பாவேந்தம் 13 கதை இலக்கியம் ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 13 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 224 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 160/- கெட்டி அட்டை : உருபா. 215/- படிகள் : 1000 நூலாக்கம் : ர்மநிர் வ. மலர், நிழூட்குகஒகூஹி சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப்படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம். பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  முன்னுரை பாவேந்தர் பாரதிதாசன் பன்முக ஆற்றல் வாய்ந்தவர். அவர், கவிஞராக, கட்டுரையாளராக, இதழாசிரியராக, சொற்பொழிவாளராக, உரையாசிரியராக, திரைக்கதையாசிரியராக, சொல்லாராய்ச்சியாளராக, பள்ளித் தமிழாசிரியராகத் திகழ்ந்தவர்; பல்வகை யாப்புகளில் பாடல் இயற்றுவதில் தேர்ந்தவர்; சிறுகதை, நெடுங்கதை (நாவல்), நாடகம், திரைப்படப் பாடல்கள், கடிதம், கிண்டல்கள், துணுக்குகள், செய்யுள் உரை முதலிய துறைகளில் தம் படைப்புகளை வெளியிட்டவர். தமிழுலகம் பாவேந்தரை மிகச் சிறந்த கவிஞராகப் போற்றி மகிழ்ந்தது. விதை இயற்றுவதில் சிறந்து விளங்கினாற்போலவே உரை நடை வரைவிலும் வல்லவர். ஆயினும் அவருடைய கவிதைகள் பயிலப் பட்ட அளவுக்கு - வெளிவந்த அளவுக்கு - ஆராயப்பட்ட அளவுக்கு உரைநடை பயிலப்படவில்லை - நூலாக வெளிவரவு மில்லை - ஆராயப் படவுமில்லை. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல் வரிகளை இயற்றியமைபோலவே உள்ளங்கவர் உரைநடை படைத்து உலாவரச் செய்தவர். கதைகளிலும், அரசியல் கட்டுரைகளிலும், நாடக, திரைப்பட உரையாடல்களிலும் பயன் கிண்டலிலும் நறுக்குத் தெறித்தாற்போலச் சின்னஞ்சிறு தொடர்களைக் கையாண்டுள்ளார். பொதுமக்கள் நலம் நாடிப் புதுப்புதுக் கருத்துகளைச் சொன்னவர் பாவேந்தர். தம் கருத்துகளைப் பல்வகை நடையில் வெளியிட்டவர்: தம் கருத்துகளை வெளியிடுவதற்கு உரிய கருவியாகவே பல்வகைப் படைப்புத் துறைகளையும் தேர்ந்தெடுத்தவர்; தமிழ், தமிழர் நலன், தமிழ்நாடு, சமுதாயத்துக்கான புரட்சிக் கருத்துகள், இயற்கை ஆகியன அவரது படைப்புகளில் மேலோங்கி நிற்கும். உங்கள் கைகளில் தவழும் பாவேந்தம் - கதை இலக்கியம் என்னும் இந்நூல் பாவேந்தரின் கதை, சிறுகதை, நெடுங்கதை ஆகிய மூவகைகளின் காலவாரியான தொகுப்பு, பல்வேறு இதழ்களில் 1930 முதல் 1960 வரை வெளிவந்த படைப்புகள் இங்குத் தொகுக்கப் பட்டுள்ளன. இதழ்களில் வெளிவராமல் கையெழுத்துப் படிகளா யிருந்தவை இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 45 கதைகள் அடங்கியுள்ளன. புதுவை முரசு, குயில், புரட்சி, தமிழரசு, நகர தூதன், போர்வீரன், பாரதிதாசன் குயில் ஆகிய இதழ்களில் வெளிவந்தவை இவை. கவிதைகள், நாடகம், சிறுகதை, தமிழர் இயக்கக் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுதவேண்டும் (பாரதிதாசன் பல்கலைக் கழகம் வெளியிட்ட பாரதிதாசன் கடிதங்கள், ப. 21) என ஒரு கடிதத்தில் எழுதி யதன் மூலமாகத் தமிழர் இயக்கக் கொள்கைகளைக் கருத்துச் செறிவுடன் சுவையாக எழுதவிரும்பியவர் பாவேந்தர் என்பது புலப்படுகின்றது. பாடல்களில் சுவை இடம்பெற்றுள்ளமை பலரும் அறிவர். மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தொழிலாளர் நலன், அடிமை நிலை ஒழிப்பு, பெண்ணுரிமை, கைம்பெண்டிர் மறுமணம், காதல் மணம், பகுத்தறிவு, தமிழ்ப்பற்று, தமிழர் இன ஒற்றுமை முதலியன கதைகளின் உள்ளடக்கமாக அமைந் துள்ளன. தொடக்கக் காலத்தில் பாட்டு வடிவில் கதைகளைக் கூறுவதில் அக்கறை கொண்டிருந்தவர் பாவேந்தர். அதனை அவரது கவிதைத் தொகுப்புகளில் காணலாம். பாண்டியன் பரிசினை முதலில் சிறுகதை யாகவும் பின் நாடகமாகவும் இறுதியாகக் காப்பியமாகவும் ஆக்கினார் என்பர். கடவுள் மகத்துவம் முதல் தமிழ்ப்பற்று வரையுள்ள கதைகள் அவை வெளிவந்த காலம் தெரிவதால் முதலில் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னை முதல் ஆலஞ்சாலையும், வேலஞ்சேரியும் வரையிலான கதைகளின் காலம் அறியக் கூடாமையின் இறுதியில் சேர்க்கப்பட்டன. இவற்றுள், ‘அனைவரும் உறவினர்,’ ஏழை உழவன் அல்லது முகுந்த சந்திரிகை ஆகிய நெடுங்கதைகளும் (புதினம்) ‘உனக்கு ஆசைதான், சாமிக்கு? பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் முதலிய குறுங்கதைகளும், அடி நொறுக்கி விடு என்னும் நொடிக் கதையும் இடம் பெற்றுள்ளன. தாசி வீட்டில் ஆசிர்வாதம், வைத்தால் குடுமி, முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் என்னும் மூன்று கதைகளும், சிறுகதைகள் என்னும் தலைப்பிடப்பட்டு புதுவை முரசில் வெளிவந்தவை. வைத்தால் குடுமி, முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில், அவர்கள் அயலார், (தந்தையும் மகனும்), மனத் துன்பத்துக்கு மருந்து, ஆகிய நான்கு கதைகளும் முதன்முதலாக இந்நூலில் நூலாக்கம் பெறுகின்றன. புதைந்த மணி, மனச்சாட்சி, தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது, ரமணி பாப்பா ஆகிய நான்கு கதைகளும் முனைவர் ய. மணிகண்டனின் பாரதிதாசன் - இலக்கியம் - அறியப்படாத படைப்புகள் நூலில் உள்ளவை. அவை நன்றியுடன் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. தமிழர் பலர் தம் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயரை நாடாமல் பிறமொழிப் பெயர்களைச் சூட்டுவது நாணத் தக்கது. பாவேந்தர் தம் படைப்புகளில் நல்ல தமிழ்ப் பெயர்களை அடுக்கடுக்காகத் தந்தவர். இக்கதைகளிலும் கதைமாந்தர்க்கேற்ற நூற்றுக்கணக்கான நல்ல தமிழ்ப் பெயர்களைப் படைத்துள்ளார். இந் நூலைப் படிப்பார் தம் பிள்ளை களுக்கு அவற்றைச் சூட்டி மகிழலாம். இரவல் சேலை, பெருமாள் மாடு (ஏழை உழவன் அல்லது முகுந்த சந்திரிகை) என்னும் பெயர்கள் படிம நிலையில் ஆளப் பெற்றுள்ளன. நாட்டுப்புறத்தில் குடியானவன் பசு கன்று போடுகிறது ... ... கடைசியாகக் குடியானவனைச் சர்ப்பம் தீண்டுகிறது. அவன் இறந்து போகிறான் (ஏழை உழவன் அல்லது முகுந்த சந்திரிகை) என்னும் பகுதி கதையோடு பொருந்தி நாட்டில் அரசர் கண்ட காட்சியாகக் காட்டப் படுகிறது. இது இராமச்சந்திர கவிராயரின் ஆவீன மழைபொழிய ... ... என்னும் தனிப்பாடலுக்கு உரைபோல் அமைந்துள்ளது. பாவேந்தரின் புலமைத்திறம் வெளிப்படும் விதம்தான் என்னே! பாடல் கதையாகிறது! இன்றைய சிறுகதைவியலார் கூறும் சிறுகதை இலக்கண உத்திகள் பல கதைகளில் பொருந்தியுள்ளன. சில, கதைத் தன்மைய உரைச் சித்திரமாய் உள்ளன. பாவேந்தர் படைத்த பயன் கிண்டல்கள் சிரிக்கவைக்கும் சிந்தனைகளாய் அமைந்தன. இக் கதைகளிலும் அத்தகைய கிண்டல்கள் நிறைந்துள்ளன. கற்பனை வளத்துக்குப் பல கதைகள் எடுத்துக்காட்டாய் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத சுமை - செவ்வாய் உலக யாத்திரை - கதை, கற்பனை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு, கிண்டல் ஆகியன நிறைந்த கதை படித்து நகைத்துச் சுவைக்கத்தக்கது. பாவேந்தரின் முத்திரை பதிக்கும் உரைநடை ஆங்காங்கே நிறைந்துள்ளது!: உடம்பு சிலிர்க்கிறது! நல்ல உயரம்! நெற்றி நிறைய நாமம்! செக்கச் செவேலென்று 60 வயதிருக்கும். என்னை வந்து தட்டி எழுப்பினார் (கடவுள் மகத்துவம்). அவள் வாடையுயர்ந்த மங்கை! மிதமிஞ்சிய பருமனில்லாத மின்னற் சுரம்போன்ற மேனியுடையவள், மெல்லிய கருங்குழலின் பின்னல். பின்னாள் நீண்டு தொங்கிற்றுக் கருநாகம்போல்! நிலவுபோல் வெண் ணிறத்தையும், நிழல்போல் மேன்மையும் உடைய அவளது ஆடை யானது மேனியின் ஒளியை மறைத்துவிட முடியவில்லை. பிறை போன்ற நெற்றி, கருவிழி, செவ்விதழ், முல்லைப்பல் ஆகிய இவைகள் வேண்டுமென்று சிரிப்பதன்றி இயற்கையாக நகைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தன (காதலும் சாதலும்) இக்கதையிலுள்ள வருணனை கதை மாந்தரை நன்கு படம்பிடித்துள்ளமையால் படிப்பாரைக் கவர்கின்றது. தொடக்கப் பள்ளித் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்துகொண்டு தமிழுக்கு இத்தனைத் துறைகளில் முத்திரை மாணிக்கங்களைப் பதித்த தமிழாசிரியர் பாவேந்தர் ஒருவரே. உரையாடலை எளிமையாக - திறமையாகக் கையாள்வதில் பாவேந்தர் வல்லவர். அவரது நாடகம், திரைப்பட உரையாடல், பயன் கிண்டல், கேட்டலும் கிளத்தலும் முதலியவற்றைப் படிப்பவர் உணர்வர். பல கதைகளில் உரையாடல் நன்கு அமைந்துள்ளது. (பண்டிதர்க்குப் பாசம், ஆற்றங்கரை ஆவேசம் ... ...) புனை பெயர்களிலும், தம் படைப்புகளை எழுதியவர் பாவேந்தர், கதைகளை K.S; பாரதிதாஸன், நாடோடி, கிண்டற்காரன் ஆகிய பெயர்களில் எழுதியுள்ளார். மதச் சின்னங்கள் ஒழிப்புக்காகவே எழுதப்பட்டக் கதையாக சுயமரியாதைக் காரருக்கு அமெரிக்கரின் கடிதம் அமைந்துள்ளது. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு, வைகறைத் துயிலெழு என்பன கருத்துவிளக்கக் கதைகளாய் உள்ளன. கெடுவான் கேடு நினைப்பான் அல்லது வாரிவயலார் விருந்து என்னும் தமிழ் நாவல் வெளிவரும் என 1932 புதுவை முரசு இதழ்களில் விளம்பரம் செய்திருந்தாலும் அக்கதை இன்றுவரை அச்சூர்தி ஏறவில்லை. சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் (1955 - 1994) பாரதிதாசன் கதைகளின் தொகுப்பு நூல்கள் நான்கு வெளிவந்திருப்பினும் இத்தொகுப்பே முழுமையான - முதன்மையான தொகுப்பாகும். இத்தொகுப்பினைப் படிப்போர் பாவேந்தரின் கொள்கைகள், நடை, படைப்பாற்றல், கதைமாந்தர் உருவாக்கம், புனைவுத்திறன் முதலியவற்றைப் பெறவேண்டும் என்பது எனது விழைவு. - பி. தமிழகன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன்... ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xvi முன்னுரை xix கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 3 2. பண்டிதர்க்குப் பாடம் 5 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 7 4. வைத்தால் குடுமி 8 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 10 6. முதலாளி - காரியக்காரன் 12 7. ஆற்றங்கரை ஆவேசம் 17 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 21 9. கண்ணுக்குத் தெரியாத சுமை 24 10. பகுத்தறிவுக்குத் தடை 29 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 32 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின் கடிதம் 35 13. வேல் பாய்ந்த இருதயம் 43 14. திருந்திய ராமாயணம்! 46 15. இதயம் எப்படியிருக்கிறது? 53 16. காதலும் சாதலும் 59 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 64 18. புதைந்த மணி 67 19. ரமணிப் பாப்பா: 71 20. மனச்சாட்சி 73 21. காதல் வாழ்வு 75 22. தேசியப் பத்திரிகைகள் 80 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 85 24. அடி நொறுக்கிவிடு 86 25. அதிகார நரி 87 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 90 27. வீடு நிறைய அவர்கள் 93 28. அவர்கள் அயலார் 96 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 98 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 102 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 104 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் 106 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 107 34. மனத்துன்பத்துக்கு மருந்து 109 35. அனைவரும் அவர்களே! 110 36. அஞ்சியஉள்ளத்தில்... 112 37. வைகறைத் துயிலெழு! 117 38. தமிழ்ப் பற்று! 118 39. அன்னை 123 40. விஞ்ஞானி 135 41. பக்த ஜெயதேவர் 148 42. ஆத்ம சக்தி 154 43. ஏழை உழவன்(அல்லது)முகுந்தசந்திரிகை 162 44. அனைவரும் உறவினர் 174 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 228 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் 230 கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் உடம்பு சிலிர்க்கிறது! நல்ல உயரம்! நெற்றி நிறையத் திருநாமம்! செக்கச் செவேலென்று அறுபது வயதிருக்கும். என்னை வந்து தட்டி எழுப்பினார். நான். ‘M® Iah? என்று கேட்டேன் (கோபமாக). என்னை அவமதிக்கிறீர்கள். புரட்டாசி மாதத்து விரதத்தைக் கைவிட்டீர்கள். எனக்கு வருகிற சனிக்கிழமை தளியல் போடு; இந்தா இதைப்பிடி என்று சொன்னார். கையில் வாங்கினேன். அப்போதுதான் மலர்ந்த மாதிரி இருந்தது. அத்தனையும் மல்லிகைப் பூக்கள் அதற்குள் விழித்துக் கொண்டேன். இந்தக் கனவில் பலன் என்ன என்று கேட்டாள் மனைவி தங்கம். புருஷன்: அதற்கென்ன இந்தச் சனிக்கிழமை தளியல் போட்டு விடலாம். கனவில் வந்தவர் பெருமாளாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமையன்று வீதிமுனை மாரியம்மனுக்குப் பிரார்த் தனைக்காரர் ஒருவர் அபிஷேகம் செய்து வைத்து அன்று இரவு உடுக்கை பம்பை சகிதம் பூசனை செய்தார். தங்கத்தின் மீது ஆவேசம் வந்தது. இந்தப் பூங்கிளையில் வந்து, ஆடுகிறது யார்? என்று பூசாரி கேட்டார். விலாசம் தெரிந்தது. அந்த மாரியாத்தாள் தான். என் அண்ணனை - அவன் மறந்தாண்டா? (அவன் என்பது தங்கத்தின் புருஷன்) தளியல் போடு! தளியல் போடு! - மாரி மலை ஏறினாள். தங்கமும் அவள் புருஷனும் சனிக்கிழமைக்கு ஆகவேண்டிய சாமான்கள் அனைத்தும் வாங்கி வைத்திருந்தார்கள். இருபது பேர் பண்டாரங்கட்குச் சாப்பாடு போடுவதாய்க் காலை 10 மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருந்தார்கள். தெருவாருக்கும் உறவின் முறையாருக்கும் சாப்பாட்டிற்குச் சொல்லியிருந்தார்கள். வீதியிலிருந்த பெரிய மனுஷிகள், போகட்டும் தங்கம் தனிக் கட்டை அவள் கண்டிருக்கும் கனவைப் பார்த்தால் அடுத்த வருஷம் அவள் பிள்ளை பெறுவாள் என்று சொல்லிச் சாப்பாட்டிற்கு வருவதாய் ஒத்துக் கொண்டார்கள். அமளிகுமளியாய்ச் சனிக்கிழமை வந்தது. அதிகாலை 5 மணி. வேலைக்காரிகளும் வேலைக்காரர்களும் சொல்லி வைத்தபடி வந்து கதவைத் தட்டினார்கள். தங்கம் திறக்கவில்லை. புருஷன்: என்ன தங்கம்! எங்கே இருக்கிறாய்! இங்கு வா! இன்றைக்குத் தானா தெருவில் சாணம் போட மறந்து போவது, வேலை அதிகம் கிடக்கிறது. தங்கம்: ஹுங்கும் ... ... ... வீட்டுக்குப் போகக் கூடாது. K.S. - புதுவை முரசு, 10.11.1930  2. பண்டிதர்க்குப் பாடம் சுப்பிரமணியன் இங்கிலீஷ் படிக்கிறான். ஆனால் அவன் தமிழிலும் தேர்ச்சியடைய வேண்டும் என்பது அவன் தகப்பானர் எண்ணம். இதற்காகப் பண்டிதர் ஒருவரிடம் மாலைப் போதில் சுப்பிரமணியனைத் தமிழ்ப்பாடம் கேட்க அனுப்பி வருவது வழக்கம். ஒருநாள் மாலை 8 மணி வரைக்கும் சுப்பிரமணியன் பண்டிதர் வீட்டிலிருந்து வராததால் சுப்பிரமணியன் பாட்டி அவனைத் தேடிக் கொண்டு பண்டிதர் வீட்டுக்கு வந்தாள். அப்போது சுப்பிரமணிய னுக்கும் பண்டிதர்க்கும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது. சுப்பிரமணி: ஆனால், நீங்கள் தண்ணீர்க் குழாய் ஒன்று தங்கள் வீட்டு மெத்தையில் வைத்துக் கொள்ளலாம். பண்டிதர்: வீட்டு மெத்தையில் தண்ணீர்க் குழாய் வைத்தால் கீழிலிருந்து தண்ணீர் குழாய்க்கு ஏறுமா? சுப்பிரமணி: அதென்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? அந்தத் தண்ணீர் உற்பத்தியாகும் இடம் மெத்தையைவிட உயரமான பூமியல்லவா? பண்டிதர்: அதெப்படி, முத்திரைப்பாளையம் புதுவையை விட உயரமா? சுப்பிரமணி: ஆம். நாம் இருப்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் சரிவு. முத்திரைப் பாளையம் உயரந்தான். பண்டிதர்: என்னடா சுப்பிரமணியா! நாம் மலை மீதா இருக்கிறோம். நாமெல்லாம் குரங்குகளா? எவனிடம் இதெல்லாம் தெரிந்து கொண்டாய். (இதற்குள் சுப்பிரமணியனுடைய பாட்டி நாழிகையாகிறதப்பா என்றாள்.) பண்டிதர்: பிறகு, பேசிக் கொள்ளலாம். நீ போய் வா. (கிழவியும் பையனும் வீட்டுக்குப் புறப்பட்டனர். நடுவழியில் சுப்பிரமணியன் தகப்பனாரும் வந்து விட்டார்.) தகப்பனார்: (கிழவியை நோக்கி.) என்ன அம்மா, நீங்கள் ஏன் இருளில் வெளிவந்தீர்கள். கிழவி: என்னப்பா? உன் மகனை அந்தக் கிழவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இனிமேல் அனுப்ப வேண்டாம். நம் பையன் என்ன சொன்னாலும் அந்தப் பண்டிதர் கண்டுபிடிக்கவில்லை. மெத்தையில் தண்ணீர்க் குழாய் வைக்க முடியாதென்றுதான் பண்டிதர் இன்னும் நினைக்கிறார். K.S. - புதுவை முரசு, 10.11.1930  3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் மாரியம்மன் கோயிலில் ஒருமுடிச்சு மாறி மாரித்தாயே இன்றைக்கு எனக்கு ஒரு ரூபாய் அகப்படும்படி அருள்செய் இரண்டனா உனக்கு உண்டியில் போடுகிறேன் என்று வேண்டி நின்றான். அவனுக்குச் சிறிது தூரத்தில் மற்றொரு சிறு வியாபாரி மாரித்தாயே ஒரு ரூபாயைக் கொண்டு வியாபாரம் செய்யப் போகிறேன் லாபம் இல்லையானாலும் நஷ்டமில்லாமல் நீ பக்கத் துணையிரு என்று சொல்லிக் கண்ணை மூடிக்கொண்டு சுந்தரி, சௌந்தரி, நிரந்தரி, துரந்தரி சோதியாய் நின்ற உமையே என்று பாடினான். இதற்குள், முடிச்சுமாறி இவன் பின்புறம் தொங்கிய முடிச்சை அவிழ்த்து அதிலிருந்த ஒரு ரூபாய்ச் சில்லரையில் ஒரு பணத்தை எடுத்து மாரித்தாய்க்கு - உண்டியில் போட்டான். அதேசமயம் பறிகொடுத்தவன் முடிச்சைத் தடவி இல்லாததால் முடிச்சுமாறியையும் கண்டுபிடித்து உதைத்தான். அவனிடம் மீதியிருந்த 14 அணாவையும் பிடுங்கிக்கொண்டான். மாரித்தாய் தன்னிடமே வைத்துக்கொள்ளாமல் இப்போது செலவழித்த கிருபை எவ்வளவு என்றால் - பணம் வேண்டிய முடுச்சுமாறிக்கு உதைகொடுத்ததில் அம்மைக்குக் கொஞ்சம் கிருபை செலவழிந்தது. நஷ்டம் வேண்டாம் என்றவனுக்கு இரண்டணா நஷ்டம் உண்டாக்கின வகையிலோ கொஞ்சம் கிருபை செலவழித்தது. இப்படிச் செலவழிந்த நல்லருளுக்கு ஈடாக முட்டாளின் இரண்டணா அம்மையின் பெட்டியில் விழுந்தது. K.S. - புதுவை முரசு, 17.11.1930  4. வைத்தால் குடுமி நடுக்கிராமத்தில் ஒரு சுப்பிரமணியர் கோயில். கோயிற் கட்டிடத்தின் ஒருபக்கத்தில் கோயில் பரிசாரகர் குடும்பம் இருந்தது. அவ்வூர்ப் பெரிய தனக்காரர் சுப்பிரமணிய பக்தர். ஒருநாள் அவர் அதிகாலையில் கோயிலுக்கு வந்தார் சுப்பிரமணியர் சுவாமி கையில் வேல் இல்லை. காவற்காரனிடம் போய். வேலை நீ பார்த்தாயா? என்றார். அவன், ஓகோ வந்தது மோசம் பொன்னி வீட்டு மண்ணப்பன் இருக்கிறானே அவன் செய்தி உங்கட்குத் தெரியுமே அவன்தான் இரண்டுநாளாய் வட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவனை விடக் கூடாது என்றான். பெரியதனக்காரர் வெளியில் வந்தார் எதிரில் வந்த ஆறுமுகஞ்செட்டியாரைப் பார்த்து; அந்தப் போக்கிரிப் பையன் மண்ணப்பன் கோயில் வேலைத் திருடிக்கொண்டு போய்விட்டான் என்றான். ஆறுமுகம் செட்டியார் இவரைத் திருப்தி செய்யவேண்டி ஒரே தாண்டாகத் தாண்டி ஒரு கான்டேபிளையும் ஊர் மனிதரையும் கும்பலாக அழைத்து வந்துவிட்டார். அனைவரும் கோயிலுக்கு வெளியில் பெரியதனக்காரரை உத்தேசித்துச் சத்தம் போடாமல் இருந்தார்கள். கான்டேபிள் திருடன் எந்தப் பக்கம் வந்து எந்தப்பக்கம் போயிருக்கக்கூடும் என்றும், காலடி ஏதாவது இருக்கிறதா என்றும் பார்த்துக்கொண்டிருந்தார். இதற்குள் கோயில் பரிசாரகர் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வெளியிலிருந்து வந்து என்ன நூதனம் என்றார். பெரியதனக்காரர் விஷயத்தைச் சொல்லிச் சத்தமிட்டார். ஐயர் என் மீது குற்றமில்லை. எவனோ உள் உளவாய் இருந்து இந்த வேலைசெய்து விட்டான். அவன் மண்ணாய்ப் போய்விடுவான் வாமி வேலைத் தொடலாமா? இந்த மூர்த்தி தம் வேலை எடுத்தவர் எவரானாலும் அவர்கள் குடும்பத்தைக் குட்டிச் சுவராக்கி விடுவார். இதை உத்தேசித்துத்தான் அந்த முத்துசாமி ஐயருக்குக் காப்பிக் கிளப்புவைக்க இந்தக் கோயிலின் முற்பக்கம் விட்டு விடுங்கள் காவலாக இருப்பார் என்றேன் நீங்கள் கேட்கவில்லை என்றார். இதைக் கேட்டுக் கொண்டே கோயிலின் பின்புறம்போய் வந்த கான்டேபிள் ஆமாம் ஐயரே பின்புறத்தில் உம்மைக் குடி வைத்ததால் சுவாமி வேலையெடுத்து உன்மனைவி அதோ உள்ளே தோசை திருப்பிப் போடுகிறாள். இன்னும் முற்பக்கத்தில் முத்துச்சாமி ஐயரைக் காப்பிக் கிளப்பு வைக்கவிட்டால் சுவாமி கவசத்தை எண்ணெய்ச் சட்டியாக உபயோகிப்பார். ஐயர்: (சிரித்துக்கொண்டு) ஆனால் வேல் உள்ளேதான் இருக்கிறதோ. கான்டேபிள்: இல்லை. இன்னும் சற்று நேரத்தில் சுவாமியின் கையில் வந்துவிடும் என்று கூடச் சொல்லுகிறேன். K.S. - புதுவை முரசு, 17.11.1930  5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் கதவு தட்டப்படுகிறது! நான் போய்ப் பார்க்கிறேன். நீ சாமியிடம் பேசிக் கொண்டிரு” என்று சொல்லித் தாய்க்கிழவி வந்து தெருக் கதவைத் திறந்து ‘யார்? என்றாள். வந்த இருவரில் ஒருவனாகிய சொக்கன், நாங்களிருவரும் புதுச்சேரி; வேண்டிய பணம் கொடுக்கிறோம். தங்கிப் போக வேண்டும் என்றான். கிழவி இதோ வருகிறேன் என்று உள்ளே போய்த் தன் மகளோடு பேசியிருந்த சுவாமியை, சப் இன்பெக்டர் வந்திருக்கிறார். நீங்கள் மறைந்து கொள்ளுங்கள் என்றாள். சுவாமி மறைந்து கொண்டார். பிறகு சொக்கனும் சுந்தரனும் உள்ளே அழைக்கவும் - வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தாய்க்கிழவி இருவரிடமும் என் தம்பி பின்புறம் இருக்கிறான்; மெல்லப் பேசுங்கள் என்றாள். தாசி: நீங்கள் எந்த ஊர்? சொக்கன்: நாங்கள் புதுச்சேரி. இந்தவூர்த் தம்பிரான் சாமியிடம் ஆசீர்வாதம் பெற வந்தேம். நாங்கள் வியாபாரம் துவக்குமுன் தம்பிரான் சுவாமியிடம் ஆசிபெற வேண்டும் என்று எங்கள் தகப்பன்மார்கள் கட்டாயப்படுத்தினார்கள். சுந்தரன்: (இடையில்) அந்தத் தடியனைக் சேவிக்கு முன் உன்னைச் சேவிக்க வந்தோம். இதைக் கேட்டதும் தாசி வாய் பொத்தி உரக்கப் பேசாதீர்கள் என்றாள். இப்படி இவள் சொன்னதை பொதுவாகத் தம்பிரான் மார்களைத் தூஷிக்கலாகாது அது பாவம் என்று சொன்னது போல் நினைத்து அந்தப் பாவத்திற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று தாசிக்குத் தெரியப்படுத்த எண்ணிச் சுந்தரன் - (உரத்த குரலில்) அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் அவனை எங்கள் எதிரில் கொண்டு வந்து நிறுத்து! (அப்போது கூடச் சொல்லுவோம் என்று அர்த்தம்) உள்ளே தம்பிரான் சுவாமி நடுங்குகிறார்! இப்போதே இந்த சப் - இன்பெக்டர்களை என்ன என்று கேட்டு, நம்மீது ஏதாவது கே இருந்தால் பணம் கொடுக்கிறதாய்ச் சொல்லிக் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்துச் சொக்கன் சுந்தரன் இருவர் முன்வந்து நின்றார். நின்றவர் சும்மா இராமல் மங்கலாய் எரிந்த லைட்டைத் திருகி நான்தான் தம்பிரான் என்றார். தாய்க்கிழவி: சுவாமி! தங்களிடந்தான் ஆசீர்வாதம் பெற வந்திருக் கிறார்கள். தாசி: வாலிபர்களே! இவரே நீங்கள் ஆசிபெற வந்த சுவாமிகள்! K.S. - புதுவை முரசு, 17.11.1930  6. முதலாளி - காரியக்காரன் கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை முதலாளி, தன் காரியக்காரனிடம் சொல்லுகிறான்; தேனூர் என்னும் கிராமம். இதற்கு 40 மைலுக்கு அப்பால் இருக்கிறது. அதில் அரைவேலி நன்செய் நிலம் எனக்குச் சொந்தமானது. அதை நீஅனுபவித்துக்கொள். அக்கிராமத்தில் எனக்கொரு வீடும் உண்டு. அதில் குடியிருந்துகொள். இரண்டு ஏர் - மாடுகள் உண்டு. உழவுக்கு வேண்டிய உபகரணங்களும் இருக்கின்றன. உபயோகித்துக் கொள். அங்கு ஆட்கள் வசதி அதிகம். கிராம மணியக்காரர் உத்தமர் - போலீ காபந்து கிடைக்கும். வயல், முப்போகம் விளையத்தக்கது ஆற்றுப் பாய்ச்சல் உள்ளது. நீ தேனூருக்குப் பயணப்படு. பயிரிட்டு நன்றாக வாழ்ந்து கொண்டிரு. கைச்செலவுக்கும் இதோ 100 ரூபாய் கொடுத்தேன். நன்றாய் யோசித்துப்பார். எல்லா வசதியும் உனக்கு ஏற்படுத்தி யிருக்கிறேன். புறப்படு என்று சொன்னான். காரியக்காரன் நன்றாய் நினைத்து நினைத்துப் பார்த்தான். தேனூருக்குத் தான் போய்ச் சௌக்கியமாகப் பயிரிட்டு ஜீவனம் செய்வதற்கு முதலாளியிடம் இன்னும் என்ன வசதி கேட்டுப் பெறவேண்டும் என்று யோசிக்கையில் எல்லா வசதியும் தனக்கு முதலாளி ஏற்பாடு செய்து விட்டார் என்றே தோன்றிற்று. தேனூருக்குத் குடியேறினான். முதலாளிக்குத் தேனூர்க் கிராமத்திலுள்ள அரைவேலி நிலத்தைப் பற்றிய கவலை தீர்ந்தது. மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு துண்டு துண்டாய்க் கிடந்த நிலங்களையெல்லாம் இந்தக் காரியக் காரனுக்கு ஒப்படைத்தது போலவே ஒவ்வொருவருக்கும் ஒப்படைத்து விட்டான். இவ்விஷயமான கவலை நெஞ்சில் இல்லை. இனி இதுபற்றிய கவலைகள் தன்னை அண்டவும் அவன் இடம் கொடுக்கப் போவதில்லை. இது முதலாளியின் தீர்மானம். தேனூர் சென்ற காரியக்காரன் தான் அவ்வூரிலிருந்து இரண்டு நாளைக்குப்பின் தன் முதலாளிக்கு ஓர் கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தில் - தனக்கு முதலாளி செய்த உதவியைப் பாராட்டியும், அதற்காக நன்றி செலுத்துவதாகவும் எழுதியிருந்தான். தனக்காக ஏற்பட்ட வீட்டில் நிரம்பக் குப்பைகள் இருந்தாகவும் மாடுகளுக்குத் தீனி இல்லையென்றும் எழுதியிருந்தான். இதனோடு தனக்கு உழுகின்ற ஆட்கள் தேவையென்றும் அதற்காக அங்கிருந்து ஆட்களைக் கடிதம் மூலம் நியமித்துத் தரும் படியும் கேட்டிருந்தான். தேனூர்க் கிராமத்தில் கள்ளர் இருப்பதாகவும் அவர்களால் ஏற்படும் தீமையிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அதில் குறித்திருந்தான். இந்தக் கடிதத்தை அவன் தன் முதலாளி யின் விலாசம் இட்டு ஓரணாத் தலையும் ஒட்டிப் போட்டான். அதற்குப் பதிலை எதிர்பார்த்தான். ஆனால் தன் வேலையைத் தொடங்க வில்லை. உயிர் வாழ்வதற்காகத் பணத்தைச் செலவிட்டுச் சாப்பிட்டு வந்தான். பிறகு, அவன் வேலை தொடங்கினான். அடிக்கடி அவன் தனக்கு நிலம்விட்ட முதலாளிக்கு நன்றி செலுத்தியும் தன்னால் தேனூரில் தேடிக்கொள்ளத்தக்க பரிகாரங்களைத் தன் முதலாளியைத் தேடித் தரச் சொல்லியும் கடிதம் எழுதுவதில் அவன் சோர்வடைய வில்லை. சுமார் நூறு முறை இவ்விதக் கடிதம் எழுதியும் பதில் வராதது கண்டும் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை. தன்னாலேயே தேனூரில் உண்டாக்கிக் கொள்ளக்கூடிய வசதி பரிகாரங்களையும் அவன் உண்டாக்கிக் கொள்ளும் சக்தியை நாளடைவில் இழந்தான். நாளடைவில் வாழ்க்கையிலும் ஈனநிலை அடைந்தான். தம்மையும் உலகத்தையும் படைத்தவர் கடவுள் என்று நினைப்பவர்கள் அக்கடவுளிடம் அவர்கள் தேனூர்க் காரியக் காரன்போல் நடந்து கொள்ளக் கூடாது. ஏ! முதலாளிக் கடவுளின் காரியக்காரர்களே, உங்கள் கடவுள் உங்கட்குக் கண் கொடுத்தார். கேட்கக் காது கொடுத்தார். மூக்கு, வாய், உடம்பு இவைகளைக் கொடுத்தார். சிந்தை கொடுத்தார். அறிவை அருளினார். இவ்வரிசையில் குறைவு ஒன்றுமில்லை. மற்றும், இத்தனைப் பெரிய உலகைக் கொடுத்தார். அதில் போகப் பொருள்கள் அனைத்தும் அமைத்தார். எல்லா வசதியும் கொடுத்தார். உங்களை நன்றாக வாழச் சொன்னார். இதற்காக நீங்கள் அவருக்கு இடை விடாமல் நன்றி செலுத்து வதை அவர் எதிர்பார்க்கவேயில்லை. பெருங் கொடை கொடுத்த பெருங்கடவுளை - தினம் உங்கள் நன்றியறிதலை எதிர்பார்க்கும் அற்பத்தனமுள்ள குள்ளக் கடவுளாக்காதீர்கள்! தினமும் கடவுளை நினைக்கும் எளிய மனிதனைவிடக் கடவுள் நினைப்பறியாத மிருக, பக்ஷிகள் கம்பீரமாக வாழ்கின்றன! மேலும், நீங்களே உங்களுக்கு இயல்பாக ஏற்பட்டிருக்கும் வசதிகளின் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டிய தீமைகட்காகக் கடவுளுக்கு விண்ணப்பம் அனுப்புவதால் என்ன பதில் கிடைக்கும்? நீங்களே தேடிக் கொள்ள வேண்டிய நன்மைகட்குக் கடவுளைக் கோருவதால் ஆவதென்ன? கடவுள் முன்னதாகவே உங்கட்கு எல்லாச் சாதனங்களையும் கொடுத்தது எதற்காக? பிற்பாடு அவர் உங்கள் விண்ணப்பத் தொல்லைகளிலிருந்து நீங்கிக் கொள்ளவன்றோ? கடவுள் உங்கட்கு விட்ட நிலத்திற்காக உங்களிடம் குத்தகையோ, வாரமோ எதிர்பார்க்கவில்லை. ஆதலால் உங்கள் நிலையைக் கடவுள் மேற்பார்வை பார்க்க எவரையும் எப்போதும் அனுப்புவதில்லை. இதனால் கடவுளின் அவதார புருஷரென்று நீங்கள் ஒருவரையும் நினைக்க வேண்டாம். கடவுள் தூதுவர் என்றும் எவரையும் நம்ப வேண்டாம். உங்கள் போற் பிறந்து, உங்கள் போலவே அறிவுடையவர் போலவும் செத்துப் போகும் எந்த மனிதரையும் இம்மியாவது உயர்த்திப் பேசாதீர்கள். நீங்கள் வசதியுடைவர்கள் - வாழ்வில் உயருங்கள். இந்நிலையில், உங்களிடம் சிலர், நல்ல எண்ணங் கொண்டவர் போலவும், அறிவுடையவர் போலவும் வந்து உம்மைப் படைத்தவர் கடவுள் என்பார்கள். நீங்கள் சும்மாவிருந்தால் அதனிலும் ஒரு படியேறி அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்தச் சொல்வார்கள். பிறகு மெதுவாக அந்தக் கடவுள் - அங்கிருந்த படி - தன் கையால் மனிதருக்குச் சட்டம் எழுதியனுப்பியிருப்பதாகச் சொல்வார்கள். அந்தச் சட்டத்தில் எளியவன் வலியவனின் காலில் நசுக்கவேண்டும் என்றிருப்பதாகச் சொல்லுவார்கள். நீங்கள் எளியவரைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். ஊரார் தாலியையும் அறுத்துத் தம் வயிற்றை நிரப்புகின்றவர்கள் கடவுளுக்குச் சொந்தக்காரர்கள் என்பார்கள். உம்மைப் பாபிகள் என்பார்கள். கூலி கொடுத்தால் புண்ணியராக்கி விடுவோம் என்பார்கள். கடவுள் என்பதில் துவக்கிய இந்தத் தொல்லைகள் வளர்ந்து வளர்ந்து - வீட்டில் அடுக்குப் பானையின் சந்தில் ஒளிந்திருக்கும் பெருச்சாளி யையும் கடவுள் என்று வணங்கும் நிலையை ஏற்படுத்துவார்கள். உங்கள் சிந்தனையை அந்தப் பெருச்சாளி புகுந்திருக்கும் அடுக்குப் பானையின் குப்பைகளை அகற்றுவதிலும் செலுத்த வழியிராது. ஆஹா! கடவுள் என்ற வரிசையில் உங்கள் நல்வாழ்வுக்கு, சுதந்தர வாழ்வுக்கு எத்தனைத் தடைகள்? எத்தனை ஆபாசங்கள்! மனிதன் ஆன்ம நிலையை அடைந்து விடுகிறான். இந்தக் கடவுள் என்னும் சாம்பிராச்சியத்தில் வேலை செய்துவரும் இலக்காக்களை - மத இலாக்கா - கோயில் இலாக்கா - மோக்ஷ இலாக்கா - பாபந் தீர்க்கும் இலாக்கா - அவதார இலக்கா - வேதாந்த இலாக்கா - வான இலாக்கா - பூசுரர், புராண பண்டித, இலாக்கா எனப் பலவாகப் பிரிக்கலாம். ஒவ்வோர் இலாக்காவாலும் உங்கட்கு ஓர் நன்மையும் இல்லை, இல்லாமல் போயினும் இவைகளில் எந்த இலாக்காவாகிலும் உங்களைப் பார்த்து, மக்களே, நீங்கள் நாளைக்குச் சாப்பிடுவதற்கு அரிசி வாங்கக் காசு இருக்கிறதா? ஏதாகிலும் குறைவுண்டா? என்று கேட்பதுண்டா? அதுதான் கிடையாது. ஒவ்வோர் இலாக்காவும் உங்களைப் பணம் கேட்கும்! உங்கள் இரத்தத்தைக் குடிக்கும்! வறுமை யென்னும் சகதியில் உங்களைத் தள்ளும். நீங்கள் செத்துப் போகும் போதும் இடுகாட்டு நரி போல் உங்கள் முன்தானையில் ஏதாகிலும் முடிந்து வைத்திருக்கிறீர்களா என்றுதான் கவனிக்கும். கடவுளுக்காக வேலை செய்து அவர்களிடம் பணம் வசூலிக்கும் - இந்த இலாக்காக்கள் அந்த பணத்தைக் கடவுளுக்குஅனுப்புவதுண்டா? அனுப்புவ தில்லை. ருஜு வேண்டுமா? இதோ, புராணிகர்கள் - இதோ, பண்டாரச் சந்நிதிகள்! இதோ தம்பிரான்கள்! இதோ சங்கராச்சாரிகள்! இதோ ஜீயர்கள்! இதோ பாதிரிகள்! இதோ முல்லாக்கள்! இதோ சந்நியாசிகள்! இதோ மடாதிபதிகள்! இதோ பிராமணோத்தமர்கள்! இவர்கள் அனைவரும் இப்படிக் கொழுத்திருப்பதும் கவலையற்றிருப்பதும் எப்படி? ஆதலின், முதற்கோணல் முற்றுங் கோணல் என்றபடி கடவுள் என்றதை ஒப்பியதால் அதன் தொடர்பு இவ்வாறு நீண்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் நலத்தைத் தேடுவார் போலவும், யோக்கியர் போலவும் கடவுள் பெயரை உம்மிடம் வந்து உச்சரிப்பவர் களிடம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் ஒன்றிருக்கிறது. கடவுள் என்று சொல்லுவார்கள். கடவுள் இருப்பது உமக்குக் கண்ணெதிரில் தெரிந்தாலும் - கடவுள் இல்லை போய் வாருங்கள்; என்று ஒரே அடியாய் அடித்து விடுங்கள். - புதுவை முரசு, 15.12.1930  7. ஆற்றங்கரை ஆவேசம் தை மாதப் பொங்கலையடுத்து வரும் கரிநாளன்று, கிராமங் களில் கன்னிப் பொங்கல் நடத்துவதுண்டு. இதற்கு ஐந்தாறு நாட்களின் முந்தியே, சிறு பெண்கட்கு இதுபற்றி நினைவு வந்துவிடும். இதைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். பருவமடையாத ஏழு சிறுமிகளை அன்றைக் காலை முதல், விரதம் அனுஷ்டிக்கும்படி ஏற்பாடு செய்திருப்பார் கள். மாலையில் ஆற்றுக்குக் கூட்டிப் போவார்கள். ஊர்ச் சிறுமிகள் அனைவரும், உடன் போவார்கள். பொங்கலிட்டுப் படையல் போட்டுக் கற்பூரம் கொளுத்தும்போது, பெரிய மனுஷிகள் அனைவரும், அந்த ஏழு கன்னிமார்களில் ஒருவர் மேலாவது ஆவேசம் வராதா என்று எதிர்பார்ப்பார்கள். இதற்காக அவர்கள், அந்த ஏழு பேர்களை யும் கும்பலாக உட்கார வைத்து, எதிரே சாம்பிராணியை அபரி மிதமாகப் புகையச் செய்வதுண்டு. ஆவேசம் வராவிட்டால், பெரிய மனுஷிகள் மனம் அமைதி பெறுவதில்லை. சிறுமிகள் மேல் ஆவேசம் வரும்படி செய்யும் பிரயத்தனத்தால், அந்தச் சிறுமிகள் மிக்க கஷ்டம் அடைய வேண்டி வரும். அவர்கள் மூர்ச்சித்து விழுவது உண்டு! கன்னிப் பொங்கல் விஷயமாக எங்களூர்ப் பெரிய மனுஷிகள் பேசிக்கொள்ளும்போது, முற்காலத்திலெல்லாம் கன்னிப் பொங்கலிடும் போது, பெண்கள்மீது ஆவேசம் வரும். கிராமத்திலிருப்பவர்களின் கேள்விக்கெல்லாம், தக்க சமாதானம் சொல்லும், உள்ளது உள்ளபடி சொல்லும். வர வரக் கலிகாலமாய்ப் போய்விட்டது. வருகிற சாமியும் வர மாட்டேன் என்கிறது. என்று சொல்லிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். சென்ற வருஷம் தை மாதம் முதல் தேதிக்கு முன்பே, தெருச் சிறுமிகட்குக் கன்னிப் பொங்கல் பேச்சு அதிகமாய் இருந்தது. அங்கொரு பாழடைந்த பிள்ளையார் கோயில் உண்டு. அதில் அந்தச் சிறுமிகள் கூடி, நடைபெற இருக்கும் கன்னிப் பொங்கல் விஷயமாக என்ன முடிவு கட்டினார்களோ தெரியவில்லை. வழக்கப்படி கன்னிப் பொங்கல், ஆற்றங்கரையில் நடந்தது. ஆவேசம் வரவழைக்க முயற்சி நடந்தது சிரமமில்லாமல் ஏழு கன்னிகள்மீதும், ஆவேசம் கிளம்பிற்று. பெரிய மனுஷிகள் கும்பலாய்ச் சூழ்ந்துகொண்டு, சாமியை உத்தரவு கேட்க ஆரம்பித்தார்கள், நானும் இன்னும் சில வாலிபர்களும், எட்டியிருந்து வேடிக்கைப் பார்த்திருந்தோம். ஆவேசங் கொண்ட பொன்னம்மா என்னும் சிறுமியை நோக்கிக் கிழவி ஒருத்தி, ஓ! பொன்னம்மா என்று கூப்பிட்டாள். அந்தப் பொன்னம்மாச் சாமியானது. அதெல்லாம் கூடாது! வீட்டில் அழைப்பது போல என்னைப் பேர் சொல்லக்கூடாது என்றது. கிழவி: கன்னியம்மா, பொங்கலிட்டதில் திருப்திதானா? பொன்னம்மா: ஏண்டி நீ, வெல்லம் போட்ட அரிசியில் பாதியை வீட்டில் வைத்துவிட்டாய்? (இதற்குள் - ஆவேசங் கொண்ட மொட்டை: அதெல்லாம் சரிப்படாது, அதை எடுத்துவா என்று சொன்னாள்.) மெத்தை வீட்டு ஆச்சி என்னும் பெரிய மனுஷி: அரிசியை எடுத்து வரச் சொல்லுகிறேன்: நான் ஒரு கேள்வி. மொட்டை: கேள்! ஆச்சி : என் மகனுக்குக் கல்யாணம் எப்போது நடைபெறும். மொட்டை : சீக்கிரம் நடக்கும். வருத்தப்படாதே! ஆச்சி : சீக்கிரம் என்றால் எந்த மாதம்? மொட்டை : வருகிற புரட்டாசி மாதம்! இதைக் கேட்டுச் சில பெரிய மனுஷிகள் நகைத்தார்கள். அதனால் மொட்டையின் தாய், அட அவள் மேல் சாமியும் வரவில்லை கீமியும் வரவில்லை! என்றாள். அந்த வார்த்தை ஆவேசம் கொண்ட மொட்டைக்குப் பிடிக்கவில்லை. தன் தாயை நோக்கி, உனக்குத்தான் தெரியுமோ? போ! போ? என்றாள். இதற்கிடையில் மேற்படி கிழவி மொட்டையை, புரட்டாசி மாதத்தில் கல்யாணம் நடப்பதுண்டா? சாமி இப்படித் தானா சொல்லும்? என்றாள். மொட்டை: ஆமாம். உன் மகள் பொன்னம்மா மாத்திரம் சரியாய் சொல்லி விடுவாளோ? நீ வீட்டில் மறைத்த அரிசி அவளுக்குத் தெரிந்ததால் சொன்னாள்! நான் அப்படியில்லை! என்றாள். இதற்குள் தங்கம்மாச்சாமி : என்னைக் கேளுங்கள்! சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்! என்றது. மேற்படி கிழவி: இரு சாமி! அந்த மொட்டைச் சாமிக்குத் திருப்பழம் கொடுத்து, மலையேற்றிவிட்டு வருகிறேன்! என்று சொல்லி, அங்கிருந்த பெரியதொரு கற்பூரக் கட்டியைக் கொளுத்திக், கையை நீட்டு மொட்டை! என்றாள். மொட்டைச்சாமி: அதெல்லாம் முடியாது. நீ கொடுப்பதாவது நான் வாங்குவதாவது! போடி! என்றது. இதற்குள் தங்கம்மாச்சாமி: நீதான் வாங்கிக் கொள்ளேண்டி! என்றது. மொட்டைச்சாமி வேண்டுமென்றே அந்தக் கிழவி என்னிடம் அத்தனை பெரிய கற்பூரத் கட்டியைக் கொளுத்திக் கொடுக்கப் பார்க்கிறாள்! என்றது. தங்கம்மாச்சாமி: நீ ஒரு முண்டம்! சொன்னதென்ன? நீ செய்கிற தென்ன? என்று, முன் தாங்கள் முடிவு செய்திருந்ததைக் குறிப்பிட்டுத் திட்டிற்று. மேற்படி கிழவி: பிடி, திருப்பழத்தை! மொட்டை: முதலில் திருப்பழத்தைக் கொடு! பிறகு கற்பூரத்தைக் கொடு! பெரிய மனுஷிகள் சிரித்தார்கள். மேற்படி கிழவி: இரண்டும் ஒன்றுதானே! மொட்டை: ஓகோ! என்னையா ஏமாற்றப் பார்க்கின்றாய்? என்று சொல்லி, அங்கு வைத்திருந்த வாழைப்பழச்சீப்பை எடுத்துக் கொண்டு, கொளுத்திய கற்பூரத்தை ஊதி வாயில் போட்டுக் கொண்டு மலையேறிற்று, மீதி ஆறு சாமிக்கும் இது பிடிக்கவில்லை. ஆறுசாமியும் ஒரே வாக்காய், கேட்க வேண்டியதை உடனே கேளுங்கள்! நாங்களும் மலையேற வேண்டும்! என்றன! ஒரு கேள்வி: பிள்ளை பிறக்குமா? பதில்: ஆண்பிள்ளை பிறக்கும். இன்னொரு கேள்வி: பையனுக்கு உத்தியோகம் கிடைக்குமா? பதில்: அடுத்த மாதத்தில் 100ரூ உத்தியோகம். இன்னொரு கேள்வி: கணவர் பிழைப்பாரா? பதில்: இன்னும் 8 நாட்களில் வேலைக்குப் போவார். வேறொரு கேள்வி: அந்தக் கிழவர் (கேட்பவளின் தங்கையின் புருஷன்) வெகுநாட்களாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாரே? பதில்: அவர் செத்துவிடுவார் பயப்படாதே! அதன் தொடர்ச்சி கேள்வி: என் தமக்கை தாலியிழந்து கஷ்டப் படுவாளே? பதில்: அவள் தாலி இழக்கமாட்டாள்! நேரம் ஆய்விட்டது. சரி சரி, இனி முடியாது. மீதி ஆறு சாமிகளும், திருப்பழம் வாங்காமல் மலையேறி விட்டன! தெளிந்தாள் போல் எழுந்தன! மொட்டையிடம் சில வாழைப் பழங்களே மீதி! ஏழு சிறுமிகளும் தனியாய்ப் போய் விட்டார்கள். வாழைப்பழ விஷயம் நடந்தது. இதன் சாரம்: இந்த சாமிகளைப்பற்றி அதிகமாய்ப் புகழ்ந்து, பெரிய மனுஷிகள் பேசிக்கொண்டு போனார்கள். கிழவி கிண்டல் துவக்க இடமில்லை. சாமியைப் பற்றிக் குறை சொன்னால், 100 ரூபாய் உத்தியோகத்தில் அமரப் போகும் பையனின் தாய்க்குக் கோபம் வருமா? வராதா? நமது நாட்டுப் பெண்டிர்களின் பேதைமையை என்ன என்று தான் சொல்லுவது? மற்றொன்று: இப்படிப்பட்ட சாமியைக் கண்டு இவ்வாறு. எண்ணத்தை யும் பணத்தையும் பறிகொடுக்கும் பேதைப் பெண் மக்கள் மட்டில், சற்றாவது இரக்கம் வைத்து எப்போதாவது - எந்த இடத்தி லாவது - எந்த ரூபத்திலாவது - ஒருமுறை அந்த உண்மைச்சாமி வந்து போகக் கூடாதா? - புதுவை முரசு, 22.12.1930  8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் ஏழை உழத்திகள் வயலில் களை பிடுங்குகிறார்கள். அவர்கள் குழந்தைகள் வயலையடுத்த தரையில் வளர்த்தப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகள் தத்தி நடந்து விழுந்து புரள்கின்றன. வயல்களை அடுத்த கரை. மேடு பள்ளமுடையது சூரிய வெப்பத்தால் கொதிப்பேறியுள்ளது. முட்கள் உள்ளது. பிள்ளைகள் இந்த நெருப்புச் சட்டியில் வறுபடுகின்றன. அந்தப் பிள்ளைகளின் இளங்கன்னங்கள், கருவிழிகள், செவ்வுதடுகள், அழகைக் கொட்டும் முகங்கள், மெல்லிய உடல்கள், சின்னஞ் சிறிய. பாதங்கள் ஆகிய இந்தப் பூக்களும் துளிர்களும் கருகி எரிந்து போவதை எரிக்கும் வெயில்தான் அறியும். பிள்ளைகளின் உடலிற் பாய்ந்த முட்களின் வாயை மண்பொடிகள் அடைத்து விடுவதால் ரத்த ஒழுக்குகள் தெரிய வில்லை. பிள்ளைகளின் அழுகுரல் மாத்திரம் வானில் கேட்பதுண்டு. அடுத்து வேலை செய்யும் தாய்மார்கட்குக் கேட்பதில்லை. ஏனெனில் அவர்கள் உள்ளமெல்லாம் மாலையில் அலக்ஷியமாய்த் தம் ஆண்டைமார் சிறிது தானியம் கூலியாக அள்ளித் தரும் கையையும் அதைச் சமைத்துத் தின்று பாதி வயிற்றோடு உறங்கப் போகும் தம் பெரிய குடும்பத்தையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றன. ஓ! கல்நெஞ்சம் கொண்ட உழத்தியர்களே! பெற்ற பிள்ளைகளை வயற்புறத்தில் சுடுவெய்யிலில் பறக்கவிட்டுக் கவலையின்றித் தலையை நட்டுக்கொண்டு களைபிடுங்கிக் கொண்டிருக்கலாமா? இரக்கமில்லையா? இப்படிப்பட்ட கேள்விகளை அந்த உழத்தியர்களை நோக்கி இதுவரைக்கும் ஒருவரும் கேட்டதில்லை. அந்த உழத்தியர் வளர்ந்ததும் இப்படித்தானே என்று அந்த உழத்தியர் நினைத்து நினைத்துப் பழகிப்போய்விட்டார்கள். வேலை நடந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் அழுது கொண்டிருந்தன. வயலுழத்தியரையும், பிள்ளைகளையும் படுத்திய தொல்லை போதுமென்று சூரியன் மேற்கு நோக்கினான். மாட்டுக்காரச் சிறுவர்கள் தாம் வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் ஆனது கண்டு பாடிய உற்சாகப்பாட்டு வானத்தில் ஏறி, சூரியனைத் துரத்தியடித்தது. மணி மாலை 6½ ஆயிற்று. உழத்தியர்கள் தாங்கள் மூச்சு விடுவதற்குத் தங்கள் ஆண்டைகளை உத்தரவு கேட்டார்கள். ஆண்டைமார்களும் வேலையை நிறுத்திக் கூலி பெற்றுக் கொள்ள உத்தரவு அருளினார்கள். அதன் பிறகு வயல் வெளிகளில் எல்லா ஏழை உழத்திகளும், ஏழை உழவர்களும் தங்கள் பிள்ளைகள் சகிதமும் கூலியாகப் பெற்ற சிறு தானிய முடிச்சுகள் சகிதமும் பசியோடும் களைப்போடும் சேரியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒரே கூட்டம்! இதனோடு நாள் முழுதும் வயிறார மேய்ந்து வீட்டுக்கு ஓட்டப்படும் மந்தை மாடுகளும் சேர்ந்து கொண்டன. ஆனால் மாடுகள் அசைவு போட்டபடி மெதுவாய்ச் சந்தோஷமாய் நடந்து போயின. அப்போதுதான் இந்த வர்த்தமானத்திற்குச் சிறிதும் சம்பந்தமே இராத ஓர் கூச்சல் பலமாய்க் கேட்டது. அக் கூச்சல் ஏதோ ஆபத்து வருமுன் செய்யப்படும் எச்சரிக்கைபோல் இருந்தது! இதைக் கேட்ட உழவர்கள் உழத்தியர்களோ எனில் தமது பசி கொண்ட உள்ளத்தோடு கேலிச் சிரிப்பை இரவல் வாங்கிச் சிரித்துக் கொண்டே நடந்தார்கள். வேதம்! வேதம்! வேதம்! அனைவரும் சற்று நின்று கேட்டு விட்டுப் போக வேண்டும். நில்லுங்கள்! நில்லுங்கள்! என்று ஒருவன் கையமர்த்திக் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தான். அவனண்டையில் இரண்டு ஆட்கள் வேதம் போதிக்க ஆரம்பித்தார்கள். அந்த ரசமான போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மூவரே. அதுவும் வேதம், போதிப்பவர்களைச் சேர்த்தால்தான். வீட்டுக்குப் போய்ப் பசியாறவேண்டும் என்ற அவசியமில்லாத அந்த மாடுகளும் வேதத்தை கேட்க நிற்கவில்லை. இந்தப் பரிசுத்த வசனங்களை அந்த மூடர்களாகிய உழவர் உழத்தியர் நின்று கேட்பதற்குப் பதிலாக அவர்கள் நடந்து கொண்டே கிண்டல் பேசவும் ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் - தேவன் நமக்காகப் பாடுபட்டார் என்று சொல்லுவதற்காகத்தான் அவர்கள் நம்மை நிற்கும்படி சொன்னார்கள். மற்றொருவன் - நாம் காலை முதல் மாலை வரைக்கும் கடு வெய்யிலில். வருந்தியுழைக்கிறோம்; பாதி வயிறு நிரம்புவது சந்தேகம். உழைக்காதவர்கட்கு வயிறு இடங்கொடுத்தால் இந்த உலகத்தையும் விழுங்கிவிடச் சௌகரியம் இருக்கிறது. இந்த இருவகையாரில் தேவன் எவருக்காகப் பாடுபட்டார் என்ற தகவல் தெரியவில்லையே. இன்னொருவர் - அடிக்கடி இவர்கள் நம்மிடம் வந்து தேவன் என்கிறார்கள் - மோக்ஷம் என்கிறார்கள்: ஒன்றும் புரியவில்லை. வேறொருவன் - அவர்கட்கு விளங்குவதால்தான் நமக்கும் அவ்வளவு விளக்கமாய்த் தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒருவன் - அவர்கள் சொல்லுகிறபடி நாம் கேட்டால் நாம் செய்யும் பாபங்களைக் கடவுள் தீர்த்து விடுவாராம். இனியொருவன் - சும்மா இருக்கும் நம்மிடம் இதைச் சொல்ல வருவதன் நோக்கம் என்ன? பாபம் செய்யச் சொல்லுகிறார்கள். வேறு ஒருவன் - எந்தத்தேவனாவது எல்லாரும் உழைக்க வேண்டும் - சாப்பிட வேண்டும் என்று பாடுபடுகிறானா என்று அந்த வேதம் போதிப்பவனைக் கேட்க வேண்டும். இன்னொருவன் - மனிதர்க்காகத் தேவன் பாடுபடுகிற வரைக்கும் மனிதன் தொல்லை தீரப் போவதில்லை. ஏழையுழவர் உழத்தியரின் பசிகொண்ட உள்ளத்தில் உதித்த இந்த மாணிக்கங்கள் அவர்களின் வாயினின்று வெளிப்பட்டுப் பயன் என்ன? அவை அந்தச் சேற்று நிலத்திலேயே இறைந்தன. அவர்கள் குடிசையடைந்தனர். சைவம் என்றும், வைஷ்ணவம் என்றும், கிறிதவம் என்றும் பலபல மதங்களைக் கட்டி, அழுதுகொண்டிருக்கும் போதகர்களே! ஏழையுலகின் பசியுள்ளம் என்ன சொல்லுகிறதென்பதை நீங்கள் கவனித்ததுண்டா? - புதுவை முரசு, 29.12.1930  9. கண்ணுக்குத் தெரியாத சுமை செவ்வாயுலக யாத்திரை நாங்கள் ஆறு நண்பர்களும் திட்டம் போட்டபடி எங்கள் ஆகாய விமானத்தை செவ்வாயுலகத்தை நோக்கி முடுக்கினோம். அது பறந்து போய்க் குறித்த இடத்தை அடைந்தது. மனிதர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்; நம்மினும் சிறிது உயரமுடையவர்கள். இந்த இரண்டு அம்சங்கள் தவிர செவ்வா யுலகத்தவர் எல்லா விஷயத்திலும் நம்மையொத்தவர்களே. ஆனால் அம்மனிதர் களனைவரும் எப்போதும் தங்கள் தலையின்மேல் ஒரு பெரிய கல்லைச் சுமந்தபடி இருந்தார்கள். எங்கள் விமானம் செவ்வாயுலகத்தில் ஒரு கிராமத்தின் வயற்புறத்தில் இறங்கிற்று. நாங்கள் முதலிற் பார்த்த ஓர் உழவன் தன் தலையில் ஒரு கல்லைச் சுமந்து கொண்டு நடந்தான். ஏதோ தூக்கிக் கொண்டு போகிறான் என்று நினைத்தோம். சிறிது தூரம் நடந்தான். உழுது கொண்டிருந்த சுமார் பத்துப் பேர்களும் தலையில் கற்சுமை உடையவர்களாய் இருந்தார்கள். அதையும் தாண்டினோம். ஓரிடத்தில் ஒரு விழா நடந்தது. மனிதர்களின் பெருங் கூட்டம். சிறு குழந்தைகள் முதல் கிழவர் ஈறாகவுள்ள அனைவரும் கல்லைச் சுமந்து கொண்டிருந் தார்கள். நாங்கள் சிரித்தால் அது குற்றமாக முடியுமோ என்று எங்கள் உள்ளம் நினைத்ததுண்டு. எனினும் அடக்க முடியாத சிரிப்புடன் நாங்களும் கட்டிப்புரண்டோம். எங்களில் ஒருவர் சாதாரண விஷயத் திற்கே அதிகமாய்ச் சிரிப்பவர். கல்சுமக்கும் மனிதர் கூட்டத்தைப் பார்த்ததும் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். செவ்வா யுலகப் பெண்ணொருத்தி ஒரு கையில் தன் ஆண் குழந்தையைப் பிடித்தபடி மற்றொரு கையில் தலையில் பாராங்கல்லைப் பிடித்தபடி நடந்தாள். குழந்தையின் தலையிலும் ஒரு கருங்கல் இருந்தது. விழாவிற் கலந்து கொள்ள அவள் விரைவாய் நடந்தாள். குழந்தையின் தலைச்சுமை கீழே வீழ்ந்தது. தாய் அதைத் தூக்கி அவசரமாய்ப் பிள்ளையின் தலையில் வைத்தாள். அவசரமாய் நடந்தாள். எங்களில் அதிகமாய்ச் சிரிக்கும் நண்பர் இந்தக் கல்லை எங்கே எடுத்துப் போகிறீர்கள் என்றுகேட்டார். அவளுக்கு எங்கள் பாஷை புரிய வில்லை. எங்களை மாத்திரம் அவள் கவனித்தாள். உடனே வீதியின் இருபக்கத்திலும் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த கற்களில் ஒன்றைத் தூக்கி வந்து எங்களில் ஒருவர் தலையில் வைத்தாள். பிறகு, மற்றொரு கல்லை மற்றொரு நண்பர் தலையில்! தடுத்தால் உதைவிழக் கூடுமென்று நாங்களும் பெரிய பெரிய கற்களைத் தலைகளில் சுமந்து கொண்டோம். எங்கள் தலையில் கல்லைச் சுமத்திய பெண் - அதனோடு சென்றுவிட வில்லை. நாங்கள் கறுப்பு நிறமாய் இருப்பதை அவள் உற்றுக் கவனித்தாள், ஓடினாள். தன் இனத்தாரோடு சொன்னாள். எங்களுக்கோ பயம்! செவ்வாயுலகம் சிறிது நேரத்தில் எங்கள் பக்கம் திரும்பிற்று. அவர்கள் எல்லோரும் நாங்கள் கறுப்பு நிறமா யிருப்பதையும், குட்டை வடிவமாயிருப்பதையும் கவனிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் எந்தப் பக்கமாக ஓடி - எப்படித் தப்பி - ஆகாய விமானத்தை அடைந்து செவ்வாயுலகை விட்டுப் பறப்பது என்று நினைத்தோம், அவர்களில் சிலர் எம்மை நெருங்கினர். ஏதோ சொல்லினர். அர்த்தம் புரியவில்லை. நாங்கள் அதற்கு விடையாக - வானத்தைக் காட்டினோம். கைச் சாடைகள் வளர்ந்தன. ஊமை நாடகம் நடந்தது. எங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்ற விஷயத்தை நாங்கள் சீக்கிரம் தெரிந்து கொண்டோம், நாங்கள் கொஞ்ச நேரத்தின் பின் மெதுவாய் எங்கள் தலையில் ஏற்றப்பட்ட கற்களைக் கீழே இறக்கினோம் அதற்காக அவர்கள் எம்மைக் கோபிக்கவில்லை. இதனால் நாங்கள் வானத்தி லிருந்து செவ்வாயுலகத்துக்கு வந்தோம் என்று குறிப்பிட்டதை அவர்கள் ஒருவாறு கண்டறிந்து கொண்டார்கள் என்று நிச்சயித்தோம். பிறகு அவர்கள் எங்களை உணவு அருந்தச் சொன்னார்கள். சிலவிதப் பழங்கள் பலவிதக் கிழங்குகள் தந்தார்கள். புசித்தோம்; ஒருவித ருசியாய் இருந்தன. இரண்டு மூன்று நாட்கள் சென்றன. எங்கள் ஆகாய விமானத் தின் உபயோகத்தை நாங்கள் காட்டினோம் எங்களிடம் அவர்கள் பக்தி விசுவாசம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனாலும், நாங்கள் கல்சுமக்காதிருந்தது பற்றி அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை; இவ்விதம் இரண்டு மாதங்கள் தீர்ந்தன. நாங்கள் அவர்கள் பேச்சை அறிய ஆரம்பித்தோம். அவர்களும் நாங்கள் பேசுவதைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். செவ்வாயுலக மக்கள் கல்லைச் சுமந்து கொண்டிருக்க என்ன காரணம்? - நூதனமான காரணம் ஒன்றுமில்லை. அது கடவுள் ஏற்பாடு என்று அவர்கள் சொன்னார்கள். அந்த ஏற்பாட்டை வற்புறுத்தும் இதிகாசங்கள், புராணங்கள், மற்றும் சாதிரங்கள் எல்லாம் சொன்னார்கள் ஆகக் கூடி கல்லைச் சுமப்பது கடவுள் ஏற்பாடு. சிரிப்பைத்தான் எம்மால் அடக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் சிரிப்பது போல் அவர்கள் இரண்டு பங்கு சிரித்தார்கள். சிரித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் சிரிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொன்னார்கள். நாங்கள் கல்லைச் சுமக்காமலிருப்பது ஒன்று. கல் சுமப்பவர்களைப் பார்த்து நாங்கள் சிரிப்பது மற்றொன்று. செவ்வாயுலகின் பத்திரிகைகள் எல்லாம் எங்களைக் கேலி செய்தன. எம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் விழுந்து விழுந்தும் புரண்டு புரண்டும் சிரித்தார்கள், இதற்கிடையில் ஒருநாள் - அங்குள்ள கிழங்குகளும் கனிகளும் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாததால் நாங்கள் இங்கிருந்து கொண்டுபோன அரிசியைச் சமைத்துச் சாப்பிட எண்ணிச் சமைக்க ஆரம்பித்தோம். எங்களில் ஒருவர் பிராம்மணர். அவர் சமையல் பண்ணத் தனியிடத்தில் மறைப்புத் திரை கட்டினார். மற்றொருவர் வேளாளர். அவர் ஒரு பக்கம் மறைவாகச் சமைத்தார். முகமதியர் ஒருவர் - அவர் ஒருபுறம் சமையல். கிறீதவர் ஒருவர். அவர் ஒருபுறம். நாயுடு ஒருவர். அவர் மற்றொருரு புறம். இன்னொருவர் ஆதிதிராவிடர். அவர் ஒரு புறம். அனைவரும் சமையல்களை முடித்து விட்டோம். ஒரு பிராமணர், சைவர், நாயுடு மூவரும் வாழையிலையைத் தேடிக் கொண்டு வெளியிற் சென்றோம். மற்றவர் உண்கலங்களை மண் கொண்டு துலக்கிக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள ஓர் வீட்டு மிருகம் குணத்தில் பூனையையும், உருவத்தில் குரங்கையும் பருமனில் ஒரு பலாப்பழத்தையும் ஒத்தது. அது ஆதிதிராவிடர் சமைத்து வைத்திருந்த சோற்றைப், பாத்திரத்தோடு தூக்கிப் போய்ப் பிராம்மணர் சமையலோடு வைத்து விட்டது. பிராமணர் வைத்திருந்த ரசத்தை மாத்திரம் கிறீதவர் சமையலுடன் கொண்டு போய் வைத்தது. பிராம்மணர் வந்து பார்த்தார். இங்கு வந்தும் பறையன் தன் போக்கிரித் தனத்தை விடவில்லையா என்றார். ஆதிதிராவிடர் நண்பர்க்கு இது பொறுக்க முடியவில்லை. பிராமணர் கன்னம் கிழிந்து போயிற்று. மீதி யுள்ள நாங்கள் இருகட்சியிலும் சேராதிருக்க முடியவில்லை. நடந்தது சண்டை; சிரித்தது செவ்வாயுலகு! எம்மைச் சுற்றிலும் செவ்வாயுலக மக்கள். மற்றவரும் எங்கள் கோலத்தைக் காண வந்து கொண்டிருந் தார்கள். இது தெரியாதிருப்பவர்களும் அழைக்கப் பட்டனர். எங்கள் கைச்சண்டை சோர்ந்து போனபின் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. இந்த இரண்டாவது அத்தியாயம் செவ்வாயுலகத்தைச் சிரிப்புலகமாக்கி விட்டது. இவர்கள் சிரிப்பதற்காக நாங்கள் கோபிப்ப தென்றால் எங்கள் சண்டையில் எமக்குள்ள ஊக்கத்தையல்லவா குறைத்துக் கொள்ள வேண்டும்? செவ்வாயுலக மனிதர் சிலர் விலக்கினார்கள். அவர்கள் எம்மை விலக்காவிட்டாலும் அதற்கு மேல் நாங்கள் சண்டை போட்டிருக்க முடியாது. கைச்சண்டையாலும், வாய்ச்சண்டையாலும் சோர்ந்து போனோம். பிராம்மணர் - கோபமாய்ச் செவ்வாயுலக மக்களைப் பார்த்து, ‘எனக்கு மாத்திரம் ஒரு தனி வீடு கிடைக்குமா? என்றார். செவ்வா யுலகினர், ஏன்? v‹d fhuz«? என்று விவரமாய்ச் சொல்லும்படி வேண்டினார்கள். நாங்கள் அனைவரும் விவரத்தைச் சொன்னோம். பிராம்மணன் உயர்வு. அவன் கடவுளின் முகத்தில் பிறந்தவன். ஆதிதிராவிடன் மட்டம். தொட்டால் தீட்டு... இந்த வரிசையில் எங்கள் புராணம், இதிகாசம், சாத்திரங்கள், வேதங்கள், சமயங்கள் எல்லா வற்றையும் சொன்னோம். ஆகக் கூடி கடவுள் ஏற்பாடுதானே என்று செவ்வாயுலகினர் கேட்டனர். ஆம், ஆம் என்று சொன்னோம். செவ்வாயுலகினர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்: எங்கள் கடவுளின் ஏற்பாடு மிக்க நல்லதாயிருக்கிறது. நாங்கள் தலையில் கல்லைத் தூக்கி வைத்துக் கொள்வது மெய்தான். அந்தோ! நீங்கள் உங்கள் தலையில் தூக்கி வைத்துள்ள கற்கள் மிக்க ஆபத் தானவை. சண்டை விளைப்பவை. எங்கள் கற்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆயினும் நாங்கள் போகுமிடத் திற்கெல்லாம் எம் தலையோடு அக்கற்கள் வருகின்றன. உங்கள் தலையில் நீங்கள் சுமக்கும் கற்கள் கண்ணுக்குத் தெரியவில்லை; ஆயினும் அவைகள் உங்களை ஆகாத வழியிலெல்லாம் செலுத்திக் கைகால்களை யெல்லாம் முறிக்கின்றன. மேலும், செவ்வாயுலகினர் எமக்குச் சொல்லியவை:- ஓ! பூலோகத்தார்களே! உங்கள் தலையில் நீங்கள் சுமந்துள்ள சாதி ஏற்பாடு, மத ஏற்பாடு முதலிய கடவுள் ஏற்பாடு, என்னும் பாராங் கற்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அச்சுமையால் நீங்கள் சண்டையிட்டுப் பிரிவுபட்டிருக்கிற மாதிரியைப் பார்த்தோம். நாங்கள் இரக்கங் கொள்ளுகிறோம். அக் கண்ணுக்குத் தெரியாத சுமையை இறக்கி வையுங்கள். இறக்கிப் போடாத வரைக்கும் நீங்கள் உங்கள் பூமியையடைவது எப்படி? - புதுவை முரசு, 5. 