பாவேந்தம் 8 உரைநடை நாடக இலக்கியம்-1 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 8 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 296 = 328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 205/- கெட்டி அட்டை : உருபா. 270/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  நூன்முகம் தமிழில் நாடகக் கலைக்கு நெடிய வரலாறு உண்டு. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம் இருந்தமை தொல்காப்பியத்தால் (999) அறியப்படுகிறது. முத்தமிழில் மூன்றாவது நாடகம். முதலிரண்டும் கலந்தது நாடகம். சங்க இலக்கியத் தில் நாடகம் நிகழ்ந்தமைக்கும், மக்கள் விரும்பிப் பார்த்தமைக்கும் சான்றுகள் உள. நாடக மகளி ராடுகளத் தெடுத்த எனப் பெரும் பாணாற்றுப் படையும் (55) பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் எனப் பட்டினப்பாலையும் (113) நாடக மகளிர் ஆடுகளத்தையும், மக்கள் விரும்பி நாடகம் பார்த்ததையும் குறிப்பிட்டுள்ளன. கலித்தொகையில் நாடகக் காட்சிகளாய்ப் பல பாடல்கள் அமைந்துள்ளன. நாடகம் என்பது ஒரு கதை தழுவி வரும் கூத்து என்றார் அடியார்க்கு நல்லார். ஆடரங்கின் அமைப்பு முதலியவற்றை அரங் கேற்றுக் காதையும் அதன் உரைகளும் சிறப்புற விவரிக்கின்றன. அரசரும் அவரைச் சார்ந்த மக்களும், எளிய மக்களும் நாடகம் பார்க்கும் நிலை சங்க காலத்திற்கு முன்பே இருந்தது. வேத்தியல், பொது வியல் என்னும் இருபிரிவுகளும் இருந்தன. வேத்தியல் அரசர் முதலி யோர்க்கு உரியது. பொதுவியல் பிற மக்களுக்கு உரியது. நாடகம் கூத்து என்றும் கூறப்பட்டது. இவ்வழக்கு இன்று வரை நிலவுகிறது. கூத்தில் வல்லார் கூத்தர் எனப்பட்டனர். கூத்தினை ஆடல் என்றும் வழங்கினர். இறைவனையே ஆடல்வல்லான், கூத்தன், கூத்தபிரான் என்றெல்லாம் போற்றினர். தமிழ்க் காப்பியங்களில் பல நாடகக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. மறைந்துபோன நாடக நூல்களையும், நாடக இலக்கண நூல்களையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நூல்களின் மறைவால் தொன்மைத் தமிழ் நாடகங்களின் இயல்புகளை அறிய இயலாதவராகிறோம். முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.985-1012) தஞ்சை பெரிய கோவிலில் இராசராச நாடகம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் உண்டு. பிற கோயில்களிலும் பூம்புலியூர் முதலிய நாடகங்கள் நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. தளிச்சேரிப் பெண்டுகளால் நாட்டிய நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் பிறமொழி ஆட்சியாளர்களால் தமிழ் நாடகமரபுச் சிதைந்தது. பொருநர், கூத்தர், விறலியர், பாணர், பாடினியர் முதலியோர் தத்தம் கலைகளை மறந்தனர். போற்றுவாரின்றி அழிந்த கலைகளுள் நாடகமும் ஒன்று. பக்தி நெறியின் செல்வாக்கால் வடமொழிப் புராணங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றன. புராணக் கதைகள் நாடகங்களாய் நடிக்கப்பட்டன. ஊர் ஊருக்குப் பல குழுக்கள் முளைத்தன. நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் பல புராண நாடகங்களைப் புதிதாக இயற்றி நாடக மேடையேற்றினார். தமிழகமெங்கும் ஆங்காங்கே பாவலர்க ளாலும் கலைஞர்களாலும் நாடகங்களும் நாடகக்குழுக்களும் தோன்றின. ஊர் விழாக்களின் போது விடிய விடிய புராண நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் ஆங்கில நாடகங்களைப் போலத் தமிழிலும் அங்கம், காட்சி (களம்) அமைக்கும் முறை தோன்றியது. பெ. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், பரிதிமாற் கலைஞரின் ரூபாவதி, மதிவாணன், மறைமலையடிகளின் சாகுந்தலம், பம்மல் சம்பந்தனாரின் சபாபதி முதலிய நாடகங்கள் தோன்றின. தேசிய விடுதலை உணர்வு மிக்கெழுந்தபோது கதரின் வெற்றி முதலிய நாடகங்கள் எழுந்தன. புராண நாடகங்களும் ஊடே அமைந்த பாடல்களால் விடுதலையுணர்வுக்கு வித்திட்டன. திராவிட இயக்கத்தவரின் பகுத்தறிவுக் கருத்துகள் நாடெங்கும் பரவின. சமூகச் சீர்த்திருத்த எண்ணங்கள் தளிர்த்தன. பகுத்தறிவு, மூட நம்பிக்கையொழிப்பு, மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, மறுமணம், பெண்ணுரிமை, குழந்தைமணக் கொடுமை, தொழிலாளர் நலன், தமிழிசை இயக்கம், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு முதலியவற்றை வலியுறுத்தும் சமூக நாடகங்கள் கனல் தெறிக்கும் உரையாடல்களுடன் மக்கள் நெஞ்சத்தைத் தொட்டன. புலவர்களும், கலைஞர்களும் இத்தகைய சமூகச் சீர்திருத்த நாடகங்களைப் படைத்தனர். பல நாடகக் குழுக்களும் வேளை தவறாமல் இவ்வேலையைச் செய்தன. அரசியல் கட்சிகளின் மாநாடுகளிலும் நாடகங்கள் இடம் பெற்றன. பள்ளிகளின் இலக்கிய மன்றங்களில் மாணவர்கள் இலக்கிய, புராண நாடகங்களை நடித்தனர். இக்காலச் சூழலில் பள்ளியில் பயிலும் போதே கனகசுப்புரத்தினம் பள்ளி ஆண்டுவிழாவில் நடித்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுப் பெரும்புலமையுற்ற நம் கவிஞர் இசைப்புலமையும் நிறைந்திருந்தார் பாடல்களைப் பாடிக் குவிக்கும் பாவேந்தரானார். ஆசிரியப் பணியாற்றும்போதே சிந்தாமணி, வீரத்தாய் என்ற நாடகங்களை மாணவர்களால் பள்ளி மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இளமையிலிருந்தே, இயற்றமிழிலும், இசைத்தமிழிலும் ஆர்வ மும் ஈடுபாடும் கொண்ட நம் கவிஞருக்கு நாடகத் தமிழும் கைவந்த கலையாயிற்று. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார். கதைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த நம் கவிஞர் அவற்றை நாடகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். 1938-இல் முதல் கவிதை நாடகம் வீரத்தாய் வெளிவந்தது. பாவேந்தரின் நாடகங்களைக் கவிதை நாடகங்கள், உரைநடை நாடகங்கள் இரண்டும் கலந்த நாடகங்கள் எனப் பகுக்கலாம். fhjyh flikah?, புரட்சிக்கவி ஆகியன முன்னர்க் கதைப்பாடலாயிருந்து பின்னர் நாடகமாயின. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி முதலியன முதலில் நாடகங்களாகப் படைக்கப்பட்டுப் பின்னர் கதைப்பாடல் களாயின. 1941-இல் தோழர் இராசவேலுக்குப் பாவேந்தர் எழுதிய கடிதத் தில்கவிதைகள், நாடகம், சிறுகதை தமிழர் கொள்கை சுவைக்கான கருத்துமாக எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் பாவேந்தரின் நாடகங்கள், தமிழர் கொள்கையை வலியுறுத்துவனவாய், சுவையுடையனவாய், கருத்துகள் நிறைந்ததாய் விளங்கின என்பது தெளிவு. 1943-இல் முத்தமிழ் அரங்கு என்னும் நாடகக்குழு அமைப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டியுள்ளார். தோழர் செல்லப்ப ரெட்டியாருக்கு எழுதிய கடிதங்களில் நாடக அரங்கு, நடிகர்கள், பாடகர், ஆடல் வல்லவர், வாத்தியக்காரர், நாட்டியக்காரர் ஆகியோரை அமைக்கவும், அவர்களைத் தங்க வைக்கவும், சம்பளம் கொடுக்கவும் பாவேந்தர் காட்டிய ஆர்வம், நெருக்கடி முதலியன புலப்படுகின்றன. முத்தமிழ் நிலையத்தையும் நாடகத்திற்கென்றே சென்னை சாந்தோம் பகுதியில் கடற்கரையொட்டி ஒரு பெரிய வீட்டில் அமைத்திருந்தார். புரட்சிக் கவி, இசையமுது நாடகங்கள் இதன் சார்பில் நடிக்கப்பட்டன. நடிப்பு, காட்சியமைப்பு, நாட்டியம், இசை முதலிய ஒவ்வொன்றிலும் பாவேந்தர் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். தேர்ந்த இயக்குநராய் விளங்கினார் எனலாம். சில நாடகங்கள் பாவேந்தரின் முன்னிலை யில் ஒத்திகை செய்யப்பட்டுள்ளன. அப்போது நடிக்கும்முறை, பாடிய முறை முதலியவற்றில் திருத்தங்களைக் கூறிச் செயற்படுத்தியுள்ளார். இன்ப இரவு என்னும் நாடகம் தந்தை பெரியார் முன்னிலை யில் சென்னை சாந்தோம் பகுதியில் 2.4.1944 இல் நடிக்கப்பட்டது. பார்த்த பெரியார் பாராட்டியுள்ளார். பாராட்டு 8. 1. 44 குடி அரசு இதழில் வெளிவந்ததின் ஒரு பகுதி: இன்று இந்த நாட்டில் தமிழும் தமிழ்க் கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன் மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது இதனால் பெரியாரின் கொள்கைக்கேற்ற தன் மானமிக்கவராய்ப் பெரியார்க்கு தெரிந்த ஒரே கவிஞர் நம் பாவேந்தர்தாம். பாவேந்தரின் நாடகங்களில் இளங்கணி பதிப்பகத் தொகுப்பு களில் இடம் பெற்றுள்ளவை 52. ஆய்வுத் தேடல்களுக்கு அகப்பட வேண்டியவையும் உள்ளன. இவற்றுள் முழுமை பெற்ற நாடகங்கள் பல. முழுமை பெறாமல் - முடிவு இல்லாமல் உள்ளனவும் இருக்கின்றன. வானொலிக்காகவும் சில நாடகங்களைப் படைத்துள்ளார். அவற்றில் உள்ள ஒலிக்குறிப்புக்களால் அக்குறிப்பு புலப்படுகின்றது. பாவேந்தர் படைப்புகள் பல. மாணவர் குறிப்பேடுகளில் எழுதப்பட்டவை. அவற்றின் பழைமையால் தெளிவில்லாப் பகுதிகளும் தெரிய வந்துள்ளன. இத்தொகுதியில் புதியனவாய் வருவனவும் உள்ளன. பாவேந்தரின் நாடகங்கள் ஆய்வாளர்களின் ஆய்வுக்குட் பட்டுள்ளன. முனைவர் ச.சு.இளங்கோ பல வகைகளாகப் பகுத்துள்ளார். அவை: தமிழ் இலக்கியச் சார்பு நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், கற்பனை வரலாற்று நாடகங்கள், சமூக நாடகங்கள், அங்கத நாடகங்கள், ஆரியப்புரட்டு விளக்க நாடகங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள், குறு நாடகங்கள் என்பன. வேறுவகையாகப் பகுப்பாரும் உளர். இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் எனவும் நடிப்பதற்குரிய நாடகம், படிப்பதற்குரிய நாடகம் எனவும் பார்க்கும் பார்வையும் உள. படிப்பதற் குரிய நாடகங்களுள் சில, சில மாற்றங்களுடன் நடிப்பதற்குரியனவாக மாற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள் முதலிய வற்றில் கொண்டிருந்த ஈடுபாடும், புராணங்கள், பழக்க வழக்கங்கள், மத அமைப்புகள் முதலியவற்றின்மீது வைத்திருந்த எண்ணங்களும், திராவிட இயக்கக் கோட்பாடுகளின் செயல் வேகங் களும், மொழி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும் இத்தகைய நாடகங்கள் தோன்றக் காரணமாயின. இரணியன் அல்லது இணையற்ற வீரன்: இரணியன் தலைமையிலிருந்த தமிழகப் பகுதியில் ஆரியர்கள், கடவுள், மத நம்பிக்கை, வழக்கங்களின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறு ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதை விளக்குவது இந் நாடகம். பழங்கதைகள் புதிய பார்வை பெற்ற நாடகங்களுள் தலையாயது: ஆரிய இனத்தின் சூழ்ச்சியையும், தமிழ்ப் பண்பாட்டின் மாட்சியையும் காட்டுவது; பலமுறை நடிக்கப் பெற்றது. புதுவை முரசு ஆசிரியரா யிருந்த குருசாமி இரணியனாய் நடிக்கப்பெற்றது; அப்போதைய அரசால் தடை செய்யப்பட்ட ஒரே நாடகம் இது. நல்ல தீர்ப்பு: நிகழ்ச்சிகளுக்கும் சிக்கல்களுக்கும் சிறந்த தீர்வுதான் சமூக மாற்றத் திற்கும் சமுதாய வளர்ச்சிக்கும் அடிகோலுவது. நல்ல தீர்வுகளே நாட்டுக்கு நலம் பயப்பன. பாவேந்தம் வழங்கும் தீர்ப்பு எல்லோரும் ஏற்றுப் போற்றத்தக்க நல்ல தீர்ப்பு. மாந்தர் பெயர்கள் நல்ல தமிழில் உள்ளன. கிள்ளை அறமன்றில் கூறும் உறுதிமொழிகள் தமிழை வயிற்றில் வைத்து அயல்மொழியை நெஞ்சில் வைத்திருப் போர்க்கு நல்ல சாட்டையடி. கற்கண்டு: கிழவர்கள் கற்கண்டு போலும் இளம்பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் கொடுமையைக் கண்டிப்பது இந்நாடகம்; கிழவன் மறுமணத்தைத் தடுத்துத் தருமன் என்னும் இளைஞன் ஒருவனுக்குக் கற்கண்டைத் திருமணம் செய்விப்பதாய்க் காட்டுவது; நகைச்சுவை நாடகம் இது. பொறுமை கடலினும் பெரிது: சமூகத்தில் நிலவும் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளை நீக்கி ஒரு புதிய பொதுவுடைமைச் சமுதாயத்தை நிறுவவேண்டும் என்பதைக் காட்டுவது இந்நாடகம். பழமொழியே தலைப்பாக உள்ளது. அமைதி: பேசா நாடகமாகிய அமைதியைப் படைத்துத் தமிழ் நாடக உலகில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார் பாவேந்தர். ஐரோப்பிய நாடுகளில் ஊமை நாடகங்கள் சிறந்து விளங்கின. அதைப்போலத் தமிழில் ஊமை நாடகம் படைத்த பெருமை பாவேந்தர்க்கே உரியது. ஒலி இல்லாமல் கருத்தை உணர்த்தும் திறன் உயரியது. பேச்சில்லாமல் செய்கையாகிய பாத்திரப் பண்புகளை விளக்குந்திறன் பாவேந்தரின் தனித்திறன். மண்ணாங்கட்டியின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடே அமைதி. பதினாறு பகுதிகளையுடையது. அரிய சொல்லாட்சிகள். எளிய நடை. சௌமியன்: கொடுங்கோல் அரசன் ஒருவனை எதிர்த்த மக்கள் ஒன்றுபட்டுப் போராடி வெற்றிபெற்றுக் குடியாட்சி முறையாக்கிய செயலை மையமாகக் கொண்டது இது. தேசிய விடுதலை உணர்வு இந்நாடகத் திற்கு உந்து சக்தியாக இருந்தது. தோன்றிய காலத்திற்கேற்ப தலைப்பிலும் பிற மொழியைப் பெற்றது. பாவேந்தர் நாடகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு கற்பனை நயம் செறிய, நகைச் சுவை பொதுள எளிய நடையில் தமிழர், மொழி, இன, நாட்டு உணர்வு பெற்றுத் தமிழராக வாழவேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவை. இத் தொகுதியைப் படிப்பார் அதனைப் பெறவேண்டும் என்பது எம் விழைவு. - பி. தமிழகன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் ..  பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன்... ix வலுவூட்டும் வரலாறு xii பதிப்பின் மதிப்பு xv நூன்முகம் xviii 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1 2. நல்லதீர்ப்பு 89 3. கற்கண்டு 121 4. பொறுமை கடலினும் பெரிது 133 5. அமைதி 209 6. சௌமியன் 235  இரணியன் அல்லது இணையற்ற வீரன் இந்நாடகம் 1. 9.9.1934-இல் சென்னை வி.பி. ஹாலில், தோழர் ஈ.வெ. ராமசாமிப் பெரியார் mவர்கள்jலைமையிலும்,2. 20.03.1935-இல் சென்னை ராயல் தியேட்டரில், கனம் மந்திரி ஸர். P.T. ராஜன், பார்-அட்-லா அவர்கள் தலைமையிலும், 3. 4-7-1936-இல் வடஆற்காடு ஜில்லா, அம்பலூர் நடன விலாசத்தில், தோழர் ஈ.வே.ராமசாமிப் பெரியார் அவர்கள் தலைமையிலும், 4. 10.12.1938-இல் சேலம் செண்ட்ரல் கொட்டகையில், திருவாளர், ஊ.ழு.நெட்டோ, MA., B.L. அவர்கள் தலைமையிலும் நடிக்கப் பட்டிருக்கிறது. உரிமையுரை சுயமரியாதை இயக்கங் கண்டாரும் பார்ப்பனரல்லாத மக்கட் குழைப்பதே தன் கடனெனக் கொண்டாரும் ஜடி என்ற நீதிக் கட்சியின் தலைவரும் தற்போது தமிழுக்காகச் சிறையிலிருப்போருமாகிய தமிழர் திலகம், அறிவின் அம்சம், புரட்சியின் சிகரம், பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கட்கு இந்நூல் ஏற்புடைத்து. eh‹ brhštJ!* இரணியன் இணையற்ற வீரன் என்னும் இந்நூலை நான் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகட்கு முன் எழுதினேன். ஆத்திக நெருப்பில் துடித்த தமிழர் நெஞ்சுக்கு, ஏற்ற நீர்நிலையாயிற்று இரணியன். எதிர்பாராத பெரு வரவேற்புக் கிடைத்தது இரணியனுக்கு. அதுமட்டுமில்லை; அறிஞர் ளு.குருசாமியவர்கள் இரணியனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தார். தாமே இரணியனாக நடித்தார். அறிஞர் K.M.ghy சுப்பிரமணியனார் முதலிய பலரையும் நடிக்கவும் வைத்தார். எண்ணியது வெற்றியடைந்தது. அன்றைய பிற்போக்குக் கருதிக் கலங்கிய தமிழரின் கலக்கத்தில் ஓர் அமைதியை நான் பார்த்தேன். மகிழ்ச்சிதான்! மற்றுமோர் பெரு மகிழ்ச்சி! இரணியன் நாடகம், நாடகம் எழுதும் இளைஞர்களை உண்டாக்கியது! நாடகங்களை எழுதிக் குவிக்கின்றார்கள். அந்நாடகங்கள் தமிழரின் மேலான கொள்கை களுக்குப் புறம்பான வழியிலும் செல்லுவன; தமிழின் உயர்வைப் புறக்கணிப்பன ஆயினும், நல்ல நாடகத்தைத் தேடும்படியான ஓர் ஆவலையாவது மக்களிடம் வளர்க்காமற் போகவில்லை. கேட்டும் கேளாமலும் இரணியனை அச்சிட்டு வெளியிட்டு, பெருவருவாய் கிடைக்கப்பட்டு மகிழ்ந்தவர் ஒருவரல்லர்; ஈ.வே.ரா. முதலிய பலர் என்பதை எண்ணுந்தோறும் எனக்கு மகிழ்ச்சி மிகும். இன்னும் இதுபோல் எழுதும் விருப்பம் தரும். என் மகிழ்ச்சி நூறு பங்கு உயர்த்தப்பட்டது ஒரே நேரத்தில். என் தோழர்களாலல்ல; இரணியனை நாடகமாக நடத்த வேண்டாம். இது ஆட்சியாளர் கட்டளை. எப்படி? இரணியனுக்கு ஒரே நேரத்தில் பதினாயிரக்கணக்கான தேவை ஏற்பட்டுவிட்டது. இரணியனை மீண்டும் அச்சிடுவதன் காரணமும் அதுதான். இரணியனைப் படிப்போர் ஒரு செய்தியில் விழிப்போடிருக்க வேண்டும். அப்போது நான் எழுதிய இரணியனில், இப்போது மாணவர்க்குப் பிடிக்காதது ஒன்றுண்டு. வடசொற்களைக் கலந் திருப்பது தான். அப்பிழையைத் திருத்திப் படித்துக்கொள்ளும் ஆற்றல் மாணவர்களிடம் உண்டு. புதுவை - பாரதிதாசன் 11.12.52 காட்சி - ஒன்று இடம் : சிங்காரவனம் உறுப்பினர் : பிரகலாதன், காங்கேயன், சித்ரபானு. (பிரகலாதன், காங்கேயன் இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்) காங்கேயன்: பிரகலாதா! என்ன ரமணீயமான சிருங்கார வனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெண்கள் குலுக் கென்று சிரித்தவுடன் அவர்களின் தாவள்யமான பற்கள் தோன்றி மறைவதுபோல் முல்லையரும்புகள் வெளித் தோன்றுவதும், பிறகு காற்றால் புதரில் மறைவது மாயிருக்கின்றன. விதவித மலரின் வாசம் நமக்குப் புளகம் உண்டாக்குகிறது. பிரகலாதன்: காங்கேயா! மிக்க அழகிய சோலைதான்! ஆயினும் என்மனம் மாத்திரம் இங்கில்லை. காங்கேயன்: அதென்ன? வேறென்ன சிந்திக்கின்றாய்? பிரகலாதன்: எனது அருமைத் தந்தையாகிய இரணிய சக்கரவர்த்தி எனக்கு இளவரசுப்பட்டம் சூட்டுவதற்கு எண்ணினார். அதற்காக என்னை உலகச் சுற்றுப் பிரயாணம் செய்ய அனுப்பினார். நீயோ, எனது பாடசாலை நண்பன். நான் உன்னையும் உடனழைத்து வந்தேன். நாம் நமது நகரத்தை விட்டு வந்து இன்று நாள்கள் பல ஆகின்றன. இன்றுவரை நமது நாட்டைவிட்டு நாம் அகன்ற பாடில்லை. நமது உலக சுற்றுப் பிரயாணம் தீர்வது எந்நாளோ தெரியவில்லை. நம்முடன் வந்த உடற்காப்பாளர்களை அடுத்துள்ள காட்டில் விட்டு வந்துள்ளோம். அவர்களை விட்டு நாம் இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே! நடுக்காட்டில் கூடாரத்தில் தங்கி யுள்ள நமது உடற்காப்பாளர்களுக்கு என்ன ஆபத்து உண்டாகுமோ என்பதிலேயே எனது கவனம் செல்லுகின்றது. காங்கேயன்: பிரகலாதா! இந் நாட்டுத் தமிழனல்லவா நீ! நம்முடன் வந்துள்ள சேவகர் அனைவரும் பச்சைத் தமிழர்களல்லவா? உனக்கு அவர்களைப் பற்றிய அச்சம் பிறக்கக் காரண மில்லையே! உனக்காக அவர்களும் அஞ்சக் காரண மில்லையே! அஞ்சுவோன் என் போன்ற ஆரியப் பார்ப்பன னல்லவோ! இது கிடக்கட்டும். நம் நாட்டை விட்டு இன்னும் நீங்கிய பாடில்லையே! வேறு தேசங்களுக்கு இன்னும் எப்போது செல்வது என்று கேட்கின்றாயே, உனது தந்தையா ராகிய வீராதிவீர, வீரமார்த்தாண்ட இரண்ய சக்கரவர்த்தி உன்னை உலக சுற்றுப் பிராயணத்திற்கு அனுப்பியதன் நோக்கமென்ன? அதை யோசி! அடாடாடாடா! அதை யல்லவா யோசிக்க வேண்டும்! அங்குள்ள இயற்கை எழில்கள், அங்கங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகள் இவைகளை யறியத்தானே! இப்போது நாம் வேறு என்ன செய்கின்றோம். அதுவுமல்லாமல், சொந்த நாட்டின் இயற்கையை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் அயல் நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்வது கேலியல்லவா? யோசிக்க வேண்டும்! பிரகலாதன்: நீ பிரமாதமாக யோசித்துவிட்டது போதும்! நிறுத்து! ஓர் அரசகுமரன் - அதாவது எதிர்காலத்தில் அரசாங்கத்தை நடத்த இருப்பவன் உலகச் சுற்றுப் பிரயாணம் செய்வது சோலைகளையும் சோலைகளிலுள்ள பறவைகளையுமே பார்த்துக் கொண்டிருக்கவா? அன்று. உலகிலுள்ள பற்பல தேச ஆட்சிமுறைகளைத் தெரிந்து வர வேண்டியதற்காகத்தான். காங்கேயன்: பிரகலாதா! நான் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆம்! உண்மைதான். நான் உன் சொல்லை ஆட்சேபிக்கவே முடியாது. உண்மையில் நீ வெகு புத்திசாலி! மேலும் சக்ரவர்த்திக்குப் பிறந்த பிள்ளை அப்படித்தானே இருக்கும்! உண்மை! நீ சொன்னது உண்மைதான். இந்தச் சிருங்கார வனத்தைப் பார்த்தவுடன் நாம் கூடாரத்திற்குத் திரும்பிட வேண்டியது தான். பிறகு அங்கிருந்து அயல்நாட்டுப் பிரயாணத்தை உடனே ஆரம்பித்துவிட வேண்டும். நாம் தாமதிக்கலாகாது, சுறுசுறுப்பில்லாமல் இருக்கிறாய். ஆகா! அதோ! அத் தடாகத்தினின்று கிளம்பும் ஒரு வகைச் சத்தம் எதுவா யிருக்கும்? சிச்சிலிக் குருவிகள், அல்லது சக்ரவாகம் தனது இரைக்காக நீரில் வீழ்வதால் ஏற்பட்ட சத்தமல்லவா? குளத்தை நோக்கிக் காங்கேயன் போகிறான். பிரகலாதனும் உடன் செல்லுகிறான். சிறிது தூரம் சென்று ËW] பிரகலாதன்: ஆஹா! இளைய அன்னங்களின் செக்கச் சிவந்த கால்களும், அலகும் களங்கமற்ற வெண்மை உடலும் வயிரக்குவியலில் மாணிக்கத் துண்டங்கள் கிடப்பது போலிருக்கின்றன! அடடா! அந்தப் பெட்டை அன்னத்திற்குச் சேவலிடம் பிணக்கமோ? காங்கேயன்: ஆஹா! என்ன மதுரமான காட்சி! பிரகலாதா! அதோ பார்! அழகிய கலாபத்தை விரித்து ஆடும் மயிலை! அதற்குத் தக்கபடி பாடும் குயிலை! ஒரு பக்கம் தேனீக்கள் மொம் மொன்று முரலும் சுருதி! மரங்கொத்தி தனது கொத்துக்களால் ஏற்படுத்தும் தாளம்! தென்றலோடு மணம் ஒரு பக்கம்! இனிமையான கச்சேரி - ஐம்பொறிகட்கும் ஏக காலத்தில் இச் சிங்காரவனம் விருந்து செய்கிறது. மேலும் செல்கிறார்கள், தனிமையில் அங்கு சித்ரபானு காணப் படுகிறாள். பிரகலாதன் பார்க்கிறான்.] பிரகலாதன்: ஆஹா! நண்பா! அதோபார். ஒரு வியப்பான காட்சி! நாம் காணுமந்த அற்புதக் காட்சியின் அர்த்தமென்ன? ஆச்சரியத்தோடு கவனிக்கிறான்] காங்கேயன்: நீலோற்பல நேத்திரம்! மின்னல் ஒளியை ஒழுக விடும் மந்தகாசம்! மலர்க்கொடியிடை! அசல் அன்னத்தின் நடை! ஆகிய இவைகள்தாம் நீ காணும் காட்சியில் அடங்கி யுள்ளவை, இன்னும் விரிவான அர்த்தம் சொல்ல வேண்டுமானால், அந்தி மாலைப் பொழுது! இன்பத் தென்றல்! இடையில் நீயும் அவ் வனிதையும்! இளம் பருவத்தின் துடிதுடிப்பு! முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் காதல் திருவிழாவின் துவஜாரோகணம்! பாட்டு கூவுது குயில் என்ற மெட்டு. இந்துதான் தோடி - ஆதி சித்ரபானு: ஓடிவாடி - சகி (ஓடி) தனிமையில் நானே தவிக்கலா னேனே சஞ்சலம் வந்ததடீ அஞ்சுகமே மானே (சகி - ஓடிவாடி) ஆடவர் இங்கே அணுகினார் அங்கே அட்டகாசம் செய்கின்றாய் உன்றன் நேசம் எங்கே (சகி) கற்புறு மாது கலங்கிடும் போது எப்படியோ மறைந்தாய் இதுவோ மகா சூது. (சகி) சித்ரபானு: (எங்கேயோ இருக்கும் தோழியை அழைப்பது போல்) சகி அம்சா! சகி அம்சா! என்னடி நான் தனிமையாக இருக்கி றேனே!! சீக்கிரம் வா! சகி அம்சா! ஓடி வந்து உதவி செய்! (ஆடவரைக் கண்டு அஞ்சியது போல் பாவனை செய்கிறாள்.] காங்கேயன்: நேசா! நீ யாகிலும் சென்று உதவி செய்யலாகாதா? உன் மனம் என்ன கல்லா? அந்த இளநங்கைக்கு என்ன ஆபத்தோ தெரியவில்லையே! உதவி கோருகிறாளே: பிரகலாதன்: (உடனே சித்ரபானுவின் எதிரில் ஓடி நின்று) பெண்ணே! உனக்கு என்ன கெடுதி ஏற்பட்டது? எதற்காக உதவி கோருகிறாய்! என்னிடம் கூறு! (சித்ரபானு பிரகலாதனை உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் கவனிக்கிறாள். உடனே மூர்ச்சித்து விழுவதுபோல் பாவனை காட்டுகிறாள்.] பிரகலாதன்: காங்கேயா! காங்கேயா! காங்கேயன்: (பிரகலாதன் சமீபத்தில் ஓடிவந்து நின்று) இதென்ன அபாயம்! நேசா! நீ என்ன செய்தாய் அவளை! (உற்றுக் கவனிக்கிறான்.) பிரகலாதன்: ஐயோ! நான் ஒன்றும் செய்யவில்லையே! என்னை ஏற இறங்கப் பார்த்தாள். அவ்வளவுதான்! தங்கப் பதுமை சாய்வது போல் சாய்ந்தாள்!. காங்கேயன்: நீ சற்று விலகி நில்! அவளைக் கவனித்தால் அவளோர் ஆரியப் பெண்போல் தோன்றுகிறாள். நீயோ, இந் நாட்டுத் தமிழ் மகன். அவளுடைய சம்மதம் தெரிந்து கொள்ளாமல் நீ அவளைத் தொட்டு உபசாரம் செய்யலாகாது. (காங்கேயன் தன் கைக்குட்டையால் அவள் முகத்தண்டை விசிறு கிறான். பிரகலாதன் விலகி நின்று கவனிக்கிறான்.] சித்ரபானு: (மூர்ச்சை தெளிந்து எழுந்து உட்காருகிறாள். காங்கே யனைப் பார்த்து) சற்று நேரத்திற்கு முன் என்னை வழிமறித்து நின்ற அந்தப் பூமான் எங்கே? காங்கேயன்: அதோ நிற்கிறார்!. சித்ரபானு: அந்தோ! (பார்த்துவிட்டுத் தலை குனிந்து) என் கற்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதா! பாழான ஓ நெஞ்சமே! எனக்கு அப கீர்த்தியை உண்டாக்கி விட்டாயா? குரங்கு மனமே, உன் கண்ணில் காணும் கிளைகளிலெல்லாம் தாவி விடுவது உனக்குப் பெருமையாகுமா? ஆரிய வம்சத்துக்கு என்னால் அவமானம் நேர்ந்துவிட்டதல்லவா? முதலில் நான் ஒரு பூமானை என் மனத்தில் காதலனாக அடைந்துவிட்டேன். ஆயினும், அந்தப் பூமானை நேரில் கண்டதில்லை. எப்படி யிருந்தாலும் அவரே எனது உயிர்; அவரே எனது மணவாளர். அவரைவிட நான் வேறொருவர் மேல் ஆசை கொள்ளலாமா? என்மனம் வேறொருவர் மேல் செல்லுமாயின் என் கற்பு என்னவாகும்? கற்பிழந்த பெண் உலகிலிருக்கத் தக்கவளா? காங்கேயன்: ஆரிய வனிதையே! இப்போது உனது நெஞ்சம் எந்தப் பூமான்மீது சென்றதோ, அந்தப் பூமான் தகாதவ னல்லவே! சித்ரபானு: இப்போது தக்கவர் மேல் என் ஆசை சென்றதாயினும் இரண்டாவதாகத்தானே சென்றது? உம்மைப் பார்த்தால் ஓர் ஆரிய சிரேஷ்டராகவே தோன்றுகிறது. நீரும் இப்படிப் பேசலாமோ? காங்கேயன்: பெண்ணே! மன்னிக்க வேண்டும். நீ முன்னரே ஒருவர் மேல் ஆசை கொண்டிருப்பதை நான் எப்படி அறிந்திருக்க முடியும்? பிரகலாதன்: (நெருங்கி) முன்னால் நீ எவனுருவத்தைப் பார்க்க வில்லையோ அவன் மீது காதல் கொண்டு விட்டதென்பது அர்த்த மற்ற விஷயம். ஆனால் நான் உன் உருவத்தைக் கண்டேன்; காதல் கொண்டேன்; இது சரியாகும். கோடை இருளில் திடீரென்று தோன்றிய மின்னலைப் போல, மாலையிலே, இந்தச் சோலை யிலே எதிர்ப்பட்ட அழகின் பிழம்பே! பெண்கள் நாயகமே! புவியின் வியப்பே! கண்டதும் என் மனத்தை இழுத்த காந்தாமணியே!, எனக்கு நல்ல பதில் சொல்லமாட்டாயா? காங்கேயன்: நான் ஒரு விஷயம் கேட்க நினைக்கிறேன். பெண் மணியே! முன்னரே நீ ஒரு பூமான் மீது காதல் கொண்டதாகத் தெரிவிக்கின்றாய். அப் பூமான் யார்? எப்படிப் பட்டவன்? பிரகலாதன்: அவன் எந்த மூடனோ! உருவத்தைத்தான் பார்க்க வில்லையே! சித்ரபானு: (கோப முகத்துடன்) நாவையடக்கும். பிரகலாதன்: ஆஹா! சாந்தத்தில் உன் முக லாவண்யத்தைக் கண்டதுண்டு. கோபத்தில் உன் முகம் எப்படிப்பட்ட சௌந்தர்யத்தை அடைகிறதென்று பார்க்க எண்ணியே நீ கோபிக்கும்படி பேசினேன். உன் கோப முகத்தையும் நான் வரவேற்கின்றேன். இனி உன் கைதீண்டி நீ என்னை அடிக்க வேண்டுமென்றால் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் தெரியவில்லை. சித்ரபானு: அந்தோ! அன்றொரு நாள் ஒரு பூமானின் பிரதாபத்தைக் கேட்டேன். என் மனத்தைப் பறி கொடுத்தேன். இன்றோ, இதோ! இந்த வீணை ஒலியிலும் என் நெஞ்சம் குதித்தோடு கிறதே! அன்று நான் காதாற் கேட்ட பூமானிடம் என் மனம் தாவிற்று. இதோ, இன்று இந்த நறுந்தேன் மலரில் என் மனம் வண்டுபோல் தாவுகிறதே! அன்று அவரை என் மானசீக உலகிலே சந்தித்தேன். இன்று இதோ! இவ்வானில் என் மனம் ஒளிபோல் பரவுகின்றதே! காங்கேயன்: முன்பு நீ காதலித்த பூமான் யார் என்றேனே! பதில் சொல்ல விருப்பமில்லையா? சித்ரபானு: அப் பூமானைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மிக்க சந்தோஷமல்லவா! அவரைப்பற்றிச் சதா பஜனை பண்ணிக் கொண்டிருப்பது என் பாக்கியமல்லவா?... என்காதலர் ஒரு தமிழ் வீரர். காங்கேயன்: இவர் மட்டும் தமிழ் வீரரல்லவோ? சித்ரபானு: ஆயினும், அவர் என் உள்ளத்தை முதலில் கொள்ளை கொண்டவராயிற்றே! காங்கேயன்: சரி, பிறகு! நண்பா, அருகில் வா! உற்றுக் கேள்! பெண்ணே! இவரிடத்தில் சொல்லிவா! சித்ரபானு: மேலும், அவர் விவாகம் ஆகாதவர். பிரகலாதன்: எனக்கும் இன்னும் விவாகம் ஆகவில்லை. சித்ரபானு: அவர் காதற் கொந்தளிப்புள்ள இளம் பருவமுள்ளவர். காங்கேயன்: சரி. மேலே! இவர் மாத்திரம் கிழவரா? பிரகலாதன்: இந்தத் தேசமா? வெளிநாடா? பெயர் என்ன? சித்ரபானு: இந்தத் தேசமே. பெயரை நான் எப்படிச் சொல்லுவது? பிரகலாதன்: இந்தத் தேசமானால் யாருடைய மகன்? சித்ரபானு: எனது மாமனார் பெயரை நான் கூறமாட்டேன். பிரகலாதன்: உனது மாமனாருக்கு என்ன வேலை? சித்ரபானு: அவர் ஒரு வேலைக்காரர் அன்று, அவர் ஒரு சக்ரவர்த்தி. பிரகலாதன்: (ஆச்சரியத்துடன்) அப்படியா! காங்கேயன்: என்ன அற்புதம்! பிரகலாதன்: ஆனால் உனது காதலன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? சித்ரபானு: அவர் உலகம் சஞ்சாரம் செய்கிறார். பிரகலாதன்: (வியப்புடன்) ஏன் என்று தெரியுமா? சித்ரபானு: அவருக்குக் கூடிய சீக்கிரம் இளவரசுப் பட்டம் ஆகப் போகிறது. காங்கேயன்: இதோ! பிரகலாதன்! பிரகலாதன்: நான் தான் அவன். (சித்ரபானு பறந்தோடி அணைத்துக் கொள்ளுதல். பிரகலாதன் ஆவலோடு கட்டிக்கொள்ளுகிறான்.] பாட்டு ரகுராம நாமாபுமா என்ற மெட்டு. அமீர்கல்யாணி - ரூபகம் பிரகாலாதன்: கானு லாவு மானே அடி (கானு) காதல் மீற லானேன் அடி தேனு லாவு மாமலர்களும் தென்றலோடு கலந்திடவுமனம் நலிவுறுதே இனியதான அதர பானம் இல்லை யென்றால் பிராணனுக் கூனம் புனித வல்லியே தாவள்ய பொங்கும் துங்கம் தங்கும் அங்கும். சித்ரபானு: சிந்து சேர்வ சந்தம் எனைச் சந்ததம் தேகந் தனைக் கொந்தும் (சிந்) மந்த மாருதம் கனல்தந்து மாது நான் மயல்பெருகிடும்படி செயும்விதந்தனையுணர் இருகையாலும் என்னைப் பிணித்தே இன்பவேட்கை தன்னைத் தணித்தே மருவ வேண்டுமே ப்ராணேசா வாது தீது மாது மீது. (சிந்) சித்ரபானு: நாதா! என் கற்பு பரிசுத்தமானது. (முகத்தைக் கவனித்து முத்தத்தின்மேல் முத்தம் கொடுத்தல்] காங்கேயன்: சரி! தேன் குடத்தில் ஈ விழுந்து விட்டது! ஏனப்பா பிரகலாதா! உலக சுற்றுப் பிரயாணம் எவ்வளவுவி லிருக்கிறது? பிரகலாதன்: உலகச் சுற்றுப்பிரயாணத்தின் சாரத்தை அனுபவிக் கின்றேனே! நீ நமது கூடாரத்தை நோக்கிப் போ! காங்கேயன்: நீ எப்போது வருவாய்? பிரகலாதன்: சீக்கிரம் வந்து சேதி தெரிவிக்கின்றேன். காட்சி - இரண்டு இடம் : சித்ரபானுவின் படுக்கையறையை யடுத்த ஒரு கூடம். உறுப்பினர் : சித்ரபானுவின் தந்தையாகிய கஜகேது, மற்றும் ஆரிய ஜனங்கள், பிரகலாதன், சித்ரபானு. கஜகேது: மருகரே! நாங்கள் ஆரிய ஜனங்கள்! பூதேவர்கள்! ஆயினும் நாங்கள் இந்நாட்டில் விஜயஞ் செய்து நீண்ட நெடுங் காலமாய் விட்டதால், இந்நாட்டுத் தமிழர்களுடன் இரத்த சம்பந்தமில்லாதிருக்க முடியவில்லை. அதனால் உம்மைப் போலுள்ள சற்குணவான்களிடம் எங்கள் பெண்கள் காதல் கொள்வதையும், எங்கள் ஆடவர்களிடத்தும் உங்களினத்துப் பெண்கள் காதல் கொள்வதையும் நாங்கள் தடை செய்வ தில்லை ஆனால் ஒன்று மாத்திரம் கவனிக்கத் தக்கது. எங்கள் வேதம் பஹு உத்க்ருஷ்டமானது. அதை அங்கீகரிக்காத எந்தத் தமிழனிடமும் நாங்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வ தில்லை. எங்கள் கர்மானுஷ்டங்கள் பஹு உத்க்கிருஷ்ட மானவை; அவைகளை ஒப்புக்கொள்ளாத எந்தத் தமிழனிடத் திலும் நாங்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை. எங்கள் வேதம், மதம், பழக்க வழக்கங்கள் ஜாதிக் கட்டுப்பாடு ஏன் உத்க்ருஷ்டமானவை என்றால் அவைகள் கேவலம் சிற்றறிவும் சிறு தொழிலுமுள்ள மனிதனால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல. அவை கடவுளால் வகுக்கப்பட்டவை. பின்னும் அவை மனு முதலிய எங்கள் மஹரிஷிகளால் ஒழுங்கு செய்யப் பட்டவையாகும். நரர் என்றும், அசுரர் என்றும், ராட்சர்களென்றும் தமிழர் களென்றும் சொல்லப்படும். இந் நாட்டுமக்கள் கடைத்தேறும் படியாக மேற்சொன்ன வேதாதிகளைக் கடவுள் ஏற்படுத்தியதோடு, பூசுரர்களாகிய எங்களையும் கடவுள் தமது முகத்தினின்றும் பிறப்பித்தார். ஆதலால் இந் நாட்டு மக்களை நல்வழிப் படுத்துவதே எங்கள் வேலை. இந்த அபிப்பிராயங்களுக் கெல்லாம் உமது தந்தையாராகிய இரண்யச் சக்ரவர்த்தியானவர் விரோதமாக இருந்து வருகிறார். ஆயினும் தெய்வ பலம் எங்களிடம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் வராது. நீர் பஹூ புத்திமான். சிறு வயது முதல் ஆத்திக ஞானம் பெற்று விளங்குகிறீர். எமது வேதத்தை அந்தரங்கத்தில் ஒப்புக் கொள்ளுகிறீர்! எம்மையெல்லாம் உயர்வாக மதிக்கிறீர். எமது வாழ்க்கை முறைகளை நீர்வெறுக்கிறதில்லை. இவைகளுக் கெல்லாம் அடையாளமாக இப்போது எமது ஆர்ய சிகாமணி யாகிய சித்ரபானுவைக் காதலித்தீர். உங்களுடைய சேர்க்கை யானது சாமான்யமானதன்று. இச் சேர்க்கையால் இந்த உலகமே நன்னிலையை அடையப் போகின்றது. ஆயினும் மருகரே! ஒரு விஷயம் மாத்திரம் உம்மைக் கேட்டுக் கொள்ளுகிறேன். நீர் சித்ர பானுவைக் கல்யாணம் செய்து கொண்ட விஷயம் எவருக்கும் தெரியாதிருக்க வேண்டும். விஷயம் வெளி வருமாயின், அதனால் உமக்குக் கேடுகள் சம்பவிக்கும். உமக்கு உமது தந்தை இந்த ராஜ்யத்தைப் பட்டா பிஷேகம் செய்யமாட்டார். அதனால் எங்கள் பெண்ணுக்கும் குறைவு ஏற்படும். பிரகலாதன்: மாமா! நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்! உங்கள் பெண்ணும் எனது உயிருமான இந்தச் சித்ரபானுவுக்கு ஒரு குறை ஏற்படும் பட்சத்தில் என் உயிர் நில்லாது! நம்புங்கள்! கஜகேது: அதென்ன! உமது தந்தையால் எனது பெண்ணுக்கு ஏதாவது குறை ஏற்பட்டால், நீர் உமது உயிரையே மாய்த்துக் கொள்வீர்? அந்தோ! மருகரே! இப்போதே எமக்குச் சித்தம் கலங்குகின்றதே! அந்தோ! மகளே! நீ என்ன காரியம் செய்து விட்டாய்! கேட்டாயா உனது அருமைக் காதலர் சொல்வதை? சித்ரபானு: நாதா! இது என்ன ஆண்மையற்ற வார்த்தை! கஜகேது: உமக்கு எதிராக உமது தந்தை ஏதேனும் செய்வா ரானால் உயிரை மாய்த்துக் கொள்வதா? எதிர்த்தவனை நாசம் செய்வேன் என்று சொல்வதல்லவா வீரனுக்கழகு! பிரகலாதன்: (தன்னை வந்து பயத்தால் அணைத்துக் கொண்ட சித்ரபானுவை நோக்கி) கண்மணி! நீ வருந்தாதே! நமக்குத் தீமை செய்வோன் என் தந்தை மாத்திரமன்று; எவராயினும் சரி! தும்சப்படுத்துவேன்! அஞ்சாதே! - மாமா! சித்ரபானுவை நான் என் உயிர் என்று நினைப்பது உண்மையானால் ஆர்ய தர்மத்தை இந்த உலகத்தில் நிலைநாட்ட என் உயிர் உபயோகப்படட்டும். அனைவரும்: ஆஹா! பேஷ்! பேஷ்! கஜகேது: இன்றல்லவோ நான் ஒரு தியாகியை, ஒப்பற்ற வீரனை, இளஞ் சிங்கத்தை மருமகனாக அடைந்தேன்! பிரகலாதன்: மாமா! எனக்குத் தக்க ஆதரவு கிடைக்கும் வரைக்கும் எனக்கும் சித்ரபானுவுக்கும் நடைபெற்ற கலியாணத்தைப் பற்றி எவருக்கும் சொல்லிவிடாதீர்கள். ஆனால் என் நண்பனாகிய காங்கேயனை உங்களுக்குத் தெரியுமா? கஜகேது: சுத்தமாகத் தெரியாது. பிரகலாதன்: அவன் ஒரு சுத்த ஆர்ய ரேஷ்டனாயிற்றே! உமக்கெல்லாம் தெரியாதிருக்க நியாமில்லையே! கஜகேது: எமக்குத் தெரியாததால் அவன் சுத்த ஆர்யனா யிருக்கமாட்டான். அது பற்றி என்ன? பிரகலாதன்: இல்லை அவனுக்கு இக் கலியாண விஷயம் தெரியும். யாரிடத்திலாவது சொல்லிவிட்டால் காரியம் கெட்டுவிடுமே என்றுதான் அஞ்சுகிறேன். கஜகேது: அப்படியா? ஆயினும் பாதகமில்லை. (உடனே கஜகேது கண்ணை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் ஜெபிப்பது போல் பாசாங்கு செய்தபின், கொஞ்சம் விபூதியை எடுத்து வாயினால் ஊதிவிட்டு) சரி! இந்த நிமிஷத்திலிருந்து நடந்த விஷயங்களையெல்லாம் அவன் மறந்து விடுவான். ஞாபகமே வராது. தெய்வ பலம் நமக்கு இருக்கிறது. ஸ்ரீமந் நாராயணன் நம்மையெல்லாம் காக்கவும் துஷ்டர்களை யெல்லாம் நிக்கிரகம் செய்யவும் திருவுளங் கொண்டிருக்கும் ரகயம் நமக்கெல்லாம் தெரியும். அவ்வுண்மையைப் பாவிகள் அறியமாட்டார்கள். மருகரே! நீர் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டியதில்லை. உமது தந்தைக்கு வலது கைபோல் இருந்துவரும் சேனாதிபதியும் நமக்கு அந்தரங்கத்தில் ஒற்று வேலை செய்து வருகிறார். நீர் எதற்கும் யோசிக்க வேண்டாம். அவ்வப்போது நடக்கும் விஷயங்களை மாத்திரம் எங்களுக்கு அறிவியும். பார்த்துக் கொள்ளுகிறோம். நீர் இங்கே சிலகாலம் தங்கிப் பிறகு உமது தந்தையாரிடம் சென்று உலக சஞ்சாரம் முடிந்து விட்டது என்று சொல்லிவிடும். ஏனென்றால், சித்ரபானு உம்மைப் பிரிந்து இருக்கமாட்டாள். பாட்டு கண்யமுள்ள நாதசுகுமாரா என்ற மெட்டு மால் கோ - ஆதி சித்ரபானு: பிராண நாதரே உமை நான் பிரியேன் - நீர் பிரிந்திடில் என்றனுயிர் தரியேன் - நல்ல பூமலர் மணம் போலே நாமே - சதா புஷ்பமஞ் சத்தினிற் கிடப்போமே. பிரகலாதன்: உன் மையலே என் மனத்தைத் தூண்டும் - எனக் குன்னைவிட என்ன சுகம் வேண்டும் - மிகு கன்னலடி உன் இதழின் ஊற்று நல்ல கட்டழகி உன் மனத்தைத் தேற்று சித்ரபானு: நாதா! என்னைவிட்டு பிரியலாகாது. பிரகலாதன்: கண்மணி! சித்ரபானு! நீ வருந்தாதே, நான் உன் தந்தை சொல்லியது போல் இங்கேயே இருந்து விடுகிறேன். சித்ரபானு: தந்தையே இன்னொரு விஷயம் அல்லவா? எனக்குத் தக்க மணவாளர் கிடைத்தால் மூன்று மாதம் நோன்பிருப்பதாக கௌரிக்குப் பிரார்த்தனை செய்திருக்கிறேன். அதன்படி இன்று முதலே நோன்பிருக்க வேண்டுமா? இன்னும் சில நாள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாமா? கஜகேது: அடாடாடா இன்றுமுதல் விரதம் இருக்க வேண்டாமா? சித்ரபானு: (வருத்தமாக) மூன்று மாத காலம் நான் எனது காதலன் முகத்தில் விழிக்காமல் எவ்வாறு இருக்கமுடியும்? (பந்துக்களில் ஒரு பெரியவர் - முகத்தில் விழிக்கலாம் ஆலிங்கன சம்சர்க்காதிகளை நீக்கவேண்டும்; அவ்வளவு தான்.) பிரகலாதன்: கண்மணி மூன்று மாதத்தையும் மூன்று நிமிஷமாகக் கழித்துவிடு. வருந்தாதே என்ன செய்வது? நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லுகிறார்களே. கஜகேது: அப்படியானால் நாளைமுதல் நோன்பு தொடக்கச் சித்தப் படுத்துகிறோம். நீங்கள் அந்தப்புரம் சென்று வாருங்கள். [ïUtU« கைகோர்த்தபடி kiwjš] காங்கேயன்: (ஓடிவந்து) அப்பா! என்ன செய்தி? கஜகேது: காங்கேயனைத் தெரியுமா என்று பிரகலாதன் கேட்டான். நான் தெரியவே தெரியாதென்று சொல்லியிருக்கிறேன். கலியாண விஷயம் ரகசியமாயிருக்க வேண்டியிருப்பதால் நீ யாரிடத்திலாகிலும் சொல்லிவிடக்கூடும் என்று சந்தேகப் பட்டான். என் மந்திர சக்தியால் நடந்தவைகளையெல்லாம் காங்கேயன் மறந்துவிடுவான் என்று சொல்லியிருக்கிறேன். நீ திருமணம் நடந்ததை மறந்துவிட்டதுபோல் பாசாங்கு செய்யவேண்டும். தெரியுமா? காங்கேயன்: மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்பிக்கிறீரோ? வேண்டியதில்லை. அது கிடக்கட்டும் எனது தங்கை சித்ரபானு தந்திரமாக நடந்து கொண்டாளா? கஜகேது: ஆஹா! அதில் உனக்குச் சந்தேகம் வேண்டியதில்லை. மேலும் இளவரசனாகிய பிரகலாதன் உன் தங்கையின் பேரில் பிராணனை வைத்திருக்கிறான். நாம் நினைத்துள்ள காரியம் பாதிமுடிந்தது என்று சொல்லவேண்டும். காங்கேயன்: சும்மா சொல்லலாகாது. தங்கை சித்ரபானு நான் முன்பே சொல்லியிருந்தபடி சிருங்காரவனத்தில் பிரகலாதனிடம் வெகு சாகஸம் செய்தாள். ஆரியர் முற்போக்கிற்கும் தமிழர் அழிவிற்கும் சித்ரபானு தன்னைத் தியாகம் செய்தாள் என்றே சொல்லவேண்டும். கஜகேது: விஷயத்தை வளர்த்தாதே. சீக்கிரம் நீ போய்விடு. கடைசி வரைக்கும் நீ சித்ரபானுவின் தமையன் என்று காட்டிக் கொள்ளாதே போ! இன்றைய பெரு நிகழ்ச்சிக்கு நீ காரணமா யிருந்ததினால் எம்மோடு சோமரஸம் அருந்தி விட்டுப்போ. (அனைவரும் கள் அருந்துகிறார்கள். காங்கேயன் மயக்கத்தோடு பாடுகிறான். மற்றவர்களும் பாடுகிறார்கள்.] *gh£L காங்கேயன்: ரசத்தில் சிறந்தது சோமரசம் - ஆர்ய ரசத்தில் சிறந்தது காமரசம்! வசத்தில் நிறுத்தாது இந்த ரசம் - காம வலையை விரிப்பதெங்கள் சரசம்! மற்றவர்: சோமரசம் குடித்தால் உறவேது? - நாங்கள் சொக்கும் சந்தோஷத்தில் துறவேது? காமரசம் மீறியது கஜகேது - ஆடிக் கண்ணயர்வோம் காரிகையர் மடிமீது! காட்சி - மூன்று இடம் : இரணியன் அந்தப்புரம் உறுப்பினர் : இரணியன், மனைவி லீலாவதி, ஆலவட்டம் வீசும் பணிப்பெண்கள், வாயிற் சேவகன். இரணியன்: உன் சஞ்சல முகத்தைக் காண நான் சகியேனே! கண்மணி! லீலாவதி! சந்தோஷத்தால் உன் முகம் என்று மலரும்? நமது அருமைக் குமாரன் இளவரசுப் பட்டத்திற்கு உரியவன் ஆகிவிட்டான். அதனால் அவன் உலக சஞ்சாரம் செய்தால்தானே உலக ஞானம் அவனுக்கு உண்டாகும். பாட்டு கானடா - ஆதி லீலாவதி: ஆசைக் கொருபிள்ளை அரிதாய் வளர்த்த கிள்ளை நேசத்துக் கவன்பாத்ரம் நேரிழையாள் என்நேத்தரம் (ஆ) தேசங்கள் தோறும்சென்று திகைத்திடு வானோ என்று ஊசலாடுதே மனம் உரைப்பீரே ஓர் எத்தனம் (ஆ) அலட்சியம் தான்என் சொல்லோ? ஐயாஉம் மனம்கல்லோ? கலக்கமெந்த நாள்தீரும் காணுதல் எந்தநேரம்? (ஆ) லீலாவதி: ஆசைக்கொரு பிள்ளை இந்நாள் மட்டும் அவன் என்னை விட்டு அரைக்கணமாவது பிரிந்ததில்லை. அவன் பிரிவை எவ்வாறு சகிப்பேன்? தற்காலம் அவன் எந்நாட்டிலிருக் கிறானோ? அங்கு அவனுக்கு என்ன இன்னல் உண்டாகிறதோ என் நெஞ்சம் தாளவில்லையே! எந்தப் பகை அரசன் அவனுக்கு இன்னல் தேடுகிறானோ! வன சஞ்சாரம் செய்யும் பொழுது கள்ளர் முதலியவர்களால் ஏதாவது இடையூறு ஏற்படுகிறதோ, சில சமயம் எந்தப் பெண்ணின் மாயவலையிற் சிக்கி அதனால் துன்பத்தை அடைகிறானோ! துஷ்ட விலங்குகளால் என்ன ஆபத்தோ! பூகம்பம், இடி, காற்று, மலையின் சரிவு, எரிமலை,கடல், முதலியவற்றால் ஏற்படும் உற்பாதங்கட்கு ஆளாகின்றானோ? அந்தோ! நாதா! என் இதயம் பிளந்துவிடும் போலிருக்கிறதே!. இரணியன்: பெண்ணரசியே! நீ இப்போது கூறியவற்றால் கலங்காத என் மனமும் சற்றுக் கலங்குகிறது. என் மைந்தனைப்பற்றிய கவலையைத் தூண்டிவிட்டது. பூமி அதிர்ந்தாலும் நம் குமாரன் அதிலிருந்து தப்பக் கூடும். எரிமலைக் கிடையி லிருந்தும் வீர மைந்தன் விலகக்கூடும். கானாறுகளின் சுழலிற் கிடையிலிருந்தும் இளங்காளை மீள முடியும். தமிழன் அவன். எந்நாட்டுப் பகையும் அவனுக்குப் பெரியதன்று. ஆயினும் கண்மணி! எங்கேயோ இருந்து இங்குப் பிழைக்க வந்த ஆரியர்களின் சூழ்ச்சிக்கு நம் மைந்தன் ஆளாகாதிருந்தால் போதும் - யாகமென்று சாக்குச் சொல்லி விலங்குகளையும், பறவைகளையும், நெருப்பிற் பொசுக்கியுண்ணும் ஆரியர்கள் - ஒரு பெண்ணைப் பலர் புணர்ச்சி செய்து மகிழும் ஆரியர்கள் - சோமரசம் என்னும் ஒருவகை கள்ளைக் குடித்து வெறிக்கும் ஒழுக்கங்கெட்ட ஆரியர்கள் - இந் நாட்டிலுள்ள தமிழர் ஒழுக்கத்திற்கே உலைவைக்கும் கொடிய ஆரியர்கள் - தமிழர் ஆட்சியைத் தொலைத்துத் தமது ஆட்சியை பரப்பச் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணைக் காட்டித் தமிழர்களை வஞ்சிக்கிறார்கள். மந்திரமென்று வஞ்சித்து ஏமாற்றுகிறார்கள் தமிழர்களைக் கொண்டு தமது இனத்தைப் பெருக்குகிறார்கள். ஆயினும் சுயநலம் கருதித் தம்மை உயர் வென்று தாமே எழுதிக் கொண்ட வேத நூலில் தமிழர்களைச் சிக்க வைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆரியர் சம்பந்தமானது இந் நாட்டிற்கு உற்பாதங்களிலெல்லாம் பெரிய உற்பாதமா யிருக்கின்றது. என் செங்கோலைப் பறிக்க அவர்கள் ஒவ்வொரு விநாடியும் சூழ்ச்சி செய்து வருகின்றனர். என் சந்ததியே அற்றுப் போகும்படி செய்ய அவர்கள் எண்ணி என் மகனுக்கு என்ன கெடுதி விளைவிக்கின்றார்களோ என்பதுதான் என் கவலை. இந் நாட்டில் வெகு நாள்களாய் ஊன்றியுள்ள ஆரிய வேரைப் பறிப்பது எனக்குக் கடின மன்று. ஆயினும் என் தமிழர்கள் அவர்களின் நயவஞ்சகத் திற்குள் சிக்கியிருக்கிறார்கள். நான் ஆரியரை நோக்கி எறியும் ஒவ்வோர் அம்பும் நம் நாட்டுத் தமிழரையும் தாக்குமன்றோ? அதனாலல்லவா யோசிக்க வேண்டியிருக் கிறது! நல்லது. என் அருமை நாயகி! நீ ஒன்றுக்கும் அஞ்சாதே. (இதற்கிடையில் தூதுவன் ஒருவன் வந்து காவற்காரனைக் கண்டு...) தூதுவன்: சேவகரே, நான் அவசரமாகத் சக்ரவர்த்தியைக் காணவேண்டும். காவற்காரன்: விடைபெற்று வருகிறேன். (அரசனிடம் சென்று வணங்கி) இராஜாதி ராஜரே தங்களை அவசரமாகக் காண ஒரு தூதர் வந்திருக்கிறார். இரணியன்: உள்ளே வரவிடு. சேவகன்: (தூதனிடம் வந்து) உள்ளே செல்லலாம். தூதுவன்: (சக்ரவர்த்தியைப் பணிந்து) இராஜாதி ராஜரே! ராஜ பாட்டையில் ஆரியராகிய ஆடவர்களும் பெண்களும் ஏகப் பெருங்கூட்டம் கூடிநின்று அட்டகாசம் செய்யும் கோலம் சொல்ல முடியவில்லை. கூடிய சீக்கிரத்தில் எவனோ நாராயணமூர்த்தி தோன்றித் தங்களையும், ஆரியர் வேதத்தை ஒப்பாத தமிழர்களையும் அழித்துவிடப் போகின்றனாம். ஆகையால் ஆரியர்கள் கொள்கைப்படி நடப்பதாக உறுதி கூற வேண்டுமாம். பூணுல் தரித்துக் கொள்ள வேண்டுமாம். சடங்குகட்கு உட்பட வேண்டுமாம் ஆரியர்களை வணங்க வேண்டுமாம். அவர்களுடைய ஆரிய வேதியர்கள் சொல்லும் விதமாக கர்மானுஷ்டானங்களில் ஈடுபடவேண்டுமாம். தமிழர்களை நல்வழிப்படுத்தவே ஆரியர்களை கடவுள் இங்கு உற்பத்திச் செய்தாராம். இன்னும் என்னென்னமோ சொல்லு கிறார்கள். இராஜபாட்டை நிர்த்தூளிப்படுகிறது, தலை துள்ளிப் போகிறார்கள். பாட்டு (அடாணா - ரூபகம்.) இரணியன்: கெட்ட ஆரியரை நாச காரியரை விட்டிடாதே - அவர் ஆணவந் தன்னை அடக்கிடவேண்டும் இப்போதே அநுபல்லவி ஏருழவர் மாடுகளை இணைத்தல் போலவரைப் பிணைத்துக் காவலிலே திணித்து வைத்திடுவாய் (ஆரிய) சரணம் சேரிவிட்டு ராஜ வீதி வந்தாரெனில் தீயருக்கிங் கென்ன வேலை? இந்த ஊருக்கடுக்காத காரியம் செய்திடில் உரிக்கவேண்டுமவர் தோலை. காரியத்தையே மிகுந்த தீவிரத்திரலே நடத்தும் காதகர்க்கு நானிறுத்த ஆணையைப் புலப்படுத்தி (ஆரிய) இரணியன்: (கோபமாய்) இதே நேரத்தில் செல். சீக்கிரம் செல்; மாடுகளைப் பிணைப்பது போல் அவர்கள் அனைவரையும் சரமாகப் பிணைத்து அவசரமாக நம்மால் கூட்டப்படும் நியாய சபைக்குக் கொண்டு வா. போ! இன்னும் சேவர்களை அழைத்துப் போ! நமது இந்த ஆணைக்குப் கீழ்ப் படியாதவர்களைக் கண்டங் கண்டமாய் வெட்டி வீழ்த்து, நாளைய மறுநாள் காலை அவசர நியாய சபை கூட்டப்படும். விரைந்து போ. (தூதுவன் வணங்கி மறைதல்] இரணியன்: லீலாவதி! பார்த்தனையா ஆரியர்களின் அட்டகாசத்தை? லீலாவதி: நாதா! நமது தமிழர்கள் ஆரியர் வார்த்தையில் மயங்குவது தான் விந்தையாக இருக்கிறது!. இரணியன்: தமிழ் வாலிபர்களை ஆரியர் பெண்களைக் கொண்டு வசப்படுத்துவதுண்டு. ஆரியப் பெண்கள் வெண்ணிற முடையவர்களாயிருக்கின்றார்கள். நம் நாட்டிலுள்ள அரசர்களைத் தந்திரத்தால் வசப்படுத்தியதோடு சூழ்ச்சியால் அவர்களைக் கொன்றார்கள். தங்களை வணங்கிப் பூசித்தால் மறுபிறப்பில் சொர்க்கம் என்ற ஓரிடத்தில் இருந்து கொண்டு பல இன்பங்களை அடையலாம், என்றல்லவா கூறுகிறார்கள்! நம்மை எதிர்ப்பவர்கள் நரகம் என்ற இடத்தில் மகா துன்பம் அடைய வேண்டும் என்பார்கள். இவற்றை நம்புகிறவர்கள் அவர்கள் வசப்பட்டு விடுகிறார்கள். முளையிலேயே நமது பெரியோர்கள் ஆரியப் பூண்டைக் கிள்ளி எறியாததால் இன்று கோடாரி கொண்டு பிளக்க வேண்டிய சிரமம் ஏற்பட்டு விட்டது. முனிவர் என்றும், ரிஷிகள் என்றும் பெயர் வைத்துள்ள ஆரியப், பாதிரிகளே இதில் முன்னின்று வேலை செய்கிறார்கள். அதிருக்கட்டும், நாழியாகிறது. உணவருந் தலாம் - வருத்தந் தணி, சீக்கிரம் குமாரன் வந்து விடுவான். காட்சி - நான்கு இடம் : காட்டுப் புறத்திலுள்ள கூடாரத்தின் பக்கத்தில் ஒரு தனித்த இடம். பாத்திரங்கள் : பிரகலாதன், காங்கேயன், கஜகேது, சித்ரபானு, மகரிஷி ஒருவர். காங்கேயன்: என்னையும் கூடாரத்திலுள்ள மற்றும் உனது உடற் காப்பாளரையும் இங்கு விட்டுவிட்டு இத்தனை நாள் நீ எங்கே போயிருந்தாய்? பிரகலாதன்: நீயும் நானும் சற்றுத் தூரத்திலுள்ள சிங்கார வனத்திற்குச் சென்றோமல்லவா? காங்கேயன்: நீ என்ன கனவா கண்டாய்? சிங்காரவனத்திற்கு நானுமா வந்தேன்? பிரகலாதன்: இன்னும் அதிக நாள் ஆகவில்லையே! அதற்குள் மறந்தாயே! காங்கேயன்: நான் மறந்துவிடவில்லை. நீதான் எதோதோ உளறுகிறாய். பிரகலாதன்: சரி! அந்த இடத்தில் நாம் இருவரும் ஆரிய வனிதையைக் கண்டது ஞாபகமிருக்கிறதா? காங்கேயன்: சரியாய்ப் போயிற்று. உனக்கென்ன பெண் பைத்தியம் பிடித்துவிட்ட காரணத்தால் இப்படியெல்லாம் நடவாததை நடந்த மாதிரி நினைக்கிறாயா? பிரகலாதன்: அது நிற்க, அவள் என்மீது காதல் கொண்டது ஞாபக மில்லையா? காங்கேயன்: சொல்வாருக்கு மதி இல்லாவிட்டாலும் கேட்பாருக்குத் தான் மதி கெட்டுப்போகுமா? ஆரிய வனிதை உன் பேரில், தமிழன்மீது காதல் கொள்வதுண்டோ? அதென்ன ஞாபக மிருக்கிறதா? ஞாபகமிருக்கிறதா என்று என்னைக் கேட்கிறாயே? எனக்கு ஞாபகம் எங்கும் போய்விடவில்லை. நீதான் வெறியன் போல் எதேதோ உளறுகின்றாய். பிரகலாதன்: சரி! நான் தான் உளறுகிறேன். விட்டுவிடு. காங்கேயன்: பின்னென்ன? இப்போது சொன்ன இத்தனை பெரிய கதையா என்னெதிரில் நடந்தது? பிரகலாதா? உனக்கு உடம்பு சரியில்லையா? ஏதாவது மயக்கமுண்டா! உனக்குச் சித்த வாதினம் கெட்டிருப்பதாய் நான் யூகிக்கிறேன். பிரகலாதன்: காங்கேயா? நான் விளையாட்டுக்காக இவ்வாறு கூறினேன்; வேறொன்றுமில்லை. காங்கேயன்: அப்படியானால் இத்தனை நாள் நீ எங்கே தான் போயிருந்தாய். பிரகலாதன்: பிறகு சொல்கிறேன். அதோ யாரோ வருகிறார்கள். அவர்கள் நம்மை நோக்கி வருகிறார்கள் போலிருக்கிறது (உற்றுக் கவனித்து) சரி, சரி, காங்கேயா! நீ இங்கேயே இரு; நான் வந்துவிடுகிறேன். பிரகலாதன்: (தன்னை நோக்கி வந்த மகரிஷி ஒருவர், சித்ர பானு, கஜகேது ஆகியோரை எதிர்கொண்டு) மாமா, நாயகி, என்ன விசேஷம்? யாரால் உங்கட்கு இன்னல் ஏற்பட்டது. முகவாட்டத்திற்குக் காரணம் என்ன? மகரிஷி: இளவரசே! உமது மாமன் உமது காதலி துக்கக் கடலில் ஆழ்ந்துள்ளார்கள். அவர்களால் பேச முடியாது. அவர்களின் உள்ளம் குமுறுவது அவர்களின் முகத்தில் தோன்றவில்லையா? என்ன செய்வது? பரிதாபம்! ஒரு பக்கம் இரண்யச் சக்ரவர்த்தியோ உமது தந்தை. தந்தையாரால் சிறைப்படுத்தப்பட்ட