பாவேந்தம் 16 பாட்டு இலக்கியம் - 2 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 16 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 352 = 384 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 240/- கெட்டி அட்டை : உருபா. 365/- படிகள் : 1000 நூலாக்கம் : ர்மநிர் வ. மலர், நிழூட்குகஒகூஹி சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  இயற்கைக் காதல்! ‘காதல் அடைதல் உயிர் இயற்கை! இயற்கையின் ஒரு கூறாகவே காதலைப் பார்த்தார் பாவேந்தர் பாரதிதாசன்! இயற்கையும் காதலும் இணைந்த வாழ்க்கையைச் சங்க இலக்கியம் காட்டியது. பாவேந்தம் பெருந்தொகுப்பின் இத் தொகுதியிலும், காதல் பாடல்களும், இயற்கைப் பாடல்களும் கலந்து மிளிர்கின்றன. வண்டிக்காரர், மாடு மேய்ப்பவர், தறி ஓட்டுபவர், கூடை முடைபவர், ஆலைத் தொழிலாளி - இப்படி உழைக்கும் மக்கள் காதல் நாயகர்களாக இலக்கியத்தில் இடம்பெறும் புதுமையைச் செய்தார் பாவேந்தர். உழைக்கும் மக்களை இலக்கிய நாயகர்களாக்கி அழகுபார்த்தார். வண்டிக்காரர் அவரின் காதலிக்குச் சர்க்கரைக் கட்டியாகத் தெரிகிறார். ‘இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி ஏறுகால் மேல்தான் சர்க்கரைக் கட்டி தெரியவில் லையோடி தலையில்துப் பட்டி சேரனே அவர்என்றால் அதில்என்ன அட்டி? (பக். 21) ஆலைத் தொழிலாளி வேலைக்குச் சென்றுவிட்டார். சங்கு ஊதினால்தான் வீடுவந்து சேர்வார். ஆலையின் சங்கே! Ú Cjhnah? என வேண்டுகோள் விடுக்கிறாள் இளம் மனைவி. வீதி பார்த்திராத என்கண்ணும் ஓய்ந்ததே என்றும் விம்முகிறாள். கணவன் வந்தால் என்ன நடக்கும்? கற்பனையில் அவள் பார்க்கிறாள். பாவேந்தர் அவளின் மனம் நுழைந்து பார்க்கிறார். குளிக்கஒரு நாழிகை யாகிலும் கழியும் குந்திப் பேசஇரு நாழிகை அழியும் விளைத்தஉணர் விற்கொஞ்ச நேரம் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல்தேன் பொழியும் (பக். 27) உழைப்பாளர் வாழ்வின் காதல் உணர்வைப் புலப்படுத்தும் பாவேந்தர், சங்க இலக்கிய அகத்திணை மரபுகளைப் பின்பற்றியும் காதல் பாடல்களைப் பாடியுள்ளார். சங்க இலக்கியப் பாடல்களை இக்கால நடையில் எளிமைப்படுத்திக் கருத்துரைப் பாட்டு எனும் தலைப்பில் தந்துள்ளார். தமிழிலக்கியத் திற்கு அவர் தந்த புதுநெறிகளில் இதுவும் ஒன்று. குறுந்தொகைப் பாடல்களில் பன்னிரண்டுக்கு மேலானவை பாவேந்தரின் எளிய நடைக்கு மாற்றம் பெற்றுள்ளதை இத் தொகுப்பில் பார்க்கலாம். பிற அகத்துறைப் பாடல்கள் இசைப் பாடல்களாக வடிவம் பெற்றுள்ளதையும் இத் தொகுப்பு காட்டும். சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் - (ஆ,57, தொல்.பொருள். இளம்.ப.234) என்பது தொல்காப்பிய விதி. காதல் பாடல்களில் தொடர்புடைய ஆண், பெண் பெயர்களைச் சுட்டிக்காட்டக் கூடாது. இசையமுது காதல் பாடல்கள் இவ் விதிக்குப் பொருந்திப் போகின்றன. உண்மை நிகழ்ச்சிகளைக் கூறும் சில பாடல்களில் கஜராஜ், சரோஜா எனப் பெயரைச் சுட்டியிருக்கிறார். உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே என்பது தொல்காப்பியம் காட்டும் அகத்திணை மரபு. உண்ணும் தொழிலைச் செய்ய இயலாத உணவற்ற பொருள்கள், உண்ணுவதாகச் சொல்வதை அகத்திணை மரபாக ஏற்கலாம் என்பது இதன் கருத்து. தொல்காப்பிய அகத்திணை மரபு காட்டும் வழியில் பாவேந்தர் பாடல்கள் நடைபோடுகின்றன. பாடி நிறுத்தி நீகொ டுத்திடும் பாக்கு வெற்றிலைச் சருகும் - அத னோடு, பார்க்கும் பார்வை யும்என் உயிரினை வந்து திருகும். (பக். 30) கூடை முடையும் தொழிலாளிக்கு, அவரின் காதலி காய்ந்த வெற்றிலையை அன்புப் பார்வை பார்த்தபடித் தருகிறாள். வெற்றிலை யும் அன்புப் பார்வையும் காதலனின் உயிரைத் திருகும் வேலையைச் செய்கின்றன என்று வியக்கிறார் பாவேந்தர். பாரதிதாசன் காட்டும் காதல், இயல்பான மனவுணர்வைக் காட்டும் நுண்ணுணர்வுச் சித்திரிப்பாக விரிவடைகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான, குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளமான, இயற்கையான உணர்ச்சியாகக் காதல் அவரால் காட்டப்படுகிறது. குழந்தைத்திருமணத்தைக் கண்டிக்கிறார். கைம்பெண் மறு மணத்தை ஆதரிக்கிறார். சாதி மறுப்புத் திருமணத்தை வரவேற்கிறார். மாந்த மேம்பாட்டிற்கு வழிசொல்கின்றன, பாரதிதாசனின் காதல் பாடல்கள். காதல் பாடல்களால் குடும்ப உணர்வை காட்டும் அவர், இயற்கைப் பாடல்களால் உலக உணர்வைக் காட்டுகிறார். காதல், இயற்கை, இரண்டுப் பகுதியும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. உலகியல் தழுவிய சிந்தனையே பாவேந்தர் பாடல்களில் மேலோங்கி நிற்கிறது. நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு எனும் ஐந்து பொருள்களால் ஆனது உலகம். விரிந்த வானே நெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே (பக். 382) என்று இயற்கையைப் பாடும்போதே உலகையும் நமக்குக் காட்டுகிறார். இயற்கை வழங்கும் எல்லாப் பொருள்களிலும் அழகைப் பார்க்கும் பாவேந்தர் அழகின் சிரிப்பு எனும் தனிப்பகுதியாக அவற்றைத் தந்துள்ளார். அழகின் சிரிப்பாக விரியும் 16 பொருள்களில் ஒன்று இருள். அழகின் பட்டியலில் இருளுக்கு இடம் தந்திருப்பது பாவேந்தர் வழங்கிய புதுமை. இருளைப் பற்றிய அவரின் பாடல்கள், எத்தகைய நுண்ணோக்கு உடையவர் அவர் என்பதை நமக்குப் புலப்படுத்தும் ஆற்றல் உடையன. ஆலமரத்தைப் பார்ப்பார், ஒற்றைக்கால் நெடிய பந்தல்! (பக். 359) என்று வியப்பார். புறாக்கள் நடந்துசெல்லும். வாழைப் பூ நடப்பது போல இவருக்குத் தோன்றும். ஒருபக்கம் இருவா ழைப்பூ உயிருள்ள அழகின் மேய்ச்சல் (பக். 362) கோவைப் பழத்தைக் கவ்வியபடி கிளி பறக்கும். கோவைப் பழமும் சிவப்பு! கிளிமூக்கும் சிவப்பு. விளக்குமேல் விளக்கை ஏற்றியதுபோல் இவருக்கு அது தோன்றும். விளக்கினில் விளக்கை ஏற்றிச் செல்லல்போல் சென்றாய் (பக். 366) என்று கிளியிடம் பேசுவார். குளத்துக்குச் செல்வார். தாமரையைப் பார்ப்பார். கண்ணாடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணாத ஒளிமுத் துக்கள் இறைத்தது போல்கு ளத்துத் தண்ணீரி லேப டர்ந்த தாமரை (பக். 350) எனப் பாவேந்தர் காட்டும்போது நாமும் குளத்துக்குள் நிற்போம். சங்க இலக்கியத்தில் புலமை உரம் பெற்ற பாரதிதாசன் அவற்றிலும் வேறுபட்ட உத்திகளோடும் நுண்ணோக்கோடும் இயற்கைப் பாடல்களையும் காதல் பாடல்களையும் தந்துள்ளார். அவர் பார்த்த இடங்களெல்லாம் இத் தொகுப்பில் பாட்டோவிய மாகக் கிடைக்கின்றன. குற்றாலம், குன்றூர், தஞ்சை வடவாறு தொடர்வண்டி நிலையம் - இப்படி அவர் நடந்து பார்த்தனவும் இருந்து பார்த்தனவும் இயற்கை அழகை வரிகளில் சுமந்தபடி பாடல்களாய் விரிந்துள்ளன. இயற்கை அழகு மாந்தனின் மனப் போக்கை மாற்றவல்லது; அறச் சிந்தனையை விரிவுபடுத்தக் கூடியது; வாழ்வின் அக்கறையை மேன்மைப்படுத்துவது. இயற்கைப் பண்புகளை மாந்தப் பண்புகளோடு இணைத்துக் காட்டுவதுதான் பாவேந்தரின் தனித்தன்மை. இயற்கைக் காதலும் மானுடக் காதலும் ஒன்றோடு ஒன்றாக இத் தொகுப்பில் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. பாவேந்தம் பெருந்தொகுப்பும் அதன் 25 தொகுதி பகுப்பு முறையும் - தமிழ்மண் பதிப்பகம் திரு.கோ.இளவழகன் அவர்கள் மகன் இனியன் நிகழ்த்தியுள்ள சாதனை! பாவேந்தம் பெருந்தொகுப்பு பரவும் இடங்களில், மக்கள் நேயமும் மறுமலர்ச்சிச் சிந்தனையும் பரவியே தீரும்! - செந்தலை ந. கவுதமன்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல்மாமழை நுழையுமுன்... வலுவூட்டும் வரலாறு பதிப்பின்மதிப்பு இயற்கைக்காதல்! காதல் 11. மாந்தோப்பில் மணம் 3 2. காதற் கடிதங்கள் 6 3. காதற் குற்றவாளிகள் 8 4. எழுதாக் கவிதை 10 5. காதற் பெருமை 12 6. காதலைத் தீய்த்த கட்டுப்பாடு 16 7. தலைவி காதல் 19 8. விரகதாபம் 20 9. வண்டிக்காரன் 21 10. மாடு மேய்ப்பவன் 22 11. பாவோடும் பெண்கள் 23 12. தறித்தொழிலாளி நினைவு 24 13. உழவன் பாட்டு 25 14. உழத்தி 26 15. ஆலைத் தொழிலாளி 27 16. இரும்பாலைத் தொழிலாளி 28 17. கோடாலிக்காரன் 29 18. கூடை முறம் கட்டுவோர் 30 19. பூக்காரி 31 20. குறவர் 32 21. தபாற்காரன் 33 22. சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் 34 23. ஓவியக்காரன் 35 24. ஆடுகின்றாள் 36 25. காதலற்ற பெட்டகம் 37 26. காதலன் காதலிக்கு 38 27. காதலி காதலனுக்கு (பதில்) 39 28. இன்னும் அவள் வரவில்லை 40 29. சொல்லித்தானா தெரியவேண்டும் 42 30. அவளை மறந்துவிடு 45 32. காதல் இயற்கை 47 33. பிசைந்த தேன் 49 34. எங்களிஷ்டம் 50 35. வாளிக்குத் தப்பிய மான் 52 36. தும்பியும் மலரும் 57 37. தமிழ் வாழ்வு 58 38. உணர்வெனும் பெரும்பதம் 62 39. ஒரே குறை 64 40. காதலனுக்குத் தேறுதல் 67 41. தொழுதெழுவாள் 69 42. சொல்லும் செயலும் 72 43. இருவர் ஒற்றுமை 73 44. பந்து பட்ட தோள் 74 45. தன்மான உலகு 76 46. மெய்யன்பு 77 47. பெற்றோர் இன்பம் 79 48. பணமும் மணமும் 82 49. திருமணம் 84 50. கதவு பேசுமா? 85 51. இங்கே உண்டு 86 52. ஆடவந்தாள் 88 53. சோலைக் காட்சி 90 54. தலைவியின் நினைவு 91 55. வண்டும் மலரும் 92 56. நாணிக்கண் புதைத்தல் 93 57. நினைந்துருகல் 94 58. யார் இவள்? 95 59. கண்டதும் காதல் 96 60. ஏந்திழை 97 61. வாழும் மாந்தர்க்கு 98 62. இன்னம் அன்பர் வரவில்லை 99 63. எண்ணம் இனிக்க நடந்தான் 100 64. அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால் 101 65. வா வா இன்ப இரவே 102 66. மறப்பதுண்டோ? 103 67. துன்ப உலகு 104 68. படலடிப்பவன் 105 69. அத்தானே வேண்டும் 106 70. காதல் வாழ்விலே 107 71. அவன்தான் குழந்தையைச் சுமப்பான் 108 72. காதல் கரும்பு 109 73. காட்டுக் குறத்தி - நாட்டுப் புறத்தான் கலப்புத் திருமணம் 110 74. அவள் உதடு 113 75. அவள் யார்? 114 76. அவன்மேற்காதல்... 115 77. அவள் ... 116 78. அவள்அவன்நேர்ந்தாடல் 117 79. தலைவனும் தலைவியும் 118 80. உனக்கென்று நான்... எனக்கென்று நீ 119 81. திரும்பிப் பார்த்தால் என்ன? 120 82. எனை மறந்தான் 121 83. அறிவு மணம் 122 84. மனத்தினை அவளுக் கீந்தான் மங்கையும் தன்னைத் தந்தாள் 123 85. குறத்தி பாட்டு 126 86. முதியோர் காதல் 127 87. பிழைத்தேனா? செத்தேனா? 129 88. வந்த சேதி முடிந்ததே! 130 89. காதல் ஒப்பந்தம் 131 90. மாடியில் Ãலவு 132 91. அவள் அப்படி 133 92. நீ வேண்டாம் 134 93. நெட்டுக்காரி 135 94. கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்? 136 95. இன்ப bவள்ளம் 137 96. அவன்மேல் நினைவு 139 97. அவன் எழுதிய அஞ்சல் 141 98. அம்மா போய்விட்டாள் அன்பை அழை! 142 99. அவள்மேற் காதல்! 143 100. வந்தால் வரச்சொல் தந்தால் தரச்சொல் 144 101. மருமகள் பூரிப்பு 146 102. அவன் கலங்கரை விளக்கடி 148 103. அவன் மேல் நினைவு 149 104. அவன் வரவில்லை 150 105. உண்மையில் கசப்பா? 152 106. விடியுமுன் குறுநகை 153 107. முதுமாலைப்போதில்...! 156 108. முகிலுக்குள் நிலா 157 109. நல்ல மனைவி 158 110. முகவரி தேவை 159 111. பறந்து வந்த கிளியே 160 112. வருந்தி அழைத்தாள் 161 113. சிரிப்பே குத்தகைச் சீட்டு 162 114. அவள் கொண்ட ஆமைகள் 164 115. அவன் அடைந்த ஆமைகள் 164 116. அவள் புன்னகை 164 117. மறப்ப தெப்படி? 165 118. தெரிந்துகொள் 166 119. யாருமில்லை 167 120. காதல் தீயின் களிப்பு 168 121. ஆம் ஆம்! யாம் யாம்! 170 122. காதல் 170 123. தோப்புக்குள்ளே மாப்பிள்ளை 171 124. ஒட்டாரம்செய்வதுஎன்போங்காலம்.. .173 125. அவள்மேற் காதல் 174 126. தமிழ் மகளே வேண்டும் நீ என்மேல் ஆசை வைக்காதே 175 127. அவள் துடிப்பு 176 128. திருக்குறள் படித்தான் 177 129. இரும்பினும் பொல்லா நெஞ்சினள் 178 130. தலைவி தோழிக்கு 179 131. காதற் பசி 180 132. அவள் இல்லை 181 133. பழங்குப்பை பஞ்சுமெத்தை 183 134. அக்கா என்பதற்கு அக்கக்கா என்றது கிளிக்கழுதை 184 135. அவளையா மணப்பேன்? 185 136. அவன் எனக்குத்தான் 186 137. கலப்பு மணம்வாழ்க 187 138. திருமணம் எனக்கு 189 139. எனக்காகப் பிறந்தவள்! 190 140. சோறல்ல கோவைப் பழம் 191 141. நானும் அவளும் 192 142. வண்டி முத்தம் 193 143. போ என்றாள் பின், வா என்றாள் 194 144. அழுதேன்; பிறகு சிரித்தேன் 195 145. வந்தாள் 196 146. சொந்த வீட்டைவிட்டு வெளியேறுகின்ற நைந்த வுள்ளம் பாடுகின்றது 197 147. தாய் தன் குழந்தையை! 198 148. அவன் வாராதபோது 199 149. அட்டி சொல்லலாமா? 200 150. ஒருத்தனுக்கு ஒருத்தி 201 151. என் அக்கா 202 152. கண்ணபிரானே! 203 153. பொழுது விடியவில்லை 204 154. இன்பத்தில் துன்பம் 205 155. இடர் வந்து சேராதே 206 156. சேவலைப் பிரிந்த அன்றிற் பேடு 207 157. எவை இருந்தால் என்ன? அவளில்லையே! 208 158. எதிர்பார்க்கும் ஏந்திழை 209 159. அன்பன் வந்தால் அப்படி! 210 160. பால்காரன்பால் அன்பு 211 161. கற்பே உயிர்... 212 162. ஒத்து வாழாத ஆண்கள் 213 163. மணவாளனைப் பறிகொடுத்த மங்கை அழுகின்றாள் 214 164. விடுத்தானோ 215 165. கள்ளி 216 166. நிலவு கேலி சிரித்தது 216 167. அவள் அடங்காச் சிரிப்பு 217 168. இன்பம் 219 169. பள்ளிக்குப் போகும்புள்ளிமான் 224 170. பேசுதற்குத் தமிழின்றிக் fதலின்பம்bசல்லுமோ 225 171. vன் அத்தான் எனக்குப் பொன் அத்தான் 228 172. நினைவு வராதா? 229 173. நேயனை அழைத்து வா 230 174. தவளை போல் குதிக்காதீர் 231 175. தென்றல் செய்த குறும்பு 233 176. தோழியே சொல்வாய் 234 177. தீராதோ காதல் நோய் 235 178. முத்து மாமா 236 179. அறுவடைப் பாட்டு 237 180. சாவை நீக்கு 238 181. நீ எனக்கு வேண்டும் 239 182. இன்பம் அனைத்தும் 240 183. தொல்லை தீர்க்கலாம் 241 184. உன் எண்ணம் கூறு 242 185. வண்ணத் தமிழாள் 243 186. பாரதி போல்வாள் 245 187. அவனும் அவளும் 246 188. வண்டும் வேங்கையும் 247 189. இன்பம், எங்கும் இன்பம் 248 190. தேனமுதே 249 191. மகிழ்ச்சி வேண்டுமா? 250 192. அயல்மனை விரும்பியவன் பட்டபாடு 251 193. இன்றைக்கு ஒத்திகை 252 194. காதல் வலியது போலும் 253 195. குகையில் நடுங்கிய கோதை 254 196. முத்தம் கேட்கும் மொய்குழல் 256 197. பிறக்க முடியாது 257 198. இளமையின் விளக்கம் 257 199. பெருகும் அன்பு 258 200. அவள் முகம் 258 201. நானே நீ! 259 202. இலாவணிப் பாட்டு 260 203. ஆயிரம் பெறும் இலாவணி 261 204. இராமாயணக் கதை - நிகழ்ச்சிப் பாடல் - 1 263 205. இராமாயணக் கதை - நிகழ்ச்சிப் பாடல் - 2 265 206. பூங்காவனம் 266 207. ஏன் சிரித்தாள்? 267 208. கோழிகள் ஒழிக 268 209. தலைவன் தளர்ச்சி 268 210. தொல்லைசெய் நிலவே 269 211. முகமலரில் குழல் 270 கருத்துரைப் பாட்டு - அகம் 271 212. தலைவி கூற்று 271 213. தலைவன் கூற்று 272 214. தோழி கூற்று 273 215. தலைவி கூற்று 274 216. தோழி கூற்று 275 217. தலைவி கூற்று 276 218. தலைவன் கூற்று 277 219. வருத்தம் தொலையும் அன்றோ 278 220. முருகனால் வந்த நோயாம் 279 221. இசையாயோ தோழி 280 222. வருவது நலமா? 281 223. தேய்ந்த புரிக்கயிறு 282 224. கூவின இன்பக் குயில்கள் 283 225. தமிழிசை போன்ற இனிய சொல்லாள் 284 226. கடிய ஓட்டடா தேரை 285 227. ஏனத்தான் இந்தப் பொய் 286 228. அதோ வந்தாண்டி 287 229. பூவால் அணி செய்த இல்லம் 288 230. மாறாத தலைவர் 289 231. அன்பினை நடப் பார் 290 232. நாகரிகம் 291 233. கூந்தல் மணம் 292 234. பாலாடைப் படுக்கை 293 235. என்றும் கைவிடாதே 294 236. தாயுள்ளம் 295 237. என்னைப்போல் அவளும் அழட்டும் 296 238. அன்றில் நினைவு 297 239. தலைவி வருத்தம் 298 240. மணக்க என்றான் 299 241. பிணித்தது நெற்றி! பிடிபட்டது யானை 300 242. வருவார் என்பதால் இருந்தேன் 300 243. வீடும் பாலையே 301 244. தலைவன் கூற்று 302 245. தோழி கூற்று 303 246. தோழி கூற்று 304 கருத்துரைப் பாட்டு - புறம் 305 247. விரைந்தனர் விரைந்தனர் 305 248. கரந்தை சூடுவீர் 306 249. மறவேந்தன் வஞ்சி சூடினான் 307 250. காஞ்சி சூடினானே 308 251. கடலொன்று வந்தது போலே 310 252. சூழ்ந்தது பகைப்படை 312 253. போ போர்க்கு 313 254. தாய்மார், போருக்கு மக்களை அனுப்புக 314 255. கடமைகள் 315 256. அவள் நெஞ்சில் இடி விழட்டும் 316 257. இனி என்ன வேண்டும் 317 258. நிலாக் கிழவி கூறுகிறாள் 318 259. ஏன் நரைக்கவில்லை? 319 இயற்கை 321 1. குன்றும் மயிலும் 322 2. மயில் 322 3. சிரித்த முல்லை 324 4. உதய சூரியன் 325 5. காடு 326 6. கானல் 328 7. மக்கள் நிலை 330 8. காட்சி இன்பம் 333 9. அழகு 334 10. கடல் 335 11. தென்றல் 338 12. காடு 341 13. குன்றம் 344 14. ஆறு 347 15. செந்தாமரை 350 16. ஞாயிறு 353 17. வான் 356 18. ஆல் 359 19. புறாக்கள் 362 20. கிளி 365 21. இருள் 368 22. சிற்றூர் 371 23. பட்டணம் 374 24. அதிகாலை 377 25. அந்திப் போதின் கதி 378 26. சோலை 380 27. கொடை வாழ்க! 381 28. இயற்கைச் செல்வம் 382 29. அதிகாலை 383 30. வானம்பாடி 384 31. மாவலிபுரச் செலவு 385 32. இருசுடரும் என் வாழ்வும் 388 33. தென்றல் 389 34. நீலவான மீது 391 35. தழைந்த சோலை 392 36. சோலை! சோலை! சோலை! 393 37. குளிர் கொண்டு வந்தது 394 38. பாடும் தாமரைப் பொய்கை 395 39. வான் தழுவும் மாமலை 396 40. பள பளா! பள பளா! 397 41. ஏனோ இன்னும் துன்பம் 398 42. சோலை ஆடல் அரங்கு 399 43. திருக்குற்றால மலை நீர்வீழ்ச்சி 400 44. வானவில் 401 45. ஆடல் பாடல் 402 46. ஆடும் மயில் 403 47. செஞ்சாமந்தியும் தும்பைச் செடியும் 404 48. தென்றல் 405 49. குன்றூர்ப் பாட்டு 406 50. கூதிர் விழா 413 51. காகிதப்பூ வேண்டாம் 415 52. இயற்கை தரும் உண்மை 416 53. எலிகள் 418 54. அக்கக்கா 420 55. குயில் 421 56. கோழிப் போர் 423 57. சேவற்போர் 424 58. திருடர் - திறந்த வானிலும் புகுவர் 426 59. கிளிக்குஞ்சு கண்ட உலகம் 427 60. சோலை தரும் நன்கொடை 429 61. எறும்பின் தவம் 430 62. சூறையில் ஓடம் 431 63. பனை 433 64. வலைக்கம்பி அறை வடவன் விலங்கு அறிவோம் போடா என்றன புறாக்கள் 434 65. உயிர் உறங்கா இரவு 435 66. கோடைக் கொடுமையும் மாரியின் வரவும் 436 67. இயற்கைப் பாடம் 437 68. பட்டணத்தான் 439 69. என்றைக்கும் பஞ்சமில்லை 439 70. பந்து விளையாட்டு 440 71. சின்ன பெண் ஆசை 440 72. சாவாத உழவன் 441 73. துலங்கா மூஞ்சி உலகம் 441 74. யார் குற்றவாளி? 442 75. என் நிலைக்கு முல்லை சிரித்தது 442 76. இயற்கையில் இல்லை மனிதருக்கு ஏன்? 443 77. காடும் - நீரோடையும் 444 78. இளவேனில் இன்பம் 446 79. கண்களும் கால்களும் 448 80. குட்டைப் புத்தி 451 81. குயில் பாட்டு 452 82. சமதர்மம் 453 83. நிழல்கள் நிழல்கள் 455 84. பார்! பார் 456 85. வலியாரிடம் வாயாடாதே 457 86. வானவில் 458 87. தலைவன் தளர்ச்சி 458 88. நாளுக்கு நாணம் 459 89. தென்றல் அருவி! 460 90. அணிற்பிள்ளைக்குக் கிளிப்பிள்ளை 460 91. தென்னந்தோப்பு 461 92. படிக்காதவன் சிரிப்பு 462 93. பொதிநாத் துவையல் அருமை 462 94. இரவின் இளவரசி 463 95. வெற்றிலைக்கு முன் என்ன போட வேண்டும்? 463 96. ஏரி 464  காதல் 1. மாந்தோப்பில் மணம் (கும்மி முதலிய எளிய ராகத்தில் பாடுக) தாமரை பூத்த குளத்தினிலே முகத் தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக் கோமள வல்லியைக் கண்டு விட்டான் - குப்பன் கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள் தூய்மை படைத்த உடம்பினையுறும் - பசுந் தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன் காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே. 1 முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு முழுமதி போல, நனைந்திருக்கும் - தன் துகிலினைப் பற்றித் துறைக்கு வந்தாள்! - குப்பன் சோர்ந்துவிட்டா னந்தக் காம னம்பால்! - நாம் புகல்வ துண்டோ குப்பன் உள்ளநிலை? - துகில் பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன் சகலமும் நீயடி மாதரசி - என் சாக்காட்டை நீக்கிட வேண்டும் என்றான். 2 கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன் கட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த விண்ணப்பம் ஒப்பினள் - புன்னகையால்! 3 சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள் சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம் முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள் முன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு சிற்றிடை வாய்திறந்தாள் அதுதான் - இன்பத் தேனின் பெருக்கன்று; செந்தமிழே! சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என் தோழிகள் இப்பக்கம் வந்திடுவார். 4 காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள் கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச் சோலையி லேஇளமா மரங்கள் – அடர் தோப்பினை நோக்கி வருக! என்றாள். நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த மொய்குழல் யாதுன்றன் எண்ண மென்றாள். 5 உன்னை எனக்குக் கொடுத்துவிடு! நான் உனக்கென்னைத் தந்திட அட்டியில்லை - இந்தக் கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக் காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்; சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ் சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில் அன்னது நான்செய்த குற்றமன்று! - நான் அமங்கலை என்றுகண் ணீர்சொரிந்தாள்! 6 ‘மணந்திட நெஞ்சில் வலிவுளதோ? - என்று வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன் - தன்னை இணங்கென்று சொன்னது - காதலுள்ளம் - தள் என்றனமூட வழக்கமெலாம் - தலை வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன் மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! - பின் கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே - சில கண்ணற்ற மூட உறவினரும், 7 வீதியிற் பற்பல வீணர்களும் வேறு விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன் தந்தையின் சொத்தையும் நீஇழப்பாய்! - நம் ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம் கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்! 8 கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன் குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன் வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் - ஆ ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர் எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும் பேடி வழக்கங்கள், மூடத்தனம், - இந்தப் பீடைகளே இங்குச் சாத்திரங்கள்! 9 காதல் அடைதல் உயிரியற்கை!; - அது கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி சாதல் அடைவதும், காதலிலே - ஒரு தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! - அடி! கோதை தொடங்கடி! என்று சொன்னான் - இன்பம் கொள்ளை, கொள்ளை, கொள்ளை, மாந்தோப்பில்! 10 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.63, 1938, புதுவை முரசு, 10. 11. 1930 2. காதற் கடிதங்கள் காதலியின் கடிதம் என் அன்பே, இங்குள்ளார் எல்லோரும் க்ஷேமமாய் இருக்கின் றார்கள்; என்தோழி யர்க்ஷேமம்! வேலைக்கா ரர்க்ஷேமம்! இதுவு மின்றி உன்தயவால் எனக்காக உன்வீட்டுக் களஞ்சியநெல் மிகவு முண்டே; உயர்அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில் பத்துவிதம் உண்டு. மற்றும் கன்னலைப்போற் பழவகை பதார்த்தவகை பக்ஷணங்கள் மிகவு முண்டு கடிமலர்ப்பூஞ் சோலையுண்டு - மான்க்ஷேமம் மயில்க்ஷேமம் பசுக்கள் க்ஷேமம் இன்னபடி இவ்விடம்யா வரும்எவையும் க்ஷேமமென்றன் நிலையோ என்றால், இருக்கின்றேன்; சாகவில்லை என்றறிக. இங்ஙனம் உன் எட்டிக்காயே காதலன் பதில் செங்கரும்பே, உன் கடிதம் வரப்பெற்றேன் நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன் தேமலர்மெய் வாடாதே! க்ஷேமமில்லை என்றுநீ தெரிவிக் கின்றாய், இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில் உனைக்காண எழும்ஏக் கத்தால், இன்பாலும் சர்க்கரையும் நன்மணத்தால் பனிக்கட்டி இட்டு றைத்த திங்கள்நிகர் குளிர்உணவைத் தின்றாலும் அதுவும்தீ! Ô!தீ! செந்தீ! திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன். உனைஅங்கே விட்டு வந்தேன்! இங்குனைநான் எட்டிக்காய் எனநினைத்த தாயுரைத்தாய்; இதுவும் மெய்தான்; இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத் துத்தெளிவித் திறுத்துக் காய்ச்சி எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை எட்டிக்காய் என்பா யாயின் எனக்குநீ எட்டிக்காய் என்றுதான் சொல்லிடுவேன். இங்குன் அன்பன் - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.66, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு - 2, 1935 3. காதற் குற்றவாளிகள் கும்மி தோட்டத்து வாசல் திறந்திருக்கும் - தினம் சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரமட்டும் வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்பு வீடு செல்வாள், இது வாடிக்கையாம். சேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச் சென்றனள் சுந்தரன் தாய்ஒருநாள்! பாட்டுச் சுவைமொழிச் சொர்ணம் வந்தாள் - வீட்டிற் பாடம் படித்திருந்தான் இளையோன். 1 கூடத் திலேமனப் பாடத் திலேவிழி கூடிக் கிடந்திடும் ஆணழகை, ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள் உண்ணத் தலைப்படு நேரத்திலே, பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற் பட்டுத் தெறித்தது மானின் விழி! ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன் ஆயிரம் ஏடு திருப்புகின்றான்! 2 தன்னந் தனிப்பட என்னை விட்டே - பெற்ற தாயும் கடைக்கு நடந்து விட்டாள். இன்னும் உண்டோ அங்கு வேலை என்றான் - சொர்ணம் ஏறிட்டுப் பார்த்தனள் கூறுகின்றாள்; ‘தன்னந் தனிப்பட நீயிருந்தாய் - எந்தத் தையல்உன் பொன்னுடல் அள்ளிவிட்டாள்? என்றனள். சுந்தரன் என்னுளத்தைக் - கள்ளி! எட்டிப் பறித்தவள் நீ என்றனன். 3 உள்ளம் பறித்தது நான் என்பதும் - என்றன் உயிர் பறித்ததுநீ என்பதும் கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் - இன்பக் கேணியிற் கண்டிட வேணுமென்றாள். துள்ளி எழுந்தனன் சுந்தரன்தான்! - பசுந் தோகை பறந்தனள் காதலன்மேல்! வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் நல்ல வீணையும் நாதமும் ஆகிவிட்டார்! 4 சாதலும் வாழ்தலும் அற்றஇடம் - அணுச் சஞ்சல மேனும் இல்லாதஇடம், மோதலும் மேவலும் அற்றஇடம் - உளம் மொய்த்தலும் நீங்கலும் அற்றஇடம்! காதல் உணர்வெனும் லோகத்திலே - அவர் காணல் நினைத்தல் தவிர்ந்திருந்தார்! சூதற்ற சுந்தரன் தாயும் வந்தாள் - அங்குச் சொர்ணத்தின் தாயும் புகுந்துவிட்டாள்! 5 பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ! - என்ன பேதமை? என்றனள் மங்கையின்தாய். சிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு சின்ன குழந்தையை நீமணந்தாய்; குற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங் கோலமென்றாள் அந்தச் சுந்தரன்தாய். புற்றர வொத்தது தாயர் உள்ளம்! - அங்குப் புன்னகை கொண்டது மூடத்தனம்! 6 குற்றம் மறுத்திடக் காரணங்கள் ஒரு கோடி யிருக்கையில், காதலர்கள் கற்றவை யாவையும் உள்ளத்திலே - வைத்துக் கண்ணிற் பெருக்கினர் நீரருவி! சற்றிது கேளுங்கள் நாட்டினரே! - பரி தாபச் சரித்திரம்! மானிடரே! ஒற்றைப் பெரும்புகழ்த் தாயகமே! - இந்த ஊமைகள் செய்ததில் தீமையுண்டோ? 7 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.68, 1938 4. எழுதாக் கவிதை எண்சீர் விருத்தம் மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்துமறைந் திட்டான்; மெல்லஇருட் கருங்கடலில் விழுந்ததிந்த உலகும்! தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும் தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா! நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள் என்றன் நனவிலுள்ள சுந்தரியை மறைக்கவச மில்லை! மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை மனவெளியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்! 1 புன்னையின்கீழ்த் திண்ணையிலே எனைஇருக்கச் சொன்னாள் புதுமங்கை வரவுபார்த் திருக்கையிலே, அன்னாள், வன்னமலர்க் கூட்டத்தில், புள்ளினத்தில், புனலில் வானத்தில், எங்கெங்கும் தன்னழகைச் சிந்திச் சின்னவிழி தழுவும்வகை செய்திருந்தாள்! இரவு சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்! எனினும் சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத் தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? 2 என்னுளத்தில் தன்வடிவம் இட்டஎழில் மங்கை இருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள் மின்னொளியாள் வராததுதான் பாக்கி;யிந்த நேரம் வீறிட்ட காதலுக்கும் வேலிகட்டல் உண்டோ? கன்னியுளம் இருளென்று கலங்கிற்றோ! கட்டுக் காவலிலே சிக்கிஅவள் தவித்திடுகின் றாளோ! என்னென்பேன் அதோபூரிக் கின்றதுவெண் ணிலவும் எழில்நீல வான்எங்க ணும்வயிரக் குப்பை! 3 மாலைப்போ தைத்துரத்தி வந்தஅந்திப் போதை வழியனுப்பும் முன்னிருளை வழியனுப்பி விட்டுக் கோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில் கொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான் சோலைநடு வேமிகவும் துடிக்கின்றேன்; இதனைத் தோகையிடம் போயுரைக்க எவருள்ளார்? அன்னாள் காலிலணி சிலம்புதான்க லீரெனக்கே ளாதோ? கண்ணெதிரிற் காணேனோ பெண்ணரசை யிங்கே? 4 தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ? தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும் விண்ணீலம் கார்குழலோ! காணும்எழி லெல்லாம் மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின் வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ! வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை! கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோவந்து விட்டாள்! கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே! 5 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.70, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு - 7, 1935 5. காதற் பெருமை கண்ணி நல்ல இளம்பருவம் - மக்கள் நாடும்குணம், கீர்த்தி, கல்வி இவையுடையான் - உயர் கஜராஜ் என்பவனும், முல்லைச் சிரிப்புடையாள் - மலர் முக ஸரோஜாவும், எல்லையிற் காதற்கடல் - தனில் ஈடுபட்டுக் கிடந்தார்! 1 திங்கள் ஒருபுறமும் - மற்றைச் செங்கதிர் ஓர்புறமும் தங்கி யிருந்திடினும் - ஒளி தாவுதல் உண்டதுபோல் அங்கந்த வேலூரில் - இவர் அங்கம் பிரிந்திருந்தும் சங்கமம் ஆவதுண்டாம் - காதற் சமுத்திர விழிகள்! 2 ஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில் ஓங்கிய காதலினைப் பிட்டுப் பிட்டுப் புகன்றார் - அதைப் பெற்றவர் கேட்கவில்லை குட்டை மனத்தாலே - அவர் கோபப் பெருக்காலே வெட்டிப் பிரிக்க வந்தார் - அந்த வீணையை நாதத்தினை! 3 பொன்னவிர் லோகத்திலே - உள்ளம் பூரிக்கும் காதலிலே என்னுளம் கன்னியுளம் - இணைந் திருந்தும், இன்பஉடல் தன்னைப் பயிலுவதோர் - நல்ல சந்தர்ப்பம் இல்லையென்றே தன்னையும் தையலையும் பெற்ற சமூகத்தை நொந்தான். 4 அண்டை இல்லத்தினிலே - என் அன்பன் இருக்கின்றான்! உண்ணும் அமுதிருந்தும் - எதிர் உண்ண முடிந்ததில்லை! தண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி சாய்த்திடக் கூடவில்லை! வண்மலர் சூடவில்லை - அது வாசலிற் பூத்திருந்தும். 5 என்று ஸரோஜாவும் - பல எண்ணி எண்ணி அயர்வாள். தன்னிலை கண்டிருந்தும் - அதைச் சற்றும் கருதாமல் என்னென்னவோ புகல்வார் - அந்த இரும்பு நெஞ்சுடையார், அன்ன தன் பெற்றோரின் செயல் அத்தனையும் கசப்பாள். 6 நல்ல ஸரோஜாவின் - மணம் நாளைய காலை என்றார்! மெல்லியின் பெற்றோர்கள் - வந்து வேறொரு வாலிபனைச் சொல்லி உனக்கவன்தான் - மிக்க தோதென்றும் சொல்லிவிட்டார். கொல்லும் மொழிகேட்டாள் - மலர்க் கொம்பு மனம்ஒடிந்தாள்! 7 கொழிக்கும் ஆணழகன்! - அவன் கொஞ்சி வந்தே எனது விழிக்குள் போய்ப் புகுந்தான் - நெஞ்ச வீட்டில் உலாவு கின்றான்! இழுத்தெறிந்து விட்டே - மற் றின்னொரு வாலிபனை நுழைத்தல் என்பதுதான் - வெகு நூதனம் என்றழுவாள்! 8 காதலிரு வர்களும் - தம் கருத்தொரு மித்தபின் வாதுகள் வம்புகள் ஏன்? - இதில் மற்றவர்க் கென்ன உண்டு? சூதுநிறை யுலகே - ஏ துட்ட இருட்டறையே! நீதிகொள், என்றுலகை - அவள் நிந்தனை செய்திடுவாள்! 9 இல்லத்தின் மாடியிலே - பின்னர் ஏறிஉரைக்க லுற்றாள்; இல்லை உனக் கெனக்கு - மணம் என்று முடித்துவிட்டார். bghšyhj ehis¡bfhU - btW« òšyid eh‹ kz¡f všyh« ïa‰W»‹wh® - bg‰w vk‹fŸ ï›Él¤âš! 10 அடுத்த மாடியிலே - நின்ற அன்பனிது கேட்டான்; துடித்த உள்ளத்திலே - அம்பு தொடுக்கப்பட்டு நின்றான்! எடுத்துக்காட்டி நின்றாள் - விஷம் இட்டதோர் சீசாவை! அடிஎன துயிரே! அழை அழைஎனையும் என்றான்! 11 தீயும் உளத்தோனும் - விஷம் தேடி எடுத்துவந்தான்! தூயநற் காதலர்க்கே - பெருந் தொல்லை தரும்புவியில் மாய்க நமதுடல்கள்! விஷம் மாந்துக நம்மலர்வாய்! போய் நுகர்வோம் சலியா - இன்பம்; பூமியின் கர்ப்பத்திலே! 12 என்று விஷம் குடித்தார் - அவர் இறப்பெனும் நிலையில் ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை ஓதரும் காதலர்கள். இன்று தொட்டுப் - புவியே - இரண் டெண்ணம் ஒருமித்தபின் நின்று தடைபுரிந்தால் - நீ நிச்சயம் தோல்வி கொள்வாய்! 13 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.72, 1938 ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு 4-5, 1935 குறிப்பு: கஜராஜ் சரோஜா காதல் மகத்துவம் என வெளிவந்தது. 6. காதலைத் தீய்த்த கட்டுப்பாடு எண்சீர் விருத்தம் வேற்றூர்போய் நள்ளிரவில் வீடு வந்த வேலனிடம், ஆள்ஒருவன் கடிதம் தந்தான். ஏற்றதனை வாசிக்க லுற்றான் வேலன்; என்னருமைக் காதலரே, கடைசிச் சேதி; நேற்றிரவு நாமிருவர் பூந்தோட் டத்தில் நெடுநேரம் பேசியதை என்தாய் கண்டாள்! ஆற்றாத துயரால்என் தந்தை, அண்ணன் அனைவரிடமும் சொல்லி முடித்து விட்டாள். 1 குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றி விட்டாய் கொடியவளே! விஷப்பாம்பே! என்று தந்தை தடதடவென் றிருகையால் தலையில் மோதித் தரையினிலே புரண்டழுதார்; அண்ணன் அங்கு மடமடவென் றேகொல்லைக் கிணற்றில் வீழ்ந்தே மாய்வார்போல் ஓடிப்பின் திரும்பி வந்து படுபாவி தாலியற்ற பிறகும் இந்தப் பழுதுநடை கொள்வதுண்டோ என்று நைந்தார். 2 தாயோஎன் எதிர்வந்து, தாலி யோடு சகலமும் போயினஏடி இன்னும் என்ன! தீயாகிக் கொளுத்திவிட்டாய் எம்மை யெல்லாம்! தெருவார்கள் ஊரார்கள் இதைய றிந்தால் ஓயாமல் தூற்றிடுவார்! யாம்இவ் வூரில் உயர்ந்திருந்தோம்; தாழ்த்திவிட்டாய் அந்தோ, நீதான் பாயேனும் விரித்ததிலே படுப்ப துண்டா, பதியிழந்தால் மூதேவி! என்று சொன்னாள். 3 தந்தையார் அடிஉன்னைக் கொன்று போட்டுத் தலையறுத்துக் கொள்ளுகின்றேன் என்பார்; அண்ணன் அந்தமதி யற்றவனைக் கொல்வேன் என்றே அருகிருக்கும் கொடுவாளைப் பாய்ந்தெ டுப்பான்! இந்தவிதம் கொதித்தார்கள் இரவு மட்டும் இனிஎன்னால் அவர்கட்குத் தொல்லை வேண்டாம் சுந்தரனே, என்காதல் துரையே! c‹id¤ Jw¡»‹nw‹ ï‹¿uÉš flÈš 圪nj! 4 காதலியின் கடிதத்தில் இதைவா சித்தான்! கதறினான்! கடல்நோக்கிப் பறந்தான் வேலன்! ஈதறிந்தார் ஊரிலுள்ளார்! ஓடி னார்கள்! எழில்வானம், முழுநிலவு, சமுத்தி ரத்தின் மீதெல்லாம் மிதக்கும்ஒளி, அகண்டா காரம் மேவுபெருங் காட்சியில்ஓர் துன்பப் புள்போல் மாதுகடற் பாலத்தின் கடைசி நின்று வாய்விட்டுக் கதறுகின்றாள் வசமி ழந்தாள்; 5 எனைமணந்தார் இறந்தார்;என்குற்ற மல்ல; இறந்தவுடன் மங்கலநாண், நல்லா டைகள், புனைமலர்குங் குமம்அணிகள் போன துண்டு, பொன்னுடலும் இன்னுயிரும் போன துண்டோ? எனைஆளும் காதலுக்கோர் இலக்கி யத்துக் கிசைந்ததெனில் உயிரியற்கை; நான்என் செய்வேன்? தனையடக்கிக் காதலினைத் தவிர்த்து வாழும் சகம்இருந்தால் காட்டாயோ நிலவே நீதான்! 6 கண்படைத்த குற்றத்தால் அழகி யோன்என் கருத்தேறி உயிர்ஏறிக் கலந்து கொண்டான்! பெண்படைத்த இவ்வுலகைப் பல்லாண் டாகப் பெற்றுயர்ந்த நெடுவானே! புனலே! கூறீர், மண்படைப்பே காதலெனில், காத லுக்கு மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக் கண்டார்? புண்படைத்த என்நாடே, கைம்மைக் கூர்வேல் பொழிகின்றாய் மங்கையர்மேல்! அழிகின் றாயே! 7 ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம் அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ? பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்! வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல், பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ? 8 இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங் காணும் இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத் தேவி, வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட் டார்கள் மறுக்கின்றார் காதலினைக் கைம்மை கூறித் தளைமீற வலியில்லேன்! அந்தோ, என்றன் தண்டமிழின் இனிமைபோல் இனிய சொல்லான் உளமாரக் காதலித்தான் என்னை! அன்னோன் ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பே னாநான்! 9 ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்! எம்மை உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப் பாடே, தீராத காதலினை நெஞ்சத் தோடு தீய்த்துவிட்டாய்! என்றாள் - பின் ஓடி வந்து சீராளன் தாவினான்! - வீழ்ந்தாள்! - வீழ்ந்தான்! தேம்பிற்றுப் பெண்ணுலகு! இருவர் தீர்ந்தார்! ஊரார்கள் பார்த்திருந்தார் கரையில் நின்றே - உளம்துடித்தார்; எனினும்அவர் உயிர்வாழ் கின்றார். 10 - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.76, 1938 7. தலைவி காதல் சோலையிலோர் நாள் எனையே தொட்டிழுத்து முத்தமிட்டான் துடுக்குத் தனத்தை என் சொல்வேன்! மாலைப்பொழுதில் இந்த மாயம்புரிந்த செம்மல் வாய்விட்டுச் சிரித்துப்பின் போய்விட்டா னேடி தோழி! - சோலை ஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன் உள்ளத்தில் வந்து நிறைந்தான்! வேடிக்கை என்ன சொல்வேன் மின்னல்போல் எதிர் நின்றான்! வேண்டித் தழுவச் சென்றேன் தாண்டி நடந்துவிட்டான்! - சோலை அகம்புகுந்தான் சேயோ - அவனை எட்டி அணைக்க வழிசொல்வாயோ! சகம்பெறும் அவன் அன்று தந்த துடுக்குமுத்தம்! சக்ரவாகம் போல்வந்தான்; கொத்திப்போக மறந்தான். - சோலை - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.79, 1938 8. விரகதாபம் காதலும் கனலாய் என்னையே சுடும் ஈதென்ன மாயமோ? நாதர்மா தெனையே சோதித்தாரோ நஞ்சமோஇவ் வஞ்சி வாழ்வு? ஐயையோ! நலியுதேஎன் அகமிகுதியு மலருடலே நனிமெலிதல் அநீதி இதுவலவோ! வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில் வருவரோ அலது வருகிலரோ? வாரிச விக சித முக தரி சனமுற வசமதோ கலவி புரிவது நிசமோ மதுரமான அமுதமு மலரினொடுமது கனியிரச மதிவிரச மடைவதென்ன - காதலும் தென்ற லென்றபுலி சீறல் தாளேன் சீத நிலவே தீதாய் விளைந்திடுதே! வென்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே மேவி ஆவி எய்தல் எந்தநாள்? - காதலும் - பாரதிதாசன் கவிதைகள், முதற்பகுதி, ப.80, 1938; ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு 1, 1935 9. வண்டிக்காரன் அதோ பாரடி அவரே என் கணவர் - அதோ பாரடி புதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி! - அதோ பாரடி இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி தெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி? சேரனே அவர்என்றால் அதில்என்ன அட்டி? - அதோ பாரடி ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார் அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார் அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா ஆசைமுத்தம் என்று தந்து நடந்தார்! - அதோ பாரடி - இசையமுது, முதற்பகுதி, ப.3, 1942 குறிப்புரை : அடி சாயுமுன் முன்வந்து விடுவேன். அப்படி அந்தி வராவிட்டால் நீ இதைச் சுவைத்துக்கொண்டே இரு என்று தன் கணவன் ஓர் ஆசை முத்தம் கொடுத்துச் சென்றானாம். வண்டிக்காரன் மனைவி தன் தோழியிடம் சொல்லுகிறாள். அடி - பரிதி நிற்கும் நிலை; சாய்தல் - மேற்றிசையில் சாய்தல். 10. மாடு மேய்ப்பவன் மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை? வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை! - மாடு பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான் பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன் - - மாடு ஓடையில் தாமரை வாடிடும் என்றான் உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன் வாடாத தாமரை உன்முகம் என்றான் மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன் கூடியிருக்க என்றான் கைகோத்து நின்றேன் காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்! - மாடு காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன் கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ? என்றான் வேளை யாகிவிடும் என்று நவின்றேன் விரும்பிப் பசுக்கறந்து குடிஎன்று நின்றான் ஆளன் கொடுத்தபா லாழாக்குப்பால் என்றேன் - அல்லடி காதற் கலப்பால் தான் என்றான் - - மாடு - இசையமுது, முதற்பகுதி, ப.4, 1942 குறிப்புரை : மாடு மேய்ப்பவனிடம் உனக்கென்ன இத்தனை நெருக்கம் என்று ஐயுற்றுக் கேட்ட தாய்க்குத் தலைவி, மேற்போக்காக அப்படி ஒன்று மில்லையே என்று கூறி அவனுடன்தான் ஒன்றுபட்டதையும் விளக்கி விடுகிறாள். 11. பாவோடும் பெண்கள் நடை ஓவியங்கள்! அடடா! நடுவீதியிற் பாவோடும் மடவார் - - நடை இடதுகை திரிவட்டம் எழிலொடு சுழலும் ஏந்தும் வலதுகை வீசுமுன் அசையும் - - நடை தண்டை யாடிடும் காலில்! கெண்டை விழிபோகும் நூலில்! கொண்டை மேலெலாம் நறுமலர்க்காடு கொடியிடை அசையும் மிகஅழகோடு - - நடை உலகினுக் குடை தேவை உடைக்கு வேண்டும் நூற்பாவே உலவும் மங்கைமார் இதனை எண்ணுவார் உயிரும் உணர்வுமாய்த் தொண்டு நண்ணுவார் - நடை - இசையமுது, முதற்பகுதி, ப.5, 1942 குறிப்புரை : உலக மக்கட்கு இன்றியமையாதன உணவு, உடை உறையுள் என்பர். உடைக்குத் தேவை நூற்பாவு - நூலால் ஆகிய பாவு. இதை எண்ணித் தொண்டு செய்கின்றார்கள் அப்பெண்கள். 12. தறித்தொழிலாளி நினைவு இழையெலாம் அவள்பூங் குழலோ! கைத்தறியின் - - இழை பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள் - என் விழியெலாம் அவளையே பொருத்தினாள் தொழில் முடிந்ததும் உணவுண்டு - நான் தூங்கு முன்னே எனைக்கண்டு - மங்கை எழுதினீர்களா மேற்கொண்டு - பதில் என்தாய்க் கென்று கேட்டதுண்டு - தேன் பிழியும் அவளிதழ் தின்றதா பிழை - அவள் பின்னும் என்னிடம் நின்றதா பிழை? - இழை தார்கொண்ட நாடாவைக் கையினால் - நான் தறியில் கோப்பதும் தேவை - அன்றோ? பார்கொண்ட மானத்தை - நான் பாதுகாப்பதும் தேவை - மிகச் சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை - நான் சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை! - இழை - இசையமுது, முதற்பகுதி, ப.6, 1942 குறிப்புரை : என்னை என் மனைவி நெருங்கவிடுவதில்லை. ஒருநாள் தூங்கு முன் அவள் தன் தாய்க்கு அஞ்சல் எழுதினீர்களா என்று கேட்க, எப்படியோ என்னைத் தனியே வந்து கண்டாள், காதல் பதைப்பால் நான் அவளோடு அளவளாயிருந்தேன் இது பிழையா? அதனால் அவளைத் துரத்திவிடுவதா என்று வருந்துகிறான், இது முதலடியின் கருத்து. நான் மக்களின் மானத்தைக் காக்கவும் வேண்டும். அவ்வுழைப் பாகிய கோடையினின்று எனக்குரிய மலர்ச்சோலை (kidÉ)ia அடையவும் அம்மாவும் ஒப்புதல் கேட்க வேண்டுமா? என்பது இரண்டாம் அடியின் கருத்து. 13. உழவன் பாட்டு சென்று பொழுது சாய - வரு கின்றேனடி விரைவாக இன்று தவறினால் ஈரம் போகுமடி இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி - - சென்று வேலி முள்சுமந்த கூலிகொடடி ஆள் வந்தால் - நீ வேளை ஆகுமுன் கொண்டுவா கூழிருந்தால்! வேலைக்காகப் பகல்போதில் உன்னைப் பிரிந்தால் விடியுமட்டும் யார்கேட்பர் காதல் புரிந்தால் - - சென்று சேவல் குரல்கிழியக் கூவல் கேளடி கரும்பு! - நின் ஆவல் தெரியுமடி போக விடைகொடு! திரும்பு! தேவை யிருக்கையில் உன்றன் நெஞ்சோ இரும்பு! சிவலைப் பசுவுக்கோ தீனி வைக்க விரும்பு - - சென்று - இசையமுது, முதற்பகுதி, ப.7, 1942 குறிப்புரை : சேவல் கூவுகிறது. கேளடி கரும்பே. உன் ஆவல் இன்னதென்பது தெரியும் எனக்கு. ஆயினும் விடை கொடு. முகத்தை ஏன் திருப்பிக் கொண்டாய். திரும்பு தேவை யிருக்கையில் அதாவது நான் விரைவாகப் போகவேண்டும் என்ற தேவை எனக்கிருக்கையில் உன் நெஞ்சம் ஒப்ப இளகாத இரும்பாகிறது. இந்த வருத்தத்தில் நம் சிலைக்குத் தீனி வைக்காமல் இருந்துவிடாதே. வைக்க விரும்பு. என்பது இரண்டாம் அடியின் கருத்து. 14. உழத்தி களை யெடுக்கின்றாள் - அதோ கட்டழகுடையாள் சிற்றிடையாள் - அதோ களையெடுக் கின்றாள் வளவயல் தனில் மங்கைமாருடன் இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல் களையெடுக் கின்றாள்! கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா? - அந்தக் கவிதை ஓவியம் எனை விரும்புமா அவிழ்ந்து வீழ்ந்த கருங் கூந்தலாம் அருவி நீரில் எப்போது முழுகலாம்? - களை ... செந்நெல் காப்பது பொதுப்பணி செய்யல்! - ஆம் என்ற நினைவினால் என்னருந் தையல் மின்னுடல் வளைய வளையல்கள் பாட விரைவில் செங்காந்தள் விரல்வாட. - களை ... - இசையமுது, முதற்பகுதி, ப.8, 1942 குறிப்புரை : இளங் கரும்பு சிறப்பில்லை. செங்கரும்பு அதாவது முற்றிய கரும்பு சிறப்புடையது; மற்றப் பெண்களின் நடுவில், தான் விரும்பும் ஒருத்தியை இளங் கரும்பிடைச் செங்கரும்பு என்றான் காதலன். 15. ஆலைத் தொழிலாளி ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின் - சங்கே காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே வேலை செய்தாரே என்வீட்டை மிதிக்கவே - ஆலையின் மேலைத் திசையினில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்த என்கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே - ஆலையின் குளிக்க ஒரு நாழிகை யாகிலும் கழியும் குந்திப் பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற் கொஞ்ச நேரம் அழியும் வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும். - ஆலையின் - இசையமுது, முதற்பகுதி, ப. 9, 1942 குறிப்புரை : அவர் மாலை 5 மணிக்கு வந்தால் குளிப்பது முதலியவற்றிற்குக் கழிந்த நாழிகை போக நானும் அவரும் காதல் இன்பத்தை அடைவதற்குள் வெள்ளி முளைக்கும்படி ஆய்விடுகிறது. ஆகையால் ஆலையின் சங்கே ஏன் இன்னும் ஊதாமல் இருக்கிறாய்? - என்பது இரண்டாம் அடியின் கருத்து. 16. இரும்பாலைத் தொழிலாளி அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள அவ்வுயிரே என்றன் ஆருயிராம்! பழுப்பேறக் காய்ச்சிய இரும்பினைத் தூக்கி உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி - இவ் - அழுக்குத் பழக்காடும் கிளியும் போல்நானும் அத்தானும் பகற்போதைக் கழித்தபின் அவன்கொஞ்ச மேனும் பிழைஇன்றி ஆலைக்குச் சென்று தன்மானம் பேணஇரா வேலையைக் காணா விடிலோ ஊனம் தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக் கண்டு விழிப்போ டிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு. - அழுக்குத் அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம் அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம் இறந்துபடும் உடலோ ஏகிடும் முன்பும் எழில்உள்ளம் நன்மை தீமை இனங்கண்ட பின்பும் அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால் இறந்தார்போல் இருப்பேனா? என்பான் என்அத்தான். - அழுக்குத் - இசையமுது, முதற்பகுதி, ப. 10, 1942 குறிப்புரை : அழுக்குத் துணியுடுத்துள்ள நிலை அழுக்குத் துணிக்குள் இருக் கின்றான் என்று கூறப்பட்டது. அறம் - மாசற்ற நெஞ்சும் செயலும். 17. கோடாலிக்காரன் வெய்யில் தாழ வரச் சொல்லடி - இந்தத் தையல் சொன்ன தாகச் சொல்லடி - வெய்யில் கையில் கோடாலி கொண்டு கட்டை பிளப்பாரைக் கண்டு கொய்யாக் கனியை இன்று கொய்து போக லாகும் என்று - வெய்யில் கூரைக்குப் பின்னால் இருக்கும் தென்னை - அதன் கூட இருக்கும் வளர்ந்த புன்னை நேரினிலே காத்திருப்பேன்! என்னை நிந்திப்பதில் என்னபயன் பின்னை? - வெய்யில் தாய்அயலூர் சென்று விட்டாள் நாளை - சென்று தான்வருவாள் இன்று நல்ல வேளை வாய்மணக்கக் கள்ளொழுகும் பாளை - நாள் மாறி விட்டால் ஆசை எல்லாம் தூளே. - வெய்யில் - இசையமுது, முதற்பகுதி, ப. 11, 1942 குறிப்புரை : கோடாலி - கோடாரியின் மரூஉ. கொய்யாக் கனி - யாராலும் கொய்ய முடியாத பழம். வாய் மணக்கக் கள் ஒழுகும் பாளை - பாளை வாய்மணக்கக் கள் ஒழுகிக் கொண்டிருக்கிறது. நாளை சென்று - நாளை மறுநாள். 18. கூடை முறம் கட்டுவோர் கசங்கு சீவடி பிரம்பு செற்றடி1 கைவேலை முடித்திடலாம் - நம் பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால் பழயதைக் கொடுத்திடலாம் பிசைந்து வைத்துள மாவும் தேனும் பீர்க்கங் கொடியின் ஓரம் - அந்த உசந்த பானை திறந்து கரடி உருட்டிடும் இந்த நேரம் கூடை முறங்கள் முடித்து விட்டேன் காடை இறக்கை போலே - இனி மூடு தட்டும் குழந்தை மூச்சிலும் முடிப்பதுதான் வேலை காடு வெட்டவும் உதவியில்லாக் கழிப்புக் கத்தியைத் தீட்டி - நீ ஏடு பத்தாய் மூங்கில் பிளக்க எழுந்திரு கண்ணாட்டி. சோடி யாக நாமிருவர் கூடி உழைக்கும் போது - நம் ஓடும் நரம்பில் உயிர்நடப்பதை உரைத்திட முடியாது பாடி நிறுத்தி நீகொடுத்திடும் பாக்கு வெற்றிலைச் சருகும் - அத னோடு, பார்க்கும் பார்வையும்என் உயிரினை வந்து திருகும். - இசையமுது, முதற்பகுதி, ப. 12, 1942 குறிப்புரை : கூடைமுறம் கட்யிருக்கும் காதலன், காதலியிடம் கூறியது. 1. செற்றடி - வெட்டடி 19. பூக்காரி சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் - நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன் பூத்தமுகத் தாமரையால் புதுமை காட்டி மயங்கி நின்றாள் - சேர்த்து தேவையடி தாமரைஇதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ் மலர்கின்றாள் - ஒரு பூவைக் காட்டிப் பேர்சொல் என்றேன் பூவை என்பேர் பூவை என்றாள் ஆவல் அற்றவன் போல்நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் - சேர்த்து காவல் மீறிக் கடைக்கு வந்துவிழுந்து - பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ மேவாதடி என்று சொன்னேன் வேங்கையில் ஈமொய்க்கா தென்றாள் தேவைக்கு மணம்வேண்டும் என்றேன் திருமணம் என்று தழுவி நின்றாள். - சேர்த்து - இசையமுது, முதற்பகுதி, ப.13, 1942 குறிப்புரை : அவள்மேல் ஆவல் இல்லாதவன்போல் நான் விலகி நடந்தேன். அப்போது அவள் விழியில் அலரி - அலரிப்பூ போன்ற செந்நிறத்தைக் கண்டேன். அதாவது அவள் எரிச்சல் அடைந்தாள். மேவாதடி - உனக்கும் எனக்கும் பொருந்தாதடி என்றேன். அதற்கவள் நான் வேங்கைமலர்; ஈ மொய்த்ததில்லை என்று தன் கற்பை விளக்கினாள். 20. குறவர் காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனள் சாடச் சாட ஒருபுறப் பறை தகதக வென் றாடினாள் போடப் போடப் புதுப்புதுக் கை புதுப்புதுக்கண் காட்டினாள். ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள். தேடத் தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்புகள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே! - இசையமுது, முதற்பகுதி, ப.14, 1942 குறிப்புரை : ஒருபுறப் பறை - குறவர் பறை. முறிப்பும் முத்தமும் - உள்ளங்கை மூடித் தலையில் இரட்டை முறித்து முத்தங் கொடுத்தல். நொடிப்பு - சிற்றசைவு. 21. தபாற்காரன் வருகின்றார் தபால்காரர் - கடிதம் தருகின்றாரோ இல்லையோ - வருகின்றார் தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக் குரியதோ என்தந்தைக் குரியதோ! - வருகின்றார் வரும்அக் கடிதம் அவர்வரைந்ததோ மாமியார் வரைந்ததோ திருமணாளர் வரைந்த தாயினும் வருவதாய் இருக்குமோ இராதோ! - வருகின்றார் அன்பர்அவர் வருவதாயினும் ஆடி போக்கியோ, விரைவிலோ இன்று போதல்நூ றாண்டு போதலே அன்றி நாளைஎன் பதுவென் சாதலே. - வருகின்றார் - இசையமுது, முதற்பகுதி, ப.15, 1942 குறிப்புரை : ஆடித் திங்கள் என்று தாய் வீட்டுக்கழைத்துச் செல்லப்பட்ட புதுப்பெண் பிரவு ஆற்றாது துன்புறுகிறாள். அவரைப் பிரிந்து இன்றைய பொழுதைப் போக்குவது நூறாண்டுகளைப் போக்குவது நூறாண்டுகளைப் போக்குவது போலிருக்கும். நாளைக்குத்தான் அவர் வருவார் என்று முடிந்தால் அது எனக்குச் சாவை உண்டாக்கும் என்கிறாள். 22. சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் மந்தையின் மாடு திரும்பையிலே - அவள் மாமன்வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள் - அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைந்திட வேட்டி கட்டி - அவன் தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக்கொடுத் திட்டாண்டி - அவன் எட்டி ஒரேமுத்தம் இட்டாண்டி! கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள் - அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள் - அவன் தோளை அவள்ஓடித் தேய்த்து நின்றாள்! கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ - இந்தக் கோடை படுத்திடும் நாளில்? என்றாள் தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான் - நீ தொட்ட இடத்தில் சிலிர்க்குதென்றான்! - இசையமுது, முதற்பகுதி, ப.16, 1942 குறிப்புரை : இது சுண்ணாம்பு இடிக்கும் பெண்களில் ஒருத்தியைப் பற்றி மற்றொருத்தி, தன் தோழிமாரிடம் கூறுவது. அவள் கேட்டாள் கடைசியாக: இந்தக் கோடையில், தொட்டியில் நான் நிரப்பிய தண்ணீர் குளிரைச் செய்கிறதல்லவா? அவன்: அந்தத் தண்ணீர் கொதிக்கிறது. ஆனால் உடம்பு தேய்ப்பதால் நீ தொடுகின்ற இடத்தில் சிலிர்க்கின்றது என்று பதில் கூறுகின்றான். 23. ஓவியக்காரன் ஓவியம் வரைந்தான் - அவன் தன் உளத்தினை வரைந்தான்! ஒல்லிஇடை எழில் முல்லைநகை இரு வில்லை நிகர்நுதல் செல்வியை வைத்தே - ஓவியம் கூவும் குயில்தனைக் கூவா திருத்திக் கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித் தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே - ஓவியம் fhjiy¡ f©Âny it!என்று சொல்வான் கணவனாக என்னை எண்ணென்று சொல்வான் ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான் இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான் கோதை அடியில்தன் கைகூப்புதல் போலவும் கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும். - ஓவியம் - இசையமுது, முதற்பகுதி, ப.17, 1942 குறிப்புரை : ஓவியக்காரன், மங்கையொருத்தியை எதிரில் இருத்தி அவள்போல் எழுதுகின்றான். மேலும் அவன் தன் உள்ளத்தில் அவள்பற்றி எழும் எண்ணத்தை வரைகின்றான். கடைசி இரு வரிகளை நோக்குக! தான் அவள் காலைத் தொழுவது போலவும் அவள் அதற்கு மகிழ்ந்து ஒப்பியது போலவும் எழுதி முடிக்கிறான். 24. ஆடுகின்றாள் நேரிசை வெண்பா கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த புலையுலகம் போக்கினேன்; போக்கிக் - கலையுலகம் சென்றேன்; மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள் நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு. 1 விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும் - சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்! அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து. 2 சதங்கைகொஞ்சும் பாதம் சதிமிதிக்கும், வானில் மிதக்கும்அவள் தாமரைக்கை மேலும் - வதங்கலிலாச் சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல் கண்கவரும் செம்பவளக் காம்பு. 3 செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத் தந்தோம்என் னும்தாள மத்தளங்கள் - பந்தியாய் இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின் வன்னஇடை வஞ்சிக் கொடி. 4 கோவை உதட்டை ஒளிதழுவும், அவ்வொளியில் பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும் - தாவும்அதைக் கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப் பண்ணால் உயிரில்வைத்தாள் பார். 5 இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும் களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன் - உளமார நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும் ஆனந்தத் தின்வசமா னேன். 6 - காதல் நினைவுகள், ப.7, 1946 25. காதலற்ற பெட்டகம் பஃறொடை வெண்பா உள்ளம் உருக்கி, உயிர்உருக்கி, மேல்வியர்வை வெள்ளம் பெருக்கியே மேனி தனைப்பொசுக்கி ஓடையின் ஓரம் உயர்சோலைக் குள்என்னைக் கோடை துரத்திடநான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். பட்டு விரித்த பசும்புல்லின் ஆசனமும் தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும் போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும் சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன், தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம் ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்! கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப் பட்டத் தரசாக வீற்றிருந்த பாங்கினிலே கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத் தேய்ந்த வழிநடந்தேன்! - காதல் திருவுருவம்! ஒன்றி உளத்தை உறிஞ்சிவிட அப்படியே நின்றேன் வனிதை நெடுமா துளைஅருகில்! தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட தீங்கனியி ரண்டு தெரிய இருக்குமெழில் மாதுளையே, கேளாய் மலர்ச்சோலை நீ! நான்தான். வாதுண்டோ என்றேன். மலர்க்கண் சிவந்துவிட்டாள்! பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல் துள்ளி விழுந்து சுவைத்த சுவைக்கிடையில் தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு மாயமருந் தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவாம் மாதுளமும் அங்கும் வருஷிக்கும் பேரன்பும் தீதின்றி வாழ்க செழித்து! - காதல் நினைவுகள், ப.9, 1946; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் 1935 26. காதலன் காதலிக்கு பறந்துவா! விருத்தம் - 1 காதலியே! என்விழிஉன் கட்டழகைப் பிரிந்ததுண்டு! கவிதை ஊற்றிக் கனிந்ததமிழ் வீணைமொழி என்செவிகள் பிரிந்ததுண்டு! கற்கண் டான மாதுனது கனியிதழைப் பிரிந்ததுண்டென் அள்ளூறும் வாய்தான்! ஏடி மயிலே மயிலே, உன் உடலான மலர்மாலை பிரிந்ததுண்டென் மார்ப கந்தான்! ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயலில்லை; மீதமுள்ள ஆவி ஒன்றே அவதியினாற் சிறுகூண்டிற் பெரும்பறவை ஆயிற்றே! அன்பு செய்தோன் சாதல்அடைந்தான் எனும்ஓர் இலக்கியத்தை உலகுக்குத் தந்தி டாதே! சடுதியில்வா! பறந்துவா! தகதகென முகம்காட்டு தைய லாளே! - காதல் நினைவுகள், ப. 11, வெளியீடு - 2, 1946; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் 1935 27. காதலி காதலனுக்கு (பதில்) பறப்பதற்குச் சிறகில்லை விருத்தம் - 2 காதல, நான் பிழைசெய்தேன்; என்ஆசை உன்மனத்தில் கழிந்த தென்று கருதினேன்! கடிதத்தைக் கண்டவுடன் களிப்புற்றேன்! களிப்பின் பின்போ வாதையுற்றேன்! பறப்பதற்குச் சிறகில்லை! காற்றைப்போல் வந்தே னில்லை வனிதைஇங்கே - நீஅங்கே! இடையில்இரு காதங்கள் வாய்த்த தூரம் சாதலுக்குக் காரணம்நான் ஆகேன்என் சாகாம ருந்தே! செங்கை தாங்கென்னை; உன்றன்நெடும் புயத்தினில்நான் வீழ்வதற்குத் தாவு கின்றேன் நீதூரம் இருக்கின்றாய் ஓகோகோ நினைப்பிழந்தேன் என்து ரையே! நிறைகாதல் உற்றவரின் கதியிதுவோ! என்செய்கேன் நீணி லத்தே! - காதல் நினைவுகள், ப.12, 1946 ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், வெளியீடு - 2, 1935 28. இன்னும் அவள் வரவில்லை எண்சீர் ஆசிரிய விருத்தம் மங்கையவள் வீட்டினிலே கூடத்துச் சுவரில் மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெயுமோ மேற்கில் தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும் யானை செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ! சிறுபுட்கள் இன்னும்ஏன் திரிந்தனவான் வெளியில்! திங்கள்முகம் இருள்வானில் மிதக்கஅவள் ஆம்பற் செவ்வாயின் இதழினிக்க இன்னும்வர விலையே! மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும் வயல்விட்டு வீட்டுக்கு வந்தபா டில்லை. துணியுலர்த்தி ஏகாலி வீடுநுழைந் திட்டால் தொலையாத மாலைதான் தொலைந்துபோ மன்றோ! அணியிரவும் தூங்கிற்றோ காலொடிந்த துண்டோ! அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்துவர வில்லை! பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே பேரின்பம் எனக்கருள இன்னும்வர விலையே! முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற பொல்லாத மாலைக்குப் போக்கிடமா இல்லை? பூங்கொடியாள் வருவதாய் நேற்றெனக்குச் சொன்ன நல்லஇரா வருவதற்கு வழிதானோ இல்லை? நானின்பம் எய்துவதில் யாருக்குத் துன்பம்? சொல்லைத்தேன் ஆக்கிஎனை அத்தான்என் றள்ளிச் சுவைக்கடலில் தள்ளஅவள் இன்னும்வர விலையே! பெருமக்கள் கலாம்விளைக்கும் மாலைமறத் திட்ட பிறகுவரும் நல்லிரவு! யாவருமே துயில்வார்! திருமிக்காள் தன்வீட்டுப் படிஇறங்கும் போதில் சிலம்பொலியும் இவ்விடத்தில் கேட்டிடும்என் காதில்! உருமிக்க பெரும்புறத்துக் கரும்பாம்பின் தீய ஒளிமாலை விழிஇன்னும் மூடாத தேனோ! புருவத்து வில்எரியும் நீலமலர் விழியாள் புத்தமுதம் எனக்குதவ இன்னும்வர விலையே! சிற்றுளிக்கும் பிளவுபடா வல்இரும்பு போல்வாள் தேனூற எனைநோக்கி வாய்மலர்ந்து நின்றே நற்றுளிகள் அமுதமுதாய் நன்கருள்செய் திட்டாள் நள்ளிரவில் அத்தானே நான்வருவேன் என்றே! வெற்றொளியும் வெறுந்தொழிலும் மிகும்மாலை என்னும் விழல்மடிய இருளருவி எப்போது பாயும்? பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம் புதிதுபுதி தாய்நல்க இன்னும்வர விலையே! மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும் வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே! நாற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை நடுவிருந்து தடுக்கின்றான் பரிதி;அவன் செய்கை மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன் மையலினை நான்பொறுக்க ஒருவழியுங் காணேன் சேற்றிற்செந் தாமரையாம் இரவில்அவள் தோற்றம்! தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வர விலையே! - காதல் நினைவுகள், ப.13, 1946 29. சொல்லித்தானா தெரியவேண்டும் தாயிருக்கையில் தனமிருக்கையில் சஞ்சல மென்ன மானே - நல்ல பாயிருக்கையில் புழுதித் தரையில் படுத்துப் புரளும் தேனே! வாயிருக்கையில் கேளடி நல்ல வான நிலவும் கொடுப்பேன் - இன்று நீயிருக்கிற நிலைசகியேன் நிலத்தினிலே உயிர்விடுப்பேன். என்ன குறைச்சல்? எதினில் தாழ்த்தி? யானை போல அப்பா - நீ சொன்ன நொடியில் குறைதவிர்ப்பார்! சொல்லுவதும் தப்பா? சின்ன இடுப்பு நெளிவதென்ன சித்திரப் புழுப்போலே - அடி கன்னி உனக்குக் கசந்ததுவோ காய்ச்சிய பசும்பாலே? அண்ணன்மார்கள் பாண்டியர்கள் ஆசைக் கொருதம்பி - அவன் எண்ண மெல்லாம் உன்னிடத்தில்! ஏற்ற தங்கக் கம்பி தண்ணென் றிருந்த உனதுமேனி தணல்படுவது விந்தை - உன் கண்ணில் கண்ட அத்தானுக்குக் கலங்கியதோ சிந்தை! - காதல் நினைவுகள், ப.16, 1946 30. அவள்மேற் பழி கைப்பிடியில் கூட்டி வரக் கட்டளை இட்டாள் எனநீ செப்புகின்றாய் வாழியவே வாழி - நான் ஒப்பவில்லை என்றுரைப்பாய் தோழி! தேரடியில் கண்ட அவள் தேனிதழைத் தந்தவுடன் ஊருக்கெனைக் கூட்டிச் செல்க என்றாள் - தன்னை யாருக்குமுன் வாக்களித் திருந்தாள்? சோலையிலே வஞ்சியினைத் தொட்டிடுமுன் சேல்விழியாள் நாலுதரம் சுற்று முற்றும் பார்த்தாள் - எந்தக் காலிக்கவள்அஞ்சி முகம்வேர்த்தாள்? கோட்டைவழி என்னை வரக் கூறி அவள் நான் வருமுன் பாட்டையிலே ஏன் தனித்து நின்றாள்? - எனைக் கூட்டிவரப் பசப்புகின்றாள்? வல்லியினை முத்தமிட்டேன் வாய்த்த என்றன் மேனியினை மெல்ல அவள் ஏன் தடவவேண்டும்? - வேறு நல்ல உடலோ அவட்கு வேண்டும்? புன்னகையும் பூப்பதில்லை! புதுமலரும் தீண்டவில்லை; என் நினைவால் வாடுகின்றாள் என்றாய் - அன்று சன்னலிலே யாருக்காக நின்றாள்? தொத்துகிளி யாள்எனது தோளின் மிசை வந்திருக்கப் பித்துமிகுந் தாள் என மொழிந்தாய் - அவள் இத்தெருவில் யாருக்காக வந்தாள்? ஆடுமயில் என் உளத்தை ஆடரங்கம் ஆக்கிவிட நாடி நலிந்தாள் எனச்சொல் கின்றாய் - அவள் மாடியிலே ஏன்ஒருநாள் நின்றாள்? - காதல் நினைவுகள், ப.17, 1946 31. அவளை மறந்துவிடு மறந்துபோ நெஞ்சே அந்த வஞ்சியை நினைக்க வேண்டாம் இறந்துபோ என்றே என்னை இவ்விடம் தனியே விட்டாள்! பறந்துபோ இரவே என்றேன் எருமையா பறந்து போகும்? உறங்கவே இல்லை கண்கள் ஒட்டாரம் என்ன சொல்வேன்? 1 மருந்துகேள் அவளை நெஞ்சே மறந்துபோ துன்பம் இல்லை! இருந்தொன்றை நினைப்பேன்; அந்த ஏந்திழை குறுக்கில் தோன்றி அருந்தென்பாள் கனியு தட்டை அவள்அங்கே இருந்தால் தானே? வரும்தென்றல்! தொடுவாள் என்னை மலர்மேனி இருந்தால் தானே? 2 பாலோடு சீனி யிட்டுப் பருகுவேன் அங்குத் தோன்றி மேலோடு வார்த்தை சொல்லி விரைவோடு மறைந்து போவாள் சேல்ஓடும் போது பின்னே சிச்சிலி விழிகள் ஓடல் போலோடி ஏன்அ வள்பால் பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே! 3 ஏட்டினில் கவிதை தன்னில் இவளைத்தான் காணு கின்றேன். கூட்டினிற் கிளியும் வானில் குளிரிளம் பிறையும் என்றன் வீட்டினில் திருவி ளக்கும் அவளெழில் விளக்கல் அன்றிக் காட்டவே இல்லை என்றன் கவலைக்கு மருந்து நெஞ்சே! 4 எனைக்கண்ட தோழன் காதில் ஏந்திழை பிரிந்த துன்பம் தனைச்சொன்னேன் அந்தத் தீயோன், தையலாள் வரும்வ ரைக்கும் நினக்குயிர் வேண்டும்; அன்னாள் நினைவினால் வாழ்க என்றான் எனக்கது சரிப்ப டாது மறந்துபோ எனது நெஞ்சே! 5 - காதல் நினைவுகள், ப.19, 1946 32. காதல் இயற்கை மறவன் சொல்லுகிறான்; கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக் கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி மண்ணிடையே வாழ்வேனை உனது மையல் மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே! எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை ஏதேதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ? தண்ணிழலைத் தாவுகின்றேன்; சாதி பேதத் தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்ப துண்டோ? குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன? குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்! மறவேந்தன் மகன்நான்தான். வார்த்தை பேதம் மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை? அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும் புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப் புனிதமடி ஒத்தஉளத் தெழுந்த காதல். குறத்தி சொல்லுகிறாள்; கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும் கைகலக்கும் போதுகல வாதே என்று பெரும்புவியே நீசொன்னாய் ஐய கோஉன் பேதமைக்கு நான்அஞ்சும் அச்சத் தாலே அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான் அயர்கின்றான், அயர்கின்றேன், ஒன்று பட்டு விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்! உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில் உடல்எரிதல் யானறிவேன் அறியார் மற்றோர் தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை? தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ? அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே; அந்தோ அந்தோ துடுக்கடங்கி னாய்மூட வழக்கத் தாலே!  இயற்கை சொல்லுகிறது: காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர் கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ? ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென் இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்! குறத்தி சொல்லுகிறாள்: மோதவரும் ஆணழகே வாவா வாவா முத்தம்வை இன்னொன்று; வைஇன் னொன்று மறவன் சொல்லுகிறான்: மாதரசி கனியிதழோ தேனோ - சாதி வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே! - காதல் நினைவுகள், ப.21, 1946 33. பிசைந்த தேன் அகவல் பெண்ணே பாராய், பெண்ணே பாராய், வெண்ணெயில் மாப்பிசைந்து, விரிந்த உள்ளங்கை ஒன்று கீழுற, மற்றொன்று மேலுற மாற்றி மாற்றி வடைதட்டி இட்டும் ஊற்றிய நெய்யில் ஒய்என வேகுவதில் இட்டவிழி எடாமலும், இருக்கும் ஓவியப் பெண்ணே பாராய், பெண்ணே பாராய்! இருவர்நாம் ஒன்றாய் இருந்துநம் விழிநான்கு காண, இரண்டு கருத்தும் கலந்தபடி ஒரேநே ரத்தில் நம்உயிர் இன்புறுவதை விரும்பு கின்றேன்; வீதியில் நடப்பது கரும்பான காட்சி, காதுக்கு நறுந்தேன்! தனித்திருந்து காண்என்று சாற்றி விடாதே! சன்ன லண்டை என்னிடம் விரைவில் பெண்ணே வாராய், பெண்ணே வாராய்! பார்த்தனை யோஎன் பச்சை மயிலே! புதிதிற் பூத்த பூங்காடு தான்அது! நான்அதைப் பெண்ணென்று நவில மாட்டேன் அக்காட்டின் நடுவில் அழகுடன் மணத்துடன் செக்கச் செவேலெனச் செந்தா மரைபார்! அதைஅவள் வாய்என்று அறைய மாட்டேன் அம்மலர் இரண்டிதழ் அவிழ்த்தது பார்நீ நான்அதை உதடுஎன்று நவில மாட்டேன். இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள் வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்? அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியொடு, பிசைந்ததேன் கேள்கேள் அதனை இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே! - காதல் நினைவுகள், ப.23, 1946 34. எங்களிஷ்டம் எழுசீர் ஆசிரிய விருத்தம் தென்றல் விளைந்தது. முல்லை மலர்ந்தது. தீங்குரற் பக்ஷிகள் பாடின. குன்று நற்சோலை விநோத மலர்க்குலம் கோலம் புரிந்தன எங்கணும். நின்றிருந் தான்தனி யாய்ஒரு வாலிபன் நேரிலோர் தாமரைப் பூவிலே அன்புறு காதலி யின்முகங் கண்டனன்; ஆம்பலில் கண்டனன் அவள்விழி! கோதை இடைதனைப் பூங்கொடி தன்னிலும், கோவைப் பழத்தினில் இதழையும், காதலன் கண்டனன்; கங்கைப் பெருக்கெனக் காதற் பெருக்கிற் கிடந்தனன்! சீதள மென்மலர் தன்முக மீதினில் சில்லென வீழ்வது போலவே காதலி அக்கணம் பின்புற மேவந்து கண்களைப் பொத்தினள் செங்கையால்! கையை விலக்கித் திரும்பினன் காதலன் காதலி நிற்பது கண்டனன்! துய்யவன் நெஞ்சும் உடம்பும் சிலிர்த்தன சுந்தரி தன்சிரிப் பொன்றினால்! கொய்மலர் மேனியை அள்ளிடு வான்அவள் கோபுரத் தோளில் அழுந்துவாள்! செய்வது யாதுபின்? இன்பநற் கேணியிற் சேர்ந்தனர் தம்மை மறந்தனர்! காதலர் இவ்விதம் இங்கிருந் தார்இதைக் கண்டனர் கேட்டனர் ஊரினர்! ஏது விடோம்என அத்தனை பேர்களும் எட்டி நடந்தனர் சோலைக்கே. பாதி மனிதர்கள் கோபத்திலே தங்கள் பற்களை மென்றனர் பற்களால்! மீதியி ருந்தவர் கத்திநற் கேடயம் வேலினைத் தூக்கி நடந்தனர்! நின்றதோர் ஆல மரத்திடை வீழ்தினை நேரிற் பிணைத்ததோர் ஊஞ்சலில் குன்றுயர் தோளினன் வீற்றிருந்தான் அந்தக் கோல நிலாமுகப் பெண்ணுடன்! சென்றனர் கண்டனர் காதலர் தங்களைச் சீறினர்! பாய்ந்தனர் சிற்சிலர். கொன்று கிடத்திட வேண்டுமென் றேசிலர் கோலையும் வேலையும் தூக்கினர். பொய்தவிர் காதல் எனப்படும் காம்பினில் பூத்த அப்பூக்கள் இரண்டையும் கொய்து சிதைத்திட ஓடினர் சிற்சிலர் குன்றிட வைதனர் சிற்சிலர்! வையக மீதினில் தாலி யிழந்தவள் மையல் அடைவது கூடுமோ? துய்யம ணாளன் இறந்தபின் மற்றவன் தொட்டதை வைதிகம் ஏற்குமோ? என்றிவை கூறினர் ஊரினர் யாவரும்! இங்கிவை கண்டனர் காதலர் குன்றினைப் போல நிமிர்ந்தனர்! கண்ஒளி கூர்ந்தனர்! அச்சம் தவிர்ந்தனர்! இன்றுள தேசம் புதுத்தே சம்,மணம் எங்களிஷ் டம்எனக் கூறியே அன்னதோர் ஊஞ்சலை உந்தி உயர்ந்துயர்ந் தாடினர்; ஊரினர் ஓடினர்! - காதல் நினைவுகள், ப.25, 1946 35. வாளிக்குத் தப்பிய மான் கணக்கப் பிள்ளையின்மேல் - அவளோ கருத்தை வைத்திருந்தாள். மணக்கும் எண்ணத்தினை - அவளோ மறைத்து வைத்திருந்தாள். பணக்கு வியல்தனைப் - பெரிதாய்ப் பார்த்திடும் வையத்திலே, துணைக்கு நல்லவனின் - பெயரைச் சொல்வதும் இல்லைஅவள். 1 அழகிய கணக்கன் - உளமோ அவள்அழ கினிலே முழுகிய தன்றி - மணக்கும் முயற்சி செய்ததில்லை, புழுதி பட்டிருக்கும் - சித்திரம் போல இரண்டுளமும் அழிவு கொள்ளாமல் - உயிரில் ஆழ்ந்து கிடந்தனவாம். 2 மணப்பிள்ளை தேடி - அலைந்தே மங்கையின் பெற்றோர்கள் பணப்பிள்ளை கிடைக்க - அவன்மேல் பாய்ந்து மணம்பேசி இணக்கம் செய்துவிட்டார் - மணமும் இயற்ற நாள்குறித்தார். மணத்தின் ஓலைப்படி - நகரின் மக்களும் வந்திருந்தார். 3 பார்ப்பனன் வந்துவிட்டான் - மணத்தின் பந்தலில் குந்திவிட்டான். கூப்பிடும் மாப்பிள்ளையைப் - பெண்ணினைக் கூப்பிடும் என்றுரைத்தான் ஆர்ப்பாட்ட நேரத்திலே - ஐயகோ ஆகாய வீதியிலே போய்ப்பாடும் மங்கையுள்ளம் - கணக்கன் பொன்னான மேனியினை! 4 கொட்டு முழக்கறியான் - கணக்கன் குந்தி இருந்தகடை விட்டுப் பெயர்ந்தறியான் - தனது வீணை யுளத்தினிலே கட்டிச் சருக்கரையைத் - தனது கண்ணில் இருப்பவளை இட்டுமிழற்று கின்றான் - தனதோர் ஏழ்மையைத் தூற்றிடுவான். 5 பெண்ணை அழைத்தார்கள் - மணமாப் பிள்ளையைக் கூப்பிட்டனர் கண்ணில் ஒருமாற்றம் - பிள்ளைக்குக் கருத்தில் ஏமாற்றம் பண்ணுவதாய் உரைத்தீர் - நகைகள் பத்தும் வரவேண்டும் எண்ணுவதாய் உரைத்தீர் - தொகையும் எண்ணி வைக்கவேண்டும் 6 என்றனன் மாப்பிள்ளைதான் - பெண்ணினர் இன்னும் சிலநாளில் ஒன்றும் குறையாமல் அனைத்தும் உன்னிடம் ஒப்படைப்போம். இன்று நடத்திடுவாய் - மணத்தை என்று பகர்ந்தார்கள். இன்று வரவேண்டும் - அதிலும் இப்பொழு தென்றுரைத்தான். 7 நல்ல மணத்தைமுடி - தொகையும் நாளைக்கு வந்துவிடும். முல்லைச் சிரிப்புடையாள் - அழகு முத்தை மணந்து கொள்வாய். சொல்லை இகழாதே - எனவே சொல்லியும் பார்த்தார்கள். இல்லை. முடியாது - வரட்டும் என்று மறுத்துவிட்டான். 8 மங்கையைப் பெற்றவனும் - தனது வாயையும் நீட்டிவிட்டான். அங்கந்த மாப்பிள்ளையும் - வாலினை அவிழ்த்து விட்டுவிட்டான். பொங்கும் சினத்தாலே - வந்தவர் போக நினைக்கையிலே தங்கம் நிகர்த்தவளின் - அருமைத் தந்தை உரைத்திடுவான். 9 இந்த மணவறையில் - மகளுக் கிந்த நொடியினிலே. எந்த வகையிலும்நான் - மணத்தை இயற்றி வைத்திடுவேன். வந்துவிட்டேன் நொடியில் - எனவே வாசலை விட்டகன்றே அந்தக் கணக்கனிடம் - நெருங்கி அன்பு மகளினை நீ 10 வந்து மணம்புரிவாய் - என்றனன் மறுத்து ரைப்பானோ? தந்த நறுங்கனியைக் - கணக்கன் தள்ளி விடுவானோ? முந்தை நறுந்தமிழைத் - தமிழன் மூச்சென்று கொள்ளானோ? அந்த நொடிதனிலே - கணக்கன் ஆடி நடக்கலுற்றான். 11 ஆசைக் கொருமகளே - எனதோர் அன்பில் முளைத்தவளே காசைக் கருதிவந்தான் - அவனோ கண்ணாலத்தை மறுத்தான் காசைக் கருதுவதோ - அந்தக் கணக்கனைக் கண்டு பேசி மணம்முடிக்க - நினைத்துன் பெற்றவர் சென்றுவிட்டார். 12 ஏழைஎன் றெண்ணாதே - கணக்கன் ஏற்ற அழகுடையான். தாழ இருப்பதுவும் - பிறகு தன்தலை நீட்டுமன்றோ! ஏழையென் றெண்ணாதே - எனவே ஈன்றவள் சொன்னவுடன் ஏழெட்டு வார்த்தைகள்ஏன்? - மாப்பிள்ளை யார் என்று கேட்டனள்பெண். 13 அந்தக் கணக்கப்பிள்ளை - எனவே அன்னை விளக்கிவிட்டாள் குந்தி இருந்தமயில் - செவிகள் குளிரக் கேட்டவுடன் தொந்தோம் எனஎழுந்தே - தனது தோகை விரித்தாடி வந்த மகிழ்ச்சியினைக் - குறிக்க வாயும் வராதிருந்தாள். 14 அந்த மணவறையில் - உரைத்த அந்த நொடியினிலே அந்தக் கணக்கனுக்கும் - அவளின் ஆசை மயில்தனக்கும் கொந்தளிக்கும் மகிழ்ச்சி - நடுவில் கொட்டும் முழக்கிடையில் வந்தவர் வாழ்த்துரையின் - நடுவில் மணம் முடித்தார்கள். 15 சிங்கக் குழந்தைகளை - இனிய செந்தமிழ்த் தொண்டர்களைப் பொங்கும் மகிழ்ச்சியிலே - அங்கமே பூரிக்க ஈன்றிடுக. திங்களும் செங்கதிரும் - எனவே செழிக்க நல்லாயுள் இங்கெழும் என்வாழ்த்து - மொழிகள் எய்துக அவ்விருவர்! 16 - காதல் நினைவுகள், ப.28, 1946 36. தும்பியும் மலரும் மகரந்தப் பொடியைத் தென்றல் - வாரிக்கொண் டோடி அகம்நொந்த தும்பிஎதிர் - அணியாகச் சிந்தும்! வகைகண்ட தும்பிதன் - வயிடூரி யக்கண் மிகவே களிக்கும் அவள் - விஷயந் தெரிந்தே! பூப்பெய்தி விட்டாள்என் - பொற்றாம ரைப்பெண் மாப்பிள்ளை என்னை அங்கு - வரவேண்டு கின்றாள் நீர்ப்பொய்கை செல்வேன்என - நெஞ்சில் நினைக்கும்; ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை - அவளுக் கனுப்பும்! அழகான பொய்கை மணி - அலைமீது கமலம் பொழியாத தேனைத் தன் - புதுநாதன் உண்ண வழிபார்த் திருந்தாள் உடல் - மயலாற் சிவந்தாள். தழையும் பண்ணொன்று வரத் - தன்மெய் சிலிர்த்தாள். கமழ்தாமரைப் பெண் இதழ்க் - கலைசோரக் கைகள் அமையாது தாழ ஆ - ஆ!! என்றிருந்தாள். இமைப்போதில் தும்பி காதல் - இசைபாடி வந்தான் கமழ்தாமரைப் பெண் இதழ்க் - கையால் அணைத்தாள். - காதல் நினைவுகள், ப.34, 1946 37. தமிழ் வாழ்வு அகவல் மாலையில் ஒருநாள் மாடியின் சன்னல் திறக்கப் பட்டது சேயிழை ஒருத்தி, முத்தொளி நெய்து முடித்த ஆடையும், பத்தரை மாற்றுப் பசும்பொன் மேனியும் உடையவ ளாக உலவு கின்றதை மருது தனது மாடியி னின்று கண்டான்; உவப்பிற் கலந்து நின்றான்! இரண்டு மாடியும் எட்டி இருந்ததால் மருதுபெண் ணழகை அருகி லிருந்து காணும் பேறுகா ணாது வருந்தினான்! தூயாள் முகத்தொளி தோன்றும்; அம்முகச் சாய லின்பம் தன்னைக் காண்கிலான்! உதடு மாணிக்கம் உதிர்ப்பது தெரியும்; எனினும் அவளின் இதழின் கடையில் சிந்தும் அழகின் சிறுகோடு காணான்! அவள்நடை, களிமயில் ஆடும் ஆட்டம்! எடுத்தடி வைப்பாள், எழிலிடை துவளும்; துடித்துப் போவான் தூய மருது! பொழுது மங்கிப் போவதை எண்ணி அழுதான் மறையுமே அவள்எழில் என்று! கண்கள் இருண்டன! கதிரவன் மறைந்தான்! பெண்ணழ கேஎனப் பிதற்றிக் கிடந்தான். மறுநாட் காலையில் மருதும் சீனுவும் பெரிதும் மகிழ்ச்சியொடு பேசி யிருந்தனர். இடையில் சீனு இயம்பு கின்றான்; அவளோ அழகின் அரங்கு! நீயோ இந்நாள் உற்ற இன்னொரு சேரன்; ஒத்த வயதும், ஒத்த அன்பும், உள்ள இருவரின் உயர்ந்த காதலை ஓராயிரம் ஆண்டுக் கொருமுறை யாக இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டுமே! இதற்குமுன் உனக்கென ஏற்பாடு செய்த கன்னல் என்னும் கசக்கும் வேப்பிலையை என்ன வந்தாலும் இகழ்ந்து தள்ளிவிடு! மாடியில், நேற்று மாலை நீகண்ட ஆடுமயி லின்பெயர் அகல்யா என்பதாம் அவள்உனக் கேதான் இவண்பிறந் துள்ளாள்; பச்சை மயிலுக்குப் பாரில் நீபிறந்தாய்; அவள்மேல் நீஉன் அன்பைச் சாய்த்ததைச் சொன்னேன்; உன்னைத் தொடஅவள் துடித்தாள் மங்கை அழகுக்கு மன்னன் ஒருவன் அங்காந் திருப்பதை அவளும் அறிவாள்; அவனைத் துரும்பென அகற்றி, நெஞ்சில் உவகை பாய்ச்சிஉன் உருவை நட்டாள்! அன்னை தந்தையர்க் கவளோ ஒருபெண், என்ன செய்வார்? ஏந்திழை சொற்படி உன்னை மருகனாய் ஒப்பி விட்டனர். முதலில் உன்றன் முழுச்சொத் தினையும் இதுநாள் அவள்மேல் எழுதிவைத் துவிடு! நகைகளைக் கொடுத்தால் நான்கொண்டு கொடுப்பேன். பிறகுதான் அவளிடம் பேச லாகும்நீ பார்ப்பதும் பிறகுதான்! பழகலும் பிறகுதான்! குலதரு மத்தைக் குலைக்க லாகுமா? என்று சீனு இயம்புதல் கேட்ட இளையோன், நண்பனே இன்னொரு முறைஅக் கிளியை மாடியில் விளையா டவிடு; மீண்டும் நான்காண விரும்பு கின்றேன் என்று கெஞ்சினான்! ஏகினான் சீனு! மாடியின் சன்னலை மங்கையின் கைகள் ஓடித் திறந்தன. ஒளிவிழி இரண்டும் எதிர்த்த மாடியில் இருந்த மருதுமேல் குதித்தன. மங்கைமேல் குளிர்ந்தன அவன்விழி. அவன்விழி அவள்விழி அன்பிற் கலந்தன அகல்யா சிரித்தாள். அவனும் சிரித்தான் கைகள் காட்டி கருத்து ரைத்தார்கள் என்சொத் துக்களை உன்பே ருக்கே எழுதி வைக்கவா? என்றான் மருது! வேண்டாம்! உன்றன் விருப்பம் வேண்டும் என்றுகை காட்டினாள் எழிலுறும் அகல்யா. அழகிய நகையெல்லாம் அனுப்பவா? என்றான் வேண்டாம் என்று மென்னகை அசைந்தாள். இன்று மாலை இவ்வூர்ப் புறத்தில் கொன்றையும் ஆலும் கொடும்பாழ் கிணறும் கூடிய தனியிடம் நாடிவாஎன்று மங்கை உரைத்து மலருடல் மறைந்தாள் சொத்துவேண் டாம்உன் தூய்மை வேண்டும் நகைவேண் டாம்உன் நலமே வேண்டும். என் றுரைத்தாள் அகல்யா; ஊர்ப்புறக் கொன்றை மரத்தின் அருகில்வா என்று சொன்னாள். என்று சீனுவிடம் இயம்பினான் மருது. நன்று நன்று நான்போ கின்றேன் என்று சீனன் எரிச்சலாய்ச் சென்றான். மாலையிற் கதிரவன் மறையும் போதில் ஆலின் அடியில் அகல்யா அமர்ந்துதன் இன்பன் வரவை எதிர்சென் றழைக்க அன்பைத் தன்மொழி யதனில் குழைத்துப் பண்ணொன்று யாழொடு பாடி யிருந்தாள். கொன்றை யடியில் குந்திக் கன்னலும் வன்னெஞ் சுடையான் வரவு நோக்கிச் சினத்தைத் தமிழொடு சேர்த்துப் பாடினாள். மருது விரைவில் வந்துகொண் டிருந்தான். ஒருகுரல்! தெளிந்த ஏசல் ஒன்றும் பொருளில் லாத புதுக்குரல் ஒன்றும் செவியில் வீழ்ந்தன. திடுக்கிட் டவனாய்க் கன்னல் வந்த காரணம் யாதென உன்னினான்; சீனன் உளவென உணர்ந்தான் மேலும்,என் வாழ்வை வீணாக் கியநீ ஞாலமேல் வாழுதி நன்றே என்ற வசைமொழி கன்னல் வழங்குதல் கேட்டான். மருதுதான் அகல்யா வாழும் ஆலிடை விரைவிற் சென்றான். மெல்லியின் பாட்டில் தமிழிசை இருந்தது. தமிழ்மொழி இல்லை! செழுமலர் இருந்தது. திகழ்மண மில்லை! வள்ள மிருந்தது வார்ந்த தேனில்லை! தணலால் அவனுளம் தாக்கப் பட்டது! கௌவிய தவனைக் கரிய இருட்டு! வாழும் நெறியை மருது தேடினான்! மேலும் - என் வாழ்வை வீணாக் கியநீ ஞாலமேல் வாழுதி நன்றே என்ற கடுமொழி தன்னைக் கன்னல் கூறினாள்! அகல்யா காதலால் ஆயிரம் சொன்னாள்! சொன்னவை தெலுங்கர்க்குச் சுவைதரத் தக்கவை! பொருள்விளங் காமொழி புகலும் ஒருத்தி இருளில் இட்ட இன்ப ஓவியம். அழகும் பண்பும் தழையக் கிடப்பினும் பழகுதமிழ் அறியாப் பாவை தமிழருக்கு உயிரில் லாத உடலே அன்றோ! கடுமொழி யேனும் கன்னலின் தமிழ்த்தேன் வடிவிலா வாழ்வுக் கடிப்படை யன்றோ? என்றான்; விலகினான் கன்னலை நோக்கி! அகல்யா மருதினை அகலாது தொடர்ந்தாள். மருது, கன்னலை மன்னிப்பு வேண்டினான்! அத்தான் வருகஎன் றழைத்த கன்னலில் மொய்த்தான்; மலரின் மூசு வண்டுபோல்! கன்னல் மருதுதம் கண்ணும் நெஞ்சும் இன்னல் உலகில் இல்லவே யில்லை; பாழுங் கிணற்றில் அகல்யா வீழ்ந்ததும் காணார்; மேவினர் இன்பமே! - காதல் நினைவுகள், ப.35, 1946 38. உணர்வெனும் பெரும்பதம் எண்சீர் ஆசிரிய விருத்தம் கதிரவனை வழியனுப்பிக் கனிந்தஅந்திப் போதில் கடற்கரையின் வெண்மணலில் தனியிருந்தேன். கண்ணைச் சதிபுரிந்து நெஞ்சினுள்ளே ஒருமங்கை தோன்றிச் சதிராடி நின்றாள். அப்புதுமைஎன்ன சொல்வேன்! மதிபோலும் முகமுடையாள் மலர்போலும் வாயாள் மந்தநகை காட்டிஎனை வாஎன்று சொன்னாள். புதையல்வந்து கூவுங்கால் போஎன்றா சொல்வேன்? பூங்காவ னக்குயிலே யாரடிநீ? என்றேன். உணர்வுஎன்றாள். பின்னென்ன அமுதாகப் பெருகும் ஓடையிலே வீழ்ந்தேன்என் ஈடில்லாச் சுவையே. துணைஎன்ன தமிழர்க்குச் சொல்லேடி என்றேன். தூய்தான ஒற்றுமைதான் துணைஎன்றாள் மங்கை இணையற்ற அந்நிலைதான் ஏற்படுங்கால் அந்த ஏற்பாட்டுக் கிடையூறும் ஏற்படுமோ? என்றேன். தணல்குளிரும்; இருள்ஒளியாம் தமிழர்ஒன்று சேர்ந்தால்? தம்மில்ஒரு வனின்உயர்வு தமக்குவந்த தாக ... ... எண்ணாத தமிழர்களால் இடையூறும் நேரும் இனத்திலுறும் பொறாமைதான் வெடிமருந்துச் சாலை மண்ணாகும் படிஎதிரி வைத்தகொடுந் தீயாம் வையத்தில் ஒழுக்கமில்லார் ஏதிருந்தும் இல்லார் நண்ணுகின்ற அன்புதான் ஒற்றுமைக்கு வித்து நல்லஅந்த வித்தினிலே தன்னலத்தைச் சிறிதும் எண்ணாமை செழித்துவரும் நடுவுநிலை பூக்கும் ஏற்றமுறு செயல்காய்க்கும்; பயன்கனியும் என்றாள். முன்னேறும் தமிழ்மக்கள் மதத்துறையை நாடி மூழ்குதலும் வேண்டுமோ மொழியேடி என்றேன். முன்னேற்றம் மதஞ்சொன்னோர் இதயம்பூஞ் சோலை! மொழிகின்ற இம்மதமோ அச்சோலை தன்னைத் தின்னவந்த காட்டுத்தீ என்றுரைத்தாள் இன்பத் தேனென்று சொல்லுவதோ அன்னவளின் வார்த்தை! கன்னல்மொழி உயிர்தழுவ வீட்டுக்குச் சென்றேன் கதிகாட்டும் விழியாளின் காதல்மறத்தல் உண்டோ! - காதல் நினைவுகள், ப.40, 1946; திராவிடநாடு, 11. 10. 1942 39. ஒரே குறை எண்சீர் ஆசிரிய விருத்தம் அழகிருக்கும் அவளிடத்தில் அன்பி ருக்கும் அறிவிருக்கும்! செயலிலுயர் நெறியி ருக்கும் விழியிருக்கும் சேலைப்போல்! கவிதை யின்பம் வீற்றிருக்கும் அவளரிய தோற்றந் தன்னில்! மொழியிருக்கும் செந்தமிழில் தேனைப் போலே முகமிருக்கும் நிலவுபோல்! என்னைக் காணும் வழியிருக்கும்; வரமாட்டாள்; வந்தெ னக்கு வாழ்வளிக்கும் எண்ணந்தான் அவள்பா லில்லை! 1 திருவிருக்கும் அவளிடத்தில்! திறமி ருக்கும்! செங்காந்தள் விரல்நுனியின் நகத்தி லெல்லாம் மெருகிருக்கும்! இதழோரப் புன்சி ரிப்பில் விளக்கிருக்கும் நீள்சடையில் மலரி ருக்கும்! புருவத்தில் ஒளியிருக்கும் வளைவி ருக்கும்! போய்ப்போய்நான் காத்திருக்கும் இடமும் மிக்க அருகிருக்கும்! வரமாட்டாள்; உடையும் நெஞ்சுக் கணைகோலும் எண்ணந்தான் அவளுக் கில்லை. 2 பண்பிருக்கும் அவளிடத்தில்! ஆடு கின்ற பச்சைமயில் போல்நடையில் அசைவி ருக்கும்! மண்ணிருக்கும் கல்தச்சுச் சுதைநூல், நல்ல வார்ப்படநூல் ஓவியநூல் வல்லார் எல்லாம் பெண்ணிருக்கும் அமைப்பறியும் ஒழுங்கி ருக்கும்! பிறர்துயின்ற, பின்என்போல் இரவில் மூடாக் கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற் கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை. 3 கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும் கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கி லைப்போல் தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச் சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந்தி ருக்கும்! இனித்திருக்கும் பொன்னாடை! அவள்சி லம்பில் எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன் அந்த நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை. 4 வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை! மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம் ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்! உயிர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்! தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்! செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை வெளியிருக்கும்! வரமாட்டாள் என்வி ழிக்கு விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை. 5 பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில் பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி உறைகூரை மேற்படர்ந்து சென்றிட் டாலும் ஒருதொடர்பும் கூரையிடம் கொள்ளா மைபோல் பிறரிருக்கும் உலகத்தில் என்னை யேதன் பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும் முறையிருக்கும்! வரமாட்டாள்; வந்தே இன்ப முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை. 6 அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை! அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும் புறமிருக்கும் என்மீதில் உயிர்இ ருக்கும்! பூத்திருக்கும் நான்காத்த முல்லை யென்றும் நிறம்காண வேண்டும் என்று சாக்குச் சொல்லி நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத் தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை. 7 உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை! உடலாவி பொருளிவற்றில் நானும், தானும் அயலில்லை என்னுமோர் உளம்இ ருக்கும்! அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற பெயரிருக்கும்! எவற்றிலுமே எனைய ழைக்கும் பித்திருக்கும்! மாடியினின் றிறங்க ஏணிக் கயிறிருக்கும்! tukh£lhŸ; v‹brŒ nt‹!நான் கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை. 8 சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும் செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப்பி ருக்கும்! தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான் தானேநான் எனும்கொள்கை தனக்கி ருக்கும் ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத் துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை நேரிருக்கும் வரமாட்டாள் என்றன் காதல் நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை. 9 அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்! ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத் திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல் தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும் கருத்திருக்கும் வரமாட்டாள்; வந்தெ னக்குக் காட்சிதரும் எண்ணந்தான் அவள்பா லில்லை. 10 - காதல் நினைவுகள், ப.43, 1946 40. காதலனுக்குத் தேறுதல் பஃறொடை வெண்பா காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின் மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீஉறிஞ்சி நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச் சாவான ஓர்குரங்கு தான்பிடுங் கிற்றேயோ! விழிநோக வையமெல்லாம் தேடி, மிகுக்க மொழிநோகக் கூவிநீ முன்பெற்ற கிள்ளையிடம் காதல் மொழிபழகக் கண்ட பெரும்பூனைச் சாதல்வந்து கிள்ளைதனைத் தட்டிப்போ யிற்றோ! அறஞ்செய்ய, ஆர்ந்த புகழ்கொள்ளப் பொன்னாற் புறஞ்செய்தே, உள்ளே புதுமாணிக் கம்சொரிந்த பேழை தனைப்பெற்றும், பெற்றதற்கு நீமகிழ்ந்தும் வாழத் தொடங்கையிலே மற்றந்தப் பெட்டகத்தை நோக்கிப் பறிக்க நுழைந்தானா அத்தீய சாக்கா டெனுந்திருடன்! சற்றுந் தனித்ததின்றி நெஞ்சம் ஒருமித்து, நீரும் குளிரும்போல் மிஞ்சுகின்ற காதல் விளையாட்டுக் காணுங்கால் அந்த மயிலை அழகின் களஞ்சியத்தைச் சந்தத் தமிழ்ச்சொல் சகுந்தலா தேவியினை நீஇழந்தாய்! உன்காதல் நெஞ்சு பொறுக்குமோ! தூயோனே மீனாட்சி சுந்தரனே, என்தோழா! ஆண்டுநூ றாகநல் லன்பு நுகர்ந்திடினும் ஈண்டுத் தெவிட்டாத இன்பச் சகுந்தலைதான் இங்குன்னைத் துன்பம் இறுகத் தழுவவிட்டுத் திங்கள் இருபதுக்குள் சென்று மறைந்துவிட்டால் அந்தோ உனக்கார்ஓர் ஆறுதலைச் செய்திடுவார்? சிந்துகண் ணீருக்குத் தேறுதலைச் செய்வார்யார்? தோழனே மீனாட்சி சுந்தரனே, ஒன்றுகேள்; யாழின் மொழியும், இசைவண்டு நேர்விழியும் கோத்தமுத்துப் பற்கள் குலுங்கும் சிரிப்பழகும் வாய்த்த நல்வஞ்சி, மற்றொருத்தி இங்குள்ளாள். njL»‹whŸ c‹id!நீ தேடந்தப் பொன்னை,ஏன் வாடுகின்றாய்? ஏன்உன் மலர்விழியை வாட்டுகின்றாய்? அன்னவனால் உன்றன் அருங்குறைகள் தீர்ந்துவிடும்! முன்னர் எழுந்திருநீ முழுநிலவு காண்பதுபோல்! அன்னவளைக் கண்டு நிலைமை அறிவிப்பாய்! இந்நாட்டின் முன்னேற்றம் எண்ணி உழைக்கின்ற நன்னோக்கம் நண்ணும் சுயமரியா தைக்காரர் காட்டும் நெறியே கடிமணத்தை நீமுடிப்பாய்! மீட்டும் சகுந்தலையை எண்ணியுளம் வாடாதே! அவ்வழகே இவ்வழகும்! அம்மயில்தான் இம்மயிலும் செவ்வையுற இன்பத் திருவிழாவைத் தொடங்கு! நீயும் புதுமனையும் நீடூழி வாழியவே! வாயார வாழ்த்துகின் றேன்நான்! - காதல் நினைவுகள், ப.47, 1946 41. தொழுதெழுவாள் அறுசீர் விருத்தம் உண்டனன் உலவி னன்பின் உள்ளறை இட்ட கட்டில் அண்டையில் நின்ற வண்ணம் என்வர வறிவா னாகி, மண்டிடும் காதற் கண்ணான் வாயிலில் நின்றி ருந்தான்! உண்டேன்,என் மாமி என்னை உறங்கப்போ என்று சொன்னாள். 1 அறைவாயி லுட்பு குந்தேன் அத்தான்,தன் கையால் அள்ளி நிறைவாயின் அமுது கேட்டுக் கனிஇதழ் நெடிது றிஞ்சி மறைவாக்கிக் கதவை, என்னை மணிவிளக் கொளியிற் கண்டு நறுமலர்ப் பஞ்ச ணைமேல் நலியாதுட் கார வைத்தான். 2 கமழ்தேய்வு பூசி வேண்டிக் கனியொடு பாலும் ஊட்டி அமைவுற என்கால் தொட்டே அவனுடை யால்து டைத்தே தமிழ்,அன்பு சேர்த்துப் பேசித் தலையணை சாய்த்துச் சாய்ந்தே இமையாது நோக்கி நோக்கி எழில்நுதல் வியர்வை போக்கி, 3 தென்றலும் போதா தென்று áÉ¿1if¡ கொண்டு வீசி அன்றிராப் பொழுதை இன்பம் அறாப்பொழு தாக்கி என்னை 2... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... நன்றுறத் துயிலிற் சேர்த்தான் நவிலுவேன் கேட்பாய் தோழி 4 கண்மூக்குக் காது வாய்மெய் இன்பத்திற் கவிழ்ப்பான்; மற்றும் பெண்பெற்ற தாயும் போல்வான் பெரும்பணி எனக்கி ழைப்பான். வன்மையால் கால்து டைப்பான் மறுப்பினும் கேட்பா னில்லை உண்மையில் நான்அ வன்பால் உயர்மதிப் புடையேன் தோழி. 5 மதிப்பிலாள் என்று நெஞ்சம் அன்புளான் வருந்து வானேல் மதிகுன்றும் உயிர்போன் றாற்கு kw«3 குன்றும் செங்கோல் ஓச்சும் அதிராத்தோள் அதிர லாகும் அன்புறும் குடிகள் வாழ்வின் நிதிகுன்றும் மன்னன் கையில் மறைகுன்ற நேரும் அன்றோ? 6 நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண் வளிதொழேன் எரிதொ ழேன்நான் அலங்கல்சேர் மார்பன் என்றன் அன்பனைத் தொழுவ தன்றி! ïy§»iH¤ njhÊ nfŸ!பின் இரவுபோ யிற்றே, கோழி, புலர்ந்தது பொழுதென் றோதப் பூத்ததென் கண்ண ரும்பு. 7 1. சிவிறி - விசிறி 2. ஆவது விருத்தத்தில் 3ஆவது அடி இடம்பெறவில்லை. 3. மறம் - வீரம் உயிர்போன்றான் துயில்க ளைந்தான் ஒளிமுகம் குறுந கைப்புப் பயின்றது, பரந்த மார்பில் பன்மலர்த் தாரும் கண்டேன் வெயில்மணித் தோடும் காதும் புதியதோர் வியப்பைச் செய்ய இயங்கிடும் உயிரன் னோனை இருகையால் தொழுதெ ழுந்தேன். 8 அழைத்தனர் எதிர்கொண் டெம்மை அணிஇசை பாடி வாழ்த்தி, இழைத்திடு மன்று நோக்கி ஏகினோம், குடிகள் அங்கே ஒழித்தது வறுமை அன்னாய் உதவுக என்று நைந்தார். பிழைத்தது மழை1என் அத்தான் பெய்என்றேன் குடிகட் கெல்லாம் மழைத்தது2 மழைக்கை3 செந்நெல். வண்டிகள் நடந்த யாண்டும். 9 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 1. பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை 2. மழைத்தது - மழை போல் செந்நெல் தந்தது 3. மழைக்கை - கொடுக்குமியல்புள்ள மன்னன் கை 42. சொல்லும் செயலும் எடுப்பு சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச் சொல்லுகின்றாய் என்துணைவன் சொன்னதையும் செய்ததையும் - சொல்வதென்றால் உடனெடுப்பு முல்லைவிலை என்ன என்றான் இல்லைஎன்று நான்சிரித்தேன் பல்லைஇதோ என்று காட்டிப் பத்துமுத்தம் வைத்து நின்றான் - சொல்வதென்றால் அடி பின்னலைப் பின்னே கரும்பாம்பென்றான் - உடன் பேதை துடித்தேன் அணைத்துநின்றான் கன்னல் என்றான் கனியிதழைக் காதல்மருந் தென்று தின்றான் - சொல்வதென்றால் நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான் நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான் குறைமதியும் இல்லை என்றேன் குளிர்முகத்தில் முகம்அணைத்தான் - சொல்வதென்றால் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 43. இருவர் ஒற்றுமை எடுப்பு எனக்கும் உன்மேல் விருப்பம் - இங் குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான் - எனக்கும் உன்மேல் உடனெடுப்பு எனக்கு நீதுணை அன்றோ - இங் குனக்கு நான்துணை அன்றோ - அத்தான் - எனக்கும் உன்மேல் அடி இனிக்கும் என்செயல் உனக்கும் - இங் கெனக்கும் உன்செயல் இனிக்கும் தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான் - எனக்கும் உன்மேல் விழிதனி லுனதழகே - என் அழகி லுனது விழியே தொழுத பிறகுன் தழுவல் - நான் தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான் - எனக்கும் உன்மேல் நீஉடல்! உயிர் நானே! - நம் நிறை மணமலர் தேனே ஓய்விலை நமதன்பும் - இங்கு ஒழிய வில்லை பேரின்பம் - அத்தான். - எனக்கும் உன்மேல் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 44. பந்து பட்ட தோள் சிந்து கண்ணி கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக் கத்தரித்த முடிசீவிப் பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில் பந்தடி கோலினை ஏந்திச் சிட்டுப் பறந்தது போல - எனை விட்டுப் பிரிந்தனர் தோழி! ஒட்டுற வற்றிட வில்லை - எனில் உயிர்து டித்திட லானேன். வடக்குத் தெருவெளி தன்னில் - அவர் மற்றுள தோழர்க ளோடும் எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை எதிர்த்தடித் தேவிளை யாடிக் கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக் காட்டின் துறைப்படி அன்றோ கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக் குளிர்நறுந் தென்றலும் என்றாள். வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட மரங்கள், மலர்க்கிளை கூட்டம், கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங் கீற்று நடுக்குலைக் காய்கள் அளித்த எழில்கண் டிருந்தாய் - உன் அருகினில் இன்பவெள் ளத்தில் குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல் கொணர்ந்தன உன்றன் நினைவில். தோழி இவ்வா றுரைக்குங்கால் - அந்தத் தோகையின் காதலன் வந்தான். நாழிகை ஆவதன் முன்னே - நீவிர் நண்ணிய தென்ன இங்கே? என்றாள். தாழ்குழலே! அந்தப்பந்து - கைக்குத் தப்பிஎன் தோளினைத் தாக்கி வீழ்ந்தது, வந்ததுன் இன்ப மேனிநினை வென்று சொன்னான். - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி 1949 45. தன்மான உலகு நேரிசை ஆசிரியப்பா என்னை அத்தான் என்ற ழைத்தாள். பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர் பெற்றோர் காலைப் பெரிது வணங்கி நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று வேண்டிட, அவரும் மெல்லிக்குச் சொல்லிடத் தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான் என்மா னத்தை ஈவேன் என்று மறுத்து, நான்வரும் வரைபொறுத் திருந்தே சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே என்வீடு கண்டு தன்பாடு கூறி உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல் வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே என்னை அத்தான் என்ற ழைத்தாள். ஏன்! எனில் அதட்டலென் றெண்ணு வாளோ? ஏனடி என்றால் இல்லைஅன் பென்னுமோ? ஏனடி என்றன் இன்னுயி ரே எனில் பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ? என்று கருதி, இறுதியில் நானே காத்திருக் கின்றேன், கட்டழ கே என உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள். ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே. என்னை அத்தான் என்ற ழைத்தாள். காத்தி ருப்பது கழறினேன் உவந்தாள். ஒருநொடிக் கப்புறம் மீண்டும் திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 46. மெய்யன்பு எண்சீர் விருத்தம் மலடிஎன்றேன், போஎன்றேன் இங்கி ருந்தால் மாய்த்திடுவேன் என்றுரைத்தேன், மங்கை நல்லாள் கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும், கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும், விலகினள்! விலகினவே சிலம்பின் பாட்டும்! விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக் கொலைக்கஞ்சாத் திருடரஞ்சும் காடு சென்றாள், கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம் உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்து விட்டாள், உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்! இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே? கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக் காம்பகற்றி வடித்திடுசுண் ணாம்பு கூட்டி வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும் தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்ப துண்டோ? தேடிச்சென் றேன்வானம் பாடி தன்னைச் சொல்லொழுகிப் போகுதடி என்வாய் - தேனைச் சொட்டுகின்ற இதழாளே? பிழைபொ றுப்பாய்; பிள்ளைபெற வேண்டாம்; உனைநான் பெற்றால் பேறெல்லாம் பெற்றவனே ஆவேன் என்றே அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை அவள்சொன்னாள் அகல்வாய் நீ அகல்வாய் என்றே. மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு வரல்இயற்கை தினையை நீதான் பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப் பாழாக்க எண்ணுவதா? எழுந்தி ரென்றேன். எனைநோக்கிச் சொல்லலுற்றாள், நமக்கு மக்கள் இல்லைஎனின் உலகமக்கள் நமக்கு மக்கள் எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை; எனக்கும்இனி உயிரில்லை என்றாள், செத்தாள். திடுக்கென்று கண்விழித்தேன் என்தோள் மீது செங்காந்தள் மலர்போலும் அவள்கை கண்டேன் அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன் அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன் படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல் பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன் சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன் சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 47. பெற்றோர் இன்பம் அகவல் கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில் சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல் துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்! உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக் களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும், சுண்ணமும் பாக்குத் தூளும், கமழும் வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள். துணைவன் அதனை மணிவிளக் கெதிரில் மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு சிவக்கச் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான், ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது கேட்டான் நண்பன்; சீட்டு நாட்டின்றி நீட்டி னேன்தொகை! நீட்டினான் கம்பி; எண்ணூற் றைம்பது வெண்பொற் காசுகள் மண்ணா யினஎன் கண்ணே என்றான். தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன் ஏகா லிஅவன் எதிரில் வந்து கூகூ என்று குழறினான்; அழுதான். உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள் முழுக்க அவனது முகத்தை மறைத்தன. மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர் அருவிபோல் இழிந்தது. தெரிவி அழாதே தெரிவி என்று செப்பினான் தலைவன். நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல் ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப் பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன். பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும் உடன்இ ருந்தன. விடிந்தது பார்த்தேன். உடல்நடுங் கிற்றே ஒன்றும் இல்லை என்று கூறினான் ஏழை ஏகாலி. அல்லல் மலிந்த அவ்வி டத்தில், வீட்டின் உட்புறத்து விளைந்த தான இனிய யாழிசை கனிச்சாறு போலத் தலைவன் தலையைத் தழுவலா யிற்று. நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே கும்மா ளமிடும் கொள்ளையோ என்று தலைவன் கேட்டான் தலைவி ஆம்என்று விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே இசையில் மூழ்கிய இருபெண் களையும் வருந்தப் பேசி வண்தமிழ் இசையை அருந்தா திருக்க ஆணை போட்டாள். தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள். மகளொடு வீணை வாசித் திருந்த நாலாவது வீட்டு நல்லி எழுந்து கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள். என்ன சேதி? என்றான் தலைவன். நல்லி ஓர்புதுமை நவில லுற்றாள் கடலின் அலைகள் தொடர்வது போல, மக்கள் சந்தைக்கு வந்துசேர்ந் தார்கள். ஆடவர் பற்பலர் அழகுப் போட்டி போடுவார் போலப் புகுந்தனர் அங்கே! என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி விரைந்தது, பின்அது மீள வில்லை. பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது, என்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின. நானும் அவனும் தேனும் சுவையும் ஆனோம் - இவைகள் அகத்தில் நேர்ந்தவை. மறுநாள் நிலவு வந்தது கண்டு நல்லிக் காக நான்தெருக் குறட்டில் காத்திருந் தேன்;அக் காளை வந்தான். தேனாள் வீட்டின்எண் தெரிவி என்றான். நான்கு - எனும் மொழியை நான்மு டிக்குமுன் நீயா என்று நெடுந்தோள் தொட்டுப் பயிலுவ தானான் பதட்டன்; என்றன் உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து மறைந்தான் என்று மங்கை என்னிடம் அறைந்தாள். உம்மிடம் அவள்இதைக் கூற நாணினாள்; ஆதலால் நான்இதைக் கூறினேன் என்று நல்லி இயம்பும் போதே இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும் கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின. நல்லியே நல்லியே நம்பெண் உன்னிடம் சொல்லியது இதுவா? நல்லது நல்லது பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்; வாழ்வுக்கு - உரிய வண்ணம் பெற்றோம். வண்ண மேனி வளர வளர,எம் ஏழ்ந ரம்புகொள் யாழ்போல் அவள்வாய் இன்னான் இடத்தில் என்அன் பென்று சொன்னதால் இன்பம் சூழப் பெற்றோம். என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின் பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும், இரந்தும், பெண்ணை ஏற்றுக் குடித்தனம் புரிந்திடச் செய்வோம் போஎன் றுரைத்தான். தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில் மலைபோற் சுமந்த என்வயிற்றில் பிறந்தபெண் நல்லி யிடத்தில் சொன்னாள். இதனைச் சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள் முல்லை வீசினவோ? முத்துப் பற்கள் நிலாவீ சினவோ? நீல விழிகள் உலவு மீன்போல் ஒளிவீ சினவோ? நான்கேட் கும்பேறு பெற்றிலேன் என்று மகள்தன் மணாளனைக் குறித்ததில் இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 48. பணமும் மணமும் கலிவெண்பா அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும் ஒத்த உள்ளத்தால் ஒருமித்து - நித்தநித்தம் பேசிப் பிரிவார்; பிறரறியா மற்கடி தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம் வளர்ந்து வருகையிலே, மஞ்சினி,தன் மைந்தன் குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான். ஆளி சிரித்தே அவனிடத்தில் - கேளண்ணா தத்தை விதவைப்பெண் சம்மதமா? என்றுரைத்தான். மெத்த விசேட மெனச்சொல்லி மஞ்சினிதான் - ஒத்துரைத்தான். சாதியிலே நான்மட்டம் சம்மதமா? - என்றே ஓதினான் ஆளி, ஒருபோதும் - காதில்நான் மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை; இட்டந்தான் என்றுரைத்தான் மஞ்சினி - கிட்டியே ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும் பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்புமணம் செய்வாயா? என்றாளி செப்பினான் - ஐயோஎன் உத்வேகம் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச் சொன்னேன் எனஉரைத்தான் மஞ்சினி. சொன்னதும் பின்ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க - அந்நேரம் வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை! கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப் பணம்இல்லை, பாங்கு முறிந்தது. யாதும், குணமில்லை என்றிருத்தல் கண்டு - திணறியே “வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூறு - கூடிவரும் மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம் அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல் நாளமைப்போம்” என்றந்த ஆளி நவிலவே, தோளலுத்த மஞ்சினி, “ஆளியண்ணா - கேளிதை இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை சிந்திப்போம் பின்”என்று செப்பினான் - ‘எந்த வருடத்தி லே? எந்த வாரத்தில்? எந்தத் தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல் நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீஎன்றான் ஆளிதான்! பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான்! பச்சையாய்த் தாலி யறுத்தவளைத் தாலிகட்டி னால்ஊரார் கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா - மேலும் சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ வேதியனை நீக்கிவிட வேண்டுமென்றாய் - ஏதும் முடியாதே, என்று முடித்தெழுந்து சென்றான். படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும் முத்தன்அங் குவந்தான், முகூர்த்தநாள் நாளைக்கே தத்தையை நீமணக்கச் சம்மதமா, - மெத்த இருந்தசொத்தும் இல்லையப்பா, ஏழைநான், நன்றாய்த் தெரிந்ததா முத்தா? செலவும் விரிவாக இல்லை! மணந்துகொள்” என்றுரைத்தான் ஆளி! அந்தச் சொல்லால்து ளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான் தனியாய் இராதே? தடைஏன்? - இனிஎன்றான், முந்திமணம் ஆயிற்றாம்; பாங்கு முறியவில்லை, தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 49. திருமணம் அகவல் மாதிவள் இலைஎனில் வாழ்தல் இலைஎனும் காதல் நெஞ்சக் காந்தமும், நாணத் திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்! புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின் துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச் சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை, அஃது திருமணம் அல்ல ஆதலால்! என்தின வறிந்து தன்செங் காந்தள் அரும்பு விரற்கிளி அலகு நகத்தால் நன்று சொறிவாள் என்று கருதி மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு! மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி! மலம்மூ டத்தான் மலர்பறித் தேன்எனில் குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதா? திருமண மின்றிச் செத்தால் அந்தச் சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது புரோகிதன் புரட்டுநூல்! அதனைத் திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 50. கதவு பேசுமா? காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன் ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத் தெருக்கதவில் ஊன்றினான் திறந்தேன் என்றோர் சொல் வரக்கேட்டான். ஆஆ மரக்கதவும் பேசுமோ? என்ன புதுமை என ஏங்க, மறுநொடியில் சின்னக் கதவு திறந்த ஒலியோடு தன்னருமைக் காதலியின் தாவுமலர் கைநுகர்ந்தான்! புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான், என்னேடி தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே என்றுரைத்தான், விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான் பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில் கருமரத்தாற் செய்த கதவு. - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, 1949 51. இங்கே உண்டு எடுப்பு போய்க் கொண்டிருந்தார்கள் - மேலும் போய்க் கொண்டிருந்தார்கள்! உடனெடுப்பு மாய்க்கும் கொடுங்கதிர் மேற்குப் புறத்தினில் போய்க் கொண்டிருக்கையில் பொன்னனும் பொன்னியும் - போய்க் கொண்டிருந்தார்கள் அடி காய்க்கும் பலாவிலும் கள்ளி மிலாரிலும் பொன்னொளி காணும் என்றாள் - அவன், சாய்க்கும் ஒளிப்புனல் யார்க்கும் சராசரி தானடி என்றுரைத்தான்! பின்னும் - போய்க் கொண்டிருந்தார்கள் சோட்டுப் புறாக்களில் ஆணிடம் பெட்டையின் தொல்லையைப் பாரும் என்றாள் - அவன், கேட்டதைப் பெற்றபின் இன்னுமத் தொல்லையைக் கெஞ்சிற்று வஞ்சி என்றான்! பின்னும் - போய்க் கொண்டிருந்தார்கள் நல்லிதழ்த் தாமரைத் தேனுக்கு, வண்டுகள் நாடுதல் பாரும் என்றாள் - அவன், செல்வரின் வீடு திறந்ததடீ பசி தீரும் வரைக்கும் என்றான்! பின்னும் - போய்க் கொண்டிருந்தார்கள் செவ்வலரிக் கொரு தீமையுண்டா? கண் சிவந்தது பாரும் என்றாள் - அவன், அவ்விடம் முல்லை சிரிப்பதும், தன் நொச்சி ஆடலும் நோக்கி என்றான்! பின்னும் - போய்க் கொண்டிருந்தார்கள் வாழுதல் எண்ணிஇவ் வையம் வெறுத்தவர் வந்தனர் பாரும் என்றாள் - அவன், கீழுலகத் துள இன்ப மெலாம் இவர் கேட்டதும் இல்லை என்றான்! பின்னும் - போய்க் கொண்டிருந்தார்கள் - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.1, 1952 52. ஆடவந்தாள் அவன்: ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள் ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்; என்னோ டாட வந்தாள்; மகிழ்ந் தாட வந்தாள்! - ஆடற் வாடாத தாமரைக்கை வானில் ஒளி தெறிக்க மங்காத செங்காந்தள் விரல்கள் பொருள் குறிக்க - ஆடற் ஓடுபிளந்தசெம் மாதுளைபோல் உதட்டில் உள்ளம் விளைத்தநகை மின்னவும் - கா தோரத்து வண்டுவிழி ஓடைமலர் முகத்தில் ஓடிஎன் உளங்கவர்ந்து தின்னவும் காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை காற்றோடு காற்றாகப் பின்னவும் காதற் கரும்பொன்று காலிற் சிலம்பணிந்து கடிதில் இடைதுவள ஆடியதோ என்னவும் - ஆடற் அவள்: பொன்மேனி காட்டிஎனை இன்பத்தில் ஆழ்த்தினான் பூரிப்பிலே எனையும் ஆடவைத்தான் தன்னோ டாட வைத்தான் மகிழ்ந் தாட வைத்தான் - பொன் தென்றல்வரும் சந்தனப் பொதிகைமேல் அருவிபோல் தேனான செந்தமிழ்ச் சிந்தொன்று பாடினான் - பொன் புன்னைமலர்க் காம்பு போன்றதோர் சிற்றடிப், புறாவும் மயிலும் களிஊன்றவே - அவை பூணும் அசைவுகளிற் காணும் அழகினின்று புதிய எண்ணம் ஒன்று தோன்றவே அன்ன ஆடற்கலை உலகுக்களித்த தமிழ் அரசர்பெருங் குடியைச் சேர்ந்தவன் ஆடினான் அவனோ டாடினேன் உற வாடினேன் மகிழ்ந்து கூடினேன். - பொன் - இசையமுது இரண்டாம் பகுதி, ப.3, 1952 53. சோலைக் காட்சி தலைவன் : தழுவின மலர்களை வண்டு பாராய் தழுவின பறவைஇ ரண்டு மாதே. தலைவி : அழகிய கொடிகள்து வண்டு மேலே அணைவன கிளைகளை வந்து நேராய் தலைவன் : மணமொடு பழகிய தென்றல் பாராய் மகிழ்வன நமதிரு நெஞ்சம் மாதே! தலைவி : அணைவன குளிரினை அந்தி மாலை அதிவிரை வினிலும தன்பு தேவை! தலைவன் : கதிரவன் ஒளியொடு கொஞ்சும் வானே கடைவிழி திறஇள வஞ்சி மானே! தலைவி : புதியதோர் சுவையினை இன்று நாமே பொழுதொடு நுகர்வது நன்று நாதா - இசையமுது இரண்டாம் பகுதி, ப.6, 1952 54. தலைவியின் நினைவு அன்றலர்ந்த செந்தாமரை - இவ் வகிலமே புகழ்ந்திடும் அன்னவன் முகம் - அன் நின்றிருந்தேன் பின்புறமாய் வந்து சடையை இழுத்தான் - என் கன்னத்தையும் கிள்ளியே தன் கைக்கு முத்தம் கொடுத்தான் - அன் (v‹) மனம் எனப்படும் மணி மேடையில் குடியேறிய மன்னன் - என் வாழ்வெனப்படும் புறம் போக்கை வளமே புரிவானோ! கனி எனப்படும் என் தேனிதழ் இனிதே சுவைப்பானோ அவன் - கல கல வெனத் தமிழ் பேசிட வருவானோ அன்னவன் முகம் - அன் கோடையிற் புனல் ஓடையைப் போல் குளிரக் குளிரத் தழுவி - இக் கோதை படும் வாதை எலாம் குணமே புரி வானோ வீடுதோறும் மாத ரெலாம் விளக் கேற்றிடும் மாலை வித வித விதக் கலவி செய்ய வாரானோ அன்னவன் முகம். - அன் - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.7, 1952 55. வண்டும் மலரும் அவள் :செழுமலர் இதழ்க்கடை திறந்தது தேன்விலை கொள்ள ஏன் வரவில்லை வண்டே வண்டே அவன் :எழும் பலபல எண்ணம் என்னும் சூறைக் காற்று மோது கின்றதே பூவே பூவே அவள் :கடலில் கலக்கும் காட்டு வெள்ளத்தைக் காற்று மறிக்கும் ஆற்றல் உண்டோ வண்டே வண்டே அவன் :விடு நினைவை விளை பயனில்லை வீணா சைகள் ஏனோ இனி பூவே பூவே அவள் :இளமை குறைந்து போனதோ எதிர் கால நம்பிக்கை ஏனிழந்தாய் வண்டே வண்டே அவன் :களர் நிலத்தினில் விளைச்சலை எதிர் காலம் கொடுக்க ஏலுமோ என் பூவே பூவே - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.8, 1952 குறிப்பு : இது தலைவியை மலடி என்று தலைவன் வெறுத்துக் கூறியதும், அவள் அமைவு கூறிக் கெஞ்சுவதும் ஆகும். 56. நாணிக்கண் புதைத்தல் தாமரை முகத்தினைத் தளிர்க்கரம் மறைத்ததடி - இளந்தையலே பூமது வருந்திடும் புதுவண்டுபோல் மனம் புழுங்குதடி மயிலே, வழங்கும் தமிழ்க்குயிலே! - தாமரை விழிமலர் மறைத்ததில் கழிமயல் ஆகுதடி - இளந்தையலே பிழிந்த அமுதத்தைப் பிசைந்த கனிரசத்தை விழுந்து புசித்துவிடின் ஒழிந்து விடுமெனவே - தாமரை நாணப்படுவதிங்கு நாணயமில்லையடி - இளந்தையலே! காணப்படும் நிலவைக், கரம்பொத்திவிடுவதில் ஆணழகன் சகித்தல் அருமை அருமையடி! - தாமரை மலர்க்கொடி விலக்கடி மதிமுகம் மறைத்தகரம் - இளந்தையலே! இலக்குத் தவறுதடி என்முகம் உன்முகம் இணைத்திணைத் திழுத்திழுத் தணைத்தணைத் தமுதளி! - தாமரை - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.10, 1952 57. நினைந்துருகல் (ÞU§fhuyfÇ என்ற bk£L) எடுப்பு செந்தேனோ தமிழோ அவளுதவிய சுகம்! - செந் உடனெடுப்பு முந்தோர் நாள் தானே வந்தெதிர் குளிர் சோலையில் முழு நிலவினில் கொண்ட காதல் மிகவாகிச் சிலீரெனக் சிட்டாவரத்திற்கு கோ - கனகவி தழ்குவிய முகமே என தொருமுக மிசையுற, மலருடல் எனதொரு புளகமெய் தனிலுற இருவ ரொருவராக ஆவலொடு கொஞ்சித்தந்த வஞ்சி முத்தம் கொஞ்சத்தினில் நெஞ்சைவிட்டு நிமிஷமும் அரை நிமிஷமும் விலகுதல் அருமை விரைவினில் அவள் பிரி வினைமனது பொறுத்திடுவது சகம் வெறுப்பதுவாகும் - நறுஞ் - செந் அடி சுந்தராங்கி அமுதங் குழல்போல் மொழியாள் சுகுணாலயம் அன்னவள்! எந்த வனிதை அவளோ டிணைபெற வருவாள்? கந்த கலப உடலாள்! அதிசோபித கண்ய மான அதி புண்யவதி சுநிதி! - செந் - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.11, 1952 58. யார் இவள்? வண்ணம் ஸ்ரீமதிஇவ ளார்? உலகிடை மானிடமதி லேதிவள்? ஒரு சேலிணையினை நேரிருவிழி, கோகனகவி நோதஅதரம், மாமதிநிகர் ஓரிளமுகம், வானுறுமழை தானிருள்குழல், வாழ்மதுகரம் ஊதிடுமலர் சூடியமுடி யோடிவளிரு மத்தக மொத்த தனத்தொடு சித்தமி னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்! மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ? தோய்மதுமலர் மாலையைநிகர் ஆகியஒரு தேகவனிதை தீவிரநடம் ஆடியமயி லேஎனுமொரு சாயலினொடு மாசறுகலை மானெனமருள் வாளவள்நடை யோஅனநடை வாழுலகினி லேஇவளரு ளாலதிசுக மேபெருகிடும்! வைத்திடு புத்தமு தத்தையெ டுக்கம றுத்திடல் மெத்தவ ருத்தமெ னக்குறும்! மதுவோடையை மொண்டுண வாக்கு நல்காளோ? மாமயலெனும் ஓர் அனலிடையே எனதுளம் நோயடைவதை மாதிவளறி யாள் இதைஎவர் போயவளிடமே புகலுவர்? ஆம். அவள்தரு வாயிதழமு தேஇதுததி மாஅவுஷதம்! ஆவியுமவ ளேஉடைமைக ளாதியுமவ ளேயுலகினில்! அற்புத சித்திர சிற்பநி லைக்கொரி லக்கியம் வைத்தசி றப்புமி குத்திடும் அழகாகிய வஞ்சியென் வீட்டை நண்ணாளோ? நாமுறுதமிழ் நாடெனுமொரு தாயுறுபுக ழோ! இனிதென நாவலர்களு மேதுதிநிதம் ஓதிடுதமி ழோ! நவநிதி யோ! முழுநில வோ! கதிரவ னோ! கவிதையி லேவருசுவை யோ! இதுகன வோபுதுயுக மோ! வடிவழ கேவடிரசம் மக்கள் உயிர்க்குறு நற்பதம் இப்படி வைத்த தெனச்சொல விட்டசு கக்கடல்! மனமே இனும்பொறு வீழ்ச்சி கொள்ளாதே! - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.12, 1952 59. கண்டதும் காதல் இராகம்: அடாணா அடதாளம் எடுப்பு களிப்பில் ஆடும் கான மயிலோ காதாரும் பண் பாடும் குயிலோ? - களிப் உடனெடுப்பு துளிக்கும் மதுமலரின் தேகம் சுகம்தரும் இவள் அளிக்கும் போகம்! - களிப் சரணம் பளிக்குமேனி கண்டு மனந்தத் தளிக்குதுடல் கொப்பளிக்குதே! ஒளிக்குதே இம்முகவிலாசம் உளத்தில் மோகம் தெளிக்குதே! வளர்க்கா தெழில் வளர்ந்த ரூபம் வையம் விளங்க ஏற்றும் தீபம்! - களிப் கலைத்துக் கலைத்து வரைந்த சித்திரமோ கவினுறும் விழி வேலோ! ஒலிக்கெலாம் உயிர்தரும் இவள்மொழி இனிப்புச் சேர்த்திட்ட பாலோ! தலைக்கேறுதே கொண்ட மோகம் தகிக்குதே இதென்ன வேகம்! - களிப் - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.14, 1952 60. ஏந்திழை எடுப்பு இன்பம் இன்பம் அடடா - அவ் வேந்திழையைக் காணுந்தோறும் உடனெடுப்பு அன்னம் நடக்கும் நடையும் - அருகே அன்னாள் அழகிய நடையும் - இன்பம் அடி வஞ்சிக் கொடியும் அசையும் - அருகே மங்கை சிற்றிடை அசையும் நெஞ்சந் தன்னில் அதுதான் - காதல் நெருப்பை இட்டுப் பிசையும் - இன்பம் கோவைக் கனியும் சிவக்கும் - அருகே கோதை இதழும் சிவக்கும் யாவும் அவளுக் கீவேன் - எனநான் எண்ணிடும் எண்ணம் உவக்கும் - இன்பம் பச்சைக் கிளியும் கொஞ்சும் - அருகே பாவையின் உதடும் கொஞ்சும் மெச்சும் போதே அடடா - மங்கை மீதினில் மையல் மிஞ்சும் - இன்பம் விண்ணில் நிலவும் ஒளிரும் மெல்லியின் முகமும் ஒளிரும் கண்ணில், கருத்தில் அதுதான் - காதற் கவிதை காட்டி மிளிரும். - இன்பம் - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.15, 1952 61. வாழும் மாந்தர்க்கு* வாழு மாந்தர்க்கு வான் மழை போன்றது மணாளர்வந் தெனக்குத் தருவதோர் இன்பம்! தோழியே அவரின்றி நான்படும் தொல்லை சொல்லிக் காட்டல் இலேசில் இல்லை. சிறுகொம்பு பெரும் பழம் தாங்குவது போலே - என் சிறிய உயிர் பெருங்காதல் தாங்குவ தாலே, மறத்தமிழன் விரைவில் வராவிடில் உடலில் மளுக்கென்று முறியும் என் ஆவிமண் மேலே! பிறர் செய்த தீமையை மறந்திடுதல், மறதி. பெற இய லாததை மறப்பதும், மறதி. இறந்து போவாளே யான் போக வேண்டுமே என்பதில் மறதியா? அது என்றன் இறுதி. - தேனருவி, ப.31, 1956 * ghuâjhr‹ fÉijfŸ eh‹fh« bjhFâŒy jiy¥ò ‘ïJ kwâah? என உள்ளது. 62. இன்னம் அன்பர் வரவில்லை இன்னம் அன்பர் வரவில்லை ஏன் மறந்தார் சொன்ன சொல்லை? - இன்னம் அன்பர் பொன்னொளி வீசிய வெய்யில் மறைந்தது, கன்னங் கறேலென்று மாலை பிறந்தது. - இன்னம் அன்பர் கன்று தலைதூக்கி அம்மா என்றது, கால் விரைந்தே பசு தொழுவத்திற் சென்றது, நன்மாதர் செங்கை விளக்கேந்தி நின்றது, நல்ல பறவை உறங்க முயன்றது, - இன்னம் அன்பர் வீட்டுத் தலைவர் கடைகட்டி வந்தார், மெல்லிடை யார்வர வேற்று மகிழ்ந்தார், நாட்டீர் விருந்துண்க என்று மொழிந்தார் நல்லுண வுண்டபின் கண்கள் அயர்ந்தார். - இன்னம் அன்பர் - தேனருவி, ப.32, 1956 63. எண்ணம் இனிக்க நடந்தான் எண்ணம் இனிக்க நடந்தான் முன்னாள்! இடர்விளைக் கின்றானே, - இந்நாள்! - எண்ணம் இனிக்க கண்ணுக்கினிய மலர்தந்த நெருஞ்சி - பின் காலைக் கொந்தும் முள்தந்த தைப்போல், - எண்ணம் இனிக்க பண்கொள் பொறியியக்க வண்டிஏறிப் பழய நண்பர்பால் செல்வதாய்க் கூறி, உண்மையும் தமிழ் ஒழுக்கமும் மீறி, ஓடினான் பரத்தைபால் முடிச்சு மாறி. - எண்ணம் இனிக்க எப்படியோ அவன் போகட்டும் என்றும் இருப்பதே இல்லை என்மனம் இன்றும்! தைப் பொங்கல் போன்ற அவன் சொல்ஒவ் வொன்றும் தனித்தமிழ் தனித்தமிழ் இன்றும் என்றும். - எண்ணம் இனிக்க - தேனருவி, ப.33, 1956 64. அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால் அடிக்கடி பார்த்துக்கொண் டிருந்தால்போதும் - தொட்டு அன்பு செய்யா விட்டாலும், - அடிக்கடி பொடிவைத் தூதாமல் பொன்னில் செதுக்கிய உருவத்தானை - முன் படித்த செந்தமிழ் பாடி யாடும் அத்தானை - அடிக்கடி கல்லும் உருகும் வெயில் காடு தாண்டிக், கைப்பொருள் நல்வழியில் தேட வேண்டி, அல்லல்தன்னை என் உள்ளத்தில் மிகவும் தூண்டி அகன்றான், என்னை அடைத்தான் தனிக் கூண்டில். - அடிக்கடி ஆளன் உருவப் படத்தில் அசைவுகள் இல்லை ஆசைப் பேச்சொன்றும் பேசவும் இல்லை, தோளில் படர்கின்ற இப் பசுங்கொடி முல்லை, தொட்டுப் பழகிடும் கட்டாயம் எதுவும் இல்லை. - அடிக்கடி - தேனருவி, ப.34, 1956 65. வா வா இன்ப இரவே வா வா இன்ப இரவே வருவதாய் உரைத்த அருமைக் காதலனை விரைவில் கூட்டி வா வா நீ. - வா வா இன்ப இரவே போய்வீழ்ந்ததே பொன்னான வெய்யில் மேற்கிலே, பூக்காடு போல் கமழ்ந்தது பஞ்சணை என் வீட்டிலே, என் - வாழ் வானதோர் வான மீதிலே, வடுவில்லாத ஒளி முழுநிலவு போன்றவனை, நொடியிலே கூட்டி வா வா நீ. - வா வா இன்ப இரவே பாடும் பறவைகளும் வாய் ஓய்ந்திடும் தூங்கியே, பார்த்த கண்ணும் பூத்துப் போனதுளம் ஏங்கியே, வாடாமல் பூமாலை போலிழுத்தே வலியவே தழுவும் இளைய காளைதனை நொடியிலே கூட்டி வா வா நீ. - வா வா இன்ப இரவே வீட்டிலே விளக்கும் ஏற்றினார் நகரப் பெண்களே, தாம் - விரும்பும் காதலர்க்கு வருந்துமே அவர்கள் கண்களே. ஊட்டினார்கள் தமிழ்ப் பாட்டுப்போ லுணவையே, ஒருத்தி நான் தனித்துக் கிடப்பதென்ன முறை? நொடிக்குள்ளே கூட்டி வா வா நீ. - வா வா இன்ப இரவே - தேனருவி, ப.35, 1956 66. மறப்பதுண்டோ? மறப்ப துண்டோ நாதன் நெஞ்சம்? மங்கையே ஈதென்ன வஞ்சம்? - மறப்ப துண்டோ இறப்ப துண்டோ வஞ்சி நானும் ஏன் பிரிந்திடும் காற்றை வானும்? சிறக்கும் காதல் தனக்கும் ஊனம் செய்தானே மானே சற்றேனும். - மறப்ப துண்டோ பூணும் ஆட்சி முறையில் நினைவோ? போரை விரும்பும் தோளின் தினவோ? காணும் காட்சியின் இன்பக் கனவோ? காரணந் தான்வே றென்னவோ! பேணலும் அன்பும் போயினவோ! பெண்ணாள் வாழ்வு மண்தான் எனவோ? - மறப்ப துண்டோ பாண்டி நாட்டை ஆளும் காளை, படை வீடேகியே இவ்வேளை, தீண்டற் கரிய தன்உடை வாளைத் தீண்டி யவிழ்த்த பின்பு நாளை, தூண்டிற் புழுப் போன்றிடும் பெண்ணாளைத் தொட்டணைப்ப தென்று விட்டானோ என்தோளை? - மறப்ப துண்டோ தெரிவை யாளின் உயிரின் வேராய்ச் செந்தமிழ் மன்னன் வாழ்ந்தான் சீராய், பிரிவில்லாத தன்வேப்பந் தாராய்ப் பிரிந்திட் டேனே மாதே பாராய்! இரவும் பகலும் சாவொடு போராய் இருந்தேன், இருந்தான் மதுரையே ஊராய், - மறப்ப துண்டோ - தேனருவி, ப.37, 1956 67. துன்ப உலகு துன்ப உலகில் துடிக்கும்நான் அவனை இன்ப உலகில் எப்போது காண்பேன்? - துன்ப உலகில் வன்புசெய் கின்றான் எப்போதும் பாவி, வாடி அழியுதே என்னரும் ஆவி. - துன்ப உலகில் தின்பதைத் தின்று தூங்குவ தென்பது சிற்றெறும் புக்கும் முடியா தென்றால் அன்பு செய்வதில் ஆவ லுள்ளவளை அணுக மாட்டேன் என்கின் றானே. - துன்ப உலகில் மறந்திருப் போம்என்றால் எப்படி முடியும்! மனத்தில் தலைகாட்டுவான் ஒவ்வொரு நொடியும்; பிறந்த நாள்முதல் பெறாத ஓர்இன்பம் பெற்றபா டில்லைஉயிர் அற்றபா டுமில்லை. - துன்ப உலகில் - தேனருவி, ப.39, 1956 68. படலடிப்பவன் பாடிக் கொண்டே ஒருவன் - பார் படலடிக் கின்றான் தெருவில் படலடிக் கின்றான். ehL ey«bgwnt ehSªjh‹ clš xo¡»‹wh‹.(mt‹) தாடி வளர்க்கவில்லை ஊர் மயக்கச் சடை வளர்க்க வில்லை. தேடும் பொன்னம்பலவன் தொண்டனென்று திரை விரிக்கவில்லை. கூடும் இருட்டறையில் பெண்களிடம் கொஞ்ச நினைக்கவில்லை, அவர்களைக் கெஞ்ச நினைக்கவில்லை. பாடுகள்பட்டாண்டி - நாட்டுக்கே பயன் விளைத்தாண்டி. - பாடிக் கொண்டே ... தோளும் மலைபோல, அதில்முகம் தோன்றும் கதிர்போல! ஆளன் அழகனடி - அவன்என் ஆசைக்கண் ணாளனடி. தாளுவதில்லை இனி - அவனிடம் சாற்றடி என்காதல், வேளை பொருத்தமடி - இப்பேதென் வீடு வரச் சொல்லடி. - பாடிக் கொண்டே ... - தேனருவி, ப.40, 1956 69. அத்தானே வேண்டும் அத்தானே வேண்டும் - அவன் அன்பேதான் வேண்டும். அத்தை மகன், என்னு ளத்தைப் பறித்த என் அத்தானே வேண்டும் முத்துச் சரப்பளி பட்டுப் புடவைகள் வேண்டாம் மூக்கும் காதும் நகை சுமக்கவும் வேண்டாம் பத்துக் காணி நிலம் வேண்டாம் பாலொடு நெய்தயிர் வேண்டாம் மெத்தை வீடு வேண்டாம் வேலைக்காரி வேண்டாம் அத்தை வேண்டாம் மாமன் வேண்டாம். முத்தமிழ் கற்ற என் - அத்தானே வேண்டும் தமிழைப் பழித்த வடக்கை அடக்கி ஆண்ட தக்கதோர் குட்டுவ னேவரினும் அவன் வேண்டாம். இமைய நெற்றியில் தன்கொடி நாட்டிய ஏந்தல் வந்துகை ஏந்தினும் வேண்டாம். அமை திரவிட நாட்டை ஆளவந் தானும் வேண்டாம். சமையம் சாதிச் சழக்கு மடமை தாண்டி னோன் மீண்டும் என்றன் - அத்தானே வேண்டும் - தேனருவி, ப.41, 1956 70. காதல் வாழ்விலே காதல் வாழ்விலே மகிழ்ந்தோம் கவலை தவிர்ந்தோம். - காதல் வாழ்விலே மாதர் என்னும் மலரும் இளைய மைந்தர் என்னும் வண்டும் கலந்த - காதல் வாழ்விலே தென்றல் காற்றும் வானும் சேரன் தமிழும் பொருளும் அன்றில் ஆணும் பெண்ணும் அணைவ தான இணையிலாத - காதல் வாழ்விலே இளமை இரண்டும், அழகே இரண்டும், நெஞ்சம் இரண்டும் அளவளாவும் போதில் பொழியும் அமிழ்த மழையில் நனைவதான - காதல் வாழ்விலே அலையில் நீந்தி ஓடும் அன்னம் போன்ற ஓடம் நிலைஉயர்த்தி, நம்மைக் கூட்டி, நினைவை எல்லாம் இன்பம் ஆக்கும் - காதல் வாழ்விலே விரிந்த வானும் ஒளியும் வீணையும் நல் இசையும் புரிந்த இன்பம் போல நாமே பூரிப்பாலே வாரித் தழுவும். - காதல் வாழ்விலே - தேனருவி, ப.43, 1956 71. அவன்தான் குழந்தையைச் சுமப்பான் அவன்தான் குழந்தையைத் தூக்கிச் செல்வான் அவனும் குழந்தையின் அன்னையாம்! அவளும் சேர்ந்து வழி நடக்கையில் - அவன் எவன்தான் மனைவியான மடமான் - ஓர் இன்னல் அடைய விடுவான்? அவள்தான் மேலாடை காத்து - விழிமீன் அன்பன்மேல் சேர்த்து நடந்து செல்வாள். - அவன் அறம் நடத்தி இன்பம் நல்கும் அமிழ்து - தன் அல்லல் தீர்தல்எப் பொழுது? புறமுள்ள சோலைக்கு மாலை செல்வாள் - தன் பொன்னான கண்ணாளன் தன்னுடன் இனிதே - அவன் - தேனருவி, ப.45, 1956 72. காதல் கரும்பு கரும்புக்குள் இருப்பது இனிமை! - என் காதல் கரும்பை விட்டிருப்பேனோ தனிமை? திருவிதழ் கூட்டுக்குள் சர்க்கரை - அவள் திருட்டு விழிக்கென்மேல் அக்கரை! மாலையின் மணிகளை நூலே தாங்கும் - இரு மனங்களின் சுமைகளைக் காதலே தாங்கும் சோலை மலர்கள் எலாம் அவள்எழில் ஓங்கும் சோர்ந்து சோர்ந்து என் விழிகளோ ஏங்கும். ஆறுதன் வழியினை அறிந்திடல் போலே - அன் பாறுதன் என்மேல் விழுந்ததினாலே பேறுபெற்றேன் நான் தமிழச்சியாலே - எனப் பேசும் உலகுதன் வியன்மொழியாலே. மக்கள் பெறாதவர் மகிழ்வினை அறியார், மாதினைப் பெறாதவர் வாழ்வினைத் தெரியார், சிக்கலைத் தீர்ப்பதும் அவளின் கடமை - அவள் சேர்ந்துவிட்டால் வேண்டேன் பிறஉடைமை! - தேனருவி, ப.46, 1956 73. காட்டுக் குறத்தி - நாட்டுப் புறத்தான் கலப்புத் திருமணம் தெருவில் குறத்தி: ஐயே! ஐயே ... தெற்குப் பொதிகைமலை எங்கள் மலைதான் - நல்ல தென்பாங்கும் நாட்டியமும் எங்கள் கலைதான்! தக்கதக்க தக்கதக்க என்றாடுவோம் - நல்ல தாயான தமிழையே கொண்டாடுவோம்! ஐயே! ஐயே ... சாதி சனங்கள் என்னை இட்டு வந்தாங்க - தன்னந் தனியே என்னை இங்கே விட்டுப் போனாங்க! வீதியிலே ஆடப்பாட நானோ ஒருத்தி - ஐயோ! வெட்கமா இருக்குதுநான் சின்ன குறத்தி! ஐயே! ஐயே ... (வீதியில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நாட்டுப் புறத்தான் எதிரில் நெருங்கிக் கூறுகின்றான்) நாட்டான்: வெட்கமென்ன சிக்கிஎன்ன சொல்லடி பெண்ணே - இந்த வீதியிலே யாருமில்லை நில்லடி கண்ணே! சொக்குப்பொடி தூவிவிட்டாய் என்மேலே சோலைக்குநீ வாடிஇள மயில்போலே குறப் பெண்ணே ... ! குறத்தி: என்னை வளைக்க இவன் வலைபோட்டான் - நல்ல இன்பம் பரிமாற இலைபோட்டான் மின்னல் அடித்ததுபோல் கண்ணை அடித்தான் - காதல் வேதனையி னாலேமனம் துடிதுடித்தான்! ஐயே! ஐயே ... நீ நாட்டுப் புறத்தான் - நான் காட்டுக் குறத்தி! நாட்டான்: நாட்டு மக்களில் - வேறு பாட்டைக் கண்டாயோ? குறத்தி: நாம் கூட்டுவாழ்க்கை வாழுவது கைகூடுமோ - இந்தக் கோதைக்குநீ மாலையிட எண்ணிடலாமோ? ஐயே! ஐயே ... நாட்டான்: காதல் கொண்டபின் - நம்மில் சாதி ஏதடி? குறத்தி: வேதனை தரும் - இந்தச் சோதனை ஏனோ? நாட்டான்: மாதரசி உனக்கென்மேல் ஆசையில்லையா? - உனை வைத்துப் படைக்க எனக்கு மீசையில்லையா? குறப் பெண்ணே ... ! குறத்தி: உனக்கு, ஆடத் தெரிந்தாலும் போதுமே - கொஞ்சம் பாடத் தெரிந்தாலும் போதுமே! - மிக அரிதாகிய கலை ஒன்றுமே தெரியாத ஓர் பழிகாரனை நாடுவதால் என்ன புண்ணியம் - உளம் நத்துவதால் என்ன கண்ணியம்? நாட்டான்: ஆட்டத்தி லேஒரு சேரன்நான் - நல்ல பாட்டில் சோழ பாண்டியர் பேரன்நான் - நீ அச்சப் படுவதை விடுவாய் ஆசைக் கனிஇதழ் தருவாய் - நம்மைக் கூட்டியதும் கலை தானடி - நல்ல கோடையிலே குளிர் தேனடி! குறத்தி: எடுஎடு எடுஎடு ஒருபுறப்பறை தங்கமாமா! தடதட தடதட வென முழக்கிடுவாய் தங்கமாமா! நாட்டான்: கொடு கொடு கொடு கட்டிமுத்தம் புள்ளிமானே - நான் கொள்ளக் கொள்ள இன்பமடி புள்ளி மானே! குறத்தி: விட ஒருநொடி முடியாது தங்கமாமா - உனை விட்டாலுயிர் தரியாது தங்க மாமா! நாட்டான்: தடதடனெப் பாயுதடி இன்பவெள்ளம் தடங்கடலில் துள்ளுதடி நம்முள்ளம். - பாரதிதாசன் பன்மணித்திரள், ப. 1, 1964 74. அவள் உதடு சிரிப்பைக் கொண்டு செய்த உதடு! சிரித்துக் கொண்டே இருந்தது - பாங்கனே! சிரித்துக் கொண்டே இருந்தது! ஒருதிங்க ளாய்உன் முகம்காணேன் என்றாள் - நான் ஒன்றுமே சொல்லாமல் ஊமைபோல் நின்றேன் உருவப் படம்கேட்டேன் தரவில்லை என்றாள் ஒகோ நானதை மறந்தேனே என்றேன் அரிவை உள்ளம் அழுதுகொண் டிருந்ததெனினும் சிரிப்பைக் கொண்டு செய்த உதடு சிரித்துக் கொண்டே இருந்தது - பாங்கனே! சிரித்துக் கொண்டே இருந்தது! உனைக்காணா திரவில் தூங்கிடேன் என்றாள் - உனை ஒருநொடி யேனும் பிரிந்திடேன் என்றாள் எனக்குப் பிறநாட்டில் வேலையுண் டென்றேன் இரண்டு திங்கள் வரேனென்று சொன்னேன் புனைபாவை உள்ளம் அழுதுகொண் டிருந்ததெனினும் சிரிப்பை கொண்டு செய்த உதடு சிரித்துக் கொண்டே இருந்தது - பாங்கனே! சிரித்துக் கொண்டே இருந்தது! இருப்பதாய் இருந்தால் என்னிடம் சொல்க - நீ போவதாய் இருந்தால்என் கட்டைக்குச் சொல் என்றாள் வருத்தத்தால் ஒன்றுமே சொல்லவில் லைநான் வாழ்வென்னைக் கைவிடு மோஎன் றெண்ணினேன் திருப்பாவை உள்ளம் அழுதுகொண் டிருந்ததெனினும் சிரிப்பைக் கொண்டு செய்த உதடு சிரித்துக் கொண்டே இருந்தது - பாங்கனே! சிரித்துக் கொண்டே இருந்தது! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.4, 1964 75. அவள் யார்? ஓர்நிலவே அவள்தானோ கதிர்தானோ கொம்புத் தேனோ - நடை ஓவியமோ புள்ளி மானோ - வேண்டும் நேயத்திலே நெஞ்சம் தோயும்போதிற் - புதிதாய் நேரிட்ட இன்பத்தேன் ஊற்றோ - வந்து நெஞ்சைத் தொடும்குளிர் காற்றோ? - ஓர் மாணிக்கச் சிரிப்புக் காரியோ - நெஞ்சை மகிழ்விக்கும் வானம் பாடியோ ஆணிப் பொன்னேஅவள் மேனியோ - மொழி அனைத்தும் தித்திக்கும் சீனியோ? - ஓர் ஆடும் மயிலோ பாடும் குயிலோ - படம்விரித் தாடும் மயிலோ பாடும் குயிலோ? - ஓர் நாடும் அகப் பொருளி னுக்கே - அவள் நல்ல தோர் இலக்கியமோ தேடரிய கலைப் பொருளோ - அருமைச் செந்தமிழின் இன்சுவையோ? - ஓர் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.5, 1964 76. அவன்மேற் காதல்... ஆடட்டுமா? - கொஞ்சம் பாடட்டுமா?அத்தான்... - ஆடட்டுமா உயிர் தளிர்க்கப் பாடும் பாவலனே - என் உளங் களிக்கப் பேசும் நாவலனே மயலுக்கு மருந்தொன்று தேடிவந்தேன் - உன் மலராத முகங்கண்டு மனம்நலிந்தேன். - ஆடட்டுமா வெண்பாத்தேன் சொரியும் ஒருநேரம் - பின் விருத்த kiHbghÊí«(c‹) இதழோரம் கண்பார்த்துன் பொன்னான வாய்திறந்தால் - நல்ல கட்டாணி முத்துக்கள் சிந்திவிடுமா? - ஆடட்டுமா மறவன் உருவியஓர் வாள்போலே - ஒளி வாரி வழங்கும்உன் fண்ணாலேÃiறயஎன்மd«பட்டபுண்zhலே- c‹ நிidவுfலங்குவJம்எதனாy?-ஆடட்டுkh சோலையுள் வானமும் நீலக்கடலும் - gசுந்nதாகைkயிலும்ஒருbfஞ்சுகிளியும் கhலப்புJமையும்உன்உŸளத்திலே- fÉகhட்டினவாதÄழ்tள்ளத்திலே! - ஆடட்டுமா - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.6, 1964 குறிப்பு : பன்னாட்களுக்கு முன் என்னால் எழுதப்பட்ட இதில் உள்ள தொடர்கள் சிலவற்றை வேறு பாவலர் எழுதியதாகப் பட முதலாளிகள் வெளியிட்டதும் படிப்போர்க்கு நினைவிருக்கும். 77. அவள் ... பாருக்கோர் புதுமை மாதர்க் கரசியவள்! பார்க்கும் பார்வை தன்னிலே - வந்து பாயும் காதல் மின்னலே! அவள்வார்த்தை ஒவ்வொன்றுமே நேர்த்தி மட்டு மல்ல! நறுக்கிப் பிழிந்தநற் கன்னலே! நேருக்கு நேரிரண்டு கெண்டை கண்டேன் நெற்றி நீராழி மண்டபத்தில் - அதற் கப்புறம் ஓர்புறத்தில் - கடும் போருக்குப் பாரை அழைக்க வளைத்தஇரு புருவங் கண் டேன் திறத்தில்! பவழமோ கோவைப் பழமோ மின்னற் பிழம்போ பாவை இரண்டுதடுமே - உண்டால் சாவையும் நீக்கி விடுமே! - அங்கே தவழும் ஒளிச்சிரிப்பைத் தான்கண்டால் என்னுள்ளம் பேரின் பத்தைத் தொடுமே! நுண் இடையும் அன்னம்போன்ற நடையும் நிறையமடை உடையும் அழகின் பெருக்கா? - இவை கடையில் விற்கும் சரக்கா? - மேல் உடைஎன்று மின்னுடுத்தி உலவிடும் தங்கத்தேர் எனக்கல் லாமற் பிறர்க்கா? - பாருக் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.7, 1964 78. அவள் அவன் நேர்ந்தாடல் அவன் :மந்தைமாடு வீடுவரும் மாலை நேரத்தில் வந்துநின்ற தென்னேடி சாலை ஓரத்தில் அவள் :சந்தையிலே கூடுவாங்கப் போனதி னாலே தயங்குகின்றேன் சாயுந்தரம் ஆனதி னாலே! அவன் :சந்தையிலே கூடுவிற்க வில்லையா கண்ணே? தக்கதாக இல்லைஎன்ற தொல்லையா பெண்ணே? அவள் :சந்தையிலே கூடுவிற்கவில்லை நல்ஐயா தனித்துவந்தேன் என்னபண்ண நீயே சொல்லையா? அவன் :கூடுநல்ல கூடுகோழிக் கூடுவேண்டுமா? அவள் :கூடுநல்ல கூடுகோழிக் கூடு வேண்டுந்தான் அவன் :பாடுபெண்ணே பாடுநல்ல கூடுதருவேன் அவள் :ஆடுகொஞ்சம் ஆடுநானும் பாடி வருவேன் அவன் :கூடு, கோழி கூடுவது போலக் கூடுவோம் அவள் :கூடு, சிட்டுக் கூடுவது போலக் கூடுவோம் அவன் :கூடுகூடு கொஞ்சுமொழி சொல்லிச் சொல்லியே அவள் :கூடக் கூட நெஞ்சில்ஆசை தீரவில்லையே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.11, 1964 79. தலைவனும் தலைவியும் தலைவன்காதல் வாழ்வே வாழ்வென்று வள்ளுவர் கருதியதேன்? புகல்வாய்! தலைவி :மாதரும் துணைவரும் மனமொத்ததே இன்பம் மற்றுமோர் இன்ப முண்டோ? தலைவன் காதலி இடத்தில் காதலன் காட்டும் கடமைதான் யாதுரைப்பாய்? தலைவி :காதலி நலமே தன்னல மென்று கருதியே வாழ்ந்திடு வான்! தலைவன்மாதர்கள் எல்லாம் மணவாள ரிடத்தில் வாழும் முறைமை உரைப்பாய்! தலைவி :ஆதிமந்தி பிறந்த அருந்தமிழ் நாட்டில் அவள்அவனைப் பிரிதல் இல்லை! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.12, 1964 80. உனக்கென்று நான்... எனக்கென்று நீ தென்பாங்குக் கண்ணிகள் உனக்கென்று நான்பிறந்தேன்! உண்மையிலே பெண்மயிலே! எனக்கென்று நீபிறந்தாய் என்குயிலே பொன்வெயிலே! தனக்கென்று வாழ்வதில்லை தமிழினத்தான் உலகினிற்றான் மனமொன்று பட்டால் இன்ப வாழ்க்கையிலே நாம் ஒன்றுதான். - உனக்கென்று நான்பிறந்தேன்! நான்என்னை உனக்களித்தேன் நடையழகி இடையழகி நீஉன்னை எனக்களிப்பாய் நேயப்பெண்ணே! வாஎன்கண்ணே! வான்ஒன்று நிலவொன்று இணைந்ததனால் அழகுண்டு நானொன்று நீஒன்று நணுகுவதால் வாழ்வுண்டு. - உனக்கென்று நான்பிறந்தேன்! தேனுனக்கு நான்துணைவன் தீங்கரும்பே! கோங்கரும்பே! கோன்எனக்கு நீதுணைவி கொஞ்சும்கிளி! வஞ்சிக்கொடி! ஏனுனக்கு மனக்கசப்பு நீஎனக் கதைவிளக்கு நானுனக்கும் நீஎனக்கும் நாமளித்த அன்பளிப்பு! - உனக்கென்று நான்பிறந்தேன்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.13, 1964 81. திரும்பிப் பார்த்தால் என்ன? திரும்பிப் பார்த்தால் என்ன? விரும்பிப் பார்த்த என்னை அவன் திரும்பிப் பார்த்தால் என்ன? பெரியவேலை உள்ளவன் போலே பெண்ணை வெறுத்தவன் போலே அரும்பும் சிரிப்பை அடக்கிச் சென்றான் அசையும் தேரைப் போலே - அவன் - திரும்பிப் குன்று சார்ந்த நாடும் வீடும் கொடுவென்று கேட்டேனா - நான் சென்று வழியை மறித்துச் சிரித்து மடியிற் கைபோட் டேனா - அவன் - திரும்பிப் மானென் றும்ஒரு மயிலென் றும்எனை அழைக்கச் சொன்ன துண்டா? - எனை ஏன்என் றொருசொல் சொன்னால் உள்ளம் ஒடிந்திடுமோ துண்டா? - அவன் - திரும்பிப் சதையில் மெருகும் முகத்தில் அழகும் தாங்கிச் சென்றான் கொடியன் - நான் அதிலே கொஞ்சம் இதிலே கொஞ்சம் அள்ளிக் கொள்ளவா முடியும் - அவன் - திரும்பிப் பாதி மறைத்துப் பாதி விலக்கும் படத்து நடிகை யாநான்? காதல் கொண்டஎன் முகத்தைப் பார்க்கக் கண்ணும் கூசுவ தேனோ? - அவன் - திரும்பிப் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.15, 1964 82. எனை மறந்தான் தென்பாங்குக் கண்ணிகள் கண்ணைப் போட்டான் என்மேலே; கையைப் போட்டான் தோள்மேலே; மண்ணை அள்ளிப் போட்டாண்டி என் வாழ்விலே! - ஒரு பெண்ணைக் குழியில் போட்டாண்டி இந்நாளிலே! காலைப் போட்டான் என்வீட்டில், கதையைப் போட்டான் என்காதில், வேலைத் தூக்கிப் போட்டாண்டி என் நெஞ்சிலே! - என் தோலை நெருப்பில் போட்டாண்டி இந்நாளிலே! பல்லைப் போட்டான் என்உதட்டில், படியைப் போட்டான் முத்தளக்க கல்லை வாரிப் போட்டாண்டி என் தலைமேலே! - சொன்ன சொல்லை மறந்து போனாண்டி இந்நாளிலே! பூவைப் போட்டான் என் தலைமேல் பொடியைப் போட்டான் நான்மயங்க சாவைத் தூக்கிப் போட்டாண்டி என் வாழ்விலே! - இந்தப் பாவையைத்தான் மறந்தாண்டி இந்நாளிலே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.16, 1964 83. அறிவு மணம் புதுநிலவு போல்முகத்தாள் நின்றாள் வெளியில் மிதிவண்டி மேல்விரைந்து சென்றான் - மதிவாணன் பார்த்தான் அவள்பார்த்தாள் பாய்காதல் மின்தாக்க வேர்த்தாள் அவன்வேர்த்தான் நெஞ்சு! மறுநாளின் மாலை மதிவாணன் வந்தான் பிறைநுதலா ளும்காணப் பெற்றாள் - சிறுக விரித்தான் விரித்தாள் இதழ்க்கூட்டு மின்னச் சிரித்தாள் சிரித்தான் அச்சேய்! மூன்றாநாள் முத்துநகை நின்றிருந்தாள் முன்போல தோன்றாத் துணையானான் தோன்றினான் - ஈன்றாரை மீறென்றான் மீறினாள்! மின்னே மிதிவண்டி ஏறென்றான் ஏறினாள் பெண். பெற்றோர் இதுகேட்டார் சற்றும் பிடிக்கவில்லை அற்றனவே சாதிமதம் ஆ! என்றே - சுற்றமுடன் கட்டைவண்டி ஏறிக் கதறி மிதிவண்டி தொட்டவழிச் சென்றார் தொடர்ந்து! சாதிமதக் கட்டைவண்டி தன்னிலே செல்லுகையில் கோதையும் சேயும் குளத்தூர்போய் - ஓதியே அன்புற்றார் வாழ்த்த அறிவு மணமுடித்தே இன்புற் றிருந்தார்கள் நன்கு. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.17, 1964 84. மனத்தினை அவளுக் கீந்தான் மங்கையும் தன்னைத் தந்தாள் நடந்தது நாள்ஒவ் வொன்றாய் நகர்ந்தன நான்கு திங்கள்! மடமயில் தனைநெ ருங்கும் வாய்ப்பில்லை, பேச்சும் இல்லை அடைந்தேன்இன் றவள்வ ரைந்த அழகிய காதல் அஞ்சல் அடைகஎன் வீட்டைக் காலை ஐந்தரை மணிக்கு நீவிர் அஞ்சலைப் படித்தான் பாரி, அற்றைநாள் இரவு தன்னைக் கெஞ்சினான் திட்டிப் பார்த்தான் கேட்கவே இல்லை அஃது; மிஞ்சுகா லணிகள் பூண்ட மெல்லிபோல் மெதுவாய்ச் செல்லக்; கொஞ்சிற்றுப் பரிதி கீழ்பால் கொடியிடை வீடு சென்றான். வருகஎன் றுரைத்தாள் - கண்ணால் வரவேற்று நின்றாள்; பாரி இருகையால் தழுவப் போனான் இரும் என்றாள் என்ன என்றான்? ஒருமனப் பட்டு வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்வோம் பருகுவோம் பிறகு காதற் பழச்சாற்றை என்று சொன்னாள். உம்மதம் என்ன என்றாள், உம்பெயர் என்ன என்றாள் எம்மதம் ஆனால் என்ன யான்ஒரு முசிலீம் என்றான். செம்மைசேர் புனைபெ யர்தான் பாரிஎன் றுரைத்தான் செம்மல். இம்மியும் நமது வாழ்வில் ஒற்றுமை இராதே என்றாள். என்மதம் மயிலே உன்னை வரவேற்க மறுப்ப தில்லை. கன்னலின் உதட்டை என்பால் காட்டுக என்றான் காளை நன்மனத் தீர்!உ மக்கு நான்வேண்டு மாயின், நீவிர் உம்மதம் துறக்க வேண்டும் உள்ளத்தும் வெளிப் புறத்தும்! என்றனள் இதனைக் கேட்டான், திடுக்கிட்டான், இயம்பு கின்றான். என்மதம் இலாம், ஆம்ஆம் எனினும்நான் திராவி டன்தான், என்றனன். மங்கை நல்லாள் இதுகேட்டாள் சிரித்துச் சொல்வாள்; மன்னிய திராவி டர்க்கு மதமில்லை சாதி இல்லை! தளைமதம் விடுக நீவிர் தனிவிடு தலைமேற் கொள்க. களையினை நெஞ்ச கத்துக் கழனியில் வளர்த்தல் வேண்டாம் இளமையில் பயனும் வாழ்வின் இன்பமும் மதத்தில் இல்லை விளைந்திட்ட தீமை எல்லாம் மதவெறி விளைத்த தென்றாள்! நினைவினில் ஆழ்ந்தான், நெஞ்சில் நிறைஇருள் நீங்கப் பெற்றான், தனிப்பெருந் திராவி டத்தைத் தான்எனக் கண்டான். மானே இனிஒரு மதத்துக் காட்பட் டிரேன்என்றான், தூய்மை யான மனத்தினை அவளுக் கீந்தான் மங்கையும் தன்னைத் தந்தாள். - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.19, 1964 85. குறத்தி பாட்டு என்னடி கானக் குறத்தி - எனக் கின்பம் தராதிருக் கின்றாய் பொன்னடி நத்திய என்னை - ஒரு போதும் விலக்கிட வேண்டாம்! பின்னடி தோளொடு தோளை - பேச்சுப் பேசவும் கூசுவ தேனோ? கன்னல் உதட்டினைக் கொஞ்சம் - உண்ணக் காட்டடி நீட்டாண்மைக் காரி! முத்துச் சிரிப்புடை யாளே - மலர் மொய்குழ லேஇள மானே தித்திக்கும் தேன்மொழி யாளே - எங்கும் தேடக் கிடைக்காத பொன்னே ஒத்துக்கொள் ஒத்துக்கொள் என்னை - இடை ஓரத்தி லேஎன்னைச் சேர்ப்பாய்! தொத்தும் பசுங்கிளி போலே - என் தோளில்வந் தேறடி பெண்ணே! கல்லைக் கவண்கொண் டெறிந்தாய் - கடைக் கண்ணெறிந் தாயடி என்மேல் கொல்லையிற் புள்ளினை வாட்டி - எனைக் கொன்றனை உன்மையல் ஊட்டி அல்லல் அகற்றடி மானே - எதிர் ஆடியும் பாடியும் காட்டி இல்லைஎன் னாதுகொ டுப்பபாய் - அடி என்னிரு கன்னத்தில் முத்தம்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.22, 1964 86. முதியோர் காதல் தோழனே உன்னிடத்தில் சொல்லுகின்றேன் என்காதல் பாழாகக் கூடாது. பாழானால் வாழ்வேது? நேற்றுமுன்னாள் நேரிழையை நேரினிலே கண்டேன்நான், நேற்றிரவும் கண்டு நெடுநேரம் பேசினேன். என்னைக் கணவனென எண்ணிவிட்டாள் ஆதலினால் பொன்னான வாய்திறக்கப் பூவையவள் நாணமுற்றாள். சின்ன வயதுடையாள் தேவைக்குத் தோதுடையாள் மின்னல் இடையாள் மிகுமையல் கொண்டுள்ளாள். என்னையவள் காதலித்தல் நானறிவேன். நானவளைப் பொன்னாய் மதிப்பதையும் போயுரைக்க வேண்டாமா? ஆதலின் நீபோய் அவளிடத்திற் கூறிவிடு மாதரசி சொல்வதைநீ வந்துசொல்வாய் என்னிடத்தில் செங்கதிரும் மேற்கில் மறைந்ததுகாண்! தேனிதழாள் அங்கிந்த நேரம் அழகாக வந்துநிற்பாள். மாமரத்தின் தெற்கில் வழிபோகும் அங்கேஓர் பூமரமும் நிற்கும் புளியமரத் தண்டையிலே! சோளம் வளர்ந்திருக்கும் கொல்லையொன்று தோன்றுமதன் நீளவரப்பினில்தான் நின்றிருப்பாள் என்கின்றேன். என்று தலைவன் இசைக்கவே அத்தோழன் - இன்றிரவே நீகாண எண்ணமா என்றுரைத்தான். ஐயையோ இன்னும் அரைநொடியில் அன்னவளை மெய்யிறுக நான்தழுவ வேண்டுமடா தோழா! விரைந்தோடு மங்கையிடம் என்னுடைய மேன்மை, பெருஞ்செல்வம் கல்வி பெரியபுகழ் அத்தனையும் சொல்லி மடமயிலாள் தொட்டிழுக்கத் தோது செய்வாய் வல்லியிடம் என்றன் வயதைமட்டும் கூறாதே! வாங்கிய வில்போல் வளைந்த உடல்எனினும், ஆங்கே பிறப்பில் அமைந்ததென்று சொல்லிவைப்பாய், தேன்தடவ நேர்ந்ததனால் சேர்ந்த நரைஎன்று மான்விழியா ளுக்குரைத்து வைத்துவிடு முன்னமே! முப்பத் திரண்டுபல்லும் மோழையே! ஏனென்றால் உப்பில்லாப் பத்தியத்தால் அப்படிஎன் றோதிவிடு! கண்ணின்ஒளி மங்கியதைக் காதலிக்குக் கூறாதே! பெண்ணரசை மெல்லத் தடவிப் பிடித்திடுவேன் சார்ந்த இருட்டில் தடுமாட்டம் யாருக்கும் வாய்ந்த இயற்கைஎன வஞ்சியவள் எண்ணிடுவாள் கற்பை எனக்களித்த பின்பு கதைதெரிந்தால். குற்றமில்லை! போபோபோ என்றான் கொடுங்கிழவன் தோழன்போய் மீண்டுவந்து சொல்லுகின்றான்: ஐயாவே வாழைத் துடையுடைய வஞ்சிவந்து காத்திருந்தாள் சொன்னதெல்லாம் சொன்னேன் துடித்துவிட்டாள் காதலினால் கன்னலின் சாற்றைக் கடிதுண்ண வேண்டுமென்றாள். காற்றாய் விரைந்துவந்து கட்டித் தழுவிமையல் ஆற்றா விடில்நான்போய் ஆற்றில் விழுந்திறப்பேன் என்று பறந்தாள். இதோஎன்றேன் ஓடிவந்தேன் சென்றுபே ரின்பத் திரைகடலில் மூழ்கிடுவீர் போய்வா ரீர்! என்று புகன்றுதோ ழன்மறைந்தான். வாய்வழியும் எச்சிலொடு காலால் வழிதடவி முள்ளில் விழுந்தெழுந்து முன்காலில் புண்ணடைந்து கள்ளுண்டான் போலஉடல் தள்ளாடிக் காலிடறிச் சோளம்வளர் கொல்லையிலே நின்றிருந்த தோகையினை மூளும் வெறியாலே மொய்குழலே என்றணுகித் தாவி அணைந்தான் தனித்திருந்த அவ்*வைக்கோற் பாவையுடன் வீழ்ந்தான் படுகிழவன்! அண்டை மறைந்திருந்த தோழன்அங்கு வந்திருந் தவர்பால் அறைவான்: கிழவன் மணம்கேட்பான். அஃதியற்கை தன்னொத்த மூத்தாளைத் தான்தேட வேண்டும்இள மின்னொத்தாள் வேண்டும்எனல் தீது. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப. 23, 1964 குறிப்பு : *it¡nfh‰ பாவை - விளைவுள்ள நிலத்தில் வைக்கோலால் செய்து நிறுத்தப்படும் புல்லுரு. - சிங்கைத் தமிழ் முரசில் வெளிவந்தது. 87. பிழைத்தேனா? செத்தேனா? நாம்வைத்த அன்பு மலையினும் பெரிதே நம்தோழன் அன்பு கடுகினும் சிறிதே! - நாம் பாம்பொன்று சீறும்; தென்றலாம் அதன்பெயர்! பழிபேசித் திரியும்: குயிலாம் அதன்பெயர்! தேம்பி அழவைத்தான் மாலைச் சுடுகாட்டில் திறங் கெட்டுப்போகுமோ முகம் காட்டிப்போனால் - நாம் கண்ணிருந் தும்உடல் மரத்தினில் மோதும் காதுகள் இருந்தும் கேட்கிலேன் யாதும்! பெண்ணிருந் தேன்பெறும் பேறென்ன பெற்றேன்? பிழைத்தேனா செத்தேனா வந்தானா அவன்றான்? - நாம் மார்பின் பூச்சோ எனஎண்ணும் மூக்கு; வண்டுசொற்படி அது முல்லையின் தாக்கு! தேரின் மணியோ என்னும்என் நெஞ்சம்; சிட்டுக்கள் அப்படி அல்லவா கொஞ்சும்! - நாம் பன்முறை அல்ல, ஒருநொடி விருந்து பழந்தமிழ்! ஒருசொல்! என்சாவா மருந்து பொன்னுடல் காதல் தணலால் உருகிற்றே பூவிதழ் அவனைக் காணாது கருகிற்றே. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.26, 1964 88. வந்த சேதி முடிந்ததே! வந்த சேதி முடிந்ததே - இயங்கு வண்டி ஓட்டுவாய் வலவனே விரைவாய் - வந்த செந்தேன் உண்டநினைவு சிறிதுநேரம் இருக்கும் சேயிழை இன்பநினைவு எப்போதும் இருக்கும் நொந்தது நோக்காது வழிபார்த்து நிற்கும் நூலிடை எனைக்கூவிக் கூவி அழைக்கும் - வந்த புதுவை நகருக்கு விரைந்துபோக வேண்டும் *bgh¿ இயக்குநெய் எத்தனைபடி வேண்டும்? இதோஎன்று பொறியினை முடுக்கிடு தாளில் இன்பம் என்று போய்விழுவேன் அவள்தோளில் - வந்த தாவும் வழியில் புக்கத்துறை கண்டு நிறுத்துத் தமிழன் உணவுவிடுதி காண்பதென் கருத்து - நல் ஆவல் ஊசலாட்ட அகத்தும்புறத்து மாகி அழுவாளின் மார்பில் எனைக்கொண்டு பொருத்து. - வந்த - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.30, 1964 *bgh¿ இயக்கு நெய் - பெட்ரோல் 89. காதல் ஒப்பந்தம் விழலாக வில்லை என் காதல் விண்ணப்பம்! அழகிய மயிலுக்கென் நன்றி! விழியினால் எழுதினாள் ஒப்பந்தம் முற்றும் வெண்ணகையா லிட்டாள் கையெ ழுத்தும் - விழலாக பிழைசெய்த தச்சுக்கு வழிகாட்டும் வடிவு! பெண் ணமைப்புக்கு முடிந்தஓர் முடிவு! வழியிலோர் ஏழைக்கு வாய்த்தபொற் குவியல்! வளவயல்நான்; அவள் சம்பா நடவு. - விழலாக மங்கைதரு மின்பம் மட்டுப்பட வில்லை வையம்என் நினைவில் தட்டுப்பட வில்லை ஐயோ அவளைப் பிரியமுடிய வில்லை ஆர்பொறுப்பார் பிரிவால்வரும் தொல்லை - விழலாக தமிழகம் நெல்லையும் விலக்குதல் முடியும் தையல்கை விலக்குதல் எப்படி முடியும்? கமழ்ந்திடும் முல்லையிற் படிந்த வண்டு கடைப்பார்ப்பான் உணவுண்ணல் எங்கே உண்டு! - விழலாக வைய மல்ல இன்பக் கடல்இது! வாழ்க்கை அல்ல அன்பின் தொடர்பிது! எய்திய இந்நிலை மாறாமை வேண்டும் இருபத் தைந்து கோடி ஆண்டும்! - விழலாக - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.31, 1964 90. மாடியில் நிலவு (fhto¢ சிந்து bk£L) மாடியி லேஉலவும் வானப் புதுநிலவு கூடிக் குலவ எனைக் கேட்டு - மெல்லப் பாடி னாளே ஒரு பாட்டு - நல் வாழ்வுக் கினி தாகிய நாள் மகிழச் செய்யுந் திருநாள் தேடிய நற்சுவைக் கூட்டு - வந்து சேந்தி னாளே வலை போட்டு! ஏடு விரிந்தமலர் எட்டிப் பார்த்தெனையே மாடிக்கு வரும்படி கூவும் - கைம் மலர்கள் நீட்டி எனைத் தாவும் வானப் பறவையும் நானா? மங்கைவ ராததும் ஏனோ! வீடுநுழை யவும்அ வாவும் - அந்த வீட்டார் தடுத்தால் உளம் நோவும் கண்கள் அழகை எட்டும் காதுமொழியை எட்டும் பெண்ணைத் தொடவோ கைஎட் டாது - நல்ல பேரின்பம் இன்றுகிட் டாது பிசைமுக் கனியின் சாறே மிகவும் பெரியதோர் ஆறாய் அண்டையி லேஓடும் போது - நான் அள்ளி அருந்த முடி யாது தண்ணென்ற தென்றலே சாற்றுவேன் ஒன்றையே கண்ணாட்டிக் கேசென்று கூறு - நான் கழறு வதையே ஒருவாறு கதிரொளி மங்கிற்று விரைவினில் தோட்டத்துத் திண்ணையின் மேலேவந் தேறு - வந்து சேறுவேன் ஏதிடை யூறு! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.32, 1964 91. அவள் அப்படி தனித்தமிழ் வண்ணம் இசை: கானடா தாளம்: ஆதி தனதன தனதன தனதன தத்தன தனதன தனதன தனதன தத்தன தனதன தனதன தனதன தத்தன தனதன தனதன தனதன தத்தன தனதானா அமிழ்தமிழ் தமிழ்தெனில் இருதமிழ் கிட்டிடும் அவளிதழ் நினைவினில் விளைவன முத்தமிழ் அழகிய முழுமதி அவள்முகம் ஒப்பது கருவிழி இருகயல்! மொழிகனி ஒப்பது - கதையாமோ? கமழ்குழல் மலரொடும் அணிகள் சுமப்பது! குறுநகை உலகினை ஒளியில் அமைப்பது! கனமணி அணியிழை கவிஞர்ம லைப்பது! கலையது கதிரிழை நெசவில்வி ரித்தது - மிகையாமோ! சுமையுடல் எனமிகு துயர்கொளு டுக்கையை மெலிவுறு கொடியினை நிகருமி டுப்பினள் சுனையினை அழகுசெய் மரையின்ம லர்க்கையின் விரலிடை நகமது கிளியைநி கர்ப்பது - தவறாமே! நமதொரு தமிழகம் அடைவதொர் வெற்றியும் நடைமுறை தனிலுறும் மகிழ்தரு பெற்றியும் நணுகிய தெனமனம் மகிழ்வைய ளிப்பவள் நடுவெயில் இடையவள் நறுநிழல் ஒப்பவன் - அறிவாய்நீ! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.33, 1964 முதல் இரண்டு வரிகளில் அமைந்த கருத்து: அமிழ் தமிழ் தமிழ்தெனில் என்பதில் மூன்று அமிழ்து அமைந்துள்ளன. அவற்றின் நடுவில் நோக்கினால் இரண்டு தமிழ் கிடைக்கின்றன. ஆனால் அவள் இதழ் பற்றிய நினைவில் கிடைப்பன இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்ச் சுவைகளுமாம். 92. நீ வேண்டாம் இலவுகாத்த கிளியானேன் நானே - அவன் என்னைத் தெருவில் விட்டுச்சென்றிட் டானே நிலையாக நம்பியிருந் தேனே - அவன் நினைத்ததைநான் அறியவில்லை மானே! தலையில்அடித் தான்மணப்பேன் என்று - நீ தமக்கை மகளே எனப்பு கன்று குலையில்அடித் தான்பாவி இன்று - கருங் குரங்கிடத்தில் அன்புவைத்தான் சென்று! தேனிருக்க வேம்புகொள்ள லாமா? - என்னைத் திகைக்கவிட்டா யோஅருமை மாமா! நானிருக்க அவளைஎண்ண லாமா? - என்னை நலியவிட்டா யோஅருமை மாமா! நானிப்படிக் கேட்டேனடி கெஞ்சி - அவன் நவின்றமொழி கேளடிஎன் வஞ்சி: யானெழுதும் அஞ்சலையும் மிஞ்சி - பள்ளி ஏகவில்லை நீசிறுநெ ருஞ்சி. உருவணக்கம் தரும்உனக்கே இன்பம் - வே றொருவனைஏன் மணக்க வேண்டும் பின்பும்? திருமாலின் சிவனாரின் முன்பும் - நீ செங்கைகூப்ப வாய்த்ததாஉன் அன்பும்? வரும்பார்ப்பைச் சாமிஎன் றழைத்தாய் - உன் மாண்குடியும் நாணமுற வைத்தாய் பெரியாரின் நன்னெறிப ழித்தாய் - தமிழ்ப் பெருநாட்டின் பெருமையைக்கு லைத்தாய்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.35, 1964 93. நெட்டுக்காரி கொஞ்சம், திரும்பிப் பாராயா? - நான் கூப்பிடும் போதும் வாராயா? நெஞ்சில் ஆசை தீராயா? - உன் நேயம் எனக்குத் தாராயா? கெஞ்சும் மொழியும்கேளாதா? - நீ கேட்டுத் திரும்ப மாளாதா? தஞ்சம், அளிக்கத் தாளாதா? - உன் தாராளம் என்னைஆளாதா? ஒருசொல் லுக்குப்பஞ்சமா? - என் உள்ளக் கொதிப்புக்கொஞ்சமா? இரும்பு தான்உன் நெஞ்சமா? - அடி என்மேல் உனக்கு வஞ்சமா? திருவி ளக்கடி வீட்டுக்கே! - நீ செந்தமி ழடிஎன் பாட்டுக்கே! உருவி ளக்கடி நாட்டுக்கே! - நீ உயிரடி என் கூட்டுக்கே! அன்னத் தொடுநடைப் போட்டியா? - என் ஆசைம னத்தினில் ஈட்டியா? பின்னழது கைமட்டும் காட்டியா - நெஞ்சு பிளந்த னைமையல் மூட்டியா? முன்னழ கும்நகை முத்தழகும் - நல்ல முத்தமிழ் கொட்டும்உ தட்டழகும் என்னழகும் சேர்இ ரண்டழகும் - அடி இன்பத்தி லேநீந் தப்பழகும்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.36, 1964 94. கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்? என்மேல் ஆசை இல்லாவிட்டால் எனைக்கண் டுசிரிப் பாளா? அன்னநடை நடப் பாளா - என் முன்னேமுன் னேவரு வாளா தன்னுடை திருத்து வாளா - தன் மின்னிடை குலுக்கு வாளா - அவளுக் - கென்மேல் இப்படி வந்தால் தோளா - லெனை இடித்துக் கொண்டு போ வாளா அப்படிப் போகவி டாளா - என் அடியை யும்மிதிப் பாளா - அவளுக் - கென்மேல் காலங் கடத்தக் கூடா - தென்று கையோ டுபிடிப் பாளா - அவள் ஆலம் பழத்தைப் பொறுக்கிப் பொறுக்கி என்மேலே அடிப் பாளா - அவளுக் - கென்மேல் கொல்லைக்கு நான்போம் போதே - அவள் கொஞ்சும் கருங்குயில் போலே மெல்ல மெல்லப் பாடு வாளா - அவள் வேலை மெனக்கெடு வாளா - அவளுக் - கென்மேல் என்நாய்க் குட்டிக்கு முத்தம் - அவள் என்னெதி ரேகொடுப் பாளா சின்னசிட் டுக்களின் கூடல் - கண்டே என்னையும் பார்த்தழு வாளா - அவளுக் - கென்மேல் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.37, 1964 95. இன்ப வெள்ளம் அன்றைக்குத்தான் சரிஎன் றாயே அப்புறம் என்னடி நாணம்? இன்றைக்குத்தான்தனித்திருந்தாய் இன்னும் என்னடி வேணும்? ஒன்று கொடு கன்னத்திலே உயிரைக் காக்க மயிலே ஓடைப் புனலில் ஆடவேண்டும் உறவு செய்யடி குயிலே! நன்றாகஉன் முகத்தைக் காட்டு நட்டுக் கொண்டதும் ஏனோ? குன்றில்ஏறிக் கொம்புத் தேனைக் கொள்ளை கொண்டிடு வேனோ? அன்றிலைப்பார் சிட்டுக்கள் பார் அலுப்பில் லாத காதல்! ஆளிருந்தும் அறிவி ருந்தும் உனக் கேனடி சாதல்? வலிதிழுப்பான் மகிழ்ச்சி கொள்வோம் என்று சும்மா நின்றாய் கலிதவிர்க்க வந்தவளே கண்டு கொண்டேன் நன்றாய் எலிஇழுக்கும் மாம்பழம் போல் இருந்தேன் முன் னாலே எட்டிஇழு! கட்டித் தழுவ ஏன் சுணக்கம் மேலே! மலைகாணேன் மலர் காணேன் வைய கத்தைக் காணேன் நிலைகாணேன் உடல் காணேன் நிறை பொருள்கள் காணேன் கொலைபுரிந்தாய் என் உடலைக் கொள்ளை கொண்டாய் உள்ளம் கூடிவிட்டாய் காண்பதெலாம் ஓர் இன்ப வெள்ளம்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.39, 1964 96. அவன்மேல் நினைவு மனவீட்டினில் அவனிருக்கையில் மறந்துறங்குவ தெப்படி? - அடி வஞ்சிக்கொடியே செப்படி! - அவன் இனிக்கும்தமிழ் நாடிச் சென்றான் இன்று சொல்வதும் தப்படி - என் - மன வீட்டினில் இனிக்கப்பேசும் வாய்மறந்தே யான் உறங்குவ தெப்படி! - அடி ஏந்திழையே செப்படி! - அவன் எனைவிடுத்தான் படிக்கச் சென்றான் என்று சொல்வதும் தப்படி - என் - மன வீட்டினில் கட்டிஅணைக்கும் கையைமறந்து கண்ணு றங்குவ தெப்படி? - அடி கானக்குயிலே செப்படி! - அவன் எட்டிச்சென்றான் தமிழ் ஆய்ந்திட என்று சொல்வதும் தப்படி - என் - மன வீட்டினில் ஒட்டும் அன்பன் உடல்மறந்தும் உறக்கம் கொள்ளுவ தெப்படி? - நடை ஓவியமே செப்படி! - அவன் எட்டச் சென்றான் தமிழ்பரப்பிட என்று சொல்வதும் தப்படி - என் - மன வீட்டினில் தொட்டால் சுவைக்கும் விரல் மறந்தே தூக்கம் கொள்ளுவ தெப்படி? - அடி தோகை யேநீ செப்படி - அவன் எட்டுத் திசையும் தமிழ்க்குச் சென்றான் என்று சொல்வதும் தப்படி - என் - மன வீட்டினில் பட்டால் இனிக்கும் உதட்டை மறந்து பாயிற்படும்பதெப்படி? - அடி பச்சைக்கிளியே செப்படி - அவன் இட்டே தமிழ் பரப்பச் சென்றான் என்று சொல்வதும் தப்படி - மன வீட்டினில் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.41, 1964 97. அவன் எழுதிய அஞ்சல் அஞ்சல் விளக்கம் கேளாய் தோழி! கேட்டில் உழன்றநான் ஆளன் எழுதிய அஞ்சலால் மகிழ்ந்தேன். செய்திச் சுருளுக்குச் செப்பும் பெயரே அஞ்சல் என்பதாம்; அதுகா ரணப்பெயர்! நானதை விளக்குவேன் நன்று கேள்நீ; எழுதிய செய்திச் சுருளை எவரும் ஆவ ணத்திற் சேர்ப்பர்; அவற்றை ஊர்க்கொரு பையே யாகச் சேர்த்தே அஞ்சற் காரன் வாயிலாய் அனுப்புவர். தகட்டுச் சிற்றிலை மிகப்பல கோத்த வளையம் தலையில் வாய்ப்புறப் பொருத்திய கலகலத் தடியும் கையும் ஆகிய வலியான் அஞ்சல் வன்சுமை தாங்கிய நெடுவழி செல்லுவான். நீகண் டிருப்பாய்! அஞ்சலோன், அதைப்பிறர் பறிப்பார் என்றே அஞ்சலால் செய்திச் சுருளுக்கு - அஞ்சல் என்பதோர் ஆகு பெயரா யிற்று. மற்றுமோர் காரணம் வழுத்துவ துண்டு அரசினர் ஆள்இவள் என்று சலங்கை உரைத்தலால் பறிக்க எண்ணுவார் உள்ளம் அஞ்சலால் செய்திச் சுருளைத் தமிழர் அஞ்சல் என்றனர்! என்பதும் அறிக! இவ்விரு காரணம் இருக்க நானுமோர் காரணம் கழறு கின்றேன்! அயலூர் சென்ற காதலன் சேயிழை என்னை மறந்தா னோஎன மருண்டி ருக்கையில் அஞ்சா தேஎனும் அருமைப் பொருள்படும் அஞ்சல் என்றதால் சுருளுக்கு - அஞ்சல் என்றபேர் அமைந்தது நன்றே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.43, 1964 98. அம்மா போய்விட்டாள் அன்பை அழை! காளையடி வீட்டுக் கொல்லையிலே! - சென்று கட்டிப் போட்டுவாடி என்மயிலே வேளை யொடுசென்று புல்லிடுவேன் - பயன் விருந்துக்கு நன்றி சொல்லிடுவேன். தாளினைப் போடடி! என்அன்னை - வீட்டில் தனியே விட்டுச்செல் வாளென்னை பாளை பிளந்த சிரிப்புடையாய் - அந்தப் பத்தமடைப் பாயை நீவிரிப்பாய்! என்னம்மை இன்னமும் போகவில்லை - தோழி இங்குநம் ஆசையும் தீரவில்லை இன்ப இலக்கியம் கையிலுண்டு - நம் ஏக்கம் தவிர்ந்திட வாய்ப்புமுண்டு. இன்றைய வாய்ப்பினை நானிழந்தால் - வே றெப்போது நான்பெறக் கூடுமடி? அன்பனைச் சென்றழை என்தோழி - என் அம்மையும் சென்றுவிட்டாள் வாழி! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.45, 1964 காளை : காளை மாடு அல்லது காதலன். கட்டிப் போட்டு வா - இருக்கும் படி செய்து வா. புல்லிடுவேன் - புணர்வேன் அல்லது புல் போடுவேன். பயன் விருந்து - பால் தந்த விருந்து அல்லது பயனுள்ள காதல் விருந்து இன்ப இலக்கியம் - காதலன். 99. அவள்மேற் காதல்! ஓடிவா ஓடிவா ஓடிவா ஓடிவா வானம் பாடியே - விரைவில் - ஓடிவா வேடிக்கைக் காரி - இங்கு வாடிக்கைக் காரி - உன்னைத் தேடினேன் ஊரி - லின்பம் நாடினேன் கோரி - விரைவில் - ஓடிவா எண்சுவைக் கூட்டு - நின் செந்தமிழ்ப் பாட்டு - நான் *nf£L¡ கேட்டு - வந்தேன் நல்வழி காட்டு - விரைவில் - ஓடிவா பெண் நடக்கு மாம் - கண்ட அன்னம் சொக்கு மாம் - இரு கண்சி மிழ்க்கு மாம் - அவை மின்னல் கக்கு மாம் - விரைவில் - ஓடிவா இங்கு நிற்கின் றேன் - கண்ணை எங்கு வைக்கின் றாய்? - நீ அங்கு நிற்கின் றாய் - உன் அன்பு கேட்கின் றேன் - விரைவில் - ஓடிவா - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.46, 1964 கேட்டு வந்தேன்: கேட்டு உவந்தேன் என்று பிரித்துப் பொருள் கொள்க. 100. வந்தால் வரச்சொல்... ... தந்தால் தரச்சொல் தென்பாங்கு கண்ணுக்கொரு வண்ணப்புறா காதுக்கவள் கானக்குயில் பெண்ணுக்கர சானவளை வந்தால் வரச்சொல் - எனக்கே பேச்சுப்படி ஆசைமுத்தம் தந்தால் தரச்சொல்! உள்நாட்டுச் சிற்றாடை ஓரப்பட்டுப் பாவாடை கண்ணாட்டி கட்டிப்போக வந்தால் வரச்சொல் - கணக்கில் கண்டபடி ஆசைமுத்தம் தந்தால் தரச்சொல்! அண்டைவீட்டுச் சின்னகண்ணே அன்புடைய பொன்னுக்கண்ணே வண்டிக்கே தவறிடாமல் வந்தால் வரச்சொல் - மிகவும் கண்டிப்பாய் வந்துமுத்தம் தந்தால் தரச்சொல்! கொண்டையிலே செங்கோங்கு தண்டையிலே தென்பாங்கு கொண்டவளைக் கண்டவுடன் வந்தால் வரச்சொல் - அவளைக் கண்டிப்பாய் வந்துமுத்தம் தந்தால் தரச்சொல்! நாட்டுக்கு மீட்சியடி நம்தமிழர் ஆட்சியடி நாட்டச்செல் வேன்அதற்குள் வந்தால் வரச்சொல் - எனக்கே நல்லபடி ஆசைமுத்தம் தந்தால் தரச்சொல்! காட்டுப் புலியடிநான் கட்டிஎன்னைச் சிறையிடுவார் கூட்டுக்குள் போகுமுன்னே வந்தால் வரச்சொல் - பேசிக் கொண்டபடி ஆசைமுத்தம் தந்தால் தரச்சொல்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.47, 1964 101. மருமகள் பூரிப்பு சிந்து கண்ணி தென்றல் அடிக்கையில் பச்சிளங் கீற்றுச் சிலிர்த்து நிலைகுலைந் தாடுதல்போல் இன்றைக்கு நீகொண்ட பூரிப்பின் காரணம் என்னடி மின்னல்இ டைச்சிறுக்கி? நின்றஉன் கால்கள்நி லைக்கவில் லைகடல் நீராய் நெளிந்தது பொன்னுடலும் அன்றைக்குச் சென்றவன் என்மகன் வீட்டை அடைந்த மகிழ்ச்சித்தி ருக்கூத்தோ? மாற்றி அணிவதும் சேலையி னைமலர் வாங்கி அணிவதும் கூந்தலிலே - ஒரு காற்றென ஓடிச்சி ரிக்கும்மு கத்துக்குக் கண்ணாடி காட்டிப்பின் மீளுவதும் நேற்றில்லையே இன்று பூரிப்ப தென்னடி? நீள்புரு வத்துநி லாப்பிறைச்சி வேற்றூர்க்குச் சென்றவன் என்மகன் வீட்டுக்கு மீண்ட மகிழ்ச்சித்தி ருக்கூத்தோ? கறிகள் சமைத்தபின் தெருவினில் விற்றிடும் காய்களை ஓடிஅ ழைப்பதுவும் சிறுவிரல் மோதிரம் பார்ப்பதுவும் பார்த்து மகிழ்வதும் செவ்விதழ் சேர்ப்பதுவும் அறையினை நோக்கலும் நேற்றில்லை யேநீ அப்படிப் பூரிப்ப தேதுக்கடி? பிறநகர் சென்றவன் என்மகன் ஊர்வர பெற்றம கிழ்ச்சித்தி ருக்கூத்தோ? கச்சையை நோக்கலும் கண்கள் மலர்வதும் கைவளை யைச்சரி செய்வதுவும் மொச்சை உரிக்கையில் முன்கட்டில் ஓடி முழங்கும் சிலம்படி மீளுவதும் பச்சைப் பசுங்கிளி தானெனக் கொஞ்சலும் பார்த்தில னேஇன்று பூரிப்பதேன்? அச்சீமை சென்றவன் என்மகன் வீட்டை அடைந்தம கிழ்ச்சித்தி ருக்கூத்தோ? - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.49, 1964 102. அவன் கலங்கரை விளக்கடி பட்டிமகன் போனவாரம் கடற்கரை ஓரம் - எனைக் கிட்டிவந்தான் கெஞ்சி நின்றான் ஒருமணி நேரம். கட்டழித்தான் தொட்டிழுத்தான் கட்டிஅணைத் தான் - இளங் காளையவன் என்உதட்டுப் பாளை அவிழ்த்தான் முன்னிருப்பார் பின்னிருப்பார் என்னநினைப் பார்? - வாய் முல்லைக்காட்டின் அண்டையிலே முத்தம் விளைத்தான் முன்னிலவும் எழுந்ததுவே முடிமுடி என்றேன் - என் முகநிலவின் குளிரிலேதன் முகத்தை நனைத்தான் கலைந்தகுழல் திருத்திவிட்டான் கன்னத்தைத் தொட்டான் குலைந்தஆடை திருத்திவிட்டான் இன்னமும் தெவிட்டான் விலங்கறுத்தே தமிழ்நாட்டை மீட்க நடந்தான் - அவன் கலங்கரை விளக்கடிஎன் காதல் நிலைக்கே. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.51, 1964 103. அவன் மேல் நினைவு நான்கு பக்கமும் வேடர்சுற்றிட நடுவில் சிக்கிய மான்போல் - ï§(F) ஏன்பிறந்தேன் இவர்கள் வீட்டில் கரையில் இட்டதோர் மீன்போல்! நீரை மொண்டிடப் போகையில்அவன் நினைப்பு வாட்டிடும் நெருப்பு - நல்ல மோரை மொண்டிடும் மொந்தையி லேஅவன் கலகல எனும் சிரிப்பு! எடுத்த சுள்ளியில் அடுப்பெரிக்கையில் எழில்எழில் அவன் எழிலே - பின் இடைக்கிடை எனைக் குலுக்கிடும் அவன் இயற்றிய கலைத் தொழிலே! அசைப்பினில்அவன் அவன்அவன்என அருகிற் சென்றதும் உண்டு - அட நிசத்தினில் அந்தக் கருக்கலில்தலை நீட்டியகதிர் கண்டு. சிறக்க உண்ணடி பழங்கள் என்றெனைத் திருத்த வந்தனள் அக்கை - சீ பறக்க மட்டிலும் சிறகெனக்கிலை பழம் இதுவெறும் சக்கை! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.52, 1964 104. அவன் வரவில்லை மங்கைமா ரோடு கூடி மடுக்கரை செல்லு கின்றாய் தங்கமே என்விண் ணப்பம் தனித்துவா என்ப தாகும், இங்ஙனம் சொன்னான்; சொல்லி எழிலுறு முகத்தை இங்கே பொங்குதா மரையில் காட்டி பொன்னுடல் மறைத்திட் டானே! குடத்தினை இடையில் தாங்கிக் குளிர்புனல் மடுவைச் சார்ந்த இடத்தினை அழகு செய்ய தனித்துவா என்று கூறித் தடத்தில்நான் வருந்தும் வண்ணம் தடந்தோளைக் குன்றில் வைத்தான்! குடத்தேனை நிகர்த்த மெய்யைக் கொண்டுபோய் மறைத்திட் டானே! வெறுத்திட அயல்மங் கைமார் மேவிட வந்தால் உன்பால், குறுக்கிட்டுப் பேச அன்பிற் குளித்திட முடியா தென்றே அறுத்துப்பே சியதால் வந்தேன் அழகாடு நடையை அன்னோன் தருக்குறு களிற்றில் வைத்தான் தன்னுடல் மறைத்திட் டானே! வரிப்புலி போன்ற நீழல் மண்ணிலே காட்டும் ஆல மரத்திடை தனித்தி ருந்தால் வரத்தடை இல்லை என்று விரிப்புறச் சொல்லி என்றன் விருப்பத்தைப் பெருக்கி னான், தான் சிரிப்பைமுல் லைபால் காட்டித் திருமேனி மறைத்திட் டானே! சதிர்வரும் நடையும் உன்றன் தனிமையும் இனிக்க அங்கே எதிர்வரக் காத்தி ருப்பேன் மடுக்கரை வாராய் என்றான் முதிர்தரு காதல் பொங்க முன்னங்கை வளையும் சோர்ந்தேன் கதிரில்தன் பார்வை காட்டிக் கனியுடல் மறைத்திட் டானே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.55, 1964 105. உண்மையில் கசப்பா? குறும்புடன் அவன் பார்த்த பார்வை குலுக்கி விட்டதென் அகத்தை - அந்த நறுமலர்க் கொடி மறைத்து விட்டது நகைத்திடுமவன் முகத்தை! வெடுக்கென என்றன் சடைப்பின் னல்தனை இழுத்த திக்கினைப் பார்த்தே - அத் துடுக்கன் அங்கொரு மரத்தில் தன்னுடல் தோய்தல் கண்டுளம் வேர்த்தேன்! தவித்து நிற்கையில் அலரி மொட்டினைத் தலையில் விட்டெறிந் திட்டான் - விரல் குவித்த கையினை முழுதும் கண்டிடக் குளிர் விழிக்கவன் எட்டான்! பூவும்பு தர்களும் தோளிற்ப டும்படி போயினன் அந்தமட் டோடு - என் நாவும் துடித்தது தோளும்து டித்தது நான்தனி யானபிற் பாடு. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.58, 1964 106. விடியுமுன் குறுநகை விடிந்தது! தங்க வெய்யில் வந்தது! மடிந்தது காரிருள்! மடிந்தது பனிப்புகை! பசும்புல் கதிரொளி பட்டு விளங்கின! விசும்பிற் காக்கைகள் பொன்னென விளங்கின! *** சேவற் கோழி தெருவில் பெடையினை ஆவற் கொருமுறை அணையும் தேவைக்குத் தீனி பொறுக்கும் திரியும் அடடா வானப் பரிதி ஆயிரம் வண்ணம் கண்ணெதிர் காட்ட வந்ததோ என்னவோ! *** தெருவில் நன்னிழல் சேர்க்கும் மரங்கள் இருபுறம் தளிரொடு தங்க மெருகு பெருக நின்றன. குருவிகள் பாடின அருகில் தென்னைகள் பாளைகள் அவிழ்ந்தன! *** ஒளிபடும் காலையில் ஒலித்தது சிற்றூர்! எளிய உழவர்கள் ஏரொடு மாட்டொடு தம்மில் இனிமைத் தமிழிற் பேசி அம்மருங்கு வரிசையில் அகன்றனர்! பெண்கள் முன்றா னையினைமுன் னிழுத்துச் செருகி, அன்றாடத் தொண்டிற் சென்றனர் ஆயினும் இன்னும் படுக்கைவிட் டெழாத பொன்னி தன்னுளம் பறித்த பொன்னனை எண்ணி வெயிலிற் புழுப்போல் மின்னிடை ஒடிய அயில்விழி நீர்பெற அழுது புரண்டாள்! இன்னும் பொன்னி எழாத தென்ன? நன்னீர் எடுக்க நாடாத தென்ன? நீராடி வந்து நாரோடு பூக்கள் சீரோடு கட்டிச், சீவிக் குழலில் சூடாத தென்ன? தோழிமா ரோடுசென் றாடா தென்ன? அன்னைஇவ் வாறு கருதி எதிர்வந்து கண்ணே என்றாள் நடுங்குடல் காட்டாது நங்கை எழுந்து மயக்கம் என்றாள்; மங்கைமெய் சொன்னாள்! *** சட்டி பானை தவலை செம்புகள் தொட்டவ ரில்லை, துலக்கியோர் இல்லை! அடுக்களை பெருக்கா தழகிலா திருந்தது. எடுக்க வில்லை அடுப்புச் சாம்பல் அன்னை தன்மகள் அருகில் நின்றவள் பொன்னியே குந்துநீ என்று புகன்று தானும் அமர்ந்து தலைசாய்ந் திருந்தாள் மயக்கம் என்று மங்கைமெய் உரைத்தாள். என்ன மயக்கம்? என்ன மயக்கம்? என்ன மயக்கம்? என்றுகேட் டாள்தாய். காரணம் சொல்லாக் கார ணத்தால் தாய்உளம் துவளத் தலைசாய்த் திருந்தாள். *** அஞ்சல் அஞ்சல் என்ற ஒருகுரல் வஞ்சியின் காதில் வீழ்ந்தது: வஞ்சி, அஞ்சல் அம்மா அஞ்சல் என்று விரைவில் எழுந்து வெளிப்புறம் ஓடி அஞ்சலைப் பெற்றாள் அதனைப் படித்தாள். பொன்னி படிக்கையில் சின்ன விழிகள் மின்னக் கடையுதடு கட்ட விழ்ந்து முத்துக் காட்ட முன்னின்ற தாயை, மங்கை நோக்கிஉன் மருமகன் நாளைக் காலையில் கட்டாயம் வருமாம்! அம்மா! புகைவண்டி நிலையம் புதுமாட்டு வண்டியை அனுப்ப வேண்டுமாம் அறிக என்று கூறிப் பறந்தாள் கொல்லை நோக்கி! துலங்கின பானை தூக்குச் சட்டிகள் குடங்கள் செம்புகள்! கொட்டில், அடுக்களை பெருக்கி அடுப்பை எரிக்கச் சமையல் முடித்துத் தாயிடம் முடிவு கூறினாள்: கடிதில் தாய்தன் கணவனுக் காகக் கொல்லைக்குச் சோறு கொண்டு போனாள்! *** எப்போ தன்னை இங்கு வருவாள்? எப்போது மாலை வேளை ஏகிடும்? அழகிய மணியிருள் எப்போ தகலும்? விடியுமுன் அப்பா விழிக்க வேண்டும் வண்டி ஓட்டியை வாஎனல் வேண்டும் அண்டைக் குடிசையில் அவனோ தூங்குவான்! கூச்ச லிட்டுக் கூப்பிட வேண்டும் பேச்சுக் கொஞ்சம் பேச வேண்டும் புதுமாட்டு வண்டி புகைவண்டி நிலையம் இடக்கில் லாமல் ஏக வேண்டும்! அத்தான் வண்டிவிட் டங்கே இறங்கி மெத்த விரைவாய் இவ்வண்டி மீது குந்துவார் கழுத்து மணிகள் குலுங்க இந்தா இந்தா, என்றவன் அதட்ட, வண்டி வந்து வாயிலில் நிற்கும்! அண்டி வந்தெனை ஆரணங் கேஎன அழைக்கும்! நானோ அறையிற் பதுங்கி இழுப்பும் பறிப்புமாய் ஏனென்று செல்லுவேன் என்று பொன்னி எண்ணிக் கிடந்தாள். *** மறுநாள் விடியுமுன் மங்கை குறுநகை காட்டினாள் கொழுநனுக்கெதிரே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.59, 1964 107. முது மாலைப் போதில் ...! மலர்ந்ததடி அல்லி - அதோ வந்ததடி நிலவு குலைந்ததடி என்பொறுமை கொல்லாதே! கொஞ்சிவிளை யாடஅட்டி சொல்லாதே! விலகிற்றடி வெப்பம் - இதோ வீசுகின்றது தென்றல் தலைசுழற்றிடும் என்னாசை தட்டாதே! தாவுங்கையை விலக்கி என்னைத் திட்டாதே! கமழ்ந்ததடி முல்லை - இதோ காணடிநம் தனிமை அமிழ்துகொடு நின்உதட்டை ஆட்டாதே! அன்புமறைத்து வன்முகமும் காட்டாதே! நமக்கென்னடி குறைவு - இது நல்லமுதிய மாலை தமிழ்உண்டு காதலுண்டு தள்ளாதே! தழுவுந்தோறும் மகிழ்ச்சிபொங்கித் துள்ளாதே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.63, 1964 108. முகிலுக்குள் நிலா தெருவறைச் சன்னல் தன்னைத் திறப்பாள்என் வரவு பார்ப்பாள், திருமுகம் காண்பேன் முல்லைச் சிரிப்பினிற் சொக்கி நிற்பேன்; ஒருநொடி தனிலே அன்னாள் ஒளிமுகம் மறைந்து போகும். அரிவையின் முகநி லாவை அடுத்தநாள் காண்பேன் அங்கே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.183, 1964 109. நல்ல மனைவி என் வாழ்க்கைப் பயிர் செழிக்கவந்த வான் மழை அவளே - இன்பத் தேன் மழை அவளே கீழ்க்கடல்மேல் கதிர்வருமுன் விழிமலர்ந்திடுவாள் - எனைத் தொழு தெழுந் திடுவாள் இல்வாழ்க் கைக் கேற்றகுணம் செயல்கள் உடையவள் செல்வவரு வாய்க்குத் தக்க செலவு செய்பவள் நல்லார் வணங்கும் கற்பை உயிரென்று நினைப்பாள் எல்லாம் பெற் றேனிவளை நான் மணந்ததனால் தன்னையும் தான்மணந்த துணைவன் தன்னையும் தன்னினத்துப் தமிழ்ப்பெருங்குடி தனிப் பெருமையையும். எந்நாளும் காப்பதிலே இம்மியும் தவறாள் பொன்னேட்டிற் புகழ் எழுதும் நன்னயமுடையாள் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.287, 1964 110. முகவரி தேவை தகவல் தெரியவில்லை - அவளின் முகவரி அறிந்துவா ஒற்றா! - தகவல் அகல நெற்றி, நிலாப்பிறை! கண்கள் அப்பட்டம் ஒப்பற்ற நீலம்! - தகவல் முகம், அன்றலர்ந்தசெந் தாமரை! - எழில் முத்தைப் பழித்த பற்கள்! தகுமேனி பத்தரை மாற்றுத் தங்கம் - அவள் சரிகுழல் மலையின்வீழ் அருவி! புகை வண்டியில் என் மேற் புன்னகை பொழிந்து நடுவே இழிந்து போனாள் - தகவல் எதிரில்வந் தமர்ந்தாள்அப் பாவை - அடடா அதைவிட எனக்கென்ன தேவை? சிதைந்தது முதற்பார்வை! - காதற் சிரிப்போடு பார்த்தாள் பிற்பாடு! மிதந்து வந்த தங்கத் தோணி எனைவிட்டு மறைந்தது! காதல் வெள்ளத்தில் நொந்தேன் - தகவல் சென்ற புகைவண்டி நில்லாது சென்றால் - அங்கே தெரிவை இறங்கா திருப்பாள் - நானோ தின்றால் உயிர்வாழ்வேன் கொல்லிமலைச் செவ்வாழைக் கனிச்சுவை இதழை! அன்னவள் என்னுளத் தழுத்திய உருவின் - நல்ல அடையாளப்படி தேடிவா! - தகவல் - காதல் பாடல்கள், ஆகடு, ப.30, 1977 111. பறந்து வந்த கிளியே பறந்து வந்த கிளியே திறந்த என்மனக் கூடு புகுவாய் பிறந்த பெண்கள் பலகோடி - உன்போல் பெண்ணொருத்தி தேடி - நான் இறந்து போகுமுன் னாடி - மிக எழில் சுமந்தபடி என்னை நாடிப் - பறந்து வந்த கிளியே பெற்றெடுத்த ஒருபொன்னை - மண்மேல் பிரிந்த தென்ன அன்னை கற்றுணர்ந்த என்னை - நீ கண்டதில்லை எனினும் என்முன்னே - பறந்து வந்த கிளியே இலங்கை தனில்இருந் தாயா? - அவர் செய் இழிவு கண்டு நைந்தாயா - நீ கலங்கி இங்கு வந்தாயா? - என் கைகள் உன்னைக் காவாத தீயா? - பறந்து வந்த கிளியே உள்ள குறைகள் நான் தீர்ப்பேன் - தமிழ் உலகை மீட்டுக் காப்பேன் தெள்ளு தமிழர் எங்கிருந்தாலும் - அவர்க்குத் தீமை செய்வாரை ஒருகை பார்ப்பேன். - பறந்து வந்த கிளியே - காதல் பாடல்கள், ப.33, 1977 112. வருந்தி அழைத்தாள் கொஞ்சும் - கிளிக்கும்கொப் பளிக்கும்என் காது நில - வொளிக்கும் தத் தளிக்கும்இம் மாது! தென்றல் - தெளிக்கும் கனலைஎன் மேலே மிகப் - புளிக்கும் இனிக்கும்பசும் பாலே அதோ - விளிக்கும் நெருங்கிஎனைச் சாவே நான் - களிக்க வருகஎன்ஐ யாவே! பூத் - துளிக்கும் தேனும்படு வேம்பு நான் - குளிக்கும் புனலும்கொடும் பாம்பு வந்து - சுளிக்கும் முகத்தைஎன் வாழ்வே நான் - களிக்க வருகஎன் ஐ யாவே! - காதல் பாடல்கள், ப.38, 1977 113. சிரிப்பே குத்தகைச் சீட்டு பஃறொடை வெண்பா சோலை வழியில், தொடுக்கும் மணிக்கிளைசூழ் ஆலின் அடியில் அமைந்திட்ட திண்ணையிலே நண்பன் வருகையினை நான்பார்த் திருக்கையிலே வெண்பல்லைப் பூவிதழால் மூடியொரு மெல்லிதான் போனாள் இடதுகை பொற்குடத்தைப் போட்டணைத்தே! நான்அப் பொற்குடமாய் நாட்டிற் பிறந்தேனா? தோகையவள் போகையிலே துள்ளும் வளர்ப்புமான் பாகல் கடித்த படுகசப்பால் ஓடிவந்தே அன்னாளை அண்டி அழகுமு கம்எடுக்கப் பொன்னான முத்தமொன்று பூவை கொடுத்தாளே அந்தமான் நானாய் அமைந்தேனா? இல்லையே? எந்த வகையிலே ஏந்திழையை நான்பிரிவேன்? நீர்கொண்டு நேரில்வரும் நேரிழையைக் கண்டணைத்தாள் பேர்கொண்ட நேரிழையாள் பெற்றதை நான்பெற்றேனா? மங்கை வழிநடந்து சோலை மணிக்குளத்தில் தங்குநீர் வெள்ளம் தழுவி மலர்மேனி ஆழம் மறைக்க அவள்மூழ் கினாள்அந்த ஆழப் புனலும்நான் ஆனேனா? இல்லையே! தாழ உடைஉடுத்துத் தண்ணீர்க் குடந்தாங்கி வந்தாள், வரும்வழியில் வந்துநான் காத்திருந்தே செந்தாழை பூத்துச் சிரிக்கச் சிரிப்பொளியாய்ப் பொற்பொடியை வண்டள்ளிப் பூவை விழிமறைக்க நற்கையால் தான்துடைத்தாள் நானிற்ப தைக்கண்டாள்! கொத்தெடுத்த கோவைப் பழஉதடு தான்திறந்தே முத்தெடுத்து நான்மகிழ முன்வைத்தாள்! அன்பின் இருப்பெல்லாம் நீஆள்க என்றாள்! அவளின் *சிரிப்பதற்குக் குத்தகைச் சீட்டு! - காதல் பாடல்கள், ப.45, 1977 *áÇ¥gj‰F - சிரிப்பு + அதற்கு எனப் பிரிக்க 114. அவள் கொண்ட ஆமைகள் கட்டளைக் கலித்துறை கொஞ்சாமை ஒன்று மகிழாமை ஒன்று குளிர்தமிழாற் கெஞ்சாமை ஒன்று கிடவாமை ஒன்று கிளைஞர் தமக்கு அஞ்சாமை ஒன்றாசை ஆற்றாமை ஒன்றதன் மேலுமின்றே துஞ்சாமை பாடையில் தூக்காமை உண்டு துடியிடைக்கே - காதல் பாடல்கள், ப.47, 1977 115. அவன் அடைந்த ஆமைகள் பாராமை ஒன்று பகராமை ஒன்றுகைப் பற்றிஎனைச் சேராமை ஒன்று சிறவாமை வாழ்விற் சிறப்பளிக்க வாராமை ஒன்று மகிழாமை ஒன்று வரவிடுத்தாய் ஓராமை யேபொறேன் ஆறாமை யேற்றினை ஒண்டொடியே - காதல் பாடல்கள், ப.48, 1977 116. அவள் புன்னகை நூறா யிரமும்என் நோய்போக் காது பேறெனில் அவளன்பு பெறுவ தாகும் அன்னவள் புன்னகை மின்வி ளக்கு மன்னும்என் காதல் வாழ்வுக்குப் போதுமே! - காதல் பாடல்கள், ப.50, 1977 117. மறப்ப தெப்படி? அவன்மேல் தானே நானே ஆசை வைத்தேன் மானே! - அவன்மேல் தானே கவலை மாட்டை ஓட்டிச் சென்றான் கண்ணை அதோ காட்டிச் சென்றான் - அவன்மேல் தானே முல்லைமலர் ஏந்தி வந்து முன்அதற்கு முத்தந் தந்து அல்லல் எல்லாம் கண்ணிற் காட்டி அகன்றி டுவான் உள்ளம் நொந்து - அவன்மேல் தானே ஆடச் சென்றால் அங்கிருப்பான் அருமை கண்டால் அவன் சிரிப்பான் கூடைப் பூவை என்எதிரில் கொண்டுவந்து கடைவிரிப்பான் - அவன்மேல் தானே புதிய புதிய வெளியீடு போட்டவிலை மதிப்போடு மிதிவண்டியில் வாங்கி வந்து மிகக் கொடுத்தல் அவன்பாடு - அவன்மேல் தானே வழுக்கியது குளத்துப்படி வந்தணைத்தான் அதேநொடி மழையும் பயிரும் அவனும் நானும் மறப்பதென்றால் அதுஎப்படி? - அவன்மேல் தானே - காதல் பாடல்கள், ப.51, 1977 118. தெரிந்துகொள் நான் உன்னைக் காதலித்தால் நீ என்னைக் காதலிப்பாய் தேனும் தினையாவோம் என்று தென் பாங்கிசை பாடவில்லை தோழி - இதைத் தெரிந்துகொள் புரிந்துகொள் தோழி! காதலிப்ப தென்இயற்கை காதலிலே உன்னையன்றி மாதரசி வேறறியேன் மதிபோன்ற நின்முகத்தின் சிரிப்பு - எனை மதிமயக்கும் அன்பின் வலைவிரிப்பு! உன்னைக் காணும் பொருட்டுநான் ஓடிவரும் அருவியன்றி என்னை உன்முன் காட்டுதற்காய் என்றும் வந்து நிற்கமாட்டேன் தோழி - நமை ஒன்றிணைத்த இயற்கைத்தாய் வாழி! - காதல் பாடல்கள், ஆகடு, ப.52, 1977 119. யாருமில்லை எடுப்பு கூடத்திலே வந்த மாடப்புறா - கூடிக் கொஞ்சும் கிளி வஞ்சிப்பதா? - கூடத்திலே உடனெடுப்பு மன - மாடத்திலே எரியும் மணிவிளக்கே வாராய் என்பசிக்கே உணவளிக்க - கூடத்திலே அடிகள் கோடைதனைத் தணிக்கும் மலர்ச்சோலை - உன் கூந்தல் பறக்குமோ என்மேலே? ஆட அழைத்ததடி நமைமாலை அதைவிட உனக்கிங் கென்ன வேலை? - கூடத்திலே சிரிப்புக்கு முகத்தினில் என்ன பஞ்சம்? தீயாய் இருக்குமோடி உன்நெஞ்சம்? திருப்படி சேயிழை உன்முகத்தைக் கொஞ்சம் சிலம்பாடும் அடிக்கடியேன் தஞ்சம்! - கூடத்திலே தானே கனியவேண்டும் நெஞ்சக்கனி தடிகொண்டு கனிவிக்க லாமோ இனி? மானே அகப்பட்டாய் என்னி டத்தினில் வாநாம் இவ்விடத்தில் தன்னந்தனி! - கூடத்திலே - காதல் பாடல்கள், ப.54, 1977 120. காதல் தீயின் களிப்பு அன்புடையாளே அருமைத் தோழி என்னைப்பற்றி நினைக்காதே! உன்றன் கருத்தை ஒப்பும் படி நீ அறிவுரை ஏதும் உரைக்காதே! உயிரும் உணர்வும் உள்ளத்துள்ளே ஓங்கும் புயலாய் அடிக்கிறது! உயரும் காதல் உணர்ச்சிநெருப்பாய் ஒன்றையும் காணா துயர்கிறது! சாதி, குலம், மதம், சீலம், மானம் சார்ந்த காதல் தீயினிலே வேதியனைப்போல் விரகிட்டல்ல காதல் தீயில் எரித்திட்டேன்! காதலை அறியாக் கயவர் கூட்டம் கண்டதையெல்லாம் கத்தட்டும்! மோதும் அலையில் உப்பைக் கொட்டும் மூடர்கள் ஏதும் செய்யட்டும்! இளமை என்னும் அறிவிப் பெண் நான் இளைஞர் என்னும் பேராற்றில் உளங்கொண்டாடி என்னை இழந்தேன் ஊராராம் நாய் குலைக்கட்டும் உண்ணும் போதும் உயிர்க்கும் போதும் காதலை யன்றி ஒன்றறியேன்; பண்ணும் தொழிலில் பாட்டில் காதல் மன்னவன்றி வேறறியேன் - காதல் பாடல்கள், ஆகடு, ப.59, 1977 121. ஆம் ஆம்! யாம் யாம்! ஆடுகின்ற மாமயிலும் பாடுகின்ற பூங்குயிலும் கூடுகின்ற சிட்டுமவள் ஆம் ஆம் ஆம்! - காதல் கொண்டாட்டம் போடுவதும் யாம் யாம் யாம்! தண்டமிழ்த்தேன் சொற்கரும்பு கொண்டினிக்கும் குற்றாலம் தொண்டை, தோளில் பெண்கனியாள் ஆம் ஆம் ஆம்! - காதல் தொந்தரவில் உண்வதுவும் யாம் யாம் யாம்! முத்துநிலா மூரலினாள் முத்தமிழை வெல்லப் பார்ப்பாள் கட்டளைக்கல் அழகியவள் ஆம் ஆம் ஆம்! - காதல் கள்மயக்கில் துள்ளுவதும் யாம் யாம் யாம்! குறிஞ்சி நிலம்போல் நலத்தாள் வெறிமுல்லைபோல் அழகாள் முறிமருதம்போல் வளத்தாள் ஆம் ஆம் ஆம்! - காதல் முத்தெடுக்கும் இன்பக்கடல் யாம் யாம் யாம்! - காதல் பாடல்கள், ப.61, ஆகடு 1977 122. காதல் அவள் : என்உதட்டைக் கடித்தது வண்டென்று எண்ணினேன், நீங்கள் தாமா? அட! அவன் : பசிக்குக் கிடைத்தது பலாச்சுளை என்று எண்ணினேன் உன் உதடுதானா? அட - காதல் பாடல்கள், ப.62, 1977 123. தோப்புக்குள்ளே மாப்பிள்ளை மாப்பிள்ளை வந்தான் - மாந் தோப்பிலே நின்றான் - உன் - மாப்பிள்ளை வந்தான் கூப்பிடும்படி சொன்னான் உன்னைக் கும்பிட்டானே அவனும் என்னை - மாப்பிள்ளை வந்தான் தாய் விழித்தாலும் - அவள் வாய் மடித்தாலும் - வழி நாய் குலைத்தாலும் - பொய்ப் பேய் மறித்தாலும் - நீ போய்வா அவன் சாகு முன்னே பொய்யல்லவே என் பொன்னே - மாப்பிள்ளை வந்தான் இருட்டிருந்தாலும் - பாறை உருட்டிருந்தாலும் - வழியில் திருட்டிருந்தாலும் - வெளியில் மருட்டிருந்தாலும் - நீ உருக்குத் தங்கக்கட்டி அவன் உயிருக்கு நீ வெல்லக் கட்டி - மாப்பிள்ளை வந்தான் மழை இருந்தாலும் - கிளை தழை விழுந்தாலும் - அவன் பிழை புரிந்தாலும் - புலி வழியில் வந்தாலும் - அடி அழகான மயிலே உன்மேல் ஆசை வைத்தான் உண்மையிலே - மாப்பிள்ளை வந்தான் மலை தடுத்தாலும் - அருவி அலை தடுத்தாலும் - வழியின் தொலை தடுத்தாலும் - மனத்தின் நிலை தடுத்தாலும் - நீ தலை காட்ட வேண்டும் அவன் சாக்காட்டை நீக்க வேண்டும் - மாப்பிள்ளை வந்தான் - காதல் பாடல்கள், ப.64, 1977 124. ஒட்டாரம் செய்வது என் போங்காலம் ... பட்டாணி வன்னப் புதுச் சேலை - அடி கட்டாணி முத்தேஉன் கையாலே - எனைத் தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை - உடல் பட்டாலும் மணக்கும் அன்பாலே! எட்டாத தூரம் இருந்தாலும் - உனை எட்டும் என்நெஞ்சும் மேன்மேலும் - அது கட்டாயம் செய்திட வந்தாலும் - நீ ஒட்டாரம் செய்வதென் போங்காலம்! ஆவணி வந்தது செந்தேனே - ஒரு தாவணி யும்வாங்கி வந்தேனே - எனைப் போவென்று சொன்னாய் நொந்தேனே - செத்துப் போகவும் மனம் துணிந்தேனே! பூவோடி விழிக் கெண்டையிலே? - ஒரு நோவோடி உன் தொண்டையிலே? - நீ வாவா என்றன் அண்டையிலே - என்று கூவா யோகருங் குயிலே! - காதல் பாடல்கள், ப.68, 1977 125. அவள்மேற் காதல் உண்டாலே தேன் மலரின் தேன் - இவள் கண்டாலே தித்திக்கும் தேன். - உண் வண்டால்கெ டாத தேன் வையம்கா ணாத தேன் மொண்டால்கு றையாததேன் - நானே மொய்த்தேன் பேராசை வைத்தேன். - உண் கண்ணொவ் வொன்றும் பூவே கைஒவ் வொன்றும் பூவே பொன்னுடம் பெல்லாம் பூவே - நான் பெறுவேன் அப்பூங் காவே. - உண் ஆளுக்குக் குளிர்சோலை தோளுக்குப் பூமாலை நாளும் என்மனம் வெம்பாலை - அதன் நடுவில் அவள் கரும்பாலை. - உண் கோவையிதழ் சுவையூட்டம் கொஞ்சுமொழி அமுதூட்டம் பாவி வைத்தேன் இதில் நாட்டம் - காதற் பசிக்கிவள் பழத்தோட்டம். - உண் - காதல் பாடல்கள், ப.69, 1977 126. தமிழ் மகளே வேண்டும் நீ என்மேல் ஆசை வைக்காதே அவன் :என்மீதில் ஆசை வைக்காதே - மயிலே என்னைப் பார்த்தும் சிரிக்காதே உன்மேல் நான் ஆசை வைக்கவில்லை - நீதான் உண்மையிலே தமிழ்மகள் இல்லை! - ஆதலால் (என்மீதில்) அவள் :மக்களில் வேற்றுமை ஏது - காதல் வாழ்க்கையிலே நாம்புகும் போது? அக்கால மனிதரும் நாமோ? என்னை அயலாள்என விலக்கிட லாமோ? - உலகத்து (மக்களில்) அவன் :சாதிகள் வீழ்ந்திட வேண்டும் - பெண்ணே தமிழினமோ வீழ்ந்திட வேண்டும்? மாதொருத்தி வேண்டும் எனக்கும் - தமிழ் மகளா யிருந்தால்தான் இனிக்கும்! - ஆதலால் (என்மீதில்) அவள் :என்உதட்டில் கசிவதும் தேனே - உண்மையில் என்பேச்சும் உன்தமிழ் தானே? பொன்னேட்டில் புகழ் தீட்டுவோம் - இன்பப் புது வாழ்வை நிலை நாட்டுவோம்! - உலகத்து (மக்களில்) அவன் : தமிழ், உடல்உயிர் யாண்டும் - ஒரு தமிழ் மகளாய்ப் பிறந்திட வேண்டும் அமிழ்தில் நாளும் நான் மூழ்க - எனக் காசை உண்டு! தமிழகம் வாழ்க! - என்மீதில் (மக்களில்) - காதல் பாடல்கள், ப.70, 1977 127. அவள் துடிப்பு எடுப்பு படித்தும் பந்தடித்தும் இருந்தவன் தானே - அந்தப் பாவி என்உள்ளம் கவர்ந்தானே - படித்தும் உடனெடுப்பு துடித்தறியாத உள்ளம் துடித்தது காளை தொடுவதெப் போதடி என்தோளை? - படித்தும் அடிகள் விடிந்தால் அவன்உருவிலே என்விழி திறக்கும் - என் வேலைக் கிடையில் நினைவெலாம் எங்கோ பறக்கும் கொடியவன் பிரிந்தான் என்பதால் என்னுளம் இறக்கும் - பின் கொஞ்ச வருவான் எனஅது மீண்டும் பிறக்கும் - படித்தும் மறந்திருக்கவோ என்னால் முடிவதும் இல்லை - அந்த வஞ்ச வண்டுக்கென் நெஞ்சந்தானே முல்லை! உறங்கும்போதும் இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை - என் ஒளிஇதழ் அடையுமா அவன்முத்தப் பல்லை? - படித்தும் காலைக் கதிர்வந்து பலகணி இடுக்கிலே சிரிக்கும் - அது காளை எட்டிப் பார்ப்பது போலவே இருக்கும் சோலைக் குளத்தில் செந்தாமரை இதழ்விரிக்கும் - அது தூயவன் முகமென என்உளம் ஆர்ப்பரிக்கும் - படித்தும் - காதல் பாடல்கள், ப.71, 1977 128. திருக்குறள் படித்தான் மரத்தின் நிழலில் நின்று கொண்டு வந்த என்னை நீயும் கண்டு வானம் பார்க்க என்ன உண்டு - நல்ல பருத்தி புடவை காய்த்ததடி பொன்வண்டு - நீ பக்கத்திலே நின்றாயடி கற்கண்டு! பார்த்ததில்லை என்கண்ணாலே பாரினிலே உன்னைப் போலே படித்ததில்லை இதன் முன்னாலே ஏத்தி ஏத்தித் தொழுவதும் உன்காலே - கொஞ்சம் இசைந்து வாடி மயிலே என்பின்னாலே! வையகத்தில் ஏன்பிறந்தாய்? வாழ்க்கை இன்பம் ஏன் துறந்தாய்? மங்கைக் கடன் ஏன்மறந்தாய் ஐயையோ அழகிலேநீ சிறந்தாய் - எனை அலையவிட்டால் நீவீணாய் இறந்தாய்! நீபத்தரை மாற்றுத் தங்கம் நிறைபேச்சு மதுரைச் சங்கம் நினைத்து நினைத்து வேகும் என்அங்கம் ஊர்பழிக்கும் என்மனமும் கசங்கும் - அடி உண்டோ சொல் எனக்கேடி நிகரெங்கும்? - காதல் பாடல்கள், ப.73, 1977 129. இரும்பினும் பொல்லா நெஞ்சினள் கட்டளைக் கலித்துறை இழையினும் மெல்லிடை யாள்;கயற் கண்ணினாள்; ஏற்றிடுசெங் கழையினும் இன்மொழி யாள்; வள்ளைக் காதினாள்; காரிருள்செய் மழையினும்கன்னங் கருங்குழ லாள்; என்ம னம்நலிந்து நுழையினும் ஏற்காத நெஞ்சினாள்! என்ன நுவலுவதே? 1 பஞ்சினும் மெல்லடி யாள்;பசுந் தோகையின் சாயலினாள்; நஞ்சினும் கொல்லும் விழியுடை யாள்; ஒரு நன்னிலவின் பிஞ்சினும் ஒண்மைசேர் நெற்றியி னாள்;அவள் பின்நடந்து கெஞ்சினும் ஏற்காத நெஞ்சினாள்! என்ன கிளத்துவதே? 2 முத்தினும் முல்லை அரும்பினும் ஒள்ளிய மூரலினாள் சொத்தினும் சீரினள்; சோட்டுப் புறாக்கூட்டு மார்பகத்தாள்; வித்தினும் மாணிக்கமேமிகும் பொன்வயல் மேனியினை நத்தினும் ஏற்காத நெஞ்சினாள், என்ன நவிலுவதே? 3 வேயினும் பொன்னெடுந் தோளுடை யாள்;ஒரு வேளையிலே தேயினும் தேயா முழுநிலாப் போன்ற திருமுகத்தாள்; ஆயினும் ஆய்ந்தாய்ந் தியற்றிய பாவை! என் விண்ணப்பமே ஈயினும் ஏற்காத நெஞ்சினாள்! என்ன இயம்புவதே? 4 கரும்பினும் தித்திக்கும் சொல்லொன்று சொல்லிஎன் காதலினை விரும்பினும் அன்றி விரும்பா விடினும் விளக்கிவிட்டால் துரும்பினும் துப்பிழந் தேன்வாழு வேன்அன்றிச் செத்தொழிவேன் இரும்பினும் பொல்லாத நெஞ்சினாள்! என்ன இயம்புவதே? 5 - காதல் பாடல்கள், ப.74, 1977 கழை - கரும்பு, வள்ளை - வள்ளைத் தண்டு; காதுக்கு உவமை நிலவின் பிஞ்சு - பிறை, ஒண்மை - ஒளி, ஒன்றிய - ஒளியுடைய, சொத்தினும் - சொத்தைவிட, சீரினள் - சிறந்தவள், வித்தினும் - விதைத்தாலும், சேய் - மூங்கில், ஆயினும் - ஒருமுறை ஆராய்ந்தாலும் 130. தலைவி தோழிக்கு சகியே தாளேன் நான் வாதே - செய்யொண்ணாது! சதா என்நினைவு காதலால் மகாசோகம் அடைதல் நன்றோ! - சகியே மிகு விரைவினில் நீயே அதி சோகம் தவிரத் துரை வரவே தோது செய்வாய் உயிர் மீட்பாய் இங்கினிப் பொறாது நெஞ்சம் - சகியே மாமயிலும் இதோ பார் வண் கோகிலமது விரசமதாய்ப் பாவையெனை மிகுகேலி பண்ணுதேடி தாங்கொணாது! சகியே தாளேன் நான்! - காதல் பாடல்கள், ப.78, 1977 131. காதற் பசி நேற்று வந்தேன் இல்லையே - நான்! நீ இல்லையே. காற்று வந்த சோலையில் எனைக் கண்டு சிரித்த முல்லையே - நேற்று வந்தேன் ஆற்றங் கரையின் ஓரம் - மாலை ஆறு மணி நேரம் - நீ வீற்றிருப்பாய் என நினைத்தேன் விளைத்தாய் நெஞ்சில் ஆரவாரம்! - நேற்று வந்தேன் புல்லாங் குழற் சொல்லை - உன் புருவ மான வில்லை - முத்துப் பல்லை, இதழை, முகத்தைத் தேடிப் பார்த்தேன் இல்லை பட்டேன் தொல்லை - நேற்று வந்தேன் இன்ப மான நிலவு - நீ என்னைப் பற்றி உலவு - நான் துன்பப் பட்ட நேர மெல்லாம் தொலைந்தது பார்! கொஞ்சிக் குலவு நேற்று வந்தேன் இல்லையே நீ இல்லையே! - காதல் பாடல்கள், ப.55, 1977 132. அவள் இல்லை பழகுதற்குத் தோழருள்ளார்; கிளைஞர் உள்ளார்; பல்பொருளும் இல்லத்தில் நிறையக் கொண்டாய்; விழியினிலே ஒளியிழந்த தென்ன என்று விளம்பினைநீ உளம்ஒத்த தோழா கேளாய்: எழுதுகின்றேன் ஓடவில்லை இறகு! கண்கள் எதிலேயும் பொருந்தவில்லை என் அகத்தை அழகுசெய்து நாளும்என்பால் அன்பு செய்வாள் அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை! புகழ்வந்து மலைமலையாய்க் குவிய, வாய்த்த புதையலைப்போல் வருவாயும் கொட்ட, நீயேன் இகழ்அடைந்த தமிழரசு போல நெஞ்சம் இளைக்கின்றாய் என்கின்றாய் தோழா கேளாய்: பகற்பனியும் காயவில்லை இரவில் தூக்கம் பகையாகும்! என்உளமாம் கருங்கல் மேட்டை அகழ்ந்ததிலே இன்பமென நிறைந் திருந்த அவள் இல்லை; என் நெஞ்சில் அமைதி இல்லை! அடுக்களையில் எழும்புகையே அமுதாய் நாற அண்டையிலே பணிசெய்வோர் உன்வாய் பார்த்து நடுக்கமுறும் நிலையுடையாய் நலிவேன் என்று நவிலுகின்றாய் தோழனே புகலு கின்றேன்; கடைக்கேகக் காலினிலே ஓட்ட மில்லை கண்ணுக்குள் மூடிவைத்துக் காத்தி ருந்த அடிச்சிலம்பின் இசையாளைத் தாய் அழைத்தாள் அவள்இல்லை; என் நெஞ்சில் அமைதி இல்லை; தென்றல்வரும் வழியினிலே அமைந்த வீடும் செந்நெலினைக் குவிக்கின்ற நன்செய் தானும் என்றைக்கும் உடையாய்நீ என்ன ஏக்கம் என்றுரைத்தாய் நன்றுரைப்பேன் கேளாய் தோழா: ஒன்றிலுமே பொருத்தவில்லை என்றன் காதும் உயிர்போன்ற மங்கையினை அண்டை வந்தே அன்றழைத்துச் சென்றாள் என்அருகில், வீட்டில் அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை! புருவம் நெறித்தால் உலகம் பொடியாய்ப் போகும் போஎன்றால் செங்கதிரும் போக்கில் மாறும் பெருமறவா ஏன் நலிந்தாய் எனக்கேட் கின்றாய் பெறற்கரிய தோழனே இதைக்கேட் பாய்நீ: ஒருநினைவும் ஒருசெயலும் இலாதொழிந்தேன் உயிர்வாழ் கின்றேன் இதுவும் புதுமையேஆம்! அருந்துறையை அன்னைவந்து கூடடிச் சென்றார்! அவள்இல்லை; என்நெஞ்சில் அமைதி இல்லை - காதல் பாடல்கள், ப.81, 1977 133. பழங்குப்பை பஞ்சுமெத்தை ஆருமில்லா நேரத்திலே வா என்றால் வருவதில்லை அம்மா இருக்கும் நேரத்திலா கும்மாளமா? - அவள் அடியைத் தாங்க என்முதுகு பெரிய மேளமா? தேரும் இல்லை திருவிழாவும் இப்போதில்லை தெருவிலே சிவன் கோயில் தானுண்டு வரச்சொல்லடி இரவிலே ஆரிருப்பார் ஊஊஊ ஊஉம் அவனும் நானும தாமிருப்போம் ஆசைதீரக் கூடலாமே அதிகாலையில் பிரியலாமே! - ஆருமில்லா ஆயிரங்கால் மண்டபத்தில் போயிருப்பேன் முன்னாடி, அழகுதுரை முகத்தை மூடி வந்திடட்டும் பின்னாடி, பாயும் படுக்கத் தலையணையும் இல்லாவிட்டால் என்னாடி? பழங்குப்பை எங்களுக்குப் பஞ்சுமெத்தை அன்றோ? - ஆருமில்லா - காதல் பாடல்கள், ப.84, 1977 134. அக்கா என்பதற்கு அக்கக்கா என்றது கிளிக்கழுதை கட்டழகி நான்நாளும் காத்திருந்தேன்; ஓர்நாள்என் கிட்டவந்தான்! இந்தக் கிளிக்கழுதை - மட்டின்றி அக்கக்கா என்றதனால் தெக்குவாய்த் தங்கைவந்தாள்; எக்கேடோ என்றுபறந் தான்! - காதல் பாடல்கள், ப.86, 1994 கிளிக்கழுதை என்றது கிளியை ஏசியபடி? மட்டின்றி - அளவில்லாமல். அறிதில் வந்த காதலன், அக்கக்கா என்று கிளி கத்தியதால் தெக்கு வாயுடைய தங்கை போலும், அவள் இங்கு வருகின்றாள் போலும், அதனால் எக் கேடு வருமோ என்று காதலன் பறந்து போய்விட்டான் - என்பது பின் வரும் இரண்டடிகளின் கருத்து. 135. அவளையா மணப்பேன்? மேனியெல்லாம் வெளியில் தெரிய வெங்காயத்தோல் சேலை கட்டி மானமெல்லாம் விற்றவளா பெண்டாட்டி? - அவள் மாந்தோப்பில் எனைஅழைத்தாள் கண்காட்டி! தேனிருந்தால் அவள்பேச்சில் சிரிப்பிருந்தால் அவள்உதட்டில் நான்மயங்கி விடலாமா சொல்லையா! - அவள் நடத்தை கெட்டுப் போவாளா இல்லையா? கமழ்விருந்தால் கூந்தலிலே கலையிருந்தால் நடையினிலே அமைவிருக்க வேண்டாமா தென்பாங்கே - கேள் ஆர்பொறுப்பார் அவள்கொடுக்கும் அத்தீங்கே? அமிழ்திருந்தால் கண்களிலே அழகிருந்தால் முகத்தினிலே தமிழர்க்குள்ள மான உணர்ச்சி வேண்டாமா - நாம் தலைகுனிந்து வாழும்நிலை பூண்டோமா? - காதல் பாடல்கள், ப.87, 1977 136. அவன் எனக்குத்தான் எனக்குத்தான் அவன் எனக்குத்தான் என்னைத்தான் அவன் காதலித்தான்! தனித் திருக்கையில் புன்னையடியில் சாய்ந் திருக்கையில் என்னைக் கண்டவன் மனத்தி லிருந்த தன்காதலை வாரிக் கண்ணாலே நேரில் வைத்தான். - எனக்குத்தான் அவன் எனக்குத்தான் மயிலிறகின் அடியிணை அவன் மலருதட்டின் நடுவிற் கண்டேன் வியப்பிருந்தது கண்குறிப்பில்! விருப்பிருந்தது புன்சிரிப்பில் - எனக்குத்தான் அவன் எனக்குத்தான் எப்படி இருக்கும் செந்தாமரை அப்படி இருக்கும் செங்கைநிரை கைப்பட என்னை அணைக்கும்போது கணமும் பிரிய மனம்வராது. - எனக்குத்தான் அவன் எனக்குத்தான் இரண்டுதோளும் இரண்டு பொன்மலை! எவள் அடைவாள் இச்செம்மலை? வருத்தம் இனியும் என்னிடத்திலா? மனஇருள் கெடவந்த வெண்ணிலா! - எனக்குத்தான் அவன் எனக்குத்தான் - காதல் பாடல்கள், ப.89, 1977 137. கலப்பு மணம் வாழ்க (mftš) எனக்குப் பகைமேல் உனக்குக் காதலா? என்று மன்று ளாடியார் இயம்பவே புதுப்பூ முத்துநகை புகலு கின்றாள் எதற்கு நீர்எதைப் புகல்கின்றீர் அப்பா அவர்உ மக்கே அன்றுபோல் இன்றும் பகையாய் இருப்பதைப் பாவைநான் என்றும் எதிர்ப்பதே இல்லை நீங்களும் என்போல் மாதுநான் அவர்மேல் வைத்த காதலை எதிர்க்க வேண்டாம்! ஏனெனில் அப்பா எட்டிய தென்மனம் அந்த இளைஞரை ஒட்டியது மீட்க ஒண்ணுமோ சொல்க! ஒழுக்கம் உடையவர்; கல்வி யுடையவர்; பழுத்த தமிழன் புடைய மேலோர்; நான்அவ ராகி விட்டேன்; நான்என வேறொன் றில்லை; அவரும் வீணாய்த் தனித்தே இருந்து சாக எண்ணிலர் என்று சாற்றினாள். தந்தை இயம்புவான்; நமது சாதி வேறு; நல்லோய் அவனது சாதி வேறென் றறிகிலாய் என்று சினத்தைச் சொல்லில் ஏற்றினான் மங்கை இனிய வகையில் சொல்லுவாள்; அப்பா உண்மையில் அவரும் என்போல் மனிதச் சாதி, மந்தி அல்லர்! காக்கை அல்லர், கரும்பாம் பல்லர் என்று கூறத் தந்தை இயம்புவான்; மனிதரில் சாதி இல்லையா மகளே? என்று கேட்க - மங்கை இயம்புவாள்; சாதி சற்றும்என் நினைவில் இல்லை, மாதுநான் தமிழனின் மகளாத லாலே! என்றாள் செந்தமிழ் இலக்கியப் பைங்கிளி; தந்தை, மக்கள்நி கர்எனும் தனது சொந்த நிலையில் தோய்ந்தே அந்த வண்ணமே வாழ்க என்றானே! - காதல் பாடல்கள், ப.92, 1977 138. திருமணம் எனக்கு பார்க்காதவன் போலே பார்த்துப் போனாண்டி - அந்தப் பாவி என்மனதில் ஆசையைத் தூண்டி - பார்க்காதவன் தீர்க்காதவன் போல்தன் ஆவலைத் தீர்த்தே சிரிக்காதவன் போலே மறைவாய்ச் சிரித்தே - பார்க்காதவன் ஐந்தாறு பேரோ டசைந்தாடிச் சென்றான் ஆதலால் தன் எண்ணம் கண்ணால் புகன்றான் செந்தாமரை காட்ட வந்தால் இருந்தேன் சீராளன் வராவிட் டாலோ இறந்தேன் - பார்க்காதவன் உள்ளத்தில் உள்ளம் கலந்தபின் அங்கே உடம்புதான் என்செய்யும் வாராமல் இங்கே? தெள்ளு தமிழன்தோள் நான்பெற்ற பங்கே திருமணம் எனக்கென்றே ஊதாயோ சங்கே! - பார்க்காதவன் - காதல் பாடல்கள், ப.94, 1977 139. எனக்காகப் பிறந்தவள்! எனக்கொன்று தெரியும் - நீ எனக்காகப் பிறந்தவள்; உனக்கொன்று தெரியுமா? - நான் உனக்காகப் பிறந்தவன் இனிக்க இனிக்க நாம் திருமணம் புரிவோம் இன்ப உலகில் கைகோத்துத் திரிவோம் தனித்துவாழும் வாழ்வு நமக்கல்ல சாவும் மனிதர்க்கது சொந்தம் மயிலே! - எனக்கொன்று மக்கள் ஒன்று சேர்வதைப் - பிறர் தடுக்க முடியும் பெண்ணே, மனம் ஒன்று சேர்வதை - யார் தடுப்பா ரடி கண்ணே! துய்க்கின்றோம் உன்னைநான் - என்னை நீ, துயரில்லை அயர்வில்லை மறிப்பேது மானே? தக்கது செய்தோம் காதலின்புறுவோம் தப்பா துரையடி ஒப்பிலா தவளே! - எனக்கொன்று - காதல் பாடல்கள், ப.99, 1977 140. சோறல்ல கோவைப் பழம் அவன் :வேலை விட்டு வீடு வந்தேன் மெல்லி உன்னைக் காணவில்லை சாலையில் இருப்பாய் என்று வந்தேனே - அடி தங்கமே இதோ உன்னைக் கண்டேனே! அவள் :ஆலை விட்டு நீவரவே ஐந்துமணி ஆகு மென்றே ஆலிலை பறிக்க இங்கு வந்தேனே - என் அத்தானே உன்னை இங்குக் கண்டேனே! அவன் :தாங்க முடியாது பசி சாப்பாடு போட்டுவிடு ஏங்கமுடியாது பெண்ணே என்னாலே - அடி என்னாவல் தீர்க்க முடியும் உன்னாலே! அவள் :தாங்க முடியா தென்றால் சாலையிலா சாப்பாடு? வாங்கால் இலை பறித்துக் கட்டுக்கட்டி - வீடு வந்திடுவேன் பொறுத்திரு என் சர்க்கரைக்கட்டி! அவன் :கேட்டதுவும் சாப்பாடா? கெஞ்சுவதும் பாற்சோறா? காட்டுக்கிளி நான் கேட்டது கோவைப் பழந்தான் - என் கண்ணாட்டியே இங்குவாடி உண்ணத் துடித்தேன்! - காதல் பாடல்கள், ப.98, 1977 141. நானும் அவளும் நானும் அவளும், உயிரும் உடம்பும் நரம்பும் யாழும், பூவும் மணமும் தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும் திங்களும் குளிரும், கதிரும் ஒளியும், - நானும் அவளும் மீனும் புனலும், விண்ணும் விரிவும் வெற்பும் தோற்றமும், வேலும் கூரும் ஆனும் கன்றும், ஆறும் கரையும், அம்பும் வில்லும், பாட்டும் உரையும் - நானும் அவளும் அவளும் நானும், அமிழ்தும் தமிழும் அறமும் பயனும், அலையும் கடலும் தவமும் அருளும், தாயும் சேயும் தாரும் சீரும், வேரும் மரமும் - நானும் அவளும் அவலும் இடியும், ஆளும் நிழலும் அசைவும் நடிப்பும், அணியும் பணியும் அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும் ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும். - நானும் அவளும் - காதல் பாடல்கள், ப.100, 1977 142. வண்டி முத்தம் அவள் : வந்து விட்டேன் இந்தமட்டும் வழிதெரிய வில்லை - ஏ வண்டி ஓட்டிப் போகும் ஐயா எங்கே உள்ளது தில்லை? அவன் : குந்திக் கொள்வாய் வண்டியிலே என்னத்துக்குத் தொல்லை? - அதோ கொய்யாத் தோப்பைத் தாண்டிவிட்டால் தெரியும் உன்னூர் எல்லை. அவள் : பஞ்சுகூட நெருப்பிருந்தால் பற்றிக்கொள்ளக் கூடும் - இந்தப் பச்சைக்கிளி நொச்சிக்கிளையில் தொத்திக் கொள்ளக்கூடும். அவன் : நெஞ்சிருக்க நினைவிருக்க உடம்பெங்கே ஓடும்? - சும்மா நீகுந்து நான்ஓட்டுவேன் நன்றாய் ஓடும் மாடும். அவள் : நல்லதையா குந்திக் கொண்டேன் நானும் இந்த ஓரம் - இனி நடந்திடுமா ஒற்றை மாடு? நாம் அதிக பாரம்! அவன் : இல்லை பெண்ணே இப்படிவா! இருந்தது பின்பாரம் - உம் இப்படி வா இப்படி வா இன்னம் கொஞ்ச நேரம்! அவள் : ஏறுகாலின் ஒட்டினிலே இருந்து சாகலாமா? - நீ இப்படி வா இப்படி வா என்னருமை மாமா! அவன் : ஆறு கல்லும் தீர்ந்தாலும் நம் ஆசை தீர்ந்து போமா? - வை அன்பு முத்தம் நூறுகோடி அதை மறப்பவர் நாமா! - காதல் பாடல்கள், ப.106, 1977 143. போ என்றாள் பின், வா என்றாள் வயலாள் விரல்படினும் மாசுபடும் ஆப்பால்! அயலாள் விரல்பட்ட ஆள்நீ, - மயலாகி நண்ணாதே போஎன்றாள். நன்றென்றான் இல்லைவா கண்ணாளா என்றாள் கரும்பு. - காதல் பாடல்கள், ப.108, 1977 144. அழுதேன்; பிறகு சிரித்தேன் எடுப்பு அழுதுகொண் டிருந்தேனே - எனைச் சிரிக்க வைத்துப் போனானே! உடனெடுப்பு அம்மா வருத்தப்பட்டாள் என்றே அடுத்த சோலையில் தனித்து நின்றே - அழுது அடிகள் வழிமேலே விழியை வைத்தே வஞ்சகனையே நினைத்தே தொழுதிருந்தேன் பின்னால்வந்தே தோளில் சாய்ந்தான் முகம்இணைத்தே - அழுது குறித்தஇடம் இந்தப் புன்னை கோரி வந்தடைவான் என்னை மறித்து வேலை இட்டாள் அன்னை வந்தேன் பெற்றேன் இன்பந் தன்னை - அழுது புன்னைமரப் பந்தர் ஒன்றே புன்னையின் கீழ்த் திண்ணை ஒன்றே இன்னொன்றே என்றேன் அன்பன் இட்ட முத்தம் இருபத்தொன்றே - அழுது மாலைபோய் மறைந்த துண்டு வாய்த்த இன்பம் தெவிட்ட வில்லை காலை மட்டும் யாம்பயின்ற கன்னல்தமிழ் மறப்ப தில்லை. - அழுது - காதல் பாடல்கள், ப.110, 1977 145. வந்தாள் தாய்வீடு போய்விட்டாய் - மானே தனிவீடெனைப் படுத்தும் பாடு காணாய்! நாய்வீடு நரிவீடு நீஇலா வீடு நடுவீடு பிணம் எரிக்கும் சுடுகாடு - தாய்வீடு சாய்வு நாற்காலியிற் சாய முடியாது தனியாகப் பாயிலும் படுக்க இயலாது வாயிலில் நான்போய்ப்போய் மீள வலிஏது? மனம்பட்ட பாட்டுக்கு முடிவென்ன ஓது? - தாய்வீடு முறுக்கு சுட்டுக் கொண்டு வந்ததாய்ச் சொன்னாய் முத்தமல்லாமல் வேறு கேட்டேனா உன்னைக் குறுக்கில் ஒருகணம் வீணாக்கி என்னைக் கொல்ல நினைத்தால்நீ ஒருசெந்நாய். - தாய்வீடு எனக்கும் உனக்கும் இடையில் சிறிதே இடுக்கிருந் தாலும் துன்பம் பெரிதே அனுப்பு கின்றனை முல்லைச் சிரிப்பை அதனால் என்மேல் சொரிந்தாய் நெருப்பை! - தாய்வீடு - காதல் பாடல்கள், ப.111, 1977 146. சொந்த வீட்டைவிட்டு வெளியேறுகின்ற நைந்த வுள்ளம் பாடுகின்றது அழகிய இல்லமே பழகிய செல்வமே அஞ்சுமே உனைப்பிரிய நெஞ்சமே அண்டி இருக்கஆசை மிஞ்சுமே அழைத்தால்வ ருவாயோ அன்பே புரிவாயோ ஆடிப்பா டிக்கிடந்த கூடமே அன்றாடம் நான் படித்த பாடமே பெற்றனை அன்னையே! வளர்த்தனை என்னையே பிள்ளைதா யைப்பிரியக் கூடுமோ பிரிந்தால் மனம்ஒன்றிலே ஓடுமோ? கற்சுவர்க்கட் டடமே கண்ணேவண்ணப் படமே கல்லெல்லாம் என்னைக்கண் காணிக்கும் கண்ணைப்பறிக் கும்ஒவ்வொரு மாணிக்கம் தெற்கில் இருந்தனை தென்றல் பயின்றனை தேடக் கிடைக்காத குன்றமே சீராய் அமைந்தமணி மன்றமே கற்றேன்உன் மடியிலே வாழ்ந்தேன்உன் இடையிலே கண்கள் மறந்திடுமோ உன்னையே கணமும் மறப்பதுண்டோ என்னையே? சொந்தஎன் வீடென்றால் செந்தமிழ் நாடன்றோ? தொல்லை கடத்துகின்ற ஓடமே தூய்மை உடையமணி மாடமே! சந்தை இரைச்சலோ சாய்க்கடை நாற்றமோ சாரா இடத்தில்அ மைந்தனை சந்தனம் பன்னீர்க மழ்ந்தனை. - காதல் பாடல்கள், ப.112, 1977 147. தாய் தன் குழந்தையை! பாலைப் பருகும் மடியிற் குழந்தை சேலைப் போல்விழி திறந்துதன் தாயை நோக்கிச் சிரித்தது! - கண்ட அன்னை உன்னால் அல்லவா உன்றன் தந்தை இரவில் என்னை அணுகா திருந்தான். எந்த நேரமும் எனைப்பிரி யாதவன் ஐந்தாறு திங்கள் அகன்றனன்! யாரால்? காதல் வாழ்வைக் கத்திகொண் டறுத்தாய் மோதல் வாழ்வை முன்னின்று நடத்தினை என்று முனிந்தே இருகை யாலும் கீழடிப் பாள்போல் மேலே தூக்கி - என் போராய்க் குவிந்த பொன்னே வாராய் என்று மார்பணைத் தனளே! - காதல் பாடல்கள், ப.115, 1977 148. அவன் வாராதபோது வெண்பா முல்லை எனைநகைக்கும் மூன்றுதமி ழும்தெவிட்டும் தொல்லை மிகவிரிக்கும் தோகைமயில்! - சொல்லை வெறுப்பேற்ற வீசும் கிளிதான்!என் காதற் பொறுப்பேற்றான் வாராத போது! தென்றல் புலிபோலச் சீறும்! மலரிலுறு மன்றல் பிணநாறி மாற்றமுறும் - குன்றல்இலாத் தீப்போல்வான் தோன்றுநிலா! சேயிழைநெஞ் சக்குளத்திற் பூப்போல்வான் வாராத போது! பாலும் புளிக்கும்நறும் பண்ணியங்கள் வேப்பங்காய்! தோலும் எரியுமத் தோய்கலவை! - மேலும் அலவனார் ஆர்கலியும் கொல்லும்என் காதற் புலவனார் வாராத போது! வண்டு வசைபாடும்! மாங்குயிலும் வாயாடும்! மண்டுகுளிர்ச் சோலை எரிமலையாம்! - கண்டுவக்க மின்னாவான் மீன்எல்லாம்! மெல்லி வறுமைக்குப் பொன்னாவான் வாராத போது! பஞ்சும் பரப்பிய பூவும் படுநெருஞ்சி கொஞ்சும்என் பாங்கி கொலைகாரி! - நஞ்சுமிகும் தீண்டவன் பாம்பு அதுதான் தேமலர்த்தார்! என்அன்பு பூண்டவன் வாராத போது! - காதல் பாடல்கள், ப.117, 1977 149. அட்டி சொல்லலாமா? அலமேல் (உம்) அலமேல் (அந்த) அலமேல் - அவள் ஆசைப்பட்டாள் மாணிக்கத்தின் மகன் மேல்! குலுக்கி (உம்) குலுக்கி (உடல்) குலுக்கி - அந்தக் குப்பனையே நேரிற் கண்டாள் சிறுக்கி! மாமா (உம்) மாமா (ஓ) மாமா - என்னை மணந்து கொள்ள அட்டி சொல்லலாமா? ஆமாம்(உம்) ஆமாம் (பெண்ணே) ஆமாம் - மெத்த அன்புக்குடித்தனம் செய்யலாமே நாம் சிரித்தான் (உம்) சிரித்தான் (அவன்) சிரித்தான் - அவள் சிவந்த உதட்டுப் பழத்தின் சாறு சுவைத்தான் திருநாள் (உம்) திருநாள் (நல்ல) திருநாள் - ஊம் தெரிந்து பாக்கு வழங்கியதே மறுநாள்! - காதல் பாடல்கள், ப.120, 1977 150. ஒருத்தனுக்கு ஒருத்தி எடுப்பு சின்னவள் மேலவனுக் காசை - நான் சிரித்தாலும் விழுந்திடும் பூசை, உடனெடுப்பு கன்னத்தில் அவளுக்கே முத்தங்கொடுத்த ஓசை - என் காதில் விழுந்த தென்று துடிக்கும் அன்னவன் மீசை, அடிகள் பொன்னென்பான் கண்ணென்பான் அவளை - அவளோ பொத்தலான ஈயக் குவளை தின்று கிடக்க எண்ணி வந்து வாய்த்தவளை - ஒரு தென்பாங்கு பாடென்று கெஞ்சும் இந்தத் தவளை. - சின்ன வயிர அட்டிகை காசுமாலை - நல்ல வகை வகையான பட்டுச்சேலை - அந்த மயிலுக்கு வாங்கி வந்து போடுவதவன் வேலை வாராய் சாப்பிட என்றால் உரிப்பான் எனது தோலை. - சின்ன என்நிலைக்கு நான்அழ வில்லை - நாட்டில் எத்தனை பெண்கட் கிந்தத் தொல்லை! கன்னி ஒருத்திதான் ஒருவனுக் கென்னும் சொல்லை கட்டாயம் ஆக்கினார் ஏதென் மகிழ்ச்சிக் கெல்லை? - சின்ன அறுபதி னாயிரம் பெண்டாட்டி - மாரை அடைந்தானாம் முன்னொரு காமாட்டி - பெண்கள் குறைபாடெல்லாம் இன்றுதீரச் சட்டந் தீட்டிக் கொடுத்த அரசுதன்னைக் கும்பிட்டேன் பாராட்டி! - சின்ன - காதல் பாடல்கள், ப.121, 1997 151. என் அக்கா ஆயினும் அவர்கள் என்அக்கா அத்தான், நாயினும் கேடாக என்னை மதித்தார்கள் அவமானச் சேற்றிலே என்னை மிதித்தார்கள் - ஆயினும் அவர்கள் என்அக்கா அத்தான், கோயிலில் தமிழ்ப்படும் பாடு - நான் இவர்களாலே பட்ட பாடு - தந்தை தாயாய் எண்ணியதோடு - பொருள் தந்ததும் கொஞ்சமோ திரும்பினேன் வீடு! - ஆயினும் அவர்கள் என்அக்கா அத்தான், இரும்புதானோ இவர்கள் நெஞ்சம் - அவர்க்கு என்மீதில் ஏனிந்த வஞ்சம்? வரும்போது வாஎன்று கொஞ்சம் மகிழ்ச்சிக்குமா வாயில் செந்தமிழ்ப் பஞ்சம்? - ஆயினும் அவர்கள் என்அக்கா அத்தான், - காதல் பாடல்கள், ப.122, 1977 152. கண்ணபிரானே! வாரும் கண்ணபிரானே - எங்கே வந்தீர் கண்ண பிரானே? சேரும் கோபிகை மார்கள் - இருப்பார் செல்லும் கண்ணபிரானே! - மெல்ல (thU«) வந்த முகவரி தப்பு - பொது மகள் இவளெனும் நினைப்பு; செந்தமிழ் நூற்படிப்பு - மிகச் சிறிதுமில்லாதது வியப்பு! - சும்மா (thU« ஒருத்தியை மணந்த பின்பு - வே றொருத்தியிடத்திலா அன்பு? - இது பொருத்தமா அறத்தின் முன்பு? - ஏ புதிய தமிழரே, போவீர் எழுந்து - சும்மா (thU«) - காதல் பாடல்கள், ப.123, 1977 153. பொழுது விடியவில்லை பொழுதும் விடிய வில்லை பொற்கோழி கூவ வில்லை வழிபார்த்த விழி யேனும் மறந்தும் உறங்க வில்லை பழிகாரன் வருவது திண்ணமா? - இல்லை பாவை எனைக்கொல்ல எண்ணமா? விளக்கிலும் நெய் யில்லை வெள்ளி முளைக்க வில்லை களம் காப்பவன் குறட்டை காதுக்குப் பெருந் தொல்லை இளக்காரம் இத்தனை ஆயிற்றே? - காதல் ஏரியின் நீர்வற்றிப் போயிற்றா? கிளியும் விழிக்க வில்லை கிட்ட எவரும் இல்லை உளத்தில் அமைதி இல்லை உறவும் அழைக்க வில்லை துளிஅன்பும் என்மட்டில் பஞ்சமா? - என் தோழன் தனக்கிரும்பு நெஞ்சமா? மறக்க முடிய வில்லை வாழ்வில் மகிழ்ச்சி இல்லை இறக்கவும் மனம் இல்லை இருந்திடில் இந்தத் தொல்லை பெறத்தகு மோஅவன் வரவு? - வரப் பெற்றால் கழியும்இந்த இரவு! - காதல் பாடல்கள், ப.124, 1977 154. இன்பத்தில் துன்பம் தலைவி கூற்று அகவல் இருந்தபடி என்றன் நெஞ்சை இழுக்கும் இருவிழி இன்பம் செய்யும் எனில்அவர் திருந்துபடி ஓவியன் தீட்டிய ஓவச் சேயிழை தன்னைத் திரும்பிப் பார்க்கும் அவ்விரு விழியே துன்பம் செய்வன! எவ்வகை உய்வேன் தோழியே! - காதல் பாடல்கள், ப.125, 1977 155. இடர் வந்து சேராதே முல்லை மலர் கேட்டேன் இல்லை என்று சொல்லாமல் முடித்துக்கொள் என்றாரடி தோழி! கொல்லை வளர்ந்தாலும் புல்லில் மணமிராதே; கொடுந் தொலைவில் அடர்ந்து படர்ந்து கிடந்து நறு - முல்லை மலர் கேட்டேன் மாங்கொம்பைத் தழுவிக் கொண்டிருக்கும் - இந்த மலர்க் கடியை அறுப்பார் உண்டோ? பூங்காட்டில் உலவிடும் வண்டைப் போ போ என்றார் என்ன பயன் கண்டார்? தூங்கா விளக்கும் சுடருக்குக்கும் ஏற்பட்ட தொடர்பை அறுப்பதாலே இடர் வந்து சேரோதோ? - முல்லை மலர் கேட்டேன் - காதல் பாடல்கள், ப.125, 1977 156. சேவலைப் பிரிந்த அன்றிற் பேடு (மாமி அழைத்தாள் என்று சென்று திரும்பிய தலைவியிடம், தோழி உன் துணைவர் திருவரங்கம் போயிருக்கிறார் என்று கூறிய அளவில், தலைவி தோழியிடம் வருந்திக் கூறுகிறாள்) ஏண்டி போனார் திருவரங்கம் - அவர் என்னாசைத் தங்கச் சுரங்கம். - ஏண்டி போனார் ... என், வேண்டுகோளைத் தாண்டி - மலை தாண்டி ஆற்றைத் தாண்டி அவர் - ஏண்டி போனார் ... நான், எட்டிப் பிடித்த வட்ட நிலா - நல்ல இனிப்பி லேப ழுத்த பலா வட்டி கொடுத்தாலும் வாராச் செல்வம் வாழ்ந்த வாழ்வும் இந்தமட் டிலா? - ஏண்டி போனார் ... அவரும் நானும் பூவும் நாரும் பிரிந்த தில்லை நொடி நேரம் எவர்க்கும் தெரியும் திருவரங்கம் இங்கிருந்து பத்துக்காத தூரம். - ஏண்டி போனார் ... அன்றில் பறவை பிரிந்த தில்லை ஆண்பிரிந்து வாழ்ந்த தில்லை என்ற சேதி தெரியாதா? - நான் எப்படிப் பொறுப்பேன் இந்தத் தொல்லை? - ஏண்டி போனார் ... - காதல் பாடல்கள், ப.130, 1977 157. எவை இருந்தால் என்ன? அவளில்லையே! மணமும் தென்றலும் குளிரும் வாய்ந்த மாலையும் சோலையும் இருந்தும் பயனில்லை குணமும் அழகும் வாய்ந்த என் காதற் குயில் இங் கிருந்தால் ஒருகுறையு மில்லை - மணமும் அணங்கும் நானும் ஒன்றா யிருந்தே அடைந்தால் பெருமை அடையும் நறுமணம் பிணத்திற்கு நலம் ஒரு கேடா அவளைப் பிரிந்த எனக்கு மணமா குணந்தரும்? - மணமும் ஒன்றில் ஒன்று புதையும் முகங்களைச் சேராமல் செய்யும் கோடைக் கொடுமையைத் தென்றற் காற்றுக் குளிர் செய்யும் ஆயினும் சேயிழை இல்லை பயனொன்றும் இல்லை - மணமும் தனிமையில் எனக்கா இன்பக்கண் காட்சி தளிர் ஆல வட்டம் என்ஒரு வனுக்கா? இனிய பொன்மேடை அவளுடன் நானும் இருந்தின்பம் அடையவே அதுவன்றோ மாட்சி! - மணமும் - காதல் பாடல்கள், ப.131, 1977 158. எதிர்பார்க்கும் ஏந்திழை சிரிப்பென்ன? களிப்பென்ன சேயிழையே மடமானே - புகழ் பரப்பும் சேரன்மகன் வரக்கேட்ட நற்சேதி தானே? கரிப்பைச் சுவைத்த பிள்ளை போலே இருந்த துன்றன் கன்னம் - விண் விரிக்கும் நிலவே என்று விளம்ப முடியவில்லை இன்னம். தெருவை நோக்கி மீண்டும் வருவை அறைக்கு மீண்டும் அன்னாய் - அவன் உருவை மனத்திற் கண்டே வருக வருக என்று சொன்னாய். இருவிழி அனுப்பினை இரண்டரைக் கல்தூரம் நீயே - உடன் வரவேற்பு வாழ்த்துரை தொடக்கம் செய்தனை தாயே! அருகில் அவனும் இல்லை அணைத்திடத் தாவினை தங்கமே - பின் கருகினை விழிமலர் காணுகிலான் அவன் எங்குமே. சருகு சலசலக்கும் தாவும் உனது மலர்க் காலம்மா! - அவன் வருகை பாடின உன் கைவளை சிலம்பவன் மேலம்மா! - காதல் பாடல்கள், ப.141, 1977 159. அன்பன் வந்தால் அப்படி! நான் சொன்னால் செய்யாதவள் புளியிற் கோது நீக் கெனப் புகல்வேன் கிளியோடு பேசக் கிளம்புவாள் என்மகள்! வெந்தயம் புடை எனில் வெடுக்கெனப் பகடைப் பந்தயம் ஆடப் பறப்பாள் அப்பெண்! விழுந்தி ருக்கும் மிளகையும் பொறுக்க எழுந்தி ருக்க ஒப்பா தவள்அவள்! அப்படிப் பட்டவள், கைப்படக் காதல் அஞ்சல் அவளுக் கெழுதிய அன்பன் என்னை மாமி என்று கூவி வீட்டில் நுழைந்ததைக் கண்ட மெல்லி அம்மியை அயலில் நகர்த்தி மிளகாய் செம்மையில் அறைத்துச் சேர்த்துக் காய்கறி திருத்திக் குழம்பு பச்சடி தென்முறைக் கூட்டு முதலன குறைவற முடித்து யானைத் தலையினும் பெரிதாய் இருந்த பானையில் வெந்ததைப் பதமுற வடித்துக் குருத்தரிந் துண்போன் கருத்தறிந்து முக்கனி உரித்துத் தேன்வைத்து - உருக்குநெய் வைத்துச் சமையல் ஆகட்டும் என்று சாற்றிய என்னிடம் ஆயிற்று என்றே இயம்பி, எட்டி, அவன்முகம் நோக்கி இனிதே முகிலைக் கண்ட தோகைபோல் தகதக என்றாடி னள்அத் தையலே! - காதல் பாடல்கள், ப.142, 1977 160. பால்காரன்பால் அன்பு கண்ணன்பால் மிகஅன்பால் வேலைக் காரி கையிற்பால் செம்போடு தெருவிற் சென்றாள் திண்ணன், பால் வாங்கென்றான் கரிய னும்பால், தீங்கற்ற பாலேஎன் பால்வாங் கென்றான் திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால் சீஎன்பால் நில்லாதீர் போவீர் அப்பால் கண்ணன்பால் நான்கொண்ட களிப்பால் அன்னோன் கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்! - காதல் பாடல்கள், ப.145, 1977 161. கற்பே உயிர்... அவன் :தயிர் விற்கப் போனவளே தட்டானிடம் பேச்சென்ன? மோர் விற்கப் போனவளே முத்தனிடம் பேச்சென்ன? அவள் :தட்டானிடம் பேசாமே தயிர் விற்ப தெப்படியாம்? முத்தனிடம் பேசாமே மோர் விற்ப தெப்படியாம்? அவன் :தயிர் விற்க மட்டுந்தான் தட்டானிடம் பேசலாம் மோர் விற்க மட்டுந்தான் முத்தனிடம் பேசலாம். அவள் :தயிர் விற்க மட்டுந்தான்! மோர் விற்கமட்டுந்தான்! உயிர் விற்க என் மனந்தான் உடன்படுமா சொல்லத்தான்? - காதல் பாடல்கள், ப.146, 1977 162. ஒத்து வாழாத ஆண்கள் அழகாய் ஓடும் அருவி அங்கே ஒரு குருவி அழைத்ததேதன் ஆணை ஆணின் நெஞ்சோ கோணை! விழியை மற்றொரு பெட்டை மேல் ஆண் வைத்த குட்டை முழுதும் கண்ட பின்பும் முற்றா தாதன் துன்பம்? அத்தான் அத்தான் என்றே அந்தப் பெட்டை நன்றே முத்துக் குரல் தாவி மூன்று முறை கூவி, ஒத்து வாழா ஆண்கள் உயிரில் லாத தூண்கள் செத்தேன் என்றே அருவி சேர்ந்த தந்தக் குருவி - காதல் பாடல்கள், ப.150, 1977 163. மணவாளனைப் பறிகொடுத்த மங்கை அழுகின்றாள் இருப்பீர் என்றிருந்தேனே இறந்தீரோ அத்தானே ஒருபானை வெண்ணெயும் கவிழ்ந்ததோ உண்ணவே அணைத்தகை அவிழ்ந்ததோ! சிரிப்பாலும் களிப்பாலும் சேயிழையை வாழவைத்தீர் முறித்தீரோ என்ஆசையை அத்தானே முத்து மழையில் வாழ நினைத்தேனே! வெண்ணெய் படும் நேரத்திலே தாழிஉடைந் திட்டதுவோ கண்ணொளியை இழந்தேனே அத்தானே காவலற்ற பயிரானேன் அத்தானே! கண்ணுக்கே மையானீர் கார்குழலில் பூவானீர் மண்ணாகிப் போனதுவே என்வாழ்வு மறப்பினும் மறக்கவில்லை உம்சேர்க்கை! - காதல் பாடல்கள், ப.153, 1977 164. விடுத்தானோ தினம் - மதன துரையை நாடி மனது மிகவும் வாடி வசமிழந் தேனென் சேடி! - தினம் மஞ்சமிசை வந்து கொஞ்சிக்கு லாவி மகிழ்ந்திடப் பறந் திடுதென் ஆவி! மாதென் செய் குவேன்? மதிமயங் இப் பாவி! - தினம் காதலின் ஆழத்தில் என்னையும் தள்ளிக் கடிதினில் அவன் வேறொரு கள்ளி மீதில் மையல் கொண்டே விடுத்தானோ எனைத் தள்ளி? - தினம் - காதல் பாடல்கள், ப.154, 1977 165. கள்ளி அகவல் கள்ளி கள்ளி எனஊர்க் காவலன் துள்ளிக் கோடம் பாக்கம் தொடர்கையில் ஒருவனை அறியா தொருவனை நாடும் கள்ளி ஓடிடத் திருவக் கள்ளி நிற்பது கண்டான் மகிழ்ந்தே - காதல் பாடல்கள், ப.155, 1977 166. நிலவு கேலி சிரித்தது வருவதாய்ச் சொன்னவர் வந்திருப்பார் என்று தெருக்கதவு திறந்து பார்த்தேன்; தென்னையை அத்தான் என்றழைத் திட்டேன்; அதற்கு முத்தொளி சிதறிட முழுநிலா என்மேல் கேலிச் சிரிப்பை வீசி நாலுபேர் அறியச் செய்தது நங்கையே! - காதல் பாடல்கள், ப.155, 1977 167. அவள் அடங்காச் சிரிப்பு ஏரிக்கரை மீது தோழி - நான் இருந்தேன் என்கால் இடரிற்று நீரில் விழுந்திட்டேன் தோழி - அந்த நிலையிலும் நீரினை நோக்கிப் பாரிலுன் சாதிதான் என்ன - என்று பாவைநான் கேட்டிடல் உண்டா? யார்சொன்ன சொல்இது என்றால் - என்னை ஈன்றவர் சொன்னது தோழி! என்நிலை என்பது கேட்பாய் - அதை ஏரிக்கரை என்று சொன்னேன் என்நிலை தப்பினேன் தோழி - ஓர் இன்பத் தடந்தோளில் வீழ்ந்தேன் அன்னதன் காரணம் கேட்பாய் - என் அறிவின் திறம்பெற்ற காதல்! மின்னல் வெளிச்சமும் வீச்சும் - வேறு வேறென்று சொல்பவர் உண்டா? மலர்என்பர் காதல் உளத்தை - அதன் மணம்என்பர் அவன்தோளில் வீழ்தல்! தலைநான்கு பெற்றவன் சொன்ன - நான்கு சாதிக் கிங்கே என்ன வேலை? உலகினில் சாதிகள் இல்லை - என் உள்ளத்தில் வேற்றுமை இல்லை கலகத்தைச் செய்கின்ற சாதி - என் கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ? அதிகாரி கட்குத்தன் பெண்ணைக் - கூட்டி அறையினி லேகொண்டு சேர்த்து மிதிமிதி என்று மிதிக்கப் - பின் விளைந்த விளைச்சலே பார்ப்பான் முதிர்ந்து முதிர்ந்துவரும் காமம் - கொண்ட முனிவர்கள் இருடிகள் தந்த பதர்களே ஆரியர் சொல்லும் சத்திரி யர்என்பதும் பார்த்தோம். இந்நாட்டு வாணிகர் எல்லாம் - பிரமன் இடுப்பில் பிறந்தாராம் தோழி என்ன புளுகுகள் தோழி - இதை ஏன்நம்பு கின்றனர் பெற்றோர்? தொன்மைத் தமிழக மாந்தர் - நாம்! சூத்திரர் என்றனர் நம்மை! பொன்னுக்குப் பித்தளை மெருகா - தமிழ்ப் பூணெலாம் பித்தளை தானா? rªjd¢ nrhiyeh‹ njhÊ - bj‹wš jGt¤ jGÉnd‹ njhÊ mªj¢ brašnf£l bg‰nwh® - mt‹ M®?