1. 1931  10. பகுத்தறிவுக்குத் தடை மேலூர்க் கிராமம் மிக்க வளமுள்ளது; மிக்க பணக்காரர் நிறைந்த ஊர். அவ்வூரில் பல சந்தர்ப்பங்களில் சரியாய் ஒரு வருடகாலத்தில் ஒரு லக்ஷத்து முப்பதினாயிரம் ரூபாய் திருட்டுப் போயிருக்கிறது. ரொக்க வகையிலும் நகை வகையிலும். இதற்கு மேலும் ஒருநாள் அதிகாலை முதற் கோழி கூவிற்று. கண்ணு ரெட்டியார் வீட்டு வேலைக்காரி தெருக்கதவைத் திறந்தாள். வீட்டிற்கெதிரிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் சாணம் எடுக்கப் போனாள். அச்சமயம் வீட்டின் உள்ளிலிருந்து ஓர் ஆள் கையில் ஒரு சிறு மூட்டையோடு வெளிப்பட்டான். அவன் கிழக்கு வீதியை நோக்கி விரைவாக நடந்தான். வேலைக்காரி, வீட்டு ரெட்டியார் போகிறார் என்று நினைத்தாள். அடுத்த நிமிஷம் வீட்டு ரெட்டியார் வெளியில் வந்தார்! வேலைக்காரிக்குச் சந்தேகம். அதோ - வீட்டிலிருந்து கீழ வீதியாக ஓர் ஆள் போகிறார். அவர் யார் பாருங்கள்! இதைக் கேட்டதும் ரெட்டியார் திடுக்கிட்டார். ஆளைத் தொடர்ந்து ஓடினார். திருடன் பெத்த பெருமாள் ஆலயத்தில் நுழைந்தான். அவன் மூலதானத்தில் நுழைந்ததையும் ரெட்டியார் இரண்டு கண்களாலேயும் நன்றாய்ப் பார்த்தார். மூலதானம் திறந் திருந்தது. விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. பரபரப்போடு, ஐயரே, ஐயரே! மூல தானத்தில் திருடன் வந்து நுழைந்தான். அவனைப்பிடியுங்கள் என்றார். மூலதானத்தில் பார்ப்பனரல்லாதவர் போகக்கூடாதல்லவா? ஐயர், என்ன ரெட்டியார்வாள்! நான் தான் இருக்கிறேன். பெருமாள்தான் இருக்கிறார்; தினம் இப்படித் தான் பலர் வந்து கேட்கிறார்கள். விஷயம் இன்னதென்று புரியவில்லை. காற்று சேஷ்டையாய் இருக்கலாம்; அந்தக் காற்றானது கோயில் மூலதானத் தில் நுழைவது விந்தை என்றார். ரெட்டியாரின் சந்தர்ப்பம் சாதிரத்தை மீறச் செய்துவிட்டது. அவர் உடனே மூலதானத்தில் நுழைந்து திருடனைத் தேடினார். திருடன் இல்லை. உள் நுழைந்தவன் தப்பியோட வேறு வழியுமில்லை. திகைப்படைந்த ரெட்டியார் வீட்டிற்குத் திரும்ப வேண்டியது தான் பாக்கி. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மற்றும் அநேக ரெட்டிமார் - போலீகாரர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மூலதானத்து ஐயர் வெளியிற் போகாமலும், வெளி மனிதர் மூலதானத்திற்குப் போகாமலும் காப்பு ஏற்படுத்தப்பட்டது. பிறகு மூலதானம் நன்றாய்ச் சோதிக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சி; மற்றும் நடவடிக்கை! ஒன்றும் பயனில்லை. திருடன் கோயிலின் மூலதானத் திற்குள் புகுந்தான் என்பதே சுத்த பொய் என்று ஏற்பட்டது. ஆனால் இம்முடிவு ஜனங்களுடையது, பறிகொடுத்த ரெட்டியாருக்கோ கெட்ட காற்றின்மேல் (பசாசின் மேல்) அதிக சந்தேகம். சில நாட்கள் சென்றன. பெத்த பெருமாள் என்ற தொடரில் பெத்த என்பது தெலுங்குப்பதம். பெரிய என்பது அதன் அர்த்தம். அந்தப் பெரிய பெருமாள் விக்ரகம் மிகப் பெரியதுதான். அது கிடந்த கோலமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. 50 வருடங்கட்கு முன் அது பூமியில் கிடைத்தது. அப்போது - தற்கால அர்ச்சகப் பிராம்மணரின் தகப்பனார் இருந்தார். அவர் செத்துப்போன பின் தற்காலத்தார் அமைந்தார். பெரிய நாராயண ஐயங்கார். சனிக்கிழமை வந்தது. காலை 10 மணி, கோயிலில் கூட்டம், நாராயண ஐயங்கார் - பெத்த பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணுகிறார். ஐயங்கார் வீட்டைப் பரிசோதனை செய்த சர்க்கார், கோயிலுக்குள் புகுந்தார்கள். வெள்ளைக்கார உத்தியோகதர் உட்பட! ஓர் உத்தி யோகதர், ஐயங்கார் சுவாமிகளே! மூலதானத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார். இது பயனற்ற வார்த்தை ஐயர் சாத்திரம் படிக்கத் தொடங்கினார். சர்க்கார் உட்புகுந்து ஆராயத் தொடங்கினார்கள். பக்தர்கள் முணுமுணுத்தார்கள். அர்ச்சகர், அக்ரமம், அக்ரமம் என்றார். சர்க்கார் செய்கை அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. உண்மை யறிவதே நோக்கமாக வந்த உத்தியோகதர்கள் மேலும் சொன்ன தாவது: பெத்த பெருமாள் விக்ரகத்தின் உட்புறத்தை ஆராய வேண்டும். இதற்கு, பெத்த பெருமாள் கடவுள் என்று மாத்திரம் அறிந்துள்ள ஜனங்கள், “சாமியை - உடைப்பதோ!”- என்று சொல்லி வருந்தினர். பிறகு, பெத்த பெருமாளின் தலை திருகப்பட்டது. திருவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாமான்கள்; நோட்டுகள்; நகைகள்; கத்திரிக் கோல் ஒன்று; 6 தோட்டா போட்ட ரிவால்வர் ஒன்று; கடைசியாய்க் களவு போன ரெட்டியார் வீட்டுப் பணமுடிப்பு. இதன் பின் பக்தர்களின் கோபத்திலிருந்து ஐயங்காரைக் காப்பாற்றுவது அருமையாகி விட்டது. இத்தனை நாள் கடவுள் - சாமி - தெய்வம் - என்ற பெயர் மயக்கத்தால் அப்பெயர்களையுடைய மனிதன் - பொருள் - செயல் - இவைகளின் உட்புறத்தை அலசிப் பார்க்க இந்திய மக்கள் கருதவில்லை. பகுத்தறிவு செத்துப் போனதற்குக் கடவுட் கொள்கை காரணம் என்க. பூமியைப் பூமிதேவியென்றும், ஆகாயத்தை ஆகாய வாணியென்றும், ஜலத்தை வருணபகவான் என்றும், நெருப்பை அக்கினி பகவான் என்றும், காற்றை வாயு பகவான் என்றும் கொண்டாடும் இந்திய மக்கள் அப்பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உட்புகுந்து ஆராய, அவர்கள் கருத்தைச் செலுத்த முயன்றதேயில்லை. பஞ்சபூதங்களுக்குத் தொண்டர் ஆனார்கள். ஆனால் பகுத்துப் பகுத்துப் பொருளின் உண்மையறியும் கூட்டத்தினருக்கு அப்பஞ்ச -பூதங்கள் வேலை செய்யும் விதத்தைக் காண்கிறோம். தந்தித் தபால், புகைவண்டி, ஆகாய விமானம், தூர தரிசனம், போலி மனிதன், இமயமலை ஆராய்ச்சி, செயற்கை மழை, செயற்கை வெயில் ஆகிய இன்றைய அபூர்வ - வாழ்க்கை விநோதங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து அவைகளை அடிமை யாக்கியவர்களால் ஏற்பட்டவை. திருடன் தான் திருடிய பணம் வைக்கும் பெட்டிக்குப் பெத்த பெருமாள் என்று பெயர் இருந்தால் பகுத்தறிவுள்ளவன் பெத்தபெரு மாளின் தலையைத் திருக வேண்டியது ஞாயம். ஊரிற் கொள்ளை போன பொருள்கள் உடையவர்களிடம் கணக்குப் பார்த்து ஒப்புவிக்கப்பட்டது. - புதுவை முரசு, 2. 2. 1931  11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் மொட்டை முருகன் தெருக் கூத்தாடி. அவன் ராசா வேஷங்கட்டி ஒரு பாட்டுப்பாடி, கரகரவென்று சுற்றிப் பழயபடி தன் சிம்மாசனமாக அமைந்திருக்கும் குந்தாணியின் மேல் உட்கார்ந்தால் அடடா என்னமாயிருக்கும்! என்று தெருக்கூத்துப் பிரியர்கள் பேசிக் கொள்வார்கள். காடைக் கிராமத்தில் ஒரு நாள் தெருக்கூத்து நடந்தது. மொட்டை முருகன் சல்லிய ராசாவாக வேஷம் கட்டப் போகிறான் என்று அண்டைக் கிராமத்துச் சனங்கள் அதிகமாய் வந்து கூடிவிட்டார்கள்! உள்ளூர்வாசிகள் மாலையிலேயே படுக்கையும் வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்புப் பல்லாய்களும் கையோடு எடுத்துக்கொண்டு முன்னிடம் தேடிக் கொண்டார்கள். சல்லியராசா வேஷம் வரும் சமயம் வந்தது. சனங்கள் எதிர்பார்த்த வண்ணருமிந்தார்கள். வேஷம் கட்டநேரம் ஆகிறதால் இடையில் கட்டியக்காரன் வேஷம் வந்தது. பிறகு சல்லிய ராசா வந்தார். ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன காரணமென்றால், மொட்டை முருகன் சல்லியராசா வேஷங் கட்டவில்லை. வேறு ஒருவன் அந்த வேஷங் கட்டிவந்தான். சனங்கள் வருத்தப்பட்டார்கள். உடனே கட்டியக்காரன் இதை அறிந்து சனங்களுக்கு மொட்டை முருகன் இப்போது வரத் தோதுப்படாது. சல்லியன் சண்டை போடும்போதுதான், அந்த மொட்டை முருகன் அந்த வேஷங் கட்டமுடியும் என்றான். பிறகு சல்லியன் சண்டை நேரம் வந்தது. மொட்டை முருகனைப் பார்க்க ஆவலாக இருந்தனர் சனங்கள். இந்தச் சமயத்தில் வேஷங் கட்டுகிற இடத்தில் நடந்தது என்ன வெனில், ஒருவன் மொட்டை முருகனைப் பார்த்து என்னடா மொட்டை! உன்னை எவ்வளவு சனங்கள் எதிர்பார்க்கிறார்கள். மெதுவாக எழுந்திரு! வேஷம் கட்டிக்கொள்! என்றான். இன்னொருவன், என்னதான் கள்ளைக் குடித்தாலும் இப்படியா? நான்கூட இப்போது குடித்து விட்டுத்தான் இருக்கிறேன். vGªâU V bkh£il! மொட்டை மெதுவாக எழுந்தான். வேஷங் கட்டியாய் விட்டது. இன்னொரு பழங்குடியன், மொட்டைக்கு அதிக மயக்காய் இருக்கிறது; மோர் இருந்தால் கூழ் இருந்தால் கொண்டு வந்து அதனோடு கரைத்துக் கொடுத்தால் மயக்கமும் தீரும். உடம்புக்கும் தெம்பு (பலம்) உண்டாகும் என்றான். உடனே மோருக்கும் கூழுக்கும் ஆள் அனுப்பப்பட்டது. ஆயினும் மொட்டை முருகன் அதற்குள் வேஷங் கட்டிக்கொண்டு சபையில் வந்து தேரை விட்டுக் கீழே குதித்தான். என்னும் பாட்டின் இந்த முதல் வரியைச் சொல்லிக்கொண்டு தேரிலிருந்து கீழே குதிக்கும் பாவனையாக ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்தில் திடீரென்று குதித்தான் (சல்லிய வேஷங் கட்டிய மொட்டை முருகன்). குதித்தவன் எழுந்திருக்க முடியவில்லை. உட்காரமுடிந்தாலும் பாதகமில்லை. புளித்தகள் ஆளைப் படுக்க வைத்துவிட்டது. நல்ல வேளையாக அதற்குள் மோரும் கூழும் வந்துவிட்டது. எடுத்து வந்தவன் அடடா என்று ஓடி வந்து சல்லிய மகாராஜனிடம் அந்தக் கூழில் அந்த மோரை ஊற்றி இந்தா என்றான். சல்லிய மகாராஜா எழுந்தார். தம்மிடம் கொடுத்த கூழ்-மோர் இவைகளைப் பார்த்தார். கையைவிட்டுக் கரைத்தார். இதற்குள் வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவன் எழுந்து, என்னாங்காணும் கூத்தாடிகளே! சல்லியராஜன் தேரை விட்டுக் கீழே குதித்தவுடன் இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று கேட்டான். அதற்கு, குடிமயக்கத்திலிருந்த மொட்டை முருகனாகிய சல்லியராஜன் உடனே எழுந்து, தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராஜன், மோரை விட்டு கூழைக் கரைத்தான் என்று பாடினான். சல்லியராஜன் கௌரவம் வெகு நன்றாயிருக்கிறது. குடிவெறி யில் அவர் மோரைவிட்டுக் கூழைக் கரைக்கிறார் என்று ஜனங்கள் சொல்லி நகைத்தார்கள். அதுபோல, நமது கனம் சி.பி.ராமசாமி ஐயர் வைசிராய் நிர்வாக சபை லா மெம்பர் தானமென்னும் தேரிலிருந்து சென்னைக்குக் குதிக்கிறார். அவர் வருணாச்சிரம மயக்கமுடையவர். மோரை விட்டுக் கூழைக் கரைக்கப் போகிறார். அறிவுள்ள ஜனங்கள் வேடிக்கை பார்த்து வருவார்கள். கனம் சி.பி.ராமசாமி சென்னைக்கு வருவதையும், பார்ப்பனப் பசங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதையும், சூழ்ச்சி செய்ய எண்ண மிடுவதையும், இதற்காக ஐயரை வானளாவப் புகழப் போவதையும், காணுகின்ற ஜனங்கள் ஐயர் சல்லிய மகாராசாவாக இருந்தாலும் நமது ஐயர் ஐயர்தான் என்ற உணர்ச்சியை இழக்கக் கூடாது. பார்ப்பன ரல்லாதவர்கள் மலைக்க வேண்டாம். அந்தக் காலம் மலையேறி விட்டது. சுதேசமித்திரன் அபிப்பிராயப்படி பார்ப்பனரை நிமிர்த்திப் பார்ப்பனரல்லாதாரைத் தரைமட்டமாக்குவது பார்ப்பனர் ஒவ்வொரு வருக்கும் முழுநோக்கமாதலால், ஏற்கனவே கனம் சி.பி.ரா. அவர்கள் மெம்பர் பதவியடைந்ததை கனம் சி.பி.ரா. தியாகம் பண்ணுகிறார் என்று சுதேசமித்திரன் சொல்லிற்று. சாரதா சட்டத்தை ஒழித்துவிட முடியுமா? சு.ம. இயக்கத்தை ஒழிக்க முடியுமா? நம் பார்ப்பனருக்கு ஏதாவது வேலை பார்த்துக் கொடுக்கிறீர்களா? என்பது கேள்வி. பார்ப்போம், வேலை உறுதியாகட்டும் என்றது பதில். - கிண்டற்காரன் - புதுவை முரசு, 3. 8. 1931  12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின் கடிதம் அமெரிக்கா, 2. 11. 30 திருமிகு, சுயமரியாதைக்காரர், S.R.V. அவர்கட்கு வந்தனம். நான் என் சொந்த முயற்சியில், தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். தென்னிந்தியாவிலுள்ள என் நண்பர்கள், எனக்கு அங்கு நடைபெறும் தமிழ்ப் பத்திரிக்கைகளை அனுப்பி வருகிறார்கள். நான் ஓர் உயர்தர வைத்தியனாயிருப்பதோடு, உலக மக்கள் ஒற்றுமையுற்று முன்னேற்றம் அடையவேண்டுமென்ற கவலையும் உடையவன். தங்கள் பத்திரிக்கையை நான் வாசித்ததில் - இந்தியாவில் இந்து வென்ற ஓர் வகையாருக்கு ஏற்பட்டிருக்கும் நெற்றிக் குறிகளை அகற்றுவதில் அநேகப் பெரியார்கட்குக் கவலையிருந்து வருவதாய் அறிந்தேன். நெற்றிக் குறிகளை அகற்ற என்னால் முடியும். இக் குறிகளை அகற்றினால்தான் மனிதரில் பேதம் நீங்கும் என்று, நீங்கள் மிகுதியும் உழைத்து வருவதை நான் பாராட்டுகிறேன். தக்க உபகரணங் களுடன் நான் இந்தியாவுக்கு வர உத்தேசம். வரும் செலவு என்னுடையது. அனுப்பும் செலவு தங்களுடையது. உடனே தந்தி மூலம் பதில் தேவை. தங்கள், K.R. பதில் தந்தி புதுவை 10.1230 கனம் டாக்டர், K.R. அமெரிக்கா. உடனே தக்க உபகரணங்களுடன் புறப்பட்டு வரவும். தக்க சம்மானம் நீங்கள் பெறுவீர்கள். எங்கள் நன்றியறிதலும், தங்கட்கு எந்நாளும் உரியதாகும். S.R.V. அமெரிக்கர் தந்தி சுயமரியாதைக்காரர், S.R.V. வேண்டிய கருவிகள் சகிதம், நான் புறப்பட்டுவிட்டேன். பிரான்ஸுசுக்கு நேரே போகிறேன். அங்குச் சில கருவிகளை ஏற்பாடு செய்துகொண்டு, 5.331-ல் புதுவைத் துறைமுகத்தில் இறங்குவேன். துறைமுகத்தில் என்னை வரவேற்பீர்கள் என்று நம்புகின்றேன். K.R. 5.3.31 காலை 7 மணிக்குப் புதுவைக் கடற்கரைப் பாலத்தில் எள் விழ இடமில்லாதபடி ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது. S.R.V. அவர்களும் மற்றும் சுயமரியாதைக்காரர் சகிதம் அமெரிக்கர் வரவுக்குக் காத்திருந்தனர். அநேக வெள்ளையர்கள் கப்பலிலிருந்து புதுவைத் துறைமுகத்தில் இறங்கிய வண்ணமிருந்தார்கள். ஆனால் அமெரிக்க டாக்டர், K.R. அவர்கள் கையில், ஒரு பெரிய பெட்டியுடன் திடீரென்று கூட்டத்தின் எதிரில் தோன்றி, நான்தான் K.R.’ என்றார். உடனே கே.ஆர்.அவர்களை அங்கு போட்டிருந்த ஓர் பெஞ்சியின்மீது ஏற்றிக் கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார்கள். S.R.V. வரவேற்புப் பத்திரம் வாசித்தார். டாக்டர் K.R. வரவேற்புக்குப் பதில் சொல்லியதாவது: நண்பர்களே தங்கள் சார்பில் நமது S.R.V. கோரிக்கைப்படி வந்திருக்கிறேன். என்னை அன்புடன் வரவேற்ற தங்கட்கு என் நன்றியுரியது. உங்களில் சிலருக்கு நெற்றியிற் குறியேற் பட்டிருப்பதையும், அதை நீக்கமுயன்றும் முடியாமலிருப்பதை யும் அறிந்து வருந்தினேன். ஏதோ எனக்கு உள்ள வைத்திய ஞானத்தால், அக் குறிகளை நீக்கிச் சொதப்படுத்த முன் வந்தேன். நெற்றியில் ஏற்பட்டிருக்கும் குறிகள் தோலை மாத்திரம் பற்றியதாயிருப்பதையும் அல்லது நெற்றியிருப்பதும் எலும்பை யும் பற்றியதா நான் முதலில் ஆராயவேண்டும். (இல்லை இல்லை என்று கூச்சல்) அப்படியானால் சரி! அக் குறிகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை நான் அறியவேண்டும். அதன்பின் - நான் அறுத் தெடுத்தபின் அவைகள் பின்னும் கிளைக்கின்றனவா என்பதையும் அறிய வேண்டும். (இல்லை இல்லை - என்ற கூச்சல்) அப்படியானால் சரி! அதன்பிறகு அந்தக் குறிகளை அறுத்த பின், அறுத்த இடத்தில் ஏற்படும் இரணத்தைச் சுலபமாக ஆற்ற வகை தேடவேண்டும் (இல்லை இல்லை என்ற கூச்சல்) அப்படியானால் சரி! - முதலாவதாக நான் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், நெற்றிக் குறியுடைய மக்கள் பிறக்கும் போதே அக்குறிகள் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலமாய் இருக்கின்றன. அதன்பிறகு எப்போது அதில் கலர்கள் ஏற்படுகின்றன என்பதேயாகும். (இல்லை இல்லை என்று கூச்சல்) அப்படியானால் சரி. இதற்காக நான் ஏராளமான உபகரணங் களுடன் வந்துள்ளேன். உள்ளூரில் உள்ள சில டாக்டர்களையும் என்னுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள். அக்குறிகளை ஆப்ரேசன் (அறுத்தல்) செய்யு மாதிரியையும், அறுத்தபின் ஔஷதங்களை உபயோகிக்க வேண்டிய மாதிரிகளையும் அவர்கட்குக் கற்றுக் கொடுத்து விடுகிறேன். என் வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும். (இல்லை, இல்லை என்று கூச்சல்) அப்படியானால் சரி. நான் மாத்திரமே எல்லாருடைய நெற்றிக் குறிகளையும் அறுத்துச் சொதப்படுத்தி விடுகிறேன். (ஜனங்கள் ஆரவாரச் சிரிப்பு) இதற்கிடையில் ஆதிகர் ஒருவர் எதிர்வந்து - ஐயா, அமெரிக்கரே! நெற்றிக் குறிகள் என்றால் இன்னதென்றே நீங்கள் தெரிந்துகொள்ளாமல், பாபம், அமெரிக்காவிலிருந்து இங்கு வந்திருக் கிறீர்கள்! அதிலும் உங்களைப் பார்த்தால் அமெரிக்கராய்த் தோன்ற வில்லை. அங்குக் கறுப்பு மனிதர் இருப்பதாய்க் கேள்வி. அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று ஒருவாறு நினைக்கிறேன். அன்றியும் இதைக் கேளும்; கடவுள்களின் ஏற்பாடுதான் மதங்கள்; மதங்களின் ஏற்பாடுதான் நெற்றிக் குறிகள். ஒரு மதத்தினர் ஒருவகைக் குறி இடுவதுண்டு. மற்றொரு மதத்தவர் மற்றொரு வகைக் குறி தரிப்பதுண்டு. ஒன்றின் பெயர் நாமம். மற்றொன்று திருநீறு. இவை தினம் தினம் அவர்ரவர்களாலேயே தங்கள் தங்கள் நெற்றியில் நாமக் கட்டியிலும், பசுஞ்சாணி பமத்தாலும் இடப்படுகின்றன. இவைகளை ஆப்ரேஷன் செய்ய நீர் கத்திப் பெட்டியும், மருந்து வகைகளும் கொண்டு வந்து விட்டீரே! உம் அறிவு ஒரு பக்கமிருந்தாலும், உம்மை அழைத்த சுயமரியாதைக் காரரின் அறிவு மிகவும் மெச்சத்தக்கது. அந்த அறிவைப் பொருட்காட்சி சாலையில்தான் கொண்டுபோய் வைக்க வேண்டும். (இதற் கிடையில் சில சுயமரியாதைக்காரர்கள். அதிகமாய்ப் பேச வேண்டாம் என்று கூச்சலிட்டனர். (ஆஸ்திகர் சிலர் உங்கள் யோக்யதை தெரிகிறது. அதிகமாய்ப் பேசினால் என்ன? என்று கேட்டனர்) இதற்குள் சு.ம. S.R.V. ஏதோ சொல்ல எண்ணிக் கையமர்த்தினார். (வெட்கம்! வெட்கம்! என்ற கூச்சல்; பெருத்த ஆரவாரம்) S.R.V. அவர் களுக்கு முனம் சின்னதாய்ப் போய்விட்டது. S.R.V. பேசமுடியவில்லை. அதன்பிறகு டாக்டர் K.R. அவர்கள் ஆசனத்தில் ஏறி, நண்பர்களே! உங்களைச் சில கேள்விகள் கேட்க எண்ணுகிறேன். தயவுசெய்து அக் கேள்விகளைக் கேட்கும்படி எனக்கு அனுமதி தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டார் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. டாக்டர் K.R. சொல்லுகிறார்... ... ‘கடவுள் மனிதர்களை உண்டாக்கினார் என்றும், அந்த மனிதர் வயிற்றில் பிறக்கும் மனிதர்களையும் அவர்தான் உண்டாக்கினார் என்றும் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? (ஆம்; ஒப்புக்கொள்ளுகிறோம் என்ற கூச்சல்) ‘சரி, அதுவுமில்லாமல், மதங்கள் மனிதருக்கு இன்றியமை யாதவை என்று கடவுள்கள் அம்மதங்களை ஏற்படுத்தியதாகவும், அதனால் மனிதர்கள் எல்லாம் மதத்திற்கு அப்புறப்பட்டிருக்கலாகா தென்று அக்கடவுள்களே எண்ணியதாகவும் நீங்கள் நம்புகிறீர்களா? (ஆம் என்ற கூச்சல்) ‘ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் வயிற்றில் பிறக்கும் மற்றொருவனும், அந்த மதத்தையுடையவனாகவே பிறக்கிறான் என்பதை நம்புகிறீர்களா? (ஆம் என்ற கூச்சல்) மதக் குறிகள், கடவுள் சம்மதம் என்று நம்புகிறீர்களா? (ஆம் என்ற கூச்சல்) அப்படி இருக்கையில், நாமமிட்டவனுக்குப் பிறப்பவன் பிறக்குபோதே நாம் இட்டுக் கொண்டுதானே பிறக்கவேண்டும்? உங்கள் ஞாயப்படி பார்த்தாலும் சுயமரியாதைப் பத்திரிக்கைகளின்படி பார்த்தாலும், நீங்கள் சொல்லும் குறிகள் அவ்வப்போது எழுதப்படுவன என்று அந்நிய நாட்டில் இருக்கும் ஒருவன் எப்படி நினைக்க முடியும்? மனிதர்களின் அங்கங்களிற் சிலவற்றிற்கும் நீங்கள் குறிகள் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்! நெற்றியில் இடுகின்ற இவைகட்கும் குறிகள் என்று சொல்லுகிறீர்கள். இதனால் நெற்றிக் குறிகள் என்று நீங்கள் சொல்லுவதை, அயல் நாடுகளில் உள்ளவர்கள் நெற்றியில் பிறவியில் ஏற்பட்ட ஏதோ ஓர் வித அங்கம் என்றுதான் நினைக்க முடியும். நான் முட்டாள்தனமாய் நினைத்ததாய் நீங்கள் கடலிரைச்சல் போல் சிரிக்கின்றீர்கள். நான் நினைத்தது சரி அல்லாமலும், நீங்கள் தினந் தோறும் நெற்றியில் இடப்படுவதுதான் குறி என்று சொல்லுவதை நான் நம்பவுமில்லை. அது பிறவியிலேயேதான் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். நெற்றிக் குறியுடையவர்களை என் கண் எதிரில் காட்டுங்கள்! என்றார். உடனே புதுவை ஒற்றைத்தெரு, மாணிக்கக் கண்ணனையும், முத்தால்பேட்டை முருகேச முதலியாரையும் டாக்டர் எதிரிற் கொண்டுபோய் நிறுத்தினார்கள். உடனே அவ்விருவருடைய நெற்றிக்குறிகளையும், டாக்டர் நன்றாய்க் கவனித்தார். டாக்டர்: நண்பர்களே, இக்குறிகள் இவர்களால் ஏற்பட்டவை அல்ல என்றுதான் தோன்றுகிறது. (அனைவரும் சிரித்து, ‘பின்னென்ன? என்று கேட்டனர்) டாக்டர்: ஏன் சொல்லுகிறேன் என்றால், இவ்விருவர் நெற்றியிலுமுள்ள குறியானது தோலைப் பற்றியதாயில்லை. இன்னும் உள்ளே யிருந்து, அது தொடங்குகிறது. எலும்பைப் பற்றியதாயுமில்லை. இன்னும் உட்புறமிருந்து தொடங்குகிறது. ஊன்றிக் கவனித்தால், இக்குறிகளுக்கும் உள்ளிருக்கும் மூளைக்கும் சம்பந்த மிருக்கிறது! (சுயமரியாதைக்காரரின் சிரிப்பு) இதற்குள் ஆதிகர் ஒருவர் எழுந்து அவ்விருவருடைய நெற்றிக்குறிகளையும் கலைத்துவிட்டு, வெறும் நெற்றியோடிருந்த அவர்களையே டாக்டரிடம் காட்டி, டாக்டரே, மூளைக்கும் குறிகளுக்கும் சம்பந்தமிருக்கிறதென்றீரே. அப்படியானால் இப்போது குறியில்லாமல் போக ஞாயமில்லையே? அதற்கு என்ன சொல்லுவீர்? டாக்டர்: சொல்லுவதென்ன, நாளைக்கு உண்டாய்விடும்? ஆதிகர்: (வெறும் நெற்றியுடனிருந்த இன்னொருவரைக் காட்டி) இவருக்குப் பல வருடங்களாக நெற்றிக்குறியில்லை! டாக்டர்: இருக்கலாம். அவருக்கு மூளை ஒழுங்கான நிலையடைந்து விட்டது! ஆதிகர்: (உடனே அதே மனிதர் நெற்றியில் ஒரு பெரிய நாமத்தைப் போட்டுக் காட்டி) டாக்டரே ஒழுங்குபட்ட மூளையுடையவ ருக்கு, இதோ குறி ஏற்பட்டுவிட்டது. இப்போதாவது மூளைக்கும், குறிக்கும் சம்பந்தமில்லை என்று ஒத்துக் கொள்ளுகிறீரா? டாக்டர்: அதெப்படி? மூளையில் சிறிது முளையிருந்திருக்கும்; நாமம் முளைத்துவிட்டது. (சுயமரியாதைக்காரர்களின் சந்தோஷ ஆரவாரம்) ஆதிகர்: டாக்டர், உமது யோசனையே யோசனை; நீர் ஓர் அந்நிய நாட்டினராயிருந்ததால், உம்மை அதிகமாய்க் கிண்டல் பண்ணி விட மனம் வரவில்லை. அமெரிக்கரும், உம்மைப் போல்தான் இருப்பார்கள்? இன்னொரு பந்தயம் கட்டுகிறீர்களா? அதாவது நீர் எம்மில் ஒருவனுடைய மூளையைப் பரிசோதியுங்கள்? ஒழுங்கான மூளையைக் குறிப்பிடுங்கள்! அதன் பிறகு அவருடைய நெற்றியில் நாமமோ, திருநீறோ ஏற்படுகிறதா இல்லையா, பார்ப்போம். டாக்டர்: ஆஹா! அப்படியே! (கூட்டத்திலிருந்த S.R.V. அவர்களைக் காட்டி) இவருடைய மூளை ஒழுங்கான நிலையில் இருக்கிறது. இவருடைய நெற்றியில் நாமமோ திருநீறோ பார்க்கவே முடியாது! (சுயமரியாதைக்காரர்கள் சபாஷ் என்று ஆர்ப்பரித்தார்கள். ஆதிகர், மூன்றாம் பேது வைத்த மாதிரி விழித்தார்கள்) ஆதிகர்: எம்மைக் கிண்டல் பண்ணுவதற்காகவா வந்தீர்! ஏன் ஓய் சுயமரியாதைக்காரன் மூளைதான் சரியான மூளை, மற்றவர் மூளை சரியானதல்லவென்றா சொல்லி விட்டீர்? உம்! அப்படியானால் என் மூளையை நீர் ஒழுங்கு பண்ண முடியுமா? டாக்டர்: உம்மை மாத்திரமல்லவே: உம்மைப் போன்றவர்களையும் ஒழுங்கு பண்ணத்தானே வந்திருக்கிறேன். ஆதிகர்: என் மூளையை ஒழுங்கு பண்ணாவிடில் உம்மை என்ன செய்வது?? டாக்டர்: உமது மூளை ஒழுங்குபடாவிட்டால் அதைப் பிறகு பொருட்காட்சி சாலையில்தான் வைக்கவேண்டும். நான், எனது ஆயுதம், ஔஷதம் இவைகளை உபயோகப்படுத்திப் பார்க்கிறேன். அதனால் உமது மூளைக்கும், உம்மைப் போன்ற வர்களுடைய மூளைக்கும் என்னவித மாற்றம் உண்டாகிறது என்பதைத் தெரிந்துகொண்டு, பிறகு மூளை ஒழுங்கடையும் அடையாது என்பதை தெரிவிக்கின்றேன். ஆதிகர்: ஓய்! எடுங்காணும் உமது ஆயுதத்தை - மருந்தை - மகா வைத்தியர்! உமக்குத்தான் மூளையில்லை! அந்த ஆயுதத்தையும் மருந்தையும், உமக்கே உபயோகப்படுத்திப் பார்க்கிறேன். உமது கத்தியாலேயே இப்போது ஆப்ரேஷன் பண்ணாமல் விடப் போவதில்லை அப்போதுதான் உமது கிண்டல் உம்மை விட்டு நீங்கும். டாக்டர்: நானே கிண்டல்காரன்தானே! என்னைவிட்டுக் கிண்டல் எப்படித் தொலையும்; இந்தாரும், எனது ஆயுதப் பெட்டி? ஆதிகர், பெட்டியை வாங்கித் திறந்து பார்க்கையில் கட்டுக் கட்டாகப் பிரசுரம் இருந்தது. கூட்டத்தினர் தலைக்கொன்றாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தனர்: பிரசுரத்தில் கண்ட விஷயம் வருமாறு: 5-3.31 காலை வெகு சிரமப்பட்டுப், புதுவைக் கடற்பாலத்தின் மேல், புதுவை முரசு கிண்டற்காரனால் கூட்டப்பட்ட பொதுக்கூட்ட முடிவில் கிண்டற்காரன் வெளியிட்ட பிரசுரம் வாழை மரத்தின் தண்டின்மேல் பட்டைகள் அடுக்கடுக்காய்ச் சேர்ந்திருப்பது போல், இந்து மக்கள் எனப்படுவோரின் மூளையில், கடவுட் குளறுபடியும், மதப் பைத்தியமும் ஆகிய படலங்கள் மூடியிருக்கின்றன. நம்மிடம் சுயமரியாதை மருந்து இருக்கிறது. தின்னக் கசப்பது போலிருக்கும். பத்தியம் தேசபக்திதான் ஒரே வேளையில் குணம் தெரியும். பேரைச் சொன்னாலே நெற்றிக் குறிகள் பறக்கும்! மூளையிலுள்ள கோளாறு தீரும்வரைக்கும், நெற்றிக் குறிகள் கிளைக்கும்! கிளைக்கும்! மற்ற ஆபாசமும் போகமாட்டா! தங்கள் கிண்டற்காரன் (கரகோஷத்தோடு கடற்கரை கூட்டம் முடிந்தது) - புதுவை முரசு, விசேஷ அநுபந்தம், 8. 8. 1931  13. வேல் பாய்ந்த இருதயம் விதவைகள் துயர் ரத்தினமுத்து 25 வயதுள்ள பெண்; இள விதவை. வீட்டில் அவள் குறுக்கில் நெடுக்கில் உலவ முடியாது, அபசகுனமாம். திருக் குடும்பத்துப் படம் மாட்டப்பட்டிருக்கும், கூடத்தின் பக்கம் அவள் காற்றே படலாகாது. அபசகுனமாம்! புதிதாக வாங்கி வந்த பண்டங்களில் அவள் விரல் வைக்கலாகாது. தோஷமாம். இரண்டு புதுப் புடைவை வாங்கி வந்தபோது அதில் ரத்தினமுத்துக்கு வாங்கி வந்ததை அவள் முதலிலேயே எடுத்து உடுத்திய காரணத்தால் தாய் - அடி மூதேவியே என்று ஒருதரம் கேட்டதுண்டு. ரத்தினத்துக்கு ஞாயமாக ஒரு பெண்ணிடம் பெற்றோர் காட்ட வேண்டிய சலுகை தீர்ந்தது. அவள் கலக்கம் அற்றுப் பல பக்கத்திலும் வீட்டில் உலவ முடியாதபடி பல வழிகளும் அடைக்கப்பட்டன. ஆகையால் ரத்தினமுத்து கூட்டில் அடைத்த கிளியானாள்; மேல் மாடியில் ஓர் அறையில் எப்போதும் ஒதுங்கிக்கிடந்தாள். ஆனால் ரத்தினமுத்து இப்படித் தனித்திருப்பதும் அவளுக்குள்ள வருத்தத்தை அதிகப்படுத்தியது. ரத்தினமுத்து படித்த பெண். சுதந்தர புத்தியுள்ளவள். மிக்க அழகுடையவள். அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்ளுவதிலிருந்து இந்த நிலையில் இருந்து வருவதற்குக் காரணம் அவள் இரண்டு கேள்வி கட்குப் பதில் தேடிக் கொண்டிருப்பதே, என் கணவர் இறந்தபின் மீதியுள்ள என் வாழ்நாள் எனக்குக் கசப்பாக்கப்பட்டிருக்கிறது. இக் கசப்புத் தடாகத்திலிருந்து நான் கரையேற மார்க்கமுண்டா? இல்லையா? ஆனால், ரத்தினமுத்து, தயாராயிருக்கிறாள்! இனிமேல்தான் ஒருவனைத் தெரிந்தெடுக்கவேண்டும் என்ற கவலை வேண்டிய தில்லை. ரத்தினமுத்தின் இருதயப் பறவை சுதந்திர உணர்ச்சியைச் சிறிது உபயோகப்படுத்தி எங்கேயோ சென்றது. அப்பறவையோடு வேறொரு வீராதிவீர உள்ளமானது அதனுடன் சேர்ந்து கொண்டது. ரத்தினமுத்தின் மாடிக்கு அருகில் ஜோஸப் வரக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு. இருவரும் தம்தம் பெற்றோரின் எண்ணத்தை முற்றமுடிய அளந்துகொள்ள அவர்கள் நினைத்துப் பிரிவதுண்டு. இது மெய்தான். தமது செய்கையால் முட்டாள் இந்தியாவைத் திருத்த வந்த காதலர், இதில் அவர்கள் மறைவு திறவு வைக்கவில்லை. மனச் சாட்சியுள்ள பெற்றோர். வேண்டுமானால் தம்மைக் கொன்று போடட்டுமே! அந்த வகையால் காதல் பூர்த்தி யாகட்டுமே! இதுதான் அவர்கள் உள்ளம். ரத்தினமுத்து வசிக்கும் மாடியிலிருந்து குனிந்து பார்த்தால் அந்த வீட்டுக்குச் சொந்தமான பங்களா ஒன்று தெரியும். அந்த பங்களாவில் தனியாக ஒரு பள்ளியறை! ரத்தினமுத்துவின் தகப்பனார்! ரத்தினமுத்துவின் தாய்! பிள்ளைகள் பாடசாலைக்குப் போயிருந்தார்கள். ரத்தின முத்துவின் தாய் தந்தை தனி. மாலை சரியாய் 5 மணி தந்தை தனது கண்ணால் ஒரு சேதி சொன்னார். தாய் குழைந்து போனாள். அவ்விருவரும் யாராவது அங்கிருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். இல்லை சபாஷ்! இருவரும் தனி! காற்றில்லை! காற்றில்லை என்று காற்றின்மேல் பழிபோட்டு பங்களாவை நாடிச் சென்றார்கள். முதிய காதலர்கள். நல்ல சந்தர்ப்பம்! ஜோசப் மாடியில் ஏறிவிட்டான்! ரத்தினமுத்தும் ஜோசப்பும் தனி. முந்திய காதலர் பங்களாவில் கைகள் பிணைத்தனர். காதற் பேச்சுக்கள் தங்கு தடையின்றி வெளிவந்தன. அதிலொன்று:- நாம் இருவரும் கூன் வளைந்து புருவம் தரையில் தொங்கும் போதுகூட இருவர் தோளும் இணைந்தபடி இருக்க வேண்டும். பள்ளியறை கூப்பிடுகிறது! முதிய காதலர் சொந்த நினைவு ஒன்றும் இல்லை. காதல் முறுக்கேறிவிட்டது. அந்தோ! அந்தோ! அந்தோ! மாடியில் இளங்களிறும், இளம் பிடியும் (ரத்தினமுத்து ஜோசப்) தமக்கெதிரெதிர், உள்ள காதல் தேன் வெள்ளத்தில் கைவைக்கவும் இல்லை. இவர்களின் இடையில் நின்று மறிப்பது எது? சமூகத்தின் மிருகக் கட்டுப்பாடு! இளங் காதலர் கண்ணீர் விட்டுப் பிரியும் சமயம்! - தாய் தகப்பன் இல்லாமல் ஒரு முத்தமாவது கொடுக்கக் கூடாதா? என்று இரு காதலர் நெஞ்சும் ஒன்றை ஒன்று நோக்கிக் கேட்க ஆரம்பித்தன. விடையும் அதிலேயே இருக்கிறது. உடனே ... ... பங்களாவில் ரத்தினமுத்தின் தாய் தந்தையர் இன்ப வெறியால் பங்களாப் பள்ளியறையை நோக்கி ஓடினர் ஆனால் அவர்கள் காலடியில் இரண்டு உருவங்கள்! அவைகள் கைகோத்தபடி தோன்றின! ரத்தினமுத்தின் தந்தை, தனது காதலியிடம் சொல்லுகிறார்:- இந்த இரண்டு நிழலைப்பார்! மாடியில் ரத்தினமுத்தும் ஜோசபும் ஆலிங்கனம் நடத்துகிறார்கள். உன் மகள் நம் சொல்லைக் கேட்கவேயில்லை... ஆனால்... நாம்... அவர்கட்கு ... ரத்தினமுத்தின் தாய்: இனிமேல் ஜோசப் வராமல் பார்த்துக் கொள்ளுவோம் உள்ளே வாருங்கள்! தந்தை : நாம் இருவரும் சாகும்வரைக்கும் தோளைப் பின்னியபடி இருக்க எண்ணுகிறோமே! நமது இளம் பெண்ணை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ஏடி! என் இதயத்தில் பாயும் ஒருவேல் அவளைப் பெற்ற உன் இதயத்தில் பாயாதிருக்கிறதே! தாய்: அந்தோ! அந்தோ! நான் அப்படிப்படடவள் அல்லவே. இருவரும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஓ! நாம் பள்ளி அறைக்குப் போவோம்! நாம் அவ்விருவருக்கும் அநுமதி தந்து விட்டோம். தாய் தனியாக: அடியம்மா ரத்தினமுத்து! மாடியிலா இருக்கிறாய்! ஜோசபுமா இருக்கிறார். நீங்கள் பேச, கீழே இடமில்லையா? இறங்குங்கள். இதற்கு விடையாக ஜோசப்: நீங்கள் எங்கள்மீது இரங்கிவிட்டீர் போலிருக்கிறது. - புதுவை முரசு, 28.9.1931  14. திருந்திய ராமாயணம்! பால காண்டம் (டெலிபோன் படலம்) மே.த. தசரதன் அழைப்பிற்கிணங்கித், தம் அந்தரங்க ஆலோசனை மண்டபத்திற்குச் சுமந்திரன் என்னும் மந்திரியும், வசிஷ்டன் என்னும் பாதிரியும்; சில பிரபுக்களும், போலீ தலைவரும், மிலிட்டரி தலைவரும் வந்து சேர்ந்தனர். பத்திரிகைப் பிரதிநிதிகள் உள்ளேவிடப் படவில்லை. மே.த. தசரதன், தன் வாயிலிருந்த உக்காவை எடுத்தார். கூட்டத்தினர் உஷாரானார்கள். மே.த. த.பேச ஆரம்பித்தார்: இக் கூட்டம், உத்தியோக தோரணையில் கூட்டப்பட்டதல்ல. எனது பிற்காலத்தில் இந்நாட்டிலுள்ள பாதிரிகட்கும், பிரபுகட்கும் என் காலத்திலிருப்பது போலவே மிக்க செல்வாக்கிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதற்குத் தக்கபடி இப்போது நடந்துகொள்ள வேண்டிய விதத்தைத், தனி முறையில் ஆலோசிக்கவே உங்களை அழைத்தேன். நமது மகத்வமுள்ள வசிஷ்ட பாதிரியாரின் அம்சமாகப் பிறந்த என் மூத்த குமாரன் திரு. ராமன். இந்நாட்டின் சக்கரவர்த்தியாகி விட வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்றார். தன் கையிலிருந்த பென்ஸர் சுருட்டைத் தூக்கி எறிந்துவிட்டுச் சிறிது கோபமாய் ஒரு பிரபு சொன்னதாவது:- சார்! ராமன்மேல் ஜனங்கட்குப் பிரியமில்லை. அவர் மைனராகத் திரிகிறார். குடும்பப் பெண்களில் அநேகர் அவரால் கற்பழிக்கப்படுகிறார்கள். ஆரியராகிய நமது அடிப்படையான எண்ணத்தின்படி, ஆரிய வமிஸத்தார். குடியேறிய இந்நாட்டிற் பரவ வேண்டும். அக்கொள்கைப்படி நீங்கள், வசிஷ்டராதியோர். அம்ஸமாய்ப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வில்லையா? திரு. ராமன் ஏன் இன்னும் அப்படிச் செய்யவில்லை? என்றார். இதைக்கேட்ட வசிஷ்ட பாதிரியார், மிடர்! இக்கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன். ஆயினும் தற்காலம், ராமன் தன் சீதையிடம் சம்பந்தப்படாதபடி, சில காரணத்திற்காகச் சக்கரவர்த்தி பிரித்து வைத்திருக்கிறார். அதனால், ராமன் சிலசமயம் சக்கர வர்த்திக்குத் தெரியாமல், சில பெண்களிடம் சம்பந்தம் வைத்திருப்பான். அந்தப் பெண்களும் இந்நாட்டுப் பழங்குடிகளாகிய தமிழரத்தம் மாறாத பெண்களாவர். அவர்களை ராமன் கலப்பது நல்லதுதான் என்று நினைக்கிறேன். ராமன் விஷயத்தில். ஊரார் துவேஷம் கொண்டிருப்பது மெய். படையும் போலீசும் நம்மிட மிருக்கையில் பயம் என்ன? (கேளுங்கள் கேளுங்கள் என்ற கூச்சல்) மேலும் பாதிரியார், தமது சட்டைச் சாக்கிலிருந்தப் பொடி டிப்பியை எடுத்துக் கொஞ்சம் பொடியை நாசியில் இழுத்துவிட்டுப் பேச ஆரம்பித்ததாவது:- மே.த. தசரதர், இப்போது ராமனுக்குப் பட்டங் கட்டுவதற்குச் சில தடைகள் இருக்கின்றன. அதனால்தான் நம்முடைய ஆதரவை அவர் நாடுகிறார். ஸ்ரீமதி கைகேயியை அவர் மணம்புரிய எண்ணிக், கைகேயி யின் தகப்பனான கேகயனைக் கேட்டபோது, அவன், உனக்குக் கௌசலை முதற் பெண்டாட்டி இருக்க, என் பெண்ணைக் கொடேன் என்றான். அதற்கு மே.த. தசரதர், ஓ, கேகய மன்னரே! நீர் உம் பெண்ணை எனக்குக் கொடுத்தால், உம் பெண் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே ராச்சிய பட்டாபிஷேகம் செய்கிறேன் என்றனர். இதற்குச் சம்மதித்து அந்தப் படியே உடன்படிக்கை எழுதிச் சர்வதேச சங்கத்தில் ரிஜிடரும் செய்யப்பட்டது. இது ஒரு தடையாயிருக்கிறது. இதல்லாமல், சம்பரன் என்னும் தமிழரசனுடன் மே.த. தசரதர் தமது கைகேயி சகிதம் படைகூட்டி யுத்தஞ் செய்யப்போனபோது சம்பரன் கைகேயியைப் பார்த்து ஏ, தமிழ்ப்பெண்ணே! நீ ஆரியனாகிய தசரதனை மணந்ததே தவறு. ஆரியர் தமிழரை அழித்துத், தமது ஆரிய ஆட்சியை ஏற்படுத்த முயல் கின்றனர். அப்படியிருக்க இந்நாட்டுப் பழங்குடியும் தமிழனுமாகிய என்னைக் கொல்ல, நீயும் சம்மதித்தது சரியோ? குலத்தைக் கெடுக்க வந்த கோடாலியே! என்றான். அது கேட்ட கைகேயி. தன் புருஷனையே எதிர்த்தாள். பிறகு, மே. த. தசரதர் தமிழனை எதிர்த்ததும், தன்னையும் தமிழச்சி என மதியாததும் ஆகிய இரு குற்றத்திற்காக மே.த. தசரதரிடம் இரண்டு மன்னிப்புப் பத்திரம் எழுதி வாங்கினாள். அப்பத்திரத்தில், கைகேயி நினைக்கும்போது, சக்கரவர்த்திக்கு விரோதமாகிய இரண்டு கொள்கைகளைக் கைகேயி நடவடிக்கைக்குக் கொண்டு வரலாம். சர்வதேச சங்கத்தின் மேசையில், இப்பத்திரங்களும் இருக்கின்றன. ராமன் பட்டத்திற்கு வருவதில் இவ்வளவு தடைகள் இருந்தாலும், இப்போது நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்வதாக வாக்களியுங்கள். ராமனுக்குப் பட்டங்கட்ட முடியும்! உடனே திரு. சுமந்திரர் எழுந்தார். இதற்குள் சிற்றுண்டியும் பான வதுக்களும் கொண்டுவரப்பட்டன. அனைவரும் விகி அண்டு சோடாவும் பிற உணவுகளும் உண்டனர். எலக்டிரிக் விசிறி முடுக்கப் பட்டது. சுமந்திரர் பிரஞ்சு சிகரெட் ஒன்றை வாயில் வைத்து. முகத்தை மறைத்திருந்த அமெரிக்கன் கிராப் மயிரை மேலே தள்ளி எழுந்தார். அவர் சொல்லப் போவதை அனைவரும் அவாவோடு கேட்க முனைந்தார்கள். திரு. சுமந்திரர் சொல்லுகிறார்:- ஆரியராகிய நம் முன்னோர் இந் நாட்டில் குடியேறிப், படாதபாடுபட்டுத் தமிழரை அடக்கினார்கள். இதற்காக, அவர்கள் பட்டது கொஞ்சமல்ல, தெற்கில் சேர சோழ பாண்டியர்களையும் ஒருவாறு நாம் நம் காலத்தில் தட்டிக் கொடுத்தோ - சம்பந்தம் பண்ணியோ - ஏமாற்றியோ நம் வழிப்படும் நிலையை உண்டுபண்ணி விட்டோம். ஆயினும், லங்கை ஏகாதி பத்தியத்தை, நாம் அழித்துப்போட வேண்டும். திரு.ராமர், பரதர், லக்ஷ்மணர், சத்ருக்னர் ஆகிய நால்வரில், தமிழரை அழிக்க வேண்டும்; ஆரிய ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும்! என்று திரு. ராமரே அழுத்தமாக நினைக்கிறார். ஆதலால், அவருக்கே பட்டம்கட்ட நாம் முயலவேண்டும். ராவண ஏகாதிபத்தியம் அழியுமட்டும், ஆரியர் ஆட்சி நிலைபெறாது. அதனால் நாம், திரு.ராமருக்குப் பட்டங்கட்டுவதில், என்ன கஷ்டம் வந்தாலும் ஏற்கத் தயார்! ஆயினும் என்ன! பரதனுக்குப் பட்டங் கட்டாமல், திரு.ராமருக்குப் பட்டங்கட்டுவதை, பரதனாவது தாயாகிய கைகேயியாவது ஆக்ஷேபிக்காமல், நாம் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்விருவர் ஆக்ஷேபிக்காவிடில் இந்த உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச சங்கம் தலையிட உரிமையில்லை. ஆதலால் அழகிய - சீதையைக் கொண்டு பரதனையும் பாட்டன் வீட்டுக்குப் போய்ச் சிறிது நாட்கள் தங்கும்படி செய்திருக்கிறோம். இடையில் அப்பரதன் வந்து விட்டாலும், சீதையின் மேல் உள்ள அன்பால், ராம பட்டாபி ஷேகத்தை ஆக்ஷே பிக்கப்போவதில்லை, கைகேயிக்கோ, ராமன் விஷயத்தில் உள்ள அன்பு நாம் அறிந்ததே. அவ்வாறிருப்பினும் அக் கைகேயி தமிழ் ரத்தம் மாறாதவளாகயிருப்பதால் விஷயத்தை முன்னே அறிவிக்கக் கூடாது. இனிக் கைகேயின் தோழியாக ஓர் மந்தரை என்னும் தமிழச்சி இருக்கிறாள். அவளும் இக்கூட்டத்தி லுள்ள ஒரு பிரபு வின் சட்டைச் சாக்கில் அடங்கியிருப்பது தெரிந்த விஷயம். ஆகையால் இன்று முதல் தந்தி தபால் டெலி போன்களை யெல்லாம் தணிக்கை செய்ய ஆரம்பிக்கவேண்டும். இது விஷயத் தில் அதிக ஜாக்கிரதையான ஏற்பாடு தேவை. நாளைக்கே பகிரங்க சபை கூட்டுவோம். அதில் நமக்கு ஆனவர்களாகப் பார்த்து, உள்ளே அனுமதிக்க வேண்டும். ராம பட்டாபிசேகத்தை பற்றித் தீர்மானம் நடக்கட்டும். மே.த. சக்கர வர்த்திக்கு உடம்பு அதிக ஆபத்தாயிருக்கிறதென்று; மறு தினத்தையே பட்டாபிசேக தினமாகப் பாதிரியார் வாயால் நிச்சயம் பண்ணி விடுவோம். எடுத்தோம் குலுக்கினோம் என்று காரியம் நடந்துவிடட்டும். இதற்கிடையில் கலகக்காரர்கள் யாராவது கூடிப் பேசாதபடி, மிலிட்டரித் தலைவரும், போலீ தலைவரும் பார்த்துக் கொள்ளட்டும். கூட்டம் கலைந்ததும், நம்மைப் பத்திரிகைப் பிரதிநிதிகள் கண்டு பேசவந்தால், அவர்களிடம் மே.த. தசரதருக்கு உடம்பு ஆபத்தான நிலையிலிருப்பதாக மாத்திரம் சொல்லவேண்டும். இதே விதம் ஜெனரல் சர்ஜனும் சொல்லும்படி நான் ஏற்பாடு செய்து விடுகிறேன். ராமனிடமும் முதலிலேயே விஷயத்தைத் தெரிவிக்கலாகாது. தெரிவித்தால், ராமன் பிராந்தி ஓட்டலில் சொல்லக்கூடும். அல்லது தனது பேட்மின்ட்டன் நண்பர்களிடம் தெரிவித்துவிடக்கூடும். நாம் செய்ய இருக்கும் வேலை மிக்க கஷ்டமானதுதான். ஆயினும், செய்துமுடிப்போம் என்று கங்கணம் கட்டுவோம் என்று சொல்லி முடித்தார். (கரகோஷம்) பிறகு பாதிரி ஒரு திருத்தம் கொண்டு வந்து பேசியதாவது:- பரதன், கைகேயி, மந்தரை ஆக்ஷேபிக்காவிட்டால் சரிதான் என்று மந்திரி சொல்லுகிறார், ஆக்ஷேபிப்பதனால் எத்தனை நாளைக்குள் அவர்கள் ஆக்ஷேபனை மனு போடவேண்டும்? (மூன்று நாளைக்குள் என்ற பதில்) இப்படியிருக்கையில், நாம் வீணாக உள் நாட்டுத் தந்திகளை ஏன் தணிக்கை செய்யவேண்டும்? வேண்டியதில்லை. நாம் அவசரமாகப் பட்டாபிசேக ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது. டெலிபோன், தந்தி முதலிய இல்லாவிட்டால், நமக்குத்தானே கஷ்டம்; ஆகையால், அயல் நாடுகள் சம்பந்தப்பட்ட கப்பல், ஐரோப்ளேன், தந்தி முதலிய அனைத்தும் நிறுத்திவிடுவோம். ஆனால் ஒன்று! அந்நிய நாட்டு தானீகர் தங்கள் நாடுகளுக்குப் பட்டாபிஷேகத் தகவல்களை அறிவிக்க முரட்டுத் தனம் செய்வார்கள். அவர்கள் முரட்டுத் தனம் நம்மை என்ன செய்யும்? மற்றபடி, சர்வதேச சங்கதானீகர் தந்தியை மாத்திரம்அனுமதிப்போம். அதனால் பாதகமில்லை. (இவ்விஷயம் அனைவராலும் அங்கீகரிக்கப் பட்டது.) கடைசியாய் மே.த.தசரதன் எழுந்து, அன்பர்களே! பாதிரியாரே! இத் தேசத்தின் அதிகாரப் பதவிகள் அனைத்தும் உங்கள் கையில் அடங்கி யுள்ளன. நீங்கள் பிரதாப விஷயத்தைத் திறம்பட முடிக்க நினைத்தால், உங்களால் முடியாமற் போகாது. எதிர்காலத்தில் தமிழரின் இந்தியாவை ஆரியர் ஆட்சிக்கு உட்படுத்துவதில் உங்கட்கு விருப்பமிருந்தால் ராமனுக்கே பட்டஞ் சூட்டுங்கள்! என்றார். அவ்வாறே! அவ்வாறே! என்று அனைவரும் சொன்னார்கள். பிறகு சிற்றுண்டி - பானம் - நடந்தது. வெளியிற் போகுமுன் கார் டிரைவர்கட்கு எச்சரிக்கைச் செய்யப்பட்டது. அனைவரும் எழுந்தனர். போலீ அதிகாரி எதையோ பார்த்து ஆச்சரியப் பட்டு, இதென்ன என்று கேட்டார். அங்கு ஓர் சுவரில் சில புலன்களும், அந்தப் புலன்களிலிருந்து டெலிபோன் கம்பிகளும் பொருத்தப் பட்டிருந்தன. அனைவரும் ஆச்சரியப்பட்டு, இதென்ன நாம் இங்கு பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் யாரோ தமது இருப்பிடத்தி லிருந்தேயறிய இவ்விதம் முன்னமே சூழ்ச்சி செய்துள்ளார்கள் போலும்! என்று திகைத்தனர். இதைக்கேட்ட சக்கரவர்த்தி அப்படி ஒன்றுமிராது. நம் ராமன்தான் செய்திருப்பான் என்றனர் மற்றவர் இதை விசாரியுங்கள் என்று சொல்லித் தமது கால் பூட் சப்தம் பிறருக்குக் கேட்காதிருக்க மெதுவாய் நடந்து கார்களில் ஏறிச் சென்றார்கள். சக்கர வர்த்தி அரண்மனையின் உட்புற வழியாகக் கைகேயியின் மாளிகை யடைந்தார். கைகேயி பாத்ரூமில் (குளிக்கும் தனியறை) இருப்பதாய்த் தெரிந்தது. பாத்ரூமை நோக்கி நடந்தார். பாத்ரூமானது வட்ட வடிவமாய் அமைந்து சுற்றிலும் நான்கு வாயிலுடையதாய் இருந்தது. வாயிற் கதவுகளெல்லாம் மூடப் பட்டிருந்தன. ஒரு வாயிலின் வெளிப்புறத்தில் திரு. ராமனை, மே.