ஆரிய ஜனங்களோ உமது மாமனாரின் பந்துக்கள்; இந்தத் தர்ம சங்கடத்தில் நாங்கள் என்ன செய்வதென்றே தோன்றவில்லை. பிரகலாதன்: அப்படியா? மகரிஷி: விஷயத்தைப் பொறுமையாய்க் கேளும். உமது பத்தினி சித்ரபானு இருக்கிறாளல்லவோ? அவளுடைய தாய்ப்பாட்டி, பாட்டன், சிற்றப்பன், சிற்றன்னை அவர்களுடைய பிள்ளைகள் ஆகச் சுமார் 50 பேர்கள் நேற்று ராஜபாட்டையில் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் தமிழர்கள் அவர்களை எதிர்த்திருக்கிறார்கள் இவர்கள் பதில்பேசாமல் போய்க் கொண்டிருந்தார்கள். ஆரியர்களை ஒருவர் இம்சை செய்தால் ஆரிய ஜனங்கள் பதிலுக்குப் பதில் செய்வதில்லையல்லவா! அவர்கள் தாம் தெய்வ பலமுடையவர் களாயிற்றே! அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமில்லையல்லவா? பிறகு என்ன நடந்ததென்றால் சக்கரவர்த்தியவர்களின் கட்டளைப் படி அநேக சேவகர்கள் கண், மூக்கு, கை, கால்களை அறுத்துச் சின்னாபின்னப்படுத்தியதுமன்றி, அனைவரையும் பிணைத்து அரச மாளிகையின் அண்டையில் உள்ள பெரிய சாவடியில் அடைத்து வைத்துள்ளார்கள். நாளைக்குச் சக்ரவர்த்தி விசாரணை செய்ய எண்ணி இருக்கிறாராம். விசாரணை என்பது மேலுக்குத்தான். சக்ரவர்த்திக்குத்தான் ஆரியர் என்றால் வேம்பாயிற்றே! அனைவரையும் கொலை செய்யும்படி ஆக்ஞாபித்து விடுவார். நாராயணமந்திர பலத்தால் இந்நாட்டுத் தமிழர்களையும், இந்தச் சக்ரவர்த்தியை யும் இதே நொடியில் நிர்மூலப்படுத்துவது எங்கள் போன்ற ஆரியக் குருக்களுக்குக் கஷ்டமன்று. ஆயினும் உமது முகத்திற்குப் பார்க்க வேண்டியிருக்கிறது. சித்ரபானு: பிராண நாதா! எனது தாயும் மற்றும் எனக்கு நெருங்கிய உறவினரும் சாகப் போகிறார்களே! நான் இந்நாட்டின் இளவரசுக்கு, ஓர் ஒப்பற்ற வீரருக்கு மனைவியல்லவா? அந்தோ! என் மாமனாகிய அந்த இரண்யச் சக்ரவர்த்தியை இதே தருணத்தில் மந்திர பலத்தால் பமீகரப் படுத்துகிறேன் என்று கிளம்பிய மகரிஷியை நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேனே! அது போல எனது உறவினருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்க உங்கள் உடல் ஏன் பதைக்கவில்லை! உம்மை நான் மணந்ததின் பயன் இதுதானா? பிரகலாதன்: கண்மணி! வருந்தாதே. உன் உறவினரைக் காப்பேன், சந்தேகியாதே. இந் நாட்டினர் அனைவரும் ஒருங்கே என்னை எதிர்ப்பினும் நான் பின் வாங்கப் போவதில்லை; உன் தாயாரும் சிறைப்பட்டார்களா? உன் சிற்றன்னை முதலியவர் களுமா சிறைபட்டார்கள்? ஆஹா! கஜகேது: மருகரே! உம்மால் முடியாவிட்டால் கூறிவிடும் ஒரு வார்த்தை. நானும் எனது குமாரத்தியும் அந்த இரணியன் எதிரில் குத்திக்கொண்டு செத்துப் போகிறோம். என் மனைவி யும் உறவினரும் கொலையுண்ட பின் எங்களுக்கு இந்த உலகம் கருப்பங்கட்டியா! நீர் ஒரு வீரத் தமிழரானால் எடுங்கள் வாளை; உங்களுக்கு அனுகூலமாகச் சேனாதிபதியும் இருக்கிறார். பிரகலாதன்: ஆஹா நான் பின் வாங்கப் போவதில்லை. [this cUî»wh‹] மகரிஷி: (தடுத்து) இளவரசே, பொறுமை கடலிலும் பெரிது பதறாதீர்கள். வினைவலியும், துணைவலியும் சீர்தூக்கி ஒரு காரியத்தை தொடங்கவேண்டும். சமீபத்தில் உமக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போகிறார்கள். அதற்குள் நாம் எல்லாவித ஆதரவுகளையும் தேடிக்கொள்ள முடியும். இப்போது சிறைப்பட்டவர்களைத் தந்திரமாக மீட்க வழி தேடினால் போதும். பிரகலாதன்: அதற்கென்ன செய்யலாம்? நீங்களே சொல்லி யருளுங்கள். மகரிஷி: இன்றிரவு நீரும் இங்குள்ள வேறு சிலரும் மாறு வேஷத்துடன் அரண்மனையண்டை சென்று சிறைப் பட்டவர்களைப் மீட்டுக்கொண்டு வந்துவிடுவது உமக்குக் கஷ்டமல்லவே! சித்ரபானு: நாதா! அவ்வாறே செய்யலாம், எப்படியாவது என் உறவினரும் தாயாரும் மீண்டால் போதும். பிரகலாதன்: அவ்வாறே உறுதி கூறுகிறேன். சித்ரபானு: அப்படியானால் நானுந்தான் உங்களுடன் வருவேன். பிரகலாதன்: என் ஆருயிர்க் காதலியே! கட்டுக் காவல் உள்ள ஆபத்துக்குரிய இடத்தில் நீ வரலாகாது. சித்ரபானு: ஒரு போதும் அப்படிப்பட்ட ஆபத்தான இடத்திற்கு உங்களை நான் தனியாக அனுப்பச் சம்மதிக்க மாட்டேன். உயிரைவிட்டு உடல் பிரியாததுபோல் நான் உங்களை விட்டுப் பிரியமாட்டேன். உங்களுக்கு நேரிடும் ஆபத்து எனக்கும் நேரட்டும். இதற்குச் சம்மதிக்காவிடில் என்னுயிரை இப்போதே மாய்த்துக் கொள்வேன். பிரகலாதன்: மாமா! இதென்ன, சித்ரபானு இந்த விஷயத்தில் இவ்வாறு பிடிவாதம் செய்கிறாள்?. கஜகேது: நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை. மகரிஷி: இளவரசே! நீர் ஓர் ஆபத்துக்குரிய விஷயத்தை நாடிச் செல்லப் போகின்றீர். கற்புடைய உமது மனைவி அச் சமயத்தில் உம்மைப் பிரிய இசைவாளா? பிரகலாதன்: பெண்ணே! அப்படியானால் வா. இன்றிரவு அரண் மனைப் பக்கம் ரகசியமாய்ச் செல்ல நீ ஆயத்தமாயிரு. கஜகேது: மருகரே! காங்கேயன் விஷயம் என்னவாயிற்று? பிரகலாதன்: உங்கள் மந்திர சக்தியால் அவன் அனைத்தையும் மறந்து விட்டது வாதவந்தான். இன்றிரவு நானும் என் நாயகியும் மாளிகையை நாடிப் போக இருக்கும் காரியம் இனிது நிறை வேறும் வண்ணம் நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும். மகரிஷி, கஜகேது: (இருவரும்) ஜயமுண்டாகுக! ஜயமுண்டாகுக! [iffis¤ தூக்கி MÓ®tâ¤jš.] பிரகலாதன்: (நமகரித்து) நான் கூடாரத்திற்குச் சென்று திரும்புகிறேன். நீங்கள் போய் வருகிறீர்களா? [nghŒ ÉL»wh‹.] மகரிஷி: பெண்ணே சித்ரபானு! இங்கு வா நான் சொல்வதைக் கவனமாகக் கேள். இன்றிரவு பிரகலாதனுடன் நீ செல்லும் போது கையோடு ஓர் ஈட்டியைக் கொண்டுபோக வேண்டும் தெரிகிறதா? சித்ரபானு: தெரிகிறது. மகரிஷி: நீங்கள் முகமூடி பூண்டு செல்லவேண்டும். சித்ரபானு: சரி. மகரிஷி: பிரகலாதன் சிறைச்சாலையண்டை சென்று அவர் களை உனக்குக் காட்டுவான். அந்த கூட்டத்தில் உன் தாய் இருக்கமாட்டாள் அல்லவா? சித்ரபானு: ஆம்! அவள்தான் நம் வீட்டிலிருக்கிறாளே! மகரிஷி: ஐயோ! என் தாயைக் காணோமே! என்று பாசாங்கு செய். அதற்கென்ன செய்வது என்று பிரகலாதன் கேட்பான். அதற்கு நீ உடனே என் தாயை மாளிகையிலும் இரண்யன் அந்தப் புரத்திலும் தேடவேண்டுமென்று வற்புறுத்து. பிரகலாதன் இசைந்தாலும் இசைவான். அப்படி இசைந்து உன்னை அந்தப் புரம் அழைத்துச் சென்றானேயானால், சந்தர்ப்பம் தெரிந்து வெகுதைரியமாகக் கூடுமானால் பிரகலாதனுக்கும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இரணியன் மார்பில் உன்னிடம் உள்ள ஈட்டியை எறி. அவன் இறந்தால் ஒழிந்தது நம்மைப் பிடித்த சனி! நீ அகப்பட்டுக் கொண்டாலும் பிரகலாதன் ஆயுதபாணியாய் இருப்பதால் உன்னை மீட்டுக் கொள்வான், பயப்படாதே! இரணியன் தேச பக்தியுள்ளவன் ஆரியரென்றால் அவனுக்கு ஆகாது மேலும் பேரறிவாள னாயும் இருக்கிறான். நமது வாழ்க்கை முறையையே அந்த வீரத் தமிழன் ஒத்துக்கொள்ளக் கூடியவனுமல்லன். அவன் ஒழிந்தால் ஆட்சி இந்த பிரகலாதன் வசந்தான் வந்துவிடும். பிரகலாதனைத்தான் நாம் கைவசப்படுத்தி விட்டோமே. நாம் வைத்ததுதான் சட்டம். ஆரியர் முன்னேற்றம் உன்னிடந்தான் இருக்கிறது. வெற்றியோடு திரும்புவாயானால் சோமரசம் உண்டு நாம் கூத்தாடலாம். சிறையிலுள்ள ஆரியரை வரும் போது மீட்டுக் கொண்டு வந்து விடுங்கள். சித்ரபானு: என்னால் கூடியதெல்லாம் செய்கிறேன். காட்சி - ஐந்து இடம் : அரண்மனை அந்தப்புரம் (நள்ளிரவு) உறுப்பினர் : பிரகலாதன், சித்ரபானுவும் முகமூடியுடன், சிறைச்சாலைக்காவலர் இருவர், இரணியன், லீலாவதி. [Kf_ofËUtU« அரண்மனை மேல்மாடியிலிருந்து சிறைச் சாலையைக் கவனித்த ã‹] பிரகலாதன்: சிறைச்சாலையின் உன் தாய் இருக்கவில்லையே! நீயும் கவனி. சித்ரபானு: என் வருத்தம் இன்னும் அதிகரிக்கிறது. சில சமயம் அரண்மனையின் வேறிடத்தில் என் தாயை அடைத்திருக்க கூடும் இப்பக்கமாக வாருங்கள்; போகலாம். (செல்லுகிறார்கள், பலவிடத்திலும் பார்த்தபின்] பிரகலாதன்: ஜாக்கிரதை! அதோ தெரிகிறது பார் அந்தப்புரம்? அப் பக்கம் போகலாகாது. சித்ரபானு: பாதகமில்லை; சென்று பார்க்கலாம். பிரகலாதன்: என் தந்தையின் சயன அறை மிக்க பாதுகாவல் உடையது. நீ போகலாகாது. சித்ரபானு: நீர் பயப்பட வேண்டாம். நானும் யுத்தப் பயிற்சி உடையவள்தான். (மேல்மாடியிலிருந்து ஜன்னல் வழியாக அந்தப்புரத்தில் நுழைதல்) நாதரே! நீங்கள் அங்கேயே இருங்கள். நான் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். பிரகலாதன்: ஜாக்கிரதை! அவசரப்படாதே! சீக்கிரம் வந்து விடு. (இரணியன் அந்தப்புரத்தில் மஞ்சத்தில் லீலாவதியுடன் நித்திரையி லிருப்பதை சித்ரபானு கவனித்துப் பல பக்கங்களிலும் கவனித்த பின் தனது ஈட்டியின் கூர்மையை ஒருமுறை கையில் தடவிப் பார்த்து இரணியன் மார்பில் குறி வைத்து எறிதல்; ஸஈட்டி இரணியன் மார்பில் பட்டு ஊடுருவாமல் கீழே விழுகிறது] பாட்டு இரணியன்: பிலஹரி - ரூபகம் காவலாளர்களே! அநுபல்லவி கனத்தபடை பிடித்தெனது படுக்கையறை யடுத்துலவும் (காவலாளர்) சரணம் காட்டிடை நரியென ஒருபெரு நாட்டினில் எலியென இதுததி வீட்டினில் எவனவன் ஒரு பெரும் ஈட்டியை எறிபவன் விரைவொடு காணீர் - காணீர் இதற்குமதுளம் நாணீர் சுயமதிப்பினைப் பூணிர்! அரண் மனை யுள, (காவலாளர்) ஈடற்ற என் மாடிப்படி மீதிப்படி ஏறித்துயில் நேரத்தினி லேயுற்றிடும் மூடப்பயல் பேடிப்பயல் எங்கே பஞ்சைப்பயல் எங்கே? வஞ்சப்பயல் எங்கே? - எங்கே இங்கித் ததி. (காவலாளர்) இரணியன்: (மார்பில் கை வைத்தபடி திடுக்கிட்டு எழுந்து நிதானித்து) யாரடா காவலர்! (உடனே நான்கு காவலர்கள் ஆயுதத் துடன் ஓடிவருதல். இரணியன் சமீபத்தில் கிடந்த ஈட்டியைக் கையில் எடுத்துக் கவனித்து) காவலர்களே! மாளிகையின் மேற்புறத்திலிருந்து யாரோ என் மார்பை நோக்கி இந்த ஈட்டியை எறிந்தனர். தேடிப் பிடியுங்கள். லீலாவதி: (திடுக்கிட்டெழுந்து கவனித்து) அந்தோ! நாதா! (இரணியன் மார்பைத் தடவுதல்) (காவலர் நாலா பக்கமும் ஓடிச் சிறிது நேரத்தில் சித்ரபானுவைப் பிடித்து வருகிறார்கள்) இரணியன்: (சிரித்து இதென்ன ஆச்சரியம்! முகமூடியை எடுங்கள். (காவலர் முகமூடியை எடுக்கப் போகும்போது சித்ரபானு தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சித்தல். காவலர் ஆயுதத்தைக் காட்டி பலாத்காரம் செய்து முகமூடியைக் களைதல்] பாட்டு இந்திராதியர் கண்டு மயங்கு என்ற மெட்டு செஞ்சுருட்டி - ரூபகம் இரணியன்: ஆச்சரியமே! சூழ்ச்சி செய்ய வந்தாய் சீச்சீ நீயொரு பெண்பூச்சி! (ஆச்) என் - அரண்மனை தனில் நுழைந்தனையா? பேச்சும் பேசாத மிலேச்சப் பெண்ணே, இன்று பேடித்தன ஆரியரின் மூடச்செயல் சாலநன்று நீங்கள் சொல்லும் ஈசுரர் ஆணையும் பூசுரர் ஆணையும் இதுவோ? நித நிதம் வெகு ஜனங்களிடம் (நீங்கள்) தூங்கும்போது கொல்லச் சொல்வது நீதமா? ஈங்கிது போல் செய்வதுதான் ஆரியரின் வேதமா? ஓஹோ! ஆரிய சூழ்ச்சியா? மிலேச்சப் பெண்ணே. என்னைக் கொல்ல வேண்டும் என்பது உங்கள் கருத்தா? தூங்கும்போது கொலை செய்வது தானா உங்களின் மனிதத் தன்மை? பூசுரர்களின் தெய்வ பலம் எங்கே? கடவுள் ஏற்படுத்தியதாக நீங்கள் சொல்லித் திரியும் வேதத்தின் கட்டளை இதுதானா? பேஷ்! எய்தவரிருக்க அம்பை நோவதும் சரியல்லல. நீயோ ஒரு பெண்ணாயிருக்கிறாய். காவலர்: மகாராஜாவே! இவ்வளவு கொடிய பாதகியை உடனே கழுவேற்றிக் கொல்ல உத்தரவுதர வேண்டுகிறோம். இரணியன்: பெண்பாலைக் கொலை செய்து கையைக் கறைப் படுத்திக் கொள்ளலாகாது. ஆண்மையுள்ள தமிழனுக்கு அது அழகாகாது. ஈட்டியைக் கையில் தந்து அப்பெண்ணை வீட்டுக்குப் போகவிடுங்கள். (இரணியனும் லீலாவதியும் மஞ்சத்தில் படுத்து போர்வையால் போர்த்துக் கொள்ளுகிறார்கள்.] (சித்ரபானு போகிறாள்: காவலர் பின்தொடர்ந்து வரும்போது] ஒரு காவலன்: (மற்ற காவலர்களை பார்த்து) நமது சக்ரவர்த்தியைக் கொலைசெய்ய அந்தப்புரத்தில் இரவில் நுழைந்த இவள் சக்ரவர்த்தியின் மார்பை நோக்கி எறிந்த ஈட்டிமுனைபட்ட காயத்தில் ரத்தம் பெருகிக் கொண்டிருக்கும் போதும் - அந்தோ! இப் பாவியைச் சக்ரவர்த்தியானவர் மன்னித்தாரே! (சித்ரபானுவை நோக்கி) அடி! ஆண்மையற்ற ஆரிய நரிக் கூட்டத்தில் பிறந்தவளே! உங்கள் ஆரியப் போக்கையும் பார்! தமிழரின் பெருந்தன்மையும் பார்! ஓடு!) சித்ரபானு: (வெளியில் வந்து தனிமையாய்) ஆஹா! என்ன பெருந் தன்மை! பகைவர்க்கு அருள்புரியும் இந்தத் தமிழ் மன்னன் தன்மை எப்படிப்பட்டது? ஆயினும் எமது ஆரியர் கட்டளைப்படி தமிழர் உயர்வைப் பற்றி பாராட்டக்கூடாது. (ஒருபுறமாகச் சித்ரபானு வந்து அங்குத் தப்பி ஓடிவந்து காத்திருக்கும் பிரகலாதனைச் சந்தித்து] நாதா! எனது ஈட்டியானது தவறிக் கீழே விழுந்ததினால் உமது தந்தை விழித்துக் கொண்டார். உடனே கூச்சலிட்டார். காவலர் வந்து என்னைப் பிடித்துக் கொண்டு போய் உமது தந்தையின் எதிரில் நிறுத்தி என்னை மானபங்கப்படுத்தினார்கள். நானொரு பெண்ணென்றும் கருதாமல் உமது தந்தை வாய்க்கு வராத வார்தைகளால் திட்டினார். உடனே நான் புலிபோல் பாய்ந்து எனது ஈட்டியையும் உமது தந்தையிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டேன். என்ன இருந்தாலும் அவர் எனக்கு மாமனார் ஆனதினால் அவரைக் கொல்லாமல் வந்துவிட்டேன். பிரகலாதன்: இவ்வளவும் நடந்ததா? என் ஆருயிர்க் காதலியே! எப்படியாவது நீ தப்பித்து வந்தாயே அதுவே போதும். உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருந்தால் என்னுயிர் என்னவாவது? வா, போகலாம், அரண்மனையில் அனைவரும் விழித்துக் கொண்டிருப்பார்கள். இங்கே நிற்கலாகாது. [ïUtU« ngh»wh®fŸ.] காட்சி - ஆறு இடம் : சித்ரபானுவின் வீட்டுப் பூசை விடுதி. உறுப்பினர் : சேனாதிபதி, சித்ரபானு சித்ரபானு: (சேனாதிபதி பிரவேசிக்கக் கண்டு) வரவேண்டும் வர வேண்டும். தங்களை உபசரிக்கவும் எனக்குச் சக்தியில்லாம லிருக்கிறது. சேனாதிபதி: காதலி! என்ன நூதனம்! இதென்ன மஞ்சள் உடை உடுத்தியிருக்கின்றாய்? சித்ரபானு: எல்லாம் தங்கள் பொருட்டே! என்ன செய்வேன்? நான் உலகில் ஏன் பிறந்தேனோ தெரியவில்லை? எனது பெற்றோரிடம் நான் உங்கள் மேல் காதல் கொண்டு விட்டதாகவும், உங்களைத்தான் மணப்பேன் என்பதாகவும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாலும் அவர்கள் சம்மதிக்க மாட்டோம் என்கிறார்கள். காரணம் நீங்கள் தமிழர் என்பது தான் அவர்கள் அபிப்ராயம். நமக்கு அனுகூலப் படும் பொருட்டே நான் கௌரி தேவியை நோக்கி விரதம் பூண்டுள்ளேன். இன்னும் என் விரதம் முடியவில்லை. சேனாதிபதி: நான் தமிழனே, சந்தேகமில்லை, ஆயினும் நான் ஆரிய வேதத்தையும், மதத்தையும் அங்கீகரித்து வருகிறேன். இன்னும் என்மீது சந்தேகம் என்ன? உன்மீது வைத்த காதலால் நாளுக்கு நாள் என் உடல் துரும்பாகிவருவதை நீ அறியவில்லையா? சித்ரபானு: அந்தோ! காதலரே! நான் உணர்கிறேன். நான் தங்கள் மேல் வைத்த காதல் நோயால் இறக்கும் தருவாயிலிருந்ததைப் பார்த்தும் என் பெற்றோருக்கு என்மீது இரக்கம் பிறக்க வில்லையென்றால் வேறு என்ன சொல்ல வேண்டும்? நான்கு திங்களாக ஆரியருக்கு அந்த இரணியனால் நடந்து வரும் தீங்குகளைச் சொல்ல முடியாது. இது தங்கட்குத் தெரியாதா? சோனதிபதி: கேள்வியுற்றேன். எவளோ ஒரு துஷ்ட ஆரியப் பெண் நடுநிசியில் சக்ரவர்த்தி பள்ளியறையில் நித்திரை செய்கையில் ஈட்டியை எறிந்தாளாம். அரசருக்கு நடு மார்பில் காயமும் ஏற்பட்டதாம். எமது பெருந்தன்மையுள்ள தமிழ்ச் சக்ரவர்த்தி அந்தப் பாதகியை மன்னித்துவிட்டாராம். மேலும், ஆரியர்கள் இராஜபாட்டையில் நின்று அட்டகாசம் செய்தும் தமிழர் வாழ்க்கை முறைகளை இழிவுபடுத்தியும் வருவதால் அவர்களையெல்லாம் சிறைப்படுத்தியிருக்கிறார்களாம். இதுவுமின்றி ஆரியர் இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தோடு நடத்திய அநேக சூழ்ச்சிகளும் அரசாங்கத்திற்குத் தெரிந்திருக்கிறதாம். அதில் சம்மந்தப்பட்ட அநேக ஆரியர்களையும் சிறைப்படுத்தி யிருக்கிறார்களாம். சித்ரபானு: ஆரியப் பெண்கள் மேலும், ஆரிய ஆடவர்கள் மேலும் சுமத்தியிருக்கும் இவ்வபாண்டகளையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா? சேனாதிபதி: அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எப் பக்கத்து நியாயத்தையும் நான் அறியேனாதலால் அதில் நான் என்ன சொல்ல முடியும்? சித்ரபானு: என் பெற்றோர் அபிப்ராயம் என்னவெனில் என்ன இருந்தாலும் சேனாதிபதியாகிய நீங்கள் சக்ரவர்த்திக்குக் கீழ்ப்பட்டவர்; என்னை நீங்கள் மணந்து கொண்டதும் சக்ரவர்த்தியார் குறுக்கிட்டு, அவளை நீக்கிவிடு, என்றால். என் கதி என்னாவது? எனக்கென்னமோ, தங்களை மணந்து கொள்ளவேண்டும் என்பதுதான் என் எண்ணம். பெற்றோர் அபிப்ராயத்தையும் நான் அனுசரிக்க வேண்டுமல்லவா? இவையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்! கடைசியில் ஒரு செய்தியைச் சுருக்கமாக உங்களிடம் சொல்லுகிறேன்: எப்படி யாவது நீங்கள் இந்தத் தேசத்திற்கு ஏகச் சக்ராதிபதியாகவும், நான் தங்கள் பட்ட மகிஷியாகவும் ஆகிவிடுவதில் உங்களுக்கு ஆட்சேபனை இராதே? பாட்டு தேவகுமார சேசு என்ற மெட்டு அமீர் கல்யாணி - திர ஏகம். சேனாதிபதி: எட்டாத கொம்புத் தேனும் கிட்டுமென்று சொல்வதா? பட்டாளச் சக்ரவர்த்தியைப் பாரில் நானும் வெல்வதா? எட்டான திசைகளிலும் இரணியன் என்று சொன்னால் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வார் அவரையெல்லாம் கொல்வதா? சேனாதிபதி: பெண்ணே! இது ஆகும் காரியம் அல்லவே! சித்ரபானு: கஜல் கட்டாணி முத்தே என் காதலரே நான் வணங்கும் கௌரி தேவி இட்டாலாகா ததுவும் ஒன்றுளதோ? ஆரியர்க்கே இசைந்த தெய்வம் நட்டானாய் இருப்பதுண்டு நாராயண மூர்த்தி நம்மையே கை விட்டானா என்பதையும் விளக்கிடுவேன் சீக்கிரத்தில்மெல்லிநானே பாட்டு பட்டாபிஷேகம் செய்து பார்த்திடுவேன் உம்மையே பக்கத்தில் நாயகியாய் நானிருப்பேன் மெய்ம்மையே. சித்ரபானு: நான் எந்தக் கௌரியை நோக்கி தவங் கிடக்கின்றோனோ அந்தக் கௌரி தேவியின் சத்தியாலும், ஆரியரின் பக்க பலமாயிருக்கும் ஸ்ரீமந் நாராயணன் கிருபையாலும் எங்கள் காரியம் கைகூடும் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. சேனாதிபதி: மனிதனுக்கு ஆக வேண்டிய காரியம் மனிதனால் தான் ஆகமுடியும்! நாராயணன், கௌரி என்கிற வார்த்தை களால் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதுதான் விளங்க வில்லை. ஆயினும் உன் வார்த்தையை கொண்டு நான் நம்பத் தடையில்லை. நான் சக்ரவர்த்தியாவதில் எனக்கு இலாபந் தான். ஆயினும் எனது சக்ரவர்த்தியாகிய இரணியனுக்கு நான் மனமாரக் கேடு செய்ய முடியாது. சித்ரபானு: உங்கள் மனமாரச் சக்ரவர்த்திக்குக் கேடு செய்ய வேண்டியதில்லை. உலக நன்மையை உத்தேசித்துத் தாங்கள் ஆரியருக்கும், ஆரிய தருமத்தை அனுசரிக்கும் தமிழருக்கும், ஒரு தீமையும் செய்யாதிருக்க உறுதிகூறுகிறீர்களா? இந்த ஒரு வரத்தையாவது நீங்கள் எனக்கு அளிக்கவேண்டும். நீங்கள் ஆரிய தர்மத்தை ஒத்துக் கொண்டதால் நீங்களும் ஆரியரே. ஆதலால் உங்களுக்கும் என் ஆரிய ஜனங்கள் ஒரு தீங்கும் செய்ய மாட்டார்கள். சேனாதிபதி: நான் ஆரியருக்கும், ஆரிய தர்மத்தை அனுசரிக்கும் தமிழருக்கும் என் மனமார ஒரு கெடுதியும் செய்வதில்லை; இது உறுதி. சித்ரபானு: சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டியதுதான். என் விரத மகிமை இப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது; அனைத்தும் கௌரியின் சக்திதான். விரதம் முடிந்ததும் நாம் இருவரும் உயிரும் உடலுமாக இன்ப வாழ்வு பெறுவோமாக. இன்னும் சில நாளிலேயே என் விரதத்தை முடித்துவிடுகின்றேன். நாதரே! என் விரதம் முடிந்ததும் அதே நிமிஷத்தில் தங்களை நான் எங்கே காணுவது? தாங்கள் மாளிகையிலிருந்தால்தான் போயிற்று! இல்லாவிடில்? சேனாதிபதி: என் ஆரூயிர்க் காதலி! நானே அடிக்கடி வந்து போகிறேன். சித்ரபானு: விரதம் முடியும் வரைக்கும் என்னை இனி நீங்கள் காண முடியாது. நான் தேடியனுப்பித் தங்களை உடனே அழைத்துக் கொள்ளுகிறேன். அந்தோ! தங்களை நான் மணம் முடிக்கும் வரைக்கும் ஒரு நாள் கழிவது ஒரு யுகமாக இருக்குமே! சேனாதிபதி: கண்மணி! வருந்தாதே! திருமணம் சீக்கிரம் முடிந்து விடும். இதோ முடிந்துவிடும். அவரசப்படாதே. சித்ரபானு: அந்தோ! விரதம் எப்போது முடியுமோ தெரிய வில்லையே! விரதம் முடியும் வரைக்கும் தங்களை நான் பார்க்கக்கூட முடியாதே! அதுவரை உங்கள் உருவப் படத்தை யாவது பார்த்துக் கொண்டிருக்கலாமா என்று கனபாடிகளைக் கேட்டேன். வேண்டாம், வேண்டாம் என்று அந்தப் பாவிகள் தடுத்தார்கள். என் ஆருயிர் நாதரே! உங்களிடம் நான் காதல் வசனங்களைக்கூட இப்போது உபயோகப்படுத்தலாகாதாமே! உங்கள் சௌந்தர்ய முகத்தைப் பார்க்கப் பார்க்க என் காதல் பெருகுகிறதே! அந்தோ! என்முன் நிற்காதீர்கள். (முகத்தைக் கையால் மறைத்துக் கொள்கிறாள்.) அந்தோ! மறைந்தீர்களா? சேனாதிபதி: வருந்தாதே. விரதத்தைப் பூர்த்திசெய். நான் போய் வருகிறேன். [kiwjš] காட்சி - ஏழு இடம் : தலைமை நீதிமன்றம் உறுப்பினர் : நீதிபதி, இரணியன், மந்திரி, சேனாதி பதி,ஆலோசனை கூறுவோர், குற்றச் சாட்டின் விவரம் கூறுவோன்,காவலர், குற்றவாளிகள். இரணியன்: (தனது சபையிலிருந்து) பெரியோர்களே! தமிழ் இரத்தம் ஓடும் எந்தத் தமிழனும் ஒழுக்கங்கெட்ட ஆரியர்களின் வலையில் விழமாட்டான் என்று நான் நம்புகிறேன். ஆரியர்கள் இந் நாட்டிலுள்ள இராஜ்யங்களைக் களங்கப் படுத்திச் சூழ்ச்சி செய்து தமது செல்வாக்கில் வைத்துக் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். ஆரியர்களின் செல்வாக்கில் வைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு தெரியும். ஆரியர்களின் செல்வாக்கு எங்கெங்கு உண்டாகிவிட்டதோ அங்கெல்லாம் நமது பழந்தமிழ் நூற்களை அழித்தும் திருத்தியும், தமிழர்களின் வாழ்க்கை முறையையே மறைக்க முயன்றும் வருகிறார்கள். இந்த ராஜ்யத்தைப் பற்றியும், இதை ஆளும் என்னைப் பற்றியும் ஆரியர்கள் அனைவரும் ஒரே மூச்சாக வேலை செய்து வருகிறார்கள். என் பெயரைக் கேட்ட அரசர்கள் அனைவரும் சிங்க சொர்ப்பனம் கண்டவர்கள் போல் திடுக்கிடத் தக்கதாய் என் புஜபலம் அமைந்திருப் பினும், ஆரியர்களின், மனிதத் தன்மையற்ற வஞ்சகக் சூழ்ச்சியின்முன் என் தோள் வலியும் ஆண்மையும் நிலை யற்றது என்பதை நான் அறிவேன். ஆயினும் பின்புறமிருந்து அம்பெய்யும் ஆரியப்பேடிகளின் கேவலத்துக்காக நானும் மனிதனென்கின்ற முறையில் இரங்குகின்றேன். மனிதத் தன்மையை எள்ளத்தனை இழக்கவும் தமிழன் விரும்ப மாட்டான். ஆரியர்கள் அனைவரும் அவர்கள் சொல்லும் நாராயணன் முதலிய தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருவதானாலும் என்னை அவர்கள் மனிதத் தன்மையுடன், வீரத்துடன், நேரில் வந்து எதிர்க்கட்டும் என்று அந்த ஆரியர்களை நான் அறைகூவி அழைக்கிறேன் ஆரியர் வஞ்சக நரிகள், பேடிகள், தமது வஞ்சகக் செயலால் இந்த உலகத்தையே தம் வசப்படுத்தலாம். இந்த உலக மக்களை யெல்லாம் தனது மாய வலையிற் சிக்க வைத்து ஒரு குடைக்கீழ் ஆளலாம். ஆயினும் தமிழர்களை ஆரியர் பின்னின்று தாக்கிய விஷயம் மட்டும் இந்த உலகம் உள்ளவரை அழியாது என்று எண்ணுகிறேன். [mitÆd® ifj£lš] இது மாத்திரமன்று. என்னை அந்த ஆரியர்கள் சூழ்ச்சியால் கொன்றாலும் கொல்லலாம். ஆயினும் இரணியன் என்ற வீரத் தமிழன் தனது வீரத்தால் மறைந்தான் என்ற கீர்த்தி உலகுள்ள மட்டும் மறையாது என்பேன். பிற்காலத்தில் ஆரியர்கள் தமிழ்வீரர்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் பொய் நூல்கள் எழுதி இழிவு படுத்தலாம்: ஆனால் பிற்காலத்தில் உண்டாக இருக்கும் பகுத்தறிவுள்ள தமிழர்கள் உண்மையை யறிந்து கொள்ளக் கூடுமென்று நம்புகிறேன். உண்மையை எவராலும் மறைக்க முடியாது. உலகில் நாளுக்கு நாள் எமது தமிழர்களிடம் வளர்ந்து வரும் பகுத்தறிவைத் தடை செய்ய எவராலும் முடியாது. இதோ இரு தினங்கட்கு முன்பு நான் தூங்கும்போது என்னை ஒரு பெண்ணைக் கொண்டு கொல்ல நினைத்தார்கள் அவ் வஞ்சகர்கள். எனது நாட்டுத் தமிழர்களை ஆரியர்களிட மிருந்து காக்க என்னுயிரை நான் பொருட்படுத்தப் போவதில்லை. அவையோர்களே! என் நீதிமன்றத்தை ஆரம்பிக்கிறேன். [mk®jš] (இரண்டு சேவகர்கள் நான்கு பேரை ஒன்றாய்ப் பிணைத்தபடி கட்டி இழுத்துக் கொண்டுவந்து அவையில் நிறுத்துகிறார்கள்.] குற்றம் சாட்டி விவரம் கூறுவோன்: பெருமானே! இவர்கள் ஆரியர் சேரியினின்றும் அரச பாட்டையில் நுழைந்ததோடு, அரச பாட்டையில் கூட்டங் கூட்டித் தமிழரின் நடைகளை இழித்துக் கூறியும், ஆரியர்களின் தீய வாழ்க்கை முறைகளை உயர்த்திக் கூறியும், நாராயணன் இங்குத் தோன்றி ஆரியரின் எதிரிகளையும் சக்கர வர்த்தியையும் அழிக்கப் போகிறான் என்று புளுகியும் ஆர்பாட்டம் செய்தார்கள். இவர்களின் நாக்கை யறுக்கத் தீர்ப்பளிக்க வேண்டுகிறேன். இரணியன்: நாராயணன் வந்து என்னையும் தமிழர்களையும் அழிக்க இருக்கும்போது இவர்கள் ஏன் என் பொருட்டு சூழ்ச்சி செய்யவேண்டும்? நாராயணனாவது என்னை நேரில் வந்து எதிர்ப்பானா? பேடித்தனமாகப் பின்னிருந்து அடிப்பானா? நன்று. இவர்களின் கண்ணைப் பிடுங்கிவிடும்படி தீர்ப்பளிக் கிறேன். (போகிறர்கள்) (வேறு நால்வரைப் பிணைத்தபடி இருசேவகர்கள் அழைத்து வருதல்.) கு. சாட்டுவோன்: பெருமானே! மேற்படி நால்வர் செய்த குற்றங்களோடு அவர்கள் தங்கள் மந்திர சக்தியால் இதே நொடியில் சக்கரவர்த்தியை எரித்துவிட எம்மால் முடியும் என்று கூறினார்கள். இவர்களுக்குக் கொலை தண்டனை விதிக்க வேண்டுகிறேன். பாட்டு (செஞ்சுருட்டி - ஆதி; வண்ணம்) இரணியன்: பிழைப்பதற்குத் தகுநிலம் இதுவென நினைத்து வெட்கித் தலையது குனிவோடும் அழுக்கு ரத்தக் கழுதைகள் நினைவதை - அறியேனோ? ஒழுக்கமற்றுத் திரிவதும் வெளியின் ஒடுக்கமற்றுப் புகல்வதும் உடையவர் புழுக்கை கட்குக் கெடுமதி மிகுவது - தெரியாதோ? கொழுந்திருக்கத் தமிழர்களு டைமையை உழைப்பு மற்றுத் திருடுவ தொடும் நமை அழிப்பதற்குச் சதியென நினைவதும் சரியாமோ? கழுக்க ளொத்துத் திரிதரு மடையர்கள் கடிக்கும் நச்சுப் பகைவர்கள் இவர்களை இழுத்து வைத்துக் கொலைசெய இதுததி - எனதாணை! இரணியன்: அப்படியா? ஏன் சும்மா இருந்தார்கள். என்னை எரிக் கட்டுமே! எரிக்காமலிருப்பது என் மீதுள்ள கருணையோ? சாட்டையால் என் எதிரிலேயே நன்றாக அடியுங்கள். அப்போதாவது என்னை எரிக்கட்டும். (சேவர்கள் சாட்டையால் அடித்தல்) மந்திரம் எங்கே? மாறுகால் மாறு கை வாங்குங்கள். (வேறு நால்வரை இழுத்து வருதல்] கு. சாட்டுவோன்: நமது அகப்பொருள் முதலிய தமிழ்ப் பெரு நூல்களையெல்லாம் சேகரித்து அவற்றிற்குத் தீயிட்டார்கள். பாட்டு ஆ இதென்ன மாயமோ என்ற மெட்டு இரணியன்: ஆ! தமிழ் எனில் தமிழரின் உயிர்! அதை அனலிட்டு மறைத்திட முனைந்திட்டாரா ஆரியர் (ஆ) பூதலத்தி லேதமிழர் புனிதம் விளக்கு மந்தப் புத்தகத்தை அகப்பொருள் வித்தகத்தை இழப்பதோ! (ஆ) ஆரியத்தை ஆரியரின் காரியத்தையே பரப்பச் சீரியத்தைத் தமிழ்மொழி வேரை வெட்ட நினைத்தாரோ? வீரியத்தை இழந்தபின் மேதியினில் வாழ்வதுண்டோ? வெற்றித் தமிழ்மொழி நெமச்சிப் புகழ்பெற வெட்டிப் பலியிடு துட்டப் பயல்களை (ஆ) இரணியன்: ஆ! கண்டங் கண்டமாக வெட்டி நமது இனிய தமிழுக்குப் பலியிடுங்கள் இந்த நாய்களை! (வேறு நால்வர்கள் நிறத்தப்படுதல்.] கு. சாட்டுவோன்: தமிழர்களையெல்லாம் இராக்ஷசர் என்றும் அசுரர்கள் என்றும் பொய் நூல்கள் எழுதியவர்கள் இவர்கள். பாட்டு ராமமூர்த்திக் கிணையானவரிந்த என்ற பாட்டின் சிறிது பேதம் இரணியன்: நிதம் தட்டிப் பறித்துப் புசித்துக் கொழுத்துச் சனத்தைக் குரைக்கின்ற நாய்களை - நாட்டை ஒட்டித் துளிர்க்கின்ற நோய்களை - ததி கட்டிப் பிடித்துக் கனத்திட்ட வாள்கொண்டு வெட்டிக் கிடத்துக தோள்களை, இரணியன்: ஓஹோ! இரண்டு கைகளையும் வெட்டுக. (மற்றும் நால்வர் கொண்டு வரப்படுகின்றனர்) கு.சாட்டுவோன்: இந்த அரசாட்சியைக் கவிழ்க்க ஆனதெல்லாம் செய்துவரும் ஆரியப் பாதிரிகள் இவர்கள். பாட்டு (பூரிகல்யாணி - அடசாபு) பல்லவி மானமில்லாதவரே அந்தோ வஞ்ச நெஞ்சம் மிஞ்சிடும் (மான) வலைப்படுத்திய மனிதரைக் கொலைப்படுத்திடக் கருதிய (மான) மக்கள் சொத்தை மொய்த்து நத்தி நக்கக் கருதிய (மான) மட்டற்றுப் பொய்க்கட்டுக் கட்டிக் குட்சிக் கலைகிற (மான) அநுபல்லவி ஆனதெல்லாம் செய்வான் நாராயணன் என்றீர் ஆயினும் ஏன் நீங்கள் இச்செயல்செய்கின்றீர் (மான) சரணம் ஆதிக்கம் செலுத்த எண்ணமோ? - எம் ஆண்மையைக் கெடுக்க ஒண்ணுமோ? சோதிக் கடவுள் தான் சொல்வதோ - நான் தூங்கும்போது வந்து கொல்வதோ? சாதியிலே தேவ சாதியும் ஒன்றுண்டோ? சதிகாரப் பாதிரிகாள் எதிரேயும் நிற்காதீர் (மான) இரணியன்: (கோபமாய்) அற்பர்களே! உங்கள் நாராயணன் எங்கே? நரிக்கூட்டமே! பேடிக் கூட்டமே! நீங்கள் நாராயணனைப் பற்றிச் சொல்லுகிற பெருமை என்ன? நீங்கள்செய்யும் வேலை என்ன! யோசித்தீர்களா? உழைக்காமல் இந்நாட்டு மக்களின் நலத்தை யெல்லாம் அபகரிக்க யெண்ணும் சோம்பேறிகளே! தூங்கும்போது எம்மைக் கொலை செய்வதுதான் உங்கள் தெய்வபலமோ? சரி? இவர்களை ஆரியர் சேரியில் கொண்டு போய் நிறுத்திச் சித்திரவதை செய்யுங்கள். சேனாதிபதியே! நாளைக்கு மாலைப் போதில் நான் இட்ட தண்டனையைச் சரிவர நிறைவேற்றி வைப்பீராக! சேனாதிபதி: சித்தமாயிருக்கிறேன். இரணியன்: நமது மன்றத்தை முடித்துக் கொள்வோம். காட்சி - எட்டு இடம் : கொலைக்களம் பாத்திரங்கள் : குற்றவாளிகள், கொலையாளிகள் நால்வர், சேனாதிபதி, சித்ரபானு. குற்றவாளிகள் அனைவரும் கொண்டுவரப்படுகிறார்கள். குற்றவாளி சார்பில் ஒருவன்: சேனாதிபதியவர்களே! நாங்கள் நிரபராதிகள், எங்கள் உயிர் இப்போது தங்களிடம் இருக்கிறது. நீங்கள் மனம் வைத்தால் எங்களுக்கு மீட்சி கிடைக்கும். நாங்கள் குற்றம் செய்தது உண்மையாக இருந்தாலும் இனிமேல் இவ்வாறு செய்வதில்லை என்று உறுதி கூறுகிறோம். எங்கள் பெண்டு பிள்ளைகள் பேரால் தங்களைக் கெஞ்சுகிறோம். சேனாதிபதி: சக்கரவர்த்தியின் தீர்ப்புக்கு மாறுதல் உண்டா? பேதைகளே! நீங்கள் இந் நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள். உங்களுக்கு இறுமாப்பென்ன? உங்கட்குச் சூழ்ச்சிகள் ஒரு கேடா? சக்கரவர்த்தியின் உயிருக்கா உலைவைக்க எண்ணி ணீர்கள்? தெய்வ பலம் இருக்கிறது நாராயணன் வருகிறான் என்று உளறுகிறீரே இந்த ஏமாற்றுகளை யார் நம்புவார்கள். வஞ்சகத்தால் உலகை வசப்படுத்துவதா உங்கள் திட்டம்? கொலையாளிகளே! முதலில் நால்வர் கண்களையும், உங்கள் கூர்மையான ஆயுதத்தால் தோண்டி எடுங்கள். பரம பக்தர்களே! உங்கள் நாராயணனைக் கொண்டு உங்கள் கண்களைக் காத்துக் கொள்ளுங்கள். (கொலையாளிகள் ஆயுதங்களைக் கொண்டு கண்களைத் தோண்டப் புறப்படுதல், குற்றவாளிகள் கூக்குரல், இதனிடையில் ஒரு முறுக்கு மீசையுள்ள வாலிபன் ஓடிவந்து) முறுக்கு மீசையுள்ள வாலிபன்: நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! சேனாதிபதி: நீ யார்? உனக்கென்ன அதிகாரம்? முறுக்கு மீசையுள்ள வாலிபன்: சக்ரவர்த்தி உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை சொல்லச் சொன்னார். சேனாதிபதி: ஒருபோதுமில்லை. விலகி நில். மு. மீ வாலிபன்: சற்று நிதானியுங்கள். (சமிக்ஞை செய்து தனது ஒட்டு மீசையையும் தலைப்பாகையும் எடுத்து சொந்த உருவைக் காட்டுதல்) சேனாதிபதி: (ஆவலாய் நெருங்கி) சித்ரபானுவா? இதென்ன மாறுவேடம்! என்ன விசேஷம்? சேனாதிபதி: நாதரே! நீர் செய்த உறுதிமொழியை மறந்தீரோ? ஆரியருக்குத் தீமை செய்வதில்லை என்றும், ஆரியர் தர்மத்தை ஒப்புக் கொண்ட எவருக்கும் தீமை செய்வதில்லை என்றும் நீர் கூறவில்லையா? சேனாதிபதி: (திகைத்து) ஆயினும், இப்போது இந்த ஆரியர் களுக்கு ஏற்படப்போகும் தீமை என்னாலல்லவே! சக்கர வர்த்தியின் கட்டளையல்லவா? சரி உன் விரதம் முடிந்து விட்டதா? சித்ரபானு: என் விரதம் முடிந்துவிட்டது. உங்களை முதன் முறையாகக் கட்டித் தழுவி முத்தமாவது தந்து போகும் கருத்தில் ஓடி வந்தேன். என் தாய் தந்தையார் தடை செய்யக் கூடுமோ என்னமோ என்று நினைத்து மாறுவேடத்துடன் வந்தேன். நான் தங்களுக்குத் தரப்போகும் ஆரம்ப முத்தம் ஆரியக் கொலைகளுக்கிடையிலா? நாதா வேண்டாம். அவர்களை விடுதலை செய்யுங்கள். (கட்டித் தழுவி முத்தம் கொடுக்கிறாள்) சேனாதிபதி: என் ஆசை மயிலே! இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்துவிடத் தடையில்லை. சக்கரவர்த்திக்கு என்ன பதில் சொல்லுவது? சித்ரபானு: இதுதானா தெரியாது? கொலையாளிகளை இங்கே கொன்று போடுங்கள். ஆரிய ஜனங்களை விடுதலை செய்யுங்கள். சக்கரவர்த்தியிடம் சென்று; திடீரென்று ஓர் ஒளி தோன்றிற்று; பிறகு அந்த ஒளி மறைந்துவிட்டது; நான் மூர்ச்சையற்றுப் போனேன்; பிறகு மூர்ச்சை தெளிந்தது, ஆரிய ஜனங்களைக் காணவில்லை; என்னுடன் வந்த கொலையாளிகள் மாண்டு கிடந்தனர், என்று கூறிவிடுங்கள். நாதரே! நம்மை நோக்கி இந்தச் சக்கரவர்த்தியின் கிரீடம் வந்து கொண்டிருப்பது உமக்குத் தெரியுமா? சேனாதிபதி: அதெப்படி? சித்ரபானு: நான் கூறுகிறேன் அவர்களை விடுதலை செய்யுங்கள். முதலில் நான்கு கொலையாளிகளையும் வேலை முடித்து விடுங்கள். பிறகு எல்லா மர்மத்தையும் சொல்லி விடுகிறேன். போய் வாருங்கள். சேனாதிபதி: (கொலையாளிகளிடம் போய்) கொலையாளிகளே! நமது சக்ரவர்த்தியின் இன்றைய உத்தரவுப்படி நீங்கள் முதலில் இந்த இடத்திலேயே அந்த ஆரியப் பாதிரிகளைக் கொலை செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் வட்டப் பாறையில் உங்கள் தலையை வைத்து மாதிரி காட்டுங்கள். (அங்கிருந்து வட்டப்பாறை மீது நான்கு கொலையாளிகளும் தங்கள் தலைகளை வரிசையாகக் குனிகிறார்கள். உடனே சேனாதிபதி நால்வரையும் சிரச்தேசம் செய்கிறான்.) சேனாதிபதி: ஆரியர்களே! சுகமாக நீங்கள் உங்கள் வீடுபோய்ச் சேருங்கள். உங்கள் மீட்சிக்கு இதோ, இந்த எனது சித்ரபானு தான் காரணம்; அவளை வாழ்த்துங்கள். ஆரியர்: ஸ்ரீமந் நாராயணன் கிருபையால் கூடிய சீக்கிரம் நீங்கள் இந்நாட்டின் சக்கரவர்த்தியாகவும் பட்டமகிஷியாகவும் ஆகக் கடவீர். நாங்கள் போய் வருகிறோம். [ngh»wh®fŸ] சித்ரபானு: நாதரே! தமிழர்களின் பச்சை ரத்தம் பொங்கிக் கொண் டிருக்கும் இந்த வட்டப்பாறை அருகிலிருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லுகிறேன். எல்லாம் ஆயத்தமாகி விட்டது! எங்கள் ஆரிய ஜனங்கள் அனைவரும் கூடி ஏற்படுத்திய திட்டத்தின்படி இந்நாட்டின் தற்காலச் சக்ரவர்த்தி சீக்கிரம் கொலை செய்யப்படுவான். பிரகலாதனையும் தந்திரமாக ஏமாற்றிக் தங்கட்கு முடி சூட்டப்படும். இது நிச்சயம் என்பதை மாத்திரம் உமக்குத் தெரிவிக்கும்படி ஆரியர்களின் தலைவர்கள் என்னிடம் சொல்லி வைத்தார்கள். சேனாதிபதி: அப்படியா? இத்தனை பெரிய காரியங்களையும் செய்து முடிப்பது சாத்தியமா? ஆயினும் நீங்கள் மிக்க தந்திர சாலிகள் என்பதை நான் நம்புகிறேன். இதே நேரத்தில்கூட அந்த இரணியனை விட நானே ஆளுந் திறமையிலும் புஜபல பராக்கிரமத்திலும் மிகுந்தவன் என்பது எனக்குத் தெரியும் ஆயினும் மாதே! உனது சௌந்தரியத்தில் கட்டுப்பட்டே உன் வார்த்தைக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன் என்பது உண்மை, அழகின் உருவமே! உன் அழகுக்கு இந்த உலகமே ஈடாகா தெனில் நான் கட்டுப்பட்டது வியப்பாகுமா? தமிழருக்கு விரோதமாக நான் எதையும் செய்ய முற்படுவதில்லை. ஆயினும் உன் முகத்தைக் காணும்போது என் சொந்த அபிப் பிராயம் அனைத்தும் பறந்துவிடுகிறது. அடி சித்ரபானு! நான் அன்று உன்னைக் காண வந்தபோது நீ மஞ்சளாடையால் உன் உடலை மறைத்திருந்தாய். இன்றோ எனில், உன் மலர் போன்ற மேனியை ஆணுடையால் மறைத்துக் கொண்டிருக்கிறாய்! சித்ரபானு: கொலைக் களத்தை மலர் மஞ்சமாக்க முடியுமா? வேண்டுமானால் இதோ, இன்னொரு முத்தம். (கட்டித் தழுவி முத்தந்தரல்) இங்கு நான் இருப்பது அபாயம். நான் போய் வருகிறேன். (ஓடிச் சிறிது தூரத்தில் நின்று கொண்டு) நாதரே! கூடிய சீக்கிரத்தில் நம்மிருவருக்கும் இரணியனுடைய மாளிகையில் திருமணம் நடக்கும்! அவ்வப்போது நான் தெரிவிப்பதுபோல் நடந்து கொள்ளுங்கள். (போகிறாள்) சேனாதிபதி: (சித்ரபானு போனபின்பு சிந்தனையில் ஆழ்ந்தவனாய் நின்றபடி இருந்து, பிறகு கொலையாளிகளைக் கவனித்தல்.) பாட்டு வாளிபாய்ந் தொருமான் என்ற மெட்டு (இந்துதான் மத்தியமாவதி - ஆதி) சேனாதிபதி: என்னகாரியம் செய்தேன் இங்குநானே அந்தோ அன்னியர் சூழ்ச்சியில் ஆழ்ந்திடலானேன் (எ) என்னதிகாரத்தை ஈனம் செய்தேன் அந்தோ மன்னிய தமிழரின் மானத்தைக் கொய்தேன். (எ) இரணிய மன்னனுக்கும் இடர்செய்தேன் அந்தோ தரணியில் தமிழர்க்குச் சதியும் செய்தேனே (எ) அருள் மன்னன் கட்டளை அழித்திட்டேனே அந்தோ ஒரு பெண்ணின் வார்த்தைக்கோ உட்படலானேன். (எ) சேனாதிபதி: ஆஹா! இந்நாட்டின் சக்கரவர்த்தியைத் தொலைக்க வழிதேடும் ஆரியர்கள் பக்கம் என் செல்வாக்கை உபயோகப் படுத்தினேனே! நான் உண்மையில் ஒரு தமிழன்தானா? இந் நாட்டில் சேனாதிபதியாய் இருப்பதும், எனது அதிகாரத்தை நிர்வகிப்பதும் இந் நாட்டின் தமிழர்கள் அல்லவா? தமிழ் மக்களின் பேரால் என்னை இந்நாள் மட்டும் கௌரவித்து நம்பி யிருக்கும் எனது சக்ரவர்த்தியைப் பற்றிய சூழ்ச்சிக்கு நான் காது கொடுக்கலாமா? இரண்ய சக்ரவர்த்தியை வஞ்சத்தால் கொன்று அப் பதவியை நான் வகிப்பதா? மனமே! நீ பாரபட்ச மில்லாமல் யோசி! சிங்கத்திற்கு வைத்த இரையை நாய் தின்ன என்ன யோக்கியதை உண்டு? அந்தோ! என் உடம்பில் தமிழ் இரத்தம் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது! தமிழருக்குச் சதி! அந்தோ! தமிழருக்குச் சதி செய்யத் துணிந்தேனே! இத்தனை யும் எதன் பொருட்டு? நான் சக்கரவர்த்தியாவதற்காக! இந்த முடிவுக்கு நானாகவா வந்தேன். நான் கள்ளங் கபடமற்ற சக்கர வர்த்திக்கும், தமிழ் மக்களுக்கும் உண்மை உள்ளவனாகவே இருந்தேன். இத்தனையும் யாரால்? அந்தப் படுபாவியாகிய - கள்ளியாகிய சித்ரபானுவாலல்லவா சண்டாளி, சூழ்ச்சிக்காரி! அந்தோ தமிழ் இரத்தம் பொங்கும் இந்த வட்டப் பாறையின் அருகில் இருந்து உனக்கொரு நற்செய்தி! சொல்கிறேன் என்று அஞ்சாத நெஞ்சத்துடன் என்னிடம் அவள் சொன்ன போது, ஏ! மானங்கெட்ட தமிழ் மகனே! ஏ! மானங்கெட்ட தமிழ் மகனே! நீ கேட்டுக் கொண்டிருந்தாயே! (எதிரே கவனித்து) வருவது யார்? சித்ரபானு: பிராண நாதா! ஒரு பிராண நாதா! ஒரு விஷயம் மறந்து போனேன். (சேனாதிபதி தலைகுனிந்து சும்மாவிருத்தல்) பாட்டு நமதே என்ற மெட்டு சித்ரபானு: துயரேன் வாட்டமேது? சொல்லவேண்டு மேஇப்போது? உயர் குமுறு காதலா உள்ள குற்ற மென்மீதிலா? (து) உணர்வு கலங்க லானதோ? உவகை யனைத்தும் போனதோ? ரணவீரா, சுகுமாரா நவில வேண்டுமே உதாரா? (து) சித்ரபானு: இதென்ன முகவாட்டமாயிருக்கிறீர்கள்? உணர்ச்சியற்று போனீர்களா! (கட்டித் தழுவிக் கொண்டு) வீரத் தமிழரே! என்ன யோசிக்கிறீர்கள்? நல்ல சந்தர்ப்பத்தில் தர்க்கீகத்திற்கு இடந் தரலாமா? நீங்கள் ஓர் ஆரியப் பெண்ணோடு சம்பந்தப்பட்டதில் உங்களுக்கு அவமானம் ஏற்படும் பட்சத்தில் என் உயிரை இதோ, உங்கள் எதிரில் மாய்த்துக் கொள்ளுகிறேன். நாதா! நான் பிறந்தது தங்கள் பொருட்டு. என் மலருடல் வாடாமல் வதங்காமல் என் பெற்றோர்களால் இந்நாள் வரையில் காப்பாற்றப் பட்டதும் உங்கள் பொருட்டே. இளமை ததும்பும் எனது அங்கங்கள் இந்நாள் வரை நன்னிலையில் இருப்பதும் உங்கள் பொருட்டே. நான் ஒரு புதிய மலர் நீங்கள் அதிலுள்ள புதுத்தேனை உண்ணப் பிறந்த வண்டு இத்தனையும் மறந்தீரே! சேனாதிபதி: (முகத்தைக் கவனித்திருந்து விட்டு) கண்மணி! நான் ஒன்றும் யோசிக்கவில்லை. நீ என்ன சொல்ல மறந்து விட்டாய்? சித்ரபானு: அதிருக்கட்டும். ஒரு மனிதன் உறுதி கூறுவதென்பது மறந்துவிடக் கூடியதா? சேனாதிபதி: இல்லை; காப்பாற்றுவதற்காகவே. நீ இதை ஏன் இப்பொழுது கூறுகிறாய்? சித்ரபானு: நீங்கள் கூறியுள்ள உறுதிமொழியைத் திரும்பவும் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியதில்லையே? சேனாதிபதி: வேண்டியதில்லை, நான் கூறியுள்ள உறுதி மொழியை உயிர் போகுமளவும் மறவேன். நீ என்ன சொல்ல வந்தாய்? சித்ரபானு: வேறொன்றுமில்லை. இளவரசரை என் சுற்றத்தார் சரிப் படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தச் சிறுவனுக்கு நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள் என்று உம்மிடம் சொல்லச் சொன்னார்கள். அந்தோ! அதோ யாரோ வருகிறர்களே! நான் போய் விடுகிறேன். (போதல்) (சேவகர்கள் சேனாதிபதியை நோக்கி வருகிறார்கள். சேனாபதி மூர்ச்சையாய்க் கிடப்பது போல் தரையில் படுத்துக் கொள்ளுகிறான். சேவகர்கள் வந்து கவனித்துவிட்டு) சேவகர்கள்: அந்தோ! இதென்ன அநியாயம்! கொலையாளிகள் வெட்டப் பட்டுக் கிடக்கிறார்கள்! நமது சேனாதிபதியவர்கள் மூர்ச்சையற்றுக் கிடக்கிறார்! ஆரியரின் சூழ்ச்சியோ! அல்லது அந்த ஆரியர் சொல்கிறபடி தெய்வபலமோ தெரியவில்லையே! (சேனாதிபதியைக் தேற்றுகிறார்கள், சேனாதிபதி மெதுவாக எழுந்து) சேனாதிபதி: அந்தோ! நான் எங்கே இருக்கிறேன்? சேவர்கள்: பிரபு இதென்ன கோலம்? இவர்கள் வெட்டப்பட்டுக் கிடக்கிறார்கள்! ஆரியர்கள் எங்கே? சேனாதிபதி: சேவகர்களே! குற்றவாளிகளை அழைத்துக் கொண்டு கொலைக்களம் வந்து சேர்ந்தேன்! அதுதான் எனக்குத் தெரியும். கொலைக்களத்திற்கு வந்தவுடன் மின்னல்போல் திடீரென்று ஓர் ஒளி தோன்றிற்று. அதற்குமேல் எனக்கு ஒன்றும் தெரியாது. இதோ இக் கோலத்தை இப்போது காண்கிறேன். சீக்கிரம் இதை விட்டு நீங்குவோம். (அனைவரும் போதல்) காட்சி - ஒன்பது இடம் : அரண்மனையில் ஒரு பாகம். பாத்திரங்கள் : இரணியன், மந்திரி, பிரகலாதன், சேனாதிபதி, சேவகர்கள். (இரணியன் இருக்கை நோக்கி பிரகலாதன் ஓடிவந்து பணிகிறான். இரணியன் கட்டியணைத்துக் கொண்டு) இரணியன்: அப்பனே வந்துவிட்டாயா? பிரகலாதன்: என் சுற்றுப் பிராயணத்தைச் சுருக்கமாகவே முடித்துக் கொண்டேன். என் அன்னை என் பிரிவைச் சகிக்க மாட்டார்க ளாதலால். அன்றியும் தங்களைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியவே இல்லை. இரணியன்: உண்மையில் உனது அன்னைக்கு ஏற்பட்ட துயரத்தை என்னால் மாற்ற முடியாதிருந்தது. சீக்கிரமாக நீ வந்ததே நல்லதாயிற்று. அப்பனே! நீ சென்ற தேசத்தில் எல்லாம் இந்த ஆரியர்களின் சூழ்ச்சி எவ்வாறிருக்கிறது? பிரகலாதன்: தந்தையே! ஆரியரை வணங்குவதன் மூலமே ஆங்காங்குள்ள தமது காரியத்தை முட்டின்றி முடித்துக் கொள்கின்றனர். குடிகள் அரசனை மதிப்பதைவிட ஆரி யருடைய வேதத்தை மேலானதென எண்ணி வழிபடு கின்றனர். அவர்களுடைய தெய்வபலமே அதற்குக் காரணம். இரணியன்: உண்மைதானா? அந்தோ! அறியாமையென்பது மக்களால் இவ்வாறு பாராட்டப்பட்டுவிட்டதா? அயோக்கியத் தனம் மக்களுக்குக் கரும்பாகத் தோன்றிவிட்டதா? சரி; நீ போய் உன் அன்னையைப் பார். அவள் உன் வரவு கோரி ஆவலாய் இருக்கிறாள். சீக்கிரம் உனக்கு இளவரசப் பட்டம் கட்டப் போகிறோம். (இச்சமயம் சேனாதிபதியும் சேவகர்களும் வந்து சக்கர வர்த்தியைப் பணிகிறார்கள்) இரணியன்: வீரத் தமிழனே! என்ன? உற்சாகமென்பது உன் முகத்தில் சிறிதும் காணப்படவில்லையே? தண்டனையை நிறைவேற்றி விட்டாயா? சேனாதிபதி: ராஜாதி ராஜரே! குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு கொலைக்களத்தை நாடிச் சென்றேன். என்னுடன் நான்கு கொலையாளிகளும் வந்தார்கள். கொலைக்களத்தையடைந்த வுடன் திடீரென்று ஓர் ஒளி தோன்றிற்று. அவ்வளவுதான் தெரியும். மூர்ச்சையற்றுக் கிடந்த என்னை இந்தச் சேவகர்கள் வந்து எழுப்பினார்கள். வட்டப் பாறையில் கொலையாளிகள் நால்வரும் வெட்டப்பட்டுக் கிடந்தார்கள். குற்றவாளிகளாகிய ஆரியர்களைக் காணவில்லை. பாட்டு (நோட் - திர ஏகம்) இரணியன்: த்ரோகச் செயலோ எனதிடம் ஆரம்பித்தாய் இதுததி பேடிச் செயல் செய்வதற்கும் எண்ணிட்டாயா? வீரத் தமிழர் வாழ்வில் மண்ணிட்டாயா? நீ கற்ற தெலாம்இதுவா? தீமைக் கனுகூலமதோ? யூகத்தினிலே மிகுந்த பித்தந்தானோ? தேகத்தினில் ஓடுவதும் ரத்தந்தானோ? இரணியன்: (கோபமாய்) துரோகியே! நீ யாரிடம் பேசுகிறாய்? இந்நாள் வரைக்கும் தமிழர்களின் பேரால் உனக்கு ஆதரவு தந்த உனது சக்கரவர்த்தியிடம் நீ கூறுவதை யோசித்துக் கூற மாட்டாயா? நன்றி கெட்டவனே! தமிழ்த் தன்மையின் வேரைப் பறிக்கத்தக்க அசட்டு வார்த்தையை என்னிடம் அஞ்சாமற் கூற முன்வந்தாயா? எனக்கிருப்பதாக நீ நினைத்திருந்த அறிவுடைமையை உனது மூடத் தனத்தையிட்டுக் குழப்பிவிட நினைத்த உன் நெஞ்சம் கருங்கல்லா? எனது தோளும் வாளும் பேடித்தனம் பொருந்தி யவை என்ற முடிவுக்கு வந்தாயா? மூடனே! மானத்தோடு பேசு! நடந்ததென்ன? (ஆசனத்திலிருந்து குதித்து எதிர்வந்து நிற்றல்) சேனாதிபதி: (பயத்தோடு) பெருமானே! தங்கள் கோபத்துக்குக் காரணம் தோன்றவில்லையே! என் வார்த்தையில் தங்கட்கே அவ நம்பிக்கை தோன்றும் காலமும் வந்துவிட்டதா? ப்ரபூ! நடந்தது உண்மை! என் வார்த்தையை நீங்கள் நம்ப முடியா விட்டால் இப் பாவியைத் தங்கள் வாளால் பிளந்து போடுங்கள். இரணியன்: (நிதானிக்கிறான் - பிறகு கெஞ்சிய முகத்தோடு) அப்பனே, உண்மைதானா? ஒளி தோன்றும் என்பதையாவது நீ நம்புகிறாயா? நீயே ஆரியர் சூழ்ச்சியை அறியாவிட்டால் அவர்கள் சொல்லும் கடவுள் நாராயணன் என்பதை நீயே ஏற்றுக் கொள்வதுபோல் பேசுவாயானால், இந்நாட்டில் சாதாரணத் தமிழ் மக்கள் கதி என்னவென்பதை நீயே யோசித்துப்பார். நீ சொல்லும் இந்த வார்த்தை ஆரியர்களின் அயோக்யத் தனமான வார்த்தைகளை அரண் செய்வதாகவன்றோ இருக்கிறது? இதைத் தமிழர் அறிந்தால் ஆரிய வலையிற் சிக்கி இவ்வரசாங்கத்தையே கவிழ்க்கவும் ஆயத்தமாகி விடுவார்களே! உன்னை நான் நம்புகிறேன்; ஆயினும், சோதி தோன்றிற்று; உடனே மூர்ச்சையானேன்; ஆரியரைக் காண வில்லை, கூட வந்தவர் வெட்டப்பட்டுக் கிடந்தார்கள் என்பதைப் பகுத்தறிவு எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? ஒருகால் உன்னை ஆரியர் பின்னின்று மூர்ச்சையாகும்படி செய்து விட்டார்கள் என்றாலும் நம்பமுடியும். சேனாதிபதி: நான் ஒரு வேளை புத்தி தவறி விட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதை ஒத்துக் கொள்ளுகிறேன். இரணியன்: இருக்கலாம். ஏனென்றால் இதற்கு முன் எத்தனையோ ஆரியர்களையும், ஆரியப்பாதிரிகளையும் நான் சிரச்சேதம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் சோதி தோன்ற வில்லையே! தப்பியோடவுமில்லையே! - சேனாதிபதியே! கடைசியாக உனக்கு ஒரு வார்த்தை, தமிழர்நாடு. நாம் தமிழர். நமதுடம்பில் தமிழ் ரத்தம் வீறிட்டோடுகிறது. தமிழர் நம்மை நம்புகிறார்கள் நான், அவர்களைக் காக்க வேண்டும். நாம் நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும். சுயமரியாதையை இழக்கலாகாது. தெரியுமா? சென்றுவா. (சேனாதிபதி போய்விடுகிறான்) மந்த்ரீ! என் மைந்தன் சுற்றுப் பிரயாண அனுபவத்தை என்னிடம் சொன்னதை நீ கேட்டாயல்லவா? எங்கும் ஆரியர் செல்வாக்கே அதிகமாயிருக்கின்றதென்றும் அவர்கள் தெய்வ பலமே அதற்குக் காரணமென்றும் சொன்னான். சேனாதிபதியோ வானில் ஒளி தோன்றிற்று என்கிறான். இவர்களின் மனோபாவம் நம்மையும் திடுக்கிட வைக்கிறது. மந்திரி: அரசே! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதே நேரத்தில் ஆரியப் பூண்டே இந்நாட்டில் இல்லாதபடி செய்து விடுவதும் நலம் என்று எண்ணுகிறேன். தங்கள் குமாரனாலும் இந்தச் சேனாதிபதியாலும் இந்த ராஜ்யத்திற்கு ஏதோ கெடுதி உண்டாகப் போகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீரத் தனம் மிகுந்த பகைவரை நாம் வரவேற்கின்றோம் ஆனால் நமக்கு நண்பர் போலவும் உறவினர் போலவும் உள்ள அயோக்கியர்களை நாம் விட்டு வைக்கலாகாது. இரணியன்: மந்த்ரீ! உண்மையே. ஆரியர் சூழ்ச்சியைக் கண்டறிவதில் நாம் கண்ணும் கருத்துமாயிருக்க வேண்டும். மந்திரி : அவ்வாறே. இரணியன்: நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். (மறைவு) காட்சி - பத்து இடம் : நகரவீதி உறுப்பினர் : தலையாரி, மாறுவேடம் பூண்ட அரசன், மாறுவேடம் பூண்ட மந்திரி, பொது ஜனங்கள். தலையாரி: (முரசறைந்து) நாளை அதிகாலையில் நமது சக்கரவர்த்தி யின் குமாரருக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்போவதால் அனைவரும் ஊரையும், வீடுகளையும் அலங்காரம் செய்வதோடு பட்டஞ்சூட்டும் வைபவத்திற்கு விஜயம் செய்யும்படியும் சக்கரவர்த்தியவர்கள் கேட்டுக் கொள்ளுகிறார்கள். வீதியில் உள்ள மக்களில் ஒருவன்: (மற்றவர்களை நோக்கி) ஐயையோ! நாம் சக்கரவர்த்தியின் கட்டளைக்கு இணங்க முடியாது. சக்கரவர்த்தி பூசுரர்களாகிய ஆரிய ஜனங்களுக்கு விரோதி. ஆரியர்களின் விரோதிகளாயிருந்தால் தான் திடீரென்று இறந்து போகிறார்களே! மற்றொருவன்: சேனாதிபதி ஆரியர்களுக்குக் கொஞ்சம் வேண்டி யிருந்ததினால்தான் அவர் தலை தப்பிற்று. இல்லாவிட்டால் நாலு பேரோடு அவரும் மாள வேண்டியதுதானே! இன்னொருவன்: நாம் ஆரியர் சொல்வதைத்தான் நம்பவேண்டும். ஒரு வீடு இருக்கிறது. அதைக் கட்டியவன் ஒருவன் இருப்பான். அதுபோலவே இந்த உலகம் இருக்கிறது. அதை உண்டாக்கியவன் இருப்பானா இல்லையா? அவன் எப்படிப் பட்டவனாயிருப்பான்? அடேயப்பா? அவனால் ஆகாதது என்ன இருக்கிறது? அந்தப் பெரிய மனிதனைத்தான் கடவுள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்; தெய்வம் என்று சொல்லுகிறார்கள். அந்தக் கடவுள்தான் ஆரியரை அனுப்பித் தமிழருக்குப் புத்தி வரும்படி செய்யச் சொன்னாராம். அப்படி யிருக்கையில் அந்தக் கடவுள் யார் பேச்சைக் கேட்பார்? ஆரியர் பேச்சைத்தானே கேட்பார். வேறொருவன்: மெய்! மெய்! அதுவுமில்லாமல் எல்லாந் தெரிந்த இளவரசரே ஆரியர்களை வணங்கும்போது நாம் எந்த மூலை? மற்றொருவன்: உம்! எவன் இந்த சக்கரவர்த்தியை நம்புவான் இனிமேல்? திடீரென்று ஒளி உண்டாகிறது! ஆரியர் சொன்ன படி செய்துவிட்டு ஓடிவிடுகிறது! இன்னொருவன்: நோய் நொடி வந்தால் ஆரியர்களிடம் போய் அவர்களை வணங்கினால் அந்த நோயை ஒளியைக் கொண்டு தீர்த்துவிடுவார்கள்! வேறொருவன்: நேற்று திம்மான் வீட்டுக் குப்பன் இறந்து விட்டா னாம். ஆரியப் பாதிரி மந்திரஞ் செய்து பிழைக்க வைத்து விட்டாராம்! இன்னொருவன்: இப்படியெல்லாம் இருக்கும்போது இந்தச் சக்கர வர்த்திக் கென்ன கொழுப்பு? (என்று பலவிதமாய் பேசிக் கொண்டே ஜனங்கள் கலைகிறார் கள். பிறகு அக்கூட்டத்தில் மாறுவேடத்திலிருந்த அரசனும் மந்திரியும் தனித்து போகிறார்கள்) பாட்டு (கிளிக்கண்ணி, மாண்டு - ஆதி) இரணியன்: ஆரியர் சூழ்ச்சியாலே அறிவை இழக்கின்றாரே சீரிய தமிழரெல்லாம் - மந்திரி சிந்தனை தீர்ந்தனரே! காரியம் சாய்வதற்கே கடவுளென் றொன்று சொல்லி ஊரை ஏமாற்றுகின்றார் - மந்திரி உணர்விலா ஆரியர்கள். சாமார்த்தியம் இல்லாததால் சாமி தன் சொந்தமென்றார் ஏமாற்றை நம்புவதோ - மந்திரி இதற்கு நாம் அஞ்சுவதோ? தீமையே ஒருருவாய்ச் சேர்ந்திட்ட ஆரியரை நாமினி விட்டு வைத்தால் - மந்திரி நாசமிகச் சேர்வது மெய். இரணியன்: மந்த்ரீ! சேனாதிபதியின் கட்டுக்கதையானது நமது நாட்டு மக்களிடம் காட்டுத் தீப்போல் பரவியிருப்பதோடு அக்கட்டுக் கதையையும் அதைச் சார்ந்த ஆரியர் புளுகுகளையும் மெய்யென்று அனுசரிக்கவும் தொடங்கிவிட்டார்கள் மக்கள்! [ïu¡fkhŒ] இந்நாள் மட்டும் பகைவராலும் அசைக்கமுடியாத என் நெஞ்சத்தைக் கேவலம், ஆரியர்களது சூழ்ச்சியும் ஏமாற்று களும் கலங்கும்படி செய்துவிட்டன; தமிழ்ப் பெருமக்கள் இந்நாள் வரையில் என்னைச் சக்கரவர்த்தி யாக பெற்றிருந் தனர். அவர்கட்கு எவ்வகைப்பட்ட இன்னலும் ஏற்படாதவாறு காத்துவந்தேன் அவர்களின் மானத்தைக் காத்துவந்தேன்; ஏமாற்றுக்காரரின் வலையிற் சிக்கிய இந்நாளே அவர்கள் தங்கள் சுயமரியாதைக்கு இடையூறு தேடிக் கொண்ட தீ நாளாகும். என் செய்வேன்! கலங்காத என் சித்தம் கலங்கவும் நேர்ந்தது. ஆயினும் எனக்கு இன்று ஏற்பட்ட கலக்கம் என் பொருட்டன்று. எனது தமிழ் மக்கள் பொருட்டே. தன்மானம் என்ற பெரும்பதவியினின்று மானமற்ற அடிமை வாழ்க்கை யின் பாதையில் அடிவைத்து விட்டார்களே! ஆரியர்களின் இந்தப் பெரிய பொய்ப் பிரச்சாரத்தில் நமது சேனாதிபதியும் என் குமாரனும் ஈடுபட்டதின் காரணம் தான் புரியவில்லை! பேரைக் கேட்ட மாத்திரத்தில் எட்டுத்திக்கும் வாழ்த்துக் கூறும்படி செங்கோல் செலுத்தும் இரணியனுக்கு வாய்த்த பிள்ளையின் தன்மையும் நன்றாகயிருக் கிறது! மந்திரி: தங்கள் குமாரரைப் பற்றி எவ்வித முடிவுக்கும் நாம் வந்து விடலாகாது. இன்னும் பார்க்க வேண்டும். [ngh»wh®fŸ.] காட்சி - பதினொன்று இடம் : அரண்மனை (பட்டம் சூட்டும் வைபவம்) உறுப்பினர் : பலதேச அரசர், இரணியன், பிரகலாதன், சேனாதிபதி, மந்திரி, லீலாவதி முதலிய அந்தப்புர மாதர்கள், பொதுமக்கள், வாத்தியக்காரர்கள், ஆணுடை தரித்த மாறுவேடத்துடன், சித்ரபானு. (இரணியன் தனது சிம்மாசனத்தில் மந்திரி பிரதானிகலுடன் வீற்றிருத்தல்) மிதுனபுரி மன்னன்: (வணங்கி) அரசர் பெருமானே! மிதுனபுரி மன்னன் வணக்கஞ் செலுத்துகிறேன். இரணியன்: வணக்கம், ஆசனத்தில் அமர்க. மச்சபுரி மன்னன்: அரசர் பெருமானே! தங்கள் குமாரன் பிரகலாதனுக்கு இளவரசுப் பட்டங்கட்டுவது பற்றி எனது மகிழ்ச்சியைத் தெரிவிக் கிறேன். மச்சபுரி மன்னன் வணக்கம். இரணியன்: தோழரே! நீவிர் வந்ததால் இவ் வைபவத்தைச் சிறப்புறுத்தினீர்கள், அமர்க. விதர்ப்ப நாட்டரசன்: அரசர் பெருமான் குமாரன் நீடுழி வாழ்க! பெருமானே! விதர்ப்ப நாட்டு மன்னன் வணக்கம். இரணியன்: தங்கள் செங்கோல் நிலைபெறுக; இவ் விருக்கையில் அமர்க! பொதுமக்களிற் சிலர் சபையை நோக்கி வருகிறார்கள்) அன்புள்ள குடிகளே! அனைவரும் அமரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். (முரசு முழங்குகிறது. ஒருவர் தட்டில் இளவரசின் க்ரீடந் தாங்கி வருதல், சகல வாத்தியமும் முழங்குகின்றன. பிரகலாதனைச் சேனாதிபதி அழைத்து வருதல்] மந்திரி: (பிரகலாதனையழைத்து இளவரசு ஆசனத்தின் அருகில் நிற்கவைத்து) நமது சக்கரவர்த்தி இரண்ய நாமத்தால் இந்நாள் பலதேச அரசர்கள், திருமுன்பும், தேசப் பெருமக்கள் திருமுன்பும், சக்கரவர்த்தி திருமகனாம் பிரகலாதனுக்கு இளவரசப் பட்டத்தை நான் சூட்டுகிறேன். [ãufyhjid neh¡»] இரணிய குமாரா! தமிழர் முறைப்படியும், இவ்வரசாங்க வழக்க படியும் பின்னாளில் நீ உன் தந்தையார் ஒழுகிய நெறியே இந் நாட்டை ஆட்சி செய்வதாய் உறுதி கூறுவதற்கு அறிகுறி யாகவும் ராஜவிவாஸப் பிரமாணமாக இரணிய நாமத்தை வாழ்த்துகிறேன் என்று உன் மனதாரச் சொல்லி இவ்வாசனத் தில் அமர்வாயாக. (உடனே அங்கு மாறுவேடத்தோடு அமர்ந்திருக்கும் சித்ரபானு எழுந்து தானிருப்பதை ஞாபகப்படுத்துவதாகச் சமிக்ஞை செய்து அமர்தல்) பிரகலாதன்: சர்வலோக சரண்யனாகிய ஸ்ரீமந் நாராயணன் நாமம் வாழ்க! * (இதைக் கேட்டவுடன் அனைவரும் ஹா! என்று திடுக்கிட்டு முகம் சுருங்குதல், சிலர் காதையடைத்தல், சிலர் திடுக்கிடத் தலையில் கை வைத்துக் குனிதல்) பாட்டு உன்னிட மடத்தனத்தை என்ற மெட்டு அடாணா - ஆதி இரணியன்: துஷ்டா விடடா! விடடா உன்றன் துடுக்கும் மிடுக்கும்நலம் தடுக்கும் கெடுக்கும் உனக் கடுக்கும் படிக்கு நடப்பாய். அநுபல்லவி இடுக்கண் மிகுக்கும்படி தொடுக்கும் மொழியைச் செவி மடுக்கும் எனதுடலும் துடிக்கும் துடிக்கும் அட (விட) சரணம் பிடிக்கும் தமிழர்களின் கொடிக்கும் எனது மணி முடிக்கும் பழுதுவரும் படிக்கு நடப்பதென்ன? குடிக்குக் கொடுமை செய நடிக்கும் ஆரியர்களின் படிப்பைப் படிக்க வந்தாய், தடிப்பயலே இத்த தி (விட) இரணியன்: (அதே சமயத்தில்) சீ! துஷ்டா! என்ன சொன்னாய்? அடக்கு உன் இறுமாப்பை! மூடனே! உனது தமிழ்த் தன்மை எங்கே? என் பெயரைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! தமிழ்ப் பெருமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட களங்கமே! உன் நெஞ்சைப் பிளப்பேன்! உன்னை என் மகன் என்ற காரணத் தினால் நான் மன்னிக்கவில்லை; பொதுமக்களின் இளவரசன் என்ற காரணத்தினால் உன்னை ஒருமுறை எச்சரிக்கிறேன். ஆரியர் அயோக்கியத்தனத்திற்குக் கட்டுப்பட்டாயா? தமிழ் ரத்தத்தை உகுத்தாயா? என் எதிரில் நீ சொல்லிய வார்த்தை யின் பொருளென்ன? உனது சொந்த நாட்டு மக்களுக்கு விரோதமாக ஆரியப் பேடிகளின் சார்பில் நான் இருப்பேன் என்று சொன்னதாகவல்லவா முடிகிறது உன் கருத்து? நாராயணன் நாமம் வாழ்க என்றாய். நாராயணன் என்ற பதத்தால் நீ குறிக்கும் மனிதன் யார்? அல்லது ஒரு சக்தியுள்ள பொருளானால் அப்பொருள் எது? மூடனே! மறைந்திருந்து வஞ்சகர் சூழ்ச்சியால் காரியத்தைச் செய்வதையே தொழிலாக உடைய ஆரியர்களுடைய காப்பாளனாக எண்ணப்படும் நாராயணன் என்ற பொருள் அல்லது உருவம் அல்லது மனிதன் எங்கே? ராஜவிவாஸப் பிரமாணம் செய்யவேண்டிய இடத்தில் அர்த்தமில்லாத வார்த்தையை உபயோகித்துச் சபையின் மனத்தைப் புண்படுத்தினாய்! எவனிடம் உனது பாசாங்கும் உனது கூட்டத்தார்களான ஆரியப் பாதிரிகள், ஆரிய ஜனங்கள் இவர்களின் அட்டகாசமும் செல்லாதோ அப்படிப்பட்ட என்னிடமா உன் வரிசையைக் காட்ட வந்தாய்? மந்திரி: அப்பா! நீ வாய் தவறிக் கூறியிருக்கலாம். அது பற்றிக் கவலையில்லை. இரணிய நாமத்தை வாழ்த்துகிறேன் என்று இப்போதாவது சொல்லிவிட்டு அமர்வாயாக. அரசர்கள்: ஆம்! ஆம்! அப்படியே செய்யலாம். பிரகலாதன்: நான் வாய் தவறிச் சொல்லவில்லையே! ஸ்ரீமந் நாராயண நாமத்தையே நான் மீண்டும் வாழ்த்துகிறேன். (உடனே லீலாவதி ஓடி பிரகலாதனை அணைத்துக் கெஞ்சிய முகத்துடன்) லீலாவதி: அருமைப் பாலா! ஆசைக்கொரு மகனே! என் குலவிளக்கே! நீ என்ன வார்த்தை மறுபடியும் கூறினாய்? பயனற்றதும் அர்த்தமற்றதுமான இவ் வார்த்தையைக் கூறுவ தன் மூலம் ஏன் பெருங்குழப்பத்தை உண்டாக்குகின்றாய்? உன் தந்தையின் கோபத்தைப் பெருக்காதே! சக்கரவர்த்தியும் உனது அருமைத் தந்தையுமான ஒருவருக்கு வாழ்த்துக்கூற என்ன தடை? உனக்கு அடாத வார்த்தையைப் போதித்தவர் யாரப்பா? பிரகலாதன்: அம்மா! சர்வ லோகத்தையும் அவற்றிலுள்ள எல்லா உயிர்களையும் சிருஷ்டித்தவன் எவனோ, நினைத்த மாத்திரத்தில் எவற்றையும் அழிக்க வல்லவன் எவனோ, எவ்வுயிர்க்கும் உணவு தந்து காப்பவன் எவனோ அந்த ஸ்ரீமந் நாராயணன் நாமமே வாழ்த்தத் தகுந்தது! இரணியன்: (தனது வாளை உருவிக் கொண்டு) அடா மசகமே என்ன சொன்னாய்? [ãufyhjid beU§Fjš] லீலாவதி: (தடை செய்கிறாள்) நாதா! சிறுவன் அறியாது சொன்னான். திருந்துவான். (பிரகலாதனைப் பார்த்து) அப்பா! பொது மக்களும் அரசர்களும் போற்றும் சக்கரவர்த்திக்கு உன்னால் அவமானம் ஏற்படலாமா? யோசித்துப் பார்! (இரணியனிடம்) நாதா! இன்று போகட்டும். நாளை இவ்வைபவத்தை வைத்துக் கொள்ளலாம். அதற்குள் நான் பிள்ளைக்குத்தக்கது சொல்லித் திருத்திவிடுகிறேன். மந்திரி: பெருமானே! அவ்வாறே செய்து பார்ப்போம். அரசர்கள்: அவ்வாறே செய்து பார்க்கலாம். (அரசனை வணங்கிப் போதல்) காட்சி - பனிரெண்டு இடம் : அரண்மனையின் ஒருபுறம் உறுப்பினர் : பிரகலாதன், சித்ரபானு, சேனாதிபதி, சேவகர். (சித்ரபானு பிரகலாதன் ஆசனங்களில் அமர்ந்தபடி) பிரகலாதன்: கண்மணி! சித்ரபானு! திடீரென்று இங்கு யாராவது வந்து விடக் கூடும். ஆதலால் நீ உனது ஆடையைத் தரித்துக் கொள். இச்சமயத்தில் நமது ரகசியம் வெடித்துவிடக் கூடாது. நேற்று நீ ராஜ சபையில் ஆணுடைதரித்துக் கொண்டு வீற்றிருந் தாயல்லவா? அப்போது உன் உருவம் ஓர் அரசிளங் குமரன் உருவமாகவே தோன்றிற்று. அப்போது நான் ஒரு பெண்ணாக இருந்தால் என்பாடு என்னாவது? சித்ரபானு: நான் தங்களை முதலில் பார்த்தபோது நான் என்ன ஆனேனோ அதுதான் ஆகும். பிரகலாதன்: அடி மயிலே! ஆசைக்குயிலே! நேற்று ராஜ சபையில் நான் ராஜ விசுவாசப் பிரமாணம் செய்யாததால் என் தந்தை ஓங்கிய வாள் என்மீது பட்டிருந்தால் என் கதி என்ன ஆவது? உன்னை விட்டுவிட்டு இறந்துதானே போகவேண்டும். பாட்டு என்ன விலை வேண்டும் என்ற மெட்டு ப்யாக் - ஏகம் சித்ரபானு: விரல் பட்டிருந்தாலன்றோ தெரியும் - என் பட்சமுள்ள தங்கள் மீது சக்கரவர்த்தியின் கை (விரல்) பட்டாளத்து வீரர்கள் பார்த்த கண் பார்த்தபடி எட்டுத் திசை சூழ்ந்திருக்க ஏற்படுத்தி வைத்தோமே (விரல்) அருகிலுமக் குந்துணையாகவே ஆரியர் உருவிய கத்தியோடும் உலவியே இருந்தார் (விரல்) மந்திரத் தினாலும் உமை மகரிஷிகள் சூழ்ந்தே எந்த வித ஆபத்துமே ஏற்படாமல் காத்தனர் (விரல்) சித்ரபானு: நாதா! உங்களுக்கு விஷயம் தெரியாது; இப்போது சொல்லுகிறேன் கேளுங்கள். உங்களுக்குச் சக்கரவர்த்தியால் ஏதாவது ஆபத்து நேரிடுமென்று கருதிச் சேனாதிபதியார் ஆயுத பாணிகளான தனது படை வீரர்களை ராஜ சபைக்கருகே தயாராகக் காத்திருக்கும்படி செய்தார். அந்தக் கட்டளையின் படி வில்வீரர் ஆயிரம் பேரும் வாள்வீரர் ஆயிரம்பேரும் மல் வீரர் ஆயிரம்பேரும் கவண்வீரர் ஆயிரம்பேரும் ஜாக்கிரதையாக இருந்தார்கள். ஆயினும் இச்சேனா வீரர்களை நானும் எனது ஆரிய ஜனங்களும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. எங்கள் ஆரிய மகரிஷிகளின் ஏற்பாட்டைக் கேளுங்கள். உங்கள்மீது சக்ரவர்த்தியின் வாள் பட்டிருந்தால் வாள் முறியுமேயன்றி உங்களுக்கு ஒருவிதக் கேடும் வந்திராது, சக்ரவர்த்தியின் கதி அதோகதிதான். பிரகலாதன்: பெண்ணே! உங்கள் மந்திரபலத்தை நம்பித்தானே இத்தனை பெரிய காரியத்தில் தலையிட்டேன். பெண்ணே! நீ உள்ளே போ! மாறுவேடம் தரித்துக் கொள். ஒரு புறமாக இரு. சித்ரபானு: நீங்கள் என்னைவிட்டு எங்கே போகிறீர்கள்? உங்கள் தந்தை உங்களைக் காணவேண்டிய நேரம் இன்னும் ஆக வில்லையே! பிரகலாதன்: அதற்காகச் சொல்லவில்லை. நீ இருப்பது தெரியலாகா தல்லவா? (சித்ரபானு பிரகலாதனின் தனி அறையுள் போகிறாள்) சேவகன்: (பிரகலாதனை வணங்கி) சேனாதிபதியார் தங்களைக் காண விரும்புகிறார். பிரகலாதன்: வரவிடு! வரவிடு! சேனாதிபதி: இளவரசே! என்ன விசேடம்? உமது அன்னை உமக்குப் புத்தி சொன்னார்களா? பிரகலாதன்: எவ்வளவோ சொன்னார்கள். என் புத்தியைக் கலைக்க முடியாது. அது கிடக்கட்டும். நான் உம்மைக் கண்டு கேட்க நினைத்திருந்த விஷயம் ஒன்று. கொலைக் களத்திற்கு அன்று குற்றவாளிகளை நீர் அழைத்துப் போன போது நடந்த புதுமை என்ன? சோதியைக் கண்டீராமே! பாட்டு சரசராணி கல்யாணி என்ற மெட்டு ஆதி சேனாதிபதி: சோதி ஏது தெய்வமேது? சொல்லும் துதிக்கும் தேவராதி ஏது? - பரஞ் (சோதி) ஓதும் மோக்ஷ நரகமேது ? நல் உலகை ஆரியர் கலகமே செய உரைத்தனர் இதைவிடப் புனிதனிற் பரஞ் (சோதி) மேதினி மேல் மதவாத முண்டாக்கி மேலும் கடவுளென்ற பயத்தையும் தேக்கிச் சாதிச் சடங்குகளைத் தாங்கித் தலையில் ஏற்றித் தம் நிலையை மாற்றிப் - பின் தமை உயர்த்திடப் புரிந்தனர். அன்றிப் பரஞ் (சோதி) சேனாதிபதி: எந்த சோதியை? உமக்கென்ன பயித்தியமா? ஆரியப் பாதிரிகள் சொல்லியபடி குற்றவாளியாகிய ஆரியர்களை விடுவிக்கவும். சக்கரவர்த்தியை ஏமாற்றவும் அவ்வாறு சொன்னேன். பிரகலாதன்: அப்படியா? பின் என்ன தான் நடந்தது? சேனாதிபதி: இதென்ன? பிறகும் அதென்ன என்கிறீரே! குற்றவாளி களை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். என்னிடமிருந்த நான்கு கொலையாளிகளும் இதைச் சக்ரவர்த்தியிடம் சொல்லிவிடக் கூடும் என்று நினைத்து அவர்களை வெட்டிவிட்டேன். பிரகலாதன்: இவ்வளவுதானா? சேனாதிபதி: வேறென்ன இருக்கமுடியும்? பிரகலாதன்: ஏன் அப்படிச் செய்தீர்? சேனாதிபதி: இதென்ன இப்படிக் கேட்கிறீர்? எல்லாம் உம் பொருட்டுத் தானே! உம் நலத்துக்காகவே ஆரியப் பாதிரிகள் சொல்லியபடி செய்தேன். சக்கரவர்த்தி தயை எனக்கு எதற்கு? உம் தயையல்லவா சாவதம். பிரகலாதன்: சேனாதிபதி! நான் உமக்கு நன்றி கூறுகிறேன் ஆனால் அன்று நடந்ததில் தெய்வாம்சம் ஒன்றுமேயில்லையா? சேனாதிபதி: (நகைத்து) இளவரசே! நன்றாகக் கூறவேண்டுமென்றால் அன்று உமக்காக நான் நடத்தியது புரட்டே. புரட்டின் பேர் தெய்வாம்சம் என்றால் பொருத்தமாகத்தானிருக்கும். (சேவகன் ஒருவன் அங்கு வந்து முதலில் சேனாதிபதியையும் பின்பு இளவரசையும் வணங்கி நிற்றல் சேனாதிபதி: என்ன காரியமாய் வந்தாய்? சேவகன்: சக்ரவர்த்தியார் இளவரசரை அதி சீக்கிரம் அழைத்து வரக் கட்டளை பிறப்பித்துள்ளார். பிரகலாதன்: நேற்றைய வரையில் ஒன்றும் மாற்றம் இல்லை. ராஜ விவாஸப் பிரமாணம் செய்யும்படி என்னைக் கட்டாயப் படுத்துவதில் பயனில்லை என்று சொல்! சேனாதிபதி: சேவகா இங்குவா! நான் இங்கு இருப்பதாக எவரிடத் திலும் சொல்லாதே! ஜாக்கிரதை! சேவகன்: அப்படியே (வணங்கிப் போதல்) பிரகலாதன்: (சேனாதிபதியை நோக்கி) நீங்கள் இன்னும் சற்று நேரம் இங்குத் தங்க உத்தேசம் போலும்! சேனாதிபதி: ஆம் தாமதிக்க வேண்டியிருக்கிறது. நான் இங்கிருப் பதால் தங்களுக்கு இடையூறு ஒன்றுமில்லையே? பிரகலாதன்: இல்லை, இல்லை, இல்லை, இந்நேரம் என் தந்தைக்கு சேவகன் சேதி சொல்லியிருப்பான்; அவர் அடிபட்ட பாம்பு போல் சீறுவார். சேனாதிபதி: என்ன நடக்கிறதென்று பார்ப்போம். (நான்கு சேவகர்கள் இரும்புச் சங்கிலியுடன் பிரகலாதனிடம் வருகிறார்கள். சேனாதிபதிக்கு முதலில் மரியாதை செய்து நிற்கிறார்கள்) சேனாதிபதி: என்ன விசேக்ஷம்? சேவகர்கள்: தலைவரே! இளவரசரை இச் சங்கிலியால் கட்டி இழுத்துவரச் சொன்னார் சக்ரவர்த்தி. பிரகலாதன்: பார்த்தீர்களா நான் சொல்லியதுபோல் நடந்தது! சேனாதிபதி: அப்படியா? போர்ச் சேவகர்களே! இப்படி வாருங்கள் ஒரு விஷயம். நான் உங்கள் தலைவன். நான் சொல்கிறபடி நீங்கள் செய்ய கடமைபட்டிருக்கிறீர்களல்லவா? சேவகர்கள்: தாங்கள் சொன்னபடி செய்ய தடை ஒன்றும் இல்லை! சேனாதிபதி: சக்ரவர்த்தியிடம் ஆச்சரியத்தோடும், பரபரப் போடும் என்னசொல்ல வேண்டும் தெரியுமா? சங்கிலியால் இள வரசரைக் கட்டினோம் சங்கிலி பொடிப்பொடியாக உதிர்ந்து விட்டது. பிறகு நெருங்க முடியவில்லை. அக்கினி சுவாலை வீசுகிறது. நாங்கள் பயந்து ஓடிவந்துவிட்டோம் என்று தைரியமாகச் சொல்லவேண்டும். சங்கிலியை இங்கேயே போட்டுவிட்டுப் போய்விடுங்கள். சேவகர்கள்: அவ்வாறே (போகிறார்கள்) சேனாதிபதி: (அவசரமாக) இளவரசே! இனித் தாமதிக்கலாகாது. இனிச் சக்கரவர்த்தி கோபாவேசத்துடன் இங்கு வரக்கூடும். நாம் தக்க ஏற்பாட்டோடு இருப்போம் உமது உயிருக்கு ஏதாவது தீமை ஏற்படும் இதோ வருகின்றேன். (சேனாதிபதி ஓடுகின்றான்) காட்சி - பதிமூன்று இடம் : அரண்மனையின் ஒருபுறம் உறுப்பினர் : ஆரியர்கள், காங்கேயன், சேனாதிபதி. சேனாதிபதி: நீங்கள் அனைவரும் ஆயுதபாணிகளாகப் பிரகலாதன் தனியறையைச் சார்ந்த பல பக்கங்களிலும் பதுங்கியிருங்கள். மகரிஷி: இரணியன் இச்சமயம் பிரகலாதனிடம் கோபமாய் வரக்கூடும். ராஜவிசுவாசப் பிரமாணம் செய்யும்படி கட்டாயப் படுத்தக் கூடும். மேலும் அந்த இரணியன் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைப் பற்றியும் இகழ்ந்து பேசுவான். அச்சமயம் திடீரென்று அவன் மேற் பாய்ந்துவிடவேண்டும். காங்கேயா! நமது காரியத்தை நாமே செய்ய வேண்டும். இதோ! இந்தச் சிங்கத்தோலைப் போர்த்திக் கொள். பயப்படாதே, சேனாதிபதி உடன் இருக்கிறார். சக்கரவர்த்தி என்னமோ மிக்க கலக்க மடைந்தேயிருப்பான். சேனாதிபதியவர்களே! தாமதிக்கா தீர்கள். இதோ வந்து விட்டோம். (சேனாதிபதி பிரகலாதன் அறையை நோக்கி ஓடுகிறான். உடனே சித்ரபானு தனது ஆணுடையுடன் அங்கே ஓடி வருகிறாள்) சித்ரபானு: (தனது கூட்டத்தாரை நோக்கி) சேனாபதியையும் அதே நேரத்தில் ஒழித்துவிடவேண்டும். ஆரியர் விஷயத்தில் அவனுக்குச் சிறிதும் நம்பிக்கையில்லை, நமது சூழ்ச்சி அனைத்தும் அவனுக்குத் தெரியும். அவனை விட்டு வைத்தால் நமக்கு அவனாலும் ஆபத்து நேரிடும். சக்கர வர்த்தியிடமிருந்து சேவர்கள் அடிக்கடி வந்து போவதால் இளவரசருடன் நெருங்கவோ, அல்லது சேதி தெரிவிக்கவோ முடியாததால் நான் அவசரமாக ஒரு கடிதத்தை எழுதி இளவரசனிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அக் கடிதத்தில் இதே சமயத்தில் சேனாபதியே ஒழித்து விட வேண்டும் என்று விவரமாய்க் குறிப்பிட்டிருக்கிறேன், சீக்கிரம் நாம் போகவேண்டும். அனைவரும் பிரகலாதன் தனியறையைச் சார்ந்த பல பக்கங்களிலும் ஓடி ஒளிந்து கொள்ளுகிறார்கள். காட்சி - பதினான்கு இடம் : கொலு மண்டபம். உறுப்பினர் : இரணியன், மந்திரி, சேவகர்கள். போர்வீரர்கள்: (இரணியனை வணங்கி) பெருமானே! நாங்கள் இளவரசைக் கட்டினோம். இளவரசர் கட்டுப்படவில்லை ஏதேதோ பேரைச் சொல்லுகிறார். எங்களை ஒருவித அக்கினி ஜ்வாலை நெருங்கவிடவில்லை. இனி நெருங்கினால் நாங்கள் வெந்து போவது நிச்சயம். பாட்டு அடடா ரதத்தை நிறுத்தடா என்ற மெட்டு மோகனம் - அட சாபு இரணியன்: சீச்சீ - அறிவேன் உங்கள் சூழ்ச்சியை உம்மால் அசைக்க முடியுமோ என் ஆட்சியை குறியற்ற ஆரியர் கூட்டத்திற் சேர்ந்தின்று கொட்ட மடிப்பதும் நித்தமும் கட்டளை முற்று மறுப்பதும் (அறி) இறையவன் என்னையோ வெறுப்பது? சொந்த இனத்தவர் வேரையோ அறுப்பது? மறைமுகமாய் என்னை வஞ்சிக்க எண்ணிடும் மடையன் கடையன் தன்னை விடவும் படுமோ? சற்றும் (அறி) இரணியன்: (கோபத்துடன் ஆசனத்திலிருந்து குதித்து) வஞ்சகர்களே நானறிவேன் உங்களை! மந்திரி! இதோ நானே சென்று அவனை இழுத்து வருகிறேன் [f¤âia உருவிக்கொண்டு XL»wh‹.] காட்சி - பதினைந்து இடம் : பிரகலாதன் தனியறை, தனியறையைச் சேர்ந்த இடங்கள். உறுப்பினர் : பிரகலாதன், லீலாவதி, இரணியன், சேனாதிபதி, ஆயுதபாணிகளாகிய ஆரியர், ஆணுடை பூண்ட சித்ரபானு, சிங்கத் தோல் போர்த்த காங்கேயன். பாட்டு (தன்யாசி - ஆதி) லீலாவதி: நாளும் சுமந்துபெற்ற காளையை வெட்டவோ நீர் வாளைச் சுமந்தீர் துரையே தாளைப் பிடித்தேன் நானே தமிழ் மக்களின் கோமானே கோளோ இதென்ன கொள்ளை குளறினான் சிறுபிள்ளை (நா) இரணியன்: உருவிய வாளுடன் கோபமாய் ஓடிவந்து பிரகலாதனை இடதுகையால் இழுத்து பெற்றவனைத் தின்னவந்த நரிக்குட்டியே! என்ன சொன்னாய்? (வாளை ஓங்குமுன் லீலாவதி ஓடிவந்து வாளைப் பிடித்துக் கொள்ளுகிறான். இரணியன் சிறிது யோசித்தல்) பாட்டு லீலாவதி: தந்தை மனது நைந்தே தவித்தார் கோபம் எழுந்தே மைந்தா என் குலக்கொழுந்தே உன் புத்தி தடுமாறிற்றோ (நீ) புனையும் முடிக் காபத்தோ? இந்த விதம் வருந்த (உனக்கு) எவரிட்ட மருந்தோ. (நா) லீலாவதி: பிராண நாதரே! தாங்கள் பெற்ற பிள்ளையல்லவா (பிரகலாதனிடம்) அப்பா எவரிட்ட மருந்தி னால் நீ சித்தங் கலங்குகிறாய்? பிரகலாதன்: மனிதரிட்ட மருந்தல்ல! ஸ்ரீமந் நாராயணனிட்ட மருந்துதான் அம்மா! (விருத்தம்) இரணியன்: ஆராயும் அறிவுமின்றி அன்பின்றி உண்மையின்றிச் சீரேதுமின்றி வந்த சிறுநாய்கள் ஆரியர்க்கே நேரான அடிமையேகேள், நீசதா உரைக்கும் அந்த நாராயணன் தான்எங்கே நான்காணக் காட்டுவாயே. இரணியன்: அட வஞ்சகனே! ஆரியப் பேடிகளின் அடிமையே! நீ சொல்லும் நாராயணன் எங்கேயிருக்கிறான் காட்டுவாயா? பிரகலாதன்: அவன் எங்குமிருப்பான். இதோ இருக்கும் தூணிலு மிருப்பான், துரும்பிலுமிருப்பான். இரணியன்: (கோபத்தால்) இந்தத் தூணிலுமா? (என்று தூணை உதைத்தல், உடனே சிங்கத்தோல் போர்த்திருந்த காங்கேயன் சிங்கத்தோல் போர்த்தபடியே தூணுக்குப் பின்புறமாக இருந்து இரணியனை நோக்கி) காங்கேயன்: அடா! நாராயணன் நாமமே! எமது பக்தனை ரக்ஷிக்கவும், உன்னை சிக்ஷிக்கவும் தூணிலிருந்து ப்ரஸன்ன மானோம். (இதற்குள் ஆயுதபாணிகளாக இருந்த ஆரியர் இரணியனுக்குப் பின்புறமாக நெருங்குதல்.) இரணியன்: (பின்புறமாக நெருங்கி வரும் ஆரியர்களையும் எதிரில் நாராயணன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் உருவத்தையும் கவனித்து கடகட வென்று இடி இடிப்பதுபோற் சிரித்து நாராயண உருவத்தை பார்த்து) அடே! நான் தூணை உதைத்தேன். நாராயணனாகிய நீ வந்தாய்! உன்னை உதைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளிவருமா என்று பார்க்கிறேன்! (என்று சொல்லி காங்கேயனை உதைத்தல். உடனே சிங்கத்தோல் கழன்று சிறிது தூரம் போய் விழுகிறது. காங்கேயன் பெருஞ் சத்தத்துடன் விழுந்திறத்தல். இதற்குள் பின்னாலிருந்த ஆரியர்கள் அனைவரும் ஓடிவந்து முதுகில் குத்திவிடுதல். இரணியன் முடிவுறுதல்) லீலாவதி : ஆ! (இரணியன் கையிலிருந்த வாளைத் தூக்கி தற்கொலை செய்து கொள்ளல்] சித்ரபானு : அண்ணா! (என்று காங்கேயன் மேல் விழுந்து அழ ஆரம்பித்தல்] ஆரியர் : நாராயண! நாராயண! நாராயண! (சேனாதிபதியைக் கொல்லப் பிரகலாதன் முனைகிறான்] சேனாதிபதி: (எதிர்த்து) உன் தந்தையைக் கொன்றதுமல்லாமல் என்னையும் கொன்று பட்டம் கட்டிக்கொள்ள நினைக்கிறாயா? (என்று பிரகலாதனைக் கொல்லுதல். அவன் மறைந்ததும் அவன் இடையில் இருக்கும் கடிதம் தெரிகிறது. அதை எடுத்துப் படிக்கிறான்) கடிதம் எனது ஆசைப் பிராண நாதரே! நான் தங்களை மணந்த நாளாக என்னை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சேனாதிபதி முயற்சி செய்வதோடு தங்களையும் ஒழித்து இந்த அரசாட்சியையும் கைப் பற்ற எண்ணியிருக்கிறார். இதே சமயத்தில் சேனாதி பதியையும் ஒழித்துவிடவேண்டும். தங்கள் நாயகி, சித்ரபானு. ஆஹா! என்ன ஆச்சரியம்! என்னையும் ஏய்த்தாளா! என்னைக் கொலை செய்யவும் சதி செய்தாளா? (சுற்றுப்புறமாகப் பார்க்கிறான். காங்கேயன் சமீபத்தில் யாரோ அண்ணா என்று அழுவதைக் கவனிக்கிறான். சித்ரபானுவின் ஒரு பக்கத்து மீசை விழுந்துவிட்டதால் சந்தேகித்து அவள் ஆணுடையைக் களைகிறான். கழுத்தில் தாலியுடன் சித்ரபானுவைக் கண்டதும்) பிரகலாதன் கட்டிய தாலியா இது? என்னைக் கொல்லும்படி ஏவிய கடிதமா இது? (சித்ரபானுவைக் குத்திக் கொல்லுதல். அச் சமயம் ஆரியர் பயந்து ஓட்டம் பிடித்தல். சேனாதிபதி கையிற் கட்டாரியுடன் அங்குள்ள அலங்கோலக் காட்சியைக் கண்டு நிதானித்து) என்ன காரியம் செய்தேன்? முதலில் நான் சித்ரபானு என்னும் இச் சண்டாளியின் அழகில் ஆசையுற்றேன். அவள் அழகானது வஞ்சக ஆரியர் சூழ்ச்சிக்கு வாசற்படி என்பதை நான் கருதாமற் போனேன். அதனால் அவள் வலையிற் சிக்குண்டேன். பிறகு அவள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டேன். அவள் என்னைத் தன் கையில் அடக்கிக் கொண்டாள். இந்த ராஜ்யத்தை எனக்குப் பட்டம் சூட்டுகிறேன் என்று சொன்னதினாலும், என்னைத் திருமணம் செய்து கொள்ளுகிறேன் என்று ஆசை காட்டியதாலும் அவள் கருத்தின்படி காரியம் செய்யவும் ஆரம்பித்தேன். இதற்கிடையில் என்னுடைய உதவி யிருப்பதைப் பிரகலாதனுக்கு தெரிவித்து அவனை மணஞ் செய்து அவனுடைய உதவியையும் சம்பாதித்தாள், இதெல்லாம் எதற்கு? தமிழர் ஆதிக்கத்திற்கே உலை வைப்பதற்கல்லவா? ஆரியச் சிறுக்கி யின் வஞ்சம் தெரிந்தும் நான் அவள் சொற்படி நடந்தேன். சக்ரவர்த்தி இறந்தார். பட்டமகிஷி இறந்தாள். அவர்களின் உடல் ரத்தச்சேற்றில் மிதக்கின்றனவே! இத்தனைக்கும் நான் காரணனானேனே! என்ன காரியம் செய்தேன்? அந்தோ என்ன காரியம் செய்தே!. (அதிசோகம்) (குத்தப்பட்டுக் கிடக்கும் இரணியனைப் பார்த்து) அந்தோ பெருமானே! பெருமக்களின் கோனே! நானே உன் வீழ்ச்சிக்குக் காரணன் ஆனேனே. இந்நாட்டின் பழந்தமிழர் ஆதிக்கத்தின் காவலனே!. ஆரியர் சூழ்ச்சியை விலக்கும் நாவலனே! வையகம் நிலை குலைந்தாலும் மனோ நிலை குலையாத மறத்தமிழ் வீரா! உதாரா! பார்வாய்ந்த மன்னர் தொழும் பேர் வாய்ந்த மலைப் புயனே! என் குலப்பயனே! உன்னுயிர் முடிந்துவிட்டதா? அந்தோ! சாயா இமயமலை போன்ற உன் உடல் சாய்ந்ததா? தமிழர் சலுகை தீர்ந்ததா? ஆரியர் நடுங்க விழிக்கும் விழிமூடிற்றா? அண்ணலே! எங்கள் பழம் பெருமை ஓடிற்றா? உலகமெல்லாம் கட்டியாண்ட உன் பெருவாழ்வு பொடி பட்டதா? அந்தோ! தமிழர் கோட்டை பிடிபட்டதா? நேரிய முறையில் எதிர்ப்பதெனும் தமிழத் தன்மையை பெரிதாக நினைத்தாய்! உன் ஆவியைச் சிறிதென மதித்தாய்! அப்பனே! உனது தமிழ்த் தன்மைக்கு உன் ஆவியைச் சமர்ப்பணம் செய்தாய்! மறைந்திருந்து திடீரென்று சூழ்ந்த ஆரியரை நீ நகைத்தாய்! வஞ்சகர் ஆயுதந் தாங்கி உன் முதுகின் புறத்திற் சூழ்ந்து கொண்ட போதும் உன் உயிரை மதியாமல், சிங்கத் தோல் போர்த்த பேடியை நோக்கி தூணை உதைத்தேன் நாராயணன் வந்தான்; நாராயணனை உதைத்தால் தூண் வெளிப்படுமா? என்று கூறி நகைத்து - நகைச்சுவைக்கு இலக்கியம் சேர்த்தாய்! ஆரியர் பொய்யை, கடவுள் பூச்சாண்டியை உடைத் தெறியும் பணியை உன் உயிர் போகும் நேரத்திலும் மேற்கொண்டாய்! அண்ணலே! மறந்தாயா! இனி உன் வீரப் பெரும் பேச்சை எங்குக் கேட்பேன்? வீரப்பார்வை யாரிடம் உண்டு? தமிழ் வளர்த்த தமிழா! தமிழறிந்த தமிழா! தமிழரைக் காத்த தமிழா! தமிழ் மக்கட்கு இடையூறு நேர்ந்தால் இனி யாரிடம் முறையிடுவது? அந்தோ! பேடித் தனம் நிறைந்த ஆரியர் உன்னைப் பின்னிருந்து குத்தியதை இந்தப் பாவி பார்த்தும் சும்மாவிருந்தேனே! இந்தப் பாழும் தோள்கள் சும்மா இருந்தனவே! இதன் பொருட்டு நான் எனக்கு இடும் தண்டனை என்ன? இந் நாட்டிற்கு நான் அரசனாக அமைவது தானா? அந்தோ! சக்ரவர்த்தியைக் கொன்றதுமல்லாமல் அவன் ராஜ்ஜியத்தையும் ஒப்புக்கொண்டான் என்ற பழியை நான் ஏற்றுக் கொள்ளலாமா? ஏ தமிழ்ப் மெருமக்களே! எனக்குத் தண்டனை இடுங்கள்! ஆரியரை நம்பாதீர்கள்! உங்கள் அறிவை, உங்கள் ஆண்மையை ஆரியரின் சூழ்ச்சியில் எள்ளத்தனையும் ஈடுபடுத்தாதீர்கள்! ஆரியர்களை அகற்றுங்கள். தமிழர் நாட்டைத் தமிழர் நாடாக்குங்கள்! உங்கள் சக்ரவர்த்தி உங்களுக்காக மாண்டான். ஆரியர் அக்ரமத்தி லிருந்து உங்களை மீட்கவே மாண்டான். அவன் மாண்டதற்கு ஆரியர் சொல்லும் வேதம், மந்திரம், கடவுள் அவதாரம் - காரணமே அல்ல, இவையனைத்தும் அயோக்கியர்களின் பொய்யுரைகள். அந்தோ! வீரத் தமிழன் மாண்டதற்குக் காரணத்தை - அவன் சரித்திரத்தை உண்மையாக எழுதவும் கவிஞர்கள் அஞ்சுவாரோ? இன்று வீரக்கனல் உகுத்த சக்ரவர்த்தியின் ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் இன்றைக்கில்லாவிடினும் ஒரு காலத்தில் வீரத்தமிழரை, சுய மரியாதையுடைய தமிழரை உண்டாக்கும் என்ற உறுதியோடு, இதோ, நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்! பிற்காலத் தமிழர்களிடம் நாட்டை ஒப்படைத்து நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். (கையிலிருந்த கட்டாரியால் குத்திக் கொண்டு இறத்தல்)  நல்லதீர்ப்பு இவர்கள் யார்? வயவரின் மன்னன்... பிறைநாட்டின் அரசன் கன்னல்... ... ... ... அரசி முல்லை... மகள் இளவரசிமாழ... படைத்தலைவன் கண்ணி... அவன் மனைவி கிள்ளை ... அவர்கள் மகள் வல்லுளி... அமைச்சன் வேலி ... அமைச்சன் சாலி... அவர்கள் மகள் கடம்பன் ... பீலி நாட்டரசன் ஆம்பல் ...... ... ... அரசி நிலவு... அவர்கள் மகள் நல்ல தீர்ப்பு பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரச னாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந் தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும், மனைவி கண்ணியும், மகள் கிள்ளையும் வந்திருந் தனர். நாட்டின் அமைச்சு வல்லுளியும், மனைவி வேலியும் மகள் சாலியும் வந்திருந்தனர். மற்றும் கல்விச் செல்வரும் பொருட் செல்வரும் உறவோடு வந்திருந்தனர். மற்றும் பிறை நாட்டின்மேற்கில்உள்ளதும்பிறைநாட்டின்சிற்றரசாய்அமைந்ததும்ஆகியபீலிநாட்டின் மன்னன்கடம்பனும்,அரசிஆம்பலும், இளவரசிநிலவும்வந்திருந்தனர்.குளிர்மலர்ச் சோலையில், அவர்கள் இனிதாக நாள் கழித்தார்கள், ஒவ்வொருநளும்விழநhள். இன்று மகளிர் நாள். சிற்றரசன் மகள் நிலவு அரங்கேறுகின்றாள். மற்றப் பெண்டிர்கள் காட்சி காணும் அவாவோடு சூழ வீற்றிருக்கின்றனர். ஆடலாசிரியன் பாடு கின்றான்: இசைக் கருவிகள் வாய்திறக்கின்றன. நிலவு ஆடுகின்றாள் களை யெடுத்தார் பல பெண்கள்! - கீழ்க் கவிந்தனவே அவர் கண்கள்! வளை குலுங்கும் கைகள்! வளைந்திடும் மெய்கள் விளைவைக் கொடுக்கும் அல்லி, குவளை, செந்தாமரைக் களை யெடுத்தார் பல பெண்கள்! மண்டும் களைகள் தமை நண்டு நிகர் விரல்கள் கொண்டு களைவதொரு காட்சி! கெண்டை உலவு கையில் பெண்டிர் விழிகள் தமைக் கண்டு நாணும், என்ன வீழ்ச்சி! தொண்டை இனிய கற் கண்டோ? மலரில் வரும் வண்டோ? என இசைக்கும் தண்டமிழ் இசை பாடிக் களை யெடுத்தார் பல பெண்கள்! கூந்தல் அவிழ்ந்து விடும் வாய்ந்த அருவிபோல்! ஏந்தி முடிக்கும் அவர் அங்கை! சோர்ந்தே விழுந்து விடும் மேலுடை, நூலுடையில் தூக்கிச் செருகும் அவர் செங்கை! ஆர்ந்த மயிலினங்கள் ஆடுகையில் தாள் பெயர்ந்து! தீர்ந்த இடத்தை விட்டுத் தீராத நன்செய் இடைக் களை யெடுத்தார் பல பெண்கள்! அரசி கன்னல்: ஆ! நான் எங்கே இருக்கின்றேன்? மகிழ்ச்சியன்றி மற்றொன்றும் இல்லாத இன்ப உலகிலா! முல்லை: என் நினைவு என்னிடம் இல்லையம்மா! இளவரசி நிலவு ஒருத்தி! அவள் ஆடத் துவக்கியவுடன் அவளிடம் களை எடுக்கும் பெண்கள் பலரைக் கண்டேன் அம்மா! படைத்தலைவன் மகள் கிள்ளை, தங்கச் சிலை போல் இன்னும் செயலற்றுக் கிடக்கின்றாள். அமைச்சன் மகள் சாலி, நெஞ்சில் இன்பம் தாங்காமல் அழுகின்றாள். அவள் கண்கள் மகிழ்ச்சியை நீராக்கி வடிக்கின்றன. பேரரசி கன்னல் அரங்கின் மேல் ஏறுகிறாள். நிலவின் கலைத் திறம் பற்றிப் பாராட்டிப் பேசலுற்றாள் நிலவே, உன் கலைவாழ்வு பல்லாண்டு நிலவுக! நிலவே, உன் வாழ்நாள் காவிரிபோல் பெருகுக! துன்ப உலகினின்றும் இன்ப உலகிற்கு எமை அழைத்துச் சென்றாய், தாழ்ந்த செயல்களை, தாழ்ந்த நினைவுகளை இமைப் போதும் நீங்காத எம்மை அமைதியில் குளிக்க வைத்தது உன் ஆடல்! நிலவே! இத்தனை பெரிது; இத்தனை சிறந்தது; இத்தனை இன்பம் பயப்பது; ஆட்டக்கலை என்பதை இன்று அறிந்தோம். ஆடல், பாடல், அழகு எனும் மூன்றின் ஒன்றும் குறையாத முழுநிலவே, நான் இன்று உனக்குத் தரும் பரிசு ஒன்று. உன் தந்தை எம் அரசர்க்கு நடக்கவும் தெரியாத இள யானைக் கன்று ஒன்றைத் தந்தார். அந்த ஆண் யானைக் கன்றானது எம்மிடம் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து பின், இறந்தது, அதன் தந்தமானது முத்துப்போல் ஒளியுள்ளதாக வும், வயிரம் போல் உறுதியுள்ளதாகவும் இருந்ததால் அதைப் பொற் கொல்லரிடம் தந்தோம். அவன் அந்தத் தந்தத்தில், அறுத்து, வயிரம் பதித்துத் தந்தது இந்தப் பதக்கம். அதை உனக்குத் தந்தேன். (பேரரசி. நிலவுக்குப் பதக்க மார்பணி சூட்டுகிறாள். அனைவரும் கை தட்டுகிறார்கள்) நிலவு கூறுகிறாள்: பேரரசியாருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். நான் பிறந்த அன்று, அந்த யானைக் கன்று பிறந்தது. ஆறு தினங்கள் சென்றபின் என் தந்தை அதைப் பேரரசர்க்கு அளித்தார் என்று என் தாயார் சொன்னார்கள். அதன் தந்தத்தால் எனக்கு இந்த வயிரப் பதக்கத்தைத் தந்ததால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் கருதுங்கள்! (அனைவருக்கும் வியப்பு) படைத்தலைவன் மகள் கிள்ளை கேட்டாள்: அப்படியானால், அம்மையாரே தங்கள் வயது என்ன? உடனே அமைச்சன் மகள் சாலி கேட்டாள்: யானைக் கன்று வளர்ந்து இறந்து, பல்லாண்டுகள் போயின. தந்தத்தால் அணி செய்து பல்லாண்டுகள் கழிந்தன! கூடவே பேரரசியார் கூறினாள்: ஏறக்குறைய உனக்கு ஐம்பது ஆண்டுகள் ஆயினவா? என்ன புதுமை? நிலவு கூறினாள்: எனக்கு ஐம்பது ஆண்டுகள் ஆயின. என் தந்தை எழுபது வயதுடையவர். அன்னைக்கு அறுபத்தெட்டு. பேரரசி: உலகைத் தன் வலிய கையொடு கொண்டு போகும் ஆயுள் நாள், நிலவே உன்னை மறந்து, விட்டுப் போனதா? கரையற்ற கால வெள்ளத்துக்குத் தப்பி நிலவே நீ எந்தக் கரையில் நின்றிருந்தாய்? உதிர்கின்ற நாளின் சருகு போன்ற இளமை, உனக்கு மட்டும் ஆலின் விழுது போல் ஊன்றி நின்றதென்ன? உடல் நூல் வல்ல மருத்துவனும், உயிர்ப்பினைக் கட்டுப் படுத்தும் அறிஞனும் நாளோடு தவறாது காணும் முதுமையை நீ சந்தித்ததில்லை எனில் புதுமை அன்றோ! நிலவு கூறினாள்: ஆடல் பயில்வாரின் உடல் வாடல் இல்லை. புதுமை மாறாத ஆடற்கலைஞருக்கு முதுமை நேருமோ பேரரசியாரே? (அனைவர் கண்ணிலும் வியப்பு) பேரரசியார் பேசுகின்றார்: நிலவே! நீடுவாழ்க. புதியதோர் எண்ணம்! நினைக்கும் தோறும் வியப்பைச் செய்யும் ஓர் ஒப்பற்ற நிலை நீ தந்தாய் நீ வாழ்க! ஆடல் அரங்கு முடிவு பெற்றது. அனைவரும் உணவு கொள்ளச் செல்வோமாக. (அனைவரும் செல்கிறார்கள். படைத் தலைவன் மகளாகிய கிள்ளை மட்டும் பறக்கவில்லை) காட்சி - 2 (அரங்கில் ஒரு புறம். நிலவு காற்சதங்கையை அவிழ்க்கக் குனிகிறாள். அதற்குள் வேறோர் மலர் போன்ற கை சதங்கையை அவிழ்த்து உதவி செய்கிறது) நிலவு : என் செல்வமே! நீ யார்! கிள்ளை : அன்னையே! படைத்தலைவர் மகள்; கிள்ளை நிலவு : உன் பிரிவு உன் அன்னை தந்தையார்க்குத் துன்பத்தைச் செய்யுமே? கிள்ளை : ஆடல் பயிலவிரும்புகிறேன். அந்த விருப்பம் என் உடலின் ஒவ்வோர் அணுவிலும் கிளர்ச்சி செய்கிறது. என் அவா பருவக்காற்றுப் போல் எழுந்து பின் மாறுவ தன்று; யானை கட்ட ஒன்றிய தறிபோல் உறுதி கொண்டது. பசி கொண்டு கேட்பவனுக்கு ஓர் அகப்பைக் கஞ்சி மறுப்பாரோ, என் வேண்டுகோளைத் தாங்கள் மறுப்பீரோ! ஆடல்; தங்களிடம் உள்ள கடல் போன்ற ஆடற்கலை. கொஞ்சம் இறங்குவீர்களா? நிலவு : தசை சரியாத கொடி போன்ற மேனி, உடுக்கை போன்ற இடை, காதளவு நீண்ட கண்ணில் உயிர்! இதழின் கடையில் இயற்கையில் சிந்தும் சிறு நகை. அத்தனையும் உனக்கு அமைப்படி கிள்ளையே! ஆடல் உனக்கு வரும், ஆடலுக்கு நீ வந்தவள். பீலி நாட்டில் தடாரி வட்டம் என்னும் வட்டத்தில் வாழ்கின்றேன். அங்கு நீ நான் வருதல் வேண்டும். ஏற்பாடு செய். நான் செல்லுமுன் கூறு. கிள்ளை: என் அன்னை தந்தையரிடம், கெஞ்சி, அவர்கள் தரும் விடையை அறிவிக்கின்றேன். அம்மணி நிலவு : போய் வா (கிள்ளை பணிந்து, பறந்தாள்) நிலவு குளிர் மலர்ச் சோலையில் தனக்காக அமைந்த விடுதி நோக்கிப் போகிறாள். சாலி என்னும் அமைச்சன் மகள் எதிர் நோக்கி வந்து பணிகிறாள். நிலவு : நீ யார்? சாலி : நான் சாலி, நிலவு : தந்தை? சாலி : இந்நாட்டின் அமைச்சர் வல்லுளியார் நிலவு : என்ன செய்தி? சாலி : எனக்கு நீங்கள் ஆடல் பயிற்சி அளிக்க வேண்டும். நிலவு : நான் பீலி நாட்டின் தடாரி வட்டம் என்னும் இடத்தில் வாழ்கின்றேன். அங்கு நீ வர ஏற்பாடு செய்து கொள். சாலி : நன்று! போய் வருகின்றேன். காட்சி -3 (பெருமன்னன் மகள் முல்லையும், சாலியும், கிள்ளையும் குவளைப் பூக் குலுங்கும் நிழலில் அமைந்த திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண் டிருந்தார்கள்.) கிள்ளை : ஆற்றூர் காரி மன்னனுக்கும், நம் நாட்டுப் பேரரசர்க்கும் மனத்தாங்கல் இருந்தால், பீலி நாட்டில் நான் ஏன் ஆடல் கற்றுக் கொள்ளக்கூடாது? சாலி : நீ அதை அவர்களையே கேட்பது தானே. கிள்ளை : கேட்டேனே சாலி. சாலி : என்ன சொன்னார்கள்? கிள்ளை : அவர்களா? நீளமாகச் சொன்னார்கள், என்ன சொன்னார்கள், தெரியுமா? அதற்கு மேல் கேட்காதே அரசியல் செய்தி முல்லை : கிள்ளை! அதோடு நிறுத்திவிடு இவ்வளவு கூட நீ வெளிப்படையாய்ப் பேசியிருக்கக் கூடாது. கிள்ளை : ஏன் சாலி நீ கேட்டாயா உன் பெற்றோரை? சாலி : கேட்டேன். கிள்ளை : கேட்டாயா? என்ன சொன்னார்கள்? சாலி : உனக்கு சொல்லியதுபோலில்லை. கிள்ளை : அப்படியா. என்ன? சாலி : போகக் கூடாது கிள்ளை : ஏன் என்று கேட்டாயா? சாலி : விட்டுவிடுவேனா? கிள்ளை : உம் சாலி : ஏன் என்றேன். அதற்கு அவர் ... கேட்காதே! [midtU« áÇ¥ò] முல்லை : உங்கள் ஆவல் நிறைவேறாததற்கு நான் வருந்துகிறேன். கிள்ளை : இளவரசியே, என்கண்ணே, என்னை என் பெற்றோர் போ என்று சொன்னாலும் நான் உடனே போயிருக்க மாட்டேன். ஏன் தெரியுமா? முல்லை : இதென்ன புதுமை? சாலி : ஏன்? கிள்ளை : கொஞ்ச நாளைக்கு மிக்க வேலையிருக்கிறது. முல்லை : உனக்கா? சாலி : என்ன கூடை முறம் கட்ட வேண்டுமா? கிள்ளை : நன்றாகக் கேட்டாய். நீ சொன்னது பாதி சரி முல்லை : கூடை முறம் ஒரு பாதி கட்ட வேண்டும்; மறுபாதி? இவைகளில் எது சரி? கிள்ளை : கட்ட வேண்டும் சாலி : என்ன கட்ட வேண்டும்? முல்லை : விரைவில் சொல்லிவிடு? கிள்ளை : மாலை கட்ட வேண்டும். இளவரசிக்கு. முல்லை : விளங்கவில்லை. சாலி : இளவரசிக்குத் திருமணமா? கிள்ளை : உனக்கும் நினைவு இல்லை. முல்லை பிறந்த நாள் அடுத்த வெள்ளிக்கு. முல்லை : ஆ! சாலி : உனக்கு மட்டும் எப்படி நினைவு வந்தது? கிள்ளை : முல்லை எப்போதும் என் நினைவில் நிலையாக இருக்கிறாள். முல்லை : கிள்ளை நீ என் மீது வைத்துள்ள அன்பு பயனற்றது. கிள்ளை : அது உனக்குத் தெரியாதோ, அன்பு பயனை எதிர் பார்த்த தில்லை. பயனை எதிர்பார்த்தது எது தெரியுமா? வாணிகம். முல்லை : வாயாடி! போவோம். சாலி : கிள்ளையோடு பேசுவதில் தெவிட்டு ஏற்படுவதில்லை. (அனைவரும் எழுந்திருக்கிறார்கள்)  அங்கம் - 2 காட்சி -1 (பிறை நாட்டின் அரண்மனையில் ஒரு பகுதி. இளவரசி முல்லை மணித் தவிசில் வீற்றிருக்கிறாள். தோழிமார் பலர் புடை சூழ்ந்திருக்கிறார்கள். முல்லையின் தந்தையும், பேரரசனுமாகிய வயவரி மன்னனும் பேரரசி கன்னலும் வருகிறார்கள். மங்கல முரசு அதிர்கின்றது.) பேரரசர் : வாழிய குழந்தாய். தமிழ் நன்று. அது தமிழர்க்கு உறுதி பயப்பது. அதை இன்னும் நீ பயில்க! தமிழறிவு பெறுக. பிறைநாட்டின் எதிர்கால அரசி நீ. அறம் இது, மறம் இது என்று ஆய்ந்துணர்க. வாழிய நீடு வாழிய! பேரரசி : அன்புக்கொரு மகளே, முல்லையே மணம் எய்துக உனது பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிற்று. நீ வாழிய! முல்லை : உங்கள் வாழ்த்து நன்று. என்பால் தங்கட்குள்ள அன்புக்கு நன்றி! தந்தையார் வாழ்க, அன்னையார் வாழ்க. தமிழ் வாழ்க. (முல்லை பணிகின்றாள்) (பேரரசும் பேரரசியாரும் போகின்றார்கள்) நிலவு, சாலி, தாழை, பொன்னி, தோரை முதலிய பெண்கள், தத்தம் இயல்புக்கேற்ற கையுறையுடன் வருகிறார்கள். தோரை - தான் கொணர்ந்த தங்கப்பானை யடுக்கிய வெள்ளி யுறியை முல்லைக்குத் தந்து - வாழிய இளவரசியே என்று வாழ்த்துகிறாள். பொன்னி - தான் கொணர்ந்த, ஒன்பது வகை மணிகள் அழுத்திய தலை யணியாகிய சுட்டியை முல்லைக்குத் தந்து - வாழிய இளவரசியே! என்று வாழ்த்தி ஒருபுறம் அமைகிறாள். தாழை - தான் கொணர்ந்த முத்துப் பரல் இட்ட காற்சிலம்பை முல்லைக்குத் தந்து, வாழிய இளவரசியே என்று வாழ்த்தி மற்றொரு புறம் அமைகிறாள். சாலி - தான் கொணர்ந்த எண் கோவையுள்ள இடையணி யாகிய காஞ்சியை முல்லைக்குத் தந்து வாழிய இளவரசியே என்று வாழ்த்தி ஒருபுறம் அமைகிறாள். கிள்ளை - தான் கொணர்ந்த, முல்லையில் தொடுத்த தான முல்லைத் தொடையலை முல்லைக்குச் சூடி, வாழிய இளவரசியே என்று வாழ்த்த, இளவரசியாகிய முல்லை, அவளைக் கட்டித்தழுவித் தன் அண்டையில் நிறுத்தித் தானும் எழுந்து நின்று கூறுகிறாள். அன்புள்ள தோழியர்களே, என் பிறந்தநாட் சிறப்பை சிறக்க வைத்தீர்கள். உங்கள் வாழ்த்து என்னைப் பெருவாழ்வில் சேர்க்கத்தக்கது. நன்றி கூறுகிறேன். (மீண்டும் மங்கல முரசு முழங்குகிறது. நிலவு வருமுன் மற்றவர்கள் போய் விடுகிறார்கள்) காட்சி - 2 சாலி, தாழை, பொன்னி, தோரை நால்வரும் முல்லைக்கு வாழ்த்துக் கூறி வருகையில் தமக்குள் பேசிக் கொள்ளுகின்றார்கள். தோரை : பேரரசு, பேரரசி இருவருக்கும் அன்புக்கு ஒருத்தி முல்லை இளவரசி; நாளைய பட்டத்தரசி அவள் இனிது வாழ்க. பொன்னி : பிறை நாட்டின் தனியரசி முல்லை, அவளின் அடக்கம், அன்பு, நன்றியறிதல் ஆகிய நற்பண்புகள் அவளுக்குள்ள மேன்மையை ஆயிரம் பங்கு அதிகப்படுத்து கின்றன. சாலி : ஏன் தாழை நீ என்ன சொல்லுகின்றாய்? தாழை : நம்மிடத்தில் அவள் அன்புடையவள். அவள் ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்கள் மேல் அவள் அன்புடைய வளாயிருத்தல் வேண்டும். இருப்பாள். நல்லவள். சாலி : கிள்ளை நம்முடன் வரவில்லை. முல்லைக்குக் கிள்ளை மேல் மிக்க அன்பு. உயர்ந்த அணிகள், பொருள்கள் நாம் தந்தோம். கிள்ளை காசு பெறாத அலங்கல் கழுத்தில் இட்டாள். அதற்காக முல்லை இளவரசி கிள்ளையைத் தழுவிக் கொண்டாள். கண்டீர்களா! கிள்ளை எப்படி எவரிடம் வளைந்து கொடுக்க வேண்டும் என்பதை நன்றாய் அறிந்தவள். முல்லையும் பசப்புக்கு மகிழ்பவள் கிள்ளையின் வஞ்சகம் முல்லைக்குத் தெரியாது. தெரிந்து கொள்வாள். தோரை : மெய்தான்! நம்மிடம் ஒரு மாதிரி; அவளிடம் வேறு மாதிரிதான் நடந்து கொண்டாள் முல்லை! பொன்னி : கிள்ளை கொண்டுவந்தது எளிய பொருள். அதற்காக முல்லை வருந்தவில்லை என்பதைக் காட்ட அவளிடம் கொஞ்சம் அதிக அன்பைக் காட்டினாள் வெளிக்கு. அது தவிர முல்லைக்கு நம்மேல் உள்ள அன்பு குறைவு என்று நாம் எண்ணலாமா? சாலி : சரி உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். போகலாம் அவிரைவாய்! kiwjš] அங்கம் - 3 காட்சி - 1 அரண்மனையின் ஒரு புறத்தில், முல்லை, கிள்ளை, சாலி மூவரும் பேசியிருக்கிறார்கள். கிள்ளை : இளவரசி! ஏதாவது படிக்கலாமே. சாலி : வேண்டாம் ஏதாவது விளையாடினால் நன்றாய் இருக்கும். முல்லை : படிக்கலாம் கிள்ளை! நீ போய், அம்மா நீராடும் அறைக்கு இந்தப் புறத்தில் ஊஞ்சலின் மேல் கவிதை நூல் இருக்கிறது. எடுத்து வா. அவள் சென்று எடுத்து வந்து, தானே அதைத் திறந்து பார்க்கிறாள் கிள்ளை : இதைக்கேள்! சாலி, கவனமாய்க் கேள் நீயும். பச்சை பசுந்தழைக் காட்டினிலே ஒரு பக்கத்தில் பூத்திட்ட முல்லையைப் பார் அச்சடையாளம் நல் வான்குளத்தில் மின்னும் ஆயிரம் மீனெனத் தோன்றுமடி! அச்சில் அடித்திட்ட வெள்ளிப் பணம் கையில் அள்ளி இறைத்தது போல் இருக்கும்! இச்சை நறுமணத் தால்அழைக்கும் - முல்லை ஏன் என்று பார்க்கையிலே சிரிக்கும்! (முல்லை சிரித்தாள்) கிள்ளை : முல்லை, ஏன் என்று பார்க்கையிலே சிரிக்கும்! சாலி : முல்லைக்கு முல்லைப் பொட்டு! கிளியின் கூச்சல் கேட்கிறது முல்லை : சாலி ஓடு கிளி கதறுகிறது! அவள் ஓடிக் கூட்டொடு தூக்கி வருகிறாள். முல்லை அதைக் கையில் ஏந்திக் கொள்கிறாள் கூட்டினின்று எடுத்து முல்லை : பத்துப் பணத்திற்கு வாங்கினேன். அப்போது இத்தனை அளவு சிறிது குழந்தை. இப்போது கத்தும் குரலுக்கு வையமும் போதாது. கையிலே வைத்திருந்தால் தான் சாது! தோழி வள்ளி வருகிறாள் வள்ளி : அன்னையார் அழைத்தார்கள். முல்லை : எனக்கு விடைகொடுங்கள். கிள்ளை : சரி. கிள்ளையும் சாலியும் வீடு செல்கிறார்கள்) காட்சி - 2 (பேரரசி கன்னல் தன் படுக்கையறைப் பக்கம் உலவுகின்றாள், அவள் விழிகள், அங்கு பல பக்கங் களையும் கூர்ந்து பார்க்கின்றன. அவள் எதையோ தேடுகிறாள்) முல்லை வருகிறாள் முல்லை : ஏன் அம்மா அழைத்தீர்கள்? கன்னல் : நீ உணவு உண்ணாமல் இருப்பது உனக்கே தெரிய வில்லையா! நேரம் ஆகிறது. முல்லை : நீங்கள் என்ன தேடுகிறீர்கள். கவிதைச் சுவடியா? கன்னல் : இல்லை. முல்லை : பின்னென்னம்மா. கன்னல் : அந்தக் கணையாழி! முல்லை : எந்தக் கணையாழி? கன்னல் : மாணிக்கக் கணையாழி. முல்லை : திடுக்கிடும் சேதி, உங்கள் உயிர் ஆயிற்றே? எங்கு விழுந்திருக்கும்! கன்னல் : கூச்சலிடாதே, அது தவறியது உன் தந்தையார் அறிந்தால் வருந்துவார். அது மணநாளில் என் விரலில் அவர் இட்டது. இங்குத்தான் இருக்கும். நீ செல் உணவுண்ண! முல்லை : நானும் தேடுகிறேன் அம்மா! கன்னல் : உணவருந்திய பின் தேடு. முல்லை : இதோ வந்துவிட்டேன். ngh»whŸ] கன்னல் : அதற்காக நீ செவ்வையாக உணவுண்ணாமல் ஓடி வந்துவிடாதே. அங்கம் - 4 காட்சி - 1 ஓய்வு கொள்ளும் அழகிய தனி அறையில் மணித்தவிசில் அரசர் வீற்றிருக்கிறார் உணவுண்ட பின், இரு தோழியர் மயில் விசிறி கொண்டு விசிறு கிறார்கள். அவர் யாரையோ எதிர்பார்க்கிறார் வழக்கப்படி. வள்ளி வெற்றிலைச் சுருள் தட்டேந்தி அங்கு வருகிறாள். அரசர் கண்ணில் வியப்பு. அரசர் : அரசியார் எங்கே வள்ளி? உடல் நலம் குறைவா? வள்ளி : கணையாழி காணவில்லை. பணிப்பெண்கள் தேடுகிறார் கள். அரசியார் தேடுகிறார் தங்களிடம் மன்னிப்பு வேண்டினார்கள். அரசர் : எந்தக் கணையாழி? வள்ளி : மாணிக்கக் கணையாழி. அரசர் : எனவே அரசியார் துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். திருமணத்தில் நான் இட்ட கணையாழி! அரசியாரை மெதுவாக என்னிடம் அழைத்து வந்துவிடு. நான் தேறுதல் கூறுகிறேன். பணிப்பெண்கள் தேடட்டும் போ. mtŸ ngh»whŸ] muá வருகிறாள். வள்ளியும் tU»whŸ] அரசி : உங்களிடம் வைத்த அன்பு குறைந்து விடவில்லை. என் விழியை என் நினைவை, தங்கள் கணையாழி ஏமாற்றி விட்டது. அரசர் : கன்னல்! அதைப்பற்றி நீ வருந்தாதிருந்தால் போதும். முப்பது ஆண்டுகள் இன்பத்தை நல்கிக் கழிந்தன. வாழ் நாட்களில், ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின் திருமண கணையாழி காணாமற் போனால், அதனால் குற்ற மில்லை. நீ மறந்திரு. இம்மியளவு துன்பத்தையும் உன் நெஞ்சு தாங்காது. அரசி : யார் எடுத்திருப்பார்? குற்றவாளியை விட்டு வைத்தால் இன்னும் இதுபோல நடக்குமே! அரசர் : அரண்மனை ஆட்களையும், பணிப் பெண்களையும், காவலர்களையும், உடற்காப்பாளர்களையும், மற்றும் இங்கு வருவோர் போவோரையும் கேட்டு ஆராய்வோம். அரசி : கோள்நிலை வல்லவர் கூறமாட்டாரா? அரசர் : கோள்நிலை வல்லவர் கூறுவதைக் கொண்டு குற்றத்தை உறுதி செய்வதை முட்டாள்தனமென்று அறநூல் கூறுகிறது. உணர்வும் ஒத்துக்கொள்ளாது. Kšiy tU»whŸ] முல்லை : அப்பா! அரசர் : ஓடிவா குழந்தாய். mU»š tU»whŸ] முல்லை : அகப்பட்டதா அம்மா? அரசி : இல்லை முல்லை! அரசர் : உன்னிடம் வந்து பேசிப் போகும் பெண்களில் யார் மேலாவது ஐயப்பட இடமுண்டா குழந்தாய்! முல்லை : இல்லை அப்பா! கிள்ளை, சாலி, தாழை, பொன்னி, தோரை, உண்மையின் அடையாளங்கள், இனி இங்கு வரவேண்டாம் என்று அவர்களைச் சொல்ல நினைக்கிறீர்களா அப்பா. அரசர் : வாழி வாழி நான் அப்படிச் சொல்லவே மாட்டேன். rhÈ tU»‹whŸ] சாலி : இளவரசியார் இருக்கிறாரா? முல்லை : அப்பா, சாலி இங்கு வரலாமா? அரசர் : ஓ, நன்றாக! முல்லை : சாலி உள்ளே வா! tU»whŸ, முல்லை கை காட்டுகிறாள். சாலி உட்கார்ந்தாள் g¡f¤âš] சாலி : பேரரசர், பேரரசியார் ஏதோ தனியாகப் பேசுகையில் நான் வந்தது இடையூறோ என்னவோ, மன்னிக்க வேண்டுகிறேன். அரசி : அப்படி ஒன்றுமில்லை என் மாணிக்கக் கணையாழி மறைந்து விட்டது. அதுபற்றிய ஆராய்ச்சி. அரண்மனை ஆட்கள் எடுத்திருப்பார்கள். அல்லது பணிப்பெண்கள். இல்லை என்றால் அகப்பட்டு விடவும் கூடும். சாலி : இல்லையம்மா, கிள்ளை எடுத்தாள்! முல்லை : கிள்ளையா? கன்னல் : அப்படியா! அரசர் : நீ எப்போது பார்த்தாய்? முல்லை : நீ கண்ணால் பார்த்தாயா? சாலி : இளவரசியே! நானும் கிள்ளையும் உன்னை விட்டுப் பிரிந்து போகையில், கிள்ளையின் இடையினின்று சிறு பொருள் ஒன்று விழுந்தது. கிள்ளை நானறியாதபடி அதை எடுத்தாள். குவிந்த விரல்களின் புறத்தில், சிவந்த ஒளி அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை என்று கூறி சாப்பிட்டபின் அரண் மனைக்குப் போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள். அதை அவள் இடையில் செருகினாள். அது, துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி அளித்தது. அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான் கிள்ளையை அற மன்றுக்கு அழைக்க வேண்டும். அவள் என் படைத் தலைவர் மகள், உனது அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன் அனைவரும் நிகர். முல்லை : அவள் நல்லவள் அப்பா. அரசர் : அறமன்றம் அவளை