பாவேந்தம்9 உரைநடை நாடக இலக்கியம்-2 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 9 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 344 = 376 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 235/- கெட்டி அட்டை : உருபா. 285/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  நூன்முகம் தமிழில் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் இருந்தமை தொல்காப்பியத்தால் (999) அறியப்படுகிறது. முத்தமிழில் மூன்றாவது நாடகம். முதலிரண்டும் கலந்தது நாடகம். சங்க இலக்கியத் தில் நாடகம் நிகழ்ந்தமைக்கும், மக்கள் விரும்பிப் பார்த்தமைக்கும் சான்றுகள் உள. நாடக மகளி ராடுகளத் தெடுத்த எனப் பெரும் பாணாற்றுப் படையும் (55) பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் எனப் பட்டினப்பாலையும் (113) நாடக மகளிர் ஆடுகளத்தையும், மக்கள் விரும்பி நாடகம் பார்த்ததையும் குறிப்பிட்டுள்ளன. கலித்தொகையில் நாடகக் காட்சிகளாய்ப் பல பாடல்கள் அமைந்துள்ளன. நாடகம் என்பது ஒரு கதை தழுவி வரும் கூத்து என்றார் அடியார்க்கு நல்லார். ஆடரங்கின் அமைப்பு முதலியவற்றை அரங் கேற்றுக் காதையும் அதன் உரைகளும் சிறப்புற விவரிக்கின்றன. அரசரும் அவரைச் சார்ந்த மக்களும், எளிய மக்களும் நாடகம் பார்க்கும் நிலை சங்க காலத்திற்கு முன்பே இருந்தது. வேத்தியல், பொது வியல் என்னும் இருபிரிவுகளும் இருந்தன. வேத்தியல் அரசர் முதலி யோர்க்கு உரியது. பொதுவியல் பிற மக்களுக்கு உரியது. நாடகம் கூத்து என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு இன்று வரை நிலவுகிறது. கூத்தில் வல்லார் கூத்தர் எனப்பட்டனர். கூத்தினை ஆடல் என்றும் வழங்கினர். இறைவனையே ஆடல்வல்லான், கூத்தன், கூத்தபிரான் என்றெல்லாம் போற்றினர். தமிழ்க் காப்பியங்களில் பல நாடகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மறைந்துபோன நாடக நூல்களையும், நாடக இலக்கண நூல்களையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நூல்களின் மறைவால் தொன்மைத் தமிழ் நாடகங்களின் இயல்புகளை அறிய இயலாதவராகிறோம். முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.985-1012) தஞ்சை பெரிய கோவிலில் இராசராச நாடகம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பிற கோயில்களிலும் பூம்புலியூர் முதலிய நாடகங்கள் நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. தளிச்சேரிப் பெண்டுகளால் நாட்டிய நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பிறமொழி ஆட்சியாளர்களால் தமிழ் நாடகமரபுச் சிதைந்தது. பொருநர், கூத்தர், விறலியர், பாணர், பாடினியர் முதலியோர் தத்தம் கலைகளை மறந்தனர். போற்றுவாரின்றி அழிந்த கலைகளுள் நாடகமும் ஒன்று. பக்தி நெறியின் செல்வாக்கால் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. புராணக் கதைகள் நாடகங்களாய் நடிக்கப்பட்டன. ஊர் ஊருக்குப் பல குழுக்கள் முளைத்தன. நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் பல புராண நாடகங்களைப் புதிதாக இயற்றி நாடக மேடையேற்றினார். தமிழகமெங்கும் ஆங்காங்கே பாவலர்க ளாலும் கலைஞர்களாலும் நாடகங்களும் நாடகக்குழுக்களும் தோன்றின. ஊர் விழாக்களின் போது விடிய விடிய புராண நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் ஆங்கில நாடகங்களைப் போலத் தமிழிலும் அங்கம், காட்சி (களம்) அமைக்கும் முறை தோன்றியது. பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞரின் ரூபாவதி, மதிவாணன், மறைமலையடிகளின் சாகுந்தலம், பம்மல் சம்பந்தனாரின் சபாபதி முதலிய நாடகங்கள் தோன்றின. தேசிய விடுதலை உணர்வு மிக்கெழுந்தபோது கதரின் வெற்றி முதலிய நாடகங்கள் எழுந்தன. புராண நாடகங்களும் ஊடே அமைந்த பாடல்களால் விடுதலையுணர்வுக்கு வித்திட்டன. திராவிட இயக்கத்தவரின் பகுத்தறிவுக் கருத்துகள் நாடெங்கும் பரவின. சமூகச் சீர்த்திருத்த எண்ணங்கள் தளிர்த்தன. பகுத்தறிவு, மூட நம்பிக்கையொழிப்பு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, மறுமணம், பெண்ணுரிமை, குழந்தைமணக் கொடுமை, தொழிலாளர் நலன், தமிழிசை இயக்கம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தும் சமூக நாடகங்கள் கனல் தெறிக்கும் உரையாடல்களுடன் மக்கள் நெஞ்சத்தைத்தொட்டன. புலவர்களும், கலைஞர்களும் இத்தகைய சமூகச் சீர்திருத்த நாடகங்களைப் படைத்தனர். பல நாடகக் குழுக்களும் வேளை தவறாமல் இவ்வேலையைச் செய்தன. அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் நாடகங்கள் இடம் பெற்றன. பள்ளிகளின் இலக்கிய மன்றங்களில் மாணவர்கள் இலக்கிய, புராண நாடகங்களை நடித்தனர். இக்காலச் சூழலில் பள்ளியில் பயிலும் போதே கனகசுப்புரத்தினம் பள்ளி ஆண்டுவிழாவில் நடித்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுப் பெரும்புலமையுற்ற நம் கவிஞர் இசைப்புலமையும் நிறைந்திருந்தார் பாடல்களைப் பாடிக் குவிக்கும் பாவேந்தரானார். ஆசிரியப் பணியாற்றும்போதே சிந்தாமணி, வீரத்தாய் என்ற நாடகங்களை மாணவர்களால் பள்ளி மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இளமையிலிருந்தே, இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் ஆர்வ மும் ஈடுபாடும் கொண்ட நம் கவிஞருக்கு நாடகத் தமிழும் கைவந்த கலையாயிற்று. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கதைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த நம் கவிஞர் அவற்றை நாடகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1938-இல் முதல் கவிதை நாடகம் வீரத்தாய் வெளிவந்தது. பாவேந்தரின் நாடகங்களைக் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள் இரண்டும் கலந்த நாடகங்கள் எனப் பகுக்கலாம். fhjyh flikah?, புரட்சிக்கவி ஆகியன முன்னர்க் கதைப்பாடலாயிருந்து பின்னர் நாடகமாயின. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலியன முதலில் நாடகங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னர் கதைப்பாடல் களாயின. 1941-இல் தோழர் இராசவேலுக்குப் பாவேந்தர் எழுதிய கடிதத் தில்கவிதைகள், நாடகம், சிறுகதை தமிழர் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாவேந்தரின் நாடகங்கள், தமிழர் கொள்கையை வலியுறுத்துவனவாய், சுவையுடையனவாய், கருத்துகள் நிறைந்ததாய் விளங்கின என்பது தெளிவு. 1943-இல் முத்தமிழ் அரங்கு என்னும் நாடகக்குழு அமைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டியுள்ளார். தோழர் செல்லப்ப ரெட்டியாருக்கு எழுதிய கடிதங்களில் நாடக அரங்கு, நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், நாட்டியக்காரர் ஆகியோரை அமைக்கவும், அவர்களைத் தங்க வைக்கவும், சம்பளம் கொடுக்கவும் பாவேந்தர் காட்டிய ஆர்வம், நெருக்கடி முதலியன புலப்படுகின்றன. முத்தமிழ் நிலையத்தையும் நாடகத்திற்கென்றே சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையொட்டி ஒரு பெரிய வீட்டில் அமைத்திருந்தார். புரட்சிக் கவி, இசையமுது நாடகங்கள் இதன் சார்பில் நடிக்கப்பட்டன. நடிப்பு, காட்சியமைப்பு, நாட்டியம், இசை முதலிய ஒவ்வொன்றிலும் பாவேந்தர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். தேர்ந்த இயக்குநராய் விளங்கினார் எனலாம். சில நாடகங்கள் பாவேந்தரின் முன்னிலை யில் ஒத்திகை செய்யப்பட்டுள்ளன. அப்போது நடிக்கும்முறை, பாடிய முறை முதலியவற்றில் திருத்தங்களைக் கூறிச் செயற்படுத்தியுள்ளார். இன்ப இரவு என்னும் நாடகம் தந்தை பெரியார் முன்னிலை யில் சென்னை சாந்தோம் பகுதியில் 2.4.1944 இல் நடிக்கப்பட்டது. பார்த்த பெரியார் பாராட்டியுள்ளார். பாராட்டு 8. 1. 44 குடி அரசு இதழில் வெளிவந்ததின் ஒரு பகுதி: இன்று இந்த நாட்டில் தமிழும் தமிழ்க் கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன் மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது இதனால் பெரியாரின் கொள்கைக்கேற்ற தன் மானமிக்கவராய்ப் பெரியார்க்கு தெரிந்த ஒரே கவிஞர் நம் பாவேந்தர்தாம். பாவேந்தரின் நாடகங்களில் இளங்கணி பதிப்பகத் தொகுப்பு களில் இடம் பெற்றுள்ளவை 52. ஆய்வுத் தேடல்களுக்கு அகப்பட வேண்டியவையும் உள்ளன. இவற்றுள் முழுமை பெற்ற நாடகங்கள் பல. முழுமை பெறாமல் - முடிவு இல்லாமல் உள்ளனவும் இருக்கின்றன. வானொலிக்காகவும் சில நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றில் உள்ள ஒலிக்குறிப்புக்களால் அக்குறிப்பு புலப்படுகின்றது. பாவேந்தர் படைப்புகள் பல. மாணவர் குறிப்பேடுகளில் எழுதப்பட்டவை. அவற்றின் பழைமையால் தெளிவில்லாப் பகுதிகளும் தெரிய வந்துள்ளன. இத்தொகுதியில் புதியனவாய் வருவனவும் உள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் ஆய்வாளர்களின் ஆய்வுக்குட் பட்டுள்ளன. முனைவர் ச.சு.இளங்கோ பல வகைகளாகப் பகுத்துள்ளார். அவை: தமிழ் இலக்கியச் சார்பு நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், கற்பனை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், அங்கத நாடகங்கள், ஆரியப்புரட்டு விளக்க நாடகங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள், குறு நாடகங்கள் என்பன. வேறுவகையாகப் பகுப்பாரும் உளர். இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் எனவும் நடிப்பதற்குரிய நாடகம், படிப்பதற்குரிய நாடகம் எனவும் பார்க்கும் பார்வையும் உள. படிப்பதற் குரிய நாடகங்களுள் சில, சில மாற்றங்களுடன் நடிப்பதற்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் முதலியவற்றில் கொண்டிருந்த ஈடுபாடும், புராணங்கள், பழக்க வழக்கங்கள், மத அமைப்புகள் முதலியவற்றின்மீது வைத்திருந்த எண்ணங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளின் செயல் வேகங் களும், மொழி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும் இத்தகைய நாடகங்கள் தோன்றக் காரணமாயின. படித்த பெண்கள்: பள்ளி ஆண்டு விழாவில் இடம் பெறுவதற்காக எழுதப் பெற்ற கொய்யாக்கனிகள் என்னும் கவிதை நாடகத்தில் மன்னர்மன்னனும் அவர் தமக்கையும் பங்கேற்று நடித்துள்ளனர். படித்த பெண்கள் இந் நாட்டிற்கு இன்றியமையாதவர்கள். பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும். அவர்கள் ஆண்களோடு சரிநிகரானவர்கள் எனப் பாவேந்தரே கூறியுள்ளார். நல்ல மனைவியால் கணவனும் நல்லவனாவான் என்று கூறும் வகையில் மின்னொளியின் பாத்திரத்தை அமைத்துள்ளார். மரக்கால் தன் பெயர்க்காரணம் கூறும் பகுதி நகைச்சுவையையும் சிந்தனையையும் தோற்றுவிக்கும். சேரதாண்டவம்: சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் காணப்படும் ஆதி மந்தி, ஆட்டனத்தி குறிப்புகளை, நுணுகி ஆராய்ந்து எழுதப் பட்டது இந்நாடகம். மூவேந்தரின் ஒற்றுமையைக் காட்டுகிறார் கவிஞர். சங்க காலத் தலைவி தன் காதலுணர்வைத் தானே தவைனிடம் புலப்படுத்த மாட்டாள். ஆதிமந்தி தன் காதலுணர்வைத் தானே புலப்படுத்துவதாக அமைத்திருப்பது புதுமையாகும். இன்பக்கடல்: கற்பனை நாடகம். வானொலியில் ஒலிபரப்புவதற்காக எழுதப்பட்டது இது. செவிநுகர் நாடகம் என்பர். பதினொரு காட்சிகள் உடையது. அரசப்பன் என்னும் கயவனின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் பட்டுவின் காதல் வெற்றியுடன் நாடகம் நிறைவுறுகிறது. சத்திமுத்தப் புலவர்: கும்பகோணத்துக்கு மேற்கே உள்ள ஊர் சத்திமுற்றம். இவ்வூரில் வாழ்ந்த சத்திமுத்தப் புலவரின் தனிப்பாடல் இரண்டினை அடிப்படை யாகக் கொண்டது; வரலாற்றின் தழுவல் இந்நாடகம்; பேரளவு கவிதை நடையும் சிறிதளவு உரைநடையும் அமைந்தது; தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை - சிறப்புகளை மக்கள் உணர வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் படைக்கப்பட்டது இது. கழைக்கூத்தியின் காதல்: விச்சுளி ஆட்டம் கழைக்கூத்தைச் சேர்ந்த ஒரு வகைக் கூத்து. அருஞ்செயலாய்க் செய்யப்படுகிறது. அதனை நிகழ்த்தும் முத்துநகை என்பாள் தொண்டை நாட்டு சடையநாத வள்ளல்மீது கொண்டிருந்த காதலை விளக்குவது இந் நாடகம். காதல் உணர்வு இயல்பாக எழும்போது அதைத் தடுத்து நிறுத்தும் கொடுஞ்சக்திகளும், சாதிப் பிரிவுகளும், சமூக நடைமுறைகளும் இருக்கக் கூடாது என்னும் நோக்கில் இயற்றப் பட்டது இந் நாடகம். பாவேந்தர் நாடகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு கற்பனை நயம் செறிய, நகைச் சுவை பொதுள எளிய நடையில் தமிழர், மொழி, இன, நாட்டு உணர்வு பெற்றுத் தமிழராக வாழ வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவை. இத் தொகுதியைப் படிப்பார் அதனைப் பெறவேண்டும் என்பது எம் விழைவு. - பி. தமிழகன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன்... ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xv நூன்முகம் xviii 1. படித்த பெண்கள் 1 2. சேரதாண்டவம் 115 3. இன்பக்கடல் 225 4. சத்திமுத்தப் புலவர் 247 5. கழைக் கூத்தியின் காதல் 279  படித்த பெண்கள் நான் என்ன சொல்கிறேன்? பொற்றாலியோ டெவையும் போம் - ஏன்? அவள் படித்தவள்; துணைவனுக்கு நற்றுணையாயிருந்தவள்; உயிரின் இயற்கை யாகிய காதல் வீணைக்குக் கன்னலிசை; உடலுக்கு உயிர் - ஆதலால்! படித்த பெண்கள் இந்நாட்டிற்கு இன்றியமையாதவர்கள். பெண்கள் அனைவரும் படிக்கவேண்டும். அவர்கள் ஆண் களோடு சரிநிகரானவர்கள் - என்பனவற்றை விளக்க இதை எழுதினேன். நன்றாய் விளக்க வேண்டும் என்று இதை நாடகமாக அமைத்தேன். புதுச்சேரி 1. 10. 1948 - பாரதிதாசன் கதை உறுப்பினர் கார்வண்ணர்... புதுவை வட்டிக்கடை முதலாளி பொன்னன்... மேற்படியாரின் தலைமகன் கண்ணப்பன்... மேற்படியானின் தம்பி கண்ணம்மா... சென்னைப் பெண், மின்னொளியுடன்படித்தtŸ மின்னொளி... பொன்னன் மனைவி இன்னமுது... மேற்படியாளின் அக்கா மரக்கால் ... பொன்னனின் காரோட்டி தங்கம்... காரோட்டியின் மனைவி வீரப்பர்... பொன்னன் தோழர் காட்டுமுத்து... வட்டிக்கடையின் கணக்கன் தடாரி... மேற்படி கடையின் காவற்காரன் இரட்டியார்... மேற்படி கடைக்கு வந்தவன் சுரைக்காய்... மேற்படி கடையின்ஆŸ சுப்ரமண்ய குருக்கள்... ஊர்க் குருக்கள் சின்னகொய்யா... கொலையாளி பெரியகொய்யா... மூத்தகொலையாË சங்கரம் பிள்ளை... பொன்னன் தோழர் பெரியசாமி... புளுகன் மன்னாதன்... பூக்காரன் அருணாசலஐய®... ஊர்ப் புரோகிதர் புதுவைக்கண்ணம்மா... கார்வண்ணரின் தங்கை (மற்றும் பலர்.) கதை நிகழ் இடம் ... புதுவை, புதுவை வட்டிக்கடை பொன்னனின் வீடு, கோயில், கோரிமேட்டுக்கடுத்த குறுங்காடு, சென்னை, கிண்டி, புதுவையில் ஓர் சத்திரம் முதலியவை. காட்சி - 1 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : மாலை ஐந்து மணி உறுப்பினர் : மின்னொளி, இன்னமுது. (கூடத்தில் கார்வண்ணரின் மருமகள் மின்னொளி ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக் கின்றாள். இன்னமுது வருகின்றாள்.) இன்னமுது : மாமாவுக்கு, எப்படியிருக்கிறது உடம்பு? மருத்துவர் தந்த மருந்து கொடுத்தாயா? மின்னொளி : வாருங்கள் அக்கா. உட்காருங்கள். உடல் நிலையில் மாற்ற மில்லையே! இந்த மருத்துவ நூலைப் பார்க் கிறேன். மருந்து ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா என்று. இன்னமுது : மார்பு வலி? மின்னொளி : அப்படியே தான் அக்கா. இன்னமுது : உண்பது? மின்னொளி : உம் (இல்லை) இரங்கத்தக்க நிலை. இன்னமுது : அத்தான்? மின்னொளி : சென்னைக்குப் பயணம்போல் இருக்கிறது. இன்னமுது : Iயையோ?இலகுவாய்ச் சொல்லிப் gர்ப்பதுjhனே? மி‹bdhË : bfஞ்சிப்பh®க்கிறேன்.வே©Lkhdhš mGJகாiyப்பிடித்Jப்பார்¡»nw‹. காட்சி - 2 இடம் : கhர்வண்ணர்வீடு காலம் : மலைஉறுப்பினர் :மின்bனாளி,இன்னமுது.கண்ணன், மரக்கால்’ (மின்னொளியும்,இன்னமுதும்,கார்வண்ணர்உடல்நிலைபற்றி வருந்தியிருக்கின்றார்கள்.கார்வண்ணரின் எட்டுவயதுள்ளசின்னபிள்ளைகண்ணன்பhடசாலையிலிருந்துவருகிறன்.அவனாடு கர்ஓட்டியானமரக்கால் என்பவன்கண்ணனின்சுவடியைஎடுத்து வருகிறhன்.) மின்னொளி : வாடி (வாடா) இன்றைக்கு நன்றாகப் பாடம் ஒப்பித்தாயா? கார் ஓட்டுகிறவரே, ஐயா ஏதாவது வேலையிட்டாரா உங்கட்கு? மரக்கால் : உம், (ஆமாம்) வீரப்பர் இருக்கார் பாருங்க, வீணப்பர்! அவுரு வூட்லே இருக்காராம் ஐயா, காரு கொண்டாரச் சொன்னாரு. போறேன். அங்கிருந்து நம்ப வட்டிக் கடைக்குப் போயி, அங்கே யிருக்ற பணத்தே அள்ளிக்கினு, நேரே வூட்டுக்கு வந்து சாப்புட்டுட்டு புகை வண்டி நிலையத்துக்கு, மின்னொளி : சென்னை செல்லவா? மரக்கால் : வேறெதுக்கு? சோசியம் பார்த்தாரு. இந்தத் தடவையில் குதிரைப் பந்தயத்தில் பெரிய வருவா வந்துடுமாம். அந்தக் கெலிக்கற குதிரே வெள்ளையாய் இருக்குமாம். முதுவுலே கறுப்பா யிருக்குமாம், சனி பாக்றதனாலே. மின்னொளி : பாருங்கள் அக்கா. இன்னமுது : என்ன செய்வது? எத்தனை முறை தோற்றாலும் அதிலுள்ள பற்று விடவில்லையே. பெற்ற தந்தை இப்படிக் கிடக்கிறார்! மின்னொளி : (தன் கண்ணீர் துடைத்து) அவர் சொல்வதை நான் தடுத்துச் சொல்வதும் தவறாம், நான் பெண்ணானதால். கார் ஓட்டுகிறவரே, நீர் போய் வாரும். (போகிறான்) இன்னமுது : தங்கச்சி! வருந்துவதில் பயனென்ன! பட்டப் பகலில் படுகுழி தோன்றவில்லை அவருக்கு, அவர் ஆண் ஆனதால் போலும்! வா, மாமாவைப் பார்ப்போம். (கண்ணன், இன்னமுது, மின்னொளி மூவரும் அறைக்குட் செல்லல்,) காட்சி - 3 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : மாலை உறுப்பினர் : மின்னொளி, கண்ணன், கார்வண்ணர். (அறையில் கட்டிலில் கார்வண்ணர் படுத்திருக்கிறார் மூவரும் செல்லுகிறார்கள். மின்னொளி : மாமா, மார்புவலி கொஞ்சம் குறைந்திருக்கிற தென்றீர்களே? கார்வண்ணர் : அங்கே யார்? இன்னமுதா? இன்னமுது : ஆம்! மாமா. கார்வண்ணர் : உட்காரம்மா. மருந்தால் பயனில்லை! நீங்கள் வருந்து வீர்கள் என்று நான் வாய்மூடி இருக்கிறேன். கண்ணன் இருக்கிறான் - உங்களிருவரிடமும் ஒப்படைக் கிறேன். பெரியவனை நான் நம்பவில்லை. மீதியுள்ள பொருளையும் அவன் அழித்துவிடுவான். நீங்கள் படித்த பெண்கள். கண்ணனைக் காக்க உங்களால் முடியும். மின்னொளி, உன் அக்கா இதே தெருவில் அரும் பண்புகள் அமைந்த சொக்குவுக்கு வாழ்க்கைப் பட்டது நான் பெற்றபேறு! நீ பெற்றபேறு! கண்ணன் பெற்ற பேறு! அவ்வளவுதான். நான் போகிறேன் எனக்குப்பின், சொத்தெல்லாம் போய்விடும். கண்ணன் காப்பாற்றப்படுவான். நம்புகிறேன். நிறையப் பொருள் தேடினேன். அது பெரிதில்லை. இன்னமுதின் தங்கை யான மின்னொளியை மருமகளாகப் பெற்றேன் நான் எல்லாம் பெற்றேன். உம். (சோர்வுறுகிறார், அனைவரும், கண்ணீர் ததும்ப அருகில் தலை தாழ்த்தியிருக்கின்றார்கள்.) காட்சி - 4 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : மாலை உறுப்பினர் : மின்னொளி, இன்னமுது, சுரைக்காய், கார்வண்ணர். (கரைக்காய் என்னும் வட்டிக்கடையின் ஆள், விரைந்து வந்து கூடத்தில் யாரையும் காணாமையால் மயங்குகின்றான்.) சுரைக்காய் : (உரத்த குரலில்) அம்மா! அம்மா! மின்னொளி : (முன் வந்து) ஏன் சுரைக்காய்? சுரைக்காய் : ஐயா இல்லிங்க? மின்னொளி : வட்டிக்கடைக்கு வந்திருப்பாரே? சுரைக்காய் : வந்தார். கொஞ்ச நேரத்லே பூட்டாரு, போனதும் அங்கே ஒரு திருட்டு நடந்துட்டுது, சண்டையா கெடக்குது. பதினாயிர ரூபா நோட்டுக் கத்தையே முத்து இரட்டியார் வாங்கினார், நம்ப வட்டிக் கடையிலெ வூட்டே வச்சி! அதெ, நம்ப தடாரி இருக்கானே அவன் திருடிக்கிட்டான் போல இருக்கு. தடாரிக்கு ஒத்தாப்லே பேசறாரு கணக்கப்புள்ளே காட்டு முத்து! ஒரே கூச்சல், அடிதடி! நீங்க வாங்களேன். இன்னமுது : (அறையிலிருந்து வந்து) மாமா, என்ன என்று கேட்கிறார். மின்னொளி : (மாமா இடம் சென்று) இரட்டியார் ஒருவர், பதினாயிர ரூபாய் கடையில் வாங்கினாராம். அங்கேயே திருட்டுப் போயிற்றாம். அடிதடியாம். கார்வண்ணர் : ஐயோ, நீதான், போய்ப் பார்த்து வர வேண்டும். மின்னொளி : நான் போய்ப் பார்த்து வருகிறேன் மாமா. (போகிறாள் சுரைக்காயுடன்) காட்சி - 5 இடம் : வட்டிக்கடை காலம் : மாலை உறுப்பினர் : மின்னொளி, இரட்டியார், கணக்கன், தடாரி. (வட்டிக்கடை அகன்ற முகப்புடையது. அம்முகப்பை உயர்ந்த பல சன்னல்களையுடைய அறைகள் சூழ்ந்திருக் கின்றன. முகப்பில், பணம் பறிகொடுத்த இரட்டியார், மற்றும் வருவார் போவார், தடாரி, கணக்கன் காட்டு முத்து ஆகியோர் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.) இரட்டியார் : (வட்டிக் கடையின் வாயிற்படியை மிதித்த மின்னொளி யைப் பார்த்து) நீங்க ஆரம்மா? கடைக்கு உடையவங் களாம்மா, பதினாயிர ரூபாம்மா. உழைச்சி சம்பாரிச்ச சொத்தை வைச்சிவாங்கினம்மா. கண்ணெ மூடிக் கண்ணெ தெறக்கிறதுக் குள்ளே அடிச்சிட்டான். மின்னொளி : யார்? இரட்டியார் : யாரா, இதோ இவன்தானம்மா. என் விலாப்பக்கம் ஒடுங்கிக்கினு நிண்ணாம்மா. நேரா உள்ளே தானம்மா போனான். தடாரி : டேய் ரெட்டி, பாத்துப்பேசு! மரியாதி கெட்டுப் புடுவே. கணக்கன் காட்டு முத்து: அவனும் இந்தக் கடையிலே பத்து வருஷ மாகத்தான் இருக்கான். இந்த மாதிரி திருட்டுப் பட்டம் சொமந்ததேயில்லை. ஏன் தடாரி, ஒனக்கும் ரெட்டிக்கும் இதுக்கு முந்தி ஏதாவது பகை உண்டோ? தடாரி : உம்! (இருந்தது) வேறே ஒண்ணுமில்லை. பத்து நாளைக்கு முந்தி இவுரு வண்டியிலே போய்க்கினு இருந்தாரு, டேய்! எட்டிப் போடாண்ணாரு. ஏனையா அடாபுடாண்லா மாண்ணேன்; இதான் சொன்னேன். அதுக்கு இவ்ரு என்னா சொல்றது. வண்டையா வாயாலே புழுத்தாரு. நானும் சும்மா சொல்லலாமா, திட்ணேன். அப்போ சொன்னாரு இவுரு, அடே, ஒன்னெ பழிவாங்க எனக்குத் தெரியுமிண்ணு. வாங்கிட்டாரில்ல? இரட்டியார் : அடே பாவி. எண்ணைக்கடா? எந்த வண்டி? தடாரி : தோ இந்த நாயித்திக்கெழமே மாட்டு வண்டிலே போவலே? இரட்டியார் : அடே ஒன் வாயிலே புழுவு புழுக்கும்டா. எனக்கு மாட்டு வண்டி ஏர்ற பழக்கமே இல்லடா. அல்லாமலும் நாயித்துக்கிழமே நானு புதுச்சேரிக்கே வல்லேடா. அம்மா! புளுவுறானம்மா. பணத்தே எப்படியாவது வாங்கிக் குடுத்துடுங்கம்மா. இவன் கிட்டதானம்மா இருக்குது. எங்கெயும் போவலேம்மா பணம். மின்னொளி : பொறுங்கள். கணக்கன் : இரட்டியாரே, சும்மா புளுகாதிங்க. மின்னொளி : கணக்கரே, நீர் சும்மா இரும். கணக்கன் : நீங்கள், இரட்டியாரை இப்படிப் பேசவுடப்படாதுங்க. மின்னொளி : கணக்கரே, நீர் இப்போதே நம் வீட்டுக்குப் போய், ஐயா இருப்பார், அழைத்து வந்துவிடுங்கள். கணக்கன் : சரிங்க. (என்று கூறிக் கடையில் தன் அறையை நோக்கிப் போக முயல்கிறான்.) மின்னொளி : எங்கே போகிறீர்கள்? கணக்கன் : இதோ வந்துவிடுகிறேன். பொடிமட்டையே வைத்து விட்டேன் என் பெட்டியில்! மின்னொளி : அப்படியா சரி. (என்று, அவளும் அவனுடன் போகிறாள்) கணக்கன் : (திரும்பி) பொடி மட்டை இருக்கட்டுமே. (என்று கூறித் தன் பெட்டியண்டை போகாமல் மின்னொளி வீட்டுக்குப் போகிறான்.) காட்சி - 6 இடம் : வட்டிக்கடை காலம் : மாலை உறுப்பினர் : மின்னொளி, இரட்டியார், தடாரி. (கணக்கன் போனதைத் தடாரி பார்த்து வருந்துகிறான்.) மின்னொளி : தடாரி, நீயும் கணக்கரோடு போய் வா. தடாரி : நான் ஏன்? மின்னொளி : போய்த்தான் வரவேண்டும்! இரட்டியார் : பாருங்கம்மா அவனே. தடாரி : டேய்! (என்று அதட்டி இரட்டியை முதுகில் அறைகிறான். அதே நொடியில் மின்னொளி கொடுத்த அறையைத் தடாரி தன் கன்னத்தில் வாங்குகிறான். கண்கலங்கி நிற்கிறான்.) மின்னொளி : அதோ இருக்கும் தனி அறையில் போய் இரு. தடாரி : அடிக்கிறிங்க. (என்று கூறிக்கொண்டே அறைக்குள் போய்விடுகிறான். மின்னொளி அறையை இழுத்துச் சாத்திக் கொள்ளு கிறாள். கடையில், கணக்கனின் அறையில் நுழைந்து அவன் பெட்டியை ஆராய்கிறாள். நோட்டுக்கள் அகப் படுகின்றன. கடையின் உடையவர் தங்கக்கூடிய அறைக்கு வருகிறாள். இரட்டியாரும் உள்ளே போகிறார்.) மின்னொளி : இரட்டியாரே, இதோ, உங்கள் பணம். எண்ணிப் பாருங்கள். இரட்டியார் : (எண்ணிப் பார்த்து) நன்றியம்மா. ஒங்க அறிவுக்கு ரொம்ப மகிழ்ச்சியம்மா. அந்தக் கெட்டவர்களை இந்த எடத்லே வைக்காதிங்கம்மா. மின்னொளி : வைப்பேனா. நீங்கள் போய் வருகிறீர்களா? இரட்டியார் : சரிங்கம்மா. (இரட்டியார், ஒருபுறமாக ஒளிந்துகொண்டு மேலே நடக்க இருப்பதைப் பார்த்திருக்கிறார்.) காட்சி - 7 இடம் : வட்டிக்கடை காலம் : மாலை உறுப்பினர் : மின்னொளி, இரட்டியார், பொன்னன், தடாரி. (கணக்கர், விரைவாக வருகிறார். அறையில் இருக்கும் மின்னொளி அழைக்க, கணக்கர் அறையிற் சென்று மின்னொளிக்கெதிரில் உட்காருகிறார்.) மின்னொளி : கடையின் பெருமை காப்பாற்றப்பட வேண்டுமே! கணக்கன் : பெருமையை, யார் போக்கடித்தது? நானா? மின்னொளி : இருவர் மீதுந்தான் ஐயம் கொள்ளுகிறார் இரட்டியார். கணக்கன் : அவன் எங்கே? மின்னொளி : வீட்டுக்குப் போயிருக்கிறான். கணக்கன் : அவன் சொன்னாலும், அதை நீங்கள் திருப்பி உங்கள் வாயால், அதிலும் என்னை, வாய் புளிச்சிதா மாங்கா புளிச்சிதாண்ணு சொல்லிபுடுவதா? உம். (அதட்டல்) மின்னொளி : ஆனால் ஒன்று, கடையின் பணத்திலிருந்து பதினாயிரம் ரூபாய் இரட்டியாரிடம் கொடுத்தனுப்பி விட்டேன். கணக்கன் : (மகிழ்ந்த முகத்தோடு) ஏன் நீங்கள் கொடுக்கவேண்டும்? என்னா போங்க. மின்னொளி : போனது போகட்டும். கடைக்குக் கெட்ட பேர் வரக் கூடாதல்லவா? கணக்கன் : அதுமட்டும் சரிதான். என்னா போங்க. ஐயா முன்னே வந்தாரு. பதினாயிரம் எடுத்துப் போனாரு. திரும்பியா வரப்போவுது? (இதற்குள், மின்னொளியின் கணவனும் கடைக்குடைய வனுமாகிய பொன்னன் கடையின் வாயிற்படியை அடைகிறான். அறையில் பேச்சுக்குரல் கேட்கிறது. காது கொடுத்தபடி அங்கேயே நிற்கிறான். இரட்டியாரும் ஒருபுறம் மறைந்து நிலைமையைப் பார்த்துக்கொண்டும், அறையின் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்) மின்னொளி : (ஒரு வெறுந் தாட்சுவடியில், என்னமோ எழுதிக் கொண்டே) அது சரி. பதினாயிரமா, எடுத்துப் போனார் ஐயா? கணக்கன் : சரியா பதினாயிரம். நான் தான் கொடுத்தேன். இதோ அவர் பற்றி! கணக்கெழுதியிருக்கேனே. எதுக்கு சொல் றேண்ணா, இப்படியே நடந்தா கடை உருப்படுமா? (இதைக் கேட்ட பொன்னன் கண்கள் சிவக்கின்றன. அச்சமயம் இரட்டியார், பொன்னனை நெருங்குகிறார்.) இரட்டியார் : (மெல்லிய குரலில்) பத்தாயிரம் ரூபாயை அந்த மானங் கெட்டவன் தடாரியென்பவன் திருடிக்கினாங்க எங்கிட்டே யிருந்து. அதுக்கு அந்தம்மா கடைப்பணத்லேயிருந்து பத்தா யிரத்தே எங்கிட்டே தூக்கிக் குடுத்துட்டு அவன் கிட்டே பேசிக்கினு இருக்காங்க அன்பா. அவனா, கடைக்கு உடையவரெயும் கொறவா பேசிக்கினு இருக்கான், உள்ளே! என்னா அக்குறும்புங்க. இப்படியாப்பட்ட வனெ வைக்கலாமா? அரை நொடியாவது? உம்? (என்ன) பொன்னன் : (மெல்லிய குரலில்) நான் தான் கடைக்கு உடையவன். என் மனைவிதான் உள்ளே பேசுகின்றவள் எப்படி என் நிலைமை? இரட்டியார் : அடடா! என்னாங்க அந்தப் பொண்ணு. மின்னொளி : (அறையில்) கணக்கரே, தடாரி அந்த அறையில் இருக்கிறான். அவனை இட்டு வாருங்கள். (சென்று அழைத்து வருகின்றான்) மின்னொளி : தடாரி, நீ எடுக்கவில்லையா பணத்தை? தடாரி : இல்லவே இல்லே. மின்னொளி : நீ, எடுத்துப்போய் இவரிடம் கொடுக்க வில்லையா? கணக்கன் : என்கிட்டியா? மின்னொளி : நீர், சும்மா இரும். கணக்கன் : அதெப்படிச் சும்மா இருப்பது? மின்னொளி : நீங்கள், எரிச்சல் அடையாமல் இருப்பது நல்லது. (தடாரியை நோக்கி) இவரிடம் கொடுக்க வில்லையா நீ? தடாரி : இல்லை. மின்னொளி : அதை, அவர் வாங்கிப் பெட்டியில், கணக்குச் சுவடியின் இடையில் வைக்கவில்லையா? (என்று கேட்டு, மெதுவாகத் தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து விரித்துப் பெட்டிமேல் இருந்த காரீய எழுதுகோல் முனையைச் சீவுகிறாள். ஆயினும், அக்கத்தி எழுதுகோல் முனையைச் சீவுவதற்கு அமைந்ததாகத் தோன்றவில்லை.) கணக்கன் : (தனக்கு வந்த எரிச்சலைத் திடீரென்று அடக்கிக் கொண்டவனாய்) அப்படி ஒண்ணுமில்லியே. மின்னொளி : ஆகக் கூடிக் கடைப் பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டேன். உமக்கென்ன? நீர், சும்மா இருக்க வேண்டியது தானே. ஏன் தடாரி, கேட்டதற்குப் பதில் கூறு. அதைக் கணக்கர் வாங்கி வைத்துக்கொண்டு உனக்கு ஆதரவாகப் பேச வில்லையா? தடாரி : அது என்னமோ. (இதற்குள், கணக்கன் தன் அறையை நோக்கி நழுவத் தொடங்குவதை மின்னொளி பார்க்கிறாள்.) மின்னொளி : கணக்கரே, எங்கே போகிறீர்? என் எதிரில் உட்கார்ந் திரும். இரட்டியார் : (பொன்னனை நோக்கி) அவனை ஏன் உட்காரச் சொல்றாங்க? இதென்ன அவமானம். (பொன்னன் முகம் எரிகிறது.) கணக்கன் : சரி, போகலே. மின்னொளி : இதில், நீங்கள் இருவரும் கையெழுத்திட்டு வெளியிற் செல்லவேண்டும். கேளுங்கள் ... ... முத்து இரட்டியாரின் பதினாயிர ரூபாயைத் தடாரி திருடிக் கணக்கன் காட்டுமுத்திடம் கொடுக்க, அதைக் காட்டுமுத்து, கணக்குச் சுவடியில் மறைத்துவிட, அதை வட்டிக் கடைக் குடையவர் கையும் களவுமாகப் பிடித்தார்கள். இதை நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்பதற்கு அறிகுறியாக இதைப் படித்துப் பார்த்துக் கையொப்பமிட்டோம். உம். ஆகட்டும் வேலை. (என்று, மின்னொளி கத்தியைக் கையில் ஒழுங்காகப் பிடித்து நிற்கிறாள்.) கணக்கன் : கடைப் பணத்தை ரெட்டிக்குக் கொடுத்தனுப்பியதாகச் சொன்னீர்களே. மின்னொளி : இதே நேரம் கையொப்பம் போடவில்லை யானால் சிறைக்கு அனுப்புவேன் உங்களை. இரட்டியார் : அடடா! நல்லம்மா! நல்லம்மா! ஐயா ஒங்க மனைவி ரொம்ப கெட்டி. (பொன்னன், அறைக்குப் போகிறான், இரட்டியாரும் கூடப் போகிறார்.) பொன்னன் : என்ன அது? மின்னொளி : (எழுதியதைத் தன் கணவனிடம் கொடுத்து) இதில் கையொப்பம் பெற்றுக்கொண்டு, உடனே இந்தத் தீயர்களை இதைவிட்டுத் துரத்த வேண்டும் அத்தான். இரட்டியார் : அம்மா, இங்கே நடந்ததெல்லாம் நாங்க கேட்டுக் கினுதான் இருந்தோம், டேய்! கணக்கா! காட்டுமுத்தோ, கழுதெ முத்தோ! போட்டுட்டு ஓடிப் போடா, தடாரி ஓடிப்போடா. என்னியாடா அடிச்சே? ஆனா, அம்மா நல்லா குடுத்தாங்க ஒண்ணு. (இருவரும், கையொப்பமிட்டுப் போகிறார்கள்.) இரட்டியார் : திருட்டு நாயிங்க! ... நான் வரட்டுமா ஐயா. வரட்டுமாம்மா. பொன்னன் : நல்லது. (இரட்டியார் போகிறார்.) காட்சி - 8 இடம் : வட்டிக்கடை காலம் : மாலை உறுப்பினர் : பொன்னன், மின்னொளி, மரக்கால். (அதே அறையில், மின்னொளியும், பொன்னனும் பேசியிருக் கிறார்கள். மரக்கால் என்னும் காரோட்டியும் அங்கே வந்து நிற்கிறான்.) பொன்னன் : உன்னை யார் இங்கே வரச்சொன்னார்கள் மின்னொளி? மின்னொளி : மாமா அனுப்பினார். மரக்கால் : மாமா அனுப்பாட்டி போனா இங்கே இதெ ஆரம்மா தீக்கறது? நல்லதாப் போச்சி, நீங்க இங்கே வந்தது. பொன்னன் : நீ, சும்மா இரடா. பெண்கள், ஆடவர் கண்கள் முன் வருவது சரியாடா? மரக்கால் : ஆமாம்மா. எல்லா கண்ணும் ஒண்ணுபோல இருக்குமா. சில கண்ணுவ குளு குளுண்ணு இருக்கும்! இன்னும் சில கண்ணுவ இருக்கு, திகு திகுண்ணு எரியும்! ஒடம்பெ பொசிக்கிப்புடாது? பொன்னன் : கண்ணேறு வந்துவிடும் என்றா நான் கூறு கிறேன், பெண்கள் வெளியில் ஏன் வரவேண்டும்? மரக்கால் : அதானே, எதுக்காக வெளியிலே வர்றது, வூட்டிலே தான் எல்லாம் இருக்குதே. மேல் கூரை இல்லியா, கவுறு இல்லியா, கெணறு இல்லியா, நல்லா வெளையாடிக் கினே இருக்கலாமே. பொன்னன் : அதென்னடா, மேல்கூரை? கவுறு, கெணறு மரக்கால் : மேல் மாடிலே ஒலாத்தலாம். கவுறு இருக்கு பாருங்க. - சுருக்குக் கவுறு இல்லிங்க - நூல் பின்ன, கெணறு தண்ணி மொள்ள, குளிக்க, முழுவ. அதுக்குச் சொன்னேன். பொன்னன் : ஆளுக்குக் குறைவா. எதற்கும் நீ ஏன் முன்னே முன்னே வருகிறாய். மரக்கால் : அதானெம்மா எல்லாத்துக்கும் ஆள் இருக்காங்க. கடல் கரைக்குப் போவணும், ஓர் ஆளை அனுப்பிடுங்க. ஒங்க தாயாரூட்டுக்குப் போவணும் ஆளை அனுப்பிடுங்க. நீங்க சாப்டணும், அனுப்புங்க ஒர்த்தனை. ஒங்களுக்கு ஏன் தொல்லை? பொன்னன் : சாப்பாட்டுக்குக் கூடவாடா நான் சொன்னேன்? மரக்கால் : இல்லிங்க. ஒருத்தனைச் சாப்பிட வைக்கணும், ஆளனுப்பி வைத்தாலுங்களே, போதாதுங்களா? பொன்னன் : அது சரி. கணக்கனை எதிரில் உட்கார வைத்துக் கொள்ளுகிறாய். ஏன்? மரக்கால் : இல்லிங்களே, பின்னாலே ஐயா வந்ததும் உக்காரச் சொல்லி கேட்க வைக்றது. பொன்னன் : அதுதானே! இப்படி யெல்லாம் நடக்காதே. மரக்கால் : நடக்கவே கூடாதம்மா. பொன்னன் : சொல்லுவதைக் கேட்காமல் இருக்கிறாயே. மரக்கால் : உம். அதுதானே, கேக்காமல் இருக்கிறீங்களே ஒழிஞ்சி ... ... பொன்னன் : அடே. மரக்கால் : ஒழிஞ்ச நேரத்திலே, இதெயெல்லாம் நெனைச்சிப் பாருங்கம்மா. பொன்னன் : ஏறு காரில். (அனைவரும் வீட்டுக்குப் போகிறார்கள்.) காட்சி - 9 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : மாலை உறுப்பினர் : பொன்னன், மரக்கால்,வீரப்பர். (பொன்னனும், மரக்காலும் தனி அறையில் பேசியிருக் கிறார்கள்.) பொன்னன் : மரக்கால், அதென்னடா அம்மாவை, நான் கடிந்து பேசும்போது நீயும் கூடக் கூடிக்கொண்டு பேசுகிறாயே. மரக்கால் : அம்மாண்ணா எனக்குப் புடிக்கிறதில்லிங்க, நீங்கண்ணா எனக்கு அதென்னுமோ கல்கண்டுமாதிரி இருக்குதுங்க. பொன்னன் : அப்படியெல்லாம் இனி நீ பேசாதே. மரக்கால் : இல்லிங்க (இதற்குள், வீரப்பர் பொன்னனைத் தேடி வந்து விடுகிறார்.) மரக்கால் : வீரப்பர், வந்துட்டாருங்க! வாங்க. பொன்னன் : வாருங்கள், உட்காருங்கள். மரக்கால் : ஐயைய்ய அவுரு உக்காந்துடுவாருங்க, நீங்க சொல்லாட்டிப் போனா கூட. பொன்னன் : இருந்தாலும், உட்காருங்கள் என்று சொல்லவேண்டியது நம் கடமையல்லவாடா? மரக்கால் : அது, அவுருக்குத் தெரிய வேண்டாங்களா? பொன்னன் : என்ன தெரியவேண்டும் என்கிறாய்? மரக்கால் : இப்ப, நீங்க என்னெ ஒக்காருங்கண்ணு சொல்லுங்க, நான் உக்கார்றனா பாருங்க. வீரப்பர் : அப்ப, நான் உக்காந்தது தப்பு, நிக்கணுமோ? நீதானாடா நானு? மரக்கால் : நான் மனிசன், நீங்க ... ... ... வீரப்பர் : மாடு, அப்படித்தானா? மரக்கால் : பெரிய மனிசர் இண்ணேன். பொன்னன் : மரக்கால், வீட்டிலே போய், ஐயா புறப்படவேண்டும் சென்னைக்கு என்று சொல். உணவு பரிமாறச் சொல்லி வா. வீரப்பரே, நீரும் இங்கேயே சாப்பிடுவதுதானே? மரக்கால் : சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்றாருங்க. வீரப்பர் : சரி, என்னடா கேலி பண்றே? மரக்கால் : பெரிய மனிசர், அப்படி நெனைக்கப்படாதுங்க. (போய்விடுகிறான் மரக்கால்) பொன்னன் : பதினாயிரம் போதுமா? வீரப்பர் : எதற்காக அவ்வளவு. எதற்கும் கையில் இருந்தால் நல்லதுதான். எடுத்த எடுப்பில் உமக்குப் பெருந்தொகை அடித்து விடும். (மரக்கால், கையில் இரண்டு கொய்யாக் கனிகளுடன் திரும்பி வருகிறான்.) மரக்கால் : நம்ப கொல்லையிலே இருந்துதுங்க. ரெண்டு பழம். எவ்வளவு பெரிசுங்க! (ஒன்றைப் பொன்னனிடம் கொடுக்கிறான். அவன், அதை வாங்கிக் கடிக்கிறான். அவாவுடன். மற்றொன்றை வீரப்பனெதிரில் காட்டி) மரக்கால் : தின்னுங்களேன். (என்று கூறித் தான் கடித்துத் தின்று கொண்டே!) கடமைக்காகச் சொல்லவேண்டியதுங்க. பொன்னன் : என்னடா மரக்கால், வீரப்பரை ஏமாற்றி விட்டாய். வீரப்பர் : எனக்குக் கொய்யாப்பழம் பிடிக்காது. மரக்கால் : அவருக்குப் பிடிக்காதுங்க. வீரப்பரும், ஒங்க கூடச் சென்னைக்கு வர்றாருங்களா? பொன்னன் : ஆமாம். வீரப்பர் : ஒனக்கு, வருத்தமா, மரக்கால்? நல்ல பேரடா ஒனக்கு. மரக்கால் : இல்லிங்க ஒரு காரணமா வச்ச பேருங்க அது. ஆராவுது எங்கியாவுது போனா, கூடப் போவுது பாருங்க அது என்னாங்க, நாயி! அந்த நாயெ எங்கப்பா மரக்காலாலெ அடிச்சாருங்க, அப்பத்தானுங்க நான் பொறந்தேன். அதோட்டு எம்பேரு மரக்காண்ணு வச்சுட்டாராம் எங்கப்பா. (உணவருந்தப் போகிறார்கள்.) காட்சி - 10 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : மாலை உறுப்பினர் : பொன்னன், மின்னொளி, மரக்கால், வீரப்பர். (உணவருந்தியபின், வீரப்பரைத் தனியறையில் உட்கார வைத்துவிட்டுப் பொன்னனும் மரக்காலும் மின்னொளி யிடம் பயணம் சொல்லிக்கொள்ளப் போகிறார்கள்.) பொன்னன் : மின்னொளி, விழிப்பாகப் பார்த்துக்கொள். நான் இரண்டு நாட்களில் வந்துவிடுகிறேன். சென்னையில் ஒருவரைப் பார்க்கவேண்டும், நம் வட்டிக்கடை பற்றி! மரக்கால் : அங்கே, ஒருத்தர் வந்திருக்கிறேண்ணாருங்க. குதிரைப் பந் ... ... ச்சே இல்லே. வேறெ எடத்லே. அவரை ஐயா - ஆடிட்டு ... ... ச்சே இல்லே - பார்த்துட்டு வீரப்பர்... ... ச்சே இல்லே - தனியா திரும்பி வந்துடுவாரு வருத்தப் படாதிங்க! பொன்னன் : என்னடா நீ ஒரு பக்கம் குளறிக் கொட்டுகிறாய். மரக்கால் : அதுவா கொட்டிக்கிதுங்க. மின்னொளி : அத்தான், மாமா உடல்நிலை நம்பத் தகுந்த தாயில்லை. பொன்னன் : அவர் உடல்நிலை எனக்கல்லவா தெரியும். ஒன்றும் வருந்தும்படி இராது. அப்படி ஒன்றும் நினைக்காதே. மரக்கால் : இப்ப, ஒண்ணும் நடந்துடாது. அம்மா, நாளைக்கி ... ... ... பொன்னன் : என்னடா, நாளைக்கு? மரக்கால் : நாளைக்கு நல்லா பூடும். மின்னொளி : நான், கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இப்போது போகக்கூடாது. பொன்னன் : போகும்போது தடுக்கிறாய்! போகிற செய்தி கெட்டு விடாதா? ஐயோ! மரக்கால் : ஆமாம்மா. போகும்போது தடுக்கப்படாது. எங்கப்பா வுக்கு, வைத்தியரு சொன்னாரிண்ணு கடல்லே ஒரு சொம்பு தண்ணி கொண்டாரப் போனேன். வழியிலே இப்படித் தான் ஒருத்தன் தடை செஞ்சான். அங்கே போனேன். கடலுமில்லே ஒரு மண்ணாங்கட்டியும் காணோம். பொன்னன் : என்னடா கடலா காணாமல் போய்விடும்? மரக்கால் : நான் போக முடியாமே போச்சிண்ணேன். மின்னொளி : அக்காகூட வீட்டுக்குப் போகாமல் இங்கேயே இருக்கிறார்கள். மாமா நிலை அப்படி இருக்கிறது. பொன்னன் : அக்கா, படித்த பெண்! பைத்தியம். மரக்கால் : படிப்புண்ணா என்னாங்க, பைத்தியங்க! நம் ஊர்லே பாருங்க, இங்கே பள்ளிக்கூடம், இங்கே ஒரு ஆபத்ரி. கடலூர்லே பாருங்க, இங்கே பள்ளிக்கூடம், இங்கே ஆபத்ரி. பட்டணத்லே பாருங்க, இங்கே பள்ளிக் கூடம், அடுத்தாப்லே ஆபத்திரி. ஏன்? படிச்சதும் பயித்தியம் புடிக்கும், ஆபத்ரியிலே நொழைஞ்சிக் கிறது. உம், மெய்தாங்க. பொன்னன் : நான் போய் வருகிறேன். மரக்கால் : வருவாரம்மா வருவாரு. மின்னொளி : ஒரு செய்தி அத்தான்! பொன்னன் : ஒரு செய்தி! என்ன ஒரு செய்தி! மரக்கால் : செய்தி ஒத்த படையா இருக்கலாமா? பாருங்க ஐயா. பொன்னன் : இல்லையடா, தொல்லை கொடுப்பதைப் பார். மின்னொளி : நம் வட்டிக் கடைக்குக் கணக்கர் இல்லை, ஆள் ஒருவன் வேண்டும். கணக்கு வேலையை நான் ... ... ... ... பொன்னன் : ஓகோ! அதை மறந்தேன். மரக்கால் : அப்ப, அம்மா, ஒங்களுக்குத் தொல்லையைக் குடுக்கலே. அவுங்கதான் ஒங்க கிட்டேருந்து வாங்கிக் கிட்டாங்க. பொன்னன் : நீ கணக்கு வேலை பார்ப்பதா? ஒரு போதும் கூடாது. நாடோறும் வெளிவரும் செய்தித் தாள்களில், இப்படிக் கணக்கன் ஒருவன், ஆள் ஒருவன் வேண்டுமென்று வெளிப்படுத்து, எட்டு நாளைக்குள் நம் முகவரிக்கு விருப்ப முள்ளவர் விண்ணப்பம் எழுத வேண்டும். ஒன்பதாம் நாள், நேரில் வரவேண்டுமென்று அறிவித்து வை. அதற்குள் நான் வந்து விடுகிறேன். மரக்கால் : ஐயா, அப்படிச் செஞ்சி புடாதிங்க. திருவிழாவுக்கு வர்ற மாதிரி கும்பல் வந்துடுங்க. வேலையில்லாத திண்டாட் டம் ரொம்பங்க. எனக்கல்லவா தெரியும் ஐயா. பொன்னன் : அதெல்லாம் இராது. தெரிவித்து வை. (போகிறான் மரக்காலுடன்.) காட்சி - 11 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : இரண்டாம் காலை உறுப்பினர் : மரக்கால், மின்னொளி, இன்னமுது. (மறுநாள் காலை, உணவுக்குப் பின், கூடத்தில் மரக்கால், மின்னொளி, இன்னமுது மூவரும் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.) மரக்கால் : பெரிய ஐயாவுக்கு, மாருவலி, வாந்தி மட்டு! அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. பெரியம்மாவுக்கு அதுக்கு மேலே. மின்னொளி : அக்கா, இந்த மரக்கால், அத்தானை என்னமா கேலி பண்ணுகிறார்.! மரக்கால் : அம்மா, அப்படியா நெனைக்றிங்க. நான் கேலி பண்றதா சொல்லுறிங்களே. எம்பேச்செல்லாம் ஒண்ணா கூட்டுங்க. போட்டு உருக்குங்க. பாருங்க கலப்படமே இல்லாத அசல் அன்புங்க. ஐயாவுக்கோ ஒங்களுக்கோ பெரியம் மாவுக்கோ ஒண்ணுண்ணா இந்தாங்க உசிரு, கொடுத் துடுவேன். அப்படி நெனைக்காதிங்க, அண்ணைக்கி ஒரு நாளு ஐயா, நம் அறநெலயத்லே படுத்திருக்காரு. வந்தான் ஒரு திருடன்! நான், அங்கே ஒரு பக்கம் படுத்திருந்தேன். வெள்ளிக்கூசா, பொன்னு கெடியாரம் இருந்தது. அவன் கத்தி என் வெலாவிலே ... ... ... மின்னொளி : குத்திவிட்டானா? மரக்கால் : இல்லே. இன்னமுது : குத்துவதற்கு முன் தடுத்துக் கொண்டீரா? மரக்கால் : இல்லே, கத்தியெ போட்டுட்டு, கூசாவையும் கெடியாரத் தெயும் எடுத்துக் கினு பூட்டான். கத்தியெ எடுத்து வெலாவிலே மறைச்சிக்கினேன். (இருவரும் சிரிக்கிறார்கள்.) மின்னொளி : இதில், உயிரைக் கொடுத்த பகுதி என்ன இருக்கிறது. இன்னமுது : அதுதானே! மரக்கால் : இல்லே, அவன் ஆப்ட்டிருந்தா! அதை நெனைச்சிப் பாருங்க. உம்! மின்னொளி : இரவு வண்டி ஏறினார்களே, நல்லபடியாக இருவரும் போய்ச் சேர்ந்திருப்பார்களோ? மரக்கால் : அதுபற்றி, கவலை வேண்டியதே இல்லை. ஆனா, ஐயா பணம் கிழியும், நானும் ஒரு தடவை ஐயாவும் வீரப்பரும் போன போது கூடப் போயிருக்கேன். வெக்கக் கேடு வீரப்பர் சேதி. மின்னொளி : ஐயா உம்மை ஏன் அழைத்துப்போக ஒப்பமாட்டேன் என்கிறார். மரக்கால் : அவர் ஒப்புவாரு, வீரப்பருக்கு நான் வர்றது சரிப்படாது. கொஞ்சங்கூட சரிப்படாது. முன்னைய தடவை நானு, வீரப்பர், ஐயா மூணு பேரும் பொறப்பட்டோம். புகைவண்டி விழுப்புரம் போய் நின்னுது, அங்கே எறங்கி ரெண்டு மணி நேரம் காத்திருக்கணுமே. காத்திருந்தோம் அறை யிலே! வீரப்பர் காப்பி, கீப்பி வேணுமோண்ணாரு ஐயாவை. காப்பி மட்டும் இருந்தா போதுமிண்ணாரு ஐயா. வீரப்பர் பொட்டியெ தெறந்தாரு, பத்து ரூபா நோட்டு ஒண்ணெ எடுத்துக்கினு, கூசா ஒண்ணு எடுத்துக் கினு போனாரு, என்னெ கூப்டல்லேம்மா. போவுட்டு மிண்ணு அவருக்குத் தெரியாமே கூடவே போயி நடக்றதே பார்த்துக்கினுருந்தேன். மூணு தடவை இட்லி கொண்டாரச் சொன்னாரு. இன்னமுது : தடவைக்கு ஒன்றாக. மரக்கால் : ஒண்ணா? மும்மூணு! மொத்தம் ஒம்பது. அப்றம் தித்திப்பு. தித்திப்பா திண்ணாரு திண்ணாரு அப்படியே திண்ணாரு. அப்றம் காப்பி குடிச்சாரு, குடிச்சாரு அப்படியே குடிச்சாரு. வெத்லேபோட்டாரு, போட்டாரு அப்படியே போட்டாரு. சிகிரேட்டு புடிச்சாரு புடிச்சாரு அப்படியே புடிச்சாரு. பழம் உரிச்சாரு உரிச்சாரு அப்படியே உரிச்சாரு. வாய்லே போட்டுக் கொதப்னாரு கொதப்பனாரு அப்படியே கொதப்னாரு. அப்றம் ஐயாவுக்கு ஒரு தம்ளர் காப்பி. அவ்வளவுதான் பத்து ரூபா காலி. ஐயா, காப்பியே சாப்ட்டாரு. வீரப்பர், சிகரேட்டு ஓணுமாண்ணு கேட்டாரு. ஆமாம்ண்ணாரு ஐயா; மறு படியும் பத்து ரூபா எடுத்துக்கினாரு போனாரு. அங்கே புதுச்சேரிக்குப் போறவரெ கண்டு அவருகிட்ட ஒம்பது ரூபாயெ குடுத்து இதே எங்கூட்லே குடுத்துப்புடுண்ணு சொல்லி அனுப்புனாரு. அப்றம், இன்னொருத்தரு கிட்டே ரொம்ப நேரம் பேசிக்கினு இருந்தாரு. அப்றம் சிகிரேட்ட வாங்கிக்கினு வந்து ஐயாகிட்ட குடுத்தாரு. ஐயா கேட்டாரு. மரக்காலுக்கும் காப்பி வாங்கிக் குடுத் திங்களாண்ணு. வெகு கணிசமா, உம், வாங்கிக் குடுத் தேனுட்டாரம்மா. நானு சும்மா இருந்துட்டேன். கொஞ்ச நாழி செண்ணு ஒரு மனிசன் வந்தான். அவன் ஆரு தெரியுமா? முன்னே வீரப்பர்கிட்டே பேசிக்கினுருந்தா ரிண்ணேனே அவந்தான். அவன் கேட்டான் வீரப்பரை. இதேயடியில் எம்மூட்டுப் பணம் மூணு நூறு ரூபாயெ வச்சிட்டு அப்பாலே போ, உடமாட்டேன். மவன் கல்லாணத்துக்கு வாங்கிம்போனே. வருசம் ரெண்டாச்சி. இன்னும் குடுக்கலியேண்ணு சண்டே புடிச்சான். அவ்வளவுதான். ஐயா சொன்னாரு. அப்படிண்ணா பொட்டியிலே இருக்றதிலே முந்நூறு ரூபாயெ எடுத்து அவன் பாக்கியெ தீத்து அனுப்பிடுண்ணு எங்கிட்டே சொன்னாரு. சரிதாண்ணு பொட்டியை நான் தெறந்தேன். எடுக்றமாதிரி சாடைகாட்டி பொட்டியெ மூடிட்டு எம் பையிலே இருந்த முந்நூறு ரூபா நோட்டைக் குடுத்தனுப் பிட்டேன். வந்தவன் அதை வாங்கிக்கினு பூட்டான். நாங்களும் பட்டணம் வண்டியிலே ஏறிட்டோம். வண்டி போனது. வீரப்பர் ஆறு சோடா குடிச்சிப்புட்டு தூங்கு னாரு. அப்போ ஐயாகிட்டே நான் சொன்னேன்: முந்நூறு ரூபா கடன்காரன் வந்தானே. அவன் வந்தது வீரப்பர் ஏற்பாடுங்க. வீரப்பர்தான் அப்படி வந்து கூச்சல் போட்றாப்லே போடு. பணம் வரும். அதிலே நீ, பத்து ரூபா யெடுத்துக்கினு மீதியெ வூட்லே குடுத்துடுண்ணு சொல்லி இருப்பாருங்கண்ணேன். ஐயா, இருக்கும் இருக்கும். அப்பவே சொல்லியிருந்தா குடுத்திருக்க மாட்டேணேண்ணாரு. இப்பவும் நான் குடுக்கலிங்களே ஐயாண்ணேன். குடுத்தியே மூணு நோட்டுண்ணாரு. அது, செல்லாத நோட்டுங்க. ஏங்கிட்டே இருந்துதுங்க. அதுங்கண்ணேன். ஏன் செல்லாதிண்ணாரு. அது வெறும் காந்தி நோட்டுங்கண்ணேன். சிரிக்கிறாரு, சிரிக்கிறாரு அப்படியே சிரிக்கிறாரு. (இருவரும் சிரிக்கிறார்கள்) மின்னொளி : கார் ஓட்டுகிறவரே, மற்றவைகளை நாளைக்குப் பேசலாம். மரக்கால் : பட்டணத்துலே நடந்தது இன்னும் ரொம்ப நல்லா இருக்கும். நாளைக்கிச் சொல்றேனம்மா அதை. இன்னமுது : உம்மைச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போகாததற்கு இது ஒன்றே போதுமான காரணம். மரக்கால் : ஆமாமாமாம். காட்சி - 12 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : முற்பகல் உறுப்பினர் : மருத்துவர்,மின்னொளி,இன்னமுது, மரக்கால், கண்ணப்பன், கார்வண்ணர். (மருத்துவர், மின்னொளி, இன்னமுது, மரக்கால், கண்ணப்பன், ஆகியவர்கள் கார்வண்ணரைச் சூழ்ந்திருக் கிறார்கள்.) மருத்துவர் : (கார்வண்ணரின் உடலைக் கண்காணித்து) அம்மா, மருந்தால் பயனில்லை. நோயாளி கேட்டதைக் கொடுத்து அவாவை நிறைவேற்றுங்கள். வெளியூர் உறவினர்க்கு அறிவித்து வையுங்கள். அனைவரும் உடனிருங்கள். மின்னொளி : அப்படியா. (கண்ணீர் விடுகிறாள். அனைவரும் அப்படியே. மருத்துவர். போய் விடுகிறார். இது சமயம், சென்னையிலிருந்து கார்வண்ணர் தங்கையும் கைம்பெண்ணு மான ஐம்பது வயதுள்ள கண்ணம்மா வந்து விடுகிறாள்.) மின்னொளி : வாருங்களம்மா (என்று வருத்தத்தோடு கூறுகிறாள். கண்ணம்மா, கார்வண்ணரைத் தொட்டுப் பார்க்கிறாள்.) கண்ணம்மா : அண்ணா! எப்படி இருக்கிறது உடம்பு? (பேச்சில்லை) ஏன் மின்னொளி, ஏன் இன்னமுது, மருத்துவர் யார்? என்ன சொன்னார்? மருந்து கொடுத்து வருகிறாரா? இன்னமுது : அம்மா இப்போது தான் மருத்துவர் வந்தார். மாமா, விரும்புவதையெல்லாம் கொடுங்கள், மருந்து பயன்படாது என்று சொல்லிப் போனார். கண்ணம்மா : அவன் கெடக்றான். ஆர் அங்கே? மரக்கால் : ஏங்க, என்னா செய்ய? கண்ணம்மா : திருப்பதிக்குப் போவாத குத்தம் இது, கொஞ்சம் மஞ்ச துணி நனை. மரக்கால் : மஞ்ச துணி நனைக்கிறேண்டா கோவிந்தா! (மின்னொளி முதலியவர்கள், கார்வண்ணரைச் சூழ்ந்து தலை நட்டபடி வருத்தத்துடன் இருக்க, மரக்கால், ஓடி மஞ்சள் துணி கொண்டு வந்து கண்ணம்மாவிடம் கொடுக்கிறான்.) கண்ணம்மா : காலணா காசுயிருந்தா கொண்டா. மரக்கால் : காலணா காசு கொண்டாரண்டா கோவிந்தா! (என்று கொண்டு வந்து கொடுக்கிறான்.) கண்ணம்மா : கோவிந்தா! சௌக்கியமாபோன மறுநாளே மலைக்கு வந்து மயிர் வாங்குகிறோம், உண்டி ஒண்ணு கட்டப்பா. மரக்கால் : உண்டி ஒண்ணு கட்டுறேண்டா கோவிந்தா! (உண்டி ஒன்று கொண்டு வந்து கொடுக்கிறான். கண்ணம்மா அதில் காசு போட்டு ஒரு பக்கம் வைக்கிறாள்.) கண்ணம்மா : வேறே ஒண்ணுமில்லே. திருமலைக்குப் போவாத குத்தந்தான். படிப்படியா இனி எறங்கிப் பூடும் பாருங்க. மரக்கால் : நோவு, படிப்படியா எறங்க வோணுண்டா கோவிந்தா! (கார்வண்ணர், புரளுகிறார். மின்னொளியும், இன்னமுதும் நிலைமையை உற்றுக்காண்கிறார்கள்.) கண்ணம்மா : இனிமே, ஒண்ணுமில்லையம்மா அவருக்கு. மின்னொளி : மாமா! இன்னமுது : மாமா! (மின்னொளி மூக்கில் கையை வைக்கிறாள்.) மின்னொளி : மாமா, போய் விட்டார்களே! (என்று கார்வண்ணர் மேல் வீழ்ந்து கண்ணீர் விடுகிறாள். இன்னமுது, கண்ணப்பனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விடுகிறாள். கண்ணப்பன் அழுகிறான்.) மரக்கால் : கோவிந்தா! கோவிந்தா! (என்று கதறுகிறான்.) கண்ணம்மா : அண்ணா! பூட்டியா! (என்று மார்படித்துக்கொண்டு அழுகிறாள்.) காட்சி - 13 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : இரண்டாம் நாள் பகல் உறுப்பினர் : மரக்கால், சீனு, (ஏனைய உறவினரும் அண்டை வீட்டாரும்.) (பிணத்தின் அருகில் பல பெண்கள் வருத்தத்துடன் சூழ்ந்திருக்கிறார்கள். மற்றும் பலர் வட்டமாக உட்கார்ந்து கட்டி ஒப்பாரி சொல்லி அழுகிறார்கள். அங்கு மரக்கால், ஒரு புறமாக உட்கார்ந்து வருந்துகிறான். மற்றும், குப்பு, மணி முதலிய பிள்ளைகளும் தம்மில் ஏதேதோ பேசியிருக் கிறார்கள். அண்டைவீட்டுச் சொக்கு தன் மனைவியைத் தேடி வருகிறான்.) சொக்கு : அங்கே, என்னா பண்றே. அந்தப் பணத்தே, எங்கே வச்சே? நெல்லுக் காரனுக்குச் கொடுக்கணும். அவன் வந்து தொந்தரவு பண்றானே. மனைவி : (கட்டியழுதிருந்தவள், கை விலக்கித் தன் அழுகையை நிறுத்தி) இந்தாசாவி! அடுப்பங் கரையில் பொட்டியிலே வச்சேன். (அவன் வாங்கிக் கொண்டு போகிறான். அவள். ஒப்பாரியை விட்ட இடத்திலிருந்து துவக்கி அழுகிறாள்.) மற்றொரு பிள்ளை : எம்மா, இவனே பாருமா. அழுதிருந்தவள் : ஆர்றா அது? என்னடா பண்றே புள்ளெயெ? (மீண்டும் அழுகிறாள்) மற்றொரு பையன் : ஏம்மா, நீ நல்லா பாடலியாம். இவன் சொல்றாம்மா. அழுதிருந்த வேறொருத்தி : அவங்கெடக்றான் நீ, வூட்டுக்குப் போ அலமாரியிலே வாழப்பழம் இருக்கு எடுத்துக்க. (பிள்ளை ஓடுகிறான்.) எதிர்வீட்டுச் சீனு: (உள்ளே, வந்து மரக்காலை நோக்கி) மரக்கால்! எழுந்திரு. நீயும் தெரியாதவனா! அழுதால் எழுந்து வருவார்களா, என்ன? ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ மாநிலத்தில்! மரக்கால் : (எழுந்து, சீனுகூட வெளியில் வரும்போது முன்னிலும் மிகுதியாக அழுதுகொண்டே) என்ன செய்வேன்? சீனு : சீச்சி! நீ, சிறிது அறிவாளி என்றல்லவா நினைத்தேன். இறந்த பின் அழுது பயனென்ன? மரக்கால் : அவரு செத்துப்புட்டாருண்ணு அழலிங்க. அங்கே பாருங்க, அந்தப் பொம்பளைங்களே, அழுவுறாங்க. சீனு : அவர்கள், அழாமலா இருப்பார்கள்? படிக்காத பெண்கள். மரக்கால் : அழுதாலும் இல்லியா, அதுக்கிண்ணு இப்படியா? பாட்டுச் சொல்லியா? பாட்டுச் சொல்லி அழுறாங்க. ஈசுரங் கோயில்லே, பெருமா கோயில்லே பார்த்துட்டு வேத பாராயணத்தெ நாம் பழிக்றமே. அவுங்க நம்ப்ளே பாத்தா பழிக்க மாட்டாங்க? அதுவுமில்லாமே, அழா றாங்க வேண்டியபோது திடீரிண்ணு நிறுத்தறாங்க. அப்றம் உட்ட எடத்லேருந்து தோக்றாங்க. இப்படியா? நம்ப நாட்லே, பெறப்பும் சடங்கு, மணமும் சடங்கு, அழுகையும் சடங்கா? சீனு : அதுகிடக்கட்டும் அவருக்குத் தந்தி கொடுத்தாயா? மரக்கால் : ஆமாங்க, ஆமாங்க, தலைப்புள்ளைங்க, மொகத்லே முழிக்கணுங்க. சீனு : முகவரி தெரியுமா உனக்கு? மரக்கால் : தெரியுங்க. சீனு : சொல்லேன். மரக்கால் : அந்தம்மா பேரு. அம்மாக்கண்ணா, கண்ணம்மாவா? கொஞ்சம் மறதியாருக்குதுங்க. சீனு : எந்த ஊர்? மரக்கால் : ஊரு, தெரிஞ்சதுதானே! அதுதாங்க. சீனு : எது? தெரிந்தால் தானே. மரக்கால் : அதானுங்க, நான்கூட ஒரு தடவை போவிலிங்களா அவுருகூட, இந்தப் பசங்க வூட்லே பணம் ஆப்ட்டா திருடிக்கினு எந்தூருக்குப் போவானுவோ? சீனு : பட்டணமா? மரக்கால் : ஆமாங்க, அதாங்க! சென்னப்பட்டணம். சீனு : தெரு? மரக்கால் : சிந்தாரிப்பேட்டைங்க. சீனு : வீட்டு எண்? மரக்கால் : தொண்ணுத்தாறு இல்லிங்க, அறவத்தொம்பது. இல்லிங்க, தொண்ணுத்தாறுதான். சீனு : சரி. தொண்ணுற்றாறு. தந்தி கொடுத்தால் அவருக்குச் சேர்ந்து விடுமல்லவா? மரக்கால் : ஆருகிட்ட? உம், சேராதுங்க, தந்தி போனாதானுங்க. அவ, அவருகிட்ட காட்டமாட்டா. அவுரு இங்கே வந்துட்டா அவளுக்குப் பணம் வராதுங்களே! எதுக்கும் தந்தி குடுங்க... ... இன்னொண்ணு பண்ணுங்களேன். கிண்டிக்குத் தந்தி குடுங்களேன். அவுரு, அங்கே தானே கெடப்பாருங்க? சீனு : கிண்டியிலே, எங்குக் கண்டு கொடுப்பது? மரக்கால் : தந்தியெ, ஆளெத் தேடிக் குடுக்கச் சொல்றது. சீனு : சீச்சி, அப்படி வழக்கமில்லை. முன் சொன்ன முகவரிக்கே கொடுப்போம். (சீனன் போகிறான், துரைசாமி வருகிறான்.) துரைசாமி : மரக்கால், பெரியவர் சனிக்கிழமையில் செத்திருக்கிறார். பிணம் எடுக்கும் போது மறந்துவிடாமல் ஒரு கோழியைப் பல்லக்கில் கட்டவேண்டும். மரக்கால் : உசுரோடாவா? ஏனுங்க? துரைசாமி : கட்டாவிட்டால் அந்தப் பிணம் துணைதேடும். மரக்கால் : அப்படி இதுக்கு முன்னே தேடியிருக்குதுங்களா? துரைசாமி : ஓ! எத்தனையோ இடத்தில் சனிப் பிணம் துணை தேடும் என்பது தெரிந்ததுதானே! மரக்கால் : அப்படி, தொணை தேடிக்கினு இருக்கிறபோது, அதே இப்படியே தேடிக்கினு இருக்கட்டும்ணா உட்டுட்டாங்க? துரைசாமி : கண்ணுக்கா தெரியும்? மரக்கால் : கட்டி அனுப்புற கோழியெ கடைசியா என்னா பண்றதுங்க? துரைசாமி : அதை யாராவது எடுத்துக் கொள்ளுவார்கள். மரக்கால் : அப்படிண்ணா, போந்தாக் கோழியா பாத்து ஒண்ணு வாங்கணுங்க. துரைசாமி : சுடலையில் இருக்கும் தோட்டி எடுத்துக் கொள்ளுவான். மரக்கால் : அப்படிண்ணா, தெருவ்லே ஒரு நாயிக் குட்டி இருக்கு துங்க. அதெப் புடிச்சிக் கட்டிப்புடலாம். ஒரு உசுரு தானுங்களே, கட்டி அனுப்பணும். துரைசாமி : சரிதான், வழக்கம் அப்படியில்லை. மரக்கால் : வழக்கம்! என்னா வழக்கம்? சரி, ஆக வேண்டியதே பார்ப்போங்க! காட்சி - 14 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : பிற்பகல் உறுப்பினர் : உறவினர், பொன்னன், கண்ணன், மின்னொளி, மரக்கால். (சில நாட்களின் பிறகு ஒருநாள் மின்னொளி, இன்னமுது மற்றும் உறவுள்ள பெண்கள் பேசியிருக்கிறார்கள். கண்ணன் பாடசாலையிலிருந்து வருகிறான்.) உறவினர் : ஏக்கமா இருக்குது புள்ளெயெப் பாத்தா: இங்கே வாடி. உறவினர் 2 : ஏன், அவனுக்கென்னா கொறைச்சல்? (இதற்குள், பொன்னனும், மரக்காலும் வீட்டில் நுழைகிறார் கள். இங்கு பேசிக்கொள்வதை ஒரு புறம் நின்று கேட்கிறார்கள்.) உறவினர் 3 : மூத்த புள்ளாண்டான் தன் சொத்தே அழிச்சிபுட்டான். உறவினர் 4 : சொத்தே அழிச்சிபுட்டா, சின்னவனுக்கு அதனாலே என்ன? மொத்தம் சொத்து நானூறாயிரம். அதிலே இரனூறா யிரம் மூத்தவன் பங்கு, அழிஞ்சிது. சின்னவன், அழிஞ்சத்தெ ஒத்துக்க முடியுமா? (இதற்குள், பொன்னனும், மரக்காலும் வந்துவிடுகிறார்கள்.) மின்னொளி : அத்தான், (கண்ணீர் துடைத்தபடி) மாமா போய்விட்டார். (அனைவரும் துன்பமுகத்துடன் காட்சியளிக்கிறார்கள்.) கண்ணன் : அண்ணா! அப்பா இறந்துபோகும்போது நீங்கள் இல்லை. அதனால், உங்களை எல்லாரும் திட்டினார்கள். பொன்னன் : சரி. எனக்கும் தெரியும். இருக்கட்டும். மரக்கால் : ஐயா இல்லாத நேரத்லே ஐயாவெ திட்றதா? அப்போ ஐயா இல்லே. அப்றம் பத்துப் பதினைஞ்சி நாள் பாத்தோம்! ஐயா வல்லே. என்னை அனுப்புனாங்க ஐயாவே இட்டாரச் சொல்லி. நாந்தான் போனேன்; அவருதான் ஆப்ட்டாரு; இட்டுக்கினு தான் வந்தேனே, அப்றம் என்னா! (பொன்னன், தன் அறைக்குப் போக, மரக்காலும், மின்னொளியும் உடன் செல்லுகிறார்கள்.) பொன்னன் : (எரிச்சலாக) மின்னொளி, இதுதான் உனக்கு வேலையோ? என்ன சொத்து! என்ன செலவு! என்ன மீதி! இவைகளைப் பற்றிச் சாவுக்கு வந்த வீணர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாயா? மரக்கால் : இதெல்லாம் நல்லா இல்லிங்கம்மா. சேச்சே. மின்னொளி : நாம் நீக்கிவிட்டோமே கணக்கனை. அவன் சாவுக்கு வந்து எல்லாரிடத்திலேயும் வட்டிக் கடையின் கணக்குப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தானாம். தங்கள் அத்தை யிடத்திலும் சொல்லியிருக்கிறான். அதைக்கொண்டு தங்கள் அத்தை அனைவரிடமும் சொல்லிக்கொண்டே யிருந்தார்கள்! நான் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. தங்கள் முகம் கோண நான் ஒன்றும் செய்யமாட்டேன் அத்தான். மரக்கால் : இப்ப அவுரு மூஞ்சி கோணிக்கிச்சே, நீங்க தானே காரணம்? மின்னொளி : நான் அல்ல என்றுதான் இப்போது விளக்கினேனே, மரக்கால். மரக்கால் : இன்னம் வௌக்கமா சொல்ணும்மா. பொன்னன் : சரி, நீ போ, உறவினர் அனைவரையும் அவரவர் வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிடு. இன்னும் இங்கிருந்து கொண்டு வீண் வம்பு வளர்க்க வேண்டாம்! நானா, இது வரைக்கும் செலவு செய்தேன்! சொன்னாளே அத்தை! அத்தை! அவளை இதே நேரத்தில் வெளியில் அனுப்பு. மரக்கால் : அத்தை! அந்தச் சொத்தையை அனுப்புங்கம்மா. இல்லே, நான் அனுப்பட்டுமா? மின்னொளி : வேண்டாம். நானே இனிய முறையில் போகும் படி செய்துவிடுகிறேன். அத்தான், சாப்பிடுங்கள்! வாருங்கள்! களைப்பாக இருக்கிறீர்கள். பொன்னன் : சரி, வருகிறேன். போய் இலை போடு! மரக்கால் : நான், என் வூட்டுக்குப் போறேம்மா. எனக்கும் எலை போட்டுடாதிங்க. பொன்னன் : அப்படியில்லை. இங்கேயே சாப்பிட்டுவிடு மரக்கால்! (மின்னொளி, போகிறாள்.) பொன்னன் : மரக்கால், நான் எனக்குரிய சொத்தை அழித்துவிட்டேனாம். அதாவது இருநூறாயிரமாம்! மீதியிருக்கும் இருநூறாயிரம் என் தம்பியுடைமையாம். மரக்கால் : அப்படியே இருக்கட்டும். ஆருக்காகத் தோத்திங்க? குதிரப்பந்தயத்லே பெருத்த தொகை வந்துட்டுது. அப்ப, அந்தத் தொகை பொதுவிலேதானே சேந்துபுடும்? பொன்னன் : குதிரைப் பந்தயம் இருக்கட்டும். அதையேன் நாம் வெளியில் சொல்ல வேண்டும்? நாழிகையாகிறது! வா. சாப்பிட்டுப் பேசுவோம். (போகிறார்கள்.) காட்சி - 15 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : மாலை உறுப்பினர் : மரக்கால், பொன்னன் (சாப்பிட்டபின், பொன்னனும், மரக்காலும் தனியாகப் பேசுகிறார்கள்.) மரக்கால் : என்னாங்கையா, அந்த வீரப்பர்! வீணப்பர். என்னாத் துக்கோ பட்டுச்சுங்கம் கட்னாப்லேண்ணு வாங்க. அந்த மாதிரி - பேர்லே வேறெ மரியாதி. என்னாங்கையா இப்படிப் பண்ணிட்டான்! ஏமாந் துட்டிங்களேயய்யா. நான் இல்லாமெ பூட்டேன் ஐயா. பொன்னன் : கண்ணம்மாவும் அவனும் சேர்ந்து செய்த வேலைதான். போய்க் கண்ணம்மா வீட்டில் இறங்கினோம். ஆயிரம் எடுத்துக் கொண்டு போனோம். மீதியைப் பெட்டியில் வைத்துப் பெட்டியைக் கண்ணம்மா வீட்டு அறையி லேயே வைத்துப் பூட்டிக் கொண்டுதான் போனோம். கண்ணம்மாவும் எங்களோடே கிண்டிக்கு வந்து விட்டாள். கிண்டியில் குதிரைப் பந்தயம் தீர்ந்ததும் கையில் இருபத்தைந்து ரூபாய்தான் இருந்தது. மரக்கால் : அப்ப, ஒரு நாள்ளே தொளாயிரத்தி எழுவத்தி அஞ்சி ரூபா தோத்துட்டிங்க! நூத்லெ ஒன்பது நூறு, பத்லெ ஏழு பத்து, அஞ்சிலே ஒண்ணு, இவ்ளவுமா! அடேப்பா! பொன்னன் : அவ்வளவு தான். மரக்கால் : அவ்வளவு தான். அதிகமில்லே, அப்றங்க. பொன்னன் : நேரே, படக்காட்சிக்குப் போய்விட்டோம். சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டுவிட்டு, இரவு பத்து மணிக்கு வீடு வந்தோம், வீட்டில் யாருமில்லை, வீடு திறந்திருந்தது. அறை திறந்திருந்தது. பெட்டி இல்லை. எல்லாரையும் கேட்டேன். அண்டை அயலில் கேட்டேன். யாரும் வந்ததாகச் சொல்ல வில்லை. உடனே போலீசில் பதிந்து வைக்கப் போனேன். போலீசில் ஏதேதோ கேட்டார்கள். நடந்ததையெல்லாம் சொன்னேன். கண்ணம்மா வருத்தப்பட்டாள். போலீசில் சொல்லியதால் தனக்கு மானக் குறைச்சல் வந்துவிட்டதாம். வீரப்பனும் அவளுடன் கூடிக்கொண்டு கூத்தாடினான். என்னிடம் செலவுக்கு ஒன்றுமில்லை. ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில் கடனாக இருபத்தைந்து ரூபாய் கேட்டேன். கடைக்காரன் கொடுத்தான். அதைக்கொண்டு பந்தயம் வைத்தேன். முந்நூறு ரூபாய் கிடைத்தது. பிறகும் ஆடிக் கொண்டிருந்தேன். தந்தி வந்தது மெய்தான். என் நிலை அப்படியிருந்தது. கடிதம் வந்ததும் மெய்தான். நிலைமை சரியாயில்லை யல்லவா? நேற்று நீ வந்தாய். பத்து ரூபாய் மீந்தது. ஏறினோம் வண்டி. இதையெல்லாம் மின்னொளி யிடமும் - யாரிடமும் சொல்லாதே. அந்தக் கொடியவன் கணக்கன், நாளடைவில் நான் வட்டிக் கடையில் எடுத்துவந்த பணத்தையெல்லாம் என் பற்றாகவே எழுதி வந்திருக்கிறான். அதையும், என் அத்தை முதலியவர் களிடம் சொல்லிக் கலகம் செய் திருக்கிறான். இந்தச் சமயத்தில் அந்தக் கணக்கனை நான் பகைத்துக்கொண்டது தவறு. இல்லையானால், அவனைக் கொண்டே கணக்கை மாற்றி எழுதச் செய்திருக்கலாம். (இச்சமயம், மாலைச் செய்தித்தாள் ஒன்றை ஒருவன் கொண்டுவந்து கொடுத்துப் போகிறான். பொன்னன் அதைப் பிரித்துப் பார்க்கிறான்.) பொன்னன் : அடடா! மறந்து போனேன். கணக்கன் ஒருவனும் ஆள் ஒருவனும் தேவையென்று இதில், வெளிப்படுத்தச் சொன்னேனே. இதோ வெளிப்படுத்தப் பட்டிருக்கிறதே. குறித்த தேதி ஆய்விட்டிருக்குமே! இல்லை. மின்னொளி தேதியைத் தள்ளிப் போட்டிருக்கிறாள். நாளைக்குத் தான்! விண்ணப்பம் வந்திருக்கிறதா? எத்தனை! நாளைக்கு விண்ணப்பத்திற்கு உடையவர்கள் வந்து சேருவார்களே. மரக்கால் : வட்டிக் கடையில் விண்ணப்பம் வந்திருக்கும் ஐயா. பொன்னன் : வந்த விண்ணப்பங்களையெல்லாம் எடுத்துவா! ஓடு! மரக்கால் : வண்டி? பொன்னன் : அவ்வளவா வந்திருக்கும்? மரக்கால் : வண்டி, வைத்துக் கொள்ளட்டுமா வாடகைக்கி? பொன்னன் : சரி. நாலணா வாங்கிக்கொள் வட்டிக் கடையில். மரக்கால் : ஒரு நடைக்குத்தான் ஆச்சி நாலணா. அப்பறம்? பொன்னன் : மிகைபட நினைக்கிறாய். அவ்வளவு வந்திரா, விண்ணப்பங்கள். போய்வா. மரக்கால் : நான் கொண்டாந்து வைக்கறேனே! நாளைக்கித் தானே! இப்ப என்னாங்க. பொன்னன் : சரி. எனக்கு வேலையிருக்கிறது. விண்ணப்பங்கள் இருக்கட்டும். உடனே சென்று இந்தக் கடிதத்தை ( கடிதம் எழுதுகிறான்) கடையில் கொடு. அவர்கள் கணக்குப் புத்தகங்களைக் கொடுப்பார்கள். அதை யாரிடமும் காட்டாமல் என்னிடம் கொண்டு வா. மரக்கால் : ஆமாய்யா, ஒங்கபேர்லே இருக்ற பத்தெயெல்லாம் மாத்தி எழுதிபுடுங்க. ராத்ரிக்கல்லாம் அதெ வேலையா யிருந்து முடிச்சுடுங்க. பொன்னன் : அதற்காகத்தான். இதை யாரிடமும் சொல்லாதே. மரக்கால் : அதென்னாங்க? அடிக்கடி என்னெ அப்படி நெனைக்கிறிங்க. பொன்னன் : நம்பாமல் இல்லை. ஏமாறாமல் இருப்பதற்குச் சொன்னேன். மரக்கால் : எங்கே? நானு ஏமாந்தேனுங்க. ஏமாத்ரதுக்குத்தான் ஏங்கிட்டே என்னாருக்குதுங்க? பொன்னன் : இருந்தாலும், உனக்குப் படிப்பில்லையல்லவா. மரக்கால் : நானு படிக்காமே இருந்ததே நல்லதாப் போச்சிங்கோ! அல்லாட்டி கண்ணம்மா கிட்டியும் வீரப்பங்கிட்டியும் ஏமாந்து தானுங்களே போவணும். ஏங்க ஐயா நீங்க படிச்ச படிப்லே தாசியே வச்சிக்கலாம்னு இருக்குதுங்க. வச்சிக்கினா, இப்டி நடக்குதுங்களே. பொன்னன் : தாசியை வைத்துக் கொள்ளலாம் என்று நான் படித்ததில் சொல்லி யில்லையேடா. மரக்கால் : தாசியே பொதுமகளிண்ணு சொல்லியில்லிங்க? பொன்னன் : ஆமாம். ஆனால், பொதுமகள் உறவு கூடாதென்றும் சொல்லியிருக்கிறது. மரக்கால் : சொல்லி என்னா பண்றதுங்க? ஊர்த் தேவடியாளுவளெ யெல்லாம் கோயில் சாமியே கட்டிக்கிதுங்க. பொன்னன் : அதெல்லாம் தன்னலக்காரர்களின் ஏற்பாடுதானே. மரக்கால் : ஆம். அப்படிச் சொல்லுங்க. என்னா தன்னலங்க! என்னா அக்குறும்புங்க! இன்னொரு அக்குறும்பான தன்னல ஏற்பாட்டைப் பாருங்க. பரவநாச்சி என்ற ஒருத்தியை சுந்தர மூர்த்தி என்பவரு வச்சிகினாரு. பரமசிவஞ் சரிப்படுத்தி வச்சாரு. இப்படி சேக்கிழாருங்க. பொன்னன் : அடடா! அது பெரிய புராணமடா. அதை ஒன்றும் சொல்லாதே. மரக்கால் : தெரியுங்க, சொன்னா திட்டுவாங்க. வருத்தப்படுவாங்க. என்னா படிப்புங்க? பொன்னன் : நாழிகையாகிறது. கணக்குகளையெல்லாம் வாங்கிவா. போ! மரக்கால் : சரிங்க (போகிறான்) காட்சி - 16 இடம் : ஊர்க் காமாட்சி கோயில் காலம் : இரவு உறுப்பினர் : மரக்கால், குருக்கள் (பின்னிகழ்ச்சி வீதியில்) (அன்றிரவு மழை தூறுகிறது. பல நாட்களாகச் சாத்தப் பட்டிருந்த காமாட்சியம்மன் கோயிலின் முன்புறமுள்ள திறந்த இடத்தில் ஒரு சிறிய பந்தல் போடுகிறார்கள் நான்கு ஆட்கள் - மரக்கால் தன் அடையாளத்தைப் பிறர் அறியாதபடி முக்காடிட்டபடி நின்று மேற்பார்வை பார்த்திருக்கிறான்; அவ்வழியே போய்க் கொண்டிருந்த சுப்ரமணிய குருக்கள் பந்தல் போடுவது எதற்காக என்பதை அறிந்து கொள்ள நினைக்கிறார்.) சுப்ரமணிய குருக்கள்: அங்கே ஆரையா, என்ன விசேஷம்? மரக்கால் : (கேட்பவர் குருக்கள் என்று தெரிந்திருந்தும் தெரியாத வன் போல்) இங்கியா? சொல்லக்கூடாதுங்க. குருக்கள் : ஏனப்படி? மரக்கால் : பாப்பானுவ எங்கே இருக்றவனும் வந்துடுவானுங்க, சாத்திக் கெடக்குதல்ல இந்தக் கோயில்! நாள ராத்திரிக்கி சுலபமா கும்பா பிக்ஷேகம் பண்ணிபுட்றது. இதே, பாப்பா னுங்க தெரிஞ்சிக்கினா, குடிகெட்டுது. நீ தெரிஞ்சிக் றதிலே ஒண்ணும் கெடுதியில்லே. குருக்கள் : யார் கைங்கரியமோ? மரக்கால் : அவுங்கதான் வட்டிக்கடை பொன்னன். குருக்கள் : அவா, என்னை மறக்கமாட்டாளே? மரக்கால் : நீங்க ஆருங்க. குருக்கள் : நான் தான் சுப்ரமண்ய குருக்கள். மரக்கால் : அடடா நீங்களா, போங்க போங்க. அதெல்லாம் ஒண்ணு மில்லிங்க சும்மா சொன்னேங்க. இருட்லே தெரியாம பூட்டுதே. (குருக்கள் போகிறார். சிறிது தூரம் போகையில் எதிரில் அருணாசலையர் வருகிறார்.) குருக்கள் : ஆர் போறது? அருணாசலையர்: நான்தான் அருணாசல ஐயர். குருக்கள் : அப்படியா? காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷே கத்தைக் சொன்னாளோ உங்க கிட்டக்க? ஐயர் : இல்லியே, என்னிக்கி வைச்சிருக்கா? குருக்கள் : நாளை ராத்திரிக்கின்னா? கமுக்கமா நடத்ராளாம், பிராம்மணா அதிகம் பேர் வந்திடுவாண்ணு! ஐயர் : அதென்ன நாளை ராத்ரிக்கி? நாளை ராத்ரி நாள் நண்ணா யில்லியே? அப்படி இருக்காது. குருக்கள் : ஏன் இருக்காது. எந்தப் புரோகிதன் தனக்கு ஒழிந்த நேரத்தை பாத்து வைச்சுட்டானோ? ஐயர் : அப்படியும் இருக்கலாம். எதுக்கும் போவாமலா இருந்துடப் போறோம். கோயில் எதிர்லே, குதிரை ராட்ணம் தொட்டி ராட்ணம் போடுவாளே! கடைகள் வைப்பாளே. பந்தல் போடறாளோ? குருக்கள் : நடக்றது. ஐயர் : சரி, நான் போய் வர்றேன் (அருணசலையர் போகிறார். வழியில், பூக்கட்டும் பூசாரி வருகிறான்.) அருணாசலையர்: பூசாரியா? புஷ்பத்துக்குச் சொன்னாளோ! பூசாரி : யாருங்க? ஐயர் : காமாட்சியம்மன் கோயில் கும்பாபிக்ஷேகமாச்சே, நாளை ராத்ரிக்கிண்ணேன். பூசாரி : சொல்லாட்டி போவுட்டுங்க. நான் பூக்கடை வைக்கலாம் பாருங்க. என் தம்பி இருக்கானே அவன்கிட்டே சொல்லணுங்க, இதை. அவன் பட்டாணிக் கடை வைக்றவன் இல்லிங்களா? ஐயர் : ஆமாமாமாம். சொல்லிவச்சுடு. (பூசாரி போகிறான். எதிரில் ஒரு கூட்டம் வருகிறது. மண்பொம்மை செய்யும் மன்னாதன் பூசாரியைப் பார்த்து விடுகிறான்.) மன்னாதன் : என்னா பூசாரி? திருக்காஞ்சித் திருநா இன்னும் எத்தனை நாளிருக்குது? பூசாரி : நாளைக்கி ஒரு திருநாளாச்சே தெரியுமா ஒனக்கு? மன்னாதன் : கேட்டாக்கா? பூசாரி : காமாட்சியம்மங் கோயில்லே நாளைக்கிக் கும்பா பிஷேக மில்லே? மன்னாதன் : என்னாப்பாது? பூசாரி : கமுக்கமா ஏற்பாடு பண்ணிட்டாங்க. எனக்கும் இப்பத்தான் தெரிஞ்சுது. நான் போறேன். (அனைவரும் போதல்.) காட்சி - 17 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : இரவு உறுப்பினர் : மின்னொளி, பொன்னன், கண்ணப்பன். (அதே இரவில், பொன்னன் வீட்டில் உட்கட்டுக் கூடத்தில், கண்ணப்பன் கட்டிலில் தூங்குகிறான். மின்னொளி அதை யடுத்துள்ள அறையில் தூங்குகிறாள். பொன்னன், கண்ணப்பன் தூங்கும் அறைக்கு இப்பால் ஒருபக்கம் இட் டிருக்கும் நாற்காலியில் குந்திக் கணக்குச் சுவடிகளைப் புரட்டுவதும் ஏதோ எழுதுவதுமாய் இருக்கிறான். மணிப்பொறியும் பன்னிரண்டு அடிக்கிறது. எதிரில் பெட்டிமேல் இட்டிருந்த விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டான். தன் அறையை நோக்கிப் போகத் தொடங்கு கிறான். வழியில் தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணப்பனைப் பார்க்க நேர்கிறது. பொன்னனுக்கு நினைவு வருகிறது பெரியவன் தன் இருநூறாயிரத்தைச் செலவு செய்து விட்டான். மீதியுள்ளது, சின்னவனுடையது அவன் மீண்டும் நாற்காலி பெட்டியை, நெருங்கினான். அவன் கைப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த குத்துக் கத்தியை எடுக்கிறான். அதன் கூரிய முனையை அவன் உற்றுப் பார்க்கிறான். தன்னுடன் பிறந்தானை மாய்த்துவிடுவது என்ற முடிவுக்கு வருகிறான். அதே நேரம் மின்னொளி புரண்டு படுக்கிறாள். அவள் இன்னும் தன் கணவன் படுக்க வரவில்லையா என்று தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். கணவன் தன் அறையை நாடி வருவதாக விளக்கொளியின் அசைவில் உணர்கிறாள். கணவனை வரவேற்க எழுகிறாள். தன் கணவன் குத்துக் கத்தியுடன் கண்ணப்பனை உறுத்திப் பார்ப்பதைக் கண்டு திடுக்கிடுகிறாள்.) மின்னொளி : திருடன்! திருடன்! அத்தான்! அத்தான்! பொன்னன் : நானும் அதற்காகத்தான் குத்துக் கத்தியுடன் எழுந்தேன். (என்று சொல்லிக்கொண்டே மின்னொளியெதிரில் வந்து நிற்கிறான்.) கண்ணப்பன் : அண்ணா! அண்ணா! (என்று திடுக்கிட்டெழுகிறான்.) மின்னொளி : (ஓடிக் கண்ணப்பனை அணைத்து) ஒன்றுமில்லை தம்பி. யாரோ இங்குவந்தது போல் தெரிந்தது. கனவோ என்னமோ! அதற்காகச் கூச்சலிட்டேன். அண்ணனும் அதற்காகக் கத்தியோடு ஓடிவந்தார்! நீ, தூங்கு தம்பி! பொன்னன் : நீ, கூச்சலிட்டாயல்லவா மின்னொளி, உடனே கத்தியைப் பெட்டியிலிருந்து எடுத்துக்கொண்டேன். நீ, ஏதாவது கனவு கண்டாயா மின்னொளி? மின்னொளி : ஆம் அத்தான்! கனவின் பயனாகத்தான், அப்படிக் கூச்சல் போட்டுவிட்டேன். நாழிகை ஆகிறது அத்தான், தூக்கம் கெட்டு விடுமே! பொன்னன் : ஆமாம். (ஒரே அறையில் இட்டிருக்கும் இரண்டு கட்டில்களில் இருவரும் படுத்துக் கொள்கிறார்கள். பொன்னன், மீண்டும் எழுந்திருக்கிறானோ என்பதை அறிய இடை இடையே தலை தூக்கிப் பார்த்தபடி இருக்கிறாள் மின்னொளி. மணிப்பொறி நான்கு அடிக்கிறது. பொன்னன் எழுந்திருக்கிறான். மின்னொளி கூடவே திடுக்கிட்டெழுகிறாள்.) மின்னொளி : நான்கடித்தது மணி. ஏனத்தான், விடியுமுன் எங்கே யாவது போகவேண்டுமோ? பொன்னன் : மரக்காலை வரச்சொன்னேன் விடியுமுன். அவன் வர வில்லை. நானே போய்த்தான் அவனை எழுப்பி வர வேண்டும். விண்ணப்பங்களைப் பார்வையிட வேண்டும் மிக்க வேலையிருக்கிறது. மின்னொளி : விண்ணப்பங்கள் எத்தனை வந்திருக்கின்றன! பொன்னன் : மிகுதியாய் இருக்குமென்றான் மரக்கால். இராது என்றேன் நான். அவன் சொன்னான். எதற்கும் விண்ணப்பக் காரர்களைக் காமாட்சியம்மன் கோயிலில் வந்து தங்கும் படி செய்கிறேன். விண்ணப்பங்களையும் அங்கே கொண்டுபோய் வைக்கிறேன். நீங்கள் அங்கே வந்து விடுங்கள் என்றான். அதற்காகத்தான் அவனையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போகலாம் என்று காலையில் எழுந்தேன். மின்னொளி : விண்ணப்பம் கொடுத்தவர்களில் அக்காவும் ஒருவர் அத்தான்! பொன்னன் : அப்படியா? இன்னமுது, கணக்குவேலை பார்த்து, வருவாய் பெறவேண்டுமா என்ன? பணக்காரருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்களே! மின்னொளி : சம்பளமில்லாமல் வேலை பார்க்கிறதாகக் கூறியிருக் கிறார்கள் விண்ணப்பத்தில். பொன்னன் : இருந்தாலும், அது சரியில்லை, மின்னொளி! இன்ன முதை நான் வேலைக்கு வைத்துக்கொள்ளுகிறேன் என்று வை. அவர்களை, இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்லி வேலை வாங்க நாக்குக் கூசாதா? மேலும், இன்னமுது ஆண்பிள்ளைகள் நடுவில் வேலை பார்ப்பதா? என்னுடன், இன்னமுது சேர்ந்து பழகுவதை ஊர் என்ன சொல்லும்? அதெல்லாம் சரியல்ல. மின்னொளி : அப்படியானால், ஒரு விண்ணப்பம் தள்ளுகடை! பொன்னன் : ஆமாமாம். மின்னொளி : இன்னொன்று பற்றி எப்படியோ? பொன்னன்: அது எது? மின்னொளி : என்னுடையது. பொன்னன் : அதுவும் தள்ளுகடைதான், உறுதியாக! மின்னொளி : சரி. தீர்ந்தன இரண்டும். நீங்கள் காலையுணவை முடித்துக் கொண்டு வெளியிற் போகலாமே, இதோ ஆய்விட்டது அத்தான். பொன்னன் : அப்படியானால், நான் வெளியிற்போய் உடனே திரும்பிவிடுகிறேன். (பொன்னன் போகிறான்.) காட்சி - 18 இடம் : மரக்கால் வீடு காலம் : காலை நாலரை மணி உறுப்பினர் : பொன்னன், மரக்கால், தங்கம். (இரவு நாலரை மணிக்குப், பொன்னன், மரக்கால் வீட்டின் கதவைத் தட்டுகிறான்.) பொன்னன் : மரக்கால்! மரக்கால்! மரக்கால் : (உள்ளிருந்தபடி) ஆர்றா அது இந்நேரத்லே. பொன்னன் : மரக்கால்! நான் தான் பொன்னன், கதவைத் திற! மரக்கால் : முண்டம்! இந்நேரத்லெ வந்துட்டான். பொன்னன் : பொன்னன்! பொன்னன்! பொன்னன்! மரக்கால் : (முன்னே, தான் பேசிய பேச்சின் தொடர்ச்சியாக) எப்பப் பார்த்தாலும் தொல்லே, தூக்கம் கெட்டுப் போவுது. (தன் மனைவி, தங்கத்தை நோக்கி, உரக்க) தங்கம்! எவனோ கூப்புடுகிறான். கொல்லைக்கிப் போய் வந்துட்ரேன். வயித்தே வலிக்குது. தங்கம் : (மெல்லிய குரலில்) ஏங்க, நீங்க பொன்னங்கிட்ட இப்ப வேலை செய்லே, வேறே ஒருத்தரிடம் வேலைக்கி அமந்து புட்டேன் இண்ணிங்களே, இவன் ஏன் இப்ப தேடிக்கினு வந்தாண்ணேன்! அப்ப நீங்க அவங்கிட்டே தான் கார் ஓட்றிங்க, தெரிஞ்சிப்போச்சி. ஒங்களுக்கு வெக்கம் கிக்கம். மானம் ஈனம், கூடைச் சதையிலே குண்டுமணி ரத்தம், ஏதாச்சும் இருக்குதாண்ணேன்! என்னாடா, நம்பப் பெண்டாட்டியெ கையப் புடிச்சி இழுத்தானே அப்படியாப்பட்டவங்கிட்ட அப்றம் ஒறவு இருக்கலாமாண்ணு இல்லியே ஒங்களுக்குத்தான். மரக்கால் : என்னெ மானங்கெட்டவண்ணு நெனச்சிக்கினே இரு. வெக்கங் கெட்டவண்ணு நெனச்சிக்கினே இரு. கூடைச் சதையிலே குண்டுமணி ரத்தம் இல்லாத வண்ணு நெனச்சிக்கினே இரு. எத்தினி நாளைக்கு? நான் ஆருண்ணு காட்டிப்புடுறேன் உட்ருவனாடி அவனே? நெனைக்காதேடி தங்கம் ஒன் நெஞ்சிலே! தங்கம் : நீங்களுந் தான் ரொம்ப நாளா சொல்லி வர்றிங்க. பாப்பம்! மரக்கால் : பாரேன். தங்கம் : அவன், காத்திருக்கானே. மரக்கால் : இருக்கட்டுமேடி. தங்கம் : அப்டிண்ணா; நெஞ்சிலியே குறுங்குறுண்ணு வச்சிருக்றிங் களோ அவனே பழிவாங்க? மரக்கால் : ஆமாம். ஆனா, ஒண்ணு. அவன் பெண்டாட்டி இருக் காளே அவுளும், அவன் கொழிந்தியா இருக்காளே அவளும், ரெண்டுபேரும் ரொம்ப நெல்லவுங்க. அவுங் களுக்கு ஒரு கெடுதி வரும்படி நானு ஒண்ணும் பண்ண மாட்டேன். தங்கம் : அது மட்டும் மெய்தான் - ஏண்ணு கேளுங்களேன் அவனே! காத்திருக் கானே தெருவுலே. (மரக்கால் போய்க் கதவைத் திறந்து திடுக்கிட்டவன் போல் பேசத் தொடங்குகிறான்.) மரக்கால் : நீங்களா! சீனன் வருவேன் இண்ணு சொல்லியிருந்தான், அவனின்ணு பாத்தேனுங்க. பொன்னன் : எனக்குத் தெரியாதா? வேறு யாரோ என்று நினைத்துத் தான் பதில் சொன்னாய். அதிருக்கட்டும் இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. அந்தக் கணக்கை யெல்லாம் பார்த்தேன். அதை மாற்றி எழுதுவது இலே சல்ல. பழைய கணக்கனையே திரும்ப அழைத்துக் கொண்டால் என்ன? மரக்கால் : அழைக்கலாம். அவென் ஒங்களெப் பழிவாங்கரத்தி லியே இருப்பான். அவன் சூழ்ச்சிக்காரன். அடிச்சி உட்ட பாம்பு பாருங்க. கட்டாயம் கடிக்குங்களே! இப்ப காமாட்சி யம்மன் கோயிலுக்குப் போவணுமே நீங்க. அங்கே நீங்க சொன்னாப்லே சின்னதா ஒரு பந்தல் போட்டிருக்கேன். ஏண்ணா, மழை பாருங்க. விண்ணப்பத்தெயெல்லாம் அங்கேயே கொண்டு போய் வச்சிருக்கேன். பொன்னன் : எத்தனை விண்ணப்பம்? மரக்கால் : ஏனுங்க. ஆயிரத்துக்குக் கொறையாதுங்க. பொன்னன் : ஐயையோ! நான் அப்படி எதிர்பார்க்கவே இல்லையே. மரக்கால் : நீங்க எதிர்பாக்கலே! ஊர் எதிர்பாக்குது. தேரும் திருணா வுமா இருக்குமிண்ணு! பொன்னன் : இதென்னடா இழவு? மரக்கால் : அப்பா செத்த எழவுக்கு, எழவுங்க. நான் முந்தி போயி, வந்திருக்றவுங் களே கையமத்தி, வர இருக்றவுங்களுக்கு வசதி பண்ணிவைக்றேன். பொன்னன் : சரி. அப்படித்தான் செய். நான் வருகிறேன். மரக்கால் : நான் சொல்லியனுப்றேன், அப்ப வாங்க கோயிலுக்கு! பொன்னன் : நல்லது. (மரக்கால் போகிறான்.) காட்சி - 19 இடம் : காமாட்சியம்மன் கோயில் காலம் : காலை உறுப்பினர் : கணக்கன், போலீசு, மரக்கால், கோயில் தர்ம கர்த்தா, விண்ணப்பக்காரர் முதலியோர். (விடிந்தபின், சரியாக ஆறுமணிக்கெல்லாம் காமாட்சி யம்மன் கோயில் உள்ளே நூற்றுக் கணக்கான பார்ப்பனர் வந்து நிறைந்திருக்கிறார்கள். வீதியில், கடைகள், தொட்டி, இராட்டினம், குதிரை இராட்டினம் நாட்டப்பட்டிருக்கின்றன. ஊரில் இருப்பவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். தமக்குள், பலவாறு பேசிக் கொள்கிறார்கள். புகை வண்டியும், புதுவை நிலையத்தில் பெருந் தொகையான மக்களை இறக்கிற்று! நூற்றுக்கணக்கான விண்ணப்பக் காரர்கள்! தேடித் திரிந்து காமாட்சியம்மன் கோயிலை அடைகிறார்கள். அவர்களில், பெரும்பாலோர் உள்ளூர்ப் பார்ப்பனர். அவர்களைக் காணுகிறார்கள்.) உள்ளூர் 1 : நீங்க அயலூரோ! சொல்லியிருந்தாளோ. வெளியூர் 1 : ஆம்! வேலைக்குத்தான் வந்தோம். உள்ளூர் 2 : உள்ளூரில் ஆள் இருக்கச் சே வெளியூரிலிருந்து அழைச்சாளோ ஒம்மை? வெளியூர் 2 : உள்ளூரில் ஆள் இருந்தா, எங்களெ ஏன் அழைக்கிறா? வெளியூர் 1 : ஒமக்கென்ன தெரியுங்காணும் சிரார்த்த பிக்ஷை, பஞ்சாங்க பிக்ஷை, சாவு வீட்டில் பிக்ஷை, வாழ்வு வீட்டில் பிக்ஷை. அவ்வளவுதானே. உள்ளூர் 2 : நீர் மகா கனபாடிகளோண்ணேன். (இவ்வாறு குளறிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம்! இராட்டினக்காரனை ஒருபுறம் போலீகாரன் தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிறான். மற்றொருபுறம் காமாட்சி யம்மன் கோயில் தர்மகர்த்தர்களில் ஒரு கட்சிக்காரர், அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்த மற்றொரு கட்சியினரைச் சேர்ந்த வேலுவிடம் கூச்சலிடுகிறார்கள்.) போலீசு : உத்தரவு வாங்கினீங்களா ராட்டினத்துக்கு? இராட்டினக்காரன்: நாங்க வாங்கற வழக்கம் இல்லிங்க! திருவிழா நடத்துறாங்களே அவுங்க எல்லாத்துக்கும் சேத்து உத்தரவு வாங்கிப்புடுவாங்க. போலீசு : வாங்கலே. வாங்கியிருந்தா, காட்டு! (இராட்டினக்காரன் திருவிழாவுக்குடையவரைத் தேடிக் கோயிலுக்கு வருகிறான். இதுபோலவே கடைக்காரர் அனைவரும் ஒரே கூட்டமாகக் கோயிலில் கூடிவிடு கிறார்கள்.) தர்மகர்த்தர் 1 : ஏன் வேலு! சர்க்கார் சாய்காலோண்ணேன். யாரையும் கேக்காமல், ஊரையும் கூட்டி முடிவு கட்டாமல், கும்பா பிஷேகம் வைச்சிபுடறதுதானோ. வேலு : எங்க கட்சிக்காரர் அப்டி ஒரு போதும் பண்ண மாட்டாங்க. இதுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்றது வட்டிக் கடைப் பொன்னன். தர்மகர்த்தர் 1 : அவருக்கும், நம்ப கோயிலுக்கும் தொடர்பு என்னா? ஒண்ணுமே யில்லியே! கோயில்லியா இருக்கார் அவுரு? வேலு : ஆம். (தர்மகர்த்தர், கோயிலுக்கு எரிச்சலோடு போகிறார். மற்றொருபுறம் எதிர்க் கட்சித் தர்மகர்த்தர் செல்லு கிறார். அவர், அவ்வழியே போய்க்கொண்டிருந்த மரக்காலைப் பார்த்து விடுகிறார்.) தர்மகர்த்தர் 2 : ஏன், கார் ஓட்டுகிறவரே! தரும கர்த்தர்களுக்குள் சச்சரவு இருப்பதும், அதனால்தான் கோயில் சாத்தி யிருப்பதும் உமக்குத் தெரியுமா தெரியாதா? மரக்கால் : தெரியுங்க. எங்கியும் உள்ளதுதானே. சொல்லவா வோணும்? தர்மகர்த்தர் 2 : அப்படியிருக்கும்போது சாவி வாங்கிம் போனீர். மரக்கால் : ஆர் இல்லேண்ணதுங்க? தர்மகர்த்தர் 2 : வாங்கிம் போனதே தப்பு. மரக்கால் : சாவி குடுத்தது சரியோண்ணேன். தர்மகர்த்தர் 2 : இருக்கட்டும். வாங்கிம் போயி கும்பாபிஷேகமாக நடத்றது? எதிர்க்கட்சியின் சூழ்ச்சி யாண்ணேன்? மரக்கால் : அப்படி ஒண்ணுமில்லிங்க! தர்மகர்த்தர் 2 : பின்னே என்னா? மரக்கால் : எப்டியாவுது ஒரு நல்ல நடவடிக்கே நடக்கட்டுங்களே? தர்மகர்த்தர் 2 : அது எப்படி? மரக்கால் : அதென்னமோ, என்னெ கேக்காதிங்க. வட்டிக் கடைக் காரர் வருவாரு, அவரெ கேளுங்க. (மரக்கால், கோயிலை நோக்கிப் போகிறான். அங்கங்கு அவரவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்கின்றான். கோயில் வாயிலை அடைகிறான். அங்கு அவன் காதில் பல வகையான கூக்குரல்கள் விழுகின்றன. உள்ளூர் : பிராமணாளைக் கேவலப்படுத்துவதா? வரட்டும், வட்டிக் கடைக்காரர்! கடைக்காரர் : என்னாய்யா? எல்லாக் கடைக்கும் சேத்துத் திருவிழா வுக்கு ஒடையவர் உத்தரவு வாங்கியிருப்பாருண்ணா எங்களைத் தொந்தரவு பண்றிங்களே! வந்தவர்கள் : வேண்டியது ரெண்டுபேரு. இதுக்கா இவ்வளவு விண்ணப்பம்? பார்ப்பனன் : போக்கிரித்தனமாண்ணா இருக்குது. கும்பாபிஷேக மிண்ணு எல்லாரியும் ஏமாத்ரான் அந்த வட்டிக் கடைக்காரன். இராட்டினக்காரன்: எல்லாரும் சேர்ந்து ஒதெயுங்க அந்த வட்டிக் கடைக்காரனே. மரக்கால் : நீங்களும் இங்கே தானா? கணக்கன் : பின்னே, என்னா? மரக்கால் : ஒங்களெப் பழயபடி வேலையிலே வச்சிக்கச் சொன்னேன் ஐயாகிட்டே. உம். முடியாதுண்ணு சொல்லி புட்டாரு பட்டு கத்ரிச்சாப்லே. கணக்கன் : அவன் கூப்டாக்கூட நான் வரமாட்டேன். மரக்கால் : அவுருக்கு, இப்ப கெட்டிக்காரக் கணக்கர் ஒருத்தர் தேவையாயிருக்குது. ஏண்ணா கணக்கெயெல்லாம் மாத்தி எழுதணும். கணக்கன் : எப்படி? ஏன்? மரக்கால் : நீங்க, இரனூறாயிர ரூபாயையும் நாளாவட்டத்லே அவரு பேர்லேயே பத்து எழுதியிருக்கிங்க. கணக்கன் : வேறே, அவுருதானே, சூதாட எடுத்தாரு. நாந்தானே குடுத்தேன். மரக்கால் : சரிதான். அதெ, அந்தப் பெரியவரு மேலேயே பத்து எழுதிபுட்டா நல்லதாச்சே. கணக்கன் : தெரியுமே எனக்கு. சாவுக்கு நான் வந்தேனே எதுக்கு? ஐயா சேதி வெளிச்சமாக்கத்தானே. ஐயாவுக்கு ஓர் அத்தை இருக்காங்களே அவுங்ககிட்டே நல்லா சொல்லி வைச்சேன். ஓகோ! பொய்க் கணக்கு எழுதத் தான் கெட்டிக்காரனா பாக்றாரோ? இருக்கட்டும். இது என்னா? யார் செஞ்சது பெரளி? மரக்கால் : எந்தப் பெரளி? கணக்கன் : கும்பாபிஷேகப் பெரளி. மரக்கால் : அவுருதான், விண்ணப்பக்காரரெ வரச் சொல்றதுக்கு, இடம் தேவையாயிருந்தது. கோயில் சாவி கேட்டாரு. அவுங்க குடுக்கமாட்டோம் இண்ணாங்க. கும்பாபிஷேகம் பண்ணி புட்றேண்ணாரு, சுலபமா. சரிண்ணு குடுத்தாரு சாவியெ அந்த தர்மகர்த்தா. கணக்கன் : அப்ப, கும்பாபிஷேகம் இல்லியோ? மரக்கால் : சொல்லுவார் சொன்னாலும் கேப்பாருக்கு அறிவு கிறிவு இருக்க வாணாமாண்ணேன். நான் வர்றேன். வேலை யிருக்குது. (என்று கூறிக் கோயிலின் பந்தல் நடுவில் இட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். எதிரில் மேசைமேல் வைத்திருந்த விண்ணப்பக் கட்டைப் பிரித்தான்.) விண்ணப்பக்காரன் 1: இவ்வளவும் விண்ணப்பமா? விண்ணப்பக்காரன் 2: எப்போது இதையெல்லாம் பார்ப்பது? (இதற்குள், விண்ணப்பக்காரர் கூட்டம் மரக்காலைச் சூழ்ந்து கொண்டது. ஒருவர் மேல் ஒருவர் தள்ளியும், மோதியும், ஏறியும் மரக்கால் எதிர்வர முயலுகிறார்கள்.) போலீசு : அங்கே யாரையா கும்பாபிஷேகக்காரர்? கடைக்காரன் 1 :ஐயா, உத்தரவு வாங்கீனிர்களா? (மரக்கால் முகத்தில், அச்சம் கூத்தாடுகிறது) மரக்கால் : நானில்லே ஒடையவன். இதோ வருவாரு இருங்க. (என்று கூறிக் கூட்டத்தினரின் காலடியில் புகுந்து தன் வீட்டுக்கோடுகிறான்.) காட்சி - 20 இடம் : மரக்கால் வீடு, காமாட்சியம்மன் கோயில் காலம் : காலை உறுப்பினர் : மரக்கால், தங்கம், தர்மகர்த்தர், பொன்னன் முதலியோர். (வீட்டில் புகுந்த மரக்கால் பரபரப்புடன் தன் மனைவியை அழைக்கிறான்.) மரக்கால் : கோயிலுக்கு வரும்படி பொன்னனுக்குச் சொல்லி அனுப்பிவுட்டேன் ஒரு பையன்கிட்டே. அவன் இந்நேரம் போய்ச் சொல்லியிருப்பான். பொன்னன் இந்நேரம் கோயிலுக்குக் கௌம்பியிருப்பான். அவன் படப்போற பாட்டை நீ பார்க்கணுமே எப்படிப் பாக்றது? தங்கம் : எப்டிப் பாக்றதுங்க நான்? மரக்கால் : ஒண்ணு செய்! நானு ஒரு சாய்புவாட்டம் வேஷம் போட்டுக்றேன். நீ ஒரு சாய்பு வூட்டுப் பொண்ணாட் டம் முக்காடு போட்டு மூஞ்சை கீஞ்சையெல்லாம் மூடி மறைச்சிக்க. நம்ம ரெண்டு பேரையும் அடை யாளம் தெரியாது. இருந்து பார்க்கலாம் வேடிக்கையே. தங்கம் : உம். சரிங்க. (மரக்கால், கண்ணுக்கு நாலு பட்டை நீலக் கண்ணாடி யும், தலைக்கு முக்காடும், அதன்மேல் குல்லாவும், கைக்குக் குடையும் இடைக்குக் கைலியும், மூக்கின் அடிக்குப் பெரியதோர் ஒட்டு மீசையும் உடலுக்குச் சட்டையுமாக விளங்கு கிறான். பெரியதொரு வெள்ளைத் துப்பட்டியைத் தலைமுதல் கால்வரை மறையப் போர்த்துக் கண் மட்டும் தெரியும்படி கையால் முக்காட்டை இழுத்துப் பிடித்துக் கொண்டே தங்கம் நடக்கத் தொடங்கு கிறாள். இருவரும் கோயிலின் வாயிலை அடை கிறார்கள். அப்போது தான் பொன்னனும் கோயிலின் வாயிலை அடைகிறான். பொன்னனை வாயிலி லேயே வளைத்துக் கொள்ளு கிறார்கள் கடைக்காரர்களும் போலீசும்.) கடைக்காரன் 1 : கடை உத்தரவு எங்கே? கடைக்காரன் 2 :எல்லாக் கடைக்கும் உத்தரவு வாங்கினீங்களா? என் பட்டாணிக் கடை உத்தரவை முன்னே குடுங்க! போலீசு : எல்லாக் கடைக்கும், உத்தரவு வாங்கினீரா நீர்? இருந்தா காட்டும். இராட்டினம் 1 : இராட்டின உத்தரவு எங்கே? உத்தரவு இல்லாவிட்டா சர்க்கார் தண்டிக்கும் எங்களே. (பொன்னன் விழிக்கிறான்.) சாயபு : என்னாம்ளே, பக்றீத்துக்கு ஓட்டிவந்த ஆட்டுக் கடாவாட்டம் முழிக்கிறீமே? பொன்னன் : யார், கடை வைக்கச் சொன்னார்கள்? யார், உங்களை இராட்டினம் போடச் சொன்னார்கள்? என்னிடத்தில் ஏது உத்தரவு? சாயபு : என்ன ஜவாப்பும்ளே இது! நீமிர்தானேம்ளே கும்பாசேகம் பண்றா? பொன்னன் : நான் எங்கே கும்பாபிஷேகம் பண்றேன்? கடைக்காரன் 1 : பின்னாரு? கடைக்காரன் 2 : என்னா அக்குறும்பா இருக்குதே! கடைக்காரன் 3 : உடமாட்டோம் உன்னே. போலீசு : எல்லாரும் போலீசுக்கு வாங்க. உம்! சாயபு : போம்ளே, போலீசு அழைக்றாஹ. (சாயபுவின் உடனிருக்கும் சாயபுவின் பெண்டாட்டி யான தங்கத்திற்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. இந்த நிலையில், தானம் வாங்கவந்த பார்ப்பனர் கூட்டம் பொன்னனை நெருங்குகிறது.) பார்ப்பனன் 1 : உள்ளூரில். நாங்க இல்லியோ? அப்படி இருக்கச்சே அசலூர்லே இருந்து கனபாடிகளை அழைச்சிட் டீரோ? கனபாடிகளை! கனபாடிகள் வந்தா! சட்டை போட்டுண்டு குல்லா வைச்சுண்டு லக்ஷணம்! காரியாதிகளே நாங்க ஆரம்பிக்கலாமோ? பொன்னன் : எதற்கு? யார்? ஒன்றும் விளங்கலியே. சாயபு : கும்பாப் சேகத்துக்கும்ளே! நீர் கூப்பிட்டிம்ளே! பொன்னன் : கும்பாபிஷேகமா? (இதற்குள் தருமகர்த்தர் வருகிறார்.) தருமகர்த்தர் 1 : ஏன் வட்டிக் கடைக்காரரே, யார் உத்தரவின் மேல் நீர் எங்கள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்ற துண்ணேன். உம்? தருமகர்த்தர் 2 : (அங்கு வந்து) வேறு எதுக்கோண்ணு சொல்லித் தானே சாவி கேட்டீர்? பொன்னன் : ஆம்! தருமகர்த்தர் 2 : கும்பாபிஷேகம் செய்ய உமக்கு யார் சொன்னார்? அதெ மட்டும் சொல் மரியாதியா! சாயபு : ரொம்பப் பணக்காரன் இண்ணு நெனைச்சிக் கிட்டீமோ நிமிரு? என்னாங்காணும் பணக்காரத் திமிரு? ஒமக்கு ஒரு காசி ஏதும்ளே சொத்து? ஜாடா குத்ரெ பந்தயத்லெ திவாலா பூட்டியேம்ளே நிமிரு? ஆருக்கும்ளே தெரியாது? இதெல்லாம் என்னா ஷரத்தும்ளே? பொன்னன் : (பார்ப்பனரை நோக்கி) உங்களை யார் அழைத்தார்கள்? பார்ப்பனர் 2 : அழைக்கணுமோண்ணேன்? சாயபு : அழைக்கணுமோம்ளே பார்ப்பானை. பலான இடத்திலே பலான ஜோலிண்ணா ஓடிவாறாஹ. பொன்னன் : என் வட்டிக் கடைக்கு ஒரு கணக்கன் தேவை, ஒரு காவற்காரன் தேவையென்று செய்தித்தாளில் வெளிப்படுத்தினேன். விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பங்கட்கு உடையவர்களும் வருவார்கள் என்று கோயில் சாவி கேட்டனுப்பினேன். அது தான் எனக்குத் தெரியும். (இதற்குள் பழய கணக்கன், அங்கு வந்துவிடுகிறான்.) கணக்கன் : ஆமாம் உள்ளூரில் ஒரு கணக்கன், ஒரு காவற் காரன் அகப்பட வில்லையா? அவர்கட்குப் பொய்க் கணக்கு எழுதத் தெரியாதா? பொன்னன் : அடே, என்ன சொன்னாய்? (கணக்கனை அடிக்கிறான் பொன்னன். கணக்கன் பொன்னனை அடிக்கிறான். போலீசு தடுக்கிறது. மக்கள் பெருந்திரளாக அங்கு மிங்கும் ஓடுகிறார் கள். பட்டாணிக் கடை முதல் எல்லாக் கடைகளும் கொள்ளை போகின்றன. எங்கும் அடி தடி கலகம், கூச்சல், குழப்பம்! பொன்னன், கணக்கன் முதலிய சிலர் போலீசுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.) சாயபு : அரே பொன்னா சொக்ரா! போ! போ! போ! கார்வார் இது கினுப்போ பொன்னனை! (தங்கம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே போகிறாள். மரக்காலும் போகிறான்.) காட்சி - 21 இடம் : கார்வண்ணர் வீடு காலம் : பகல் உறுப்பினர் : மரக்கால், மின்னொளி, தங்கம், இன்னமுது, முதலியோர். (தங்கமும் மரக்காலும், மாற்றுடை களைந்து உரிய உருவத் துடன் மின்னொளியிடம் வருகிறார்கள். மின்னொளியுடன் இன்னமுதும் இருக்கிறாள்.) மின்னொளி : என்ன செய்தி மரக்கால்? மரக்கால் : காமாட்சியம்மன் கோயில் தெருவிலெ அண்டு கொள்ளாத கூட்டம். கோயிலுக்குள்ளே எள்ளு போட்டா எள்ளு வுழாதுங்க. எனக்குத் தலைவலி பொறுக்க முடியிலெ. ஐயாவே அழைச்சி வர ஆள் அனுப்பிட்டு வூட்டுக்குப் போனேன். இப்பத்தான் கொஞ்சம் ஒடம்பு நல்லாச்சி. ஐயா வூட்டுக்குப் போவுணும்ணேன்; தங்கம் நானும் வர்றேன் நீங்க இந்த நெலையிலே தனியே போப்படா துண்ணா. வா இண்ணேன் வந்தா. வந்தோம். என்னாம்மா சேதி? கணக்கப் புள்ளே ஆரு? காவக்காரன் ஆரு? இன்னமுது : என்ன கார் ஓட்டுகிறவரே! இராட்டினம், கடைகள் எல்லாம் வந்துவிட்டனவாம். கும்பாபிஷேகமாம். விண்ணப்பக் காரர்களின் கூட்டத்திலிருந்து கும்பாபிஷேகம் பிறந்தது எப்படி? யார், இதை யெல்லாம் உண்டாக்கினவர்கள்? மரக்கால் : ஆரும் உண்டாக்க வேண்டியதில்லிங்க. வேலை யில்லாத் திண்டாட்டந்தான் காரணமாயிருக்கும். மின்னொளி : பார்ப்பனர், எப்படி வந்தார்கள்? மரக்கால் : அமைதியா இருக்ற வூர்லே கலகத்தெ உண்டாக்கி காலந் தள்றவுங்க அவுங்கதான்மா! (இதற்குள், வட்டிக் கடையின் ஆள் ஒருவன் ஓடி வருகிறான்.) ஆள் 1 : அம்மா, ஐயாவைப் பழய கணக்கன் அடிச்சான். மரக்கால் : உம். இருக்காது. ஆள் 1 : நான் தான் பார்த்தேனே! மரக்கால் : எப்போ பார்த்தே? ஆள் 1 : இப்பத்தான். மரக்கால் : நீ, கண்ணாலே பாத்தியா? ஆள் 1 : பார்த்தேன். மரக்கால் : ஐயா, சும்மாவா இருந்தாரு? ஆள் 1 : நம் ஐயா தான் முதல்லே ஒண்ணு வைச்சாரு அவனே. மரக்கால் : ஏன்? ஆள் 1 : அவன் சொன்னான். பொய்க் கணக்கு எழுதத்தானே அயலூர்லே இருந்து தெறமையான கணக்கப்புள்ளெயே தேட்றேண்ணான். வைச்சாரு ஒண்ணு! மரக்கால் : வைச்சாரா? அதான் கேட்டேன். நம்ம ஐயா, எங்கே? ஆள் 1 : ஐயாவையும், கணக்கனையும், கடைக்காரரையும், இராட்ணக்காரரையும் போலீசு புடிச்சிக்கினு பூட்டுது. மின்னொளி : இதென்ன குளறுபடி அக்கா? நாம் இங்கிருந்தால் ஆவதென்ன? அங்கே போய் நிலைமையைப் பார்த்து வருவோமே. மரக்கால் : ஒண்ணும் வராது ஐயாவுக்கு! நீங்க ஏனம்மா போறிங்க? திட்டுவாரு ஓங்களே கண்டா! இன்னமுது : உண்மைதான்! நீர் போலீசுக்குப் போய் ஐயாவுக்குத் துணையாக இருக்கலாமே (இதற்குள், வெளியூரிலிந்து ஒரு தலைப்பாகைக்காரர் வருகிறார்.) தலைப்பாகை: ஆர் வீட்டிலே? மரக்கால் : ஏன்? எந்த ஊர்? தலைப்பாகை: நான் சென்னை. விண்ணப்பங் கொடுத்தேன். நேரில் வரச்சொன்னபடி வந்தேன். மரக்கால் : ஒருவரைத் தேர்ந்தெடுத்தாய்விட்டது. தலைப்பாகை: எப்படியோ வந்து விட்டேன். போய்ச் சேர வேண்டும் செலவுக்கு இல்லை, சாப்பாடு.... மின்னொளி : உட்காருங்கள். சாப்பிட்டுப் போகலாம். தலைப்பாகை: செலவுக்கு? மின்னொளி : ஏற்பாடு செய்யப்படும். (இதற்குள், இன்னும் எழெட்டுப் பேர் வந்து விடுகிறார்கள்.) ஒருவர் : இதுதானே வட்டிக்கடைப் பொன்னன் வீடு? மரக்கால் : இல்லை இல்லை, எதிர்த்த வீடு. ஒருவர் : வீட்டில் அவர் இருப்பாரா? மரக்கால் : திண்ணையிலே ஒக்காந்திருங்க. அவர் வார நேரந்தான். (எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்கள். மற்றும் பத்துப்பேர் வருகிறார்கள்.) ஒருவர் : விண்ணப்பத்துக்குப் பதில் என்ன? மரக்கால் : எந்தவூர்? ஒருவர் : இந்த வூர்தான். மரக்கால் : ஆளைப் பொறுக்கி எடுத்தாச்சே. ஒருவர் : யாரை? தெரியணுமில்ல. மரக்கால் : திண்ணையிலே உட்காருங்க. (இன்னும் 20 பேர் வருகிறார்கள்.) மரக்கால் : வாங்க, விண்ணப்பக்காரர்களா? தெருவிலே உக்காருங்க. (திண்ணையிலே உட்காருகிறார்கள்.) மரக்கால் : வாங்க, விண்ணப்பக்காரர்களா? ஒருவர் : ஆமாமாம். நான் இரவது வருஷம் கணக்கு வேலை பார்த்திருக்கேன். என்னெ எடுத்துக்குங்க. மற்றொருவர் : ஐயா, எங்கே? நீங்கதானா? மரக்கால் : ஒருத்தரை எடுத்தாச்சே. ஒருவர் : எடுத்தாச்சி! எங்களுக்குச் செலவுக்குக் குடுத்து அனுப்புங்க. மரக்கால் : திண்ணையிலே ஒக்காருங்க ஐயா வருவாரு. ஒருவர் : திண்ணையிலே இடமில்லையே. மரக்கால் : இங்கேதான் ஒக்காருங்க. (மற்றும் 50 பேர் வந்துவிடுகிறார்கள்.) மரக்கால் : இங்கேதான் ஒக்காந்திருங்க. (மின்னொளியும், இன்னமுதும் மரக்காலைத் தனியே அழைத்துப் பேசுகின்றனர்.) மின்னொளி : என்ன நீர் அனைவரையும் இங்கேயே அடுக்குகிறீர்! அங்கே தொல்லையடைந்து ஐயா இங்கே வருகையிலுந் தொல்லையா? மரக்கால் : என்ன பண்ணச் சொல்றிங்க. இன்னது செய்றதுண்ணு சொல்லுங்க. இன்னமுது : வேண்டிய ஆட்களை எடுத்தாயிற்று என்றால் போக வேண்டியதுதானே. மரக்கால் : அச்சமா இருக்குதம்மா? அவர்களுக்கோ ஒரே எரிச்சல். இன்னமுது : என்ன செய்வது! தெரியவில்லையே. மரக்கால் : ஏதாவது வழிதேடி வைக்றேன். ஐயா, நான் சொன்னா கேக்றாரா? தங்கம் இங்கே வா. (வருகிறாள்) ஒங் கதையே அம்மாகிட்டச் சொல்லணுமிண்ணு தானே வந்தே, சொன்னியா? தங்கம் : பக்கத்தூட்டுப் பண்டாரம் பொண்டாட்டி இருக்கா பாருங்க, மரக்கால் : இருக்கா பாருங்க! இருப்பது அம்மாவுக்காடி தெரியும்? தங்கம் : அவ கம்மலே எங்கிட்ட குடுத்து வட்டிக் கடயிலே வச்சிப் பத்து ரூபா வாங்கிக் குடுக்கச் சொன்னா. எடுத்தும் போனேன். ஐயா இருந்தாரு - தனியா. என்னே அங்கியே அறையிலே கூப்டாரு - போனேன். கெட்ட நெனைப்பு நெனைச்சாரு. (வெட்கத்தால் தலை நட்டுக் கொள்ளுகிறாள்) மரக்கால் : அப்றம், நெனைச்சி என்னா செஞ்சாரு... அவ சொல்ல வெட்கப்பட்றா. கையப் புடிச்சி இழுத்தாராம், உம்! எப்படி? மின்னொளி : கார் ஓட்டுகிறவரே! மன்னிப்புக் கேட்கிறேன். அம்மா, உன்னையும் நான் மன்னிப்புக் கேட்கிறேன். ஊர்ப் பெண்களைக் கல் என்றும் மரமென்றும் நினைக் கும் கீழ் மக்கள் கூட்டத்தை நான் வெறுக்கிறேன். என் நிலைக்கு நீங்கள் இரங்குங்கள். (கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள்.) மரக்கால் : அம்மா, நானும் உங்கவூட்லே இன்னும் வேலை பாத்துக் கினு இருக்கிறது ஒங்களைக் காப்பாத்த, கண்ணப்பனைக் காப்பாத்த. தங்கம் : இந்தக் கூட்டத்தெ எப்படியாவது போகச் சொல்லுங் களேன், மரக்கால் : இருக்கட்டும். (என்று தெருநோக்கிச் செல்லுகிறான். சிறிது நேரத்தில், உள்ளே வந்து, உள்ளே நிறைந்துள்ளவர்களில் ஒருவரைத் தனியே அழைத்துப் பேசுகிறான்.) மரக்கால் : உங்கள் பெயர்? அவன் : குப்புப்பிள்ளை. மரக்கால் : திறமை? குப்புப்பிள்ளை: பி.ஏ. வித்வான் தேர்தல். மரக்கால் : முகத்திலே தெரிஞ்சுது. ஆரிடமும் ஒன்றும் சொல்லா தீர்கள். என் கூடவே வாங்க. (தெருவில் அழைத்துச் சென்று சற்றுத் தொலைவில் ஒரு வீட்டைக் குறிப்பிட்டுக் கூறுகிறான்.) அந்தவூட்லே புள்ளே செத்துப்பூட்டுது. ஐயா, அதோ பச்சைப் போர்வையுடன் ஒக்காந்து இருக்காரு பாருங்க. அவுரு பக்கத்லே சாடையா போயி மெதுவா ஒக்காந்துபுடுங்க. கூடவே போங்க. போம்போது மெதுவா சமயம் பார்த்துச் சொல்லுங்க சீனன் அனுப்புனாருண்ணு அதோடு சரி. உம், உடுங்க! (குப்பு பிள்ளை நழுவுகிறார். மரக்கால், சற்று உரக்க மற்றவர்கட்கும் சிறிது புரியும்படி சொல்லியதால் குப்புப்பிள்ளையுடன் ஒருவர் ஒருவராக நழுவுகிறார் கள். தெருவில் இருந்த அனைவரும் சாவு வீட்டில் மொய்த்துக் கொண்டார்கள்.) மரக்கால் : (வீட்டினுள் வந்து ஒருவரை அறையில் அழைத்து உரக்கச் சொல்லுகிறான்) உம் பெயர் என்ன? அவர் : ராமு! மரக்கால் : திறமை? ராமு : எ.எ.எல்.சி. மரக்கால் : கேள்விப்பட்டிருக்கேன். ராமு : காவற்காரன் வேலை தேவை! மரக்கால் : நேரே மேற்கே போங்க. nfh£il nkhL!, அங்கே வயலுக்கும் பக்கத்லே தோப்பு! அங்கே மரம் வெட்டுவாங்க! ஒருவர் செவப்பா கையிலே கொடை வைச்சிக்கினு நிப்பாரு. அவுருதான். போயி காணுங்க. (போகிறார் ராமு. மற்றவரும் போகிறார்கள்.) மரக்கால் : அம்மா, எல்லாரும் பூட்டாங்க. ஐயாவும் வர்றாரு. கம் முண்ணு வூட்டே பூட்டிக்கினு நம்பத் தோட்டத்து வூடு இருக்குது பாருங்க, அங்கே பூடணும். ஐயா கிட்டே சொல்லி புடுங்க. (மரக்காலும் தங்கமும் போகிறார்கள்.) மின்னொளி : அக்கா! கொலைமுயற்சி, ஏழைப் பெண்களைக் கற்பழிக்கும் வழக்கம், சூதில் நாட்டம், இவை என் கணவர்! இருக்கப் பிடிக்கவில்லை. தற்கொலை பழிப்பாகும் என்று அஞ்சுகிறேன். இன்னமுது : அவரைத் திருத்தலாம். ஊக்கத்தை இழக்காதே! காட்சி - 22 இடம் : கண்ணப்பர் வீடு காலம் : மாலை உறுப்பினர் : பொன்னன், மின்னொளி. (பொன்னன் வருகிறான். அங்கொரு சாய்வு நாற்காலி யில், மின்னொளி நீர் சொரியும் விழியுடன் முகம் கவிழ்ந் திருக்கிறாள். இன்னமுது சமையல் கட்டில் சென்றாள்.) பொன்னன் : மின்னொளி! மின்னொளி : அத்தான்; (எனத் தலை நிமிர்கிறாள்.) பொன்னன் : நீ ஏன் அழுகிறாய்? மின்னொளி : (எழுந்து நின்று) உங்கட்கு என்ன நேர்ந்ததோ என்று தான். பொன்னன் : எல்லாம் அந்தக் கணக்கன் வளர்த்த வம்பு. என் மேல் அரசினர் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். அபராதம் விதிப்பார்கள்; அஞ்சவில்லை. மானத்தைக் கெடுத்தான் கணக்கன். அதை நினைத்தால் உள்ளம் வருந்துகிறது. மின்னொளி : அத்தான்! இந்த வீடுநிறைய விண்ணப்பக்காரர்கள்! தெரு நிறைய விண்ணப்பக்காரர்கள். கொதிப்புடைய நெஞ்சினராய்க் கூடிவிட்டார்கள்.! வழிச் செலவுக்குச் பணம் என்பார் சிலர். சாப்பாட்டுக்குக் கொடு என்பார் மற்றும் சிலர். ஒரே ஆர்ப்பாட்டம். மரக்கால், சூழ்ச்சி செய்து எங்கேயோ அனுப்பினார். நாம் வீட்டைச் சாத்திக் கொண்டு தோட்டத்து வீட்டுக்குப் போய்விட வேண்டும். மரக்கால் அதைத்தான் வற்புறுத்திக் கூறுகிறார். பொன்னன் : உடனே. கிளம்ப வேண்டும்! வட்டிக் கடை? மின்னொளி : முன்னமே சாத்தியாய் விட்டது. இரண்டு நாட்களின் பின் திறக்கலாம் என்று சொல்லி அனுப்பினேன் ஆட்களிடம். பொன்னன் : நல்ல வேலை செய்தாய். காட்சி - 23 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : பொன்னன், மரக்கால். (முத்தால்பேட்டையில் உள்ள கார்வண்ணர் சத்திரம். அச்சத்திரத்தின் முன்புறம், பார்ப்பனர் சிற்றுணவுக் கடை. வலப்புறத்தில் பெரிய தோர் அறை. உயர் வகுப்பு மாணவர் பலர் தங்கும் இடம் இடப்புறத்து அறை. பொதுவிடம், மிகப் பெரியது தான். உட்கட்டில் ஓர் அறையில் மரக்கால், பொன்னன் பேசத் தொடங்குகிறார்கள் இரவு மணி 10.) பொன்னன் : உன்னை, என்னில் வேறாக நினைக்கவில்லை. மரக்கால் : தெரியாதுங்களா? நான் நினைச்சால்லிங்களா நீங்க நெனைக்க. பொன்னன் : அதனால், என் நன்மை உன் நன்மை. உன் நன்மை என் நன்மை. மரக்கால் : சொல்லணுங்களா? பொன்னன் : நான், நினைப்பதை உனக்கு மறைக்க மாட்டேன். மரக்கால் : மறைக்க வாணாண்ணேன்! பொன்னன் : என் கருத்துக்கும் நீ மாற்றமாக நடக்கக் கூடியவனல்ல. மரக்கால் : எப்போ நடந்தேன்? வெரலை வுடுங்க, இந்த இரவது வர்ஷத்லே? பொன்னன் : நான் நல்லதைச் சொல்லுகிறேனோ, பொல்லதைச் சொல்லுகிறேனோ, செய்யென்றால் செய்து வந்தாய். மரக்கால் : இனிமேலுந்தாங்க. அது என்னா அப்படிச் சொல்லி புட்டிங்க, வந்தேண்ணு! நீங்க இப்பொ சொல்லுங்க, கணக்கனே குத்தணுமா? ஒரே குத்து, கொடல் வெளியே! போறேன் சாவடிக்கு! உறுதியா. பொன்னன் : செய்யச் சொன்னால் செய்யமாட்டேன் என்றா சொல்லு கிறாய்! இருக்கட்டும், நான் சொல்ல வருவது அதுவல்ல. மரக்கால் : சொல்லுங்க. சும்மா. பொன்னன் : நினைத்தால் நெஞ்சு பகீர் என்கிறது மரக்கால். (கண்ணீர் துடைக்கிறான்.) மரக்கால் : என்னாங்க ஐயா? சொல்லுங்க ஐயா, சொல்ல மாட்டேண் றீங்களேய்யா. (அழுகிறான், கண்ணீர் துடைத்துக் கொள்ளுகிறான்.) பொன்னன் : அழாதே மரக்கால்! முதலிலிருந்து கடைசி வரைக்கும் அந்த வீரப்பன் என்னைக் கெடுத்துக் கொண்டே வந்து விட்டான். மரக்கால் : அவந்தானே. சரிங்க நாளைக்கிக் கோயிலுக்கு வருவான். நீங்க எட்ட நில்லுங்க. ஒரு தட்டு தட்றேன். கை உழுந்துபுடும். தொங்கிபுடுண்ணேன். நரம்பு வேலை! முந்தியே செஞ் சிருப்பேன்! நீங்க வருத்தப்படு விங்கண்ணு இருந்துட்டேன். வெகுநாளா அவன் மேலே எனக்கொரு புள்ளி. கொஞ்சம் மனசெ பெரிசு பண்ணி உத்தரவு குடுங்கண்ணேன். ஆளே ஒழிச்சி புட்றேன் அடியோட. சாவடிக்கு நான் போறேன். எங்க வூட்டுக்காரியெ தெருவிலியா வுட்றப் போறிங்க. எனக்கு என்னாங்க புள்ளெயா குட்டியா? இந்த ஒடம்புலே ஓடுறது ஒங்க ரத்தங்க. பொன்னன் : வீரப்பனால் என்னுடைய இருநூறாயிர ரூபாய் தொலைந்தது என்கிறேன். மீதியுள்ள சொத்தில் ஒரு காசும் நான் அடைய முடியாது. நானும், என் மனைவியும் பிச்சைதான் எடுக்க வேண்டுமாம். என் அத்தையும் மற்ற உறவினரும் காப்புக் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் வழக்காட. மரக்கால் : அப்படிங்களா! இருக்குங்க. அவங்க கண்ணெ பாத்திங்களா நெருப்புக் கண்ணுங்க! நெஞ்சு அத்தினியும் நஞ்சுங்க. பொன்னன் : உனக்கு இருநூறு ரூபா எடுத்து வந்தேன் பெற்றுக் கொள் (நோட்டுக்கள் கொடுக்கிறான். மரக்கால் பெற்றுக் கொள்ளுகிறான்) இதற்கு நல்லவழி ஒன்று நீ தான் சொல்ல வேண்டும். மரக்கால் : சொல்றங்க. நல்லா சொல்றங்க. நாளைக்கு இல்லிங்க. வூட்டுக்கு வாங்க. நெனைச்சி வைக்கிறேன். இல்லிங்க. நீங்க வரவாணாம். நாளைக்கிநான் வந்து சொல்றேன். பொன்னன் : என் அத்தை என் குடும்பத்தில் புகுந்து கலகம் செய்வதற்கு ஒரு காரணமாய் இருப்பவன் யார்? மரக்கால் : ஒங்க தம்பி. பொன்னன் : அவனுக்கோ, இப்போதே நான் என்றால் வேம்பு. இந்தச் சிறு வயதிலேயே. மரக்கால் : என்னா திட்றாங்க அவன், ஒங்களெப் பின்னாலே! என்னா பாருங்க! குடும்ப கோடாலிங்க! பொன்னன் : நன்றாய்க் கூறினாய் மரக்கால் அவனை. மரக்கால் : வைக்கப்படாதுங்க. பொன்னன் : ஆம். என்ன செய்யலாம்? அதைச்சொல். மரக்கால் : அவுங்க அத்தை வூட்டுக்கு அனுப்பிப் புடணுங்க. பொன்னன் : அவர்கட்குப் பின்னும் நன்மையாகிவிடாதா? மரக்கால் : ஆமாங்க ஆமாங்க. ஆளை ஒழிச்சிப்புடுவமே. பொன்னன் : அதுதான் சரி. எப்படி? மரக்கால் : ஒரு மனசனைப் புடிக்றது. அவங்கூட அனுப்றது தம்பியே. பூடுங்க கல்லூரியில் படிக்கண்ணு, ஒழிச்சி புட்றது. இன்னொண்ணு செய்வமா? தனியா செலபேர் பெரிய படிப்பு கத்து குடுப்பாங்க. அவுங்ககிட்ட அனுப்பி ஒழிச்சிப்புட்றதுங்க. தேவலிங்க அது. பொன்னன் : மரக்கால்! சொன்னால் தெரியும் உனக்கு, அந்தப் பையன் இருக்கிற வரைக்கும் நமக்குச் சொத்து ஏது? மரக்கால் : ஆச்சிரமம் வைச்சிருக்காங்களே அங்கே அனுப்பிப் புட்டா, புள்ளாண்டான் அத்தோடு சரி. பொன்னான் : சரி தான். ஆச்சிரமம் முதலில் அவனுக்குள்ள சொத்தைத்தானே கேட்டு வாங்கி ஏப்பமிட்டு விடுகிறது. மரக்கால் : நாம்ப ஏப்பமிடப் பார்த்தா அது ஏப்பமிடப் பாக்குதோ? ஏது, பெரிய பக்காதாம் போல இருக்கு ஆச்சிரமம். ஆமாங்க, எந்த ஆச்சிரமத்தே பார்த்தாலும், அல்லாம் காசடிக்ற வேலையாகத்தான் இருக்குதுங்க. பொன்னன் : வேறுவழி தோன்றவில்லையா? இப்போது சொன்னயே வீரப்பனைப் பற்றி அது போல் ... ... மரக்கால் : அதுபோலத் தானுங்க செய்யணும். ஒங்க தம்பி ஒங்களெ அந்த மாதிரி மோசம் செய்வாருங்க. அப்ப ஒங்க தம்பியே அப்டிச் செய்யத்தான் போறேனுங்க. பொன்னன் : ஐயோ! தெரியாமல் பேசுகிறாயே! இப்போதே தீர்த்து விட வேண்டாமா? மரக்கால் : தீத்துப்புட்றது நல்லது தாங்க. பொன்னன் : அதுதான் எப்படி? மரக்கால் : சர்க்காரை வைச்சிக்கினு இந்தாங்க அவர் சொத்து இவ்வளவு, இவர் சொத்து இவ்வளவுண்ணு தீத்துக்கறது, ஒழிஞ்சுது சள்ளெ. பொன்னன் : இன்னும் தெரியாமல் பேசுகிறாய். அப்படிச் செய்தால் எனக்கு மீதிப்படுவது என்ன? மரக்கால் : ஆமாங்க. கையில் தகரக் கொவளெ; கக்கத்லே கந்தத் துணிமூட்டெங்க. எக்லெ துண்ணுத்துப் பொட்லம். திக்கில்லாத பாவி சிவபெருமானே நீராகாரம் கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா வூத்துங்கம்மா என்ற பாட்டு. ஆமாங்க ஆமாங்க. அதுவாணாம். வேற ஏதாவது பண்ணணும். பொன்னன் : மறைவான இடத்தில் பையனை அழைத்துப் போ. கழுத்தை முறுக்கிக் கொன்று போட்டுப் புதைத்துவிடு. (மரக்கால், இதைக் கேட்டதும் அவனுக்குக் குரல் அடைத்துப் போகிறது. கண்ணீர் பீரிட்டடிக்கிறது. இருமல் வந்ததாகப் பாசாங்கிட்டு மறைவில் ஓடி நின்று அழுது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பொன்னனிடம் வந்து நிற்கிறான்.) மரக்கால் : நாம்ப, எப்படிச் சொல்றதிண்ணு நெனைச்சேன்; ஒங்க வாயாலியே வரட்டுமிண்ணு நான் இருக்க வேண்டியது தானே. எண்ணா ஒங்க தம்பியாச்சே? இது சின்னதுங்க. நீங்க மலைக்காதிங்க. காலையிலே தக்க ஏற்பாடு பண்ணிப் புட்றேனுங்க. பொன்னன் : ஏன் மரக்கால், உன்னால் முடியுமல்லவா? முடியாமல் என்ன? மரக்கால் : அப்படில்லிங்க. ஒண்ணைத் தொட்டால் வெத்தியா முடிக்கணும். நானு, அந்தப் பையனோட ரொம்பப் பழவி புட்டேன். பழவிப்புட்ட ஒருத்தனைப் பழிவாங்க நெஞ்சு கொஞ்சம் பால்மாறும். இப்ப பாருங்க சில பேர் அறுத்துத் திங்கறத்துக்காவ பொறா வளப்பாங்க. கோழி வளப்பாங்க. வளக்றாங்களா? அதுங்கூடப் பழவிப் புட்றாங்களா? அப்றம் அதுவுளே அறுக்க மனசு வர்ற தில்லிங்க. கோழி, பொறாகிட்டேயே இப்டிண்ணா, மனசன்கிட்டே எப்டி மனசு வரும்? நீங்க, ஒண்ணுக்கும் ஓசிக்காதிங்க. எங்கிட்ட இருக்காங்க. அவுங்களைத் தொட்டுப் பாத்துட்டுவந்து சொல்றேனுங்க. பொன்னன் : அப்படியா, உம்... ... மரக்கால் : என்னாங்க, ஒண்ணும் கெட்டுபுடாதுங்க. இப்ப வேண்ணா போயி வந்துடுறேன். நீங்க மட்டும் இங்கியே இருங்க. தோட்டத்து வூட்டுக்குப் பூடாதிங்க. நானு ஒடனே வந்து பதிலு சொல்லிபுட்றேனுங்க. பொன்னன் : அப்படியானால் சரி. மரக்கால் : தோ வந்துட்றேன். (என்று மரக்கால் போகிறான். அவன் போகும் போது சத்திரத்தின் வெளிப்புறத்தில் இருந்த பார்ப்பானிடம் கூறுகிறான்.) மரக்கால் : ஓய்!! ஐயரே, ஐயா உள்ளே தனியா இருக்காரு. காப்பி, கீப்பி கொண்டுபோய் வை. கூட இரு. ஐயர் : நல்லது. (மரக்கால் போகிறான்.) காட்சி - 24 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : உச்சி இரவு உறுப்பினர் : பொன்னன், ஐயர், சங்கரப்பிள்ளை முதலியோர். (மரக்கால் வெளியே சென்றவுடன், ஐயர் பொன்னனுடன் உள்ளே போகிறார்.) ஐயர் : சௌக்கியமோ! பொன்னன் : இந்நேரம் நீர் எங்கிருந்தீர்? ஐயர் : இங்கேதான் இருந்தேன். நீங்கள் பேசிண்டு இருந்தியள். பொன்னன் : எப்படித் தெரியும்? ஐயர் : பேசிண்டுதானே இருந்தியள். பொன்னன் : என்ன பேசிக்கொண்டிருந்தோம்? ஐயர் : ரகசியம் பேசிக் கொண்டிருந்தியள். பொன்னன் : ரகசியம்! ஏன் அங்கே நின்றிருந்தீர்? (உள்ளே வரக்கூடாதா என்ற கருத்தில் பொன்னன் இப்படிக் கேட்டதாக ஐயர் நினைத்துக் கொண்டு பதில் கூறுகிறார்.) ஐயர் : நமக்கென்ன, உள்ளே நாம் ஏன் போக வேண்டும் என்று நெனைச்சுண்டு, வெர்னே இருந்துட்டேன். (இதற்குள் அங்குவந்த சங்கரப்பிள்ளை, பொன்னனின் நண்பர், பேச்சில் தலையிட்டுக்கொள்கிறார்.) சங்கரப்பிள்ளை : என்னங்காணும் ஐயரே. ஐயர் : இவா, மரக்கால் கூடப் பேசிண்டிருந்தா. நாம் ஏன் வர வேண்டும்? ரகசியம் பேசிண்டிருந்தா. நான் அங்கியே இருந்துட்டேன். சங்கரப்பிள்ளை : ரகசியம்! என்ன ரகசியம்? யார் தலையை யார் அறுத்து விடுகிறார்கள்? நீர் ஏன் அதை நினைக்க வேண்டும். பொன்னன் : இல்லை, இல்லை. என்ன பேசி இருந்தோம் என்பதைக் கேட்டிருந்தீரா என்றேன். ஐயர் : இல்லியேண்ணேன். பொன்னன் : அப்படியானால் ஒன்றும் நீர் தெரிந்து கொள்ள வில்லையே. ஐயர் : இல்லேண்ணேன். பொன்னன் : சரி நீர் போகலாம். ஐயர் : காப்பி வேண்டாமோ? பொன்னன் : வேண்டாம். (ஐயர் போகிறார்.) நீங்கள் இங்குத்தான் இருந்தீர்களா? இப்போது