த. சக்கரவர்த்தி சந்தித்தார். அவர் நெஞ்சம் துடித்தது. âL¡»£L ‘uhkh V‹ ï§F tªjhŒ? என்று கேட்டார் சிற்றன்னை யிடம் வந்ததாய் ராமன் சொன்னான். ‘gh¤%Äšjhdh rªâ¡f v©ÂdhŒ? என்று தசரதர் கேட்டார். இது விஷயத்தில் தாங்கள் அதிகமாய்க் கவனிக்கலாமா? என்று ராமன் சொன்னான். தசரதர் பரிதாபமாய், ராமா என்மீது உனக்கு உண்மையான ஆசை இல்லை போலும்! அவளைச் சிற்றன்னை என்றும் நினைக்கலாகாதா? என்றார். ராமனுக்குக் கோபம்! கைகேயி உமக்கு மனைவி என்பதும் நான் உமக்குப் பிள்ளை என்பதும், எனக்குக் கைகேயி சிற்றன்னை என்பதும் ஆரியர் முறைப்படி உண்மையாயினும் உலக நியாயப்படி பார்த்தால் ஆக்ஷேபிக்கக் கூடியவை. இதற்குள் மந்தரை அங்கு வந்தாள். தசரதருக்கு வணக்கம் செய்தாள். தசரதர் அவளைக் கடுப்போடு பார்த்தார். தகாத சந்தர்ப்பத்தில் தான் வந்தது அபச்சாரம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டாள் மந்தரை. தசரதர் மன்னிப்பதாய்க் கூறி மந்தரையை வெளியிற் போகச் சொன்னார். மந்தரை பதில் கூறுகிறாள்:- தந்தையாரும், மூத்த மகனாரும் ஏககாலத்தில் என் தலைவியை எதிர்பார்க்கிறீர்கள். உள்ளிருக்கும் தலைவிக்கோ உங்கள் வருகை தெரியாது. நான் தலைவியைக் கண்டு உங்கள் வரவைத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘ifnfÆ! என்று உரத்த சப்தமிட்டாள். அந்தரங்க ஆலோசனை மண்டபத்தில், இன்னும் என்ன சூழ்ச்சி வார்த்தை நடக்கிறதென்று கவனிக்கிறேன் என்று கைகேயி உள்ளிருந்தபடி பதில் சொன்னாள். தசரதர் திடுக்கிட்டு, ஓ! மந்தரை! இதென்ன ஆச்சரியம்! என்றார். மந்தரை கூறுகிறாள்:- தங்களுடைய அந்தரங்க ஆலோசனை மண்டபத்தில் ஒலி பெருக்கும் கருவியும், அவ்வொலியைப் பாத்ரூமில் கொண்டு வரக்கூடிய டெலிபோனும் புதிதாக நான் ஏற்பாடு செய்தேன். அங்கு ஏதோ சபைகூடிப் பேசுவதாய்க் கேள்விப்பட்டேன். உடனே அதைக் கவனி என்று, என் வீட்டிலிருந்து டெலிபோன் மூலம் என் தலைவிக்குத் தெரிவித் திருந்தேன். அதைத் தலைவி கேட்டுக் கொண்டிருக்கிறதாய்த் தெரிகிறது. கைகேயி! இதோ உன் நாதரும் மகனாரும் வந்திருக் கிறார்கள்; வெளியில் வா! என்று மந்தரை கூச்சலிட்டாள். தசரதர் தமது உடைவாளைத் தடவினார். மந்தரையைக் கண்ணால் எரிக்கவும் நினைத்தார். தம் பல்லைப், பல்லாலேயே மென்று தின்றார். ராமனுக்கு விஷயம் புரியவில்லை. மேலும் தசரதர், மந்தரையை அப்படியே வாரித் தரையில் மோதத் தாவினார். kªjiu ‘#h¡»uij! என்ற ஒரு வார்த்தை சொல்லித் தன் இடையிலிருந்த ரிவால்வாரை நீட்டினாள். கைகேயி வெளிவந்து, தசரதனையும் ராமனையும் சீறினாள். கேகய நாட்டில் நடந்துள்ள உடன்படிக்கைப்படி, இந் நாட்டுக் குரியவன் பரதனே. எனக்குள்ள இரண்டு அதிகாரங்களில் ஒன்றின் படி, நீ பதினான்கு வருஷம் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். மற்றோர் அதிகாரத்தை மீதியாக வைத்திருக்கிறேன்? என்று இடிபோல் பேசிச் சர்வதேச சங்கத்திற்குத் தந்தியும் எழுதி மந்தரையிடம் கொடுத்தாள். jruj‹: (gÇjhg¤Jl‹) ifnfÆ, eh‹ ï§nfna ÉGªJ cÆ® ÉL»nw‹! மந்தரை: சக்கரவர்த்தியாரே, வேண்டாம் வேண்டாம்! மெதுவாக அந்தப்புரத்திற்குச் சென்று, அங்குள்ள சோபாவில் உட்கார்ந்து உயிர் விடுங்கள்! ராமன்: பரதன் என்னைத்தானே பட்டங்கட்டிக் கொள்ளக் சொல்லுவான். கைகேயி: மெய்தான், நன்றாக ஞாபகப்படுத்தினாய் என்று மற்றோர் அதிகாரத்தால், சீதையையும் நீ உடன்கூட்டிப் போக உத்தர விடுகிறேன். என் கட்டளைக்குக் கீழ்ப் படியுங்கள்! அல்லது, இவ்விரு தமிழப் பெண்களை எதிர்த்துப் பாருங்கள்! மந்தரை: ராமா நீதான் அதிர்ஷ்டசாலி! இப்போது தான் உன் சீதை உனக்குக் கிடைத்தாள்! ராமன், சீதை, லட்சுமணன் சகிதம் காடு சென்றான். இதில். ராமனுக்கு ஒருவகையில் சந்தோஷமே! டெலிபோன் படலம் முற்றிற்று. மந்தரை திருவடிகளே சரணம்!. - புதுவை முரசு, 16.12.1931  15. இதயம் எப்படியிருக்கிறது? ஏழைகள் சிரிக்கிறார்கள் எனது நண்பர் கோவிந்தன் ஆதிகர். கொஞ்சம் பிடிவாத குண முள்ளவர். சுயமரியாதைக் கட்சி அவருக்கும் பிடிக்காது. சமதர்ம மென்றாலோ சிரித்துக் கேலி பண்ணுவார். ஒருநாள் மத்தியானம் 12 மணிக்குச் சாப்பாட்டைப் பற்றி அவருக்கும், அவர் தகப்பனாருக்கும் வார்த்தை நடந்து கொண்டிருந்தது. அச்சமயம் நான் அவர் வீட்டுத் தெருத்திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். நான் இருந்தது அவர்கட்குத் தெரியாது. கோவிந்தன் (தம் தகப்பனாரிடம் மிக்க வருத்தத்தோடு சொல்லுகிறார்) அப்பா நான்தான் வேலையில்லாதிருக்கிறேன். நீங்களாவது வீட்டில் அடுப்புப் புகையும்படி முன் ஜாக்ரதையாய் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா? தந்தை: என்ன செய்வது? இன்றைக்கு வேலை தருவதாகச் சொல்லி, அந்த மனிதன் திடீரென்று நாளைக்கு ஆகட்டுமென்று கையை விரித்து விட்டான். இன்று மத்தியானம் சமையற் செலவிற்கு அம்மா சமாளித்துக் கொள்ளுவாள் என்று நினைத்தேன். அவளுக்கும் தோதில்லை போலும். இராத்திரிச் சாப்பாட்டிற்கு எப்படியாவது ஏற்பாடு செய்கிறேன். அதுவரைக்கும் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். என்று சொல்லி, அடே அப்பா நீ வெளியிற் போக வேண்டியிருந்தால் முகத்தைக் கழுவி, நெற்றி நிறைய நாமம் போட்டுக் கொண்டு போ. அப்போதுதான் பட்டினி முகம் தெரியாது என்று வற்புறுத்தினார். பிறகு கோவிந்தன் நெற்றி நிறைய நாமமிட்டு வெளியில் வந்தார். என்னைக் கண்டு திடுக்கிட்டு, இந்நேரம் நீர் இங்குதானா இருந்தீர் என்று கேட்டார். தமது வீட்டின் நிலை எனக்குத் தெரிந்து விடுவதில் அவருக்கு விருப்பம் இராதது சகஜம். நான் இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறேன் என்று, இரண்டு தடவை அழுத்திச் சொன்னேன். வெயிற் காலத்தில் நானும், அவரும் சாப்பிட்டவுடன் மூன்று மைல் தூரத்திலுள்ள காத்தான் பங்களாவுக்குப் போவது வழக்கம். புறப்பட்டோம். வழியில் சுயமரியாதை - சமதர்மம் இவற்றைப் பற்றிய வாதம், என் நண்பரின் முரட்டு மறுப்பு, எனது திகைப்பு, கொஞ்சம் மவுனம் இவற்றைத் தாண்டியதும் இன்றைய உலக நிலையின் ஒரு துளியை நாங்கள் பருக நேர்ந்தது. வயற்புறத்திலிருந்த களிப்பு மண்ணையெல்லாம் ஒரு புறத்திற் குவித்துக் கொண்டிருந்தனர் சில தொழிலாளர். சேர்த்த மண்ணில் கிணற்று ஜலத்தை மொண்டு மொண்டு ஊற்றிச் சேறாக்கிக் கொண்டிருந்தனர் மற்றும் சிலர். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் பதப்படுத்திய சேற்றைக் கட்டிக்கொண்டு கற்கள் அறுத்துக் கொண்டிருந்தனர் வேறு சிலர். பதப் படுத்திய சேற்றுக் குவியலண்டையில் சில ஏழைத் தொழிலாளர் குனிந்து, முதுகைப் பலகைபோல் காட்ட அம்முதுகில் நிறையக் களிமண்ணை ஏற்றிக் கல்லறுக்கும் இடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர் இன்னும் சில தோழர். நல்ல வெயிலுக்கிடையில் மணி 2 ஆயிற்று. மரத்து நிழலில் கஞ்சிக் கலயத்தோடு காத்திருந்த இவர்களின் பெண்டிர்களில் ஒருத்தி வீட்டிற் கைப்பிள்ளையைப் போட்டுவிட்டு வந்தேன் என்று கதறினாள். வயிற்றில் பசித் தீ எரிந்து கொண்டிருக்கும் விஷயம் அப்போதுதான் அத் தொழிலாளர்கட்கு ஞாபகம் வந்தது. உள்ளங்கைகளை மாத்திரம் ஒருவாறு சுத்தம் செய்துகொண்டு கஞ்சி குடிக்கத் தாவினார்கள். அவர்கள் தேகத்திலிருந்து வடிந்த வியர்வை நீரைவிடக் குறைந்த எடையுள்ள அந்தக் கஞ்சி கலந்த நீரையுண்டு அவர்கள் திருப்தி அடைய வேண்டியிருந்தது. என் நண்பர் கோவிந்தன் இக்காட்சியை உருக்கமாகவே நோக்கினார். நான் - இந்த ஆபீ எத்தனை மணிக்குக் கலையும் என்பது உமக்குத் தெரியுமா? இந்தக் கேள்விக்கு அடியில் வருவதெல்லாம் என் நண்பருடைய பதில்: ஆம். 6.30 மணி வரைக்கும் இவர்கள் வேலை செய்தாக வேண்டும். காலை 7 மணிக்கு இவ்வேலை துவக்கப்பட்டது. மாலையில் அவர் கூலி 6 அணாதான். நாளைக்கு இந்த வேலையும் அவர்கட்குக் கிடைக்காமற் போகலாம். கிடைக்கா விடிற் பெண்டு பிள்ளைகள் சகிதம் பட்டினிதான். இவர்கட்கு வீட்டு வசதியோ, சுகாதார வசதியோ, பஞ்சம் இவ்வளவும் உண்மை. இது பற்றி நீர் என்ன சொல்ல வருகிறீர்? பொது நன்மையை முதலாளிகள் வசப்படுத்திக் கொண்டதுதானே இவர்களின் இவ்விதத் துன்பத்திற்குக் காரணம் என்று நான் கேட்டேன். நண்பர்: இவர்கட்குத் துன்பமா? அதோ பாரும் அவர்களின் சந்தோஷ ஆரவாரம்! உண்மையில் அவர்கள் தமக்குள் மாமன், மைத்துனன் முறை கூறிச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்களின் உள்ளத் தின் அடித்தளம்?... இதை என் நண்பருக்கு எவ்வாறு காட்டமுடியும். நாங்கள் நடந்தோம். மற்றும் வழியில், இடையிற் கோவணத்தோடு வெயிலின் களைப்போடு மூங்கில் வெட்டுவோரும், முழங்காலளவு வயற் சேற்றில் நீந்தியபடி ஏரடிப்போரும், தலைநட்டு முதுகைக் குனிந்தபடி வரப்புத் திருத்துவோரும், ஏற்றம் இறைப்போரும், பாத்தி கட்டுவோரும் தங்கள் அபிலாஷை லக்ஷியம் அனைத்தையும் அரை வயிற்று கூழிற் புதைத்துவிட்டு மீதியுள்ள உடலால் ஓயாது உழைத்துக் கொண்டிருந்தார்கள். அங்கோரிடத்தில் ஆற்றுப்பாலம் கட்டிக்கொண்டு இருக்கும் கருமார், கொல்லூற்றுக்காரர், தச்சர் ஆகியோரின் உடலும், தோளும் பம்பரம் போல் ஆடிக் கொண்டிருந்தன. அக்காட்சியைக் கோவிந்தனிடம் காட்டி இந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்ட முதலாளிக்கு இந்த பாலம் கட்டி முடியும் வரை மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வருமானம் வருமென்று நினைக்கிறேன். இவ் வொப்பந்தத்தைத் தொழிலாளரே நேரே அடைந்திருந்தால் அவர்கட்குத் தினம் 1-க்குக் கூலி சராசரி 4 ரூபாய் கட்டக்கூடும். அந்த 4 ரூபாயில் 2 ரூபாயே அவர்களுக்குப் போதும் என்று நினைத்தால் அவர்கள் தினம் 4 மணி நேரம் வேலை செய்தால் போதுமானதாயிருக்கும். ஏதோ அச்சந்தர்ப்பத்தால் ஒருவனிடம் முதல் சிக்கிவிட்டால் அதே காரணத்தால் பொதுமக்களிடம் ஏழ்மை உண்டாகிவிடுகிறது. அதன் பிறகு முதலாளிக்கு முதல் வலுப்பது தவிரத் தொழிலாளிக்கு எந்த வகையிலும் முன்னேற்றம் இருக்க வழியில்லை. இதே ரீதியில் இவ்வுலகம் நடைபெற்றால் உலகின் எதிர்கால நிலை, மக்களை உயிரோடு புதைக்கும் மயானமாகி விடும் என்பதை நீர் ஆக்ஷேபிக்கிறீரா? இதற்குப் பதிலாக என் நண்பர் அதோ பாரும் அத் தொழிலாளர்கள் சிட்டுக்குருவிகள் போல் உற்சாகமாக வேலை செய்கிறார்கள் என்று சொன்னார். நாங்கள் போய்ச் சேர வேண்டிய பங்களா இன்னும் சற்றுத் தூரத்தில் இருந்தது. என் நண்பர் முகத்தில் கொஞ்சம் சுருக்கம் ஏற்பட்டது. நடை ஓடவில்லை. வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இது மாத்திரமன்று. ஓர் வரப்பைவிட்டு இறங்கும்போது அவர் விழுந்ததற்குக் காரணத்தையும் அவர் என்னிடம் மறைத்துச் சொல்லி மழுப்பினார். நாங்கள் பங்களாவை அடையும்முன், பங்களாவில் எமக்கு இடம் அகப்படாது என்று தெரிந்து விட்டது. வேலை நிறுத்தம் செய்த ஆலைத் தொழிலாளர் பங்களாவில் நிறையக் கூடியிருப்பதை வழியிற் கேள்விப்பட்டோம். எனது நண்பர் எதிரில், எனக்கும் நகரத்திற் சென்று சில்லரை வேலை செய்து விட்டு வீடு திரும்பும் சில ஏழைத் தோழர்களுக்கும் கீழ்வரும் சம்பாஷணை நடந்தது. நான்: இன்றைக்கு நீங்கள் தலைக்கு என்ன சம்பாதித்தீர்கள்? ஏழைகள்: 4 அணாவீதம் சம்பாதித்தோம். நான்: உங்கட்குக் காலுக்குச் செருப்பில்லையா? குடை இல்லையா? உங்கள் சரீரம் இளைத்துப் போகக் காரணமென்ன? நீங்கள் நோய் நொடி யின்றி வாழ முடிகிறதா? உங்கள் வாஸதலம் எப்படிப்பட்டது? அந்தோ நண்பரே பார்த்தீரா! கடவுளும் கடவுள் மக்களை முன்னேற்றுவிக்கச் செய்த மதமும், அந்த மதம் கற்பித்த மூட எண்ணங்களும் மக்களை ஏற ஆசைப்படவும் விடாது குறுக் கிடுகின்றன என்றேன். என் நண்பருக்கு இந்த வார்த்தையில் ஒன்றும் காதில் விழவில்லை. அவர் மார்பு வலிக்கிறது, மார்பு வலிக்கிறது என்று அலறினார். உஷ்ணம் அதிப்பட்டால் தமக்கு மார்பு வலி வந்துவிடும் என்றும் நலிந்து கூறினார். கோவிந்தனைக் கையில் அணைத்தபடி தேறுதல் கூறிப் பங்களாவுக்கு ஓர் அறையிற் சேர்த்தேன். கோவிந்தனுக்குச் செய்யவேண்டிய சிசிச்சையென்ன? உணவுதர வேண்டியதைத் தவிர வேறொன்றுமில்லை என்பது தான் என் எண்ணம். அதற்காகத்தான் ஓடினேன். மாலைப் போது மணி நான்கும் ஆகிவிட்டது. இதற்குள் பங்களாவில் நிறைந்திருந்த தொழிலாளரிடமும் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர் அன்று ஆலைச் சொந்தக் காரரிடமும் அத்து மீறி நடந்து விட்டார்கள். அதனால் போலீ அதிகாரி குற்றவாளிகளைத் தேடிக்கொண்டு அங்கு வந்தார். நிச்சயம் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டே இருக்கும். பெருங்கலகம் உண்டாகித்தான் இருக்கும். காருண்யமுள்ள சர்க்கார் நிலையில் பெருங்குழப்பம் உண்டாகித்தான் இருக்கும். இல்லாவிட்டால் பொதுமக்கள் நலத்தை மாத்திரம் தனியாகக் கருதித் தியாகம் புரியும் சர்க்கார்ப் பிரதிநிதி போலீ அதிகாரி அங்கு வந்திருக்க முடியுமா? தொழிலாளிகளான வேலாயுதன், கந்தன் ஆகிய இருவரைப் போலீ அதிகாரி கைது செய்தார். ஆலை முதலாளிக்கு விரோதமாகத் தொழிலாளர்களைக் கலகம் செய்யும்படி தூண்ட உத்தேசித்த தாகத்தான் அந்த இருவர் மீது ஏற்பட்ட குற்றம். இருவரையும் போலீ அதிகாரி கைது செய்துவிட்டு, மற்றத் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்துபோக வேண்டியதற்காகப் பயமுறுத்தும்போது, வேலாயுதன் முதலிய இருவரும் செய்த பெருங் குற்றத்தை விசாரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கையிற் கிடைத்த கொஞ்சம் பாலையும், வாழைப் பழங்களையும் ஏந்தி என் நண்பரை நோக்கித் துரிதமாக அந்த வழியாக நான் வரும்போது, ஒரு அதட்டல் வார்த்தை என்னை வழி மறித்தது. என் பெயர் சுப்பன் என்று விடை சொன்னேன். மீண்டும் போலீகாரர் உன் பெயர் விநாயகம் அல்ல? கலகத்தைத் தூண்ட உத்தேசித்தவனல்லவா நீ? வேலாயுதன் கூட்டாளி யல்லவா நீ? என்று கேட்டார். நல்ல வேளையாக எனக்கு வந்த சிரிப்பை மற்றொரு துக்கம் தடுத்துவிட்டது. ஐயா கலகம் செய்யத் தூண்டும் உத்தேசத்தை எவ்வாறு நீங்கள் கண்டு அறிந்தீர்கள் என்கிறேன். போலீ: இங்கிலீ ஆட்சி ஒருவனுடைய இதயத்தைத் தடவி ஆராயும் வலிமையுடையது தெரியுமா? நான்: தங்களைப் பரிதாபமாகக் கெஞ்சுகிறேன். ஒவ்வொருவனுடைய இருதயத்தையும் இதுவரைக்கும் தடவிப் பார்த்ததில் சர்க்கார் எதிர்ப்புக்கள் தட்டுப்படுவது தவிர அதன் பக்கத்திலேயே ஏழை மக்களின் பசித்துன்பம் தட்டுப்பட்டதே கிடையாதா? அல்லது உழைப்புக்குத் தக்க பயன் கிடைக்காது. கொதிக்கும் இதயத்தை, உடையும் நெஞ்சத்தை உணரும் உணர்ச்சி அற்றுப் போனீர்களா? உடனே நான் என் நண்பரை நோக்கி ஓடினேன். போஸீ அதிகாரி என்னைப் பின்பற்றி வருவதை நான் உணர்ந்தேன். ஐயோ எனக்கு ஆகாரம் ஏன்? நான் என் இருதயம் வெடித்து விட்டதாக உணருகிறேன். நான் மத்தியானம் சாப்பிட வழியில்லாமற் போயிற்று! நீர் என் திருநாமம் மற்றும் எனது வெளிச் செயல் இவற்றை மாத்திரம் அறிந்தீர். என் உள்ளத்தில் கிடந்த பசித்துன்பத்தையும், அதனால் நான் கண்ட அவமானத்தையும் நீர் எவ்வாறு அறிந்திருக்க முடியும்? அந்தோ நண்பரே, உலகம் இயங்குகிறது. உலக மக்கள் இயங்குகின்றனர். ஆயினும் அவ்வியக்கம் சந்தோஷத்துக்குரியது போல், சுறுசுறுப்புடையது போல் தோன்றலாம். இன்றைய உலகின் உட்புறம் எத்தனை கோணங்கள், எவ்வளவு அவமானம், தற்கொலை, அகால மரணம் அனைத்தும் சவக்குழியை நோக்கி எவ்வளவு விரைவாய்ப் போய்க் கொண்டிருக்கின்றன! ஆ! மார்பு ... ... நண்பரே தேறுதல் கொள்க! என்றேன். இதற்குள் போலீ அதிகாரியும் மற்றவரும் நண்பருக்குப் பாலைக் கொடுக்கச் சொன்னார்கள். என் நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு பாலைத் தூக்கினேன்; என் முயற்சி பயனற்றதாயிற்று. என் நண்பர் பிரேதமானார். முதலாளியுலகமே! மக்களின் நன்மைக்காக ஆட்சி செய்வதாய்க் கூறும் ஆட்சி நாடகங்களே! ஏழைத் தொழிலாளர் உள்ளத்தின் சாயலை என் நண்பரின் கதியில் அறிகிறீர்களா? - புரட்சி, 11. 2. 1934  16. காதலும் சாதலும் கோடைக்காலத்து மின்னல்போல் அவள் நெஞ்சில் புதியதோர் எண்ணம் தோன்றிற்று. இடது கை கடிவாளத்தை அசைத்தாள். குதிரை செங்குன்று நோக்கிப் பறந்தது. தோழிகளும் தமது குதிரைகளை அதே பாதை நோக்கித் துரத்தினார்கள். செல்வியும், தோழிமாரும் செங்குன்றையடுத்துள்ள கண்ணிச் சோலையை அடைந்தார்கள். தமது குதிரைகளை நாவல் மரம் ஒன்றில் கட்டினார்கள். அழகாய் அமைந்த அச்சிங்காரச் சோலையில் நுழைந்தார்கள், மருளும் பார்வை உடைய மான்கள் போல. நக்ஷத்திரங்கள் நிரம்பிய நீலவானம் போல் பச்சைத் தழைகள் அளாவிய மரங்களில் மலர்கள் குலுங்கின. எங்ஙணும் கொடிப்பூக்கள் புதர்ப் பூக்கள் தரையில் அழகு கொழித்தன. பூஞ்செடிகளின் கால்களை நோக்கி மடைகோலி விட்ட தண்ணீர் சாரை சாரையாய் ஓடிக் கொண்டிருந்தது. நிசப்தத்தில் ஊடுருவிப் பாய்ந்தது, பறவைகளின் இனிய கீதம்! புதுப் பெண்கள் போல் ஒரு சாயலாக மயில்கள் ஒதுங்கி ஒதுங்கி நடந்தன. இவை செல்வியின் மனத்தைக் கவர்ந்தன. கவிதைக்குரிய அழகின் கூட்டத்தை அவளால் வருணிக்க முடியவில்லை. அவள் பேசுவாள். ஆயினும் ஊமையானாள். செக்கச் செவேலென்று பூத்திருந்த செங்காந்தள் மலர்களையும், அவைகளை அடுத்து உயரத்தில் தொங்கும் பொன்னிறமான சரக்கொன்றை மலர்களையும் தோழிகள் கண்டார்கள். அக்காட்சி, இரப்பவர் இல்லை என்று ஏந்திய கைகளில் கொடையாளிகள் பொற்காசுகளைச் சொரிவதாகும் என்று கவிதை செய்து கொண்டிருந்தார்கள். அச்சமயம் புள்ளிமான் ஒன்று வேறொரு பக்கத்தில் செல்வியை அழைத்துக் கொண்டு போயிற்று. சூரியன் அதகிரியைத் தழுவும் நேரம் ஒரு பக்கம். ஒருபக்கம் பிரிந்துசென்ற செல்வி, சிறிது ஆயாசத்தால் அங்கிருந்த பளிங்கு மேடை ஒன்றில் அமர்ந்தாள். அவளுடைய நீலவிழிகள் சஞ்சரித்த இடத்தில் காதல் விளைக்கும் ஆண் மயிலும் பெண் மயிலும் ஒன்றை ஒன்று கண்ணாற் சுவைத்தபடி இருந்தன. அந்தக் காதல் வெள்ளம் இரண்டிற்கும் நடுவில் ஒரு விரற்கடைத் தூரந்தான் பாக்கி. செல்வி தன் பார்வையைத் திடீரென்று மறுபடியும் திருப்பினாள். அவளுடைய தன்னந்தனிமையை அவளுக்கு ஞாபகத்தை உண்டாக்கின. சோடி மயில்கள். அவளுடைய இளமையின் இயற்கை அவளைக் கண்ணீர் விட வைத்தது. அவள் எழுந்தாள். தோழிமாரைத் தேடி நடந்தாள். மற்றொருபுறம் செங்குன்றூர் இளவரசன் மெருகேற்றிய கருங்கல் மேடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆயினும் அவனுடைய இளமையும் அழகும், ஒளியுமாத்திரம் தூங்காமல் தம்மை நாடிவரும் ஜீவனுக்கு மற்றோர் ஜீவனை அளிக்கக் காத்திருந்தன. அவள் அவனைப் பார்த்தாள்; அவளுடைய கெண்டை விழிகள் ஆடாமல் அசையாமல் இருந்தன. அவள் இவ்வுலகை மறந்தாள். அவனது சிகை புறங்கழுத்தளவு கத்தரித்து விடப்பட்டிருந்தது. கதிர் விடும் விசால நெற்றியில் மேலேறிய கரும் புருவம் ஒளிவீசிக் கிடந்தது. அவனுடைய இரண்டு உதடுகளின் கடைக் கட்டில் ஜீவகளை பின்னிக் கொண்டிருந்தது. அவனுடைய மார்பும், மார்பிற்கிடந்து ஒளிசெய்யும் நவமணிப் பதக்கங்களும் உதயகிரியும் இளம் பரிதியுமாக விளங்கின. அவள் கண்களில் புதியதோர் ஒளி உண்டாயிற்று. அவள் முக மண்டலம் நிறைய ஆச்சரியம்! நெஞ்சில் காதல் பிரவாகம்! அவன் அழகு நிலவையும், கதிரையும் மின்னலையும் பொன்னையும் கண்டு வல்லவன் ஆக்கிய சித்திரமோ என்று சந்தேகப்பட்டாள். அந்த ஆண்மை யின் வடிவில் அறியப்படும் மற்றொரு வீரவடிவம், கேடயத்தோடு வைக்கப்பட்டிருக்கும் நீண்ட வாளாகும் என்று உவமித்தாள். அவள் தோற்றம் அவனை உயர்நிலையில் சேர்த்தது. கம்பனின் தமிழ்க் கவிதை போல கண்ட மாத்திரத்தில் அளவற்ற இன்பத்தை உண்டாக்கும் அவளுடைய திரு உருவமானது, கேட்டமாத்திரத்தில் இன்பம் விளைக்கும் செந்தமிழ்க்குச் சமம். அவன் திடுக்கிட்டெழுந்தான்; அவள் திகைத்தாள். இருவர் பார்வையும், இருவர் மனமும் அமைதி பெற்றபின், அதிசயத்தோடு, நீயார்? தனியாக... என்று கேட்டான் நான் கொற்றவேல் மன்னன் புதல்வி. என் பெயர் செல்வி என்று கூறினாள். அவள் கொஞ்சம் நாணத்தால் உடை ஒதுங்கித் தலை குனிந்திருந்தாளாயினும், அந்தக் கட்டழகனின் நல்ல பதிலை எதிர்பார்த்தாளாதலால் சற்று நிமிர்ந்து புன்சிரிப்புடன் அவனுடைய முகத்தை மற்றொரு முறை பார்த்தாள். அவனும் அவள் முகத்திற் சிந்தும் அழகைத் தன் பார்வையால் ஏந்தினான். அவள் வாடையுயர்ந்த மங்கை! மிதமிஞ்சிய பருமனில்லாத மின்னற்சுரம் போன்ற மேனியுடையவள், மெல்லிய கருங்குழலின் பின்னல், பின்னால் நீண்டு தொங்கிற்றுக் கருநாகம் போல்! நிலவுபோல் வெண்ணிறத்தையும், நிழல் போல் மேன்மையையும் உடைய அவளது ஆடையானது மேனியின் ஒளியை மறைத்து விட முடியவில்லை. பிறைபோன்ற நெற்றி, கருவிழி, செவ்விதழ், முல்லைப்பல் ஆகிய இவைகள் வேண்டுமென்று சிரிப்பதன்றி இயற்கையாக நகைப்பைக் கொட்டிக் கொண்டிருந்தன. அந்த அழகின் சித்திரம், அவனது நெஞ்சை அளாவி உயிரில் தோய்ந்தது. ஆயினும் அவள், பகை அரசனின் மகள் என்பதை எண்ணினான். தன் நெஞ்சையும் உயிரையும் அளாவிய அந்த அழகை வலிய வெளியே இழுத்துப் போட்டான். ‘v‹id Ú§fŸ x¥ò»Ö®fsh? என்று அவள் ஆற்ற முடியாத காதல் தூண்டக் கேட்டாள். செல்வியே, ஒன்றை ஒன்று தழுவும் நமது இரண்டு உள்ளத்தை, நம்மிரு நாட்டின் பழம் பகையானது பிரிக்கிறது. என் அன்னை நாட்டில் ஒருத்தியிருக்கிறாள். அவள் உன்னிலும் அழகுடையவள் அல்ல எனினும் அவள் என் பகையரசனின் மகளல்ல என்று கூறி மறுத்தான். இதைக் கேட்ட செல்வி உள்ளந் துடித்தாள். பகையுள்ளத்தைத் தாண்டி அவனுடைய அன்பைத் தன்னிடம் ஓடி வரும்படி செய்ய அவளால் முடியாமற் போயிற்று. என் உள்ளத்தில் குடிபுகுந்தவரின் பேர் என்ன? அதையாவது கூறலாமா என்று பரிதாபமாகக் கேட்டாள். இளவரசன் தன் பெயரைச் சொன்னான் வேல் மறவன் என்று. உள்ளம் ஒடிந்த செல்வி தன் உயிரைச் சுமந்துகொண்டு தள்ளாடி நடந்தாள். செல்வி தன் தோழிமாருடன் தன் மாளிகை சென்றாள். அவனையே நினைத்திருந்தாள் வினாடிதோறும்! ஒரு நாள் போவது அவளுக்கு ஓர் யுகம் போலாயிருந்தது. இவ்வாறு கழிந்த நாட்கள் அவள் கணக்குப்படி பல யுகங்களாகுமாயினும் நமது சைவப் பஞ்சாங்கப்படி இரண்டு வருடங்கள் ஆயின. வேல் மறவன் தாய் நாடாகிய செங்குன்றூருக்கும் செல்வியின் தாயகமாகிய கேணிச் சுரையூருக்கும் சண்டை மூண்டது. கேணிச் சுரையூரின் கோட்டை வாசலைக் கடந்து எதிர்ப் படை அரச மாளிகையை முற்றுகையிட்டுவிட்டது. கேணிச் சுரையூரின் காக்கைக் கொடி பிடிபடும் என்று இருபக்கத்தாரும் நிச்சயிக்கலானார்கள். கேணிச் சுரையூரின் கவிஞர்கள் தமது தாய்நாட்டின் கௌரவத்தைக் காக்க சுதேச வாலிபருக்கு எழுச்சியை, ஆவேசத்தைத் தூண்டினார்கள். ஆனால் அந்நாட்டுப் பெண்கள் போரில் கலந்து கொள்ளக்கூடாது என்பது அந் நாட்டின் சட்டமாதலால் பெண்களின் எழுச்சி அடைந்த தோள்கள் அடக்கப்பட்டன. கேணிச்சுரையூரில் வயது வந்த வாலிபர் அனைவரும் போர்க்கோலம் பூண்டார்கள். இனந்தெரியாத வாலிபன் ஒருவன் கேணிச் சுரையூரின் படைக்குத் தலைமை வகிக்கலானான். அரச மாளிகையை முற்றுகையிட்டிருந்த செங்குன்றூர்ப் படையில் இனந்தெரியாதஅந்தச் சிங்க வாலிபன் சிறுபடை ஒன்றுடன் புகுந்தான்! செங்குன்றூர்ப்படை சிதறி ஓடிற்று. அது கோட்டை வாசலுக்கு வெகு தூரத்தில் அமைந்திருந்த தன் கூடாரத்தை நோக்கிப் பறந்தது. கேணிச் சுரையூரின் அரசன் மகிழ்ந்து கூடாரத்தை நோக்கி ஓடிய எதிரிகட்குப் பெண்ணுடைகளைக் கழுதை மேல் அனுப்பினான். கோட்டை வாசல் கடந்து உள் நுழைந்த பகைவர் திருப்பியடிக்கப் பட்டால் அவர்கள் எதிரிகளால் தரப்படும் பெண்ணுடைகளை அணிந்துதான் மீண்டும் போர் செய்ய வேண்டும் என்பது இரு நாட்டைப் பொறுத்த நிபந்தனை. செங்குன்றூர்ப் படைக்குத் தலைமை வகித்திருந்த வேல் மறவன் கழுதை தூக்கி வந்த பெண்ணுடைகளை வெட்கத்தோடு வாங்கித் தன் வீரர்கட்குத் தந்ததோடு தானும் ஒன்று தரித்துக் கொண்டான். மீண்டும் போர்க்களத்தில் இரு பக்கத்துப் போர் முரசுகளும் போரை ஆரம்பித்தன. உறவென்பதில்லை; நான் என்பதில்லை. தம் தம் தாய் நாட்டின் வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு போர் செய்தார்கள். தலைகள் பனங்குலை சரிவதுபோல் சரிந்தன. போர்வீரர்கள் ஒருவருக்கொருவர் வீதம் நின்று வாள் யுத்தம் நடத்தினார்கள். இனந்தெரியாத அந்தப் படைவீரனை நோக்கி, அதோ நாணத்தால் முகம் மறையும்படி பெண்ணுடையால் மூடி நிற்கும் அந்த வீரன்தான் பகைப்படைக்குத் தலைவன் என்று கூறினான் ஒரு வேஷக்காரன். இனந்தெரியாத அப்படைத் தலைவன் அவன்மேற் பாய்ந்தான். இரு தலைவர்க்கும் வாட்போர் மூண்டது. விரைந்து சுழலும் இரு வாள்களும் மின்னல் ஒளியை உண்டாக்கின. போர்க்கலையின் நுட்பத்தை மற்ற வீரர்கள் உற்றுக் கவனிக்கலானார்கள், தம் தம் போர்த் தொழிலையும் மறந்து! அவர்கள் தம் தலைவர்களின் வெற்றி தோல்வியை எதிர் பார்ப்பதையும் மறந்து போனார்கள். போர்த்திறமை வெகுநேரம் நீடிப்பதால் கலை நுட்பம் தமக்குப் புரியும் என்று நினைத்தார்கள். முடிவில், வாட்போர் செய்திருந்த அந்த இரு தலைவர்களின் இரு மார்பிலும், ஏக காலத்தில், இரண்டு வாள் முனைகள் நுழைந்து வெளிவந்தன. அதனால் இருவர் தோள்களும் தாழ்ந்தன. இரு மார்புகள் ரத்தத்தை உகுத்தன. கடைசாய்ந்து விழும் இரு தேர்கள் போல் இரு தலைவரும் ஒரு முகமாகச் சாய்ந்தனர். இருவர் உடைகளும் இடம்விட்டு நகர்ந்தன. இருவர் கண்களும் சந்தித்தன. கழுத்தளவு கத்தரித்துவிட்ட சிகை. மேலேறிய சூரிய ஒளி பொருந்திய புருவம் சமீபத்தில் முல்லைப்பல் கருநாகம் போன்ற பின்னல்! என் அன்பே என்று பதைத்தது வீரன் உடல்! என் அன்பே என்று அதிர்ந்தது, செல்வியின் மலர் மேனி! இருவர் தோள்களும் தழுவின காதற் பதைப்பால்! போகும் உயிர்கள் பிடித்து நிறுத்தப்பட்டன சிறிது நேரம்! ரத்தஞ் சிந்திய யுத்த பூமியில் அந்த மலர் மஞ்சத்தில் ஒரே நேரத்தில் - ஒரே கணத்தில் இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. அவை ஒரே ஒரு காதல் முத்தம், இரண்டு மரணம்! - தமிழரசு, 15.12.1934  17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது ரங்கனும் கெங்கியும் மௌண்ட்ரோடு சார்ல கம்பெனியின் எதிரில் காத்திருப்பார்கள். எப்போதாவது தேவையிருந்தால் கம்பெனிக் காரர் வேலையிடுவார்கள். ஆனால் வேலையிடாத நாளில்கூடக் கம்பெனியார் ரங்கனுக்கும் கெங்கிக்கும் சேர்த்து இரவு 7 மணிக்குப் பிச்சையிடுவதுண்டு காலணா அரையணா! கம்பெனிக்காரர் தவிர, அதிர்ஷ்டவசமாக ரங்கனையோ கெங்கியையோ சுமை சுமந்து போக, வேறு யாராவது அழைத்தால், அன்றைக்கு அவர்களுக்குப் பணக்காரர் வீட்டில் தீபாவளியும் புகுந்த மாதிரி! கெங்கிக்கு, விறகு சுமந்து போனதில் கூலி அரையணா வந்தது. ஒரு தம்படிக்கு வெற்றிலையும் பாக்கும் வாங்கினாள். புகையிலை சிறிது கையிருப்பில் இருந்தது. சுண்ணாம்பு சகிதம் கையிற் சேர்த்தாள் ஒன்றாக! அந்த அமுதவர்க்கத்தைக் கவனித்தாள். கம்பெனியின் எதிரில் நிற்கும் தன் கணவனையும் பார்த்தாள்! கெங்கி: இப்படி வாயேன்! என்றாள் அன்பில் தோய்த்தெடுத்த வார்த்தைகளால்! ரங்கனுக்கு ஒரு நினைப்பு: அத்தனையும் அவளே வாயிற்போட்டுத் திருப்தியடைந்தால் என்ன மற்றொரு நினைப்பு: கூப்பிட்டாள்; போகாவிட்டால் அவளுக்குக் கஷ்டம். ரங்கன் அவளண்டையில் வந்துநின்றான். வெற்றிலை பாக்கை அவன் கையில் கொடுத்தாள் எல்லாவற்றையும்! ரங்கன்: எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துவிட்டாயே? கெங்கி: நீ எடுத்துக் கொண்டு கொடேன்! கெங்கி எதிர்ப்பார்த்த இன்பம் அவளுக்கு ஏற்பட்டது ரங்கன் தன் கையால் பாதியைக் கெங்கிக்கு அருள் செய்ததால்? கெங்கி: முத்துப்பேட்டைக்கு உங்க அம்மா வீட்டுக்கு எப்போ போறே? ரங்கன்: நானா? கெங்கி: சொன்னியே முன்னே ரங்கன்: உன்னைவிட்டுத் தனியாகவா? சீ! இந்த வார்த்தையில் கெங்கிக்கு ஏற்பட்ட காதல் மகிழ்ச்சியி லிருந்து ஓர் கற்பனை விளைந்தது போலும்:- தே, யிருதே! ராத்ரி ஒரு கனா கண்டேன்: செட்டியார் வீட்டம்மா, வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்து, நீயும் உன் ஆம்படையானும் நான் வரும் வரைக்கும் தெருவில் படுத்துக் கொள்ள வேண்டாம். வீட்டின் உள்ளேயே படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஊருக்குப் போனாங்க, நீயும் நானும் வீட்டில், கூடத்தில் படுத்துக்கொண்டு இருந்தோம். சிரிச்சி விளையாடி! குறட்டில் படுத்திருந்த குள்ளி இருமினாள்; விழித்துக் கொண்டேன். ரங்கன்: காங்கிரகாரர் நமக்கெல்லாம் குடிசைகட்டி வாடகை யில்லாமல் விடப்போகிறதாக, கூட்டம் போட்டுப் பேசி முடிவு பண்ணப் போறாங்களாம்... மறுநாள் மாலையில்: காங்கிரசுக்கு ஜே! பாரதமாதாவுக்கு ஜே! மந்திரி ராஜகோபாலாச் சாரியாருக்கு ஜே! கோதைநாயகி அம்மாளுக்கு ஜே! காப்பி கிளப் சுப்ராமையருக்கு ஜே! ரங்கனின் பிரச்சாரத்தால், மவுண்ட் ரோட்டில் - வீடில்லாமல் தெருவில் படுத்துறங்கும் ஏழைகள் எல்லாரும் ஆயிரக்கணக்காக - காங்கிர பிரசங்கத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வீடுகட்டிக் கொடுக்கும் தேதியைத் தெரிந்து கொள்ள. பிரசங்கியார் பிரசங்கத்தின் இடையில் எல்லோரும் கதர் வாங்க வேண்டும் என்றார். கெங்கி: காசு? பிரசங்கம்: கடன் மசோதா கட்டாயம் நிறைவேறும்? ரங்கன்: ஒண்ணுமே புரியிலே! பிரசங்கம்: கட்டாயம் நிறைவேறியே தீரும். கெங்கி: அதுதான் கேட்டேன்; குடிசையில்லாமல் என்னா பண்றது? எழவு! பிரசங்கம்; நாட்டில் அனைவரும் ஹிந்தி பேசவேண்டும்; எழுத வேண்டும். கெங்கி: (அங்கிருந்த ஒருவனை நோக்கி) என்னா சொல்றாங்க சாமி? கனவான்: இதெல்லாம் உங்களுக்கல்ல கழுதைகளா! பிரசங்கம்: நான் பிரேரேபிக்கும் தீர்மானம் என்னவென்றால், தெருக் குறடுகளிலும், தெருவின் இருபக்கங்களிலும் படுத்துறங்கும் ஏழைகள் ஆபாசமாகக் குளிர் தாங்காமல் இறந்துவிடுகிறார்கள். பிணம் கேட்பாரற்று நாறுகிறது. முனிசிபாலிட்டியார் உடனுக் குடன் வண்டியில் ஏற்றிப் போய்ப் புதைத்துவிட - தக்க ஏற்பாடு செய்யவேண்டும். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாகத் தலைவர் கூறினார். பிரசங்கி: இந்நேரம் ஆயிரக்கணக்காக நீங்கள் விஜயம் செய்து கூட்டத்தைச் சிறப்பித்ததற்கு வந்தனம் கூறுகிறோம். காங்கிரசுக்கு ஜே! பாரதமாதாவுக்கு ஜே! மந்திரி ராஜகோபாலாச் சாரியாருக்கு ஜே! கோதைநாயகி அம்மாளுக்கு ஜே! காப்பி கிளப் சுப்பராமையருக்கு ஜே! - தமிழரசு, 15. 1. 1938  18. புதைந்த மணி அவள் என்னை ஏன் கோபிக்கிறாள்! அவள் யாரைத்தான் காதலிக்கிறாள்! - ஒன்றுமே புரியவில்லை சேரனுக்கு. குயிலின் குரல் கேட்குந்தோறும் அங்கயற்கண்ணியின் குரல் அவன் காதில் விழும். முல்லையைப் பார்ப்பான்; அங்கயற்கண்ணி எதிர் நின்று சிரிக்கும் காட்சி தோன்றும். அவளை அவன் மறந்திருக்க வழியில்லை. இயற்கைச் சித்திரம் இல்லாத இடம் இல்லை. ஆதலால், சேரன் துயரம் பொங்கி வழிந்தது. சேனாபதியின் மகன்மேல் அவள் நெஞ்சம் சென்றதா - இதை நினைப்பான். கத்தியை உருவுவான். நன்றாய் அறியவேண்டும். பழயபடி கத்தியை உறையிற் போடுவான். அவள் என்னைவிட உயர் நிலையுடையவளா? செல்வமா; தலைமையா? தோள் வலியுள்ள வீராங்கனையா அவள். அப்படி ஒன்று மில்லை. என்னை அவள் கோபிக்கிறாள். வெறுப்பான வார்த்தைகளால் அதட்டுகிறாள் - சேரன் நெஞ்சம் கலங்கினான். அவன் உட்கார்ந்திருந்த சோலை அங்குள்ள பறவைகள், வளர்ப்பு மான், சும்மா இருந்தன. அவன் பேசாதிருந்தான். உள்ளம் கேள்விகள் கிளப்பின. அதுவே தப்பான விடைகளைத் தந்தன. சேரனுக்கு அமைதியில்லை. அச் சமயம் அவன் கண்ணெதிரில் அங்கயற்கண்ணி தோன்றினாள் வெகு தூரத்தில். சேரனுக்கு நெஞ்சு படும்பாடு ஆலைவாய்ப் பஞ்சுபடாது. அவளிடம் ஓடும் அவன் உள்ளம். பயந்து திரும்பும் அதே உள்ளம்! நெருப்பிற் குதித்துத் தன் பசிக்கு உணவு கைக் கொள்ளத் தடையில்லை. நெருப்பிற் குதித்தும் அந்நெருப்பு உணவு தர மறுக்கு மானால் என்ன பண்ணுவது? எத்தனை முறை உதாசீனம் செய்வாள். பொருட்படுத்தாமல் எத்தனை முறை சென்றேன். கெஞ்சினேன். தணிந்த சொல் ஒன்றுக்கு வழியில்லை. அவள் தந்தை திரை(ற) கொண்டான் என்னையும் தன் பெண்ணையும் மணமக்கள் என்று வாழ்த்தி விட்டான். அவனால் தடையில்லை. தாயால் தடையில்லை. சேரன் நான்! சக்ரவர்த்தி! நாடாளும் பேறு பெற்றேன். அவளும் நானும் ஒரு தேரில் வீற்றிருந்து வசந்த மண்டபம் நோக்கிப் போகும் ஓர் பெரும் பேற்றை நான் எதிர்பார்க்கவில்லை. வருக அத்தான் இந்த ஒரு வார்த்தை நெருப்பை நீக்கிய ஒரு சிறு வரவேற்பு - வழியில்லை. ஐயையோ அவள் உடல் அனைத்தும், உறுப்பனைத்தும், அழகுக் கூட்டம். உரையனைத்தும் சீறும் பாம்பின் விஷம் என்று சேரன் செயலற்றிருந்தான். அவன் உள்ளம் சோரும், ஏதாவது செய்யச் சொல்லிக் கொண்டே இருக்கும். கண்ணுக்கெட்டிய இடத்தில் இருந்த அங்கயற்கண்ணியின் எதிரில் சேனாபதி மகன் வந்து சேர்ந்ததையும் அவள் அவனுக்கு இருக்கை காட்டி உபசரித்ததையும் சேரன் கண்டான். அவன் உயிர் உணர்வு அனைத்தையும் தன் செவியில் சேர்த்து அங்கு நடக்கும் பேச்சை உற்றுக்கேட்டான். நீரோட்டத்தில் துரும்பு மிதந்தோடுவதுபோல் அவன் தன்னையும் அறியாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான் மறைவாக! அவர்கட்குச் சமீபத்தில் ஒரு மாமரத்தின் பின் ஒளிந்து நின்றான். சேரன் பல நாட்களாக எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் இதுதான். சேனாபதியின் மகன் இடையில் நீண்ட வாள் தொங்கிற்று. நிராயுத பாணியாக அவன் வந்திருந்தால் அவனை எதிர்க்க முடியாது. சேரன் அந்த வகையில் மகிழ்ச்சியடைந்தான். பச்சைத் தமிழனாதலால். அவன் என்ன சொல்லுவான்! அவள் எப்படிப் பேசுகிறாள் - என்று உற்றுக் கவனித்திருந்தான். சேனாபதி மகன், அங்கயற்கண்ணியைப் பார்த்தபடி இருந்தான். அங்கயற்கண்ணி நெஞ்சம் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தது. ஒரு மங்கையின் எதிரில் ஒரு வாலிபன் ஒரு காரணமின்றிக் குந்தி யிருப்பானானால் அந்த மங்கைதான் என்ன நினைப்பாள் - இந்த யோசனை சேனாபதி மகனுக்கு இல்லை. இந்த யோசனைக்கு ஆதாரமான அறிவு அவளின் அங்க அழகில் இடை விடாது சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இச்சமயம் அங்கயற்கண்ணி, சேரன் முன்னிருந்த இடத்தை நோக்குவதும், அங்கு அவன் இல்லையென்று தேர்ந்து அதன் அண்டை அயலில் நோக்குவதையும் சேரன் கண்டான். சேரன் உள்ளம் முணுமுணுத்தது; ஓகோ நான் வந்திருப்பது அவளுக்குத் தெரியும் போலிருக்கிறது. அதனால் தன் காதலனான சேனாபதியிடம் சகஜ வார்த்தை பேச மயங்குகிறாள் என்று நினைத்தான்! அங்கயற்கண்ணி சேனாபதி மகனிடம் கூறுவாள்; நண்பரே, அந்த அரசனைத் தேடுக இந்தச் சோலையில், சேனாபதி மகன்: ஏன்! அங்கய: என் நாக்குச் சோர்ந்து போகுமட்டும் அவனைத் திட்ட வேண்டும். அதோ அந்தப் புன்னை மரத்தின் மேடையின் மேல் இருந்தான் இப்போது. சேனாபதி மகன்: நம்மிருவரையும் அவன் பார்த்திருக்கக் கூடுமா? அங்கய: பார்த்திருக்கலாம். சேனாபதி மகன்: நம்மிருவரின் ஒற்றுமை அவனை ஓட்டமெடுக்க வைத்துவிட்டது. அங்கய: அப்படியானால், நான் என் வேலையாளிடம் பேசியிருப்பதை அவன் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான். அவன் ஓட்ட மெடுக்கவில்லையே! சேனாபதி மகன் திடுக்கிட்டுப் போனான். சேரன் மகிழ்ச்சிக் கடலில் வீழ்ந்தான். ஆயினும் அவள் என்னைக் காதலிக்கிறாள் என்பதற்கு அத்தாட்சி வேண்டும் என்று இருந்தான். இச்சமயம் சேனாபதி மகன், தலை குனிந்தபடி தன்னிருப்பிடம் நோக்கி நழுகினான். அங்கயற்கண்ணி சோலையில் வேறொருபக்கம் ஓடினாள். ஓடிய மங்கை மரத்தின்பின் நின்ற சேரனைக் கண்டு நின்றாள். சேரன் அவளைக் கண்டு தவித்து நின்றான். எதிரில் நிற்கும் இரு விக்ரகங்களைத் திரும்பிப் பார்த்த சேனாபதி மகன் பின்புறம் வந்து ஒரு மரத்தில் மறைந்து நடப்பதைக் கவனித்திருந்தான். அங்கய: செயலற்ற தோளும் தீவிரமில்லாத நெஞ்சும் உள்ளவன் ஆடவனல்ல! மங்கையொருத்தி தனியிருக்க நீ வந்ததென்ன? மரம்போல் நிற்பதென்ன? விழியைப்பார் நொள்ளை மாதிரி! உதட்டைப்பார் இருட்டு மாதிரி! சேரனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. அவனுக்கு உலகம் பயனற்றுத் தோன்றிவிட்டது. அவளை மாய்த்தபின் தான் மாண் டொழியலாம் என நிச்சயித்தான். சிலசமயம் இனிமேல் நல்ல வார்த்தை சொல்லக்கூடும் என்று பொறுத்திருந்தான். அங்கயற்கண்ணி முன்விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து - தோளைப்பார் வற்றிய சருகுமாதிரி - சேரன் அவள் தப்பி ஒடாதிருக்க அவளை இறுகப் பிடித்தான். தரையில் மோதத் தூக்கினான். அவள்: ஆஹா இத்தனைநாள் இந்த உணர்வு எங்கே போயிற்று அத்தான்! அவன்: என்மேல் வெறுப்பென்று நினைத்தேனடி நீ என் மேல் வைத்த காதல் உன் உள்ளத்தில் புதைந்த மணி! அதை நான் அறிய வில்லை. - தமிழரசு, 15. 1. 1939  19. ரமணிப் பாப்பா: ஒரு நாடகம் நடத்துவதென்றால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. நாடகம் எழுத ஓர் ஆசிரியரைத் தேட வேண்டுமா? வேண்டாமா? வேண்டும். அந்த ஆசிரியர் மூக்குக் கண்ணாடியைத் துடைப்பதற்கு ஒரு நாழிகை செல்லும். இறகு எடுக்கப் பொழுது போகும். இன்னும் மூக்குப்பொடி, அதைத் துடைக்கும் சிரமம், சொல்லி முடியாது. கதையை முடிக்க எத்தனையோ மாதங்கள், கதை முடிந்ததா என்று விசாரிக்க வருபவர்க்கு எத்தனையோ செறு(ரு)ப்புத் தேயக் கூடும். கதை முடிகிறதோ, முடிவதற்குள் நாடகத் தலைவர் அது வேண்டாம், ராமர் பட்டாபிஷேகத்தை எழுதுங்கள் என்று சொல்லி விடுகிறாரோ ஆர் கண்டார்? சரி கதை முடிந்து தொலைந்தது. அதன்மேல் பாட்டுக்கள், பாட்டுக்கு முன் வர்ண மெட்டுக்கள், வர்ண மெட்டுக்களின் முன்னாலேயே நடிகரின் குரல் சரிபார்த்தல், சரி பார்க்கும் போது நடிகர் கணைக்கும் கணைப்பு, நினைப்பு, பல! பிறகு இன்னாருக்கு இன்ன படினம் என்று நிச்சயம் செய்தாக வேண்டும். இதில் ஏராளமான தொல்லை, தொண்டை நன்றா யிருப்பதால் அவன் குரூபியாயிருந்தாலும் ராஜா வேஷம் கேட்பான். நான் மீசையை அடித்துக் கொள்ள முடியாது பெண் வேஷம் கூடவே கூடாது என்று கூச்சல் போடுவான் மற்றொரு மனிதன். ஏணி மாதிரி இருக்கும் 43 வயதுள்ள ஒருவன் ராஜகுமாரன் வேஷங் கேட்பதும் உண்டு. அந்த வேஷத்தை அவனுக்குக் கொடாவிடில் அவனுக்குள்ள செல்வாக்கால் கம்பெனியையே கலைத்து விடவும் கூடும். எங்கள் நாடகம் துவக்கி இந்தச் சித்திரை வந்தால் சரியாக இரண்டு வருஷம் ஆயின என்று நாடகத் தலைவர்கள் சொல்லுவதை நாம் கேட்டதில்லையா? இந்த ஆபாசம், காலதாமதம், ஆக்ஷேபணை, சமாதானம் ஒன்றும் இல்லை. ஒன்று கேளுங்கள்:- என் குழந்தை பேர் ரமணி! வயது நான்கு! இன்னொரு குழந்தை வசந்தா, ஐந்தரை வயது! எதிர்த்த வீட்டு மங்கலக்ஷிமி அடுத்த வீட்டுக் குழந்தை, இப்படி ஐந்தாறு குழந்தைகள் சேர்ந்தார்கள். என்ன நடந்தது தெரியுமா? ரமணி மற்றக் குழந்தைகளை நோக்கி:- நான்தான் ராஜாவாம்! நீதான் மந்திரியாம்! மங்கலஷிமி சேவகனாம். குப்பு திருடனாம். தனத்தின் வீட்டில் திருடன் முறுக்கைத் திருடி விட்டானாம். சேவகன் பிடித்துக் கொண்டு வருவானாம். ராஜா என்ன பண்றது மந்திரி இண்ணு கேட்பானாம். மந்திரி சாவடியில் போடச் சொல்றானாம். என்னா வரயா? மற்றவர்கள் சரி என்றார்கள். கதை, எழுதியாயிற்று. நடிகர்கள் பொறுக்கி ஆய்விட்டதா இல்லையா? படினம் வரப்படுத்தியும் ஆய்விட்டது. நாடகம் துவக்கும் சமயம். திருடன் திருடுகிறான். சேவகன் பிடித்துக் கொண்டான். திருடன் ஐயையோ என்று கதறுகிறான். சேவகன் அடிப்பதால், சரித்திரத்தில் நீதி பெறப்படுகிறதா இல்லையா? துயர பாகம் எப்படி? தத்ரூபமல்லவா? திருடன் ஒரு நாற்காலியில் அடைக்கப்படுகிறான். மந்திரியின் ஆலோசனைப்படி ராஜாவின் ஆக்ஞையால். திருடன் சிறைச்சாலையில் துன்புறுத்தப்படுகிறான். திருடனுக்குத் துன்பம் சகிக்கமுடியவில்லை. அவன் சொல்லுகிறான்:- இப்படித்தான் அடிப்பாங்களா சாவடியிலே? சேவகன்: ஓ கேட்டுப் பாரேன். ஆரையாவது? திருடன்: நான் கேக்கமாட்டேன். இனிமே அடிச்சா இந்தக் கல்லாலே மண்டையை ஒடச்சிபுடுவேன். கதை முடிந்தது. அழகிய துன்பியல் நாடகம் பெரியவர்கட்கு இது தெரியவில்லையே! - தமிழரசு, 15. 1. 1939  20. மனச்சாட்சி பொன்னியும் எதிர்வீட்டு முருகியும் கறி வாங்கக் கடைக்குப் போயிருந்தபோது ஒரு பெட்டைக் கோழி மலிவான விலைக்கு வந்தது. பொன்னி அதை ஐந்தணாவுக்கு வாங்கினாள். முருகிக்கு இது விஷயத்தில் பொறாமையே கிடையாது. வீட்டுக்கு வந்தார்கள். இரண்டு நாட்கள் சென்றன. *** காலை 10 மணி! பொன்னி தன் புதுப்பெட்டை இட்ட முட்டை ஒன்றை முருகிக்கு அன்புடன் அனுப்பினாள். முருகிக்கு அந்த முட்டை வெகு ஆச்சரியத்தை உண்டாக்கிவிட்டது; முட்டையைக் கையால் தூக்கித் தூக்கி நிறைபோட்டாள்; அதன் பருமனைக் கண்ணால் அளந்தாள். முட்டை அதிகப் பெரிது. கனமும் உடையது. முருகி நினைத்தாள்: பொன்னி நிரம்ப அதிர்ஷ்டசாலி. அவளுக்கு ஐந்தணாவுக்கு உயர்ந்த ரகமான கோழி அகப்பட்டது. அந்தக் கோழி அவளுடைய குடும்ப முன்னேற்றத்தின் விதை. *** அன்று மாலை 6½ மணிக்கு முருகி, தன் கொல்லைப்புறம் ஏதோ வேலையாகச் சென்றாள். அவள் மனதில் இருந்து கொண்டிருந்த அந்தப் பெட்டை தனது வைக்கோற்போரில் அடைந்திருந்தது. என்ன ருசி! எவ்வளவு பெரிது அந்த முட்டை! முருகியை இந்த ஆசை இழுத்துச் சென்றது மனிதத் தன்மைக்கு அப்பால்! உடனே முருகியின் சிந்தனை இப்படி மாறிற்று: பொன்னிக்கு எப்படித் தெரியும் நான் தான் கோழியைப் பிடித்தேன் என்று! அதை நான் பிடித்துக் கொள்கிறேன். நாலைந்து முட்டைகள் என் வீட்டிலேயே இடட்டும். அந்த முட்டைகளை வேறு பெட்டையண்டை அடை வைத்துவிட்டுப் பொன்னியின் கோழியை அடித்துத் தின்று விடுகிறேன். ஆயினும் முருகி, இந்தக் கெட்ட எண்ணக் கிணற்றில் இன்னும் முழுகி விடவில்லை. அரை மனதோடு பெட்டையைப் பிடித்தாள்; வீட்டில் கவிழ்த்து வைத்துவிட்டாள். *** கோழியைத் தேடிக்கொண்டு பொன்னி வந்தாள். முருகி தத்தளித்தாள். முருகி அநாகரீகமான உலகில் இருந்துகொண்டு உன் பெட்டை இங்கு வரவேயில்லையே என்ற பொய்கூறி முடித்துவிட்டாள். *** முருகியின் கணவன் வந்தான். முருகி தான் பொன்னிக்குச் செய்த அக்ரமத்தைச் சொன்னாள். அவன் சொன்னான்:- அக்ரமத்தைச் செய்துவிட்டு இப்படிக் கஷ்டப்படுகிறாய். முருகி: ஆம் பிறர் பொருளைத் திருடியவர்கள் மறுபிறப்பில் அநேக துன்பங்களை அநுபவிக்க வேண்டுமாமே? கணவன்: மறுபிறப்பு உண்டு என்பதே இன்னும் நிச்சயமாக வில்லையே! முருகி இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனாள். நான் கோழியைத் திருடியதற்கு மறுபிறப்பில் தண்டனை இருந்தால் என் மனம் அமைதியடைந்திருக்கும். இப்போது என்னை அல்லல்படுத்தும் மனச்சாட்சிக்கு ஓர் ஆறுதலும் இல்லாமல் போய்விட்டதே. பெட்டை பொன்னியுடையது என்பதை என் மனம் நன்றாய் அறியும். பொய் கூறிவிட்டேன். வேதனையிலிருந்து மீள முடியவில்லை என்றாள். முருகி மறைத்து வைத்திருந்த பெட்டையைத் தூக்கிக் கொண்டு பொன்னியின் வீடு நோக்கி ஓடினாள். பொன்னியிடம் உண்மை கூறினாள். மன்னிப்புக் கேட்டாள். கிடைத்த அந்த மன்னிப்பில் முருகிக்கு ஐந்நூறு கோழியினால் ஏற்படும் இன்பம் ஏற்பட்டது. - தமிழரசு, 15. 3. 1939  21. காதல் வாழ்வு ஒன்று மணம் முடிந்தது. தனியிடம், விடுதலை பெற்ற இரண்டுள்ளம். அளவுகடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக் காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை. இரண்டு ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து பேசலுற்றார்கள். மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும் தழை மரங்கள் உள்ளது, ஊற்றிற் சிறந்த நீர் நிலையின் துறையில் அமைந்த நுழைவாயிலுள்ளது. அழகிய சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா அத்தான். ஆம். குறைவற்ற தனிமை! பறந்தார்கள். மூன்று நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கி வை குடிசையில். நான் மட்டுமா? அதிர்ந்தது அவள் உள்ளம்! இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல் குடிசையில் நுழைந்தன. விட்டுப் பிரிவேன் என்று அச்சப்பட்டாயா? மன்னிக்க வேண்டும் குடிசை சாத்தப்பட்டது. நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும் இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே ஒலி குடிசையினின்றும் வெளிவந்தது; இது எதிரொலியன்று. நான்கு தேக்கும், அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும் பார்; நம்மைப்போல! இல்லை. அரண்மனை கசந்தால் அழகிய குடிலில் குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது. வானில் ஓர் ஒலி! வைகறையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை உதிர்த்தன வானப்புட்கள், ஆணும் பெண்ணுமாக நாமும் வானில் - அடடா சிறகில்லையே! நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும். ஐந்து கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில் அள்ளி நுகர்வன இன்பத்தை! நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் - அடடா நாம் மீன்களல்லவே! கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்ளுகிறேன். பிற்பகுதியும் கேள். நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைபபோக்கி விட்டது. மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல் நீராடின. ஆறு கரையேறுங்கள் என்னோடு மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும் உன் இன்பத்தைப் பெருக்க வில்லையா? தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வெளி, இதற்கு! நனைந்த ஆடை காரணம் அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள் குடிசையில் மறைந்தார்கள் ஓடி! ஏழு அழைத்து வரச் சொன்னார்கள் அப்பா ஏன்? கப்பல் வந்திருக்கிறது! மெல்லப் பேசு! என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக்குரல்! என்ன சொன்னார் அப்பா? அனுப்ப வேண்டுமாம் உம்மை! சிங்கைக்கா? “ஆம் என்ன அங்கே திட்டென்று விழுந்த உடலின் ஓசை! நாலு நாட்கள் நீடிக்கலாமா? இன்றைக்கே! - இதென்ன குடிசையில் வெள்ளம் நீ போ இதோ வருகின்றேன் எட்டு தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே! இறக்கவில்லை அத்தான் உனை விட்டுப் பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறு மட்டும். கடமை என் வாயை அடைக்கிறது என் மடமை கிடந்து துடிக்கிறது மடமை! அல்ல உயிரின் இயற்கை தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான் என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது; உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை ஒன்பது தோழி, நான் அப்பாவிடம் போகிறேன் நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார் என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால் அவள் சாகிறாள். சென்று காப்பாற்று எவ்வளவு நேரம்? நேரமா? எத்தனை நாள்? நாளா? அடுத்த ஆண்டில் வந்து விடுவேன் கால் நாழிகை, சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக் கொண்டிருக்க முடியும். ஐயா அடுத்த ஆண்டில் அவள் உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வெளியுடன் வெளியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன். பத்து நூலேணியில் அழுகுரல், கண்ணீர் - அவன் கப்பலேறுகிறான். கப்பலுக்குள் - இங்கே உட்காரவேண்டும் நீவிர் கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது? உம் மனைவி இறந்தாளா? இறந்திருப்பாளானால் அது அவள் செய்த முதல் குற்றம்; இறந்த செய்தியை என் காதில் எட்டாதிருக்க முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம். இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை தன் னிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள். பயனற்றது இவ்வுலகம்! ஒருபற்று என்னை வாட்டுகின்றது. அவள் இறந்தாள் ஆதலால் நான் இறந்தேன். இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில் கலக்கிறேன். சிரிப்பு! இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியுமாகிறார்கள். அத்தான், நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம். தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும் உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு! வாழ்க காதல் வாழ்வு! - குயில், 1. 7. 1947  22. தேசியப் பத்திரிகைகள் தமிழ்நாட்டின் தேசியப் பத்திரிகைகளின் இன்றைய போக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி என் அபிப்பிராயத்தை விளக்கும்படி என் தோழர்கள் சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். ஒரு கதை- ஏற்கனவே போட்ட திட்டப்படி சங்கரன் வீட்டின் எதிரில் ப வந்து நின்றது. இதில் சங்கரன் பந்துக்கள் சுமார் பத்துப் பேர்களும், சங்கரன் மனைவியும், சங்கரன் தாயும் ஏறி உட்கார்ந்தார்கள், திருவிழா நடக்கும் ஊர் சுமார் 40 மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. ப புறப்பட்டது சங்கரன் தன் தாயை நோக்கி ஆரம்பித்தான். ஏனம்மா! எனக்கும் பால் கொண்டு வந்து வைத்தீர்களே, அந்தச் செம்பு பொத்தல் செம்பு என்பதை நீங்கள் கவனிக்கவே இல்லை போலிருக்கிறது என்று வெகு சாந்தமாகவும் மரியாதை கோணாத முறையிலும் கேட்டான். தாய்க்குத் திடுக்கென்று எடுத்துப் போட்டது. ஐயோ! அப்பா! நான் கவனிக்கவே இல்லையே, பால் எல்லாம் ஒழுகிவிட்டதோ? என்று வருந்தினாள் அவள். சங்கரன், பக்ஷணம் சாப்பிட்டபின் பாலைப் பார்த்தேன். எல்லாம் மேஜைமேல் ஓடியிருந்தது. செம்பில் துளி கூட இல்லை. நான் பக்ஷணம் சாப்பிடுவது கொஞ்சம்; என் பசிக்கு ஆதரவு பால்தான். ஏன் உங்களுக்குத் தெரியாதா? தெரிந்தது தானே அம்மா. தாய்: ஆம், அப்பா! நான் கவனிக்கவேயில்லை. பசியாக இருக்கிறாயே, என்ன பண்ணலாம்! சங்கரன்: முதலில் பிள்ளையின் நன்மையில் தாய்க்கு அக்கரையிருக்க வேண்டும்; எப்போது பார்த்தாலும் மருமகள் மேலும் மற்றவர்கள் மேலும் வாழ் வாழ் என்ற கத்தினால் மாத்திரம் போதுமா? இரண்டாவது, அடிக்கடி உபயோகிக்கும் பாத்திரத்தின் நிலையைக் கவனிக்க வேண்டும். அது சமுசாரிக்கு அழகு. ஏதோ குடும்பத் தில் பெரிய அனுபவசாலிபோல் நீட்டினால் மாத்திரம் போதுமா? மூன்றாவது பிள்ளை சாப்பிட்டு முடித்தானா என்பதைக் கடைசி வரைக்கும் இருந்து கவனிக்க வேண்டும். அவன் சாப்பிட்டால் என்ன, ஒழிந்தால் என்ன என்ற மனோ பாவம் கூடாது. பலகாரம் வைத்தீர்கள். அதில் ஓர் இட்லிகூடச் சாப்பிடவில்லை. பாலைப் பார்த்தேன் ஒருதுளி. பசி காதை அடைக்கிறது. இந்த வார்த்தைகளையெல்லாம் சங்கரன் பஸிலிருந்த பந்துக்களில் ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றி முன்னிலைப் படுத்தி சொல்லிக் கொண்டிருந்தான். அனைவரும் சங்கரன் தாயை வெறுத்தார்கள். சங்கரனை ஆதரித்துப் பேசினார்கள். அப்போது சங்கரன் தாயார் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ப அடுத்த ஊரில் ஓர் விறகுக் கடையண்டை நிற்கும்படி, சங்கரன் சொன்னான். அது விறகுக் கடை என்பது சங்கரனுக்கு நன்றாய்த் தெரியும் விறகுக் கடையில் மனிதர்கள் நின்றார்கள். சங்கரன் கடைக் காரனைப் பார்த்துக் காப்பி இருக்கிறதா என்று கேட்டுவிட்டு, என் தாயார், எனக்குப் பொத்தற் செம்பில் பால் கொண்டு வந்து வைத்தார்கள். அந்த அநியாயக்காரி அப்படிச் செய்ய நினைத்தால் அந்த ஆபத்திலிருந்து எப்படி நான் தப்ப முடியும்! தாயை நம்ப வேண்டுமா! நம்ப வேண்டாமா? பலகாரமும் சாப்பிடவில்லை, பாலை நம்பி. செம்பில் துளி கூட இல்லை என்று சொன்னான். அங்கிருந்த அனைவரும் சங்கரன் தாயைக் கொடுங் கண்ணால் ஒருமுறை பார்த்து விட்டு, இந்தப் புண்ணியவதிதான் உமது தாயோ என்று கேட்டார்கள். தாய்க்கு இதயம் பிளந்துவிடும் சமயம் ப புறப்பட்டது. சங்கரன் தாய் சொன்னாள்: நான் வேண்டுமென்று செய்ய வில்லை அப்பா. அந்த வார்த்தையை அவள், அடிமை ஒருவன் ஆண்ட வனிடம் மன்னிப்புக் கேட்கும் முறையில் சொன்னாள். சங்கரனும், அம்மா அதனால் இப்பொழுது என்ன முழுகிப்போய் விட்டது என்று வெகு வினயமாகப் பதில் கூறினான். பஸில் எண்ணெய் ஆகிவிட்டதால் அடுத்த நகரின் ஷெட்டில் இருந்த கடையில் பஸை நிறுத்தினான் டிரைவர். சங்கரன் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி, இங்கே காப்பி அகப்படுமா என்று கேட்டான். சங்கரன் எதிர்பார்த்தபடியே கிடைக்காது... என்று பதில் கிடைத்தது. இதோ இந்தம்மாதான் என் தாயார். காலையில் என்னைப் பட்டினி போட்டு விட்டார்கள் என்று தொடங்கி வெகு உருக்கமாக முடித்தான். தன் தாய் ஓர் அன்பற்ற மிருகம் என்ற இந்தப் பிரசாரத்தின் பின் ப புறப்பட்டது. பஸிலிருந்த சொந்தக்காரர்கள் சங்கரனின் நிலைமைக்கு வருந்தினார்கள். நடுவழியில் அவனுக்கு மரணம் நேர்ந்து விடு மல்லவா? தான் செய்தது தப்புத்தானே! என்ன பண்ணுவாள் தாய். செம்பில் துவாரமிருந்ததைத் தாய் அறியவில்லை. இது உண்மையான சங்கதி. இது பற்றித் தான் இத்தனை அவமானப்பட வேண்டுமா? என்று அவள் நினைத்தாள். மற்றவர்களிடம் இது பற்றிக் கூறி அபவாதத்திலிருந்து தன்னை மீட்க நினைத்தாள். அதுதானே முடியாது. தன் பிள்ளைக்குத்தான் செய்தது குற்றம் அல்லவா? சும்மா இருந்துவிட்டாள் தன் சுபாவப்படி! திருவிழாவுக்குத் தமது ஊரார் எல்லாரும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கட்டாக ஒரு சத்திரத்தில் இறங்கி இருந்தார்கள். சங்கரன் தன் ஊராரை எல்லாம் ஒருமுகப்படுத்தி, ஒரு வைத்தியர் இங்கு கிடைப்பாரா என்று கேட்டான். இல்லை என்று மாத்திரம் அவர்கள் சொன்னார்கள்; ஏன் வைத்தியம் என்று சங்கரன் சொன்னான். எதற்காக வைத்தியர் என்று அவர்கள் கேட்டார்கள். கதையை ஆரம்பித்தான் சங்கரன். ஒருவாறு முடித்தான் தன் தாய்மேற் பழியை சுருக்கமாக முடித்துவிட்டதாக நினைத்தான். மேலும் சொல்லு கிறான். (என்னைப் பட்டினி போடவேண்டும் என்ற நோக்கத்தோடு பொத்தல் செம்பில் பாலை வைத்தாள் தாய். பெற்றவளாயிருந்தால் அப்படிச் செய்வாளா, என் உடம்பின் நிலை இவளுக்குத் தெரியாததல்லவே? காலைப் பட்டினியால் என் உடல் தத்துக் குத்தலாயிற்று.