நல்லவள் என்று உறுதி செய்யட்டுமே! சாலி : அரசே, அவள் தீயவள். அரசி : அவள் தீயவளானால், அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும். அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில், சேர்க்கை யுடையவர் அனைவரையும் மன்று நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன். சாலி : வணக்கம். (போகிறாள்) கன்னல் : கிள்ளை நல்லவள் நான் எண்ணினேன். முல்லை : இப்போதும் அவள் நல்லவள்தான் அம்மா. (அரசர் போகிறார். முல்லை தலைகுனிந்தபடி வருத்தத்தோடு தன் அறை நோக்கிச் செல்லுகிறாள்) அங்கம் 5 காட்சி - 1 (வீட்டில் படைத்தலைவன் மாழையும், கண்ணி என்னும் அவன் மனைவியும் தாங்கொணாத் துன்பத் தோடு தலை சாய்த்து நாற்காலியில் துவள்கின் றார்கள். எதிரில் கண்ணீர் ததும்பக் கிள்ளை நிற்கிறாள்) மாழை : நீ எடுக்கவில்லையானால், சாலி ஏன் அப்படிச் சொல்லு கிறாள்? கிள்ளை : என்னை ஏன் அவள் இத்தனை பெரிய குற்றத்திற்கு உட்படுத்துகிறாள் என்பது எனக்கே விளங்கவில்லை. அவள் முழுதும் பொய் சொல்லுகிறாள். அன்னை தந்தைக்கும் தெரிவிக்காமல் அந்த மாணிக்கக் கணை யாழியை நான் எப்படி அணிந்து கொள்ள முடியும்? அப்பா, இத்தனை பெரிய குற்றம் நான் இழைப்பவளா? இல்லை. இல்லவேயில்லை அன்னையே! கண்ணி : நாழிகையாகிறது, மன்றுநோக்கி கூட்டிச் செல்லுங்கள். மாழை : நான் போகமாட்டேன். மானக்கேடு தலை தூக்க முடிய வில்லை. மகளே, நீ போ, அங்கேயாவது உண்மை கூறு! ஒவென்று அலறிக்கொண்டு கிள்ளை ஓடுகிறாள்) காட்சி - 2 அறமன்றம் - பிறைநாட்டரசர் வயவரி மன்னர் பெருந்தவிசில் வீற்றிருந்தார். இடப்புறமாக, வழக்கெடுத்துரைப்போன் வளன் அமர்ந்திருந்தான் வலப்புறமாகக் குறிப் பெடுக்கும் கொன்றை அமைந்திருந்தான். எதிரில் முன் வரிசையில், இளவரசி முல்லையும், அமைச்சன் மகள் சாலியும் இருந்தனர். பின் வரிசையில், அமைச்சு வல்லுளி உட்கார்ந்திருந்தான். தாழை தோரை ஒரு புறம் காணுமாறு வந்திருந்தனர். கிள்ளை குற்றவாளியாக அரசர்க்கு முன் நின்றிருந்தாள். காவலர் பணியாளர் பலர் பல பக்கங்களிலும் நின்றிருந்தனர். பெருமக்கள் பலர் காணுமாறு போந்திருந்தனர். பேரரசு எழுந்து - அறமன்றத்தைத் துவக்கம் செய்தேன். நடுநிலை கோணாது தீர்ப்பளிப்பதாய் உறுதி கூறுகிறேன். வழக்கெடுத்துரைக்கும் வளன் கூறினான் - பிறைநாட்டின் பேரரசியார் கன்னல் அம்மையாரின் மாணிக்கக் கணையாழி காணாமற் போயிற்று. அதைக் கிள்ளை என்னும் இவள் - படைத் தலைவர் மாழையின் மகள் களவு செய்ததாகப் பேரரசியார் நினைக்கிறார்கள். இவ்வழக்கின் சான்றினராக இளவரசியார் முல்லையும், அமைச்சர் மகள் சாலியும் அழைக்கப் பெற்றுள்ளார்கள். மன்றில் கூடி யுள்ளவர்கள் இவ்வழக்கில் உதவி செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு : கிள்ளையே, அறமன்றத்தின் முன் மெய் கூறுவதாக நீ உறுதி கூறு. கிள்ளை : நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின், மக்களில் தன்னை உயர்ந்தவன் என்று கூறுகின்ற கொடி யோன் செய்யும் கொடுமை செய்தவள் ஆவேன். நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின். உழுதவனைக் கூலிக்காரன் என்று கூறி உழுதவனைத் தான் பறிக்கும் முதலாளி செய்யும் தீமையை செய்தவள் ஆவேன். நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின், தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழால் ஊழியம் பெற்றுத் தமிழையன்றி அயல் மொழியை ஆதரிக்கும் சழக்கன் செய்யும் சழக்குச் சூழ்ந்தவள் ஆவேன். நான் இந்த அறமன்றத்தின் முன் மெய்யே கூறுவதாக உறுதி கூறுகிறேன். அரசர் : கிள்ளாய் நீ அந்த மாணிக்கக் கணையாழியை எடுத்த துண்டா? கிள்ளை : நான் எடுத்ததில்லை பேரரசே! அரசர் : அக்கணையாழி இப்போது உன்னிடமோ, உன்னால் பிறரிடமோ இல்லையா? கிள்ளை : என்னிடம் இல்லை. நான் அதைப் பிறரிடம் கொடுத்து வைத்ததும் இல்லை பேரரசே! அரசர் : சாலி இது பற்றி உனக்கென்ன தெரியும்? சாலி : கிள்ளை வைத்திருக்கக் கண்டேன். அரசர் : என்றைக்கு? சாலி : நேற்று அரசர் : நேற்று அரண்மனைக்குப் போனதுண்டா? சாலி : நானும் கிள்ளையும் போனதுண்டு. அரசர் : என்ன வேலை? சாலி : இளவரசி முல்லைக்கு நாங்கள் தோழிகள். அரசர் : இவை மெய்தானா கிள்ளாய்? கிள்ளை : அவை அனைத்தும் மெய் அரசர் : முல்லையே இவை மெய்யா? முல்லை : ஆம் மெய். அரசர் : நீ என்ன கூறுவாய் கிள்ளையே! கிள்ளை : என்னிடம் எப்போது பார்த்தாள் சாலி? சாலி : நேற்றுக் கையில் வைத்திருந்தபோதுதான் பார்த்தேன். கிள்ளை : எந்த இடத்தில்? சாலி : இளவரசியை விட்டு வெளிவருகையில் கிள்ளை : எப்படி வைத்திருந்தேன்? சாலி : கையில் கிள்ளை : எந்த கையில்? சாலி : உம் - வலக்கையில்! கிள்ளை : என் வலக்கையில் அச்சிறிய பொருளை வைத்திருந்தால் அது எப்படித் தெரிந்தது சாலிக்கு? சாலி : நான் தான் என்ன அது என்று கேட்டேன். கிள்ளைதான் இது மாணிக்கக் கணையாழி என்று கூறினாள். கிள்ளை : அதுபற்றிச் சாலி கிள்ளையை ஒன்றும் கேட்கவில்லையா? சாலி : இல்லை. முல்லை : பேரரசே நான் ஒன்று கூற முன்வருகிறேன். சாலி முதலில் என்னிடமும் தங்களிடமும், கூறியது வேறு. அவள் கூறினாள்: கிள்ளையிடமிருந்து ஏதோ ஒன்று கீழ் விழுந்தது. அது சிவப்பொளியுடையதாய் இருந்தது. அதை அவள் இடையில் செருகினாள், அது தங்கக் காசைத் துணியில் அழுத்திய அளவில் தோன்றிற்று என்றாள். இப்பொழுது சொல்வன அனைத்தும் வேறு! கிள்ளை நல்லவள், இப்படிப்பட்ட குற்றம் செய்பவள் அல்ல. சாலி கிள்ளையைக் குற்றத்தில் உட்படுத்த எண்ணி இவ்வாறு வேண்டுமென்ற கூறுகிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அரசர் : மன்றிலுள்ளவர்களே! அரண்மனைப் பொருள் களவு போனால், அது பற்றி யார் மேல் சிறிது ஐயம் ஏற்பட்டாலும் அவர்களை அயல் நாடு கடத்தி வைக்கும்படி அறநூல் கட்டளையிடுகிறது. நான் அதன்படி, கிள்ளை பீலி நாட்டில் நாலாண்டு வாழ்ந் திருக்கத் தீர்ப்புக் கூறினேன். இதன்படி கிள்ளை இன்றே பீலி நாட்டுக்குப் புறப்பட்டுவிடவேண்டும். midtU« f©fy§F»wh®fŸ] கிள்ளை : பீலி நாட்டிற்கா? நம் சிற்றரசிருக்கும் இந்தப் பீலி நாட்டுக்குத் தானே பேரரசே? அரசர் : ஆம் இன்றே பயணத்தைத் தொடங்கு! »Ÿis சிரிப்பில் குதித்தாள். அவள் முல்லையிடம் ஓடி வந்து உரத்த FuÈš.] இளவரசியே, என் பொருட்டு நீ வருந்துகின்றாயா? நீ மகிழ்ச்சி யடை! சாலியின் சூழ்ச்சி, என்னைப் பீலியில் சேர்த்தது! அவள் என்மேல் இல்லாததைச் சொல்லி என்னை அந்த நிலாவிடம் சேர்த்தாள். நாலாண்டில், எனக்கு, ஆடல் பாடல் நன்றாய் வந்து விடுமே. முல்லை : உனக்கு நல்லதாயிற்று! வாழி வாழி, உனக்கு ஏற்பட்ட தண்டனை உன்னை இனிக்க வைத்து விட்டதே! ஆட்டம் உனக்கு ஒரே ஆண்டில் வந்துவிடுமே! ïij¢ சாலி கேட்டுத் திடுக்கிடுகிறாள். அவள் jd¡FŸ] முல்லை அவள் மேல் அன்பாய் இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தச் சூழ்ச்சி செய்தேன், அதன் பயனாக அவள் நிலாவையடைந்துவிட்டால், பிறை நாட்டின் பாராட்டும் புகழ்ச்சியும் கிள்ளைக்குத் தான்! ... ... ... mªj¢ சாலி, அரசனை நோக்கிக் TW»whŸ] பேரரசே! குற்றவாளியாகிய கிள்ளை அந்தப் பீலி நாட்டில் ஆடல் கற்றுக் கொள்ளலாகாது என்று தீர்ப்பளிக்க வேண்டுகிறேன். mur® முதல் அனைவரும் சிரிக்கின்றனர். சாலியின் தந்தையான அமைச்சன் முகம் கவிழ்ந்து bfhŸS»wJ.] அரசர் : சாலி, உனக்கு யார்மேல் எப்படிப்பட்ட கெட்ட எண்ணம் உண்டாகிறதோ அதையெல்லாம் நான் தீர்ப்பாகச் சொல்லித் தீர்த்துவிட வேண்டுமோ? உன் வாய்ச் சொல்லைக் கொண்டு கிள்ளையைத் தண்டித்தது சரியில்லை என்று நன்றாக விளங்கி விட்டது. கிள்ளை : அப்படியானால், தாங்கள் எனக்களித்த தீர்ப்பை மாற்றவா போகிறீர்கள்? midtU« áÇ¡»wh®fŸ] அரசர் : அஞ்சவேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை. கிள்ளை : நான் இப்போதே தானே போய் விடவேண்டும்? இப்படித் தான் தீர்ப்பளித்தீர்கள் என்று என் தந்தையாரிடம் நான் சொன்னால் அவர் நம்பமாட்டார். வேண்டுமென்று நானே சொல்லுவதாக அவர் நினைப்பார். அவரையும் அழைத்துத் தீர்ப்பைச் சொல்லிவிடும்படி தங்களைக் கேட்டுக் கொள்ளு கிறேன். முல்லை : ஆம் ஆம்! Û©L« áÇ¥ò] இதற்குள் பேரரசியார் மன்று நோக்கி வருவதாகக் கூறத் தோழி ஒருத்தி அங்கு வருகிறாள். அவளை அனைவரும் நோக்கியிருக்கிறார்கள். தோழி : பேரரசே! பேரரசியார் மன்று நோக்கி வருகிறார்கள். midtU« எழுந்து நிற்கிறார்கள்.அரசியார் அரசரிடம் கணையாழியை Ú£L»wh®] பேரரசி : அகப்பட்டு விட்டது. கிள்ளை குற்றவாளியல்ல. கிள்ளை : அதெப்படி? தீர்ப்பை மாற்றக்கூடாது பேரரசே! அரசர் : நீ குற்றவாளி என்றுதானே அந்தத் தீர்ப்பைச் செய்தேன். இப்போது நீ குற்றவாளியில்லை, தீர்ப்பை மாற்றத்தானே வேண்டும்? கிள்ளை : நான் தீர்ப்பளிக்கு முன் எப்படியோ அப்படித்தான் இப்போதும். அப்போதைக்கு இப்போது என்ன வேறு பாட்டைக் கண்டீர்கள்? அரசர் : தீர்ப்புக்கு முன் இருந்த நிலையில் நீ இப்போது இல்லையே! கிள்ளை : நான் இப்போதும் குற்றவாளியில்லை. அப்போதும் குற்றவாளியில்லையே. தீர்ப்பை ஏன் மாற்ற வேண்டும்? அரசர் : அப்படியா நீ சொல்வதும் ஒரு வகையில் சரியே! நீ என்ன சொல்கிறாய், சாலி! சாலி : நான் தான் குற்றவாளி, எனக்குத்தான் அந்தப் தீர்ப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். அரசர் : அது ஏன்? நீ எப்படிக் குற்றவாளி? சாலி : நான் தான் முதலில் அந்தக் கணையாழியை எடுத்தேன். பிறகு வைத்துவிட்டேன். ஆகையால் நான் தான் குற்றவாளி. áÇ¥ò] பேரரசி : எவ்விடத்திலிருந்து எடுத்தாய்? சாலி : அங்குத் தான் ... ... ... பேரரசி : எங்கு? சாலி : தாங்கள் நீராடும் கட்டத்தின் இப்புறமிருந்த கண்ணாடிச் சிலையின் கீழிலிருந்து எடுத்தேன். பேரரசி : எங்கு வைத்தாய்? சாலி : அங்குத்தான் வைத்தேன். பேரரசி : இல்லை இல்லை. நீ கணையாழியை எடுக்கவுமில்லை; வைக்கவுமில்லை; ஆடல் கற்றுக் கொள்ள விரும்புகிறாய் நிலாவிடம். அரசர் : ஆனால், நான் உனக்குத் தீர்ப்புக் கூறட்டுமா சாலி? கிள்ளை : எனக்களித்த தீர்ப்பு மாறுதல் கூடாது! அரசர் : அதையும் மாற்றித்தானாக வேண்டும். கேளுங்கள் சாலி நல்லபெண்ணாகிய கிள்ளை மேல் பொய்ப்பழி கூறிய தால் சாலி கிள்ளையை மன்னிப்புக் கேட்கவேண்டும். இந்தத் தீர்ப்பு நிறை வேறிய பின், அரண்மனைப் பொருளில் ஆடல் அரங்கு ஒன்று அமைத்து, இந்நாட்டின் ஆடற் சாலை முன்னேற்றத்திற்கு, நிலாவை வரவழைத்து கிள்ளை, சாலி முதலிய அனைவர்க்கும் சொல்லி வைக்கச் செய்ய வேண்டும்! என்ன! கிள்ளை : சாலி, என்னை மன்னிப்புக்கேள் விரைவில். சாலி : மன்னிக்க வேண்டும் - எங்கே பேரரசே, ஆடல் அரங்கம்? அரசர் : ஆடற்கலை நம் நாட்டில் எழுக. குழந்தைகளே உங்கள் விருப்பம் நன்று. இதோ அனைத்தும் ஏற்பாடு செய்து விடுகின்றேன். காட்சி - 3 (பிறை நாட்டில் புதிதாக அமைத்த அரங்கில், நிலாவினால் பயிற்றப்பட்ட பெண்கள், கிள்ளை, சாலி, தாழை, தோரை, முல்லை முதலியவர்கள் ஆடுகின்றார்கள்.) நிலா பாடுகிறாள் செங்கதிர் எழுந்தான் திரைக்கடல் மேலே சிரிக்கும்செந் தாமரை போலே! எங்கணும் ஒளியே! எங்கணும் உணர்வே! இனிதாய் மலர்ந்தது காலை! ஏரினைத் தூக்கி உழவர்கள் தொடர்ந்தார் எருதுகள் முன்செல்ல நடந்தார்! ஊரினிற் பெண்கள் நீர்க்குடம் சுமந்தே உவப்புடன் குளக்கரை அடைந்தார்! வாணிகர் கடைகளைத் திறந்திடு கின்றார் மாணவர் ஏட்டோடு சென்றார். வீணையைப்போல் அங் காடிகள் கூவி வீதியெல்லாம் நடக்கின்றார். எழுந்தன அறங்கள் நிறைந்தன அன்பும்! ஏகின ஏகின துன்பம்! பொழிந்தன பொழிந்தன தமிழரின் நாட்டில் புதுமைகள்! எங்கணும் இன்பம்!  கற்கண்டு பாவேந்தர் முன்னுரை தமிழர் மேன்மையைக் காட்டும் கருத்துக்கள் பல உருவங்களில் தோன்றித் தோன்றி நினைவைக் கவர்வதுண்டு! சும்மா இருந்துவிட முடிகின்றதா? அவ்வப்போது எழுதி. கிடைத்த ஏட்டில் வெளியிட்டு வைத்தவைகளே இந்த நாடகங்கள். இப்போது நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது அந்த நாடகங்கட்கு. தமிழர்கள் ஆதரிக்க. இஃது என் விண்ணப்பம். பாரதிதாசன் நகைச்சுவை நாடகம் புதுச்சேரியில் முதலியார் தெரு என்பதொன்று. அத்தெருவின் முனையில் இருப்பது சிங்கார முதலியார் வீடு. சிங்கார முதலியார் புதுச்சேரியில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்; செல்வாக்குள்ளவர்; நல்ல பரோபகாரியுமாவார். அந்தச் சிங்கார முதலியார் வீட்டுக்கெதிரில், ஒரு வாரமாகத் தருமன் சிறுத்தொண்டப்பத்தன் கதை பாடி முடித்ததில் அவனுக்கு நல்ல வரும்படி? சிறுத்தொண்டப் பத்தன் கதையைத் துவக்கி யிருக்கிறான், மீண்டும். தருமனும் அவன் சிற்றாளாகிய சின்னான் என்ற சிறு பையனும் உட்கார்ந்திருக்கிறார்கள். வீதி யோரத்தில் சாக்கை விரித்துப் போட்டு! அவர்கட்கு எதிரில் ஒரு திரை விரித்துப் போடப் பட்டிருக்கிறது. அத்திரையில், சிறுத்தொண்டப் பத்தன் கதையில் உள்ள பிரதான கட்டங்கள் சில சித்தரிக்கப் பட்டுள்ளன. கதை பாடுவதற்கு இடையில், கதையில் வரும் சித்திரத்தை அவன் கையில் உள்ள கோலால் மக்கட்குக் குறிப்பிடுவான். தருமனின் இடது கை ஒன்றே இரு தாளத்தை யும் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கும், வலது கைதான் படம் காட்டுகிறதே! பக்கத்தில் உள்ள சின்னான் ஒற்றைத் தந்தித் தம்பூராவை மீட்டுகிறான். பிள்ளையார் தோத்திரம் முடிந்துவிட்டது. கதை ஆரம்பமாகப் போகிறது. எதிரில் சிலர் உட்கார்ந்துகொண்டும் நின்று கொண்டும் ஆவலா யிருக்கிறார்கள் கதை கேட்க. தருமன்: (எதிரில் உள்ளவர்களை நோக்கி) கொஞ்சம் வெத்திலை இருந்தா குடுங்க பாக்குப் புகையிலையுடன் வெற்றிலை உடனே ஏற்பாடாகிறது. வாயிற் போட்டுக் குதப்பி அடக்கிக் கொள்ளுகிறான். தருமன் : போட்டா தம்பூரை! திருச்செங்காட் டாங்குடியில் சிறுத்தொண்டப் பத்தன் - அந்தச் சிறுத் தொண்டப் பத்தன் திருவெண்காட்டு நங்கையை மணம் புரிந்தான். கல்லாணம் செய்த பின்னே இருவரும் கூடி - அந்த இருவரும் கூடி, கனமாகச் சீராளனைப் பெற்றெடுத்தார். சீராளன் வயசல்லோ அஞ்சான வுடனே - நல்ல அஞ்சான வுடனே, தெருப்பள்ளிக் கூடத்திலே படிக்கவச்சார். சீராளன் : பள்ளிக்கூடம் போவதாக எழுதப்பட்டிருக்கும் கட்டத்தைக் கோலால் குறிப்பிடுகிறான் தருமன். கேட்பவர்களில் ஒருவன் சொல்லுகிறான், அதானே! படிக்காட்டிப் போனா என்னா பண்றது! மற்றொருவன்: உ, சும்மா இரு! இதற்குள் சிங்கார முதலியார் வெளிவந்து தம் வீட்டுக் குறட்டில் நிற்கிறார்; முதலியாரின் குழந்தையாகிய புட்ப ரதனும் முதலியாருடன் நின்று கதையைக் கவனிக்கிறான்) தருமன் : இப்படி இருக்கின்ற நாளையிலே பத்தன் நாளையிலே பத்தன் - அவன் ஈடில்லா அன்னதானம் செய்ய நினத்தான். அன்னதானம் என்று சொல்லி சிறுத்தொண்டப் பத்தன் சிறுத்தொண்டப் பத்தன் - அவன் அன்னக்கொடி தன்னையே நாட்டி விட்டான். தருமக் திரும்பிப் பார்க்கிறான். முதலியார் நிற்பதை அறிந்து அவரிடம் சொல்லுகிறான்) ஒங்க காவற்காரர் இப்பதானுங்க போனாருங்க நீங்க அவசர மாகச் செக்கு மாத்த அனுப்பினிங்கபோல இருக்குதே. சிறுத் தொண்டப் பத்தன் தினந்தோறும் மே அன்னம் பொசித்திடலானார் - அடியார் பொசித்திடலானார் சிவனடியார் கூட்டம் கூட்டமாக. இந்தப் பையனே அனுப்பி அவசரமாக அழைச்சிவரச் சொல்லட் டுங்களா? – கூட்டம் கூட்டமாக முதலியார் : அவனுக்கு இடம் தெரியுமா? தருமன் : தெரியுங்க - கூட்டம் கூட்டமாக முதலியார் : அப்படிண்ணா அனுப்பு! நான் அவசரமா குப்புசாமி முதலியார் வீட்டுக்குப் போகணும். தருமன் : ஓடு பையா கூட்டம் கூட்டமாக நூறு பேருக்குத் தினம் சிறுத் தொண்டப் பத்தன் - அந்தச் சிறுத் தொண்டப் பத்தன் நோகாமல் அன்னமிட்டான் சிறுத் தொண்டப் பத்தன். முதலியார் : இப்பத்தானா அவன் போனான்? தருமன் : ஆமாங்க - சிறுத் தொண்டப் பத்தன் முதலியார் : இங்கே என்னா பண்ணான்? தருமன் : ஒருத்தன் கிட்ட பேசிகினு இருந்தானுங்க. சிறுத் தொண்டப் பத்தன் (புட்பரதனை நோக்கி) பள்ளிக் கூடம் போகவே தம்பி - சிறுத்தொண்டப் பத்தன் - போவாணாம் இண்ணு சொன்னாங்க அப்பா?... ... சிறுத்தொண்டப் பத்தன் புட்பரதன் : (தன் தகப்பனாரை நோக்கி) அப்பா! ஒங்களை இவன் சிறுத்தொண்டப் பத்தன் இன்றாம்பா! என்னியும் அப்படியே சொல்றாம்பா. நம்ப காவக்காரனைக் கூடம்பா. முதலியார் : இல்லையப்பா. பாட்டைச் சேர்ந்த பகுதி அது. தருமன் : ஆயிரம் பேருக்குச் சிறுத்தொண்டப் பத்தன் - அந்தச் சிறுத்தொண்டப் பத்தன் அனுதினமும் அன்னம் போட்டான் சிறுத்தொண்டப் பத்தன் சிறுத்தொண்டப் பத்தன், அன்னக்கொடியை நாட்டி, தினம் ஆயிரம் பேருக்கு ரெண்டாயிரம் பேருக்கு அன்னம் போட்டு வர்ரானாம். இப்படி இருக்கின்ற நாளையிலே கைலை - நல்ல நாளையிலே - கைலை ஈசனும் பார்வதியும் பேசுகின்றார். கேட்பவர்களில் ஒருவன்: அங்கே கைலாசத்திலியா! சரிதான்! மற்றொருவன்: கைலாசத்திலே நடக்குது? தருமன் : என்னாடி பார்வதியே சிறுத்தொண்டப் பத்தன் - அந்தச் சிறுத்தொண்டப் பத்தன் இறுமாப்புக் கொண்டாண்டி பார்வதியே. அன்னக்கொடி நாட்டினாண்டி பார்வதியே -அடி பார்வதியே, அது விவரம் காணவேணும் பார்வதியே. பெருமைக்குச் சோறுபோடும் பேர்வழியும் உண்டு கேட்ப 1 : ஹுங்கும். கேட்ப 2 : பின்னே இல்லையா! சின்னத்தனம் மறைந்திடச் சோறிடுவ துண்டு. கேட்ப 1 : உண்டு உண்டு. கேட்ப 2 : சொச் சோ சோ! தருமன் : சிறுத்தொண்டப் பத்தனை நான் தெரிஞ்சி வாரேன் பொண்ணே தெரிஞ்சி வாரேன் பொண்னே - அவனுக்குச் சிவபக்தி உண்டா என்று தெரிஞ்சி வாரேன் ... ... ... ... பையனும் முதலியாரின் காவற்காரனாகிய குப்பனும் கன வேகமாக வருகிறார்கள். காவற்காரன் : (தருமனை நோக்கி) ரொம்ப கோவிச்சிகினாரா எசமான்? என்று பயத்தோடு கேட்கிறான். தருமன் : பின்னென்னா! - தெரிஞ்சி வாரேன் பொண்ணே- நீதான் இங்கேயே வெகு நேரமாய் பேசிக்கினு இருந்துட்டியே? - தெரிஞ்சி வாரேன்பொண்ணே. காவற்காரன் : நீ சொல்லிபுட்டியோ? தருமன் : என்று பார்வதியிடம் சொல்லிவிட்டே சாமி! காவற்காரன் : நான் சொல்லவேயில்லையே சொல்லிவிட்டே சாமி எழுந்து போனார் செங்காட் டாங் குடிக்கே காவற்காரன் : ஏது ஏது! ஒன்னால எனக்கு ரொம்பத் தொந்தரவு. இந்த எடத்தேவுட்டுக் கௌம்பு. தருமன் : செங்காட் - டாங்குடிக்கே என்னியா? செங்காட் - டாங்குடிக்கே ïj‰FŸ எஜமான் வந்துவிடுகிறார். அவர் காவற்காரனை நோக்கிக் nfhgkhf] ஏண்டா எப்போ போனே? இந்நேரம் என்னா பண்ணே? காவற்காரன் : நேரா போயி நேரா வந்தேனுங்க. தருமன் : செங்காட் - டாங்குடிக்கே முதலியார் : நீ பிரயோஜனமில்லே. வேற எங்கியாவது வேலை பார்த்துக் கொண்டு போய்விடு. தருமன் : செங்காட் - டாங்குடிக்கே டாங்குடிக்கே காவற்காரன் : இவனைப் பாருங்க நீங்க ஏமேலே கோவிச்சிகிரிங் கிண்ணு. என்னைக் கேலி பண்றானுங்க. உடனே தருமன் ஜனங்களைப் பார்த்து உருக்கமாக சிவனடியார் போலவே அவர் உருவெடுத்தார் - என்று அடியை முடிக்கிறான். v#kh‹ உள்ளே போய்விடுகிறார். காவற்காரன் குப்பனோ, முதலியார் வீட்டின் குறட்டில் போட்டிருக்கும் விசிப்பலகையில் உட்காருகிறான். அச்சமயம் குப்புசாமி முதலியார் காரில் ஏறிக்கொண்டு அவ்வழியாகப் போகிறார். குப்புசாமி முதலியாரைத் தேடிக்கொண்டு சிங்கார முதலியார் இப்போது அவசரமாகப் போகிறார் என்பது தருமனுக்கு நினைவிருக்கிறது. சிங்கார முதலியார் உள்ளே உடுத்துகிறார். அவர் வெளியே வந்ததும் காவற்காரன்மேல் கோள் மூட்டிவிடத் தருமன் திட்டம் போட்டிருக்கிறான். அதற்குச் சிசங்கார முதலியார் வெளியில் வருவதற்குள், காவற்காரனை அங்கில்லாமல் அனுப்ப ஒரு யோசனை brŒjh‹.] ஆரையா காவற்காரரே என்றான்; காவற்காரன் ஏன் என்றான். தருமன் : அதோ முத்து கூப்புட்டுட்டுப் போறாரு ஒங்களே. ïij¡ கேட்டுக் காவற்காரன் போகிறான். அச்சமயம் சிங்கார முதலியார் உடுத்துக்கொண்டு வெளியில் tU»wh®.] தருமன் : சிறுத்தொண்டப் பத்தன் வீட்டுத் தெருவில் வந்தார் - சாமி தெருவில் வந்தார் சந்தன நங்கை என்னும் தாதி கண்டாள். முதலியாரை நோக்கி, நீங்க குப்புசாமி முதலியாரைத் தேடிப் போவதா யிருந்தா பயணத்தை நிறுத்த வேண்டியதுதானுங்க. சிங்கார : ஏன்? தருமன் : அவுரு இப்பதான் காரில் இப்படிப்போனாருங்க. முதலியார் : ஐயோ அப்படியா! நல்லதாப் போச்சி நீ சொன்னது. எங்கே காவற்காரன்? தருமன் : இங்கேதான் இருந்தாருங்க. நான் சொன்னேன். குப்புசாமி முதலியாரு இதோ காரில் போறாரு, எஜமாங்கிட்டே சொல்லையா இண்ணு. அவரு சொன்னாருங்க நறுக்கிண்ணு, போய் ஏமாந்துட்டு வரட்டுமே இண்ணு. எழுந்து இப்பத்தான் எங்கியோ போனாருங்க. நான் சொன்னேன் இண்ணு, அவரு கிட்டே சொல்லிப்புடாதீங்க. முதலியார் : நீ நம்ப வீட்டுக்கு காவல்காரனாக இருக்றியா? தருமன் : சரிங்க, அவரு அடிப்பாருங்க. முதலியார் : அவன் கெடக்றான், நான் பார்த்துக் கொள் கிறேன். தருமன் : சரிங்க, சந்தன நங்கை என்னும் தாதி காண்டாள் தாதி காண்டாள் - சாமியைத் தயவு செய்தே உள்ள வாரு மென்றாள். KjÈah® உள்ளே போகிறார். காவற்காரன் வருகிறான். தருமன் வெகு உருக்கமாகப் பாட Mu«ã¡»wh‹.] ஓடி, வெண்காட்டு நங்கையும் ஓடி வந்தாள் அங்கே - அவள் ஒடி வந்தாள் அங்கே, விழுந்து பணிந்தாள் சாமி திருவடியில் காவற்காரன் : (கோபமாக) எங்கடா முத்து கூப்பிட்டாண்ணியே? தருமன் : அன்ன முண்ண வேணுமென்ற அடியில் வீழ்ந்தா ளம்மை - அவர் அடியில் வீழ்ந்தா ளம்மை சோறுதின்ன வேணுமென்றே தொழுது நின்றாள். காவற் : என்னடா கேக்றேன். நீ பாட்டுக்குப் பாடறியே? தருமன் : சும்மா இரையா, சோறு தின்ன வேணுமென்றே தொழுது நின்றாள். ïj‰FŸ முதலியார் காவற்காரக் குப்பனுக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் tªJ,] இந்தா! புடி போ என்கிறார். காவற்காரன் : நான் ஒரு குற்றமும் செய்யலீங்களே, சோத்துக்கு வழியில்லாமே ஆக்கிப்புட்டிங்களே? தருமன் : சோறு தின்ன வேண்டுமென்றே தொழுது நின்றாள். காவற்காரன் : நான் எப்படி பொழைக்கிறதுங்க? தருமன் : சோறு தின்ன வேணுமென்றேதொழுது நின்றாள். தொழுது நின்றாள் காவற்காரன் : பாருங்க, அதியே அவன் திலுப்பித் திலுப்பிச் சொல்லுறானுங்க. முதலியார் : நான் வேறு ஆள் வைச்சுட்டேன்! பூடு! KjÈah® வீட்டுக்குள் போய்விடுகிறார். காவற்காரன் மூக்கால் அழுதுகொண்டே தருமன் குந்தியிருக்கும் இடத்தைக் கடந்து ngh»wh‹.] தருமன் : புருஷன் எங்கே என்று கேட்டா ராம், சாமியார் - கேட்டா ராம் சாமியார். போனார் வெளியில் என்றா ளாம் அம்மை! ïªj¡ கடைசி அடியைக் காவற்காரனுடைய முகத்தைப் பார்த்துக் கேலியாகப் பலமுறை கூறுகிறான். காவற்காரன் மகா தொந்தரவோடு kiw»wh‹.] தருமன் : ஆளனில்லா வீட்டிலே அமுதுண்ணே னம்மா - நான் அமுதுண்ணே னம்மா கணவனில்லா வீட்டிலே உண்ணே னென்றார் KjÈah® உள்ளே போகிறார். தருமன் எதிரில் ஓடி நின்று F«ãL»wh‹.] முதலியார் : ஜாக்கிரதையா இரு; அவனாட்டம் நடக்காதே. வேறு என்ன தேவை உனக்கு? தருமன் : எஜமான் தயவு இருந்தாப் போதும். முதலியார் : சரி, இரு. (முதலியார் உள்ளே போகிறார். தருமன் பின்னிருந்து வெகு பக்குவமாக) தருமன் : அந்தத் துண்டே இப்படி எறிஞ்சுட்டுப் போங்க என்கிறான். அவர் போட்டிருந்த காவித் துண்டைத் தருமனுக்குக் கொடுத்துப் போகிறார். தருமன் வாசற்படியின் விசிப் பலகையில் உட்கார்ந்து கொள்ளுகிறான், காவித் துண்டைப் போர்த்துக்கொண்டு! அச்சமயம் அவனண்டையில் புட்ப ரதன் tU»wh‹.] புட்பரதன் : நீயா காவலு? அப்பா சொன்னாங்களே. தருமன் : ஆமாந் தம்பி! உள்ளே போயி அப்பாவுது வேட்டி இருந்தா ஒண்ணு எடுத்தா! புட்பரதன் உள்ளே ஒடுகிறான். சின்னான்: அப்போது வெண்காட்டம்மை ஏதுரைத்தாள் - அம்மை ஏதுரைத்தாள், அவர் வெளியில் போயிருக்கார் என்றுரைத்தாள். ஆளன் வந்தா லென்னிடம் அனுப்பு மென்றார் - சாமி அனுப்பு மென்றார் அழைத்தால் வருவேனென்றே சாமி சொன்னார். தருமன் : மகிழ்ச்சி! போடு! இதற்குள் புட்பரதன் ஒரு வேட்டியைக் கொண்டு வந்த கொடுக்கிறான். தருமன் தழைய விட்டுக் கட்டிக் கொள்கிறான் புட்பரதன் : நீ பெரிய ஆளா இருக்கிறியே! எங்கப்பா சொன் னாங்க, முதலிலே ஒண்ணும் வாணாம் இண்ணியாம், உடனே துண்டு கேட்டியாம். இப்போ வேட்டி கேட்டியே. தருமன் : அப்பாவா சொன்னாங்க! தோ பாரு தம்பி, வேட்டி எனக்கு அழுக்கா இருந்தது, அத்தோட்டு தான் தம்பி. புட்பரதன் : கதையைச் சொல்லேன் கேட்போம். தருமன் : சாமியார் வேஷத்தோடு சாமி சிறுத்தொண்டன் வீட்டுக்கு வந்தாரா? புட்பரதன் : வந்தாரு. தருமன் : சந்தன நங்கை பார்த்தாளா? புட்பரதன் : பார்த்தா. தருமன் : ஒடனே கும்பிட்டு உள்ளே வாங்க இண்ணா, அப்றம் உள்ளே இருந்து வந்த திருவெண்காட்டு நங்கை பாத்தா. சாப்பிடச் சொன்னா, அதுக்கு சாமி ஊட்டுக் காரர் எங்கே இண்ணார் வெளியில் போயிருக் காரு இண்ணா. ஆம்ளே இல்லாத ஊட்டுலே நான் சாப்பிடமாட்டேன். அவுரு வந்தா என்னைக் கூப்பிட்டு அனுப்பு இண்ணு சொல்லிபுட்டு, கோயில் திருவாத்தி மரத்தடியிலே போயிஒக்காந்துக்கினாரு. புட்பரதன் : ஓகோ! அப்படியா? தருமன் : தம்பி, ஒரு விசிறி பிஞ்சி போனது கிஞ்சு போனது இருந்தா எடுத்தாயேன். புட்பரதன் எடுத்து வந்து கொடுக்க, தருமன் வெள்ளை வேட்டி, காவித்துண்டு, கையில் விசிறியுடன் வீட்டு முதலியார் போலவே விளங்குகிறான். 2 வீரப்ப முதலியாருக்கு 70 வயது நடக்கிறது. அவருக்கு தலைக்கு உயர்ந்த பிள்ளைகள் இருவர் இருக்கிறார்கள். வீரப்ப முதலியார் மனைவி இறந்து போகவே வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்தார். இந்த எண்ணத்தில் கொஞ்சம் மூச்சு விட்டார். பிள்ளைகள் சீறினார்கள். அது முதல் பிள்ளைகளிடம் அது விஷயத்தைச் சொல்வதே யில்லை. துரைசாமி முதலியார் வீரப்ப முதலியாருக்கு 300 ரூபாய் பாக்கி செலுத்தவேண்டியிருந்தது. வீரப்ப முதலியார் அதைக் கண்டித்துக் கேட்கவில்லை. ஏனென்றால், துரைசாமி முதலியாரால் வீரப்ப முதலியாருக்கு முக்கியமானதோர் காரியம் ஆக வேண்டியிருந்தது. துரைசாமி முதலியாரும் தாரமிழந்தவர். அவருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் கற்கண்டு. கற்கண்டை 70 வயது சென்ற வீரப்ப முதலியார் கட்டிக் கொள்வதாகத் துரைசாமி முதலியாரிடம் கூறினார். கடன் தொல்லை யாவது நீங்கட்டும் என்று நினைத்துத் துரைசாமி முதலியார் ஒத்துக் கொண்டார். கல்யாணத்தைத் தம் ஊராகிய சிதம்பரத்தில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை. வீரப்ப முதலியார் பிள்ளைகள் மலைபோல வந்து குறுக்கே நின்றுவிடுவார்கள். வீரப்ப முதலியார் ரகசிய முறையில் அறுநூறே சில்லரை ரூபாய் எடுத்துக் கொண்டு, துரைசாமி முதலியார் கற்கண்டு ஆகிய இரண்டு சீவன்களையும் அழைத்துக் கொண்டு, புதுவைக்கு வந்துவிட்டார். செட்டித் தெருவில் ஒரு வீடு காலியாயிருக் கிறது. அந்த வீட்டுக்குடையவர் எதிர் வீட்டுக்காரர். அவரைக் கண்டு வாடகை பேசி முடிக்கச் சொல்லித் துரைசாமி முதலியாரை அனுப்பிவிட்டு, அந்த வீட்டின் எதிரில் தெருவீல் வீரப்ப முதலியாரும், கற்கண்டும் நிற்கிறார்கள். இவ்விருவரும் நிற்பதைப் பக்கத்து வீட்டின் நடைத் திண்ணையிலிருந்து ராமசாமியும் சீனுவாசனும் கவனிக்கிறார்கள். வீரப்பக் கிழவர் கற்கண்டை நெருங்கிறார். கற்கண்டு விலகி ஜாடையாகக் கிழவரின் மறுபக்கம் மாறி நிற்கிறாள். பல தடவை இப்படி. வீரப்ப : கற்கண்டு. கற்கண்டு : ஏங்க. f‰f©ol« வெற்றிலை இருக்காது என்பது வீரப்பக் கிழவருக்கே bjÇí«.] வீரப்ப : வெத்திலை இருக்கா? கற்கண்டு : இல்லிங்களே! வீரப்ப : வாங்கிவரச் சொல்லவா? கற்கண்டு : எனக்குங்களா, நான் வெத்திலை போட்டுக்றதில்லிங்களே. வீரப்ப : ஏன் வெட்கப்படுறே? எல்லாப் பெரயாசையும் ஒன்க்காகத் தானே, எல்லாம் கொண்டாந்திருக்கேன் ஒனக்கு. ஒத்துக் குடித்தனம் பண்ணு. கற்கண்டு : நல்லா குடித்தனம் பண்ணனும். அதுதான் எனக்கும் ஆசைங்க. வீரப்ப : அப்படிச் சொல்லு. ïj‰FŸ குறிப்பிட்ட வீடு திறந்துவிடப்படுகிறது. துரைசாமி முதலியார் வாங்க என்று கூப்பிடுகிறார். இருவரும் போகிறார்கள். தெருப்பக்கத்து அறையில் கற்கண்டு நுழைந்து ஒரு புறமாக நிற்கிறாள். வீரப்பக்கிழவர் துரைசாமி முதலியாரிடம் ஒரு ரூபாயைக் bfhL¤J] நல்ல பலகாரமா பார்த்து வாங்கி வாரும் என்கிறார். கற்கண்டு : நானும் வர்ரேன் அப்பா. வீரப்ப : நீ ஏன்? அதெல்லாம் சரியல்ல கற்கண்டு. துரைசாமி : வரட்டுமே! வீரப்ப : அட சீ! என்னாங்காணும். உமக்கு புத்தி கித்தி இருக்கா! துரைசாமி : சரிதாம்மா, நீ இரு! என்னா வாங்கி வரச் சொன்னீங்க? வீரப்ப : கொஞ்சம் லட்டு, சிலேபி, அல்வா, பழம், இன்னும் என்னா ஓணும் கற்கண்டு? கற்கண்டு : போதுங்க, புதுச்சேரி நெய்முறுக்கு நல்லா இருக்கும் இண்ணாங்களே. துரைசாமி : அவுரு மெல்ல முடி .... வீரப்ப : ஓய் தூ! ஆருங் காணும்? வாங்கி வாருங்காணும் முறுக்கும். துரைசாமி : சரி. JiurhÄ முதலியார் வெளியில் போகிறார் - வெளியில் புறப்பட்ட துரைசாமி முதலியாருக்கும், அடுத்த வீட்டின் குறட்டில் காத்திருந்த ராமசாமி, சீனிவாசன் ஆகிய இருவர்க்கும் கீழ்வரும் பேச்சு el¡»wJ] ராமசாமி : ஏணையா நீங்க எந்த ஊரு? துரைசாமி : செதம்பரம். ராமசாமி : அந்தக் கெழவர் ஆரு? துரைசாமி : நம்ம சொந்தக்காரரு. ராமசாமி : அந்தப் பொண்ணு? துரைசாமி : நம்ப கொழந்தை. ராமசாமி : எங்கே போறீங்க இப்ப? துரைசாமி : பலகாரம் வாங்க. ராமசாமி : கெழவரை அனுப்பறத்தானே? துரைசாமி : அது சரியல்ல. ராமசாமி : வயசு பெண்ணையும் அந்த அயோக்யக் கிழவரையும் தனிக்க உட்டுட்டு நீர் போறது சரியோ? துரைசாமி : பாதகமில்லே. அவர்தான் அந்தப் பொண்ணே கட்டிக்கப் போறே மாப்ளே! சீனுவாசன்: அட பாவீங்களா! ராமசாமி : அப்படியா, சரிதான். போய்வாங்க செதம்பரத்தாரே. துரைநசாமி முதலியார் தலை குனிந்தபடி போய் விடுகிறார். ராமசாமியும் சீனுவாசனும் அறையில் வீரப்பக் கிழவர் செய்கையை ஜன்னல் வழியாகக் கவனிக்கிறார்கள். வெளிப் பக்கமிருந்து. வீரப்பக் கிழவருக்கு குஷி அதிகரிக்கிறது. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் என்று தொடங்கும் வெண்பாவை விருத்தம் போல் மெதுவாகப் பாடிக் கொண்டே விரல் நொடிப்பால் தாளம் போடுகிறார். வீரப்ப : கற்கண்டு, இப்பதான் என் மனசு குளுந்தது பனிக்கட்டி மாதிரி. ஏன் இண்ணு கேளு. (அவள் ஏன் என்று கேட்க வில்லை.) வீரப்ப : ஏன் இண்ணா, நாம்ப ரெண்டு பேரும் நான் நெனச்ச மாதிரி ஒரே ஊட்டுலே இருக்கோம் கற்கண்டு. ஒண்ணு கேளேன். கோகிலாம்பா இண்ணு ஒருத்தி தங்கம் இண்ணு ஒருத்தி. முனியம்மா இண்ணு ஒருத்தி. இப்படி பல பேரு! ஐயையோ எனக்குக் கடுதாசி மேலே கடுதாசி எழுதறது. உம், எம் மனசு போகவே இல்லே அவங்க கிட்டே. ஒனக்கும் எனக்கும் பொருத்தம் இண்ணு இந்தத் தலையிலே எழுதியிருக்கும் போது எப்படி மனசு போவும். ஹி! ஹி! இப்படி வா, ஒக்காரு. கற்கண்டு : அக்றே இல்லிங்க. வீரப்ப : கற்கண்டு, இந்தப் பணப்பையை அந்த டிரங்கில் வை. அவள் வந்து பையை வாங்குகிறாள். இதென்னா ஒன் கன்னத்திலே கரி என்று கூறி, அவள் கன்னத்தைத் தொடுகிறார். அவள் பையைக் கொண்டு போய் டிரங்கில் வைக்கிறாள் வீரப்ப : (தனக்குள் உரத்த குரலில்) அங்கே ... ... ... ... மொத்தம் அறுநூத்தி அஞ்சி ரூபா கொண்டாந்தேன். துணிமணி முப்பது ரூபா போச்சி. சில்லறைச் செலவு ரூபா அம்பது போச்சி. இப்ப ஒரு ரூபா. அன்னூத்தி இரவத்தி நாலுரூபா ... கற்கண்டு எங்கே எடுத்து வா பையை. அவள் பழையபடி எடுத்து வந்துகொடுக்கிறாள் வீரப்ப : இதென்ன தலையிலே ஒட்டடை? அவள் தலையைத் தொடுகிறார். உடனே பையை அவிழ்த்து ஒன்று ஒன்றாக எண்ணிப் பார்த்து, கற்கண்டு, சரிதான் கொண்டுவை என்று கூறுடிகிறார். கற்கண்டு பையை வாங்குகிறாள். வீரப்பக் கிழவர் மூணு பவுனுக்குக் காப்படிக்கிறதா இருந்தா என்று கூறிக் கற்கண்டின் கையைப் பிடித்துக் கை கனவாசியா இருக்குமோ? என்றார். அவள் பதமாகத் திமிறுகிறாள் என்று தோன்றவே. கையை விட்டு விடுகிறார். கற்கண்டு பையை டிரங்கில் வைத்துவிட்டு மூலையிலேயே É»whŸ.] வீரப்ப : எந்நேரம் நிப்பே, ஒக்காரு, சொல்றேனே, இப்படி வா என்ன வெக்கம்? என் பக்கத்திலே வந்து ஒக்கார மாட்டே கற்கண்டு? என்னே வரச் சொல்றியா; வர்றேன். கிழவர் கற்கண்டிடம் போகக் காலடி எடுத்து வைக்கிறார்! ஆனால் கிழவரின் குடுமி பின்னால் இழுக்கப்படுகிறது. கிழவர் குடுமியை விடுவிக்க முயன்று, கீழே விழுந்து, மிகுந்த தொல்லையுடன் எழுந்து, ஜன்னலின் வெளியில் பார்க்கிறார், ராமசாமி: (சீறுகிறான்) பெரியவரே, இளம் பெண்ணின் வாழ்வைக் கெடுக்க வேண்டாம். கிழவர் மலைத்து நிற்கிறார். கற்கண்டு நெஞ்சில் வியப்பும் மகிழ்ச்சியும், கண்களில் துன்பநடிப்பும் கற்கண்டு : நீங்க ரெண்டுபேரும் ஆரு? ஏன் அவரை இப்படித் துன்பப்படுத்தணும்? சீனு : தங்கச்சி, ஒன் வாழ்வில் உனக்குப் பொறுப்பு இருக்க வாணாமா? தள்ளாத கெழவராச்சே! கற்கண்டு : எப்படித் சொல்றீங்க, அவர் தள்ளாத கெழவர் இண்ணு? சீனு : தலை மயிரு. மீசை வெள்ளைக் கோரப்பட்டு; அது கூடவா தெரியிலே? கற்கண்டு : கெழவருக்கு இப்படியா இருக்கும் பல்லு? சீனு : ஐயையோ தங்கச்சி. சொந்த பல்லல்லம்மா. சைனாக் காரன் வேலை. அவுரு கண்ணே பாரம்மா. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்ட மாதிரி! இது செத்துப் போன மனிதர் ஆவி இன்றாங்களே, அதுவா இருக்குமோ என்னமோ? கற்கண்டு : கண்ணா தெரியிலே அவருக்கு? சீனு : தெரியுதே? எங்கே தெரியுதம்மா? அவரு உருவு நம்பக் கண்ணுக்குத் தெரியுது. அதைக் கொண்டு நம்ப உருவு இவருக்குத் தெரியறதா அர்த்தமா? காலைத் தூக்கி ஆகாயத்தை எட்டி எட்டி ஒதைக்கிறாரு. கற்கண்டு : என்ன, எனக்குச் சிரிப்புக் காட்டப் பாக்றிங்களா? சீனு : சிரிக்காம இருக்கிற பந்தயத்திலே ஒன்னை ஜயிக்க முடியா தம்மா. வீரப்ப : போங்கடாப்பா. போக்கிறித்தனம் பண்ணாதீங்க. சீனு : ஆமாந் தாத்தா, ஒரு சின்னப் பொண்ணே இப்படி ஏமாத் திறிங்களே, நீங்க போக்றியா? நாங்க போக்றிங்களா? கெடுக்காதிங்க தாத்தா. uhkrhÄ சீனுவாசன் இருவரும் போகிறார்கள். துரைசாமி முதலியார் பலகாரங்களோடு tU»wh®.] வீரப்ப : கற்கண்டு நீ போயி பலகாரம் சாப்பிடு போ. f‰f©L ngh»whŸ.] வீரப்ப : ஏன் காணும்! கற்கண்டு ஏமேலே உசிரெ வைச்சிருக் கிறது இப்பத்தாங்றேன் தெரிஞ்சிது. இந்தத் தெருவு ரொம்ப மோசம். இந்த ஊரிலே சிங்கார முதலியா ரிண்ணு ஒருத்தர் இருக்காரு. அவுரு நம்பளவுரு. அவரைப் பிடிக்கணும். எல்லாம் சாயும். அதான் சரி. நான் அவரைப் பார்த்துட்டு வர்ரேன். மொதல்லே செய்ய வேண்டிய வேலை அதுதான். போய் வர்ரேன். துரைசாமி : பாத்துப் போங்க பத்ரமா. வீரப்ப : அப்ப நான் என்னா அவ்வளவு கெழவனா? துரைசாமி : அதுக்குச் சொல்லல்லே. வீரப்ப : பின்னே எதுக்குச் சொன்னே? åu¥g¡ கிழவர் போகிறார். ஆனால் தூணில் முட்டிக் கொண்டு விழுந்து, நல்லபடியாக எழுந்து, வலியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் போய் ÉL»wh®.] கற்கண்டு : எங்கே அப்பா போறாரு ஒங்க மருமகப் புள்ளே? துரைசாமி : அவருக்கு வயசு என்னமோ கொஞ்சந்தாம்மா. கற்கண்டு : நல்ல பலசாலிகூட, வயித்யம் செய்தா கண்ணு நல்லாய் விடும். கடிக்காமல் இருந்த பல்லு எங்கியும் பூடாது. பித்த நரை. அவருக்கு வயசு என்னாப்பா இருக்கும்? துரைசாமி : இந்தச் சித்திரை வந்தா நாற்பது. கற்கண்டு : அப்படியா! சித்திரை வர இன்னும் எத்னி மாசம் இருக்கு? துரைசாமி : இன்னும் மூணு மாசம் இருக்கு. கற்கண்டு : அப்ப சித்திரை வரப்போறது நிச்சயம்? அது வரைக்கும் இவரு இருக்கப் போறது? துரைசாமி : என்ன நாயே! ஏன் அப்படி சொல்றே? கற்கண்டு : ஆயிசு கெட்டிதான் இன்னு சொன்னிங்களே. துரைசாமி : சாதகம் பார்த்தேன். ஆயிசு கெட்டிதான். கற்கண்டு : அப்படிண்ணா சரிதான். துரைசாமி முதலியார் பலகாரம் சாப்பிடுகிறார் 3 சிங்கார முதலியார் வீட்டுக் குறட்டில் தருமன் ஏகப்பட்ட சட்டதிட்டமாக உட்கார்ந்திருக்கிறான் விசிப்பலகை மேல். வீரப்பக் கிழவர், எதிரில் போய் நின்று வினயமாக, தாங்கதானா சிங்கார மொதலியாரு? என்கிறார். தருமன் : ஆமாங்க, என்னா சேதி? எந்த ஊரு? வீரப்ப : நானு செதம்பரங்க. வீட்லெ பொண்டுவ காலமாய்ட்டாங்க. நமக்கிண்ணு ஒருத்தி இருந்தா நல்லது. திடீருண்ணு கொஞ்சம் வெந்நீரு வைச்சிக் குடுக்கணும். ஒருத்தி இருந்தா - ஹிஹி. தருமன் : அது மாத்ரமா. நமக்கே ஒண்ணாச்சி. மேலே உழுந்து அழுவ ஒருத்தி ஓணுமே. நல்ல பொணம் இண்ணா என்ன அர்த்தம் தாலியைக் கையிலே தூக்கிக்கிணு, பூவே எடுத்து எடுத்து விசிறி எறிஞ்சி அழுவ ஒரு கட்டுக் கழுத்தி இருக்க வாணாமா? வெக்கக் கேடு. வீரப்ப : கலியாணம் நானு பண்ணிக்கப் படாதிண்ணு நம்ப பசங்க எகுத்தாளி பண்றானுங்க. தருமன் : அவனுவ ஆருண்ணென்? வீரப்ப : அதுக்கு மேலே ஒரு பொண்ணே பாத்தேனுங்க. கலியாணத்தே புதுச்சேரியிலே வைச்சி முடிச்சிப்புடலா மின்னு, தகப்பனாரு துரைசாமி முதலியாரையும் கையோடு கூட்டி வந்துட்டேன்; செட்டித்தெருவுலே வீடு பேசி எறங்கி இருக்கோம். அந்தத் தெருவுலே போக்டாப் பசங்க ஜாதிங்க. தருமன் : நீங்க என்னா மரபு? வீரப்ப : மொதலியார் தானுங்க. தருமன் : நம்ம மரபுதான். வீரப்ப : அதனாலேதான் இங்கே ... ... ... தருமன் : சரிதான், கடமைப்பட்டுட்டேன். அந்தத் தெருவு போக்கிரித் தெருவுதான். இருக்கட்டும். எல்லாம் ஏற்பாடு பண்றேன். எடுத்தேன் கவுத்தேனென்று கல்யாணத்தே முடிச்சிப்புடணும். அப்படி வைச்சிகிங்க. பன்னிப் பன்னி ஏங் கேக்றிங்க. இது ஒரு மாதிரி ஊரு. பயப்பட வேண்டியதில்லே. இங்கே நம்ப எடத்திலே ஆரும் ஒண்ணும் பண்ணிக்க முடியாது. இந்த ஒலகத்திலேயே நான் ஒரு ஜீவனுக்குத்தான் பயப்படுவேன். எங்க அண்ணனுக்கு. உள்ளதான் இருக்காரு. அவுரு ஒரு சிடுசிடுப் பேர்வழி. அவ்வளவுதான். என்னை எதிலியும் கவனிக்காதே இண்ணுவாரு. நீங்க இருக்கிங்க. ஒங்க சங்கதியைச் சொன்னீங்க. நான் கவனிக்கணுமே, ஐயோ இண்ணு நெனைக்கிறேன். இதெல்லாம் அவருக்குப் புடிக்கவே புடிக்காது. தெரிஞ்சாலும் ஒங்களியும் வோட்டுவாரு. மத்தபடி பொண்ணுங்கச் சம்மதந்தானே? வீரப்ப : உசிருங்க. தருமன் : பொண்ணு தகப்பனாருக்கு? வீரப்ப : மணவறையிலே தம் மவளே எம் பக்கத்திலே குந்த வச்சி, கண்ணாலே பாத்துட்டாப் போதும் இண்றாரு அவுரு. தருமன் : சொச்சோ! அப்படியோ? இப்ப எங்கிட்டே என்னா எதிர்பாக்றிங்க? பணந்தானே? சரி; எவ்வளவு தேவை? நூறு ரூபாய்லே எல்லாம் முடிச்சுப் புடலாமா? வீரப்ப : ஐயையோ! சொன்னதே போதுங்க... எனக்குக் காசு பணம் வாணாங்க. தருமன் : நம்ம மரபா இருக்கிற விஷயத்திலே பணமா பெரிசி. வீரப்ப : இல்லிங்க, எங்கிட்ட பணம் இருக்கு. இல்லாட்டி போனா கேக்றேனுங்க. தருமன் : நீங்க வெக்கப்படறதா தெரியுது. வீரப்ப : வெக்கம் என்னாங்க. தருமன் : நம்ப சாதி இருக்குதே ரொம்பக் கேவல நெலைக்கு வந்து விட்டது. அதனாலே ஒருத்தருக்கு ஒருத்தர் நமக்குள்ளே உதவியா நடந்து கொள்ளணும். அதுக்காகத்தான் சொல்றேன். சரி, பொண்ணுக்கு ஏதாவது நகை நட்டு ஏற்பாடு பண்ணணுமே? அப்படி இல்லாட்டிப் போனா நல்ல இருக்காது. வீரப்ப : நீங்களே செஞ்சிபுடுங்க. அததுக்கு எப்படியோ அப்படி. ஒங்க கையிலே குடுத்துடுறேன். எல்லாத்தையும் நீங்கதானே முடிச்சி வைக்கணும். தருமன் : இப்ப எங்க நகை செய்றது. வேண்டாம். நம்ப ஊட்ல இருந்து செட்டா அனுப்பி வைக்கிறேன். மெதுவாகச் செய்துகினு அப்புறம் குடுங்க நகையை அவரசமில்லே. வீரப்ப : உங்க தயவுங்க. åu¥g¡ கிழவர் தம்மிடமிருந்த சில்லறையை மாத்திரம் எடுத்துக் கொண்டு, மொத்தமாக 500 ரூபாயை பையுடன் தருமன் எதிரில் it¡»wh®] தருமன் : இங்கியா வைக்றிங்க. சரி, ஒப்புக் கொள்றேன். ஒரு விஷயமாத்ரம் சொல்றேன். அது என்னாண்ணா இந்த ஊரிலே ஒருத்தன் மாத்ரம் இருக்கான் எனக்கு விரோதி. அவங்கிட்ட ஒரு முப்பது லக்ஷ ரூபா காசி கெடந்து கூத்தாடுது. பல காரியத்லே அவனைத் தலையெடுக்க வொட்டாதே அடிச்சேன். எதுக்குச் சொல்றேன். அவன் நான் கவனிக்கிற காரியத்லே எதிரா வரக்கூடும். அந்தக் காலத்தில் நீங்க பயந்து பூடக்கூடாது. காரியத்லே பின்னிடையக் கூடாது. அதுதான் நீங்க கவனிக்க வேண்டியது. வீரப்ப : அதென்ன அப்படிச் சொல்றிங்க நம்ப மரபு! ஒரு போதும் இல்லைங்க. கிழிச்ச கோட்டெ தாண்டுவனா? தருமன் : அதாங் கேட்டேன். சரி எல்லாம் நான் பாத்துக்றேன். நீங்க எறங்கி இருக்ற வூட்டுக்கு வாங்க போவலாம். வீரப்ப : நானே அவுங்களே அழைச்சி வரேனுங்க. தருமன் : சரியல்ல. முன்னே போங்க. இதோ வர்றேன். நான் அங்கே தலையைக் காட்டிப்புட்டா எதிர்ப்பு மட்டமா இருக்கும். அதுக்காக. வீரப்ப : ஆமாங்க ஆமாங்க. தருமன் : முன்னே போங்க. வீரப்பக் கிழவர் முன்னே போகத் தருமன் பணப்பையை அடிமடியில் பத்திரப்படுத்திக்கொண்டு பின் தொடர்கிறான். 4 வீரப்பக் கிழவர் கற்கண்டு என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைகிறார். துரைசாமி முதலியாரும் கற்கண்டும் ஏன் என்று முன்வந்து நிற்கிறார்கள். வீரப்ப : ஆரு வர்ராரு பாத்திங்களா? மொதிலியார்வாள்! நம்ப காரியம் இனிமே யாராலும் தடைப்படாது. அந்தப் போக்கிரிப் பசங்களே இப்ப வரச்சொல்லுங்க. சோட்டால் அடிக்றேன். JiurhÄ முதலியாரும் கற்கண்டும் முதலியாரைத் தரிசனம் செய்கிறார்கள். பாய் கொண்டு வந்து போடுகிறார்கள். ஓடுகிறார்கள். ML»wh®fŸ.] வீரப்ப : இவுங்கதான் இந்தப் புதுச்சேரிப் பட்டணத்துக்கு ராசா மாதிரி. சிங்கார முதலியார் இண்ணா - கோவிச்சிக் காதிங்க - அழுத பிள்ளையும் வாயெ கெட்டியா மூடிக்கும் ஓடிப்போயி. தருமன் : உம், நமக்கு மேலெல்லாம் ஒலகத்திலே உண்டுங்க. ஒம்பேர் என்னாம்மா? கற்கண்டு : கற்கண்டு, (நாணிக் கொள்கிறாள்) தருமன் : அப்படியா? கற்கண்டு இவரெ கல்யாணம் பண்ணிக் கொள்வதிலே அட்டிகிட்டி ஒண்ணுமில்லியே? கற்கண்டு : ஒங்களுக்குப் பிரியமிருந்தா எனக்குப் பிரியந்தானுங்க. தருமன் : நீங்கதானுங்களா துரைசாமி முதலியாரு? கல்யாணத்தே முடிச்சுப்புட வேண்டியதுதானே? துரைசாமி : சீக்கிரம் முடிச்சிப்புட்டா தேவலை. தருமன் : ஒண்ணு பண்ணுங்க. வீரப்ப முதலியாரு மாப்பிள்ளை யாவும் இருக்காரு. இங்கே சிலருக்குப் புடிக்காதவராயும் இருக்காரு. முதலியார் தெருவுக்கு மேலண்டைப் பக்கத்தில் ஒரு வூடு காலியா இருக்குது இண்ணு கேள்விப்பட்டேன். முன்னே அதெப் போயி முடிச்சி வீரப்ப மொதலியாரு அதிலே இருந்துடணும். ஒடனே செய்யுங்க இதெ. நாளைக்கி முகூர்த்த நாளு. முடிச்சிட வேண்டியதான். வேறே பேச்சில்லே. துரைசாமி : நல்லதுங்க. வீரப்ப : அதுக்குள் எப்படி முடியும்? தருமன் : எல்லாம் செட்டா நான் அனுப்பறேன். அனுப்புறவன் நானில்லை? நாளெ வளத்தப்படாது, வீரப்ப : அப்படீண்ணா சரி, துரைசாமி மொதலியாரே எழுந் திரும். நானும் வர்ரேன். தருமன் : நீ நான் போகணும், ஆக வேண்டிய காரியம் அதிகம் இருக்குது. தருமன் அவசரமாகச் சென்று, வீதியின் முனையில் நின்று, இருகிழங்களும் வெளியில் போகிறார்களா என்று கவனிக்கிறான். இருவரும் போகிறார்கள். கற்கண்டைத் தனியாகச் சந்திக்க வீட்டை நோக்கி வருகிறான். வழியில் ராமசாமியும் சீனுவாசனும் நிற்கின்றார்கள்) ராமசாமி : சிங்கார முதலியாரா? தருமன் : ஆம், என்னா சேதி? ராமசாமி : வாங்களேன். தருமன் : இல்லை அவசரமாகப் போகணும். ராமசாமி : என்னாங்க சிங்கார முதலியாரே, ஒரு சேதி கேட்டுப் போகப்படாதா? தருமன் : ஏன்? என்னா சேதியப்பா? jUk‹ É»wh‹] ராமசாமி : அந்தக் கெழவனுக்கா அந்தச் சின்னப் பொண்ணே கண்ணாலம் பண்ணிவைக்கப் போறிங்க. தருமன் : அதுபத்தி ஒங்களுக்கு என்னா கவலை? உம்? ராமசாமி : அப்படிங்களா? ஒங்களுக்கு என்னாங்க கவலை? ஏதாவது தரகோ? தருமன் : மரியாதையாகப் பேசுங்க. சீனு : மரியாதையாக பேசுங்க. மரியாதையாகப் பேசு ராமசாமி. தருமன் : நான் யார் தெரியுமல்ல? சீனு : அவரு யாருன்னு தெரியுமல்ல ராமசாமி ஒனக்கு? ராமசாமி சிரிக்கிறான் விழுந்து; சீனுவும் சிரிக்கிறான் ராமசாமி : ஏண்டா! சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடுகின்றவன் இவன் இண்ணு, எங்களுக்குமாடா தெரியாது, காமாட்டி? தருமன் : தெரியுங்களா என்னை? தெரிஞ்சுதான் இருக்குதுங்க ஒங்களுக்கு! மன்னிக்கணுங்க. சீனு : நீ அந்தப் பொண்ணே கட்டிக்கொண்டா கூடச் சம்மதம் எங்களுக்கு, தள்ளாத கெழவனுக்கு வேண்டாம். தருமன் : ஒங்களுக்குத் திருப்தியா முடிச்சுப்புடறேன் ஒரு மாதிரி! ஒங்க ஒதவி இருக்கணும் சாமி. ராமசாமி : சாமியாவது பூதமாவது. முயற்சி எடுத்துப்பாரு. எங்க ஒத்தாசை நிறைய இருக்கும் ஒனக்கு. போறியா? அப்பப்ப வந்து சொல்லு. தருமன் : சரிங்க. தருமன் கற்கண்டின் எதிரில் போகிறான் கற்கண்டு : வாங்க. தருமன் : அப்பா எங்கே? கற்கண்டு : ரெண்டு பேருந்தான் வூடு பார்க்கப் போனாங்க. தருமன் : கற்கண்டு, ஒன்னே தனியாக்கண்டு ஓ மனசை அறியணும் இண்ற எண்ணம். அந்தப் பெரியவரை நீ கட்டிக்கச் சம்மதிச்சதுக்கு என்னா காரணம்? கற்கண்டு : அதுவா எங்கப்பா அவருகிட்டே 300 ரூபா கடன் பட்டு இருக்காங்க. அதுக்காக என்னெ தொந்தரவு செய்றா ருங்க. அந்தக் கெழவரெ கட்டிக்க சொல்லி. தருமன் : நானு நெனைச்சேன்! அப்படிண்ணா ஒனக்குப் பிடிக்கல்லே? கற்கண்டு : ஆனா, எங்கப்பா தனிக்கட்டே, அவுரு மனசெ திருப்திப் படுத்தணும் நானு. தருமன் : சவுகரியமா வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக் கிறதிலே தடையில்லே. கற்கண்டு : ஒங்களாலேதான் முடியுங்க. அவுரும் கெழவரா இருக்கப் படாதுங்க. தருமன் : நல்லாச்சொன்னே, துள்ளுகாளை என்னாட்டம் இருப்பான் அசல். கற்கண்டு : சரிங்க தருமன் : நல்ல சம்பாதனைக்காரன். கற்கண்டு : சரிதானுங்க. தருமன் : ஒங்கப்பா அந்தக் கெழவருக்குக் குடுக்க வேண்டிய 300 ரூபாயை அந்தப் புள்ளையாண்டான் குடுத்துப்புடுவான். கற்கண்டு : அதாங்க வேண்டியதுங்க. தருமன் : இதே மனசிலே வை, கட்டவுத்து உட்டுடாதே காரியம் கெட்டுடும். கற்கண்டு : உறுதிங்க. தருமன் : உம்; பெண் புத்தி பின்புத்தி இண்ணுவாங்க. நான் சொல்றெ ஆளெ கண்ணாலம் பண்ணிக்கிறதாக. கை போடு பார்க்கலாம். கற்கண்டு : (பரிதாபமாக) அவரெ ஒருதரம் கண்ணாலே பார்த்தாத் தேவலைங்க. தருமன் : என்னெ பார்த்தா அவனெ பாக்க வேண்டியதில்லே, கற்கண்டு. கற்கண்டு : கெழவன் இல்லிங்களே? ஒங்களாட்டம் இருந்தா சரிதானுங்க. தருமன் : சரி. கற்கண்டு : பெரிய அந்ததுக்காரராய் இருக்கப்படாதுங்க. தருமன் : அப்படியா? சரி; சாதாரண அந்தீசுதான். கற்கண்டு : பிச்சை எடுக்கிறவராயிருந்தாக்கூடப் பாதகம் இல்லிங்க. கெழவராயில்லாமே கண்ணுக்குப் புடிச்சி இருந்தாப் போதுங்க. 300 ரூபா கெழவர்கிட்ட எறிஞ்சிப்புடணுங்க. கையை நீட்டுங்க. ஐகயை நீட்டுகிறான் தருமன் கற்கண்டு : ஐயோ, நீங்க ஏழையா இருக்கப்படாதுங்களா? தருமன் : ஏழையை நீ ஏன் விரும்புகிறாய்? கற்கண்டு : பணக்காரர் என்னெ ஏன் விரும்புறாரு? விரும்பினாலும் பின்னாலே? ஏழையாயிருந்தா அப்படி யில்லிங்க. என் உடம்பு உண்டு. பாடுபடத் தைரியம் உண்டுங்க. தருமன் : அப்படியா! ஐயோ! பெண்ணே கற்கண்டு. நான் சொல்ற அந்தப் பையன் சனங்களுக்கு சிறுத்தொண்டப் பத்தன் கதை சொல்லி நல்ல வெதமாப் பொழைக்கிறான். இனிமே அந்த வேலையை உட்டுடச் சொல்றேன், வேறே வேலை பார்த்துக் குடுக்கறேன். அவன் கையிலே 500 ரூபா ரொக்கம் வைச்சிருக்கிறான். என்ன சொல்றே? கற்கண்டு : அவுரு எப்படி இருப்பாருங்க? தருமன் : என்னாட்டமே. கற்கண்டு : சத்தியாமா அவுரே கட்டிக்றேன். அவுருசிறுத்தொண்டப் பந்தன் கதை சொல்ற வேலையை உட வேண்டிய தில்லிங்க. அவுரு கெழவரில்லையே? தருமன் : சத்யமா இல்லை. கற்கண்டு : கண்ணுக்கு புடிக்குங்களா? தருமன் : என்னெ ஒனக்குப் புடிக்குதா? கற்கண்டு : புடிக்குதுங்களே. தருமன் : என்போலவே இருப்பான் இண்றேனே. ஆனா நெலமை நான் சொன்னதுதான்! கற்கண்டு : ஐயா, என் தாய் மேலே ஆணை, அந்த நெலமை எனக்குச் சம்மதம். தருமன் : அப்படியா, கைபோடு. கற்கண்டு : ஒருதரம் அவரெ என் கண்ணாலே பாத்திட்டாப் போதும். தருமன் : நாந்தாங் கற்கண்டு. கற்கண்டு : ஆ? நீங்க பணக்காரராச்சே! தருமன் : ஆர் சொன்னதிண்ணேன்? கற்கண்டு : கெழவர் சொன்னாரே, என்னமோ மொதிலியாரிண்ணு. தருமன் : சிங்கார மொதிலியார் தாங்கதானா இண்ணாரு. ஆமாங்க இண்ணேன். நான் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடறவன் தானே. மனசிலே போட்டு வை. சம்மதமா கற்கண்டு? தருமன் அவளெதிரில் கையை நீட்டுகிறான். அவள்கை போட்டுக் கொடுத்ததோடு, அந்தக் கைக்கு முத்தங்கொடுக்கிறாள். கற்கண்டு : என் மைசூரு ராஜாவே! மாணிக்கக் கூஜாவே! என்னெ கண்ணாலம் பண்ணிக்கிறிங்களா? தருமன் : அடி,செவ்வாழைப் பழச்சீப்பே! சீமை எலந்தந் தோப்பே! நான் சொல்றபடி கேக்கணும் நீ. கற்கண்டு : தங்கத்து வார்ப்படமும் தானாக வந்து நிண்ணு. கோடு கிழிச்சுட்டா கொஞ்சோண்டு தாண்டுவனா? தருமன் : கற்கண்டு, இப்ப எனக்கு என்ன மகிழ்ச்சி தெரியுமா? கற்கண்டு : எனக்கு மாத்ரம் கசக்குதிண்ணுநெனைக்றிங்களா? மாம்பழத் தட்டு வா இண்ணு கூப்பிட்டாப்லே, நஞ்ச பெலாச்சொளே நாக்லே வந்துகுதிச்சாப்லே, தேனான கொளத்திலே திட்டுண்ணு விழுந்தாப்லே, சோன மழையும் பவுனாச்சொரிஞ் சாப்லே, கொடலை மல்லிகைப்பூகொட்டி முடிச்சாப்லே, வடம்புடிச்ச தேரு வாசல்லே வந்தாப்லே அப்படியே துள்ளுது மகிழ்ச்சி தெரியுங்களா? தருமன் : கற்கண்டு, ஒன் அழவுலே நானு அட்டையாட்டம் ஒட்டிக்கப்படாது இதுங்காட்டியும், இண்ணைய வரைக்கும். தெபாரு, சிரிக்காதே சுருட்டி - மடக்கிகிணு இங்கே உழுந்துட வைக்காதே சொல்லிபுட்டேன், ஒங் கண்லே காந்தமா இருக்கும், போடி. கற்கண்டு : ஏங்க அப்டி சிடுசிடுண்ணு இருக்கீங்க? தருமன் : காரியம் பெரிசி! கொறையும் முடிக்க வாணாமா? கற்கண்டு : அதுக்குச் சொல்றிங்களா. பறிச்சித் திங்கறாப்பலே சிரிச்ச மொகம் இப்படி மாறிச்சே என்னடாப்பாண்ணு பாத்தேன். தருமன் : இப்ப ஒரே ஆபத்து. கற்கண்டு : என்னா? தருமன் : நாம்ப ரெண்டுபேரும் இப்பக் கொஞ்ச நேரம் பிரியணுமே. கற்கண்டு : ஆமாங்க. என்னா பண்றதுங்க. ஒடனே. வந்துடுங்க. தருமன் : உசுரே ஒரு கையாலே புடிச்சிகினு இரு; என் பச்செ கிளியில்லே! கொஞ்ச நேரம். கற்கண்டு : வர்ரது நிச்சயமா இருந்தா, நான் சாவாமே இருக்றது நிச்சயந்தான். தருமன் : நிச்சயம் நூறு பங்கிலியும் கற்கண்டு : அப்படிண்ணா துன்பமில்லை. ஓ! தருமன் : வரட்டுமா? கற்கண்டு : போறிங்க? தருமன் : வந்துடுவாங்களே. கற்கண்டு : வந்துடுவாங்களா? தருமன் : உம், வர்ரேன். கற்கண்டு : போறிங்க? தருமன் : ஆகவேண்டியது ரொம்ப இருக்குதே; நாளை அதி காலையிலே கலியாணமாச்சே! கற்கண்டு : கவனமாய் பாருங்க. இங்கியே இருந்திட்டிங்களே. தருமன் : போய் வர்ரேன். கற்கண்டு : போறிங்க, ஒண்ணு கேக்க ஆசையாயிருக்கு. தருமன் : என்ன அது? கற்கண்டு : நீங்க திட்டாதிங்க. தருமன் : நானா. சே. சொல்லு சும்மா. கற்கண்டு : ஒங்க பேரு சொன்னா தருமமா இருக்கும். தருமன் : அதுதான் பேரு. நீதான் சொல்லிட்டியே தருமன் இண்ணு. கற்கண்டு : ஐயையோ, பேரேச் சொல்லிப்புட்டேனே. தருமன் : தெரியாதிருக்கும்போது ஆம்படையாம் பேரே சொன்னா குத்தமில்லே கற்கண்டு. நான் வர்றேன். நாழி ஆவுது. கற்கண்டு : (வருத்தமாக) நான் கண்ணை மூடிக்கிறேன். சொல்லாமே பூடுங்க நீங்க. பூட்டிங்களா! (உரத்து) கண்ணை மூடிக் கொள்ளுகிறாள். தருமன் அவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே போய் விடுகிறான் தருமன் : பூட்டேன். கற்கண்டு : (தூரமாகச் சென்றவனை) இப்பவே வர்ரிங்களா? தருமன் : (உரத்து) வர்றேன். 