தான் வருகிறீர்களா! சங்கரப்பிள்ளை : ஏன்? இங்குத்தான் இருந்தேன். நீரும் மரக்காலும் பேசியிருந்ததைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். (என்று ஒருபோடு போட்டார், சங்கரப்பிள்ளை. பொன்னனுக்கு அச்சம் உண்டாகி விடுகிறது.) பொன்னன் : சங்கரப்பிள்ளை, நீங்கள் இன்றுவரைக்கும் என் நன்மையில் அக்கறையுடையவராகவே இருந்து வந்திருக்கிறீர். இனிமேலும் அப்படியே இருப்பீர் என்று நம்புகிறேன். சங்கரப்பிள்ளை : அதிலென்ன அட்டி? பொன்னன் : நானும் மரக்காலும் பேசியிருந்தோமே இங்கு? அப்போது நீர் எங்கே இருந்தீர்? சங்கரப்பிள்ளை : எனக்குத் தெரியவே தெரியாது. நான் இப்போது தானே வருகிறேன். பொன்னன் : கேட்டால்? சங்கரப்பிள்ளை : இல்லை என்கிறேனே! பொய்யா? பொன்னன் : இப்போது யார் தலையை யார் அறுப்பது என்று கூறினீர்களே, எதற்காகக் கூறினீர்கள்? சங்கரப்பிள்ளை : தலையை அறுப்பது பற்றியா பேசியிருந்தீர்? பொன்னன் : இல்லையே, நீங்கள் எந்த வழியாக வந்தீர்கள்? வழியில் மரக்காலைக் கண்டீர்களா? அவன் ஏதாவது சொன்னானா உங்களிடம்? சங்கரப்பிள்ளை : என்ன இருக்கிறது சொல்வதற்கு? பொன்னன் : ஒன்றுமில்லை. உடனே திரும்பி வருவதாகச் சொன்னான் ... சங்கரப்பிள்ளை : ஏன்? பொன்னன் : சென்னப்பன் செய்யூருக்குப் போய்விடப் போகிறான். முன்னே போய் முந்நூறு ரூபாயையும் வாங்கி வந்து விடு என்றேன். சாப்பிட்டுவிட்டு வருகிறேன். என்றான். சங்கரப்பிள்ளை : சென்னப்பனா, நமக்கு முந்நூறு ரூபாய் தர வேண்டும்? பொன்னன் : ஆமாம்! சங்கரப்பிள்ளை : எப்போது வாங்கினான்.? பொன்னன் : பத்துநாட்களுக்கு முன். சங்கரப்பிள்ளை : எந்தச் சென்னப்பன்? பொன்னன் : நாயனார் வீட்டுச் சென்னப்பன். சங்கரப்பிள்ளை : அவன் செத்து ஆறுமாதம் ஆகிறதே? பொன்னன் : ஆறு மாதத்தின் முன்புதான் சென்னப்பன் வாங்கினான்; அவன் சாகும்போது அவன் மகனிடம் சொல்லிவிட்டுப் போனான். பத்து நாளுக்கு முன் அவன் அதைக் கொடுத்து விடுவதாக ஒத்துக் கொண்டான். சங்கரப்பிள்ளை : அவனுக்கு மகன் ஏது? மணமே ஆக வில்லையே சென்னப்பனுக்கு? பொன்னன் : அவன் பெருமாள் கோயில் தாசியை வைத்திருந் தான். அவள் வயிற்றில் பிறந்த பிள்ளை. சங்கரப்பிள்ளை : பெருமாள் கோயிலுக்குத் தாசியில்லையே! பொன்னன் : ஏன் இல்லை! உண்டு, உண்டு. பட்டாச்சாரி வைத்திருக் கிறானே அவள் தான். அவளைத்தான் பெருமாள் கோயில் தாசி என்பார்கள். சங்கரப்பிள்ளை : அவள் தாசியல்லவே. அதென்னமோ நான் போய் வருகிறேன். பொன்னன் : சரி. நான் கூடச் சாப்பிடவேண்டும். பசிக்கிறது. சங்கரப்பிள்ளை : எங்கே? பொன்னன் : இங்கேதான். நீங்களும் சாப்பிட்டுப் போவது தானே. சங்கரப்பிள்ளை : சரி. காட்சி - 25 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : மரக்கால், பொன்னன், ஐயர், சங்கரப் பிள்ளை (மரக்கால், சத்திரத்துள் நுழைகிறான். வாயிலில் ஐயர் பாக்கிறார்.) ஐயர் : என்ன மரக்கா? நீரும் ஐயாவும் என்ன பேசிண்டிருந் தியள்? ரொம்ப ரகசியமோ? மரக்கால் : ஏன்? என்னா நடந்தது? ஐயர் : இல்லே, நீர் ஐயா தனியா இருக்காருண்ணீர் இல்லியோ, போனேன். இந்நேரம் எங்கிருந்தீர்? இந்நேரம் எங்கிருந்தீர் இண்ணு கோவிச்சிக்கினார். மரக்கால் : உம்மேலே, புகாருங்காணும். ஐயர் : என்னா? மரக்கால் : ஒம்ம பொட்டியண்டை நாலு நாளுக்கு முந்தி முட்டைத் தோலு இருந்ததா இல்லியா? ஒண்ணு! ரெண்டாவது, சத்ரம் பெருக்றாளே குப்பு! அவளே, எங்கே கூப்டீர்? மூணாவது, பழஞ்சோத்தே தோசை மாவிலே போட்டு அரைக்கச் சொன்னதுண்டா இல்லியா? நாலாவது, சாராயக்கடைக்காரனுக்கு நீர் குடுக்கவேண்டிய பணத்தைக் குடுக்காததனாலே நேத்து ராத்ரி சண்டை நடந்துதா, இல்லியா? இதெல்லாம் ஐயா காதுக்கு எட்டிப்போச்சி. அதைப் பத்தி வருத்தமாகவே பேசினாரு. நான், தணிவு சொல்லிக்கினு இருந்தேன். அதை நீர் கேட்டுக்கினு இருந்திரோண்ணுதான் அப்டி அவுரு கேட்டாரு. தெரியுமா? ஐயர் : தணிவு சொன்னீரா? மரக்கால் : ரொம்ப. ஒரு பொட்டலம் கட்டி வையும் பெரிசா. என்னா? ஐயர் : ஆஹா! கட்டிவைக்கிறேனே. உமக்கில்லாமேயா? (மரக்கால், இரண்டடி எடுத்துவைக்கிறான். எதிரில் சங்கரப்பிள்ளை வருகிறார்.) சங்கரப்பிள்ளை : மரக்கால், இப்படிவா. (இருவரும், வெளியில் ஒருபுறமாக வந்த நிற்கிறார்கள்.) மரக்கால் : என்னாங்க சேதி? சங்கரப்பிள்ளை : என்ன, பொன்னன். ஒரு மாதிரியாயிருக்கிறார்? மரக்கால் : என்னாங்க? சங்கரப்பிள்ளை : பொன்னனை, யார் என்ன செய்தார்கள்? பொன்னன், யாரையோ பழிவாங்க இருக்கிறார் என்று தோன்றுகிறது. மரக்கால் : எதைக்கொண்டு சொல்றிங்க? சங்கரப்பிள்ளை : கழுத்தறுக்கிறது பொசுக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தாரே? மரக்கால் : யாரோடே? சங்கரப்பிள்ளை : உன்னோடுதான். மரக்கால் : அதுவா? அப்ப, எங்கிருந்திங்க? சங்கரப்பிள்ளை : இல்லை. அவர் வாயாலேயே அறிந்தேன். மரக்கால் : ஒங்ககிட்ட வருத்தமா பேசினாரா? சங்கரப்பிள்ளை : இல்லை. இந்நேரம் எங்கிருந்தீர்? இந்நேரம் எங்கிருந்தீர்? என்கிறார். மரக்கால் : ஒங்களைப்பத்தி நானும் அவுரும் பேசிக்கினு இருந்தோம். அது ஒங்க காதிலே உழுந்திருக்கு மிண்ணு நெனைச்சி அப்படிக் கேட்டிருப்பாரு. ஏண்ணா, ஒங்க பையன் மயிலு வளர்த்தானே அதை ஐயாகிட்டேல்லவா வுட்டு வச்சிருந்தான். அது நேத்து ஒருபுள்ளெயின் கண்ணெ கொத்திப் புட்டுது. அதெ தொலைச்சிப் புடணுமிண்ணு நான் சொன்னேன். மயிலுக்கு ஒடயவன் கேட்டா, என்னா பண்றதுண் ணாரு. நான் சொன்னேன் அவந்தான் ரங்கோனுக்கு ஓடிப்புட்டானேண் ணேன். ஏண்ணாரு. சேதியெ சொன்னேன். சங்கரப்பிள்ளை : எந்தச் சேதியை? அவன் வியாபாரமாக அல்லவா போயிருக்கிறான். மரக்கால் : அதைத்தான் வெவரமா சொன்னேன். சங்கரப்பிள்ளை : விவரம் என்ன இருக்கிறது? மரக்கால் : ஒண்ணுமில்லே இண்ணுதான், வெவரமாச் சொன்னேன். சங்கரப்பிள்ளை : என்ன; கேலிபண்றியா? மரக்கால் : கேலியா? கீச்சான் வூட்டுப்புள்ளே கழுத்லே இருந்த சங்கிலியே திருடிட்டு, சர்க்கார் கையிலே ஆப்டாமே ஓடிப் புட்டதைச் சொல்றதா கேலி? அவன், இப்ப திரும்பமாட்டான். அறுங்க கழுத் தேண்ணேன். அப்டிண்ணா துண்டாவெட்டித் தொலேண்ணாரு. அதோட்டுத்தான், நீங்க எங் கேருந்திங்க இந்நேரம் இண்ணாரு. போய் வாங்க. சங்கரப்பிள்ளை : (தலைகுனிந்து) வருகிறேன். (மரக்கால் உள்ளே போகிறான்.) பொன்னன் : (ஆவலாக) என்ன மரக்கால்? மரக்கால் : ஒழுங்கா முடிச்சுட்டேன். ரெண்டு மொறட்டுப் பசங்க. அண்ணந்தம்பி. கொய்யாக்குடிண்ணு ஒருவூரு. அங்கேருந்து வந்தாருங்ககுடி. அதிலே மூத்தவம் பேரு பெரிய கொய்யா; சின்னவன் பேரு சின்ன கொய்யா. படிச்ச பசங்கதான். இந்த மாதிரி, சேதியிலே எறங்கிப்புட்டானுவ. அவனுவ எங்கூடக் கார் ஓட்டிக்கினு இருந்தவனுங்க தான். அஞ்சா நெஞ்சி படைச்சவனுவ. ஆனா பொய் பேசத் தெரியாது. உண்மைக்கு உத்தாரமாக நடப்பானுவ. சேதியெச் சொன்னேன். மழைக் காலமா இருக்குதே பரவா இல்லியாண்ணு கேட்டேன். மழைக் காலந் தான் தோது இண்ணு சொன்னானுவ. காலையிலே கரிக்கல்லியே இங்கே வருவாங்க. வரச்சொன்னேன். ஒங்க வாயாலே சொல்ல வாணாமோ? சொல்லிபுடுங்க. ஏதாவது பணங் கேட்பானுவ. குடுங்க. அவனுவளாலே செய்ய முடியி லேண்ணா பணத்துக்கு நான் இருக்றேன் அவ்வளவுதான். இப்பவே கூப்டேன். வூட்லே விருந்தாடி, கரிக்கல்லே வந்து காண்றேண் ணானுவ. காலையிலே வருவானுவ. பயந்து கியந்து பூடப் போறிங்க! ஆளு நல்ல அந்தாயத்தா இருப் பானுவ. தொடை தொடைப் பெரிசி இருக்கும் மீசை. வூட்லே தங்கத்துக்குத் தேளு கொட்டிப் புட்டுது இண்ணு ஆளு வழியிலே கண்டு சொன்னான். நான் பூட்டு வர்றேனுங்க. ஒண்ணும் சந்தேகப்ப டாதிங்க. எல்லாம் ஒழுங்கா முடிஞ்சிபுடும். பொன்னன் : நல்லது, நான் இங்கேயே படுத்துக் கொள்ளு கிறேன். மரக்கால் : கட்டாயம். நான் வர்றேனுங்க! (போகிறான்.) காட்சி - 26 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : மாலை உறுப்பினர் : காளியப்பன், பொன்னன், வீராசாமி, பட்டு முதலியோர். (மறுநாள் மாலை மூன்றுமணி. பொன்னன் சத்திரத் தின் குறட்டில் நின்று, யாரையோ கருத்தூன்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தெருவில் போகின்றவர்கள் நம்முடன் பேச வருவார்கள் என்று உள்ளே போகிறான். பிறகு, வெளியில் வந்து வரும் வழியைப் பார்க்கிறான். சத்திரத்தின் இடப்புறத்து அறையில் சிலர் பேசியிருக்கிறார்கள். வலப்புறம் உள்ள அறையில் சிலர் பேசியிருக்கிறார்கள். சிற்றுண்டிக் கடையில் சிலர் சிற்றுண்டி உண்ணுகிறார் கள். ஐயர் உணவு தந்து கொண்டிருக்கிறார். காளியப்பன் வீராசாமி பட்டு மூவரும் சிற்றுண்டி அருந்தியபின் பொன்னனை அணுகுகிறார்கள்.) காளியப்பன் : என்ன பொன்னு? சற்று நேரம் கடிதாசி போடுவோமே! பொன்னன் : இல்லை. எனக்கு வேலை இருக்கிறது. வீராசாமி : கடிதாசி ஆடுவதைவிட இன்னும் பெரிய வேலை என்னப்பா வந்து விட்டது. சிறிது நேரம்! பொன்னன் : ஒழியவில்லை. இருந்தால் வரமாட்டேனா? பட்டு : சும்மாதானே நிற்கிறாய். போகவேண்டிய நேரத்தில் போய் விடுவதுதானே. உட்காரு! (உள்ளே போய்க் கடிதாசிக்கட்டை எடுத்துப்பாய் விரித்து உட்கார்ந்து விடுகிறார்கள்.) பட்டு : வா பொன்னு! ஒருகை குறைகிறது. (பொன்னன், மறுக்க முடியவில்லை. உட்காருகிறான்.) காளியப்பன் : முந்நூற்று நாலப்பா. (கடிதாசி போடுகிறான்.) வீராசாமி : நீதான் பட்டு, கைவரிசை கேள். பட்டு : நூற்றம்பது. வீராசாமி : இருநூறு! பொன்னன் : இல்லை. காளியப்பன் : துருப்பு? வீராசாமி : க்ளாவர்! பொன்னன் : இதோ வந்துவிட்டேன். (என்று, தெருவிற்போய், யாரையோ பார்த்து விட்டு வந்து உட்காருகிறான்.) பட்டு : ஆட்டின். (இறங்கினான்.) வீராசாமி : ஜாதி இருக்கிறது. பொன்னன் : க்ளாவர் பூர் (போடுகிறான். ஆனால் க்ளாவர்தான் துருப்பு என்பது நினைவில்லை. தாளையும் எடுத்துக் கொள்ளவில்லை.) வீராசாமி : எடு! பொன்னன் : (விழிக்கிறான்) நானா? ஏன்? பட்டு : துருப்பு என்ன? பொன்னன் : டைமன். பட்டு : டைமனா? பொன்னன் : பேட். பட்டு : பேட்டா? காளியப்பன் : இப்போது, பொன்னன் சொல்லப்போவது சரியாக இருக்கும். பொன்னன் : ஆட்டீன்! ஆட்டீன்!! இதோ வந்துவிட்டேன். (என்று வெளியில் ஓடுகிறான்; மீண்டும் வருகிறான்.) பட்டு : என்ன பொன்னு. கொலை செய்தவன் போல் மருள மருள விழிக்கிறாயே? (இதைக்கேட்ட பொன்னன் விழிகள் அஞ்சுகின்றன. அவன் கையினின்று கடிதாசிகள் கீழ் விழுகின்றன.) பொன்னன் : பட்டு! எதைக் கொண்டுசொல்லுகிறாய்? இது வரைக்கும் அதாவது காலைமுதல் இங்கேதானா இருக்கிறாய்? பட்டு! எனக்கொரு துன்பம் எனில் அது உனக்கு வந்ததாகக் கொள்ள வேண்டும் நீ. உன் தந்தையும் என் தந்தையும், நீயும் நானும் விடாது தொடர்ந்து வரும் நட்புடை யவர்கள். பட்டு : நண்பா! நாங்கள் போகிறோம்-நீ, ஏதோ கவலையோடு இருக்கிறாய். (அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.) பட்டு : பொன்னு, உனக்கொன்று சொல்ல நினைக்கிறேன். நல்லது செய்து நலிந்தாரில்லை. அல்லது செய்தோர் வாழ்ந்தாரில்லை நாங்கள் வருகின்றோம். காட்சி - 27 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : பெரிய கொய்யா, சின்ன கொய்யா, ஐயர், பொன்னன், பெரியசாமி, முதலியோர். (பட்டு முதலியவர்கள் போனபின் பொன்னன் குறட்டில் வந்து நின்று யாரையோ எதிர்பார்க்கிறான். வர வில்லை யென்று முகம் சுருக்குகிறான். எதிர் கொண் டழைக்க எண்ணிப் போகிறான். பொன்னன் வெளிச் சென்றவுடன் இப்புறமாகப் பெரிய கொய்யா சின்ன கொய்யா என்ற இருவரும், சத்திரத்தில் நுழை கிறார்கள். உப்பியுள்ள கன்னங்கள், நிறைய மீசை, புறங்கழுத்து வரைக்கும் மறைக்கும் மழைக்குல்லாய்! குதிகால் வரைக்கும் தொங்கும் மழைக்காலத்துச் சட்டை ஆகிய உருவத்தோடுள்ள அவர்கள் குடித்து விட்டிருப்பவராகவும் தோன்றுகிறார்கள்.) பெரியகொய்யா : கடையில் என்ன இருக்கிறது? ஐயர் : என்ன வேண்டும்? பெ.கொ. : அப்படியானால் நாங்கள் கையில் காசில்லாதவர்களா? ஐயர் : என்ன ஐயா, இன்னது வேண்டும் என்று சொன்னால் தானே? பெ.கொ. : என்னென்ன இருக்கிறது? அத்தனையும் கொண்டுவா. ஐயர் : அப்படியானாக்கா ஒரு வண்டிகொண்டு வாரும். பெ.கொ. : ஏங்காணும் வண்டி? ஐயர் : ஏற்றிப் போறதுக்கு, சின்ன கொய்யா: ஏனடா கேலியா செய்கிறாய்? அடித்தேனே யானால் பல் உதிர்ந்து போகும். (என்று கூறித் தானே சாய்ந்தபடி விழுகிறான்) ஐயர் : பல்லெல்லாம் சரியாயிருக்கிறதா எண்ணிப்பாரும். மெதுவாக எழுந்திரும். எந்தக் கடையிலிருந்து வர்றீர்? பெ.கொ. : அப்படியானால், நாங்கள் குடியர்களா? ஐயர் : ஆர்சொன்னா? நானா அப்படிச் சொன்னேன்.? பெ.கொ. : அடங்கும்! நீட்டாதேயும். (இதற்குள் பொன்னன் வந்து விடுகிறான்.) பொன்னன் : என்ன ஐயர், சும்மா இரும். (குறட்டில் பொன்னனும் பெரிய கொய்யா சின்ன கொய்யாவும் தனியாகப் பேசத் தொடங்குகிறார்கள்.) பொன்னன் : (மெதுவாக, ஆனால் பரபரப்புடன்.) என்ன, வேலை முடிந்ததா? பெ.கொ. : இதோ பாரும் (என்று தன் இடையில் மறைத்து வைத் திருந்த குருதி தோய்ந்த கத்தியை எடுத்துக் காட்டி) வேலை முடிந்துவிட்டது. நாழிகையாகிறது. ஐந்நூறு கொடுத்தீர்கள். மீதியையும் கொடுத்தால் போய் விடுகிறோம். எம்முடன் உள்ள கார் ஓட்டிகள் ஏதாவது நினைப்பார்கள். விரைவில் நாங்கள் போக வேண்டும். பொன்னன் : யாராவது பார்த்து விட்டார்களோ? இல்லையே? (இதற்குள்: பெரியசாமி இடப்புறத்து அறையினின்று வெளியில் வருகிறான். இவர்களைப் பார்த்து விடுகிறான்.) பெரியசாமி : தெரியும், தெரியும். (பொன்னன் திடுக்கிட்டுத் திரும்புகிறான்) பொன்னன் : பெரியசாமி! நீ இந்நேரம் இங்குத்தானா இருந்தாய்? கேட்கிறேனே! நாங்கள் பேசியது உன் காதில் வீழ்ந்ததா? பெரியசாமி : விழாமலா? பொன்னன் : (அவனையணுகி) என்ன விழுந்தது காதில்? பெரியசாமி, சொல்லமாட்டேன் என்கிறாயே? சி.கொ. : என்ன ஐயா, அவரிடத்தில்? (பெரிய சாமியை நோக்கி) யாரையா நீர் வீண் பேச்சுப் பேசுகிறீர்? பெரியசாமி : நீ, யார் கேட்க? கன்னத்தை அரிசி மூட்டை மாதிரி வைத்துக்கொண்டு? அதட்டுகிறாயே? சி.கொ. : நீ, எனக்கு எந்த மூலை என்கின்றேன். வீணாக உரித்துக் கொள்ள வேண்டாம் தோலை. பெரியசாமி : தோலை! எந்தத் தோலை? மாட்டுத்தோலையா ஆட்டுத் தோலையா? இந்த வூரில் செல்லுமடா எனக்கு. என் பேரைச்சொல்லிக் கேளடா என்னைப் பற்றி. நடுங்கு வார்கள்! பொன்னுக்காகப் பார்க்கிறேன். இல்லா விட்டால் இந்நேரம் உன் பிணம் நாறி இருக்கும். சி.கொ. : எங்கே காட்டு உன் கைவரிசையை. (சின்ன கொய்யா கையை மடக்கிக் கொண்டு நெருங்கு கிறான். பெரிய கொய்யா இடைமறிக்கிறான்.) பெ.கொ. : (பெரியசாமியை நோக்கி) அவன் கிடக்கிறான் அறியா தவன்! உம்மைப் பார்த்தால் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைபோல் தோன்றுகிறது. நீங்கள் போய் விடுங்கள், பொன்னன் : எனக்குத் தெரிந்தவர். மிக நல்லவர். பெரியசாமி : பெரிய மனிதர் வீட்டுப்பிள்ளை போலிருக்கிறேனா? நான் பெரிய மனிதர் விட்டுப்பிள்ளை தான். அட்டியில்லை. பார்த்தால் இப்டி இருக்கிறேன் என்று எண்ணம் வேண்டாம். சட்டை, சரிகை வேட்டி எல்லாம் இருக்க நான் அவைகளை விரும்புவ தில்லை. நான் போட் டிருந்த மோதிரத்தில் ஒரு வயிரம் விழுந்துவிட்டது. தட்டானிடம் இப்போது தான் வேலைசெய்யக் கொடுத்தேன். இதோ இருக்கிறான் அவனும்! கேட்டுப் பார்த்தால் தெரியும். நான் இருப்பது செட்டித்தெரு. எந்தச் சேதிக்கும் என்னைத்தான் கூப்பிடுவார்கள். சி.கொ. : உங்கள் தெருவில் கோயில் உண்டா? பெரியசாமி : ஓ! இருக்கிறது! சி.கொ. : இருக்கிறதா? அதில் திருவிழா நடக்குமே? பெரியசாமி : நடக்கும். சி.கொ. : தீவட்டி பிடிக்க யாரை அழைப்பார்கள்? பெரியசாமி : இன்னமும் கேலியா பேசுகிறீர்? பொன்னன் : பெரியசாமி! நாழிகையாகிறது. சின்ன கொய்யா, வளர்த்தாதீர். போய்வா பெரியசாமி! பெரியசாமி : அதற்காக நான் சொல்லவில்லை. பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளையோல் இருக்கிறதாகச் சொன்னாரே அதற்குச் சொல்லுகிறேன். என் தகப்பனார் இருக்கிறாரே அவர் மாரி யம்மன் கோயில் தர்ம கர்த்தா. சிவப்பு வேட்டிதான் இடையில் கட்டுவார். குடையைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு தெருவில் போவாரேயானால் தெருவில் குந்தியிருக்கும் பெண்டுகள் எழுந்து நிற்கத்தான் வேண்டும். மாட்டுத் தரகு மாணிக்கம் என்றால் அழுத பிள்ளையும் வாயை மூடிக்கொள்ளும். நாங்கள் யாதவ சாதி. எங்கள் தகப்பனார் ஊர் நாட்டாண்மைக்காரருக்கு உற்ற நண்பரல்லவா? சி.கொ. : ஓ! அப்படியா? நாட்டாண்மைக்காரருக்கு நண்பர் இல்லையென்று நான் கேள்விப்பட்டேன். பொன்னன் : சும்மா இரும் சின்ன கொய்யா. பெரியசாமி, நாழிகை யாகிறது! எனக்குத் தெரியாதா உன் பெருமை. பெரியசாமி : அதற்காக நான் சொல்லவில்லை. பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை போல என்றாரே அதற்கல்லவா சொல்லுகிறேன். இதோ இருக்கிறது வண்டிப் பாளையம். விறகுக்கடை வெள்ளியம்பலம் என்றால் சிறு பிள்ளையும் தெரிந்து கொள்ளும். குறைந்த பேர் வழியில்லை. அவர்கள் வீட்டில் காலையில் காப்பித்தான். நடுப்பகலில் சுடு சோறு. சி.கொ. : இரவில், கூழோ? பெரியசாமி : என்றைக்குக் கூழ்? விரலை விடும் பார்க்கலாம்! ஒரு மாதத்துக்கு வேண்டிய அரிசி முதல் தேதியிலேயே வீட்டில் வந்து பாடுமே! அவர் வீட்டுப் பெண்ணைக் கட்டினவன் நான். ஆமாம்! இங்கிருந்து போய் விட்டே னென்று வைத்துக் கொள்ளும். உடனே காப்பி கம கம என்று வந்துவிடும் எதிரில்! எங்கள் மாமியாரையும் சும்மா சொல்லிவிடக்கூடாது. மருமகன் மேல் உயிர். நான் வீட்டில் நுழைந்து விட்டேனோ இல்லையா? ஆடுவார்கள் பம்பரம் போல். கடைக்குப் போவதும் தெரியாது வருவதும் தெரியாது. ஆய்விட்டது என்பார்கள் சமையல். வேறு பேச்சில்லை. பெ.கொ. : (கொட்டாவி விட்டுக்கொண்டே) இப்படித்தான் சிலருக்குத் திடீரென்று தொல்லை யேற்பட்டு விடுகிறது. சி.கொ. : இருங்கள் அண்ணா. தம் கதை ஆயிற்று. தந்தை கதை முடிந்தது. மாமனார் கதை மாறிற்று. மாமி கதையில் முன்பகுதி முடிகிறது. பெரியசாமி : நான் அதற்குச் சொல்லவில்லை. பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை போல என்றீர்களே. சி.கொ. : அதற்கல்லவா இவ்வளவும் சொல்லுகிறார். சொல்லுங் கள், விவரமாகவும் பொறுமையாகவும். பொன்னன் : பெரியசாமி, நாழிகை ஆகிறது. நாங்கள் பேசி யிருந்தது கேட்டதா உன் காதில்? பெ.கொ. : நான் சொல்லி வருகிறேன். இதைக் கேளுங்கள்! நாங்கள் இங்கே ஒரு செய்தி மறைவாகப் பேசியிருந்தோம். அதாவது, புதுச்சேரியிலிருந்து சரிகை, இந்தியா யூனியன் தீர்வைச் சாவடிக்குத் தெரியாமல் எடுத்துப் போவது பற்றி! அது வெளியில் தெரியக் கூடாதல்லவா! அதற்காகத்தான் அவர் அப்படிக் கேட்கிறார். இப்போது தெரிகிறதா? பெரியசாமி : அதுதான் பேசியிருந்தீர்கள். என் காதில் விழாமலா இருக்கிறது? பொன்னன் சம்பாதிப்பதில் எனக்குப் பொறாமையா? நான் அப்படிப்பட்டவனா? எங்கள் தாத்தா இருந்தாரே வேணுகோபால் ... ... சி.கொ. : தாத்தா கதைக்குப் பிள்ளையார் துதி! ஆகட்டும், ஆகட்டும். பொன்னன் : போய்வா பெரியசாமி. பெரியசாமி : நான் அதற்குச் சொல்லவில்லை ... ... சி.கொ. : பெரியமனிதர் வீட்டுப்பிள்ளை போல என்றா ரல்லவா அண்ணன்! அதற்காக அல்லவா சுருக்கமாகச் சொல்லுகிறார். பெரியசாமி : ஒருநாள் மஞ்சகுப்பம் போனார். யார் போனார்? சி.கொ. : யார் போனார்? சொல்லுங்களேன் அண்ணா! சும்மா இருந்தால் சுவையாய் இருக்குமா கதை? பெரியசாமி : எங்கள் தாத்தா போனார். எங்குப் போனார் மஞ்ச குப்பத்துக்குப் போனார். எங்கள் தாத்தா இலேசான பேர்வழி அல்ல. சி.கொ. : பளுவோ? பெரியசாமி : கையில் எப்போதும் தடி வைத்திருப்பார். மஞ்ச குப்பத்தில் ஒரு சத்திரம். இந்தச் சத்திரம் போலப் பெரியதா யிருக்கும். பெ.கொ. : என்ன ஐயா பொன்னரே! கேட்டுக் கொண்டிருங்கள், தூக்கம் வருகிறது. உங்கள் வேலை தீர்ந்ததும் எழுப்புங்கள். (என்று கூறி அங்குப் போட்டிருந்த விசிப்பலகையில் படுத்து விடுகிறான்.) பொன்னன் : என்ன பெரியசாமி? நாழிகை ஆகிறது. பெரியசாமி : அதற்குச் சொல்லவில்லை. அந்தச் சத்திரத்தில் புதுச்சேரி ஆள் ஒருவன் கக்கத்தில் ஒரு மூட்டையை வைத்துக் கொண்டு அச்சத்தோடு நிற்கிறான். ஏன் தெரியுமா? எதிரில் ஒரு போலீசுக் காரனைப் பார்த்து இவன் ஏன் அஞ்ச வேண்டும் என்றேன். தாத்தா கேட்டார் என்னப்பா, ஏனப்பா சொல்லப்பா என்று ... ... இதற்குள் அவன் வந்து இவனைப் பிடித்துக் கொண்டான். எவன் பிடித்துக் கொண்டான்? பொன்னன் : தாத்தாவைப் பிடித்துக் கொண்டான் அவன். பெரியசாமி : உம், இல்லை இல்லை! சி.கொ. : பொன்னருக்கு விளங்கவில்லை. இப்போது சொல்லி வந்தவைகளையெல்லாம் ஒன்றும் விடாமல் திரும்பிச் சொல்லுங்கள். ஏன் ஐயா, நாம் இந்த உடம்பையடைந்தது எதற்காக? இப்படிப்பட்ட நல்ல வரலாறு களைக் கேட்கத்தானே? உற்றுக்கேளுங்கள். பொன்னன் : பெரியசாமி, நாழிகை ஆகிறது. பெரியசாமி : அவன் கக்கத்தில் வைத்திருந்தது சரிகை மூட்டை. அதற்காகத்தான், போலீசுக்காரன் பிடித்தான் என்றால் சும்மா பிடித்து விடுவானோ? சி.கொ. : சும்மா பிடித்துக் கொண்டதாகத்தான் நான் நினைத்தேன். அப்படி இல்லையோ? பெரியசாமி : நீங்கள் ஓர் கபடற்றவர்போல் இருக்கிறது. சும்மா பிடிப்பானா? தெரிகிறதா பொன்னு? பொன்னன் : தெரிகிறது, போய் வா பெரியசாமி. பெரியசாமி : அதற்குச் சொல்லவில்லை; எங்கள் தாத்தா சும்மா இருப் பாரா? என்னுடையது அந்த மூட்டை என்றார். போலீசு, நீயும் வா போலீசுக்கு என்றது. போனார். யார் போனது? சி.கொ. : என்னையா கேட்கிறீர்? அதோ அவரைக் கேளுங்கள். தூக்கம் வருகிறது. யாரையா போனார்? சொல்லுமே. பொன்னன் : என்ன பெரியசாமி? நாழிகையாகிறது. பெரியசாமி : போலீசுக்குப் போனார் மீட்டுக் கொடுத்துவிட்டாரா இல்லையா மூட்டையை? அதற்காக அவன் முப்பது ரூபாய் கொடுக்கவந்தான் தாத்தாவுக்கு. உம்! வாங்க வில்லையே, அதற்குமேல் அவன் என்ன செய்தான் தெரியுமா? ரூபாய் கொடுப்பது சரியல்ல என்று எண்ணி ஒரு சால்வை எடுத்துக் கொடுத் தானாம். எதுக்குச் சொல்லுகிறேன் என்றால் அவர் பெருந்தன்மைக்காக ஒரு நாள் ... ... (இதற்குள் பெரிய கொய்யா விழித்து எழுந்து விடுகிறான்.) பெ.கொ. : என்ன, நீங்கள் நேற்று வந்தீர்களே. இன்னுமா இங்கே இருக்கிறீர்கள்! தம்பி, பல்துலக்கப் பற்பொடி கொண்டுவா. சி.கொ. : இருங்கள் அண்ணா, புதுக்கதை தொடங்குகிறார். நன்றா யிருக்கும் போல் இருக்கிறது. பெரியசாமி : ஒருநாள், என் மகன் என்ன செய்தான் தெரிமா? சி.கொ. : தெரியாதே, சொன்னால்தானே தெரியும். (இதற்குள் பெரியசாமியின் தகப்பனார் பெரிய சாமியைத் தேடிக் கொண்டு வந்து விடுகிறார். பெரியசாமி ஓடி விடுகிறான்.) தகப்பனார் : கேட்டீர்களா ஒரு சேதி? பொன்னன் : வேண்டாம் வேண்டாம். போய்வாருங்கள். தகப்பனார் : ஒன்றுமில்லை. பெ.கொ. : இவரும், அப்படித்தான் போலிருக்கிறது. சி.கொ. : அவர் அப்பன்தானே இவர். ஐயா நீங்கள் நாளைக்கு வாருங்கள். இப்போது மங்களம் பாடியாய்விட்டது. தகப்பனார் : நான் போய் வருகிறேன். (போய் விடுகிறார்) பெ.கொ. : என்ன பொன்னரே அவரவர்களை வலிய அழைத்து, எங்களப்பன் குதிருக்குள் இல்லை யென்கிறீர். செய்தி வெளியாகிவிட்டால் உம்மோடு போகுமா? எங்கள் உயிரல்லவா முதலில் போய்விடும். பொன்னன் : என் நெஞ்சம் கொஞ்சமும் அமைதியில் இல்லை. தக்கபடி சொல்லி, நான் தவறிவிடாமல் காப்பாற்றி னீர்கள். நாம் உள்ளே போய்ப் பேசுவோம். (அனைவரும், சத்திரத்தின் உட்கட்டில் ஒரு பெரிய அறையில் போகிறார்கள்.) பொன்னன் : என்ன நடந்தது? யாரும் பார்த்துவிடவில்லையே? சி.கொ. : அதிருக்கட்டும். உம் நெஞ்சு அமைதிபடவில்லை யென்றீரே, அது ஏன்? நாங்களல்லவா கொலை செய்தோம். எட்ட இருந்த உமக்கு இப்படிப்பட்ட கலவரமா? ஏது ஏது எம்மை காட்டிக் கொடுத்து விடுவீர் போலிருக்கிறதே! நாங்கள் கொலை செய்த செய்தியை யாராவது சிறிது பார்த் திருந்தால், அவர்கள் உம்மிடம் வந்து பேச்சுக் கொடுத்தால் என்ன ஆகும் எங்கள் நிலை? பெ.கொ. : கட்டாயம் இவர் சொல்லித்தான் தீர்ப்பார். பொன்னன் : அப்படியானால், யாராவது பார்த்து விட்டார்களா என்ன? பெ.கொ. : அதென்னமோ நடந்ததை நடந்தபடி ஒன்றையும் விடாமல் சொல்லுகிறோம் கேளும். சி.கொ. : அடடா! எங்கள் உள்ளமல்லவா ஐயா, கலவரம் அடைய வேண்டும். உமக்குக் கலவரம் ஏன்? நீர் சொல்லிய படியே வாடகைக்குக் கார் பேசினோம். பள்ளிக்கூடம் விடும்போது சரியாய்ப் பதினொரு மணி ஆயிற்று. கண்ணப்பன் பள்ளிவிட்டு வெளி வந்தான். நான் சொன்னேன்: தம்பி, உன் அண்ணன் அண்ணி இரு வரும் அங்கொரு தோட்டத்துக்குப் போயிருக்கிறார்கள். உன்னை அழைத்துவரச் சொன்னார்கள். என்று சொன்ன வுடன், அவன் முத்தான பல்காட்டி மெத்த நகைத்து, அத்தோட்டம் எங்கேயென்று கேட்டுக், கத்தரித்து விட்ட கருமயிர் நெற்றிமட்டும் தொங்கி அசையத், தங்கப் பாவை ஒன்று செங்குத்தான பாறை மேல் தாவியது போல், அங்குற்ற காரில் ஏறிக்குந்தி, விடு காரை என்று வாய்முத்தம் சிந்தி, முந்தி அண்ணியைப் பார்க்க வேண்டும் என்னை விட்டுப் போனாரே என்றான் வருந்தி. பிந்திக் கார் சிறிது தொலைவில் போனது. அவன் அன்பானது தேனது விரும்பும் வண்டு போல் ஏனது தொலைவோ, எங்கே அத்தோட்டம்? காட்டும் என்று கேட்டும், என்தோளில் கையைப் போட்டும் வாட்டும் பிள்ளைக்கு, நாங்கள் பாட்டும் பல விளையாட்டும் காட்டிச் சென்றோம். எதிர் நோக்கிற்று, அவன் விழி. அண்ணன் அண்ணி என்றது, அவன் மொழி, மாளாதிருந்தது வழி. பள்ளம் படுகுழி தாண்டிக் குழந்தாய் ஒழி என்று கார்போய் நின்றது கோரிமேட்டை யடுத்த காட்டில். பிள்ளை, என்ன இங்கே என்றான். அண்ணி எங்கே என்றான். கண்ணால் தாவினான். அண்ணா என்று கூவினான். பாவி நான் பாரடா என்று கத்தியை நீட்டினேன். அவன் கண்ணெதிரில், தீட்டினேன். அவன் நெஞ்சில், எரி மூட்டினேன். கண்ணீர் மிஞ்சினான். காலில் விழுந்து கெஞ்சினான். என்னை ஒன்றும் செய்யாதீர் என்று கொஞ்சினான். சாவுக்கு அஞ்சி னான், அந்தக் குற்றமற்ற நெஞ்சினான். தோயும் குருதிபோல் சிவந்த வாயும் அழுகையா ஓயும்? மலையினின்று சாயும் அருவிபோல் கண்ணீரும் பாயும்! தப்ப முயன்றான் அந்தத் தாயும் தகப்பனு மில்லாச் சேயும்! போயும் போயும் என்னிடமா அவன் விதத்தை சாயும்! என் அண்ணன் பிடித்தார், அவன் கைகளை! அடித்தார், அவன் முகத்திலே! இடித்தார், அவன் முகவாய்க் கட்டையிலே! கடித்தார் அவன் கழுத்திலே! அறுபடும் கோழிபோல் திமிறினான். நெஞ்சு குமுறினான். நான், ஒரு குத்தில் அவன் மூக்கை உடைத்தேன். அவன் வாயில் துணியை அடைத்தேன். முதுகைப் புடைத்தேன். துடைத்தேன் என் குருதிக் கையை! தள்ளினேன் கீழே. தலை சாய்ந்தான் ஏழை. உடைத்துக் கொண்டது கால், உடலை அழுத்திப் பிடித்தேன் கையால், பதைத்துச் சிவந்தது தோல். பெ.கொ. : குப்புறத் தள்ளினதற்கப்புறம், அவன் கைப்புறம் என் காலூன்றிக் கழுத்தின் புறம் அறுத்தேன். கத்தி, கூர்மை இல்லாததால் கழுத்து அறுபடவில்லை. மறுபடியும் தீட்ட வேண்டியதாயிற்று. தீட்டுமுன் பையன் ஓட்டமெடுப் பான் என்று அவன் இரண்டு குதிகாலையும் ஒரு கல்லின் மேல்வைத்துக் கத்தி யின் முனையால் நறுக்கி னோம். அப்போது அவன் உடல் துடித்தது. கண்ணோ நீர் வடித்தது. குருதி பீறிட் டடித்தது. நெஞ்சோ இரக்கம் பிடித்தது. வாயுதடு உதறல் பிடித்தது. எங்கள் உள்ளம் எங்களையே இடித்தது. குறை தீர எம்மிடம் முறையிட எண்ணினான். ஏதேதோ முயற்சி பண்ணினான். அண்ணி, நான் இவ்வாறு படுகிறேனே என்று அணிவாய் திறந்தழவோ, துணி, வாய் நிறைய அடைத்துள்ளது. குதி கால் கழிந்திருத்தலால், குருதி வழிந்திருத்தலால், அவனால் எழுந்திருத்தல் ஆகாது. கத்தியைத் தீட்டி வர நான் சென்றேன். தம்பி அருகில் நின்றான். கையைத் திருகி எடுக்கவா என்றான். பிள்ளை உடல் குருதி வெள்ளத்தில் சுழன்றது. அவன் காதினின்று செந்நீர் சுளைசுளையாய்க் கழன்றது. பொன்னன் : ஐயோ! நெடுநேரம் அவனை ஏன் இவ்வாறு வருத்தினீர்கள்! பெ.கொ. : கத்தியைத் தீட்டிக்கொண்டு வந்தேன். ஒரு துடையை, ஆட்டை அதன் தசைக்காக அறுப்பதுபோல் அறுத்தேன். படபட என்று துடித்தது அவன் உடல். பிறகு, மற்றொரு துடையையும் அறுத்தேன். பொன்னன் : ஐயோ! அவன் இப்படியெல்லாம் பாடுபட நேரும் என்று தெரிந்தால், நான் சொல்லியிருக்கமாட்டேனே. சி.கொ. : கையை, அறுக்கவில்லை, கொய்யாமல் நார்ப் பற்றுள்ள கிளையை முறுக்கி இழுப்பதுபோல் ஒரு கையைக், காலை உந்திக் கையால் மெதுவாகத் திருகி இழுத்துப் போட்டேன். அப்போது அவனுடைய அடைபட்ட தொண்டையிலிருந்தும் கொர கொர வென்று ஓர் ஒலி எழுந்தது. கிறு கிறு என்று அவன் உடல் கழன்றது. அழுத்திப்பிடிக்க முடியவில்லை. மற்றொரு கையை இழுத்தேன். உடல் மேல் கிளம்பி விழுந்தது. பொன்னன் : ஐயோ! அப்பா. நான்தான் வாய்தவறிச் சொன்னாலும், நீங்களாவது எனக்கு நல்லது சொல்லக் கூடாதா? ஐயோ! தம்பி! பெ.கொ. : எனக்கு, உள்ளம் இளகிவிட்டது. பிள்ளை படும்பாடு காண! தம்பிவிட்டுவிடு இதோடு என்றேன். அதற்கு அவன் சொன்னான். தாயும் தகப்பனுமாயிருக்கும் பொன்னரே சொன்னார் இவனைக் கொலை செய்யும் படி! என்றால், நமக்கு இரக்கம் ஒன்றா, என்று கூறிப் பிள்ளையை அந்த நிலையில் அப்படியே தூக்கித் தரையில் அடித்தான். வாயில், அடைத்திருந்த துணியும் கீழேவிழுந்தது. அவன் வாய்விட்டுக் கெஞ்ச நினைத் திருப்பான். ஆயினும் தொண்டையைவிட்டு ஒலி வெளிவரவில்லை. ஹும், ஹும் என்றது தொண்டை. உடலில் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது உயிர். மெதுவாகப் புரண்டான். கண்ணை ஒருவகை நீலம் கவ்வியது. ஹும்ஹும் என்றான். பொன்னன் : ஐயோ! தம்பி. எப்படிப்பட்ட துன்பம்! காதால் கேட்கவும் பொறுக்கமுடியவில்லையே! நீ, எப்படிப் பொறுத்தாய்! எப்படிப் பதைத்தாயோ! யாரை நினைத்தாயோ! தாயை நினைத்துத் தவித்தாயோ! அப்பாவை எண்ணி அலறி னாயோ! என்னை இகழ்ந்தாயோ! அண்ணியை அழைத் தாயோ! நடுக்காட்டில் துடைக் காலை அறுத்தாரோ! ஐயோ! தம்பி. நான் கொலைக்காரன்! நான் பொல்லாக் கொலைகாரனப்பா, தம்பி! (தேம்பி) காசுக்காக, உடன் பிறந்த கண்ணப்பனை, என் கண்ணொப்பானைக் கொலை செய்தேன். துடிக்க வைத்தேன். தூக்கி அடித்தாரா? ஐயோ தம்பி. (எழுந்து, உரத்த குரலில்) உன்னை நான் இந்தப்பாடு படுத்த எந்த வகை முற்பட்டேன்! தாயும் தந்தையும் நான் என்று நம்பிய உன்னை ஏன் இன்று இந்நிலைக்குள்ளாக் கினேன்! வேல் ஈட்டி எறியினும் வால் ஆட்டும் நாய்போல், உன்னை என்ன செய்யினும் என் முகத்தையே இரக்கத் துடன் பார்ப்பாயே. கருத் தறியாப் போதுன்னை நான் உருத்தெரியாதாக்க நினைத்தேன்! எனக்கு என்ன தண்டனை இடுகிறாய்? (தன் தலையைத் தன் இருகை கொண்டமட்டும் பிடித்துத் திருகிக் கொள்கிறான். ஆயினும் நீங்காவுயிரோடு நிலத்தில் சாய்கிறான். இருவரும் அவனைத்தூக்கி ஓர் சாய்வு நாற்காலியில் கிடத்தி அருகில் இருந்து தேற்றுகிறார்கள்.) காட்சி 28 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : பொன்னன், சின்ன கொய்யா, பெரிய கொய்யா. (சாய்ந்து படுத்த பொன்னன் நிமிர்ந்து உட்காருகிறான்.) சின்ன கொய்யா: எப்படி ஐயா இருக்கிறது உடம்பு? பொன்னன் : (அழுதுகொண்டே) ஐயா, அவனைக் கொல்லாமல் விட்டுவிடுவதுதானே! சி.கொ. : எம்மை ஏவிவிட்டு எட்டியிருந்த உமக்கே இப்படி இருந்தால், துடையறுத்தும் மடையறுத்த நீர்போல் வந்த செந்நீரை மண்ணிட்டு மறைத்தும், கையைப் புய்த்துப் பிடுங்கியபோது வெளிவந்த வெண் ணரம்பை அறுத்தும், அதனால் மண்ணதிர்ந்தது போல் அடடா, அவன் கண்ணதிர்ந்ததைப் பார்த்துக் கலங்கியும், விடாது தொடர்ந்து படாத பாடுபத்திய எமக்கல்லவோ இருக்கவேண்டும் உமக்குள்ள பரபரப்பு. பெரிய கொய்யா : நான் தான் வாய்தவறிச் சொன்னாலும் நீங்களாவது இப்படியெல்லாம் வரும் என்று அப்போதே சொல்லப்படாதா என்றீரே? இப்போது யாரைப் பழிவாங்க எண்ணுகிறீர்? குதிகால் அதிராமல் நாங்கள் அதிகாலையில் உம்மிடம் வந்தோம். அது காலம் வேறு. இது காலம் இன்னொருவனை மாய்த்தே பொன்னோ பொருளோ அடைய வேண்டுமேயல்லாது இன்னல் புரியாவிடில் ஏது மில்லை என்றுரைத்தீர். கடமை உமக்கன்றோ காப்பது என்றோம்! உடைமை எனக்கன்றோ ஒழிந்து விடும் என்றீர். கூடப்பிறந்தானே கொல்வதுவோ என்றுரைத்தோம் வாடப் புரிவானே வருநாளில் என்றுரைத்தீர். கெடுதலை செய்யவோ என்றோம். படுகொலை செய்வீர் என்று பகர்ந்தீர். இப்போது இப்படிச் சொல்கிறீர்; கூவுகிறீர்; அழுகிறீர்; அலறுகிறீர்; புழுப்போல் துடிக்கின்றீர்; புரண்டு கதறுகின்றீர். இது நல்லதா? பொன்னன் : காசுக்காக உடன்பிறந்த கண்ணப்பனை, மாசற்ற மாணிக்கத்தை மாய்க்கச் சொன்னேன். நடுக்காட்டில் காலை நறுக்கும்போதும் ஐயோ, தம்பி! வெடுக்கென்று கைகளைப் புய்க்கும்போதும் எப்படித் துடித்திருப்பாய். நீங்கள் ஒரே வெட்டாக வெட்டிப் போட்டிருந்தால் இத்தனை துன்பம் இராதே ஐயா. பொ.கொ : அதெப்படி? நாங்கள் தோண்டிய குழி சிறியதாயிருந்தது, என்று தெரிந்ததால், கால் கைகளைத் தனித்தனி வெட்ட வேண்டியதாயிற்று. அதன்பிறகு, அவன் வாயில் மீண்டும் துணியை அடைத்தோம். கூச்சலிடாமல் மல்லாத்திப் போட்டோம். இரு காலும் இரு கையும் அறுப்பட்ட முண்டம் செந்நீரில் நனைந்தபடி திரு திரு என்று விழித்தது கண்ணை! இரு இரு என்றான் என் தம்பி! அப்போது அவன் எழுந்து ஓடிவிட முயன்றான். கிரு கிரு என்று சுழன்றது குறையுடம்பு. பொன்னன் : ஐயோ! ஐயோ! அப்பா! அப்பா! நான் கொலைகாரன். நல்லாரை நோக்கித் தவங்கிடக்கும் ஏ தொல்லுலகே! (எழுந்து உரத்த குரலில்) பொல்லான் என்னுயிர் போக்கா விடில் தூய உன்மேனி தீயதாய் விடுமே! பல் கோடி மக்களைப் பெற்ற நல்லுலகே! அவர்கள் அனைவரும் நல்லபடி வாழ வேண்டும் என்று சொல்லுகின்றாய். என் தாய் வயிற்றில் இருவர் பிறந்தோம். பெற்றார் இறந்தார். ஒருவன் மற்றொருவனுக்கு உற்ற துணையாகாது, ஏதுமறியா இளையானை, சூது நெஞ்சத்தால் மூத்தான் துடிதுடிக்கக் கொலை செய்தான் எனில், காது கேளாது இருப்பாயோ! அமைதி வேண்டி யிருக்கும் அன்பு மக்களே! நான் செய்த வன்பு பொறுத்தால் பின்பு நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் மறையுமே! நான் கொலைகாரன்; நான் கொலைகாரன்! தண்டனை யிடுங்கள்! தண்டனை இடுங்கள்! சி.கொ. : (அவன் வாயைக் கையால் பொத்தி) அறிவிழந்தீரா! உலகை அழைக்கிறீர்! உலகைத் தண்டனை கேட்கிறீர்! கொலை செய்வித்த உமக்குத் தண்டனை கொடுப்போர் கொலைசெய்த எம்மை விடுவாரோ! நீவிர் ஆண்டீர், அனுபவித்தீர், உயிர்விடத் துணிந்தீர். நாங்கள் ஒரு தாய்க்கு இருபிள்ளைகள், இன்னும் நெடுநாள் இருக்க எண்ணுகிறோமே. (பொன்னன், உணர்வு கலங்கி மண்ணிற் சாய்கிறான்; அவனைப் பிடித்து மீட்டும் சாய்வு நாற்காலியில் வளர்த்தி உடன் இருக்கிறார்கள்.) காட்சி - 29 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : வேலு, சீனு, முத்து முதலிய மாணவர்கள். (சத்திரத்தின் முன்புறத்தில் வலப்புறத்து அறையில் மாணவர்பேசியிருக் கிறார்கள்.) வேலு : பொழுதோடு போய்ச் சாப்பிட்டு வந்துவிடுவோமோ. சீனி : என்னடா, இன்னும் மணி ஆறுகூட ஆகவில்லையே முத்து : வேம்பு, சாப்பாட்டு விடுதியை நினைத்தால் பாம்பாகச் சீறுகிறது நெஞ்சம். வாலி : பகல் சாப்பாடு நன்றாகத்தானே இருந்தது. பெருமாள் : அதில், எனக்குப் பிடித்தவை இரண்டே இரண்டு. ஒன்று வாழையிலை, மற்றொன்று வெந்நீர்! வேலு : ஏனப்பா, உப்பிலும் தப்பில்லையே. பெருமாள் : ஆமாம். தவறிவிட்டேன். சீனி : அதெல்லாம் இருக்கட்டும் யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கள், பொழுது போகட்டும் நல்லபடி. வாலி : ஆமாம். அப்பா பெருமாள், நீதான் பாடு ஒன்று. பெருமாள் : நான் நன்றாகப் பாடமாட்டேன். வாலி : என்ன அப்படிச் சொல்லுகிறாய்? அன்றொருநாள் பாடினாய். கேட்டேன் சொல்லெல்லாம் வெல்லம் போல் சொன்னாய். பண்முறை அனைத்தும் விண்ணென்று மேலேறுவதும் உண் ணென்று உவக்கக் கொடுப்பதுமாய் இருந்தது! சும்மா பாடு. (பாடத் தொடங்கிறான் மேலே பார்த்தபடி. அவன் மேலே பார்ப்பதை அனைவரும் பார்க்கிறார்கள். அதற்குள் அங்குப் போட்டிருந்த மேசையின்மேல் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அதன்மேல் ஏறுகிறான் வாலி.) சீனி : ஏனப்பா ஏறுகிறாய்? வாலி : பாடு என்றால், இவன் மேலே பார்க்கிறானே. மேலே எந்த இடத்தில் பாட்டு எழுதி வைத்திருக்கிறான் என்று பார்க்கிறேன். சீனி : கேலி பண்ணாதே. நீ, பாடப்பா. வாலி : (பாடுகிறான்) நீ, இருப்பதென்ன நிலை? நெஞ்சே! நாளை நீ, இருப்பதென்ன நிலை? பெருமாள் : நிறுத்தப்பா! மூதேவிப் பாட்டு. நாளைக்கு நீ இருப்பது என்ன நிலை? நாளைக்குச் செத்துப்போவது மட்டும் நிலையோ? நல்ல மொழியில் நல்ல கருத்தில் வாழ்வுக்கு வழிகாட்டியாகவோ, உள்ளத்திற்கு இன்பம் ஊட்டுவதாகவோ, ஒரு பாட்டும் தெரியாதோ உனக்கு? வாலி : இதைத்தான் பாடுவேன். பெருமாள் : வாழும் வீட்டில் மரநாய்! வேண்டாம். நான் ஒன்று சொல்லட்டுமா? சீனி : என்ன அது? பெருமாள் : நான் குகன் பாடம் படிக்கிறேன் கூத்தாடு வதற்கு, அதைச் சொல்லிக்காட்டவா? பாட்டல்ல, உரை நடை. சீனி : உரைநடையா? வாலி : அதனாலென்ன? பெருமாள் : உரைநடை என்றால், நடிப்புடன்! சீனி : ஓகோ! அப்படியானால், நன்றாயிருக்கும். ஆகட்டும். பெருமாள் : (எழுந்து) மழைக்கும், காய்ந்துவிழும் தழைக்கும் ஏது? இந்த முழக்கம்? (அங்கொரு குன்றின் மீது, அதாவது, அங்கிருந்த மேசை யின் மீது ஏறிக் கையைக் கண்ணுக்குக் குடையாக்கிக் குறித்துப் பார்க்கிறான் ஓசை வரும் வழியை) என்ன காட்சி! மக்கள் உடலோ அன்றிக் கடலோ முகில் திரண்டு மண்ணிற்படலோ! அடலோடு எதிரிவிட்ட படையா, திசைமறக்கும் தடையா, பெருநடையாய் வருகின்றார்கள். அவை எவை? ஓகோ! தேர்வந்தன. பார்வந்த தெனும்படி ஊர்வந்தன, கதிரை வீசும் முகபடா மணிந்த குதிரைவந்தன, வானை அளாவும் யானை வந்தன. சரிதான், பரதன்! ஒத்திருக்கும் சத்துருக்கன்! (என்றிவ்வாறே பெருமாள் தொடர்ந்து பேசுகிறான் . அங்கே, அதே நேரத்தில் பொன்னன். உணர்வு பெற்றுத் தலை தூக்கிப் பேசத் தொடங்குகிறான்.) பொன்னன் : தம்பி; தம்பி!! என்னை நம்பியிருந்தாய்! உடன் பிறந்தேன். கடன்பிறழான் என்று நம்பியிருந்தாய். காலை வெட்டிக் கையைக் களைந்து, உன்னை மேலும் என்னென்ன இன்னல் புரிந்தார்கள்! என்னால் என்னால்! பழிக்குப்பழியாக என்னை ஒழிக்கட்டும் இந்த ஊர். ஊர்மறந்தால், அழிக்கட்டும் என் கையே என்னை! ஆம். உளந்தவறி, வாய்தவறி, ஒழுக்கந் தவறி, உடன் பிறந்த இளந்தம்பி உயிரைக் களைந்தெறிந்த பொன்னைப் பிளந்தெறிந்தார் என்று என் மனைவியிடம் பிறர் சொல்லவேண்டும். இல்லாவிடில் உயிரோடு அவள் முகத்தில் நான் விழிப்பதெப்படி? ஐயோ! அன்னை யினும் அன்புடன் அவனை வளர்த்தாளே? (இதே நேரத்தில் குகனாகப் பேசும் பெருமாளின் குரல் பொன்னன், இருகொய்யா ஆகியவர் காதில் விழுகிறது.) பெருமாள் : உடன் பிறந்தவனின் உடைமை பறித்தாய், தீயவனே! அவன், உயிர் பறிக்கவும் நினைத்தாயா? பொன்னன் : (உற்றுக் கேட்கிறான்) நான் தீயவன்தான்! ஊர் அறிந்தது என் சூழ்ச்சியை, என் கொலைச் செயலை! பெருமாள் : ஆம், அவனே! அடே! காட்டுகிறேன் என் கை இருப்பை, வாட்டுகின்றேன் உன்றன் உயிரை. பொன்னன் : வாட்டுகிறேன் உன்றன் உயிரை... ... தண்டனை கேட் கின்றேன். உயிர்வாழ ஒப்பேன். ஆயினும்... ... வாட்டுகிறேன்! என் தம்பியடைந்தது போல்! தாளேனே! நினைத்தால் நெஞ்சு பதைக்கிறதே! என்னைத் தேடியா வருகின்றார்? அரசினரா? அருகில் வந்துவிட்டார்களா? விரைவில் பிடித்துப் போவாரோ? பெருமாள் : வஞ்சகனே, உன் உடன்பிறந்தானுக்கு அன்பன் நான் என்பது உண்மையாயின் இன்று உன் சதையை நரிக்கு விருந்தாக்குவேன். பொன்னன்: ஆ! சதையை! (உணர்வற்றுச் சாய்கிறான். இருவரும் தாங்கிப் படுக்க வைக்கிறார்கள்.) சி.கொ. : அண்ணேன்! கொஞ்சம் சிரிக்க அனுமதி கொடுக்கிறீர்களா? பெ.கொ. : எனக்கு வரும் சிரிப்பு வயிற்றைக் கிழிப்பினும் வாய் திறக்கிறேனோ? அழுத்திவை! அழுத்திவை! (உடனிருந்து தேற்றுகிறார்கள்.) காட்சி - 30 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : மரக்கால், போலீசு முதலியோர். (மரக்கால், பொன்னனின் மூடப்பட்டிருக்கும் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறான். போலீசுக்காரன், கையில் அரசினர் அறிக்கையுடன் வருகிறான்.) மரக்கால் : ஏன் போலீசுக்காரரே என்மேலே வழக்கா? எங்க ஐயா மெலேயா? போலீசு : உங்க அய்யாமேலே. மரக்கால் : சரியா போச்சி. நல்லவேளைக்கி வந்து ஒத்துக்கினிங்க. போலீசு : என்னா சேதி! (இதற்குள் தெருவின் கடைசி வீட்டுக்காரர், போலீசுக் காரனிடம் ஏதோ முறையிட வருகிறார்.) கடைசி வீடு : அண்ணைக்கி ஒருநாள் எங்க வூட்லே சாவுங்க. பொணம் எடுக்கப்போற வேலையிலே இந்த மரக்கால் ஒரு கலகத்தெ வளத்திபுட்டாருங்க. போலீசு : என்னா? மரக்கால் : விரிவா, மெதுவா சொல்லிவாங்க. போலீசுக்காரரே உத்துக் கேளுங்க. கடைசி வீடு : அந்தவூட்லே இவுரு இருந்தாரு. இவுரு கூட எரநூறு முந்நூறுபேரு ஒரே கூட்டமா இருந்தாங்க. அவுங்க கிட்டே என்னமோ இவுருசொல்லி அனுப்பி புட்டாரு. அவுங்க அவ்ளோபேரும் சாவு வூட்லேவந்து நெறைஞ்சி புட்டாங்க. பொணத்தை எடுத்துப் போம் போது கூட வந்தாங்க. நானு வருத்தமா கூடப் போனேன். அவுங் கள்ளே ஒருத்தன் வந்தான். எனக்கு அந்தவேலையெ குடுங்கண்ணான். ஒடனே இன்னொருவன் அதேமாதிரி. தொடந்தாப்லே வேறொருவன் அதே பாங்கு! இன்னொருவன், இன்னொருவன். ஐயையோ, போதும். என்னா சொல்லியும் எவனும் கேக்கவேயில்லே. எம்.ஏ. இண்ணான் ஒருத்தன் என்னென்னமோ! சுடுகாட்டுக் கும் வந்துபுட்டானுவ. அங்கே நானு தனியா ஒக்காந்திருந் தேனா பிச்சிப் பிடுங்கினாங்க. வேலையுமில்லே கீலை யுமில்லேண்ணேன். நம்பலே. கடைசியா சுடுகாட்லே பொணம் தூக்னவனுக்கும் மத்தவங்களுக்கும் கூலி குடுக்றாங்க. இவுங்க என்னா பண்றாங்க, உங்களுக்காக வெளியூர்லே இருந்து வந்தோமே எங்களுக்கு போகக் கூலி வந்த கூலி குடுங்கண்ணாங்க. ரொம்ப தொந்தரவா போச்சி அவங்களே வெட்டி அனுப்றது. இவுரு மேலே வழக்கு போடுங்க போலீசுக்காரரே. போலீசு : நீர், என்னா சொல்றீர்? மரக்கால் : கொஞ்சம் குறுக்குக் கேள்வி கேக்றங்க, அவரை. எங்க தெருவு கடைசி வூட்டுக்காரரே, அந்த வூட்லே ஒங்க சொந்தக்காரர் செத்துப்புட்டாங்களே என்னமா செத்தாங்க? காய்ச்சலா? கடைசி வீடு : காய்ச்சல்தான், வேறென்னா? மரக்கால் : தெருவாரு எத்தினிப் பேருவந்தாங்க சாவுக்கு? கடைசி வீடு : எனக்கும் தெருவுக்கும் பகை! மரக்கால் : பொணம் எடுக்க ஆள் கெடைச்சாங்களா? கடைசி வீடு : தெருவாரு, பொணந் தூக்றவங்களே போவாணாம்ணு கட்டுப்பாடு பண்ணாங்க. மரக்கால் : அப்படிண்ணா, ரொம்ப தொல்லேபட்டிங்க ஆளு இல்லாமே? கடைசி வீடு : ஆமாம். மரக்கால் : பொணத்துக்குக் கூட வர்றதுக்கு மனசாளும் இல்லே. ரொம்ப அவமானமாத்தான் இருந்திருக்கும். கடைசி வீடு : ஆமாம். மரக்கால் : அதெல்லாம் நெனச்சித்தான் கூட்டம் அனுப்னேன். ஒங்களுக்குப் புத்தி இல்லாமபோனா நான் என்னா பண்றது. கடைசி வீடு : புத்தியில்லையா? ஆருக்குப் புத்தியில்லெ? மரக்கால் : பின்னே என்னா? வந்த கூட்டத்திலே நாலு பேரைப் புடிச்சி தூக்கு பொணத்தோண்றதுதானே? நெருப்புச் சட்டியை ஒருத்தன்கிட்டே குடுத்துத் தூக்குண்றதுதானே! ஒருத் தனைப் பொரி எறைக்கச் சொல்றதுதானே. பந்தம் புடிக்கச் சொல்றதுதானே. போலீசு : பி.ஏ. எம்.ஏ. குடுத்தவுங்களையா? மரக்கால் : ஏன் செய்யமாட்டாங்க? வேலை இல்லாத் திண்டாட்டம் எனக்கல்லவா தெரியும்! சொல்லிப் பாக்றதுதானே. கடைசி வீடு : புத்தி இல்லேண்ணியே, என்ன? போலீசுக்காரரே நீர் சாட்சி. மரக்கால் : அது இருக்கட்டுங்க, மடியிலே என்னாங்க. கடைசி வீடு : அஞ்சி ரூபா! ஏன்? மரக்கால் : எடுங்க கையிலே. ஒங்க நன்மைக்குத்தாங்க! கடைசி வீடு : கையில் எடுத்துக்கொண்டு) சரி. எடுத்துக்கினேன். மரக்கால் : அந்த வூட்லே செத்துப்புட்டாரே அவுரு காய்ச்சலாலே சாவலே. கடுப்னாலே சாவ்லே. மூச்சடக்கி சாவ்லே. மூக் கொடைஞ்சி சாவ்லே. மாரடச்சிச் சாவ்லே. வாந்தி எடுத்துச் சாவ்லே. சொல்லிபுடுவேன்! அந்த அஞ்சி ரூபாயெ குடுத்துடணும் கா போடு பணத்தே, கால போட மாட்டியா? போட்டுடு. (போலீசும் கை நீட்டுகிறது மரக்காலும் நீட்டுகிறான்) இப்டிபோடு (வாங்கிக் கொள்கிறான் மரக்கால்.) போலீசு : ஓகோ, காலராவா: போலீசுக்குத் தெரிவிச்சியா? கடைசி வீடு : இல்லிங்க. போலீசு : அதோ சொன்னாரே மரக்கால். கடைசி வீடு : கேளுங்க. போலீசு : என்னா மரக்கா, கால இண்ணியே. மரக்கால் : காலபலம்! காலபலம்! காலபலம்! போலீசு : காலபலம் சரிதான். பணம் ஏன் நீ வாங்கினே? மரக்கால் : பணமா அது மூலபலம், மூலபலம், மூலபலம்! கடைசி வூட்டுக்காரரே, நீங்க, போங்க. (அவன் போய் விட்ட பிறகு) ஏன் போலீசுக்காரரே அவர் கையால் நீங்க இந்த அஞ்சி ரூபாயே வாங்கலாமா? இந்தாங்க நீங்க இதை வைச்சிக்கிங்க. அவுங்க வூட்லே காலராவிலே செத்துப் பூட்டாங்க. ஒண்ணும் நடவடிக்கை எடுக்காதிங்க. போலீசு : சரி. இந்த அறிக்கையெ பொன்னன்கிட்ட குடுத்துடுங்க. மரக்கால் : அதான் சரியில்லேண்ணேன். நேரா போங்க சத்திரத்துக்கு! ஐயர் கடையைத்தாண்டி, உள்ளே போய்க் கதவைத் தட்டுங்க. என்னாண்ணு! கேப்பாங்க. அறிக்கை இண்ணுங்க. திறந்து வாங்கிக்குவாங்க. நான் கூட அங்கத்தான் வர்றேன். ஆனா நானு தோட்டத்துப் பக்கத்து வழியா உள்ளே பூடுவேன். நீங்க அறிக்கையே குடுத்துட்டு, ஏதாவது நைவேத்யம் பெத்துக்கினு வூட்டுக்குப் போங்க. (போலீசுக்காரன் போகிறான்.) காட்சி - 31 இடம் : கார்வண்ணர் சத்திரம் காலம் : இரவு உறுப்பினர் : பொன்னன், சின்ன கொய்யா, பெரிய கொய்யா, போலீசு, மரக்கால், தங்கம் முதலியோர். (பொன்னன் கண் திறக்கிறான்; உற்று நோக்குகிறான் இருவரையும்.) பொன்னன் : தம்பி! எப்போது பார்ப்பேன்! கொலைக்காரர்களே, என்ன கொடுமை செய்தீர்கள்! என்னைப் பிடிக்க வந்தவர்கள் எங்கே? ஐயோ! ஐயோ! என் சதையை நரி தின்னும் என்றார்களே! ஐயா, நான் சாகப் பின் வாங்கவில்லை. என் தம்பியை நீங்கள் செய்தது போலச் செய்வார்களே என்று, என் தம்பி நடுங்கியது போல நான் அஞ்சி நடுங்குகிறேன். என்ன நிலை! என்ன நிலை! இன்ப உலகத்தை நான் துன்ப உலகமாக்கிக் கொண்டேன். தீர்ந்தது என் வாழ்வு! ஐயோ! (என்று உரக்க அலறுகிறான். கதவு தட்டப் படுகிறது.) சி.கொ. : யார்? போலீசு : போலீசுக்காரன், கதவைத் தெறங்க. பொன்னன் : (உடல் நடுங்கி எழுந்து பலபக்கங்களிலும் ஓடியபடி) ஐயா, பிடிக்க வந்து விட்டார்களே! என்ன செய்வது? பெ.கொ. : இந்த அறையில் புகுந்து கொள்ளுங்கள். கூச்சலிடாதீர்கள். (அங்கிருந்த ஓர் அறையில் புகுந்து கொள்ளுகிறான் பொன்னன். கதவைச் சாத்தி விடுகிறான் பெரிய கொய்யா. சின்ன கொய்யா போலீசுக்காரன் தட்டும் கதவைத் திறக்கிறான்.) சி.கொ. : மெதுவாகப் பேசுங்கள் போலீசுக்காரரே. போலீசு : பொன்னன் எங்கே? சி.கொ. : ஏன்? அறிக்கைதானே, என்னிடம் கொடும். போலீசு : அவரிடம் கொடுத்தால் ஏதாவது கிடைக்கும். சி.கொ. : நான் கொடுக்கமாட்டேனா என்ன? (அறிக்கையை வாங்கிக் கொண்டு ஒரு பீடியை அவனிடம் கொடுக்கிறான். அவன் அதை உற்றுப் பார்த்து விட்டுக் கூறுகிறான்.) போலீசு : என்னாய்யா இதுதானா? சி.கொ. : வேறு காசு இல்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம். பீடியைத் திருப்பிக் கொடுத்துவிடும் என்னிடமே. போலீசு : அப்றம் வர்றது சரிதான், பீடியை ஏன் கேக்றீர்? சி.கொ. : பீடியைக் கொடுக்கவிட்டால் அப்றம் வந்து பயனில்லை. போலீசு : அப்படியா? (பீடியைப் பிறகு கொடுக்கப் பார்க்கிறான், கொடுக்கப் போகிறான். கையை இழுத்துக் கொள்ளுகிறான். போலீசு : சரி. பீடியே போதும். (என்று சொல்லிப் போகிறான். அவன் போனபின் கதவைச் சாத்திவிட்டுப் பொன்னனைத் திறந்து விடுகிறான்.) பொன்னன் : (இரக்கமாக) ஐயா, அவன் என்ன சொன்னான்? சி.கொ. : நீதி விளக்கத் தலைவர் கூப்பிட்டிருக்கிறார். பொன்னன் : என்ன சொன்னீர்கள்? சி.கொ. : இங்கே இல்லையென்று சொல்லியனுப்பி விட்டேன். பொன்னன் : பிறகு என்ன செய்வது? சி.கொ. : உங்கள் மனைவி, உறவினர்களிடம் சொல்லிக் கொண்டு, சொத்து முதலியவைகளை யாருக்கு எழுத வேண்டுமோ எழுதிவிட்டு, விளக்கத்தலைவரிடம் போக வேண்டும். பொன்னன் : விளக்கத்தலைவர் என்ன செய்வார்? சி.கொ. : இப்படியெல்லாம் உம் தம்பியைக் கொலை செய்ததால் அதுபோலவே உம்மையும் செய்யும்படி தீர்ப்புக் கூறுவார் பொன்னன் : ஐயோ! தம்பி, தம்பி, நான் கொலைகாரன்! எனக்குத் தண்டனை வேண்டும், வேண்டும்! ஏன் ஐயா! என் தம்பி இப்படியெல்லாம் இன்னல் அடைந்தான் என்று அவர்கட்கு எப்படித் தெரியும்? கொலை செய்யும் போது எவராவது பார்த்திருப்பார்களா? சி.கொ. : கால்களும் கைகளும், அறுபட, அறுபட்ட இடத்தில் செந்நீர் பீரிட்டடிக்க, இரங்கத்தக்க நிலையில் அவன் கிடந்தானல்லவா? இதைச் சொல்லவே நாக்குக் கூசுகிறது. அப்படி அவன் கிடந்தான். அப்போது அங்கிருந்த பறவைகள் அழுதன. மரங்கள் அழுவதுபோல் கிளைகளை அசைத்தன. தழைகள் ஆடும் ஒலி ஐயோ என்று கூவியழுதது போல் எங்கள் காதில் கேட்டது. என் அண்ணன் அதற்குள் தீ மூட்டினான். கட்டைகள் கனிந்து கொழுந்து விட்டு எரிந்தன. அதில் உன் உடன் பிறந்த அழகனை உயிரோடு போட்டோம். பொன்னன் : ஐயோ! ஐயோ! எதற்காக? தீயவர்களே, மனிதர்காள? பிணந்தின்னும் நரிகளா? கொலைக்கஞ்சாப் பாவிகளே. சி.கொ. : ஏனையா இப்படிக் கூவுகிறீர்? நடந்ததைக் கேளும்! பெ.கொ. : கூறுவதென்ன? பிள்ளையின் உடல் தீயில் மள மள வென்று பொரிந்தது, எரிந்தது. உடற்குப்பையைக் காலால் அந்தக் குழியில் தள்ளினோம்; மண்ணைத் தள்ளினோம். வந்தோம். நீரும் அழவேண்டிய கடமைக்காக அழுதீர். அவ்வளவுதான். பொன்னன் : தம்பி! (உரக்க அழுதபடி சுற்றும் முற்றும் பார்க்கிறான்.) சி.கொ. : ஏனையா கூவுகிறீர்? உடனே நீர் வீட்டுக்குப் போவது தானே? பெ.கொ. : போய்விடும் ஐயா வீட்டுக்கு, பொன்னன் : என் வீட்டுக்கா? இந்தக் கொலை செய்த உடம்புடனா? அந்தச் சேயைத் தாயாய் வளர்த்த மின்னொளியின் எதிரிலா? மற்றும் அவன்பால் அன்புள்ள இன்னமுதின் எதிரிலா? எப்படிச் செல்வேன்? இல்லை. இல்லை. சி.கொ. : இளையவன் இறந்ததுபற்றி வருந்துவார்களா? ஏன் வருந்துகிறார்கள்? என்ன நீர் சொல்வதெல்லாம் வேடிக்கை. இது உம் வாடிக்கை போலிருக்கிறது! அவன் இறந்தான், தொலைந்தான், என்றால் அவனுக்குள்ள இருநூறாயிர ரூபா சொத்து வந்ததென்று நினைத்து, இனிமேல் கராச்சிப் புடைவையும் காருமாக உலாவலாம் என்று மகிழ்வார்களா, வருந்துவார்களா? பொன்னன் : ஐயா, ஐயா படித்த பெண்கள்! ஒழுக்கம் உடையவர்கள். அவனைக் கொலை செய்தது கேட்டால் உயிர் விடுவார்கள். மகிழமாட்டார்கள். அதைவிடக் கொலை செய்வித்த என்னுடல் பழிக்குப் பழியாகப் பிளக்கப் பட்டது என்று கேட்டால் ஒருகால் மகிழ்வார்கள். என்னை, விளக்கத் தலைவர் கொலைக் குற்றஞ்சாட்டி என் உடலைத் துண்டு துண்டாக நறுக்கித் துடிக்கும்படி செய்யும் வரைக்கும் நான் இந்தத் தீய உயிரை வைத்திருக்க வேண்டாம்! வேண்டாம். (பல பக்கங்களிலும் பார்க்கிறான். அங்கொரு கொடுவாள் கிடக்கிறது. அதைப் பாய்ந்து எடுக்கிறான். ஆனால், சின்ன கொய்யா அதைப் பிடுங்கிக் கொள்ளுகிறான்.) சி.கொ. : போய்விடும் ஐயா வீட்டுக்கு. பொன்னன் : போகமாட்டேன் உம்மைக் கெஞ்சுகிறேன்! கத்தி! சி.கொ. : ஏன் போகமாட்டீர்! பொன்னன் : அவள், என்னை அருவருப்பாள். துன்ப முகத்தோடு பார்ப்பாள். சி.கொ. : அந்த அம்மாவே உம்மிடம் வந்து, செய்தது போகட்டும், நீர் வீட்டுக்கு வாரும். நமக்குச் சொத்து மிச்சந்தானே என்றால் போவீரா? பொன்னன் : ஐயோ! அவளா சொல்லுவாள்? அவளா மகிழ்வாள்? உயிர்விடுவாள் கண்ணப்பன் இறந்தது பற்றி. சி.கொ. : இல்லை, அந்த அம்மா மகிழ்வாள். மகிழ்ச்சி தெரிவித் தால் சரிதானே. பொன்னன் : ஒரு போதும் மகிழாள் ஐயா, சி.கொ. : மகிழ்வாள். மகிழ்வாள். அவளுக்கு மகிழ்ச்சி தான் இதோ பாரும். (தன் மீசை, தலைக் குல்லாயைக் களைந்து) நான்தான் மின்னொளி. (அடுத்து நிற்கும் பெரிய கொய்யாவைக் காட்டி) இவர்தான் என் காதலர். பொன்னன் : (உற்றுப் பார்த்து) அடி தீயவளே! நீயா? உன் கையா லேயா என் தம்பியை இவ்வாறு பாடுபடுத் தினாய்? ஐயோ! அவனை வளர்ப்பது போல் மேலுக்குக் காட்டி னையோ? என் தம்பி! கள்ளம் கபடில்லாத என் தம்பி. இந்நாள் வரைக்கும், பசிகொண்ட புலியினிடத் திலா வாழ்ந்து வந்தான்? உனக் கென்னடி செய்தான் அவன்? ஐயோ! ஐயோ! சி.கொ. : எண்ணிப் பாரும். நீர் அவனை ஒழித்துவிட்டு அவன் சொத்தைச் சென்னையிலுள்ள கண்ணம்மா மகிழச் செலவு செய்யலாம் என்று நினைத்தீர். நான் உம்மையும், உம் தம்பி இருக்கானே சிறுத்தைக் குட்டி அவனையும் ஒருமிக்க ஒழித்துவிட்டு, இதோ கழுத்து மட்டும் மீசையுள்ள என் கண்ணாளருடன் காலந் தள்ளலாம் என்று திட்டம் போட்டேன்! கூச்சலிடாதீர். அகப்பட வைப்பேன் உம்மை! பொன்னன் : (அவனையும், அருகில் நிற்கும் பெரிய கொய்யாவை யும் உறுத்திப் பார்த்து, தன் இரு கைகளையும் தலைமீது வைத்துத் தலைமயிரைப் பிய்த்துப் பிறகு ஓர் முடிவுக்கு வந்தவன்போல) நான், கூச்சலிடவில்லை, உடன் பிறந்தான் போனான். மனைவி, என் கண்ணெதிரில் வேறு ஒருவனுடன் நிற்கிறாள். என்னை உடல் கிழிக்க அறமன்றம் தேடுகிறது, ஆம். (ஓடிவந்து மின்னொளியின் எதிரில் முழந்தாளிட்டுக் கெஞ்சிய முகம் காட்டி) மின்னொளி! உன்னை, இறுதியாக ஒன்று கேட்கிறேன். மின்னொளி : என்ன கேட்கிறீர்? பொன்னன் : உன் கையால், என்னை வெட்டித் தள்ளினால் உன்மீது குற்றம் வரும். அந்தக் கத்தியைக் கொடு! (என்று கையை நீட்டிக் கெஞ்சுகிறான்) மின்னொளி : (அண்டையில் நிற்கும் பெரிய கொய்யாவின் தோளில் கையைப் போட்டு, அவனுக்கு ஒரு முத்தம் தந்து) என் காதலரே! உமது தீர்ப்பென்ன? பெ.