என் பந்துக்கள் இதோ இருக்கிறார்கள். இவர்களில் ஒருவராவது என் தாயின் அட்டூழியத்தை ஆதரிக்கிறார்களா? கேளுங்கள். அது போகட்டும். அங்கொரு கடையில் பலர் கூடி இருந்தார்கள். என் தாயார் செய்கையைக் கூறினேன். எவராவது அவள் செய்தது சரி என்று ஒத்துக் கொண்டார்களா? அந்த நகர மக்களில் யாராவது இவளைத் தூற்றாமல் இருந்தார்களா? சத்திரத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் சொல்லிக் காட்டினேனே அவர்களில் இவளை எவன்தான் காறி உமிழ வில்லை? உங்களில் யாருக்குத்தான் பிடிக்கிறது, இவள் செய்கை? என் மீது உங்களுக்கெல்லாம் இத்தனை இரக்கம் ஏன் உண்டாகிறது. என்று கூறி முடித்தான். இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர், அந்தம்மாவின் வாக்கு மூலம் என்ன? என்று கேட்டார்கள். தாய்: பொத்தற் செம்பிலே பால் வைத்ததாகச் சொல்லுகிறான் பிள்ளை. சிலர் : உங்கள் பிள்ளைதானே? தாய்: ஏன் கேட்கிறீர்கள்! சிலர் : பின் என்ன? பெற்ற தாயாயிருந்தால் இந்தப் பிள்ளை சொந்தத் தாயைப்பற்றி இவ்வளவு பேர் அறிய இத்தனை ஊர் அறிய உங்கள் மீது பழிகூறித் திரிவாரோ? தாய்: நான் பெற்றால் என்ன, பெறாவிட்டால் என்ன, அவன் என் பிள்ளைதான். சிலர் : உம் வயிற்றில் பிறந்த பிள்ளையா? தாய்: இது என்ன கேள்வி? சங்கரன்: இவள் என்னைப் பெற்றவளாயிருந்தால் இப்படிச் செய்வாளா? என் மாற்றாந்தாய் அவள். சிலர்: ஐயா, அந்தம்மா உன்னை விலக்க வில்லையே! அந்தம்மா உனக்குச் செய்ததுதான் என்ன? பொத்தற் செம்பில் பால் வைத்ததாய்ச் சொல்லுகிறாய். தாயினிடம் காட்ட வேண்டிய மரியாதை, அன்பு, பொறுப்பு ஒன்றுமே கிடையாது? சங்கரனுக்குக் கோபம் வந்து விட்டது. உங்களை எல்லாம் ஞாயம் கேட்க வரவில்லை என்று கூறினான். ஊராருக்கு உணர்ச்சி சிறிது உண்டாகி வருவது பற்றி அவனுக்கு ஏற்பட்ட வருத்தம் சொல்லமுடியாது. ப ஊருக்கு வந்து சேர்ந்தது. தாய் வீட்டில் நுழைந்தாள். தான் தன் பிள்ளைக்கு பால்வைத்த செம்பு அப்படியே மேஜைமேல் இருந்தது. அதில் தண்ணீரை ஊற்றி பரிசோதித்தாள். செம்பில் பொத்தல் இல்லை. இனி மேலாவது தேசியப் பத்திரிகைகள் சங்கரன் போல் இராமல் தமிழ்நாடு என்னும் தாயின் மட்டில் பொறுப்போடும் அன்போடும் தொண்டு செய்க. - போர்வாள், 21.11.1947  23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் - இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது. அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை. காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று. காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே? கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந் தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்து விட்டார்கள் புதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள் சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக் குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள். நான் தனீ: என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும் காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது; அட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்? வந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை! குஞ்சு - நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது. காக்கை - உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சாமி! சனியன் சாமி, ஏறுஞ்சாமி. காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது. - குயில், 15.5.1948  24. அடி நொறுக்கிவிடு இரண்டு வயதுள்ள குழந்தை. எழுந்தால் விழும்; விழுந்தால் அழும். அக்குழந்தை அப்பா ஏதாகிலும் வாங்கி வருவார் என்று பார்த்திருக்கிறது. அப்பா வரவில்லை. குழந்தைக்கு மனசில் வருத்தம். எரிச்சல். அப்பா வந்துவிட்டார். ஒன்றும் வாங்கி வரவில்லை. குழந்தை தன் அப்பாவின் காலைப்பற்றிக் கொண்டே எழுகிறது. தன் இரண்டு கைகளாலும் அப்பாவின் துடையைப் பிடித்துக் கொள்கிறது. தன் காலால் அப்பாவை உதைக்கிறது. திராவிடனே! இன்று உன்னை உதைக்க நினைப்பவன் உன் குழந்தையல்ல. உன் காலைப் பற்றிக் கொண்டே உன்னை உதைக்க நினைக்கிறான். அடி. நொறுக்கிவிடு அவனை. - குயில், 15.5.1948  25. அதிகார நரி மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது அடுத்த காட்டில் ஒரு நரி இருந்தது. அந்த நரிக்குப் பெரிய காட்டி லிருக்கும் சிங்க அரசன் அதிகாரம் கொடுத்திருந்தது. நரி அந்த அதிகாரத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்றால், யானைகளை யெல்லாம் எங்கும் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எருமைகளையும், மாடுகளையும் அங்கிருக்கும் பெரு நரி, பெருநரி ஒன்றும் செய்யக்கூடாது. இப்படிப் பல. இந்த வேலைகளையெல்லாம் நரி பார்த்துக் கொள்வது உண்டு. ஆயினும் தன் அளவுக்கு மீறிய வேறு வகையிலும் கருத்தைச் செலுத்தத் தொடங்கி விட்டது. அதென்ன என்றால், இந்த நரிக்குப் புள்ளி விழுந்த தோல் என்றால் பிடிக்காது, அந்தக் காட்டிலோ புள்ளிமான்கள் நாளுக்கு நாள் மிகுதியாகி வருகின்றன! இதற்கு என்ன செய்யலாம் என்று நரி எண்ணியது. சில மான்களைத் தன் வழிக்கு இழுக்கத் திட்டம் போட்டது. ஒரு நாள் பத்து மான்கள் மாடுகளுக்கு விட்டிருந்த புல்லை மேய்ந்து விட்டன. மாடுகள் வழக்கிட்டன. நரி மான்களை அழைத்து. நீங்கள் மாட்டின் புல்லை மேய்ந்து விட்டீர்கள். மன்னித்தேன். நீங்கள் அடிக்கடி என்னிடம் வந்து போக வேண்டும் என்றது. பத்து மான்களும் அடிக்கடி வந்துபோகும். பச்சைப் புல் எல்லாவற்றையும் மாட்டுக்கும் இல்லாமல் மேய்ந்து கொள்ளும். நரி கேட்காது. ஒரு நாள் பத்து மான்களைப் பார்த்து சொல்லுகின்றது நரி. அதோபார்! அந்த பேய்மரத்து நிழலில் ஒரு மான். அதை நீங்கள் கொம்பால் குத்தித் தொல்லை கொடுங்கள் என்றது. அப்படியே பத்து மான்களும் செய்தன. வேப்பமரத்து மான் நரியிடம் சொல்லியது. நரி வழக்கையே ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு நாள் நாவல் மரத்தடியில், இருந்த நான்கு மான்கள் மேலும் நரி தன் பத்து மான்களையும் ஏவிற்று. நான்கு மான்களுக்கும் நல்ல அடி. நரியிடம் விண்ணப்பித்தன. நரி ஏற்றுக் கொள்ளவில்லை. காட்டில் உள்ள மான்கள் எல்லாம் வருத்தப்பட்டன. நரி, இந்த பத்து மான்களை ஏவி விட்டு நம்மைத் தொல்லைப்படுத்துகிறது என்று கூட்டம் போட்டுப் பேசின. தனி வகையில் நம் மேல் நரிக்கு இருக்கும் வருத்தத்தைப் பொது வகையில் கிடைத்திருக்கும் அதிகாரத்தால் தீர்த்துக் கொள்ளுவது அடாது என்று மனங்கொதித்தன. நரிக்குக் கருவியாகத் தம்மினமே அமைந்ததை எண்ணி எண்ணி எரிச்சல் அடைந்தன. அந்தப் பத்து மான்களையும் ஒரு நரியையும் எல்லோரும் சேர்ந்து ஒழித்து விடலாமா என்று எண்ணின. பொது ஆட்சியின் அமைதியைக் கெடுக்க அவைகளுக்கு மனம் வரவில்லை. ஒருநாள், பத்து மான்களும் நரியிடம் போயின. அப்போது நரி தன் மனைவியிடம் குகையில் பேசிக் கொண்டிருந்தது. மனைவி நரி கேட்டது; அடிக்கடி இந்தப் புள்ளி மான்கள் பத்தும் உம்மிடம் ஏன் வர வேண்டும? அதற்குக் கணவன் நரி, பத்து மான்களைக் கொண்டு பல்லாயிர மான்களையும் ஒழிப்பது, பிறகு பத்து மான்களை ஒழிப்பது, என்று திட்டமிது. முள்ளை முள்ளாலேயே களைய வேண்டும் என்று பதில் சொல்லியது. இதையெல்லாம் அங்கு வந்து காத்திருந்த மான்கள் எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தன. நரியைப் பார்க்கவும் அந்த மான்களுக்குப் பிடிக்கவில்லை. திரும்பிப் போய்விட்டன. அன்றைக்கே அந்தப் பத்து மான்களும் காட்டு மான்களையெல்லாம் கண்டு தாம் இதுவரை செய்த ஐந்தாம்படை வேலைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டன. எங்கும் இச்செய்தி பரவி விட்டது. மான்களெல்லாம் ஒத்துப் போயின என்று நரி கேள்விப் பட்டது. நடுங்கிப் போய்விட்டது. தன் மனைவியை அழைத்துக் கூறியது. எப்போதும் தலைமாட்டில் காத்திருக்கிறது நமக்குச் சாவு. பத்து மான்களை வைத்துக்கொண்டு நாம் பண்ணியதெல்லாம் வெளியாகி விட்டது. இப்பொழுது பத்து மான்கள் கூடக் காட்டு மான்களிடம் சேர்ந்துவிட்டன. rhî!சாவு! மனைவி நரிக்கும் நடுக்கம் வந்து விட்டது. ஆம்! எப்போதும் நமக்குச் சாவு வரலாம். இப்போது வரலாம்; இந்த மணி நேரத்திலேயே ஏற்படலாம் சாவு. சாவு, ஆம்! பெரும்பான்மையினரைப் பகைத்தோம். நாம் இரும்பு உடல் படைத்தாலும் முடியாது. rhî!சாவு! மான்கள் ஒன்றும் செய்யவில்லை, அந்த அதிகார நரியை. நரி இறந்து கிடந்தது, பெட்டை நரியுடன். - குயில், 15.6.1948  26. காகத்தை என்செயப் படைத்தாய்? பொதிகை மலையை அடுத்த காடு, அதன் பெயர் பொங்கக் காடு, அந்தக் காட்டில் முகிலி என்ற யானை அரசு செலுத்தி வந்தது. அந்தக் காட்டி லிருந்த விலங்கு பறவைகளுக்கெல்லாம் அந்த அரசனிடம் மதிப்பு மிகுதி. அந்தக் காட்டில் ஒரு பெரிய ஓடை. அந்த ஓடையை அடுத்தாற் போல் புல் அடர்ந்து மெத்தென்றிருக்கும் ஓர் அகன்ற வெளி. அந்த வெளியின் நடுவிலோர் பாறையும், நிழல் தருகின்ற வாகை மரமும் இருக்கும். அங்குத்தான் முகிலியரசன் நாடோறும் வந்து அமர்ந்து விலங்கு பறவைகள் சொல்லும் வழக்குகளைக் கேட்டுத் தீர்ப்புக் கூறுவான். இது இப்படியிருக்க, ஒரு நாள் காலையில் கடப்பாரை மூக்கன் என்னும் காக்கை இரைத்தேடப் பொதிகை மலைச் சாரலில் இருந்த வீட்டின் இறைப்பில் குந்தியிருந்தது. அவ்வீட்டின் கூடத்தில் ஒரு தமிழ்ப் புலவர் மற்றொருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில், கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய் என்ற அடியைச் சொன்னார். அதைச் சொன்னார் என்றால் எதற்காகச் சொன்னார் என்பதல்லவர் கேள்வி. காக்கைக்கு மிக்க வருத்தம் வந்துவிட்டது. அந்தப் புலவரின் விரிவுரையைக் கேட்ட போது யாரையோ பற்றிய பேச்சுக்கிடையில் நம் இனத்தை இழுத்துப் போட்டுப பேசுவதாவது! காக்கை மிக்க எரிச்சலோடு இரைகூடத் தேடாமல் தன் அரசனிடம் ஓடியது. அரசே நான் இந்தக் காட்டுக்குடி; என் பெயர் கடப்பாறை மூக்கன். நான் என் தனிமுறையிலும், என் இனத்தின் தலைவன் என்ற முறையிலும் வழக்கிடுகிறேன். எனக்கும் என் இனத்திற்கும் ஏற்பட்டதாக நான் எண்ணும் மானக் குறைவுக்காக எதிரியை ஒறுக்கவேண்டும் என விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். கடப்பாறை - மன்னிக்கவும். பொதிகை மலைச் சாரலில் ஒரு வீட்டில் ஒரு புலவர்க்கும் மற்றொருவர்க்கும் பேச்சு நடந்தது. பேச்சுக்கிடையில். கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய் என்று புலவர் சொன்னார். என்னையும் என் இனத்தையும் குறைவுபடுத்தினார். எங்கள் ஒழுக்கம் தாழ்ந்தது என்பது அவர் சொற்களில் ஒலிக்கிறது. யானை - பார்ப்பனரின் செயல் பண்புகளும் உங்கள் இனத்தின் செயல் பண்புகளும் ஒரே தன்மை வாய்ந்தவை என்று கூறியுள்ளார் புலவர். கடப்பாரை - ஆம் அரசே - எம் செயல் பண்புகள் தாழ்ந்தவைகளா? நாங்கள் காலையில் குளிக்கிறோம். உண்ணும்போது உறவினை அழைக்கிறோம். இதனால் உலகுக்கு நாங்கள் நல்ல வழிகாட்டிகள். மேலும் ஊரைத் தூய்மை செய்கிறோம். ஆதலினால் பிறர் நலம் பேணும் அறவோர் இல்லையா நாங்கள்? யானை - நீங்கள் அறவோர். அதுபற்றிப் பேச்சில்லை. இருக்கட்டும் நாளை தீர்ப்புச் சொல்லுகிறேன். களைப்புத்தீர நீர் சற்றே உட்கார்ந்திருந்து போம் இன்று என்ன உணவு உண்டீர்? கடப்பாரை - வழியில் ஒரு சிறியவன் அப்பம் வாங்கிக் கொண்டு போனான். அதை அப்பிக்கொண்டு போய் ஒரு மரக் கிளையில் வைத்து உண்டது தவிர வெறும் பட்டினி கிடக்கிறேன். காக்கை போய்விட்டது. மறுநாள் காலையிலேயே முகிலி அரசனின் தீர்ப்பைக் கேட்க வந்துவிட்டது. முகிலி அரசன் - என்ன காக்கையாரே காலையில் வந்துவிட்டீர் உணவுண்டீரா? காக்கை - ஆம் ஐயா, சிட்டுக்குருவி ஒன்று தன் இரு குஞ்சுகளையும் விட்டு நகர்ந்தது. நல்லவேளை என்று அவ்விரண்டு குஞ்சுகளையும் கொன்று தின்றுவிட்டேன். இனித்தான் தக்க இரைதேட வேண்டும். தீர்ப்புக் கூறுங்கள். யானை - காக்கையாரே, உன் வழக்குப் பற்றிய தீர்ப்பை நாளைக்குத் தான் கூறமுடியும் போய் வாரும். காக்கை போய் மறுநாள் காலை யானையரசரிடம் வந்து தீர்ப்புக்குக் காத்திருந்தது. யானை - என்ன காக்கையாரே உண்டீரோ? காக்கை - ஆம் அரசே, அங்கு மிகுதியாகச் சோறு கறி கண்டேன். என் இனத்தையெல்லாம் அழைத்தேன். அனைவரும் உண்டோம். யானை - உங்கள் சோறும் உங்கள் கறியுமா? காக்கை - இல்லை, இல்லை. திருமண வீட்டார் எறிந்தவை. முகிலி என்னும் அரச யானை தன் தீர்ப்பைச் சொல்லுகிறது. காக்கையாரே, நீரும் உம் இனமும் அறவோர் என்கின்றீர், இருக்கலாம். ஆயினும், நீர் ஒரு பிள்ளை ஏமாந்தபோது அப்பத்தைப் பிடுங்கியதாகக் கூறினீர். சிட்டுக் குஞ்சுகளைத் தின்றதாகக் கூறினீர், ஊரார் வீட்டுச் சோறு கறிக்கு உறவினரை அழைத்தாகக் கூறினீர். இதனால் தெரிவதென்ன எனில். நீங்கள் ஏமாந்தவர்கள் தொடையில் கயிறு திரிப்பவராகவும் எளியோரை வஞ்சிப்பவராகவும் ஊர்ச் சொத்தை உண்ண ஒற்றுமை யாய்க் காலையில் எழுந்து வருபவராகவும், இருக்கின்றீர். உம் இனமும் இவ்வாறு அறவோர் என்னும் மறவோர் ஆதலில் தமிழ்ப் புலவர் சாற்றியது தக்கதே... உம் வழக்கை ஏற்றுக் கொள்ள முடியாது. - குயில், 15.7.1948  27. வீடு நிறைய அவர்கள் வள்ளியம்மாவுக்குப் பத்து வயது இருக்கும். அவள் தன் வீட்டுத் திண்ணையில் ஏழாங்காய் ஆடியிருந்தாள் தோழிகளுடன். நாலைந்து குறவர்களும் இரண்டு மூன்று குறத்திகளும் கூட்டமாய் வந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் ஒரு கிளி வைத்திருந்தான். மற்றொருவன் கூட்டில் நிறையக் கிளிகள் வைத்திருந்தான். அவர்கள் கிளி வாங்கலியா கிளி என்று கூவினார்கள். வள்ளி உள்ளே ஓடித் தன் அன்னையிடம் கெஞ்சினாள் கிளி வாங்கித் தரச் சொல்லி. அன்னை ஒரு பணம் கொடுத்தாள் வாங்கிக் கொள் என்று. ஒரு கிளி என்ன விலை என்று கேட்டாள் குறவர்களை அழைத்து வள்ளி. இரண்டு பணம் சொல்லி ஒரு பணத்திற்கு ஒப்பினார்கள். வள்ளி ஒரு பணத்தைக் கொடுத்து ஒரு கிளியைத் தன் கையில் வாங்கப் போனாள். குறவன் கையிலிருந்து அந்தக் கிளி தப்பித் தொலைவில் ஓடி விழுந்தது. குறவர்கள் அதைப் பிடிக்க ஓடினார்கள். அதற்குள் கிளியை அங்கு காத்திருந்த பூனையொன்று கவ்விக் கொண்டு மறைந்துவிட்டது. மனச்சான்று இல்லாத அந்தக் குறவர்கள் வள்ளியிடம் பெற்ற ஒரு பணத்திற்கு வேறு ஒரு கிளி கொடுத்திருக்கலாம். அப்படியும் செய்ய வில்லை. வள்ளியை உறுத்திப் பார்த்தார்கள். அவர்கள் தம் மொழியில் அனைவரும் என்னென்னமோ பேசலானார்கள். பணமும் வேண்டாம் கிளியும் வேண்டாம். அவர்கள் தம் பேச்சை அடக்கிக் கொண்டு போய்விட்டால் போதும் என்று நினைத்தாள் வள்ளி. அவர்களின் பேச்சு வள்ளிக்கு அருவருக்கும் கூச்சல் - அவர்களின் தாய்மொழி! வள்ளி பருவம் எய்தினாள். தான் விரும்பிய காளை ஒருவனை மணந்து கொண்டாள். மணம் வள்ளி வீட்டில் நடந்தது. இரண்டு நாட்களின் பின் மாப்பிள்ளை வீட்டார், மாப்பிள்ளையையும் வள்ளியையும் அழைத்துப் போனார்கள் தம் வீட்டுக்கு. மாப்பிள்ளைக்கு மிக மகிழ்ச்சி. வள்ளிக்கு அதைவிட! வாழ்க்கை இன்பத்தை முதன்முதலாகச் சுவை பார்க்கப் போகிறார்கள் அல்லவா? வண்டி, மாப்பிள்ளை வீட்டை எப்போது அடையும் எப்போது அடையும் என்ற எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். குதிரை வண்டி என்னமோ விரைவாகத் தான் செல்லுகிறது! வள்ளிக்கு மணமகனுக்கும் மெல்ல மெல்ல அக்குதிரை நொண்டி நடை நடப்பதாகத் தோன்றுகிறது. வண்டி, மாப்பிள்ளை வீட்டின் எதிரில் சென்று நின்றது. அனைவரும் - வள்ளியும் - பிள்ளையும் - வண்டியைவிட்டு இறங்கினார்கள். வள்ளியின் தோழி வள்ளியிடம் இதுதான் உன் மணவாளன் வீடு என்று சொல்லிக் காட்டினாள். வள்ளி, தன் வாழ்க்கை இன்பத்தை நுகரும் வீட்டைக் கண்திறந்து களிப்போடு நோக்கினாள். அவ்வீட்டின் உள்ளிருந்து பலரின் குரல்! அது குறவர்களின் அருவருக்கத்தக்க குரல் - அது அவர்களின் தாய்மொழி! வள்ளி, நடுங்கி நின்றாள். இவர்களிடம் தப்பிப் பிழைப்பது எப்படி என்று திடுக்கிட்டாள். மணமகன் தன் வீடு நோக்கி நகர்கின்றான்; அவன் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் தன் புது மனைவி தன்னுடன் வருகிறாளா என்று. அவள் கால் பெயராதிருப்பதைக் கண்டு தானும் நிற்கிறான். தோழி: உம் வா! வள்ளியம்மா வா! வள்ளி: வீடு நிறைய அவர்கள்! தோழி: எவர்கள்? உன் காதலனின் தம்பிமார் இருவர் தங்கை ஒருத்தி. ஒரு வாத்தியார். வள்ளி: மாப்பிள்ளை குறவரா? தோழி: எதைக் கொண்டு இப்படிக் கேட்கிறாய்! வள்ளி: வீடுநிறையக் குறவர் குரல் - அருவருக்கும் கூச்சல் அது அவர்களின் தாய்மொழி. தோழி: ஐயையோ. இல்லையே. இந்தி படிக்கிறார்கள். வள்ளி: அது இவர்கள் தாய்மொழியா? என் காதலர் குறவரா? தோழி: இல்லை. அவர் தமிழர் - திராவிடர். இந்தி கற்றுக் கொள்ளு கிறார்கள். வள்ளி: அப்படியானால், குறவர்கள் ஆகப்போகிறார்களா? தோழி: இந்தி படித்தால் குறவர்கள் ஆகிவிடுவார்களா? இந்தி குறவர் மொழியில்லையே? வள்ளி: இந்தி நம் தாய் மொழியா? தோழி: இல்லை. வள்ளி: அப்படியிருக்க இந்தி படிப்பானேன்? இந்திக்காரர் ஆவானேன்? தோழி: அதெல்லாம் உனக்கு அக்கரையில்லை. வள்ளி: வேறு யாருக்கு? எனக்கு உயிர் இல்லையா? மொழி யில்லையா? என்னையும் அவரையும் சேர்த்தது எது? தமிழ் தானே! என் மணவாளரை என்பால் அன்பு கொள்ள வைக்கப் போவது எது? தமிழ்தானே! பிறமொழி புகுவது பிறர்கலை. பிறர் ஒழுக்கம் புகுவதல்லவா? அன்புள்ள தோழியே, என் ஆருயிர்க் காதலர் என் கண்ணே என்ற ஒரு தமிழ்ச் சொல்லால் என்னை அழைக்கும் பேறு நான் பெறவேண்டும். மணமகன் பெற்றோர் வள்ளியை இழுத்துப் போனார்கள். இந்தி வீட்டை விட்டு ஒழிந்தது. வள்ளி திராவிடரின் வாழ்க்கையின்பத்தை நுகர்வாளாயினாள். - குயில், 15.8.1948  28. அவர்கள் அயலார் தந்தையும் மகனும் மகன்: அப்பா அவர்கள் வீட்டில் அந்த ஐயர் செத்து விட்டார். இல்லையா? பிணம் எடுக்கும்போது வீட்டுப் பெண்டிர்கள் வெளியில் வந்து பிணத்தின்மேல் விழுந்து அழுதார்கள். அப்புறம் பிணத்தைத் தூக்கிக் கொண்டு போகத் தொடங்கினார்கள், பிணம் தூக்குகின்றவர்கள். பெண்டிர்கள் உடனே வீட்டின் உள் போய்விடவேண்டும். இல்லையா? அவர்கள் அப்படிச் செய்யவில்லை. பிணத்தின் கூடவே போய் விட்டார்கள்: சுடுகாட்டில். பிணத்தைச் சுடுகிறவரைக்கும் கூடவே யிருந்துவிட்டுத்தான் வருவார்களாமே? தந்தை : ஆம் குழந்தாய், திராவிடர் நாம். இல்லையா? திராவிடப் பெண்கள் பிணத்தின் கூடவே சுடுகாடு வரைக்கும் போகமாட்டார்கள். ஆடவர் மட்டும் போவார்கள். மகன் : அப்படியானால் அவர்கள் திராவிடர்கள் அல்லர். வேறு யார் அவர்கள்? தந்தை : அவர்கள் ஆரியர் - ஆரியர் கால்வழிவந்தவர். மகன் : திராவிடர்களில் சிலர், பிணத்தின் கூடவே, சுடுகாடு வரைக்கும் போவார்களாமே? தந்தை : கோமுட்டிகள் என்ற மரபினர், தம்மைப் பார்ப்பனரோடு இணைத்துக் கொள்ளுவதில் பெருமையுண்டு என்று பிழையாய் நினைக்கிறார்கள். அவர்கள் பார்ப்பனரிடம் பேசும்போது மனக் கெப்புடு அமாவாயா சூத்ரவாளகு எப்டு என்று கேட்பார்கள் ஆதலால் கோம்டிகளின் பெண்டுகள் பிணத்தோடு சுடுகாடு வரைக்கும் செல்லத் தொடங்கினார்கள். கோமுட்டிகள் திராவிடர்கள்! மகன் : திராவிடப் பெண்கள் பிணத்தோடு சுடுகாடு செல்வதில்லை எனறு நீங்களே சொல்லுகிறீர்களா? தமிழப் பெரியார்களும் சொல்லியிருக்கிறார்களா? தந்தை : நான் சொல்வதில்லை. நீ கண் கூடாய்ப் பார்த்ததுதான். திராவிடப் பெண்கள் பிணத்தோடு செல்லமாட்டார்கள் என்பதற்கும், வீட்டோடுதான் இருந்துவிடுவார்கள் என்பதற்கும் தமிழ்ச் சான்றோரின் பழங் சான்று உண்டு. அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழி அம்பொழுக மெத்திய மாதர்கள் வாயில் மட்டே விம்மி விம்மி யிரு கைத் தலைமேல் வைத் தழுமைந் தரும் சுடுகாடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே! - குயில், 15. 8. 1948  29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது மாலை ஐந்தரை மணிக்கு மகளிர் கழகம் மகளிரால் நிறைந்தது. தலைவி தங்கம் சொற்பொழிவு மன்றத்தைத் துவக்கஞ் செய்தாள். அஞ்சலை அறம் இன்னதென்று சொற்பெருக்காற்றினாள். மற்றவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். அவர்களின் தாமரைக் கைகள் ஒலி செய்தன. தலைவி, தங்கம் முடிவுரை சாற்றுங்கால் அஞ்சலையின் அறவுரை அரிதென்று போற்றினாள். அனைவர் பேராலும் நன்றியும் அறிவித்தாள். அதன் பின்னர், ஒருபால் மகளிர் சிலர் ஆடல் பயின்றனர்; ஒருபால் மகளிர் சிலர் பாடல் பயின்றனர்; கதைகள் பேசிக் களித்தனர் சிற்சிலர். வீட்டுக் கதைகள் விளைத்தனர் சிற்சிலர். இவ்வாறு ஒரு மணி நேரம் சென்றது. ஆறரை மணி ஆயிற்றென்று, பொன்னி சிற்றுணவு பரிமாறிச் சிரித்து நின்றாள். மயில்களும், குயில்களும், மான்களும், கிளிகளும் வரிசையில் குந்தின. என்ன, மகளிர் அனைவரும் வரிசையிற் குந்தி உண்ணலாயினர். மல்லிகை சொன்னாள்: மறுநாள் பாஞ்சாலி திருமணத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் என்று. இந்தப் பேச்சு எடுக்கவில்லை. அஞ்சலை சொன்னாள்: நாளைக்கு அமாவாசையாதலால் கடலிற் குளிக்கலாமா என்று. சுறாமீன் தொல்லை ஆதலால் வீட்டில் குளிப்பது மிக நன்று என்றாள் பச்சையம்மாள். இவ்வாறே பலர் பல சொன்னார்கள். ஆனால் ஒருமுகம் நட்டபடி இருந்தது. அங்கயற் கண்ணி ஏன் அழவும் இல்லை, சிரிக்கவும் இல்லை, பேசவும் இல்லை, பாடவுமில்லை என்று முத்தம்மாள் கேட்டாள்: அனைவரும் அந்தக் கேள்வியையே கேட்கலாயினர். அங்கயற்கண்ணி உதடுகள் புன்சிரிப்பைச் செய்தன. அவள் சில சொற்களால் பெரியதொரு செய்தியை வெளியிட்டாள். நாழிகை ஆகிறது! என் காதலர் காத்திருப்பார், எனக்காக. நேற்றும் இப்படிச் சொன்னாள் அங்கயற்கண்ணி! முந்தா நாளும் இப்படிச் சொன்னாள் அங்கயற்கண்ணி. இது மட்டுமன்று, அங்கயற்கண்ணி உள்ளம் அயலெதிலும் செல்லவே இல்லை. அவள்மேல் உயிர் வைத்திருக்கும் ஒருவன்மேல் தன் உயிரை வைத்து விட்டாள் என்று மகளிர் அனைவரும் சொல்லிக் கொண்டார்கள். தலைவி, கழகம் முடிந்தது என்றாள். அங்கயற்கண்ணி காதலர் கருத்துக்கு விருந்து செய்ய விரைந்து செல்லுக என்றனர் அனைவரும். அங்கயற்கண்ணி அகன்றாள், அழகைச் சுமந்தபடி! அங்கயற்கண்ணி போய்விட்டாள்; அனைவரும் போய் விட்டார்கள். அஞ்சலையும் மல்லிகையும் போகவில்லை. அஞ்சலை மல்லிகையிடம் ஒரு மூட்டையை அவிழ்த்தாள். அங்கயற்கண்ணி நாள்தோறும் காதலர், காதலர் என்று கதைக்கிறாள். அவள் பேச்சில் மெய்யும் இருக்குமோ! மல்லிகை சொன்னாள்: அங்கயற்கண்ணி ஒரு தற்பெருமைக்காரி. அஞ்சலை: இன்றைக்காவது அவள் சொல்லின் உண்மையைக் கண்டறியலாமா? மல்லிகை: நான் பின் தொடர்கின்றேன். நீ இங்கேயே இரு! புகைவண்டி நிலையத்தில் விற்பனை நூல்நிலையம் அழகாகக் காட்சி அளித்தது. பலர் நூல்களும், ஏடுகளும் வாங்கிச் சென்றார்கள். ஓர் அழகிய இளைஞன், சுவடி ஒன்றைத் திறந்து நின்றபடி படித்துக் கொண்டிருந்தான். நூல் நிலையத்திற்குச் சிறிது தொலைவில் அங்கயற் கண்ணி முல்லைச் செண்டு விலை பேசிக் கொண்டிருந்தாள். மல்லிகை அங்கு வந்து சேர்ந்தாள். அங்கயற்கண்ணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் காதலன் யார்? -அவள் கண்கள் நாற்புறமும் தேடின. அவன் சுவடியிற் கண்ணையும் கருத்தையும் செலுத்தி நின்றிருந்தான். அவள் முல்லை விலை தீர்த்து வாங்கி, வரவேண்டிய புகைவண்டிமேற் கண்ணையும் கருத்தையும் செலுத்தி நின்றிருந்தாள். மல்லிகையின் உள்ளம் பிழையாக ஒரு முடிவுக்கு வந்தது - அவனுக்காகத்தான் அங்கயற்கண்ணி காத்திருக்கிறாள் என்று. மல்லிகைக்கு இரக்கம் வந்தது. அவள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். அவன் அழகை அவள் அடையத் தவங்கிடக்கின்றாள். ஆதலால் கொடி யிடையால் மார்பைச் சுமந்து நின்று வருந்தித் காத்துக் கொண்டிருக் கின்றாள். அவன் மேலும் பிழையில்லை. கிடைக்ககரிய கிள்ளையை மறக்க வைத்தது அவன் சுமக்கும் தமிழிலக்கியமேயாகும். மல்லிகை விர்ரென்று அவன் அண்டையிற்போய் நின்றாள். அப்போதும் அவன் நிமிர்ந்தானில்லை. உனக்காக. உன் காதலி அதோ எந்நேரம் காத்திருப்பாள்? என்றாள். கேட்டான். கலவரத்திற் சுழன்ற அவன் உள்ளம் அடுத்த நொடியில் ஏற்றதொரு முடிவைத் தாவிற்று. எங்கே? என்று திரும்பிப் பார்த்தான். அங்கோர் எழில் ஓவியம் நின்றது!. மீண்டும் மல்லிகை சொன்னாள்: உனக்காக உன் காதலி அதோ எந்நேரம் காத்திருப்பாள் என்று. ஆண்மையும் இளமையும் இலக்கணமும் அதிர்வேட்டோடு தன்னை நோக்கி வருவதை அங்கயற்கண்ணி நோக்கினாள். அங்கே தன் தோழி மல்லிகை தன்னை நோக்கியபடி நிற்பதையும் நோக்கினாள். எனக்காகக் காத்திருப்பார் என் காதலர் என்று அங்கயற்கண்ணி சொன்னதை மல்லிகை மறந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள் அங்கயல். ஆணழகு வந்து எதிர்நின்று, எனக்காகக் காத்திருந்தாயா? அப்படியானால் நாம் பெற்றது பெரும் பேறு என்றவுடன், பெண்ணழகு நாணிக் குனிந்து ஆணழகைக் கடைக்கண்ணால் கொன்று, என்னை எண்ணி வந்தீர்! இதைவிட நான் பெறத்தக்கது ஒன்றுமேயில்லை என்று போட்டாள் ஒரு போடு. புகைவண்டி நிலையத்தில் உள்ளே தங்கும் அறை நோக்கி நடக்குமுன், இரண்டு வலக்கைகள் அங்கு நின்றிருந்த மல்லிகைக்கு நன்றி தெரிவித்தன. - குயில், 8.7.1958  30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை வேலனுக்கு விண்ணப்பம் என்ற கதையின் படப்பிடிப்பு நடைபெறுகின்றது. பொன்னம்மா நாட்டியக்காரியாகச் சோடிக்கப்பட்டு படம் இயக்குவோனின் எதிரில் வந்து நிற்கின்றாள். படமுதலாளியும் படம் இயக்குவோனும் கொண்ட மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. அவளின் பெருத்திருந்த மார்பை நான்கு விரற்கடை அகலமுள்ள ஒரு கச்சை சுற்றிவந்து முதுகின்புறம் முடியிட்டுக் கொண்டிருந்தது - தாவணி இல்லை. ஆடினாள்! பாடினாள்! படப்பிடிப்பு நல்லபடி முடிந்தது. வேலனுக்கு விண்ணப்பம் வெளிவந்து ஏறத்தாழ பன்னிரண்டு கிழமைகள் ஓடியது. படத்தின் வெற்றிக்குப் பொன்னம்மாவின் சோடிப்பே காரணம் என்று நம்பினார்கள், படமுதலாளியும் பட இயக்கியும்! சில திங்கள் சென்றன. படம் இயக்கியின் இரண்டாவது தங்கை தங்கத்தின் ஆடல் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வேலனுக்கு விண்ணப்பம் என்ற படத்தின் முதலாளியும் மற்றும் குறிப்பிடத்தக்க பலரும் வருகைதந்து அரங்கேற்று விழாவைச் சிறப்பித்தார்கள். வேலனுக்கு விண்ணப்பம் என்ற பட முதலாளி தங்கத்திற்கு ஓர் உறுதி கூறினான் - நான் எடுக்கப்போகும் அடுத்த படத்தில் நீதான் தலைமை நாட்டியக்காரி சேயிழையின் சிரிப்பு என்ற கதையின் படப்பிடிப்பு நடைபெறு கின்றது. சோடிப்பு அறையினின்று தங்கம் வெளிவருவதை முதலாளி ஆவலுடன் எதிர்பார்த்து நின்றான். தங்கம் வந்தாள்; அவள் முன் படத்தில் பொன்னம்மா போலவே சோடிக்கப்பட்டிருந்தாள். படமுதலாளி, சற்றுநேரம் சொக்கிநின்று மிக்க நன்று என்றார். அதே நேரத்தில் படம் இயக்குவோன். தங்கச்சி ஓடு உள்ளே என்று அதட்டினான். தங்கம் சோடிப்பு அறைக்குள் ஓடி மறைந்தாள். சோடிப்பவனை வேலு! வா இங்கே என்றான். அவன் எதிரில் வந்து நின்றான் - யார் இப்படிச் சோடிக்கும்படி உனக்குச் சொன்னவர்? என்று கேட்டான். அதற்கு அவன் முதலாளியைக் காட்டினான். முதலாளி அதே சோடிப்பவனை நோக்கி, முன் படத்தில் பொன்னம்மாவுக்கு அப்படிச் சோடிக்க சொன்னவர் யாரென்று கேட்டான். அதற்குச் சோடிப்பவன் படம் இயக்குவோனைக் காட்டினான். படம் இயக்குவோனுக்கு கோபம் பொத்துக்கொண்டு எரிச்சல் கிளம்பிவிட்டது. அவன் முதலாளியை நோக்கி, ஐயா, முதலாளியாரே!; தங்கம் என் தங்கை. அவளுக்குமா இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க சோடிப்பு? எண்ணத்தில் ஆழ்ந்து எழுந்த முதலாளி படம் இயக்குவோனை நோக்கி, ஐயா படம் இயக்குவோரே தங்கம் உங்கள் தங்கை. பொன்னம்மா? - குயில், 17. 3. 1959  31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் புலவர் ஒருவருக்கு இயற்பெயரே மறைந்துவிட்டது. அவரைத் தெருவாரும் ஊராரும் முண்டைக்கண்ணி ஆம்படையான் என்றே அழைப்பார்கள். முண்டைக்கண்ணி ஆம்படையான் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு இட்டளியும், சுவைநீரும் உட்கொண்டு மைலாப் பூருக்குச் செல்லுவார். மைலாப்பூரில் அவர் நுழையும் தெருவுக்கு வடக்குமுனை தெற்குமுனை உண்டு. அவர் வடக்கு முனையால் நுழைந்தால் அவருக்கு முதலில் கிடைப்பது பணக்காரர் பழனியாண்டி வீடு; தெற்கு முனையால் நுழைந்தால் பார்ப்பனர் பஞ்சு வீடு, இரண்டு வீடுகளும் அண்டையில் அமைந்தவை. புலவர் பார்ப்பனரிடம் ஐயர் என்பதன் பொருள் மேலானவர்: ஐ என்பது மேன்மை. அது பலர்பால் இறுதிநிலையாகிய அர் பெற்று ஐயர் என முடிந்தது என்பார். அவரிடம் ஆக வேண்டியதை முடித்துக் கொண்டு பணக்கார பழனியாண்டியிடம் வருவார். ஐயர் என்றால் பிச்சையெடுப்பவர்; ஐயம் பிச்சை; அது அர் பெற்று ஐயர் ஆயிற்று என்று கூறி ஆக வேண்டியதை முடித்துக் கொண்டு போவார். இன்னொரு நாள் பார்ப்பனரிடம் ஐயர் என்ற சொல் ஆரியர் என்ற சொல்லின் திரிபே என்பார். அதே தொடர்பாகத் தமிழரிடம் ஓடி ஐயர் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் ஆரியருக்கும் தொடர்பே இல்லை என்பார். மற்றொரு நாள் செல்வார், தமிழ் ஆரியத்தின் பிள்ளை என்பார். பார்ப்பனரிடம் அவரால் ஆக வேண்டியதைப் பெற்றுக் கொண்டு கையோடு கையாகத் தமிழரிடம் வந்து, ஆரியம் தமிழின் குழந்தையே என்று ஆதாரம் காட்டி ஐந்தோ பத்தோ வாங்கிக் கொண்டு போவார். ஒரு பல்கலைக் கழகத்தில் தலைமைப் புலவர் இடம் மிகுதிப் பட்டதைக் கேள்விப்பட்ட முண்டைக்கண்ணி ஆம்படையான் ஐயரிடம் சென்று அந்த இடத்தை முடித்து வைக்க வேண்டும் என்றார். ஐயரும் ஒத்துக் கொண்டார். மறுநாள் புலவருக்கு கண்நோய் கண்டுவிட்டது. இரண்டு கண்ணுக்கும் மருணீக்கியார் மருந்திட்டுக் கண்களுக்கும் கறுப்புத் திரை போட்டனுப்பினார். புலவர் வண்டியேறி மைலாப்பூர்த் தெருவின் வடக்கு முனையால் நுழைந்தார். உட்காரு முன்னேமே தம் அரிய கண்டுபிடிப்பை வெளியிடத் தொடங்கி, என் ஆராய்ச்சியில் தமிழர் என்போர் பார்ப்பனருக்குப் பிறந்தவர் என்றே விளங்கி விட்டது என்றார்; அவர் நுழைந்த வீடு பார்ப்பனர் வீடு அன்று; இவர் சொன்னது பார்ப்பனரிடத்தில் அன்று. இதைக் கேட்ட பழனியாண்டி தம் கையில் கிடைத்ததை எடுத்து அடி அடி என்று அடித்தார். பிச்சை எடுத்த நாயே என்று திட்டினார். புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையானுக்கு நோய் நீங்கிற்று; கண்கள் திறந்தன. இப்போது புலவர்க்கு ஓய்ச்சல் ஒழிசல் கிடையாது. எங்கும் அழைப்பு ! எப்போதும் கறுப்புச் சட்டை! - குயில், 31. 3. 1959  32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் அவளும் நானும் என் உள்ளம் ஒரு துள்ளுமான்! என் அறிவு தடுத்தும் கேளாமல் உங்களை அணுகிற்று, உறவு வேண்டி! எள்ளத்தனை இடமும் ... ... ‘இல்லாதிருக்கலாம்; உண்டாக்க முடியாதா? இரும்பினால் ஆனவை கதவுகள் விரும்பினால் திறக்க மாட்டாவோ தமிழ் விருந்தினரை வெறுப்பதில்லை நாங்கள் வியப்பில்லை -அது தமிழர் பண்பாடு! என்பாடு வேறு! தீ வெதுப்பத் தாவித் திருக்குளத்தின் இடைப்புறத்தில் சிறிது இடம்... கொடுத்தாலும் மாசுபடும். ஊருணி நீர் நிறைந்திருப்பது உண்ணாதிருக்கவா? அல்லிக் குளம் அழகு பெற்றிருப்பது ஆடாதிருக்கவா? ஆழ்நீர் மடு மூழ்காதிருக்கவா? ஏடி! ஏடி! ஏடி! தோழி, அதோ உன் தலைவியின் மலர்க்குழலின் தேனை உண்ணவோ, அல்லது தீங்கு பண்ணவோ - பார்! fUt©LfË‹ bgU«gil! நீ இப்படி ஓடு; அவளை மீட்பது என் பாடு! வண்டுகள் புறம் போயின. முகில் விலகுவது போல அவள் இதழகள் விலகின. குளிர் நிலா வெளிப்பட்டது போல, அவள் குறு நகை தோன்றிற்று! கடைக்கண்ணால் என்னைக் கட்டி அணைத்துப் புன்னகையால் புகன்றாளன்றோ ஒன்று! அதன் பொருள் என்ன? நாணத்தை விலக்கி என்னை ஏறிட்டுக் காணத் துடித்தாளன்றோ! அதன் விலை என்ன? என் இன்ப வாழ்க்கைக்குப் பெறத்தக்க ஒன்று! - பெற்று விட்டேன். முற்றிற்று முதற் பிரிவு! மேலே? - குயில், 8. 9. 1959  33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு திருப்புளிசாமி வீட்டுக்கு மருத்துவப் புலவர் ஒருவர் வந்தார். இனிப்பு நீர்ப்பிணி உடைய திருப்புளிசாமிக்கு மருத்துவப் புலவர் சொன்னார்: ஒரு நாட் காலை வில்வத் துளிர் ஐந்தை வாயிற் போட்டு மென்று விழுங்க வேண்டும். மறுநாள் நாவற் றுளிர் ஐந்தைப் போட்டு மென்று விழுங்க வேண்டும். இப்படி நாற்பது நாட்கள் செய்து வந்தால் இனிப்பு நீர்ப்பிணி இராது; மீண்டும் வராது. திருப்புளிசாமி மருத்துவப் புலவர்க்கு வேண்டிய மரியாதை செய்து அனுப்பிவிட்டுத் தன்வீட்டுக் கொல்லையில் ஒரு வில்வ மரத்தையும் ஒரு நாவல் மரத்தையும், வளர்க்கும்படி ஆட்களுக்குக் கட்டளை போட்டான். கொல்லையின் கட்டைச் சுவரைவிடச் சற்றே உயரமாக வளர்ந்திருந்தன, வில்வமும் நாவலும். நாள்தோறும் திருப்புளி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதுபற்றித் திருப்புளி ஒரு முடிவுக்கு வரவில்லை. நாள்தோறும் திருப்புளிசாமிக்கு ஐந்து கொழுந்திலை பறித்துக் கொடுக்க ஓர் ஆள் வைக்க வேண்டும். இன்னும் ஆள் வைக்க வில்லை திருப்புளிசாமி. பறித்துத் தந்த ஐந்து இலைகளையும் அப்படியே வாயிற்போட்டு மென்று விழுங்குவதா? அரைத்து விழுங்குவதா? மருத்துவப் புலவரை நன்றாய்க் கேட்க வேண்டும். இன்னும் கேட்கவில்லை திருப்புளிசாமி. வில்வமும் நாவலும் கொல்லையிற் பயிரானது தொடங்கியே, இனிப்பு நீர்ப்பிணி என்னை விட்டுத் தொலைந்தது என்று திருப்புளி சாமி நாளொன்றுக்கு மூன்று வேளையும் பச்சரிசிப் பண்ணியமும் சோறும் உண்ணத் தலைப்பட்டதால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்தே வந்தது இனிப்பு நீர்ப்பிணி. இனிப்பு நீர்ப்பிணியால் சாகக்கிடந்த கொல்லை வீட்டுக் குப்புசாமி ஓர் ஏழை. ஆனால் முயற்சிச் செல்வம் மிகுதியாக அவனுக்கு உண்டு. திருப்புளி வீட்டுக் கொல்லையில் நாவலும், வில்வமும் குப்பன் வீட்டுப் புறத்தில் என்றைக்குத் தலைகாட்டினவோ அன்று முதல், நாள் தவறாமல் தளிர் பறித்துத் தின்று வந்தான் குப்பன். ஆண்டு ஒன்று சென்றது. குப்பனைக் காண வந்த அவன் நண்பன் நாராயணசாமி, உனக்கு இனிப்பு நீர்ப்பிணி எப்படி யிருக்கிறது, என்று கேட்டான்? அதற்குக் குப்பன், எனக்கு அந்த நோய் இருந்ததே நினைப்பில்லை என்று சொன்னான். மருத்துவ மனையிற் கிடந்த திருப்புளிசாமி மருத்துவரை நோக்கிக் கேட்டான் சாவேனா, பிழைப்பேனா என்று. நிலைமை கவலைக்கிடமானது என்றார் மருத்துவத் தலைவர். ‘ஐயோ!வீட்டில் வளர்த்த வில்வத் துளிரையும் நாவற்றுளி ரையும் உண்டு வந்தேனே? திருப்புளியே! வாழும் மனிதனைச் சுற்றி இருப்பன அனைத்தும் மருந்துகள். முயற்சியுடையவன் அவற்றைப் பயன் படுத்தி வாழ்கின்றான். திருப்புளிகளின் வாழ்வுக்கு அவர்களின் சோம்பேறித்தனம் ஓர் இருப்பு உளி. - குயில், 22.9.1959  34. மனத்துன்பத்துக்கு மருந்து நேற்று வந்தீர்கள் என் பசுமாடு நோயாய்க் கிடந்தது. இன்றும் வந்தீர்கள் உயிர் ஊசலாடுகின்றது. மருந்து எழுதிக் கொடுங்கள். என்றான். மருத்துவர் வாகீசையரை நோக்கி மாணிக்கம். உடனே கீழ்வருமாறு ஐயர் எழுதிக் கொடுத்தார். உம் மனத்துன்பத்துக்கு மருந்தாக இதை எழுதிக் கொடுத்தேன். படித்துக் கொண்டிருக்கவும். முற்பிறப்பில் செய்த வினைப்பயனை வெல்லமுடியாது இதை மாணிக்கம் கையிற் கொடுத்து - வந்த கூலி கேட்டார் வாகீசர்! இல்லை என்றான் மாணிக்கம்! ஏன் என்றான் பார்ப்பான். அதற்கு மாணிக்கம். பார்ப்பான் எழுதிக் கொடுத்ததையே திருப்பி அவன் கையிற் கொடுத்தான். - குயில், 22.9.1959  35. அனைவரும் அவர்களே! நெய்வேலியில் வேலையில் இருந்த கிட்டு, வேலை நேரத்தில் வடலூரில் கடைத்தெருவிற் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை வேம்பு கண்டு கேட்டான். ‘வேலை நேரத்தில் நெய்வேலியைவிட்டு வடலூரில் இருக்கின்றாயே? கிட்டு: நான் நெய்வேலியில் இருந்தேனா வடலூரில் இருந்தேனா என்று தீர்மானிப்பவன் பார்ப்பான் தானே. வேம்பு: மேற்பார்வையாளர் நீ அலுவலிடத்தில் இல்லை என்று குறித்துக்கொண்டு போய்விட்டால்... கிட்டு: அலுவலகத்தில் நான் இருந்தேனா இல்லையா என்று பார்க்க வருகின்ற பார்வையாளன் பார்ப்பான் தானே! வேம்பு: எழுதாமற் கிடக்கும் உன் எழுத்துப் புத்தகத்தைக் கொண்டு உன் மேற் குற்றம் சாட்டமாட்டானா? கிட்டு: எழுதாமல் கிடக்கிறது-எழுதிக் கிடக்கிறது என்று தீர்மானிப் பவன் பார்ப்பான் தானே! வேம்பு: இப்படி உன்போல் எல்லாப் பார்ப்பனருமே செய்து கொண்டி ருந்தால் நெய்வேலித் திட்டமே நிறை வேறாமல் போய்விடுமே. கிட்டு: நிறைவேறிற்று, நிறைவேறவில்லை என்று எடுத்துச் சொல்பவன் பார்ப்பான் தானே. வேம்பு: இப்படியே போய்க் கொண்டிருந்தால் நேரத்தில் நிலக்கரி ஏற்றக் கப்பல் வந்தால் எதை ஏற்றுவது? கிட்டு: நிலக்கரி ஏற்றப்பட்டது; கப்பல் சும்மா திரும்பிற்று என்று எடுத்துச் சொல்வோன் பார்ப்பான் தானே! வேம்பு: அதிருக்கட்டும்! நெய்வேலித் திட்டத்திற்கு போட்ட பணமெல்லாம் விழலுக்கிறைத்த நீர் என்று ஆகிவிடலாமா? கிட்டு: போட்ட பணம் வீணாயிற்று, வீணாகவில்லை என்று எழுதி வைப்பவன் பார்ப்பான்தானே! வேம்பு: பார்ப்பனரைக் கொண்டு நடைபெறுகின்ற எதுவும் பாழாய்ப் போய்விடும்; தமிழர்களைக் கொண்டு, நடைபெறுகின்ற எதுவும் நல்லபடி முடியும் என்ற பெயரல்லவா வந்துவிடும். கிட்டு: பார்ப்பானால் முடிகிறதா, தமிழனால் முடிகிறதா என்று ஆராய்வோன் பார்ப்பான் தானே. வேம்பு: வேலை நேரத்தில் இங்கு வந்த உனக்கு உயிருக்குத் தீங்கு வந்து ஏதாவது நேர்ந்து விட்டால் உன் நேர்த்தலைவன் அல்லவா பதில் சொல்லியாக வேண்டும். கிட்டு: நான் செத்தேன், சாகாமல் இருக்கிறேன் என்று சொல்பவன் பார்ப்பான் தானே! வேம்பு: பார்ப்பனரால் நாடு அழிந்து போகிறது என்ற பழி உண்டாகலாமா? கிட்டு: பார்ப்பானால்தான் அழிகின்றது. தமிழனால்தான் நாடு அழிகின்றது என்று உலகத்திற்கு காட்டுகின்றவன் பார்ப்பான்தானே! - குயில், 29.9.1959  36. அஞ்சிய உள்ளத்தில்... வேங்கை ஒரு முரடன். தோள் வலியுடையவன் படிக்காதவன், அவன் செய்யில் ஒரு வியப்பு என்ன எனில் படிக்காத வேங்கைக்கும் இந்த வேடப்புலியூரில் புகழ் உண்டு. வேங்கை ஊருக்குப் புறத்தில் இருந்தது அவன் வீடு. அவன் வீட்டில் இளைஞர் பலர் மொய்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த இளைஞர் அனைவரும் வேங்கைபால் வலிமிக்கவராகவும், புகழ் உடையவராகவும் விளங்க ஆசையுடைபவர்கள். அவர்களில் புலிக்குட்டி என்பவன் ஒருவன். அந்தக் கூட்டத்திற்கு அவன் சட்டாம்பிள்ளையாய் விளங்கினான். ஒரு நாள் வேங்கையும், சட்டாம்பிள்ளையாகிய புலிக் குட்டியும் தனித்துப் பேசினார்கள். புதிய கண்டுபிடிப்பு ஒன்று! புலிக்குட்டி சொன்னான்: நாம் ஏன் சாப்பாட்டுக்குத் தொல்லைப்பட வேண்டும்? வேடப்புலியூர் மக்களில் பெரும்பாலோர் ஏன் வெள்ளாட்டுக் கறியை நெய்யில் வேகவைத்து மூன்று வேளையும் உண்டு செறிமானத்துக்கு மருந்து உண்டு கிடக்கவேண்டும்? உண்டு விட்டு மாடுபோல், அவர்கள் உறங்கும்போது வீட்டில் உள்ள பணத்தையும் நகைகளையும் கொள்ளையடிப்பதால் என்ன? வேங்கை: சரிதான், திருடுவதைக் கண்டுவிட்டால் என்ன செய்வது - என்று கேட்டான். அதற்குப் புலிக்குட்டி புகலுவான்: திருடியவர்கள் அவர்களை, இதோ இந்த ஆலின் அடியில் நடக்கும் அறமன்றத்திற்குத்தான் கொண்டு வரவேண்டும். நம்மை அவ்வாறு கொண்டு வரமுடியுமா? அது சரிதான் என்று வேங்கை நகைத்தான். புலிக்குட்டி மேலும் எண்ணத்தில் ஆழ்ந்தான். அவன் சொன்னான். எதற்கும் நாம் முன்னெச்சரிக்கையாக இந்த ஆலமரத்தையே அடியோடு வெட்டி விறகாக்கி விடவேண்டும். புலிக்குட்டியின் இந்த அரிய கண்டுபிடிப்பு ஒத்துக் கொள்ளப் பட்டது. வேங்கை ஊராருக்கு ஒரு அறிவிப்பு விடுத்தான். அதன்படி மறுநாள் காலையில் ஊர் மக்கள் எல்லோரும் தலைக்கு ஒரு கோடரி அல்லது கடப்பாரையுடன் ஆலமரத்தடியில் வந்து சேரவேண்டும். பெண்கள் ஒவ்வொரு வரும் தட்டு, அரிவாள் கொண்டு வரவேண்டும். என்பதுதான் அறிக்கை. ஊர்ப் பெரிய மனிதர்களும், ஆலின் அடியில் மன்று கூடி அற ஆய்வு செய்து வரும் நடுவினர்களும், தம் பங்குக்கு ஆன ஒரு கோடரியோ, கடப்பாரையோ முன்னேற்பாடு செய்து விட்டார்கள். இவர்கள் அறநூல் அறிந்தவர்கள். தமிழ் இலக்கியப் புலிகள். ஆனால் அஞ்சும் இயல்பு உடையவர்கள். மக்கள் தலைவரே! பொது மன்று நடைபெறும் ஆலை வெட்ட ஆயுதம் காணுகின்றார்கள் என்பதால் மக்கள் எல்லோருமே ஆயுத முன்னேற்பாட்டை முடித்து விட்டார்கள். வேங்கையின் வீட்டுக்கு எதிர்த்த வீட்டில் இருப்பவர் பெயர் புறப்பாட்டுக் கணக்காயன் முத்துவீரன் என்பது. அவர் சிறிது நாட்களாக மனித வாழ்க்கை என்பது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி அதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தவர். அறுபது ஆண்டு நிறையப் பெற்றவர். ஆயினும் ஒழுக்கம் உடையவர். ஆதலால் உடல் நலம் கெடாதிருந்தார். தோற்றம் ஓர் யானை. அவருக்கும் கிடைத்தது அறிவிப்பு: காலையில் ஆலமரம் வெட்டப் புறப்படு என்பதுதானே அறிவிப்பின் சுருக்கம். அறிவிப்பைக் கண்டவுடன் மனைவியை அழைத்தார்! அவள் வந்தாள். அடி முருகாத்தா! என் அன்பே! ஒன்று கேள். நம் ஆசைகள் தீர்ந்தன. இனியும் நுகரவேண்டும் என்பது ஒன்றும் இல்லை. பையனுக்குத் திருமணம் முடித்தாகிவிட்டது. பெண்ணுக்கும், திருமணம் முடித்துவிட்டோம். அவர்களும் பிள்ளை குட்டி வேலை வித்து நிறைய உடையவர்கள், அவர்களுக்குச் சொத்தும் வைத்து இருக்கிறோம். நம் கடமை தீர்ந்தது. நீ போன ஆண்டு காசு மாலை போட்டுக்கொள்ள ஆசை யிருக்கிறது என்றாய். வெள்ளை மாட்டை விற்றேன்! காசு மாலையோடு கல்லிழைத்த ஓலையும் வாங்கிக் கொடுத்தேன். வெள்ளிக்கிழமை இரவு நீ நோயாய்க் கிடைக்கையில் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். எனக்கும் எல்லாம் இருக்கிறது என்று மகிழ மகிழச் சொன்னது உண்டு. இந்த உடம்பு என்றும் இருக்கப் பண்ணலாம். ஏன் என்றும் இருக்க வேண்டும்? நல்லபடியாய் ஏன் சாகக்கூடாது? என்று முடித்தான். அவள் சொன்னது இதுதான். இன்னும் எதற்கு இங்கு இருப்பது? சாக வழி சொல்லுங்கள். நானும் கூடவே வந்து விடுகின்றேன் என்றாள். அதற்கு அவன் விளம்புவான்: சாகவழி நாமே வகுப்பதில்லை. தானாக ஏற்பட வேண்டும். சாவு ஏற்படும்படியான நல்ல காரியத்தைச் செய்துவிட வேண்டியதுதான் நம் கடன். இவ்வாறு இருவரும் சாகத் துணிவதைப் பற்றிக் காலைவரை பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். வேங்கையின் ஆள் முத்து, கணக்காயர் வீட்டுக்கு வந்து, அதோ பாரும்! சிற்றெறும்பின் சாரைகள் போல ஆயுதத்தோடு ஊரார் ஆலடிக்குப் போகின்றார்கள். நீங்களும் எழுந்திருங்கள் என்றான். கணக்காயரும், மனைவியாரும் தங்கள் முடிவுப்படி நாங்கள் வரமுடியாது என்று பட்டுக் கத்தரித்தது போல் சொல்லி விட்டார்கள். முத்து கேட்டான்: ஊர் ஓடும்போது ஒக்க ஓடவேண்டாமா? கணக்காயர்: ஓட வேண்டாம் முத்து: ஆலமரம் வெட்ட வேண்டாமா? கணக்: வேண்டாம் முத்து: வெட்டுவதை மறிக்க உம் ஒருவரால் முடியுமா? கணக்: முடியும் முத்து: உம்முடன் யார் சேருவார்? கணக் : எல்லோரும் முத்து: நீர் சட்டாம்பிள்ளையோ! கணக்: தன்னலம் மறுத்தவன் முத்து: கணக்காயரே! ஊருக்கு இடையூறான ஆல மரத்தை வெட்டுவதில் நீர் ஒத்துழைக்க வேண்டும். கணக் : ஆலமரக் கோயில் அன்று ஊருக்கு இடையூறு முத்து : பின்... கணக்: குழவிக்கல் கோயில் இதோ வருகின்றேன் என்று முத்து எரிச்சலோடு போனான். முத்து நடந்ததை வேங்கையிடம் கூறினான். சிவன் கோயிலைத் தான் இடிக்க வேண்டும். ஆலமரக் கோயிலை வெட்டக்கூடாது; என்று கணக்காயர் சொன்னதை வேங்கை, ஆலமரத்தடியில் வந்து சேர்ந்த ஊர் மக்களிடம் கூறினான். ஊர் மக்கள், நாங்கள் எல்லோரும் வேங்கையின் கட்டளைப்படி வந்துள்ளோம். கணக்காயர் வர மறுத்தார். இது அவர் செய்த முதல் தப்பு. இரண்டாவது சிவன் கோயிலைப் பழித்தார் என்று கூச்ச லிட்டார்கள். வேங்கையும் சட்டாம்பிள்ளை புலிக்குட்டியும் தனித்துப் பேசினார்கள். முடிவில் கணக்காயரை நோக்கிச் சட்டாம் பிள்ளையும் முத்துவும் போவதாகத் தெரிந்தது. கணக்காயர் தலை மனைவியின் தலை தனித் தனியான கோலில் கோத்துக் கூட்டத்தில் எடுத்து வரப்படுகின்றன. கணக்காயர் தலை இதோ! மனைவி தலை இதோ! என்றான் வேங்கை: தலைகளைக் கண்ட ஊர் மக்கள் கைகொட்டி மகிழவில்லை. கண்ணீர் சிந்தினார்கள். ஒருவன் கேட்டான். அவர் ஏன் சாகவும் துணிந்தார்? இன்னொருவன் சொன்னான். ஆலமரத்தை வெட்டக் கூடாது - என்பதற்காக. வேறொருவன் கேட்டான்: சிவன் கோயிலைவிட ஆலமரம் பயனுள்ளது என்பது கணக்காயர் கருத்தோ? மற்றொருவன் கூறினான்: வேறென்ன? இந்த வினா விடை நீண்டு கொண்டே போகவில்லை. வேங்கையும், சட்டாம்பிள்ளையும் மற்றும் ஆறு பேரும் வெட்டப்பட்டு அங்கே குழிதோண்டிப் புதைக்கப்பட்டார்கள். - குயில், 2. 8. 