5 தருமன் சிங்கார முதலியார் வீட்டில் யோசனை யோடு உட்கார்ந்திருக்கிறான். சின்னான் சிறுத் தொண்டன் கதை பாடுவதற்கு முன் அது சம்பந்த மான வசனம் பேசுகிறான். இச்சமயம் புட்பரதனும் குறட்டில் வந்து நிற்கிறான். சின்னான் : ஆத்தி மரத்தடியிலே சாமி குந்தியிருந்தாரா? அங்கே சிறுத்தொண்டப் பத்தனாகப்பட்டவன் அவுரு காலில் உழுந்தானா? உழுந்து அழைச்சானா? அதுக்குச் சாமி ஒங்க ஊட்டிலே என்ன கறிடா இண்ணு கேட்டாரா? பூசினிக்கா பொடலங்கா அந்தக்கா இந்தக்கா இண்ணு சிறுத்தொண்டப் பத்தன் சொன்னானா? அதுக்குச் சொல்றாரு சாமி. பூசினிக்காய் ஐயரொட தொப்பை யல்லோ பத்தா - அது தொப்பை யல்லோ பத்தா பூசனிக்கா கறி எனக்கு வேண்டா மென்றார் கேட்பவர் : ஓகோ, சிவனுடைய தொப்பை யாட்டம் பூசனிக்கா இருக்குது; அதுக்காக, அது வாணாம் திண்ணாப் பாவம் இண்றாரா? கேட்பவர்1 : சொல்றவரு ஆரு? கேட்பவர்2: சொல்றவரும் அவருதான். கேட்பவர்1 : தெருவிளையாடால் இதெல்லாம். சின்னான் : கத்திரிக்காய் ஐயரொட பூசை மணியல்லோ பத்தா - அது பூசை மணியல்லோ பத்தா கத்திரிக்காக் கறி எனக்கு வேண்டாம் என்றார். முருங்கக்கா ஐயரொட விபூதி யல்லோ பத்தா - அது வீபூதியல்லோ பத்தா முருங்கக்காக் கறி எனக்கு வேண்டாம் என்றார். பாவக்கா ஐயரோட குண்டல மல்லோ பத்தா - அது குண்டல மல்லோ பத்தா பாவக்காக் கறிஎனக்கு வேண்டாம் என்றார். இந்தக் கறிகள் எல்லாம் எனக்கு வேண்டாம் பத்தா - அது எனக்கு வேண்டாம் பத்தா எடுத்துரைப்பேன் அதைக் கேளும் பத்தா. மனிதக் கறி எனக்கு வேணுமடா பத்தா - அது வேணுமடா பத்தா பிள்ளைக் கறி எனக்கு வேணுமடா. புட்ப : (ஆச்சரியத்தோடு) ஐயையோ! பிள்ளையையா சமைக்கிறது? தருமன் : உம். ஆமாம் ஒன்னாட்டம் பிள்ளையை. பள்ளிக்குடப் பிள்ளையாய் இருக்க வேணும் பத்தா - அது இருக்க வேணும் பத்தா ஒரு தாய்க்கொரு மகனாய் இருக்கணுண்டா. தாயார் மடியில் அமுக்கிப் புடிக்கணுண்டா பத்தா - நல்லாப் புடிக்கணுண்டா பத்தா தகப்பனார் கத்தியாலே அறுக்கணுண்டா. புட்ப : ஐயையோ! அப்படியே செஞ்சாங்களா? தருமன் : ஓ! அதே மாதிரிப் புள்ளெய அலற அலற அறுத்து ஆக்கினாங்க. போட்டாங்க. புட்பரதன் எண்ணம் குழம்புகிறது. விழிக்கிறான். மெதுவாக உள்ளே போய்விடுகிறான். வேலை இழந்த காவற்காரக் குப்பன் வருகிறான் வெகு சோர்வுடன்) தருமன் : குப்பர் வருகிறாரோ குப்பர். குப்பன் : என் கஞ்சியைக் கெடுத்துப்புட்டியே? என் அடி வயிற்றில் அடிச்சிப்புட்டியே? ஒன்னேதான் கேட்கலாம் இண்ணு வந்தேன். ஒனக்கு வேற பொழப்பு உண்டு. எனக்கு அப்படி இல்லே. நீ இப்ப நெனச்சா என் துன்பத்தை நீக்கிட முடியும் நான் புள்ளெ! குட்டிக்காரன். என்னா சொல்றே? தருமன் : வந்தியா வழிக்கு? ஒன் முறுக்கு திலுப்பு எல்லாம் ஏங்கிட்டே காட்டமாட்டியே? குப்பன் : ஊஹும். தருமன் : சரி, ஒரு பக்கம் போயிரு. எசமான் வெளியிலே வந்து நிப்பாரு. ஓடியாந்து காலிலே உழு. கெஞ்சு. அழுவு நானும் ஒனக்கு சிபாரிசு செய்றேன். தெரியுமா? குப்பன் : தெரியும். தருமன் : தெரியுங்க இண்ணுடா. குப்பன் : தெரியுங்க. தருமன் : இனி ஒரு தடவை என்னைப்பற்றி அசாக்ரதையா இருப்பியா? குப்பன் : இல்லே. தருமன் : இல்லிங்க இண்ணுடா. குப்பன் : இல்லிங்க. தருமன் : போ. குப்பன் சந்து முனையில் மறைவாக நிற்கிறான் வீரப்பக் கிழவர் தருமனை நோக்கி வருவதைத் தருமன் பார்த்து விடுகிறான். தருமனுக்கு ஓர் கற்பனை உதிக்கிறது. வீட்டின் வாசற்படிக்குப் புறமாக மறைவில் கணக்கப் பிள்ளையிருப்பது போலவும். தருமன் அந்தக் கணக்கப் பிள்ளையோடு பேசுவது போலவும் பிறர் நினைக்கும்படி ngR»wh‹.] கணக்கப்பிள்ளை வேலை பார்ப்பது இப்படியாண் ணேன். மார்வாடி கைமாத்தாக - சீட்டா நாட்டா பதிமூவா யிர ரூபா வாங்கிப் போனான். அதே கேக்க மறந்துட லாமா? ஒண்ணு. காட்டுக் குத்தகை வகையில் வேலுக் கவுண்டர் கணக்கு ஐயாயிரம் தவுசல் படுகிறது. அதே ஒடனே எடுத்தெழுதி இதோ இருக்குதடா மடையா கணக்கு இண்ணு அவன் மூஞ்சிலே எறியறதில்லே? என்னா? நீங்க சொல்லலையா? எல்லாத்தையுமா நான் சொல்லணும்? நல்லா இருக்கு. (இதற்குள் வீரப்ப முதலியார் சமீபத்தில் வந்துவிடுகிறார்.) சரி போய் வேலையே பாரும். வாங்க முதலியாரே. வீரப்ப : வீடு அமத்திச் சமையலுக்கும் ஏற்பாடு பண்ணிட் டேனுங்க. தருமன் : பேஷ். நல்லா செய்திங்க. புஷ்பப் பல்லக்குக்குச் சொல்லிப்புட்டேன். பல்லக்கு ஒங்க ஊட்டுக்கு வரும். அங்கேயே ஜோடிப்பு நடக்கும். அந்த நேரத்துக்கு முதிப்பா பொண்ணு வூட்டுக்கு அனுப்ப வேண்டியது. ஒடனே பொண்ணு வீட்டுலே இருந்து ஊர்கோலமாகக் கௌம்பி முத்தால் பேட்டைச் சத்திரத்துக்குப் போறது. விடியற்காலை முகூர்த்தம். வேண்டிய ஆள்கள் சாமான்கள் அல்லாம் சித்தமாயிட்டுது. ஜவுளி தினுசு மாத்ரந்தான் எடுக்கணும். கேட்டிங்களா சேதியை! அந்தப் பசங்க ரெண்டு பேரும், என் விரோதி இருக்கான் இண்ணெனே அவன் ஆட்கள்தான். பயம் ஒண்ணு மில்லே. இருந்தாலும் நாம்ப முன்னேற்பாடா இருக்கணும் பாருங்க? நீங்க மாத்ரம் வெளியிலே வரவாணாம். அந்த நேரத்திலே நானு வந்து கூப்பிடுவேன். வீரப்ப : சரிதானுங்க. அப்படியே. நான் போகட்டுமா? அதென்னமோ அல்லாம் ஒங்க பொறுப்பு. தருமன் : அதான் பாரத்தே என் தலையிலே போட்டுட்டீங்களே. சரிபோய் வாங்க. வெளியிலே மாத்ரம் நீங்க வரவேண்டாம். வீரப்ப : அதென்னாங்க அதை அவ்வளவு அழுத்தமா சொல்றீங்க? நெலமை அவ்வளவு மோசமாவா இருக்குது. தருமன் : இல்லை வேற ஒருத்தனுக்குக் கற்கண்டைத் தூக்கிப் போயிக் கலியாணம் பண்ணிப்புடறதுண்ணு எதிரியின் யோசனை. வீரப்ப : அந்தப் பசங்க அப்பவே அதான்களே சொன்னானுங்க. தருமன் : பாத்திங்களா. ï¢rka¤âš வெளியில் போயிருந்த சிங்கார முதலியார் வந்துவிடுகிறார். தருமன் விழிக்கிறான். முன்பு தருமன் எசமானிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியிற் போனது பற்றி எசமான் பேசப் போகும் பேச்சுக்களால், தருமன் கேவலம் காவற்காரன் என்ற உண்மை வீரப்ப முதலியாருக்குத் தெரிந்துவிட்டால் ஆபத்து. வீரப்ப முதலியாரை நீங்கள் சீக்கிரம் போய்விடுங்கள் என்று சொல்லி அனுப்புவதும் சாத்தியமில்லை. அவர் குறட்டைவிட்டுப் போகக் கால் மணிநேரம் செல்லும். ஆயினும் தருமனுக்கு மின்னல் போல் ஒரு யோசனை நெஞ்சில் தோன்றியது. எசமான் தன்னை நோக்கி வாய் திறக்குமுன், தானே அவரை neh¡».] தருமன் : நாம் பழைய வேலைக்காரனை நீக்கியதால் அவன் அதிகத் தொந்தரவு படுவதாகத்தான் தோணுது. சிங்கார : சரி; நீ முன்னே எங்கே போனே? தருமன் : இங்கில்லே மெய்தான். சிங்கார : எதற்காக ஒன்னை வைத்தது? வெளியிலிருந்து வருகிறவர்கள் விசாரித்து உள்ளே விட; உள்ளே கூப்பிட்ட கொரலுக்கு ஏண்ணு கேக்க. நீ பூட்டா என்ன பண்றது? தருமன் : அது முட்டாள் தனமில்லிங்களா? சிங்கார : பிச்சை எடுத்த நாயே! ஒன்னே கொண்டாந்து சேத்ததுக்கா? தருமன் : அக்றமமில்லிங்களா? சிங்கார : அவுசரமிருந்தா சொல்லிட்டுப் போறது? தருமன் : ஓ நல்லா சிங்கார : அயோக்கியப் பையா. கோபமாகச் சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைந்த வுடனே, அவர் வார்த்தையைத் தொடர்ந்தாற்போல் தருமனும், ஈனப் பையன் என்று வேறொருவனைக் கூறியது போல் கூறிவிட்டு, வீரப்ப முதலியாரை நோக்கி எவனெ வைச்சாலும் அயோக்கியத்தனந்தான் பண்றானுவ; பாருங்க அண்ணனுக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கலே. ஒருத்தனையும் அண்ணன் இப்படியெல்லாம் திட்ட மாட்டாரு. அந்தப் பையன் அப்டி நடந்து கொண்டா னுங்க. நீக்கிவிட்டு வேறெ ஆளெ வைச்சுடணும் என்று கூறி, (சிங்கார முதலியார் பேசிய அனைத்தும் தன்னை யல்ல என்று வீரப்பக் கிழவர் நம்பும்படி செய்துவிடுகிறான்.) வீரப்ப : ஓகோ வேறே ஆளப்பத்தி கோவிச்சிக்கினாரோ? சரி தான். தங்கள் அண்ணார் கொஞ்சம் கோவக்காரர்தான் போலிருக்கு. தருமன் : இந்த ஒலகத்திலே எங்கிட்டதான் மரியாதை, போங்க ளேன். வீரப்பக்கிழவர் விடைபெற்றுக் கொண்டு போய் விடுகிறார். தருமனும் ஆபத்தில் தப்பினோம் என்று மூச்சு விடுகிறான். சிறிது நேரம் சென்று வழக்கம்போல் சிங்கார முதலியார் உடைகளைக் களைந்து, காவித்துண்டு. வெள்ளை வேட்டி, கையில் விசிறியுடன் வெளியில் வருகிறார்) சந்து முனையில் காத்திருந்த பழைய காவல் குப்பன் ஓடிவந்து காலில் விழுகிறான் குப்பன் : வேலையை விட்டு நீக்கிய நாளிலிருந்து பட்டினிங்க. புள்ளெ குட்டிக்காரனுங்க. நீங்கதானுங்க காப்பாத்தனும். சிங்கார : ஒன்னை அனுப்பிப்புட்டு இந்தப் பையனே வைச்சேன். இவனும் அப்படித்தான் செய்றான். தருமன் : எனக்கு பொழப்பு இருக்குங்க. என் வேலையெ பழயபடி இவனுக்கே கொடுத்துடுங்க. சிங்கார : சரி. அப்ப ஒப்புக்கொள்ளு குப்பா. முதலியார் உள்ளே போனதும், தருமன் தனது வெள்ளை வேட்டி, காவித்துண்டு, விசிறி இவைகளைக் குப்பனிடம் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். குப்பன் அந்த உடைகளை உடுத்திக்கொண்டு விசிறியையும் கையில் பிடித்தவண்ணம் விசிப் பலகையை mil»wh‹.] 6 துரைசாமி முதலியாரும் கற்கண்டும் தருமன் அனுப்பிய கூறைப் புடவை பன்னிரண்டாறு சில்லறை நகைகள் ரவிக்கை முதலியவைகளைப் பற்றிப் பேசிப் புகழ்ந்திருக்கிறார்கள். அச்சமயம் சின்னான் தன்னுடன் வந்த பெண் பிள்ளையைக் காட்டி, முதலியார் வீட்டம்மா என்கிறான். துரைசாமி முதலியார் திடுக்கிட்டெழுந்து சிறிது வீட்டின் வெளிப்புறத்தில் ஒதுங்கி விடுகிறார். வந்த பெண் பிள்ளை ஒர் ஓரமாகச் சென்று, கற்கண்டை அழைத்துக்கொண்டு, அந்த வீட்டை அடைகிறாள் அந்த அம்மாவுக்கும் கற்கண்டுக்கும் நடக்கும் பேச்சுக்களை ஆண் பிள்ளையாகிய துரைசாமி முதலியார் எப்படிச் சமீபத்தில் இருந்து கேட்க முடியும்? கற்கண்டு : (தன் தகப்பனிடம் வந்து) அப்பா, ஒங்களே முத்தால் பேட்டை சத்ரத்துக்கு, சின்னான் கூடப் போயி ஆக வேண்டியதெப் பார்க்கச் சொன்னங்க. அம்மா நகையெல்லாம் கொண்டாந்திருக்காங்க. மத்தவங்களும் இப்ப வரப் போறாங்களாம். நீங்க இருக்றிங்க இண்ணு அம்மா வெக்கப்படுறாங்க. துரைசாமி : சரிதான் சின்னான் வரியா! இருவரும் போய்விடுகிறார்கள் கற்கண்டு : (அம்மாவை நோக்கிச் சிரித்துக் கொண்டு) ஆவ வேண்டியதென்னா மேற்கொண்டு? அம்மா : (அம்மாவாக வந்த தருமன்) நீயும் நானுந்தான் கற்கண்டு! கற்கண்டு : ஏங்க இம்மா நேரம்? கோவில்லே பெருமாளையாவது பார்த்த கண்ணு மறந்து போவும், ஒங்களெக் கண்டதிலே இருந்து இந்தப் பாழாபோன மனதும் கண்ணும் மறக்குதா ஒங்களே? கலியாணம் நடந்துடுமா? தருமன் : நாளைக்கு இந்நேரம் எனக்கு நீ, உனக்கு நானு! அப்பட்டம் அலுவாத் துண்டுதானே? கற்கண்டு : அள்ளி அள்ளி முழுங்க வேண்டியதுதானோ; ஐயையோ இந்த ராத்திரி போயி? அப்பறம் ஒரு ராத்ரி வரவேணுமா? தருமன் : ஏன் அப்படி? இதோ இந்த ராத்திரி போச்சோ போவு லியோ கலியாணந் தீர்ந்தது. ஆடேன்! பாடேன்! என் முதுவுமேலே ஏறிக்கேன்? அல்லாட்டி மாட்டு வண்டி கட்டிக்கேன்! ஏறிக்கேன் என்னோட! உடனே சவாரி ஆலஞ்சாலை காத்லே! வாயேன் திரும்பி! சாப்பிடேன் என்னோட ஒரே எலையிலே! கற்கண்டு: அப்றம்? தருமன் : புட்டுக்கேன் லட்டே! கற்கண்டு: அப்றம்? தருமன் : கொட்டிக்கேன் வாயிலே! கற்கண்டு: அப்றம்? தருமன் : நெட்டிக்கேன் பாலே! கற்கண்டு: அப்றம்! தருமன் : வெட்டிக்கேன் பாக்கே! கற்கண்டு: அப்றம்? தருமன் : தூக்கேன் ஏலக்கா, கிராம்பு, ஜாதிக்கா, ஜாதி பத்ரி, தோக்கேன் கம கம கம கமண்ணு. ஆரு ஒன்னே கேக்றவுங்க இண்ணேன். கற்கண்டு: அப்படியா சேதி! ஐயையோ! கற்கண்டு தருமன்மேல் விழுந்து சிரிக்கிறாள் இப்ப எங்கப்பா திரும்பி வந்துட்டா? தருமன் : யாரு! ஏன் வர்ராரு. சின்னான் கொடுக்ற மருந்திலே. முத்தால் பேட்டைச் சத்ரத்து மூலையிலே முட்டை இடற கோழிதான் ஒங்கப்பா. ஆனா கற்கண்டு! நானு அவசரமாப் போவணும். ஆவ வேண்டிய காரியத்தெ பார்க்கவாணாம்? என் கண்ணில்லே. எனக்கு உத்தரவு குடு. கற்கண்டு: போறிங்க? தருமன் : ஆமாம். கற்கண்டு: செய்ங்க. அவள் ஆசையோடு பார்க்கிறாள் அவன் போவதை 7 ஆயாசமான குரலில் தருமன் துரைசாமி முதலியாரிடம் போகிறான். தருமன் : அந்தப் பசங்க ரொம்ப அயோக்யத்தனத்திலே ஆரம்பிச் சுட்டானுவ. துரைசாமி : என்னா! என்னாங்க? தருமன் : நானு என்னா சொல்றது போங்க. துரைசாமி : அப்படீங்களா? தருமன் : வீரப்பக் கிழவருக்குத் தவிர வேறு யாருக்காவது கற்கண்டைக் கலியாணம் பண்ணிப்புடக் கூடாதா? துரைசாமி : முடியவே முடியாதுங்க. அப்படி நான் தவறி நடந்துப் புட்டு உசுரோட இருக்கமாட்டேன். தருமன் : அதிகக் கஷ்டமிருக்குது கிழவருக்கு முடிக்கிற விஷயத் திலே. துரைசாமி : உசுரே போகட்டுங்க; நான் அவருக்கே குடுத்தாகணும். தருமன் : பொண்ணுக்குக் கெழவர் விஷயத்திலே இஷ்டம் இல்லாட்டி? துரைசாமி : கற்கண்டுக்கா? தருமன் : உம் துரைசாமி : இந்தச் சத்ரத்துக் கெணத்லே உழுந்து ஒழியறது. அவ்வளவுதானுங்க. தருமன் : பாவம் ஒங்க சபதம் நெறவேறணும். பாப்பம். கெழவரு வயித்தால போவுதிண்ணாரு. துரைசாமி : எப்போ? தருமன் : சாயந்திரம், டாக்டரை அழைச்சி உட்டுட்டுத் தானே நான் அந்தண்டை போனேன். சரி, நான் போய் வர்ரேன், ஒங்களுக்கு வண்டியும் தக்க ஆளும் அனுப்புறேன். அல்லாட்டி நான் வர்றேன். அது குறுக்கே நீங்க வெளியிலே வரவாணாம், கலியாணத்தெ பொண்ணு வூட்லே செட்டித் தெருவுலியேதான் வச்சிக்க வேண்டியதா வரும்போல இருக்குது. இருங்க. துரைசாமி : ஒங்களுக்கு ரொம்ப சிரமம். தருமன் : இருக்கட்டுங்க. அதெப் பார்த்தா முடியுதுங்களா? வர்ரேன். mtrukhf¥ போகிறான் தருமன்; சிறிது தூரம் போனவுடன் சின்னான் எதிரில் tU»wh‹.] சின்னான் : துரைசாமி மொதிலியாரை இங்கே உட்டுட்டு அங்கே வந்தேன், ஒங்களே காணோம், ஓடியாரேன். தருமன் : சரி என்னா மணி? சின்னான் : பத்துக்கு மேலே ஆச்சி. தருமன் : ஒண்ணு பண்ணு. நான் நேரே வீரப்பக் கெழவர் கிட்ட ஒக்காந்து பேசியிருப்பேன். அந்தச் சமயம், அந்தத் தெருவுலே கடாம் படாண்ணு கல்லு வந்த உழணும். சின்னான் : எங்கே உழணும்? தருமன் : தெருவுலே இருக்கிற பல ஊட்டு மேலியும், என்னா சொல்றே? சின்னான் : சரி, அடுத்த தெருவுலே இருந்து, பத்து மலைப் பிஞ்சியை அணுப்றேன். அப்றம் என்னா? தருமன் : அதான் போ! á‹dh‹ XL»wh‹] 8 தருமன் வீரப்ப முதலியார் வீட்டைத் தட்டுகிறான். தருமன் : நாந்தான்! கதவைத் திறங்க? வீரப்ப : நாந்தான் இண்ணா? ஆரு? தருமன் : நான்தான் சிங்கார முதலியார். சின்னான் : வாங்க வாங்க. fjî âw¡f¥gL»wJ] வீரப்ப : நீங்க சொன்னதிலிருந்து கதவைப் பூட்டியே வச்சுடறது. தருமன் : அதுதான் சரி! விஷயம் அதிக மொம்மரமா பூட்டுதுங்க. வீரப்ப : என்னா? தருமன் : ஒங்களே தூக்கிப் போய்டறது. அல்லாட்டி அடிச்சி புடறது. பொண்ணே தூக்கிப் போயி வேறு ஆளுக்குக் கட்டிப்புடறது. வீரப்ப : அதானுங்க அவுங்க தீர்மானம். தருமன் : அடியாட்களே ஏற்பாடு பண்ணி புட்டானுவ. வீரப்ப : ஐயையோ! என்னா பண்றதுங்க? தருமன் : தக்க ஏற்பாடு பண்ணாமலா இருப்பேன்? பயப்பட வேண்டிய அவசியம் இல்லியே! வீரப்ப : ஒங்க தயவுங்க. என்னெ காப்பாத்தி வீட்டுக்கு அனுப்றது ஒங்க பொறுப்புங்க. தருமன் : அவனுவ இந்தத் தெருவுக்கு வரப்போறதா கேழ்வி. நானும் தக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். உயிருக்குப் பயந்தா என்ன ஆவும்? வீரப்ப : என்னியா அப்டி துணியணும் இண்றிங்க? தருமன் : உம் என்னெ சொல்றேன்? fjit யாரோ தட்டுகிறார்கள்! அதைக் கேட்ட வீரப்ப முதலியார் நடுங்குகிறார். தருமனுக்குத் தெரியும் இன்னார் என்று. அதனால் தருமன் வெகு தைரியமாக, ஆர் அங்கே? என்று அதட்டிவிட்டுக் கதவைத் திறக்க vGªâU¡»wh‹.] வீரப்ப : ஐயையோ தெறக்காதீங்க. தடுக்கிறார். தருமன் திமிறிக்கொண்டு போய்க் கதவைத் திறந்து. யார்? என்றான். பல்லக்குங்க என்று பதில் கிடைக்கிறது. தருமன் : பல்லக்கா? அப்டிதான் வையுங்க கொஞ்சம். கட்டை முட்டை தர்றேன். அதே போட்டு ஊட்டு எதிரே கொளுத்துங்க. சாவு வீடாட்டம் பாக்றவங்க நெனைக்கணும். தெரியுமா? ஆராவது கேட்டா. செதம்பரத்து பெரியவுரு காலராவிலே செத்துப் புட்டாரு. அவருக்கு காலையிலே கல்யாணம் ஆக இருந்தது இண்ணு சொல்லுங்க. ஆள் : சரிங்க. தருமன் கட்டை முட்டைகளை எடுக்கப் போகிறான். இவைகளைக் கேட்டிருந்த வீரப்ப முதலியார் வீரப்ப : நீங்க கண்டுபிடிக்க மாட்டேன்றிங்களே. நான் போற மாதிரியே... இதற்குள் தெருவிலிருந்து சத்தம் கேட்கிறது. கல்லு! கல்லு! எவன் அவன்? உடாதே. தருமன் : வந்துட்டானுவ. வீரப்ப : இங்கே வரக்கூடுமா? தருமன் : வரட்டுமே! வந்தா, கெழவர் செத்துப்புட்டாருண்ணு பல்லக்கு தூக்ற ஆள் சொல்லப் போறான். ஆத்ரமா வந்தவனுங்க ஐயையோ இண்ணு மனசி எரங்கி பூடப் போரானுவ, அவ்வளவு தானே! வீரப்ப : நல்ல யோசனைதான். பிணம் இருந்தால் அந்த வீட்டின் எதிரில் தீ மூட்டுவது என்ற வழக்கப்படி தீ எரிகிறது. பல்லக்கும் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது தருமன் : நீங்க உள்ளியே இருங்க, கதவெ சாத்திக்கினு. இதோ வந்துடுகிறேன்! வீரப்ப : ஏன் போறீங்க? தருமன் : அட! போம்போதே மூதேவியாட்டம்! ஒண்ணும் கேக்காதிங்க? வீரப்ப : சரிங்க. சற்று நேரத்திற்கெல்லாம் தருமன் தன் முகம் மறைய முக்காடிட்டுக் கொண்டு துரைசாமி முதலியார் சகிதம் பல்லக்கு வைத்திருக்கும் தெருவை அடைகிறான். அந்த வீதி முனையில் தற்செயலாகப் பல்லக்கையும் தீ எரிவதையும் பார்த்தவன் போல் நடித்து தருமன் : நில்லுங்க! அங்கே என்னா? துரை : தெரியிலிங்களே. தருமன் : அதுதானே வீரப்ப முதலியார் இருக்கிற வூடு? துரை : தெரியிலிங்களே. நெருப்பு எரியறது மாத்திரம் தெரியுது எனக்கு. தருமன் : என்னாங்க அது! ஐயையோ! துரை : என்னாங்க? தருமன் : நெருப்புத் தெரியுதே! ஐயையோ, பல்லக்குத் தெரியுதே! துரை : ஐயையோ, போயி பார்ப்பமே, அடடா! இருவரும் வீரப்ப முதலியார் வீட்டின் எதிரில் வந்து நிற்கிறார்கள். தருமன் ஒருபுறமாக நின்று கொண்டு துரைசாமி முதலியாரை neh¡».] அந்த ஆளை மெதுவாக என்னா இங்கேண்ணு விசாரி யுங்க என்கிறான். துரைசாமி முதலியார் போய்க் கேட்கிறார். என்னா இங்கே? ஆள் : நாளைக்கு கல்யாணம் செய்துக்க இருந்தாருங்க அந்தச் செதம்பரத்து பெரியவரு. காலராவுல செத்துப் புட்டாருங்க. தருமனும் துரைசாமி முதலியாரும் பேசிக்கொண்டே திரும்புகிறார்கள். துரை : நாங்க செதம்பரத்திலே இருந்து வந்தோம். அவருக்கு இப்படி ஆச்சி. எனக்கு அவச் சொல்லு ஏற்பட்டுப் போச்சி. (அழுகிறார்) தருமன் : மனசெ தெடப்படுத்துங்க. எனக்குச் சாயந்திரமே சந்தேகம் ஏற்பட்டுப் போச்சு. அத்தோட்டு தான் கேட்டேன். அங்கேயே வேற ஒருத்தருக்குக் கட்டிக் குடுக்க ஏற்பாடு பண்ணலாமா இண்ணு? இப்ப என்னா? கலியாணத்துக்காக ஏகப்பட்ட செலவு ஆயிபோச்சி குறிச்ச நேரத்திலே கலியாணத்தே முடிக்காட்டிப் போனா எனக்குக் கெட்ட பேரு. துரை : அப்படித்தான் செய்யுங்க! மாப்பிள்ளை? தருமன் : இருக்கான்! நல்ல பையன்! துரை : நல்லா இருப்பானா? கண்ணுக்குப புடிக்குமா பொண்ணுக்கு? தருமன் : என்னாட்டமே இருப்பான்! என்ன பாத்தா அவனெ பார்க்கவே வேண்டியதில்லை. அநேகம் பேரு நான் தாண்ணு நெனைச்சி அவங்கிட்டே பேசுவாங்க. முந்தா நேத்து தபால்காரன் அவனைப் பார்த்தான். கும்பிடு போட்டுட்டு என் தபாலே அவங்கிட்டே குடுத்துட்டான். அப்டி. துரை : அவனெ சம்மதிக்க வைக்கணுமே. தருமன் : இப்ப ஆகவேண்டிய வேலை அதுதான்! நீங்க முத்தால் பேட்டையிலே சத்ரத்லே இருங்க. ஒங்களே கூட, அந்தப் போக்கிரிப் பசங்க தேடுவதாகக் கேள்வி. நான் எல்லாம் ஏற்பாடு பண்ணிப்புட்டு ஆளெ அனுப்புறேன். வாங்க. உம்? துரை : நல்லதுங்க. 9 கற்கண்டும் தருமனும் மணவறையில் உட்கார்ந் திருக்கிறார்கள். இன்னும் தாலி கட்டவில்லை. ராமசாமியும் சீனுவாசனும் ஆக வேண்டிய காரியத்தைப் பொறுப்புடன் கவனிக்கிறார்கள். தாலி கட்டப்போகும் சமயம் துரைசாமி முதலியார் மணவீட்டில் நுழைகிறார். மாப்பிள்ளையைப் பார்க்கிறார். அவர் முகம் வேறுபடுகிறது. மகா பெரிய முதலியாராகிய சிங்கார முதலியார்தான் மாப்பிள்ளையா? அப்படியானால், அவர் சுய காரியத்திற்காகப் பல சூழ்ச்சி செய்தாரா? என்பன போன்ற சந்தேகம் அவருக்குத் தோன்றுகின்றன. அதனால் துரைசாமி முதலியார். எல்லாம் சூழ்ச்சியா இருக்குது என்று கூவுகிறார். அதே சமயம் சின்னான் ஓடிவந்து, தாத்தா என்கின்றான். துரைசாமி முதலியார் ஏன்? என்கிறார். சின்னான் : சிங்கார முதலியாரு பொணத்தண்டே இருந்து சகல காரியத்தையும் பார்க்கிறாராம். உங்களைக் கல்யாணத்தைக் கவனிக்கச் சொன்னாரு. துரை : அப்ப அவுரில்லையே இவுரு...? - அப்படியா ஓகோ அவுரு கூடச் சொன்னார் அவுராட்டமே இருப்பாரு இவுரு இண்ணு. சரிதான். தருமன் : (பார்ப்பானை நோக்கி) ஓய், ஒண்ணும் சாங்கியம் வாணாம். எடு தாலியே. kh§»Èa தாரணம் தாராளமாக மங்களமாக Ko»wJ] bg© மாப்பிள்ளை பாலும் பழமும் உண்ட பிறகு தருமன் தனியே துரைசாமி முதலியாரைக் கும்பிடுகிறான். வாய்நிறைய வெற்றிலை FiHa] துரை : சவுக்கியமாக இருக்கணும். தருமன் : (வெற்றிலை குதப்பிக் கொண்டே) மொதிலியாரு அங்கே இல்லிங்களா? துரை : இல்லப்பா, அவுரு அங்கே இருக்காரு! அதையேன் இந்த எடத்லே கேக்றே? இருக்கட்டும்! (மற்றொரு புறம் தனியாக) ராமசாமி : தருமா! மெச்சத்தக்க செயல். சீனு : ஏன் ஐயரை வைச்சே? ராமசாமி : கூலிக்காரன்! சொன்னபடி கேட்பான் பாப்பான்! சீனு : ஓகோ! ராமசாமி : நாளைக்குப் பொணம் எழுந்து வருமே? தருமன் : வரட்டுமே? அது எழுந்து வர்ர பொணந்தான்..... பாருங்களேன் வேடிக்கையெ! சீனு : தருமன் தனி ராசியப்பா! அனாமத்து மூளை, ஜமாயி தருமா, வர்ரோம். நாளைக்கிச் சந்திக்கலாம். தருமன் : ஓ! பேஷா! 10 நன்றாய் விடிந்தது. கல்யாண உடைகளை நீக்கிச் சாதாரண உடையுடன் தருமன் வீரப்ப முதலியாரிடம் வருத்த மான முகத்துடன் சென்று பெருமூச்சோடு உட்காருகிறான். வீரப்ப : கல்யாணம் எப்பங்க? ராத்திரி என்னா நடந்துதுங்க. தருமன் : எங்க அண்ணாரிடம் ஆளை அனுப்பி ஏதோதோ புளுகிப்புட்டானுவ. வீரப்ப : அப்றம்? தருமன் : நான் வெளியே வல்லெண்ணா அப்புறம் என்னா? வீரப்ப : முடிவு? தருமன் : முடிவு முடிவுதான். என்னாட்டமே ஒருத்தன் இந்த ஊரிலே இருக்கான், அந்தப் பாவியெ புடிச்சி எல்லாக் காரியத்தையும் செப்பனிட்டு முடிச்சிபுட்டானுவ. வீரப்ப : எப்படிண்ணேன்? தருமன் : அந்த எழவே ஏன் கேக்றிங்க? வேறு ஒருத்தனுக்குக் கற்கண்டை கட்டிச் சோபனத்தையும் கையோடு முடிச்சி புட்டானுவ. இதுக்கெல்லாம் தைரியம் இருக்கணும். அது தான் ஒங்ககிட்ட பூஜ்யங்க! வீணா எனக்கு இதிலே அவமானம் வந்திட்டுது. உயிரே உட்டுக்கலாமிண்ணுங் கூட முடிவுகட்டி, கவுத்தைக்கூட எடுத்து அறையின் உத்தரத்துலகூட மாட்டிபுட்டேன் இண்ணுகூட வச்சிக் கிங்க. அப்புறம் பார்த்தேன். சீ அதுவா பெரிசி: இருக்கிற வரைக் காப்பாத்தி நல்லபடியா செதம்பரத்துக்கு அனுப்பணுமேண்ணு மனசை தெடம் பண்ணிகினு ஓடியாந்தேன். வீரப்ப : அப்படியா, உம் அந்த தொரைசாமி மொதலி.... ஆஹா! எப்படிச் சம்மதித்தான்! உம்! தருமன் : நான் சொல்ற மாதிரியே சொல்லியிருக்கான், என்னாட்டம் இருக்கிற அந்த ஆளு. வீரப்ப : ஆருக்குக் கட்டி வைச்சிட்டான்? தருமன் : கட்டிகினவனும் அந்தப் பையன்தான் இண்ணு கேழ்விங்க. என்னா சொன்னான் அவன்? நீங்க செத்து புட்டிங்க காலராவிலெ இண்ணு நேரே சொல்லியிருக் கானுங்க. என்னா அக்குறும்பு இண்றது; வீரப்ப : ஓகோ, ராத்ரி பல்லாகு வச்சிருந்துதே. விசாரிச்சி இருப்பானுவ. ஆள் சொல்லியிருப்பான் நான் செத்துப் போனதாக. தருமன் : அதான் விஷயம். கலியாணத்துக்காக இத்தனை தூரம் செலவு செய்து வீணா போவலாமா இண்ணு சொல்லியிருப்பான். அப்படீண்ணு சொன்னா துரைசாமி முதலி, சிங்கார மொதலியாரே கட்டிக்றேன் இன்னாரே இண்ணு சம்மதிச்சிபுட்டான். அவளும் சம்மதிச்சிபுட்டா. அதான் சங்கதி. இன்னொரு சேதிங்க. ஒங்களெ மெரட்றது இண்ணு சுத்திகினு இருக்காணுவ. நீங்க இப்பவே பொறப்பட்டு செதம்பரத்துக்கு போயி அஞ்சாறுநாள் செண்ணு வறிங்க. என்னா சொல்றீங்க? வீரப்ப : நான் செத்தாலும் சரிதான். நேரே அந்தத் தொரைசாமி மொதலியே கண்டு நாலு கேழ்வி நறுக்காகக் கேக்கணும். அந்தக் குட்டியையும் அப்டி! இப்பவே என் 300 ரூபாயெ அணா பைசாவோடு வைச்சுட வாணாமா அந்த நாயி. kfh கோபத்தோடு வீரப்ப முதலியார் கற்கண்டு வீட்டுக்குப் போகிறார். தருமனோ வீரப்ப முதலியாருக்கு முன்னே வேறு வழியாக அதே கற்கண்டு வீட்டுக்குப் போய்க் கலியாண உடையுடன் கற்கண்டின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளு »wh‹.] தருமன் : (கற்கண்டை நோக்கி) நாளு போவது வீணா? நீ சீக்கிரம் பாடக் கத்துக்கணும். கற்கண்டு : அதுக்கென்ன, இப்பவே தோக்குங்கு நல்லா! நானா வாணா மின்றேன். ரொம்ப ஆசையாச்சே பாட்டுண்ணா எனக்கு. தருமன் : அப்படியா, சின்னான் போடடா தம்பூரு. கொண்டாடா தாளத்தே! á¤jkh»wJ.] தருமன் : (தாளத்தோடு) மொதல்லே புள்ளார் தோத்திரம் பாடணும். எப்டிதெரியுமா? ஆதி சிவன் பெத்தெடுத்த புள்ளையா ரப்பா - ஓஹோ புள்ளையாரப்பா சொன்னாத்தானே வரும். கற்கண்டு : ஆதி சிவன் பெத்தெடுத்த புள்ளையா ரப்பா - ஓஹோ புள்ளையா ரப்பா தருமன் : ஆ எஞ் செங்கரும்பே! ரவை பேசுதே தொண்டையிலே! உம்! சின்னான் : கொட்டுது ரவை! தருமன் : அம்பிகை பெத்தெடுத்த புள்ளையாரப்பா! கற்கண்டு : ” ” ” ” தருமன் : சிவபெருமான் பெத்தெடுத்த புள்ளையாரப்பா! கற்கண்டு : ” ” ” ” தருமன் : செவகாமி பெத்தெடுத்த புள்ளையாரப்பா! கற்கண்டு : ” ” ” ” தருமன் : சிறுத்தொண்டப் பத்தன் கதை நான் பாடவேணும் - நல்லா நான் பாடவேணும் தேவா துணைபுரிய நீ வாவா! கற்கண்டு: ” ” ” தருமன் : நான் சொல்றபடியே சொல்றியே அப்றம் என்னா? இண்ணைக்கே தோக்க வேண்டியதுதான் தொழிலை. கற்கண்டு: ஓ கணக்கா, நானா வாணாம் இண்றேன்? இதற்குள் அங்கு வந்த வீரப்ப முதலியார் வீட்டின் முன் புறத்தில் உட்கார்ந்திருந்த துரைசாமி முதலியாரை நோக்கி வயிற்றெரிச்சலாக வீரப்ப : தொரசாமி மொதலியாரே! சரிதானா நீர் செஞ்சது? எத்தினி நாளா தொரசாமி மொதலியாரே காத்திருந்தே, என்னே இந்த மாதிரி வயித்தை எரிய வைக்க? நல்லா இருக்குது மொதலி யாரே, நல்லா இருக்குது! எல்லாம் முடிஞ்சு போச்சா? இன்னும் ஏதாவது சொச்சம் இருக்குதா? துரைசாமி : என்னை நீங்க ஒண்ணும் சொல்லக்கூடாது. நான் ஒரு குத்தமும் செய்யலே. அல்லாம் சிங்கார மொதலியார் கட்டளைப்படி நடந்த காரியம். வீரப்ப : கலியாணம் முடிஞ்சி போச்சில்ல? துரைசாமி : ஆமாங்க. வீரப்ப : சரி, உம் பொண்ணுக்கு நீர் முடிச்சீர், அதெப் பத்தி என்னாங்க மொதலியாரே, சிங்கார மொதலியாரா இப்டி சொன்னாரு? துரைசாமி: ஆமாங்க நீங்க செத்துப்புட்டிங்க இண்ணு சொன்னாரு. நம்ப வேண்டியதா போச்சி. வீரப்ப : சிங்கார மொதலியாரு அப்படியாப்பட்ட அயோக்ய ரல்லவே! அல்லாம் இதோ (மாப்பிள்ளையைக் காட்டி) இந்த அயோக்யன் செஞ்சவேலை. அவராட்டமே இருந்தான் இவன். இருக்றானே! பாரேன்! பிச்சை எடுக்றவனுக்கா வாழ்க்கைப்பட்டே மோசக் காரி? அனுபவிப்பே. என் கண்ணாலே பார்ப்பேன், தகரக் குவளையெ கைலே தூக்கித் தெருத்தெருவா பிச்சை எடுக்றதை. கற்கண்டு : ரொம்ப சந்தோஷமாச்சே தாத்தா உங்களெ கட்டிகினு அழறதிலியும் பிச்சை எடுக்கறது தேவலியே, வயிசு மாப்பிள்ளை கூட. தருமன் : ஐ பால் சர்பத்தாட்டம் அப்டி சொல்லு! வீரப்ப : அது போவுட்டும். என் பணத்தை எடும்! 300 ரூபா! இதே நேரத்லே எடும்! என்னாங்காணும் முழிக்கிறீரே. மானம் இல்லே? துரைசாமி : (அழுதுகொண்டே) என்னா சொல்றே மருமகப் பிள்ளை? தருமன் : உம்! பெரியவரே, நானா மானங்கெட்டவன்? என்ன தெரியாது ஒமக்கு. தெரிஞ்சுக்குவிங்க சீக்கிரம், மானிங் காணும் நானு. ஒருத்தரு ஒண்ணு சொல்லிபுட்டா இந்த உசிரெ அப்படியே உட்டுடுவேங்காணும். பெரியவரே! ஒமக்குச் சேர வேண்டிய 300 ரூபாயெ அந்தச் சிங்கார முதலியார்கிட்டே வண்டி கட்டிகினு போயி பைசல் பண்ணிபுட்டு வந்ததுதான் பெரியவரே தாலியெ கைலெ எடுத்தேன். அதுவும் வட்டியோட! அந்த வட்டியும் தொடர்வட்டி பெரியவரே! அணா பைசாவோட பெரியவரே! அரைக்காசு சொச்சம் வந்தது; ஒருகாசு குடுத்தேன். அதுவும்! இன்னும் கேளு பெரியவரே! நான் குடுத்த பணத்லே ஒரு ரூபா ராணி ரூபா செல்லாதிண்ணு எடுத்தாந்தாரு. அதையும் ஒத்துக்கின்னு வேற ரூபா கொடுத்தனுப்பினேன். பெரியவரே, சிங்கார மொதலியாரு விசிறியே வைச்சட்டுப் பூட்டாரு. இப்பத்தான் பெரிய வரே இதோ இருக்கான் சின்னான் - கொண்டு போயி குடுத்துட்டு வந்தான் பெரியவரே; பணத்தைக் கையிலே வச்சுகினு விசிப் பலகையிலேதான் ஒக்காந்து இருக்கா ராம் பெரியவரே! அப்டி நெனைச்சி புடாதியும் நம்பளே; க்ஷத்ரிய புள்ளை சிங்கக்குட்டி பெரியவரே! என்னே திட்டுறிங்களா பெரியவரே! நல்லா இருக்குது, இப்பத் தான் ஒங்களைத்தான் தேடி வந்தானுவ அந்தப் போக்றிப் பசங்க. நான்தான் கூரை மழுக்கி அனுப்னேன். பெரியவரே. இது ஒரு மாதிரி ஊரு பெரியவரே! பெரியவரே! வீரப்பக்கிழவருக்கு வயிற்றெரிச்சல் ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம்! அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சரேலென்று எழுந்தார் ஆத்திரமாக வீரப்ப : தொரைசாமி மொதலி, சவுக்யமா இரும். கற்கண்டு, அனுப விப்பே. என் வவுரு எரியற மாதிரி திகிதிகிண்ணு எரிஞ்சி புடணும். என்று சொல்லி வெளியிற் போகிறார் சிங்கார முதலியார் வீடு நோக்கி. துரைசாமி முதலியாருக்குக் கொஞ்சம் வருத்தம் வீரப்ப முதலியார் துன்பத்தைக் கருதி கற்கண்டு : ஏங்க, இவுரு நேரே எங்கே போவாரு? தருமன் : அந்தக் கொள்ளையே நீ நேரே பாத்தாத்தான் தெரியும் இங்கியே வாயாலே சொன்னா என்ன பிரயோசனம்? கற்கண்டு : ரொம்ப வேடிக்கையா இருக்குமா? தருமன் : ஆயிரந்தலை படைச்ச ஆதி சேஷன்கூட, சிரிக்க இன்னம் பத்து, பதினைஞ்சி தலை கடன் கேட்பான். வரியா இப்பவே! அங்கே நான் சொல்லிக்கினு இருந்த சிறுத்தொண்டப் பத்தன் கதையை இன்னும் முடிக்கலே. முடிப்போமே போயி. கொஞ்சந்தான் பாக்கி இருக்குது. கற்கண்டு : சரி. சின்னான், கற்கண்டு, தருமன் மூவரும் தம்பூரா, தாளம், படம் இவற்றுடன் போகிறார்கள். 11 வீட்டுக் குறட்டில் காவல் காத்திருக்கும் குப்பனை நோக்கி, வீட்டு எஜமானாகிய சிங்கார முதலியார் கூறுகிறார். வந்தானா சிறுத்தொண்டப் பத்தன் கதை பாட? இல்லியே? சிறுத்தொண்டப் பத்தன் கதை பையனெ என்னா கஷ்டப்படுத் திட்டுது. பாக்றே இல்லவோ? ராத்திரியெல்லாம், கொல்றாங்க வெட்டு றாங்க இண்ணு அலறித் துடிச்சான் இல்லியோ? என்னா நிலையிலே கெடத்தி வெச்சிருக்கு புள்ளெயெ, பாத்தியாடா, தாயி, மடியிலே அழுத்திப் புடிச்சிக்கிறாளாம்; தகப்பனார் கத்தியாலே அறுத்தாராம். இதெல்லாம் கேட்டுகினு இருந்தா ரவை பசங்க கதி என்னாகும்? ஆயுட்டுதே! கண்டிப்பாச் சொல்லிப்புட்டேன். அவன் இங்கே இப்ப வந்தாத் தொரத்திப்புடு. இல்லே என்னே கூப்டு தெரியுமா? குப்பன் : நல்லதுங்க. சிங்காரமுதலியார் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது தான் கற்கண்டும் தருமனும் சின்னானும் அங்கு வருகிறார் கள். அதே சமயத்தில் வேறு பக்கமிருந்து வீரப்ப முதலியார் காவற்காரக் குப்பனை அடைகிறார். வீரப்பக் கிழவருக்கும் காவற்காரக் குப்பனுக்கும் நடக்கப் போவதைத் தருமன் முதலிய மூவரும் சந்து முடக்கில் ஒளிந்து நின்று கவனிக் கிறார்கள். அவர்கள் இன்னும் படத்தை விரிக்கவில்லை வீரப்ப : (குப்பனை நோக்கி) என்னங்க முடிவு இப்படியாப் போச்சிங்க? குப்பன் : என்னா அது? தருமன், கற்கண்டு ஒருபுறமிருந்து சிரிக்கிறார்கள் வீரப்ப : கல்யாணந்தாங்க. குப்பன் : எந்தக் கல்யாணம்? வீரப்ப : இந்தக் கல்யாணந்தானுங்க. குப்பன் : ஏதையா கல்யாணம்? வீரப்ப : என்னாங்க அப்டிக் கேக்றிங்களே? குப்பன் : பின்னே எப்படிக் கேக்க? வீரப்ப : நீங்க கவனிச்ச காரியம் இப்படி முடியலாங்களா? குப்பன் : நான் என்னாத்தெக் கவனிச்சேன்? வீரப்ப : தொரைசாமி மொதலியாருதானுங்க சொல்றாரு அப்படி. குப்பன் : எந்தத் தொரைசாமி மொதிலியாரு? வீரப்ப : என்னாங்க நூதனமாக் கேக்றிங்க? குப்பன் : யாருகிட்டேப் பேசிறீங்க? வீரப்ப : ஒங்க கிட்டதானுங்க. குப்பன் : ஒண்ணுமே புரியலிங்களே. என்னே ஆருண்ணு நெனைச்சிப் பேசிறீங்க. வீரப்ப : சிங்கார மொதலியாரு தானுங்களே நீங்க? குப்பன் : நானில்லை ஐயா. அவுரு உள்ளே இருக்காரு, வருவாரு, காத்திருங்க. வீரப்ப : நீங்க இல்லிங்களா? அப்டிங்களா? சரிதானுங்க. வீரப்ப முதலியார் ஒரு புறமாக நிற்கிறார் தருமன் : (பாட்டு) மாய உலக மல்லோ இந்த உலகம் - ஆமாம் இந்த உலகம் மாயா உலகத்லே வந்து விட்டார்? (பேச்சு) விரிடா சின்னான் படத்தே, சின்னான் படத்தை விரிக்கிறான். கற்கண்டு அதே அடியைத் திருப்பிச் சொல்லிக் கொண்டே உட்காருகிறாள். தருமன் உட்காருகிறான். கடைசியில் சின்னான் தம்பூரா மீட்டிக் கொண்டே இருக்க இருவரும் நெருங்கி உட்கார்ந்து கொண்டே ஆரம்பிக்கிறார்கள். காவற்காரக் குப்பன் மயங்குகிறான். தருமனை நோக்கி பாடாதே என்று கூறவும் குப்பனுக்குப் பயம் தருமன் : சிவபெருமான் வந்தார். ரிஷபத்திலே - அந்த ரிஷபத்திலே சிவகாமி அம்மனும் கூட வந்தா. கற்கண்டு : ” ” ” ” தருமன் : ஒன்மனசைச் சோதிச்சண்டா சிறுத்தொண்டப் பத்தா - ஆமாம் சிறுத்தொண்டப் பத்தா ஓடி வந்து சேருங்கடா கைலாசம் கற்கண்டு : ” ” ” ” தருமன் : சிறுத்தொண்டப் பத்தன் மத்தஎல்லோரையும் - மத்த எல்லோரையும் சிவபொருமான் பாதம் சேர்த்துக் கொண்டார். கற்கண்டு : ” ” ” ” இச்சமயம் டாக்டர் சுந்தரமூர்த்தி சிங்கார முதலியார் வீட்டுக்குள் நுழைகிறார் தருமன் : ஆகையால் மனுஷர்களே மனுஷர்களே - நீங்க மனுஷர்களே அடியாருக் கன்னமிட வேண்டுமல்லோ. கற்கண்டு : ” ” ” ” கேட் 1 : மெய்தானே! கேட் 2 : அன்னதானத்துக்கு ஈடா? தருமன் : கதை முடியப் போவுது. காசி போட்டாத்தானே? தருமன் : காசு பணம் எல்லாம் கூட வராதல்லோ - ஆமாம் கூட வராதல்லோ கடவுளே பத்திசெய்வீர் மனுஷர்களே. கேட் 1 : செத்துப்புட்டா காசு பணம் கூடவா வரப்போவுது? கேட் 2 : உம். அது ஏது? டாக்டரும் சிங்கார முதலியாரும் வெளியில் வருகிறார்கள். சிங்கார முதலியார் முகம் களையிழந்து இருக்கிறது சிங்கார : (டாக்டரை நோக்கி) ஒண்ணும் பிள்ளைக்கு ஆபத்து இருக்காதுங்களே? தருமன் : சாவது நிச்சயமே மனுஷர்களே மனுஷர்களே - ஓ மனுஷர்களே சாமியின் பதம்சேர்வீர் மனுஷர்களே. டாக்டர் : என்னாங்க இந்த மூதேவிப் பையனெ இன்னும் வச்சிருக்கிங்க? சிங்கார முதலியாருக்கு அடங்காத கோபம். அடே காமாட்டி, போமாட்டே? என்று சத்தம் போடுகிறார். கற்கண்டு எழுந்து ஓட எத்தனிக்கிறாள், அவளையும் ஒரு கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டான் தருமன் : கோபஞ் சண்டாள மல்லோ மனுஷர்களே - ஓ மனுஷர்களே கோமானின் பதம்சேர்வீர் மனுஷர்களே. இப்பத்தானுங்க வசூல் ஆவுது. இதோ முடிச்சிப் புட்ரேனுங்க. கேட் 1 : இதோ ஆயிபுட்டுதுங்க சாமி. தருமன் : (கேட்கும் ஜனங்களிடம்) நீங்க கேளுங்க என்று மெதுவாகக் கூறினான். கோபஞ் சண்டாள மல்லோ மனுஷர்களே - ஓ மனுஷர்களே குஞ்சித பாதத்தே சேருங்களே. தருமன் அதிக உருக்கத்தோடு இந்த அடியைக் கூறியதோடு தானும் கும்பிடுகிறான். அதைக்கண்டு. கேட்பவர்களும் F«ãL»wh®fŸ.] தருமன் : நிறுத்திப்புடட்டுமா? கேட் 1 : முடிங்க! சொல்லுங்க. கேட் 2 : குறுக்க நிறுத்தலாமா? சிங்கார : (டாக்டரை நோக்கி) இருக்கட்டுங்க. முடியட்டுங்க. டாக்டர் : காய்ச்சல் அதிகமாக இருக்குது. கொஞ்சம் இறங்கணும் இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது. நான் வர்ரேன், 15 நிமிஷம் பொறுத்து. lh¡l® போகிறார். சிங்கார முதலியார் பரபரத்த உள்ளத்தோடு நிற்கிறார். குறட்டிலே வீரப்ப முதலியார் beU§F»wh®.] குப்பன் : இந்தப் பெரியவுரு ஒங்களே தேடறாருங்க. சிங்கார : என்னா சேதி? வீரப்ப : ஏதோ தாங்க மனவலியா இருக்றிங்க. கெட்டது கெட்டதுங்க. ஐந்நூறு ரூபா ஒண்ணு, துரைசாமி மொதலி கொடுத்த முன்னூறு ரூபா ஒண்ணு. ஆக 800 ரூபாயெ குடுங்க. சிங்கார : சரிதான்! யாரிடத்லே குடுத்தே யாரே கேக்றே? வீரப்ப : என்னாங்க ... ... ... நேத்து இதே எடத்லே.. சிங்கார : (தருமனை நோக்கி) ஏண்டா இவரெ ஏமாத்தி பணத்தே வாங்கிக்கினியா? தருமன் : அவுரையே கேளுங்க. சிங்கார : ஏனையா பெரியவரே! சிறுத்தொண்டப் பந்தன் கதை பாடுகிறானே அவனா? வீரப்ப : அந்தப் பிச்சைக்கார பையன் கிட்டவா குடுப்பேனுங்க? சிங்கார : அப்படின்னாப் போங்களேன். வீரப்ப : நீங்க வீட்டு மூத்தவருங்களா? சிங்கார : எந்த வூட்டுக்கு? அட அடையாளமே தெரியலிங்க ஒங்களுக்கு. சரியா விசாரிங்க, பெரியவரே. வீரப்ப : அப்ப நீங்க வாங்கலே பணம்? சிங்கார : இல்லே. வீரப்ப : ஏன் ஐயா (குப்பனை நோக்கி) நீங்களும் வாங்கலே! குப்பன் : இல்லிங்க. சிங்கார : அவன்கிட்டே கொடுக்கலிங்களே? வீரப்ப : இல்லிங்க. தருமன் : (இச்சமயத்திலே) காண்பதெல்லாம் பொய்யே இந்த ஒலகத்திலே - இந்த ஒலகத்திலே கடவுள் மாத்ரம் மெய்யே மனுஷர்களே. F«ãL»wh‹; மற்றவர்களும் F«ãL»wh®fŸ.] சிங்கார : அட காமாட்டி, நிறுத்திடுப் போமாட்டே! கதெ சொல்றான் கதெ! பாவிப் பையா, கதை கேட்டுத் தாண்டா குழந்தை ஆபத்தாக் கெடக்கறான். தொலைஞ்சிப் போயேண்டா! தருமன் : இந்தச் சிவ கதையெ குத்தஞ் சொன்ன பேர் - ஆமாம் குத்தஞ் சொன்னபேர் எரிகின்ற நரகத்திலே உழுவாங்க சிங்கார : அடேய் கிண்டலா பண்றே என்னே? தோலே உரிச்சிடு வேன். கேட் 1 : ஒங்களே இல்லையா. நீங்க சும்மா இருங்க. கேட் 2 : கதையெ ஏஞ்சாமி கெடுக்றிங்க. fij கேட்கும் ஜனங்கள் அனைவரும் சிங்கார முதலியாரை வெறுப்பாகப் பார்ப்பதைச் சிங்கார முதலியார் cz®»wh®.] சிங்கார : வேறு இடத்திற்கு அவனே அழைச்சிக்கி போங்க. தருமன் : இதோ முடிஞ்சி போச்சிங்க. பணக்காரர் என்று சொல்லிக் கிருவங்கொள்ளாதிங்க - நீங்க கிருவங்கொள்ளா திங்க (எங்கப்பன்) பரமசிவன் பாதம் நெனையுங்க. சிங்கார : என்னடா சொன்னே? கேட் 1 : ஒரே முட்டாக் கோவிச்சிக்கிறிங்களே? கேட் 2 : என்னங்க சாமி பண்ணுவிங்க? கடிச்சித் திண்ணுப் புடுவிங்களா? ïitfis¡ கேட்டுக் கொண்டே டாக்டர் tU»wh®.] சிங்கார : என்னா போக்கிரித்தனம் பண்றானுங்க இவன்கள்! டாக்டர் : அவனே ஆதரிக்க ஜனங்கள் இருக்கும்போது நாம் என்னா செய்கிறது? சிங்கார : இந்தச் சிவகதையைக் குற்றம் சொல்லுகிறவர்கள் எரியும் நரகத்திலே விழுவாங்க என்று பாடுகிறான் என்னைக் குறித்து. அதேமாதிரி அந்த ஜனங்களும் ஏமேலே கோவிச்சிக் கிறாங்க. என்ன முட்டாள்தனம்! டாக்டர் : முட்டாள்தனம் அதற்கு ஜனங்கள் ஆதரவு இருக்குதே. அப்படி இருக்கிற வரைக்கும், அவன் போக்கிரித்தனம், ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பு இவைகள் இருந்துதானே தீரும். lh¡l® உள்ளே போகிறார். சிங்கார முதலியார் மகா கோபத்தோடு தருமனை உறுத்திப் பார்த்தபடி நிற்கிறார். அச்சமயத்தில் வீரப்ப முதலியார் bjhl§F»wh®.] வீரப்ப : அப்ப என்னாங்க ஏம் பணத்துக்கு ஒரு வழியுமில்லிங் களா? சிங்கார : அடச்சீ போங்காணும், பைத்தியமா உமக்கு! பூடும்! இங்கே நிற்கப்படாது. åu¥g முதலியார் அந்த அதட்டலின் சத்தத்தால் விழுந்தடித்து எழுந்து el¡fY‰wh®.] தருமன் : இந்தச் சிவ கதயெ சொல்லிய பேர்கள் - நல்லா சொல்லிய பேர்கள் இன்பத்தை எந்நாளும் அடைவாங்க. சிங்கார : உம் அப்றம் தருமன் : இந்தச் சிவ கதயெ கேட்டவர் யாரும் - இப்பா கேட்டவர் யாரும் எம்பெருமான் பாதம் சேர்வாங்க. சிங்கார : இனிமே இந்தப் பக்கம் வருவியோ? á‹dh‹ படத்தைச் சுருட்டுகிறான். தருமனும் கற்கண்டும் எழுந்து É»wh®fŸ.] தருமன் : இந்தக் கதை அருமை தெரியாத மனிதர் - ஆமாம் தெரியாத மனிதர் எருமைமாடாப் பிறந்து திரிவாங்க. சிங்கார : அடே! கேட் 1 : ஞாயந் தானுங்களே? கேட் 2 : பின்னென்னாங்க? á§fhu முதலியார் வீட்டுக்குள் போய் விடுகிறார். ஜனங்கள் போகிறார்கள் ஒரு òwkhf.] கற்கண்டு : அந்தக் கெழவர் போறத்தே பாருங்க பாவம். தருமன் : (தாளம் போடுவது போல் வெறுங்கயைல் பாவனைக் காட்டிக்கொண்டே) பாவம்பொய் புண்ணியம் பொய் மனுஷர்களே - ஓ மனுஷர்களே பரமசிவன் மெய்யல்லோ எப்போதும். கற்கண்டு : பெரியவர்க்கு அந்த முந்நூறு ரூபா குடுக்கலியா நீங்க? குடுத்துப்புட்டதாய்ச் சொன்னிங்களே சிங்கார மொதிலியார் கிட்ட. தருமன் : காசும் பொய் ரூபாயும் பொய் மனுஷர்களே - ஓ மனுஷர்களே - இந்தக் கற்கண்டும் நானும் மெய் எப்போதும். கற்கண்டு : 500 ரூபா வேறே வாங்கினீங்களா பெரியவுரு கிட்டே! தருமன் : பெரியவர் பொய் சின்னவர் பொய் மனுஷர்களே - ஓ மனுஷர்களே - நாம்ப பிழைப்பது மெய் என்றன் கற்கண்டே! சீனாக் கற்கண்டே.  பொறுமை கடலினும் பெரிது (நகைச்சுவை நாடகம்) (முத்துப்பாக்கம் பெரிய எஜமான் ஓர் சுயகாரியப் புலி. அவர்தம் காரியத்தில் அதிக அக்கறையும் சுறுசுறுப்பும் உள்ளவர்; பிறர் காரியத்தில் மகா மந்தம். முத்துப்பாக்கம் 50 வீடுகள் உடைய கிராமம், நமது பெரிய எஜமான், ஊருக்கே பெரிய எஜமான். மிகப்பெரிய மிராசுதார். அவருக்கு 16 வயதுள்ள பிள்ளையாண்டான் உண்டு. அவரை ஊராரும், வீட்டுக் கணக்கர், ஆட்களும் சின்ன எஜமான் என்பார்கள். சின்ன எஜமான் தவிர 8 , 5, 3, 1 வயதுள்ள 4 பசங்கள் உண்டு. அதிகாலையில் வெளிக்குப் போய், பெரிய எஜமான் தம் வீடு நோக்கி மெதுவாக வந்த கொண்டிருக்கிறார். பரிதாப முகத்துடன் வீட்டுக் கணக்கர் பின் தொடர்கிறார்) கணக்கன் : எஜமான்! வீட்டில் என் மனைவியைப் பாம்பு கடித்து விட்டது. பெ.எ. : (இந்த வார்த்தையைக் கேட்டதில் பதைபதைப்பு ஏதுமின்றி) சாந்தலிங்கம் நேற்று வட்டிப்பணம் கொடுத்தானா? கணக்கன் : கொடுத்தான். வைத்யரை இட்டு வந்து காட்டினேன் சீக்கிரமாக, பெரிய எஜமானிடம் ஓடி, மருந்து கேட்டு வாங்கி வா என்று சொன்னார் வைத்யர்? ஓடி வந்தேன். பெ.எ. : அந்த முத்துசாமி என்னதான் நினைத்துக் கொண்டிருக் கிறான்? எப்போதுதான் பணம் கொடுப்பான்? கணக்கன் : இந்த மாதத்திலேயே கொடுத்துவிடுவதாகச் சொன்னான். வந்துவிடும். வைத்தியரிடம் பாம்புக் கடி மருந்து இல்லையாம், உங்களுக்குச் செய்து கொடுத்தாராம் போன மாதம் அவசரமாகக் கொடுங்கள். பெ.எ. : விழுப்புரத்தில் இப்போது என்ன சினிமா நடக்கிறது? கணக்கன் : இந்திப் படம்! கொஞ்சம் அவசரமாகக் கொடுத்தால் தேவலை எஜமான். பெ.எ. : பொறுமை கடலினும் பெரிது. கணக்கன் : இதுக்குக் கூடவா? பெ.எ. : சின்னசாமியைக் கணக்குப்பிள்ளையாய் வைத்துக் கொள்ளச் சொல்லி, உன்னை நீக்கிவிடச் சொன்னார்; என்னிடம் தொந்தரவு பண்றாரே. கணக்கன் : உங்க சித்தம். மருந்து இருக்குதில்ல உங்ககிட்ட? பெரிய எஜமான் தம் வீட்டுத் திண்ணையை அடைந்து É£lh®] பெ.எ. : (உள்ளிருப்பவரை நோக்கி) பாயைக் கொண்டு வந்து போட்றா. தலைகாணி எடுத்து வா. காலெல்லாம் வலிக்குது. கணக்கன் : உட்காரீங்களே, மருந்து அவசரமாச்சே எஜமான். இதற்குள் பாய் போடுகிறான் ஓர் ஆள், தலையணை போடுகிறான் ஒருவன். கால் பிடிக்கிறான் xUt‹.] பெ.எ. : எந்த வைத்யர்? கணக்கன் : வேலுசாமி. பெ.எ. : உம். கையைப் பிடிடா. இதற்குள் கணக்கன் இந்தப் பாவியின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல், பெரிய எஜமானின் வீட்டினுள் புகுந்து, அங்கு இருக்கும் சின்ன எஜமானிடம் TW»wh‹.] கணக்கன் : சின்ன எஜமான், என் மனைவியைப் பாம்பு கடித்து விட்டது. மருந்து இருக்குதாம் இங்கே. அவசரமா எடுத்துக் கொடுங்களேன். சி.எ. : அப்படியா, அப்பாவிடம் இருக்கு. கேட்டியா? கணக் : அவர் எப்போது வர்ரது? அதற்குள் மனைவி ஒழிஞ்சி பூடுவாள் போலிருக்கே. சி.எ. : (வெளியில் தன் தகப்பனை நோக்கி) அப்பா பெட்டிச் சாவி கொடுங்க. மருந்து வேணுமாம் கணக்கப் பிள்ளைக்கு. பெ.எ. : காப்பி சாப்பிட்டாயா? என்ன பலகாரம் வச்சா அம்மா? சி.எ. : தோசை சொஜ்ஜி! சாவி கொடுப்பா. பாம்பு கடிச்சிட்ட தாமே கணக்குப்பிள்ளை வீட்டில். கணக் : உடனே மருந்து கொடுக்கணும் என்று வைத்தியர் பறக்கிறார். பெ.எ. : வரதராஜலு கடிதம் போட்டானே அதை எடு தம்பி. சின்ன எஜமான் எரிச்சலுடன் உள்ளே ngh»wh‹.] கணக் : என்ன ஆச்சோ வீட்டில்! மருந்து இருக்குதில்ல எஜமான்? இதற்குள் ஓர் ஆள் தினசரி ஒன்றைக் கொண்டு வந்த கொடுக்க; அதை வாங்கி விரித்துக் கணக்கனை neh¡».] பெ.எ. : உள்ளே கண்ணாடியை எடுத்துவா. கணக் : வாசித்த பிறகுதான் எழுந்திருப்பிங்களோ! ஐயோ, அவசரமாச்சே எஜமான்! பெ.எ. : பொறுமை கடலினும் பெரிது. விசிறிக் கொண்டிருந்த ஆள் ஓடிக் கண்ணாடியை எடுத்துக் கொடுக்க, பெரிய எஜமான் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்து ÉL»wh®.] கணக் : சாவியைக் குடுங்களேன் எஜமான், எப்போ வாசிக்கிறது? எப்போ மருந்து கொடுக்கறது? பெ.எ. : என்ன கடித்தது? கணக் : பாம்பு. பெரிய v#kh‹.] கணக் : பாம்புங்க. பெ.எ. : மருந்து இல்லியே. fz¡f® கையுதறிக்கொண்டு வீட்டை நோக்கி XL»wh®.] fz¡fÅ‹ வீட்டில் el¥gJ] உறவினர் : இப்படிக் கொண்டு வா மருந்தை! ஆர் வீட்டில்? அவசரமாகக் கொஞ்சம் தண்ணீர் கொண்டா. மருந்தெ வாயில் போட்டுத் தண்ணியை ஊத்தணும். clÅU¡F« வைத்தியர் கையை Ú£L»wh®.] கணக் : எங்கே? அந்தப் பாவி இந்நேரம் காத்திருக்க வைத்து மருந்து இல்லேண்ணு சொல்லிவிட்டானே! v‹W கூறி, அங்கு வளர்த்தி வைத்திருக்கும் தன் மனைவியை neh¡»] தன பாக்கியம்! jdgh¡»a« வாயில் நுரை jŸS»wJ.] வைத்தியர் : நா.... நா.. நான்... போ. போய்.... வ... வ.. வ.. வர்றேன். ngh»wh®. கணக்கனும் உடன் போகிறான். இதற்குள் பெரிய எஜமானுக்குக் காலை அமுக்கிக் கொண்டிருக்கும் இரிசனின் தகப்பனாகிய ஒர் கிழவன், பெரிய எஜமானை neh¡F»wh‹.] கிழவன் : பேரன் ஊருக்குப் போறான் பாட்டி கூட! அரை ரூபா குடுங்க. குடுத்தனுப்ப வாணாங்களா எஜமான்? பெ.எ. : தெக்குவெளியிலே பயிரெல்லாம் எப்படியிருக்கு; பாத்தியா கிழவா? கிழவன் : பாத்தேன். நல்லா இருக்கு. இதோ நிக்றாங்க! தோ வந்துட்றேன் இண்ணு ஓடியாந்தேன், குடுங்க. பெ.எ. : முதுகே உருட்டு. இரிசன் : எங்க பெரியவரை அனுப்பனா தேவலை எஜமான். ïj‰FŸ விசிறிக் கொண்டிருந்த குப்பனின் இடது கையில் தேள் கொட்டி ÉL»wJ.] குப்பன் : ஐயோ! (பார்க்கிறான்) தேள் கொட்டிப் புட்டுதுங்க. பெ.எ. : இந்தப் பக்கம் வந்து விசிறு. பொறுடா. kWg¡f« வலியோடு விசிறுகிறான். சீனனை இருவர் தூக்கி வந்து பெரிய எஜமான் எதிரில் தெருவில் »l¤J»wh®fŸ.] கொள்ளு : வேலுப்பையன் இவனெ மண்டையை ஒடைச்சிபுட்டு, ஊட்லே பூந்து பொண்டுவளே அடிச்சிபுட்டு, பணம் நகை யெல்லாம் தூக்கிகிணு நொச்சிக் காட்டுக்கு ஓடிப்புட்டான். போலீஸுக்கு ஆளெ உடுங்க. ஆக வேண்டியதே பாருங்க எஜமான். பெ.எ. : அங்காரு? மனைவி கனகம்: (உள்ளேயிருந்து வந்து) ஏன்? bgÇa எஜமான் பேப்பர் thá¡»wh®.] கொள்ளு : வேலுப்பையன் ஓடிப்புடுவாங்க. கிழவன் : கொஞ்சம் தயவு பண்ணுங்க. fha¥g£L¡ கிடக்கும் சீனன் தத்துக் குத்தலான நிலையில் ïU¡»wh‹.] சீனன் : என்னெ காப்பாத்துங்க. அவனெ புடிக்க ஏற்பாடு பண்ணுங்க. வைத் : ம. kUªJ என்று சொல்ல மஎழுத்தில் அகப்பட்டுக் கொண்டு அவதையடைகிறார். தெற்று வாயாராகிய it¤âa®] கனகம் : ஏன் கூப்பிட்டிங்க? பெ.எ. : இதோ வந்துவிட்டேன். கணக் : என் மனைவிக்கு உயிர் போவுதுங்களே, எழுந்திருங் களேன். பெ.எ. : பொறுமை கடலினும் பெரிது. பேப்பர் வாசிக்கிறார். உற்றுக் கவனித்தபடி, சுப்ரமண்ய குருக்கள் tU»wh®.] சுப்ர : வரணும் (இடது கையைத் தூக்கி ஆசீர்வதித்தபடி) பெ.எ. : வாங்க. சாமி. உக்காருங்க. சுப்ர : உட்கார்ரதுக்கில்லே. கொஞ்சம் அவசரமா வந்தேன். நம்ம ஆத்லே இன்னிக்கு நம்ம மருமான் ஊருக்குப் போறது, அவன் ஆம்படையாளெ கூட்டினு. பெ.எ. : ராமையா குருக்கள் சௌக்யமா இருக்காரா? சுப்ர : இருக்கார். மருமான் வந்தா செலவு இருக்காதா? 