கொ. : எனது தீர்ப்பா? கேளடி! நாம் இருவரும் சற்றுநேரம் கை கோத்து மகிழ்ச்சிக் கூத்தாடுவோம். அவர், களைப்பாய் இருக்கிறார். அதோ அந்தப் பெட்டியிலிருக்கும் இளநீர்க் காயில் ஒன்றை எடுத்து வரச்சொல். சீவிப் பொத்த லிட்டுத் தருகிறேன். குளுகுளு வென்று முதலில் குடிக் கட்டும். அதன் பிறகு நம் ஆடல், பாடல்! அதன் பிறகு, நம் கண்ணெதிரே, நம் உள்ளம் களிக்க, இந்தக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு வீழ்ந்து சாகட்டும். பொன்னன் : அதன் பிறகு, கத்தியைக் கொடுக்கிறீர்களா? (சென்று, அங்கு மூலையில் இருந்த பெரியதொரு பெட்டியைத் தலைகுனிந்து பார்க்கிறான் பொன்னன்! கண்ணப்பனும் மரக்காலும் பெட்டியுள்ளே இருந்து எழுந்து நிற்கிறார்கள்.) மரக்கால் : தம்பி, சாவலிங்க. பொன்னன் : தம்பி, கண்ணப்பா! (என்று தம்பியைக் கட்டி அணைத்தபடி திரும்புகிறான். அதற்குள், பெரிய கொய்யாவாக இருந்த இன்னமுதும் தன் மாற்றுடை நீக்கி நிற்கிறாள்! பொன்னன் : (தம்பியை விட்டுவிட்டுத் தன் இருகைகளையும் ஏந்திய படி) படித்த பெண்களே! கொலை முயற்சியினின்று என்னை நல்லநிலை நிறுத்திக் காத்தீர்கள். மண்கல் என்று நினைத்தேனே பெண் கல்வியை. காட்டாறு போலக் கண்டபடி நடக்கும் காளையர்க்கு நல்லொழுக்கம் ஊட்டாமல் ஊட்டி உயர்நிலைப்படுத்துவார் கற்றறிந்த ஒண்டொடியார் என்பது கண்டேன். பொருள் பெற்றிருந் தேன். ஆம் இருள் பெற்றிருந் தேன். திருந்தேன்; உங்கள் அருள்பெற்றுத் திருந்தினேன். காசுக்காக உடன் பிறந்த கண்ணை அழிக்க நினைத்த கடையேன். கன் னெஞ்சம் உடையேன். தீய நடையேன். எத்தீமை செய்ய வும் பின் இடையேன். கல்விகற்ற உங்கள் துணை வலியால் ஒரு கேடும் அடையேன் ஆயினேன். கடற் பிறப்பு வையத்தில் அடற்பிறப்பார் ஆனாலும் உடற் பிறப்பால் தோள் வலிபோம் என்பார் உயர்ந்தோர். மடப் பிறவி, மடப்பிறவி எய்தரிய மாணிக்கத்தை எறிந்துவிட எண்ணினேன். உயர்குடி ஒன்று இருப்பதாய் உரைப்பார்; உயர் பண்பு வாழையடி வாழையெனத் தொடரும் என்பார். என் தந்தை உயர் பண்புடையார்; என்னிடம் எவ்வாறு தோற்றிற்றுத் தாழ்வு நடை. பெண்கள் மடமை உடையவர் என்ற மடையர், மாணுடைய அறிவின் வார்ப்படங்களைக் காணுதல் வேண்டும். இந்நாடு உருப் பட வேண்டுமானால் நான் பெற்ற பேறு எவரும் பெறுதல் வேண்டும். நான் மனைவி உடையேன் அல்லேன் கற்ற படியாத மனைவியைப் பெற்றிருந்தேன். ஆடவர் உலகே, நீ கற்ற பெண்ணை மணந்து உற்ற இடரெல்லாம் ஒதுக்கு. கொலையிற் சென்ற என்னுளம் கலையிற் சிறந்த பெண்களின் முயற்சியால் மீட்கப்பட்டது. நீவிரும் தவறு இழைப்பீர். அப்போது உங்களின் தங்கச் சிலைகள் அதினின்று உங்களை மீட்பர். பெண் கல்வி வேண்டும். பெண்கள் விடுதலை வேண்டும். இதனை நான் உணர்கின்றேன். மின்னொளி! இந்நாள் நான் ஓர் ஏழை. எனக்கென ஒரு பொருள் இல்லை. அதை, நான் விரும்புவமில்லை. பெண் கல்விக்கென்று பெரும்பொருள் செலவிட்டேனா? பெண்கட்கு விடுதலையில்லாக் கெடுதலை நீக்கத்தான் உழைத்தேனா? பாழான குதிரைப் பந்தயத்தால் கீழான நிலை எய்தி - அம் மட்டோ, வாழாதடிக்க எண்ணினேன், உடன் பிறந்தானை. மின்னொளி : அத்தான், நீங்கள் ஏழையல்ல. உங்கட்கு இன்னும் இரு நூறாயிர ரூபாய் சொத்திருக்கிறது. பொன்னன் : எப்படி? ஏது? கைப்பிடியாய் அள்ளி அந்தச் செப்படி வித்தையில் சிதைத்த தொகை சரியாய் இரு நூறாயிரம் ஆயிற்றே! மின்னொளி : இல்லை? வீரப்பர் வழியிலும், சென்னையில் கண்ணம்மா வழியிலும் நீங்கள் இழந்த தொகை, செலவு போக, நூறாயிரம்! அதை அவர்கள் அவ்வப்போது எனக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பொன்னன் : அப்படியா? மரக்கால் : அப்ப, நூறாயிரம் ரூபா ஐயாவுது கல்லுப் புள்ளாராட்டம் நம்பூட்டிலே உக்காந்துக்கினுதான் இருக்குதோ? மின்னொளி : வேறென்ன? கீழே போட்டு விடுவேனா? மரக்கால் : அதுக்கில்லேம்மா: செல பேருங்க ஆப்டறதே அப்படியே ஆத்தா வூட்டுக்கு அனுப்பிடுவாங்களே. மின்னொளி : நான் அங்கு அனுப்பவில்லை. அவர்கள் தாம் நூறாயிரம் ரூபாய் அத்தானுக்கு கொடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். பொன்னன் : என்ன மின்னொளி? மின்னொளி : எனக்கு ஐம்பதினாயிரமும் அக்காவுக்கு ஐம்பதி னாயிரமும் எழுதிவைத்தார்கள். அக்கா அதை எனக்குக் கொடுத்தார்கள். நான் தங்கட்குக் கொடுத்து விட்டேன். பொன்னன் : என்ன மகிழ்ச்சி? எனக்கேன் இன்னமுது? இன்னமுது : இல்லை. இருக்கட்டும். என்னை மணந்தார், குதிரைப் பந்தயத்தில் ஒன்றையும் இழந்துவிடவில்லை. பொன்னன் : சென்னையில், இந்தக் கண்ணம்மா, எனக்கு மட்டும் தெரிந்தவள் என்றல்லவா எண்ணினேன். மரக்கால் : நீங்க, என்னையும் அப்படித்தான் நெனைச்சிருந்திங்க. பொன்னன் : அதுவும் பொய்தானே. நீயும் மின்னொளி, இன்னமுது பங்கில்தான இருந்து வந்தாய்? மரக்கால் : வேறே என்னாங்க. ஒங்க பங்கில இருந்துட்டா இந்த மாதிரி முடிவு உண்டாவுங்களா? பொன்னன் : வீரப்பர், மரக்கால், மின்னொளி, இன்னமுது - அதோ தங்கம் - அனைவரும் ஒரு சார்பாக இருந்தீர்களா என்னைக் காப்பாற்ற? அனைவர்க்கும் நன்றி. கண்ணம் மாவை நான் மிக இலேசாக எண்ணினேன். அவள் படித்தவள் என்றுகூடக் காட்டிக் கொள்ள வில்லை. இன்னமுது : மரக்கால் காட்டிக் கொண்டாரா? இல்லியே அதுபோலத் தான். மரக்கால் : இருக்கட்டுங்க. வூட்டுக்குப் போனதும் இப்போ நீங்க சொன்ன மாதிரி நல்லவரா நடந்துகொள்ளுங்க. மறந்து புடக் கூடாதுங்க. ஒங்களுக்குச் சொத்து இருந்தா, அதைப் பெண்கள் படிப்புக்குக் குடுப்பேண்ணு சொன்னீங்களே. பொன்னன் : என் கைக்கு வந்ததும் அப்படியே செய்வேன். மின்னொளி : கையில்தான் வைத்திருக்கிறேன் அத்தான். இதோ பூஞ்சோலை வட்டிக்கடையில் நூறாயிரத்துக்கு இரசீது. இதோ நூறாயிரம் ரூபாய் சொத்துக்கும் உங்கள் பேருக்கு நன்கொடைச் சீட்டு. (மின்னொளி கொடுக்கிறாள். அவைகளைப் பொன்னன் பார்த்து மகிழ்கிறான்.) பொன்னன் : நண்பர் மரக்காலும், இன்னமுது மின்னொளியும் முன்னிருந்து பெண் பாடசாலை ஒன்றும், பிள்ளைப் பேற்று மருத்துவ விடுதி ஒன்றும் ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். மின்னொளி : உயர் கல்வி கற்க விரும்பும் பெண்களின் உதவிக்காக ஒரு தொகை ஒதுக்க வேண்டும். பொன்னன் : அவ்வாறே செய்து விடுங்கள். அந்த அற நிறுவனங் களை மேற்பார்வை பார்ப்பதும், அவற்றிற்கு இவ்வுட லால் இயன்றவாறு உழைப்பதுமே என் நோன்பாகும். மரக்கால் : அம்மா. நீங்க அதிலே தலையிடக் கூடாதுங்க, ஏண்ணா. நீங்க பொம்பளே! வெளிவரக் கூடாதுங்க. பொன்னன் : மரக்கால்! எனக்கு நல்லதோர் தேர்தல் வைக்கிறாய். நான், பெண்கள் உரிமையில் இதற்குமுன் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். உறுதியாகவுரைக் கின்றேன். என் மனைவி, என் மூடத்தனமான கட்டுப்பாட்டின்படி வெளியில் வராமல் இருந்திருந்தால் என் நிலை என்னாகும்? என்பால் அருள் உள்ளம் உடைய இன்னமுது நம் வட்டிக்கடையைத் தலைமை பூண்டு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இன்னமுது : நன்று, அத்தான். பொன்னன் : மின்னொளி! இப்போது உணர்கின்றேன் சென்னைக் கண்ணம்மா உன் சொற்படி நடந்து கொண்டாள் என்று. அதற்காக அவள் நான் வருந்தும்படி பல செயல் செய்தாள். மின்னொளி : என்கூடப் படித்த கோதை. பொன்னன் : மின்னொளி! இன்னமுது! இன்னொரு வியப்புறத்தக்க செய்தி, என்னவெனில், சிறிதுகூடச் சின்னக் கொய்யா பெரிய கொய்யாவாக உருமாறியிருந்த உங்களின் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. மின்னொளி : நம் வீட்டுக் கொல்லையிலுள்ள கொய்யாக்காயின் பற்றையை இரு கன்னங்களினுள்ளும் அடைத்துக் கொண்டோம். அதனால் உருமாற்றம் ஏற்பட்டதோடு குரல் மாற்றமும் ஏற்பட்டது. மரக்கால் : அதோட்டுதானுங்க சின்னகொய்யா, பெரிய கொய்யாண்ணு பேருங்க. பொன்னன் : அந்த உருவம் எப்படி நன்றாயில்லையோ, அது போலவே நன்றாயில்லாத பேர்களையே அமைத்தது, மிகப்பொருத்தம்! மரக்கால் : என்னா அப்டி சொல்லிபுட்டிங்க! ஆழ்ந்து பார்த்தா அத்தனையும் பொருத்தம். கொய்யாக் கனிண்ணா, தீய ஆடவர்களால் கொய்யமுடியாத கனி போன்ற பெண்கள் என்று பொருளுங்க. பொன்னன் : ஓகோ, மிக்க சுவை! மரக்கால் : அப்றம் காரோட்டி உருமாற்றமா நல்லாயில்லிங்க? ஆழ்ந்து பார்த்தா, அம்மா! பெரியம்மா! நல்லாவா இல்லே? (தங்கம்மா வந்து நிற்கிறாள்.) மரக்கால் : கொய்யக்கூடிய பழமிண்ணு ஐயா நெனைக்கக் காரணம் ஒண்ணு இருந்துதுங்க. ஏண்ணா, அந்தப் பொண்ணு படிக்காதவதானே. கெட்டவர்கள் கெட்ட நெனைப் போடு கிட்ட வந்தா வெட்டிப்போடணுமின்ற நெஞ்சுவலி எப்டி வரும்? எங்கே படிச்சா அவ? பொன்னன் : (தலைநாணிக் கைகூப்புகிறான்) தங்கம்மா, நான் செய்தது தவறு. என்னை மன்னிக்க வேண்டுகிறேன். (எதிரில், முழந்தாளிடுகிறான். அத் தங்கம்மா அப்பால் ஓடி நிற்கிறாள்.) மரக்கால் : இனிமே, தங்கம், இவுருமேலே எரிச்சலா குத்தஞ் சொல்லமாட்டியே? தங்கம் : இல்லே. இல்லே. மின்னொளி : அம்மா, நான்கூட அவர் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்கிறேன். தங்கம் : வேணாங்கம்மா. மரக்கால் : நானு ஒரே கூச்சல் போடப் போறேங்க. அவளோ மகிழ்ச்சிங்க எனக்கு! பெண்கல்வி வாழ்க. அனைவரும் : பெண்கல்வி வாழ்க! மரக்கால் : பெண்கள் விடுதலை, வாழ்க! அனைவரும் : பெண்கள் விடுதலை, வாழ்க!  சேரதாண்டவம் முதற் பதிப்பின் முன்னுரை* அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான். சேரதாண்டவம் என்பது சேரன் ஆட்டனத்தியின் கூத்து எனப் பொருள்படும். எனவே, சேரனின் கூத்துப் பற்றிய நூல் இது என்க. கூத்துப் பற்றிய நூல் எனின், கூத்தின் இலக்கணம் கூறும் நூலோ, அன்று. சேரனின் கூத்தே இக்கதைக்கு வேராகவும், மரம் கிளையாக வும் வருதலின் சேரதாண்டவம் கதை விளக்குவதென்க. ஆட்டனத்தி ஆதிமந்தி பற்றிய வரலாறு, தொடர்பாக யாண்டும் கிடைப்பதின்று. பாண்டியன் உயிர் விட்டபின் பாண்டியன் மனைவிக்குக் கண்ணகி கூறியதாக உள்ள மூன்று கற்புக்கரசியர் வரலாறுகளில், ஆதிமந்தி வரலாறு ஒன்று என்றுமட்டும் காணப்பட்டது கொண்டு, அத்தகைய வரலாறு நூல்களில் நுணுகி ஆராயப்பட்டது. பரணர், அகநானூற்றில். 222ஆம் செய்யுளில் - கழா அர்ப் பெருந்துறை விழவி னாடும் ஈட்டெழிற் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் ஆட்டனத்தி நலன் நயந் துரைஇத் தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின் மாதிரந் துழைஇ மதிமருண் டலந்த ஆதிமந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் எனவும், 286 ஆம் செய்யுளில் - ஆட்டனத்தியைக் காணீ ரோவென நாட்டின் நாட்டின் ஊரின் ஊரிற் கடல் கொண்டன் றெனப் புனலொளித்தன்றெனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி எனவும், 396 ஆம் செய்யுளில் - ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்பநின் மார்பு தருகல்லாய் பிறனா யினையே இனியான் விடுக்குவன் அல்லன் என மந்தி பனிவார் கண்ணள் பலபுலந் துறையக் கடுந்திறல் அத்தி யாடணி நசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டொளித்தாங்கு எனவும், 135 ஆம் செய்யுளில் - எழுதெழில் மழைக்கண் கலுழ நோய்கூர்ந்து ஆதிமந்தியின் அறிவுபிறி தாகி எனவும், 376 ஆம் செய்யுளில் - ஒலிகதிர் கழனிக் கழாஅர் முன்றுரைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காண ... ... ... ... ... ... ... ... ... ... ... புனல் நயந்தாடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டொளித் jh§F”1 2vdî«, 76ஆம் செய்யுளில் - கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் கரியலம் பொருநனைக் காண்டி ரோவென ஆதிமந்தி பேதுற் றினையச் சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகும் அந்தண் காவிரி ... ... ... ... ... ... ... எனவும், வெள்ளிவீதியார், அகம் 45 ஆம் செய்யுளில் காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்(து) ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ? எனவும், இளங்கோவடிகள், சிலம்பு 21, 11-15 இல் - மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் எனவும், ஆதிமந்தியாரே, குறுந்தொகை 31ஆம் செய்யுளில் - மன்னர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமொ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே எனவும் சொல்லிய செய்திகள் காணப்படுகின்றன. இவையின்றி வர்ண சூசி எனும் ஏட்டுப் பிரதியில் மருதி சில வரிகளால் மேன்மைப்படுத்தப்படுகிறாள். இவைகளைக் கொண்டே சேரதாண்டவத்தை இவ்வாறு எழுதினேன். இச் சுவடி மட்டப் பதிப்பு. இனி வெளியிட எண்ணும் இதன் மேன்மைப் பதிப்புக்கு இது ஓர் படி போல்வதே. - பாரதிதாசன் கதை உறுப்பினர் ஆட்டனத்தி : சேரநாட்டிளவரசன் ஆதிமந்தி : சோழநாட்டரசன் மகள் சோழன் : ஆதிமந்தியின் தந்தை சோழமன்னி : ஆதிமந்தியின் தாய் இரும்பிடர்த்தலையார் : சோழனின் மாமனார் வல்லமன் : சேரனின் மைத்துனன் குன்றத்தோளான் : சேரநாட்டு ஒற்றர் படைத்தலைவன் நெய்தலி : கடற்கரை சார்ந்த ஊரினள் சின்னை : நெய்தலியின் தோழி மற்றும், சேரனின் அன்னை, நெய்தலியின் தந்தை, அரசவை உறுப்பினர், தோழியர், ஊர்ப் பெருமக்கள், கள்வன், தொழிலாளர். காட்சி - 1 சேரநாட்டின் அரண்மனையில் அமைந்த ஆடல் அரங்கில், சேரநாட்டுப் படைமறவர்களும், அறிஞர்களும், அமைச்சர் முதலியவர்களும், ஆடல் காணும் அவாவுடன் நிறைய அமர்ந்திருக் கின்றார்கள். கூட்டிசை முழங்கி அறுதியடைகிறது. ஆடல் ஆசிரியனும், ஆட இருப்போனுமாகிய சேரன் ஆட்டனத்தி அரங்கின் நடுவில் தோன்றுகிறான், மணித்தேர் நிலைக்குவந்து நின்றது போல்! சேரன் ஆட்டனத்தி செப்புகின்றான்; வாழ்க! சேரநாட்டு மறவர் வாழ்க! பெருமக்கள் வாழ்க! மேலும் விளம்புகின்றான்; இன்றைய அரங்கு, என் படைமறவர்க்கு! அவர்கள் போர்த் திறம் பெறுவதற்கு! அவர்களின் உள்ளம் உயர்வு பெறவேண்டும் என்பதற்கு! என் அரசியல் உறுப்பினரும், அறிஞர்களும் கருத்தோடு காண்க. என் படைமறவர், பார்ப்பதோடன்றிப் பார்த்தவைகளைத் தம் போர்வாழ்வில் மேற்கொண்டு புகழ் பெறுவாராகுக. இன்னும் இயம்புவான்: இன்றைய அரங்கில் ஆடல், பழைய வரலாறு தழுவியதாகும். அவ்வரலாறும் என் பாட்டன் நாளில், நாட்டுப்பற்றும் தோள் வலியுமிகுந்த ஒரு போர் மறவனின் போர்த்திறத்தைக் குறித்ததாகும்! ஆடல் துவக்கம் செய்கிறேன். சேரன் ஆட்டனத்தி திரையில் மறைகிறான்; அவையினர் வாழ்த்துகின்றனர்! காட்டுக் குயிலும் கடல் முழக்கமும் ஒத்து இசைத்தாற்போல் கூட்டிசை துவங்குகிறது. சேரன் ஆட்டனத்தி ஆடி வருகின்றான். பின்னிசையும், வரலாறு குறித்துப் பாடும் இன்னிசைத் தமிழும் ஒன்று பட்டுக் கேட்போர் காதில் இன்பத்தைப் பொழிகின்றன. ஆடுவோனின் ஆடுங்காலடி இயக்கம். முழவு முழக்குவோனின் விரல் இயக்கத் திற்குச் சரிநிகர்! அவன் கண்ணும் கருத்தும், வரலாற்றின் கருத்தை எண்பித்துக் கலையின்பத்தை வார்த்தன. ஆடல், பாடல், அழகு என்னும் அம்மூன்றினின்று, கடலின்மேல் இளஞாயிறுபோல் வரலாறு தோன்றுகிறது. பார்ப்போர் பாழுலகை மறந்தனர்; இன்ப உலகில் வாழ்வாராயினர். அந்த வரலாற்றுச் சுருக்கம் போர்க்களத்தில், செங்குருதிச் சேற்றில் பல்லாயிரம் பிணங்கள் புதைந்துள்ளன. ஒரு பிணம் தன் தலையைத் தூக்குகின்றது. மெல்ல எழுகின்றது. கண் உறுத்தித் தொலைவில் நோக்குகின்றது. வாளைத் தூக்குகின்றது. மற்றொரு கையால் கேடயம் தூக்க வேண்டும். இடக்கை ஒட்ட அறுபட்டிருக்கிறது. ஆயினும் ... ... ... ? ஆயினும், அந்த ஒற்றைக் கைப் போர்மறவன் ஓடுகிறான் பகைப்படையை நோக்கி! அவன் தள்ளாடி விழுகின்றான் - ஆயினும் ... ... ... ? ஆயினும் ஓடுகிறான், சடுதியில் எழுந்து. அவனுடைய அவிழ்ந்த தலைமுடி கண்ணை மறைக்கின்றது. ஓடுகின்றான், ஒரு கையில் வாள் முனையால் முடியை விலக்கிய படி! தன்நாட்டுப் படையைத் தள்ளிக்கொண்டே முன்னேறுகின்ற பகைப்படையைப் பின்னிருந்து அறைகூவி அழைக்கின்றது ஒரு செங்குருதி முகம்! அழைக்கின்றது ஒற்றைவாளின் முனை. எதிரியின் படைமறவர்கள் திரும்பிப் பார்க்கின்றார்கள். அவர்களின் வியப்பு அவர்களை அச்சக்கடலில் ஆழ்த்துகின்றது. நொடியில் ஆயிரம் பேரைப் பின் கிடத்தி முன்னேறுகிறான். இந்நேரம் பிணமாய்க் கிடந்தவன். பகைமன்னனின் பெருந்தேர் முன்னேறிச் செல்லுகின்றது. அதை எதிர்நின்று மறிக்கின்றது ஓர் அகன்ற மார்பு! அதட்டுகிறது ஓர் இடிக்குரல்! செங்குருதி சொட்டும் ஒற்றை வாள் - நிறுத்தடா - போருக்கு அழைக்கிறது! ஒற்றைக் கை வாளுக்குத் தேரோட்டியின் உடல் இரு துண்டு! தேர் நின்றது. பகை மன்னன், ஒற்றைக்கை மறவன் இருவர்க்கும் வாட்போர்: நொடியில் பகைமன்னன் மடிகிறான். அருகிலிருந்த உடற் காப்பாளர் மடிகின்றார்கள். எங்கும் கலக்கம்! எங்கும் சோர்வு! எங்கும் அவலம்! ஒற்றைக் கையன் பகைப்படைக் கடலை நீந்தித் தன் நாட்டுப் படையின் அருகு அடைகின்றான். தன் நாட்டுப் படைத்தலைவன் தாங்காத வியப்படைகின்றான். ஒற்றைக்கையன் திறம் கேட்டுப் புதிய எழுச்சி! பகைப் படையின் சல்லிவேரும் இல்லை. வெற்றி முழக்கம்! அதே நேரத்தில் ஒற்றைக்கை மறவனின் உடலில் ஒட்டியிருந்த உயிர் மீளா விடை பெறுகின்றது. போர்மறவன் உருவச்சிலை சேரநாட்டு நடுவில் நாட்டப் படுகின்றது. போர்மறவர், பெருமக்கள், வேந்தர் ஆகியோர் சிலைக்கு வணக்கம் செய்கிறார்கள்.! இவ்வரலாற்றை ஆடலால், பாடலால், அழகால் விளக்கிய சேரன் ஆட்டனத்தியை அறிஞர் புகழ்கின்றார்கள். பார்த்திருந்த சேர நாட்டுப் படைமறவர் உள்ளத்தில் நாட்டுப்பற்றுப் பெருக்கெடுக் கின்றது. புதியவலிமை ஏறுகின்றது தோளில்! அவர்கள் எழுந்து. கையுயர்த்தி நிற்பதே போதாமல், குதித்துக் குதித்துப் போர்! போர்! ngh®! என்று முழங்குகின்றார்கள். சேரன் வந்து செப்புகின்றான்:- இந்நாட்டு முதுமன்னனை, உங்கள் அருமைப் பழ மன்னனை, என் முன்னோனைக் கொன்ற சோழனையும், அவன் படை மறவர்களையும் நம் வாள் பழி வாங்கக் காத்திருக்கட்டும்! போர்! போர்! போர்! படைமறவர் முழக்கம். அந்த நாளை நோக்கியே இமைக்காதிருக்கின்றன நம் கண்கள்! மார்பிலேயே மண்டிக்கிடக்கின்றது நம்மூச்சு! நம் இடைவிடா முயற்சி ஓங்குக! நம் நினைப்பும் செயலும் எதைக் குறித்து? சோழனோடு போரிடுவதற்கு! அந்நாள் விரைவில் வருக! கதிரும் விரைந்து செல்க; வீணான நாட்கள் விரைந்து கழிக! போர் நிகழ்த்தும் நாள் நமக்குச் செங்கரும்பின் தித்திக்கும் சாறு அரங்கினர் அனைவரும் ஆர்வத்தால், சோழன் வீழ்க என்று முழங்குகிறார்கள். முழக்கத்தின் நடுவில் ஓர் இடி முழக்கம் குறுக்கிடுகின்றது. நடுவில் ஒரு போர் மறவன் குறுக்கிடுகின்றான்! அவன் எரிச்சலோடு கூச்சலிடுகின்றான். அவன், அங்கு அமர்ந்துள்ள இருவரைக் காட்டிக் கூறுகின்றான், கோடை இடிபோல்! சோழன் வீழ்க என்று இவ்விருவர் சொல்லவில்லை. சோழன் வீழ்க என்று சொல்லவுமில்லை; அவர்கள் உடல் ஆர்வத்தால் துள்ளவுமில்லை. சோழன் வீழ்ச்சி இவ்விருவர்க்கும் துன்பந் தருவதாயிற்றா? என்ன! பகைவன் வீழ்ச்சி இவர்கட்குப் பச்சை வேம்பா? என்ன! கூட்ட நடுவில் அவ்விருவரும் இழுத்து வரப்படுகின்றார்கள். எல்லோருடைய வெறுப்பும் அவ்விருவர் மேல்! ஒருவன் கூறுகின்றான் - அவர்கள் சேரநாட்டாரல்லர். மற்றொருவன் - அவர்கள் சோழ நாட்டின் ஒற்றர்கள்! சேரன் ஆட்டனத்தி - சிறைப்படுத்துக அவர்களை! விடிந்தபின் நம் அமைச்சர் அவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! என முடிக்க, அரங்கு முடிவுறுகின்றது. காட்சி - 2 மறுநாள் காலையில், அரண்மனையின் உணவின் கூடத்தைவிட்டு அன்னை மானோக்கியாரும், சேரன் ஆட்டனத்தியும் நேற்று நடந்தவற்றில் குறிப்பிடத்தக்க செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டே சுவடி அறை வந்து சேருகின்றார்கள். சுவைமிக்க பேச்சுக்களின் இடையே, சேரன் ஆட்டனத்திக்குப் பல புதிய கருத்துக்கள் கிடைக்கின்றன, அன்னையிட மிருந்து! நீதி மன்றம் உன்னை எதிர்பார்த்துக் கிடக்கின்றது. விரைந்து செல் மைந்தா! என்றாள் அன்னை மானோக்கி, நன்று என்று செல்கின்றான் பிள்ளை. காட்சி - 3 மதயானைக்கு நடை கற்பிப்பான் போலச் சேரன் ஆட்டனத்தி நீதிமன்றத்தில் நுழைகின்றான். அமைச்சர் முதலியோர் வாழ்த்துக் கூறி, வணக்கம் செய்கின்றார்கள். உயர் மணி மேடையில் உட்காருகின்றான் சேரன் ஆட்டனத்தி. அமைச்சன் அறிக்கை - அரசே, இவ்விருவரும் சோழ மன்னனால் அனுப்பப் பட்ட ஒற்றர்களே! யாளிக் கொடி இவர் பெயர்; அவர் பெயர் அழகுவேல். சேரன் ஆட்டனத்தி கேட்கின்றான் இருவரையும் - சேரநாட்டில் போர்முயற்சி நடக்கின்றதா என்று அறிந்துபோக வந்தீர்கள்? படையின் அளவைக்கூட! வந்தது என்றைக்கு! நீவிர் கண்ட அன்று. எவ்வளவு அறிந்தீர்கள்? பயனற்ற கேள்வி. சொல்ல மறுக்கின்றீர்கள்? கடமையைச் செய்கின்றோம். இன்னல் வரும்! செத்த பிறகுமா? சேரன் வியப்புறுகின்றான். உமது நாட்டன்பு நன்று! ஒற்றரே, உம் நாட்டுப் படையின் அளவு என்ன? என்னைப் பற்றி உம் மன்னனின் உள்ளக் கிடக்கை எப்படி? கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகின்றீர். சொன்னால் தொல்லை குறையுமே, உமக்கு? தொல்லை குறையும். ஆயினும், எம் புகழின் எல்லை குறையுமே! இவர்களைச் சிறையில் தள்ளுங்கள். என்ன! தள்ளுங்களா! உங்கள் சிறை பள்ளத்திலா இருக்கின்றது? இவர்கள் சாகும்வரை சிறையில் கிடக்கட்டும். செத்தபின் சுடுகாட்டிற் புதையுங்கள். அரசே, எங்குள்ள சுடுகாட்டில்? இந்நாட்டில்! பணிவோடு கேட்டுக்கொள்கின்றோம் நாங்கள் பிணமானால், அப் பிணங்களை எம் சோழநாட்டு எல்லையில், எம் தாய்நாட்டின் மண்ணில் எறிந்துவிட்டு வரும்படி தீர்ப்புச் செய்யுங்கள். சேரன் ஆட்டனத்தியும் மன்றில் உள்ளவர்களும் வியப்பில் ஆழ்ந்துவிடுகிறார்கள். சேரன் ஆட்டனத்தி செப்புகின்றான்: உமக்குள்ள நாட்டன்பு வியக்கத்தக்கது. உமக்கு மன்னிப்புத் தர ஆசைப்படுகின்றது என் உள்ளம். ஆயினும் என் அரசியல் மறுக்கின்றது. நீவிர் சோழனைப் பற்றிய என் உள்ளக் கிடக்கையை நேரில் கேட்டறிந்து விட்டீர். என் படையின் அளவையும் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த நிலையில் உம்மைச் சோழனிடம் அனுப்பலாகாதன்றோ? ஆம் அரசே! உம் பிணம் சோழ நாட்டுக்கு அனுப்பப்படும் என்று தீர்ப்பளிக்கின்றேன். காட்சி - 4 சேரநாட்டின் அரண்மனையில் ஒரு தனியறையில், சேரன் ஆட்டனத்தியின் பரபரப்பான பேச்சும், அதை உற்றுக் கேட்போரின் கண் ஒளியும் குறிப்பிடத் தக்கவை. ஒற்றரே, உங்களுக்கு ஆடல் பாடல் தெரியும். சோழ நாட்டின் எல்லைப்புற மக்கள்போல் உருமாற்றிக் கொள்ளுங்கள். சோழ நாட்டின் நகரிலும். அரண்மனையிலும், மற்றும் எங்கணும் உங்கள் ஆடல் பாடல்களால் மக்கள் நெஞ்சைக் கவர்ந்து கொள்ள வேண்டும் சோழனின் உள்ளக் கிடைக்கை, நாட்டு மக்களின் எண்ணம், படையின் அளவு, படைவீடுகளின் அமைப்பு, நாட்டின் அமைப்பு ஆகியவற்றைத் தெரிந்து வருக. செல்லுங்கள்; வெற்றியோடு திரும்புங்கள். குன்றத்தோளான் உள்ளிட்ட ஒற்றர் பத்துப்பேரும் பறந்து சென்றனர். காட்சி - 5 சோழ நாட்டின் எல்லைப்புறத்து வாயில் நீங்கிச் சோழ நாட்டு வேட்டுவர் பலர் வெளியில் வருகிறார்கள். எதிரில் வரும் குன்றத்தோளான், அவர்களைக் கேட்கின்றான்;- நீங்கள் எங்கிருந்து வாரிங்கையா? நாங்கள் விலங்கு வளைக்கக் காட்டுக்குப் போகிறோமையா. எந்த நாடையா? சோணாடு அப்பண்ணா நம்ப நாடுதாண்டா, எலே. நீங்க சோணாடாய்யா? ஆமாய்யா, நாடகம் சொல்லிக்கப் போனோம். சொல்லிக்கிட்டு வர்ரோமையா. அப்படிண்ணா, கொஞ்சம் ஆடிக் காட்றோம் பாக்றீங் களாய்யா? ஆமாய்யா, ஆமாய்யா, கொஞ்சோண்டு ஆடிக்காட்டுங் கோய்யா, கொஞ்சோண்டு பாடியும் காட்டுங்கோய்யா. சேர நாட்டு ஒற்றர்கள் ஆடுகின்றார்கள். அவர்களிற் சிலர் பாடுகின்றார்கள். மற்றும் சிலர் முழவும் யாழும் குழலும் ஒலிப்படுத்துகின்றார்கள். சோணாட்டு வேட்டுவர்க்குச் சொல்லொணா மகிழ்ச்சி. உங்களுக்குக் கரும்பு வேண்டுமா? என்கின்றான் ஒரு வேட்டுவன். மற்றொருவன், தேனும் தினைமாவும் தருகிறேனே உங்கட்கு என்கின்றான். குன்றத்தோளான் கூறுகின்றான்:- நல்லவங்களா இருக்கீங்க நீங்க. ஆனா எங்களுக்கு மிக்க ஆசையா இருக்கிறது ஒண்ணே ஒண்ணு; கேட்டாத் தருவீங்களா? கேளுங்கய்யா என்றார்கள் சோணாட்டார். நாங்க பத்துப் பேருங்க. இந்தப் பத்துப் பேருக்கு வர்ராப்லே வேட்டி, சட்டை, மேத்துண்டு குடுத்தா ஒங்க பேர் இருக்கும் என்று குன்றத்தோளான் கூறவே, மகிழ்ச்சியோடு தருகின்றார்கள். அவைகளை உடுத்திக்கொண்ட சேரநாட்டு ஒற்றர்கள், உடையால் சோழ நாட்டாராகவே தோற்றம் அளிக்கின்றார்கள். காட்சி - 6 எல்லைப்புற மதிலின் வாயில், கட்டுக் காவல் உள்ளதாய் விளங்குகின்றது. உருவிய கத்தியுடன் நால்வர் வாயிலில் காத்திருக்கின்றார்கள். நுழையவரும் பத்துப்பேர்களையும் நோக்கி, அவர்களில் ஒருவன் கழறுகின்றான்:- எங்கே போக வேண்டும்? எங்க ஊருக்குங்க ... ... ... ஓங்க ஊருண்ணா? தேன் வெள்ளங்க. தேன் வெள்ளமா நீங்க? மெய்யா? இது என்ன வொழுக்கக் கேடு! பொய்யி வேறியா இதுலே? நல்லா இருக்கு! இன்னொரு சேரநாட்டான் இடையில், நல்லா இருக்கு நாயம். ஒங்க வேட்டியிலே உள்ள சாயம்! இ ஹி ஹி. மற்றொரு காவற்காரன்: பழமொழி பழகிறியா? பரியாசம் பண்றியா! சேரநாட்டுத் திருட்டுப் பசங்க நம்ப நாட்டிலே நொழைஞ்சி, நெலமை தெரிஞ்சும் பூட்றாங்க! அதுக்காக அரசர் விழிப்பா காத்துட்டு இருக்கச் சொன்னாங்க, நீங்க என்னான்னா இளிக்கிறீங்க, போங்க! போங்க! ஒற்றர்கள் பத்துப்பேரும் சோழநாட்டில் நுழைந்து விட்டார்கள். நகர் நோக்கிச் செல்கின்றார்கள், சேரநாட்டுத் திருட்டுப் பசங்க என்று காவற்காரன் சொன்னதை எண்ணி எண்ணி எரிச்சலுடன். காட்சி - 7 (ஒரு திங்கட்கு அப்பால்) வணிகத் தெரு அறநிலையத்தில், தனியறையில், ஒற்றர்கள் பத்துப் பேர் பேசிக்கொள்ளுகிறார்கள்: ஒருவன் கூறுவது: நம் வேலைகள் முடிந்தன, நாடு திரும்பலாமே! தலைவன் குன்றத்தோளான் கூறுகின்றான்; வணிகப் பண்டசாலைகளை, பெருவகை நிலையங்களைப் பார்ப்போமாயின் நாட்டின் செல்வ நிலையும், பொருள் விளைவும் பிறவும் அறிந்துகொள்ள முடியும். மற்றோர் ஒற்றன் உரைக்கின்றான் - அரண்மனையில் ஆடினோம். அழகிய தெருக்களில் ஆடினோம். படைவீட்டில் ஆடினோம். பெரிய அலுவலகத்தினர் வீடுகளிலும், தோட்டக் கச்சேரிகளிலும் ஆடினோம். இரும்பிடர்த் தலையார் இல்லத்தில் ஆடினோம். அரும்பும் இளநகை ஆதிமந்தியின் தனியறையில் ஆடினோம். அறிய வேண்டுவன அறிந்தோம் பெறவேண்டுவன பெற்றோம்! கடைத் தெருவிலுமா? ஆடுவதற்கு இனி என்ன இருக்கின்றது? கட்டு மூட்டையை! குன்றத்தோளான் மறுத்துக் கூறுவான்:- செங்கண்ணரே, கடைத்தெருவில் அறிய வேண்டியவை பல இருக்கின்றன என்கின்றேன் நான்; ஒற்றர் குழுவின் தலைவன் என்ற முறையில்! செங்கண்ணன்: மன்னிக்க! காட்சி - 8 கடைவீதியின் ஒரு திறந்த வெளியில் மக்கள்கூட்டம் மிகப்பெரிதாகிறது. பெருவாணிகர். ஆடல் காணக் கூடியுள்ளனர். மற்றும் ஆடவர் பெண்டிர் அளவற்றார் கூடியுள்ளனர். அப்பக்கத்து வாழ்கின்ற அலுவலினர் கூடியுள்ளனர். ஊர்க்காவலர் கூடியுள்ளனர். உள்நாட்டின் உளவறிவோர். கூடியுள்ளனர். எட்டுக் கால்நட்டு, மேலே பட்டு விரித்துக் கட்டிய ஆடல் அரங்கு அழகு செய்கின்றது. மேடையிட்டனர். அதன் மேற் சரிகை ஆடையிட்டனர். தரைமட்டும் தொங்கும் திரையிட்டனர். ஓசையில்லை. மக்கள் காதில் செந்தமிழ் புகத் தொடங்கிற்று. வியக்க, வியக்க, மெல்லென ஆடிவந்தான் ஒருவன். பல்லிசையும் எல்லையில்லா இன்பத்தை ஈந்தன. பாட்டொன்று, பின் கேட்கலாயினர். அப்பாடலின் பொருளை ஆடுவோரின் கை கண் நிலை இதழ் இவற்றினால் விளக்கியதானது வயிரத்தின் எதிரில் விளக்கிட்டது போலிருந்தது. அப்பாடல் வருமாறு- பிறவியில் என்னென்ன புதுமை! - மக்கட் பிறவியில் என்னென்ன புதுமை! நறுமலர் சூடிய மங்கை ஒருத்தியும் நானில மெச்சிடும் செம்மல் ஒருத்தனும் சிறிதன்பு செய்குவர் சேயிழை ஈவாள் சிப்பி முத்துக்கிணை பச்சைக் குழந்தையை (பிற) பால் குடிக்கும் சிரிக்கும் சிறு கால்கைகள் பார்த்திட ஆட்டும் தலைநிலை நின்றிட ஏலும் பின்னே தவழும் பிற குட்கார்ந் தெழுந்து நடக்கும் குழந்தைப் பருவத்தில் (பிற) அஞ்சொல் பயின்றுநற் பாவைவிரும்பி ஆண் டைந்தாகப் பள்ளி புகுந்து கலைகற்று மிஞ்சுபத் தாறினில் மெல்லியைக் கூடிப்பின் மெய்தளர் வார் இந்த வையக மீதினில் (பிற) அரங்கு முடிகின்றது. அனைவரும் பணவுதவி செய்கின்றார்கள். சிலர் புகழ்ந்து கூறுகின்றார்கள். ஆட்டக்காரரை மிகப்பலர் சூழ்ந்து நிற்கின்றார்கள். அவர்களில், முன்னாள் அவர்கட்கு ஆடை அளித்த வேடர் சிலர். கூட்டம் விலகுகிறது. வேடர்களில் ஒருவன் கூறுகின்றான் ஆட்டக்காரரை நோக்கி - நல்லா இருக்கிங்களாய்யா? குன்றத்தோளான் கூறுகின்றான்- நல்லா இருக்கேன் அண்ணே, போகலாம் பேசிக் கொண்டே! வேடன் - பொற வாசல்லே துணிகொடுத்தோமே நாங்கதான், நெனவு இருக்கா! இவ்வுரையைச் சோழநாட்டுத் துப்பறிவோன் உற்றுக் கேட்கின்றான். குன்றத்தோளான் முதலியோர் வேடரைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள், வேடர் பேச்சைப் பிறர் கேட்கலாகாது என்பதற்காக, துப்பறிவோனும், இவர்களைப் பின் தொடர்கின்றான், அவர்கள் நிற்கவில்லை. துப்பறிவோன் சொல்லுகின்றான், அதட்டலாக; ஆட்டக் காரர்களே, ஆர்காணும் வேடர்களே, நில்லுங்கள். நிற்கின்றார்கள், துப்பறிவோன் - ஆட்டக்காரரை நோக்கி; நீவீர் எந்த நாடு? அதற்கு வேடர்கள் பதில் கூறுகிறார்கள்: இந்த நாடு தாங்க, அதென்ன அப்படிக் கேட்கிறீங்க. எங்க சொந்தக்காருங்க. குன்றத்தோளான் - அவுங்க எங்க சொந்தக்காருங்க. நாங்க வேடர் தாங்க, நாங்க வேடரிண்ணு ஊர்லேல்லாம் சொல்லிக்கிங்க, அதனாலே எங்களுக்கு ஒண்ணும் கொறஞ்சிப் பூடாதுங்க, வெலங்கு வளைக்கிறவுங்க ஆட்டம் ஆட வந்துட்டாங்களேண்ணு மத்தவங்க நெனைக்கப்படாதேண்ணு, கொஞ்சம் மறைக்கிறதுங்க, நீங்கண்ணா சொல்லுங்களேன், முழுகியா பூடும்? துப்பறிவோன் - சரி சரி சரி. கோவிச்சிக்காதீங்க. சேரநாட்டு ஆட்கள் சோழ நாட்டிலே புகுந்து மறைவான நிலையைத் தெரிஞ்சும் போறாங்க. அதுக்காகக் கேட்டேன். அதுக்காகவே நம்ப அரசர் எங்களெ துப்பறிய ஏற்படுத்தியிருக்காங்க குன்றத்தோளான்: அதென்ன எளவோ எங்களுக்குத் தெரியாது. (போதல்) காட்சி - 9 ஆடல் அரங்கில் மாணவர் பலர் அமர்ந்திருக்கிறார்கள் சேரன் ஆட்டனத்தி செப்புகின்றான் - முத்தமிழ் பிறந்த வகையை விரித்துரைப்பேன் ஆடலால். திரையில் மறைகின்றான். கூட்டிசை முழங்குகின்றது. சேரன் ஆட்டனத்தி ஆடி வருகிறான், பாடலின் பொருள் குறித்து! பாடல் விரிந்த இயற்கை அன்னாய் - எங்கும் விளைந்த பொருளின் முதலே! திரிந்த காற்றும் புனலும் இன்னும் செந்தீ எவையும் உடையாய்! தெரிந்த கதிரும் நிலவும் - பலவாய்ச் செறிந்த உலகின் அழகே புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம் புதுமை! புதுமை! புதுமை அசைவைச் செய்தாய் அங்கே - ஒலியாம் அலையைச் செய்தாய் நீயே நசையால் காணும் வண்ணம் - நிலமேல் நாலும் விரியச் செய்தாய் பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம் பைந்தமிழ் பேசச் செய்தாய் இசையாம் தமிழைத் தந்தாய் - புள்ளினம் ஏந்திழை யாரின் குரலால்! எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள் எதிலும் அசைவைச் சேர்த்தாய் சொல்லால் இசையால் இன்பம் - எமையே துய்க்கச் செய்தாய் அடடா! கல்லா மயில் வான்கோழிகள் - புறாக்கள் காட்டும் சுவைசேர் அசைவால் அல்லல் விலக்கும் ஆடற் - றமிழ்தான் அமையச் செய்தாய் வாழி! மாணவர் விழிகள் வியப்பால் விரிகின்றன. கை தட்டி ஆர்க்கின்றார்கள். வாழிய ஆடல்! வாழிய அரசர்! சேரன் ஆட்டனத்தி, திரையில் மறைகின்றான். அரசியல் உடையுடன் அரங்கை அடைகின்றான். அவன் முடிவுரை கூறத் தொடங்குகிறான். அதே நேரத்தில், அரங்கின் மக்கள் கூட்டத்தில் பத்துப்பேர் நுழைகின்றார்கள். சேரன், அவர்களை நோக்குகிறான், வாழிய பெருமக்கள் என்ற ஒரே சொல் சொல்லி அரங்கை முடிக்கிறான். மக்கள், மீண்டும் அரசனை வாழ்த்திச் செல்லுகிறார்கள். சேரனும் அரங்கில் நுழைந்த பத்துப் பேர்களும் கருத்தூன்றிப் பேசியவண்ணம் தனியிடம் நோக்கிச் செல்லுகின்றார்கள். காட்சி - 10 சேரனின் அரண்மனை சார்ந்த தனியறையில் சேரனும் அரங்கில் நுழைந்த பத்துப் பேரும் ஒருபுறம் அமர்கிறார்கள். அவாவோடு சேரன் கேட்டான், வெற்றிதானே? என்று. வெற்றி! முழுவெற்றி, இதோ இந்த ஏடுகள் சோழநாடு பற்றிய எல்லாத் தகவல்களையும் நன்றாகத் தெரிவிக்கும் அப்படியா? மிக்க மகிழ்ச்சி. படையளவில் சோழன் நம்மினும் பெரியவனா? பெரியவனில்லை. ஒத்தவன். ஆயுதங்களின் நிலைமை எப்படி? அவைகள் துடைப்பவனைக்கூடப் பார்த்திருக்க முடியாது பன்னாளாக. தரைப் படையின் சுறுசுறுப்பை நோக்கினீர்களா? ஆம், நோக்கினோம். மறவர் தூங்குகிறார்கள். போர் நினைவே இல்லை! இந்த விடைகள் சேரன் முகத்தில் ஓர் புது மெருகை விளைக்கின்றன. அவன், அங்கெல்லாம் ஆடற்கலையின் நிலை என்ன? என்று பத்துப் பேரையும் கேட்கிறான். ஆடற்கலை அங்கு நல்ல நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சேரன் : ஆடலின் சுவையுணரும் நிலையில் மக்கள் இல்லையா? சோழன் நாட்டில் புகுந்தீர் இத்தனை தகவல்கள் சேர்த்தீர். இம் முயற்சிக்கு உங்கள் ஆடல் திறமை பயன்பட்டதா? விடை : சிற்றூரில் ஆடினோம். நகர்ப்புறத்தில் ஆடினோம். இரும்பிடர்த் தலையார் இல்லத்தில் ஆடினோம். அங்கு வளர்ந்துவரும் ஆதிமந்தி என்னும் சோழ மகளின் தனியறையில் ஆடினோம். சேரன் : சோழன், மகளை ஏன் தன் மாமன் வீட்டில் விட்டிருக்கிறான்! விடை : சோழனின் மறுமனைவியால் ஆதிமந்திக்குத் தீமை நேரக் கூடும் என்பது ஒரு காரணம்; மற்றொரு காரணம், இரும்பிடர்த் தலையார் பல்கலை ஆய்ந்தவர். அவற்றை அவளுக்கு நல்குதல் வேண்டும் அன்றோ! உண்மையில், எங்கள் ஆடலை இரும்பிடர்த் தலையார் சுவைத்தார். அதன் அருமை பெருமையை அவர் பாராட்டினார். ஆதிமந்திக்கோ நாங்கள் அண்டையிலேயே தங்கி, ஆடிக்கொண்டே இருந்தால் போதும்! சேரன் : என்ன ஆடினீர்கள்? விடை : இத்தனைக்கும் ஆடற்கலை என்னும் ஆலமரத்தின் மிலார்களையே அவர்கள் எம்மிடம் கண்டார்கள். பெரிய இடங்களை அவர்கட்குக் காட்டினால், நாங்கள் சேரநாட்டினர் என்பது தெரிந்துவிடக்கூடும். சிற்றூரில் வாழ்வாள் தன் மணாளனாகிய உழவனுக்குக் கூழ் கொண்டு போவதை நாங்கள் ஆடிய போது, ஆதிமந்தி மகிழ்ச்சி எல்லை மீறிவிட்டது. சிரித்தாள். சிரிப்பு மறைந்தது. எண்ணத்தில் ஆழ்ந்தன கண்கள். கும்பிட்டன கைகள் ஆடற் கலைக்கு! முத்து மாலை கழற்றித் தந்தாள். நாளைக்கு வருகிறீர்களா என்று கெஞ்சினாள் எம்மை. நாங்கள் அவாவைக் கொலை செய்தோம். மறுநாளே ஊரை விட்டுப் புறப்பட்டு விடவில்லையா நாங்கள்? சேரன் : ஆதிமந்தி! அவள் பெயரா? அவள் ... ... ? விடை : விரித்துரைத்தால் விளைவதென்ன? பகைவன் வீட்டுப் பெண்தானே! சேரன் : தச்சுக் கலையோடு ஒத்திட்டுப் பார்க்க நினைத்தேன், பகைவன் மகளானால் என்ன? விடை : தச்சுக்கலை! அவளை நோக்கி அது புதுக்கப்படவேண்டும். ஏறிட்டுப் பார்க்கும் போதெல்லாம் அவள் இருவிழிகள் இதழ் விரிந்த செந்தாமரைகள்! எதிர்நோக்கிச் சாயும் அவள் பார்வை, காதல் முழங்கி, காண்போர் உள்ளத்தில் மின்னிப் பொழியும் அமுத மழை! நெற்றிக்கு மேல் அமைந்த கருங் குழல் நிலவுக்கு மேலமைந்த கருமுகில். புன் சிரிப்பில் முத்துப் பிறக்கும்; மாணிக்கம் சிந்தும். வாய்விட்டுச் சிரிக்கை யில் இளைஞர் வையம் அதிர்கிறது. பொன்னே, தன் வன்மை இழந்து, மென்மை அடைந்து, மெருகுடன் அமைந்ததோ என்னும் கன்னம், சின்னஇடை கொடி போல அசையப் பொன்னுடையும் பன்மணி நகைகளும் சுமந்து, சிலம்பு பண்பாட அவள் நடக்கையில், வல்லவன் ஆக்கிய ஓவியமே நடக்கக் கண்டோம். அவள் இருக்கையில், அழகின் அரசு கொலுவிருக்கக் கண்டோம். முறுக்காணியைச் சரிப்படுத்திய பின் இசைவல்லான் மிழற்றிய யாழ்தருவதை, அவள் பேச்சுக்கள் தரும். அவள் தலை, விழி, கால், கைகளில் இயற்கையாகத் தோன்றும் ஒவ்வோர் அசைவும், ஆடல் நூலின் மெய்ப்பாட்டிலக்கணத்தையே பயனற்றதாக்கி விடுகின்றது. அவள் எதிர்நிற்க அஞ்சினோம். இருக்க அஞ்சினோம். பேச அஞ்சினோம். பாடென்றாள்; ஆடென்றாள்; அஞ்சினோம். காரணம், அவள் ஆயிழை அல்லள்; அழகின் ஒளி என்று நாங்கள் நினைத்ததுதான். அவள் தாயன்பு கண்டதால் அன்றோ எம் அச்சம் தெளிந்தது, யாமும் தாயாரிடத்துச் சேயராய் இருந்த பழக்கத்தால்! அவளை யாராலும் மணக்க முடியாது. சேரன் : ஏன்? என்று வியப்புடன் வெடுக்கென்று கேட்கிறான். விடை : இருகாரணத்தால்! சேரன் : அவை ... ... ? விடை : ஒருவர் தவிர, இவ்வுலகில் அவளுக்கேற்ற அழகுள்ள ஆடவர் பிறந்திருக்கவில்லை. பிறந்துள்ள ஒருவர் அவர்களுக்குப் பகைவர். சென்ற உயிர் மீண்டதுபோல் சேரன், ஓகோ அதற்குச் சொல்லு கிறீர்களா? என்கிறான், விடை : நாழிகையாகிறது மன்னரே! சேரன் : ஆம் ... அதனால் ... நான் ... இல்லை ... இருக்கட்டும் ... அவளை ... ... சரி, நீங்கள் போகலாம். பிறகு ... ... ஆம், நீங்கள் போகலாம். (சேரனை குளறிக் கொண்டு கிடக்கவிட்டுப் பத்துப் பேரும் பிரிகிறார்கள்.) காட்சி - 11 சேரன் ஆட்டனத்தி தன் தனியறையில் உட்கார்ந்திருக் கிறான். பணியாளன் ஒருவன் அருகினின்று விசிறிக் கொண்டிருக் கின்றான். அரைநாழிகைக்குப்பின் அரசனின் ஆழ்ந்த நினைவு கலைகிறது. எழுந்துலவுகிறான். உலவும் நிலை வர வர விசையா யிருக்கிறது. பின் உட்காருகிறான். அவன் விசிறுவோனை வெறுத்துக் கூறுகிறான்; விசிறியின் காற்றில் அனல் பறக்கிறது; நிறுத்து. பணியாளன் விசிறாமல் நிற்கிறான். சிறிதுநேரத்தின் பின் சேரன், விசிறாமல் நிற்கிறாயே என்று பணியாளனை அதட்டுகிறான். வெட்டிவேர் விசிறி விசை கொள்ளுகிறது; நறுமணத்தோடு. சேரன் வெளியில் விரைந்து சென்று மீளுகிறான். உட்காருகிறான். மீண்டும் வெளியில்! பின்னும் உட்புறம்! சேரன் உட்கார்ந்திருக்கிறான். பணியாளனை நோக்கி: என் மைத்துனர் வல்லமன் வருகிறாரா பார். பணியாளன் வெளியில் ஓடுகிறான், இல்லை என்று உள்ளே வருகிறான். சேரன் : (எரிச்சலாகப் பணியாளனை நோக்கி) எந்நேரம்? பணியாளன் : ஆம் அரசே. இந்நேரம் வந்திருக்கலாம்! (பணியாளன் வெளியில் செல்கிறான்.) (வெளியில்) (வல்லமன் வருகிறான், அவனைப் பணியாளன் அவாவுடன் எதிர்நோக்குகின்றான்.) பணி : வாருங்கள்! (வல்லமன் வருகின்றான். பணியாளனை நோக்கிக் கை அமைத்துக் கூவாதே என்று கூறி அருகில் வருகிறான்.) வல்லமன் : உன் விசிறியையும், தலைப்பாகை உடை யாவையும் என்னிடம் கொடு, சிறிது நேரம். (வல்லமன் அவன் உடைகளை வாங்கி உடுத்துக் கொள் ளுகின்றான். Éá¿ia¡ ifÆš ão¤J ËW, ‘c‹ nghš ïU¡»nwdh? என்கின்றான். பணியாளன், என் கோடரிப்பல் உங்களுக்கு இல்லை. என் குழிந்த விழி உங் களுக்கு இல்லை என்கின்றான். வல்லமன் ஏதோ பொருளை வாயினுள் பொருத்துகின்றான். தன் விழியில் மாற்றம் உண்டாக்கிக் கொள்கின்றான். உள்ளே போகிறான்.) சேரன் : இன்னும் வரவில்லையா வல்லமர்? போலிப்பணியாளன்: இல்லை. சேரன் : எந்நேரம்? போலி : ஆரைக் கேட்கிறீர் இந்தக் கேள்வி? சேரன் : என் மைத்துனர் ஆதிமந்தியைக் கேட்க வேண்டிய கேள்வி. போலி : ஆதிமந்தி என்கிறீர்கள் அரசே, உங்கள் மைத்துனர் பேர் வல்லமர். சேரன் : வாய் தவறிவிட்டது. போலி : சோழநாடு சென்று திரும்பிய பத்துப்பேருடன் நீங்கள் பேசியபின், உங்கள் நினைவு சரியாக இல்லை, அரசே! சேரன் : இதை நீ என் அன்னையிடம் கூறிவிடாதே. போலி : நானாக அன்னையாரிடம் சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் கேட்டால் ... ... ... ? சேரன் : அவர்கட்குத் தெரியப் போவதில்லை; ஆதலால் அவர்கள் உன்னைக் கேட்கப் போவதுமில்லை. வல்லமர் வருகிறாரா பார். போலி : (வெளியில் போய் வந்து) வரவில்லை அரசே! சோழ நாட்டிலுள்ள ஒரு பெண்ணின் பேர் ஆதிமந்தியா? சேரன் : ஆம்; மிக்க அழகுடையவளாம். இதை என் அன்னை யாரிடம் கூறிவிடாதே. ஏனெனில், பகையரசன் மகள் மேல் இவன் காதல் வைக்கிறான். என்று, அவர்கள் வருந்துவார்கள். போலி : நீங்கள் அந்தக் காதலை அவள்மேல் வைக்காத போது, வேறு ஒருத்தி மேல்தானே வைக்க நினைக்கிறீர்கள்? சேரன் : பின் என்ன? வல்லமரைப் பார். போலி : அவர் வரவில்லை. ஏன் வல்லமர் அரசே? சேரன் : நீ போய்ப் பார்த்து வா. போலிப் பணியாளனாயிருக்கும் வல்லமன் வெளியில் சென்று, பணியாளனிடம் வாங்கிய உடைகளைக் கொடுத்து, அரசனிடம் அவனை முன்னே விடுத்துப் பின்னே உரிய உருவத்துடன் சேரனிடம் தோன்றுகிறான். சேரனுக்கு அளவற்ற வியப்பு. அளவற்ற மகிழ்ச்சியுடன், என்னடா வல்லமா, ஏனடா இவ்வளவு நேரம்? என்று கூறி, அவனைத் தழுவிக் கொள்ளுகிறான். வல்லமன் : என்னை அழைத்தது எதற்கு? என்னை அழைக்கும்படி விட்ட ஆள் ஒரு சண்டி. வருகிறேன். போடா என்றால், கை யோடு அழைத்துவரச் சொன்னார் அரசர் என்கிறான். உன் பின்னேயே வருகிறேன் போடா என்றால், எனக்கும் முன்னேயே போவீர்கள் என்கிறான். என்னோடு வந்தால் குற்றம் நேராது என்கிறான். அடே ஆட்டனத்தி! இப்படிப்பட்ட ஆளை இனி என்னிடம் அனுப்பினால் என்னிடம் உதைபடுவாய். சேரன் : என்னடா, எனக்குக் கப்பம் கட்டிவரும் சிற்றரசன் நீ, என்னைக் கழுதைபோல் உதைக்கவும் தலைப்பட்டு விட்டாய். வல்லமன் : கழுதைபோல் அல்ல; குதிரை போல்! சேரன் : உதைக்கும் குதிரையான என் அன்புள்ள மைத்துனா, நாம் சோழநாட்டில் சென்று உளவறிய வேண்டும். என்ன? பழிக்குப் பழி வாங்க வேண்டாமா என் தலை முறையில் கை வைத்த சோழனை? (வல்லமனுக்குச் சிரிப்பு வந்துவிடுகிறது.) வல்லமன் : ஆம்! நாம் நேரிற் சென்றுதானா உளவறிய வேண்டும்? சோழனை ஒழிக்க வேண்டியது கட்டாயம். உளவறிய நம்மைப் போகும்படி எது கட்டாயப் படுத்துகிறது? சேரன் : ஐயையோ, நான்தான் அப்படி முடிவு செய்தேன். வல்லமன் : காரணந்தான் கேட்கிறேன். ஏதடா அங்கு உன் நெஞ்சைக் கவர்ந்தது? எதுவாயிருக்கலாம்? சேரன் : என்ன கேள்வி? பகைவன் நாட்டின் நிலையை அறிய வேண்டும் என்ற அவா என்னை அங்குச் செல் என்று வற்புறுத்தாதா? வல்லமன் : சரி. நான் வரவில்லை. நீ போ. சேரன் : அஞ்சுகிறாயா? வல்லமன் : தேவையில்லாத கேள்வி. சேரன் : உனக்கு உருவத்தை மாற்றும் அரிய திறம் உண்டு. அதனால் தான் உன்னை வேண்டுகின்றேன். வல்லமன் : வரமுடியாது. சேரன் : எனக்கு இந்த வகையில் உதவி செய்யக்கூடாதா? வல்லமன் : வர விருப்பமில்லை. சேரன் : இங்கிருந்து மாற்றுருவத்தோடு கிளம்பிச் சோணாடு சென்று, உளவறிந்துகொண்டு, நாலு நாட்களில் மீண்டு வந்துவிடலாம். வல்லமன் : வரமுடியாது. சேரன் : என்னடா வரமுடியாது என்று ஒரே பேச்சைத் திரும்பத் திரும்பக் கூறுகிறாய்? அறிவிருக்கிறதா உனக்கு? வல்லமன் : இருக்கிறது. சேரன் : பின், ஏன் காரணம் கூறமாட்டேன் என்கிறாய்? வல்லமன் : அறிவிருப்பதுதான் காரணம். நீ ஆதிமந்தியை எண்ணி அங்கு என்னை அழைப்பது எனக்குத்தெரியும். சேரன் : அந்தப் பணியாள் சொல்லிவிட்டானா மைத்துனா? அது தானாடா செய்தி. அன்னையிடம் சொல்லிவிடாதே. ஆதி மந்தியையும் பார்த்தது போல் இருக்கும்; அரசியல் அமைப்பை அறிந்தது போலும் இருக்கும். புறப்படுவோமா? வல்லமன் : எனக்கு இடையில் ஒரு வேலை இருக்கிறது. சேரன் : அதென்ன? வல்லமன் : உன் அன்னையாரிடம் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். அவ்வளவுதான். சேரன் : என்னவென்று? வல்லமன் : ஆதிமந்தியைப் பற்றியறியச் சோணாட்டுக்கு உம் மகனுக்கு உதவியாகப் போய்வருகிறேன் என்று! சேரன் : ஐயையோ! வேண்டாம் உனக்கு ஒருதங்கை இருந்தால் - அவளை நான் கட்டிக் கொண்டிருந்தால் எனக்கு ஒரு தங்கை இருந்தால் - அவளை நீ கட்டிக் கொண்டிருந் தால், இப்படி என் நன்மையில் விருப்பமில்லாமல் பேசுவாயாடா நீ? வல்லமன் : அட முட்டாளே, என் தங்கையை நீ மணந்து கொண்டு - ஆதிமந்திக்கும் என்னை அழைத்திருந்தால், உன்னைக் கொலையல்லவா செய்திருப்பேன்! சேரன் : ஆம்; ஆம். பிழை, பிழை! என் அன்புள்ள மைத்துனா, வா. வல்லமன் : வருகிறேன். உன் அன்னைக்குக் காரணம் என்ன சொல்ல நினைக்கிறாய்? சேரன் : சோணாட்டின் நிலையறியச் செல்லுகிறோம். வல்லமன் : இப்போது தான் பத்துப்பேர் ஒற்றர் சென்று எல்லா வற்றையும் தெரிந்து கொண்டு வந்து விட்டார்களே, மகனே? சேரன் : அவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் தாயே. ஒன்றையும் தெரிந்துவரவில்லை அவர்கள். வல்லமன் : அவர்கள் கொண்டுவந்த குறிப்பேடுகளைக் காட்டடா மகனே! சேரன் : அவைகளை எனக்கு வந்த எரிச்சலால் கிழித்தெறிந்து விட்டேன், தாயே. வல்லமன் : அப்படியானால், அந்தப் பத்து ஒற்றர்களையும் நாம் நேரில் கண்டு, என்னென்ன தகவல்கள் தெரிந்துவந்தீர் என்று கேட்க வேண்டும் மகனே. சேரன் : ஆம் மைத்துனரே, அன்னையார் அப்படிக்கேட்டால் என்ன செய்வது? வல்லமன் : அந்தப் பத்துப் பேரையும் அழை. நீங்கள் அந்தத் தகவல் கொண்டு வரவில்லை, இந்தத் தகவல் கொண்டு வரவில்லை என்று மிகுதியாகச் சீறு. அவர்கள் விழிப்பார்கள். அதன் பிறகு அன்னையார் கேட்டால், நாங்கள் தவறிவிட்டோம் என்று அவர்கள் கூறுவார்கள். நாம் சோழநாடு செல்வது சரிதான் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். இதே நேரத்தில் ஒற்றர் பத்துப் பேரும் அங்கு வருகிறார் கள். சேரன் அவர்களை நோக்கி எரிச்சலோடு கூறுகிறான். - சேரன் : அகழ் இத்தனை அடி அகலம் என்பதை அறிந்து வரவில்லை? அரண்மனைக்கும் கோட்டை வாயிலுக்கும் எத்தனை தொலை - ஏன் அறிந்து வரவில்லை? நிலவறை ஒன்றுமே இல்லையா? - என்ன மடத்தனமான செய்கை! ஆழ்ந்து நோக்கவில்லை. உளவறிந்து வந்ததாக நீங்கள் கொடுத்துள்ள குறிப்பேடுகள் ஒரு பயனையும் உண்டாக்க வில்லை. கிழித்துப் போட்டு விட்டேன் அவைகளை. சேரன் மேலும் அவர்களைக் கேட்கிறான் - சரியான தகவல் தெரிந்துகொள்ள நானே போக வேண்டும். என்ன தோன்றுகிறது உங்களுக்கு? விடை : ஆம்; ஆம். சேரன் : என் அன்னையார் கேட்டால் என்ன சொல்வீர்கள்? விடை : அன்னையாரே, நாங்கள் சோணாடு போய்வந்தோம். எந்தத் தகவலும் தெரிந்துவர எம்மால் முடியாமல் போய் விட்டது. இச்செயல் செய்யத்தக்க அறிவும் ஆற்றலும் நம் அரசரிடமே உண்டு. மேலும், அன்னையாரே, எதிரி நாட்டின் இருப்பை விரைவில் அறிந்து கொள்ளவும் வேண்டும். சேரன் : அப்படித்தான் சொல்ல வேண்டும். உங்கள் பத்துப் பேருக்கும், தக்கபடி பத்துச் சிற்றூர் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படும். நீங்கள் நாளைக்கு எம்முடன் சோழநாட்டுக்கு வரவேண்டும். என் அழைப்பை எதிர்பார்த்திருங்கள். பத்துப்பேரும் கீழ்க்காணும் வகையாகப் பேசிக் கொண்டு போகிறார்கள். அகழின் அகலம் எதற்கு? நிலவறை இல்லை. இல்லாததும் குற்றமா? அரண்மனைக்கும் கோட்டை வாயிலுக்கும் எத்தனை தொலைவு என்பதைக் குறித்திருக்கிறோமே? அரசர் தாமே சோழநாடு செல்ல விரும்புகிறார். நாம் சென்று வந்ததைப் பயனற்றதாக்கி. ஏன்? ஏனா? இழுக்கிறது சோணாட்டுப் பெண்ணழகு! ஆமாம் ஆமாம் ஆமாம்! அன்னையார் கேட்டால் நாம் என்ன சொல்ல வேண்டும் என்பதை, அவரே நமக்குச் சொல்லாமற் சொன்னார். அது தான் சேதி நாம் ஆயத்தமாயிருக்கவேண்டும் சோணாடுபோக. வாருங்கள். காட்சி - 12 சோழநாட்டின் எல்லைப்புறத்து வாயிலின் காவலர் நால்வர் தொலைவிலிருந்து வரும் பெருங்கூச்சலைக் காது கொடுத்துக் கேட்கிறார்கள். ஐயையோ என்று ஆயிரம்பேர் கதறுகிறார்கள். குடிசை யெல்லாம் எரிஞ்சி போச்சே - ஆயிரம் பேர். கொள்ளைக் கூட்டத்தை இன்னும் நம்ம சோழ ராசா ஒழிக்கலியே - ஆயிரம் பேர். எல்லைப்புறத்து வாயில் காப்போரின் எதிரில். வெளியிலிருந்து வந்த ஏழை மக்களின் கூட்டம், வயிறெரிய முறையிடுகின்றது. முதலில் இந்த நள்ளிரவில் எங்கள் சிற்றூருக்குள் கற்கள் வந்து விழுந்தன. ஊர் மக்கள் ஒரு புறமாக ஓடி ஒதுங்கினோம். மற்றொரு மூலை கொளுத்தப்பட்டது. குடிசைகள் எரிகின்றன. கவண் கற்கள் பறந்தன. அடி, கொல்லு, வெட்டு என்ற கூச்சல் கேட்டன. கொள்ளைக்காரர் கையில் ஆயுதங்கள் இருந்தன. நாங்கள் எல்லோரும் ஊரைவிட்டு ஓடி வருகிறோம். சோழரிடம் சொல்லப் போகின்றோம். காவலர்கள், பரபரப்புடன், போங்க போங்க என்று சொல்ல, எல்லைப்புற மக்கள் அனைவரும் உட்புறம் நோக்கி நுழை கின்றார்கள். தட்டுமுட்டுக்களைத் தலையில் சுமந்தபடி பல்லோர்! குழந்தை குட்டிகளை இடையிற் சுமந்தபடி பல பெண்டிர்! பொதி சுமந்தபடி கழுதைகள் பற்பல! பொதி சுமந்தபடி குதிரைகள் பற்பல! சோணாட்டின் நகர்த் தெருக்களில் உருமாறியிருக்கும் ஆட்டனத்தி, வல்லமன், குன்றத்தோளான் முதலிய ஒற்றர் பத்துப் பேர் உள்ளிட்ட, எல்லைப்புற மக்கள் நுழைந்து விடுகிறார்கள். ஊரில் கொள்ளைக்காரர்கள் புகுந்து கொள்ளையடித்து விட்டார்கள். வீடுகளைக் கொளுத்திவிட்டார்கள் என்று கூச்சல், நகர மக்களை எழுப்பி விடுகிறது. ஊர்க் காவலர் இது கேட்டு, எரியும் சிற்றூர் நோக்கிப் பறந்து போகிறார்கள், கொள்ளைக்காரரைப் பிடிக்க. சோணாட்டின் ஓர் அற விடுதியில் பன்னிரண்டு பேர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சேரன் : கொள்ளைக்காரரைப் பிடிக்க ஊர்க்காவலர் செல்லு கிறார்கள். நாம் இங்கு இருக்கிறோம், மைத்துனா! வல்லமன் : ஆம் ஊர்க்காவலர் அங்குப் போய்ப் பார்ப்பார்கள். பொருள்கள் கொள்ளை போகவில்லை என்று அறிந்து வியப்படைவார்கள். கல்லெறிந்தும், கவண் எறிந்தும், வீட்டைக் கொளுத்தியும் தீமை செய்தவர் எப் பொருளை யும் எடுக்கவில்லை என்றால்? சேரன் : வியப்புத்தான். எனக்கொன்று தோன்றுகிறது. விடிந்ததும், நாம் அரண்மனையில் ஆட வாய்ப்பளிக்கும்படி அரசனை வேண்ட வேண்டும். அவன் என்ன ஆடப் போகிறீர்கள் என்று கேட்பான்? இரவு கொள்ளைக்காரர் ஊரில் செய்த தீமையை நடித்துக் காட்டுவோம் என்று கூறி, நடித்துக் காட்டுவோம். மைத்துனா, நம் உருவத்தைத் திறமையுடன் மாற்றியமைக்க வேண்டும் நீ. வல்லமன் : ஆகட்டும், தூக்கம் வருகிறது! தூங்குங்கள் அனைவரும்; விடியட்டும். காட்சி - 13 சோழன் : நீங்கள் எந்த ஊர்? குன்றத்தோளான் : எல்லைப்புறத்து மக்கள். எங்கள் ஊரைத்தானே இரவு கொள்ளைக்காரர் கொளுத்தினார்கள். சோழன் : என்ன ஆடுவீர்கள்? குன்றத்தோளான் : இரவு கொள்ளைக்காரர் எங்கள் ஊரில் புகுந்ததை யும் அங்கு நடந்ததையும் நடித்துக் காட்டுவோம்! சோழன் வியப்புடன் தன் அமைச்சனையும் அருகில் அமர்ந்திருந்த தலையாய அலுவலர் களையும் நோக்குகிறான், அமைச்சன் : அரசே! தங்கள் மாமனார் இரும்பிடர்த் தலையார், தங்கள் மகள் ஆதிமந்தி இருவர்க்கும் ஆடல் காண்ப தென்றால் விருப்பம் மிகுதி - இவர்கள் சொல்லும் வண்ணம் அரண்மனையில் ஆடல் நடத்தச் சொல்லி அரண்மனை யினர் மட்டும் கண்டு களிக்கலாம். சோழன் : ஆட்டக்காரர்களே. உடனே அரண்மனையில் அரங்கு கூட்டி ஆடிக்காட்டுங்கள். அமைச்சரே, மாமனார், என் பெண்ணான ஆதிமந்தி இருவர்க் கும் என்பேரால் அழைப்பு அனுப்புக. அற விடுதியில்: ஆட்டனத்தியும் வல்லமனும் குன்றத்தோளான் உள்ளிட்ட பதின்மரும் ஆடல் அரங்கிற்கு ஆன வகையில் உடையணிவதும், உருமாறுவதும் ஆகிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஊர்க் கொள்ளைக்காரராகக் குன்றத்தோளானும் வல்லமனும் உருக் கெள்ளுகிறார்கள். சேரன் அவுரிச் சாயத் தொழிலாளியாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் பெண்களாகவும் உருக்கொள்ளுகிறார்கள். அரண்மனை அரங்கில்: மன்னனும், மன்னியும் ஆதிமந்தியும் இரும்பிடர்த் தலையாரும் மற்றும் அரண்மனைத் தோழியரும் உறவினரும் ஆடல் காணும் விருப்பத்தோடு அமர்ந்திருக்கிறார்கள். ஆதிமந்தி தன் தந்தையைக் கேட்கிறாள் - அப்பா, இரவு எல்லைப் புறத்தில் கொள்ளைக்காரரால் நடந்த அட்டூழியங்களை நீங்கள் நேரிற்சென்று பார்த்தீர்களா? சோழன் : நீ நினைக்கும் அளவுக்கு அழிவு ஒன்றும் நேர்ந்துவிட வில்லை. ஊர்க்காவலர் உடனே அங்குச் சென்று நிலைமையை அறிந்து வந்தார்கள். ஆதிமந்தி : கொள்ளைக்காரர்கள் அகப்பட்டார்களா? சோழன் : கொள்ளைக்காரர் யாரும் அகப்படவில்லை. மேலும் கல்லெறிந்ததும் கவண் எறிந்ததும் குடிசைகளைக் கொளுத்தியதும் கொள்ளைக்காரர் செயல் என்றும் எண்ண முடியவில்லை. ஊரிலே சிலரால் உண்டானதா யிருக்கலாம் என்கிறார்கள் காவலர். புலன் தேடுகிறார்கள். அரங்கு துவக்கப்படுகிறது. அனைவர் பார்வையும் அரங்கில் மொய்க்கிறது. துவக்க இசைக் கூட்டு நின்றவுடன், முதல் கட்டம் தோன்றுகிறது. அவுரி நீலம் துவைக்கும் தொழிலாளி, சாவடியில் துணியைத் தோய்த்துத் தோய்த்து எடுப்பது பிழிவது முதலிய செயலை ஊக்கத் துடன் செய்து கொண்டிருக்கிறான் - இக் கருத்துக் கொண்ட பாடல் உள்ளிருந்து பாடப்படுகிறது. இப்பாடலுக்கு ஏற்றவகையில் மெய்ப்பாடு தோன்றுகிறது. நடிகனின் முகத்திலும் உடலுறுப்புக்களிலும், தொழிலாளியின் உடல் முழுதும் கருநீலம். இரண்டாவது கட்டம் தோன்றுகிறது: நீலம் துவைப்பானின் மனைவி வருகிறாள். அவள் தன் மணவாளனை நோக்கி, இந்த நள்ளிருளிலும் வேலை செய்ய வேண்டுமா? இந்த இரவு எனக்கு மட்டும் துன்ப இரவா? ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் இன்பத்தை நுகர்கிறார்களே! என்று (மெய்ப்பட்டால்) கூறுகிறாள். (மெய்ப்பாடு - அபிநயம்.) தொழிலாளி பதில் கூறுகிறான் - நாட்டு மக்களுக்கு விரைவாகத் தேவைப்படுகின்றன நீல ஆடைகள். இந்த இரவில் தொண்டு செய்ய என்னை விடு. நிலவொளி கலக்காத தூய இருள், உன் பார்வையை எதிலும் செல்லவிடாது, நீ தூங்கு. அவள் போகிறாள். மூன்றாங் கட்டம் தொடங்குகிறது: இரண்டு கொள்ளைக்காரர்கள் கற்களைப் பொறுக்குகிறார்கள். ஊர்மேல் எறிகிறார்கள். ஊர்மக்கள் பிள்ளை குட்டிகளுடன் ஒருபுறம் கூடி விடுகிறார்கள். கற்கள் மேலே விழுகின்றன. மக்கள் வருந்துகிறார்கள். சிலர் அடிபட்டு வீழ்கிறார்கள். தொழிலாளி துணிந்து நீலம் ஏற்றும் வேலையை இடைவிடாது செய்து கொண்டிருக்கிறான். இரண்டு கொள்ளைக்காரரும் கவண்களை எடுக்கிறார்கள். அவற்றில் கல் இட்டு மக்களை நோக்கி வீசி விடுகிறார்கள். மக்களில் பலர் அடிபட்டுச் சாய்கிறார்கள். தொழிலாளி நீலந் துவைத்துக் கொண்டிருக்கிறான். பலர் ஓடிவிடுகிறார்கள். நான்காவது கட்டம்: தொழிலாளியின் மனைவி முறத்தால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, பதைப்புடன், வந்துவிடு என்று அழைக்கிறாள் தன் கணவனை, தொழிலாளி, அதற்குப் பதில் கூறுமுகத்தால், கிழக்கு வெளுக்கு முன் பத்துக் கோடி புடவைகள் (ஒரு கோடி - 20 புடைவைகள்) நீலம் துவைத்தாக வேண்டும் என்று கூறி, மனைவியின் அழைப்புக்கு வருந்தித் தன் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ளுகின்றான். ஐந்தாவது கட்டம்: கொள்ளைக்காரர்கள், அரணிக் கட்டையில் தீக்கடைகிறார்கள். சுளுந்து கொளுத்துகிறார்கள். கொளுத்திய சுளுந்தங் கழிகளைக் கொண்டு குடிசைகளைக் கொளுத்துகிறார்கள்! ஊர் மக்கள் பல புறங்களிலும் சிதறி ஓடுகிறார்கள். தொழிலாளியின் மனைவி தன் கணவனுக்குக் காட்டுகிறாள் தீயை. தொழிலாளி, அவுரி நீலம் துவைத்த புடைவைகளைத் தீ ஒன்றும் செய்யாது என்று கூறித் தோய்த்த புடைவைகளை விரைவாக எண்ணுகிறான். ஆறாவது கட்டம்: கொள்ளைக்காரர் தொழிலாளியை நோக்கி வருகிறார்கள். மனைவி கணவனை அழைக்கிறாள். கொள்ளைக்காரர் வருவதைக் காட்டுகிறாள். தொழிலாளி நீலந் துவைத்துப் பிழிந்து போட்ட புடவைகள் இருபதுகோடி ஆய்விட்டது என்று மனைவியிடம் கூறி மகிழ்கின்றான். அவள் கள்ளர் நெருங்குவதைக் காட்டிப் பதைக் கிறாள். கணவன் நீலக் கரும் புடைவைகளை விரித்துத் தன் உடலை மறைத்துக்கொண்டு முழங்காலிட்டுப் படுத்துக் கொள்ளுகிறான், அவளும் அவ்வாறே செய்கிறாள். காட்சியரங்கு முடிகிறது. அரசன், என்ன கேடு விளைவித் துள்ளார்கள் கொள்ளைக்காரர்! என்று பதறுகிறான். கரும் புடைவை போர்த்துப் படுத்திருக்கும் தொழிலாளியின் சேரனின் - கருநிறம் பூசாத காலடி, அழகிய ஒளித் தண்டையுடன் காட்சியளிக்கிறது. அக்காட்சி யில் ஊன்றுகின்றன ஆதிமந்தியின் கண்கள். அவள், தன் அண்டையில் உட்கார்ந்திருந்த இரும்பிடர்த் தலையாரைத் தாத்தா என்றழைத்து, தொழிலாளியாய் நடித்த அந்த ஆட்டக்காரனின் காலைப் பாருங்கள். உடலெல்லாம் கருநிறம் பூசிய அவன், தன் காலடியில் பூசவில்லை. அதனால் காலடி தன் உண்மை ஒளியை - வேலைப்பாடமைந்த ஒளித்தண்டையை உலகுக்குக் காட்டுகிறது. தாத்தா : ஆம் ! அந்த நடிகன் ஒளி மேனி படைத்த இளைஞன். தன் மார்பை அழகுபடுத்தியிருந்த பக்க மாலையை ஆட்டக் காரருக்கு அளித்து, அரசன் மற்றவருடன் அரண்மனையின் உட்புறம் செல்லுகிறான். நடிகர் கூட்டம் வெளிச் செல்கிறது. சேரனின் அழகடியில் சிக்கிய பார்வையை மீட்க முடியாமல் திகைத்து நிற்கிறாள் ஆதிமந்தி. இரும்பிடர்த்தலையார் ஆதிமந்தியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று விடுகிறார். காட்சி - 14 அறவிடுதியில்: சேரன் சுண்ணச் சேறு கூட்டிக் கொல்லூற்றில் அதைப் புரட்டிப் பண்படுத்தி ஒரு மூலையில் உருவச்சிலை செய்யத் தலைப்படுகிறான். ஒருபுறம் ஓய்வுபெற்றுப் படுத்துப் புரளும் வல்லமனும், குன்றத்தோளான் உள்ளிட்ட பதின்மரும் எழுந்து சேரனைக் காண வருகிறார்கள். வல்லமன் : நேற்று நடந்த அரண்மனை அரங்கில் அரசனின் ஆடல், கலையின் உச்சியை அடைந்து விட்டது. சேரன் : வல்லமா, மெய்ப்பாடுதான் காண்போரின் கருத்தைக் கவர்ந்தது என்பது என் எண்ணம். குன்றத்தோளான் : ஆதிமந்தி என்னையும் என்னுடன் முன் இங்கு வந்த இந்த ஒன்பதின்மரையும் மறந்திருக்க முடியாது. அவள் அரங்கின் தொடக்கத்திலேனும் முடிவிலேனும் என்னைக் கண்டு தன் வீட்டிற்கு அழைப்பாள் என்று நினைத்தேன். சேரன் : அழையாமைக்குக் காரணம் என்ன? குன்றத்தோளான் : தொடக்கத்தில் கண்டு பேச முடியாமற் போனது சரி. அதன் பிறகு அவள் ஆடல் வரலாற்றில் நெஞ்சைப் பறிகொடுத்துக் கிடந்தாள். கடைசிக் கட்டத்தில் அவள் நிலை எனக்கு வியப்பை உண்டாக்கியது. எதையோ நோக்கின அவள் விழிகள். நிற்கவைத்த தங்கப்பாவைபோல் அசையாதிருந்தாள். இரும் பிடர்த் தலையார் அவள் கையைப் பற்றி இழுத்துச் சென்றார். அப்போதும் அவள் சேரமன்னரைக் கீழ்க் கண்ணால் பார்த்தபடி சென்றாள். சேர மன்னரிடம் அப்போதும் கவர்ச்சி தரத்தக்கது என்ன இருந்தது? அவர் இருண்ட உடம்பில், இருண்ட முகத்தில் அழகாயிருந்தது? சேரன் : நீலப் புடைவைக்குள்ளிருந்து எழுந்தேன் அவளும் இரும்பிடரும் செல்வதைக் கண்டேன். வல்லமன் : என்ன செய்கிறார் அரசர்? சேரன் : அதைத்தான்! வல்லமன் : கடைசியிற் கண்ட காட்சியையா? சேரன் : அவளுக்கு வரால்மீன் போன்ற முன்கை! அதில் பன்மணி யிட்டு இழைத்த வளையல் அணிந்திருந்தாள், செல்லு கிறாள்; அவை பாடுகின்றன! புறங்கை நண்டு போன்றிருந்தது. ஆனால் நண்டின் கால்களில் வான்மீன்கள் மொய்த்த கணையாழிகள் இரா. அவள் கையின் நகங்கள் கிளிமூக்குகள் நெளிவிலும், நிறத்திலும்! இரும்பிடர்த் தலையாருடன் தென்முகம் நோக்கிப் போவாள்; தென்மேற்புறம் எதையோ திரும்பித் தேடினது அவள் சித்திரை நிலாமுகம்; அரண்மனையெல்லாம் ஒளி செய்தது அவள் மேனி; அது பத்தரை மாற்றுப் பசும்பொன். நீலக்குழலால் ஒளிமங்கிய அரண்மனையில், அவள் சாயல் விழி. மின்னலை எறிந்தது! வல்லமன் : அதெல்லாம் கிடக்கட்டும்; நாங்கள் செய்யவேண்டிய தென்ன? சேரன் : இரும்பிடர்த்தலையார் அரண்மனையில், ஆதிமந்தியின் முன்னிலையில் நாம் ஆட வாய்ப்புத் தேடுங்கள். என்னால் அவளைப் பிரிந்திருக்க முடியவில்லை. அவள் உருவச் சிலையை - அந்த முதியோனுடன் அவள் சென்ற நிலையை - சுண்ணத்தால் நான் செய்கின்ற வகையில் என் காதல் நோய்க்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருப் பேன். நீங்கள் வந்து நல்ல செய்தி சொல்லுங்கள். (போகிறார்கள்.) காட்சி - 15 சோழ நாட்டின் புறவூரின் அரசப் பெருந்தெரு அமளிப்படுகிறது. நடுத்தெருவின் ஒதுக்குப்புறத்தில் நின்று ஒருவன் முழக்குகிறான்! எதிரில் ஒரு மான் விளையாடுகிறது; துள்ளி ஓடுகிறது; மருளுகின்றது. மானைத் துரத்தி வந்து வேடன், அதை அடித்து வீழ்த்த வில் வளைக்கிறான். அம்பறாத் தூணியினின்று அம்பை எடுக்கின்றான். வில்லில் தொடுக்கிறான். தெருமக்கள் தத்தம் வீடுகளை விட்டு வெளிவந்து வேடிக்கை பார்க்கிறார்கள். சிறுவர்கள் தெருவில் எள் விழஇடமில்லாது நிறைந்துவிடுகிறார்கள். மான் மருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வேடன் வாய்ப்புப் பார்த்தபடி தொடர்கிறான். பம்பை தொடர்கின்றது. இரும்பிடர்த் தலையாரின் அரண்மனை, அதிலுள்ள ஆதிமந்தி, தோழியர் சிலம்படியால் அதிர்ந்து போகிறது. ஆதிமந்தி, மின்னற் கொடியொன்று இடம்விட்டு விரைதல் போல் மாடிப்படியேறித் தெருப்புறம் நோக்குகிறாள். தோழியரும் அப்படியே. மான் துள்ளி விளையாடுகிறது, பம்பை காட்டும் தாளப்படி, வேடன் குறி பார்க்கிறான். மானாக நடிப்பவன் வல்லமன் ஆதலினால், வேடனாகி ஆடுபவன் குன்றத்தோளான் ஆதலினால், ஆடலும் மெய்ப்பாடும் ஆதிமந்தியின் உள்ளத்தை வளைத்து விடுகிறது. அவள் கண்களில் வியப்பு! உதட்டில் மகிழ்ச்சி! வேடன் அம்பைத் தொடுத்துவிடுவானோ என்று ஆதிமந்தி அஞ்சினாள். மான் தப்பிஓடிவிடுகிறது. மாடிப் பெண்கள் தம் வளையல்கள் பாடக் கைகொட்டிக் கலகல வென்று சிரித்து மகிழ் கிறார்கள்; வாளிக்குத் தப்பிய மானுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். மற்றொரு முறை மான் ஏமாந்து நிற்கிறது. வேடன் குறி பார்க்கிறான். அம்பு விடுமுன் நல்லவேலையாக வேடன் காலில் பாம்பு கடித்துவிடுகிறது. அவன் கடிபட்ட இடத்தைப் பிடித்தபடி உட்கார்ந்து படுத்து, மார்பு அடைப்பட்டு இறந்து விடுகிறான். வரலாற்றில் ஒட்டிக் கொண்டிருந்த ஆதிமந்தியுள்ளம், தன் நிலைக்கு வருகிறது, இறந்து வீழ்ந்ததுபோல் மெய்ப்பாடு காட்டிய குன்றத்தோளானின் காலடியை, அவள் கூர்ந்து நோக்குகிறாள். அவனில்லை, அந்தக் கால் இல்லை! ஆதிமந்தி நொச்சி என்னும் தோழியை நோக்கி, ஆடல் முடிந்தது. நீ போய் அந்த ஆட்டக்காரரை அழைத்துவா என்றாள். நொச்சி பறந்தோடுகிறாள். காட்சி - 16 ஆதிமந்தியின் அரண்மனைத் தோட்டத்தில் - சோலையில் வல்லமன் குன்றத்தோளான் முதலிய பதினொருவரும் ஆடல் தொடங்குகிறார்கள். ஆதிமந்தியும் தோழிமாரும் எதிரில் ஒரு திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குன்றத்தோளான் ஆகிய மயில் ஒன்று படுத்திருக்கிறது. தன் அலகால் உடலில் உள்ள பேன்களைக் கொத்தி அகற்றுகிறது இறக்கைகளால் மண்ணைச் சீய்க்கிறது. எழுகிறது; தன் படத்தை விரிக்கிறது. ஆடுகிறது முழவுக்கு ஒத்து. மயிலின் ஆடலில் சொக்கி நிற்கிறாள் வல்லமனாய பெண். மயிலின் ஆடலில் கருத்தைச் செலுத்தி நிற்கும் அப் பெண்ணின் பின்புறம், (பதின்மரில் ஒருவனாகிய) எருது ஒன்று நெருங்குகிறது. அது தன்கூரிய கொம்புகளை அவளின் முதுகின் நடுவில் பாய்ச்ச முன் கால்களால் தரையில் உந்தித் தலையைக் குனிகிறது. ஆதிமந்தி ஆ! என்று அலறி ஓடி, அப்பெண்ணைக் காக்க எண்ணி, அவளின் கையைப் பற்றி வேறுபுறம் இழுத்து விடுகிறாள். ‘bkŒahd vUjšynt! என்று முழவு முழக்குவோன் கூறினான். நடிப்பென்பதை மறந்தேன் என்று நாணி நின்றாள் ஆதிமந்தி. அவள் தன் தோழிகளுக்குக் கூறுகிறாள் - கலை என்பது எது? குன்றத்தோளரை நாம் அறிவோம். வல்லமரை நாம் பார்த்தோம். அதோ நிற்கும் அவரையும் நாம் எதிரில் கண்டிருந்தோம். இம் மூவரும் மயில், மங்கை, மாடு என நடிக்கப் போவதாகச் சொன்னார்கள் நம்மிடம். அம் மூவரும் நடிக்கத் தொடரும் நிலையிலும் அவர்கள் குன்றத் தோளார் முதலிய அம்மூவர்தாம் என்பதை நாம் அறியாமலில்லை. ஆயினும், நடித்துக் கொண்டிருந்தார்கள் - மாடு அந்த மங்கையைக் கொம்பால் குத்திவிடப் போகும் கட்டத்தில், நம் உள்ளம் எந்த நிலையை யடைந்தது? குன்றத்தோளார் - முதலிய மூவரையும் மறந்தது மயிலல்ல, மகன் தான்; மாடல்ல, மகன் தான் மங்கையல்ல. மகன் தான் - ஆயினும் நம் உள்ளம் மக்கள்தாம் இவர்கள் என்பதை மறந்துவிட்டது. நம்மை எது மறக்கச் செய்ததோ அது கலை. அந்த ஆள் மங்கை என்றும், மற்றோர் ஆள் கொல்ல வரும் மாடென்றும் மறந்ததே என்னுள்ளம், எது - எந்தத் திறம், என்னை அவ்வாறு மறக்க வைத்ததோ அது கலை! ஆதிமந்தி, ஆடல் வல்லுநரை நோக்கிக் கூறுவாள் - நீவிர் இன்னும் உங்கள் ஆடலை நடத்த விரும்புகின்றீர்களா? வல்லமன் : இல்லை; நாளைக்கு நேரம் குறிப்பிட்டால் ஆடல் நடத்த அட்டியில்லை. ஆதிமந்தி : நானும் அப்படித்தான் நினைத்தேன். நாளை மாலை வருகின்றீர்களா? ஒன்று கேட்க விரும்புகின்றேன். ஆடல் திறமுடையார் உங்கள் பதினொருவர் தவிர இன்னும் இருக்கின்றாரா? வல்லமன் : ஆம் அம்மே! அவரும் நாளை வருவார். ஆதிமந்தி : உங்கட்கு என்ன தேவை? வல்லமன் : இன்றே எமக்குத் தேவைப்படுவது, தங்க இடம். ஆதிமந்தி : இவ்வரண்மனை சார்ந்த அற விடுதி ஒன்றுள்ளது. வல்லமன் : வெள்ளித் தெரு அறவிடுதியில் தங்கியுள்ளோம். அதை விட்டு எம்மைப் போகச் சொல்லாதிருந்தாலே போதிய தாகும். ஆதிமந்தி : ஏற்பாடு செய்துவிட்டேன். வல்லமன் : விடை? ஆதிமந்தி : நன்றி ஐயன்மீர். (போதல்) காட்சி - 17 தாத்தா, நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும் என்றாள் ஆதிமந்தி. காத்திருக்கிறேன் அன்னையே என்றார், ஒரு பணியாளன் குரலில், இரும்பிடர்த்தலையார். ஆதிமந்தி, அதிகாரத் தோரணையில் தான் பேசிவிட்டதாக உணர்கிறாள். அதற்காகத் தாத்தாவை மன்னிப்புக் கேட்டாள். மேலும், அவள் சொல்லுகிறாள்; புதிய முத்துக்கள் வேண்டும் தாத்தா. விறலாரிடம் சரக்கு வந்திருப்பதாகத் தோழி சென்னாள். உங்களுக்குத் தானே முத்துக்களை ஆராயும் ஆற்றல் உண்டு? தாத்தா: என் கண்ணே இதோ - (போகிறார்) தோழி ஓடி வருகிறாள் ஆதிமந்தியிடம், அவள் கூறுகிறாள்; ஆதிமந்தி ஆதிமந்தி, ஆடல் துவங்கியாயிற்று. விரைவில் வந்தால் தானே? தாத்தாவை மெதுவாகத் தள்ளினேன் வெளியில் என்று கூறி, ஆடல் நடக்கும் இடமாகிய அரண்மனைத் தோட்டத்தை நோக்கித் தோழியுடன் ஓடுகிறாள். வழியில் - தோழி, புதிய ஆட்டக்காரரும் வந்திருக்கிறாரா தெரியாது என்கிறாள் தோழி. (ஓடுகிறார்கள்) ஆடலரங்கின் எதிரில், திண்ணையில் தோழியுடன் சென்று அமர்கிறாள். ஆடல் நடக்கிறது - ஒருத்தி நீர்த்துறை நோக்கிக் குடம் எடுத்து மெல்லிடை அசைய நடக்கிறாள். குடம் துலக்குகிறாள். உடுத்த சேலையின் சிறு பகுதி உடல் மறைக்க, மற்றுள்ள பகுதியை நனைத்துத் துவைக்கிறாள். துவைத்த பகுதியால் உடல் மறைத்து, மற்றப் பகுதியைத் துவைக்கிறாள். நீராடுகிறாள் - ஆடலில் தோன்றும் இந்த நிகழ்ச்சியை ஆதிமந்தி விரும்ப வில்லை. நீராடும் பெண்ணாக நடிப்பவன் காலில் கழல் அணிந் திருக்கவில்லை. அந்தக் கால் பொன்னொளி தழுவியிருக்கவில்லை. வேறொரு நடிகன் வெளிவர மாட்டானோ? - இது ஆதிமந்தி யின் அவா. கூட்டிசை முழங்கி அறுதி அடைகிறது. பாடலும், பின்னிசையும் தோன்றுகின்றன. மன்னன் ஒருவன் தேர் செலுத்தி வருகிறான். அவன் காலில் மறக்கழல் ஒளி வீசுகிறது. ஆதிமந்தி உள்ளம், அவன், அவன் அந்த ஆணழகன் என்று துடிக்கிறது. காதல், சூறை! அதில் அவள் துரும்பு. காதல், அனல்! அதில் அவள் புழு! அவள் உள்ளத்தில் ஏற்பட்ட பரபரப்புக்கு ஒத்த வகையில், ஓர் எண்ணம் தோன்றுகிறது. அவ்வெண்ணத்தைச் செயற்படுத்தத் தயங்கவில்லை: எனக்கு மயக்கம்! என்று கூச்சலிடுகிறாள். தன் தோழியிடம், தலையும் வலிக்கிறது என்று கூறித் திண்ணையில் சாய்கிறாள். அனைவர் பார்வையும் ஆதிமந்தியைச் சூழ்கிறது. ஆடல் நிறுத்தப்படுகிறது. அனைவரும் ஆதிமந்தியைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். நடிப்பு உடையுடன், சேரன் அவளை அணுகி, அவளின் அழகைக் கேட்பாரின்றி அள்ளி அருந்திக் கொண்டிருக்கிறான். ஆதிமந்தி பேசத் தொடங்குகிறாள் - அதோ, அந்த மாமரத்தின் தளிர்களையெல்லாம் பறிக்க வேண்டும். குன்றத்தோளார் உள்ளிட்ட பத்துப் பேரும் இதை விரைவிற் செய்க. தோழியே! விரைவாகப் போ, அரண்மனை மருத்துவரிடம். மயக்கமும் தலைவலியும் என்று கூறி மருந்து பெற்று வா! எதிரில் நிற்கும் சேரன் தவிர, மற்றவர் அனைவரும் போய் விடுகிறார்கள். ஆதிமந்தியின் எதிரில் நிற்கும் ஆட்டனத்தி, நான் என்ன செய்யவேண்டும் இளவரசியாரே? என்று அஞ்சிய குரலில் கேட்கிறான். அவளின் கண்ணில் திரளும் ஒளியையும் கடையுதட்டின் தாழ்திறக்கும் புன்சிரிப்பையும் தன் கேள்விக்கு விடையாகப் பெறுகிறான். ஆயினும், விடையின் பொருள் அவனுக்கு நன்றாய் விளங்கவில்லை. ஆதிமந்தி : நீலந் துவைக்கும் தொழிலாளியாய் நடித்தவர் நீர்தாமோ? சேரன் : ஆம், அம்மா! ஆதிமந்தி : அன்று கழலணிந்த காலுடன் காணப்பட்டன நீர்தாமோ? சேரன் : விழித்தான்; அஞ்சினான். தன் காலை மற்றொரு முறை நோக்குகிறான். ஆம், அம்மே! அது எனக்குக் கிடைத்த பரிசிற் பொருள்களில் ஒன்று. ஆதிமந்தி : நீவிர் எங்கிருப்பது? சேரன் : எல்லைப்புறம். ஆதிமந்தி : எல்லைப்புறத்து ஆளா? உன்னை ஓர் அரசன் என்று நினைக்கிறேன். ஆட்டன் : எந்த நாட்டுக்கு? ஆதிமந்தி : ஏதோ ஒரு நாட்டுக்கு! ஆட்டன் : எதைக் கொண்டு சொல்லுகிறீர்கள்? ஆதிமந்தி : நடை, உடை தோற்றம், குரல் ... ... ஆட்டன் : இவை அரசர்க்கு வேறு, ஆண்டிக்கு வேறா? ஆதிமந்தி : உம்! இல்லையா பின்னை? ஆட்டன் : நடிப்புத்திறன் என்பதொன்று உண்டு நம்புகிறீர்களா! ஆதிமந்தி : ஆம். ஓகோ! ஆம், நடிப்புத் திறத்தால் ஆண்டியும் அரசனாகத் தோற்றமளிக்க முடியும் ... ... ஆயினும் ... ... ஆயினும், பிறப்பிலேயே நீ ஓர் - நீங்கள் ஓர் அரசரென்று - அரசரென்று எண்ணுகிறது என் உள்ளம்! ஆட்டன் : வேடிக்கையான உள்ளம்! எவனும் ஆண்டியாகவே பிறப்பதில்லை! அரசனாகவும் பிறப்பதில்லை. ஆதிமந்தி : உமக்கு இது எப்படித் தெரியும்? ஆட்டன் : என் பகுத்தறிவால்! ஆதிமந்தி : என் தந்தை எப்படி? ஆட்டன் : தந்தையின் தந்தை தேடிவைத்த அரச நிலையை, படைத் துணையை உன் - உம் தந்தை அடைந்தார். ஆதிமந்தி : தந்தையின் தந்தை சொத்து. சரி; அவர் தந்தை...? அரசனாகவே பிறந்தார் இல்லையா! ஆட்டன் : இல்லை. மாந்தரில் ஒருவராகவே பிறந்தார், தம் தோள் வலிமையால் அரசரானார், ஆதிமந்தி : மக்கட் பிறப்பில் உயர்வு தாழ்வு கிடையாது. இல்லையா? ஆட்டன் : இருக்க முடியாது. தன்னிலையிழந்த ஆதிமந்தியின் உள்ளம், தன் உண்மைத் தன்மையைக் கக்கிவிட்டது. ஆதிமந்தி : அவள் கூறினாள் வாய் தவறி: அப்படியா? என் அன்பு தகாத இடத்தில் சென்றுவிடவில்லை. பதைபதைப்புடனும், தடுக்க முடியாத அவாவுடனும், அவள் அவனைப் பார்த்து மேலும் கூறுகிறாள்: ஆகையால் நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். இன்றிரவு இத்தோட்டத்துக் கதவைத் திறந்து வைக்கிறேன். நீங்கள் மட்டும் தனியாக வரவேண்டும். அவர்கள் வருவதற்குள் உறுதி கூறிவிடுங்கள்! என்ன? ஆட்டன் : உறுதி! ஆதிமந்தி : நான் தோட்டத்து வாயிற்படியிலேயே அச்சடித்த பாவை போல் அசையாது நின்றிருப்பேன். நீங்கள் வரும் வரைக்கும், நீங்கள் வரும் திசையை நோக்கியபடியே இருக்கும் என் கண்கள், சிமிழ்க்காமல்! ஆட்டன் : உறுதி! அவர்கள் வருகிறார்கள். ஆதிமந்தி : எனக்கு மகிழ்ச்சி. மறந்துவிடாதீர்கள். ஆட்டன் : இல்லை; அவர்கள் வருகிறார்கள். ஆதிமந்தி : ஆமாம்; ஆமாம் வராவிட்டால் என் உயிர் இருப்பது உறுதியில்லை உம்; உம். ஆட்டனத்தி சற்றே விலகி நிற்கிறான். ஆதிமந்தி ஒன்றும் அறியாதவள் போல் மேல்நோக்கியிருக்கிறாள். குன்றத் தோளான் உள்ளிட்ட அனைவரும் வருகிறார்கள். குன்றத் தோளான்: துளிர் பறித்துப் போட்டாயிற்று. ஆதிமந்தி : ஓகோ, மிக்க நன்றி! நீங்கள் அனைவரும் போகலாம். வேண்டும்போது அழைக்கிறேன். அனைவரும் போகிறார்கள் ஆட்டனத்தியும் போகிறான், ஆதிமந்தியைக் காதற் கண்ணால் பார்த்தபடி. காட்சி - 18 ஆதிமந்தி தன் கட்டிலில் படுத்திருக்கிறாள். தோழி பால் கொண்டு வந்து வைக்கிறாள். ஆதிமந்தி : இனி ஒன்றும் வேண்டாம் இனி என் படுக்கையறையை நோக்கி யாருமே வரவேண்டாம். தூக்கம் எனக்கு! தோழி : பழம் கொண்டு வந்து விடுகிறேன். ஓடிப் பழங் கொண்டுவந்து வைக்கிறாள். ஆதிமந்தி : அதோடு நிறுத்து! இனி ஒன்றும் வேண்டாம். தூக்கம் கண்ணிமையைச் சுழற்றுகிறது. தோழி : சர்க்கரை கொண்டு வந்து விடுகிறேன். ஓடி மீளுகிறாள். ஆதிமந்தி இனி ஒன்றும் தேவையில்லை. பாதி இரவா யிற்று, நான் சாப்பிட்டு முடிய என் நினைவே தூக்க மயக்கத்தில் கரைகிறது. போ என்றால் போக மாட்டேன் என்கிறாய். தோழி : ஏன் என்னை இன்றைக்கு இப்படி வெருட்டுகிறாய்? உனக்கு இன்று என்ன வந்தது? ஆதிமந்தி : ஒன்றும் வரவில்லை. எனக்கு வாழ்வு வந்து விடவில்லை என்றேன். அவ்வளவு தான். அதுபற்றி நீ கேட்கத் தேவை யில்லை. நான் தனிமையை விரும்புவதில் வியப் படையத் தக்கது எதுவுமில்லை; சொல்லிவிட்டேன். தோழி : கோடையில் பெய்யும் முத்துமழை போல என்ன இப்படி - இவ்வளவு பேசுகிறாய்? நான் உன் அறைக்கு வரமாட்டேன், நீ செத்தாலும்; நான் சாவதாயிருந்தாலும். தோழி அறைக் கதவை ஒருக்கணித்துவிட்டு வெளிச் செல்லுகிறாள். தோழி சென்றாள், கால் நாழிகை சென்றது. அந்தக் கால் நாழிகை ஆதிமந்திக்குப் பன்னூறு நாழிகையாய்த் தோன்றியிருக்கலாம். அதற்குள் அவள், நானூறு தடவை சேரன் வருகிறானா என்று தோட்டத்து வாயில் வழிச் சென்று திரும்புகிறாள். இடையில் ஆதிமந்திக்கு ஓர் அச்சம், தோழி தன் அறைக்கு வந்து விடுவாளோ என்று நினைத்து! ஆதிமந்தி, தன் அறையை விட்டு நீங்கித் தோட்டத்து வாயிலில் நின்று சேரனின் வருகைமேல் விழி செலுத்த லானாள். அதே நேரத்தில் தோழி, அவளை அறையில் வந்து பார்த்து - இல்லாததால் தோட்டத்து வாயிலில் வந்து பார்க்கிறாள். ஆதிமந்தி : ஆர்? தோழி : இதுதான் தூக்கமோ? ஆதிமந்தி : தூங்கிக் கொண்டு தான் இருந்தேன். பலகணி வழியாகத் தென்றற் காற்று, பூவிதழ் ஒன்றைத் தூக்கி வந்து, என் மார்பின் மேல் போட்டது. பூவிதழில் ஒரு பொன்வண்டு. அது நன்றாக எரியாத விளக்கொளியில் மாணிக்கம் போல் மின்னியது. அது எனக்கு வேண்டும். அது இவ்வழியாகப் பறந்து போயிற்று. உனக்கென்ன? நீ போ, தூங்கு! தோழி ஆதிமந்தியின் அதட்டலுக்கு அஞ்சிப் போய் விடுகிறாள். தோழி தன் அறைக்கு வரும் உட்புறக் கதவை இழுத்துப் பூட்டுகிறாள் ஆதிமந்தி. ஆதிமந்தி கட்டிலில் படுப்பாள். அதிக நேரம் ஆய்விட்ட தாகக் கருதி எழுந்தோடிச் சேரன் வரும் வழி பார்ப்பாள். மீண்டும் கட்டில். மறுபடியும் வரும் வழி. எப்படியும் வருவான் என்று நினைப்பாள். அவன் ஆடற் காலின் அழகு நினைத்து அவளும் ஆடுவாள், தறுகண் மீது வளைந்த புருவம் நினைப்பாள். அவன் மலைத் தோள் நினைப்பாள், தனிமையாகத் - தன் கட்டிலண்டை யில்... நள்ளிரவில் அவனைக் காணப்போகும் பேறு நினைத்துத் துள்ளி எழுவாள். வராதது பற்றி மனம் இரங்குவாள். கலுக்கென்று ஓர் ஒலி கேட்கிறாள். அவன் தூக்கி வைத்த காலின் கழல் ஒலி என்று ஓடுகிறாள். ஆம் அவன் தான், எதிர் கொண்டாள். நான் தான் என்றாள் அவனும் நான் தான் என்றான். கட்டிலண்டை வந்து சேர்ந்தார்கள். உட்காரலாம் என்று அன்புடன் கூறினாள். சேரன் : செப்புகிறான் நம் உள்ளத்தை ஒத்திட்டுப் பார்க்க வேண்டாமா? ஆதிமந்தி : உங்களையே அடைந்துவிட்டது என் உள்ளம், நீங்கள் யாராயிருந்தாலும்! சேரன் : என் நெஞ்சம் உங்களையே நத்திவிட்டது. என்னை நீவிர் பிடர்பிடித்துத் தள்ளினாலும் விலகேன். அவள் கைகள் ஏந்த, ஆட்டனத்தியின் இருகைகளும் அவற்றைப் பற்றுகின்றன. ஆதிமந்தி : நீங்கள் யார் என்பதை நான் அறிய வேண்டாம். உங்கள் அழகு என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது. எதுவும் இனி நம்மைப் பிரிக்க முடியாது, நம் இரண்டுள்ளமும் ஒன்று பட்டதால்! எனக்கு உங்களை விட எதுவும் பெரிதில்லை, நாம் இரண்டுடல் ஓருயிர் ஆய்விட்டதால். சேரன் : ஆதிமந்தி! நம் உறவை உறுதி செய்தன ஒத்த இளமையும், ஒத்த அன்பும், ஒத்த அழகும்! ஆயினும், நம்மைப் பிரிக்கக் காத்திருப்பது ஒன்று உண்டு. ஆதிமந்தி : நம் பெற்றோரா? சேரன் : இல்லை. ஆதிமந்தி : பகைவரா? சேரன் : அதுவுமில்லை. ஆதிமந்தி : ஏன் உங்கள் பேச்சில் இத்தனை அச்சம்? நம்மைப் பிரிக்க இருப்பது நம் இறுதி - சாக்காடாகத்தான் இருக்க முடியும். சேரன் : நான் யார்? - சொல்ல அஞ்சுகிறேன். ஆயினும் சொல்லு கிறேன் உன்னை நம்புவதால்! ஆதிமந்தி : யார் நீங்கள்? - யாராயிருப்பினும் என் உயிர் நீங்கள்! சேரன் : உன்னை நீ நம்புகிறாயா? ஆதிமந்தி : சோழன் மகள் நான். சேரன் : இருந்தாலும்? ஆதிமந்தி : அஞ்சுகிறீர்கள். சேரன் : அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அல்லவா? ஆதிமந்தி : அஞ்சவேண்டாமே. என்னைக் கைவிட மாட்டீர்களே? சேரன் : உயிருள்ளவரைக்கும் இல்லை! ஆதிமந்தி : அப்படியானால் நீங்கள் உயிரோடிருப்பதில் ஐயப்பாடு உண்டோ? சேரன் : இல்லை ஆதிமந்தி. அதற்கல்ல. ஆதிமந்தி : பின் எதற்கு? என்னைக் கொலை செய்வது உங்கள் நோக்கமா? சேரன் : அதைவிட கொடிய நோக்கமுடையவன். ஆதிமந்தி : என்ன? அந்நோக்கம்? ... ... இருப்பினும் அது நம்மைப் பிரிக்காது. சேரன் : நான் சேரன் ஆட்டனத்தி! ஆதிமந்தி : ஓ! (வியப்பு) சேர மன்னரா! (சிரிப்பு). எவ்வளவு கசப்புத் தெரியுமா கற்கண்டு போல! சேரன் : அப்படியா? ஆதிமந்தி : வேறென்ன? பகை என்றா எண்ணுகிறார்கள்? இன்றுதான் உறவாகிவிட்டீர்களே? என் தந்தை எதிர்ப்பாரென்றா எண்ணுகிறீர்கள்? நீங்கள் தாம் என் உயிராகி விட்டீர் களே? அல்லது தாத்தா வருந்துவார் என்றா எண்ணு கிறீர்கள்? அவர்கள்தாம் மகிழ்ச்சியடைவார்களே! சேரன் : உன் மனப்பாங்கு அப்படி. அவர்களையும் அப்படி நினைக்கிறாய். ஆதிமந்தி : இல்லையானால், உங்களை அப்படியே, இரண்டு துண்டாய் வெட்டி விடுவார்களோ, என் தந்தையும் தாத்தாவும் கூடிக் கொண்டு? சேரன் : ஏன் இராது? ஆதிமந்தி : வெட்டும்போது, நான் பட்டுப்போன மரம் போலப் பார்த்துக் கொண்டே நிற்பேனா? சேரன் : என்ன செய்வாய்? என்ன செய்ய முடியும்? ஆதிமந்தி : நடக்கப்போவதைக் கேளுங்கள். விடிந்ததும் தாத்தா வருவார். வந்திருப்பவர் சேரமன்னர் ... ... சேரன் : அப்படியா? சேரன் தன் இடையிலிருந்து வாளை உருவுவது போல் காட்டுகிறான். அவன் திடுக்கிட்டு விலகி நிற்கிறாள். சேரன் : ஏன் இப்படி அஞ்சுகிறாய்? அட ! நானே இப்படிச் சீறினேன் என்றா? அப்படி உன் தாத்தா எரிந்து விழுவார். என்றேன். ஆதிமந்தி : ஓகோ உங்கள் ஆடல் திறமையும் அல்லலை விளைத்து விட்டது. வந்திருப்பவர் சேரமன்னர் என்று நான் சொன்னால், அதற்கு என் தாத்தா அப்படியா என்று வாளையா உருவுவார்? உருவட்டுமே! வந்து உங்களை வெட்டுவதற்குள், சேரருக்கு என்னை ஒப்படைத்து விட்டேன் என்று சொல்லிவிட மாட்டேனா! உருவிய வாளைப் பழையபடி உறையிற் போட்டுக்கொள்ள மாட்டாரா! சேரன் : அப்படித் திடீரென்று சொல்லக்கூடாது ஆதிமந்தி. நான் தான் ஆதிமந்தியும், உன் தாத்தா இரும்பிடர்த் தலையாரும் என்று வைத்துக்கொள். (சேரன், ஆதிமந்தி இரும்பிடர்த்தலையார் இருவரும் பேசுவது போல் நடிப்புடன் பேசுகிறான்.) தாத்தா! ஏனம்மா! அந்த ஆட்டக்காரர்கள் சேரநாட்டில்தான் ஆடக் கற்றுக் கொண்டார்களாம். ஓகோ! நானும் அங்கே போய் ஆடக் கற்றுக் கொள்ளவேண்டும் தாத்தா. கற்றுக் கொள் அவர்களிடம் இங்கேயே. ஆற்று நீரை நேரே அள்ளிக் குடிப்பதால் வேண்டிய மட்டும் கிடைக்கும், பிறர் அள்ளி வந்தால் இடையில் ஒழுகிவிடும். சேரன் நாடு பகை நாடல்லவா? ஆம் தாத்தா, அவர் நம்மைப் பகைவர் என்று நினைக்காமல் இருக்க வேண்டும். உறவென்றா நினைப்பார்கள் நம்மை? நீங்கள் சேரரைப் பகை என்று எண்ணவில்லையே? இல்லை. என் தந்தை? நினைக்கவில்லை. சேரரும் நம்மேல் பகைகொள்ளவில்லை என்று தெரிய வேண்டும் இல்லையா? நமக்கு எப்படித் தெரியும்? தெரிந்தால்? நாம் நட்புக்கொள்ள அட்டியில்லை. அவருக்கு மணமாகவில்லையாம் தாத்தா! ஆம் நீ என்ன எண்ணுகிறாய்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தாத்தா? அம்மா, நான் சேரனைப் பற்றி எதுவும் நினைத்ததே யில்லை. நானும் நினைக்க கூடாதோ? நினைக்க உனக்கு உரிமை உண்டு; ஆனால் அவன் உன்னை நினைக்க வேண்டுமே? நினைப்பதாய்த் தெரிந்தால்? எங்கே தெரிகிறது? தெரிந்தால்? உன் விருப்பம்; அவன் விருப்பம். அட்டி சொல்ல மாட்டீர்களே? எனக்கென்ன அட்டி? உறுதியாகவா? உறுதியாக. அப்பாவுக்கு வருத்தமாயிருக்குமோ? அஃதெப்படி இருக்கும்? பகை என்பாரே! உறவாகி விடுகிறானே! ஒருகால், எரிந்து வீழ்ந்தால்? தணித்து விடுகிறேன். உறுதியாகவா? உறுதி அம்மா! அம்மா ஒப்புவார்களா? நான் சொல்லிக் கொள்ளுகிறேன். ஏதாகிலும் உன்பேச்சில் உண்மை இருக்கிறதா ஆதிமந்தி? இனி அவர் நம் பகைவர் அல்லர். எப்படிச் சொல்லுகிறாய்? சொல்லி அனுப்பினார். யாரிடம் ? இங்கு வந்தவரிடம், தாத்தா! எப்படி நம்புவது அம்மா? எழுதி அனுப்பியிருக்கிறாரே தாத்தா! உனக்கா? உங்கட்கு. எங்கே ஓலை? என் சொல்லில் நம்பிக்கை இல்லையா உங்கட்கு? பெரிய செய்தி அம்மா. உண்மை தாத்தா. விளையாடாதே! என் வாழ்வின் தலையான கட்டம் தாத்தா. ஓலை எங்கே? என்ன நடந்தது? ஓலை காட்டினாலும் நம்ப மாட்டீர்கள், ஆம். கடினந்தான். நேரில் சொன்னால்? சேரனா அம்மா? ஆம். என்ன புதுமை! இங்கு வந்தா? உம். வருவானா? வராமல் என்ன தாத்தா? யாரை நம்பி? என்னை வியப்பு! அடைக்கலம் தருவீரா? தமிழன் கடமையல்லவா? - இப்படி மெல்ல மெல்லச் சொல்ல வேண்டும். ஆதிமந்தி : ஆகட்டும், அப்படித்தான் ஆகட்டும். நலம் செய்து கொள்ளுங்கள். நாழிகை ஆகிறது. சேரன் தன் மேலுடையைக் களைந்து தர, ஆதிமந்தி அதை வாங்கி ஒருபுறம் மாட்டுகிறாள். இடையில் கட்டியிருந்த வாளை அவிழ்த்துத் தர, அதை வாங்கி ஒருபுறம் வைக்கிறாள். அவன் மார்பிலும் தோளிலும் சந்தனம் பூசி மகிழ்கிறாள். மாலை சூட்டுகிறாள். அவன் அவளின் கைகளைப் பற்றுகிறான். அதே நேரம் அவர்கள் இருந்த அறைக்கதவு தானே மூடிக்கொள்ளுகிறது. ஆதிமந்தியும் சேரனும் படுத்திருக்கும் அறையின் வெளிப் புறத்தில் - அந்த இரவில், தோழியை நோக்கி இரும்பிடர்த் தலையார் சுட்டுவிரலைத் தம் வாய் சேர உயர்த்தி, கூவாதே என்ற கருத்துத் தோன்றக் காட்டி, மெதுவாக அடியூன்றிச் செல்லுகிறார். தோழியும் அவ்வாறே இரும்பிடர்த் தலையாரைப் பின்பற்றிச் செல்லுகிறாள். காட்சி - 19 இரும்பிடர்த்தலையாரின் தனியறை வந்து சேருகிறார்கள், இரும்பிடர்த் தலையாரும் தோழியும். இரும்பிடர்த்தலையார்: திடுக்கிடத்தக்க நிகழ்ச்சி! ஆயினும் அறிஞர்கள் ஆதரிக்கத்தக்க செய்தி. சோழன் ஒரு சுடு மூஞ்சி. சொல்வதைப் பொறுமையோடு கேட்கும் பண்பு கூட அவனிடம் இல்லை. பகைவன் உறவானான்! இச் சோழநாட்டுக்கு மட்டுமல்ல; மூவல்லரசுகட்கும் எதிர் பாராது கிடைத்த நற்செய்தி. உலகின் அமைதியை உண்டு பண்ணி விட்டாள் அருமைப் பேர்த்தி ஆதிமந்தி. அவள் அழகு. அவள் பண்பாடு அந்த மறத்தமிழனை, ஆம்; அந்த வெல்லுதற்கரிய சேரன் ஆட்டனத்தியை வழிப் படுத்திவிட்டன. சேரன் என்றே, தோன்றுகிறது. நம் ஆதிமந்தியிடம் இந்த நள்ளிரவில் தனியறையில் பேசியிருக்கிறான். அவளும் அவன்மேற் காதல்கொண்டு பேசுகிறாள் என்றல்லவா என்னிடம் ஓடிவந்து கூறினாய்? இதை நீ கூறியபோது உதடு நடுங்கிற்று. ஆயினும் தோழிப்பெண்ணே, உன் உடல் பூரிப்பால் செயலற்றது. இதை நீயும் அறிந்திருப் பாய். குழந்தாய்! சோழனை நான் ஒத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். என் ஆயுள் முடிவில் இந்நாட்டுக்குச் செய்யத் தக்க பெருந்தொண்டு ஒன்று இருக்குமானால், அது சேரன் உறவைச் சோழன் ஒத்துக் கொள்ளச் செய்வதுதான். ஐயோ, அவன் ஒத்துக் கொண்டாலும் அந்தச் சோழன் மனைவி ஒத்துக்கொள்ள மாட்டாள். தன் வழியில் ஆதிமந்தியை மணம் செய்து கொடுக்கவே அவள் எண்ணியிருக்கிறாள். தோழி : தாத்தா! தாங்கள் நினைத்தால் இது ஆகாததா? எவ்வாறு அவரவர்கட்குச் சொல்லவேண்டும் என்பது தங்கட்குத் தெரியும். நாழிகையாகவில்லையா? சிறிது நேரம் கண்ணுறக்கம் கொள்ளுங்கள். இரும்பிடர் : எப்போதும், யாரிடமும், சேரன் ஆதிமந்தி உறவையோ, சேரன் இங்கிருப்பதையோ வெளியிடாதே! இதை யெல்லாம் மறந்து தூங்கு. தோழி : ஆம் தாத்தா. இதையே நினைத்துக்கொண்டு தூங்கினால், தூக்கத்தில் வாய்பிதற்ற நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். இரும்பிடர் : நீ போ! (போகிறாள்.) காட்சி - 20 காலை மலர்ந்தது. இரும்பிடர்த்தலையார் தன் தனியறையில் வந்து உட்காருகிறார். அவர் யாரையோ எதிர்பார்த்து, வெளி வாயிலுக்கும் தன் அறைக்குமாக உலவுகிறார். அவர் முகம் எண்ணக் கடலின் அடியாழத்தில் வேலை செய்கிறது. தோழி வருகிறாள். இரும்பிடர் : என்ன நடந்தது? சேரன் தன் இருப்பிடம் சென்று விட்டானோ? யாரும் பார்த்து விடவில்லையே? தோழி : இல்லவேயில்லை தாத்தா. அவர் ஓர் ஆட்டக்காரர் போலவே உருமாறி வழவழவென்று வந்தவழியே போய் விட்டார். என்னைக் கூடத் தேடவில்லை ஆதிமந்தி. காலைக் கடன் முடிக்க ஒன்றும் அறியாதவள் போல் மடமடவென்றா சென்று விடுவாள்? - தன் கையை முகவாயில் ஊன்றி வியப்புறுகிறாள். இரும்பிடர் : இரு, சிலம்பொலி! அவள் தான். முத்துக்களை எடுத்துக் கொள்ளுகிறேன், அவள் வாங்கி வரச் சொன்னா ளல்லவா! முத்துக்கள் நிறைந்த சிமிழ் ஒன்றைப் பெட்டி திறந்து எடுத்துத் தம்முன் வைத்துக் கொள்கிறார். (ஆதிமந்தி வருகிறாள்.) ஆதிமந்தி : தாத்தா! இரும்பிடர் : வா அம்மா, இதோ முத்துக்கள். ஆதிமந்தி : நீ ஏது காலையில் இங்கே? தோழி : என்னிடம் ஏன் பேசுகிறாய்? ஆதிமந்தி : சரி; சரி அடக்கு. தோழி : அடக்கமுடியாதே. அதெப்படி அடக்குவது? வழக்கம் போலத்தானே பணிவிடைக்கு வந்தேன் உன் அறைக்கு நீ என்னவோ புதிதாகச் சிடுசிடு என்று விழுந்தாயே. ஆதிமந்தி : அதெல்லாம் கிடக்கட்டும். தோழி : ஏன் கிடக்கச் சொல்லுகிறாய்? தாத்தாவிடம் முழுதும் சொல்லித்தான் பார்ப்போமே. ஆதிமந்தி : எரிச்சல் ஆகாது கண்ணே. இந்த முத்தைப்பார் நல்ல தாய்ப் பொறுக்கு. இரும்பிடர்த்தலையார் சிரிக்கிறார். தோழி சிரிக்கிறாள். இரும்பிடர் : தோழிப் பெண்ணே, சிற்றுணவு ஏற்பாடு செய். நீ போ. தோழி : முத்தைப் பார்க்கலாமே? இரும்பிடர் : வேண்டாம் போ. ஆதிமந்தி : வேண்டாம் போ. தோழி : தாத்தா சொன்னால் போதுமே. ஆதிமந்தி : நான் சொன்னது தவறுதான் போ. தோழி : அப்போதும் போ என்றுதானே கூறுகிறாய் ஆதிமந்தி : சரி; அதுவும் சொல்லவில்லை. (தோழி போகிறாள்) ஆதிமந்தி, தோழி போய்விட்டாளா என்று நோக்குகிறாள். ஆதிமந்தி : அந்த ஆட்டக்காரைக் கேட்டேன் தாத்தா. அவர்கள் நம் நாட்டு மக்கள். நீங்கள் ஆடுவதற்கு எங்கே கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டேன். சேர நாட்டில் என்றார்கள். இரும்பிடர் : அப்படியா! ஆதிமந்தி : நான் ஆடல் கற்றுக் கொள்ளவேண்டும் தாத்தா! இரும்பிடர் : அந்த ஆட்டக்காரர்களிடம் கற்றுக் கொள்வதுதானே? ஆதிமந்தி : ஆற்றில் நேராக அள்ளிக் குடிப்பதற்கும், ஒழுகவிட்ட படி ஒருவர் அள்ளிவர அதைக் குடிப்பதற்கும் வேறு பாடில்லையா தாத்தா! இரும்பிடர் : சேரநாட்டிலே சென்று கற்றுக்கொள்வது நல்ல தென்கி றாயா? அது கிடக்கட்டும். குழந்தாய், உன்னை அந்தச் சேரன் ஆட்டனத்திக்கே வாழ்க்கைப்படும்படி செய்ய எண்ணுகிறேன். ஆதிமந்தி : நீங்களா அப்படி நினைப்பீர்கள், நான்தான் தெரியாத் தனமாக நினைத்தாலும்! இரும்பிடர் : எண்ணமிருந்தால் சொல்லமாட்டயா? ஆதிமந்தி : சொன்னால் முடிப்பீர்கள்? இரும்பிடர் : முடிப்பேன். ஆதிமந்தி : பகையாயிற்றே. உறவாகி விடுகிறாரே என்று தாத்தா சொல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே, தோழி உள்ளே நுழைகிறாள். இரும்பிடர் : அது தான் உறவாகிவிடுகிறாரே, சேரர்! தோழி : உறவாகிவிட்டாரே. ஆதிமந்தி : பாருங்கள் தாத்தா அவளை! இதெல்லாம் கேலியா? நீங்கள் ஏதோ கேட்கிறீர்கள்; நான் பதில் சொல்லுகிறேன். அதைக் குளறுபடி செய்கிறாள். தோழி : ஐயோ! தாத்தா கேட்கிறார். இவர்கள் பதில் சொல்லு கிறார்கள். தாத்தாதான் இரவு பாடம் வரப்படுத்தினார். ஆதிமந்தி : நீ போ அம்மா, பசிக்கிறது. உணவு பரிமாறு, நீ போ, உன்னைக் கேட்டுக் கொள்ளுகிறேன். போ அம்மா. இரும்பிடர்த்தலையர் சிரிக்கிறார். தோழி சிரிக்கிறாள். இரும்பிடர் : நீ போ அம்மா. தோழி : சுருக்கமாக முடி ஆதிமந்தி! (போகிறாள்.) ஆதிமந்தி : நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். அப்பா, அம்மா அவன் பகைவன் என்பார்களே. இரும்பிடர் : நான் தான் சரிப்படுத்தி ஆகவேண்டும். அதற்கு ஒருவழி சொல்லுகிறேன். தோழி வந்துகொண்டிருக்கிறாள். ஆதிமந்தி : என்ன வழி தாத்தா? இரும்பிடர் : இதே நேரம் ... ... முதலில் சேரரைத் தம் நாட்டுக்கு அனுப்பிவிடு. ஆதிமந்தி : உம்... என்ன? - அவர் இங்கேயா ... தோழி : ஊஹும். எங்களுக்குத் தெரியுமா? நலம் செய்தாய். கதவைச் சாத்தினோம் நானும் தாத்தாவும். ஆதிமந்தி நாணித் தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு குனிந்து கொள்ளுகிறாள். இரும்பிடர் : இவ்வறை முழுவதும் இருள்சூழ்ந்து கொண்டதம்மா, ஏன் உன் முகவிளக்கை முன்கையால் மூடிக் கொள்ளு கின்றாய்? நீ நாணவேண்டியதில்லை. நல்லது செய்தாய். தோழி : கெண்டை விழியை உன் நண்டுக் கையால் நலிவு செய்யாதே! இப்படிப் பார்! கையை விலக்க முயல்கிறாள் தோழி, முகத்தை மூடிய கையை ஆதிமந்தி விலக்கவுமில்லை. தோழி : தாத்தா! ஆகவேண்டியதை நீங்கள் பார்க்க வேண்டியதுதான், இரும்பிடர் : நான் போகிறேன். எழுந்திருக்கிறார். ஆதிமந்தி ஓடி இரும்பிடர்த் தலையாரின் கால்களைத் தன் இரு கைகளாலும் பற்றி அழுகிறாள். ஆதிமந்தி : (முகம் நிமிர்த்தி) தாத்தா! என்னைக் காப்பாற்றுங்கள். அவருக்கு எந்தத் தீமையும் நேரா வகை செய்யுங்கள். இரும்பிடர் : அவர் தம் ஊருக்குப் போயிருக்கட்டும். உன் பெற்றோரை வழிப்படுத்தியபின் அழைக்கலாம். ஆதிமந்தி : நானும் அவருடன் போகிறேன்! இரும்பிடர் : வேண்டாம். ஆதிமந்தி : அவரைப் பிரிந்திருக்க முடியாது தாத்தா. இரும்பிடர் : இருபுறமும் இடி! - குழந்தாய், சேரரை உன்னுடன் - அறையிலேயே வைத்திரு. வெளிக்குக் காட்டாதே! தோழி : நான் அவரை அழைத்து வந்துவிடுகிறேன். உன் அறைக்கு. ஆதிமந்தி : நல்லது தாத்தா! உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு ஒன்று நேர்ந்தால் என்னுயிர் நில்லாது. இரும்பிடர் : தெரியும் அம்மா! தெரியும் அம்மா! அஞ்சாதே! இரு போய்வருகிறேன். (போதல்) காட்சி - 21 சோழன் தன் மனைவியுடன் பேசியிருக்கிறான். பணியாளன் தந்த ஓலையைத் தோழி ஒருத்தி பெற்றுச் சோழன் அறையிற் சேர்க்கிறாள். சோழன் படிக்கிறான். சோழன் : துணைவியே, மாமா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். தனியே வருகிறார்களாம். தனியான செய்தி பற்றிப் பசவேண்டுமாம். மன்னி : எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கும்? ஆதிமந்தியின் திருமணம் பற்றியதாக இருக்கும் அத்தான். சோழன் : இருக்கட்டும். எதிர்கொண்டழைக்க விரைவுபடு! நான் தெருவினின்று எதிர்கொள்ளுகிறேன். நீ அரண்மனை யின் மகளிர் இல்லத்தின் வெளியினின்று பணிந்து வரவேற்க வேண்டும். இரும்பிடர்த் தலையார் வரவேற்கப்படுகிறார். நலம் வினாவியபின் சோழன். சோழ மன்னி, இரும்பிடர்த் தலையார் மூவரும் பேசுகிறார்கள். இரும்பிடர் : நான் இங்கு ஒரு குறிப்பிடத்தக்க செய்தி பற்றிப் பேச வந்தேன். அதற்காகத்தான் வருவதற்கு முன் ஓலை எழுதி யனுப்பினேன். சோழன் : மாமா! நீங்கள் சொல்ல இருப்பது என்ன என்பதை அறிய எனக்கும் இவளுக்கும் (மன்னிக்கும்) ஏற்பட் டிருக்கும் ஆவல் சிறிதன்று. இரும்பிடர் : நான் சொல்லப் போவது உனக்கு இனிக்காது. உன் துணைவிக்கும் கசக்கும். மன்னி : அப்படியா தாத்தா! அதென்ன? இரும்பிடர் : நம் ஆதிமந்தியைச் சேரன் ஆட்டனத்திக்குத் திருமணம் செய்து வைப்போம். சோழன் : என்னைப் பழிவாங்க அவன் படைசேர்க்கிறானே! இரும்பிடர் : அதற்காகத்தான் திருமணத்தை முடித்துவிடவேண்டும். சோழன் : பணிந்து போவதா! இரும்பிடர் : பணிவாகாது இது. மன்னி : என் வழியில் ஆதிமந்தி வாழ்க்கைப்படவேண்டும் தாத்தா! இரும்பிடர் : ஆதிமந்தி வாழ்க்கைப் படுவதற்கு முன் அவளிடம் நீ இதைச் சொல்லியிருக்க வேண்டும். மன்னி : ஆதிமந்தி வாழ்கைப்பட்டு விட்டாளா சேரனுக்கு? இரும்பிடர் : அப்படித்தான் பொருள்! சோழன் : காவிரி ஆற்றைப் போல் பெரு வியப்பு! மாமா... இரும்பிடர் : நிறுத்து! கேட்டதற்கு விடை கூறு. என் கருத்துக்கு, நீங்கள் இருவரும் இதே நொடியில் ஒப்புதல் தரவேண்டும். உன் தலைமுறைக்கு ஒருத்தி ஆதிமந்தி, அவள் உயிர் வாழ்வதா - ஒழிந்து விடுவதா என்பது பற்றிய முடிவைத் தான் இப்போது கேட்கிறேன். சோழன் : மாமா, மாமா! என்ன விளைவு! உங்கள் கருத்துப்போல் ஆகட்டும். இவளையும் கேளுங்கள். இரும்பிடர் : குழந்தாய், மயிரிழையும் அசைவு கூடாது. நிலையான உறுதி கூறிவிடு, மீண்டும் கேட்கிறேன். இதே நொடியில் கூறிவிடு. மன்னி : ஒத்துக் கொண்டேன்; ஒத்துக் கொண்டேன் தாத்தா. இரும்பிடர் : நீங்கள் இருவரும் ஒத்துக் கொள்வதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் பகைவன் என்று நினைக்கும் அந்தச் சேரனை, முதல் முறையாக இந்நாட்டில் காணநேர்கையில், உங்கள் உள்ளத் தின் அமைதி கெடக்கூடும். அவனுக்கு நீங்கள் இன்னல் தேட முனையவும் கூடும். உங்கள் ஒரு மகள், சோழன் தலை முறையாகிய வாழையின் கீழ்க்கன்று ஆதிமந்திக்கும், அவள் உயிரென எண்ணும் சேரன் ஆட்டனத்திக்கும், எப்போதும் எங்கும், நேரிலும் பிறரைக் கொண்டு தீங்கு செய்வதில்லை என்றும், அவர்களின் உரிமையைப் பறிப்பதில்லை என்றும், உறுதி கூறவேண்டும். சோழன் : மாமா! மாமா! உங்கள் பேச்சுக்கு - உங்கள் கருத்துக்கு மாறாக நடப்பதுண்டோ? நானும், இன்று வரை நான் வாழ்ந்த வாழ்வும் - தங்களால்! மறந்து விட்டேனோ? உறுதி கூறுகிறேன் - அன்புள்ள துணைவியே என்னுடன் எழுந்து நில் - எப்போதும் எவரைக் கொண்டும் - நாங்கள் நேராகவும், சேரன் ஆட்டனத்திக்கும், எங்கள் பெண் ஆதி மந்திக்கும் இன்னல் சூழோம். அவர்களின் உரிமையைப் பறிக்க மனத்தாலும் எண்ண மாட்டோம். உறுதி, உறுதி, மன்னி : அவ்வாறே! இரும்பிடர் : அமைதி பெற்றது என் உள்ளம். சோழன் : மகிழ்ச்சி மாமா! நம் பெண்ணும் அவனும் உடலும் உயிரும் ஆன பிறகாவது சேரன், சோழ நாட்டிற்பகை கொள்ளா திருப்பான் என்று எண்ணுகிறேன். இரும்பிடர் : அதற்காகத்தான் திருமணம். மன்னி : மாப்பிள்ளையைப் பார்ப்பது எப்போது? இரும்பிடர் : நாம் மாப்பிள்ளையைப் பார்ப்பது, மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்ப்பது, திருமணம் நடைபெறும் இடத்தை உறுதிசெய்வது முதலிய அனைத்தும், மிக விரைவில் நடைபெறும். தேரைக்கொண்டு வந்து வாயிலில் நிறுத்துக. நாம் மூவரும் என் வீடு நோக்கிச் செல்லவேண்டும். சோழன் : அப்படியா! ஏன் மாமா? இரும்பிடர் : பிறகு சொல்கிறேன். மூவரும் தேரேறிச் செல்லு கிறார்கள். காட்சி - 22 ஆதிமந்தியின் தனியறை அழகு செய்யப்படுகிறது. அறையின் நடுவிடத்தில், சேரனுக்குரிய விற்கொடியும், சோழனுக்குரிய புலிக் கொடியும், பாண்டியனுக்குரிய கயற் கொடியும் நிறுவப்படுகின்றன. முறையே விற்கொடிக்குப் பனை மாலையும், புலிக் கொடிக்கு ஆத்தி மாலையும், கயற் கொடிக்கு வேப்ப மாலையும், அணிவிக்கின்றார்கள். சேரனின் கொல்லி மலையும், சோழனின் நேரிமலையும், பாண்டியனின் பொதிகை மலையும் அழகுற முக்கொடிகளின் கீழும் வரைகின்றார்கள். ஆட்டனத்தி : ஆதிமந்தி, எங்கே நீ புனைந்த முக்கொடி வாழ்த்து? மெல்லப்பாடு. ஆதிமந்தி பாடுகிறாள். ஆட்டனத்தி ஆடுகிறான். வில்லும் புலியும் கயலும் - நனி வெல்க! வெல்க! வெல்க! கொல்லி நேரி பொதிகை - புகழ் கொள்க! கொள்க! கொள்க! வல்லார் சேரர் சோழர் - பாண்டி மன்னர் வாழ்க! வாழ்க! செல்லும் பொருனை காவிரி - வைகை திருவே நல்க! நல்க! முடியுடை வேந்தர் மூவர் - தம் மொய்ம்ப னைத்தும் சேர்க படியினை முழுதும் ஆள்க! - கொடும் பகைமை முழுதும் வீழ்க! நெடிதறம் வெல்க! வெல்க! - நனி நீணில மக்கள் வாழ்க! அடிமையும் மிடிமையும் மறைக! - நல் அன்பும் வாய்மையும் வெல்க! இப்பாட்டின் கடைசியடியாகிய அடிமையும் மிடிமையும் மறைக - நல் அன்பும் வாய்மையும் வெல்க! என்று கூறி, ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் இணைந்து நின்று தம் வலக்கை தூக்கி கண்ணில் மகிழ்ச்சிப்புனல் ஒழுக, அசைவற்று நிற்கிறார்கள். இவைகளை வெளிப்புறம் இருந்து காது கொடுத்திருந்த இரும் பிடர்த் தலையார், சோழன், சோழமன்னி மூவரும் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்செறிய இரும்பிடர்த்தலையார் அறைக்கதவைத் திறக்கிறார். இரும்பிடர்த்தலையாரும், மன்னனும், மன்னியும் கை தூக்கி வாழ்க மணமக்கள் என்று வாழ்த்துகிறார்கள். அவர்களின் உயர்த்திய கையின் கீழ்ச் சேரன் ஆட்டனத்தியும், ஆதிமந்தியும் தலை தாழ்த்தி வணங்கி முகம் நிமிர்த்துகிறார்கள். சோழ மன்னி : (ஆதிமந்தியைத் தழுவிக் கொண்டவளாய் அவள் கூந்தலை நீவியபடி உச்சியில் முத்தமிட்டு) நீ நன்னிலை பெற்றாய். உன் மணவாளனோடு இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி பொங்க, நன்மக்கள் பெற்று நீடூழி வாழவேண்டும். இரும்பிடர் : (ஆட்டனத்தியைத் தழுவிக் கொண்டு) சேர மன்னனே, உன் துணைவி ஆதிமந்தியுடன் நன்று வாழ்க. உங்கள் திருமணம் நீடுழி வாழ்க. சோழ மன்னன் : வாழ்க ஆட்டனத்தி! வாழ்க ஆதிமந்தி! மூன்று நாடும் ஒன்றுபட்டுப் பகைவென்று உலகைக் காக்க! அனைவரும் அறைதாண்டி அப்புறம் நடக்கிறார்கள். Mâkªâ f©zhY« Kf¤jhY«, ‘gh®¤Ô®fsh! அஞ்சினீர்களே என்று கூறி, ஆட்டனத்தியின் கைப்பிடித்து நடக்கிறாள். ஆட்டனத்தி அப்பா அம்மா தாத்தா அனைவரை யும் ஆதிமந்திக்குச் சுட்டிக்காட்டி, காதற் செயல் செய்யாதே என்று மறுத்து நாணுதலோடு நடக்கிறான். சோழன் : சேரரின் அன்னையார் இத் திருமணத்தை ஆதரிப் பார்களா? அல்லது பகைவன் மகளை விரும்பியது பிழை என்று வருந்துவார்களா? ஆட்டனத்தி : அவ்வளவு குள்ள நினைப்புடையவராயிருப்பார் என்று நான் எண்ணவில்லை மாமா. இரும்பிடர் : சோழ மன்னன் சோழ மன்னி ஒப்புக் கொண்டபின், சேர மன்னி ஒப்பத் தடையிராது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆதிமந்தி : நானும் என் துணைவரும் ஒன்றுபட்டபின் பிறர் ஒப்பாமை எம்மை என்னசெய்யமுடியும் அப்பா? இரும்பிடர் : நன்றி கூறினை குழந்தாய், சில நாட்கள் இங்கு வாழ்க்கை நடத்தியிருங்கள். உன் மாமிக்கும் நாட்டாருக்கும் செய்தியனுப்புங்கள். பிறகு ஒரு நாள் அங்குச் சென்று, நல்லாரின் வாழ்த்துப் பெற்று, நன்றே வாழ்ந்திருங்கள். காட்சி - 23 பூங்காவில் தோழிமார் பொன்னூசல் கட்டிப் பூவால் பூங் கொடியால் அழகு செய்து, ஆட்டனத்தி, ஆதிமந்தி இருவர் வரவு பார்க்கிறார்கள். ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் பூங்காவின் உள் நுழைகிறார்கள். ஆதிமந்தி : ஊசல்! ஊசல்! (ஓடுகிறாள்) ஆட்டனத்தி : (துன்புற்று நின்றபடி) என்னைத் தனியே விட்டுச் சென்றாய்! அவள் திரும்பிப் பார்த்து, ஆட்டனத்தியை நோக்கி ஓடி வருகிறாள். ஆதிமந்தி : நீங்களும் என்னுடன் விரைவாக வந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று எண்ணினேன் அத்தான். தங்களைப் பிரிந்து செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மன்னிக்க வேண்டும் அத்தான். ஆட்டனத்தி : என்னைவிட உன் உள்ளத்தைக் கவர்ந்தது எது? அதை நாடிச் செல்ல வேண்டும் நீ. ஆதிமந்தி : உங்களைவிட எனக்குக் கவர்ச்சியுள்ள பொருள் நீங்கள் தாம் அத்தான். பிரிந்தால் மும்முறை அழைத்து உயிர்விடும் அன்றில்! பிரிந்தால் உடனே உயிர் விடுவாள் இவ்வாதிமந்தி! நான் ஏன் வாழ்கின்றேன்? நீங்கள் வாழ்கின்றீர்; ஆதலால் வாழ்கின்றேன். உங்கள் தோளில் எனக்கு இடங்கொடுங்கள் அத்தான். ஆட்டனத்தி : (தன்னிரு கைகளையும் ஏந்துகிறான்) வா தோளில் (தன் தலை சாய்த்தபடி அவள் நடக்க, ஆட்டனத்தி நடக்கிறான்.) ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் ஊசலில் அமர்ந்துகொள்ளத் தோழிகள் அசைக்கிறார்கள். ஆதிமந்தி : ஊசல் முன்னோக்கிச் செல்லுகிறது. மீளுகிறது. இது எதைக் குறிப்பிடுகிறது அத்தான்? ஆட்டனத்தி : அதுவா? ஆடவர் உள்ளம் ஒன்றில் செல்லுகிறது; பழையபடி தன் காதலியிடம் மீளுகிறது. ஆதிமந்தி : சேர நாடு சென்றது தேர். உடனே திரும்பி வந்துவிடும். அதையல்லவா நினைப்பூட்டுகிறது இந்த ஊசல். ஆட்டனத்தி : உனக்கு உன் மாமியைப் பார்ப்பதிலேயே நினைவு. அதனால் ஊசலிலும் தேரையே காணுகிறாய், நீ ஐயுறாதே. தேர் செல்லும். தூதுவர் ஓலை தருவார்கள். சேர நாட்டின் பெரியாரும், அமைச்சரும், புலவரும், என் அன்னையும் புறப்பட்டுவிடுவார்கள். ஆதிமந்தி : அஞ்ச வேண்டியதில்லை என் நெஞ்சு. ஆயினும் அஞ்சுகிறது. ஆட்டனத்தி : எது பற்றி? ஆதிமந்தி : உங்கள் அன்னை, இவள் பகைவன் மகள். ஆகையால் இவளை விடு. வேறு ஒருத்தியை மணந்து கொள் என்று சொல்லவும் கூடுமே! ஆட்டனத்தி : அவள் பகைவன் மகள். அவளை விடு. உன் உயிரை விடு என்றா, பெற்ற அன்னையார் கூறுவார்கள்? உனக்கென்ன வெறியா? என் கண்ணே! என்னிடம் கொஞ்சிக் கிடப்பதை விட்டு, அஞ்சிக் கிடக்கின்றாயே! ஆதிமந்தி : அச்சம் தொலைந்தது. ஆடுவோம் பொன்னூசல். தோழிமார் ஊசல் ஆட்டிக்கொண்டு பாடுகின்றார்கள். பாட்டு சூழல் சரிந்தது பூப்பறந்தது, கோதை கண்டீரோ? - தோழியீர்! அழகு மன்னவன் போர்வை தென்றலில் அலைதல் கண்டீரோ? தழுவும் இருவர் விழியைக் காதல் தழுவல் கண்டீரோ?