பாவேந்தம்15 பாட்டு இலக்கியம் – 1 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 15 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 432 = 464 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 290/- கெட்டி அட்டை : உருபா. 425/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ!தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டு கோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல் களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை காலவரிசைப்படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வழி பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகள் தமிழ்கூறும் நல்லுலகம் பயன் பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்ய வேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன் வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளோம். பாவேந்தத் தொகுப்பு செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற் றானும் துணைசெய்து நெறிப்படுத்தி உதவிய திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி.தமிழகன் முதலிய பெருமக்களுக்குச் சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந் தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் - தமிழருக்கும் - தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய வருங்காலத் தலைமுறை முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகளை வெளியிடுகின்றோம். - பதிப்பாளர்  வாழும் தமிழால் வளர்வோம்! வாங்க என்றால் திரும்பிப் பார்ப்பவர், வாடா என்றால் திகைத்துப் போகிறார். மக்கள் வாழ்வோடு கலந்து நிற்கிறது மொழி! உள்ளமும் உணர்வும் கலந்த உயிர்ப்பாற்றல் அது. மொழியை வெறும் கருவியாகக் குறுக்கிப் பார்ப்பது, குறுகல் மனத்தையே காட்டும். தமிழ் என்பதற்குள் மொழி, இனம், நாடு, பண்பாடு, வாழ்வு என எல்லாம் கலந்து நிற்கிறது! இந்தப் பரந்த பொருளை விழுங்கி வெளிப் பட்டவையே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள். பாவேந்தம் எனும் தலைப்பின்கீழ் வரும் தமிழ்த் தொகுப்பில் அந்த விரிந்த பொருள் வெளிப்படுவதைப் பார்க்கலாம். நம் முன்னோரின் மூவாயிரம் ஆண்டுகாலச் சிந்தனைச் சேமிப்பு பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பது தமிழ் மொழிக்குள்! மொழியைப் புரிந்து கொண்டால், முன்னோரின் சிந்தனையைப் புரிந்து கொள்ளலாம். அறிவுமரபு அறாமல் பாதுகாக்க விரும்புவோர், மொழியைப் பாதுகாக்கும் ஆர்வத்தோடு இருப்பார்கள். வேரில்லாத பாசியாகத் தமிழினத்தை மாற்றத் துடிப்போர், வடமொழி, இந்தி, ஆங்கிலம் எனப் பிறமொழி வெந்நீரைச் சுமந்து திரிவார்கள். ‘வல்லமை சேர்க்கும், வலிவையுண் டாக்கும்; வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்? (பக். 107) பாவேந்தரின் கேள்வி பொருள் பொதிந்தது. புட்டி உணவு, சத்து உணவு, புரத உணவு என வகை வகையாய்க் குழந்தை உணவுகள் வந்துவிட்டன. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவதே சரியானது என இப்போது வற்புறுத்தப்படுகிறது. தாய்ப்பால்தான் குழந்தைகளுக்குச் சிறந்த உணவு என்று மருத்துவ உலகம் வலியுறுத்திப் பேசுகிறது. தாய்ப்பால் வாரம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது அரசின் நல்வாழ்வுத்துறை! தாய்ப்பாலின் தேவையை மெதுவாகப் புரிந்து கொண்டதுபோல், தாய்மொழியின் தேவையையும் மெதுவாகத்தான் புரிந்து கொள்ளப் போகிறோம். தாய்ப்பால் வாரம் இங்கே கொண்டாடப்படுவதுபோல், பிப்பிரவரி 21ஆம் நாளைத் தாய்மொழி நாள் என உலகம் கொண்டாடத் தொடங்கிவிட்டது. குன்றாப் பெருமை உடைய நிறைமொழி ஒன்றே என்றால் அதுஎன் தமிழ்மொழி (தொகு.18; பக். 363) பாவேந்தருக்கு இருந்த இந்தப் பெருமிதம் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். மொழி நம் இயல்பான அடையாளம்! மதம் மாறுவதுபோல் மொழி மாற முடியாது. மொழியை மறந்த இனம், முகத்தை இழந்த மாந்தனுக்குச் சமம். நாவில் வாழும் மொழி எதுவோ, அந்த மொழியே வாழும்! மொழி வாழும் இடம் நாக்கு என்பதைப் புரிந்துகொண்டவர்களுக்கே மொழிப் பாதுகாப்பும் புரியும். மக்களை நேசிக்கும் எவரும் மக்களின் மொழியை நேசிப்பார்கள். சிற்றூர் மக்கள் நாவில் ராசாத்தி, ரோசாப்பூ, வேட்டி என்றே வரும். ஜ, ஷ, ஹ, ஸ்ரீ என்பனவெல்லாம் அவர்கள் நாவில் வரா. மூளையை அந்நிய மொழிக்குப் பறி கொடுத்தவர்களே ஷிவ்குமார், லக்ஷ்மி, கணேஷ், ஷங்கர் என்று இரவல் கைத்தடியோடு தள்ளாடி நிற்பார்கள். எழுத்துக் கலப்பும் சொற் கலப்பும் மொழியழிவின் தொடக்கம். மொழி என்பது பொது ஒழுங்கு! எனக்குப் பிடித்திருக்கிறது எனப் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. சீர் குலைப்போரைச் செத்தவர் பட்டியலில் வைத்துவிடுகிறார் பாவேந்தர். தனக்கென வாழ்வது சாவுக்கொப் பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வது ஆகும்! (பக். 154) மூச்சுவிடும் பிணங்களே மொழியழிவை ஊக்குவிக்கின்றன. பிரெஞ்சு மொழியில் பிறமொழிச் சொல்லைக் கலந்தால் தண்டத் தொகை கட்டவேண்டும். 1971இல் இருந்தே அதற்கான சட்டம் அங்கே இருக்கிறது. சீனப் பெயரைத் தவிர வேறு பெயர் வைத்தால் அரசு சலுகை எதனை யும் சீனாவில் பெற முடியாது. சீன அரசே தொகுத்து வைத்திருக்கும் பெயர்களில் ஒன்றைத்தான் குழந்தைகளுக்கு வைக்க வேண்டும். பாவேந்தர் ஏங்குகிறார்: ‘அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? (பக். 36) தமிழ்நாட்டுக் குழந்தைகளைப் பெயரை வைத்து அடையாளம் காணமுடியாது. ஆஷா, அபிஷேக், நீரஜா, நிர்மல் என வடமொழி நெடி! வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர் வரக்காணில் காறிநீ உமிழ்வாய் (பக். 132) பாவேந்தருக்கு வரும் சினம், ஒவ்வொருவருக்கும் வந்திருந்தால் இந்த இழிநிலை ஏற்பட்டிருக்காது. வடமொழி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பிறமொழிச் செல்வாக்கு ஊக்கப்படுத்தப்படுகிறது. வாணிகம், தொழில், ஆட்சி, கல்வி இப்படி ஏதோ ஒன்றில் செல்வாக்கு பெற்றுவிட்ட மொழி - மற்ற மொழியை விழுங்கிச் செரிக்க வாயைத் திறந்தபடி உள்ளது. விழிப்புணர்வு இல்லாத இனம் அழிந்துவிடும்! விதைக்காத நிலத்தில் விளைச்சல் இருக்காது! பாவேந்தர் தெளிவு படுத்தியிருக்கும் விதம் வியப்பைத் தருகிறது. விழிப்போரே நிலைகாண்பார் விதைப்போரே அறுத்திடுவார் களைகாண் டோறும் அழிப்போரே அறஞ்செய்வார் அறிந்தோரே உயர்ந்திடுவார்! ஆதல் ஆர்வம் செழிப்போரே இளைஞர்களே, தென்னாட்டுச் சிங்கங்காள்! எழுக நம்தாய் மொழிப்போரே வேண்டுவது தொடக்கஞ்செய் வீர்!வெல்வீர்! மொழிப்போர் வெல்க! (பக். 89, 90) தமிழினத்தின் மூச்சும் முதுகெலும்பும் தமிழ் மொழியில்தான் இருக்கிறது என்று உருகினார். வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என்தமிழ்த் தாயே (பக். 30) தமிழ்ப் பாதுகாப்பின் தேவை உணர்ந்து இணைந்து உழைக்குமாறு தமிழர்களை அழைத்தார். தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு (பக். 21) எளிய தமிழில் பாடல் எழுதும்போதே பிலம், கஞ்சமலர், கொதுகு, சிச்சிலி என அரிய சொற்களையும் இடம்பெற வைப்பது பாவேந்தர் வழக்கம். வானூர்தி, புகைவண்டி, மிதிவண்டி, பொறியியங்கி (கார்), இடைச் செட்டுக்காரர் (காண்டிராக்டர்) என்பனபோல் புதிய கலைச் சொற்களை யும் பாடலில் இடம்பெறச் செய்துவிடுவார். அருஞ்சொற்களையும், கலைச் சொற்களையும் பாடலில் இடம்பெற வைப்பதற்கான காரணத்தையும் அவரே கூறுகிறார்: இரண்டோர் அருஞ் சொற்களேனும் அறிந்து கொள்ளாராயின், பாட்டினால் ஏற்படும் பயன்தான் என்ன? (இளைஞர் இலக்கியம், முன்னுரை) பாவேந்தர் பாடல், தமிழகத்தைக் காக்கத் தம்மையே ஒப்படைக்கும் ஈக உணர்வை வாசிப்போரிடம் ஏற்படுத்தியது. ‘எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால் செத்தொழியும் நாள்எனக்குத் திருநாள் ஆகும் ! (தொகு.2; பக்.159) தம் காலத்தில் குமுக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் பங்கெடுப்பவராகப் பாரதிதாசன் திகழ்ந்தார். வெள்ளையர் வெளியேறாத நிலையிலேயே, இந்திக்குப் பட்டம் சூட்டும் எட்டப்பர் வேலைகள் 1938இல் தொடங்கிவிட்டன. தமிழகம் கண்ட முதல் மொழிப்போர் அதுதான்! மக்கள் தொகுதி எக்குறை யாலே மிக்க துன்பம் மேவு கின்றதோ அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச் சிக்கெனப் பிடித்துச் சீர்பெறல் இயற்கை (தொகு.18; பக்.15) காலத்தின் குரலாக மொழிப்போர்க் களத்தில் முழங்கின பாரதிதாசன் பாடல்கள். அவை அவரைப் புரட்சிக்கவிஞர் ஆக்கின; பாவேந்தர் ஆக்கின. தந்தை பெரியாரின் தன்மானச் சிந்தனைகளைக் கலை, இலக்கிய வடிவத்தில் ஏந்தும் முயற்சியைப் பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா இருவரும் வேகப்படுத்தினர். பாவேந்தரிடம் பாடல்களாகவும், அண்ணாவிடம் உரைநடை யாகவும் கலை இலக்கிய உருவம் பூண்ட பெரியாரின் புரட்சிக் கருத்துகள் தமிழர் மனங்களை எளிமையாய்ச் சென்றடைந்தன. தமிழிலக்கிய வரலாறு கேட்டிராத புதுக்குரலை எழுப்பியது பாரதிதாசன் பாடல்: பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை! (பக். 350) தன்னை அழித்துக்கொள்வது கோழைத்தனம்! அழிப்பவரை அழிப்பதே ஆண்மைச் செயல்! புதுவழி காட்டியது புரட்சிப் பாவேந்தர் பாடல்: ‘சாகச்செய் வானைச் சாகச்செய் யாமல் சாகின்றாய் தமிழா! (பக். 254) உலகின் எந்த மூலையில் மாந்த உரிமை பறிக்கப்பட்டாலும் எழுத்தைப் போர்க் கருவியாக்கினார் பாவேந்தர். ‘உருசிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான் உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான் இட்லர் என்னும் சிட்டுக் குருவி! (தொகு.17; பக்.106) இட்லரைக் குருவியாகப் பார்த்த அவர், (அன்றைய) உருசியாவை உலகின் உயிராகப் பார்த்தார். பாரதி பாட்டில் பற்றிய பொதுவுடைமைத்தீ என்றன் பாட்டு நெய்யால் வளர்ந்தது (தொகு.17; பக்.276) பாரதியைத் தீயாகவும் தம்மைத் தீ வளர்க்கும் நெய்யாகவும் உருவகித்துக்கொண்ட பாவேந்தர் கை காட்டினார். ‘புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!’(தொகு.17; பக்.72) காலம் பாரதிதாசனை உருவாக்கியது, காலத்தை பாரதிதாசன் உருவாக்கினார். புதிய காலத்தின் புதிய குரலாக ஒலித்த அவர், இனத்தின் மூச்சாகவும் முதுகெலும்பாகவும் மொழியைப் பார்த்தார். தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார்எனில் வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக! (தொகு.17; பக்.91) மதமும் சாதியும் மக்களைப் பிரிப்பவை. தமிழ்எனும் உணர்வே தமிழரை இணைக்கும். அந்நிய மொழியும் எழுத்தும் பண்பாடும் தமிழர் அடையாளத்தை மெல்ல அழிப்பவை. விழிப்பூட்டினார் பாவேந்தர். பாக்கியம் பெற்றவன் நீதான்! - புலி நீதான்! - சிங்கம் நீதான்! - இந்தப் பாராண்ட மறத்திஉன் தாய்தான்! - தமிழ்ப் பண்பாட்டை மிதிப்பவன் பழிவாங்கப் படவேண்டும்! சும்மாஇருந் தால்நீயோர் நாய்தான்! (தொகு.18; பக்.47) ‘பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க! - என ஆணையிட்டவர் பாவேந்தர். அவரின் அனைத்து நூல்களையும் ஒரே பெருந்தொகுப்பாக்கி - பொருள் வாரியாக 25 தொகுதியாக்கி தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியன் வழங்கியிருக்கிறார். பாடல்களை யாப்புக்கும், இசைக்கும் ஏற்ற வகையில் சீர்பிரித்து வெளியிட முயன்றிருப்பது இத் தொகுப்பின் தனிச்சிறப்பு! இராவண காவியம் நூலுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய சிறப்புப் பாயிரத்தின் வரிகளை உருக்குலைக்காமல், 1946 முதற் பதிப்பில் உள்ளபடி முழுமையாகத் தந்திருப்பதும் இத்தொகுப்புதான்! சிறப்பு சேர்த்த பாவேந்தருக்கு இப்பெருந்தொகுப்பின் வழியாகச் சிறப்புகளைச் சேர்த்திருக்கிறது இளங்கணி பதிப்பகம். சேரவேண்டியவர் களிடம் இத் தொகுப்புகளைச் சேர்க்க வேண்டிய கடமை தமிழுணர்வாளர்கள் அனைவர்க்கும் உண்டு. - செந்தலை ந. கவுதமன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல்மாமH iii நுழையுமு‹... vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiii வாழு«தமிழாšவளர்வோ« xv தன்னைப் பற்றி 1 1. நானொரு பாவேந்தன் 3 2. ஓய்வு பெற்றேன் 8 3. என் ஆசை 9 4. எனது நன்றி 11 தமிழ் 13 1. தமிழின் இனிமை 14 2. இன்பத் தமிழ் 16 3. தமிழ் உணவு 17 4. தமிழ்ப் பேறு 20 5. எங்கள் தமிழ் 21 6. தமிழ் வளர்ச்சி 22 7. தமிழ்க் காதல் 23 8. எந்நாளோ? 24 9. சங்க நாதம் 27 10. தமிழ்க் கனவு 28 11. தமிழ் 30 12. தமிழ் 31 13. தமிழ்ப் பள்ளு 32 14. நெஞ்சுக்கு நீதி 33 15. தமிழர் முரசு 34 16. எழுச்சி 35 17. எந்நாள் 36 18. இன்பத் தமிழ் 37 19. உலகின் நோக்கம் 38 20 .தமிழ் 39 21. தமிழியக்கம் 42 22 .இசைத் தமிழ் 91 23. தமிழர்களின் எழுதுகோல் 92 24. வள்ளுவர் வழங்கிய முத்துகள் 93 25. இசைபெறு திருக்குறள் 95 26. நாடாண்டாயே 98 27. எதுஇசை? 99 28. தமிழ்த்தொண்டு 100 29. தமிழ்த்தொண்டு 101 30. நிலவே 103 31. முழங்கும் குறள் 104 32. தன்னேரிலாத தமிழ் 105 33. எதை வேண்டித் தவங்கிடந்தாய்? 106 34. செந்தமிழ்ச் செல்வம் 107 35. துள்ளி ஆடுவோம் 108 36. விண்ணப்பம் கேள் 109 37. எனக்கு வந்த அஞ்சல் 110 38. தமிழன் பாட்டு 111 39. தமிழ் வாழ்த்து 112 40. முத்தமிழ் 114 41. மூவேந்தர் 114 42. தமிழ்மொழி - தமிழ்நாடு 115 43. கட்டாயக் கல்வி 116 44. தமிழ்தான் நீயா? 117 45. வானொலி 118 46. காட்சி 119 47. படி! 120 48. இரகசியச் சொல் 122 49. அரங்கரத்தினம் சாவுக்கு வரவேற்பு 123 50. அரங்கரத்தினம் உண்ணாநோன்பு வெல்க 125 51. பெயர் மாற்றம் 126 52. மன்னை மாநாட்டுத் தீர்மானங்களின் கருத்து! 128 53. குண்டு போடு 131 54. காங்கிரசா தமிழைக் காத்தது 133 55. தில்லிக்கு எச்சரிக்கை! 135 56. தமிழ் வரலாறு 136 57. அறிவு பெற வருக தமிழ் 138 58. நமது குயில் 139 59. தமிழுள்ளம் 141 60. கழைக் கூத்தாடி 143 61. நல்ல தொண்டு 145 62. தமிழுண்டு நானுண்டு 146 63. தமிழ் வாழ்க்கை 147 64. வள்ளுவர் வழி 148 65. என்கருத்தில்... 149 66. தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் 150 67. தமிழிளைஞரே தமிழைக் காப்பர் 151 68. தன் கையே தனக்குதவி 152 69. எங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி 153 70. தமிழுக்கு வாழ்வதே வாழ்வு 154 71. எது என் ஆசை? 155 72. தமிழ் விடுதலை ஆகட்டும் 156 73. தமிழ் இன்றியமையாதது 156 74. தமிழன்னை விழிக்க! 157 75. மணக்காதா? 158 76. தமிழ் தமிழன் உயிர் 163 77. ஆரிய மறைக்கு முன்னவை தமிழ் நான்மறை 165 78. முடியாதது 166 79. யாழிசையும் தமிழோசையும் 166 80. தருமபுரத்துத் தம்பிரான் தக்கவாறு நடந்து கொள்க 167 81. புலவர் சிவபிரான் திருவடி அடைந்தார் 168 82. சிவமா பெரிது? செந்தமிழ் பெரிது! 169 83. தமிழன்னை 170 84. இரண்டும் ஒன்றா? 171 85. கோயிலில் தமிழில்லை 172 86. மொழியின்றேல் நாம் யார் 174 87. சமயக்கணக்கரும் தமிழும் 175 88. உயிர்மொழி 177 89. வாழ்வுயர்த்தும் மொழி 178 90. அரியணை அறிஞர்க்கு 179 91. ஆடு - பாடு 180 92. வையம் அறியச் செய்வீர் 181 93. இல்லாத சிவனும் இருக்கும் தமிழும் 182 94. தமிழின் மேன்மை 183 95. எழுத்துத் திருத்தத்தினும் எண்ணத்திருத்தம் வேண்டும் 187 96. எந்நாள் 189 97. அந்தம்மாவும் நானும்! 190 98. மதத் தலைவர் அனைவரும் மாத்தமிழின் பகைவரே! 193 99. பாட்டும் பாவையும் 194 100. குயில் 195 101. மனிதனும் தாய்மொழியும் பிரிக்க முடியாதவை 198 102. அழியாப் புகழ் 199 103. தமிழைக் கெடுப்பவர் கேடு 200 104. அகர முதலி 202 105. தமிழுலகத் தலைமை 203 106. தமிழ் ஊற்று 204 107. குறள் படித்தேன் 206 108. அம்மா! அம்மா! 207 109. தாயும் குழந்தையும் 208 110. தமிழ்த் தொண்டு 209 111. தமிழர் அறிக்கை 211 112. பிரதிநிதித்துவம் - படிவம் 212 113. கன்னடம் பணிய வேண்டும் 213 114. குறள் மலர் 215 115. நான் பிறந்த உலகம் சிறந்தது! மார் தட்டிய வள்ளுவன் 216 116. அமைச்சருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு! 217 117. பகை ஒழிய வருவாய் 218 118. மின்னும் தமிழ் 219 119. அது நம்மை ஒன்று படுத்தும் 221 120. செந்தமிழ் மீட்போம் 222 121. தமிழ் நலம் 223 122. சாதி மறுப்பு 225 123. மதமறுப்பு 225 124. வடமொழியில் சிபாரிசா? 226 125. இராசாசி தமிழ் படித்தால் வாராத வெண்பாவும் வரும் 227 126. இராசாராம் அடங்க வேண்டும் 228 127. திரு முத்தமிழ் அழிக்கும் சட்டர்சிக்குக் கருமுத்துக் கேடயம் கொடுத்தார் 228 128. இறகு தமிழ்! பேனா ஆங்கிலம் ! 229 129. பொன்னேட்டில் புதுப்பாட்டு 230 130. என் விலங்கை மாற்று 231 131. சுண்டல் காரணப்பெயர் 233 132. தமிழ் போனால் மேடைத் தம்பிரான் பாடைத்தம்பிரான் 233 133. தலைவி விழுந்து விழுந்து சிரித்தாள் 234 134. பாரதிதாசன் திருக்குறள் 235 135. கிழக்குச் சுவருக்கு அப்பால் தமிழ்விளக்கு 236 136. மன்ற உறுப்பினர்க்கு நன்றியும் மற்றவர்க்கு வேண்டுகோளும்! 236 137. எந்தநாள் திருநாள்? 237 138. கவிஞர்கள் தேவை! 239 139. தமிழன் 242 தமிழர் 243 140. அன்றும் இன்றும் 243 141. தமிழன் 244 142. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை 245 143. பகை நடுக்கம் 247 144. தமிழர் எழுச்சி 248 145. நீயறியாயோ நிலவே 250 146. தமிழர்கள் இழைத்த தவறு 251 147. தமிழ்நாட்டில் ஐந்தாம் படை 252 148. இனமல்லடா அவன் 253 149. சாகின்றாய் தமிழா 254 150. தாலாட்டு 255 151. தமிழன் 256 152. தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து 257 153. தமிழர்க்கு வாழ்க்கைச் சுவை ஏது? 259 154. தமிழர் பண்பாடு 260 155. பழிப்புறு தமிழனை விழிப்புறச் செய்வது 262 156. தமிழர் யார் 263 157. வெற்றி நமக்கென்று கொட்டடா முரசு 263 158. தமிழினத்தார் ஒன்றுபட வேண்டும் 264 159. விடுதலைப் பாட்டு 266 160. அச்சந் தவிர் 267 161. தீவாளியா 268 162. தமிழுக்கு உயிர் அளித்தான் 270 163. மீட்சிப் பத்து 271 164. தன்னாட்சி 273 165. வருக நேருவே 274 166. தென் பாங்குக் காரி 276 167. தமிழன் 278 168. நாம் தமிழர் என்று பாடு 279 169. கொட்டடா முரசம் 280 170. தூங்கும் புலி எழுந்தது 281 171. புலிக்கு நாய் எந்த மூலை 282 172. தமிழ் வீரர் எழுச்சி 283 173. புத்துலகம் காண்போம் 284 174. கல்வி ஆசிரியருக்குத் தொல்லை 285 175. தமிழன் 287 176. தமிழன் 288 177. தமிழர் வாழ்க 289 178. தமிழர்க்கு அழைப்பு 291 179. தமிழரிடம் எல்லாம் உண்டு 292 180. இனப் பண்பாடு மனப் பண்பாடாதல் வேண்டும் 295 181. எழுக தமிழர் 296 182. அம்மா சுட்ட தோசை 297 183. அடிமைத் தமிழன் தொல்லை அவனுக்கு வை எல்லை 298 184. குருதிபொங்கினால்... 299 185. எரிமலைச் சீற்றம் 300 186. பர்மாத் தமிழர்க்கு நன்றி 301 187. எல்லாம் தமிழர் உடைமையே 302 188. கொடைத் தமிழன் 304 189. தமிழர் எழுக! 306 190. அறுவரைக் கொன்ற அரசியல் வீழ்க! 307 191. மொழிவெறியா கூடாது? 308 192. காங்கிரசு 309 193. பொதுப்பணம் அரோகரா! 309 194. ஒற்றுமைதான் வழி 310 195. அமைச்சர் பத்தவச்சலனார்க்கு அறிக்கை 312 196. அமைச்சர் பத்தவச்சலனார்! 313 197. பத்தவச்சலம் பாடும் பாட்டு 314 198. பத்தவச்சலம் மேலும் பழியேற்றார் 314 199. கொட்டடா பறை! 315 200. மீண்ட தமிழகத்தில் 315 201. தமிழனுக்குப் பிறக்க வேண்டும் 316 202. அன்னைமார்க்கு விண்ணப்பம் 317 203. எங்குள்ள தமிழரும் எங்கள் பட்டாளம் 318 204. கன்னக்கோல்காரன் 320 205. தில்லி ஒழிக 321 206. புறப்படுவீர்! விடுதலைப் போர்! 322 207. படார் 323 208. இதுவுமோர் பிழைப்பா 324 209. தமிழர் கடன் 325 210. வாருங்கள் 326 211. வெல்க தமிழ், வெல்க தமிழர்! 328 212. தமிழைத் தமிழனிடமிருந்து பிரிக்கமுடியாது 329 213. துணைத்தலைவர் இலக்குமண சாமி 330 தமிழ்நாடு 331 214. தமிழ் நாடு 331 215. கூவாய் கருங்குயிலே 332 216. வேங்கைக் குகையில் 333 217. எதற்கும் மேல் 334 218. மீட்சி எப்போது? 334 219. எது தம்பி வேண்டும்? 335 220. வாய்மை முரசு 337 221. விடுதலையே 339 222. தாயகமே வாழி 340 223. வண்மைசேர் தமிழ்நாடு 341 224. வெற்றிக்கு வழி 342 225. தொண்டர்படை நடைத்திறம் 344 226. அன்பு வாழ்வுகொண்ட நீவிர் 345 227. வெல்க! 346 228. மக்கள் பாசறை 347 229. பட்டாளம் கிளம்பிற்று கொட்டடா பறை 349 230. கொலைப்படை வேண்டும் 350 231. குடும்பத்தோடு புறப்படு 351 232. புகழைத் தேடு 352 233. புறப்படட்டும் புலிகள் 353 234. விடுதலை பெறுவது முதல்வேலை 354 235. செந்தமிழ் நாடு 356 236. தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் 357 237. தமிழ்நாட்டு வாழ்த்து 358 238. நாடு நலம்பெற வேண்டும் 359 239. விடுதலை முழக்கம் 361 240. தமிழகம் மீள வேண்டும், ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும் 362 241. வெல்க தமிழ்நாடு 364 242. கொடிய ஆட்சி 366 243. வருக விடுதலை வாழ்வு 368 244. ஆட்பட்டிருப்பது வெட்கம் 370 245. தமிழகம் 372 246. எழில்மிகு தமிழ்நாடு 374 247. விடுதலை ஆசை 375 248. நாட்டியல் நாட்டுவோம் 376 249. துன்ப உலகிலும் தொண்டு 381 250. நன்றி இது - தீது எது? 382 251. கடன்பட உடன்படேல் 384 252. என் நாடு 385 253. பண்பாடு 386 254. நாட்டுக்கு நான் 387 255. சென்னை பற்றிச் சண்டையா? 388 256. தனியாக்கப் போராங்கோ 389 257. புதுப்போர் 391 258. எது பிரிவினை மனப்பான்மை 393 259. நேருவின் ஆட்சி 394 260. அவர் செல்லும் பாதை 395 261. வெல்வ துறுதி 397 262. விடுதலை நம் உரிமை 398 263. வேங்கையே எழுக 400 264. சீறும் புலிகள் நாம் 401 265. தமிழ்நாட்டின் நிலை 402 266. இனாம் ஒழிப்பு 404 267. தமிழாட்சியை விரி பிறர் ஆட்சியை எரி 405 268. தமிழர் நாடு 406 269. தமிழ்நாடு ஒன்றுபடுக 407 270. செந்தமிழ்நாடு 408 271. தமிழ்நாடு 409 272. அன்றைய கருத்து இன்றைய கடமை 411 273. செந்தமிழ் நாட்டுக்குத் திருநாமம் 413 274. நாட்டில் மிடி இல்லையாம் 413 275. இறைவன் பணித்ததே நம் பணி! 414 276. வாடல் jவிர்த்துtழ்வோம் 416 277. தமிழகம் வென்றாக வேண்டும்! 416 278. காற்றுள்ள போதே 417 279. உனக்குமா ஓர் இயக்கம்? 418 280. ஏமாறாதே 420 281. நாடு, மொழி, பண்பாடு, எல்லை, கலை. 420 282. வரலாற்றை முழக்கிடுக உலகமெலாம் 421 திராவிடன் 423 283. திராவிடன் கடமை 423 284. அது முடியாது 424 285. உணரவில்லை 425 286. உயிர் பெரிதில்லை 426 287. இனி எங்கள் ஆட்சி 427 288. திராவிடர் 428 289. திராவிடர் திருப்பாடல் 432 290. விடுதலைப் பாட்டு 438 291. திராவிடர் ஒழுக்கம் 439 292. திராவிடர்க்கு விண்ணப்பம் 442 293. முன்னேறு... 447 294. திராவிடர் வெற்றி 448 295. தூத்துக்குடி மாகாணத் திராவிடர் மாநாடு 449 296. திராவிடர் மீட்சி 451 297. மெதுப்போக்குத் திராவிடனுக்கு முற்போக்குத் திராவிடன் மொழிதல் 455 298. ஒன்றுசேரவேண்டும் 456 299. முன்னணி மறவன் நீ 457 300. ஆளவந்தீர் அழிகின்றீர் 458 301. இராஜாஜி கவர்னர் ஜெனரல் 460 302. முற்போக்குப் பார்ப்பனர் மாநாடு 462 303. பகுத்தறிவிதுவா? பகுத்தறிவீரே 464 304. இறந்தவர்பிழைத் தெழுந்தார் 465 305. க.து.விட்டுத் தி.க.வந்தனர் வருக! வாழ்க! 465 306. மீண்ட செல்வங்கட்கு வரவேற்பும் வாழ்த்தும் 466 307. வெற்றிப் பறை 467 308. ஏனங்குடி ம. சம்பந்தம் அறிக்கை 468 309. திராவிட நாட்டுப் பண் 469 310. இனப் பெயர் 471 311. பிரிவு தீது 474 312. ஏற்றப் பாட்டு 475 313. அன்னை அறிக்கை 491 314. எங்கள் திராவிடம் 492 315. குழந்தை வளர்ப்பு 493 316. ஆளவந்தார்க்கு இறுதி அறிக்கை 495 317. இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க 497 318. வாழ்க திராவிடம் 499 319. திராவிட நாட்டுக் கொடி வணக்கம் 501 320. எங்கள் கொடி எங்கள் நோக்கம் எங்கள் உறுதி 502 321. திராவிட நாட்டுத் தொண்டால் வரும் இன்பம் 503 322. திராவிட நாட்டுப் பண் 505 323. திராவிடம் 506 324. தெற்கெல்லை திராவிடர்க்கே 508 325. வந்தார்க்கு வாழ்த்து 509 326. தி.மு.க. அட்டூழியம்! 510 327. கல்லெறிதல் நன்றா? 510 328. தொலைபேசிக்குத் தீயா? 510 329. மிதிவண்டிக்குத் தீயா? 511 330. பேருந்துவண்டி சிதைத்தது சரியா? 511 331. கண்ணியமா? புண்ணியமா? 511 332. மருத்துவ இல்லத்திலும் வம்பா? 512 333. எரிந்தன பெண்கள் வயிறு! 512 334. தி.மு.க.வின் இறுதி 512 இந்தி எதிர்ப்புப் பாட்டு 513 1. என் தமிழா 514 2. இந்தி எதிர்த்திட வாரீர் 517 3. இந்தியா கட்டாயம்? 518 4. இந்தி எதிர்ப்பு முரசு 519 5. எழுக! 520 6. எல்லாரும் வாருங்கள் 521 7. பர்க்கட்டும் 523 8. இந்தி ஒழிப்பதும் கட்டாயம் 525 9. பிள்ளைகள் சொத்து தாய் மொழிக்கே 526 10. இந்தி எதிர்ப்பார் இயம்பும் உறுதிப்பாடு 527 11. வடமொழி எதிர்ப்பு 528 12. இந்திக்கு உன்திறம் காட்டு 529 13. இந்தி எதிர்ப்பார் மேற்கொள்ளும் உறுதிப்பாடு 531 14. இந்தியா? 532 15. இந்தித் திணிப்புச் சரியல்ல 533 16. இந்தி ஒழிக 534 17. புதுவாழ்வு வேண்டும் 535 18. இந்திப் போர் மூளுக! 537 19. இந்திப் பேயாட்டம் 539 20. அரிமா இடத்தில் நரிமாவா? 540 21. இப்படி ஓர் ஓசையா 541 22. இந்தித் திணிப்பு 542 23. இந்தி எதற்கு? 543 24. காற்றை விதைத்துப் புயலை அறுக்காதீர் 544 25. இந்தியை எதிர்ப்போம் 545 26. எல்லாத் துறையிலும் இந்தி ஒழிக 547 27. தமிழர் ஓங்கினர் வாள் 548 28. கிளிக்கு இந்தி வருமா 548 29. வடக்கின் இடக்கு அடக்கு 549 30. புறப்பாட்டுப் பாடு 550 31. வரலாற்றில் வெற்றிகொள் 551 32. இந்திமுக்காலமும் இல்லை என்று முழங்கு 552 33. போருக்கு வேண்டும் பிள்ளை 553 34. கல்விஅமைச்சர்க்கு 555 35. திணிக்கும் மொழி வேண்டா இணைக்கும் மொழி வேண்டும் 556 36. தேர்தல்அறிக்கை 557 37. எங்கேவாழ்வு 559 தன்னைப் பற்றி 1. நானொரு பாவேந்தன் பாரதிதாசனார் தம்மைப்பற்றி யாத்த கவிதை தமிழி லக்கணம், தமிழி லக்கியம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், புதுவைத் திருப்புளி சாமி ஐயா, செந்தமிழ் இருப்பே என்னும் பங்காரு பக்தர், புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு பெரும்புகழ்ப் பெரிய சாமிப் பிள்ளை என்பவர் ஆவர். இவர்களின் அருளினால் பதினே ழாண்டும் பற்றா இளையேன் நாற்பது புலவர் தேர்தலில் முதலாத் தேர்வு பெற்றேன். காரைக் காலின் ஒருபகுதி யான நிரவியில் ஓர்இடம் ஓர்ஆ சிரியர் தேவைஎன் றதனால் அந்த இடத்தை அடையக் கருதிப் புலவர் பல்லோர் போட்டி இட்டனர். யானும் பதினெட்டாண் டெய்தினேன், ஆயினும் இளையன் ஆதலால் அவன்அவ் விடத்தை அடைதல் ஆகா தென்றனர் ஆள்வோர். ஆயினும் நானே அதனை அடையச் சட்டங் காட்டித் தடைகளை நீக்கி அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார். அவர்யார்? கல்வித் துறைச்செய லாளர் பொய்இலா ராகிய கையார் என்க. முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன் ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன். அலுவலில் இருந்த அத்தனை நாளிலும் அறவழி தவறிய அதிகா ரிகளின் எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக்கடலை வென்று நீந்தா வேளையே இல்லை. அலுவல் கால நிலைஇது. ஆயினும். ஆசை பற்றிய தமிழின் தொண்டில் ஒட்டிய என்உளம் வெட்டினும் பிரியாது வெண்பா முதலிய எழுதும் என்கை; வண்ணம் பாடிக் கொண்டிருக் கும்வாய்! முப்ப தாண்டு முடியும் வரைக்கும்நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர் என்னும்! ஆயினும், கடவு ளுருவம் அனைத்தையும் தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்! பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை, புதுநடை காட்டினார். நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர் தொண்டினால், அவர்க்கும், புலவர்க்கும் தோன்றும் சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன். முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும் கட்புலம் போல என்றன் உள்ளம், சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும் சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும் இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர் ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது. நல்லா சிரியன்மார் நல்லா சிரியைமார் பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும் அலுவலில் அழகுற வாழ்கின் றார்கள். திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால் கொலைமுதற் பற்பல குற்றம் சுமந்த மாசிலா மனத்து மாட சாமியும் அன்புறு பாரதி அரவிந் தர்முதல் வன்முறை யுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப் பன்முறைப் புதுவையில் செத்துப் பிழைத்தேன். மக்கள்நலம் காத்தல் கண்டு ஆளவந்தார் எக்கேடு சூழினும் அஞ்சேன்; ஒருநாள் சிறைக்கதவு திறக்கப் பட்டது; சென்றேன்; அறைக்கதவு புனிதப் பட்டது; மீண்டேன். புதுவை அரசியற் போரில் இறங்குவேன்; இதைவை யேன்எனில் அதைவிட்டு வையேன். நாய்பல நாற்புறம் வாய்தி றக்கினும் தாய்மொழித் தொண்டு தவறிய தில்லை. நன்றி மறந்தவர் இன்று வரைக்கும் குன்று கொணர்ந்து தூற்றுவர்; நன்றெனப் பட்டதைச் செய்வேன்; பகைவருக்கு அஞ்சேன். வாய்ப்பு நேர்ந்த போதெலாம் பிறரைத் தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை. படிப்புத் தந்தேன் சோறுதந் தேன்தலை எடுக்கச் செய்தேன் என்தலை தனைஅவன் அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்; குறுக்கிற் பாய்ந்தும் பெரியவன் ஆகட்டும் என்று நினைத்திருக் கின்றேன் இன்றும்! என்கை பற்றி எழுந்து, பின் என்னையே துன்பு றுத்தும் பிள்ளைகள் பற்றிய கதைகள் பலஉள. தடைகள் கணக்கில. எதையும் தாண்டி இந்நாள் எழுபதாம் ஆண்டினை, ஈளைநோய் அங்காந்த வாயையும் தாண்டி அடைந்தேன்; சாவு தோற்றது! மெய்யே! ஆயினும் மெய்இலா உலகில் என்னை இன்னும் வாழச் சொன்னார் புலவர் இராம நாதன் அவர்கள்! நானோர் பாவேந்தன் என்பதனை நானிலத் தமிழர் நன்றே அறிவர். என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர் நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்மர். என்நடை தம்நடை; என்யாப்புத் தம்யாப்பென்று இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை எண்ணினால், இருப்பவர் தம்மில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர். திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவ ரிருப்பிடம் என்றன் நூற்களின் இருப்பிடம்! அவரால் வெளிவந் துள்ள திரைப்படம் என்நூற் சொல்லை மாற்றியது குறிப்பிடும்! பழியே தவர்மேல்? என்நூல் அல்லது வழியே தவர்க்குக்? கற்பனை ஏது? கட்சித் தலைவர்தம் கட்சிக் குழந்தையின் தொட்டில் ஆட்டப் பாடிய பாட்டும், வளர்க்கப் பாடி வந்த பாட்டும் என்பாட் டாகும்! என்பாட் டுக்குப் பின்பாட்டுப் பாடினோன் அதனைத் தன்பாட்டு என்று இயம்பும் - இதுகுன்றின் விளக்காம்! எனினும், நாட்டுப் பற்றுள நல்லவர் மிகப்பலர் என்றன் பாட்டின் மேன்மையை உணர்ந்து சிலசொல் உரைத்த துண்டு: முட்டுக் கட்டை இட்ட தில்லை. மற்றும், தமிழே உயிரென வாழும் தோழர் சில்லோர் வாழ்வின் பயனென என்பாட் டுக்களை என்றன் நூற்களை வரப்ப டுத்தி முறைப்படி வாய்விட்டு வீட்டிலும் கூட்டந் தன்னிலும் மிக்க ஒழுங்குறப் பாடு கின்றதும் உண்மையே. ஒருநாள், ஓரிலக்கம் மக்கள் கூடிக் கால்இ லக்கம் வெண்பொற் காசும் பொன்னின் ஆடையும் ஈந்ததும் பொய்யன்று. இவர்க ளன்றி மேல்நான் இயம்பிய இழிந்தோர் என்னை ஒழிக்கத் தமிழையே ஒழிக்கவும் தயங்கா உள்ளம் படைத்தவர். புலவர் இராம நாதன் அவர்கள் தமது பெருந்தமிழ்ப் புலமையால் தாவி என்றன் நூல்கள் அனைத்தையும் எடுத்துக் கவிஞரும் காதலும் எனப்பெயர் கொடுத்துத் திறனாய்வு வையம் காணச் செய்தார். நான்கா ணும்அவர் நல்ல எண்ணம். என்றன் எழுபதாம் ஆண்டின் பின்னும் நன்றுநான் வாழ்வதற் கான நோற்றலின் ஆற்றல் தருவதாம்! வள்ளுவர், கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கென் றருளினார். புலவர் இராம நாதனார் நூல்பல உலகினுக் களித்துல குளவரை வாழ்கவே. - புலவர் ந.இராமநாதனின் கவிஞரும் காதலும், நூலுக்கு வழங்கிய வாழ்த்து, 1.3.1960 2. ஓய்வு பெற்றேன் எட்டுப் பதினொன்று நாற்பத்தா றிட்ட எழிலுறுநாள் விட்டுப் பிரிந்ததென் ஆசி ரியப்பணி மேலும்எனைக் கட்டுப் படுத்துவ தொன்றில்லை திங்கள் கடைசிதொறும் தட்டாது வந்திடும் ஐம்பான்வெண் பொற்காசு சம்பளமே... - பாரதிதாசன் குயில், 10.7.1967 3. என் ஆசை தமிழர் தூங்கிய நாளில் ஆரியர் தமிழில் ஆரியச் சழக்கைச் சேர்த்தனர்; தமிழர் விழித்தஇந் நாளில் ஆரியர் ஆரியக் கலப்பிலாத் தமிழும் உண்டோ? தமிழுக் காரியம் தாய்எனல் பொய்யோ? என்று தமைமறந் தியம்பு கின்றனர். *** இமையம் தொடங்கிக் குமரி வரைக்கும் தமிழரே தழைந்து வாழ்ந்தஅந் நாளில் பிழைக்க வந்த பிச்சைக் காரர்கள் இந்நாள் தமிழரை நோக்கி இயம்புவர்; வண்தமி ழர்க்கொரு வரலா றுண்டோ? வாழ்க்கை முறையொன்று வாய்ந்த துண்டோ? *** ஆரியர் ஆணவ மிக்க ஒற்றுமை வாய்மை என்பதன் வலியையும் அடக்கித் தீய வழியே சென்று தாயக ஆட்சியை அடைந்த தாயினும் வாய்மை சாகா தென்பதைச் சழக்கர் அறியார்; சாகாத் தமிழத் தலைமுறை அறியும்! தமிழகத் தையும் தமிழையும் மீட்கத் தமிழர் ஒற்றுமை தாங்கி எழுந்தனர்; ஆரியர் அதுகண் டலறு கின்றனர் அதனா லன்றோ எம்ஆரி யந்தான் தனிமொழி தனிமொழி! யாமே தக்கவர் ஆரியர் ஆள்வதே முறைமை என்று வையக மெல்லாம் புளுகு மொழியும் பெருநிறு வனங்கள் பரப்பு கின்றனர் *** அழகு நடைபோட்டு வந்தஎன் ஆயுள் அறுபத் தெட்டுக்குப் பின்னும், என்ஆசை வாழ்ந்திரு என்று வலியும் தந்ததே. என்தமிழ் அன்னை துன்பம் நீங்கித் தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன் என்தமிழ் நாடு தன்னாட்சி காண்பேன் என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத் துலங்குதல் காண்பேன் தமிழர் நலங்காண் பேன்நான் நானில மதிலே! - பழம் புதுப் பாடல்கள், ப.349, 2005; குயில், 5.5.1959 குறிப்பு : கவிஞர் தன் பிறந்தநாள் அறிக்கையாகத் தமிழ்முரசு இதழுக்கு 29.4.59இல் வழங்கிய கவிதை. 4. எனது நன்றி அறுசீர் விருத்தம் என்தமிழ்க் கவிதைத் தொண்டும் இனியதோ? நான்பி றந்த முன்னாள்நன் னாளோ? என்னை முதிர் அன்பால் வாழ்த்தல் நன்றோ? இன்னும்நான் பன்னாள் வாழ்ந்தால் என்னால்இப் பொன்னாட் டார்க்கே என்னதான் நன்மை என்ப தெனக்கேதும் விளங்க வில்லை! மலேயாவில் அங்கங் கேயும் மன்னிய நிறுவ னத்தார் பலரும்என் பிறந்த நாளில் பகர்ந்தனர் எனக்கு வாழ்த்து! நிலவிய அன்புத் தோழர் நேருற வாழ்த்துச் சொன்னார் அலைகடற் கப்பால் வாழ்வார் அன்பால்என் அகத்தில் வாழ்வார்! ஊக்கத்தை எனக்க ளித்தார் உயர்மல யாவில் உள்ளார் தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால் தூய்தமிழ் பிதற்றும் என்வாய் ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை எல்லாம் தேக்கியென் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன். மலேயாவின் தோழர்க் கெல்லாம் மனமார்ந்த நன்றி! அன்னார் கலையாத அன்பி னோடும் கலந்துற வாகிச் செல்வம் தலையான தென்றே எண்ணித் தக்கதாம் வழியிற் றேடிச் செலவுமட் டாகச் செய்து செந்தமிழ் போற்றி வாழ்க! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.232, 1964; குயில், 25.8.1947  (தனது பிறந்த தினத்தை ஒட்டி மலேயாவிலிருந்து வாழ்த்துத் தந்திகளும், பாராட்டுச் செய்திகளும் அனுப்பிய அன்பர்கட்குக் கவியரசர் பாரதிதாசன் அவர்கள் தெரிவித்த நன்றியறிதல். 1. தமிழின் இனிமை (ஆநந்த பைரவி - ஆதி) கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும் குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும் குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும் விழைகுவ னேனும் தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்! பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் பக்கத் துறவின் முறையார் தயைமிக உடையாள் அன்னை - என்னைச் சந்ததம் மறவாத் தந்தை குயில்போற் பேசிடும் மனையாள் - அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை அயலவ ராகும் வண்ணம் - தமிழ்என் அறிவினில் உறைதல் கண்டீர்! நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே நிறையக் குளிர்வெண் ணிலவாம் காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே கடல்மேல் எல்லாம் ஒளியாம் மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல மலைகளின் இன்பக் காட்சி மேலென எழுதும் கவிஞர் - தமிழின் விந்தையை எழுதத் தரமோ? செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் தேக்கிய கறியின் வகையும் தன்னிகர் தானியம் முதிரை - கட்டித் தயிரொடு மிளகின் சாறும் நன் மதுரஞ்செய் கிழங்கு - காணில் நாவிலினித்திடும் அப்பம், உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே! - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.113, 1938 2. இன்பத் தமிழ் (சங்கராபரண ஜன்யம் - மிசிரசாபு) தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்குநேர்! தமிழுக்கு நிலவென்றுபேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்குநீர்! தமிழுக்கு மணமென்றுபேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்! தமிழுக்கு மதுவென்றுபேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்குவேர்! தமிழ் எங்கள் இளமைக்குப்பால்! - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்குவேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத்தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்றதீ! - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.115, 1938 3. தமிழ் உணவு (கானடா - மிசிரஏகம்) ஆற்றங்கரைதனிலே - இருள் அந்தியிலே குளிர் தந்த நிலாவினில், காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற் காலத்தின் தீமை இலாததினால் அங்கு வீற்றிருந்தார் பலபேர் - வந்து மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச் சாற்றுச் சுவைமொழியார் - சிலர் தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர் 1 - ஆற்றங்கரைதனிலே நாட்டின் நிலைபேசிப் - பல நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர்புறம்; ஓட்டம் பயின்றிடுவார் - நல்ல ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்; கோட்டைப் பவுன் உருக்கிச் - செய்த குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள் ஆட்ட நடை நடந்தே - மண்ணை அள்ளுவர், வீழுவர் அம்புலி வேண்டுவர்! 2 - ஆற்றங்கரைதனிலே புனலும் நிலாவொளியும் - அங்குப் புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில் இனிது பறந்து பறந் - தங்கும் இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்! தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும் தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்! புனையிருள் அந்திப் பெண்ணாள் - ஒளி போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த 3 - ஆற்றங்கரைதனிலே விந்தை உரைத்திடுவேன் - அந்த வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள் முந்த ஓர் பாட்டுரைத்தாள் - அது முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது; பிந்தி வடக்கினிலே - மக்கள் பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள் எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன! 4 - ஆற்றங்கரைதனிலே பொருளற்ற பாட்டுக்களை - அங்குப் புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்! இருளுக்குள் சித்திரத்தின் - திறன் ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ? உருவற்றுப் போனதுண்டோ - மிக்க உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வுற்ற நல்வாழ்வு? கருவுற்ற செந்தமிழ்ச்சொல் - ஒரு கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த 5 - ஆற்றங்கரைதனிலே சங்கீத விற்பனனாம் - ஒரு சண்டாளன் ஆரம்பித்தான் இந்துதான் ஒன்றை; அங்கந்தப் பாட்டினிலே - சுவை அத்தனையும் கண்டுவிட்டது போலவே நம்குள்ளர் வாய்திறந்தே - நன்று நன்றென ஆர்ப்பரித்தார்! அந்த நேரத்தில் எங்கிருந்தோ தமிழில் - ஓர் இன்ப நறுங்கவி கேட்டது காதினில்! 6 - ஆற்றங்கரைதனிலே ‘அஞ்சலை உன் ஆசை - என்னை அப்புறம் இப்புறம் போகவிடாதடி கொஞ்சம் இரங்கிடுவாய் - நல்ல கோவைப் பழத்தினைப்போன்ற உதட்டினை வஞ்சி, எனக்களிப்பாய்! என்ற வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்தென்றன் நெஞ்சையும், வானத்தையும் - குளிர் நீரையும், நிலவையும் தமிழர் குலத்தையும் 7 - ஆற்றங்கரைதனிலே ஒன்றெனச் செய்ததுவே! - நல் உவகை பெறச்செய்ததே தமிழ்ப் போசனம்! நன்று தமிழ் வளர்க! - தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க - கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் - தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! 8 - ஆற்றங்கரைதனிலே - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.116, 1938 4. தமிழ்ப் பேறு (சகானா - திரம்) ஏடெடுத்தேன் கவிஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்ன துவான்! ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக, என்று ரைக்கும்! காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்! ஆடு மயில்நிகர் பெண்களெல் லாம்உயிர் அன்பினைச் சித்திரம் செய்க, என்றார்! 1 சோலைக் குளிர்தரு தென்றல் வரும், பசுந் தோகை மயில்வரும், அன்னம்வரும், மாலைப் பொழுதினில் மேற்றி சையில்விழும் மாணிக்கப் பரிதி காட்சிதரும் வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர் வெற்பென்று சொல்லி வரைக எனும் கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து கூவின என்னை! - இவற்றிடையே. 2 இன்னலி லே,தமிழ் நாட்டினிலே யுள்ள என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார் அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே! இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர், என்றுரைக் கும்நிலை எய்திவிட்டால் - துன்பங்கள் நீங்கும், சுகம்வரும் நெஞ்சினில் தூய்மையுண் டாகிடும், வீரம்வரும்! 3 - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.119, 1938 மணிக்கொடி - இதழில் தமிழ்ச் செல்வி என்று தலைப்பு இடம்பெற்றிருந்தது. 5. எங்கள் தமிழ் (பிலகரி - ஆதி) இனிமைத் தமிழ்மொழி எமது - எமக் கின்பந் தரும்படி வாய்த்த நல்அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை! நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில் - இனிமைத் தமிழ் எங்கள்உயிர் என்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே! தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத் தமிழ் குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்! தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு தமிழ் என்று தோள்தட்டி ஆடு! - நல்ல தமிழ் வெல்க வெல்க என்றே தினம்பாடு! - இனிமைத் - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.120, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் 1935 6. தமிழ் வளர்ச்சி எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்; இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழ்ழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்! இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்! எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை, தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.121, 1938; சுதந்திரச் சங்கு 29.12.1933 7. தமிழ்க் காதல் (எதுகுலகாம்போதி - திரம்) கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க் காட்டினில் வண்டின் இசைவளத்தால் கமழ்தரு தென்றல் சிலிர்சிலிர்ப்பால் - கருங் கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில் ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால் சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை - எனைத் தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள். சோலை அணங்கொடு திண்ணையிலே - நான் தோளினை ஊன்றி இருக்கையிலே சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன் செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்! சோலையெலாம் ஒளி வானமெலாம் - நல்ல தோகையர் கூட்டமெலாம் அளிக்கும் கோல இன்பத்தையென் உள்ளத்திலே - வந்து கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்! - சுதந்திரச் சங்கு 8.12.1933; மணிக்கொடி 02.09.1934; பாரதிதாசன் கவிதைகள், ப.122, முதல்தொகுதி 1938 8. எந்நாளோ? என்னருந் தமிழ்நாட் டின்கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலைஞா னத்தால், பராக்கிர மத்தால், அன்பால் உன்னத இமம லைபோல் ஓங்கிடும் கீர்த்தி யெய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக்கேட் டிடல்எந் நாளோ? கைத்திறச் சித்தி ரங்கள், கணிதங்கள் வான நூல்கள் மெய்த்திற நூல்கள், சிற்பம், விஞ்ஞானம், காவி யங்கள் வைத்துள தமிழர் நூற்கள் வையத்தின் புதுமை என்னப் புத்தக சாலை எங்கும் புதுக்குநாள் எந்த நாளோ? தாயெழிற் றமிழை, என்றன் தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியிற் காண இப்புவி அவாவிற் றென்ற தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன் செவியில் வந்து பாயுநாள் எந்த நாளோ? ஆரிதைப் பகர்வார் இங்கே? பார்த்தொழில் அனைத்தும் கொண்ட பயன்தரும் ஆலைக் கூட்டம் ஆர்த்திடக் கேட்ப தென்றோ? அணிபெறத் தமிழர் கூட்டம் போர்த்தொழில் பயில்வ தெண்ணிப் புவியெலாம் நடுங்கிற் றென்ற வார்த்தையைக் கேட்டு நெஞ்சு மகிழ்ந்துகூத் தாடல் என்றோ? வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவ ரேமற் றுடலினால் பலராய்க் காண்பார்; கள்ளத்தால் நெருங்கொ ணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் சொக்கும்நாள் எந்த நாளோ? தறுக்கினாற் பிறதே சத்தார் தமிழன்பால் - என் - நாட் டான்பால் வெறுப்புறும் குற்றஞ் செய்தா ராதலால் விரைந்தன் னாரை நொறுக்கினார் முதுகெ லும்பைத் தமிழர்கள் என்ற சேதி குறித்தசொல் கேட்டின் பத்திற் குதிக்கும்நாள் எந்த நாளோ? நாட்டும்சீர்த் தமிழன் இந்த நானில மாயம் கண்டு காட்டிய வழியிற் சென்று கதிபெற வேண்டும் என்றே ஆட்டும்சுட் டுவிரல் கண்டே ஆடிற்று வையம் என்று கேட்டுநான் இன்ப ஊற்றுக் கேணியிற் குளிப்ப தெந்நாள்? விண்ணிடை இரதம் ஊர்ந்து மேதினி கலக்கு தற்கும் பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப் பாரினை மயக்கு தற்கும் மண்ணிடை வாளை யேந்திப் பகைப்புலம் மாய்ப்ப தற்கும் எண்ணிலாத் தமிழர் உள்ளார் எனும்நிலை காண்ப தென்றோ? கண்களும் ஒளியும் போலக் கவின்மலர் வாசம் போலப் பெண்களும் ஆண்கள் தாமும் பெருந்தமிழ் நாடு தன்னில், தண்கடல் நிகர்த்த அன்பால் சமானத்தர் ஆனார் என்ற பண்வந்து காதிற் பாயப் பருகுநாள் எந்த நாளோ? - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.123, 1938; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், வெளியீடு, 7, 1935 9. சங்க நாதம் (ஹாரேஜுகே என்ற இந்துதான் மெட்டு) எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய், முழங்கு சங்கே! சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! - எங்கள் - பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி, ப.126, 1938 10. தமிழ்க் கனவு தமிழ்நா டெங்கும் தடபுடல்! அமளி!! பணமேஎங்கணு«பறக்குது! விரைவில் குவியுது பணங்கள்! மலைபோற்குவியுது! தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார் ஓடினார் ஓடினார் ஓடினார் நடந்தே! ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள் ஒளிகொள் விழியில் உறுதி காட்டி இறக்கை fட்டிப்gwக்கின்றh®fள்! ஐயேh எத்தனை அதிர்ச்சி உத்ஸாகம்! சமுத்திரம் போல அமைந்த மைதானம்! அங்கே கூடினார் அத்தனை பேரும்! குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்! வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்! cu¡f¡ nf£lh‹ ‘cÆnuh e«jÄœ? அகிலம் கிழிய ஆம்! M«! என்றனர்!! ஒற்றுமைஎன்றான்;நற்றே‹என்றன®! உள்ளன்பு ஊற்றிஊற்¿ஊற்றி¤தமிiழவளர்க்Fம்சங்fம்ஒ‹று சிங்fப்புலவuச்சேர்த்தkத்தார்கŸ! உணர்ச்சியை எழுச்சியை ஊக்கத் தையெலாம் கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள் சுடர்க்கவி bதாடங்கினர்!gறந்தது தொழும்பு! கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள் வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்! தொழில்நூல் அழகாய்த் தொகுத்தனர் விரைவில்! காற்றி லெல்லாம் கலந்தது கீதம்! சங்கீத மெலாம்த கத்தகா யத்தமிழ்! காத லெலாம்தமிழ் கனிந்த சாறு! கண்ணெ திர்தமிழ்க் கட்டுடல் வீரர்கள்! காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக் கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால் புகழ்ந்தா ளென்று பொறாமல் சோர்ந்து வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன் அந்தோ! அந்தோ! பழைய நைந்த தமிழரொடு நானிருந் தேனே! - பாரதிதாசன் கவிதைகள், முதற் தொகுதி, ப.127, 1938 11. தமிழ் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என்தமிழ்த் தாயே வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும் வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ! செந்தமிழே! உயிரே! நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித் தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போல செழித்தஎன் தமிழே ஒளியே வாழி! - இசையமுது, முதற்பகுதி, ப.33, 1942 இப் பாடல் புதுச்சேரி மாநில அரசின் இறைவணக்கப் பாடலாகும். நல்கிடும் - கொடுத்திருக்கின்ற தோன்றுடல் - தோன்றிய உயிர் உடல் நீ, உயிர் நான் என்று பிரித்துப் பொருள் உணர்க. ஒளி - புகழ் 12. தமிழ் வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே! - வெண் வானும் போலே! வண்ணப் பூவும் மணமும் போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ! - வெண் வானும் போலே! வையகமே உய்யு மாறு வாய்ந்த தமிழ்என் அரும்பேறு! துய்யதான சங்க மென்னும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை (தம்)கையிலே வேலேந்தி - இந்தக் கடல் உலகாள்மூ வேந்தர் கருத் தேந்திக் காத்தார் - அந்தக் கன்னல் தமிழும் நானும் நல்ல - வெண் வானும் போலே! - இசையமுது, முதற்பகுதி, ப.45, 1942 குறிப்புரை: வண்ணப் பூ - அழகிய பூ, மூவேந்தர் - சேர சோழ பாண்டியர்கள் 13. தமிழ்ப் பள்ளு ஆடுவமே பள்ளுப் பாடுவமே! - தமிழ் ஆட்சியின் மாட்சியில் கூடுவமே. - ஆடுவமே... கோடுயர் வேங்கடக் குன்றமுதல் - நல்ல குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே நாம் - ஆடுவமே... மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ் மக்களென் றே குதித் தாடுவமே! கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் - நல்ல கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே நாம் - ஆடுவமே... மூலமென்றே சொல்லல் முத்தமிழாம் - புவி மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்! ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே - புவி நாம் எனவே குதித் தாடுவமே! நாம் - ஆடுவமே... வானிடை மிதந்திடும் தென்றலிலே - மணி மாடங்கள் கூடங்கள் மீதினிலே தேனிடை ஊறிய செம்பவழ - இதழ்ச் சேயிழை யாரொடும் ஆடுவமே நாம் - ஆடுவமே... கவிதைகள், காவியம், உயர்கலைகள் - உளம் கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம் குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம் - இங்குக் குறையில வாம்என் றாடுவமே நாம். - ஆடுவமே... - இசையமுது, முதற்பகுதி, ப.34, 1942 குறிப்புரை: ஞாலம் - உலகம், சேயிழையாரொடும் - பெண்களோடு 14. நெஞ்சுக்கு நீதி சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார் ஓதும் வழி நடந்தால் யாதும் துயரமில்லை ஏதும் சந்தேகம் உளதோ - நெஞ்சே இதில் தீது சிறிதும் உளதோ? சாதி சமயக்கடை வீதியின் அப்பால் ஒரு சோதி அறிவிற் சரிநீதி விளங்கும் அதைக் காதினில் தினம் கேட்பாய் - நெஞ்சே இந்த மேதினி தனை மீட்பாய். கூழுமில்லாது நாட்கள் ஏழும் பசித்துன்பமே சூழும்படியே பிறர் தாழும் நிலை தவிர்க்க வாழும் முறைமை சொல்வார் - நெஞ்சே நல்லார் பாழும் இருளைக் கொல்வார். மேழி யுழவன் பாட்டும், கோழியின் ஆர்ப்பும் கேட்டாய் ஆழியிற் கதிர் ஏறும் நாழிகை யாயிற்றே வாழிய மனப்பாவாய் - அறிஞர் காட்டும் ஊழியம் செயப் போவாய். - இசையமுது, முதற்பகுதி, ப.35, 1942 குறிப்புரை: பூதலம் - உலகம், ஆர்ப்பும் - கூவுவதும், ஆழி - கடல், கதிர்- சூரியன். 15. தமிழர் முரசு உயர்வென்று கொட்டுக முரசே - நல்ல உண்மைத் தமிழர்கள் வாழ்வு! அயர்வில்லை அச்சமிங் கில்லை - புவி ஆளப் பிறந்தவன் தமிழன். - உயர்வென்று கொட்டுக முரசே அயல் என்று கொட்டுக முரசே! - உற வான திராவிடர் அல்லார்! துயர் செய்ய எண்ணிடும் பகைவர் - திறம் தூள் என்று கொட்டுக முரசே! - உயர்வென்று கொட்டுக முரசே அறிவுள்ள திராவிடர் நாட்டில் - சற்றும் ஆண்மை யில்லாதவர் வந்து நமர்பசி கொள்ள நம்சோற்றை - உண்ண நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்! - உயர்வென்று கொட்டுக முரசே தமிழ்நாடு தமிழருக் கென்றே - இந்தச் சகத்தில் முழக்கிடு முரசே நமைவென்ற நாட்டினர் இல்லை - இதை நாற்றிசை முற்றும் முழக்கு! - உயர்வென்று கொட்டுக முரசே - இசையமுது முதற்பகுதி, ப.36, 1942 குறிப்புரை: தமிழ்நாடு வடக்கில் விந்திய மலையையும், தெற்கில் குமரியையும் எல்லையாக உடைய பெருநாடு; திராவிட நாடு என்பதும் அதுவே. 16. எழுச்சி தமிழனே இது கேளாய் - உன்பால் சாற்ற நினைத்தேன் பல நாளாய். கமழும்உன் தமிழினை உயிரென ஓம்பு காணும் பிறமொழிக ளோவெறும் வேம்பு! நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு நம் உரிமைதனைக் கடித்ததப் பாம்பு. - தமிழனே இது கேளாய் தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு. - தமிழனே இது கேளாய் வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார் வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார் நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார் நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார். - தமிழனே இது கேளாய் - இசையமுது முதற்பகுதி, ப.37, 1942 குறிப்புரை: சாற்ற - சொல்ல, கமழும் - புகழ்கொண்ட, ஓம்பு - காப்பாற்று, தாம்பு - கயிறு 17. எந்நாள் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? அந்த வாழ்வுதான்... இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர். - அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலிஎன்ப தெல்லாம் செந்தமிழ் முழக்கம் ஒளிஎன்ப தெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி,வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும். - அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை பிற மாந்தர்க்கும் உயிரானதே பெறலான பேறு சிறிதல்லவே! - அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? - இசையமுது முதற்பகுதி, ப.38, 1942 ஒளி - புகழ், ஒளி என்பதெல்லாம் - புகழுக்குரியது என்பதனைத்தும், புலி, வில், கயல் மூன்றும் மூவேந்தர் கொடிகள். 18. இன்பத் தமிழ் இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு துன்பம் இனியுமுண்டோ சொல் சொல் சொல் பகையே! முன்பு துருப்பிடித் திருந்த படைக்கலமாம் முத்தமிழ் ஒளி அறிந்து செல் செல் செல்பகையே! - இன்பந் தருந்தமிழில்... தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் யாம் யாம் யாம் பகையே! துள்ளும் பகை முடித்துக் கூத்திடுவோம் தமிழர் கொள்கை நிறைவடைந்து போம் போம் போம் பகையே! - இன்பந் தருந்தமிழில்... - இசையமுது முதற்பகுதி, ப.41, 1942 தெள்ளும் தமிழில் - தெளிவுற்ற தமிழாகிய தின்பண்டத்தில், இசைத்தேனை - இசையாகிய தேனை, பிழிந்து - வார்த்து, எடுத்து - தேன்வார்த்த அத் தின்பண்டத்தை எடுத்து 19. உலகின் நோக்கம் உவகை உவகை உலகத்தாயின் கூத்து! - வந்து குவியுதடா நெஞ்சில் உவகை உவகை! எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி எங்கும் அடடே தாயின் பேரொளி உவகை உவகை! அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாம் - இடையினின் றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம் தவழும் புதுநசை மின்னித் துலங்கும் தாய்நின் றாடிய அடிஇடி முழங்கும் உவகை உவகை! தொடுநீள் வானப் பெருவில் ஒருகையில் - பெரும்புறம் தூளாகிடவரு கதிர்வேல் ஒருகையில் அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி ஆடும் திறல்கண் டோடும் பகைதான் உவகை உவகை! அகலொளி விளக்கு நிலவினில் அவள் ஆடும்! - ஆடிநின் றந்தமிழின்பத் தென்பாங்கிற் பாடும்! துகளறு விண்மீன் துளிகள் பறக்கத் துடிஇடை நெளியும் துணைவிழி உலவும் உவகை உவகை! - இசையமுது, முதற்பகுதி, ப.42, 1942 குறிப்புரை: தொடுநீள் வானப் பெருவில் - தொடுகின்றதான நீண்ட பெரிய வானவில் ஓடும்பகை - பகை ஓடும்! உலகின் பகை என்பது அமைதியைக் கெடுக்கும் சாதி மதம் ஆண்டான் அடிமை என்ற நிலை ஆகியவை. 20. தமிழ் முதலில் உண்டானது தமிழ் புனல்சூழ்ந்து வடிந்து போன நிலத்திலே புதிய நாளை மனிதப்பைங் கூழ்மு ளைத்தே வகுத்தது! மனித வாழ்வை, இனியநற் றமிழே நீதான் எழுப்பினை! தமிழன் கண்ட கனவுதான், இந்நாள் வையக் கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ? 1 இசை, கூத்தின் முளை பழந்தமிழ் மக்கள் அந்நாள் பறவைகள் விலங்கு, வண்டு, தழைமூங்கில் இசைத்த தைத்,தாம் தழுவியே இசைத்த தாலே எழும்இசைத் தமிழே! ï‹g« vŒâna Fâ¤j jhny ÉÊí©z¥ ãwªj T¤J¤ jÄnH!என் வியப்பின் வைப்பே! 2 இயற்றமிழ் எழில் அம்மாஎன் றழைத்தல், காகா எனச்சொல்லல், அஃகென் றொன்றைச் செம்மையிற் சுட்டல் என்னும் இயற்கையின் செறிவி னாலே இம்மா நிலத்தை ஆண்ட இயற்றமி ழேஎன் அன்பே! சும்மாதான் சொன்னார் உன்னை ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே! 3 தமிழர்க்குத் தமிழ் உயிர் வளர்பிறை போல்வ ளர்ந்த தமிழரில் அறிஞர் தங்கள், உளத்தையும், உலகில் ஆர்ந்த வளத்தையும் எழுத்துச் சொல்லால், விளக்கிடும் இயல்மு திர்ந்தும் வீறுகொள் இசைய டைந்தும், அளப்பிலா உவகை ஆடற் றமிழேநீ என்றன் ஆவி! 4 சாகாத் தமிழ் படுப்பினும் படாது, தீயர் பன்னாளும் முன்னேற் றத்தைத் தடுப்பினும், தமிழர் தங்கள் தலைமுறை தலைமு றைவந் தடுக்கின்ற தமிழே! பின்னர் அகத்தியர் காப்பி யர்கள் கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி! 5 கலைகள் தந்த தமிழ் இசையினைக் காணு கின்றேன்; எண்நுட்பம் காணு கின்றேன்; அசைக்கொணாக் கல்தச் சர்கள் ஆக்கிய பொருள்காண் கின்றேன்; பசைப்பொருட் பாடல் ஆடல் பார்க்கின்றேன்; ஓவி யங்கள், நசையுள்ள மருந்து வன்மை பலபல நான்காண் கின்றேன். 6 முன்னூலில் அயலார் நஞ்சம் பன்னூறு நூற்றாண் டாகப் பழந்தமிழ் மலையின் ஊற்றாய் மன்னரின் காப்பி னாலே, வழிவழி வழாது வந்த அன்னவை காணு கின்றேன், ஆயினும் அவற்றைத் தந்த முன்னூலை, அயலான், நஞ்சால் முறித்ததும் காணு கின்றேன்! 7 பகைக் கஞ்சாத் தமிழ் வடக்கினில் தமிழர் வாழ்வை வதக்கிப்,பின் தெற்கில் வந்தே இடக்கினைச் செயநி னைத்த எதிரியை, அந்நாள் தொட்டே அடக்கடா என்று ரைத்த அறங்காக்கும் தமிழே! இங்குத் தடைக்கற்கள் உண்டென் றாலும் தடந்தோளுண் டெனச்சி ரித்தாய்! 8 வெற்றித் தமிழ் ஆளுவோர்க் காட்பட் டேனும், அரசியல் தலைமை கொள்ள நாளுமே முயன்றார் தீயோர்; தமிழேநீ நடுங்க வில்லை! வாளினை எடுங்கள் சாதி மதம்இல்லை! தமிழர் பெற்ற காளைகாள் என்றாய்; காதில் கடல்முழக் கத்தைக் கேட்டாய்! 9 படைத் தமிழ் இருளினை வறுமை நோயை இடறுவேன்; என்னு டல்மேல் உருள்கின்ற பகைக்குன் றைநான் ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ கருமான்செய் படையின் வீடு! நான்அங்கோர் மறவன்! கன்னற் பொருள்தரும் தமிழே நீஓர் பூக்காடு; நானோர் தும்பி! 10 - அழகின் சிரிப்பு, ப.57, 1944 தின்னும் தமிழ் மறவர்யாம் - தின்னும் தமிழினத்தாராகிய வீரர் யாங்கள், அத்தகைய தமிழ்த் தின்பண்டம் புறப்பொருள் என்க. 21. தமிழியக்கம் 1. நெஞ்சு பதைக்கும் நிலை கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். 1 எடுத்துமகிழ் இளங்குழந்தாய் இசைத்துமகிழ் நல்யாழே இங்குள் ளோர்வாய் மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே அன்பே, வன்பு தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம் தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். 2 பண்டுவந்த செழும்பொருளே பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே அன்பே, வாழ்வில் தொண்டுவந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் துளிர்க்கா வண்ணம் உண்டுவரல் நினைக்கையிலே உளம்பதைக்கும் சொல்வதெனில் வாய்ப தைக்கும். 3 உடலியக்கும் நல்லுயிரே, உயிரியக்கும் நுண்கலையே, மக்கள் வாழ்வாம், கடலியக்கும் சுவைப்பாட்டே கண்ணான செந்தமிழே அன்பே, நாட்டில் கெடல்இயக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைக் கெடுக்கப் பாடு படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்பகர வாய்ப தைக்கும். 4 வையத்தின் பழநிலவே வாழ்வுக்கோர் புத்துணர்வே மயிலே, மேலோர் ஐயத்திற் கறிவொளியே, ஆடல்தரும் செந்தமிழே அன்பே, தீமை செய்யத்தான் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தீர்க்க எண்ணும் மெய்யைத்தான் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்விளக்க வாய்ப தைக்கும். 5 2. இருப்பதைவிட இறப்பது நன்று வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப் புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 6 மிகுகோயில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர் தகுமாறு மணம்புரிவோர் கல்விதரும் கணக்காயர் தம்மா ணாக்கர் நகுமாறு நந்தமிழை நலிவுசெயும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை மாய்ப்பதுண்டோ? வாய்ப்பாட் டாளர் இகழ்ச்சியுற நடப்பதுண்டோ? இசைப்பாடல் ஆக்குபவர் இழிவேன் ஏற்றார்? நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ வாழ்வுக் கான புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 8 கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும் கூட்டம்? தீமை மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ? சொல்லாக் கத்தார் தூற்றுமொழி ஏன்சுமந்தார்? துண்டறிக்கை யாளருமோ தீயர்? வாழ்வில் ஏற்றமுற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 9 நல்லஅரும் பொருளுடையார் நந்தமிழ்க்கோ பகையாவார்? நாட்டில் ஆணை சொல்லவரும் அரசியலார் செந்தமிழ்நா டிதுவென்றும் தெரியார் போலும்! வல்லவரும் பெரியநிலை வாய்த்தவரும் என்செய்தார்? இன்ப வாழ்வின் எல்லையறிந் தும்திருந்தாத் தமிழருயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 10 3. வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு! ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! கண்டறிவாய்! எழுந்திருநீ! இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும்நீ படைப்பாய்! இந்நாள் தொண்டுசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! 11 உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெலாம் உன்றன் வெற்றி! அயராதே! எழுந்திருநீ! இளந்தமிழா, அறஞ்செய்வாய்! நாம டைந்த துயரத்தைப் பழிதன்னை வாழ்வினிலோர் தாழ்மையினைத் துடைப்பாய் இந்நாள் செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. 12 வாழியநீ! தமிழ்த்தாய்க்கு வரும்பெருமை உன்பெருமை! வயிற்றுக் கூற்றக் கூழின்றி வாடுகின்றார்; எழுந்திருநீ! இளந்தமிழா, குறைத விர்க்க ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை ஆக்கு விப்பாய்! ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. 13 உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ! பிணிநீக்க எழுந்திருநீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக் கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! விடுதலைகொள் அழகு நாட்டில் பணிசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. 14 எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய் இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. 15 4. மங்கையர் முதியோர் எழுக! ஒருவானில் பன்னிலவாய் உயர்தமிழப் பெண்களெலாம் எழுக! உங்கள் திருவான செந்தமிழின் சிறுமையினைத் தீர்ப்பதென எழுக! நீவீர், பெருமானம் காப்பதற்கு வாரீரேல் உங்கள்நுதற் பிறையே நாணும் மருமலர்வாய்த் தாமரையும் கனியுதடும், நன்னெஞ்சும் வாட்டம் எய்தும்! 16 நகர்நோக்கிப் பசுந்தோகை நாடகத்து மாமயில்கள் நண்ணி யாங்குப் பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்கப் பெண்களெலாம் பறந்து வாரீர்! மிகுமானம் காப்பதற்கு வாரீரேல் வெண்ணிலவு முகஞ்சு ருங்கும் மகிழ்வான மலர்க்கன்னம் வாய்மையுளம் வாட்டமுறும் மலர்க்கண் நாணும். 