10 ரூபாய் கொடுங்க. நிக்க வச்சிட்டு வந்தேன். பெ.எ. : கடுதாசி கிடுதாசி போட்டாரா? சுப்ர : போட்டார். நான் அப்புறம் வந்து சொல்றேன். என்னை அனுப்புங்க. பெரிய எஜமான் பேப்பர் பார்க்கிறார் பழையபடி சுப்ர : என்னை அனுப்புங்க. சாவகாசமா பாருங்களேன். பேப்பரை. பெ.எ. : ஒங்கமேலே ஒரு பிராது. சுப்ர : என்னா அது? பெ.எ. : (பேப்பர் பார்க்கிறார்) கணக் : ஆபத்துங்க. (பரிதாபமாக) கிழவன் : அரை ரூபாய்தானுங்க. (பரிதாபமாக) இரிசன் : எங்க பெரியவரே அனுப்புங்க. (பரிதாபமாக) குப்பன் : தேளுங்க. (பரிதாபமாக) கொள்ளு : திருட்டுப் பையன். ? (பரிதாபமாக) சுப்ர : 10 ரூபாய். (கையைப் பிசைந்தபடி) சீனன் : ஐயோண்ணு போவுது உயிர். v‹¿›thW அவரவர் முணுமுணுத்துக் கொண்டிருக் கிறார்கள் வாய் ஓயாமல் மனைவி : (பெரிய எஜமானை நோக்கி) ஏன் கூப்புட்டிங்க? பெ.எ. : கலியாண விஷயம் என்ன? கனகம் : அவன் கலியாணம் இப்ப வாண்டாம் இண்றான். சம்பா தனைக்கு வழிதேடிய பின்னேதான் செய்துக்குவேன் இண்ணு சொல்றான். பெ.எ. : (கணக்கனை நோக்கி) நம்ம பையன் பெரியவனாப் போயிட்டான். கலியாணம் பண்ணணுமா இல்லையா? கணக் : ஆபத்துங்க. பெ.எ. : (திடுக்கிட்டு, நிதானித்து) ஒகோ உன் சேதியா? அது இருக்கட்டும். கண்ணுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்தா போறது. (கிழவனை நோக்கி) ஏன் கிழவா பொண்ணா நமக்கு அகப்படாது.? கிழவன் : அரை ரூபாய் தானுங்க. பெ.எ. : (திடுக்கிட்டு, நிதானித்து) ஓகோ - நல்ல இடத்துப் பெண் ஒண்ணு இருக்கு, உங்க அப்பாவை அனுப்பிக் கேக்கலாமிண்ணு நினைக்கிறேன். (இரிசனை நோக்கி) ஏன்? இரிசன் : எங்க பெரியவரே அனுப்புங்க. பெ.எ. : என்னடா மடப்பயலே. இரிசன் : அவசரங்க. பெரியவரே அனுப்புங்க. பெ.எ. : ஓகோ. ஏண்டி கனகம்? ஜமீன்தார் மகள் எப்படி? படிச்ச பொண்ணு; நல்ல அழகு. (குப்பனை நோக்கி) ஏன்? குப்பன் : தேளுங்க. பெ.எ. : தேளா! (நிதானித்து) ஓகோ உன் சங்கதியோ? (மனையை நோக்கி) ஜமீன்தார் அந்ததில் குறைஞ்சவரா கனகம்? (கொள்ளுவை நோக்கி) அவர் அந்தது எப்படி? கொள்ளு : திருட்டுப் பையன். குப்பன் : ஓகோ அதுவா? பெ.எ. : அடடா, என்னடா அப்படி சொல்லிட்டியே ஜமீன்தாரே. கொள்ளு : திருட்டுப் பையன் ஓடிடுவாங்க. கனகம் : எங்க அண்ணன் மவ நல்லா இல்லியா? அவளே ஏங் கட்டப்படாது? நாங்க என்னா பொற மாட்டமா? பரியம் ஏதாவது குடுங்க. ஏன் குருக்களே? சுப்ர : பத்து ரூபாய். கனகம் : அட, ஒன்னே பாடையிலே வைக்க. குருக்களா நீ? மூஞ்சை பாரு திருட்டுப் பையனாட்டம். சுப்ர : மருமானை ஊருக்கு அனுப்பணும். 10 ரூபாய் தேவை யிண்ணேன். கனகம் : ஓகோ! (பெரிய எஜமானை நோக்கி) நீங்க கட்டாட்டிப் போனா எங்கூட்டிலே சோறு கொதிக்காமே பூடாது. கிராக்கி இல்லாமல் இல்லே. (இச்சமயம் சீனன் எழுந்து விழுகிறான். அவனைக் காட்டி) சீனனுக்குத் தெரியும் எங்க வீட்டு நெலவரம். சீனன் : ஐயோண்ணு போவுது உயிரு. கனகம் : ஏங் குடும்பமா? சீனன் : போலிஸுக்குச் சொல்லுங்க; மண்டை ஒடஞ்சி போச்சிங்க. பெ.எ. : உனக்கென்ன செய்யணும்ண்றே? கிழவன் : அரை ரூபாய்! நாழி ஆவுதுங்க. பெ.எ. : சரி ஒனக்கு? கொள்ளு : வேலு ஓடிப்புடுவானுங்க. சீக்கிரம் போலிஸுக்கு ஆள் அனுப்பணுங்க. பெ.எ. : சரி நீ? குப்பன் : தேள் கொட்டிபுட்டது; போறேனுங்க! மருந்து இருந்தா போடுங்க. பெ.எ. : சரி. நீ? வைத் : ம என்ற எழுத்தைத் தாண்டி மருந்து என்று கூறி முடித்து, பெட்டியில் என்பதற்கு பெ என்ற எழுத்தில் மாட்டிக் கொண்டு, அவதைப் பட Mu«ã¡»wh®.] கணக் : மருந்து. பெட்டியில் இருக்கிறதாமே! அவசரம் எஜமான். பெ.எ. : சரி, நீ? இரிசன் : எங்க அப்பாவை அனுப்புங்க அவசரமா. பெ.எ. : சரி, நீங்க? சுப்ர : அதான். 10 ரூபாய் கேட்டேனே. பெ.எ. : சரி. போகிறார். அனைவரும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். பெரிய எஜமான் சற்று நேரம்சென்ற பின், ஒரு பொட்டணத்துடன் வெளியே வருகிறார். கணக்கர் கை நீட்டுகிறார் ஆவலுடன். பொட்டணத்தைக் கணக்கனிடம் கொடுத்துக் TW»wh®.] பெ.எ. : இந்தப் பொட்டணத்தைக் கோயில்லெ குருக்கள் இருப்பர். அவர்கிட்ட கொடுத்துட்டு அவசரமா ஓடியா. bgh£lz¤ij வாங்காமல் தலை தாழ்த்தி É»wh‹.] கணக் : ஐயோ எனக்கிண்ணு நெனைச்சேன். பெ.எ : (திண்ணையில் அதைவைத்து) அவசரமா கொடுத் துட்டு ஓடியா. cŸns போகிறார். சிறிது நேரம் சென்று எட்டணாவுடன் வெளியில் tªJ] பெ.எ. : இந்தா (அரை ரூபாயைக் காட்டி) யாரங்கெ? கிழவன் : நான்தாங்க. (ஆவலாகக் கைநீட்டி நெருங்குகிறான்.) பெ.எ. : (தேள் கொட்டப்பட்ட குப்பனை நோக்கி) குப்பா, இதைக் கொண்டு போய் ராமசாமி பிள்ளை கேட்டார். நல்ல நெய்யா வாங்கிக் கொடுத்துட்டு ஓடியா. கிழவன் : எனக்கு எஜமான்? என்னை அனுப்புங்க. குப்பன் : கொட்டு வாயில் ரொம்ப கடுக்குதுங்க. பெ.எ. : சரி. நான் அனுப்புகிறேன். (உள்ளே போகிறார். சற்று நேரம் சென்று ஒரு நோட்டோடு வெளி வருகிறார்.) சுப்ர : ரொம்ப உபகாரமா போச்சு (என்று கூறிக் கையை நீட்டுகிறார்.) பெ.எ. : நாளைக்கு ஒரு விசேஷம். அதற்குச் சில்லறை வேணும் வைத்யரே மாத்தி வாரீரா?..... அப்புறம் ஆகட்டும்... இருங்க. இதோ வந்துட்டேன். (சிறிது நேரம் சென்று குப்பனை) பல்லு குச்சி நல்ல வேப்பங் குச்சா பாத்து ஒடிச்சிகினு வா. இதோ சாப்பிட்டு வர்றேன். போகிறார். இதற்குள் ஒரு பையன் ஓடி வந்து கணக்கனைப் gh®¤J.] பையன் : ஒங்க பொண்டாட்டி செத்துப்புட்டாங்க. கணக் : பூட்டாளா, ஐயோ! பெ.எ. : பூஜை முடிச்சிபுட்டு வர்ரேன். கணக் : அட காமாட்டி. (என்று கூறி ஓடுகிறான்.) குருக்கள் : சரியா போச்சு! (போகிறார்.) முணுமுணுத்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் ngh»wh®fŸ.] மறுநாள் bgÇa எஜமான் திண்ணையில் உட்கார்ந்திருக்க, மனைவி எதிரில் É»whŸ.] பெ.எ. : நேற்றே தெரியும் அவன் ஒரு மாதிரியிருந்தான். காசி மாலை இருக்கா? அதையும் எடுத்துக்கினு பூட்டானா? கனகம் : அதையுந்தான். பெ.எ. : அட பாவி; எங்கே போயிருப்பான்? மொத்தம் பதினாயிர ரூபாய் நகை இருக்கும். ரொக்கம் ஆயிரம் அல்லாத்தையும் எடுத்துக்கினு போயிட்டானே. பணம் நகை போகட்டும். பிள்ளை இருக்கிற இடம் தெரிந்தா போதும். கனகம் : அதுதானே நான் நினைக்கிறேன். ராத்ரி கிளம்பி நேரே ரயிலுக்குப் போயிட்டான் இருட்டில்! காலை 3 மணி ரயில் ஒத்துக்கிச்சி. எங்கியோ பூட்டான். jªâíl‹ ஒரு பியூன் சைக்கிளில் tU»wh‹.] பெ.எ. : (தந்தியைக் கொடுக்க அதை வாசிக்கிறார்) இப்ப என்னா மணி? 3 இருக்கும். ஐயோ! இன்னும் ஒரு மணி நேரந்தானே இருக்குது. அவசரமா ரயிலுக்குப் போகணுமே; ஐயையோ! கனகம் : என்னா சங்கதி? கேட்கறேனே. பெ.எ. : சென்னையிலே நாளை காலையில் கப்பல் ஏறப் போறானாம் பையன். மோரிசுக்குப் போக. அதுக் குள்ளே நாம் வந்தாதான் பார்க்க முடியுமாம்! கிளம்பு. இன்னும் ஒரு மணி நேரந்தான்! 6 மைல் இருக்கு ரயில் டேஷனுக்கு; கிளம்பு! fdf« உள்ளே ஓடி உடுத்துகிறாள். மூட்டை கட்டுகிறாள். பிள்ளைகளுக்கு உடுத்துகிறாள். வெகு பரபரப்புடன் பெரிய எஜமான் வெளியில் ஓடுகிறார். கணக்குப் பிள்ளையின் வீட்டெதிரில் ËW] பெ.எ. : கணக்குப் பிள்ளை ஓடியா. fz¡F¥ பிள்ளை tU»wh‹.] பெ.எ. : ரயிலுக்கு அவசரமா போகணும் வண்டிக்காரனைக் கூப்பிடு. ஓடு. கணக் : நாளைக்குத்தான் மூணாநாள். கொஞ்சம் கிரியை விசேஷமாக நடத்த யோசனை. பெ.எ. : நான் என்ன சொல்றேன்! அவசரம் ஓடு. கணக் : பொறுமை கடலினும் பெரிது. பெ.எ. : என்னா மடையா சீக்கிரம் வண்டி. கணக் : என்ன விசேஷம்? பெ.எ. : ஐயோ! சோம்பேறி நாயே. v‹W கூறி வண்டிக்காரனாகிய குப்பனின் வீட்டிற்கு ஓடி, எதிரில் ËW.] குப்பா! ஓடியா வண்டி கட்டு. குப்பன் : (எதிரில் நின்று) தோ வந்துட்டேன். இந்தக் கையைத் தூக்கமுடியலிங்க. தேள் கொட்டிச்சி பாருங்க. என்னாங்க ... ... பெ.எ. : கதை சொல்லி மறுக்க நாழியில்லை.. அவசரம் ஓடியா. வண்டியைக் கட்டு! வா. குப்பன் : (தன் வீட்டுக்காரியை நோக்கி) அங்காரு? வெற்றிலைப் பையை எடு. தோ வர்ரேன் போங்க. பெ.எ. : என்ன வர்ரியா? புறப்படு. ஓடு. சொல்றேனே. குப்பன் : பொறுமை, கடல் இருக்குது பாருங்க. அதுக்கீடு பெரிசுங்க. பெ.எ. : அடே வாடா சீக்கிரம். குப்பன் : சரி. efU»wh‹. பெரிய எஜமான் அவனைத் தள்ளிக் கொண்டு XL»wh®.] பெ.எ. : போய் வண்டியைக் கட்டு, இதோ கொள்ளுப் பையனைக் கூட்டிகினு ஓடியாரேன். ஓடு. mtrukhf XL»wh®.] bgÇa எஜமான் வீட்டின் எதிரில் கட்டை வண்டி நிற்கிறது. அதன் கூண்டு தனியாக ஒரு புறம் இருக்கிறது. அதைப் பழுது பார்க்க ஆரம்பிக்கிறான் குப்பன்! பெரிய எஜமான், கொள்ளு, சீனன், கணக்கன் tU»wh®fŸ.] பெ.எ. : கணக்கப்பிள்ளை, புதகத்தேயெல்லாம் எடுத்து உன் அறையிலே வைச்சிக்கோ. நான் வர இரண்டு நாள் ஆவும். என்னடா செய்யறே குப்பா? போதும் பழுது பார்த்தது; கூண்டே எடுத்து மூடு சீக்கிரம். குப்பன் : சரிங்க. T©il¤ தூக்கி வருகிறான். பெரிய எஜமான் உள்ளே ngh»wh®.] பெ.எ. : போக வேண்டிய மூட்டை, முடிச்சி, பொட்டி, போழை யெல்லாம் ஒரு பக்கம் எடுத்துவை. கனகம், அப்றம் உடுத்தலாம்; சீக்கிரம். நாழி ஆவுது. ïj‰FŸ கொல்லைப்புறமிருந்து கழுதை ஒன்று வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது. கூடத்தில் எடுத்துப் போக வேண்டிய சாமான்களைக் கனகம் கொண்டு வைக்கிறாள், இடுப்பில் ஒரு பிள்ளையைச் சுமந்தபடி x›bth‹whf.] அவையாவன; வேடுகட்டிய ஒரு தவலை, ஒரு மூட்டை, ஒரு கூஜா செம்பு, சர்க்கரை சீசா, சோப்பு பெட்டி, பாலாடை, சீப்பு முதலியன அடங்கிய ஒரு சிறு தகரப்பெட்டி, பிள்ளைத் தடுக்கு, மெத்தைச் சுருணை, தலையணைக் கட்டு, பலகாரம் அடங்கிய ஒரு டின், வெற்றிலை பாக்குப் பெட்டி, செருப்பு ஒரு ஜோடி அப்போது கட்டிக் கொள்ளவேண்டிய புடவை, அப்போது போட்டுக் கொள்ள வேண்டிய நகை, ஒட்டியாணம், கண்ணாடி, பிள்ளைகளின் உடைகள், நகைகள். பெ.எ. : (டிரங்கில் உடுப்பு அடுக்கிக் கொண்டே) கணக்கப் பிள்ளே. கண : இதோ புதகங்களை எடுத்து வைக்கிறேன். பெ.எ. : ஆரையாவது அனுப்பு! கொல்லைக் கதவை சாத்தச் சொல்லு. நானே சாத்தி விடுகிறேன். ஓடிச் சாத்துகிறார். (கனகத்தை நோக்கி) ஆச்சா? நாழிகை ஆகிறது. சாமான் களையெல்லாம் வண்டியிலே எடுத்து வை. btËÆš போகிறார். வண்டியில் கூண்டு மூடுகிறவனைப் gh®¤J] போதும்டா T©il மேலோடு வைத்து ÉL»wh‹.] குப்பன் : சரி பெ.எ. : வண்டியைக் கட்டு; மாட்டே ஓட்டிவா. F¥g‹ கொல்லையை நோக்கிப் ngh»wh‹.] பெ.எ. : (உள்ளே தலைவாரிக் கொண்டிருக்கும் கனகத்தை ஒர் அறை அறைந்து) முண்டே! நாழிகை ஆகிறது. v‹W கூறி, டிரங்கு தடுக்கக் கீழே விழுகிறார். எழுந்து சாமான்களை எடுத்துக்கொண்டு, வண்டியை நோக்கி ஓடி, அதில் வைத்து, அவசரமாகத் திரும்பி, மற்றும் சாமான்களை எடுத்து வருவதற்குள், கழுதை ஓர் அறையில் புகுந்து விடுகிறது. கனகமும் சாமான்களை வண்டியில் கொண்டு வந்து it¡»whŸ.] பெ.எ : கவலை வேண்டாம். v‹W கூறி அதை அறையில் வைக்க நுழைகிறார். கனகம் அவசரமாகக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டி விடுகிறாள். அதே அறையில் கழுதையும் இருந்ததால் அதனிடம் பெரிய எஜமான் உதைபடுகிறதால் ஏற்படும் கதறல் வீட்டைப் ãs¡»wJ.] பெ.எ. : ஐயையோ! ஐயையோ! fdf« கதவைத் திறக்க, பெரிய எஜமான் பல் உடைந்தபடி வெளியே வந்து விழுகிறார். அறையில் கனகம் நுழைகிறார். இது பெரிய எஜமானுக்குத் தெரியாது. அவசரமாக எழுந்து கதவைச் சாத்துகிறார். கழுதை கனகத்தை cij¡»wJ.] கனகம் : ஐயையோ! ஐயையோ! bgÇa எஜமான் கதவைத் திறக்கிறார். மண்டை உடைந்தபடி கனகம் வெளியே வந்து விழுகிறாள். கழுதை இருப்பது தெரிகிறது. பெ.எ. : அதைரியப்படாதே. எழுந்திரு. வண்டியிலேறு. (கழுதையை நோக்கி) உ. சீ. (தமக்குள்) உள்ளே கிடந்து ஒழி. (கதவைச் சாத்துகிறார்.) mL¤j அறையில் தம் 8 வயதுப் பையன் என்னமோ எடுக்கிறான். அது தெரியாமல் பூட்டி விடுகிறார். 8 வயது பிள்ளை தவிர மற்றப் பிள்ளைகள் சாமான்கள் வண்டியில் ஏற்றுமதி நடந்து É£lJ.] பெ.எ. : கணக்கப்பிள்ளை, பத்திரம், நான் மூன்று நாளில் வந்து விடுகிறேன். t©oÆš ஏற, கூண்டு rhŒ»wJ] குப்பன் : பயப்படாதிங்க. இதோ சரிப்படுத்தி விடுகிறேன். v‹W இறங்க KaY»wh‹.] பெ.எ. : கூண்டு இல்லாவிட்டால் பாதகமில்லை. ஓட்டு! T©L இல்லாத வண்டி XL»wJ.] கனகம் : எல்லாச் சாமான்களும் சரியாய் எடுத்து வைச்சாச்சோ, என்னமோ? பெ.எ. : வச்சாச்சி; ரயில் அகப்படுமா குப்பா? குப்பன் : ஆகா நல்லா. பெ.எ. : ஓட்டு வண்டியை. குப்பன் : ஏய்.. kh£il அபாரமாக அடித்து விரட்டுகிறான். வண்டியில் கடையாணி இல்லாததால், இரு சக்கரமும் ஏக காலத்தில் கழலப் பார் நிலத்தில் உட்கார்ந்து விடுகிறது. பிள்ளைகள் கீழே உருளுகின்றனர். கனகம் விழுந்து எழுந்து பிள்ளைகளைக் காப்பாற்றுகிறாள். 8 வயதுள்ள பிள்ளை பெயர் uhK.] கனகம் : ஐயோ! ராமு எங்கே? ïj‰FŸ எதிரில் ஒரு கூண்டு வண்டி வருகிறது. பெ.எ. கைகாட்டி நிறுத்துகிறார். சாமான்கள் ஏற்றப்படுகின்றன. பிள்ளைகள் V‰w¥gL»wh®fŸ.] கனகம் : ராமுவைக் காணோமே? v‹W Tî»whŸ.] பெ.எ. : மணி ஆகிவிட்டது. ஓட்டு வண்டியை. v‹W f¤J»wh®.] குப்பன் : பொறுமை கடலினும் பெரிது. v‹W கத்துகிறான். வண்டி XL»wJ.] கனகம் : ராமுவைக் காணோமே, ஐயோ, பெ.எ. : ராமு எங்கே? (இறங்கி, வண்டி வந்த வழி நோக்கி ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து) வீட்டிலேயே தங்கி விட்டானோ? கனகம் : அப்படித்தான் இருக்கும். bg.v.: வீட்டை நோக்கி ஓடுகிறார். திரும்பி XotªJ.] பெ.எ. : வீட்டுச் சாவி எங்கே? கனகம் : என்னிடம் கொடுக்கலியே. பெ.எ. : போடி முண்டே (என்று ஓடுகிறார். திரும்பி ஓடிவந்து) கனகம்! கணக்கப் பிள்ளையிடம் இருக்குமா சாவி! கனகம் : இருக்கும். பெ.எ. : வண்டியை ஓட்டு. டிக்கட்டு வாங்கிவிடு. நான் எப்படி யாவது வந்து விடுகிறேன். ஆம்பளை! கனகம் : சரி. t©o ஓடுகிறது. பெரிய எஜமான் ஓடுகிறார். வீட்டை நோக்கி, கணக்கப்பிள்ளை வீடு சாத்தியிருக்கிறது. பெரிய எஜமான் கதவைத் தட்டுகிறார் Éiuthf.] பெ.எ. : கணக்குப்பிள்ளை! கணக் : (உள்ளேயிருந்தபடி) யாரடா அவன்? பெ.எ. : நான்தான் பெரிய எஜமான்! கணக் : ஏன் என்ன சங்கதி. நீங்களா? ரயில் அகப்படலியா? பெ.எ : சாவி கொடு. கணக் : எந்தச் சாவி? பெ.எ. : வீட்டுச் சாவி? கணக் : ஏன்? பெ.எ. : பையனை வீட்டிலே விட்டுச் சாத்திவிட்டுப் பூட்டேன். அவசரத்தில்! கணக் : அடடா! அதுதான் அறையில் சத்தம் கேட்டதோ. பையனை அறையில் வுட்டுச் சாத்திவிட்டிங்க. பெ.எ. : ஐயையோ! என்ன பண்ணுவேன், அடடா, வாயேன் வெளியே, என்ன பண்றே? கணக் : இதோ வந்துட்டேன்! பெ.எ. : சாவியாவது குடேன். கணக் : இதே வந்துட்டேன். பெ.எ. : என்னடா பண்றே பாவி. கணக் : பொறுமை கடலினும் பெரிசு. எண்ணெய்த் தலையோடு இருக்கேன். இதோ வந்துவிட்டேன். பெ.எ. : சாவியைக் கொடுத்தனுப்பேன். கணக் : வீட்டில் யாரும் இல்லை. பெ.எ. : ஜன்னலால் போடு. கணக் : எதை? பெ.எ. : அறைக்கதவு சாவியை. கணக் : என்னிடம் ஏது? பெ.எ. : பின் எங்கே? கணக் : எங்கே வச்சிங்க? பெ.எ. : வீட்டுக் கதவு சாவி கொடு. கணக் : அறையில்தானே பிள்ளையிருக்கான். பெ.எ. : (கதவை உடைக்கிறார். கதவு உடைந்துவிடுகிறது. எதிரில் நிற்கிறான் கணக்கன்) சாவி கொடு. கணக் : பொறுமை கடலினும் பெரிது. இந்தாங்க சாவி. சாவியை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறார் பெரிய எஜமான் அவசரமாக வீட்டைத் திறக்கிறார். கொத்துச் சாவியிலிருக்கும் வேறு சாவியைப் போட்டு! பிறகு, சரியான சாவியால் திறந்து உள்ளே ஓடுகிறார். அறைக்கதவு சாவியைத் தேடுகிறார். அகப்படவில்லை. அங்கிருந்த கடப்பாறையால் அறைக் கதவை உடைக்கிறார். கழுதை வெளியே ஓடி வருகிறது பிறகு இரண்டாவது அறைக் கதவை உடைக்கிறார். பிள்ளை படுத்துத் தூங்குகிறான். அள்ளியெடுக்கிறார் பெ.எ. : ஓடியா தம்பி. தெரியாமல் சாத்திவிட்டேன். இழுத்துக் கொண்டு ஓடிவிடுகிறார் வீட்டைச் சாத்தாமல்) சிறிது நேரம் செல்ல) பெ.எ. : அடடா! வீட்டைப் பூட்டவில்லை. போ தம்பி டேஷனுக்கு. இதோ வந்துட்றேன். வீட்டை நோக்கி ஓடுகிறார். பையன் சோகமாக அங்கு உட்கார்ந்து விடுகிறான். திரும்பி பெ.எ.ஓடி வருகிறார். பையன் சோர்ந்து உட்கார்ந் திருப்பதைப் பார்த்து, அவனைத் தூக்கிக் கொண்டு XL»wh®.] எதிரில் கனகம் வண்டி ஓடி வருகிறது பெ.எ. : என்ன சங்கதி? ஏன்? கனகம் : பணம் என்னிடம் கொடுக்கவில்லையே டிக்கட் வாங்க! பெ.எ. : சரி சரி. என்னிடம் இருக்கிறது. வண்டியில் அனைவரும் ஏறிக்கொள்ள, வண்டி டேஷனை நோக்கி ஓடுகிறது. ரயில் டேஷனை அடைகிறது) குப்பன் : சரி. பெ.எ. : (புக்கிங் கிளார்க்கை நோக்கி) டிக்கட் கொடுங்க. கிளார்க்கு: எந்த ஊருக்கு? பெ.எ. : பட்டணம் (பையில் கையை விடுகிறார்.) கிளார்க்கு: எத்தனை? பெ.எ. : மூணரை. சீக்கிரம் கொடுங்க. கிளார்க்கு: பணம் ? பெ.எ. : அடடா, இதோ வந்துட்டேன். (தன் மனைவியை நோக்கி) மணிபர் எங்கே? கனகம் : யாரைக் கேட்கிறீங்க? பெ.எ. : எங்கே என் டிரங்கு? கனகம் : உங்கள் டிரங்கை எடுத்து வைக்கலே. பெ.எ. : ஐயையோ! (குப்பனை நோக்கி) என்ன பண்ணுவேன்? uÆš போய் É£lJ.]  அமைதி பாவேந்தர் முன்னுரை அமைதி என்னும் இச்சிறு நாடகம், நாடக உறுப்பினர் - நடிகர் எவருக்கும் பேச்சில்லாது நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. ஆதலின், இதை ஊமை நாடகம் என்றேன். நடிகர் அனைவரும் ஊமைபோல் நடித்தா லும், ஊமைகளைக் கொண்டும் இந்நாடகத்தை நடைபெறு விக்கலாம் ஆதலினாலும் ஊமை நாடகம் என்றது பொருந்துவ தாகும். இந்நாடகம் எம்மொழியராலும் நடத்துவிக்க முடியும். கருத்துக் களும் உலகப்பொதுவானவை! - பாரதிதாசன் ஒன்று ஏழெட்டுக் கூரை வீடுகள்! புல்லடர்ந்த தரையில் சில தேய்ந்த வழிகள்! இடையிடையே மரங்கள், செடிகள், கொடிகள்! கூரைகளைச் சுற்றி வளைந்தோடும் வாய்க்கால்! அங்கும் இங்கும் திரியும் ஆடுகள், கோழிகள், நாய்கள். ஒரு கூரை வீட்டின் எதிரில் பிணப்பாடை கட்டுகிறார்கள். ஒருவன் துன்பமுகத்துடன் உள்ளே போவதும் வெளியில் வருவது மாக இருக்கிறான். வீட்டின் வெளிப்புறம் பத்துபேர் குந்தியிருக்கிறார் கள். இறந்த கிழவியை வீட்டினுள்ளிருந்து சிலர் தூக்கி வருகிறார் கள். சில பெண்டிர்கள் உடன் வருகிறார்கள். பிணம் தூக்கப் படுகிறது. அந்தத் துன்ப முகத்தினன் தன் இடையில் செருகி வைத் திருந்த சாவியை எடுக்கிறான். வீட்டிலிருந்த பெண்டிர்கள் வெளிச் செல்கிறார்கள். வீட்டை இழுத்துப் பூட்டிவிட்டுப் பிணத்தோடு நட்ட தலையினனாய் நீர் ஒழுகும் கண்ணினனாய் நடந்து செல்லுகிறான். அவன் பெயர் மண்ணாங்கட்டி. இரண்டு பிணத்தோடு சென்றவர்கள், மண்ணாங்கட்டியுள்ள வீடு நோக்கி வருகிறார்கள். மண்ணாங்கட்டி வீட்டுக் குறட்டில் நின்று கை கூப்ப, பிணத்தோடு சென்று மீண்ட அனைவரும் கைகூப்பிச் செல்லுகிறார்கள். மண்ணாங்கட்டி, வீட்டைத் திறக்கிறான். வீட்டின் உட்புறம் பல பொருள்களையும் பார்க்கிறான். கண்ணீர் சொரிகிறான். ஒருபுற மிருந்த பெட்டியைத் திறக்கிறான். அதிலிருந்து காசுகள் அனைத்தை யும் தன் மடியில் வைத்துக் கொள்ளுகிறான். ஓர் எழுதுகோல் சிறிது தாள் எடுக்கிறான். ஒரு புறம் உட்கார்ந்து சிறு தாள் கிழித்து அதில் ஏதோ எழுதுகிறான். எழுதுகோலையும் மற்றும் சிறிது தாளையும் மடியில் வைத்துக் கொள்ளுகிறான். அவன் கண்ணெதிரில் கொடியில், ஒரு பழம் புடவையும், ஒரு வேட்டி ஒரு துண்டும் காட்சியளிக்கின்றன. அவற்றை மடித்துக் கைப் புறம் வைத்து வெளிவருகிறான். வீட்டைப் பூட்டிக் கொள்ளுகிறான். தலையில் முக்காடிட்டு நடக்கிறான். மூன்று ஏழெட்டுக் குடிசைகளில், கடைசியில் உள்ள ஒரு பொத்தற் குடிசையின் பின்புறமாக மண்ணாங்கட்டி நின்று, பொத்தற் குடிசை யின் உள்ளே பார்க்கிறான். இரக்கம் கொள்ளுகிறான். தன் வீட்டுச் சாவியையும் தான் எழுதிய தாளையும் குடிசையின் உள்ளே போட்டுச் சிறிது தொலைவில் சென்று ஓர் மரத்தடியில் நிற்கிறான். பொத்தற் குடிசையைப் பார்த்தபடி! பொத்தற் குடிசையின் உள்ளே இருந்து ஒருவன் தன் கையில் சாவியுடனும், மண்ணாங்கட்டி எறிந்த ஏட்டுடனும் வெளிவருகிறான். அவன் மற்றும் ஒரு முறை ஏட்டைப் படிக்கிறான். அவன் கண்கள் வியப்பில் ஆழ்கின்றன. அவன் மகிழ்ச்சியால் விரைவாக மண்ணாங் கட்டியின் வீட்டைத் திறக்கிறான். சுற்றிலும் பார்க்கிறான். மீண்டும் கதவைப் பூட்டிக் கொண்டு தன் பொத்தற் குடிசையை அடைகிறான். உடனே அவனும் மற்றொருத்தியும் பொத்தற் குடிசையிலிருந்து தட்டு முட்டுக்களுடன் மண்ணாங்கட்டியின் வீட்டை அடைகிறார்கள். இவற்றை மண்ணாங்கட்டி கண்டு உள்ளம் பூரித்துச் செல்கிறான் ஊரின் புறத்தே. நான்கு அடுத்த சிற்றூரில் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் விழுகிறான். பறவைகள் தழைகிளைகளில் அடங்குகின்றன. குடிசைகளில் விளக்கேற்றப்படுகின்றது. பனி புகைகின்றது. ஊரின் பொதுச் சாவடியில் ஒரு கிழவி மேலாடையின்றித் தன் கையால் மெய்போர்த்துக் குளிரால் நடுங்கியபடி மூலையில் ஒண்டியிருக் கிறாள். மண்ணாங்கட்டி காணுகிறான். அவன் முகம் துன்பத்தை யளாவுகின்றது. கிழவியின் எதிரில் ஒரு பழம்புடவை வந்து வீழ்கிறது. அவள் சுற்றும் முற்றும் பார்க்கிறாள். புடவையை மகிழ்ச்சியுடன் எடுத்து விரித்துப் போர்த்திக் கொள்ளுகிறாள். அவளின் இருண்ட விழிகளை ஒளி தழுவுகின்றது. புடவை போர்த்த தன் அழகைத் தானே பலமுற குனிந்து குனிந்து பார்த்து மகிழ்கிறாள். பற்கள் இல்லாவிடினும் உதடுகளால் சிரிக்கிறாள். மண்ணாங்கட்டிக்கு இஃதோர் இன்பக் காட்சி! சிரித்த முகத்தோடு அவன் மேலும் நடக்கிறான். ஐந்து நள்ளிருளில் ஒரு குடிசையில் ஒற்றை விளக்கு எரிகிறது. தரையிற் குந்தித் தலையிற் கை வைத்துக் கண்ணீர் சிந்துகின்றான் ஒருவன். அறையிலிருந்து ஒருத்தி ஒரு சின்னஞ் சிறு மூட்டையுடன் வெளிவந்து கொல்லைப்புறக் கதவு திறந்து வெளிச் செல்லுகிறாள். அவள் சிறிது தொலைவில் தனியே சென்று ஒரு வேலிப்புறத்தில் தன் கையிலிருந்த மூட்டையை மெதுவாகத் தரையில் வைத்துப் போகிறாள். மண்ணாங்கட்டி அம் மூட்டையைச் சென்று எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அவன் மேனி நடுங்குகிறது. குழந்தையைத் தன் மேலுடையால் மறைத்து எடுத்துப் போகிறான். சற்றுத் தொலைவில் ஒரு குளத்தைக் காணுகிறான். அதில் குழந்தையின் செந்நீர் தோய்ந்த மேனியைக் கழுவுகிறான். கொப் பூழ்க் கொடியைக் களைகிறான். உடையால் ஒற்றி வேறு உடை போர்த்துக் கைப்புறத்தில் அணைத்தபடி செல்லுகிறான். அங்கொரு தொழுவம் காணுகிறான். அதில் உள்ள ஒரு பசுவைக் காணுகிறாள். குழந்தையை ஒரு புறம் படுக்க வைத்து விட்டுப் பசும்பாலைத் துணி நனையக் கறந்து குழந்தையின் வாயிற் பிழிந்து உண்பிக்கிறான். சற்றுத் தொலைவில் குழந்தையுடன் செல்லுகிறான். ஊர்ப் பொதுச் சாவடி ஒன்று காணுகிறான். ஊர் பொதுச் சாவடியில் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் துயிலுகிறார்கள். ஆயினும், அவர்களில் ஒரு கணவனும் மனவியும் துயில் நீங்கி எழுந்து மற்றவர்கள் துயில்வதையும் அவர்களின் அண்டையில் மூட்டை முடுச்சுகள் கேட்பாரற்றுக் கிடப்பதையும் பார்க்கிறார்கள். அந்த மூட்டைகளிற் சிலவற்றை திருடிச் சென்று சிறிது தொலைவிலுள்ள ஆலமரத்தின் வேரில் மறைத்து மீண்டும் துயில்வாரோடு தாமும் வந்து துயில்கிறார்கள். கிழக்கு வெளுக்கிறது. ஆலமரத்தை நோக்கி ஒரு கணவனும் அவன் மனைவியும் சுற்று முற்றும் பார்த்தபடி வருகிறார்கள். அவர்கள் திருடிப் பதுக்கிய மூட்டைகளைக் காணுகிறார்கள். அம் மூட்டைகளின் அண்டையில் வண்டு விழிகாட்டி மலர் முகம் காட்டிச் சிறிய மலர்க் கைகளும் கால்களும் அசைத்துக் கிடக்கும் ஒரு குழந்தையையும், குழந்தையின் அண்டையில், சில தங்க நகைகளும் பணமும் கிடப்பதையும் காணுகிறார்கள். மனைவி குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறாள். கணவன் முகம் மகிழ்ச்சி கொள்ளு கிறது. ஆலமரத்தின் மேல் ஒரு நெஞ்சம் பூரித்துப் போகிறது. பிள்ளையையும், பணம், நகை மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு கணவனும் மனைவியும் போகிறார்கள். ஆலமரத்தை விட்டு இறங்கிய மண்ணாங்கட்டி வேறு புறம் செல்லுகிறான். ஆறு மண்ணாங்கட்டி ஒரு சிற்றூரை அடைகிறான். இளங்கதிர் கடலைவிட்டு எழுகிறது. அவன் நடக்கிறான். அவன் கண்கள் நாற்புற நிகழ்ச்சிகளையும் துழாவுகின்றன. அங்கோர் வண்டியில் ஏறுகால்மேல் உட்கார்ந்து மாடுகளை ஓட்டுகிறான். வண்டியில் ஏற்றிய பூச்சுணைக்காய் பின்புறத்தில் நழுகுகின்றது ஆயினும், அது விழுமுன் ஏந்தி முன்னிருந்த இடத்தில் வைக்கின்றன மண்ணாங்கட்டியின் கைகள். தெருத்திண்ணைமேல் தூணிற் கட்டப்பட்ட கன்றுக்குட்டி கால் தவறிக் கீழே விழுகிறது. அதன் உடல் பதைக்குகிறது. அது தூக்கு மாட்டிக் கொண்ட உடல்போல் தொங்கித் துடிக்கிறது! இந்நிலை அதற்கு ஒரு நொடி. மறு நொடியில் மண்ணாங்கட்டி மீட்சியளித்து அதற்கு முத்தமும் தந்து மகிழ்ந்தபடி நடக்கிறான். மண்ணாங்கட்டிக்கு உச்சியினின்று கதிரவன் நெருப்புக் குடை பிடிக்கும் நேரம்! ஒரு குளக்கரையில் இருவர் தலைவிரித்து நிறையச் சோறிட்டு உண்டிருக்கிறார்கள் அக்காட்சியை மண்ணாங்கட்டி பார்க்கிறான். திகைக்கிறான். தன் கையால் அடிவயிற்றைத் தடவுகிறான். அவன் முகம் சுருங்குகிறது. அப்போது அவன் எதிரில் ஒரு வைக்கோல் வண்டி போகிறது. எத்தனை பெரிய வண்டி! அவ்வண்டி மேல் எவ்வளவு வைக்கோல்! இளைத்த இரண்டெருதுகள், மண்டியிட்டு இழுத்துச் செல்கின்றன, அவற்றின் கண்கள் பீளை கக்குகின்றன; கடைவாய் நுரையூற்று! மண்ணாங்கட்டி பாய்கிறான், வண்டியின் பின்புறம் தன் தலையைப் பொருத்தி உரங்கொண்ட மட்டும் தள்ளிச் செல்கிறான், எருதுகள் துயர் நீங்கி மாப்பிள்ளை போல் நடக்கின்றன. மண்ணாங் கட்டியின் சுருக்க முகம் மலர்கின்றது வண்டி தன் இடத்தை யடைகின்றது. மண்ணாங்கட்டி வேறு வழி நோக்கி நடக்கிறான். ஏழு நள்ளிருளில் தனித்திருக்கும் ஒரு வீட்டின் தெருப்புறத்து அறைச்சன்னலின் கம்பிகளை இருவர் விலக்குகிறார்கள். வீட்டின் தெருக்கதவு பூட்டப்பட்டிருக்கிறது. மண்ணாங்கட்டி எதிரிலுள்ள மரத்தில் மறைந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அறையின் உள்ளே ஒருவன் புகுகின்றான். பிறகு வெளிவருகிறான். இருவரும் தெருப் புறத்திலுள்ள மற்றோர் அறையின் சன்னற் கம்பிகளை விலக்கு கிறார்கள். ஒருவன் உள்ளே புகுந்து தவலை ஒன்றை எடுத்து வெளியிலிருந்தவனிடம் நீட்ட அவன் அதை வாங்கி வைக்கிறான். மற்றும் உள்ளே சென்றவன் வேறு பொருளை எடுக்குமுன் மண்ணாங்கட்டி, வெளியிலிருப்பவன் காணும்படி சற்றுத் தொலை வில் உலவுகிறான், வெளியிலிருப்பவன் மெல்ல நழுகுகிறான். சிறிது தொலைவில் நழுகிய பின், அவனை நோக்கி மண்ணாங்கட்டி, ஒரு கல்லை எறிகிறான். அவன் ஓடிமறைந்து விடுகிறான். மண்ணாங் கட்டி, சன்னலண்டை வந்து நின்று கொள்ளுகிறான். அறையின் உள்ளே சென்றவன் பெரியதும், சிறியது மாகிய பல பொருள்களை வெளியே நீட்டுகிறான். நீட்டுந்தோறும் மண்ணாங்கட்டி அவற்றை வாங்கி வாங்கி அடுத்த சன்னல் வழியாக அறைக்குள் செலுத்தி விடுகிறான். சோறு நிறைந்த ஓர் குண்டானை யும், குழம்பு நிறைந்த குவளையையும் கடைசியில் உள்ளேயிருந்தவன் கொடுக்கிறான். மண்ணாங்கட்டி அவ்விரண்டையும் சன்னலின் எதிரிலேயே வைத்து விடுகிறான். அவன் அறையை விட்டு வெளிவருகிறான். மண்ணாங்கட்டி நழுகி எதிரில் மரத்தில் மறைந்து கொள்கிறான். வந்தவன் சோற்றுக் குண்டானையும், குழம்புக் குவளையையும் தூக்கிக்கொண்டு தன் துணைவனைத் தேடிச் சிறிது நகருகின்றான். அவன் இல்லாததால் இன்னும் சிறிது நகருகிறான். உடனே அவனை நோக்கி ஒரு கல் சீறி வந்து எதிரில் விழுகிறது. மற்றொன்று, இன் னொன்று குண்டானோடும் குவளையோடும் அவன் கம்பி நீட்டுகிறான். மண்ணாங்கட்டி வேறுபுறமாகச் செல்லுகிறான். எட்டு வெயிலில் தங்கம் போர்த்ததுபோல் ஒரு மலை தோற்றம் அளிக்கிறது. அதன் சரிவில் ஒரு பெருமாள் கோவில் தோன்றுகிறது. கோவில் சூழ ஆயிரக்கணக்கான மக்களின் நடமாட்டம். அங்குள்ள ஒரு தோப்பில் ஒரு புறமாக உட்காருகிறான் மண்ணாங்கட்டி. தோப்பில் பல புறங்களிலும், வியர்வை ஒழுகும் மேனியும் கண் குழிவுபட்ட முகமுமாகப் பலர் காணப்படுகிறார்கள். சிலர் உட்கார்ந் திருக்கிறார்கள். சோர்ந்து! சிலர் படுத்தும் புறள்கிறார்கள் வயிற்றைப் பிசைந்தபடி! அவர்கள் முகங்கள் ஒவ்வொன்றும் பசித் துன்பத்தால் கருகியிருக்கின்றன. ஒரு மூலையில் வேறொரு காட்சியை மண்ணாங்கட்டி காணுகிறான். புன்னைமரத்தின் நன்னிழலில் பொன்னிழை கலந்து நெய்த துகில் விரித்து அதன் மேல் மணியிழை மின்னும் ஒருத்தியும், தங்கத் துகில் சரிந்து வீழ வெயில் வீசும் மார்பணி துலங்க, அருகமர்ந்த ஒருவனும் மகிழ்ந்திருக்கின்றனர். அவள் பாலில் துவைத்த ஒப்பிட்டை அவன் வாயில் அப்பிக் கொண்டிருக்கிறாள். அவர்கள் எறிந்த நெய்யொழுகும் பண்ணியமும் அப்பமும் எதிரில் நாய்கள் தின்று தெவிட்டுதல் அடைகின்றன. மிகுபலர் துன்பமுறுகின்றனர். மிகச் சிலர் இன்பமுறுகின்றனர். மண்ணாங்கட்டி காணுகின்றான். புன்னை மரத்தடியை விட்டு மண்ணாங்கட்டியின் உள்ளம் இப்பெரு வையத்தை நோக்குகின்றது: அங்கு மிகுபலர் துன்புறுகின்றனர், மிகச் சிலர் இன்புறு கின்றனர். சிறிது நேரம் சென்றது. மண்ணாங்கட்டி மரத்து நிழலில் தூங்குகிறான். ஒன்பது இருள்! பெருமாள் கோவில் மடப்பள்ளியின் தெருப் பக்கத்துச் சன்னல் திறக்கப்படுகிறது! உட்புறமிருந்து ஒரு பெருந் தட்டு வெளிப்புறம் நீட்டப்படுகிறது! அந்தச் சன்னலில் கருத்தின்றி ஒரு பெண் சற்று தொலைவில் மற்றொருவனின் தோளில் கை வைத்தபடி நிற்கிறாள். மண்ணாங்கட்டி வெளிப்புறமிருந்து தட்டை வாங்கிப் போகிறான்! பெண்ணை விட்டுக் காளை பிரிகிறான். பெண்ணாள் கண்பூத்துப் போக நெடு நேரம் சன்னலை நோக்கி நிற்கிறாள். அவள் கைகளை முறித்துக் கொண்டு செல்கிறாள். மண்ணாங்கட்டி, தட்டிலிருந்து பொங்கலில் வேண்டுமட்டும் அருந்துகிறான். மீந்ததை ஒருபுறம் உட்கார்ந்து தூங்கி விழும் நொண்டியின் எதிர் வைத்து நடக்கிறான். நொண்டி விழித்துப் பொங்கலை மகிழ்ந்துண்ணுகிறான். பத்து மண்ணாங்கட்டியின் எதிரில் ஒரு பெரிய ஊர் தோன்றுகிறது. வானைத் தொடுகின்ற இரண்டு மாடி வீடுகள் தோன்றுகின்றன. இவ்விரண்டு மாடி வீடுகளும் தம்மில் நெருங்கியிருக்கவில்லை. இரண்டுக்கும் நடுவில் ஒரு கல் தொலைவு இடைவெளியிருக்கலாம். மண்ணாங்கட்டி ஊரில் நுழைகிறான். ஊர்ப்புறத்தில் புல்லற்ற வெளி யில் சில மாடுகள் மேய்கின்றன. அவை எலும்பும் தோலுமாய்த் தோன்றுகின்றன. தெருக்களைக் காணுகிறான். நிறையப் பொத்தற் குடிசைகள்; தெருக்களில் தீனியின்றி மண்ணைக் கொத்தித் தின்னும் இளைத்த கோழிகள் மேய்கின்றன. ஆடையின்றி விலாவெடுத்த சிறுகுழந்தைகள் மண்ணிற் கிடக்கின்றன. குலைக்கவும் வலிவின்றி நாய்கள் மண்ணாங்கட்டியைக் கண்ணாற் பார்த்துப் பழையபடி புறங்கால் இடுக்கில் தலைவைத்துச் சுருண்டு படுக்கின்றன. பேச்சுக் குரலற்ற குடிசைகளைக் காணுகிறான். சில குடிசை களை அவன் எட்டிப் பார்க்கின்றான். பூனை தூங்கும் அடுப்புகள், ஈரமற்ற முற்றங்கள், ஒட்டடை நிறைந்த அடுக்குப் பானைகள் காட்சியளிக்கின்றன. அவன் விழிகளில் இரக்கமும் வியப்பும் மாறி மாறித் தோன்றுகின்றன. ஒரு மாந்தோப்புத் தோன்றுகின்றது. மரங்களில், காயில்லை, வண்டுகளும், பூவும் இருக்கின்றன. ஏழை மக்கள் சிலர் மாவடு, பூ, தளிர் இவைகளைக் கையால் தாவிப் பறித்து உண்கிறார்கள். அவர்களின் கண்கள் எவனுக்கோ அஞ்சுகின்றன. ஒருவன் கையில் தடியுடன் வருகிறான். மக்கள் ஓடி ஒளிகிறார்கள். வேறுபுறம் மண்ணாங்கட்டி செல்லுகிறான். பழுக்காத பனங்காயைப் பலர் பல்லாற் கடித்துக் கிடக் கின்றனர். மற்றும் சிலர் பச்சோலையைத் தின்கின்றனர். மண்ணாங் கட்டி மெய் நடுங்குகிறான். அவன் மறுபுறம் நடக்கின்றான். பெரியதோர் மாடிவீடு. அதையடுத்துப் பல பொருட் காப்பு விடுதிகள் தோன்றுகின்றன. மாடி வீட்டின் வாயிலில் நிறைய மக்கள் கெஞ்சிய முகத்தோடும் துணி விரித்து ஏந்திய கையோடும் மொய்த் திருக்கின்றார்கள். சிலர் கூழ் ஏந்தும் சிறு பானையுடன் ஏங்கியிருக்கின்றனர். வேறு புகல் இல்லையென்னும் நிலையில் பலர் வாயிலின் நேரில் உட்கார்ந்திருக்கின்றனர். மற்றும் பலர் உட்கார்ந்திருக்க வலிவின்றிப் படுத்திருக்கின்றனர். மண்ணாங்கட்டி நின்று பார்க்கிறான். அவன் முகம் கருமையடைகின்றது. சிறிது நேரம் செல்ல, மாடி வீட்டினின்று ஒருவன் கையிற் கோலுடன் ஏழை மக்களை நோக்கிச் சினத்துடன் வருகின்றான். மக்கள் அஞ்சிப் பறக்கின்றார்கள். அவன் உள்ளே போகின்றான். மீண்டும் ஏழை மக்கள் மாடி வீட்டை மொய்க்கின்றார்கள். மண்ணாங்கட்டி மேலும் நடக்கின்றான் விரைவாக! ஒரு கல் தொலைவு செல்லுகின்றான். மற்றொரு வீட்டைக் காண்கின்றான். அங்கும் காணுகின்றான் கையேந்தி நிற்கும் ஏழை மக்களை. மண்ணாங்கட்டி ஆவலுடன் எதையோ பார்க்கிறான். நடக்கிறான் மேலும்! ஊரின் மேற்குப் புறத்தில் ஏரிக்கரையை அடைகிறான்: ஏரியைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கின்றன அவன் விழிகள். அவன் முகத்தில் சிறிது மகிழ்ச்சியரும்புகின்றது. ஏரி நிறைய நீர் இருக்கிறது. ஏரியின் மறுமுனையைப் பார்க்கிறான். ஊர் தோன்றுகிறது. அவ்வூருக்கும் இந்த ஏரிக்கும் இடையில் தடைச் சுவர் ஒன்று மட்டமாய்க் கட்டப்பட்டிருப்பதை அறிகிறான். மற்றும் ஏரியின் அருகில் குறவர் குடிசைகள் தோன்றுகின்றன. உற்றுப் பார்க்கிறான் மண்ணாங்கட்டி, ஒரு குறவன் மூட்டம் போட்டு அதில் உயிருடன் நாய் ஒன்றை வதக்கிக் கொண்டிருக்கிறான். அதன் தசையை எதிர்பார்த்துப் பல குறவர் ஏங்கி நிற்கிறார்கள். மண்ணாங் கட்டி விரைந்து சென்று குடிசையொன்றில் நுழைகிறான். சிறிது நேரத்தில் அக்குடிசையினின்று ஒரு குறவன் வெளிச் செல்லுகிறான். அவன் உடனே பல குறவர்களுடன் தன் குடிசைக்குள் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் வீழ்கிறான். கையெழுத்து மறைகிறது. பல குறவர்கள் மண்ணாங்கட்டியுடன் செல்லுகிறார்கள் கையில் கடப்பாரைகளுடன். ஏரியின் அக்கரையில் கட்டப்பட்டிருக்கும் தடைச் சுவர் இடி படுகின்றது. மண்ணாங்கட்டியின் தோள் விரைவாக அவ்வேலையில் ஈடுபடுகின்றது. குறவர்கள் தம் தலைவருடன் போட்டியிடு கின்றார்கள். மண்ணாங்கட்டி ஏரியைப் பார்க்கிறான். அவன் மகிழ்ச்சி கொண்ட முகத்தை மற்றும் காண்கிறார்கள். குறவர்களும் மண்ணாங் கட்டியும் குறவரின் குடிசைகளை நோக்கிச் செல்கிறார்கள். சிறிது நேரத்தில், ஒருவன் சுளுந்தக் கழி கொளுத்தியபடி இடிக்கப்பட்டிருக்கும் தடைச் சுவரைப் பார்க்கிறான். ஏரியின் மறு முனையில் தோன்றும் ஊரை நோக்கி விரைந்து செல்லுகிறான்! உடனே சுளுந்தக் கழி கொளுத்திப் பிடித்தவனும் ஊர்ப் பெரியவர் களும் தடைச்சுவரை ஆராய்கிறார்கள். அவர்கள் கண்ணில் தீப் பொறி பறக்கிறது. அவர்கள் தம் எதிரில் தோன்றும் இரண்டு மாடிகள் உள்ள ஊரை நோக்குகிறார்கள். மீண்டும் குறவர்களுடன் மண்ணாங்கட்டி செல்கிறான். ஏரிக் கரை இடிபடுகின்றது. தண்ணீர் உடைந்த தடைச்சுவரைத் தாண்டி அவ்வூரில் நுழைகிறது. இடையில் பரந்த வயல் அனைத்தும் வெள்ளம். அவ்வூரிற் சென்ற அளவு இவ்வூரிலும் வெள்ளம் புகுகின்றது. மண்ணாங்கட்டி குறவர்களுடன் செல்லுகிறான்! பதினொன்று மாடி வீட்டின் பெருங் கதவு திறக்கப்படுகின்றது. பெரிய பண்ணையார் முறுக்கிய மீசையுடன் விரைவாக வெளிவருகிறார். அவர் மனைவி அணிகளையும் தன் அழகையும் சுமந்து வெளி வருகின்றாள். இருவரும் தெரு நடுவில் நின்று கையில் மண் வெட்டி யும் சிவப்புத் துணியையும் தூக்கி அசைத்துக் காட்டு கிறார்கள். ஊர் மக்கள் மண்வெட்டி, தட்டு, பாரை தூக்கி ஏரி நோக்கி ஓடுகிறார்கள். மற்றொரு மாடி வீட்டினின்று சின்ன பண்ணையார் அவருடைய அழகற்ற மனைவியும் அவ்வாறே அடையாளங்காட்ட அங்குள்ள மக்களும் ஏரியை நோக்கி ஓடுகிறார்கள் கருவிகளுடன். இரு பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான ஆட்கள், பெருமிடாக் களில் அரிசியைக் கழுவிப் போட்டுச் சோறாக்குகிறார்கள். ஏரியில் வேலை செய்யும் ஊர் மக்கட்கு வாழையிலை திருத்தப்படுகிறது. சோறு இட, கறிகள் அரிகிறார்கள் குழம்பு வைக்க, நூற்றுக்கணக்கான அடுப்புகள் எரிகின்றன. தாளிப்பு மணம் கமகம என்று எழுகின்றது நாற்புறத்தும். அனைத்தும் ஊர்மக்கட்கு! மகிழ்ச்சியுடன் திரிகிறான். மண்ணாங்கட்டி. அவன் ஏரிக்கரை செல்கிறான். ஊர் மக்கள் ஏரிக்கரை செப்பனிடுவதைப் பார்க்கிறான். மீண்டும் ஊருக்குள் வருகிறான். சோறு கறிகள் இலையில் வரிசை வரிசயைக வட்டிக்கப் படுவது காணுகிறான். பசிகொண்ட நாய்கள் தாமே சோற்றண்டையில் சூழ்ந்தன. பசிகொண்ட மக்களோ பண்ணையார்கள் கையசைக்க வந்து சேர்ந்தனர். அனைவரும் உணவருந்துகிறார்கள். மண்ணாங்கட்டி அள்ளூறிப் போகிறான், மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உண்ணும் மக்களைச் சுற்றி சுற்றி வருகிறான். விலாப்புடைக்க உண்டு எழுகிறார்கள் ஊர் மக்கள். அவர்கள் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கிட்டு மெல்லுகிறார்கள். அவர்கள் முகங்கள் பொலிவுறுகின்றன. முதுகெலும்பை ஒட்டிய வயிறு முற்புறம் பெருத்திருப்பதை மண்ணாங்கட்டி கடைக்கண்ணால் பார்த்துப் பார்த்துக் கடை யுதட்டால் சிரிப்பை ஒழுக விடுகிறான். அனைவரும் ஏரி நோக்கிச் செல்லுகிறார்கள். வேலை தொடங்குகிறார்கள். மாலை வேளைச் சோறு சமைக்கத் தொடங்குகிறார்கள் பண்ணையாட்கள். மண்ணாங் கட்டி தான் சாப்பிட மறந்து போனதைத் தன் வயிற்றைத் தடவிய அவன் கைகள் காட்டுகின்றன. மாலைப் போதில் மீண்டும் ஊர் விருந்து மண்ணாங் கட்டிக்கு உட்பட நடக்கிறது. பன்னிரண்டு மாலையில், மண்ணாங்கட்டி ஏரிக்கரையண்டையில் நின்று வேலை நடப்பதைப் பார்க்கிறான். நாளை வேலை தீர்ந்து விடும் நிலையில் இருப்பது அவனுக்குத் தெரிகிறது. ஊர் மக்கள் ஏரிக் கரையைக் கட்டுவதில் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்க்கிறான். அவன் விழிகள் நினைப்பில் தோய்கின்றன. பகலவனும் மேற்கில் மறைகிறான். ஊரில் நுழைகிறான். பெரிய பண்ணையார் வீட்டு மாடியில் பொருத்தப் பட்டிருக்கும் மணிப்பொறியின் முட்கள் இரவு 9 என்று காட்டு கின்றன. மண்ணாங்கட்டி அப்பெரு வீட்டை ஒரு சுற்றுச் சுற்றி வருகிறான். மேலும் அவன் அவ்வீட்டின் பக்கவாட்டில் நின்று வீட்டின் உயரத்தைக் கண்ணால் அளக்கிறான்! அப்பெரு வீட்டின் மாடியில், ஒருகூடம், அங்கு சாப்பாட்டு மேசை, நாற்காலிகள், அலமாரி, ஒரு புறம் இரண்டு கட்டில்கள், விளக்கொளியில் காட்சியளிக்கின்றன. பெரிய பண்ணையார் அங்கு வந்து மேசையின் எதிரில் உட்காருகிறார். ஆட்கள் சாப்பாட்டுக்குரிய கறிகள் முதலியவைகள் கொண்டு வந்து வைத்துப் போகிறார்கள். பெரிய பண்ணையாரின் அழகு மனைவி வருகிறாள். அவள் இரண்டுபேருக்கு உணவு படைக்கிறாள். அலமாரியைத் திறக்கிறாள். சாராயச் சீசாவை எடுத்துக் கணவன் எதிரில் உள்ள ஏனத்தில் ஊற்றுகிறாள். அவன் குடிக்கிறான். மேலும் மேலும் ஊற்றுகிறாள். அவளும் அவனும் சோறு உண்ணத் தலைப்படுகிறார்கள். இடை யிடையே இடது கையால் தன் கணவனுக்குச் சாராயம் ஊற்றிக் கொடுக்க அவன் குடித்துத் தலை சாய்கிறான். அழகி தன் கணவனைத் தூக்கி, அடுத்துள்ள ஒரு கட்டிலில் போடுகிறாள். அவன் உயிரற்றவன் போல் ஆகிறான். மனைவி, உண்டு கைகழுவி அணிமாற்றி அணிந்தும் உடைமாற்றி உடுத்தும், கண்ணாடி பார்த்துத் தலைசீவியும், முகந்திருத்தியும் ஒரு கருநிறமுள்ள மெல்லிய பட்டு உடையால் முக்காடிட்டு மாடியை விட்டு இறங்குகிறாள். இதை யெல்லாம் மாடியின் சன்னலில் ஒன்றிப் பார்த்திருந்த மண்ணாங் கட்டியும் அவள் இறங்குமுன், கீழிறங்கி வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருபுறம் ஒளிந்து நிற்கிறான். பெரிய பண்ணையாரின் வீட்டுக் கொல்லைப்புறக் கதவு திறக்கப்படுகிறது. பெரிய பண்ணை யின் மனைவி வெளியே வருகிறாள். அங்கு வந்து நிற்கும் ஒரு வண்டியில் ஏற வண்டி சின்ன பண்ணையை நோக்கிப் போகிறது. மண்ணாங்கட்டியும் தொடர்கிறான். சின்ன பண்ணையாரின் வீட்டைத் தாண்டிச் சிறிது தொலை வில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோடை விடுதியின் எதிரில் வண்டி நிற்கிறது. அங்கு காத்திருந்த சின்ன பண்ணையாரால் அவ்வழகிய மங்கை அள்ளிக்கொண்டு போகப்படுகிறாள் விடுதிக்குள். பதின்மூன்று மறுநாள் ஏரியில் மக்கள் வேலை செய்வதையும், வேலை செய்வோருக்குச் சோறு ஆக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு அன்றிரவு பின்புறமாக மாடியில் ஒரு பூனைக் குட்டியுடன் வீட்டின் மாடியில் ஏறுகிறான். பெரிய பண்ணையார் சாப்பாட்டு மேசையின் எதிரில் வந்து உட்காருகிறார். அவர் எதிரில் ஒரு பூனைக்குட்டி, உலவுகிறது! அதன் கழுத்தில் ஒரு கடிதம் தொங்குகிறது. பூனைக்குட்டியைப் பிடித்து அந்தக் கடிதத்தைப் படிக்கிறார். அவர் முகம் எரிகிறது. என்னமோ நினைக்கிறார். கடிதத்தை மேசைமேல் வைத்துவிட்டு, அலமாரியைத் திறந்து சாராயச் சீசாவை எடுத்து, அதைத் திறந்து சாராயத்தை யெல்லாம் நீர் விழும் தூம்பில் ஊற்றிவிட்டு அதில் நிறையத் தண்ணீர் ஊற்றி எதிரில் வைத்துக் கொள்ளுகிறார். கறிகள். சோறு வருகின்றன. மனைவி வருகிறாள். சாராயம் என்று எண்ணி, தண்ணீரை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள் கணவனுக்கு! அவன் உண்டு. மயங்கியவன் போல் மேலுக்குக் காட்டுகிறான். மனைவி கணவனைத் தூக்கிக் கட்டிலில் போட்டு உடை உடுத்து முகம் திருத்தி, கரும்பட்டால் முக்காடிட்டு மாடிவிட்டு இறங்குகிறாள். இறங்குகையில் மேசையின் கீழே விழுந்து கிடக்கும் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு போகிறாள். அவள் வண்டியில் ஏறுகிறாள். வண்டி போகிறது. பெரிய பண்ணையார் ஒரு கருப்புக் குதிரையில் ஏறி வண்டியின் பின்னோடு செல்லுகிறார். அவள் சின்ன பண்ணையாரின் கோடை விடுதியை அடைகிறாள். சின்ன பண்ணை எதிர்கொண்டழைத்துப் போகிறார். இதைப் பெரிய பண்ணையார் தொலைவிலிருந்து பார்த்துத் திரும்புகிறார். ஒளிந்து நின்று பார்த்திருக்கும் மண்ணாங்கட்டியும் மகிழ்ச்சியுடன் திரும்புகிறான். ஏரியின் மேற்கிலிருந்து ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. அப்படை சின்ன பண்ணயைர் வீட்டை அடைகிறது. குதிரைகள் ஒருபுறம் கட்டப்படுகின்றன. பலர் இறங்குகிறார்கள்! மண்ணெண் ணெய் சின்ன பண்ணை வீட்டின் மேல் மழையாய்ப் பொழிகிறது! வீடு சிறிது நேரத்தில் தழலின் இடையே காட்சி யளிக்கிறது. வந்த அயலூரார் குதிரை ஏறிப் பறந்து செல்லுகிறார்கள். செல்லுபவர் ஒருவரின் சுழல் துப்பாக்கி கீழே விழுகிறது. மண்ணாங்கட்டி அதை எடுத்துக்கொண்டு ஒருபுறம் மகிழ்ந்தோடி, ஏழை மக்கள் வீடு தோறும் புகுந்து புகுந்து வெளிவரு கின்றான். பொழுது விடிகிறது. சின்ன பண்ணையை அடுத்துள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. நெல், கேழ்வரகு முதலிய மணிகளை அவர்கள் வேறிடங்கட்கு மாற்றுகிறார்கள். எரிவதை சிலர் அவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறைக் கொள்ளி களை ஒருபுறம் சேர்க்கிறார்கள். அழகிய தட்டுமுட்டுக்களை அணுவாக்குகிறார்கள். சிலர் முறையாக நெல் முதலியவற்றை, ஏழை மக்களின் வீடு தோறும் நிரப்புகிறார்கள் கேட்பாரின்மையால். சின்ன பண்ணையாரும், அவர் மனைவியாரும் நேற்றிரவு சின்ன பண்ணையிடம் வந்த அழகு மங்கையும் (பெரிய பண்ணையார் மனைவி) ஒரே வண்டியில் ஏறிக்கொண்டு நகர் நோக்கிப் பயணப்படுகிறார்கள். மூவரும் ஏறிய வண்டியானது பெரிய பண்ணையார் வீட்டுத்தெருவில் போகிறது. பெரிய பண்ணையார் அவர்களைப் பார்த்து வயிற்றைப் பிசைகிறார். அவர் கண்கள் தீயைக் கக்குகின்றன. மண்ணாங்கட்டி மகிழ்ச்சியுடன் மறுபுறம் செல்லுகிறான். எரிந்துபோன பகுதிபோக எரியாதன அனைத்திலும் உள்ள பல பொருள்கள் ஏழை மக்கட்குக் கிடைக்கின்றன. அவர்கட்கு நிறையச் சோறு சமைக்கப்படுகிறது. காய்கறிகள் ஆக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி அங்கு ஒருபுறமிருந்த நெய்க்குடத்தை, அடுப்பில் இருந்த இரும்புச் சட்டியில் தலைகீழ் ஊற்றி அதில் உளுத்த வடை தட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறான். பதினான்கு மாலை இரண்டு மணிக்கு ஏரிக்கரை நண்பர்களை நோக்கி மண்ணாங்கட்டி செல்லுகிறான். அந்தக் குறவர் குடிசைகள் அதிரும்படி இரண்டு குறவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மண்ணாங்கட்டி நடுங்குகிறான். அவர்களை நோக்கி ஓடுவதை மண்ணாங்கட்டி பார்க்கிறான். அவன் உள்ளமும் கைகால்களும் நடுங்குகின்றன. மண்டையுடைந்தோடும், அந்தக் குறவனைப் பின் பற்றி மண்ணாங்கட்டி ஓட முயல்கிறான். ஆயினும் குறவன் மறைந்து விடுகின்றான். மண்ணாங்கட்டி ஏரிக்கரையிலிருந்த ஓர் ஆல மரத்தின் மேல் ஏறி நடப்பதைப் பார்க்கும் கருத்தால் காத்திருக் கிறான். சிறிது நேரத்தில் பெரிய பண்ணையும், அவர் ஆட்கள் சிலரும் குறவர் குடிசையை நோக்கி வருகிறார்கள். குறவர்கள் பலர் பிள்ளை குட்டிகளுடன் வீட்டைவிட்டு வெளிநோக்கி ஓடி மறைகிறார்கள். மண்டையை உடைத்த குறவன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு அச்சத்துடன் ஓடி மறைகிறான். பெரிய பண்ணையாரும் ஆட்களும் மண்டையுடைந்த குறவனும், குடிசைகளை அடைகிறார்கள். பல மண்வெட்டிகள், இருப்புப் பாரைகள், தோண்டி எடுக்கப்படுகின்றன. குடிசைகளிலும் மண்வெட்டிகள் எடுத்து ஒருபுறமாக வைக்கப்படுகின்றன. ஆட்கள் சிலர் குறவர் ஓடிய வழிநோக்கி விரைவாகச் செல்லுகிறார்கள். பெரிய பண்ணையார் வீடு நோக்கிச் செல்லுகிறார். பதினைந்து இரவு பத்து மணியாகிறது பெரிய பண்ணையார் வீட்டு மணிப் பொறியில்! நகரத்தினின்று 100 குதிரைகள் பெரிய பண்ணையாரின் வீட்டை நோக்கி வருகின்றன. குதிரைகளினின்று இறங்கிய அரசினர் பெரிய பண்ணையாரை சூழ்ந்து கொள்ளுகிறார்கள். அவர் இரு காவலர்பால் ஒப்படைக்கப்படுகிறார். மற்றும் காவலர் பலரும், ஏழை மக்களின் வீட்டுக்கிருவர் விழுக்காடு சூழ்ந்துகொள்ளுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் தந்தை தாய் பிள்ளைகளும் ஒன்று சேர்த்துச் சங்கிலியால் பிணிக்கப்படுகிறார்கள். ஏழை மக்களின் குடும்பங்கள் அனைத்தும் பிணிக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி கண்ணீர் விடுகிறான். ஒரு புறமாக ஓடுகிறான். வேறு புறமாக ஓடிவருகிறான். இதே நேரத்தில், மண்டையுடைந்த குறவனை இருவர் அவன் கைகளைக் கட்டியபடி பிடித்து வருகிறார்கள். ஊரில் காவலர் நிறைந்திருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். ஆயினும் அவர்கள் அக்குறவனை ஊரில் அருகிலிருந்த மாந்தோப்பில் ஒரு மரத்தில் கட்டிவிட்டுச் சிறிது தொலைவில் உட்காருகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உறங்கத் தொடங்குகிறார்கள். இதைக்கண்ட மண்ணாங் கட்டியின் முகம் துன்பக் கடலில் மூழ்குகிறது. அவன் தன் இடையில் இருந்த இறகு தாள் எடுத்து ஏதோ எழுதுகிறான். எழுதிய தாளோடு தான் எடுத்த சுழல் துப்பாக்கியையும் சேர்த்துக் கட்டுகிறான். பெரிய பண்ணையாரைச் சூழ்ந்திருந்த காவல் தலைவரின் எதிரில் விழும்படி அதைத் தொலைவிலிருந்து விட்டெறிகிறான். காவல் தலைவர் அதை ஆவலாய் எடுத்துப் பிரித்துப் பார்க்கிறார். சிறிது நேரத்தில் தலைவரும் ஏறக்குறைய இருபது காவலரும் குதிரை ஏறி ஏரிக்கரைக்கு அப்புறமுள்ள சிற்றூர் நோக்கிப் புறப்படுகிறார்கள். பதினாறு நள்ளிருளில் மண்ணாங்கட்டி, தோப்பில் கட்டப்பட்டிருக்கும் குறவனைச் சுற்றிச் சுற்றி வருகிறான். குறவனைக் கட்டியவர்கள் உறங்குமிடத்தை நெருங்குகிறான். அவர்கள் நிலையை உற்றுப் பார்க்கிறான். விரைந்து வந்து கட்டப்பட்டிருக்கும் குறவனை அவிழ்க்கிறான். குறவன் விரைவாக ஓடி மறைகிறான். உறங்கிய வர்கள் திடுக்கிட்டு விழிக்கிறார்கள். மாமரத்தை விரைவில் அடைகி றார்கள். மண்ணாங்கட்டியைப் பிடிக்கிறார்கள். கட்டி விடுகிறார்கள். மண்ணாங்கட்டி தாக்கப்படுகிறான். இரண்டு தடிகள் மாறிமாறி மண்ணாங்கட்டி மேல் பாய்கின்றன. அடிகள் நின்றபோதெல்லாம் அவன் விழிகள் ஏழை மக்களின் வீட்டை நோக்குகின்றன. அடிபடும்போதெல்லாம் அவனால் தலை தூக்க முடியாவிடினும் அவன் நெஞ்சம் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஏழை மக்களின் நிலை என்ன என்று பார்க்கிறது. அடித்தவர்கள் சற்று தொலைவில் சென்று உட்காருகிறார்கள். இருள் நிறம் கட்டுக் குலைகிறது. கருநிற வானில் வெண்ணிறம் மிதக்கத் தொடங்குகிறது. சங்கிலியால் பிணிக்கப்பட்டுத் தத்தம் குடிசைக்கு நேரில் நிற்கும் ஏழை மக்களின் விழிகள் கோழியை மூடி வைத்துள்ள கூடையைப் பார்க்கின்றன. மீண்டும் அவ்விழிகள் தம் கைகள் விலங்கிடப் பட்டிருப்பதைப் பார்த்து நீர் சொரிகின்றன. கிழக்கில் இளங்கதிர் தலை நீட்டுகின்றது. மண்ணாங் கட்டிக்குக் காவல் இருப்போர் கிழக்கே பார்க்கிறார்கள். அதே நேரத்தில் ஏரிக்குப் புறத்திலுள்ள சிற்றூருக்குச் சென்ற காவல் தலைவன். ஊரில் நுழைகிறான். மண்ணாங்கட்டியை நோக்கி விரைவாகக் கையில் தடியுடன் வருகிறார்கள் முன்னே அடித்தவர்கள்; மற்றும் வேலையைத் தொடங்குகிறார்கள். மண்ணாங்கட்டி விலங்கிடப்பட்ட மக்கள் பால் செலுத்திய ஆவல் முகம் திடுக்கென அதிர்கிறது. மண்ணாங் கட்டியின் உடலில் ஓங்கியடிக்கும் தடிகள், உடலிலேயே பதிகின்றன. அவன் தலையில் செந்நீர் அருவி இழிகின்றது. மண்ணாங்கட்டி ஆவலோடு ஏழை மக்களின் நிலையைப் பார்க்கிறான். அவன் கழுத்து, தலையைச் சுமக்க மறுத்துவிடுகிறது. தொங்குகின்ற தலையிலிருக்கும் விழிகள் ஏழை மக்களின் வீட்டை நோக்குகின்றன. மற்றோர் அடி. மண்ணாங்கட்டியின் தலை விழுகிறது. வீடுதோறும் சங்கிலியாற் பிணித்து நிறுத்தப்பட்டிருந்த ஏழை மக்கட்கு மீட்சி கிடைக்கின்றது. காவலர்கள் அவர்களின் விலங்கு களை அகற்றுகின்றார்கள். விடுபட்ட ஏழை மக்கள் ஒன்று கூடுகின் றார்கள். அவர்கள் கண்கள் யாரையோ தேடுகின்றன. கூட்டம் அங்குமிங்கும் போகின்றது. தோப்பை நோக்கி ஆவலாக அவர்கள் ஓடி வருகிறார்கள். காலைக் கதிர் வெளிச்சம் காட்டுகின்றது. தோள்மேல் விழுந்து கிடந்து, செங்குருதி ஒழுக விழிகள், விடுபட்ட மக்களை நோக்குகின்றன. மண்ணாங்கட்டியின் இதழ் விலகுகிறது. முத்துப்பற்கள் திகழ்கின்றன. வாய்க்கடையிற் சிரிப்பு மின்னுகிறது. கண்ணில் பெருமகிழ்ச்சி மலர்கிறது. அவன் தலை நிமிர்ந்தது! ஆயினும் பழையபடி வீழ்ந்தது. மக்கள் ஓடி மொய்த்துக் கட்டவிழ்த்தார்கள். அடித்தவர்கள் கண்களில் அச்சமும், வியப்பும் தோன்றுகின்றன. அவர்கள் கையுதறுகிறார்கள். மண்ணாங்கட்டியின் தலை மற்றொரு முறை நிமிருமா! இல்லை! அவன் நீண்ட அமைதியில் நிலைத்துவிட்டான். ஏழை மக்கள் அள்ளியணைத்த மண்ணாங்கட்டி பத்தரை மாற்றுப் பொன்னாங்கட்டி!  