- தோழியீர்! கழலும் சிலம்பும் மின்னி முழங்க ஆடும் பொன்னூசல்! காட்சி - 24 ஆதிமந்தியும் ஆட்டனத்தியும், அரண்மனையின் ஒருபால் தாழ்வாரத்தில் பூப்பந்தாடியிருக்கிறார்கள். ஆட்டனத்தி : நீ அனுப்பும் பந்து என் கைவரைக்குங்கூட வர வில்லை. இடையில் வீழ்ந்துவிடுகிறது. ஆதிமந்தி : விசையாய் எறிந்தால் தங்கள் மேல் மோதி இன்னல் விளைக்குமென்று என் கை அஞ்சுகிறது. இடையில் தோழிமார் ஐவர் அங்கு ஓடி வருகிறார்கள். கார் குழல் என்னும் தோழி, கையை மேல் தூக்கிய படி கழறுகிறாள் - கார்குழல் : அரசே! உங்கள் அன்னையார் வந்துள்ளார்! சேரநாட்டுப் பெரியார், அமைச்சர், புலவர் வந்துள்ளார்கள். தேர்கள் அரண்மனை வாயிலில் நிறைந்து நிற்கின்றன. உங்கள் அன்னையார் கண்கள் எவரையோ ஆவலோடு காண விழைகின்றன. சோழ மன்னரும் சோழ மன்னியும் எதிர் கொண்டழைக்கிறார்கள். m‹idah® xU brhš brh‹dh®; ‘v‹ kUkfŸ v§nf? இங்கு நீவிர் பந்தாடியிருத்தல் சரியன்று. ஓடிவர வேண்டும். ஆதிமந்தி உன் முகத்தை மாமிக்குக் காட்டு. ஓடிவா. அதோ கேள்; அவர்களின் மகிழ்ச்சிக்குரல்! இனிய முழக்கம்! விடுங்கள் உங்கள் ஆடலை! விரைவில் வருக! ஆதிமந்தியும், ஆட்டனத்தியும் ஓடுகின்றார்கள், இரு கை கொட்டியும் கலகலவென்று சிரித்தும்! சேரநாட்டறிஞர், புலவர், அமைச்சர் சோழனால்வரவேற்கப்படுகிறார்கள். வாழ்த்து மொழிகள் மாற்றி வழங்குகிறார்கள். சோழமன்னி, ஆட்டனத்தியின் அன்னையைக் கும்பிட்டு வரவேற் கிறார்கள். இரும்பிடர்த் தலையார் அவரவர்க்கு இருக்கை காட்டி இருக்க வேண்டுகிறார். ஆட்டனத்தியின் அன்னையார் காலடியில், ஆதிமந்தி யும் ஆட்டனத்தியும் பணிந்து நிற்கிறார்கள். அன்னையார் தன் மருமகளை அள்ளி மார்போடு அணைத்துக் கொள்கிறாள். அன்னை : என் மகனை மணந்தாய்; உலகின் அமைதியை நிலை நாட்டினாய். எனக்கு மருமகளானாய்; உலக ஒற்றுமை யின் திரு மகளானாய், என் செல்வமே! என் உவப்பே! என் அன்பே! நீ வாழ்வாயாக! நின் துணைவன் நீடுவாழ்க! இன்று போல் நீயும் உன்துணைவனும் என்றும் இன்புற்று நன்மக்கள் பெற்றுப் புகழ் பெற்று மூவேந்தும் மூன்று நாடும் ஒன்றேயாக, ஈன்ற தாயின் மக்களே இந்நில மக்களாக, உலகுக் குழைத்து உயர் வாழ்வு பெறுக. காட்சி - 25 சோழ நாட்டின் நகர், சிற்றூர் எங்கும் யானை மேல் வள்ளுவன் முரசறைந்து, அரசரின் வேண்டுகோளை விளக்கி வருகின்றான். நம் சோழமன்னர் மகள் ஆதிமந்தி - சேரன் ஆட்டனத்தி திருமணத்தினை வாழ்த்துவதற்கு நாட்டினர் சுற்றஞ்சூழ வருக. இது சோழமன்னரின் அன்பு வேண்டுகோள் மறுநாள் - அரண்மனைப் பெருமன்றின் நடுவில் ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் பொன்னாடை மணியிழை பூண்டு வீற்றிருக் கிறார்கள். மன்றில், சோழன் அமைச்சர் அறிஞர் புலவர் அமர்ந் திருக்கிறார்கள். பெருமக்கள் நிறைந்து காட்சியளிக்கிறார்கள். சோழமன்னன் : (எழுந்து வணங்கி) அறிஞர்களே! என் மகள் சேரன் ஆட்டனத்தியைக் காதலித்தாள். ஆட்டனத்தி என் மகளைக் காதலித்தான். அதன் பயனாக ஏற்பட்ட அவர்களின் திருமணத்தை வாழ்த்தியருள வேண்டிக் கொள்ளுகிறேன். அனைவரும் மணமக்கள் வாழ்க என்று அன்பு முழக்கம் செய்கிறார்கள். அறிஞரும், புலவரும் தனித்தனியே எழுந்து மணமக்களை வாழ்த்து கிறார்கள். அனைவர்க்கும் அடைக்காய் வழங்குகிறார்கள். இசை முழங்குகிறது. மணமுரசம் ஆர்க்கின்றது. காட்சி - 26 காவிரியாற்றில் அன்னப் படகு மிதக்கின்றது. நான்கு பேர் கறுப்புச் சட்டை பூண்டவராய்ப் படகின் துடுப்பு வலிக்கிறார்கள். படகில் இட்ட விசிப்பலகையில் ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் உடல்சேர அமர்ந்திருக்கிறார்கள். ஆட்டனத்தி : இருகரையில் உள்ள மரங்கள் கொடிகள் செடிகள் தம் மலர்க்கொத்துக்களை அசைத்து நம்மை வழியனுப்பு கின்றன. சிறு பறவைகள் இனிய குரலால் வாழ்த்து கின்றன. உடலுக்கு இன்பம் செய்கின்றது தென்றல். ஆற்றின் நறும் புனல் நம் படகை மெல்லெனச் சுமந்து நடக்கிறது. மணத்தை அள்ளித் தூவும் மாலைப்போது, நாம் அடையும் இன்பத்தைச் சிறப்புறச் செய்கிறது. நீ என்னைத் தழுவியபடி அருகில் இருக்கிறாய். இப்போது, என்மானே, எனக்கில்லாதது ஒன்றுமில்லை. ஆதிமந்தி : நாம் எங்கே போகிறோம்? ஆட்டனத்தி : படகு கிழக்கு நோக்கிச் செல்லுகிறது. அதோ ஆனத்தூர் என்னும் சிற்றூரின் துறை. நாம் இறங்குவோம். அரண் மனையில் நம்மைத் தேடுவார்கள் நம் பெற்றோர். மாலை தன் வலியிழந்து இராவுடன் கலக்கிறது துறையில் நிறுத்தடா படகை. படகு நிற்கிறது. துறையில் படகுவிட்டு இறங்கும் இடம் சேறு மிகுந்திருக்கிறது ஆதிமந்தியைப் படகின் நடுவிலே விட்டு, ஆட்டனத்தி இறங்குகிறான். ஆட்டனத்தியின் குரல் கேட்கிறது ஆதிமந்தியின் காதில் - கறுப்புடையுடலின்மேல் கால்வைத்துக் கரையேறு. ஆட்டனத்தி படகு செலுத்தவோனின் கறுப்புடையை வாங்கிப் போர்த்துப் படகின் அடிப்புறத்தில் குனிந்து கொடுக்கிறான். ஆதிமந்தி அவன் முதுகில் அடி யூன்றிக் கரையேறுகிறாள். ஆதிமந்தி : (கரையில் நின்று தன் துணைவனைக் காணாது திகைக்கிறாள்) அத்தான்! பதில் இல்லை, ஆயினும், கரையில் நிற்கும் ஒருபல்லக் கினின்று ஒரு குரல் கேட்கிறது. இங்கு வாடி. ஆதிமந்தி, தன் தாயும் மாமியும் பல்லக்கில் இருந்தபடி கூவியழைப்பதை உணர்ந்து, அங்கு ஓடுகிறாள். கறுப்புடையுடன் குனிந்துகொண்டிருந்த ஆட்டனத்தி, கறுப்புடையை உடையவ னிடம் கொடுத்து அவளைத் தொடர்ந்து செல்லுகிறான். சோழமன்னி : சேற்றுத் துறையை எப்படிக் கடந்து கரையேறினாய் ஆதிமந்தி? ஆதிமந்தி : என் தாய் தந்தையைவிட என்மீது அன்புடையான் அந்தப் படகு செலுத்துவோன். அவன் முதுகில் காலூன்றிக் கரை சேர்ந்தேன். தாயும் மாமியும் சிரிக்கிறார்கள். அவர்கள் உண்மை கூற வாய் எடுக்கிறார்கள். பின்னால் வந்த ஆட்டனத்தி அவர்களை நோக்கிச் சொல்லாதீர்கள் என்று சைகை காட்டுகிறான். அனைவரும் அரண்மனை செல்லு கிறார்கள். வழியில் - சோழமன்னி : அப்படி நீ, ஓருடலின் மேல்கால் ஊன்றி இறங்குகை யில், உன் அத்தான் எங்கிருந்தார் ஆதிமந்தி? ஆதிமந்தி : அவர்கள் எங்கேயோ என்னைவிட்டுப் போய் விட்டார்கள் அம்மா! சோழமன்னி : அவர் முதுகின்மேல்தான் நீ கால்வைத்து இறங்கினாய். ஆதிமந்தி உடல் நடுங்குகிறது. கண்ணீர் பெருகுகிறது. ஆட்டனத்தி : மாமி! நீங்கள் அதைச் சொல்லியிருக்கலாகாது உங்கள் மகளிடம். அவள் வருந்துவதைப் பாருங்கள்... ... ஆதிமந்தி வருந்தாதே! உன் கால் என் உடலில் பட்டால் என்னுடல் தேய்ந்துவிடாது. அதனால் எனக்குத் தொல்லை எதுவும் விளைந்துவிடவில்லை. இன்னும் வருந்து கிறாய். உன் கால் என்னுடலில் படுவதேயில்லையா? ஆதிமந்தி இதுகேட்டு நாணிக்கொள்கிறாள். பல்லக்குச் செல்கிறது. காட்சி - 27 பற்பல தேர்கள் அரண்மனை வாயிலில் நிற்கின்றன. அரண் மனையின் உட்புறம் சோழனும், சேரமன்னியும் மற்றும் உறவினரும் துன்பமுகத்துடன் ஒருபால் நிற்கிறார்கள். ஆதிமந்தியும் ஆட்டனத் தியும், ஆட்டனத்தியின் தாய், அமைச்சர் புலவர் அறிஞர் அனைவரும் பயணம் சொல்லிக் கொள்ளுகிறார்கள். சோழன் : மருந்துபோல் ஒரு பெண் எமக்கு! அவளுக் குரியது இந்த அரசு; அவளுக்குரியன இந்த அரசச் செல்வங்கள் அனைத்தும். ஆதலால் மருமகரே, உமக்கு உரியன இந்நாடு அனைத்தும்! எம் மகளும் நீரும் நன்றே உம் நாடு சென்று வருக. உடனே - அடிக்கடி இங்கு வந்து உங்களின் முகங்களை எமக்குக் காட்டிப்போக. எம் ஒரு மகளைப் பிரிந்து யாம் வாழோம். சில நாட்கள் சேர நாட்டில் நீவிர் தங்குக. இதோ ஒரு திங்களில் காவிரி நீர்ப்பெருக்கு விழா வருகின்றது. அவ்விழாப்போது நீங்கள் இங்கு வந்திருத்தல் வேண்டும். எம் கண்ணிலேயே இருப்பீர்கள் நீரும் என் பெண்ணும். வராது இருந்து விடாதீர்கள். இரும்பிடர் : சேரரே, மிகச் சில நாட்கள் அங்கு இருந்து விட்டு, உடனே இங்கு வந்துவிட வேண்டும். சேரன் அன்னை : வருந்தாதீர்கள். உடனே. உங்கள் பெண்ணையும் உங்கள் மருமகரையும் அனுப்பி வைக்கிறேன். காவிரி நீர்ப் பெருக்கு விழாவுக்கு நான் உள்ளிட்ட அனைவரும் இங்கு வருகிறோம். ஆதிமந்தி, ஆட்டனத்தி மற்றும் அமைச்சர், புலவர், அறிஞர் தேர்களில் ஏறிக் கொள்ளத் தேர்கள் செல்லுகின்றன. நாட்டு மக்களும் சோழன் முதலிய வர்களும் வாழ்த்துக்கூறி வழியனுப்புகிறார்கள். காட்சி - 28 சேர நாட்டில் ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் வாழ்க்கை நடத்தி வருகையில், ஒரு நாள் ஆதிமந்தி, அடுக்களையில், தன் தோழி ஒருத்தியுடனும் பணிப் பெண்களுடனும் சோறுகறி ஆக்கிக் கொண்டிருக்கிறாள். ஆதிமந்தி : தோழி! நீ சென்று, அரண்மனையின் முன்கட்டில் அத்தான் தனியாய் இருக்கிறார்களா? பிறரோடு பேசியிருக் கிறார்களா? பார்த்துவா. தோழி சென்று திரும்பி வருகிறாள். தோழி : ஆதிமந்தி! தனியாகத்தான் இருக்கிறார்கள். ஆதிமந்தி : ஐயையோ! அவர் தனியாய் அங்கிருக்கையில், நான் உடனிருக்க வில்லையானால் வருந்துவார்களே; தோழி சென்று ஆறுதல் கூறிவா. தோழி : என்னவென்று? ஆதிமந்தி : உனக்குத் தெரியவில்லையா? சோறும் கறியும் கொதிப்பதும் வேகுவதுமா யிருக்கின்றன. அதைத்தான் அவரிடம் கூறும்படி சொல்கிறேன். தோழி செல்லுகிறாள். திரும்பி வருகிறாள். தோழி : ஆதிமந்தி! அவரிடம் சொன்னேன். அங்கே கொதிக் கிறது என்று. இங்கே மட்டும் என்ன குளிர்கிறதோ? இங்கும்தான் என் நெஞ்சம் கொதிக்கிறது என்று சிடுசிடு என்று கூறினார். ஆதிமந்தி : ஐயையோ! ஓடு ஓடு! இறக்கும் நேரம்; இதோ வந்து விட்டாள் ஆதிமந்தி என்று கூறிவிட்டுவா. தோழி ஓடுகிறாள். திரும்பி வருகிறாள். தோழி : இறக்கும் நேரம் என்று அவரிடம் சொன்னதற்கு, இங்குமட்டும் நான் வாழும் நேரமா? நானும் இறக்கும் நேரந்தான் என்று எரிந்து வீழ்ந்தார். ஆதிமந்தி : ஐயையோ! தோழி, இங்கிரு. நானே போய் ஆறுதல் கூறிவிட்டு ஓடிவந்து விடுகிறேன். ஆட்டனத்தி தன் அறையில் இருக்கிறான். ஆதிமந்தி அவன் எதிரில் போய் நிற்கிறாள். ஆதிமந்தி : சமையல் வேலை பார்த்திருந்தேன், அத்தான். ஆட்டனத்தி : வேலைக்காரிகள் இல்லையா? பார்த்துக் கொள்ள மாட்டார்களா? ஆதிமந்தி : அத்தானுக்கு என்ன பிடிக்கும், மாமிக்கு எந்தக்கறி பிடிக்கும் என்பது எனக்கல்லவா தெரியும்? உணவு ஆக்கும் பொறுப்பைப் பணிப்பெண்களிடம் ஒப் படைக்கலாமா? ஆட்டனத்தி : உன் மாமி இல்லையா? அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா? ஆதிமந்தி : தள்ளாத பருவத்தில் அவர்களையா சமைக்க விடுவது? வந்தவள் வள்ளிக்கிழங்குபோல் இருந்துகொண்டு, அந்த அம்மையாரை அடுப்பில் வேகும்படி விட்டு விட்டாள் என்று என்னை அண்டை அயலார் தூற்ற மாட்டார்களா? இதற்குள் ஆட்டனத்தியின் தாய் அங்கு வந்து விடுகிறாள். தாய் : என்ன செய்தி? ஆட்டனத்தி : ஒன்றுமில்லையம்மா! பசிக்கிறது. சமையல் ஆய் விட்டதா என்று கேட்கிறேன் ஆதிமந்தியை, ஆதிமந்தி : ஆமாம் மாமி, அதுதான் கேட்டார்கள். சாப்பிட வாருங்கள் அனைவரும். (அனைவரும் போகிறார்கள்.) காட்சி - 29 மற்றொரு நாள் - ஆதிமந்தி, எண்ணெய், சீயக்காய், நறுங்கலவை முதலியவை இட்ட தட்டத்தைக் கையிலேந்தி ஆட்டனத்தியை அணுகுகிறாள். ஆதிமந்தி : அத்தான்! வாருங்கள், வாருங்கள் எண்ணெய் இட்டுக் கொள்ள! ஆட்டனத்தி : என்ன இது ஆதிமந்தி! மின்னிடை நோக, விலாப்புறம் நோக. பொன்னின் சிலம்படி பொறுக்கெனக் கொப் பளிக்க, இவ்வாறு தட்டம் சுமந்து தலைக்கெண்ணெய் இடவும் வந்து விட்டாயே! இந்தத் தொல்லை உனக் கெதற்கு? பணிப்பெண் எவளும் இல்லையா? ஆதிமந்தி : உங்கள் திருமேனி தீண்டி எண்ணெய் இட்டு, எழில் மார்பில் இரு கண்ணையிட்டுத் தூய்மை செய்யும் இன்பப் பணியை நான் பணிப்பெண்ணுக்கோ கொடுக்க உடன் படுவேன்? ஆட்டனத்தி : இல்லை; இல்லை. இப்பணியால் உன் உடல் இன்னல் உறும். ஆதிமந்தி : சரி அத்தான். போகிறாள். பணிப்பெண்ணொருத்தி ஆட்டனத்திக்கு எண்ணெய் இட்டுத் தண்ணீர் பெய்து முடித்ததும், பின்னே நின்று அவன் தலைமயிர்க்கு நறும்புகை ஊட்டுகிறாள். அதே நேரம் ஆட்டனத்தியின் தாய் அங்கு வருகிறாள். தாய் : அப்பா, ஏது புதுமையாயிருக்கிறது! ஆதிமந்தி எப்படி ஒத்துக்கொண்டாள்? அவளே உனக்கு எண்ணெய் இட வந்துவிடுவாளே? ஆட்டனத்தி : அவள்தான் வந்தாள். உன் உடல் நலியும் வேண்டாம் என்றேன். அவள் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு போனாள். சோழன் மகள் - செல்வமாய் வளர்ந்தவள், அவளுக்கு நாம் தொல்லை கொடுக்கலாமா அம்மா? தாய் : ஆம் அப்பா, (அங்கு இருந்த பணிப்பெண்ணை நோக்கிக் கூறுகிறாள்) அடி பெண்ணே! ஆதிமந்தியை உணவு பரிமாறச் சொல். போ! பணிப்பெண் வெளிச் செல்லுகிறாள். வழியில் நிற்கும் தாய் பணிப்பெண் முகத்தைப் பார்க்கிறாள். வியப்புறுகிறாள். தாய் : ஆட்டனத்தி! ஆட்டனத்தி! ஆதிமந்திதானடா இவள் பணிப்பெண் அல்லடா! தாய் : ஆதிமந்தியை எட்டிப்பிடித்து எதிர்நிறுத்திக் கொண்டு, அவளைக் கட்டித்தழுவி முத்தம் கொடுக்கிறாள் உச்சந்தலையில். ஆட்டனத்தி : இதற்காகத்தான் முக்காடு இட்டுக்கொண்டு வந்தாயோ, ஆதிமந்தி? தாய் : ஆதிமந்தி! இந்தத் தொல்லையெல்லாம் உனக்கு ஏன்? ஆதிமந்தி : மாமி, உங்கள் மணவாளரிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? எண்ணெய் இடவுமா பணிப்பெண்? தாய் : நீ சொல்வது சரிதான் அம்மா! ஆதிமந்தி : உணவுண்ண வருகிறீர்களா? (அனைவரும் போகிறார்கள்) காட்சி - 30 சோழ நாடு புதுமையடைகிறது. நகர மக்களும் சிற்றூரின் மக்களும் மகிழ்ச்சியால் தூண்டப்படுகிறார்கள். தெருக்கள் தூய்மை செய்யப்படுகின்றன. வீடுகள் சிறப்புச் செய்யப்படுகின்றன. பெண்கள் பொன்னாடை பூண்டு, தத்தம் கண்ணாளர்களை அழைத்துப் போகக் காத்திருக்கிறார்கள். வண்டிகள், யானை, தேர், குதிரை முதலிய ஊர்திகள் வீட்டின் எதிரில் காத்திருக்கின்றன. அதிர்வேட்டு, விழா முரசு வானைப் பிளந்தன. நகர மக்கள் பொங்கற் புதுப்பானை சமையற் பொருள்களுடன் மனைவியரையும் மக்களையும் தேரில் ஏற்றுகிறார்கள். சிலர் வண்டியில், சிலர் யானைமேல், சிலர் குதிரைமேல் ஏறிச் செல்லுகிறார்கள். அரண்மனையினின்று நால்வகைப் படைசூழத் தங்கத் தேரில் சோழன், சோழமன்னி, அரச வகுப்பினர், அமைச்சர், தலையாய அலுவலினர் கிளம்பிவிட்டார்கள். கூட்டிசை முழங்குகிறது. புலிக் கொடிகள் வானில் அழகு செய்கின்றன. நாட்டின் மக்கட் பெருங்கடல் இடம்விட்டு நகர்வது போல் தோற்றமளிக்கிறது. காவிரிக்கரையில் அடித்துள்ள கூடாரங்களை நோக்கிச் சென்ற மக்கள் அனைவரும், தத்தம் கூடாரங்களை அடையாளம் நோக்கிப் புகுவாராயினர். அரசர்க்கென அமைந்த மணிவீட்டில் சோழனும், சோழமன்னி யும், தோழியரும் அமர்ந்தனர். மன்னி : மருகர் வரவில்லை. ஆதிமந்தி வரவில்லை. மன்னன் : இந்நேரம் வருவார்கள். விழாத் தொடங்கும் முரசும், அதிர்வேட்டும் முழங்கின. ஒருபுறம் குதிரையேற்றம். மற்றொரு பால் யானையேற்றம். இன்னொருபுறம் காலாட்களின் அணிவகுப்பு. ஆடவர் பெண்டிர் புதுப் புனல் ஆடுகின்றார்! அங்கொரு புறம் சேவற்போர்! காடைச் சண்டை ஒரு பால்! வாட்போர் ஒருபால்! விற்போர் ஒருபால்! பாடுநர் ஒரு பாங்கு! ஆடுநர் ஒரு பாங்கு! கழைக்கூத்து மற்றொரு பாங்கு! தோற்பாவைக் கூத்து இன்னொரு புறம்! அங்கங்கு மக்கள் கூடிக் காட்சியின் மகிழ்ச்சியில் ஆழ்கின்றார்கள். புதியதோர் அதிர்ச்சி! - பொற்றேர் ஒன்று விழாவின் நடுவில் ஊடுருவுகின்றது. மக்கள் கை தட்டி ஆர்கின்றார்கள். ‘thœf Mâ kªâah®, thœf M£ld¤âah®, thœf nru k‹Åah®! என்ற வாழ்த்தொலி வானைப் பிளக்கின்றது. ஆட்டனத்தியை, அவன் தாயை, ஆதிமந்தியை, சோழனும், சோழமன்னியும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். சோழன், மன்னிமார், ஆட்டனத்தி, ஆதிமந்தி கால்நடையாக, அங்காங்கு நிகழ்த்தப்பெறும் காட்சிகளைக் காணுவாராயினார். காவிரியின் இருகரையும் அடைத்துப் பெருகிப் பாயும் புனல் கண்டு, வியப்பும் மகிழ்ச்சியும் அடைவாராயினார். பாடுவார் பாடல் கேட்ட ஆதிமந்தி, தன் மணவாளன் முகம் நோக்கினாள். ஆடுவார் ஆடுதல் கண்ட ஆட்டனத்தி, தன் காதலி முகம் நோக்கித் தனியே அழைத்தான். ஆட்டனத்தியின் கால் அப்போதே ஆடல் துவக்கம் செய்தன. அரசன் முதலானோர் பின் தொடரத் தம் தனி வீட்டெதிர் பாடல் துவக்கினாள் ஆதிமந்தி. ஆடத் தொடங்கினான் ஆட்டனத்தி. பின்னணி இசைக் கூட்டும் தொடங் கிற்று! மக்கள் அனைவரும் குழுமுகின்றார்கள். ஆதிமந்தி பாட்டு எடுப்பு எங்கும், எதிலும் மகிழ்ச்சி - உனக்கு நெஞ்சே! எங்கும், எதிலும் மகிழ்ச்சி! உடனெடுப்பு பொங்கும் காவிரி புனலைச் சொரியும் புலங்கள் அனைத்தும் செந்நெல் கொழிக்கும் (எ) தெங்கும் கரும்பும் செழிக்கும் - உனக்கு நெஞ்சே தேனை மலர்கள் கொழிக்கும்! மங்காச் சுவைமுக் கனியும் - உனக்கு நெஞ்சே வழங்கும் மரம் அத் தனையும் தங்கச் சுரங்கம் உடையாய் மும்மைத் தமிழை உயிராய்க் கொண்டாய் - உனக்கு நெஞ்சே (எ) முத்தே உதிர்க்கும் நகையார் - உனக்கு நெஞ்சே முதிரும் அன்புத் தாய்மார்! கத்தி சுமந்த தமிழர் - உனக்கு நெஞ்சே காவல் தந்தை மார்கள்! எத்திப் பிழைக்க வருவோர் பகையை இடரும் தோள்வலி யுடையாய் - உனக்கு நெஞ்சே (எ) பாண்டிய சோழ சேரர் -உனக்கு நெஞ்சே பச்சைத் தமிழர் மூவேந்தர்! ஈண்டுல காள்வர் அன்றி - உலகில் வேறோர் இனத்தார் ஆளுதல் இல்லை. யாண்டும் உன்னினம்! உனதே ஆட்சி! இன்பம் இன்பம் எங்கும் - உனக்கு நெஞ்சே (எ) பாடலில் முடிவு காட்டுகிறாள் ஆதிமந்தி. ஆடலுக்கு அறுதி வைக்கிறான் ஆட்டனத்தி. சோழமன்னி : (தன் மணவாளனாகிய சோழனை நோக்கி) அத்தான்! என் தாய்நாடாகிய பாண்டிய நாடும், உங்கள் நாடாகிய சோழ நாடும், தன் நாடாகிய சேர நாடும் உலகை ஆளட்டும் என்று கூறினார் உங்கள் மருகர் ஆட்டனத்தி! அவர் வாழ்க! ஆதிமந்தி வாழ்க! சோழன் : இன்னும் ஆடமாட்டானா நம் மருமகன்; நம் மகள்தான் ஆடலை நிறுத்தினாள். சோழமன்னி : அவளுக்கல்லவா உண்டு தன் மணவாளன் புனலாடிப் புதுப்பொங்கல் அருந்த வேண்டும் என்னும் அக்கறை! பொதுமக்கள் அனைவரும், இட்ட பொங்கலை இலையில் படைத்து அழைக்கும் தம் மனைவிமாரின் எண்ணத்தை நிறைவு செய்யத் தொடங்குகிறார்கள். ஆதிமந்தி, இசை வல்லாரை ஒரு புறம் போகச் செய்து தன் காதலனின் காற்சதங்கையை அவிழ்த்து, மேலணிகளை அவிழ்த்து, அவனை அங்கிருக்கும் ஒரு மேடையில் அமரும் படி செய்கிறாள். ஆட்டனத்தி : இன்னும் ஆடவேண்டும் என்று எண்ணுகிறது என் உள்ளம்! ஆதிமந்தி : ஆடலாம் அமுதுண்டபின்! பாடலாம் பசி தீர்ந்தபின்! அத்தான் ! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இட்டுப் பொங்கிய, புதுப்புனல் விழாப் பொங்கல் நமக்காகக் காத்திருக்கிறதே! நீங்கள் நீராடி வாருங்கள்! ஆடவர் நீராடுதுறைக்கு விரைவிற் செல்லுங்கள். மகளிர் ஆடுதுறைக்கு நான் செல்லவா அத்தான்! ஆட்டனத்தி : விரைவாகச் செல்லுவாய் ஆதிமந்தி. நமக்காகக் காத்திருப்பார்கள் உன் பெற்றோர் இல்லையா? ஆதிமந்தி : ஆம் அத்தான், ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் நீராடச் செல்லுகிறார்கள். காட்சி - 31 மகளிர் நீராடும் துறையினின்று ஆதிமந்தி தோழி மாருடன் விடுதியை அடைகிறாள். சோழமன்னி : உன் மணவாளன் இன்னும் வரவில்லை ஆதிமந்தி! ஆதிமந்தி : நீந்தி விளையாடும் சிறிதுநேரம். நீரினுள் மறைந்து விளையாடும் சிறிது நேரம். நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும் சிறிது நேரம்... ... அத்தான் நீராடப் போனால் குறைந்தது ஐந்து நாழிகை கழியும். nrhHk‹Å : ‘fhÉÇ thœf! எனப் பொங்கி வழிந்த பாலொடு தேன் தந்து, பருப்பொடு ஏலமிட்டுக் கரும்பின் கட்டி உறவு செய்யத் துழாவியிறக்கி, முக்கனி சேர்த்து நெய் மிதக்கும் பொங்கலை இலையில் இடு. உன் அத்தான் வரும் நேரம் ஆகிறது. வழிந்தோடும் காவிரிப் புனலுக்கு முதலில் பொங்கல் ஒரு கை இட்டுவா! நன்னீரை வாழ்த்தி வா! ஆதிமந்தி நெய்யொழுக இரு கை நிறையப் பொங்கல் அள்ளிக்கொண்டு காவிரி நோக்கிச் செல்லுகிறாள். ‘காவிரியிற் பெருவெள்ளம்! ‘காவிரியிற் பெருவெள்ளம்! இக் கூக்குரல் ஆதிமந்தியின் காதில் விழுகிறது. அவள் காவிரியில் பொங்கலை இட்டும் புருவம் நெற்றியேறப் பெரு வெள்ளத்தை நோக்குகிறாள். பெருமக்கள், பெருவெள்ளம்! பெருவெள்ளம்! என்று அலறு கிறார்கள். விடுதியிலிருந்த சோழன், சோழமன்னி முதலியவர்கள் காவிரிக் கரை நோக்கி ஓடிவருகிறார்கள் ஆடவர் நீராடு துறையை அணுகி, அத்தான் அத்தான் என்று ஆதிமந்தி அலறுகிறாள். அங்கிருந்தவர்கள் ஆதிமந்தியை நோக்கி, ஐயோ அரசியே! அரசர் கரையேறவில்லை என்கிறார்கள். சிலர், ஆற்றோடு சென்றிருக்கவேண்டும் தாயே! என்ற இரக்கத்தோடு கூறுகிறார்கள். ஆதிமந்தி கரையோடு பதறி ஓடுகிறாள்! அத்தான்! அத்தான்! என்று கூவியபடியே. சோழன், சோழமன்னி மற்றும் பெருமக்கள் கரையின் மேற்புறம் நின்று துடிக்கிறார்கள். கண்ணே! மருமகனே! என்று கதறுகிறாள் சோழமன்னி! அப்பா ஆட்டனத்தி என்று அகம் துடிக்கிறான் சோழன்! செய்வது இன்னதென்று தோன்றாமல் இவர்கள் இங்கே துன்பப்பெருக்கில் தள்ளாடி விழுந்து மூச்சற்றுக் கிடக்கையில், ஆதிமந்தியின் நிலை என்ன என்பதை எவரும் நினைக்கவில்லை. ஆதிமந்தி : காவிரி அன்னாய்! கண்ணாளனைக் கொடு என்று கரை யோரம் சென்று கொண்டேயிருக்கிறாள். அவள் கண்கள் அலைபுரண்டோடும் காவிரி வெள்ளத்தையே நோக்கு கின்றன. எதிர்க்கரையில் அவர் ஒதுக்கப்பட்டாரோ என்று நினைத்து, அத்தான்! என்று கூவுவாள். எதிர்க் கரையினின்று விடையொன்றும் வாராதொழியவே நிற்காது கரையோடு மேலும், அத்தான் என்று கூவி அழைத்தபடி செல்லுவாள். இடையில், ஆற்றங்கரையின் சிற்றூர் மக்கள் சிலர், ஆதிமந்தி அழுது கூவிச் செல்லுதலைக் கண்டு, வழி மறிக்கிறார்கள். ஆள் : அம்மா, நீ யார்? உனக்கு ஏற்பட்ட தீமை என்ன? ஆதிமந்தி : ஐயன் மீர்! மணவாளர் சேரரைக் காவிரி கவர்ந்து செல்லுகின்றாள். காவிரிக்குத் தப்பி என் கணவர் இங்குக் கரையேறக் கண்டீரோ? பெண் : ஐயோ இல்லையே! அம்மா நீ இவ்வாறு தனியே கரையோடு செல்லுவதில் பயனென்ன ... ... ? ஆதிமந்தி : அவரைப் பிரிந்து வாழ்வதில்தான் என்ன பயன்? ஆதிமந்தி அவர்களைவிட்டு நீங்கிக் கடிது செல்லுகிறாள். அத்தான்! - காவிரித் தாயே, கணவனைக் கொடுத்தருள். அவள் கரையோடு இன்னும் சென்று கொண்டிருக்கிறாள். கரையில் வழிமறித்து வளர்ந்த முட்செடிகள் பள்ளம் படுகுழிகளைக் கடந்து செல்லுகிறாள். மாலைப்போதும் மறைய, இருள் சூழ்ந்துகொள்ளுகிறது. அவள் கரையோடு கணவனைக் குரல் எடுத்துக் கூவியும், தருவாள் என் தமிழரசனை என்று காவிரியைக் கெஞ்சியும் நடந்துகொண்டிருக் கிறாள். அவள் கால்கள் முள்ளேறி முறிபடவே, புண்பட்டு வீங்கி மண்மீது ஊன்ற முடியாத நிலையில் மாய்வாள்போல் குப்புற வீழ்வாள். பிணி தீர்ந்தாள் போல். எழுந்து, செங்குத்தாய் நின்று, திசை நோக்கிக் கதறி மீண்டும் செல்வாள். காட்சி - 32 கடற்கரை சார்ந்த பட்டினம் நிலவின் ஒளியால் திகழ்கின்றது. சங்கு வளையல்களும், முத்துத் தொங்கலும், பலகறையணியும் அணிந்த பட்டினத்து மங்கைமார் கும்மியடித்தும். முழுநிலா வாழ்த்தியும், ஓடியும் பாடியும் விளையாடுகிறார்கள். காவிரி, கடலில் கலக்கும் இடத்தில், கட்டு மரத்தை மிதக்கவிட்டும், அதன் ஓட்டத்தை அளந்தும் ஆடவர் மகளிர் கடல் நடுச் சென்று களிப்புறுகின்றனர். கடலில் எழுந்த முழு நிலவில், ஆங்கே கட்டுமரத்தில் விளரி யாழ் கூட்டிப் பாடி இருக்கும் நெய்தலி, தன் தோழியர் இடையே மற்றொரு முழுமதி என விளங்குகின்றாள். விரிந்த வானும் கடலின் பரப்பும் மெருகேறிய வெள்ளி எனக் காட்சிதர, நெய்தலியின் கட்டவிழ்ந்த கூந்தல் அகிலின் மென்புகை போலக் காற்றில் மிதந்தது. இடது தோள்மேல் கிடந்த வெண்துகிலின் முன்தானை ஒரு புறம் கடகடவென உதறிற்று. அவளின் கனியுதடு சாறு உதிர்த்ததோ எனும்படி அவள் பாடும் பாட்டு அடுத்திருந்த தோழிமார்க்கு இனிமை செய்தது. அப்பாடலைத் தொடர்ந்த விளரியாழின் இசையால் குளிர்ந்தது முழுநிலா! நெய்தலின் இன்னுயிர்த் தோழியாகிய சின்னை, காவிரிப் புனல் கடலில் கலக்கும் இடத்தை உற்று நோக்குகிறாள். அவ்வாறு நோக்கும் தன் விழிகளை இன்னும் சிறிது கிழக்கில் கொண்டு வருகிறாள். அவள் உள்ளம் பதறுகிறது. தன் அண்டையிலிருந்த சாப்பறையைத் தூக்கி முழக்குகிறாள். (சாப்பறை - கடல் சார்ந்த ஊராகிய நெய்தல் நிலத்துக்கு உரிய பறை.) நெய்தலி, கையிலிருந்து யாழைக் கீழே வைத்து, என்ன என்ன? என்று திடுக்கிட்டு வினவுகிறாள். சின்னை : அதோ தத்தளிக்கும் ஓர் உடல்! நெய்தலி : மேலும் சாப்பறை முழக்கு! கடலில் மிதக்கும் அந்தக் கட்டுமரங்களை அழை! முன்றானையை வீசு! சாப்பறை முழங்குகிறது. மீன் பிடிக்கும் தொழிலாளர், தத்தம் கட்டுமரங்களை விரைவாகக் கொண்டு வரு கிறார்கள். மிதந்த உடல் மீட்கப்படுகிறது நெய்தலியின் கட்டு மரத்தில், மறவர் அணியும் கழலுடன் ஓர் உடல் உயிர் போகும் நிலையுடன் வளர்த்தப்படுகிறது. நெய்தலி : மணிமுடியில்லை; ஆயினும் மன்னவன்! ஐயோ, உலகு நலம்பெறவேண்டும். உயிர் தாருங்கள் அவருக்கு. வையம் வளம்பெறவேண்டும் பிரியும் ஆவியைப் பிரியாது காப்பாற்றுங்கள். ஆணழகுக்கு ஓர் இலக்கியத்தைக் கை சோர விடலாகாது! ஐயன்மீர்! வேண்டுவன செய்யுங்கள்! என்று பதறிக் கண்ணீருடன், துவண்டு கிடக்கும் ஆட்டனத்தியைத் தொட்டுத் தூக்கி, தன் மடியில் அவன் தலையைப் பொருத்திக் கொள்ளுகிறாள். பிறர் அவனுடலில் சூடுண்டாக்கும் முறைகளை மேற் கொள்ளுகிறார்கள். விரைவில் கட்டுமரம் கரை சேர்கிறது. சேரன் நெய்தலி யின் இல்லில் சேர்க்கப் படுகிறான். அவன் விழி திறக்கிறான். நெய்தலி அளவற்ற மகிழ்ச்சியடைகிறாள். அவள் கைகள், ஆட்டனத்தியின் உடலில் சூடேறச் சுடு மணல் ஒத்திக் கொண்டிருக்க, அவள் விழிகள் அவன் முகத்தில் மொய்த்த படி இருக்கின்றன. சின்னை : (தொழிலாளர்களை நோக்கி) நெய்தலி அழைக்கா விட்டால் நீங்களா வந்து உதவி செய்து விடுவீர்கள்? இந்தப் பொன்னுடல் உயிர் பெற்றிருக்குமா? தொழிலாளி : நீ அழைத்தாலும் வருவோம். ஆனால் உன் சொல்லை நாங்கள் நம்பவேண்டும். சின்னை : எத்தனை முறை உங்களிடம் நான் பொய் சொல்லி யிருக்கிறேன், விரலை விடுங்கள்! தொழிலாளி : சின்னையே! நான் அதற்குச் சொல்லவில்லை. பிழைப்புக்கான வகையில் நாங்கள் கடலில் கையும் வலைக் கயிறுமாக இருக்கிறோம். எங்களை நோக்கி வரும் அழைப்பு மட்டமாயிருந்தால் போதுமா? சின்னை : நான் மட்டமோ? தொழிலாளி : நெய்தலியை நோக்க நீ மட்டம்; அட்டியில்லை, சின்னை : அப்படிச் சொன்னால் கேள்வியில்லை. அவள் அரசி, நான் தோழி! இந் நேரத்தில், ஆட்டனத்திக்குத் தன்னுணர்வு ஏற்படுகிறது. அவன் கையூன்றி எழுகிறான்; ஆயினும் அவன் நிற்க முடியாதென அறிந்து, குந்திய நிலையில் சின்னை தெரிவித்த அரசி யார் என்பதை அறிய எண்ணுகிறான். அவன் தன் காற்புறத்தில் ஒத்தடம் கொடுத்தபடியிருக்கும் நெய்தலியின் முகத்தை நோக்குகிறான். நெய்தலி, தன் மேல் பூண்ட துகிலைத் திருத்தம் செய்துகொண்டு, மேலும் தன் பணியை மேற்கொள்ளுகிறாள். ஆட்டனத்தி : அரசியே! அரசியே! உனக்கேன் தொல்லை? நன்றி! சின்னை : அவள் பெயர் நெய்தலி! அவள் இல்லாவிடில் நீங்கள் காப்பாற்றப்பட்டிருக்க முடியாதையா! நெய்தலி ஒத்தடம் தருவதை நிறுத்தவில்லை. ஆட்டனத்தி : நெய்தலி! உனக்கேன் தொல்லை? வேறு ஆட்கள் இல்லையா? நிறுத்து! நெய்தலி : (நிறுத்திக் கண்ணீருடன்) நான் உங்கள் பொன்னுடலைத் தொடும் பேறு பெறக் கூடாதா? அதைத் தாங்கள் பிறருக்குத் தர ஒப்பவேண்டாம் என்று உங்களைக் கெஞ்சுகிறேன். ஆட்டனத்தி : அன்புள்ள நெய்தலி அரசி! என் உடம்பைப் பிறரும் தொடவேண்டாம். என் உடல் நலம் பெற்றுவிட்டது. நீயும் தொல்லையுற வேண்டாம். இதற்குள் சின்னை ஓடி நொய்க் கஞ்சி கொண்டு வருகிறாள். சின்னை : இதைக்குடியுங்கள் ஐயா சூடாக! ஆட்டனத்தி : நெய்தலி, அதை வாங்கு! உன் கையால் நீ என் வாயில் ஊற்று! நெய்தலி மகிழ்ச்சிப் பதைப்புடன் எழுந்து, நொய்க் கஞ்சிப் பல்லாயை வலக்கையில் பற்றி, ஆட்டனத்தியின்பின் தலையை இடக்கையால் அணைத்தபடி, கஞ்சி குடிப்பாட்டுகிறாள். தொழிலாளர் விடைபெற்றுப் போகிறார்கள். நெய்தலியின் தாய் தந்தையர் தம் மகளின் பிறர் நலம் பேணும் தன்மை நோக்கிக் களிப்புறுகிறார்கள். தாய் : அம்மா அல்லலுற்று வந்த விருந்தினர்க்கு இனி உயிருக்கு இழுக்கில்லை. அவர் இறப்பினின்று முழுதும் தப்பினார். தந்தை : குழந்தாய், நள்ளிரவு! சற்று நேரம் அவர் தூங்கட்டும், நீயும் கண்ணுறக்கம் கொள்ளம்மா. நெய்தலி : அப்பா! நீங்கள் தூங்கச் செல்லுங்கள். முதியோர் கண் விழிப்பது தீமை. நானும் இதோ இவரைத் தூங்க வைத்துப் பின் தூங்குவேன். அவர்கள் போகிறார்கள். தோழி ஒருபுறம் குந்தித் தூங்கி விழுந்தபடி யிருக்கிறாள். ஆட்டனத்தி : நெய்தலி, கஞ்சி போதும் எனக்கு. சற்றே என் அண்டையில் நீ உட்கார்ந்து என்னுடன் பேசியிரு! நெய்தலி : நான் பெற்ற பேறு! (உட்கார்ந்திருக்கிறாள்.) ஆட்டனத்தி : என்னை ஏன் காப்பாற்றினை? என் நோக்கம், என் விழிப்பு இவற்றை எதிர்த்துப் புறங்காட்டச் செய்தது சாவு. அது என்னைத் தன் இடையில் சுமந்து போய், நிலையான இன்பத்தில் சேர்க்கப்பார்த்தது, நீ தடுத்து விட்டாயே! நெய்தலி : ஆனால், அந்தச் சாவு, என் கண்ணுக்குப் படாமல் உங்களை இழுத்துச் செல்ல முடியவில்லை. உங்கள் நிலை என் கண்ணிற்பட்ட பின்னரும், உங்களை அச் சாவினின்று மீட்காமல் இருந்துவிட முடியுமா? நானும் மக்கள் இனத்தைச் சேர்ந்தவளாயிற்றே. அன்றியும், உங்களால் இந்த உலகத்துக்கு என்னென்ன நன்மைகள் ஏற்பட இருக்கின்றனவோ? உங்களைக் காப்பதில் எனக்கு உதவி செய்த உறவினரையும், இதோ உறங்கி விழும் தோழி சின்னையையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் செய்த உதவியை நான் என்றைக்கும் மறவேன். ஆட்டனத்தி : என்னை நீ காப்பாற்றத் துடித்ததற்கு நீ கூறும் காரணங்கள் அளவுக்கு மேற்பட்டவை என்று தோன்றுகிறது. நெய்தலி : ஏன்? ஆட்டனத்தி : ஓருயிர்க்கு உதவி செய்பவர், அவ்வுயிரால் தமக்கு உதவி கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். உதவி செய்வதற்குக் காரணம் இதுவன்றி வேறெதுவாய் இருக்க முடியும்? (சிரிப்பு) நெய்தலி : என்ன அழகான திருமேனி! என்ன மடமையான உள்ளம்! ஆட்டனத்தி : இல்லை, இல்லை. நான் வேண்டுமென்றே உன் உள்ளத்தை - அறிவுடைமையை - உன் விடுதலை மேம்பாட்டை அறிய அப்படிச் சொன்னேன். இரக்கம் மாற்றுதவியை எதிர்பார்ப்பதில்லை. அறம் செய்வார் உதவியை எண்ணிச் செய்யவில்லை. அறஞ் செய்யும் உள்ளத்தில் ஏற்படும் இன்பத்தை மட்டும் அது எதிர்பார்ப்பதுதான். நெய்தலி : உங்களிடம் நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆட்டனத்தி : எப்போதுமா? இனியுமா? நெய்தலி : (விழிக்கிறாள்) இல்லை. எப்போதுமில்லை. நீங்கள் கடலில் சாவக் கிடந்து புரள்கின்றீர்கள். அந்நிலையில் உங்களை நோக்குகின்றேன். காக்கத் தாவுகின்றேன். அப்போது உங்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. ஆட்டனத்தி : ஆனால் இப்போது? நெய்தலி : நீங்கள் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென ஒன்றிருந்தால், அந்த அளவு தங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். ஆட்டனத்தி : நீ தருக்குள்ளம் உள்ளவள். நெய்தலி : ஆம்! அதற்காக என்னை மன்னித்தருள வேண்டும். உங்கட்குத் தூக்கம் வருகிறதா? ஆட்டனத்தி : உனக்குத் தூக்கம் வருமானால், என் எதிரிலேயே தூங்கு. இன்னும் உன் அழகை, உன் உடலில் அமைந்துள்ள தச்சுத் திறத்தை முழுவதும் பார்த்து முடிக்கவில்லை. சிரிக்கா திருக்கையிலும் சிரிக்கும் உன்உதட்டின் கடைக் கூட்டு என்னை விழிமூட விடுமா? விழி மூடினாலும், என் நெஞ்சில் படிந்த ஓர் இன்பத் தனி ஓவியம் என்னைத் தூங்கவிடுமா? நெய்தலி : அப்படியானால் நான் போய்விடுகிறேன். ஆட்டனத்தி : உயிர் பொறுக்காது நெய்தலி! கண் கவர்ந்த பொருள் நீ என்னுடைமை எனில், உன்னை நான் பொறுத்துப் பார்த்து இன்புற எண்ணலாம். நெய்தலி : என்னையும் என் உடைமை எவைகளையும் தங்கட்கு ஒப்படைத்துவிட்டேன். அவன் ஏந்திய இருகைகளில், நெய்தலி மகிழ்ச்சியால் தன்னிலையற்றுச் சாய்கிறாள். காட்சி - 33 திரையன், நெய்தலியின் தந்தையைக் காண வந்திருக்கிறான். நெய்தலியின் தந்தை திரையனைக் காணுகின்றார். திரையன் : களத்தின் உப்பு முழுவதம் எனக்குத் தரவேண்டும். அதன் விலைக்கு நீவிர் வேண்டுவது என்ன? தந்தை : திரையரே, என் உடைமையில் எனக்கு இப்போது உரிமை யில்லை. அதற்கு உடையவர் என் ஒரு பெண், நெய்தலி யும், அவளின் உயிர்க் காதலன் ஆட்டனத்தியும்! ஆதலின் நீவிர் அவரிடம் பேசிக் கொள்! திரையன் : ஆட்டனத்தி! - என்ன புதுமை! சோழன் மருமகன் ஆற்றுப் பெருவெள்ளத்தால் இறந்து நாட்பல ஆயினவே! அவன் மனைவி ஆதிமந்தி அவனைத் தேடிச் சென்றவள் இன்னும் காணப்படாததால், சோழ நாடும் சேரநாடும் கண்ணீர் வடித்துக் கிடக்கின்றனவே! எந்த ஆட்டனத்தி? தந்தை : நீர் சொல்லும் ஆட்டனத்தியாகத்தான் இருத்தல் வேண்டும். ஏன் எனில், ஆட்டனத்தி என் மகளால் கடலினின்று காப்பாற்றப்பட்டான். அவனைக் கடலில் கொணர்ந்தது காவிரிதான். திரையன் : நான் ஆட்டனத்தியைக் காண இயலுமா? தந்தை : காண இயலும். ஆயினும், என் பெண்ணும், அவனும் பெரும் படகொன்று செப்பனிட்டுக் கடல் நடுவில் அதை நிறுத்தி, ஆங்கு ஆடல் பாடல் நிகழ்த்தி, இன்பம் நுகர்ந்த படி நாள் கழிக்கின்றார்கள். திரையன் : ஐயம் சிறிதும் இல்லை. அவன் அந்தச் சேரனே! (எதிரில் இருந்த சரக்குச் சிப்பத்தைச் சுட்டிக் காட்டி) ஐய! இதைத் தங்கள் காப்பில் வைத்துப் போகின்றேன். சிறிது நாட்களில் திரும்புகின்றேன். தந்தை : எங்கே செல்ல எண்ணம்? திரையன் : சோழநாடு. தந்தை : ஆட்டனத்தி இருப்பது தெரிவிக்கவோ? திரையன் : வேறென்ன? தந்தை : ஆட்டனத்தியின் கருத்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே! திரையன் : மறுப்பதும் உண்டோ! தன்னை இழந்து கதறும் நாட்டு மக்கட்கும், உறவினர்க்கும், தான் இருப்பதைத் தெரிவிக்க மறுப்பது மக்கள் இயற்கை யாகுமோ? தந்தை : ஆம்; ஆம் கடிது செல்லும்! ஆயினும், இதை நான் என் மகளுக்கும் என் மருகற்கும் சொல்லாமல் இருக்கவேண்டும். (அவன் நன்றி கூறி வணங்கிச் செல்லுகின்றான்.) காட்சி - 34 ஒரு நாள் மாலை பட்டினத்தில் தெற்கு எல்லையில் இருப்ப தாகிய சோலையில், ஆட்டனத்தியும் நெய்தலியும் உலவிய வண்ணம், அதன் அழகு பார்த்துக் களித்திருக்கிறார்கள். உப்பங்கழி சார்ந்ததோர் இடத்தில் சிறிது தொலைவில் வெண்தாழைக் காடு காட்சி தரலாயிற்று. சற்று நீண்ட ஓர் தாழையின் உச்சியில் பூத்திருந்த புதுப்பூவானது தன் இடை முறிந்து நிலை சாய்ந்திருக்கிறது. ஆட்டனத்தி : அதுவென்ன நெய்தலி! நெய்தலி : ஆண் அன்னம் என்று தோன்றுகிறது. ஆட்டனத்தி : ஏன்? நெய்தலி : பின்னென்ன அத்தான்? பெண் அன்னமாயிருந்தால், அது துணையைவிட்டுப் பிரிந்திருக்குமா? ஆட்டனத்தி : ஆண் அன்னம்? நெய்தலி : தனியே இருக்க அதனால் முடியும். ஆண்மையின் நெஞ்சு கல்லுக்கு நேர். ஆட்டனத்தி : நான்? நெய்தலி : அப்படித்தான்! ஆட்டனத்தி : ஐயோ! நாட்டை மறந்தும், நற்குடி மறந்தும், தேட்டம் மறந்தும், சேயிழை மறந்தும், உன் கூட்டுறவு ஒன்றையே குறி எனக் கொண்டேன் - நீ என்பால் காட்டும் பேரன்பினால்! கண்ணிமைப்போதும் உன்னைப் பிரிய எண்ணியதில்லை. உன் கண்ணோட்டத்தைப் புறக் கணித்து, எப்போது நெய்தலி உன்னைப் பிரிந்திருக்க எண்ணினேன்? நெய்தலி : நேற்று நீராடினோமா? ஆட்டனத்தி : நாமிருவருந்தானே? பிரியவில்லையே! நெய்தலி : அது சரி! அதன்பின்? நான் என் குழலுக்குப் புகை யூட்டிக் கொண்டிருந்தேனா? ஆட்டனத்தி : நானுந்தானே இருந்தேன். நெய்தலி : இல்லை உங்கட்கு நினைவுபடுத்துகிறேன். உங்களைக் காணாமல் திடுக்கிட்டேனா? ஆட்டனத்தி : ஆரைக் கேட்கிறாய்? எனக்கு நீ திடுக்கிட்டதுமா தெரிய முடியும்? நெய்தலி : திடுக்கிட்டேன் அத்தான்! ஆட்டனத்தி : சரி; சரி. நெய்தலி : திடுக்கிட்டு என் கண்கள் தேடின உங்களை. ஆட்டனத்தி : அருகில்தானே இருந்தேன். நெய்தலி : பிறகுதானே கிடைத்தீர்கள்? ஆட்டனத்தி : பின்புறம் இருந்தபடி உன் குழல் தரையில் புரளாது தாங்கியிருந்தேன். இது பிரிவுக் குற்றமானால் அந்தக் குற்றத்தை இனியும் செய்வேன். நெய்தலி : அதற்குச் சொல்லவில்லை அத்தான்! நான் இனிமேல் பாய் விரித்துக் குந்திக் குழலுக்கு அகிற்புகை காட்டு கிறேன். நீங்கள் என் கண்களை விட்டு விலக வேண்டாம். ஆட்டனத்தி : நல்லது. அது அன்னந்தானா! தன்னந் தனியாய் இருக்கிறதே! நெய்தலி : அருகில் போய்ப் பார்க்க வேண்டும். நெய்தலி, ஆட்டனத்தியின் கையைப் பற்றித் தூக்க அவன் எழுகிறான். அன்னங் காணச் செல்லுகிறார்கள். காட்சி - 35 ஆட்டனத்தி : நெய்தலி! அன்னமுமில்லை; மயிலுமில்லை; அடி ஒடிந்து தொங்கும் வெண்டாழையின் புதுப் பூ! நெய்தலி : ஆம் அத்தான்! அதே நேரம் ஆட்டனத்தி நெய்தலி கையைப் பிடித்த படி சேற்றில் ஆழ்ந்துவிடுகிறான். நெய்தலி : அத்தான்! அத்தான்! வழிப்பறிக்காரர் சூழ்ச்சி! அவள் அவன் கைகளைப் பற்றி மேல்நோக்கி இழுக்கிறாள். நெய்தலி : தென்னூராரே! தென்னூராரே! ஐயோ! ஐயோ! கழுத்து வரைக்கும் புதைந்த என் காதலரின் கையைவிட்டால் பொன்னுடல் முழுதும் புதைந்திடுமோ! தென்னூராரே! தென்னூராரே! (ஆட்டனத்தியை நோக்கி) அத்தான்! இன்னும் ஆழமிருக்கிறதா? இவ்வளவுதானா? ஆட்டனத்தி : வலக்கால் அடியூன்றும் அளவு கெட்டித் தரை தட்டுப் படுகிறது. மற்ற இடம் நம்பத்தக்கதில்லை. ஆயினும் நீ என் கையைவிட்டுச் சிறிது தொலைவிற் சென்று, உதவிக்கு மக்களை அழைக்கலாம். நெய்தலி : ஐயோ! கைவிடுவது எப்படி? தென்னூராரே, தென்னூராரே! (ஆட்டனத்தியை நோக்கி) இப்படிப் பள்ளம் வெட்டிச் சேறிட்டு ஆறலைக்கும் தீயர் இப்போது நம்மை நோக்கி வரக்கூடும். ஆட்டனத்தி : அப்படியா? என் கையை விடு. நீயாயினும் எங்கே யாவது ஓடி மறைந்து உயிர் தப்பு! நெய்தலி : நான் ஒப்புவேனா! ஐயோ! தென்னூராரே! தென்னூராரே! ஆட்டனத்தி : உன் குரல் அவர்கள் காதில் விழவில்லை. சிறிது நெருங்கிக் குரல்கொடு! கையை விட்டுப் போ! நான் ஆழ்ந்துவிடமாட்டேன். நெய்தலி அவன் கையைவிட்டு ஊர் நோக்கி விரைந்து ஓடுகிறாள். அங்கு மரத்தில் பதுங்கியிருந்த கள்வன் ஒருவன் எதிர்ப்படுகிறான். கள்வன் : நில் நெய்தலி : ஐயோ! நீர் கள்வரா? நான் அணிந்துள்ள விலையுயர்ந்த முத்துத் தொங்கல் முதலிய எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறேன். உமக்குத் தேவையானது உடைமைதானே! உயிர் அல்லவே! கள்வன் : மூன்று, உடைமை, உன் உடல், உயிர் - ஆகக் கூடி நீ! நெய்தலி : நான் நன்றாயிருக்கிறனோ? கள்வன் : குழம்பிலிட்ட நெற்றிலி மீன்போல் இருக்கவில்லையா உன் பேச்சு! கண் கருநாவற்பழம்! மூக்கு சிறு முள்ளங்கி. உதடு பலாச்சுளை. பல்லிமுட்டைப் பல். சொல்ல வர வில்லை உள்ளத்தில் இனிக்கிறதாயினும் - வருகிறாயா என்னுடன்? நீ வந்த வழியில் ஏதாவது புதுமை கண்டாயா? அங்கு நான் சேற்றுப் பள்ளம் வெட்டி வைத் தேன்; அதில் யாராவது சிக்கியிருக்கப் பார்த்தாயா? நெய்தலி : சிக்கிக் கொண்டால் என்ன செய்வது? கள்வன் : அகப்பட்டவரைக் கொன்று, அவர் அணிகளைச் சுருட்டிக் கொள்வதுதான். வா, பள்ளத்தைப் போய்ப் பார்த்து வரலாம். நெய்தலி : (அவன்மேற் பாய்ந்து தன்னிரு கைகளாலும் அவன் கழுத்தைப் பிடித்து நெறித்தபடி) கொன்று விடுவாயா? கொன்றுவிடுவாயா? கள்வன் : (அவள் கழுத்தை இரு கையாலும் பிடித்து நெரிக்கிறான்.) விடு! நெய்தலி : (அவன் வயிற்றில் எட்டி உதைத்து நிலத்தில் தள்ளி, மீண்டும் அவன் கழுத்தை நெருக்குகிறாள்.) என் காதலரைக் கொன்று விடுமுன் உன்னைக் கொன்றுவிட மாட்டேனா? கள்வன் : (எட்டி, நெய்தலியின் கழுத்தைப் பற்றி நெருக்குகிறான்) விடு. கள்வனும் நெய்தலியும் ஒரே நேரத்தில் உணர்வற்றுச் சாய்கிறார்கள். அதே நேரத்தில் தென்னூர்ச் செங்கானும், ஆட்களும் ஓடிவருகிறார்கள். கள்வன் கால் கைகள் பிணிக்கப்படுகின்றன. செங்கான், ஒருக்கணித்துச் சோர்ந்து கிடக்கும் நெய்தலியின் இடப்புறக் காதின் மறைவில் உள்ள நீல வடுவை உற்று நோக்குகிறான். உடனே அவளை அன்புடன் எழுப்புகிறான். தண்ணீர் கொடுக் கிறார்கள்; நெய்தலி விழிக்கிறாள். நெய்தலி : அங்கே என் காதலர் சேற்றுப்பள்ளத்தில் கழுத்தளவு புதைந்து கிடக்கிறார். அனைவரும் நெய்தலியுடன் விரைந்து செல்லுகிறார்கள். ஆட்டனத்தி : நெய்தலி, நான் பள்ளத்தில் ஆழ்ந்துவிடவில்லை. நெய்தலி : ஐயன்மீர்! என் காதலரைக் கைகொடுத்துத் தூக்கிக் காப்பாற்றுங்கள். செங்கான் : உன் உயிர் போன்றவரை நாங்கள் காப்போம். ஆயினும் அதற்குமுன் உன்னை ஒன்று கேட்போம். நெய்தலி : விரைவாக. செங்கான் : மறையாமல் பதில் சொல்லுவதாக உறுதி கூறு. நெய்தலி : நீவீர் யார்? உம் பெயர் என்ன? செங்கான் : பயனற்ற கேள்வி நெய்தலி : உண்மை கூறுவேன். உண்மை கூறுவேன். செங்கான் : உன் பெயர்? ஆட்டனத்தி : மருதி. நெய்தலி : மருதி! நான் செங்கான் என்பார்க்கும் செழியாள் என்பவர்க்கும் பிறந்தேன், மூன்றாம் பேறாக, என் பெரிய தந்தையின் நெய்தலி என்ற பெண்குழவி இறந்தது. அதை மறைத்து, குழவியாயிருந்த என்னை என் பெரிய தந்தை எடுத்துச் சென்றார். என் பெற்றோருக்கு - நெய்தலிக் குழந்தையைக் கொடுவிலங்கு தூக்கிப் போயிற்று என்று சொல்லி வைத்தார்கள். செங்கான் : என் குழந்தாய்! நான் தான் உன்னைப் பெற்ற செங்கான். உன் அன்னை வீட்டில் உள்ளாள். என்று கூறி, விரைந்து அனைவரும் ஓடி ஆட்டனத் தியை மீட்டு, உடலைத் தூய்மை செய்தபின், ஆட்டனத்தி, மருதி இருவரையும் செங்கான் வீட்டிற்கு அழைத்துச் செல்லுகிறார்கள், தென்னூரை நோக்கி. காட்சி - 36 பட்டினத்தின் வடபால் பரபரப்படைந்திருக்கிறது. கட்டு மரத்தைக் கடலில் இறக்கியவர்கள் அப்படியே விட்டுப் புதுமை நோக்கிடும் அவாவால் விரைந்து செல்லுகின்றார்கள். பெண்கள் கைவேலை நிறுத்தி விரைகின்றார்கள். முதியோர் செல்லுகிறார்கள், ஓருடல் பட்டினத்தின் வடபால் ஒரு மரத்தின் அடியில் பிணம் போல் கிடக்கின்றது. அவ்வுடல் கொடி போன்றது. மின்னும் மணி பூண்டுள்ளது. அவ்வுடலில் பெண்மை திகழ்கின்றது. அவள் சாகும் நிலையில் இருக்கின்றாள். உடலில் நிறையப் புண்கள். ஒவ்வொன்றிலும் கூரிய முள்! நெய்தலியின் வீட்டில் சேர்க்கப்பட்ட அவ்வுடல், பல மருத்துவரால் சூழ்ந்துகொள்ளப்படுகிறது. மக்கள் சூழ்ந்து கொண்டிருக் கிறார்கள். பிணம் கண் விழிக்கிறது. அது பேசத் தலைப்படுகிறது. நான் எங்கே இருக்கிறேன்! நெய்தலியின் தந்தை: அம்மா! பட்டினத்தில் இருக்கிறாய். நீ மெய் மறந்து இவ்வூரின் வடபால் ஒருபுறம் வீழ்ந்து கிடந்தாய். உன்னை எடுத்து வந்தோம். நீயார் அம்மா! ஆதிமந்தி : நான் இழந்த என் மணவாளனைத் தேடிக் கொண்டு காவிரிக் கரையோரம் பன்னாளாக நடந்து வந்தேன். ஆம்! இளைத்தேன்! ஆவி சோர்ந்தேன் ஒரு மரத்தடி யில்! என் நிலை அறியேன் அதன் பின்பு! உங்கள் உதவியால் உயிர் பெற்றேன். என் சிறிய உடல் வீக்க மடைந்துள்ள இவ்வுடம்பை எழும்படி செய்யாது. மருத்துவர்கள் ஆதிமந்தியின் உடலில் தைத்த முட்களை எடுக்கிறார்கள். மருந்து தடவுகிறார்கள். இலேசான உணவு தருகிறார் கள். அவளுக்குக் காய்ச்சல். அவள் உடல் கம்பளியால் மூடப்படுகிறது. அவள் தூக்கத்தில் புதைந்துவிட்டாள். கம்பளிக்குள் இருந்து சில பேச்சுக்கள் வெளிவரு கின்றன. அத்தான்! அத்தான்! காவிரித் தாயே! v‹ m¤jhid - MÉia vd¡F¡ bfhL! மருத்துவர் - அவள் வாய் பிதற்றுகிறாள். நெ-தந்தை : ஆயினும், அவள் உள்ளம் தெரிகிறது! அவள் பேச்சுக்கள் பொருள் உடையன. ஆதிமந்தி கம்பளியை எடுத்துப் போட்டுவிட்டு, எழுந்து உட்கார்ந்து விடுகிறாள். அவள் கூறுகிறாள்! நான் மீண்டும் செல்ல வேண்டும் காவிரிக் கரையோரம். ஏன் எனில், என் அத்தானைத் தேடவேண்டும் ஆதலால். மருத்துவர் : அம்மே! காவிரி இவ்வூரோடு முடிகிறது இது பட்டினம். ஆதிமந்தி : அப்படியானால், என் மணாளர் இங்கு ஒதுக்கப் பட்டதுண்டா? மருத்துவர் : உன் மணாளர் எவர் என்பதை யாம் அறியோமே! பன்னாளின் முன், ஒதுக்கப்பட்டார் ஓர் மன்னர் மகனார்! ஆதிமந்தி : உயிர் வந்தது! இழந்த இன்பம் மீண்டது! அவர் இங்குத் தானா இருக்கின்றார்? மருத்துவர் : ஆம் அம்மே! சற்றே அமைதியாய் இருக்கவேண்டும். இல்லாவிடில் மீண்டும் நோய் வலிவடையும். ஆதிமந்தி : நல்லது ஐயா. ஆதிமந்தி இவ்வாறு சொல்லித் தன் ஆவலின் காரணமாகத் தன் உடையைத் திருத்துகிறாள். குழலை ஒதுக்குகிறாள். அவள் மணக்கண் முன் ஆட்டனத்தி காட்சியளிக்கிறான். அவள் குறுநகை கொள்ளுகிறாள். அவள் இந்நிலையிலிருக்கையில் ஆட்டனத்தியும் நெய்தலியும் அவ்வீட்டை நெருங்குகிறார்கள். வழியில் மருத்துவரை நோக்கினார்கள். காட்சி - 37 தாழ்வாரத்ரைதச் சேர்ந்த அறைக்குள் ஆதிமந்தி இருக்கிறான். அறைக்கதவு சாத்தப்பட்டிருக்கிறது. ஆட்டனத்தி தாழ்வாரத்தை அடைகிறான். உடன் நெய்தலி இருக்கிறாள். நெ-தந்தை : (ஆட்டனத்தியை நோக்கி) அதோ அந்த அறையில் தான் வந்த விருந்து! ஆட்டனத்தி : (அறையின் வெளிப்புறத்திலிருந்தபடியே) காணக் கண் அவாக் கொள்கிறது! ஆயினும் அறைக் கதவு மறைக்கிறது. ஆதிமந்தி : அவர் குரல்! வெளிவந்து ஆட்டனத்தியைக் காண, ஆட்டனத்தி அவளைக் காண்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் தழுவுகிறார்கள். தழுவிக் கொண்டபின் இரண்டுடல் ஓருடலாகவே காட்சியளிக்கிறது. சூழ்ந்திருப்போர் முகங்கள் இரக்கத்தில் ஆழ்கின்றன. நெய்தலி வெய்யில் கண்டவள்போல் நோக்கி விழி கூசுகின்றாள். அவள் கால்கள் நாலடித் தொலைவு பின் சென்று நின்றன. நெய்தலியின் தோழி, நெய்தலியின் நிலைக்கு வருந்துவாள்போல் தோற்றமளிக்கிறாள். மீண்டும் அனைவரும் ஆட்டனத்தி ஆதிமந்தி அளவ ளாவுதலைப் பார்த்து நிற்கிறார்கள். அப்போது ஆதிமந்தி தன் இரு கைகளையும் ஆட்டனத்தியின் இரு கன்னங் களிலும் அணைத்தபடியும், அதுபோலவே ஆட்டனத்தி அவள் கன்னங்களையணைத்த படியும். அன்புவிழி நீர் பெருக்கி உயிர்ப்புடன் சில மொழிகளை வெளிப் படுத்துகிறார்கள். ஆதிமந்தி : இழந்தேனோ என்று துடித்தேன். இழக்கவில்லை அத்தான். ஆட்டனத்தி : என் உயிரே, உன்னை மறந்தேன்; ஆயினும் உன்னைப் பெற்றுச் சிறந்தேன். நெய்தலியும் தோழியும் இதுகேட்டு மெல்லெனப் பின் நோக்கி நழுவி, நெய்தலியின் அறையை அடைகிறார்கள். தோழி : உனக்கோர் ஒப்புடையாள் (சக்களத்தி) தோன்றினாள். நெய்தலி : ஒருவனும் ஒருத்தியும் ஒருமனப்படுவது காதல்! ஒருத்தி உள்ளத்தில் ஒருவனுக்கு இடம் உண்டு. ஒருவன் உள்ளத்தில் ஒருத்திக்குத்தான் இடமுண்டு. அந்த உள்ளமே காதல் உள்ளம். அக்காதலே காதல். மற்றது சாதல். அவன் ஒளி அவள் வெளி! அவள் பாட்டு அவன் தமிழ்ச்சொல்! அவள் யாழ் அவன் இசை! மலர் மணம் இருவரும்! இன்னும் பார்க்கலாம் அங்குக் கூடியுள்ளவர்களின் தோளிடையில் நம் விழியைச் செலுத்தி. அவர்களின் பேச்சில் பெருக்கெடுக்கும் அன்பின் அருவியில் மூழ்கலாம். நெய்தலி செல்லத் தோழியும் உடன் செல்லுகிறாள். தாழ்வாரத்தில் ஆட்டனத்தி : சிறு வெப்பத்திற்கும் ஆற்றாது உருகி உருவழியும் வெண்ணெய் போன்ற உன் மெல்லிய உடல், என்னைத் தேடி அலையும் போது கடுவெயிலையும் தாங்கியது எவ்வாறு என் அன்பே! அன்பின் உறுதியே! பஞ்சுபடாப் பாடுபட்டனை யாயின் அது என்னால்! என்னால்! என்று கூறி மீண்டும் மார்போடு தழுவிக் கொள்கிறான். ஆதிமந்தி : (தழுவியபோது தன் தலையை அவன் தோள்மேற் கிடத்திக் கண்ணீர் உகுத்து) பெருவெள்ளம் உருட்டிற்றே திருமேனியை! நெடுநீளமுள்ள காவிரி படுகொலை செய்ய எண்ணிற்றே என் அன்பே! காவிரி வாழ்க! என் காதலரை என்னிடம் சேர்த்தது! (என்று கூறித் தன் முகத்தை அவன் முகத்தோடு பொருத்துகிறாள்.) ஆட்டனத்தி : (அவள் இரு தோளையும் இரு கையால் பிடித்து அசைத்து) நம் வாழ்வு தொடங்கிற்றே; இனி நம்மைப் பிரிப்பது எது? நடந்ததை மறந்து விடுவோம், ஆதிமந்தி! இதைக்கேட்ட நெய்தலி தன் தோழியுடன் பின்னோக்கி நடக்கிறாள். நெய்தலி : அவன் அவளுக்கு! அவள் அவனுக்கு! தோழி : இல்லை. அவன் உனக்கும் அவளுக்கும்! நெய்தலி : அன்பும் உடலும் சேர்ந்தது அவன். இதில் எதைக் கூறுகிறாய் அவன் என்று? தோழி : அன்பை நெய்தலி : அது ஆதிமந்தியினின்று பிரிக்க முடியாத சொத்து! தோழி : உடல் ? நெய்தலி : பிணந்தானே! தோழி : அவன் அழகு? நெய்தலி : பிணத்தின் அழகு! எதற்காக அவ்வன்பையும் அவன் உடலையும் நாம் இடையிற் புகுந்து பிரிக்க முயல்வது? அன்புள்ள தோழி! காந்தமும் இரும்பும் சேருகின்ற சேர்க்கையின் நடுவில் நம்நிலை என்ன? என்னைத் தனியே விடு, நீ போ. அந்த இரண்டுள்ளமும் ஒன்றுபடும் அழகை நோக்கி வா! எனக்கு நல்ல முடிவு தேவை! அதை நான் எண்ண இடம் கொடு. தோழி போகிறாள். தாழ்வாரம் நோக்கி! அவள் போனதை நோக்கி, நெய்தலி வெளியே விரைவாகச் செல்லுகிறாள். நெய்தலி : (போகும் போது) அவள் அவனுக்கு! அவன் அவளுக்கு! அவள் மேலும் செல்லுகிறாள். கடற்கரையை அடைகிறாள். ஒளி குன்றாத மாலைப் போது. அங்கொரு கட்டுமரத்தில் ஒரு பெருங் கருங்கல்லை ஏற்றுகிறாள். ஒரு கயிற்றைத் தேடி, எடுத்து வந்து அக்கருங்கல்லைக் கட்டி, மறுமுனையைத் தன் கழுத்தில் பிணிக்கிறாள்; கட்டுமரத்தைக் கடலில் செலுத்துகிறாள். தாழ்வாரத்தில் ஆட்டனத்தி : தனக்கென வாழாத் தகைமையுடையாள் நெய்தலி! அவளே என்னைக் காப்பாற்றினாள். எனக்கு அவள் என் சென்ற உயிரை மீட்டுத் தந்தாள். சோறிட்டாள். உடை, தந்தாள், என்னைக் காத்து உனக்குத் தந்தாள். ஆதிமந்தி : என் அன்னையை எனக்குக் காட்டுங்கள். நெய்தலி யார்? எங்கே? தோழி : அம்மா! இதோ அழைத்து வருகின்றேன். ஆதிமந்தி : இல்லை; இல்லை. நாமே அவள் அறைநோக்கிச் செல்வோம். (செல்லுகிறார்கள்.) தோழி : அவள் இல்லை! எங்கே நெய்தலி? (பல பக்கமும் ஓடிக் கேட்கிறாள்) தோழி : அவள் கடற்கரை நோக்கிச் சென்றாள்! அனைவரும் கடற்கரையை நோக்கிச் செல்லுகிறார்கள். தோழி : செல்லும்போதே வாழ்க்கையை வெறுத்துப் பேசினாள்! (அனைவரும் விரைந்து செல்லுகிறார்கள் கடற்கரையை நோக்கி.) ஊரில் சோழனும்,சோழமன்னியும் இரும்பிடர்த் தலையாரும், ஆட்ட னத்தியின் தாயும், அமைச்சர் படைத்தலைவர் பலரும் தேரூர்ந்தும் குதிரை பல்லக்கு ஊர்ந்தும் பட்டினத்தை அடைகிறார்கள். ஊரார் : யாரைத் தேடுகின்றீர்கள்? நீங்கள் யார்? சோழன் : ஆதிமந்தி என்றோர் பெண்ணாள், அவளின் கண்ணான ஆட்டனத்தி இருவரையும் தேடிவந்தோம். ஊரார் : இருவருமே உள்ளார். (சோழன் முதலியோர் மகிழ்ச்சியால் கை கொட்டுகிறார்கள்.) சோழன் : எங்கே ஐயன்மீர்? ஊரார் : அதோ கடற்கரை நோக்கிச் செல்லுகிறார்கள். ஏன் எனில், தம்மைக் காப்பாற்றிய நெய்தலியைத் தேடித் செல்லு கிறார்கள். நெய்தலியும் ஆட்டனத்தியின் காதலிதான். சோழன் முதலியவர்களின் ஊர்திகள் கடற்கரை நோக்கி விரைகின்றன. காட்சி - 38 பல கட்டு மரங்களும் தோணிகளும் கடலில் தள்ளப் படுகின்றன. அலை கடந்து பல கட்டுமரங்களும் நடுக்கடலில் கண் செலுத்தி விரைகின்றன. மற்றும் பல கட்டுமரங்கள், தோணிகள் நெய்தலியை, இரக்கத் தோடு நெருங்குகின்றன. நெய்தலி : (கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றுடன் கட்டு மரத்தில் எழுந்து நிற்கிறாள். அவள் கூந்தல் அவிழ்ந்து காற்றில் பறக்கிறது. அவள் இரு கைகளையும் மேல் தூக்கிப் பேசுகிறாள்) தென்புலமே! இன்றிலும் நூறாயிர மடங்கு பெரிதாயிருந்த தென்புலமே! உன் பெரும் பகுதியை உண்டு ஒழித்தது தண்ணீர்தான்! கடற்புனல்தான்! அத்தண்ணீருக்குத் தப்பி வந்த தென்புலத்தாரே, இந்நாள் மட்டும் உன்னைக் காத்து வந்தார்; வருகின்றார். இங்குள்ள பெருமக்கள் இனியும் காப்பர்! தெற்கினின்று வடக்கு நோக்கி நகரும் பெரும் புனற் கடல் வெள்ளத்தைத் தம் தோளால் எதிர்த்து, சாக்காட்டுக் குழியை நிரப்பிவரும் தமிழர் இவ்வுலகுக்குப் பெருந்தொண்டு செய்து வருகின்றார்கள். அன்று உயிருண்ண விரைந்த காவிரி வெள்ளத்தைத் தன் மார்பினால் வலியடக்கிப் பிறர்க்கு நலம் செய்தான் ஆட்டனத்தி. அவன் எனக்கும் இன்பத்தை அருளினான். அவன் அவளுக்கு! அவன் அன்பும் அவன் அழகும், அவன் திருமேனியும் அவளுக்கு! நாளைக்கு மக்களை ஒழித்துண்ணும் புனலில் நான் இன்றைக்கே என் காதலனைக் காணுகின்றேன்! இதோ புனலின் ஆழத்தில் அவன் உடல் என் மெய்ப்பாட்டில் தோன்றுகிறது. அங்கு நான் அவனைத் தழுவுகின்றேன். அவன் அவளுக்கு! அவள் அவனுக்கு இவ்வுலகில்! நெய்தலி கட்டுமரத்திலிருந்த கல்லைக் கடலில் உதைத்துத் தள்ளுகிறாள். கல் தன்னிடமிருந்த கயிற்றால் நெய்தலியை இழுத்துக் கடலில் தள்ளுகிறது. ஆட்டனத்தி : ஆம்! நம் காதல் வாழ்வுக்காக, அவள் உயிர் நீத்தாள்! ஆற்றொணாத் துன்பம்! ஆதிமந்தி : என் உயிரை - என் அன்பை - என் மணவாளரை எனக் களிக்க அன்னை மருதி ஆவி நீத்தாள். அனைவரும் : வாழ்க நெய்தலி! காட்சி - 39 நெய்தலி என்னும் மருதிக்குக் கடற்கரையில் கல்நாட்டப் படுகிறது. சோழன் முதலிய அனைவரும், ஆட்டனத்தி - ஆதிமந்தி இருவரும்; தனக்கென வாழாதாள் மருதியின் பேர் வாழ்க!  இன்பக்கடல் காது நுகர் நாடகம் 1. பட்டு வீடு பட்டு : யார்? அரச : அரசப்பன். பட்டு : ஓ! வாருங்கள்; உட்காருங்கள் அத்தான். அரச : என்ன பட்டு, உன் குரலில் இத்தனை தளர்ச்சி? பட்டு : ஒன்றுமில்லை ... ... நமக்குள் ஏற்பட்டுள்ள தொடர்பு ஊர் அறிந்ததாகிவிட்டது. நம் திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டுமென என்று பெற்றோர் கவலை அடைந்திருக் கிறார்கள். அரச : நான்தான் சொன்னேனே, என் காதல் பித்துக்காக உன்னை யும், திரண்ட சொத்துக்காக அந்தத் தங்கத்தையும் (நான்) மணந்து கொள்ள வேண்டுமென்று! இதை இனிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டாமா, நீ உன் பெற்றோருக்கு? பட்டு : ஒப்புவார்களா... உம்... ஒப்புவார்கள்... ஒப்பித்தான் தீர வேண்டும் அவர்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் என்னைப் பறிகொடுத்தேன் உங்கட்கு! இப்போது இதுவும் சொல்வீர்கள். எதுவும் சொல்வீர்கள். நல்லது அத்தான்! ஆமாம், முதலில் எனக்கும் உங்கட்கும் திருமணமா? அல்லது தங்கத்திற்கும் தங்கட்குமா? அரச : தங்கத்தைத்தான் முதலில் மணந்து கொள்ள வேண்டும். பட்டு : அத்தான், கேளுங்கள், நான் பட்டு, முதலில் பட்டணிந்து தானே, பிறகு தங்கத்தையணிவார்கள்? அரச : இல்லையே, தங்கத்தைப் பெற்றால்தானே பட்டைப் பெற முடியும்? இதில் இன்னொன்னு. என்னென்று கேள். பட்டு : என்ன? அரச : தங்கம் என் தாய் மாமன் மகள். இருந்தாலும் உன் அக மொத்த தோழி. அவளையும் என்னையும் ஒன்றுபடுத்தும் தொல்லை என்னைச் சேர்ந்ததில்லை. பட்டு : ஐயோ அத்தான். தங்கம் அந்த இளவழகன் மேல் உயிரை வைத்திருக்கிறாள். தங்கத்தின் தந்தையோ, மகள் விருப்பத் திற்கு மாறாக நடப்பதில்லை. மேலும் நோயுற்றவர் தந்தை. தாயற்றவள் தங்கம். அரச : தங்கம் என் மைத்துனி, நினைவிருக்கிறதா? பட்டு : எனக்கு நினைவிருக்கிறது. அவளுக்கு நினைவிருக்க வேண்டும் அத்தான். அரச : என் கண்ணல்ல. நீ முயன்றால் அவளுக்கு அதை நினை வூட்டலாம். நீ முயன்றால் என்னோடு கூட்டலாம். மனமார முயற்சி செய். என் பங்கில் இரு. உன்னை நம்பி இருக்கிறேன். என்னை நீ நம்பு. பட்டு : நம்பியதின் பயனைத்தானே இதோ அறுவடை செய்கிறேன். இன்னும் நம்பவேண்டும். நம்புகிறேன். அரச : வருந்தாதே பட்டு. இனிமேலும் நீ வருந்தும்படி நான் நடக்க மாட்டேன்! முகத்தைக் காட்டு - என் கருத்தை முடி. என் கண்ணல்ல. (முத்தத்தின் ஒலி.)  2. தங்கம் வீடு பட்டு : தங்கம்! எங்கே தங்கம்? வேலைக்காரி : அவுங்கப்பாகிட்டே பேசிக்கிட்டு இருக்காங்க. அதோ வர்ராங்களே. தங்கம் : பாட்டு பல்லவி முல்லைமலர் கேட்டேன் இல்லை என்று சொல்லாமல் முடித்துக் கொள் என்றாரடி தோழி பட்டு (பேச்சு) ஓகோ அப்பாவா சொன்னார் தங்கம்? சொந்த மாமனைக் கட்டிக் கொள்ளச் சொல்லவில்லையா? தங்கம் (பாட்டு) துணை எடுப்பு கொல்லையில் வளர்ந்தாலும் புல்லில் மணமிராதே கொடுந்தொலைவில் அடர்ந்து படர்ந்து கிடந்த நறு (முல்லை) மாங் கொம்பைத் தழுவிக் கொண்டிருக்கும் - இந்த மலர்க்கொடியை அறுப்பார் உண்டா? பூங்காட்டில் உலவிடும் வண்டைப் - போ போ என்றார் என்ன பயன் கண்டார்? தூங்கா விளக்குக்கும் சுடருக்கும் ஏற்பட்ட தொடர்பை அறுப்பதாலே இடர்வந்து சேராதா! (முல்லை) சாகும்போது உன் தாய் சொல்லியபடி நீ உன் மாமனை மணந்து கொள்வதுதானே என்று சொன்னார் தந்தை. நான் சொன்னேன், மாமாவின் நடத்தையை என் தாய் இப்போது இருந்து பார்த்தால், அப்படிச் சொல்லமாட்டார்கள் என்றேன், என்றேனா, சரியம்மா சரியம்மா, நீ இளவழ கனையே மணந்து கொள்ளம்மா என்று முடித்து விட்டார் வாய் குளிர, மனம் குளிர. பட்டு : திருமணம்? தங்கம் : இன்னும் நாலைந்து நாளில். பட்டு : மிக்க மகிழ்ச்சி தங்கம், எனக்கு விடை கொடு. தங்கம் : ஏன் பட்டு? பட்டு : அம்மா விரைவில் வரச் சொன்னார்கள். நீ. படித்துக் கொண்டிரு. தங்கம் : சரி.  3. தங்கம் வீடு (காற்செருப்பின் நடை ஓசை) தங்கம் : வேலைக்காரி!, வெளியிற்போ, வெளியிற் போ. வேலை : ஏம்மா? தங்கம் : அவர் வருகிறார். போ போ. வேலை : வரலையம்மா. தங்கம் : அதே காலடி ஓசை. வேலை : ஏம்மா கவுந்து படுத்துக்கிட்டிங்க கட்டில்லே? தங்கம் : அதெல்லாம் கேளாதே, போ ... ... இளவழகன் : (நாற்காலி இழுக்கப்படும் ஓசை) (செம்பு விரலால் தெறிக்கப் படும் ஓசை) தங்கம் ! தங்கம்! (உடம்பில் கையால் தட்டப்படும் ஓசை) தூக்கமா? தங்கம் : இல்லை அத்தான் இல்லை. நீங்கள் வந்தவுடன் கையால் தொட்டு எழுப்புவதுதானே! என்மேல் கைபட்டால் ஒடிந்தா போகும். தாமரைத்தண்டு சடுக்கென்று ஒடிவது போல? இளவழகன் : இப்படி என்று தெரிந்தால் தப்படிப்பதுபோல் சாத்தி யிருப்பேனே. அதுபோகட்டும் தங்கம், சேதியைச் சொல்லமாட்டேன் என்கிறாயே? தங்கம் : சொல்லத்தான் தொடங்குகிறேனே அத்தான். இளவழகன் : காயா? பழமா? தங்கம் : எப்படித் தெரிகிறது உங்கட்கு? இளவழகன் : உன் முகம் என்னமோ முந்தாநாள் பூத்த தாமரை மாதிரி இருக்கிறது. தங்கம் : அப்படியானால் கெட்ட செய்திதானே? ஆமாம், உங்களை நான் மணந்து கொள்ளக் கூடாதென்று அப்பா சொல்லிவிட்டார். இளவழகன் : ஆ. அப்படியா? தங்கம் : இல்லையில்லை! நல்ல செய்திதான். இளவழகன் : மெய்தானா தங்கம்? தங்கம் : மெய்தானா? என் முகம் முந்தாநாள் மலர்ந்த தாமரை போலிருப்பது? இளவழகன் : இந்தா, இன்று இதழ் விரித்த செந்தாமரை உன்முகம். j§f« : ‘khkid kzªJ bfhŸ»whah? என்றார் அப்பா. முடியாதப்பா என்றேன் நான். அம்மா சாகும்போது அப்படித் தானே சொன்னாள் என்றார். இப்போது அம்மா இருந்தால் அப்படிச் சொல்ல மாட்டார்கள் என்றேன். யாரை மணந்து கொள்ள நினைக்கிறாய் என்று கேட்டார். சொன்னேன் ... ... இளவழகன் : என்ன சொன்னாய்? தங்கம் : உங்கள் பேரை. இளவழகன் : எனக்கு இரண்டு பேர் உண்டு. எதைச் சொன்னாய் என்றால்? தங்கம் : சொன்னேன். அவர் தெரிந்து கொண்டார். அப்புறம் என்ன? இளவழகன் : அப்பாவிடம் நீ சொல்லியபடி சொல். சொல்லுகிறாயா இல்லையா? நான் போகிறேன். தங்கம் : இளவழகனை என்றேன். இளவழகன் : அப்படிச் சொல் காது குளிர - அதற்கு? தங்கம் : மனமார ஒப்பினார், சரி என்று செப்பினார். இதில் இன்னொரு மகிழ்ச்சிக்குரிய செய்தி. என்ன என்று கேளுங்கள். இளவழகன் : என்ன என்று வேறு கேட்க வேண்டும்! விரைவில் சொல்ல மாட்டாயா தங்கம்? தங்கம் : இன்னும் இரண்டு மூன்று நாட்களில் திருமணம்; ஏன் என்று கேளுங்கள். இளவழகன் : ஏன்? தங்கம் : அப்பாவுக்கு உடல் நலம் இல்லை. சீர்கேடு முற்றிக் கொண்டு வருகிறது. அத்தான். இன்றைக்கே மாப்பிள்ளை வீட்டார் அப்பாவைக் கண்டு பெண் கேட்டு, நாளையும் குறித்துவிட வேண்டும். விரைவில் போய் இதைச் சொல்லுங்கள். உங்கள் பெற்றோருக்கு. இளவழகன் : அப்படியானால், நான் விரைவில் வீட்டிற்குப் போகவா? தங்கம் : உம்; பின்னென்ன? இளவழகன் : சரி, போய் வருகிறேன். (நாற்காலி தள்ளப்படும் ஓசை) தங்கம் : இன்னும் சிறிதுநேரம் இருங்கள் அத்தான்; உட்காருங் கள். இளவழகன் : இருக்கவும் கூடாது, போகவும் கூடாது. தங்கம் : விரைவில் போனால்தான், அவர்களை விரைவில் அனுப்ப முடியும் என்கிறீர்களா? இளவழகன் : நானா சொன்னேன்? நீதானே தங்கம் சொன்னாய்! என் கரும்பல்ல, விடை கொடு, போய் வருகிறேன். 4. தங்கம் வீடு அரசப்பன் தந்தை: தே. செங்கேணி! ஐயா என்ன செய்கிறார்? வேலைக்காரி : ஆரு. தங்கம் அவுங்கப்பாதானே. அரசப்பன் தந்தை: ஆமாம். வேலைக்காரி : அவுங்களுக்குத்தான் உடம்பு நல்லால்லியே சும்மா வந்து வந்து தொல்லை குடுத்தா? அரசப்பன் தந்தை: சீ ஓடிப்போய் ஒங்க மச்சான் வந்திருக் காருண்ணு சொல்லு. வேலைக்காரி : ஐயா... ஐயா... தங்கத்தின் தந்தை: ஏன்? வேலைக்காரி : அரசப்பா அவுங்க அப்பா வந்திருக்காரு தூங்கறார்ண்ணு சொல்லிப்புடட்டுமா? தங்கத்தின் தந்தை: சீச்சி அனுப்புடி. அரசப்பன் தந்தை: எப்படி இருக்கிறது உடம்பு? தங்கத்தின் தந்தை: சீர்கேடு மிகுதியாகிறது. (இருமல் ஓசை) ஐந்தாந் தேதி தங்கத்தின் திருமணம் (இருமல்) இடையில் மூன்று நாள்தான் இருக்கிறது. (இருமல்) அரசப்பன் தந்தை: மாப்பிள்ளை? தங்கத்தின் தந்தை: இரிசப்பன் மகன் இளவழகன் (இருமல்) நல்ல பையன். (இருமல்) படித்த பையன். அரசப்பன் தந்தை: உரியவன் இருக்கையில் ஏன் அப்படி? தங்கத்தின் தந்தை: அல்ல அல்ல. (இருமல்) தங்கம் இளவழகனைக் கட்டிக் கொள்வேன் என்னும்போது? வருத்தப் படாதே இருந்து நடத்து நீ திருமணத்தை. (இருமல்) படுத்த படுக்கையை விட்டு என்னால் நகரமுடியாது. (இருமல்) அரசப்பன் தந்தை: நம் பையனுக்கு உங்கள் பெண்ணைக் கொடுப்பதால் சொத்து அயலில் போகாதே? தங்கத்தின் தந்தை: அதெல்லாம் எனக்குத் தெரியும். அரசப்பன் தந்தை: சரி. தங்கத்தின் தந்தை: கணக்கப்பிள்ளை இருக்கிறார். ஆட்கள் இருக் கிறார்கள். ஆக வேண்டியதைப் பார். தொடங்கு. போ ... ...  