1960  37. வைகறைத் துயிலெழு! விடியா மூஞ்சி வேலைக்குப் போனான்; வேலை கிடைத்தும் கூலி கிடைக்கவில்லை. பொழுது விடிந்துவிட்டது. ஆனால் அவன் முகத்தில் இன்னும் பொழுது விடியவில்லை. தூக்கக் கலக்கம் அவனை இன்னும் விட்டபாடு இல்லை. இப்படிப்பட்டவர்களைத்தான் விடியா மூஞ்சி என்பவர் தமிழர். அந்த விடியா மூஞ்சி காலை எட்டரை மணிக்குக் கொல்லூற்று வேலைக்குப் போனான். வேலையிருக்கிறதா என்றான். நேரத்தோடு வேலையில் ஈடுபட்டிருந்த மேத்திரி இருக்கிறது சேறுகூட்டு என்றான். ஆனால் வேலைக்கமர்ந்தவர்களின் பெயர்களை எட்டு மணிக்கே குறித்துக் கொண்டு போய்விட்டான் முதலாளி. வேலையாட்கள் அனைவரும் வேலைசெய்து கொண்டிருக் கிறார்கள். முதலாளி மேற்பார்வைக்கு அங்கே வந்தான். விடியா மூஞ்சி ஒரு குட்டிச் சுவர்மேல் தலையை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். வேலை விட்டாயிற்று மாலை ஆறுமணி ஆய்விட்டது. ஆட்கள் கூலி கேட்கின்றார்கள். விடியா மூஞ்சிக்குக் கொடுப்பானா கூலி? ஒரு நயாபைசாகூட இல்லை போ என்றான். விடியா மூஞ்சி ஓராண்டு முயன்று காலை ஆறுமணிக்கெல்லாம் கண்விழிக்கக் கற்றுக் கொண்டான். - குயில், 4.10.1960  38. தமிழ்ப் பற்று! (இருபது ஆண்டின் முன்னே, புதுவையில் ஒரு தமிழ்ப் புலவர்க்கு ஏற்பட்ட துயர்மிகு நிலையைப் பாவேந்தர் அறிந்து, மனம் வெதும்பி எழுதினார், இச்சிறுகதையை. தமிழாசிரியராகப் பன்னெடுங் காலம் பணியாற்றிய நம் பாவேந்தர்,ஆசிரியர் நிலை உயருமட்டும், நாட்டின் முன்னேற்றம் முயற்கொம்பே என்று கருதினார். தமிழ்ப் புலவரை மதித்து நல்வாழ்வு அளித்தலே தமிழரின் தலையாய கடன் என்பதை இச்சிறுகதை எடுத்துக் கூறுகின்றது!) அவர்கள் உணர்ச்சியுள்ள இளைஞர்கள்; தமிழ்ப்பற்று மிக்கவர்கள்! சென்ற ஆண்டில் கோடையில் மாலைப் போதில் அவர்கள் கடற்கரை யில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கந்தசாமி சொன்னான்: நம்மாலான தொண்டு செய்ய வேண்டும் என்று, கந்தசாமி யின் அச்சொற்கள் மற்ற இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்ந்தன! தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும். ஆம்! என்று உறுதி செய்தார்கள் அனைவரும். தமிழ்க் கழகம் என்ற பெயரால் ஒரு நிறுவனம் நிறுவப்பெற்றது. ஆண்டு ஒன்றுக்குள் தமிழ்க் கழகத்தில் வந்து சொற்பொழிவாற்றாத தமிழ்ப்புலவரே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லும்படி ஆயிற்று. ஆண்டு விழா மூன்றுநாள் நிகழ்ச்சியாக மிகச் சிறந்த முறையில் கொண்டாடப் பெற்றது. ஊர் மக்கட்குத் தமிழ்க் கழகம் என்றால் கற்கண்டு. அப்படி ஒரு கழகமும் இதுவரை ஊராரின் நெஞ்சைக் கவர்ந்திருக்க முடியாது. தமிழ்க் கழகத்தார், தம் கழகத்தின் சார்பில் ஒரு தமிழ் விடுதி ஏற்படுத்தத் திட்டம் போட்டார்கள். உயர் வகுப்பில் நுழையும்படி மாணவர்கட்குப் பயிற்சியளிப்பதுதான் தமிழ் விடுதியின் நோக்கம். சரியாக நாற்பது மாணவர்கள் தமிழ் விடுதியில் சேர்ந்தார்கள். மூன்று ஆசிரியர்களைச் சம்பளத்திற்கு அமர்த்தினார்கள் கழகத்தார். வகுப்புகள் சிறப்புடன் நடந்து வந்தன. மாதக் கடைசியில், கழகத்தார் கேட்பதற்குள், மூன்று ரூபாய் விழுக்காடு நாற்பது மாணவரும் நூற்றிருபது ரூபாயைக் கொண்டு வந்து குவித்தார்கள். கழகத்தார் அனைவர்க்கும் ஒரே மகிழ்ச்சி! கழகத்தின் ஆசிரியர் மூவரில் வீராசாமிப் புலவர் குறிப்பிடத் தகுந்தவர். நிறைந்த தமிழ்ப் புலமை, பயிற்றுமுறை, பண்பு, ஒழுக்கம் எதிலும் குறைந்தவரல்லர்; மாதம் பிறந்து ஐந்து தேதியும் ஆய்விட்டது. எட்டாந்தேதி சம்பளம் வந்து விடும் என்று தமிழ் விடுதியின் ஆசிரியர் களில் இரண்டுபேர் பேசிக் கொண்டார்கள். அதற்கு முன்பே சம்பளம் கைக்கு வந்துவிடும் என்று வீராசாமிப் புலவர் நம்பினர். கழகத்து இளைஞர்கள் உணர்ச்சியுள்ளவர்கள் - தமிழ்ப்பற்று மிக்கவர்கள். ஆறாம் தேதி இரவு பத்து மணியடித்தது. வீராசாமிப் புலவர் குடும்பம், பசியின் நிலைக்க முடியாத ஆழத்தில் முழுகிற்று. அந்தத் துன்ப நிலையிலும் புலவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரு மகிழ்ச்சி; என்னவென்றால் ஐந்து பிள்ளைகளும் பசியால் விம்மிச் சோர்ந்ததால் குப்புறப் படுத்துத் தூங்கி விட்டார்கள். புலவர், தம் ஒட்டிய வயிற்றை மேலும் ஒரு கையால் அழுத்திய படி குடியிருக்கும் பகுதியில் ஒருபுறம் கிடந்த முறத்தைத் தூக்கிக் கூரை மேல் செருகிவிட்டு அந்த இடத்தில் சோர்ந்து உட்கார்ந்தார்! எதிரில் பெருத்த வயிற்றொடு அவர் மனைவி நின்று கொண்டிருந்தாள்; பெருத்த வயிறென்பது உணவுண்டதால் பெருத்ததன்று. அந்த அம்மாவின் வயிற்றில் ஆறாவது குழந்தை வாழ்கின்றது. பெருங்காற்று! விடிந்தால் அமைதி- என்றார் புலவர். காலையில் சம்பளம் வருவது உறுதிதானே- என்றார் மனைவி. புலவர் சொல்லுகிறார்; அதிகாலையில் கழகத் தலைவரும், பொருட்காப்பாளரும் வெளியில் போகுமுன் அவர்களை வளைத்துக் கொள்கிறேன். சம்பளத்தை வாங்கிக் கொண்டு நேரே வீட்டுக்கு வருகிறேன். உன்னிடம் நாலைந்து ரூபாயைப் போட்டுவிட்டு நேரே கடைக்குப் போய்விடுகிறேன்! நீ காலையில் விறகு முதலியவைகளை விரைவாக வாங்கிவிடு. நான் கடையில் ஆகவேண்டியதை முடித்துக் கொண்டு ஓடி வந்து விடுகிறேன். அரிசி முதலியவைகளை நாம் சில்லரையாக அவ்வப்போது வாங்குவது சரியல்ல. ஒரு மூட்டை அரிசி ஒரு மாதத்திற்கு வேண்டிய பல சரக்கு வாங்கி வந்து விடுகிறேன். நான் கடைத் தெருவில் சிற்றுணவு பார்த்துக் கொள்கிறேன். காலை உணவைச் சிறிது நல்ல முறையில் ஏற்பாடு செய். பிள்ளைகட்கு! மனைவி; ஆமாம்! இராப்பட்டினி கிடந்த பிள்ளைகள். இப்போதே ஒரு மாட்டுவண்டி பேசி வைத்துவிடலாமே; அரிசி முதலியவற்றை ஏற்றிவர! புலவர். காலையில் பார்த்து கொள்ளலாம். வண்டி கிடைக்கும். மறுநாள் காலையில் எதிர்பார்க்கும் இன்பத்தை, நினைத்த புலவரும் மனைவியும் அந்தத் துன்ப இரவிலும் தூங்க முடிந்தது. கழகத் தலைவரும் பொருட்காப்பாளரும் அலுவலை முன்னிட்டு வெளிச் செல்லுமுன் புலவர் அவர்களைக் கண்டார். அவர்கள் கழகக் கட்டிடத்தில் போயிருக்கும்படி சொன்னார்கள் புலவரை. காலை எட்டுமணி அடித்துவிட்டது. வழக்கப்படி வகுப்புகள் தொடங்கின. புலவர் அந்த வண்டியை அனுப்பிவிட்டார், நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு வரச் சொல்லி! வண்டிக்காரன் நல்ல மனிதன்! பன்னிரண்டு மணிக்குத் தலைவர் பூசையில் இருந்தார். பொருட் காப்பாளர் புதிய வெளியீடு ஒன்றைக் கருத்தாகப் படித்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டபின், ஒரு மணியாயிற்று; கழகத்தின் தலைவரும் பொருட் காப்பாளரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள் என்று செய்தி கிடைத்தது புலவருக்கு. ஓய்வு என்பது அவர்கள் தூங்குவதின் பெயர். இரண்டு மணிக்கு வகுப்புக்கள் தொடங்கின மாலை ஆறு மணிக்குத் தலைவரையும் பொருட்காப்பாளரையும் கழகக் கட்டிடத்தில் புலவர் காணமுடிந்தது. தலைவர் புலவரைக் கேட்டார்: இந்த மாதத்தில் வகுப்பு எத்தனை நாட்கள் நடந்தன என்று ஆயுத பூசைக்காக ஒன்பது நாட்கள் வகுப்பு இல்லை. கழகத்தில் வடக்கத்தியார் இறங்கி இருந்ததால் மூன்று நாள் வகுப்பு நடக்க வில்லை. மதகடிப்பட்டுச் சந்தைக்குப் போய் மாடு வாங்கிவர என்னை அனுப்பினீர்கள். அது ஒரு நாளும் சேர்ந்தால் பதின்மூன்று நாட்கள் போகப் பதினேழு நாட்கள் வகுப்பு நடந்தது, என்று புலவர் பதில் சொன்னார். தலைவர், பொருட் காப்பாளருக்குக் கீழ்வருமாறு கட்டளைப் பிறப்பித்தார்; கால்ரூபாய் விழுக்காடு பதின்மூன்று நாளின் தொகையைக் கழித்துக் கொண்டு மீதியைப் புலவரிடம் கொடுத்துக் கையொப்பம் பெற்றுக் கொள்ளுங்கள். பொருட்காப்பாளர் பிரஞ்சு நன்றாகப் படித்தவர்! மொத்தச் சம்பளத் தொகையைப் பணமாக்கி அதில் பதின்மூன்று நாளில் மொத்தத் தொகையைக் கழித்து மீதியை எட்டால் வகுத்து ரூபாயாக்கி எதிரில் வைத்தார். புலவர் நாலேகால் ரூபாயைப் பார்க்கிறார் உற்று. ‘அப்படியானால் எனக்கு மாதச் சம்பளம் ஏழரை ரூபாயா? என்று வியப்போடு கேட்டார் புலவர். நூறாயிர ரூபாய் சொத்துள்ள முற்போக்கு மன்றத்தில் உம் போன்ற புலவர் வகுப்பு நடத்துவதற்கு ஆறு ரூபாய்தானே கொடுக்கிறார்கள் என்றார் தலைவர்! நான் கூடுதலாக எதிர்பார்த்தேன்-இது புலவர் சொன்னது. ஏழரை ரூபாய் அதிகம் என்பது எங்கள் கருத்து தலைவர் சொன்ன பதில் இது. இங்கு ஆட்சி செலுத்தும் பிறநாட்டார், உங்களைவிட அதிகமாக மதிக்கிறார்கள் தமிழை! - இப்படிக்கு வீராசாமிப் புலவர்! பிறநாட்டினர், தம் பிரஞ்சு மொழி போலவே எண்ணு கிறார்கள் தமிழையும். அவர்கட்கு என்ன தெரியும்? ஆதலால் பிரஞ்சு மொழிக்குக் கொடுக்கும் சம்பளத்தைப் போலவே தமிழுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள். இங்ஙனம் தங்கள் அன்புள்ள கழகத் தலைவர்! பேச்சு முடிந்தது; நடுங்கும் நெஞ்சம், நாலேகால் ரூபாயை எடுத்துக்கொண்டு தள்ளாடி நடந்து சென்றது. வெளியில் வண்டிக் காரன். காத்திருந்ததற்கு இரண்டு பணம் பிடுங்கிக் கொண்டு போனான். அவன் நல்லவன்! புலவர் எட்டாந்தேதி வரைக்கும் கழகத்திற்கு வரவில்லை; எட்டாந் தேதி மாலை, புலவர் இனித் தமிழ்க் கழகத்துக்கு மட்டுமின்றி எந்தக் கழகத் துக்கும் வரமுடியாது என்று தமிழ்க் கழகத்தார் கேள்விப் பட்டார்கள். தமிழ்க் கழகத்தினர், உலக மக்கள் நிறைந்த பெருங் கழகத்தி லிருந்து வேறு புலவரைத் தேடுகின்றார்கள். அவர்கள் உணர்ச்சியுள்ள இளைஞர்கள்! தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள்! - பாரதிதாசன் குயில், 10.9.1967  39. அன்னை பொங்கல் விழா. திருவரசி, பொன்னம்மா, மின்னொளி ஆகியோர் அதிகாலையில் ஞாயிறு போற்றிப் பொங்கல் தொடங்குகிறார்கள். பால் பொங்குகிறது. மகிழ்ச்சியால், ‘பொங்கலோ பொங்கல்! என்று ஆரவாரம் செய்கிறார்கள். இலை போடப்படுகிறது. நல்லப்பன் வருகிறான். திருவரசியும் பொன்னம்மாவும் வரவேற்று உடன் உண்ணச் செய்கிறார்கள். அவன் கண்ணும் கருத்தும் மின்னொளி மேல்! நல்லப்பன் வெளியில் செல்லுகையில் சன்னலில் மின்னொளியைப் பார்க்கிறான். பேச்சுக் கொடுக்கிறான். அவள் உள்ளே போய்விடுகிறாள். அன்று மாலை மின்னொளியும் மீனாள் முதலிய பெண்களும் ஊஞ்சலாடி முடித்து ஒளிந்து பிடிக்கிறார்கள். காணாமற் போன மாட்டைத்தேடி வந்த இளவழகன், அலரிப் புதரில் வெண்ணிறங் கண்டு, இச்சு இச்சு என்று ஓட்டியதை அறிந்த மின்னொளி, இனி அவன் கையிலுள்ள கோலாலும், மாடென்றெண்ணி அடிப்பான் என்று நினைத்தவளாய் எதிர்வந்து நிற்கிறாள். கண்ணொடு கண் கலக்கின்றன. அவன் இனிதாக வர்ணித்து அரிதில் பிரிகின்றான். இதைப் பார்த்து வந்த மீனாள் மின்னொளியின் உளப்பாங்கை அறிந்து, அவன் இன்னான் என்று கூறி, மின்னொளியிடம் கடிதம் பெற்றுப் போகிறாள். இளவழகன் திருமணம் செய்துகொள்ள ஒப்புவதாகக் கடிதம் எழுதித் தந்ததை, மின்னொளியிடம் சன்னலில் மீனாள் கொடுக்கிறாள். சன்னலில் மின்னொளி கடிதம் படிப்பதைத் தெருப்புறத்தி லிருந்து நல்லப்பன் பார்த்துக் கொள்ளுகிறான். இதற்குள் இளவழகன் அனுப்பிய சிறுமி தில்லையும் பதில் கடிதம் கேட்க - மின்னொளி பதில் கடிதம் எழுதித் தில்லையிடம் கொடுக்கிறாள். தெருவில் போகும் தில்லை எதிரில் நல்லப்பன் குந்தி, தலையில் என்ன? gh®! என்ன, சிறுமி கவனிக்கையில், அவள் மடியிலிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு, அனுப்பி விடுகின்றான். பெரிய பண்ணையாகிய மணிமொழியாரும் அவர் மானேஜரான நச்சினார்க்கினியர் என்னும் நல்லப்பன் தந்தையும், மணிமொழியார் இளமனைவி தேனருவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மணிமொழியாரும், நச்சினார்க்கினியரும் மலேயாவுக்குப் போகவேண்டும், இங்கு நல்லப்பனுக்கு திருமணத்தை முடித்து, மானேஜராக அமர்த்திவிட்டு! நச்சினார்க்கினியர், தன் மகன், தானே ஒரு பெண்ணை மணக்க ஏற்பாடு செய்துகொண்டு வருகிறான் என்கிறார். விரைவில் திருமணம் முடிய வேண்டுமென்று கவலைப் படுகிறார் மணிமொழியார். தனக்குப் பிடித்தமாகத் தானே தேடிக்கொள்ளும்படி விடுவதுதான் நல்லதென்கிறாள் தேனருவி. மின்னொளி தன் சன்னலின் ஒரு கடிதம் கிடக்கக் கண்டு எடுத்துப் படிக்க - அன்புள்ள மின்னொளிக்கு, நான் உன்னை நேரிற்காண விரும்புகிறேன். இன்றிரவு ஊரார் மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்குக் கொண்டு போவார்கள். உன் பெற்றோர் போகட்டும். நீ போகாதே. இரவு 8 மணிக்கு நான் வருகிறேன். இங்ஙனம், இளவழகன். என்றிருப்பதை எண்ணி, மீனாவுடன் அன்று இரவு தன் வீட்டில், இளவழகனை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறாள். மீனா வேறு அறையில் இருக்கிறாள். மின்னொளி தன் வீடு நோக்கி வரும் இளவழகனை வரவேற்க வாயெடுக்கிறாள். நல்லப்பனைக் கண்டு வியப்பும் வருத்தமும் அடைகிறாள். நல்லப்பன் மின்னொளியைத் தனக்கு இணங்கும்படி முயலு கிறான்; முடியவில்லை. அச்சுறுத்துகிறான்; அவள் அஞ்சவில்லை. சீழ்க்கை அடிக்க நால்வர் உள்ளே நுழைகிறார்கள். மீனா கொல்லைப்புறமாக ஓடித் தெருக் கதவையும் மின்னொளி பின்னே ஓடிக் கொல்லைக் கதவையும் சாத்தித் தெருப்புறத்திலும் கொல்லைப்புறத்திலும் சங்கிலி போட்டுவிடுகிறார்கள். இதே நேரத்தில் மின்னொளியின் தாயான பொன்னம்மா கும்பலில் நெருக்குண்டு வீழ்ந்து கால் உடைந்து போக அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வருகிறான் தந்தை திருவரசு. வீட்டில் ஏறிக்குதிக்கின்ற நல்லப்பன் மின்னொளியைத் தாவுகிறான். அவன் பிறகு குதிக்கின்ற நால்வரையும் மீனா தடியால் அடித்து வீழ்த்திய வண்ணமிருக்கிறாள். எதிர்த்து - பிடிக்கத் தாவிய - நல்லப்பனுக்கு மின்னொளி தன் இடையில் செருகியிருந்த கத்தியைக் காட்டி, என்னைக் காக்கும் இக்கத்தியை நீ எதிர்த்தால் குத்திக் கொல்லப்படுவாய் என்று அவன் திடுக்கிட்டு நிற்கும்படி செய்கிறாள். தந்தை வந்துவிடுகின்றார்! வண்டியில் தாய் வந்துவிடுகின்றாள்! பின்னே தேனருவி, மணிமொழியாரின் கார் வந்துவிடுகின்றது. செய்தி விளக்கம் அடைகிறது. தேனருவி, மின்னொளியின் திறத்தை வியந்து பேசுகிறாள். இதில் கோயில் விழாவை நம்பிய தாய்க்குக் கால் ஒடிவும், அன்னை தந்தையரே முன்னறி தெய்வம் என்று நம்பிய மின்னொளிக்கு புகழும் ஏற்பட்டதாகிறது. முடிவில், தேனருவி, இளவழகனுக்கே மின்னொளி மனைவி! திருமணம் விரைவில் முடித்துவிடுங்கள் என்று கூறிச் செல்லுகிறார்கள். பெரிய பண்ணை மணிமொழியார் நச்சினார்க்கினியார் இருவரும், இரண்டாண்டுக்குப் பின்னர் இந்தியா வந்து திருமணம் முடிப்பதாகக் கூறி, நல்லப்பனை மானேஜர் ஆக்கிவிட்டு மலேயே செல்லுகிறார்கள். மணிமொழியார் முதலியவர்கள் போனபின் இளவழகன் - மின்னொளி திருமணம் (பதிவுத் திருமணம்) நடைபெறுகிறது. இளவழகன் தன் மாமனாரின் புடைவை வாங்கும் தொழிலை மாமனார் வீட்டிலிருந்தே கவனித்துவருகிறான். நூல் கிடைக்கவில்லை. வியாபாரமில்லை. நிலுவை வசூலாக வில்லை. வருமான வரியாக 25,000 - க்கு நோட்டீ வந்துவிட்டது. தன் சொத்தையும் தன் மாமனார் சொத்தையும் விற்று கடன்களைப் பைசல் செய்கின்றான் இளவழகன். மின்னொளி ஆண் குழந்தை பெறுகிறாள். மூன்றாம் நாள் மாமனார் இறந்துவிடுகிறார். வெளியில் வரவேண்டியதை நம்பி, காலங் கழிக்கிறான். கொடுத்த கடனைக் கேட்டால் அடிக்க வருகிறார்கள் பலர். பெரிய பண்ணை வீட்டுக்காரியாகிய தேனருவி வீட்டுக்கு, அங்கு வேலை செய்யும் மேதிரியைத் தேடிக்கொண்டு (கொடுத்த கடனைக் கேட்க) வருகிறான். இளவழகனைத் தேனருவி பார்க்கிறாள். நிலைமையை விசாரிக்கிறாள். கொய்யாப்பட்டுக் கிராமத்தின் மானேஜர் இடத்தைக் கொடுத்து, கார் கொடுத்து, அவ்வூரிலுள்ள கூரை வீட்டில் இருக்கச் சொல்லி, கையில் சிறிது தொகையும் தந்து அனுப்புகிறாள் இளவழகனை! இந்த முடிவை மானேஜராகிய நல்லப்பன் மேலுக்கு ஒப்புகிறான். அவன், குடிசையில் தங்கும் இளவழகனைக் கொளுத்தி விடும்படி ஆட்களை அனுப்பிவிடுகிறான். தினமும், பிள்ளைக்குத் தாய்ப்பாலும், சோறும் பெற்றுப் போடும் செங்கோணி, மின்னொளியிடம் ஓடி வந்து அம்மா உங்கள் ஐயாவைக் கொளுத்த ஆட்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். ஆட்களில் என் கணவனும் ஒருவன் என்கிறாள். மின்னொளி தாடியும் மீசையும் முண்டாசுமாகத் தேனருவியிடம் ஓடிக் கூறி, இதை மின்னொளி சொல்லச் சொன்னாள் என்று கூற, அவள் காரில் பலரை அனுப்புகிறாள். அப்பலரில் தாடிக்காரனும் உட்கார்ந்து கொள்கிறான். கார் போகிறது. அதை நல்லப்பன் இடையில் மறித்து நிறுத்தி, அங்குள்ள ஆட்களுடன் ஒத்திருங்கள் என்று கூறி அனுப்புகிறான். கார் பறக்கிறது. இளவழகன் குண்டர்களால் கட்டிப் போடப்பட்டிருக்கும் குடிசை கொளுத்தப்படுகிறது. வேறுபுறமாக தாடி ஆள் இளவழகனை மீட்டுக் கொண்டு போகிறான். அதே நடு இரவில், இளவழகன் மீண்டு ஓடிய செய்தி நல்லப்ப னுக்கு எட்டுகிறது. இளவழகன் வீட்டைச் சூழ்ந்து இளவழகனையும் குழந்தையையும் மின்னொளியையும் கொன்றுவிடும்படி வந்த ஆட்களை ஏவுகிறான். இளவழகன் தேனருவி வீடு சென்றுவிடுகிறான். மின்னொளியும் வீட்டில் நுழைகிறாள். பலர் பின் தொடர்கிறார்கள். மின்னொளி அறையிற் புகுந்து தாளிட்டுக் கொள்கிறாள். ஆட்கள் மூன்று வயதுக் குழந்தையைத் தூணில் கட்டு கிறார்கள். வெளியில் வந்துவிடு மின்னொளியே என்கிறார்கள். அவள் வர மறுக்கிறாள். குழந்தையை வெட்டு என்கிறான் ஒருவன். மின்னொளி பிள்ளையைத் தன் இருகையால் மறைத்தபடி தன் மார்பை எதிரிகட்குக்காட்டி நிற்கிறாள். கத்தியை நீட்டுகிறான் செங்கோணி, கணவன். ஆயினும் கை ஓடவில்லை. பிள்ளைக்கு பால் தரும் மார்பு! அள்ளி அள்ளிச் சோறிடும் அன்னையின் கை, என்று கூறி கத்தியைக் கீழே வீசி மற்றவர்களையும் அழைத்துப் போய் விடுகிறான். அதே நேரம் அங்கு வந்த தேனருவியும் இளவழகனும் செய்தி யறிகிறார்கள். தேனருவி, தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்ற வள்ளுவர் உள்ளத்தை வையத்தில் மெய்ப்பித்தார்கள், அன்னை மின்னொளியார் என்று புகழ்கின்றாள். நல்லப்பன், தான் செய்த தீமைகளைத் தன் அந்தரங்க வேலைக் காரனாகிய செங்கோணி கணவன் ஆணைமுத்திடம் சொல்லுகிறான். அவன், நீங்கள் இனிமேல் அந்தவரயாய் நடந்துகொள்ள மாட்டீர்கள் என்கிறான். தலைக்கு மேல் வெள்ளம், முழம் போனால் என்ன சாண் போனால் என்ன - தேனருவியை நெருங்குவதே சரி என்று உறுதி கொள்ளுகிறான். தேனருவிக்குத் தூக்கம் வரவில்லை. அவள் எண்ணமெல்லாம் இளவழகன்பால் விடுவித்திருந்தாள் ஆபத்து உதவிக்கு வா என்று அழகனுக்கு அஞ்சல் அனுப்புகிறாள். அவன் ஓடி வருகிறான் தன் காதல் உள்ளத்தை காட்டுகிறாள். உதவி கோருகிறாள். அழகன் அவள் அன்பில் கட்டுப்படுகிறான். பஞ்சணையில் படுத்துள்ள இளவழகனுக்கு தேனருவி கால் பிடித் திருக்கையில், காமக் கனல் வெதுப்பக் கதவைத் திறந்து கொண்டு புகுந்த நல்லப்பன் இருவர் நிலைகண்டு பின் வாங்குகிறான். இவன் பார்த்து விட்டான் என்று தேனருவி மட்டும் தெரிந்துகொள்ளுகிறாள். நல்லப்ப னுக்குத் தேனருவியுடனிருந்தவன் இன்னான் என்பதும் தெரியாது. தேனருவி, நடந்ததை இளவழகனிடம் கூறி, நீங்கள் என்னை விட்டு வெளியிலேயே போகக் கூடாது. போனால், இருவருக்கும் நல்லப்பனால் தீமை நடக்கும் என்று கூறிவிட்டு, மின்னொளிக்கு உன் கணவனை அவசரமாக இலங்கை மானேஜ் மெண்டுக்கு அனுப்பி இருக்கிறேன் என்று கடிதம் எழுதியனுப்பு கிறாள். விடிந்ததும், நல்லப்பன் தேனருவியைக் கண்டு, இரவு தேனருவியில் படிந்து கிடந்தவன் யாவன் என்று கேட்க, அவள், நானும் என் தோழியுமான புண்ணியமும் சிவா பார்வதி நாடகம் நடித்தோம் என்கிறாள். அவன், அவளைத் தொடுகிறான். அவள் சீறி விலக்குகிறாள். உடனே நல்லப்பன் உங்கள் மனதைச் சோதித்தேன், உங்கள் கணவராகிய மணிமொழியாருக்கு உங்களைப் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்க என்று மழுப்புகிறான். இளவழகன் தேனருவியின் உள்கட்டில் தேனருவியிடம், சதா இன்பத்தை அனுபவித்தபடி தன் மனைவி பிள்ளையை மறந்தவனாய் இருக்கிறான். தன் மனைவி கருப்பந்தாங்கி இருந்தாள் என்பதையும் அவள் செலவுக்கு தொல்லைப்படுவாள் என்பதையும் தன் நினைவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பமே அவனுக்கு இல்லாமல் செய்து வருகிறாள் தேனருவி. நல்லப்பன், இளவழகன் ஊரில் இல்லாதிருத்தலை எண்ணு கிறான்; விசாரிக்கிறான். தேனருவியைக் கேட்கிறான். அவள், அவனை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகக் கூறி விடுகிறாள். மலேயாவிலிருந்து நச்சினார்க்கினியர் எழுதிய கடிதம், தேனருவிக்குக் கிடைக்கிறது. அதில், மணிமொழியார் அங்கு மலாய் காரியை மணந்து குழந்தை பெற்றிருப்பதாயும், அவரை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டால் நல்லதென்றும், காணப்படுகிறது. தேனருவி ஓர் ஆண் குழந்தை பெறுகிறாள். பெற்ற குழந்தையை அவள் ஒருநாள் இரவு செங்கோணியிடம் கொடுத்து புதைத்துவிடு என்று கூறி ஒரு சரிகைப் புடவையில் சுருட்டித் தர அவள் வாங்கிச் சென்று கொல்ல மனம் வராமல் மின்னொளி, வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டுப் போகிறாள். காலையில், மின்னொளி சாணியிட வந்தவள், குழந்தையை எடுத்து மார்போடணைத்துச் சரிகைச் சேலையைத் தூய்மை செய்து பெட்டியில் வைத்து குழந்தையைக் காத்து வருகிறாள். ஏணையில், அநாதைக் குழந்தையும் மடியில் தன் பிள்ளையும் ஆக உட்கார்ந்து நூல் உருண்டை சுற்றுகையில், தன் கணவன் நினைவு வரவே கண்ணீர்விட்டு கிடக்கிறாள் அதே நேரத்தில், இளவழகன் எதிரில், தேனருவி, அநாதைத் தாயின் சோகக் கதை பற்றிய அபிநயம் காட்டி ஆடுகிறாள். அநாதை தன் கையில் ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு கதறுவதாகக் கண்ட இளவழகன், தன் மனைவி நினைவால் இரக்கமடைவதை, அவள் என்ன என்று கேட்க, ‘என் மனைவி, செலவுக்கு என்ன செய்வாள்? என்கிறான். அன்று முதல் புண்ணியத்தின் வசம் நாடோறும் பணம் அனுப்புவாள் ஆனாள். புண்ணியம் கொடுத்த ஐந்து ரூபாய்க்கு, நூல் தளைகள் வாங்கியது போக அரை ரூபாய் அரிசி அதிகம் வாங்கிச் சமைத்ததில் அன்று ஒருகை அளவு சோறு மீந்தது. அவள் அந்த மீந்த சோற்றைக் கையில் ஏந்தியபடி ஒருபுறம் ஓவியம் போல் அசைவற்று நிற்கையில், புண்ணியம் சென்று, எதை நினைத்து இவ்வாறு சோறும் கையுமாக அசைவற்று நிற்கிறீர்கள் என்ன, அதற்கவள், இந்த மீந்த சோற்றை உண்ண இப்போது எனக்கு இன்னொரு குழந்தை இல்லையே என்று கூறியதைக் கேட்ட புண்ணியம், மின்னொளியிடம் தாய்மை கண்டு, அவள் காலில் விழுந்து கும்பிட்டுச் செல்லுகிறாள். புண்ணியம், தேனருவி தனக்குப் பிள்ளை வேண்டாம் என்று நினைத்துக் காரியம் செய்வதையும், இளவழகனை அவள் மனைவி யிடம் அனுப்பாமல் உள்ளடக்கி வைத்திருப்பதையும் சகிக்காமல், நல்லப்பனிடம், உள்ளே இளவழகனிருப்பதையும், தேனருவி பெற்ற குழந்தை செங்கோணி இரக்கத்தால் மின்னொளியிடம் வளர்வதையும் கூறி இதற்கெல்லாம் நல்ல ஏற்பாடு செய்தால் நலம் என்று கூறுகிறாள். அதற்கு நல்லப்பன், மணிமொழியார் இந்தியாவுக்கு வரும்படி செய்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்று கூறி, மணிமொழியாருக்கு, கடிதம் எழுதுகிறான். அதில், நீங்கள் உடனே வராவிட்டால் தேனருவி சொத்தெல்லாம் இளவழகனுக்குப் பலவகையில் போய்ச் சேர்ந்துவிடும் என்று எழுதிவிடுகிறான். மின்னொளி குழந்தை பெறுகிறாள். (பெண்) சந்நியாசி ஒருவர் தேனருவி வீட்டில் குந்தியிருந்து, உதவி பெற்றுப் போகிறார். அவர் அடிக்கடி கூறும், ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல என்பதில் பெண்டிர் சதமல்ல என்ற வரியைத் தனக்கு அனுகூலமாகக் கொண்டு - இளவழகன் தன் மனைவியை மறந்திருக்க வேண்டிய அவசியத்தைக் கூறுவாள் தேனருவி. தேனருவி ஒரு நாள் இளவழகனை அறையில் பூட்டிவிட்டு, கருத்தடை மருத்துவச்சியிடம் போகிறாள் அங்கு, சந்நியாசி, தன் மனைவிக்குக் கருத்தடைச் சிகிச்சையின் பொருட்டு வீட்டுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டுக் கொண்டு வெளியில் உட்கார்ந்திருந்த தேனருவி, சந்நியாசி போனபின், அவர் யார் என்று கேட்க, அவர் பெரிய பணக்காரர், இங்கு ஒரு பெரிய பங்களா வாங்கவும் முயன்று கொண்டிருக்கிறார் என்கிறாள் மருத்துவச்சி! காரில் தேனருவி வந்துகொண்டு இருக்கிறாள். புண்ணியம் கடிதத்தைத் தபால் பெட்டியில் போட நெருங்குகிறாள். தேனருவி மறித்துப் பிரித்துப் படிக்கிறாள். தந்தையே, மணிமொழியார் இந்தியாவுக்கு வந்து விட்டதாகக் கூறியிருக்கிறீர் உங்கள் கடிதத்தில்! வரவில்லையே. தகவல் தெரிவியுங்கள். இங்ஙனம், ந. நல்லப்பன் என்று இருந்ததைப் பார்த்துப் புண்ணியத்தை அதட்டிக் கேட்க - அவள் முன் மணிமொழியார்க்கு நல்லப்பன் எழுதிய அனைத்தையும் சொல்லிவிடுகிறாள். அவளைப் பணங் கொடுப்பதாயும், நயத்தாலும் பயத்தாலும் இனித் தன்னையே ஆதரிக்கச் செய்து கொள்கிறாள். புண்ணியம் இனி வீட்டின் உட்கட்டை விட்டு வெளியே போகக் கூடாதாம். இளவழகன் கொல்லையில் ஒரு புறம் உட்கார்ந்திருக்கிறான். இருபுறாக்கள் காதல் களிப்பில் இருப்பதைக் காணுகிறான். அங்கு வந்த செங்கோணியை எங்கே தேனருவி என்கிறான். மஞ்சத்தில் போய்ப் படுக்கிறான். மீண்டும் எழுந்து அவள் வருகை பார்க்கிறான். அவள் அவனை விட்டு வெளியிற் சென்றது, அவனுக்கு பலவகையிலும் துன்பத்தை உண்டாக்குகிறது. அவள் வருகிறாள், என் மணவாளர் வந்துவிடக்கூடும். அவர் நான் நடந்து கொண்டு வந்துள்ளதையெல்லாம் அறியக்கூடாது. அதற்காக நான் இனிச் செய்யப்போவது உங்கட்குத் துன்பத்தைத் தரலாம். என் நிலை கருதி நீங்கள் வருந்தலாகாது என்று பதறுகிறாள். தேனருவி நீ எனக்கு இப்போது நன்மையே செய்தாய் நீ என் மனைவி அல்ல என்பதை எனக்கு உணர்த்தினாய். இனி எனக்கு செய்யப் போவதும் அப்படியே என்கிறான். அவள் ஓடுகிறாள். எங்கேயோ! அவ்வூர், வடக்குத் தெரு மைதானத்தில் அறிஞர் ஒருவர் மாலை, அரிசி எப்போது கிடைக்கும் என்பது பற்றிச் சொற்பொழிவு ஆற்றத் தொடங்குகிறார். ஊர் மக்கள் குழுமியிருக்கிறார்கள்! சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது! இளவழகன் தான் படுக்கும் பஞ்சணையில் தான் படுத்திருப்பது போல் தோன்றும் தலையணை அடுக்கித் துணிபோர்த்து வைத்துவிட்டு வேறுபுறம் போய்க் காத்திருக்கிறான். சில கறுப்புடைக் காரர்கள் நுழைந்து பஞ்சணையில் தூங்குகிறான் இளவழகன் என்று எண்ணிக் குத்துவாளால் குத்துகிறார்கள். மின்னொளி! மக்களே! உங்கள் நிலை என்ன? - என்று கூவிக் கொண்டு தன் வீட்டை நோக்கி ஓடுகிறான். அதே நேரம், உடல்நலமில்லாத மின்னொளி தள்ளாடி நடந்து கைப் பிள்ளையை ஏணையிலும், அநாதைப் பிள்ளையைச் சரிகைப் புடைவையிலும், பெரிய பிள்ளையைப் பாயிலும் படுக்கவைத்து ஒருபுறம் விளக்கைச் சிறிதாக்கிக் கண்ணயர, ஓர் ஆள் வீடேறிக் குதித்து, அநாதைப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு, தெருக்கதவைத் திறந்து கொண்டு ஓடுகிறான், சரிகைச் சேலையுடன், அடுத்த இரண்டே நிமிஷத்தில் திடுக்கிட்டெழுந்த மின்னொளி, அநாதைக் குழந்தை இல்லாதது கண்டு, ஏணைக் குழந்தையை ஏணையுடன் கழுத்தில் மாட்டிக்கொண்டும், மற்றப் பிள்ளையை இடுப்பில் இடுக்கிக் கொண்டும் வெளியில் பதைபதைக்கத் தோடுகிறாள். பிள்ளையைத் தூக்கி ஓடுகிறான் என்று கண்ட அவள், குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஐயையோ என்று கூச்சலிடுகிறாள்; பன்முறை! அதே நேரத்தில், சொற் பொழிவாளர் ... ... ... ஆதலால் சாதி சமய வேற்றுமை இந்நாட்டை விட்டு ஒழிந்து போக வேண்டும் என்று முடிக்க - அங்கு கேட்டிருந்த மக்களில் பலர் சாதி சமய வேற்றுமை ஒழிய என்ன செய்ய வேண்டும்? - என்று கேட்கிறார்கள். சொற் பொழிவாளர் விடை தேடி விழிக்கிறார் நிசப்தம்... குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்ற ஒரு சொல் அனைவர் காதிலும் விழுகின்றது. அத்தொடரில் இங்கு எழுந்த கேள்விக்கும் விடை இருப்பதாகச் சொற்பொழிவாளர் முதலியவர்கட்குத் தோன்றுகிறது. ஆயினும் அடுத்த சொல்லாகிய ஐயோ காதில் விழவே, சொல் வந்த திசை நோக்கிச் சொற்பொழிவாளர் ஓட, மற்றும் பெரும்பாலோரும் ஓடுகின்றார்கள். பிள்ளையைத் தூக்கி வந்தவன், பிள்ளையைக் கிணற்றில் போடுகிறான். பின்னே ஓடிவந்த மின்னொளி, கையிலுள்ள குழந்தைகளைக் கிணற்றடியில் கிடத்திவிட்டு, கிணற்றில் குதிக்கிறாள். குதிப்பவள் முதுகில் அருகிலிருந்த ஒருவன் கத்தியால் குத்துகிறான். குத்திய கத்தி - அவள் முதுகில் பதிந்ததை, கத்தியின் குருதி ஈரம் காட்டுகிறது. சூழ்ந்திருப்பவர்கள் இரக்கத்தால் துடித்து அலறுகிறார்கள். சிலர் அவளை மீட்கக் கிணற்றில் இறங்க முயலுகிறார்கள். அவர்கள் முயற்சி தேவைப்படவில்லை. மின்னொளி தன் கழுத்தில் தொங்கும் ஏணையில் பிள்ளையை இட்டுத் தூக்கி வெளி வருகின்றாள். அவள் ஏணையில் இருந்த பிள்ளையை எடுத்துப் பார்த்து மார்போடனைத்துக் கொள்ளுகிறாள். சுற்றியிருந்த சரிகைப் புடைவையைக் கீழே போட்டு. தேனருவி தன் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு ஓ என்று அழுகிறாள். அங்கிருந்த சந்நியாசி அழுகிறான். ஒருபுறமிருக்கும் இளவழகன் அழுது துடிக்கிறான். மின்னொளி, பிழைக்க மாட்டேன் சாகின்றேன். சாக அஞ்சவில்லை இந்த மக்களை யார் காப்பாற்றுவார்கள்? ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... நாட்டாட்சியின் கீழ் பிள்ளை வளர்ப்புச் சாலைகள் தெருத் தோறும் தேவை- அதனால், சாதி, மதம், உயர்வு, தாழ்வு நீங்கும். எல்லார்க்கும் உணவு உடை உறையுள் கிடைக்கும்! இந்நாட்டில் வீடுதோறும் ஏங்கிக் கிடக்கும் திக்கற்ற பிள்ளைகள் வாழ்க! - உயிரற்று நிலத்தில் சாய்கிறாள். தேனருவி தன் குழந்தையைத் தாவி எடுக்கிறாள். அதே நேரம், அங்கிருந்த சந்நியாசியிடமிருந்து குழந்தையை மலாய்ப்பெண் வாங்குகிறாள். சந்நியாசி, மணிமொழியாராகக் காட்சி தருகிறார். தன் குழந்தைகளை இளவழகன் அணைத்துக் கொள்கிறான். சொற்பெருக்காளர் - வேற்றுமை ஒழிய அரிசி கிடைக்க - பிள்ளை வளர்ப்புச் சாலைகள் நிறுவப்பட வேண்டும்.! அறிவைச் செய்பவள் அன்னை. ஆற்றலுடையவள் அன்னை. வாழ்க அன்னையின் நாமம். மணிமொழியார் தன் சொத்தையெல்லாம், தேனருவி தன் சொத்தை யெல்லாம் பிள்ளை வளர்ப்புச் சாலைக்கு ஆக்குவதாக உறுதி கூறுகிறார்கள். - பாரதிதாசன் புதினங்கள், 1994  40. விஞ்ஞானி புறக்கட்டில் இருக்கும், அங்கே மதுரை நடுங்கிக் கொண்டிருக் கிறான். அடிமேல் அடிவைத்து அறைக் கதவின் இடுக்கில் பார்ப்பதும், அவ்வாறே மீள்வதுமாயிருக்கிறான். பிறகு ஒருவாறு ஊக்கத்துடன் வெளிவந்து அங்கு எல்லா இடத்திலும் துருவிப்பார்த்து ஒருபுறம் அங்கேயே உட்காருகிறான். மீண்டும் ஆளன் கடிதத்தைப் படிக்கிறான். அவன் மனக்கண் முன் பாண்டியன், அங்கயற்கண்ணி, மங்கையர்க் கரசி, அறிவுடை நம்பி தோன்றி மறைகிறார்கள். மதுரை, தன் வீடு சென்று மனைவி, மகள் இருவரையும், என் செய்தியை வெளியிற் சொல்லியதுண்டா? எனக்கெதிராக முயற்சி செய்வதுண்டா? என்று கேட்கிறான். அவர்கள் இல்லே என்கிறார்கள். பின் யார் என்னைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்தினார்கள் என்று கேட்க, அவர்கள், நாங்கள் எதிர்ப்பாக எதுவும் செய்யவில்லை என்பதற்கு நீங்கள் இதுவரைக்கும் உயிரோடு இருப்பதே அத்தாட்சி என்று கூறுகிறார்கள். உடன் பிறந்தானைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் ஒழியாப் பழியை அடைந்தது கண்டும் நான் தந்தையைக் காட்டிக் கொடுத்து வாழ ஒப்புவேனா என்கிறாள். பாங்கில் அழகிய உடையுடன் எட்டி வேலை பார்க்கிறான். அங்கு, சராய், சிலிப்பர், ஷர்ட், முக்காட்டுடன் ஒருத்தி வந்து நிற்கிறாள். அவள் எட்டியின் அழகில் சொக்கி வைத்தகண் சிமிழ்க்காமல் வாய் பேசாமல் மகிழ்ச்சியால் ஆழ்கிறாள். பின்பு அவள் எட்டியை அணுகி, முகமலரை வேறுபக்கம் திருப்பியபடி, நகைமேல் பணம் தேவை என்கிறாள். எட்டி வேறு பக்கமுள்ள ஆளைக் காட்டி, அவரிடம் கேட்கச் சொல்லுகிறான். அதற்கு, என் நிலையில் உள்ள பெண்களிடம் அவர்கள் நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்று கூறித் தன் விரலை அவன் எதிரில் வைக்கிறாள். அதில் விலையேறப் பெற்ற மோதிரம் ஒளி வீசுகிறது, பொன் விரலுக்கு விளக்குப் போட்டதுபோல. எட்டி மனம் விரல்களின் அழகில் குழம்புகிறது... மோதிரத்தைக் கழற்றித் தாருங்கள் என்கிறான். என் காதலருக்காகக் காத்திருக்கும் மோதிரம் அது. நானே கழற்றிவிடுவது சரியல்ல. நீங்களே கழற்றிக் கொள்ளுங்கள் என்கிறாள். அவன் தொடுகிறான். கழற்றிக்கொண்டு, எவ்வளவு வேண்டும் என்கிறான். ஆயிரம் ரூபாயும், அந்த மோதிரம் இருந்த இடத்திற்கு வேறொரு மோதிரமும் வேண்டும் என்கிறாள். அவன் அவள் முகத்தைக் காண முயலுகின்றான். அவளும் முகந் திருப்பி முத்துநகை முகிழ்க்கிறாள். அவன் சிரிக்கிறான். அவள் கெஞ்சுகிறாள். முகத்தால் - எட்டி தன் மோதிரத்தை அவள் விரலுக்கு இட்டு, எவருக்குங் காட்டேல் என்கிறான். தில்லைக்கண் முக்காட்டை நீக்கி முழுமுகச் செழுநிலா ஒளிசெயச் சிரித்து ஓடுகிறாள். சிறிது நேரத்தில் எட்டியும் தன் பழைய நடையுடன் தில்லையுடன் போகிறான். தில்லைக் கண்ணு வீட்டில், எட்டி தில்லைக்கண்ணால் பாராட்டப் படுகிறான். தன்னைக் கைவிடக் கூடாதென்று அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றாள். அவனையே கேட்கின்றள், ‘மதுரை தன்னை மணந்துகொள்ள நிர்பந்தம் செய்கிறான் நிராகரித்து விடவா என்று! எட்டி, அப்படிச் செய்யாதே ஞாயப்படி அவன் கஷ்டம் வாங்கிய வகையில் 3 லட்சம் தரவேண்டியதிருப்பதால் அதைப் பெறும் வரை நிராகரிக்காதே என்கிறான். அவன் கொலைக்காரன் கொள்ளைக்காரன் அவனைக் காணுதற்கே கண் நாணுகிறது என்கிறான். பொறுமையுடன் எப்போதும் போல் நடந்துவா என்கிறான். அதே நேரத்தில் மதுரை அங்கு வந்து, என்னைச் சார்ந்த பல செய்திகள் வெளியானதற்கு நீ தானா காரணம் என்றும், நீதான் எனக்கு மொட்டைக் கடிதம் எழுதினாயா என்றும் பலவாறு கேள்வி கேட்க, அதற்குத் தில்லை நானில்லை என்று கூறி அக்கடிதத்தில் சொல்லிய படி நீவிர் நடந்துதான் இருக்கிறீர் என்றால் உன்னுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்போவதில்லை என்கிறாள். அதை யெல்லாம் தான் செய்ததேயில்லை என்று பலவாறு கூறி 15ஆம் தேதி நாம் திருமண உறுதி செய்துகொள்ள வேண்டும் என்கிறான். திருமணம் எப்போது என்கிறாள் எட்டி? அடுத்த வாரம் ரிஜிடர் மணம் நடத்திக் கொள்ளலாம் என்று கூற, தில்லைக்கு கண்காட்டி நல்லது என்கிறான். அவளும் கேட்கிறாள். கிரையப் பணத்தை எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு மதுரை பலர் முன் திருமண உறுதி கூறிவிடு: மறுநாள் பணங் கொடுத்துவிடுகிறேன். திருமண உறுதி தெருவீட்டார்க்கு நடுவில் நடைபெற வேண்டுமென்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுவதாகவும் சொல்லிப் போனான். பரங்கிமலைக் குகையில் விஞ்ஞானி நாய்ப் பிணத்தை அடைத்து வைத்த பெட்டியை எடுத்துப் பார்க்கிறான். திகைக்கிறான். நாயை எடுத்து அதற்கு மருந்து ஏற்றுகிறான். நாய் உயிர் பெற்று எழுந்திருக்கிறது. அதைத் தட்டிக் கொடுத்து அதற்கு உடனே பால் வைக்கிறான். இதை எதிரில் வரிசையாப் பார்த்திருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஆடுகிறார்கள். இன்பெக்டர் மதுரையிடம் வந்து பேசுகிறான். மதுரை தனக்குப் பயமுறுத்தல் கடிதம் வந்திருப்பதாகக் கூறி, அதற்கு என்ன செய்யலாம் என்று கூற - அவன், அதெல்லாம் நான் தக்க ஏற்பாடு செய்கிறேன். நாமும் சில ரௌடிகளுக்குப் பணம் கொடுத்து, கையோடு வைத்துக் கொள்ள வேண்டும். மற்றப்படி போலீசும் கண்காணிப்பாயிருக்கும் என்கிறான். மேலும், மதுரை தனக்கும் தில்லைக் கண்ணுக்கும் 15-ல் திருமண உறுதி நடைபெறப் போவதாகவும் அதையும் உடனிருந்து நடத்த வேண்டும் என்று கூறி, உங்கள் நண்பர் முகவரியும் தேவை என்று தன் சட்டைப் பையிலிருந்து, தன் தினசரிக் குறிப்பை விரிக்க, 12 ஆம் தேதி ஆகிய தொரு பக்கத்தில், 15 ஆம் தேதி மாலை 7.30-க்கு உன் சாவு! திருமண உறுதி நடக்காது. அதற்குள் நான் சொன்னவைகளை நிறைவேற்றினால் தப்பிப்பாய். இங்ஙனம், ஆளன் இப்படி எழுதியிருந்த பக்கத்தை மதுரை இன்பெக்டரிடம் காட்ட அவன், திருமணவுறுதி டீ பார்ட்டி 10 பேரில் இருக்கட்டும், சுற்றிலும் ஆள்போட்டு விடுவோம். நானும் ஆயுதத்தோடு வந்திருக்கிறேன். விழா முடிந்ததும் ஆளனைப் பிடிக்க ஏற்பாடு செய்யலாம் என்கிறான். மதுரை, துப்பறியும் மாணிக்கம் இதில் சுறுசுறுப்புக் காட்டவில்லை என்று கூற இன்பெக்டர் அவன் பயங்காளி என்று கூறிச் செல்லுகிறான். எட்டி வருகிறான். டைரியை அவனிடம் காட்டி மதுரை தன் அச்சத்தையும் வியப்பையும் வெளிப்படுத்துகிறான். எட்டி கண்ணீர் வடித்துக் கூறுவான். டீ பார்ட்டியில் கலந்து கொள்வார்க்கெல்லாம் முகமறையக் கறுப்புடை தருவோம். நீங்கள் உட்கார வேண்டிய இடத்தில் நம் ரௌடி ரத்தினத்தை உட்கார வைப்போம். நானும் கறுப்புடையுடன் பரிமாறு கிறேன். நம்மைச் சுற்றிலும் ஆயுதங்களுடன் ஆட்கள் இருக்கட்டும். இப்படிச் செய்தால் உங்கட்கு ஒரு தீமையும் வராது - டைரியில் எழுதிய கள்ளன் கைவரிசையுடையவனாகவே இருக்க வேண்டும் என்று கூற, மதுரை அப்படியே செய்துவிடு என்று மகிழ்ச்சியடைகிறான். மதுரையிடம் தில்லைக்கண் வந்து பேசியிருக்கிறாள். எட்டி செய்துள்ள ஏற்பாடுகளை மதுரை கூறி அஞ்சாதே என்கிறான். 15 மாலை 6 மணி காட்டுகிறது பாங்கையடுத்துள்ள வீட்டின் கூடத்து மணிப்பொறி! பலர் கம்புகளுடன் வந்து தம் சிலம்ப வரிசை காட்ட அவர்கள் கம்புடன் நிற்க வேண்டிய இடங்களைக் குறிப்பிடுகிறார் இன்பெக்டர். அதாவது வீட்டில் புறத்தில்! வீட்டின் வாயிலில் சிலர் நிறுத்தப்படுகிறார்கள். பின் இன்பெக்டர் உட்பட ஓர் அறையில், பத்துப் பேர் முகமூடிக் கறுப்புடை போர்த்துக் கொண்டு மேசையின் எதிரில் உள்ள நாற்காலிகளில் வரிசையாய் அமர்கின்றார்கள். மதுரை இன்று எனக்கும் தில்லைக்கண்ணுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தின் பொருட்டு உறுதி நடக்கப் போகிறது. உங்கள் முன்னிலையில் நான் என் உறுதியைக் கூறுகிறேன். நான் மனமார, தில்லைக் கண்ணை என் வாழ்க்கைத் துணையாக மணக்க உறுதி கூறுகிறேன். தில்லைக் கண், எழுந்திருக்கிறாள். நான் வாழ்க்கைத் துணையாக இவரை மணந்து கொள்வதாக உறுதி கூறுகிறேன். எட்டி: பேர் சொல்லவில்லை, இன்: மணவாளன் பெயரை மணப்பெண் சொல்லுவதில்லை. இருவரும் மணந்து வாழ்க என்று வாழ்த்துகிறேன். வாழ்க மணமக்கள்! வாழ்க மணமக்கள்! மதுரை: ஒழிந்தான் என் பகைவன். அவன் போட்ட சபதம் ஒழிந்தது. முழுத் தோல்வியடைந்தான் ஆளன், என்று உட்கார எட்டி சிற்றுண்டி கொண்டு வருகிறான். அனைவரும் உண்ணுகிறார்கள். டீ கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அனைவரும் அருந்து கிறார்கள். மணிப்பொறியில் 7.30 அடிக்கிறது டீ அருந்திய மதுரை சாய்கிறான். அனைவரும், மதுரையை ஆராய்கிறார்கள். அவன் இறந்து விட்டான். இன்பெக்டர், இச் செய்தி வெளிக்கு தெரியவேண்டாம். மாரடைப்பால் இறந்ததாக உத்தரவு பெற்றுப் பிணத்தைப் புதைத்து விடுங்கள். ஏனெனில், இதைக் கிளறினால், அநேகத் தகவல்கள் வெளிப்பட்டு, அனைவர்க்கும் துன்பம் ஏற்படும் என்று கூறி, பிணத்தை எடுக்க உத்தரவும் தந்து போகிறான். அதே நேரத்தில், அழுதுகொண்டே எட்டி, தில்லைக் கண்ணைக் கையுடன் அழைத்துக் கொண்டு வெளியிற் செல்கிறான். எதிரில் மங்கையும் அங்கயனும் அழுதுகொண்டே வருகின்றார்கள். எட்டி, அழுது புரண்டு அனைவர்க்கும் அழைப்பு அனுப்ப வேண்டாம் என்று கூறுகிறான். போகிறான் தில்லைக்கண்ணுடன் அன்றிரவு பிணம் புதைக்கப் படுகிறது. நள்ளிரவில் அப்பிணம் இரண்டுபேரால் தோண்டப்பட்டு எடுத்துச்செல்லப்படுகிறது காரில்! விஞ்ஞானி அறையில் வார்க்கப்பட்ட பிணத்திற்கு மருந்து ஏற்றப்படவே உயிர் வருகிறது. அதே நிலையில் அங்குள்ள சிறையில் மதுரையை வளர்த்த அவன் சிறிது நேரத்தில் உயிர்பெற்று எழுகிறான். வாய் மூடி ஒருவன், அவனுக்குப் பால் சிற்றுணவு கொண்டு வந்து வைக்க மதுரை, அவைகளை ஆவலுடன் அருந்துகிறான். அவன், நீங்கள் யார்? - நான் எப்படி யாரால் இங்கு வந்தேன் - என்று கேட்க, வாய்மூடி தன் வாயை மூடிக் காட்டிச் செல்கிறான். மதுரை சிறையிலிருந்து தப்பியோட முயல்பவனாய் அங்குள்ள கம்பியை விலக்குகிறான். அதே நேரத்தில் எதிரிலுள்ள சுவரில் சிவப்பு ஒளி எழுத்தால் தப்பிப் போக முயலவேண்டாம் என்ற சொற்கள் காணப்படவே, உடனே, மதுரை அங்குள்ள கண்ணாடிப் பெட்டி ஒன்றைக் கைத்துண்டால் மறைக்க நேரும் போது கீழே பொருந்தியுள்ள பொறி ஒன்று அவனைத் தூக்கி எறிகிறது. மதுரை, செயலற்று ஒருபுறம் உட்கார்ந்து விழிக்கிறான். அங்கயற்கண்ணி திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறாள். எட்டியும் மங்கையர்க்கரசியும் ஒருபுறம் (சிறிது தொலைவில்) பேசியிருக்கிறார்கள். எட்டி, தில்லைக்கு உணவு கொண்டு போக வேண்டுமா என்று கேட்க, மங்கையர்க்கரசி அம்மாவைக் கேட்கும்படி சொல்ல, அம்மாவைக் கேட்கிறான். அதற்கு அவள், எனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இருக்கும் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் மதுரையின் மனைவி அல்லள் ஆதலால் என்கிறாள். எல்லாவற்றிற்கும் மங்கையர்க்கரசிதான் உரியவள் என்கிறாள். மங்கையர்க்கரசியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு, ஏனெம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள். பெற்ற தாய்க்கு மகள் தனக்கென ஒன்று உடையவள் அல்ல என்று அழுகிறாள். அப்பாவின் எண்ணம்போல் தில்லைக் கண்ணுக்கு வேளைதோறும் உணவு கொடுத்து வரவேண்டியதுதான் என்கிறாள் மங்கையர்க்கரசி! எட்டி, ஆனால் தில்லை நம்மிடத்தில் உணவை எதிர்பார்க்க வில்லை. தனக்குச் சேர வேண்டிய மூன்று லட்சத்தைத்தான் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது என்கிறான். மங்கையர்க்கரசியும், அங்கையனும் விபரங் கேட்டதிலிருந்து, ஆளனின் கடிதம் - ஆளன்தான் மதுரையின் எதிரி என்பனவற்றை வெளியாக்குகிறான் எட்டி! மங்கையர்க்கரசி ஆளன்மேல் ஆத்திரங்கொண்டு, அவன் எதிரில் வரக்கண்டால் பழிக்கு பழி வாங்குவேன் என்று கூற, அங்கு ஆளன் தோன்றுகிறான். மங்கையர்க்கரசி நிராயுதபாணி! ஆளன் மங்கையர்க்கரசி வாக்குவாதம். நாளைக்கு உன் ஆட்களுடன் காத்திரு! உன்னை நேரில் வந்து காணுகிறேன். அப்போதாவது என்னைப் பழிக்குப் பழி வாங்கலாம் என்று கூறி மறைகிறான். மங்கையர்க்கரசி ஆட்களைச் சேகரித்து, வீட்டில் எங்கும் நிறுத்தி, அவனைப் பிடித்துக் கட்டிவைக்கச் சொல்லுகிறாள். அவள் மேல் மாடியில் எட்டி துணையுடன் இருந்து வருவதாக முடிவு கூறுகிறாள். அங்கயற்கண்ணிக்கு இந்த ஏற்பாடெல்லாம் பிடிக்கவில்லை. ஆளன் அறத்தொண்டன் என்று வாதிக்கிறாள். அவன் சொன்னபடி, சொத்தை அவரவர்களிடம் சேர்த்து விடுவதே மேல் என்று கூறுகிறாள். மகள் அவரவர்களிடம் சொத்தைச் சேர்த்துவிட அட்டியில்லை. ஆயினும் என் தந்தையைக் கொன்றவனைக் கொல்லுவேன் என்கிறாள். அங்கயற்கண்ணி திருக்குறளுடன் வெளியிற் சென்று விடுகிறாள். அதே நேரத்தில் பழமலைக் கிழவர் பாங்கு ரசீதுகளில் மங்கையர்க்கரசியின் கையொப்பம் பெற்றுப் போகிறார். அதே நேரத்தில் எட்டி வந்து கொல்லையில் எருமை மாட்டைக் காணோம் என்கிறான். வீட்டு வாயிலிலும் உட்புறத்திலும் ஆயுதங்களுடன் ஆட்கள் காத்திருக்கிறார்கள். ஆளன் தன் விஞ்ஞானி ஆராய்ச்சி இல்லத்தை விட்டுப் புறப்படுகிறான். வாய்த்திரையுடைய ஒருவன், ஒரு ரிவால்வரை நீட்டி இதை எடுத்துப் போக என்று கைகாட்ட, ஆளன் தன் நடு நெற்றியைக் காட்டி விட்டுப் போய்விடுகிறான். ஓர் எருமை மாட்டின்மேல் கறுப்புடை போர்த்த ஓர் உருவம் வருவதை ஆட்கள் கண்டு அஞ்சி வீட்டுக்குள் ஓடுகிறார்கள். எருமை வீட்டில் நுழைகிறது. அதே நேரத்தில் பழமலையும் வீட்டில் நுழைகிறார். வீட்டின் தோட்டத்திற் சென்ற எமனை ஆட்கள் நெருங்க அஞ்சுகிறார்கள். அதே நேரத்தில் மாடியிலிருந்த எட்டி, மங்கையர்க்கரசியின் எதிரில் ஆளன் தோன்றி பழிக்குப்பழி வாங்கு என்கிறான். அவள் சினத்தோடு பேசுகிறாள். கடைசியில், ஆளன் ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்துப்படி என்ன, அவள் படித்து மயங்கி விழுகிறாள். அவளை ஆளனும் எட்டியும் தூக்கித் தெருவில் எறிகிறார்கள். எறியப்பட்ட மங்கையர்க்கரசி தெருவில் ஆட்களால் விரித்துப் பிடிக்கப்பட்டிருக்கும் வலையில் விழுகிறாள். ஆட்கள் மங்கையர்க்கரசியைக் காரில் தூக்கிச் செல்லுகிறார்கள். கொல்லையில் எருமைமேல் குச்சுக்களால் ஆன கறுப்புடை உருவத்தைக் கண்டு நாணிச் செல்லுகிறார்கள். மாணிக்கம் வருகிறான். நடந்ததை எட்டியால் அறிந்து, ஆளனைப் புகழ்கின்றான். தெருவில், ஒலிபெருக்கி கேட்கிறது. மாலை மயிலைக் குளக்கரைச் சத்திரத்தில், அங்கையற்கண்ணி, இருக்க வேண்டுமா? என்ற பொருள் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தப் போவதறிந்த எட்டி, மாணிக்கம், அங்கு புறப்படுகிறார்கள். சொற்பொழிவு நடக்கிறது. மாணிக்கம், எட்டி, பழமலை மூவரும் கேட்கிறார்கள்; முடிகிறது. அங்கயற்கண்ணியைக் கண்டு நடந்தவற்றைக் கூறுகிறார்கள். மாணிக்கம், எட்டி, பழமலை, அங்கயற்கண்ணி நால்வரும் மங்கையர்க்கரசியைத் தேடிச் செல்லுகிறார்கள். எட்டி, மலைக்குகைக்குள் அழைத்துச் செல்லுகிறான். குகைக்குள் புக மறுக்கிறார்கள். எட்டி, குகைக்குள் எல்லாம் உண்டு மங்கையர்க்கரசியிருக்கிறார்கள். நோய் தீர்க்க வல்லது! இம் மலையுள் புகுந்ததும் ஊமையும் பேசுவான் என்கிறான். ஊமையாகிய பழமலை, வாருங்கள் போவோம் உள்ளே என்று சைகை காட்ட, அனைவரும் நுழைகிறார்கள். ஊமையாகிய பழமலைப் பேசத் தொடங்குகிறார். மாணிக்கம் வியப்புறுகிறான். குகை பேச வைத்தால், காடு பாட வைக்கும், கடல் ஆடவைக்கும் போலும் என்று இகழ்ச்சி பேசுகின்றாள். உள்ளே, கட்டடத்தின் எதிரில் - வெட்டவெளி - முகத்திரை உடையவன் விசிப்பலகையும் நாற்காலியும் கொண்டுவந்து போடுகிறான். நாற்காலியில் பழமலை உட்கார்ந்து பேச்சைத் துவக்குமுன் மற்றும் பலர் கறுப்புடை முகத்திரையுடன் கூடி வந்துட்கார வைக்கப்படுகிறார்கள். 1. பழமலை, துரையை முத்தும் வீராசாமியும் பாண்டியனாரும் கிணற்றில் போட்டுவிட்டது வருந்தத்தக்கது என்று கூற மூவரும் தத்தம் உருக்காட்டி காரணங் கூறுகிறார்கள். பழமலை, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் என்பதால் அவ்வாறு செய்திருக்கலாகாது என்று தீர்ப்புக் கூறுகிறான். மாணிக்கத்திற்கும், அங்கயற் கண்ணிக்கும் பழமலை பாண்டியனார் முதலியவர்களை அறிமுகப்படுத்துகிறார். 2. தில்லைக் கண் மதுரையை மணந்து கொள்வதாக ஆசைப் பேச்சுப் பேசியது வருந்தத் தக்கது என்கிறார். தில்லைக் கண் தன் உருவுடன் தோன்றி, காரணம் கூற, சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பதறிவு என்று முடிக்கிறார். தில்லைக் கண் மற்றவர்க்கு அறிமுகப் படுத்தப்படுகிறார்கள். 3. பெற்றதாய், ஆளன் அறத்தொண்டன் என்கிறார்கள். அதன் பொருட்டு மங்கையர்க்கரசியார் தாயையே வெறுத்தார்கள். தாய் வெளியிற் செல்வதையும், ஒத்துக் கொண்டார்கள். ஆளன் சொல்லிய படி இன்னும், அவரவர்களிடம் சொத்தை ஒப்படைக்கவில்லை. மங்கை தோன்றி, காரணங்கூறுகையில் தந்தையைக் கொன்ற ஆளனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு என்று கூறி முடிக்கிறார். பழமலை. 4. அங்கயற்கண்ணியம்மையார், தமக்கும் மதுரைக்கும் மிருந்த திருமணத் தொடர்பை அறுத்துக்கொண்டது. மதுரை வேறு ஒரு மங்கையை நாட இடங்கொடுத்தது. மேலும் அவர்கள் நம் கணவரைத் தீவழியிற் செல்லாது காத்திருக்கலாம் என்கிறார் பழமலை. அதற்குக் காரணம் கூறுகிறார் பழமலை. தற்காத்துத் தற்கொண்டாற் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். என்று கூறி முடிக்கிறார். 5. மாணிக்கம், மதுரை சாவுக்குக் காரணமாகவிருந்த ஆளனைப் பிடிக்க என்னால் முடியாது என்ற கூறியிருக்க வேண்டும்! அப்படி அவர் செய்யாதது குற்றம். மாணிக்கம், காரணம் கூறுகையில், கொலையும் கொள்ளையும் செய்துவந்த மதுரையைப் பிடிக்க முடியாத வகையில் அரசியல்நிலை இருந்து வருகிறது. யாராலும் பிடிக்க முடியாது என்று கூறி ஆளனை யாசிக்கிறான். 6. தானே மங்கையர்க்கரசி பேச்சைத் தொடங்குகிறாள். குற்றங்கள் செய்த மதுரையை ஆளன் மன்னிக்க வேண்டாமா? கொன்றுவிடலாமா? இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய அவருக்கேன் தோன்றவில்லை. கொலை செய்ய ஆளனுக்கு என்ன அதிகாரம்? ஆதலால் ஆளனைக் கொலை செய்ய வேண்டும் என்கிறாள். பிறரிடம் வஞ்சித்த பொருள் இன்னின்ன என்று கூறி அவைகளை அவரவரிடம் சேர்க்க முயன்ற ஆளனுக்கு நன்றி கூற வேண்டாமா என்று மாணிக்கம் கேட்கிறான். பொதுநலத்தில் நாட்டமுடைய ஆளனை வரவேற்கின்றேன். கொலை செய்த ஆளனைத்தான் கொல்ல நினைக்கிறேன் என்கிறாள். பழமலை: ஆம். அக்கொலைக் குற்றத்தைச் செய்யாதிருந்தால் ஆளனை ஆதரிப்பதில் மங்கை பின்னிட மாட்டாள். ஆளன் கொலை செய்தது மெய்தானா? மதுரை இறந்தது மெய்தானா? அங்கயற்கண்ணி: கொலைக்கும் காரணமாகாவிடில் ஆளன்போல் ஒருவர் கிடைப்பது அரிதே. மங்கை: ஆம், அவன் கண்ணைக் கவரும் கட்டழகன். ஆனால் கருத்தை, வெறுக்க வைக்கும் கொலைக்காரன். அவனைப் பிடிக்க வேண்டும். அவன் யார்? ஆராயவேண்டும். பழமலை : ஆளன் ஆருமில்லை. பாண்டியனார் மகனே! அவன் இங்கிலாந்தில் எட்டியுடன் விஞ்ஞானம் படித்திருந்தான். அவனுக்குத் தந்தையார் சென்னை மங்கையர்க்கரசியின் உருவப் படத்தை அனுப்பியிருந்தார். அவன் அவள்மேல் ஆராக் காதல்கொண்டு - அவளைப் பார்க்கச் சென்னைக்கு கிளம்பினான். இன்னும் தேர்வில் தேறவில்லை. 