17 தண்டூன்றும் முதியோரே! தமிழ்த்தொண்டென் றால்இளமை தனைஎய் தீரோ? வண்டூன்றும் சிற்றடியால் மண்டுநறும் பொடிசிதறும் பொதிகை தன்னில் பண்டூன்றும் திருவடியால் பச்சைமயில் போல்வந்து தமிழர்க் காவி கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய் கொண்டகுறை தவிர்ப்பதற்குக் குதித்து வாரீர். 18 பிரம்புவளை மெய்யுடையீர் ஆருயிரில் வாரியிட்டுப் பிசைந்த தான உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டீரோ? இரங்குநிலை கொண்டதமிழ் ஏற்றகுறை தவிர்த்திடநீர் எழுச்சி கொள்வீர். 19 அன்னையினை எதிர்த்தார்க்கும் அவள்மேன்மை மறந்தார்க்கும் அயர்ந்த வர்க்கும் மின்னைவிழி உயர்ந்ததுபோல் மெய்யுயிரைப் பெற்றதுபோல் தமிழ்ச்சாப் பாடு தன்னையுணர் விப்பதற்குச் சாரைச்சிற் றெறும்பென்னத் தமிழ்நாட் டீரே, முன்னைவைத்த காலைப்பின் வையாமே வரிசையுற முடுகு வீரே! 20 5. வாணிகர் வாணிகர், தம் முகவரியை வரைகின்ற பலகையில், ஆங் கிலமா வேண்டும்? மாணுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்! ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈறாக அனைவர் போக்கும் நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலங்காக்கும் செய்கை யாமோ? 21 உணவுதரு விடுதிதனைக் கிளப்பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத் துணிக்கடைக்குச் சில்குஷாப் எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்! மணக்கவரும் தென்றலிலே குளிராஇல் லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை. 22 பவன், மண்டல் முதலியன இனியேனும் தமிழகத்தில் பயிலா வண்ணம் அவண்சென்று முழங்கிடுவீர்! ஆங்கிலச்சொல் இந்திமொழி வடசொல் யாவும் இவண்தமிழிற் கலப்பதுண்டோ பிராம்மணர் கள்உண்ணும் இடம் இப் பேச்சில் உவப்புண்டோ? தமிழ்மானம் ஒழிந்திடுதே ஐயகோ உணர்வீர் நன்றே. 23 அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவதே அன்றி, அச்சொல் குறைவற்ற தொடராகக் குற்றமற்ற சொல்லாக அமையு மாயின் மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்? தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ? குறியுற்ற மறவர்களே! இப்பணியை முடிப்பதற்கோர் கூட்டம் வேண்டும். 24 பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும் கூத்தாலும் பிறர்உ வக்க ஓச்சுகவே மணிமுரசு! வீதியெல்லாம் வரிசையுற உலவா நிற்பீர்! ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற இன்னலுக்குள் இன்ப வெள்ளம் பாய்ச்சாதோ பொதுத்தொண்டு? பைந்தமிழ்க்குச் செயும்தொண்டு? பருக வாரீர். 25 6. அரசியல்சீர் வாய்ந்தார் (1) கல்லூரித் தலைவரைநான் கேட்கின்றேன் கனிதமிழின் பேரைச் சொன்னால் சொல்லூறிப் போகாதோ? வாயூறிப் போகாதோ! தூய்த மிழ்க்கு வல்லூறாய் வாய்த்தீரோ? வளம்செய்யும் எண்ணமெனில் நீர்பி றந்த நல்லூரின் நன்மொழியால் அல்லாது நடந்திடுமோ நவில்வீர் இன்றே. 26 வரிப்பணத்தை வழங்கிடுவோர் வாய்ப்பளிக்க முந்திடுவோர் தமிழர் அன்றோ இருப்புறுநும் அலுவலுக்கும் யாரையா வேர்? jÄiH kw¥g J©nlh?; நரிப்பிணத்தை நரியுந்தின் னாதென்ப தறியீரோ? நம்மா னத்தை எரிப்பதற்குத் திருவுளமோ? எழிற்பள்ளிக் கணக்காயர் தலைமை யோரே. 27 தமிழ்நாட்டின் உப்பைத்தின் றீரன்றோ கணக்காயர் தந்தை மாரே! தமிழ்நாட்டில் தமிழர்களின் தன்னுணர்வு நாட்டுவதைத் தவிர்ப்பீ ராயின் உமிழாதோ, வருத்தாதோ உம்மையே உம் மருமை உள்ளச் சான்றே? அமுதூட்ட நஞ்சூட்டி அகமகிழும் தாயுண்டோ அருமைச் சேய்க்கே? 28 படிப்பாரின் தமிழ்ச்சுவடி பரிந்தாயும் அரசியலார் குழுவி னோரே தடிப்பாகிப் போவதுண்டோ உம்முள்ளம்? தமிழென்றும் வடசொல் என்றும் வடிப்பாக்கி நோக்கிடவும் மாட்டீரோ: செந்தமிழின் பகைவ ரின்வால் பிடிப்பாரின் துணையில்இனும் பிழைப்பீரோ மறவர்தமிழ்ப் பெரிய நாட்டில்? 29 தமிழ்நடையில் நயம்வேண்டின் தமிழ்நாட்டின் நடைமுறையைத் தமிழ்நாட் டாரை அமையவரை தல்வேண்டும்! அவ்வாற்றால் அமைவுற்ற சுவடி தன்னை உமைமறந்து மறுக்காதீர் உமியைப்போய் ஒப்பாதீர் இன்னும் கேளீர்! தமிழ்தழுவாச் சுவடிதனைத் தணல்தழுவா திராதினிமேல் தமிழ்நா டெங்கும்! 30 7. அரசியல்சீர் வாய்ந்தார் தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்? இலங்கும்இசைப் பாட்டுக்கள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ? நலங்கண்டீர் தமிழ்மொழியால் நற்றமிழை ஈடழித்தல் நன்றோ சின்ன விலங்கதுதான் சோறிட்டான் மேற்காட்டும் நன்றியைநீர் மேற்கொள் ளீரோ. 31 பொதுமையிலே கிடைத்திட்ட செல்வாக்கை இனநலத்துக் காக்கு வோரை இதுவரைக்கும் மன்னித்த எழில்தமிழர் இனிப்பொறுப்பார் என்ப தில்லை குதிகாலும் மேற்செல்லும் அடுத்தபடி கீழேதான் வந்து சேரும் அதுவியற்கை! மலைக்காதீர்! அறிவுநாள் இது! கொடுமை அழிந்தே தீரும். 32 அரசியலார் அறிக்கையிலும் சுவடியிலும் தமிழ்ப்பெருமை அழித்தி டக்கை வரிசையெலாம் காட்டுவதோ? வடமொழியும் பிழைத்தமிழும் பெருகி விட்டால் வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்குமெனும் கருத்தோ? நாட்டில் திருடர்களை வளரவிடும் ஏற்பாடோ? செல்லுபடி ஆகா திங்கே. 33 திருடர்ஜாக் கிரதைஇதைத் திருடருண்டு விழிப்போடி ருங்கள் என்றால் வருந்தீமை என்ன?நியா யதலத்தை அறமன்றம் எனில்வாய்க் காதோ? அருவருக்கும் நெஞ்சுடையார் அருவருக்கும் செயலுடையார் அன்றோ இந்தக் கருவறுக்கும் வினைசெய்வார் கலப்பாலில் துளிநஞ்சும் கலத்தல் வேண்டாம். 34 அரசியலார் அலுவலகம் அறமன்றம் இங்கெல்லாம் அலுவல் பெற்றீர் உரையனைத்தும் ஆங்கிலமோ? உணர்விலையோ? ஒழுக்கந்தான் இதுவென் பீரோ? வரும்நாட்டுப் புறத்தவரின் தமிழ்ப்பேச்சும் பிடிப்பதில்லை வண்ட மிழ்சேர் திருநாட்டிற் பிறந்தோமென் றெண்ணுவதும் இல்லைஇனித் திருந்து வீரே. 35 8. அரசியல்சீர் வாய்ந்தார் (3) தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சாய் வருதல் வேண்டும் தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும் நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது சிறிதுமிதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36 தமிழ்எங்கே, தமிழின்நிலை என்னஎனத் தாமறியாத் தமிழர் என்பார் தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில் அமைவாக ஆயிரம்பேர் அறிஞருள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37 நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று புகழ்கின்ற பலஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்டம் செய்தால் அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெலாம்? அல்லாக்கால் அமைதி யுண்டோ? 38 தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின் தேவை, வாழ்வு தமையறிதல் உண்டோஎந் நாளுமில்லை! தமிழறியான் சுவையே காணான்! சுமைசுமையாய் அரசியல்சீர் சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ, தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய? 39 ஆங்கிலநூல் அறிவுக்குச் சான்றிருந்தால் அதுபோதும் அலுவல் பார்க்க! ஈங்குள்ள தமிழர்நெறி அவர்க்கென்ன தெரிந்திருக்கும்? இதுவு மன்றி மாங்காட்டுச் செவிடனெதிர் வடிகட்டி ஊமையரை வைத்த தைப்போல் தீங்கற்ற தமிழறியான் செந்தமிழ்நாட் டலுவலின்மேற் செல்ல லாமோ? 40 9. புலவர் தமிழ்ப்புலவர் ஒன்றுபடும் நன்னாளே தமிழர்க்குப் பொன்னா ளாகும்! தமிழ்ப் பெருநூல் ஒன்றேனும் ஒற்றுமையைத் தடைசெய்யக் கண்ட துண்டோ? தமிழ்ப்புலவர் தமக்குள்ளே மாறுபட்ட தன்மையினால் இந்நாள் மட்டும் தமிழ்ப்பெருநா டடைந்துள்ள தீமையினைத் தமிழறிஞர் அறிகி லாரோ? 41 ஒல்காத பெரும்புகழ்த்தொல் காப்பியமும், நன்னூலும் தமிழர்க் கெல்லாம் நல்கரிய நன்மையெலாம் நல்கினஎன் றால்நாமும் நன்றி சொல்வோம் செல்பலநூற் றாண்டுசெல அவ்விருநூல் திருவடியில் புதிய நூல்கள் பல்காவேல் இருநூற்கும் பழியே! நம் புலவர்க்கும் பழியே யன்றோ! 42 தனித்தியங்கத் தக்கதெனத் தமிழ்பற்றித் தமிழ்ப்புலவர் சாற்று கின்றார் இனித்திடும்அவ் விருநூலில் வடமொழிஏன்? வடஎழுத்துக் கொழுங்கு தான்ஏன்? தனித்தமிழில் இந்நாட்டுத் தக்கபுதுக் காப்பியம், நன் னூல்,இ யற்ற நினைப்பாரேல் நம்புலவர் நிலவாவோ ஆயிரநூல் தமிழ கத்தே? 42 முதுமைபெறு சமயமெனும் களர்நிலத்தில் நட்டதமிழ்ப் பெருநூல் எல்லாம் இதுவரைக்கும் என்னபயன் தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப் பொதுவான தமிழரிலே பொன்னான தமிழ்வெறுத்தார் பெரும்பா லோராம்! புதுநூல்கள் புதுக்கருத்தால் பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம். 43 சோற்றுக்கென் றொருபுலவர் தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார்! தொகையாம் செல்வப் பேற்றுக்கென் றொருபுலவர் சாதிரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்! நேற்றுச்சென் றார்நெறியே நாம்செல்வோம் எனஒருவர் நிகழ்த்தா நிற்பார்! காற்றிற்போம் பதராகக் காட்சியளிக் கின்றார்கள் புலவர் சில்லோர்! 44 10. புலவர் சீவல்ல பர்திருவள் ளுவரானார் என்றொருவர் செப்ப லுற்றார்! நாவன்மை என்பதுவும் செந்தமிழை நலிப்பதற்கோ? நாணி லாரோ? பாவளிக்கும் சுவைமுழுதும் பருகிவிட்ட தாயுரைக்கும் ஒருவர் சொல்வார் கோவையிட்ட கம்பனது செய்யுளிலே முக்காலும் கோணல் என்றே! 45 கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு நம்பினால் நம்புங்கள் இவைதாம்கம் பன்செய்யுள் எனஅச் சிட்டு வெம்புமா றளிக்கையிலும் மேவாத செயல்இதனைச் செய்ய இந்தக் கொம்பன்யார் எனக்கேட்க ஆளில்லை யாபுலவர் கூட்டந் தன்னில்? 46 வாட்டடங்கண் கற்றரையை வாள்த்தடங்கண் கல்த்தரைஎன் றெழுதி முன்னைப் பாட்டினிலே பெரும்பிழையைப் பல்குவிப்பா னுக்குமணிப் பண்டி தர்கள் சாட்டைகொடுத் தறிக்கைவிடத் தாள்ஒன்றும் அற்றதுவோ! தமக்குச் சோறு போட்டிடுவார் ஒப்புகிலார் எனுங்கருத்தோ மானமற்ற போக்குத் தானோ! 47 வடமொழியும் தெரியுமெனப் பொய்கூறி வடமொழிக்கு வாய்ப்பும் நல்க வடமொழியா னைக்கொண்டு மொழிபெயர்த்து வருவார்க்கு வண்ட மிழ்ச்சீர் கெடுவதிலே கவலையில்லை ஆரியரை ஆதரித்துக் கிடப்ப தொன்றே நடைமுறையில் நலன்விளைக்கும் என்னுமொரு மடமையினை நசுக்க வேண்டும். 48 அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக, அரசி யல்சார் வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையமறி மொழிய தாகத், திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை நம்புலவர் சேர்ந்து தொண்டு புரிகஎன வேண்டுகின்றோம் பொழிகஎன வேண்டுகின்றோம் பொன்ம ழைதான்! 49 11. குடும்பத்தார் அன்னைதந்த பால்ஒழுகும் குழந்தைவாய் தேன்ஒழுக அம்மா என்று சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ! 50 வானத்து வெண்ணிலவும் வையத்தின் ஓவியமும் தரும்வி யப்பைத் தேனொக்கப் பொழிந்ததுவும் தமிழன்றோ! தெருவிலுறு மக்கள் தந்த ஊனுக்குள் உணர்வேயும் தமிழன்றோ! வெளியேயும் உள்ளத் துள்ளும் தான்நத்தும் அனைத்துமே காட்சிதரும் வாயிலெலாம் தமிழே யன்றோ! 51 திருமிக்க தமிழகத்தின் குடும்பத்தீர்! இல்லறத்தீர்! செந்த மிழ்க்கே வருமிக்க தீமையினை எதிர்த்திடுவீர் நெஞ்சாலும் வாய்மெய் யாலும்! பொருள்மிக்க தமிழ்மொழிக்குப் புரிந்திடுவீர் நற்றொண்டு; புரியீ ராயின் இருள்மிக்க தாகிவிடும் தமிழ்நாடும் தமிழர்களின் இனிய வாழ்வும்! 52 காக்கை கா என்றுதனைக் காப்பாற்றச் சொல்லும்! ஒரு கருமு கில்தான், நோக்கியே கடமடா என்றேதன் கடனுரைக்கும் நுண்கண் கிள்ளை வாய்க்கும்வகை அக்கா என் றழைத்ததனால் வஞ்சத்துப் பூனை ஞாம்ஞாம் (நாம்) காக்கின்றோம் எனச்சொல்லக், கழுதைஅதை ஏஎன்று கடிந்து கூவும். 54 கூ எனவே வையத்தின் பேர்உரைத்துக் குயில்கூவும் வாழ்வாழ் என்று நாவினிக்க நாய்வாழ்த்தும் நற்சேவல் கோ என்று வேந்தன் பேரைப் பாவிசைத்தாற் போலிசைக்க, வருங்காற்றோ ஆம் என்று பழிச்சும்! இங்கு யாவினுமே தமிழல்லால் இயற்கைதரும் மொழிவேறொன் றில்லை யன்றோ! 55 12. கோயிலார் உயிர்போன்ற உங்கள்தமிழ் கடவுளுக்கே உவப்பாதல் இல்லை போலும்! உயிர்போன்ற உங்கள்தமிழ் உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்! பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் படுத்தவந்த வடம றைதான் செயிர்தீர வாழ்த்துதற்கும் தேவையினைச் சொல்லுதற்கும் உதவும் போலும்! 56 மடிகட்டிக், கோயிலிலே மேலுடையை இடுப்பினிலே வரிந்து கட்டிப் பொடிகட்டி இல்லாது பூசியிரு கைகட்டிப் பார்ப்பா னுக்குப் படிகட்டித் தமிழரெனப் படிக்கட்டின் கீழ்நின்று தமிழ்மா னத்தை வடிகட்டி அவன்வடசொல் மண்ணாங்கட் டிக்குவப்பீர் மந்த்ரம் என்றே. 57 காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம், மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத் தமிழைத் தீயோர் போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப துண்டோ? வேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே மேவி டாமே. 58 சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம்? தெற்கோதும் தேவாரம், திருவாய்நன் மொழியான தேனி ருக்கச் செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால்? 59 திருப்படியில் நின்றபடி செந்தமிழில் பெரும்படியார் அருளிச் செய்த உருப்படியை அப்படியே ஊரறியும் படியுரைத்தால் படியும் நெஞ்சில்! தெருப்படியிற் கழுதையெனச் செல்லுபடி யாகாத வடசொற் கூச்சல் நெருப்படியை எப்படியோ பொறுத்திடினும் நேர்ந்தபடி பொருள்கண் டீரோ! 60 13. அறத்தலைவர் அறத்தலைவீர் செயத்தக்க அறமிந்நாள் தமிழ்காத்தல் அன்றோ? தங்கள் நிறத்தியலை நிலைநிறுத்தித் தமிழ்அழிக்க நினைப்பாரின் செயலை நீவிர் மறத்தலினும் கேடுண்டோ? மடத்திலுறு பெரும்பொருளைச் செந்த மிழ்,சீர் பெறச்செலவு செய்தலினும் பெறத்தக்க பெரும்பேறு பிறிது முண்டோ! 61 கல்லாரின் நெஞ்சத்தே கடவுள்நிலான் என்னுமொழி கண்டு ளீரே நில்லாத கடவுளைநீர் நிலைத்திருக்கும் படிசெய்யத் தமிழர் நாட்டில் எல்லாரும் தமிழ்கற்க என்செய்தீர்? செயநினைத்தால் இயலா தேயோ? தொல்லையெலாம் போமாறு தூய்மையெலாம் ஆமாறு தொண்டு செய்வீர்! 62 செந்தமிழிற் புதுப்புதுநூல் விளைப்பதற்குச் செல்வத்தைச் செலவு செய்தால் நந்தமிழ்நா டுயராதோ! நலிவெல்லாம் தீராவோ! பொருளை அள்ளித் தந்தாரே முன்னாளில் தமிழ்நாட்டார் உம்மிடத்தில், தலைமை யேற்று வந்தீரே அரசியல்சீர் வாய்ந்தாரை வசப்படுத்தி வாழ்வ தற்கோ? 63 அறநிலையக் காப்புக்கே அரசினர்கள் அயலாரை அமைப்பர்! அன்னோர் பிறமொழிக்குத் துணைநின்றும் தமிழ்மொழியின் பீடழிக்கும் செயல்பு ரிந்தும், சிறுமையுறு வடமொழிக்குக் கழகங்கள் இங்கமைத்தும் தீமை செய்வார்! உறுதியுடன் தமிழரெல்லாம் ஒன்றுபட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும்! 64 நாட்டிலுறும் அறநிலையம் ஒவ்வொன்றும் நற்றமிழ்க்கல் லூரி ஒன்றும், வீட்டிலுறு கழகங்கள் நாலைந்தும் மேன்மையுறும் புலவர் கூடித் தீட்டுநூல் வெளியீடு செய்நிலையம் ஒன்றுமாய்த் தருமேல் நம்மை வாட்டிவரும் வறுமைநிலை மாய்க்கவரும் தாழ்மைநிலை மாய்ந்து போமே. 65 14. விழா நடத்துவோர் தேர்வரும், பின் பார்ப்பனர்கள் வரிசையுறச் செங்கைகள் கோத்த வண்ணம், நீர்வருங்கால் கத்துகின்ற நெடுந்தவளைக் கூட்டமெனக் கூச்ச லிட்டு நேர்வருவார் அன்னவர்கள் நிகழ்த்துவதன் பொருளென்ன? இனிமை உண்டா? ஊர்வருந்தும் படிஇதைஏன், விழாத்தலைவர் உடன்சேர்த்தார்? ஒழிக்க வேண்டும்! 66 பல்லிசைகள் நேர்முழங்கப் பகல்போலும் விளக்கெடுப்பக் குதிரை, யானை நல்லசிறப் பளித்துவர நடுவிலொரு தேவடியாள் ஆட, மக்கள் எல்லோரும் கயிறிழுக்க இயங்குமொரு தேர்மீதில் ஆரி யத்தைச் சொல்லிடுமோர் சொறிபிடித்த பார்ப்பானைக் குந்தவைத்தல் தூய்மை தானோ! 67 விவாகசுப முகூர்த்தமென வெளிப்படுத்தும் மணஅழைப்பில் மேன்மை என்ன? அவாள்இவாள் என்றுரைக்கும் பார்ப்பனரின் அடிதொடர்தல் மடமை யன்றோ? உவகைபெறத் தமிழர்மணம் உயிர்பெறுங்கால் உயிரற்ற வடசொற் கூச்சல் கவலையினை ஆக்காதோ! மணவிழவு காண்பவரே கழறு வீரே! 68 மானந்தான் மறைந்ததுவோ? விழாத்தலைவீர், மணமெல்லாம் வடசொல் லாலே ஆனவையா சொல்லிடுவீர்! அந்நாளில் தமிழர்மணம் தமிழ்ச்சொல் லாலே ஆனதென அறியீரோ? பார்ப்பனன்போய் அடிவைத்த வீட்டி லெல்லாம் ஊனந்தான் அல்லாமல் உயர்வென்ன கண்டுவிட்டார் இந்நாள் மட்டும்? 69 மணமக்கள் தமைத்தமிழர் வாழ்கஎன வாழ்த்துமொரு வண்த மிழ்க்கே இணையாகப் பார்ப்பான்சொல் வடமொழியா, தமிழர்செவிக் கின்பம் ஊட்டும்! பணமிக்க தலைவர்களே பழியேற்க வேண்டாம்நீர்! திரும ணத்தில் மணமக்கள், இல்லறத்தை மாத்தமிழால் தொடங்கிடுக; மல்கும் இன்பம்! 70 15. கணக்காயர் கழகத்தின் கணக்காயர், தனிமுறையிற் கல்விதரும் கணக்கா யர்கள், எழுதவல்ல பேசவல்ல கல்லூரிக் கணக்காயர் எவரும் நாட்டின் முழுநலத்தில் பொறுப்புடனும் முன்னேற்றக் கருத்துடனும் உழைப்பா ராயின் அழுதிருக்கும் தமிழன்னை சிரித்தெழுவாள்; அவள்மக்கள் அடிமை தீர்வார்! 70 நற்றமிழில், தமிழகத்தில் நல்லெண்ணம் இல்லாத நரிக்கூட் டத்தைக் கற்றுவைக்க அமைப்பதினும் கடிநாயை அமைத்திடலாம்! அருமை யாகப் பெற்றெடுத்த மக்கள்தமைப் பெரும்பகைவர் பார்ப்பனர்பால் அனுப்போம் என்று கொற்றவர்க்குக் கூறிடவும் அவர்ஒப்புக் கொண்டிடவும் செய்தல் வேண்டும் 72 இகழ்ச்சியுறும் பார்ப்பனனாம் கணக்காயன், நந்தமிழர் இனத்துச் சேயை இகழ்கின்றான்! நம்மவர்முன் னேறுவரோ! தமிழ்மொழியை வடசொல் லுக்கு மிகத்தாழ்ந்த தென்கின்றான்! வடசொற்கு மகிழ்கின்றான் கொடிய வன்தன் வகுப்பானை வியக்கின்றான்! விட்டுவைத்தல் மாக்கொடிதே எழுச்சி வேண்டும்! 73 வடசொல்இது தமிழ்ச்சொல்இது எனப்பிரித்துக் காட்டிடவும் மாட்டான்! நம்சேய் கெடஎதுசெய் திடவேண்டும் அதைச்செய்வான் கீழ்க்கண்ணான்! கொடிய பார்ப்பான்! நொடிதோறும் வளர்ந்திடும்இந் நோய்தன்னை நீக்காது தமிழர் வாளா விடுவதுதான் மிகக்கொடிது! கிளர்ந்தெழுதல் வேண்டுமின்றே மேன்மை நாட்டார்! 74 தமிழ்ப்புதுநூல்ஆதரிப்பீர்!! தமிழ்ப்பாட்டை ஆதரிப்பீர், தமிழர்க் கென்றே அமைத்துள்ளகருத்தினைaஆதரிப்பீ®! தமிழ்தான்எம் ஆவி”என்Wநமைப்பகைப்பா®நடுங்கும்வf நன்றுரைப்பீ®வென்றிமுu செங்கு«நீவி®உமக்குரியா®பிறர்க்கடிk இல்லையெdஉணர்த்திடுவீ® மாzவர்க்கே! 75 16. மாணவர் கற்கின்ற இருபாலீர் தமிழ்நாட்டின் கண்ணொப்பீர் கனியி ருக்கநிற்கின்றbநடுமரத்தில் கய்கவரநினையாதீர் மூதுணர்வால் முற்கண்டஎவற்றினுக்கும்முதலனநந்தமிழை இகழ்தலின்றிக்கற்கண்டாய்நினைத்தின்பம் கைக்bகாண்டுவாழ்ந்திடுவீர்நன்றேஎன்றும்! 76 ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர் ஏங்கவைக்கும் வடமொழியை இந்தியினை எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டாம். தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள் இந்தி வட சொல்இ ரண்டும்! 77 பார்ப்பான்பால் படியாதீர்; சொற்குக்கீழ்ப் படியாதீர் உம்மை ஏய்க்கப் பார்ப்பான்;தீ துறப்பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான்எப் போதும் பார்ப்பான் ஆர்ப்பான்நம் நன்மையிலே ஆர்வமிக உள்ளவன்போல் நம்ப வேண்டாம் பார்ப்பானின் கையைஎதிர் பார்ப்பானை யேபார்ப்பான் தின்னப் பார்ப்பான்! 78 தமிழின்பேர் சொல்லிமிகு தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட் டாலும் தமிழழித்துத் தமிழர்தமைத் தலைதூக்கா தழித்துவிட நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான் அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம் தமிழர்கடன் பார்ப்பானைத் தரைமட்டம் ஆக்குவதே என்று ணர்வீர்! 79 தமிழரின்சீர் தனைக்குறைத்துத் தனியொருசொல் சொன்னாலும் பார்ப்பான் தன்னை உமிழ்ந்திடுக! மானத்தை ஒருசிறிதும் இழக்காதீர் தமிழைக் காக்க இமையளவும் சோம்பின்றி எவனுக்கும் அஞ்சாது தொண்டு செய்வீர் சுமைஉங்கள் தலைமீதில் துயர்போக்கல் உங்கள்கடன்! தூய்தின் வாழ்க! 80 17. பாடகர் நாயும்வயிற் றைவளர்க்கும்; வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாட லாமோ? போய்உங்கள் செந்தமிழின் பெருமையினைப் புதைப்பீரோ பாட கர்காள்! தோயுந்தேன் நிகர்தமிழாற் பாடாமே தெலுங்கிசையைச் சொல்லிப் பிச்சை ஈயுங்கள் என்பீரோ? மனிதரைப்போல் இருக்கின்றீர் என்ன வாழ்வு? 81 செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றிப் பைந்தமிழில் இசையின்றேல் பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி எந்தமிழில் இசையில்லை. எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டா? உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உங்கட் கெல்லாம்? 82 வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர் கிளிபோலச் சொல்வதன்றித் தமிழ்நூல்கள் ஆராய்ந்து கிழித்திட் டீரோ புளிஎன்றால் புலியென்றே உச்சரிக்கும் புவியீரே புளுக வேண்டாம் துளியறிவும் தமிழ்மொழியில் உள்ளதுவோ பாடகர்க்குச் சொல்வீர் மெய்யாய்! 83 தமிழ்மகளாய்ப் பிறந்தவளும் தமிழ்ப்பகைவன் தனைப்புணர்ந்து தமிழ்பா டாமல் சுமக்கரிய தூற்றுதலைச் சுமப்பதுவும் நன்றேயோ? பார்ப்ப னத்தி. நமக்குரிய தமிழ்காக்க ஒப்பாமை நன்றறியும் இந்த நாடு! தமிழ்நாட்டுப் பாடகரே தமிழ்பாடித் தமிழ்மானம் காப்பீர் நன்றே! 84 தமிழ்மொழியில் தமிழ்ப்பாடல் மிகவுண்டு தமிழ்க்கவிஞர் பல்லோர் உள்ளார் உமைத்தாழ்வு படுத்தாதீர் பார்ப்பான்சொல் கேட்டபடி உயிர்வா ழாதீர்! உமைவிலக்கிப் பணக்காரன் உடன்சேர்ந்து நலம்கொள்ளும் உளவன் பார்ப்பான்! சிமிழ்க்காமல் விழித்திடுங்கள் பார்ப்பானை நம்பாதீர் திறமை கொள்வீர்! 85 18. கூத்தர் வாய்ப்பாட்டுப் பாடிடுவோர் பெரும்பாலோர் வண்டமிழ்க்குத் தீமை செய்தார்! போய்ப்பாரீர் படக்காட்சி! போய்ப்பாரீர் நாடகங்கள்! பொன்போல் மிக்க வாய்ப்பாகத் தமிழ்ஒன்றே பேசுகின்றார் பாடுகின்றார் வாழ்க அன்னார்! தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில்வட மொழிசேர்த்தார்! தவிர்த்தல் வேண்டும்! 86 தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள் படக்கதைகள் எழுத வேண்டும் தமிழ்ப்பகைவர் பார்ப்பனர்கள் நாடகத்தில் படக்கதையைத் தமிழர் எல்லாம் இமைப்போதும் பார்த்திடுதல் இனியேனும் நீக்கிடுதல் வேண்டும் யாவும் அமைப்பானும் செந்தமிழன் அதைக்காண்பா னுந்தமிழன் ஆதல் வேண்டும். 87 ஆடுகின்ற மெல்லியலாள் அங்கையினைக் காட்டுவது பொருள்கு றித்தே நாடிடும்அப் பொருள்குறிக்கும் சொல்தமிழாய் இருப்பதுதான் நன்றா? அன்றித் தேடிடினும் பொருள்தோன்றாத் தெலுங்குவட சொல்லாதல் நன்றா? பின்னால் பாடுகின்றார் நட்டுவனார் பைந்தமிழா? பிறமொழியா? எதுநன் றாகும்? 88 கூத்தர்பலர் தமக்குள்ள தமிழ்ப்பேரை நீக்கிவிட்டுக் கொள்கை விட்டுச் சாத்திக்கொள் கின்றார்கள் வடமொழிப்பேர்! இந்திப்பேர்! அவற்றி லெல்லாம் வாய்த்திருக்கும் தாழ்வறியார் புதிதென்றால் நஞ்சினையும் மகிழ்ந்துண் பாரோ? தாய்த்திருநா டுயர்வெய்தும் நாள்எந்நாள்? தமிழுயரும் நாள்எந் நாளோ? 89 என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ! செவியில் யாண்டும் கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ, கண்ணெதிரில் காண்ப வெல்லாம் தன்னேரில் லாததமிழ் தனிமொழியாய்க் காணேனோ! இவ்வை யத்தில் முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றெனவே மொழியே னோநான்! 90 19. பாட்டியற்றுவோர் தமிழிசைப்பாட் டியற்றுபவர் தமிழர்களாய் இருந்தால்தான் தமிழ்த்தென் பாங்கில் அமைவுபெறும்! பார்ப்பனனும் தமிழறிவுக் கயலானும் அமைக்கும் பாடல், அமுதொத்த தமிழின்மேல் எட்டியையும் வேம்பினையும் அறைத்துப் பூசித் தமிழர்க்கே தமிழ்என்றால் தனிக்கசப்பென் றாக்கிவிடும் தானும் சாகும்! 91 மனமேஈச னின்நாமம் வாழ்த்துவாய் எனும்வேத நாய கன்தன் இனிதான பாடலைப்போல் திருடுவதற் கில்லையெனில் இங்கோர் பார்ப்பான் தனதாய்ஒன் றுரைப்பான்அத் தமிழ்ப்பாட்டில் தமிழுண்டா! எள்ளின் மூக்கத் தனையிருப்பின் இரவுதனை ரா என்றே சாற்றியிருப் பான்அப் பாட்டில்! 92 செந்தமிழில் அன்புடையார் சிலபார்ப்பார் இருந்தாலும் அவரை. மற்றச் செந்தழற்பார்ப் பார்கெடுக்கப் பார்ப்பார்இத் தமிழ்வாழப் பாரார் அன்றோ! அந்தமிழால் உடல்வளர்ப்பார் ஆரியந்தான் தமதென்பார், ஆரி யத்தில் இந்தவரி என்னஎனில் யாம்அறியோம் எம்பாட்டன் அறிந்தான் என்பார்! 93 மறைஅறியார் எனினுமவர் மறையவராம் என்றுரைப்பார்! இலக்க ணத்தின் துறையறியார் எனினுமவர் தூயதமிழ் எழுத்தாளர் என்று சொல்வார்! குறையுடையார் எனினுமவர் குதித்திடுவார் யாம்மேலோர் கூட்டம் என்றே! அறையுமிவை பெருந்தமிழர் ஆழ்ந்தநெடுந் தூக்கத்தின் பயனே அன்றோ! 94 இயற்கைஎழில் என்னென்ன? இனியதமிழ் நாட்டின்சீர் என்ன? மற்றும் செயற்கரிய நந்தமிழர் என்னென்ன செய்தார்கள்? செந்த மிழ்க்காம் முயற்சிஎவை நாட்டிற்கு முடிப்பதென்ன? இவையனைத்தும் தனித்த மைந்த வியத்தகுசெந் தமிழாலே வெல்லத்துத் தென்பாங்கில் பாடல் வேண்டும்! 95 20. சொற்பொழிவாளர்! மற்போர்க்கே அஞ்சிடுவோம் ஆயினும்யாம் வண்மைமிகு தமிழர் நாட்டில் சொற்போருக் கஞ்சுகிலோம் என்றாராம் ஒருமுதியோர் அவர்க்குச் சொல்வேன் கற்போரின் பகுத்தறிவைக் கவிழ்க்கின்ற ஒழுக்கமிலாக் கதையைத் தாங்கி நிற்பாரும் நிற்பாரோ நின்றாலும் வீழாரோ நெடுங்கா லின்றி? 96 சமயமெனும் சூளையிலே தமிழ்நட்டால் முளையாதென் றறிந்தி ருந்தும் சமயநூல் அல்லாது வழியறியாத் தமிழ்ப்புலவர் சமயம் பேசித் தமிழ்அழிப்பார் எனினுமவர் தமிழ்வளர்ப்போம் என்றுரைத்துத் தமைவி யப்பார் தமிழ்வளர்ச்சி தடைப்பட்டால் தம்வளர்ச்சி உண்டென்றும் நினைப்பார் சில்லோர்! 97 பணமனுப்பி வாரீரெனில் பயணமுறும் தமிழ்ப்புலவர் ஊரில் வந்து மொணமொணெனக் கடவுளரின் முச்செயலின் பொய்ப்பேச்சில் முழுக வைப்பார் கணகணெனத் தமிழ்க்கல்வி கட்டாயம் செயத்தக்க கருத்தும் சொல்லார் தணியாத சமயமொடு சாதியெனும் தீயில்நெய்யைச் சாய்த்துச் செல்வார்! 98 மொழியழிப்பான் தனைப்பற்றி ஒருமொழியும் மொழிவதில்லை மொழிந்தால் பார்ப்பான், விழிநோகும் எனநடுங்கிப் வெண்ணீற்றுப் பதிகத்தை விரித்துச் சொல்லிப் பழியாகத் தன்தாயைப் புணர்ந்தானைச் சிவன்உவந்த பாங்கும் கூறி ஒழிவார்கள்; தமிழ்மொழியை ஒழிப்பாரை ஒழிப்பதன்முன் ஒழியா தின்னல்! 99 உலகுக்குத் தமிழ்மொழியின் உயர்வுதனைக் காட்டுவது சொற்பெ ருக்காம்! கலகத்தைச் சமயத்தைக் கழறுவதைக் காதாலும் கேட்க வேண்டாம் சிலகற்றார் பலகற்க விரும்பும்வகை செயல்வேண்டும்! கல்லார் ஓடித் தலையுடைத்துக் கொள்ளவேண்டும்! தன்னலம்இல் லார்சொல்லால் எல்லாம் எய்தும்! 100 21. ஏடெழுதுவார் (1) பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் பைந்த மிழ்க்கோ சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும் நன்மையில்லை திருட ரின்பால் ஊர்ப்பணத்தை ஒப்படைத்தல் சரியாமோ செய்தித்தாள் உடையா ரன்றோ ஊர்ப்பெருமை காப்பவர்கள் அஃதில்லார் ஏதிருந்தும் ஒன்று மில்லார்! 101 ஆங்கிலத்தில் புலவரெனில் அரசினரின் அலுவலிலே அமர்ந்தி ருப்பார்! பாங்குறுசெந் தமிழ்ப்புலமை படைத்தாரேல் பள்ளியிலே அமர்ந்தி ருப்பார்! தீங்குற்ற இசைப்புலமை சிறிதிருந்தால் படத்தொழிலில் சேர்ந்தி ருப்பார்! ஈங்கிவற்றில் ஏதுமிலார் தமிழினிலே ஏடெழுதிப் பிழைக்க வந்தார்! 102 ஓவியத்தின் மதிப்புரையும் உயர்கவியின் மதிப்புரையும் இசையின் வல்லார் நாவிலுறு பாடல்களின் நயம்பற்றி மதிப்புரையும் உரைந டைக்கு மேவுகின்ற மதிப்புரையும் கூத்தர்களின் மதிப்புரையும் விள்வார்; நாங்கள் யாவும்அறிந் தோம்என்பார்; பெரும்பாலோர் பிழையின்றி எழுதல் இல்லார்! 103 ஊர்திருடும் பார்ப்பானும் உயர்வுடையான் எனக்குறிப்பார் திராவி டர்கொள் சீர்குறித்துச் சீறிடுவார்; சிறுமையுற வரைந்திடுவார் செய்யுந் தொண்டு பார்திருத்த என்றிடுவார்; பழமைக்கு மெருகிடுவார் நாட்டுக் கான சீர்திருத்தம் என்றாலோ சிறுநரிபோல் சூழ்ச்சியினைச் செய்வார் நாளும்! 104 நடுநிலைமை இருப்பதில்லை நல்லொழுக்கம் சிறிதுமிலை தமிழை மாய்க்கும் கெடுநினைப்பே மிகவுடையார் கீழ்மையிலே உடல்வளர்ப்பார் பொருள்ப டைத்தோன் அடிநத்த நாணுகிலார் அறமொன்றும் கூறுகிலார் ஏழை யோரின் மடிபறிக்கும் திறமுடையார் மறந்தேனும் திரவிடரை மதித்தல் இல்லார்! 105 22. ஏடெழுதுவார் (2) இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடெழுதல் கேடு நல்கும் தலைக்கணையில் நெருப்பிட்டுத் தலைவைத்துத் துயில்வதுபோல் பகைவ னைப்போய் நிலைப்புற்ற தமிழ்ஏட்டில் ஆசிரிய னாக்குவது நீங்க வேண்டும் கலைப்பண்பும் உயர்நினைப்பும் உடையவரே ஏடெழுதும் கணக்கா யர்கள்! 106 தன்னினத்தான் வேறினத்தான் தன்பகைவன் தன்நண்பன் எவனா னாலும், அன்னவனின் அருஞ்செயலைப் பாராட்டு வோன்செய்தி அறிவிப் போனாம்! சின்னபிழை ஏடெழுதும் கணக்காயன் செய்திடினும் திருநாட் டார்பால் மன்னிவிடும்; ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே விழிப்பு வேண்டும்! 107 ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுற வைப்பதுவும் ஏடே யாகும்! தோற்றுபுது நிலையுணர்ந்து தோன்றாத வழிகூறித் துணைபு ரிந்து சேற்றிலுயர் தாமரைபோல் திருநாட்டின் உளங்கவர்ந்து தீந்த மிழ்த்தொண் டாற்றுந்தாள் அங்கங்கே அழகழகாய் அறிஞர்களால் அமைத்தல் வேண்டும்! 108 தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும் ஏட்டை யெல்லாம் கண்டறிந்த படிஅவற்றை மக்களெலாம் மறுக்கும்வணம் கழற வேண்டும் வண்டுதொடர் மலர்போலே மக்கள்தொடர் ஏடுபல தோன்றும் வண்ணம் மண்டுதொகை திரட்டி, அதை ஏடெழுத வல்லார்பால் நல்க வேண்டும்! 109 ஆங்கிலத்துச் செய்தித்தாள் அந்தமிழின் சீர்காக்க எழுதல் வேண்டும் தீங்கற்ற திரவிடநன் மொழிகளிலே பலதாள்கள் எழுதல் வேண்டும் ஓங்கிடநாம் உயர்முறையில் நாடோறும் கிழமைதொறும் திங்கள் தோறும் மாங்காட்டுக் குயிலினம்போல் பறந்திடவேண் டும்தமிழ்த்தாள் வண்ணம் பாடி! 110 23. பெருஞ்செல்வர்! கோயில்பல கட்டுகின்றீர் குளங்கள்பல வெட்டுகின்றீர் கோடை நாளில் வாயிலுற நீர்ப்பந்தல் மாடுறிஞ்ச நெடுந்தறிகள் வாய்ப்பச் செய்தீர் தாயிலும்பன் மடங்கான அன்போடு மக்கள்நலம் தாவு கின்றீர் ஆயினும்நம் தமிழ்நாட்டில் செயத்தக்க தின்னதென அறிகி லீரே! 111 தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும் இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும் தமிழுக்குப் பொருள்கொடுங்கள் தமிழறிஞர் கழகங்கள் நிறுவி டுங்கள் தமிழ்ப்பள்ளி கல்லூரி தமிழ்ஏடு பலப்பலவும் நிலைப்பச் செய்வீர்! 112 நேர்மையின்றிப் பிறர்பொருளில் தம்பெயரால் கல்லூரி நிறுவிப் பெண்ணைச் சீர்கெடுத்தும் மறைவழியாய்ச் செல்வத்தை மிகவளைத்தும் குடிகெ டுத்தும் பார்அறியத் தாம்அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில் வேர்அறுந்த நெடுமரம்போல் வீழ்ந்துமவன் விட்டதுவே வழியாம் என்றும், 113 அறத்துக்கு நிறுவியதை வருவாய்க்கென் றாக்குவதில் அறிவு பெற்ற மறப்பார்ப்பான் செந்தமிழ மாணவரைக் கெடுத்தாலும் எதற்கு மேவாய் திறக்காமல் நாமிருந்தும் செந்தமிழ்க்குப் பாடுபடல் போல்ந டித்தும் சிறப்பார்போல் இல்லாது செந்தமிழ்க்கு மெய்யுளத்தால் செல்வம் ஈக! 114 சிங்கங்கள் வாழ்காட்டில் சிறுநரிநாய் குரங்கெண்கு சிறுத்தை யாவும் தங்கிநெடுங் கூச்சலிடும் தன்மையைப்போல் தமிழ்நாட்டில் தமிழே யன்றி அங்கங்கே அவரவர்கள் நம்மொழிக்கும், பிறமொழிக்கும் ஆக்கம் தேடி மங்காத செந்தமிழை மங்கும்வகை செய்வதற்கு வழக்கும் சொல்வார். 115 24. மற்றும் பலர் அச்சகத்துத் தமிழர்க்கோ அருந்தமிழில் அன்பிருந்தால் அச்சி யற்றும் எச்சிறிய அறிக்கையிலும் நூல்களிலும் எதிர்மொழியை உடைய வர்நீக் கச்சொல்ல லாமன்றோ? எண்எல்லாம் தமிழினிலே உண்டோ என்றால் மெச்சுகின்ற ஆங்கிலஎண் அல்லாது வேறில்லை என்கின் றாரே! 116 கலைச்சொல்லாக் கத்தாரே! கல்வியினால் நீர்பெற்ற அறிவை யெல்லாம் தலைச்சரக்காம் தமிழ்ச்சரக்கைத் தலைகவிழ வைப்பதற்கோ விற்கின் றீர்கள்? மலைச்சறுக்கில் இருக்கின்றீர்! மாத்தமிழர் கண்திறந்து வாழ்வுக் கெல்லாம் நிலைச்சரக்கைக் கண்டுகொண்டார் நெடுநாளின் விளையாட்டை நிறுத்த வேண்டும்! 117 அரசினரும் பெரியநிலை அடைந்தவரும் அறிந்திடுக. மக்கள் நெஞ்சில் முரசிருந்து முழங்கிற்றுத் தமிழ்வாழ்க தமிழ்வெல்க! என்றே! முன்னாள் அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே சூழ்ச்சிசெய்யும் ஆட்கள் யாரும் எரிசருகு! தமிழரிடை எழுச்சியுறும் தமிழார்வம் கொழுத்த தீ! தீ! 118 கடவுள்வெறி சமயவெறி கன்னல்நிகர் தமிழுக்கு நோய்நோய் நோயே இடைவந்த சாதிஎனும் இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம் தாய்தாய் தாயே! கடல்போலும் எழுக! கடல் முழக்கம்போல் கழறிடுக! தமிழ்வாழ் கென்று! கெடல்எங்கே தமிழின்நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! 119 விழிப்போரே நிலைகாண்பார் விதைப்போரே அறுத்திடுவார் களைகாண் டோறும் அழிப்போரே அறஞ்செய்வார் அறிந்தோரே உயர்ந்திடுவார்! ஆதல் ஆர்வம் செழிப்போரே இளைஞர்களே, தென்னாட்டுச் சிங்கங்காள்! எழுக நம்தாய்! bkhÊ¥nghnu nt©LtJ bjhl¡fŠbrŒ å®!வெல்வீர்! மொழிப்போர் வெல்க! 120 - தமிழியக்கம், 1945 22. இசைத் தமிழ் சிந்து கண்ணி மேசை விளக்கேற்றி - நாற்காலி மீதில் அமர்ந்தேநான் ஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமை அம்மா அருகில்வந்தார் மீசைத் தமிழமன்னர் - தம்பகையை வென்ற வரலாற்றை ஓசை யுடன்படித்தேன் - அன்னைமகிழ் வுற்றதை என்ன சொல்வேன்? செந்தமிழ் நாட்டினிலே - வாழ்கின்ற சேயிழை யார் எவரும் வந்த விருந்தோம்பும் - வழக்கத்தை வாய்விட்டுச் சொல்லுகையில் அந்தத் தமிழ் அன்னையின் - முகத்தினில் அன்பு பெருகியதை எந்த வகை உரைப்பேன்! - கேட்டபின்பும் இன்னும்சொல் என்றுரைத்தார்! கிட்ட நெருங்கிஎனைப் - பிள்ளாய் என்று கெஞ்சி நறுந்தேனைச் சொட்டுவதைப்போலே - வாய்திறந்து சொல்லொரு பாடல் என்றார் கட்டிக் கரும்பான - இசைத்தமிழ் காதினில் கேட்டவுடன் எட்டு வகைச்செல்வமும் - தாம்பெற்றார் என்னைச் சுமந்து பெற்றார் - குயில், 01.07.1947; பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.88, 1949 23. தமிழர்களின் எழுதுகோல் கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும் கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால், தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற் சிரிப்பள்ளித் தூற்றும்! நலம் செந்தமிழ்க்கும் என்னாம்? தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால் சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே! இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சிமனப் பான்மை ஏற்படுத்தல், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம். விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கால் வையம் வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்? மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம். உரத்தினிலே குண்டுபுகும் வேளையிலும் மக்கள் உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்! பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள் பிறர்தமர்என் றெண்ணுவது பேதமையே அன்றோ! பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க! புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும் அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால், எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை? ஏற்றசெயல் செய்தற்கும் ஏன்அஞ்ச வேண்டும்? உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள், நன்றே உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும். - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.87, 1949 24. வள்ளுவர் வழங்கிய முத்துகள் தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள் அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம் கொள்ளும் அறம், பொருள், இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு வள்ளுவ னைப்பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே! 1 வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள் பொல்லாத தில்லை புரைதீர்த்த வாழ்வினி லேஅழைத்துச் செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! 2 தொன்னூற் படியில்லை! திராவிடர் தூய கலைஒழுக்கம் பின்னூற் படியிற் பெறும்படி இல்லை; பிழைபடியா அந்நூற் படிதிரு வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து முந்நூற்று முப்பதும் முத்தாக மூன்று படியளந்தே! 3 கன்னல் இதுஎனக் காட்டியே மக்கள் கடித்துணுமோர் இன்னல் தராது பருகுக சாறென ஈவதுபோல் பின்னல் அகற்றிப் பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே பன்னல் உடையது வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே! 4 வித்திப் பிழைக்கும் உழவனும் வேந்தனும் நாடனைத்தும் ஒத்துப் பிழைக்க வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல், எத்துப் பழுத்தவர் ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல் அத்திப் பழமன்று; தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே! 5 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, 5.129, 1949 25. இசைபெறு திருக்குறள் கசடறக் கற்க பகவத் கீதை பகர்ந்த கண்ணணை நல்வட மதுரைக் கச்சென நவில்வர்; திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ தென்மது ரைக்கோர் அச்செனச் செப்புவர்! இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்! இதனால் அறிவ தென்ன வென்றால்! இருவேறு நூற்கள், இருவேறு கொள்கைகள் இருவேறு மொழிகள், இருவேறு பண்பாடு உளஎன உணர்தல் வேண்டு மன்றோ? கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை அடிப்படை தன்னில் அருளினான் என்க! அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை எதனடிப் படையில் இயற்றினார் என்றால், ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல் அடிப்படை தன்னில் அருளினான் என்க! எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று வடமொழி யாளர் வழங்கு கின்றார். பரிமே லழகர் திருக்குற ளுக்குச் சாங்கியக் கருத்தைத் தாம்மேற் கொண்டே உரைசெய் தாரா? இல்லைஎன் றுணர்க! ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்! சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன் என்றார் மன்னுகல் லாடனார்! வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்! சாங்கியம் மதமன்று; தத்துவ நூலே! பரிமே லழகர் பெருவை ணவரே மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின் அவை தகுமோ? ஆய்தல் வேண்டும். திருவள் ளுவர்தாம் இரண்டா யிரமெனும் ஆண்டின்முன் குறளை அளித்தார் என்பர். ஆயிரத் தெழுநூ றாண்டுகள் கழிந்தபின் பரிமே லழகர் உரைசெய் துள்ளார் என்பதும் நினைவில் இருத்தல் வேண்டும். பரிமே லழகர் உரையோ வள்ளுவர் திருவுள் ளத்தின் திரையே ஆனது! நிறவேறு பாட்டை அறவே ஒதுக்கிய தமிழ்த்திரு வள்ளுவர் அமிழ்தக் கொள்கையை நஞ்சென்று நாட்டினார் பரிமே லழகர். பழந்தமிழ் நாட்டின் பண்பே பண்பென அன்னார் ஆய்ந்த அறமே அறமென ஒழுக்கமே ஒழுக்க விலக்கணம் ஆமென வள்ளுவர் நாட்டினர், தெள்ளு தமிழர் சீர்த்தியைத் திறம்பட எடுத்துக் காட்டினார், பரிமே லழகர் செய்த உரையில் தமிழரைக் காணுமா றில்லை. தமிழரின் எதிர்ப்புறத் துள்ள இனத்தார் மேன்மையின் செருகலே கண்டோம்! செருகலே கண்டோம்! வடநூல் கொண்டே வள்ளுவர், குறளை இயற்றினார் என்ற எண்ணமேற் படும்படி உரைசெய் துள்ளார் பரிமே லழகர்! எடுத்துக் காட்டொன் றியம்பு கின்றேன்: ஒழுக்க முடைமை, குடிமை என்பதற்கு உரைசொல் கின்றார் பரிமே லழகர் தத்தம் வருணத் திற்கும், நிலைக்கும் ஓதப் பட்ட ஒழுக்கந் தன்னை உடைய ராதல் - உரைதா னாஇது? ஒழுக்க முடைமை, உயர்தமிழ்க் குடிகளின் தன்மை யுடைய ராதல் - தகும்இது; குடிமை என்பது குடிகளின் தன்மையே! வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இல்எனப் பகர்ந்ததில் பழங்குடி குறித்த பாங்கும் அறிக. நன்றுயாம் நவில வந்த தென்எனில் திருவள் ளுவரின் திருக்குறள் தன்னைக் கசடறக் கற்க; கற்றே இசையொடு தமிழர் இனிது வாழ்கவே! - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.132,1949 26. நாடாண்டாயே ehlh© lhna jÄnH!நீ ஞாலம் ஆண்டாய்! வாழ்வும் ஈந்தாயே! ஏடு யாவும் நீயே! மக்கள் எண்ணம் எவைகளும் நீயே, பகைதீர்ந்தே! - நா நாடு மீளவே, கேடு தீரவே, நாமினி இலங்கி நனி வாழவே - நா இனிதாகிய தமிழே! எனதுயிரே! இளைஞர்க்கிடை மூளுகின்ற உணர்வே! கனியினும் மிகுசுவையே! உனைநான் காணாப்போது கவலை மிகுந்திடுதே! கனல்நிகர் ஆரியர் நலிவேசெயினும் கலையாவும் வெந்து போகச்செயினும், புனலிடைத் தமிழ்நூற்களெலாம் போயினும், புதுமை இளமை எனும்படி. - நா - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.21, 1952 27. எது இசை? தமிழ் பாடல் முறையா, நாட்டிலே கண், வாயைக் காட்டல் முறையா? எது முறை சொல்க மனமே! தமிழ் பேசுவார்க்குத் தீந்தமிழினிதோ தாங்களறியாத பிறமொழி பாடுதல் இனிதோ மொழிபொருள் மிகநன்றாய்க் காட்டுதல் கவியா? - தம் விழிபல் உதடுகாண அதட்டல் கவியா? பிழைபட நிந்தனைபட நடப்பது நலமா? பெருமை ஓங்குமாறு தமிழைப் போற்றுதல் நலமா? - தமிழ் - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.22, 1952 28. தமிழ்த் தொண்டு தமிழ்என்னும் மணிவிளக் கேற்றடா நாட்டில், தமிழரின் நெஞ்சமாம் அழகான வீட்டில்! அமுதென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை! அறமென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை! - த தமிழ்என்ற உணவினைக் குவியடா யார்க்கும், தமிழருக் கிங்குள்ள குறையெலாம் தீர்க்கும். சமமாக ஆற்றடா தமிழூழி யத்தைச் சகலர்க்கும் ஆற்றடா தமிழூழி யத்தை. - த தமிழென்ற வன்மையைக் கூட்டடா தோளில், தமிழர்க்கு நலமெலாம் வரும்ஒரே நாளில்! அமைவினால் புரியடா செந்தமிழ்த் தொண்டே! அன்பினால் புரியடா செந்தமிழ்த் தொண்டு. - த தமிழ்என்னும் உணர்வினைச் சேரடா எங்கும் தமிழரின் ஆட்சியே உலகெலாம் தங்கும் இமையேனும் ஓயாது தமிழுக் குழைப்பாய்! இன்பமே அதுவென்று தமிழுக் குழைப்பாய்! - த - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.23, 1952 29. தமிழ்த் தொண்டு இயற்கை அன்னை அருளிய இன்தமிழ்! அயல்மொழி வேண்டா ஆர்எழில் சேர்தமிழ் நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும் குறைவில தென்று குறிக்கும் தனித்தமிழ்! தமிழர் வாழ்வின் தனிப்பெரு மைக்கும் அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்! அந்த நாளில் அறிவுசால் புலவர் எந்தநாள் தோன்றிய தோஎனும் பழந்தமிழ்! தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில் அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ்! தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று - இமையாது முயன்ற அயலவர் எதிரில், இறவாது நிற்கும் ஏற்றத் தமிழின் பெருநிலை எண்ணுக, தமிழ்ப்பெரு மக்களே! அருஞ்செல் வர்கள் அன்று தொடங்கி இன்று வரைக்கும் ஈந்து வந்துள பொன்றா ஆதரவு - அன்றோ காரணம்? அயல்மொழி எல்லாம் அண்டையில் கண்ணெதிர் வியக்கு முறையில் மேன்மை பெற்றன; என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்! இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர் தமிழிடம் காட்டும் தயவு போதுமா? தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக! தமிழர் பொருளெலாம் தமிழுக்குத் தந்தார் தமிழை யுயர்த்தினார் தாமுயர் வுற்றார் என்றசொல் நாட்டினால், இறவா நற்புகழ் நன்று வாய்ந்திடும் என்ற நடுக்கமோ? தமிழின் தொண்டு தரித்திர வயிற்றுக்கு - அமிழ்தம் அன்றோ அண்ணன் மாரே! ஆவன தமிழுக் காற்றுதல் சிறிதே, ஈவது சிறிதே, இன்ப மொழிக்கு! வருத்தச் சேதி இஃதொன்று மட்டுமா? ஒருவர் ஒன்று தமிழ்நலம் உன்னி இயற்றமுன் வந்திடில், இடையூறு பற்பல இயற்ற முன்வருவதை என்ன என்பது, தமிழ்க்கவி தைக்கெனத் தனிப்பத் திரிகை அமைப்போம் என்றே ஆண்டுபல சென்றன; தமிழ்ப்பற் றுடையார், தம்பு சாமிஎன்று அமைந்த சீமான் அன்புறு தோழர் ஸ்ரீசுப்ர மண்ய பாரதி திருப்பெயர் வாய்ந்த கவிதா மண்டலம் எனுமிதை ஆய்ந்த அறிஞர் கவிஞரால் ஆக்கி வெளியிட முன்வந் தொளிரு கின்றார் தெளியுளப் பெரியார் செய்த நன்றி மறப்பதற் கில்லை வண்மைத் தமிழர்! அறப்பெருஞ் செயலை, அரும்பெருஞ் செயலைத் தமிழர் ஆனோர் தோள்தந்து தாங்குக! அமுதம் பெருக்குதல் அனைவர்க்கு மன்றோ? சேர்ந்து தொண்டாற்றுதல் சிறப்பா அன்றிக் காய்ந்தும் முணுத்துக் கசந்தும் கலகம் செய்தும் திரிதல் சிறப்பா செய்புக குள்ள நெஞ்சினர் கொடுமை செய்வதைத் தெள்ளிய நெஞ்சினர் தீர்த்தும், தமிழில் அன்பிலாத் தமிழரை அன்பில் தோய்த்தும் தென்பா லெழுந்தா தீந்தமிழ்ச் சுடரை வானிடை எழுமோர் வண்மைச் சுடராய்ச் செய்யமுன் வருக தமிழரே உய்ய நம்மவர்க்கிங் குறுதுணை அஃதே - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.26, 1952 30. நிலவே நிலவே நீமுன் நடந்ததைக் கூறுவாய்! மெய்யாய்க் கூறுவாய்! இலகு செந்தமிழையும் உன்னையும் கூட்டி, இயற்கை அன்னைவளர்த்த திலையோ பாலூட்டி! சங்கமேறித் தமிழுலகிருள் போக்கித் தாவியெழில் வானமிசை நீயுலவத் தமிழ்வாழ்த்தி, உனைவாழ்த்தி மக்கள் வாழ்வு தொடங்கியதை மறந்தனையோ, குளிர்ந்தவெண் ணிலவேநீ வடமொழிக்குதவி தமிழ்மொழி அன்றோ? மறுமொழி கூறாதிருப்பது நன்றோ? கடல்சூழ் வையம் ஆண்டது தமிழோ? கையேந்தி வந்தவர் பேசிய மொழியோ? - நிலவே ஆரியர் ஆட்சி வாய்ந்த பின்னை அழகிய தமிழ்நூ லாகிய பொன்னை வேரொடு மாற்றிட வஞ்சம் என்னென்ன விளைத்தார், அதைத்தான் கேட்டேன் உன்னை. - நிலவே - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.30, 1952; குயில், 15.6.1948 31. முழங்கும் குறள் முழங்கிடுகின்றதே அறம்! - மு முட்டுப்படும்உலகே! இனவேற்றுமை பட்டுக்கெடும் உலகே நம்திருக்குறள் - மு உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் எனல் கேட்டீரோ! வாய்மை அடிப்படை மக்களைச் சேர்க்கும். மாண்பிலா ஆட்சி யாளரை நீக்கும். தாய்மொழி தன்னையும் மீட்டுக் காக்கும். தள்ளத் தகாத்திரு வள்ளுவர் வாய்மொழி - மு எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் எனல் கேட்டீரோ! ஒற்றுமை ஒன்றினால் அச்சம் பறக்கும். ஊருக் குழைப்பதோர் வீரம் பிறக்கும். சற்றும் பிசகாமல் எண்ணிய நலங்கள் சாரும் என்றுதிரு வள்ளுவரின் குறள் - மு துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் எனல் கேட்டீரோ! நாட்பட்டுப் போனஓர் சட்டத்திலே, ஒரு நல்லது செய்யாத சட்டத்திலே, ஆட்பட்டுப் போகாமல் ஒற்றுமையாயதை ஆற்றலில் மாற்றுக என்று திருக்குறள் - மு அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் எனல் கேட்டீரோ? அஞ்சத் தகுந்ததற் கஞ்சுதல் வேண்டும். அஞ்சத் தகாததற் கஞ்சிட லாமா? கெஞ்சினால் மிஞ்சுவர் கேடாள வந்தார் கிளர்ச்சி தேவைஎன் றுணர்த்திய திருக்குறள். - மு - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.24, 1952 32. தன்னேரிலாத தமிழ் தன்னேரிலாத தமிழ் அன்னையே - உனைவாழ்த்தினேன் இன்னல் தவிர்த்தாள் என்னையே! - தன்னேரிலாத தமிழ் முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய மொழியே! மொழியே, மொழியே எனவே வாழ்த்தும். - தன்னேரிலாத தமிழ் தென்னவன், சேரன், சோழன் செம்மையிலே வளர்ந்த திருவே! திருவே, திருவே புகழ்மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே! வாழ்வே, வாழ்வே எனவே வாழ்த்தும் - தன்னேரிலாத தமிழ் ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே! அன்பே, அன்பே புகழ்மிகுந்த சீர்பெறு முத்தமிழே, தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி, செல்வி, செல்வி எனவே வாழ்த்தும் - தன்னேரிலாத தமிழ் முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம் பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும் - தன்னேரிலாத தமிழ் - தேனருவி, ப.9, 1956 33. எதை வேண்டித் தவங்கிடந்தாய்? எதைவேண்டித் தவங்கிடந்தாய்? என்தமிழ்த் தாயே! - நீயே, - எதை வேண்டித்... எனதுயிரே, உடலே, பொருளே நீ - எதை வேண்டித்... கதிதரு தமிழ் கட்டாயக் கல்வியா? கலைமிகு முத்தமிழ் வித்தார சங்கமா? புதுமுறை விஞ்ஞானமா? எலாம் பொதுவாக்குதல் உத்தேசமா? - சொல் - எதை வேண்டித்... இமயத்தில் பேர்வரைந்த செந்தமி ழன்தோள் இந்நிலத்தை நன்னிலைக்குள் ஆக்க வேண்டுமா? சமயம் சாதிகள் அகல யாவும் சமம் எனுநிலை அமைய வேண்டுமா? - எதை வேண்டித்... - தேனருவி, ப.10, 1956 34. செந்தமிழ்ச் செல்வம் செல்வ மென்று போற்று செந்தமிழ்ச் சொல்லை - நீ - செல்வ மென்று... அல்லலும் நீங்கும் பகையாவும் நீங்கும். - செல்வ மென்று... வெல்வது வேலன்று; செந்தமிழ் ஒன்றே நல்லொற்றுமை சேர்க்கும்; நன்னெறி சேர்க்கும், வல்லமை சேர்க்கும், வாழ்வையுண் டாக்கும்; வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்? தமிழர்க்கு மானம் தனியுயிர் யாவும் தமிழே யாதலால் வாழ்த்துவோம் நாளும்! - செல்வ மென்று... - தேனருவி, ப.11, 1956 35. துள்ளி ஆடுவோம் துள்ளி ஆடுவோம் - வாரீர் பள்ளுப் பாடுவோம் வள்ளுவன் இரண்டு திருவடி - இந்த வையம் அளந்ததை எண்ணி எண்ணி நாம் - துள்ளி ஆடுவோம் வள் என்று சொல்வது வண்மையாம் - அந்த வண்மை படைத்தவன் வள்ளுவனாம் - மன்னர் உள்படு கருமத் தலைமை அலுவல் ஒன்றுக்கு வள்ளுவம் என்றது கண்டு - துள்ளி ஆடுவோம் அமைச்சர் அவையின் தலைவன் அகம்புறம் காணும் வலவன் தமிழ் மக்களின் பகைவரும் - தம் தலையில் தூக்கி ஆடும் புலவன்! - துள்ளி ஆடுவோம் வானுக்குச் செங்கதிர் ஒன்று - புனல் வண்மைக்குக் காவிரி ஒன்று - நல்ல மானத்தைக் காத்து வாழ எண்ணுமிந்த வையத்துக் கொன்று திருக்குறள் என்று! - துள்ளி ஆடுவோம் - தேனருவி, ப.12, 1956 36. விண்ணப்பம் கேள் விண்ணப்பம்கேள் என் தமிழிசையே - தாயே! விண்ணப்பம் கேள்! வண்டமிழ் நாட்டில் உள்ள மகன்நான் விடுக்கும் - விண்ணப்பம் கேள் புகன்றிடும் எனக்கும், கேட்கும் தமிழர்க்கும் புரியாத தெலுங்கில் நான் பாடுதல் வேண்டுமாம் தகுந்தமிழ் தன்னிலோர் தமிழ்மகன் தமிழில் தமிழ் நாட்டில் பாடுவதை மறந்திட வேண்டுமாம்! - விண்ணப்பம் கேள் தக்கதோர் இசைக்குத் தமிழ் ஒத்து வராதாம் தமிழுக்குத் தக்கதோர் இசை ஒத்து வராதாம் இக்காலம் தமிழ் என்ற பேச்சே கூடாதாம் இனிமேல் தமிழ்க்கு முன்னைய ஓட்டம் ஓடாதாம்! - விண்ணப்பம் கேள் தமிழ்ப்பாங் கறியாத தமிழினத் தார்க்கே, வானொலிப் பணத்தைத் தருவதற் காக அமைந்த அதிகாரிகள் செய்யும் அடாச்செயல் அகலும் வண்ணம் முயலுதல் வேண்டும். - விண்ணப்பம் கேள் தமிழர்கள் எல்லாம் உன்மக்கள் அன்றோ? சற்றே அவர்களை ஒற்றுமை ஆக்குவாய்; இமைத்திடும் நேரத்தில் தமிழின் பகைவர் எழுந்த சூறைக் காற்றில் துரும்பாய்ப் பறப்பார். - விண்ணப்பம் கேள் - தேனருவி, ப.13, 1956 37. எனக்கு வந்த அஞ்சல் எனக்கு வந்த அஞ்ச லட்டையில் இருந்தவை பத்து வரிகள் - அவற்றில் இருந்தவை நூறு பிழைகள்! இனிப்பை இணிப்பென் றெழுதி வைத்தார், இழுப்பை இளுப்பென் றெழுதி வைத்தார், மனைஎன் றெழுதமணை என்றார் அவர், மாற்றென்று சொல்ல மாத்தென்றார், குனம்குனம் என்று குணத்தைச் சொன்னார், கோவை என்பதைக் கோர்வை என்றார், கனிநிகர் தமிழறி வில்லாமல் காட்சியை அவர் காக்ஷி என்றாரே! முப்பத்து மூன்றை முப்பதி மூன்றென்றும், முட்கம்பி என்பதை முள்க்கம்பி என்றும், முற்புறம் என்பதை முர்ப்புரம் என்றும், முட்டியை வேட்டியை முஷ்டி வேஷ்டி என்றும், இப்படிக் கென்பதை இப்படிக்கி என்றும், இளமை என்பதை இலமை என்றும், அப்போ தென்பதை அப்போ என்றும், அழிவு பெற்றிட எழுதி விட்டனர்! அவைகள் வந்தது, பாட்டி செத்தது, சேய் பிறந்தாள், எந்தன் செல்வம், கவர்ந்துக் கொண்டான், கண்டுச் சொன்னான், காற்று பட்டது, கடித்து தின்றான் எவரை கண்டீர், எப்படி சொன்னீர், என்று தமிழைக் கொன்று குலைத்தவர், சுவையுள்ள எட்டுத் தமிழ்ப் படங்களின் தூய தமிழ்எழுத் தாளரென் றார்தம்மை! - தேனருவி, ப.15, 1956 38. தமிழன் பாட்டு தமிழுக் காக! - என் தாயினுக் காக! அமையாரின் படையை என்சினத்தால் எரிப்பேன் அவராலே நான்சாக நேரினும் சிரிப்பேன். - தமிழுக் தமிழுக்கு மகன்நான்! - ஒரு தாழ்வையும் அறியேன் தமைஉயர்வென் பார்அவர் பகைப்பெருங் கடனாத் தாக்கிடுவேன் அல்ல திழப்பேன் என்உடல். - தமிழுக் அஞ்சுதல் இல்லேன் - நான் ஆரியன் அல்லேன் நெஞ்சம் தமிழ்மரபின் வீரத் தொகுப்பு நேர்போரில் காண்பேன் சிறப்பல்ல திறப்பு! - தமிழுக் பைந்தமிழ் எல்லை - தனில் பகைக்கிட மில்லை எந்நாளும் தோலாத செந்தமிழன்தோள் எழுந்தால்நான் தூள்; அல்லது தமிழ்த்தாய் ஆள்வாள்! - தேனருவி, ப.21, 1978; குயில், 2.2.1960 39. தமிழ் வாழ்த்து தமிழே வாழ்க தாயே வாழ்க! அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க! கமழக் கமழக் கனிந்த கனியே அமைந்த வாழ்வின் அழகே வாழ்க! சேர சோழ பாண்டிய ரெல்லாம் ஆர வளர்த்த ஆயே வாழ்க! ஊரும் பேரும் தெரியா தவரும் பாரோர் அறியச் செய்தாய் வாழ்க! சீரிய அறமும் சிறந்த வாழ்வும் ஆரும் அடையும் அறிவைப் பொழிந்தாய் வீரம் தந்தாய் மேன்மை வகுத்தாய் ஈர நெஞ்சே இன்பம் என்றாய். குமரி நாட்டில் தூக்கிய கொடியை இமயத் தலைமேல் ஏறச் செய்தாய் தமிழைத் தனித்த புகழில் நட்டாய் தமிழின் பகைவர் நெஞ்சைச் சுட்டாய். முத்தமிழ் அம்மா முத்தமிழ் அம்மா தத்துவ உணர்வை முதலில் தந்தாய் எத்தனை இலக்கியம் இலக்கணம் வைத்தாய் முத்துக் கடலே பவழக் கொடியே. எழுத்தே பேச்சே இயலே வாழ்க! ïiH¤j1 குயிலே இசையே வாழ்க! தழைத்த மயிலே கூத்தே வாழ்க! ஒழுக்க வாழ்வின் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ்நாட் டுக்கும் பிறநாட் டுக்கும் அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! Xuh cy»‹2 xËna thœf!3 - இளைஞர் இலக்கியம், ப.3, 1958 இழைத்த - மணி பதித்த, ஓரா உலகின் - அறிவு நிரம்பாத ஒளியே, ஒளியே - அறிவே 40. முத்தமிழ் படிப்பும் பேச்சும் இயற்றமிழ் பாடும் பாட்டே இசைத்தமிழ் நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே நாடகத்தமிழ் என்பார்கள் முடிக்கும் மூன்றும் முத்தமிழே முத்தமிழ் என்பது புத்தமுதே முடித்த வண்ணம் நம்தமிழே முத்தமிழ் என்றே சொல்வார்கள். - இளைஞர் இலக்கியம், ப.5, 1958 41. மூவேந்தர் சேர வேந்தர் தமிழ்வேந்தர் சிறந்த சோழர் தமிழ்வேந்தர் பாரோர் எல்லாம் புகழ்கின்ற பாண்டிய வேந்தர் தமிழ்வேந்தர் நேரே தமிழைக் காத்தாரே நீண்ட நாட்டை ஆண்டாரே வீரத் தாலே புகழெல்லாம் விளைத்த இவரே மூவேந்தர். - இளைஞர் இலக்கியம், ப.5, 1958 42. தமிழ்மொழி - தமிழ்நாடு நாம்பே சுமொழி தமிழ்மொழி! நாமெல் லாரும் தமிழர்கள்! மாம்பழம் அடடா மாம்பழம் வாய்க்கி னிக்கும் தமிழ்மொழி தீம்பால் செந்தேன் தமிழ்மொழி செங்க ரும்பே தமிழ்மொழி! நாம்பே சுமொழி தமிழ்மொழி நாமெல் லாரும் தமிழர்கள்! நாம்பே சுமொழி தமிழ்மொழி நமது நாடு தமிழ்நாடு காம்பில் மணக்கும் மல்லிகை காதில் மணக்கும் தமிழ்மொழி வேம்பா நஞ்சா தமிழ்மொழி விரும்பிக் கற்பது தமிழ்மொழி! நாம்பே சுமொழி தமிழ்மொழி! நமது நாடு தமிழ்நாடு! - இளைஞர் இலக்கியம், ப.6, 1958 43. கட்டாயக் கல்வி பன்றி எதற்குத் தெருவில் வந்தது? பாட்டையி லுள்ள கழிவை உண்ண. என்ன கழிவு தெருவில் இருக்கும்? இருக்கும் பிள்ளைகள் வெளிக்கி ருந்தனர். என்ன காரணம் அப்படிச் செய்ய? இருக்கும் பெற்றோர் ஒழுக்க மற்றோர் சின்ன நடத்தை எப்படிச் தொலையும்? சிறந்த அறிவு பெருக வேண்டும். அறிவை எப்படி அடைய முடியும்? அனைவர் தாமும் படிக்க வேண்டும் நிறைய எவரும் படிப்ப தெப்படி? நீள முயன்றால் முடியும். குறைகள் தீர முயல்வ தெப்படி? கூட்டமக்கள் கிளர்ச்சி வேண்டும் கறைகள் போகா திருப்பதென்ன? கட்டாயக் கல்வி கிட்டாமைதான். - இளைஞர் இலக்கியம், ப.7, 1958 44. தமிழ்தான் நீயா? தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே தமிழ்ப டித்தாயா? தமிழ்ப டித்தேன் தமிழ்ப டித்தேன் தமிழப் பெண் நானே. தமிழப் பெண்ணே தமிழப் பெண்ணே தமிழை ஏன் படித்தாய்? * தமிழ் படித்தேன் அதை உண்ணத்தான் தமிழ்ப டித்தேன் நான் அமிழ்தைத் தந்தால் தமிழைத் தள்ளி அதை நீ உண்பாயா? அமிழ்தும் தமிழுக் கதிக இனிப்பா? அதுவா எனைவ ளர்க்கும்? தமிழ்தான் நீயோ? நீதான் தமிழோ? தமிழப் பெண்ணே சொல்! தமிழை யும்பார் என்னை யும்பார் வேற்றுமை யேஇல்லை! - இளைஞர் இலக்கியம், ப.10, 1958 *jÄœ படித்தேன் என்றால், தமிழானது ஒரு படியளவுள்ள தேன்போல் இனிப்பது என்பது பொருள். 45. வானொலி வானொலி எல்லாம் தேனொலி ஆக்கும் செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு நானும் மகிழ்வேன் நாடும் மகிழும் நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்! ஏன்ஒலி செய்தார் செந்தமிழ் நாட்டில் இன்னொரு மொழியில் அமைந்த பாட்டை? நானும் அழவா? நாடும் அழவா? நமது நாட்டில் அதற்கென்ன வேலை? தெலுங்கு நாட்டில் தெலுங்கு வேண்டும் செந்தமிழ் நாட்டில் அதற்கென்ன வேலை? தெலுங்கு நாட்டில் செந்தமிழ்ப் பாட்டைச் சேர்ப்பதுண்டா; இல்லவே இல்லை; விலங்கு பறவை செந்தமிழ் நாட்டில் விரும்பிக் கேட்பதும் செந்தமிழ்ப் பாட்டை குலுங்கும் அரும்பும் செந்தமிழ்ப் பாட்டை குளிர்ந்த செந்தமிழ் கேட்டு மலரும்! - இளைஞர் இலக்கியம், ப.11, 1958 46. காட்சி காட்சி என்றெழுது தம்பி - சிலர் காக்ஷி என்பார் அது தப்பாம்; காட்சி என்னும் பெயர் தம்பி - கேள் காண் என்னும் சொல்லின் விளைவாம்! மாட்சி என்றெழுது தம்பி - அது மாண் எனும் சொல்லின் விளைவே! மாட்சி எனில் பெருமையாகும் - இந்த வகையை அறிந்து கொள்ள வேண்டும்! அடிக்கடி உத்யோகம் என்பர் - அதை அலுவல் என்றுரைத்திடு தம்பி! படிப்பது வாசித்தல் இரண்டில் - உன் பழந்தமிழ் முன்னது தம்பி! உடுத்திடும் வேட்டியை வேஷ்டி - என உரைப்பதும் பெரும்பிழை அன்றோ? தடுப்பினும் சாதம் என்பார்கள் - அதைத் தமிழினில் சோறென்று நீ சொல்! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.335, 1964; குயில், 1.1.1948 47. படி! எடுப்பு நூலைப்படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி உடனெடுப்பு காலையிற்படி கடும்பகல் படி மாலை, இரவு பொருள்படும்படி - நூலைப்படி! அடிகள் கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் அப்படிக் கல்லாதவர் வாழ்வ தெப்படி? - நூலைப்படி! அறம்படி பொருளைப் படி அப்படியே இன்பம் படி இறந்த தமிழ் நான்மறை பிறந்த தென்று சொல்லும்படி - நூலைப்படி! அகப்பொருள் படி அதன்படி புறப்பொருள் படி நல்லபடி புகப்புகப் படிப்படியாய்ப் புலமைவரும் என்சொற்படி - நூலைப்படி! சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி சேதி அப்படி தெரிந்துபடி தீமை வந்திடுமே மறுபடி - நூலைப்படி! பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூற்களை ஒப்புவ தெப்படி? - நூலைப்படி! தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படி அடங்கா இன்பம் மறுபடி ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி - நூலைப்படி - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.321, 1964; குயில், 1.1.1948 48. இரகசியச் சொல் ஏடா தூதா இங்குவா தனியே என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர் இரகசி யச்சொல் இயம்பு கின்றேன் உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி இறந்தது வடமொழி என்று தமிழர் இயம்பி வந்த துண்டா இல்லையா? இறந்தது மெய்தான் எனினும் தமிழர் இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்! மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்? வடமொழி இறந்த தென்றதால் தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல் கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல் நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல் இன்தமிழ்ப் பயிற்சிக் கெதிரில் அவதி இந்தியைக் கொணர்ந்தார் இன்தமிழ் நலியும் வடமொழி இறந்ததால் வடமொழிக் குரியார் தமிழையும் அழிக்கச் சந்ததம் முயன்றார் என்ற சேதியை இங்கிருந் தோடி எனது பெரியார் இன்னுயி ரனையார் தமிழின் தலைவர் தமிழ வீரர் இப்புவி மாயம் எழிலின் கூட்டம் ஒப்புறக் காட்டும் உயர்தமிழ்க் கவிஞர் இன்தமிழ் மாணவர் இளஞ்சிங் கங்கள் இன்னவ ரிடமெலாம் இயம்புவாய் விரைவில்! இங்கிருந் தேநான் தமிழர் அங்கங் கொதித்தெழும் ஆர்ப்பால் அறிவெனே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.77, 1964 49. அரங்கரத்தினம் சாவுக்கு வரவேற்பு அன்னையின் சீர் அழிப்பதற்கே ஆளவந்தார் முயலுகின்றார் இன்னுமவர் திருந்தவில்லை சாவே வா! - அவர் இனியேனும் திருந்துதற்கே சாவே வா! தென்தமிழின் சீரழிக்கத் தில்லியினோர் முயலுகின்றார் இன்னுமவர் திருந்தவில்லை சாவே வா! - அவர் இனியேனும் திருந்துதற்கே சாவே வா! வானொலியை நீக்கி, ஆகாஷ் வாணி என்று முழங்குகின்றார் மானங்கெட்டோர் நடுங்கும்படி சாவே வா! - என் வண்டமிழர் எழுச்சிகொள்ளச் சாவே வா! ஆனதமிழ் அமைச்சரையும் அறிவழித்தார் தில்லியினோர் தேன்என்றே உனையழைத்தேன் சாவே வா! - என் செந்தமிழர் எழுச்சி கொள்ளச் சாவே வா! அரிதுசெய்தான் அரங்கரத்தினம் அறம்விளைத்தான் என்னும்படி இருகையால் வரவேற்றேன் சாவே வா! - என் இன்பத்தமிழ் வாழ்த்திடவே சாவே வா! தெரியட்டுங்காண் உலகுக்கெல்லாம் செந்தமிழர் எழுச்சித்திறம் புரியட்டுங்காண் தில்லிக்கொடுமை சாவே வா! - உயிர் போகட்டுங்காண் தெரியுஞ்சேதி சாவே வா! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.69, 1964 50. அரங்கரத்தினம் உண்ணாநோன்பு வெல்க இராகம்: தன்யாசி தாளம்: சாபு அழகைச் செய்தாய் தமிழ்மொழிக்கே அரங்க ரத்தினமே - நீ அன்பு செய்தாய் தமிழ்மொழிக்கே அரங்க ரத்தினமே தழைவைச் செய்தாய் தமிழ்மொழிக்கே அரங்க ரத்தினமே - நீ தலைமை வைத்தாய் தமிழ்மொழிக்கே அரங்க ரத்தினமே எழுகஎழுக தமிழ்மொழியை இழிவு செய்கின்றார் - விழித் தெழுகஎன்று முழக்கஞ் செய்தாய் அரங்க ரத்தினமே ஒழுகும்முறை எமக்குரைத்தாய் அரங்க ரத்தினமே - நல் உயிரினும் தமிழ்மே லென்றாய் அரங்க ரத்தினமே! கத்தாத கழுதைகண்டு கண்கலங்கினாய் - நல்ல கழுத்தொடிந்த மாடுகளைக் கண்டு துடித்தாய் ஒத்தாசை நீபுரிந்தாய் அரங்க ரத்தினமே - நீ உணர்வு தந்தாய் தமிழருக்கே அரங்க ரத்தினமே நத்தாத உயிரு முண்டோ உடம்பு தன்னையே - உளம் நத்தாத தமிழ னுண்டோ முத்தமிழ் தனையே கைத்தாளம் போடுகின் றாய்புகழ் நிலத்திலே - நீ காட்டாற்றின் எழுச்சி வைத்தாய் எம்முளத்திலே! அந்தமிழ்த்தாய் முகத்தினிலே ஆரியக் கறைஏன்? - நம் அழகுதமிழ்ச் சோலையிலே ஆகாஷ் வாணிஏன்? செந்தமிழ்க்கே இழிவுகண்டால் என்உயிர்தான்ஏன் - நல்ல செந்தமிழர் வாழ்க்கைச்சுவை அந்தமிழால்தான் இந்தப்படி தவங்கிடந்தாய் அரங்க ரத்தினமே - வெற்றி எய்துகநின் உண்ணாநோன்பும் அரங்க ரத்தினமே வந்ததுண்டு தமிழ்க்குயர்வு தோழா உன்னாலே! வாழ்கபுகழ் வாழ்கதமிழ் அரங்க ரத்தினமே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.71, 1964 51. பெயர் மாற்றம் சென்னையில் கீழ்ப்பாக் கத்தைத் தேடினேன். ஓர்இ ளைஞன் அன்னதோர் ஊரே இல்லை என்றனன்! அப்பக் கத்தில் இன்னொரு முதியோர் தம்மை வினவினேன். இருப்ப தாகச் சொன்னார்; அவ்வூர்க்குப் போகத் தோதொன்றும் சொல்ல லானார். மக்களின் இயங்கி வண்டி இங்குத்தான் வந்து நிற்கும். இக்காலம் வருங்கா லந்தான் ஏறிச்செல் வீர்கள் என்றார். மக்களின் இயங்கி வண்டி வந்தது; குந்திக் கொண்டேன். சிக்கென ஓர்ஆள் எங்கே செல்லுதல் வேண்டும் என்றான். கீழ்ப்பாக்கம் என்று சொன்னேன் கேலியை என்மேல் வீசிக் கீழ்ப்பாக்கம் என்ப தில்லை மேல்பாக்கம் தானும் இல்லை கீழிறங் கிடுவீர் என்றான். அங்கொரு கிழவர் கேட்டுக் கீழ்ப்பாக்கம் உண்டு காணும்! வரலாறு கேட்பீர் என்றார்! கீழ்ப்பாக்கம் என்னும் அஃது கீல்பாக்கம் என்றா கிப்பின் தாழ்வுற்றுக் கெல்லி என்று தான்மாறிற் றென்று சொன்னார். கீழ்ப்பாக்கம் கெல்லி ஆனால் கிள்ளையும் அள்ளி யுண்டு வாழ்த்திடும் தமிழ மிழ்தின் வரலாறே மாறி டாதோ! தமிழ்நாடு தமிழ்நா டென்ற தன்பெயர் இழந்தி டாதோ! தமிழ்நூலும் தமிழ்நூ லென்ற தன்பெயர் இழந்தி டாதோ! தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்தி டாரோ! தமிழ்ப்புகழ் தொலைப்பார் தங்கள் தனியாட்சி நிறுவி டாரோ! இவ்வாறு வருந்தா நின்றார்! இயங்கியும் கெல்லி என்ற அவ்விடம் நிற்கக் கண்டார். அங்ஙனே இறங்க லுற்றார் செவ்விதிற் கீழ்ப்பாக் கத்தின் தெருக்கண்டார். தமிழ்வ ழங்கும் கொவ்வைசேர் இதழ்கள் கண்டார். கொல்புலிக் கூட்டம் கண்டார். தமிழ்நலம் காக்க! இன்பத் தமிழகம் காக்க! அன்புத் தமிழரே தமிழ கத்தில் தமிழரின் ஆட்சி காக்க இமைமூடித் திறக்கு முன்னே எதிரிகள் கோடி இன்னல் சமைக்கின்றார்! அவர்கள் தோளைச் சாய்ப்பது பெரியார் பாதை! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.72, 1964 52. மன்னை மாநாட்டுத் தீர்மானங்களின் கருத்து! தமிழ்நாடு தில்லியின் தனிஅடி நாடா? வரியின் வாயிலாய் அறுபது கோடியை இந்தா என்றே இங்கே கொடுக்கும் தில்லியின் செய்கை தில்லு முல்லே! பதினோ ராண்டில் பணத்தாள் அச்சிட்டு முப்பத் தைந்து கோடியை முடக்கிய தில்லியின் சுரண்டல் திடுக்கிட வைத்தது. பணம்உறை நிலையம், ஆயுட் பதிவு, வாய்புகை வண்டி, அஞ்சல் நிலையம், வாணிக ஒற்றுமை நிலைய வாய்ப்பு வகுக்கும் இவற்றின் வருமா னத்தில் செந்தமிழ் நாட்டுக்குச் சேர வேண்டிய சிலகோ டியையும் தில்லி விழுங்கிற்றே! அயல்நா டுகளை அரித்து வாங்கும் கடன்தொகை தனில்விழுக் காடு பார்த்துத் தமிழ்நாட் டுக்குத் தருதல் வேண்டுமே! அதையும் தில்லி அழுத்திக் கொண்டது! பலதுறை களிலும் பதினோ ராண்டாய் ஏமாற் றியபணம் எண்ணூறு கோடி! இதனால் தமிழரின் உழைப்பும் இழப்பும் வளர்ந்ததால் இங்கு வறுமை வளர்ந்தது! நம்தொழி லாளரும் நடுத்தர மக்களும் வாழ்வில் இடிந்து கண்ணீர் வடித்தனர்! பண்டை நாளில் உலகமே பார்த்து வியக்கும் பேரர சாக விளங்கிய தமிழ்த்திரு நாடு, தில்லியின் தாளில் அடிமை என்ற நிலையை அடைந்தது. இந்தியா ஒருநா டென்று கூறித் தமிழ ரைச்சிறு பான்மைய ராக்கி, உயிரை உறிஞ்சு கின்றது தில்லி! அடிமை விலங்கை அகற்றிடும் விடுதலைக் கொடிநட்டு மீட்சி கொள்ள வேண்டுவது மிகவும் தேவை யாகி விட்டது! இத்தமிழ் நாட்டில் இந்தியைத் தில்லி புகுத்தி மனத்தைப் புண்ணாக் கிற்றே! தமிழுக் குரிய தக்க இடங்களை இந்தியே விழுங்கி ஏப்ப மிட்டது! வண்டி நிலையம் வரும்பல அஞ்சல் அட்டை பணம்அனுப் புத்தாள் அனைத்திலும் இந்தி புகுத்தி இடர்வி ளைத்ததே! அயல்இந் திக்கே ஆட்சிஏன் இங்கே? தமிழர் நாட்டில் தமிழ்த்தாய் அடிமையா? இந்த நிலையை இனியும் பொறோம்! பொறோம்! இந்த மாநா டிவற்றை எல்லாம், விளக்கிக் காட்ட விரும்பு கின்றது. நம்தமிழ் நாடு நாலு கோடி மக்களைப் பெற்று வாழு கின்றது, மற்றவை போலிம் மாத்தமிழ் நாடும் வல்லர சாக வாழலாம் அன்றோ! ஐ.நா. என்ற நிறுவன மதனில் உயர்தமிழ் நாடும்ஓர் உறுப்பை அடையும். தகுதி அடைதற்குத் தடைதான் என்ன? அயலா ருக்குநாம் அடிமை என்பதே? உடனடி யாக உரிமை வேண்டும். பணநிலை உயரவும் பழம்புகழ் உயரவும் உயிர்நிகர் தமிழ்தான் உயர்வு கொள்ளவும் உரிமை மக்களாய் உலகில் திகழவும் வறுமை நீங்கி வாழ்வில் உயரவும் இனத்தின் உரிமை இன்றியமை யாதது! தில்லியின் பிடிப்புச் சிறிது மின்றி, உரிமைத் தமிழகம் உண்டாக்கு வதிலும், எவ்வழி யும்நமக் கில்லை என்றும் கருது கின்றது பெரிதிம்மா நாடு! உரிமை நாட்டை உடனே அடையவும், உமது குறிக்கோள் நாடெலாம் அறியவும் தமிழினம் தமிழ்நாடு தமிழர்நாம் என்ற உணர்ச்சியை வளர்க்கவும் உடனடி யாக நற்றமிழ் நாடில்லா நாவலந் தீவின் படத்தை எரிப்ப தென்று பாரில்இம் முழுமா நாடு முடிவுசெய்வ தோடு எல்லாத் தமிழரும் இதிற்பங்கு கொள்க எனவும் வேண்டு கின்றதிம் மாநாடு! பட எரிப்புநாள் எந்நாள் என்பதைப் பெரியார் குறிக்க என்று அரியஇம் மாநா டறிவிக் கின்றதே! - பன்மணித்திரள், ப. 101, 1964 53. குண்டு போடு தமிழுக்கு நீசெய்யும் தொண்டு - நின் பகைமீது பாய்ச்சிய குண்டு. - தமிழுக்கு தமிழில் நீபுலமை பெறவேண்டும் - அது தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும் தமிழிலே யேபேச வேண்டும் - அது தனித்தமிழ் வளர்ச்சியைத் தூண்டும். - தமிழுக்கு தமிழில் பேசு; தமிழிலே பாடு - நீ தமிழினிற் பாடியே ஆடு தமிழ்ப் பாட்டையே காதிற் போடு - தமிழ் தப்பினால் உன்காதை மூடு. - தமிழுக்கு வாணிக விளம்பரப் பலகை - அதில் வண்தமிழ் இலாவிடில் கைவை காண்கநீ திருமண அழைப்பைப் - பிற கலந்திருந்தால் அதைப் புய்புய். - தமிழுக்கு பொருள்களைத் தமிழினில் அழைப்பாய் - பிற பொருந்தாப் பெயர்களை ஒழிப்பாய் தெருப்பெயரில் தமிழே இழைப்பாய் - அதில் சீறுவார் மடமையை ஒழிப்பாய். - தமிழுக்கு தமிழினிலே வழிபாடு வேண்டிப் - பின் தளர்ந்தனன் முன்னமோர் ஆண்டி அமைவாக அவனையும் தூண்டி - நீ அறஞ்செய்க சோம்பலைத் தாண்டி. - தமிழுக்கு உரைசெய்ய நூலெழுத வந்தோர் - அவற் றுள்வடசொல் ஏன்தாம் கலந்தார்? சரிசெய்ய ஆனதை நீபார் - அவர் தடுத்தால் தொடங்குவாய் மொழிப்போர். - தமிழுக்கு வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய் - எதிர் வரக்காணில் காறிநீ உமிழ்வாய் கடன்என்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய் - ஒரு கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய். - தமிழுக்கு இறைதடுத்தாலும் இந்நாட்டுக்கு - மற் றிங்குள்ளோரின் குறைபாட்டுக்குச் சிறிதும் அஞ்சேல் தொண்டு செய்வாய் - கடுஞ் சிறையறை திருமணவறை உனக்கு! - தமிழுக்கு - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.75, 1964, குயில், 14.4.1959 54. காங்கிரசா தமிழைக் காத்தது செத்தவட மொழியினில் செந்தமிழ் பிறந்ததென்று பொய்த்திடும் வையாபுரிகள் போக்கினையும் ஆதரித்த கத்துநிறை காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று புகன்றனை நாணமில்லையா? செம்பொனிகர் பைந்தமிழைத் தேர்ந்துணரா டி.கே.சி. யைக் கம்பனெனவே அணைத்த கல்கியினை ஆதரித்த வம்புமிகும் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென வரைந்தனை வெட்கமில்லையா? தாய்மொழி இலக்கணத்தைத் தாக்கிஒரு கம்பனுயர் தூய்கவி அலைக்கழித்துச் சொற்பிழைக்கும் டி.கே.சி.யைப் போய்உயர்த்தும் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று புகன்றனை அறிவில்லையா? காளையர்கள் ஓது தமிழ்க் கல்வியையும் பெற்றறியா மூளிகளைக், காப்பிக்கடை முண்டங்களை நல்லஎழுத் தாளரெனும் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று புகன்றனை உணர்வில்லையா? கூறு தமிழ்ச் சொல்லாக்கக் குழுவினர் என்று சொல்லி மாறுபட்ட வடசொல்லில் மாற்றுவதை ஆதரிக்கும் வீறுதவிர் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று விள்ளுகின்றாய் மேன்மை யில்லையா? துய்யதமிழ் மறைமலை சோம சுந்தரம் திருவி எய்து கலியாணம், பல இன்தமிழ்வல்லார் இருந்தும் நொய்களைச்சார் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று நுவன்றனை? கருத்தில்லையா? வண்தமிழை எம்முயிரை வடசொல்லினால் அழிக்க எண்ணிடுவார் தமக்கெல்லாம் ஏற்றமதைத் தேடிவந்த திண்மையற்ற காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று செப்பலுற்றாய் செம்மை இல்லையா? தாயகத்திற்கே வணக்கம் என்பதை வந்தே மாதரம், தூயதிரு என்பதை ஸ்ரீ என்றுரைக்கத் தோது செய்த தீய சட்டக் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று செப்பலுற்றாய் சீர்த்தி இல்லையா? இந்து வெல்க என்பதை ஜெய்இந்து என்பவர்க்கும் நந்தமிழ்ச்சொல் வணக்கத்தை நமகாரம் என்பவர்க்கும் தந்தினம்சொல் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று சாற்ற வந்தாய் தகவில்லையா? கோயில்மண வாயில்களில் கொஞ்சுதமிழ் நீக்கித் தங்கள் தீயவட சொல்புகுத்தும் தெக்கணாமுட்டிகட் கெல்லாம் போய்அளக்கும் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று புகன்றனை கண்ணுமில்லையா? காலமெலாம் விடுதலை காண உழைத்தோம் என்பவர் ஏலுதமிழ் கட்டாயமாம் என்றுரைக்கக் கேட்டதில்லை தோலைவிற்கும் காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று சொல்லலுற்றாய் தூய்மையில்லையா? தென்னிலத்தை உழவில்லை செந்தமிழ் விதைக்கவில்லை இந்நிலையில் இந்தி ஓதி நாட்டிடவும் எண்ணுகின்ற புன்மையுறு காங்கிரசா எங்கள் தமிழை - இங்குக் காத்ததென்று புகன்றனை வெட்கமில்லையா? - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.82,1964; குயில், 15.8.1948 55. தில்லிக்கு எச்சரிக்கை! வானொலியை ஆக்கு! ஆகாஷ்வாணியை நீக்கு! வானொலியாம் தமிழ்நீக்கி ஆகாஷ் வாணி வடசொல்லை அங்குவைத்தார்! தமிழர் நாட்டில் தேனொலியாம் தமிழ்இருக்க வடக்கு நஞ்சைச் செந்தமிழர் காதினிலே ஊற்றி னீரே ஏனையா எனக்கேட்டார் விசுவ நாதர்! இதுதானே சரிஎன்றார் ஆள வந்தார் பூனைஅல்ல தமிழ்நாடு நெஞ்சம் அஞ்சாப் புலிஎன்று காட்டுமட்டும் அவர்தி ருந்தார். இளவழகன் தமிழ்நாட்டான்; ஆகாஷ் வாணி எனும்இழிவு தொலையுமட்டும் உண்ணேன் என்றான்; உளஅழகை வெளிக்காட்டிச் சூளு ரைத்தே உயர்திருச்சி வானொலியின் நிலையத் தின்முன் எளிதாக நாட்டாரை எழுப்பி விட்டே ஏதுமிலாத் தனியாள்போல் உட்கார்ந் துள்ளான் இளவழகன் எண்ணமே தமிழர் எண்ணம்! எச்சரிகை செய்கின்றேன் தில்லி யார்க்கே. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.281, 1964; குயில், 3.12.1958 56. தமிழ் வரலாறு கேளீர் தமிழ் வரலாறு - கேட்கக் கேட்க அதுநமக்கு முக்கனிச் சாறு. - கே நாள்எனும் நீள் உலகிற்கே - நல்ல நாகரிகத் துணைநம் தமிழாகும் வாளுக்குக் கூர்மையைப் போலே - அது வாழ்வுக்குப் பாதை வகுத்தது மாகும். - கே இயல்பினில் தோன்றிய தாகும் - தமிழ் இந்நாவலத்தின் முதன்மொழி யாகும் அயலவர் கால்வைக்கு முன்பே - தமிழ் ஐந்தின் இலக்கணம் கண்டது மாகும்! - கே அகத்தியன் சொன்னது மில்லை - தமிழ் அகத்திய மேமுதல் நூல்எனல் பொய்யாம் மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் - பிறர் மேல்வைத்த நூலே அகத்திய மாகும். - கே நாடுதொல் காப்பிய நூலும் - இங்கு நம்மவர் கொள்கை நவின்றிட வில்லை ஏடுகள் தந்தன ரேனும் - தமிழ் இயற்கைக் கருத்தந்த நூல்களில் இல்லை. - கே கல்லையும் செம்பையும் கண்டே - இரு கைதொழும் கொள்கை தமிழ்க்கொள்கை இல்லை. நல்லொழுக்கம் சிறப்பென்னும் - அறம் நாடி அதன்திறம் பாடும் தமிழ்தான். - கே ஆன்மாவை ஒப்புவ தில்லை - தமிழ் அணுவென்று கூறிடும் உயிரினை அஃதே! கோனாட்சி தன்னைச் சிரிக்கும் - அது கோலெடுத் தோன்செயல் என்று வெறுக்கும். - கே முன்குடிக் கோனாட்சி ஒப்பும் - தமிழ் முன்னிருந் தாள்வோனைக் காவலன் என்னும் ஆள்என்னும் சொற்பொருள் காண்பீர் - தனி ஆளுக்கும், ஆள்கைக்கும் வேற்றுமை யில்லை. - கே காட்டாறு மக்களைக் கொல்லும் - மூங்கிற் காடும் கனல்பட் டழிந்திடும், அந்தக் கேட்டுக்குத் தெய்வ மென்றேபேர் - அதைக் கெஞ்சல் இறைஞ்சல் தமிழ்க்கொள்கை யில்லை. - கே மாசற்ற எண்ணத்தி னாலே - இன்ப வாழ்வை அடைவது நந்தமிழ்க் கொள்கை! ஈசன் என்றே ஒன்றைக் கூறி - இடர் ஏற்பதை நம்தமிழ் என்பது மில்லை. - கே முருகெனல், அழகிளமைக் காம் - எனில் முருகனை நந்தமிழ் ஒப்புவ தில்லை விரிவுறு முல்லை நிலத்தில் - வரும் வேட்கையை மால்என்று நந்தமிழ் சொல்லும். - கே கோயிலும் மன்னவன் இல்லம் - அந்தக் கோயில் வணங்கும் இடந்தானு மில்லை தாயும் தகப்பனும் அன்றோ - தொழத் தக்கவ ராவர் என்றேதமிழ் சொல்லும். - கே சாதி மதம்தமிழ் இல்லை - இந்தச் சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை. தீதுற தெவ்வே பகைமை - அந்தத் தெவ்வில் விளைந்தது தேவர் எனுஞ்சொல். - கே - பாரதிதாசன் பன்மணித்திரள், 1964; குயில், 1.1.1948 உயிரும் நுண்மையும் அணுவெனலாகும் என்பது பிங்கலந்தை. கோல் என்பது சொல்லுவது; முதனிலை திரிந்த தொழிற்பெயர். அக் கோல் என்பது ஆட்சிக்கும் கோலன் அரசனுக்கும் பெயராயினமை காண்க. தெய்எண் கிளவி கொள்ளலும் கோறலும் என்பது பிங்கலந்தை. மாசற்ற கொள்கை மனத்தில் உதித்தக்கால் ஈசனைக் காணும் உடம்பு என்பது ஔவை குறள். மாசற்ற எண்ணத்தைவிட வேறாக ஒரு பொருள் உண்டென நினைப்பார்க்கு மறுப்பாகும். 57. அறிவு பெற வருக தமிழ் வண்ணம் தனன தனனா தனன தனனா தனன தனனா தன தானா அழகு முகிலே தவழும் மலைமேல் அருவி ஒருபால் இசையோடே அமிழும்! அதிலே சிதறு துளிபோல் அணிம லரெலாம் எழும்மேலே எழுதும் முழுதோ வியமும் நிகரோ எனவு றைகுவார் மடவோரே எறிக வணிலே குருவி கடிவார் இனிய மொழிசேர் தமிழ்நாடே தழைவு பெறவே வருக தமிழே தமிழர் உயிரே வருவாயே! தழுவு குழல்யாழ் கிளிமொ ழியுமோர் அமிழ்தும் உனையே நிகர் ஆமோ? விழியின் ஒளிநீ எமது புகழ்நீ விரிதி ருவுநீ எனயாமே விழைவ தறிவாய் அறிவு பெறவே விரைவில் வருவாய் ஒரு தாயே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.65, 1964 58. நமது குயில் செந்தமிழ் நாடு சிறப்புறுதல் வேண்டுமெனில் நந்தமிழை நாம்மீட்க வேண்டுமன்றோ? - முந்தாத நெஞ்சும், விழியும், நிலைகண் டெழும்வண்ணம் கொஞ்சும் நமது குயில். அண்டைமொழி கள்சலு கைபெற, ஆவிநிகர் பண்டைத் தமிழ்வருந்தப் பார்ப்போமோ? - அண்டுமலர்க் காவும், தமிழர் கருத்தும், களிதுள்ளக் கூவும் நமது குயில். அயலான்நம் செந்தமிழை ஆளுவது நீங்க முயலா திருத்தல் முறையோ? - மயல்நீக்கி, ஊட்டும் உணர்வூட்டி, ஒன்றாய்த் தமிழர்களைக் கூட்டும் நமது குயில். வடமொழியால் செந்தமிழை மாற்றும் கொடுமை படமுடியா தன்றோஇப் பாரில்? - கொடியார்க்கு, மொட்டு மலர்ந்ததென முத்தமிழ்ச்சீர் வாய்திறந்து கொட்டும் நமது குயில். ஆண்என்ப, பெண்என்ப, அந்தமிழ்ச்சீர் ஆயாதார் நாண்என்ப தின்றி நடப்பதுவோ? - வீணாள் கழிக்கும் தமிழரின் காதில், தமிழ்ச்சீர் கொழிக்கும் நமது குயில். நிலைச்சொல் தமிழருறு நீள்தமிழ் நாட்டில் கலைச்சொல் வடமொழியிற் காண - அலைச்சல்ஏன்? நோக்கும் அறிவிழந்த மக்களிடை, நுண்ணறிவைக் கோக்கும் நமது குயில். ஆண்ட தமிழர் அடிமைபெற, வேற்றவர்கள் பூண்டபெருஞ் சூழ்ச்சி பொறுப்பதுண்டோ? - தூண்டா தவிக்கும் அவர்க்கே, அறம்பாடிப் பாடிக் குவிக்கும் நமது குயில். இந்தியினைக் கட்டாயம் ஆக்கி, இனிதான செந்தமிழை ஈடழித்தாற் சீறோமோ? - இந்த அடுக்கும் செயலிலர்க்கே ஆட்சிமுறை சொல்லிக் கொடுக்கும் நமது குயில். மாட்சி தமக்குரித்து; வண்டமிழர் கூட்டமோ காட்சிக்கே என்று கதைப்பதுண்டோ? - ஆட்சி பறிக்கும் உளத்தார்க்குப் பண்பிதுதான் என்று குறிக்கும் நமது குயில். செந்தமிழ்நாட் டாட்சிபெற்றுச் செம்மைத் திராவிடத்தில் முந்தும் குறைகள் முடிக்கோமோ? - வந்துநமைச் சீறும் பகைவர்க்குச் செந்தமிழர் கைத்திறத்தைக் கூறும் நமது குயில். - குயில் பாடல்கள், ப. 20, 1. 10. 1977; குயில் 1. 10. 1947 59. தமிழுள்ளம் மனமே அவளிடம் அகப்படாதே தென்னகம் திருவிழாக் கண்டாற் போல என்னகம் இவளைக் கண்டு வியந்தது! உண்மையில் வியப்புக் குரியவள், வெண்ணிலவு பெண்ணின் முகமென்று பேசினும் பொருந்தும்! அதோஅக் கருங்குயில் கூவியது - ஆயிழை இதோதன் தோழியை இந்தா என்றாள்; குயிலினும் கோதை குரலே இனிது! பார்க்கின் றாள்எனைப் பார்க்கின் றாள்அவள். மனமே மனமே, பழிவாங்கும் நிறுவனம்! பறிப்பாள் உன்னை! பறந்துவா! பறந்துவா! நிற்றல் வேண்டா! அவள்அழகு பற்றுமுன் பறந்துவா! பணி உண்டு வேறே! அவள் அனுப்பிய தோழி நேற்று நேரில் உனைக்கண் டாளாம்! காற்றுக் காகச் சோலைவந் தாயாம்! அவள்மே லேநீ ஆசைகொண் டாயாம்! குவளை கண்டு,பின் கோதை விழிகண்டு, மகிழ்ந்த தைஉன் முகம்சொல் லிற்றாம்! ஆனால், அங்கிருந்து புறப்படுங் கால்உன் முகவரி சொல்ல வில்லையாம் முகவரி அவளையும் கேட்கிலை யாமே! அவள் வேண்டாம் காரணம் பிறகு...! சோலையில் அந்தத் தோகை தன்விழியை ஆலிலைத் தொன்னை ஆக்கி - என் அருளைப் பெய் என்று கெஞ்சினாள். பெரிதும் அஃது மெய்யே! மேலும் என்மனப் புள்ளிமான் அவளின் அழகு வலைக்குத் தப்பிடப் பட்ட பாடு பஞ்சு படாது! தென்றல் குளிரைச் செய்த போதும் அழகும் இளமையும் அமைந்தஅவ் வுருப்படி எழுதிய காதல் எழுத்தையும் விலக்கினேன்! காரணம் கழறுதற் கில்லை! ஓரிரு நாள்காத் திருக்க உலகமே! காதல் இன்பத்திலும் இன்பம் வேறுண்டு சின்னநாய்க் குட்டி திண்ணையில் குதிக்கும் அன்னையார் அதற்குப் பால்வாங் கிவைக்கக் காசில் லாமல் கண்ணீர் விட்டனர்! பூச, முகப்பொடி கேட்டாள் பொன்னி! அண்ணன் வாங்கித், தராததேன்? ஆதலால் மண்ணாய்ப் போக! என்று வாழ்த்துவாள்! மெத்தென்று செருப்பு விற்கும்; வாங்க இத்தனை நாள்களாய் முடிந்தபா டில்லை. அரசினர் ஆணை அனுப்பினர் நீவிர் வரும்இத் திங்கள் இரண்டாம் நாளன்று வருமா னவரி வாங்கும் துறைக்கே பெரியதி காரி, ஓராயி ரம்பணம் திங்கள் ஊதியம் கொள்க என்றனர். எங்கள் வறுமையை எண்ணி னால் - இது பாரி வள்ளல் வாரிக் கொடுத்ததே! எனினும் அலுவலை வேண்டேன்! இனிதினும் இனிது மற்றொன் றுளதே! வலிய அணைத்தாய் வேண்டாம் அதோ போர் முரசு! வலிய அணைத்தாய் மார்பில் இறுகநீ மலிவு விலைக்கு வந்த மாணிக்கம்! அடித்து வாய்திறந் தூட்டிய அமிழ்தே! படித்து வரப்பண்ணிய பழந்தமிழ்ப் பாட்டே! ஆயினும் வேண்டாம் எனைவிடு! செந்தமிழ்த் தாயினும் நான்தொழத் தக்க தொன்றுண்டோ? nfŸ!கேள்! போர்முரசு! தூக்கிய வாள்இது வெல்க! வண்டமிழ் வாழ்கவே! - குயில் பாடல்கள், ப.159, 1977; இனமுழக்கம், 14.1.1963 60. கழைக் கூத்தாடி திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடம் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடம் அஹஹ கும்பிட்றேன் அல்லா ருக்கும் அஹஹஹ வரிஞ்சலா அமர்ந்தி ருங்க! மக்களெ பெத்த மகராச ருங்க, கண்ணால் பார்த்துக் காசு போடுங்க. ஒருதுட்டு உங்கட் கொருவாய் வெத்லே, எங்களுக் கதுதான் திங்கற சோறு! மொதல்ஒரு வேலே, முழக்கடா மோளம். திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடம். என்னடா தம்பி? ஏண்டா அண்ணா! இதோபார் தம்பி எலும்புக் கூடு, சதையும் இல்லே சத்தும் இல்லே. ஆமாம் திடுதிடும் அதற்குப் பேரென்னா? அதன்பேர் தமிழ்நாடு! சரிசரி திடுதிடும்! இந்த எலும்பே எழுந்திருக்க வைக்கிறேன்; செய்யி செய்யி பார்ப்போம் திடுதிடும்; அமிஞ்ச எலும்பே ஆட வைக்கிறேன்; செஞ்சி காட்டு திடுதிடும் திடுதிடும்; ஓய்ஞ்ச நாட்டிலே உசுருண் டாக்றேன் ஆக்கிக் காட்டடா அண்ணே திடுதிடும்! அடிமோ ளத்தெ! திடுதிடும் திடுதிடும் இந்த எலும்பே இப்படி வைக்கிறேன். வைச்சா உயிரா வந்திடும்? திடுதிடும்! மருந்து செய்யணும் தெரிஞ்சுதா ஒனக்கு? சரிசெய் திடுதிடும்! இதோபார் மாம்பழம் இதைநான் புழியறேன். புழிபுழி திடுதிடும்! இதுரதாளி இதையும் புழியறேன். புழிதிடும் திடுதிடும்! பலாச்சுளை புழியறேன். திடுதிடும் புழிபுழி! தேனும் சேக்கறேன், பாலும் சேக்கறேன், எளநீர் வழுக்கே இட்டுக் கொழைக்கறேன், இடித்த தினைமா இட்டுப் பெசையறேன், பொடித்த பருப்பும் போட்டுக் கலக்றேன், எல்லாத் தையுமே இளஞ்சூ டாக்கி, பல்லாய் நிறையப் பக்குவப் படுத்தினேன். ஆஹா ஆஹா, அண்ணே அண்ணே! இந்த மருந்துக் கென்னா பேரு? உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்ளுதமிழ் தம்பி தெள்ளுதமிழ் இதுதான்! இந்த மருந்தே எலும்புக் கூட்டில் தடவுறேன் தம்பி அடிமோ ளத்தை! திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் சிரித்தது பாரடா செந்தமிழ்க் கூடு! விரிந்தது பாரடா அழிந்த நம்நாடு! பாடுது பாரடா பைந்தமிழ் நாடு! முழிச்சிப் பாத்து முறுக்குது மீசையை! எதிரி மேலே எண்ணம் கொள்ளுது! சொத்தைக் காக்கக் கத்தியைத் தூக்குது; தமிழில் நனைந்த தமிழ்நாடு பாத்தியா; ஆடுது பாத்தியா அழகு நாடு! தாயி மாரே தகப்ப மாரே மாய மில்லை, மந்திர மில்லே, கருத்து வேணும்! நம்ப வருத்தம் நீங்கத் தேடணும் வழியே! - குயில் பாடல்கள், ப.116, 1977 61. நல்ல தொண்டு நகர்ப்புற ஓடையில் குளித்து, நகரத்துத் தமிழர் இட்டகூழ் அமிழ்தென மகிழ்ந்து, சிராப்பள்ளி ஊரில் இராப்பள்ளி நடத்தும் தார்க்கோல் தண்டன் வீட்டுத் திண்ணையில் இருந்த அடிகள் நம்பியார் எதிரில் திருந்தாத் திருமலை செயல்கண் டிருந்தார். சிறுகுடிற் கதவு திறந்தி ருந்தது. குறுமதிக் குப்புதன், கொண்டான் இருக்கவும் தெருவில் சிரிப்புடன் சென்ற சீனனை வரலாம் என்று வலக்கை அசைத்தாள், சீனன் வந்து சேர்ந்தான் பின்னொடு. திருமலை வந்து சேதி அறிந்தான், திருமலை திகைத்து நின்றான்! திரும்பினான்! தெருவில் வந்தான், சீனனைக் கொல்வதா? குறைமதிக் குப்பைக் கொன்று போடுவதா? அல்ல திரண்டு பேரையும் அழிப்பதா? நான்தொலை குவதா? எதுதான் நல்லது? அடிக ளாரிடம் அனைத்தும் கூறினான். தானே சாதல் நன்றென்று சாற்றினான். இருளை நினைக்க வில்லையா என்று நம்பியார் கேட்டார்; இல்லைஎன நவின்றான். சாவது திண்ணமா என்று சாற்றிய அடிகள்பால், ஆம்ஆம் என்றான் திருமலை, அடிகள் நம்பியார் அறிவிக் கின்றார்; பூண்ட பழியைநீ புகழிற் புதைப்பாய் தமிழுக்குத் தொண்டு செய்து சாவு, கோடரிக் காம்பர் இடுகாடு கொண்டுபோம் விழாவொன்று வேப்ப மரத் தெரு முனையில் நடந்தது. மாலை மூன்று மணிக்கெல்லாம் கட்டை இடுகாடு வந்தது; அங்குக் கிடந்த திருமலை உடம்பையும் அமைத்த குழியில் இட்டனர் தமிழ்வாழ் கென்றனர் ஆங்குப் பலரே. - குயில் பாடல்கள், ப.119, 1977; குயில், 15.4.1962 62. தமிழுண்டு நானுண்டு சரிதாண்டி போடி - அடி தங்க வானம்பாடி. - சரிதாண்டி சிரிக்கும் பாவை, நடைஓவியம், செந்தேன் என்று நினைத்தேன் - நீ திரும்பிப் பார்க்க மறுத்து விட்டாய் திடுக்கிட்டு மனம் கொதித்தேன் பருக்கைக் கல்லும் உருகிவிடும் பாட்டில் ஒன்று கேட்டால் - அப் பைந்தமிழின் அருளுண்டு கையில் இறகும் உண்டு! - சரிதாண்டி பச்சிளநீர், வெண்ணிலவு, பாங்கி என்று நினைத்தேன் - எனைப் பார்த்திடவும் மறுத்து விட்டாய் பதறிமனம் கொதித்தேன் நச்சரவும் மகிழ்ந்திருக்கும் நாட்டுப் பாட்டுக் கேட்டால் - அந் நற்றமிழின் அருளுண்டு கையில் இறகும் உண்டு! - சரிதாண்டி தேனருவி, பூந்தோட்டம், செல்வம் என்று நினைத்தேன் - நீ சிறிது பேச மறுத்துவிட்டாய் தீயால் நெஞ்சு கொதித்தேன். ஆனை ஒன்றும் மதம்அடங்கும் அருமைப் பாட்டைக் கேட்டால் - அவ் அன்னை தமிழ் அருளுண்டு கையில் இறகும் உண்டு! - சரிதாண்டி - காதல் பாடல்கள், ப.49, 1977; குயில், 13.12.1960 63. தமிழ் வாழ்க்கை இரண்டடிதான் வாழ்க்கைத்துணை என்றானே - என்னை ஏறெடுத்துப் பார்க்காமலே சென்றானே, திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும் கூத்துண்டா - அவள் சிலம்பொலிதான் தித்திக்கின்ற கற்கண்டா? - இரண்டடி மேகலையும் கையுமாக வாழ்கின்றான் - என் விருப்பம் சொன்னால் சீறி என்மேல் வீழ்கின்றான் சாகையிலும் அவள் அகமே தாழ்கின்றான் - அவன் தமிழ்மடந்தை புறப்பொருளே சூழ்கின்றான். - இரண்டடி தமிழ்மணத்தில் என்னையும்வை என்றேனே - அவன் தனிமனத்தில் இருநினைவா என்றானே. தமியாளும் இந்தி அன்றோ என்றேனே - நான் தமிழனடி என்று சொல்லிச் சென்றானே. - இரண்டடி - காதல் பாடல்கள், ப.114 1977; குயில், 17.1.1961 64. வள்ளுவர் வழி வாழ வழி வகுத்தார் வள்ளுவனார் தமிழ் மறை புகன்றார் நல்ல முறை நவின்றார் நம்மனோர் வாழ வழி வகுத்தார் வள்ளுவனார். வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார். - வாழ வழி வகுத்தார் வள்ளுவனார் ஏழைக் கிரங்காததும் சரியா? நாட்டின் எளிமை கண்டு கூத்தாட ஒரு நரியா? இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான் கண்டனைத் திவ்வுல கென்றார் நம்மனோர் - வாழ வழி வகுத்தார் வள்ளுவனார் - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.132, 1977 65. என் கருத்தில்... வள்ளுவர்க்கு நிறமில்லை மதமும் இல்லை மதங்கட்குஅப் பாலிருந்தே குறள்செய் துள்ளார் உள்ளசிறு மதங்குறிக்கும் சொற்கள் கொண்டே உவகையொடு தத்தமது மதத்தில் சேர்த்து தெள்ளிவைத்த நீறிடுதல் திருமண் சார்த்தல் செழும்பிண்டி அமர்ந்தானைச் சேர்ந்தா னென்னல் தள்ளிவைத்த மரபென்று பேசல் யாவும் சரியென்று தோன்றவில்லை யென்க ருத்தில்! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.233, 1977; குயில், 8.6.1958 66. தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான் தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்! தமிழ்ப் பகையாளனும் தானே பெயர்வான். - தமிழுயர்ந் தமிழுக்குத் தொண்டு தரும்புல வோர்கள் தமிழ்க்கனி மரத்தினைத் தாங்கிடும் வேர்கள்! கமழ்புதுக் கருத்துக்குப் பலபல துறைகள் கற்றவர் வரவரக் கவின்பெறும் முறைகள்! - தமிழுயர்ந் எங்கும் எதிலுமே தமிழமு தூட்டு இங்கிலீசை இந்தியை இடமிலா தோட்டு திங்கள், செவ்வாய், புதன் கோள்கட்குச் செல்வாய் தேடரும் அறிவியல் எண்ணங்கள் வெல்வாய்! - தமிழுயர்ந் - வேங்கையே எழுக, ப.115, 1978; அறிவியல், 16.2.1961 67. தமிழிளைஞரே தமிழைக் காப்பர் தமிழ்ப்புல வோர்கள் என்செய் கின்றார் தமிழுக் கின்னல் வரும்போது? தமிழ்தா னேஉமை வாழ்விக் கின்றது சாம்பிண மாகக் கிடப்பதுவா? தமிழ்எழுத் தாளர் என்செய் கின்றார் தமிழைக் கெடுப்பார் வரும்போது? தமிழைச் சோற்றுக் கடகாய் வைத்துத் தன்மா னத்தை விற்பதுவா? தமிழ்மடத் தலைவர் என்செய் கின்றார் தமிழை அழிப்பார் வரும்போது? தமிழர்கோ யிற்குள் வடமொ ழிச்சியர் தாளில் வீழ்ந்து மறப்பதுவா? தமிழ்க்கா ளைகாள் தமிழ்மா ணவர்காள் தமிழின் பகையைக் காணுங்கள் தமிழ்ப்பகை மாய்த்த வீரர்கள் என்ற தன்மா னத்தைப் பூணுங்கள்! - வேங்கையே எழுக, ப.142, 1978 68. தன் கையே தனக்குதவி தன்கண் ணாலே பார்த்திட முடியும்; தன்கா தாலே கேட்டிட முடியும்; தன்அறி வாலே உணர்ந்திட முடியும்; தன்கா லாலே நடந்திட முடியும்; தன்கை தானே தனக்கரும் உதவி? இதுதான் உலகத் தியற்கை; இதனைப் பொதுமொழி என்னும் புதுமொழிக் கெண்ணுக! பிறன்கண் ணாலே பார்த்திட முடியுமா? பிறன்கா தாலே கேட்டிட முடியுமா? பிறன்அறி வாலே உணர்ந்திட முடியுமா? பிறன்கா லாலே நடந்திட முடியுமா? பிறமொழி யாலே பேசலும் எழுதலும் அறிவொளி காணலும் அரிது! பேதமை! இவைதாம் முடியும் என்றால், எவரும் தாய்மொழி விட்டுப் பிறமொழி தழுவலாம்; ஆளவந்தார் அதிகா ரத்தால் மாள நினைப்பது மடமைச் செயலே! - வேங்கையே எழுக, ப.114, 1978; மயில், 1.9.1948 69. எங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி கொதிப்புள்ள வீரர்களே! கொள்கைமிகு தோழர்களே! மிதித்திடும் வஞ்சகரை - வீழ்த்துவீர்! மேல்வருண நஞ்சினரைத் - தாழ்த்துவீர்! மதிதமிழ் தன்மான மறவரை நாடொறும் நீர் - வாழ்த்துவீர்! பாடுபடும் பாட்டாளி பணம் சுரண்டும் பொருளாளி நாடுகெடும் இரண்டினத்தை - மாற்றுவீர்! நல்லுழைப் பாளர்களைப் - போற்றுவீர்! கேடுகெட்ட கொள்கையினர் கீழ்அறிவு திருந்தஅறி - வூட்டுவீர்! செந்தமிழை எண்ணாமல் சேர்மொழிக்குப் பாய்விரிக்கும் வந்தேறிகள் கங்காணிகள் - ஓட்டுவீர்! வரிப்புலிகள் நாங்களென்று - காட்டுவீர்! இந்தியாட்சி கொள்ளாதென்றே எங்கள்நாடு தனி நாடென்றே - நாட்டுவீர்! - வேங்கையே எழுக, ப.110, 1978 70. தமிழுக்கு வாழ்வதே வாழ்வு தமிழே உனக்கு வணக்கம் தாயுன் புகழ்இந்த உலகில் மணக்கும்! - தமிழே இமை நேரமும் உனைமறக்க மாட்டோம் எம்கடன் ஆற்றாமல் இறக்க மாட்டோம் அமுதத் தமிழைத் துறக்க மாட்டோம் அடிமையை ஒப்பினால் சிறக்க மாட்டோம். - தமிழே உனக்கு வந்தநலம் எமக்கு வந்ததாகும் உனக்கு வந்தவெற்றி எமக்கு வந்ததாகும் தனக்கென வாழ்ந்தது சாவுக் கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வ தாகும்! - தமிழே - குயில், 15.4.1962; தமிழுக்கு அமுதென்று பேர், ப.17, 1978 71. எது என் ஆசை? அதுதான் என் ஆசை - தமிழ் அன்னை அவள் முன்னைபோலத் தன்னைத்தானே ஆளவேண்டும். - அதுதான் இதுதான் அவள் நிலையா? - அவள் எல்லாம் பெற்றிலையா? - இனிப் புதுவாழ்வுறல் மலையா? - அவள் போரில் நின்று பாரில் இன்று நேர்நிமிர்ந்து வாழவேண்டும். - அதுதான் அடிமை யுற்ற துண்டா? - அவள் அயலவனின் பெண்டா? - இம் மிடிமை நிலை பண்டா? - அவள் வெற்றிக் கொடி பற்றிப் பகை எற்றிப் புகழ் மேவ வேண்டும். - அதுதான் ஆரியம் போல் முடமா? - தமிழ் அன்னை கலப்படமா? - வேற் றூர்தான் பிறப்பிடமா? - பகை ஒழித்தே இடர்அழித்தே நலம் கொழித்தே புகழ் ஓங்க வேண்டும். - அதுதான் இடையில் வந்த வாழ்வா - அவள் ஏற்ப திந்தச் சூழ்வா? - தமிழ் நடையிலென்ன தாழ்வா? - தமிழ் நாடு நல்ல வீடு, மிகு பீடு பெற்று வாழவேண்டும்! - அதுதான் - தமிழுக்கு அமுதென்று பேர், ப.18, 1978; குயில், 26.1.1960 72. தமிழ் விடுதலை ஆகட்டும் சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்டஎன் தமிழ் விடுதலை ஆகட்டும். - சலுகை பிள்ளை பிறந்தேன் யாருக்காக? பெற்றதமிழ் மொழிப் போருக்காக! உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும் உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக! - சலுகை போனால் என்னுயிர் போகட்டும் - என் புகழுடல் நிலை ஆகட்டும்! தேனால் செய்தஎன் செந்தமிழ்தான் திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்! - சலுகை - தமிழுக்கு அமுதென்று பேர், ப.23, 1978; குயில், 1.5.1962 73. தமிழ் இன்றியமையாதது (வெண்பா) உணவால் உயிர்நிலைக்கும்; அந்த உயிரும் அணிதமிழால் ஆகும்; அதனால் - பணிமொழியே! செந்தமிழைத் தீர்ப்பாரைத் தீர்த்தல் முதல்வேலை! சிந்தட்டும் செங்குருதி ஆறு. வீரர் மரபில் விளைந்த மணிவிளக்கே! பாரில் ஒருமொழியைப் பாழாக்கிச் - சீரின்றித் தம்மொழியை மேலாக்கும் தக்கைகளும் வாழ்ந்ததுண்டோ? இம்மா நிலத்தில் இயம்பு. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.48, 1978; குயில், 6.12.1960 74. தமிழன்னை விழிக்க! எண்சீர் விருத்தம் துயர்க்கடலில் தத்தளிக்கும் தமிழ்த்தாயே சின்ன துரும்பினையும் பெரும்புணையாய்த் தாவுகின்றாய்! மோதும் புயற்கிடையில் சுழலுகின்ற தமிழ்த்தாயே! மண்ணிற் புழுவினையும் விழுதென்று பற்றுகின்றாய்! சற்றும் வெயிற்கிடையில் துடிக்கின்றாய் தமிழ்த்தாயே! புன்னீர் வீழ்ச்சியைநீர் வீழ்ச்சிஎன்று விரைகின்றாய்! இந்நாள் உயர்ச்சிஇலா மக்கள்சிலர் நடத்தையினைச் சொல்வேன் உடல்நடுங்கிக் கண்ணீரால் கடலைத்தூர்க் காதே. ஊனக்கண் இரண்டிருந்தும் ஓருணர்வும் இல்லா உன்மக்கள் கல்விபெற ஒருசெப்புக் காசே தானம்செய் தானைமிகப் போற்றுவதே நல்ல தமிழ்மகனின் பெருங்கடமை அல்லவா அம்மா வானத்தின் மாசகல வந்தநிலாப் போல்வான்; மக்கள்மன மாசகற்றப் பலஇலக்கம் தந்த மானத்தான்; நின்மைந்தன் சிவாசிகணே சன்மேல் மண்ணள்ளிப் போட்டிடவும் எண்ணுகின்றார் சில்லோர். அம்மனித விலங்குகளை நீபெற்ற துண்டா? அறமறியா நரிகளையும் நீபெற்ற துண்டா? செம்மைநிலை அறியாத குள்ளர்களும் உன்றன் திருவயிற்றிற் பிறந்தார்கள் என்பதுமெய் யானால்! அம்மாஅம் மாஅம்மா திருத்திஅருள் செய்வாய்! அல்லர்எனில் அடியோடு வேர்கல்லிப் போடு! பொய்ம்மானை மெய்என்ற இராமனைப்போல் நீயும் புல்லர்களை நம்பாதே நல்லபடி வாழ்க! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.59, 1978; குயில், 2.8.1960 75. மணக்காதா? உருவடைய ஒன்றுபட வாழ்வு கொள்ள உரிமைபெற இன்பமுற நாளும் நாட்டின் இருள்கடிய அருள்பெறப் பெருந்தொண் டாற்றி இயங்குமோர் தன்மானக் கழகத் தாயின் திருவடியின் அருளாகப் பல்எண் ணங்கள் செயற்படுத்தக் கிடைப்பனவாம்; இவற்றுள் ஒன்றே தமிழிசையைப் பிறமொழியால் இசைத்தல் வேண்டா தமிழிசைபா ராட்டிடுவீர் என்ப தாகும். தமிழ்ப்பயிரில் இந்திஎனும் எருமை மேய்க்கத் தவறாக நினைத்தவரும், அவர்சொல் வாக்கை அமுதாக நினைப்பவரும் தமிழி சைக்கோர் ஆதரவு தரவந்தார்; எனினும் அன்னார் தமிழிசையைத் தவறான வழியிற் போக்கித் தாங்கரிய பழிதாங்கா திருத்தல் வேண்டும். தமிழுக்குப் பகையானோர் தமிழி சைக்கோ தக்கபே ராதரவை நல்கு வார்கள்? சமயவெறி சாதிவெறி மூடச் செய்கை தமைவளர்த்தல் தம்நலத்தை வளர்த்தல் என்று நமதருமை நாட்டினிலே இந்நாள் மட்டும் நடைமுறையால் காட்டிவரும் கூட்டத் தார்கள் தமிழிசைப்பாட் டென்பதெலாம் வெறிப்பாட் டாகத் தருவதற்கு முயல்வதன்றி வேறென் செய்வார்? தமிழ்ப்பாடல் மதம்சாதி மூட எண்ணம் தரும்பாட்டாய் இருப்பதினும் இலாமை நன்று. பாடல்பெறும் பொருள்களிலே கடவுள் ஒன்று! பாடலெலாம் கடவுளுக்கென் றிருக்கு மட்டும் பாடலிலே புதுப்பாங்கும் புதுக்க ருத்தும் பல்பொருளின் நல்லழகும் உயர்வும், இந்த நாடுபெறல் முடியாது; தன்னில் ஊறும் நல்லூற்றுக் கவிஞர்களும் தோன்ற மாட்டார் மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் மடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்! இசைப்புலமை உள்ளவரிற் பெரும்பா லோர்தாம் இந்நாட்டில் தமிழறியார் எனினும், அன்னார் கசிந்துருகப் பாட்டெழுதிச் சிவனே என்று கசிந்துருகி நிற்பாரேல், பொருள்அ ளிக்க இசைந்திடவோ பலருள்ளார்; எனினும் நாட்டில் இனியதமிழ், இழுக்கின்றிச் சுவையும் சொல்லும் பிசைந்தெழுந்தால் உணர்வுற்றே எழும்நா டென்னும் பெற்றியினை அறிவாரிங் கில்லை யன்றோ? தமிழிசைக்கு மாநாடு கூட்டு கின்றார்; தமைசரக்காய் வாணிகம்செய் இசைவல் லாரில் அமைவுற்ற பெண்டிரும்ஆ டவர்கள் தாமும் அழைத்தபடி அங்குவந்து கூடு கின்றார்; இமைப்போதும் விட்டுவில காத செல்வர், எழிலடியார், வழக்கம்போல் வருகின் றார்கள்; தமக்காக என்றெண்ணி ஊரி லுள்ளார் தடையின்றி அங்குவந்து நிறைகின் றார்கள். அவர்களிலே ஒருவர்மா நாட்டி னுக்கே அருந்தலைவர்! திறப்பாளர் ஒருவர், மற்றும் அவரிலொரு வரவேற்புத் தலைவர் ஆவார்! அத்தனைஆள் பேச்சினையும் ஆய்ந்து பார்த்தால் முதிர்ந்தபொரு ளாளியின்மேல் முடிந்த வாழ்த்தும் முழங்குகின்ற புகழ்ச்சியுந்தாம்! பின்போ, பாடல், மிதந்தோடி மாநாட்டுச் செல்வாக் காளர் மேலெல்லாம் உளமெல்லாம் குளிர்ச்சி செய்யும். தமைமறந்து பொருளாளர், நண்பர் அங்குத் தமிழிசைக்குத் தாமகிழ்தல் போலே அந்த அமுதமொழி அழகினிலே சொக்கு வார்கள்! அப்போதில் அந்தமயில் தெலுங்கிற் பாடும்! தமிழிசைதான் அடடாவோ என்பார்! மேலும் சமற்கிருதம் பாடிடுவாள் அடுத்தாற் போல! தமிழிசைக்கு மாற்றமையா என்பார் மக்கள்; தமிழிசைதான் என்பார்கள் மாநாட் டார்கள்! வாய்ப்பாட்டால் வருமானம் அடைவார் உள்ளம் வருந்தாமல் தீர்மானம் நிறைவே றும்!பின் சாப்பாடு பெறுமானம் நடக்கும் மற்றும் தக்கபல வெகுமானம், முடிந்த பின்பு, காப்பாற்றப் பட்டதின்று தமிழின் மானம் கண்டீரோ என்றுரைத்துத் தியாகை யர்சீர் போய்ப்பாடத், தம்மானம் அடமா னத்தால் போக்கியவர், அவருக்குப் பணங்கொ டுப்பார். முழுவெற்றி அடைந்ததுவாம் தமிழி சைதான்! முன்பெல்லாம் தமிழ்ஒன்றே பாடி னோரும், அழலானார் தெலுங்கினிலே வெற்றிக் குப்பின்! அங்கங்கே தெலுங்கிசைக்கும் கட்ட டங்கள், எழும்படி ஆனதன்றோ! உடலை விற்க இணங்குகின்ற பெண்கள்சிலர் தங்க ளின்தாய் மொழிவிற்கத் தயங்குவரோ? பாட கர்கள் முழுநாட்டு வான் ஒலியில் தெலுங்கி சைத்தார்! இசைப்பாட்டுக் குயிலினங்கள் வர,இ ருக்க, ஏனென்றால் ஆம் என்ன இவ்வா றான பசைப்புள்ள விருப்புக்கும், திரைக்குப் பின்னால் பழிச்செயல்கள் புரிவதனை அறிந்தோர் பாடும் வசைப்பாட்டின் அடைப்புக்கும், வழியைத் தேடி மகிழ்வடைதல் அல்லாமல், இந்நாள் மட்டும் கசப்பான நிலைமையிலே சிறிது மாற்றம் கண்டதுண்டோ தமிழிசையின் இயக்கத் தாலே? நீர்கலந்து பால்விற்பான் தனைஅ டைந்து நீர்தவிர்த்துப் பால்விற்கக் கேட்டுக் கொண்டால் நீர்கலக்கும் வழக்கத்தை நீக்கிக் கொள்ளான்; நீர்கலப்பான் கூட்டுறவை அறவே நீக்கி ஊர்கலந்து, மக்களிடம் உணர்வெ ழுப்பி, உள்ளநிலை மாற்றுவதே நேர்மை யாகும். நீர்கலந்தான் உடன்கலந்து நிற்ப தேனோ? நீர்கலந்தா னைச்சார்ந்தார் உறவெ தற்கோ? எந்நாளும் தமிழிசையே பாடு வோர்கள் இருக்கின்றார் சிலர்என்றால் அவரை விட்டுப் பொன்னாகத் தெலுங்கிசைபா டிடுவார் தம்மைப் போய்அழைப்பார் தமிழிசையே இயக்கு வோர்கள்! சொன்னாலும் வாய்நாணும் செய்கை அன்றோ? தொட்டதெல்லாம் மேற்பூச்சு, வஞ்சம், சூழ்ச்சி! இந்நாடு விழிப்படையா திருக்க வில்லை; இழுத்தஇழுப் புக்குவரும் நிலையில் இல்லை. தெலுங்கிசைத்தால் மறுப்பீர்கள்! தமிழே பாடச் செய்யுங்கள்! அதற்காகத் திரண்டெ ழுங்கள்! இலங்குதமிழ் மொழியினிலே பாடல் இல்லை எனஉரைத்தால், அறையுங்கள்! தமிழ மைப்பு நலமுள்ள இசைக்கொவ்வா தென்பார் வாலை, நறுக்குங்கள்! இசைக்குமொழி வேண்டாம் என்னும் விலங்குகளை வளையுங்கள் எனமக் கள்பால் விண்டதுண்டோ தமிழிசையின் தலைவர் என்போர்? பெருமக்கள் நலம்பறிக்கும் தெலுங்குப் பாட்டைப் பெருமக்கள் எதிர்க்கும்வகை செய்தல் வேண்டும். திருடருண்டு விழித்திருங்கள் பறிகொ டாதீர், செயல்செய்வீர் என்பதுதான் சரியே யன்றித் திருடர்களை வீட்டுக்குள் அழைத்துப் பேசித் திருடருக்குப் பணம்கொடுத்துக் கூட்டு கின்ற திருடர்மா நாட்டினிலே திருட்டைத் தீர்க்க முடியாதே என்றுதான் செப்பு கின்றேன். பல்லவிகள், கீர்த்தனங்கள், மற்று முள்ள பலநுணுக்கம், இசைவிரிவு தெரிந்துள் ளாரின் நல்லுதவி பெற்றுத்தான் தமிழி சைக்கு நாம்ஏற்றம் தேடுவது முடியு மென்று சொல்லுகின்றார் சிலபுலிகள்! அவர்க்கு நானும் சொல்லுகின்றேன்; சுண்ணமிடிப் பார்கள் பாடும் பல்வகைஇ லேசான இசைகள் போதும் பாரதியா ரேபோதும்; தியாகர் வேண்டாம். விரிவான இராகமும்,பல் லவியும்; மற்றும் வெறும்சரளி யும்,கருவி வல்ல வர்பால் இருப்பனவே! பாடகர்கள் என்போ ரெல்லாம் இன்கவிதைத் தமிழ்ப்பழத்தின் தோலு ரித்துத் தரும்திறமை யடைந்தாலே போதும்! ஐயோ தமிழ்ப்பாவை இசைப்புலியால் மாய்க்க வேண்டா நரம்பிழுப்பும், குறைகொள்ளிப் பிணப்ப தைப்பும் நாய்க்குரைப்பும் தமிழ்ப்பாட்டை நண்ண வேண்டாம். செல்வர்களோ, இன்றுள்ள செய்தித் தாளால் சிறப்பவரோ, சுவையுணர்வோர் என்பார் தாமோ, சொல்லளவே கலந்தஇசைத் துளிகட் கன்றித் தொழிற்புலமை காட்டுதற்கு முயலு கின்ற வல்லநடை, மறைவான நிறஅ மைப்பின் வாய்ப்பு,முழு தும்சுவைத்தல் இல்லை; ஆடித் தொல்லையுறும் தலை;நகைத்துத் தொலைக்கும் வாய்தான்; தொடையில்தேள் கொட்டிடினும் எடார்தம் கையை! பணக்காரர் மகிழ்ச்சியிலே பொழுது போக்கிப் பார்ப்பதற்கோ பயன்விளைப்ப தாகக் காட்டித் தணிக்கின்றார் தம்விருப்பம்! அதற்குப் பேர்தான் தமிழிசைஎன் றால்அதனை மறுப்பா ரில்லை; மணக்காதா செந்தமிழ்தான் இசையில் என்று வழியின்பால் தொண்டுசெய வந்திட் டாரோ; அணித்தான தமிழ்ப்புலவர் அருவ ருக்கும் அறிவற்ற செயலென்றால் யார்ம றுப்பார்? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.61, 1978, எது இசை, முத்தமிழ் நிலைய வெளியீடு, 1946 76. தமிழ் தமிழன் உயிர் மொழிப்பற்று மிக்குடையான் மொழிப்போர் வீரன் மொழிவெறியன் அவன்அல்லன்! மொழியைக் கொல்லும் கழிவடையே மொழிவெறியன் என்று சொல்க. கண்திறக்கு முன்னமே வாய்தி றந்து குழந்தைஅழும் அதுதான்தாய் மொழிஎன் பார்கள். கூண்டறையிற் கிடந்தாலும் தமிழ்க்கு ழந்தை எழுப்பும்ஒலி தாய்மொழியாம் தமிழே! அன்றி இங்கிலீ சிற்பேசல் எங்கும் இல்லை. தமிழனொடு தமிழ்பிறக்கும், தமிழி னோடு தமிழ்மகன் தோன்றிடுவான்; தமிழும் சேயும் இமைப்போது பிரிந்தாலும் வாழ்வ தில்லை இதனாற்றான் மொழிஒருவன் உயிர்என் றார்கள். நமக்கெதிரே பன்மொழிகள் காணு கின்றோம். நன்றவற்றைக் கொண்டவரைக் காணு கின்றோம். தமக்குரிய மொழிநீங்கி வாழ்வார் யாவர்? தம்முயிரைத் தாமிழந்து வாழ்வார் உண்டோ? படையெடுப்பால், பகையாளர் நுழைவால், தீங்கு பட்டதனால் இன்றுவரை உரிமை அற்று நடைமெலிந்து கிடக்கின்ற தமிழன் னைக்கு நற்றொண்டு செய்பவரே நாட்டின் தொண்டர் அடிமைஎனும் சேற்றினிலே ஆடி ஆடி அழகிழந்த உள்ளத்தால் ஆங்கி லத்தைத் தொடைதட்டித் தாய்மொழியாய்ச் செய்வார், கெட்ட சூறையினைப் பொதிகையிலே வாழச் செய்வார். புதுப்பொருள்கள் தோன்றின;அப் பொருள்கட் கெல்லாம் புதுப்பெயர்கள் தமிழினிலே சேர்க்க வேண்டும் இதையறியார் வேறுமொழி கிடைக்கு மட்டும் இத்தமிழே இருக்கட்டும் என்று சொன்னார் மதுரையினும் நல்லநகர் கிடைக்கு மட்டும் மதுரையே இருக்கட்டும் என்று சொன்னால் மதுரையிலே வாழ்கின்ற நாயும் வேறு மாநகர்க்கும் குடிபோக ஒப்பா தன்றோ? ஆங்கிலந்தான் உலகமொழி என்று சொல்வார்; ஆனாலும் தமிழ்மொழிநம் தாயே அன்றோ? ஆங்கிலந்தான் உலகமொழி என்று சொல்வார் தமிழ்மொழியும் அந்தநிலை எய்தும் வண்ணம் ஈங்கிருந்து பெருமுயற்சி செயலாம் அன்றோ இதுசெய்யோம் என்பவர்கள் வாயை மூடித் தூங்கலாம் அன்றோ?வாய்த் துடுக்குக் காட்டித் துன்பத்தை விலைபேசி வாங்கல் நன்றோ? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.69, 1978; குயில், 18.10.1960 77. ஆரிய மறைக்கு முன்னவை தமிழ் நான்மறை நிறைதமிழ் மக்களே! குறைவறு பன்மொழி மறைமலை அடிகளார் அறைவது கேளீர்; இரண்டா யிரத்துநா னூறாண் டிறுதியில் இருந்த இன்னருட் கௌதம சாக்கியன் ஆரிய மறைகள் மூன்றென அறைதலால் நான்மறை என்பவை தமிழ்நான் மறையே. பழைய செந்தமிழ்ப் பாட்டு களிலும். இடைக்கா லத்தில் எழுந்தவை ஆன திருவா சகத்திலும், திருமந் திரத்திலும், தேவா ரத்திலும், செப்பி யுள்ளவை ஆரிய மறையன்று; தமிழ்நான் மறையே. ஆரிய மறைகள் என்பன அனைத்தும் சிறுதெய் வங்களின் வணக்கம் செறிந்தவை. அறம்பொருள் இன்பம் வீடெனும் நான்கின் திறத்திற் சேர்ப்பவை தமிழ்நான் மறைகளே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.75, 1978, குயில், 21.6.1960 78. முடியாதது அகவல் மலையை மடுவே ஆக்கவும் முடியும்; அலைகடல் அனைத்தும் தூர்த்தலும் முடியும்; விண்ணில் விரைந்து பறக்கவும் முடியும்; மண்ணில் மழைபெய் விக்கவும் முடியும்; சேய்மையை அணிமையாய்ச் செய்யவும் முடியும்; மாய்வதை மாயாமற் செய்யவும் முடியும்; தமிழி னின்று தமிழ னைஇமைப் போது பிரிப்பதும் முடியா தெவர்க்குமே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.76, 1978; குயில், 21.6.1960 79. யாழிசையும் தமிழோசையும் அறைக்குள் யாழிசை ஏதென்று சென்றே எட்டிப் பார்த்தேன். பேத்தி நெட்டுருப் பண்ணினாள் நீதிநூற் றிரட்டையே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.83, 1978; குயில், 15.4.1962 80. தருமபுரத்துத் தம்பிரான் தக்கவாறு நடந்து கொள்க தமிழ்மொழியை வெறுப்பதேன் தரும புரத்துத் தம்பிரான்? - செந் - தமிழ் தமிழ்மொழி என்ன எட்டியா? - அவ் வடமொழி வெல்லக் கட்டியா - செந் - தமிழ் தமிழகத்தில் தமிழ்ப் பயிர் - அது தமிழர் கட்கெல் லாம்உயிர் தமிழிற் சைவம் பெரிதென்றால் - அது தலையின் இழிந்த சிறுமயிர் - செந் - தமிழ் சிரி இருந்திட வேண்டுமாம் - தமிழ்த் திரு ஒழிந்திட வேண்டுமாம் குரு வென்றெண்ணிய தமிழர்கள் - இனிக் குருக்கள் என்றிட வேண்டுமாம் - செந் - தமிழ் தாயும் தமிழை எதிர்த்திட்டால் - நொடி தாழ்ந் திடாது தமிழன் வேல்! வாய் கொழுத்த பண்டாரம் - இனி வகையாய் நடந்திடுதல் மேல் - செந் - தமிழ் - தமிழுக்கு அமுதென்று பேர், ப.84, 1978; குயில், 1.12.1959 81. புலவர் சிவபிரான் திருவடி அடைந்தார் தமிழ கத்திற் பிறந்தும், தமிழெனும் அமிழ்து நிறைய உண்டும், அதனாற் செல்வம் நிறையச் சேர்த்தும், உடம்பு புல்லாய்ப் புலனெலாம் செல்ல ரித்து மருத்துவ மனையிற் கிடந்து புரளும் ஒருத்தர்க்குத் தமிழ்ப்பற்று மருந்து தேவைஅதைக் குருதியில் ஏற்றுமுன் சிவபிரான் திருவடி நீழல் சேர்ந்தார் புலவரே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.85, 1978; குயில், 21.6.1950 82. சிவமா பெரிது? செந்தமிழ் பெரிது! சமையமா பெரிதுதம்பி ரானே - நல்ல தமிழேபெ ரிதுமடத் தம்பி ரானே தமிழைவெ றுப்பதென்ன தம்பி ரானே - உன் தாயை வெறுப்ப தென்ன தம்பி ரானே? சமையம் ஒழிந்திட்டால் தமிழர் உண்டு - நல்ல தமிழ்ஒ ழிந்தால் தமிழ்இனம் உளதோ? தமிழுக்குத் தொண்டுசெய்க தம்பி ரானே - தமிழ் தமிழனின் உயிர்!மடத் தம்பி ரானே. சிவமா பெரியது தம்பி ரானே - நல்ல செந்தமிழ் பெரிதுமடத் தம்பி ரானே சிவமொழிந் தால்தமிழ் இனமி ருக்கும் - தமிழ் செத்தால் இனம்சாகும் தம்பி ரானே. சிவநெறி சொல்லி இங்குத் தமிழ்நெறியை - நீ சீறுவ தோமடத் தம்பி ரானே? சிவத்தொண்டு மேல்அன்று தம்பி ரானே - தமிழ்த் திருத்தொண்டு மேல்மடத் தம்பி ரானே. கோயி லாபெரிது தம்பி ரானே - அங்குக் கொள்ளை யாபெரிது தம்பி ரானே? கோயிலினும் பெரிது தம்பி ரானே - தமிழ்க் கொள்கையன் றோமடத் தம்பி ரானே தாயிற் பெரியதொன்று தம்பி ரானே - அது தமிழல்ல வோமடத் தம்பி ரானே? நேயத் தமிழ் வெறுத்துத் தம்பி ரானே - தமிழ் நிலத்தினில் வாழ்வதென்ன தம்பி ரானே? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.86, 1978; குயில், 8.12.1959 83. தமிழன்னை உளங்குளிர் தமிழ்மாலை ஒளிகொள் இன்னிசைச் சோலை அளவின்றிக் கொடுத்ததே அன்னையின் முலைப்பாலை. - உளங்குளிர் ஏழிசைத் தாலாட்டி இலக்கியச் சோறூட்டி வாழிய வாழியஎன்று வளர்த்தனள் உணர்வூட்டி. - உளங்குளிர் திருக்குறள் நூலோடு சிறப்புறு சங்க ஏடு விருப்புடன் கருத்துடன் விளைத்திட்டாள் அன்போடு. - உளங்குளிர் பண்புகளுக்கோர் எல்லை பைந்தமிழன் எனும்சொல்லை மண்ணுலகில் வைக்கும் தமிழ் மணக்கும் கொடிமுல்லை. - உளங்குளிர் - தமிழுக்கு அமுதென்று பேர், ப.90, 1978 84. இரண்டும் ஒன்றா? செக்குப் பாட்டும் சிட்டுப் பாட்டும் ஒன்றா? - வட சேரிப் பாட்டும் தெற்குப் பாட்டும் ஒன்றா? கொக்குப் பாட்டும் குயிலின் பாட்டும் ஒன்றா? - வட கோணைப் பாட்டும் குழற்பாட்டும் ஒன்றா? விக்குப் பாட்டும் வீரப் பாட்டும் ஒன்றா? - வட வெட்டிப் பாட்டும் தொட்டிற் பாட்டும் ஒன்றா? மக்குப் பாட்டும் தமிழன் பாட்டும் ஒன்றா? - வட மடயன் பாட்டை நாம்பாடுதல் நன்றா? பிணவறையும் மணவறையும் ஒன்றா? - வட பேயகமும் தாயகமும் ஒன்றா? தணல்மொழியும் அணிதமிழும் ஒன்றா? தாழ்மறையும் தமிழ்மறையும் ஒன்றா? நுணற்பாட்டும் தமிழ்ப்பண்ணும் ஒன்றா? - வட நூற்கருத்தும் தமிழ்க்கருத்தும் ஒன்றா? தணிபுனலும் செந்தணலும் ஒன்றா? - வட சழக்கினைநாம் அழைப்பதுவும் நன்றா? கல்லைத்தொழல் கடவுள்தொழல் ஒன்றா - வட கழிநெறியும் தமிழ்நெறியும் ஒன்றா? புல்லணிதல் போர்அணிதல் ஒன்றா? - வட புலைத்தொழிலும் கலைத்தொழிலும் ஒன்றா? கொல்லும்தொழில் காப்புத்தொழில் ஒன்றா? - வட கொலைவேள்வி தமிழ்வேள்வி ஒன்றா? சொல்லிற்பொய், நல்வாய்மை ஒன்றா? - வட தூக்கில் தொங்க நாம்விரும்பல் நன்றா? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.93, 1978; குயில், 8.9.1959 86. மொழியின்றேல் நாம் யார் விழியில் லாத வாழ்வும் வெற்றி பெறுதல் கூடும் வழியில் லாத ஊர்க்கும் வரப்பைக் கடந்து சேர்வோம் எழில்இல் லாத பெண்ணும் எவற்கோ மனையாய்க் கூடும் மொழியில் லாத வாழ்வை நினைக்க முடியா தன்றோ? மொழியே தானே மூச்சு மொழியே தானே உணர்வு மொழியே தானே வாழ்வு மொழியே தானே இன்பம் மொழியே தானே மனிதன் மொழியே தானே வழிகள் மொழியே தானே உலகம் மொழியின் றேல்நாம் யாரோ?. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.132, 1978 87. சமயக்கணக்கரும் தமிழும் அந்தநாள் சமயக் கணக்கரை நினைக்கிறேன் இந்தநாள் சமயச் சழக்கரைப் பார்க்கிறேன் வேறுபா டெத்தனை மாறுபா டெத்தனை! கூறும் சமயக் கொள்கைகள் மாறினும் அனைவரும் தமிழின் அருமை பெருமையைத் தனைப்புகழ் வதினும் தமிழைப் புகழ்வதில் மாற்றுக் குறையா மதிப்புடன் போற்றினர் ஏற்றுக் கொள்வோர் தமிழர் ஆதலின் இந்நாள் சமய மடங்கள் எப்படி? ஆரிய மொழியின் அடியை வருடி வீரிய மிலாது வெம்பு கின்றன. குருக்கள் மார்எனும் கோயிற்பெ ருச்சாளிகள் இருப்பிட மன்றோ எம்மவர் இருப்பிடம்! இன்னிசை பாடிய எந்தமிழ் நால்வர் இன்றமிழ்ப் பாட்டை எழில்படச் சுவரில் எழுதிய தன்றித் தொழுதிட வைத்திலர். கடவுளை வணங்கக் கருதிச் செல்லுவார் வடமொழி அருச்சனை செய்து வருகையில் தின்பண் டத்தை வாங்கித் தின்று தென்பொடு பார்ப்புக்குத் தண்டம் அழுது சுவரில் எழுதிய சொல்லோவி யங்களைத் தவறியும் பார்த்துத் தமிழ்ப்பாட் டெண்ணார். இப்படி நடக்கிறது ஏதோ தமிழ்ப்பணி! அறநிலை யம்எனும் துரைத்த னத்தில் மறந்தும் தமிழை மதிப்ப தில்லை. சைவ வைணவ மடங்கள், அவற்றைஆள் சைவ வைணவ மடாதி பதிகள் கோயில் நிலத்தால் கும்பி நிரப்பி மூலையில் பூசாரி குடும்பத் தாருடன் துறவிகள் ஐயகோ உறவிகள் ஆயினர். நிறங்கள் அவர்கள் நெஞ்சில் நிறைவதால் சிவபோக சாரத்தில் செந்தமிழ் மறந்தனர்; வைகுண்ட போகத்தில் வண்டமிழ் மறந்தனர். மற்ற சமயமோ தமிழுக்கும் அவர்க்கும் சொற்றொடர் பில்லை. சொல்லுவேன் தமிழரே மடங்கள் மதித்திடும் கோயில் அனைத்தையும் பிடுங்கிட வேண்டும் அரசு, பெருந்தமிழ்க் கல்விச் சாலைக ளாகஅதனை மாற்றுக. கோயிலைக் கலையின் கூடமாய் மாற்றுக. இதனைச் செய்யாத வரையில் தமிழ்வா ழாதே தமிழர்வா ழாரே! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.124, 1978 88. உயிர்மொழி வீறுடைய செம்மொழி தமிழ்மொழி - உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி! - வீறுடைய மாறுபடும் மொழிகளைப்போல் மாறவில்லை மங்கிவரும் மொழிகளைப்போல் மங்கவில்லை! வேறுபடும் மொழிகளைப்போல் வேறாகவில்லை வீழ்ந்துபடும் மொழிகளைப்போல் வீழவில்லை! - வீறுடைய கூறுபடும் மொழிகளைப்போல் குலையவில்லை கொஞ்சிப்பேசும் வழக்கற்றுக் குமையவில்லை! சாறுபட்ட மரங்களைப்போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதரைப்போல் தாழவில்லை! - வீறுடைய - தமிழுக்கு அமுதென்று பேர், ப.127, 1978 89. வாழ்வுயர்த்தும் மொழி உலகின் முதல்மொழியே - எம் உணர்வின் முதல்மொழியாம் கலைகளின் சீர்மொழியே - எம் கண்ணிற் சிறந்ததுவாம்! அலகில் ஆற்றல் மொழி - என் அன்னைத் தமிழ்மொழியாம்! தொல்காப்பிய மொழியே - எம் தூய நலமொழியாம்! பல்காப்பிய மொழியே - எம் பண்பாடுணர்த்தும் மொழி! வெல்லும் தமிழ்மொழியே - எம் வீரவாழ்வு மொழியாம்! பண்ணும் இயல்கூத்தும் - இப் பாருக்களித்த மொழி! எண்ண உயர்வினுக்கே - தலை இருப்பெனும் செம்மொழியாம்! மண்விண் இருக்கும்வரை - தமிழ் வாழ்வுயர்த்தும் மொழியாம்! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.128, 1978 90. அரியணை அறிஞர்க்கு தமிழ்நாட் டைப்போல் தலைப்புகழ் கொண்ட கமழ்மலர் ஆயிரம் கருத்துகள் மலரும் மான மிகுந்த சீன வள்ளுவன் ஆன கன்பூசி அறைவது கேளீர்; என்னிடம் தாய்நிலம் ஆளத் தருவரேல் முன்னதாய் மொழியைச் சீர்திருத்துவேன். காரணம் - மொழியே விழியாம், விழியே மொழியாம்; மொழித்தெளி வுடையார் விழித்தெளி வுடையார்; பேச்சு மொழிக்கும் இலக்கிய மொழிக்கும் காட்டும் இடைவெளி களைந்து மக்கள் வழக்கு மொழியாய் வாழ்வொடும் சேர்ப்பேன். மொழித்திருத் தந்தான் மனித முன்னேற்றம் வேரும் விழுதுமாய் விளங்கும் மனிதர் சீரும் சிறப்பும் செம்மையும் எய்துவர். மொழிச்செம் மைஇல் லையேல் மக்கள் அழிவது திண்ணம். அருமை மொழியே அனைத்தறி வுக்கும் ஆன்ற திறவுகோல். என்றியம் பினராம்; என்தமிழ் ஆட்சி அரியணை ஏறும் அறிஞர்க்குத் தெரிவிக் கின்றேன் தெளியுமா அறிவே? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.129, 1978 91. ஆடு - பாடு தமிழ்தமிழ் என்றுநீ ஆடு - பட் டறிவின் உணர்வெல்லாம் பாடு! குமிழ்த்த இவ்வுலகப் பேரேடு - குறித்த ஐந்தொகைக் கீடிணை ஏது? - தமிழ்தமிழ் என்றுநீ ஆடு நமதுயிர் வாழ்வி னோடு - உலக நாகரிகத்தை விளக்கும் செப்பேடு தமிழன்றி வேறெது கூறு - மக்கள் சமமென்ற பொதுமைப் பண்பாடு! - தமிழ்தமிழ் என்றுநீ ஆடு தமிழுக்கு நீசெய்யும் கேடு - பெற்ற தாய்க்குச் செய்யும் மானக்கேடு சிமிழ்க்காதே சிந்தனைப் பீடு - நாளும் செழிக்கட்டும் தமிழ்மறைக் காடு! - தமிழ்தமிழ் என்றுநீ ஆடு சிறுகதை புதினத்தி னோடு - பல சிற்பச் செந்நூல் பலபோடு அறுத்த அறுவடை மேடு - என ஆக்குக அறிவியல் ஏடு! - தமிழ்தமிழ் என்றுநீ ஆடு சட்ட நுணுக்கங்கள் தேடு - பொறி சமைக்கும் இயல்களில் கூடு முட்டிடும் வான்எல்லைக் கோடு - கோள் முழுதாளும் புடவிநூ லோடு! - தமிழ்தமிழ் என்றுநீ ஆடு உயிரியல் பயிரியல் பாடு - நம் உடலியல் மருந்தியல் ஏடு தயிரினில் வெண்ணெய்போல் தேடு - நின் தன்னறிவால் உயரும் நாடு! - தமிழ்தமிழ் என்றுநீ ஆடு - தமிழுக்கு அமுதென்று பேர், ப.130, 1978 92. வையம் அறியச் செய்வீர் தமிழ்ப்புல வோர்களே, தமிழ்ப்புல வோர்களே, அமிழ்தைப் பாய்ச்சும் இரகசி யத்தை உங்கட் குரைப்பதில் உவகை கொள்கிறேன். சங்கநூற் புலமைச் சான்றோர் தோன்றுமுன் தோன்றிய தொல்காப் பியத்தின் பின்னர் தாய்மொழிப் பெயரைத் தமிழ்எனக் குறித்தல் ஆய்வில் கிடைத்த அரும்பொருள் அறிவீர், ஆனால், ஓர்உண்மை அறைவேன் உரத்தே. வடமொழிக் கொருபெயர் வடமொழி நூல்களில் இல்லவே இல்லை; என்ன வியப்பா? சமக்கிரு தம்எனச் சாற்றுவ தெல்லாம் செம்மையும் ஒழுங்கும் பெற்றதைச் செப்பும். சமக்கிருதம் எனும்சொல் மொழியைக் குறிக்க அமையவே இல்லையாம். அறிஞருள் அறிஞர் நீகந்த சாமி நீயறி வாய்எனச் சொன்னசொல் கன்னற் பாகாய்க் காதில் இன்னும் ஒலித்தெனை எந்தமிழ்ச் சிறப்பாம் இறுமாப்புக் கடலில் எக்களித் தாடச் செய்கிற தருமைப் புலவரே! வையம் அறிய வாய்முர சறைகவே! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.133, 1978 93. இல்லாத சிவனும் இருக்கும் தமிழும் இல்லாத சிவன்முடியை அடியை மேனாள் இரண்டுபேர் தேடினராம் இதுபு ராணம். கல்லாத போக்கிதிலே ஐய மில்லை; கடவுளுக்கு வேரில்லை கிளையும் இல்லை எல்லோரும் உணருங்கள் எனும்க ருத்து புதைந்துளதை எண்ணுகிறேன் வியக்கின் றேன்நான். சொல்லார்ந்த தமிழ்மொழிக்கும் அதனின் தோற்றம் தொல்பழமை அடிமுடியைக் கண்டா ரில்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத் தின்முன் கையுழைப்பி னாலுயர்ந்த மனித ருக்குள் தொல்காப்பி யமனிதன் தமிழன் என்று தொன்னிலத்தின் ஆய்வுகளால் குமரி நாட்டின் பல்காப்பி யம்போல பார்அ னைத்தும் பரந்தவனும் பரந்தமொழி தமிழே என்னும் சொல்காப்பி யத்தின்அடி முடியைக் காணாத் தொல்லியலார் அறிவியலார் திகைக்கின் றாரே. எந்நாட்டுப் பழங்குடிக்கும் மொழிக்கும் அன்னார் இனத்திற்கும் அடிமுடியைக் காண்பார், வெல்வார்; முன்னாட்டின் குடிமக்கள் யார்யார் என்று முன்னேற்றம் கண்டார்கள் என்ப தெல்லாம் பன்னாட்டின் ஆராய்ச்சி யாளர்க் கெல்லாம் பலாவன்று பழம்வாழை உரித்தல் போலாம். தென்னாட்டின் வரலாறும் மொழியும் வாழ்வும் திகைக்கவைக்கும் இனத்தினன்நான் திகட்டல் உண்டோ? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.135, 1978 94. தமிழின் மேன்மை உழைப்பா ளர்மிகும் ஊர்ப்புறங் களிலோ அழைக்கும் அழகுசூழ் வயல்வெளி களிலோ ஓங்கிய சிறப்பின் உயர்மலர்க் காட்டிலோ மாங்குயில் கூவிடும் மரம்அடர் காட்டிலோ மனித உழைப்பால் மாண்புறும் நகரிலோ தனிமை மிகுந்த வெட்ட வெளியிலோ தொழிற்சா லைமிகு தொழிற்பேட் டையிலோ ஒழிவு நேரத் துவந்திடும் அரங்கிலோ வீட்டிலோ, வெளியிலோ, கூட்டங் களிலோ நாட்டில் எங்கெங்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடமெலாம் உரையா டும்மொழி தெள்ளத் தெளிந்த செந்தமிழ் மொழியின் இனிமையில் தோய்ந்த எக்களிப் புணரலாம். அழகுக் கவிதையின் செழுமையைப் பருகலாம் உண்மையில் உரத்த குரல்களைக் கேட்கலாம் மல்லிகை மணம்போல் சொல்லின் பம்தரும் மழலையை, காதலர் குதலையை அருந்தலாம் மனஓவி யம்தரும் கனவுகள் நிறைந்த இளைஞரின் பேச்சுகள் ஏந்தி உண்ணலாம் தேன்சிட் டைப்போல் தீங்குயில் போல வானம் பாடியின் வண்மைக் குரல்போல் திசைதோறும் திசைதோறும் இசைபெறும் இன்தமிழ் மொழியினை மனத்தில் வழியச் செய்குவீர்! அந்தமிழ் மொழியினால் அகில உலகையும் சொந்த மாக்கிடும் சுரப்புச் சுனைஅது! மனத்துள் ஊறும் மட்டிலாக் கருத்தினைக் கணத்திற் குள்ளே கழறிட முடியும். அறிவின் விழிப்பில் அகப்படும் எதனையும் வெளிப்படுத் திடத்தகும் எளியது தமிழ்மொழி! வைய இசையெலாம் கைக்கொண் டிசைக்கும் பைந்தமிழ்க் குள்ளே பாரின் மொழியெலாம் மொழிந்திட முடியும்; மொழியின் கருத்தையும் பிழிந்தபழச் சாறாய்ப் பெற்றிட முடியும். வண்ணத் தொளியினை வானத் தெளிவினை எண்ணத் தொளியாய் இயம்பும் எம்மொழி! மலர்வனத் தழகெலாம் மலர்த்திட முடியும். இலையின் சலனம், இடியின் குமுறல், அலைகளின் ஆர்ப்பொலி, ஆழியின் அமைதி, குழந்தையின் மழலை, குமுறும் கோளரி தடைபடா அருவி, தணல்மலை வெடிப்பு, தென்றலின் இன்பம், வாடையின் திணிப்பு ஒன்பது சுவையின் ஓயாக் கூத்து, செயலின் ஊக்கம், அமைதியின் ஆக்கம், செயற்கையின் செம்மையாய் இயற்கையின் இணையாய் அளவிலா உணர்ச்சியின் ஆற்ற லுடைமை வளமை மாட்சி வண்டமிழ்க் குண்டு. எவ்வித எண்ண ஏற்றங் களையும் செவ்விதின் உணர்த்தும் சீர்மைக் கருத்து கோடா கோடிக் கொள்கை,கோட் பாடுடையர் ஏடாய்க் கொடுக்கும் இனிமை வாய்ந்தது! அறிவியல் துறைகள் அறிதொறும் அறிதொறும் புரியும் தமிழில் பொலிந்திடச் செய்யும் முத்தமிழ் போல முழுவுல கத்தும் எத்திசை தேடினும் இல்லாத் தனிமொழி! அத்தகை மொழியின் அருமை மக்களாய் இத்தரை பிறந்ததால் இறுமாப் படைகிறோம் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஓதும் இவ்வுரை உவந்த ஒருமொழி! யாவையும் இணைக்கும் எவரையும் பிணைக்கும் தேவைக் கெல்லாம் சிந்தனை யளிக்கும் மக்கள் நெஞ்ச மடுவி லிருந்தும் அக்கறை மிகுந்த அன்பி லிருந்தும் எவரும் அறியாத் தோற்றுவா யிருந்தும் வாழ்வின் வளங்களின் புதுமையி லிருந்தும் இயற்கையின் உண்மைத் திண்மையி லிருந்தும் பெருமைக் குரிய அருங்களஞ் சியமாய் உருவெடுத் துள்ளது உயிர்நிகர் ஒண்டமிழ்! பயில்தொறும் பயில்தொறும் பண்பாட் டின்குரல் மனித குலத்தின் மாண்பினைக் காட்டுதே! எண்ணிக்கை யில்லாக் கால வளர்ச்சியின் பண்ணொலி யன்றோ பாங்குற் றெழுந்தே உலகமாம் நாடகத் தோய்விலா தியங்கும் கலைமக ளாகக் காண்கிறாள் தமிழ்த்தாய்! உயிரே உயிரை உணரும்; உண்மை உணர்ச்சி வாயில் உணர்வோன் வலித்தே என்பதற் கெடுத்துக் காட்டே எம்மொழி! எம்மொழிச் சிறப்பை எதற்கொப் பிடலாம்? எம்மொழி நுகர்வை எதற்குவ மிக்கலாம்? எம்மொழி அருமை பெருமை பெறுதற்கு அரிய அன்னையா? அப்பனா? உடன்பிறந் துரிமையில் இணையும் ஒப்பில் உறவினரா? வாழ வைத்திடும் தோழனா? காதலால் சூழ்உல கத்துத் தோன்றாத் துணையா? மயக்குறு மக்களா? மண்ணுல கத்தில் எதைச்சொன் னாலும் அதனை ஏற்றிடேன். ஏனெனில் எந்தமிழ் இன்பம்; என்னுடை ஊனின் உயிரில் உவப்புறும் எதற்கும் மேலே மேலே தாவிச் செல்வது! எவைக்கும் மேலாய் எவைக்கும் உள்ளாய் சுவைபட் டுயிரில் உயிர்ப்புறு வாழ்க்கையில் ஓங்கியும் உயர்ந்தும் பாங்குற விரிந்தும் மேன்மைக் கெல்லாம் மேம்படும் எம்மொழி! ஒருவனாய் உலகிற் கொப்பற் றுயர்ந்த திருவள்ளு வன்சொல் புதையலை எடுத்தேன் ஒருசமு தாய ஒழுங்கொற்று மையைப் பெருமனத் தாலே பேரன் பதனால் நெருங்கிப் பிணைத்தான்; வேற்றுமை நிழலை அருகில் விடாமல் அன்னையாய்க் காத்தான் சங்கநூற் புலவர்கள் சாற்றிய பாட்டில் அங்கெங் கேயும் இயற்கையின் அருமை எவரையும் தழுவும் இன்பத் தோழமை உவகையில் ஒன்றிய உறவின் இணைப்பு! சாதி சமய மதத்தின் சழக்கு வேதனை தராத வியப்புறு காட்சி எல்லார்க்கும் எல்லாம் என்று மகிழ்ந்திடும் பொல்லாங் கில்லாப் புதுச்சமு தாயம் பூத்து மணந்து பொன்னொளி தந்தது. காப்பியங் களின்சொல் காட்டிய நன்மொழி மாப்பெரு மக்களின் வாழ்வெனும் மலர்வனம். ஈடிலா வியப்பை நாடி நரம்பினில் ஓடிடச் செய்து பாடிடும் உணர்வே! பாரதிப் பாட்டின் சொற்களில் படிவேன் சூரியன் ஒளிமுன் தோன்றும் சொற்களாய் எத்தடை யாயினும் அத்தடை தகர்க்கும் முத்தமிழ்ப் பார்வையை உள்ளத் துணர்ச்சியை எவரையும் ஈர்க்கும் ஏற்றத் துடனே கவர்ந்தது பொன்னொளி; கண்கள் ஒருகணம் நானிலத் தினையே நட்பால் பிணைத்தன. ஒளியைத் தெளிக்கும் உண்மைச் சொற்கள் இன்பமாய்ச் சிரித்து மன்பதை யோடெனை வீழாப் புகழினில் வாழவைத் ததுவே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.136 1978 95. எழுத்துத் திருத்தத்தினும் எண்ணத்திருத்தம் வேண்டும் எழுத்துகளைச் சீர்திருத்தும் ஆர்வ லர்க்கோர் விண்ணப்பம்; எதற்காக இந்த வேகம்? பழுத்துக்க னிந்திட்ட மொழிக்க னிக்குப் பழம்அழுகச் செய்வதுவா உங்கள் திட்டம்? ஒழுக்கத்தில் ஓர்அழகு வேண்டு மாயின் உயர்பெரியார் திருத்தத்தை ஏற்க; மேலும் கழுத்தறுப்பு வேலைகளைச் செய்வ தெல்லாம் காளைகளைக் காயடிக்கும் செயலை ஒக்கும். மொழிக்குரிய உயர்கருத்தும் உலக ளாவும் முன்னேறும் அறிவியலை வளர்க்கும் எண்ணம் விழிக்கடையின் ஓரத்தும் வராத பேர்கள் வெதும்பு வதேன் எழுத்தினிலே சீர்தி ருத்தம்? கொழித்த மொழி பிரஞ்சினிலே, ஆங்கி லத்தில், குறி யீட்டைக் காட்டுகிற மொழி சீனத்தில் தொழில்படுமா உங்களுடை சீர்தி ருத்தம் தோல்விழுங்கிச் சுளைகளைஏன் எறிகின் றீர்நீர். மக்களெலாம் தாய்மொழியைக் கற்ப தற்கு மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச் சிக்கலின்றித் தெளிவாக உணர்வ தற்குச் செம்மைநிலை காணாத ஆங்கி லத்தால் தக்கஒரு தகுதியினைப் பெற்றாற் போன்று தமக்குள்தாம் பெரியரென எண்ணிக் கொண்டு தக்கைகளாய்த் தலைநிமிர்ந்தே ஆடல் வேண்டாம் தமிழ்வளர்ச்சி, இயக்குநர்கள் கையில் இல்லை. உயிர்மெய்யைப் பிரித்தெழுதல் எளிதே என்றும் உரைத்ததுநான் உண்மைதான்; நூறு பக்கம் பயிர்களிடைக் களைபோல வளர்ந்தி ரண்டு பங்காக வளருவதை அறிந்தேன்; அன்பீர் பயில்கின்ற வர்க்குமச்சுக் கோப்ப வர்க்கும் பாங்காக வளர்கின்ற பொறியி யற்கும் செயல்படநீர் விழைகின்றீர், எழுத்த மைப்பால் சிந்தனைக்கு வந்ததடை செப்பு வீரே? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.140, 1978; சீர்திருத்தம், 1.2.1950 96. எந்நாள் தாய்மொழியாம் நானிலத்தில் நானுழைத்துப் பார்த்தேன் தலைப்பட்ட செல்வத்தின் பயன்எண்ணப் போமோ? தாய்மொழியாம் ஆழ்கடலில் புலமையொடும் ஆழ்ந்தேன் தளைபட்ட களஞ்சியத்தின் கணக்கறியப் போமோ? தாய்மொழியாம் விண்வெளியில் பறந்துவந்து மீண்டேன் தட்டுண்ட ஒளிமீன்கள் எண்ணில்பல கோடி தாய்மொழியாம் மண்ணகழ்ந்தேன் நம்முன்னோர் வாழ்ந்த தன்னிகரில் பண்பாடு நாகரிகம் கண்டேன். தாய்மொழியின் இலக்கியஇ லக்கணங்கள் கற்றேன் தனித்தமிழின் மாட்சியினில் ஆட்சியினில் வியந்தேன். தாய்மொழியாம் தமிழ்மொழியால் வையகத்தைக் காக்கும் தகுதியறிந் தின்புற்றேன். நடக்கும்நாள் எந்நாள்? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.134, 1978 97. அந்தம்மாவும் நானும்! தூங்கும் என்னை விழிக்க வைத்தன; நாரணன் பாட்டும் நாய்க்கு ரைப்பும்! நல்லதோர் மார்கழி நாள்அன் றோஅது? மின்விளக் கேற்றினேன் வெள்ளைத் தாளும் இறகும் அண்டையில் இருத்தல் கண்டேன். என்மனக் கோயில் திறந்தேன் இனிய பொன்முகம் புதிய தமிழகம் கண்டேன். அன்னை கூறினாள்; முன்னை நாளைவிட இந்தப் பொங்கல்நாள் ஏற்றம் உடையது. கெடுதலை நீக்கி விடுதலை ஆக்கத் தேரோட்டும் ஈரோட்டுப் பெரியவன் திறத்தை உணரா மக்களும் உணர்ந்துபின் பற்றினர். போரிலோர் புதுமுறுக்குக் காணு கின்றேன். என்று சொன்னாள்; இலக்கியம் மாற்றினர், இந்தி கொணர்ந்தனர், இனவர லாற்றின் வேரை அழிக்க வேண்டுவ செய்தனர் இனத்தைக் காட்டிக் கொடுப்பவர், இனிய தமிழைக் காட்டிக் கொடுப்பவர் தழைத்தனர், எழுச்சி தடைப்பட்டதோ என்றேன். தடைப்பட வில்லை கவலை தழைத்ததால் புலவர்பால் உணர்வு பூத்தது; ஒற்றுமை காய்த்தது; எழுச்சி கனிந்த தன்றோ! செந்தமிழ்ப் புலவன் வெள்ளை வாரணன் அருளிய தொல்காப் பியஆ ராய்ச்சி அஞ்சுதல் சிறிதும் இல்லா அருள்மிகு நெஞ்சப் படைப்பு! நாட்டுக் கன்பளிப்பு. நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதலிய பதினைந்து செய்யுள் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியத்தில் இடைச்செருகல் என்றெ டுத்துக் காட்டிய யானைக்குக் கைமாறு வானும் போதாது. தெ.பொ. மீக்கள் செய்யும் தீமையில் விளைந்த உணர்ச்சி வெள்ளப் பயன்இதே! இதோகாண் புலவர்கள் எழுதுகின்றார்கள். மற்றொன்று கேட்பாய்! கற்றும் கேட்டும் தினத்தந் தியினால் செல்வம் சேர்த்தும் வரும்ஒரு தமிழன் ஆதித்தன் என்பான் பார்ப்பான் நட்புப் பட்ட காரணத்தால் தம்மி னின்றும் நீக்கினர் தமிழர். அதனால் அந்த ஆதித்தன் என்பான் தமிழர் - தலைவனைத் தமிழக வேந்தனை அடைந்தா னாகி அழுதா னாகி என்கூட்டத் திற்கு நின்அருள் வேண்டும் என்றனன். சரிதான் என்றான் தந்தை தமிழர் உள்ளப் பாங்கு தன்னையும் அன்னார் எழுச்சியின் அளவையும் காண்க என்றாள் அன்னை, மகிழ்ச்சி எய்தினேன். ஆயினும் என்றன் ஐயப் பாடுகள் அகல வில்லை அறிக்கை செய்தேன். பார்ப்பனன் தமிழர் பகைவன் என்றேன் உண்மை என்றே அன்னை ஒப்பினாள். பார்ப்பா னுக்குத் தமிழ்மகள் பயந்த தீயனால் நாட்டுக்கு நன்மை யுண்டா? என்றேன் அன்னை இயம்பு கின்றாள். பார்ப்புக்குப் பிறந்தோன் பகைவன்; அன்னோன் தீர்ப்புக் கடங்கித் திரிபவரும் தீயரே. வள்ளுவன் திருக்குறள் ஆணை! அவர்களால் எள்ளுமூக் கத்தனை நன்மையும் இந்நாட்டுக்கு இல்லை இல்லை என்றாள் அன்னை. அன்னையே இன்னும்ஓர் அறிக்கை; நாட்டை ஆள வந்தார் தமிழரே ஆயினும் மாள வந்த பார்ப்பன மக்களை ஏற விட்ட தென்ன வென்றேன், வீழ்ந்துமுன் காட்டும் வீரகேள் என்றாள். இதற்கிடை என்னரும் பேத்தியும் பேரனும் தூக்கமா என்றனர். நாட்டுக்கு ஆக்கம் நேருமுன் தூக்கமே திங்கே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.118, 1978; குயில், 14.9.1959 98. மதத் தலைவர் அனைவரும் மாத்தமிழின் பகைவரே! சைவம் காக்கும் மடத்தாண்டி - அவன் தமிழின் சீரைக் கெடுத்தாண்டி - அந்தச் சைவம் தொலைவ தெந்நாளோ? - நல்ல தமிழர் வாழ்வதெந்நாளோ? வைணவத்தானும் அப்படித்தான்! - அந்த மதத்தலைவனும் அப்படித்தான், வைணவம் தொலைவ தெந்நாளோ - தமிழ் மக்கள் வாழ்வ தெந்நாளோ? ஏசு மதமும் தமிழர்களைத் - தம் இன்பத் தமிழை எதிர்க்க வைக்கும் - அந்த ஏசுமதம் தீர்வ தெந்நாளோ? - தமிழ் இனத்தார் வாழ்வ தெந்நாளோ? எல்லா மதங்களும் நம்தமிழ்க்கே - மிக எதிர்ப்புடையன என்மானே! பொல்லா மதங்கள் தொலைவ தெந்நாள்? - தமிழ்ப் பொலிவ தெந்நாள் செந்தேனே? மயிலத் தாண்டி கையெழுத்தை - ஒரு வடவெழுத் தாலே போடுகின்றான்! செயலில் தருமைப் பண்டாரம் - தமிழ்த் திருவை வேண்டாம் என்கின்றான். பசுத்தோல் போர்த்த புலிபோலே - உள்ள பண்டாரப் பசங்களின் தோலே பசையடங்குதல் எந்நாளோ - நம் பைந்தமிழ் வாழ்வதும் எந்நாளோ? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.80, 1978; குயில், 24.11.1959 99. பாட்டும் பாவையும் இசை அமுதிலே என் - உயிர்க்கிளி இன்பம் கொள்ளுதே! அக்கக்கா என்று விள்ளுதே! வசை இல்லை! வம்பில்லை! இல்லை சிறிதும் கலகம்! - உன் வாழ்வில் ஒரு பேரின்பம் வற்றாத இசை உலகம்! - இசை ஏழை நெஞ்சே வாழவைக்கும் இன்பத் தமிழ்ப் பாட்டு! - நீ ஏழை உடைய பண்ணை எல்லாம் யாழில் வைத்து நன்றாய் மீட்டு. - இசை வீரப் பாட்டு; வெற்றிப் பாட்டு மேன்மைக் காதற் பாட்டு; - நீ சேர சோழ பாண்டியர்கள் திருப்பாட்டில் ஆர்வம் காட்டு! - இசை - தமிழுக்கு அமுதென்று பேர், ப.81, 1978; குயில், 2.8.1960 100. குயில் திருமிகு தமிழகத் தலைநகர் ஆன சென்னையிற் பன்னூறு கவிஞர் சேர்ந்த அனைத்து லகத்தமிழ்க் கவிஞர் பெருமன் றத்தின் சார்பில் முத்தமிழ்ப் புத்தமிழ்து பாடுங் குயில்! இது பதினைந்து நாள்கள் தேடுவார் அடையும் தேடருஞ் செல்வம். கலகக் கட்சிகளில் தலையி டாது வலியவரும் சண்டை யையும் விடாது; குயிலின் கொள்கையும் குயிலை உடைய பெருமன் றத்தின் கொள்கையும் இதுவே. மதங்களில் எதிலும் பற்று வைத்தலும், சாதியை நினைத்தலும் குயிலேடு தவிர்க்கும் அனைத்து லகத்தமிழ்க் கவிஞர் அனைவரும் ஒற்றுமை எய்தும் வண்ணம் உழைக்கும் ஒருகவி ஞன்தான் பெற்ற உயர்வு, கவிஞர் அனைவரும் அடைந்த தாக எண்ணுமோர் பண்பாடு வளர்க்க இளைக்காது. பெருமன் றத்துக் கவிஞர்பால் பெற்ற கவிதை அனைத்தையும் கவின்பெரு நூலாய்த் தொகுக்கவும், தொகுத்ததை ஆங்கிலம் ஆக்கி உலகுக்குத் தந்து, தமிழகப் பெரும்புகழ் நிலைபெறு வித்தலும் தலையான எண்ணம், குயில்தமி ழுக்குக் கூடிய மட்டில் அயரா துழைக்கும்; ஐய மில்லை. தமிழைக் காக்கவும் தமிழ்ப்பா வாணர் அமைவினை ஆயவும் அரசினர் அமைக்கும் நிறுவனம் பலவும் நேரிய முறையில் நிகழும் வண்ணம் நினைவு படுத்துவது குயிலின், குயில்நிறு வனத்தின் மூச்சு. தமிழ்ப்பே ரறிஞரும் தமிழ்ப்பெருங் கவிஞரும் பெறத்தகும் பயனைப் பெறவொட் டாமல் இடையில் ஒருசிலர் எழுப்பி வருவதோர் இருப்புச் சுவரை இடிக்கவந் ததுகுயில், பெருமன் றத்தின் பெருந்தொகைக் கவிஞர் வரைவன குயிலில் வரும், அவர் படம்வரும், அவர் வர லாறும் அழகுற வெளிவரும். மன்றம் வளர்க்கும் அக்குயில் அப்பெரு மன்ற உறுப்பினர் வளர்ப்ப தாகும். ஒருகுயில் வாங்கலும், ஐந்துகுயில் வாங்கச் செய்தலும் மன்ற உறுப்பினர் செயலாம், அயலவர் விற்பனை உரிமை அற்றவர் அன்றியும் அன்புக் குயில்ஆ சிரியரும் ஆயிரங் கவிஞர் என்ப தறிக, மன்ற உறுப்பினர் மணிக்குயில் உறுப்பினர்; மன்றம் உடையார் மணிக்குயில் உடையார்; அவர்கட் கென்றன் அன்பு வேண்டுகோள், பழந்தமிழ் நாட்டினர் கவிதையைப் படிக்கும் வழக்கம் அடைய உழைத்தல் முதற்கடன். அனைத்துல கத்தமிழ்க் கவிஞர் மன்றத்தில் சேரா திருப்பவர் சேருமாறு செய்க. அடங்கல் உலகினும் குயிலை அனுப்புக; கட்சிகள் மதங்கள் சாதிகள் என்னும் முட்களில் மணிக்குயில் முட்டா தாதலால் எல்லாரும் உண்ணும் இன்ப உணவெனச் சொல்லிக் குயிலைத் துறைதொறும் உயர்த்துக. அலுவலில் உள்ளவர் ஆத ரிக்கலாம். இலகு மாணவர் இதைஆ தரிக்கலாம். மகளிர் இதனை மகிழ்ச்சியோடும் ஆத ரிக்கலாம்! அறஞ்செய்ய மறுப்பா? செந்தமிழ்ப் புலவர்க்குச் சொல்வ தொன்று குயிலுக்கு நீவீர் கொடுக்கும் ஆதரவு துயிலுவார்க் களிக்கும் தூய ஆதரவு அருளைச் செய்க குயிலுக்கு, அன்னது இருளை நீக்கும் இன்தமிழ் நாட்டில்! தமிழை எதிர்க்கும் தலைவர், சழக்கர் பெருகுமிவ் வேளையிற் பேரா சிரியர் திருமுகம் திருப்பினால் பகைமுகம் என்ஆம்? தொன்மைக்குத் தொன்மையிற் றோன்றிய தொல்குடி அன்புத் தமிழரே ஆத ரிக்க தமிழே வாழ்க! இன்பத் தமிழகம் பகையை ஒழித்துத் தழைகவே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.46, 1978; குயில், 15.4.1962 101. மனிதனும் தாய்மொழியும் பிரிக்க முடியாதவை செந்தமிழும் உடல்உயிரும் சேர்ந்தபொருள் தமிழன் எந்தப்படி அவ்வுருப்படி எவன்பிரிப்பான் செப்படி? சொந்தஉயிர் சொந்தவுடல் சொந்த மொழி மூன்றும் வந்தபடி நிலைக்குமடி வழியிற் பிரிவதில்லை! மக்களிடம் தாய்மொழிதான் மாய்ந்தநிலை சாவாம், எக்கொடிய னால்முடியும் ஒன்றைஇ ரண்டாக்கல்? தக்கபே ருலகினிலே தாய்மொழியை மாற்றத் தக்கபே ராற்றலினை அடைந்தவனும் உண்டோ? - தமிழுக்கு அமுதென்று பேர், ப.53, 1978 102. அழியாப் புகழ் அழியா திருப்பது புகழொன்றே ஆகும் - பிற அனைத்தும் மறைந்து போகும் - அழியா வழியே ஏகுக வழியே மீளுக பழிதே டாதே அருமைக் குழந்தாய்! - அழியா மொழி என்றால் உயிரின் நரம்பு - நன் முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு! மழையால் நன்செய் ஆகும் கரம்பு - நின் வாழ்நா ளெல்லாம் வைத்துத் தமிழை விரும்பு! - அழியா தமிழுக்கு வரும்இடை யூறு - போகச் சாவதும் உனக்குச் செங்கரும்பின் சாறு! சுமைசுமை யாய்வரும் தமிழர்கைம் மாறு தொடங்கப் பாபோர் தமிழ்உய்யு மாறு! - அழியா தமிழை இகழ்வோன் மடையன் தமிழிற் றமிழனைக் காணான் கடையன்; அமிழ்திற் சுவைகாணான் அவ்வறி வுடையான் அழிப்பானை, மகனே அழித்திடத் தடைஏன்? - அழியா புகழ் உள்ளான் சாவதே இல்லை! இகழ்உடை யானோ வாழ்வதே இல்லை! மகனே உற்றுக்கேள் என்சொல்லை - எனக்கு மகிழ்ச்சிவை அதுதான் என் வாழ்வின் எல்லை! - அழியா - தமிழுக்கு அமுதென்று பேர், ப.123, 1978 103. தமிழைக் கெடுப்பவர் கேடு தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது தமிழகத் தமிழர் தலைவர் தாமும் தமிழ்நா டென்று சாற்றவும் மறுத்தனர். தமிழால் தமிழர் ஆயினர், அன்னவர்; தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர். தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்; தமிழால் தலைமை அடைந்த அவர்கள், தமிழில் ஏதுளது என்று சாற்றுவர். தமிழைப் பேசித் தலைவர் ஆயினர் தமிழை எழுதித் தலைவர் ஆயினர் தமிழாற் பயன்ஏது என்று சாற்றினர். தமிழர் வாழத் தக்கவை ஆன எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்; எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்; அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர். அந்த அருமைத் தலைவரே இந்நாள் ஆங்கிலம் தாயாய் அமைக என்றும் தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர். தமிழர் தலைவர் தமிழாற் பேசியும் தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத் தமிழர் தங்குதடை இன்றி உணர்ந்தனர்; உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்! அன்றியும், அருமைத் தமிழே அன்றி வேறு மொழிஎமக்கு வராதென விளம்புவர். தமிழே தலைவர் ஆக்கியது, மற்றும் தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை எவரும் மறுக்க இயலா தன்றோ? இப்படிப் பட்ட தலைவர் என்பவர் தமிழில் இலக்கியம் இல்லை என்றனர். தலைவரைச் செய்தது தமிழி லக்கியமே! தமிழினம் படைத்தது தமிழி லக்கியமே! தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும் வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்! தமிழி லக்கியம், தமிழிலக் கணத்தை உண்டு பண்ண உதவ வில்லை என்று தமிழர் தலைவர் சாற்றுவர்; அதேநே ரத்தில் அந்தத் தலைவர் முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம் எத்தனை ஆயிரம் என்பதை அறியார். அறியினும் வெளியில் அறைய மாட்டார்; அவைகளை ஒழிக்கவே அறையில் முயலுவார். இந்தத் தமிழில் விஞ்ஞானம் இல்லை அந்த ஆங்கிலத்தில் அதிகம் உண்டே ஆதலால் அழியத் தக்கது தமிழாம்! விஞ்ஞானம் பற்றி இதுவரை விளைந்த எந்த நூலை இவரா தரித்தார்? இத்தனை என்றும் எண்ணிய துண்டா? நெஞ்சக் கிணற்றின் அடியில் நிறைந்த மடமைக் கருத்தை மாய்ப்போம் என்று மார்பு தட்டும் மாப்பெரும் புலிகள் தமிழில் இல்லாப் புதிய சொற்களை ஏற்படுத்துவோம் என்ற துண்டா? அணுஅளவேனும் இத் துணிவு வந்ததா? இல்லை. காரணம் வேறே இருக்கலாம். நாட்டுக் குழைத்த தலைவர்கள் கேட்டுக் குழைப்பதாற் பெறுவது கெடுதியே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.56, 1978; குயில், 10.1.1961 104. அகர முதலி அகர முதலி ஒன்றை நாளும் பார்த்து வருவாய் நிகரி லாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய்! பொற்சு ரங்கம் போல புதிய புதிய சொற்கள் முற்படும் வான் வில்லாய் முழுதும் வைரக் கற்கள் சொல்லுலகக் குதிரை தூய அகர முதலி வெல்லு வாய்நீ ஏறி வீர நூலுக் குதவி: சொற்க ளஞ்சி யத்தைச் சொந்த மாக்கிக் கொண்டால் கற்ப தெல்லாம் புரியும் கற்ப னைகள் விரியும். நிகண்டு செய்யுட் கூண்டில் அடைத்த சொற்கு யில்கள் அகர முதலிக் காவில் அமர்ந்து கூவக் கேட்பாய்! ஒருபொருளைக் குறிக்க ஒருநூறு சொற்கள் அருமையாக ஆடும் அழகு மலர்க ளைப் போல். அணிய ணியாய் வீரர் ஆர்த்து நிற்ப தைப்போல் மணிமணியாய்ச் சொற்கள் மனத்தில் ஏற்றிக் கொள்வாய்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப. 72, 1978 105. தமிழுலகத் தலைமை பொய்யும் புரட்டும் போகப் போக்கிலிகள் சாக மெய்எனும்தீ ஏந்துகநீ தம்பி - நல்ல மேன்மையெல்லாம் சாரும் தங்கக் கம்பி! இருளும் மருளும் சாக இழிவனைத்தும் வேக, கருத்தில் புரட்சி ஏந்துகநீ தம்பி - நல்ல காலம் உன்றன் பின்னால்வரும் நம்பி! அயர்வும் துயரும் நோக ஆண்மை மேன்மை யாக உயர்ந்தோர் உறவைத் தேடிக்கொள்நீ தம்பி - நல்ல உலகப் பொதுமை உடன்வரவே எம்பி! தமிழை வைத்துத் தின்பார் தாயின் உயிரை உண்பார்! தமிழனாக வாழ்ந்தால் போதும் தம்பி - நல்ல தலைமை கொள்ளும் தமிழுலகம் நம்பி! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.70, 1978 106. தமிழ் ஊற்று கிழவி ஒருத்தி, கிழவன் ஒருவன் இருவரும் காட்டில் இருந்து வாழ்ந்தனர், கிழவியின் அகவை எழுபத் தைந்து கிழவனின் அகவை எண்ப தாகும். இருவரும் உழைப்பதில் சலிப்பில் லாதவர் இரட்டைக் கிளவிபோல் பிரியா வாழ்வினர். ஒருநாள் கிழவன் உணவிற் காக அருநெல் லிக்கனி, அகழ்கிழங் கிற்காய் நெடுந்தொலை சென்றான் நெடுநேரம் ஆயிற்று. கிழவிக் கிருப்பே கொள்ள வில்லை. கிழவனை எண்ணி உழன்றது உள்ளம். மாலைக் கதிரவன் மலைவாயி லுக்குள் காலை வைக்குமுன் கடிது சென்றாள். பத்துகல் தொலைவைப் பத்து நொடிக்குள் சிட்டாய்க் கடந்தாள், கட்டழகுக் காளை ஒருவன் திரும்பிக் கொண்டிருந்தான்; அவனைக் கிழவி, கிழவனை வழியில் எங்கேனும் கண்டனை யோ என வினவினள்; கொண்டவன் அவன்தான் என்பதை அவள்அறி யாளே, நான்தான் உன்றன் கணவன் என்றதும் வான்இடி மழைபோல் வசைபொழிந் தாளே. மயங்கி விழுந்தாள், வியர்த்தான் இளைஞன்; அருகி லிருந்த ஓடையி லிருந்து முகந்து மணிநீர் முகம்தெளித் திட்டான்; பருகிட நீரை அருத்தினான்; அடடே கிழவி அக்கணமே கொழுகொழு குமரியாய் மாறினாள், மயங்கினான் இளையோன், நொடியில் இருவரும் தம்தம் இளைமையில் மருண்டனர். சாவின் அங்காந்த வாயிலை யடையவே கூவும் பருவம் கொண்ட இருவரும் இளமை திரும்பிய தெப்படி என்றே அளவ ளாவினர். அருகுள ஓடைநீர் அருந்திய தால்தான் பருவம் திரும்பிற்று அந்நீர் ஓடைநீர் அமிழ்தம் செந்தமிழ் என்றதும் சிலிர்த்தது உணர்வே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.125, 1978 107. குறள் படித்தேன் குறள் படித்தேன் குறள்படித்தேன் குணமடைந்தேன் நான் - தூய குருதி கொண்டேன் நான் - உயிர் உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள்படித்தேன் குறைக ளைந்தேன் நான் - மனக் கொழுமை கொண்டேன் நான் - உயிர்ச் செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன் இன்பம் படித்தேன் - அறி வின்பம் குடித்தேன் - உலகத் துன்பம் துடைத்தேன்! திறம் படைத்தேன் உரம் படைத்தேன் திருக்குற ளாலே - முப்பால் தருங்குற ளாலே - உலகு ஒழுங்குற லாலே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.74, 1978 108. அம்மா! அம்மா! அம்மாஉன்றன் கைவளையாய் ஆகமாட் டேனா? அலுங்கிக் குலுங்கி நடக்கையிலே பாட மாட்டேனா? செம்மாதுளை சிரிப்பதுபோல் சிரித்தெனைப் பார்ப்பாய், செல்வமகனே என்றெனைநீ மகிழ்வுடன் சேர்ப்பாய்! அம்மா உன்றன் காதணியாய் ஆகமாட் டேனா? அசைந்தசைந்து கதைகளினைச் சொல்லமாட் டேனா? சும்மாஇரு என்றெனைநீ சொல்லிடு வாயா? துயில்கையிலும் கனவுலகில் சொல்லச்சொல் வாயா? அம்மா உன்றன் நெற்றிப்பொட்டாய் ஆகமாட் டேனா? அழ கொளியாய் நெற்றிவானில் மிலுங்க மாட்டேனா? இம்மா நிலத்தில் என்மகனே குங்குமம் என்பாய் எழிற்கண்ணாடி பார்த்துப்பார்த்து இருத்தினை அன்பாய்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.77, 1978 109. தாயும் குழந்தையும் குழந்தை : என்னைப் பெற்றது யாரம்மா? தாய் : அன்பிணைப்பு தானம்மா! குழந்தை : சின்னக் கைகள் கால்களும் செழித்து வளர்ந்த தெப்படி? தாய் : என்றன் குருதி தன்னையே இணைக்கும் கொடியால் பெற்றனை. குழந்தை : கண்ணில் ஒளியை எப்படி காணு மாறு செய்தனை? தாய் : உண்மை யான உள்ளொளி உன்றன் தந்தை பெற்றதால். குழந்தை : நல்லுடம்பு பெற்றதும் நான் அறியச் சொல்லம்மா! தாய் : நல்லொழுக்கம் வாழ்விலே நாங்கள் பெற்றதாலம்மா! குழந்தை : அரிய செய்தி யாவையும் அறிகிறேன் நான் எப்படி! தாய் : பெரியார் பேச்சு பற்பல பேறு காலம் கேட்டதால்! குழந்தை : பெறுதற் கரிய பேரினைப் பெற்றேன் என்றார் ஊரினர்? தாய் : குறளைக் கற்ற தந்தையார் கூட்டுறவினால் அம்மா? குழந்தை : வாய்மொழிகள் ஒவ்வொன்றும் மணந்தினித்தல் ஏனம்மா? தாய் : தாய்மொழி நம் தமிழ்மொழி தலை மலைத்தேன் அல்லவா! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.68, 1978 110. தமிழ்த் தொண்டு வயதிருபத் தைந்தினில்நான் காரைக்கால் நகரில் வண்தமிழால் ஏடெழுதி வெளிப்படுத்தும் நாளில் வெயில்நிகர்த்த முகமுடையான் இளங்காளை ஒருவன் மெல்லஎனை வந்தடுத்தான்; சின்னாளின் பின்னர்த் துயில்களைந்தேன்; உணர்வுற்றென் தமிழர்க்கு நானும் தொண்டுசெய எண்ணுகிறேன் என்றுரைத்தான்; தம்பி முயல்கின்றார் நல்லறிஞர் நம்நாட்டை மீட்க முடிந்தவரை தொண்டாற்றப் போஎன்றேன் சென்றான். ஒருமுப்ப தாண்டுக்குப் பின்னொருநாள் அவனை ஒளியிழந்த முகம்சிறிது வெளுத்ததலை ஓயா திருமுகனைவு பேச்சோடு கண்டுமனம் நொந்தேன்; ஏதேனும் பணம்?என்றான், பிள்ளைகள்எத் தனைபேர் இருக்கின்றார் எனக்கேட்டேன். பணமில்லை என்றான். எங்குள்ளார் பெற்றவர்கள் எனக்கேட்டேன்; என்னை இரக்கமெனும் பெருங்கடலில் தள்ளினான். உற்றார் எவருமே நினைவில்லை என்பதையும் சொன்னான். வீடுதமிழ் நாடுதான்! தமிழரெலாம் கிளைஞர் விண்தட்டி மேலெழுந்த மண்படுக்கை யாகும்; வாடுபசி நேரத்தில் எவரேனும் ஒருவர் வா, என்றாற் சாப்பாடு! காதலெலாம் என்றன் நாடுநலம் பெறும்வண்ணம் நான்சிறிது பேசல்! நாலுபேர் என்பேச்சுக் கிணங்குவதே இன்பம்! ஈடுபட்ட நாள்முழுதும் இப்படியே! ஐயா இன்றுநான் செயத்தக்க தென்னவென்று கேட்டான். தமிழ்நாட்டின் அதிகாரம் தமிழனிடம் இல்லை. தமிழ்உயர்ந்தால் தமிழ்நாட்டின் நிலைஉயரும் அப்பா தமிழ்நாட்டில் தமிழன்நிலை எத்துறைநோக் கிடினும் தலைகுனியத் தக்கதுவாம் எவர்அறியார் இதனை! நமக்கெல்லாம் நாட்டுரிமை வந்ததென்கின் றார்கள்; நமைவீழ்த்த நமக்குரிமை என்பததன் பொருளாம்! தமிழ்த்தொண்டு தொடங்கென்றேன்! பணம்எடுத்தேன் வாங்கத் தான்மறந்தான்; தமிழ்தாழ்ந்த தேன்எனப்ப றந்தான்! - நாள்மலர்கள், ப.111, 1978 111. தமிழர் அறிக்கை கட்டாயத் தமிழ்க்கல்விக் கழகம் யாண்டும் கவினுறவே தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் தட்டாமே அரசியலின் துறைகள் யாவும் தமிழ்ப்பேச்சால் தமிழ்எழுத்தால் நடத்தல் வேண்டும். பட்டோம்இந் நாள்வரைக்கும்! தமிழர் ஒன்று பட்டவுள்ளம் விடுத்திட்ட அறிக்கை இஃது கொட்டினோம் தமிழ்முரசு! நாட்டை ஆள்வோர் குறைமுடிக்க! இல்லையெனில் புரட்சி தோன்றும். தமிழ்நாட்டில் துறைதோறும் தமிழ ருக்கே தலைமைஇருந் திடவேண்டும். தமிழர் நாட்டில் தமிழர்களாற் குழுஅமைத்துச் சட்ட திட்டம் தமக்கான முறையினிலே அமைக்கச் சொல்லி, அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்! ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது! தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால் சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை! திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர், திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே! அரியதமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே அன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும், உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை! ஒன்றுபட்டோம், சாதியில்லை; சமய மில்லை; குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம் கூறுகவா யேஇன்றேல் புரட்சி தோன்றும். - நாள்மலர்கள், ப.76, 1978; தமிழ்முரசு, 1946 112. பிரதிநிதித்துவம் - படிவம் ஆதியில் வந்த வடமொழி அதனில் அழகிய பிரதி நிதி எனும் சொற்கே ஓதுக தமிழ்ப்பெயர் என்றான் பார்ப்பான். ஓதாப் பார்ப்பான் பேதமை தீரப், பாதியில் வந்த வடமொழி யாளர் படிவம் என்பதை அவ்வாறு பகர்ந்தனர். நீதெளி என்றே நிகழ்த்திய அளவில் நின்றான் சென்றான் மறுநாள் வந்தான். வேதம் சொன்ன வடமொழி முதலா? வெறுந்தமிழ் - முதலா? என்றான் பார்ப்பான். ஓது மறைக்குமுன் உயர்தமிழ் நான்மறை ஓதிய மொழியே முதலெனச் சொன்னேன். கீதை தந்த வடமொழி பெரிதென்றான், கிடைக்கரும் திருக்குறள் அதற்பெரி தென்றேன். ஏதிது நம்திரை கிழிந்த தென்றே ஏகினான் பின்னர்த் திரும்பவே யில்லையே! - நாள்மலர்கள், ப.90,1978; குயில், 15.9.1959 குறிப்பு : படி என்றதை வடவர், பிரதி என்றனர். வடவர் படிவம் என்றதை அவர்கள் பிரதித்துவம் என்றனர். பிரதிநிதிகள் என்பதைப் படிவத்தார் எனல் வேண்டும். 113. கன்னடம் பணிய வேண்டும் அகவல் கன்னடர் தம்மூர்க் கவின்விழா வுக்கே இன்னிசை பாட எம்.எ.சுப்பு இலக்குமி தன்னை இட்டுக் கொண்டு போயினர். கச்சேரி தொடங்கும் போது நாயினம் நடுவில் குலைப்பது போலக் கன்னடர் ஒருபால் கூடி என்னமாய்த் தமிழ்மகள் இங்குத் தலைகாட்டினாள் என்று கூச்ச லிட்டனர்; ஆச்சா போச்சா என்றனர் - தமிழை எதிர்த்தனர். தமிழரை இழிவு செய்து பேசினர். பழிபல கூறினர், தம்முயர்வு கூறித் துடித்தனர். உலகு புகழ் வாய்ப்பாட்டுத் தலைவிமேல் வெறுப்புக் காட்டினர், கறுப்புக் கொடியும் காட்டினர். தங்கள் கீழ்மை காட்டினர். நான்கு கோடி நற்றமிழ் வீரர் உடன் பிறந்த ஒருகலைச் செல்வி தலைகு னிந்து தமிழகம் திரும்பினாள். கன்னடர் அயலர் என்றுநாம் என்றும் கருதிய தில்லை. கன்னடர் தமிழகத்தில் வாழ்வதை மறுத்த தில்லை. அவர்கள் தாழ்வு பெரும்வகை தாக்கிய தில்லை. மதிப்புக் கொடுக்க மறுத்ததும் இல்லை தமிழகச் செல்வம் தக்கபடி திரட்டினர். எதிர்த்த தில்லை. இத்தமி ழகத்தின் கண்ணிகர் ஒருமகள் - ஒருநாள் கன்னடம் சென்று புகழைச் சேர்த்ததை அவர்கள் பொறுக்க வில்லை நாம்இதைப் பொறுப்பதா? கன்னடர் புரிந்த இந்தக் குற்றம் சின்ன தென்று செப்புதற் கில்லை. அவர்கள் தமிழரைத் தாழ்வு படுத்தினர், இந்நாள் அவர்களின் இச்செய லுக்குக் காரணம் எதுவெனக் கருத வேண்டும். தமிழர்கள் தமிழகம் பிரிதல் வேண்டும் என்று கூறு கின்றனர். எனவே தமிழக அண்டைப் பகுதிகள் தம்பால் நண்பு கொள்வதை நாடினர் தமிழர்! இன்றைய ஆட்சி யாளர் இதனை வெட்ட நினைப்பதில் வியப்பே இல்லை. கன்னடர் இன்று காட்டிய கையிருப்பு ஆட்சி யாளரின் தூண்டலின் விளைவே. நாமிதை விட்டு வைத்தல் நல்லதா? கன்னடர் பணிவு காட்டும் வரைக்கும் மூளட்டும் அறப்போர்! தமிழே ஆளட்டும் நாவலந் தீவனைத் தையுமே! - நாள் மலர்கள், ப.38, 1978; குயில், 15.5.1962 114. குறள் மலர் திராவிட நாட்டுளீர், உங்கள் செயற்கெலாம் அறமே அடிப்படை ஆதல் வேண்டும். அறம்எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள்! செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு! மனமா சறுக்கும் இனிய மருந்து! கசடறக் கற்க; கற்றிலார் அறிஞர்பால் கேட்க! கேட்க! திராவிடம் மீட்க! ஔவையார் அருளிய ஆத்தி சூடியின் ஒருதொடர் தன்னை - ஒன்றுக் கான உரையை - எப்படி ஒருவர் இலேசாய் நினைவில் நிறுத்தி இனிதுரைப் பாரோ, அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர் முப்பால் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளையும் அவற்றிங்குக் கொடுத்த பொருளையும் நினைவில் நிறுத்தி இனிது விளக்குமோர் ஆற்றல் உடையவர். அவர்திருக் குறள்மலர் வழங்கும் நகைச்சுவை, மறச்சுவை! பிறசுவை ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை! அரிசிமா இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப் பாசிப் பயிற்றுமி படைப்பார் அல்லர். அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறள் தேனாற்றி னின்று செம்பில்மொண் டளிப்பவை! குறட்பயன் கொள்ள நம்திருக் குறள்முனி சாமிசொல் கொள்வது போதுமே. - நாள் மலர்கள், ப.98, 1978; குறள் மலர், 9.9.1950 115. நான் பிறந்த உலகம் சிறந்தது! மார் தட்டிய வள்ளுவன் அவ்வுலகம் நல்லதென்றான் ஆரியன்! நான்பிறந்த இவ்வுலகம் நல்லதென்றான் வள்ளுவன் - அவ்வுலகம் மேலே இருப்பதென்றான் ஆரியன் மேலுக்கு மேலே இருப்பதென்றான் வேள். மிக்குள தேவருல கஃதென்றான் ஆரியன். மக்களுல கஃதென்றான் வள்ளுவன் - மக்கள் பெறத்தக்க தவ்வுலகென் றான்ஆரி யன்! சேய் பெறத்தக்க திவ்வுலகென் றான்! அவ்வுலகால் இவ்வுலகம் ஆனதென்றான் ஆரியன்! இவ்வுலகின் ஏட்டுச் சுரைக்காய்தான் - அவ்வுலகம் என்றான்எல் லாம்அறிந்த வள்ளுவன்! ஆரியன் நின்றான் நெடுமூச்சு விட்டு. ஒப்பிடும் ஆரிய நான்மறை ஓதிய அப்படிஎன் சொல்என்றான் ஆரியன் - செப்பியதன் அப்பன் தமிழ்நான் மறையே அறைந்ததைத்தான். செப்பினேன் என்றுரைத்தான் சேய். மருந்தென வேண்டாமே அவ்வுலகில் என்று திருந்தாத ஆரியன் செப்ப - உரைத்தான்சேய் உண்மை அதுவானால் உபேந்திரன் என்னுமோர் மருத்துவன் ஏனோஅங் கு! இரப்பா ரிலாஉலகம் அவ்வுலகம் என்றே உரைத்திட்டான் ஆரியன்! தேவன் - உரைத்தான் இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. - நாள் மலர்கள், ப.104, 1978; குயில், 10.5.1960 116. அமைச்சருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு! நாட்டவரை ஆதரிப்பீர் என்றுரைக்க, நம்அமைச்சர் கேட்டவரை நோக்கியே கேளுங்கள் - நாட்டவரை கூட்டுக்கும் நன்று; குழம்புக்கும் நன்றென்றார் மாட்டுக்கா வாய்க்கும் தமிழ்? நாட்டவரை ஆதரிப்பீர் - நாட்டிலுள்ள மக்களை ஆதரிப்பீர் என்று சிலர் அமைச்சரிடம் சொல்ல, அதற்கு நம் அமைச்சர், அவ்வாறு கேட்டவரை நோக்கி, கேளுங்கள் நாட்டவரை - சீமை அவரை அல்லாத நாட்டு அவரைக் காய் இருக்கிறதே அது, கூட்டுக்கறியாக்கவும் நல்லரே, குழம்பு வைக்கவும் நல்லதே என்றார், இப்படிப்பட்ட மாட்டுக்கு இனிமேலும் தமிழ்வருமா? என்பது இவ் வெண்பாவின் கருத்து. - நாள் மலர்கள், ப.22, 1978; குயில், 22.12.1959 117. பகை ஒழிய வருவாய் அளவி லாவயல் நீர்வள மேவிய விளைவு சேர்தமிழ் நாடதி லேபிடி அரிசி தேடிஐ யோவென ஓடினர் - இதுகாலை இளைய காளைக ளோமனம் வாடினர் மகளி ரோஅறம் மாறினர் நாவலர் இயலி லேஇசை நாடக நூலினில் - உரைகாணார் தெளிவு சேர்தமிழ் நூல் அழி வானது பெரிய வாழ்வினி லேகுறை மேயது திரிவில் வேன்மற வோர்இலை யாயினர் - விரைவாய்நீ ஒளிசெல் நாவினிலே தமிழே! எம துயிரிலே உறைவாய் தமிழே! பகை ஒழிய வேவரு வாய்தமிழே! எமை - உடையாரே! - பாரதிதாசன் வண்ணப் பாடல்கள், ப.27, 1995 118. மின்னும் தமிழ் பின்னும் திரும்பாதீர் - பழம்பீடை இருள்நடையில் தமிழ் வளர்ப்பவரே - நல்ல தவங் கிடப்பவரே - தமிழ் அமுதமென்றும் இனியதென்றும் சொல்லி அகமகிழ்வோரே, கமழும் நல்வீரத் - தமிழ்க் கவி புனைவோரே - மிகு சுமைபெறப் பழந்தமிழ் நெடுங்கதை சொல்ல வருபவரே உமக்கொரு சேதி - தனை உரைத்தல் என்ஆவல் - இனித் தமிழ்படித்திடும் தமிழரின் தொகை தனை வளர்த்திடுவீர். அமைத்திட வாரீர் - தமிழ் அரங்கினைப் பெரிதாய் - நீர் அமைத்த திக்கணம் மறுகணம் கவி அகிலம் ஏறவைப்பீர் சின்ன மொழிகளிலே - புவி தின்னும் சுவையளிப்பீர் - தமிழ் இன்னும் பெருக்கி மற்றின்னம் பெருக்கிமற் றெங்கும் கவிவளர்ப்பீர் பின்னும் திரும்பாதீர் - பழம் பீடை இருள்நடையில்! - நல்ல கன்னலை ஒத்த கருத்துக் களுக்குக் கறுப்புடை போர்த்தாதீர். உன்னுந் தமிழர்களின் - உயிர் உள்ளத்தும் ஆவியிலும் - எங்கும் சன்னத்தமாம் தமிழ் தத்தம் மதங்களில் தள்ள நினைக்காதீர் - பழம் புதுப் பாடல்கள், ப.131, 2005; மணிக்கொடி, 3.12.1933 119. அது நம்மை ஒன்று படுத்தும் சமயத்தால் பிரிவுற்றோம்! சாதியினால் பிரிவுற்றோம்! சடங்கு, மற்றும் சாற்றரிய பழக்கவழக் கங்களினாற் பிரிவுற்றோம்! கொடுத்தல் கொள்ளல் தமில்முற்றும் பிரிவுற்றோம்! அரசியலாற் பிரிவுற்றோம்! வருவாய் தன்னில் தாழ்வுயர்வாற் பிரிவுற்றோம்! சலுகையினாற் பிரிவுற்றோம் எனினும், இந்நாள் நமையெல்லாம் ஒன்றாக்கிப் புத்துணர்வை உண்டாக்கி நலம்செய் தற்கு நாமொன்று பெற்றுள்ளோம் தமிழ் அதனை உயிரென்று நாளும் காப்போம் அமிழ்தொத்த புதுநூற்கள் பொதுநூற்கள் ஆகுமா றந்தமிழ்க்கே அன்றன்று நூறுநூ றென்றுதோன் றுதல்வேண்டும் அறிஞ ராலே! - பழம் புதுப் பாடல்கள், ப.227, 2005; கவிதா மண்டலம், மே 2001.ப.2 குறிப்பு : புதுவை பி. சுந்தரவேலு ஆசிரியராக இருந்து நடத்திய, வெண்ணிலா 27.04.1945 இதழில் இடம்பெற்ற இப் பாடல், மே 2001 கவிதாமண்டலம் இதழில் திரு. தி.வ. மெய்கண்டார் மறுவெளியீடு பெற்றுள்ளது. இதழில் தலைப்பையடுத்துக் கவிஞரின் பெயர் கனகசுப்புரத்தினம் பாரதிதாசன் எனக் குறிக்கப்பட்டுள்ளது. 120. செந்தமிழ் மீட்போம் தேனருவி யான தமிழ் ஏன்பருக வேண்டும் மென்றே ஊனருவி யாக இந்தி தான்பருக வேண்டு மென்றார் மானமின்றி வாழ்வ துண்டோ ஈனர்காலில் வீழ்வ துண்டோ வானிடிந்து வீழ்ந்திடினும் ஆனதமிழ் காத்திடுவோம் தாய்முலைப்பால் நீக்கிஇந்தி நாய்முலைப்பால் கொள்வதுண்டோ? தூயகனிச் சாறிருக்கக் காய்புளிக்கத் தின்பதுண்டோ? வாய்மணக்கும் தமிழிருக்க நோய்அழைக்க ஒப்புவதோ? மாய்வதொன்று வெல்வதொன்று தாய்மொழியை மீட்டிடுவோம் செந்தமிழின் நன்செயிலே இந்திக்கடா மேய்ப்பதற்கே வந்துவிட்ட துரிமைஎன்றார் தொந்திவட நாட்டினர்கள் நிந்தைபட வாழ்வதுண்டோ? tªjïl® jh§FtJ©nlh?1 இந்திஆட்சி யைமுறிப்போம் செந்தமிழை மீட்டிடுவோம். - பழம் புதுப் பாடல்கள், 229, 2005; ராணி, 2.12.1990 குறிப்பு : இலங்கையில் 1964வரை இருந்தவரும் அங்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவராகப் பணியாற்றியவரு மான தூத்துக்குடி மாவட்ட நாரைக்கிணறு என்னும் ஊரைச் சார்ந்த சு.கா. சுந்தரராசனுக்கு 4.8.1947இல் பாரதிதாசன் எழுதிய தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பிய கவிதையே இது. கவிதையொடு கடிதச் செய்தியும் இதழில் இடம்பெற்றுள்ளன. 1. ஓசைச் சீர்மையின்மை 121. தமிழ் நலம் சமையல் அளிக்கும் அறை அமுதளித்தாலும் அது தமிழ் அளிக்கும் பள்ளிக்கு - நிகராமா? - தம்பி, இமைப்பொழு தேனும் அதைச் சுவைக்க மறுப்பதுவும் - சரியாமா? ஏட்டினில் ஔவைமூ தாட்டி அளித்தசெல்வம் இந்த உலகம் பெறும் - மறந்தனையா? தம்பி, பாட்டில் பழந்தமிழும் பாரில் தமிழகமும் - உயர்ந்தனவாம். வார்ந்த தமிழமூ வேந்தர் தமதுபுகழ் வாய்ந்த புறப்பொருளைக் காணாயோ! தம்பி, ஆர்ந்த தமிழ்ப்புலவர் அகப்பொருள் கண்டுநலம் - பூணாயோ! சொல்லால் குயில்பயிற்றும் தோகையர் இல்லறத்தால் கல்லா உலகுக்குக்கண் - ஈந்தாரே தம்பி, வல்லது தம் மொழிதான் என்றவரும் தமிழிற் - சேர்ந்தாரே படிப்பு நிரம்பா நாட்டில் பள்ளிக் கணக்காயரைத் துடிக்கச் செய்தாரை இனிக் - கிளியே - எவர் சும்மா விடுவாரடி? படிப்போரின் பெற்றவர்கள் பள்ளிக் கணக்காயரைக் கெடுத்திட எண்ணாரடி - கிளியே - இக் கேட்டினை ஒப்பாரடி! - பழம் புதுப் பாடல்கள், ப.233, 2005; குயில், 1.10.1947 குறிப்பு : இறுதி இரண்டு கண்ணிகளும் முந்தையவற்றிலிருந்து வேறுபட்டு விட்டிசைக்கின்றன. 122. சாதி மறுப்பு பார்ப்பனர்மே லானவரோ? பாரிலுள்ளோர் தாழ்ந்தவரோ? தீர்ப்பறிய வேண்டின்நீ தேவர்குறள் - பார்ப்பாய்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால். - பழம் புதுப் பாடல்கள், ப.227; குயில், 8.6.1958 123. மதமறுப்பு சமையக் கணக்கர்கள் சாற்றுவன கேளேல் அமைவுதனை வேண்டின்நீ தேவர் - தமிழைப்பார் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். - பழம் புதுப் பாடல்கள், ப.277, 2005; குயில், 17.6.1958 124. வடமொழியில் சிபாரிசா? தமிழ் தந்த சிவனார்க்கு வடமொழியில் சிபாரிசா சாற்றாய் என்று தமிழறிகுன் றக்குடிகளார் ஒருசொல்லால் ஒரு சாட்டை தருதல் கேட்டுச் சிமிட்டாவைத் தூக்கியே ஓடிவந்தார் பார்ப்பனர்கள் *சிறைப்ப தற்கே அமைவாகச் சங்கரரும் தூக்கிவந்தார் அடைப்பத்தை அடங்கார் யாரோ? - பழம் புதுப் பாடல்கள், ப.286, 2005; குயில், 12.8.1958 *சிரைப்பதற்கே என இருத்தல்வேண்டும் 125. இராசாசி தமிழ் படித்தால் வாராத வெண்பாவும் வரும் வேண்டியா நந்த விகடன் வெளியிட்டான் தாண்டியாச் சாரிதந்த தப்புவெண்பா ஈண்டே இவாள்தவறி னாலும் அவாள்திருத்த லாமே? அவாளுக்கி வாள்எழுந்துண் பாள். இராசாசி தப்பு வெண்பா மூதுரைவேல் தூக்கி மொழிப்போரில் முன்சென்று சூதுரைகள் அத்தனையும் தோற்கடித்து - தீதறவே நாமடைந்த ஆங்கிலமே நன்மருந்து எனஓதி நாடறிய ஔவையின்சொல் நாட்டு. - பழம் புதுப் பாடல்கள், ப.291, 2005; குயில், 2.9.1958 தோற்கடித்து + தீது = இடையில் த் வரவேண்டும். நன்மருந்து என ஓதி, இதில் புணர்ச்சிப் பிழையும், தொடைப் பிழையும் ஆயின. மூன்றாமடியின் நாமடைந்த என்பதற்கு நான்காமடியின் 1நாடறிந்த என்பது எதுகைப் பிழையாயிற்று. 1. நாடறிய என இருத்தல் வேண்டும். 126. இராசாராம் அடங்க வேண்டும் இராசா ராம்எனும் காங்கிர சிறைவர் கீழ்வரு மாறு கிளத்தி னாராம்: நேருவைச் செருப்பால் அடித்த பேரெலாம் மனிதரா? என்று கேட்ட மனிதரை நாம்கேட் கின்றோம்: நம்மரும் தமிழர் தலைவரை இகழ்ந்தவன் மனிதன் தானா? காங்கிர சிறைவர் கருதுக! தீங்கரசு செல்க. செந்தமிழ் மீள்கவே! - பழம் புதுப் பாடல்கள், ப.302, 2005; குயில், 30.9.1958 127. திரு முத்தமிழ் அழிக்கும் சட்டர்சிக்குக் கருமுத்துக் கேடயம் கொடுத்தார் திருமுத் தமிழ்வெட்டத் தென்னாடு போந்த சட்டர்சிக்குக் கருமுத் தளித்தனன் கைக்கேடயம்நெடுங் கல்கத்தாவில் தருமத்தைக் கொன்றும் தமிழ்த்தாயைக் கொன்றும் தனையுயர்த்தும் கருமத்தைச் செய்பவன் கைகாரனேனும் கயவனன்றோ. - பழம் புதுப் பாடல்கள், ப.306, 2005; குயில், 7.10.1958 128. இறகு தமிழ்! பேனா ஆங்கிலம் ! எங்க ளூரில் இருப்பவர்கள் இற கென்று சொல்வார் இற கென்றால் மைதொட்டே எழுதுகின்ற இறகு! உங்களூரில் பேனாஎன்றே உளறுவார்கள் வீணாய் உன் தமிழ்தான் இருக்கையிலே ஆங்கிலப் பேர் ஏனோ! என்னிடத்தி லே, மையூற் றிறகும் உண்டு பாராய் எடுத்தவுடன் மைதொடாமல் எழுதலாமே சீராய்! முன்னெல்லாம் வாத்திறகால் எழுதிக்கொண்டி ருந்தார் பின்னால் தான் இரும் பிறகும் இந்த மையூற் றிறகும்! நாம் தமிழர்! நம்பொருளை நம் தமிழால் சொல்வோம் நாம் தமிழர்! எப்போதும் நம் தமிழே கற்போம்! காம்பினிலே கண்ணெதிரே கைக்கெட்டும் நல்ல மாம்பழம் இருக்கையிலே வேப்பம்பழம் ஏனோ? - பழம் புதுப் பாடல்கள், ப.315, 2005; குயில், 11.11.1958 129. பொன்னேட்டில் புதுப்பாட்டு பழந்தமிழ்க் குடிகள் வழிவந்த நாமே பச்சைத் தமிழர்கள்! நமதிந்த நாடு - நல் உழுந்தள வேனும் நமைப்பிறர் ஆள உரிமையே இல்லை என்றுநீ பாடு! எழுந்த நம் எண்ணம் செந்தீ வெள்ளம்! எதிர்ப்பில்லை என்று பாடொரு பாட்டு - நாம் இழந்தன பலப்பல! ஆயினும் தமிழ்மறம் இழக்கிலோம் என்றே இலக்கியம் காட்டு! குமரியும் இமயமும் குரைகடன் இரண்டும் உள்ளிட்ட தான தமிழகம் இன்று - சிறு சிமிழா யிடினும் புலவனேபாடு செந்தமிழ் மக்கள் சிறுத்தைகள் என்று! பொய்மை வென்றது புரட்டுகள் வென்றன என்றன தொலைந்தன பார் இப்பொழுது - நன் மெய்ம்மை வென்றதே வீரம் வென்றதே என்று நீ கவிஞனே பொன்னேட்டில் எழுது! மதவலை அறுத்தோம் சாதிநஞ் சுமிழ்ந்தோம் வடக்கர் இடக்கரின் போக்கையும் கண்டோம் - நாம் புதுக்கிய விடுதலை மணிக்கொடி ஏற்றிப் புலவரின் செந்தமிழ்க் கவியவமு துண்டோம்! - பழம் புதுப் பாடல்கள், ப.316, 2005; குயில், 18.11.1958 130. என் விலங்கை மாற்று என் மகனே என்ற கண்ணி மண்கலங்க வீரத்தால் வாழ்ந்தேன் எனைஇன்று கண்கலங்க வைத்ததுவும் காணாயோ என்மகனே திண்ணைச் சிறுகதையும் தேர்தலிலே ஆசையும்என் அண்ணாந்தாள் தன்னை அகற்றிடுமோ என்மகனே தமிழை அழிக்கின்றான் தில்லியான் நீஉன் அமிழ்தை இழந்திட்டால் ஆவியுண்டோ என்மகனே உமிழத் தகும்இந்தி உன்றனுக்கா? ஞாலம் கமழத் தகும்தமிழ்க்கும் கைவிலங்கா என்மகனே இன்றுபட்ட இன்னல்கள் என்றுபட்டேன் என்தமிழர் ஒன்றுபட்டால் அன்றோ உயிர்வாழ்வேன் என்மகனே குன்றின் விளக்குநான் குத்தரிசிக் கேதில்லி முன்னிலிற் கைஏந்த முற்பட்டேன் என்மகனே தமிழ்நாட்டைச் சென்னைஎன்று சாற்றி, எவர்க்கும் அமையப் பொதுமகள்போல் ஆக்கினார் என்மகனே தமிழ்நாட்டில் மற்ற இனங்கள் கலைகள் தமைஉயர்த்தி யேஎன்னைச் சாகடித்தார் என்மகனே. தமிழ்தமிழர் தொன்மை தனிமேன்மை மாற்றி அமைக்கும் வரலாற்றை ஆர்பொறுப்பார் என்மகனே தமர்வாழச் சாதிவைத்துச் சட்டம் இட்ட மக்கள் சமநிலைமை தோன்றுமா சாற்றுவாய் என்மகனே மலையாளம் என்உடம்பே; மற்றதனை வெட்டிக் கொலைகாரர் என்பகையாய்க் கொண்டுவந்தார் என்மகனே; பலியானார் ஆந்திரரும் தில்லிப் பகைக்கே எலியானார் என்பகைவர் ஆனாரே என்மகனே என்அடங்கற் பொன்னுடலே என்னை இழப்பதுண்டோ கன்னடத்தைப் புய்த்த கதையறிவாய் என்மகனே என்விலங்கை மாற்றி வடக்கர் இடர்மாற்றி உன்விளங்காச் சீர்த்தியினை ஓங்கவைப்பாய் என்மகனே! - பழம் புதுப் பாடல்கள், 2005; குயில், 16.6.1959 131. சுண்டல் காரணப்பெயர் சூட்ட டுப்பில் ஒருபா னைக்குள் வார்த்த நீரில் ஒருபடி கடலை போட்டெ ரித்தால் பொங்கிய நீரும் சுண்ட இறக்கி தாளித் திடுவார் சுண்டல் என்பார் அதன்பெயர் உண்டால் உண்ண உண்ணத் தெவிட்டாதே. - பழம் புதுப் பாடல்கள், 378, 2005; குயில், 7.10.1958 132. தமிழ் போனால் மேடைத் தம்பிரான் பாடைத்தம்பிரான் தமிழ்நாட்டில் இன்பத் தமிழ்ச்சீர் குலைந்தால் தமிழர் இரார்! தமிழ்நா டேது? - நமையாள மேடைமேல் வீற்றிருப்பார் தம்பிரான் கைலாயப் பாடைமேல் வீற்றிருப்பார் பார்! - பழம் புதுப் பாடல்கள், ப.380, 2005; குயில், 22.12.1959 133. தலைவி விழுந்து விழுந்து சிரித்தாள் அகவல் எனையும் விட்டுத் தனியே இருந்தநீ கனியுதடு கண்ணாடிக் கன்னம் துடியிடை குலுங்கக் குலுங்கச் சிரித்தனை கோதையே எதைநீ நினைத்தாய்! என்றாள் தோழி தமிழக ஆட்சி தம்ம தென்னும் அமைச்சரும் விளக்கெண்ணெய் ஆண்டவன் தானும் செந்தமி ழகத்தைச் சென்னை அரசென்று கிளத்திய தென்ன என்று கேட்கத் தில்லி அப்படிச் செய்ததென் றார்என எழுந்து சொல்லிய தலைவி விழுந்து விழுந்து சிரித்தனள் மேலுமே. - பழம் புதுப் பாடல்கள், ப.382, 2005; குயில், 21.6.1960 134. பாரதிதாசன் திருக்குறள் சமையத்தார்க் கஞ்சற்க தன்மையொடு வீரம் அமைதி அறிவின் பயன். - குயில், 14. 6. 1960 ஒருவன் புகழ்வான் ஒருவன் இகழ்வான் இரண்டுக்கும் அப்பால் இரு. - பழம் புதுப் பாடல்கள், ப.382, 2005; குயில், 21.6 .1960 இடைச்செருகல் வள்ளுவரில் இல்லை படைத்த - தமிழ் யாவினும் உண்டென்பேன் யான். - குயில், 28. 6. 1960 தானும் உயிர்களும் வாழ்கஎனும் தன்மையே தானம் எனும்நற் றமிழ். - பழம் புதுப் பாடல்கள், ப.384, 2005; குயில், 5.7.1960 எந்நற் பொருள்கட்கும் ஏங்கா தொருவனுடன் மன்னலே ஆகும் மனம். - குயில், 12. 7. 1960 தி.மு.கழக உறுப்பினர்க்கு! கழக உறுப்பினர் கண்திறக்க! இன்றேல் அழநேரும் மானம் அழிந்து - குயில், 2. 8. 1960 தமிழ்நாடு முறைசெய்யும் நம்பெரியார் கீழ்அறுப் பானைச் சிறைசெய்யும் செந்தமிழ் நாடு. - குயில், 2. 8.1960 இருந்தாள் இருக்கின்றாள் என்றும் இருப்பாள் வருந்தாள் மறத்தமிழ்த் தாய். - பழம் புதுப் பாடல்கள், ப.388, 2005; குயில், 9.8.1960 அவன்செய லாலவன் செல்வம் அடைந்தான்! எவன்செயலால் ஏந்துகன்றான் கை. - குயில், 16. 8. 1960 135. கிழக்குச் சுவருக்கு அப்பால் தமிழ்விளக்கு வான்கடல் தொட்ட கிழக்கு மதிற்சுவர்! யானும் தமிழும் இப்புறந் தன்னில் தங்கிக் கிடப்பதா என்றேன் சிங்கைத் தமிழ்விளக்குத் தெரிந்ததப் புறத்தே. - பழம் புதுப் பாடல்கள், 2005; குயில், 21.6.1960 136. மன்ற உறுப்பினர்க்கு நன்றியும் மற்றவர்க்கு வேண்டுகோளும்! கட்டளைக் கலித்துறை பாடி வருங்குயில் ஏடு நடத்தினர், பண்புடனே கூடி அனைத்துல கத்தமிழ்ப் பாவலர்! கொள்கைவெல்லல் நாடி, அளித்தனர் நன்கொடை! அப்படி மற்றவரும் கோடியும் அல்ல; தமிழ்காக்கக் கொஞ்சம் உதவுகவே. - பழம் புதுப் பாடல்கள் 2005; குயில், 1.7.1962 137. எந்தநாள் திருநாள்? தமிழரெலாம் ஒன்றாய்த் தமிழ்காக்கும் நன்னாள் தமிழர் திருநாள் அதனைச் - சமைத்திடுவோம்! இந்திக் களையால் தமிழ்ப்பயிர் ஏறாது செந்தமிழ் வாழ்க செழித்து. திருவாக்க வேண்டுமெனில் செந்தமிழ் மாண்பை உருவாக்க வேண்டும் உடனே! - தெருவுக்குள் இந்தியைச் சேர்த்தலும் இல்லங் களிலெல்லாம் செந்தீயைச் சேர்த்தலும் ஒன்று. சிவம்சேர்க்க வேண்டுமெனில் செந்தமிழைக் காக்கத் தவம்சேர்க்க வேண்டும் தமிழர் - எவரும்! திருநாளெல் லாம்திருநாள் செந்தமிழை மீட்கும் பெருநாள் அடையப் பெறின். திருமாலும் செந்தமிழின் உள்உள்ளான்; இந்தி வருதலும் மாய்த்தலும் இன்றிப் - பெருநாட்டார் மீட்சி தமிழுக்கு வேண்டுமென ஒன்றுபட்டால் ஆட்சி தமிழுக்கே ஆம்! நமைச்சார்ந்து நம்மால் சிறந்து விளங்கும் அமைச்சரும் ஆள்வோரும் என்றும் - தமிழ்த்தாயைக் காக்கக் கருதிலர்; பூங்காவில் வெள்ளாட்டை மேய்க்க விரும்புகின் றார். சிறைதோறும் மாற்றார் செறிந்திருந்த நாட்டின் துறைதோறும் இந்தி தொடரும் - குறைகண்டும் கட்சிபல கண்டு கவிழ்கின்றார்; செந்தமிழ்க் கட்சிஒன் றில்லாமை கண்டு. வேண்டுமா இந்திநஞ்சு? வேண்டுமா ஆங்கிலம்? வேண்டுமா இந்த விழற்காடு? - வேண்டுமெனில், வெந்தமட்டும் போதாதா? வெந்த தமிழர்க்குத் தந்தமட்டும் போதும் தழும்பு. ஆண்டார் இனமொழியை மற்றவர்க்கும் ஆக்கஎண்ணும் காண்டா மிருகத்தைக் கண்டதுண்டா - யாண்டேனும் ஒன்றுபடா நாடுபற்றி ஒன்றா நினைப்பார்கள்? கொன்றிடவும் எண்ணக்கூ டும். காசுக் கொருபாடு! கன்னிக் கொருமுத்தம்! ஈசர்க்குப் பூசை இயற்றுவதாய்ப் - பேசியே ஒன்றாகக் கட்சிகள், ஓங்கு தமிழாணை! நன்றாத லின்றிக் கெடும் ஏகஇந்தி யாஎன்றே எம்தமிழை மாய்க்கவந்தால் சாகஇந்தி யாவென்றே சாற்றிடுவோம் - போகஇந்தி எங்கள் தமிழகத்தை எங்கள் தமிழ்ஆள்க! சிங்கங்கள் செப்பினர்இவ் வாறு. - பழம் புதுப் பாடல்கள், 2005; தமிழ்நாடு, தீபாவளி மலர், 15.11.1963 138. கவிஞர்கள் தேவை! செந்தமிழ்க் கவிஞர் தேவைஇந் நாட்டில் எலியுள் ளத்தில் புலியுள்ளம் சேர்க்கக் கணக்கிலாக் கவிஞர்கள் கட்டாயந் தேவை தூங்கும் தமிழர் சுருக்கென விழிக்க ஈங்குக் கவிஞர்கள் எண்ணிலார் தேவை தமிழைத் தமிழரைத் தமிழ கத்தைத் தமக்கென்று குதிக்கும் சழக்கரை ஒழிக்கச் சிங்கத் தமிழரைச் செய்பவர் கவிஞரே! ஆக்கலும் அழித்தலும் காத்தலும் செந்தமிழ் மாக்கவி ஞர்க்கலால் மற்றவர்க் கியலுமோ? ஒற்றுமை பாடி உயர்உல கொன்றை அற்றைநாள் ஆக்கினும் ஆக்குவர் கவிஞர் வேற்றுமை மதம்பல விளைத்து மக்களைக் காற்றில் துரும்பெனக் காட்டினும் காட்டுவர். பல்கலைக் கழகம் இரண்டுபார்க் கின்றோம் நல்ல தலைமை இல்லவே இல்லை ஆங்கி லத்தின் அழகு கங் காணிகள்! தீங்கி ழைப்பவர் செந்தமி ழுக்கே! செந்தமிழ்க் கவிஞர் செத்தால் மகிழ்வர்! சொந்தத் தாயைத் தூக்கில் இடுபவர்! தலைமையை மாற்ற நிலையுயர்த் திடுக! கவிஞர் தோன்றிடக் கடுந்தவம் புரிவோம்! உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன அவற்றின் அயர்நிலை நீங்க வேண்டும்; அந்தமிழ்க் கவிஞரைப் படைக்கும் கருத்து வேண்டும். எல்லாப் பள்ளியும் இன்பத் தமிழைக் கல்லார் இலைஎன்று காட்ட வேண்டும். செல்வர்கள் கவிஞர் செய்யும் நூற்களை வெளியிட வேண்டும் அவ்வப் போதே அவர்கள் அடைந்துள செல்வம் அனைத்தும் பைந்தமிழ் வளர்க்கப் பயன்பட வேண்டும்! ஈத்து வக்கும் இன்பம் பெரிதென எண்ணிச் செயல்செய வேண்டும் செல்வர்! ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லான்1 பொன்றாது நிற்பதொன் றில்லெனப் புகல்வோம். எல்லா ஊரும் திருவா ரூத்தேர் இழுத்து நிலையில் நிறுத்துதல் போலத் தமிழர் எல்லாம் சரிநிகர் ஒன்றாய்த் தமிழரின் தொல்சீர்த் தங்கத் தேரை உளமெலாம் உற்றிடச் செய்தல் வேண்டும்! தமிழைத் தமிழனே மறந்தநாள் இந்நாள்! தமிழரின் தொல்சீர் சாகும் வண்ணம் எதிரிகள் தவங்கள் இயற்றுநாள் இந்நாள்! தெற்கி லுள்ள சீரலை வாய்க்குத் தெற்கில் ஏழ்மதுரை ஏழ்தெங்கம் என்ன நாற்பத் தொன்பது நாடுகள் இருந்தன. அவைகள் கடலுள் ஆழ்ந்தன அதனால் அங்கி ருந்த அந்தமிழ்ச் சங்கமும் மறைந்தது; தமிழ்நான் மறையும் மறைந்தன; இந்த உண்மையைக் கவிஞர் எல்லாம் அடிக்கடி நொடிக்குநொடி அந்தமிழ்க் கவிகளால் உலகுக் கெடுத்துக் காட்ட வேண்டும். கொடுங்கடல் கொண்டஅக் குமரிநா டுமுதல் இமையம் வரைக்கும் எங்கள் தமிழகம் என்ற உண்மையைக் கவிஞர் எல்லாம் அடிக்கடி நொடிக்குநொடி அழகுறப் பாடுக! தெலுங்கெனில் வேறு மொழிஎன்று செப்புவர் மலையாள மொழிஎன்று மற்றொன்று கூறுவர் கன்னட மொழிஎன்று ஒன்று கழறுவர் துளுவென ஒன்று சொல்லி யிருந்தனர் இவையெலாம் தமிழே என்ற உண்மையை அடிக்கடி நொடிக்குநொடி அந்தமிழ்க் கவிஞர் எங்கணும் முழக்க மிடுதல் வேண்டும். முந்தாநாள் தோன்றிய சிங்கள மூடர் செந்தமி ழர்தம் சிறிய திட்டைத் தமதென்று சொல்லித் தலைதுள்ளு கின்றனர். குமரி நாட்டின் குளிர்தமிழ் நாட்டின் சிறிய திட்டே அந்தத் திட்டெனக் கவிஞர் எடுத்துக் காட்ட வேண்டும் செந்தமிழ்க் கென்று வந்துள தீமையைத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தடுக்க அஞ்சாது கவிஞர் ஆவன பாடுக - பழம் புதுப் பாடல்கள், 2005; பாரதமுழக்கம், 1.2.1965 குறிப்பு: இறுதிக்காலத்தில் வீறுணர்ச்சி சிறிதும் குன்றாது கவிஞர் வரைந்த இப்பாடல் 29.11.1963 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிப் பாட்டரங்கத் தலைமைக் கவிதையாகப் பாடப்பெற்றது. கவிஞர் மறைந்தபின் பாரத முழக்கம் 1.2.1965 இதழிலும், கவிஞர் த. கோவேந்தன் தொகுத்தளித்த பாவேந்தர் பாரதிதாசன் ஏப்ரல் 1965 நூலிலும் இப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதழில் கவிஞர்கள் தேவை பாவேந்தர் பாரதிதாசனாரின் இறுதி வேண்டுகோள் என்னும் தலைப்பைப் பெற்றிருந்தது. 1. புகழல்லால் அல்லது புகழல்லாற் என இருத்தல் வேண்டும். 139. தமிழன் தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை தூயஎன் தமிழ்மேல் ஆணையிட் டேநான் தோழரே உரைக்கின்றேன். நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான்கண்டும். ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி உழைத்திட நான்தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன் எமை நத்துவா யென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன். தமக்கொரு தீமை என்று நற்றமிழர் எனை அழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என்ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்தஎன் மறவேந்தர் பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர் புலிநிகர் தமிழ் மாந்தர். ஆன என்தமிழர் ஆட்சியை நிறுவ அல்லல்கள் வரின் ஏற்பேன்! ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக் குவப்புடன் நான் சேர்ப்பேன். - இசையமுது, முதற்பகுதி, ப.40, 1944 140. அன்றும் இன்றும் பண்டு தமிழ்ச் சங்கத்தை உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம் விண்டு புகழ்ந்து பாடி இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்! அண்டும் புலவர்க் கெல்லாம் அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே தண்டமிழ் இந்நாள் மட்டும் சாகாமைக்கே அடிப் படை மானே! புலவர் நினைப்பை யெல்லாம் பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி, நலம் செய்தா ரடிமானே நம்தமிழ் வேந்தர் நம்மை மேலாக்கி! இலைஎன்ற புலவர்க்கோ எடையின்றிப் பொன்தந்தார் மூவேந்தர் கலைதந்தார் நமக் கெல்லாம் அதனால் இன்றைக்கு நாம் தமிழ்மாந்தர்! - இசையமுது, முதற் பகுதி, ப.46, 1944 குறிப்புரை : பார் எல்லாம் - பாரில் எங்கும், இலை - இல்லை 141. தமிழன் அறியச் செய்தோன் தமிழன் அறிந்த அனைத்தும் வையத்தார்கள் - அறியச் செய்தோன் செறிந்து காணும் கலையின் பொருளும் சிறந்த செயலும் அறமும் செய்து நிறைந்த இன்ப வாழ்வைக் காண நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள் - அறியச் செய்தோன் காற்றுக் கனல்மண் புனலும் வானும் தமிழன் கனவும் திறமும் கூட்டி நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய நவின்று, நவின்று, நவின்று முன்னாள் - அறியச் செய்தோன் எங்கும் புலமை எங்கும் விடுதலை! எங்கும் புதுமை கண்டாய் நீதான்! அங்குத் தமிழன் திறமை கண்டாய், அங்குத் தமிழன் தோளே கண்டாய்! - அறியச் செய்தோன் - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.83, 1949 142. தமிழனுக்கு வீழ்ச்சியில்லை தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள், தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை! தமிழர்க்குத் தொண்டுசெய்யும், தமிழ னுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும் தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ? தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும் தம்ஆணை பிறர்ஏற்க வாழு வாரும் தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூறொன்று தாம்செய்து வாழ்ந்தநாள் மலையே றிற்றே! உமிழ்ந்தசிறு பருக்கையினால் உயிர்வாழ் வாரும் உரமிழந்து சாக்காட்டை நண்ணு வாரும் தமிழ்என்று தமிழரென்று சிறிது தொண்டு தாம்புரிவார் அவர்பெருமை அரசர்க் கில்லை! ஒருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான், உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைஈ கின்றான்; அரியபெருஞ் செயலையெலாம் தமிழ்நாட் டன்பின் ஆழத்தில் காணுகின்றான்! தமிழன் இந்நாள் பெரிதான திட்டத்தைத் தொடங்கி விட்டான்; பிறந்துள்ளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும், வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும். வாழ்கதமிழ் இவ்வையம் வாழ்க நன்றே! அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே! இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக், கவிதை தோறும் தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக் காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு பொன்னான கலைப்பேழை, என்று சொல்லும் புகழேற்றி வருகின்றார் - அறிஞர் வாழ்க! - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.81, 1949 143. பகை நடுக்கம் தமிழர் என்று சொல்வோம் - பகைவர் தமைநடுங்க வைப்போம் இமய வெற்பின் முடியிற் - கொடியை ஏற வைத்த நாங்கள் - தமிழர் நமதடா இந்நாடு - என்றும் நாமிந் நாட்டின் வேந்தர் சமம்இந் நாட்டு மக்கள் - என்றே தாக்கடா வெற்றி முரசை - தமிழர் எந்தநாளும் தமிழர் - தம்கை ஏந்தி வாழ்ந்த தில்லை இந்த நாளில் நம் ஆணை - செல்ல ஏற்றடா - தமிழர் கொடியை - தமிழர் வையம் கண்ட துண்டு - நாட்டு மறவர் வாழ்வு தன்னைப் பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே பேரிகை முழக்கு. - தமிழர் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.84, 1952 144. தமிழர் எழுச்சி உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம் இங்கிவை தமிழரின் உடைமை! அயர்வுகள் தீர்ந்தன புதுமையில் உலகை ஆள்வது தமிழர்கள் கடமை! புயல்நிகர் பகைமையும் வேரொடு மாளும் தமிழர்கள் சமரிடைப் புகுந்தால்! வெயில்முகம் சுளித்தால் அகிலம் தூளாம் மேன்மையை முழக்குக முரசே! பழமையில் இங்குள அன்புறு காதற் பயனுறும் அகப்பொருள் காப்போம்! அழகிய தமிழ்நடை யாற்புதி யனவாய் ஆயிரம் கலைநூல் சேர்ப்போம்! அழுதிட ஒருவன்மற் றொருவனை மேய்க்கும் அதருமம் அனைத்தையும் மாய்ப்போம்! முழுதுல கப்பயன் உலகினர் சமம்பெற அன்பினில் மனிதரைத் தோய்ப்போம்! முழக்குக எங்கணும் முழக்குக முரசே! முழக்குக தமிழர்கள் பெருமை! வழங்கிடும் அங்கையர் வாளுயர் தோளினர் வாய்மையின் வாழ்பவர் தமிழர்! எழுந்துள வீரம் தமிழரின் மூச்சில் எழுந்தது வாமென முழக்கே! அழுந்துதல் இல்லை உலகுள்ள வரைக்கும் அன்புத் தமிழர்கள் வாழ்வு! மணிமுடி மறவர்கள் முழுதுணர் மேலோர் மாபெருங் கவிஞர்கள் கூட்டம் அணிமுடி காதல் மகளிர்கள் கூட்டம் ஆவது தமிழர்கள் ஈட்டம்! பணிகுதல் இல்லை! அஞ்சுதல் இல்லை! பாய்ந்திடும் ஒற்றுமை யாலே! தணியாக் காதல் நிறைவா மின்பம் தமிழர்க் கிப்புவி மேலே! - முல்லைக்காடு, ப.25, 1955 145. நீயறியாயோ நிலவே நீயறியாயோ நிலவே புகல்வாய் நிலமதில் யாமே வாழ்ந்த நல்வாழ்வை, - நீயறியாயோ ... உழவினி லாவது தொழிலினி லாவது ஒருகுறை இலாமல்யாம் வாழ்ந்த ததனை, - நீயறியாயோ ... கலையினி லாவது நிலைமையி லாவது கவிதையி லாவது யாம்தாழ்ந்த துண்டோ? - நீயறியாயோ ... படையினி லாவது புகழினி லாவது கடுகள வாவது யார்நிகர் எமக்கே? - நீயறியாயோ ... உலகொடு வாணிக முறையினி லேனும் ஒருசிறு தாழ்வு நேர்ந்த துண்டோ? - நீயறியாயோ ... அறமுறை போர்முறை அழகிய ஓவியம் அனைத்திலும் யாமே சிறந்திருந் ததனை! - நீயறியாயோ ... - தேனருவி, ப.20, 1956 146. தமிழர்கள் இழைத்த தவறு தமிழர்கள் துன்பத்தைத் தழுவினர் கடமையில் வழுவினார்; ஆதலால், - தமிழர்கள் தமிழ்நெறி தன்னை இகழ்ந்தார் பிறநெறி தன்னை மகிழ்ந்தார் நமரெலாம் எக்கேடு கெடினும் நமக்கென்ன என்று பகைவரைப் புகழ்ந்தார். - தமிழர்கள் ஒன்றே அல்லால் குலமில்லை ஒருவ னல்லால் தெய்வமில்லை என்றதோர் தமிழரின் சொல்லை மறந்ததால் அல்லவா வந்ததித் தொல்லை? - தமிழர்கள் தமிழை இகழ்ந்தனர் என்று சொல்லக் கேட்டுவட கோடி சென்று தமிழ்த்திறம் காட்டினார் அன்று தலைவன் என்கின்றார்கள் பகைவனை இன்று. - தமிழர்கள் - தேனருவி, ப,21, 1956 147. தமிழ்நாட்டில் ஐந்தாம் படை உடலுக்குள் உலவுமோர் ஐந்தாம்படை ஒழிப்பாய் தமிழா ஒழிப்பாய்! - உடலுக்குள் உலவுமோர் கடலினைப் போற்பெருந் தமிழர்கள் கூட்டத்தில் கலகம் விளைப்பது பொறாமை அதுதான் - உடலுக்குள் உலவுமோர் மொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே - பண்டு முதல்நாக ரிகரும் பழந்தமிழ் மக்களே பழியா ஒழுக்கம் பழந்தமிழ்க் குடிமையாம்! பகைக்கிடந் தந்ததுன் உறக்கம் அதுதான்; - உடலுக்குள் உலவுமோர் அறம்பொருள் இன்பம் எய்துதல் வாழ்க்கை! அடிமை மதம்சாதி ஏற்பதுன் தாழ்க்கை. மறத்தன்மை வழிவழி வந்தஉன் நாட்டிலே மற்றதை மறந்தது மடமை அதுதான்; - உடலுக்குள் உலவுமோர் இம்மை என்பது பகையற்ற வாழ்வே - இங்கு மறுமை என்பது மாயாப்பெரும் புகழே! தம்மை ஆளும் வடவர்க்குன்னைத் தாழ்த்துவோர் தம்மைவிட் டதுவே உன்மறதி அதுதான். - உடலுக்குள் உலவுமோர் - தேனருவி, ப.22, 1956 148. இனமல்லடா அவன் இனமல்லடா அவன், பகைவன் - இனியும் ஏமாற வேண்டாம் தமிழா! - இனமல்லடா அவன் மனம்ஒன்று, செயல்ஒன்று அன்னோர்க்குக் - கெட்ட வஞ்சகரைக் கண்ட இடமெல்லாம் தாக்கே! தனியாண்ட செந்தமிழ்த் தாய்க்கு - நீ தலைவன்! நீதலைவன், வாளினைத் தூக்கு! - இனமல்லடா அவன் அலுவல்கள் எல்லாம் அவர்க்கா? அடிமையும் மிடிமையும் உனக்கா? கொலுவிருந் திடும்நிலை நரிக்கா? கூடியே கெஞ்சுநிலை வேங்கைப் புலிக்கா? - இனமல்லடா அவன் - தேனருவி, ப.23, 1956 149. சாகின்றாய் தமிழா சாகின்றாய் தமிழா! சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல் - சாகின்றாய் தமிழா சலுகைகள் இலையே என்றும் தமிழ்அழிந் திடுதே என்றும் அலுவல்கள் இலையே என்றும் - கெட்ட அடிமையில் வாழ்வது உண்டா என்றும் - சாகின்றாய் தமிழா அயலவன் ஆள்கின்றான் என்றும் - அதனால் அல்லல்கள் வந்தன என்றும் முயலுவ தறியேன் என்றும் - சிறிதும் முறையற்ற அரசியல் வாய்ந்ததே என்றும் - சாகின்றாய் தமிழா உணவிலை உடையிலை என்றும் - நம் உடலிடை வலிவிலை என்றும் பிணியிடை நலிந்தேன் என்றும் - கெஞ்சிப் பிறரிடம் அணுகுதல் பழியே என்றும் - சாகின்றாய் தமிழா புகழ்பட வாழ்பவன் தமிழன்! - என்றும் பொதுநலம் புரிவான் தமிழன்! மிகுபலர் கெடமுயல் வானைச் - சற்றும் விடுவது முறையோ அடல்மிக உடையாய். - சாகின்றாய் தமிழா - தேனருவி, ப.24, 1956 150. தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ சீராரும் இன்பத் திராவிடனே என்கரும்பே! ஆரா அமுதே வெற்றித் திராவிடரின் ஆரியர்கள் இங்கே அடிவைக்கு முன்னமே வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின் பேரர்க்குப் பேரனே பிள்ளாய்நீ கண்ணுறங்கு! சேர அரிதான செல்வமே கண்ணுறங்கு! வெண்டா மரையில் விளையாடும் வண்டுபோல் கண்தான் அயரநீ என்ன கருதுகின்றாய்? பண்டைத் திராவிடத்தின் பண்பு குலைக்கஇனி அண்டைப் பகைவர் நினைப்பரெனும் ஐயமோ? தொண்டு விரும்போம் துடைநடுங்கோம் எந்நாளும் சண்டையிட்டுத் தோற்றதில்லை தக்க திராவிடர்கள் எண்டிசையும் நன்றறியும் அன்றோ? இனிக்குங்கற் கண்டே, கனியே, எங்கண்மணியே கண்வளராய். தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள் எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின்மேல் மங்கா உடல்மலரும் வாய்மலரும் கண்மலரும், செங்கை மலரும், சிரிப்பின் எழில்மலரும், தங்கா தசைந்தாடும் தண்டைஇரு கால்மலரும்! அங்கங் கழகுசெயும் ஆணழகே கண்வளராய் எங்கள் மரபின் எழில்விளக்கே கண்வளராய். - தேனருவி, ப.123, 1978; குயில், 2.5.1948 151. தமிழன் நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்! கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும் ஏன் ஏன் ஏன்? பல்லுயிர் காக்கும் எண்ணம் எனக்குண்டு பார் பார் பார்! செல்வத்திலே என்னை வெல்ல நினைப்பவன் யார் யார் யார்? சொல்லுடல் உள்ளம் ஞாலந் தாங்கும் தூண் தூண் தூண்டு! புல்லர்கள் என்னை வெல்ல நினைப்பது வீண் வீண் வீண்! தொல்லுல குக்குள்ள அல்லல் அறுப்பதென் தோள் தோள் தோள்! வல்லவன் என்னை வெல்ல நினைப்பவன் தூள் தூள் தூள்! - இளைஞர் இலக்கியம், ப.48, முதற் தொகுதி, 1958 152. தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து அகவல் சாப்பாட்டு வேளையில் தஞ்சாவூரின் நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி! திரு.வீர மணியின் திருமணம் வாழ்த்தித் திருச்சியி னின்று திரும்பும் எனக்குப் பெரும்பசி வயிற்றைப் பிசைவ தாயிற்று! நானோ, பார்ப்பனன் தொட்டதைத் திரும்பியும் பாரேன். தமிழன் உணவு தாங்கி வாரானோ என்று நினைத்துக் கிடக்கையில், எதிரில் தமிழன் ஒருவன் தலைப்பெட் டியுடன் சுவைநீர், இட்டளி, தூய வடை, எனும் அமிழ்தைஎன் காதில் போட்டான்! அழைத்தேன். அரையணா விழுக்காடு வடைகள் ஆறும், அவ்விழுக் காடே அன்பின் இட்டளி மூன்றும் பருப்புக் குழம்பில் முழுகத் தாயென இட்டான்; சேயென உண்டேன். சுவைநீர் சுடச்சுடத் தந்தான் பருகினேன். இத்த னைக்கும் ஆறணா என்றான்! அத்தனை யுண்டேன் தந்ததோ ஆறணா! தஞ்சை வண்டிச் சரகில் ஓர்தமிழன் மலிவு விலையில் உண்டி வழங்கினான் என்பதில் வியப்பே இல்லை. ஆனால், இத்தனை சுவையினை எங்கும்நான் காண்கிலேன். உண்டி விற்கும் உண்மைத் தமிழரே அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச் செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக! உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே! தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து! தமிழர் தமிழனை ஆத ரிக்க! தஞ்சைத் தமிழன் செய்தது போலே இனிதே யாயினும், எட்டியே ஆயினும், வாழ்வ தாயினும், சாவ தாயினும் தமிழன் ஆக்கிய துண்க தமிழகம் தன்னுரிமை பெறற்பொ ருட்டே. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.279, 1964 153. தமிழர்க்கு வாழ்க்கைச் சுவை ஏது? உணவு விடுதி ஒன்றில் ஓர் அறையில் இருவர் தங்கினர். ஒருவன் தமிழன் மற்றவன் பிரான்சு நாட்டு வாணிகன்! கமழ்புனல் ஆடி அமிழ்துண வுண்டு தூயுடை உடுத்துச் சாய்வுநாற் காலியிற் சாய்ந்த தமிழன், தன்னெதிர் நடப்பதைப் பாடிக் கொண்டே பார்த்தி ருந்தான்! அரைவெள் ளிக்குக் காற்கோப் பையுணவு கேட்டு, வாங்கி உண்டு, கிழிந்த உடையுடன் பிரான்சினன் எதிரில் உள்ள சாய்வுநாற் காலியிற் சாயத் தொடங்கினான் தமிழன் அவனை நோக்கிச் சாற்றினான்; சுவையிலா உணவையும் துய்ப்பது, பிரான்சில் உள்ளவ ரிடத்திலும் உண்டோ? நண்பரே? தமிழனை நோக்கிப் பிரான்சினன் சாற்றினான்: உயர்சுவை உணவை உண்ப தென்பது தமிழகத் தமிழ ரிடத்திலும் உண்டோ? பின்னும் பிரான்சினன் பேசு கின்றனன்; எரிச்சல் உறுவதேன் இன்தமிழ் நண்பரே பிறந்தஉம் நாட்டைப் பிறன்ஆள் கின்றான், வாழ்க்கையில் சுவையும் வாய்ப்ப துண்டோ? வாழ்க்கைச் சுவையிலான் வாய்ச்சுவை யுடையனோ? இன்றுநீர் உண்டதில் என்சுவை கண்டீர்? கமழ்புனல் ஆடினீர், அமிழ்துண வுண்டீர், நீர்ஓர் அடிமை என்பதை நினைந்திரோ? என்று தமிழனை எண்ணத்தில் ஆழ்த்தினான் கமழ்புனல், கழிபுனல் ஆனது தமிழற்கே, அமிழ்துண வோக்காளம் அடைந்தான் உமிழ்ந்தது தமிழனை அறிவுலகு கான்றே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.296, 1964; குயில், 3.2.1959 154. தமிழர் பண்பாடு வைய கத்திற் சிறந்தபண் பாடு வாய்ந்த நாடு செந்தமிழ் நாடு - வைய உய்யத் தமிழன் பிறன்பொருள் நண்ணிடான் உயிரைப் புகழுக்கும் பெரிதென எண்ணிடான் - வைய தெய்வம் இல்லை! மெய்யுணர் வுண்டு! சிவன்முதல் உருவெலாம் மெய்யென்று கொண்டு நையும் மக்களின் நிலையினைக் கண்டு நாளும் உழைப்பதே தமிழனின் தொண்டு - வைய கற்பு, மாதர்க் குயிரினும் பெரிது, கன்னி ஒருத்திக் கொருவனே தெய்வம்! வெற்பு வந்து குறுக்கில் மறிக்கினும் விருந்தோம்பி வாழ்பவள் மேன்மைத் தமிழ்மகள். - வைய மக்கட் பிறப்பில் வேற்றுமை பேசும் மாக்கள் தம்மை வெறுப்பவன் தமிழன்; கைக்க நெஞ்சு செய்பாவத் திற்குக் கழுவாய் உண்டெனல் கயமை என்பான். - வைய அன்றைத் தமிழ்நான் மறைஉயிர் என்பான் ஆரியர் பொய்ம்மறை ஒப்பான் தமிழன்; தின்ற ஆடு தேவர்க் குவப்பெனும் தீய வேள்வியைக் கான்றுமிழ் கின்றவன். - வைய தொடர்ந்தெ டுத்த பல்படை எடுப்பிலும் துயரு றாமல் தன்னுயிர்த் தமிழை அடைந்து காத்தவன், ஆயிரம் படைகள் அடைந்திட் டாலும் அஞ்சிடான் தமிழன். - வைய ஒருகு லத்துக் கொருநீதி சொல்வதும் ஒருத்தி ஐவரை மணந்துயிர் வாழ்வதும் பெருகு பொய்ம்மையை மெய்யெனப் பிதற்றலும் பிறர்நூற் கொள்கை; ஒப்பிடான் தமிழன். - வைய திருக்குறள் முதலெனக் காட்டிய நன்னெறி செந்தமிழ் நாட்டான் பெற்ற தன்னெறி இருப்பின் எல்லாரும் இன்புற் றிருக்க எண்ணி வாழ்வான் இன்பத் தமிழ்மகன். - வைய - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.175, 1964 155. பழிப்புறு தமிழனை விழிப்புறச் செய்வது என் தாயே... என்ற கண்ணி செந்தமிழா உன்நாட்டின் பேரென்ன செப்பென்றால் இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே! பைந்தமிழ் நாட்டினையும் பாரதம்என் றும்சொல்வான் எந்தவகை இச்சேய் உருப்படுவான் என்தாயே! தாயைத்தாய், என்றறியான் தாய்நாட்டைத் தீய்க்கின்ற தீயைத்தாய் என்பான் திருந்தானோ என்தாயே தமிழ்மொழிதான் தாய்மொழி என்னும் தமிழன் தமிழ்நாடு தான்தனது தாய்நாடென் றெண்ணானோ? தமிழ்நாடென் தாய்நாடு தாய்மொழி தான்என்றன் தமிழென் றுணரான் சழக்கனன்றோ என்தாயே! கலைமுறைகா ணான்நாட்டைக் காட்டிக் கொடுப்பான் தலைமுறைச்சீர் காணான் தலைவனென்பான் என்தாயே! தொலையாச் சுரண்டல் தொலையாமல் தொண்டின் விலைகேட்கும் வீணன் தலைவனா என்தாயே! செந்தமிழ் நாட்டின் திருவிளக்கை மாய்க்கின்ற இந்திவரக் கையொப்பம் இட்டான்ஓர் பேதையன்றோ! நம்தாய் அடிமை வடநாட்டான் நம்ஆண்டான் இந்தநிலை மாற்றா திருந்தென்ன என்தாயே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.177, 1964 156. தமிழர் யார் மன்னு தமிழ்க்குடியாம் வாழையடி வாழைஎன இந்நிலத்தில் எங்குறைவா ரும்தமிழர் - பன்னுமிந்த வாய்ப்பில்லார் தம்மை, அவர் வைப்பாட்டி மக்களை ஏற்கமாட் டோம்தமிழர் என்று. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.183, 1964 157. வெற்றி நமக்கென்று கொட்டடா முரசு எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே. - எங்குப் செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும் சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும். - எங்குப் சிங்கக் குகையில் நரிக்கிடம் தந்தோம் செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்! பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு. - எங்குப் ஆண்ட தமிழில் ஆரியம் சேர்த்தார் ஆயினும் தமிழர் நெறிகண்டு வேர்த்தார் மூண்டு ணர்வால் எழுந்தது தமிழரசு முற்றும் வெற்றிஎன்று கொட்டடா முரசு. - எங்குப் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.220, 1964 158. தமிழினத்தார் ஒன்றுபட வேண்டும் நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம் நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும் நாமெல்லாம் ஒரேவகுப்பார் என்ற எண்ணம் நன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும் தீமையுற நமைஎல்லாம் சமையம், சாதி சிதறடிக்க இடங்கொடுத்தல் நமது குற்றம். ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை அகற்றென்றால் அவ்வாமை கேட்க லாமா? ஒற்றுமையைக் காப்பதற்கு மதமா? அன்றி ஒன்றாகச் சேர்க்கத்தான் மதமா? சாதி, அற்றஇடம் அல்லவோ அன்பு வெள்ளம் அணைகடந்து விளைநிலத்தில் பாயக் கூடும்! பற்றற்றோம் என்பவர்கள் சமயம், சாதி படுகுழிநீங் குகஎன்னும் முரசு கேட்டோம். உற்றநலம் உணர்ந்திடுக தமிழி னத்தார். உள்ளூர ஒன்றுபட்டால் வாழ்தல் கூடும்! மக்கள்தமைப் பிரிப்பதென ஒன்றி ருந்தால் மடமைதான் அதுவென்பேன். நாமெல் லாரும் திக்கற்ற பிள்ளைகளாய் இருக்கின் றோம்இத் தீயநிலை நீக்குதற்கு முடியும் நம்மால்! எக்குறையும் தீர்ந்துவிடும்; வறுமை போகும் எந்நலமும் பெற்றிடுவோம் அனைவ ருக்கும் சர்க்கரைப்பந் தலிலேதேன் மாரி பெய்யும்; சாதிவெறி சமயவெறி தலைக விழ்ந்தால்! தம்தலையில் ஆணியைத்தா மேய டித்துத் தாம்புதனை அதிற்கட்டிப் பிறரி டத்தில் தந்துவிடும் மடமைதனை என்ன என்பேன்! சாதிசம யத்தினிலே வீழ்ந்தோர் அன்றே தொந்திபெருத் தோர்அடியில் வீழ்ந்தோ ராவார்! தூவென்று சாதிமதம் கான்று மிழ்ந்தால் அந்தநொடி யேநமது மிடிப றக்கும் அடுத்தநொடி திராவிடரின் கொடிப றக்கும்! உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும் உணவினிலே ஒன்றாதல் வேண்டும்; நல்ல நடையினிலே ஒன்றாதல் வேண்டும்; பேசும் நாவிலும்எண் ணத்திலும்ஒன் றாதல் வேண்டும் மடைதிறந்த வெள்ளம்போல் நம்தே வைக்கும், மாற்றாரை ஒழிப்பதற்கும் ஏறிப் பாயும் படையினிலே ஒன்றாதல் வேண்டும்; வாழ்வின் பயன்காண வேண்டுமன்றோ தமிழி னத்தார்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.221, 1964; குயில், 1.2.1948 159. விடுதலைப் பாட்டு தமிழருக்கு மறவர் என்று பேர் நாயும் ஒப்பாத அடிமை வாழ்வை நாலு கோடித் தமிழரா ஒப்புவர்? தாய்நாட் டிற்குத் தமிழ்நா டென்றுபேர்! தமிழ ருக்கே மறவர் என்றுபேர்! - நாயும் தப்பாத தேய்தல் வளர்தல் திங்கள் வழக்கம் தேயாப் புகழ்செயல் எங்கள் வழக்கம்! தாய கத்தின் மீட்சிப் போரினில் சாவும், தமிழர்க் கமிழ்தாய் இனிக்கும்! - நாயும் தப்பாத வீரம் பிறந்த நாட்டிற் பிறந்தவர்; வெற்றித் தமிழர்; உலகிற் சிறந்தவர்; ஆரியர் அல்லர்; மறைந்தி ருந்தே அம்பு பாய்ச்சும் பூரியர் அல்லர். - நாயும் தப்பாத குறைஒன்று தாயகம் கொள்ளவும் பாரோம் குன்று பெயரினும் உள்ளுரம் தீரோம் சிறையும் நோயும் கட்டிலும் தென்றலும்! செந்நீர் சிந்தல் தேன்சிந்து பாடல்! - நாயும் தப்பாத - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.269, 1964 160. அச்சந் தவிர் அஞ்சாமை வேண்டும் தமிழர்க்கே - பகையின் அழிவுக் கடலின் ஆழத்தில் மகிழ! - அஞ் கொஞ்சாமை பகைவரைக் கிட்டாமை பகைவர்சொல் கேளாமை காட்டிக் கொடாமை பின்னிடாமை எனும் - அஞ் தஞ்சமாய் வந்தவர் தலையினில் ஏறினார் தமிழர் மேன்மையைத் தாழ்த்திக் கூறினார் நெஞ்சீர மற்றவர்; இட்டாரைச் சீறினார் நேரினில் மக்கள் இயல்பையே மீறினார். - அஞ் பிச்சைக்கு வந்தவர் அதிகாரம் பெற்றார் பிறர்நலம் அழிப்பதோர் பேடிமை உற்றார் பொய்ச்சி ரிப்புச் சிரித்திடக் கற்றார் பொதுவறம் கொல்வதில் நாணமே அற்றார். - அஞ் தமிழர் உணர்ச்சியைக் குறைத்தெடை போட்டார் தமிழர் எதிர்ப்புக்குத் தப்பிட மாட்டார்! தமிழ்நாட்டுக் குடையவர் யார்? தமிழ் நாட்டார்! தமிழரை எதிர்ப்பா ரோஅயல் நாட்டார். வசைக்கும் சிறைக்கும் குண்டுக்கும் எதிர்ப்புக்கும் வாட்டிடும் படுகொலைக் கும்வரும் சாவுக்கும் அசைக்க முடியாத மலையை நிகர்க்கும் அஞ்சாமை ஒன்றே வேண்டும் தமிழர்க்கு. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.217, 1964 161. தீவாளியா அசுரரென்று தமிழர்களை, ஆரி யர்கள் அழைத்தார்கள்; சுரர்என்று தம்மைச் சொன்னார் பசிகொண்ட நரிபோலே ஆரி யர்கள் பழந்தமிழர் தமையணுகி, வயிற்றைக் காட்டி இசைந்தவர்பால் கூத்தாடி, இனத்தைக் கூட்டி இடம்பெற்றுக் கலாம்விளைத்துக் குடித்த னத்தை வசம்பார்த்துப் பெரிதாக்கி வைத்த பின்னர் வளநாட்டில் ஆதிக்கம் பெறநி னைத்தார். 1 செங்கதிரை நாழிகைகள், மேற்கில் தள்ளும் செயல்போலே, ஆரியர்கள், தமிழர் வாழ்வில் பொங்குதமிழ்க் கலைச்செல்வம் மறையும் வண்ணம் புனைசுருட்டுச் செய்துவந்தார் ஐய கோநம் மங்காத தமிழ்மறவர் வரலா றெல்லாம் மங்கும்வகை செய்தார்கள்; வையங் கண்ட தங்கத்தை இரும்பென்று சொன்னார்; ஐயோ தமிழரெலாம் அசுரர்கள்! தாம்சு ரர்கள்! 2 அரக்கரென்றார்; அசுரரென்றார்; நம்மை யெல்லாம் அழகற்றோர் ஒழுக்கமிலார், எனவ ரைந்தார் சுரக்கவில்லை மலையருவி! உணர்ச்சி வெள்ளம் தோன்றவில்லை நெஞ்சத்தில் நமைம றந்தோம் குரங்கினங்கள் என்றுரைத்தார். நம்மை யெல்லாம் குறுங்கரடிக் கூட்டமென்றார் கேட்டி ருந்தோம். அரிக்கின்ற செல், அழிக்க, மறந்த தோள்கள், அன்றுபோல் இன்றுமுண்டு குன்றத் தைப்போல். 3 வாலியின்பால் வஞ்சகத்தைச் செய்த ராமன் வாலிக்கு மோட்சத்தை அருள்செய் தானாம்! கோலைத்தன் வசமாக்கச் சதையை விற்ற கொடியவன்பேர் ஆழ்வானாம்! உடன்பி றந்தீர், கேலியொன்று கேட்டீரோ, நரகன் என்போன், கீழ்ச்செயல்கள் செய்தானாம், சுரர்கட் கெல்லாம் ஏலாத செயல்செய்த பாவி யாம்,அவ் விந்திரனின் ஆட்சியையும் பறித்த துண்டாம். 4 பெண்ணினத்தைக் கொல்லாமை கடைப்பி டித்த பெரியானை, நரகன்எனும் தமிழச் சேயைப் பெண்டாட்டி தனையனுப்பி, மான மின்றிப் பெருவெற்றி கிழித்தாராம் கண்ண வீரர். பண்டிகையாம்! தீவாளி அந்த நாளாம்; பல்லக்கை வழிகூட்டி அனுப்பு கின்ற பெண்டுக்குப் போடுதல்போல் கழுத்துக் கோடி பெரிதுபெரி தாய்வாங்கிப் படைய லிட்டே. 5 அணிந்திடவும் வேண்டுமாம், அந்த நாளில்; அகமகிழ வேண்டுமாம். அதுவு மன்றித் தணியாத மகிழ்ச்சிதனை, அறிவை அந்நாள் தலைமுழுக வேண்டுமாம்; தமிழர் மானம் தணல்பட்டுப் படபடென வெடித்த தென்று சாற்றுதல்போல் வெடிகொளுத்த வேண்டு மாம்;இப் பணியிட்டோர் ஆரியர்கள், தமிழர் என்னும் பண்டிதர்கள் இவற்றிற்குக் கவிதை செய்தார். 6 இனமழிப்பார் அடிசுமக்கும் படிச்சு வர்கள் இனமழிப்பார் அடிசுமப்பார் படிச்ச வர்கள்! கனலென்று நடுங்கினரோ? நம்மி னத்தைக் கசந்தாரோ? வற்றியதோர் ஓலை யைப்போல் மனம்சுருண்டு போனாரோ? தம்மைத் தாமே மறந்தாரோ, ஐயகோ தமிழர் தம்முன் முனமிருந்தார் சிலகம்பர்; விட்ட தாலே முளைத்தகம் பக்கிளைகள் மும்ம டங்கோ? 