5. தங்கம் வீடு இளவழகன் : என்ன ஊன்றிப் படிக்கிறாய்? தங்கம் : வாருங்கள் அத்தான். நல்ல வேளை, என் மாமா இருக்கிறாரே அவர் எழுதுகிறார் காதற் கடிதம். படியுங்கள். இளவழகன் : செந்தாமரை மலர்க்கும் செவ்விதழ்க்கும் தேனுக்கும் நொந்தே கிடக்கும் நுவல் வண்டு வந்தால் வரவேற்ப துண்டா மலர்க்காடே? ஓர் சொல் தரவே நான் தந்தேன் இவ்வேடு மாமா வண்டு, மைத்துனியாகிய மலர்க்காட்டைக் கேட்கிறது. உன்னிடம் வந்தால் வா என்று வரவேற்பாயா? பதில் எழுது ஒரு பேச்சில் என்று வா என்று சொன்னால், தங்கம் உன் வாய் மலரா கசக்கும்? பதிலா எழுதுகிறாய்? படி தங்கம். தங்கம் : செந்தாமரைமலர்க்கும் செவ்விதழ்க்கும் தேனுக்கும் வந்தால் வரவேற்க ஒண்ணாது - செந்தேனை வீழ்த்துகின்ற தோட்டம் தோட்டக்காரன் மேன்மை யினை வாழ்த்து மணப் பந்தலுக்கு வா. இதை உங்கள் கையாலேயே அதோ இருக்கும் அவர் ஆளிடம் கொடுத்து அனுப்புங்கள் அத்தான். இளவழகன் : இதை எடுத்துப் போய்க் கொடப்பா. வேலைக்காரன் : நல்லதுங்க. தங்கம் : ஏன் அத்தான், விடிந்தால் திருமணமாயிற்றே. உடுப் பெல்லாம் தைத்தாகிவிட்டதா? இளவழகன் : விடிந்தாலா? இன்றிரவுதான் திருமணம். இன்றிரவு நாலு மணிக்கு. இன்னும் சட்டை தைத்து முடியவில்லை யாம். சட்டையில்லாவிட்டால் என்ன தங்கம்? பாட்டு அன்பிருந்தால் போதுமன்றோ அங்கரக்கா என்ன பயன்? தென்பழந் தமிழ்ச் சொல்லாளே தங்கமே தங்கம் உன் பழக்கம் பொன்னுடையாய் மேனி குலுங்கும். தங்கம் : நான் பாடட்டுமா? பாட்டு பொன்மெருகு மேனியன்றோ புழுதிபடக் கூடாதையா மன்னவன் போல் சட்டை போட்டுச் சிங்கமே சிங்கம் மணவறைக்கு வந்தாலே என் ஆசையும் பொங்கும். இளவழகன் : மெத்தச் சுவை தங்கம். நான் போகிறேன். வேலை இருக்கிறது. தங்கம் : சரி அத்தான்.  6. தங்கம் வீடு உறவு 1 : மூன்று மணி ஆகிறது. மேளக்காரர் நடையில் படுத்திருக் கிறாங்க. எழுப்புங்க. உறவு 2 : ஏன் முருகேசு, வாழ மரத்தெ கட்றது எப்போ? எழுந்திருப்பா. உறவு 3 : அடுப்ப மூட்றதுதானே, சமையல்காரரே. உறவு 4 : வரவேண்டிய பெரியவர்களுக்கு வண்டி அனுப்பியாச்சா? (இசை முழக்கம்)  7. பட்டு வீடு அரச : பட்டு, நீ திருமண வீட்டுக்குப் போகாதே. இங்கேயே இருந்து விடு. ஏன் என்றால், அங்கே கலவரம் ஏற்படும் பட்டு : என்ன? அரச : திருமண வேளையில் இளவழகன் இருக்கமாட்டான். பட்டு : ஏன்? அரச : அவனை அங்கில்லாமல் செய்துவிடுவேன் எப்படியாவது. பட்டு : உயிருக்குக் கெடுதி நேர்ந்துவிடக்கூடாது அத்தான். அரச : இல்லை இல்லை. மயக்க மருந்தைக் கொடுத்துக் கடற் பாலத்தின் அடியில் போட்டு வைத்துவிட எண்ணுகிறேன். பட்டு : இறந்து விட்டால்? அரச : இறக்க மாட்டான் பட்டு. வசம்பின் சாற்றையும் எலுமிச்சைச் சாற்றையும் கலந்து கொடுத்தால் உடனே மயக்கம் தீர்ந்து விடும். தாலி கட்டும் வேளை அவன் இல்லாவிட்டால் நான் தங்கத்திற்குத் தாலி கட்டி விடுவேன். அப்பாவும் அதுதான் சரி என்றார். இங்கேயே இரு. பட்டு : சரி.  8 . தெரு அரச : ராமு! காருக்கு எண்ணெய் ஊற்றியாயிற்றா? ராமு : ஆச்சிங்க. அரச : மாப்பிள்ளையைக் கூப்பிடு விரைவாக. ராமு : மாப்பிள்ளே. அரசப்பன் கூப்பிடறாரு. அரச : இளவழகரே, ஏறுங்கள் காரில், அந்தப் படவா இன்னும் தைக்கிறான் உடுப்பை, ஒருமுறை போட்டுப் பார்க்க வேண்டுமாம். உம், விடப்பா காரைக் கடற்கரை பக்கம், ஏறுங்கள், ஏறுங்கள், பும் பும், (கார் ஊதும் ஓசை) இளவழகன் : திருமணம் முடிப்பதென்றால், எவ்வளவு தொல்லை அரசப்பன்! அரச : அதை ஏன் கேட்கிறீர்கள் இளவழகரே! காலைச் சிற் றுண்டி யோடு சரி. இதுவரைக்கும் பச்சைத் தண்ணீரை வாயில் ஊற்றவில்லை. கேட்டால் கேளுங்கள். விட்டால் விடுங்கள். வானத்தின் கீழேயிருந்து சொல்லுகிறேன். என்னவோ சீமை இலந்தம் பழமாம், சென்னையி லிருந்துவந்தது. வாயிற் போடுங்கள் இதை. இளவழகன் : நன்றாயிருக்கிறது! (இச்சி என்று சப்பும் ஓசை) அரச : ராமு, மாப்பிள்ளையைக் கூப்பிடு இப்போது. ராமு : மயான காண்டந்தானா? அரச : இல்லை. மாலை வரைக்கும் மாப்பிள்ளைக்கு மழையும் வெய்யிலும் ஒன்றுதான். நிறுத்து காரை. இவனைத் தூக்கு. நடந்து போ. கடற்பாலத்தின் அடியில் கிடத்து. அப்படித்தான். இந்தா இந்தத் துணியால் மூடு. உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும். வா போகலாம். (பும்... பும்...)  9. தங்கம் வீடு ஐயர் : பொண்ணு மாப்பிள்ளைக்கு வதிராபரணம் ஆகட்டும். நாழிகை ஆகிறது. உறவு 1 : வாம்மா தங்கம், இப்படி வா. பொண்ணு தோழி ஆரு தைனாகி? உறவு 2 : அவத்தான் அயிலாண்டம். அதுகூடவா தெரியாது. உறவு 3 : சித்தப்பா, மாப்பிளே எங்கே சித்தப்பா? உறவு 4 : இங்கேதான் இருப்பான். நீ வெத்லே கட்டே பிரிச்சி பட்டி கட்டு. ஆரத்தெ கொண்டா. சந்தனம் கரை. இளவழகன் தாய் : ஆமாம், நம்ம பையன் இளவழகன் எங்கே? இளவழகன் தந்தை: இங்கேதான் இருப்பான். இளவழகன் தாய் : எங்கியும் பார்த்தேனே, இல்லியே. ஐயர் : பொண்ணு மாப்பிள்ளை வரணும், வாத்யம் வாத்யம்! இளவழகன் தந்தை: நிறுத்தப்பா வாத்யத்தை. பையன் எங்கே! உறவு 1 : ஏன் வீராசாமி, பையனே பாத்தியா. குப்பு சாமிக்குத் தெரியுமே. ஏன் குப்புசாமி, மாப்பிள்ளை எங்கே? உறவு : நான் பார்க்கவேல்லே. அதோ வராரே அரசப்பன்! அவரெ கேட்டா தெரியுமே. இளவழகன் தந்தை: என்னா அரசப்பா, இளவழகன் எங்கே யப்பா? ஐயர் : முகூர்த்த வேளை தப்பிடப்படாது சீக்கிரம். இளவழகன் தாய் : பிள்ளைய யாராவது எங்கேயாவது இட்டுப் போய்க் கொன்னுட்டாங்களோ என்னமோ தெரியலியே. அரச : நானும் இத்தனை நேரமாய் அலைந்து விட்டேன். இளவழகன் ஊரிலே இருக்கிறதாகத் தெரியவில்லை. இளவழகன் தந்தை : ஐயோ ஏன்? அரச : இளவழகன் ஒருத்தியை வைப்பாட்டியாய் வைத்துக் கொண்டிருந்தாராம். இளவழகன் தந்தை : ஐயோ, அப்படிப் பட்டவனல்லவே. அரச : கேளுங்கள். அவளும், அவனைப் பெற்றவர் களும் இளவழ கனை மடக்கி, நீ திருமணம் செய்துகொண்டால் நாங்கள் போகிற வழி என்ன என்று சண்டை போட்டார்களாம். அதன் மேல் இளவழகன் நான் தங்கத்தைத் திருமணம் செய்து கொள்ளவில்லை; உன்னையே நான் திருமணம் செய்து கொள்ளுகிறேன். என்று அந்த வைப்பாட்டியையும், வைப்பாட்டியின் உறவினரையும் கூட்டிக் கொண்டு, வெளி யூருக்குப் போய்விட்டாராம் என்று கேள்வி. இளவழகன் தந்தை : அடடா என்ன மாறுபாடு. உறவு 1 : பெரிய முட்டாத்தனமால்ல இருக்கு. உறவு 2 : அப்போ என்னா பண்றது. ஒண்ணும் கெட்டுப் புடலே. இதே இருக்கார் மலையாட்டம் அரசப் பன். இழுத்து வைத்து மணத்தை முடியுங்கள். உறவு 3 : ஆமாமாம் உறவு 2 : பெத்தவங்களே கேக்கணுமே! உறவு 1 : மாப்புள்ளையெப் பெத்தவங்க ஒத்துக்கறாங்க; அந்தாண்ட பாத்தா பொண்ணுக்கு ஒடையவங்க யாரு? அந்த மாப்பிள்ளையே பெத்தவங்க தானே? இது என்ன வெக்கக் கேடாக்குது. உறவு 2 : அது சரிதான். உறவு 3 : கொண்டா? உறவு 4 : மாப்பிள்ளையெ தலையிலே தண்ணியே ஊத்திகினு வரச்சொல்லு. அவ்வளவுதான். உறவு 5 : ஏன் ஐயரே, முகூர்த்த வேளை இன்னும் இருக்குதில்ல? ஐயர் : நல்லா இருக்குண்ணேன். மணி நாலுதானே ஆச்சி! இருக்கு! இருக்கு! உறவு 1 : பொண்ணு எங்கே? உறவு 2 : இதோ வருது. இட்டாங்க பொண்ணு மாப் பிள்ளையெ. உறவு 3 : பொண்ணு எங்கே? உறவு 4 : பொண்ணு காணலையே? உறவு 5 : உம் அங்கேதானிருக்கும். எங்கே பூடும்?  10. கடற்கரை பாட்டு தங்கம் : நிலவே நிலவே சிறிதும் இன்பம் இலையே வாழ்வில் ஏனிந்தத் துன்பம்? விலையிலா மாணிக்கந் தன்னை விலக்கினான் அன்றியும், தன்னை விரும்பென்று சொல்லுவான் என்னை! கடலே கடலே என் உயிரை விடலே தகுதி வாழ்வினி வீணே உடலும் உயிரும் அவன் என்றிருந்தேன்! படலாகுமோ இந்தத் தாழ்வு? கெடலானதே என்றன் வாழ்வு! பேச்சு கடலே! ஆழ்க்கடலே! உன் நடுவயிற்றில் என்னை அடக்கிக் கொள்! பட்டு : தங்கம்! தங்கம்! தங்கம் : ஆ, யார் பட்டா; பட்டு : ஆம் தங்கம், உன் மணவாளன் இதோ. தங்கம் : அத்தான்! இளவழகன் : கடலில் விழுந்து உயிர்விடவும் துணிந்தாயோ? தங்கம், எனக்கு மயக்க மருந்தைக் கொடுத்து இங்கே போட்டு விட்டுப் போய்விட்டான் அரசப்பன். வசம்பின் சாற்றை யும் எலுமிச்சஞ் சாற்றையும் தந்து என்னைக் காத்தவர் உன் தோழி பட்டு. பட்டு : என் அருகில் உட்கார்ந்து கொள். தங்கம் அருகில் வா. கடலில் வீழ்ந்து உயிர்விடவும் துணிந்தாய். தங்கம் : ஆம் அத்தான். துன்பக்கடலில் தொலைந்திருப்பேன். ஆயினும் இன்பக்கடலில் இதோ நீந்தி விளையாடு கின்றேன். பட்டு : நீங்கள் இங்கேயே இருங்கள்! நான் அந்தக் குற்றவாளி அரசப்பன் நிலையைப் பார்த்து வருகிறேன். இளவழகன் : பட்டு, கூடுமானால், இதே நேரத்தில் அரசப்பனை நீ மணந்துகொள்ள முயன்று பார். பட்டு : நல்லது, போகிறேன். 11. தங்கம் வீடு பாட்டு தங்கம் : ஒருமனப் பட்டதே திருமணம் ஆகும் உயிருடல் போலே இருவர் அன் பாலே (ஒரு) கருமணல் காட்டில், நீலவான் கூரை, வெண்ணிலாச் சந்தனப் பூச்சு, பெருங்கடல் முரசம் நலமெலாம் செய்யப் பேரின்ப வாழ்வுகண்டோம் நாம் (ஒரு) மக்கள் : தங்கமே, இளவழகே வாழ்க! தங்கம் : பட்டு மனம் முடிந்ததா உனக்கு? பட்டு : ஆம் தங்கம். மக்கள் : இரு மணமக்களும் வாழ்க.  தமிழ் தமிழ் நலம் சமையல் அளிக்கும் அறை அமுதளித்தாலும் அது தமிழ் அளிக்கும் பள்ளிக்கு - நிகராமா? - தம்பி இமைப்பொழு தேனும் அதைச் சுவைக்க மறுப்பதுவும் - சரியாமா? ஏட்டினில் ஔவைமூ தாட்டி அளித்த செல்வம் இந்த உலகம் பெறும் - மறந்தனையா? தம்பி, பாட்டில் பழந்த மிழும் பாரில் தமிழகமும் - உயர்ந்தனவாம். வார்ந்த தமிழ மூ வேந்தர் தமது புகழ் வாய்ந்த புறப்பொருளைக் காணாயோ! தம்பி, ஆர்ந்த தமிழ்ப் புலவர் அகப்பொருள் கண்டுநலம் - பூணாயோ! சொல்லால் குயில் பயிற்றும் தோகையர் இல்லறத்தால் கல்லா உலகுக்கக்கண் - ஈந்தாரே தம்பி, வல்லது தம் மொழிதான் என்றவரும் தமிழிற் - சேர்ந்தாரே.  சத்திமுத்தப் புலவர் 1 இடம் : மாளிகை, மன்னி (அரசி) அறை காலம் : வேனில், மாலை காட்சி உறுப்பினர் : பாண்டியன், பாண்டியன் மன்னி பாண்டியன் : மங்கையே மாளிகைக்கு நேர் வந்து நிற்கின்றது தேர் திரும்பிப் பார் வந்து சேர் இவ்வெயிலை யார் பொறுத்திருப் பார்? மன்னி : ஆம் அத்தான் வெப்பந்தணிக்கும் சோலை மாமரச் சாலை! மணமலர் மூலைக்கு மூலை! அதைவிட இங்கென்ன வேலை? அடடா வெயில் உரிக்கிறது தோலை! (புறப்படுகிறார்கள்.) பாண்டியன் : புறப்பட்டு விட்டாயா! கையோடு கை கோத்து மெய்யோடு மெய் சேர்த்து நடந்து வா! காத்து நிற்கும் தேரிலேறு பார்த்துப் பார்த்து (அணைத்து ஏற்றிவிடுகிறான்.) மன்னி : நீங்கள் ஏற என்ன தடை நசுங்கி விடாது என் துடை குதிரை தொடங்கட்டும் பெரு நடை பாகனுக்குக் கொடுங்கள் விடை பாட்டு பாண்டியன் : மனங்குளிர இளம் பரிதி நடம் பயில ஓட்டடா குளம் படியின் சதங்கை ஒலி ததும்ப இனி ஓட்டடா! நீட்டியதோர் சாட்டை நுனி காட்டி இனி ஓட்டடா! கூட்டம் நட மாட்டமது பார்த்தபடி ஓட்டடா! பாட்டு மன்னி : சாலை முடி வானவுடன் சோலையினைக் காணலாம்; மாலையில் உலாவி நலம் யாவுமினிப் பூணலாம். (தேர் செல்லுகிறது) 2 இடம் : சோலை காலம் : வேனில், காலை காட்சி உறுப்பினர் : பாண்டியன், பாண்டியன் மன்னி பாண்டியன் : பெண்ணே சோலையைக் காண நேர்ந்தது. தேர் வந்து சேர்ந்தது. தொல்லை தீர்ந்தது. உலவும் வேலை நம்மைச் சார்ந்தது! தென்றல் ஆர்ந்தது; அதில் மணம் ஊர்ந்தது; தெவிட்டாது பாடுவதில் அந்தத் தேன் சிட்டுத் தேர்ந்தது! மன்னி : தேடிக் கொண்டிருக்கும் மணிப் புறா! ஊடிக் கொண்டிருக்கும் அதன் பெட்டை வாடிக் கொண்டிருக்கும்! இரண்டுள் ளமும் ஒன்றையொன்று நாடிக் கொண்டிருக்கும்; பின் கூடிக் கொண்டிருக்கும்; கூடிக், கூட்டில் பாடிக் கொண்டிருக்கும்! அடடா குந்திய கிளியோ ஆடிக் கொண்டிருக்கும் அழகிய ஊஞ்சல்! (சிறிது விலகி) பாண்டியன் : காண்பாய் செவ்வாழையின் காய் கண்டு திறந்தது மந்தியின் வாய் மடிவிட்டுப் பிரிந்த அதன் சேய் அதோ உதிர்ந்தது சருகு மான் குட்டிக்குப் பாய் அது மடி சாய் என்று வேண்டத் தாய் பால் தரும் அதனிடம் போய்! மெல்ல நடந்து வரு வாய்! தாங்குமோ உன் கால் நோய்? (பின்னும் சிறிது விலகி) மன்னி : அ ஆ! மிகப் பெரிய குளம்? சுற்றிலும் புதர்ப் பூக்கள் என்ன வளம்? தாமரை இலைக் கம் பளம் அதன்மேல் நீர்முத்து வயிரமடித்த வளம்! வியப் படைகின்றது என் உளம்! (மற்றொருபுறம் போய்.) பாண்டியன் : வண்டுகள் இசையரங் காக்கியது ஊரை; அல்லியும் தாமரையும் அப்படியே மறைத்தது நீரை! துள்ளுமீன் அசைத்தது அவற்றின் வேரை. மன்னி : ஏன் அத்தான் தாமரை அரும்பா சாரை? அஞ்சுவதைப் பாருங்கள் அந்தத் தேரை! (நாரைகளைப் பார்த்து.) பாண்டியன் : பெண்ணே பார் நாரை நாரை நாரை! அந்த நரையின் தோற்றம் பார். வெண்ணிலவு மண்ணுலகுக் களித்த காணிக்கைபோல், பேணிக் கொள்வார்க்கும் காணற் கியலாது அதன் மாணிக்கக் கால்! மன்னி : ஆம், அத்தான் காலில் காணப்படும் செந்நிறத்திற்கு ஒப்பாக மாணிக்கத்தைக் கூறினீர்கள் அல்லவா? அதன் உடலை நான் சொல்லவா? வெண்ணிலவும் அதை வெல்லவா முடியும்? என்ன நல்அவா ஒன்றே ஒன்று! பாண்டியன் : நன்றே சொல் இன்றே! மன்னி : நாரையின் கூர்வாய் கண்டீர்களா அது எதுபோல் இருக்கிறது விண்டீர்களா? பாண்டியன் : கூர்வாய்க்குச் சிறந்த ஒப்பனை கூற மறந்தேனா! அறிவு துறந்தேனா! அல்லது நான் இறந்தேனா! மன்னி : அத்தான் அதன் கூர்வாய் காணும் போது எதைச் சொன்னால் தோது? கத்தரிக் கோல்போல் என்றால் ஏன் ஒவ் வாது? பாண்டியன் : ஏது முடி யாது? மன்னி : திரண்டு இருக்கிறது நாரையின் அலகு. பாண்டியன் : சப்பைக் கத்தரிக்கோலை இணை சொன்னால் ஏற்குமோ உலகு? பெண்ணே மாளிகை நண்ணுவோம் இதைப் பொறுமையுடன் எண்ணுவோம். (போகிறார்கள்.) 3 இடம் : புலவர் இல்லம்; சத்திமுத்தச் சிற்றூர் காலம் : காலை காட்சி உறுப்பினர் : சத்திமுத்தப் புலவர், அவர் மனைவி மனைவி : எதைக் கொண்டு அரிசி வாங்குகின்றது? அடுப்பில் பூனை தூங்குகின்றது. பெரிய பையன் கண்ணில் நீர் தேங்குகின்றது. கைப்பிள்ளை பாலுக்கு ஏங்குகின்றது. சொன்னால் உங்கள் முகம் சோங்குகின்றது. எப்படிச் சாவைத் தாங்குகின்றது. இப்படியா உங்கள் தமிழ் ஓங்குகின்றது? புலவர் : என் தந்தை தாய் தேடி வைத்த பொருள் ஒரு கோடி பசியால் வாடி என்னை நாடி என்மேல் பாடிப் புகழ்ந்த புலவர்க்கு அள்ளிக் கொடுத்தேன் ஓடி ஓடி. இன்று பசிக்குப் பருக உண்டா ஒரு துளி புளித்த காடி? நினைத்தால் தளர்கின்றது என் நாடி. மனைவி : நீங்கள் ஏன் அரசரிடம் போகக் கூடாது? நம் வறுமை ஏன் ஏகக் கூடாது? ஏன் சொல்லுகிறேன் எனில் என் மக்கள் உள்ளம் நோகக் கூடாது அதனால் நான் சாகக் கூடாது புலவர் : பசியானது துன்பக் கடல்! அதில் துடிக்கும் உன் உடல்! கொதிக்கும் மக்கள் குடல் எப்படி முடியும் இந்த நிலையில் உங்களை விட்டு வெளியில் புறப் படல்? மனைவி : வேறென்ன வழி? சரியல்லவா என் மொழி? செல்லா விடில் வருமே பழி. புலவர் : அண்டை வீட்டில் அரைப்படி அரிசி கைமாற்று வாங்கிப் பசி ஆற்று நாளைக்குக் கொடுத்து விடுவோம் நம்மிடம் ஏது ஏ மாற்று? மனைவி : வாங்கியாயிற்று நேற்று புலவர் : புலவர் வீட்டுக்காரி தர ஒப்புவாள் சென்று கேள் கூசலாகாது உன் தோள் பசியோ கடுக்கும் தேள் மனைவி : கேட்டாயிற்றே முந்தா நாள் புலவர் : மக்களைக் கட்டிப் பிடித்து அருகில் படுத்துப் போகும் உயிரைப் போகாது தடுத்துக் கொண்டிரு! கொடுத்துப் போக ஒன்று மில்லை, உங்களை வெறுங்கை யோடு விடுத்துப் போகிறேன். 4 இடம் : காட்டுவழி காலம் : மாலை காட்சி உறுப்பினர் : புலவர், மாடு மேய்க்கு சிறுவன் வழியில் பாட்டு புலவர் : படும் பாட்டை அறியாத பசிநோயே நெடுங் காட்டில் வந்து மூண்டாயே! எல்லாம் இருக்கின்ற திருநாடே இல்லாமை தீருமா இனிமேலே! புலவர் : ஆட்டுக்காரத் தம்பி! பையன் : ஏன் பாட்டுக்கார அண்ணா? புலவர் : எது நகரம்? பையன் : இது அகரம்! புலவர் : எது பாட்டை? பையன் : அதோ பேட்டை அடுத்த கள்ளிக் காட்டைத் தாண்டி ஓர் ஓட்டைப் பிள்ளையார் கோயில், அதன் சோட்டைப் பிடித்தால் அடையலாம் ஒரு மேட்டை அங்கிருந்து பார்த்தால் தெரியும். கோட்டை புலவர் : தம்பி நன்றி பையன் : ஒதுங்கிப் போங்க அதோ பன்றி! நடவுங்கள் கவலை இன்றி, பாட்டு புலவர் : நள்ளிருள் வந்ததுவோ - பெண்டு பிள்ளைகளின் நிலை எதுவோ? கொள்ளிநிகர் பசிநோயால் பறந்தாரோ - அவர் கொண்டதுயர் தாங்காமல் இறந்தாரோ! உள்ளதொரு பாண்டிநகர் அடைந்தேனே - நான் ஒருகாத எல்லை கடந்தேனே! தள்ளாடித் தள்ளாடி நடந்தேனே- நோய் தாங்காமல் இருகாலும் ஒடிந்தேனே! தேரடியில் இன்றிரவு கழிப்பேனே - இரவு சென்றவுடன் காலையில் விழிப்பேனே! பாராளும் பாண்டிமா நாட்டான் மேல் பாடியே என் வறுமை ஒழிப்பேனே. (தேரடியில் படுத்துக் கொள்ளுகிறார்.) 5 இடம் : பாண்டி மாநகர் காலம் : இரவு காட்சி உறுப்பினர் : புலவர், பாண்டியன், அமைச்சன். அரசன் : அமைச்சரே ஊரில் திருட்டு வஞ்சப் புரட்டுத் தீயவர்களின் உருட்டு நடக்கின்றனவா என்றறியும் பொருட்டுச் சுற்றி வருகின்றோம் இந்த இருட்டு வேளையிலும்! அமைச்சன் : அதனால்தானே இவ்வாறு துணிந்து இந்த மாற்றுடை அணிந்து பெருங்குரல் தணிந்து நகர்வலம் வருகின்றோம். அரசன் : தெற்குத் தெரு நீக்கி வடக்குத் தெரு நோக்கி மேற்கில் கருத்தைப் போக்கி வருகின்றோம். தேரோடும் தெருவே பாக்கி. அமைச்சன் : அரசே நாரை! நாரை! எப்பக்கத்து நீரை எண்ணி இந்நேரத்தில் தேரைக் கடந்து போகின்றது இந் நாரை? ஒரு குரல் : நாராய் நாராய் செங்கால் நாராய் பாண்டி : யாருடை குரல் பாராய் தேரடியிலிருந்து வருகின்றது நேராய் உற்றுக் கேட்போம் வாராய் எனக்குத் தோன்றுகிறது அகவற் சீராய் ஒரு குரல் : பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்! பாண்டி : அடடா பெற்றேன் கூர்வாய்க்கு உவமை கற்றேன் இன்பம் உற்றேன்! ஒரு குரல் : நீயும் உன் மனைவியும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக் கேகுவிராயின் எம் மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனை சுவர்க் கூரைக் கனைகுரற் பல்லிபாடு பார்த் திருக்கும் என் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீ இப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே பாண்டி : அமைச்சே! பனங்கிழங்கு பிளந்தது போன்றிருக்கிறது நாரையின் கூர்வாய் என்பதற்கு.பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னபவளக்கூர்வாய் என்றார். அமைச் : மற்றும் அச்செய்யுளின் பொருளை உணர்ந்தீரா? பறந்து சென்ற நாரையைத் தம்மனைவிக்குத் தூதுவிடுகின்றார். எப்படி? பாண்டி : நாரையே, நீயும் உன் மனைவியும் தெற்கிலுள்ள கன்னியா குமரியுள் மூழ்கி வடதிசைக்குச் செல்வீராயின், அங்கே சத்தி முத்தம் என்னும் எங்கள் ஊரில் தங்கி என் மனைவியிடம் என் நிலைமைக் கூறுவாய் என்கிறார். அமைச் : தம் மனைவி அங்கு என்ன நிலையில் இருப்பாளாம் என்றால், நனைந்த சுவருள்ள கூரையில் இருக்கும் பல்லி, தன் கணவன் வந்து விடுவான் என்று கூறுவதை எதிர் பார்த்திருப்பாளாம். அப்படிப்பட்டவளிடம் நாரை என்ன சொல்லவேண்டுமாம்! பாண்டியன் ஆளும் மதுரையில் ஆடை யில்லாமல் குளிர்காற்றில் மெலிந்து, கையால் உடம்பைப் பொத்திக்கொண்டு, காலை உடலால் தழுவிப் பெட்டியில் அடைந்த பாம்பு போல் மூச்சுவிடும் ஏழையான உன் கணவனைக் கண்டேன் என்று கூறவேண்டுமாம்; என்னே வறுமையின் கொடுமை, என்னே அரும் புலவரின் இரங்கத் தக்க நிலை! நாழிகையாகிறது. அவரை அழைப்போம்! பாண்டி : குறட்டை விடுகிறார்; எழுப்பலாகாது. இதோ என் போர்வை யால் அவர் உடம்பைப் போர்த்து விடுகிறேன். போவோம். விடியட்டும். காவற்காரர்களை அனுப்பி அழைத்துக் கொள்வோம். பாண்டியன் பள்ளியறை மன்னன் : இருள் மடிந்தது கூவும் சேவல் கழுத்தோ ஒடிந்தது கதிரொளி எங்கும் படிந்தது அரசி : இரவு நான் தூங்கியபின் வந்தீர்கள் போலும் வழிபார்த்திருந்தன என் இருவிழி வேலும்! உலாவி அலுத்தன என் இரு காலும்! துவண்டு போயிற்று என் இடை நூலும் ஆறிப் போயிற்றுப் பாலும் அழகு குன்றின முப்பழத் தோலும் வாடின கட்டிலில் மலர்வகை நாலும் கண்விழிக்க எவ்வாறு ஏலும் மேலும்! மேலும்!! மன்னன் : அதை விடு காது கொடு கருத் தொடு! ஒரு புலவர் ஊரின் நடு உத விடுகின்ற கவிதைத் தேனைச் செவிமடு நுகர்ந்து மனம் நிறை படு நாராய் நாராய் ... ... ... ... ... ... ... எனுமே என்றார்! அரசி : பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன ஆ! என்ன அணி மறக்க முடியாத கவிதைப் பணி வந்திருக்கிறாரா அப்புலவர் மணி? மன்னன் : விரைவில் வர அழைப்போம் அவர் வரவால் உயிர் தழைப்போம் அவருக்குப் பெருந்தொண் டிழைப்போம் நாம் பிழைப்போம் பாண்டியன் மன்றம் பாண்டி : வேவுக்காரரே இரவில் நகரைச் சுற்றிச் சுற்றிக் கால் நொந்தேன். தேரடி அருகில் வந்தேன் என் போர்வை காணாமற் போகவே உள்ளம் நைந்தேன் கள்ளனைத்தேட உமக்குக் கட்டளை தந்தேன் வேவு : அரசே போர்வையின் அடையாளம் இன்னபடி என்றால் சொன்னபடி செய்வோம்! பாண்டி : இழை அனைத்தும் பொன்னே அதன் நிறம் மின்னே முத்துத் தொங்கும் முன்னே! அதன் அழகு என்னே! என்னே! வேவு : இன்னே செல்கின்றோம் எங்கள் மன்னே பாண்டி : ஒற்றை மட்டும் நீ மறந்து விடாதே கள்ளன் அகப்பட்டால் விடாதே ஆயினும் அவனுக்குத் தொல்லை கொடாதே ஐயோ ஏதும் அடாதே பேசப் படாதே வேவு : அரசே மறவேன் உண்ணும் ஊணை மறப்பேனா தங்கள் ஆணை செய்யேன் சிறிதும் கோணை அரசன் : ஏன் சுணக்கம்? வேவு : அரசே வணக்கம் (போகிறார்கள்) புலவர் : பன்னாடை போன்ற என்னாடை கண்டிந்தப் பொன்னாடை போர்த்தவர் எவர்! இந்தா துணி இதை அணி என்றார் என் பசிப் பிணி சிறிது தணி என்கிறாரா இல்லையே! வறுமை தனக் குரியவில்லை எடுத்து வாட்டியும் என்னுயிர் பிரியவில்லை என் குடும்ப நிலை தெரியவில்லை அரசனிடம் போகவழி புரியவில்லை (எதிரில் வருவோனைப் பார்த்து.) என்ன! அவன் ஏன் பார்க்கிறான் என்னை உற்று வேறு வேலை அற்று என்மேல் அவனுக் கென்ன பற்று அவன் தலைப்பாகையோ இருபது சுற்று மீசையோ முருங்கைக்காய் நெற்று நானும் நிற்கிறேன் சற்று வேவு : யார்! வை! இது அரசர் போர்வை என்ன செய்யும் உன் பார்வை? கேள் அரசனின் தீர்வை: இப்படிக் காலை நேர் வை என்ன உன் முகத்தில் வேர்வை? புலவர் : விடிந்தது. கிடந்தது என்மேல் இப்போர்வை இது மெய் என் வாயில் வராது பொய் தலையைக் கொய் வேறேது செய்யினும் செய் வேவு : வாய்ப் பேச்சுத்தான் நெய் நடத்தை என்னவோ நொய் அரசர் மன்னித்தால் உய் இல்லாவிடில் உன் உயிரைக் கொலைக் களத்தில் பெய் நட. பாண்டியன் மன்று அரசர் : நீர் இருப்பது எந்த நத்தம்? புலவர் : சத்தி முத்தம் அரசர் : உம் தொழிலா அயலார் உடைமையை நாடுவது? புலவர் : இல்லை பாடுவது? அரசர் : போர்வை ஏது? புலவர் : தெரி யாது நான் விழித்த போது கிடந்தது என் மீது அரசர் : அமைச்சரே இவரைத் தனிச் சிறையில் தள்ள வேண்டும் அமைச்சர் : அரசே ஏன் பதட்டம் கொள்ள வேண்டும் கடுமொழி ஏன் விள்ள வேண்டும் ஆராயாது ஏன் துள்ள வேண்டும்? அரசர் : புலவரே நீர் அடைய வேண்டுவது சிறை புலவர் : எனக்கா சிறை என்ன முறை நீரா ஓர் இறை ஆய்ந்தோய்ந்து பாராதது உம் குறை அரசர் : சிறைக்குத்தான் போக வேண்டும் ஏன் என்னை நோக வேண்டும்? புலவர் : இப்படியா நான் சாக வேண்டும்? அரசர் : தீர்ப்பு முடி வானது புலவர் : ஏனது? அரசர் : என் உரிமை எங்கே போனது? புலவர் : செய்தறியேனே நானது அரசர் : அமைச்சரே சிறைப்படுத்துவீர் சென்று அமைச் : நன்று அரண்மனை காவல் : புலவரே இதுதான் நீர் இருக்க வேண்டிய அறை புலவர் : இதுவா சிறை? காவல் : ஆம் போம் புலவர் : போகின்றோம் நாம் (சுற்று முற்றும் பார்த்து) பொன்னால் தட்டு முட்டு திரையெல்லாம் பட்டு கேட்கும் பாட்டெல்லாம் புதிய மெட்டு முரசின் கொட்டு இதை விட்டு இருபுறம் சென்றால் தங்கத் தட்டு அதில் மணிகள் இட்டு, காட்டி வைத்துள்ளார் ப கட்டு தூண்களெல்லாம் மின் வெட்டு அவற்றின் மேல் பறப்பன போலும் சிட்டு! சிறையில் இருக்க வேண்டியது பொத்து விளக்கு இங்குள்ளனவோ பத்துவிளக்கு அனைத்தும் கொத்து விளக்கு நடுவில் தரையில் தங்கக் குத்துவிளக்கு சிறையில் தருவது தரை மட்டில் இது தங்கக் கட்டில் அருகில் பலவகை வட்டில் பாவை ஆடும் தொட்டில் இங்கில்லை செத்தைப் படுக்கை இங்கிருப்பது பஞ்சு மெத்தைப் படுக்கை இங்கு ஏசலும் வசைகள் பேசலும் மொய்க்கும் ஈசலும் இல்லை, பொன் னூசலும் மணம் வீசலும் காணக்கண் கூசலும் உள்ளன. காவல் : (வந்து) புலவரே இதோ சோறும் மிளகின் சாறும் கறிகள் பதி னாறும் அள் ளுறும் பண்ணியங்கள் வேறும் உள்ளன. பசி யாறும் இன்னும் வேண்டுவன கூறும் புலவர் : குறுக்கே ஒரு சொல் கேட்டு விடுங்கள்; என் மனைவி மக்களையும் இச்சிறையில் போட்டு விடுங்கள் காவல் : சிரிப்புக்கு வித்து உங்கள் எத்து! பொறுங்கள் நாள் பத்து அரசர் வருவார் ஒத்து புலவர் : போய் வருவீர் நான் சாப்பிடுகின்றேன் பிறகு கூப்பிடுகின்றேன் மாளிகை மன்னன் : பணியாளர்களே சத்திமுத்தம் செல்லுங்கள் இப்பொருள்கள் புலவர் கொடுத்தார் என்று புலவர் மனைவியிடம் போய்ச் சொல்லுங்கள் வழியில் திருடர் வந்தால் அவர்களை வெல்லுங்கள் பணியாள் : அப்படியே அரசே! நடவுங்கள் அரசர் : பொழுதோடு இடையில் காட்டைக் கடவுங்கள் பணியாள் : அரசே கும்பிடுகின்றோம். தங்கள் பேச்சை நம்பிடுகின்றோம். பணியாள் : பாகனே! யானையை ஓட்டு அடே வண்டியைப் பூட்டு உன் நடையை நீட்டு. தலையில் மூட்டையைப் போட்டு சில்லரைச் சாமான்களையெல்லாம் கூட்டு கத்தியைத் தீட்டு உறையில் போட்டு இடையில் கட்டிக் காட்டு நடவுங்கள் என் சொல் கேட்டு பார்த்து நடவுங்கள் உளை சுமையைத் தடுக்கிறது பார் கிளை அவிழ்கின்றது பார் வண்டிமாட்டின் தளை இறுகட்டுமே குரல் வளை வரிசையாய் ஓட்டுங்கள் குதிரை களை ஆர் தம்பி நில் சத்திமுத்தம் இன்னும் எத்தனை கல்? தெரிந்தால் சொல்? இது என்ன புல் தம்பி : இல்லை அது நெல் சத்தி முத்தத்திற்கு அந்த வாய்க்காலைத் தாண்டிச் செல் பணியாள் : ஏனையா சத்திமுத்தப் புலவர் வீடு எங்கே உண்டு? அவருடைய பெண்டு இருந்தால் கண்டு புலவர் கொடுத்ததாக விண்டு இவைகளைக் கொண்டு சேர்ப்பதுஎம் தொண்டு தம்பி : ஐயா, அதோ தெரிகிறதே மச்சு அதன் அண்டையில் இருக்கிற குச்சு பணியாள் : புலவர் வீடு பூட்டியிருக்கிறதே உள் கொக்கி மாட்டியிருக்கிறதே தம்பி : தட்டு ஒலி : லொட்டு லொட்டு தம்பி : அவர்கள் இருப்பது அந்தக் கட்டு பணியாள் : உம்! கையிலே கிடையாது ஒரு துட்டு இதில் அவர்கட்கு முன் கட்டு பின் கட்டு படிக் கட்டு அதை மட்டு விடு! அந்த மட்டு பணியாள் : அம்மை அம்மை அம்மை பிள்ளை : அம்மா! அழைக்கின்றார்கள் உம்மை புலவர் மனைவி: யார் அழைப்பார் நம்மை பணியாள் : திறவுங்கள் தாளை பு.மனைவி : காசில்லாத வேளை பணியாள் : பார்த்துப் பேசுங்கள் ஆளை பு.மனைவி : உங்கள் கடனைத் தீர்க்கின்றேன் நாளை பணியாள் : கேளுங்கள் எம் சொல்லை பு.மனைவி : இப்போது காசு கையில் இல்லை பணியாள் : இதென்ன தொல்லை புலவர் எம்மை விடுத்தார் பு.மனைவி : ஓகோ என்ன கொடுத்தார் பணியாள் : மாணிக்கச் சுட்டி காப்புக் கொலுசு கெட்டி காலுக்கு மெட்டி மற்றும் நகைகள் வைக்கப் பெட்டி வெள்ளிச் சட்டி பழத்தித்திப்புத் தொட்டி தங்கக் கட்டி யானைக் குட்டி மிக நீளம் அம்மா இந்தப் பட்டி பு.மனைவி : மெய்யா ஐயா? பணியாள் : ஐயையோ பொய்யா? பு.மனைவி : உடை! பணியாள் : என்ன தடை? ஒரு கடை அப்படியே! நூல் ஒரு விரு விரற் கடை தங்கக் கெண்டை எடைக் கெடை பு. மனைவி : அப்படியானால் முன்னே கூரையின் ஓலையை நீக்கிப் போடுங்கள் ஒரு சேலையை பணியாள் : போட்டோம் எடுத்துக் கொண்டீர்களா? பு.மனைவி : ஆம், உடுத்துக் கொண்டோம் திறந்தேன், உள்ளே வாருங்கள். பணியாள் : நிறையப் பொருள் பாருங்கள் இதோ மூட்டை சம்பா நெற் கோட்டை காணுங்கள் பெட்டிகளின் நீட்டை அவிழ்த்து விடுகின்றோம் மாட்டை இனிப் பெரிதாகக் கட்டுங்கள் வீட்டை பு. மனைவி : ஆம் வெறும் ஓட்டை என்ன என்பது இது வரைக்கும் பட்ட பாட்டை! பணியாள் : அடைய வேண்டியது எங்கள் நாட்டை இல்லாவிட்டால் அரசர் கிழித்து விடுவார் எங்கள் சீட்டை பொழுதொடு திரும்பாவிடில் திருடரின் வேட்டை அதுவுமின்றிக் கொடியது போகும் பாட்டை பெரிதான வேலங் காட்டைக் கடந்தேற வேண்டும் பெரிய மேட்டை பு.மனைவி : கேட்க மறந்தேன் இந் நேரம் அவர் சென்றது போன வாரம் இது அயலார்க்கு இளக் காரம் அவர்க்கும் இல்லை நெஞ்சில் ஈரம் சொன்னால் என் மேல் காரம் பணியாள் : ஆடிப் பூரம் கழித்தால் அங்குத் திரு விழா ஆற்றின் ஓரம் பு.மனைவி : அப்படியானால் எது அவர் வருநாள்? பணியாள் : இப்போது திருநாள் அதன் பின் ஒருநாள் அல்லது இருநாள் பு.மனைவி : எல்லாம் தந்தார் அவரும் வந்தார் என்றால் நொந்துஆர் பேசுவார்? பணியாள் : அவரிடம் சொல்லுகின்றோம் இப்போதே செல்லுகின்றோம் பு.மனைவி : சாப்பாடாகிவிடும் ஒரு நொடி பாப்பா ஒரு படி போட்டு வடி பிட்டுக்கு மா இடி இதென்ன பாப்பா மிளகாய் நெடி! விரைவில் வேலையை முடி பணியாள் : எதற்கம்மா இது வேறு இருக்கிறதம்மா கட்டுச் சோறு இந்தப் பொழுது போய்விடும் ஒருவாறு பு.மனைவி : ஆய்விட்டதே பணியாள் : பொழுது போய்விட்டதே பு.மனைவி : தட்டி நடப்பதற்கல்ல நான் சொல்வது பணியாள் : நல்லது அரண்மனை அரசி : அத்தான் புலவரை அனுப்பி விடலா காதா? அரசன் : நான் அவருக்குச் செய்வது தீதா? என் நோக்கம் தெரிவது இப் போதா? குறை சொல்வது என் மீதா? அரசி : வளையிலிருக்கும் நண்டு போல, அவரைக் கண்டு மகிழ, வீட்டுக்கும் தெருவுக்கும் நடந்து கொண்டு இருப்பாளே அவர் பெண்டு அன்றியும் குண்டு விளையாடும் பிள்ளைகள் அவருக்கு உண்டு! அப்பாவைக் காண அவர் வண்டு விழிகள் வருந்துமே ம ருண்டு அரசன் : கண்மணி கேள் புலவர்க்கு வீடுகட்ட ஆள் அனுப்பினேன் முப்பதா நாள் அரசி : ஓகோ குடிசையாய் இருக்கப் படா தென்று ஆட்கள் சென்று மாடி வீடு ஒன்று கட்டச் செய்தீர்களா? நன்று அத்தான் அவர் இனி ஏழை அன்று புலவர் நின்று தின்றாலும் அழியாது அவர்பெற்ற செல்வக் குன்று ஒரு பாட்டினால் அவர் தம் வறுமையைக் கொன்று புகழ் நாட்டினார் புலவரை வென்று அவரைத் தலைவராக்கிவிட்டார் புலவர் மன்று அரசன் : பெண்ணே! புலவரில் அவர் உயர்ந்த இனம் அரசி : அவர் முனம் சென்று காண விழைகின்றது என் மனம் அரசன் : சரி. அவரைக் கண்டவுடன் மேலுக்குக் காட்டுவேன் சினம் அதற்காக நீ வருந்தினால் அது தெரியாத் தனம் அரசி : வருந்தவில்லை உண் மையிலே அரசர் : அப்படியானால் வா மயிலே சிறை அரசர் : பாவலரே புலவர் : ஏன் காவலரே! அரசர் : என்ன வேண்டியது? புலவர் : மன்னவா, என்னை வறுமை தாண்டியது பெண்டு பிள்ளைகளைக் காணும் அவா தூண்டியது அதனால் மனத்தில் துன்பம் ஈண்டியது அரசர் : நீர் செய்தது புலவரே கொட்டம் ஓராண்டு சிறையிருக்க வேண்டியது சட்டம் சிறிது தளர்த்தியது என் திட்டம் இதற்காக உம் பேச்சோ ப தட்டம் என் ஆட்சியை என்ன நினைக்கும் இந்த மா வட்டம் புலவர் : பார்க்க விரும்புகிறேன் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன் இரக்கமுள்ள மன்னவா அப்போது தான் தீரும் என்னவா. அரசர் : ஆரடா பல்லக்குப் போக்கி! இவரை இவர் ஊர் நோக்கி, பல்லக்கில் வைத்துத் தூக்கி சென்று இவர் அவாவை நீக்கி வாருங்கள் அரசர் : புலவரே, திரும்ப வேண்டும் உடனே புலவர் : அது என் கடனே வழியில் புலவர் : பல்லக்குத் தூக்கிகளே இதுதான் சத்தி முத்தத் தெரு தெரியவில்லையே வீட்டின் உரு! எதிரில் குவிந்திருக்குமோ மாட்டின் எரு முளைத்திருக்குமே மரு ஒரு குறியுமில்லையே இதேது மாடி அதன்மேல் கண்ணாடிக் கூரை மூடி அங்கு ஆடிப் பலர் பாடி இருக்கிறார்கள் தோடி பாப்பா : (மாடியிலிருந்து) அப்பா வாருங்கள் ஓடி! அம்மா! முகம் வாடி வருகிறார்கள் அப்பா நமைத் தேடி! மனைவி : போடி பாப்பா போடி அழைத்து வாடி புலவர் : (உள்ளே வந்து) வீடு ஏது மனைவி : நீங்கள் செய்த தோது எனக்கா புரி யாது? புலவர் : என்னடி மாது புதுமை யாது? எனக்குத் தெரி யாது மனைவி : ஆட்கள் வந்து கட்டிக் கொடுத்தார்கள் அதற்கு முன்பே செல்வம் கொட்டிக் கொடுத்தார்கள் தங்கப் பாளம் வெட்டிக் கொடுத்தார்கள் புலவர் : பாண்டியனூர் நாடினேன் மாளிகை தேடினேன் தேரடியில் படுத்துப் பாடினேன் பிறகு கண் மூடினேன் விடியப் போர்வை இருந்தது மகிழ்ச்சி கூடினேன் திருடன் என்று பிடித்தார் வாடினேன் மனைவி : பிறகு? புலவர் : அரசர் உன்னைச் சிறைப்படுத்தினேன் என்றார் பல்லையே பல்லால் மென்றார் கண்ணால் என்னைத் தின்றார் பிறகு சிரித்து நின்றார் மனைவி : அரசர் உங்கப் புடைத்தார்? புலவர் : இல்லை சிறையில் அடைத்தார் என் பசியின் எலும்பை உடைத்தார் பதினாறு வகைக் கறி சோறு படைத்தார் அப்ப வகையை என் வாயில் அடைத்தார் என் அச்சம் துடைத்தார் மனைவி : அப்படியா? புலவர் : இப்படியே கழிந்தது பகலிரவு - நேரம் தீர்ந்தது நாலு வாரம் மனைவி : பின்பு? புலவர் : அரசர் என்னைக் கண்டார் போக விடைகேட்டேன் ஒப்புக் கொண்டார் ஆனால் உடனே திரும்ப வேண்டும் என்று விண்டார் மனைவி : ஐயையோ கோலமிட்டேன் மெழுகி எண்ணெய் இட்டு முழுகி என்மேல் அன்பு ஒழுகி தங்கி இராவிடல் என் மனம் கெட்டு விடாதா அழுகி? பாப்பா : அப்பா நீங்கள் போகாவிட்டால் தப்பா? மனைவி : மேலும் வானத்தை மூட்டி யிருக்கிறது மப்பா வழியில் நனைவதில் தித் திப்பா? புலவர் : அட சுப்பா சின் னப்பா ஏன் குப்பா இப்போது போக வேண்டியது கண்டிப்பா? குப்பன் : போகலாம் விடிந்தால் புலவர் : அரசர் கடிந்தால்? குப்பன் : எங்கள் கால் ஒடிந்தால் நாங்கள் மடிந்தால் முடிந்தால் தானே ஐயா?! புலவர் : சரி போவது நாளை - ஏனென்றால் வருத்திக் கொள்ளக்கூடாது தோளை! புலவர் : ஏன் அழுகிறாய் பாப்பா? கையை உறுத்துவது தங்கக் காப்பா? பாப்பா : இவ்வளவு கெட்டியா போப்பா? புலவர் : பொன்னாச்சி, சின்ன பிள்ளை அழுகிறானே ஏன்? பொன் : முக்கனியும் தேன் அதைவிட்டு அவன்; மான் வேண்டும் என்றழுகின் றான் புலவர் : என்ன அதுபார் அந்த மூலை பொன் : ஆம். கல்லிழைத்த மாலை கழற்றி எறிந்தேன்! பழைய வேலை! புலவர் : ஏன் கணக்கப் பிள்ளை அந்தத் தங்கப் பெட்டியில் என்ன பழுது? மூன்றாவது வீட்டுக்காரன் இருக்கிறானே விழுது அவன் ஆயிரம் பொற்காசு கடன் கேட்கிறானே தொலை அழுது அந்தக் கல்விக் கழகத்திற்குப் பத்தாயிரம் கொடு தொழுது நாலாயிரமா செலவு இன்றைப் பொழுது கூட்டு முழுது விடாமல் எழுது கணக் : நம் ஆடு மந்தை மாடு சென்று காடு மேய்ந்து வீடு வந்து அடங்கக் கொட்டகை போடு என்றார் நம் மன்றாடு புலவர் : ஓ நல்ல ஏற் பாடு மேம் பாடு பெற ஆவன தேடு கணக் : என்ன பிற் பாடு புலவர் : நாடோறும் நம் யானை தின்னும் வெல்லப் பானை எத்தனை? அதனோடு சேர் தேனை வேளைக்கு இருமூட்டை அரிசி வைக்கச் சொல் ஓட்டு வானை கணக் : அது செல்வத்தில் அமிழ்கின்றது கவளத்தை உமிழ்கின்றது! புலவர் : ஏன்? அரிசியுடன் கலந்த தவிட்டாலோ? அல்லது தெவிட்டாலோ? குடி தாங்கி வருகிறான் குடி : வீட்டில் யார்? புலவர் : யார் நீர் உரைப் பீர்? குடி : கையில் கொடி தாங்கித் தலையில் முடிதாங்கி இந்தப் படிதாங்கி வாழும் மன்னரோ நீர்! புலவர் : நீர் யார் தடிதாங்கி குடி : தெரியாதா? நான்தான் குடிதாங்கி புலவர் : என்ன சேதி? குடி : உன் சொத்தில் என்ன மீதி? அதிலே பிரித்துக் கொடு பாதி அதுதான் நீதி புலவர் : நீ என் அப்பனுக்குப் பிறந்தாயா? குடி : நான் பங்காளி என்பதை மறந்தாயா? புலவர் : அவ்வளவு நீ சிறந்தாயா? குடி : நீ உறவைத் துறந்தாயா? அல்லது இருக்கிறாயா? இறந்தாயா? புலவர் : போ வெளியே குடி : அட எங் கிளியே கம்பங் களியே அட அச்சங் கொளியே மான மில்லையா துளியே இருந்தால் பிரி உடைமையை புலவர் : அடடா விளக்கி விட்டார் கடமையை என்னிடம் காட்டாதேடா உன் மடமையை ஓடிவிடு படுவாய் குடி : அட பயலே நீ கெடுவாய் (இருவருக்கும் சண்டை) புலவர் : இதென்ன என் கையோடு வந்துவிட்டது! இவன் தாடியா? இது இவன் முக மூடியா! இவனோர் கூத் தாடியா? (குடிதாங்கியே பாண்டியன் என்று அறிந்து) அப்படியா பாண்டிய மன்னரே அறியாமற் போனேன் முன்னரே அரசர் : உங்கட்குத் தொல்லை விளைக்க லானேன் தங்களின் நிலை நலந் தானே? (பாட்டு) புலவர் : வெறும்புற் கையு மரி தாங்கிள்ளை சோறும் என் வீட்டில் வரும் எறும்புக்கும் ஆபத மில்லை முன்னாள் என் இருங் கலியாம் குறும்பைத் தவிர்ந்த குடிதாங்கியைச் சென்று கூடிய பின் தெறும்புற் கொல் யானை கவளங் கொள்ளாமல் தெவிட்டியதே! அங்கும் என்னைக் காத்தீர்கள் இங்கும் செல்வம் சேர்த்தீர்கள் பாண்டி : புலவரே! நாராய் நாராய் என்ற அப்பாட்டுக்கு அளித்தேன் அத்தனை பொன்னையே! இப்பாட்டுக்கு அளித்தேன் நான் என்னையே!  கழைக் கூத்தியின் காதல் முன்னுரை விச்சுளி ஆட்டம் என்பதொன்று தமிழ் நூற்களில் காணப் படுகிறது. அது கழைக்கூத்தைச் சேர்ந்த ஓர் அருஞ்செயல். மக்கள் உடற்பருமனில் பன்மடங்கு சிறிதான ஒரு நெடுந்தறியில் எதிரிலிருந்து காண்பார்க்குத் தெரியாதவாறு ஒருவர் பதுங்குவதே விச்சுளியாடல் என்பது. சடையநாத வள்ளல், தொண்டைநாட்டுப் புழற்கோட்டத்து இருந்தவர்; இவர் பாண்டியன் வழிவந்தவர் என்பர். இவர்மேல் விச்சுளியாடவல்ல கழைக்கூத்தி ஒருத்தி காதல் கொண்டதை விளக்குவதான மாகுன்றனைய என்று தொடங்கும் பாடல் ஒன்று கேட்கப்படுகின்றது. சடையநாத வள்ளல் எவர் எதை வேண்டினும், இல்லை என்னாது கொடுக்கின்றவர். பகைவனால் அனுப்பப்பட்ட ஒருவன் சடையநாத வள்ளலிடம் வந்து, புகழ்ந்து பாடியபோது உமக்கு என்னவேண்டும் என்று கேட்க அதற்கவன் அரசி முதுகில் சோறு படைக்க வேண்டும் என்ன, அவ்வாறே அரசர், சூலுற்றிருந்த அரசி முதுகில் சோறிடச் செய்து உண்பித்தார். உண்ட அவன், தன் பகைவனால் ஒற்றறிய அனுப்பப்பட்டவன் எனத் தெரிந்து அவனைச் சிறையிலிட்டார் என்பர். இதுபற்றிச் சடையநாத வள்ளலைப் புகழும், சூலி முதுகிற் சுடச்சுடஅப் போதமைத்த பாலடிசில் தன்னைப் படைக்கும்கை என்ற ஒரு பாட்டும் கிடைக்கின்றது. இவைகளை அடிப்படையாய் வைத்துக் கட்டப்பட்டதே இக்கட்டடம். இது சுருக்கமாக, முன்னர் என்னால் எழுதி வெளியிடப் பட்டது; அதைச் சிறிது பெரிதுபடுத்தி எழுதினேன். 1951 - பாரதிதாசன் காட்சி - 1 இடம் : தொண்டைநாட்டுப்புழற்கோட்டம் சார்ந்த அப்பனூர்த் தோட்டக்காடு. காலம் : மாலை கதை உறுப்பினர் : முத்து நகை என்னும் கழைக்கூத்தி, அவள் தோழிமார், மன்னன் சடைய நாதன், அவன் அமைச்சன் முதலிய வர்கள். நிகழ்ச்சி : பேச்சும் விளையாட்டு முத்துநகை : பாருங்கள் அத்திப் பழக்குலை; அழகிய மாணிக்கத் தொங்கல்! முள்ளி : நம் கண்ணைப் பறிக்கிறது; நம்மால் பறிக்க முடியுமா அதை? பொன்னி : எட்டவில்லையானால் என் தோளின் மேல் ஏறு. (முள்ளி பொன்னியின் தோள்மேல் ஏறிப் பழக் குலைகளைப் பறித்துப் போடுகிறாள்) வள்ளி : (அத்திப் பழங்களை வாயில் தள்ளிக்கொண்டே!) முள்ளி உனக்கு மிகுந்த துன்பம். முத்துநகை : ஆமாம் வள்ளி, அவளுடைய துன்பம் உனக்கு இன்பம், பழம் பறித்துப் போட்டவள் இறங்கி வருமுன் பத்துஇருக்கும் நீ விழுங்கியவை. வள்ளி : ஐயையோ நான் உண்டவை ஏழெட்டுத்தான் இருக்கும். முள்ளி : அப்படியானால் நாலைந்து தான் மீதியிருக்கும் (முள்ளி இறங்கி வந்து மீதியுள்ள பழங்களை எண்ணுகிறாள்) பொன்னிக்கு ஒன்று. இந்தா (பொன்னி பெற்றுக் கொள்கிறாள்) வள்ளி : நான் ஒன்று எடுத்துக் கொள்ளுகிறேன். மீந்தவை மூன்று. அவை முத்துநகைக்கு (முத்துநகைக்குக் கொடுக்கிறாள் முள்ளி) முத்துநகை : துன்பப்பட்டுப் பறித்தவளுக்கு ஒன்று. சும்மா நின்ற எனக்கு மூன்று (வாங்க மறுக்கிறாள்) முள்ளி : இதிலென்ன துன்பம்? ஒன்று போதும் எனக்கு. முத்துந : எனக்கும் ஒன்று போதும் முள்ளி : சரி உனக்கும் ஒன்று. மீதி இரண்டு பழங்களை நான் குறிப்பிடுகிறபடி உன் கையாலேயே கொடு. ஒன்று யாப்புத் தவறாமல் பாப்புனையும் உன் வல்லமைக்கு. மற்றொன்று உன் கழைக்கூத்தின் திறமைக்கு. பொன்னி : நல்லபரிசு! பெற்றுக் கொள்ளேடி முத்துநகை? அறுபது அடி நீளத் தறி நட்டு, அதன் நுனியில் இருபது அடி நீள மூங்கில் வளை கட்டிப் பறை முழங்கி, ஊர் கூட்டி, ஆடச் சொன்னார்கள் உன்னை. என் கண்ணே, நீ காலுக்குச் சிறாய் மாட்டி, மேலுக்குக் கச்சை இறுக்கி, உடுக்கை போன்ற உன் இடுப்பு அசைய நடந்து சென்று அந்த நெடுந்தறி மேல் தலைகீழாக ஏறினை; வளைந்து கொடுக்கும் மூங்கில் நுனியை ஒரு கையால் பற்றினை. உன்னுடல் வானத்தில் தொங்கும் அத்திப் பழம்; கண் கவர்ந்த மாணிக்கத் தொங்கல். முள்ளி : உன் புகழ் உனக்குத் தெரியாது. அன்றைக்கு நம் அப்பனூர் அதிர்ந்தது, உன் ஆடல் கண்ட வியப்பால். வள்ளி : ஒன்றின் மேல் ஒன்றாகப் பத்துக் குடங்கள் அடுக்கி, மேற் குடத்தில் நீ நின்றாடிய பாங்கும். உடன்பாடிய தென் பாங்கும், பாட்டன் காலத்துப் பகைவரையும் உன்வீட்டின் வாயிலில் கொண்டு வந்து சேர்த்துவிட வில்லையா! (முத்துநகை, எதிரில் - தொலைவில் பார்வை செலுத்து கின்றாள்) முத்துநகை : அதோ பாருங்கள், திறந்த வெளியில் பறந்து வரும் குதிரைகளின் வரிசை, வில்லில் விடுபட்ட அம்புகள். முள்ளி : முத்துநகை! முத்துநகை! மன்னர் சடையநாதர்! அமைச்சர்! படைத்தலைவர்! உடற் காப்பாளர்! வருகின்றார்கள். நாம் மறைந்து கொள்வோம். (தோழிமார் மரங்களில் பதுங்கிக் கொள்கிறார்கள். முத்து நகை, அருகில் நீண்டு தாழ்ந்த ஆலின்கிளை மேல், அதன் விழுதைப் பற்றி ஏறிக் கொள்ளுகின்றாள். அரசன் சடைய நாதனை அவள் கண்கள் உற்று நோக்குகின்றன. முத்து நகை மறைந்திருக்கும் கிளையின் கீழாக மன்னனின் குதிரை செல்லுகிறது! முத்துநகை, மன்னனின் மணி முடியைத் தன் இரு கால்களால் கழற்றிக் கொள்கின்றாள். முடி பறிபோனதும் தெரியாமல் குதிரையை முடுக்கிக் கொண்டு செல்லுகின்றான் சடையநாதன்.) காட்சி - 2 இடம் : தொண்டைநாட்டுப்புழற்கோட்டத்தின் அரண்மனை வாயில். காலம் : மேற்படி கதை உறுப்பினர் : சடையநாதன்; அவனைச் சார்ந்த அமைச்சர் முதலியோர். நிகழ்ச்சி : மானக்கேடும் மனக்கொதிப்பும். அமைச்சர் : மணிமுடி எங்கே? அரசன் : (குதிரையை விட்டு இறங்கித் தன் தலையைத் தடவிப் பார்த்துத் திடுக்கிட்டு) வழியில் தவறி விழுந்ததா? என்ன மானக்கேடு! உடற்காப்பாளர் உடன்வந்தீர்கள்! உடற்கா : வழியில் தவறிவிழவில்லை. அரசன் : பொய். கடமை தவறியவர்கள் பேசும் பேச்சு; விரைவாக உணவை முடித்து வாருங்கள். உடற்கா : விடை தர வேண்டுகிறோம். உணவருந்துவதற்கல்ல. அரசன் : பசி வருத்தம் இருக்குமே! உடற்கா : கொல்லாது! (உடற்காப்பாளர்கள் தம் குதிரைகளில் பாய்ந்தேற அவை மான் விசை கொள்ளுகின்றன.) அரசன் : மணிமுடி மறைந்தது! பகைவர் கேட்டால் சிரிப்பார்கள். நான் வழியில் உறங்கவில்லை. என் உணர்வு மழுங்க வில்லை. அப்படியிருந்தும் தலையில் முடியில்லை. மறைந்தது தெரியவில்லை. என் பகைவரின் கை வரிசையா? அமைச் : உயிரை அல்லவா பறித்திருப்பார்கள் வேந்தே! அரசன் : எல்லைப் புறத்து விடுதியில் இறங்கினோம். சிறிது உறங்கினோம். எல்லைப்புற மக்களைப் பிறகு கண்டோம். விழிப்போடு இருங்கள் என்று விண்டோம், சிற்றுணவு உண்டோம். கழற்றி வைத்த மணிமுடியை எடுத்தணிந்து தானே குதிரை மேல் ஏறினேன். அமைச் : நினைவிருக்கிறது எனக்கு! படைத்தலைவர் எடுத்துக் கொடுத்தார். அதை உடற்காப்பாளர் துடைத்துக் கொடுத்தார். முடிபூண்டபடியே குதிரை மீது ஏறினீர்கள். மன்னன் : என்ன வியப்பு! மணிமுடி போனதை அறியாத நான் மாநிலம் ஆள்வதெப்படி? இன்று மணிமுடி பறிகொடுத்தேன். இதற்கு முன் என்னென்ன பறி கொடுத்தேனோ? இனி என்னென்ன பறி கொடுப்பேனோ? எனக்குப் பெரும்படை இருந்தென்ன, என் கண்மூடித் தனத்தின் அடிப்படை மீது? வல்லமையற்ற என் பகைவர்கள், என்திறமைக் குறைவால் வல்லமை அடைகிறார்கள். அமைச்சரே! என்ன எண்ணத்தில் ஆழ்ந்திருக்கின்றீர்? அமைச் : நம் குதிரைகள் ஒரு பெரிய ஆலின் அடிவழியாக வந்தன. மன்னன் : விழுது தடுத்தால் விழுந்திருக்கவும் கூடும் என்கிறீர். அப்படியானால் அப்போது நான் பஞ்சு மெத்தையிலா தூங்கிக் கொண்டிருந்தேன்? சிரிப்பு வருகிறது கொதிப்பையும் தாண்டிக் கொண்டு! அமைச் : நாம் அங்கே போகத்தான் வேண்டும். மன்னன் : பசித்துன்பம்... ஆம்... உயிரையா போக்கிவிடும்! (அரசன் குதிரை மேற் பாய்ந்தேறப் படைத்தலைவனும், அமைச்சனும் பின்பற்றக் குதிரைகள் விரைகின்றன.) காட்சி - 3 இடம் : அப்பனூர்த் தோட்டம் காடு. காலம் : மாலை கதை உறுப்பினர் : முத்துநகை, தோழிமார். நிகழ்ச்சி : அச்சமும் வியப்பும். முள்ளி : இந்தக் கிளைமேல்தானே ஏறி மறைந்தாள்! பொன்னி : ஏடீ முத்துநகை! (தோழிமார் முத்துநகைப் பேர் சொல்லிக் கூவி அழைக் கிறார்கள் பன்முறை) வள்ளி : அவள் இந்தக் கிளையில் ஏறியதைப் பார்த்தோம் நன்றாக! அதைவிட்டு அவள் இறங்கியிருந்தால் நமக்குத் தெரியாமலா போகும்? இங்குதானே இருந்தோம். (அவள் ஏறிய கிளையை அண்ணாந்து பார்த்தபடி அவளைக் கூவிக் கூவி அழைக்கிறார்கள் தோழிகள்) பொன்னி : நமக்குத் தெரியாமல் இறங்கி ஓடியிருப்பாள். வள்ளி : ஓடி மறைந்து கொண்டிருப்பாள், நம்மை ஏமாந்தவர் களாக்க. முள்ளி : இருக்கும். இருக்கும், முத்துநகை, நாழிகை ஆகிறது வீட்டுக்குப் போகிறோம் வந்துவிடு. (அனைவரும் சுற்று முற்றும் பார்க்கிறார்கள் முத்து நகை வருவாள் என்று) பொன்னி : முத்துநகை, வீட்டுக்குப் போகிறோம், வந்துவிடு இன்னும் விளையாடாதே... ... நாம் போகலாமா, நாம் போகலாமா வள்ளி, முள்ளி? முள்ளி : போகலாம். (மூவரும் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்கள். ஆலின் கிளை அசைகிறது மேலும் கீழுமாக, மூவரும் கிளையை வியப்புடன் பார்க்கிறார்கள்.) பொன்னி : கிளை ஆடுகிறது; காற்றால் அல்ல. முள்ளி : தானே ஆடவில்லை கிளை உந்தப்படுகிறது. கிளையில் அவளும் இல்லையே. வள்ளி : உந்தப்படுகிறது. யாரால்? அதெல்லாம் இல்லை. நீண்டு தாழ்ந்த கிளையைச் சிறிய காற்றும் கீழ்மேலாக அசைக்கும், போகலாம் வாருங்கள். (கிளையை நோக்கியபடியே வீடு செல்ல நாலடி எடுத்து வைக்கிறார்கள் தோழிகள். ஆலின் கிளையில் இலை தழைந்த ஒரு சிறு கிளை கல கலவென்று உலுக்கப் படுகிறது) வள்ளி : இதென்ன! எனக்கு அச்சமாயிருக்கிறது! பொன்னி : பேயா இருக்குமோ? முள்ளி : காணோமே ஒன்றையும்! வள்ளி : பேய் கண்ணுக்கா தெரியும்? முள்ளி : பின் எதற்குத் தெரியும்? வள்ளி : அதன் ஓசைதான் காதில் கேட்கும். முள்ளி : நம் குரல் அதற்குக் கேட்குமா? வள்ளி : கேட்கும். முள்ளி : அப்படியானால் கூப்பிடு. எங்கே எங்கள் முத்துநகை என்று கேட்டுப் பார்க்கலாம். பொன்னி : நீதான் கூப்பிட்டுக்கேள், நாங்கள் வீட்டுக்கு ஓடி விடுகிறோம். முள்ளி : பேயே, (ஏன் என்று ஒரு கீச்சுக் குரல் கேட்கிறது. மூவரும் அச்சத்தால் சிறிது தொலைவில் ஓடித் திரும்பிப் பார்க்கிறார்கள். மெல்ல மெல்ல மீண்டும் திரும்பி வருகிறார்கள்) முள்ளி : பேயே எங்கள் முத்துநகை எங்கே? (அவளை நான் விழுங்கிவிட்டேன் என்ற கீச்சுக் குரல் கேட்கிறது. ஐயையோ என்றும் மூவரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஓடாதீர்கள் ஓடாதீர்கள் நான் தான் முத்துநகை என்ற குரல் கேட்கிறது. ஓடியவர்கள் திரும்பிப்பார்த்து நிற்கிறார்கள்! மெதுவாக ஆலமரத்தை நோக்கி வருகிறார்கள்! ஆலின் கிளையிலிருந்து மணிமுடி யும் கையுமாக முத்துநகை குதிக்கிறாள்) வள்ளி : நம் முத்துநகைதான். முள்ளி : எங்கே மறைந்திருந்தாள்! மறைந்திருக்க அந்தக் கிளையில் இடமேது? பொன்னி : முத்துநகைதானா, வேறு.... முத்துந : பேயல்ல, முத்துநகைதான்! அச்சங்கொள்ளிகள் நீங்கள். வள்ளி : இதென்ன கையில்? ஒளி மணிகள், அடடா தங்க மரக்கால். பொன்னி : இல்லை, மணிமுடி! ஏது? ஏது முத்துநகை? முத்துந : குதிரைமேற்சென்ற அரசர் முடியைக் கிளைமேல் இருந்தபடி கழற்றிக் கொண்டேன். (அனைவரும் கையால் வாயைப் பொத்திக் கொள் கிறார்கள். கண்ணில் அச்சம்) பொன்னி : என்ன செயல்செய்தாய் முத்துநகை? (முத்துநகை, மணிமுடியை உற்றுநோக்கிப் புன்னகை புரிகிறாள்; அதைத் தன் மார்போடு அணைத்துக் கொள்ளுகிறாள்.) வள்ளி : நீ எங்கள் முத்துநகைதானே? (அச்சம்) முத்துநகை : அச்சப்படாதே. சிறிய பொருளுக்குப் பின்னால் என் உடலை மறைத்துக் கொள்ளத் தெரியும் எனக்கு. அதன் பேர் விச்சுளி ஆட்டம், பேய் என ஒன்று உண்டா? வீணான நடுக்கம். பொன்னி : இவ்வளவுதானா! வள்ளி : எனக்குமட்டும் அப்போதே தெரியும். முள்ளி : எனக்குந்தான் தெரியும் வள்ளி : தெரிந்துதான் நடுங்கினீர்களா என்ன? (முத்துநகை, எதிரில் நோக்குகிறான், மூன்று குதிரைகள் ஆலமரத்தை நோக்கி வருகின்றன) முத்துந : நீங்கள் தொலைவில் ஓடி மறைந்து கொள்ளுங்கள். (தோழிமார் ஓடி விடுகிறார்கள். முத்துநகை, முன்போல் ஆலின் கிளையில் ஏறி மறைகிறாள் மணிமுடியுடன்.) காட்சி - 4 இடம் : ஆலின் அடி காலம் : முதிர் மாலை கதை உறுப்பினர் : முத்துநகை, அரசன் முதலியவர். நிகழ்ச்சி : வியப்பும் திகைப்பும் மன்னன் : (குதிரை விட்டு இறங்கி) அமைச்சரே, படைத் தலைவரே, இந்த ஆலமரத்தின் விழுது என் மணி முடியைக் கீழே தள்ளி யிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? அப்படி யானால் தேடுவோம் இங்குதானே விழுந்து கிடக்க வேண்டும்! (அனைவரும் தேடுகிறார்கள்.) அமைச்சர் : எங்கும் காணோமே. (ஆலின் கிளை மேலும் கீழுமாக அசைகிறது; அரசன் முதலியோர், அசையும் அக்கிளையை அண்ணாந்து பார்க்கிறார்கள்) ப. தலைவன் : கிளையின் அசைவுக்குக் காரணம் என்ன? (கிளை முன்னிலும் மிகுதியாக அசைகிறது.) அரசன் : என்ன! (அரசன் முதலியோர் கிளையையும் அதில் உள்ள தழை இடுக்குகளையும் ஊன்றி நோக்குகிறார்கள்) அரசன் : ஒன்றும் விளங்கவில்லை! அமைச்சர் : என்ன வியப்பு! ப. தலைவன் : காற்றல்ல காரணம். அமைச்சர் : தென்றல் மெல்லென அசைகிறது. கிளையோ மேலும் கீழுமாக ஆடுகிறது. ப. தலைவன் : மந்தி குந்தி அசைப்பதுண்டு. இருந்தால் தெரியுமே! அணிற் பிள்ளையா அசைக்கும்? அதையும் காணோமே! (கிளையின் அசைவு முன்னிலும் அதிகரிக்கிறது) அரசன் : அமைச்சரே, படைத்தலைவரே, மக்களின் இயல்புக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாகத் தோன்றவில்லையா? படைத்தலை : மக்களின் இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு வல்லமை அது, இவ்வாறு செய்வது ஏன்? இதனால் யாருக்கு நன்மை? நமக்குப் புரியாத வகையில் பிறர் செய்யும் செயலே இது என்று நினைக்கிறேன். நீண்டு தாழ்ந்த இக் கிளையை வெட்டித் தள்ளிப் பார்ப்போம். (தன் வாளை உருவுகிறான்.) கிளை : கிளையை வெட்டாதே! (அரசன் வியப்பும் திகைப்பும் அடைகிறான்) அரசன் : நீ யார்? கிளை : என்னைத் தெரிந்து கொள்ள விரும்பவேண்டாம், அரசன் : என் மணிமுடி காணப்படவில்லை அறிவாயா? கிளை : அதோ புத்தூர் இருக்கிறதல்லவா? அங்கே வழிப் போக்கர் தங்கும் பொதுச் சாவடிக்கு இன்று நள்ளிருளில் தனியே வருக, மணிமுடி கிடைக்கும். அரசன் : யார் கொடுப்பார்? (பதில் இல்லை) அரசன் : யார் எடுத்தார்? (பதில் இல்லை) அரசன் : இங்கே தந்தால் என்ன? (பதில் இல்லை) அரசன் : இன்னும் ஒரு பேச்சுப் பேசு! (பதில் இல்லை) அரசன் : வல்லவன் மிழற்றும் யாழே! மாமரத்துக் குயிலே இன்னும் ஒரு பேச்சுப் பேசு! அரசன் : இருவிழிக்கு எட்டாத இன்பத் தேன்கூடே, ஒரு துளி துளிப்பாய். (பதில் இல்லை, அண்ணாந்து கொஞ்சிய அரசனின் உள்ளம் எண்ணத்தில் ஆழ்கிறது.) அரசன் : போகலாம். (அனைவரும் குதிரை ஏறிப் போகிறார்கள்) அரசன் : இதோ வந்துவிடுகிறேன். (திரும்பி ஆலின் அடியில் வந்து கிளையை உற்றுப் பார்க்கிறான், போகிறான்.) காட்சி - 5 இடம் : மேற்படி காலம் : மேற்படி கதை உறுப்பினர் : முத்துநகை, தோழிமார். நிகழ்ச்சி : கேலியும், மகிழ்ச்சியும் (முத்துநகை பொத்தென்று குதிக்கிறாள். தோழிமார் கலகலவென்று நகைத்து ஓடி வருகிறார்கள்) முள்ளி : வல்லவன் மிழற்றிய யாழே, மாமரத்துக் குயிலே! இன்னும் ஒரு பேச்சுப் பேசு! இருவிழிக்கு எட்டாத இன்பத் தேன்கூடே, ஒரு துளி துளிப்பாய். பொன்னி : ஏன் முத்துநகை இத்தனைக்கும் பதில் சொல்லாமல் இருந்து விட்டாய்? முத்துநகை : விரைவில் நிகழ்ச்சி முடியவேண்டுமே. முள்ளி : இல்லாவிட்டால்? முத்துநகை : எவ்வளவு நேரம் என் உடல் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பது? முள்ளி : ஏன்? முத்துநகை : எதிரிக்கு யான் இருப்பது தெரியாதிருக்க என் உடலை ஒடுக்கிக் கொண்டிருக்கவேண்டும், காணுவோர் மனப் போக்கை அறிந்து! அதுதான் நான் முன் சொன்ன விச்சுளியாட்டம். கழைக்கூத்தைச் சேர்ந்தது. முள்ளி : எத்தனை மெல்லிய பொருளிலும் உன்னால் மறைந்து கொள்ள முடியும்? முத்துநகை : என் முன் கையளவு தடிப்பும், என் அளவு உயரமும், உள்ள கோலில் நான் மறைந்துகொள்ள முடியும். மறைந் திருக்கும்போது அக்கோலின் நாற்புறமும் பிறர் பார்க்கவிடக் கூடாது. எதிர்ப்புறத்தார்க்கு மட்டுந்தான் தெரியாதபடி மறையமுடியும். பொன்னி : முத்துநகை, இன்று நள்ளிரவில் என்ன செய்யப் போகிறாய்? மு. நகை : தோழியர்களே, இதையெல்லாம் யாரிடமும் சொல்லாதீர் கள். நம் பெற்றோருக்கும் தெரியாதிருக்க வேண்டும். என்ன? முள்ளி : யாரிடமும் கூறவில்லை உறுதி. மு. நகை : பொன்னி, வள்ளி, என்ன? பொன்னி : உறுதி! வள்ளி : உறுதி! மு. நகை : உறுதியைக் காப்பாற்றுங்கள். எனக்கும் உங்களுக்கும் நலம் உண்டு. இன்றிரவு நாம் உணவுண்டு பெற்றோர்க்குத் தெரியாமல் இங்கு வந்து கூடிப் பேசுவோம்! நேரமாகிறது. (அனைவரும் போகிறார்கள்) காட்சி - 6 இடம் : அரண்மனை, ஆய்வு மன்றம் காலம் : முன்னிரவு கதை உறுப்பினர் : அரசன், அமைச்சன் முதலியோர் நிகழ்ச்சி : அச்சமும், உறுதியும் அமைச்சன் : இன்னுமா அரசர் உணவு முடியவில்லை? படை.