முன்னுரை 1939ஆம் ஆண்டு வாக்கில் நான் தமிழரசில் முறையாகக் கட்டுரை கவிதை எழுதி வந்தேன். அதற்குரியவர் உயர்திரு. டாக்டர் மே. மாசிலாமணி முதலியாராவார். அவர் இல்லத்தில் யான் இடை யிடையே தொடர்பாகக் பன்னாள் தங்குவதுண்டு. அப்போதெல்லாம் முதலியார் எனக்குத் தந்தை போல் உண்டி, உறையுள் தந்து காத்து வருவார். தமிழரசு நிலையத்தில் எழுதியதாகும் இச் சௌமியன் நாடகம். மேலட்டை, முகவுரை சேர்க்குமுன் வையப் பெரும் போர் தொடங்கிவிட்டது. இந்நாள் குறை முடித்து வெளியிடலாயிற்று. இப்பணியில் டாக்டர் எனக்குச் செய்த உதவி மறப்பதரிது. 1. 1. 1947 - பாரதிதாசன் காட்சி - 1 இடம் : வஞ்சிக்கிராமம்; குடியானவர் வீடு. உறுப்பினர் : குடியானவன், சீனன், பூங்கோதை, சேவகன். அதிர்ஷ்டம் வருகிறது உனக்கு! v‹W சொல்லிக்கொண்டே குடியானவன் வீட்டில் நுழைந்தான் கிராமச் சேவகன். சீனன் என்னும் வஞ்சிக் கிராமத்துக் குடியானவன், தன் மகள் பூங்கோதைக்கு நிச்சயித்திருந்த கலியாண மகிழ்ச்சியிலிருந்தான். சேவகனைக் கண்டதும் அவன் திடுக்கிட்டான். சந்தோஷ உள்ளத்தில் அச்சம் FoòFªjJ.] வாங்க; உக்காருங்க; என்ன சேதிங்க? பயத்தோடு கேட்டான் குடியானவன் சேவகன் : இனி உனக்கு என்ன குறைச்சல்! நான் கூட இனி உனக்குப் பயந்துதான் நடக்க வேண்டும். குடியானவன்: நீங்க இந்த ஏழைக்குப் பயப்படுவதாவது. சேவகன் : கிராமபதி உன்னிடம் அகப்பட்டுக் கொண்டார்; இனி, நீ சொன்னபடிதான் அவர். குடியான : ஐயா, எனக்கு ஒண்ணும் புரியலிங்களே. சேவகன் : நேற்றுக் கிராமபதியவர்கள் கிராமத்தைச் சுற்றி வந்தாரல்லவா? அவர் கிருபை உன் குடும்பத்தின் மேல் விழுந்தது! குடியான : இன்னதென்று சொல்லமாட்டேன் என்கிறீங்களே? சேவகன் : உன் மகள் தெரு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந் தாளாமே. குடியானவனுக்கு விஷயம் முற்றும் விளங்கி விட்டது. தன் ஒரே பெண்ணின் நன்மையில் ஓடியது அவன் நெஞ்சம் குடியான : இருக்கலாங்க அதுபற்றி என்னாங்க? v‹W பயத்தோடு nf£lh‹.] சேவகன் : வேறொன்றுமில்லை. கிராமபதியவர்களின் வீட்டில் தோழிப்பெண் இல்லை. அதற்காக. குடியான : ஐயோ! என் குடும்பத்தில் அந்த மாதிரி வழக்கம் இல்லிங்களே! ஐயா, உங்க காலைப் பிடித்துக் கொள்கிறேன்; கிராமபதி ஐயாவுக்குச் சமாதானம் நீங்கதான் சொல்லணும். cŸns பூங்கோதை தலைவாரி முடித்துப் பூ வைத்துக், காதில் நாகவடமும் முத்தரியும் போட்டு அரக்குப்பட்டுக் கண்டாங்கி உடுத்தி முத்துப்பல் காட்டி, உப்பிட்டுக் குலுக்கிய நாவற்பழத்தை இரு கைநிறைய Vªâago,] அப்பா! என்று அங்கு வந்தாள், அச்சமயம் சேவகனைக் கண்டாள், அவளின் சிரித்த உதடு பயத்தால் மாறியது. திடுக்கிட்டு நின்றாள். வேறு வழியில்லை. பழையபடி பறந்தாள் cŸns.] சேவகன் : கூப்பிடு! அவள் தானா உன் மகள்? குடியானவன் மனம் பயத்துக்கு அப்பால் போய்விட்டது அதெல்லாம் முடியாது! என்று கண்டிப்பாகக் கூறினான், சேவகன் : உன் மகளை - நான் சொல்வதைக் கேள் - உன் மகளைக் கிராமபதியிடம் அனுப்பு. அவர் உன் மகள் ஞாபகமாகவே இருப்பார். அவள் பச்சைக்கிளி போல் இருக்கிறாள். இதைக்கேட்ட குடியானவன் மரம்போல் சும்மா இருந்து - தனக்குச் சிறிதும் சம்மதம் இல்லாமையைத் தெரிவித்தான். சேவகனுக்குக் nfhg«.] சேவகன் : அவளைக் கையோடு இழுத்துவா என்று கிராமபதி என்னிடம் கூறியிருந்தால், விட்டுப்போகமாட்டேன். அடே வந்ததைப் படு! nrtf‹ கோபத்தோடு சென்றான். குடியானவன் தனக்கு நேர இருப்பவை எவை என்பதை நினைத்து மனமுருகி, வயலுக்கு elªjh‹.] காட்சி - 1 அ Foahdt‹ வயற்களத்தில் வைக்கோற்போரின் நிழலில் நின்றிருந்தான். ஆட்கள் கோணிப் பைகளில் நெல்லை வாரிக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உக்கிரம் இல்லாத அந்தி; புழுக்கமில்லாத சமயம். சீனன் புழுக்கமுடைய நெஞ்சத்தோடு நின்றிருந்தான் m§nf] உலகம் உண்டுகாண், சூரியன் உண்டுகாண் ஓடிப்பாயும் மணிப்புனல் உண்டு காண், இலகும் மக்களின் மலைப்புயக் கூட்டங்கள் எங்கும் போயின எண்ணுக நெஞ்சமே! கலகம் செய்வதும் கைப்பொருள் கவர்வதும் கயவர் செய்கை; ஆயினும் அன்னது சிலதினங்கள் இருக்கும்; பின் அது தீர்ந்து போகும். செம்மை யுண்டாகுமே! v‹w ஓர் தமிழ்ப்பாட்டு குடியானவன் காதில் வீழ்ந்தது. எதிரில் ஆசிரமவாசி ஒருவன், ஆலமரத்தின் அடியில் நிற்பதைக் குடியானவன் கண்டான். அதே சமயத்தில் இரு சேவகரும் கொள்ளைக்காரரும் குடியானவனை நோக்கி வந்தார்கள். குடியானவன் மரத்தில் கட்டப்படுகிறான். நெற்குவியல் கொள்ளையடிக்கப்படுகிறது. குடியான : அரசாங்கம் இல்லை; நீதியில்லை! என்று கூவியழுதான் ஆலமரத்தடியில் இரு கண்கள் எரிந்தன. ஆரமவாசி தன் உடைவாளை உருவுகிறான். ஆனால், அவன் மனக்கண் முன், தன் குருவின் ஆரமத்திலிருந்து விடை பெற்றுத் திரும்பும்போது, குரு, நீ என் உத்தரவின்றிப் பொது விவகாரங்களில் கலந்து கொள்ளாதிருக்க என்று கூறி கை யமைத்தது தோன்றவே, ஆரமவாசி திரும்பவும் உடைவாளை உறையில் இட்டுக் குடியானவனை நோக்கி ஓடிவந்தான். அதற்குள் கொள்ளைக்காரரும் சேவகரும் போய் விட்டார் கள். ஆரமவாசி குடியானவனை mÉœ¤JÉ£L,] ஆரமி : ஐயா, என் கைகள், என் குருவினால் கட்டப்பட்டிருக் கின்றன.! குடியான : அப்பனே! நீ பார்த்திருந்தாயல்லவா இந்தக் கீழான நடவடிக்கைகளை? கிராமபதியிடம் செல்லுவோம். ஆரமி : ஞாயம் கிடைக்குமென்று நினைக்கிறீரா? என்னால் தடையில்லை. v‹W சொல்லிக் குடியானவனைக் கூட்டிக் கொண்டு கிராமபதியிடம் நடந்தான் MÞukthá.] காட்சி - 1 ஆ பல சேவகர்கள் சகிதம் கிராமபதி உட்கார்ந்திருந்தான். இரு சேவகர்கள் பூங்கோதையை இழுத்து வந்தார்கள். அவள் அவர்கள் கைகளினின்று தப்பிப் பறந்துபோக முயன்றாள். அந்தச்சிறகு அற்ற அன்னம், மீண்டும் இழுத்து நிறுத்தப்பட்டாள் கிராமபதி எதிரில் பூங்கோதை : என்னை ஏன் தொல்லை பண்ணுகிறீர்கள்? என்று துடிதுடிப்போடு கேட்டாள் கிராமபதி : நீ என் வீட்டில் தோழிப் பெண்ணாயிருந்தால், உனக் கென்ன முழுகிவிடும்? எல்லாச்சுகமும் உனக்கு உண்டாகுமே! பூங்கோ : வேண்டாம் ஐயா, என்று அழுது நிற்கையில் ஆரமியும், குடியானவனும் வந்தனர். குடியானவன் தன் மகள் அங்குத் துன்புறுவதைக் கண்டு ஆத்திரத்தோடு இது ஞாயமா ஐயா? கலியாணம் ஆகவேண்டிய பெண்ணாச்சுதே! கிராமபதி : ஏன் ஆரமியே! நீ எங்கு வந்தாய்? ஊர் விவகாரத் தில் கலந்து கொள்ளக்கூடாது என்று உனது குரு சந்த்ரசேனர் உனக்குக் கட்டளை இட்டிருக்க வில்லையா? ஆரமி : ஆம்! உமது சேவகர் சிலரும், மற்றும் கொள்ளைக் காரரும் இந்தக் குடியானவரை மரத்தில் கட்டிவிட்டு, நெல்லைக் கொள்ளையடித்துப் போனதை நான் பார்த்தேன். கிராமபதி : அப்படியா! இதைக்கேள். சேவகனே! என்ன நடந்தது? சேவகன் : நானும் தண்டலதிபரும் இந்தக் குடியானவனிடம் போய் வரி கேட்டோம். என்னையடித்ததோடு இந்த ஆரமியும் குடியானவனும் தங்களையும் தங்கள் ஆட்சியையும் குறை கூறினார்கள். குடியான : ஐயோ இல்லையே ஐயா! ஆரமி : இருக்கட்டுமே. நாங்கள் குற்றம் செய்தோம். இந்த மங்கை என்ன செய்தாள்? கிராமபதி : ஏன் சேவகனே, இவளும் திட்டவில்லையா? சேவகன் : ஓ! திட்டினாளே! கிராமபதி : நீ மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போய்விடு. சேவகனே, இந்தக் குடியானவனைத் தூணில் கட்டு! (சேவகரால் குடியானவன் தூணில் கட்டப்பட்டான்) இவளை உள்ளே அழைத்துப்போ! nrtf® அவளை நெருங்கினர். கட்டப்பட்டிருந்த குடியான வன் கட்டைத் திமிறிப் பார்த்தான். ஆரமி தன் வாளை உருவிச் சேவகர்களையும் கிராமாதிபதியையும் வெட்டப் போகும் சமயம், அவன் கண்ணில் தனது குருவின் தடுக்குங்கை njh‹¿‰W!] ஐயோ! இந்த பாவிகளை விட்டுவைப்பதா? v‹W தலையில் அடித்துக்கொண்டு வெளியிற் சென்றான். சேவகர் பூங்கோதையை உள்ளே தள்ளினார்கள். பூங் கோதையின் அப்பா! அப்பா! என்ற கூச்சல் கட்டடித்தை அதிரச் brŒjJ] காட்சி - 2 இடம் : சேது நகர் - மாளிகை உறுப்பினர் : நகரபதி, வர்த்தகன் பிரதானிகள், நாட்டியக்காரி, பணிப்பெண்கள். சேதுநகர் மாளிகையின் உல்லாச மண்டபத்தில், நகரபதி தனது தலைப்பாகையைக் கழட்டி ஓர் புறம் வைத்து, மெத்தைமேல் சாய்ந்திருக்கச் சில பெண்கள் வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி கால் வருடிக் கொண்டிருக்கிறாள். பிரதானிகள் சேவகர்கள் புடை சூழ்ந்திருக்கிறார்கள். நாட்டியக்காரி நாட்டியம் ஆரம்பித்தாள் பாடிக்கொண்டு பாவை வைத்து நான் ஆடப்பார்த்த இளங்கோமான், நாவை அசைத்துக் காட்டி நல்விழியும் காட்டி, எனைத் தேர்நிறுத்தும் சாலையிலோர் சிற்றிடத்திற் கூட்டிப்போய், தேர்நிறுத்திச் செய்தி நிகழ்த்தவோ என்றுரைத்தான்; என்ன என்றேன். என்றன் இருகையும் பற்றி அவன், தின்னா இதழ்தன்னைத் தின்பான்போல் தான் சுவைத்தான்! பட்டி மகன் போம்போதும் பார்வையினால் சுட்டுவிட்டே எட்டி நடந்தான் என்னை விட்டு, ïªj¥ பாட்டிற்கானபடி பாவனை காட்டி அங்கு இருந்தவர் களை ஆனந்தத்தில் ஆழ்த்தினாள். முடிவு பெற்றதும் சேவகன் : ப்ரபூ! தங்கள் சேவைக்குக் காத்திருக்கிறார் வைர வர்த்தகர் தலைவாசலில். நகரபதி : உத்தரவு nrtf‹ ஓடி வர்த்தகனை உள்ளே அனுப்ப வர்த்தகன் நகரபதியை வணங்கித் தன்னிடமிருந்த விலையுயர்ந்த மணிகளைப் பரப்பினான். நகரபதி ஆச்சரியத்தோடு அவைகளைப் பார்த்தான் நகரபதி : ஆஹா! இந்த நகரின் வர்த்தகர் உண்மையில் மகோன்னத நிலையிலிருக்கிறார்கள். வர்த்தகன் : ப்ரபூ! உண்மையில், தங்கள் கிருபையால் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம் லங்கை நாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டது முதல்! நகரபதி : வர்த்தகரே, உம்மை அழைத்தது உமது வைரத்தை வாங்குவதற்காகவல்ல. நான் அன்று பவனி வந்தபோது நீர் எழுந்து மரியாதை செய்யவில்லை. அதன் பொருட்டு உம்மை, எனது தலைவரும் - இந்நாட்டு மன்னருமான ரவி கேது மன்னரின் பேரால் சிறைப்படுத்துகின்றேன். சேவகர்களே! வர்த்தகன் : ஐயோ இதென்ன அநியாயம். சில வைரங்களையாவது தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். v‹W கதறி நகரபதியின் காலில் விழப்போனான். சேகவர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள். பொருள்களை மற்றுள்ள சேவகர்கள் தூக்கி நகரபதியிடம் வைத்தார்கள். நகரபதி : பிரதானி ஒருவன் வருக! m§»Uªj பிரதானி ஒருவன் நகரபதியின் வாயண்டைத் தன்காதுகளைச் nr®¡»wh‹.] வர்த்தகர் வீதியில் சேவகர், கொள்ளைக்காரர் சகிதம் செல்லுக. விலையேறப்பெற்ற பொருள்களை ஆக்ரமிக்க; பணப் பெட்டிகளைக் கொண்டு வருக. ãujhÅí« அங்கிருந்த சேவகர்களும் குதித்துக் கொண்டு XL»wh®fŸ.] காட்சி - 2m MÞuÄfŸ அநேகர் ஓர் தோட்டத்தில் பேசிக்கொண்டும், தாம் கற்ற வித்தைகளைப் பயிற்சி செய்து கொண்டும் இருந்தார்கள் பதுமன் : நான் பேசும் சித்திரம் வரைந்திருக்கிறேன் பாருங்கள். gl¤âš அனைவர் கவனமும் br‹wJ.] கோபதி : அப்படி ஒன்று உண்டா? பதுமன் : நிரூபிக்கிறேன். v‹W கூறித் தான் எழுதிய படத்தின் ஒரு பகுதியை மாத்திரம் fh£o;] இது என்ன? சுந்தரன் : தோப்பில் நடுவிற் செல்லும் ஓர் பாதை. பதுமன் : அதற்கு மேல்? சுந்தரன் : தட்டுமுட்டுச் சாமான்கள் ஏற்றியுள்ள ஓர் இரட்டை மாட்டு வண்டி கோபதி : இதோ பிரயாணியையும் வண்டிக்காரனையும் திருடர்கள் அடிக்கிறார்கள். பதுமன் : பிரயாணி, வண்டியைக் காட்ஏடி அதிலுள்ளவைகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்; என்னை இம்சை செய்யவேண்டாம்... என்று சொல்லுகிறா னல்லவா? என் சித்திரம் பேசவில்லையா? midtU« கைகொட்டிச் áǤJ,] உண்மையப்பா! v‹W கூறி k»œªjd®.] வேலன் : அது கிடக்கிட்டும். நமது குரு நமக்குப் பல கலைகளைப் போதித்து நம்மை வாள் ஒன்றையும் சுமக்க வைத்து, நமது கைகளை மாத்திரம் கட்டி வைத்து விட்டாரே! சுந்தரன் : தக்க காலத்தை அவர் எதிர்பார்க்கிறார். பதுமன் : இல்லை, அவர் கொள்கை அஹிம்சை. சுந்தரன் : இல்லை. நல்ல நம்பியார் அகிம்சாதர்மர். கோபதி : லட்சியத்தை அடையும் மார்க்கத்தில் இம்சை இருக்கத் தான் வேண்டும்; இருப்பது இயற்கை. சுந்தரன் : நமது ரவிகேது மன்னரின் கொள்கை இன்ன தென்று நான் சொல்லட்டுமா? பதுமன் : ஹாய முறையில் சொல்லிக் காட்ட முடிந்தால் சொல். சுந்தரன் : அரசரும் அவர் பரிவாரமும் குழந்தைகள். அக் குழந்தை கட்கு, ஜனங்கள் அப்பம், பிட்டு, பலாச்சுளை, பொம்மை, கண் விழிக்காத நாய்க்குட்டிகள்! கொலை என்பது அவர்கட்குத் தாய்ப்பால்! கொள்ளை நிலாச்சோறு! இதுகேட்டு அனைவரும் சிரித்தார்கள் பதுமன் : சுந்தரா, எடுத்துக் கொள் உன் வாளையும் கேடயத்தை யும், சற்றுநேரம் ... ... சுந்தான் வாளையும் கேடயத்தையும் தூக்கி நின்றான். பதுமனும் அவ்வாறே எதிர்த்தான். இருவரும் வாட்போர் நிகழ்த்தினர். அச்சமயம் ஓர் வேட்டுச் சத்தம் nf£lJ.] வேலன் : தோழர்களே, வேட்டுச் சத்தம்! நகரபதியின் ஆயுதச் சாலையின் துப்பாக்கி என்று நினைக்கிறேன். அனைவரும் அசைவற்று நின்றார்கள் பதுமன் : நாம் போவதால் ஆவதென்ன? அனைவரும் வர்த்தக வீதி நோக்கி ஓடினார்கள். வர்த்தகர்கள் பல திக்குகள் நோக்கிச் சிதறி ஓடுகிறார்கள். வீதியில் வேட்டுகள் அதிகக்கலவரத்தை உண்டாக்கு கின்றன. சேவகர்களும் மற்றும் கொள்ளைக்காரர்களும் பொருள்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆரமிகள் ஒரே சமயத்தில் தங்கள் கத்திகளை உருவினார்கள். அவர்கட்கு எதிரில் தடுக்குங்கை தோன்றவே திகைத்து Ëwh®fŸ.] சுந்தரன் : அந்தோ அக்ரமத்தின் ஆடம்பரமே! தோழர்களே, நமது குருவிடம் ஓடுவோம்; நடக்கும் அக்ரமங்களைக் கூறுவோம் நமக்கு அவர் உத்தரவு தரட்டும் இந்த அயோக்கியரைக் கொன்று போடும்படி. இல்லையேல் அவர் பாதத்தில் நாம் சுமக்கும் இந்த வாட்களை எறிந்து விட்டுத் திரும்புவோம். அனைவரும் தலைகுனிந்து நடந்து போனார்கள் தமது குருவை நோக்கி காட்சி - 3 இடம் : இராஜதானி, சந்த்ரசேனரின் ஆரமத்தை அடுத்த ஓர் சோலை. உறுப்பினர் : சந்த்ரசேனர், சேனாபதிரதன், நல்லதம்பி, சௌமியன், ஆரமிகள். ஆஸ்ரமசிஷ்யர்களின் எதிரில் சந்த்ரசேனர் ஓர் பீடத்தில் உட்கார்ந்திருந்தார். அவர் உபதேசத்தைச் சிஷ்யர்கள் ஆவலாகக் கேட்டிருந்தார்கள். சேனாபதி ரதனும், நல்லநம்பியும் அங்கு ஒரு புறம் இருந்தார்கள் சந்த்ரசே : உங்கள் எதிரில் உலகம் நடக்கிறது. அதை நீங்கள் நோக்குக. உங்கள் பார்வையை விசாலப்படுத்துக. அறிவுலகில் ஏறுக. நீங்களும் இவ்வுலக மக்களும் ஒன்றே என உணர்க. உங்கள் எதிரில் நல்லனவும் தீயனவும் நடக்கின்றன. ஆளுவதும் ஆட்படுவதும் நடக்கின்றன. நல்லனவற்றை ஆதரியுங்கள். தீயனவற்றை எதிர்க்க நீங்கள் ஆயத்தமா யிருங்கள், உலக நலத்திற்காக நீங்கள் எதற்கும் சித்தமாயிருங்கள். நீங்கள் பொதுமக்களுக்குச் செய்யும் தொண்டு, நீங்கள் உங்களுக்குச் செய்யும் தொண்டென்று உணருங்கள். அது அன்பு நெறியாம். அன்பு. செய்யுங்கள்; அதனால் அன்பை வளருங்கள். அன்பினால் இவ்வுலகம் ஒன்றுபடும். ஒன்றுபட்ட உலகம் சாந்திக்குத் தகுதியாகும். விடைபெற்றுக் கொள்க. சிஷ்யர்கள் குருவை நமகரித்துச் சென்றார்கள் சௌமியன்: வாமி! நாட்டு மக்கள் படுந்தொல்லை சகிக்க முடிய வில்லை. அவர்கட்கு மீட்சியில்லையா? எங்கள் கண்ணெ திரில் தினமும் நடைபெறும் அக்ரமங்களை எதிர்க்க எங்கள் தோள் எழுகின்றது. ஆயினும் தங்களின் ஆணை, அத்தோளை வலியற்றதாக்கி விடுகின்றது. இதோ கிராமத்திலிருந்தும், நகரத்திலிருந்தும், தங்கள் சிஷ்யர்கள் தங்களிடம் அங்கு நடைபெறும் அக்ரமங்களைச் சொல்லிக் கொள்ள வந்து காத்திருக்கிறார்கள். 1-வது ஆரமி: வாமி! நான் வஞ்சிக் கிராமத்தில் அந்தக் கிராமபதி இழைத்த அக்ரமங்களை நேரில் பார்த்தேன். சீனனின் மகளைக் கற்பழித்தான்! அவன் நெற்குவியலைக் கொள்ளை யடித்தான். சீனனையும் இம்சித்தான். என்னால் சகிக்க முடியவில்லை. v‹W கண்ணீர் É£lh‹ 2-வது ஆரமி:அக்ரமங்களை எதிர்த்துப் போராட எமக்கு உத்தரவு கொடுங்கள். இல்லாவிடில் எம் கண்களைப் பிடுங்கி விடுங்கள். அக்ரமத்தைப் பார்க்க முடியவில்லை. 3-வதுஆரமி: பெரும்பட்டி நகரில் வாமி! சத்திரத்திற்கென்று விடப்பட்டிருந்த சொத்துக்களை யெல்லாம் அரசாங்கத்தில் சேர்த்தாயிற்று. யாத்ரீகர்கள் பசியோடு திரும்புகிறார்கள். 4-வது ஆரமி: சேரிக் கிராமத்தில் உள்ள அனைவர் சொத்தும் பறிமுதல் செய்து விட்டான் வாமி, கிராமபதி. v‹wh®fŸ அனைவரும் குருவின் கட்டளைக்குத் fh¤âUªjh®fŸ.] குரு : அன்பர்களே, உங்கள் நோக்கம் நன்று. நீங்கள் அடைந் துள்ள தேசபக்தி மேன்மையுடையது. மக்களின் க்ஷேமம் உங்கள் க்ஷேமம் என்று உணர்கின்றீர்கள். பாராட்டு கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இல்லாதவர்கட்கு உங்களிடம் இருப்பனவற்றை உதவுதலிலேயே கவனம் செலுத்த வேண்டும். அதனால் மக்கள் அறிவிலே தெளிவு பெறுவார்கள். நெஞ்சிலே உறுதி பெறுவார்கள். அகத்திலே அன்பின் ஓர் வெள்ளம் அடைவார்கள். பொறிகளின்மீது அவர்கட்கு ஆட்சி நடத்தும் பக்குவம் உண்டாகும். காலம் வரும்! என்று சொல்லித் தமது தடுக்கும் கைகாட்டிச் சிஷ்யர்கனை அமர்த்தினார். அனைவரும் ஆரமத்தை நோக்கி நடந்தார்கள். நடக்கையில் சௌமியன் மற்றவர்களைத் தடுத்து நிறுத்தித் தன் உத்ஸாகத்தை வெளிப்படுத் âdh‹.] சௌமியன்: தோழர்களே, குருவின் கடைசி வார்த்தையைக் கவனித்தீர்களா? காலம் வரும் - கோபதி : ஆம். நமக்கு அவ் வார்த்தை உத்ஸாகத்தை உண்டாக்குகின்றது. அனைவரும் வாளை உருவி உயரத்தூ’க்கி காலம் வரும்! என்று சொல்லி உறையிலிட்டுப் போனார்கள் காட்சி - 3m நல்ல நம்பி : சந்த்ரசேனரே, ஒரு சந்தேகம்! முதலில் உமது சிஷ்யர்களின் உள்ளத்தை வியந்தீர்கள். பின் நாட்டின் தொண்டு இன்னதென்று உபதேசித்தீர்கள்! நன்று காலம் வரும் என்று முடித்தீர்களே, நீர் எதிர் பார்க்கும் காலம் எது? படுகொலை செய்து ரத்தம் சிந்தும் யுத்த காலமா? சேனாபதி : ஆம். வேறென்ன? இந்த மன்னனும் அவனைச் சார்ந்த நகரபதிகள் கிராமபதிகள் உத்தியோகதர் களும் பொது மக்களை இம்சிக்கிறார்கள். ந-நம்பி : அதன் பொருட்டு அவர்களை நாமும் கொலை செய்வதா? பரிகாரம் தேடுகிறேன் என்று சொல்லி மக்களை இம்சிக் கிறவன் நாட்டில் இம்சையை வளர்க்கிறவ னாகிறான். காப்பவனைத் தேடித் தவங்கிடக்கும் இவ்வுலகம் அழிப்பவனைச் சுமக்கவும் சகிக்குமா? குற்றம் புரிந்த அவயங்களைத் தண்டிக்கும் மனிதனைக் கண்டோமா? மனித வெள்ளத்தில் ஒரு துளி தவறு செய்தால், அதன் பொருட்டு அது இம்சையடைந்தால், அனுப விப்பது அந்தத் தனித் துளிமட்டுமா? தீய உள்ளத்தை அன்பினால் மாற்றி அவனைத் திருந்தச் செய்து, அவன் அன்னையை மகிழச் செய்வோம். திருந்தக்கூடிய மனிதனை அவன் அன்னை வயிறு கொதிக்க கொலை செய்யாதிருப்போம். ஒரு சிறுகூட்டம் அநீதியே செய்கிறது; இம்சையே செய்கிறது. அந்த அழுக்குக் குட்டையோடு மனிதப் பெருங்கடலைப் பரிசுத்தப்படுத்திச் சங்கமமாக்கு வோம். கொடியவன் நல்லவன் ஆகிறதில்லை என்று நீவீர் கருதுவீரானால். முன்னோர் சொன்ன நீதி சாதிரங் களும் அன்பின் மகத்துவமும் நாணித் தலைகுனிந்து விடுமே. ரவிகேது மன்னனைத், திருத்துவோம். அவன் எனக்கும் சந்த்ர சேனருக்கும் சிறுவயது முதல் நண்பனாய் இருக்கின்றான். நிமிஷந்தோறும் மக்களைக் கல்வி கேள்விகளில் உயர்த்து வோம். கல்வியின் ஒளி மக்கள்பால் பரவும். அது அக்ரமம் செய்யும் மனிதனுக்கும் அறிவு கொளுத்தும். சந்த்ரசே : உலக மக்கள் போய்ச் சேரவேண்டிய இடம் ஒன்று. அது சாந்திமயமானது! அங்கு இம்சையில்லை! பேதமில்லை! துன்பமில்லை. ஆனால் அவ்விடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பாதையில் ஏகதேசம் இம்சை யில்லாமற் போகுமா? நண்பரே, நான் நினைப்பது பிழையாய் இருக்கலாம். இம்சை அடியோடு நீக்க முடியாதது என்பதுதான் என் அபிப்பிராயம். ஆயினும் உங்கள் வார்த்தை மக்கள்மேல் எனக்கு இரக்கத்தை உண்டாக்கிறது. ந-நம்பி : மனித லக்ஷியத்தை அடையும் மார்க்கத்தில் இம்சை வேண்டியதிருக்கும் என்பது பற்றி இன்னும் நான் சிந்திப்பேன். சேனாபதி : நீங்கள் ஒரு புஜபலம் உடையவராயிருந்தால், இவ்வித பயம் ஏற்படாது உங்கட்கு. என்று நல்லநம்பியை நோக்கிச் சிரித்துச் சொன்னான் நம்பி : கத்தியும் கையுமாயிருப்பவன் புஜபலமுள்ள தைரிய சாலியோ அப்பனே? இதைக் கேட்ட சேனாபதி விழித்துப் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தான். இச்சமயத்தில் சௌம்யன், குருவின் சமுகத்தை நோக்கி விரைவாக வந்து பணிகிறான், சௌம்யன்: இந்த அக்ரமத்தைச் சொல்லாதிருக்க முடியவில்லை சமுகத்தில்! மந்திரி அழகுப் போட்டி ஏற்படுத்தி இருக் கிறார்! ஊரில் உள்ள அழகிய பெண்களை யெல்லாம் உத்தியா வனத்தில் இழுத்து வந்து நிறுத்துகிறார்கள். அழகில் உயர்ந்த பெண்ணை அரசர் அடைவாராம். ந-நம்பி : இதோ நான் அரசனிடம் போகிறேன். ஐயோ என்ன அநீதி? சௌம்யன்: தந்தையே, அந்தத் துஷ்டனிடம் போகிறீர்கள், அபாயம் வரும், நானும் வருகிறேன். ந-நம்பி : இம்சையை நான் வெறுப்பதால், நீ வருவதையும் நான் வெறுக்கிறேன். குழந்தைப் பருவ முதல் சௌம்யனை நல்ல நம்பி வளர்த்தவராதலால், நல்ல நம்பிக்கு ஏதாவது ஆபத்து அரசனால் ஏற்படும் என்று பயந்தான் brs«a‹.] சௌம்யன்: இந்த வாளையாவது உடன்கொண்டு போகமாட்டீர்களா? v‹W வாளை நல்லநம்பியிடம் நீட்டிக் bfŠádh‹.] ந-நம்பி : அன்பைவிட அது வலிவுடையதென்று நினைக்கிறாய்! என்று சொல்லி நல்லநம்பி நடந்தார். அந்தச் சாந்தம் நிறைந்த முகத்தைச் சௌம்யன் neh¡».] எனது குரு ஓர் மூர்க்கர்! என்று முணுமுணுத்தான். ஆயினும் இப்பக்கம் திரும்பித் தன் குருவின் வீரம் ததும்பும் முகத்தைப் gh®¤J] நல்லநம்பியார் ஓர் பழங்காலப் பைத்தியம்! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் காட்சி - 4 இடம் : இராஜதானி உத்தியானவனம். உறுப்பினர் : அரசன் ரவிகேது, நல்லதம்பி, ப்ரதானிகள், சேவகர்கள், பெண்கள். உத்தியானவனத்தில் பல பெண்கள் நிறுத்தப்பட்டிருக் கிறார்கள். தலைக்கொரு சேவகன் காவலில், அவர்கள் நடுங்குகின்ற உள்ளமும், பெருகுகின்ற கண்ணீரும் உடையவர்கள். சில பெண்கள் தம்மைப் பிடித்த பிடியை மீறிப் போகப் பிரயத்தனப்பட்டும் முடியாமையால் தலையிலடித்து அழுது கொண்டிருந்தார்கள். அரசன் பிரதானிகள் சகிதம் அங்கு வந்து கொண்டிருந் தான், பசி கொண்ட புலி மான்மீது பாய்வது போல்! அவனைத் தொடர்ந்து நல்லநம்பியும் வந்து கொண்டிருந் தார் விரைவாக ந-நம்பி : நண்பரே ஒரு விண்ணப்பம். என்று நல்லநம்பி கூற, அரசன் திரும்பிப் பார்த்து அரசன் : நல்லநம்பியாரே, என்ன சேதி? ந-நம்பி : இது பலாத்காரமல்லவா? நல்லதல்லவே! அரசன் : நான் சாப்பிடுவதுகூட உமக்குத் தீய நடத்தையாகத் தானே தோன்றும். என்று சொல்லிக்கொண்டே அரசன் முன்னே நடந்தான் ந-நம்பி : எனது சகோதரிகளை ..... என்று ஆரம்பித்த நல்லநம்பி அரசன் நெடுந்தூரம் போயி விட்டான்.. என்று முடிக்காமல் நிறுத்தினார் வார்த்தையை அரசன் : என்ன சொன்னீர் நண்பரே! என்று நின்றான் அரசன். நல்ல நம்பி அரசனை அணுகினார். அரசன் : உமது சகோதரிகளா இங்கு இருக்கிறார்கள்? ஆம் என்று பொய் சொல்ல நம்பி யோசித்தார். ஆயினும் அவர் மனக் கண்ணின் முன், உலகம் என்ற ஒருத்தியின் திருவயிற்றில் உலக மக்கள் உலவுவதான காட்சி தெரிந்தது. உடனே அரசன் nfŸÉ¡F.] ஆம்! என்று பதில் கூறினார் நம்பியார் அரசன் : நீர் எனது நண்பர் என்பது அந்தச் சேவகர்கட்குத் தெரியா திருக்கலாம். அதுபற்றிநான் வருந்துகிறேன். உமது சகோதரிகளைக் காட்டுவீராயின் அவர்களை அனுப்பி விடுவேன். என்றுகூற நல்லநம்பியும் அரசனோடு நடந்தார் அரசன் : நல்ல நம்பியாரே, இப்பெண் உமது சகோதரியா? ந-நம்பி : ஆம். என்று கூறவே, அரசன் அவளை வீட்டுக்குப்போ என்று சைகை காட்டி, அடுத்துள்ள பெண்ணை அணுகி அரசன் : இம்மங்கை? ந-நம்பி : ஆம். என் சகோதரியே இவள். அரசன் : இந்த யுவதி உமது சகோதரியா? ந-நம்பி : இவளும் என்னுடன் பிறந்தவள் தான்! இதற்குள் பண் ஒன்று கேட்டது. அரசன் அதைக் கவனித்துக் கேட்டிருந்தான் அஞ்சுகம் : அரும்பிடும் இளமையும் அழகிய உடலும் உனக்கே விரும்பிடும் எனை நீ விரும்பிடுவாய் உளம் களிக்க! சுரும்பிடும் சுருதிகள், தென்றலின் இனிமை இப் போது பெருமையல் விளைத்தெனைத் தள்ளுதே கண்ணா உன் மீது! பாடிய அந்த அஞ்சுகத்தை நோக்கி நடந்தான் அரசன் அரசன் : பெண்ணே, நீ யார்? அஞ்சுகம் : நான் தங்கள் தாசி. என்று கூறித் தன் தலையை நிமிர்த்தினாள் புன்னகை தோன்ற அரசன் : பெண்ணே, நீ இங்கே இரு, நான் மற்றவர்களையும் பார்த்து வருகிறேன். என்று மற்றப் பெண்களை நோக்கிவந்து நண்பரே, இந்த அழகிய பெண் உமது சகோதரியல்லவே. ந-நம்பி : உண்மையில் என் சகோதரியே. அரசன் : நல்ல நம்பியாரே, உம் சொல்லில் உண்மை சிறிதேனும் இல்லை. ந-நம்பி : அன்பரே, அவள் மாத்திரம் அல்ல. இவ்வுலகப் பெண்கள் அனைவரும் என் சகோதரிகள். அதோ பாரும் உமது திவ்ய ரூபலாவண்யத்தில் மையலுற்றுத் தவிக்கிறாள். அஞ்சுகம். ஆகையால் அவள் உமது காதலி! மற்றவர் கள் அனைவரும் உமக்கும் சகோதரிகளல்லவா? அஞ்சுகம் : குளிர்புனல் சிற்றலை மீது குதிகொள்ளும் கோகனகப்பூவிதழ்போல் வாராயோ வண்டே! அளியாத செங்காயை ஆர் உண்பார்? அகம் ஓவ்வா ரிடத்தேயும் காதலுண்டோ வண்டே? அரசன் இந்தக் காதற்பாட்டை ரசித்தான். அவன் மனம் நல்ல நம்பியின் கருத்தின் பக்கம் திரும்பியது அரசன் : நல்ல நம்பியாரே, உமது அத்தனை சகோதரிகளையும் அழைத்துப் போக உமக்கு அனுமதியளிக்கிறேன். என்றுகூறி அஞ்சுகத்தைத் தாவினான் அவளும் பறந்து வந்து அவன் கைப்புறத்தில் வீழ்ந்தாள். நல்ல நம்பியும் சந்தோஷத்தோடு திரும்பினார் காட்சி - 4m ரவிகேது தன் புதுக் காதலியை அணைத்தபடி நடந்து கொண்டிருக்கையில், சேனாபதியும் மந்திரியும் ஓடிவந்து நின்று நமகாரம் செலுத்தினார்கள். அரசன் : சிலநாள் எனது புதிய காதலியுடன் இன்பம் அனுபவித் திருப்பேன். அதுவரைக்கும் இந்தத்தேசத்தை மந்திரி ஆண்டு வருவார்! என் ஆணையைச் சேனாபதி மேற்கொண்டு நடக்க வேண்டும். சேனாபதி : இது வழக்க விரோதம் என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன். அரசன் : இல்லை இல்லை மந்திரியார் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இதுபற்றிய விவாதம் முற்றுப்பெற்றது. சேனாபதி ரதன் வருத்தத்தோடு வணங்கிப் போனான். அஞ்சுகம் மந்திரியை neh¡»,] அஞ்சுகம் : நான் அரசரின் அன்பைப் பெற்றது தங்களால், ஆதலால் தற்காலிகமாகத் தேசத்தை ஆளும் பாக்கியம் நீங்கள் பெற்றீர்கள். மந்திரி : தங்கட்கு நன்றி செலுத்துகிறேன். இருவரையும் வணங்கிப் போனான் காட்சி - 5 இடம் : ஆரமத்தையடுத்த பூங்காவனம். உறுப்பினர் : சந்த்ரசேனர், குமாரி பத்ரா. தோழியர், அரசகுமாரன் பானு, சௌம்யன், பிறர். பத்ரா, தனது தோழியர் இருவர் சகிதம் நர்த்தனம் செய்தும், பூக்கொய்தும் முடித்து, ஒளிந்து பிடிக்கும் ஆட்டத்தில் உற்சாக மிகுந்திருந்தாள்; பூங்காவில் பழையதோர் மண்டபம்! பத்ரா தன் தோழியைத் தேடித் தனி வந்தாள். அரச குமாரன் பானு குதிரையின் மேல் வந்தான். தற் செயலாக அங்கு அவளைச் சந்தித்தான்; அவள் அழகு அவனுக்கு வியப்பை உண்டாக்கியது. பூம் புதர்கள் அடர்ந்த வழிகள் ஒன்றுபோல் தோன்றினதால், மான் போல் மருண்டு நின்றாள் பத்ரா. அவளை நோக்கி பானு : புன்னையின் கன்றுக்குப் பின்னே தொடங்கும் பாதை, நீ போக நினைக்கும் நடுமண்டபத்தில் உன்னைச் சேர்க்கும். பத்ரா திரும்பிப் பார்த்தாள் பத்ரா : நன்றி செலுத்துகிறேன். என்று கூறி ஓடினாள் பானு : இன்பக் கனவு மறைந்தது! என்று கூறித் தவித்துச் சோலையின் வேறு புறம் போனான். அங்குத் தோழியைக் கண்டான் பானு : உன்னிடம் ஒரு சேதி. தோழி, பானுவிடம் வந்த நின்றாள். பானு முள் ஒன்றை ஒடித்து ஓர் பத்திரத்தில் எழுதி இதை உன் தலைவியிடம் கொடு. இந்த நன்றியை எனக்குச் செய். தோழி அதைப் பெற்றுத் தலைவி பத்ராவிடம் ஓடி தோழி : அரசகுமாரர் இதைக் கொடுத்தார் தங்களிடம் கொடுக்கச் சொல்லி. ஆச்சரியத்தோடு பத்ரா அதை வாங்கி வாசித்தாள் வாரா விருந்து வரக்கண்டும் உன்விழியாற் பாராமே விட்டுப் பறந்தாலும் - சீராய்என் நெஞ்சமட்டும் உன்னோடு நேர்ந்ததடி என்றனுக்குத் தஞ்சமட்டும் வஞ்சிநீ தான். என்று வாசித்து, இகழ்ச்சி தோன்றச் சிரித்து, அதற்கு ஓர் பதிலை எழுதித் தோழியிடம் கொடுத்தாள். தோழி பானுவை நோக்கிப் போக, அவனும் குதிரை மேல் எதிர் வந்தான். லிகிதத்தை வாசிக்கலானான் மஞ்சென்று சொன்னகுழல் மங்கைநல்லாள் மக்களெல்லாம் நஞ்சென்று சொல்லி நடுங்குகின்ற - வஞ்சகனின் சேயை அழைப்பதுண்டோ? செம்மைபெற எண்ணுபவர், நோயை அழைப்பதுண்டோ? நோக்கு! பானு கோபத்தோடு தன் குதிரையைத் துரத்தினான் காட்சி - 5m பத்ரா, முல்லைக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தாள். தோழிகள், களையெடுத்துக் கொண்டிருந்தார்கள் தோழி : இதைப் பாருங்களேன்! கோபத்தோடு சென்ற அரச குமாரன் குதிரையின்மேல் முறுக்காக நிமிர்ந்தபடி போனானே, அதைப் போலவே வெகு முறுக்காக இருக்கிறது இந்தக் களை. வேறுதோழி: மீண்டும் அதை எனக்கு ஞாபகப்படுத்துகிறாய். அவன் போக்கு எனக்குப் பயத்தை உண்டுபண்ணுகிறது. பத்ராவின் காதில் இவ்வார்த்தைகள் ஏறவில்லை பத்ரா : உயிரரும்பி மிக்க உணர்வு மலர்ந்து பயில்புகழ் வாசம் பரப்பி - அயலார்க்கு நன்றாகும் முல்லை நறுங்கொடியே மானிடர்கள் ஒன்றாதல் எந்நாள் உரை? என ஓர் கவிதை கூறினாள், அதைக் கேட்ட தோழி : பிரளய காலத்தில் அம்மணி! இதற்குள் பல சேவர்கள் பத்ராவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். தோழிக்குச் சூழ்ச்சி விளங்கிற்று தோழி : அம்மணி, நம்மை நோக்கித் துன்பம் விரைவாக வருகிறது! ஒரு சேகவன் பத்ராவை நோக்கி அழுத்தம் திருத்தமாகக் கூறலானான் சேவகன் : அரசர் பேரால் உன்னை நான் சிறைப்படுத்துகிறேன். கீழ்ப் படிந்து நீ என்னுடன் வரவேண்டும். பத்ரா : நான் இழைத்த குற்றம்? சேவ : அது என்னிடம் சொல்லப்படவில்லை. தோழி : எம்மையும் குற்றவாளிகளாக்குங்கள். சேவ : என் வேலை அல்ல அது. பத்ரா : என் தந்தை சந்த்ரசேனர் என்பதை நீர் அறிவீரா? அவர் உத்திரவின்மேல் நான் உம்முடன் வரமுடியும். சேவ : ஒரு வினாடியும் தாமதிக்க முடியாது. பத்ரா சேவகருடன் நடந்தாள். தோழிகள் சந்த்ரசேனரை நோக்கி ஓடினார்கள் சேவ : இதோ இளவரசரின் சாந்தி மண்டபம். நீ பிரவேசிக்க வேண்டிய இடம். பத்ரா : நான் நீதி மன்றத்தை அடைய வேண்டியதுதான் ஞாயம். சேவ : இல்லை. இது தற்காலிக நீதி மன்றம். மற்றொருபுரம் சௌம்யன் தன் தோழர் சிலருடன் ஆரமத்தை நோக்கிப்போய்க் கொண்டிருக்கத் தோழிகள் கண்டார்கள் தோழி : நண்பரே, அதோ பத்ராவை - உமது குருவின் குமாரியை அக்ரமமாக அரச குமாரன் சேவகரை ஏவித்தன் சாந்தி மண்டபத்தில் அடைத்தான்! இந்நேரம் அவள் நிலை ஆபத்தாக முடிந்திருக்கும். என்று கூறவே, சௌம்யன் துடிதுடித்துத் தன் தோழர்களை அழைத்துக் கொண்டு சாந்தி மண்டபம் நோக்கி ஓடினான். தோழியரும் தொடர்ந்தார்கள். பத்ரா சாந்தி மண்டபத்தில் ஓர் தனிஅறையில் நிறுத்தப் பட்டாள். சேவகர்கள் அகன்று வெளிப்பக்கம் nghdh®fŸ.] பானு : பெண்ணே, நான் இந்நாட்டை ஆள நேர்ந்தால் நாட்டில் சரிநீதி செலுத்த எண்ணுகிறேன். பத்ரா : இளவரசர் நோக்கம் நன்று! பானு : அதன் பொருட்டு நான் இன்றே அடையவேண்டிய ஆலோசனைக்காரி ஒருத்தி; அவள் நீ! பத்ரா : உமது எண்ணம் கொடியது! யாரிடம் இதை நீர் கூறுகிறீர்? பானு : பூவே! நான் அநாயாசமாக உன்னிடம் மதுவை உண்ண நினைக்கிறேன். பத்ரா : கசக்கிப் பிழிதல் மனிதர் செயல் அல்ல அல்லவா? பானு : எந்த வகையிலும் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்பவன் மனிதன். பத்ரா : நான் என்ன குற்றத்திற்காக இங்கு நிறுத்தப்பட்டிருக் கிறேன். பானு : கேள் இதை. நான் உன்னையடைய எந்த அக்ரமத்தை யும் செய்வேன். உயிரையும் வெறுப்பேன். அப கீர்த்தியைப் பொருட்படுத்த மாட்டேன். தங்கக் கனிக்கு மண்வெட்டப் பின் வாங்குவதுண்டா? என்னிடம் நீயே வந்துவிடு! பத்ரா விடுதலை பெற முயன்றாள்; பயனில்லை பத்ரா : அந்தோ அக்ரம உலகமே! என்ற சத்தம் சாந்தி மண்டபத்தை முட்டியது இச்சமயம் சாந்தி மண்டபத்தின் வாயிலில் ஆரமிகள் நின்று அறை கூவினார்கள் ஆரமி : அரசகுமாரனே, அக்ரமம் செய்யும் அயோக்கியர்களே! இதைக்கேட்ட சேவகர்களும் பானுவும் வெளியில் ஓடி ஆரமிகளைத் தொடர்ந்தார்கள். ஆரமிகள் ஓடினார்கள். எதிரிகளும் பிடிக்க ஓடலானார்கள். இதற்குள் மண்டபத் தின் பின்புறத்தில் காத்திருந்த சௌம்யன் உட்புகுந்தான். மஞ்சத்தில் நீங்கா உயிரோடு கிடந்த பத்ராவைக் கண்டு பதைத்து சௌம்யன்: அம்மா, இவ்வழியாக நீங்கள் சென்று மீளலாம். பத்ரா எழுந்து தள்ளாடி நடந்துபோக சௌம்யனும் உடன் சென்றான். சிறிது தூரம் கடந்தது சௌம்யன் : அம்மா, இதோ தங்கள் ஆரமத்திற்குப் போகும் வழி! பத்ரா : இந்நாட்டில் நல்லவர் இல்லை; வீரர்கள் இல்லை, இதை என் தந்தையாரிடம் கூறுக. சௌம்யன்: அம்மா, சந்த்ரசேனர் இந்நாட்டில் இருப்பதால், இந் நாட்டில் நல்லவர்களும் வீரர்களும் இருக்கிறார்கள். பத்ரா : என் உள்ளத்தை அமைதிப் படுத்துபவை இங்கு எவை உண்டு! பரந்த இந்த இயற்கைகள் என் துன்பத்தை மாற்றட்டும். இதைப் பத்ரா கூறி முடித்து, அடுத்த வார்த்தைகளை உக்ரமாக ஆரம்பித்தாள் உடனே என்னைவிட்டுப் போவீரா மாட்டீரா? சீ! உலகம் என்ன செய்யும்? ஆடவரும் பெண்டிரும் தம்மை வீரர்களாக்கிக் கொள்ளவில்லை. படைப்பலம் அவனுக்கு! பின்னும் பத்ரா சிரிக்கிறார் நீர் நல்லவர்! என்னோடு வாரும். சிரிக்கிறாள் சௌம்யன் பத்ராவின், பைத்தியத்தை எண்ணி வருந்திக் குருவிடம் கூற ஓடினான் காட்சி - 5M சௌம்யனும் மற்றும் தோழர்களும் சந்த்ரசேனரிடம் ஓடி வந்தார்கள். சௌம் : சுவாமி! தங்கள் குமாரி தோழிமாருடன் பூங்காவில் இருந்த சமயம், அரசகுமாரனாகிய பானு சேவகரை அனுப்பித் தங்கள் குமாரியை இழுத்துவரச் செய்தான். நானும் தோழரும் இதைத் தோழிகளால் அறிந்து, பானுவின் சாந்தி மண்டபம் நோக்கி ஓடினோம். எதிர்த்த எனது தோழர்களைத் துரத்திக்கொண்டு பானுவும் சேவகரும் ஓடிவிட, நான் மண்டபத்தில் சென்று பார்த்தேன். தங்கள் குமாரி வாடியபூப்போல் மஞ்சத்தில் கிடக்கக் கண்டேன். அழைத்துவரும் வழியில், தங்கள் குமாரி பேசிய பேச்சுக்கள் கவர்ச்சி யுடையவை. இந்நாட்டில் நல்லவர் இல்லை; வீரர்கள் இல்லை என்று கூறினாள். நான் பிறகு ஆரமத்துக்கு அழைத்தேன். அவள் சொல்லிய பதிலும் சிரிப்பும் அவள் அதே க்ஷணத்தில் சித்த சுவாதீனம் இழந்தாள் என்பதைக் காட்டின. இயற்கைக் காட்சிகள் என் துன்பத்தை மாற்றட்டும் என்று சொல்லிப்போனாள். இவைகளை யெல்லாங் கேட்ட சந்த்ரசேனர் சிந்தனையில் ஆழ்ந்தார். குருவின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள் சௌம்யன் முதலியோர். நல்ல நம்பி அங்கு வந்து ந-நம்பி : சந்த்ரசேனரே, உமது குமாரி சித்தசுவாதீனமிழந்து தனியாகப் போய்க்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்! அந்தப் பானு அவளை அவமானப்படுத்தியதையும் கேள்விப் பட்டேன்.! சந்த்ர : அன்பரே பானுவைச் சௌம்யன் எதிர்த்தான். அதனால் சௌம்யனுக்கு ஏற்படப் போகும் தண்டனையினின்று அவனைக் காப்பாற்றவேண்டும். ந-நம்பி : உங்கள் பெருநோக்கம் ஒப்பற்றதாகும். ஆயினும் தங்கள் குமாரியைக் காப்பாற்ற வேண்டுவதும் முக்கியமாகும். சந்த்ர : சௌம்யா! உடனே ஆரமவாசிகள் அனைவரையும் கூட்டிவந்து என் எதிரில் நிறுத்து. சௌம்யன் ஓடி ஆமரவாசிகளைக்கூட்டி வந்து, சந்திரசேனர் எதிரில் நிறுத்தினான். அக் கூட்டத்தில் தௌம்யன் என்பவன் சௌம்யன் போலவே இருப்பதைச் சந்த்ரசேனர் ftŤjh®.] சந்த்ர : நண்பரே, இதோ நிற்கும் தௌம்யனைப் பாரும்! ந-நம்பி : ஆச்சரியம்! அவன் சௌம்யன் போலவே தோன்று கிறான். சிறிது கூட வித்தியாசமில்லை. சந்த்ர : தௌம்யா! இதைக் கேள். சௌம்யனுக்கு ஏற்படுந் தண்டனைகளை ஏற்றுக்கொள்ள நீ சித்தமாயிரு! தேச நன்மை கருதி இதைக் கூறுகிறேன். சௌம்யன்: சுவாமி! எனக்காகத் தௌம்யன் துன்பத்தை ஏற்றுக் கொள்வதை நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? ந-நம்பி : சௌம்யா, குரு வார்த்தையைத் தட்டாதே! சந்த்ர : ஒப்புயர்வில்லாத உன் சேவையைத் தாய் நாடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிறைக்குப் போவதைத் தௌம்யன் தடுத்து வைக்கட்டும். தௌம்யனுக்கும் கஷ்டம் வராமல் நாம் காப்பாற்றுவோம். தௌம்யன்: மக்கள் அக்ரமத்திலிருந்து மீளும் காலம் நெருங்குவதை யறிந்து, நான் அளவிலாத ஆநந்தம் அடைகிறேன். சௌம்யனுக்காக நான் என்னுயிரைத் தர, ஆநந்தத் தோடு ஒப்புக் கொள்ளுகிறேன். சந்த்ர : தௌம்யா, உன் தியாக புத்திக்காக உன்னைப் பாராட்டு கிறேன். அப்பா சௌம்யா, நீ சிறிது நாட்கள் மறைந்திரு. எங்கே சென்று தாமதிக்க உத்தேசிக்கிறாய்? இதைக்கேட்ட சௌம்யன், தௌம்யனை நினைத்தும், தான் மறைந்து வசிக்க வேண்டும் என்று குரு சொன்னதை நினைத்தும் வருந்தி சௌம் : சுவாமி! தங்கள் கட்டளையை மறுக்க முடியவில்லை. சித்ர நகர் வாசிகள் என்னை அறியமாட்டார்கள் அங்குச் சென்று தங்கியிருக்கிறேன். சந்த்ர : சௌம்யா, அஞ்சாதே! நான் தௌம்யனைக் காப்பேன். உன்னையும் சீக்கிரம் அழைப்பேன். நீ போய்வா. mt‹ அவன் தௌம்யனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மறைந்தான் காட்சி - 6 இடம் : இராஜதானி நீதிமன்றத்திற்குப்போகும் வழியில் உள்ள ஓர் சாலை. உறுப்பினர் : தௌம்யன், சேவகர் இருவர், பானு, பத்ரா. இரு சேவகர்கள் துப்பாக்கி ஏந்தியவர்களாய்த் தௌம்யனை நீதிமன்றத்துக்கு அழைத்துப் போகிறார்கள் 1. சேவகன் : ஏன் சௌம்ய வாமி. தாங்கள் தாம் இளவரசரை எதிர்த்த அயோக்கியனோ? தௌம்யன் : அதென்ன மரியாதையாக ஆரம்பித்து அவ மரியாதையாக முடித்தீர்களே, தாங்கள் முட்டாள் மாதிரி! 1. சேவ : முட்டாள் மாதிரியா! என்று கூறித் தன் கையிலிருந்து துப்பாக்கியால் தௌம் யனை மோத எத்தனித்தான். துப்பாக்கி வெகு தூரம் போய் விழுந்தது. சேவகன் மண்ணைக் கவ்வியபடி வீழ்ந்தான். இத்தனையும் செய்த தௌம்யன் நீ ஏன் சும்மா நிற்கிறாய்? என்று சொல்லி முடியுமுன் 2-வது சேவகனும் தன் துப்பாக்கியால் எதிர்க்க, அதுவும் அதே கதியை அடைந்தது, உடனே இரு சேவகரும் தௌம்யனிடம் மல்யுத்தம் ஆரம்பித்தார்கள். சேவர்கள் தங்கள் அங்கியின் கையை இழுத்துச் சுருட்டு வதற்குள், தௌம்யனால் அடிபட்டுச் சுழன்று விழுந்தார்கள். தௌம்யன் : இங்கேயே படுத்திருங்கள்! நானே நீதிபதி யோக்கி யதையைப் பார்க்கப் போகிறேன். என்று சொல்லிச் சென்றான், அச்சமயம் பானு குதிரை மேல் அங்கு வந்தான். அடிபட்டுக் கிடக்கும் சேவகர்களைக் f©L,] சேவகர்களே, இதென்ன? v‹W ஆச்சரியத்தோடு கேட்டான், ஒரு சேவகன் சிரமத்தோடு vGªJ,] எங்கள் இருவரையும் இந்தக் கதிக்குள்ளாக்கிவிட்டு, அதோ போய்க்கொண்டிருக்கிறான் சௌம்யன். குற்றவாளியாக இழுத்துச் செல்லப்படும் சௌம்யனைப் பார்க்கவந்த பானு நாணி நின்று சௌம்யனைத் தொடரலானான், பத்ரா : என்றன் இளமையையும் ஏற்ற அழகினையும் நன்றுதினம் காப்பாற்றி நான் மகிழும் நாதனிடம் சென்று வழங்கிச் சிறப்படையக் காத்திருந்தேன் மன்னன் மகன் என்னருமை மாண்பைக்கெடுத்தானே! v‹w சோகம் நிறைந்த பாட்டு, பானுவின் காதில் வீழ்ந்தது. பானு, பத்ரா வெகு தூரத்தில் கூந்தல் விரிய அண்ணாந்த பார்வையுடன் நடந்து போவதைப் பார்த்தான். அவன் மனம் பதறிற்று. தன் கையிற் பற்றி யிருந்த குதிரையின் கடிவாளம் அவன் கையைவிட்டு நழுகிற்று. அவன் குதிரையை மறந்தான் ஐயோ பத்ரா! v‹W அலறி அவளைத் தொடர்ந்து போனான். ஆயினும் அவள், அவன் கண்ணுக்கு மறைந்தாள். அப்போது தான் பானுவுக்குத் தன் குதிரையின் ஞாபகம் வந்தது. மீண்டும் குதிரையை நோக்கி ஓடிவந்தான். குதிரைமேல் ஏற நினைத்தான். அவள் கண்ணுக்கு மறைந்தாள் என்று வருந்தினான். ஆயினும், பிறகு அவள் சென்ற வழியாகக் குதிரையைத் தூண்டினான் காட்சி - 6m சேனாபதி ரதன் சௌம்யனைக் காணவரும்போதே, தௌம்யனைக் கண்டு தன் மகனான சௌம்யன் என்றே நினைத்து, அப்பனே உன்னை அழைக்கவந்த சேவகர்கள் எங்கே? என்று ஆவலாகக் கேட்டான் தௌம்யன் : அவர்களா! அதோ அங்கே தூங்குகிறார்கள். நியாயாதிபதி எங்கே இருக்கிறார்? நீர் எங்கே வந்தீர்? ஏதாவது வேண்டுமா அல்லது நீராவது என்னிடம் மரியாதையாக நடந்து கொள்ளுகிறீரா? சேனாபதிக்கு ஒன்றும் புரியாமல் விழித்து சேனா : அப்பா, நான் என்ன உன்னிடம் அவமரியாதை காட்டக் கூடும்? புத்தி சுவாதீனமில்லையா உனக்கு? என்னைக் கண்டதும் அன்போடு தந்தையே என்று அழைப்பாயே. இது கேட்டுத் தௌம்யன் விழித்தது ஐயா, சௌம்யன் தங்கள் குமாரனா? சேனாபதி தௌம்யனை உற்று நோக்கி அப்பா, நீ யார்? தௌம் : நான் சௌம்யன் அல்ல; அவனைப் போன்ற உருவம் உடையேன். அதனால் சௌம்யன் ஏற்கவேண்டிய தண்டனையை, நான் ஏற்கும்படி எனது குரு ஆக்ஞாபித்தார். இதைக் கேட்டதும் சேனாபதி ஆச்சரியமும் இரக்கமும் அடைந்தான். அவன் கண்களிலிருந்து நீர் பெருகிற்று சேனா : அப்பா, அப்பா, என் பிள்ளை, நீயும் என்பிள்ளைதான். நீ தண்டனை ஏற்கப் போவதை மாத்திரம் நான் சகிப்பேனா? பிள்ளைக்கு என்ன இடையூறு செய்கிறார்களோ, அந்தக் கொடிய சேவகர்கள் என்று நினைத்தல்லவா ஓடிவந்தேன். அவனுக்காக நீ தண்டனை ஏற்றுக் கொள் என்று குரு எப்படிச் சொல்லி யிருக்கலாம். தௌம் : நீங்கள் வருந்துவது சரியல்ல. தேச நலனுக்குச் சௌம்யன் வெளியில் இருக்கவேண்டும். நான் சிறையில் இருப்பதால் பாதகம் இல்லை. சேனா : அப்பா, ஒன்று செய். நீ எங்கேணும் போய்ச் சிறிது காலம் மறைந்திரு. தௌம் : உங்கள் அன்புக்கு நன்றி செலுத்துகிறேன், ஆயினும் நான் ஓடி மறைவதால், சௌம்யனைச் சிறைப்பத்திரம் தேடிக் கொண்டே இருக்கும். அவன் அகப்பட்டுக் கொள்ளவும் கூடும். நீதி மன்றுக்குப் போவோம், வாருங்கள். v‹W சொல்லி முன் நடந்தான். சேனாபதியும் bjhl®ªjh‹.] காட்சி - 7 இடம் : சித்ர நகர் மாளிகையைச் சேர்ந்த நந்தவனம். உறுப்பினர் : நகரபதி குமாரி குமுதினி, தோழிகள் சௌம்யன். குமுதினி தன் காதலன் சீக்கிரம் வருவானா என்று தன் கண்களை மூடிக்கொண்டு தரையில் வட்டக்கோடு கிழிப்பதும், அந்தக் கோட்டின் இருமுனையும் சேர்ந்திருந் தால் வருவார் என்று திருப்தியடைவதும், அவன் வராததால் பின்னும் கோடு கிழிப்பதுமாக இருந்தாள் தன் தோழி r»j«!] குமுதினி : இதுதான் கடைசி முறை ஆழி இழைக்கிறேன். தோழி : கீழே பார்க்கிறாயே? அதென்ன வழக்கம். FKâÅ nfhoG¤jhŸ.] தோழி : என்ன குமுதினி, உன் காதலர் வரமாட்டார் போலிருக்கிறதே! brs«a‹ பின்புறம் வந்து குமுதினியின் கண்களை _odh‹.] தோழி : யார்? சொல் பார்க்கலாம். குமுதினி : இவ்வளவு நேரம் என்னைக் காக்கவைத்து, என் கண்களை மூடியதால், மூடியவர் என் காதலர். சௌம் : நான் எப்போதும் சீக்கிரம் வருவதில்லையா? v‹W சொல்லிக்கொண்டே கையை எடுத்துவிட்டு அவள் முகத்தோடு முகம் nr®¤jh‹.] குமுதினி : இதோ பாருங்கள் உங்கள் வரவை எண்ணி ஆழி இழைத்த விரல் தேய்ந்து போனதை! என் உடம்பைத் தொட்டுப் பாருங்கள். குளிர்ந்த மலர்போல் இருக்கிறதா? அல்லது எரியும் கனல் போலிருக்கிறதா என்று. சௌம் : என் கையால் உன் முகத்தை மூடியிருப்பேனாயின், உன் மலர்போன்ற முகம் தீய்ந்து போயிருக்கும். இதோ பார் அல்லி மலர்கள்! இவற்றால் அன்றோ உன் முகத்தை மூடினேன். brs«aÅ‹ இரு கைகளிலும் இருந்த இரு மலர்களையும், அவன் காட்ட, அவைகளைக் குமுதினி கண்டாள். அம்மலர் கருகி ïUªjd.] குமுதினி : அவை என் முகத்தில் பட்டதாலல்லவா சூடு தாங்காமல் கருகின. சௌம் : அல்லவே குமுதினி. என் கைகள் பட்டதால் கருகின. உன் மீது எனக்குள்ள காதலின் அளவை நான் எவ்வாறு தான் எண்பிக்கக் கடவேன். குமுதினி : உங்கள் அன்பையெல்லாம் எனக்குக் கொடுங்கள் என்றால், கொடுத்தேன் என்று பொய் கூறுவீர்கள். என்னைவிட்டுப் பிரியவேகூடாது என்றால். அங்கொரு வனுக்கு உயிர்ப் பிச்சை தந்தேன்; அதன் பொருட்டு இதோ போய் வந்து விடுகிறேன் என்பீர்கள், மனித சஞ்சாரமற்ற இடத்தில் நாம் இருவரும் மாத்திரம் இருந்து இன்பத்தில் ஈடுபட்டுக் கிடப்போமே என்றால், வேளை யோடு உணவு எப்படிக் கிடைக்கும் என்பீர்கள். உங்களுக்கொரு பரீக்ஷையாவது காரணமாவது? இச்சமயத்தில் சௌம்யனுக்கெதிரில், சற்றுத் தூரத்தில், ஓர் இளமானைக் கலைமான் ஒன்று தன் கொம்பினால் குத்தி இம்சிப்பதை அவன் கண்டான். அவனுக்கு நாட்டின் நிலை ஞாபகத்துக்கு tªjjhš,] பெண்ணே, அதோ பார், அந்தக் கலைமான் இந்த இளமானை இம்சிக்கிறது தன் கொம்பினால்! அரச வர்க்கம் இப்படித்தான் ஏழை மக்களை இம்சிக்கிறது. குமுதினி : எப்போதும் எனது அரசர்மேல் குறைகூறுவதுதான் உங்களுக்கு வேலை. அவர் மகுடத்தை நீங்கள் கைப்பற்றும் வரைக்கும் நிறுத்தமாட்டீர்கள்! சௌம் : அதில் நான் வெற்றி பெற்றால் நீ வருந்துவாயல்லவா! குமுதினி : நான் பட்டத்தரசி ஆவதற்கா? சௌம் : நான் அந்த யுத்தத்தில் இறந்து போனால்? குமுதினி : மெத்த சந்தோஷம்! நாம் இணை பிரியாதிருக்கலா மல்லவா மரண பூமியில். சௌம் : இரண்டும் வேண்டாம் எனில்? குமுதினி : இதோ தென்றல், மலர்களின் பரிமளம், குளிர் காற்று நீங்கள், நான், முத்தம்! கூறிச் சௌம்யன் முகத்தோடு முகம் சேர்த்தாள். சௌம்யன் இச் என்று ஓர் முத்தமிட்டான். குமு : ஒரு பாட்டு பாடுங்கள். சௌம் : பாட்டுப் பாடும் பிரச்சினையை நானல்ல பிரதாபிக் கிறது வழக்கம் முதலில். குமு : அப்படித்தானாகட்டுமே. சௌம் : பெண்ணே ஒரு பாட்டுப் பாடு. குமு : இதற்குத்தானா! என்று சிரித்து மலரினில் வண்டு மதுவினை உண்டு மறித்தும் வருமே சுவை கண்டு! நல்ல மங்கை மெல்லிடையே துவண்டு வருந்துகின்றாள் தெரிந்திலையோ வா, விரைந்தன்பு கொண்டு! காட்சி - 8 இடம் : மணியாற்றங்கரை. உறுப்பினர் : சந்த்ரசேனர்,சேனாபதி,உபசேனாதி பதிகள், பத்ரா, பானு. ஒவ்வொருவராக இரவில் மணியாற்றங்கரை நோக்கி வந்தார்கள். சேனாபதியும் உபசேனாபதி ஐவரும் மணலில் உட்கார்ந்திருந்தார்கள். சிறிய பாறையின்மேல் சந்த்ரசேனர் அமர்ந்தார் சந்த்ர : நண்பர்களே, இந்நாட்டு மக்களின் நன்மைக்காக நாம் அனைவரும் இந்த அரசாட்சியை வீழ்த்துவோம். மனப் பூர்வமாக நீங்கள் ஆதரிக்கிறீர்களா? ஆற்றின் தண்ணீரைக் கையில் அள்ளி சத்தியமாக ஆதரிக்கிறோம் என்று கூறினார்கள் சந்த்ர : வாழ்ந்தது பிங்கலநாடு! வாழ்ந்தனர் மக்கள்! v‹W கூறிச் சந்த்ரசேனர் உற்சாகத்தோடு எழுந்து ËW,] அன்பர்களே! வெற்றியை வேண்டிக் காரியத்தில் இறங்கி னோம். எதுவரினும் இன்பம் என்றே ஏற்போம். உங்கள் சேனா வீரர்களையெல்லாம், உங்கள் மேலான எண்ணத் திற்கு ஒத்து வரும்படி செய்க. நாளைய இரவு சிறையிலுள்ள தௌம்யனைச் சேனாபதி ரகசிய முறையில் திறந்து விடுக. அவனைச் சித்ர நகருக்கனுப்பிச் சௌம்யனை அழைத்து வரும்படி சொல்க. மறுநாள் சூரியோதயத்தில், போரை ஆரம்பிக்கவேண்டும். ராஜதானியைச் சேனைகள் வளைக்கட்டும். கோட்டையை முற்றுகை யிடட்டும். மாளிகையை வசப்படுத்தி அரசனையும் பானுவையும் உடற்காப்பாளரையும் வீழ்த்துக. அதே நேரத்தில் கிராமங்களிலும், நகரங்களிலும் புகுந்து, கிராமபதி களையும் நகரபதிகளையும் எதிர்த்து வீழ்த்த வேண்டும். ஏன் சாத்தியந்தானே? மற்றவர் : வெற்றி நிச்சயம்! v‹W அனைவரும் MuthǤjh®fŸ] பத்ரா : மானமுள்ளான் மகள் நானோ! மங்கைநலம் உள்ளவளோ! மதியே மதியே ஈனமுள்ளான் தனக்கு நான் இணங்கியதும் உண்டோசொல் மதியே மதியே! தான தருமம் புரிந்தே சற்சனர்க்கு விருந்திட்டு மதியே மதியே! ஏனையவர் போலே நான் இல்லறத்தை நடத்தாத எட்டியானேன்; இந்தச் சோகப்பாட்டுக் காற்றோடு வந்து ஆற்றங்கரையி லுள்ள அனைவர்க்கும் பரிதாபத்தையும் எழுச்சியையும் உண்டாக்கியது. அனைவரும், கண்கொண்ட தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் பத்ராவைக் கண்டனர். அவளைப் பானுபின் தொடர்ந்து நெருங்க முயல்வதையும் பார்த்தார்கள் சேனாபதி : வாமி! அந்தக் கொடும் பாம்புகளுக்கு இரையாகும்படி பெற்ற தங்கள் குமாரி அதோ! இப்போதே ஒருவேலை தீரட்டும் உத்தரவு கொடுங்கள்! அவளை வெட்டி அங்கேயே புதைத்து விட்டு வருகிறேன். சந்த்ர : ஐயோ! ஆசைக்கொரு பெண்! கவியரசி! அவள் நிலை இப்படியா! அப்பனே தொட்ட காரியம் பெரிது; மகா ஜனங்களின் நல்வாழ்க்கையை உத்தேசித்தது; வேறுவழி இல்லை. அவளை இழந்து விடுவோம். எடுத்தகாரியம் இடையில் முறித்துக் கொள்ளலாகாது. சேனா : சுவாமி, ஐயோ ஐயோ! என்ன பரிதாபம் என்ன முழுகி விடும்? சேனாபதி தன் வாளில் கை வைத்தான். சந்த்ரசேனர் அவன் கையைப் பிடித்துக் bfh©L] சந்த்ர : அப்பா இந்த வரம் எனக்குக் கொடு! சிறுகல்லும் பெரியதோர் தடாகத்தைக் கலக்கும். அமைதி கொள். நாம் போவோம். திரும்பியும் பார்க்க வேண்டாம். சந்த்ரசேனர் சேனாபதியைப் பிடித்த பிடியை விடாமல், உபசேனாபதிகள் சகிதம் நடந்தார் ஆரமத்தை neh¡».] காட்சி - 9 இடம் : சந்த்ரசேனரின் ஆரமம். உறுப்பினர் : ஆரமிகள். ஆஸ்ரமவாசி ஒருவன், ஆரமத்தின் வாசற்படியில் நின்று மற்றும் கிராமங்களிலிருந்தும் நகரங்களி லிருந்தும் வரும் ஆரமிகளை வரவேற்றுக் bfh©oUªjh‹.] 