அவன் எச்சாதி? என்றார் இந்தாடி அன்புள்ள தோழி - எனக் கெப்போ தடங்கும் சிரிப்பு. வந்தவன் ஆண்சாதி என்றால் - அவனை மணந்தவள் பெண்சாதி தானே! - காதல் பாடல்கள், ப.169, 1977 168. இன்பம் அறுசீர் விருத்தம் 1 சோலையில் தோகைமார் சிந்தொன்று வண்டு பாடும் சோலையில், செங்கை யிற்பூப் பந்தொன்றை எறிந்தாள் அன்னம் பார் என்றாள்! பறந்த தென்றாள்! பொந்தொன்றில் சோலைக் கப்பால் போயிற்றே என்று நைந்தார் பந்தில்லை என்றார் கிள்ளை பார் என்றாள்! பறந்த தென்றாள்! அன்னம் பந்தைத் தேடச் சென்றாள் அன்னத்தைப் பழித்தாள் கிள்ளை ஆதலால் அழுத அன்னம் முன்அதைக் கொணர்வேன் என்று முடுகொடு வெளியிற் சென்றாள் தென்னந்தோப் பொன்று கண்டாள் சிறுபந்தைத் தேடும் போதில் புன்னையின் மறைவி னின்று பொலிந்தன இரண்டு கண்கள்! வேலன் உதவிக்கு வந்தான் குனிந்தனள் குனிந்த வண்ணம் கூனிய முதுகின் மீது புனைந்தனள் இரும லர்க்கை! பொன்முகம் கவலை நீரால் நனைந்தனள், என்ன தேடி நலிகின்றாய்? என்று வேலன், முனம்வந்து கேட்டான்; அன்னம் முகத்தினில் நாணம் பூத்தாள். அயலார்க்கு வேலையில்லை சோலையில் அடித்த பந்து தொலைவிலே இங்கு வீழ்ந்த தாலதைத் தேடு கின்றேன் அயலவர்க் கிவ்வி டத்தில் வேலைஏ தென்று வேலன் விலாப்புறம் வேல்ப தித்தாள்! நூலிடை முறியும் என்று நுவல்வதும் பிழையா என்றான். பொந்தில் இருவர் கைகள் வேலனும் பந்து தேட அன்னமும் முயலு கின்றாள் ஆலின்வேர்ப் பொந்து கண்டார் எதிரெதிர் அன்னம் வேலன் ஏலவே நுழைத்த கைகள் ஒன்றில்ஒன் றிழைந்த தாலே மூலத்தை மறந்தா ராகி நகைமுத்தை முடிய விழ்த்தார். நான் போகவேண்டும் மேழியை உழவர் தூக்கி வீட்டுக்குத் திரும்பும் நேரம்! கோழிகள் சிறகு கூம்பி அடைந்தன கூட்டுக் குள்ளே! தோழிமார் பந்து கேட்பார் தொலைந்தது தெரிந்தால் என்மேல் ஏழிசை கூட்டிக் கேலிப் பண்பாடி இழிவு செய்வார். வேலன் அணைப்பு இதுகேட்ட வேலன் அன்பால் இடதுகைப் புறத்தில் அன்னம் புதைந்திட அணைத்த வண்ணம் போகலாம் என்று சொன்னான். எதற்கென்று மங்கை கேட்டாள் இதற்கல்ல வீட்டி லுள்ள புதுப்பந்து தரத்தான் என்றான் அன்றில்கள் போக லானார். 2 சோலையில் தோழிமார் அன்னத்தைத் தேடும் கண்கள் அழுதன கிள்ளை என்பாள் என்கேலி அன்னந் தன்னை இன்னலில் தோய்த்த தென்றாள் முன்னாக அன்னந் தன்னைத் தேடநாம் முயல வேண்டும் என்றனள் வஞ்சி, ஆங்கே எழுந்தனர் பெண்கள் யாரும். வேலன் விலகினான் தோழிமார் வருகின் றார்கள் தொலைவினில் என்றாள் அன்னம் வாழிய அன்பே என்று வேலனும் வாழ்த்திச் சென்றான் அன்னம் பந்து கொடுத்தாள் நாழிகை ஆயிற் றந்தோ நான்செய்த தொன்று மில்லை. பாழ்மகன் செய்த வேலை பந்திதோ என்றாள் அன்னம். இது நம் பந்தல்ல பொழிலிடை ஒருபாற் குந்திப் பூப்பந்தை ஆராய்ந் தார்கள் எழிலான பந்தே ஆனால் இப்பந்து நம்பந் தன்றே விழிக்கின்றாய் அன்னம் என்ன விளைந்தது சொல்க என்று கனிமொழி கேட்டாள் அன்னம் கண்ணீராற் சொல்ல லுற்றாள். வேலன் மேற்குறை தென்னந்தோப் புக்குச் சென்று பந்தினைத் தேடும் போதே புன்னைக்குப் பின்னி ருந்து பொதுக்கென எதிரில் வந்தே இன்னந்தான் தேடு கின்றாய் யான்தேடு கின்றேன் என்று கன்னந்தான் செய்தான் அந்தக் கள்வன்என் கையைத் தொட்டான். தொட்ட இன்பம் புறங்கையை விரலால் தொட்டான் அதிலொரு புதுமை கேளீர்; திறந்தது நெஞ்சம்! உள்ளே சென்றனன் அந்தக் கள்வன் மறந்திட்டேன் உலகை அந்த மாக்கள்வன் இடும ருந்தால் பறந்தது நாணம்! பட்ட பாட்டையார் அறிவர் என்றாள். என்னைக் கருப்பஞ் சக்கையாக்கினான் பூப்பந்து கிடைக்க வில்லை போதுபோ யிற்றே! அங்கே கூப்பிடு வார்கள் தோழமைக் குயில்களும் என்று சொன்னேன். காப்பாக என்இ டுப்பைக் கைப்புறம் இறுக்கி ஆலை வாய்ப்பிலே கருப்பஞ் சக்கை ஆக்கினான் வஞ்ச நெஞ்சன். புதுப்பந்து தந்தான் அணைத்திட்ட அணைப்பில் என்னை வீட்டுக்கே அழைத்துச் சென்றான் முணுமுணுத் தேன்அப் போதென் முகத்தொடு முகத்தைச் சேர்த்தான் அணிமலர்ப் பந்து தந்தான் அதேஇது என்றாள் அன்னம் மணப்பந்தல் இடுதல் தான்நம் மறுவேலை என்றாள் கிள்ளை. நான் போதும் நாளையே பந்து தேட நாமெல்லாம் போக வேண்டும் காளையை அங்குக் கண்டால் கடுஞ்சொல்லை உகுக்க வேண்டும் வேளையோ டேகு வோம்நாம் வீட்டுக்கே என்றாள் முல்லை நாளைக்குப் பந்து தேட நான்போதும் என்றாள் அன்னம். - காதல் பாடல்கள், ப.171, 1977 169. பள்ளிக்குப் போகும் புள்ளிமான் திருநாளில் என்னைத் திரும்பிப் பார்த்தாள் - பின் ஒருநாள் உரையாடத் தானும் உரையாடி நான்நகைக்கத் தானும் நகைத்தான் அதனாலே வான நிலவும் மனமொத்துப் - போனாள்என் இன்பத்தை வாழ்வில் இணைஎன்றேன்! அன்னவள் துன்பத்தை என்வாழ்வில் தூர்த்துவிட்டான் - இன்னும் படித்துப் படிப்படியாய் முன்னேற்றத் திட்டம் முடித்துநான் வாழுமுறைக்கு - முடிவொன்று பண்ணுவ தென்றும் பகர்ந்திட்டாள்; இன்றதனை எண்ணுவ தென்ப திழுக்கென்றாள் - கண்ணிலே சற்றும் தொடர்பின்றித் தன்கருத்திற்கும்ஒரு முற்றுப் புள்ளிக் குறியும் முன்வைத்தாள் - உற்றுக்கேள் கண்ணப்பா நானவளைக் கட்டாவிட்டால் வாழ்வு மண்ணப்பா என்றுரைத்தான் மன்னாதன் - மன்னாதா பார்த்தாள் பகர்ந்திட்டாள் பற்காட்டினாள் என்று கூத்தாடு கின்றாய் குரங்காகக் - கோத்த பவழம் சிரிக்கும் பறிக்க முயன்றால் அவிழ விடுமோ அதற்குள் - தவழ்சரடு? பள்ளிக்குச் செல்லுமொரு செந்தமிழ்ப் பாக்கியத்தை அள்ளிப் பெண்முற்போக்கில் ஆறாத - கொள்ளி வைக்க எண்ணாதே எல்லாரும் அண்ணன்மார் என்றெண்ணும் பெண்ணாத லாலும், இரும்புமனம் - பண்பாடு பெற்றுள்ள தாலும்அவள் பேசினாள் உன்னிடத்தில் முற்றிய கல்வி முயற்சியே - நற்றவம் என்று நினைக்கும் இளைய பெருமாட்டி! கன்றாத் தமிழ்வாழைக் கன்றின்கீழ்க் - கன்றுதனை அன்னை என்று போற்றப்பா என்றேன். அம் மன்னாதன் பின்ஓடினான் அறிவு பெற்று! - காதல் பாடல்கள், ப.186, 1977 170. பேசுதற்குத் தமிழின்றிக் காதலின்பம் செல்லுமோ நெஞ்சில் நிறைந்த காதலால் அந்த நேரிழை, தன்னை எனக்களித் தாளே, அஞ்சினாள் என்றும், தந்தையின் வறுமை அகற்ற எண்ணி வேலனுக் கேதான் தஞ்ச மாயினாள் என்றும்நீ சொல்கின்றாய்; சாவுக்கும் எனக்குந்தான் திருமணம் போலும் வஞ்சிக் கொடிபோல்வாள் வஞ்சியா? அன்றி வஞ்சிப்பாள் வஞ்சியா? ஐயுற வைத்தனள் கூடு சாத்தி யிருக்கையில் உள்உள்ள கொஞ்சு கிள்ளை இல்லை என்கின்றாளா! வீடு சாத்தி யிருக்கையில் உள்உள்ள மேலோன் இல்லைஎன் கின்றா ளாஅவள்? தேடி என்னைத் தன்னெஞ்சில் வைத்தவள் திறந்துவிட் டாள்எனில் இறந்துபட் டிருப்பாளே! ஈடிலாக் கற்பினாள் என்றுநான் நம்பினேன், இல்லை என்றால் தமிழுக்கே நாணமாம் தன்னு ளத்தில் ஒருவனுக் கிடந்தந்து மற்றொ ருத்தனைத் தாவுவ தென்பது தென்னவர் கற்பன்று! கற்பை இழந்தவள் தீந்தமிழ் நாட்டினள் என்றும்எண் ணப்படாள் புன்னை கொய்துகொண் டிருந்தாள் எனைக்கண்டு புன்ன கைப்பினால் போட்டுக் கொலைசெய்தாள்! பின்னொரு நாளிலே தன்வீட்டுத் தோட்டத்தில் பொத்தலாம்படி என்றன் கன்னத்தைக் கொத்தினாள், தமிழினும் இனியதோர் மொழிதேடித் திரிவேனைத் தடுத்தாட் கொண்ட பெருமாட்டி தான்தன்னை அமிழ்தென்று காட்டி உண்ணவும் நீட்டினாள் அவள்பிறனுக்கா அளித்தாள், எச்சிற் பண்டத்தை? உமிழாதா வையகம்? கதிர்மதி ஒழிந்தாலும் ஒழியாப் புகழுலகில் கால்வைக்க ஒண்ணாதே அமிழ்ந்ததா என்ஆசை அவள்வஞ்சக் கடலினில்? அடைந்திட்டதா மாசும் தமிழ்ஒழுக் கந்தன்னில்? வந்த ஆளிடம் இவ்வாறு கூறித்தன் வயிற்றை நோக்கினான்; கத்தியைத் தூக்கினான்; கொந்து முன்னர்க் கத்திதூக் கியகை குறுக்கில் மறிக்கப் பட்டது! குரல்ஒன்றும் அந்த மங்கைதான் நான்என் றெழுந்ததே! அன்பு மங்கையைக் காதலன் கண்ணுற்றான்; இந்தி யாவில் மறைந்திட்ட தமிழகம் எதிரில் வந்தது போல்மகிழ்ந் தான்அவன் நீஎ னக்குத் தானேடி கிள்ளையே நின்ற வாறு நெஞ்சைக் கலக்கினாய் நேயத் தமிழே என்தோளில் சாய்என்று நீட்டு கின்ற கரும்பான கைகளைத் தூய நங்கை விலக்கினாள் சொல்லுவாள்; தொன்மையும் மேன்மையும் உடையவள் ஆந்தமிழ்த் தாயி ருந்தனள், தமிழகக் காதலர் தமிழிற் பேசித் தமிழின்பம் உற்றனர் நாமும் இன்று தமிழ்பேசி இன்ப நல்ல வாழ்வின் வழிநோக்கி நடக்கின்றோம்; தீம னத்து வடக்கர்நம் தமிழினைத் தின்றொ ழிக்க ஒவ்வொரு பல்லையும் காய்மாட்டித் துறட்டுக் கோலாய் நீட்டிக் கால்மாட்டில் நிற்கின்றார்! பேசு தற்கே தேமதுரத் தமிழின்றிக் காதல் இன்பம் செல்லுமோ? செல்லு மோதமிழ் வாழ்வு? உரைகேட்டான், உரைக்கின்றான் தமிழ வேங்கை; ஒருமொழிவைத் துலகாண்ட தமிழ னைப்போல் ஒருநாவ லந்தீவை வென்றே னுந்தன் ஒருமொழிவைத் தாட்சிசெயக் கனவு கண்ட பெருவேலான் அசோகனால் நெருங்க ஒண்ணாப் பெருநெருப்பைத் தில்லிஎனும் சிறுது ரும்பா நெருங்கும்? நீதொடக்கம் செய்என்று சொன்னான்! நெருங்கினார் குளிரருவித் திருக்குற் றாலம் - காதல் பாடல்கள், ப.193-197, 1977 171. என் அத்தான் எனக்குப் பொன் அத்தான் எனை, மணக்கத்தான் பணத்தைத்தான் குவிக்கத்தான் புறப்பட்டான் மறப்பானோ தோழிப் பெண்ணே! என்அத்தான் - மனம் மாறமாட்டான் மாற்றுயர்ந்த பொன் அத்தான்! நல்ல, குணத்தில்தான் செயலிற்றான் அணைப்பில்தான் மிகுந்திட்டான் குற்றமில்லான் தோழிப் பெண்ணே என்அத்தான் - ஒரு கோவைப் பழத்தைக் கிளிவிடுமா தின்னத்தான்? என், சீரைத்தான் கோரித்தான் தேரிற்றான் ஏறித்தான் திரும்புகின்றான் தோழிப்பெண்ணே என்அத்தான் - அவன் விரும்புவதும் உலகத்திலே என்னைத்தான்! என், பேரைத்தான் எண்ணித்தான்! ஊரைத்தான் நோக்கித்தான் பெயர்கின்றான் தோழிப்பெண்ணே. என்அத்தான் - நீ துயரத்தில் ஏன் தள்ளிக் கொண்டாய் உன்னைத்தான்? - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுப்பு, ப.9, 1977 172. நினைவு வராதா? நிலவு வராதா - எங்கும் உலவி வராதா! நிலவு கண்டால் என்முகம் அவன் நினைப்பில் வராதா - அவன் மறதி தீராதா! மலர் விரியாதா - அங்கு மணம் பரவாதா! மணம் நுகர்ந்தால் என்குழல் அவன் மனத்தைத் தொடாதா - அவன் மறதி கெடாதா! குயிலும் கொஞ்சாதா - அவன் செவியில் விழாதா! குரலால் என்மொழி நினைவு கொஞ்சம் வராதா - காதற் பஞ்சம் தீராதா! வெயில் தழுவாதா - ஒளி இருள் கழுவாதா வெயில் கண்டால் என் புருவம் விருப்பம் தராதா - காதற் கரிப்புத் தீராதா! மின்னல் வராதா - அவன் கண்ணில் படாதா! மின்னல் கண்டால் என் இருப்பின் மென்மை நினைப்பான் - காதல் வெப்பந் தணிப்பான்! கன்னல் ஓங்காதா - அங்குக் காட்சி தராதா! கன்னல் கண்டால் என்உதட்டுக் கதை மறப்பானா? - இங்கு வர மறுப்பானா? - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.17, 1977 173. நேயனை அழைத்து வா எனக்கிதுதான் நிலவா, கடுநெருப்பா - அவன் என்னைக் கூடி இருக்கையிலே அழகும் குளிரும் கலப்பா! - எனக்கிதுதான் நிலவா இனித்திருக்கும் பழமா இதுபாலா - அவை எட்டி என்றால் அவனில்லாத தாலா! நினைத் தொழுதேன் உயிரிருக்கும் போதே - என் நேயனைப்போய் அழைத்து வாடி மாதே. - எனக்கிதுதான் நிலவா மணக்கும் முல்லைக் கொடியா பிணநெடியா - அவன் வாராவிட்டால் இவைஎல்லாம் இப்படியா தணலில் போட்ட புழுவாய்த் துடித்தேனே - என் தமிழவேளை அழைத்து வாடி மானே! - எனக்கிதுதான் நிலவா - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.25, 1977 174. தவளை போல் குதிக்காதீர் அவளிப்படி நடந்தாளோ? அவளிப்படி விழித்தாளோ! இவளிடத்தில் காட்டாதீர்! இவளிடத்தில் விழிக்காதீர்! அவள்பூசிய கலவைதானோ? அவள்தந்த அடைகாயோ! இவளிடத்தில் வீசாதீர்! இவளிடத்தில் சிரிக்காதீர்! அவள்சூட்டிய மலர்தானோ? அவள்கடித்த கன்னப் புண்ணோ! இவளிடத்தில் நீட்டாதீர்! இவள்மனத்தைக் கலக்காதீர்! அவள்கொடுத்த தலைக்கொழுப்பா! அவள்கொடுத்த ஆணவமா? இவளிடத்தில் செல்லாதே இவளைஒன்றும் பண்ணாதே? அவளிடமே போவீரே! அவளிடமே சாவீரே! இவளிடத்தில் வரவேண்டாம் இவள்தோளை நத்தாதீர் எவளிடத்தில் எதுசெல்லும் அவளிடத்தில் அதுசெல்லும் குவளை அத்தான் அவள்கண்கள் குவளை நீரும் இங்கில்லை! அவளிதழ்தான் இருக்குமங்கே அவலுமில்லை மெல்லுதற்கே! சவலைபோகும் பிள்ளை இங்கே தனிஇன்பக் கொள்ளை அங்கே கவலையெல்லாம் அவளிடத்தில் கண்ணீர்தான் இவ்விடத்தில் தவளைபோலக் குதிக்காதீர் தலைவாயில் மிதிக்காதீர்! - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.27, 1977 175. தென்றல் செய்த குறும்பு இழுத்திழுத்து மூடு கின்றேன் எடுத்தெடுத்துப் போடு கின்றாய் பழிக்க என்றன் மேலா டையைத் தென்றலே - உன்னைப் பார்த்துவிட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே! சிலிர்க்கச் சிலிர்க்க வீசு கின்றாய் செந்தாழை மணம் பூசு கின்றாய் குலுக்கி நடக்கும் போதிலே என் பாவாடை - தனைக் குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே! வந்து வந்து கன்னந் தொட்டாய் வள்ளைக் காதில் முத்த மிட்டாய் செந்தா மரை முகத்தி னைஏன் நாடினாய் - ஏன் சீவியதோர் கருங்குழலால் மூடினாய்! மேலுக்குமேல் குளிரைச் செய்தாய் மிகமிகமிகக் களியைச் செய்தாய் உள்ளுக்குள்ளே கையை வைத்தாய் தென்றலே உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் - என் தென்றலே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.31, 1977 176. தோழியே சொல்வாய் காசுபணம் வேண்டாமடி தோழியே - அவன் கட்டழகு போதுமடி தோழியே ஆசை வைத்தேன் அவன்மேலே தோழியே - என்னை அவனுக்கே அளித்தேனடி தோழியே! ஓசைபடா தென்வீட்டில் ஓர்இரவிலே - என்பால் ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே ஏசட்டுமே அவன்வரவால் என்னையே - நான் இவ்வுலகுக் கஞ்சேனடி தோழியே! தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில் - செழுந் தேனுக்காக வண்டுபாடும் மாலையில் இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர் - நல் எழில்காட்டிச் சென்றானடி தோழியே! ஒன்றெனக்குச் செய்திடடி இப்போதே - நல்ல ஒத்தாசை ஆகுமடி தோழியே அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன் - கொஞ்சம் அன்புதந்து போகச் சொல்வாய் தோழியே! என்பார்வை அவன்பார்வை தோழியே - அங்கே இடித்ததுவும் மின்னியதும் சொல்வாயே தன்அழகின் தாக்கடைந்த என்வாழ்வில் - அவன் தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே! பொன்னான நாளடியே என்தோழி - ஒருவாய்ப் பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே இந்நாளும் வாழுகின்றேன் தோழியே - அவன் எனைமறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.32, 1977 177. தீராதோ காதல் நோய் வாராத ehbsyh«(eh‹) வாழாதநாள் - அத்தான் - வாராத நாளெலாம் வந்திட்டால் காண்பேனிங்கே சந்தனச் சோலையைத்தான் - வாராத நாளெலாம் தீராத காதல்நோயை ஓர்நொடியில் தீர்த்திடுவான் செந்தமிழ் பேசிப்பேசித் தேன்கவிதை சேர்த்திடுவான் பாராத நாள் எல்லாம் பாழானநாள் அத்தானைப் பார்க்கும்நாள் ஒவ்வொன்றும் தைப்பொங்கல் நாள் - வாராத நாளெலாம் உண்ணமனம் ஓடுமா (v‹) கண்ணிமையும் மூடுமா? உண்டான தேன்வறண்டால் வண்டுதான் பாடுமா? எண்ணுவேன் என்மனந்தான் கண்ணாளனைத் தேடுமா? எண்ணாமல் இருப்பதற்கும் ஏந்திழையால் கூடுமா? - வாராத நாளெலாம் - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.34, 1977 178. முத்து மாமா புதுக்கோயில் மதில்மேலே முத்து மாமா - இரண்டு புறாவந்து பாடுவதேன் முத்து மாமா? எதுக்காகப் பாடினவோ முத்து மாமா - நாமும் அதுக்காகப் பாடுவமே முத்து மாமா ஒதுக்கிடுமோ ஆற்று நீரைக் கடல்வெள்ளம் - என்னை ஒதுக்கி வைக்க எண்ணலாமா முத்து மாமா? முதல்மனைவி நானிருந்தும் முத்து மாமா - அந்த மூளியைநீ எண்ணலாமா முத்து மாமா? ஒதிய மரத்தின் கீழே முத்து மாமா - கோழி ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்து மாமா? எதுசெய்ய நினைத்தனவோ முத்து மாமா - நாமும் அதுசெய்ய அட்டி என்ன முத்து மாமா. குதிகுதியாய்க் குதித்ததுண்டு முத்து மாமா - எனக்குக் குழந்தையில்லை ஆனாலும் முத்து மாமா எதிலும் எனக்கதிகாரம் முத்து மாமா - நீதான் எப்போதுமே என்சொத்து முத்து மாமா! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.36, 1977 179. அறுவடைப் பாட்டு நாட்டு மாதரே - அறுவடைப் பாட்டுப் பாடுவோம். - நாட்டு ... ஆட்டமயில் கூட்டமாக அங்கே செல்லுவோம் - நாட்டு ... தங்கக் கதிர்தான் - தன் தலை சாய்ந்ததே சிங்கத் தமிழர் - தம் செல்வம் உயர்ந்ததே பொங்கும் சுடர்ப்பொன் னரிவாள் செங்கை பிடிப்போம் போத்துக் கூட்டி அரிந்த செந்நெல் போட்டுக் கட்டுவோம் - நாட்டு ... கட்டழகு தாளின் - கட்டுக் கண்ணைப் பறிக்கும் சிட்டாய்ப் பறப்போம் - களத்தில் சென்று சேர்ப்போம் கட்டடிக்கும் ஆளும்தோளும் பட்டாளந் தானோ - அவர் காதலிமார் ஆசையோடு தொட்டாலும் தேனோ? - நாட்டு ... - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.37, 1977 180. சாவை நீக்கு கண்டவுடன் காதல் கொண்டேன் உன்மேலே - நீ கண்வைக்க வேணுமடி என்மேலே அண்டினேன் ஆதரிக்கக் கையோடு - கேள் அதுதானே தமிழர்கள் பண்பாடு! கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே - எனைக் கூட்டிக்கொள் உன்இடுப்பின் ஓரமே நொண்டியின் கைம்மேல் வந்தா விழும் - என் நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்? அழகில் ஆருமில்லை உன்னைப்போல் - உன்மேல் அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல் இழைக்க இழைக்க மணம்கொடுக்கும் சந்தனம் - மனம் இனிக்க இனிக்க பூப்பூக்கும் நந்தனம்! பழுக்கப் பழுக்கச் சுவைகொடுக்கும் செவ்வாழை பறிக்கும்போதே மணம்கொடுக்கும் வெண்தாழை தழுவு முன்னே இன்பந்தரும் பெண்ணாளே - என் சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.43, 1977 181. நீ எனக்கு வேண்டும் வானுக்கு நிலவு வேண்டும் வாழ்வுக்குப் புகழ் வேண்டும் தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் - என் செங்கரும்பே நீஎனக்கு வேண்டும்! மீனுக்குப் பொய்கை வேண்டும் வெற்றிக்கு வீரம் வேண்டும் கானுக்கு வேங்கைப்புலி வேண்டும் - என் கண்ணாட்டியே நீஎனக்கு வேண்டும்! வாளுக்குக் கூர்மை வேண்டும் வண்டுக்குத் தேன்வேண்டும் தோளுக்குப் பூமாலை வேண்டும் - அடி தோகையே நீஎனக்கு வேண்டும்! நாளுக்குப் புதுமை வேண்டும் நாட்டுக்கே உரிமை வேண்டும் கேளுக்கே ஆதரவு வேண்டும் - அடி கிள்ளையே நீஎனக்கு வேண்டும்! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.44, 1977 182. இன்பம் அனைத்தும் பெண்கள் இட்ட பிச்சைதான் - ஆண்கள் பெற்ற இன்பம் அனைத்தும் - அழகிய - பெண்கள் இட்ட பிச்சைதான் கண்ணைக் கவர்வார் எண்ணம் கவர்வார் காதலால் இன்ப வாழ்வ ளித்திடும் - பெண்கள் இட்ட பிச்சைதான் அன்னை தயை உடையார் - பணிவினில் அடியவர் போன்றார் - மலர்ப் பொன்னின் அழகுடையார் பொறுமையில் பூமிக்கிணை ஆவார் இன்பம் அளிப்பதில் தாசிகள் - அவர் எண்ணம் அளிப்பதில் அமைச்சர்கள் - அழகிய - பெண்கள் இட்ட பிச்சைதான் கண்ணின் கடைப் பார்வை - ஒரு சிறு கட்டளை போட்டுவிட்டால் - இப்பெரு மண்ணுலகின் ஆட்சி ஆண்கள் வாங்குமோர் வாள் வீச்சு பெண்களினால் பண்கள் இலக்கியம் - அவர் பேச்சுக்குத்தான் பெயர் அமிழ்தம் - அழகிய - பெண்கள் இட்ட பிச்சைதான் - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.45, 1977 183. தொல்லை தீர்க்கலாம் பாலும் தேனும் புளித்த காடி பாடுது பார் வானம் பாடி சோலையிலே நீயும் நானும் ஆடி - நம் தொல்லையெல்லாம் தீர்த்திடலாம் வாடி! ஆலமரம் கூடாரம் அல்லிப்பூக் குளத்தோரம் மாலைக்காலம் நமை அழைக்கும் நேரம் - இந்த மாப்பிள்ளைக்கு நீதாண்டி ஆதாரம்! காதலுக்கு மஞ்சள் சிட்டுக் காத்திருக்கும் வேலை விட்டு - அடி மாதரசே பேசக் கூச்சப்பட்டு - நீ வருந்தலாமா கீழே தலை நட்டு? போதாதா நான்உனக்கு பொன்தாண்டி நீஎனக்கு காதோடு சொல்வாயுன் எண்ணம் - நீ கட்டுப்பட்டால் இன்பவாழ்வு திண்ணம்! பூமணக்கும் உன்கொண்டை பொன்குலுங்கும் கால்தண்டை தீமை என்ன கண்டாய் என்னண்டை - வாய் திறந்திட்டால் கெட்டாபோகும் தொண்டை! மாமிக்குன்மேல் ஆசையுண்டு மகனுக்கு நீகற்கண்டு நீமேலும் மேலும் துவண்டு - போய் நிற்பதென்ன சொல் ஆசைகொண்டு! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.47, 1977 184. உன் எண்ணம் கூறு பாழாய்ப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப் பறித்துக் கொண்டாய் அடியேஎன் சின்னக்குட்டி உன்மேனி ஒரு பூத்தொட்டி உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி! ஏழைக்கு வடித்து வைத்த சோறு - பணம் இருப்பவர்க்குச் சாத்துக்குடிச் சாறு பெருக்கெடுத்த தேனாறு பெண்ணே உன்எண்ணம் கூறு! காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா - நீ கடுகடுப்புக் காட்டுவதும் என்மட்டிலா வேரிலே பழுத்த பலா வேண்டும் போதும் தடங்கலா? வீணாகிப் போகலாமா நேரமே - என்னை விலக்கிவிட்டால் பழிஉன்னைச் சேருமே பொறுத்தேன் ஒருவாரமே பொறுக்க மாட்டார் யாருமே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.49, 1977 185. வண்ணத் தமிழாள் அவளின் அழகு! வஞ்சிக்கொடி போலஇடை அஞ்சத்தகு மாறுளது! நஞ்சுக்கிணை யோஅலது அம்புக்கிணை யோ, உலவு கெண்டைக்கிணை யோ, கரிய வண்டுக்கிணை யோ, விழிகள் மங்கைக்கிணை ஏதுலகில் அங்கைக்கிணை யோமலரும்? வானரசு தானிலவு போலுலக மாதரசு நானினிது வாழும்வகை ஆனதிரு வானஉரு மேனிஅது வோஅமிழ்து வீசுமண மோமிகுதி கானிடை உலாவுமயில் தானுமெனை யேயணைய - நினைவாளோ () அவளின் சொல்! கொஞ்சிப்பரி மாறுமொழி பண்டைத்தமி ழோஅலது கொம்பிற்கனி யோஎளிதில் உண்டற்கமு தோ, அரசி மிஞ்சிச்சுவை யோயுதடு பஞ்சைக்கொரு வாழ்வினிய கொண்டற்கிணை யானகுழல் இன்பச்சுனை யாடுவது. கூடு மெனிலோ பெரிய பேறு பெறுவேன் அலது நீடு துயரே அடைவேன் ஈடு சொலவோ அரிது தேடு பொருள்யா துமிலை சீரு மிவளே உறவு யாவு மிவளே இனிய தேனி வளில்ஈ எனவும் - அமிழ்வேனோ? () பஞ்சுக்கிணை யானஅடி அன்புக்குரி தானதுணை மின்பட்டது போல்மெருகு பொன்பட்டது போல்ஒளிசெய் அன்புற்றிடு மாதுநகை இன்புற்றிடு மாறுளது பண்புக்கினி தாய்ஒழுகும் நண்புக்கினி யாள்எழுது பாடலவள் eh‹e(š)Yiu ஆடலவள் நானடையும் ஓடைமல ரேஅரசி ஊறுமணம் நானுமதில் நீடவரும் யாழுமவள் நீர்மைஇசை நானதனில் ஈடுபடு மேனியவள் ஏழைஅதில் ஆவிஎன - அமைவாளோ () அவள்... எனக்கா? நெஞ்சிற்குடி யேறிநிலை நின்றிட்டன ளேஉயிரில் அஞ்சத்தகு மோஅவளின் அண்டைச்செல வேஇனியும் என்சொற்படி யேஅவளும் இன்சொற்சொலு மோஅலது வன்சொற்சொலு மோஅழகு மங்கைக் கெவர் போயறைவார்? மான மவளே எனதின் ஊனு மவளே எனுயிர் தானு மவளே புகழ்மை மான மவளே கொடிய ஏழமை எலாமரசி தோழமை யினாலொழியும் மாமழை யினாலுலகு தானமையுமாறு நலம் - அருள்வாளோ! - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.67, 1977 186. பாரதி போல்வாள் இளவெயில்ஆடி ஒளிவிடு மாந்தளிர் மேனி அவள்மேனி கிளிப்பேச் செல்லாம் நெல்லிக்குப்பத் தாலைச் சீனி சளசளவென்ன மலைவீழ் அருவிக் கூந்தல் அவள்கூந்தல் இளப்ப மில்லை அவ்வழகுக் களஞ்சியத்தைக் கைஏந்தல்! துன்பஆடவர் இன்புறும் மாணிக்கச் சிரிப்பே அவள்சிரிப்புக் கன்னம் பளிங்கெனில் இயற்கை அன்னை கையிருப்பு! பொன்வெயிலும் வெண்ணிலவும் ஒளிவிடும் அணிகள் இவள்அணிகள் அன்பு செய்தால் எனைஅண்டுமா வையப் பிணிகள்? பண்டை மறக்குல மாண்பினுக் குரியாள் அவள்உரியாள் அண்டும் பகையை வெல்லும் மக்களைத் தருவாள்! மண்டுபுகழ்ப் பாரதி தமிழ்போன்ற சொல்லாள் இன்சொல்லாள் திண்டா டும்எனக் கின்ப வழிகாட்ட வல்லாள்! - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.70, 1977 187. அவனும் அவளும் அவள் : தின்பதற்குத் தேங்குழலே தென்றலுக்குப் பூங்குழலே அன்பு செய்ய வாய்த்திருக்கும் அத்தானே - என் ஆசையெல்லாம் உன்மேல் வைத்தேனே! அவன் : இன்பத்தின் இருப்பிடமே என்காதல் வார்ப்படமே முன்பிருந்து காத்திருக்கும் மாதுக்கு - நல் முத்துப் பிறக்காததும் ஏதுக்கு? அவள் : தங்கமலை வெள்ளிமலை சந்தத் தமிழ்ப் பொதிகைமலை குங்குமத்தில் உன்முகந்தான் தோயாதா - என் கொஞ்சுமொழி உன்காதில் தோயாதா? அவன் : சங்கத்து முத்தமிழே தாவியுண்ணும் புத்தமுதே மங்கைக்கும் செங்கைக்கும் தூரமா - உன் வாய்திறக்க இவ்வளவு நேரமா? - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.81, 1977 188. வண்டும் வேங்கையும் காதலன் : கோடைக்குக் குளிர் இருக்கும் கூந்தலுக்கு மலர் இருக்கும் ஓடைக்குப் பக்கம் ஒரு மேடையாம் - அந்த மேடை மேலே இரண்டு காடையாம். காதலி : கோடைக்குக் குளிர் இருக்கும் கூந்தலுக்கு மலரிருக்கும் ஓடையின் பக்கம் ஒரு மேடையா - அதில் கூடுகட்டும் சின்னஞ்சிறு காடையா? காதலன் : எருமை இறங்கக் கண்டால் தவளை தங்கிடுமா? இருவரும் அங்கே கூடி இருக்கலாம் - நாம் எந்நேரமும் கொஞ்சிப் பேசிச் சிரிக்கலாம். காதலி : தெரிந்தது பதைபதைப்பு புரிந்ததே உன்கொழுப்பு சிரிக்க சிரிக்கப் பேசுவது செல்லாது - உன் சில்லறைப் பேச்சுக்கள் என்னை வெல்லாது காதலன் : பேசாதா பச்சைக்கிளி சிரிக்காதா முல்லைக்கொடி பேசுவதும் சிரிப்பதுவும் நாளைக்கே - உதட்டில் பிச்சைபோடு மெத்த பசி வேளைக்கே! காதலி : ஆசைக்கு நான்ஆளல்ல ஆட இது நாளல்ல மூசு வண்டு வேங்கையிடம் ஓடுமா - ஒரு முல்லைக்கொடி வேம்படியை நாடுமா? - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.82, 1977 189. இன்பம், எங்கும் இன்பம் தலைவி: காற்றி லெலாம் இன்பம் அந்தக் கடல் முரசில் இன்பம் ஆற்று வெள்ளம் ஊற்றுப்புனல் அசைவி லெல்லாம் இன்பம் நாற்றிசையும் இன்பம் இதோ நல்ல நிலாத் தோட்டம் - அதில் மாற்றமிலா நம் காதல் வாழ்க்கை எலாம் இன்பம் இன்பம்! தலைவன்: சிரிப்பினிலே இன்பம் உன்றன் சேல்விழியில் இன்பம் நீ இருக்கும்போதும் நடக்கும் போதும் பேசும்போதும் இன்பம் உரித்துவைத்த பழமேஉன் உடுக்கை போன்ற இடுப்பை - நீ திருப்பும் போதும் நொடிக்கும் போதும் குலுக்கும் போதும் இன்பம் இன்பம்! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.84, 1977 190. தேனமுதே தேனமுதே பாலமுதே நானுனைப் பெற்றதால் போனதுண்டாம் என்னிளமை நானுனைப் பெற்றதால்! - தேனமுதே பாலமுதே மேலானஎன் கட்டுமார்பும் தோலாய் இளைத்ததாம் மின்னும் என்றன் உடம்பும் சலவை நூலாய் வெளுத்ததாம் ஆனநா ளெல்லாம் உனைநான் தாலாட்டும் பணியாம் அழகிய பஞ்சணை இல்லையாம் நானுனைப் பெற்றதால்! - தேனமுதே பாலமுதே உன்அப்பா என்அத்தான் உறவும் பொய்தானாம் உற்ற காதல் வற்றிப்போனதும் உண்மை தானாம் புன்சிரிப்பும் கொள்ளாராம் போனதுவாம் காதலின்பம் நானுனைப் பெற்றதால்! - தேனமுதே பாலமுதே பொன்னல்ல வெள்ளியல்ல பூவே உன்கன்னம்! புதுப்புது முத்தம் இந்தாஇந்தா வாங்கிக்கொள் இன்னம் இந்நிலத்தில் என்கண்ணே பிள்ளை அமுதே! எல்லாம் பெற்றேனடா நானுனைப் பெற்றதால்! - தேனமுதே பாலமுதே - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.85, 1977 191. மகிழ்ச்சி வேண்டுமா? வேண்டுமா? மகளே வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? இன்பம் வேண்டுமா? தூண்டா மணிவிளக்கே சொல்லுவேன் கேள் உனக்கே துணைவனோடு நீதான் இணை பிரியாதிருக்க - வேண்டுமா? கறிசமைத்துச் சோறாக்கியுன் கணவனுக்கிடும் முன்பு - நின் கருத்தினிலே மகிழ்ச்சி தோன்றும் அதுதாண்டி அன்பு! வெறுக்காமல் உன் அத்தான் உண்டு மகிழ்ந்தபின்பு மெல்லியே உன்வாழ்க்கை இனிக்கும் செங்கரும்பு - வேண்டுமா? கண்ணாளன் வெளியிற் சென்று திரும்புவதும் உண்டு - தன் காரியம் கை கூடாமையால் வருந்துவதும் உண்டு. பண்ணொன்று பாடடி இன்பக் கற்கண்டு பரிமாறு துயர்தீரும் அதுநல்ல தொண்டு - வேண்டுமா? - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.87, 1977 192. அயல்மனை விரும்பியவன் பட்டபாடு பதினான்கு சீர் விருத்தம் கண்ணான மனைவியிடம் திரைப்படம் பார்த்திடக் கருதினேன் என்று புளுகிக் கந்தனோ ஒருமங்கை வரச்சொன்ன நள்ளிருள் வரும்வரை அழகி யதிரு வண்ணா மலைதிருக் குளப்படி மலக்கழிவில் அமிழ்ந்தே பதுங்கி, நேரம் ஆனபின் விரைவினிற் போனதோர் போக்கிலே ஆலமர வேர்த டுக்கப் புண்ணான காலையும் எண்ணாமல் முள்ளொன்று பொத்ததும் வாங்கா மல்மேல் புளியங்கி ளையொன்று துளையிட்ட நெற்றியிற் போட்டகை போட்ட வண்ணம் வண்ணான் பெருங்கழுதை மேல்விழுந் துதையுண்டு தோட்ட வாயிற் சேர்ந்தனன்; வள்ளென்ற தொருநாய், தன் உள்ளங் கலங்கினன் வந்து வீழ்ந்தனன் வீட்டிலே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.96, 1977 193. இன்றைக்கு ஒத்திகை பஃறொடை வெண்பா மாணிக்கம் தன்வீட்டு மாடியின் மேற்குந்தி தோணிக்கா ரத்தெருவின் தோற்றத்தைப் பார்த்திருந்தான் பொன்னிதன் வீட்டுக் குறட்டினிற் பூத்தொடுப்பாள் தன்விழியைத் தற்செயலாய் மாடியின்மேல் எறிந்தாள்! பார்வை வலையில்ஒரு பச்சைமயில் பட்டதனால் யார்வைத்த பூங்கொடியோ என்றிருந்தான் மாணிக்கம். பூத்தொடுக்கும் கைகள், புதுமை பார்க்கும் கண்கள் நோக்குவதும் மீளுவதும் ஆக இருவரின் உள்ளம் இரண்டும் ஒட்டிக் கிடக்கும் அங்கே! தள்ளுவளா? ஒப்புவளா? தையல் எனும் ஐயத்தை மாணிக்கம் எண்ணி மணிக்கணக்காய்த் துன்புற்றான் ஆணிப்பொன் மேனியினாள் எண்ணமும் அப்படித்தான்! அன்னைதான் பொன்னியினை உள்ளிருந்தே உண்ணாமல் என்ன செய்கின்றாய் என்றேசினாள்; பொன்னி இதோவந்தேன் என்பாள் எழுந்திருக்க மாட்டாள் இதுவெல்லாம் காதினில் ஏறுமா? மாடியினைப் பார்ப்பாள்; சிரிப்பாள்! அதேநேரம் பச்சையப்பன் ஊர்ப்பேச்சுப் பேசுதற்கே உள்வந்து மாடியிலே மாணிக்கம் செய்திகண்டு மங்கையிடம் என்னகண்டாய்? காணிக்கை வைத்தாளா தன்நெஞ்சைக் காட்டென்றான்; பெய்வளைதான் தன்மீது பெய்துள்ள அன்பினிலே ஐயமில்லை என்றே அறிவிப்பான் மாணிக்கம் துத்திப்பூக் கொண்டையும் நானும்நலம் துய்க்கின்ற ஒத்திகை இன்றைக்கு; நாளைக்குக் கூத்து! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.101, 1977 194. காதல் வலியது போலும் அன்பே உடலுயிர் ஆக்கும் போலும்! அன்பே காதல் ஆகும் போலும்! கழறும்அக் காதல் வலியது போலும்! மதின்மேல் இருந்த வரிஅணிற் காதலி கிரீச்சென்று தன்னுளம் கிளத்திய அளவில் வான்கிளையி னின்று மண்ணில் வீழ்ந்த சிற்றணிற் காதலன் செத்தொழி யாமல் வில்லெறி அம்பென மரத்தில் ஏற இரண்டும் காதற் படகில் ஏறின இன்பக் கடலின் அக்கரை எய்தின அதோகா தலிகைக் குழந்தை மதியை வாஎன் றழைத்தது பாடியே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.118, 1977 195. குகையில் நடுங்கிய கோதை இருளடைந்த ஒருகுகையில் பட்டணத்துப் பெண்ணாள் இன்னமுதம் என்றொருத்தி அடைபட்டி ருந்தாள்! அருளுடையார் இவ்வுரலகில் ஒருவருமே இல்லை! அடிமைநிலை தீர்த்திடஓர் ஆளில்லை போலும்! திருடர்களால் இக்குகைக்குக் கொண்டுவரப் பட்டேன் திங்கள்ஒன்றும் ஆயிற்று விடுதலையே இல்லை! பொருளுண்டு நகையுண்டு உணவுவகை உண்டு பூச்சுண்டு பேச்சுக்குத் துணையாரு மில்லை காலையிலே இட்டலியும் சாம்பாரும் வடையும் கண்ணெதிரிற் காணுகின்றேன் ஆள்கண்ட தில்லை! மாலையிலே சுவைநீரும் வைத்துப்போ கின்றார் வைத்தவரைக் கண்ணெதிரில் காணவழி யில்லை ஏலுமட்டும் நடுப்பகலில் உணவுவைத்துப் போவார் எவர்? என்பேன், சுவர்மட்டும் யாருமில்லை என்னும் என்னஇது? யார்வேலை? காரணந்தான் என்ன? எனக்கூவி இன்னமுதம் நாள்கழித்தாள் ஒருநாள் பொன்னுடம்பை வெளிக்காட்டும் மென்பட்டுச் சட்டை போட்டிருந்த ஓர்இளைஞன் நீட்டாண்மை யோடு என்னஉனக் குக்குறைச்சல்? ஏன்வருத்தம்? என்றே எதிர்வந்தான்! இருவிழிகள் அதிர்ந்திட்ட மங்கை பின்னும்அவன் முகங்காண நிமிர்ந்திட்டாள் நாணம் பின்னிழுக்கத் தலைகுனிந்தாள் புன்னகையைச் சிந்தி என்னமோ பேசுதற்கு வாய்திறந்தாள் நாவும் எழவில்லை ஆழகிய தங்கப்பாவை ஆனாள்! விடுதலைதான் நன்றென்றாய் மேற்கொள்வாய் என்றான் விடுதலையும் கெடுதலையை விளைவிக்கு மென்றாள் மங்கை படுகுகையும் பூங்காவோ? மாளிகையோ? என்றான் பானையிலே பாலிருந்தால் ஊமில்லை என்றாள் அடைந்த நீ நடந்ததெல்லாம் அறிவாயோ? என்றான் அறிவுக்குத் திரைபோட்டாக் கதுதெரியும் என்றாள் உடமைக்குத் திருடவில்லை! cid!இன்ப வாழ்வின் ஒப்புக் கென்றான்; ஓடிக்கைப் புறத்திற் சாய்ந்தாள்! - பாரதிதாசன் கவிதைகள், காதல், பிப்ரவரி 1994 196. முத்தம் கேட்கும் மொய்குழல் பத்துத் திங்கள் கிடந்து சிப்பி உடல் உடைத்த முத்தே எனக்கொரு முத்தம் கொடு - பவழக் கொத்தே எனக்கொரு முத்தங்கொடு செத்துப்போ னேன் உனைப் பெற்றேன் பிழைத்தேன் என் சொத்தே எனக்கொரு முத்தம்கொடு - மனம் வைத்தே எனக்கொரு முத்தங்கொடு முற்றா இளம்பிறை நீ சிற்றானைக் கன்றானாய் சற்றே எனக்கொரு முத்தம் கொடு - பயற்று நெற்றே எனக்கொரு முத்தம்கொடு சுற்று மயிர்ச் சுருள் நெற்றி நிலாக் கதிர் பெற்றாய் எனக்கொரு முத்தம் கொடு - உன் நற்றாய் எனக்கொரு முத்தம் கொடு கொம்புத் தேன்சிரிப்பில் ததும்பத் தவழ்ந்தாய் நீ தம்பி எனக்கொரு முத்தம் கொடு - தங்கக் கம்பி எனக்கொரு முத்தம் கொடு தெம்பு தமிழ்க்கு வந்த வம்பை விளக்கும் கூர் அம்பே எனக்கொரு முத்தங்கொடு - வெற்றிக் கொம்பே எனக்கொரு முத்தங்கொடு. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.22, 1978 197. பிறக்க முடியாது பிறக்க முடியாதடி உனைப்போல் ஒருத்தி பெண்ணழகால் இந்த மண்ணரசாள இனிப் - பிறக்க மறக்கவும் முடியாது கண்ணேஉன் முகத்தையும் வாரி ஒளிவீசும் நகைமுத்துச் சரத்தையும்! இறக்கவும் முடியாதே உனைஇழந்தே னென்றே இருக்கவும் முடியாதே உனைப் பிரிந்தே னென்றே - பிறக்க பறக்கவும் முடியாது நீஎனை விட்டே; பச்சைமயி லேவாஎன் வாழ்வின்பொ ருட்டே திறக்கவேண்டும் உன்வாய் என்நலம் கோரி தென்னாடு பெற்றஎன் கிளிப்பேச்சுக் காரி. - பிறக்க - பாரதிதாசன் கவிதைகள், காதல், ப.106, 1994 198. இளமையின் விளக்கம் சாவெப் படிஇருக்கும் சாற்றென்றாள்! நாம்பிரிந்தால் நோவெப் படிஇருக்கும் நோக்கென்றான் - வேவுதமிழ் எவ்வா றினிக்கும்என்றாள். எட்டிஇழுத் தணைத்தே இவ்வா றினிக்குமென்றான் சேய். - பாரதிதாசன் கவிதைகள், காதல், ப.179, 1994 199. பெருகும் அன்பு வியாழன் வீணாய்ப் போன போதிலும் வெள்ளி மகிழ்ச்சியை விளைத்த போதிலும் சனியாய் நம்மை வியர்வையால் தாக்கிய ஞாயிறு தொலைந்ததே நல்ல வாய்ப்பாம் திங்கள் எழுந்தது திருவுள ஓப்பம் நின் செவ்வாய் மலரில் என் அன்புதன் பெய்வாய் மலர ஆறாய்ப் பெருகுமே! - பழம் புதுப் பாடல்கள், ப.281, 2005 200. அவள் முகம் மனைவிஎன் மடிமேல் இருந்தாள்! வானில் நெடுமுகில் வெள்ளம் நீந்தி வந்த கண்கவர் வெண்ணிலாப் பெண்ணைக் கண்டேன் இருகை நீட்டி ஏந்தினேன் ஏந்தி நிலவா என்றேன் முகம். ஆம் என்றது முகமா? என்றேன் நிலவு, நகைபுரிந் தாம் ஆம் என்று நவின்றதே! - பழம் புதுப் பாடல்கள், ப.282, 2005 201. நானே நீ! எனக்கு வந்த துனக்கு வந்ததே யான்வேறு நீவே றென்ப துண்டா? என்று பொன்னி எல்லிக்குக் கூறினாள் அடுத்தநாள் பொன்னிக் கைம்பது வெள்ளி பணவிடை வந்தது பணத்தை எண்ணி எல்லி பெற்றே பொன்னி என்றே கையெ ழுத்தும் கடிதில் இட்டாள். பொன்னிக்கு மின்விளக்குப் பொதுவரி கட்ட ஐம்பது வெள்ளி இல்லை ஆதலால் நடவ டிக்கை வருமென்று நடுங்கினாள் ஊர் நகைக்குமென் றுயிரை விட்டிடத் தாம்பொன்று கையில் தாங்கி நிற்கையில், உனக்கு வந்த பணவிடை எனக்கென்று நம்பி ஐம்பதை நான் பெற்றுக் கொண்டேன் என்றே சொல்லி நின்றாள் எல்லி! பொன்னி எல்லிக்குப் புகலு கின்றாள்; எனக்கு வந்த துனக்கு வந்ததே யான்வேறு நீவே றென்ப தில்லை தூய மின் விளக்குத் துறைத்த னத்தார் என்மேல் எடுக்கும் நடவ டிக்கையால் மானம் வண்டியில் ஏறு கின்றது தூக்கிட்டுக் கொள்ள தூக்கினேன் கயிற்றை எனக்கு வந்த துனக்கு வந்ததே யான்வேறு நீவே றென்ப துண்டா? இந்தா என்றாள் பொன்னி! இந்தா ஐம்பதும் என்றாள் எல்லியே! - பழம் புதுப் பாடல்கள், ப.310, 2005 குறிப்பு : பாடலின் இறுதியில் குறிப்பு எனும் தலைப்பில் கவிஞரே தந்துள்ள பொருட்குறிப்பு பின்வருவது: வெள்ளி - ரூபாய், பணவிடை - மணியார்டர், மின்விளக்கு - எலக்ட்ரிக் லைட், பொதுவரி - அரசினர் வரி, நடவடிக்கை - வழக்கு, தாம்பு - கயிறு, தூய் - தூய. 202. இலாவணிப் பாட்டு நீலமலர் தன்னையும் கோலக் கெண்டை மீனையும் நிகர்க்குதே இவள் நேத்ரம் என்ன காத்ரம்? நான்எம் மாத்ரம் - இந்த வாலைப் பெண்ணைப் புணர வேண்டுமே கொக்கோக சாத்ரம் ஏக காலத்திலிரு சூரியன் புறப்பட்டா எப்படித் தானிருக்கும் ஓது? அதுபோல் காதில் இருப்ப தேது? ஒப்பாலாயிரம் பெறும் கொப்பு முதல்நகைகள் இழையாலாயிரம் பெறும் தாவணி மற்றும் பூவணி - கனக சுப்பரத்னம் சொன்னான் அடியாலாயிரம் பெறும் லாவணி. - பாவேந்தர் நினைவுகள் (Kj‰gFâ); பக். 89 - 91; பழம் புதுப் பாடல்கள் ப. 32 -2005 குறிப்பு: ஒரு காதலன் காதலியின் உறுப்பழகை வருணித்துப் பாடுவது போலக் கனக சுப்புரத்தினம் தனது 16ஆம் அகவையில் எழுதிய ஓர் இலாவணிப் பாட்டிலிருந்து அவராலேயே நினைவுகூரப்பட்ட சில வரிகளே இவை. ஒருநாள் பாரதியாரின் வீட்டு மாடிமேல் இந்தப் பாடலை இசையோடு இளம் பருவ நண்பர்கள் சிலரிடம் பாடிக்காட்டிக் கொண்டிருந்தபோது அவர்களறியாமல் இப் பாடலைக் கேட்டுப் பாரதியார் சபாஷ் என்று கூறித் தன் முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டியதாகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். 203. ஆயிரம் பெறும் இலாவணி அள்ளி அமுத முண்ணும் ஆழக் கிணறு முண்டாம் அதுவே முத்திக்குப் போகும் மார்க்கம் கண்டால் வேர்க்கும்; காமனைத் தீர்க்கும் எங்கும் எள்ளது நிறைந்த தங்கத் தட்டெனவே இனிமை சேர்க்கும் ஆலிலையோ வயிறு மரவி னுடலோ கைகள் நூலிழையோ அந்த இடுப்பு; அண்டை மடிப்பு; சதங்கை முடிப்பு நிதம் காலில் விழுந்தாகிலும் பெறவேண்டுமே இவள் தொடுப்பு ஒப்பால் ஆயிரம் பெறும் கொப்பு நகைகளுடன் செப்பிலோர் கோடி பெறும் காதணி முகமல் தாவணி; கொண்டைப் பூவணி கனக சுப்புரத்தினம் சொன்ன அடிகள் ஆயிரம் பெறும் லாவணி! - பாவேந்தருடன் பயின்ற நாள்கள், ப. 131-133; பழம் புதுப் பாடல்கள், ப. 33-34, 2005 குறிப்பு: பாரதிதாசன் மாணவரும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரு மான பாவலர் மணி சித்தன் பாவேந்தருடன் பயின்ற நாள்கள் (1990) என்னும் தன் நூலில் முன், பின் குறிப்புகளோடு பதிவு செய்துள்ள முந்தைய பாடலில் இறுதி அடியோடு இப்பாடலின் இறுதி ஒத்திருந் தாலும் முன் பகுதிகள் வேறுபட்டுள்ளன. இந்த இலாவணிப் பாடல் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது பற்றிச் சித்தன் குறிப்பிடுவதாவது: மருத்துவர் சி.எம்.சாமி தனிமையாக இருந்த அந்த இல்லத்தில், அந்நாள் புதுவை அரசியலில் ஒரு பிரிவைச் சேர்ந்த சிலர் கூடுவர்... கவிஞரிடம் அவர்களுக்கெல்லாம் பெருமதிப்புண்டு. ஒருநாள் கவிஞர், சி.எம்.சாமி (kU¤Jt®) செய்து கொண் டிருப்பது என்ன இலேகியம் என்று வினவினார். மருத்துவர் சொன்னார் இது தம்பன இலேகியம் இதற்குப் பெயர் இந்திர புஷ்பாதி இலேகியம் என்பது என்று. அதை உண்பவர் யானை யின் வலிமையைப் பெறுவர் என்று தெருச்சுவரில் எழுதி வைத் திருந்தார். கவிஞர் கேட்டார்; ‘இது காம இச்சையைத் தூண்டுவதா? என்று. அதற்கு சி.எம்.சாமி உங்கள் பாட்டை விடவா? என்றார். அந்தப் பாட்டு, அந்த மருத்துவர் இல்லத்தில் இருந்த சில அன்பர்களின் தூண்டுதலினால் எழுதப் பெற்றதாம். இன்பச் சுவை மிக்க பாடல் அது; இலாவணியாக அமைந்தது அப்பாடல். இந்த முன்குறிப்போடு பாடலை வழங்கியுள்ள சித்தன் இறுதியில் இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு பாடல்களை அவர் சொன்னார். முதுமை, மறதி இவை காரணமாகச் சி.எம்.சாமியால் பாடல்களைப் பிழையின்றிச் சொல்ல இயலவில்லை. மேலே சொன்ன பாடல்களிலும் கூடப் பிழைகள் இருக்கலாம் என்றார் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. 204. இராமாயணக் கதை நிகழ்ச்சிப் பாடல் - 1 இந்திராதியர் கண்டு மகிழ்ந்திடும் மடந்தையர் பலர் நடந்தார்! இலையோ இடையென மயல்கொளவரும் இந்திராதியர்... கிஞ்சுக வாயிதழ் சந்திரிகை வீசிட பந்தமிலாமுனி தங்கும் வனத்திடை இந்திராதியர்... தம்பியிவ் வனம்பாராய்! கொம்பில் மாமலர்களெல்லாம் கொட்டும் தேனில்லாமல் கோங்கு படலம் யாவும் ஏங்கியிருப்பதென்ன தம்பியிவ்வனம்... - பாரதிதாசன் பார்வையில் பாரதி, கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல். ப.94; பழம்புதுப் பாடல்கள், ப. 36 - 37, 2005 குறிப்பு : ஒரு பாகவதர் இராமாயணத்தைக் கதாகாலட்சேபம் செய்வதற்கான இசைப்பாடல்கள் எழுதித் தருமாறு பாரதியிடம் கேட்க, பாரதியார் பாகவதரைக் கனக சுப்புரத்தினத்திடம் ஆற்றுப்படுத்த, அவர் எழுதிக் கொடுத்த பாடலின் சில வரிகள் இவை. பாகவதர் பெயர் பெலாப்புத்தூர் சீனிவாச பாகவதர் (f.F.g.94) என்று குறிக்கப்பட்டுள்ளது. கவிஞர் ஆலங்குப்பத்தில் ஆசிரியப் பணியாற்றிய காலத்தில் மேற்குறித்த நிகழ்ச்சி நடந்ததாக மன்னர் மன்னன் குறித் துள்ளார். (f.F.g 93 - 94). இதிலிருந்து அங்குப் பணியாற்றிய 7.7.1916 - 10.4.1917 ஆகிய காலக்கட்டத்தில் இப்பாடல் எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். பேரா. நா.இராமநாதன் தன் நினைவிலிருந்து கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இப்பாடல் (பா.பா.பா.), இராமாயணத்தில் கலைக் கோட்டு முனிவரை அழைத்துவர அனுப்பப்பட்ட பெண்கள் வனத்திடைச் செல்வதைப் பேசுகிறது. பாடலின் இறுதிப்பகுதி மடந்தையர் நடந்ததைச் சொல்லாமல் தம்பியை விளித்துப் பேசுவதாக வேறுபட்டு விட்டிசைக்கின்றது. வனத்தை வருணிக்கும் பிறிதொரு பாடலின் பகுதியாக இது அமையலாம். இப்பகுதியில் பரதன் தன் பாட்டன் கேகயனது மாளிகையி லிருந்து அயோத்திக்குப் புறப்பட்டு வரும்போது பின் நிகழப்போகும் நிகழ்ச்சியை முன்னறிவிக்கும் தீய நிமித்தமாக மலர்களின் வாட்டம் குறிக்கப்படுகிறது எனக் கருதலாம். (பாகவதரிடம் இந்திராதியர் தொழும் என்று தொடங்கும் பாடல் முதற் கொண்ட பல்வேறு பாடலை எழுதி அளித்தார் (f.F.g.94) எனும் குறிப்பு பாடலின் தொடக்கத்தைப் பிறழப் பதிவு செய்துள்ளது.) 205. இராமாயணக் கதை நிகழ்ச்சிப் பாடல் - 2 இந்த்ராதியர் கண்டு மகிழும் மடந்தை1 பலர் நடந்தார் இலையோ இடைஎன மயல்கொள வரும் - இந்த்ராதியர் சிந்துர வாயிதழ் சந்த்ரிகை வீசிடப் பந்த மிலாமுனி தங்கும் வனத்திடை - இந்த்ராதியர் செந்தேனில் இனிக்கும் பக்ஷணமும் சீதக்குல மலரும் சிதையா மதுரித மொழுகிட வரும் - செந்தேனில் சந்தன குங்குமச் சாந்து வகைகளும் மந்தமாருதம் வீசும் நந்தனமே என்று - இந்த்ராதியர் - பாட்டுப் பறவைகள், ப. 197 - 198 குறிப்பு: பாரதியாரின் வரலாற்றினைத் திரைப்படமாக எடுப்பதற்குப் பாரதிதாசன் எழுதிய மகாகவி பாரதியார் வரலாறு என்னும் எழுத் தோவியத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. இந்த்ராதியர் எனத் தொடங்கும் இப்பாடலும் கலைக்கோட்டு மகரிஷியை அழைத்து வரப் பெண்கள் செல்வதைச் சொல்கின்றது. நினைவிலிருந்து கூறப்பட்ட முந்தைய பாடலைவிட வடிவச் செம்மையுடைய தாகவும் வேறுபாடுகட்கு இடமில்லாததாகவும் இப்பாடல் அமைந்துள்ளது. பாடல்கேட்டு வந்த பாகவதரின் பெயர் பலாப்புத்தூர் ஸ்ரீநிவாச ஐயங்கார் (gh.g.g.195) என்று எழுத்தோவியத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. 1. மடந்தையர் என இருப்பின் நன்று 206. பூங்காவனம் மாதவனே என்ற இந்துதான் மெட்டு (jiyÉí« nroaU«) மாதர்களே எழில் மாதர்களே! சீதளச் செந்தாமரைச் சங்கீத வண்டினம் - இங்குக் காதினிக்கவே கவிதை பாடும் இத்தினம் மாதர்களே எழில் மாதர்களே! வாசம் நன்கு வீசும் முல்லை பூத்திருக்குதே - இங்கு மூசுவ ண்டு தேனருந்தக் காத்திருக்குதே! - மாதர்களே மாமரத்திலே குயில்கள் கூவுதல் கண்டீர் - அங்குத் தாமருந்தவே தளிரைத் தாவுதல் கண்டீர் - மாதர்களே சோலை தன்னிற் பூ உதிர்ந்த மாமகரந்தம் - அங்குக் கோலநற் பொன்போல எந்தப் பாகமும் சிந்தும் - மாதர்களே ஈரமந்த மாருதம் சஞ்சாரம் கொள்ளுதே - அங்கு நேரில் இன்ப ஓரைதன்னில் என்னைத்தள்ளுதே - மாதர்களே - பழம் புதுப் பாடல்கள், ப.160, 2005; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்; யுவ - ஆவணி (1935) வெளியீடு 6.ப.30; 207. ஏன் சிரித்தாள்? கோதையவள் என்தொடர்பைக் கோரவில்லை என்றுரைத்தால் வீதியில்ஏன் என்னைக்கண்டு சிரித்தாள்? காதலில்லை என்றனின்மேல் கட்டழகிக் கென்றுரைத்தால் ஏதுக்கெனை இடித்துக்கொண்டு போனாள்? பாகுமொழி யாள்உளம்என் பங்கில்இல்லை என்றுரைத்தால் போகையிலே ஏன்திரும்பிப் பார்த்தாள்? நீகிடப்பாய் என்றனையே நீக்கிவிட்டாள் என்றுரைத்தால் தோகைஎன்றன் காகிதம்ஏன் தொட்டாள்? மின்னுதலாள் நெஞ்சம்என்றன் மீதில்இல்லை என்றுரைத்தால் என்உறவோர்க் கேன்புரிந்தாள் நன்மை? கன்னல்மொழி யாளுக்கென்மேல் காதலில்லை என்றுரைத்தால் என்கிளியே ஏன்அவளழைத்தாள்? - பழம் புதுப் பாடல்கள், ப. 228, 2005 208. கோழிகள் ஒழிக சட்டமன்றம் கோழி வளர்ப்பதைத்1 தடைசெய்யுமா2 தொட்டார்கை தொட்டுச் சுவைக்குமுன் - பட்டப் பகலாயிற் றென்று பறையடிக்கும் சற்றும் அகலார் அகலும் படிக்கு. என் காதலர்பால் நுகரும் இன்ப விளையாட்டு முடியுமுன் அந்தக் கோழி பகல் ஆய்விட்டது என்று கூவுகின்றது. அதனால் என்னைவிட்டு அகலாதவரும் அகன்று விடு கின்றனர். சென்னை சட்டமன்று கோழி வளர்ப்பதையே தடைசெய்து விட்டால் நல்லதாகும் என்பது இப்பாட்டின் கருத்து. - பழம் புதுப் பாடல்கள், ப.380, 2005 1, 2, தளை தட்டுமிடங்கள் 209. தலைவன் தளர்ச்சி குயில்கூ வியது கடகட வென்றே தலைவன் கேட்டான் தளர்ந்தான் தலைவி தன்னிடம் கொஞ்சுதல் நினைத்தே. - பழம் புதுப் பாடல்கள், ப.404, 2005 குறிப்பு : மூன்று வரியுள்ள அகவற்பாட்டுக்கு எடுத்துக்காட்டு என்னும் குறிப்புடன் இதழில் இடம்பெற்ற பாடல். 210. தொல்லைசெய் நிலவே ஒளியோடு குளிரோடு புறப்பட்ட நிலவே - என் உணர்வோடு காதலைச் சேர்த்தாய், நல் - ஒளி களியோடு நின்மேனி தழுவிற்று வானம் காதல் நெருப்பைத் தழுவினேன் நானும் - ஒளி உளத்தை நீபடுத்தும் பாடு - நான் உலகையே மறப்பேன் இன்றோடு துளிபோதும் நான்விரும்பும் அவளிடம் ஓடு தொல்லைசெய் என்துணை நாடுவாள் பிற்பாடு - ஒளி குறிப்பு : குயில் மாத வெளியீட்டில் 4 இதழ்களில் (15.6.48, 15.7.48, 15.8.48, 1.10.48) பாரதிதாசன் எழுதிய அனைவரும் உறவினர் என்னும் முற்றுப் பெறாத தொடர்கதையில் அஞ்சி என்பான் பாடுவதாக இடம்பெறும் பாடல் இது. - பழம் புதுப் பாடல்கள், ப.235, 2005 211. முகமலரில் குழல் ப்ரோவ பாராமா மெட்டு பல்லவி தென்றல் வீசுதே இனிதான - சிறிய சன்னலுக்குள் பொன்னிமங்கை மேல் அநுபல்லவி சென்ற செம்மல் மார்பில் பூசும் மணம் தேக்கி, நின்துணைவன் வந்தா னென்று சரணம் நிலவை முகில் தாவுதல் போல் முக மலரில் குழல் தாவி அலைதல் கண்டே;ன அங்கை கொண்டு கோதி அன்பன் வந்திட்ட சேதி கூறியே! - 1943 குறிப்பு : இப் பாடல் இதுவரை அச்சில் வெளிவரவில்லை. 212. தலைவி கூற்று (jiytid நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி T¿aJ.) ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக் கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின் சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை எண்ணித் துயில்நீங் கியஎன் கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே! - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.50, 1949 குறுந்தொகை 186 - ஆம் முல்லைத்திணை பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது. 213. தலைவன் கூற்று (வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலைவன், தன் தேர்ப்பாகனை நோக்கி, இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து, நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து என்று கூறுவது.) நாமின்று சென்று நாளையே வருவோம்; வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்; இளம்பிறை போல்அதன் விளங்கொளி உருளை விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக் காற்றைப் போலக் கடிது மீள்வோம்; வளையல் நிறைந்த கையுடை இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே. - இசையமுது இரண்டாம் பகுதி, ப.49, 1949 குறுந்தொகை 189-ஆம் பாடல்; மதுரை ஈழத்துப் பூதன் தேவன் அருளியது. 