த. : அரசியார்க்குச் சேதி தெரிவிக்கிறாரோ என்னவோ! உடற்காப் : யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று நமக்கு ஆணையிட்டார். அரசியார்க்கு அரசர் தெரிவிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. (அரசன் புன்னகை தவழும் முகத்துடன் வருகின்றான். அனைவரும் வணக்கம் தெரிவிக்கிறார்கள்.) அமைச்சன் : அரசர் முகம் அன்றலர்ந்த செந்தாமரை. படை. த : இதழோரத்தில் நகைமுத்து. உடற்காப் : அரசர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அமைச்சன் : புத்தூர்ப் பொதுச்சாவடிக்குப் போவதில்லை என்று தானே? அரசன் : போவதென்று. அமைச் : ஆழந் தெரியவில்லையே! அரசன் : தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அமைச்சன் : ஊசலாடிய கிளை பேசலானது புதிது. அது அழைத்த இடத்திற்கு நாம் போவது சரியாகாதே. புதுமையின் மறைவில் இன்னதுதான் இருக்கும் என்பதை எப்படி அறிய முடியும்? அரசன் : அறிய வேண்டும். சாகவா நேரும்? மகிழத்தக்க பரிசு! உடற்காப் : தனியாகச் செல்ல வேண்டும் போலும்! அரசன் : நீர் கேட்கவில்லையா கிளை சொன்னது? உடற்காப் : ஆம். ஆயினும் நாம் விழிப்போடு நடந்து கொள்ள வேண்டாமா? அரசன் : தூங்கிவிட்டேன். புத்தூர்ப் பொதுச் சாவடிக்கு நான் போகக்கூடாது என்ற உங்கள் மறுப்புப் பயனற்றதாகும். (அதே நேரத்தில் வாயிற்காப்போன் அரசனிடம் ஒரு சீட்டு கொண்டுவந்து கொடுத்துப் பணிகிறான். அரசன் படிக்கிறான் தனக்குள்.) அரசன் : வரவிடு புலவரை. (வாயிற் காப்போன் போகிறான்) அரசன் : (அமைச்சரை நோக்கி) கேளுங்கள். இல்லாள் எனக்கழ, நான் அவட்கேங்க எழுந்த பசிப் பொல்லாக்கை நீக்கென வந்தேன் புதிய னூர்ப் பொன்னன், இந்நாள் செல்லா மணிமுடி சென்றதென் றேங்காது தேன் மலர்த்தார் வல்லாய் சடையப்ப நாதா எனைப்பார் வரவழைத்தே மணிமுடி சென்றுவிடவில்லையாம். சென்றுவிட்டது என்று நான் ஏக்கமடைய வேண்டாமாம். (புலவர் வருகிறார்; அவரின் உடல் மறைந்தபடி ஓர் இளைத்த உருவம் பின் தொடர்கிறது. அவ்வுருவம் தன் கையில் ஓர் உலக்கை வைத்திருக்கிறது.) அரசன் : அதோ புலவரும் வந்துவிட்டார். (புலவர் அரசனை நெருங்குகையில் புலவர்பின் மறைந்தபடி வந்த உருவம் அங்கிருந்த தூணில் மறைந்து கொள்ளுகிறது.) புலவர் : வேந்தர் வேந்தே வாழ்க! அரச : அமருங்கள், மறைந்தது என் மணிமுடி, தேடிச் சென்றோம், அங்கோ ஆலின் கிளை ஆடியது. அதன்பின் அக் கிளை பேசியது. மணிமுடிகேட்டேன். புத்தூர்ப் பொதுச் சாவடிக்கு இன்று நள்ளிரவில் கிடைக்கும் வா என்றது. நீங்கள், செல்லா மணிமுடி சென்றதென்று ஏங்க வேண்டாம் என்றீர்கள். அதுபற்றி இன்னும் தெரிந்தால் சொல்லுங்கள். அமைச்சன் : தனியாக அரசர் புத்தூர்ப் பொதுச்சாவடி செல்வது நன்றா? புலவர் : உண்டபின் உரைப்பேன். அரசன் : சோறு வட்டிக்கச் சொல்வீர் உடற்காப்பாளரே. புலவர் : கலத்தில் அல்ல அரசன் : இளவாழை இலையில்? புலவர் : பறவை மிதித்தது அரசன் : வாயில் ஊட்டச் செய்கிறேன். புலவர் : வாட்டப்படாது! அரசன் : கையில் உருட்டிப் போட்டால் வாங்கியுண்பீர்கள். புலவர் : மானக்கேடு. தனக்கென வாழாப் பிறர்க்குரியோயே, என் அன்னை முதுகின் மேல் படைப்பீராயின் அது கேழ்வரகின் கூழாயினும் அமுது எனக்கு! அமைச் : அரண்மனையில் உணவுண்டு முடிந்துவிட்டது. அன்னை அரசியார் தூங்குகின்ற நேரம், இனிச் சமைக்க வேண்டும். அன்னை அரசியாரின் முதுகின் மேல் படைக்க வேண்டும்! என்ன புலவரே? அரசன் : புலவரே, அவர்மேல் வருத்தம் வைக்கவேண்டாம்; ஈயும் ஆமையும் என் அமைச்சரின் உடற்பிறப்பு. புலவர் : ஈயும் ஆமையும்! ஈயாமையா, ஓகோ! ஈயாமையும் கெடுதியில்லை! தடுக்காமை இருந்தால். அரசன் : உணவை நேர் செய்கிறேன். (அரசன் போகிறான், அரசி வருகிறாள்) (அரசன் வருகிறான், பணிப்பெண்கள் வருகிறார்கள்) (அரசி கவிழ்ந்து படுக்க, அவள் முதுகில் பணிப்பெண் களும் அரசனும் சோறு கறிகள் படைக்கிறார்கள். புலவர் உணவருந்துகிறார்.) ப.தலைவன் : தமிழ்ப் புலவரின் தறுக்குத் தலைதுள்ளிப் போகிறது. அமைச்சன் : அரசர் கொடை அளவை மிஞ்சிவிட்டது. ப. தலைவன் : ஈதலால் நெஞ்சம் இன்பம் அடைகிறது. அந்த இன்பத்தை இடைவிடாது நுகர்ந்து கொண்டிருப்பதோர் மனப்பான்மை ஈவோரைத் தன் வழியே இழுத்துச் சென்று விடுகிறது! நிலை தவறி விடுகிறார்கள் கள் ளுண்டவர் போல. ஐயோ அரசியார் திருமுதுகை அப் புலவனின் எச்சில் கலமாக்கவும் அரசர் ஒப்பினாரே! அமைச்சன் : அவ்வாறு கேட்கத் துணிந்தானே அப் புலவன். என்ன கொடுமை! என்ன கொடுமை! தமிழ்க்குப் புகழ் தேடுகின்றனா? இல்லை இகழன்றோ தேடுகின்றான்! (புலவர் உணவுடன்! அரசர் கைகழுவத் தண்ணீர் தருகிறார்.) (புலவர், அரசர், அரசி மூவரும் வந்து உட்காருகிறார்கள்.) அரசன் : புலவரே, நான் இன்னும் சிறிது நேரத்தில் அந்தப் புத்தூர்ப் பொதுச்சாவடிக்குச் செல்லலாமல்லவோ? புலவர் : அந்த ஆலின் கிளையின் ஆணைப்படியா? அரசன் : ஆம் அந்த இனிய குரலின் ஏற்பாட்டின் படி! புலவர் : (இனிய குரலில் பாடுகிறார்) தீயொன் றழைத்திடில் பஞ்சான நற்பொதி செல்வதுண்டோ? நோயொன்ற ழைத்திடில் கற்றார் திரும்பியும் நோக்குவரோ வாயொன்று தாமரை அன்பொன்று நெஞ்ச மனையிருக்கப் பேயொன் றழைத்திடில் போவதுண் டோ புழற் பேரரசே? (இப் பாட்டின் நான்காம் அடியை அரசி கேட்கக் கூடாது என்ற எண்ணத்தோடு அரசன் அரசியை உள்ளே அழைத்துச் சென்று விடுகிறான். அமைச்சனும் உடன் செல்லுகிறான். சிறிது நேரத்தில் அமைச்சன் பொற்காசு நிறைந்த தட்டொன்று தூக்கியபடி புலவர் முன் வந்து அவரிடம் கொடுக்கிறான். புலவர் பெற்றுக் கொள்ளுகிறார்.) அமைச்சன் : புலவரே, விரைவிற் போய்வாரும். புலவர் : நன்று! (புலவர் தட்டுடன் கிளம்புகிறார். தூணண்டை வரும்போது, மறைந்திருந்த உருவம் தன் உலக்கையால் புலவரின் முதுகில் அடித்து வீழ்த்துகிறது.) புலவர் : ஐயோ! (தரையில் வீழ்ந்து கதறுகிறார்.) (உருவம் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமல் வெளிச் சென்று விடுகிறது.) (அமைச்சன், படைத்தலைவன், உடற்காப்பாளன் ஆகியோர் ஒன்றும் அறியாது, துன்பமும் வியப்பும் அடைந்த புலவர் அருகில் வந்து நிற்கிறார்கள். அரசன் அரசி இருவரும் அங்கு ஓடி வருகிறார்கள்.) அரசன் : என்ன நடந்தது? புலவர் : அரசே நீர் என்னை அறிந்து கொள்ளாவிடினும், உம் அமைச்சர் முதலியவர்கள் என்னை இன்னான் என்று அறிந்து கொண்டார்கள். ஆதலால்தான் அவர்கள் என்னை இத் துன்பத்துக்குள்ளாக்கினார்கள். நான் பட்டது போதும். இனியும் என்னை அவர்கள் இன்னற் படுத்தாதிருக்கும்படி ஏற்பாடு செய்க. நான் உம் பகைவ னாகிய நடு நாட்டானால் அனுப்பப்பட்டவன். பல நாள்களாகவே இங்கு தங்கி உளவறிந்து வருகின்றேன். இன்று உம் அரண்மனையின் உட்புறத்துள்ள பொருட் காப்பறையின் அமைப்பை அறிய வந்தேன். நீர் மணி முடி இழந்ததையும் சாக்காக வைத்துப் பாட்டொன்று பாடிக் கொடுத்தேன். என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன். அரசியார் கற்பும், உமது கொடைத் திறமும், உம்மைக் காக்கும். நடு நாட்டானின் நயவஞ்சகமும் பொறாமையும் அவனை அழிக்கும். அரசன் : அமைச்சரே என்ன கூறுகிறீர்? அமைச் : காவலில் வைக்க வேண்டும். காலையில் ஆய்ந் தோய்ந்து ஆவன செய்வோம். அரசன் : அவ்வாறே செய்க. காட்சி - 7 இடம் : அரண்மனை, வாயில் காலம் : மேற்படி கதை உறுப்பினர் : வாயில் காப்போர் குப்பன், முத்தன். நிகழ்ச்சி : அச்சமும், சிரிப்பும் (கவிழ்ந்து படுத்துக்கொண்ட குப்பனும் முத்தனும் சிறிது தலைதூக்குகிறார்கள்.) குப்பன் : போய்விட்டதா?... வருமாடா? முத்தன் : அரண்மனை உலக்கையா அது அல்லது வெளி உலக்கையா? குப்பன் : போய்விட்டதா? முத்தன் : அதுபோய்விட்டது தடதடவென்று, கண்ணுக்கெட்டிய வரைக்கும் நான் பார்த்தேன். குப்பன் : நீயா பார்த்தாய்; மெய்யாகத்தான் இருக்கும். நீயும் நானும் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருந்தோம். உலக்கை உள்ளே இருந்து வந்தது. என்னடா உலக்கை நடக்கிறதே என்று நினைக்கும் போதே வயிற்றில் சொரக் என்றது. விழுந்தோம் கவிழ்ந்து! பார்த்தானாம் இவன்! முத்தன் : எடுத்த எடுப்பில் என் பெண்டாட்டி வருகிறாள் நேற்று வந்தது போல் என்று நினைத்தேனடா! பூ பூ பூ ... ... ... (உடல் குலுங்கச் சிரிக்கிறான்) பிறகு பார்த்தால் மழ மழவென்று வருகிறது உலக்கை. கிக் கிக் கிக் ... ... ... (மல்லாக்க நிமிர்ந்து சிரிக்கிறான்) குப்பன் : யாரோ மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பின் மேல் உலக்கையை நிமிர்த்துப் பிடித்தபடி தரையோடு நகர்ந்து போகிறது போல் இருக்கிறதென்று தரையை நட்டுப் பார்க்கிறேன். அப்பொழுதுதான் அடிவயிற்றில் குபீல் என்றது! குக் குக் குக் ... ... ... முத்தன் : நான் திரும்பிப் பார்த்த நொடியில் ஒட்டை வருகிறது என்று நினைத்தேன், ஐயையோ ஐயையோ ஐயையோ ... ... ... (வயிறு வலிக்கச் சிரிக்கிறான்! முத்தனோ தரையில் உட்கார்ந்தபடி தலைவலிக்கச் சிரிக்கிறான். இவர்களின் பின்புறமாகப் படைத்தலைவன் வந்து நிற்கிறான்.) குப்பன் : அந்த உலக்கையை வழிமறிக்கலாம் என்று நினைத்தேன் அது போகிற விசையில் மூஞ்சியை, முகவாய்க் கட்டையை உடைத்துவிட்டால் என்ன செய்கிறது. ப.த : ஆரடா இந்த வழியாகப் போனவன்? (இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் சொல்லத் தொடங்குகிறார்கள்.) முத்தன் : உலக்கை ஒன்று போனது தலைவரே! ப. த : அவனை இன்னானென்று தெரிந்து கொள்ளவில்லையா நீங்கள்? (அருகில் நிற்கும் குப்பனுக்குச் சிரிப்பு அடக்க முடியவில்லை. அவன் வாயைப் பொத்திக் கொண் டிருந்தும் பயனற்றதாகி விடுகிறது. புர் என்று சிரிப்பு வெளிவந்துவிடுகிறது.) குப்பன் : ஏதோ ஓர் உலக்கை. ப. த : நீ மட்டும் மிக்க அறிவாளியோ! உலக்கையாம்! அவன் இன்னானென்று சரியாய்த் தெரிய வேண்டுமே. (முத்தனால் சிரிப்பு அடக்க முடியவில்லை. புதைவாணச் சிரிப்பு ஓசையுடன் கிளம்புகிறது.) முத்தன் : உலக்கை தான் வேறொன்றுமில்லை. ப.த : உலக்கையாயிருக்கட்டும் அறிவாளியாயிருக்கட்டும் அவன் எந்தப் புறமிருந்து எந்தப் புறம் போனான்? கேட்கிறேன். அச்சமில்லாமல் சிரித்துக் கொண்டிருக் கிறீர்களே! முத்தன் : (சிரித்துக் கொண்டும் அதை ஒருவாறு அடக்கிக் கொண்டும், ஏன் குப்பா நீதான் சொல் இதற்குப் பதில் ஒக்காளச் சிரிப்பு) குப்பன் : உலக்கை தான் ஐயா. அரண்மனையின் உட்புற மிருந்து வெளியே போனது. ப.த : கையில் என்ன வைத்திருந்தான்? குப்பன் : (பதில் சொல்ல முடியவில்லை அவனால்; அழுகிறான் சிரித்துக்கொண்டே. இதற்கிடையில் அமைச்சன் அங்கு வருகிறான்.) அமைச் : அதுகிடக்கட்டும் ஆணா? பெண்ணா? (முத்தன் சிரிப்பது தெரியாமல் இருப்பதற்காக வாயைத் திறந்து கொள்கிறான். அப்போதும் சிரிப்பு வருகிறது. ஆ என்ற மாற்றோசையுடன்) குப்பன் : (இருமல் போட்டுச் சிரிப்பை மறைக்க முயலுகிறான் அது ஓங்காரச் சிரிப்பாகிறது) உலக்கை ஐயா! அமைச் : உலக்கை என்றால்? (எரிச்சலுடன்) அதெல்லாம் இருக்கட்டும் ஆணா? பெண்ணா? குப்பன் : ஏதுங் கெட்ட உலக்கை ஐயா. (முகத்தை திரும்பிக் கொண்டு சிரிக்கிறான்) முத்தன் : நம் வீட்டில் உலக்கை இல்லையா? அமைச் : உலக்கை இருந்தால்? முத் : (ஒருபுறம் மறைவாக ஓடி நின்று வெடிச்சிரிப்புச் சிரிக்கிறான்! அங்கிருந்து அமைச்சனின் எதிரில் வந்து நின்று) வாந்தி எடுத்தேன். (மீண்டும் சிரிப்பு) அமைச் : அடக்கம் இல்லாதவர்கள் இவர்கள்! (படைத்தலைவன், இருவரையும் அடிக்கிறான். இருவரும் ஓவென்று அழுகிறார்கள். அதே நேரத்தில் அரசன் அங்கு வந்து விடுகிறான்.) அரசன் : புலவரை அடித்தவன் யார், என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அமைச் : கண்டுபிடித்து விட்டோம், அரண்மனை ஆள் அல்லன். முத் : உலக்கை ஐயா! (அழுது கொண்டே) (குப்பன் அழுகுரல், வெடிச் சிரிப்பாகிறது) அரசன் : இதென்ன! உலக்கையா போகும்? குப்ப : அமைச்சர் ஐயா! நீங்கள் அங்கிருந்து இப்படி வாருங்கள் சும்மா. (அமைச்சன் அரண்மனையின் உள்ளிருந்து வெளியிற் போகிறான்.) குப்ப : இவர்தான் உலக்கை (அரசனுக்கு சிரிப்புக் குலுங்குகிறது) முத் : (படைத்தலைவனைக் காட்டி) இவரை உலக்கை என்று வையுங்கள்! அங்கிருந்து இந்த வழியாகப் போயிற்று. அரசன் : மனிதனே போகவில்லையா? நான் கேட்பது எப்படி? முத் : உலக்கை! மனிதனல்ல, பெண்ணல்ல. விலங்கல்ல பறவையல்ல, உலக்கை! அரசன் : என்ன வியப்பு! உண்மை விளங்கிற்று! ஆலின் கிளையாகக் காட்சிதந்த அந்த இளமங்கை இன்று உலக்கையாக வந்து இத் திருவிளையாடல் இயற்றினாள். மக்களின் வன்மைக்கு அப்பாற் பட்டதான பெரு வன்மை யுடையவள் அமைச்சரே, என்னைப் பின்தொடர வேண்டாம். படைத்தலைவரே, என்னோடு வராதீர். அவள் கூறியபடி தன்னந்தனியே செல்லுவேன். அங்கு அணுக வேண்டாம் என்கிறாள் அரசி. அமைச்சர் படைத் தலைவர் எண்ணமும் அப்படியே. இதற்கு என் மேல் நீங்களும், அவளும் கொண்ட அன்பே, காரணம். தடையை மீறுகின்றேன் என் கடமை அது. அமைச் : அரசே, தனியே செல்வதை மறுக்கிறேன். ப.த : என் எண்ணமும் அதுதான். அரசன் : விடைகொடுங்கள். ப.த. அமை : விடைதர மறுக்கிறோம். அரசன் : என் விருப்பத்தின்படி, (அரசன் சென்று குதிரையேறி, அதை முடுக்குகிறான். அரசன் சென்ற பின் அமைச்சனும் படைத்தலைவனும் பேசிக் கொள்ளுகிறார்கள்) அமைச் : அரசியாரிடம் இதை விரைவிற் சென்று சொல்லுவோம். (விரைந்து அரண்மனையின் உட்புறம் செல்லுகிறார்கள்.) காட்சி - 8 இடம் : ஊர் பொதுச் சாவடி. காலம் : நள்ளிரவு கதை உறுப்பினர் : முத்துநகை, முள்ளி, வள்ளி,பொன்னி, அரசர் நிகழ்ச்சி : முன்னேற்பாடு. (பொதுச் சாவடியினுள், மூன்றடிக்கோர் உலக்கை விழுக்காடு; வரிசைக்கு இருபத்தைந்தாகப் பத்து வரிசை நட்டிருக்கிறார்கள். அவளைவிடச் சிறிது உயரமான அவ்வுலக்கை ஒவ்வொன்றின் மேலும் ஒவ்வொரு விளக்கு எரிகிறது.) முத்துநகை : அரசர் வரும் நேரம். என்காலில் இந்தச் சிலம்பை மாட்டுங்கள். (தோழிமார் முத்துநகையின் காலில் சிலம்பை அணி விக்கிறார்கள்.) வள்ளி : முத்துநகை, உன்னை அரசர் கண்டால் என்ன ஆகும் நீ தேன் குடம்! அவர் ஈ. முள்ளி : தேன் குடம் வாய் திறந்தால்தானே! பொன்னி : அரசர் விரும்பினால் முத்துநகை ஒப்ப என்ன தடை? முத்து.ந. : அதெல்லாம் இருக்கட்டும் நான் சொன்னவை நினை விருக்கட்டும். அவர்கள் வரும் வழிநோக்கிச் செல்லுங்கள் விரைவாக. வள்ளி : எம்மால் செய்ய முடியாததைச் செய்யும்படி சொல்லு கிறாய். முத்து.ந. : மலைக்க வேண்டாம் அமைச்சரும், மற்றவரும் உம்மை விட நுண்ணறிவுடையவர்கள் என்று நினையாதீர். செல்லுங்கள். (தோழிமார் செல்லுகிறார்கள். முத்துநகை உலக்கைகளின் இடையில் மறைகிறாள். சிறிது நேரத்தில் அரசன் வந்து ஊர்ப் பொதுச்சாவடியினுள் நுழைகிறான். உலக்கை களின் நடுவிலிருந்து, ஆடும் காலடிச் சிலம்பொலி கேட்கிறது. அந்தத் தாளத்துக்கு ஒத்தபடி இனிய பாடல் கேட்கிறது.) பாட்டு உள்ளம் கவர்ந்திடும் ஒளிப்பகல் இருக்கையில் உனை விரும்புவாரோ இருளே? (உள்) வள்ளல் சடையநாதர் மணமலர்த் தாரிருக்க வஞ்சிக் கொடியே, நீயேன், சொல்வாய்? (உள்) கொள்ளைக் கதிர்மணிக் கூடம் இருக்கையில் கூரையே ஏதுக்கு நீதான்? வெள்ளித்தேர் ஏறும் வேந்தர் விரும்பிடார் எருமையே வீணாவல் கொண்டாய். உள்ளான பஞ்சணை மெத்தை இருக்கையில் உலக்கைகளே உங்கள் இடம் நலம் செய்யுமா? (உள்) (பாடல் கேட்கிறது. ஆடலின் காற்சிலம்பு இசை கேட்கிறது. உலக்கைகளின் இடையில் புகுந்து புகுந்து வரும் அரசன் அங்கு எவரையும் காணாது வியப்படைகிறான். மீண்டும் காதலை மறைபொருளாகக் கொண்ட பாடல் தொடங் குகிறது. பாடற் கருத்தில் சொக்கி நிற்கிறான்.) காட்சி - 9 இடம் : பொதுச் சாவடிக்கு வரும் வழி காலம் : நள்ளிரவு கதை உறுப்பினர் : தோழி, வள்ளி, அரசி நிகழ்ச்சி : ஏமாற்றம். (வள்ளி எதிரில் உற்றுநோக்கியபடி ஓர் மரத்தடியில் நிற்கிறாள். முக்காடிட்டபடி அரசி வருகிறாள். வள்ளி எதிரே செல்லுகிறாள்! வள்ளி : யார் நீங்கள்? ஓர் ஆடவன் ஒரு பெண்ணுடன் போகக் கண்டீர்களா? அரசி : எந்த ஆடவன்! பெண் யார்? வள்ளி : பெரிய இடத்துச் சேதி. போகக் கண்டீர்களா? அரசி : நங்கையே நானும் பெரிய இடத்தவள்தான் (முக்காட்டை விலக்கி) நான் அரசி. வள்ளி : வணக்கம் அன்னையே அரசர் வந்தார்; இந்த நள்ளிருளில் ஊர்ப்பொதுச் சாவடியில் காத்திருந்த ஒருத்தி அரசரை ஆவலுடன் வரவேற்றாள். காதல் மொழிகள் மாற்றிக் கொண்டார்கள் இருவரும். அரசர் அவளை அரண் மனைக்கு அழைத்தார். அங்கு அரசி கண்டால் என்னைப் பழிப்பாள். நான்தாளேனே என்றாள் அவள். அரண் மனையை அடுத்த சோலை விடுதிக்கு வா என்று அரசர் அவளைக் கைப் புறத்தில் அணைத்தபடி இழுத்துச் சென்றார். அரசி : என் மணவாளரா? நீ ஏன் இவர்களைத் தேடுகிறாய்? வள்ளி : நானா?... ... ... அவள் என்னையும் துணைக்கு அழைத்தாள். இதோ என் மணவாளரிடம் இக் குழந்தையைக் கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறிக் குழந்தையை என் மணவாளரிடம் கொடுத்துவிட்டு வந்து பார்க்கையில் அவர்களைக் காணேன். அரசி : நீ யார்? வள்ளி : நான் நீத்தான் பாளையத்தாள். நகருக்கு வந்தோம் நானும் மணவாளரும். இரவு பொதுச்சாவடியில் தங்கினோம்! குழந்தையழும், நான் போகிறேன்! அரசி : நன்றி! நன்றி! நன்றி! போ! நானும் விரைவாகப் போகிறேன். உனக்கு என்னவேண்டும்? இந்தா இந்த முத்துமாலை. (முத்து மாலையைக் கழற்றித்தர வள்ளி பெற்றுக் கொள்ளுகிறாள். அரசி விரைவாகத் தன் அரண்மனை சார்ந்த சோலையை நோக்கி ஓடுகிறாள்.) காட்சி - 10 இடம் : அரண்மனைக்கும்பொதுச்சாவடிக்கும் இடையில் ஓர் அறவிடுதி. காலம் : மேற்படி கதை உறுப்பினர் : தோழி, முள்ளி, படைத் தலைவன். நிகழ்ச்சி : ஏமாற்று. (குதிரைமேல் படைத்தலைவன் வருகிறான். எதிரில் முள்ளி ஓடுகிறாள்.) முள்ளி : ஐயா! ஐயா! நீங்கள் யார்? படைத்தலைவர் வாழும் இடம் எங்கே இருக்கின்றது? ப.த : ஏன் உனக்கு பெருமூச்சு? என்னநேர்ந்தது? முள்ளி : அரசர் வந்தார். அவரை நான்கு பேர் பிடித்துக்கட்டினார்கள். ப. த : ஆ! முள்ளி : குதிரைமேல் போட்டுக்கொண்டு போனார்கள். அரசர் கூவினார் கரடிப் பட்டிக் கள்ளர்கள் என்று. அதற்குள் அரசர் வாய் அடைக்கப்பட்டது. இப்படித்தான், இப்படித்தான் போனார்கள்! இப்படித்தான் போனார்கள்! (படைத்தலைவன் குதிரையை முடுக்குகிறான். வந்தவழியே குதிரை பறக்கிறது.) காட்சி - 11 இடம் : அரண்மனைக்கும் பொதுச் சாவடிக் கும் இடையில் ஓர் பாழ் விடுதி. காலம் : மேற்படி கதை உறுப்பினர் : பொன்னி, அமைச்சன் நிகழ்ச்சி : காதல் (பாழில்லத்தில் தோழி பொன்னி, நல்லுடை நல்லணியுடன் எதிர் நோக்கியிருக்க, அமைச்சன் குதிரைமேல் வருகின்றான். பொன்னி அவன் எதிரில் பாடிக்கொண்டே ஆடுகிறாள்) பாட்டு சிவனடி மறவாத செம்மல் - எங்கே? செந்தமிழ் நாட்டினன் எங்கே? எங்கே (சிவ) அவன் வாழும் மணவீ டெங்கே? எங்கே அழகியோன் வாழ்விடம் எங்கே? எங்கே (சிவ) துவளா என்னிடை துவள லானேன் துன்புறா என்னுளம் துன்புறல் ஏனோ! பவளவா யிதழை அவன் சுவைப்பானோ! பாவை என் காதலை அவன் வெறுப்பானோ? (சிவ) (குதிரையை நிறுத்தி, இறங்கி நின்று அவளின் ஆடல் பாடல்களில் சொக்கி நின்ற அமைச்சன், பேசத் தலைப் படுகிறான். அவனின் அச்சம், நாவை அடக்குகிறது.) அமைச் : பெண்ணே! ... ... ... நீ... யார்? (மீண்டும் பாடி ஆடுகிறாள்.) பாட்டு அடி - 2 பொன்னி : உணர்வே, இவன் யார்? ஓ ஓ அமைச்சனோ? உமையவள் சொன்ன நன் மகன்தானோ? அணைய விடில் என்ஆவி என் னாகும்? அருள் புரிவான் எனில்என் துயர் போகும். (சிவ) அமைச் : நான் அமைச்சன்! (பொன்னி, அவனை உற்று நோக்குகிறாள். மலைப்புற்று நின்று மண்ணில் சாய்கிறாள். அமைச்சன் அவளைத் தன் தொடையில் வைத்து அவள் முகத்தை நட்டுப் பார்க் கிறான். கண்மூடி இருந்த அவள் கண் திறந்து பார்த்துப் புன்சிரிப்புக் கொள்ளுகிறாள்.) பொன்னி : நம் இருவர் தவத்தின் பயன் இந்த ஒட்டுறவு! மலை மகள் அருளின் பயன் நம் திருமணம் நான் இந்நேரம் ஆடினேனா! நான் இந்நேரமட்டும் பாடினேனா? அமைச் : ஆம்? ... ... அது உனக்கே தெரியாதா? ஆடிப் பாடும் போது உன் நிலை எப்படி? பொன்னி : ஆடிப் பாடியவள் வானாட்டு மகள், உன் மடியில் கிடப்பவள் - இப்போது - இந்நாட்டு மங்கை. ஆடிப் பாடியவள் மலைகளின் தோழி. உன் மடியில் கிடக்கும் இப்போது உன் அன்பு மனைவி. அமைச் : என்ன புதுமை! நான் காண்பது கனவல்லவே! நான் யார்? வானாட்டுப் பெண்ணே என்னை அறிவாயா? பொன்னி : அமைச்சனே, உன்னையே நீ ஐயப்படுகிறாயா? வள்ளல் சடையநாதனின் அமைச்சன்தான் நீ! அமைச் : அதில் ஒன்றும் மாற்றமில்லையே? நன்று உன் பழைய வரலாறு என்ன? என்னிடம் கூறுவாயா? பொன்னி : சிவனார் மனைவி மலைமகள் தெரியுமா? அவள் தோழி இந்திரை தெரியுமா? ஒருநாள் சிவனாரும் மலைமகளும் களித்து ஆடிக் காதலில் இருவரும் கட்டிப் புரண்டார்கள். வழக்கப்படி நான் பூக்கொய்து கொண்டு போனேன். அப்போது நான் அங்குச் சென்ற பிழைக்காக என்னை வெறுத்தார்கள். மலைமகள் கூறினாள்: நீ மண்ணுலகில் ஒரு தாழ்ந்த குடியில் பிறந்திடுவாய். சடையநாத வள்ளலின் அமைச்சனை மணவாளனாகப் பெற்று, அவனையே அந்நாட்டுக்கு அரசனாக்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, பின் இங்கு மீண்டும் வா, என்றாளா? பிறந்தேன். வளர்ந்தேன், வந்தேன், உன்னை அடைந்தேன். அமைச் : என் கண்ணே! கட்டிக் கரும்பே, நான் இந்த நாட்டுக்கு அரசனாவேனா? எப்போது? பொன்னி : இதோ பார். அவள் தந்த புதுமைக்கோல்! இதனால் எதையும் வெல்வேன். அரியவை அனைத்தும் செய் வேன். மேலும் அவ்வப்போது நான் இன்னது செய்ய வேண்டும் என்று மலைமகள் என் உணர்வில் தோன்றிச் சொல்லிக் கொடுப்பாளே! தெரியுமா உனக்கு? அமைச் : எனக்கென்ன தெரியும்! எல்லாம் தெரியும் உனக்கு! எல்லாம் முடியும் உனக்கு! என்றைக்கு, எப்படி நான் அரசனாவேன்? பொன்னி : கேட்டுச் சொல்லுகிறேன். மலைமகளே! ... ... அவ்வாறே தாயே... ... ஆகட்டும் அன்னையே அமைச்சே என்னை இப்போது மணந்தற்கு அடையாளம் கொடு. அமைச் : இதோ என் கணையாழி. (கணையாழியைப் பெற்றுக் கொள்ளுகிறாள்) பொன்னி : பாழில்லம்! - கேடில்லை. இங்கே நாம் இன்பத்தை நுகர்ந்திருப்போம். பிறகு மற்றவைகளைக் கூறுகிறேன். அமைச் : நான் பெற்ற பேறு யார் பெறுவார்? யார் பெற்றார்? (இருவரும் கைகோத்தபடி பாழில்லத்தில் நுழைகிறார்கள்.) காட்சி - 12 இடம் : ஊர்ப் பொதுச் சாவடி. காலம் : விடியுமுன். கதை உறுப்பினர் : அரசன், முத்துநகை. நிகழ்ச்சி : எதிர்பாராத எதிர்ப்பு. (அரசன், உலக்கைகளின் இடையிடையே புகுந்து புகுந்து தேடுகிறான். முத்துநகை தென்பட வில்லை. காலோய்ந்து மலைத்து நிற்கிறான்.) அரசன் : (இரக்கமும், காதலும் நிறைந்த குரலில்) எனக்கேன் இந்தத் தேர்தல்? பெண்ணே நான் தோற்றேன், உன் இன்ப முகம் காட்டு. முத்துநகை : அரசே நீர் தோற்றுவிடவில்லை. இரங்குதல் வேண்டாம். முதலில் நான் கேட்கும் சில கேள்விகட்கு விடை கூறுங்கள் கடலின் நீர்த்துளிகளில் உயர்வு தாழ்வு உண்டா? அரசன் : கடலின் பெருந்தோற்றம், அதன் பிளவற்ற நிலை இவற்றிற்கு, உயர்வு தாழ்வற்ற நீர்த் துளிகள் காரணம், அன்னமே நீர்த்துளிகள் தம்மில் நிகர். முத்துநகை : விளக்கத்தோடு கூடிய விடை; மிக்க மகிழ்ச்சி வேந்தரே! பெருந்தோற்றமுள்ள மக்கள் கூட்டம் பிளவற்ற நிலையை அடையவேண்டும். மக்களின் உயர்வு தாழ்வு நீங்க வேண்டுமல்லவா? அரசன் : மக்கள் நிலை வேறு. முற்பிறப்பில் செய்த வினைக் கீடாக இப்பிறப்பில் மக்கள் தம்மில் உயர்வு தாழ்வு அடைகிறார்கள். அரசென ஒரு சாதி, அந்தணர் என ஒரு சாதி, வாணிகர் என ஒரு சாதி, சூத்திரர் என ஒரு சாதி இவை தம்மில் ஏற்றத் தாழ்வு உடையவைக ளல்லவா? முத்துநகை : (குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறாள்) அப்படியா?... ... அரசன் : கலைஞன் தெறித்த யாழின் நரம்பொலி! பூங்காவனக் குயிலின் குரலிசை! ஐயோ பெண்ணே சிரிப்பொலி கேட்கிறது! தேனலை கொழிக்கும் செவ்வு தட்டைக் காண முடியவில்லையே. எதிரில் உன் பொன் மேனி காட்டமாட்டாயா? முத்து : நேரம் வரும். நானும் அதைத்தான் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். அரசன் : மக்களில் உயர்வு தாழ்வு உண்டு என்பது கேலிக்குரிய தென்கிறாயா? முத்து ந : கேலி செய்யவில்லை. வியப்பை உண்டாக்குகிறது உங்கள் சொற்கள். ஒருவன் உயர்ந்தவனாகவே பிறக்கிறான் என்பது உங்களின் இப்போதையை நம்பிக்கை போலிருக்கிறது. அப்படித்தானே? அரசன் : இப்போதையை நம்பிக்கை! முன்னும் அந்த நம்பிக்கை உண்டு. நம்பிக்கை என்ன? உண்மை அதுதானே! நான் சொல்லுவதா இது! சாத்திரம்! முத்துந : சாத்திரம்! அந்தச் சாத்திரம் தமிழர் நலத்துக்காகத் தமிழறிஞர் செய்ததா? தமிழர்க்கு நலமுண்டா அதனால்? அரசன் : ஆரியரால் செய்யப்பட்டது; உண்மை கூறுகிறது; நலம் செய்கிறது. முத்துந : யாருக்கு? உமக்கு நலம், மற்றும், சாதி உயர்வு கூறிப் பொது மக்களைச் சுரண்டும் ஒரு கூட்டத்துக்கு. நம் பெரும்பான்மை ஏழை மக்கட்கு நலமுண்டா அதனால்? முன் பிறப்பில் நல் வினை செய்ததால் நீங்கள் இப்பிறப்பில் அரசரானீர். முன் பிறப்பில் தீவினை செய்ததால் ஆட்பட்டுக் கிடக்கிறார்கள் குடிமக்கள். ஆதலால் குடிமக்கள் அரசனாக எண்ணுவதோ புரட்சி செய்ய முயலுவதோ பயனற்றவை. அவர்கள் ஆரியரை வழிபட்டும் அரசர்க்கு அடிமைப்பட்டும் நாள் கழிக்க வேண்டும். இது ஆரியர் சாதிரம். இதனால் உமக்கு நலம் ஆரியர்க்கு நலம். கிளற வேண்டாம் நெஞ்சக் கனலை, இதைக் கேளுங்கள். தாழ்ந்த தள்ளப்பட்ட ஒருத்தியும் உயர்ந்த சாதி எனும் ஒருவனும் சாதி என்று உளம் ஒத்துப்போனால், மணந்து வாழச் சட்டம் இருக்கிறதா? அரசன் : இல்லை அவர்கள் வாழமுடியாது. முத்து ந : சட்டம் செய்த நீங்கள் அதை மாற்றமுடியுமா? அரசன் : முடியாது. மாற்ற ஒப்பமாட்டேன். (இதே நேரத்தில் அரசன் தலையில் மணிமுடியை முத்துநகை, பொருத்தி மறைகிறாள். அரசன் திரும்பிப் பல பக்கமும் பார்க்கிறான். அவன் யாரையும் காண முடியவில்லை. முத்து ந : உங்கள் மணவிருள் நீங்கவேண்டும். அரசன் : பூப்பட்டது போல் உன்கைபட்டது என் தலையில்! நீ தொட்ட இடத்தில் சுறுக்கிட்ட இன்பம் உன் உடலின் ஒவ்வோ ரணுவையும் கவர்ந்தது. என்னை இழந்தேன். எதிரில் வா! காதல் எனும் நெருப்புக் குழியினின்று தாண்டிக் குதிக்க இன்பக் குளிர் ஓடையே எதிரில் வா! என்னைக் காப்பாற்று! பெண்ணே! ... ... பெண்ணே ஏன் பேச்சில்லை! பெண்ணே... ... போய்விட்டாள். (மயங்கி நிற்கிறான். நினைப்பில் ஆழ்கிறான்) அவள் ஒரு தாழ்ந்த பிறவி... ... ஆயினும்... ... உயர்ந்த கொள்கை உடையவள்.. விரும்பத்தக்க பண்புடை யவள். மன்ணாளும் மன்னன் கருத்துக்கும் மறுப் புரைத்து அந்த மட மங்கை... கண்ணெதிரில் தோன்றா மல் கருத்தைக் கவர்ந்த காதல் மின்வலி! பெண்ணே! ... ... பெண்ணே! (கையில் வாளை உருவுகிறான்.) என் தோள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. அவளால் எனக்கேற்பட்டிருக்கும் நிலை, காதல் தானா? வெறுப்பா? வியப்பா? நடுக்கமா? இரக்கமற்றவள்! இருக்கின்றாயா இளமங்கையே! இருக்கின்றாயா ஆக்க மற்றவளே! (வெளியில் செல்லுகிறான். மீண்டும் வருகிறான். அவன் கண்கள் பிச்சை கேட்கின்றன. மறு நொடி நெருப்பைக் கக்குகின்றன. உலக்கைகளை ஒவ்வொன்றாய் வாளால் சாய்க்கிறான். பொதுச் சாவடியின் உட்புறத்து அரசி வெட்டவெளியை நோக்குகின்றான். ஏமாந்த உள்ளத்தோடு வெளிச் செல்லுகிறான்; வெளிப்புறத்தில் அவளைத் தேடுகின்றன அவன் கண்கள்.) காட்சி - 13 இடம் : புத்தூர் பொதுச் சாவக்குச் சற்றுத் தொலைவில் காலம் : மேற்படி கதை உறுப்பினர் : முத்துநகை, பொன்னி, அரசன், அமைச்சன். நிகழ்ச்சி : ஆராய்ச்சி. முத்துநகை : (ஊர்ப் பொதுச் சாவடியினின்று விரைவாக நடந்து செல்லுகிறாள். தோழி எதிரில் வருகிறாள்.) நீதானா? என்ன நடந்தது? பொன்னி : அமைச்சர் என் வலையில் சிக்கினார். அவரின் எதிரில் ஆடிப் பாடி நான் பார்வதியின் தோழியாய் இருந்தேன். என் குற்றத்திற்குக் கழுவாயாக நான் இழி பிறப் பெடுத்து உங்களை மணக்க நேர்ந்தது என்று புளுகி அமைச்சரை மணந்துகொண்டேன். முத்துந : அடாடா எதிர்பாராத வெற்றி உனக்கு ஏற்பட்டது. பொன்னி : ஆனால், முத்துநகை, நான் நிறைவேற்ற முடியாததான ஓர் உறுதியை அமைச்சருக்குக் கூறிவிட்டேன். பார்வதி உன்னை அரசராக்கச் சொல்லியிருக் கிறாள். அதன்படி உன்னைநான் இந் நாட்டுக்கு அரசராக்குவேன் என்று கூறினேன். அமைச்சரோ அதே நினைவாக இருக்கிறார். முத்துந : நேரத்திற்கு ஏற்றபடி வாயில் வந்ததை யெல்லாம் உளறிவிட்டால், இருக்கட்டும் நீ கூறியதை அவன் எவ்வாறு நம்பினான்? பொன்னி : நம்பாமலா! பார்வதி, நான் நினைத்தபோதெல்லாம் என் உள்ளத்தில் தோன்றி உதவி செய்கிறாள் என்று கூறி யிருக்கிறேன். அவள் தந்த புதுமைக்கோல் என்று இதோ இக்கோலையும் காட்டினேனே! முத்து ந : இந்தப் புளுகு, உன்னைக் காப்பாற்றக்கடவது, அமைச்சன் எங்கே? பொன்னி : அமைச்சர் என்று சொல்லகூடாதா? அமைச்சன் என்று தாழ்வுபடுத்திக் கூறுகிறாயே! இப்போது தான் எனக்கு இன்பந் தந்து, பிரிந்து போனார். அரசரை எதிர்நோக்கி இப் பக்கத்தில் தான் சுற்றிக் கொண்டிருப்பார். நாளைக்குத்தான் அங்கு நானும் அவரும் கூடுவோம். முத்துநகை : அதோ அமைச்சர்! நாம் மறைந்துகொள்வோம். ஓகோ! அதோ அரசரும் எதிரில் வருகிறார். நாம் இந்த ஆலின் புறத்தில் மறைந்திருந்து நடப்பதை அறிவோம். (மறைந்து கொள்ளுகிறார்கள். சற்றுத் தொலைவில் அரசரும் அமைச்சரும் சேர்ந்து கொள்ளுகிறார்கள்!) அரசன் : அமைச்சரே! அமைச் : ஆம் அரசே! மணி முடி கிடைத்துவிட்டது போலும்! அரசன் : மணிமுடி பெற்றேன், மங்கையைப் பெற்றேனில்லை. அவள் என் கருத்தில் காட்சியளித்தாள். கண்ணில் காட்சி யளிக்க வில்லை. ஆடும் அடிச்சிலம்பின் இன்னொலி கேட்டேன், ஆராவமுதப் பாடல் கேட்டேன். ஆயினும் அவளைக் கண்ணாரக் காணப் பெற்றி லேன். சாதியில் உயர்வு தாழ்வு உண்டா என்றாள். ஆம் என்றேன். பிறர் கொள்கையை நீ ஏன் மேற் கொள்ளுகிறாய் என்றாள். நன்மை விளைப்பதால் என்றேன். மனவிருள் நீங்க வேண்டும் என்று கூறி மணிமுடி தந்து போனாள். இப்பக்கத்தே அவளைத் தேடுவேன். சிறிது நேரம் நீர் இங்கே இருப்பீர்! (அரசன் மறுபுறம் செல்லுகிறான்.) பொன்னி : நீ ஏன் நான் செய்தது போல் செய்யவில்லை? முத்துநகை : அமைச்சன் மூடநம்பிக்கையுடையவன். ஆரியர் கொள்கையின் அடிமை, அவன்உன்னிடம் உன் கட்டுக் கதைக்கு ஏமாந்தான். அரசன் அப்படியில்லை, தன்னலத்துக்காக - அரச செல்வத்தைப் பிறர் அடையக் கூடாதே என்பதற்காக முற்பிறப்புக் கொள்கையையும் சாதிக் கொள்கையையும் கடைப்பிடித்திருக்கிறான். இந்த நிலையில் என்னை அவன் ஏற்றுக் கொள்வான் என்பது உறுதியில்லை. அவன் மனவிருள் நீங்க வேண்டும். அதோ வருகிறார்கள். முள்ளியும், வள்ளியும், அவர்களை அப்புறத்திலேயே மடக்கி அழைத்துக் கொண்டுபோக வேண்டும் வா! (வேறு புறத்தில்) முத்துநகை : முள்ளி! நீ என்ன செய்தாய்? முள்ளி : படைத்தலைவர் வந்தார். எதிரில் ஓடினேன், கரடிப் பட்டிக் கள்ளர்கள் அரசரைக் கட்டிக் குதிரைமேற் போட்டுக்கொண்டு அதோ போகிறார்கள் என்றேன் ஓடுகிறான் படைத்தலைவன். முத்து ந : அப்படியா? வள்ளி நீ என்ன செய்தாய்? வள்ளி : அரசி வந்தாள். நான் சொன்னேன். அரசர் வந்தார் அவரை, எதிர்பார்த்து நின்ற ஒரு மங்கை அவரைத் தழுவிக் கொண்டாள். இருவரும் அரண்மனைச் சோலையில் உள்ள விடுதிக்குச் சென்றார்கள், என்றேன். ஓடுகிறாள் அரசி. எனக்கொரு முத்துமாலை கொடுத்தாள். முத்துந : நடைமுறை மிக்க விரிவடைந்துவிட்டது. ஒன்று செய் பொன்னி! அமைச்சன். அரசனை ஒருபுறம் மறைத்து வைக்க வேண்டும். பார்வதி கூறியதாக உன் அத்தானிடம் கூறிவிடு, ஓடு. பொன்னி : எப்படி முடியும் அமைச்சரால்? முத்துந : மூடக் கொள்கைதான் இன்று ஆட்சி நடத்துகிறது நாட்டில். அமைச்சர் தாம் அம் மூடக்கொள்கையின் தலைவர், அவரால் முடியும். விரைவில் போ. பொன்னி : அமைச்சர் அரசராய் விடுவாரா? முத்துநகை : இப்போது இதற்கு விடைசொல்ல முடியாது. விரைவாகப் போ. (பொன்னி ஓடுகிறாள்; போனபின்) முத்துநகை : முள்ளி, நீ, பழம் விற்பவள்போல் நகரில் பல பகுதி களிலும் திரிந்து கொண்டிரு. இரண்டு நாழிகைக் கொருமுறை நகரில் நடப்பதை எனக்குத் தெரிவித்துப் போகவேண்டும். வள்ளி, நீ ஆண் உருவுடன் குரங் காட்டியாக அரண்மனையில் உள்ளே நடப்பதை அறிந்து எனக்கு அடிக்கடி வந்து கூறிப் போ, உங்கள் இயற்கை அழகை மாற்றிக் கொள்ள வேண்டும். நான், நம் சிற்றூரின் ஏரிக்கரை அரசடியில் உங்களை எதிர்பார்த்திருப்பேன். விரைவில் செல்லுங்கள், உன் வீட்டில் நீ வளர்க்கும் குரங்குகளைக் கூட்டிக் கொள். (போகிறார்கள்) காட்சி - 14 இடம் : நகர வீதிகள் காலம் : விடியல் கதை உறுப்பினர் : நகரமக்கள் நிகழ்ச்சி : ஊர்ப்பேச்சு ஒருவன் : அரசர், பெண்ணொருத்தியைத் தேடிக்கொண்டு நள்ளிருளில் தனியே சென்றார். கொள்ளைக் கூட்டத்தார். அரசரைக் கட்டிக் குதிரைமேல் போட்டுக் கொண்டு பிடித்தார்கள் ஓட்டம். 2 ஆவது ஆள் : பிடித்துக் கொண்டுபோய் என்ன செய்வார்கள்? 3 ஆவது ஆள் : என்ன செய்வார்கள், நம் அரசனுக்குப் பகைவனான நடுநாட்டானிடம் கொடுத்தால், நடு நாட்டான் கொள்ளைக் கூட்டத்தாருக்குப் பரிசாக ஊரோ உடைமையோ கொடுப்பான். 4 ஆவது ஆள் : ஆனால், ஒன்று; படைத் தலைவர் தம் படையுடன் தேடிப் போயிருக்கிறார். கொள்ளைக்காரரைக் கண்டு பிடித்து வர அவரால் முடியாதா? அரசரை எப்படியும் மீட்டு வந்து விடுவார். 5 ஆவது ஆள் : நம் வள்ளல் அரிய நாத மன்னர், மங்கை ஒருத்தியைத் தேடிப்போனார் என்றால், அது ஒழுக்க மல்லவே. 6 ஆவது ஆள் : அப்படியில்லை அது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட கெடுதியை நீக்கப் போயிருப்பார். 7 ஆவது ஆள் : அதற்கு தனியாக - அதுவும் அரசரே போக வேண்டுமா என்ன? 8 ஆவது ஆள் : அது தானே? வேறு ஒன்றுமில்லை. அயலான் மனைவியை அடித்துக்கொண்டு வரத்தான் போயிருப்பார். 9 ஆவது ஆள் : ஆரிய சாத்திரம் படிக்கிறார் அரசர். அதன் பிறகுதான் அவர் நடையில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. 10 ஆவது ஆள் : அரசி நிலை என்ன? 2 ஆவது ஆள் : வேறு எவளையோ இழுத்துக் கொண்டு வந்து, சோலையில் - விடுதியில் வைத்திருக்கிறார் அரசர் என்று நினைத்து அழுதாள். அதன்பிறகு அந்த அழுகை இரட்டிப் பாய்விட்டது. அரசரையும் அரசின் வைப்பாட்டியையும் கொள்ளைக்காரர் கொண்டு போய் விட்டார்கள் அல்லவா? காட்சி - 15 இடம் : கட்டுக்காட்டு மலை நுழை காலம் : மாலை கதை உறுப்பினர் : அரசன், ஆண்டியப்பன், அல்லி நிகழ்ச்சி : ஐயப்பாடு (கட்டுக்காட்டு மலை நுழையில் ஒரு புறம் அரசன் தறியோடு பிணிக்கப் பட்டிருக்கிறான். அவன் கை கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது. அவன் எதிரில் அல்லி என்ற ஒருத்தி, உணவை எதிரில் வைத்து நிற்கிறாள்.) அரசன் : உணவா? எனக்கா? அல்லி, என்னைக் கட்டியிழுத்து வந்த அந்த முகமூடிக் கூட்டம் எது? ஏன் நான் இங்குக் கொண்டு வரப்பட்டேன்? கொண்டு வந்தவர்களின் நோக்கம் என்ன? உனக்குத் தெரியும்! அல்லி : சொல்ல வேண்டாம் - இது என் தலைவர்களின் கட்டளை. உணவுண்ணுங்கள். (இதற்குள் வெளியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது) குரல் : என்னடி செய்கிறாய் அங்கே இன்னும்? அல்லி : சோறு கொண்டு வந்து அரசருக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறேன். சாப்பிடுங்கள் அரசரே! அரசன் : அவர் யார்? அல்லி : என் கணவர். கூப்பிடட்டுமா? - இப்படித்தான் வந்து விடுங்கள். (ஆண்டியப்பன் வந்து அரசனுக்குத் தலைவணங்க நிற்கிறான்.) அரசன் : இப்படி என்னைக் கட்டிக் கொண்டு வந்தவர் யார் ஐயா? ஆண்டி : சிவபெருமான் அரசன் : கடவுளுக்குப் பேர் உண்டா? செயல் உண்டா? ஆட்களை அனுப்பி என்னைக் கட்டி இங்குக் கொண்டு வந்தது கடவுளா? ஆண்டி : கடவுள் வராது. நீங்கள் முற்பிறப்பில் செய்த தீவினையின் செயல். அரசன் : முற்பிறப்பு உண்டா இல்லையா என்பது முடிவு பெறாத செய்தி. தீவினைத் தொடர்பு நம்பத் தகாததொன்று. ஆண்டி : நீங்கள் முற்பிறப்பில் செய்த வினைக்கீடாக இன்ன பிறப்பில் இன்ன நாளில் இன்னபடி நடக்கும் என்று உங்கள் தலையில் எழுதி வைத்திருக்கும். ஏன் இதை மறுக்கிறீர்கள். அரசர் : இவை எல்லாம் ஆரியர் மூடக் கொள்கைகள். ஆண்டி : உலகில் மக்களின் ஏற்றத்தாழ்வு நிலைக்குக் காரணம் என்ன? அரசன் : அதுவா?... ... ஆண்டி : கேள்வி விளங்கவில்லையா - நீங்கள் அரசர்; நான் அடிமை; நீங்கள் செல்வர். நான் ஏழை; இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று தான் கேட்கிறேன். அரசன் : அதுவா? ... ... ஆண்டி : நீங்கள் மேலான சாதி. என் போன்றோர் தாழ்சாதி காரணம்? அரசன் : காரணம் என்ன என்று கேட்கிறாய். அதுவா? ... ... ஆண்டி : வள்ளலே, உள்ளத்தை மறைக்காதீர்கள். அரசன் : உலக மக்களின் ஏற்றத்தாழ்வு நிலைமைகட்குக் காரணம் அவரவர்களின் அறிவு ஆற்றல்களே. ஆண்டி : தெளிவான கருத்து. சாதியில்லை அல்லவா? அரசன் : இல்லை. ஆண்டி : மக்கள் யாவரும் நிகரா? அரசன் : ஒரே நிகர். ஆண்டி : ஏன் இவ்வளவு கேட்டேன், என் அண்ணன் மகள் ஒருத்திக்கும் அடுத்த ஊர் அந்தணர் மகனுக்கும் உள்ளத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. மணக்கத் துடிக்கிறார்கள் இருவரும்! இந்நாட்டு சட்டம் வெட்டுகிறது. அவர்களின் ஒட்டுறவையே. அச்சட்டம் ஒழிந்ததல்லவா இப்போது? அரசன் : மணந்தால் - மனம் ஒன்றுபட்டது. தெரிந்தால் சட்டம் தீங்கு செய்யும் அவர்கட்கு. ஆண்டி : சாதியில்லை. அரசன் : சட்டம் இருக்கிறது. ஆண்டி : உங்கள் கருத்துக்கு மாறாக. அரசன் : என் கருத்து மாறி இருக்கலாம். ஆண்டி : இன்னும் எவர் கருத்துத் திருந்த வேண்டும்? அரசன் : அமைச்சர் கருத்துத் திருந்த வேண்டும். மக்கள் கருத்து மாற வேண்டும். ஆண்டி : மக்கள் தமிழர், நீவீர் அமைச்சருக்கு அஞ்சுவது இயல்புத ன். அவர் முற்பிறப்பு, சாதி, முதலியவைகள் இருக்க வேண்டும் என்று கூறுவது உங்கள் நலத்துக்கு. ஆரிய ராகிய அவர் நலத்துக்கு. இந்தச் சூழ்ச்சிக் கருத்துகள் மக்களுக்கு விளங்கி வருகின்றன. அமைச்சர் உமக்கு எதிராக மக்களைக் கிளப்பி விட்டு ஆட்சியைப் பறிப்பார் என்று நீங்கள் அஞ்சுதல் வேண்டாம். அரசன் : நீ யார்? ஆண்டி : நான் ஆண்டியப்பன். அமைச்சர் உங்களை ஒழித்து, தாம் இந்த அரசைப் பறித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக் கிறார். நீங்கள், ஆரியச் சட்டத்தை ஒழிக்கும் வழியில்தான், அவர் முயற்சியைத் தோற்கும்படி செய்ய வேண்டும், நான் நாளை வருகிறேன். ஒன்றை மறந்துவிட வேண்டாம். சொன்னால் தீமையடைவீர்கள். அரசன் : (வியப்பு) நல்லது. (ஆண்டியப்பன், அல்லி போய் விடுகிறார்கள்.) காட்சி - 16 இடம் : பாழில்லம் காலம் : இரவு கதை உறுப்பினர் : அரசன், ஆண்டியப்பன், அல்லி, பழக்காரி நிகழ்ச்சி : நல்லதோர் ஏற்பாடு அல்லி : என்ன ஆண்டியப்பா! நல்ல ஆண்டியப்பன், உன் குரல் கூட ஆண் குரலாகவே மாறிவிட்டது. ஆண்டி : உன்னையும் சிறிதுகூட அடையாளம் தெரியவில்லை. மாற்றுடையைக் களைந்துவிடு. என் மணவாளர் வரும் நேரம். என்ன வியப்பு? முள்ளியா வருகிறாள். அவள் தானே பழக்காரி. (அருகில் வந்த முள்ளியை நோக்கி) நீ யார் பழம் விற்பளா? என்ன பழம்? முள்ளி : மாம்பழங்க, நல்ல பழம், மாதிரி வேணுமா. புசித்துப் பார்த்து வாங்குங்க. ஆண்டி : உன்னை எங்கேயோ பார்த்தாப்போல் இருக்கிறதே, நீ ஒரு கழைக் கூத்தாடி இனத்தவள் இல்லையா? முள்ளி : இல்லிங்க, இல்லிங்க. தோட்டப்பட்டு எங்க ஊரு அங்குள்ள பழந்தானுங்க இது?... ... அடட பணப்பையை அங்க வைச்சுட்டு வந்துட்டேன் (என்று கூறி, ஓடத் தொடங்குகிறாள்.) ஆண்டி : நில்லு, நில்லு, நான் முத்துநகை, இவள் யார் பார். முள்ளி : அடாடா கண்டுபிடிக்கவில்லையே நான். இப்போது தெரிகிறது அவள் வள்ளி. அது கிடக்கட்டும், புதுச்செய்தி சொல்லிப் போகவந்தேன். அரசரைக் கரடிப்பட்டிக் கள்ளரிடமிருந்து மீட்கச் சென்றாரல்லவா படைத் தலைவர் அவர் அமைச்சருக்குச் செய்தி அனுப்பியிருக் கிறார். முத்துநகை : என்னவென்று? முள்ளி : கரடிப்பட்டி மலைக்குகையில் கள்ளர் அரசரைச் சிறை யில் வைத்திருக்கக்கூடும் என்று நினைக்கக் காரணம் இருக்கிறது. உடனே கரடிப்பட்டிக் கள்ளிக் காட்டிலுள்ள சாவடி வந்து சேரும்படி, குதிரை மறவர் நூறு பேர், காலாட்கள் நூறுபேர் அனுப்பிவைக்கவும். முத்துந : நன்றாக உளறுகிறான் படைத்தலைவன். பொன்னி, உன் மணவாளராகிய அமைச்சரிடம், அவன் கேட்ட படையை அனுப்ப வேண்டாம் என்று கூறு. பார்வதி கூறியதாக, நானும் ஒரு வேலை செய்கிறேன். அரசர் குதிரை எங்கே, எனக்கு வேண்டும். (பொன்னி பிடித்து வருகிறாள்.) முத்துந : முள்ளி பழையபடி காலையில் பழக்காரியாக அங்கிரு. என்னை நகரத்துக் கோயிலின் பின்புறம் பதினொரு மணிக்கு எதிர்பார்த்துக் காத்திரு. பொன்னி அமைச்சர் வரும் நேரம், அவன் நடந்து கொள்ளவேண்டிய முறையை நாளைக்குக் கூறுவதாகப் புளுகிவை. (முத்துநகை ஆண்டியப்பனாகவே குதிரையேறிப் போகிறாள்.) காட்சி - 17 இடம் : கரடிப்பட்டி காலம் : நள்ளிரவு கதை உறுப்பினர் : முத்துநகை,படைத்தலைவன், போர் மறவர் ஐவர். நிகழ்ச்சி : கேலிக்கூத்து முத்துந : (ஆண்டியப்பனாகவே) குதிரையிற் சென்று, கரடிப் பட்டிமலைக் குகையிலே எதிரிலுள்ள தேக்குமரத்தில் தான் ஏறிவந்த அரசன் குதிரையைக் கட்டி வைத்துவிட்டுப் படைத்தலைவன் தங்கியிருக்கும் சாவடிக்குக் கால் நடையாக வருகிறாள். படைத்தலைவன் குதிரையும் மற்றும் ஐந்து பேர்களின் குதிரைகளும் ஒரு புறம் கட்டப்பட்டிருப்பதைக் காண்கிறாள். பச்சிலை பறித்துச் சாவடியின் சுவரில் எழுதுகிறாள். கள்ளரைப் பிடித்து, அரசரைக் காக்க வந்தீர். தூங்கு கின்றீர். தூங்குபவரைக் தொலைப்பது அறமல்ல என்று விட்டோம். கரடிப்பட்டி மலைக்குகைக் கள்ளரோடு போர் தொடுக்க விரும்பினால் தொடுக்க. வலி இல்லாவிட்டால் அமைச்சர் தலையை எமக்கு காணிக்கையாய்ப் படைத்து அரசரை மீட்க. இப்படி கரடிப்பட்டி மலைக்குகைக் கள்ளர் பெருமக்கள் (இவ்வாறு எழுதிவிட்டு, ஐந்து குதிரைகளை அவிழ்த்து விட்டுப் படைத் தலைவனின் குதிரைமேல் ஏறிக்கொண்டு சென்று விடுகிறாள்.) காட்சி - 18 இடம் : காட்சி மன்றம் காலம் : மறுநாள் காலை கதை உறுப்பினர் : பொதுமக்கள், அமைச்சன முதலியவர் நிகழ்ச்சி : சூழ்ச்சி, வஞ்சம் (பொது மக்கள் காட்சி மன்றில் நிறைந்திருக்கிறார்கள். அமைச்சன் வீற்றிருக்கிறான். அரசின் அலுவல்காரர் சிலர்.) அமைச்சன் : பெருமக்களே, அறிஞர்களே! நம் அரசர்க்குக் கேடு காலம் கிட்டியதால், அவர், கண்ட மங்கையரைக் கைப் பிடித்திழுக்கத் தலைப்பட்டார். கடைசியில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் நாடு சுற்றித் திரிந்தார். கரடிப்பட்டிக் கள்ளரால் கைப்பற்றப்பட்டார், கரடிப் பட்டிக் குகையின் எதிரில் அரசர் குதிரை காணப் பட்டது. கள்ளர்கள், ஒரு செய்தி விடுத்துள்ளார்கள் தம் குடிசையிலிருந்து! அரசர் வேண்டுமானால், அமைச்சர் தலை எமக்கு வேண்டும். அல்லது போருக்கு வாருங்கள். அரசரை மீட்க படைத்தலைவர், குகைக்கு அருகிலுள்ள சாவடியில் ஐந்து மறவருடன், உதவப் படை கேட்டுக் காத்திருக்கிறார். இது நிலைமை. என் கடமை என்ன? நான் நினைக்கிறேன், என்னை நீங்கள் அரசனாக்குங்கள். அரசரை மீட்கும் வரைக்கும் நான் படையைப் படைத் தலைவருடன் ஒத்துழைக்கும்படி கூறி, அனுப்பு கிறேன். அரசரை மீட்கிறேன். ஆனால், அரசர் மீட்கப்பட்ட பின், அவரை மீண்டும் அரச ராக்குவதில் எனக்கு விருப்ப மில்லை. படைத் தலைவர் விழிப்பின்மை யால்தான் இத்தனை மானக் கேடுகள். படையில் ஒழுங்கின்மை ஏற்படுகின்றன. அவரை யும் நீக்கவோ திருத்தவோ எனக்கு அதிகாரம் தேவை. பெருமக்களில் ஒருவன்: எங்களுக்கு ஒன்றும் தெரியாது! ஏற்றபடி செய்யுங்கள். (உதவிப்படைத்தலைவன் எழுந்து அரச முடியைக் கையில் எடுத்துக் கூறுவான்.) பெருமக்களே, இந்த முடியை உங்கள் பேரால் அமைச்சருக்குச் சூட்டுகிறேன். (முடி சூட்டுகிறான்) உதவி : ஏன் நீங்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை? ஒருவன் : எங்களுக்கென்ன தெரியும்? அமைச்சன் : சிவபெருமான் அருளாலும், உங்கள் கோரிக்கை யாலும் நான் அரசன். நன்னெறியில் என் ஆட்சியை செலுத்த எல்லாம் வல்ல சிவபெருமான் துணை செய்க. (அனைவரும் கும்பிட்டுக் கொண்டே போகிறார்கள்.) காட்சி - 19 இடம் : கட்டுக்காட்டு மலை நுழை காலம் : மாலை இரண்டு மணி கதை உறுப்பினர் : அரசன், ஆண்டியப்பன், அல்லி நிகழ்ச்சி : காப்பளித்தல் ஆண்டி : அரசே, படைத்தலைவர் கேட்டபடி (உடனே படை அனுப்பவில்லை, அமைச்சன். அதன்பிறகு, அவனுடைய புதுமனைவியின் விருப்பப்படி, பொதுமக்களைக் கூட்டினான் இன்று காலை. எழுத்து மணமில்லாத பொது மக்கள் எதிரில், தானே அரசன் என்றான். உதவிப் படைத்தலைவனாகிய நீலன் பொது மக்கள் பேரால் அமைச்சனுக்கு முடிசூட்டினான். அப்போது உண்டாகத் தக்க பொய்ப்பழி கூறினான். இனி உங்களை அரசனாக்க மாட்டானாம். படைத் தலைவரையும் நீக்கிட விடவேண்டும் என்றான் பொது மக்களிடம். தீர்ந்தது இப்போது நடை பெறுவது: படை மறவர்களையும், உதவிப் படைத் தலைவர் களையும், கூட்டிப்போகிறான். அவர்கள் சென்று படைத் தலைவரைக் கொல்ல வேண்டுமாம். அரசரைக் கொண்டு வந்து சிறையில் போட வேண்டுமாம். ஒரு கட்டளை எழுதித் தாருங்கள் படைத் தலைவருக்கு. படைத் தலைவரே, நீர் அவ் விடத்தை விட்டு உடனே இவ்வஞ்சல் தருவோருடன் வந்து என்னைக் காணுக, மாற்றுருவுடன் என்று! (உடனே அரசன் எழுதித்தர ஆண்டியப்பனாகிய முத்து நகை பெற்றுக்கொண்டு குதிரை யேறிச் செல்லுகிறாள். அல்லி முகவாட்டத்துடன் சென்று மறைகிறாள்.) காட்சி - 20 இடம் : அரண்மனை காலம் : மாலை ஆறு மணி கதை உறுப்பினர் : தெய்வமாடி, அரசி நிகழ்ச்சி : மடமையில் நம்பிக்கை அரசி : தெய்வமாடியே, உன் தெய்வத்தை வரவழைத்துக் கொடு. தோழியே, அவள் கேட்பன கொண்டு வந்து கொடு. (அரிசி குவிக்கப்படுகிறது. மற்றும் நகைகள், பிறகு தெய்வம் வருகிறது. தெய்வம் ஆடிமேல்.) தெய்வம் : ஏன் அழைத்தாய் அரசியே. அரசி : என் மணவாளர் நிலை என்ன? தெய்வம் : அவர் கரடிப் பட்டிக் கள்ளரிடம் பிடிபட்டிருக்கிறார். அவரோடு ஒரு மங்கை இருக்கிறாள். அரசி : அந்த மங்கை தன் உருவை மறைத்துக் கொள்ளுகிறாள். அது எப்படி? தெய்வம் : தன் உருவை சிறு பொருளில் மறைத்துக் கொள்ளுவதென்பது விச்சுளி என்னும் வேலை. அது கழைக் கூத்தைச் சார்ந்தது. அரசி : ஆ அப்படியா? அந்த மங்கைக்கு விச்சுளி தெரியுமா? தெய்வம் : தெரியும். அரசி : அரசர் நிலை என்ன ஆகும்? தெய்வம் : அவரை இங்கிருந்து புறப்பட்டிருக்கும் உதவிப் படைத் தலைவர் கொன்று விடுவார். அரசி : ஐயோ தப்ப முடியாதா? தெய்வம் : தப்ப முடியாது. படைத் தலைவரையும் கொன்று விடுவார்கள். அரசி : என் நிலை என்ன? தெய்வம் : நீ எங்கேயாவது ஓடி விடுவாய் அமைச்சனுக்கு அஞ்சி. அரசி : அதுதான் சரி. (தெய்வம் மலையேறிய பின் எழுந்து அரிசியை அள்ளுகிறது. அதே நேரம் ஆண்டியப்பன் இரண்டு கிழவருடன் அங்கு வருகிறான். அரசி கருப்புடையால் முக்காடிட்டு வெளிக் கிளம்புகிறாள். தோழியும் உடன் புறப்படுகிறாள்.) ஆண்டி : அம்மா! இந்த இரண்டு பெரியார்களும் உமக்கு ஏதோ அறிவுரை கூற வந்துள்ளார்கள். கிழவர் : எங்கே புறப்பாடு? அரசி : இந்நேரம் என் மணாளர் இறந்திருப்பார். என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், என் மணாளரின் உடலை எரிக்கவும் நான் செல்ல வேண்டும். கிழவர் 1 : இப்படி, யார் சொன்னார்கள். அரசி : இந்தத் தெய்வமாடி மேல் அந்த தெய்வம் சொல்லியது. கிழவர் 2 : படைத்தலைவர் வரும் வரைக்குமாவது நீங்கள் இருக்கலாகாதா? அரசி : படைத் தலைவரும் இந்நேரம் இறந்திருப்பார். கிழவர் 2 : சொன்னவர் யார்? அரசி : தெய்வம் கிழவர் 1 : அரசர் எங்கிருக்கிறார்? அரசி : ஒரு மங்கையுடன் கள்ளரிடம் அகப்பட்டார். ஆண்டி : யார் சொன்னார்? அரசி : தெய்வம் ஆண்டி : ஐயோ தெய்வமே! கிழவர் 1 : பெண்ணே நான்தான். (தன் கிழவர் உருவைக் கலைத்து உரிய உருவத்துடன் நிற்கிறான் அரசன்) கிழவர் 2 : அன்னையே நான்தான் படைத்தலைவன். அரசி : (தெய்வமாடிமேல் சீறிச் சொல்லுகிறாள்) பொய்ப் பிழைப்புக் காரியே! ஆண்டி : அம்மா அவளை விடுங்கள். பிழை நம்முடையது. நம் மூட நம்பிக்கையை ஏழைகள் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது குற்றமாகாது. அரசி : அத்தான்! அமைச்சன் தங்களைக் கொல்லப் படை அனுப்பினானே. அரசன் : வரட்டுமே. அரசி : உம்மோடு கூட்டிச் சென்ற மங்கை எங்கே? அரசன் : செய்தியே பொய்! தெய்வத்தின் பேச்சை இன்னும் நம்புகிறாய். அரசி : கள்ளர் பிடிக்கவில்லையா உங்களை? ஆண்டி : இல்லை. அரசி : படை சென்றிருக்கிறதே கள்ளர் குகைக்கு, அங்கு உங்கள் குதிரையும் காணப்பட்டதாமே. ஆண்டி : காணப்பட்டால்? படை சென்றது குகைக்கு! உதவிப் படைத் தலைவர் குகையை நெருங்கலாமா நெருங்க கூடாதா என்று எண்ணிக்கொண்டே இருக்கிறார் பொழுது விடிந்தால் திங்கட் கிழமை என்றும் இராகுகாலம் தள்ளிப்போர் தொடங்குவ தென்றும் திட்டமிட்டிருக்கிறார். வெற்றி கிடைக்குமா தோல்வி ஏற்படுமா என்று பிள்ளையார் பிடித்து வைத்துப் பூ வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது. அரசன் : படைத் தலைவரே, படைவீட்டில் சென்று மீதியுள்ள படை மறவரை வாளும் கையுமாக அழைத்து வாரும். இதே இரவில். அமைச்சன், உதவிப் படைத் தலைவன் என்னை யும் உம்மையும் கொன்று திரும்புவதை எதிர்பார்த்து எல்லைப் புறத்தில் நின் றிருக்கிறான். படை : நன்று. நீங்கள் இங்கேயே இருங்கள் (போகிறான்.) காட்சி - 21 இடம் : எல்லைப்புறம் காலம் : காலை கதை உறுப்பினர் : அரசன், படை நிகழ்ச்சி : ஏமாற்றம் (உதவி படைத்தலைவனை முன்னே குதிரைமேல் வருகிறான், படை பின்னே வருகிறது.) அமைச்சன் : (உதவிப் படைத்தலைவனை நோக்கி) வெற்றியா? தோல்வியா? உதவி : அரசன் காணப்படவில்லை, படைத் தலைவன் இல்லை. குகை இருக்கிறது. உள்ளே யாருமில்லை. அரசன் குதிரை அங்கிருக்கிறது. அமைச்சன் : அப்போதே எனக்குத் தெரியும். இங்குக் கீழ்ப் புறத்தில் பல்லி சொல்லியது. உதவி : நானும் பிள்ளையார் தலையில் பூ வைத்துக் கேட்டேன், தோல்வி என்று விடை கிடைத்தது. (இதே நேரத்தில் பொன்னி, உரிய உருவத்துடன் அமைச்சன் எதிரில் குதிரை மேல் வருகிறாள்.) அமைச்சன் : பெண்ணே என்ன புதுமை? (தனியாக ஒருபுறம் செல்லுகிறார்கள்.) பொன்னி : மலைமகள் சொல்லுகிறாள் என் உள்ளத்தில் தோன்றி. அதை கேட்க: சிவலோகம் என்பது பொருவெளியில் மூழ்கிவிட்டது. சிவன் என்ற பேரும் பொருளற்றதாகிவிடவே அப் பெயரால் குறிக்கப் பெற்ற அப்பொருளும் பரம் பொருளோடு கலந்து விட்டது. அமைச்சன் : ஐயையோ! அப்படியானால், கடவுள் திருவிளையாடல் பற்றிய புராணங்கள், இதிகாசங்கள், மந்திரங்கள், சடங்குகள், கோயில்கள் என்ன ஆகும்! பொன்னி : மக்களின் மடமை இருக்கும் வரைக்கும் இருக்கும்? அமைச்சன் : இருக்கும் அல்லவா? - மடமை நிலைத்திருக்க நான் கல்வியைத் தலையெடுக்கவொட்டாமல் தடுத்து விடுகிறேன். பொன்னி : அரசனும், படைத்தலைவனும் அரண்மனையில் உம்மை எதிர்பார்த்திருக்கிறார்கள். அமைச்சன் : ஐயையோ, மெய்தானா மலைமகளே. பொன்னி : மலைமகள் கடைசியாக ஒரு வார்த்தை கூறுகிறாள். உனக்கு மன்னிப்புக் கிடைக்கும். மலைமகளும் மீளா விடை பெற்றுக் கொள்ளுகிறார். மீதி இருப்பவள் பொன்னிதான். அமைச்சன் : (நடுக்கம்) பொன்னி, நம் வாழ்வு என்ன ஆவது? பொன்னி : நீர் அரசரை மன்னிக்கக் கேட்டுக் கொள்ளவேண்டும். ஆரியர் தீயொழுக்கத்தை ஆதரித்துப் பேச வேண்டாம். சாதியில்லை, மதம் இல்லை, வாரும் போகலாம். காட்சி - 22 இடம் : அரண்மனை காலம் : மறுநாள் காலை கதை உறுப்பினர் : அனைவரும் நிகழ்ச்சி : உண்மை உணர்வு மணிமுடி புனைந்த அரியநாத வள்ளல் அரியணை மேல் அரசியுடன் வீற்றிருக்கிறான். அமைச்சன் தலை நாணி ஒரு புறம் நிற்கிறான். உதவி படைத்தலைவன் அவ்வாறு. படைத் தலைவன் அலுவல் உடையுடன் ஒரு புறமும் பெருமக்கள் அறிஞர் எதிரிலும், அமர்ந்திருக்கிறார்கள். அரசன் : பொதுமக்களே, தமிழர் கொள்கை மங்கிய அளவு அறிவின்மையும் அறிவற்ற செயல்களும், மூடநம்பிக்கைகளும் மக்க ளிடம் வளர்ந்தன. அமைச்சனின் மூடநம்பிக்கையும் மதவெறியுமே அவரை பேராசைக்குள்ளாயின. அவரை மன்னிக்கிறேன். அவர் கொள்கை மதம், சாதி, உருவ வணக்கம் முதலியவற்றைத் தலை கவிழ்க்கிறேன். முற்பிறப்புக் கொள்கை சரி அல்ல. ஒருவன் நன்மை தீமைக்கு அவன் நற்செயல் தீச்செயல். அறிவு அறியாமை ஆற்றல் ஆற்றலின்மை காரணம் என்று நம்புகிறேன். என் அரசை நான் பெற்றதற்கும் என்னுயிர் தப்பியதற்கும் காரணர் ஆண்டியப்பர் ... ... அவர் எங்கே? அவர் வாழ்க. நம் மகிழ்ச்சிக்குரிய இந்நா ளை கூத்துக்காட்சியால் நிறைவு செய்வோம் அனைவரும் அரண்மனைக்கு வருவீர்கள். (அனைவரும் போதல்) காட்சி - 23 இடம் : கழைக்கூத்தர் இடம் காலம் : மாலை கதை உறுப்பினர் : அனைவரும் நிகழ்ச்சி : காதலும் தடையும் திறந்த வெளி. தோள் அளவு தடித்த மூங்கில் இடைவிட்டு மேல் கட்டிய பந்தல்! ஒரு புறம் அரசியும் அரசனும் வீற்றிருக்கிறார்கள். அமைச்சர் முதலியவர்கள் அண்மையில் இருக்கிறார்கள். பெருமக்கள் அமர்ந்திருக்கிறார்கள். பின்னணி இசை முழங்குகின்றது. நெடுந்தறி உச்சியாடல் குடத்தின் மேல் கொட்டியாடல், உடல் வளைத்தல், தலை கீழ் நடத்தல், காற்றில் மிதத்தல், அனலில் படுத்தல் முதலியன நடக்கின்றன. அனைவரும் கைகொட்டி மகிழ்கிறார்கள். கழைக் கூத்தாடிகளின் தலைவன் அவை நடுவில் தோன்றி கூறுகிறான். தலைவன் : அரசே, பெருமக்களே, எங்கள் தலைமை ஆட்டக்காரி இப்போது மூங்கிற் பந்தலில் ஏறி ஆடுவாள். அவள் உடல் உங்கள் விழிக்குத் தெரியாது சிலம்பொலி கேட்கும் இவ்வாடலின் பெயர்தான் விச்சுளி ஆட்டம். அரசி : (திடுக்கிட்ட முகத்தை நகைப்பால் மறைத்து) மணவாளரே, என் காதலரே, என்னுள்ளத்தை அறிய மாட்டீரா? இந் நேரம் நாம் கண்ட காட்சிகள் உங்கள் உள்ளத்தில் காதல் கிளர்ச்சியை உண்டாக்க வில்லையா? என் கையால் ஒரு சுருள் வெற்றிலை நறுமணங் கலந்த பாக்கு, வந்து விடுவோம் விரைவில். அரசன் : விரைவில் வந்துவிடுவோம். (விச்சுளி நடந்தேறியது. அனைவரும் மகிழ்கிறார்கள். அரசியின் ஏற்பட்டால் விச்சுளியாடிய முத்துநகை ஏமாற்றமடைகிறாள். வேறு ஆட்டக்காரன் கத்தி சுழற்றுகிறான். அரசனும் அரசியும் வருகிறார்கள் (போகிறார்கள்) அரசன் : விச்சுளி நடந்துவிட்டதா தலைவன் : ஆம். அரசன் : மற்றொரு முறை! தலைவன் : முடியாது. அரசன் : ஆ! எதிர்பார்த்தது கிட்டாமல் போயிற்று. வரிசை தந்து அனுப்பு படைத்தலைவரே. (வரிசை நடக்கிறது. அனைவரும் போகிறார்கள். காட்சி - 24 இடம் : சோலை காலம் : மேற்படி கதை உறுப்பினர் : அரசன், முத்துநகை, பொன்னி நிகழ்ச்சி : இன்ப நிகழ்ச்சி அரசன் : (பாடிக்கொண்டே வருகிறான். தன் கையிலுள்ள மடலைப் பார்த்து) பாட்டு மாகுன் றனைய பொற்றோளான் வழுதிமன் வாழ் கரும்பின் பாகொன்று கொல்லியைப் பாத்தெனைப் பார்த்திலன். பையப் பையப் போகின்ற புள்ளினங் காள், புழற் கோட்டம் புகுவ துண்டேல் சாகின்ற னள் என்று சொல்லுவீர் அன்றைச் சடைய னுக்கே. பொன்னி : (எதிரில் வந்து) உம் வரவை எதிர்பார்த்து வருந்தி கிடக் கிறாள் விச்சுளியாடிய முத்துநகை, மலர்ச்சோலையில். அரசன் : ஆம். இதோ அவள் அனுப்பிய மடல். (விரைந்து செல்லுகிறான்.) முத்துநகை : நானே மணிமுடி பறித்து மறைந்தாடி - இன்று விச்சுளி யாடிய முத்துநகை. அரசன் : இன்பத் தோற்றம்! என் உயிரைக் காப்பாற்று. முத்துநகை : சாதியுண்டா? அரசன் : இல்லை. முத்துநகை : மணந்துகொள்ளத் தடையில்லையே? அரசன் : இல்லை (தழுவிக் கொள்ளுகிறார்கள்.) 