6 மாதங்கள் இங்கிலாந்தில்தான் தங்க வேண்டும் என்று டர்பனிலிருந்த தந்தைக்குப் பொய் கூறினான். இருபது லட்சம் தந்தையனுப்ப அதையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். சென்னைக்கு - ஆளன் எட்டியுடன் வந்து சேர்ந்தவுடன் அவன் கேள்விப்பட்டான் மங்கை - செழியன் திருமணத்தை! அவன் கேள்விப் பட்டான் செழியன் கொல்லப்பட்டதை! மதுரையிடம் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறிய எட்டி சமையற்காரனாய் அமர்ந்தான். அது போலவே ஆளனும், மதுரையிடம் செயலாளன் பழமலையாய் அமர்ந்தான் - என்றான். மறைவிடம் ஓடி, செயலாளன் வேஷத்தைக் கலைத்த ஆளனைக் கண்டு வியப்புறுகிறார் அனைவரும் அப்படியே! மங்கை பதறுகிறாள் ஆளனை நோக்கி! அங்கயல் (தடுத்து) பாண்டியனார் மகன் அழகிய மணவாளன் அல்லவா? ஆளன்: ஆம்! நான் காதலில் மங்கையால் விலக்கப்பட்டேன்! எனக்கு அழகு போயிற்று. மணத்தை வெறுத்தேன். மணம் போயிற்று. மீதி ஆளன்! மங்கை: நான் என் தந்தையைக் கொலை செய்தவனை மணந்து கொள்ளாதது சரியே! அவனை நான் வெறுப்பதும் சரியே! அவன் என் எதிரில் ஆண்மகன்போல் உயிர் வாழ்வதுதான் வியப்பு! மறைந்து இருந்து வாலியைக் கொலை செய்த ராமனையே வெறுக்கும் இந்நாடு இந்த மாபாவியை விட்டு வைத்திருப்பது வெட்கக்கேடு. ஆளன்: இருக்கலாம். பிறரிடம் அபகரித்த பணத்தைக் கொடாத நீ வாழ்வது மட்டும் நீதி போலும்! மங்கை: சொத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை உயிரைத் திருப்பித்தர முடியுமா? கொன்றவன் நீ இதற்கு மான உணர்ச்சியுடன் விடைகூற வேண்டும். என் தந்தை உயிரைக் கொடாவிட்டால், உன் உயிரைக் கொடுக்க வேண்டும். இன்னா செய்தாருக்கும் இனியவே செய்ய வேண்டும் என்றாயே. இன்னா செய்த என் தந்தைக்கு கொலையை அன்றே பரிசளித்தாய். ஆளன் புன் சிரிப்புடன் எழுந்து போகிறான். அங்கே முக மூடியுடன் ஒருவன் வருகிறான். தன் முகமூடியை நீக்கி மதுரையாகக் காட்சியளிக்கிறான். அனைவரும் வியப்புறுகின்றார்கள். அப்பா என்று ஓடித் தழுவிக் கொள்கிறாள் மங்கை! மதுரை தன்னை ஆளன் கொண்டு வந்த வகையைக் கூறித் தான் செய்த தீச் செயல்களுக்கு வருந்துகிறான். அவரவர் பணத்தை அவரவரிடம் சேர்த்துவிடும்படி கூற - தில்லை, அறிவுடை நம்பி, வீராசாமி, முத்து பாண்டியனார் அனைவரும் தமக்குச் சேரவேண்டிய பணத்தை ஆளனிடமே கொடுத்துவிடுவதாகக் கூறுகிறார்கள். மங்கை தனக்குடையானாகிய செழியனின் பத்து லட்சம் தனக்கே உரிமையுடையது ஆதலால், அதையும் ஆளனுக்கே தருகிறாள். ஒருபுறம்: மங்கை தனியே இருக்கிறாள். தில்லைக் கண்ணும் அங்கயற்கண்ணியும் அவளிடம் கூறுகிறார்கள். அழகிய மணவாளன் உன்னிடம் ஒரு ரிவால்வரும், பூவும் பொட்டும் தருவார். அவரை மணப்பதாகப் பூவும் பொட்டும் எடுத்துக்கொள். உன் தந்தையை அவர் செய்ததற்கு - விரும்பினால் அவரைக் கொல்ல ரிவால்வரை எடுத்துக்கொள் என்கிறார்கள். அவள் - என் தந்தைக்கு அவர் நன்மை செய்தார் என்கிறாள். தில்லை மங்கைக்கு தலைப் பின்னுகிறாள். தனியே இருந்த மங்கைக்கு - அழகிய மணவாளன் மலர் சூட்டிப் பொட்டிட்டு முத்தம் இடுகிறான். தனியே இருந்த அங்கயற்கண்ணியிடம் திருக்குறளையும், தன் மாலையையும் மதுரை தர - அவள் திருக்குறளை எடுத்துக்கொண்டு, இல்லத் துறவு வேண்டும் எல்லார்க்கும் தொண்டு செய்ய வேண்டும் என்கிறாள். தனியே இருந்த தில்லையிடம் மாலையுடன் வருகிறான் எட்டி. அவள் - எல்லார் முன்னிலையிலும் நம் திருமணத்தை நீ ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்கிறாள். எனக்கு வெட்கமாய் இருந்தது என்று கோணங்கியாடுகிறான். அவள் மாலையைப் போடுவதுதானே என்கிறாள். எனக்கு என்னமோபோல இருக்கிறது என்கிறான். தில்லை மாலை சூட்டுகிறாள்; எட்டி மாலை சூட்டுகிறான் தில்லைக்கு. அனைவருடனும் - நின்று அழகிய மணவாளன். விஞ்ஞானம் வளர்க! குறள் நெறி ஓங்குக! எல்லா நிதியும் தமிழ் வளர்ச்சிக்கே! எம் வாழ்வு தமிழ்த் தொண்டுக்கே! - பாரதிதாசன் புதினங்கள், 1994  41. பக்த ஜெயதேவர் ஜகந்நாதத்தில் பில்வ வனம் என்னும் பார்ப்பனச் சேரியில் நாராயண பட்டர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவி கமலாபாய். அவர் அருந்தவப் பிள்ளை ஜெயதேவர். *** அதே ஜகந்நாதத்தில் அக்னிஹோத்ரன் மகள் பத்மாவதிக்குக் கலியாணம் ஆக வேண்டியதிருந்தது. கண்ணபிரான் அக்னி ஹோத்ரனின் கனவில் தோன்றி, ஜெயதேவனுக்குக் கொடு என்று கூறிப்போக, ஜெயதேவரின் வீடு சென்றார்கள். நாராயண பட்டருக்கும் கண்ணன் கனவில் சொல்லியிருந்த தால் திருமணம் முடிந்தது. *** ஜெயதேவரும் பத்மாவதியும் இல்லறத்தை நடத்தி வருநாளில் நாராயண பட்டர் பிள்ளையை அழைத்து நான் தவம்புரியக் காடு செல்வேன். நீ உலகில் கீர்த்தியோடு வாழக் கடவாய் என்றார். ஜெய தேவர் வருந்தியும் நாராயண பட்டர் கேட்கவில்லை; போய்விட்டார். *** ஜெயதேவர் சகல சாதிர பண்டிதர். தர்மவான். அனைவரும் அவனைப் புகழ்ந்து வரலானார்கள். பில்வாவில் ஒரு பிரபல வியாபாரி இருந்தான். நற்குண நற்செய்கையுடையவன். அவன் ஜெயதேவரை அடைந்தான். ஞானோபதேசம் பெற ஜெயதேவர் ஆத்ம ஞானத்தை உபதேசித்தார். அன்று முதல் அவன் ஜெயதேவர் கற்பித்த மார்க்கத்தில் நின்று ஆத்மானந்தத்தை அனுபவித்து வந்தான். ஜெயதேவர் பாகவதத்தை அனுதினம் ஓதுவார் கலி யுகத்தில் கண்ணன் புகழைத் துதிப்பதைக் காட்டிலும் வேறு மார்க்கம் கிடையாது. முக்திக்கும் அதுதான் மார்க்கம் என்று பாகவதம் விதிக்கிறது. பஜனை செய்வாரானார். அவர் உலகம் வியக்கத்தக்க சங்கீத ஞானியாயும் கவிதாரத்னமாகவும் விளங்கலானார். ஜெயதேவர் கீத கோவிந்தம் பாடினார். கீதகோவிந்தம் என்ற சாதிரத்திற்கு மகத்வம் அதிகரித்தது. ஒரு சமயம் ஜெகந்நாத க்ஷேத்திரத்திற்கு ஜனங்கள் கீத கோவிந்தம் பாடி, பஜனை பண்ணியிருக்கையில், கீத கோவிந்தத்தால் நாம் ஆனந்த மடைந்ததாம். அதை நாம் அங்கீகரித்தோம் என்று அசரீரி எழுந்தது. அதனால் கீத கோவிந்தத்தின் மதிப்பு அதிகரித்தது. *** ஒட்டிர தேசத்திற்கு அரசன் சாத்துவிகன். அவன் மகா பண்டிதன். அவன் தேசத்தில் கீத கோவிந்தம் மிகவும் பிரசித்தம் அடைந்திருப்பதை அவன் அறிந்தான். பகவானை கீர்த்தனையால் பாடுவது சிரேஷ்டமே என்ற முடிவுக்கு வந்தவனாய், தானும் 100 அழகிய கீர்த்தனங்கள் செய்து வெளியிட்டான். ஆயினும் அவைகளை ஜனங்கள் விரும்பவில்லை. இதனால் அரசன் பண்டிதர்களையும் பிரபலதர்களையும் கூட்டிக் கீத கோவிந்தத்தைப் போல் என் கீர்த்தனங்களும் உயர்ந்தவை என்றும், மேலும் இருவகைக் கீர்த்தனங்களும் ஒரே கடவுளைப் பற்றியவை என்றும் கூறினான். பண்டிதர்கள் அரசனை நோக்கி, நீங்கள் பொறாமையால் அந்தக் கீர்த்தனங்களை இயற்றினீர்கள். மேலும் ஜெயதேவர் ஒப்பற்ற பெரியவர்; ஞானி. அவரின் கீத கோவிந்தத்தைக் கடவுள் அங்கீகரித்து வியந்தார். அதுபோல நீங்களும் பெருமானின் அங்கீகாரத்தைப் பெற முயலுங்கள் என்றார்கள். அதற்கு அரசன் ஓர் பந்தயம் ஏற்படுத்தினான். அதன்படி பண்டிதர்களும், அரசனும் கிருஷ்ண ஜெயந்தியன்று ஜெகந்நாதம் சென்று கீத கோவிந்தத்தையும் அரசன் கீர்த்தனைகளையும் காப்பிட்டுக் கோவிலில் வைத்துப் போய்விட்டார்கள். விடியற்காலையில் சன்னதியைத் திறந்து பார்க்க, கீத கோவிந்தத்தின் தலையேட்டில் இதை நாம் அங்கீகரித்தோம் இப்படிக்கு ஜகந்நாதன் என்றிருந்தது. அரசன் வருந்தினான். வீடு வந்து உணவு நீத்துக் கடவுளைக் கெஞ்ச ஆரம்பித்தான். அன்றிரவு அவன் தூக்கத்தில் கடவுள் தோன்றி ஜெயதேவர் மகிமைகூறி, நீயும் கீத கோவிந்தத்தைப் பாராயணம் பண்ணுவாயாக என்ன, அரசன் அவ்வாறு செய்யத் தலைப்பட்ட அளவில் கீத கோவிந்தம் உலகப் பிரசித்தம் அடையலாயிற்று. ஒருநாள் அக்னிஹோத்ரன் தன் மருமகன் பெருமை கேட்டுப் பார்க்கவந்தான். ஆனந்தம் கொண்டான். மருமகனைப் பூசித்துத் தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். அங்கும் மக்கள் அனைவராலும் பூசிக்கப்பட்டிருந்தார் ஜெயதேவர். அங்கு முக்கிய மாணாக்கனாகிய பகவத்தாஸன் வந்து - சுவாமி தாங்கள் பில்வாவுக்கு வந்து போக வேண்டும் என்ன, ஜெயதேவர் சென்று இருந்து - பிறகு புறப்பட்டார். புறப்படும்போது தாஸன் ரத்தினங்கள் பொற்கட்டிகளைப் பல்லக்குப் போகிகளிடம் கொடுத்து - இவற்றைச் சுவாமிகளின் மனைவியாகிய பத்மாவதியிடம் கொடுத்து - வந்து சேர்ந்ததென்று ஓலைபெற்று வரவேண்டும் என்று அனுப்பியிருந்தான்: பல்லக்குக் காட்டைக் கடக்கையில் திருடர் மறித்தார்கள். ஜெயதேவர் எம்மிடம் ஒன்றுமில்லை என்றார். திருடர் பல்லக்கைக் சோதிக்க, போகிகள் ஒருபக்கம் வைத்திருந்த தங்கம் ரத்தினம் கிடைத்தன. அவைகளை எடுத்துக் கொண்டு ஜெயதேவரையும் கால் கைகளை வெட்டி இவரைத் தூக்கிக் கிணற்றில் போட்டுப் போனார்கள். *** ஜெயதேவர் கிணற்றில் சமாதி யோகத்தில் கூடிக் கவலையற்று இருந்தார். *** சாத்துவிக மன்னன் வேட்டைக்கு வரும் வழியில் கிணற்றின் உள்ளிருந்து ஓர் ஒளி தெரிவதைக் கொண்டு கிணற்றைச் சோதித்தான். ஜெயதேவர் நிலைக்கு வருந்தினான். *** அரசன் தன் அரண்மனைக்குக் கொண்டுபோய் ரணங்களை ஆற்றினான். ஜெயதேவர் அங்கிருக்கையில் - போகிகள், பகவத் தாஸனிடம் நடந்தவைகளைத் தெரிவித்தார்கள். அவன் துடித்தான். ஜெயதேவர் இருப்பிடம் தெரியாமல் - தேடச் செய்து கொண்டிருந்தான். *** பத்மாவதிக்குச் சாத்துவிக மன்னன் பல்லக்கு அனுப்பி அழைத்து ஜெயதேவரைக்காட்ட அவள் துயரத்தில் மூழ்கியிருந்தாள். ஜெயதேவரும் பத்மாவதியும் அங்கே இருந்தார்கள். அவர்களை அங்குள்ள ஜனங்கள் பூசித்தார்கள். அவர் புகழ் விரிந்தது. இப்படி ஓர் மகாத்மா அங்குத் தங்கி இருப்பதால் நாமும் தரிசித்து நம் பாவத்தைத் தீர்த்துத் கொள்வோம் என்று நினைத்து ஐந்தாறு பேர் சாதுக்கள் வேடத்தோடு ஜெயதேவரிடம் வந்தார்கள். அரசனுடம்கூட இருக்கிறான். ஆனால் வந்தவர்கள் முன்பு ஜெயதேவரை இம்சித்த திருடர்கள். அவர்கள் ஜெய தேவரைக் கண்டதும் இவரா என்று நடுங்கினார்கள். ஆயினும் ஜெயதேவர் அவர்களை அரசனுக்குக் காட்டிக் கொடாமல், அவர்கள் சாதுக்கள் வேடந்தாங்கியது பற்றிச் சந்தோஷித்து அவர்கட்கு ஏற்ற உபசாரம் புரிவித்து - அவர்கள் கேட்டபடி, வண்டியில் ஆபரணம் ஏற்றி அனுப்பினார். வண்டி நகரைத் தாண்டியதும், திருடர்கள் வண்டியை நிறுத்தச் சொல்லி - அந்த அரசனது வண்டிக்காரனிடத்திலும் உடன்வந்த அரச சேவகரிடத்திலும் ஜெயதேவரைப் பற்றிக் குறைவாகக் கூறி - ஜெய தேவரைத் தாங்கள் படுத்திய இம்சைகளையும் கூறினார்கள். உடனே பூமி அதிர்ந்தது. நிலம் பிளந்தது. அந்தத் திருடர் பிளவில் வீழ்ந்து மாண்டார்கள். *** இந்தச் சேதி அரசனுக்கும் ஜெயதேவருக்கும் எட்ட அவர்கள் பிளவை வந்து பார்த்தார்கள். ஜெயதேவர் என்னால் இந்த மனிதர்கட்கு இந்தக் கதி வந்ததே என்று துக்கித்து மூர்ச்சையாகி விழுந்து பிண மானார். அரசன் பிராணத் தியாகம் பண்ணிக்கொள்ள முயலுகையில் பரமசிவன் பிரத்யக்ஷமாகி, ஜெயதேவரை விழிக்கச்செய்து அரசனுக்கும் அனுக்கிரகம் புரிந்து போகிறார். *** ஜெயதேவர் இல்லாத சமயம் அரசன் மனைவி ஜெயதேவர் மனைவியிடம் பேசியிருந்தார்கள். அச்சமயம் ஓர் தூதுவன் அரசியிடம், உமது சொந்தக்காரர் இறந்தார். அதனால் அவர் மனைவி உடன்கட்டை ஏறினாள் என்றான். கேட்ட அரசி திடுக்கிட்டாள். மேலும் அவள், உடன் கட்டை ஏறியவளைப் புகழ்ந்து பேசினாள். அது கேட்ட ஜெயதேவர் மனைவி, கணவன் இறந்தால் உடனே உயிர் விடுகிற வளே உத்தமி. கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறுகிறவள் மத்யமிதான் என்றாள். இதனால் இருவர்க்கும் மனம் வேறுபடுகிறது. *** ஒருநாள் அரசியின் சூழ்ச்சியின்படி சிலர் வந்து ஜெயதேவர் இறந்தார் என்று பத்மாவதியிடம் கூற, உடனே பத்மாவதி ஆவி பிரிகிறது. அரசி துடித்தாள். *** அரசனும் ஜெயதேவரும் ரதத்தில் வருகிறார்கள். வீதியில் துர்க்குறி காணுகிறார்கள். அரண்மனை சென்று சேதி அறிகிறார்கள். அரசன் துடித்தான். ஜெயதேவர் வருந்தினார். அரசன் தன் மனைவியைக் கொல்லப் போகிறான். ஜெயதேவர் தடுக்கிறார். அரசி ஜெயதேவரை நோக்கி என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஜெயதேவர் மூர்ச்சையாகி விழ - அவர் கால் கை வளர் கின்றன. ஜெயதேவர் கடவுளைத் துதிக்க, பத்மாவதியைக் கடவுள் வந்து எழுப்புகிறார். கடவுள் ஆசி கூறி மறைந்தார். *** ஜெயதேவர் பாகவதத்தை வடமொழியில் பாடியருளினார் அரசன் முயற்சியால் அரங்கேற்றும் போது புதிய அந்தணர் ஒருவர் அங்கு வந்து, அநேக குதர்க்க வாதம் புரிந்து, பின் கண்ணனான தன் சொந்த உருவத்தோடு காட்சிதந்து நூலைப் புகழ்ந்து ஆசி தந்து போனார். *** ஜெயதேவர் சிவபெருமானைக் குறித்து ஐந்து கீர்த்தனம் செய்தார். இப்படியிருக்க- ஒருநாள் கணேச (பட்டர்) மகோபாத்யாயர் வந்து கீத கோவிந்தம் முதலியவைகளைச் சொல்லும்படி கேட்க, அதில் குற்றம் சொன்னார். அதற்கு அரசன் கோபித்து அவை குற்றமுடையது என்று எண்பித்தால் என் அரசை உமக்குத் தருகிறேன் என்று பந்தயம் கூற, உபாத்தியாயர் சம்மதித்துக் காசிச் சங்கத்திற்கு அழைத்துப் போனார். சங்கத்தின் தலைவரான சர்வக்ஞ பண்டிதர் நூலைப் பார்த்தார். சபையாரோடு கங்கைக் கரைக்குச் சென்று கங்கையைத் துதித்து நூலைக் கங்கையில் போட்டார். கங்கா தேவி நூலை ஏந்தி எதிர்வந்து நின்று நூலின் மகத்துவத்தை விவரித்தாள். கங்கைக்கும் சர்வக்ஞர்க்கும் மனத்தாங்கல் ஏற்படுகிறது. கீத கோவிந்த ஏடுகளைச் சர்வக்ஞர் வானில் எறிகிறார். அப்போது ஏடுகளை ஏந்திக் கண்ணபிரான் ப்ராப்தமாகி (ருக்மணி பாமா சகிதம்) காட்சியளித்துச் சந்தேகத்தை நீக்கி, அதே நேரத்தில் சர்வக்ஞ பண்டிதராய் இருந்த சிவபெருமானும் காட்சியளித்தார். மற்ற கணேசர், சுப்ரமணியர் காட்சியளித்தார். *** அதன் பிறகு ஜெயதேவர், அரசனுக்கும் தம் மனைவிக்கும் ஞானோபதேசம் செய்து முக்திப் பேறடைந்தார். - பாரதிதாசன் புதினங்கள், 1994  42. ஆத்ம சக்தி 1. அடிமைப்பட்ட அந்தச் செம்மை நாட்டின் உள்ளத்தில் தேசபக்தி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. ஆளுவோர் மேல் அந்நாட்டுக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்புக் கொஞ்சமல்ல. விடாது தீயைக் கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் கீழ் குடித்தனம் பண்ணுவதுபோல், படையை வைத்துக்கொண்டு காலந்தள்ளி வந்தார்கள் ஆளுவோர். ஆயினும் ஆரை விட்டது ஆளும் ஆசை. ஆட்சியினால் வரும் சுரண்டற் பொருள் போய் விட்டால் என்ன பண்ணுவார்கள் ஆளுவோர்? செம்மை நாட்டார் நிராயுதபாணிகள். ஆயுதங்கள் இல்லாமை ஒருபுறமிருக்க சுதந்தரத்தை விரும்புவோர்க்கு இருக்க வேண்டியவைகளில் அநேகம் செம்மைநாட்டில் இல்லை என்பதும் வாதவந்தான். ஆனால் ஒன்று, செம்மை நாட்டில் பூத்துக் காய்த்துள்ள ஆத்ம சக்தி ஜகத்தையே எதிர்க்க வல்லது. செம்மை நாட்டில் ஜனங்களை சுதந்தரப் பாதையில் நடத்திப் போகின்றவர்களின் பிரதானமானவர்கள் இரு தலைவர்கள். ஒருவன் அழகன். ஆநந்தன் மற்றவன். இருவரும் ஒத்த மனோ பாவம் உடையவர்கள். உருவத்தில் இருவராகக் காணப் பட்டார்கள். எண்ணத்தால் இருவரும் ஒரே இரும்புக்குண்டு. 2. வழக்கப்படி அவள் அழகனை ஒரு தனியாகக் கண்டாள். அவள் பெயர் பட்டு. ஆனந்தனின் தங்கை. எனக்கு உறுதி கூறினால் போதும் என்று கெஞ்சினாள். அழகன், சொன்னான்: நமது தேசத்தை உன் அண்ணன் எதிர்க்கவில்லை. மெய்தான். ஆயினும் நீ உயர்ந்த ஜாதிப் பெண். அழகனின் இந்த வார்த்தை பட்டுக்குக் கொடூரமாக இருந்தது. அதைப்பற்றி உனக்கென்ன. ஜாதியைத் தான் தள்ளிவிட்டோமே. நாட்டின் விடுதலைக்கு ஜாதி ஒரு முட்டுக்கட்டையல்லவா? கரை கடந்து பாயும் என் காதலுக்கு ஒரு தேக்கிடம் காட்டு என்று பதைத்தாள். அழகன், சுதந்தரமில்லை. நாம் அடிமை. இதில் கல்யாணம் என்றான். சுதந்தரந்தான் வந்துவிடப் போகிறதே. சரி வந்தபின் மணந்து கொள்-என்ன? என்று கேட்டாள். அழகன் ஒத்துக் கொண்டான். ஆற்றொணாத் துன்பத்தால் இன்னொரு வரம் கேட்டாள் பட்டு. மணம் ஆகிறவரைக்கும் நாம் தனி வீட்டில் இருந்தால் என்ன? என்றாள். அவன் ஒப்பவில்லை. சுதந்திரம் கிடைத்த மறு நிமிஷம் கல்யாணம். இந்த ஒரு சந்தோஷந்தான் பட்டு உயிரோடு காலம் தள்ளி வருவதற்குக் காரணம். 3. செம்மை நாட்டைப் பிடித்து, அதில் தன் படையையும் தனது பிரதிநிதியையும் வைத்து ஆண்டுவந்த சென்னிநாட்டுப் பொன்னரங்க மன்னன் செம்மை நாட்டுக்கு சுதந்தரம்கொடுத்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் செம்மை நாட்டுக்கு விடுதலை கொடுத்த பின், அது தன்னைத்தான் காத்துக் கொள்ளவோ ஆண்டு கொள்ளவோ முடியாமல்போனால் சில சமயம் தன் கையைவிட்டு அந்தச் செம்மை நாடு தன் எதிரியாகிய நடு நாட்டுக்கு உட்பட்டுவிட்டால் ஆபத்து. இதற்காகச் சென்னி நாட்டுப் பொன்னரங்கன் செம்மை நாட்டின் நிலையறியவும் விடுதலை கொடுக்கவும் வருவதாகச் சொல்லி அனுப்பினான் செம்மை நாட்டுக்கு. செம்மை நாட்டின் உள்ளம் ஆனந்தக் கடல். 4. பெரியதோர் வரவேற்புக்குப் பின், பொன்னரங்கன் ஆநந்தன் இல்லத்தில் தங்கி, செம்மை நாட்டின் அறிஞர்கள் பிரதான குடிகள் ஆகிய பலரை அழைத்துப் பேசினான். நகரங்கள், கிராமங்கள், பொது தாபனங்கள் ஆகிய இடங்கட்கு நேரில் சென்றும் நிலைமையை அறிந்தான். சேரி ஜனங்கள் சுதந்தரம் கிடைத்ததும் தீண்டாமை ஒழியும் என்ற விஷயத்தில் சந்தேகம் தீர்ந்திருந்தார்கள். ஏழைகள் பணக்காரர் ஆவதும் சுதந்தர நாட்டில்தான். நல்ல பொதுவான சட்ட திட்டங்களும் அப்போதுதான். சுதந்தரம் ஆத்மா அவர்கட்கு. 5. பொன்னரங்கர் நம் நாட்டுக்குச் சுதந்தரம் தருவதாக ஓர் சுதந்தரப் பிரகடனம் சித்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து மக்கள் சந்தோஷக் கடலில் ஆழ்ந்திருந்தனர். பட்டு, தன் இருப்பிடத்திலிருந்து ஓடி அழகனிடம் உத்தரவு கேட்டாள், சோலையில் தோழிமாருடன் ஆனந்தக் கூத்தடிக்க. அறிஞர்கள், பொன்னரங்கன் தங்களுக்குச் சுதந்தரம் கொடுக்க இசைந்ததற்கு பொன்னரங்கன் மேல் பாய, நடுநாட்டான் படை திரட்டுகிறான். அதனால்தான் நம்மைச் சுதந்தரம் அளிப்பதன் மூலம் தட்டிக் கொடுக்கிறான் என்று காரணம் சொல்லிக் கொண்டார்கள். தேச பக்தர்கள் தமது ஆத்ம சக்தியின் வேகத்தை வியந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ஆத்மசக்தி செய்த வேலையை எடுத்துக் காட்டினார்கள். 6. பொன்னரங்க மன்னர் ஆனந்தனின் உப்பரிகையில் காற்றோட்ட மாக வீற்றிருந்தபடி சுதந்தரப் பிரகடனத்தை எழுதிக் கொண்டிருந்தார். இடையில் அவர் கண்கள் திறந்த ஜன்னலின் வழியாகக் குதித்துச் சோலையைத் தடவின. சோலையில் பட்டு, தோழிமாரோடு கூத்தடித்துக் கொண்டிருந்தாள், கண்ணைப் பறிக்கும் கட்டழகோடு; பொன்னரங்கன் உள்ளம் மறுக்க முடியாத ஓர் முடிவுக்கு வந்தது. உயிரோடு வாழ்வதென்பது பட்டோடு வாழ்வதுதான். 7. தனது பிரதிநிதியுடன் இதுபற்றி யோசித்தான். பட்டு அழகனைக் காதலிப்பது தெரிந்தது. சுதந்தரம் கொடுப்பதை நிறுத்தி வைக்கிறேன். பட்டு கிடைத்ததும் அதை மேள தாளத்தோடு தருகிறேன் என்று கூறிவிட்டான் ரகசியமாகத் தன் பிரதிநிதியுடன். 8. பின் பொன்னரங்க மன்னன் வெளிப்படையாகச் சொல்லி விட்டான். பட்டை எனக்குக் கொடுத்தால் சுதந்தரத்தை நான் கொடுப்பேன் என்று. பட்டு பொன்னரங்கனை விரும்பவில்லை என்று அழகன் கேள்விப்பட்டான். அவளை நான் அரசனுக்கு ஆட்படச் சொல்ல மாட்டேன். என் காதலியைக் கொடுத்து நாட்டுக்கு உரிமை பெற முடியாது என்று குதித்தான். ஆள்வோரின் படைக்கத்தி சுழற்றவும் ஆரம்பித்து விட்டது. குடிகள் துன்பம் தாங்க முடியவில்லை. பட்டின் உற்றார், அண்ணனாகிய ஆனந்தன் ஆகியோர் பலமுறை அரசனைப் பேட்டி கண்டார்கள். இதோ முடிவு, அதோ சமாதானம் என்று நிமிஷத்தை எண்ணியபடி இருந்தார்கள் ஜனங்கள், படைவீரர் தம்மைப் படுத்தும் பாடு தாங்காமல்! ஆத்மசக்திக்குத் தெரியும் நேரம். அப்போது அது சும்மா இருந்தது படையை எதிர்க்காமல். 9. பட்டு, காவலில் வைக்கப்பட்டாள் என்றும் அவள் உயிர் போனாலும் அழகனையன்றி வேறொருவரைக் காதலிக்க முடியாது என்று கூறுகிறாள் என்றும் தக்க இடத்திலிருந்து, அதாவது உயிர் போன்ற நண்பனாகிய ஆநந்தன் வாயிலாகக் கேள்விப்பட்டான். அடிக்கடி அந்த இன்பமான நிமிஷங்களைத் தேன்போல் அழகன் அனுபவித்தாலும் நாட்டு மக்கள் படும் துன்பத்தையும் தன்னால் சுதந்தரம் தடைப்பட்டு விட்டதையும் அவன் நினைந்து வருந்தாமலில்லை. 10. ஊர் நாட்டாண்மைக்காரன் ஜனங்கள் சகிதம் அழுதுகொண்டே வந்து அழகனைக் கண்டார்கள். உங்கள் காதல் சேஷ்டையால் எங்கள் நிலை இப்படி ஆகலாமா? என்று கேட்டார்கள். பட்டு மன்னனை மணந்து கொண்டால் எங்கட்கு இப்படிப்பட்ட தொல்லை ஏற்படாதே என்று கேட்டார்கள். நீங்கள் பட்டு மேல் எண்ணங்கொண்டு அதை வெற்றிகரமாக முடிப்பதற்காகத்தான் ஜனத்தலைமை வகிக்க வந்தீர்களா? என்று சுடச்சுடக் கேட்டார்கள். அழகனின் பதைபதைப்பும் துக்கமும் சேர்ந்து அவனை ஒருபதிலும் சொல்ல முடியாத நிலையில் வைத்தன. மீண்டும் ஜனங்கள், நாங்கள் சின்னத் தலைவராகிய ஆநந்தனைக் கண்டு முறையிட்டோம். அவர் தலைவரைக் காணுங்கள். என்று கூறிவிட்டார் என்றார்கள். ஏன் ஆனந்தன் சமாதானம் கூறியிருக்கக்கூடாது என்று அழகன் நினைத்தான். நண்பனைத் தன் நெஞ்சம் நிந்தித்தது பற்றித் தானே வருந்தினான். அழகன் ஜனங்களை நோக்கி, அவள் மன்னனை மணந்து கொள்வதை நான் வேண்டாம் என்று கூறவில்லையே. நான் அவளைக் காதலிக்கும் போது இத்தகைய நிலை ஏற்படும் என்று எப்படித் தெரியும்? என்று பரிதாபமாய் அழுது கூறினான். சீக்கிரம் நிலைமையை ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லி அனுப்பினான். 11. ஆநந்தன் நள்ளிரவில் இரைக்க இரைக்க கத்தியும் கையுமாக ஓடி வந்தான் அழகனிடம். என் தங்கையால்! அவளால்தானே அழகா? - அவளில்லாவிட்டால் மன்னன் மனோ நிலை இப்படியாகி இராதே! என்றான். அழகன் என்ன செய்தாய் அதற்காக? என்று கேட்டான். ஆநந்தன், நான் அவளைக் கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். சென்றேன். அவளைச் சுற்றிலும் நியமித்திருந்த காவற்காரர் விழித்துக் கொண்டார்கள். நான் ஆள் தெரியாமல் ஓடிவந்தேன். நீ என்னை மன்னித்து விடு! அவள் உனக்குரிய பொருள் என்றான். அழகன்: அவளிறந்தால் அவன் காதலுக்கும் பங்கம் ஏற்படாது. நாட்டின் சுதந்தரமும் அளிக்கப்பட்டுவிடும் என்பது உன் எண்ணமாகும். உன் தியாகம் நன்று. உடன் பிறந்தாளைப் பலியிட வேண்டிய தாயிற்று சுதந்தர தெய்வத்துக்கு? அழகன் கண்ணீர் சொரிந்து கூறுவான்: ஆநந்தா வேறு வழியில்லை நான் அதைச் செய்கிறேன். அவள் போன பின் நான் இருப்பது கிடையாது. அவளைத் தொடர்கின்றேன். சுதந்திர தேசத்தை நீ நல்ல முறையில் ஆண்டிரு. வர்ணாரம தர்மம் இந்தக் காலத்தில் மக்களின் ஒற்றுமையைக் கெடுக்கிறது. அது மக்கள் முன்னேற்றத்திற்குப் பெரியதோர் முட்டுக்கட்டை. அதை ஒழி. நல்லதோர் சட்டம் செய். மக்கள் சமம் என்ற வேதத்தை நடைமுறையில் வை. நான் இப்போதே உன்னிடம் விடை கேட்கிறேன். கடைசி விடை. அடுத்த ஜன்மத்தில் உன் நட்புக் கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. நானும் பட்டும் இறப்புலகில் ரகசிய சந்திப்பும் மறுபிறவியில் இந்த நாட்டில் ஏழைச் சதிபதியாகவாவது பிறந்து வாழும் இன்ப வாழ்க்கையும், ஆண்டவன் கிருபை செய்யட்டும் என்றான். அழகன் கண்ணீர் விட்டான். அழகன் மேலும் பேசினான். ஆயினும் அப்பேச்சில் எழுத்துக்கள் ஒன்றும் புரியவில்லை. ஆநந்தன் கேட்டிருந்தான். இவன் விழிகள் மூடியிருந்தன. ஆநந்தன் தன் நண்பனைக் கும்பிட்டு, அழகா நீயே உன் உயிரை மாய்த்துக் கொண்டதாக ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடு. உன்னுடைய ஆசீர்வாதம் எனக்கு எதேஷ்டமாகப் பயன்பட வேண்டும் என்று கூறினான். ஆத்திரத்தோடு வெகு விரைவில் அழகன் அவ்வாறே எழுத ஆரம்பித்தான். ஆநந்தன், இடையில் நான் சொன்ன மாதிரி எழுது. நீ இப்போது கூறியபடி பிற்காலத்தின் என் ஆட்சிமுறை இவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அதில் குறிக்காதே. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எச்சரித்தான். தரும தேவதை அழகனை வாழ்த்தத் தொடங்கினாள். அவனால் தியாக லக்ஷணம் உலகுக்கு விகசிதமாகப் போகிறதென்று. 12. அதே இரவு அழகன் வீட்டின் முன்புறம் கருடிக் கூடம். அது தனியறை போன்றது. அங்கே செம்மை நாட்டின் அறிஞர்கள் சிலர் காத்திருந்தார்கள். அவர்கள் வாய்கள் முணுமுணுவென்று பேசிக் கொண்டிருந்தன. அழகன் வீட்டின் பின்கட்டில் கும்பிட்டபடி இருந்தான். பிரிந்துபோன ஆநந்தன் அழகன் வீட்டின் தோட்டத்து வாசல் வழியாக உட்புகுந்தான். நான் மாய்த்தேன் என் தங்கையைத் தேசத்துக்காக என்று ஆநந்தன் கூவி அழகனின் கால்மாட்டில் வீழ்ந்தான், தடுமாறி விழுபவன்போல. அதை அழகன் கேட்டான். ஆநந்தனைப் பார்த்தான். சென்றாயா என் உயிரே என்று பட்டைக் குறித்துச் சொன்னான். அவன் கால்கள் கருடிக் கூடத்தின் கதவண்டை கொண்டு சேர்த்தன அழகனை. அவன் கருடிக் கூடக் கதவைத் திறந்து கத்தி ஒன்றைத் தூக்கினான். அறிஞர்கள் எழுந்து நின்றார்கள் தலைவனுக்கு மரியாதை செய்யும் முறையில். அவன் அறிஞர்களை எதிர்பாராத விதமாகப் பார்த்து, என் உயிர் முடிந்தது தேசத்துக்காக என்று கத்தியை கழுத்தில் வைத்தான். ஒரு சேதி என்று கூவித் தடுத்தனர் அறிஞர்கள். அழகன்: அவள் இறந்தாள் அறிஞர்: அவள் மாயவில்லை அழகன்: ஆநந்தன் மாய்த்துவிட்டான் அறிஞர்: அவன் பொய் சொன்னான். அழகன்: பொய் கூறமாட்டான். அறிஞர்: ஜாதி வெறிபிடித்த பொய்யன். அழகன்: அவள் எங்கே? அறிஞர்: அரசனோடு ஒத்துப் போனாள். அழகன்: ஏன் அவன் பொய் கூறினான். அறிஞர்: உன்னைச் சாகடிக்க. அழகன்: அதனால் அவனுக்கு என்ன வரும்? அறிஞர்: உம் பதவி அவனுக்கு வரும். அழகன்: பதவி அவனுக்கேன்? அறிஞர்: பதவி தவிர மற்றவை அவனுக்கேன்? அழகன்: என்ன? அறிஞர்: வர்ணாரம முறைபடி உயர் ஜாதிக்குச் செல்வாக்கிருக்கும் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவனுடைய, அவன் இனத்தாருடைய எண்ணம். அழகன்: எப்போதிருந்து? அறிஞர்: ஆதிமுதல். அழகன்: நீங்கள் அறிவீரா? அறிஞர்: அறிவோம். அழகன்: ஏன் கூறவில்லை? அறிஞர்: நேரம் ஏது? அழகன்: இப்படிப்பட்ட வஞ்சகனா? அறிஞர்: அவன் மட்டுமா? அழகன்: ஒருவரும் நல்லவரில்லையா? அறிஞர்: இருக்கிறார்கள் அழகன்: யார்? அறிஞர்: பிறகு சொல்லுவோம். ஐயனே கத்தியைக் கொடும். நாங்கள் சொல்லுவது சத்தியம். அழகன்: (கத்தியைக் கொடுத்து) தன் தங்கையை எனக்குத் தந்தான். அவனுக்கு உயர் ஜாதி எண்ணமிருந்தால் சம்மதித்திரானே? அறிஞர்: அவன் உயர் ஜாதி அல்ல என்பது நம்மைவிட அவனுக்கு நன்றாய்த் தெரியும். அழகன்: பின்? அறிஞர்: சுயநலம். அழகன்: இன்னுமா அந்த அவிவேகம்? அறிஞர்: தீர்ந்துவிடுமா? அழகன்: எப்போது? அறிஞர்: ஊழிக்காலத்தில். அழகன்: மேலே நடக்க வேண்டியது? அறிஞர்: அரசனுக்கு ஒன்றும் தெரியாது. அவன் அரசனுக்கு ஒத்துக்கொண்ட மறுநிமிஷம் உம்மை ஒழிக்க ஆநந்தன் செய்த ஆநந்தச் செய்கைகள் இவை. அழகன்: இப்போது? அறிஞர்: எல்லோரும் ஓர் குலம் ஆக்குவோம். எல்லார் தளைகளையும் அறுத்து ஆற்றுவோம். அரசன் துணைசெய்க. அழகன்: அதன் பின் அறிஞர்: அரசன், இங்குள்ள அவன் படை தரணி போக வேண்டியது தான், செம்மை நாடு சுதந்தர நாடு? - பாரதிதாசன் புதினங்கள், 1994  43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை சந்திரிகை : கதாநாயகி சாரங்கன் : அவள் தமயன் பெருமாள் மாடு: அரச வம்ஸத்தான் இரவற்சேலை : அவன் தங்கை சுந்தரி : அவன் மனைவி முகுந்தன் : கதாநாயகன், ஏழை உழவன் முராரி : தந்தை முத்தாயி : தாய் ராஜதானி : இடை நாட்டை இருந்தாளும் சோழப் பிரதிநிதி சேனாதிபதி : இடைநாட்டின் சேனாதிபதி சோழன் : சோழநாட்டரசன் மந்திரி : யார் பிரதானியார் ஏழை உழவன் அல்லது முகுந்த சந்திரிகை களத்தில் குவிந்த நெல் அளக்கப்படுகிறது. தண்ணீர் இறைத்த கடனுக்கும், எரு வாங்கிய கடனுக்கும் நிலவரிக்கும் பிற ஆட்களுக்கும் பகிர்ந்து கொடுத்தபின் மீதியில்லை. அளவுகாரன் மீதியில்லை என்பதைத் தெரிவிக்கிறான். முகுந்தன் என்னும் ஏழை உழவன் விழிக்கிறான். வயோதிகத் தாய் தந்தையரைக் காப்பது எப்படி என்று தவித்து நிற்கிறான். அவன் நிழல் கண்ணில் படுகிறது. என் அருமைத்தாய் தந்தையால் வளர்க்கப்பட்ட இத்தனை பெரிய உடல் எனக்கிருந்தும் பயனென்ன என்று அளவு காரனிடம் கூறுகிறான். இதைக்கேட்டுக் கொண்டே வந்த அவர் தந்தை முராரி, எல்லாம் தரும் இந்த உடல் அப்பா, வருந்தாதே என்று கூறித் தேற்றுகிறான். வீட்டில் தாய் தந்தையார்க்கு உருக்கமான சம்பாஷணை. முராரி சோழநாட்டில் உள்ள உழவுத் தொழில் வசதியைக் கூறுகிறான். அந்த வசதி இடை நாட்டில் இல்லை. காரணம் இடைநாடு அடிமைநாடு. காடழிக்கிறார்கள். முகுந்தன் மரம் பிளக்கிறான். மற்றும் பலரோடு. காட்டுக் குத்தகைக்காரன் அவரவர் பிளந்த அளவுக்குக் கூலி கொடுக்கின்றான். ஓர் கிழவன் பிள்ளையில்லாதவன். தன்னால் கட்டை பிளக்க முடியவில்லை. முடியாமை தெரிந்தால் எப்போதுமே கிழவனைக் காட்டுக்குள் விடமாட்டார்கள். அந்தக் கிழவனுக்கு முகுந்தன் தான் வெட்டிய விறகுகளில் பாதியை கிழவன் வெட்டியதாகக் காட்டுகிறான். இதனால் சரிபாதிக் கூலி கிழவனுக்குப் போகிறது. முகுந்தன் கூலி பெற்றுச் சிறிது விறகைத் தலையில் சுமந்து வீட்டுக்குப் போகிறான். வழியில் பறை முழங்குகிறது. கிராமத்தார் கூடுகிறார்கள். ஆலமரத் தின் கீழ் சந்திரிகா (கதாநாயகி) சாரங்கன் (-யாள் தமயன்) பெருமாள் மாடு, இரவற்சேலை முதலிய தேசத் தொண்டர்கள் பிரசங்கம் செய்கிறார்கள். இடைநாடு சுதந்தரம் அடைய வேண்டும் என்பது பற்றித் தான் பேச்சு, அப்பிரசங்கம் பொது ஜனங்கட்கு உணர்ச்சியை உண்டு பண்ணவில்லை. விளங்கவில்லை. ஜனங்கள் தேசத் தொண்டர்களிடைப் பரபர முணுமுணுப்பு. பேதம். இதற்கிடையில் நீங்கள் நன்றாக விஷயத்தை விளக்கவில்லை என்று ஒரு குரல் கேட்கிறது. இப்படிக் கூறிய பிறகு தலைவன் மேடையில் பேசக் கேட்டுக் கொள்ளப் படுகிறான். வாய்க்கால் வடிகால் ஏரிமராமத்து இல்லை. தொழிலாளர்க்கு வசதி, உழவுக்குக் கடன் கொடுப்பதில்லை என்று தொடங்கி சுதந்திரம் தேவை என விளக்குகிறான். மக்களிடைச் சந்தோஷ ஆரவாரம். தேசத் தொண்டர்கள் கூடி, முகுந்தன் தாய் தந்தையரிடம் போகிறார்கள். தாய் தந்தையர் தமது வறுமை நிலையிலும் தம் குமாரனை நாட்டுக்குத் தத்தம் புரிகிறார்கள். சந்திரிகா முடியிழந்த மன்னன் மகள். அவள் முகுந்தன் என்னும் அந்த ஏழை உழவன் மேல் காதல் கொள்கிறாள். அடிக்கடி இருவரும் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் சந்திரிகா பேசும் காதல் பேச்சுகட்கெல்லாம் முகுந்தன் பொருள் தெரியாது தேசீய விடை கொடுக்கிறான். இதனால் அவன் எண்ணம் தேசத்தொண்டில் ஈடுபட்டிருப்பதைச் சந்திரிகா உணருகிறாள். மேலும் முயலுகிறாள். பல சந்திப்புக்குப் பின் முகுந்தனுக்கும் அவள் மேல் காதல் உண்டாகிறது. எனினும் அடிமை நாட்டில் திருமணம் செய்துகொள்ளேன் என்கிறான். சுதந்திரம் பெற்றவுடன் மணம்-முத்தம்-என்று ஒரே பிடியாகப் பிடிக்கிறான். கடைசியில் ஓரிரவு பூரண சந்திரனும் வானம்பாடியின் இனிய சேஷ்டையால் அவள் காதல் தீயில் கொளுத்தப் பட்டதால் அவனை மருந்துக்கு இழுக்கிறாள். முடியவில்லை. சுதந்திர நாட்டில் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுவதாகக் கைபோட்டுத் தருகிறான். இதை மறைவிலிருந்து சேனாதிபதி (இடை நாட்டில் சோழனால் நியமிக்கப்பட் டிருப்பவன்) பார்த்து விடுகிறான். கிண்டலான சம்பாஷனை களின்பின், சேனாதிபதி, சீக்கிரம் நாட்டுக்குச் சுதந்தரம் கிடைக்கப் போகிறது. அதனால் உங்கள் திருமணம் சீக்கிரம் நடக்கும் என வாழ்த்திச் செல்லுகின்றான். சுதந்தரம் கிடைத்த மாதிரிதானே நாம் கலியாணம் செய்து கொள்ளலாமே. தாராளமாக இப்போதே எனக்கு ஒரு முத்தம் தரலாமே என்கிறாள் சந்திரிகா. சிரிப்போடு மறுக்கிறான் முகுந்தன். நகர வீதியில் பிற நாட்டார்க்கு இங்கென்ன வேலை என்ற பாட்டைப் பாடி மக்களுக்கு எழுச்சியை உண்டாக்குகிறார் முகுந்தனும் பிறரும். மற்றொருபுறம் கலையும் தொழிலும் நாம் அறிவோம்; போர் செய் வோம். முன்னர் ஆண்டோம்; இப்போதும் ஆள்வோம். ஆயத்தமாய் இருங்கள் என்ற பாட்டும் பிரசங்கமும் நடைபெறுகிறது முகுந்தனால். முகுந்தன், சந்திரிகா, பிறர் கைது செய்யப்பட்டு சேனாதிபதியால் விலங்கிடப்படுகிறார்கள். ராஜதானி (சோழன் பிரதிநிதியாக இருந்து இடைநாட்டை ஆண்டு வருவோன்) வருகிறான். தேசத் தொண்டர் களுக்கு அனுகூலமாகப் பேசி அவர்களை விடுதலை செய்கிறான். ராஜதானி இடைநாட்டின் நல்ல நிலையையும் முகுந்தன் திறமையான பிரசாரத்தையும் கூறி, இடை நாட்டுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட வேண்டும் என்கிறான். இது விஷயத்தைத்தான் சோழனுக்கு அறிவித்து விடப் போவதையும் கூறி, சேனாதிபதியின் அபிப்பிராயத்தையும் பெறுகிறான். பெருமாள்மாடு என்பவன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏழை முகுந்தனும் சந்திரிகாவும் சந்தோஷமாகப் பேசியிருந்ததைப் பார்த்துவிட்டதிலிருந்து தான் சந்திரிகாவை அடையவேண்டும் என்று சதா உடையை - கிழிந்ததையும் பழசுகளையும் - ஏராளமாகத் தூக்கித் தோளில் போட்டுக்கொள்வதை உடுத்திக் கொண்டதாக நினைத்துச் சந்திரிகாவிடம் போய்ப் பாடுவதும் ஆடுவதுமாக இருக்கிறான். அவள் எதிர்ப்பைப் பலப்படுத்தக் கூடாது என்றெண்ணிப் பெருமாள் மாட்டைத் தட்டிக் கொடுத்து வருகிறாள். பெருமாள்மாடு அதை உண்மை யென்றே நினைத்து விடுகிறான். தன் மனைவியாகிய சுந்தரியிடம் அவன் பேசுவதே கிடையாது. அவள் ஒரு நாள் காரணம் கேட்கிறாள் தன்னைச் சந்திரிகை காதலிக்கிறாள். நான்அவளைக் காதலிக்கிறேன் என்றும் அதனால் செல்வம் கிடைக்குமென்றும் கூறுகிறான். இதற்காகச் சுந்தரி வருந்துகிறாள். ஒருநாள் அவள் தனியாகச் சிந்திக்கத் தொடங்கினாள். தன்னிடம் பால் குடிக்கும் குழந்தையிருப்பதால் தன் மீது அவன் வெறுப்பு அடைகிறான் என்ற முடிவோடு, பிள்ளையைத் தரையில் மோதத்தூக்குகிறாள். அக் குழந்தையின் சிரித்தமுகம் அவள் அன்பைத் தூண்டி விடவே மோதத் தூக்கிய கைகள் தழுவிக் கொள்ள எண்ணவே ஒன்று முத்தந் தருகிறாள். பெருமாள்மாடு மனோராஜ்யம் புரிவதும், மனைவி வெறுப்பதும், மனோராஜ்யத்தில் கடைசியில் உணவு இல்லை என்ற முடிவுதெரிந்து பெருமாள்மாடு ஏமாறுவதுமாகக் காலந்தள்ளுகிறான். அவன் மனோ ராஜ்யத்தை முழுதும் ஆமோதிப்பவள் பெருமாள்மாட்டின் தங்கை இரவற்சேலை என்பவள். (சந்திரிகை மெச்சும்படி ஆரம்பத்தில் ஒருநாள் பெருமாள் மாடு ஏராளமான உடைகளோடு வெளிவருகிறான். அவனைப் போலவே பெருமாள்மாடும் ஏராளமான துணிகளைப் போட்டுக் கொண்டு போயிற்று. இதைக் கண்ட நண்பர்கள் அவனுக்குப் பெருமாள்மாடு என்ற பேரை வைத்து விடுகிறார்கள்.) பாண்டியன் சோழ நாட்டின்மேல் படையெடுப்பானோ என்ற சந்தேகம் சோழனுக்கு ஏற்படுகிறது. இது பற்றிச் சோழன் தன் மந்திரிப் பிரதானிகளிடம் பிரதாபிக்கிறான். இச் சமயத்தில் இடை நாட்டுக்கும் நாம் சுதந்திரம் கொடுத்து விடுவது நல்லது என்ற முடிவுக்கு வருகிறான் சோழன். இதே சமயம் இடைநாட்டை ஆண்டுவரும் ராஜதானியின் அறிக்கை கிடைக்கிறது. அவ்வறிக்கையும் இடைநாட்டின் நல்ல நிலையை உத்தேசித்தும், பாண்டியன் படையெடுப்பை உத்தேசித்தும், இடைநாட்டுக்குச் சுதந்திரம் கொடுத்து விடலாம் என்றிருக்கிறது. சோழன் தான் இடைநாட்டின் நிலைமைஅறிந்து அங்கேயே சுதந்தரப் பிரகடனத்தை வெளிப்படுத்தி வருவதாகப் புறப்படுகிறான். இடைநாட்டின் கோட்டை வாசற்படியில் சில வைதீகப் பார்ப்பனர் வந்து உட்போக உத்தரவு கேட்கிறார்கள். பார்ப்பனக் கோலத்தைக் கண்ட காவற்காரர் ஆச்சரியப் படுகிறார்கள். தங்கள் தலைமுறையில் இப்படிப்பட்ட கோலத்தோடு - இடைநாட்டில் மனதாரப் பார்த்ததில்லை என்றும் பார்ப்பனர் போன்ற பேரையே கேட்டதில்லையென்றும் கூறிவிடுகிறார்கள். ஆயினும் கடைசியில் அவர்கள் உட்போக அனுமதிக்கப்படுகிறார்கள். பிறகு சில பறையர்கள் உட்புகக் கேட்கிறார்கள். அதுபற்றியும் அப்படியே ஆச்சரியம் உண்டாகிறது. அவர்களும் உட்போக அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி மாறுவேடத்துடன் வந்த சோழனும், பிரதானிகளும் இடை நாட்டில் ஜாதி என்ற பேச்சே மறைந்துவிட்டதாக அறிந்து சந்தோஷிக் கிறார்கள். ராஜதானியும் சேனாதிபதியும் (இடைநாடு) பேசியிருக்கை யில் இடைநாட்டுத் தேசபக்தர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் உள்ளே நுழைகிறார்கள். ராஜதானியையும், சேனாதிபதியையும் பார்த்து எங்கள் நாட்டில் நீங்கள் இருப்பது மானங்கெட்ட வேலை என்று எதிர்ப்பாகப் போகிறார்கள். சேனாதிபதி வாளை உருவுகிறான். ராஜதானி தடுக்கிறான். தேசபக்தர்கள் என்று கூறிய அந்தச் சோழ மன்னன் முதலியவர் களைச் சொந்த உருவத்தைக் காட்டி ராஜதானியின் தன்மையைப் பாராட்டுகிறார்கள். சோழனும் ராஜதானியும் சில பிரதானிகளும் மாறுவேடம் அணிந்தும், மற்றும் நினைத்த உருவத்தை அடைய உடை மீசை தாடிகளை எடுத்துக்கொண்டும் இடைநாட்டின் நிலையை அறியப் புறப்படுகிறார்கள். நாட்டுப்புறத்தில் சில குடிசைகள். அந்தக் குடிசைகளில் அந்த அர்த்த ராத்திரியில் சிலர் சில மாணவர்கட்குப் பாடம் சொல்லித் தருகிறார்கள். பிரதானிகளில் ஒருவன் மாறுவேடத்தோடு சென்று, ‘ஏன் இந்நேரத்தில் படிப்பு? என்கிறான். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு முறையாக அனுப்பாததால் நாட்டாண்மைக்காரர் எம்மை ஊரிலிருந்து நீக்கிவிட்டார்கள். எம் பிள்ளை கட்குக் கணிதம், இலக்கியம், இலக்கணம் சொல்லி கொடுத்துவிட்டால் பிறகு ஊரில் சேர்த்துக் கொள்வார்கள் என்று பதில் கூறுகிறார்கள். அரசன் இடைநாட்டின் கல்வி அபிவிருத்தியைப் புகழ்கிறான். சீர்திருத்தத் திருமணம் நடக்கிறது. இங்கு நடத்திய சம்பாஷணைகள், சச்சரவுகளால் பறையன் என்பதும் பார்ப்பான் என்பதும் புரோகிதம் என்பதும் இடைநாட்டில் கிடையாது என்பதும் விளங்குகிறது. மூஞ்சி சுருங்கிய தொண்டு கிழவன் குறட்டைவிட்டுத் தூங்குகிறான். அவன் பக்கத்தில் அவன் இளமனைவி இருந்து அவன் கோலத்தைப் பார்த்துச் சிரிக்கமாட்டாதவளாகி விஷத்தை அருந்தும் சமயம் அவள் தாய் பார்த்துத் தடுக்கிறாள். இதற்குள் கிழவன் விழித்து விஷயம் அறிந்து, தான் இளமங்கையை மணந்தது தவறு என்று உணர்ந்து அவளைப் பார்த்து, பெண்ணே நான் இறந்தால் நீ வேறொருவனை மணந்து கொள்வதாக எனக்கு உறுதி கொடு என்கிறான். அவள் மறுக்கிறாள். அச்சமயத்தில் தேசபக்தன் (முகுந்தனின்) சின்னத்தின் சப்தமும் தேசநீதி முழக்கமும் கேட்கிறது. அதை எடுத்துக்காட்டி - உறுதி கேட்க அவள் அவ்வாறே தேச நீதிக்குக் கீழ்ப்படிகிறாள். தாயும் மங்கையும் அப்புறம் போனதும், கிழவன் தள்ளாடி நடந்து விஷத்தை எடுத்துக் குடித்து உயிர் துறக்கிறான். இதுகண்ட அரசன் முதலியவர்கள் நாட்டின் நிலைக்கு மெச்சியும், கிழவனிலைக்கு வருந்தியும் அகலுகிறார்கள். நாட்டுப்புறத்தில் குடியானவன் பசு கன்று போடுகிறது மழை பொழிகிறது. இல்லம் வீழ்கிறது வீட்டுக்காரி பிரசவ வேதனை அடைகிறாள். கொல்லையில் பண்ணையாள் குளிரால் மெலிந்து உயிர் விடுகிறான். மழையீரம் காயுமுன் அவசரமாக விதைக்க நெல்கொண்டு போகிறான். வழியிலே கடன்காரர் மறிக்கிறார்கள். சாவோலை கொண் டொருவர் எதிரே வருகிறார். விருந்தாளி ஒருவன் வந்து விடுகிறான். கடைசி யாகக் குடியானவனைச் சர்ப்பம் தீண்டுகிறது. அவன் இறந்து போகிறான். இவைகளையெல்லாம் கண்ட அரசர் முதலானோர் இடை நாட்டின் வறுமை நிலைக்கு வருந்திச் செல்கிறார்கள். முகுந்தன் தன் பரிவாரத்தோடு ஆயுதச் சாலையைப் பார்வை யிடுகிறான். அங்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் வீரர்கட்குச் சொல்லுகிறான். குதிரைப் படையைப் பார்வையிடுகிறான். சுதந்தரம் நமது ஆத்மா என்று கூறிக் குதிரைகளைச் சேர்க்கும்படி கூறுகிறான். காலாட்களை அணுகி ஓர் சொற்பொழிவு நடத்துகிறான். இவைகளையெல்லாம் பார்த்திருந்த அரசன் ஆச்சரியப்பட்டுச் சேனாதிபதியை மாறுவேடத்தோடு அவனிடம் பேசிவர ஏதோ கூறி அனுப்புகிறான். மாறுவேடத்தோடுள்ள சேனாதிபதி முகுந்தனிடம் நமது சோழ நாட்டின்மேல் பாண்டியன் படையெடுப்பதால் சோழனுக்கு நெருக்கடி ஏற்படும் அந்த நெருக்கடி நமக்குச் சாதகமல்லவா? நெருக்கடியான நேரத்தில் நாமும் சோழனை எதிர்த்து நாட்டை மீட்கலாம். இதுகேட்ட முகுந்தன், ‘பாண்டியன் படையெடுப்பு நிச்சயமா? என்கிறான். நிச்சயமென்று ஆதாரத்துடன் கூறவே, சோழ ராஜனுக்கு நெருக்கடி நேரத்தில் நாம் சுதந்திரம் - கிளர்ச்சி ஆகிப்பதே சரியல்ல. உயர்ந்த நோக்கமாகாது. சுதந்திரம் நிலைக்காது. சோழ ராஜனும், ராஜதானியும் கோரி னால் நாம் அக்ரமக்காரனாகிய பாண்டியனைச் சோழன் படையோடு சேர்ந்து முறியடிக்க வேண்டும். பிறகு நமது சுதந்தரக் கிளர்ச்சி என்று கூறி சேர்ந்த படைகளைக் கலைக்கிறான். இச்சமயம் பெருமாள்மாடு இதையெதிர்த்துப் பேசுகிறான். ஒருபுறம் பெருமாள்மாட்டை ஒருவன் தனியே அழைத்து ஏன் எதிர்க்கிறாய் என்று கேட்கிறான். இடைநாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்ததும் சந்திரிகை என்னைக் கலியாணம் செய்து கொள்வதுபற்றி யோசிப்ப தாகச் சொன்னாள் என்கிறான். அப்படியானால் சுயகாரியத்தை உத்தேசித்துத்தான் நீ சோழனுக்கு நெருக்கடியை எதிர்பார்க்கின்றாயோ? ஆம்! மற்றொருபுறம். முகுந்தன் சந்திரிகை பேசுகிறார்கள். ஏன் நீங்கள் இடை நாட்டின் சுதந்தர நாளைத் தள்ளிக்கொண்டு போகிறீர்கள்? கலியாணம்? முகுந்தன். ஒழுக்கமும் பெருந்தன்மையும் சுயகாரியத்தை விடப் பெரியவை என்கிறான். அரசன் முதலானோரிடம் பிரதானிகள் இதைக் கூற, அரசன் உண்மை யில் இடைநாடு தேச ஒழுக்கத்தில் சிறந்தது என்று கூறிப் போகிறான். பாண்டியன் வேட்டையாடுகையில் புலி அடித்ததால் இறந்தான் என்ற சேதி சோழனுக்குக் கிடைக்கிறது. சோழ நாட்டின்மேல் பாண்டியன் படையெடுப்பு இல்லை என்று தெரிந்துவிட்டது. சோழன் வருகையைத் தேசத் தொண்டர்கட்கு அறிவிக்கப்படுகிறது. இடைநாடு முடியிழந்த மன்னன் மாளிகையில் சோழன் முதலியவர்கட்கு உற்சாகமான வரவேற்பு நடக்கிறது. சோழன், பாண்டியன் இறந்ததைக் கூறி - இடைநாட்டிற்குச் சுதந்திரம் அளிப்பதாகவும் வாக்களிக்கிறான். அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். முகுந்தன் சந்திரிகையைக் கண்டு இந்தச் சந்தோஷச் செய்தியைத் தெரிவிக்க ஓடுகிறான். அவள் அந்தப்புரத்தில் இல்லை. அங்கிருந்தவர்களிடம் அவள் வந்தால் சுதந்தரம் நாளைக்கு என்பதை அவளிடம் கூறச் சொல்லி - அதோடு நில்லாமல் பின்னும் அவளைத் தேடி தேசப் பொதுமன்றில் ஓடி அங்கேயும் காணாமல் உத்யான வனத்தை நோக்கி ஓடுகிறான். பெருமாள்மாடு உடை உடுத்துகிறான். மனைவியிடம் சுதந்தரம் நாளைக்கு - கலியாணம் நாளை மறுநாள் என்று கூறுகிறான். அவள் கண்ணீர் விடுகிறாள். இவன் வெளியில் துணிகளோடு ஓடுகிறான். உப்பரிகையில் சுதந்தரப் பிரகடனம் தயாரித்துக் கொண்டிருந்த அரசர் தற்செயலாக ஜன்னல் வழியாகப் பார்க்கிறார். உத்தியான வனத்தில் சந்திரிகை, இரவற்சேலை, தோழிமார் நீராடியிருந்தார்கள். சோழன் சந்திரிகை யின் அழகில் சிக்கிச் சேனாதிபதியை இவள்தான் சந்திரிகை நீ சொன்ன வனிதையோ? இவளை நான் அடைய மார்க்கம் தேடு என்கிறான். அவள் முகுந்தன் மேல் காதல் கொண்டவள். அவள் மனம் உங்களிடம் திரும்புவது அருமை என்கிறான். நீராடித் துறை ஏறிய சந்திரிகையிடம் ஆவலோடு முகுந்தன் தோன்றி சுதந்தரம் உண்டு என்கிறான். அதே சமயம் சோழன் சேனாதிபதியிடம் சுதந்தரம் இல்லை என்கிறான். சந்திரிகை உப்பரிகை ஜன்னலில் அரசர் பார்ப்பதை இரவற் சேலைக்குக் காட்டுகிறாள். அனைவரும் ஓடி மறைகிறார்கள். முகுந்தனும் உடன் போகிறான். அன்று மாலை சோழன் சந்திரிகை சந்திப்பு. சோழன் எண்ணத்தைச் சந்திரிகை நிராகரித்தல். சோழன் - முகுந்தன் சந்திப்பு. முகுந்தன் தன் காதலிக்குச் சோழனைப் பற்றிச் சிபாரிசு செய்ய மறுத்ததோடு, ஒருவர் கொடுத்து வாங்குவது சுதந்தரமாகாது. அது நிலைக்கவும் நிலைக்காது. தாமே பெறுவதுதான் சுதந்தரம், நிலைப்பது என்று கூறிப் போகிறான். சந்திரிகை தன் அந்தப்புரத்தில் காவற்படுத்தப்படுகிறாள், சோழன் கட்டளைப்படி. முகுந்தன் சிறையில் இடப்படுகிறான், ரகசியமாக. பெருமாள்மாடு தன் தங்கை இரவற்சேலையிடம் சோழன் யாரோ ஒருத்திமேல் ஆசைப்பட்டானாம்அவளைக் கொடுத்தால்தான் சுதந்தரம் கொடுப்பேன் என்று கூறுகிறானாம். இப்படி மாளிகையில் ரகசியமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்கிறான். இரவற் சேலை என்மேல் ஆசைப்பட்டான் அரசன். எனக்கு நல்ல சேலை ஒன்று இரவல் வாங்கிக் கொடுத்தால் நான் அரசனிடம் சென்று கலியாணத்தை முடித்துக் கொள்வேன். அதன் பிறகு சுதந்தரம். அதன் பிறகு உனக்கும் சந்திரிகைக்கும் கலியாணம் என்கிறாள். சாரங்கன் (சந்திரிகை தமயன்) முதலிய தேசத் தொண்டர்கள் கூடி ஆலோசிக்கிறார்கள். அரசன் தன் தங்கையின் அந்தப்புரத்தில் காவல் நியமித்ததன் காரணம் தெரியவில்லை. முகுந்தன் ஏன் சிறைப்படுத்தப்பட்டான். இச்சமயம் பெருமாள்மாடு தோன்றுகிறான். தன் தங்கையாகிய இரவற்சேலை மேல் சோழன் காதல் கொண்டதாயும், அவள் சேலை நல்லதாக இல்லாததால் சோழன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளத் தயக்கப்படுகிறது என்றும் ஒரு சேலை இரவல் வேண்டும் என்றும் கேட்கிறான். அனைவரும் சிரிக்கிறார்கள். சிலர் நம்புகிறார்கள். சந்திரிகை கட்டியிருந்த சேலையைச் சாரங்கன் கொண்டு வந்து கொடுக்கிறான். சுதந்தரந்தான் இரவற் சேலையில் வந்து நிற்கிறதா என்று அனைவரும் நகைக்கிறார்கள். எனினும் இச்சேதி காட்டுத்தீப் போல் பரவுகிறது. இரவற் புடவை யின் அழகைப் பார்க்க ஊர் ஜனங்கள் அவள் வீட்டில் கூடிவிடுகிறார்கள். இரவற்சேலை கலியாணப் பெண் ஜாடையில் காட்சி கொடுக்கிறாள். சாரங்கனும் கண்டு பரிகசித்துப் போகிறான். சோழனும் சாரங்கனும் சந்திக்கிறார்கள். சோழன் அவளை நான் மணந்தால் - மணக்கும்படி - நீங்கள் துணை செய்தால் சுதந்தரம் கிடைக்கும் என்கிறான். சாரங்கன் அவள்தான் சம்மதிக்கிறாளே என்று கூறுகிறான். அரசன் ஆச்சரியப்பட்டு, அப்படியா இதைமெய்ப்பிக்கிறீரா என்கிறான். இதோ என்று திரும்புகிறான் சாரங்கன். இரவற்சேலை திருமணக் கோலத்துடன் பரிஜனங்கள் புடைசூழ வாத்திய சகிதம் சோழனிருந்த இடம் நோக்கி அழைத்துப்போகப்படுகிறாள். இரவற் புடவையில் இருந்து கிடைக்கிறது சுதந்தரம் என்கிறார்கள். அதே நேரத்தில் தனக்கும் சந்திரிகைக்கும் திருமணம் என்றும் - இந்த ராஜ்ஜியத்திற்கு நான்தான் அரசன் என்றும், என் தங்கைதான் சோழ நாட்டின் ராணியென்றும் கூறிக் கம்பீரமாக நடக்கிறான் பெருமாள்மாடு. சோழனும் ராஜதானியும் சேனாதிபதியும் பேசியிருக்கிறார்கள். சோழன் தனக்குச் சந்திரிகை வாழ்க்கைப்படப் போவதை அவர்களிடம் சொல்லிப் பெருமை பேசுகிறான். தன் உடை நன்றாக இருக்கிறதா என்று தன்னைத்தானே பார்த்துக் கொள்கிறான். மற்றவர்களை எல்லாம் போகும்படிக் கேட்டுக்கொள்கிறான். இரவற்சேலை வந்து தலைகுவிந்து ஒருபுறம் அமர்த்தப் படுகிறாள். அனைவரும் வெளியே போகிறார்கள். அரசன் அணுகி - கடைசியில் இரவற் சேலையென்று அறிந்து அளவற்ற கோபமும் நாணமும் அடைகிறான். அவளைப் போம்படி கூறுகிறான். அவள் எழுந்தோடுகிறாள். வாசலில் ஜனங்கள் நிற்கிறார்கள். விஷயந் தெரிந்து நகைக்கிறார்கள். பெருமாள்மாடு என் தங்கை கலியாணம் நிச்சயமாய் விட்டது. இனி என் கலியாணம் தான் பாக்கி என்று கூறுகிறான். அனைவரும் பரிகசிக்கிறார்கள். சோழன் சேனாதிபதிக்கு ஆக்ஞையிடுகிறான், தேசத் தொண்டர் களையும் பிரதான குடிகளையும் சிறைப்படுத்தி துன்பம் இழைக்கும்படி. அவ்வாறே நடைபெறுகிறது. நாடு துன்பத்தை அடைகிறது. ஜனங்கள் அலறுகிறார்கள். நகர வீதியில் ஒன்று தீக்கிரை ஆக்கப்படுகிறது. சந்திரிகை உள்ளத்தைத் தன்பக்கம் திருப்பச் சொல்லி அவளிடம் அனுப்புகிறான். ஜனங்கள் சந்திரிகையை அணுகி அவளைச் சபிக்கிறார்கள். அவள் துன்பம் அடைகிறாள். காதல்? தேசம்? ஒருவன் மேல் சென்ற உள்ளம் பிறரை நினைப்பதும் கற்புத்தவறு என்று கூறுகிறாள். கற்பா? தேசமா? எது பிரதானம்? மீண்டும் ஜனங்கள் முகுந்தனிடம் வந்து அவனை நிந்திக்கிறார்கள். முகுந்தன் அவள் பிறரை மணப்பதில் எனக்குத் தடையில்லை. தேசத்தின் பொருட்டு. எனினும் அவள் கற்புடையவள்; உண்மைக் காதலுள்ள அவள் அப்படிச் செய்யாள் என்று கூறித் துடிக்கிறன். ஊரின் மக்கள் ஐயோ என்று கூக்குரலிடுவது சந்திரிகை காதில் நாராசமாகிறது. அவ்வாறே முகுந்தன் காதில் வீழ்வதால் அவன் நடுக்கம் அடைகிறான். இரக்கத்தால் சோர்ந்து விழுகிறான். முகுந்தன் அன்றிரவு தூக்கமில்லாமல் சிறையில் உலாவுகிறான். ராஜதானி அங்கு வருகிறான். ராஜதானி, தனக்கு இடைநாட்டின் நன்மையில் அக்கறை உண்டு என்பதை ஞாபகப்படுத்துகிறான். முகுந்தா இந்தத் தர்மசங்கடத்தை நீ எவ்வாறு தாங்குவாய் என்கின்றான். கடைசியாக, நீயே உன்கையால் உன் உயிர்போன்ற காதலியைக் கொன்றுவிடு. அதனால் அவள் கற்புக்கும் காதலுக்கும் பழுது ஏற்படாத தோடு நாடும் சுதந்தரமடையும். மக்கள்படும் தொல்லை தீரும் என்கிறான். முகுந்தன் சரி என்ற முடிவுக்கு வருகிறான் சிரமசாத்யமாக. முகுந்தன் சந்திரிகையை நோக்கிப் போகிறான். ராஜதானி சந்திரிகை யின் காவற்காரரையெல்லாம் அப்புறப்படுத்துகிறான். பெருமாள்மாடும், இரவற்சேலையும் பேசிக்கொண்டு தெருவில் நடக்கிறார்கள். அதே இரவில், சேனாதிபதி அடுத்த தெருவைத் தீக்கிரையாக்க ஆட்களோடு நிற்கிறான். பெருமாள்மாடு இரவற்சேலை இருவரோடு சேனாதிபதி சம்பாஷிக்கிறார். கேலியாகவும் தான் நிற்பதன் நோக்கத்தை அவர்கள் அறியாமல் இருக்கவும் பெருமாள்மாடு இரவற்சேலை இருவர்க்கும் தெரிந்துவிடுகிறது மக்களோடு தெருவைக் கொளுத்தப் போவது! அவ் விருவரும் பதுங்கியிருந்து பார்க்கிறார்கள். கொளுத்தப்போவது உண்மை என்று தெரிந்தால் இரவற்சேலையும், பெருமாள் மாடும் கூச்சலிட்டு தெரு வீடுகளில் உறங்கும் மக்களை எழுப்பி விடலாம் என்ற நோக்கத்தோடு பதுங்கியிருக்கிறார்கள். முகுந்தன் சந்திரிகையை அடைகிறான். அவள் நித்திரை செய்கிறாள். அவளைக் குத்திக் கொல்ல முயலுகிறான் அவன். கை துணியவில்லை, துடிக்கிறான், தேசத்தை நினைக்கிறான், பின்னும் முயற்சி... அவள் நாதா! என்று வாய் பிதற்றிப் புரண்டு படுக்கிறாள். முகுந்தன் பதைத்துக் கத்தியை விட்டெறிகிறான். அவள் விழிக்கிறாள். அவனைத் தழுவிக் கொள்கிறாள் ஆவலாக. அவன் முகத்தில் ஒளியில்லை. கண்ணில் காதல் இல்லை. காரணம் கேட்கிறாள். அவன் மறைத்துக் கூறுகிறான். அவள் தழுவிய கைகளை விலக்கிச் சிறிது வெளிப்புறம் வந்து உலாவுகிறான். அதற்குள் கூச்சல், ஐயோ தெருவோரே எழுந்தோடுங்கள். தெருவைக் கொளுத்துகிறார்கள். ஐயோ பற்றி எரிகிறது நாடு. அந்த முகுந்தனாலும் சந்திரிகை யாலும்... ஐயோ...! ஐயோ...! என்ற மக்கள் கூச்சல்... அலறல்! இதை முகுந்தன் கேட்கிறான். பதைத்து உள்ளே போகிறான், கீழே விழுந்த கத்தியை எடுக்கிறான். அவள் அவனைத் தழுவிக்கொள்கிறாள் காதலால். தன்மேல் படர்ந்த வஞ்சிக் கொடியை அந்த முகுந்த விருக்ஷத்தின் விளக்கை - குத்திக் கீழேபோட்டது நாட்டுக்காக? உடனே முகுந்தன் அதே வாளால் தன்னைத் தன் காதலியுடன் சேர்த்தான். மரணபூமியில் இருவரும் ஒன்றுபட்டார்கள். நாட்டுமக்கள் தலைவர்கள் எதிரில்; சோழன் முகுந்தனின் கிழத்தாய் தந்தையிடம், பெரியோரே உம் உயிர் போன்ற மகனை இழந்தீர். இந்தாரும் சுதந்தரப் பிரகடனம்! கிழத் தந்தை, சுதந்திரம் கிடைத்தது! நான் என் பிள்ளையை மீண்டும் பெற்றேன். நலம்! - பாரதிதாசன் புதினங்கள், 1994  44. அனைவரும் உறவினர் 1 சின்னாற்றூர், சேரநாட்டிலுள்ள ஒரு சிற்றூர். அதில் நூறு வீடுகள் உண்டு. ஊரைச் சுற்றி நன்செய் புன்செய் பரந்து கிடக்கும். அங்கங்கே மலர் வனங்களும், தோப்புக்களும் நிழல் தரும். சிற்றாறு ஒன்று, மடுக்கள் பல. அவை வற்றாப் புனல் வழங்குவன. சேரமன்னன் ஆணைபெற்றுப் புலம்பெற்றியார் நாட்டாண்மை நடத்தி வருகின்றார். அவர், ஊரில் ஏற்படும் எவ்வகை வழக்குகளை யும் ஆய்ந்து தீர்ப்புக் கூறும் அதிகாரம் உடையவர். பெருவேலன் என்பவர் அவ்வூரின் பெருநிலக் கிழவர் மற்றும் நாலைந்து பேர் அவருக்கு வலக்கை இடக்கை போன்ற செல்வம் படைத்தவர்கள். ஏனையோர் அவர்களிடம் வேலை பார்ப்பவரும், உழுபவரும் ஆவார். சிற்சில நாட்களின் முன் இரண்டு திருமணம் ஊரில் நடந்தன. அஞ்சி என்னும் இளைஞன் பெருவேலனிடம் வேலை பார்ப்பவன். அவனுக்கும் வரிசிலை என்னும் நிலக் கிழவனிடம் வேலை பார்க்கும் மாறனின் தங்கை அழகம்மாவுக்கும் நடந்த திருமணம் ஒன்று. மற்றொன்று, அஞ்சியின் தங்கை மருதிக்கும் அழகம்மா அண்ணன் மாறனுக்கும் நடந்த திருமணம். அஞ்சியின் வீடு அரசமரத்துத் தெருவில் அமைந்தது, மாறன் வீடு மருதமரத்துத் தெருவில் வாய்ந்தது. ஒருநாள் காலை அஞ்சியிடம் மாறன் வந்தான். மாறன்: அத்தான்! உன் தங்கை ஆற்றங்கரைப் பூங்காவிற்கு அழைத்தாள் என்னை, நீயும் என் தங்கையைக் கூட்டிக்கொண்டு சும்மா... அப்படி? அஞ்சி: என்ன அத்தான் இது. உன் தங்கையும் என் தங்கையும் ஒத்துப் பேசிக்கொண்டார்கள்போல் இருக்கிறது. என்னை உன் தங்கை அழைத்தாள் ஆற்றங்கரைப் பூங்காவிற்கு இப்போது... மாறன்: கிளம்பலாமா? எங்கே என் தங்கை? உடுத்திக்கொள்ளச் சொல். அழகம்மா: (மாற்றி உடுத்த உடையுடன் வந்து) போகலாமா? அஞ்சி: அடி சக்கே. முன்னேற்பாடாகவே இருக்கிறாய். போகையில் மருதியையும் அழைத்துப் போகலாம். (போகிறார்கள்) 2 அஞ்சி, அழகம்மா இணைந்து நடக்க, மாறன் மருதியுடன் நடந்து செல்லுகிறான். அஞ்சி : தழையடர்ந்த பெருமரங்கள், வானத்தின் கீழ் ஒரு பச்சை வானம், சிறிதும் வெய்யில் தெரியவில்லை. அழகம்மா : கம்பளிப் போர்வை வேண்டும் போலிருக்கிறது. அத்தனை குளிர்ச்சி அத்தான். அஞ்சி : நாம் ஒருவரை ஒருவர் இழுத்துப் போர்த்துக்கொண்டால் போகிறது. அழகம்மா : (முகம் சுளித்து) அண்ணன் வருகிறார்? என்ன பேச்சு? (சிறிது தொலைவில்) மாறன் : என்ன மருதி! கட்டுப்கோப்பான இடமா இது? தனியறை என்ற எண்ணமா இந்தச் சிட்டுக்களுக்கு? காதல் விளையாட்டைப் பார். அவைகளுக்கு வெட்கமில்லை. மருதி : அலரி இல்லையா அத்தான்? மல்லிகையைப் பாருங்கள் முத்து முத்தாய். இவைகள் உங்கள் கண்ணைக் கவரவில்லையா? வேண்டாத மதிப்புரை எதற்கத்தான். மற்றும் பூங்காவின் புதுமை கண்ட வண்ணம் உலாவுகிறார்கள் வெய்யில் மறைகிறது. அஞ்சியின் மடியில் அழகம்மா தலைவைத்துப் படுத்தபடி ஆற்றங்கரையில் வரிசையாய் நிற்கும் மலர்க் கிளைகளின் அழகை நுகர்கிறாள். (அதே நேரத்தில் மற்றொரு புறம் மாறனும் மருதியும்) மருதி: என்ன குளிர்! என் தோளின் மேல் கையைப் போட்டுக் கொள்ளுங்கள். மாறன்: (அதைக் காதில் வாங்கவில்லை) அத்தான் எங்கே இருக்கிறாய்? அஞ்சி: (அங்கிருந்தபடியே) இங்குத் தான் இருக்கிறேன். மாறன்: நேரமாகவில்லை? அஞ்சி: உன் தங்கை என் மடியில் படுத்துக்கொண்டு எழுந்திருக்க மாட்டேன் என்கிறாள். மாறன்: நான் போகவேண்டும் அறுத்த அரிக்கட்டுக்களுக்கு இன்று இரவு காவல் இருக்கவேண்டியது என்முறை. அஞ்சி: அப்படியானால் நீ போகலாம். மாறன்: மருதி! விரைவில் வீடுபோய்ச் சாப்பிட்டுவிட்டு வயலுக்குப் போகவேண்டும். இன்றிரவு காவல் என்முறை. மருதி: என் அண்ணன் உங்கள் தங்கைமேல் வைத்திருக்கும் அன்பைப் பாருங்கள். நீங்கள் என்மீது காட்டும் அன்பைப் பாருங்கள். மாறன்: மருதி! கடமை! கடமை! மற்றவை அதன் பிறகு. அவன் போகிறான். (அவள் போகிறாள்) மறுபுறம் அஞ்சி: அழகம்மா! நானுந்தான் காவலுக்குப் போகவேண்டும். அழகம்மா: கடமையைச் செய்யாமல்? எழுந்திருங்கள். அஞ்சி: உன்னைப் பிரிந்தா? மனம்வருகிறதா? அழகம்மா: இன்னும் சிறிது நேரத்திற்குப் பின் போகலாமா அத்தான்? அஞ்சி: வீட்டுக்குத்தானே? பார்ப்போம். 