7 - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.126, 1964 162. தமிழுக்கு உயிர் அளித்தான் ஆட்டு மந்தையிற் காட்டுப்புலி பாய்ந்தாற்போல் - என் அன்புடையான் களம் புகுந்தான் வாதோழி பாட்டுப் பெற்றானா உயர்ந்த சாவாலே - அவன் பழியைப் பெற்றானே இழிந்த வாழ்வாலே நாட்டின்புறப் போர்க்களமே வாதோழி - பார் நம்தமிழர் இனப்பெருமை பார்தோழி! கேட்டதுபார் போர்முழக்கம்! வாதோழி - பார் கிழிந்ததுவே வானவெளி வாதோழி! செங்குருதி ஓடையிலே யானைகள் செத்தபடி மிதப்பனவும் பார்தோழி! எங்கணுமே தேர்குதிரை காலாட்கள் இற்றனபார் இறந்தனபார் என்தோழி! தங்கம்நிகர் ஓருடம்பு வான்நோக்கிப் - பார் தரைக்கழகு செய்வதனைப் பார்தோழி! சிங்கமடி செந்தமிழன் என்காதல் செல்வமடி செத்துவிட்டான் பார்தோழி! முன்மார்பில் உடலெல்லாம் வேல்தாங்கி - அவன் முள்ளம்பன்றி போற்கிடந்தான் பார் பார் பார் என்மார்பு தழுவியவன் போர்மாதின் - நல் இளமார்பு தழுவியபின் புகழ்மாதின் பொன்மார்பு தழுவுகின்றான் பார்தோழி! புதியசுவை எனக்களித்தான் பார்மீதில் என்ஆசைத் தமிழ்காத்தான் காணேடி - என் எழிற்றமிழுக் குயிர்அளித்தான் சீர்வாழ்க! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.80, 1964 163. மீட்சிப் பத்து கட்டளைக் கலித்துறை பொன்னிலும் மண்ணிலும் பெண்ணிலும் நெஞ்சைப் [புகுத்தலல்லால் தன்னல நீக்கிப் பெரியார் நெறிநின்று தாய்நிலத்தை முன்னுற மீட்டுத் தமிழ்,கலை, வாழ்க்கை முறைதழைக்கத் தன்மானம் காக்கவேண் டாமோ அருமைத் தமிழர்களே? பாம்பாகச் சீறும் வடவரின் பல்லைப் புய்த்தலின்றி மேம்பாடு கோரி வெறும்பாடு பட்டுக் கிடப்பதுண்டோ? நாம்பாடு பட்டதெல் லாம்விழ லோ? தமிழ் நாட்டுரிமை வேம்பா? அடிமை நிலைகரும் பா? தமிழ் மேன்மக்களே! உணலுற்ற சோறும் பறித்தான்! தமிழின் உயர்வழித்தான்! மணலுற்ற தென்றான் தமிழகம்! செந்தமிழ் மாணவரே தணலற்ற வீட்டுக்குள் தைப்பொங்கல் பாடும் தலைவருண்டா? நுணலாநாம்? தேவாங்கா? ஆமையா சற்றே நுவலுவிரே! ஊர்ப்படம் நீக்கிப்பன் னாட்டுப் படத்தின் உருஎரிக்கும் தீர்ப்படங் கற்கும் இணக்கம் தராமல் திரைப்படத்திற் பேர்ப்படங் காட்டிடும் பெண்ணான பத்தரை மாற்றுத்தங்க வார்ப்படங் கண்டால் மலைப்படங் காண்ஓர் கலப்படமே! யார்தாம் தலைவர்? நல்வழி காட்டுவோர் யாவர்? இந்நாள் யார்தாம் தமிழரைக் காக்கப் பிறந்தார்? இனிப்பிறவார் யார்தாம்? அவர்நம் பெரியார்தாம் இல்லை எனில்பிறகு யார்தாம் புகலுவிர் யார்தாம் புகலுவிர் இந்நிலத்தே! மெய்யேந்தித் தோளினில் வேலேந்தி வாழ்ந்த தமிழரிடம் கைஏந்தி, வேந்தரின் காலேந்தி ஏந்திக் கயல்விழியால் மையேந்து மாதர் இதழினை மன்னர்கள் உண்ணஏந்திப் பொய்யேந்தும் ஆரியர் நாட்டின்கோல் ஏந்தவும் போந்தனரே! முந்தைக்கு முந்தை அதன்முந்தை ஆட்சி முறைவகுத்த எந்தைக்குத் தந்தை அவன்தந்தை யின்தந்தை பெற்றபுகழ், கந்தைக்கும் சோற்றுக்கும் இல்லாமை தன்னிற் கரைந்திடில்என் மைந்தரின் மைந்தர்க்கு வைப்பேன் விடுதலை [வாழ்வினையே! விழிக்குத் தெரிந்த தமிழகம் இல்லையாம் - மேலுமிந்த மொழிக்குச் சிறந்த தமிழ்முதல் இல்லையாம் முன்னவரின் வழிக்கென்று யாதும் வரலாறும் இல்லையாம் ஆரியரைப் பழிக்குப் பழிவாங்கல் அன்னாரின் ஆட்சி பறிப்பதுவே! தமிழரின் மேன்மை இகழ்ந்த வடக்கர் தறுக்கடக்கி அமைந்தனர் மூவேந்தர்; அன்றே அவரை அழித்திருந்தால் இமையம் பிறந்திடு முற்பிறந் திட்டஇன் பத்தமிழைத் தமது வடமொழி தந்ததென் னார்அச் சழக்கர்களே! நாவலந் தீவே நமது! பிறகு நமைஅடைந்த பாவிகள் ஆரியர் கூலியாய்க் குற்றக் குழுவினராய் மேவினர் நம்மடி மெல்லவே நம்தலை மேலுமுற்றார்; யாவையும் வவ்வினர் ஈவதுண் டோதமிழ் நாட்டையுமே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.97, 1964 164. தன்னாட்சி தன்னாட்டைத் தான்பெறான் உலகில் எந்நாட்டா னாயினும் இழிந்தவன் தோழி! முன்நாட்டை ஆண்டவன் முழுவாழ்வு வாழ்ந்தவன் தென்னாட்டான் இந்நாளில் தில்லிக் கடியவன் என்னேடி தோழி இழிவில் இழிவன்றோ! ஒன்றே குலம்என்றான் புகழே உயிர்என்றான் அன்றாடம் சாகின்றான் தில்லிக்கே ஆட்பட்டான் நன்றோடி தோழி? நாயினுங் கேடானான்! செந்தமிழ் காத்தான் திருக்குறளில் ஆர்வத்தான் இந்தி சுமக்கின்றான் தில்லிக் கிளிக்கின்றான் இந்தாடி தோழி இவனா தமிழ்மறவன்? மானம் இழப்பதிலும் மாள்வதே மேல்என்பான் ஆனதமி ழன்இந்நாள் தில்லிக்கே ஆட்பட்டான் பூனைக்குத் தோழி புலியும் அடங்குவதோ! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.99, 1964 165. வருக நேருவே அகவல் வருக நேருவே வருக வருக! பெருகு தமிழர்க்குப் பெரும்பகை நீவிர்; வரவேற்க வேண்டும், மறுப்பது சரியன்று! வருக நேருவே வருக! நீவிர் அரசியல் ஒழுக்கம் அடைந்த துண்டோ? உலகின் அரசியல் உணர்ந்த துண்டோ? பதவி யாளர்க் குள்ளபண் பாடுகள் உம்மிடம் உண்டா? உலகின் பொதுவறம் உம்மிடம் உண்டா? செம்மையாய் எண்ணினால் இல்லை, எதுவும் இல்லை என்பதே என்றன் எண்ணம் ஆகும்! கேட்பீர்: - ஓரி னத்தின் உயிரே ஆன ஒருதனித் தொன்மொழி ஆன தமிழை அழிக்க முடியுமா? அழிக்க எண்ணும் எண்ணம் அறமா? இந்த உலகில் இம்மனப் பான்மையை எந்தத் தலைவர்பால் கண்டீர்! காட்ட முடியுமா உம்மால்! என்னதி கார எல்லையின் ஒருமொழி வளர்ந்தால் என்றன் பதவியும் வளரும் என்றுதாம் எண்ணுவர் எந்தத் தலைவரும்! ஓரி னத்தை அதிலும் ஒண்தமிழ்ப் பேரி னத்தைப் பெரிதுகட் டழித்து நும்அதி கார நுழைவைப் பெருக்க எண்ணுவது சரியா? இந்த வண்ணம் எந்த அரசியல் தலைவ ரிடத்தில் கண்டீர்? அல்லது கல்வி, அறிவு ஒழுக்கம் என்ப வற்றில் ஒன்று நன்றெனச் சொல்லுமா இந்த நடத்தையை? நாட்டு மக்களைப் பிரிவினில் நடத்தி ஆட்சி நடத்தினான் ஆங்கிலன் என்றீர் நீர்செயும் வேலை எப்படி? நினைத்தீரா? தமிழர் எடுத்த தமிழ அமைச்சரைத் தமிழரி னின்று தடுத்தாட் கொண்டீர்; அவர்களை எமக்குப் பகைமை ஆக்கினீர் அவர்கள் கையால் அல்லல் இழைத்தீர்; எத்தனை நாளைக் கிம்முறை செல்லும்? நீரைப் பிரித்தால் நிலையிற் பிரியுமா? அரிசியைப் பிடுங்கினீர்; அயலார்க் களித்தீர் இதுவே சிறிது முற்றினால் போதுமே தமிழினம் ஒன்றுபட் டும்மைத் தாழ்த்த! வருக நேருவே வருக! வந்து - அரியஎம் அமைச்சர் உள்ளத் துள்ளே உம்முள் ளத்தையும் ஒட்டி, உள்ள நிலைமையின் துடிப்பை நேரில் உணர்க. தமிழர்க்குச் சாவு வருவதைத் தமிழரின் அமைச்சர் ஒப்புவார் அல்லர்! தமிழர்கள் அவர்கள்!! தமிழகம் வாழ்கவே. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.104, 1964 166. தென் பாங்குக் காரி நாலடுக்கு மல்லிகையாம் நாரெடுத்துப் பூத்தொடுக்கும் சேலெடுக்கும் கண்ணாளே திரும்பாதோ உன்முகந்தான் - செங்கேணி! அடியே - செங்கேணி! இரும்போடி உன்மனந்தான் - செங்கேணி! மேலடுக்கு மாடியிலே நம்நாடு தாழையிலே காலடுக்கு வெற்றிலையோ கையடுக்குச் சீட்டாட்டமா - கங்காணி! போடா போ - கங்காணி! சொல்லடுக்கி நாட்டை விற்கும் - கங்காணி! அஞ்சுவிரல் மோதிரமாம் அங்கைமேல் பச்சைக்கிளி கொஞ்சுகின்ற நேரத்திலும் கொஞ்சமும்நீ கொஞ்சாததேன் - செங்கேணி! அடியே - செங்கேணி! நெஞ்சந்தான் செங்கல்லோ - செங்கேணி! பஞ்சணையில் அரசியலோ சாதிநம்மைப் பழிக்கையிலே! தஞ்சமென்ன பார்ப்பானிடம் தமிழர்களை விலைக்கு விற்கும் - கங்காணி! போடா போ - கங்காணி! தண்டாதே சட்டிச்சோறு - கங்காணி! வண்டுக்குக் கும்மாளமாம் வாயுதடு தேனூற்றாம் கண்டுங்கா ணாததுபோல் காட்டுகின்றாய் நீட்டாண்மை - செங்கேணி! அடியே - செங்கேணி! கற்றதெல்லாம் என்னிடமா - செங்கேணி! தொண்டுக்கு முட்டுக்கட்டை துட்டுக்குச் சிட்டானாய் வெண்தாடி வேந்தன் நாட்டு விடுதலைக்கு மறுதலையா - கங்காணி! போடா போ - கங்காணி! கெடுதலைக்குப் பாடுபட்டாய் - கங்காணி! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.111, 1964 167. தமிழன் பிறக்கும் போதே பெருமை யோடு பிறந்தவன் தமிழன் - தமிழ்ப் பெருங்குடி தன்னில் பிறந்தவன் ஆதலால் - பிறக்கும் இறப்பதே இல்லை தமிழன் - புகழுடம்பை எங்குமே வைத்தது காண்க. மறக்குமா வையம் தமிழன் - மனப்பாங்கு வளர்த்த அறத்தையும் அறிவையும்? சிறப்ப தென்றால் தமிழால் சிறக்க வேண்டும்; தீர்வ தென்றால் தமிழ்மறந்து தீர்தல் வேண்டும். - பிறக்கும் முதலில் தோன்றிய மனிதன் தமிழன் முதல்மொழி தமிழ்மொழி - ஆதலால் புதுவாழ்வின் வேர்தமிழர் பண்பாடே - பிறக்கும் முதுகிற்புண் படாதவன் தமிழன் - போர்எனில் மொய்குழல் முத்தமென் றெண்ணுவான் மதிப்போடு வாழ்பவன் தமிழன் வாழ்வதற் கென்று வாழ்பவன் அல்லன். - பிறக்கும் - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.177, 1977; குயில், 15.5.1962 168. நாம் தமிழர் என்று பாடு நாம்பிறந்தது நாம்வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு! போம்படிசொல் அயலாட்சியைப் பொழுதோடு - விரைவில் போகா விட்டால் அறிவார்அவர் படும்பாடு. நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு - தமிழா நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு? தீமைஇனிப் பொறுக்காது நம்தமிழ்நாடு - நாம் தீர்த்துக் கொண்டோம் அவர்கணக்கை இன்றோடு! மூவேந்தர் முறைசெய்தது நம்தமிழ்நாடு - தாய் முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு கோவிலுக்குள் வேண்டாம்பிறர் தலையீடு - பகை குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு! நாவலரும் காவலரும் ஆண்ட திந்நாடு - நிமிர்ந்து நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு நாவைப்பதா நம்சோற்றில் கோழிப்பேடு? - தமிழா நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு! முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ்நாடு - நீ முன்னேறுவாய் தமிழ்மறவா ஒற்றுமையோடு நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு - மறவா நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு! தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு - நம் தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு - தமிழா நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.178, 1977 169. கொட்டடா முரசம் நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம் eh«!தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்! நறுமலர்ச் சோலையில் நரிபுக விட்டிடோம் நாம்தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி வேரற்றுப் போயிற்றுக் கொட்டடா முரசம்! நந்தமிழ் நாடாளும் சொந்த நன்மைந்தர்கள் eh«!தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் முந்துபல் பகைப்படை நம்படை முன்னிற்க முடியாது போயிற்றுக் கொட்டடா முரசம்! நந்தமிழ்த் தாய்க்கெதிர் இந்திக்கும் ஆட்சியா! நாம் தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் வந்தவர் போயினார் செந்தமிழ்ச் செல்வமே மணிமுடி புனைந்தனள் கொட்டடா முரசம்! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.182, 1977 170. தூங்கும் புலி எழுந்தது தூங்கும் புலியைப் பறைகொண் டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம். - தூங்கும் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம். - தூங்கும் பண்டைப் பெரும்புகழ் உடையோமா? இல்லையா! பாருக்கு வீரத்தைச் சொன்னோமா? இல்லையா! எண்டிசை வாய்மையால் ஆண்டோமா, இல்லையா? எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? - தூங்கும் தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா? தமிழ்க் குயிர்தர இசைந்தாரா இல்லையா? தமிழ்வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா? - தூங்கும் செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா, இல்லையா? தில்லி நரிதான் நடுங்கிற்றா, இல்லையா? முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா? - தூங்கும் தமிழர் ஒற்றுமை நிறைந்ததா, இல்லையா? தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா? தமக்குத் தமிழகம் அடிமையே என்னும் சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா? - தூங்கும் - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, 1977; குயில், 5.5.1959 171. புலிக்கு நாய் எந்த மூலை தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம் தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம். தமிழ்நாட்டில் அயலார்க் கினிஎன்ன வேலை? தாவும் புலிக்கொரு நாய்எந்த மூலை? தூங்கிய துண்டு தமிழர்கள் முன்பு - பகை தூளாகும் அன்றோ எழுந்த பின்பு? தீங்கு புரிகின்ற வடக்கரின் என்பு சிதைந்திடச் செய்திடும் தமிழரின் வன்பு. அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க - மற் றயல்நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க! துவளாத வாழ்க்கை உலகெலாம் சூழ்க! தூக்கிய கைகள்அறம் நோக்கித் தாழ்க! தமிழனுக் குலகம் நடுங்கிய துண்டு - அங்குத் தன்னாட்சி நிறுவிட எண்ணிய துண்டா? தமதே என்று பிறர்பொருள் கொண்டு தாம்வாழ எண்ணினோர் எங்குளார் பண்டு! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.193, 1977; குயில், 4.11.1958 172. தமிழ் வீரர் எழுச்சி எங்கள் இளந்தமிழ் வீரர் - அவர் இப்புவி வீழினும் வீரர் வீரர். சிங்கப் படையினைப் போலப் - பகைத் தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்! கங்கை தவழ்ந்திடு நாடு - தங்கள் காதல் எலாமந்த நாட்டி னோடு தங்களி னத்தவர்க் காக - உயிர் தன்னையு மீந்திடும் வீரர் ஆவர். - எங்கள் வெற்றி நிலைத்திட வேண்டும் - தங்கள் வீர மெலாம்புவி ஏற வேண்டும் சுற்றம் சுகப்பட வேண்டும் - நற் சுதந்திர வாழ்வினிற் கூட வேண்டும் மற்றிவை வீரரின் உள்ளம் - தனில் மண்டிக் கிளர்வன வாழி - வாழி! சற்றதிற் சோர்பவர் அல்லர் - இதிற் சாவடைதல் ஒன்று வாழ்தல் ஒன்று! - எங்கள் சோழனென் றேஒரு வீரன் - இந்தத் தொல்புவி காத்தவன் வீரன்! வீரன்! வாழிய பாண்டிய வீரன்! - அவன் வாய்மையி லேபெரும் வீரன் வீரன் ஊழிபெ யர்த்துவந் தாலும் - தங்கள் ஊக்கங் கெடாக்குடி தோன்றி னோர்கள் வாழ்க தமிழ்க்குல வீரர் - அந்த வண்மைத் தமிழ்க்குலம் வாழ்க! - எங்கள் - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.95, 1978 173. புத்துலகம் காண்போம் தமிழகத்தில் நாம் பிறந்தோம் தமிழர்களாய் வாழ்வோம். தமிழினத்தில் நாம் பிறந்தோம் தமிழ் மொழிக்காய் வாழ்வோம். தமிழறத்தில் நாம் வளர்ந்தோம் தரையனைத்தும் சேர்ப்போம்; தமிழுறவில் நாம் செழித்தோம் தழுவி யுலகு காப்போம். தமிழ்ப் பண்பில் நாம் சிறந்தோம் சாதி மதம் தவிர்ப்போம் தமிழன்பில் நாம் குளித்தோம் தனித்திருத்தல் அவிப்போம். பூங்குன்றன் மொழிப்பொருளாய்ப் புத்துலகம் காண்போம் பாங்கமைக்கும் பொதுவுடைமை பண்பனைத்தும் பூண்போம்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.64, 1978 174. கல்வி ஆசிரியருக்குத் தொல்லை பள்ளிச் சிறுவர்கட்குப் பாடம் சொல்லிக் கொடுப்போர் உள்ளம் நலிந்தாரடி - கிளியே - இனி ஊரும் துலங்கா தடி! தள்ளத் தகுமோ கல்வித் தந்தையர் முறையீடு வெள்ளம் கரைபுரண்டால் - கிளியே - மேல் விளைவுகள் என்னாகுமோ? மண்ணளிப்பதும் நன்கு வாழ்வதும் மாணவர்க்குக் கண்ணளிப் போரால் அன்றோ - கிளியே - அவர் கவன்றிடச் செய்தல் நன்றோ? புண்படப் பேசித் தமிழ்ப் புலவர்வருந்தச் செய்தார் கண்கெட்டுப் போனாரடி - கிளியே - கேட்கும் காதும் இழந்தா ரடி! பெருமானம் பேணுகின்ற பள்ளிக் கணக்காயர்கள் வருமானம் போதா தென்றார் - கிளியே - இதை மறுப்பதும் ஏதுக் கடி? பெருமான்களாம் இவர்கள் கைக்கூலி பெறுவார்க்கே அருமானம் அத்தனையும் - கிளியே - இவர் அடமானம் ஆக்கிடு வார்! ஏசினார் கல்விச் செல்வம் ஈவாரைக் காதறுந்த ஊசிகள் மாளிகையில் - கிளியே - போய் உட்கார லான தடி! ஆசான்கள் மாணவரை அமைதி படுத்துதற்குப் பேசாதீர் என்பதற்கே - கிளியே - மாதம் பெற்ற பணம் போதா தடி! புல்விற்க ஓர் விண்ணப்பம் போட்டால் கைக்கூலி கேட்பார் கல்விக் கணக்காயரோ! - கிளியே - அவர் கைகட்டி நில்லா ரடி! செல்லும் செலவை எண்ணிச் சிறுதொகை கூட்டும்படி சொல்லினும் கேளாவிட்டால் - கிளியே - அவர் தொழில் நிறுத்தம் செய்குவார்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, 1978; குயில் 1.12.1947 175. தமிழன் அன்னை, தந்தை, அன்பு, மொழிஇவை உன்னைப் படைத்தன, கடவுள் அன்று! கடவுள், கடவுள் என்பர்; அஃது அன்பெனும் பொருளுக் கமைந்த ஒருபெயர்! தமிழன்நான் தோன்றியது சாற்றுக என்பையேல் அன்னை, தந்தை, அன்பு, தமிழ்எனும் நான்கும் உன்னை நல்கின என்க. அன்னையும், தந்தையும், அன்பும், ஆரியமும் ஆகிய நான்கினால் ஆரியன் தோன்றினான். அன்னை, தந்தை, அன்பு, பிரன்சு நான்கினால் பிரெஞ்சுக் காரன் நண்ணினான். பிறமொழி மாந்தரும் இவ்வாறு பிறந்தனர். எனினும், தமிழன் என்பவனுக்கும், பிறமொழி பேசும் மற்றவர்க்கும் வேறு பாடு விளம்பு கின்றேன்: - நீண்ட காலமாய் நிலவுல கத்தில் மாண்ட ஆரியம் வாழ்வ தென்பர். நிலத்தினில் பிறவும் நெடுங்காலத் தின்முன் உண்டா யினஎன உரைத்தல் கூடும் ஆங்கிலம் ஆதி காலம் தொடங்கி வாழ்வ தென்றே வரைதல் கூடும்! தமிழோ காலம் உண்டான காலமாய் இருந்து வருவதால் தமிழன் இருப்பவர் எவர்க்கும் முன்தோன் றியவனே! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.70, 1978; குயில், 27.6.1960 176. தமிழன் தமிழனை எதிர்க்கும் பீரங்கிக் குண்டு சமையல் அறையின் முள்ளங்கித் தண்டு. தமிழைத் தமிழன் தாய்என்ப தாலும் தமிழ்பழித்தானை அவன்நாய் என்பதாலும் - தமிழனை தமிழ்த்தாய் வாடத் தான்வாழ்வ தென்பது தமிழனால் சற்றும் பொறுக்கஒவ் வாதது தமிழைத் தமிழன் மறந்த தெப்போது சாவதும் வாழ்வதும் தமிழுக்கே என்றோது. - தமிழனை மெத்தைவீடு கட்டிப் புலாற் சோறு வழங்குவ தல்ல அவன் வேண்டும் பேறு முத்தமிழ் காத்துப் பகைவனை ஒருவாறு முடிப்பது தான்முடி வாம்என்று கூறு. - தமிழனை ஒருநாட்டு மொழியினை ஒழிப்பவன் எண்ணம் ஒழிந்து போகுமுன் ஏற்படும் எண்ணம் பருந்து பறக்க வேண்டியது திண்ணம் பறக்கா விட்டால் தெரியும்கை வண்ணம். - தமிழனை - தமிழுக்கு அமுதென்று பேர், ப.77, 1978; குயில், 15.11.1960 177. தமிழர் வாழ்க தமிழ்மொழியைத் தாய்என்னும் தமிழர் வாழ்கவே! தமிழ்மொழிக்குத் தாழ்வுரைக்கும் தக்கை வீழ்கவே. தமிழ்வாழத் தாம்வாழும் தமிழர் வாழ்கவே! தமிழ்வீழத் தாம்தாழும் சழக்கர் வீழ்கவே. அமிழ்தென்று தமிழுண்ணும் அன்பர் வாழ்கவே! அமிழ்திருக்க நஞ்சுண்ணும் அடியர் வீழ்கவே. நமதென்று தமிழ்போற்றும் நல்லர் வாழ்கவே! நமைவிற்கப் பிறரைநத்தும் நாய்கள் வீழ்கவே. எல்லாம் உண்டு தமிழிலென்பார் எவரும் வாழ்கவே! செல்வம்எண்ணிப் பிறரைநத்தும் தீயர் வீழ்கவே. பொல்லாங்கற்ற தமிழ்வல்ல புலவர் வாழ்கவே! எல்லாங்கற்றும் தமிழறியா இழிஞர் வீழ்கவே. வேலும்வாளும் தமிழ் என்னும் வீரர் வாழ்கவே! கூலிக்காகத் தமிழைஏசும் கொடியர் வீழ்கவே. மேலாகும் தமிழ்என்னும் வீரர் வாழ்கவே! காலில்வீழ்ந்தும் தமிழ்விற்கும் கடையர் வீழ்கவே. மீட்சிக்குத் தமிழ்காக்கும் வீரர் வாழ்கவே! ஆட்சிக்குத் தமிழ்விற்கும் அடியர் வீழ்கவே! சூழ்ச்சிக்கும் மயங்காத தூயர் வாழ்கவே! வீழ்ச்சிக்கு வழிகோலும் வீணர் வீழ்கவே! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.54, 1978; குயில், 20.12.1960 178. தமிழர்க்கு அழைப்பு தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழரல்லார் தமைச்சார்தல் தீமை செய்யும்! தமிழர்க்குத் தமிழர்தான் இடர்செய் தாலும் தமிழர்பொது நலமெண்ணிப் பொறுக்க வேண்டும்! தமிழரெலாம் தமிழரன்றோ? தமிழர் அல்லார் தமிழரல்லார் என்பதிலும் ஐய முண்டோ? தமிழர்க்குத் தமிழரல்லார் இதுவ ரைக்கும் தமைமறந்தும் ஒருநன்மை நினைத்த துண்டோ? தமிழனொரு தமிழனுக்குத் தீமை செய்தால் தனிமுறையிற் செய்ததென அதைம றந்து தமிழரது பொதுநலத்துக் குயிரும் தந்து தமிழரது பண்பைநிலை நிறுத்த வேண்டும் தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா? தமிழரெலாம் ஒன்றுபடத் தக்க நேரம் தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும். தமிழரெல்லாம் தமிழருக்குத் துணையாய் நிற்க, தமிழ்கொன்று தமிழினத்தை ஈட ழிக்கத் தமிழரல்லார் மூச்சுவிடா துழைக்கின் றார்கள். தமிழருக்குத் தலைவரெனச் சொல்வார் தாமும் தமிழ்மாய்க்கக் காசுபெறத் துடிக்கின் றார்கள். தமிழ்மாய்க்கக் கூலிதரச் சிலரும் உள்ளார். தமிழ்கொல்லும் தலைவர்களைக் காணும் தீய தலைமுறையும் இதுவாகும் ஒன்று சேர்க! - தமிழுக்கு அமுதென்று பேர், ப.21, 1978; குயில், 24.1.1961 179. தமிழரிடம் எல்லாம் உண்டு கேள்வி தென்கடலில் முத்திருக்கும் தென்னாட்டில் தமிழிருக்கும் என்கின்றார் மெய்தானா தமிழரே? - அங் கின்னம் ஏதேனு முண்டோ தமிழரே? விடை தென்கடலில் முத்திருக்கும் தென்குமரி ஆழ்ந்திருக்கும் தென்னாட்டில் எல்லாமுண்டு தோழரே - அதைத் தெரிந்துகொள்ள ஆசை வேண்டும் தோழரே! கேள்வி முன்னாளின் இலக்கியங்கள் இந்நாளின் இலக்கியங்கள் தென்னாட்டில் உள்ளனவோ தமிழரே? - நீர் செவ்வையாய் விளக்க வேண்டும் தமிழரே, விடை பொன்சேர்தொல் காப்பியமும் புறப்பொருளும் அகப்பொருளும் தன்னேரிலாக் குறளும் - தோழரே - இவை சார்ந்தபல் லாயிரமாம் - தோழரே. கேள்வி முன்னாளின் இலக்கியங்கள் மொழிந்தீர்கள் இவைஎன்றே இந்நாளின் இலக்கியங்கள் - தமிழரே - நீர் ஏதொன்றும் கூறவில்லை தமிழரே? விடை இந்நாளில் தோன்றியவை எண்ணிறந்த இலக்கியங்கள் இன்னும் அவ்விளைவின் ஓட்டம் - தோழரே - சற்றே இருவென்றால் இருந்திடுமோ - தோழரே. கேள்வி நன்றான தமிழ்நூல்கள் நல்லனவோ, அல்லனவோ குன்றாமல் விளக்க வேண்டும் தமிழரே - உம் கொள்கையினில் ஆசைவைத்தேன் தமிழரே. விடை ஒன்றாகும் மக்கள்நிலை உணர்வொன்றே பெறத்தக்கதாம் அன்றே உரைத்தஇவை - தோழரே - இதை ஆரும் உரையாதபோது தோழரே. கேள்வி நன்றான அக்கருத்தை நாட்டுகின்ற இலக்கியங்கள் ஒன்றேனும் தனித்தமிழில் - தமிழரே - இங் குள்ளதுவோ சொல்லிடுவீர் - தமிழரே? விடை இன்றுநீர் தனித்தமிழ்ஒன் றிருப்பதாக ஒப்புகின்றீர் குன்றிலொரு குரங்கு வந்தால் - தோழரே - அக் குரங்குகளே குன்றாகுமோ - தோழரே? கேள்வி வீட்டிலே உள்ளபொருள் வேறுபட்டால் அந்தப்பொருள் வேறுபொருள் என்னாரோ தமிழரே - அவ் வேறுபொருள் உம்பொருளோ தமிழரே? விடை வீட்டிலே இருந்தபொருள் வேறுபட்டால் வீட்டுரிமை வேறாகிப் போய்விடுமோ தோழரே - எம் வீட்டுப்பொருள் தேடோமோ தோழரே. கேள்வி கூட்டக்கடல் நீரின்உள்ளே குமரிநாடு முழுகிற்றென்றீர் நாட்டுக்கதில் பெருமைஎன்ன தமிழரே - இதை நன்றாக விளக்க வேண்டும் தமிழரே? விடை பாட்டை அறியாஉலகில் பழங்குமரி அறிவுவைத்தாள் மூட்டையுடன் இங்கு வந்தோர் - தோழரே - கடல் முத்தைச் சொல்லி அதைமறைப்பார் தோழரே. கேள்வி நாட்டைஒட்டிக் குமரிநாடும் இருந்ததென்றால் தமிழருக்குக் காட்டஇதில் பெருமை உண்டோ தமிழரே - நான் காணஇதை விளக்க வேண்டும் தமிழரே? விடை காட்டைஒத்த உலகில்ஒளி காட்டிவைத்த குமரிநாட்டைக் காட்டினால் எம்பெருமை தோழரே - மிகக் காணுவார் என்பகைவர் தோழரே. - தமிழுக்கு அமுதென்று பேர், ப.71, 1978; குயில், 23.2.1960 180. இனப் பண்பாடு மனப் பண்பாடாதல் வேண்டும் அகவல் தாங்கள் தமிழரே என்று பார்ப்பனர் கழறலாம், அதிலே கவலை இல்லை; தமிழர் தம்மைப் பார்ப்பனர் என்று பகரலாம் அதற்குப் பதற மாட்டோம்! சிங்களம் சென்ற தமிழன் சிங்களச் செங்க ரும்பைச் சேர்ந்து நாலைந்து பிள்ளை குட்டிகள் பெற்றுத் தென்னாட் டெல்லையில் மகிழ்வுடன் வாழ்ந்தி ருக்கலாம். பாரிசில் பிறந்த பச்சைக் கிளியைத் தமிழன் உயிரில் தாங்கி வந்து மக்களோடு மக்களாய் வாழ்ந்தி ருக்கலாம். ஊன்றி நோக்கத் தக்க தொன்றே; தமிழ்மொழி நன்றே தழைக்க வேண்டும் தமிழ் அமிழ்து சாற்றிய முறைப்படி தமிழன் உரிமையோடு வாழ வேண்டும் என்றஓர் அழியா இனப்பண் பாடு மனப்பண் பாடாம்எனின் தனித்தசீர்த் தமிழரே அவர்தமிழ் அகத்தாரே! - தமிழுக்கும் அமுதென்று பேர், ப.22, 1978; குயில், 8.9.1959 181. எழுக தமிழர் நேரிசை வெண்பா தமிழ்மீள வேண்டும் தமிழகம் இங்கு நமதாக வேண்டும் நமக்குச் - சுமையான தீமை அகன்று திருஓங்க வேண்டும்நம் சீமை சிறக்கவேண் டும். தமிழ்மொழியைக் கொன்றால் தமிழரைக் கொல்ல அமையுமென எண்ணும் அயலார் - உமியாய் இகழ்பெறு தல்வேண்டும் இன்பத் தமிழே புகழ்பெறுதல் வேண்டும் புறத்து. ஆங்கிலமே தாய்மொழி ஆவது வேண்டுமெனும் தீங்கில் சிறந்த சிறுமதியோர் - ஈங்குத் திருந்துத லேவேண்டும் செய்த செயற்கு வருந்துதல் வேண்டும் மனம். இந்தி புகுத்துகின்ற எத்தர்க்கும் ஒத்தூதும் மந்திக்கும் வேண்டும் வருமானம் - தொந்திக்கு நாட்டுக் கறிஒன்றே நாம்வெல்வோம் நம்மிலே கூட்டுக் கறிஒன்றே கொண்டு. thŒâw¡F« Ôa kiy¥gh«ig eh«bfhšy¤ öŒj‰w J¥gh¡» V‹?குண்டேன்? - தேயத்தில் மற்றுமை வேண்டுவது வாய்மைத் தமிழரே ஒற்றுமை ஒன்றேஒன் றே. சாப்பிடுதல் தூங்குதல் தாரத்தை நேரத்தில் கூப்பிடுதல் என்ற குறுகிய - வாய்ப்பில் மகிழ்ச்சிஎங்கே? செந்தமிழர் மானமெங்கே? பண்டைப் புகழ்ச்சிஎங்கே எண்ணும் பொழுது! - தமிழுக்கும் அமுதென்று பேர், ப.69, 1978; குயில், 19.6.1961 182. அம்மா சுட்ட தோசை தோசை சுட்டாள் இந்நாட் டுக்குச் சுட்டுக் கொடுத்தாள் பார்ப்பன னுக்கு! ஆசை காட்டி மோசம் செய்தாள் அவளே தாண்டா ஆள வந்தாள். பூசை போட்ட பார்ப்பா னுக்குப் பொரிவி ளங்காய் சுட்டுத் தந்தாள்! மீசை வைத்த தமிழர் உறவை விலக்கி வைத்தே ஆள வந்தாள். தமிழர் நாட்டைச் சென்னை என்றாள். தாங்கோம் என்றார் பின்னை என்றாள். அமிழ்தம் என்றாள் வாய்தி றந்தோம். ஐய ருக்கே அதைக்கொ டுத்தாள். உமிகொ டுத்தாள் தமிழ னுக்கே உணவு தந்தாள் பார்ப்பா னுக்கே! உமக்கு நானே அம்மா என்றாள் ஓகோ என்றால் சும்மா என்றாள். நெஞ்ச மெல்லாம் பார்ப்பா னுக்கே நெய்வே லியுமே பார்ப்பா னுக்கே வஞ்சம் எல்லாம் தமிழ னுக்கே வறுமை எல்லாம் தமிழ னுக்கே. அஞ்சுவ தெல்லாம் பார்ப்பா னுக்கே! அலுவ லெல்லாம் பார்ப்பா னுக்கே! மிஞ்ச விட்டாள் இந்தி தனையே! மெலிய வைத்தாள் தமிழ்நம் தாயை. - தமிழுக்கும் அமுதென்று பேர், ப.80, 1978; குயில், 20.10.1962 183. அடிமைத் தமிழன் தொல்லை அவனுக்கு வை எல்லை அடிமைத் தமிழன் தந்தானே தொல்லை ஆரியப் பாம்புக்குச் சட்டத்தின் பல்லை! குடிகேடர் என்கின்ற குற்றத்தின் சொல்லை கொண்டானே தந்தானே கொடுமைக்கோர் அளவில்லை! மாண்புப் பெரியாரைச் சிறையினில் அடைத்தார் மானத் தமிழரின் தலையினை உடைத்தார். காண்கின்ற கண்ணில்லை கருத்தில்லை மக்களைப் புடைத்தார் காட்டிக் கொடுத்தார்க்குக் காசுகள் படைத்தார்! ஊர்வல மாதரைத் தடியாலே தடுத்தார் உயிரன்புத் தாயர்க்குத் தொல்லைகள் கொடுத்தார் யார்பொறுப் பார்இனி தீப்பந்தம் எடுத்தார் ஆள்வோரின் சட்டத்தில் தீயினை மடுத்தார்! தமிழனே தமிழர்க்குச் செய்தானே கொடுமை தாங்குவ தில்லைநாம் தடுப்பது கடமை உமிழ்ந்திட்டோம் எச்சிலை திருந்தட்டும் அடிமை உதவாக்கரைக் கென்ன அமைச்சென்ற உடைமை? - வேங்கையே எழுக, ப.139, 1978; திராவிடம், 1.1.1949 184. குருதி பொங்கினால்... குருதி பொங்கினால் தயங்காது - தமிழ்க் குருளைக் கூட்டங்கள் மயங்காது! இருப்ப தல்லது தமிழோ டிறப்பதென்றிடும் கொள்கை மறவர்உயிர் தயங்காது! உண்மையின் கண்கள் இமைக்காது - அற உணர்வுத் தோள்களும் பொறுக்காது! அண்டும் பிறமொழி ஆதிக்கப் போரினில் ஆளவந் தார்குரல் நிலைக்காது! கோளரி கள்மனம் சலிக்காது - சிறு குள்ள நரித்தனம் பலிக்காது! ஆள நினைப்பவர் அற்ப மொழித்திணிப் பத்தனையும் எரிமலைமுன் நிலைக்காது! விடியலில் கருக்கலுக் கிடமேது? விளைச்சலில் களைகளைப் பிடுங்காது கிடப்பவர் அல்லர்யாம் தமிழர்கள் வீரம் கிளர்ச்சியில் வெல்லா தொடுங்காது! - வேங்கையே எழுக, ப.128, 1978; முத்தமிழ், 10.9.1948 185. எரிமலைச் சீற்றம் கடுஞ்சினம் மாந்தரைக் கண்குரு டாக்கும்; கண்ணோட்டம் அன்பினை நட்பினைத் தீர்க்கும்! கொடுவிலங் காக்கிடும் சுற்றம்பார்க் காது கொண்ட கொள்கைகளைக் காத்திடும் போது! படுகளம் படுகளம் இனிக்கும்கற் கண்டு பைந்தமிழ் காப்பாய்நீ போர்க்குணம் கொண்டு! இந்திக்குக் காட்டுக கொதிப்பை வெறுப்பை! என்நாட்டார் உணரட்டும் தமக்குள்ள பொறுப்பை! வந்தவர்க்கெல் லாம்நாம் இடம்தர மாட்டோம்! வலியவரும் போரில் புறங்காட்ட மாட்டோம்! முந்துக முந்துக போர்எல்லைக் கோடு முழுவெற்றி நமக்கென்று முழக்கிற்றன் போடு! ஆட்பட் டிருப்பவர் நாமல்லர் கூறு! ஆளவந் தோம்தமிழ் ஆட்சியின் வீறு! நாட்கடத் தாது நம்கையில் உண்டு நலிவுசெய் வார்களின் தலைக்குவை குண்டு! மீட்பதென் றேஎழும் எரிமலைச் சீற்றம் வெற்றியின் வார்ப்பட வெற்றியின் தோற்றம்! - வேங்கையே எழுக, ப.111, 1978; தொண்டு, 1.3.1959 186. பர்மாத் தமிழர்க்கு நன்றி இனிதாக அகிலபர் மாத்தமிழர் சங்கம் ஏழாவ தாண்டுவிழா அடைந்ததெனக் கேட்ட மனமேநீ மகிழ்ச்சியால் கூத்தாடு கின்றாய் வாயேநீ வாழ்த்தியே அன்பில்ஆழ் கின்றாய். தனித்திங்கே வாழ்கின்ற கண்களே, நீங்கள் அங்குள்ள தமிழர்களை நேரிற்கா ணுதற்கு நினைக்கின்றீர் உங்கள்அவா இயல்பான தாகும் நெடுந்தொலைவில் வாழுமவர் உடன்பிறந்தார் அன்றோ! மதமான பேய்பிடித்தும் சாதிவெறி கொண்டும் மாண்பற்ற கொள்கையினார் கட்சிபல புகன்றும் இதுதமிழர் தம்கொள்கை, இதுபகைவர் கொள்கை என்பனவும் அறியாமல் இங்குள்ள தமிழர், புதுச்சங்கம் நிறுவுவார் மறுநாளே கலைப்பார் புகழ்மிக்க பர்மாவின் தமிழரும்அப் படியா? மதம்சாதி கட்சிவெறி இல்லாமற், சங்கம் வளர்ப்பார்கள் தம்வாழ்வை வளர்ப்பார்கள்நன்றே! உடன்பிறந்த தமிழர்அங்கே வாழும்முறை காண அவாவுகின்ற கண்களே ஒன்றுரைப்பேன் கேளீர்: கடல்கடந்தார் வேற்றுமையாம் கார்கடலும் கடந்தார் கைத்தொழில் வாணிகம் அலுவல் எத்துறைதான் எனினும் தடங்கலின்றிப் பொறாமையும் சச்சரவும் இன்றித் தாம்தமிழர்! தமிழ்தம்தாய்! எனும்மனம் கோணாமல் இடம்பெற்றார் - என்றேன் - என் சொல்லோவி யத்தை எதிர்காண்பீர். அவர்சங்கம் எதிர்காண்பீர் மகிழ்வீர்! ஏழாண்டு பெற்ற எழில்அகில பர்மாவில் வாழ்தமிழர் சங்கம் வளர்ச்சிபெற்று - வாழியவே நேயத் தமிழர் நிலையுயர்க! செந்தமிழ்த் தாயே வளர்க தழைத்து. - நாள் மலர்கள், ப.39, 1978; குயில், 23.6.1959 187. எல்லாம் தமிழர் உடைமையே கருநட இசையும் தமிழர் கண்டதே! பல்லிசை கட்கும் வடக்குப் பாவிகள் இழிந்ததம் வடசொற் பெயரை இட்டனர். ஏழிசை வடவர் கண்டிலர்; அன்றியும் யாழிசை அறியார்; குழலிசை அறியார்; இனிமை தோன்றப் பாடுதல் அறியார்; ஆதியே தமிழர் அறிந்தவர் இவைகள், ஆரிய மறையில் அமைந்த தொன்று சாமம் பெயரால் சாற்றும் முறையைக் கேட்டறி யாத நாட்டு மக்கள் கோயிலின் தேர்விழாக் கூட்ட நடுவில் தவளைகத் துவதையும், நாய்குரைப் பதையும் கேட்டுக் காது கிழிபட் டிருப்பார்; அதுதான் அவர்இசை; சாம வேதம்! *** ஓவியம் தமிழர் உளத்தின் வளர்ச்சியே! ஆரியர் ஓவியம் அறியார்! மற்றும் தச்சும் முதன்முதல் தமிழன் கண்டதே! படமயில் ஆடும்; பார்த்த ஓவியன் நடஅர சென்று வரைந்து நல்குவான்; நல்கிய அதற்குப் புல்லுடைப் பார்ப்பான் அதுதான் கடவுள் அதற்குயிர் தருவேன் என்பான்; தமிழனும் ஆம்ஆம் என்பான். *** மருந்து தருவோர் மருத்துவம் என்பதும் இருந்து பார்ப்பான் இங்குக் கற்றதே. *** இன்னும் ஒன்றையும் இயம்புவேன் கேட்க. வேட்டி யைக்கீழ்ப் பாய்ச்சிக் கட்டுகை அதுவும் பார்ப்பானுக் கமைந்த வழக்கம். வேண்டாம் என்று விளம்புவான் ஒருபயல். வேட்டி, சட்டை, காசு, மெய்ப்பை இவைஎலாம் தமிழ்ப்பெயர்! பண்டே கண்டவை! காற்சட் டைஎன மேற்சட் டைஎன இப்போ திருப்பவை, அப்போ திருந்தவை. *** தமிழன் உடைமையை வடவன் உடைமைஎன்று தமிழனே ஆக்கித் தலைகவிழ் கின்றான். *** இந்நாள் தமிழில் இருக்கும் எண்களை அந்நாள் அரபியர், ஆங்கில மக்கள் எடுத்தாண் டார்கள்! இதைஆ ராய்க! தமிழில் ஒன்று மில்லை என்றும், தமிழில் இலக்கியம் இல்லை என்றும், தமிழைத் தொலைக்க வேண்டும் என்றும், கூறும் குறுகிய கொள்கை உடையோர் எல்லாம் வடவர் சொத்தே என்று சொல்லுவது நாளைய பிணஞ்சொல் லுவதே. - நாள் மலர்கள், ப.61, 1978; குயில், 3.1.1963 188. கொடைத் தமிழன் திங்கள்கதிர் உள்ளமட்டுன்1 கீர்த்தி யுண்டு செவிபெற்ற பாக்கியத்தால் இங்குன் பாட்டில் பொங்கிவரும் சுவையனைத்தும் உண்ணு கின்றோம் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... சிங்கமென்று நீயுரைத்தாய் தமிழர் தம்மைச் செய்கையிலே வானுயர்ந்தாய் தமிழா! உன்னை எங்குலத்து வீரனென நாங்கள் ஏத்தும் இசையுனக்குக் கேட்பதுண்டோ வானி லாங்கே காண்பதினாலே2 சத்தியத்தைக் கண்டு பாடிக் கடவுளிங்கு யாவுமென்று நன்றாய்ச் சொல்லி மாண்பினிலே நீயிருந்து காட்டி எம்மை வடுவகற்றித் தமிழரென வாழ்க சொல்லிச் சேண்புகுந்த சுப்பிரமணிய பாரதி உன் தெய்வமொழி இங்குவைத்த வன்மை யாலே ஆண்மையினி லேறுகின்றோம் இன்றே எங்கள் அடிமையைநின் ஆவலினைத் தீர்ப்போம் அண்ணே! இயல்பில்வரும் பேச்சினைப்போல் எழுதி ஆங்கே எழுத்தெழுத்துக் கொளிகாட்டி இனத்தை யெல்லாம் பயிலும்விதம் கவியாக்கும் பாங்கின் ஜோதி பரவுமொரு மண்டலமாய்க் காணுந் தோறும் வியக்கின்றார்; நின்திறனைத் தாமும் கேட்பார் வெண்மதிபோல் மற்றொன்று செய்வ துண்டோ? செயற்கரிது செய்துவிட்டாய்! தமிழா! நின்போற் செய்வதையும் காட்டுகின்றாய் நின்சீர் வாழி! - பழம் புதுப் பாடல்கள், ப.142, 2005; மணிக்கொடி, 22.7.1934 குறிப்பு : ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியைப் பற்றி, வெண்மதிபோல் மற்றொன்று செய்வதுண்டோ? இருள் அடர்ந்த இரவு கழிந்து விடியுங் காலம் வருவதை அறிவிக்கும் குரலை அருகிருந்து உடனிருந்து கேட்டவர் பாரதிதாஸன் - அந்தக் குரலொலி கேட்டுத் தமிழ்நாட்டு மக்கள், தமது தொழிலை மேற்கொண்டு வெளிப்பட்டதையும், அவர்களது போரையும் நேரில் கண்டனுபவித்தனர். சென்ற சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்ட தமிழனின் குரலில் ஒலித்த வீரம், ஆவேசம், ஆதர்சம் யாவும் அந்த ஒரு குரலிலிருந்து எழுந்தவைதான். அந்த முதல்குரல் நாட்டு மக்களுக்கு ஊட்டிய ஆவேசத்தையும், காட்டிய ஆதர்சத்தையும் இந்தப் பாடலில் எழில்கலந்து பாடியிருக்கிறார் பாரதிதாஸன். - என்னும் மணிக்கொடியின் குறிப்பு, பாடலின் தலைப்பை அடுத்து இடம்பெற்றுள்ளது. மணிக்கொடியில் வெளிவந்தபோது மூலத்தில் முதல் விருத்தத்தின் இரண்டாமடி, அரையடி குறைந்துள்ளது. இப்பாடல் பாரதிதாசன் பார்வையில் பாரதி நூலில் இவ்விடுபாட்டோடே எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. பின்னர் பாரதியாரோடு பத்தாண்டுகள் (1992) நூலில் விடுபட்ட பகுதி புத்துணர்வு பெறுகின்றோம்! நிமிர்ந்து நின்றோம்! என்றும் அரையடியால் நிறைவுசெய்யப் பெற்றுள்ளது. எதன் அடிப்படையில் இவ்வடி நிறைவு செய்யப்பெற்றது என்பதற்கான குறிப்பு அந்நூலில் தரப்படவில்லை. 1. உள்ளமட்டுமுன் (பா. பா. gh.); 2. காண்பதினால் என இருப்பின் நன்று. 189. தமிழர் எழுக! தமிழ் நிலத்தில் தமிழான பயிர்விளைச்சல் குறைவு! தமிழ் நிலத்தில் அயல்மொழியாம் களைவிளைச்சல் மிகுதி! தமிழ் நிலத்தில் தமிழ்க் கொள்கை எனும் விளைச்சல் குறைவு! தமிழ் நிலத்தில் அயற் கொள்கைக் களைவிளைச்சல் மிகுதி! தமிழ் நிலத்தில் தமிழ் ஒழுக்கப் பயிர்விளைச்சல் குறைவு! தமிழ் நிலத்தில் அயலொழுக்கக் களைவிளைச்சல் மிகுதி! தமிழர்களே! களைநீக்க வேண்டாமா? - உங்கள் சமையஉளத் தாலன்றித் தமிழுளத்தால் சொல்க! தமிழ் நிலத்தில் மக்கள்நிகர் எனும் விளைச்சல் இல்லை! தமிழ் நிலத்தில் சாதியெனும் களைவிளைச்சல் மிகுதி தமிழ் நிலத்தில் ஒன்றுதெய்வம் எனும் விளைச்சல் குறைவு! தமிழ் நிலத்தில் உருவணக்கக் களைவிளைச்சல் மிகுதி! தமிழ் நிலத்தில் தன்னுரிமை எனும் விளைச்சல் இல்லை! தமிழ் நிலத்தில் அயலாட்சிக் களைவிளைச்சல் மிகுதி! சமையஉளத் தால் இதனை எண்ணித்தூங் காதீர்! தமிழுளத்தால் எண்ணிடுவீர் களைநீக்க எழுவீர்! - பழம் புதுப் பாடல்கள், ப.274, 2005; குயில் 1.6.1958 190. அறுவரைக் கொன்ற அரசியல் வீழ்க! அறுப தாயிரம் ஆண்டுமுன் இருந்தஓர் கல்லா யுதத்தை இன்றைய அரசினர் கண்டு பிடித்துக் கையாள் கின்றனர் அவ்வா யுதத்தை ஆராய்ந் தவர்அது காட்டு மிராண்டித் தனம்என்று கண்டனர். எறியப் பட்டவர் இரும்பு டம்பையும் அறிஞர் ஆக்கிய நீதி தன்னையும் அரசியல் ஒழுக்கம் அறம் எவற்றையும் கிழித்துக் கொண்டு கிடுகிடுவென்று பாய வல்லதாம் அரசினர் படையது! ஒவ்வாச் சாதி ஒழிய வேண்டினர் அவ்வழிக் கிளர்ச்சி அறத்தாற் புரிந்தனர். அவ்வளவே தான், அவ்வளவே தான்! கடுக டுத்தது காட்டுமிராண் டித்தனம். சிறைப்பட் டவர்கள் சிறுவயிற் றுக்குக் கூழு மிழந்தபின் குடலு மிழந்தனர் நாலா யிரவரில் அறுவர் நல்லுடல்கள் தோலா யினவே, தோற்றன உயிரையே. தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளராம் தமிழரைச் சாவின் வாயில் தள்ளிற்றுக் காட்டு மிராண்டித் தனம்அது கண்டோம். வீழ்க இன்றைய இந்தியப் பாழாம் அரசியல் படுக்கை எழாமே! - பழம் புதுப் பாடல்கள், ப.276, 2005; குயில் 1.6.1958 191. மொழிவெறியா கூடாது? மொழிவெறி கூடாது என்று மொழிந்தார், உமிழத் தக்க உளறுவாய்க் கக்கன்! சொன்ன இச்சொல் தமிழர்க்குச் சொன்னசொல்! என்னசொல் கின்றோம் என்றெண்ணாமல் சொல்வது கக்கனின் தனித்த சொத்தே! போற்றி வாழும்இத் திருப்போற்றி யார்க்குச் சோற்றுக் கெவரையும் போற்றத் தோன்றும். வடவரைப் போற்றினால் வாழலாம்; தமிழக் கடையரைப் போற்றினால் ஒன்றும் காண்கிலோம் என்பது கக்கன் குறிக்கோள் என்க. தின்பது சாவது - எனும்சிறு கொள்கை கக்கன் பிறக்கையில் ஒக்கப் பிறந்தது தமிழும் உயிரும் உடம்பும், தமிழன்! இந்த மூன்றில் எதுகுறைத் தாலும் தமிழன் இருப்பினும் செத்தவன் தானே! நல்லறி வுலகைக் கேட்டால் நவிலும்; ஒருநாட்டுக்கு மொழிவெறி உயிரென்று! நல்லறி வுலகைக் கேட்டால் நவிலும். ஓரினத்திற்கு மொழிவெறி உணர்வென்று! அடிமை நாய்கள் இதனை அறியா! மானமி லார்இதை எண்ண மாட்டார் கழுகும் காண மறுக்கும் அறிவுறு கட்டை திருந்துதல் எங்கே! - பழம் புதுப் பாடல்கள், ப.278, 2005; குயில், 24.6.1958 192. காங்கிரசு குத்தகைகள் நற்சலுகை கொள்ளாதார் காங்கிரசில் எத்தனை பேர்கள் இருப்பார்கள்? எத்தர்களும் கத்தர்களும் வாழ்கின்ற காங்கிரசு வாழ்வதென்றால் பெத்த பெருமாள் செயல். - பழம் புதுப் பாடல்கள், ப.285, 2005; குயில், 5.8.1958 193. பொதுப்பணம் அரோகரா! துறைதோறும் வைத்தபொருள் அத்துறையோர் வீட்டின் அறைதோறும் ஆட்டமிடும்; கேள்வி - முறையுண்டா? பெட்டிப் பணமெல்லாம் கோவிந்தா கோவிந்தா கட்டுக் கணக்க ரகரா! - பழம் புதுப் பாடல்கள், ப.285, ப.2005; குயில், 12,08.1958 துறை - டிபார்ட்மெண்ட், துறையோர் - அலுவல்காரர 194. ஒற்றுமைதான் வழி நல்ல வழிஇது நல்ல வழிஇது சொல்வதைக் கேளீர் கொல்லை வழியல்ல கோணல் வழியல்ல சொல்லுவதைக் கேளீர் தொல்லை யடைந்தீர் சோற்றுக் கலைந்தீர் நெல்லிக்காய் மூட்டை யைப்போல் எல்லையில் லாத பிரிவினை நீக்கி ஒற்றுமை கொள்வீரே - நல்லவழி இது சாதிக் கிணற்றில் சமையச்சேற்றில் தள்ளப்பட் டேஅழிந்தீர் ஓதும் பெரியார் உள்ளம் உணர்ந்தே ஒற்றுமை கொள்வீரே - நல்லவழி இது ஆண்டுக்கு நூறு கோடிஇ ழந்தோம் அடிமைப் பட்டதினால் தூண்டிலில் மீனாய்த் துடிது டித்தோம் நாட்டை விட்டதினால். நாலு கோடிமக்கள் மற்றவர் காலடி நத்திப் பிழைப்ப துண்டோ? ஓலை விடுப்பீர் நம்பகை ஓட ஒற்றுமை கொள்வீரே நிலை கெட்டுவந்த வடக்கரையே நேருவாட்சி காக்கும் நிலை கெட்டுவந்த தமிழர்களைப் பாடைகட்டித் தூக்கும். படிஅரிசிக்குப் பறக்கையில் பக்த வச்சலம் சிரிக்கின்றார் அடியோடு கேரளம் ஏற்றிக் கையை விரிக்கின்றார் முத்தான மொழி முன்னோ ரின்மொழி முத்தமிழர் சொன்னதாம் எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம். என்னும் அருள் மொழியே - நல்லவழி இது - பழம் புதுப் பாடல்கள், ப.293, 2005; குயில், 9.9.1958 195. அமைச்சர் பத்தவச்சலனார்க்கு அறிக்கை கேரளத் திற்கு நெல்ஏற் றுமதி கெடுதி அன்றோ என்றுநாம் கேட்டால் ஊரில் உள்ள தமிழர்கள் நிறைய உண்ட மீதியை அனுப்பினேன் என்றே ஓர்அ மைச்சரே, பக்தவச் சலமே உள்ளத்தை விற்றே உரைக்கின் றீரே நேரு தந்ததா நீர்பெற்ற பதவி? நேயத் தமிழர் உமக்கா பகைவர்? நம்பிய மக்களை நட்டாற் றிற்கை நழுவ விடுவது நல்லதா ஐயா? தம்பதம் எண்ணிப் பிறர்க்கா ளாகித் தம் இனம் வாட்ட விலங்குகள் ஒப்பாவே வெம்பி இந்நாள் அழுதவர் நாளைக்கே வேங்கைக ளாகி எழவும் கூடுமே இம்மட்டும் போனது போகட்டும் இனிமேல் இம்மி நெல்லும் அகலாமற் செய்கவே! திறமை அனைத்தையும் தன்னலத் திற்கே செலுத்தி வந்த உம்மையே மீண்டும் இறைமை கொள்ளச் செய்தனர் தமிழர்! இன்னல் கொள்ளச் செய்வதா அவர்களை? நிறைய இந்நாள் அதிகாரம் உம்மிடம் நின்ற துண்டு நாளைக்கே அழியலாம். அறிக ஐயா பக்தவச் சலமே ஆயிரம் வரினும் இனங்கொல்ல வேண்டாம்! - பழம் புதுப் பாடலகள், ப.290, 2005; குயில், 26.8.1958 196. அமைச்சர் பத்தவச்சலனார்! தென்னாட் டார்கள் வடநாடு சென்றே பிச்சை எடுக்கின் றார்கள் பிச்சையும் நிறையக் கிடைத்திடு கின்ற தென்றே அமைச்சர் பத்த வச்சலம் அறைந்தார்; தமிழர் அரிசியைக் கேரளம் தள்ளும் மதியிலார் நாண மில்லார் இதுவும் சொல்வார் எதுவும் சொல்வரே! - பழம் புதுப் பாடல்கள், ப.298, ப.2005; குயில், 16.9.1958 197. பத்தவச்சலம் பாடும் பாட்டு நெல்லில்லை என்றுசொன்னால் உண்டென்பார்! நேரான சொல்லில்லை என்றால் தொழில் என்பார்! நல்லதமிழ் வித்தவிச்சுத் தில்லிக்கு வேலைசெய்யும் நம்அமைச்சர் பக்தவச்ச லம்பாடும் பாட்டு. - பழம் புதுப் பாடல்கள், ப.300, ப.2005; குயில், 23.9.1958 198. பத்தவச்சலம் மேலும் பழியேற்றார் ஊரலைத்த நெல்லை உடனுக் குடன்கட்டிக் கேரளத்துக் கேற்றிக் கெடுங்கழுகை - நேரில் விட்டே கொத்தவச்ச லம்பாடிக் கூட்டத்தை ஆதரித்தே பத்தவச்ச லம்பழியேற் றார். - பழம் புதுப் பாடல்கள், ப.305, ப.2005; குயில், 30.9.1958 199. கொட்டடா பறை! இசை : மோகனம் தாளம் : ஆதி நற்றவம் பலித்ததே ஒற்றுமை பெற்றோம் அற்றதே பகைஎன்று கொட்டடா பறை உற்றதே விடுதலை கொட்டடா பறை! அற்றைநாள் இப்பெரும் தமிழுலகம் ஆண்டோம் இற்றைக்கும் நாம்அந்த நிலையினைப் பூண்டோம் வெற்றி முற்றுமே பெற்றோம்நாம் தமிழர் வியப்பில்லை என்று கொட்டடா பறை! புகழ்க்கெல்லை இல்லை கொட்டடா பறை! நாம் பெற்ற விடுதலை மணிக்கொடி காப்போம் நானிலம் காப்போம் கெடுதலைத் தீர்ப்போம் தேம்பலா வாழை மாவெனும் முத்தமிழ்ச் செழுங்கனி வழங்குவோம் கொட்டடா பறை! முழுதுலகும் பெறக் கொட்டடா பறை! ஒருவன்நாட்டை ஒருவன் பறிக்கும் உள்ளப் போக்கைத் தமிழன்கை நறுக்கும் அருள் ஒன்றே சட்டம்! மக்கட்கே ஆட்சி! அமைதி நிலைஎன்று கொட்டடா பறை! தமிழர் கொடைஎன்று கொட்டடா பறை! - பழம் புதுப் பாடல்கள், ப.308, 2005; குயில், 14.10.1958 200. மீண்ட தமிழகத்தில் மீட்சித் தமிழகத்தில் மேன்மைத் தமிழருக்கே ஆட்சி கொடுப்போம் அறம்அதுதான் - மாட்சித் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழன் தமிழன் எனப்படுதல் தப்பு. - பழம் புதுப் பாடல்கள், ப.312, 2005; குயில், 21.10.1958; 201. தமிழனுக்குப் பிறக்க வேண்டும் வழுக்கி விழுந்த ஒருதமி ழச்சி வயிற்றில் தமிழ்மக னுக்குப் பிறந்தோன் அழுக்குச் சுமப்பவ னாயினும் அவனை எந்தமிழ் நாட்டார் நம்பலாம். ஆனால் வழுக்கி விழுந்த ஒருதமி ழச்சி வயிற்றில் பார்ப்பன னுக்குப் பிறந்தோன் விழிக்கு நல்லனாய்த் தோன்றினும் அவனை மேன்மைத் தமிழர் நம்பவே வேண்டாம். தமிழச்சி வயிற்றில் தமிழர்க்குப் பிறந்த தமிழ் மகன் தமிழர்க்கு நல்லது செய்வான் தமிழச்சி வயிற்றில் பார்ப்புக்குப் பிறந்த தறுதலை தமிழர்க்கு நல்லது செய்யான்! தமிழச்சி வயிற்றில் தமிழர்க்குப் பிறந்த தமிழ் மகன் தமிழர் நெறியையே சார்வான் தமிழச்சி வயிற்றில் பார்ப்புக்குப் பிறந்த தறுதலை பார்ப்பனர் அடியையே சார்வான்! வழுக்கி லாத தமிழ்மகள் ஒருத்தி வழுக்கினும் தமிழன் மார்பினில் வீழ்க தழைத்த தேனும் பழுத்ததே ஆயினும் தமிழ்மகள் எட்டியை எட்டுதல் சாதலே! இழுக்கு வண்டெச்சில் ஆயினும் தமிழ்மகள் இனத்தேன் உண்ணலால் தீதொன்றும் இல்லையே இழுக்குத் தேடற்க பார்ப்பானைக் காணற்க இறக்க நேரினும் இனபகை எண்ணற்க! - பழம் புதுப் பாடல்கள், ப.313, 2005; குயில், 21.10.1958 202. அன்னைமார்க்கு விண்ணப்பம் மாய்த்தான் பகைப்படை; மாய்ந்தான் களத்திடை பார்த்த தாய்முலைப் பாலூறும் தமிழகம். போய்த் தீர்ந்த துண்டா வடவரின் அடிக்கீழ்? புதல்வரை அனுப்புக அன்னைமீர் போருக்கே - மா பழித்தவாய் மூடுமுன் வடபுலம் தாக்கும் பழந்தமி ழகமா அடிமை ஏற்கும்? வழித்தான் தமிழகச் செல்வம் அனைத்தும்! மக்களை அனுப்புக அன்னைமீர் போருக்கே - மா நற்றமிழ் மீது செலுத்தினான் கண்ணை; நடுங்கிற் றேநம் இலக்கியப் பண்ணை! மற்றும் பகைவனை விட்டுவைப் போமோ! மைந்தரை அனுப்புக அன்மைமீர் போருக்கே - மா இருட்கடல் கிழிய எழுகசெம் பரிதி எழுக மணிக்கொடி வென்றது கருதி! நரிக்கு இடம்தரும் செந்தமிழ் வேங்கை நன்மக்கள் தாரீர் அன்னைமீர் போருக்கே! - மா - பழம் புதுப் பாடல்கள், ப.317, 2005; குயில், 25.11.1958 203. எங்குள்ள தமிழரும் எங்கள் பட்டாளம் சிங்கைத்தமிழ் மக்கள் எங்கள்பட் டாளம்! சிங்களத் தமிழர்கள் எங்கள்பட் டாளம் எங்குள்ள தமிழரும் எங்கள்பட் டாளம் தங்கட்குத் தாயகம் தமிழகமே நாளும் தங்கத்தைச் சுட்டாலும் தன்னொளி மங்காது சந்தன மறைத்தாலும் தன்மணம் குன்றாது சங்கத்தமிழ்க் கொள்கைத் தாய்ப்பாலிலே வந்த சிங்கங்க ளுக்குள்ள தென்பாங் குபோ காது எங்கே திரிந்தாலும் எங்கள் புலிக்கூட்டம் கங்குல் பகலுந்தான் காட்டைமறக் காது செங்குத்து மலையினில் சிக்கித்தவித் தாலும் தங்கத்தமிழ் நாடு தாழப்பொறுக் காது இங்குவரும் மேன்மை இனத்தவரின் மேன்மை மங்காத்தமிழ் நாடு மாத்தமிழர் வீடு எங்குள்ள தமிழனும் இந்நாட்டுப்பங் காளி! பொங்கினால்ஓ ருள்ளம் பொங்கும்தமிழ் வெள்ளம். - பழம் புதுப் பாடல், ப.318, 2005; குயில், 25.11.1958 204. கன்னக்கோல்காரன் இராகம் : புன்னாகவராளி தாளம் : சாபு பார்ப்பான் இனப்பகைவன் என்றான் முன்னாளில் - அந்தப் பார்ப்பான் காலைப் பணிந்து நின்றான் இந்நாளில் - பார் ஊர்க் கோயிலின் உருவெறுத்தான் முன்னாளில் - அந்த உருவெல்லாம் கடவுளென்றான் இந்நாளில் - பார் தீர்ப்பாய் ராமன் மனிதன் என்றான் முன்னாளில் - அந்தச் சீராமன் தான் கடவுன் என்றாள் இந்நாளில் - பார் சேர்க்க வேண்டாம் பார்ப்பை என்றான் முன்னாளில் - மிகத் தேவை அவன் தலைமை என்றான் இந்நாளில் - பார் பேரைச் சொல்லப் பார்ப்பான் என்றான் முன்னாளில் - அவனே பிராமணன் என்று சொன்னான் இந்நாளில் - பார் ஆரிய ரூர் சேரி என்றான் முன்னாளில் - அவனே அக்ரா காரம் என்று சொன்னான் இந்நாளில் - பார் ஓர் தமிழே வாழ்க என்றான் முன்னாளில் - அவனே உயர்மொழி தான் இந்தி என்றான் இந்நாளில் - பார் பார் தமிழன் நான் என்றான் முன்னாளில் - அவனே பார்ப்பான் மகன் நானே என்றான் இந்நாளில் - பார் - பழம் புதுப் பாடல்கள், ப.330, 2005; குயில் 27.1.1959 205. தில்லி ஒழிக செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன் தில்லி தன்னை ஒழிக்க வேண்டும் நாம் குந்திச் சிறிய கதைபேசித் திரியும் குள்ளத் தலைவர் குற்றம் செய்தனர் - செந் இந்திச் செய்தியில் நடந்த தெப்படி? இன்பத் தமிழை மாய்ப்பதும் கண்டோம் பைந்தமிழ் நாட்டுக் குள்ள அதிகாரம் பத்தில் ஒன்றும் பலித்ததா நமக்கு - செந் நாட்டினை ஆண்ட தமிழரா அடிமைகள் காட்டு மிராண்டிக் கழுதையா ஆள்வது? நாட்டையும் மொழியையும் நசுக்குதல் கண்டும் நாய்வாழ்க் கையை நாம் நாடுதல் நல்லதா? - செந் புலவர் உள்ளனர் எதற்குத் தாம் உள்ளனர்? பொன்னுளார் உள்ளனர் எப்பயன் கண்டோம்? கலைஞர் வாழ்கின்றார் எதற்காக வாழ்கின்றார்? கை விலங்குக்கு மெருகு போடவா? - செந் சோறுண்ணு கின்றோம்! நாயுண்ண வில்லையா? துன்ப மற்ற தலைமுறை செய்வோம் ஆறு பாய்ந்தெனத் தமிழர்கள் பாய்க அழிக்கும் பகையை அழிப்ப தற்கே - செந் - பழம் புதுப் பாடல்கள், ப.331, 2005; குயில், 17.2.1959 206. புறப்படுவீர்! விடுதலைப் போர்! நாட்டைமீட்க மனமிருந்தால் இங்குவாரீர் - இனத்தைக் காட்டிக் கொடுக்க மனமிருந்தால் அங்குப் போவீர் ஏட்டிற் புகழ் எழுதவென்றால் இங்குவாரீர் - இல்லை இழிவுதேட மனமிருந்தால் அங்குப் போவீர் வாட்டும்பசி நீக்கவென்றால் இங்குவாரீர் - பகைவர் வால்பிடித்து வாழ்வதென்றால் அங்குப் போவீர் மூட்டிவிட்டார் நம்பெரியார் போர்ப்பெருந்தீயை - அதில் மூழ்கவாரீர் மூழ்கவாரீர் தோழன் மாரே! தமிழைமீட்க மனமிருந்தால் இங்குவாரீர் - தமிழ்த் தாயைக்கொல்ல மனமிருந்தால் அங்குப் போவீர் சமையவெறி ஒழிகவென்றால் இங்குவாரீர் - கெட்ட தறிதலைகள் வேண்டுமென்றால் அங்குப் போவீர் நமதுடைமை நமக்கென்றால் இங்குவாரீர் - கெட்ட நாய்ப்பிழைப்பே நல்ல தென்றால் அங்குப் போவீர் குமைத்துவிட்டார் நம்பெரியார் போர்ப்பெருந்தீயை - அதில் குதித்திடுவீர் குதித்திடுவீர் தோழன் மாரே! மானங்காக்க மனமிருந்தால் இங்குவாரீர் - சிறிதும் மானமில்லார் வேண்டுமென்றால் அங்குப் போவீர் ஆனமட்டும் பார்ப்பதென்றால் இங்குவாரீர் - பகைவர் அடியைநத்தி வாழ்வதென்றால் அங்குப் போவீர் போனதில்லை தமிழர்வீரம் இங்குவாரீர் - கெட்ட புன்செயலே நல்லதென்றால் அங்குப் போவீர் தேனருவி, விடுதலைப் போர்! வாழ்க பெரியார்! மிகவே சிறப்படைவீர் புறப்படுவீர் தோழன் மாரே. - பழம் புதுப் பாடல்கள், ப.331, 2005; குயில், 9.12.1958 207. படார் படார் என்று காசுதரும் பைந்தமிழர் கையிற் படார்! திருடும் பார்ப்பார்மேல் ஐயப் - படார்! தீப் படப் படப்ப டார்படார் என்று வெடித்தார் மடப் பசங்கள் சூழரங்கத் தார். - பழம் புதுப் பாடல்கள், ப.341, 2005; குயில், 7.4.1959 208. இதுவுமோர் பிழைப்பா கையிற் பெற்ற பதவி பெரிதா? இனம் காட்டிக் கொடுத்த பழி சிறிதா? - சொல்லேடா? - கையில் பையிற் பெற்ற பணந்தான் பெரிதா? - இனப் பகைவனைச் சேர்ந்த பழிசிறிதா? - சொல்லேடா? - கையில் பார்ப்பானைப் பிராமணன் என்றாய் - நீ பதவிக் கவன் வீடு சென்றாய் தீர்ப்புக்கு வாய் பார்த்து நின்றாய் - நீ செந்தமிழர் மாண்பைக் கொன்றாய்! சொல்லேடா? - கையில் தமிழர்க் குழைப்ப தாய்மொ ழிந்தாய் - பின்பு தன்மானமே கெட்ட ழிந்தாய் உமிழ்பவன் வீடுநு ழைந்தாய் - நீ ஊரில் நாயினும் இ ழிந்தாய்! - சொல்லேடா? - கையில் எந்தமிழ்த் தாயைக் கசந்தாய் - கெட்ட இந்தி வருவதற்கும் இசைந்தாய் வந்தா ரடியில் கண்ணீர் கசிந்தாய் - நீ மாத்த மிழுடன் நஞ்சைப் பிசைந்தாய்! சொல்லேடா? - கையில் தமிழர் இழப்புக் கொஞ்சம் இழப்பா? - பகை தழைப்பது கொஞ்சம் தழைப்பா? தமிழன்னை சாக உழைப்ப துழைப்பா? தரம் கெட்டாய் இதுவும் ஓர் பிழைப்பா? சொல்லேடா? - கையில் - பழம் புதுப் பாடல்கள், ப.345, 2005; குயில், 28.4.1959 209. தமிழர் கடன் ஏழைத் தமிழன் வாழ வேண்டும் மாமா - அவன் இட்டலிக் கடையில் உண்ண மறுக்க லாமா? கூழா னாலும் தமிழன் விற்பது நமது - சுவை குறைந்திட் டாலும் அதுநமக்கே அமுது தாழ்வாய் நமைத் தமிழன் நினைப்ப தில்லை - அந்தத் தமிழ னுக்கேன் தமிழர்களால் தொல்லை? பாழாக்கிடும் நமை அயலான் நெஞ்சு - தீயன் படைப்ப தமுதம் என்றாலுமது நஞ்சு! தமிழன் கடையில் தமிழன் உண்ண வேண்டும் - பிற தறிதலைகள் கடையை ஒழிக்க வேண்டும் தமிழர்களால் தமிழர் வாழ வேண்டும் - நமைத் தாழ்த்து வாரை வீழ்த்தி டத்தான் வேண்டும்! தமிழன் கடை தமிழரின் தாய் வீடு - பிற சழக்கர் கடை நமக்குச் சுடு காடு! தமிழருணவு தமிழருக்குத் தாய்ப்பால் - பிற சாக்க டைகள் உணவு நமக்கு நோய்ப்பால்! நூற்றுக் கிரு நூறுவரு மானம் - கெட்ட நூலுக் கதை கொட்டுவதா மானம்? காற்று மழை கலந்தடிக்கும் போதும் - அவன் கடைக்கு றட்டில் ஒதுங்குவதும் தீதாம்! வேற்றுவனை வேரறுத்தல் நன்றா? - அவன் விற்பனையை ஓங்க வைத்தல் நன்றா? சாற்ற வந்தேன் முத்தான என் அத்தான் - தனித் தமிழர்களின் நற்கடமை யைத்தான்! - பழம் புதுப் பாடல்கள், ப.351, 2005; குயில், 5.5.1959 210. வாருங்கள் நாற்புறத்தும் பகைவர்கூட்டம் நடுப்புறத்தில் நம்தமிழ்த்தாய்! காப்பதற்குத் தமிழரெலாம் வாருங்கள் - தீய கதைமுடிக்க விரைவில்ஒன்று சேருங்கள். சோற்றுக்காக வந்தவர்கள் தொழும்புக்கென்று வந்தவர்கள் ஆற்றல்காட்டிப் பேசுகின்றார் வாருங்கள் - அகந்தை அறுக்கவேண்டும் விரைவில்ஒன்று சேருங்கள். பிச்சைஎன்று வந்தவர்கள் பெரியநாடு தம்மதென்றார் கைச்சரக்கைக் காட்டுகின்றார் வாருங்கள் - அந்தக் கழிவிடையை1 ஒழிக்கஒன்று சேருங்கள். முச்சங்கமும் முத்தமிழும் மூவரசும் எளியஎன்று நச்சைஅள்ளி வீசுகின்றார் வாருங்கள் - அவர் நாவறுக்க விரைவில்ஒன்று சேருங்கள். வந்தவர்கள் தமிழர்களாம் வாழ்ந்தவரே ஆரியராம் கொந்துகின்றார் வரலாற்றை வாருங்கள் - அந்தக் கோட்டான்களை ஒழிக்கஒன்று சேருங்கள். இந்திஒன்றே மேலானதாம் செந்தமிழ்தான் கீழானதாம் முந்துகின்றார் முந்துகின்றார் வாருங்கள் - அந்த முட்டுக்கட்டைகள் தீரஒன்று சேருங்கள். - பழம் புதுப் பாடல்கள், ப.357, 2005; குயில், 2.6.1959 1. கழிசடையை என இருத்தல் நன்று. 211. வெல்க தமிழ், வெல்க தமிழர்! இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால் அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும் வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும் கான்றுமிழ்தல் வேண்டும் கழிவடைச் சாதி சமயம் என்னும் எவற்றையும் மதித்தல் கூடாது மறப்பது நன்று தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள் எவற்றிலும் எவரும் சேர்தல் சரியன்று தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்; தமிழ்மொழி வீழ்ந்தால் தமிழர் வீழ்வர்; தமிழ் தமிழர்க்குயிர் தமிழன்னைக்கொரு தாழ்வு நேர விடுதலின் உயிரை விடுதல் தக்கது. சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை செந்தமி ழர்க்கும் உண்டு! திருமிகு சட்ட மன்றிலும் பைந்த மிழர்க்கு நூற்றுக் கைம்பது விழுக்காடு நோக்கிக் படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்! செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச் சிங்களர் பெரும்பான்மை யோரெனச் செப்பித் தமிழர் உரிமையைத் தலைக விழ்க்க எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள் எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும் மானங் காப்பதில் தமிழ்மக்கள் சாதல் நேரினும் தாழக் கூடாது இவைகள்இலங்கைத் தமிழர் கொள்கைகள்! யாவர்இவற்றை எதிர்ப்பினும் விடற்க! வெல்க இலங்கைத் தமிழர்! வெல்க தமிழே! மேவுக புகழே! - பழம் புதுப் பாடல்கள், ப.367, 2005 குறிப்பு: இலங்கை தினகரன் சிறப்புமலருக்கு 11.7.1959இல் எழுதியதாகும். 212. தமிழைத் தமிழனிடமிருந்து பிரிக்கமுடியாது காற்றும் மழையும் கலந்தடிக்கும் வேளையிலும் ஊற்றுநீர் வெள்ளமெலாம் ஊரழிக்கும் வேளையிலும் தோற்றம் குலையாமல் தூய தமிழ்த்தொண்டே ஆற்றி யிருந்தான் தமிழ்க்கவிஞன் அன்பினிலே. கண்கள் இறகு முனையில், கருத்தெல்லாம் மண்ணுலக மக்கள் நிலையினியே1 வைத்திருந்தான் உண்ணுவீர் என்னும் மனையாள் உரையினையும் எண்ணுகிலான் இன்பத் தமிழ்க்கவிஞன் ஏஏஏ. வேட்டி அவிழும்; வியர்வை உடல்நனைக்கும்; பாட்டி இருமுவாள்; பதினைந்து நாய்குலைக்கும் சீட்டிக் கடைக்காரன் பட்டகடன் தீர்என்பான் கேட்கிலான்; கேடில் தமிழ்க்கவிஞன் ஏஏஏ. அயல்வேந்தர் ஐந்துபேர் கூடிஉன் நாட்டின் புயல்வேந்த னுக்குத் துணையாய்ப் புகுந்து கயல்புலி மீன்கொடி கண்ட தமிழர் உயிரினின்று முத்தமிழை ஓட்ட முயன்றனரே. கைசோர்ந்தார் கால்சோர்ந்தார் கண்ணீரும் ஆறாக மெய்சோர்ந்தார் வீசுகுண்டு வேல்வாள் விழலானார் தைசேர்ந்த பொங்கலுண்டு வந்த தமிழர்களைத் துய்ய தமிழ்க்கவிஞன் கண்ணாற் சுவைத்தானே. பேரன் எதிர்வந்து தாத்தாஎன் றான்என்றன் பேரா தமிழர்தாம் பெற்ற தமிழுயிரைப் பாரோர் எதிர்த்தார் பழிசுமந்தார் நீபடித்துப் பாராய்என் றான்கவிஞன் பாட்டெல்லாம் காட்டியே. - பழம் புதுப் பாடல்கள், ப.390, 2005; காலைக்கதிர் பொங்கல் மலர், 1961 1. நிலையினிலே என்று இருப்பின் நன்று 213. துணைத்தலைவர் இலக்குமண சாமி இலக்குமண சாமி எழிலார்சென் னைப்பல் கலைக்கழகம் கைவிடா விட்டால் - நலத்தமிழ்போம்! ஆங்கிலமே ஈங்கிலகும் ஐயோஇத் துன்பத்தைத் தாங்கிலமே தாங்கிலமே யாம். - பழம் புதுப்பாடல்கள், ப.384, 2005; குயில், 5.7.1960 214. தமிழ் நாடு சேரன் செங்குட்டுவன் பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ? - சேரன் பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைத்துப் பார்ப்பாயே! - சேரன் பண்டிருந்த தமிழர் மேன்மை பழுதாக முழுதுமே கண்டிருந்தும் குகையிற் புலிபோல் கண்ணுறக்கம் ஏனோ? - சேரன் - இசையமுது, முதற்பகுதி, ப.46, 1942 215. கூவாய் கருங்குயிலே எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக! என்றேநீ செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே. கன்னடம் தெலுங்கு மலையாளம் களிதுளுவம் முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராது மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யாள்கஎனக் கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே. வராதெனச் சொன்னாரும் வருந்தத்தன் ஆட்சி இராத இடமில்லை என்றநிலை நாட்டத் திராவிட நாடு சிறைநீங்க என்று குரலே முரசாகக் கூவாய் கருங்குயிலே. உண்ணல் உடுத்தல் உயிர்த்தல்எனச் செந்தமிழை நண்ணலும் ஆம்என்று நாட்டுக; வேறுமொழி எண்ணல் நிறுவல் இலாதுகல்வி கட்டாயம் பண்ணல் பயன்என்று கூவாய் கருங்குயிலே. செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே. இளைஞர் துடிக்கின்றார் தமிழன் நிலைஎண்ணிக் கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின் களைநீக் குகஎன்று கூவாய் கருங்குயிலே. பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும் ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார் மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே. - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.85, 1949 216. வேங்கைக் குகையில் நீள் வையம் எதிர்த் திடினும் - அஞ்சுதல் இல்லாத் தோள்வாய்ந்த மூவேந்தர் - சீர்ஆட்சி நாள்என்ற கடல்வெள்ளம் தான்கொண்டு போனதே கோள்வாய்ந்த பெருந்தீயர் வரலால் இருளானதே! யாவரும் ஒன்றேஎன வாழ்ந்தோமே நாங்கள் இனம்சாதி மதவெறி அலங்கோலம், மேவி வீழ்ச்சி நிலை அடையவும் ஆனதே வேங்கைக் குகைக்குள்நரி வாழ்ந்திடவும் ஆனதே. - இசையமுது இரண்டாம் பகுதி, ப.37, 1952 217. எதற்கும் மேல் தமிழ் நாடுதான் மேலான நாடு தமிழர்க் கெல்லாம் மற்றவை காடு. - தமிழ் கமழ் தென்றலே நடமாடு நாடு காவிரி நீள்வைகை பாயும் நாடு. - தமிழ் கன்னல்மா பலாவும் வாழை கமுகு செந்நெல் யாவுமே மலிகின்ற நாடு. - தமிழ் பொன்னின் வார்ப்படம் போல் மாதரோடு போர்புரி மாவீரர் வாழும் நாடு. - தமிழ் - இசையமுது இரண்டாம் பகுதி, ப.38, 1952 218. மீட்சி எப்போது? காலைமுதல் மாலைவரை ஏருழுவர் பசியால் மெலிந்து நோயினில்வாடி - காலை தோலைமூட ஆடைஏதும் இலையே - உடல் தூய்மைக்கும் யாதொருவழியுமே இலையே - காலை அண்டி வாழ ஒருவீடில்லை. பிள்ளைகள் கல்வி அடையவோ வழியில்லை. மீட்சியும் கண்டதில்லை. நாளுமே வீழ்ச்சிஎனில் கோரும் பொதுவாழ்வு தூய்மை பெறுமா? - காலை - இசையமுது இரண்டாம் பகுதி, ப.39, 1952 219. எது தம்பி வேண்டும்? கொல்லையிலே ஒருசிட்டு - நல்ல கூட்டினிலே ஒருகிள்ளை சொல்லும் இவற்றினில் யாது? - நீ துன்பம் இல்லாதது கூறு! முல்லையிலே ஒருவண்டு - பண மூட்டையின் மேலொரு செல்வன் இல்லை என்னாத நல்வாழ்வை - நீ இந்த இரண்டில் விளக்கு. கோயிலில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு தூயது யாது சொல்தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது? வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலை வார்க்கும் திருப்பணி யாளன் ஈய நினைத்திடும் காசை - நீ யாருக்கு நல்குவை தம்பி? ஊருக்குழைத்திடக் கேட்டார் - உனை யோகம் புரிந்திடச் சொன்னார் யாருக் குடன்பட எண்ணம் - நீ இந்த இரண்டினில் தம்பி? கார்வி தைக்கும் தொழிலாளி - நேர் கைலை வேண்டிடும் சைவன் யாரப்பனே நலம்செய்வோன் - உரை இந்தப் பெருவையத் திற்கே? கற்சிலை செய்த கற்றச்சன் - இரு கைதொழும் கோவிலின் வேலன் நற்கலை ஈபவன் யாவன் - இதை நன்கு விளக்கிடு தம்பி! முற்றும் இசைத்தொழிலாளி - வாய் மூடி அருள்செய்யும் கண்ணன் நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு? கடவுள் அணிந்திட்ட மாலை - பூங் காவிற் சிரிக்கின்ற முல்லை உடைபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது? படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறு பண்ணையிலே பொதுத்தன்மை எடைபோட்டு நீகூறு வாயோ - இங்கு எதுநன்மை எதுதீமை தம்பி? நொய்தான பிழையான புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல் வையத்தில் எதுதம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி! உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்தியோகம் பார்க்கும் மைந்தன் செய்யும் திருக்தொண் டிரண்டில் - தம்பி செம்மையாம் ஒன்றினைக் கூறு. - இசையமுது இரண்டாம் பகுதி, ப.40, 1952 220. வாய்மை முரசு மனிதன் உண்போன்; மற்றவும் உண்பன! மற்றவை உறங்கும்; மனிதனும் உறங்குவான்! இன்புறும் பிறஉயிர்; இவனும் ஆங்ஙனே! துன்புறு வான்இவன்; துன்புறும் பிறவும் மனிதன் அறிபவன்; மற்றவும் அறிவன! மனித னுக்கு; மற்ற உயிர்கட்குக் குறிகள் உண்டு; நெறிகள் உண்டு! மனிதன்ஏன் நிலத்தில் வாய்த்த உயிர்களில் இனியோன் சிறந்தோன் எனப்படு கின்றான்? முளைத்த விலங்கு முதற்,சுள் ளான்வரை உள்ள உயிர்கட் கில்லாத தென்ன? மனித னிடத்தில் வாய்த்த சிறப்பெது? கேளீர், அதனைக் கேளீர், கேளீரே. உள்ளம் கண்டதை உள்ளவர்க் குரைத்தல் என்பது, மனித னிடத்தில் தானுண்டு! பிறஉயிர் களிடம் பிரசாரம் செய்யும் தனிஒரு மேன்மை சற்றும் இல்லை; இம்மி கூட இல்லைஎன் றறிக! உள்ளங் கண்டதை உலகுக் குரைத்தல் மற்றவற் றினின்று மனிதனைப் பிரிப்பது; மனித னுக்கு மாண்பு தருவது! அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ, வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ, பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்ற துரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன், தாழ்ந்த சுள்ளானில் தாழ்ந்தவ னாவான். மனித ருள்ளும் மனிதத் தன்மை கொள்கை என்று கூறுவர் அறிஞர் கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனித ருள்வாய்த்த மனித விலங்கு! நெஞ்சை ஒளித்துப் பேசுதல் வஞ்ச மன்றோ மாநிலத் தீரே! - இசையமுது இரண்டாம் பகுதி, ப.42, 1952 221. விடுதலையே உன்னைத்தான் விடுதலையே உள்ளத்தின் ஒளியே ஓடிவா திராவிடத்தில் ஏசெஞ்சொற் கிளியே தின்னத்தான் சோறில்லை செம்மைக்கோர் வழியில்லை என்போர்கள் இல்லாமே எல்லார்க்கும் நலம்அருள்வாய் - உன்னைத்தான் விடுதலையே உள்ளத்தே நீதான் உணர்வினிலும் நீயே ஓடிவா திராவிடத்தில் ஏஅன்புத் தாயே கள்ளத்தார் கொந்தாமல் கண்ணீர்தான் சிந்தாமல் வெள்ளத்தேன் அவரவரின் வீதத்தால் பொழிபவளே - உன்னைத்தான் விடுதலையே ஒருமனிதன் வாட ஒப்பா நன்னிலையே! ஓடிவா என்நாட்டினில் ஏஇன்பப் பொருளே திருவுடையார் பிடிவாதஞ் செய்தீமை எதிர்மோத வரும்அனலே, மக்களெலாம் வாழ்த்துகின்ற ஒளிவிழியே - உன்னைத்தான் விடுதலையே - இசையமுது இரண்டாம் பகுதி, ப.44, 1952 222. தாயகமே வாழி தாயகமே வாழி தமிழ் - கேரளந் தெலுகு துளுகன் னடமுறு - தாயகமே வாழி அலைமிகு காவிரி வெள்ளம் போலே அறிவொளி சேர்க்கும் கல்வியி னாலே நிலையினி லோங்கி வன்பகை வாட்டி நீணிலம் வாயார வாழ்த்தவே எங்கள் - தாயகமே வாழி வானமேலேற தாய் மணிக்கொடி! வளர்க வீடெலாம் செங்குட்டுவன்கள்! வளமே ஓங்குக! நல்லற மாதர் மகிழ்வே பொங்குக உலகினில் எங்கள் - தாயகமே வாழி - இசையமுது இரண்டாம் பகுதி, ப.60, 1952 223. வண்மைசேர் தமிழ்நாடு வண்மைசேர் தமிழ்நா டெங்கள் நாடு வாழ்த்துவோம் அன்போடு - வண்மைசேர் ... திண்மை யாகிய தோள்வீரர் திங்கள் முகங்கொள் பெண்கள் வாழும்நாடு! - வண்மைசேர் ... வண்ணம் பாடியே நடக்கும் வைகை காவிரி பெண்ணை! தண்ணறுந் தென்றல் பூஞ்சோலை சாகாத இன்பம் தழைகின்ற நாடு! - வண்மைசேர் ... சந்தனம் கமழ்பொதிகை சந்தப் பறவைகள் பாடல் சிந்துதேன் பொங்கும் மகிழ்ச்சி செந்நெல் வயல்கள் சிறக்கின்ற நாடு! - வண்மைசேர் ... பூரிக்கும் தமிழ்க்கவிதை வாழ்வினுக் கதேஆவி பாருக்கே இன்பம் சூழ்விக்கும் பழநாடு வாழ்வின் பயன்சொன்ன நாடு! - வண்மைசேர் ... - தேனருவி, ப.19, 1956 224. வெற்றிக்கு வழி வெல்லும் வகைகேளீர் -நாட்டாரே வெல்லும்வகைகேளீர்... எல்லையில் கால்வைத்த பொல்லா வடக்கரை, இல்லை திராவிடம் என்ற துடுக்கரை - வெல்லும் வகைகேளீர் (ஒற்றிலி - தாளம் இலாதது) பல்குழுவும்பாழ்செய்யும்உட்பகையும்வேந்தலைக்கும்கொல்குறும்பும்இல்லதுநாடு.brhšÈ aருளினான்tள்ளுவன்ïவ்வாறு öய்மைbசய்யப்படnவண்டும்åடு...