214. தோழி கூற்று (தலைவன் தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கின்றான். அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி: தலைவன் நட்பினால் உன் தோள் வாடினாலும் என் அன்பை அது குறைத்துவிடவில்லை என்று.) மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில் இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய, ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம் அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற - நாடனது நட்புநின் தோளை வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே! - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.51, 1949 குறுந்தொகை - 90ஆம் பாடல்; குறிஞ்சித்திணை; மதுரை எழுத்தாளன், சேந்தன் பூதன் பாடியது 215. தலைவி கூற்று (பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது) செல்லார் என்றுநான் நினைத்திருந்தேன் - செல்லென்று சொல்லாள் என்றுதாம் நினைந் தகன்றார். - செல் அல்லல் உடையதென் உள்ளம் அதுவன்றி மயக்கமும் கொள்ளும் பொல்லாத எங்கள் ஊக்கம் விளைத்தபோர் நல்ல பாம்பு கௌவியதாயிற்றே. - செல் - இசையமுது இரண்டாம் பகுதி, ப.17, 1952 குறுந்தொகை 43. ஔவையார் பாடிய பாலைத்திணைப் பாட்டின் கருத்து 216. தோழி கூற்று (கடிது வருவார் என்று ஆற்றுவித்தது) அம்மா உன்மேல் - அவர் அதி விருப்பம் உடையவர். - அம்மா செம்மையாய் விரைவில் திரும்பினும் திரும்புவார் திரும்பி வந்தின்பம் நல்கினும் நல்குவார். - அம்மா அன்றவர் சென்ற வழியில் ஆண்யானை பெண்யானையின் பசியை நின்ற யா மரம் உரித்தூட்டல் காண்பார் நின்நிலை எண்ணி இன்றே திரும்புவார். - அம்மா - இசையமுது இரண்டாம் பகுதி, ப.18, 1952 குறுந் - 37 பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடற்கருத்து பாலைத்திணை 217. தலைவி கூற்று (பொருள்வயின் பிரிந்த இடத்துத் தலைவி ஆற்றாமை கண்டு தோழி சொன்னது) நினையாரோ தோழி? தினையேனும் - எனை நினையாரோ தோழி? நினைவா ராயின் எனையாள வருவார்! நினைக்கிலார்! இனியேனும்என் நெஞ்சம் களிக்க - நினை தீவேடன் அன்பின் இரும்புமுனை தீட்டும் ஒலிபோல் செங்காற் பல்லி துணையினை அழைப்பது கேட்டும் ஆய அக் கள்ளிக்காட்டு வழிச்செல்பவர் மீட்டும் அணுகாரோ அணுகாவிடில் அதுவென் நெஞ்சை வாட்டும். - நினை - இசையமுது இரண்டாம் பகுதி, ப.19, 1952 குறுந்தொகை 16, பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடற் கருத்து 218. தலைவன் கூற்று (இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் பிரிவர் என்று கருதி அஞ்சிய தலைமகட்குத் தலைவன் கூறியது) என்தாய் யாரோ! உன்தாய் யாரோ! - பெண்ணே என்தந்தை உன்தந்தை உறவினர் அல்லரே! இன்றிங் கேஉனை எவ்வா றடைந்தேன்? நீஎன்னை எவ்வா றறிந்தாய்? - நாம் செம்மண் நிலமும் பெய்த மழையும்போல் சேர்ந்தோம் அடடா இன்பம் ஆர்ந்தோம். - என் இரண்டு நெஞ்சில் வீறிட்ட காதலே இருவரையும் சேர்த்த திவ்வையமீதே மருண்ட மக்கள் மாப்பிள்ளை பெண்களை மணத்தில் கூட்டுவ தாக எண்ணுவார். - என் - இசையமுது இரண்டாம் பகுதி, ப.20, 1952 குறுந்தொகை 40. செம்புலப்பெயனீரார் பாடற் கருத்து 219. வருத்தம் தொலையும் அன்றோ குறிஞ்சித் திணை - 1 (தலைவி, தலைவனுக்கு உரைத்தது) வருத்தம் தொலையும் அன்றோ? என்னை மணந்து கொண்டால் இந்த வருத்தம் தொலையு மன்றோ? பரந்து பொன்போல் வேங்கைப் பூக்கள் பாறைமேற் பொலியும் பன்மலை நாடனே, - வருத்தம் தொலையும் அன்றோ கொள்ளைக் கருமுகில் அஞ்ச இடித்து - மின்னிக் கொட்டு மழைதான் மலையைப் பொடித்து வெள்ள அருவியைத் துணையாய்ப் பிடித்து - வாழும் விலங்கு பறவை அனைத்தையும் மடித்துத் துள்ளுகின்றநீர் அனைத்தையும் அடித்து நள்ளிருள்தனில் வந்தனையே இந்த - வருத்தம் தொலையும் அன்றோ உளவுக் காரர்கள் காணவும் கூடும் - இவ் வூரில் நாய்களும் பலநட மாடும் கிளைஞர் கண்டால் அவர்நெஞ்சம் வாடும் கிட்டும் அயலவர் வாய்வசை பாடும் களவுப் புணர்ச்சியால் பற்பல கேடும் கண்டும் இவ்விருளில் வந்தனை, இந்த - வருத்தம் தொலையும் அன்றோ - தேனருவி, ப.57, 1956 220. முருகனால் வந்த நோயாம் குறிஞ்சித் திணை - 2 (தோழி தலைவனுக்குச் சொல்லியது) முருகனால் வந்த நோயாம்! உனக்கிது முருகனால் வந்த நோயாம்! கருதிக் கருதிக் கண்ணான வெற்பனை உருகும் உன்உடம்பில் வந்த இந்நோய் - முருகனால் ஏதுங்கெட்ட பூசாரி தன்னை, இட்டு வந்தாள் நமைஈன்ற அன்னை, ஓர்தட்டு நிறையக் கொட்டினாள் பொன்னை உளறினான் அதைவாங்கிய பின்னை. - முருகனால் கழற்சிக் காய்களாற் கணக்கொன்று போட்டான், காரணங்கள் சொல்லவும் மாட்டான், கொழுத்த ஆட்டை அறுத்துப் படைத்தால் கொடுமை தீருமென்றான் அந்தக் கோட்டான். - முருகனால் - தேனருவி, ப.59, 1956 221. இசையாயோ தோழி குறிஞ்சித் திணை - 3 (தலைவி, தோழிக்குச் சொல்லியது) இசையாயோ தோழி? - கொடும் பசலை படர்ந்த என்முகம்தனைப் பார்த்திருந்தும் அவனிடம் சொல்ல - இசையாயோ தோழி? கள்ளத்தால் வருவோன் - இன்ப வெள்ளத்தேன் சொரிவான் - எனை எள்ளித்தான் திரிவான் - போய் இன்றேநீ காண - இசையாயோ தோழி? இன்னொன்றும் செய்வாய் - தோழி என்தாயிடம் போய் - அவனை மன்றல் முடிப்பாய்என் மனநோய் தணிப்பாய்நீ - இசையாயோ தோழி? தண்ணார்ந்த குன்றில்செந் தமிழ்பாடும் அருவி - எழில் பண்ணார்ந்த நாடன்தரும் பயன்கொள் வதற்கேநீ! - இசையாயோ தோழி? - தேனருவி, ப.60, 1956 222. வருவது நலமா? பாலைத்திணை - 1 (தலைவன், தலைவிக்குச் சொல்லியது) வருவது நலமா? என்னுடன் நீ வருவது நலமா? மரமெலாம் தீப்பற்றி எரியும் கானலில் நீ - வருவது நலமா? கருதும் கருத்தும் நடுங்கும் - கானல் காணும் கண்ணும் நடுங்கும் பருக்கைக் கல்லிலும் முள்ளிலும் - உன் பஞ்சான மெல்லடி எப்படி இயங்கும்? - வருவது நலமா? வேர்வீழ்ந் துயர்ந்த வேலின் கீழும் - மிக மிஞ்சு குளிரொடு மான் கூடி வாழும் கார்காலத்திலா உன்னை மறப்பேன்? கட்டாயம் வருவேன் வராவிடில் இறப்பேன். - வருவது நலமா? - தேனருவி, ப.61, 1956 223. தேய்ந்த புரிக்கயிறு பாலைத் திணை - 2 (இடைச் சுரத்துத் தலைவன் இயம்பியது) தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்! ஏய்ந்த யானை இப்புறம் ஒருமுனை இழுக்க, இன்னும் ஒன்று மறுமுனை இழுக்கத் தறியில் - தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்! சேயிழை வருந்துவாள் போபோ - பொருள் தேடவந் தாய்நீ இவ்வழி வாவா - ஆயஇரு கொள்கை இருபுறம் இழுக்க அடையா இன்னல் அடைவத னாலே - தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்! வஞ்சிக்கொடி நான்வரும் வழிபார்த்து வாயிலில் வருவாள் போவாள் உளம்வேர்த்து நெஞ்சம் களிக்க அவளிடம் செல்வதா? நெடும்பொருள் தேட இவ்வழிச் செல்வதா? - தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்! தந்தை தேட்டத்தை உண்டுயிர் வாழ்பவன் சாகுமட்டும் பிறர்காலில் வீழ்பவன்! இந்தவா றெண்ணி இப்பாங்கு செல்வதா? ஏந்திழை வருந்தும் இல்லமே மீள்வதா? - தேய்ந்த புரிக்கயி றாயிற்றென் உள்ளம்! - தேனருவி, ப.62, 1956 224. கூவின இன்பக் குயில்கள் பாலைத் திணை - 3 (தலைவி சாற்றியது) கூவின இன்பக் குயில்கள்! கூடினோர் பிரிதல் வேண்டாமென்று - கூவின இன்பக் குயில்கள்! தாவிய நல்லுயிர் தளிர்க்கத் தளிர்க்கத் தணியாக் காதல் இனிக்க இனிக்கக் - கூவின இன்பக் குயில்கள்! இன்றிருந்து நாளைபோம் பொருள்தேடி இன்பம் வெறுப்பவன் ஓர் இலம்பாடி அன்றன்று புதிதாகும் சுவையை நன்றே அடுப்பீர் என்றேஇடித் துரைப்பது போல் - கூவின இன்பக் குயில்கள்! பொருள்தேடச் செல்வேன் செல்வேன் என்று புகலுவார் துணைவியார் அன்பினைக் கொன்று! வருவது மில்லை குறித்தநாள் வாய்ப்பில் வாய்மையா இது? என்றுமாந் தோப்பில். - கூவின இன்பக் குயில்கள்! - தேனருவி, ப.64, 1956 225. தமிழிசை போன்ற இனிய சொல்லாள் பாலைத் திணை - 4 (தலைவன். தேர்வலவனுக் குரைத்த) தமிழிசை போன்ற இனிய சொல்லாளை அணுகிட வேண்டும்! விடு தேரை! இமை மூடாமல் வரும் வழி மீதே விழிவைத் திருப்பாள்! இப்போதே. - தமிழிசை போன்ற... என்றன் பிரிவால் உயிர்துடி துடிப்பாள் எந்த நேரமும் கண்ணீர் வடிப்பாள் முன்கண்ட இன்ப இலக்கியம் படிப்பாள் - என் முகம் பார்த்தால்தான் மனக்குறை முடிப்பாள். - தமிழிசை போன்ற... *ïil¢ செட்டுக் காரன் இட்ட பாதைபோல் இவ்வழி மேடுபள்ளம் ஆதலால் தடையின்றித் தேரின் குதிரை பறந்தால் தமிழ்ச்செல்வி துயர்தீர்க்க முடியும் என்னால் - தமிழிசை போன்ற... - தேனருவி, ப.65, 1956 * இடைச் செட்டுக்காரன் இட்ட பாதை என்றது கண்ட்ராக்டர் போட்ட சாலை. 226. கடிய ஓட்டடா தேரை முல்லைத்திணை (தலைவன். தேர்ப்பாகனுக்குரைத்தது) கடிய ஓட்டடா தேரைப் - பாகனே கடிய ஓட்டடா! கொடியெலாம் முல்லை அரும்பின! பொன்போல் கொன்றை மலர்ந்தன மென்மேல்! கடகட வென்றே இடித்து மின்னி எழுமோர் கார்காலம் தொடங்கியது பார்பார்! - கடிய ஓட்டடா கால்விரைந்து குட்டியொடு பெண்மான் களர்நிலத்தில் சென்றதை ஆண்மான் ஏல்வதாஎன அன்பினால் மீட்க ஏகும் அதுபோலென் துணைவியைக் காக்கக் - கடிய ஓட்டடா எப்போது வருவான், எப்போது வருவான் என்றிராப் பகல்எதிர் பார்க்கும் இன்பத்தேன்! கைப்புறத்தை இறுகத் தழுவத்தான் கண்ணிலும் மனத்திலும் ஆவலை வைத்தேன். - கடிய ஓட்டடா - தேனருவி, ப.66, 1956 227. ஏனத்தான் இந்தப் பொய் மருதத் திணை (தலைவி. தலைவனுக்குரைத்தது) ஏனத்தான் இந்தப்பொய்? - அந்தப் பரத்தை இல்லம் புகுந்தது மெய், உனக் கேனத்தான் இந்தப்பொய்? பானைச் சோற்றுக்குப் பதம்ஒரு சோறு அதோஉன் மார்பிற் கலவைச் சேறு! நானுண்ட எச்சிலேதான் அவனென்று மாதும் நவின்றதைக் கேட்டேன், புளித்தது காதும் - ஏனத்தான் களையெடுப்பவர் பற்றிய வயல்மீன் கழுவி ஆய்ந்து குழம்பிட்டு வைத்துநான் உளமகிழ்ந் துன்றன் வரவு பார்த்திருக்கையில் உண்மை கேட்டு மிகவும் வருந்தினேன். - ஏனத்தான் கூடி ஆடினை அவளின்பம் கருதி, உன் கூடைச் சதையிலுண்டா குன்றிமணிக் குருதி? வாடினும் தன்னிலை மன்னுதல் மானம் மானமிலாய் இங்கு வந்ததே ஊனம். - ஏனத்தான் கண்டதே இல்லை அவளை என்கின்றாய் கடலைமே லாடையால் மறைக்கின்றாய் பண்டுநாம் நுகர்ந்த எலாமறக் கின்றாய் பல்காட்டிப் பஞ்சணை அச்சாரம் தந்தாய். - ஏனத்தான் - தேனருவி, ப.67, 1956 228. அதோ வந்தாண்டி நெய்தற்றிணை (தோழி. தலைவனுக்குச் சொல்லியது) அதோ வந்தாண்டி - நல்ல அழகு மாப்பிள்ளை நம்மை வேண்டி - அதோ வந்தாண்டி ... இதுவரையிலும் பிரிந்திருந்தவன் நிதி திரட்டிட ஊர்திரிந்தவன் - அதோ வந்தாண்டி ... புன்னை மலர்கள் அரும்பி மலர்ந்து பொன்னைப் போலப் பொடியைச் சொரிந்து முன்னே தாழம் புதரை விரைந்து மூடும் கடல் கொண்டாடும் துறைவன். - அதோ வந்தாண்டி ... மறைந்து மறைந்து வந்து புணர்வான் மணந்து செல்ல இன்று நினைந்தான் திறந்த வானம் சிரிக்கும் பகலில் தெருவில் யாரும் காணும் வண்ணம் - அதோ வந்தாண்டி ... கடலில் எறிந்த அரும்பொருள்தான் காணப் பெற்றே மனமகிழ்ந்தேன் உடல்மெலிந்தேன், உளம்அயர்ந்தேன் ஒழிந்தது துயர்! உயிர் மருந்தாய். - அதோ வந்தாண்டி ... - தேனருவி, ப.69, 1956 229. பூவால் அணி செய்த இல்லம் நெய்தற்றிணை (தோழியும். செவிலியும் சொல்லியது) பூவால் அணிசெய்த இல்லம் - எம்மொரு நாவால் நவிலல் அருமை அன்றோ? பாவலர் போலச் சங்கு வளையல்கள் பாடும் நுளைச்சியர் கண்நிகர் கருநெய்தற் - பூவால் அணிசெய்த இல்லம் ... காவல் பார்த்துக் களவில் வந்தும் - எம் கண்ணொப் பாளின் கண்ணீரில் நனைந்தும் ஆவற் கனியை இன்று மணந்தநீ அன்று மணவாத் துறைவனே எம்நெய்தற் - பூவால் அணிசெய்த இல்லம் ... நோக்குவள் உன்வரவு வந்தால் வாழ்வாள் நொடி தொறும் அன்னவள் இறப்பாள் பிறப்பாள் ஆக்கத் துறைவனே இன்று மணந்தாய் அன்று மணந்திலை எங்கரு நெய்தற் - பூவால் அணிசெய்த இல்லம் ... - தேனருவி, ப.70, 1956 230. மாறாத தலைவர் குறிஞ்சித் திணை (தலைவி தோழிக்குக் கூறியது) சொன்னசொல் மாறாத தலைவர் - அவர் தொலையாத நிலையன்புக் கினியர்! தோழீ தோளினைப் பிரியாத துணைவர்! - அவர் தூய்மையும் வாய்மையும் வாய்ந்தநல் கணவர். - சொன்ன இன்சுவைத் தாமரைத் தேனுண்ட தேனீ இனம்கூடிச் சந்தன மரத்தின் வானீள் நன்கிளை தாங்கிய தேனடைத் தேன்போல் நல்லவர் நட்பென்றும் ஊன்றிடும் ஆல்போல். - சொன்ன உலகிற்கு நீர்முதல் ஆவது போலே உறவுக்கு அவரின்றி அமையாது வாழ்வே விலகவே பொறாதவர் பிரிவதும் ஏது? வீணையை விரல்பிரிந்தால் இசைபிறக்காது! - சொன்ன என்நெற்றிப் பசலைக்கு என்றுமே அஞ்சுவார் இன்னல்தரார் எனையே இன்பத்தில் கொஞ்சுவார் அன்பன்றி வேறொன்றும் உண்மையில் அறியார் அவர்பிரிந்தார் என்றால் வேறெவர் மிஞ்சுவார்? - சொன்ன - தேனருவி, ப.53, 1978 231. அன்பினை நடப் பார் குறிஞ்சித் திணை (தோழி. தலைவிக்குக் கூறியது) அன்பை அறிந்தேன் உண்மை உணர்ந்தேன் ஆகையி னால்தான் என்வாய் திறந்தேன். ஒன்றுகேள் நன்றுகேள் அம்மலை நாடன் ஒப்பிலா விருப்பினால் வருந்திய ஆளன் என்வாய்ச் சொல்லினை நம்பினால் நம்பு நம்பாவிட்டால் எனக்கேன் இந்த வம்பு? நீயே எண்ணிப்பார் புரிந்திடும் உண்மை ஆயரோ டாய்ந்துபார் தெரிந்திடும் நன்மை. அறிவால் ஆராய்ந்து அறிந்த பிறகே அளாவுதல் வேண்டும் அன்புதான் உறவே. பெரியோர் நட்பினை ஆய்ந்து கொள்வார்கள், நட்பு கொண்டபின் பின்ஆய மாட்டார்கள்! அன்புடை யார்க்கவர் அன்பராய் நடப்பார் ஆதலால் தலைவீ, அன்பினை *el¥ பார்! - தேனருவி, ப.54, 1978 * நடப் பார் - நடுவதற்குப் பார் 232. நாகரிகம் குறிஞ்சித் திணை (தோழி மொழி நண்பர்தரும் நஞ்சினையும் நல்லமுதாய் வேட்டுண்பர் நாகரிகம் மிக்குடையார் உலகில் - அந்த நாகரிகம் நீயுடையாய் தலைவா! பெண்கனியாள் என்றன் தோழி பின்னிப்பிணைந் துனக்கின்பம் பேருளத்துப் பசிதீர்க்க வில்லை - அதைப் பெரும்பிழை எனஎண்ணில் தொல்லை. பண்பாட்டெல்லை மீறலாமா? பழகிவிட்டு மாறலாமா? கண்ணோட்டம் கொண்டவளை மணப்பாய் - அவள் கண்ணும் உயிரும் நீயல்லவோ அணைப்பாய்! - தேனருவி, ப.55, 1978 233. கூந்தல் மணம் குறிஞ்சித் திணை (துறை - நலம் பாராட்டல்) மலர்தொறும் மதுஉண்ணும் மணிஒளித் தேன்வண்டே நலந்தரு மொழிஒன்று செப்பிட வேண்டும் - நீ நடுநிலை தவறாமல் ஒப்பிட வேண்டும்! பயில்தொறும் பயில்தொறும் காதன்மை பாங்குயர்ந்த மயிலியல் சாயலினாள் முல்லை நகையாள் - முத்தை மாணிக்கத்தில் வைத்துயிரைக் கொல்லும் நகையாள்! அலையலையாய் நெளிந்து கார்முகிலை அடிமைகொண்டு மலைப்பூட்டும் மயக்கூட்டும் கூந்தல் மணம்போல் - வேறு மலர்களில் கண்டதுண்டோ? கூந்தல் மணமே? தேனூற்று மலர்களில் திகட்டாமல் உண்டிடும்நீ வானூற்றாய் மணக்கின்ற கூந்தல் துறப்பாய் - அட வற்றாதெனக் கின்பம்தரும் கூந்தல் மறப்பாய்! - தேனருவி, ப.56, 1978 234. பாலாடைப் படுக்கை மருதத் திணை (தோழி கூற்று) ஊடலைத் தீர்த்திட வேண்டி - வந்த ஒண்டமிழ் வாணனே, கேட்டிடுவாய்! ஆடவர்க் கேற்ற அறிவுடனே - என் அருமைத் தலைவியின் தோள்மணந்தோன். ஏடவிழ் வெண்ணிறத் தாமரைபோல் - நிலா எட்டிமுகம் பார்க்கும் மாலையிலே, கூடத்திலே தூய மலர்ப்படுக்கை - கொண்ட குள்ள வடிவுடைக் கட்டிலிலே ஏறிப் படுத்தனன், யானையைப்போல் இட்ட பெருமூச்சு விட்டபடி, மீறிய அன்புடன் பிள்ளையினைத் - தன் மேனிதழுவிப் படுத்திருந்தான். ஏறினள் பிள்ளையின் தாயவளும் - தன் இச்சைக் குகந்த தலைவனையே ஆறிய பாலினில் ஆடையைப்போல் - அவன் அன்பு முதுகினைத் தழுவிக் கொண்டாள். - தேனருவி, ப.59, 1956 235. என்றும் கைவிடாதே பாலைத் திணை (உடன் போக்கில் தோழி தலைவற்கு) பெற்றோர் அறிந்திலர் உற்றார் தெரிந்திலர் கற்றவனே இவளைக் கொண்டாய் கங்குலில் வரச்சொல்லி விண்டாய்! குற்றம் ஈதானாலும் நற்றவக் காதற்கு நான்தடை ஆவதும் உண்டா? நாளைநீர் வாழ்பவர் அன்றோ? இன்றுபோல் என்றும்நீர் அன்பினில் தென்பினில் நன்று குறள்போல வாழ்க! நற்றிணைப் பாடல்போல் வாழ்க! ஓங்கிய மார்பெழில் ஒளியுமிழ் திருமேனி பாங்கு தளரினும் கைவிடாய் பசையற்றுப் போகுமோ மெய்விடாய்? கூந்தல் நரைத்தாலும் கொண்டநின் காதற்சொல் ஏந்திய பெண்ணினைத் தள்வையோ? இன்றுபோல் என்றும்நீ கொள்வையே! - தேனருவி, ப.65, 1956 236. தாயுள்ளம் பாலைத்திணை (செவிலித்தாய் மெழி) காதலனோடு சென்றாள் விரும்பி - அவள் களவு மணத்திருந்தாள் அரும்பி கணவனோடு வருவாள் திரும்பி! - காதலனோடு சென்றாள் மோதும் உழவர்கொட்டும் பறையொலி முழக்கத்திற்கு ஆடிடும் பச்சைமயில்! வாழும் உயர்மலை ஓங்கும் முகில் வழியெல்லாம் பெய்யட்டும் குளிர்ந்த மழை! - காதலனோடு சென்றாள் அறநெறி இதுவென அவனுடன் சென்றாள் அன்பினை அன்பு மனத்தினால் வென்றாள்! பிறைநுதல் சிறுமி சென்ற பாலைவனம் பேரின்பம் ஆக்கட்டும் மழையின் வளம்! - காதலனோடு சென்றாள் - தேனருவி, ப.66, 1956 237. என்னைப்போல் அவளும் அழட்டும் பாலைத் திணை ((மகளைப் பிரிந்த தாயின் மொழி) மகளைப் பிரிந்தஎன் கண்ணீர்போல் மகனைப் பிரிந்தாளும் சிந்துக கண்ணீர்! - மகளைப் பிரிந்தஎன்... புலியிடம் தப்பிய பெண்மான் - ஆண் மான்குரல் புகலிடம் சேரும். நலிசெயும் வெப்பக் காடு - மகள் நம்பிப்பின் சென்றாள் அன்போடு! - மகளைப் பிரிந்தஎன்... புதுவலி பொருந்திய வில்லைப் பொருந்திய தோள்தழுவும் கொடிமுல்லை! பெதும்பையைப் பிரிந்தஎன் தொல்லை - அவன் பொற்றோளும் எய்துக எல்லை! - மகளைப் பிரிந்தஎன்... - தேனருவி, ப.67, 1956 238. அன்றில் நினைவு பாலைத் திணை (தலைவன் நினைவு மொழி)) பிரிந்த போது தெரிந்தது தொலைவு திரும்பும் போது தெரிந்திலேன் தொலைவு! பிரிந்த காதல் வழியினைப் பெருக்கும் பின்உனை நினைத்தால், வழியது சுருங்கும். - பிரிந்த போது ... சிறந்த பொருளைத் தேடிட எண்ணி சேயிழை உன்விழிகளில் தேக்கினேன் கண்ணீர் பறந்தேன் பறந்தேன் பாலை நிலத்தை படுதொலை வதனால் இழந்தேன் நலத்தை. - பிரிந்த போது ... அழகிய நகையினாய் நினைத்தேன் உன்னை அல்லல் படுத்திய நெடுவழி என்னை உழக்கெல்லைத் தொலைவாய் ஆக்கிற்றுப் பின்னை உள்ளன்பு அணில்நாம் வழியோ தென்னை! - பிரிந்த போது ... - தேனருவி, ப.68, 1956 239. தலைவி வருத்தம் போனால் போகட்டுமே - பசும் பொன்னா யிருந்தவன் பித்தளையாய் அங்கே போனால் போகட்டுமே! ஆனாலும் என்றன் அன்பை மறந்தான் - அந்த ஆந்தைக் கூட்டிற்பு றாவாய்ப் பறந்தான் ஊனாய் வற்றிய பசுவைக் கறந்தான் - அவன் உள்ளன் பிலாதவ ளால்சீர் குலைந்தான் போனால் போகட்டுமே! வாழ்க்கையி லேபங்கு கொண்டவள் நானா - அன்றி வரவுக்கோர் இரவென்னும் அம்மங்கை தானா? தாழ்வுற்ற நேரத்து தளர்ச்சியுற் றேனா - அவன் தழைத்திருந்த போதும் தலைநிமிர்ந் தேனா? போனால் போகட்டுமே! காலிற்பட் டதுரும்பென் கண்ணிற் பட்ட இரும்பு - தான் கடிந்து பேசினாலும் அது எனக்குக் கரும்பு தேளுக்குப் பிறக்குமா தேனீ எனும் சுரும்பு? சோலையி லன்றோ இருக்கும் முல்லை யரும்பு? போனால் போகட்டுமே! - காதல் பாடல்கள், ப.113, 1977 240. மணக்க என்றான் நல்லநெஞ்சன் தோழி கூற்று காந்தளின் இதழ்க்கதவு திறக்கும் வரைக்கும் காத்திராது வண்டு பாத்திறம் காட்டத் தக்கோர் வருகை கண்டெதிர் கொண்ட மிக்கோர் போல மெல்லிதழ் திறந்தது. அத்தகு சிறந்த மலையுடை அன்னவன் நல்ல நெஞ்சம் உடையவன் என்க. பெருமணம் புரியாது பிரிந்ததை உன்னிக் கதறும் உன்நிலை கழறினேன் மணக்கவே என்றான் மற்றவன் நாணியே! - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.38, 1977 கருவூர்க் கதப்பிள்ளை அருளிய குறுந்தொகை 265ஆம் பாடல் கருத்து இது. 241. பிணித்தது நெற்றி! பிடிபட்டது யானை ஒருத்தியின் நெற்றி தலைவன் கூற்று வாட்டம் ஏன் என்று கேட்ட பாங்கனே, கேட்க! எட் டாம்பிறை கடலில் கிளைத்தல் போல் கரிய கூந்தல் அருகில் தோன்றிய ஒருத்தியின் நெற்றி பிணித்தது - என் கருத்தோ கடிது பிடிபட்ட யானையே. - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.72, 1977 242. வருவார் என்பதால் இருந்தேன் தலைவன் கூற்று கிளி உண்டதனால் கதிரிழந்து கிடந்த தினைத்தாள் செத்துப் போகாது நல்ல மழைவர இலைவிட் டதுபோலே என் புது நலம் உண்டதாற் போகும் என் நல்லுயிர், வருவார் என்னும் நினைவால் இருந்தது தோழி என்றாள் தலைவியே. - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.73, 1977 243. வீடும் பாலையே (தோழி கூற்று) உயிரே பிரிந்தால் உடல்வா ழாது வெயில்நுதல், அயில்விழி, வெண்ணிலா முகத்து நேரிழை தனையும் நீர்அழைத் தேகுக என்றேன் நீரதற்கு இயம்பிய தென்ன? உப்பு வாணிகர் ஒன்றிப் பிரிந்த வெப்பு நிலம்போல் விரிச்சென்ற ஊர்போல் இருக்கும் பாலை நிலத்தில் என்னுடன் மருக்கொ ழுந்தும் வருவதோ என்று தனியே செல்வதாய்ச் சாற்றினீர்! உம்மை மாது பிரிந்து வாழும் வீடுதான் இனிதோ சொல்க என்று துனிபொ றாது சொன்னாள் தோழியே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.71, 1977 பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடிய குறுந்தொகை 124 ஆம் பாட்டைத் தழுவியது. 244. தலைவன் கூற்று (பேரறிவுடைய நீ ஒருத்தியால் உள்ளம் உடைவது அழகா என்று இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பையும் வனப்பையும் கூறி - இந்தகையாளை மறப்பதெப்டி என்று தலைவன் கூறியது)) விரைந்து தழுவுவாள்; விரும்பும், அழகினாள்; கொடிபோல் இடையினாள்; நெடிய கூந்தலாள்; ஒருபுறம் மேய்ந்த விரைந்து சுரக்குந் தூய்தாம் பசுவின் துளங்குதலைக் கன்று தாய்கா ணுதற்குத் தான்விரும் புதல்போல் விருப்புடன் நோக்குவாள்; எவ்வாறு இருப்பேன் யானே அவளை மறந்தே! - தேனருவி, ப.206, 1956 குறுந்தொகை 132ஆம் செய்யுள் 245. தோழி கூற்று (தலைவன் பிரிய எண்ணியிருப்பதையறிந்து வேறுபட்ட தலைவியை நோக்கித் தோழி கூறியது) ஆட வர்க்குயிர் கேடிலாத் தொழிலே, பீடுறு மகளிர்க் காடவரே உயிர் என, உரைத்தவரும் அவரே, உனைவிட்டகலார், இனிநீ அழாதே! - தேனருவி, ப.206, 1956 குறுந்தொகை 135ஆம் செய்யுள் 246. தோழி கூற்று (KjšehŸ குறிப்பிட்ட இடத்தே வந்து தலைவியைக் காணத்தவறிய தலைவன், மறுநாள் வந்து அண்மை யில் நிற்பதையறிந்த தோழி நேற்றிரவு தலைவர் வரவை எதிர்நோக்கித் துயிலாதிருந்தோம் என்று அவன் காதில் விழக் கூறியது) எம்வீட் டயலில் ஏழ்குன் றின்1 மேல் இலைமயி லடிபோலி ருக்கும் நொச்சியின் அழகிய மென்கிளை ஆர்ந்த பூக்கள் விழும்ஒலி கேட்ட வண்ணம் விழித்துக் கிடந்தோம் ஊர்உறங் கையிலே. - பழம் புதுப் பாடல்கள், ப.207, 2005 குறுந்தொகை 138ஆம் செய்யுள் குறிப்பு : கவிஞரின் அகம் புறம் பற்றிய பழந்தமிழ்ச் செய்யுட்களின் உரையாக அமைந்த பாட்டுகள் பல துறைப்பாடல்கள் என்னும் பிரிவில் தேனருவியில் இணைக்கப்பட்டுள்ளன. திணைக் குறிப்புகளுடன் பழந்தமிழ்ச் செய்யுள்களை எளிமைப் படுத்தும் பாடல்கள் அவை. பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதியிலும் (1952), கருத்துரைப்பாட்டு எனும் பொதுத் தலைப்பில் மூன்று குறுந்தொகைப் பாடல்கள் எளிமையாக்கம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் இணைத்து எண்ணத்தக்கன. 1. ஏழ்குன்று : அப்பெயருள்ள குன்று 247. விரைந்தனர் விரைந்தனர் வெட்சித் திணை விரைந்தனர் விரைந்தனர் வேல் மறவர் வெட்சி சூடியே! பொருந்தாப் பகைவர் இடம் நோக்கிப் பெருங்கானம் இடை நீக்கி, - விரைந்தனர் நல்லவை செய்யான்தான் நாட்டுக்கு - மாற்றான் புல்லும் இடான் பசு மாட்டுக்கு, வல்ல ஒற்றன் ஆய்ந்தான் பகைநிலை, வளைந்தது வில்லின் நெடுந்தலை! - விரைந்தனர் கழுத்துமணி பாடக் கருந்தலை ஆடும் கறவை ஆன்கள் கவர்ந்தே, விழுந்தோள் மறவர் மீளும் வழியில் விழாச் செய்கின்றனர் வெற்றி வாழ்த்தி. - விரைந்தனர் - தேனருவி, ப.71, 1956 248. கரந்தை சூடுவீர் கரந்தைத் திணை கரந்தை சூடுவீர் மறவரே - பகை கவர்ந்த ஆனிரை மீண்டன என்று - கரந்தை சூடுவீர் தெரிந்து தெரிந்து விரைந்து வந்து செறிந்தீர் மறக்குடிப் பழஞ்சீர் தோன்ற, விரைந்து கொடிய சாக்காடு தின்ற உயிரையும் மீட்போம் என்றே நன்று - கரந்தை சூடுவீர் வெட்சி புனைந்தவர் அதோ அதோ அதோ! வில்வான் அம்பு மழை பொழிகவே, கட்சி இரண்டு நெருப்புக் கக்கின, கழன்றன தலைகள்! சுழன்றன வாள்கள்! - கரந்தை சூடுவீர் ஒருமகன் தனிநின் றசைத்த நெடுவாள், ஒழித்தது பகைவனை ஆயினும், பிறரால் திருமகன் குடர் சரித்திட அத்திருமகன் செத்தான், தன்புகழ் வைத்தான், வாழ்த்துக! - கரந்தை சூடுவீர் - தேனருவி, ப.72, 1956 249. மறவேந்தன் வஞ்சி சூடினான் வஞ்சித் திணை மறவேந்தன் வஞ்சி சூடினான் - எங்கள் மறவேந்தன் வஞ்சி சூடினான் இளமா எருதென எழுந்தெங்கள் - மறவேந்தன் வஞ்சி சூடினான் வீரமுர சியம்ப, மிகு வெற்றி யானை முழங்க, ஆர்த்த வாளும் ஏந்து படை மேற் சினந்தே கிளம்ப, - மறவேந்தன் வஞ்சி சூடினான் நீள்குடை விரிந்தெழ - ஒளி வாள்உறை பெயர்ந்தெழ, தோளுயர்ந்த மறவோர்கள் சினம் தோன்றவே கிளம்ப, - மறவேந்தன் வஞ்சி சூடினான் வெற்றி கண்ட இறைவன் - புகழ் விள்ளும் நீளுலகமே. அற்றதே பகைவர் நாடு! - மனம் யாவும் நொந்து போகும்! - மறவேந்தன் வஞ்சி சூடினான் - தேனருவி, ப.73, 1956 250. காஞ்சி சூடினானே காஞ்சித் திணை காஞ்சி சூடினானே - மன்னன் காஞ்சி சூடினானே! கடிநகர் மேலொரு பகைவரு வதனால் படியதிர்ந் திடவொரு துடிமுழங் கிடவே - காஞ்சிசூடி எழுந்தான் - மன்னன் காஞ்சி சூடி எழுந்தான். மறக்குடி தனில் வாழும் அறத்தகு போரின் திறத்த வரே படை பெறக் கடவீர் எனக் - காஞ்சி சூடி எழுந்தான் - மன்னன் காஞ்சி சூடி எழுந்தான். வெறுப்புறு பகைதனைப் பகற்கதிர் சாயுமுன் அழிப்பேன், அல்லது பழிப்படை வேன்எனக் காஞ்சி சூடி எழுந்தான் மன்னன் காஞ்சி சூடி எழுந்தான். ஒருபெரு மறவன் அயலவன் தலையை இதுபெறு வாய்என அரசெதிர் தரவே - காஞ்சி சூடி எழுந்தான் - மன்னன் காஞ்சி சூடி எழுந்தான். பெருநிதி பெறுவாய் பெருநிதி பெறுவாய் திறல்மிக உடையோய் மறவா எனவே - காஞ்சி சூடி எழுந்தான் - மன்னன் காஞ்சி சூடி எழுந்தான். - தேனருவி, ப.74, 1956 251. கடலொன்று வந்தது போலே காஞ்சித் திணை (fhto¢ áªJ) கடலொன்று வந்தது போலே பகைவரின் படைஒன்று வந்தது கண்டான் - மன்னன் காஞ்சி மலர்சூடிக் கொண்டான் - மிக்க அடலுண்டு தோளினில் எதிர்சென்று தாக்குக மறவரே என்று விண்டான். படையும் பகைப்படையும் அடுபோரில் விடும்அம்பு பருவேழத் துடலையூ டுருவி - அங்குப் பாய்ச்சும் குருதிமலை அருவி - அந்த அடைவஞ் சியான் சண்டை இடஅஞ்சி டாமையால் தொடர்க என்றான்வாட் கருவி. தோளில் இலகு காஞ்சி யாளன், மறவர்படை சூழக் குடைவிடுத்த பின்னே - கதிர் மேலைப் புறம் படையும்முன்னே - தீயன் மாளச்செய் வேன் அன்றி மற்றவர்க்கா ளாவேன் என்றனன் வஞ்சினம் என்னே! மூளும்சண் டைநடுவில் ஆளன் ஒருவன் பகை யாளன் தலையை வெட்டி ஏந்தினான் - அங்கு மொய்த்த படைக்கடலை நீந்தினான் - மன்னன் தாளில் அதனை இட்டு மாளாத நிதிபெற்றுத் தாங்கா மகிழ்ச்சிக் கள்மாந்தினான். ஓர்பால் நிலைத்திட்ட தேர்போல் உருப்பெற்ற கூர்வேல் மறச்செம்மல் செத்தான் - மனை மார்பால் அணைத்தென்றன் அத்தான் - நின் சார்பால் இருந்தேன் உன் சாவால் இதோ என்று சாய்ந்தாள் உயிர்வில கத்தான். போரிடு கூட்டம் குலைந்திடு நேரத்தும் ஓர்மறவன் தோள் செழித்துப் - பகை வேரின் உறுதி யழித்துத் - தன் மார்பின் புறத்தினிற் றான்பெற்ற புண்ணிடை வேல்வைத் திறந்தான் கிழித்து. வேல் வீழ்ந்து மாண்டு விழுந்தவனை அவன் வேல்விழி மங்கை அடுத்தே - அந்த வேலினைக் கையில் எடுத்தே - தன் கோலக் குலையினிற் குத்தித் கொண்டாள் தனைக் கொண்டவனோடு படுத்தே. மூலைக்கு மூலை உலாவித் திறஞ்செய்து வாய்க்கும் படைகளை நோக்கி - யானை மேல் முழங்கும்துடி போக்கிப் - படை நாளும் ஒரே வழி ஏறுக என்றனன். நற்கழ லோன் உளம் ஊக்கி! - தேனருவி, ப.76, 1956 252. சூழ்ந்தது பகைப்படை நொச்சித் திணை (எயில் காத்தல் நொச்சி) (இலாவணி மெட்டு) சூழ்ந்தது பகைப்படை சூழ்ந்தது சூழ்ந்ததென்று தொடர்மதில் காக்க நொச்சி சூடினார் சூடினார், - ஆடி வீழ்ந்திடப் பகைமேல் வாளைச் சுழற்றச் சிலர் வீழ்ந்து பெரும் புகழைத் தேடினார் தேடினார்! ஆர்ந்திடும் நந்தும் கொம்பும் ஆர்த்தே அகழழிக்கச் சேர்ந்த உழிஞைப் படை சீறுமே சீறுமே! மேல் பாய்ந்தது நொச்சிப் படை பாய்ந்து பகைத் திறத்தைப் பஞ்சாய்ப் பறக்கடித்து மீறுமே மீறுமே! அதிரும் படைநடுங்கக் குதிரை மறமும் காட்டி எங்கணும் கைத்திறம் காட்டுவார் காட்டுவார்! - நொச்சி அதிரும்படி அவரும் ஆளுக்கொ ராள்குறித்தே அம்புபறக்க வில்லில் நாட்டுவார் நாட்டுவார்! - தேனருவி, ப.78, 1956 253. போ போர்க்கு வாகைத் திணை (துறை மூதின் மூல்லை) பாலுண்ணும் பிள்ளையே விடுமார்பை! வேல்வைத்த தோளான் நமது நிலத்தில் கால்வைத்தான் இன்றே கட்டழிக்கப் போகாயோ! - பாலு கூர்வேலும் இந்தா - முற்பகை குத்தி வளைந்ததை நன்றாய், ஆராய்ந்து தந்தேன் சாத்தடா தோளில்! mw¤ij¢ brŒ!நட! இதே நாளில்! - பாலு மறக்குடி வந்தோர் - உன்முன்னோர் போரில் இறந்தனர் அதோபார்! பிறங்கிற்றுப் புகழும்! நடுகற்கள் நோக்குக! பிழைக்கினும் இறக்கினும் புகழே, போபோர்க்கு! - பாலு - தேனருவி, ப.78, 1956 254. தாய்மார், போருக்கு மக்களை அனுப்புக வாகைத் திணை அருந்திய பால்முலை அறுத்தெறிந்த தாய், அறத்துணை பூண்ட மறத் தமிழ் நாடு! - அருந்திய வரும்பகைக் களிற்றின் நெற்றியில் புதைந்தவேல் வாங்காது வந்த, தன்தீங்கான மைந்தன் - அருந்திய தெரிந்திருக்கும் தமிழர்தம் வீரம் இடையிலே மறந் திருக்கவும் கூடும்; சரிந்த பகைவர்கால் தமிழகம் தீண்டுமுன் தாய்மார் மக்களை அனுப்புக தாக்கவே! - அருந்திய இமய வட்டாரம் தாக்கிய சோழன் இருந்த மலைத்தொடர் சோழமலைத் தொடர்! தமிழன் தாக்கினை மறந்தாரைத் தாக்கத் தாய்மார் மக்களைப் போருக் கனுப்புக! - அருந்திய இமய வெற்பின் அண்டையில் பெரிதாய் இன்னும் உண்டதன் பேர், சோழன் கணவாய்! தமை மறந்து பகைவர் புகுந்தனர் தாய்மார் மக்களைப் போருக் கனுப்புக! - அருந்திய - தேனருவி, ப.76, 1978 255. கடமைகள் வாகைத் திணை (துறை மூதின் முல்லை) எனக்குக் கடமை மைந்தனைப் பெறலே - தந்தை தனக்குக் கடமை கல்வியைத் தரலே! - எனக்குக் கடமை அறிவில் வளர்ந்தும் ஆண்மையில் சிறந்தும் நெறிப்படும் மகனுக்கு நீள்வேல்தருதல் கொல்லனின் கடமை! - எனக்குக் கடமை உழைப்பால் உலகோம்பும் உண்மையை உணர்த்தும் தழைப்புறும் நன்னிலம் தந்தோம்புதல்தான் மன்னனின் கடமை! - எனக்குக் கடமை தாய்நிலம் தனில்பகை தறுதலை நீட்டில் ஓய்வின்றி வாள்வீசி போர்எல்லைக் கோட்டில் சாய்த்துப்பல் யானைகளைச் சமர்க்கள ஏட்டில் மாயாப் புகழ் எழுதல் என்மகன் கடமை! - எனக்குக் கடமை - தேனருவி, ப.77, 1978 புறநானூற்றுப் பாடல் 312இன் தழுவல் 256. அவள் நெஞ்சில் இடி விழட்டும் வாகைத் திணை (துறை : மூதின் முல்லை) இடிவிழட்டும் இவள் நெஞ்சில் - மறக் குடி மகள் என்பதற்குக் கடிய மணம் கொண்டாள். - இடிவிழட்டும் நேற்று முன்னாள் நடந்த நிறை யானைப் போரில் கூற்றுவனுக் கிரையிட்டான் - தந்தை கொடுத்தீந்தான் புகழ்க்குயிர் நேரில்! - இடிவிழட்டும் நேற்றுநடந்த பெரும்போர் நிரையினை மீட்கையில் - கணவன் மாற்றாரை மாள்வித்து மாண்டனன் வாட்கையில்! - இடிவிழட்டும் இன்றும் போர்முழக்கம் இன்புறக் கேட்டாள் - அடடே நன்றென்று மயங்கி அன்பு மகனை அனுப்பிட வேட்டாள்! - இடிவிழட்டும் ஆடிடும் பிள்ளைக்கே ஆடையை உடுத்திக் - கலைந்து கோடிய தலை மயிர்க் குற்றநெய் பூசி ஒருமகன் அன்றி வேறு ஒருமகன் இல்லாள் - பகைவர் செருமுகம் செல்கெனச் செவ்வேல் தந்தாள்! - இடிவிழட்டும் - தேனருவி, ப.78, 1978 புறநானூற்றுப் பாடல் 379இன் தழுவல் 257. இனி என்ன வேண்டும் வாகைத் திணை வாகை நமக்குத் தாழ்வெலாம் அவர்க்கே! வட்டஆழித் தேர்கள் அழிந்தன, மாளாப் பகைப்படை மாண்டு தொலைந்தது. மட்டிலாப்புகழ் பட்டத்து மன்னன், மாய்ந்தான், என்வாள் தோய்ந்தது மார்பில்! ஆனைகள் எல்லாம் பூனைகள் ஆயின, அம்பும் வில்லும் கம்பந் தட்டுகள், நானிலம் குழியப் பறக்கும் குதிரைகள் நத்தைகள் ஆயின! நத்தைகள் ஆயின! வெள்ளை மாலை வீரக் கருங்கழல், சிவப்புக் கச்சை வேண்டி அணிந்தீர். தெள்ளு மாத்தமிழ் மறவரே கண்டீர் தீர்ந்தது வேலை இனிஎன்ன வேண்டும்? - தேனருவி, ப.79, 1978 258. நிலாக் கிழவி கூறுகிறாள் காஞ்சித் திணை சென்றதடா அமைதி நோக்கி உலகம் - அட சீனாக் காரா ஏண்டா இந்தக் கலகம்? நன்றாக நீ திருந்த வேண்டும்! ஞாலம் உன்னை மதிக்க வேண்டும்! ஒன்றாய்ச் சேர்ந்து வாழ வேண்டும்! ஒழுக்கம் கெட்டால் என்ன வேண்டும்? - சென்றதடா உலகம் எலாம் பொதுவென்றாய் உடைமை எலாம் பொதுவென்றாய் கலகம் செய்து நிலத்தை எலாம் கைப் பற்றத்தான் முயலுகின்றாய். - சென்றதடா பொது உடைமைக் கொள்கை ஒன்று பூத்துக் காய்த்து வருமின்று பொது உடைமை எனக்கென்று புகன்றாயே குறுக்கில் நின்று. - சென்றதடா கொலைக்காரப் பசங்க ளோடு கூடுவது மானக் கேடு, இலைக்காக மரத்தை வெட்டிடில் ஏற்றுக் கொள்வ தெந்த நாடு! - சென்றதடா உயிர் காப்பது பொதுவுடைமை உயிர் போக்குதல் பெருமடமை உயர்வான இக் கருத்தை உணர்வதுதான் உன் கடமை! - சென்றதடா அறநெறியை மனத்தில் நீக்கி அழிவு செய்ய உலகை நோக்கிப் புறப்பட்டாய் சீனாக் காரா பொடியாகும் உன் துப்பாக்கி! - சென்றதடா - தேனருவி, ப.81, 1978; பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, 1977 259. ஏன் நரைக்கவில்லை? (பிரிராந்தையார் விடை) மிகப்பல ஆண்டுகள் ஆகியும் மேனியில் நரையே இல்லையே! இந்த நன்னிலை எப்படி எய்தினீர்? என்று கேட்டோர்க்குப் பிசிராந் தையார் இசைப்பா ராயினார்; மாட்சிமைப் பட்ட குணங்கள் வாய்ந்தஎன் மனைவி அறிவு நிரம்ப வாய்ந்தவள்! அன்புறு புதல்வரும் அத்தகை யோரே என்னுடை ஏவ லாளர் தாமும் யான்எண் ணியது - அவர் எண்ணும் இயல்பினர்! இறைவனோ முறைசெய்து காக்கும் மேலோன்! என்னூ ரின்கண் இருக்கும் குடிகள் பணியத் தகுமிடம் பணிபவர் நன்றே! அமையத் தகுகுணம் அனைத்தும் அமைந்தவர். கல்வி நிறைந்தவர் கற்றதன் பயனாய் நாவைச் சுவைக்கே அடிமை ஆக்கார்; உடம்பு பயன்மடந் தைக்கே என்னார்; கண்ணில், காட்சி வெறிகொண்டு திரியார் மூக்கு நறுமணம் தோய்த்துக் கவிழார்; காதை இசையினில் அளவொடு கவிப்பவர்; எனவே, ஆன்றவிந் தடங்கிய கொள்கை யுடைய சான்றோர் மிகப்பலர்! ஆதலால் ஏன்எனக்கு நரைக்கும்? இயம்பு வீரே! - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.146, 1977  (ïJ புறம் (191) - யாண்டு பலவாக என்ற தொடக்கச் செய்யுளின் உரை És¡f«.) இயற்கை 1. மயில் அழகிய மயிலே! அழகிய மயிலே! அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம் கருங்குயி லிருந்து விருந்து செய்யக் கடிமலர் வண்டுகள் நெடிது பாடத், தென்றல் உலவச், சிலிர்க்கும் சோலையில் அடியெடுத் தூன்றி அங்கம் புளகித் தாடு கின்றாய் அழகிய மயிலே! உனது தோகை புனையாச் சித்திரம் ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்! உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ! ஆடு கின்றாய்; அலகின் நுனியில் வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்! சாயல்உன் தனிச் சொத்து! ஸபாஷ்! கரகோஷம்! ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆனஉன் மெல்லுடல், ஆடல் உன்உயிர், இவைகள் என்னை எடுத்துப் போயின! இப்போது, என்நினைவு என்னும் உலகில் மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன் நீயும் பெண்களும் நிகர்என் கின்றார்! நிசம்அது! Ãr«!நிசம்! - நிசமே யாயினும் பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்! அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்! அயலான் வீட்டின் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ கறையொன் றில்லாக் கலாப மயிலே நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்! இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன் மனதிற் போட்டுவை; மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதற் காக! புவிக்கொன் றுரைப்பேன்; புருஷர் கூட்டம் பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள் சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே! - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.75, 1938 2. சிரித்த முல்லை மாலைப் போதில் சோலையின் பக்கம் சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது வாசம் வந்த வசத்தில் திரும்பினேன் சோலை நடுவில் சொக்குப் பச்சைப் பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சிகொண் டேனே! - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.77, 1938 3. உதய சூரியன் உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில் உதித்துவிட்டான் செங்கதிரோன் தகத்தகாயம் பார்! விலகிற்றுக் காரிருள்தான் பறந்ததுபார் அயர்வு விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா! மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்! மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின்ப்ர வாகம்! நலம்செய்தான் ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான்; காட்டி நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை. ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானத்தில் மண்ணில்! உயர்மலைகள் சோலைநதி இயற்கைஎழில் கள்பார்! களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால் கவிதைகள் கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்! தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள் ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூரியன் வாழ்க நன்றே! - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.78,1938 4. காடு காவடிச்சிந்து மெட்டு முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர் முட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள் இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே கால்களில் தடுக்கும் - உள் நடுங்கும். கிட்டிமர வேர்கள்பல கூடும் - அதன் கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர மட்டையசை வால்புலியின் குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத் தேடும் - பின் வாடும். நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர் வாளெயிற்று வேங்கையெலாம் வால்சுழற்றிப் பாயவருங் காடு - பள்ளம்! மேடு! கேளொடும் கிளம்பிவரும் பன்றி - நிலம் கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு தூளிபடத் தாவுகையில் ஊளையிடும் குள்ளநரி குன்றில் - புகும் ஒன்றி. வானிடைஓர் வானடர்ந்த வாறு - பெரு வண்கிளை மரங்கள் என்ன வீறு! - நல்ல தேனடை சொரிந்ததுவும் தென்னைமரம் ஊற்றியதும் ஆறு - இன்பச் சாறு! கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும் ஆனினம் சுமந்தமடி ஆறெனவே பால்சுரந்து தீர்க்கும் - அடை ஆக்கும். - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.79, 1938 5. கானல் வானும் கனல் சொரியும்! - தரை மண்ணும் கனல் எழுப்பும்! கானலில் நான்நடந்தேன் - நிழல் காணும் விருப்பத்தினால்! ஊனுடல் அன்றி மற்றோர் - நிழல் உயிருக் கில்லை அங்கே! ஆன திசைமுழுதும் - தணல் அள்ளும் பெருவெளியாம்! ஒட்டும் பொடிதாங்கா - தெடுத் தூன்றும் அடியும்சுடும் விட்டுப் புறங்குதித்தால் - அங்கும் வேகும்! உளம்துடிக்கும்! சொட்டுப் புனல்அறியேன்! ஒன்று சொல்லவும் யாருமில்லை! கட்டுடல் செந்தணலில் - கட்டிக் கந்தக மாய்எரியும்! முளைத்த கள்ளியினைக் - கனல் மொய்த்துக் கரியாக்கி விளைத்த சாம்பலைப்போய் - இனி மேலும் உருக்கிடவே கொளுத்தி டும்கானல்! - உயிர் கொன்று தின்னும் கானல்! களைத்த மேனி கண்டும் - புறங் கழுத்த றுக்கும்வெளி! திடுக்கென விழித்தேன் - நல்ல சீதளப் பூஞ்சோலை! நெடும்பகற் கனவில் - கண்ட நெஞ்சுறுத் தும்கானல் தொடர்ந்த தென்நினைவில்! - குளிர் சோலையும் ஓடையுமே சுடவரும் கனலோ - என்று தோன்றிய துண்மையிலே. - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.81, 1938 6. மக்கள் நிலை சிட்டு தென்னை மரத்தில் - சிட்டுப் பின்னும் அழைக்கும் - ஒரு புன்னை மரத்தினில் ஓடிய காதலி போபோ என்றுரைக்கும். வண்ண இறக்கை - தன்னை அங்கு விரித்தே - தன் சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும் செப்பும் மணிவாயால்: என்னடி பெண்ணே - உயிர் ஏகிடும் முன்னே - நீ என்னிடம்வா எனையாகிலும் கூப்பிடு தாமதம் நீக்கிவிடு என்றிது சொல்லப் - பெட்டை எண்ணம் உயர்ந்தே - அத் தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது பின்னும் அழைக்கும் சிட்டு. அணில் கீச்சென்று கத்தி - அணில் கிளையொன்றில் ஓடிப் - பின் வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை வெடுக்கென்று தான்கடிக்கும். ஆச்சென்று சொல்லி - ஆண் அணைக்க நெருங்கும் - உடன் பாய்ச்சிய அம்பெனக் கீழ்த்தரை நோக்கிப் பறந்திடும் பெட்டைஅணில்! மூச்சுடன் ஆணோ - அதன் முதுகிற் குதிக்கும் - கொல்லர் காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக் கலந்திடும் இன்பத்திலே. ஏச்சுக்கள் அச்சம் - தம்மில் எளிமை வளப்பம் - சதிக் கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம் கொஞ்சமும் இல்லை அங்கே. வானும் முல்லையும் எண்ணங்கள் போலே - விரி வெத்தனை! கண்டாய் - இரு கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் கூடிச் சுடர்தரும் வான்! வண்ணங்களைப் போய்க் - கரு மாமுகில் உண்டு - பின்பு பண்ணும் முழக்கத்தை மின்னலை அம்முகில் பாய்ச்சிய வானவில்லை வண்ணக் கலாப - மயில் பண்ணிய கூத்தை - அங்கு வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்! மேல்முத்தை வான்சொரிந்தான்! விண்முத் தணிந்தாள் - அவள் மேனி சிலிர்த்தாள் - இதைக் கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக் கடல்வந்து பாய்ந்திடுதே! மனிதர் மஞ்சம் திருத்தி - உடை மாற்றி யணிந்தே - கொஞ்சம் கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி கோதை அழைக்கையிலே மிஞ்சிய சோகம் - மித மிஞ்சிய அச்சம் - என் வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன வாதனை கொள்வாரோ நெஞ்சிலிவ் வாறு - நினைந் தங்குரைக் கின்றான்; - அடி பஞ்சைப் பரம்பரை நாமடி! பிள்ளைகள் பற்பலர் ஏதுக் கென்பான். கஞ்சி பறித்தார் - எழுங் காதல் பறித்தார் - கெட்ட வஞ்சகம் சேர்சின்ன மானிடச் சாதிக்கு வாய்ந்த நிலை இதுவோ! - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.83, 1938 7. காட்சி இன்பம் குன்றின்மீது நின்று கண்டேன் கோலம்! என்ன கோலமே! பொன்ததும்பும் அந்திவானம் போதந் தந்ததேடி தோழி! - குன்றின் முன்பு கண்ட காட்சி தன்னை முருகன் என்றும் வேலன் என்றும் 1கொன்பயின்றார் சொல்வர்; அஃது குறுகும் கொள்கை அன்றோ தோழி! - குன்றின் கண்ணும் நெஞ்சும் கவருகின்ற கடலை வானைக் கவிஞர் அந்நாள் வண்ண மயில்வே லோன்என் றார்கள். வந்ததே போர்இந் - நாள் - தோழி! - குன்றின் எண்ண எண்ண இனிக்கும் காட்சிக் கேது கோயில்? தீபம் ஏனோ! வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம் மயில் வெற்பும் நன் - றே - தோ - ழி. - குன்றின் பண்ண வேண்டும் பூசை என்பார் பாலும் தேனும் வேண்டும் என்பார் உண்ண வேண்டும் சாமி என்பார் உளத்தில் அன்பு வேண் - டார் - தோ - ழி. - குன்றின் அன்பு வேண்டும் அஃது யார்க்கும் ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்! வன்பு கொண்டோர் வடிவுகாட்டி வணங்க என்று சொல் - வார் - தோ - ழி. - குன்றின் என்பும் தோலும் வாடு கின்றார் ஏழை என்ப தெண்ணார் அன்றே! துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு சூழ்க வையம் தோ - ழி - வா - ழி! - குன்றின் - பாரதிதாசன் கவிதைகள், முதல் தொகுதி, ப.86, 1938 1. கொன் - பயனில்லை 8. அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் தனில்அந்த அழகெ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள் திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே! செந்தோள் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தி னாள்;என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள். திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் அழகுதனைக் கண்டேன்நல் லின்பங் கண்டேன். பசையுள்ள பொருளிலெலாம் பசைய வள்காண்! பழமையினால் சாகாத இளைய வள்காண்! நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை. - அழகின் சிரிப்பு, ப. 1, 1944 9. கடல் மணல், அலைகள் ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஓர மெல்லாம் கீரியின் உடல்வண் ணம்போல் மணல்மெத்தை; அம்மெத் தைமேல் நேரிடும் அலையோ, கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும்; வீழும் புரண்டிடும்; பாராய் தம்பி. 1 மணற்கரையில் நண்டுகள் வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல் துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்! வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் நண்டுப் பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் வியப்பைச் செய்யும். 2 புரட்சிக்கப்பால் அமைதி புரட்சிக்கப் பால்அ மைதி பொலியுமாம். அதுபோல், ஓரக் கரையினில் அலைகள் மோதிக் கலகங்கள் விளைக்கும்; ஆனால் அருகுள்ள அலைகட் கப்பால் கடலிடை அமைதி அன்றோ! பெருநீரை வான்மு கக்கும் வான்நிறம் பெருநீர் வாங்கும்! 3 கடலின் கண்கொள்ளாக் காட்சி பெரும்புனல் நிலையும், வானிற் பிணைந்தஅக் கரையும், இப்பால் ஒருங்காக வடக்கும் தெற்கும் ஓடுநீர்ப் பரப்பும் காண இருவிழிச் சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண ஒருகோடிச் சிறகு வேண்டும் ஓகோகோ எனப்பின் வாங்கும். 4 கடலும் இளங் கதிரும் எழுந்தது செங்க திர்தான் கடல்மிசை! அடடா எங்கும் விழுந்தது தங்கத் தூற்றல்! வெளியெலாம் ஒளியின் வீச்சு! முழங்கிய நீர்ப்ப ரப்பின் முழுதும்பொன் னொளிப றக்கும் பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி! 5 கடலும் வானும் அக்கரை, சோலை போலத் தோன்றிடும்! அந்தச் சோலை திக்கெலாம் தெரியக் காட்டும் இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்! கைக்கொள்ள அம்மு கில்கள் போராடும்! கருவா னத்தை மொய்த்துமே செவ்வா னாக்கி முடித்திடும்! பாராய் தம்பி! 6 எழுந்த கதிர் இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான் களித்தன கடலின் புட்கள் எழுந்தன கைகள் கொட்டி! ஒளித்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னி றத்தை எங்கணும் இறைக்க லானான். 7 கடல் முழக்கம் கடல்நீரும், நீல வானும் கைகோக்கும்! அதற்கி தற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில்வீணை; அவ்வீ ணைமேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்தின் பத்தை வடிக்கின்ற புலவன்! தம்பி வண்கடல் பண்பா டல்கேள்! 8 நடுப்பகலிற் கடலின் காட்சி செழுங்கதிர் உச்சி ஏறிச் செந்தணல் வீசு தல்பார்! புழுங்கிய மக்கள் தம்மைக் குளிர்காற்றால் புதுமை செய்து முழங்கிற்று கடல்! இவ் வைய முழுவதும் வாழ்விற் செம்மை வழங்கிற்று கடல்! நற் செல்வம் வளர்க்கின்ற கடல்பார் தம்பி! 9 நிலவிற் கடல் பொன்னுடை களைந்து, வேறே புதிதான முத்துச் சேலை தன்இடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள். தம்பி என்னென்று கேள்;அ தோபார் எழில்நிலா ஒளிகொட் டிற்று! மன்னியே வாழி என்று கடலினை வாழ்த்தாய் தம்பி! 10 - அழகின் சிரிப்பு, ப.2, 1944 10. தென்றல் மென்காற்றும் வன்காற்றும் அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே கொண்டஓர் பெரும்பு றத்தில் கூத்திடு கின்ற காற்றே! திண்குன்றைத் தூள்தூ ளாகச் செய்யினும் செய்வாய்; நீஓர் நுண்துளி அனிச்சம் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்! 1 தென்னாடு பெற்ற செல்வம் உன்னிடம் அமைந்தி ருக்கும் உண்மையின் விரிவில், மக்கள் சின்னதோர் பகுதி யேனும் தெரிந்தார்கள் இல்லை; யேனும் தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன் பத்தைத் தென்னாட்டுக் கல்லால் வேறே எந்நாட்டில் தெரியச் செய்தாய்? 2 தென்றலின் நலம் குளிர்நறுஞ் சந்த னஞ்சார் பொதிகையில் குளிர்ந்தும், ஆங்கே ஒளிர்நறு மலரின் ஊடே மணத்தினை உண்டும், வண்டின் கிளர்நறும் பண்ணில் நல்ல கேள்வியை அடைந்தும் நாளும் வளர்கின்றாய் தென்ற லேஉன் வரவினை வாழ்த்தா ருண்டா? 3 அசைவின் பயன் உன்அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர் சின்னநல் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும்! பெற்ற அன்னையைக் கண்டோர், அன்னை அன்பினைக் கண்ணிற் காணார் என்னினும் உயிர்க்கூட் டத்தை இணைத்திடல் அன்பே அன்றோ? 4 தென்றலின் குறும்பு உலைத்தீயை ஊது கின்றாய் உலைத்தீயில் உருகும் கொல்லன் மலைத்தோளில் உனது தோளும் மார்பினில் உன்பூ மார்பும் சலிக்காது தழுவத் தந்து! குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள் விலக்காத உடையை நீபோய் விலக்கினும், விலக்கார் உன்னை! 5 குழந்தையும் தென்றலும் இழந்திட்டால் உயிர்வா ழாத என்னாசை மலர்மு கத்துக் குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின் கொழுந்தென்று நினைத்துக், கண்ணிற் குளிர்செய்து, மேனி எங்கும் வழிந்தோடிக், கிலுகி லுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி! 6 தென்றல் இன்பம் இருந்தஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும், கொண்டு விருந்தாய்நீ அடையுந் தோறும் கோடையின் வெப்பத் திற்கு மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப், பின்னர், வானிற் பருந்தாகி, இளங்கி ளைமேற் பறந்தோடிப் பாடு கின்றாய்! 7 தென்றலின் பயன் எழுதிக்கொண் டிருந்தேன், அங்கே எழுதிய தாளும் கண்டாய் வழியோடு வந்த நீயோ வழக்கம்போல் இன்பம் தந்தாய் எழுதிய தாளை நீஏன் கிளப்பினை என்று கேட்டேன் புழுதியைத் துடைத்தேன் என்றாய் மீண்டும்நீ புணர்ந்தாய் என்னை! 8 தென்றற்கு நன்றி கமுகொடு, நெடிய தென்னை கமழ்கின்ற சந்த னங்கள் சமைகின்ற பொதிகை அன்னை உனைத்தந்தாள்; தமிழைத் தந்தாள் தமிழ்எனக் ககத்தும், தக்க தென்றல்நீ புறத்தும், இன்பம் அமைவுறச் செய்வ தைநான் கனவிலும் மறவேன் அன்றோ? 9 தென்றலின் விளையாட்டு களிச்சிறு தும்பி பெற்ற கண்ணாடிச் சிறகில் மின்னித் துளிச்சிறு மலர்இ தழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையா டிப், போய்க் கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்றாய் தென்ற லேநீ! 10 - அழகின் சிரிப்பு, ப.6, 1944 11. காடு மலைப்பு வழி நாடினேன்; நடந்தேன்; என்றன் நகரஓ வியத்தைத் தாண்டித் தேடினேன்; சிற்றூர் தந்த காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன் பாடினேன்; பறந்தேன்; தேய்ந்த பாதையை இழந்தேன். அங்கே மாடிவீ டொன்று மில்லை மரங்களோ பேச வில்லை! 11 வழி யடையாளம் மேன்மேலும் நடந்தேன்; அங்கே மேற்றிசை வானம் என்னை நான்தம்பி என்னை நோக்கி நடதம்பி எனச்சொல் லிற்று! வான்வரை மேற்குத் திக்கை மறைத்திட்ட புகைநீ லத்தைத் தேன்கண்டாற் போலே கண்டேன் திகழ்காடு நோக்கிச் சென்றேன். 12 காட்டின் அருகு வன்மைகொள் பருக்கைக் கல்லின் வழியெலாம் பள்ளம், மேடு! முன்னாக இறங்கி ஏறி முதலைகள் கிடப்ப தைப்போல் சின்னதும் பெரிது மான வெடிப்புக்கள் தாண்டிச் சென்றேன் கன்மாடம் எனும்பு றாக்கள் கற்களைப் பொறுக்கக் கண்டேன். 13 மயிலின் வரவேற்பு மகிழ்ந்துநான் ஏகும் போதில் காடுதன் மயிலை ஏவி அகவலால் வரவேற் பொன்றை அனுப்பிற்று! கொன்றைக் காய்க்கு நிகரான வாலை ஆட்டிக் காரெலி நின்று நின்று நகர்ந்தது. கூடச் சென்றேன் நற்பாதை காட்டும் என்றே. 14 தமிழா நீ வாழ்க! முகத்திலே கொடுவாள் மீசை வேடன்,என் எதிரில் வந்தான். அகப்பட்ட பறவை காட்ட அவற்றின்பேர் கேட்டேன்! வேடன் வகைப்பட்ட பரத்து வாசன் என்பதை வலியன் என்றான் சகோரத்தைச் செம்போத் தென்றான்! தமிழாநீ வாழ்க என்றேன். 15 வேடன் வழி கூறினான் போம்அங்கே! பாரும் அந்தப் புனஎலு மிச்சை என்றான் ஆம்என்றேன் அதைத்தான் ஐயா குருந்தென்றும் அறைவார் என்றான்! ஆம்என்றேன் தெரிந்த வன்போல்! அப்பக்கம் நோக்கிச் சென்றால் மாமரம் இருக்கும் அந்த வழிச்செல்வீர் என்றான் சென்றேன். 16 காட்டின் உச்சிக்கிளையில் குரங்கு ஊசல் செருந்தி, யாச் சா,இ லந்தை, தேக்கீந்து கொன்றை யெல்லாம் பெருங்காட்டின் கூரை! அந்தப் பெருங்கூரை மேலே நீண்ட ஒருமூங்கில், இருகு ரங்கு கண்டேன்பொன் னூசல் ஆடல்! குருந்தடை யாளம் கண்டேன் கோணல்மா மரமும் கண்டேன்! 17 பாம்பின் வாயில் தாயைப் பறிகொடுத்த மான்கன்றை நரியடித்தது ஆனைஒன் றிளம ரத்தை முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப் பூனைஒன் றணுகும்; அங்கே புலிஒன்று தோன்றும்; பாம்பின் பானைவாய் திறக்கக் கண்டு யாவுமே பறக்கும்; கன்றோ மானைக்கா ணாது நிற்கும்! அதைஒரு நரிபோய் மாய்க்கும். 18 மயிலுக்குக் கரடி வாழ்த்து இழந்தபெட் டையினைக் கண்டே எழுந்தோடும் சேவல் வாலின் கொழுந்துபட் டெழுந்த கூட்டக் கொசுக்களை முகில்தான் என்று தழைந்ததன் படம்வி ரிக்கும் தனிமயி லால்,அ டைத் தேன் வழிந்திடும்; கரடி வந்து மயிலுக்கு வாழ்த்துக் கூறும். 19 பயன்பல விளைக்கும் காடு ஆடிய கிளைகள் தோறும் கொடிதொங்கி, அசையும்! புட்கள் பாடிய படியி ருக்கும்! படைவிலங் கொன்றை யொன்று தேடிய படியி ருக்கும்! காற்றோடு சருகும் சேர்ந்து நீடிசை காட்டா நிற்கும்; பயன்தந்து நிற்கும் காடே! 20 - அழகின் சிரிப்பு, ப.10, 1944 12. குன்றம் மாலை வானும் குன்றமும் தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னி லேஓர் செங்கதிர் மாணிக் கத்துச் செழும்பழம் முழுகும் மாலை, செங்குத்தாய் உயர்ந்த குன்றின் மரகதத் திருமே னிக்கு மங்காத பவழம் போர்த்து வைத்தது வையம் காண! 1 ஒளியும் குன்றும் அருவிகள், வயிரத் தொங்கல்! அடர்கொடி, பச்சைப் பட்டே! குருவிகள், தங்கக் கட்டி! குளிர்மலர், மணியின் குப்பை! எருதின்மேற் பாயும் வேங்கை, நிலவுமேல் எழுந்த மின்னல், சருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பார டாநீ! 2 கிளி எறிதல் தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தித் தழைபசுஞ் சிறக டித்து மலைப்புன்னை மரத்தின் பக்கம் வந்திடும் கிளிக்கூட் டத்தில், சிலைப்பெண்ணாள் கவண்எ றிந்து, வீழ்த்தினேன் சிறகை, என்றாள் குலுக்கென்று சிரித்தொ ருத்தி கொழும்புன்னை இலைகள் என்றாள்! 3 குறவன் மயக்கம் பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி ஆதொண்டைப் பழம்பார்த் தானை உதட்டினைப் பிதுக்கிக் கோவை உன்குறி பிழைஎன் றோதும்! குதித்தடி மான்மான் என்று குறுந்தடி தூக்கு வானைக், கொதிக்காதே நான்அம் மானே எனஓர்பெண் கூறி நிற்பாள்! 