3 அஞ்சியும் அழகம்மாவும் இரவு ஏழு மணிக்கு அரசமரத்துத் தெரு வில் தம் வீடு வந்தார்கள். உணவருந்தினார்கள், எட்டு மணியாய்விட்டது. அழகம்மா: நீங்கள் கொல்லைக் காவலுக்குப் போக வேண்டுமே அஞ்சி: ஆமாம் இன்னும் சிறிது நேரம் பொறுத்துப் போனால் என்ன முழுகிவிடப் போகிறது? வெற்றிலை கொண்டு வா. நடுவீட்டு முற்றத்தில் தடுக்கைப் போடு. அழகம்மா நிலவைப் பார்த்தாயா? அழகம்மா: நிலவின் ஒளியில், உங்கள் முகந்தான் அத்தான் என் நெஞ்சை அள்ளுகிறது. நான் மடித்து கொடுக்கிறேன் வெற்றிலை இதோ... என்ன அத்தான் கையால் வாங்குகிறீர்கள். வாயில் வெற்றிலை சுருள் கொடுத்து மகிழ்கிறாள். அஞ்சி: இதென்ன அழகம்மா. எப்போது பார்த்தாலும் தொல்லை. லொக்கு லொக்கு என்று இந்த அண்டை வீட்டுக்கார ஆனையப்பன் இருமிக் கொண்டேயிருக்கிறான். அழகம்மா: என்ன செய்வான் இரங்கத் தக்கநிலை! தொலையாப் பிணி அது கிடக்கட்டும் அத்தான். ஒரு பாட்டு நிலாப்பாட்டு. அஞ்சி: பாட்டு ஒளியோடு குளிரோடு புறப்பட்ட நிலவே - என் உணர்வோடு காதலைச் சேர்த்தாய் நல் - ஒளி களியோடு நின்மேனி தழுவிற்று வானம் காதல் நெருப்பைத் தழுவினேன் நானும் - ஒளி உளத்தை நீ படுத்தும் பாடு - நான் உலகையே மறப்பேன் இன்றோடு - ஒளி துளிபோதும் நான் விரும்பும் அவளிடம் ஓடு தொல்லைசெய். என் துணை நாடுவாள் பிற்பாடு - ஒளி அழகம்மா: அத்தான் நாழிகையாகிறதே. நீங்கள் போகவேண்டாம்? அஞ்சி: போகவேண்டும். இது ஒரு தொல்லை. (போய்விடுகிறான்.) 4 வேம்பு என்பவன் களத்தில் காவல் காத்திருக்கிறான். பகல் முழுதும் காக்கவேண்டியது அவன் பொறுப்பு. இரவில் அஞ்சி காவல் ஒப்புக்கொள்ள வருவான் என்று வேம்பு எதிர்பார்க்கிறான். காலம் தாழ்த்து அஞ்சி வருகிறான். வேம்பு: இத்தனை நேரம் என்ன அஞ்சி? அஞ்சி: என் மனைவிக்குத் தலைவலி. மருத்துவரை அழைக்கப் போனேன்; வந்தேன். என் மனைவியின் கையைப் பார்க்கச் சொன்னேன். மருந்து கொடுத்தார் மருத்துவர். அதை உண்ணும் படி மனைவியை வற்புறுத்தினேன். சாப்பிட்டேன். அவளைச் சாப்பிடச் சொன்னேன், சோற்றை. கை கழுவினேன். வெற்றிலை போட்டுக் கொள்ளவும் இல்லை. நீ காத்திருப்பாய் என்று ஓடிவருகிறேன் இரைக்க இரைக்க! சரி விரைவில் நீ போ. வேம்பு போய்விடுகிறான். அவன் தொலைவில் போனவுடன் அஞ்சி அங்குப் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில்தான் படுத்திருப்பதுபோல் தோன்றுபடி வைக்கோலைக் குமித்து, அதன்மேல் தான் போர்த்திருந்த வெள்ளைத் துப்பட்டியால் மூடிவிட்டுப் போய்விடுகிறான் தன் வீட்டுக்கு. சிறிது நேரம் செல்லக்களத்தில் குவித்திருக்கும் நெல்லைத் திருடும் நோக்கத்தோடு இருவர் வருகிறார்கள். திருடன் 1: (அஞ்சி படுத்திருப்பதாக எண்ணி) அண்ணே கொஞ்சம் பாக்கு இருந்தா கொடுக்கிறீர்களா? அண்ணே! அண்ணே! திருடன் 2: தூங்குவதுபோல் இருப்பாரடா அவர், அன்னேன். துப்பட்டியைத் திறக்க வைக்கோல்தான் இருக்கிறது. கோணிப் பை இரண்டு நிறைய நெல் நிறைக்கப்படுகிறது. எடுத்துப் போய் விடுகிறார்கள். மீண்டும் வருகிறார்கள். மற்றும் இரண்டு கோணிப்பை நெல்லைக் கொண்டு போகிறார்கள். மீண்டும் மீண்டும். சிறிது நேரத்தில் நிலத்திற்கு உடையவனான பெருவேலன் மேற்பார்வைக்கு வருகிறான். பெருவேலன்: யார் காவல்? வேம்பு! அஞ்சி! ஒருவருமில்லை. நெல்லின் நிலையைப் பார்க்கிறான். களவு போனது தெரிகிறது. அடுத்த களத்திலிருந்த கூனனைக் கூப்பிட்டுவந்து விட்டு விட்டுப் போய்விடுகிறான். 5 அஞ்சியும் அழகம்மாவும் காதலால் விழுங்கப்பட்டவர்களாய் ஆடியும் ஓடியும் பாடியும் பற்றியும் இருக்கிறார்கள். அஞ்சி: கூட்டில் விடுபட்ட பச்சைக் கிளிபோல் என்கைக்குத் தப்பி எங்கே ஓடுகிறாய்? அவள் ஓட இவன் துரத்திப் பிடிக்க முயலுகிறான். அவள் அகப் பட்டுக் கொள்கிறாள். அஞ்சி அவளைத் தூக்கிக் கொள்கிறான். அங்கிருந்த ஒரு மரப்பெட்டி தடுக்கிவிட இருவரும் விழுகிறார்கள். அதன்பின் செம்புகள் இவர்களின் கால்படக் கலகலவென்று ஓசையிட்டு உருளுகின்றன. அடுத்த வீட்டில்... ஆனையப்பன்: தூக்கம் வரவில்லை இவர்கள் அடிக்கும் கூத்தால், நாடோறும் இப்படி, நாளைக்கு ஆகட்டும் வழக்கிட்டுத்தான் தீர்க்க வேண்டும். (இருமுகிறான்) அழகம்மா: என்னை விட்டு விடுங்கள். நீங்கள் விரும்பியபடி நடக்கிறேன். ஆமாம் அத்தான் இதோ விடியப் போகிறது. களத்துக்கு யாரை விட்டு வந்தீர்கள். நெல் களவு போய்விட்டால்? அஞ்சி: களத்தில் என்போல் வைக்கோல் குமித்துத் துப்பட்டி போர்த்தி மூடிவிட்டு வந்தேன். அஞ்சியும் அழகம்மாவும் அறையில் நுழைகிறார்கள். அடுத்த வீட்டில் ஆனையப்பன்: ஆ! விடியப்போகிறது. ஓய்ந்தது இவர்கள் கூத்து. 6 சின்னாற்றூரின் மேற்புறத்தில் உள்ள பெரியதோர் ஆலமரத்தின் அடியில் கண்ணகியின் உருவச்சிலை காணப்படுகிறது. அதை யடுத்துப் புலம்பெற்றியார் வீற்றிருக்கிறார். அண்டையில் கணக்கன் பொன்னன் எழுத்தாணி ஓலைக்கட்டுடன் உட்கார்ந்திருக்கிறான். எதிரில் பொது மக்கள் பலர் அடக்கமாக அமர்ந்திருக்கிறார்கள். புலம்பெற்றியார்: கண்ணகி தனது சிலம்பென்று பாண்டியன்பால் எண்பித்தவுடன் மனது கலங்கி மண்ணிற் சாய்ந்திறந்தான் அன்றோ? அவ்வாறு சேர நாட்டு மக்கள் தாம் செய்த குற்றத்திற்கு வருந்துவாராக. அன்றியும் தம் பொருளை இழந்தார் எவரும் நம்பால் வழக்கிடுவாராக! சேரன் ஆணைப்படி இன்று மன்று தொடங்கப்படுகிறது. ஒருவன் தன் வழக்கைக் சொல்லுகிறான். ஐயா, என் பெயர் மண்ணப்பன்; வஞ்சி வீதியில் இருப்பவன்; என் தந்தை பெயர் பொன்னையன். கணக்கன் எழுதுகிறான். ஏணித் தெரு வீறு, என் எருமையை ஓட்டிக்கொண்டு போய்த் தன் கொட்டகையில் கட்டிக்கொண்டு கொடேன் என்கிறான். என் சொத்தை வாங்கிக் கொடுக்க வேண்டுகிறேன். சான்றினர்: முள்ளித் தெரு முத்து, சாரம் சப்பாணி. புலம்பெற்றியார்: நாளை அவரை அழைக்கிறோம். நீரும் வருக. ஊர்க்காவலர் அஞ்சியை அழைத்தார்களோ? கணக்கர்: அழைக்கச் சென்றுள்ளார்கள். வழக்கிட்ட பெருவேலனாரும் ஆனையப்பரும் வந்திருக்கின்றாரோ? பெருவேலன்: ஆம் ஐயா. ஆனை: ஆம் ஐயா. ஊர்காவலர் அஞ்சியைக் கொண்டுவந்து மன்றின் எதிர் நிறுத்துகிறார்கள். புலம்பெற்றியார்: உம் பெயர் அஞ்சியோ? அரச மரத்துத் தெருவோ? அஞ்சி: ஆம் ஐயா, புலம்பெற்றியார்: என்ன பணி செய்வீர்! அஞ்சி: பெருவேலனார் நிலக்காவற் பணி. புலம்பெற்றியார்: பெருவேலனார் பேசுக. பெருவேலன்: இவர் இன்றிரவு நிலக்காவற்பணி நிகழ்த்தவில்லை. அதனால் ஐம்பது கலநெல் கள்ளரால் அழிந்தது. அஞ்சி: நான் காவலிருந்தேன். புலம்பெற்றியார்: சேரமன்னர் ஆணையாக! அஞ்சி: சேரனார் ஆணையாக. பெருவேலன்: இன்றிரவு நானே நேரிற் சென்றேன். இவர் இல்லை. அண்டைக் களத்திலிருந்த கூனரை அழைத்து விட்டுவிட்டு வீடு திரும்பினேன். அஞ்சி: வேம்பு காவல் காத்திருந்தான். அவனை வீடு போக்கி நான் காவல் தொடங்கினேன். புலம்பெற்றியார்: வேம்பு ஒப்புகிறாரா? வேம்பு: ஆம் ஐயா! பெருவேலன்: களத்தில் அஞ்சி இல்லாமைக்கு நான் விடும் சான்றினர் கூனர். அவரைக் கேட்க வேண்டுகிறேன். புலம்பெற்றியார்: கூனர் உம் ஆள் அல்லரோ? பெருவேலன்: ஆம் ஐயா புலம்பெற்றியார்: கொள்ளோம்! ஆனையப்பன்: இந்த அஞ்சியார் மேலேயே நான் இடும் வழக்கை ஆய்தல் வேண்டும். புலம்பெற்றியார்: உரைக்க. ஆனையப்பன்: இன்றிரவெல்லாம் அஞ்சி தம் புது மனைவியுடன் ஆடிப்பாடிக் கிடந்தார். அதனால் எனக்குத் தூக்கம் கெட்டது. நாடோறும் இப்படி. புலம்பெற்றியார்: அஞ்சியாரே. என்ன இயம்புவீர். நீர் நும் வீட்டில் இரவெல்லாம் இருந்ததாக ஏற்படுகின்றதே? அஞ்சி: நான் வீட்டுக்கு வரவேயில்லை. ஆனையப்பன்: அஞ்சியார் வீட்டில் இன்றிரவு விடியுமட்டும் நடந்த காதல் பேச்சும், காதல் ஆட்டமும், கூச்சலும் குளறுபடியும் நான் மட்டுமல்ல, இதோ இவர்களும் கேட்டிருந்தார்கள். புலம்பெற்றியார்: என்ன? ஆரல்: ஆம் ஐயா! வெள்ளி: ஆம் ஐயா! காடு: ஆம் ஐயா! புலம்பெற்றியார்: இன்னின்னார் என்று விளக்குங்கள். ஆரல்: அஞ்சியார் வீட்டில் அழகம்மாவும் மற்றோர் ஆடவரும் - ஆடவர் இன்னாரென்று சொல்ல இயலவில்லை. விளையாடி யிருந்தார்கள். மற்றவர்கள்: ஆம் ஐயா! புலம்பெற்றியார்: சேரமன்னர் ஆணையால் நான் சொல்லுந் தீர்ப்பு இதுவாகும்: அஞ்சியார் இன்றிரவு களத்தில் தங்கினார் என்று ஏற்படுகிறது. அவர் களத்தில் இல்லையென்று பெருவேலர் சொல்லுவது நம்பத்தக்க தன்று. 7 அஞ்சியார் களத்தில் இருக்கவும், ஐம்பதின் கலநெல் களவு போனது கொண்டு களத்தில் அஞ்சியார் தூங்கியிருக்கலாம் என்றோ, சிறிது நேரம் அவ்விடத்தை விட்டு நீங்கியிருக்கலாம் என்றோ தோன்றுகிறது. ஆயினும் ஐம்பது கல நெல்லை இழந்தவர்க்கு அதன் விலையாகிய ஐந்நூறு பணத்தை அஞ்சியார் தரவேண்டும் என்பது என் முதல் தீர்ப்பு. இரண்டாவது தீர்மானம் என்னவெனில் - இவ்வழக்கில் இடை நிகழ்ச்சியாக ஒரு செய்தி கிடைக்கிறது. அஞ்சியார் களத்திலிருந்தார். அந்த இரவில் அஞ்சியார் மனைவி அழகம்மா வேறொருவருடன் காதல் விளையாட்டு நடத்தியிருக்கிறார் விடியுமட்டும். அழகம்மா கற்பு ஐயப்படத் தக்கதாயிருப்பதால், அழகம்மா மக்கள் இருப்பில்லாத இடத்தில் தனிவாழ்வு நடத்தவேண்டும். இதனை அவர் கணவர் ஒத்துக் கொள்வாராயின் அவரும் அந்த அழகம்மாவுடன் செல்லலாம். இன்றிலிருந்தே இத் தீர்ப்புகள் செயற்படுத்தப்படும். (அஞ்சியின் தலை குனிகிறது. அவன் கண்களில் நீர் ததும்புகிறது.) கணக்கர்: அஞ்சி தரவேண்டிய ஐந்நூறு பணத்திற்காக அவரின் அசையும் பொருள் அசையாப் பொருள் பறிக்கப்படும். ஏலத்தால் விற்கப்படும்; பெருவேலனார்க்கு அளிக்கப்படும். அஞ்சியாரே! நீரும் உமது மனைவியாருடன் போக எண்ணமா? அஞ்சி: ஆம் ஐயா! கணக்கர்: தீர்ப்புக்களைச் செயற்படுத்தும் வரைக்கும் நீவீர் காவலில் இருக்க! தீர்ப்பு உம் மனைவியார்க்கு அறிவிக்கப்படும். (அஞ்சியைக் காவலன் அழைத்துச் செல்லுகிறான்.) 8 (அழகம்மாவும் மருதியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அழகம்மாவின் வீட்டில்) அழகம்மா: உங்கள் அண்ணனார் இரவு களத்திற்குப் போகவில்லை. அதன்பொருட்டுப் பெருவேலனார் வழக்கிட்டாரோ என்னவோ தெரியவில்லை. நாட்டாண்மைக்கரர் அழைத்தார். இவர் சென்றார். (இதற்குள் காவலன் ஒருவன் அழகம்மாவிடம் வந்து நிற்கிறான்.) காவலன்: நீரோ அழகம்மா என்பவர். அழகம்மா: ஆம்! காவலன்: சேரமன்னர் பேரால் புலம்பெற்றியார் தீர்ப்பு. உமது கற்பு ஐயப்படத் தக்கது. ஆதலின் நீவிர் தனிமையாகவோ கணவருடனோ மக்கள் இருப்பற்ற இடத்திற்குப் போக வேண்டும். உம் வீடு முதலிய அசையாப் பொருள்களும், பேழை முதலிய அசைப் பொருள்களும் அரசினர் கையில் வைக்கப்படும். அழகம்மா: என் கற்பு ஐயப்படத்தக்கது! எவன் செய்த தீர்ப்பு? என் கணவர் முன் செய்யப்பட்டதா இத்தீர்ப்பு? காவலன்: சினம் தீயது அம்மா! தீர்ப்பை மறுத்து வழக்காட எண்ணினால் சொல்லுங்கள். நான் போய் நாட்டாண்மைக்காரரிடம் கூறுகிறேன். உம் கணவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அழகம்மா: ஆம், போய்ச்சொல். (காவலன் போகிறான்.) அழகம்மா: அண்ணியாரே, என் கற்பு ஐயப்படத்தக்கதாம். நான் மக்களற்ற இடம் சென்று நாள் கழிக்க வேண்டுமாம். சொத்தெல்லாம் அரசினர் கையில் இருக்குமாம். இடிவீழ்ந்தது திடீரென்று என் வாழ்வில், கணவர் காவலில் வைக்கப்பட்டிருக் கிறாராம். என் கற்பில் ஐயம்! எனக்கொரு வாள் தேவை! என் உயிர் அல்லது நாட்டாண்மைக்காரன் உயிர் போகவேண்டும். ஆயுதச்சாலை! ஆயுதச்சாலை! (ஓடுகிறாள்.) (மருதி நடுக்கத்துடன் நிற்கிறாள்.) பூட்டப்பட்டிருக்கும் ஆயுதச்சாலையின் கதவை உடைக்கிறாள் அழகம்மா. மக்கள் கூடிவிடுகிறார்கள். அழகம்மா: எனக்கு வாள் ஒன்று தேவை. (கதவை உடைக்கிறாள்.) பொது மக்களில் ஒருவன்: அம்மா சினம் தீது. அமைதி படுங்கள். அழகம்மா: என் கற்பில் ஐயப்படுகிறான் நாட்டாண்மைக்காரன். (கதவை உடைக்கிறாள். உடைபட்டு விடுகிறது. வாள் ஒன்றைத் தூக்கிக் கொள்ளுகிறாள். தன் கணவன் காவற்படுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள்.) 9 (சிறைச் சாலையில் அடைக்கப்பட்ட அஞ்சி, அங்கு உலவு கிறான். கம்பிக் கதவின் இடுக்கில் அவன் உலவுவது தெரிகிறது. அழகம்மா சினத்தோடும் வியப்போடும் பார்க்கிறாள்.) அழகம்மா: அத்தான் ஏன் இந்த நிலை? என் கற்பில் ஐயமா? ஏன் சொன்னான்? அஞ்சி: என் கண்ணே! வாளைக் கீழே போடு. அழகம்மா: என் கற்பை ஏன் குறை கூறினான்? அஞ்சி: நான் காரணமாயிருந்தேன். இரவு காவலில் இருந்தாயா என்றான் நாட்டாண்மைக்காரன். இருந்தேன் என்று கூறினேன். அதே நேரத்தில், அண்டைவீட்டுப் பிணியாளன் என்மேல் ஒரு வழக்கிட்டான். அவன் கூறினான்; அழகம்மா வீட்டில் அழகம்மாவும் மற்றொருவனும் இரவெல்லாம் கூத்தடித்ததால் தூக்கம் கெட்டது என்றான். அதைக் கொண்டு நாட்டாண்மைக் காரன் உன் கற்பில் ஐயங்கொண்டு இவ்வாறு தீர்ப்புக் கூறினான். அழகம்மா: ஐயோ! என்மேல் வீழ்ந்தபழிக்கு உங்கள் ஒரு பொய் காரணமாயிற்று. எதிர்வழக்காட நினைத்தேனே! அத்தான்! அவனிடம், நான் என் கணவருடன் தான் இரவில் மகிழ்ந்தேன் என்றால், காவல் காத்திருந்தேன் என்று நீங்கள் சொன்னது பொய்யாகிறதே. என்ன செய்வேன்! (வாளைக் கீழே எறிகிறாள்.) காவலன்: (அதே நேரம் அங்குவந்து) அஞ்சியாரே, ஐந்நூறு பணத்திற்கு உம் வீடு ஏலம் போடப் பட்டது. அந்தத் தொகை பெருவேலனாரிடம் கொடுக்கப்பட்டது. இனி நீர் விடுதலை பெறுவீர். உம் மனைவியார் மக்களில்லாத இடம் நோக்கிச் சென்றுவிட வேண்டும். (அஞ்சியைத் திறந்துவிடுகிறான். அஞ்சியும் அழகம்மாவும் வருத்தத்துடன் வெளிச் செல்லுகிறார்கள்.) 10 (அழகம்மாவும் அஞ்சியும் ஆறாத்துயரோடு அரசமரத்துத் தெரு நோக்கிச் சென்றார்கள். தெருவின் பொதுமக்கள் அனைவர்க்கும் நடந்த செய்தி எட்டுவதாயிற்று. அழகம்மாவின் நிலைக்கு வருந்தினர் சிலர். அவளைத் தொடர்ந்தனர் சிலர். சாத்தனுக்குத் தம் அரைக்காணி நன்செய்யை நூறு பணத்திற்கும், கைக்கு வேண்டிய சில தட்டுமுட்டுக்கள் தவிர பிற அசை பொருட்களை ஆணியப்பனுக்கு இருபத்தைந்து பணத்திற்கும் விற்றுவிட்டு வெளிச்செல்லத் தொடங்கினார்கள். பார்த்திருந்த ஊரார் பதைத்தார்கள். மாறன் மனைவியும் அஞ்சியின் தங்கையுமான மருதி மண்ணிற் புரண்டழுதாள்.) அஞ்சி: மருதி! அழுவதால் பயன் என்ன? உன் அண்ணியும் பல நாட்களாகச் சொல்லி வந்தாள் சோழநாடு பார்க்க வேண்டும் என்று. சோழநாடு மட்டுமன்றி எல்லா நாடுகளையும் பார்த்து இன்புற எங்கட்கு இப்போது வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகிழ வேண்டியது தான். என் மனைவியின் கற்பில் எள்ளளவும் குறை சொல்ல முடியாது என்பது எனக்குத் தெரியும். இஃது அவளுக்கு தெரியும். போம்போது என் மைத்துனர் மாறனைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான் என் மனக்குறை. மருதி: அண்ணா! ஆள் மேல் ஆள் அனுப்பினேன். வந்துவிடுவார். அவருக்கு நடந்தவைகளில் ஒன்றும் தெரியாது. மேலும் அவர் வந்தால், அவரை அழைத்துக் கொண்டு நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் அண்ணா, நீங்கள் இல்லாத இவ்வூரில் எங்களுக்குத் தான் என்ன கிடக்கிறது. அறம் இறந்த ஊரில் ஆர்தாம் குடி யிருக்க இசைவார்? உங்கள் மைத்துனர் தம் தலைவர் கட்டளைப் படி அயலூர் சென்றாரோ என்னவோ தெரியவில்லையே. அஞ்சி: தங்கையே, எதற்கும் நீயே ஒருமுறை சென்று உன் மணாளர் வந்துவிட்டாரா பார்த்து வா. அனுப்பிய ஆட்கள் என்ன சேதி கொண்டு வந்தார்கள் அதையும் தெரிந்து கொள்ளலாம் அல்லவா. விரைவில் போ அம்மா, எழுந்திரு. மருதி: இதோ வந்துவிடுகிறேன் அண்ணா. (போகிறாள்.) அஞ்சி: அழகம்மா உன் அண்ணி வருவதற்குள் நாம் போய்விடலாம். இல்லாவிடில் அவர்கள் நம்மைப் போக விடமாட்டார்கள். அங்குச் சூழ்ந்துள்ள மக்களில் ஒருவன் - ஐயா, மாறனார் வந்து விடுவாரே! 2: சிறிது நேரம் இருந்து போகலாம் ஐயா! 3: அம்மா சிறிது நேரம் காத்திருங்கள். அழகம்மா: பயனில்லை ஐயா. (அழகம்மா - அஞ்சி போகிறார்கள். ஊர் மக்களும் தொடர்கிறார்கள்.) 11 (அழகம்மா இடுப்பில் ஒரு மூட்டையையும் வலக்கையில் ஒரு செம்பையும் எடுத்துச் செல்ல, அஞ்சி இடது தோளில் ஒரு மூட்டையும் வலக்கையில் ஒரு தடியும் ஆக உடன் செல்லுகிறான்.) நீர் ததும்பும் நான்கு விழிகள்; கலக்கமடைந்த இரண்டு முகங்கள்; இவைகளை இரக்கத்தோடு பார்த்தபடி, பலர் உடன் செல்லுகிறார்கள். (அரசமரத்தடியில் பலருக்கு இடையில் புலம் பெற்றியார் வழக்கு ஆராய்கிறார். இரண்டு கள்வரின் கைகளை ஒன்றாகக் கட்டிப்பிடித்து இழுத்து வருகிறான் மாறன்) மாறன்: நாட்டாண்மைக்காரரே, என் மைத்துனர் காவல் காத்திருந்த களத்து நெல்லை-ஐம்பது கலங்களை - இவர்கள் திருடினார்கள். உளவு, தானே என்னிடம் வந்தது. இவர்களைப் பிடித்துக்கேட்டேன். ஒப்புக் கொண்டார்கள். மேலும் ஆராய்ந்து இவர்களை ஒறுத்தல் செய்ய வேண்டுகிறேன். புலம்பெற்றியார்: கள்வர் என்று கருதப்படுகின்ற நீவீர் யார்? பெயர் என்ன? இருப்பிடம் எது? கள்வன் 1: என்பேர் வலியன்; வட்டப்பள்ளம் என்னூர். கள்வன் 2: என்பேர் நெல்லி, வட்டப்பள்ளம். (இதற்குள் அஞ்சியும் அழகம்மாவும் அவ்வழியாக வருகிறார்கள். மாறனைக்கண்டு நிற்கிறார்கள்.) புலம்பெற்றியார்: களத்தில் நெல்லைக் களவு செய்ததுண்டா? கள்வர்: ஆம் ஐயா! புலம்பெற்றியார்: எப்போது? கள்வர்: இரவு. புலம்பெற்றியார்: களத்தில் யாரும் இல்லையா? கள்வர்: கயிற்றுக் கட்டிலில் யாரோ படுத்திருப்பது போல் தோன்றவே நாங்கள் துப்பட்டியை நீக்கிப் பார்த்தோம். மாந்தர் எவருமில்லை. மாந்தன் படுத்திருக்கும் அளவு வைக்கோல் குமிந்திருந்தது. நெல்லைக் களவு செய்தோம், ஐம்பது கலம். (மாறன், தன் மைத்துனன் அஞ்சியையும் அழகம்மாவையும் பார்த்துப் பதைப்புடன் அருகில் வருகிறான்.) மாறன்: புறப்பாட்டுத் தோற்றம், என்ன அத்தான்? என்ன தங்கச்சி? அழகம்மா: என் கற்பில் ஐயம் கொண்டானாம். மாறன்: எவன்? எந்தத் தீயன்? அழகம்மா: இதோ வழக்குத் தீர்க்கிறானே இந்த அறிஞன். அதன் பொருட்டு நான் மக்கள் இல்லாத இடத்திற்கு குடி போகத் தீர்ப்புச் செய்தான். அஞ்சி: அத்தான் நான் இரவு முழுவதும் காவல் காத்திருந்தேன் என்று கூறினேன். அதே நேரத்தில் அண்டை வீட்டு ஆனை, அதே இரவில் அழகம்மாவுடன் யாரோ காதல் விளையாட்டு நடத்தி என் தூக்கத்தைக் கெடுத்தார்கள் என்று கூறினான். புலம் பெற்றியார் இவ்வாறு தீர்ப்புக் கூறினார். மாறன்: புலம்பெற்றியாரே, புதுமணம் கொண்ட என் மைத்துனர் காவல் இருக்கவேண்டிய நேரத்தில் காதல் தூண்டத் தன் மனைவியிடம் சென்றிருக்கலாம். இதற்குச் சான்று பகரவில்லையா கள்வரின் பேச்சுக்கள். காவல் இருந்தாயா என்றபோது இருந்தேன் என்று இளைஞராகிய என் மைத்துனர் ஒரு பொய் சொல்லியிருக்கலாம். அதற்குச் சின்னாற்றூர் நல்லதொரு குடும்பத்தை இழந்துவிடச் செய்யலாமா? கற்பில் ஐயப்பாடு காட்டி உலகம் பழிக்க வழி செய்யலாமா? புலம்பெற்றியார்: இருந்ததாகச் சேரமன்னர் பேரில் ஆணையிட்டு சொன்னார். என் தீர்ப்புச் சரியானது! அழகம்மா: சரியானது! எவள்மேல் குற்றம் சுமத்தினாயோ, அவளை அழைத்துக் கேட்டாயா! அஞ்சி: அழகம்மா என் பொருட்டுப் பேச்சை அடக்கு. அழகம்மா: ஆம் உங்கள் பொருட்டு. உங்கள் பொருட்டே. நான் கற்புடையவள். நான் கற்பிழக்கவில்லை என்பற்கு இந்த வானம் இடிந்து விழாமல் இருப்பதும் வையம் மூழ்காதிருப்பதும் சான்றாகும். மக்கள் வாழ்வற்ற இடம் நோக்கிச் செல்லுகின்றோம். நீங்கள் வாழ்ந்திருங்கள். இந்த வாழத் தகாத ஊரில் வாழ்ந் திருங்கள். புலம்பெற்றியார் நாட்டாண்மை செலுத்தும் சிற்றூரில். ஒருவன்: அம்மா உமக்கு இழைத்த இந்தத் தீமையை நாங்கள் சேர மன்னருக்கு எடுத்துக் கூறி தீர்ப்பை மாற்றச் செய்கிறோம் வருந்தாதீர்கள். அழகம்மா: அண்ணா! நாங்கள் செல்லுகிறோம். அண்ணியாருக்கும் சொல்லுங்கள் நாங்கள் போய்விட்டதை. மாறன்: அம்மா! உனக்குத் தீமை செய்த சின்னாற்றூரைத் தீக்கிரை யாக்குவேன். அவனது தீர்ப்பை மாற்றி உன்னையும் உன் மைத்துனரையும் அரசினர் மன்னிப்புக் கேட்கவைப்பேன். அதன் பொருட்டு இங்கே நான் வாழ்கிறேன். நீங்கள் செல்லும் இடத்தைச் சொல்லிப் போகவேண்டும். அஞ்சி: மைத்துனரே, நாங்கள் சோழநாட்டில் காவிரிக்கரையான நல்லிடம் கண்டு தங்க எண்ணுகிறோம். இதைவிட உறுதியாக இன்ன இடம் என்று குறிப்பிட முடியாது. மாறன்: மக்கள் வாழாத இடம்! ஆயினும் உங்கள் குடியேற்றம் மக்கள் நிறைந்த இடமாகவேண்டும். (போகிறார்கள், மற்றவர்கள் அழுகிறார்கள்.) 12 (அஞ்சியும் அழகம்மாவும் சின்னாற்றூரைக் கடக்குமுன், அண்டை வீட்டு ஆனை எதிர் வரக் காணுகிறார்கள்.) ஆனை: அஞ்சியாரே! அம்மையாரே! இரங்குகிறேன் உங்கள் நிலைக்கு. உங்களுக்கு இத்தகைய கொடிய தீர்ப்பளித்த புலம் பெற்றியாரை நான் வெறுக்கிறேன். அழகம்மா: நீர் என்னவென்று வழக்கிட்டீர்? ஆனை: அம்மையாரே! இரவெல்லாம் அஞ்சி தம் புதுமனைவியுடன் ஆடிப்பாடிக் கிடந்தார். அதனால் எனக்குத் தூக்கம் கெட்டு விட்டது. நாடோறும் இப்படி என்று நான் வழக்கிட்டேன். மேலும், அஞ்சியார் வீட்டில் இன்றிரவு விடியு மட்டும் நடந்த காதல் பேச்சும், காதல் ஆட்டமும் கூச்சலும் குளறுபடியும் நான் மட்டுமல்ல, இதோ இவர்களும் கேட்டிருந்தார்கள் என்று ஆரல், வெள்ளி, காடு எனும் மூவரையும் சான்றாகக் காட்டினேன். உடனே புலம்பெற்றியார், உண்மைதானா வென்று அம்மூவரை யும் கேட்டார். ஆம் ஐயா என்று அவர்களும் கூறினார்கள். மறுபடியும் புலம் பெற்றியார், அஞ்சியார் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இன்னினார் என்று விளக்குங்கள் என்று கேட்டார். உண்மையில் இம்மூவரும், உம் வீட்டில் நடந்த ஆரவாரத்தையறிவார்களே தவிர இன்னின்னார் என்று அறியாதவர்களானதால் புலம்பெற்றியாரிடம், அழகம்மாவும் யாரோ ஓர் ஆடவரும் விளையாடினார்கள், இன்னின்னார் என்ற சொல்ல இயலவில்லை என்று கூறிவிட்டார்கள். அதற்கேற்றபடி அஞ்சியாரும், தாம் களத்தில் இருந்ததாகவே சேரனார் மேல் ஆணையிட்டும் கூறிவிட்டார். எனவே அஞ்சியாரே அப்படிக் கூறிவிட்டதால், நான் புலம் பெற்றியாரிடம், அஞ்சியாரும் அழகம்மாவுமே விளையாடினார்கள் என்ற உண்மையை மேலும் கூறி வற்புறுத்த முடியாமற் போய்விட்டது. இத்தனை பெருந் தீமைக்கும் காரணம் அஞ்சியாரின் ஒருபொய்யே! ஆகவே அம்மையாரே! நானல்லன் பழிகாரன். அழகம்மா: ஐயா அவர்சொன்ன ஒரு பொய்யல்ல காரணம். இத் தீங்கிற்கு அவர் என்மேற்கொண்ட காதல்தான் காரணம். ஆதலால் இத்தீங்கையும் நான் நன்மையாகக் கருதுகிறேன். உங்கள்மேல் வருத்தமில்லை. போய் வருகின்றோம். (கண்ணீருடன் ஆனை நிற்க. இருவரும் போகிறார்கள்.) 13 (அஞ்சியும் அழகம்மாவும் பாண்டிய நாட்டைச் சுற்றிப் பார்த்தபின், சோழ நாட்டின் பல பகுதிகளைக் கண்டபின், அந்நாட்டுக் காவிரியாற்றின் கரையையடுத்த பெருஞ்சோலை சேர்கிறார்கள்.) அஞ்சி: பெண்ணே! மக்கள் இல்லாத இடம், நம் வாழ்வை நிறுவனம் செய்வ தால், புலம்பெற்றியின் தீர்ப்பைப் நிறைவேற்றியவர்கள் ஆவோம். கரையளாவிப் பாடிவரும் காவிரி ஆற்றுப் புனலைப் பார்! கரையெல்லாம் மரங்கள்! மரமெல்லாம் பாடும் பறவைகள்! மலர் கொழிக்கும் மரம் செடி கொடிகள்! எத்தனை வளம்! அழகம்மா, இது காடல்ல தீய விலங்குகள் இல்லாததால்! இயற்கை தந்த பெருஞ்சோலை இன்பஞ் செய்வதால்! அழகம்மா: வாழ்க்கை நடத்தவேண்டியது இங்குத்தான். மக்களில்லாத இடம் வருத்தம் செய்யும். ஆயினும், என்னைவிட இங்கு வேறு பெண்களே இல்லாததால் எனக்கு உங்களால் தொல்லை இராது. அண்ணாரையும் அண்ணியாரையும் பிரிந்து வாழ வேண்டும். துன்பந்தான். ஆயினும், உங்களுடன் இணை பிரியாமல் இருக்கும் வாய்ப்பை நினைத்தால் இன்பந்தான். காயும் கனியும் கிழங்கும் நமக்கு உணவு. மரநிழல் நமக்கு வீடு. சருகு மெத்தை! இப்படியேதானா? அஞ்சி: மூங்கிலும், தென்னை மட்டையும், நாரும் நாளைக்கே நமக்குப் புதிய வீட்டை இந்தா என்று கொடுக்கும். புல்லரிசிச் சமையல் சில நாட்கள், பிறகு செந்நெல் விளைவிக்கத் தெரியாதா நமக்கு? என்ன இல்லை? முப்பழக் கனியுடன் அப்பட்டத் தேன் கலந்து செய்யும் பழத் தித்திப்பு வேண்டுமா உனக்கு? என்ன கறியில்லை இங்கே? அதோ தெரிகிறதே ஆற்றோரம் அடர்ந்த கொடி! வா. அதனிடையில் தங்கக் குடங்கள் போல், பச்சை மணிக் குழவிகள் போல் காட்டுகிறேன் தித்திக்கும் வெள்ளரிப் பழங்கள். (போகிறார்கள். அழகிய வெள்ளரிப் பழங்களைப் பறித்து அவாத் தீர அருந்தியிருக்கிறார்கள்.) அழகம்மா: அத்தான், முதலில் ஆகவேண்டிய வேலை குடிசை கட்டுவது. அஞ்சி: ஓ! நாளைக்கே அழகாக! இளநீர் பறிக்கட்டுமா! அழகம்மா! அழகம்மா: இந்த ஆலின் நிழலில் சற்று இளைப்பாறலாம். குளிர்ந்த காற்றும் மலர் மணமும் என்னை என்னவோ செய்கிறது! இளநீரும் நறுந்தேனும் நீங்களே எனக்கு. (ஒருபுறம் படுத்துத் தூங்குகிறார்கள்.) 14 (சின்னாற்றூர் (சேரநாடு) சிறப்புச் செய்யப்படுகிறது.) தெருவெல்லாம் வரவேற்புத் தட்டிகள், தரையெல்லாம் தண்ணீர்த் தெளியல், வீடெல்லாம் பூத்தொங்கள், வீட்டின் உட்புறமெல்லாம் பட் டணிந்து நகையணிந்து சேரனைக் காண அவாவும் பாவையர் பதைப்பு. நாட்டாண்மைக்காரர் சேரனை எதிர்கொள்ள முந்து கிறார். அவரை ஆதரித்து அவருடன் செல்கிறார் சிலர். அவரை எதிர்த்து முணுமுணுக்கிறார் சிலர். நாட்டாண்மைக்காரர் தீர்ப்பளிக்கும் ஆலமரத்தின் எதிரில் ஆராய்ச்சிமணி தூக்கப் பெருந்தூண்கள் நாட்டப்படுகின்றன. நாட்டாண்மைக்காரர் தீர்ப்பைச் சேரனிடம் மறுக்கச் சிலர் கூடுகின்றனர். ஆராய்ச்சிமணிக்கு இடமேயில்லை என்று கூறி நிற்கின்றார் சிலர். மணியோசை கேட்கிறது. சேரன் யானை பின்னே வருவதால்! தூள் கிளம்புகிறது. சேரன் படையின் காலால் எழுப்பப்பட்டு! வாழ்த்தொலி வானைப் பிளக்கிறது. முரசொலி வேறு - வெற்றிச்சங்கு வேறு. வீட்டின் வாயில்களில் எல்லாம் பெண்கள். தெருவெல்லாம் காளையர் கூட்டம். சேரர் ஊருக்குள் நுழைந்துவிட்டார். இதோ நகர்வலம் மாறன் வீட்டின் பதற்றமான பேச்சுக்கள் நிகழ்கின்றன. மாறன்: சேரன் ஆலடி அமர்ந்தவுடன் நான் ஆராய்ச்சிமணியை அசைப்பேன். என் அருமைத் தங்கைக்குப் புலம்பெற்றி நல்கிய தீர்ப்புத் தீயது என்று மன்னனிடம் எடுத்துக் காட்டுவேன். மன்னன் தெரிந்து மாற்றட்டும். இல்லையேல் என் மறுப்புச் சரியில்லை என்றும் புலம்பெற்றியை இகழ்ந்தது தவறு என்றும், என்னைக் கொலை செய்யச் சொல்லட்டும். மருதி: அத்தான்! நீங்கள் புலம்பெற்றி மேல் மன்னரிடம் வழக்குரைக்கா திருக்க உங்களைப் புலம்பெற்றியின் ஆட்கள் அச்சுறுத்தினார்கள். அது ஏன்? மாறன்: அதுவா? புலம்பெற்றிக்குத் தெரியும் தான் செய்த தீர்ப்பு அறமற்றதென்று. மருதி: நீங்கள் ஆராய்ச்சி மணியை நெருங்காமல் செய்ய ஆட்களை ஏற்படுத்தியிருப்பாரோ புலம்பெற்றி? மாறன்: இருக்கட்டுமே! மருதி: உங்கள் கருத்து ஈடேறாமல் போய்விட்டால்? மாறன்: அப்படித்தான் என்னை வழியிலேயே கொல்லட்டும். மருதி: அதுதான் முடியாது அத்தான்! இதோ பாருங்கள் நீளக்கத்தி, மாற்றுருவோடு நானும் உங்களைப் பின்பற்றி வருவேன். மாறன்: மறவர் பெற்ற மணியே! அப்படிச் செய்! (மருதி முக்காடிட்டுக் கொள்ளுகிறாள். இடையில் நீளக்கத்தியை மறைத்துக் கொள்ளுகிறாள். கிழவி போல் கூனிக் கொள்ளுகிறாள். கையில் தடியொன்று தாங்குகிறாள்) மாறன்: இந்நேரம் சேரன் எல்லா வரிசைகளையும் பெற்று ஆலடியில் அமர்ந்திருப்பான். முன்னே செல்லுகிறேன். பின்னே வா! (போகிறார்கள்.) 15 (ஆலடி நோக்கிக் கிழவி இருபுறமும் உற்றுப் பார்த்தபடி, செல்ல, முன்னே செல்லுகிறான் மாறன். நாவல் மரத்தில் மறைந்திருந்த ஒருவன் மாறன் பின் வந்து சேருகிறான்.) மறைந்திருந்தவன்: எங்கே போகிறீர் மாறனாரே? மாறன்: சேரனிடம் புலம்பெற்றியார்மேல் வழக்குச் சொல்லப் போகிறேன். மறைந்திருந்தவன்: வேண்டாம் வேண்டாம்! புலம்பெற்றிமேல் சொல்லும் வழக்குப் பொய்யாய் முடிந்தால் சேரமன்னர் பொய் வழக்கிட்ட வனுக்குக் கொலைத் தீர்ப்பு இட்டுவிடுவார். மாறன்: பொய்யாய் முடியாது. (சிறிது தொலைவில் சென்றபின் அங்கிருந்த மாமரத்திற் பதுங்கி யிருந்த கட்டையன் எதிர்வருகிறான்.) கட்டையன்: என்ன மாறனாரே! எங்கே? மாறன்: என் தங்கை அழகம்மாவின் கற்பு ஐயப்படத்தக்கது என்று தீர்ப்புரைத்தான் புலம்பெற்றி, அது சரியல்லவென்று சேரனாரிடம் சொல்லப் போகிறேன். கட்டையன்: வேண்டாம் வேண்டாம். புலம்பெற்றி மேல் சேரனார் மிக்க விருப்பம் வைத்திருக்கிறார். அதனால் சேர மன்னரால் உமக்கே பெருந்தீமை விளையும். மாறன்: என் பொருட்டு அறம் தவறி அழியாப் பழிதேடிக் கொள்வாரா சேரனார்! (போகிறார்கள்) (ஆராய்ச்சி மணியை மாறன் நெருங்குகிறான். கிழவியும் உடன் செல்லுகிறாள். ஆராய்ச்சி மணியருகில் நிற்கும் பலரில் குண்டு எதிர் வருகிறான்.) குண்டு: ஆராய்ச்சிமணியை அசைக்கவா போகிறீர்? தலை தப்பாது. (மாறன் மணியின் கயிற்றைப் பற்றுகிறான். பின்னிருந்து குண்டு, மாறன் தலைநோக்கித் தடியை ஓச்சுகிறான். ஓச்சிய கையின் மேல் கிழவியின் கத்தி பாய்கிறது. குண்டின் கை துண்டாய் விழுகிறது.) குண்டு: ஐயோ. (உரத்தகுரலில் அலறி வீழ்கிறான். ஆலடி அரங்கில் அமைதி கெடுகிறது. சேரன் கூச்சல் உண்டான இடம் நோக்கி வருகிறான். அவனுடன் புலம்பெற்றியும் பெரிய அலுவல்காரர்களும் வருகிறார் கள். அங்கிருந்து சிலர் சேரனிடம் முறையிடுகிறார்கள்) 1. இவர் ஆராய்ச்சி மணியை அடிக்க வந்தார். இதோ இவர் அவரை அச்சுறுத்தினர். 2. ஆமாம் அதையும் பொருட்படுத்தாமல் அவர் கயிற்றைத் தொட்டார். தொடவே இதோ இவர் பின்னால் தடியை ஓங்கினார். ஓங்கிய கையைப் பின்னிருந்து வாளால் வெட்டினார் இந்தக் கிழவியார். 3. கிழவியார் வெட்ட வில்லையானால் இவர் தலை உடைந் திருக்கும். சேரன்: யார்மீது உமக்கு வழக்கு? மாறன்: புலம்பெற்றியார் மீது? சேரன்: அப்படியா? நீ ஆராய்ச்சி மணியை அடிப்பதைத் தடைசெய்த இவன் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்? மாறன்: அரசே! எனக்கு முறைமை வழங்க வேண்டும். நான் வரும் வழியில் புலம்பெற்றியார் ஆட்கள், புலம்பெற்றி மேல் அரசனிடம் வழக்கிடாதே என்று என்னை அச்சுறுத்தினார்கள். மீறி வந்தேன். இங்கு இவன் புலம்பெற்றி மேல் வழக்குரைத்தால் தலைபோகும் என்றான். கயிற்றைத் தொட்டேன்... கிழவி: பின்னிலிருந்து இவன் தடியை ஓச்சினான். அடி விழுமுன் நான் இந்த வாளால் அவன் கையைத் துணித்து என் மணாளரைக் காத்தேன். சேரன்: மறவர் மகளிரே! நீவிர் இவர் மனைவியாரா? கிழவி: ஆம் அரசே! என் முக்காட்டை நீக்கிவிடுகிறேன். (சேரன் வியப்புறுகிறான்.) சேரன்: எல்லோரும் ஆலடி வாருங்கள்! (அனைவரும் போகிறார்கள்) 16 (ஆலடியில் ஒருபுறம் மாறன் சேரனிடம் தன் வழக்கைக் கூறிக் கொண்டிருக்கிறான். அருகில் ஒருபுறம் கை வெட்டுப்பட்ட குண்டு அலறுகிறான்.) குண்டு: அரசே, புலம்பெற்றியார் என்னை ஆளாக்கி, மாறன் மணியை அசைக்கொணாத வகை செய்ய வற்புறுத்தினார். மாறனார் வழக்குரைத்தால் தம் பிழை தெரிந்துவிடும் என்று புலம் பெற்றியார் நினைத்தார். (கூட்டத்திலிருந்து ஆனை கூச்சலிடுகிறார்) ஆனை: அரசே, அஞ்சியாரையும் அவர் மனைவியார் அழகம்மாவை யும் இந்த நாடு இழக்கலாகாது. அழகம்மா கற்புள்ளவர். முறையற்றது புலம்பெற்றியார் தீர்ப்பு. சேரன்: மாறன் முறையீடு கேட்டேன். புலம்பெற்றி சொன்னவற்றைக் கேட்டேன். மற்றும் பல சான்றினர் பகர்ந்தவை கேட்டேன். காதல் காரணமாக அஞ்சியார் பொய் கூறினார். புலம்பெற்றியார் அவர் பேச்சைக் கொண்டு, அவர் வீட்டில் இல்லை என்று முடிவு கட்டியதில் தவறில்லை. ஆனால், தவறாக அழகம்மா கற்பில் ஐயம்கொண்ட புலம் பெற்றி, என் ஆணையின்றி அயல்நாடு கடத்தியது தவறு. இதனால் என் நாட்டு மக்களை - இருவரை என் பொன்னாடு இழந்தது வருந்தத்தக்கது. என் தீர்ப்பு: புலம்பெற்றி இன்றுமுதல் தன் வேலையை இழந்துவிடுக. ஊர்க் காவல் பணி ஏற்க. அதன் பொருட்டு அவர்க்குத் திங்கள் ஒன்றுக்கு ஒன்பது பணம் தருவோம். ஊர்க்காவலனாகிய புலம்பெற்றிக்கு ஒரு வேலை, என்ன எனில், அழகம்மா அஞ்சி இருவரையும் தேடி, என் ஆணை கூறி அழைத்து வரவேண்டும் அவர் வர ஒப்பாவிடில் அதையும் அவர் கைப்பட எழுதி வாங்கிவரவேண்டும். கணக்கரே! என் ஆணையை எழுதிப் புலம்பெற்றியிடம் கொடுக்க. கூட்டம்: வாழ்க சேரனார்! (அனைவரும் போகிறார்கள்) (ஒருபுறமாகப் புலம்பெற்றியும், மாறனும், மருதியும் பேசுகிறார்கள்.) புலம்பெற்றி: மாறனார்க்கல்லவா, தெரியும் அஞ்சியாரும் அழகம்மை யாரும் சென்றுள்ள இடம். அது இன்னதென்று கூறி எனக்கு உதவி செய்யவேண்டும். மாறன்: புலம்பெற்றியாரே, நானும் உம்முடன் வர எண்ணுகிறேன். காவிரி யாற்றங் கரையோரமெல்லாம் தேட வேண்டும். சோழ நாடுதான் அவருக்குப் பிடித்தமானது என்பது எனக்குத் தெரியும். மருதி: நானும் வருவேன் அத்தான். மாறன்: உன்னை அழைத்துப் போக அட்டியில்லை. ஆயினும் உன்னிலை வழி நடக்கக் கூடியதில்லை. கருத் தாங்கியிருக்கின்றாயே? மருதி: அத்தான் மறுப்பதால் பயனில்லை. கருத் தாங்கியிருக்கிறேன் என்ற காரணத்தால் உங்களைப் பிரிந்திருக்க முடியாதென்கிறேன். மாறன்: அப்படியா? புலம்பெற்றி: வரட்டுமே, நாளை காலை கிளம்பலாமே? மாறன்: ஆம்! 17 (சோழ நாட்டுப் பெருஞ்சோலையில் அஞ்சியும் அழகம்மாவும் அமைத்த ஒரு குடிசையின் அண்டையில் மற்றொரு குடிசை கட்டிக் கொண்டிருக்கிறான் அஞ்சி. மாலைநேரம் ஆகிறது. அன்றிரவுக்கான உணவு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாள் அழகம்மா. அழகம்மா அஞ்சியிடம் வருகிறாள்.) அழகம்மா: என்போல் என் அண்ணியாரும் கருவுற்றிருப்பார்களோ என்னவோ தெரியவில்லையே. அஞ்சி: இந்த நிலையில் உன் உள்ளத்தில் எந்தக் குறைபாடும் இருக்கக்கூடாது. என் மைத்துனரும் தங்கையும் கட்டாயம் இங்கு வருவார்கள். இந்த நம்பிக்கையால்தான் அவர்கள் தங்க இக்குடிசை ஏற்பாடு செய்கிறேன். அழகம்மா: நானுந்தான் அத்தான் நம்புகிறேன். ஒவ்வொரு வேளைக்கும் அவர்கள் இருவரும் கஞ்சிக் குடிக்கத் தேக்கிலைக் கல்லை தைப்பேன். அவர் வராததால் அவ்விரு கல்லைகளையும் நிழலில் உலர்த்தி அடுக்கி வைப்பேன். இப்படி நாள் ஒன்றுக்கு நான்கு விழுக்காடு நம் குடிசையின் பரணையை நிறைத்துவிட்டன. அஞ்சி: எண் கண்ணே! கவலைக்கு இடந்தராதே! கருத்தாங்கிய நீ, தேக்கிலை பறிக்காதே. உன் மேனி நலியும். (இதே நேரத்தில் புதுக்குடிசையின் பின்னிருந்து ஒரு குரல் கேட்கிறது.) குரல் 1: நாங்கள் ஒருவகை இனத்தார். முகத்தைக் கறுப்புத்துணியால் மறைத்திருப்போம். கண்ணுக்குமட்டும் பொத்தல் உண்டு. மூவர் வந்திருக்கிறோம். குடிசைக்குப் பின் மறைந்திருக்கிறோம். உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம். எங்களைக் கண்டு நீங்கள் அஞ்சக்கூடாது எதிரில் வரலாமா? அழகம்மா: வரச் சொல்லுங்கள் அத்தான்! அஞ்சி: நீங்கள் வரக்கூடாது. என் மனைவி அஞ்சுவாள். அதனால் அவள் தாங்கியுள்ள கருச்சிதையினும் சிதையும். குரல் 1: நாங்கள் மிக நல்லவர்கள். அஞ்சவேண்டிய தேவையே ஏற்படாது. அஞ்சி: அப்படியா? - வரலாம். (மூன்றுபேர் கறுப்புத் துணியால் முக மூடியபடி எதிர்வந்து நிற்கிறார்கள்.) அஞ்சி: நீங்கள் எங்கிருப்பது? குரல் 1: நாங்கள் இந்த பாங்கில் உள்ள மலை வாழ்நர். குரல் 2: அதெல்லாம் இருக்கட்டும் ஏன். அண்ணியாரே - அட - ஏன் அம்மையாரே! கருத்தரித்து எத்தனை திங்கள் ஆயின? அழகம்மா: என் அண்ணியார்! (என்று கூறிக் குரல் 2 ஐத்-தாவி அணைத்துக் கொள்ளுகிறாள்.) மருதி: (தன் முகமூடியை விலக்கி) அண்ணியாரே நலந்தானே. (இதற்குள் அனைவரும் முகமூடியை விலக்குகிறார்கள். மாறனும் அஞ்சியும் தழுவிக் கொள்ளுகிறார்கள்.) அஞ்சி: என்ன புலம்பெற்றியாரா! அழகம்மா: என் கற்பில் ஐயம் என்ற தீயனா? புலம்பெற்றியார்: அம்மையாரே, சேரனார் ஆணை இதோ இருக்கிறது. உங்களை மக்களில்லாத அயல்நாடு கடத்தியது என்பிழை என்று சேரனார் தீர்ப்புக் கூறினார். அதனால் என்னையும் அவ் வேலையை விட்டு நீக்கினார். நீக்கி எனக்கு ஊர்க்காவற்பணி உதவினார். உதவி, உங்கள் இருவரையும் சேரநாட்டுக்கு அழைத்து வரும்படி எனக்குக் கட்டளையிட்டார். என்னை மன்னிக்க வேண்டுகிறேன். புறப்பட வேண்டும் பெற்ற தாய்நாடு நோக்கி. அஞ்சி: புலம்பெற்றியாரே மன்னித்தோம். உம்மால் வருத்தமில்லை. நாங்கள் மீண்டும் சேரநாடு... என்ன உன் எண்ணம் அழகம்மா? அழகம்மா: பெருஞ்சோலை பிடிக்கிறது. எனக்கும் இவ்விடம் விட்டுப் போக மனமில்லை. அஞ்சி: வர விருப்பமில்லை. நீவிர் இரண்டு நாள் தங்கி போகலாம். வழி நடந்த வருத்தம் நீங்கும். (அனைவரும் நெடுநேரம் அன்புடன் பேசி உணவு உண்ணத் தலைப்பட்டார்கள்.) (ஒருபுறம்) மாறன்: மருதி! உன்னிடம் ஒன்று சொல்ல அஞ்சுகிறேன். மருதி: நான் ஒன்று உங்களிடம் சொல்ல அச்சப்படுகிறேன். அது என்ன தெரியுமா அத்தான்? மாறன்: நான் சொல்ல நினைப்பது என்ன தெரியுமா மருதி? நாம் இங்கேயே இருந்து விடுவோம். மருதி: நாம் இங்கேயே இருந்து விடுவோம். 18 (இரண்டு நாட்களின் பின் புலம்பெற்றி அஞ்சியிடம் அஞ்சல் பெற்றுக்கொண்டு போய்விடுகிறான். அழகம்மா இரண்டாண் குழந்தை (இரட்டைப் பேறாகப்) பெற்றெடுக்கிறாள். முன்னே பிறந்தவனுக்கு அஞ்சி மூத்தோன் எனவும் இரண்டாவது பிறந்த பிள்ளைக்கு அஞ்சி இளையான் எனவும் பெயரிட்டு மகிழ்ந்திருக்கையில், மருதி இரண்டு பெண் குழந்தை பெறுகிறாள். மாறன் முன்னை எனவும் மாறன் பின்னை எனவும் இரு பெண் குழந்தைகட்கும் பெயரிட்டு மகிழ்கின்றார்கள். ஆண்டுகள் இருபத் தொன்றானபின், பெருஞ்சோலையில் இரு திருமணங்கள் நடைபெறுகின்றன. அஞ்சி மூத்தோன் - மாறன் முன்னை என்பாளோடும், அஞ்சி இளையான் - மாறன் பின்னையுடனும் இன்பம் நுகர்ந்து வரும் நாளில்... அஞ்சி மூத்தோனும் - மாறன் முன்னையும் அஞ்சி வள்ளை என்னும் ஒரு பெண்ணைப் பெறுகிறார்கள். அஞ்சி இளையானும் - மாறன் பின்னையும் மாறன் வாகை என்னும் ஓர் ஆண்மகனைப் பெறுகிறார்கள். பின்னாள் அஞ்சி வள்ளையும் - மாறன் வாகையும் மணவாள ராகிப் பெருஞ்சோலையை ஒரு சிற்றூராக்கிச் சிறப்பாக வாழ்ந்து வரும்போது ஒருநாள் - தன் பாட்டன்மார் பெயரால் பெருஞ்சோலையில் நினைவுக்கல் நாட்டி விழா நடத்துகிறார்கள். பெருஞ்சோலைச் சிற்றூரில் அஞ்சி என்று பெயர் பொறித்த உயர்ந்த கல் ஒன்றும் மாறன் என்ற கல் ஒன்றும் காட்சி தரலாயின. இரு கற்களின் அடியிலும் இருவரும் இப்பெருஞ் சோலைச் சிற்றூரை ஆக்கியோர் என்றும், பெருஞ்சோலை மக்களின் முதல் தந்தைமார் என்றும் கல்எழுதி நாட்டினார்கள். இதன்பின் ஆண்டுகள் நானூறு சென்றன. 19 400 ஆண்டுகளின் பின் - காவிரியின் வட கரையிலமைந்த பெருஞ்சோலை (வடபெருஞ் சோலைநாடு) நாட்டின் மாறன் திருக்காத்த மன்னனும், மன்னி பூங் குழலாளும் கோட்டை வாயில் கோபுரத்தின்மீது நின்று காவிரியின் தென்கரையில் அமைந்த பெருஞ்சோலை (தென் பெருஞ்சோலை நாடு) நாட்டின் தொலைக்காட்சியை நோக்குகிறார்கள். மாறன் திருக்காத்த மன்னன் சினத்தோடு செப்புகிறான்: பூங்குழலாளே, பொடியாக்கிப் போடுவேன் தென்பெருஞ்சோலை நாட்டை! வேரற்றுப் போக செய்வேன், அந்நாட்டின் அஞ்சி அழக மன்னனையும் அவன் குடிகளையும்! பூங்குழல்: இடையில் ஆறு ஒன்று இருக்கிறதே? எப்படி நம் படை தென்பெருஞ்சோலை நாட்டை அடையும்? மாறன்: பேதையே நம்மிடம் உள்ள காலாட்படையினர் தொகை ஆயிரம்! நூறு யானை, நூறு குதிரை, நூறு தேர், இந்த நால்வகைப் படையும் அக்கரை அடைய ஐந்துமணி நேரம் போதும், மூன்று நாளில் நாட்டைச் சுட்டெரித்து, மக்களையும் மன்னன் குடும்பத்தையும் இல்லாது செய்து, நம் கொடியை நாட்டி விடலாம். அறந் தவறாது ஆணை செலுத்துகிறானாம். அஞ்சி, மறவழியில் நாட்டை ஆள்கின்றேனாம் நான். (அரசன் இப்படிச் சொல்லி முடித்தவுடன், அனைவரும் உறவினர் என்ற ஒருகுரல் கேட்கிறது. மன்னனும் மன்னி (அரசி)யும் வியப்பும் அச்சமும் அடைந்தவராய்ப் பல் புறமும் திரும்பிப் பார்க்கிறார்கள். கோபுரத்தின் கீழ்ப்படியில் காவலன் ஒருவனன்றி வேறொருவருமில்லை.) அரசன்: (காவல்காரனை நோக்கி) இங்கு வந்தவர் எவர்? கேட்டது யார் குரல்? காவல்காரன்: அரசே இந்தச் சுவர் பேசிற்று, அனைவரும் உறவினர் என்று. மன்னி: என்ன வியப்பு? சுவர் பேசிற்றா! யார் நம்புவார்கள்? மன்னன்: அனைவரும் உறவினர்! நாமும் தென் பெருஞ்சோலை நாட்டா ருமா? இதென்ன மடமை! காவற்காரா! நீதான் அவ்வாறு கூறினாயா? காவற்காரன்: ஐயையோ நானில்லையே அரசே! சுவர்தானுங்க! அரசன்: என்னுடன் வாருங்கள் அரண்மனை செல்வோம். (போகிறார்கள். அரண்மனையை நெருங்குகிறார்கள். படைத் தலைவன் எதிர்ப்படுகிறான். அரசன் நடந்தவைகளைக் கூறுகிறான்.) படைத்தலைவன்: சுவர் பேசுகிறதா! காவற்காரனைச் சிறைப்படுத்த உத்திரவு கொடுங்கள். அரசன்: இவன்தான் கூச்சலிட்டிருக்க வேண்டும், அவன் இன்னான் என்று ஆராயவேண்டும். நாம் துவக்கும் போரை அல்லவா இவன் எதிர்க்கிறான். காவற்காரன்: நானில்லை படைத்தலைவரே, நானில்லை மன்னவரே. மன்னன்: இவனைச் சிறைப்படுத்துங்கள். படைத் தலைவரே அலுவலகத்தில் என்னை வந்து பாருங்கள். (அரசன் மனைவி இருவரும் போகிறார்கள் அரண்மனையின் உட்புறநோக்கி, படைத்தலைவன் காவற்காரனின் தலைப்பாகையை தட்டிவிட்டு அவனின் குடுமியைப் பிடித்து இழுத்துப் போகிறான்.) படைத்தலைவன்: சுவர் பேசிற்றா? உண்மையைச் சொல்லாவிட்டால் உரிக்கப்படும் உன் உடம்பின் தோல். காவற்காரன்: தோலை உரிச்சிபுடாதிங்க. நீங்க எப்படிச் சொல்லச் சொல்லுறிங்களோ அப்படிச் சொல்றேன். படைத்தலைவன்: நான் சொல்லிக் கொடுப்பது என்ன இருக்கிறது? காவற்காரன்: சுவர் பேசிச்சிண்ணு மெய்யே சொன்னேன். அப்டி சொல்லாதே. நாங்க ஒன்னே என்னாண்ணு நெனைக்கிறமோ அப்படியே நீயும் சொல்லணும். அல்லாட்டி தோலை உரிப்போம் இண்றின்ங்க. நீங்க என்னே என்னா நெனைக்கிறீங்க? சொல்லுங்க. அந்த மாதிரி சொல்லி விடறேன். படைத்தலைவன்: அப்படியானால் நீ சொல்வது உண்மை தானா? காவற்காரன்: பொய்யில்லிங்க. படைத்தலைவன்: சுவர் பேசுமாடா? காவற்காரன்: பேசினமாதிரி இருந்துதுங்க. நானு என்னாத்தே கண்டேன்? படைத்தலைவன்: ஒருகால் அனைவரும் உறவினர் என்று கூச்சலிட்டுவிட்டு ஓடிவிட்டானா எவனாவது? காவற்காரன்: ஆரைக் கேக்கிறீங்க? படைத்தலைவன்: உன்னைத்தானேடா கேட்க வேண்டியதாய் இருக்கிறது? காவற்காரன்: கேளுங்க பதிலைமட்டும் எங்கிட்ட இருந்து எதிர்பார்க்க வாணாம். படைத்தலைவன்: ஏன்? காவற்காரன்: தெரிஞ்சாதானே? படைத்தலைவன்: நீ விழிப்போடுதானே அங்கு நின்றிருந்தாய்? காவற்காரன்: அதெப்படி நான் விழிப்போடு இருந்திருக்க முடியுண்ணேன். படைத்தலைவன்: ஏன்? காவற்காரன்: நேத்து இரவு முச்சூடும் தூங்கிலியே. படைத்தலைவன்: அதனால்? காவற்காரன்: தூக்கத்தோடு நிண்ணுகினு இருந்தேன். படைத்தலைவன்: எவனோ கூச்சல் இட்டு ஓடியிருக்கிறான். அப்படி இருக்கலாமல்லவா? காவற்காரன்: ஆமாங்க. படைத்தலைவன்: முட்டாளே போ. உன் வேலையை நோக்கி! உன்னை விடுதலை செய்தேன். 