(x‰WË - தாளம் உடையது) பல்வகைக் காட்சிகள் கூட்டிக் கூட்டிப் பகைவளர்த்தனர் நீட்டி நீட்டி எல்லாக் கட்சியும் ஒன்றுபட வேண்டும் இதனை முதலிற் செய்ய வேண்டும். - வெல்லும் வகைகேளீர் (ஒற்றுளி) இராவணன் நாட்டுக்கோர் வீடணன் போலே இரணியன் நாட்டுக்குக் கொடிய பிரகலா தன்போலே, திராவிட நாட்டுக்குப் பெரிதாக உள்ளதோர் ஐந்தாம் படை... (ஒற்றுளி) அடக்கவேண்டும் அவர்கள் துடுக்கை அறுக்க வேண்டும் தேளின் கொடுக்கை மடமை மதங்கள் ச்தி அனைத்தும் மறைந்த கதையும் மறக்க வேண்டும். - வெல்லும் வகைகேளீர் (ஒற்றிலி) ஆளவந்தான் ஒருதமிழன் ஆதலினால் அவனாட்சி அழியும் வகைதேடி அலைவார், கோளெல்லாம் மூட்டிடுவார் குற்றங்கள் சாற்றிடுவார் கொல்லைப் புறத்து வந்தார். (ஒற்றுலி) இந்த - மூளைக்கு நல்ல அதிர்ச்சி மருத்துவம், வேளைக்கு வேளை செய்து திருத்துவம், வாளுக்கு யாதொரு வேலையும் இல்லை, நாளைக்குத் தீர்ந்திடும் நாம்படும் தொல்லை. - வெல்லும் வகைகேளீர் - தேனருவி, ப.27, 1956 225. தொண்டர்படை நடைத்திறம் விடுதலை செய்நமது நாட்டை விரைவாய் கெடுதலை செய்யும் வடவர் ஆட்சி பொடிபடச் செய்! நட நட நட... இரும்புப் பட்டறை அவர்க்காம் - நல்ல எஃகுப் பட்டறை அவர்க்காம் திரும்பும் பக்கம் எங்கும் கொழிக்கும்செல்வமெல்லாம்அவர்க்காம்,நட... -விடுதலசய்... சுங்கப் பொருளும் அவர்க்காம் - வண்டித் தொடர்வருவாய் அவர்க்காம் தங்கச் சுரங்கம், கரிச்சுரங்கம் சுரண்டும்உரிமைஅவர்க்காம்,நட... - விடுதலை செய் ... ஞாலம் புகழ்விஞ்ஞானம் -தொழில்நாம்அறிந்தவரேனும் -ஒருகாலும்தொழிலில்நாமுன்னேறஇடங்கொடுப்பதுசிறிதுமில்லை,நட... - விடுதலை செய் ... வாழ்வும் புகழும்அவர்க்காம்-fட்ட வசயும்பசியும்நமக்காம்தாழ்வும்bதாழும்பும் நkக்கhம்-ஒUதருக்கும் செருக்கும்அவர்fளுக்காம், el... - விடுதலை செய் ... அருவிப் பாய்ச்சல் போலே - நட அழிவடக்கின் மேலே தெரிவது வா மேலை நாளைச் செங்குட்டுவன் வேலையாவும். - விடுதலை செய் ... - தேனருவி, ப.29, 1956 226. அன்பு வாழ்வுகொண்ட ÚÉ® தந்த தான தந்த தான தந்த தான தந்த தான jனதானm‹ò வாழ்வு கொண்ட நீவிர் இன்பம் ஆர உண்டு வாழ்க! தமிழ்வாழ! அஞ்சிடாது தொண்டு சார்க! அண்டு தாழ்வ கன்றுபோக முனைவீர்கள்! முன்பு வாழ்வு யர்ந்த நாடு முன்பு தீமை வென்ற நாடு தமிழ்நாடு! முன்பு ஞால மெங்கு மேகி வங்க வாணி கஞ்செய் நாடு பழநாடு! என்பு தோலு லர்ந்து வாடி இன்று நாடி ருந்த வாறு மறவாதீர்! இந்தி நோய் கொணர்ந்தி டாது வன்பு காரர் அண்டி டாத வகைஆய்க! இன்று போல்ம கிழ்ந்து பாரில் என்றும் நீவிர் நன்று வாழ்க புகழ்மேவி! இன்ப மேஇ யைந்த வாழ்வில் எஞ்சி டாது வந்துவாழ்க தமிழ்நாடே! - தேனருவி, ப.120, 1956 227. வெல்க! என்தாய் நாடே! இன்தமிழ் நாடே! பொன்னிறக் கதிர்விளை நன்செய் வளத்தினை தேன்மலர்ச் சோலையும் தென்னையும் வாழையும் வானிடை உயரும் மங்காச் சிறப்பினை! கனியென்று கட்டிக் கரும்பென்று வையத் தனியென்று செந்நெல் தருவதோர் வளத்தினை! குன்றாப் பயன்தரு குன்றுகள் உடையைநீ! இன்பெனும் புதுப்புனல் ஆறுபாய் எழிலினை! காடுகள் கழனிகள் ஓடைகள் புள்ளினம் பாடும் பொய்கை பலப்பல உடையைநீ! மின்தூங்கு மணிகள் மேவினை மாற்றுயர் பொன்தூங்கு நிலவறை பொன்றாத் திருவினை! உலகினை அழைக்கும் ஒளிமுத்துக் கடல்கள் இலகு பவழ இலக்குகள் உடையைநீ! இப்பார் எல்லாம் ஏந்துகை நிரப்பும் உப்பளச் செல்வம் உதவும் திறத்தினை! உழுவார் மனப்படி மழைபெறும் பேற்றினை! ஒழியா தசையும் தென்றல் உடையைநீ! முகத்து நிலவு காட்டி மகளிர் அகத்திறம் காட்டி ஒழுகும் அழகினை! நாளை தூக்குக உலகைஎனில் இன்றே வாளைத் தூக்கும் மறவர்உன் மக்கள்! தத்துவ முதல்நூல் உலகுக்குத் தந்தனை! கத்திலா இலக்கியம் கடலெனக் கண்டனை! அமிழ்தென ஒருபொருள் உண்டெனக் காட்டும் தமிழ்உன் மூச்சும் பேச்சும் ஆம்எனில் என்ன இல்லை உன்பால்? அன்னாய் அளப்பரும் பரப்பினை வெல்கவே. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.95, 1964; குயில் 17.6.1958 228. மக்கள் பாசறை காங்கிரசு தீங்கர சானதால் அதனைத் தமிழர் ஒதுக்கித் தள்ளினர், மற்றும் சட்ட மன்றினர் தந்நலச் சுவரில் முட்டித், தமிழரை முழுவதும் இழந்தனர், கட்சித் தலைவர்கள் மக்களைக் கைவிட்டுத் தமக்குத் தலைவர் தாம்என்று வாழ்ந்தனர். ஆதலின் தமிழர் அனைவரும் இந்நாள் எவர்க்கும் எந்த நிறுவனத் திற்கும் கட்டுப் படாமல்ஓர் பாசறை கண்டனர் தலைவர் பெரியார் என்றுதாம் கொண்டனர். மக்கட் பாசறை எக்கட் சிக்கும் எத்தலை வர்க்கும் அடக்கம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் இயம்புவோம். அரசியல் அறிந்தவர் அறமு ணர்ந்தவர் இதனை ஊன்றி எண்ண வேண்டும் விடுதலை தமிழ கத்திற்கு வேண்டும் சாற்றும் இஃது தமிழரின் மூச்சே ஆதலின் இந்நாள் தமிழர் அனைவரும் உருவால் பலர்எனில் உணர்வால் ஒருவரே. இந்நாள் எதிரிகள் தமிழருக் கிருப்பினும் தமிழ கத்தைத் தமிழரே ஆள்வதாய்ச் சாற்றினும் அதிலே தவறொன்று மில்லை. தமிழைப் பேசும் தமிழக நிலைமை இதுஎனில், மற்றத் தமிழகம் எவ்வாறு? தனிநா டல்ல கேரளம்! தமிழகம் நனிநா டல்ல தெலுங்கம்! தமிழகம் தனிநா டல்ல கன்னடம்! தமிழகம்! ஆயினும் அவற்றின் நிலைமை வேறே. அங்குளார் அயலார்க் கடங்கி வாழ்குவர் தம்நிலை உணர்கிலார்! தகுதி காண்கிலர் உணர்வார் விரைவில்! உணரச் செய்வோம். திறக்கட்டும் பாசறைக் கதவு! அயல்மேற் பறக்கட்டும் தமிழர் பட்டாளம்! அயலார் தொடர்பினை அறுத்துத் தொலையச் செய்யட்டும். இங்குத் தமிழ்க்கொடி யேறுக எங்கும் பின்ஏறும் பெரியார் வெல்கவே. - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.271, 1964; குயில், 4.11.1958 229. பட்டாளம் கிளம்பிற்று கொட்டடா பறை நான்கு கோடித் தமிழர் பட்டாளம் நாட்டை மீட்கக் கிளம்பிற்று கண்டாய் தீங்கு செய்யும் வடவரின் ஆட்டம் செல்லாதென்று கொட்டு வெற்றிப் பறை! நாங்கள் அல்ல ஆட்பட்டிருப்பவர், நாங்கள் நாட்டை ஆளப் பிறந்தவர்! வேங்கை எழுந்தபின் நரிகட்கிங்கே வேலை இல்லை என்றுநீ கொட்டு! ஆண்டவர்க்கு வாய்த்தது தொண்டோ ஆளுந் தகுதியும் வடவருக்குண்டோ? தோண்ட வேண்டாம் வடவர் சாக்குழியென்று சொல்லி கொட்டடா! கொட்டு வெற்றிப் பறை! பழைய வரலாறு தெரியாத தங்கள் பாட்டன் மாரைக் கேட்டால் சொல்லுவர் அழையா வீட்டில் நுழைந்த திடக்கே அழியப் போவது வடக்கே வடக்கே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.264, 1964; குயில், 5.8.1958 230. கொலைப்படை வேண்டும் பீரிட்டடிக்கும் உடற்குருதி கண்டால் சோரா திருந்திடப் பழகு - வரும் போர் வீரனுக்கிதே அழகு! - பீரிட்டடிக்கும் உடற்குருதி நேரிட்ட போரிலே உன்விழுப் புண்ணில் நின்பகை நடுமார்பில் நீசெய்த புண்ணில் - பீரிட்டடிக்கும் உடற்குருதி மீன் உண்ணத்தான் வேண்டும் தேடு! - நீ மிக உண்ணத்தான் வேண்டும் ஆடு! நான் உண்டதுண்டு புலிக்கறியி னோடு நல்ல கரடிக் கறியை! உயர்வென்று பாடு! - பீரிட்டடிக்கும் உடற்குருதி ஊன்வாங்க வேண்டாம், உயிரோடு வாங்கி உடம்பு துடித்திடக் கத்தியைத் தாங்கித் தேன்வாங்கக் கூடழிப் பான்போல் ஓங்கித் திறம்செய்க; உயிரினிற் கண்ணோட்டம் நீங்கி. - பீரிட்டடிக்கும் உடற்குருதி வடபாங்கில் முன்னாளில் தமிழரை வென்றார் வந்திட்ட ஆரியர் உடும்பையும் தின்றார் இடம்பெற்ற பின்சைவம் மிகநல்ல தென்றார் இன்று தேவைப்படல் கொலைப்படை அன்றோ? - பீரிட்டடிக்கும் உடற்குருதி எண்ணாயிரம் தமிழ் மக்களைக் கழுவால் இழித்த குருதியைத் தேனென்றான் விழியால் பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை பைந்தமிழர்க்கெலாம் உயிரடா விடுதலை! - பீரிட்டடிக்கும் உடற்குருதி - பாரதிதாசன் பன்மணித்திரள், ப. 273, 1964; குயில், 17.3.1959 231. குடும்பத்தோடு புறப்படு வீட்டைப் பூட்டிக் குடும்பத்தோடு நாட்டை மீட்க இன்றே ஓடு! காட்டியதாம் கைவரிசை தில்லி! - அதைச் சீட்டுக் கிழிந்து போனதென்று சொல்லி. - வீட்டை ஆட்டுவாராம் அடக்குவாராம் அழிப்பாராம் ஒழிப்பாராம் ஒட்டுவாராம் நம்மை அவ்வடக்கர் - மேலும் தீட்டுவாராம் கத்தியை அவ்விடக்கர்! - வீட்டை வெற்றி பெற்றால் மீள்வதென்று வீழ்ச்சியுற்றால் சாவதென்று நற்றமிழன்னைக் குறுதி கூறு - அட நாம்தமிழர்! நாம்தமிழர்ஏறு!! -வீட்l செந்தமிழைக்கொல்லச்சொல்லிச் சீரகத்தைஅழிக்கச்செhல்லி இந்தியிiனக்கற்கச்சொல்லிச்செhல்லி- ஒரு மந்தியாட்டம்ஆடியதம்தில்லி. - வீட்டை தாய்க்கரிசி இல்லை என்பார் தமிழர்க்கெல்லாம் தொல்லை என்பார், வாய்க்கரிசி போட்டுக் bகாண்டுமுந்து- நல்லபர்ப்பரிசுநீbபறநிiனந்து! - வீட்டை - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.277, 1964; குயில், 16.8.1958 232. புகழைத் தேடு சோறு வேண்டும் துணிவேண்டும் - நல்ல கூறை வேண்டும் வேறென்ன வேண்டும்? - சோறு ஆறு செல்ல ஊர்தி வேண்டுமெனில் அதுபெற்ற பின்பும் ஆசையா தூண்டும்? - சோறு ஈறு வேண்டும் உன்ஆசைக்கு! மேன்மேல் ஏற்றம் வேண்டினால் புகழ்தேட வேண்டும் நாறு வேண்டும் மலருக்கு! நீதமிழ் நாட்டுக்கு நாளும் உழைத்திட வேண்டும். - சோறு புகழாசை கொள்ளுக: பொருளாசை தள்ளுக! புகழொன்றே நிலைஎன்ற தேவர்சொல் எண்ணுக! இகழ்வரும் மிகுபொருள் தேடுங்கால்! தமிழ்மீட்பில் என்ன நேர்ந்தாலும் அவைஎலாம் இன்பமே. - சோறு அழகிய இயங்கியில் நீசெல்லு கின்றாய்; தமிழன் வீரன் என்று சொல்லுகின்றாய் பழுது போக்கித் தமிழகம் மீட்பையேல் பார்ப்பான் நல்லதோர் தமிழனைப் பார்ப்பான். - சோறு தமிழன் உயர்ந்தவன் என்று சொல்கின்றாய்; தமிழன் வீரன் என்று சொல்கின்றாய்! தமிழன் அடிமை எனும்பழி போக்குங்கால் தமிழா உன்புகழ் நிலையாக்கு கின்றாய்! - சோறு - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.272, 1964; குயில், 17.3.1959 233. புறப்படட்டும் புலிகள் தமிழ் நாட்டு விடுதலை, தமிழ்ப் புலவர் விடுதலை நமக்கென்ன என்றிருப் பாரோ? - புலவர் நமக்கென்ன என்றிருப் பாரோ? - தமிழ் தமிழைப் பேச உரிமையும் இல்லை தாயை வாழ்த்தினும் வந்திடும் தொல்லை. தமிழ் மொழி எல்லாம் வடமொழி என்று சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று தமிழ்மொழி எல்லாம் தமிழ்மொழி என்று சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று. தமிழ்ப்பகைப் பார்ப்பனர் அடைவது நன்மை தமிழ்ப் புலவோர்கள் அடைவது தீமை நற்றமிழ் என்பது தில்லிக் காகாது. நம்அமைச்சர்க்கும் காது கேளாது; புற்றிலே மோதினால் பாம்பு சாகாது புறப்படட்டும் புலிகள் இப்பொழுது! - தமிழ் தமிழ் விடுதலைப் போரைத் தட்டிக் கழிப்பதா! தட்டியே மனைவியின் முகத்தில் விழிப்பதா! தமக்குள பெருமையைத் தாமே அழிப்பதா? தமைஈன்ற தாயின் குடரைக் கிழிப்பதா? - தமிழ் ஆட்டிப் படைப்பவர்க் கஞ்சுதல் வேண்டாம் அமைச்சர் என்பார்க்கும் அஞ்சுதல் வேண்டாம் காட்டிக் கொடுப்பார்க்கும் அஞ்சுதல் வேண்டாம் கருத்திலாக் கட்சிகட் கஞ்சுதல் வேண்டாம். - தமிழ் - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.218, 1964; குயில், 25.11.1958 234. விடுதலை பெறுவது முதல்வேலை பெரியார் கட்டளை (தனித்தமிழ் வண்ணம்) தன தன தன தன தன தான தனதன தனதன தன தான தனதன தனதன தன தான - தன தானா விடுதலை பெறுவது முதல்வேலை அடிமையில் உழல்வது முடியாது விழிதுயில் வதுமிகு தவறாகும் - எழுவீரே! மிகுபுகழ் உடையது தமிழ்நாடு மிகுதிறம் உடையது தமிழ்நாடு மிகநலம் உடையது தமிழ்நாடு - பழநாளே! கொடியது கொடியது வடநாடு குறுகிய செயலது வடநாடு கொடுமையை விடுவது சிறிதேனும் - முடியாதே! குவிபொருள் கவர்வது வடநாடு பசியினில் உழல்வது தமிழ்நாடு குறைவுடன் உறைவது தமிழ்வாழ்வில் - உளதாமோ! அடிமைகள் எனநமை வடவோர்கள் நினைவதை விடுவது குறைவாகும் அதைவிட ஒழிவது நலமாகும் - நிலமீதே! அனைவரும் உறவினர் தமிழ்நாடர் அனைவரும் ஒருநிகர் தவறாமல் அலைகடல் எனஎழ இதுவேளை - விரைவீரே! நடைபெறு மிதுநம துயிர்வேலை நரிகளும் நரிகளின் அடியாரும் இடர்புரி வதில்மயிர் இழையேனும் - முடையாமோ? நலிவினை உணருக! பெருவாழ்வின் நரையினை உணருக இதுவேளை நமைஎழ விழைபவர் திருவாளர் - பெரியாரே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.109, 1964; குயில், 12.8.1958 235. செந்தமிழ் நாடு அண்டிமுயல் வேங்கைவர, அன்புடையாள் ஆளன்வரக் கண்டிறக்கும் காடு கமழ்நாடு; - வண்டு பறக்குமென் கூந்தலார் பற்றும் அறமே சிறக்குமென் செந்தமிழ் நாடு. இதில் கண்டிறக்கும் என்ற தொடரானது. கண்டு + இறக்கும் என்றும், கண் + திறக்கும் என்றும் பிரிக்கப்படும் வகையால் இருபொருள் தருகின்றது. எனவே, அண்டும் முயல் வேங்கைவர, கண்டு இறக்கும் காடு கமழ் நாடும் என்றும், அன்புடையாள் ஆளன் வரக் கண்திறக்கும் காடுகமழ் நாடு எனவும் வரிசைப்படுத்திப் பார்த்துப் பொருள் கொள்ள வேண்டும். ஒருபுறம் அண்டிய முயலானது - வேங்கை (தீடீரென) வரக்கண்டு (அச்சத்தால்) இறந்து போகின்ற காடு; தன்னிட மிருக்கும் சந்தனம் அகில் முதலியவற்றால் மணம் வீசுகின்ற நாடு. மேலும்; அன்புள்ள குறப்பெண் (தோழி முதலியவர்கள் என்ன கூறியும் நட்ட தலை நிமிராமல்) ஆளன் வரவே, கண் திறந்து மகிழ்கின்ற, காடுகமழ் நாடு. இத்தகைய நாடு எப்படிப்பட்டது? யாருடையது எனில், வண்டானது சூடியிருக்கும் மலர்த்தேன் கருதிப் பறந்து கொண்டிருக்கும், கூந்தலுடைய பெண்கள் விரும்பி நடத்துகின்ற அறமே சிறந்திருக்கின்ற என் செந்தமிழ் நாடு என்பது இச்செய்யுளின் பொழிப்புரை. கூடிக் குலவுநரும், கொல்புலியைச் சீறுநரும், ஓடத் துலாவெடுக்கும் ஒண்குன்ற - நாடுதான் ஆர்ந்ததென் பாற்குமரி, ஆம்வடக்கு வேங்கடமே சேர்ந்ததென் செந்தமிழ் நாடு. ஓடத்து + உலா எடுக்கும் என்றும் இருவகையாய்ப் பிரித்துப் பொருள் கொள்க. உலா எடுத்தல் - உலாவி வருதல், துலா எடுத்தல் - துலாக் கோலைத் தூக்குதல். குலவுநர் - குலவுகின்றவர் (காதலர்கள்), சீறுநர் - சீறுகின்றவர், ஒண் குன்றம் - ஒளிமிக்கமலை. ஆழ்ந்த - நிறைந்த புனல் நிறைந்த என்றபடி, சேர்ந்ததென் - சேர்ந்தது என் எனப்பிரிக்க. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.228, 1964; குயில், 1.7.1947 236. தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் - கெட்ட சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம். அமையாப் பார்ப்பனப் பகைவர்க்குத் தமிழரை அண்ணாத் துரைகள் காட்டிக் கொடுத்தாலும், தமிழுக்கு வடமொழி தாய்என்று தெ.பொ மீனாட்சி அழகுகள் சாற்றித் திரிந்தாலும் தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் - கெட்ட சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்! நேருவின் அடியில் காம ராசர்கள் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்திட்ட போதிலும் தீராப் பகையொடு தமிழர்கூட் டத்தைச் சிறையில் தள்ளிக் கொலைசெய்த போதிலும் தமிழர்நாட்டை விடுதலை செய்வோம் - கெட்ட சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்! தமிழர் செய்த தவம்பலித் திட்டது பெரியார் திருவுளம் எமைக்காக்க வந்தது சமையம் சாதி ஆரியம் இந்தி தலைதூக்கி எங்கள் காலைக் கவ்வினும் தமிழ்நாட்டை விடுதலை செய்வோம் - கெட்ட சழக்கர் ஆட்சியை வேரோடு கொய்வோம்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.119, 1964; குயில், 8.6.1958 237. தமிழ்நாட்டு வாழ்த்து தமிழ் நாடே வாழ்க - எம் தாய் நாடே வாழ்க அமிழ்தாகிய இயலிசை கூத்தென்னும் தமிழாகிய உயிர்தழையும் விழுமிய - தமிழ் நாடே இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால் எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால் கலங்கொள் முத்துக் கடலும் பவழக் கடலும் கிழக்கு மேற்கில் உடுத்த - தமிழ் நாடே குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய் பெருநில முடையாய் நடுக்க மறியாய்! தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும் தெண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும். - தமிழ் நாடே - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.120, 1964 238. நாடு நலம்பெற வேண்டும் (ஆநந்தக் களிப்பு மெட்டு) நாடு நலம்பெற வேண்டும் - மக்கள் நாகரி கம்பெற்று வாழ்ந்திட வேண்டும் - நாடு ஏடுகள் மெய்பேச வேண்டும் - பிழை எங்குக்கண் டாலும்இ டித்திடல் வேண்டும் ஆடுகள் போல்விழ வேண்டாம் - இங் கவரவர் எண்ணத்தை மேற்கொள்ள வேண்டும். வீடிருந் தாற்குடி தோன்றும் - நல்ல விடுதலை உள்ளத்தில் நடுநிலை தோன்றும் மேடுபள் ளங்களைக் கண்டே - நலம் விதைக்கஎ ழுத்துழு வோன்எழுத் தாளன். - நாடு அன்னையும் தந்தையும் போலே - மக்கள் ஆளவந் தாரைநி னைத்திடும் வண்ணம் தன்னலம் என்பதை நீக்கி - ஒரு சார்பிலும் சாராமல் ஆளுதல் வேண்டும் இன்னல் விளைத்திடும் சாதி - மதம் யாவினு மேதமை நீக்கிஎல் லார்க்கும் நன்மை விளைப்பவர் தம்மை - இந்த நாடு வணங்கிடும் நாடோறும் என்பேன். - நாடு அலுவல கத்தவர் யாரும் - அந்த அலுவல கத்தின்த லைவர்கள் யாரும் சலுகைகள் காட்டுதல் இன்றி - எங்கும் சரிநிகர் நீதிசெ லுத்துதல் வேண்டும் கொலைகள வென்பன யாவும் - அவர் கோணல்உ ளத்தில்வி ளைவன அன்றோ? தலைவர்நம் காந்தியின் சாவும் - அந்தச் சாய்ந்தத ராசின்வி ளைவென்று சொல்வேன். - நாடு நாட்டின் தலைவர்கள் சாதி - மத நாய்வெறி தன்னைந றுக்குதல் வேண்டும் கோட்சேயைக் கண்டன ரன்றோ - அவன் கூட்டத்தின் உள்ளக்கி டக்கையும் கண்டோர் கேட்டைத்த விர்த்திட வேண்டும் - மக்கள் கேண்மையும் ஆண்மையும் நாளும்வ ளர்த்தே வாட்டம் தவிர்த்திட வேண்டும் - அன்பே வாழ்வுக்கு நல்லவ கைசெய்ய வேண்டும்! - நாடு - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.121, 1964; குயில், 1.4.1948 239. விடுதலை முழக்கம் (அகவல்) இசை: சாமா தாளம் : ஆதி நம்தமிழ் நாடே நம்தாய் நாடு! நம்தாய் நாடு வெல்க வெல்க! நம்தமிழ் நாடு வாழ்க வாழ்கவே இந்த முழக்கம் எழுப்புக நன்றே வீடெலாம் விடுதலை முழக்கம் மேவுக! ஊரெலாம் விடுதலை முழக்கம் உயர்க! காலையில் விடுதலை முழக்கம் காட்டுக! உண்ணுமுன் விடுதலை முழக்கி உண்க! உறங்குமுன் விடுதலை முழக்கி உறங்குக! அன்னைமார் விடுதலை முழக்குவா ராகுக! தந்தைமார் விடுதலை முழக்கம் தழுவுக! மக்கள்மார் விடுதலை முழக்கம் வளர்க்க! அலுவல்முன் விடுதலை முழக்குவார் ஆகுக! தொழில்முன் விடுதலை முழக்கித் தொடங்குக! விற்பனை விடுதலை முழக்கித் தொடங்குக! படிக்குமுன் விடுதலை முழக்கிப் படிக்க! அழகிய விடுதலை மணிக்கொடி எழும்வரை பகைவர்க் கென்றுமிங் கிடியென முழக்கவே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.219, 1964; குயில், 14.10.1958 240. தமிழகம் மீள வேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும் செந்தமிழ்ச் சொற்களை இந்தியால் எழுதுதல் அறிவிலாச் செயல்! அறமிலாச் செயல்! வடவரின் இந்த மடமை எண்ணத்தை முளையிலே கிள்ளி எறிதல்நம் முதற்கடன் ஏனெனில், எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே இனத்தைக் கொல்வ தெதற்கெனில், தமிழர் நிலத்தைச் சுரண்டித் தமது நிலையினை உயர்த்த, வடவரின் உள்ளம் இதுதான் நேருவின் ஆட்சி நெடுநா ளாக செந்தமி ழர்க்குச் செய்யும் தீமைகள் இம்மி யேனும் குறைந்த பாடில்லை நேருவின் ஆட்சி மாற வேண்டும். ஒழிக்க வேண்டும் உயர்தமிழ் மக்கள் இந்தியை எத்துப் பேசிப் புகுத்தியது! சாதி ஒழிப்பாரைச் சாக டித்தது! பாரோர் அறியப் பார்ப்பனர் ஆட்சியை நிறுவிற்றுத் தமிழரைக் கறுவிற்றுக் கொல்வதாய் எந்தத் துறையிலும் இம்மி அளவும் உரிமை தரேன்என உறுமிற்றுப் பன்றி! தமிழர் செல்வத்தைத் தயங்காது சுரண்டிற்று எங்குள தமிழ இனத்தார் தம்மையும் கயமை மனத்தாற் காட்டிக் கொடுத்தது தமிழர் நன்செய் தருநெல் லைஎலாம் அயலார்க் கென்றது; பசிஉமக் கென்றது! நம்இ னத்தார் செம்மைத் தமிழர்கள் இலங்கை அரசினால் எய்தும் இன்னலை ஆத ரித்தது நேருவின் ஆட்சி! மலையத் தமிழர்கள் நிலைமை நன்றெனில் நெஞ்சு கொதித்தது நேருவின் ஆட்சி அங்குள தமிழர் தொல்லை அடைந்திடில் ஆம்ஆம் என்ற தறமிலான் ஆட்சி! தமிழை அழிக்கத் தமிழனைத் தேடிக் காசு தந்து அலுவல் காட்டி ஊக்கம் செய்த துயர்விலான் ஆட்சி! ஆகாஷ் வாணி - அதனை நீக்குக! வானொலி - ஆக்குக! என்று கெஞ்சினும் இதற்கும் மறுப்பா எங்கே அடுக்கும்? தமிழன் உயிரையா தருதல் வேண்டும் இந்த உரிமை எய்து தற்கு? ஆரியர் ஆட்சி நீங்க வேண்டும் ஒழித்துக் கட்ட வேண்டும் விழுப்பத் தமிழகம் மீட்சி பெறவே! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.242, 1964 241. வெல்க தமிழ்நாடு இலங்கறத்தால் வீரத்தால் புகழைச் செய்த இத்தமிழ கத்தாய்க்கு வடக்கன் இட்ட விலங்கறுக்கப் புறப்பட்டான் தமிழர் தந்தை! வெல்கவே வெல்கவே என்றார் நாட்டார்! கலங்காத நெஞ்சத்து மறவர் கூட்டக் கடலொன்று படைஎன்று தொடரும் போதும் துலங்காமூஞ் சிக்கூட்டம் ஒன்று மட்டும் துட்டடித்துக் கொண்டிருத்தல் வெட்கக் கேடு! தமிழினத்தைத் தலைகவிழ்த்துத் தமிழ கத்தில் தன்னினத்தை வளர்ப்பதென்ற பார்ப்பான் ஆட்சி நமைநோக்கி எளியஉரை ஒன்று சொன்ன நாக்கறுக்கப் புறப்பட்டான் தமிழர் தந்தை! தமிழ்வெல்க தமிழ்வெல்க என்றார் நாட்டார்; தமிழர்படை தரைகிழியத் தொடரும் போதும் உமிழ்பார்ப்பான் எச்சிலுக்கோர் கூட்டம் மட்டும் உட்கார்ந்து கொண்டிருத்தல் வெட்கக் கேடு! ஆளவந்தார் காலடியில் அமிழ்து கண்டே அதற்காகப் போராடும் கூட்டம் ஒன்று! மீளுகநம் தாயகமே என்று கூறி மேற்செல்லும் மற்றுமொரு பெரிய கூட்டம்! கோளரிகாள், சிறுத்தைகளே, இவ்வி ரண்டில் குறிகெட்டுத் திரிகின்ற நரிக்கூட் டத்தின் ஊளைபெறும் வெற்றியது நாட்டின் தோல்வி உயர்நோக்கம் தோற்பின்அது நாட்டின் வெற்றி! சீரில்லை; சிறப்பில்லை அன்னை யான திருநாட்டை மீட்பதிலே ஆசை யில்லை கூரில்லை அறிவினிலே; கொள்கை யில்லாக் கோடரியின் காம்புகளைக் கான்று மிழ்ந்து நேரில்லை யாருமே தமிழர்க் கென்று நிலமதிரத் திரண்டெழுந்து தில்லி என்ற பேரில்லை என்றாக்கித் தீர்க்க வேண்டும் பெற்றதமிழ் நாட்டைநாம் பெறுதல் வேண்டும்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.267, 1964; குயில், 23.12.1958 242. கொடிய ஆட்சி திராவிடப் பெருமக்களுக்குத் தீராத் துன்பம் என்ன உரிமைஇது ? யாருக் குரிமை? ஏதும் விளங்கவில்லை நாட்டு மக்களே சின்ன நினைவுகளும் தீய செயலும் தீர்ந்திடக் கண்டதில்லை நாட்டு மக்களே! இன்னல் அடைகின்றனர் நாட்டின ரெல்லாம் இன்பம் அடைகின்றனர் ஓரி னத்தவர், என்ன உரிமைஇது யாருக் குரிமை ஏதும் விளங்கவில்லை நாட்டு மக்களே! அடிமைப் படுத்திவந்த வெள்ளையர் சட்டம் - இங் ககன்றிடக் கண்டதில்லை நாட்டு மக்களே அடிமைப் படுத்திஇந்த நாட்டினரையே - இங் கழித்திடக் கருதினர் ஓரி னத்தவர். கொடுமைப் படுத்திவந்த வெள்ளையர் சட்டம் - ஒரு கோணலில் லாதபடி காப்பது மன்றி கொடுமை அனைத்தும் இது கொடுமை என்னும் - சட்டம் கொடியர்கள் புதுக்கினர் நாட்டு மக்களே. விடுதலை என்றனர் நாட்டுமக்களே - அந்த விடுதலை யாருக்கு நாட்டு மக்களே கெடுதலை உங்கட்கு நாட்டு மக்களே - ஓர் கீழ்நிலை உங்கட்கு நாட்டு மக்களே! விடுதலை அடைந்தவர் ஓரினத்தவர் - உம்மை விழுங்கிடத் தடையில்லை அன்ன வருக்கே? இடுதலைத் தம்மவருக் கிடுத லின்றி - ஓர் இம்மி இடுவதுண்டா உங்களுக் கெல்லாம்? என்னருந்தி ராவிட நாட்டு மக்களே - இங் கேழ்மை உமக்குரிமை இன்பம் அவர்க்காம்! மன்னர் தமைநிகர்த்த அதிகாரம் - மற்றும் வாழ்வை உயர்த்துகின்ற பேரலுவல்கள். இன்ன பிறவுமவர் தமக்குரிமை - இங் கீடழிந் திடல்மட்டும் உமக்குரிமை! என்ன உரிமைஇது நாட்டு மக்களே? இன்பத்தி ராவிட நாட்டு மக்களே. - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.165, 1964; குயில், 1.10.1948 243. வருக விடுதலை வாழ்வு விடுதலை வாழ்வே வாவா - எம் வெற்றிப் பயனே வாவா கெடுதலை மாய்த்தாய் வாவா - ஒரு கீழ்மை தொலைத்தாய் வாவா தடதட வென்றே சாதி - எனும் தடையை இடித்தாய் வாவா அடிமை தவிர்த்தாய் வாவா - நல் அன்பில் உயர்ந்தாய் வாவா! வாழ்வின் பயனே வாவா - தமிழ் மக்கள் விருப்பே வாவா தாழ்வு தவிர்த்தாய் வாவா - எம் தமிழின் காப்பே வாவா ஏழ்மை துடைத்தாய் வாவா - நல் இன்பக் கடலே வாவா ஆழப் புதைத்தாய் மடமை - நல் அறிவில் உயர்ந்தாய் வாவா! ஒருமொழி யால்ஓர் இனமாம் - அவ் வோரின மேஒரு நாடாம் ஒருநா டின்னொரு நாட்டைப் - போய் ஒடுக்குதல் ஒப்பாய் வாவா ஒருவன் வாழ ஒருவன் உழைக்க வேண்டும் என்னும் இருளைப் பிளப்பாய் வாவா - இங் கெவர்க்கும் ஒளியே வாவா! ஊணும் உடையும் வீடும் - நல் உயிரின் நலமொடு கல்வி பேணும் வகையில் யாண்டும் - காணில் பெரியர் சிறியவர் இல்லை! ஆணுரிமை பெண்ணுரிமை - நல் அறத்தின் காப்பே வாவா வாணாள் இடையில் தமிழர் - பெற்ற மாசு துடைத்தாய் வாவா! உரிமை வாழ்வே வாவா - எம் ஒற்றுமை விளைவே வாவா பெரிது முயன்றார் தமிழர் - அவர் பெற்றதோர் பேறே வாவா அரிது புரிந்தார் தமிழர் - அவர் ஆர்ந்த புகழே வாவா வரைகடல் உலகும் தமிழும் - வானும் வாழ்நாள் வாழ்வாய் வாவா! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.297, 1964; குயில், 9.12.1958 244. ஆட்பட்டிருப்பது வெட்கம் இசை: காபி தாளம்: ஆதி மிடிமையே கொடுக்கும் குடிமையே கெடுக்கும் அடிமை வாழ்வும் ஒரு வாழ்வா? - நம் கொடிய தளை அறுக்க உரிமைக் கொடி பறக்கக் கூடிப் படை எடுத்தல் தாழ்வா? படிமன்னர் தொழும் மூன்று முடிமன்னர் வழி வந்தோம் பழிமன்ன வாழ்ந்திட லாமா? - நாம் தொடுத்தது போர்! பகை தொலைந்தது பார் என்று சொல்லிட இரண்டு நாள் ஆமா? ஒருகுடி ஓரினம்! ஒருமொழி கொண்டவர் ஒன்று பட்டார் என்ற பேச்சு - நேர் திருவிலாப் பகைவர் செவியினிலே வீழட்டும் தீர்ந்து போகும் அவர் மூச்சு! உருவற்றுப் போகட்டும் தமிழினம் என்றென்றே ஓயா துழைக்கும் ஒரு கோட்டி - அதன் கருவற்றுப் போம்படி செய்வோம் நமக்குள்ள கைகள் எட்டுக் கோடி ஈட்டி! ஆளாக வந்தவர் ஆள்வதும் ஆண்டவர் ஆட்பட் டிருப்பதும் வெட்கம் - மறத் தோளாய் இருந்தவை தோலாயின என்று சொன்னால் இவ் வையகம் சிரிக்கும். தூளாய்ப் பறந்திடும் வஞ்ச நெடுங்குன்றம் தூங்கும் தமிழர் விழித்தால் - பின் ஆளப் பிறந்தவர் ஆளுகின்றாரென அறிவோர் வரைவார் எழுத்தால்! வாழ்க்கையி லோர்சுவை, வையத்திலோர் புகழ்! வாரிரோ தமிழ்ச் சிங்கங்காள்! - வெந் தீக்காட்டில் வாழ்கின்ற செந்தமிழ் நாட்டன்னை மீட்க நமையழைக் கின்றாள்! வீழ்ச்சி அறிந்ததில்லை வேங்கைகளே எழுவீர் வீரம் நமைப் பிரிந்ததில்லை - நம் தாய்க்கா விலங்கு? தமிழ்க்கா துயரமிங்குத் தாக்குவீர்! தீர்ந்தது தொல்லை! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.265, 1964; குயில், 30.12.1958 245. தமிழகம் ஆதி மனிதன் தமிழன் ஆதி மனிதன் தமிழன்தான்; அவன்மொ ழிந்ததும் செந்தமிழ்த்தேன்! மூதறிஞர் ஒழுக்க நெறிகள் முதலிற் கண்டதும் தமிழகந்தான்! காதல் வாழ்வும், புகழ் வாழ்வும், காட்டிய தும்தமிழ் நான்மறைதான்! ஓதும் அந்தத் தமிழ் நான்மறை உலகம் போற்றும் முத்தமிழ்தான். நெய்தல் நிலம் நீளக் கடலும் முத்துப் பெட்டி; நெய்தல் நிலத்துப் பெண்மான் குட்டி, ஆள னுக்கே வரிந்து கட்டி அளிக்கும் உதடு சர்க்கரைக் கட்டி. ஆதிமொழி தமிழ்மொழி! குறிஞ்சி நிலம் வேளை பார்க்கும் சிச்சிலிக் குருவி மீனை வீசும் மலை அருவி காளையின்மேல் கண்வாள் உருவிக் கதை முடித்தாள் அவள் மருவி. முல்லை நிலம் காட்டுமயில் கூட்டம் கூடிக் களித்திருப்பார் குரவை ஆடிக் கூட்டமுதப் பாட்டும் பாடிக் குழலூதிடும் ஆயர் பாடி. மருத நிலம் பரத்தையிடம் சென்று வந்து பஞ்சமான நிலை பகர்ந்து சிரித்த கணவன் மேல்சினந்து செங்கை தொட்டாள் பின்உவந்து. பாடிவரும் ஆறுகள் பல, பரந்துயர்ந்த மலைகளும் பல, ஆடி நடக்கும் உழவு மாடு கொடுக்கும் செல்வம் மிகப் பலபல. ஓடை என்பது மலர்ச் சோலை ஒழுக விட்ட தேனாலே கோடை பறக்கும் முன்னாலே குளிரும் தென்றல் அன்பாலே! அறங்கிடந்து பண் பாடும், அன்பிருந்து சதிர் ஆடும், திறங்கிடந்த நாகரிகம் செய்து தந்த தமிழ்நாடு. மறங்கிடந்த தோள் வீரர் மகளிர்தரும் பெருங்கற்புச் சிறந்திருக்கும் தமிழ் நாடு செந்தமிழர் தாய் நாடு! - குயில், பாடல்கள், ப.61, 1977 246. எழில்மிகு தமிழ்நாடு எல்லாம் இருந்த தமிழ்நாடு படிப்பில்லாமல் பொல்லாங் கடைந்தது பிற்பாடு. சொல்லும் இயற்கைதரும் செல்வம் இல்லை என்னாமல் நெல்லும் சுவைமுக்கனி நெய்பால் கரும்பு வெல்லம். - எல்லாம் தென்றல் சிலிர்க்கவரும் சோலை தனிற்குயிலும் தேன்சிட்டும் பாடும் அங்கு மாலை மணக்கும்மலர் ஒன்றல்ல மூலைக்கு மூலை தெருக்கள்தொறும் ஓரத்தில் நிழல்தரும் சாலை இடையிடையே தென்னை மாதுளைகள் வாய்ப்பு வாழை மரத்தில் தேனாகத் தொங்கும் பழச்சீப்பு விளாஇலந்தை எந்நாளுமே கொடுக்கும் காய்ப்பு குலுங்கும் எலிமிச்சை நாவல் எங்கும் தோப்பு உலகினிலே எங்கும் இல்லை இப்படி என்பது கவிஞர் தீர்ப்பு - எல்லாம் - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.123, 1977 247. விடுதலை ஆசை தனித்தமிழ் வண்ணம் தனதன தான தனதன தான தனதன தான தன தானா கருவிழி ஓடி உலகொடு பேசி எனதிட மீளும் அழகோனே கழைநிகர் காதல் உழவினில் ஆன கதிர்மணி யேஎன் இளையோய்நீ! பெரியவ னாகி எளியவர் வாழ்வு பெருகிடு மாறு புரியாயோ பிறர்நலம் நாடி ஒழுகினை யாக இருசெவி வீழ மகிழேனோ! தெரிவன யாவும் உயர்தமி ழாக வருவது கோரி உழையாயோ செறிதமிழ் நாடு திகழ்வது பாரீர் எனஎனை நீயும் அழையாயோ! ஒருதமி ழேந முயிரென யாரும் உணர்வுறு மாறு புரியாயோ உயர்தமிழ் நாடு விடுதலை வாழ்வு பெறஉன தாசை பெருகாதோ! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.125, 1977; குயில், 7.4.1959 248. நாட்டியல் நாட்டுவோம் தென்பால் குமரி வடபால் இமயம் கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்? நாவலந் தீவென நவிலுவார் கண்ணே! தீவின் நடுவில் நாவல் மரங்கள் இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர். செவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும் நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்? பழையநம் தீவில் மொழி,இனம் பலஉள. மொழியி னின்று கல்வி முளைத்தது கல்வி இந்நாட்டில் கணக்கா யர்களைக் கலைஞரை, கவிஞரைத், தலைவரைப், புலவரை விஞ்ஞா னிகளை விளைத்தது - ஆயினும் கற்றவர், கல்லா ரிடத்தும் கல்வியைப் பரப்ப முயல வில்லை பாழிருள் விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர். கற்ற வர்சிலர், கல்லாத வர்பலர். என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம் என்பது கற்றவர் எண்ணம் போலும் எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர் எனும்நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே! என்ன அத்தான், நீங்கள் இப்படிக் கற்றாரை எல்லாம் கடிந்துகொள் கின்றீர்? கற்றாரைத் திட்ட வில்லை, கல்வி அற்றார்க்கு இரக்கம் காட்டினேன் அன்பே! கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு, யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில் யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும். கண்ணிலார் எண்ணிலார் என்பது கண்டும் கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா? கல்லா வறியர்க்குக் கைப்பொருள் கல்வியே! இல்லை என்பது கல்விஇல் லாமையே! உடையவர் என்பவர் கல்வி உடையரே! நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர் உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார் சிலர்ப டித்தவர் பலர்படி யாதவர் என்ற வேற்றுமை ஏன்வர வேண்டும்? ஆட்சி வேலை அதிக மிருக்கையில் நாட்டிற் கட்டாயக் கல்வி, நாளைக்கு ஆகட்டும் என்பவர் மக்கள் இன்று சாகட்டும் என்று சாற்றுகின் றவரே! எந்நா ளும்நான் எண்ணுவது இதுதான்: இந்த நாட்டில் யாவரும் படித்தவர் என்னும் நன்னிலை ஏற்படுவ தெந்நாள்? நாவலந் தீவில் மதங்கள் நனிபல! கடவுளே வந்து மதம்பல கழறினார் கடவுளின் தூதரும் கழறினார் மதங்கள் கடவுளிற் கொஞ்சம் மனிதரிற் கொஞ்சமும் கலந்த ஒருவரும் ஒருமதம் கழறினார் கடவுளை நேரிற் கண்டவர் சொன்னார் கேள்விப் பட்டவரும் கிளத்தினார். ஒருவர் கடவுள் ஒருவர் என்பார், ஒருவர் கடவுள் மூவர் என்பார், ஒருவர் கடவுள் இல்லையென் றுரைப்பார். நாம்பெற்ற பேறு யார்பெற் றார்கள் ஒருமதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த் திருவருள் புரிந்த பெரியோ ரும்பலர்; மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில் விதம்பல சேர்த்த வித்தக ரும்பலர். நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும் இருக்கலாம் இன்னும் பெருக்கலாம் எனினும் மதங்கள் வேறு மக்கள் வேறு மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள் இந்நில மக்கள் அவ்வெழிற் சட்டையின் உட்புறத் துள்ள மனிதரைக் காண்க. அந்த மனிதர் இந்தப் பெருநிலம் ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம் அறிந்து பயனிலை உணர்ந்தால் ஒற்றுமை நிலைபெறும்; கலகம் அறவே நீங்கும். பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும் நாங்கள் ஒன்றுபட்டோம் என்று நவின்றால் மதங்களின் தலைவர் விரைந்து வந்து பிரிந்தி ருங்கள் என்றா பிதற்றுவர்? அவர்கள் அருள்உளம் கொண்டவர் அல்லரோ? eh£oaš v‹D« ešy j§f¤nj® e‹Åiy e©z nt©lh kh?சொல், எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால் செல்லரும் நிலைக்குச் செல்லல் இலேசு. பலஇனம் பலமொழி பற்றி ஒருசில: - பழம்பெரு நிலத்தில் பலமொழி பலஇனம் இருப்பதால், இஃதொரு பல்கலைக் கழகம்! ஆனால், தேனாய்ப் பேசும் திருவே, ஓரி னத்துக் குள்ள மொழியைப் பலஇனத் துள்ளும் பரப்ப முயல்வதால் நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற கோட்பாடு சரிஎன்று கொள்வதற் இல்லை. அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச் செம்மை செய்து செழுமை யாக்கி இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும் ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும் என்பதென் எண்ணம் கன்னற் சாறே! இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை மொழிப்பற் றினின்று பிரிப்பது முயற்கொம்பு. அன்னை மொழியையும் படிஅத னோடுநான் சொன்ன மொழியையும் படிஎனும் சொற்கள் கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ? ஆங்கிலன் தனக்குள அடிமையை நோக்கி ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன் என்றான். நாட்டில் இலக்குமண சாமிகள் தமிழ்மறந்து ஆங்கிலம் சார்ந்து தமிழைக் காட்டிக் கொடுக்கவும் தலைப்பட் டார்கள். இந்த நிலத்தில் அடிமை இல்லை ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா? கைக்குறி காரர் கணக்கிலர் வாழும் இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல் எவ்வாறு இயலும்? அமைதிஎன் னாகும்? நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப் பாரடி நாவலந் தீவின் பரப்பைநீ பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி பிரிய நினைத்தவர் பிழைஉணர் கின்றனர் பெருநி லத்தில் ஒரேகொடி பறந்தது! நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர் எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர் இமையச் சாரலில் ஒருவன் இருமினான் குமரி வாழ்வான் மருந்துகொண் டோடினான் ஒருவர்க்கு வந்தது அனைவர்க்கும் என்ற மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்! இமயம் மீட்கப் பட்ட திதோபார் சீனன் செந்நீர் கண்ணீ ராக எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி! விளைச்சற் குவியல் விண்ணை முட்டியது தொழில்நலம் கண்டோம் - தேவை முழுமை எய்திற்று - வாழ்க அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்தே! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.126, 1977 249. துன்ப உலகிலும் bjh©L* எடுப்பு துன்ப உலகம் என்று புத்தர்பி ரானும் சொன்னதில் பொய்யில்லை ஒருதுளி யேனும்! துணை எடுப்பு அன்பினால் செய்யும் மக்கள் தொண்டு வன்பினை நீக்க வழிசெய்தல் உண்டு. அடிகள் நல்லவரை மாய்க்கக் கெட்டவர் இருப்பார் நாடாண்ட மன்னரைக் காடாளப் பிரிப்பார் செல்வக் குழந்தைகளின் கழுத்தையும் முறிப்பார் செந்தமிழ்த் தாய்நலம், செல்லாய் அரிப்பார்! தமிழர்க்குத் தலைவர் தமிழையே கொல்வார் தடுத்தாலும் தம்வழி சரிஎன்று சொல்வார் உமக்காக உழைக்கின்றோம் என்றும் சொல்வார் ஊரைஏ மாற்றுவதில் தாமே வெல்வார்! தூங்கித் தூங்கிமக்கள் தீயரை வளர்ப்பார் தூங்காம லேவந்த தீமையில் குளிப்பார் ஆங்கிலம் இந்தியை அழைத்தே களிப்பார் அவர்சொல்லை ஒப்பியே பிறகுதத் தளிப்பார். வாணிகம் என்பது வஞ்சகக் கிடங்கு வளர்ந்த அலுவல் கைக்கூலி அரங்கு நாணற்க அஞ்சற்க ஊதுக சங்கு நமக்குண்டு நாட்டுக்குத் தொண்டிலே பங்கு! - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.133, 1977; குயில், 7.2.1961 துன்ப உலகம் என்ற தலைப்பு குயில் இதழில் உள்ளது. 250. e‹¿ ïJ - ÔJ vJ?* விலைபெரிது; சுடர் மிகுதி; வயிர மணி நன்று - ஆனால் விற்கறையும் கிளிக் காலும் இருந்தால் அது தீதே! தலை சிறந்தது; நிலையுயர்ந்தது; தமிழ்ச் சுவடி நன்றே - ஆனால் தழுவத்தகா வடவர் கொள்கை இருந்தால் அது தீதே! கலையுயர்ந்தது; பயன் விளைப்பது; திரைப் படந்தான் நன்றே - ஆனால் காலொடிந்தவன் நடித்த தென்றால் நாலுநாள்ஓ டாதே! துலையில் ஏற்றிப் பெரியார்க்கே எடைப் பொருள்தரல் நன்றே - ஆனால் தொட்டால் கையில் ஈமொய்க்கும் பே ரீச்சம் பழம் தீதே! பொன்னான இயக்கத் திற்குத் தலைமைப் பதவி நன்றே - ஆனால் பொறுக்கித் தின்ன வந்தவனைப் புகுத்துவதால் தீதே! தன்மானம் காத்து வரும் தந்தை திறம் நன்றே - ஆனால் தறுதலைகள் சேர்க்கப்பட்டால் எதிர்காலம் தீதே! *ஆனால் என்ற தலைப்பு குயில் இதழில் உள்ளது. எந்நாடும் போற்று கின்ற தமிழ்நாடு நன்றே - ஆனால் இருட்டறையில் தமிழ் மக்கள் இருப்பதுவும் தீதே! உன்னும் கோவில் ஊர்தோறும் இருப்பதுவும் நன்றே உருவ வணக்கம் இருக்குமட்டும் உமிழும் தணற் குன்றே! - பாரதிதாசன் கவிதகள், நான்காம் தொகுதி 1977; குயில், 20.9.1960 251. கடன்பட உடன்படேல் உடற்ப யிற்சி விடுதியில் ஒள்ளியோன் எடையில் மிகுந்த இரும்புக் குண்டை ஒருகையால் தூக்கி உயர்த்திக் காட்டினான் ஐந்து பாரம் ஆனஓர் தூணை ஏந்தி இருகையால் உயர்த்தி இறக்கினான் முடுக்கி விட்ட முழுவலி இயங்கியை இடக்கை பற்றி இழுத்து நிறுத்தினான்! இவ்வகை ஆற்றல் காட்டி இருக்கையில் அவ்விடம் அவனை நண்பன் அணுகி, நீ பட்ட கடனுக் காகப் பச்சை வட்டிக் கணக்குப் பார்த்த வண்ணமாய்த் திண்ணையில் அமர்ந்துளான் என்று செப்பினான். இதனைக் கேட்ட ஒள்ளியோன் ஏங்கி எதிரில் உள்ளதன் இல்லம் கிளம்பினான். ஒள்ளியோன் வாங்கி வைத்த ஒருமணங்கு பஞ்சு மூட்டையைத் தூக்கவும் அஞ்சி ஆளிடம் அனுப்பச் சொல்லிப் போனான். உள்ளம் கடன்வாங் குகையில் உவப்புறும் கொடுத்தவன் வட்டியொடு கேட்கையில் கொலைபடும். ஆதலின் அருமைத் தமிழரே கேட்பீர், கடன்படும் நிலைகளுக்கு உடன்பட வேண்டாம். ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை போகா றகலாக் கடைஎனப் புகன்ற தேவர் நன்னெறி புகலெனத் தாவுக! தமிழகம் மீளுதற் பொருட்டே! - பாரதிதாசன் கவிதைகள், ப.150, 1977; குயில், 20.10.1959 252. என் நாடு அன்னை பிறந்த நாடு - எங்கள் அப்பன் பிறந்த நாடு முன்னையோர் பல்கோடி - வாழ்ந்த முத்தமிழ்சேர் தென்னாடு! சான்றோர்களின் பாடு - தனை சமைத்த துயர்ந்த நாடு ஆன்றோர்களின் அறிவால் - புகழ் அணிமிகுந்த திந்நாடு! முத்துக் கடல்சூழ் நாடு - வாழும் முச்சங் கப்பொன் ஏடு எத்தி சையும் மணக்கும் - அறிவு இசைத்திடும் தேன் கூடு! அருவி மலைகொள் நாடு - வற்றா ஆறுகள் பாய் காடு! கருவிருக்கும் வயல்கள் - விளைவு கணக்கின்றித் தரும் பீடு! தொழில் மலிந்த நாடு - உழைப்பு தோள்களின் மேம் பாடு விழிப்புணர்வி னோடு - எம்மை வீர ராக்கும் நாடு! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.93, 1978 253. பண்பாடு தம்பி : பண்பாடு பண்பாடு பண்பாடு! பாரெல்லாம் ஒன்றென்றே பண்பாடு! திண்டாடும் உல குயரப் பண்பாடு! செந்தமிழின் முப்பாலின் பண்பாடு! தங்கை : பண்பாடு பண்பாடு பண்பாடு! பசித்தவர்க்கு உணவளித்தல் பண்பாடு புண்பாடு தீர்ப்பதுவே பண்பாடு! புத்தருவி போல் குதித்துப் பண்பாடு! தம்பி : பண்பாடு பண்பாடு பண்பாடு! பாரதியின் செயல்முறையே பண்பாடு கொண்டாடு கல்வியதே பண்பாடு கோவில்களில் இல்லைநம் பண்பாடு! தங்கை : பண்பாடு பாண்பாடு பண்பாடு பழமையைப் புதுக்கியே பண்பாடு மண்மேடு இட்டதண்ணே நம்நாடு மாநிலத்தில் மேலுயர்த்தப் பண்பாடு! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.91, 1978 254. நாட்டுக்கு நான் தமிழுக்குப் பிள்ளை - அவன் தளைநீக்கும் மறவன் நமதன்பு நாட்டை - இனி நான்காக்கக் கடவேன். அமிழ்தொக்கும் தமிழர் - நல் அறம்காக்கும் மறவர் தமைஈன்ற நாடு - தமிழ்ச் சான்றோரின் வீடே. சாவைத் தொலைத்தேன் - தமிழ்த் தாய்க்கு வாழ்கின்றேன் பாஒன்றி னாலே - தமிழ்ப் பண்பாடு காப்பேன். நாவை அசைத்தால் - ஒரு நானூறி லக்கம் மூவேந்தர் பேரர் - பகை முற்றும் தொலைப்பார். ஞாலம் முழங்கும் - தமிழ் நான்மறை நன்றே காலந் திரும்பும் - தெற்குக் கடலும் ஒதுங்கும் சோலைகள் காண்பேன் - அங்குத் தொன்னகர் காண்பேன் நாலு திசைகள் - தமிழ் நாடென் றடங்கும். - வேங்கையே எழுக, ப.17, 1978; குயில் 16.8.1960 255. சென்னை பற்றிச் சண்டையா? எடுப்பு சென்னை நகருக்காகத் தீராது சண்டையிட்டீர் இன்பத் திராவிடரே - நீவிர் உலகில் எல்லோரும் என்மைந்தரே! உடன் எடுப்பு என்னதென்ன தென்பீர் இனத்திற் பகைகொள்வீர் தென்தமிழ்க் கிள்ளையே என்தெலுங்குப் பிள்ளையே - சென்னை அடிகள் என்னைத் தன்னடிமை என்றான் - என்னருமக்கள் யாரும் தன்னடிமை என்றான் சென்னை நகருள்ளிட்ட திராவிட மாநிலம் தன்னுடைமை என்றானே வடநாட்டுப் பகைவோனே - சென்னை முற்றத்தை மூத்தவனும் - இளையனான முதிரன்பில் வாய்த்தவனும் பெற்றுக் கொள்வதில் சண்டை உற்று நலிவதுண்டோ? பெருவீட்டை மீட்பதொன்றே இருவர்க்கும் கடனன்றோ? - சென்னை பெயரினால் வேறுபட்டீர் - மக்களே நீங்கள் பிறப்பினால் ஒன்றுபட்டீர் அயர்வினால் அனைவரும் அயலானுக் காட்பட்டீர் அறமறந்தீர், உங்கள் திறமறந்தீர், நாளும் - சென்னை - வேங்கையே எழுக, ப.35, 1978; குயில், 1.10.1947 256. தனியாக்கப் போராங்கோ தமிழ்நாட்டைத் தமிழர்களைத் தனியாக்கப் போராங்கோ உமிஇடிக்கப் போராங்கோ நல்ல உரல்உடைக்கப் போராங்கோ - நம்ப - தமிழ்... தமிழ் பேசும் மாகாணம் தனிஎன்று சொன்னாங்கோ தெலுங்கு பேசும் அண்டைவீட்டைச் சண்டை பிடிக்கச் சொன்னாங்கோ! நமது மலையாளிகளை நாம் பகைக்கச் சொன்னாங்கோ நலமேதான் பண்ணி நமைக் கலகஞ் செய்யச் சொன்னாங்கோ! - தமிழ்... தெலுங்கு நம்ம தெருவை விட்டு, தெலுங்கு நாடு போகணும் மலையாளத்தார் இங்கிருந்தால் மானம் விட்டுச் சாகணும்! கன்னடத்தார் கன்னடநா டெங்கே என்று தேடணும் களிதுளுவர் முகவரியைக் கண்டுபிடிக்க ஓடணும்! - தமிழ்... தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடரும் துளுவரும் தனித்தனியாய்ப் பண்ணாங்கோ இதுநல்லதே இண்ணாங்கோ! நமது சேரன் மலையாளி என்று தள்ளி விட்டாங்கோ நாலில் ஒருபங்கை மட்டும் தமிழ்நாடாக் கிட்டாங்கோ! - தமிழ்... கன்னடம் தெலுங்கு துளு நாடுகாத்து வந்தாங்கோ கண்ட அந்தச் சோழ பாண்டி மன்னரையும் நொந்தாங்கோ! மன்னு தமிழ் நூலையெல்லாம் மறக்கும்படி சொன்னாங்கோ வரிப்புலி, வில், கயற்கொடிகள் மாற்றங்கொள்ள வச்சாங்கோ! தமிழ்... சேரன்நிலம் தமிழ்நிலமாய்ச் செப்பும் நூலைக் கொண்ணாங்கோ தெலுங்குநிலம் தமிழ்நிலமே இல்லை என்று பண்ணாங்கோ! ஊரில் இனித் திராவிடநாடு உருப்படுமா இண்ணாங்கோ ஒவ்வொன்றுக்கும் பகைமூட்டி ஒழிப்பம் என்று சொன்னாங்கோ! தமிழ்... தெலுங்கு மலையாள மெல்லாம் திராவிட நாடில்லையாம் சேர்துளுவம் கன்னடமும் திராவிட நாடில்லையாம்! இலகு திராவிடம் பிரிக்க வந்தால் அடிப்பாங்களாம் எழுந்து வரும் திராவிடரை விழுந்து கடிப்பாங்களாம்! தமிழ் ... - வேங்கையே எழுக, ப.36, 1978; குயில், 12.1.1947 257. புதுப்போர் சாதி ஒழிய வேண்டும் என்பதும் தமிழக விடுதலை வேண்டும் என்பதும் குள்ளக் கருத்தா? வெள்ளம் போன்ற தமிழர் நலத்துக்குத் தக்கன அன்றோ? ஒழியாச் சாதி ஒழிய வேண்டும் தமிழகம் அடிமை தவிர்தல் வேண்டும் என்னும்இக் கொள்கை எல்லாத் தமிழரின் கொள்கை அன்றோ? இந்தக் கொள்கை வெல்லு மாயின் எல்லாத் தமிழர்க்கும் அல்லல் தீரும் இழிவும் அகலும் என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா? தமிழ்ப்பெரு மக்களே, சற்று எண்ணுமின்; பெரியார் சொன்னார் பெரியார் ஆதலின்! அரிய இவற்றை அவரை அல்லால் எவரால் இங்கே சொல்ல முடிந்தது? எவர்தாம் இதுவரை சொல்ல லானார்? சொன்னார் பெரியார் என்பது மட்டுமா? செய்தார் பெரியார் செய்வார் பெரியார் என்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா? ஆயிரம் ஆண்டுகள் அகன்றன! வரலாறு சாக வில்லை இருக்கக் கண்டோம். அவ்வர லாற்றில் ஓர்தமிழர் தலைவனைக் கண்ட துண்டோ? காதுதான் கேட்டதா? பெற்றோம் இன்றுதான் பெறற்கரும் பேற்றை! பெற்றோம் இன்றுதான் பெரியார் தம்மை! அன்புடை யீரே அறிவுடைத் தமிழரே பெரியார் எண்பது வயதும் பெற்றார் இருக்கும் போதே விடுதலை எய்தலாம் கட்சி வேண்டாம் கலகம் வேண்டாம் எப்பிரி விற்கும் ஆட்படல் இன்னலே! எல்லா மக்களும் இருப்புக் குண்டுபோல் ஒன்று படுதல் வேண்டும் இன்றே! நன்று பெறுதல் வேண்டும் அனைவரும்! திராவிடர் கழகம் சிறிய தன்றே, அஃது பெரியார்க் குரிய தன்றே சாற்றுவேன்; அஃது தமிழரின் உடைமை! பொதுவாம் இயக்கம்! பொதுவாம் நிறுவனம்! அங்கிருந்து கிளம்பும் அரும்போர் நிறுவனம்! பொதுப்போர்! புதுப்போர்! எழுக எழுக! புதியதோர் தமிழ் உலகம் இதோ! இதோ! வெல்க எழிற்றமிழ் நாடே! - வேங்கையே எழுக, ப.58, 1978; குயில், 8.7.1958 258. எது பிரிவினை மனப்பான்மை பிண்ணாக்கு நிறம்! பிளவிலாக் குளம்புகள் வெண்முகம்! நீள்காது! மிகமிக அழகு! தெருவிற் புகுந்து தெருவில்என் வீட்டின் அருகில் வந்ததும் அருமை! அருமை! வீட்டினுட் புகுந்தது, காட்டுத்தழை என்று சுவடிகள் துணிகளை மென்றுதின்றதும் சொல்லொணாப் புதுமை! சொல்லொணாப் புதுமை! வாய்தி றந்து வண்ணம் பாடித் தூய்மையைத் துடைத்ததும் மெச்சத் தக்கது! துணிவுடன் அடுக்களைச் சோற்றுப் பானையை உருட்டி முழுதும் இனிதாய் உண்டதைப் பார்க்கப் பார்க்கப் பார்ப்பார் கண்கள் மகிழ்ச்சி மத்தாப் பாக விளங்கின! தன்னுளந் தாங்காது வீட்டின் தலைவன் வாய்பெ ருத்த வடக்குக் கழுதையே வெளியே போநீ என்று விளம்பினான். இதுபிரி வினைமனப் பான்மை என்று கத்து கின்றதே கழுதை கத்து கின்றதே கத்து கின்றதே! - வேங்கையே எழுக, ப.60, 1978; குயில், 29.7.1958 259. நேருவின் ஆட்சி நேருவின் ஆட்சி தீருகின்ற நாள் நெருங்கிற் றென்று கொட்டடா முரசம்! சாரும் ஆரியர் வாழ வைக்குமோர் தன்விருப்பத் தனியாட்சி நோய்கொண்ட - நேருவின் ஆட்சி இந்தி புகுத்தித் தமிழ் விளக்கவித்தான் தன் இனத்த வர்க்கே செல்வம் குவித்தான் செந்தமிழ் நாட்டார் வாழ்வைக் கவிழ்த்தான் - இன்று செல்வாக் கெல்லாம் இழந்து தவித்தான். - நேருவின் ஆட்சி தமிழகத்தின் பெருவரு மானம் - எல்லாம் வடவருக்குத் தான் செய்யும் தானம்! தமிழ்நாட்டமைச்சர் எவர்க்கும் தன்மானம் சற்றும் வேண்டாமாம் எள்ளள வேனும்! - நேருவின் ஆட்சி காங்கிரசுக்குத்தான் பெற்ற தங்கை - தலைவி காசில் விளையாடுகிறவள் தங்கை! ஆங்காண் என்றூதினாள் தன்ஆணைச் சங்கை இதோ அவனே பூண்கின்றான் அவன்கால் விலங்கை. - நேருவின் ஆட்சி சமநிலை நோக்கிடும் ஆட்சியின் மூலம் - தன் சமையமா? சாதியா? உமிழாதா ஞாலம்? சுமை தாங்கி சுமையினைத் தனதென்ற காலம் தொலைந்தது தொலைந்தது நாட்டில் எப்போதும். - நேருவின் ஆட்சி - வேங்கையே எழுக, 1978; குயில், 15.9.1959 260. அவர் செல்லும் பாதை முன்னே போகும் குதிரை - அதைத் தன்ன தென்றார் நேரு! முன்னை நாக ரீகம் - அறம் முற்றிய பண்பாடு நன்ற மைந்த நாடு - நம் நல்ல தமிழ் நடு தொன்மை யான நாட்டை - மிகச் சுரண்ட வந்தார் நேரு. சீக்கியரின் நாடும் - மற்றும் சின்ன பல நாடும் தூக்க முற்ற போது - முடி சூடிக் கொண்ட நேரு! பார்க்க நேர்ந்த போது - ஓடிப் பறந்திடுவார் நேரு! ஏய்க்க வந்தார் நேரு! - இந்தி எவர்க்கும் வேண்டு மென்றே. தில்லியிலே குந்தி - நேரு செப்புமொழி எல்லாம், நல்ல சட்ட மென்றார் - அது நமக்கு மென்று சொன்னார். எல்லை யற்ற நாளாய் - இங் கிருந்த தமிழாட்சி இல்லை என்று சொன்னார் - அதை யாவர் ஒப்பு வார்கள்? படை யுடையார் நேரு - அந்தப் பதவி நிலை யாமோ? குடம் உடைந்து போனால் - அதன் குற்றோ டெல்லாம் மண்ணே! கடை விலைபோ காதே - அது கட்டித் தங்க மாமே இடை நடுவில் நேரு - அறம் ஏற்று நடப்பாரா? - வேங்கையே எழுக, ப.79, 1978; குயில், 23.8.1960 261. வெல்வ துறுதி குள்ள நரியாய்ப் பதுங்கி - ஆச்சாரி கொடுக்கும் குலக்கல்வித் திட்டம் கள்ளப் பசப்புமொழி யாகும் - சுடு காட்டை எண்ணுவரோ தமிழர்? எத்தனின் ஏமாற்றுத் திட்டம் - நமை ஈடேறா தழிக்கின்ற திட்டம் செத்ததுவா தமிழ்க் குருதி - தமிழா சீறுக வெல்வ துறுதி! காமராசரே இதைப் பொறுக்கோம் - குலக் கல்வியின் வேரை அறுப்போம்! ஓமந்தூரர்தம் இடத்தில் - நீ உட்கார வேண்டும் திடத்தில்! கோணற் கருத்துகள் போகும் - வந்த குறுக்குநூல் பாழ்எண்ணம் சாகும்! ஆணவ ஆச்சாரி வீழ்க - தமிழ் அண்ணலே நின் ஆட்சி வாழ்க! - வேங்கையே எழுக, ப.107, 1978 262. விடுதலை நம் உரிமை கையோடு கைகோத்து வாரீர் கழகத்தோழர்களே ஒன்று சேரீர் பொய்யோடு வந்தவர் புரட்டோடு வந்தவர் புறங்காட்டி ஓடினர் பாரீர்! எந்தக் கொடுமைகள் வீழ்த்தும்? எந்தத் தடைச்சட்டம் தாழ்த்தும்? உந்தும் விடுதலை வேட்கை உரிமைகள் ஒற்றுமை கண்டே வாழ்த்தும். விடுதலை வாழ்வுநம் உரிமை வேங்கைபோல் நீஎழு! அடிமை கெடுதலை தூள்படும் கீழ்மைகள் மாண்டிடும் கீழ்அறுப்ப தெந்த எருமை? முன்னோர்கள் ஆண்ட இந்நாடு முச்சங்க முத்தமிழ் ஏடு பின்னாளில் வந்தேறிக் கூட்டம் சுரண்டினும் பிழைத்தது, இனியில்லை கேடு! தீங்கரசுக் கென்ன ஆட்சி? திராவிடர் கைகொளும் மாட்சி ஓங்கிடும் ஐந்தாண்டில் உண்மை மொழியிது பெரியார் உழைப்புக்கில்லை வீழ்ச்சி! உழைப்பால் வருவது வெற்றி உரிமை விடுதலைப் பற்றி அழைத்தது சங்கொலி ஆர்த்தது முரசொலி ஆட்சி அதிகாரம் முற்றி! கண்ணில் கல்வி விளக்கேற்று கைத்தொழில் வாழ்வுக்கு நாற்று மண்ணில் பொதுநலம் மாண்புறு தமிழரால் மண்டிற்று என்றசொல் ஊற்று! - வேங்கையே எழுக, ப.108, 1978; பொது நலம், 15.2.1954 263. வேங்கையே எழுக வேங்கையே நீ எழுக! வெற்றித் தமிழைத் தொழுக! ஓங்கியெழும் எரிமலைபோல் உதவா மொழிமேல் விழுக! இந்தியாமே இந்தி இனவெறிகொள் இந்தி வந்ததென்றார் வாள்எடு நீ வாலறுக்க முந்தி! ஆங்கிலத்தால் நாடு அழிந்தது பண்பாடு தூங்கவில்லை தமிழர்என்று தோலை உரித்துப் போடு! ஒருமைப்பாடு வேண்டி உளறினான் ஓர் ஆண்டி அருமைப்பாடு தெரியாதார்க்கு அறிவு கொளுத்து தூண்டி! தாய்மொழிதான் கண்கள் தழுவும் மொழிகள் புண்கள் நோய்மொழியை நுழைத்தால் சாவு நூறாயிரம் எண்கள்! இந்தியா ஒருநாடு என்பதே தப்பேடு செந்தமிழர் நாடு வேறென்பதைச் சீறிப் பெறுக பீடு! - வேங்கையே எழுக, ப.113, 1978; தமிழணங்கு, 1.8.1948 264. சீறும் புலிகள் நாம் நாட்டை ஆளப் பிறந்தவர் நாம் - எந்த நாளும் அடிமைப் படமாட்டோம் கேட்டைச் சுமப்பதுவா மக்கள் - நமைக் கீழறுக்கும் அறியாமைகளின் கோட்டை தகர்ப்பது நம்கடமை - உழையா குறுக்கு நூலினர் பாழ்மடமைப் பூட்டை யுடைப்பது நம்ஆண்மை - வரிப் புலியே எழுந்துஆள் நம்மேன்மை! ஆள நினைப்பவர் யாருக்குமே - நாம் ஆட்பட்டிருந் தழிந்ததிலை, தாள முடியாத போர்களினால் - பிற சமய மதங்களின் வேர்களினால் நீளத் துயின்றனம் பாழ்அடிமை - நமை நிமிரா தழித்தது ஆரியமே: மீளப் பெரியார் பெருந்தொண்டு - இடி மின்னலாய்ப் பாய்ந்தது கட்டறுத்தோம். முத்தமிழ்க் குருதியில் சேர்ந்திருந்த - பல மூடத் தனத்தின் நஞ்செடுத்தார் புத்தம் புதிய தமிழ்க்குருதி - நம் பொன்னுடல் புத்துணர்வு புத்துணர்ச்சி எத்திசையும் பெற ஏற்றிவிட்டார் - இனி எங்குண்டு நம்மை எதிர்ப்பவர்கள்? செத்தனர் செத்தனர் நமைமிதித்தோர் - இனிச் சீறும் புலிகள்நாம் வெல்பவர் யார்? - வேங்கையே எழுக, ப.120, 1978; தனியரசு, 20.8.1960 265. தமிழ்நாட்டின் நிலை சிவத்தொண்டு மிக அறிந்தான் திரு நீற்றை விட் டெறிந்தான் இவன்தானா நாகரிகக் காரன் இவனை ஆதரிப்பவனா வீரன்? சவலைபோகும் பிள்ளை தமிழ்காணா நொள்ளை நவிலக் கற்கும் பிள்ளை நலமறியா வெள்ளை. இவர்களெல்லாம் தமிழர்களின் தலைவர் இந்த நாட்டின் ஆட்சிக்காக அலைவர். சைவத் தாயின் சேய்கள் தமிழைக் கெடுக்கும் நாய்கள் செவ்வித் தாழங் காய்கள் தீங்கு செய்யும் நோய்கள். தெய்வ மென்று பதவி பெற்ற திருடர் செந்தமிழ்மேற் கண்ணில்லாத குருடர். காட்டிக் கொடுப் பார்கள் களவுக்கும் அஞ் சார்கள் கூட்டிக் கொடுப் பார்கள் கொடுமைக் கெல்லாம் வேர்கள். நாட்டை நடத்தும் தலைவர்களாம் இவர்கள் நடுத்தெருவில் இருக்கும் குட்டிச் சுவர்கள். அணங்கு பிடிக்கும் வேடர் அறிவுகெட்ட மூடர் குணம் கேளா ஏடர் கூட்டக்குடி கேடர். பணம் பறிக்கும் இவரிடமாம் கலைகள். பைந்தமிழ்ப் பற்றில்லா எச்சில் கலைகள். காசு தேடக் கற்றார் கான்றுமிழப் பெற்றார் கூசுதலே அற்றார் கொள்கை ஏதும் பற்றார் மீசையுள்ள தமிழ்ப் புலவர் என்பார் மேன்மைத் தமிழ் ஈரலையும் தின்பார். - தமிழுக்கு அமுதென்று பேர், ப.107, 1978; குயில், 12.1.1960 266. இனாம் ஒழிப்பு ஜமீன்ஒழிப்பு நல்லதுவாம் இனாம்ஒழிப்புத் தீயதுவாம் சட்ட மன்றில் அமர்க்களமாம் இதுபற்றி! வியப்பன்றோ? இனாம்ஒழிப்பை ஆத ரிப்போர் தமக்குரிய கடமையினைப் புரிபவர்கள் தம்நாட்டின் நன்மை காப்போர்! அமிழ்த்திடுவோம் இனாம்ஒழிப்பை என்பவர்யார்? எத்தனைபேர்? அதனைக் கேட்பீர்! இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள் சிறுபான்மைக் கூட்டத்தின் இனத்தோர் ஆவார்! இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள் இனாம்சொத்தால் இனும்வாழ எண்ணு வோர்கள்! இனாம் ஒழிப்பை மறுப்பவர்கள் இனாம்சொத்தால் வாழ்வோர்பால் இனாம்கொள் வோர்கள்! இனாம்ஒழிப்பை மறுப்பவர்கள் அன்றும்இனாம் என்றும்இனாம் எனவாழ் வோரே! - நாள் மலர்கள், ப.63, 1978; குயில், 1.12.1947 267. தமிழாட்சியை விரி பிறர் ஆட்சியை எரி தமிழ் எல்லை நீங்கிய பிற எல்லைப் படத்தைக் கொளுத்து! வடவன் ஆட்சியை உலகம் சிரிக்கும்! - அவன் வரைந்த ஆட்சி எல்லைப் படத்தைத் தமிழகம் தீயில் இட்டெரிக்கும்! - வடவன் ஒடிந்தது வடவன் கொடுங்கோல்! கொடுங்கோல்! உயர்ந்தது தமிழனின் செங்கோல்! செங்கோல்! உடைந்தான் வடவன் தான்செய்த தீங்கால்! ஒட்ட அறுந்தது பார்இந்தி யின்வால். - வடவன் தமிழாட்சி வாழ்த்திப் பிறஆட்சி கொளுத்து(த்) தமிழ்ஒன்றே வைய மொழிஎன்று கிளத்து(த்) தமிழர்க்கும் வடவர்க்கும் போரை வளர்த்து(த்) தாய்நாட்டு விடுதலை நிற்குமே நிலைத்து. - வடவன் தீப்பந்தம் கொளுத்திக் கையிலே தூக்கித் திருநாட்டின் எல்லையை மட்டிலும் நீக்கிப் பார்ப்பன ஆட்சிப் படத்தினைத் தீய்க்குப் படைப்பாய், தாய்நாட்டை விடுதலை ஆக்கி! - வடவன் - நாள்மலர்கள், ப.106, 1978; குயில், 7.6.1960 268. தமிழர் நாடு என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ செவியில் யாண்டும்? கன்னல்நிகர் தமிழிசையே கேளேனோ! கண்ணெதிரில் காண்பவெல் லாம்நான்? தன்னேரில் லாததமிழ் தனிமொழியாய்க் காணேனோ? இவ்வை யத்தில்? முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றெனவே மொழியே னோநான்? - நாள் மலர்கள், 80, 1978; தமிழர்நாடு, 3.7.1944 269. தமிழ்நாடு ஒன்றுபடுக தமிழ்நா டேஎன் தாய்நா டேநீ தமிழைச் சேர்த்தாய் எங்கள் உயிரில் அமிழ்தைச் சேர்த்தாய் எங்கள் வாழ்வில் தமிழ்நா டேநீ வாழ்க! வாழ்க! முத்தமிழ் அன்னாய் முழுதும் நாங்கள் ஒத்து வாழ்ந்தால் உனக்கும் நல்லது செத்துக் கிடக்கும் எமக்கும் நல்லது முத்தமிழ் அன்னாய் வாழ்க! வாழ்க! குமரி தொடங்கி இமயம் வரைக்கும் அமைந்த உன்றன் அளவும் குறைந்தது தமிழர் மேன்மைத் தரமும் குறைந்தது தமிழின் மேன்மைத் தரமும் குறைந்தது. வாழ்விற் புதுமை மலரக் கண்டோம் தாழாத் தலைமுறை தழையச் செய்யும் வாழைக் கன்றுகள் வளரக் கண்டோம் வாழ்க அன்னாய் வாழ்க! வாழ்க! - இளைஞர் இலக்கியம், முதற் பகுதி, ப. 44, 1992 270. செந்தமிழ்நாடு இருபொருள் வெண்பா மடக்கொடியைக் காதலித்தோர் வார்கூழ் உழவர் அடைக்கலத்தால் கொள்ளும் அழகு - நெடுநாடே பொய்விளை யாதுநனி செம்மை புரிந்திடுநன் செய்விளைஎன் செந்தமிழ் நாடு. குறிப்புரை : மடக்கொடியைக் காதலித்தவர், அடைக்கலத்தால் அம்மடக் கொடியை அடைகின்ற அழகான நெடிய நாடே - அன்றியும், வார்க் கின்ற கூழை, உழவர் இலைக்கலத்தால் தொன்னையால் அடைந்து குடிக்கும் அழகான நெடிய நாடே பொய்விளையாமல் மிகச் செம்மை தருகின்ற நன்செய் விளையும் என் செந்தமிழ்நாடு. அடைக் கலம் தம்மையே ஒப்படைப்பது. அதையே அடை கலம் எனப் பிரித்து இலைக்கலம் என்று பொருள்கொள்க. அடை - இலை. மெய்த்தநூல் ஆய்வானும் மெல்லியைப்பி ரிந்தானும் முத்தமிழந் தேன்என்னும் முன்னாடு - கொத்தும் கழுகு மதங்கள் கருதா தறத்தில் ஒழுகு முயர்தமிழ் நாடு. குறிப்புரை: மெய்த்தநூல் ஆய்வானும் முத்தமிழந்தேன் என்னும் முன்னாடு என்றும் மெல்லியைப் பிரிந்தாலும் முத்தமிழந் தேன் என்னும் முன்னாடு என்றும் கூட்டுக. முதலில் முத் தமிழ் - அம் - தேன் எனப் பிரிந்து முத்தமிழானது அழகிய தேன் என்றும், இரண்டாவது முத்தம் - இழந்தேன் எனப் பிரிந்து அவள் தரும் முத்தத்தை இழந்தேன் என்றும் பொருள்தரும். - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.231, 1964; குயில், 1.9.47 குறிப்பு: தனிப்பாடல் புலவர்களிடம் தூக்கலாகக் காணப்படும் இப்பிரிமொழிச் சிலேடையமைப்புபாரதிதாசனிடம் அருகியே காணப்படுவதாகும். மேற்குறித்த இரண்டு வெண்பாக்களும் செந்தமிழ் நாடு என்னும் பொதுத் தலைப்பில் அமைந்துள்ளன. 271. தமிழ்நாடு செந்தமிழ் நாடென்றன் அன்னை - தொண்டு செய்திடுமாறு பணித்தனள் என்னை கொந்த வரும்பகை நீக்கென் றுதிர்த்தாள் கோணல் வழக்கத்தை எண்ணிக் கொதித்தாள் சொந்த மறக்குல மாட்சியும் ஆட்சியும் சோர்வுற்றதோ என்று கூவிக் குதித்தாள் - செந்தமிழ் அன்புநல் வாய்மை அறம்வளர்த் திட்டாள் ஆர்க்கும் நலம்என்று முரசறைந் திட்டாள் வன்புகள் செய்ய வரும்பகைக் கூட்டத்தை மாய்த்திட வேவடி வேலினைத் தொட்டாள் - செந்தமிழ் வைகையும் தீம்புனற் காவிரி ஆறும் வாழை பலாசெழும் கன்னலின் சாறும் பெய்யும் சுவைமொழி மாதர்தம் கற்பும் பேசப்பேச நெஞ்சில் இன்பம்வந் தேறும் - செந்தமிழ் பாலைப் பொழிந்து தரும்பசுக் குலமும் பைம்பொழில் தேன்மலர் செழுநன்செய் நலமும் காலமெல்லாம் தென்றல் ஈந்திடு பொதிகையும் காணில் இதற்கீடில் லைஎந்த நிலமும் - செந்தமிழ் உலகு தொடங்கிய நாளினில் அன்னாள் ஊக்க மிகுந்தற மார்க்கங்கள் சொன்னாள் நிலையினில் அன்பு நிலைபெரி தென்னவே நேர்மை எலாம்வகுத் தானவள்* முன்நாள் - செந்தமிழ் *jhstŸ என இருத்தல் வேண்டும். வேங்கடத்தின் தெற்கில் அலைகடல் மூன்றும் வெல்க வெல்கஎன ஆர்த்திட ஆங்கே ஓங்கு தமிழ்தனில் ஓம்என்று பாடிய உவகைப் பெருக்கினில் கூத்திடு கின்றாள் - செந்தமிழ் - யாதும் ஊரே, அக்டோபர் 2000; பழம் புதுப் பாடல்கள், ப.247, 2005 குறிப்பு : இப்பாடல் மறுவெளியீடு செய்யப்பெற்ற யாதும் ஊரே என்னும் திங்கள் இதழில் அளிக்கப்பெற்ற குறிப்பு: 50 ஆண்டுகளுக்கு முன் வந்த தமிழரசு என்ற இதழில் புரட்சிக்கவிஞர் எழுதிய இக்கவிதையை நமக்களிப்பவர் அன்புப் பழம்நீ. 272. அன்றைய கருத்து இன்றைய கடமை செந்தமிழை நாம்மீட்க வேண்டும் மேலும் செந்தமிழை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் செந்தமிழர் நிலப்பகுதி இன்னும் உண்டு திறத்தாலே அவைகளையும் மீட்க வேண்டும் செந்தமிழர் நாட்டுக்குத் தமிழ்நா டென்ற திருப்பெயரை நிலைநிறுத்த முயல வேண்டும் செந்தமிழ்த்தாய் பெறஇருக்கும் வெற்றிக் கெல்லாம் செங்கோட்டை வெற்றிதான் முதல்வி ளைச்சல்! தளையகன்ற செங்கோட்டை இளையான் மீண்டும் தமிழ்நாட்டின் கைப்புறத்தில் இணைந்த தான களியூட்டும் விழாப்பாடி ஆடு கின்றோம்! கனல்தாண்டிப் பனிமலர்ப்பூங் காவ டைந்தோம் குளிரூட்டும் தமிழகத்தின் பண்பா டல்லால் குறையூட்டும் பிறர்நாற்றம் பொறுக்க மாட்டோம்; இளைஞர்களே, முதியோரே, தங்கை மாரே! தாய்மாரே எல்லார்க்கும் ஒருவிண் ணப்பம். தூய்தான கோயிலெலாம் தமிழே வேண்டும் அலுவலகத் துறைதோறும் தமிழே வேண்டும் ஆயகலை அனைத்திலுமே தமிழே வேண்டும் அடுக்களையிலே1 அங்கணத்தில் தமிழே வேண்டும் வாயில்தோறும்2 வாணிகத்துப் பலகை, அச்சு வாய்ப்பனைத்தும் எவ்விடத்தும் தமிழே வேண்டும்! தீயிலிட்டுப் பொசுக்கும்வகை செய்ய வேண்டும் செந்தமிழே அல்லாத பிறசொல் கண்டால்! 1. அடுக்களையில் என இருத்தல் வேண்டும் 2. வாயில் தொறும் என இருப்பின் நன்று. வாழியவே செங்கோட்டை மக்கள் நன்றே வாழியவே செந்தமிழே எங்கும் என்றும்! வாழியவே தமிழ்ப்புலவர் ஓயாத் தொண்டு வாழியவே தமிழரது நல்லொ ழுக்கம்! வாழியவே தமிழரறம் வாய்மை அன்பு வாழியவே பழந்தமிழன் பொருளில் தூய்மை! வாழியவே பழந்தமிழ்நூல் நல்வி ளைச்சல் வாழியவே தமிழ்நாடு; தமிழர் நன்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.260, 2005; குயில், 10.1.1968 குறிப்பு : பாரதிதாசன் குயில் இதழில் செங்கோட்டை நிலப்பகுதி தமிழகத்தோடு இணைந்தபோது நிகழ்ந்த விழாவிற்குப் பாவேந்தர் விடுத்திருந்த வாழ்த்து இது. இதனை நமக்கு உதவியவர் சே. சாகுல் அமீது (தமிழாசிரியர், அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, கெங்க வல்லி - சேலம் மாவட்டம்) என்னும் முன் குறிப்போடு இப்பாடல் வெளியிடப் பட்டுள்ளது. செங்கோட்டையை மட்டும் - பூகோள அமைப்பு காரணமாக - திரு நெல்வேலி மாவட்டத்திலே சேர்த்துவிட்டு மற்ற நான்கு தாலுக்காக் களை (தோவாளை, அசுத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு) கன்னியாகுமரி என்னும் பெயரில் தனி மாவட்டமாக்க - தமிழக அரசின் விருப்பப்படி மத்திய அரசின் மசோதாவில் வழி வகுக்கப் பட்டது. மொழிவாரி ராஜ்யமசோதா, டில்லி மக்கள் அவையிலும் சட்டமாக்கப் பட்ட பின்னர், 1956 நவம்பர் முதல் தேதியிலே நடைமுறைக்கு வந்தது என்பார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. இதிலிருந்து இப்பாடல் 1956 இறுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது. 273. செந்தமிழ் நாட்டுக்குத் திருநாமம் திருநாமம் போட்டனர் செந்தமிழ் நாட்டுக்குத் தில்லியினோர் ஒருநூறு கோடியை ஓராண்டில் ஒட்ட c¿ÁÉ£lhš* கருநூற்றுக் கொன்றாய்ப் பிழைத்தவர் கைகளும் ஓடெடுக்கும் இருநாளைக் கென்னாமல் இன்றேநம் நாட்டை விடுவிப்பீரே. - பழம் புதுப் பாடல்கள், ப.287, 2005; குயில், 19.8.1958 *c¿Á - உறிஞ்சி 274. நாட்டில் மிடி இல்லையாம் மிடிஇல்லை என்பார் அமைச்சர்! தம் வீட்டில் மிடியேது? மெய்யாய் அரிசிப் - படி, அப் படியே மலையாளம் சிட்டாய்ப் பறக்கும் இபடிசொல்வார் அப்படிச்சொல் வார். - பழம் புதுப் பாடல்கள், ப.287, 2005; குயில், 19.8.1959 275. இறைவன் பணித்ததே நம் பணி! எடுப்பு இறைவன் பணித்ததே நம் பணி என்றுசொல். என் மனையாளிடம் குயிலே - ஈரோட் - டிறைவன் உடனெடுப்பு சிறையேநம் மாளிகை சிறைக்களி அமிழ்தே செத்தாலும் சாகாத சொத்தாகும் புகழே - இறைவன் அடிகள் குறிஒன்று நமக்குண்டு குயிலே வடவர் கொட்டத்தை அடக்கிட ஒற்றுமை வேண்டும் அறிவுண்டு நிறையாக ஆளும் திறமும் கொண்டோம் ஆட்பட்ட தமிழ் நாட்டை மீட்க வேண்டும்என் - றிறைவன் தொழும்பே உயர்வென்று சொல்லிடும் பார்ப்பனர் தொண்ட ரடிப்பொடி ஆழ்வார்க்கும் அஞ்சோம் கழுவடைக் கட்சிகள் குரைப்புக்கும் அஞ்சோம் கறையுற்ற தமிழ்நாட்டை மீட்கவேண்டும் என் - றிறைவன் தம்பட்ட உயர்வுக்குத் தமிழே ஒழிகஎன்று தம்பட்டம் அடிக்கின்ற தக்கைகட் கஞ்சோம். வெம்பட்டும் மக்கள் என்று பகையை நத்தும் வெம்பகைக்கும் அஞ்சோம் நாட்டை மீட்பீர்என் - றிறைவன் தெற்கு நாகரிகம் வடவர் உடமை எனும் தெ.பொ.