4 குன்றச் சாரல், பிற குன்றத்தின் சாரல் குன்றின் அருவிகள் குதிக்கும் பொய்கை பன்றிகள் மணற்கி ழங்கு பறித்திடும் ஊக்கம், நல்ல குன்றியின் மணியால், வெண்மைக் கொம்பினால் அணிகள் பூண்டு நின்றிடும் குறத்தி யர்கள் நிலாமுகம் பார டாநீ! 5 குறத்தியர் நிறைதினைக் கதிர் மு திர்ந்து நெடுந்தாளும் பழுத்த கொல்லைப் புறத்தினில் தேர்போல் நீண்ட புதுப்பரண் அமைத்து, மேலே குறத்தியர் கவண்எ டுத்துக் குறிபார்க்கும் விழி, நீ லப்பூ! எறியும்கை, செங்காந் தட்பூ! உடுக்கைதான் எழில்இ டுப்பே! 6 மங்கிய வானில் குன்றின் காட்சி! மறைகின்றான் பரிதி; குன்ற மங்கையோ ஒளியி ழந்து, நிறைமூங்கில் இளங்கை நீட்டி வாராயோ எனஅ ழைப்பாள்! சிறுபுட்கள் அலறும்! யானை இருப்பிடம் சேரும்! அங்கோர் குறுநரி ஊளைச் சங்கால் இருள்இருள் என்று கூவும்! 7 நிலவும் குன்றும் இருந்தஓர் கருந்தி ரைக்குள், இட்டபொற் குவியல் போலே, கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே கருத்துக்கள் இருத்தல் போலே இருள்மூடிற் றுக்குன் றத்தை! நாழிகை இரண்டு செல்லத் திரும்பிற்று நிலவு; குன்றம் திகழ்ந்தது முத்துப் போலே! 8 எழில் பெற்ற குன்றம் நீலமுக் காட்டுக் காரி நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த பாலிலே உறைமோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து, பானை மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் குன்றின்மேல் வீசி விட்டாள்! ஏலுமட் டுந்தோ ழாநீ எடுத்துண்பாய் எழிலை எல்லாம்! 9 முகில் மொய்த்த குன்றம் ஆனைகள், முதலைக் கூட்டம், ஆயிரம் கருங்கு ரங்கு, வானிலே காட்டி வந்த வண்முகில் ஒன்று கூடிப் பானையில் ஊற்று கின்ற பதநீர்போல் குன்றில் மொய்க்கப் போனது; அடிமை நெஞ்சம் புகைதல்போல் தோன்றும் குன்றம்! 10 - அழகின் சிரிப்பு, ப.14, 1944 13. ஆறு நீரற்ற ஆற்றுப் பாதை! இருபக்கம் மண்மே டிட்டும், இடைஆழ்ந்தும், நீள மான ஒருபாதை கண்டேன், அந்தப் பாதையின் உள்இ டத்தில் உரிந்தநற் றாழம் பூவின் நறும்பொடி உதிர்ந்த தைப்போல் பெருமணல், அதன்மே லெல்லாம் கதிரொளிப் பெருக்கம், கண்டேன்! 1 வழிப் போக்கு மணல்சுடும்; வழிச்செல் வோர்கள், இறங்கியும் ஏறி யும்போய் அணைகரை மேட்டின் அண்டை அடர்மர நிழலில் நின்று தணலேறும் தம்கால் ஆற்றிச் சாலைகண் டூரைக் காண்பார். அணிநிலம் நடுவில் ஆற்றுப் பாதை வான் வில் போல் தோன்றும். 2 வெள்ளம் வருமுன் வெப்பத்தால் வெதும்பு கின்ற வெளியெலாம் குளிர்காற் றொன்று தொப்பென்று குதிக்க, அங்கே துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன். எப்பக்கம் இருந்தோ கூட்டப் பறவைகள் இப்பக் கத்துக் குப்பத்து மரத்தில் வந்து குந்திய புதுமை கண்டேன். 3 வெள்ளத்தின் தோற்றம் ஒலிஒன்று கேட்டேன். ஓஓ புதுப்புனல்! பெரிய வெள்ளம், சலசல என்று பாய்ந்து வரக்கண்டேன். தணல்நி றத்தில் நிலவொத்த நிறம்க லந்து நெடுவானின் சுடரும் வாங்கிப் பொலிந்தது! கோடை யாட்சி மாற்றிற்று புரட்சி வெள்ளம். 4 வெள்ளப் பாய்ச்சல் பெருஞ்சிங்கம் அறைய வீழும் யானைபோல் பெருகிப் பாய்ந்து வரும்வெள்ளம், மோத லாலே மணற்கரை இடிந்து வீழும்! மருங்கினில் இருந்த ஆலும் மல்லாந்து வீழும் ஆற்றில்! பருந்து, மேற் பறக்கும்! நீரில், பட்டாவைச் சுழற்றும் வாளை! 5 வெள்ளத்தின் வரவறிதல் கரையோரப் புலத்தில் மேயும் காலிகள் கடமை எண்ணும்! தரையினிற் காதை ஊன்றிச் சரிசரி புதுவெள் ளத்தின் திரைமோதும் ஒலிதான் என்று சிறுவர்கள் செங்கை காட்டிப் பெரியோரைக் கூவு கின்றார்; பேச்சொன்றே ஒலியோ நீளம்! 6 வெள்ளத்தின் ஒளி! அழகு! இருகரை ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச் சரிவுகள்! நுரையோ முத்துத் தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி மரகத வீச்சு! நீரில் மிதக்கின்ற மரங்க ளின்மேல் ஒருநாரை வெண்டா ழம்பூ! உவப்புக்கோ உவமை இல்லை. 6 வெள்ளம் எனும் படைக்கு மரங்களின் வாழ்த்து ஒரே வகை ஆடை பூண்ட பெரும்படை, ஒழுங்காய் நின்று சரேலெனப் பகைமேற் பாயும் தன்மைபோல் ஆற்று வெள்ளம், இராவெலாம் நடத்தல் கண்ட இருகரை மரங்கள், தோல்வி வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி! 6 உழவர் முயற்சி ஆற்றுவெள் ளத்தைக் காணச் சிற்றூரார் அங்கு வந்தார்! போற்றினார் புதுவெள் ளத்தைப்! புகன்றனர் வாழ்த்து ரைகள்! காற்றாகப் பறந்து சென்று கழனிகள் மடைதி றந்து மாற்றினார் வாய்க்கால்! மற்றும் வடிகாலை மறித்தார் நன்றே. 6 ஆற்று நடை நோய்தீர்ந்தார்; வறுமை தீர்ந்தார், நூற்றுக்கு நூறு பேரும்! ஒய்வின்றிக் கலப்பை தூக்கி உழவுப்பண் பாட லானார்! சேய்களின் மகிழ்ச்சி கண்டு சிலம்படி குலுங்க ஆற்றுத் தாய்நடக் கின்றாள் வையம் தழைகவே தழைக என்றே! 6 - அழகின் சிரிப்பு, ப.18, 1944 14. செந்தாமரை நீர், இலை, நீர்த் துளிகள் கண்ணாடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணாத ஒளிமுத் துக்கள் இறைந்தது போல்கு ளத்துத் தண்ணீரி லேப டர்ந்த தாமரை இலையும், மேலே தெண்ணீரின் துளியும் கண்டேன் உவப்பொடு வீடு சேர்ந்தேன். 1 தாமரையின் சிற்றரும்பு சிலநாட்கள் சென்ற பின்னர்க் குளக்கரை சென்றேன்! பச்சை இலைத்தட்டில் சிந்தும் பால்போல் எழில்நீரும், கரிய பாம்பின் தலைகள்போல் நிமிர்ந்தி ருந்த தாமரைச் சிற்ற ரும்பும் இலகுதல் காணப் பெற்றேன்; காட்சியின் இன்பம் பெற்றேன். 2 முதிர் அரும்பு மணிஇருள் அடர்ந்த வீட்டில் மங்கைமார், செங்கை ஏந்தி, அணிசெய்த நல்வி ளக்கின் அழகிய பிழம்பு போலத் தணிஇலைப் பரப்பி னிற்செந் தாமரைச் செவ்வ ரும்பு பிணிபோக்கி என்வி ழிக்குப் படைத்தது பெருவி ருந்தே! 3 அவிழ் அரும்பு விரிக்கின்ற பச்சைப் பட்டை மேனிபோர்த் துக்,கி டந்து வரிக்கின்ற பெண்கள், வான வீதியைப் பார்த்துப் பார்த்துச் சிரிக்கின்ற இதழ்க்கூட் டத்தால் மாணிக்கம் சிதறு தல்போல் இருக்கும்அப் பச்சி லைமேல் அரும்புகள் இதழ்வி ரிக்கும்! 4 மலர்களின் தோற்றம் விண்போன்ற வெள்ளக் காடு, மேலெலாம் ஒளிசெய் கின்ற வெண்முத்தங் கள்கொ ழிக்கும் பச்சிலைக் காடு, மேலே மண்ணுளார் மகிழும் செந்தா மரைமலர்க் காடு, நெஞ்சைக் கண்ணுளே வைக்கச் சொல்லிக் கவிதையைக் காணச் சொல்லும். 5 ஒப்பு வாய்போலச் சிலம லர்கள்! வா என்றே அழைக்கும் கைபோல் தூயவை சிலம லர்கள்! தோய்ந்துநீ ராடி மேலே பாயும்நன் முகம்போல் நெஞ்சைப் பறிப்பன சிலம லர்கள்! ஆயிரம் பெண்கள் நீரில் ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்! 6 செவ்விதழ் ஓரிதழ் குழந்தை கன்னம்! ஓரிதழ் விழியை ஒக்கும்! ஓரிதழ் தன்ம ணாளன் உருவினைக் கண்டு கண்டு பூரிக்கும் உதடு! மற்றும் ஓரிதழ் பொல்லார் நெஞ்சம்! வாரித் தரச்சி வந்த உள்ளங்கை யாம்மற் றொன்று! 7 தேன் மூடிய வாய்தி றந்து உளமார முன்னா ளெல்லாம் தேடிய தமிழு ணர்வைத் தின்னவே பலர்க்கும் தந்தும் வாடாத புலவர் போலே அரும்பிப்பின் மலர்ந்த பூக்கள் வாடாது தேன்கொ டுக்கும் வண்டுகள் அதைக்கு டிக்கும்! 8 வண்டுகள் தேனுண்ண, வண்டு பாடும்! தேனுண்ட பின், ஓர் கூட்டம் தானோர்பால் தாவும்! வேறோர் தனிக்கூட்டம் களியாட் டத்தை வானிடை நடத்தும்! ஓன்று மலர்என்னும் கட்டி லுண்டு நானுண்டென் றுறக்கம் கொள்ளும் நறும்பொடி இறைக்கும் ஒன்று. 9 பாட்டு, மணம் என்னைநான் இழந்தேன்; இன்ப உலகத்தில் வாழ லுற்றேன்; பொன்துகள், தென்றற் காற்று, புதுமணம், வண்டின் பாட்டு, பன்னூறு செழுமா ணிக்கப் பறவைபோல் கூட்டப் பூக்கள் இன்றெலாம் பார்த்திட் டாலும் தெவிட்டாத எழிலின் கூத்தே! 10 - அழகின் சிரிப்பு, ப.22, 1944 15. ஞாயிறு எழுந்த ஞாயிறு xË¥bghUŸ Ú!நீ ஞாலத் தொருபொருள், வாராய்! நெஞ்சக் களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற்பொரு ளே,ஆழ் நீரில் வெளிப்பட எழுந்தாய்; ஓகோ விண்ணெலாம் பொன்னை அள்ளித் தெளிக்கின்றாய்; கடலிற் பொங்கும் திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய். 1 வையத்தின் உணர்ச்சி எழுந்தன உயிரின் கூட்டம்! இருள்இல்லை அயர்வும் இல்லை! எழுந்தனை ஒளியே, எங்கும்! எங்கணும் உணர்ச்சி வெள்ளம் பொழிந்தநின் கதிர்ஒவ் வொன்றும் பொலிந்தேறி, மேற்றி சைமேல் கொழுந்தோடக் கோடி வண்ணம் கொழித்தது சுடர்க்கோ மானே! 2 காட்சி ஞாயிறு பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும் சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும் மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே! 3 ஒளிசெய்யும் பரிதி கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்! நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி! 4 கதிரும் இருளும் என்னகாண் புதுமை! தங்க இழையுடன் நூலை வைத்துப் பின்னிய ஆடை, காற்றில் பெயர்ந்தாடி அசைவ தைப்போல் நன்னீரில் கதிர்க லந்து நளிர்கடல் நெளிதல் கண்டேன்; உன்கதிர், இருட்ப லாவை உரித்தொளிச் சுளையூட் டிற்றே! 5 கறை போக்கி எழில் செய்தாய் இலகிய பனியின் முத்தை இளங்கதிர்க் கையால் உண்பாய்! அலைஅலை யாய்உ மிழ்வாய் அழகினை, ஒளியை யெல்லாம்! இலைதொறும் ஈரம் காத்த கறைபோக்கி இயல்பு காப்பாய்! மலையெலாம் சோலை எல்லாம் நனைக்கின்றாய் சுடர்ப்பொன் நீரால்! 6 எங்கும் அது தாமரை அரும்பி லெல்லாம் சரித்தனை இதழ்கள் தம்மை! மாமரத் தளிர்அ சைவில் மணிப்பச்சை குலுங்கச் செய்தாய்! ஆமாமாம் சேவற் கொண்டை அதிலும்உன் அழகே காண்பேன்! நீமன்னன்; ஒளியின் செல்வன்; நிறைமக்கள் வாழ்த்தும் வெய்யோன். 7 பரிதியும் செயலும் இறகினில் உயிரை வைத்தாய் எழுந்தன புட்கள்! மாதர் அறஞ்செய்யும் திறஞ்செய் திட்டாய்! ஆடவர் குன்றத் தோளில் உறைகின்றாய்! கன்று காலி உயிர்பெறச் செய்கின் றாய்நீ! மறத்தமிழ் மக்கள் வாழ்வில் இன்பத்தை வைத்தாய் நீயே. 8 பரிதி இன்றேல் நிலாவுக்கு ஒளியில்லை வாழும்நின் ஒளிதான் இன்றேல் வானிலே உடுக்கள் எல்லாம் தாழங்காய், கடுக்காய் கள்போல் தழைவின்றி அழகி ழக்கும்! பாழ்என்ற நிலையில் வாழ்வைப் பயிரிட்ட உழவன் நீ;பைங் கூழுக்கு வேரும் நீயே குளிருக்குப் போர்வை நீயே! 9 ஞாயிறு வாழி விழிப்பார்வை தடுத்து வீழ விரிகின்ற ஒளியே, சோர்வை ஒழிக்கின்ற உணர்வே, வையத் திருளினை ஒதுக்கித் தள்ளித் தழற்பெரு வெள்ளந் தன்னைச் சாய்ப்போயே, வெயிலில் ஆடித் தழைக்கின்றோம் புதுஞா யிற்றுத் தனிச்சொத்தே வாழி நன்றே. 10 - அழகின் சிரிப்பு, ப.26, 1944 16. வான் விண்மீன் நிறைந்த வான் மண்மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர்செல் வராம்இ தைத்,தன் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டந்திக் குப்பின் விண்மீனாய்க் கொப்ப ளித்த விரிவானம் பாராய் தம்பி! 1 நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப் பூனை பாற்புகை முகிலைச் சீய்த்துப் பளிச்சென்று திங்கட் சேவல் நாற்றிக்கும் குரல்எ டுத்து நல்லொளி பாய்ச்சிப், பெட்டை ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப் பொடிவிண்மீன் குஞ்சு கட்கும் மேற்பார்வை செலுத்திப், பூனை இருட்டையும் வெளுத்துத் தள்ளும். 2 பகல் வானில் முகிலோவியங்கள் பகல்வானிற் கதிரின் வீச்சுப் பரந்தது! முகிலி னங்கள் வகைவகை ஓவி யங்கள் வழங்கின: யானைக் கூட்டம்! தகதக எனும்மா ணிக்க அருவிகள்! நீலச் சாரல்! புகைக்கூட்டம்! எரிம லைகள் பொன்வேங்கை! மணிப்பூஞ் சோலை! 3 இருண்ட வானும் ஏற்றிய விளக்கும் கிழக்குப்பெண் விட்டெ றிந்த கிளிச்சிறைப் பரிதிப் பந்து, செழித்தமேற் றிசைவா னத்தின் செம்பருத் திப்பூங் காவில் விழுந்தது! விரிவி ளக்கின் கொழுந்தினால் மங்கை மார்கள் இழந்ததைத் தேடிக் கொள்ள இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள்! 4 காலை வானம் கோழிகூ விற்று! வையம் கொண்டதோர் இருளைத், தங்க மேழியால் உழுதான் அந்த விரிகதிர்ச் செல்வன்; பின்னர் ஆழிசூழ் உலகின் காட்சி அரும்பிற்று! முனைய விழ்ந்து வாழிய வைய மென்று மலர்ந்தது காலை வானம்! 5 வானவில் அதிர்ந்தது காற்று! நீளப் பூங்கிளை அசைந்தா டிற்று! முதிர்ந்திட்ட முகிலின் சேறு மூடிற்று! சேற்றுக் குள்ளே புதைந்திட்ட கதிரிற் பூத்த புதுப்புது வண்ண மெல்லாம் ததும்பிற்றே வான வில்லாய்ப்! பாரடி அழகின் தன்மை! 6 மழைவான் gfšth‹nkš fUK »šfŸ gilvL¤ jd!வில் லோடு துகளற்ற வாளும், வேலும் சுழன்றன மின்னி மின்னி! நகைத்தது கலக லென்று நல்ல கார்முகில்தான்! வெற்றி அகத்துற்ற இயற்கைப் பெண்ணாள் இறைத்தாள்பூ மழையை அள்ளி! 7 எரிகின்ற வானம் தேன்செய்யும் மலரும் தீயும்! செந்தீயும் நீறாய்ப் போகும்! கான்,செய்,ஊர், மலை, கா, ஆறு கடலெலாம் எரிவ தோடு தான்செய்த தணலில் தானும் எரிகின்றான் பகலோன்! அங்கு வான்செய்த வெப்பத் தால்இவ் வையத்தின் அடியும் வேகும்! 8 உச்சிப் போதுக்கும் மாலைப் போதுக்கும் இடை நேரம் உச்சியில் இருந்த வெய்யோன், ஓரடி மேற்கில் வைத்தான், நொச்சியின் நிழல்கி ழக்கில் சாய்ந்தது! நுரையும், நீரும், பச்சையும், பழுப்பு மான பலவண்ண முகில்கள் கூடிப் பொய்ச்சான்று போல, யானை புகலும்;பின் மலையைக் காட்டும். 9 வான் தந்த பாடம் எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே; இத்தரை, கொய்யாப் பிஞ்சு; நீஅதில் சிற்றெ றும்பே அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே! 10 - அழகின் சிரிப்பு, ப.30, 1944 17. ஆல் அடி - கிளை, காய், இலை, நிழல் ஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் பெரிய யானை! போயின மிலார்கள் வானில்! பொலிந்தன பவளக் காய்கள்! காயினை நிழலாற் காக்கும் இலையெலாம், உள்ளங் கைகள்! ஆயஊர் அடங்கும் நீழல், ஆலிடைக் காண லாகும்! 1 விழுதும் வேரும் தூலம்போல் வளர்கி ளைக்கு விழுதுகள் தூண்கள்! தூண்கள் ஆலினைச் சுற்றி நிற்கும் அருந்திறல் மறவர்! வேரோ வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிய பாம்பின் கூட்டம்! நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல்! 2 பச்சிலை, இளவிழுது மேற்கிளை யின்வீழ் தெல்லாம் மின்னிடும் பொன்னி ழைகள்! வேற்கோல்போல் சிலவீழ் துண்டாம்! அருவியின் வீழ்ச்சி போலத் தோற்றஞ்செய் வனவும் உண்டு! சுடர்வான்கீழ்ப் பச்சி லைவான் ஏற்பட்ட தென்றால், வீழ்தோ எழுந்தங்கக் கதிர்கள் என்பேன். 3 அடிமரச் சார்பு அடிமரப் பதிவி லெல்லாம் அடங்கிடும் காட்டுப் பூனை! இடையிடை ஏற்பட் டுள்ள பெருங்கிளைப் பொந்தி லெல்லாம் படைப்பாம்பின் பெருமூச் சுக்கள்! பளிங்குக்கண் ஆந்தைச் சீறல்! தடதடப் பறவைக் கூட்டம்! தரையெலாம் சருகின் மெத்தை! 4 வௌவால், பழக்குலை, கோது, குரங்கு, பருந்து தொலைவுள்ள கிளையில் வௌவால் தொங்கிடும்; வாய்க்குள் கொண்டு குலைப்பழம், கிளை, கொ டுக்கும்; கோதுகள் மழையாய்ச் சிந்தும்! தலைக்கொழுப் புக்கு ரங்கு சாட்டைக்கோல் ஒடிக்கும்; பின்னால் இலைச்சந்தில் குரங்கின் வாலை எலியென்று பருந்தி ழுக்கும்! 5 கிளிகள் கொத்தான பழக்கு லைக்குக் குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை தொத்துங்கால் தவறி, அங்கே துடிக்குந்தன் பெட்டை யண்டைப் பொத்தென்று வீழும்; அன்பிற் பிணைந்திடும்; அருகில் உள்ள தித்திக்கும் பழங்கள் அக்கால் ஆணுக்குக் கசப்பைச் செய்யும்! 6 சிட்டுக்கள் வானத்துக் குமிழ்ப றந்து வையத்தில் வீழ்வ தைப்போல் தானம்பா டும்சிட் டுக்கள் தழைகிளை மீது வீழ்ந்து, பூனைக்கண் போல்ஒ ளிக்கும்; புழுக்களைத் தின்று தின்று தேனிறை முல்லைக் காம்பின் சிற்றடி தத்திப் பாடும். 7 குரங்கின் அச்சம் கிளையினிற் பாம்பு தொங்க, விழுதென்று, குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல் கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும். 8 பறவை யூஞ்சல் ஆலினைக் காற்று மோதும்; அசைவேனோ எனச்சி ரித்துக் கோலத்துக் கிளைகு லுங்க அடிமரக் குன்று நிற்கும்! தாலாட்ட ஆளில் லாமல் தவித்திட்ட கிளைப்புள் ளெல்லாம் கால்வைத்த கிளைகள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும்! 9 குயில் விருந்து மழைமுகில் மின்னுக் கஞ்சி மாங்குயில் பறந்து வந்து வழங்குக குடிசை என்று வாய்விட்டு வண்ணம் பாடக் கொழுங்கிளைத் தோள்உ யர்த்திக் குளிரிலைக் கைய மர்த்திப் பழந்தந்து களிப்பாக் கும்பின் பசுந்துளிர் வழங்கும் ஆலே. 10 - அழகின் சிரிப்பு, ப.34, 1944 18. புறாக்கள் கூட்டின் திறப்பு, புறாக்களின் குதிப்பு வீட்டுக்கு வெளிப்பு றத்தில் வேலன்வந் தேபு றாவின் கூட்டினைத் திறக்கு முன்பு குடுகுடு எனக்கு தித்தல் கேட்டது காதில்! கூட்டைத் திறந்ததும் கீழ்ச்ச ரிந்த கோட்டுப்பூப் போற்பு றாக்கள் குதித்தன கூட்டி னின்றே! 1 புறாக்களின் பன்னிறம் இருநிலா இணைந்து பாடி இரையுண்ணும்! செவ்வி தழ்கள் விரியாத தாம ரைபோல் ஓர்இணை! மெல்லி யர்கள் கருங்கொண்டை! கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து! மேலும், ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்! 2 புறாக்களிடம் ஒத்துண்ணல் உண்டு இட்டதோர் தாம ரைப்பூ இதழ்விரிந் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் வெட்டில்லை; குத்து மில்லை; வேறுவே றிருந்த ருந்தும் கட்டில்லை; கீழ்மேல் என்னும் கண்மூடி வழக்க மில்லை. 3 நடை அழகு அகன்றவாய்ச் சட்டி ஒன்றின் விளிம்பினில் அடிபொ ருந்தப், புகும்தலை; நீர்வாய் மொண்டு நிமிர்ந்திடும்; பொன்இ மைகள் நகும்; மணி விழிநாற் பாங்கும் நாட்டிடும்; கீழ்இ றங்கி மகிழ்ச்சியாய் உலவி, வைய மன்னர்க்கு நடைகற் பிக்கும்! 4 புறாவின் ஒழுக்கம் ஒருபெட்டை தன்ஆண் அன்றி வேறொன்றுக் குடன்ப டாதாம்; ஒருபெட்டை மத்தாப் பைப்போல் ஒளிபுரிந் திடநின் றாலும் திரும்பியும் பார்ப்ப தில்லை வேறொரு சேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட் டால்தான் ஒன்றுமற் றொன்றை நாடும்! 5 புறாக்களுக்கு மனிதர் பாடம் அவள்தனி; ஒப்ப வில்லை; அவன், அவள் வருந்தும் வண்ணம் தவறிழைக் கின்றான் இந்தத் தகாச்செயல் தன்னை, அன்பு தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒருசில தறுத லைகள், கவலைசேர் மக்க ளின்பால் கற்றுக்கொண் டிருத்தல் கூடும்! 6 புறாக்கள் காதல் தலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச்சுற்றும் ஆண்பு றாவைக், கொலைபாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற்சென் றேதி ரும்பித் தலைநாட்டித், தரையைக் காட்டி, இங்குவா எனஅ ழைக்கும்; மலைகாட்டி அழைத்தா லுந்தான் மறுப்பாரோ மையல் உற்றார்? 7 தாயன்பு தந்தையன்பு தாய்இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்; தாய்அருந் தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நி ரப்பும்; ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! 8 மயிற்புறா ஆடல் மயிற்புறா, படம்வி ரிக்கும்; மார்பினை முன்உ யர்த்தும்; நயப்புறு கழுத்தை வாங்கி நன்றாக நிமிர்ந்து, காலைப் பயிற்றிடும் ஆடல் நூலின் படி,தூக்கி அடைவு போடும்; மயிற்புறா வெண்சங் கொக்கும்; வால், தந்த விசிறி ஒக்கும்! 9 அடைபடும் புறாக்கள் கூட்டமாய்ப் பறந்து போகும், சுழற்றிய கூர்வாள் போலே! கூட்டினில் அடையும் வந்தே கொத்தடி மைகள் போலே! கூட்டினை வேலன் வந்து சாத்தினான், குழைத்து வண்ணம் தீட்டிய ஓவி யத்தைத் திரையிட்டு மறைத்தல் போலே! 10 - அழகின் சிரிப்பு, ப.38, 1944 19. கிளி மூக்கு, கண், வால், பசுமை இலவின்*காய் உடலும் செக்கச் செவேலென இருக்கும் மூக்கும், இலகிடு மணல்தக் காளி எழில்ஒளிச் செங்காய்க் கண்ணும், நிலைஒளி தழுவும் மாவின் நெட்டிலை வாலும், கொண்டாய் பலர்புகழ் கின்ற பச்சைப் பசுங்கிளி வாராய்! வாராய்! 1 கழுத்து வரி, சொக்குப் பச்சை நீலவான் தன்னைச் சுற்றும், நெடிதான வான வில்லைப் போலநின் கழுத்தில் ஓடும் பொன்வரி மின்வி ரிக்கும்! ஆல்,அல ரிக்கொ ழுந்தில் அல்லியின் இலையில் உன்றன் மேலுள சொக்குப் பச்சை மேனிபோல் சிறிது மில்லை! 2 அழகுச் சரக்கு கொள்ளாத பொருள்க ளோடும், அழகினிற் சிறிது கூட்டிக் கொள்ளவே செயும்இ யற்கை, தான்கொண்ட கொள்கை மீறித் தன்னரும் கையி ருப்பாம் அழகெனும் தலைச்ச ரக்கைக் கிள்ளிவைத் திட்ட கிள்ளாய் கிட்டவா சும்மா வாநீ! 3 *K‹ பதிப்புகளில் போதும் எனும் பிழை வடிவம் இடம்பெற்றுள்ளது. சொன்னதைச் சொல்லும் இளித்தவா யர்கள், மற்றும் ஏமாற்றுக் காரர் கூடி விளைத்திடும் தொல்லை வாழ்வில், மேலோடு நடக்க எண்ணி உளப்பாங்க றிந்து மக்கள் உரைத்ததை உரைத்த வண்ணம் கிளத்திடும் கிளியே என்சொல் கேட்டுப்போ பறந்து வாராய்! 4 ஏற்றிய விளக்கு கிளிச்செல்வ மேநீ அங்குக் கிடந்திட்ட பச்சி லைமேல் பளிச்சென எரியும் கோவைப் பழத்தில்உன் மூக்கை ஊன்றி விளக்கினில் விளக்கை ஏற்றிச் செல்லல்போல் சென்றாய்! ஆலின் கிளைக்கிடை இலையும், காயும் கிடத்தல்போல் அதில்கி டந்தாய்! 5 நிறைந்த ஆட்சி தென்னைதான் ஊஞ்சல்! விண்தான் திருவுலா வீதி! வாரித் தின்னத்தான் பழம்,கொட் டைகள்! திருநாடு வையம் போலும்! புன்னைக்காய்த் தலையில் செம்மைப் புதுமுடி புனைந்தி ருப்பாய்! உன்னைத்தான் காணு கின்றேன் கிள்ளாய்நீ ஆட்சி உள்ளாய்! 6 இருவகைப் பேச்சு காட்டினில் திரியும் போது கிரீச்சென்று கழறு கின்றாய்; கூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்! வீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணீர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்! 7 மக்களை மகிழ்விக்கும் கொஞ்சுவாய் அழகு தன்னைக் கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு வஞ்சியர் தமையும், மற்ற வறியவர் தமையும், ஒக்க நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம் நிரப்புவாய், அவர்அ ளிக்கும் நைஞ்சநற் பழத்தை உண்பாய்; கூழேனும் நன்றே என்பாய்! 8 கிளிக்குள்ள பெருமை உனக்கிந்த உலகில் உள்ள பெருமையை உணர்த்து கின்றேன்; தினைக்கொல்லைக் குறவன் உன்னைச் சிறைகொண்டு நாட்டில் வந்து, மனைதொறும், சென்றே உன்றன் அழகினை எதிரில் வைப்பான்; தனக்கான பொருளைச் செல்வர் தமிழ்க்கீதல் போல ஈவார்! 9 ஓவியர்க் குதவி பாவலர் எல்லாம் நாளும் பணத்துக்கும், பெருமைக் கும்போய்க் காவியம் செய்வார் நாளும் கண், கைகள் கருத்தும் நோக! ஓவியப் புலவ ரெல்லாம் உனைப்போல எழுதி விட்டால் தேவைக்குப் பணம்கி டைக்கும் சீர்த்தியும் கிடைக்கும் நன்றே! 10 - அழகின் சிரிப்பு, ப.42, 1944 20. இருள் வாடிய உயிர்களை அணைப்பாய் ஆடிஓ டிப்போர் இட்டும், அருந்துதல் அருந்தி யும், பின் வாடியே இருக்கும் வைய மக்களை, உயிர்க்கூட் டத்தை, ஓடியே அணைப்பாய்! உன்றன் மணிநீலச் சிறக ளாவ மூடுவாய் இருளே, அன்பின் முழக்கமே, உனக்கு நன்றி! 1 இருளின் பகலாடை, இரவாடை விண்முதல் மண்வ ரைக்கும் வியக்கும்உன் மேனி தன்னைக் கண்ணிலே காண்பேன்; நீயோ அடிக்கடி உடையில் மாற்றம் பண்ணுவாய் இருளே, உன்றன் பகல்உடை தங்கச் சேலை! வெண்பட்டில் இராச்சே லைமேல் வேலைப்பா டென்ன சொல்வேன்! 2 இருள், நீர்நிலை, கதிர், சுழல்வண்டு எங்குச்செல் கின்றாய் என்று பரிதியை ஒருநாள் கேட்டேன்; கங்குலை ஒழிக்க என்றான். கடிதுசெல் தம்பி என்றேன். அங்குன்னைத் தொடர்ந்தான்; நீயோ! அகல்வதால் நினைத்தான்; என்னே! எங்கணும் நிறைந்த நீர்நீ; அதில், கதிர் சுழல்வண் டன்றோ! 3 நீ முத்துடை போர்த்து நின்றாய் கள்ளரை வெளிப்ப டுத்தும் இருட்பெண்ணே, கதைஒன் றைக்கேள்; பிள்ளைகள் தூங்கி னார்கள்; பெண்டாட்டி அருகில் நின்றாள்; உள்ளமோ எதிலும் ஒட்டா திருக்கையில், நிமிர்ந்தேன், நீயோ வெள்ளைமுத் துக்கள் தைத்த போர்வையை மேனி போர்த்தே. 4 கொண்டையில் நிலாக் கொண்டைப் பூ மண்முதல் விண்வ ரைக்கும் வளர்ந்தஉன் உடல்தி ருப்பிக் கண்மலர் திருப்பி நின்றாய்! பின்புறம் கரிய கூந்தற் கொண்டையில் ஒளியைக் காட்டும் குளிர்நிலா வயிர வில்லை கண்டேன்;என் கலங்கும் நெஞ்சம் மனைவியின் திருமுன் செல்லும்! 5 பிறப்பும் இறப்பும் வானொடு நீபி றந்தாய்! மறுபடி, கடலில் தோன்றும் மீன்என உயிர்உ டல்கள் விளைந்தன! எவ்வி டத்தும் நீநிறை வுற்றாய்! எங்கும், பொருளுண்டேல் நிழலுண் டன்றோ! பானையில் இருப்பாய்; பாலின் அணுத்தோறும் பரந்தி ருப்பாய்! 6 உருப்படியின் அடையாளத்தை இருள் அறிவிக்கும் உயர்ந்துள்ள அழகு மூக்கின் இருபுறம் உறைவாய்; மங்கை கயல்விழிக் கடையில் உள்ளாய்; காதினில் நடுப்பு றத்தும், அயலிலும், சூழ்வாய்; பெண்ணின் முகத்தினில் அடையா ளத்தை இயக்குவாய் இருளே, உன்சீர், ஓவியர் அறிந்தி ருப்பார்! 7 இருளே அழகின் வேர் அடுக்கிதழ்த் தாம ரைப்பூ இதழ்தோறும் அடிப்பு றத்தில் படுத்திருப் பாய்நீ! பூவின் பசைஇதழ் ஒவ்வொன் றுக்கும் தடுப்புக்காட் டுகின்றாய்! இன்றேல், தாமரை அழகு சாகும்! அடுத்திடும் இருளே, எங்கும் அனைத்துள்ளும் அழகு நீயே! 8 அறியாமைதான் இருள்; ஆனால் அதுதான் அறிவைச் செய்யும் அறிவென்றால் ஒளியாம். ஆம்ஆம்! அறியாமை இருளாம். ஆம்ஆம்! அறியாமை அறிவைச் செய்யும்; அறியாமை அறிவால் உண்டோ? சிறுவனைத் தீண்டிற் றுத்தேள்; நள்ளிருள்; விளக்குத் தேவை; நிறைவேற்ற நெருப்புக் குச்சி தேடினார்; கிடைக்க வில்லை; 9 இருளின் பெருமை இயம்ப அரிது பெட்டியில் இருப்ப தாகப் பேசினார்; சாவி இல்லை; எட்டுப்பேர் இதற்குள் தேளால் கொட்டப்பட் டுத்து டித்தார்; கட்டாயம் தூய்மை வேண்டும் என்னுமோர் அறிவு தன்னை இட்டளித் திட்ட நல்ல இருளேஉன் பெருமை என்னே! 10 - அழகின் சிரிப்பு, ப.46, 1944 21. சிற்றூர் நெடுஞ்சாலை எனைஅ ழைத்து நேராகச் சென்று, பின்னர், இடையிலோர் முடக்கைக் காட்டி ஏகிற்று! நானோ ஒற்றை அடிப்பாதை கண்டேன்; அங்கோர் ஆலின்கீழ்க் காலி மேய்க்கும் இடைப்பையன் இருந்தான்; என்னை எந்தஊர் என்று கேட்டான். 1 புதுச்சேரி என்று சொல்லிப் போம்வழி கேட்டேன், பையன் இதைத்தாண்டி அதோஇ ருக்கும் பழஞ்சேரி இடத்தில் தள்ளி ஒதிச்சாலை யோடு சென்றே ஓணான்பச் சேரி வாய்க்கால் குதிச்சேறிப் போனால் ஊர்தான் கூப்பிடு தொலைவே என்றான்! 2 பனித்துளி மணிகள் காய்க்கும் பசும்புற்கள் அடர்பு லத்தில் தனித்தனி அகலா வண்ணம் சாய்த்திட்ட பசுக்கள் எல்லாம், தனக்கொன்று பிறர்க்கொன் றென்னாத் தன்மையால் புல்லை மேயும்! இனித்திடப் பாடும் பையன் தாளம்போல் இச்இச் சென்றான். 3 மந்தையின் வெளிஅ டுத்து வரிசையாய் இருபக் கத்தில், கொந்திடும் அணிலின் வால்போல் குலைமுத்துச் சோளக் கொல்லை, சந்திலாச் சதுரக் கள்ளி, வேலிக்குள் தழைத்தி ருக்கும்; வெந்தயச் செடிக ளின்மேல் மின்னிடும் தங்கப் பூக்கள்! 4 முற்றிய குலைப்ப ழத்தை முதுகினிற் சுமந்து நின்று வற்றிய மக்காள் வாரீர் என்றது வாழைத் தோட்டம்; சிற்றோடு கையில் €Vªâ ஒருகாணிப் பருத்தி தேற்ற ஒற்றைஆள் நீர்இ றைத்தான், உழைப்பொன்றே செல்வம் என்பான். 5 குட்டையில் தவளை ஒன்று குதித்தது, பாம்பின் வாயிற் பட்டதால் அதுவி €G§»¡ கரையினிற் புரளப் பார்த்த பெட்டைப்ப ருந்து தூக்கிப் பெருங்கிளை தன்னிற் குந்தச் சிட்டுகள் ஆலி னின்று திடுக்கிட்டு மேற்ப றக்கும்! 6 இளையவள் முதிய வள்போல் இருந்தனள் ஒருத்தி; என்னை வளைத்தனள், ‘கோழி முட்டை வாங்கவா வந்தீர்? என்றாள். விளையாட்டாய்ச் சேரி முட்டை வேகாதே! என்றேன். கேட்டுப் புளித்தனள்; எனினும் என்சொல், பொய்என்று மறுக்க வில்லை! 7 என்றேனும் முட்டை உண்ட துண்டோநீ என்று கேட்டேன். ஒன்றேனும் உண்ட தில்லை; ஒருநாளும் உண்ட தில்லை; தின்றேனேல் புளித்த கூழில் சேர்த்திடும் உப்புக் கான ஒன்றரைக் காசுக் கென்றன் உயிர்விற்றால் ஒப்பார் என்றாள். 8 சேரிக்குப் பெரிது சிற்றூர், தென்னைமா சூழ்ந்தி ருக்கும்; தேர்ஒன்று, கோவில் ஒன்று சேர்ந்தஓர் வீதி, ஓட்டுக் கூரைகள், கூண்டு வண்டி கொட்டில்சேர் வீதி ஐந்தே; ஊர்இது; நாட்டார்க் கெல்லாம் உயிர்தரும் உணவின் ஊற்று. 9 நன்செயைச் சுற்றும் வாய்க்கால் நல்லாற்று நீரை வாங்கிப் பொன்செயும் உழவு செய்வோன், பொழுதெலாம் உழவு செய்தேன் என்செய்தாய் என்ற பாட்டை எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி முன்செய்த கூழுக் கத்தான் முடக்கத்தான் துவையல் என்றாள். 10 - அழகின் சிரிப்பு, ப.50, 1944 22. பட்டணம் எத்தனை வகைத்தெ ருக்கள்! என்னென்ன வகைஇல் லங்கள்! ஒத்திடும் சுண்ண வேலை, உயர்மர வேலை செய்யும் அத்திறம் வேறே; மற்றும் அவரவர்க் கமைந்த தான கைத்திறம் வேறே என்று காட்டின கட்ட டங்கள். 1 இயற்கையின் உயிர்கட் குள்ளே மனிதன்தான் எவற்றி னுக்கும் உயர்ச்சியும், தான்அ றிந்த உண்மையை உலகுக் காக்கும் முயற்சியும் இடைவி டாமல் முன்னேற்றச் செயலைச் செய்யும் பயிற்சியும் உடையான் என்று பட்டணம் எடுத்துக் காட்டும். 2 நடுவினிற் புகையின் வண்டி ஓடிடும் நடைப்பா தைக்குள் இடைவிடா தோடும் தம்மில் இயங்கிடும் ஊர்தி யெல்லாம் கடலோரம் கப்பல் வந்து கணக்கற்ற பொருள்கு விக்கும் படைமக்கள் சிட்டுப் போலப் பறப்பார்கள் பயனை நாடி! 3 வாணிகப் பண்ட சாலை வைத்துள்ள பொருள்கள் தாமும், காண்எனக் காட்டி விற்கும் அங்காடிப் பொருள்கள் தாமும் வீணாளைப் பயன்ப டுத்தும் வியன்காட்சிப் பொருள்கள் தாமும், காணுங்கால் மனிதர் பெற்ற கலைத்திறம் காணச் செய்யும். 4 உள்ளத்தை ஏட்டால் தீட்டி உலகத்தில் புதுமை சேர்க்கும் கொள்கைசேர் நிலைய மெல்லாம் அறிஞரின் கூட்டம் கண்டேன்; கொள்கைஒன் றிருக்க வேறு கொள்கைக்கே அடிமை யாகும் வெள்ளுடை எழுத்தா ளர்கள் வெறுப்புறும் செயலும் கண்டேன். 5 உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பும் உயர்வழக் கறிஞர் தம்மை விண்வரை வளர்ந்த நீதி மன்றத்தில் விளங்கக் கண்டேன்; புண்பட்ட பெருமக் கட்குப் பொதுநலம் தேடு கின்ற திண்மைசேர் மன்றிற் சென்றேன், அவரையே அங்கும் கண்டேன். 6 மாலைப்போ தென்னும் அன்னை, உழைப்பினால் மடிவார் தம்மைச் சாலிலே சாரா யத்தால் தாலாட்டும் கடையின் உள்ளே காலத்தைக் களியாற் போக்கக் கருதுவோர் இருக்கக் கண்டேன், மாலையில் கோழி முட்டை மரக்கறி ஆதல் கண்டேன். 7 இயற்கையின் எழிலை யெல்லாம் சிற்றூரில் காண ஏலும்! செயற்கையின் அழகை யெல்லாம் பட்டணம் தெரியக் காட்டும்! முயற்சியும் முழுது ழைப்பும் சிற்றூரில் காணு கின்றேன்; பயிற்சியும் கலையு ணர்வும் பட்டணத் திற்பார்க் கின்றேன்! 8 வருநாளில் நாடு காக்க வாழ்ந்திடும் இளைஞர் கூட்டம், திருநாளின் கூட்ட மாகத் தெருஓரம் சுவடி யோடு, பெருநாளைப் பயன்நா ளாக்கும் பெரும்பெருங் கழகம் நோக்கி ஒருநாளும் தவறி டாமல் வரிசையாய் உவக்கச் செல்வார்! 9 கலையினில் வளர்ந்தும், நாட்டுக் கவிதையில் ஒளிமி குந்தும், நிலவிடும் நிலாமு கத்து நீலப்பூ விழிமங் கைமார் தலையாய கலைகள் ஆய்ந்து தம்வீடு போதல் கண்டேன் உலவிடு மடமைப் பேயின் உடம்பின்தோல் உரிதல் கண்டேன்! 10 - அழகின் சிரிப்பு, ப.54, 1944 தமிழ் இயற்கையாய் முகிழ்த்தது ... 23. அதிகாலை கொக்கோ கோகோ என இனிமையில் குரல் மிகுத்திடக் கூவல் - செவிக் குளிர்தரு அதிகாலை என்பதைக் குறித்திடும் மணிச் சேவல்! திக்கார்ந்திடும் இருள்விலகிடும் சிறு பறவைகள் கூவும் - நல்ல திரைக்கடல் மிசை எழுந்திடும் தினம் செழுங்கதிரொளி தூவும்! தக்கோர் கண்ணில், தெளியுளம் அதில் தகு புதுமைகள் உதிக்கும் - நல்ல தமிழ்க் கவிதைகள் உழுபவர் சொல்ல எருதுகள் சதி மிதிக்கும்! செக்காடுவார் திடு திகுகிறு கீச்சென வரும் சத்தம்! - நல்ல சேரியின்துணை கோரி அங்குள ஊர் முழுமையும் கத்தும்! கண்மா மலர் விரிந்திடும் பெண்கள் கரம் கதவுகள் திறக்கும் - மிகக் கருத்துடன் அவர் முன்றில் விளக்கக் காற்சிலம்பொலி பறக்கும்! உண்ணாதுண்டு துயில் கிடந்திடும் உயிர் நிகர்த்த குழந்தை - விரைந் தோடித் தனது பாடம் படிக்க உவகை கொண்டிடும் தந்தை! விண்ணேறிடும் பகலவன் கதிர்! விளங்குறும் திசை முகமே! - தகு வினை தொடங்குது கிடுகிடுவென விரிமனித சமுகமே! - முல்லைக்காடு, ப.7, 1948 24. அந்திப் போதின் கதி அந்தியும் மேற்கில் மறைந்தாள் - அவள் ஆடையெனும் கருவானம் எந்தத் திசையிலும் காற்றில் - பறந் தேறிடும் காட்சியும் கண்டீர்! சிந்திய முத்து வடந்தான் - ஒளி சேர்ந்திடு நட்சத்திரங்கள்! சிந்தையிற் கோபம் அடைந்தாள் - அந்தி சின்முகம் இங்குத் திருப்பாள். பாடும் கடற்பெரு வேந்தன் - தன் பங்கில் இருந்தன னேனும் நாடும் உளத்தினில் வேறு - தனி நங்கையை எண்ணிட லானான் ஏடு திருப்பிப் படித்தால் - அந்தி எப்படி ஒப்புவாள் கண்டீர்! ஆடி நடந்துவந் திட்டாள் - அதோ அந்தியின் நேர் சக்களத்தி! கன்னங் கறுத்த நற்கூந்தல் - அந்தி கட்டவிழ நடந்தாளே சென்னி புனைந்த கிரீடம் - மணி சிந்திட ஓடி விட்டாளே! கன்னியுளம் வெறுத்தாளே - கடற் காதலன் போக்கினை எண்ணி! என்ன உரைப்பினும் கேளாள் - அந்தி யின்முகம் கீழ்த்திசை காட்டாள். ஏடி ஒளிமுகத் தாளே - அந்தி! என்னை மறந்தனை என்றே கோடி முறைஅழைத் திட்டான் - உளம் கொந்தளிப் புற்றுப் புரண்டான். வாடிய அந்தி நடந்த - அந்த மார்க்கத்திலே வழிபோக்கிப் பீடழிந்தான் அந்த நேரம் - ஒரு பெண்வந்து பின்புறம் நின்றாள்! வந்திடும் சோதி நிலாவைக் - கடல் வாரி அணைத்தனன் கண்டீர். அந்தி பிரிந்தத னாலே - கடல் ஆகம் இருண்டது; பின்னை விந்தை நிலாவரப் பெற்றான் - கடல் மேனியெல்லாம் ஒளிபெற்றான்! சிந்தனையை அள்ளுது கண்டீர். அங்குச் சீதக்கடல் மதிச் சேர்க்கை! - முல்லைக்காடு, ப.9, 1948 25. சோலை அறுசீர் ஆசிரிய விருத்தம் விரைமலர்த் தேன்வண் டெல்லாம் வீணையை மிழற்ற, ஆங்கே மரங்கொத்திப் புட்கள் தாளம் வகைப்படுத் திடத்,த டாகக் கரையினில் அலைக்கரங்கள் கவின்மிரு தங்கம் ஆர்ப்பக் கருங்குயில் பாடத் தோகைக் கணிகைநின் றாடும் சோலை! வானவில் ஏந்தல் கண்டு மாந்தளிர் மெய்சி வக்கத் தேனுந்தும் மலர்க்கு லங்கள் செம்மக ரந்தம் தூவ ஆநந்தத் தென்றல் மெல்ல ஆலவட் டம்பி டிக்க வானவில் மறைய, மாலை மல்லிகை சிரிக்கும் சோலை! நெல்லியும் கமுகும் ஆலும் நெடுங்கிளைக் கரம்வ ளைத்துச் சொல்லுக இரண்டி லொன்று தொட்டிழுத் திடுவோம் என்ன நல்லமா துளம்ந டுங்கும்; நறுவிளா நடுங்கும்; கொய்யா வல்லிஎன் மார்போ கொய்யாக் கனியென வழுத்தும் சோலை! மாணிக்க அலகிற் கொஞ்சும் மரகதக் கிள்ளைக் கூட்டம் ஆணிப்பொன் னூச லாட அணிக்கிளை அசைக்கும் தென்றல்! தூணிட்ட பச்சைப் பந்தல் சூழ்கிளை மஞ்சத் தின்மேல் ஆணொடு பெண்சிட் டின்பம் மொண்டுமொண் டருந்தும் சோலை! பறிபடாப் பசும்புற் பூமி பட்டுத்தைத் திட்ட பெட்டி திறந்தஅப் பெட்டி யெங்கும் சேர்பனி வயிரக் குப்பை! அறைமணிக் குப்பை யெல்லாம் அருக்கனின் ஒளிப்பெரு க்கம்! பறிபடாப் புற்கள் கண்ணைப் பறித்திடச் சிறக்கும் சோலை! - முல்லைக்காடு, ப.12, 1948 26. கொடை வாழ்க! எக்காளக் குயில் வெண்பா நின்றசெங் காந்தள்பூ நேரில்கை ஏந்தநெடும் கொன்றை மலர்ப்பொன்னைக் கொட்டுகின்றாள் - என்றே அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணில் கொடைவாழ்க என்று குறித்து. - முல்லைக்காடு, ப.31, 1948 27. இயற்கைச் செல்வம் விரிந்த வானே வெளியே - எங்கும் விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும் - மண்ணும் செந்தீ யாவும் தந்தோய். தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச் செறிந்த உலகின் வித்தே புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம் புதுமை! புதுமை! புதுமை! அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம் அலையைச் செய்தாய் நீயே! நசையால் காணும் வண்ணம் - நிலமே நான்காய் விரியச் செய்தாய்! பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம் பைந்தமிழ் பேசச் செய்தாய்! இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை, ஏந்திழை இனிமைக் குரலால்! எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள் எதிலும் அசைவைச் சேர்த்தாய். சொல்லால் இசையால் இன்பம் - எமையே துய்க்கச் செய்தாய்! அடடா! கல்லா மயில், வான் கோழி - புறவுகள் காட்டும் சுவைசேர் அசைவால் அல்லல் விலக்கும் ஆடற் - கலை தான் அமையச் செய்தாய் வாழி! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.19, 1938 28. அதிகாலை அமைதியில் ஒளிஅரும்பும் அதிகாலை - மிக அழகான இருட்சோலை தனில் - அமைதியில் ஒளி இமைதிறந்தே தலைவி கேட்டாள் - சேவல் எழுந்திருப்பீர் என்று கூவல் - அமைதியில் ஒளி தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம் தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம் அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ ராடி, உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம் - அமைதியில் ஒளி பெற்றவர் கூடத்தில் மணைமேற் பொருந்தித் - தம் பிள்ளைகளோடு சிற்றுண வருந்தி உற்ற வேளையில் கைகள் வருந்தி உழைக்க லாயினர் அன்பு திருந்தி. - அமைதியில் ஒளி - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.70, 1949 29. வானம்பாடி வானந்தான் பாடிற்றா? வான்நிலவு பாடிற்றா? தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும் மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ! வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன் தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப் பெய்த அமுதா? எனநானே பேசுகையில் நீநம்பாய் என்று நிமிர்ந்த என்கண்ணேரில் வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க நீந்துகின்ற வானம்பாடிக்கு நிகழ்த்தினேன்; உன்றன் மணிச்சிறகும் சின்ன கருவிழியும் என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில் பாடிக்கொண் டேஇருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர் தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்! அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன் இசைமழையால் இன்புறுவோம் யாம். - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.21, 1938 30. மாவலிபுரச் செலவு சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச் சேரி நகர்வரை நீளும். அன்னதில் தோணிகள் ஓடும் - எழில் அன்னம் மிதப்பது போல. என்னருந் தோழரும் நானும் - ஒன்றில் ஏறி யமர்ந்திட்ட பின்பு சென்னையை விட்டது தோணி - பின்பு தீவிரப்பட்டது வேகம். தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள் சென்றிடும் போது விசாலச் சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில் தூவிடும் பொன்னொளி கண்டோம். நெற்றி வளைத்து முகத்தை - நட்டு நீரினை நோக்கியே நாங்கள் அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல் அத்தனையும் ஒளிவானம். சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று சாற்றும் சுவடி திறந்து சஞ்சார வானிலும் எங்கள் - செவி தன்னிலும் நற்றமிழ் ஏற்றி அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க ஆசையி னால்ஒரு தோழர் செஞ்சுடர் அச்சமயத்தில் - எம்மைச் செய்தது தான்மிக்க மோசம். மிக்க முரண்கொண்ட மாடு - தன் மூக்குக் கயிற்றையும் மீறிப் பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப் பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச் சக்கரம் போலிருள் வானில் - முற்றும் சாய்ந்தது சூரிய வட்டம்! புக்க பெருவெளி யெல்லாம் - இருள் போர்த்தது! போனது தோணி. வெட்டவெயிலினில் நாங்கள் - எதிர் வேறொரு காட்சியும் கண்டோம் குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில் கூந்தல் சரிந்ததோர் ஈந்தும் மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப வார்த்தைகள் பேசிடும் போது கட்டுக் கடங்கா நகைப்பைப் - பனை கலகல வென்றுகொட் டிற்றே. எட்டிய மட்டும் கிழக்குத் - திசை ஏற்றிய எங்கள் விழிக்குப் பட்டது கொஞ்சம் வெளிச்சம் - அன்று பௌர்ணமி என்பதும் கண்டோம். வட்டக் குளிர்மதி எங்கே - என்று வரவு நோக்கி யிருந்தோம். ஒட்டகமேல் அரசன்போல் - மதி ஓர்மரத் தண்டையில் தோன்றும். முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று முற்றும் சிவந்தது சொல்வாய்? இத்தனை கோபம் நிலாவே - உனக்கு ஏற்றிய தார்என்று கேட்டோம். உத்தர மாக எம்நெஞ்சில் - மதி ஒன்று புகன்றது கண்டீர். சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால் திரும்பிப் பார்த்திட்ட போது. தோணிக் கயிற்றினை ஓர்ஆள் - இரு தோள்கொண் டிழுப்பது கண்டோம். காணச் சகித்திட வில்லை - அவன் கரையொடு நடந்திடு கின்றான். கோணி முதுகினைக் கையால் - ஒரு கோல்நுனி யால்மலை போன்ற தோணியை வேறொரு வன்தான் - தள்ளித் தொல்லை யுற்றான்பின் புறத்தில். இந்த உலகினில் யாரும் - நல் இன்ப மெனும்கரை யேறல் சந்தத மும்தொழி லாளர் - புயம் தரும்து ணையன்றி வேறே எந்த விதத்திலும் இல்லை - இதை இருப துதரம் சொன்னோம். சிந்தை களித்த நிலாவும் - முத்துச் சிந்தொளி சிந்தி உயர்ந்தாள். நீல உடையினைப் போர்த்தே - அங்கு நின்றிருந் தாள் உயர் விண்ணாள். வாலிப வெண்மதி கண்டான் - முத்து மாலையைக் கையிலிழுத்து நாலு புறத்திலும் சிந்தி - ஒளி நட்சத்திரக் குப்பை யாக்கிப் பாலுடல் மறையக் காலை - நாங்கள் பலிபு ரக்கரை சேர்ந்தோம். - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.22, 1949 1934ஆம் ஆண்டு ஒருநாள் முழுநிலா இரவில் மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம், நானும் என் தோழர்கள் ப. ஜீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினார் சுப்பிரமணியம், மயிலை சீனி. வேங்கடசாமி, எ.வி. இலிங்கம், நாரண துரைக்கண் ஆகியோரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும், அப்பெருந் தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத்தக்க காட்சி. அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப் பாட்டு. 31. இருசுடரும் என் வாழ்வும் காலை ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல் உணர்வைக் கண்டேன் நெஞ்சில்! நெளியக் கண்டேன் பொன்னின் - கதிர் நிறையக் கண்டேன் உவகை! துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி துள்ளக் கண்டேன் விழியில்! தெளியக் கண்டேன் வையம் - என் செயலிற் கண்டேன் அறமே! மாலை மறையக் கண்டேன் கதிர்தான் - போய் மாயக் கண்டேன் சோர்வே! நிறையக் கண்டேன் விண்மீன் - என் நினைவிற் கண்டேன் புதுமை! குறையக் கண்டேன் வெப்பம் - என்னைக் கூடக் கண்டேன் அமைதி! உறையக் கண்டேன் குளிர்தான் - மேல் ஓங்கக் கண்டேன் வாழ்வே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.26, 1949 32. தென்றல் பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின் புதுமணத்தில் தோய்ந்துபூந் தாது வாரி நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும் சதிராடி மூங்கிலிலே பண்எ ழுப்பித் தாழையெல்லாம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி, அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல் அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச் செல்வம்ஒன்று வரும்; அதன்பேர் தென்றற் காற்று! வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள். அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன். அங்கிருந்த விசிப்பலகை தனிற்ப டுத்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப் பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள் விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும். அக்காலம் அறைக்குவந்த பூனை யின்மேல் அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில் பக்காப்பூ னைநூறு பொருளை யெல்லாம் பாழாக்கி னாலும்அதில் கவலை கொள்ளேன். வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை சூழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சம் தொல்லையுறா வகைஇருத்தல் வேண்டும் அங்கே வீழ்ந்துகிடந் திட்டஎனைத் தனிமை அந்தி இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப் பாழான அவளுடலின் குளிர்ச்சி மென்மை மணம்இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று. தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள், சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும் சரியாத குழல்சரிய லானாள் போலும் தடவினாள் போலும்எனைத் தன்க ரத்தால்! புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்! புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண் பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஓகோ? பேசுமிவள் மனைவி? மற் றொருத்தி தென்றல்! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.27, 1949 33. நீலவான மீது நீல வான மீது தோன்றும் கோல மென்ன சொல்வேன் தோழி - நீலவான மீது ஞால மெங்கும் குளிரும் ஒளியும் நல்கும் திங்கள் அங்குக் கண்டேன் - நீலவான மீது முத்துக் குவியல் இறைந்த துண்டோ? முல்லைக் காடோ கூட்ட வண்டோ? புத்தம் புதுநி லாவின் சிரிப்புப் புனிதத் தாரகை எனத்து ளிர்த்ததோ? - நீலவான மீது அழகு காட்டி இயற்கை அன்னை அன்பு கொள்ளச் செய்தாள் என்னை பழகப் பழக என்கண் முன்னைப் பண்ணும் புதுமை என்னே! என்னே! - நீலவான மீது - தேனருவி, ப.81, 1956 34. தழைந்த சோலை தழைந்த சோலை நிறைந்த மலர்கள் தமிழ்பா டிடும் வண்டு - நல் அமிழ்தாகிய தென்றல் - பாராய் - தழைந்த சோலை அழகிய மயில்குயில் ஆடும் பாடும் அண்டும் சிட்டுகள் கூடும் குலவும் எழிலொடு தளிரொடு படர் கொடி முல்லை இன்பம் இன்பம் இன்பம் பாராய் - தழைந்த சோலை தங்கத் தட்டில் வெள்ளிக் காசு சார்ந்த மேனிக் கலைமான் காதல் பொங்கித் தேடித் துணையைக் கூடும் புதுமை புதுமை புதுமை பாராய் - தழைந்த சோலை - தேனருவி, ப.82, 1956 35. சோலை! சோலை! சோலை! சோலை சோலை சோலை - இன்பம் துய்ப்பது தான்என் வேலை மாலை தழுவித் தென்றல் முழுகி - அதோ மலர்கள் எழுதி வண்ணம் தீட்டும் - சோலை சோலை சோலை ஆலு யர்ந்து நிழல்தரும் அந்த ஆலயத்தில் மாமயில் தோகை மேல் விரித்து வேடிக்கை காட்டும்! விளாம் பழத்தைப் பந்தாடும் மந்தி - அதோ களை இழக்கும் அழகுசா மந்தி சோலை சோலை சோலை பொன்னோடை இருளோடு கலக்கும் பொழுது நோக்கித் தொழுதிடும் அல்லி தன்னிலே வண்டு பஞ்சுரம் பாடும் தமிழிசை உயர் வென்று சொல்லி! தவளை இரைச்சல் குயிலுக்குத் தொல்லை தருவது கண்டு சிரிக்கும் வெண் முல்லை! சோலை சோலை சோலை - தேனருவி, ப.83, 1956 36. குளிர் கொண்டு வந்தது குளிர் கொண்டு வந்தது மாலை - நறுமணம் கொழித்தது மணிமலர்ச் சோலை - இனிதான - குளிர்கொண்டு வெளி என்ற பெரும் படவிரிப்பில் - இச்சோலை குளிர் கொண் டெழுதிய இயற்கையின் சிரிப்பு! - குளிர்கொண்டு களிகொண்டு மயிலாடும் மன்றில் - இனிதான இசை கொண்டு வந்திடும் தென்றல் தளிரெல்லாம் மெருகுள்ள பச்சை - இக்காட்சி தனிஓர் இயற்கை நமக்கிட்ட பிச்சை! - குளிர்கொண்டு பச்சைப் பசுங்கொடியின் முல்லை - மல்லிகை பாய்ச்சும் மணத்துக் கீடில்லை மச்சு வளைத்தன பெருமரக் கிளைகள் வரிசை விளக்குகள் அங்குள்ள மலர்கள்! - குளிர்கொண்டு - தேனருவி, ப.84, 1956 37. பாடும் தாமரைப் பொய்கை பாடும் தாமரைப் பொய்கை - வண்டு பாடும் தாமரைப் பொய்கை! பச்சிலைப் பட்டு விரித்து முத்துத் துளி பரப்பி வாய் விட்டுச் சிரித்துச் சிரித்துப் - பாடும் தாமரைப் பொய்கை இதழும் தென்றலும் அசையும் - இசை இன்பமும் மணமும் பிசையும்! புதிய செவ்விதழ் உண்டு பின்னும் கரிய நெய்தல் பூவிற்பு ரண்டு கண்ட பெண்களைக் கற்பழிக்க எண்ணம் கொண்டு திரியும் குண்டரைப் போல் வண்டு - பாடும் தாமரைப் பொய்கை காலையில் பிரிந்த கணவன் தனக்குக் காத்திருந்தேதன் மனைக்கு மாலைவரும் என்று தேம்பும் - ஒரு மங்கைபோல் அல்லியும் கூம்பும்! சேலொடு வாளைகள் துள்ளிக் கரை உயர் தேன் கூ டழிக்கையில் கானக் கருங்குயில் - பாடும் தாமரைப் பொய்கை - தேனருவி, ப.85, 1956 38. வான் தழுவும் மாமலை வான்தழுவும் மாமலை பாராய் நான்தழுவும் ஆரா வமுதே! - வான் தழுவும் மாமலை கான்முழுதும் ஆடிப்பாடி வரும் அருவி - பார் கயலுக்கு வீழ்ந்திடும் சிச்சிலிக் குருவி - வான் தழுவும் மாமலை ஒளி தழுவிய வள்ளிக் கொடியும் - மலர் உறை வண்டு சிதறும் பொன் பொடியும் களி செய்திடும் உலகுக்கு நன்மட மானே - நமைக் காதல் செய்ய வைத்தது மெய் தானே - வான் தழுவும் மாமலை உடல் தழுவிட வீசும் காற்றும் - நம் உயிர் தழுவிடக் கமழும் மணமும் விடமன மிலை! கட்டித் தழுவும் இன்பம் விடமனம் வருமா? அப்படிப் போலே! - வான் தழுவும் மாமலை - தேனருவி, ப.86, 1956 39. பள பளா! பள பளா! பள பளா பள பளா பள பளா என்று பச்சைத் தவளைகள் குட்டைக் கரையினில் தச்சுப் பட்டறை போலே - அவை கத்திக் கிடந்த தாலே தள பளா தள பளா தள பளா என்று தப்பட்டை கொட்டிக்கரு வரால்கள் குட்டிக் குரவைகள் துள்ளும் - துணி தப்பும் கல்லையும் தள்ளும் மள மளா மள மளா மள மளா என்று மட்டை கிளையை ஒடித்துக் காய்கனி கொட்டைப் பாக்கொடு தெங்கு - கீழே விட்டெறியும் குரங்கு சொள சொளா சொள சொளா சொள சொளா என்று தொட்டித் தேனையும் நெட்டிப் பூம்பொடி தட்டிக் குளவிகள் கொட்டும் - ஒரு குட்டிக் குரங்கை மட்டும். - தேனருவி, ப.87, 1956 40. ஏனோ இன்னும் துன்பம் முல்லை கமழும் தென்றல்! மொய்க்கும் வண்டின் பாடல்! எல்லை யற்ற இன்பம்! - நெஞ்சே ஏனோ இன்னும் துன்பம்? சொல்லி வைத்த தைப்போல் சொல்லிக் கொஞ்சும் கிள்ளை எல்லை யற்ற இன்பம் - நெஞ்சே ஏனோ இன்னும் துன்பம்? எங்குப் போக வேண்டும்? யாரை அடைய வேண்டும்? இங்கு மெத்த இன்பம் - நெஞ்சே ஏனோ இன்னும் துன்பம்? - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.8, 1964 41. சோலை ஆடல் அரங்கு விட்டுவிட்டுக் குழல் €CJ« மொட்டு வைத்துக் குயில் பாடும் வட்டாரச் சோலையிலே மாமயில் ஆடும் - நல்ல மரங்கொத்தி அரங்கத்தில் தாளங்கள் போடும். கட்டுக்கரை அலை மோதும் காதினிக்கும் ஒரு மேளம்! தட்டாமல் ஒத்தூதும் தாமரை வண்டு - நல்ல சிட்டுச் சலங்கை போடும் ஒத்தாசை கண்டு. வெள்ளைப் பட்டுப் பெடைஅன்னம் வீறார்ப்பு நடை அன்னம் உள்ளோடு லாவையிலே ஒட்டாரக் கிள்ளை - நல்ல ஒழுங்குபேசிக் கொண்டிருக்கும் ஓயாத பிள்ளை. கொள்ளை கொள்ளை கொடிமுல்லை கோத்தமுத்தும் இணைஇல்லை கள்ளொழுகும் உதடுகாட்டிச் சிரித்தாள் ஒருத்தி காட்சியெல்லாம் கண்டிருந்தது ஓர்செம் பருத்தி! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.18, 1964 42. திருக்குற்றால மலை நீர்வீழ்ச்சி அழகிய இயங்கிஎம் அனைவர் தம்மையும் தழல்பெயும் கோடைக் கொடுமை நீக்கச் சுமந்து விரைந்து பலகல் தொலைவைக் கடந்ததும் கனலினின்று புனலிற் குதித்த ஒருநிலை கண்டோம் திருக்குற் றாலம் இன்னும் அரைக்கல்லே என்ற னர்பின் பசுந்தழை அடர்மரப் பந்தற் கீழ்குளிர் பிசைந்த வழியேகி நின்ற தியங்கி. இனியாம் நடந்தே எழுதல் வேண்டும் நானும் நேயரும் சிறிது நடந்ததும் வான்கீழ் வெளியை அழகால் மறைத்த திருக்குற் றால மலைநீர் வீழ்ச்சி இதோபார் என்றனர் எதிர்நின்று நோக்கினேன் பொன்வெயில் தழுவிய நன்மே னியுடன் நின்றி ருந்தாள் நெடியோள் ஒருத்தி அன்னவள் மென்குழல் அணிமலர்ச் சோலையாய் விண்ணிடை விரைந்து நறுமணம் விரிக்கும் ஆட வில்லை அசைகிலள் விடாது பாடிக் கொண்டே இருந்தாள் பண்ணொன்று! தமிழ்வாழ்ந் தால்தான் தமிழர் வாழ்வார். சாதிநோய் தவிர்க தமிழனே, என்றும் தமிழ்மீண் டால்தான் தமிழ்நாடு மீளும் என்ற முழக்கம் எழுச்சியைச் செய்ததால் தூய்தமிழ் மக்கள் தொடர்ந்தனர்! சூழ்ந்தனர்! சுடர்படு முதியோள் தோளி னின்றும் அடிமிசை வீழ்ந்து புரளும் சலசலப் பொன்னா டைதனில் ஆடினர் அன்னாய் அகம்புறம் குளிர்ந்தோம்! என்றே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.178, 1964 43. வானவில் (É© எழுது fÉij) மண்ணுலகு கடல்மலை அனைத்தும்உள் ளாக்கியே விளைந்தது வானவில்! என்னென்ன வண்ணங்கள்! விண்முழுது கருமணல் அதன்மீது மாணிக்கம் வீறிடு நிறப்பச்சை, வயிரத் தடுக்குகள் உள்நிலவும் நீரோடை கண்ணையும் மனத்தையும் உயிரினொடும் அள்ளியே செல்கின்ற தல்லாமல் எண்ணற்ற அழகினால் இயற்கைவிளை யாடலின் எல்லைகா ணேன், அதைச் சொல்லுமா றில்லையே! புதுமைஇது வானிடைக் கண்டஅவ ளோவியம் போய், முகிழ் புனலிலே நொடிதோறும் கரைந்ததே ï(J) அது எனச்சொல்ல ஏலா தொழிந்ததே இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம் கதுமெனத் தோன்றிடும் மறைந்திடும என்பதைக் கண்ணெதிர்க் காட்டவரும் விண்எழுது கவிதையாம் அதுநமக் குத்தெரியும் அன்றியும் கவிஞருளம் அவ்வான விரிவினும் பெரிதென்ப தறிவமே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.179, 1964 44. ஆடல் பாடல் (பச்சைப் பட்டரங்கில்) நான்ஓர் வரப்போடு போனபோது நன்செயை அடுத்ததோர் சின்ன திட்டு நில்என்று சொன்னது நின்றேன், வரிசை மிஞ்சாது நீண்டு வளராது தரையை மறைத்த வண்ணம் மண்டிய புற்களின் நிறத்தையும் நிறத்திடை, நிறைத்த பொன்வெயில் ஒளியையும் கண்டேன் உள்ளம்அவ் வழகில் குளித்துக் களித்துக் கூத்தடித் திருந்தது மற்றோர் இன்னொலி வந்தது காதில் ஒற்றை நீலஒ ளிச்சிறை வண்டு பாடியது தும்பைச் சிரிப்புடன் ஆடியது பச்சைப் பட்ட ரங்கிலே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.180, 1964 45. ஆடும் மயில் தக தக என்றாடுமாம் மயில் நன்றாடுமாம் களிப்பில் நின்றாடுமாம் - தக தக என்றாடுமாம் மாலை வெயில் தனிமலர் சோலை தனில் நடமிடும் நீல மயில் - தக தக என்றாடுமாம் கண்ணாயிரம் ஒளிவிடும் மின்னாயிரம் மயில்அது பெண்ணாய் வந்தே - தக தக என்றாடுமாம் பின்வாங்குமாம் அழகொடு முன்வாங்குமாம் நடைமுறை தென்பாங் கென்றே - தக தக என்றாடுமாம் மெச்சும்வகை மேனி தச்சுக்கலை காட்டும் பச்சை மயில் - தக தக என்றாடுமாம் பொன்னால்முடி புனைமயில் மின்னால்விழி அலகினில் என்னே எழில்! - தக தக என்றாடுமாம் மணிமா முகில் வளைகழுத் தினைச் சூழவே அழகுற அணிமா மயில் - தக தக என்றாடுமாம் அதிரும் படம் தங்கக் கதிர் தூவிடும் உலகினை மகிழ்வித் திடும் - தக தக என்றாடுமாம் - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.181, 1964 46. செஞ்சாமந்தியும் தும்பைச் செடியும் செஞ்சா மந்தியும் தும்பைச் செடியும் கொஞ்சிப் பேசிக் கொண்டி ருந்தன. செடியில் நிறைந்த செம்மலர். இளையோன் புதுவகைச் சட்டை போலி ருந்தது. தும்பையும் பூவும் தோகையும் சிரிப்பும் உள்ளம் இரண்டு ஒன்றே யாகி இருப்ப தென்ற இவர்களின் முடிவை யார்தாம் எதிர்க்க எண்ணுவர்? காற்றோ இலவம் பழுப்பை எடுத்து வந்து கலகம் செய்யும் கருத்தால் அந்தச் செஞ்சா மந்தியின் தலையிற் சேர்த்தது தும்பை கேலியாய்ச் சிரித்தது! செம்மலர் சினத்தால் மேலும் சிவந்ததே. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.184, 1964 47. தென்றல் மலர்மணம் கொண்டு வந்த தென்றலே - என் வாழ்வில் இனிமை வைத்த தென்றலே நிலவைப் பகலில் கண்ட தில்லைநான் - குளிர் நிலவைத் தழுவ வைத்த தென்றலே! பலஇசை கொண்டு வந்த தென்றலே - தென் பாங்கின் தனிப்பிறவித் தென்றலே இலகும் தளிரினிலோர் அசைவினை - நேரில் எழுதிக் காட்டுகின்ற தென்றலே! பேரைக் கேட்டதுண்டு தென்றலே - உனைப் பேசப் புலவரில்லை தென்றலே நேரிலுனைக் கண்டதில்லை தென்றலே - இதை நினைக்கப் பெருவியப்பு தென்றலே ஊரிடைப் பாடிவரும் தென்றலே - உன் உதடு மணந்ததோ தென்றலே? பூந்துகள் கொட்டுகின்ற தென்றலே - உன்கை பூவோ பொழில்என்பதோ தென்றலே? - நீ நீந்தும் வானப்புனல் எங்கணும் - உன் நிழலையும் கண்டதில்லை தென்றலே சாய்ந்தாடும் பூங்கிளையின் தென்றலே தட்டுப் பந்தாடுகின்ற தென்றலே தீய்ந்து கருகவைக்கும் கோடையில் - நீ செய்தது மறப்பதில்லை தென்றலே! - பாரதிதாசன் கவிதைகள், பன்மணித்திரள், ப.182, 1964 48. குன்றூர்ப் பாட்டு குன்றூர் குன்னூர் என்று சிதைந்து, பின் குன்னூர் குன்றூர் எனத்திருந் திற்றாம் அவ்வூர் மக்கள் பெரியார் ஆக்கிய அறிவியக் கத்தை அடைந்தனர் ஆதலின் குன்னூர் என்பதில் உள்ள குறையைக் கடிந்து குன்றூர் என்று கண்டனர். குன்னூர் என்று திரித்துக் கூறினோர் யார்எனில் ஆங்கிலர் என்று கூறுவர்; ஆங்கிலர் தமிழை அறியார் அவருடன் ஈங்கி ருந்த பார்ப்பனர் ஆகிலும் உண்மை இதுவென உரைத்த துண்டா? இல்லை, ஏனெனில் பார்ப்பனர் தமிழின் பகைவர்; பைந்தமிழ் கெட்டொழி வதையே எண்ணி ஆவன செய்யும் இழிசினர்; குன்றின் மீதில் அமைந்தது குன்றூர்! அது, நம் பொறியியல் அறிஞர்க் கறிஞரும் பொருட்பெற்றி யாய்ந்த முதுபெரும் புலவரும் ஆகிய சீ.டி. நாயு டவர்கள் வாழ்வதால் பெரும்புகழ் வாய்ந்த தென்று செப்பும் கோவைக்கு - ஐம்பது கல்லுக்கு அப்பால் அமைந்தது; வருவார்க் கெல்லாம் இயற்கை ஈந்த அழகின் படைப்பு! தேவைக்குப் பொன்மலி கோவை நகரின் திராவிடர் கழகச் செயலா ளர் திரு அரங்க நாதன் அருமைத் தம்பியின் திருமணத் திற்குநான் சென்ற காலை என்னைக் குன்றூர்த் தமிழரும் ஆங்குச் சொற்பெருக் காற்ற வருகெனச் சொன்னதால் ஒப்பினேன்; ஊரையும் பார்க்கலா மன்றோ! கோவையி னின்று குன்றூர் போக ஆவலோடு நான் இயங்கியில் அமர்ந்தேன். நடுப்பகல் நோக்கிக் காலை நகர்கையில் பொன்வெயிற் பொன்வண் டாக வண்டி பறந்து சென்று வாணிகம் பரந்த மேட்டுப் பாளைய நகரின் மேன்மையைக் காட்டி வெப்பமும் காட்டி நின்றது! வருவோர் போவோர் ஆகிய வாணிகர் பல்லா யிரவர் விரைவதும் பார்த்தேன் அவர்களின் கால்களில் முயற்சி மின்னுவது காட்சி அளித்தது, காலும் தாளும் முயற்சியும் ஆன மூன்றும் ஒன்றே என்று தமிழர் இயம்புவது நினைத்தேன்; மேட்டுப் பாளையக் கடைத்தெரு விட்டு மேலும் விரைந்து செல்லும் என் வண்டி இருபுறம் பாக்கு மரங்கள் அடர்ந்த ஒருவழி ஓடிற்று மரங்களும் உடன்வர! அத்தனை நீளப்பெருவழி அது தான்! இரண்டுகல் தொலைவு; இரண்டடிக் கொன்றென கால் கீழ் ஊன்றிக் கண்கொளா உயரத்து உச்சியில் பச்சை மட்டைகள் சுமந்து கக்கத்தில் மணிக்குலை கவினுறத் தொங்க அடைத்துள அழகிய கமுகினம்! வானைத் துடைத்துத் தூசி போக்குவன போலும்! வெப்பம் விலக்கின! நிழல்முடி கவித்தன! கப்பம் கட்டின குளிர்காற்று வைத்தே! என்னரும் வண்டி எழிலமைந் திருப்பினும் விரைந்து செல்லினும் விரிந்து யர்ந்து குளிர்தரு கமுகின் கூட்டம் இல்லையேல் என்பயன்? இயற்கையின் ஆதரவு செயற்கைக்குத் தேவை என்பது சாவாத உண்மை! குன்றின் அடிநிலை சென்று வண்டிபி னின்று முடிநிலை நிமிர்ந்து பார்த்தேன். தோன்றிய தென்ன? - தமிழகத் தொன்மைதான்! நெடிய குன்றத்தின் நேர்ஒரே பக்கம் வளைந்து வளைந்து செல்லும் வழியே எனது வண்டி மேல்நோக்கி ஏறியது - என்று சொல்லும் சொல்,மெய் இல்லை! சுடரும் நிலவும் தோன்றிய நாளில் தோன்றித் துலங்கும் குன்றூர் உச்சிக்கு - இங் கிருந்து சென்று மீண்டும் அங் கிருந்து சுவடுகாண மீளும் என்றன் அருமைத் தமிழக முதியோன் இன்று தன்னலம் நீக்கி என்றன் வண்டியை வளைந்ததன் முதுகிற் சுமந்து சாயாது சறுக்காது தானிட்ட சுவடு மாறாது மறவாது மலையுச்சி நோக்கி ஏறுவான் ஆனான். ஏகுவேன் ஆனேன்! நின்றி ருக்கும் அந்தக் குன்றின் அடிநிலை தாண்டி நடுநிலை சென்றேன்; குனிந்து கீழ்ப்புறம் நோக்கினேன்; குரல்எடுத்துக் கீழுறு தமிழரே மேல்வா ரீரோ என்று கூற எண்ணினேன்! கேட்குமா? என்று வாளா இருக்க லானேன்! குன்று வழியின் இருபுறத்து நின்ற காடுகள் பாடின! அழகு காட்டின! ஆடின கிளைத்தழை தோகை யாகவே! பக்க வாட்டிற் பள்ளத்தி னின்று மிக்கு நீண்ட கொடிப்பூ மின்னின! நெட்டை மரமொன்று நிலத்தி னின்று எட்டியா னிருந்த அளவாய் எழுந்து தன்தலை தாவி என்நிலை நோக்கி மகிழ்ந்தது மகனுக்கு மகிழ்தந் தைபோல்! இதுதான் குன்றூர் என்றனர்! நடுப்பகல் பதினொரு மணிவெயில் பாய்ந்த தாயினும் குளிர்ந்த காற்று வெப்பினைக் குறைத்தது! புதுமனை, பொதுமனை, கடைகள், தொழில்மனை அழகுற அமைந்தி ருந்தன ஆங்கே; நன்சைய் புன்செய் நறுமலர்த் தோட்டம் சுற்றிலும் அழகு தோற்று வித்தன பயிர்த்தொழில் மக்கள், பலர்; சிலர் சிறுதொழில் மக்கள் செறிந்தி ருந்தனர். திரண்ட செல்வம் இன்மையால் பார்ப்பனர் சுரண்டலால் ஏற்படும் தொல்லைஅங் கில்லை! நாய்கடி நலம்செயும் மருத்துவ விடுதி குன்றூர் தன்னில் குறிப்பிடத் தக்கது. வருவார் தங்கும் வளைவில் தங்கினேன் நன்று விரிந்த இந்தக் குன்றூர் குன்றின் உச்சியில் இருந்த கொள்கையை எண்ணுந் தோறும் வியப்பை ஈந்தது. வெயிலின் வெப்பம் எந்த நாளிலும் துயரம் விளைப்ப தில்லை ஆங்கே! சித்திரைத் திங்கள் வந்தால், ஊரில் செத்தே போகும் செங்கதிர்க் கொதிப்பு; வாழ்வன குளிர்ச்சியும் மகிழ்ச்சியு மாகும். வெப்பம் மிக்க தென்னாட் டார்கள் குளிர்ச்சிக்குச் செல்வது குன்றூ ராகும்! ஊட்டி என்றே ஆங்கிலன் உரைப்பதும், உதகை என்றே ஆரியன் உரைப்பதும், ஆகிய தண்ணீர்ச் சுழலது - வேதான் அழகிய குன்றூர்க் கப்புறம் அமைந்தது. நீல மலைஎன நிகழ்த்தலும் அதையே! அடியி னின்று நெடுமுடி நோக்கினால் சிறிதாய்த் தோன்றும் இடத்தில் பெரிய நகரினைக் கண்டு நான்வியப் புறுகையில் என்னைஎன் தோழர்கள் இதுவியப் பன்று பொன்னும் பன்னிற மணிகளும் பூவென்று மின்னும் பெரும்பரப்பு வியப்பாம் என்றனர். ஊருக்கு - அரைக்கல் தூரம் நடந்தேன், நேரில்நான் கண்டது மலர்வனம்; மணிக்காடு! உச்சிக் குன்றின் பக்க வாட்டில் ஐந்நூறு காணிப் பரப்பை அழகு மொய்த்து விளையாடக் குத்தகை பிடித்தது! நிமிர்ந்தால் இலைஇலா நீலப் பூமரம்! கமழும் முத்துப் பந்தர்க் கவின்மரம்! மஞ்சட் பொடியை வாரி இறைக்கும் செம்மலர் மரங்கள் சிறுபட் டாளம் கண்ணோடு சென்று மனத்தைக் கவர்ந்தன! கொன்றை பூத்த தங்கக் கோவை தென்றலால் ஆடும், வண்டெலாம் பாடும். வண்ண மரங்களின் அழகில் வளைந்தஎன் கண்ணைக் கீழ்ப்பாய்ந்த வரியணில் கவிழ்த்ததால் பன்மலர் நிலத் தோவியம் பலித்தது. பச்சை மணிச்சிற் றிலைச்செடி வரிசை வட்டம் குறிக்க அதனுள் மஞ்சள் சிவப்பு நீலம் ஒளிபடு மலர்வகை அப்பட்டம் பன்மணி இழைப்போன் அழுத்திய மாதர் தலையணி வட்டமே ஆகும். பெருமுக் கோணத் துள்ளே உரோசு விரிமலர் நறுமணம் வீசி மிளிர்ந்தன நீல உரோசும் ஒருபுறம் நிறைந்தன சிவப்பு ரோசும் ஒருபுறம் திகழ்ந்தன வெள்ளை உரோசும் வியப்பைச் செய்தன பன்னிறச் சாமந்திப் பரப்பையும் இன்னும் இருந்த அழகின் சிரிப்பையும் எழுதி முடிக்க இருப தாண்டு கழியும் ஆதலால் அடுத்தது கழறுவேன். மேல்வந்து மின்னி உட்சென்று குமிழ்விடும் சேல்விளையாடும் பொய்கையும் திண்ணையும் கலைஞன் படமும் காண்பார்க் கிடமுமாம் திண்ணையி னின்று பொய்கையிற் செலுத்திய கண்களைத் தாமரை கண்டு மலர்ந்தன அண்டையில் அல்லிகள் தன்முகம் கூம்பின பொய்கையைச் சுற்றும் புதரெலாம் பூக்கள் பூக்களில் வடியும் தேனெலாம் ஈக்கள் ஈக்களில் எழுவன இனிய பாக்களாம். திண்ணைக்குப் பந்தல் ஒன்று செய்த வண்ண மலர் குலுங்கு கொடிகளின் பின்னலில் வீழ்ந்த வெயிலால் கீழிடம் இன்ப ஓவியக் கம்பள விரிப்பைப் பெற்றது விழிகள் அழகை உண்ணச் செவிகள் எழுமின் னிசையினை உண்ண மூக்கு நறுமணம் உண்ண நல்லுடல் குளிரை உண்ணக் கிடந்த என்னை உடனே உண்ண வருக என்றான் ஒருமகன் இன்னும் என்ன உண்ப தென்றேன் கொத்துக் கறியின் குழம்பும் வறுத்த மத்தி மீனும் வாய்க்கமு தன்றோ! அங்குப் போகலாம் வருகஎன் றழைத்தான் அவைகளும் இங்கே இருந்தால் அடடா குறைவிலா இன்பக் கொள்ளை அன்றோ! மெய்விழி, மூக்குச், செவிகள், விழுங்கும் ஊறொளி நாற்றம் ஒலி அமுது துறந்து வாய்க்குச் சுவையமுது நோக்கிச் சென்றேன் கொன்றை விழிமலர் தேன்புனல் கொட்டிச் செல்விரோ என்று செப்பும் போதும் சென்றேன். வருந்தி வழிநடந்து சென்று கறுப்புடை ஏழைத் தோழர் காட்டிய அன்பினில் கறியும் சோறும் அளாவ உண்டு மகிழ்ந்தேன். நடுப்பகல் ஒருமணி என்றது மணிப்பொறி! எழுந்து சென்றேன் கூட்டம் நடக்கும் குறிப்பிடம் நோக்கி! முப்புறம் கடையும் வீடும், இப்புறம் தெருவும் சேர்ந்த சின்னதோர் திடலினுள் தொட்டி ராட்டினம் சுழன்றுகொண் டிருந்தது வட்ட இராட்டினம் வண்ணம் பாடிற்று நாயிரண்டு போர்ப்பணி நடத்தின தாயும் தந்தையும் ஐந்தாறு சேயரும் ஏறிய இயங்கி ஒன்று புகுந்து பம்பம் பம்பம் எனவம்பும் புரிந்தது திடலின் நடுவில் வெறுமை திகழ்ந்தது தெருவினில் சிற்சிலர் நின்று கொண் டிருந்தனர் நானெனக்குச் சொற்பொழிவு நடத்தினேன் என்னுரை எனக்குத் தெரிந்ததே ஆதலின் உடனே நிறுத்தினேன் : உடனே இடம்படு கோவைக் கேகினேன் இனிதே - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.185, 1964 49. கூதிர் விழா கூதிர்விழா - நல்ல குளிர்காலப் பொன்விழா! கொட்டடா கொட்டடா முரசம்! வீதிக்கு வீதி - பல வீட்டுப் புலித்தமிழர் வில்லேந்தி வந்தனர் வாழ்க! சூதற்ற தமிழ் மாதர் சோலைப் பசுங்கிளிகள் சுடர்விளக் கேந்தினார் வாழ்க! போழ்தும் புறம்போகப் பொன்னாடு வலம்வந்து பொதுமன்று சூழ்ந்தனர் வாழ்க! தமிழர் விழாநல்ல தண்கூதிர்ப் பொன்விழா தடதடென் றோச்சடா முழவம்! அமுதென்று பாடுவோம் அதுநன்று போற்றுவோம் அறிவென்று சொல்லடா தமிழை! நமதென்று நாட்டடா நந்தமிழ்ப் பொன்னாடு! நரிகளுக் கிங்கில்லை வேலை! சமைகின்ற கலைஎலாம் தமிழ்தந்த பணிஎல்லாம் தலைஎன்று சாற்றடா உலகில்! ஊதடா நற்றமிழர் ஒன்றென்று நாடெலாம் ஊதடா €cjlh தாரை! மீதெலாம் கார்வானம் விளைவெல்லாம் செந்நெல் விருப்பெலாம் போர்ஆ மென் றூது! போழ்தெல்லாம் அறமென்று புகைஎலாம் அகிலென்று பொற்றாரை ஊதடா ஊது! கூதிராம் ஐப்பசிக் கார்த்திகைக் குளிர்விழா கொட்டடா கொட்டடா முரசம்! - பாரதிதாசன் கவிதைகள், பன்மணித்திரள், ப.197, 1964 50. காகிதப்பூ வேண்டாம் எடுப்பு இயற்கை உனக்களித்த மணமலர் இருக்கையில் ஏனிந்த காகிதப்பூ? மகளே - இயற்கை உடனெடுப்பு செயற்கை மலர்காட்டித் தேன்மல ரினம்கொல்லத் தெரியார் முயல்கின்றார் தெரிவையே எதிரில் - இயற்கை அடிகள் பொன்போலும் முதற்பொருள் விளைதல் அரிதாயின் போலிப் பொருள்நாடல் உண்டு - கேள், என்னருந் தமிழகம் இந்தாமுல்லை, இந்தா சாமந்தி என்பதும் கண்டு - நல் அன்பிலார் போல்நீ அழகிலாக் காகிதம் அழகிய கூந்தலில் அணிதல் எதைக்கொண்டு - இயற்கை காகிதப் பூவினில் இயற்கை மணமுண்டோ கட்டழ கினில்உள்ள நுட்பம் - இளந் தோகையே தாளிலே காண்பதும் உண்டோ? தூய்மைஉண் டோகுளிர் உண்டோ? - நீ ஏகுவாய் மகளே வண்டுபா டும்மலர் எடுப்பாய் தொடுப்பாய் கூந்தலில் முடிப்பாய். - இயற்கை - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.196, 1964 51. இயற்கை தரும் உண்மை பாலைக் காய்ச்சும் பக்குவம் அறியா மனைவியிடம் மடமை மாற்ற வேண்டி அவளிடம் இதனை அறைவாய்; அதனால் அவள்தன் மடமையை அகற்ற முயல்வாள் என்றேன். என்றன் இதயம் முதலில் இந்நாட்டு மக்கட் கியம்புவேன் என்றது. சனப்ரதி நிதிகளாய்ச் சார்ந்த மனிதரே, சனங்களே, இங்குச் சகலமும் மாறும். உமது தீய ஒழுக்கம் மாற்றி நல்லொழுக் கத்தை நாட வேண்டும் நீர் அண்டை வீட்டான் அழிய வேண்டும் அன்னிய மதத்தான் அழிய வேண்டும் மற்றச் சாதியான் மடிய வேண்டும் என்று தினம்தினம் எண்ணி எண்ணி இந்த எண்ணத்தை இதயம் பூசி நாவையும் இப்படி நடத்தி நடத்திக் கண்களை இந்தக் காட்சியில் பயிற்றி அந்த மலத்தை அதிகம் பெருக்கி எளிய புழுப்போல் அதனில் நெளிகிறீர். அனைவரும் நாட்டார் அனைவரும் சோதரர் என்ற பெருநோக் கெப்போ திருந்தது? நீங்கள் பூண்ட நீட்டுத் தளையைச் சிறிது நீக்கச் செயல்செயும் போதும் பிறனுடன் ஒற்றுமை மறுப்பதால் வெற்றி பெறலாம் என்பதை அறிந்துள போதும் ஒத்துப் போக உள்ளம் பிறந்ததே அண்டை வீட்டான் அயல்மதம் சாதி அழிய வேண்டும் - அந்தோ ஒழுக்கமா? பலநூற் றாண்டுகள் பாழ்போ யினவே! மலப்புழு நிலையில் மாய்கின் றீரே! குணங்கள் மாறும்; மாற்றலாம் இணங்குக! உயர்க! இன்பம் வருமே! ஒன்று மற்றொன்றாய் உலகிடை எவையும் குணங்களில் மாறக் கூடி யவைகள் தீயைச் சொரிந்த செழுமைச் சூரியன் மேற்றிசை யேகி வீழு முன்பு கண்ணுக் கழகிய காட்சி தந்து தீமை சிறிதும் இன்றித் திகழ்ந்தது. அரைத்துளி நீரும் அற்ற ஏரியின் அகன்ற நடுத்தலம்! அமைதியில் இருந்தேன் தீப்பிடித் தெரிந்த ஆகா யத்தில் தேகம் சிலிர்க்கக் காற்று மிதந்தது! என்னைச் சுற்றிப் பெரியதோர் வட்டமாய் எழிலுறு மரங்கள் பச்சென் றிருந்தன! இலைகள் பட்சி யினங்கள் அனைத்தும் அனல்தவிர்ந் தனவாய் ஆடின பாடின! உயர்ந்த வானிடை உற்ற மேற்கில் ஒளிப்பிர வாகம்! ஒருநூறு நிறங்கள்! தகத்த காயம் சார்ந்தஅந் நிறங்களில் ஒன்றில் ஒன்று சங்கமம்! ஆங்கே ஊதா வர்ணத் தடாகம், பொன்னின் உருக்கு வெள்ளத்தில் €Xo¡ கலந்தது! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.199, 1964 52. எலிகள் எண்ணினால் நூறிருக்கும் எங்கள் வீட்டின் எலிகள் - அவை இரவு பகல் பண்டங்களைத் திருடுவதில் புலிகள்! கண்ணெதிரில் ஓடிஒன்று கதவிடுக்கில் மறையும் - அங்குக் காய்ச்சி வைத்த நெய்யினிலே பாதிக்குமேல் குறையும்! பிண்ணாக்கைத் தின் றஎலி பானையையும் உடைக்கும் - நல்ல பெட்டியினைத் துளைத்த எலி பட்டினையும் கடிக்கும்! எண்ணெயினைக் குடிக்கும் ஒன்று புளியைஒன்று தின்னும் - அங்கு இரண்டெலிகள் பழச்சீப்பை இழுக்கும் முன்னும் பின்னும் அழகநம்பி முழவினொலி அறையினிலே கேட்கும் - அங்கு ஐந்தெலி கள் நெல்சாலின்மேல் மூடியையுந் தூக்கும்! பழஞ்சுவடி ஏட்டையெல்லாம் பழுது பார்க்கும் ஒன்று - புதுப் பாடலையும் திருத்திவைக்கும் ஏடுகளைத் தின்று குழந்தை தூங்கும்போது மயிர் கத்தரிக்கும் ஒன்று - சிறு குடுகுடுவென்றோடும் ஒன்று குதித்திடும் மற்றொன்று தழைத்த நாட்டில் நுழைந்த வட நாட்டினரைப் போலே நமைத் தாக்குமிந்த எலிகள் தொல்லை நீக்க வேண்டும் மேலே - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.327, 1964 53. அக்கக்கா அக்கக்கா என்றதாம் கிள்ளை அழகான என்கிளிப் பிள்ளை அக்காவும் வந்தனள் தானே அங்கே இருந்ததொரு பூனை நிற்காமல் ஓட்டினாள் அக்கா நில்லாமல் போனதுசு ருக்கா அக்கா உள்ளே போகும் முன்னம் அக்கக்கா என்றதாம் பின்னும்! அஞ்சாமல் ஒருதிருடன் வந்தான் அக்காவைப் பார்த்தான்ப றந்தான் அஞ்சாறு கோவைப்ப ழத்தை அறேழு கொய்யாப்ப ழத்தை மஞ்சள் பலாச்சுளை வித்தை மட்டாய்க் களாப்பழக் கொத்தை கொஞ்சமாய் வேர்க்கடலை முத்தைக் கொடுத்தனள் உண்டதாம் தத்தை - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.332, 1964 54. குயில் மின்னும் கருமேனி விண்ணில் மிதப்ப,இரு சின்னஞ் சிறுவிழியாம், செம்மணிகள் நாற்புறத்தும் நோக்க, விரைந்து, கதிரும் நுழையாத பூக்கமழும் சோலை புகுவது கண்டேன்; கூக்கூ எனும்அக் குயிலின் குரல்கேட்டேன்; ஆக்காத நல்லமுதோ! அடடாநான் என்சொல்வேன்! விட்டுவிட் டொளிக்குமொரு மின்வெட்டுப் போல்நறவின் சொட்டொன்றொன் றாகச் சுவையேறிற் றென்காதில். கருநெய்தற் காட்டரும்பு போலும் குவிந்த இரண்டலகு தம்மிற் பிரிந்து குரல்எடுக்க வாயிற்செவ் வல்லி மலர்கண்டு நான்வியந்தேன்! ஓயாது சுற்றுமுற்றும் பார்க்கும் ஒளிக்குயில்தான் இவ்வுலகம் இன்னல் நிறைந்ததென எண்ணிற்றா? எவ்வலியும் தன்னிடத்தே இல்லைஎன அஞ்சிற்றா? மாவின் கிளையை மணிக்காலால் தான்பற்றிப் பாவின் இனிமைதனைப் பாரோர்க்குப் பாய்ச்சுகின்ற நேரத்தில், தன்விழியின் நேரிலுள்ள மாந்தளிரை, ஆர அருந்தத் தொடங்கும் அவாவோடு பொன்னாய்ப் பொலியும் தளிரும், புதுமெருகில் மின்னாய் மிளிர்கின்ற மென்தளிரும், பிள்ளைகளின் மேனி எனப்பொலியும் மிக்கொளிசெய் நற்றளிரும் ஆன கிளிச்சிறகின் ஆர்ந்த பசுந்தளிரும் கொத்தாய் இருக்கும் குயிலலகுச் சாமணத்தை வைத்தெடுத் துண்ணும்; பின் தத்திப் பிறிதொருபால் வேறு தளிர்பார்க்கும்; இடையிடையே, மேல்கரும்பின் சாறுநிகர் பாடல் தரும், தன் சிறகடித்து மற்று மொருகிளைக்கு மாறும், மறுநொடியில் முற்றிலும் அஞ்சும், மகிழும் முடிவினிலே. சேய்மையிலோர் சோலைக்குச் செல்லும் குயிலினிடம் தூய்மை மிகுபண்பொன்று கேட்பீர்: €சுவையைப் படியளக்கும் வையத்தார் உண்ணும் படியே குடியிருப்பொன் றில்லாக் குயில்! - குயில் பாடல்கள், ப.5, 1977 55. கோழிப் போர் ஆர்த்தது கோழி போர்க்களத்தே! அணுகுண்டெல்லாம் என்கணுக் காலின் கீழே அறந்தவ றேன்போர் அறந்தவறே னென்றே - ஆர்த்தது பாருக்கொரு வேந்தன் தேருக்கொரு பாகன்நான்! பார்என் றெதிர்த்த மற்றொரு கோழி ஓரடி வாங்கி, மற்றோரடி தந்தது மார்பில். - ஆர்த்தது எற்றும் கோட்டு முட்கள் ஈட்டிக்கோர் ஈட்டி - ஒன்று சிறந்த கழுத்துக் கிழிந்தும் எதிர்த்தே இறந்தது, தன்புகழ்க் கிலக்கியம் வைத்தே! - ஆர்த்தது - குயில் பாடல்கள், ப.19, 1977 56. சேவற்போர் போரிடுகின்றன! போரிடுகின்றன! கார்நிறச் சேவலும் கதிர்நிறச் சேவலும் போரிடுகின்றன, போரிடுகின்றன. தலையைத் தாழ்த்தின; தம்கழுத்துச் சிறகு சிலிர்த்தன; குறிபார்த்துச் சினவிழி எதிர்த்தன; தெருவெலாம் செந்தூள் சிதறச் சிதறப் போரிடுகின்றன ஓரிரு சேவலும்! அடடே! அடடே! அராவிய இரும்பென எடுத்த முள்தூக்கி அடித்த காலை ஊன்றுமுன் எதிரிகால் உயர்ந்தடித்தது! குருதி நனையுடல் கருதாது பகையுயிர் பருகுவ தொன்றே கருதிச் சலியாது போரிடுகின்றன பொன்விழிக் கோழிகள். கதிர் நிறச் சேவலா கார்நிறச் சேவலா! எதுவெற்றி பெறும் என்றேன் நெஞ்சை! அரசினர் சலுகை அடைந்தவர் வெல்வர் அஃதிலார் அஞ்சுவர் ஆதலால், தோற்பர் என்றதென் நெஞ்சம்! ஏஏ அரசியல் ஒன்று மில்லா உண்மை உலகத்து மறப்போர்; இதுஎனல் மறந்தனை நெஞ்சே. மேலும், அவ்வுலகில் ஏலும் அரசினர் தம்செல் வாக்கைத் தம்மவர்க் காக்கி வஞ்சம் புரிவதும் கொஞ்சமும் இல்லையே என்றேன்! ஆமாம் இவை மக்களல்ல என்றது! போரிடுகின்றன சேவல்கள். பகையின் இறக்கைகள் புகுத்திய கழுத்தால் எதிர்ப்புறம் தள்ளி இருகாற் படையை உரத்திற் பாய்ச்ச ஓங்கும் போதே வலப்புறம் விலகி விரட்டும் அதன்பகை! குறுநெஞ்ச மக்கள் கொண்ட போர்க்கிடையில் பெருமையும் வசையும் பேசுவர் அன்றோ! குரலினை மூச்சோடு கூட்டி, விரைவில் சிறப்பதும் இறப்பதும் தெரிதல் வேண்டிப் போரிடுகின்றன பொய்யிலாப் பறவைகள்! FiHªj br«gu¤ijnghš bfh©il, brªÚ® bghÊaî«, jho »Êaî«, ïw¡if ÉǤJ¡ Fâ¤J, Ä‹bt£L¥ nghY« bjUŸbkŒ¥ ò©Â‹ FUâ aUÉ¢ nr‰¿š j§fŸ M‰wš bfh©lk£L« fh‰¿š áwF fH‹W gw¡f¥ nghÇL »‹wd!போரிடுகின்றன! அடடா! ஒன்றின் நெடிய கழுத்தில் கொடியமுள் பாயக் குரல்வளை கிழிந்தது! கதிர் விழுந்தது! கதிர் இறந்தது! புதுப்புகழ் உலகு புக்கது! கார்நிறம் நற்கழுத்து உயர்ந்து வளைத்தது வெற்றி முரசொலி விளைத்த தாங்கே! - குயில் பாடல்கள், ப.30, 1977 57. திருடர் - திறந்த வானிலும் புகுவர் திறந்த வானம்! அவ்வான் நிறைய இறைந்த முத்தும் மணிகளும் சிந்திய வயிரத்து வாய்ந்த தட்டும் கிடந்தன! இந்த வானத்துக் குடையவர் யாரோ? கதவே இல்லை! உறங்கும் விழியரும்பு பூக்க வில்லை புதுவையைப் போல. வீட்டுக் குடையவர் விழிக்க வேண்டும் இந்தியா ஆள்வோர் இருக்கின் றார்கள் அன்பிலா தவர்அவர் அறமறி யாதார். திறந்த வானில் இறைந்த மணிகளை வயிரத் தட்டொடு மடியில் கட்டுவர் வானிலும் புகுந்து வம்பு வளர்ப்பவர் கூட்டுக் கொள்ளைக் காகக் கூடவே இருக்கும் பார்ப்பனர் இரும்புக் கரண்டிகள் மக்கள் உரிமையைச் சுரண்டித் திக்குமுக் காடச் செய்வர் அன்றோ? - குயில் பாடல்கள், ப.37, 1977 58. கிளிக்குஞ்சு கண்ட உலகம் வளர்ந்த தென்னையின் மட்டைக் கிடையில் பன்னா டையெனும் பஞ்சு மெத்தைமேல் கீச்சுக் கீச்சென்று கிளிக்குஞ்சு பாடியது. அருகில் ஈன்ற அன்னை இருந்தாள். வானிடை உலவிய வன்சிறைப் பருந்து திடீரென்று தாய்க்கிளி மேனி தீண்டித் துன்பு றும்படி தூக்கிப் போனதே! கிளிக்குஞ்சு காக்கைக் குஞ்சிடம் செப்பும்; என்தாய், பருந்தை எடுத்துப் போனாள் போகையில் பாடிக் கொண்டே போனாள் அந்தப் பாட்டும் நல்லபாட்டு என்றது. காக்கைக் குஞ்சு கழறு கின்றதாம்! எங்கே தூக்கிப் போனாள் பருந்தை? கிளிக்குஞ்சு தானும் கிளத்து கின்றது; பருந்தைத் தீயர் வருத்தி யிருப்பர் ஆல மரத்தில் கொண்டுபோய் அமைக்க எண்ணி யிருப்பாள் என்று €Twnt சற்று நேரத்தில் தாய்க்கிளி யின்தலை கிளிக்குஞ்சு காணக் கீழே விழுந்தது. காக்கைக் குஞ்சு, ஏன்என்று கழறவே கிளியின் குஞ்சு கிளத்து கின்றது: என்தாய் உடம்போ அங்கே இருக்கும் தலையோ இரைஎனக்குத் தரவந் திருக்கும் என்று சொல்லும் போதே எதிரில் தாயாம் காக்கை சரேலென வந்தது. கிளிக்குஞ்சு, கெட்ட காக்கையே கேட்பாய்; அதோஎன் அம்மா! அவளிடம் சொல்லி உன்னைக் கொல்லுவேன் ஓடுநீ என்று சொன்னது! காக்கை சொல்லு கின்றது; பச்சைக் கிளிஒன்று பருந்தைத் தூக்கும் உலகைநீ உண்டு பண்ணினாய்! அன்றியும் அறுந்த கிளித்தலை அன்பு மகவுக்கு இரைதர வருவதோர் இன்ப உலகை நீயுண்டு பண்ணினாய்! நெடிய கடவுள் உன்காப் படுத்தும் என்னையும் படைத்தஇவ் உலகில் உன்னுலகு செல்லா தென்று அலகால் காக்கை அழித்தது குஞ்சையே. - குயில் பாடல்கள், ப.41, 1977 59. சோலை தரும் நன்கொடை மலரோ மணங்கொடுக்கும் வண்டுகள் இசைகொடுக்கும் சலசலென்று நீர்கொடுக்கும் ஓடையே - தன் கடுஞ்சூட்டில் தணிவு கொடுக்கும் கோடையே! தென்னை இளநீர் கொடுக்கும் தேன்வாழை பழம்கொடுக்கும் புன்னையோ முத்தம் கொடுக்கும் கையிலே - தான் போனதாய் எழுதிக் கொடுக்கும் வெய்யிலே! முல்லை சிரிப்புக் கொடுக்கும் மொய்யலரி சினம்கொடுக்கும் சொல்லிலே, தமிழ்கொடுக்கும் பச்சைக்கிளி - தன் தோகையால் எழில்கொடுக்கும் அச்சுமயில்! மந்தியோ பால்கொடுக்கும் வந்தகுட்டி வாய்கொடுக்கும் சிந்தியே தேன்கொடுக்கும் பூக்காடு - மேல் செந்தமிழ் உண்ணக் கொடுக்கும் ஈக்காடு! - குயில் பாடல்கள், ப.44, 1977 60. எறும்பின் தவம் தரையிற் கிடந்த தங்கத் துகள்கள் வரிசை மாறாது நடந்தன. அவற்றை இரைக்குச் செல்லும் எறும்புகள் என்றனர் அரிய போர்வீரர் அணிநடை பயில ஓராண்டு செல்லும் ஊசிமுனை எறும்புக்கு ஈராண் டாயினும் வேண்டுமே என்றேன். வரிசை, ஒழுங்கும், மாறு படாமை எறும்புகட் கெல்லாம் இயல்பில் அமைந்தவை! மனிதன் ஒழுக்கநூல் ஆர்ந்தான் ஆயினும் இனி அவன் திருந்துதல் எந்நாள் அறிகிலேம் என்றனர்! இதனைக் கேட்ட என்உதட்டு மன்றில் சிரிப்பு வந்து குதித்தது. எறும்புகள் நடந்துகொண் டிருந்தன; வழியைச் சிறுகல் தடுத்தது; ஏறி இறங்கி எறும்புகள் நடந்து கொண்டிருந்தன! பெட்டி குறுக்கில் கிடந்தது; சுற்றிக் கொண்டு போகும் மனிதரின் மனநிலை பெறாமல் வழிகோ ணாமல், வரிகோ ணாமல் பெட்டிமேல் ஏறிப் பின்புறம் இறங்கி எறும்புகள் நடந்து கொண்டிருந்தன; சுவரொன்று நடுவில் நின்றது; நடுங்க வில்லை மலைக்க வில்லை, வலிகுன்ற வில்லை நடையின் விரைவு தடைபட வில்லை; எறும்புகள் நடந்து கொண்டிருந்தன! அரிசிநொய்க் குவியலை அடைந்தன. ஒவ்வொன்று தூக்கித் தாவி முடித்தன தம்புற்று மீண்டே மருந்தில் லாதநோய் சோம்பல்! அருந்தவம் ஊக்கம்! அன்பு மக்களே! - குயில் பாடல்கள், ப.45, 1977 61. சூறையில் ஓடம் வீற்றிருக்கும் மணிமாடம் விருந்துண்ணும் நடுக்கூடம் ஆற்றிலே நடமாடும் ஆழகான நம்ஓடம் ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம் காற்றோ குளிர்ந்துவரும் கண்ணிலே விண்தெரியும் சாற்றிலே சர்க்கரை போட்ட தமிழ்ப் பாட்டும் தானேவரும் ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! சிற்றலையின் வரிசையிலே சேல்மீன்கள் விளையாடும் முற்றிவிட்ட பகைபோல முதலை ஒன்று குறுக்கோடும். ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! கற்றாழை மிதந்துவரும் கண்ணெதிரில் வாள்சுழற்றும் முற்றாத தென்னம்பாளை முன்னேவந்து தான்சிரிக்கும். ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! மேற்கை வெறுத்துவரும் கிழக்கு நோக்கி விரைந்தோடும் ஆற்றில் மிதக்கும் ஓடம் காற்றுக்குமேல் ஆட்டம் போடும். ஆமாமாம் ஆமாமாம்ஆமாமாம்! கீற்றுத் தென்னைமேலே கிள்ளைகளும் தமிழ்பேசும் சேற்றுத் தவளைகளும் திடும்திடும் பறைவீசும் ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! வெள்ளாடு தழைமேயும் வெய்யில் குடைபிடிக்கும் புள்ளிமான் தென்துறையில் பூரித்து நீர் அருந்தும் ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! கள்ளிமலர் பூத்திருக்கும் பொன்வண்டு காத்திருக்கும் துள்ளி வரால்மீன்கள் சூறையாடும் மாம்பழத்தை ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! வானம் கருத்ததண்ணே காற்றுமழை வந்ததண்ணே ஏனம் கவிழ்ந்ததண்ணே என்கஞ்சி சாய்ந்ததண்ணே. ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! கைசோர்ந்து போனதண்ணே கண்தெரிய வில்லை அண்ணே ஐயையோ நம்ஓடம் ஆற்றில்தள் ளாடுதண்ணே. ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! ஒய்யென்று காற்றடித்தால் மூச்சே ஒழிந்துவிடும் பொய்தானோ நம்வாழ்வு போனால் வராதே அண்ணே! ஆமாமாம் ஆமாமாம் ஆமாமாம்! - குயில் பாடல்கள், ப.56, 1977 62. பனை முதலை முதுகின் அடிமரமும் அன்பு மதலை தலைக்குலையும், மற்றக் - குதலை தனைஒப்பச் சாறும், தமிழ்ஏடும் நல்கும் பனைஒப்ப துண்டோ பகர். பசுமை தடவி, மெருகிப் பலவாம் விசிறிகள் விற்பான்போல் நின்றே - இசைபாடும் அப்பனையைக் கற்பனையாம் கற்பக மாம்என்றால் ஒப்பனைகொள் ளாதிவ் வுலகு. காலாணி என்வாரை! கட்டுவதும் என்நாரே! மேலாடல் என்ஓலை! வீடுகளும் - மேலும் உண்ணும் நுங்கு, கருப்பட்டி, நூல்தாள், பதனி,பனாட் டெங்கும்என்சொத் தென்னும் பனை. அகணிசேர் மட்டைபன் னாடை விரல்போல் மிகவாம் பனம்பூ, விளைத்த - தொகுகாய்கள் உள்நாடிக் கண்டேன் உரிஞ்சிதழ்த்தேன் மங்கையரின் கண்ணாடிக் கன்னம்நிகர் நுங்கு - குயில் பாடல்கள், ப.59, 1977 63. வலைக்கம்பி அறை வடவன் விலங்கு அறிவோம் போடா என்றன புறாக்கள் வலைக்கம்பி அறையில் வளர்ப்புப் புறாக்கள் நிலைக்கும், இன்ப நிகழ்ச்சி கட்கும் இடையூ றேதும் இன்றி வளர்ந்தன. பெட்டை முட்டைஇடும்; அதைப்பெட் டையும் ஆணும் அன்புடன் அடைகாத் திருக்கும்; ஒன்றிரண்டு குஞ்சு பொறிக்கும் நன்று. பெரிதாம்; இவ்வாறு பெருகும் புறாப்படை! வளர்ப்பவன் உள்ளங் கையில் வைத்த தீனியை அவனின் தோளினின்று தின்னும்! வளர்ப்பவன் வாயின் எச்சில் நீரை உண்ணும் அந்த வண்ணப் புறாக்கள்! நேரு தமிழரை நெருக்கு வதுபோல் வளர்ப்பவன் புறாக்களை வருத்திய தில்லை வலைக்கம்பி அறையில் சிலகம் பிகளைப் பழுது பார்த்த பொழுது புறாக்கள் பறந்துபோய்ப் பக்கத்து - உயர்ந்த மதில்மேல் வரிசையாய் உட்கார்ந்து கொண்டன. வளர்ப்பவன் அவற்றை வருவீர்என்றான். வலைக்கம் பிஅறை வடவன் விலங்கு வாரோம் வாரோம் என்றன புறாக்கள். ஒன்றாய் இருக்கலாம்என்றான் வளர்ப்பவன்; நன்றாய்த் தின்னவா நாடொறும் நாங்கள் பொறிக்கும் குஞ்சு களைநீ? அறிவோம் போடாஎன்றன புறாக்களே! - குயில் பாடல்கள், ப.60, 1977 64. உயிர் உறங்கா இரவு உலகத்தின் சுழற்சியினால் பரிதிக் கோளம் ஒளிமாற்றி எழுவண்ணம் முகிலில் பூசும் பலகற்றும் அறிவில்லா மனத்தி னைப்போல் பரவும்இருள் பாழ்பட்ட சிற்றூர் தன்னை நலமுற்றச் செய்திடுவோம் எனத்து ணிந்த நல்இளைஞர் போல்விண்மீன்! எங்கும் மின்னும்! விலகட்டும் அறியாமை எனமுன் நிற்கும் பெரியாராய் வெண்ணிலவு விரிவான் தோன்றும். வான்பறவை இனமெல்லாம் மரங்கள் தோறும் மயக்குறுநல் மக்களைப்போல் குரல்அ டங்கும் தேன்பறவை சிற்சிலதம் குரல்அ மிழ்தைத் தித்திக்க எங்கிருந்தோ முணுமு ணுக்கும் ஆனிரையும் ஆடுகளும் ஆன்ற வர்போல் அடங்கும்; அலை ஆழியோ முரசொ லிக்கும்! ஊனுறங்கும், உயிர்உறங்கா துணர்வில் ஓங்கி ஒளியுலகை வரவேற்க விழித்தி ருக்கும். - குயில் பாடல்கள், ப.71, 1977 65. கோடைக் கொடுமையும் மாரியின் வரவும் வெயிலின் கொடுமை விலக்கிட எண்ணிக் கடற்கரைப் பக்கம் நடந்தேன், கடலோ உலைநீர் போல கொதித்தலைந் துயிர்த்தது; கடற்காற்று ஆவியாய்க் கனன்று வீசிற்று; வான வெப்பத்தால் போனகதிர் சிவந்தது. எழுந்த வெண்ணிலா எண்ணெயில் பொரித்த அப்பளம் போலக் கொப்பளம் கொண்டது; வெம்மையால் அம்மை வார்த்தது போல மீனினம் விசும்பில் தான் எழுந்திட வைக்கோலில் சுற்றிய வெள்ளரிப் பழம்போல் வெக்கையால் மேனி வியர்த்து வாட்டிற்று யான் ஒருவன் மட்டுமா எய்தினேன் இன்னல்? இல்லவே இல்லை; எல்லா மக்களும் வந்தே றிகளால் நொந்தழு வார்போல் கோடைக் கொடுமையில் வாடலானோம். புரட்சியின் புழுக்கத்தின் பின் பொதுவுடைமைபோல் புகுந்தது மாரியே! - குயில் பாடல்கள், ப.74, 1977 66. இயற்கைப் பாடம் என்னுடைய தோட்டத்தில் பலா, மா, வாழை, இன்இளநீர் தெங்குபத்து வைத்தேன்; காலம் தன்னுடைய பிள்ளைகளாய் வளர்த்த வற்றைத் தாராள மாய்விளைவைப் பருவந் தோறும் முன்னடையச் செய்வதிலே சுணங்க வில்லை. முன்னேறும் விலையேற்ற நாளில், தோட்டம் கன்றுடைய பசுவைப்போல் என்கு டும்பம் வரும்விருந்து களிப்புறவே விளைவை ஈயும். தோட்டத்து விளைவெல்லாம் என்உ ழைப்பா? சுழன்றுவரும் கதிர்மதியின் மழைவி ளைச்சல்! ஊட்டத்தைக் கொடுக்கின்ற கனியும் காயும் ஊரார்க்கு மலிவாகக் கிடைக்கும் போது நாட்டாரே, நான்ஒன்று நினைத்துப் பார்த்தேன் நாகரிகம் மிகுந்துவரும் உலகில், நாட்டில் ஓட்டமிகும் இயந்திரங்கள் பொருள்உற் பத்தி ஒயவில்லை தொழிலாளர் உழைப்பி னாலே. இயற்கையிலே காணாத ஒருவி யப்பு பொருள்விளைவு நூறுமடங் கென்கின் றோம்நாம் பயக்கின்ற பொருள்எல்லாம் மலிவா? இல்லை முன்னேற்றம் படுவேகம் என்கின் றோம் நாம் செயற்கையிலே பொருளாளி தான்கொ ழுக்கச் செத்தொழியும் தொகைமக்கள் எண்ணில் லாதார் அயற்கையிலே பணம்குவிய அடிமை ஆகி அல்லலுற்று வாழ்பவர்கள் கோடி கோடி! பண்டங்கள் பெருக்குவதன் மூலம் நாட்டில் பணக்காரன் சுரண்டுகிறான் வறுமை நோயை எண்டிசையும் பரப்புகிறான் இதற்கு மாறாய் இயற்கைவிளை பொருள்கள்நமைச் சுரண்டல் இல்லை நண்பர்களே, உமக்குண்மை ஒன்று சொல்வேன் நானிலத்தில் வளர்ந்துபயன் விளைத்த போதும் கொண்டெவற்றை யும்நாங்கள் தின்ப தில்லை கொழுப்பதில்லை கொடுக்கின்றோம் உழைத்தோ ருக்கே என்றன்முன் விளைந்தபல புல்லும் ஏனை எழுந்தசெடி, கொடி, மரமும்,இயம்பக் கேட்டேன் நன்றுஇதனை நாடெங்கும் சொல்லு கின்றேன் நாட்டில்பொது வுடைமைக்கு வித்தீ தென்றேன் கொன்றழிக்கும் முதலாளி என்றில் லாமல் கூட்டுடைமை பயன்மரமாய், இயற்கை அன்னை அன்புயிராய், தொழிலியலை மாற்றல் வேண்டும் அதற்குப்பின் துன்பில்லை சுரண்டல் இல்லை. - குயில் பாடல்கள், ப.76, 1977 67. பட்டணத்தான் கொல்லையில் பரணின் கொடிகளி னின்றே இருபது புடலங் காய்களும், இரண்டு பாம்பும் தொங்கின பட்ட ணத்தான் பொறுக்காய் இரண்டு புடலங் காய்களைப் பறித்துப் பையில் போட்டுக் கொண்டு பின்சென்று பாம்பைத் தொட்டான்; நஞ்சென்று கதறினான் நறுக்கென்று கடிக்கவே. - குயில் பாடல்கள், ப.84, 1977 68. என்றைக்கும் பஞ்சமில்லை கொன்றைக்கும் முல்லைக்கும் கொம்புக்கும் கள்ளுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லையே - இன்றைக்கும் ஊதவில்லை என்றதுண்டா உள்ளவண்டு? வெள்ளத்தேன் போவதில்லை என்றதுண்டா? போய்! - குயில் பாடல்கள், ப.85, 1977 69. பந்து விளையாட்டு கரடிகள் கீழிருந்து கைஏந்த ஏந்த மரக்கிளை ஆடரங் காகக் குரங்கு பந்தடித்தது விளாம்பழம் கொண்டே! - பன்மணித்திரள், ப.85, 1964 70. சின்ன பெண் ஆசை மணங்கொண்டு தென்றல் வரும்என்றார் €Cuh® மணஞ்செய்ய மாப்பிள்ளையா இங்கே - கொணருமென்று பால்மறவாப் பாவை வினாவப் பரிந்துதாய் தேன்மறவாப் பூமணம்என் றாள். - குயில் பாடல்கள், ப.86, 1977 71. சாவாத உழவன் வெயிலில் உழவன் வியர்க்க உழுதிடும் வயல்அயல் மரத்து நிழலும் சுட்டதால் குளிர்பொருந்து €Tl« சென்றுபின், மாலைஅவ் வயலிடை வந்தேன், உழவன் உயிரோ டின்னும் உழுகின் றானே! - குயில் பாடல்கள், ப.86, 1977 72. துலங்கா மூஞ்சி உலகம் கூடத்தில் ஆண்சிட்டைப் பெண்சிட்டுக் கூடிப்பின் கூடிக்கூ டிக்கூடிக் கூடிப்பின் - கூடி விலகி அரிசி விளைந்தும் துலங்கா உலகில் விழித்தன உற்று. - குயில் பாடல்கள், ப.87, 1977 73. யார் குற்றவாளி? கொஞ்சும் குயில்ஒன்று கூகூ என்றது தென்றலால் அசைந்த செவ்விதழ் அல்லிதான் இகழ்ச்சிச் சீழ்க்கை அடித்ததாய்த் தகாதிது தடாபுடா என்றது தவளையே. - குயில் பாடல்கள், ப.88, 1977 74. என் நிலைக்கு முல்லை சிரித்தது இரவு தங்கிப் பகலில் வந்தஎன் வரவுக்கு மனைவி கண்சி வந்தாள் மலர்வனம் சென்றேன் அங்கும் அலரிகண் சிவந்தது! முல்லை சிரித்ததே! - குயில் பாடல்கள், ப.100, 1977 75. இயற்கையில் இல்லை மனிதருக்கு ஏன்? மலர்கள் பற்பல மணமும் பற்பல மதங்கள் கிடையாது; விலங்குகள் பற்பல வண்ணம் பற்பல வேற்றுமை கிடையாது; தண்ணீர் பற்பல நிலங்கள் பற்பல சாதிகள் கிடையாது; பண்கள் பற்பல பாடல்கள் பற்பல பகைத்தீ கிடையாது மலைகள் பற்பல மடுவுகள் பற்பல மடமைகள் கிடையாது அலைகள் பற்பல ஆழ்கடல் பற்பல சமயம் ஆங்கில்லை. மாந்தர் பற்பலர் மொழிகள் பற்பல மதிக்கும் அறிவிருந்தும் ஏந்தும் சாதி சமயம் மதத்தின் இழிவால் கெட்டனரே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.59, 1978 76. காடும் - நீரோடையும் வெயில்புக முடியாக் குயில்புகும் காடு எண்ணிலா மரங்களின் இசைபயில் வீடு கண்கவர் மலர்கள் கமழ்ந்திடும் கோடு கோடுகள் தோறும் கொழித்ததேன் கூடு கூடுகள் தோறும் தேனிசை ஏடு காடுஇவ் வாறாய்க் களித்தி ருக்கையில் பாடும் குரலில் ஓடுநீ ரோடை அடர்ந்து படர்ந்த மரஞ்செடிக் கிடையில் மடமட என்று தடையற்று ஓட முடிய வில்லையே முடிய வில்லையே கொடியதிக் காடெனக் குறைகூ றிற்று ஞாயிறு தோன்றலும் ஞாயிறு காய்தலும் ஞாயிறு மறைதலும் நான்காண வில்லையே ஒளிக்கதிர் வெப்பம் உண்ண முடியாதா வெளிவான் மீன்களை வெண்ணிலாக் கதிர்களைப் பார்த்துநான் மகிழ பார்த்துற வாட ஆர்த்து மகிழ அகன்ற இக்காடு தடையாய் உள்ளதே தடையாய் உள்ளதே உடைந்த உளத்தோ டுரைத்தது நீர்ஓடை: முட்டாள் தனமாய் மூடிமறைக்கும் பட்டா ளம்போல் பரந்தஇக் காட்டை அழிப்பா ரில்லையா ஒழிப்பா ரில்லையா மொழியும் என்குரல் முழக்கம் கேட்கலையா என்றுநீ ரோடை இயம்பி நடந்தது. நன்றுநீ ரோடையே! என்று காடு பேச லுற்றது பேரிலை நாவினால்: ஏச லுற்றநீர் ஒடையே கேட்பாய் என்மடி தவழும் சின்னஞ் சிறிய குழந்தைநீ நின்றன் குறைமொழி கேட்டேன் குழந்தைக்கு அறிவுக்கண் குருடென் பார்கள், உண்மை என்பதை உன்னிடம் காண்கிறேன் விண்ணில் சுழலும் விரிகதிர்ப் பரிதியின் வெஞ்சுடர் உன்றன் மேனியிற் படாமல் கொஞ்சு நிழலினைக் கொடுத்து வளர்க்கின்றேன். சூறா வளியின்தொல்லை யில்லாமல் நீரோ டைஉனை நிழலில் வைத்துள்ளேன்; விண்வீழ் கொள்ளிகள் வீழ்ந்துனைச் சுடாமல் கண்ணில் இமைபோல் காத்து வருகின்றேன். இலைமலி கிளைக்கைக் குடையுனக்கு இலையேல் அலையும் நீருடல் ஆவிபோ யிருக்கும்; வறட்சி உன்வாழ்வில் வறுமைதந் திருக்கும்; சிறகு முளைக்குமுன் பறப்பதும் உண்டா? பொறுப்பது நல்லது வலுப்பெறு வாய்நீ! சமவெளிக்கு நீஅ மைதியாய்ச் செல்லலாம்; உடன்பிறந் தோர்பலர் உடன்வரு வார்கள்; ஒற்றுமை உங்களை உரம்பெறச் செய்யும்; பற்பல இடத்தும் பாய்ந்து செல்லலாம்; நீரோ டைப்பெயர் ஆறென மாறும். பேரா றெனவே பெரிதும் மகிழ்வர் பரிதியின் ஒளிக்கதிர் பருகிட லாம்நீ! விரிந்த விண்ணையே எதிரொ லிக்கலாம் எக்காற் றிலும்நீ இணைந்து விளையாடலாம் மக்களின் உழைப்பில் மகிழ்ந்தி ருக்கலாம் காடிவ் வாறு கழற ஓடைக் குழந்தை உவந்தோ டியதே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.127, 1978 77. இளவேனில் இன்பம் தென்றல் காற்று மலரில் ஆடி தேன் பொழிந்தது. குன்றில் மோதி அருவி யாடி குளுமை தந்தது. மகிழும்இள வேனிற்கால மரங்கள் யாவுமே முகிழும் இளந்தளிர்கள் விட்டு மொட்டும் விட்டன. வெம்மையோடு வெக்கை தந்த வேனில் காலையில் செம்மை முகில்கள் கோடை மாரி சீற்றம் காட்டின. பாரி, ஓரி, காரி வள்ளல் பரிசளித் தல்போல் மாரி பெய்து மடுவு குட்டை மழைநி றைத்தது. மழைபொ ழிந்து தெளிந்த வானில் மதிஎ ழுந்தது. அழகுப் பெரியார் முகத்தைப் போல அமுதைப் பொழிந்தது ஊரமைதியில் ஓடை யின்நீர் பாடி ஓடிற்று. பேரமைதியில் பறவைகளும் பேசி ஓய்ந்தன. தண்டச் சோறு தின்னும் கூட்டம் சலசலத் தல்போல் அண்டை வகுப்பில் இந்தி வாத்தி பாடம் நடத்தல்போல் குட்டைத் தவளைக் கூட்டம் எல்லாம் கொரகொ ரத்தது. பொட்டைத் தலையன் அரசி யல்போல் புருபு ருத்தது. பகல்முழுதும் ஆடு மேய்த்த பழையன் முத்தனும் நுகம்அ விழ்ந்த காளைகள்போல் தூங்கப் போகையில் தகுதியற்றோன் தலைவனாகித் தமிழைக் குதட்டல்போல் மிகுதி யாகத் தவளைக் கூட்டம் இரைச்சல் இட்டது. பழையன் முத்தன் உறக்கம் கெடுக்கப் பாழும் தவளைகள் மழையின் மகிழ்வில் கத்திப் பாடி அமைதி மறுத்தன உறக்கம் கெடுக்கும் தவளைகளின் உரத்த குரலினைத் துரத்த வேண்டி முத்தன் பழையன் சூழ்ச்சி செய்தனர். முத்தன் சொன்னான் குளத்தி லுள்ள அல்லி மொட்டினை சற்றுநீளக் கம்புடனே தறித்துப் போடென்றான். அல்லிக் குளத்தில் அல்லி மொட்டுக் கொடியை அறுத்துமே மெல்ல குட்டையில் மிதக்க விட்டார் பழையன் முத்தனும் அல்லிக்கொடி மொட்டின் தோற்றம் அளையும் பாம்புபோல் மெல்ல மிதக்கக் கண்ட தவளை மிகவும் அஞ்சியே இரவனைத்தும் இரைச்ச லின்றி இனிய தமிழின் முன் குரலடங்கிய வடமொழிபோல் குமைந்தி ருந்தது. ஒலியடங்க அமைதி இரவில் உறக்க ஓய்வினை நலிவிலாது பழையன் முத்தன் நன்கு €Ef®ªjd®. காலைக் கதிரோன் விழிக்கு முன்னர் கண்ம லர்ந்தனர் காலைக்கடனை முடித்துக் குட்டைக் கரையைச் சேர்ந்தனர் அல்லி மொட்டுக் கொடியின் தோற்றம் அஞ்சும் பாம்பென மெல்ல மிதக்கக் கண்டு சிரித்து வெளிஎடுத்தனர் தவளைகளின் மகிழ்ச்சியினை மேலும் தடுப்பதேன் அவற்றின் குரலைத் தொடங்கட்டும் என அவர்கள் சென்றனர். பாம்பொழிந்த களிப்பினாலே பச்சைத் தவளைகள் தாம்தீம் என்று எகிரிக் குதித்துத் தாளம் இட்டன. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.129, 1978 78. கண்களும் கால்களும் அகவல் அருமை யான அழகிய உடம்பு பெருமைக்குரிய தலையில் இரண்டு கருநெய் தலைப்போல் கவின்மிகு கண்கள் துருதுரு வென்று பார்ப்பதே தொழிலாய் உலகம் அனைத்தையும் ஓங்கி அளந்தன கலகல என்றவை களிப்புடன் மிதந்தன. அவ்வுட லின்கீழ் அணிவகுத் தனபோல் செவ்வாழைத் தண்டெனச் சிறந்த கால்கள் உடலைத் தாங்கலால் உழைத்துச் சிறந்தன நடந்து மகிழ்ந்தன நானில மெல்லாம். உடலில் எத்தனை உறுப்புகள் இருப்பினும் படர்விழிக் கேனோ காலின்மேல் பாய்ச்சல்? கால்களுக் கேனோ கண்ணின் மேல் காய்ச்சல்? மேல்இவை தமக்குள் பொறாமை விளைந்தது. கால்கள் ஒருநாள் கண்களைப் பார்த்து மேலே இருந்து மிகு உழைப் பின்றித் தொல்லையில் லாமல் சுழன்றிவ் வுலகினை எல்லையில் இன்பமாய் இருப்பதாய் எண்ணின ஆதலால் கால்கள் ஆத்திரம் உற்று மோதிமண் கட்டியை முகத்தில் தூவிற்று கண்கள் மண்ணினால் கலக்க முற்றன. எதனையும் பார்க்கும் இயல்பை இழந்தன அதனால் உடம்பு அலைந்துளைந் தயர்ந்தது பாறையின் பக்கம் ஒருநாள் பலா வேரினால் தடுக்கி விழுந்ததும், நடக்கும் கால்கள் முறிந்தன; கவலை மிகுதியால் பாழுடம் பென்னைப் பாடாய்ப் படுத்திற்று என்று புலம்பின எலும்பொடிந்த கால்கள் இரண்டு கால்களும் எண்ணத் தொடங்கின நான் ஏன் முறிந்தேன் கால்கள் நழுவின. உடம்பெனை வீழ்த்திற்று ஏன் வீழ்த்திற்று? அடடே அதற்குக் கண்ணிலை அன்றோ? கண்கள் கண்ண்கள்ள்... கலங்கின கால்கள் கண்களைக் கெடுத்தது கால்கள் அன்றோ? கண்கள் போனபின் எதனைக் காணும் பள்ளம் தெரியுமா? பாறை தெரியுமா? வெள்ளம் தெரியுமா? வேர்கள் தெரியுமா? என்று பற்பல எண்ணி ஏங்கித் தன்றன் தவற்றினை முட்டாள் தனத்தினை நினைத்து வருந்திற்று நெஞ்சில் அதற்குள் ஓருடம் பினிலே உள்ள உறுப்புகள் யார்க்கு யார்பகை என்று நினைப்பது போர்க்குணம் மிக்கது பொறாமையால் என்றதே. அதற்குள் ஒருசில உடம்புகள் ஆங்கே உதவியற் றுடைந்த உடம்பினைத் தூக்கி மருத்துவ மனைக்குக் கொண்டு சேர்த்தன கண்களில் இருந்த மண்ணை அகற்றினர் புண் ஆறிற்று பொலிந்தன கண்கள். ஒடிந்த கால்களும் ஒட்டப் பட்டு படிந்து நடக்கும் பாங்கு பெற்றன கால்கள் மன்னிப்பைக் கண்ணிடம் பெற்றன. குற்றம் பொறுக்கும் நற்குணத் தாலே குற்றம் பார்க்கில் சுற்றம் இல் என விழிகள் கூறின; மீண்டும் அவைதாம் தமிழும் இசையும் போல் தழுவின நட்பினில், கால்சொல் லிற்று கண்ணே, இருவரும் ஓருடம் பினிலே உறுப்பாய் இருப்பினும் இருவரின் இயல்பும் வெவ்வே றாகும் ஒருவரின் இயல்பு மற்றொரு வருக்கில்லை, எந்தப் பொருளையும் ஏறிட்டுப் பார்க்கும் நீ எந்த இடத்திற்கும் ஏக முடியாது. எவ்விடத் திற்கும் ஏகிடும் நானோ எவ்விடத் தையும் காண இயலாது மேடும் பள்ளமும் காடும் கழனியும் கூடும் நின் கண்கள் கொண்டு காட்டிடும் அவ்விட மெல்லாம் அலுப்பில்லாமல் செவ்வனே நடப்பேன் திக்குமுக் காடேன் ஒருவர்க் கொருவர் உதவியாய் இருப்போம் என்று கூறிற்று கால்கள் இரங்கியே நன்றென்று விழியும் நன்றி கூறிற்று காண விரும்பும் காட்சிக் குகந்த நீணில மனைத்தும் நீஎனைக் கொண்டு செல் என்றன கண்கள். நின்ற கால்கள் சென்றன திசையெலாம் சேர்ந்தே ஒற்றுமை யாலே உலகுழல் கின்றதே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.135, 1978 79. குட்டைப் புத்தி சிறிய குட்டை ஒன்று - வெயில் சித்தி ரையின் போது வறண்டு வயிறே வாயாய் - வெடித்து வான்ம ழைக்கே ஏங்கி நிறம் மாறிப் போச்சு - தன் நெஞ்சு லர்ந்து போச்சு. கோடை யிலே ஒருநாள் - முகில் குளிர்ந்த காற்றைப் பெற்று வாடையிலே செல்வன் - சிறு கஞ்சி வார்ப்ப தைப்போல் கோடைமாரி கொஞ்சம் - மழை கொடுத்து வந்து சென்றான் குட்டை யப்பன் தனது - சிறு கும்பி நிறைந்த தாலே அட்ட காசம் செய்தான் - தவளை ஆர வாரத் தோடு கொட்டா வியும் விட்டான் - பசிக் கொடுமை தீர்ந்த தென்றே. குட்டைப் புத்திக் காரர் - மக்கள் கூட்டத் தையும் நினையார் கிட்டி யது போதும் - எனக் கேளி ரையும் மறப்பார் மட்டி லாத உலகம் - நிறை மகிழ்ச்சி கொள்ள வாழ்வாய். - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.118, 1978 80. குயில் பாட்டு குயிலே குயிலே கூவாயோ? குரலால் என்னைக் காவாயோ? பயிலும் உன்வாய் பூவாயோ? பயனை அள்ளித் தூவாயோ? துயிலாத் தமிழை ஈவாயோ? சுவையை உயிரில் கோவாயோ? அயலாய் எண்ணிப் போவாயோ? அன்பால் என்னைத் தாவாயோ? - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.88, 1978 81. சமதர்மம் வானம் அறுந்து விழுந்ததாய் பரந்த நீலப் பெருங்கடல் ஆன திசையை அளந்திடும் அளவில் இருந்த ஆழியில் பென்னம் பெரிய சுறாமீன் பின்னும் பசியால் அலைந்தது: சின்னஞ்சிறிய மீனினை விழுங்க வாயைத் திறந்தது. சின்னஞ் சிறிய மீனதைச் சிலிர்த்து மருண்டு கேட்டது என்னை விழுங்க வேண்டுமா? இந்தக் கடலில் உயிர்ப்புடன் உன்னைப் போல எனக்குமே உரிமை உண்டு வாழ்ந்திட கன்னங் கரிய ஆழியுள் கருதும் அறத்தின் முன் சமம். சிரித்துச் சுறாவும் கேட்டது சின்னஞ் சிறிய மீனமே சரி நிகர்ப்பைப் பற்றியா சாற்ற வந்தாய் ஒன்று செய் என்பசிக்கு நீ உனை இரையாய் ஆக்க விரும்பலை; உன்பசிக்கு நான் இரை உடன் பட்டேன் நீ உண்டிடு, என்று சுறாமீன் முடிக்குமுன் இயலும் வரையில் வாய்திறந் தின்று விழுங்கு வேன்எனச் சுற்றிச் சிறுமீன் திரிந்தது. பிறகு களைத்துச் சுறாவிடம் பெருமூச் சொன்று விட்டுமே அறம் உணர்ந்தேன் சுறவு நீ எனை விழுங்காய் என்றதே, - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.113, 1978 82. நிழல்கள் நிழல்கள் ஒளியின் எதிரில் கைநீட்டி ஒப்ப னையாக விரல்காட்டிக் கிளியின் நிழலினைக் காட்டினேன் பார்! கிழக்கு ரங்கைக் காட்டினேன் பார்! முன்னும் பின்னும் விரல்காட்டி முட்டிக்கு மேல்ஒரு விரல் நீட்டி கன்றுக் குட்டியைக் காட்டினேன் பார்! கழுதைக் குட்டியைக் காட்டினேன் பார்! நாயினைப்பார்! நரியினைப் பார்! நல்ல மாடு குதிரையைப் பார்! கோயில் சுற்றும் பார்ப்பைக் காட்டினேன் பார்! குணங் கெட்ட எருமை ஓடுதல் பார்! கரடியைப் பார் காக்கையைப் பார் காண்டா மிருகம் நிற்றலைப் பார்! பரட்டைத் தலைப் பையன் காட்டினேன் பார் பானை வயிற்றுக் கரடி காட்டினேன் பார்! தீங்கரசு தலைவனைப் பார் தெருவில் தத்தும் தவளையைப் பார் மாங்குயிலைப் பறக்க விட்டேன் பார் பார்! மடக்கும் கைவிரல் நிழல்களைப் பார்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.78, 1978 83. பார்! பார் பொன்னிளங் காலையில் பூத்த சுடர்க் கதிர் பார்! இன் இள வேனிலில் இன்ப மலர்ச்சியைப் பார்! மின்னலின் கொத்தாக முல்லை மலர்ந்தது பார்! கன்னலின் தோகையாய்க் களித்தசைந் தாடலைப் பார்! வண்ண மிகுந்தெழில் வடிக்கும் பறவைகள் பார்! கண்ணில் கருத்தில் கற்பனை கூட்டலைப் பார்! இன்சுவை காய்கனி எங்கும் செழித்தலைப் பார்! செந்தேன் அறுவடை செய்யும் உழவரைப்பார்! இயற்கைத் தாய் பற்பல இன்பம் அளித்தலைப் பார் முயற்சி இன்றேல் வாழ்வு முழுமை பெறாததைப் பார்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.71, 1978 84. வலியாரிடம் வாயாடாதே இரண்டு பக்கமும் வாலா என்றது பூனை எதிரி லேதும் பிக்கை என்றது யானை உருண்ட துதிக்கை ஏனோ என்றது பூனை ஊற்று நீரை உறிஞ்ச என்றது யானை திரண்டு நீண்ட பல் ஏன் என்றது பூனை சீறும் புலியைத் தாக்க என்றது யானை இருண்ட மலை பாயா தென்றது பூனை எடுத்தெ றிந்தது பூனை யைப்போய் யானை - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப. 45, 1978 பயிற்சி : பூனை புலியினத்தைச் சேர்ந்தது, புலியைத் தாக்குவேன் என்று யானை சொன்னதால் எரிச்சல் வந்தது பூனைக்கு. அதனால் நீ இருண்ட மலைபோல் இருக்கின்றாய் உன்னால் புலியை நோக்கிப் பாய்ந்து கொல்ல முடியாது என்றது. யானை பூனைக்கு அறிவு புகட்டியது. எப்படி? தும்பிக்கையால் பூனையைத் தூக்கி எறிந்தது. இதனால் பூனை தெரிந்துகொண்டது என்ன? யானை பாய வேண்டிய தில்லை. அதற்கு நீண்ட தும்பிக்கை இருக்கிறது என்பது. இதனால் இளைஞர் அறிந்துகொள்ளுவது; வலியாரிடம் வாயாடக் கூடாது. 85. வானவில் கதிர் எழுந்தது! மழை பொழிந்தது காணும் திசையிலே! புதுமைகொண்டது பொலிவெ ழுந்தது வான்வில் இசையிலே! செம்மை வண்ணம் செங்கொடி போல் சிரித்து விழுந்தது! அம்மையின் கை பச்சை வளையல் அங்குத் தெரிந்தது! மீன்கொத்திகள் பறப்பது போல் நீலம் விளைந்தது! ஓவிய னின் தூரிகை போல் ஊதா ஒளிர்ந்தது! தூவி மலர் போல் கரு நீலம் மிளிர்ந்தது! புலவர்களின் பாடலைப்போலபொன்மைநிறைந்தது!! Ãyîy»š k¡fŸ kd« be»H ÉiuªjJ!தலைவன் தளர்ச்சி குயில்கூ வியது கடகட வென்றே தலைவன் கேட்டான் தளர்ந்தான் தலைவி தன்னிடம் கொஞ்சுதல் நினைத்தே - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப. 96, 1978 86. நாளுக்கு நாணம் அகவல் கருங்கட லின்மேல் பொன்னிறக் கதிர்கள் இலங்கும் வண்ணம் எழுந்த பரிதியே! நேற்றுங் கண்டோம்; நின்னை இக்கடல்மேல் அதற்கு முன்னாள் அதற்கு முன்னாள் தினம் தினம் காலையில் சேர்வது கண்டோம் மாலையில் மேற்றிசை மறைவது கண்டோம் யாமுனைக் காணல்போல் நீஎமைக் காண்கிறாய் அனைத்துத் தேசமும் நிதம்உனை அறிவன! அவைஎலாம் நீயும் அனுதினம் காண்கிறாய்; சொல்லுவேன் இதுகேள் bjh‹ik¢€Rlnu! நாளொரு புதுமை மாதமோர் நன்னிலை உடுத்த ஆடைஅடுத்த நாள்களை தல்போல் புதிய புதிய செயல்கள் புரிந்திடும் செகத்தைத் தினம்தினம் காணும் நீதான் எனது சமூகம் இழிநிலை நின்றும் இம்மி பெயர்ந்தது முண்டோ இசைப்பாய் சாதி சமயம் சாத்திரப் புராணம் மனிதர் மனிதரைச் சாமியாய் வணங்கல் ஆனவை பலவும் சமூகத்தை அழுத்தி அழுத்தி வருத்த அதன்கீழ் அழுந்திக் கண்ணுள மட்டும் இருட்டை விட்டகலோம் என்று சொல்லும் இழிநிலைச் சமூகம் எங்கே யிருக்கக் கண்டிருக் கின்றாய்? கருங்கட லின்மேல் பொன்னிறக் கதிர்கள் இலங்கும் வண்ணம் எழுந்த பரிதியே! எங்கள் நிலையின் ஈனத்தைக் காண உள்ளம் நாணியோ உன்றன் ஒளியிற் குன்றிக் குன்றி மேற்றிசை சென்றிடு கின்றாய்! வேறென் செய்வையோ? - பழம் புதுப்பாடல்கள், ப.110, 2005 87. தென்றல் அருவி! எடுப்பு பொழுதுமலர் மணம் மருவி - நம்மேல் ஒழுகும் தென்றல் அருவி - பொழுது உடனெடுப்பு பொழிலிடைத் தழையெலாம் அசையப் பொன்னிறப் பறவைமெய் சிலிர்க்க - பொழுது அடி எழுதஓர் உருவிலாக் காற்றால் - நமக் கின்பமே தன்குளிர் ஊற்றால் கழைமொழி மங்கைமார் உறவும் - குளிர் காற்றுக்கு நிகரில்லை அன்றோ? - பொழுது - பழம் புதுப் பாடல்கள், ப.238, 2005; குயில், ப. 238, 15.8.1948; குறிப்பு: குயில் மாத வெளியீட்டில் பாரதிதாசன் எழுதிய அனைவரும் உறவினர் தொடர்கதையில் நன்னன் என்பான் யாழிசைத்துப் பாடுவதாக இடம் பெறும் பாடல் இது. 88. அணிற்பிள்ளைக்குக் கிளிப்பிள்ளை ஈந்து தந்த இருள்முத் துப்பழம் வேம்பு தந்த வெயில்முத் துப்பழம் இனித்ததேன்? கசந்ததேன்? கிளியே! இனித்த தேன், கசந்த தேன் என்றுணர் அணிலே! - பழம் புதுப் பாடல்கள், ப.281, 2005; குயில், ப. 281, 24.6.1958 89. தென்னந்தோப்பு சின்ன தோப்பு - நல்ல தென்னந் தோப்பு - தரும் முன்னும் பின்னும் நல்ல காய்ப்புக் - குடும்ப முன்னேற்றத்துக் கொரு வாய்ப்பு மோடான மோடி வானத்தி லோடிக் காடாகி ஓலை பச்சென்று வளர்ந்த - சின்னதோப்பு இன்னிளநீரும் தின்னத் தேங்காயும் பின்னிப் பின்னிப் போடும் கீற்றும் - கொடுக்கும் என்வீடும் தென்னையின் தோற்றம்! ஏராளமாய் நாரும் கொடுக்கும் thiu(¡) கொடுக்கும் பட்டையும் கொடுக்கும் - சின்னதோப்பு கட்டிவிட்ட பாளை தித்திப்புச் சாறு தொட்டி இட்டுக் காய்ச்சும் வெல்லம் - நல்ல கொப்பறை கொடுக்கும் செல்வம் காத்திடும் கூரைக் கீற்றும் கொடுக்கும் அடுப்பெரித்திட மட்டையும் கொடுக்கும்1 - சின்னதோப்பு சிட்டுக்கள் பாடும் தென்றலும் ஆடும் குட்டையிலே பூபூக்கும் - நல்ல எட்டுத் திக்கும் மணம்தூக்கும் இல்லா தவரை உழைப்புக் கேட்கும் நல்லா தரவு கொடுத்துக் காக்கும் - சின்னதோப்பு - பழம் புதுப் பாடல்கள், ப.292, 2005 90. படிக்காதவன் சிரிப்பு நிலைமண்டில ஆசிரியப்பா சுவடியில் தோய்ந்தன என்னிரு கண்ணும்! என்னை நோக்கி என்ன பார்க் கின்றீர் என்றான் மதுரை நாய்க்கன் மன்றம் என்றேன்! இருநூறு கல்லுக் கப்பால் இருப்பதை இங்கிருந்து பார்ப்பதா என்று சிரித்தான் விழுந்து விழுந்து சீனனே! - பழம் புதுப் பாடல்கள், ப.381, 2005 91. பொதிநாத் துவையல் அருமை வெண்பா ஆய ஒருத்தி அரைக்க இரண்டுபேர் போயதைவ ழிக்க ஐந்து பூவைமார் - ஓயார்கள் நாவிலிட மூன்றுபேர் நண்ணவேண் டும்பொதி நாவிலிட்ட நல்லதுவை யல். - பழம் புதுப் பாடல்கள், ப.381, 2005 92. இரவின் இளவரசி கட்டளைக் கலித்துறை கரவில் இருந்தொரு மங்கைஎன் மூக்கில் கடிமணத்தை வரவிடு கின்றான் வரவில்லை என்னெதிர் வாயிதழைத் தரவில்லை உண்ணவும் என்றேன்என் தோழனும் தையலவள் இரவின் இளவர சிப்பெயர்ப் பூவென் றியம்பினனே. - பழம் புதுப் பாடல்கள், ப.395, 2005 93. வெற்றிலைக்கு முன் என்ன போட வேண்டும்? வெண்பா வெற்றிலைக்கு முன்என்ன போடுவார் வேலப்பா சற்றிதனை எண்ணிவிடை சாற்றென்றான் - கொற்றன் நகைத்துப்பாக் கென்று நவின்றான் வேலப்பன் அகத்தியடா என்றான் அவன். - பழம் புதுப் பாடல்கள், ப.405, 2005; குயில், ப. 405, 15.05.1962 94. ஏரி ஏரி என்றால் பள்ளம் - அதில் இருக்கும் நிறை வெள்ளம் நீரின் மேலும் துள்ளும் - ஆம் நிறைய மீன்கள் துள்ளும் மேலே பறக்கும் பருந்து - நிறை மீன் அதற்கு விருந்து ஆலா கொக்குகள் தெரிந்து - மீன் அருந்தும் மேலே திரிந்து ஓரத்திலே கோரை - உள்ளான்! ஒரு பக்கத்திலே நாரை! ஆரா மீன்கள் சாரை - கண்டால் அழித்துவிடும் பேரை சென்னல் கெளுத்தி நண்டு - பல சேர்ந்திருப்பது கண்டு பின்னல் வலையைக் கொண்டு - பலர் பிடிப்பதுவும் உண்டு நீர் கொடுக்கும் ஏரி - மீன் நிறையக் கொடுக்கும் ஏரி ஊரைக் காக்கும் ஏரி - நம் உயிரைக் காக்கும் ஏரி - வானம்பாடி சிறுவர் வார இதழ், 6. 8. 1962; பழம் புதுப் பாடல்கள், ப. 419, 2005 