20 (படைத்தலைவனால் விடுதலை செய்யப்பட்ட காவற்காரன் மகிழ்ச்சியுடன் தன் வீடு நோக்கி ஓடுகிறான். சில்லிக் குப்பத்தில் அவன் குடிசையில் முல்லை அவனை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறாள்.) (நான் தப்பிச்சது அருமையடி என்று காவற்காரன் அவள் கைப்புறத்தில் வீழ்கிறான்.) முல்லை: என்னா அப்டி ஒனக்கு ஏங்கண்ணாளா? (காவற்காரன் நடந்தவைகளைச் சொல்லுகிறான்.) முல்லை கூறுகிறாள்: அந்த போர் தடுப்பார் கூட்டத்தின் வேலைக் காரனுடன் நீ இனிமே சேரவேண்டாம். சேர்ந்ததால்தான் அனைவரும் உறவினர் என்ற அறமொழியை நீ அந்த அரசர் எதிரிலும் சொல்லும்படி ஆச்சி அனைவரும் உறவினராய் இருந்தா நமக்கென்னா? அனைவரும் பகைவரா இருந்தா நமக்கென்னா? உலகில் நமக்கு வேண்டியதெல்லாம் இரவு. நீ நான் ஆன கூட்டுறவு; அன்பு மகிழ்ச்சி; அவ்வளவுதான். இனிமே சேரமாட்டியே அவங்கூட. காவற்காரன்: சேர்ந்தா என்ன? நம்ப வாயி நம்ப பேச்செ கேட்டா! இருக்கட்டும் நேரமாச்சி சோறு போடு. (அதுக்குள்ளே ஒரு முத்தம் ... ... அம்மாடி) அதே நேரத்தில் ஒரு குரல் - அனைவரும் உறவினர். (மனைவியுடன் சாப்பிடச் சென்ற காவற்காரன் திரும்பிப் பார்க்கிறான்.) காவற்காரன்: அட வந்துட்டியா? என்ன சேதி? வந்தவன்: நல்ல சேதிதான். சாப்பாட்டு நேரம். சாப்புட்டுட்டியா? காவற்காரன்: சாப்பிடப் போனேன். நீ வந்தே. சாப்பிட வாரியா. முல்லே குப்பனுக்கும் சாப்பாடு போடு. (அவள் உம் என்று இழுத்தபடி சாப்பாடு போட உள்ளே செல்லுகிறாள்.) காவற்காரன் குப்பன் காதில் சொல்லுகிறான்: முல்லை எதிரில் இனி போர் மறுப்போர் கருத்துக்களையோ அனைவரும் உறவினர் என்ற அற மொழியையோ சொல்லாதே. குப்பன்: சரி. காவற்காரன்: (உரத்த குரலில்) வா குப்பா சாப்பிடலாம். (சாப்பிடுகிறார்கள்.) குப்பன்: நான் விரைவில் போகணும். கண்ணாடிப் பாக்கம் இருக்குதே அங்கே ஒரு பெரிய ஆலமரம். மிகப் பெரிசி. அதை வெட்றாங்க (வெட்ணா நடுவிலே - எந்த நடுவிலே? - வெட்றாங்களே அந்த மரத்துக்கு நடுவிலே கோடாலி பாயிலே. டணீங்டணீங்கிண்ணு ஓசை கேக்குது. இப்டி ஓசை கேக்குதுண்ணு நம்ப அரசருக்கு சொல்லி அனுப்பி யிருக்காங்க. அவுரு வந்துதான் மேலே வேலையை நடத்தறதா, மரத்தை வெட்டாமே உட்டுர்ரதாண்ணு முடிவு பண்ணப் போறாங்க. அந்த இடத்துக்கு நம்ம போர் மறுப்பவங்களும் போகப் போறாங்க. என்னை அதுக்காக வெரசா வரச் சொன்னாங்க. காவற்காரன்: அட மரத்துக்கு நடுவிலியா அப்டி ஓசை கேக்குது? என்னாவா இருக்கும்? குப்பன்: அந்த மரத்தின் நடுப்பகுதி கல்லாயி போச்சிண்றாங்க. காவற்காரன்: கல்லாயி போனா வெட்டக் கூடாதா? குப்பன்: அந்தக் கல்லு நெலத்துக்கு உள்ளே தொலவுலே ஊடுருவிப் போயிகினு இருந்தா என்னா பண்றது? எப்டி வெட்றது வெட்னா அடி நெலம் இடிவாங்கிபுட்டா! என்ன ஆவுதோ? இப்டி எல்லாம் கொழப்பிகினு கெடக்கிறாங்க. ஊர் மக்கள் அல்லாரும் அங்கேதான் ஒரே கூட்டம் கடலாட்டம்! முல்லை: அப்டிண்ணா நாம்பளும் போவலாமா? காவற்காரன்: போனா போவுது. 21 (வானை அடைத்த தழை மிலாறுகளையும், யானை இருநூறு தங்கும் நிழல் தரும் நிலைமையையும், பத்துப் பேர் கைகோர்த்து அணைப்பினும் அடங்காத பருமனையும் உடைய ஆலமரம், ஆயிரம் ஆட்களால் வேர் கல்லப்படுகிறது. வேர் அனைத்தும் வெட்டப்பட்டது. மரம் சாய்க்க முடியாத நிலைமையில் அசையாது நிற்கிறது.) அரசன், அமைச்சன், முதலியவர்களும் பார்க்க வந்த பெருங்கூட்ட மக்களும், பதினாயிரக் கணக்கானவர். நடுமரம், பல கோடாரிகளால் வெட்டப்படுகிறது. ஒரு பாதி வெட்டியாயிற்று. இனிக் கோடரி பாயாது என்று கூறுகிறார்கள் ஆட்கள். கோடரியைப் பாய ஒட்டாது செய்வது கருங்கல் என்றனர் பல்லோர். இல்லை இல்லை இரும்பு என்றனர் பலர். வயிரம் என்கிறார்கள் மற்றும் பலர். ஆராய்ச்சியாளர் நடுப்பகுதியைத் தொட்டும் தடவியும் கடித்தும் நகத்தால் சுரண்டி நக்கியும் பார்க்கிறார்கள். fU§fš!; ஆம் கருங்கல்! ஆனால் ஆல மரத்தின் நடுவில் கருங்கல் - அதிலும் இத்தனை நீளக்கல் எப்படி வந்தது? அந்தக் கல் நிலத்தின் அடிமட்டத்தை ஊடுருவிச் செல்கிறது - ஒன்றுமே புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை. போர் மறுப்போர்களில் ஒருவர் இன்னும் உற்று நோக்குகிறார். அரசர்: பெரியாரே. இன்னும் என்ன பார்க்கிறீர்? மற்றவர்கட்குப் புரியாதது உமக்கு மட்டும் புரிந்துவிடுமா என்ன? பெரியார்: இயற்கை. சிலர்க்கு தன் உண்மையைக் காட்ட முன்வருவதுண்டு. அரசர்: என் தீர்ப்பு! இம்மரத்தை வெட்ட வேண்டாம். இனி அது பிழைத்தால் பிழைக்கட்டும். செத்தால் அதன் உண்மைதானே புலப்படும் பார்த்துக்கொள்வோம். (அனைவரும் பலவாறு பேசிப் போகிறார்கள். பெரியார் மட்டும் இன்னும் தம்மிரு கண்களையும் நடுமரத்தில் உருட்டிக் கொண்டிருக்கிறார்.) 22 (காவிரியாற்றின் புனல் நெளிவில் மிதக்கும் ஒளியை, மாலைக் கதிரவன் கையோடு கொண்டு போய்க் கொண்டிருந்தான் மேற்றிசை நோக்கி! கரையோரத்துச் சோலை மரங்களும், மலர்க்கொடிகளும் இருளைத் தழுவத் தொடங்கின.) முல்லை சிரித்தபடி இருந்தது, வண்டின் பாட்டு ஓய்ந்த பாடில்லை. வீடு செல்லுமுன் மாடுகள் துறையில் இறங்கி நீர் குடித்தன. மேய்ப்பவர்கள் அவைகளின் உடலைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தார்கள் பாடியபடி. கணகணவென்று சிறு குருவிகள் குரலினிமை காட்டித் தம் கூடுகளை அணுகின. காவிரியாற்றின் வடகரையில் புதர்ப்பூக்கள் மொய்த்த துறையில் பொன்னாவிரையும் அவள் தோழி தேன்மொழியும் நீரள்ளி அருந்துகிறார்கள்.) தோழி: பொன்னாவிரை அக்கரையைப் பார்! பொன்னா: அழகிய அன்னப் படகு! துடுப்பு வலிப்போர் இருவர். ஒளி படைத்த முகமும், வலிபடைத்த தோளும் அமைந்த ஓர் காளை! தேன்மொழியே அந்தக் காளையின் இடையில் மின்னும் வாள், அவனை ஒரு போர் மறவன் என்று சொல்லுகிறது. அதோ பார்! அந்த அழகியோனைச் சுமந்துபோகக் கரையில் குதிரை கட்டப்பட்டிருக்கிறது. தோழி! தோழி! நம்மை நோக்கி வருகிறது. அந்தப் படகு. ஆறு ஓட்டமில்லாதிருக்கிறது. இக்கரைக்கு வந்து சேரவும் கூடும் அந்தப் படகு. வேடிக்கை பார்க்கலாம் சிறிது நேரம். பறித்த பூக்களை நாரில் தொடுத்தபடி இந்தப் பாறையில் அமர்ந்திருப்போமா? தோழி: நம் பல்லக்குக் காத்திருக்கிறது. செங்கதிர் இருளை அனுப்புகிறது. சிறிதுநேரம் தங்குவோம். பொன்னாவிரை: விரைந்து வருகிறது படகு! இக்கரைக்கு. (தோழியும் தலைவியும் பூத் தொடுத்தபடி பாறையில் அமர்ந்திருக்கிறார்கள், கீழ்க் கண்ணால் படகைப் பார்த்தபடி! தென் பெருஞ்சோலை நாட்டுப் போர் மறவனான பரிமேலழகன் பொன்னாவிரையை நோக்குகிறான். அவனின் படகு இக்கரையை அடைகிறது. அவன் துறையில் இறங்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறான். நெஞ்சும் விழிகளும், அவளின் அழகைப் பருகியபடி இருந்தன. இறங்கப் போறீங்களா? - இது படகு ஓட்டிகளின் பேச்சு. (பரிமேலழகன் இறங்குகிறான்.) பரிமேலழகன்: பெண்மணிகளே, முயற்காது வெற்றிலைம் துளிர் ஒரு கட்டு வேண்டி வந்தேன். அருகில் இருந்தால் காட்டுங்கள். பறித்துக் கொள்ளுகிறேன். பொன்னாவிரை: தென்பெருஞ்சோலை நாடுதானே உங்கள் தாய் நாடு? பரிமேலழகன்: இருந்தால் என்ன? பொன்னாவிரை: முறைதவறாது ஆட்சி நடக்கும் நாடு அது. பரிமேலழகன்: தேவையில்லாத ஆராய்ச்சி! பொன்னாவிரை: எங்கள் நாடு முறை தவறி ஆளப்படுவது! பரிமேலழகன்: இரண்டு அரசர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு; வாய்தவறி வந்த பேச்சுக்கள். பொன்னாவிரை: அரசர்க்குள் கருத்து வேறுபாடு! ஆம் அரசர் வேறு குடிகள் வேறு என்பதுண்டா? தோழி விரைவிற் சென்று அவர்கள் கேட்ட முயற்காது வெற்றிலைத் துளிர் ஒரு கட்டுப் பறித்து வா! இவர்கள் பகைநாட்டார்தாம். என்றாலும், விருந்தாக வந்தவர்கள். (தோழி போகிறாள்) பரிமேலழகன்: இரவு தொடங்கிவிட்டது. உங்கட்குப் பல்லக்குக் காத்திருக்கிறது. நான் இக்கரையில் இன்னும் இருப்பதை என் ஓடக்காரர்கள் வியப்போடு நோக்குகிறார்கள். முதியோரும் இந்நேரத்தில் இங்குக் காலங்கழிக்கக் காரணமில்லை. ஏற்ற இளம் பருவத்தினர் நாம், குழி உள்ள தட்டிலிட்ட இரசத் துளிகள் போல் - தனிமையாகப் பேசியிருக்கிறோம். மற்றவர்கள் கண்டால் என்ன நினைப்பார்கள். பகை நாட்டானிடம் பேசியிருந்தாள் என்ற பழி உங்கட்குக் கிட்டுமே என்பதை நினைத்தால் அஞ்சாத என் மற உள்ளமும் அச்சத்தால் திடுக்கிடுகிறது. வெற்றிலைத் துளிர் வேண்டாம் நான்... (தன் கையால் போகிறேன் என்று குறிக்கிறான். அவள் பதைக்கிறாள்.) பொன்னாவிரை: ஆம் ஆம். அப்படியானால் இந்தப் பாதிரி மரத்தின் சரிந்த கிளைப்புறத்தில் பதுங்கி நில்லுங்கள். பரிமேலழகன்: இல்லை இல்லை பிறர் பழியை ஆவலோடு காணக் காத் திருப்பது இந்த உலகம். அதன் பார்வை பாதிரியின் கிளையையும் அதன் தழையையும் ஊடுருவிப்பாயும் வன்மையுடையவை. பொன்னாவிரை: நான் உங்களுடன் பேச ஒத்துக் கொண்டதும் தவறு. நாமிருவரும் இத்தனை நாழிகை ஒரே இடத்தில் நின்றதும் பழிப்புக்கிடமானது. எங்கள் நாட்டின் மறமன்னர் உங்கள் நாட்டின் மன்னரையும் குடிகளையும் வேரறுக்க நினைக்கிறார். உங்கள் அரசரும் அப்படி, ஆதலால் நாமிருவரும் உருக்கி வார்த்தாலும் ஒன்று சேரமாட்டாத இரண்டு உயிர் - இரண்டு வெவ்வேறான உடல்கள், என் கைப்புறத்தில் வந்து பதுங்கிக் கொள்ளுங்கள். என் மேலாடையால் மூடிக் கொள்ளுகிறேன். தன் இருகைகளாலும் அவனை ஏந்தி அழைக்கிறான். பரிமேலழகன்: அப்படியானால் உலகினர் கண்களை மறைப்பதுதான் உங்கள் நோக்கமா? பொன்னாவிரை: பின்னென்ன? பரிமேலழகன்: என்னை வெறுப்பது ... பொன்னாவிரை: உங்களை நான் வெறுப்பது என் உயிரை வெறுப்ப தல்லவா? பரிமேலழகன்: என் போலத்தானா நீங்களும்? (இருவரும் இறுகத் தழுவி ஈருடல் ஓருயிராகக் காட்சி யளிக்கிறார்கள்.) பொன்னாவிரை: மணவாளரே, என் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள். என் வீட்டுக்கு வாருங்கள். நம் திருமணத்தை இந்நாட்டுப் பெரியார் பாராட்டுவார்கள். என் அண்ணன் என் நிலைக்குப் பெருமை அடைவார். பரிமேலழகன்: கண்ணே, அது தக்கதன்று. என் படகில் ஏறிக்கொள். தோழியிடம் உன் பெற்றோருக்குத் திருமணச் செய்தியைச் சொல்லியனுப்பு. அவர்கள் என் நாட்டிற்கு வருவார்கள். வந்து நம்மை அவர்கள் வாழ்த்திச் செல்லுவார்கள். (தோழி வெற்றிலைக் கட்டுடன் வருகிறாள்.) பொன்னாவிரை புகல்வாள்: தோழி, என் அண்ணனிடமும் பெற்றோ ரிடமும் கூறிவிடு. நான், காவிரிக்கரையில் தென்பெருஞ்சோலை நாட்டின்... பரிமேலழகன்: பரிமேலழகனை... பொன் - மணந்து கொண்டேன் என்று, பரிமேலழகன்: தென்பெருஞ்சோலைநாடு திருவயின் பெருந்தெரு என் முகவரி. இதைக் கேட்ட தோழி கண்ணீர் வடித்து, தொடுத்து வைத்திருந்த மாலையைப் பொன்னாவிரையிடம் தர, அவள் தன் மணவாள னுக்கு அணிகிறாள்; மற்றொரு மாலையைப் பொன்னாவிரைக்கு அவன் சூட்டுகிறான். அன்னப்படகு ஆற்றில் நடக்கிறது, மணமக்களைச் சுமந்து. 23 தென்பெருஞ்சோலைநாட்டில் ஒரு வீட்டில் ஊர் பெருமக்கள் கூடியிருக்கிறார்கள். மணமுரசு முழங்குகிறது. இன்னிசை முழங்குகிறது. பொன்னாவிரையும் பரிமேலழகனும் கை கோத்தபடி மன்றில் வரக் காத்திருக்கிறார்கள். எதிர்பார்த்தபடி தென்பெருஞ் சோலை நாட்டு அஞ்சி மன்னன் தேரினின்று இறங்கி மன்றைச் சிறப்புச் செய்ய வந்து சேர்கிறான், தன் குழாத்தோடு, பெருமக்கள் அரசருக்கு வாழ்த்துக் கூறி வரவேற்கிறார்கள். மன்றம் அமைதி பெறுகிறது. மணமக்கள் மன்றில் வந்து அரசருக்கும் பெருமக்கட்கும் வணக்கம் செய்கிறார்கள். அரசர் அமர்க என்று கூற, மணமக்கள் ஒருபால் அமர்கிறார்கள். மணமகள் எழுந்து, மன்னரே, பெருமக்களே! நான் பரிமேலழகரை மனமாரக் காதலித்தேன். அதன் பயனாக அவரை நான் மணந்து கொண்டேன். எங்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன். (வாழ்க என்று அனைவரும் வாழ்த்துகிறார்கள். மணமகள் சார்பில் ஒரு முதியவர் பேசுகிறார்.) மன்னரே, பெருமக்களே! மணமகள், வடபெருஞ்சோலை நாட்டு மன்னனின் முன்னாள் படைத்தலைவர் முத்தானார் மகளார்! அவர் பெயர் பொன்னாவிரையார், ஒரு நாள் தம் நாட்டின் காவிரிக் கரையிலே தோழியுடன் ஆடியிருந்தார். அன்னப் படகேறி ஆற்றில் உலவிய நம் பரிமேலழகரைக் கண்டார். இருவரும் நெருங்கினார்கள். பொன்னா விரையார் அவர் மேல் காதல் கொண்டார். அக்காதலின் பயனாக அவரை மணந்துகொண்ட பொன்னவிரையாரை நான் உங்கள் சார்பாக வாழ்த்து கிறேன், அவர்கள் நன் மக்கள் பெற்று நல் வாழ்வு வாழ்க என்று. (அனைவரும் அவ்வாறே என்று ஆரவாரித்தனர். பரிமேலழகர் எழுந்து வணங்கிக் கூறுவார்.) நான் பொன்னாவிரையார் மீது காதல் கொண்டேன். அதன் பயனாக அவரை மணந்து கொண்டேன். அரசரும் பெருமக்களும் எம்மை வாழ்த்தியருள வேண்டுகிறேன். (அனைவரும் வாழ்க என்று கூறுகிறார்கள்.) அஞ்சி மன்னர் எழுந்து அறிக்கை செய்கிறார். பெருமக்களே! மணமகனார் என் முன்னாள் படைத்தலைவர் செந் தோளர் மகனார். அவர் இன்று என் காலாட் படையில் நூற்றுவர் முதலி (நூறு காலாட்களின் தலைவர்) அவர் காவிரிக்கரையில் பொன்னா விரையார் மேற் காதல் கொண்டதின் பயனாக, நிகழ்ந்த இத் திருமணத்தை வாழ்த்துகிறேன், உங்கள் சார்பில், நல்வாழ்வு பெறுக! நன்மக்கள் பெறுக! (அனைவரும் அவ்வாறே ஆகுக என்று ஆரவாரிக்கின்றனர். இன்னிசையும் மணமுரசும் எழுகின்றன. அதன் பிறகு ஆடல் பாடல் கண் காதுகட்கு இன்பம் பயக்கின்றன. பற்பலவகைப் பண்ணியங்களும் பழவகைகளும் அறுசுவையுணவும் பரிமாறிய தலைவாழையிலைப் படையல் நோக்கி மக்களும் அரசரும் அழைக்கப்படுகிறார்கள். உணவு முடிகிறது; அடைகாய் தருகிறார்கள். அவரவர் தம்மில் கூடிப் பேசுவாரும் குந்தி உறங்குவாரும் ஆனார். மாலை நேரம் தலைகாட்டிற்று தென்றல் தன் இனிமை காட்டி உலவிற்று. முல்லை, தன் நறுமண முரசால் சோலைக்கழைத்தது உலகினரை.) 24 சோலையில் ஒருபால் பரிமேலழகனும், அவன் மனைவி பொன்னாவிரையும் பொன்னூசல் ஆடியிருக்கிறார்கள். பொன்னா விரை தன் காதலனின் தோளில் சாய்ந்தபடி பொன்னூசலின் அசைவின் இனிமையைப் புகழ்வதும். அவனைத் தொட்டுப் பயில்வதால் ஏற்படும் இன்பத்தை நுகர்வதுமாயிருக்கிறாள். அவள் பேசுகிறாள். கிளிகள் தலைசாய்த்து உற்றுக் கேட்கின்றன. குலுக்கென்று நகைக்கிறாள். தம் இனம் என்று குயில்கள் அணுகுகின்றன. அவள் கண்களைக் கருநெய்தல் மலர் என வண்டுகள் அண்டும். சோலையில் மற்றொரு பால், பொன்னாவிரையின் அண்ணன் நன்னன், யாழ்மிழற்றி இசையின்பத்தைப் பெருக வைக்கிறான். சுற்றிலுமுள்ள தன் தோழரையெல்லாம் அதைப் பருக வைக்கிறான். அவன் யாழிசையுடன், தன்குரல் கலக்கப் பாடுகிறான். தோழர் சிலர் ஆடுகிறார்கள். மற்றொருபால், பரிமேலழகனின் தங்கை பச்சைமயில் தன் வளர்ப்பு மான் குட்டிக்குத் தண்ணீர் காட்டுகிறாள், காவிரிக் கரையில் ஒரு துறையில். மான்குட்டி நீர் குடிக்கிறது. பச்சை மயில் அதன் உடலைத் தடவிக்கொடுத்துக் கொண்டு நிற்கிறாள். பொல்லாத மான்குட்டி, சொல்லாமல் ஒருபுறம் குதித்துக் குதித்து ஓடுகிறது. அதன்துடுக்குத் தனம் பச்சை மயிலுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அவள் அதனோடு ஓடுகிறாள், காற்சிலம்பு கலகல என்று ஒலிக்க ஒரு புன்னை மரத்தடியில் மான் குட்டி ஓர் இன்னிசை கேட்டு நின்று விடுகிறது. மரத்தின் பின்புறமே வந்து மான் குட்டியைப் பற்றிக் கொள்ள முயலுகிறாள் பச்சை மயில், ஆயினும் அம்முயற்சியில் சென்ற தன் எண்ணம் தடுக்கி, அங்கு எழும் இன்னிசையில் விழுகிறது. மிழற்றுவோன் யார்? - அவள் கண்கள் தேடுகின்றன. எடுத்த அடி இடையசைய யூன்றி, மற்றும் சிறிது தொலை செல்கிறாள். ஐந்தாறு தோழர்கட்கு நடுவில் ஓர் ஆணழகு கொலுவிருக்கக் காணுகிறாள். நன்னனின் வலக்கை விரல்கள் இசை எழுப்ப, இடது கையின் விரல்கள் நரம்புதோறும் ஓடி அவ்விசையைப் பண்படுத்துகின்றன. அவன் முன்னுதடு அசையக் கடையுதடு புன்னகையைச் சொரிகிறது. வானிடை மிதக்கும் பாடலின் செந்தமிழ்! பாட்டு எடுப்பு பொழுதுமலர் மணம் மருவி - நம்மேல் ஒழுகும் தென்றல் அருவி! (பொழுது) உடனெடுப்பு பொழிலிடைத் தழை யெலாம் அசையப் பொன்னிறப் பறவைமெய் சிலிர்க்கப் (பொழுது) அடி எழுதஒர் உருவிலாக் காற்றால் - நமக் கின்பமே தன்குளிர் ஊற்றால்; கழைமொழி மங்கைமலர் உறவும் - குளிர் காற்றுக்கு நிகரில்லை அன்றோ? (பொழுது) பச்சை மயில், பாட்டின் கருத்திலும் பாடும் பாணியிலும் சொக்கும்போது மான் குட்டியின் செய்கை குளறுபடி உண்டாக்கி விடுகிறது. அது துள்ளி ஓடி நன்னன் எதிரில் சென்று அவனின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்க்கிறது. நன்னன் சிறிது தொலைவில் நிற்கும் தங்கப் பாவையைக் காணுகிறான். அவள் தோற்றத்தில் வியப்படைகிறான். அவளை அவன் விரும்புகிறான். தன் விருப்பத்தை அவளிடம் கூற வழி தேடுகிறான். அந்த மான்குட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்துப் பச்சை மயிலை ஏறிட்டுப் பார்த்தான்; அப்போது அவளின் தாமரை முகத்து நடுவில் முல்லைப் பல் அழகு நகையை ஒழுகவிட்டது. நன்னன் தான் மேற் போர்த்திருந்த பட்டுப் போர்வையை எடுத்து மானின் கழுத்திற் கட்டுகிறான்; மானைஅடிமைப் படுத்த நினைப்பவன் போல் வெளிக்குக் காட்டி அதைப் பச்சை மயிலிடம் போம்படி செய்கிறான் அதுவும் அஞ்சி ஓடுகிறது பச்சை மயிலிடம். பச்சைமயில்: (மானை அணைத்து) உன் கழுத்தை இறுக்கி விடாது என்று மேல்வேட்டியை அவிழ்த்துத் தன் மார்பில் ஒற்றுகிறாள், அவள், அவனை ஒரு பார்வை பார்த்து. நன்னன் விழிகள் இன்பத்தை நுகர்ந்தன. தன் மேற்போர்வை யுடன் தன்னை நோக்கி இரண்டடி எடுத்து வைத்த பச்சைமயிலை எதிர் கொண்டோடித் தன் வேட்டியைப் பெற்றுக் கொள்ளுகிறான்.) நன்னன்: பொன்னாவிரையின் அண்ணன் நான்! பச்சைமயில்: பரிமேலழகர் தங்கை நான். நன்னன்: கருத்து? பச்சைமயில்: வேறுபாடில்லை. நன்னன்: நான் பெற்ற பேறு! பச்சைமயில்: எனவே? நன்னன்: நான் உங்கள் காணிக்கை! பச்சைமயில்: என் காதல் என்னை உண்ணப் படைக்கிறது தங்கள் பால். நன்னன்: மான்குட்டி ஓடுகிறது. பச்சைமயில்: ஆம். (இருவரும் சேர்ந்து ஓடுகிறார்கள் மான்குட்டியுடன். மான்குட்டி ஓர் மரத்தின் அடியில் நிற்கிறது. நன்னனும், பச்சையும் நாற்புறமும் நோக்குகிறார்கள்.) பச்சைமயில்: இந்த மான்குட்டி நம்மை உற்றுப் பார்த்தபடி நிற்கிறது. நன்னன்: நாம் நுகரும் இன்பத்தின் உண்மையை அது அறியாது. தனக்கு இன்றுமுதல் இரண்டு பேர்வழிகள் தலைவர்கள் என்று அது நினைத்துக் கொள்ளுகிறது. பச்சைமயில்: நம் திருமணச் செய்தியைப் பெற்றோரிடம் கூறவேண்டும். நன்னன்: ஆம்! உடனே மற்றொரு திருமண வாழ்த்து! போகலாம். பச்சைமயில்: உங்களுடன் வர எனக்கு நாணமாய் இருக்கிறது. எங்கள் வீட்டில் என் தம்பி என் தங்கை இருக்கிறார்கள் ஆதலால். நன்னன்: என் வீட்டிலும் எனக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள் - அவர்கள் எதிரில் மணக்கோலத்துடன் செல்ல எனக்கும் மனம் ஒப்பவில்லை. (இருவரும் தனித்தனியே தத்தம் பெற்றோரை நோக்கிச் செல்லுகிறார்கள். மான்குட்டி, யாருடன் செல்வது என்ற எண்ணத்துடன் நின்று தயங்குகிறது.) 25 (வடபெருஞ் சோலை அதிர்கிறது. போர்முரசு முழங்குகிறது. யானை ஓட்டுவோர் பலர் போருடையுடன் தம் தம் யானையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஐந்நூறு யானைகள் அணி வகுத்து நிற்கின்றன. ஒருபுறம் ஐந்நூறு குதிரைகள் தத்தம் தலைவரைச் சுமந்தபடி வரிசை பெறுகின்றன. ஐந்நூறு கொண்ட தேர்ப்படை, பெருவீதியை அழகு செய்கிறது. படைவீடு நிறைந்த வாள்களும் வேல்களும் போர் மறவர்களால் எடுக்கப்படுகின்றன. கணகணவென்று ஓசை வானைப் பிளப்பன. தெருக்கள் சிறப்புச் செய்யப்படுகின்றன. முதியோர் தம் மக்களைப் போருக்குப் போகுமாறு தூண்டுகின்றார்கள். புதல்வர்கள், வீழ்க, தென்பெருஞ்சோலை! வாழ்க, வடபெருஞ்சோலை! என்று வாய்விட்டு முழக்கஞ் செய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் பகைப்படை, நாட்டுப்படை என அணி வகுத்துப் பொய்ப் போர் விளைத்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள். மகளிர் போர்க்குப் போகும் படை வரிசைக்கு வாழ்த்துக் கூறத் தத்தம் வீட்டு வாயிலிலும் மாடியிலும் நிற்கிறார்கள். காலாட்படையைச் சேர்ந்த மறவர் வாள் தொங்கும் இடைக் கச்சோடு தம் பெற்றோர் பால் விடை பெறுகிறார்கள். நன்னன் தன் தனியறையில் தலைப்பாகையணிந்து சட்டை யிட்டுக் கச்சிறுக்கிக் கத்தியணிந்து இடக்கையில் பலகையேந்தித் தன் பெற்றோரிடம் தாழ்வாரத்தில் வருகிறான். தாழ்வாரத்தில் முத்தானார்ஆகிய முன்னாட் படைத் தலைவர் ஓர் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கிறார். அருகில் அவர்தம் கிழ மனைவி காட்சியளிக்கிறாள்.) நன்னன்: தந்தையே! அன்னையே, எனக்கு வாழ்த்துக் கூறுங்கள். முத்தானார்: வெற்றியோடு திரும்புக. தாய்: விழிப்போடிரு, வெற்றியோடு திரும்பு. தம்பி! உன் மனைவியிடம் விடைப்பெற்றுப் போருக்குப் போய் வா. அவள் கருவுற்றிருக் கிறாள்; உன்னைப் பிரிய வருந்துவாள். தேறுதல் கூறு. முத்தானார்: குழந்தாய் இந்த வடபெருஞ் சோலை நாட்டுக்கு நான் படைத் தலைவனாயிருந்து பெருந்தொண்டு புரிந்துள்ளேன். தம் திருக்காத்த மன்னர் என்னைப் பாராட்டாத நாள் இல்லை. நான் பெற்ற புகழை நீயும் பெறுக! நம் தலைமுறையைப் புகழுள்ள தாக்கு! வெற்றித்தார் புரள மீள்க. (நன்னன் பணிந்து போகிறான்.) (நன்னன் மனைவி தன் தோழியுடன் மணவாளனை எதிர் நோக்கியிருக்கிறாள். மகிழ்ச்சிதானே? - என்ற குரல் காட்டியபடி நன்னன் தன் மனைவியின் எதிரில் வந்து நிற்கிறான்.) பச்சைமயில்: வருக, நூற்றுவர் முதலியாரே! உங்கள் போல் ஓர் ஆடவனை என் கருவில் நீங்கள் தோற்றுவித்தீர்கள். அதனால் நீங்கள் போருக்குத் துணிவுடன் செல்லுகிறீர்கள். வெற்றியுடன் திரும்பு வதில் விழிப்புடன் இருங்கள். ஏன்? உங்களுக்கு ஒன்று நேர்ந்தால் - நன்னன்: ஆம் தெரியும். நானிறந்தால் நீ யிறக்க நேரும். உன் வயிற்றிலுள்ள மறச் சிறுவன் அல்லது மறச் சிறுமி இறக்க நேரும். வெல்க என்று வாழ்த்து. மீள்வேன் நீ மகிழ்வாய். நம் கைப்புறத்தில் குழந்தை சிரித்து விளையாடும். பச்சைமயில்: வெற்றியோடு திரும்புக மணாளரே. (நன்னன் கட்டியணைத்து முத்தம் தந்து போகிறான் பச்சைமயில் கண்ணீரோடு கணவனின் பின்னழகு பார்த்தபடி நிற்கிறாள்.) 26 (வடபெருஞ்சோலை நாட்டின் குறுங்காட்டினடுவிலுள்ள ஆலடியில் பெரியார் கிளிச்சிறை நடுவீற்றிருக்கிறார். மற்றும் அறிஞர் ஆறு பேர் பக்கலில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஆலமரத்தின் நடுவில் தட்டுப்படும் கருங்கல் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியவில்லையா என்றார் பெரியார் கிளிச்சிறை.) அறிஞர் 1: கல் ஒன்று அல்ல, இரண்டு. அறிஞர்2: கற்கள் மேடு பள்ளமின்றி வேலைதீர்ந்தவை என்று தோன்றுகிறது. அறிஞர் 3: ஆராய்ச்சி, கைவிடப்பட்டதா? அறிஞர்4: இல்லை ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஆலமரம் வெட்டப்படுகிறது. மூன்றடி நீளத்தில் கற்கள் இரண்டும் இப்போது காட்சியளிக்கின்றன. அறிஞர் 5: கற்களின் பருமன் என்ன? அறிஞர் 6: மூன்றடிக்கு மூன்றடி. அறிஞர் 1: உயரம்? அறிஞர் 2: கண்டவர் யார்? காணுவதற்குத்தான் முயற்சி நடக்கிறது. அறிஞர் 3: மண்ணுக்குள் புதைந்துள்ளபகுதி எவ்வளவு இருக்கலாம்? அறிஞர் 4: தெரியவில்லை. அறிஞர் 5: மேல் சென்றுள்ள பகுதி? அறிஞர் 6: தெரியவில்லை. அடிமரம் எத்தனை உயரமோ அத்தனை உயரம் இருக்கவேண்டும். நடுமரம் வெட்டி அகற்றப்படுகிறது. நடு மரத்தின் பருமனைக் குறைப்பது தான் நடக்கவேண்டிய வேலை. அறிஞர் 1: ஆலின் நடுவில் ஊடுருவும் கற்களிலிருந்து நமக்கு ஏதாவது ஆதாரம் கிடைக்கக் கூடுமா? பெரியார் விடையருள வேண்டு கிறேன். பெரியார் கிளிச்சிறை: உலகமக்கள் அனைவரும் உறவினர் என்பதற்கு எங்கணும் ஆதாரங்களைக் காணுகின்றேன். வட பெருஞ்சோலை தென்பெருஞ்சோலை இரண்டு இடத்திலும் உள்ள மக்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே என்பதை எதுவும் மறுக்க வில்லை. ஆயினும் இதை, உலகிற்குக் காட்டி மெய்ப்பிக்க என்னால் முடியவில்லை; காரணம் மக்கள் பண்படவில்லை. ஆலமரத்துக் கற்கள் நாட்டுமக்கள் அனைவரும் உறவினர் என்பதையாவது எண்பிக்க உதவும் என்று நம்புகிறேன். முயற்சியைக் கைவிட வேண்டாம். அதே நேரம் அரசினர் காவற்காரனும் முல்லையின் கணவனும் ஆகிய கடியன் வருகிறான். அறிஞர் 1: என்ன செய்தி கடியனே, போர் எது வரைக்கும் உள்ளது? அறிஞர் 2: போர்நிலை அறிய இவனையா பணித்தீர்கள்? அறிஞர் 3: இவன் பித்தன். அன்று அரசனும் அரசியும் கோட்டைக் கோபுரத்திலிருந்து தென்பெருஞ்சோலையைச் சீறிப் பேசி யிருக்கையில் அனைவரும் உறவினர் என்று கூறியவன். அறிஞர் 4: கொள்கையிற் பற்றுள்ளவன். அறிஞர் 5: கடியனே, போர் நிலை எப்படி? கடியன்: இந்நாட்டின் நால்வகைப் படையும் காவிரியின் வடகரையை அடைந்துவிட்டது. பகைவரின் நால்வகைப்படையும் தென் கரையை அடைந்து விட்டது விற்போர் தொடங்கியிருக்கிறது. இரு சார்பினரும் தொடுக்கும் அம்புகள் வானையே மறைக்கின்றன. வடகரையில் நம்மவர்கள் இதுவரைக்கும் நூறுபேர் மாண்டனர். பகைவர்களிலும் பலர் மாண்டிருப்பார்கள். இடையே கவண் கற்களும் சீறுகின்றன. இரு சார்பினரும் ஆற்றைக் கடக்கவும் முயல்கின்றனர். நம் நாட்டின் யானையொன்று கண்ணிழந்தது. பகைப் படையின் குதிரை ஒன்று இறந்தது. பெரியார்: பகை பகை என்கிறாய். எது பகை எவர் பகைவர்? கடியன்: மன்னிக்க வேண்டும் ஐயா. பெரியார்: அரசர்க்கு அறமுரைத்தேன். அவர் சீறினார். போருக்குக் காரணம் வடபெருஞ்சோலை மன்னர், அறவழியில் ஆட்சி நடத்த வில்லை என்று தென்பெருஞ்சோலை மன்னர் செப்பியதாகக் கேள்விப்பட்டது தான். இதற்காக இரு நாட்டு மக்களையும் போரில் இழுத்து விட்டார் வடபெருஞ்சோலை மன்னர். உடன் பிறந்தவர் தம்மில் உயிர் மாளுகின்றார்கள். போர் நடக்கும் இடம் நோக்கிப் போக வேண்டும். நாம்; மீண்டும் நம் மன்னரைக் கண்டு போரை நிறுத்தும்படி கேட்டுக் கொள்வோம். (அனைவரும் போகிறார்கள்.) 27 வடபெருஞ்சோலையில் ஓர் மன்றில் போர்நிலை பற்றிய செய்தி அறிவிக்கப்படுகிறது. அரசியல் அலுவல்காரன் ஒருவன் பொது மன்றின் நடுவில் நின்று பேசுகிறான். ஊர்ப் பொதுமக்கள் கேட்கிறார்கள். வடபெருஞ்சோலை நாட்டுமக்களே, நாட்டு மன்னர் நம்மை நல்லபடி நடத்தவில்லை என்று அந்தத் தென்பெருஞ்சோலை மன்னன் செப்பினான் அன்றோ?... அங்கிருந்த பெரியார் கிளிச்சிறை குறுக்கிட்டு ‘எப்போது செப்பினான் அப்பா? - என்கிறார். அலுவல்காரன்: சென்ற திங்களில், செப்பினான். அதனால் நம் அரசர் அகம் துடித்தார். அந்தத் தென்பெருஞ்சோலையானின் வாய்க் கொழுப்பை அடக்க எண்ணினார்; போர் தொடங்கினார். பெரியார்: குறுக்கிட்டு அந்த மன்னர் நம் மன்னரைப் பழித்தால் நம் மன்னர் தனி முறையில் அவரை ஏதாவது செய்திருக்கலாம், அப்பா. அதன்பொருட்டு ஏதுமறியாத நாட்டு மக்களை அந்நாட்டு மக்களுடன் போர் செய்யத் தூண்டுவானேன் அப்பா. அதுவுமன்றி அம் மன்னர் நம்மன்னரைப் பழித்ததாகக் கூறியவர் யார்? ஆய்ந் தோய்ந்து பார்க்க வேண்டாமா அப்பா. அலுவல்காரன்: குன்றூர்ப் பண்ணையாளிடம் அந்த மன்னன் கூறினான். அந்தக் குன்றூர்ப் பண்ணையாள் நம் மன்னரிடம் கூறினான். ஆதலால் நம் படைகிளம்பியது. காவிரியாற்றின் கரையை அடைந்தது. பகைப் படையும் தென்கரையில் வந்து எதிர்த்தது. தொடங்கினார்கள் விற்போர். எதிரிகளில் மிகப்பலர் அழிந்தார்கள். தொடங்கியது கவண் போர். எதிரிகள் மிகப் பலர் அழிந்தார்கள். எதிரிகளின் யானைகள் பல மாண்டன. குதிரைகளில் பல மாண்டன. (அதன் பின் காவிரியாறு கடந்து நம் படை தென் பெருஞ் சோலை நாட்டின் உட்புகுந்து விட்டது! ஒழிகின்றார் தென்பெருஞ் சோலை மக்கள். வெற்றி நமக்கே! வாழ்க மாறன் திருக்காத்த மன்னர்.) பெரியார் கூறுகிறார்: தென்பெருஞ்சோலை மக்களின் அழிவு வடபெருஞ்சோலையின் அழிவல்லவோ அப்பா. அனைவரும் உறவினர் அன்றோ அப்பா. 28 (செய்தி முடிகிறது. பெரியார் கிளிச்சிறையாரின் சொல்லை யாரும் பொருள்படுத்தவில்லை. ஊர் மக்கள் தத்தம் வீடு செல்கிறார்கள். பெரியாரும் அறிஞர்களும் போர் நடக்கும் இடநோக்கி நடக்கிறார்கள்.) 29 (தென்பெருஞ்சோலை எரிகிறது. எரி வானளாவுகிறது, தழை மரங்கள் எரிகின்றன. கூரையின் கொள்ளிகள் மேலேழுகின்றன. மக்கள் அழுகுரல் கேட்கிறது. மரம், கல் மூங்கில் வெடிக்கின்றன. வடபெருஞ்சோலை மக்கள் காவிரியாற்றின் இக்கரையிற் கூடி நின்று தென்பெருஞ்சோலையின் தீயக் காட்சியைக் காணுகின்றார்கள். சிலர் தத்தம் வீட்டு மாடிமேல்நின்று நோக்குகிறார்கள். (தென்பெஞ்சோலை மக்கள் அனைவரும் அழிந்து விடுவார் களோ என்று வடபெருஞ்சோலையினர் நடுங்குகிறார்கள். ஐயோ என் உறவினர் நிலை என்ன ஆயிற்றோ என்று ஏங்குகிறார்கள் பலர். என் பெற்றோர் இறந்தாரோ என்று நடுங்குவார் சிலர். என் தங்கையை இப்போது தானே திருமணம் செய்வித்துத் தென்பெருஞ் சோலை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன். எரிகிறதே தென் பெருஞ் சோலை. எரிகிறதே என் வயிறு என்று கண்ணீர் விட்டு கதறுவான் தந்தை தாயற்ற இளைஞன் ஒருவன். மகளுக்காக அழுவாள் ஒருதாய்; தாய்க்காக அழுவாள் மகள். தம்பியை எண்ணி அழுவான் அண்ணன்; அண்ணனை எண்ணி அழுவான் தம்பி.) தென் பெருஞ்சோலையிலுள்ள ஒவ்வொருவரையும் எண்ணி வடபெருஞ்சோலையினர் அனைவரும் அழுது துடித்தார்கள். இக்காட்சியை, இவ்விரக்க குரல்களைப் பெரியார் கிளிச் சிறையாரும், மற்றும் உடனிருந்த அறிஞர்களும் நேரிற்கண்டும் கேட்டும் உள்ளம் துடிக்கிறார்கள். அனைவரும் உறவினர்! அனைவரும் உறவினர்! என்று முழக்கம் செய்கின்றனர். போர் நடக்கும் இடத்தை நாடி மேலும் நடக்கின்றார்கள். வடகரையை அவர்கள் அடையும்முன், போர் நிலை கூறுவோர் எதிர்ப்படுகிறார்கள். அவர்கள் கூச்சலிட்டுக் கூறுகிறார்கள்: நம் படை தென்பெருஞ்சோலையின் ஒரு பகுதியைத் தீக்கிரை யாக்கியது. எதிரிகள் நூற்றுக்கணக்காக மாண்டனர். ஆயினும் துன்புறுத்தப்பட்ட தென்பெருஞ்சோலை நம் படையை ஒற்றுமையுடன் எதிர்க்கிறது ஆதலால் நம் படை பின்வாங்கிற்று! (பெரியார் கிளிச்சிறையார் அது கேட்டுத் தம் அறிஞரிடம் கூறுகிறார்!) (நண்பர்களே, வடபெருஞ்சோலையின் படை பின் வாங்குகிற தாம். அரசரை அரண்மனையில் காணமுடியும் விரைவில். ஆதலால் நாம் அரண்மனையிற் காத்திருப்போம். அனைவரும் போகிறார்கள். 30 (அரண்மனையில் திருக்காத்த மன்னனும் அமைச்சனும் படைத் தலைவனும் தலையாய அலுவல்காரரும் அமர்ந்திருக்க, எதிர்பார்த்த படி, பெரியார் கிளிச்சிறையாரும் அறிஞர்களும் வருகிறார்கள். அரசர் இருக்கை காட்ட, அனைவரும் அமர்கிறார்கள்.) அரசர்: சொல்ல வந்ததென்ன? பெரியார் கிளிசிறை பேசுகிறார்: அரசே, இப்போது நடை பெற்ற போரினால் என்ன பயன் கண்டோம்? வடபெருஞ் சோலை மக்கள் பலரை இழந்தது. தென்பெருஞ் சோலையிலும் தீர்ந்தனர் மிகப் பலர். இதனால் வடபெருஞ்சோலையும் தென்பெருஞ் சோலையும் தம் மக்களில் பலரை இழந்தன. அதனால் மக்களுலகம் தம் மக்கள் பலரை இழந்தது. தென்பெருஞ்சோலை தீப்பட்டெரிந்தபோது வடபெருஞ் சோலை மக்கள் ஐயோ எம்முறவினர் நிலை என்ன ஆயிற்றோ என்று கதறினார்கள். அங்கு இன்னல் உறுகின்றார்களோ என இங்குள்ள அவருறவினர் ஏங்கித் துடித்தனர். அனைவரும் உறவினர் அன்றோ? இருபுறத்திலும் இந்தப் போரில் மக்கள் இன்னல் உறுகையில் உயிரை இழக்கையில் அறிவுலகம் இரங்கிற்று ஏன்? அனைவரும் உறவினர் அன்றோ? இனியும் போர் நிகழாமலிருக்க வழி தேடியருள வேண்டுகிறேன் தங்களை! நீங்கள் யார்? தென்பெருஞ்சோலை மன்னர் யார்? உறவினர் அன்றோ? போர் வேண்டாம்! மக்கள் மாய்தல் வேண்டாம்! போருக்குக் காரணம் என்ன? தென்பெருஞ்சோலை மன்னன் தங்களைத் திட்டினார் என்று தாங்கள் கேள்விப்பட்டதுதான். தங்களைத் திட்டியது உண்மையா? உண்மை என்றே வைத்துக் கொள்வோம். தனிமுறையில் அதை நீவிர் இருவரும் தீர்த்துக் கொண் டிருக்கலாம். இனிய முறையில் அந்தச் சிக்கலைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம். பெருமக்களை இத்தகைய இன்னலில் போய்ப் பாம்பின் பல்லிடுக்கில் ஏன் இழுத்து விடவேண்டும்? போர் வேண்டாம். மாய்தல் வேண்டாம். இதையே தென்பெருஞ்சோலை மன்னர்க்கும் யாம் போய்ச் சொல்ல, உத்தரவு கொடுங்கள்; அனைவரும் உறவினர். மன்னன்: கிளிச்சிறையாரே, மக்கள் அனைவரும் உறவினர் என்பது கற்பனை. வடபெருஞ்சோலையினரும் தென்பெருஞ்சோலைத் தீயரும் உறவினர் என்பதில் சிறிது உண்மையிருப்பினும் அது இருநாட்டிற்கும் ஏற்பட்டுள்ள போரை நிறுத்திவிடாது. கிளிச்சிறை: இரு மன்னரும் உறவினர்; குருதிக் கலப்புள்ளவர்கள் என்பது மெய்யாய்விட்டால் போர் நிறுத்தப்படும் என்று எண்ணுகிறேன். மன்னன்: மெய்யாகும் போது பேசவேண்டிய பேச்சு அது. கிளிச்சிறை: இருநாட்டு மக்களும் குருதிக் கலப்புள்ளவர் என்பது எடுத்துக் காட்டப்பட்டால் போர் நிறுத்தப்படும் என்று எண்ணுகிறேன். மன்னன்: ஐயமேது? கிளிச்சிறை: இருநாட்டினர் அனைவரும் உறவினர் என்று முடிந்தால் உலக மக்கள் அனைவரும் உறவினர் என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். மன்னன்: இருக்கலாம் கிளிச்சிறை: போர் நிறுத்தப் பட்டதா தற்போது? மன்னன்: நம்மைப் பொறுத்த வரைக்கும்! கிளிச்சிறை: விடை தருக! மன்னன்: நன்று (போகிறார்கள்) 31 (தென்பெருஞ்சோலையின் அஞ்சி மன்னன் தன் அமைச்சர் முதலானோருடன் பெரியார் கிளிச்சிறைக்கும் உடன் வந்த அறிஞர் கட்கும் காட்சியளிக்கிறான்.) கிளிச்சிறை: அரசே, உலகில் அனைவரும் உறவினர். வடபெருஞ் சோலை மன்னரும் தாங்களும் குருதிக்கலப்புள்ள உறவினர். இவ்விரு நாட்டுமக்களும் பிரிக்கமுடியாத உறவினர். உலகில் ஒரு தனி மாந்தனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்கள் உலக மக்கள் அனைவர்க்குமே ஏற்படுவதாகும். வடபெருஞ்சோலையும் தென்பெருஞ்சோலையும் இழந்த மக்களை எண்ணி உயிருட னிருக்கும் இருநாட்டு மக்களும் இன்று வருந்தவில்லையா? ஆதலால் நிகழ்ந்த போருக்கு நாமெல்லோரும் வருந்துவோமாக, இறந்த மக்கள் பொருட்டு நாம் அனைவரும் வருந்துவோமாக. இனியும் இவ்வகைப் போர் நிகழாதிருக்க வேண்டும்; ஏற்ற சூழ்நிலையை உண்டாக்குவோம். போர் நிகழாதிருக்க அருள் புரிய வேண்டும். இதை நான், இரு நாட்டு மக்கள் பேராலும் தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்; அறிவுலகம் தங்களைக் கேட்டுக் கொள்கிறது. அஞ்சி மன்னன்: அப்படியா ... ... ... ... இருந்தாலும் ... ... ... ... இன்னது சொல்வது என்று தோன்றாமல் அஞ்சி மன்னன் மயங்குகிறான். கடைசியாய் ஒரு முடிவுக்கு வருகிறான்; அவன் கிளிச்சிறையிடம் கூறுகிறான்: பெரியாரே, நான் உங்கள் வேண்டுகோளின்படி போர் செய்யாமல் இருந்துவிடுகிறேன். நீங்கள் உலகமக்களின் நன்மையைக் கோரி மாறன் திருக்காத்த மன்னருக்கும் இப்படியே கூறி, அவரையும் போரிடாமல் கட்டுப்படுத்த வேண்டுகிறேன். கிளிச்சிறை: மகிழ்ச்சி மன்னரே, தாங்கள் போரிடாதிருந்தால் அவரும் அவ்வாறே இருந்துவிடக்கூடும் என்று நம்புகிறேன். அஞ்சி: உத்தரவு பெற்றுக் கொள்ளுங்கள். ஆயினும் என் அரண்மனை யில் இன்று விருந்துண்டு போக வேண்டுகிறேன். கிளிச்சிறை: அவ்வாறே ஆகட்டும். (அரசினர் அலுவல்காரர் சிலர் கிளிச்சிறை முதலியவர்களை அழைத்துச் செல்லுகிறார்கள். அவர்கள் போனபின் அஞ்சி மன்னனும் அமைச்சரும், படைத்தலைவனும் பேசுகிறார்கள்.) அரசன்: தென்பெருஞ்சோலையின் சிறு பகுதி தீக்கிறையாயிற்றுப் பகைவரால்! நம் படையில் பெரும்பகுதி அழிந்தது பகைவரால்! உற்றாரை இழந்து ஊர் அழும் அழுகை தீர்ந்த பாடில்லை இன்றுவரை! போரை நிறுத்த வேண்டுமாம் நாம். படைத்தலைவன்: நேரத்திற்கேற்றபடி அவர்கட்கு விடை கூறினீர்கள். அமைச்சர்: நம் படையை நாம் பெருக்க வேண்டும். அதற்குச் சில மாதங்கள் ஆகும். அதன் பொருட்டு இந்த வடபெருஞ்சோலை ஆட்களுக்கு நல்லவகையில் நம் அரசர் விடைகூறினார். நம்பிக் கொண்டிருக்கட்டும் அந்த வடபெருஞ்சோலை மன்னன். இதையே, இதையே அவன் நம்பிப் போர் முயற்சியில்லாமல் தூங்கட்டும். நம் படையைப் பெருக்கிக்கொண்டு, திடீரென்று வடபெருஞ்சோலை மன்னனையும், மக்களையும் தொலைப் போம். தென்பெருஞ்சோலையின் அஞ்சிமன்னர் கொடி வடபெருஞ் சோலையில் வானளாவிப் பறக்கட்டும். அஞ்சி: அவ்வளவுதான்! (செல்லுகிறார்கள்) 32 (தென்பெருஞ்சோலையினின்று ஓர் படகு நிறைய மக்களைச் சுமந்தபடி வடபெருஞ்சோலைக் கரையை அடைகிறது. வடகரையில் நன்னன் அவன் மனைவி பச்சைமயில், நன்னனின் தம்பிமார்; நன்மானன், நன்மார்பன்; நன்னனின் தங்கைமார்; பொன்கிளை, பொன்மான் - ஆகிய அறுவரும் ஆவலுடன் வரவேற்கிறார்கள்.) படகிலிருந்து பரிமேலழகன், அவன் மனைவி பொன்னாவிரை, பரிமேலழகனின் தம்பிமார்; பரியூர் வள்ளல், பரிமேற்பரிதி, பரிமேலழகனின் தங்கைமார்: பச்சைக்கிளி, பச்சைக் கொடி ஆகிய ஆறுபேறும் இறங்குகிறார்கள்.) நன்னன் முதலியவர்கள்: நலந்தானே! நலந்தானே! பரிமேலழகன் முதலியவர்கள்: நலந்தானே! நலந்தானே! நன்னன்: போரில் தப்பினோம். வாழ்கின்றோம் மைத்துனரே. பரிமேலழகன்: வாழ்கின்றோம் மைத்துனரே. நன்னன்: தங்கை பொன்னாவிராய்! போருக்குப் பின்னும் உன் அத்தானை நீ பெற்றாய். மகிழ்ச்சியம்மா! (அன்பாகப் பார்த்து மகிழ்கின்றார்கள் அண்ணனும் தங்கையும்.) பரிமேலழகன்: தங்கை பச்சைமயிலே! உன் அத்தானோடு உன்னைக் காண மகிழ்ச்சியம்மா! (தங்கை தமயன் மகிழ்ச்சிப் பார்வை! நன்மானன் கண்கள், பொன் கிளையின் பார்வையில் பட்டுத்தெறிக்கின்றன. பொன்கிளை நாணி முகம் கவிழ்கின்றாள். அவள் கடையுதடு மாணிக்கம் சிதறுகின்றது! பரிதிமேல்வள்ளல் பச்சைக்கிளி முகம் பார்த்துக் கண்கூசுகிறான். பச்சைக்கிளியின் முத்துப் பற்கள் காதல் ஒளியைக் கக்குகின்றன. நன்மார்பன் நடுங்குகின்றான் பச்சைக்கொடியின் அச்சுமுகம் கண்டு! பச்சைக் கொடி புன்னகைமின்னித் தன் காதலைக் குறிப்பிடுகிறாள். பரிமேற்பரிதி, கொடியிடை துவள நிற்கும் பொன்மானைக் கண்டு நெஞ்சைக் கப்பணமாக்குகின்றான். பொன்மான் உள்ளம் தன்னை பரிமேற்பரிதிக்குக் காணிக்கையாக்குகின்றது. அனைவரும் தேர்களில் ஏறி வடபெருஞ்சோலை நன்னன் வீடு சேர்கின்றார்கள்.) 33 வட பெருஞ்சோலையில் நன்னனின் பெருமாளிகை அன்றிரவு வெண்ணிலவின் ஒளியில் விளக்கம் அடைகிறது. அதன் பலகணிகளின் உட்புற நோக்கித் தென்றல் புகுந்து இனிமை உதவுகின்றது. இன்பத்தை நுகர்ந்தபின் ஆழ்ந்த தூக்கத்தைத் தழுவியிருக்கும் நன்னனையும் பச்சை மயிலையும் அத்தென்றல் வாழ்த்தியுலாவியிருந்தது. அவ்வாறே பரிமேலழகனும் பொன்னாவிரையும் தூங்கும் கட்டிலில் தென்றல் அவர்களின் தூக்கம் கலையாமல் விசிறிக் கொண்டிருந்தது. ஆயினும் நன்மானனைக் காதல் நினைவிலிருந்து மீட்க அத்தென்றலால் முடியவில்லை. விழித்திருக்கும் அவனைத் தூக்க உலகில் சேர்க்க அத்தென்றலால் முடியவில்லை. நன்மானன் பச்சைக் கிளியின் உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் தான் கண்ட அழகைத் தன் மனக்கண்ணால் மீண்டும் மீண்டும் சுவைத்துக் கிடந்தான். தன் தனிமையைத் திட்டினான். குளிர்ந்த தென்றல் படுத்தும் தொல்லையை அவனால் பொறுக்க முடியவில்லை. அரண்மனையை அடுத்த மலர் வனத்துக்கு ஓடினான். புன்னைமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த திண்ணையை அடைந்தான். â©iz ngRtJ nf£»wh‹.; மைத்துனரே உங்கட்கும் தூக்கம் வரவில்லையா? நன்மானன்: யார்? பரிமேல் வள்ளலா? திண்ணையில் புரள்வானேன் இந்நேரத்தில்! பரிமேல் வள்ளல்: என்ன இருப்பினும் எனக்கு இது புதிய இடந்தானே? (இருவரும் தம் மனநிலைக்குப் புறம்பான செய்தி பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதேநேரத்தில் தேன்மொழி என்னும் தோழியும் பச்சைக் கிளியும், பொன்கிளையும் அங்கு வருகிறார்கள்.) பச்சைக்கிளி: ஏன்தோழி! என் அண்ணனோடு யார் பேசியிருப்பவர்? தோழி: நன்மானன் நன்னன் இருக்கிறாரே... பச்சைக்கிளி: தெரியாதா என்ன? அவர் தம்பி! நாம் ஏன் இங்கு வந்தோம். தோழி: தூக்கம் வரவில்லை. சோலைக்கு வா என்றவள் நீ தானே! பச்சைக்கிளி: சொன்னதுண்டு. அவர் இந்நேரத்தில் இங்கிருப்பார் என்று எனக்கு எப்படித் தெரியும்? பொன்கிளை: எப்படி எப்படி? என்னைப் பார்த்துப் பேசு. நீ தானே தெரிவித்தாய் சற்றுமுன், உன் அண்ணனும் என் அண்ணனும் சோலையில் இருக்கிறார்கள் என்று! தோழி: அப்படியானால் தனியாக நீ சோலைக்கு வந்திருக்கிறாய் சற்றுமுன். உள்ளத்தை ஏன் மறைக்கிறாய் பச்சைக் கிளியே? நன்மானனைக் கண்டது முதல் உன் நிலை இன்னபடி என்று எனக்குத் தெரிகிறதே. அவர் போலப் படம் வரைந்தாய்; வரைந்த படத்தை வாரியணைத்தாய். பச்சைக்கிளி: நான் போகிறேன். (வருத்தத்துடன் பச்சைக்கிளி போகிறாள்.) அவளைத் தோழி பின் தொடர்கிறாள்) தோழி: நான் சொன்னேன் என்று வருத்தமா?.... (இந்த நிலையை உற்றுநோக்கி இருந்த நன்மானன் பரிமேல் வள்ளலை விட்டுப் பிரிந்து அங்கே வருகிறான்.) நன்மானன்: யார்? njhÊah?அங்கே யார்? தோழி: தங்கள்மேல் உயிர்வைத்திருக்கும் பச்சைக்கிளி. நன்மானன்: இது நீ தொடுத்த புகழ்மாலை. தோழி: அப்படியானால், பச்சைக்கிளி தங்களை வெறுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நன்மானன்: பச்சைக்கிளி பேசவேயில்லை! அப்படித்தான் நினைக்கிறேன். பச்சைக்கிளி: நான் பேசவேண்டியதில்லை; நீங்களே என் மீது பழி போடுங்கள். (கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுகிறாள் பச்சைக்கிளி.) நன்மானன்: பச்சைக்கிளி என்னுயிர் என்று நான் நினைப்பதை எடுத்துச் சொல்ல இங்கு எனக்கொரு தோழன் இல்லை. பச்சைக்கிளியின் வருத்தத்தைத் தீர்க்க எப்படி என்னால் முடியும்? தோழி: வாழ்க மணமக்கள்! (அவனும் நடந்தான், அவளும் நடந்தாள் தம்மையறியாமல்! மயங்கினாள் தோழி.) தோழி: நான் பொன்கிளையை அழைத்து வந்து விடுகிறேன். நீங்கள் பேசிக்கொண்டே போகலாம். (தோழி திரும்புகிறாள். திண்ணையருகில் பொன்கிளையும் பரிமேல் வள்ளலும் பேசியிருக்கிறார்கள்.) தோழி: நான் வரலாமா? பரிமேல் வள்ளல்: ஏன்? தோழி: தங்கட்குத் திருமண வாழ்த்துச் சொல்ல! பொன்கிளை: அப்படியானால் நாளைக்குத் திருமண விழா. தோழி: ஒன்றுக்கு இரண்டு பரிமேல் வள்ளல்: அப்படியா? நன்மானன் பச்சைக்கிளி நன்மணம் வாழ்க. தோழி: நான் போகிறேன். மெதுவாக வாருங்கள். (போகிறாள்) 34 நன்மானன், பச்சைக்கிளி ஆகிய மணமக்கள், ஓரிணையாகவும், பரிமேல் வள்ளல், பொன்கிளை ஓரிணையாகவும் மணமன்றில் காட்சி யளிக்கிறார்கள். மணமன்றில் பெரியவர்களும் அறிஞர்களும் மன்னரும் நிறைந்திருக்கிறார்கள். நன்னனும் பச்சைமயிலும் மன்றினரைக் கை கூப்பி, மணமக்களுக்கு வாழ்த்துக் கூறும்படி கேட்டுக் கொள்ளுகிறார்கள்.) வடபெருஞ்சோலை மன்னன் மாறன் எழுந்து மணமக்களைப் பாராட்டுகிறான்: மன்றினரே! நன்மானன், நம்நாட்டு நூற்றுவர் முதலி என்பதை நீங்கள் அறிவீர்கள், பொன்கிளை அவர் தங்கை! போர் நிறுத்தப்பட்டவுடன் நலம் உசாவ வந்த பச்சைக் கிளிமேல் நன்மானன் காதல் கொண்டார். பச்சைக்கிளியாரும் அவர்மேற் காதல் கொண்டார். அது போலவே, பரிமேல் வள்ளல் என்ற தென்பெருஞ்சோலை நூற்றவர் முதலியாகிய பரிமேல் வள்ளல், பொன்கிளை ஆகியவர்கள் தம்மில் உள்ளம் ஒத்துப் போனார்கள். நன்மானன் பொன்கிளை, என் நாட்டார். பரிமேல் வள்ளல் பச்சைக்கிளி பகைநாட்டார். இன்று இவர்கள் மட்டும் உறவினர். (அனைவரும் உறவினர் - என்ற குரல் மன்றின் நடுவிலிருந்து எழுகின்றது. பெரியார் கிளிச்சிறை எழுகின்றார்.) கிளிச்சிறை: அந்நாட்டாரும் இந்நாட்டாரும் பிரிக்க முடியாத உறவினர். இதை இந்த இரண்டு திருமணமும் நமக்கு நினைவுறுத்துகின்றன. (அனைவரும் உறவினர் என்று பெருங்குரலில் கூறுகிறார். அனைவரும் அவ்வாறே கூறுகிறார்கள். மணவிழா முடிவுபெறுகிறது. அனைவரும் உணவருந்துகிறார்கள். நன்னனும் பச்சைமயிலும் தாம் முன்னின்று முடித்த திருமண நிகழ்ச்சியைக் குறித்துப் பேசி இரவு பத்து மணிக்குத் தூங்கப் போகிறார்கள். 35 நன்மானன் பச்சைக்கிளி ஆகிய புதுமணக்களும், பரிமேல் வள்ளல் பொன்கிளை ஆகிய புதுமண மக்களும் இன்பம் நுகர்ந்தபடி அந்த இரவே வழிகூட்டி அனுப்புகிறார்கள். காலைப் பொழுது தோன்றுகிறது. இளங்கதிர் சிறிது சூட்டோடு காட்சியளிக்கிறது. 36 வடபெருஞ்சோலைத் தெருக்கள்தோறும் பறை முழக்கம் கேட்கிறது. அரசினர் கட்டளை போர் மறவர்களை நோக்கிப் பறக்கிறது. தென்பெருஞ்சோலையின் படை வடபெருஞ் சோலைமேல் எழுகின்றது என்ற அறிவிப்புக் கேட்டு எங்கும் அமைதியின்மை காணப்படுகிறது. படைவீடுகளில் படைத்தலைவர்களும் மறவர்களும் தடதடவென்று வேலை பார்க்கிறார்கள். ஒருபுறம் யானைப்படை, மற்றொருபுறம் குதிரைப்படை, இன்னொருபுறம் தேர்ப்படை, ஒழுங்கு செய்யப்படுகின்றன. காளையர், போரிற் கலந்துகொள்ள அரசரின் ஆணைகேட்க ஓடுகிறார்கள். படைப் பழக்கம் ஒத்திட்டுப் பார்க்கப்படுகிறது பெருவெளியில் நன்மார்பன் தன் அண்ணன்மார்களான நன்னன், நன்மானன் ஆகியோரிடம் விடை பெற்றுக்கொண்டு அரசரிடம் போகிறான். வழியில் நன்னன் மனைவி யும், தன் அண்ணியுமான பச்சைமயில், தன் சிறிய தங்கையான பச்சைக் கொடியுடன் கூடத்தில் நிற்கிறாள். - குயில் (திங்களிதழ்), புதுச்சேரி; 15.6.1948; 15.7.1948; 15.8.1948; 15.10.1948 குறிப்பு : இத்தொடர் கதை முற்றுப் பெறவில்லை. 1 முதல் 36 வரையிலமைந்த கதைத் தொடர்ச்சி வரிசை எண்கள் குயில் இதழில் முறையாகக் குறிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக 7, 19, 28, 35 ஆகிய எண்கள் இல்லை. கதைத் தொடர்பைக் கருத்தில் கொண்டு மேற்சுட்டிய எண்களைத் தொகுப்பாசிரியர் தந்துள்ளார்.  45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் பெற்றவள் ஆலஞ்சாலையில் ஆலிலை பறித்துப் போட்டுக் கொண்டே போகிறாள். மகள், கொத்துக்களினின்று இலைகளை இணுக்கிக் கொண்டிருக்கிறாள். தாய் கண்ணுக்கு மறையும் தொலைவில் போகிறாள். பெண்ணாள் அண்ணாந்து பார்த்து நிற்கிறாள். அன்பில் இணைந்த இரண்டு கிளிகள் ஆலின் கிளையில் உட்கார்ந்திருக்கின்றன. அவள் கண்ணையும் மனத்தையும் அவைகள் கவர்கின்றன. அவள் மங்கைப் பருவம் உடையவள்; அவள் பெயர் கங்குற் பிறை, தன் தோழனை அடுத்துள்ள சிற்றூருக்குச் செல்ல விடுத்துத், தனித்து வருகின்றான். தங்கப் பொறை. அவன் அவளைப் பார்க்கிறான். அவன் கண்கள் இன்பத்தை யடைகின்றன. அவளின் பின்புறமாக ஒரு குரங்கு வந்து அவள் துகிலைப் பற்றி இழுக்கின்றது. அவள் திரும்பிப் பார்க்கின்றாள். அவள் கண்கள் துன்புறுகின்றன. ஆயினும் அவள் பார்வை தங்கப்பொறை மேற் செல்லுகிறது. அன்பால் இணைந்த கிளிகளைப் பார்த்திருந்த கங்குற் பிறையின் கண்களில் பொருள் நிறைந்த குறிப்பிருந்தது. தலை குனிந்தாள். கீழ்க் கண்ணால் அவனைப் பார்க்கிறாள். சிறிது நேரம் இருவரும் ஊமைகளாய்த் திகழ்ந்தார்கள். குரங்கு அவளை மேலும் நெருங்குகிறது. அடுத்த நொடியில் தேன்கூடு கிழித்தது போல் அவள் உதடுகள் பிரிந்தன. மொழி தேன்போல மொழிவாள்! இந்தக் குரங்கைத் துரத்துங்கள்! எனக்கு இலை கொடுப்பாயா என்று கேட்டான் தங்கப்பொறை. ஒரு கட்டு என்றாள் கங்குற்பிறை. தாய் வந்துவிட்டாள். குரங்கைத் துரத்திக் கொண்டு போய்விட்டான் நீங்கா மனத்துடன். II ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் உட்பட நூறு சிற்றூர் கொண்ட அந்த வட்டாரத்தின் முன்னேற்றம் வியப்பையளிப்பதாகும்! அதற்குக் காரணம் தமிழ் முன்னேற்றம்! தமிழ் முன்னேற்றத்திற்கு ஒருவர் காரணர். அவர் பெயர் திண்ணைப் பள்ளிக்கூடக் கண்ணப்பர். நூறு சிற்றூர்கட்கும் கண்ணப்பர் கண் ஒப்பார் என்பார் எவரும். தமிழ் தந்து எங்கட்கு உயிர்தந்தார் என்பர் அனைவரும் கண்ணப்பர் தமிழ் தந்தார், வாழ்வு தந்தார் எமக்கு என்பர் எல்லோரும். வேலஞ்சேரி அதோ கொள்ளைக்காரரால் வளைந்து கொள்ளப் படுகிறது. கற்கள் நாற்புறமிருந்து பறந்து வருகின்றன. வேலஞ்சேரி மக்கள் தோல்வியடைகிறார்கள். அவர்கள் தத்தம் வீடுகளில் புகுந்து கதவுகளைச் சாத்திக் கொள்ளுகிறார்கள். கண்ணப்பர் கடத்திச் செல்லப் படுகிறார். அவர் கைகள் பின்னால் கட்டப்பட்டன. கள்வர் தலைவன் வேலஞ்சேரிக்கு ஓலையனுப்புகிறார். நூறாயிரம் வெண் பொற் காசுகள் ஆலஞ்சாலையில் பட்ட மரத்தின் அடியில் வைக்கப்படவேண்டும். இல்லையாயின் மூன்று நாள் நடுப்பகல் கண்ணப்பர் தலைமட்டும் பட்ட மரத்தடியில் இருக்கும். இது இரிசு கட்டளை. கள்வர் பட்டம் போகிறது. இரிசு என்னும் கள்வர் தலைவன் போகிறான். உடன் கண்ணப்பர் கவிழ்ந்த முகத்துடன் பின் கட்டிய கையுடன் நடக்கிறார். ஆயினும் கண்ணப்பரின் நிலைக்கு வருந்து முகத்தோடு ஒருவன் சிறிது தொலைவாகவே நடந்து பின் தொடர்கின்றான். அவன் பெயர் ... ... ... ... ... ... (கதை முற்றுப்பெறவில்லை)  எதிர்பாருங்கள்! எதிர்பாருங்கள்!! 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் என்ற சிறந்த தமிழ்நாவல் (btËÆLnth®: பாரதிதாஸன்) இதில் உயர்சாதிக்காரர்களின் இறுமாப்பும், வைதீகர்களின் அட்டூழியமும், தகுதியற்றவர்கள் பதவி பட்டங்கட்குப் போட்டி போடும் மோகமும், விதவைகளை இழிவுபடுத்தும் பேதைமையும், வயதுசென்ற கிழவன் திருமணமகளுக்குத் தரகராக வீடு தேடிச் சென்று தாலிகட்டும் விநோதமும் மிகத் தெளிவாக வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும், வாரி வயலார் என்றொரு மனிதர் கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப, சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்துப் பின் இறுதி யில் தோல்வியடைந்து தஞ்சமடைந்த விவரங்களும் அவ்வப்போது குமரன் சண்டமாருதம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த அழகிய கட்டுரைகளும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் முதல் தேதி இந்நாவல் வெளிவரும். விலை ரூபாய் ஒன்று. தபால் கட்டணமில்லை. வி.பி. அனுப்ப முடியாது. வேண்டு வோர் முன்பணம் அனுப்பிப் பெயரைப் பதிவு செய்து கொள்ளவும். வியாபாரிகட்குத் தக்க கமிஷன் கொடுக்கப்படும். விலாசம்: V.R.nfhghš, நெ. 100, காளத்தீவரன்கோயில்வீதி, புதுச்சேரி. F.I. - புதுவை முரசு, 21.3.1932 