மீ சேதுவாம் தீயோர்க்கும் அஞ்சோம் நெற்பொதி தன்னை மலையாளம் ஏற்றிட நின்றார்க்கும் அஞ்சோம் நாட்டை மீட்பீர்என் - றிறைவன் உறவுகொள் இலங்கையில் ஆயிரம் தமிழரின் உயிர்க்கொலை செய்தாரை ஆதரித்தே வரும் நெறியற்ற தில்லியின் நீட்டாண்மைக் கஞ்சோம் நேயத்தால் நம்தமிழ் நாட்டை மீட்பீர்என் - றிறைவன் - பழம் புதுப் பாடல்கள், ப.288, 2005; குயில், 19.8.1958 276. வாடல் தவிர்த்து வாழ்வோம் பெற்ற தமிழகம் பெற்றது கைவிலங்கோ! அற்றதோ மேன்மை, அழகுதமிழ்? - சொற்கிளியும் ஆடல் மயிலும் இசைக்குயிலும் ஆட்சியம்பால் வாடல் தவிர்த்துவாழ் வோம். - பழம் புதுப் பாடல்கள், ப.328, 2005; குயில், 13.1.1959; பொங்கல் மலர் 20.1.1959 277. தமிழகம் வென்றாக வேண்டும்! இராகம் : திருரஞ்சனி தாளம் : ஆதி இன்றே செயத்தக்க தொன்றே - தொண்டு செய் இன்பத் தமிழ்நாட்டுக் கென்றே அன்பி னால் உள்ளம் நன்றாக வேண்டும் அனைத்துத் தமிழரும் ஒன்றாக வேண்டும் பொன்றும் வடக்கர்கள் சென்றாக வேண்டும் பொன்னான தமிழகம் வென்றாக வேண்டும் - இன்றே இழந்த புகழைநீ மீட்கத்தான் வேண்டும் இரண்டில் ஒன்றைநீ பார்க்கத்தான் வேண்டும் முழந்தாள் இடுவதோ பார்ப்பனன் ஆட்சிக்கு? முத்தமிழின் ஆட்சியைச் சேர்க்கத்தான் வேண்டும் - இன்றே சாதிக் கிறுக்குத்தான் தாழ்வைப் போக்குமோ சமையக் கிறுக்குத்தான் வாழ்வை ஆக்குமோ தீது வடக்குநோய் தமிழைக் காக்குமோ செந்த மிழ்நாட்டின் அடிமை போக்குமா - இன்றே - பழம் புதுப் பாடல்கள், ப.329, 2005; குயில், 27.1.1959 278. காற்றுள்ள போதே கட்டளைக் கலித்துறை காற்றுள்ள போதொடு தூற்றிக்கொள் என்று கழறுமொழி நூற்றுக்கு நூறுமே உண்மையன் றோஇழை நுண்ணிடையே கூற்றொக்கும் நேரு இருக்கையிற் பார்ப்பனக் குண்டரெலாம் சோற்றுக்கும் கூரைக்கும் வாய்ப்பெய்தி யேநலம் துய்த்தனரே. கற்றுமை வென்றனம் என்றனர் பார்ப்பனர்; கண்ணெதிர் எம் ஒற்றுமை காணுக என்றனர்; உம்மினம் போக்குதற்கே பெற்றிமை உள்ளம்எம் நேருவைப் பெற்றனம் என்றுரைத்தார்! சற்றும் ஐ யோஉணர் வுற்றிலர் தொன்மைத் தமிழர்களே. அல்லிற் பகலில் அலுக்காம லே எண்ப தாண்டினிலும் சொல்லிற் செயலில் தமிழர்க்குத் தொண்டு செயும் பெரியார் வெல்லற் கிருக்கப் பயன்கண் டிடாமல் வெறிதவிழ்த்த நெல்லிக்காய் மூட்டைக்கு நேராயி னார் தமிழ் நேயர்களே உலையின் அரிசி குழையும்முன் பிச்சைஎன் றோடு நர்போல் தலைவனின் ஆற்றல் பயன்தரு முன்னோடித் தாயைவிற்றும் புலையர் உதவி பெரிதென்றும் போனஇப் பேதைமையைக் கலையென்ப தாவூர்க் கொலையென்ப தாவுரை கண்மணியே பாத்திய கீரை ஒருதிங்கள் மட்டே பயனளிக்கும் கூத்தியர் இன்பம் முதுமைவந் தாற்கெடும் குள்ளர்கையின் மாத்தமிழ் நாட்டினை மீட்பதால் இன்பம் மறைவதுண்டோ ஏத்தவும் பெறுவர் பின்வரு வார்களால் என்றைக்குமே! - பழம் புதுப் பாடல்கள், ப.337, 2005; குயில், 10.3.1959 279. உனக்குமா ஓர் இயக்கம்? உனக்குமா ஓர் இயக்கம் - அதைக் கலைக்க என்ன தயக்கம் இனக் குறையை நீக்கப் பெரியார் இயக்கம் நாட்டில் இருக்கையிலே - உனக்குமா ஓர் இயக்கம்? தமிழ்நா டென்று பேர்வை என்றால் வரலா றில்லை என்றான் நமை இகழ்ந்தான் நாக்கறுக்க நம் பெரியார் இயக்கம் இருக்க - உனக்குமா ஓர் இயக்கம்? காங்கரசுக் காரா - உனக்குத் தமிழன் என்று பேரா? தீங்கிழைக்கும் தில்லி காலைச் சேருவதும் உன் சீரா? - உனக்குமா ஓர் இயக்கம்? தனியுடைமை பழித்தாய் - இது வரைக்கும் என்ன கிழித்தாய்? இனிய தமிழை அழிக்கும் தில்லியை ஏந்தி வாலைக் குழைத்தாய் - உனக்குமா ஓர் இயக்கம்? பார்ப்பானுக்குப் பிள்ளை - நீ தமிழர் நலத்தில் நொள்ளை பார்ப்பான் கொள்ளை தனில் அசைக்க முடியுமா ஓர் எள்ளை - உனக்குமா ஓர் இயக்கம்? செட்டுத் தமிழர் நெல்லைச் சேர்த்தான் மலையா ளத்தின் எல்லை கொட்டம் அடிக்கும் ஆட்சித் தொல்லை குறைக்க உன்னால் ஆவ தில்லை - உனக்குமா ஓர் இயக்கம்? தமிழரசி கூலி - இங்கே உனக்கு மென்ன சோலி? தமிழ் ஒழிப்ப னோடு கூடி தமிழைச் செய்தாய் கேலி! - உனக்குமா ஓர் இயக்கம்? தமிழ்ப்பெருமை துணித்தான் - இந்தி தமிழகத்தில் திணித்தான் நமை இகழ்ந்தான் நாக்கறுக்க நம் பெரியார் இயக்கம் இருக்க - உனக்குமா ஓர் இயக்கம்? நாம் தமிழர் தானா - இல்லை நல்ல தலைக்குப் பேனா ஏந்தியகை இட்ட கையை ஒடிப்பதுவே கொள்கை ஆனால் - உனக்குமா ஓர் இயக்கம்? - பழம் புதுப் பாடல்கள், ப.335, 2005; குயில், 3.3.1959 280. ஏமாறாதே எலிஏ மாந்தால் எறும்பும் கொல்லும் புலிஏ மாந்தால் பன்றியும் òw£L«1 யானைஏ மாந்தால் எறும்பும் நலிசெயும் மானே மாந்தால் நரியும் மடிக்கும்! தாயகம் ஏமாந்தது ஆரியத் தீயர் உயர்நிலை சிதைத்தார் அன்றே! - பழம் புதுப் பாடல்கள் 2005; குயில், 12.5.1959 281. நாடு, மொழி, பண்பாடு, எல்லை, கலை. நாடு மொழியாற் சிறப்படையும் நாட்டுப்பண் பாடு பழமையாற் சீர்த்திபெறும் - நாடுபெற்ற எல்லையோ வீரர் இருப்பை விளக்குவது கல்லெல்லாம் காட்டும் கலை. - பழம் புதுப் பாடல்கள், ப.383, 2005; குயில், 28.6.1960 1. புரட்டும் என திருத்தல் வேண்டும் 282. வரலாற்றை முழக்கிடுக உலகமெலாம் முதல்மனிதன் தோன்றியநா டெங்கள் நாடு முதல்மொழியைக் கண்டநா டெங்கள் நாடு முதல்மொழியில் தமிழ்கண்ட தெங்கள் நாடு ... ... ... ... ... ... ... ... ... ... ... ... எதுநாக ரிகமென்றே அறியாப் போதில் இதுநாக ரிகமென்ற தெங்கள் நாடு முதலாட்சி முறைவகுத்த தெங்கள் நாடு மூவேந்தர் முறைகாத்த தெங்கள் நாடே! கடல்கொண்ட குமரிநா டெங்கள் நாடு கவிஞரெலாம் வாழ்ந்தநா டெங்கள் நாடு வடஇமையம் குமரிநா டெல்லை யாக மாத்தமிழர் வாழ்ந்தநா டெங்கள் நாடு முடிபுனைந்த தமிழ்வேந்தர் வாழ்வை வைத்து முத்தமிழைக் காத்தநா டெங்கள் நாடு அடிநாளே அறிவளித்த தெங்கள் நாடே! ... ... ... ... ... ... ... ... ... ... பொய்சொல்லிப் பொய்சொல்லித் தமிழர் மாண்பைப் பொய்யாக்கி னார்பகைவர்! பொய்யி ருட்டை மெய்சொல்லி மெய்சொல்லி வெளுக்க வைக்க வெடுவெடென நடுங்குவதேன் தமிழ்ச்சிங் கங்கள்? உய்யாத நெறிகண்டும் தூதூ என்றே உமிழாதார் தமிழரா? தமிழ்ப ழித்த வையாபு ரிப்பிள்ளை போன்றா ரான வடமன்னர் தமிழரிடம் பெற்ற தென்ன? தலைநாளில் தத்துவநூற் கொள்கை கண்டார் தமிழ்ச்சான்றோர் அல்லாமல் மற்று யாவர்? கலைவல்லார் தொழில்வல்லார் போரில் வல்லார் கைகாரத் தமிழரென்றால் எவர்ம றுப்பார்? நிலைபெரிது; மிகப்பெரிது நீணி லத்தில் நிகரற்ற நம்பண்டைத் தமிழர் வாழ்வு! நிலைசிறிது; மிகச்சிறிது இற்றை நாளில் நினைத்தாலும் குலைநடுங்கும் தமிழர் வாழ்வு! தமிழுக்குத் தமிழகத்தில் ஆட்சி இல்லை சாற்றினார் இவ்வாறு தமிழின் மாற்றார்! நமக்கிந்நாள் வேண்டியதும் இந்தி தானே நவிலுகின்றான் இவ்வாறு தமிழன் தானும் சுமைசுமையாய் இலக்கியங்கள் ஆங்கி லத்தில் தோன்றுவதால் தாய்மொழியாய் ஒப்பச் சொன்னார் தமிழிலே ஒன்றுமே இல்லை என்றான் தனைமறந்த தமிழனவன்! வியப்பி தன்றோ? பெரிதாற்றல் உடையீரே தமிழ்ச்சான் றோரே பின்நோக்கிப் பிடர்பிடித்து நம்மைத் தள்ளும் நரிப்படையை வெல்லுதற்குப் புதிய தாக நான்ஒன்று சொல்லுகின்றேன்; கேட்க வேண்டும்; பெரியபடை தேவையில்லை! குண்டு வேண்டாம்! பிறநாட்டார் உள்நாட்டார் எவரு மேநம் வரலாற்றை அறியும்வகை முழக்கம் செய்வீர்! மறவாமல் இதைச்செய்வீர் விடாது செய்வீர்! உலகறிந்த தமிழனைஊர் அறிய வில்லை. உயர்தமிழ்த்தாய் வடமொழியின் பிள்ளை என்று கலகத்து மாந்தர்சிலர் கழறு கின்றார் கடல்கடந்த நாட்டாரும் நம்பு கின்றார் இலங்கைவாழ் தமிழரெலாம் நாடற் றோராம் என்னநிலை தமிழருக்கு? மீண்டும் சொல்வேன் வலந்தாங்கும் வாளுடைய தமிழர் பெற்ற வரலாற்றை முழக்கிடுக உலக மெல்லாம்! - பழம் புதுப் பாடல்கள், ப.451, 2005; குயில், 10.5.1967 283. திராவிடன் கடமை எடுப்பு மனவீட்டைத் திறப்பாய் - சாதி மதக்கத வுடைத்து - மனவீட்டைத் உடனெடுப்பு இனமான திராவிடர் பண்பின் எழில்காண உணர்வு விளக்கேற்றி - மனவீட்டைத் அடி புனைசுருட்டுக் குப்பை அன்றோ - பழம் புராண வழக்கங்கள் யாவும்? இனிமேலும் விட்டுவைக் காதே எடுதுடைப்பத்தை இப் போதே தனிஉலகை ஆண்டனை முன்னாள் தன்மானம் இழந்திடாதே இந்நாள் - மனவீட்டைத் வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி இடைநாளில் மட்டுமா? சென்ற இரண்டாயிரத் தாண்டு பார்த்தார் விடுவாயடா தன்ன லத்தை - உன் விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு. - மனவீட்டைத் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.75, 1949; குயில், 1.1.1948 284. அது முடியாது எடுப்பு கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை கொண்டுபோய் விடுவான் திராவிடக் காளை. - கோட்டை உடனெடுப்பு கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக் கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை. - கோட்டை அடி காட்டை அழிப்பது கூடும் - அலை கடலையும் தூர்ப்பது கூடும் மேட்டை அகழ்வதும் கூடும் - விரி விண்ணை அளப்பதும் கூடும் ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்? - கோட்டை அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை அழிக்குமுறை எவ்வாறு முடியும்? ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர் வொடுக்குதல் எவ்வாறு முடியும்? திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத் திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்? - கோட்டை - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.76, 1949 285. உணரவில்லை எடுப்பு உணரச் செய்தான் உன்னை - அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும். - உணரச் உடனெடுப்பு தணலைத் தொழுவான் உயர்வென் கின்றான் - உனைத் தணலில் தள்ள வழிபார்க் கின்றான். - உணரச் அடி முணுமுணு வென்றே மறைவிற் சென்றே முட்டாள் முட்டாள் திராவிடன் என்றே பணிமனை ஆட்சி பட்டம் யாவும் பார்ப்பானுக்கே என்று புகன்றே. - உணரச் நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள் நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள் ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்? எண்ணில் கோடி மக்கட் குறவே. - உணரச் அடியை நத்திப் பிழைத்த பார்ப்பான் ஆளப் பிறந்த தாய்ச்சொல் கின்றான் துடியாய்த் துடித்தான் உன்றன் ஆட்சி தூளாய்ச் செய்துனை ஆளாக் கிடவே. - உணரச் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.78, 1949 286. உயிர் பெரிதில்லை ஒருவன் உள்ள வரையில் - குருதி ஒருசொட் டுள்ள வரையில் - ஒருவன் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிட சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன் - ஒருவன் பெரிது மானம்! உயிர்பெரி தில்லை பெற்ற தாயைப் பிறராள விடுவோன் திராவிடன் அல்லன்! திராவிடன் அல்லன்! தீமை செய்து பார்க்கட்டும் ஆள்வோர்? - ஒருவன் அடித்தோன் அடிபட நேர்ந்ததில் வுலகில் ஆள வந்தார் ஆட்படல் உண்டு நெடிய திராவிடம் எங்களின் உடைமை நிறைவுணர் வுண்டெங்கள் பட்டாள முண்டு! - ஒருவன் வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ? வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ? அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை! ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை! - ஒருவன் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.79, 1949 287. இனி எங்கள் ஆட்சி எடுப்பு தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி சற்றும் நிலைக்காது! மாளும்! - தன்னினம் உடனெடுப்பு இந்நிலம் திராவிடம் ஆண்டோர் இறந்தநாள் வரலாறு காண்க. - தன்னினம் அடி மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய மன்னன் திராவிட மன்னன் - எதிர் வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள் திராவிட மன்னவன் தோளே! சின்ன நினைப்புகள் தன்மான மற்ற செயல்களை இனிவிட்டு வையோம். - தன்னினம் திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத் திருநாடு பெற்ற சேய்தான் - இத் திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை தேடினான் எனிலவன் நாய்தான்! எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில். - தன்னினம் - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி, ப.80, 1949 288. திராவிடர் இடியப்பக் காரா - ஓ - இடியப்பக் காரா! விடியற் காலம் தட்டைத் தூக்கி வீட்டார் கேட்கக் கூவி வந்தாய் - இடியப்பக் காரா... செப்ப னிட்ட வீட்டுக் காரன் தெலுங்கு பேசும் மீசைக் காரன் அப்பமு வெல ஏமி என்றான் அயலான் அவன்என நினைத்தாய் எப்படி அவன்அயல் ஆவான் இனஒழுக்கம் குறைந்த துண்டோ? செப்பும் மொழிதெலுங் கென்றால் தெலுங்கு மொழியும் உன்உடைமை! - இடியப்பக் காரா... அடிமரமே ஒன்றேடா அதன் பெயர்தி ராவிடமே தடங்கிளைகள் ஐந்தல்லவா தமிழ், தெலுங்கு, கேரளமே அடடேகன் னடம், துளுவம், ஐங்கிளைக்கும் அடிஒன்றே கொடிது, கொடிது தெலுங்கனைநீ குறைகூறும் மனப்பான்மை. - இடியப்பக் காரா... ஐந்து நிறத்தில் மணிக்கோவை அவற்றூடே செல்லுவது பொன்னிழையே அல்லாமல் பூணூலா சொல்லிடுவாய் சென்னைக்காரன் கோழி என்பான் தெலுங்குக் காரன் கோடி என்பான் கன்னடத்தான் கோளி என்பான் களிச்சேரலன் கோலி என்பான். - இடியப்பக் காரா... துளுவக் காரன் கோழ் என்பான் சொன்ன இந்த ஐந்திலும் நீ ஒளிக்கும் உயிரைப் பார்த்த துண்டோ உள்ள பொதுமை கண்ட துண்டோ தெளிவி லார்க்கும் தெரிவியடா திராவிடம்! திராவிடமே! ஒளிக்காதே உன்மனத்தை உயர்தெலுங்கன் நம்மவனே. - இடியப்பக் காரா... தெலுங்கனா உன்பகைவன்? ஒரு சேரலனா உன்பகைவன்? துலங்கும் ஒருகன்னடனா? துளுவனுமா உன்பகைவன்? உலர்சருகே இவர்களெலாம் உன்பகைவர் என்று சொன்னால் நலம்புரியும் உறவினர்கள் நாட்டி லெவர்தாம் உனக்கு? - இடியப்பக் காரா... தெலுங்குக்காரன் நாட்டாட்சி செய்யும்நிலை வந்துவிட்டால் தெலுங்கருக்கே நலமெல்லாம் செய்திடுவான் என்கின்றாயா? மலையாளி நாடாண்டால் மலையாளத் தார்களுக்கே நலம்புரிவான் என்கின்றாயா? நல்லகரடி உன்கரடி. - இடியப்பக் காரா... இரட்டி செய்த ஆட்சியிலே இரட்டி யார்க்கே நாட்டை எல்லாம் புரட்டி விட்டான் என்று நீயே புளுகியதும் உண்டல்லவா? விருப்பமுடன் வேளாளன் வேளாளர் தங்களையே உருப்படச்செய் தான்எனநீ உளறுவதும் உண்டல்லவா? - இடியப்பக் காரா... வரிந்து கட்டி வன்னியனும் வன்னியர்க்கே நன்மையெலாம் புரிந்து விட்டான் என்றுமனம் புழுங்கியதும் மெய்தானே? துருக்கன் ஒருதென் னாட்டான் துருக்கருக்கே நலம்புரிவான் சிரிக்கும்படி இப்படிநீ செப்புவதும் உண்டல்லவா? - இடியப்பக் காரா... நாவலந்தீ வொன்றதிலே நவிலும் இரண்டுலகம் உண்டு மூவேந்தர் கொடிபறக்க முத்தமிழின் நலம்சிறக்கத் தேவைஎலாம் கொண்டதிரா விடஉலகம் ஒன்றாகும்! ஆஓட்டி ஆத்தின்னும் ஆரியநா டொன்றாகும்! - இடியப்பக் காரா... நடுவிலொரு விந்தியமாம்! நல்லதிரா விடநாடு, கடல்மூன்றும் புடைசூழும் கவினுறுதென் பாங்கினிலே! வடநாட்டில் திரவிடர்கள் வாழுகின்றார் அங்கவர்கள் வடவர்கள்தாம் என்பதான மனநிலைகொண் டவராவார். - இடியப்பக் காரா... வடுவிலாத் திராவிடத்தில் வடவர்களைச் சேர்ந்தசில மடயர்களும் உண்டப்பா வயிற்றெரிச்சல் கூறிடுவேன் இடவிரும்பும் திரவிடத்தில் இரந்துண்டு வாழுமந்தக் கடையர்க்கோ திரவிடரைக் கவிழ்ப்பதுதான் பெருநோக்கம் - இடியப்பக் காரா... இந்நிலையில் திரவிடன்நீ என்னநினைத் திடவேண்டும்? நின்இனத்தார் பெற்றபேறு நீபெற்ற பேறல்லவா? கன்னடனோ, கேரளனோ, கன்னானோ, மண்ணானோ, வன்னியனோ, மன்னவனோ, எல்லாரும் திரவிடரே! - இடியப்பக் காரா... திரவிடத்தின் தீமைஎலாம் திரவிடரின் தீமைஎன்க திரவிடத்தின் நலமெல்லாம் திரவிடரின் நலமென்க மருளாதே அஞ்சாதே வடவர்களை நீக்கிடுவாய் திரவிடத்தில் திரவிடரின் ஆட்சியைஉண் டாக்கிடுவாய். - இடியப்பக் காரா... - இசையமுது, இரண்டாம் பகுதி, ப.55, 1952 289. திராவிடர் திருப்பாடல் காலைப் பத்து வெண்டளையான் வந்த தரவிணைக் கொச்சகக் கலிப்பா கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து விழித்தான்; எழுந்தான்; விரிகதிரோன் வாழி! அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை! மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே! விழிப்பெய்த மாட்டீரோ? தூங்குவிரோ மேலும்? அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்! ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர் வழித்தோன்றும் மங்கையீர் காளையரே வாரீரோ. 1 எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர் எழுந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ? பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே ஒழிந்துபட வடக்கர் ஒட்டாரம் செய்தார்; அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த எழில்மடவீர் காளையரே இன்னேநீர் வாரீரோ! 2 காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்! தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ? தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்துநின்றார் தூக்கறியார் வாளொன்றும்! போராடும் துப்பில்லார் சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட்கருத்தைப் போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும் வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும் போக்க மடவீரே காளையரே வாரீரோ! 3 தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான் செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள் தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ! பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும் எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய மங்கையீர் காளையரே வாரீரோ! வாரீரோ! 4 தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்! ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ? சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள் நேர்மலிந்தார் பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பீர் பார்கலந்த கீர்த்திப் பழைய திராவிடத்தை வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்; கார்குழலீர் காளையரே வாரீரோ வாரீரோ! 5 செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ? மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே! பஞ்சணைவிட் டெழுந்து பாரீர் திராவிடத்தை நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்த்த நினைத்தாரே! நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ? அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்க கொஞ்சுங் குயில்களே காளையரே வாரீரோ. 6 கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை நாவாலும் மேல்என்னோம்; நல்லறமே நாடுவோம்! தேவர்யாம் என்பவரைத் தெவ்வரென எதிர்ப்போம் சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம் வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம் மேவும் இக்கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர் தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்கப் பாவையரே காளையரே பல்லோரும் வாரீரோ! 7 மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன் துன்னினான்! இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ? முன்னாள் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும்அது என்னும் நன்னாட்டில் சின்ன வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களும், இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக் கன்னல்மொழி மங்கையீர் காளையரே வாரீரோ! 8 நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக் கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில் ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்! தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப் போல வடக்கர்தம் பொய்ந்நூல் தனைப்புகுத்தி மேலும் நமைமாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ? வாலிழையீர் காளையரே வாரீரோ வாரீரோ! 9 அருவி,மலை, மரங்கள் அத்தனையும் பொன்னின் மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான். விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்? அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்த்தார் ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர் திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்; உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர், வரைத்தோளீர் காளையரே வாரீரோ வாரீரோ! 10 இராப் பத்து வெண்டளையான் வந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா திருவிளக் கேற்றி இரவு சிறக்க வருவிருந் தோடு மகிழ்ந்துண வுண்டீர்! அருகு மடவார் அடைகாய் தரவும் பருகுபால் காத்திருக்கப் பஞ்சணை மேவித் தெருவினில் யாம்பாடும் செந்தமிழும் கேட்பீர்! பெருவாழ்வு வாழ்ந்த திராவிடநா டிந்நாள் திருகுவட நாட்டார் கையினிற் சிக்கி உருவழிந்து போகாமே காப்பாற்றல் உங்கடனே. 1 ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின் சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும் தோற்றும் இரவும் சுடர்விளக்கும் இல்லத்தில் காற்று நுகர்ந்திடுவீர்! காது கொடுத்தேயாம் சாற்றுதல் கேளீர் தமிழை வடநாட்டார் மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம் மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே. 2 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனுமோர் சிறப்புடைய நம்கொள்கை நானிலத்தின் செல்வம்! தறுக்கன் வடநாட்டான் தன்னலத்தான் இந்நாள் நிறப்பாகு பாட்டை நிலைநிறுத்த எண்ணி வெறுப்புடைய இந்தி விதைக்கின்றான் இங்கே. அறப்போர் தொடுத்திடுவோம் வெல்வோம்நாம் அன்றி இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர் உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே. 3 தீயில் நிலநீரில் காற்றில் செழுவானின் ஆயில் குறியில் அறியாப் பெரும்பொருட்குக் கோயில் தனைஒப்புக் கொள்ளோம்! சுமந்தீன்ற தாயின் பிறிதோர் பொருட்குத் தலைவணங்கோம்! வாயில் பொறாமைச்சொல் வையோம்! அவாவெகுளி தீயிற் கொடுஞ்சொற்கள் தீர்த்தோம்; அறப்பயனே வாயிற் பருகுவோம் நம்கொள்கைப் பற்றறுக்க நோயில் நுழைஇந்தி வேரறுத்தல் உங்கடனே. 4 ஒழுக்கம் கெடுக்கும்! உணர்வை ஒடுக்கும்! வழக்கும் பெரும்போரும் மாநிலத்தில் சேர்க்கும்! இழுக்கு தருமதங்கள் யாவும் விலக்கிக் கொழுக்கும் குருமாரின் கொட்டம் அறுத்துத் தழைக்கத் தழைக்க நறுங்கொள்கை நெஞ்சிற் பழுக்கும் படிவாழ் திராவிடர் பண்பை அழிக்க நினைத்திங்கே ஆளவந்தார் இந்தி புழுக்கும் படிசெய்தார் போக்கிடுதல் உங்கடனே. 5 எட்டுத் திசையும் பதினா றிடைப்பாங்கும் முட்டித் தளும்பி முளைத்தோங்கு பேரொளிக்கே எட்டுக் குடப்பசுப்பால் இட்டாட்டு வீரென்னும் பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும் குட்டி வணங்குமுன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும் மட்டக் கருத்துக்கள் மாளா மடமைஎலாம் கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில் கட்டுவார் தம்மைஒரு கைபார்த்தல் உங்கடனே. 6 தந்தைமார் பற்பலராய்த் தாயொருத்தி யாய்மாட்டு மந்தையுடன் இந்நாட்டில் வந்தவர்கள் நாமெல்லாம் முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்! வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள்விற்கும் சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ? கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் உங்கடனே. 7 புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர் தலையெடுத்தார் இன்பத் திராவிடத்தின் தக்க கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க வலைகட்டி நம்மில் வகையறியா மக்கள் பலரைப் பிடித்துரா மாயணத்தை மற்றும் மலிபொய் மனுநூலை வாழ்வித்தார் யாவும் தொலையப் பெரும்போர் தொடுப்பதுவும் உங்கடனே. 8 தென்றற் குளிரும், செழுங்கா மலர்மணமும், நின்று தலைதாழ்த்தும் வாழையும், நீள்கரும்பும்; என்றும் எவர்க்குமே போதும்எனும் செந்நெல் நன்று விளையும் வளமார்ந்த நன்செய்யும், அன்றன் றணுகப் புதிய புதியசுவை குன்றாத செந்தமிழும், குன்றும், மணியாறும் தொன்றுதொட்ட சீரும் உடைய திராவிடத்தை இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உங்கடனே. 9 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்என்ற வள்ளுவர்சொல் தாழ்வொன் றடையாது தஞ்செயலை நன்றாற்றும் ஆழ்கடல் முப்பாங் கமைந்த திராவிடத்தில் வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள் வாழ்க! நனிவாழ்க! மற்றோர்கள் வீழ்ந்திடுக! யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும் வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே! 10 - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, ப.165, 1955 290. விடுதலைப் பாட்டு மீள்வது நோக்கம் - இந்த மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல் மாள்வது நோக்கம் - இதை வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்! ஆள்வது நோக்கம் - எங்கள் அன்னை நிலத்தினில் இன்னொரு வன்கால் நீள்வது காணோம் - இதை நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்! - மீள்வது நோக்கம் கனவொன்று கண்டார் - தங்கள் கையிறுப் பிவ்விடம் செல்லுவ துண்டோ இனநலம் காண்பார் - எனில் இங்கென்ன வேலை அடக்குக வாலை! தினவுண்டு தோளில் - வரத் திறல்மிக உண்டெனில் வந்துபார்க் கட்டும்; மனநோய் அடைந்தார் - அந்த வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்! - கனவொன்று கண்டார் திராவிடர் நாங்கள் - இத்தி ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்! ஒரே இனத்தார்கள் - எமக் கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே சரேலென ஓர்சொல் - இங்குத் தாவுதல் கேட்டெம் ஆவி துடித்தோம்! வராதவர் வந்தார் - இங்கு வந்தவர் எம்மிடம் - வாளுண்டு காண்பார்! - திராவிடர் நாங்கள் - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, ப.170, 1955 291. திராவிடர் ஒழுக்கம் சிந்து - கண்ணிகள் தட்டுப்ப டாதபெரும் - பொருட்கொரு சாதியும் உண்டோடா - படுவாய், சாதியும் உண்டோடா? மட்டற்ற செம்பொருட்கே - முரண்படும் மதங்கள் உண்டோடா? எட்டுத் திசைமுழுதும் - விசும்பு, மண் எங்கும் நிறைபொருட்கே - படுவாய், எங்கும் நிறைபொருட்கே கொட்டு முழக்குண்டோ - அமர்ந்திடக் கோயில்கள் உண்டோடா? பிட்டுச் சுமந்ததுண்டோ? - நிறைபொருள் பெண்டாட்டி கேட்டதுண்டோ? - படுவாய் பெண்டாட்டி கேட்டதுண்டோ? கட்டைக் குதிரை கட்டும் பெருந்தேர் காட்டெனக் கேட்ட துண்டோ? பட்டுடை கேட்டதுண்டோ? - பெரும்பொருள் பண்ணியம் உண்பதுண்டோ? - படுவாய் பண்ணியம் உண்பதுண்டோ? அட்டைப் படத்தினிலும் - திரையிலும் அப்பொருள் காண்பதுண்டோ? பிரமன் என்பதிலும் - மொட்டைத்தலைப் பிச்சையன் என்பதிலும் - படுவாய், பிச்சையன் என்பதிலும் முருகன் என்பதிலும் - திருமால் முக்கணன் என்பதிலும், வரும் பெருச்சாளி - அதன்மிசை வருவன் என்பதிலும் - படுவாய், வருவன் என்பதிலும் சரிந்த தொந்தியுள்ளார் - பார்ப்பனர்க்குத் தரகன் என்பதிலும் பெரும்பொருள் உளதோ? - தொழுவதில் பேறுகள் பெற்றதுண்டோ? - படுவாய், பேறுகள் பெற்றதுண்டோ? கரும்பி ருக்குதடா - உன்னிடத்தில் காணும் கருத்திலையோ! இரும்பு நெஞ்சத்திலே - பயன்ஒன்றும் இல்லை உணர்ந்திடடா - படுவாய், இல்லை உணர்ந்திடடா! திரும்பும் பக்கமெலாம் - பெருமக்கள் தேவை யுணர்ந்திடடா! தீயபொ றாமையையும் - உடைமையிற் செல்லும் அவாவினையும் - படுவாய், செல்லும் அவாவினையும் காயும் சினத்தினையும் - பிறர்உளம் கன்ற உரைப்பதையும் ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில் அறம் பிறக்குமடா! - படுவாய், அறம் பிறக்குமடா! தூய அறவுளத்தால் - செயலினில் தொண்டு பிறக்குமடா! ஏயும் நற்றொண்டாலே - பெரியதோர் இன்பம் பிறக்குமடா - படுவாய் இன்பம் பிறக்குமடா! தீயும் குளிருமடா - உனையண்டும் நோயும் பறக்குமடா! வாயில் திறக்குமடா - புதியதோர் வழி பிறக்குமடா - படுவாய், வழி பிறக்குமடா ஓயுதல் தீருமடா - புதியதோர் ஒளி பிறக்குமடா! தாயொடு மக்களடா - அனைவரும் சரிநிகர் உடைமை; தேயும் நிலை விடுப்பாய் - இவையே திராவிடர் ஒழுக்கம். - பாரதிதாசன் கவிதைகள், மூன்றாம் தொகுதி, ப.174, 1955 292. திராவிடர்க்கு விண்ணப்பம் தென்னாட்டுத் தாய்மாரே தந்தை மாரே திராவிடநல் இளைஞர்களே உடன்பி றந்தீர்! முன்னாட்கு முன்னாளே நாவற் றீவை முழுதாண்ட மூவேந்தர் மரபி னோரே மன்னர்க்கு மன்னரென வடவர் வாழ்த்த வாழ்ந்திட்ட வாழைக்குக் கீழ்க்கன் றன்னீர்! கன்னடரே கேரளரே துளுவப் பாங்கீர் கவின்தெலுங்கப் பாங்கினரே உணர்வு மிக்கீர்! 1 திருத்தமிழத் துருக்கர்களே சமண மக்காள், திராவிடத்துக் கிறித்தவரே, புத்தச் சார்பீர்; திருத்தமிகு வைணவரே சைவத் துள்ளீர் - தென்னாட்டுப் பார்ப்பனரே எண்விண் ணப்பம்; தெருத்தோறும் ஊர்தோறும் வீடு தோறும் செல்லுமா றேவிடுத்த என்விண் ணப்பம்! வருத்துகின்ற நாட்டுநிலை மாறச் செய்து மானத்தைக் காத்திடுமோர் ஆவ லாலே. 2 நெடுங்குன்றத் தோளுடையார் திராவி டர்தம் நெஞ்சுதொறும் ஏறவிட்ட என்விண் ணப்பம்! அடங்காத எழுச்சியினைச் செய்க! வெற்றி அடையுமட்டும் உருவியவாள் உறைகா ணாத கடும்போரை வளர்த்திடுக குருதி யாற்றங் கரையினிலே திராவிடர்கள் வாகை சூடி நடுந்தறியின் மணிக்கொடியால் திராவி டர்தம் நல்வாழ்வை உயர்த்துகவிண் ணப்பம் கேளீர்! 3 இன்றல்ல நேற்றல்ல பன்னூற் றாண்டாய் இந்நிலத்தைப் பொன்னிலத்தைத், திராவி டத்தை என்றேனும் எவ்வகையி லேனும் பற்றி ஈடழிக்க வழிபார்த்தார் வடக்கு நாட்டார்! ஒன்றல்ல அவர்சூழ்ச்சி மனுநூல் தன்னை ஒழுக்கநூல் எனச்சொல்லி வலைவி ரித்தார் அன்றுமுதல் இருடியரை முனிவர் தம்மை ஆள்வளைக்கத் திராவிடத்தில் அனுப்பிப் பார்த்தார்! 4 திராவிடரை இழிவுறுத்தும் கதைகள் கோத்துத் திராவிடரை நம்பும்வகை செய்து பார்த்தார். இராவிடத்தில் தலைநிமிர்ந்தும் மறவர் மக்கள் இருப்பிடத்தில் அடிவீழ்ந்தும் பார்த்தார்; தெய்வ மரபினர்கள் தாம்என்று கூறிப் பார்த்தார். மன்னர்களைப் பல்வகையால் மயக்கிப் பார்த்தார் ஒரேநாட்டார் நாம்என்று சொல்லிப் பார்த்தார் ஒரேஇனத்தார் நாம்என்றும் புளுகிப் பார்த்தார். 5 மொகலாயர் முதல்அயலார் படைஎ டுப்பால் முழுகிவிடும் இந்துமதம் என்று கூறி மிகநயமாய்த் திராவிடத்தை வளைக்கப் பார்த்தார் வீழ்ஆலின் வௌவாலைக் குயில்என் பார்போல் தகுமொழிஎன் றும்தேவ மொழியீ தென்றும் தம்மொழியைத் திராவிடத்தில் உயர்த்தப் பார்த்தார். புகழ்தமிழாம் பூங்காவின் குயிலை மண்ணிற் புதைத்திடவும் ஏதேதோ செய்து பார்த்தார். 6 மேனாட்டார் இங்குவந்தார் அவரி டத்தே மிகத்தாழ்ந்து தம்கொள்கை ஒப்ப வைத்து வால்நாட்டி அவரைப்பின் ஆழம் பார்த்து வாலறுக்கத் தலைப்பட்ட மேனாட் டாரை ஆனமட்டும் எதிர்ப்பதுபோல் வெளிக்குக் காட்டி அலுவல்பெறக் கால்பிடித்துத் தலைநி மிர்ந்து தேன்அடடா தேசபக்தி என்று கூறி திராவிடத்தில் விளம்பரமும் செய்து கொண்டார்! 7 நானிலத்துப் போர்வரவே ஆங்கி லத்து நரிக்குள்ள வலியொடுங்கிப் போன தாலே, மானிகள்போல் இந்நாட்டின் அதிகா ரத்தை வால்குழைத்த வடக்கரிடம் ஒப்ப டைத்தார் ஓநாய்க்கோர் அதிகாரம் வந்து விட்டால் உயர்புலியும் ஆடாகத் தோன்றி டாதோ? தீநினைப்பை வெளிக்காட்ட லானார் இங்கே! திராவிடர்என் றோரினமே இல்லை என்றார். 8 செங்குட்டு வன்பிறந்த திராவி டத்தைச் சிறுவடக்கர் ஆளுவதோ நன்று! நன்று! மங்கிற்றுத் திராவிடந்தான் எனும்நி னைப்போ? மாண்டார்என் றெண்ணினரோ மறவர் மக்கள்! எங்குற்றீர் உறவினரே! ஏன்உ றக்கம்? எழுந்திருப்பீர் பகைநினைப்பை ஒழிக்க வேண்டும் செங்குத்துத் தோளெங்கே மறத்த னத்தைச் சிறிதறிய வேண்டுமிந்தப் பகைவர் கூட்டம். 9 வடமொழியாற் பிறந்ததென்றார் தமிழை! என்ன வாய்ப்பதட்டம்! இவ்வையம் அறிய நம்மேல் சுடுமொழியை வீசுகின்றார் அன்றோ? நம்மைத் துரும்பெனவே எண்ணுகின்றார் அவ்வ டக்கர் படியரிசித் தேவைக்கும் முழத்துண் டுக்கும் பல்லிளித்துத் தமைநோக்கிக் கெஞ்சத் தக்க அடிமைநிலை நோக்கவந்தார் இதுவும் சொல்வார் அடக்காமல் விட்டுவைத்தால் எதுவும் சொல்வார்! 10 வடநாட்டுப் பொருள்விற்கும் சந்தை யாக்கி வடிகட்ட வழிசெய்தார் திராவி டத்தை! அடிப்படையாம் விளைபொருள்கள் அவர்ஒப் பந்தம் அரசினரின் சலுகைக்கோ குறைச்ச லில்லை! விடிவிளக்கில் தூங்காமல் வடவர் இங்கே! மிகும்வட்டி குவிப்பதுவும் பெரும்வே டிக்கை! உடனடியாய்ச் செயத்தக்க தொன்றே ஆகும் உள்ளதிரா விடர்நமக்குள் பிளவு வேண்டாம். 11 அமைச்சரென நம்மவர்க்குப் பெயர்அ மைத்தே அவர்கையால் திராவிடரைக் கெடுப்ப தன்றி இமைப்போதும் அவர்விருப்பம் போல்ந டக்க எள்ளளவும் இடந்தாரார் இதைஎண் ணாமல் நமக்குரிய திராவிடர்கள் சில்லோர், இன்று நம்கொள்கைக் கெதிராக நடக்கின் றார்கள் தமக்குரியார் வடவரல்லர் என்னும் உண்மை தாமறிவார் இன்றில்லா விடினும் நாளை! 12 பழையவர லாறுண்டு நடப்பும் கண்டோம் பச்சைநஞ்சாம் வடவருக்குத் திராவி டர்கள் தழைந்ததிரா விடநாட்டை அடக்கி ஆளத் தலைமுறைத லைமுறையாய் முயற்சி செய்தார் இழைத்துணையாய்ப் பழகிடினும் திராவி டர்கள் இராக்கதர்என் றருவருக்கின் றார்வ டக்கர். வழுக்கிவிட நேர்ந்திடினும் வடக்கன் போட்ட வலைக்குள்விழும் திராவிடன்தன் மானம் விற்போன் 13 கீரையுண்டு நாள்கழிப்பர் திராவி டர்கள் கெட்டழிவார் இவ்வாறு நம்மைச் சொன்னார். தேரைஎன மதிக்கின்றார் வேங்கை தன்னைத்! தென்னாட்டை இவர்தாமோ வாழ வைப்பார்? ஊரையடித் துலையிலிடும் வடக்கர் கொள்கைக் கொத்துழைத்தல் பொதுத்தொண்டாம், தம்மி னத்தின் பேரைஅழிக் கின்றார்கள் திராவி டத்திற் பிறக்கின்ற பெரும்பேறு பெற்ற சில்லோர்! 14 சிறப்புடைய குடித்தனத்தான் மறத்த னத்தால் செங்கோல்கொண் டிந்நாட்டை ஆளத் தக்கான், அறத்துறையில் பண்பட்டான் தன்நாட் டார்க்கே ஆவதொன்றை ஈகஎன்று நாண மின்றித் தறுக்குடைய வடக்கனிடம் செல்லு கின்றான் தனித்துநின்று வடபுலத்தைத் தகர்க்க வல்லான்! துறக்கின்றான் தன்மானம்; தூதூ தூதூ துடிக்கின்றோம் உடன்பிறந்தான் நிலைமை கண்டே! 15 இதுவேநம் தலைமுறைக்குத் தேர்தல் காலம் இடர்சூழ்ந்த திராவிடத்தை மீட்க வேண்டும் முதுவேனில் காலத்தே எறும்பின் சாரை முடுகுதல்போல் அணிவகுத்து முன்னே றிப்போய்ப் புதியதொரு வரலாற்றில் பொன்னெ ழுத்தால் புறங்காட்டி னார்பகைவர் என்று தீட்ட எதிரிகளை வலியடக்கி வாகை சூடி இனவெற்றிக் கொடிதன்னை ஏற்ற வேண்டும். 16 - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.113, 1964 293. முன்னேறு... ஏறு முன்னேறு திராவிடனே இன்னலை நீக்குதல் உன்கடனே - விரைந்தேறு... வீறுகொண் டேறுவி ரைந்துமுன் னேறுவி ழாக்கண்ட பிள்ளையைப் போல் மகிழ்ந்தேறு நீறுபடுத்திடு வாய்பகை நெஞ்சினை நீதான் இறைவன் திராவிட நாட்டினுக் - கேறு... குமரிஇத் தெற்கிலும் வங்கம் வடக்கிலும் கொட்டும் திரைக்கடல் மற்றிரு பாங்கிலும் அமையக் கிடந்த திராவிட நாட்டினை ஆண்டவன் ஆளப் பிறந்தவன் நீ விரைந் - தேறு செல்வத்தை நல்கும் மலைகளும் மண்ணிடைத் தேனென்று பாய்ந்திடும் ஆறும் சுனைகளும் நெல்லைக் குவித்திடும் நன்செயும் முத்தை நிறைக்கும் திரைகொள் திராவிடம் வெல்கஎன் - றேறு வையம் எதிர்த்து வந்தாலும் கலங்காத மறவரும் பச்சை மயிலொத்த பெண்களும் மெய்யறம் காத்துநல் லின்பத்தி லாழ்ந்திடும் மேன்மைத் திராவிடம் வாழியவே என - ஏறு - பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப.220, 1977 294. திராவிடர் வெற்றி காந்தியைக் கொன்றவன் கருத்தின் வழியே சாய்ந்திடு கின்றனர் தலைவர் யாவரும் என்று நடுங்க வில்லை திராவிடர்; வன்மனம் கொண்ட வைத்திய நாதரின் குதிப்பால் எம்திறல் குறையா துள்ளக் கொதிப்பால் இயக்கம் கொழுக்கும் அன்றோ? சேய்மையில் இல்லை திராவிடர் வெற்றி அண்மையில் என்று முரசே! திண்மையில் முழங்குக திசையதிர்ந் திடவே! - நாள் மலர்கள், ப.64, 1978; குயில், 1.4.1948 295. தூத்துக்குடி மாகாணத் திராவிடர் மாநாடு மெய்ம்மை விளங்கியது தூத்துக்குடியில் - எங்கள் மேன்மை விளங்கியது தூத்துக்குடியில், பொய்ம்மை கவிழ்ந்ததுண்டு தூத்துக்குடியில் - பிறர் புரட்டு விளங்கியது தூத்துக்குடியில். எம்மை விரும்பவில்லை நாட்டிலுள்ளவர் - என்ற ஏமாற்றுத் தொலைந்தது தூத்துக்குடியில். செம்மை அடைந்தனர் திராவிடமக்கள் - என்னும் செய்தி புலப்பட்டது தூத்துக்குடியில், நூறாயி ரக்கணக்கில் தூத்துக்குடியில் - தங்கள் நோக்கம் வெளிப்படுத்த வந்து குவிந்தார்; ஆறாயிர மகளிர் வந்து நிறைந்தார் - தங்கள் அன்புத் திராவிடத்தை மீட்கும் நினைவால். நீறாகிப் போனதுண்டு பகையுளந்தான் - மிக நீளக் கிடக்கும்நம் திராவிடத்திலே. வேறேது திராவிடர் கழகமல்லால் - என்ற மெய்ம்மை விளங்கியது தூத்துக்குடியில். இன்பத் திராவிடமும், ஆளும் பொறுப்பும் - எவையும் எமக்கே எனும்இறுதி முரசறைந்தோம். வன்பு மிகுபகையை எங்கள்கழகம் - வெளியில் வாடா என்றழைத்தது தூத்துக்குடியில். அன்பும் உடற்சதையும் எங்களுயிரும் - எங்கள் இருப்பும் இறப்பும் இத்தி ராவிடமடா - எனில் உன்போல நாடோடி நாங்களில்லையே - என வகையினுக் குரைத்தது தூத்துக்குடியில். ஆட்சி உடையசில திராவிடர்பால் - மெல்ல அணுகிக் கழகத்தவர் தம்மிற் சிலரை வாட்டி மகிழ்ந்துவரும் பகைநரியின் - வஞ்ச வாலறுந்து போகுமென்று தூத்துக்குடியில். காட்டினர் திராவிடர் கழகத்தவர் - மக்கள் கடல்ஒன்று முழங்கிற்றுத் தூத்துக்குடியில்! நாட்டினில் ஆதரவு கழகத்துக்கே - என்று நடுங்கிற்றுப் பகைப்புலம் தூத்துக்குடியில். - நாள் மலர்கள், ப.53, 1978; குயில், 15.6.1948 296. திராவிடர் மீட்சி திராவிட நாட்டின் பெயர் நான்மூ வேந்தர் நாடென நவில்வதும் தென்மறவர் நாடென்று செப்பலும் பழந்தமிழ் நாடெனப் பகர்வதும், இந்நாள் வழங்கு திராவிடர் நாடென வரைவதும், ஒன்றே! அதுதான், தொன்று தொட்டு வென்று புகழோங்கு நம்அன்னை நாடு! திராவிடம் தமிழ்மொழி திராவிடம் என்று செப்பிய தேன்எனில் திருத்தமி ழம் எனும் செந்தமிழ்ப் பெயரை வடவர் திரமிளம் என்று வழங்கினர். திரமிளம், பிறகு திராவிடம் ஆனது; வேட்டியை வடவர் வேஷ்டி எனினும்அவ் வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே! அதுபோல், திருத்தமி ழகத்தைத் திராவிடம் என்றால் இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்? மூவேந்தர் மூவேந் தரென மொழியப் பெறுவோர் பாவேந் தர்புகழ் கயற்கொடிப் பாண்டியன், போரில் நிகரிலாப் புலிக்கொடிச் சோழன் சீருறு விற்கொடிச் சேரன் ஆவார். இம்மூ வேந்தர் இனத்தவர் தமிழர் இம்மூ வேந்தர் செம்மொழி தமிழே! மொழித் திரிபினால் பெயர் மாற்றம்! நெடிய இத் தமிழகம் இடைக்காலத்தில் தமிழ்நா டாந்திரம், தனி ஒரு கேரளம் அமையும் துளுவம், கன்னடம் ஆகப் பிரிவுற்றது தமிழ்ப் பேச்சின் திரிபினால்! கோழி என்று கூறல் தெலுங்காம் கோளி என்று கூறல் கேரளமாம் கோலி என்று கூறல் துளுவமாம் தமிழ் மொழி இவ்வாறு தான்திரிந்திடினும் அனைத்தும் தமிழே ஆகும் அன்றிப் பிறமொழி என்று பேசவும் படுமோ? அனைத்தும் பழந்தமிழ் நாடே கன்னட நாடெனக் கவின்மலையாள நன்னர் நாடென ஆந்திர நாடெனப் பன்னும் துளுவநா டெனப்பற் பலபெயர் பகரினும் அனைத்தும் பழந்தமிழ் நாடே அன்றி அவைதாம் அயல் நாடுகளா? குள்ள நோக்கம் இவையெலாம் தமிழகம் இல்லை எனவும் இவைகள் ஒழித்த இடுக்கு நிலமே தமிழ் நாடெனவும், அத் தமிழ்நாடுதனை அமைவுறப் பிரித்தே அமைப்பீர் எனவும் விள்ளுகின்றார் சிலர் விரிந்த நோக்கிலார். நீங்கள் சொல்வீர்களா? தெள்ளுதமிழாம் திரைகடல் தன்னை உள்ளும் புறமும் ஆய்ந்துணர்ந்த தமிழரே தமிழைக் காத்த நம் தமிழ் இலக்கியமாம் அமுதைத் தன் வரலாற்றினால் உயர்த்திய தமிழச் சேரனைத் தமிழன் என்று செப்பவும் மறுப்பிரோ? சேரன் நாட்டினை நம்தமிழ் நாடென நவில மறுப்பிரோ? விற்கொடி உம்மினும் வேறா சொல்வீர்? கன்னடம் துளுவம் கவின் ஆந்திரம் இவை பன்னருஞ் சோழன், பாண்டியன் ஆண்ட வண்டமிழ் நாடா? வடவர் நாடா? கயலோ புலியோ கவினுறு தமிழர்க்கு அயலோ பகைவர் அயலெனக் கூறினும்? திராவிட நாட்டை முழுதும் மீட்போம் பன்னூறாண்டு முதல் இந்நாள் மட்டும் வென்றார் இல்லை என்றும், வெல்ல நின்றார் இல்லை என்றும், நிகழ்வதும் அருமைத் திராவிடப் பெரிய நாட்டைப் பழந்தமிழகத்தைப், பார் அறிந்ததென் மறவர் வையத்தை, இறவாப் புகழ்கொள் மூவேந்தர் நாட்டை முழுவதும் மீட்போம். தென்தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம், துளு என்னுமிவ் வைந்தில் ஒன்றுதான் தமிழகம் என்று நான்கையும் எதிர்ப்பதா? எதிர்ப்பின் நம்முடன், நம்மூர் நம்தெரு வதனில் தென்னண்டை வீட்டுத் தெலுங்கர் நிலை ஏது? வடவண்டை வீட்டு மலையாளிகளைப் பகைப்பதா? எதிர்ப்பாங்கு வீட்டுக் கன்னடத்தாரைக் கடிந்து கொள்வதா? அல்ல திவர்களை அவரவர் நாட்டுக்குக் குடியேற்றுவதா? குடியேற்றிய பின் இங்கெத்தனைபேர் தமிழர் இருப்பார்? பெயர் மாறின் பொருள் மாறுமோ! செந்தமிழ், கேரள, தெலுங்கு, கன்னடம், துளு ஐந்து வகையில் அழைக்கப் பெறினும் மாந்தர் வகையால் திராவிட மக்கள்நாம்! மீட்சி தென்குமரி வங்கம் திரைகடல் முப்பாங்கு மன்னிய திராவிட வையத் துரிமையை ஒருசிறி திழக்க ஒப்போம், பெருநாட்டுப் பெருந்தொகைப் பெரும்புகழ்ப் பெரும்பண்புடையார் நாம் பிரிவோ மில்லை, பிரிந்தால் வாழ்வில்லை. கலைஒன்று, திராவிடர் கண்ட நாகரிக நிலைஒன்று, தாழைமுள் நிகர் நெல்லரிசிச் சோற் றுணவொன்று! நடையுடை ஒன்று நமக்கெலாம். உறுதி ஒன்று திராவிட மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே! - வேங்கையே எழுக, ப.40, 1978; குயில், 1.10.1947 297. மெதுப்போக்குத் திராவிடனுக்கு முற்போக்குத் திராவிடன் மொழிதல் வாய்ப்பான வேளையடா அண்ணே - நீ வால்குழைத்து வாழ்வதுண்டோ அண்ணே? தீர்ப்பான சேதி ஒன்று சொல்வேன் - தி ராவிடத்தை மீட்க முயல் அண்ணே காய்ப்பேறிப் போனதடா அண்ணே - உன் காட்டிக் கொடுக்கும் இழிதன்மை தாய்ப்பால் குடித்திருப்பாய் அண்ணே - எனில் தன்மானம் போனதென்ன அண்ணே? பண்டைத் திராவிட நாடண்ணே - இது பாராண்ட தாயகமாம் அண்ணே கொண்டு வடக்கனிடம் தந்தே - அங்குக் கொடிதூக்க ஒப்பினையே அண்ணே சுண்டைக்காய் அதிகாரம் பெற்றாய் - உன் தூய்மையினை நீஅதற்கு விற்றாய் வண்டியிலே ஏற்றிவிட்டாய் மானம் - உன் வாளெடுக்க நீ மறந்தாய் அண்ணே. உன்னருந்தி ராவிடத்தை அண்ணே - அவர் உருக்குலைக்க உனைஅழைத்தார் அண்ணே என்னருந் திராவிடத்தில் நீர்யார் - என் றேன்கேட்க நீமறந்தாய் அண்ணே? தின்னவரும் நாய்நரிகள் கையால் - நீ சீரடைதல் இல்லையடா அண்ணே அன்னை உனை வேண்டுகின்றாள் அண்ணே - அவட் காட்சிதர நீவருவாய் அண்ணே. - வேங்கையே எழுக, ப.44, 1978; குயில், 1.9.1947 298. ஒன்றுசேரவேண்டும் செந்தமிழை வளமாக்க உதவ வேண்டும் தீ இந்தித் திணிப்பை இனி மாற்ற வேண்டும் முந்தவே கட்டாயக் கல்வி வேண்டும் முற்றி வரும் சாதிவெறி ஒழிய வேண்டும் இந்த நிலை யாங்களெலாம் எய்தி விட்டால் எங்கள்வாழ் வுக்குவே றென்ன வேண்டும் இந்தியினை எதிர்க்கின்றோம் அதற்குப் பேர்தான் இந்நாட்டுப் பிரிவினைக்கோ ரிக்கை யாகும். செந்தமிழ்நாட் டின்மீதில் அள்ளி அள்ளிச் செழுந்தீயை வீசுகின்ற வடபு லத்தை எந்தாயே என்றுநாம் அழைக்க மாட்டோம் எள்ளளவு மனச்சான்றும் வடக்கர்க் கில்லை முந்துங்கள் தமிழர்களே தமிழன் னைக்கு முட்டுக்கட் டைகளாக அமைய வேண்டா ஐந்தாறு கட்சிகளும் ஒன்று சேர்க்க ஆளவரும் இந்திவிட்டு மீள லாகும். - வேங்கையே எழுக, ப.44, 1978; குயில், 17.6.1952 299. முன்னணி மறவன் நீ முன்னணி மறவன் நீ எந்நாளும் வாழ்க! நன்கு கூடினார் திராவிட நாட்டினர் நண்ணினார்கள் தோழர்கள் வீட்டினர் பன்னு முனக்குப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடினார்கள் அன்பினைச் சேர்த்து. - முன்னணி மறவன் நீ ... ஆசை நீக்கப் பிறந்தனை நாட்டின் மாசை நீக்கச் சிறந்திட வேண்டும் நீ ஊர் சிரிக்கும் ஐந் தாம்படைத் தொல்லை ஒழியு மட்டும் முன்னேற்றம் இல்லை. - முன்னணி மறவன் நீ ... வந்த வடமொழி தமிழுக்குத் தாயாம் - நம் வாழ்வின் சீர்த்தி வடவரால் வந்ததாம் இந்தச் சொல் சொன்ன தெந்தக் கலவடை எனில் இங்கிருக்கும் அதேஐந் தாம்படை. - முன்னணி மறவன் நீ ... ஒன்று பட்டனர் திராவிடர் இந்நாள் உணர்ந்து போற்ற வேண்டிய நன்னாள் இன்று சிற்சில தந்நல மிக்க ஏடுகள் செயும் இடையூறு திருத்தும். - முன்னணி மறவன் நீ ... ஆண்டதமிழர் தாம் கொண்ட தூக்கம் ஆரியர்க் கெலாம் நல்லதோர் ஆக்கம் வேண்டிச் செந்தமிழ் வேரிற்கை வைத்தார் விளங்கு தமிழ் நூல் உரையிற் பொய் வைத்தார். - முன்னணி மறவன் நீ ... கன்னல் நாட்டைக் கசப்பாக்கும் இந்திக் கால்கள் வெட்டப் படவேண்டும் முந்தி, இன ஒழுக்கம் இன்கலை தாய்மொழி எண்ணி டார்க்குக் காட்டடா நல்வழி! - முன்னணி மறவன் நீ ... - தேனருவி, 1978 300. ஆளவந்தீர் அழிகின்றீர் அழிகின்றீர் அழிகின்றீர் அழிக்கஒண்ணாத் திராவிடத்தை அழிக்க எண்ணி அழிகின்றீர்! ஆளவந்தீர் அழிக்கின்றீர் ஆளுகின்ற அறிவே இன்றி அழிகின்றீர்! நல்லொழுக்கம் அணுவளவும் இல்லாமே அறங்கா ணாமே அழிகின்றீர்! மக்களுளே அவர்பகைவர் இவர்நமர்என் றழிகின் றீரே! அழிகின்றீர்! அழியாத அன்புநெறி காணாமே அடாத செய்தே அழிகின்றீர்! அதிகாரத் திரைமறைவில் தன்னலத்தை ஆக்கி ஆக்கி அழிகின்றீர்! இப்பெரிய திராவிடத்தின் நன்மையெலாம் அயலார்க் காக்கி அழிகின்றீர் திராவிடத்தை ஆரியருக் காட்படுத்தி அழிகின் றீரே! அழிகின்றீர் ஆட்சியினை உமக்களித்த இந்நாட்டை அவம தித்தே அழிகின்றீர்! உணவளித்தே திராவிடத்தை ஆளாமே அழிக்க எண்ணி அழிகின்றீர்! உடையளித்தே அனைவர்க்கும் மானத்தைக் காத்தி டாமே அழிகின்றீர்! ஆளவந்தும் பிறராணைக் காட்பட்டே அழிகின் றீரே! அழிகின்றீர்! தனக்கொன்றும் பிறர்க்கொன்று மாய்நடக்கும் அழிநி னைப்பால் அழிகின்றீர்! ஆட்சிநிலை அடைந்தபின்னர் புதுமனிதர் ஆக மாறி அழிகின்றீர்! நம்கட்சி அவர்கட்சி இவர்எனவே அறம்பி ழைத்தே அழிகின்றீர்! திராவிடர்நாம் எனும்உணர்வே இல்லாமல் அழிகின் றீரே! அழிகின்றீர் தொழிலாளர் அடிவயிற்றுச் சுடுநெருப்பை அவித்த லின்றி அழிகின்றீர்! சாதிமதம் அடிமுட்டாள் வழக்கத்தை அகற்ற லின்றி அழிகின்றீர்! செல்வநிலை அனைவர்க்கும் பொதுவென்னும் அறிவே யின்றி அழிகின்றீர்! அழியாத வழியிருக்க அழிநிலைகொண் டழிகின் றீரே! - நாள்மலர்கள், ப.46, 1978; குயில், 1.10.1947 301. இராஜாஜி கவர்னர் ஜெனரல் இராஜாஜி அவர்கள் இப்பெரு நாவலந் தீவுக்குக் கவர்னர் ஜெனர லானார் முன்னாள் சென்னை முதலமைச் சாகி இன்னல் சூழ்ந்தார் இந்தியைக் கிளப்பியே! தம்எதிர்க் கட்சித் தலைவரைச் சிறையில் தள்ளினார். அறத்தைத் தள்ளினார். அதனால் அவரின் அமைச்சுப் பட்டமும் அகன்றது. கவர்னர் ஜெனரல் கருத வேண்டும் எவர்க்கும் கவர்னராய் இருக்க வேண்டும் ஓர நடத்தை தீர வேண்டும் கவர்னர் ஜெனரலால் கல்கி கூட்டம் எவற்றையும் அடைந்திட எண்ண மிட்டுக் குதிப்பதை என்னென்று கூறுவ திங்கே? வரப்போ கின்றார் இராஜாஜி கவர்னராய் என்றசொல் கேட்ட இங்குள்ள பார்ப்பனர் தர்பைக் கைகளால் கத்தி தூக்குவோம் அரபியில் யூதர்போல் ஆவோம் நாங்கள் என்று குதிப்பதை யாரும் அறிவர் தர்ப்பைக் கையால் கத்தி தூக்கட்டும் கத்தியால் என்செயக் கருது கின்றார் என்பதை இங்குப் பன்ன வேண்டாம். பார்ப்பனர் குதிப்புக்குக் காரணம் கவர்னர் பார்ப்பனர் என்றுதான் பகர வேண்டும் இராஜாஜி அவர்கள் இவற்றுக் கெல்லாம் இடந்தரா திருப்பார் என்றெண்ணு கின்றேன் சாதி மதத்தைத் தவிர்ப்ப தேஅறம்! அவற்றைப் பெருக்குதல் அறமே அல்ல. இத்தமிழ் நாட்டில் இராஜா ஜிக்கு நன்னிலை வாய்த்தது நமக்கெல்லாம் பெருமை என்று சில்லோர் இயம்பினார் இங்கே. தமிழ்நாட்டுப் பற்று தமிழர்க் குண்டு பார்ப்பனர்க் கந்தப் பற்றே இராது. தன்கையிற் கிடைத்ததைத் தன்னண் டையிலோர் தமிழ னுக்குத் தரவே எண்ணிடான். இமயத் தருகில் இருப்பினும் தேடிப் பார்ப்பன னுக்கே படைப்பான் அன்றோ? திராவிடர் கண்கள் திறந்திருக் கட்டும் சரேலெனப் பாய்வார் இராஜாஜி ஒரேஉளம் கொள்க உள்ள திராவிடரே! - நாள் மலர்கள், ப.48, 1978; குயில், 15.5.1948 302. முற்போக்குப் பார்ப்பனர் மாநாடு இதுவரை வாளேந்தாச் சோதாக்கள் சென்னைமா வட்டம் சேர்முற் போக்குப் பார்ப்பனர் மாநாடு பகர்மே முதல்நாள் இரண்டாவ தாக இரசிக ரஞ்சனி சபாவில், கே. எ. ராம சாமி சாத்திரி என்பவர் தலைமையில் நடந்ததாம் வேதபா ராயணம் விளைத்தா ராம்முதல் இந்திய யூனியன் கொடியேற் றினார்பின்! எம்.எ. சுப்பிர மணியன் என்பவர் அம்மா நாட்டுக் கடிகோ லுகையில் தர்ப்பைகொள் கையால் வாளும் தாங்குவோம் என்றார் - பார்ப்பனர் இதுவரை வாளினைத் தொட்டறி யாத சோதா மக்களா? இனிமேல் இவர், வாள் ஏந்துவா ராயின் காந்தியைக் கண்டு கைகள் கூப்பி ஏந்து துப்பாக்கியை எடுத்துச் சுட்ட மான மில்லா வஞ்சச் செயல்இனி யேனும் செய்யா திருப்பரோ இவர்கள்? ஆண்டவன் உயர்வு தாழ்வுண் டாக்கினான் ஈண்டதை மாற்றுதல் இயலா தென்று எம்.எ. சுப்பிர மணியன் இயம்பினார். உயர்வு தாழ்வுகள் உண்டாக் கியஓர் ஆண்டவன் அழிந்து போனான்; இன்று எல்லா ரும்நிகர் என்பதை மறுத்துச் சொல்லுவார் முகத்தில் தூஎன உமிழும் மக்க ளாட்சி வலுத்திருப் பதனால் எக்க ளித்தல் இயலாது பார்ப்பார்க்கு! மாநாட்டுக் கன்வீனர் மணிஎனும் ஓர்ஆள் அவசியம் நேர்ந்தால் அரேபி யாவில் யூதர்கள் அரேபியர் மீது தொடங்கிய வேலையைத் திராவிடர் மீது தொடங்குவோம் என்று கூறினராம் நன்று! நன்று! குருதி வெறிகொண்டு திரியும் நாய்களை அடித்துப் போடும் அலுவலைத் திராவிடர் எடுத்துக் கொள்ளக் கூடும் தடுத்துக் கொள்ள முடியுமா பிறர்க்கே? - நாள்மலர்கள், ப.50, 1978; குயில், 15.5.1948 303. பகுத்தறிவிதுவா? பகுத்தறிவீரே எண்ணெய்யும் உண்மையும் இறுதியில் மேம்படும் கண்ணீர்த் துளிகளின் கழகப் பிரிவினை நாட்டுக் கொருநாள் கேட்டினைப் பயக்கும் ஊட்டம் இலாதார் உட்கோள் இலாதார் தன்னலம் எண்ணித் தமிழ்நலம் மறந்து புன்னலத் திற்காய்ப் பொறுக்கித் தின்னச் செல்வ தென்பது சீர்கே டானது. திராவிடர்க்குத் தெரிந்து செய்யும் தீங்கிது. ஒரேஇனம் ஒரேநாடு ஒருநாள் அடைவதே சரேல்என வீழ்த்தும் தமிழரே பகுத்தறி விதுவா? பகுத்தறி வீரே? - நாள் மலர்கள், ப.99, 1978; திராவிடம், 15.9.1952 304. இறந்தவர்பிழைத் தெழுந்தார் அன்னை இறந்தாள் அதனால் சலவைக்கு நாள்பிடித்த தென்றான் சலவைத் தொழிலாளி! பின்புதான் அப்பன் செத்தான் என்றான்! பிறகுதன் பாட்டி செத்தாள் என் றியம்பி நின்றான் என்னைக் கடன்கேட்க வந்தார் இருந்தார் பிழைத் தெழுந்தே. - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.92, 1978 305. க.து.விட்டுத் தி.க.வந்தனர் வருக! வாழ்க! வடக்கு மாங்குடி நாக ராசனார் வல்லம் படுகை செயராம னவர்கள் கடையன் பார்ப்பான் அடிக்கண் ணீர்த்துளிக் கட்சியின் கீழ்மை கண்டு விலகி இடக்குச் சாதி ஒழிக என்றும் இத்தமிழ் நாடு மீள்க என்றும் நடத்துபோர்த் திராவிடர் கழகம் போந்தனர் நன்றே வருக! என்றும் வாழியவே. - பழம் புதுப் பாடல்கள், ப.283, 2005; குயில், 29.7.1958 306. மீண்ட செல்வங்கட்கு வரவேற்பும் வாழ்த்தும் கண்ணீர்த் துளியெனும் உண்ணிகள் தொல்லை எண்ணி மீண்ட தோழர்கள் இவர்கள்; திருப்பத் தூரில் தேநீர்விடுதிக் கண்ணன், மற்றும் அறிவுக் கண்ணு! துரைசாமி என்னும் பொன்வேலைத் தோழர்! நகைக்கடைத் தேவராசன் என்பார் தேநீர் விடுதித் திகழ்ரங்க சாமி சாப்பாட்டு விடுதிச் சங்கரன் ராசா முடிதிருத்து முதல்வர் கிருட்டின சாமி இன்னுணவு விடுதி இராமன் என்பார் நிலைநகை வாணிகம் கலைவாணி என்பார் கொண்டயே காம்பரம் குயில்இதழ் விற்பார் வெள்ளி வேலை முனிசா மிஅவர் தையல் வேலத் தகுமுரு கேசன் இறைச்சி வாணிகம் எழிலுறு மாசி இரும்பு வாணிகம் அப்துல் வகாபு நாளும் பொதுப்பணிக் காளி யப்பன் வண்டி வண்டியாய் நாட்டு மக்கட்குத் தொண்டுசெய் ராம சாமித் தூயன் ஆகியோர் திராவிடர் கழகம் அடைந்தனர். வருக வருக வாழ்க! திருநாட் டுக்குத் தொண்டு செய்யவே! - பழம் புதுப் பாடல்கள், ப.284, 2005; குயில், 5.8.1958 307. வெற்றிப் பறை வெற்றிப்பறை கொட்டடா மறவா வெற்றிப்பறை கொட்டடா பெற்றிடுவோம் எம் திராவிடர் நாட்டை பிரித்திடுவோம் பிறர் எண்ணிடும் கேட்டை நீ - வெற்றி இராதினிப் பிறர்சூழ்ச்சி உணர்வினில் குன்றோம் திராவிட நாடு திராவிடர்க் கென்றோம் - வெற்றி குமரி தொடங்கிநல் வங்கம் வரைக்கும்நல் அமைவான எமதாட்சி யசையா திருக்கும்நீ - வெற்றி தூய்தமிழ்க், கன்னடம், துளு, மலையாளம், ஆய்தெலுங் கென்பன வந்தமிழ் என்றே - வெற்றி தூக்கத்தி லேவந்து பிச்சை யென்றுரைத்தார் ஆக்கத்தில் கைவைத்தால் ஆரிதைப் பொறுப்பார்? - வெற்றி உணர்வுண்டு தோளுண்டு மலையினைப் போலே பணியாத பேர்க்கெல்லாம் இங்கென்ன வேலை? - வெற்றி உலகின் துவக்கம் திராவிடர் வாழ்வு! நிலைகெட்டு வந்தவர்க்கோ நாங்கள் தாழ்வு! - வெற்றி கூளங்க ளாம்பகை சூழ்ச்சியை வீழ்த்தி நாளும் திராவிடர் வாழ்கென்று வாழ்த்தி - வெற்றி - பழம் புதுப் பாடல்கள், ப.232, 2005; குயில், 1.10.1947 308. ஏனங்குடி ம. சம்பந்தம் அறிக்கை இந்த நாட்டில் எங்கள் கட்சிதான் முதன்மை உடையதென்று மொழிந்து கடமை கண்ணியம் கட்டுப் பாடெனும் சொல்வலை வீசித் தூய தமிழக மக்கள் தமிழையும்1 மாணவர் தம்மையும் மயக்கிக் கூத்தியர் மடியில் சாய்த்து நாட்டில் தீமை நாட்டு கின்றனர்; மானம் அழிப்பார்; வீரம் மாய்ப்பார் கடிவர் பண்பினைக் கண்ணீர்த் துளிகள் *** உண்மையும் நேர்மையும் ஒழிவன அல்ல இந்நாள் வரைக்கும் அவருடன் இருந்தநான் உண்மை உணர்ந்து வருந்து கின்றேன் *** தந்தை பெரியார் ஒருவரே தன்னலம் எண்ணா துழைப்பவர், தண்முகில் போல! அவரடி பற்றினேன்! தமிழர் எவர்க்கும் யான்தரும் அறிக்கை யீதே! - பழம் புதுப் பாடல்கள், ப.352, 2005; குயில்,12.5.1959 1. தம்மையும் என இருத்தல் நன்று. 309. திராவிட நாட்டுப் பண் இசை : மோகனம் தாளம் : ஆதி வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே! சூழும் தென்கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்த நாடு. - வாழ்க 1 பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம் கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு. - வாழ்க 2 அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும் அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு வெள்ளப் புனலும் ஊழித் தீயும் வேகச் சீறும் மறவர்கள் நாடு. - வாழ்க 3 அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக் குவியும் கடல்கள் முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய் முல்லைக் காடு மணக்கும் நாடு. - வாழ்க 4 அமைவாம் உலகின் மக்களை யெல்லாம் அடிநாள் ஈன்ற அன்னை தந்தை தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச் சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு. - வாழ்க 5 ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின் சாற்றில் தென்றல் காற்றில் நல்ல ஆற்றல் மறவர் செயலில் பெண்கள் அழகில் கற்பில் உயர்ந்த நாடு. - வாழ்க 6 புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப் பொன்னார் இழையும் துகிலும் பூண்டு கனிமொழி பேசி இல்லறம் நாடும் காதல் மாதர் மகிழுறும் நாடு. - வாழ்க 7 திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க இங்குத் திராவிடர் வாழ்க மிகவே இன்பம் சூழ்ந்தே எங்கள் நாடு! - வாழ்க 8 - பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி, ப.99, 1949; குயில், 1.10.1947 310. இனப் பெயர் 1 இனப்பெயர் என்என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்! வான்தான் என்புகழ்! முன்னாள் என்னும் பன்னெடுங் காலத்தின் உச்சியில் திராவிடன் ஒளிசெய் கின்றான். அன்னோன் கால்வழி யாகிய தொடர்கயிற்று மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா எதிர்கா லத்தின் கடைசியோ டியைந்தது. சீர்த்தி யால்,அ றத்தால், செழுமையால் வையப் போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்! ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி! விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட திராவிடன் ஆலின் சிறிய வித்தே! இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்! உன்இனப் பெயர்தான் என்ன என்று கேட்கக் கேட்க அதனால் எனக்கு மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம். 2 கடந்த காலப் படம்இது! அடடே வடபெருங் குன்றமும் இல்லை! அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே! அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய வெற்பின் வடபுறத்து விளையா டினவே! மேற்கு - அரபிக்கடல் கிழக்கு வங்கக்கடல் இல்லை; என்ன வியப்புஇது! ஆப்பி ரிக்கமும், ஆத்திரே லியமும் குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும் இடையீ டின்றி நெடிது கிடந்த தொடித்தோள் வையம் தோன்றக் கண்டேன். அங்குக் கண்டேன்; தென்மது ரைத்தமி ழின்முதற் கழகம் அதன்பாற் கண்டேன் ஆன்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை, நான்ஓர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்! தொடித்தோள் வையம் நெடிய வானில், உடுக்கள் போற்பல உயர்நா டுகளும் அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித் தென்மா மதுரையும் திகழ்வ தாகப் - பெருஞா லத்தின் இருள்கெடத் தமிழறிவு - திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே. 3 என்னே என்னே! வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே! தொடித்தோள் வையத் தூயநா டுகளில் சிற்சில வற்றைச் சீறிவிழுங் கிற்றே! அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே மீண்டும் தெற்கில் ஈண்டிற்று வெள்ளம் மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன. என்ன கொடுமை! அங்குளார் இங்கு வந்தனர் அலறியே தெய்என்று செப்பும் தீமுதல் ஐந்தில் நீர்ஒன்று - அடிக்கடி நெடுநிலம் விழுங்கலால், சிதறி வந்த தென்புலத் தாரை ஓம்பும்நாள் இடைவிடாது - உளவா யிற்றே! 4 கடற்கீழ்க் கிடந்த வடபெரும் பனிமலை மேற்றோன் றும்படி மிகுபெருங் கடல்நீர் தென்பால் ஐயகோ சீறி வந்ததால் தொடித்தோள் வையமே படிமிசை மறைந்ததே இன்றுதென் கடலில் இலங்கை முதலா ஒன்றுமில்லை. மேற்கிடம் அரபிக் கடலும் கிழக்கிடம் வங்கக் கடலும் அன்றி வேறில்லை. வடபெரும் பனிமலை மண்மேற் றோன்ற அங்கிருந்து விந்தியம்ஆம் குன்றம் மட்டும் நிலப்பரப் பானது! திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர் அங்கும் குடிபுகுந் தழகு செய்தனர். ஆரியர் கால்நடை அமைய வந்தவர், பனிவரை யடுத்த நனிபெரு நிலத்தில் தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும் மொழியையும் தமிழால் ஒழுங்கு செய்தனர், வடபால் இருந்துதென் குடபால் வந்த ஆரியர் சிற்சிலர் குடமலைச் சாரல் அடைந்தார் ஆதலின், குடமலை தன்னைக் குடமுனி என்றனர். ஆரியர் இங்குச் சீரிய தமிழில் அறிவு பெற்றனர். அதிகா ரத்தின் விருப்பால் நாடொறும் விளைத்தனர் சூழ்ச்சிகள். இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம் முதற்பெருங் கழகம் ஆகிய எவற்றிலும் தம்பெயர் ஏற்றித் தம்மைத் திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக் காட்ட முயன்றனர் அன்றோ. திராவிடன் நான்!என் பெருமை இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே! - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.71, 1949 311. பிரிவு தீது கேரளம் என்றுபி ரிப்பதுவும் - நாம் கேடுற ஆந்திரம் பிய்ப்பதுவும் சேரும் திராவிடர் சேரா தழித்திடச் செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக் கொய்திட வேண்டும் அண்ணே. கேரளம் என்னல் திராவிடமே - ஒரு கேடற்ற ஆந்திரம் அவ்வாறே கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள் திராவிடம் ஆகும் அண்ணே - வேறு இராதெனல் உண்மை அண்ணே. செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும் நந்தம் திராவிட நாடெனல் அல்லது வந்தவர் நாடாமோ? - அவை வடவர் நாடாமோ? செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள் அந்த மிகுந்த திராவிடம் அல்லது ஆரியச் சொல்லாமோ - அவர் வேர்வந்த சொல்லாமோ? - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, ப.77, 1949 312. ஏற்றப் பாட்டு முற்பகல் கதிர் வாழ்த்து 1. ஓங்கு கதிர் வா வா - நீ ஒன்றுடனே வாழி 2. மாங் கனியும் நீதான் - அந்த வானம் என்னும் தோப்பில்! 3. நீங்கும் பனி என்றே - இங்கு நீ சிரித்து வந்தாய்! 4. நாங்கள் மறப் போமோ - நீ நாலுடனே வாழி 5. ஐந் துடனே வாழி - நீ அள்ளி வைத்த தங்கம்! 6. முந்திய கருக்கல் - எந்த மூலையிலும் இல்லை. 7. சந்து பொந்தில் எங்கும் - உன் தங்க வெய்யில் கண்டோம். 8. இந்த நன்மை செய்தாய் - நீ எட்டுடனே வாழி! திராவிடநாடு வாழ்த்து 9. இன்பம் உள்ள நாடு - தம்பி இத் திராவி டந்தான் 10. உன்னி வாழ்த்து வோமே - தம்பி ஒருப துடன் வாழி! திராவிட நாட்டின் சிறப்பு 11. நன்மை யுள்ள நாடு - தம்பி நாவலந் தீவுக்குள் 12. தென்னை வளம் சேரும் - நல்ல தெற்கு வள நாடு. 13. கன்னி முதல் வங்கம் - இரு கடல் கிழக்கு மேற்கு. 14. சின்ன தல்ல தம்பி - நம் திராவிட நன்னாடு! 15. முன்னரசர் நாடு - நல்ல மூன்றரசர் நாடு 16. மன்னர் வில்எ டுத்தால் - பனி வடமலை நடுங்கும். 17. பாண் டியன்பேர் சொன்னால் - இந்தப் பார் நடுங்கும் தம்பி 18. ஆண்டிருந்த சேரன் - அவன் ஆரியரை வென்றான். 19. மாண்ட துண்டு சோழன் - அவன் மாநிலத்தைக் காத்தான். 20. மாண்டு விட்டால் என்ன - அவன் வழி வந்தவர் நாமே! 21. இருப துடன் ஒன்றே - வளம் எக்க ளிக்கும் நாட்டில் 22. எரு தடிப்ப தாலே - தம்பி என்ன பயன் என்று 23. பொருந்த யானை கட்டி - நெல் போர் அடித்தல் உண்டு, 24. கரும்பு தரும் சாறோ - தம்பி கா விரியின் ஆறு! 25. முப் பழமும் தேனும் - நல்ல முந்தி ரிப்ப ருப்பும், 26. எப்பொ ழுதும் காணும் - தம்பி இருப துடன் ஆறு 27. கப்பல் கொண்டு போகும் - இங்குக் காணும் சரக் கெல்லாம். 28. சிப்ப மாகச் சாயும் - பல சீமைச் சரக் கெல்லாம் 29. கெட்டி முத்துச் சாயும் - நம் கீழ்க் கடலில் தம்பி. 30. முட்டில் லாத நாடு - தம்பி முப்பதுடன் வாழி! 31. வெட்டும்இட மெல்லாம் - நாம் வேண்டிய பொன் கிட்டும் 32. எட்டுத் திசை பாடும் - நம் இன்பத் திரு நாட்டை! 33. நாக ரிக நாடு! - நம் நல்ல பெரு நாடு! 34. தோகை மயில் ஆடும் - பூந் தோட் டங்களில் எல்லாம். 35. வேக வைக்கும் கோடை - அதை விழுந் தவிக்கும் தென்றல் 36. வாழ் கறவை மாடு - தம்பி மாம லையின் ஈடு! 37. சந்த னத்துச் சோலை - அதைச் சார்ந்து நிற்கும் குன்றம் 38. அந்தப் பொதிகை போல் - தம்பி ஆருங் கண்ட தில்லை 39. சிந்தருவி உண்டு - தம்பி தெங் கிளநீர் போலே! 40. நந்து புனல் ஆறு - தம்பி நாற்பதுடன் வாழி! 41. காவிரி நல்வைகை - பல கண் கவரும் பொய்கை 42. பூ விரியும் சோலை - நல்ல பொன் கொழிக்கும் நன்செய் 43. யாவும் உண்டு கண்டாய் - தம்பி இத் திராவி டத்தில். 44. தேவை எல்லாம் சாயும் - நம் தெற்கு வள நாட்டில். திராவிடர் கலை ஒழுக்கம் 45. குற்ற மற்ற கொள்கை - தம்பி கொண்ட திந்த நாடு 46. கற்ற வருக் கெல்லாம் - தம்பி கல்வி தந்த நாடு 47. வெற்றி மற வர்கள் - தம்பி வேல் மறவர் நாடு. 48. மற்ற வரும் வாழத் - தம்பி வழி வகுத்த நாடு. 49. ஈரடியும் தந்தான் - தம்பி இங்கு வள்ளு வன் - தான் 50. ஆரும் அறம் கண்டோம் - தம்பி ஐம்ப துடன் வாழி! 51. சீருடைய நாடு - தம்பி திராவிட நன் னாடு 52. பேருடைய நாடு - தம்பி பெருந் திராவிட ந்தான். 53. ஓர் கடவுள் உண்டு - தம்பி உண்மை கண்ட நாட்டில் 54. பேரும் அதற் கில்லை - தம்பி பெண்டும் அதற் கில்லை 55. தேரும் அதற் கில்லை - தம்பி சேயும் அதற் கில்லை 56. ஆரும் அதன் மக்கள் - அது அத்த னைக்கும் வித்து! 57. உள்ளதொரு தெய்வம் - அதற் குருவ மில்லை - தம்பி 58. அள்ளி வைத்த ஆப்பி - தம்பி அதிற் கடவுள் இல்லை. 59. குள்ள மில்லை தெய்வம் - அது கோயில் களில் இல்லை. 60. தெள்ளு பொடி பூசும் - தம்பி சிவன் கடவு ளல்ல. 61. அறுப துடன் ஒன்று தம்பி அரி கடவுள் அல்ல - 62. அறு முகனும் அல்ல - தம்பி ஐங் கையனும் அல்ல. 63. அறு சமயம் சொல்லும் - தம்பி அது கடவுள் அல்ல. 64. பிற மதத்தில் இல்லை - அந்தப் பெரிய பொருள் - தம்பி. 65. திராவி டர்கள் முன்னே - தம்பி தெரிந் துணர்ந்த உண்மை. 66. ஒரு மதமும் வேண்டாம் - தம்பி உண்மை யுடை யார்க்கே. 67. பெரு மதங்கள் என்னும் - அந்தப் பேய் பிடிக்க வேண்டாம். 68. திருட்டுக் குரு மாரின் - கெட்ட செயலை ஒப்ப வேண்டாம்! 69. காணிக் கைகள் கொட்டி - நீ கண் கலங்க வேண்டாம்! 70. ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி எழுப துடன் வாழி! 71. தோணி யினில் ஏற்றி - நல்ல சொர்க்கம் சேர்க்க மாட்டார். 72. நாண மற்ற பேச்சை - நீ நம்ப வேண்டாம் தம்பி. 73. சாதி யில்லை தம்பி - மக்கள் தாழ் வுயர்வும் இல்லை. 74. தீத கற்ற வந்த - நம் திருக் குறளைப் பாராய். 75. நீதி பொது தம்பி - இந்த நீணி லத்தில் யார்க்கும். 76. மாத ருக்கும் நீதி - ஆண் மக்க ளுக்கும் ஒன்றே 77. பச்சை விளக் காகும் - உன் பகுத் தறிவு தம்பி 78. பச்சை விளக் காலே - நல்ல பாதை பிடி தம்பி! 79. அச்ச மில்லை தம்பி - நல்ல அறம் இருக்கும் போது! 80. எச்ச ரிக்கை கண்டாய் - தம்பி எண்ப துடன் வாழி! 81. வள்ளு வரின் நூலே - நல்ல வழி யளிக்கும் தம்பி! 82. குள்ளர் வழிச் சென்று - நீ குழியில் விழ வேண்டாம். 83. உள்ள இனத் தார்கள் - உளம் ஒன்று பட வேண்டும். 84. தள்ளுக பொ றாமை - ஒரு தாய் வயிற்று மக்கள், 85. நீக்குக பே ராசை - தம்பி நிகர் எவரும் ஆவார் 86. போக்குச் சினம் தீச்சொல் - நீ பொன் அறத்தை வாழ்த்து 87. சேர்க்கும் அறம் உன்னை - ஒரு தீங்கும் அற்ற வாழ்வில்! 88. ஊர்க் குழைக்க வேண்டும் - நீ உண்மையுடன் தம்பி! 89. நாட்டுக் குழை தம்பி - இந்த நானி லத்தை எண்ணி! 90. வீட்டுக் குழை தம்பி - இங்கு மீதிப் பெயர் எண்ணி! 91. தோட்டம் பொது தம்பி - இந்தச் சீமை பொது தம்பி! 92. தேட்டம் பொது தம்பி - உணர் தொண்ணூ றோடி ரண்டே 93. கண் அடித் தழைக்கும் - ஒரு கட்டழகி தன்னை 94. எண்ணம் ஒத்திருந்தால் - நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் 95. பண்ணி வைப்ப தாக - வரும் பார்ப்பு மணம் வேண்டாம். 96. கண்மணியும் நீயும் - நல்ல காதல் மணம் கொள்வீர் 97. திராவிடத்தை மீட்பீர் - நம் செந்தமிழை மீட்பீர். 98. திராவிடர்கள் ஒன்றாய்த் - தம்பி சேர்ந்துழைக்க வேண்டும். 99. திராவிடத்தில் மாற்றார் - தமைச் சேர விட வேண்டாம். 100. ஒரே உறுதி கொள்வாய் - தம்பி ஒரு நூறுடன் வாழி. ஏற்றப்பாட்டு, ப.5, 1949 குறிப்புரை: கதிர் - சூரியன், ஓங்கு - கடல்மேல் எழுகின்ற, உன்னி - நினைத்து, நாவலந் தீவு - இந்தியா, கன்னி - கன்னியாகுமரி, வங்கம் - வங்காளம், மூன்றரசர் - சேர சோழ பாண்டியர், பனிவடமலை - இமயமலை, பார் - உலகம், முப்பழம் - மா, பலா, வாழை, குன்றம் - மலை, நந்து புனல் - பெருகுகின்ற நீர், மறவர் - வீரர், அறம் - தருமம், சேய் - பிள்ளை, ஆப்பு - சாணி, தெள்ளுபொடி - திருநீறு, நிகர் எவரும் - எவரும் சமானம், தேட்டம் - சொத்து, பார்ப்பு - பார்ப்பனன், மாற்றார் - பகைவர். பிற்பகல் மாலை 1. உச்சி குடை சாய்ந்தான்-கதிர் (ஒன்றுடனே) வாழி! 2. மச்சு வேய்ந்திருந்தான்-அந்த மாற்றுயர்ந்த பொன்னன் 3. மெச்சுதடி பெண்ணே-அந்த வெய்யிலையும் வையம். 4. வைச்ச புள்ளி மாறான்-அவன் மாலை மாற்றப் போவான். ஒழுக்கம் 5. நல்லொழுக்கம் ஒன்றே-பெண்ணே நல்ல நிலை சேர்க்கும் 6. புல் ஒழுக்கம் தீமை-பெண்ணே பொய் உரைத்தல் தீமை! 7. இல் லறமே பெண்ணே-இங்கு நல் லறமென் பார்கள் 8. கல்வியுடைய யோரே-பெண்ணே கண்ணுடைய ராவார். 9. நன்றி மறவாதே-பெண்ணே நற்பொறுமை வேண்டும் 10. இன்சொல் இனிதாகும்-பெண்ணே இன்னல் செய்ய வேண்டாம். 11. உன்னருமை நாட்டின்-பெண்ணே உண்மை நிலை காண்பாய். 12. இந்நிலத்தின் தொண்டில்-நீ ஈடுபட வேண்டும். 13. (பத்துடனே மூன்று)-நீ பகுத்தறிவைப் போற்று! 14. நத்தியிரு பெண்ணே-நீ நல்ல வரை என்றும்! 15. சொத்து வரும் என்று-நீ தோது தவறாதே. 16. முத்து வரும் என்று-நீ முறை தவற வேண்டாம். 17. கனியத் தமிழ் பாடு-பெண்ணே கச்சேரி செய்யாதே. 18. சினிமாவிற் சேர்ந்து-நீ தீமை யடையாதே! 19. தனித்து வரும்போது-கெட்ட தறுதலை கண் வைத்தால், 20. இனிக்க நலம் கூறு-பெண்ணே இல்லாவிடில் தாக்கு. 21. (இருபதுடன் ஒன்றே)-பெண்ணே இத்திரா விடத்தில். 22. அரிசிமட்டும் இல்லை-பெண்ணே ஆட்சி மட்டும் உண்டு. 23. இரிசன் மகன் முத்தை-பெண்ணே இந்தி படி என்றான். 24. வரிசை கெட்ட மூளி-அவன் வைத்தது தான் சட்டம்! 25. (இருபதுடன் ஐந்தே)-நம் இனிய தமிழ்த் தாயைக் 26. கருவறுத்துப் போடும்-ஒரு கத்தியடி இந்தி. 27. அரிய செயல் ஒன்று-பெண்ணே ஆளுபவர் செய்தார். 28. ஒருவருக்கும் கள்ளைப்-பெண்ணே ஒழிக்கச் சட்டம் செய்தார்! 29. கள்ளை விட்ட பேர்க்குப்-பெண்ணே கைப் பணமும் மீதி 30. முள் விலக்கினார்கள்-பெண்ணே (முப்பதுடன்) வாழி! 31. கள்ளை விட்டுக் கையில் பெண்ணே காசு மீத்தச் செய்தார். 32. கள்ளக் கடை போட்டார்-அதைக் கழற்ற வழி செய்தார். 33. ஆள வந்தார் உண்டு-பெண்ணே ஐயோ பெரும் மண்டு 34. நாளும் கையில் மட்டும்-பெண்ணே நல்ல வருமானம்! 35. ஆளுக்கென்ன பஞ்சம்-பெண்ணே அடிமடியில் லஞ்சம்! 36. தோளிலே மிடுக்காம்-அவர் தொழுவதோ வடக்காம்! 37. கெண்டை விழியாளே-அடி கிள்ளை மொழி யாளே! 38. கொண்டையிலே பூவும்-உன் கோணை நெடு வாக்கும், 39. தண்டையிலே பாட்டும்-என் தாழ் அடியில் கூத்தும், 40. கண்டவுடன் காதல்-நான் கொண்டே னேஉன் மீதில். 41. (நாற்ப துடன் ஒன்று)-பெண்ணே நான் உனக்கு மாமன். 42. நேற்று வந்து போனாய்-அடி நீல மயில் போலே. 43. மாற்று யர்ந்த பொன்னே-அடி மாணிக்கமே கேளாய் 44. சோற்றை மறந்தேனே-அடி தூக்க மில்லை மானே! 45. உன் நினைப்புத் தானே-அடி ஊற் றெடுத்த தேனே! 46. என்னைக் கொல்லு தேடி-அடி ஏதுக் கிந்த மோடி? 47. சின்ன வய தாளே-அடி சிரித்த முகத் தாளே; 48. அன்ன நடை யாளே-நல்ல அச்ச இடை யாளே! 49. துள்ளு வதென் ஆசை-அடி துடித்த தடி மீசை. 50. அள்ளுவ தென் காதல்-அடி (ஐம்பதுடன்) வாழி! 51. தள்ளத் தகு மோடி-நான் தாய்க்குத் தலைப் பிள்ளை 52. நொள்ளை யல்ல பெண்ணே-நான் நொண்டி யல்ல பெண்ணே. 53. வருத்தம் இல்லை பெண்ணே-என் மாமிக் கும்என் மேலே 54. கருத்தும் உண்டு மாமன்-என்னைக் கட்டிக் கொள்ளச் சொல்வான் 55. சிரிப்பு மலர் வாயால்-அடி தெரிவி ஒரு பேச்சே 56. கருத்தை உரை கொஞ்சம்-பெண்ணே கல்லடி உன் நெஞ்சம். 57. பார் இரண்டு சிட்டுப்-பெண்ணே பழகும் ஒன்று பட்டு. 58. யார் தடுக்கக் கூடும்-பெண்ணே (ஐம்ப துடன் எட்டு) 59. பீர்க்க மலர் பூக்கும்-அடி பின் பொழுதும் கண்டாய். 60. ஆர்க்கு தடி வண்டும்-பெண்ணே (அறுப துடன்) வாழி! 61. விரிந்ததடி முல்லை-அடி வீசி யது தென்றல் 62. சரிந்த தடி பெண்ணே-மலர் தங்கப் பொடி எங்கும். 63. எரிந்த தடி மேனி-பெண்ணே இனிப் பொறுக்க மாட்டேன். 64. புரிந்தனைஇந் நேரம்-அடி பொல்லாத ஒட் டாரம். 65. பூட்டி வைத்த வீட்டின்-அடி புது விளக்கும் நீயே. 66. மாட்டி வைத்த கூட்டில்-அடி மணிக் கிளியும் நீயே. 67. போட்டு வைத்த சம்பா-இனிப் பொங்கி டும்முன் னாலே 68. கூட்டி வைத்த வீட்டின்-நல்ல குடும்ப விளக் காவாய். 69. கூண்டு வண்டி கட்டி-நாம் கூட லூர் அடைந்தால், 70. பாண்டி யன்கு டும்பம்-என்று பார்த்து மகிழ் வார்கள். 71. தாண்டி நடை போட்டு-நாம் தக ததென்று போனால் 72. மாண்ட நெடுஞ் சோழன்-அவன் வளர் குடும்பம் என்பார். 73. தையல் என்றன் வீட்டில்-நீ சமையல் செய்யும் போதுன் 74. கை யழகு பார்த்து-நான் களித் திடுவேன் பெண்ணே 75. கையில் விளக் கேந்தி-நீ கடைசி அறை போவாய். 76. பொய் யல்லவே பெண்ணே-மிகப் பூரிக்கும் என் மேனி. 77. (எழுப துடன் ஏழு)-பெண்ணே இளமை மாறிப் போகும் 78. அழகு மாறிப் போகும்-நீ அறிந்து நட பெண்ணே 79. குழந்தை குட்டி பெற்று-நாம் குறை தவிர்க்க வேண்டும். 80. பிழிந்த பழச் சாறே-அடி பேச்சும் உண்டோ வேறே. 81. தங்கக் கதிர் மேற்கில்-மெல்லத் தவழ்ந்ததடி பெண்ணே. 82. மங்கிற்றடி வெய்யில்-அதோ மகிழ்ந்த தடி அல்லி. 83. தங்கும் தா மரைப்பூ-மானே. தளர்ந்ததடி மேனி, 84. பொங்கிற் றடி காதல்-அடி பூவை யேஉன் மீதில்! 85. (எண் பதுடன் ஐந்தே)-பெண்ணே எருதுகளின் கூட்டம். 86. கண் மகிழ்ந்து பெண்ணே-அவை கழனி விட்டுப் போகும். 87. பெண் மயிலே என்னை-நீ பெருமைப் படச் செய்வாய். 88. உண்மையிலே நானே-உன் ஊழி யம்செய் வேனே, 89. பட்ட தடி உன்கை-பெண்ணே பலித்த தடி வாழ்வு. 90. தொட்டது துலங்கும்-இனித் (தொண்ணூ றுடன்) வாழி! 91. இட்டது நீ சட்டம்-என் இன்பப் பெரு மாட்டி, 92. விட்டுப் பிரியாதே-எந்த வேளையிலும் மாதே. 93. ஆறு தலைச் செய்வாய்-என் அண்டை யிலி ருந்தே. 94. மாறி டுமோ கண்ணே-நம் வாழ்க் கையிலே எண்ணம்? 95. மாறும்படி செய்வார்-இவ் வையகத்தில் இல்லை, 96. ஊறு தடி அன்பும்-பெண்ணே ஏங்கிடுதே இன்பம். 97. தேக்கி யது நீலம்-அந்தச் செங்க திரின் மேலே. 98. பூக்கும் மண முல்லை-இனிப் போகு மடி மாலை 99. வாய்க்க விளக் கேற்றி-நகர் மாத ரும்ம கிழ்ந்தார் 100. நோக்கியது வையம்-பெண்ணே (நூறுடனே) வாழி! ஏற்றப்பாட்டு, ப.5, 1949 குறிப்புரை : உச்சிக்குடை - சூரியன் சாய்ந்தான் - மேற்கில் சாயத் தலைப்பட்டுவிட்டான் மச்சு வேய்ந்து விட்டான் - மேற்கூரை போட்டிருந்தான் இதுவரைக்கும். பொன்னன் - மாற்றுயர்ந்த பொன் கதிரையுடை சூரியன் மாலை மாற்ற - மாலைப் பொழுதை மாற்றி இரவை உண்டாக்க ஆர்க்கு தடி - முழங்குகின்ற தடி. 313. அன்னை அறிக்கை திராவிடம் என்னருமை மக்களே இன்பத் திராவிடரே இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்! உங்கள் கலைஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம் பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்! ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதைமறைத்துத் தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள் அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்! பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால் அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ? ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால் பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ? மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால் தக்க முலீமைத் தாக்கா திருப்பாரோ? உங்கள் கடமை உணர்வீர்கள், ஒன்றுபட்டால் இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை! ஏசு மதத்தாரும் முலீம்கள் எல்லாரும் பேசில் திராவிடர்என் பிள்ளைகளே என்றுணர்க! சாதிமதமும் பேசித் தனித்தனியே நீரிருந்தால் தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார் ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே! ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன் பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ! மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில் இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ! - பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி, ப.177, 1955 314. எங்கள் திராவிடம் தங்கம் விளைந்த நிலம் - எங்கள் தாய்நிலம் போற் காண்கிலம் - உயர் செங்கதிர் போல் திங்கள்போல் - துலங்கும்தி ராவிட மாநிலமே! எங்கும் வளப்பம் மிகும் - புகழ் எண்ணத் தகும்தாயகம் - கழை தெங்கும்செந் நெல்கமுகும் - விளையும்தி ராவிட நல்லகமே! அன்பு பதிந்த இடம் - எங்கள் ஆட்சி சிறந்த இடம் - நல் இன்பம் நிறைந்த இடம் - எமைஎல்லாம் ஈன்ற திராவிடமே! மன்னும் அதன்புகழ்வான் - சொல்லும் வாய்க்கது தித்திக்கும் தேன் - உயிர், என்பு, குருதி, நல்லூன் - எலாம்எங்கள் இன்பத்தி ராவிடந் தான்! திராவிட நன்னாடு - கொண்ட சீருக் கொருகேடு - தனைக் கருதும் பிறநாடு - போர்த்திறத்தைக் காட்டும் நம்மோடு அரியது செய்திடுவோம் - தனி ஆட்சி நிறுவிடுவோம் - மிகப் பெரியது நம்நாடு - திராவிடப் பெற்றியை வாழ்த்திடு வோம்! - பாரதிதாசன் பன்மணித்திரள், ப.235, 1964; குயில், 15.7.1958 315. குழந்தை வளர்ப்பு ஒருதேன் கூட்டில் இரண்டா யிரம்அறை யிருந்தன; அழகாய் இருந்தன, தூய்மையாய் இருந்தன. ஒன்று போல் இருந்தன அன்றோ! *** அவ்வறை தோறும் அழகிய குழந்தைகள் செவ்வனே வாழும் தேன் குடித் துறங்கும் என்ன அழகிய ஏற்பாடு! மிக மிக நேர்மை யான நிறுவனம் அன்றோ தழைந்த வாழ்வு தாய கம்பெறக் குழந்தைகள் தம்மைக் கூட்டி வளர்ப்பது முடியா தென்று முணுமுணுப் பார்க்கு முடியு மென்று மொழிந்தன ஈக்கள்! *** ஈக்கள் செய்தன இச்செயல் இந்நாட்டு மாக்கள் செய்ய மதிபடைத் திலரே *** ஈன்றவர் ஈன்றார் இளங்குழந் தைகளை தேன் கூட் டைப்போல் திருந்த வளர்ப்பது நாட்டை முன்னின்று நடத்துவார் கடமை. ஒருநாட்டி லுள்ள உடைமை அனைத்தும் பெருநாட்டத் தோடு பேசுவ தாயின் அந்நாட்டுக் குழந்தைகட் கன்றோ உரியவை? இந்நாட் டவர்க் கெலாம் ஏற்றவை செய்வதாய்த் தலைமை பெற்றவர் தங்கள் குழந்தையின் நிலையை மட்டும் நினைத்தால் போதுமா? தூய செவிலித் தாயை அமைத்தும் நோயுறா வண்ணம் நுண்முறை நாடியும் ஆவன செய்வதை அறியா தவர்யார்? *** எம்பிள்ளை கட்கே யாம் வாழ் கின்றோம் செம்புபோல் செழும்பொன் செலவழிக் கின்றோம் என்று நாளும் இயம்பினார் அன்றோ? அதுபோல் அன்னை நாட் டரும்செல் வங்களை வளர்க்கும் பொறுப்பை வாங்கவேண் டாமா? இவ்வாண்டில் இத்தனை இளங்குழந் தைகள் செவ்வெண்ணெய் இன்றிச் செத்தன என்ற நிலைமுழு தறிந்தும் தலைமுழுகித் தீர்ப்பதா? மாந்தர் பொதுஇயல்பு மண்ணாக லாமா? மனச் சான்றுமா வருத்த வில்லை!? *** தெருத்தோறும் தெருத்தோறும் பெருத்த வீடு மருத்துவர், மருந்து, திருத்தச்செவிலியர் கட்டில்கள் தொட்டில்கள், கணக்கர் அமைக்க! தெருத்தோறும் கருப்பெற்ற சேயிழை மாரைக் கருத்தொடு நாடொறும் கண்காணிக்க! குழந்தை பெறும்நாள் குறுகிடில் அவரை மருத்துவ வீட்டில் வரவ ழைக்க பெறும்நோய் இன்றிப் பெறும்வகை செய்க! குறுநகை மதலையைக் குளுகுளு வென்று மனமார்ந்த அன்பொடு வளர்த்து வருக இரண்டாண் டானபின் இந்தா என்று குழந்தைப் பள்ளிக்குக் கொடுத்து விடுக! இன்னவை அனைத்தும் இன்னே செய்து பொன்னா டாக்குதல் பொதுக்கடன் நமக்கே குழந்தை வளர்ப்பு நிறுவனம் தழைந்து திராவிடத் தாயகம் வாழ்கவே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.333, 1964 316. ஆளவந்தார்க்கு இறுதி அறிக்கை எடுப்பு இந்த இறுதி அறிக்கையை ஆளவந்தார்க்கு விடுப்போம் - அவர் இணங்கி வராவிடில், கிளர்ச்சிப் படையெடுப்போம் உடன் எடுப்பு பிறர்க்கிட மின்றித் திராவிட நாட்டைப் பிரித்திட வேண்டும் இப்போதே - இதைப் பின்னும் வடக்கர் சரக்கினை விற்கப் பெருஞ்சந்தை ஆக்குதல் தீதே! - இந்த அடிகள் இறைமையும் ஆட்சி முறைமையும் மக்கள் இணக்கமும் ஆம் அமைப்போடு - மண்ணில் எவர்க்கும் அரசியல் நுணுக்கம் உணர்த்திய இன்பத் திராவிட நாடு கறைபட்டு மற்றவர் கையில் அகப்பட்டுக் காலமெல்லாம் பட்ட பாடு - நன்று கருதுகின்றோம் இனி வரைந்திட வேண்டும் புதிய இலக்கிய ஏடு! - இந்த ஆங்கிலர் தம்மை அடுத்தார்! துருக்கரின் ஆட்சியை ஆதரித்தார் - நம் ஆள்வலி கொண்ட திராவிடர் தம்மை அழுத்த இவ்வாறு செய்தார். தீங்குதரும் ஆளவந்தார்க்கும் சிறைக்கும் திராவிடர் அஞ்சுதல் இல்லை - எழில் தெற்கு முனைவங்கம் மேல்கீழ்க் கடல்கள் திராவிட நாட்டினர் எல்லை. - இந்த வேதத்தின் பேர்சொல்லித் தெற்கை வளைக்க விளைத்தனர் சூழ்ச்சிகள் அந்நாள் - வந்த வெள்ளையர் ஆட்சி தொலைப்பவன் பேரால் விழுங்க நினைத்தனர் இந்நாள். சாதி மதங்கள் வடவர் காலூன்றும் சாரக் கட்டானது கண்டோம் - நம் தாயகம் காக்கத் திராவிட மக்கள் அனைவரும் ஒன்றெனக் கொண்டோம்? - இந்த - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.230, 1964; குயில், 15.8.1947 317. இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க முதலமைச்சர்க்கு தூக்கம் கலைந்தது துடுக்கு நினைவால் தாக்கப் பட்டேன் தலையைக் கிளப்பி வட்டு மின்விசையைத் தட்டினேன் மளக்கென்று; வெட்ட வெளிச்சம் விளைத்தது விளக்கு மணிப்பொறி இரண்டரை மணிகாட் டியது தணிப்பரும் அவாவுடன் தாள்இற கெடுத்தேன் எழுந்த எண்ணத்தை எழுதத் தொடங்கையில் முழந்தொங்கு தாடி முதியோர் ஒருவர் நெஞ்சில் தோன்றி நீஇதை எழுதுதல் கொஞ்சமும் சரியல்ல என்று கூறினார் இளைஞன் ஒருவன் எழுதினால் தீமை விளைந்தி டாது விளைந்திடா தென்றான் *** இந்த தொல்லை எதற்கு நமக்கு வந்த எண்ணத்தை மனதில் அழுத்தி ஏடுநிறைத்திட ஏதாவ தொன்றைத் தேடுக என்று செப்பினான் ஒருவன் *** என்னடா இழவா இருக்கிற தென்று முன்போல் வட்டு முனையைத் தொட்டேன் இருண்டது படுத்தேன்; எனினும் தூங்கிலேன். ஒருவர் பேச்சுக்கு உடன்படேன் என்று வட்டுமின் விசையைத் தட்டி உட்கார்ந்து விட்டதை எழுதிப் படித்துப் பார்த்தேன்; முதல மைச்சரே இதனைக் கேட்பீர் பதினா யிரவர் பார்ப்பனர் கூடி உமது நல் லாட்சியை ஒழிக்கத், திட்டம் அமைத்தனர் நீர்உம் அருமைத் திராவிடர் கழகந் தன்னைக் கடிதே வளர்ப்பீர் கிழவரே அதற்கோர் வழியும் சொல்வேன் கருஞ்சட்டைப் படைமேல் எரிந்து விழுக வருந்திங்க ளுக்குள் வளர்ந்திடும் கழகம், *** அமைச்சருக் கிதனை அனுப்ப லாமா? அனுப்பலாம் என்றதோர் அறிவு ; நீ அதை மடித்துவை என்றதோர் மற்றோர் அறிவு மணிப்பொறி ஐந்து மணி அடித்தது என்னடா இழவாய் இருக்கின்ற தென்று மடித்து வைத்தேன் மற்றிரண்டு நாளில் கருஞ்சட் டைப்படை கலைக்கப் பட்டதாய்த் தெரிந்தேன் நாள்வரிச் செய்தித் தாளால் மறுநாள் கழக வளர்ச்சியும் தெரிந்தேன். *** முழுது ணர்ச்சியால் எழுது வேன் இதனை முழுதும் உணர்ந்த முதல மைச்சரே கவினுறு திராவிட கழகத் தின்மேல் இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க இன்னும் ஒருகோடி இளைஞரைத் தருக பொன்னும் ஒளியும் நீ விரும் யாமும், இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க வன்மனக் கூட்டமும் மகிழும் உம்மை இன்னும் கொஞ்சம் எரிச்சல் கொள்க. திராவிடம் திராவிடர் ஆளும் ஒரேஇடம் ஆகும் உம்பெயர் ஓங்குமே! - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.223, 1964 318. வாழ்க திராவிடம் நிழலில் இருந்த நின்உடல் நிறமும், வெயிலில் இருந்தஉன் கையின் நிறமும், வேறா யினும்,அம் மெய்யும், கையும், வேறுவே றென்று விளம்புவ துண்டா? நீயும் தெலுங்கனும் நீங்கொணா இனத்தவர், இந்த உண்மையை இடைநாள் என்னும் நிழல்மறைத் திருந்தது. நீ,உன் உணர்வால், உள்ள உறவினை உற்று நோக்குக. பரந்து கிடக்கும்உன் பழந்தமிழ் நாட்டைப் பார்!உன் பைந்தமிழ்ச் சீர்பார்! மகிழ்ச்சிகொள்! உன்னையும் தெலுங்கன் தன்னையும் விடாமல் ஒன்று சேர்க்கும் ஓர்உறவை நீஏன் அறுக்க முயன்றனை? ஆகுமா உன்னால்? பிறர்கண் டஞ்சுமுன் பெரியபட் டாளத்தை அறுத்துக் குறுக்குதல் அறியாமை அன்றோ! ஏன்உன் இனத்தை எதிரிக் காக்கி ஊனத்தை நாட்டுக் குண்டாக்கு கின்றாய்? அயலார் தம்மை,நீ அண்ட வில்லையே; தெலுங்கனை நம்மருஞ் செந்தமிழ் மறவனை அடைகின்றாய் நீ,அ றஞ்செய் கின்றாய்! அகத்தில் உணர்ச்சி அருவி பாய்ச்சும் நம்மருந் தாய்த்தமிழ் செம்மைப் பழந்தமிழ், தெலுங்கென ஒருமொழி செப்பிய துண்டா? கன்னடம் உண்டெனக் கழறிய துண்டா? கேரளம் உண்டெனக் கிளத்திய துண்டா? துளுவம் உண்டெனச் சொன்ன துண்டா? சேரன் பிறன்என்று செந்தமிழ் சொன்னதா? அன்னவன் நாட்டை அயல்நா டென்றதா? பாண்டிய நாட்டைப் பழந்தமிழ் வெறுத்ததா? சோழ நாட்டைத் தொடாதீர் என்றதா? தலைமுறை தலைமுறை தலைமுறை யாகக் கிடந்தஉன் புகழுக் கடையாள மாக இருந்தஉன் விற்கொடி எட்டிபோற் கசந்ததா? கயற்கொடி புலிக்கொடி கசப்பா நல்கின? தெலுங்க நாடு செப்பு கேரளம் கன்னடம் துளுவம் என்னும் நாடுகள் அனைத்தும் புதுப்பெயர் ஆம்என அறிக. எல்லாம் பழந்தமிழ் நாடென இயம்புக. யாவரும் என்றன் இனத்தார் என்க. திராவிடம் என்றன் திருநா டென்று சரேலென எழுக தடந்தோள் ஆர்த்தே! மீட்பாய் திராவிட நாட்டை! அதோபார் வீழ்ந்த துன்றன் பகைப்புலம் வாழ்ந்தனர் திராவிட மக்கள் இனிதே! - பாரதிதாசன் கவிதைகள் நான்காம் தொகுதி, ப.227, 1977 319. திராவிட நாட்டுக் கொடி வணக்கம் வானில் உயர்ந்த திராவிட நாட்டு மணிக்கொடி தன்னை வணங்குவோம்! நானில மேல்அதன் மாண்பினைக் காண்பதில் நாம் நன்று சேர இணங்குவோம். ஊனுடைமை உயிர்யாவும் திராவிடர் மானத்தைக் காப்பதற் கல்லவோ? ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் - அவர் ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லவோ? விண்ணிடை ஏறிய எங்கள் மணிக்கொடி வெல்க வெல்க வெல்க வெல்கவே! மண்ணில் உயர்ந்த திராவிட நாட்டினர் மாட்சி மணிக்கொடி வெல்கவே! திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட திராவிடர் மாக்கொடி வாழ்கவே! ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ் ஓங்கித் திராவிடம் வாழ்கவே! - வேங்கையே எழுக, ப.33, 1978; குயில், 1.12.1947 320. எங்கள் கொடி எங்கள் நோக்கம் எங்கள் உறுதி வைகறை இருட்டையும் செங்கதிர் நகைப்பையும் திராவிடர் மணிக்கொடி குறிக்கும் வாழ்விருள் தவிப்போர் தனிப்பெரும் புரட்சியை வரவேற்றல் கொடியின் நோக்கம். துய்யபன் னூறாயிரம் திராவிட மக்கள் கொடிநெடுந் தறியினைச் சூழ்ந்தே தோய்கருஞ் சட்டையால் துயருளம் காட்டியும் சுடர்விழிகள் நாளின்மேல் வைத்தும். ஐயகோ வாரிரோ திராவிட மக்களே ஆனஉம் மானத்தைக் காப்பீர் அடிமையினை மிடிமையினை மாற்றுவீர் என்னவே அழைத்தனர்; இதைமறுத்தே வையகம் எதிர்க்கட்டும்! அதிகார மக்கள்தாம் வாட்படை யோடும் வரட்டும்; வன்சிறை இதோ என்று காட்டட்டும் திராவிடம் மீட்பதெம் குறியாகுமே. - வேங்கையே எழுக, ப.34, 1978; குயில், 1.4.1948 321. திராவிட நாட்டுத் தொண்டால் வரும் இன்பம் அவன்: பிறர்நலம் கண்டுநாம் பொறாமை கொள்கிலோம், நிறைபொருள் பெறினும் குறைபாடு கருதும் அவாவை உடையோம் அல்லோம்; வெகுளியால் எவர்க்கும் தீமை இயற்றுவோம் இல்லை, என்னாத கூறலும் இல்லை நம்நா! இந்நாள் இந்நொடி வரைக்கும் நல்லறம் வழுவாது வாழ்க்கை நடத்துதல் எண்ணிநான் மகிழும்இவ் வேளையில், வண்டின் இசையும், புகுகுளிர் தென்றலும், பூக்களின் மணமும் அம்ம கிழ்ச்சியைப் பெருக்கின! அன்றியும், முத்துப்பல் சிரித்தால் முகமெலாம் சிரிக்கும்உன் அத்து மீறிய அழகும் இளமையும் பழையபடி பழய படிஇழுத் தென்னை நிழலுறு காவிரி நீர்த்துறை போன்றதோர் இன்பத்தில் ஆழ்த்தின! அன்பின் பொய்கையே! அவள்: பிரியினும் உன்திரு வுருவம்என் நெஞ்சில் பிரிய வில்லை; எனினும் அருகில் நீவீர் இருந்தால் தான்என் ஆவி இருப்ப தாகும், அருகில் இருக்கவும் தழுவிடில் என்னுயிர் தளிர்ப்ப தாகும்.நான் தழுவ நீவீர் தமிழ்பேசி யணைப்பின் சொல்லொணா இன்பம் தூய மணாளரே! அவள்: இதனைப் போன்ற இன்பம் இவ்வுலகில் வேறெத னாலும் விளையக் கூடுமோ? அதனை அறிய ஆவல் உற்றேன்! அவன்: முத்துக் கடல்முரசு முப்புறம் முழங்க வடக்கின் வங்கத் திடதுகால் ஊன்றி வானவில் ஒத்த வாளா யுதத்தை இமயம் நோக்கி எடுத்த திருக்கோலப் பெருநாட் டைநமைப் பெற்றபொன் னாட்டைத் திராவிட நாட்டைச் சிலர்எதிர்க் கின்றனர் அச்சிலர் அந்நாள் பிச்சைஎன்று வந்தவர்; திராவிடர்க்குச் சேயிழை கூட்டிக் கொடுத்தல் செய்து வந்தவர்; இந்நாள் அவர்கள் நையும் சூழ்ச்சி நாட லாயினர்; திராவிடர் ஒன்று சேரா வண்ணம் கலாம்விளைக் கின்றனர் நிலாமுகப் பெண்ணே! இன்றுநாம் நாட்டுக் கிழைக்கும் ஒவ்வொரு சிறிய தொண்டும் பெருநலம் செய்யும், இழைக்கும் தொண்டெலாம் இன்பம் செய்யும். மானம் பாழ்பட வாழ்வதைப் பார்க்கிலும் ஊனுடல் ஒழிவதே உயர்வை நல்கும். தூங்கும் திராவிடத் தோழன்இல் சென்று தீங்குறு திராவிட நிலைமை செப்பி அன்னோன் அயர்வைச் சிறிதே அகற்றுவோன் நெஞ்சினில் தோன்றும் இன்பம் கொஞ்சமன்று திராவிடர் மொழிக்கும் திராவிடர் கலைக்கும் திராவிட நாக ரிகத்தின் சீர்க்கும் மதம்சாதி என்னும் மடமைக் கப்பால் தூய நெஞ்சமும் தூய கொள்கையும் மேற்கொண்டு வாழும்நம் மேன்மை தனக்கும் இடையூ றாக்கும் கடையரை எதிர்த்துப் போராடு கின்ற போது பொறிபடும் வாளிடைத் திராவிடன் தோள்கி டந்தே அசையும் ஒவ்வோ ரசைவிலும் அன்னோன் கசிதேன் பெண்இதழ் காட்டும், அதனிலும் பேரின் பத்தை அடைவான் ஆரிதை மறுப்பார் அன்பு மங்கையே? - வேங்கையே எழுக, ப.140, 1978; குயில், 15.7.1948 322. திராவிட நாட்டுப் பண் வாழ்க வாழ்க வாழ்கவே வளமது பெருக திராவிட நாடு! - வாழ்க! சூழ்தரு பரிதியின் ஒளிபடு குன்றம் தோற்றம் பாடுநர் கூற்றைச் சாடுநர் வீழ்புனல் அருவி ஆடிடும் மகளிர் வேண்டிய நலமும் ஈண்டிய நாடு - வாழ்க! கத்தும் கடல்தரு முத்துக் குவியல் கமழும் கூந்தற் றமிழப் பெண்கள், தித்தித் திடுமொழி மாதர் உலகைத் தேற்றும் அறமேசெய் தமிழ்நாடு - வாழ்க! நளிர்புனல் நன்செய் விளைவுறு செந்நெல் நறுநெய் தயிரோடு நிறைபடு சோறும், எளிமையை நீக்கும் ஈவோர் கூட்டம், எய்திய நாடு திராவிட நாடு - வாழ்க! பாடும் பறவை, விடுதலை விலங்கு, பல்வகை மலர்கள் முல்லைக் கொடிகள் காடும் கமழக் கைகோத்தாடும் காதலர் அன்பு கனிவுறு நாடு - வாழ்க! தமிழகம் தமிழ்தரு துளுவும் தெலுங்கும் தகுமலை யாளம் கன்னட முதலா அமைவுறு நாட்டைத் திராவிடம் என்றே அறிஞர் போற்றும் அன்னை நாடு - வாழ்க! - வேங்கையே எழுக, ப.49, 1978; குயில், 1.7.1947 323. திராவிடம் பாலி மொழியில் பகர்ந்த மகாவமிச நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்: - மேலாம் தமிழ்என்ற சொல்லைத் தமிழோஎன் றார்!ஏன்? தமிழரல்லார் நாக்குத் தவறு. தமிழ்நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள் தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லார்! ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை ஓதலினால் மாறுபடல் உண்டு. தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம் த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா படியைப் ப்ரதிஎன்னும் பச்சை வடவோரிப் படியுரைத்தல் யார்வியப்பார் பார். தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு த்ரமிள த்ரமில்எல்லாம் சாற்றின் - தமிழின் திரிபே அவைகளும்! செந்தமிழ்ச் சொல்வேர்தான் பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு. திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில் பிரிந்தவாய்க் காலும் பிறிதோ? - தெரிந்த பழத்தைப் பயம்பளம் என்பார் அவைதாம் தழைத்த தமிழ்ச்சொற்கள் தாம். உரைத்த இவைகொண்டே உணர்க தமிழம் திராவிடம் என்றேதிரிந்த தென்று! திராவிடம் ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல் ஆரியச்சொல் ஆமோ அறி. தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும் நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும் பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப் பொருள்கள் தமிழ்ப்பெயரே பூண்டு. திராவிடம் தன்னந் தனியா ரியமா? திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ? இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப்பேர் என்பார்சொல் ஏற்புடைய தன்று. - தமிழுக்கும் அமுதென்று பேர், ப.121, 1978; குயில், 15.7.1958 இது தமிழகம் என்பதன் திரிபு ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன. 324. தெற்கெல்லை திராவிடர்க்கே முதல்இ டைகடைச் சங்கத் தின்பின் மதத்துறை யாளரின் மடுத்துறை யாக ஆனது திராவிடம், போனது மானம்! ஈனப் பார்ப்பனர் எடுப்பார்க் கைப்பிள்ளையாய் எல்லா அரசரும் இடுப்பொ டிந்தனர். பொல்லாச் சமயப் போக்கிலி கட்கெலாம். கோயில் கட்டினர், குளத்தை வெட்டினர். நோயில் நொடிந்தது தமிழகம்; அயலவர் ஆட்சி ஓங்க ஆரிய நரிகளின் சூழ்ச்சி பலித்தது. சுரண்டினர் வந்தேறிகள். சமக்கிரு தத்தின் சாரைப் பாம்பின் வாய் தமிழின் தூய்மையைத் தமிழர் மேன்மையை நச்சுப் படுத்திற்று தொடர்கதை யாக முற்றுப் பெறாமல், ஒற்றுமை யிலாத சாதிச் சாய்க்கடையில் திராவிடர் சாய்ந்தனர். ஒரே நாளில் இந்திய விடுதலை உரிமை திராவிட நாட்டிலும் சேர்ந்திடும் என்ற நம்பிக் கைதனில் நச்சுப் புகையினை அல்லா டிமுதல் ஆச்சாரி வரையிலும் எல்லா ரும்யாம் ஓர்இனம், இந்தியர் கல்லா தவர்அவர் கருத்துகேட் காதீர் எமக்க ளிக்கும் உரிமை அவர்க்குமாம் என்று வடக்கினர் ஆட்சி ஏறினர். கொன்ற ழிவதுவா கோளரிக் கூட்டமே தெற்கெல்லை திராவிடர்க் கேஎன அற்பருக் குரைத்துத் திராவிடம் அடைகவே. - நாள் மலர்கள், ப.97, 1978; திராவிடம், 10.12.1947 325. வந்தார்க்கு வாழ்த்து திண்டி வனத்துத் தேர்தலில் தி.மு.க. கண்ணியம் கடமை கட்டுப் பாடுகள் கடந்து தீங்குற நடந்த காரணத்தால் கண்ணீர்த் துளிகளின் கலப்பட மான நாவலர் பகுத்தறிவு மன்றம் நாடேன்; இன்றுமுதல் நீங்கிக் கொண்டேன் என்பதைச் செந்தமிழ்க் குயிலுக்குத் தெரிவிக் கின்றேன். என்று தோழர் எ.கே.சாமி நன்று நமக்கே நவில லுற்றார் நாமும் அவரைத் திராவிடர் கழகச் சார்பில் வருகெனச் சாற்று கின்றோம் வாழ்க வாழ்க வாழ்கெனத் தோழர்க்கு வாழ்த்தும் சொல்கின் றோமே! - பழம் புதுப் பாடல்கள், ப.355, 2005; குயில், 26.5.1959 326. தி.மு.க. அட்டூழியம்! திமுக்கழகம் தேடிய மக்கள்செல் வாக்கால் தமிழ்த்தாய் விலங்கு தவிர்க்கத் - தமிழகத்தில் எத்தனையோ நல்லூழி யம்செயலாம் செய்தவை அத்தனையும் அட்டூழி யம்! - பழம் புதுப் பாடல்கள், ப.414, 2005; குயில், 1.8.1962 327. கல்லெறிதல் நன்றா? விலைகள் மலைபோல் உயர்ந்தால் கழகத் தலைகள் எலாம் சட்டமன்றிற் சென்று, - நிலைகுறித்துச் சொல்லெறிதல் நன்றா? துடுக்காக மக்கள்மேல் கல்லெறிதல் நன்றா கழறு. - பழம் புதுப் பாடல்கள், ப.414, 2005; குயில், 1.8.1962 328. தொலைபேசிக்குத் தீயா? தொலைபேசிப் பெட்டிக்குத் தீவைத்துத் தொல்லை விலைபேசி வாங்கினார் வீணே! - வலைவீசி ஆளவந்தார் பற்றி அடைத்த சிறைநரிகள் ஊளையிட்டால் என்னபயன் உண்டு? - பழம் புதுப் பாடல்கள், ப.414, 2005; குயில், 1.8.1962 329. மிதிவண்டிக்குத் தீயா? தானே தனித்தியங்கத் தக்கமிதி வண்டியினை ஏனோ ஏரியிலே போட்டார்கள்? - மானே இதுதான் இயக்க அறப்போர்என் றால்பின் எதுதான் இடக்குத் தனம்? - பழம் புதுப் பாடல்கள், ப.415, 2005; குயில், 1.8.1962 330. பேருந்துவண்டி சிதைத்தது சரியா? அரசின் அலுவலகம் சென்று மறியல் புரிதலை விட்டுப் புறத்தில் - திரிந்திருந்த எண்பது மக்கட்பே ருந்துவண்டி ஈடழித்தார் பண்பதுவோ? என்ன பயன்? - பழம் புதுப் பாடல்கள், ப.415, 2005; குயில், 1.8.1962 331. கண்ணியமா? புண்ணியமா? நாடு புகுந்த வடக்கர் நடுநடுங்க வீடு புகுந்து மிகுதிருட்டில் - ஈடுபடல் கண்ணியமா கட்டுப்பா டாகடமை யாமிகுந்த புண்ணியமா பெண்ணே புகல். - பழம் புதுப் பாடல்கள், ப.415, 2005; குயில், 1.8.1962 332. மருத்துவ இல்லத்திலும் வம்பா? பல்லூரின் மக்கள் பதறடித்தார்! பாங்கான கல்லூரி மாணவர்மேற் கல்லெறிந்தார் - நல்ல தெருக்கள் அமைதி சிதைத்தார்! விளைத்தார் மருத்துவ இல்லத்தும் வம்பு. - பழம் புதுப் பாடல்கள், ப.416, 2005; குயில், 1.8.1962 333. எரிந்தன பெண்கள் வயிறு! திருவுற்ற செந்தமிழ் நாட்டினில் ஐயோ கருவுற்ற பெண்கண் கலங்கத் - தெருவில் புரிந்தசெயல் கீழ்மக்க ளும்புரியார் பற்றி எரிந்தன பெண்கள் வயிறு! - பழம் புதுப் பாடல்கள், ப.416, 2005; குயில், 1.8.1962 334. தி.மு.க.வின் இறுதி மணப்பந்த லுக்குத்தீ வைத்தார் கழகப் பிணப்பந்த லுக்குக்கால் நட்டார் - பணதுக்குத் தீட்டிய திட்டம் சிவசிவா! ஊர்ப்பெயரால் ஓட்டிய ஓட்டைவண்டி தூள். - பழம் புதுப் பாடல்கள், ப.416, 2005; குயில், 1.8.1962  1. என் தமிழா செந்தமிழ்க்கு நின்ற உயிர் இந்தி வந்தால் நின்றுவிடும்! 1. கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள் சட்ட மியற்றுவதில் சம்மதமோ என்தமிழா! 2. கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல் இன்னல் தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா! 3. தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும் பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா! 4. உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும் பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா! 5. தமிழழியு மானால் தமிழர் அழிவர் - இதை நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் - என்தமிழா! 6. தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா! 7. உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர் கடல்காட்டி வீழ்என்று கத்துகிறார் என்தமிழா! 8. தென்றற் பொதியமலை செந்தமிழ்க்கு மீதியாய் நின்றஉயிர் இந்திவந்தால் நீங்கிவிடும் என்தமிழா! 9. மொகலாயர் வந்து முடிபூண்டும் தம்மொழிதான் சகலர்க்கும் சட்டமென்று சாற்றவில்லை என்தமிழா! 10. தாய்மொழிக்கு நேரெதிர்ப்பாய்த் தம்மொழியை வற்புறுத்தும் பேய்களைநாம் கண்டதில்லை பேருலகில் என்தமிழா! 11. அன்று தமிழ்நூல் அழித்தார்கள் ஆரியர்கள் இன்றுதமிழ் வேரறுக்க எண்ணிவிட்டார் என்தமிழா! 12. ஓரிதனைச் சோளவயல் உட்சேர்த்தாள் போலிங்கே ஆரியரைச் சேர்த்த அவதியிது என்தமிழா! 13. காய்ச்சலுறு நாட்டில் கனித்தமிழே யல்லாது மூச்சுறுத்தும் இந்திவந்து முட்டுவதா என்தமிழா! 14. தேளுக் கதிகாரம் சேர்ந்துவிட்டால் தன்கொடுக்கால் வேளைக்கு வேளை விளையாடும் என்தமிழா! 15. இயற்கைத் தமிழ்மொழியை ஈடழிப்ப தோஇந்திச் செயற்கைமொழி உன்நாக்கைத் தீண்டுவதோ என்தமிழா! 16. உய்யும் தொழிற்கல்வி உள்ளதுவா இந்தியிலே! துய்ய கலைக்கதிலே தோதுமுண்டா என்தமிழா! 17. நாட்டுரிமை நாட்ட நடுமொழியாய் இந்திதனை நாட்டிவிட்டால் அவ்வுரிமை நாடிடுமோ என்தமிழா! 18. சீனர் ஒருமொழியே சேர்ந்தும் சுவாதீன ஈனர்களாய் இன்றிருக்க இல்லையா என்தமிழா! 19. பலபாக்ஷை ரஷ்யர்களின் பச்சை விடுதலையை உலகோர் வியப்ப துணராயோ என்தமிழா! 20. நிலவடையும் தண்தமிழை நீக்குவதோ?இந்திக் கலவடையை மாட்டிக் கதறுவதோ என்தமிழா! 21. இந்தியிலே வீரம் இருக்குதெனும் ஈனர்களின் புந்தியிலே பொய்யே புழுத்ததுவோ என்தமிழா! 22. இந்திக் கருத்துகள் இங்குண்டு செந்தமிழின் கந்தமெலாம் இந்தியிலே கட்டச்சொல் என்தமிழா! 23. இந்தி தனைப்புகுத்தி €ஏற்படுத்தும் நல்லுரிமை பந்தியிலே வேறான பார்ப்பனர்க்காம் என்தமிழா! 24. நல்லுரிமை தேடும் நரிகள் முகமொன்றே சொல்லும் அவர் எண்ணும் சூழ்ச்சிகளை என்தமிழா! 25. பார்ப்பனர்க்கே இந்திவரும் பச்சைத் தமிழரெலாம் சீர்படுதல் எவ்வாறு செப்பிடுவாய் என்தமிழா! 26. பள்ளியிலே தேர்ச்சிபெறும் பத்தில் ஒருதமிழன் தெள்ளெனவே இந்திவரின் தேறான்காண் என்தமிழா! 27. சாதி யொழித்துச் சமயப்பித் தம்தொலைத்தால் மீதி இருத்தல் விடுதலைதான் என்தமிழா! 28. பேதம் வளர்க்குமொரு பீடையினை இந்திஎன்றால் ஏதும் தவறில்லை என்றறிவாய் என்தமிழா! 29. பொதுமொழிவேண் டாம்வேண்டாம் புன்மை மடமைஎனும் மதிப்பழக்கம் தீர்ந்தால் வரும்உரிமை என்தமிழா! 30. எல்லோரும் ஒப்புடையார் என்ற பெருநோக்கம் எல்லார்க்கும் ஏற்பட்டால் இன்பமடா என்தமிழா! - இந்தி எதிர்ப்புப் பாடல்கள், ப.41, 1937 குடிஅரசு, 24.8.1937; குயில், 1.10.1948 அ. குடிஅரசு இதழில் (24.10.1937) ஹிந்தி எதிர்ப்புப் பாடல் எனும் தலைப்பில் வெளிவந்துள்ள கவிதை 30 கண்ணிகளைக் கொண்டு விளங்குகிறது. ஆனால் நூல்வடிவம் பெறும்போது 28 கண்ணிகளைக் கொண்டு இப் பாடல் அமைந்துள்ளது. நீக்கப்பட்ட இரு கண்ணிகள் வருமாறு: ஆ. ஓரிதனைச் சோளவயல் உட்சேர்த்தால்போலிங்கே ஆரியரைச் சேர்த்த அவதியிது என்தமிழா எனும் 12ஆவது கண்ணி நீக்கப்பட்டுள்ளது. இ. சீனர் ஒரு மொழியே சேர்ந்தும் சுவாதீன ஈனர்களாய் இன்றிருக்க இல்லையா என் தமிழா எனும் 18ஆவது கண்ணி நீக்கப்பட்டுள்ளது. இக் கவிதை எழுதப்பட்ட காலத்தில் (24.10.1937) சீனர் ஒரு மொழியே சேர்ந்து சுவாதீன ஈனர்களாய் வாழ்ந்திருந்தாலும், பின்னர் மாசேதுங் எழுச்சியால் 1949இல் புரட்சி ஏற்பட்டு நாடு பொதுவுடைமை ஆக்கப் பட்டது. ஆதலில், இக் கண்ணியின் கருத்து நூல்வடிவம் பெற்ற காலத்தில் (1964 பன்மணி;) பொருந்தாது அமைந்திருப்பதால், இதனை நீக்கினார் எனலாம். (நன்றி: குடிஅரசு இதழில் பாரதிதாசன் பாடல்கள், தொகுப்பு முனைவர் ச.சு. இளங்கோ) 2. இந்தி எதிர்த்திட வாரீர்* இராகம் : நாதநாம கிரியை தாளம் : ஆதி ஆநந்தக் களிப்பு மெட்டு இந்தி எதிர்த்திட வாரீர் - நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்! - இந்தி முந்திய காலத்து மன்னர் - நம் முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்த வடமொழி தன்னை - விட்டு வைத்த தனால்வந்த தீமையைக் கண்டோம்! - இந்தி செந்தமிழ் தன்னில் இல்லாத - பல சீமைக் கருத்துகள் இந்தியில் உண்டோ? எந்த நலம்செய்யும் இந்தி - எமக் கின்பம் பயப்பது செந்தமி ழன்றோ! - இந்தி தென்னாடு தான்எங்கள் நாடு - நல்ல செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும் புன்மைகொள் ஆரிய நாட்டை - எங்கள் பொன்னாட்டி னோடு பொருத்துதல் ஒப்போம்! - இந்தி இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்திஎன் றாலோ கன்னங் கிழிந்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! - இந்தி - இந்தி எதிர்ப்புப் பாட்டு, ப.3, 1948; குயில், 15.7.1948 *FÆš இதழில் வாரீர் என்ற தலைப்பு உள்ளது. 4. ‘இந்தி’யா கட்டாயம் இராகம் : சகானா தாளம் : திரகதி கண்ணிகள் தமிழ் அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் - இந்தி ஆனைக்குத் தீனியும் கட்டாயமாம் சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலில்லை - இந்தித் தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம்! கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே - இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம் இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் - இந்தி இருட்டில் வீழ்வது கட்டாயமாம்! அம்மா எனத்தாவும் கைக்குழந்தை - இந்தி அம்மியில் முட்டுதல் கட்டாயமாம் இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் - இவ்வா றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை! தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் - பெறத் தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால் போய்விடும் கல்லாமை! இங்கதன்பின் - பிற புன்மொழி கள்வந்து சேரட்டுமே! - இந்தி எதிர்ப்புப் பாட்டு, ப.4, 1948; குயில், 15.7.1948 *FÆš இதழில் புதிய இந்தி எதிர்ப்புப் ட்டு என்ற தலைப்பில் வந்துள்ளது. 4. இந்தி எதிர்ப்பு முரசு இராகம் : இங்லீஷ் டியூன் தாளம் : தி ரகதி 29 மேளம் தீர சங்கராபர ஜன்யம் கண்ணிகள் I பெருநாவற் றீவினிலே இருநாடுண் டவைகளிலே திருநாடாம் தமிழ்நாடே எந்தாய் நாடாம் வருமொழியாம் இந்தியையும் வடநாட்டார் ஆட்சியையும் ஒருநாளும் ஒப்போமென் றதிராயோ முரசே! II சேரர்பாண் டியர்சோழர் பேரர்க்குப் பேரரெனில் வேரஞ்சிப் போம்வடவர் நாடஞ் சிப்போம் ஓரிந்திக் கோவடவரின் ஒப்பந்தக் காரர்க்கோ ஒருபோதும் தாழோமென் றதிராயோ முரசே! III அல்லற்கஞ்சோம் கடுமொழி சொல்லற்கஞ்சோம் ஒருசிறை செல்லற்கஞ்சோம், அஞ்சோம்! தூக்குக் கஞ்சோம் இல்லுக்கோர் தமிழ்மறவன் ஈட்டுக்கோர் நாட்டுப்பெண் தொல்லைதரும் இந்தியினைக் கொல்லோமோ முரசே! IV குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக் கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திமொழி? மண்டைப்புழு மாய்ந்ததுவென் றதிராயோ முரசே! - இந்தி எதிர்ப்புப் பாட்டு, ப.5, 1948; குயில், 15.7.1948 5. எழுக! எடுப்பு குமுறும் தமிழ்க் கடலே - இந்தி கொணரும் பகைமேல் எழுவாய் உள் - குமுறும் உடனெடுப்பு நமதே இந்தப் பழமைத் தமிழகம் நாமில்லை பிறர் அடிமை உள் - குமுறும் அடி அமுதே எனுமோர் தமிழே நாங்கள் அனைவரும் நுகர்வோம் அல்லால் இமைநே ரத்தும் ஒப்புவ தில்லை இந்தியை எதிரியின் நஞ்சை! அமைதி காண்போம்! ஆட்சியை நிறுவ அணிஅணி யாய்முன் னேறாய் உள் - குமுறும் - இந்தி எதிர்ப்புப் பாட்டு, ப.7, 30.7.1948; குயில், 15.7.1948 6. எல்லாரும் வாருங்கள் 1938 இந்தி எதிர்ப்புப் படையின் போர்ப்பாட்டு இது இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் - நீங்கள் எல்லாரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழ்க்குத் தீமை வந்தபின்னும் - இந்தத் தேகமிருந்தொரு லாபமுண்டோ? - இந் விந்தைத் தமிழ்மொழி எங்கள்மொழி - அது வீரத் தமிழ்மக்கள் ஆவி என்போம், இந்திக்குச் சலுகை தந்திடுவார் - அந்த ஈனரைக் கான்றே யுமிழ்ந்திடுவோம்! - இந் இப்புவி தோன்றிய நாள்முதலாய் - எங்கள் இன்பத் தமிழ்மொழி உண்டுகண்டீர் தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்ததில்லை - இந்தத் தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ? - இந் எப்பக்கம் வந்து புகுந்துவிடும் - இந்தி எத்தனை பட்டாளம் கூட்டிவரும்? அற்பமென் போமந்த இந்திதனை - அதன் ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்! - இந் எங்கள் உடல்பொருள் ஆவியெல்லாம் - எங்கள் இன்பத் தமிழ்மொழிக் கேதருவோம் மங்கை ஒருத்தி தரும்சுகமும் - எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்? - இந் சிங்கமென் றேஇளங் காளைகளே - மிகத் தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே! பங்கம் விளைந்திடில் தாய்மொழிக்கே - உடற் பச்சை ரத்தம் பரிமாறிடுவோம். - இந் தூங்குதல் போன்றது சாக்காடு - பின்னர்த் தூங்கி விழிப்பது நம்பிறப்பு தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் - உயிர் தித்திப்பை எண்ணிடப் போவதில்லை! - இந் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - நமை மாட்ட நினைக்குஞ் சிறைச்சாலை! ஏங்க விடோம்தமிழ்த் தாய்தனையே - உயிர் இவ்வுடலை விட்டு நீங்கும்வரை! - இந் - இந்தி எதிர்ப்புப் பாட்டு, 1948 7. பர்க்கட்டும் கண்ணிகள் இராகம் : சிவரஞ்சனி திரகதி : ஏகதாளம் 22ஆவது மேளம் கரஹரப்ரியாவில் ஜன்யம் ஆரோசை : ஸரிகபத அவரோசை : தபகரி இந்தி புகுந்தது நாட்டிலே - இன்னும் என்னசெய் கின்றீர் வீட்டிலே? மைந்தர்அன் னைதந்தை யாவரும்-ஓடி வாருங்கள் போர்எல்லைக் கோட்டிலே இன்பத்தி ராவிட நாட்டினை - உண் டேப்ப மிடும்ஏற் பாட்டினைப் பன்முறை யும்செய்து பார்த்தனர் - இன்னும் பார்ப்பா ரானால் பார்க்கட்டுமே. செத்த வடமொழி காட்டியும் - நம் செந்தமிழ் மேல்எய்த ஈட்டியும் பொத்தென வீழ்ந்தது பன்முறை - இந்திப் பூச்சாண்டி காட்டினர் இம்முறை இந்தும தம்என்ற பேச்சையே - சொல்லி இன்பத் தமிழன்னை மூச்சையே கொந்திடப் பார்த்தனர் பன்முறை - இந்திக் கொம்பூதி வந்தனர் இம்முறை. வேதம் வடமொழி என்றனர் - தமிழ் வீண்மொழி என்றுபு கன்றனர் ஏதும்செல் லாதெனக் கண்டபின் - இன் றிந்தியைக் கட்டாயம் என்றனர். ஆட்சியெ லாம்அவர் கையிலாம் - படை அத்தனை யும்அவர் பையிலாம் கோட்டை பிடித்ததும் இந்தியாம் நம் கோடரிக் காம்புகள் கூற்றிவை. தீந்தமிழ் காணாத சேய்களின் - பெருஞ் செல்வத்தை இந்தியின் வாய்களில் ஈந்தனர் இம்மூட நாய்களின் - செயல் ஏற்குமோ இப்பெரு நாட்டிலே. நாடு நலம்பெற வேண்டுமாம் - வட நாட்டிந்தி தான்அதைத் தூண்டுமாம் பீடுறு செந்தமிழ் நாட்டிலே - சில பேடிப் பசங்களின் கூற்றிவை. - இந்தி எதிர்ப்புப் பாட்டு, முதற்பதிப்பு, ப.11, 30.7.1948 8. இந்தி ஒழிப்பதும் கட்டாயம் தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே என்பதுபோல் பாடுக. இன்பத்தி ராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே துன்பம்கொ டுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! அன்பின் தமிழிளைஞர், தாய்அளித்திடும் - நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ? வடக்கர் அனுப்பிவைத்த இந்திமொழியே - எம் வாழ்வைக் கெடுக்கவந்த இந்திமொழியே படைவலி உள்ளதென எண்ணியிருப்பாய் - உன் பகட்டுப் பலிப்பதில்லை இந்திமொழியே அடக்கு முறைக்கும்உன் சிறைக்கும்அஞ்சோம் -உன் ஆட்சியை வேரினொடும் வீழ்த்தமுடியும் படைக்கு நடுங்குபவர் நாங்களில்லையே - முன் பட்டதையும் மறந்தனை இந்திமொழியே ஆரியம் என்னுமொரு செத்தமொழியின் - மெய்னஒகப அழுக்கில் புழுத்தஓர் இந்திமொழியே பாரியம் புந்தமிழர் குருதியிலே - நீ பாய நினைத்ததென்ன இந்திமொழியே? கூரிய வாளுடைத்,தி ராவிடமக்கள் - தம் கூட்டம் சிறியதல்ல இந்திமொழியே கார்முகில் முழக்கென முரசொலிகேள் - பெருங் கடலெனத் திரவிடர் படையினைப்பார்! - இந்தி எதிர்ப்புப் பாட்டு, முதற்பதிப்பு, ப.13, 30.07.1948 9. பிள்ளைகள் சொத்து தாய் மொழிக்கே ஆறுமுக வடிவேலனே என்ற காவடிச் சிந்து போலப் பாடுக நூற்றுக்குத் தொண்ணூறு பேர்க்குப் படிப்பில்லை நோக்குவார் யாருமில்லை - இந்தி மாற்றலர் சொல்லினைக் கட்டாயம் கற்றிட வைத்தனர் என்ன தொல்லை! ஏற்ற தமிழ்மொழி யாகிய தாய்ப்பாலும் இல்லாத பிள்ளைகட்கே இந்திச் சேற்றைக் குடிப்பது கட்டாயம் என்றனர் தீமை விளைப்பதற்கே. தாய்மொழிக் கல்வியைக் கட்டாயம் ஆக்கிடத் தக்கதோர் செல்வத்தையே - இந்தித் தேய்மொழிக் கும்பிற செத்தமொழிக்கும் செலவு செய்தார் மெத்தவே ஓய்வறு நாட்டினில் பிள்ளைகட்கான உரிமைஒன் றுண்டு கண்டீர் - தம் தாய்மொழி கட்டாயம் கொள்ளுவதாகும் பிறமொழி தம் விருப்பம். - இந்தி எதிர்ப்புப் பாட்டு, முதற்பதிப்பு, ப.15, 30.7.1948 10. இந்தி எதிர்ப்பார் இயம்பும் உறுதிப்பாடு திராவிடப் பொதுமக்கள்: தூயதாய் நாட்டில் தாய்மொழி நூற்றில் தொண்ணூறு பேர்க்கிலா நிலைமையில் ஆள்வோர், வாயில்வா ராவட மொழியதாம் இந்தியைக் கட்டாய பாடமாய் வைத்தனர் ஆதலால் ஆயும்எம் திரவிட மொழியும்,பண் பாடும் அழிவுறும் என்றுயாம் நம்புவ தாலும், தீயதாம் வழியில் இந்தியின் பேரால் திரவிடர் செல்வம் அழிகின்ற தாலும், அன்னையின் பால்நிகர் தம்மொழி கற்பார் அயல் மொழி பலகற்ப தான இன்னலை நீக்கல் அறமென்ப தாலும், யாம்இந்த உறுதியை மேற்கொள்ளு கின்றோம் தன்மைதீர் இந்திதான் கட்டாயம் என்னும் ஓர் சட்டத்தைக் கட்டுடன் யாம்எதிர்க் கின்றோம் என்னதீங் குறினும், எமைச்சிறை சேர்க்கினும் யாம்எதிர்த் திடுகின் றோம்இந்தி ஒழிகவே. - இந்தி எதிர்ப்புப் பாட்டு, முதற்பதிப்பு, ப.16, 30.7.1948 11. வடமொழி எதிர்ப்பு பூசாரி கன்னக்கோல் வடமொ ழிக்குப் பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழக மெல்லாம் ஆசிரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார் ஐயகோ அறிவிழந்தார் ஆள வந்தார் பேசத்தான் முடிவதுண்டோ? அஞ்சல் ஒன்று பிறர்க்கெழுத முடிவதுண்டோ அச்சொல் லாலே! வீசாத வாளுக்குப் படைவீ டொன்றா? வெள்ளியினாற் பிடிஒன்றா வெட்கக் கேடே! வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த வஞ்சகர்தம் இல்லத்தில் பேசும் பேச்சு வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா?கிழமைத்தாள் நாளின் ஏடு வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு வடமொழியா? நாடகங்கள் திரைப்ப டங்கள் வடமொழியா?அலுவலக நடைமு றைகள் வடமொழியா?மந்திரமென் றேமாற் றத்தான் வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பா ருண்டோ? திராவிடரை அயலார்கள் என்பார் அந்தத் திராவிடரை எவ்வகையி லேனும் அண்டி உருவடையும் நிலையுடையார் பேடி மக்கள் உவப்படைய வடமொழிக்கே, ஆள வந்தார் பெருமக்கள் வரிப்பணத்தால் சிறப்புச் செய்தார் பிறர்காலில் இந்நாட்டைப் படைய லிட்டார். திராவிடரோ அன்னவர்தாம்? மான முள்ள திராவிடரோ? மக்களோ? மாக்கள் தாமோ! - இந்தி எதிர்ப்புப் பாட்டுகள், ப.17, 1948; குயில், 15.7.1948 12. இந்திக்கு உன்திறம் காட்டு குழிப்பு நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நா திந்திநா நாதந்தி நாதந்தி நா முந்தைத் தமிழ்ப் பூங் கொ ழுந்தைப் பெருந்தாய் ம ருந்தைப் புறம் தாக்கு மோர் இந்திப்ப ருந்தைப் பறந்தோடச் செய்! முன்னைப்பெ ருஞ் சீர்த்தி அன்னைத் தமிழ், வாய்த்த பொன்னைப் புறந் தாக்குமோர் இந்திக்குன் வன்மைத் திறங் காட்டுவாய்! மோனைத் தமிழ்த்தா யை ஊனைத் துளிர்ப்பாக்கும் தேனைப் புறந்தாக்குமோர் இந்திக்கு வானைக் கிடங்காக்குவாய்! மயிலைத் தமிழ்த் தூய வெயிலைப் பயன் கூவு குயிலைப் புறந் தாக்குமோர் இந்திக்குன் அயிலைத் தெரிந் தோட்டுவாய்! மேலைத் தமிழ்த் தாயை மாலைத் தவிர்க்கின்ற நூலைப் புறந்தாக்குமோர் இந்திக்குன் வேலைத் தெரிந் தோட்டுவாய்! முத்தைப் பெருந்தூய சொத்தை தமிழ்த்தாய்வ ளத்தைப் புறந்தாக்குமோர் இந்திக்க ழுத்தைக் குறைப்பாயடா! நாவைத் தெவிட்டாத பாவைத் தமிழ்த்தாயை மாவைப் புறந்தாக்குமோர் இந்திக்க டாவைப் பிளப்பாயடா! - இந்தி எதிர்ப்புப் பாட்டு, முதற்பதிப்பு, ப.18, 30.7.1948 13. இந்தி எதிர்ப்பார் மேற்கொள்ளும் உறுதிப்பாடு மாணவர்: திராவிட மென்னும் தனிப்பெரு நாட்டின் திராவிட மொழியை உயிரெனக் கொண்ட ஒரே இன மாணவச் சேயரும் மகளிரும் உணர்வினால் மேற்கொள்ளும் உறுதி இஃதாகும். திராவிட நாட்டில் இந்திகட் டாயம் செய்தவர் சட்டத்தை எதிர்க்கின்றோம் நாங்கள் வரமறுக்கின்றோம் இந்தியின் கூச்சல் வரும்கல் விக்கழ கத்திற்கு நாங்கள். தாய்மொழிகற்கும் வகுப்புக்கள் இல்லை தாய்மொழி வாத்திமார் பெருகிடவில்லை ஆயஎம் நாட்டின் அருஞ்செல்வ மெல்லாம் அயல்மொழிக் கழிப்பகை யாம்ஒப்பமாட்டோம் சீயன செயினும் ஆளவந் தார்கள் சிறைசெய வரினும் யாமஞ்ச மாட்டோம் வாயிலும் நுழையா இந்தியை நாட்டின் வாயிலில் எதிர்ப்போம் இந்திஒழிகவே! 14. இந்தியா? தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை - தமிழை தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் - தமிழை இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி - தமிழை ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன்அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு - தமிழை தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று? மோதுறும் பதவி நிலையிலா ஒன்று; முழங்காற்றங் கரைமரம் நிலைக்குமா நின்று? - தமிழை ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்தென்பர் வித்தகர் தீக்கனவு காண்கிறார் இந்திபற் றியவர் தெற்குச் சூறைக்கு நிற்காது வடசுவர். - தமிழை - பாரதிதாசன் பன்மணித் திரள், ப.79, 1964 15. இந்தித் திணிப்புச் சரியல்ல அமைதி வேண்டும் நாட்டினிலே அன்பு வேண்டும் என்பார் ஆழ மடுவில் நீரைக் கலக்க வேண்டாம் என்று சொல்வார். தமிழகத்தில் இந்தி திணிக்கச் சட்டம் செய்தார் அவரே சாரும் குட்டையில் எருமை மாட்டை தள்ளு கின்றார் அவரே! சுமக்க வேண்டும் இந்தியினைப் பொதுமொழியாய் என்பார்; தொலைய வேண்டும் எதிர்ப்புக் கூச்சல் தொலைய வேண்டும் என்பார்; தமிழ் மொழியை அழிக்கவேண்டும் என்றவரும் அவரே தமிழகத்திலே புகுந்த சாக்குருவிகள் அவரே! - வேங்கையே எழுக, ப.64, 1978; குயில், 1.5.1962 16. இந்தி ஒழிக தமிழ்வாழ்க தமிழ்வாழ்க என்று சொன்னான் தாமரையின் வாய்மலர்ந்து தேனைப் பெய்தான்; தமிழ்இதுபார் என்றுதன் உள்ளங் காட்டி, தன்னுயிரில் அதுகாட்டி, என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள் அமிழ்தென்றேன் ஆம்என்றேன் மகிழ்ந்து நின்றேன் கமழ்இமை கனியிதழும் தந்தாள் உண்டேன் கண்திறந்தேன் வேறொருத்தி வருதல் கண்டேன். தமிழ்வீழ்க தமிழ்வீழ்க என்று சொன்னாள் தமிழ்க்காதில் ஈயத்தை உருக்கி வார்த்தாள் தமிழில்லை என்றுதன் உளத்தைக் காட்டி தன்னுயிரிற் பகைகாட்டி என்றன் தோளை அமிழ்திதுவா எட்டியா என்று தொட்டாள் அப்பட்டம் எட்டிக்காய் அடியே என்றேன் உமிழ்இந்தி நான்என்றாள்! ஒழிவாய் என்றேன் ஒழிப்பவர்கள் ஒழிக்கட்டும் ஒழியேன் என்றாள். - வேங்கையே எழுக, ப.65, 1978; குயில், 17.1.1961 17. புதுவாழ்வு வேண்டும் வாளைத் தூக்கி வேலைத் தூக்கி வந்து புகுந்த இந்தி - நம் வாழ்வைத் தூக்கி அடிக்குமடா தமிழகத்தில் குந்தி! தோளைத் தூக்கி மேற்போட்டான் நாட்டிலேபொ ருந்தி - நீ செருப்பைத் தூக்கிப் போடவன்மேல் உன்மனம் திருந்தி. ஆளைத்தூக்கி ஆள்மேலே போட்டான் வட மந்தி - கீழ் அறுப்பாரை அகற்றிவிட்டால் கிழியும் அவன் தொந்தி! தோளைத்தூக்கி உலகாண்டான் செந்தமிழன் முந்தி - தன் தோலைத்தூக்க எலும்பில்லாமல் துடிக்கலுற்றான் பிந்தி. உலகுதோன்ற உடன்தோன்றி நிலவும்தமிழ் நாடு - தன் உருத்தோன்ற முடியாமல் சூழ்ந்துவிட்டார் கேடு! சிலநாள்கள் இந்தநிலை தீர்ந்திடும்பிற் பாடு - நீ செந்தமிழை என்னருமைத் தாயென்று பாடு! பலருள்ளார் தமிழ்மறவர் தமிழாஉன் னோடு! பழநாளின் ஆட்சியிலே விளக்கடா உன்பீடு. புலைஎழுப்பும் இந்திநாயின் தலையில் ஒன்று போடு - நல் புதுவாழ்வைப் பழநாட்டில் விடுதலையால் தேடு! - வேங்கையே எழுக, ப.101, 1978; குயில், 13.12.1960 18. இந்திப் போர் மூளுக! இந்திக்குச் சிறைசென்ற ஆதித்தனார் வாழ்க! சிவஞானம் வாழ்க! இந்தியை எதிர்க்கும் மாணவர் வெல்க இந்திஎன்று சாக்குருவிக் கூச்ச லிட்டார் இராசேந்தி ரப்பிரசாத்! அவரே இந்தச் செந்தமிழ்நாட் டிற்காலை வைத்தார் என்றால் திருவடிக்குப் பூசைசெய்வார் தமிழர் ஆகார்! எந்தமிழ்மேல் இந்தியினை ஏற்ற எண்ணும் இடக்கரே வடக்கரே செல்வீர் என்றே எந்தமகன் எதிர்த்தானோ அவனே நாட்டின் எழில்மறவன்; தன்மானச் சிங்கம் என்பேன் துடைநடுங்கிக் திராவிடமுன் னேற்றக் கண்ணீர்த் துளிகளெலாம் கருங்கொடிகாட் டுவதாய்ச் சொன்னார் படையுண்டு; வலியுண்டு மிகவே என்றார். பதுங்கியது தவிரஒன்றும் புரிந்த தில்லை! உடலெல்லாம் பொருளெல்லாம் ஆவி எல்லாம் உயர்தமிழுக் கேஎனுமா தித்த னார்தாம் தடைசெய்வேன் கருங்கொடியால் என்றெ ழுந்தார் தமிழ்கொல்லும் ஆளவந்தார் சிறையிற் போட்டார். நாம்தமிழர் இயக்கத்தார் நாமும் என்றார் நாடாள்வார் அவரையும்தாம் சிறையிற் போட்டார் நாம்தமிழர் இயக்கத்தார் நடுங்க வில்லை நம்தமிழ்க்குச் சிறைஎன்றால் கற்கண் டென்றார் மோந்துமோந் தயலடியை நக்கும் நாய்கள் முகம்நாணி வீட்டுக்குள் புகுந்து கொண்டார் வேந்தான பிரசாதை வெறுத்து ரைத்த சிவஞான மேலோனும் வாழ்க நன்றே. ஆதித் தனார்வாழ்க அவரி யக்கம் நாம்தமிழர் அதுநாளும் வாழ்க! வாழ்க! தீதுற்ற பிரசாத்தின் நெஞ்சு கண்டு சீறுகின்ற தமிழகத்து மாண வர்கள் சூதுற்ற ஆளவந்தார்க் கஞ்ச வேண்டாம் துடைநடுங்கி கள்பேச்சைக் கேட்க வேண்டாம் ஓதுற்ற அன்னையாம் தமிழைக் காக்க உறுதிகொள்க! போர்வெல்க! வெல்க நன்றே! - வேங்கை எழுக, ப.80, 1978; குயில், 23.8.1960 19. இந்திப் பேயாட்டம் திரும்பி வருகிறதாம் இந்திப் பேயாட்டம் திராவிடர் திரும்புக எடுக்கும் நோய் ஓட்டம்! - திரும்பி வருகிறதாம் ... கரும்பிருக்கையில் கசந்திடும் இந்தி - எட்டிக் காயையா விரும்புவர், தின்பர் வருந்தி திருந்தி வந்திடும் செந்தமிழ்க் கல்வி - இனிச் செத்தெழ விடுவதோ போர்க் கெழு முந்தி! - திரும்பி வருகிறதாம் ... வடக்கின் வாய்க்கொழுப்பால் முன்னொரு காலம் வன்கல்லைச் சுமந்ததை அறியும் ஞாலம்! இடக்கினால் இந்தியால் இனிஅவர் ஓலம் இடுவதும் இடர்வதும் அழிவுறும் - கோலம்! - திரும்பி வருகிறதாம் ... பெரியாரின் தொண்டர்கள் கொண்டஓர் சீற்றம் பிழைபடும் அரசியல் போக்கினால் ஏற்றம் வெறியாக மாறிற்றே அரிமாவின் தோற்றம் விரைந்தெழு தமிழரை எதுவந்து மாற்றும்? - திரும்பி வருகிறதாம் ... பத்தாண்டின் முன்னே பட்டதோர் பாடு பாழ்பட்ட ஆட்சி மறந்ததோ சூடு? முட்டாள்கள் என்றுமே முழுமூச்சி னோடு மோதிடப் பார்க்கிறார் முற்றுகை சுடுகாடு! - திரும்பி வருகிறதாம் ... - வேங்கையே எழுக, ப.121, 1978; பகுத்தறிவு, 1.10.1948 20. அரிமா இடத்தில் நரிமாவா? கொடியர் வடவர் இந்தியினைக் குழந்தைக் கல்விக் கூடத்தில் படிக்கச் சொல்லி நுழைக்கின்றார் பாம்பின் நஞ்சை மறந்தழகு வடிவில் மயங்கி வாழ்க்கையினை மடித்துக் கொள்ளச் சொல்கின்றார் ஒடிய அவர்தம் முயற்சிகளை ஒடுக்கி நறுக்கித் துரத்திடுவீர்! ஒத்துப் போகா உறவினர்கள் உலகில் நமக்கிங் காரியரே செத்துப் போன மொழியுடலில் செழுமை யற்ற இந்திமொழி பித்துப் பிடித்தே ஆட்சியினால் பெருமைத் தமிழுக் கிடையூறாய்த் தொத்திக் கொள்ளப் பார்க்கிறது. தொலைத்தல் தமிழர் கடனாமே! அரிமா உலவும் காட்டினிலே ஆரி யம்போல் வாழ்கின்ற நரிமா வுக்கும் இடமுண்டு மறுக்க வில்லை நாம், ஆனால் அரிமா இடத்தில் நரிமாக்கள் அட்ட காசம் செய்வதுவா? சரிப்ப டாது தமிழர்களே சாய்ப்பீர் இந்தி நரித்தனத்தை! எச்சிற் சோறு போலிந்தி எல்லா மொழியின் கலப்படமாம் அச்ச மிலாது நம்நாட்டில் அமுதத் தமிழைக் கெடுப்பதுவா? பிச்சைப் பதவிப் பித்தர்களைக் காட்டிப் பிழைக்கும் எத்தர்களை மிச்ச மிலாது செய்வதுவே மேன்மைத் தமிழர்க் கழகாகும்! - வேங்கையே எழுக, ப.123, 1978; புரட்சி, 15.9.1960 21. இப்படி ஓர் ஓசையா அண்டை வீட்டின் அறையி லிருந்து பழுத்துக் காய்ந்த பனைஓ லைமேல் கூடல்வாய்த் தண்ணீர் கொட்டும் ஓசை வந்தது, சென்று பார்த்தேன் இந்திப் பாடம் நடத்தினார் ஈசுவரே! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.87, 1978; குயில், 15.4.1962 22. இந்தித் திணிப்பு இந்தி திணிப்பாராம் - ஒருமையை வந்து பிணிப்பாராம் கந்தலைத் தைத்தஓர் காட்சியைப் போலுள இந்திய தேசிய எண்ணத் துழல்பவர் ஒற்றுமைக் குழைப்பவராம் - மக்களின் பற்றினுக் குழைப்பவராம்! மொழிவழி மாநிலம் முற்றும் பிரித்தபின் அழிவை விளைத்தவர் உறவை அறுத்தவர் நாட்டை வருத்தாராம் - மொழி ஏட்டைத் திருத்தாராம்! பத்தாண்டின் முன்னே பத்தாம் பசலிகள் செத்தோம் பிழைத்தோம்என் றோடிய தீயர்கள் இந்தி திணிப்பாராம் - ஒருமையை வந்து பிணிப்பாராம் - வேங்கையே எழுக, ப.125, 1978 23. இந்தி எதற்கு? சீர்மிகுந்த நாட்டினிலே இந்தி எதற்கு? சிக்கலினை வளர்ப்பதற்கு ஆட்சி எதற்கு? ஊர்கள்தோறும் வடவர்இந்தி ஓட்டம் எதற்கு? ஒற்றுமையைக் கெடுப்பதற்கு ஆட்சிபோ தாதோ? சூழ்ச்சியொடும் இந்தியினைக் கொணர்வ தெதற்கு? தொல்லையினை விலைகொடுத்து வாங்கல் எதற்கு? வெற்றிபெற்ற தமிழிருக்க இந்தி எதற்கு? வீரர்களின் தோள்தினவால் வீழ்ச்சி யுறற்கா? கற்பதற்கு வழிகளில்லை கலகம் எதற்கு? காப்பதற்குத் திட்டமில்லை கருத்து மில்லையே! தெம்பில்லாத மக்களிடை தீமை எதற்கு? திராவிடத்தின் ஒற்றுமையைத் தீர்ப்ப தெதற்கு? வம்புசெயும் தீங்குவட இந்தி எதற்கு? வளரும்இளம் தலைமுறையை ஒழித்துக் கட்டவா? அருவருப்பு வறுமையினை அறுக்கமாட் டாமல் அதிகார வாள்எடுத்தே அச்சுறுத் தல்ஏன்? கரும்பிருக்க கனியிருக்க வேம்பும் எதற்கு? கன்னித்தமிழ் இருக்க இந்திக் கழுதை எதற்கு? தாழ்வுயர்வு மாறவில்லை சாதி சமயத்தின் தறுதலைகள் ஒடுங்கவில்லை தலைமை எதற்கு வாழ்வுயர்த்தும் தாய்மொழியின் வன்மை இருக்க வடமொழியின் வைப்பாட்டி இந்தி எதற்கு? கமழ்உரிமை விடுதலையின் கட்டவிழ்க் காமல் கலக நச்சுக் கண்ணீர்ப்புகை இந்தி கலப்பதேன்? தமிழ்மொழிக்கே உலகையாளும் தகுதி யிருக்கு தமிழ்மகனே இந்திப் பாம்பின் தலையை நறுக்கு! - வேங்கையே எழுக, ப.126, 1978 24. காற்றை விதைத்துப் புயலை அறுக்காதீர் எங்களின் வாழ்வும் எங்களின் வளமும் எங்களின் தாய்மொழி இன்தமிழ்ச் செல்வமே! தமிழ்எங்கள்உயிர், தமிழ்எங்கள் உடல் தமிழ்வாழ்வதனால் யாம்வாழ்கின்றோம்! தமிழ்எம் உணர்வு! தமிழ்எம் உணர்ச்சி! உண்ணும் உணவும் பருகும் நீரும் தமிழே! தமிழே, சாவா மருந்து! தேனின் இனிமை! செழுமலரின் மணம்! தமிழ்தான் எங்களின் கூர்வாள், எங்களின் கேடயம், எஃகில் காணா வலிமையின் இருப்பு! நீரின் தெளிவு! நெருப்பின் சுடர்தீ! காலப் பழமையால் வைரம் பாய்ந்தது! நாக ரிகத்தின் நாற்றங் காலது! எம்மொழிக் கும்அது ஈடிணை யற்ற செம்மொழி! உலகச் சிந்தனைக் கெல்லாம் ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை! அதனில் இந்தி நஞ்சைக் கலப்பது பொதுமை நோக்கிப் புதுமைக் கேகும் மக்களை மாய்க்கும் மடச்செயல் ஆகும் சிக்கல் நெருப்பில் எண்ணெய்யைச் சேர்ப்பதா? தீமையின் விளைவு தீமையே, காற்றை விதைத்துப் புயல்அறுக் காதீர்! - வேங்கையே எழுக, ப.129, 1978 25. இந்தியை எதிர்ப்போம் செந்தழித்தாய் அழைத்தாள் எம்மைச் செந்தமிழ்த் தாய் அழைத்தாள் வரும் இந்திக்குளம் பதைத்தாள் எங்கள் தோள் வெற்றித் தோள்; இங்கு வந்தால் பகைப்படை தூள்! தூள்! தூள்! எங்களை நோக்கிச் சொன்னாள் வந்தால் இந்தியை நீக்கச் சொன்னாள் தண்டிப்போம் கண்டிப்போம் எங்கே வாழ்வ தந்த நாய்?நாய்?நாய்? பைந்தமிழைக் காப்போம் எங்கள் பைந்தமிழைக் காப்போம் இந்திப் பட்டாளத்தைத் தீர்ப்போம். பதுங்கோம் ஒதுங்கோம் முந்திடும் வேங்கைகள் நாம்! நாம்! நாம்! இருக்கும் தமிழ்ச்சோலை நாம் இருக்கும் தமிழ்ச் சோலை தனில் இந்திக் கென்ன வேலை? இங்கினிமேல் கால் வைத்தால் உரிந்துபோம் உடம்பின் தோல்! தோல்! தோல்! - வேங்கையே எழுக, ப.131, 1978; குயில், 22.7.1958 26. எல்லாத் துறையிலும் இந்தி ஒழிக இந்தியினை மாணவர்கள் வெறுக்க வேண்டும் இந்தியினைப் படிப்பதற்கு மறுக்க வேண்டும் இந்திசொல்ல வருவோரைச் சிரிக்க வேண்டும் இந்திவைத்த தேர்தலினை முறிக்க வேண்டும் இந்திபடிக் காதவர்க்கோ அலுவல் இல்லை என்றுரைத்தால் அவ்வரசை ஒழிக்க வேண்டும் இந்தியிலே தாள்கண்டால் கிழிக்க வேண்டும் இந்தியுள்ள பலகைகளை உடைக்க வேண்டும். அஞ்சலட்டை தனிலிந்தி காணப் பட்டால் அனைவருக்கும் முன்வைத்தே எரிக்க வேண்டும் நெஞ்சகத்தில் இந்திமொழி பரப்பு கின்ற நிறுவனத்தின் மூடுவிழா நடத்த வேண்டும் நஞ்சுகாண் இந்திஎன்று சொல்லும் போது நமதென்று சொல்லுகின்ற நாயைக் கண்டால் அஞ்சாது தமிழறத்தால் திருத்த வேண்டும் ஆளவந்தார் சிறைஎன்றால் மகிழ வேண்டும். தமிழ்காத்தல் மாணவரின் சொந்த வேலை தாம்நினைத்தால் ஆளவந்தார் எந்த மூலை? உமியன்றோ இங்குவந்த இந்தி மேதி ஒன்றுபட்டால் மாணவர்கள் தெரியும் சேதி உமிபறக்கும் மாணவர்கள் மூச்சு விட்டால் இந்திஎனும் எச்சிலைதான் என்ன ஆகும்? சிமிழ்க்காமல் பார்த்தாலே இந்தி சாகும் திருவாச கம்பாடி முடிக்க லாகும். - வேங்கையே எழுக, ப.133, 1978; குயில், 23.3.1960 27. தமிழர் ஓங்கினர் வாள் தாலமுத்து நடராசனைத் தந்ததும் போதாதா? அவருயிர் வெந்ததும் போதாதா? ஆளவந்தார் தமிழரை அடித்ததும் போதாதா - சிறையில் மடித்ததும் போதாதா? இந்தியினால் உங்கள்தீ எண்ணம் நிறைவேறுமா? - தமிழர் எண்ணம் நிறைவேறுமா? செந்தமிழ்ப் படைப்புலிகள் சீறிப் புறப்படல்பார் - தடை மீறிப் புறப்படல் பார்! விருப்பிலா நஞ்சை வேண்டிப் புகுத்துகின்றீர் - உரிமை தாண்டிப் புகுத்துகின்றீர்! உருப்பட மாட்டீர்கள் ஒடிந்தநும் சட்டங்கள் தூள் - கோடித் தமிழர்கள் ஓங்கினார் வாள்! - வேங்கையே எழுக, ப.137, 1978 28. கிளிக்கு இந்தி வருமா கற்றுக் கொடுப்பதும் கட்டாய இந்தியாம் கற்றுக் கொள்வதும் அதுதான் என்றால், பெருமைசேர் தோழியரே தரும புரத்தான் அருமைக் காதலி அங்கை ஏந்திய பட்டுப் பச்சைப் பவழவாய்க் கிளிக்கே அக்கா என்ற தமிழா! தக்கடா புக்கடா இந்தியா தருவதே? - வேங்கையே எழுக, ப.138, 1978; குயில், 21.6.1960 29. வடக்கின் இடக்கு அடக்கு இந்திப் பகையை எழுப்பிவிட்டது ஏதும் கெட்ட வடக்கு செந்தமிழா இன்னுமென்ன சிறுத்தையிடம் இடக்கு வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சும் வெறித்தனத்தை அடக்கு! இந்திஎனும் வெறிநாயை ஏவி விட்டது வடக்கு சொந்தநாட்டில் சொந்தமொழி தொல்லைப் படா தடக்கு கந்தகத்தில் தீயை வைத்தார் கனன்றெழுந்து மடக்கு! இந்திமொழி அதிகாரத்தேள் ஏந்திவரும் கொடுக்கு வந்தேறிகள் சூழ்ச்சிகெட வாகைப்போரைத் தொடக்கு முந்துவட ஆட்சி எலும்பு முறிந்தொடிய அடக்கு! - வேங்கையே எழுக, ப.140, 1978; தீப்பொறி, 1.5.1948 30. புறப்பாட்டுப் பாடு கோட்சேக்கள் கூட்டம் கொணர்ந்தது இந்தி கொலைகாரர் கொள்கையை நடுங்கச்செய் முந்தி! ஆட்பட் டிருந்திடோம் அடிமைப்படோம் என்றே ஆர்த்தெழு போர்தொடு அனல்காற்றாய் உந்தி! ஆரிய மாயையால் அழிந்ததே நாடு ஐந்தாம் படைக்கெல்லாம் அமைச்சென்ன கேடு? சீரிய வாழ்வுண்டு செந்தமிழ்ச் சீற்றம் தீயரைத் தீய்க்கட்டும் புறப்பாட்டுப் பாடு! - வேங்கையே எழுக, ப.141, 1978 31. வரலாற்றில் வெற்றிகொள் தில்லித் திமிருக்கோர் மறுப்பு திராவிடர் காட்டுக வெறுப்பு தொல்லைக்குமேல் தொல்லை சுமைசுமையாத் தந்தால் துடுக்குத் தனங்களை நறுக்கு இந்திமொழிக் கென்ன திணிப்பு? ஏன்வேண்டும் இந்தியப் பிணிப்பு? வந்தேறிகள் சொல்லும் வடக்காட்சி ஒப்பிடோம் வகுப்போம் தெற்கெல்லைத் துணிப்பு! வடக்குக்கு நாமில்லை அடிமை வாழ்ந்திடோம் தாழ்ந்திடோம் மிடிமை இடக்கு செயுமிந்தி எம்மொழி எம்இனம் ஏறி மிதிப்பது கொடுமை. தொற்றுநோய் ஒட்டுணி வடக்கு தொலைத்திடப் போர்ப்படை தொடக்கு ஒற்றுமை கொண்டவர் ஓங்கிய எண்ணத்தார் உருப்பட தீப்பகை அடக்கு! பெற்றுவிட வேண்டும் நாடு பிரிவுற வேண்டும் தென்னாடு வெற்றி நினைவிலே வேங்கை மறவரே வெற்றிகொள் வரலாற்றி னோடு! - வேங்கையே எழுக, ப.143, 1978; தாய்நாடு, 5.2.1954 32. இந்தி முக்காலமும் இல்லை என்று முழங்கு இன்றைக் கெழாமல் நீ என்றைக் கெழுந்திப் பன்றியைக் கொன்றழிப் பாயோ - பகைப் பார்ப்பை ஒழித்தழிப் பாயோ? இப்பொழு தெழாமல் நீ எப்பொழு தெழுந்திந்திக் குப்பையைத் தீய்த்திடு வாயோ - வஞ்சக் குணத்தாரை மாய்த்திடு வாயோ? இந்நொடி எழாமல் நீ எந்நொடி எழுந்திந்தி மந்தியைத் துரத்திடு வாயோ? - தமிழ் மாங்கொல்லை புரந்திடு வாயோ? இக்காலத் தெழாமல் நீ எக்காலத் தெழுந்திந்தி முக்காலத் தில்லை என்றுரைப்பாய் - வெற்றி முழக்குக முழக்குக சிறப்பாய்! - வேங்கையே எழுக, ப.144, 1978; சீர்திருத்தம், 1.6.1948 33. போருக்கு வேண்டும் பிள்ளை அந்தமிழ் காத்திடப் போராம் அன்பநீ செல்லுகின் றாயாம், வந்தது சேதி மகிழ்ந்தேன். வாழ்வில்என் காதலர் சீர்த்தி இந்தநாள் எய்திட வேண்டும்; இன்பமுத் தம்ஒரு கோடி செந்தமிழ் வீரத்தில் சேர்ப்பேன்; செங்களப் பிள்ளைகள் ஈவேன். இங்குள வண்டமிழ்க் கில்லா எவ்வளம் கண்டனர் ஆள்வோர்? எங்குள வைய மொழிக்கும் ஈன்றதாய் நந்தமிழ் அன்றோ? மங்கல நாணின்மேல் ஆணை, மார்புறச் சேர்ந்துபின் செல்க, தங்கும்என் சூலுளபிள்ளை தங்களின் பின்வரும், வெல்லும்! முத்தமிழ் நாட்டினில் இந்தி முற்றுகை என்றொரு பேச்சும் எத்திசை வந்ததோ போருக் கிங்குநாம் ஒன்றெனச் சேர்ந்தீர்; பெற்றிடும் பிள்ளையும் நாளை பீடுடன் வென்றிட வேண்டிச் சுற்றுக என்தமிழ்த் தோளை, தோன்றுவன் போர்க்களம் தன்னில்! வண்டமிழ் நாட்டில்தி ணிக்கும் வன்செயல் தீர்த்திட இந்தாள் கொண்டெழும் போர்க்குணக் குன்றே, கோளரி யேஉயிர் அன்பே! பெண்டகை யாள்வயி றீனும் பிள்ளையும் வாகையைச் சூடக் கண்ணுறங் காய்உயிர் எச்சக் கால்முளை தோன்றிட வேண்டும். தென்மொழி காக்கும்பு ரட்சித் தேரினை ஓட்டிடும் அன்ப, நன்மொழி கொஞ்சிடும் ஆண்பெண் மக்களின் நல்வர வேற்பை என்விழி காணவும் வேண்டும், ஏமுறும் வெற்றியில் பூத்த நின்இரு தோளினில் மக்கள் ஏறிட என்னுடல் தோய்வாய்! - காதல் பாடல்கள், ப.159, 1978; பொதுநலம், 1.4.1950 34. கல்வி அமைச்சர்க்கு கட்டாயப் படிப்புக்குப் பணத்தைச் செலவு செய்தாயிற்று. ஆனால் வாயால் இந்தி கட்டாயமில்லை என்பதா? இந்தியினைக் கட்டாயம் இல்லை என்றீர்! இருக்கின்ற பார்ப்பனர்கள் உமைஎ திர்த்தார். இந்திமொழி கட்டாயம் என்றீர், பின்னர் இப்போதோ கட்டாயம் இல்லை என்று தந்திரத்தைக் காட்டுகின்றீர்! இந்திக் கன்றோ தமிழர்களின் பெரும்பொருளைச் செலவு செய்தீர்! பொந்திலுறும் வடமொழிக்கே அன்றோ நீவிர் பொருளையெலாம் செலவிட்டீர்! என்ன நோக்கம்? கட்டாயப் படிப்புக்குத் தேவை யான கணிசமுள தொகையினையும் தொலைத்தீர்; இந்தி கட்டாய மில்லைஎன வாயாற் சொன்னீர். கனிதமிழை எல்லார்க்கும் தமிழ கத்தில் கட்டாயம் கற்கஐந் தாண்டின் திட்டம் கடிதினிலே அமைத்திட்டால் தொல்லை யுண்டா? விட்டுவைப்போம் இந்தியினைத், தேவை யுள்ளோர் வீட்டினிலே படியாரோ அதுவ ரைக்கும்? என்னமுழு கிப்போகும் இந்தி தன்னை எடுத்துவிட்டால்? ஒப்பாத இந்தி தன்னை வன்மையுடன் எதிர்ப்போர்கள் சிலரே என்றீர், மறந்தீரா? கண்ணிலையா? வாய்க்கொ ழுப்பா? á‹dkâ ah?உள்ள அதிகா ரத்தின் திமிர்தானா? அவினாசி லிங்கத் தாரே இன்றைக்கோ உம்வீட்டுப் பண்ணை யாளும் இந்திஎதிர்ப் பார்கட்சி என்று ணர்வீர். - நாள் மலர்கள், ப.57, 1978; குயில், 15.8.1948 35. திணிக்கும் மொழி வேண்டா இணைக்கும் மொழி வேண்டும் அருமைப் பிள்ளாய், அழகுக் கிள்ளாய், அந்தமிழைக் கற்பாய்! பெருமை சேரும் செம்மை கூறும் பைந்தமிழைக் கற்பாய்! இமிழ்க டல்சூழ் உலகி னிலே ஈடிலாத மொழியுள் தமிழ்மொழிபோல் தாய்மொழி போல் தருவதுண்டோ விழிகள்! பாங்கிருக்கும் பயனிருக்கும் உலக மொழி ஒன்று ஆங்கிலத்தை உலகொருமை அறிவுக் கேற்பாய் நன்று பன்மொழிகள் கற்பதுவும் படிப்புக் கழகாகும்; இன்பத் தமிழை ஏற்றதின் பின் எய்துவதே சாலும்! ஈங்கிரண்டு மொழிகள் போதும் எண்ணமெலாம் ஓங்கும் வீங்குலகில் திணிக்கும் மொழி விளைத்திடுமே தீங்கும்! - ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, ப.60, 1978 36. தேர்தல் அறிக்கை இந்தி இங்கே இருக்கவே கூடாது இந்திக் கிங்கே சலுகை எதற்கு? வடமொ ழிக்குப் பள்ளி வைப்பதை வரிப்ப ணத்தை வாரி இறைப்பதை உடனே அரசினர் ஒழிக்க வேண்டும். பார்ப்பா னிடத்தில் பசப்புதல் வாயிலாய் அரசினர் ஆயிரம் அடைவ தாயினும் கான்று மிழ்வது கட்டாயம் என்பேன். எந்த அலுவலும் பார்ப்பானிடத்தில் விடுவது கெடுதலை விளைப்பதை எண்ணி விழிப்போடு அரசினர் இருக்க வேண்டும் தனிநிறு வனங்கள் பார்ப்பனர் தம்மை அமைப்ப தற்கும் அளவு வகுக்க! தமிழைக் காட்டிக் கொடுக்கும் தக்கைகள் அரசினர் சலுகை அடைதல் ஒழிக்க. தமிழா ராயும் தனிக்குழுஉ தன்னில் பார்ப்பான் அவன்கை பார்ப்பான், விலக்குக! சென்னை இராச்சியம் இன்னே ஒழியத் தமிழ்நா டென்றுதான் சாற்ற வேண்டும். ஆகாஷ் வாணி அறவே ஒழிய வானொலி என்றே வழங்க வேண்டும். திராவிட மொழியா ராய்ச்சி செய்ய வந்த குழுவினை மாற்றி அமைக்க. தமிழைக் கேலி செய்யும் தலைவர்கள் அமைதி கொள்ள ஆவன செய்க தமிழர் தமக்கு வரலா றில்லை என்பார் திருந்த ஏற்பாடு செய்க, திருமணம் பற்றிச் செந்தமிழ் தன்னில் இலக்கியம் இல்லை என்பார்க் கெல்லாம் ஆங்கிலம் தாய்மொழி ஆக்க எண்ணும் தலைவரை ஒறுக்கும் சட்டம் செய்க. தமிழர் எண்ணம் தலையெடுக் குங்கால் பார்ப்பார் மறுத்தால் பல்லை உடைக்க. தமிழர்க்கு ஆவன சாற்றும் போது நேரு தடுத்தார் என்று நிகழ்த்தி ஆகா தடித்தல் அறமன்று ஆதலால் ஆள்வோர் நேருவுக்கு அடங்குதல் ஒழிக தேர்தல் நாளில்நான் செயும்எச் சரிக்கைஇது! அதனைச் செய்தேன்; இதனைச் செய்தேன் என்று மக்கள் வாக்கை ஏற்க எண்ண வேண்டாம்; மேல்நான் எழுதிய அனைத்தையும் செய்தே யாக வேண்டும்; செய்யா விட்டால் தோல்வியே சேரும் அமைச்சர்க் கிதனைச் சொன்னேன்; தமிழர் வாழ்க! தலைவர் வாழ்கவே! - பாரதிதாசன் கவிதைகள், சமுதாயம், 404, 1992; குயில், 13.12.1960 37. எங்கே வாழ்வு மந்திவந்தால் பிள்ளை மகிழ்வெங்கே? வாய்க்குவரா இந்திவந்தால் எந்தாய் எழிலெங்கே? - கொந்தும் வடக்குவந்தால் தெற்கெங்கே? வந்தவரால் இங்கே இடக்குவந்தால் எங்கே அறம்? - பழம் புதுப் பாடல்கள், ப.383, 2005; குயில், 5.7.1960 