1-வது ஆ : நமகாரம். நீங்கள் அனைவரும் வெகுதூரமிருந்து வந்திருக் கிறீர்கள். சிரமம் இருக்கும். ஆதலால் நீங்கள் நேரே ஆரமத்தின் அடுக்களைப்புறம் சென்று உண வருந்தச் சித்தமாக இருக்க வேண்டும். குருவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நாளைக்கு! அதுவரை அமைதியோடு ஆர மத்தில் இருக்க வேண்டும். இது குருவின் கட்டளை! 2-வது ஆ : நல்லது. நான் தான் வஞ்சிக் கிராமவாசி. அந்தக் கிராமபதி செய்யும் ... ... ... ... 1-வது ஆ : வெளி விஷயங்கள் எவைகளைப்பற்றியும் பேசலாகாது. 2-வது ஆ : அப்படியா. v‹W சொல்லி உள்ளே nghŒÉ£lh‹] 3-வது ஆ : என்னைத் தெரிகிறதா? சேரிக் கிராமம்! சென்ற ஆண்டுதான் ஆரமத்தை விட்டுப் போனேன். 1-வது ஆ : நல்லது உள்ளே போயிருங்கள். 4-வது ஆ : ஜனங்கட்கு ஏதாவது கதிமோக்ஷம் சீக்கிரம் ... ... 1-வது ஆ : அதுபற்றி ... ... ... ... 4-வது ஆ : சரி சரி. மன்னிக்க வேண்டும். 5-வது ஆ : நான் தான் சந்த்ரநகர்! பொது விஷயங்களைப் பற்றி நான் உங்களை ஒன்றும் கேட்கவில்லை. நல்ல நம்பி பேச்சைத்தான் குரு இன்னும் கேட் ... ... ... ... 1-வது ஆ : நிறுத்தும்! cŸns போய்விட்டான். மற்றவர்களும் ஆரமத்தில் EiHªjh®fŸ.] 6-வது ஆ : உள் நாட்டுப் போர் துவக்கப் போவதாகக் கேள்வி. 1-வது ஆ : இதென்ன தோழரே, வெளி விஷயத்தைப் பற்றி எந்தப் பிரதாபமும் கூடாதென்றால், பிதற்றுகிறீரே. 6-வது ஆ : பின்னை ஏன் ஆரமிகள் அனைவரும் அழைக்கப் படுகிறார்கள்? இது கூடக் கேட்கக் கூடாதோ? என்னிடம் சொன்னால் என்ன? 1-வது ஆ : அந்தோ! குருவின் பகைவரா நீர்? தயவு செய்து உள்ளே போம். 6-வது ஆ : வேறொன்றுமில்லை. சேனாபதி நமக்கு ஒத்திருக்கிறாரா என்ற சந்தேகம். 1-வது ஆ : குருவின் ஆணையை மீறுகிறீர். 6-வது ஆ : இல்லை. 1-வது ஆ : இல்லை யென்றால் உள்ளே போகவேண்டுமல்லவா? காட்சி - 10 இடம் : ராஜதானி மாளிகையில் அந்தப்புரத் தின் தாழ்வாரம். உறுப்பினர் : ரவிகேது மன்னன், அஞ்சுகம், நல்ல தம்பி, பானு பிறர். uÉnfJ மன்னன் அலங்காரமான மஞ்சத்தில் சாய்ந்திருந் தான். அவன் மடியில் அஞ்சுகம் தலை வைத்து அரசன் வாயில் வெற்றிலைச் சுருள் கொடுத்திருந்தாள். தோழி ஒருத்தி விசிறிக் கொண்டிருந்தாள். அச் சமயம் அரசனைக் காணுங் கருத்தால்; நல்லநம்பி அவசரமாக வந்து கொண்டிருந்தார். தலைவாசலில் சேவகன் தூங்கிக் கொண்டிருந்தான். ந-நம்பி : சேவகரே! ïij¡nf£L விழித்த சேவகன் கொட்டாவிக் கெதிரில் விரலை beho¤J,] என்ன செய்தி? நில்லுங்கள். ந-நம்பி : நான் அவசரமாக அரசரைக் காணவேண்டும். சேவ : அப்படியா, v‹W சொல்லி மீண்டும் கொட்டாவி É£lh‹.] ந-நம்பி : நேரமாகிறது. நான் போகிறேன். சேவ : நில்லும் என்ன சங்கதி ? ந-நம்பி : நான் அவசரமாக அரசரைக் காண வேண்டுமென்றேனே. சேவ : என்னை உத்தரவு கேட்கவேண்டுமா வேண்டாமா? நீரே சொல்லும். Û©L« bfh£lhÉ] ந-நம்பி : ஆம் உத்தரவு கொடும். சேவ : அப்படிக் கேளும் அதுதானே முறை bfh£lhÉ விட்டுக் bfh©nl] கட்டாயம் நீங்கள் போக வேண்டுமா? ந-நம்பி : ஆமப்பா. அவசரமாகப் போக வேண்டும். சேவ : அப்படிச் சொல்லும். இரண்டு மாதத்துக்கொரு தடவை மூன்று மாதத்துக்கொரு தடவை, ஒன்று அல்லது இரண்டு கொட்டாவி எனக்கு வருவதுண்டு, அப்படி வரும் பக்ஷத்தில் அதற்கு என்ன செய்கிறது? v‹W சொல்லிக் கொட்டாவி விடுத்து விரல் நொடித்தான். நல்லநம்பிக்கு அதிக அவசரம். அவர் சேவகன் அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் உள்ளே போய்விட்டார். சேவகன் அவரை அதட்டி நிறுத்த வாய் எடுத்தான். அதற்குள் கொட்டாவி வந்து விட்டது. அதனால் அவன் தன் கையால் போகாதீர் என்று சைகை காட்டினான். கொட்டாவி தீர்ந்து திரும்பிப் பார்த்தான். அவர் உள்ளே போய்விட்டதை அறிந்தான். மீண்டும் கொட்டாவி விட்டுப்படுத்துக் bfh©lh‹.] ந-நம்பி : நண்பரே, உமது அரசாட்சியைக் சந்த்ரசேனரிடம் ஒப்படைத்து விட்டதாக நீர் ஓர் ப்ரகடனம் வெளியிட்டு விட வேண்டும். அரசன் : ஏன்? அமருங்கள். ந-நம்பி : அல்லது சந்த்ரசேனரை அடைந்து, தர்ம வழியில் இனி ஆட்சி நடத்துவதாக உறுதி கூறி, அவரைச் சமாதானப் படுத்த வேண்டும். நீர் என் நண்பர் என்பதற்காகவும், உம்மைச் சேர்ந்தவர்கட்கோ உமக்கோ இம்சை ஏற்படக் கூடாது என்பதற்காகவும் நான் இதைக் கூறுகிறேன். இன்னும் கேட்பீர்! நாட்டு மக்கள் உமக்கு ஒத்திருக்க வில்லை. உமது சேனாபதி யும், உபசேனாபதிகளும், சேனா வீரர்களும் உம்மை எதிர்க்கச் சித்தமாயிருக் கின்றனர். நாட்டு மக்களையும் சைன்யத்தையும் சந்த்ர சேனர் உமக்கு விரோதமாகக் கிளப்பி விட்டுவிட்டார். நாளை போர் ஆரம்பமாகிறது. நீரும், பானுவும் உயிரிழக்கப் போவது உண்மை என்று எனக்குத் தோன்றுகிறது. உமக்காகப் பரிந்து வருபவர்கள் அனைவரும் உயிரிழக்க வேண்டும். நினைக்கும் போதே சகிக்க முடியாத துன்பம் உண்டாகிறது. நண்பரே! நான் சொன்னபடி செய்ய மாட்டீரா? ïJnf£l அரசன் ப்ரமை கொண்டவன்போல் ÉʤJ] நண்பரே, இவ்வளவும் உண்மையாக இருக்கலாம். ஆயினும் சந்த்ரசேனரிடம் நான் பணிந்து போவதும், நானே என் ஆட்சியை விடுவதும் சரியென்று தோன்ற வில்லை. இராஜ தானியில் எனக்குப் பலமில்லை என்பது வாதவமே. குன்ற நகர், எதிரிகளால் ஜெயிக்க முடியாதது. நான் அங்குத் தப்பிப் போக வழி தேடுகிறேன். அங்கிருந்து மற்ற நகர்ப்படைகளைச் சேர்த்துக் கொண்டு சந்த்ரசேனரை எதிர்க்க முடியும். ந-நம்பி : கொலையும் இம்சையும் உள்ள யுத்தம் இல்லாமற் செய்ய வழியில்லையா? அங்கிருந்தும் படை சேர்ப்பது தானா உம் உத்தேசம்? அரசன் : குன்ற நகரிலிருந்து யோசிப்போம். ந-நம்பி : நன்று. ஆனால் நீர், மாளிகையின் பத்து முழதூரத்தின் கிழக்கே அமைந்த நில அறைக் கதவைத் திறந்து கொண்டு போவீரானால், கபில ஏரிக்கரையண்டை உம்மைச் சேர்க்கும். தப்ப வழி தேடும் சீக்கிரம். ï¢rka« பானு tªjh‹] பானு : தந்தையே, நாளை உள் நாட்டுப் போர் துவக்க இருக்கிறார் சந்த்ரசேனர் எனக் கேள்வி. அரசன் : பிள்ளாய், நீ எங்கும் போகாதே. என்னுடன் இரு. தப்பிப் போகவேண்டும் நாம். ïij¡nf£l பானுவின் மனக்கண்ணில் பத்ராவின் பரிதாபத் தோற்றம் njh‹wnt,] என்னைப்பற்றிக் கவலை வேண்டாம். நான் வந்து சேருகிறேன். உடனே நீங்கள் புறப்படலாம். எங்குப் போக உத்தேசம்? அரசன் : அப்பா, குன்றநகர் போக நினைக்கிறேன். பானு : ஐயோ மோசம் போகிறீர்கள். குன்ற நகரபதி உங்களை மோசம் செய்யக்கூடும். அவன் சம்பந்தத்தை நீங்கள் முன்னொரு காலத்தில் வெறுத்தீரல்லவா. அரசன் : அபயம் அடைந்த தன் தலைவனை விலக்குவானா? பானு : அப்படியானால் உடனே பிரயத்னப்படுங்கள். இன்றிரவுக்குள் நீங்கள் குன்ற நகரில் போய்ச்சேர்ந்து விட வேண்டும். நான் இதோ வருகிறேன். ந-நம்பி : நான் சென்று வருகிறேன். ïUtU« nghdh®fŸ.] அஞ்சுகம் : என்கதி அதோகதிதானா? அரசன் : அஞ்சுகமே என்னுடன் நீயும் வரவேண்டியதுதானே? அஞ்சுகம் : காதலின் இலக்கணத்தை எனக்குக் கூறுகின்றீர்கள் போலிருக்கிறது. நீர் நாட்டினரை விரோதித்துக் கொண்டு ஓடுகிறீர். நானும் அப்படித்தானோ? எனக்கு வேண்டிய திரவியத்தையும் பூஷணங்களையும் இப்படி வைக்கீறீரா? சந்த்ரசேனரை நோக்கிப் போகவா! ïij¡ கேட்டுத் âL¡»£L] அரசன் : அஞ்சுகம்! நீ கேட்டது தருகிறேன்; என்னுடன் வா, அஞ்சுகம் : அது முடியாது. இங்கேதானிருக்கவேண்டும். கேட்டதை வையும். mur‹ சேவகரை நோக்கிச் சைகைகாட்ட, அவர்கள் அஞ்சுகத்தைப் பிடிக்க மறுக்கிறார்கள். âL¡»£L,] அரசன் : உம்மையும் சந்த்ரசேனன் பதப்படுத்தி வைத்திருக்கிறானா! v‹W முணுமுணுத்தான். இதைக் கூர்ந்து கவனித்த தாசி mŠRf«.] ஓகோ! என்னைக் கொல்ல வழி தேடுகிறீரா? அதற்குள் அடேபாவி, உன்னுயிருக்கே வழி தேடுகிறேன். v‹W சொல்லி வேகமாக வெளியில் ஓடினாள். அரசன் நடுங்கிப் பதைத்து அந்தப்புரத்தில் EiHªJ] அந்தத் தாசி நமது நோக்கத்தைச் சந்த்ரசேனரிடம் தெரிவிக்கு முன், நிலவறை மார்க்கம் தப்பிப்போவோம். v‹W கூச்சலிட்டு Xodh‹.] காட்சி - 10m jiy வாசற் காவலன் கொட்டாவி விட்டபடி உட்கார்ந் திருந்தான். அந்த வழியாகப் பரபரப்புடன் ஓடிய தாசி அஞ்சுகத்தைப் பார்த்ததும், அவனுக்கு ஏற்பட்ட ஆச்சரியம் அவன் கொட்டாவியையும் ÃW¤âaJ.] சேவகன் : அந்தச் சேனாபதி ... ... ... ... v‹W கூறி உங்கள் மேல் கோபமாக இருப்பார் என்று கூறுமுன் mŠRf«] ஆம். அவர் எங்கே? v‹W கேட்டாள், உடனே சேவகனும் ÃjhŤJ] அவரைத்தானே காணவேண்டும்.? அஞ்சுகம் : கட்டாயம் நான் அவரையாவது, சந்த்ரசேனரையாவது காணவேண்டும். சேவகன் : நானும் அவர்களைத்தான் காணவேண்டும் அவர்களிடம் நீங்கள் அவசரமாக என்ன சொல்லவேண்டும்? அஞ்சுகம் : இந்த அக்ரமக்கார அரசன் நிலவறை மார்க்கமாகத் தப்பி ஓடுகிறான், சேவகன் : அடி பாவி! v‹W சொல்லி அவள்மேல் பாய்ந்து அவளைப் பிடிக்க முயன்றான். ஆயினும் அவள் அங்கிருந்த கத்தியைத் தாவி எடுத்துச் சேவகனெதிர் காட்டித் தப்பி ஓடினாள். சேவகன் துப்பாக்கியால் அவளைச் சுட்டுவீழ்த்தினான். இச் சத்தங் கேட்டு உள்ளிருந்த சேவகன் ஓடி வந்து, தனக்குள்ளே சொல்லிக் bfhŸth‹;] அக்ரமத்தின் கடைசிப்பலி! ஆயினும் நாளைய அறப் போரின் முதற்கொலை! காட்சி - 11 இடம் : சித்ரநகர் அந்தப்புரம் உறுப்பினர் : குமுதினி, பானுமதி, நல்லதம்பி குமுதினி தன் அந்தப்புரத்தில் நிலைக் கண்ணாடி எதிரில் நின்று தன் முகத்தைத் திருத்திக் கொண்டே பாடினாள் உயர்வாழ் வென்பது காதலினாலே உண்டாகும் மனமே இப்புவிமேலே! அயர்வும் பொய்ம்மையும் இவ்விடம்யார்க்கும் அன்பெனும் ஒன்றேதான் தீர்க்கும்! இமயமா மலையை வீரன்தோள் மோதல் எழில்மாதர் மேலவர்வைத்த மெய்க் காதல்! தமியனாய் ஆழ்கடலில் முத்துக் குளிப்பான் தன்கூலி மனைவிபால் தந்தே களிப்பான். இதைக் காதில் வாங்கியபடி நல்ல நம்பி, பெண்ணுரு வோடு தன்னுடன் வரும் பானுமதி என்னும் பானுவை அழைத்துக் கொண்டு, குமுதினியின் அந்தப்புரத்தில் நுழைந்தார் குமுதினி : வரவேண்டும். அரசரும் சுற்றத்தாரும் சௌக்யமா? ‘ என்ற ஆவலாய்க்கேட்டு உட்கார்ந்தாள். நல்ல நம்பியையும் பானுமதியையும் உட்காரும்படி காட்டி ந-நம்பி : குமுதினி, அரசர் காலமெல்லாம் இழைத்த அக்ரமங் களின் பயனாகச் சந்த்ரசேனரும் சேனாபதியும், அரசருக்கு விரோத மாகக் கிளம்பிவிட்டார்கள். இந் நேரம் இராஜதானி என்ன ஆயிற்றோ? இந்த மங்கையைப் பார். இவள் பெயர் பானுமதி! இவள் அரசரின் சொந்தக்காரி! இவள் உன் அடைக்கலம். ரகசிய முறையில் இவளை நீ காப்பாற்றிக் கொடு. குமுதினி : ஐயோ! அவர் ஆணையாலல்லவா என் தந்தை இந் நகரின் ஆட்சியை நடாத்தும் கௌரவத்தை அடைந்தார். அம்மா, நீ என்னிடம் சவுக்கியமாக இருக்கலாம். அரசருக்கு ஆபத்தா! என் தந்தை இங்கு இருப்பது சரியா? ந-நம்பி : வேண்டாம் வேண்டாம். அரசர் அழைத்தாலும் போகாமல் தடுத்துவிடு உன் தந்தையை! நான் சொன்னதாகவும் அவரிடம் கூறு. நான் இங்குத் தாமதிக்க முடியாது. இராஜதானி நோக்கிப்போகிறேன். பானுமதி பத்திரம்! குமுதினி : இன்றிருந்து நாளைக்குப் போகலாகாதா? ந-நம்பி : உன் அன்பு நன்று! (போய் வருகிறேன்.) காட்சி - 11m சித்ரநகரில் தௌம்யன் பரபரப்புடன் முக்காடணிந்து, சௌம்யன் விடுதியில் நுழைந்தான் தௌம் : சௌம்யா! ஓடு இராஜதானியை நோக்கி! இதோ இரவு கழிகிறது. சூரியோதயத்தின் ஆரம்பத்திலேயே போர் ஆரம்பிக்கப்படும். சௌம் : தௌம்யா, உனக்கென்ன நேர்ந்தது? எனக்காக நீ என்னென்ன துன்பப்பட்டாயோ! தௌம் : என்ன உதை தெரியுமா? சௌம் : அந்தோ! தௌம் : ... ... ... ... உன் பேரால் ... ... ... ... சௌம் : நான் பாவி! தௌம் : ... ... ... ... அந்தச் சேவகருக்குக் கொடுத்தது! சௌம் : என்ன சேவகருக்கா? என் அழுகையைச் சிரிப்பாக்கி விட்டாயே தௌம்யா! தௌம் : என்னைப் பிடித்துச் சென்றார்கள் இரு சேவகர்கள். வழியில் என்னை இழிவாகப் பேசினார்கள். அடித்துக் கிடத்திச் சென்றேன். பிறகு சேனாபதி, தன் பிள்ளையைத் தேடி வந்தார். சேனாபதிக்கும் சௌம்யனுக்கும் உள்ள பாத்யம் அதற்குமுன் எனக்குத் தெரியாது. அவரிடம் ஆரம்பித்தேன். அவர் மலைத்து, மகனே உனக்குச் சுவாதீன சித்தமும் இல்லையா என்றார், நான் உண்மையைக் கூறினேன். பிறகு நான் சிறையிலடைக்கப்பட்டேன். நாளைக்கு நாட்டுக்கு விடுதலை! உன்னிடம் ஓடிவந்தேன் குருவின் ஆணைப்படி. சௌம் : ஒரு குதிரைகூட இல்லை ஏறி விரைவாகப் போக. தௌம் : மெய்தானா! உன் மனதில் என்ன தான் இருக்கிறது? சௌம் : பெரியதோர் உற்சாகம்! தௌம் : ஏறிப்போ அதன்மேல்! சௌம் : உண்மை கூறினாய். இதோ நான் விரைவாகச் சென்று... இங்கு எனக்கொரு நண்பன்... அவனிடம் விடைபெற்று வந்து விடுகிறேன். தௌம் : இதென்ன உன் குதிரை உன்னைப் பின்னோக்கித் தள்ளுகிறது? நண்பன் கூடவா சித்ரநகரில் ? இருப்பினும் குருவின் ஆணையைவிட அந்த நட்புப் பெரிதா? நீ விழிக்கும் விழியில் எனக்கு அவநம்பிக்கை தோன்றுகிறதே! சௌம் : அன்பனே, உன்னிடம் மறைப்பது சரியன்று! இந்த நகர பதியின் குமாரி குமுதினி, என்னைத் தன் உயிரைவிட உயர்வாக எண்ணியிருக்கிறாள். தௌம் : விரோதியின் மகள் உன் காதலி போலும்! பகைவர் கூட்டத்தை ஓழிப்பதென்ற நியதிக்கு உன் காதல் தடை யல்லவா? சௌம் : நண்பனே, பகைவன் தோட்டத்துப் பூங்கொத்து, அண்டை வீட்டுக்காரனை மகிழ்விக்காதா? இதைக்கேட்ட தௌம்யன் புன்சிரிப்புக் கொண்டு சும்மா இருந்தான் சௌம்: இதோ வந்துவிடுகிறேன். v‹W nghdh‹] காட்சி - 11M பானு : இல்லை, அரசர் உண்மையில் ஆதரவற்றிருக்கிறார்! ‘ இச்சமயம் சௌம்யன் உட்புகுந்தான். சௌம்யனைக் கண்ட பானுமதி விலகிப் போனாள் சௌம் : குமுதினி, எனக்கு விடைகொடு! என்னை என் குரு சந்த்ரசேனர் அழைத்தார். உடனே திரும்புவேன். குமுதி : காதலரே, என்னைப் பிரிந்தால் நான் உயிர் தரிக்க மாட்டேன். நீங்கள் போருக்குப் போகிறீர்கள்; என்னை விட்டுப் பிரிகிறீர்கள் இந்த இரண்டு காரணத்தால்! சௌம்யன் திகைத்தான். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகி சௌம் : என்னை அழைக்க வந்தவனை அனுப்பிவிட்டு வருகிறேன். குமுதி : நீங்கள் வரும்வழியில் என் விழிவைத்துக் காத்திருப்பேன். சௌம் : நம்பியிரு என்று சொல்லி விரைந்து போனான். குமுதினி வாசற் படியில் தவித்து நின்றாள். அவள் மனம் சௌம்யனைத் தொடர்ந்தது. அச்சமயம் அவளுக்குப் ã‹òwÄUªJ,] குமுதினி ! என்ற ஓர் சத்தம் கேட்டது. தன் காதலன் தானென்று அவள் மனதில் மின்னல் தோன்றுவதுபோல் தோன்றி, அது மறையும் நேரத்துக்குள் பானுமதி தான் என்ற முடிவுக்கு வந்தாள் குமுதி : என்னிடம் நீ என்ன பேச நினைக்கிறாய்? பானு : சௌம்யன் அழகுடையவன். குமுதி : உண்மை. பானு : அவன் நமது விரோதி! குமுதி : உன்னை யார் கேட்டது? பானு : சௌம்யனுக்கு அஞ்சியே என் உயிர் உன்னிடம் அடைக்கலமாக வைக்கப்பட்டிருக்கிறது. குமு : உன் நிலைக்கு நான் பரிதாபப் படுகிறேன். பானு : காலமெல்லாம் உன் தந்தைக்குச் சகாயம் புரிந்து வரும் அரச வம்சத்தில் பிறந்த ஒருவனுக்கு நீ உன்னைத் தந்து கௌரவிக்கலாம். (குமுதினிக்கு இதில் ஓர் எழுத்துக்கூடக்காதில் விழவில்லை) பானு : நான் கூப்பிடுகிறேனே! (அவள் காதில் விழவில்லை) நான் கூப்பிடுகிறேனே. (என்று பின்னும் உரக்கக் கூறினாள்) குமு : என் காதலரைச் சென்றா? பானு : இல்லை. அரசவம்சத்தில் தோன்றிய ஓர் சுந்தர புருஷனை! குமு : ஏன் எப்போது? பானு : நீ சௌம்யனை விலக்க வேண்டாம். குமு : யார் சொன்னது? பானு : அவன் அழகு உன்னை அள்ளிக் கொள்ளும். குமு : அள்ளிக்கொண்டது! பானு : அந்த அரசகுமாரன் உன்மீது வைத்த காதலால் கரைந்து போகிறான். குமு : அடங்கு! அடைக்கலப் பெண்ணுக்கு ஏன் இந்த வீண் வார்த்தைகள்! பானு : குமுதினி என்னைப்பார்! (என்று கூறித் தன் பெண்ணுடைகளை நீக்கி அரசகுமாரனாக நின்றான். குமுதினி வியப்பும் கோபமும் கொண்டாள்.) குமுதி : நீர் அரசகுமாரர் ஆதலால் உன்னை மன்னிக்கிறேன். ஒன்று உறுதி. உன்னைக் காதலிக்கவில்லை நான் என் காதலருக்காக வாழ்வதால்! (இருவரிடமும் மௌனம் குடிகொண்டது. அவள் விழி சௌயம்யன் வரும் பாதையில் போயிற்று.) காட்சி - 11ï (விரைவாக ஓடிவந்த சௌம்யனிடம் தௌம்யன் கிண்டலாக,) என்ன உத்தரவுக்கு அருள் சுரந்ததா? சௌம் : இல்லை. என்னைப் பிரிந்தால் அவள் செத்துப்போவாள். இன்னொருதரம் நீ எனக்காகச் சிரமப்படவேண்டும். தௌம் : நான் சித்தம். ஆனால் உடனே போகவேண்டும் இராஜ தானிக்கு நீ. சௌம் : அதற்காகத்தான்; எனக்குப் பதிலாக நீ அவளுடன் இரு, என்னைப் போலிருக்கிறாயே! தௌம் : உண்மையாகவா? சௌம் : அதனாலென்ன? தௌம் : இரு என் சிரிப்பை முடித்துக்கொண்டு வருகிறேன். (சிரித்துக்கொண்டே பேசுகிறான்) பழகிய நாய் விளையாட்டுக்குக் கடிக்கவரும்; அதனோடு பழக்கமில்லாத மனிதன் ஐயையோ என்று கதறி விட்டால்? அன்றைக்கு நான் கொடுத்தற்குப் பதிலாகக் கொடு என்று அவள் காதல் முத்தத்தைக் குறித்துக் கேட்பாள்; நான் தயிர் வடைக்குப் பதிலாக உளுத்த வடை கொடுக்கப் போனால்? நீ அன்றைக்குச் சொல்லி நிறுத்திய கதையின் தொடர்ச்சியை அவள் என்னைக் கேட்பாள்; அதற்கு நான் மருள மருள விழிப்பே னானால்? என்ன ஆகும்? நீ சொல்வது பொருத்தமாக இருக்கிறதா? சௌம் : தௌம்யா, எனக்கு வேறு வழியில்லை. உன் சமயோசித புத்திக்கு அப்பாலாக ஒன்றும் நடந்துவிடாது. தௌம் : ஐயையோ, உனக்காக நான் சிறையில் இருந்தேன். இப்போது நீ காட்டும் சிறைச்சாலை மிக மோசமானது! சௌம் : நேராக மாளிகைக்குப்போ! பளிங்குப் பதுமைகள் இரு பக்கமும் நிறுத்தியுள்ள அறைக்குப் பக்கத்தறை குமுதினியுடையது. குமுதினியின் தோழி பொன்னியின் அறை இப்பக்கம் உள்ளது. குமுதினியுடன் ஓர் அழகிய பெண் இருக்கிறாள். அவள் மீது உனக்குக் காதல் உண்டானால் வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளாதே நான் வருகிற வரைக்கும். நான் போகிறேன். (என்று சொல்லிச் சௌம்யன் போனான். தௌம்யன் மலைத்து நின்று பெருமூச்சுடன் புறப்பட்டான் மாளிகைக்கு) காட்சி - 11< (தௌம்யன் பளிங்குப் பதுமை அடையாளமுள்ள அறையைக் கண்டுபிடித்தானாயினும், இப்புறத்தின் அறை வாசற்படியில் நின்றிருந்த பொன்னியைக் குமுதினி என்று நினைத்து.) குமுதினி! (என்றான்) பொன்னி : நானா குமுதினி ? தௌம் : வாய் தவறிவிட்டேன். குமுதினி எங்கே! பொன்னி : குமுதினியை இந்த அறையில்தானா தேடுவது? தௌம் : நீ ஒரு வாயாடி! இந்த அறையில் அவள் இருப்பதாகவா கேட்டேன். (என்று கூறி அடுத்த அறையில் நுழைந்தான். வழி பார்த்திருந்த குமுதினி தௌம்யனைக் கண்டதும்.) பொன்னி : நீங்கள் சொல்லிப் போனதென்ன? செய்ததென்ன? (என்று கூறிச் சீக்கிரம் வருவதாகச் சொல்லித் தாமதித்து வந்தது பற்றி வருத்தமாய்க் கேட்டாள்.) தௌம் : ஆம். நான் இராஜதானிக்குப்போய் வருவதாகவே சொன்னேன் உன்னைவிட்டுப் பிரியமனமில்லை. குமுதி : நீங்கள் அப்படிச் சொல்லவில்லையே. சீக்கிரம் வருவதாகச் சொல்லி, நேரம் கழித்து வந்தீர்கள். (தௌம்யன் மனம்படாதபாடுபட்டது.) குமுதி : உட்காருங்கள்! (தௌம்யன், இரண்டு ஆசனங்களில் தான் உட்காரவேண்டிய ஆசனம் இன்னதென்று தெரிந்து கொள்வதற்காக,) நீ உட்கார்! என்று கூறினான். (சௌம்யன் மடியில்தான் குமுதினி உட்கார்வது இந்த வழக்கத்திற்கு விரோதமாக இவன் வார்த்தையிருந்ததால் குமுதினி) நான் உங்கள் எதிரியின் மகள் என்ற உணர்வை, உம்மை அழைக்க வந்தவர் உண்டாக்கி விட்டாரா? (என்று வருத்தமாகக் கேட்டுப் பின்னும் உங்களை நான் வேண்டிக் கொண்டதென்ன?) (என்று கேட்டாள்.) (இதற்குத் தௌம்யன் என்னை விட்டுப் பிரியலாகாது என்று வேண்டினாய் என்று சொல்வதற்குப் பதிலாக.) ஆம், என்னை முதலில் அமரச்சொன்னாய். (என்று பதில் கூறினான். குமுதினிக்கு, இவன் மனம் இராஜதானியில் இருக்கிறது என்று நினைத்து.) இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? (என்று கேட்டாள்.) நான் பொன்னியின் வீட்டில்தான் இருக்கிறேன். (என, குமுதினி என்பதற்குப் பதிலாகப் பொன்னி என்ற பதத்தை உச்சரித்து விட்டான். குமுதினிக்குத் தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது. அவன் தன் தோழியாகிய பொன்னியின் மையலால்தான் உளறுகிறான் என நினைத்து,) அப்படியா? (என்று கூறித் தரையிற் புரண்டு அழுதாள், தௌம்யனுக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டதால், எப்படியாவது தப்பி ஓடுவதே உசிதம் என்று கருதி நழுகினான். தான் ஊடியபோது தன் காதலன் ஊடல் நீக்க முயலாமல் நழுகுவது கண்ட குமுதினி, பின்னும் அதிகமாகப் புரண்டழுதாள், நழுகிய தௌம்யனோ வழி தவறி மாளிகையின் பின்புறமாகச் சென்றான். வழியில் இருந்த பணிப் பெண்கள் குமுதினியின் காதலன் என்பது பற்றி ஒன்றும் சொல்லாவிடினும் பின்னிருந்து கேலியாக நகைத்தார்கள். இதைத் தௌம்யன் ஊகித்துத் திரும்பினான்.) பணிப்பெண் : நீங்கள் எங்கே போகவேண்டும்? தௌம் : நான் அவசரமாக என் விடுதிக்குப் போகவேண்டும். (இது கேட்ட பணிப்பெண் குலுக்கென்று நகைத்தாள். தௌம்யன் விரைந்து சென்றான். மாளிகையின் புறத்திலுள்ள சிங்காரவனத்தை அடைந்தான். அந்த இரவில் நக்ஷத்திர வெளிச்சத்தில் பொன்னி, தன் அண்ணனிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் தௌம்யனைக் கண்டதும்,) உங்கள் வார்தையின்படிதான் காத்திருக்கிறேன். (என்று சொன்னான். இந்த மழைக்கு எந்தக் குடையைப் பிடிப்பது என்று தோன்றாமல் தௌம்யன்,) வாலிபனே, நீ பொன்னியிடம் இந்த இன்ப இரவில் பேசவேண்டிய காதல் வார்த்தைகளைப் பேசி முடி; நாளைக்கு ஆகட்டும். (என்று கூறினான்.) (இவ்வார்த்தைகள் பொன்னிக்குக் கஷ்டத்தை யுண்டு பண்ணி விட்டது. ஆயினும் பரிகாசத்துக்குச் சொல்லி யிருக்கலாம் என்றெண்ணிச் சும்மா இருந்துவிட்டாள். தௌம்யனுக்குப் பூங்காவை விட்டு வெளிச் செல்ல வழி தெரியாமையால்,) பொன்னி, என்னுடன் தெருவரைக்கும் வா. (என்று சொல்ல, அவளும் அவனுடன் வந்தாள். ஆயினும் தௌம்யன் போகும் வழியே பொன்னி போய்க் கொண்டிருந்தாள். தௌம்யனோ சோலையைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் குமுதினி சோலைப்பக்கம் வந்தாள். அவளுக்குச் சந்தேகம் பலப்பட்டது. கோபத்தோடு பார்த்தாள். தௌம்யனும் பொன்னியும், குமுதினியைப் பார்த்தார்கள். குமுதினி திடீரென உள்ளே ஓடி வாள் ஒன்றைத் தூக்கிவந்தாள். இதைக்கண்ட இருவரும் ஓட எத்தனிக்கையில்,) தௌம் : தெருவுக்குப் எப்படிப் போவது? (என்று பொன்னியைப் பதைப்புடன் கேட்டான். அவள் சுட்டிக் காட்டினாள். ஓடி மறைந்தான் தௌம்யன்.) காட்சி - 12 இடம் : பிங்கல நாட்டின் இராஜதானி. உறுப்பினர் : சேனாபதி, சேனவீரர், சந்த்ரசேனர், நல்லதம்பி, ஆட்கள், பிறர். (பிங்கல நாட்டின் இராஜதானி முழுதும் படையின் நடமாட்டமா யிருந்தது. சேனாபதியும் சௌம்யனும், துப்பாக்கிப் படையுடன் அரண் மனையின் உள்ளே நுழைகிறார்கள். ஒருபுறம் சேனாவீரர்கள், கோட்டையின் மீது பறக்கும் சிங்கக் கொடியைக் கிழித்து எறிகிறார்கள். அரண்மனையில் அரசனுடைய தற்காப்புப் படை அஞ்சிப் பணிகிறது. சேனாபதியும் சௌம்யனும், அரசன் முதலிய எவரையும் அரண்மனையில் காணாமையால் ஆச்சரியம் அடைகிறார்கள்.) சேனா : சௌம்யா, என்ன ஆச்சர்யம்! அரசன் இல்லை, பானு இல்லை, மற்றும் அரச குடும்பத்தினர் எவருமே காணப் படவில்லை. சௌம் : சேவகனே, நீ அரசர் அந்தப்புரத்தின் காவற்காரன் அல்லவா? சேவகன் : ஆம்! அதோ அந்த வெள்ளித் தூணின் பக்கத்தில் பாருங்கள் நிலவறை! அதன் வழியாக நேற்றே அரசன் முதலியோர் தப்பிப்போய் விட்டார்கள். சௌம் : அவர்கட்கு எச்சரிக்கை செய்தது யார்? சேவ : நல்ல நம்பியார். சேனா : ஆகா பார்த்தாயா அவன் செய்த மோசத்தை! சௌம் : அரசர் எங்கே போயிருக்கலாம்? சேவ : குன்ற நகரில் இருக்கிறார் இந்நேரம் மற்ற நகரங்களி லிருந்து அரசருக்கு உதவியாகப் படையும் வந்து சேர்ந்திருக்கலாம். சேனா : உடனே சௌம்யா, சந்த்ரசேனரிடம் இதை யெல்லாம் கூறு. நானும் இதோ வருகிறேன். (சௌம்யன் போகிறான்.) காட்சி - 12m (சேனாபதி சிறியதோர் சேனையுடன் மாளிகையைவிட்டு வெளிவரும்போது, நல்லநம்பி எதிர்ப்பட்டார். அவர் சேனாபதியை நோக்கி,) சேனாபதி, அரசர் பக்கமிருந்த அனைவரும் பணிந்து போனார்கள். இம்சைக்கோ உயிர்ச் சேதத்திற்கோ அவசிய மில்லாது போனதுபற்றி எனக்குள்ள மகிழ்ச்சி அளவு கடந்ததாகும். சேனா : எனக்கும் சந்தோஷமே. ஆனால் நாட்டின் நன்மையை யுத்தேசித்து, உம்மைப் போர் முடியும் வரைக்கும் காவலில் வைக்க நினைக்கிறேன். சேனா வீரர்களே! நல்ல நம்பியாரை இரு கைகளையும் சங்கிலியால் கட்டி, அழைத்துப்போய் மணியாற்றங்கரைக்கு அப்புறமிருக்கும் பாழ்மண்டபத்தில் வைத்து, உங்களில் ஐம்பது பேர் காவல் இருங்கள். (உடனே சேனாவீரர்கள் நல்லநம்பியாரைச் சங்கிலியால்கட்டி அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள்.) ந-நம்பி : மக்கள் அனைவரும் உறவினர். மனிதர் மனிதரை இம்சை செய்யலாகா தென்பது எனது எண்ணம். இதுபற்றி நான் திரிகரண சுத்தியாய்த் தொண்டு செய்து வருகிறேன். இதுதான் நான் செய்த குற்றம். நல்ல தண்டனைதான்! (நல்லநம்பி முதலியவர்கள் மணியாற்றங்கரையை நோக்கிப் போனதும்,) சேனா : சேனாவீரர்களே, நல்ல நம்பியாரைக் காவலில் வைத்த விஷயத்தை யாரிடமும் நீங்கள் சொல்லாதிருங்கள். நாம் சந்த்ரசேனரை நோக்கிப் போவோம். காட்சி - 12M சௌம் : சுவாமி! நேற்றே நல்ல நம்பியார் நமது நோக்கங்களை யெல்லாம் அரசர் முதலியவர்களிடம் சொல்லி, அவர்களை நிலவறை மார்க்கமாகத் தப்பிப் போகும்படி ஏற்பாடு செய்து விட்டார். அரசர் குன்ற நகரில் சென்றிருப்பதாய்த் தெரிகிறது. அங்கிருந்து கொண்டு மற்ற நகர்ப் படைகளைத் தமக்குச் சாதகமாகச் சேர்த்து வருகிறாராம். (இது கேட்ட சந்த்ரசேனர் பெருமூச்சு விட்டு,) அப்பா, ஒன்றும் முழுகிப் போகாது, அரசன் குன்றநகர் போய்விட்டதுதான், நமக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. உடனே நீ சென்று சித்ரநகர்ப் பக்கமிருக்கும் கிராமங்களிலிருந்தும் நகரங்களி லிருந்தும் படைகள், குன்ற நகர் நோக்கிப் போகாமல் தடுக்கும்படி சேனாபதியிடம் கூறு. அதுவுமின்றி. நாளை மறுநாள் உனக்குப் பட்டாபிஷேகம் என்றும், அப் பட்டாபி ஷேகத்தினிமித்தம் நகரபதிகளும் கிராமபதிகளும் வர வேண்டுமென்றும் இன்றே நகரபதி கிராமபதிகளுக்குத் தூதரை அனுப்பவேண்டும். தண்டோராமூலம் ராஜ தானிக்கும் தெரியப்படுத்துக. சௌம் : சுவாமி! இந்நாட்டை ஆளத் தக்க திறமையும் கௌரவமும் தங்களுக்கல்லவா உண்டு! சந்த்ர : அப்பா சரியல்ல. நான் சொன்னபடி ஏற்பாடு செய்! (சௌம்யன் வணங்கிப் போகிறான்,) காட்சி - 13 இடம் : சித்ரநகர் தௌம்யன் விடுதி. உறுப்பினர் : தௌம்யன், பொன்னி. குமுதினி சேனா வீரர்கள். பொன்னி : நீங்கள் குமுதினிக்குக் கூறிய உறுதி என்ன? தௌம் : அதென்னமோ ஞாபகமில்லை, நீ சொல். பொன்னி : குமுதினியைவிட்டு நீர் பிரிவதில்லை என்று உறுதி கூறவில்லையா? தௌம் : ஆம் பொன்னி : அப்படியிருக்க, ஏன் நீர் அவளிடம் போகாமல் இருக்கிறீர்? நீர் குமுதினியைச் சமாதானப்படுத்தாம லிருப்பதால், எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. தௌம் : ஏன்? பொன்னி : பின்னென்ன? அன்றிரவு என்னையும் உம்மையும் அவள் பூஞ்சோலையில் கண்டாள். என்மீது நீங்கள் காதல் கொண்டிருக்கிறீர்களாம். அன்றிரவு நான் அவள் தண்டனைக்குத் தப்பியது வெகு அருமையாக முடிந்தது. இது மாத்திரமா? குமுதினியிடம் எவனோ அரச குமாரனாம் அவன் பெண் வேஷத்தோடு பதுங்கியிருக் கிறான். அவனும் எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளிக் கொண்டே இருக்கிறான். அவன் உங்கட்கு விரோதி; பெயர் பானு! (இது கேட்டதும் தௌம்யன் ஆச்சரியமும் கோபமும் அடைந்து,) பொன்னி, நாம் குமுதினியிடம் போவோம் வா! (என்று கூறித் தன் உடையவாளைத் தாவி எடுத்து அரையில் கட்டினான்.) பொன்னி : இதென்ன உடைவாள்? நான் சொன்னது பிழையாகி விட்டது. தௌம் : நீ பயப்படாதே! அவனால் எனக்கு ஆபத்து ஏற்படாமல் என்னைக் காத்துக் கொள்ளவேண்டாமா? (இருவரும் போகிறார்கள்.) காட்சி - 13m (சுநீதி என்னும் உபசேனாபதி இராஜதானியிலிருந்து, சித்ரநகரின் மாளிகையை முற்றுகை யிட்டான். சுநீதியும் சில சேனா வீரர்களும் மாளிகையில் நுழைந்தார்கள். குமுதினி எதிரில் தோன்றினாள்.) சுநீதி : பெண்ணே, நகரமாளிகையைச் சௌம்ய அரசர் வசம் ஆக்குகின்றேன். உன்னைச் சிறைப்படுத்துகின்றேன். குமுதி : நீர் சொன்ன அவர் எப்போது அரசரானார்? சுநீதி : ரவிகேது மன்னர் பயந்தோடினார். இராஜதானி பிடிபட்டது. சிங்கக்கொடி அவிழ்க்கப்பட்டது. இன்று இந்நேரம் சௌம் யனுக்கு அரசபட்டம் சூட்டியிருப்பார்கள். இதுமாத்திர மல்ல. குன்ற நகரில் பதுங்கியிருக்கும் ரவிகேதுவின் அழைப்பின் படி, உனது தந்தை குன்றநகர் நோக்கிப் போய்க் கொண்டிருந் தாரல்லவா? அவரையும் சௌம்ய மன்னரின் சேனை சிறைப்படுத்தி விட்டது. குமுதி : உங்கள் அரசர் எனது காதலர்! சுநீதி : தப்ப வழிதேடுகிறீரா? குமுதி : இல்லை, உண்மையில் அவர் என் உயிர் போன்றவர். சுநீதி : இந்த மங்கையைப் பார்த்திருங்கள்! (என்று சொல்லி நுழைந்தான். இச்சமயத்தில் தௌம்யன் வந்து குமுதினியின் நிலையைப் பார்த்தான்.) குமுதி : என்னைச் சிறைப்படுத்தப் போவது பற்றி நான் வருந்த வில்லை. என்னை அபயம் என்று அடைந்தவரைக் காப்பாற்றும்படி தங்களை வேண்டுகிறேன். (இதைகேட்ட தௌம்யன், இச்சமயத்தில் சௌம்யன் இருந்தால் குமுதினிக்குக் காப்பளிப்பதோடு, அவள் விரும்பியபடி பானுவுக்கும் மன்னிப்புத் தருவான். ஆதலால், இருவரையும் இப்போது காப்பாற்றியே தீர வேண்டும் என்று நிச்சயித்து,) பெண்ணே குமுதினி! ஒன்றுக்கும் அஞ்சாதே, அந்த அரச குமாரனாகிய பானுவையும் நான் ஒரு குறையும் இன்றிக் காப்பாற்றுகிறேன். (என்று உறுதிகூறி, அங்கிருந்த சேனா வீரர்களிடம் ஏதோ ரகசியம் பேசியிருந்தான். அதற்குள் சேனாபதி உள்ளிருந்த பானுமதியை அழைத்து வந்து,) பெண்ணே இந்த மங்கை யார்? (என்று கேட்டான். உடனே தௌம்யன் சுநீதியைத் தனியே கைப்பிடித்து அழைத்துப் போய் ஏதோ சொன்னான், அதன் பின் சுநீதி சொல்லுகிறான்.) பானு! உன்னை நமது, இந்தச் சௌம்ய அரசர் மன்னித்தார், அம்மா, உம்மையும் விடுதலை செய்திருக்கிறேன் அரசர் ஆணையின்படி! தௌம் : பானு, எனது குரு சந்த்ரசேனர் மன்னிப்பைப் பெறும் வரைக்கும், எங்கும் அகலாது இங்கேயே இருக்க வேண்டும். குமுதினி வருந்தாதே! உன் அந்தப்புரத்திலிரு, நான் இதோ வந்து விடுகிறேன். சேனாபதி, நீரும் உமது பரிவாரத்தோடு இங்கே இரும். (என்று கூறி அகன்றான்) காட்சி - 13M (வெளியில் காத்திருந்த பொன்னியும் தௌம்யனும் பேசிக்கொண்டே விடுதியை நோக்கிச் செல்லுகிறார்கள்.) பொன்னி : உங்கள் பேரென்ன? தௌம் : ஏன் கேட்கிறாய் பொன்னி? பொன்னி : நீங்கள் பிங்கல நாட்டின் அரசரா? தௌம் : ஆம்! பொன்னி : எப்போது உங்களுக்குப் பட்டம் கட்டினார்கள்? தௌம் : இன்றைக்கு எனக்குப் பட்டங்கட்ட வேண்டிய நாள். அதுபற்றி என்னை அங்குத் தேடுவார்கள். பொன்னி : குமுதினி அதிர்ஷ்டசாலிதான், அவள் பட்டத்தரசி! தௌம் : உன்னையும் நான் மணந்து கொள்ளட்டுமா? பொன்னி : ஒரு போதும் நான் ஒப்பமுடியாது, என் குமுதினிக்குத் துரோகம் செய்வேனா? தௌம் : அவளை நான் மணந்து கொள்ளாவிடில்? பொன்னி : ஐயோ அது ஏன் அப்படி? ஐயா, உங்களை அவள் தன் உயிரைவிட மேலாக மதிக்கிறாள், நீங்கள் கைவிட்டால் அவள் சாவாள். தௌம் : அவள் என்னை மணந்துகொள்ள மாட்டேனென்றால் நீ என்ன மணந்து கொள்ளச் சம்மதிக்கிறாயா? பொன்னி : நான் அவள் மேல் உங்களுக்கிருந்த அன்பைக் கெடுத்தேன் என்று இவ்வுலகம் சொல்லும். ஆகையால் நான் சம்மதிக்க முடியாது. தௌம் : குமுதினியைக் காணுமுன் உன்மேல் நான் காதல் கொண்டிருந்தால் சம்மதித்திருப்பாய் அல்லவா? பொன்னி : ஆம்! (என்றுகூறிச் சிரித்தாள். விடுதியின் முற்றத்தில் சௌம்யன் தன் முகம் மறைய முக்காடிட்டிருந்தான். அவன் தௌம்யனும் பொன்னியும் வருவதைப் பார்த்தான். பொன்னி வருவதால், தன் உண்மை தெரிந்துவிடும் என்பதற்காகக் கஷ்டமாக இருந்தது. அதற்காக அவன் வருகிற தௌம்யனுக்கும் பொன்னிக்கும் முதுகை மாத்திரம் காட்டியபடி எதிரில் இருந்த சுவரில், நான் உன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று எழுதினான். அதைப் படித்த தௌம்யன் பொன்னியிடம்,) பொன்னி, நீ போய்ப் பிறகு வா. (என்று கூற அவள் நடந்தாள்.) தௌம் : சௌம்யா, நல்ல ஏற்பாடு செய்தாய். என்ன செய்தி உனக்குப் பட்டாபிஷேகம் நடந்துவிட்டதா? சௌம் : ஆம் ஆடம்பரமில்லாமல் அவசரமாக நடத்தப்பட்டு விட்டது, குமுதினி சௌக்கியமா? அவள் எங்கிருக் கிறாள்? நீ அவ்விடம் எவ்வாறு நடந்துகொண்டாய்? விஷயம் தெரிந்துவிட்டதா என்ன? தௌம் : படாத அவமானப் பட்டேன்! குட்டு வெளிப்பட்டு விட வில்லை. அது கிடக்கட்டும். இராஜதானிப்படை ஒன்று மாளிகையை முற்றுகையிட்டுக் குமுதினியைச் சிறைப் படுத்திற்று, நான்தான் சௌம்யனாதலால் அவளைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. சௌம் : அதற்காகத்தான் நான் ஓடிவந்தேன். நல்ல வேலை செய்தாய். தௌம் : அவளுடன் இருந்த பெண் யார் தெரியுமா? பானுதான். சௌம் : அட அவனைச் சிறைப்படுத்தினீர்களா அல்லது கொன்று விட்டீர்களா? தௌம் : சௌம்யா, அதில் தான் நான் பிழைசெய்து விட்டேன். குமுதினி என்னைக் கெஞ்சினாள் தன்னிடம் சரண் புகுந்த அரசகுமாரனைக் காப்பாற்றும்படி, நான் அவ்வாறு உறுதி கூறிவிட்டேன். சௌம் : அப்படிச் செய்திருக்கலாகாது. ஆனால் நீ தந்த உறுதியை நான் இனி மறுக்கப்போவதில்லை. குருவின் தீர்ப்பு எப்படியோ? தௌம் : அப்படியானால் நாம் அனைவரும் இராஜதானியை நோக்கிப் போக வேண்டுமே. சௌம் : விரைவாக பேசிக்கொண்டே போகலாம். காட்சி - 14 இடம் : மணியாற்றங்கரை உறுப்பினர் : பத்ரா, நல்லநம்பி, சேனாவீரர். (மணியாற்றின் அக்கரையிலிருக்கும் மண்டபத்தின் வெளிப்புறத்தில், நல்லநம்பியின் இருகைகளும் இரண்டு இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு, அந்தச் சங்கிலியின் இரு முனைகள் இருபுறம் அடித்துள்ள இருப்பாணிகளில் பிணிக்கப்பட்டிருக்கின்றன. காவலிருந்தவர்கள் ஒரு பக்கம் தூங்கிக் கொண்டிருந்தனர். நல்லநம்பியின் சமீபத்தில் இருவர் மாத்திரம் விழித்தபடி நின்றிருந்தனர்.) ஒருவன் : பெரியவரே, அள்ளாமல் திருடாமல் இத்தனை அவதி ஏன் உமக்கு? ந-நம்பி : எவரும் யார்க்கும் பகைவர் அல்லர். எவருக்கும் எவரும் இம்சை இழைக்கலாகாது. இதை உலக மக்கள் உணரும் வரைக்கும் என் போன்றோர்க்கு இது போன்ற நிலைமைதான் ஏற்படும். மற்றொருவன்: உம்மால் ஒன்றும் ஆகாது. நீர் கிழவர் ஆகையால் தான் நீர் வல்லவர்களையும் கையாலாகாதவர்க ளாக்க முயலுகிறீர். ந-நம்பி : ஆம் அப்பா, (என்று கிழவர் கூறித் திரும்பினார். ஆற்றங்கரையில், அந்த இரவில் ஒரு பெண் ஆற்றையடுத்த பாறையொன்றில் - தலைவிரிகோலமாக ஏறுவதைப் பார்த்தார்.) அன்பர்களே, அதோ பாருங்கள். ஆற்றின் அக் கரையில் ஓர் பெண்! அவள் இந்த அர்த்த ராத்திரி யில் அந்தப் பாறைமேல் ஏறுவானேன்? அவள், அந்தோ ஆற்றில் விழுந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறாளா? அன்பர்களே, நீங்கள் போய் அவளைக் காப்பாற்றுங்கள். அதனால் மனித சமுகத்துக்கு நன்மை செய்தவராவீர்கள். 1-வது ஆள் : எமக்கு அதுவேலையல்ல, உம்மைக் காப்பதுதான். (நல்ல நம்பி பின்னும் அவளை நோக்கினர். அந்தப் பெண்மணி தன் கைகளை மேலே தூக்கிப் புலம்புவதாகத் தெரிந்தது. நல்ல நம்பியின் உடல் துடித்தது. அவர் மனம் அங்குத் தாவிற்று.) 2-வது ஆள் : என்ன ஓடப்பார்க்கிறீரோ? (என்று கூறி அவரை மறித்தான். மற்றொருவனும் அவரைப் பின்நோக்கித் தள்ளினான். பெண்மணி விழப்போகும் சமயம் என்று அவர்க்குத் தோன்றியது. இரு சங்கிலிகளும் அறுந்து வீழ்ந்தன. நல்லநம்பி இல்லை. ஆற்றங்கரையில் இருந்தார், விரைவில் நீந்தி அக்கரைக்குப் போய்,) பெண்ணே பொறு! பெண்ணே பொறு! (என்று கூவினார். அவள் எதிரில் நின்று அவள் இரு கைகளையும் பிடித்தார். நல்லநம்பிக்குக் காவல் இருவரும் அவரைத் துரத்திப் பிடிப்பது ஆகாத காரியம் என்று நினைத்து மற்றவர்களை எழுப்பினார்கள். அனைவரும் சங்கிலிகள் அறுந்து கிடப்பதைக் கண்டு பயந்தார்கள்.) ஒருவன் : இப்படிப்பட்டவரை நாம் துரத்துவதாவது அவரைப் பிடிப்பதாவது, நடந்ததைக் கூறி விடுவோம் சேனாபதியிடம் (போனார்கள்) ந-நம்பி : அம்மா, பத்ரா, தற்கொலை செய்து கொள்ள நினைத்தாயா? உனக்கு அப்படிப்பட்ட துன்பம் என்ன? பத்ரா : ஐயா, நான் அநாதை! அந்த அரசகுமாரனை நான் மீண்டும் அடைந்து சுகிக்க எண்ணினேன். நேற்றுப் போரில் அவனைக் கொன்று போட்டதாகக் கேள்விப் பட்டேன். இன்னும் எதற்காக இருப்பது? ந-நம்பி : அம்மா, அவன் இறக்கவில்லை, அவனை நான் கூடிய சீக்கிரம் காட்டுகிறேன். நீ அதுவரைக்கும் என்னிடம் இரு. காட்சி - 15 இடம் : கொலு மண்டபம். உறுப்பினர் : சந்த்ரசேனர், சேனாபதி. (சந்த்ரசேனரும் சேனாபதியும் அரசன் கொலுமண்டபத்தில் உலவிய வண்ணம் பேசியிருக்கிறார்கள்;) சந்த்ர : அரசன் தன் துர்நடத்தையால் இந்த மணியாசனத்தை இழந்துபோனான். சேனா : சௌம்யனை அரசன் என்று தண்டோராமூலம் தெரியப்படுத்தி னோம். சௌம்யன், தந்தை தாய் பெயர் தெரியாதவன்; நாடோடி என்று குடிகள் பேசிக் கொள்ளுகிறார்கள். சந்த்ர : இல்லை, அவன் மிகவும் நல்லவன், சுத்த வீரன், அறிஞன், தன்னுயிர் போல் மன்னுயிரை நினைப்பவன், அவனிடம் அரசனுக்குரிய முகக்குறி காணப்படுகிறது. சேனா : ஆனால் ஒன்று; இந்நாட்டின் அரசன் சௌம்யன் என்றும், அவனுக்குப் பட்டாபிஷேகம் என்றும் சேதி வெளிப்படுத்தி யிராவிடில், ரவிகேது மன்னன் அழைப்பின்படி நகரப் படைகளும் கிராமப் படைகளும் பெரும் பாலும் ரவிகேது மன்னனிடம் போயிருக்கும். சந்த்ர : மேலும் சௌம்யனும் அநேகப் படைகளை ரவிகேது மன்னனிடம் போய்ச்சேராமல் தடுத்துச் சிறைப்படுத்தி விட்டான். சேனா : நமது சேனை சித்தமாயிருக்கின்றது குன்ற நகரின் மேற்படையெடுக்க. சந்த்ர : சௌம்யன் வந்து சேரட்டும். குன்றநகர் மேட்டுப் பாங்கான இடம். எதிரி சேனைக்கு எதிர்ப்புறம் ஒரு படையைக் காட்டி, மற்றொரு பெரும் படையைப் பின்புறம் செலுத்திக் குன்ற நகரைப் பிடிக்க வேண்டும். காட்சி - 16 இடம் : குன்றநகர் சேர்ந்த ஓர் குன்று. உறுப்பினர் : ரவிகேது, நல்லதம்பி. (தனித்தனிப் பாறையில் ரவிகேதுவும் நல்ல நம்பியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.) ரவிகேது : நான் நகரபதிகளுக்கும் கிராமபதிகளுக்கும் அனுப்பிய அழைப்புப் போய்ச் சேர்வதற்குள், சௌம்ய னுக்குப் பட்டா பிஷேகம் என்ற சேதி அவர்கட்கு எட்டிவிட்டது. அதனால் நான் எதிர்பார்த்தபடி படைகள் வந்து சேரவில்லை, சந்த்ர சேனர் இதற்காகத்தான் அவசரமாக அந்தப் பட்டாபிஷேகச் சேதியைப் பரப்பினார். இப்போதும் சந்த்ரசேனரும் சௌம்யனும் இறந்தார்கள் என்று கேள்விப்பட்டால், சேனாபதி உட்பட என்னிடம் சேர்ந்து விடுவார்கள். இதற்கு ஏதாவது வழிசொல்ல மாட்டிரா நண்பரே? ந-நம்பி : இன்னும், கொல்லுவது என்ற மனப்பான்மை மாற வில்லை உமக்கு ஓர் உண்மையைச் சொல்லவேண்டும் உம்மிடம் நான். சௌம்யன் யார்? உமது புத்திரன் அல்லவா? (இது கேட்ட ரவிகேது,) அப்படியா! (என்று இமாலய ஆச்சரியம் அடைந்தான். மேலும் அவன்,) நல்ல நம்பியாரே, இது மெய்தானா! விவரம் என்ன? (என்று ஆவலாய்க் கேட்டான்.) ந-நம்பி : நீர் உம் பிள்ளையை உமது அண்ணனான தருமிக்குத் தத்தாகக் கொடுத்தீர், அதன் பிறகு உம் அண்ணன், அண்ணி, குழந்தை இவர்கள் தூங்கும்போது மாளிகைக்குத் தீ வைத்தீர், அரசனும் மனைவியும் இறந்தனர். நான் தான், சாகாதிருந்த இந்தக் குழந்தையைச் சேனாபதி யிடம் கொடுத்து வளர்த்து வரும்படி செய்தேன். ரவிகேது : என் பிள்ளையும், அவனுக்குக் கல்வி கற்பித்து வந்த சந்த்ர சேனரையும் நான் என் கண்ணால் பார்த்து அவர்க ளிடம் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு, நான் செய்த பாவங்கட்காக யாத்திரை செல்ல நினைக்கிறேன். ந-நம்பி : ஆகா அன்பரே, இன்று தான் நீர் பரிசுத்தரானீர்! நான் காட்டுகிறேன் அவர்களை! உமது சாந்தமான இருதயத்தில் குரோதம் தோன்றலாகாது! என்ன சொல்லுகின்றீர்? ரவிகே : நண்பரே, அரசை அடைபவன் என் மகன்தானே. இதை விட எனக்கு வேறென்ன பாக்யம் தேவை? ந-நம்பி : சொட்டு ரத்தம் சிந்தாமல் எல்லாம் சரியாக முடிந்தது. புறப்படுங்கள் என்னுடன் இராஜதானிக்கு. ரவிகே : இதோ உடை எடுத்து வருகிறேன். என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் நேரட்டும். ந-நம்பி : யாரால், உமது பிள்ளையாலா? ரவிகே : என் மகனுக்கும், சந்த்ரசேனருக்கும் தெரியுமா நான் சௌம்யனுக்குத் தந்தை என்பது? ந-நம்பி : தெரியாது, நான் சொல்லுவேன். எதற்கும் அஞ்சாதீர். சீக்கிரம் வாரும். காட்சி - 17 இடம் : இராஜதானிக்கு அருகில் உள்ள வழி. உறுப்பினர் : சௌம்யன் முதலியவர். (குமுதினியும் சௌம்யனும் ஒரு ரதத்திலும், தௌம்யனும் பொன்னியும், பானுவும் ஒரு ரதத்திலுமாக ராஜதானியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருக்கிறார்கள்.) குமுதி : இராஜதானிக்குச் சென்றவுடன் என் தந்தையை எனக்குக் கொடுத்துவிடுங்கள். சௌம் : குமுதினி, எனதன்பான மாமன் அல்லவா? அதோ பார் உதயசூரியன்! இருள் பறந்தது! உன் துன்பம் அனைத்தும் நீங்கிவிடும், (எதிரில் போய்கொண்டிருக்கும் ஒரு வயோதிகர், பானுவை ரதத்தில் பார்த்து, இரக்கத்தோடு கூறுகிறார்.) கிழவர் : அரசகுமாரரே, அதோ நல்லநம்பியாரின் உப்பரிகையில் பத்ரா நின்று உமது பெயரைச் சொல்லி அழுது துடிக்கிறாள். நீர் சிக்கீரம் சென்று அவளுக்கு உயிர்ப் பிச்சை கொடுப்பீர். (இதைக் கேட்ட பானு,) ஐயோ பத்ரா! நான் பாவி! (என்று கூறித் தன் முகத்தை இரு கையாலும் மூடிக்கொண்டு கதறி,) என்னையும் நினைத்தாயா? (முகத்தை திறந்து தலையில் அடித்துக் கொண்டே,) என் அன்பே! அரசாக்ஞையால் நான் உயிர்விடப் போகும் போது, என்னை நினைத்து வருந்துகிறாயா? (என்று கூறி அழுதான்) தௌம் : பானு, நீ ஒன்றுக்கும் அஞ்சாதே! பத்ரா உன்மீது காதல் உள்ளவள் என்பது தெரிந்தால், சந்த்ரசேனர் உன்னை மன்னிப்பார். சௌம்ய அரசரோ உனக்கு மன்னிப்புக் கொடுத்துவிட்டார். (ரதம் வேகமாகச் செலுத்தப்படுகிறது. பத்ரா உப்பரிகையினின்று, எதிரில் வந்து கொண்டிருக்கும் பானுவின் ரதத்தைக் கவனிக்கிறாள். பானுவும் உப்பரிகையைக் கவனிக்கிறாள். உப்பரிகையின் அருகில் ரதம் வந்து நிற்கிறது.) பத்ரா : ஆ! (என்று தன் இரு கைகளாலும் தாவுகிறாள்) பானு : பத்ரா! (என்று தன் இரு கைகளாலும் தாவுகிறான்) பத்ரா : நாதா! என் ஆவி உமக்குச் சமர்ப்பணம்! (என்று கூறிப் பதறுகிறாள்) பானு : பத்ரா, நான் செய்த குற்றத்தை க்ஷமித்துவிடு! (பத்ரா இறங்கி ஓடி வந்து ரதத்தின் மேல் ஏறிப் பானுவைக் கட்டித் தழுவிக் கொள்ளுகிறாள். மற்றவர்கள் இரக்கத்தோடு பார்க்கிறார்கள். ரதம் புறப்படுகிறது.) (சௌம்யன் ரதமோ முன்னே போய்விட்டது.) காட்சி - 18 இடம் : கொலு மண்டபம். உறுப்பினர் : சந்த்ரசேனர், சௌம்யன், நல்லதம்பி, ரவிகேது, பத்ரா, பானு, குமுதினி, சேனாபதி, தௌம்யன், பொன்னி. (சேனாபதியும் சந்த்ரசேனரும், சௌம்யனை எதிர்பார்த்திருக் கின்றனர். மற்றொருபுறம் நல்ல நம்பியும், தாடிநரைத்த தள்ளாத கிழவன் போல் வேஷமிட்டிருக்கும் ரவிகேதுவும் பேசுகிறார்கள்:) ந-நம்பி : நண்பரே, முடியிழந்தவர் நீர்; அந்த முடியைப் பறித்தவர் சந்த்ரசேனர்; அதைச் சூடியிருப்பவன் சௌம்யன்; உப பலமாக இருந்தவன் சேனாபதிரதன். அவர்களைக் காணுங்கால் உமக்கு உண்டாகும் கோபத்தைச் சாந்தமாக மாற்றிக் கொள்க. எனது கொள்கை இப்போது உமது சாந்த குணத்தால் ஒளிபெற வேண்டும். உமது உடைவாளை அவர்களைக் கண்டதும் கழற்றி அவர்களிடம் சமர்ப்பியும். மறவாதீர். நான் இதோ வருகிறேன். (என்று கூறிச் சென்று, சந்த்ரசேனர் என்ன பேசியிருக்கிறார் என்பதை ஒளிவிலிருந்து கேட்டிருக்கிறார். அதேசமயம் மற்றொருபுறம் குமுதினியிடம் சௌம்யன்,) நீ இங்கே இரு. நான் கூப்பிடும்போது வா. (என்று கூறிச் சந்த்ரசேனரிடம் போனான். மற்றொருபுறம் பத்ரா, தன் நாதனான பானுவை நோக்கி,) நாதா! நீர் இங்கேயே இருப்பீர்; நான் அழைக்கும் போது வரலாம். (என்று கூறிச் சந்த்ரசேனர் இருப்பிடம் போனாள். மற்றொரு புறம் தௌம்யன் தன் பொன்னியை நோக்கி,) எனக்கு வெட்கமாயிருக்கும்; நீ இங்கேயே இரு. பொன்னி : அதென்ன வெட்கம்? தௌம் : வந்த இடத்தில் தொத்தித் கொண்டவள்தானே நீ! பொன்னி : அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள் எல்லாரும் அப்படித்தாங்காணும்! தௌம் : இருந்தாலும்! நான் சொல்லுவதைக் கேள், கொஞ்ச நேரம் இருக்கக்கூடாதா? (என்று கூறிச்சந்த்ரசேனரிடம் போகிறான்.) (தம்மை வந்து வணங்கி நின்ற சௌம்யனைப் பார்த்து,) சந்த்ர : சௌம்ய மன்னனே, ஆயத்தப்படு! சேனை சித்தமா யிருக்கிறது. குன்றநகரின் குன்றக்கோட்டையை நானும் சேனாபதியும் நேரே நின்று எதிர்க்கிறோம். அதே நேரத்தில் நகருக்குப் பின்புறம் நீ மற்றொரு பெருஞ் சேனையோடு உட்புகுந்துவிடு. நாட்டுக்கு அரசன் நீ. நாட்டு மக்களின் மனோரதத்தை ஈடேற்ற வேண்டுவது உன் கடமை. மக்களை இம்சித்த அந்த ரவிகேதுவை இழுத்துவந்து, உன்கையால் பழிக்குப்பழி வாங்க வேண்டும். எனது அருமைக் குமாரி என்றும் பாராமல் அவமானப் படுத்திய பானுவை, நான் கொல்லுவேன். (இச்சமயம்) மோசம் போகின்றீர்! (என்ற ஓர் குரல் கேட்கிறது) சந்த்ர : நான் மோசம் போகவில்லை நம்பியாரே! (நல்லநம்பி எதிர்த்தோன்றி) சந்த்ரசேனரே, சௌம்யன் ரவிகேதுவைக் கொல்வதா? ரவிகேது சௌம்யனுக்குத் தந்தை என்பதை நீர் அறியீர். தருமி மன்னன் தன் தம்பியாகிய ரவிகேதுவின் குழந்தையை வீகாரம் அடைந்து அரசு செலுத்திவந்தான். அவன் அரசாட்சியைக் கைப்பற்ற எண்ணிய ரவிகேது அவன் மாளிகையில் தீ வைத்தான். சாகாது, பிழைத்தவன் சௌம்யனாகிய குழந்தை ஒருவன். அவனை நான் எடுத்து வந்து, சேனாபதியிடம் கொடுத்தேன். சந்த்ர : அப்படியா? என்ன ஆச்சரியம்! பகை உறவாயிற்றா! ந-நம்பி : இது மாத்திரமல்ல கேளும்! நீர் பானுவைக் கொல்ல நினைத்தீர். உம் மகள் பத்ரா, தன்னை அந்தப் பானுவுக்குச் சமர்ப்பித்து விட்டாள். பானு இறந்ததாக நினைத்து. ஆற்றில் விழப்போன பத்ராவை நான் காப்பாற்றினேன். உன் அன்பான மருமகனையோ கொல்ல வாளைத் தீட்டுகிறீர்? (இச்சமயம் பானு, பத்ராவின் தோள்சேர வந்து நின்றான்.) அன்றியும், சித்ரநகரின் தலைவனின் குமாரியை இந்தச் சௌம்யன் காதலித்திருக்கிறான். அவள் கோரிக்கைக் கிணங்கிப் பானுவை மன்னித்ததாக உறுதியும் கூறினான். (இச்சமயம் குமுதினி சௌம்யன் சமீபம் வந்து நின்றாள்) மனித சமுகத்தில் பகை என்பது ஒன்றுண்டா? இம்சிப் பதும் கொலை செய்வதும் யார் செய்யும் வேலை? இதோ பாரும், அந்த ரவிகேது மன்னர் வருகிறார். தமது நண்பராகிய உம்மையும், பிள்ளையாகிய சௌம்யனை யும் கண்டு, தேசத்தை ஒப்படைக்கவும், தாம் செய்த குற்றத்திற்கு உம்மையெல்லாம் மன்னிப்புக் கேட்கவும். (அனைவரும் அதி ஆச்சரியத்தோடு எதிர்பார்க்க, ரவிகேது தன் சொந்த உருவத்தோடு தான் அணிந்திருந்த வாளை அவிழ்த்துக் கொண்டே) அப்பா குழந்தாய்! (என்று கூவி வந்து, அவிழ்த்த வாளைச் சௌம்ய னிடம் நீட்டுகிறான். சௌம்யன் ஒன்றுந் தோன்றாமல் சும்மா இருந்தது நோக்கி, நல்ல நம்பி வாளை வாங்கிக் கொண்டு,) குரோதத்தை வளர்க்கும் உங்களுடைய வாட்களையும் கொடுங்கள். (என்று கூறச் சேனாபதியும் சௌம்யனும், தௌம்யனும் அணிந்திருந்த வாட்களையும் நல்லநம்பியிடம் கொடுத்தார்கள். மறுகணம்) என் மகுடம் பறிக்கவா துஷ்டர்களே! (என்று ரவிகேது இடிபோல் அதட்டி, மறைவாகக் கட்டியிருந்த மற்றொரு வாளைச் சந்த்ரசேனர் மேல் ஓச்சினான். ஓச்சிய வாள் சந்த்ரசேனர் மீது விழுமுன்,) ஆ! (என்று நல்லநம்பி, தம்மிடமிருந்த வாட்களில் ஒன்றால், ரவிகேதுவின் ஓங்கிய கையை இற்று விழும்படி துணித்து, மறுமுறை ஓங்கிய வாளை ஓங்கியபடி நிறுத்தி,) ஐயோ! (என்று கூறித் தலையையும் தோளையும் தாழ்த்தி நின்றார். அனைவரும் செய்வது இன்னதென ஒன்றும் தோன்றாது நின்றார்கள். வீழ்ந்த ரவிகேது.) சௌம்யா, பானு! நானும் என் தமையனும் ஆட்சி வெறியால் பரபரம் பொல்லாங்கு பெற்றது போலல்லாமல் நீங்கள் ஒத்திருப்பீர்கள். சௌம்யன் சுகமாக இந்நாட்டை ஆளட்டும். சௌம் : பொல்லாங்கு என்பவை எல்லாந்தரும் இப்பதவியை நான் வேண்டேன்! (என்றுகூறித் தன் மகுடத்தைக் கழட்டி,) இதைப் பொதுமக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்! ஆளுவோரும் ஆட்படுவோரும் மக்கள்! (என்று கூறித் தரையில் எறிந்தான்) சந்த்ர : குடியாட்சி தழைக!  மறையாத நினைவு தென் பாண்டி நாட்டிற்கும், செந்தமிழ் நிலத்திற்கும், நம்முடைய கவிதைச் செல்வத்தால் புதுமணம் சேர்த்துப் புகழ் பெற்றவர். அமரகவி சுப்ரமணிய பாரதியார். பாரதியின் கவிதையால் எழுச்சி பெற்றோர் பலர். வாழ்வும் வளமும் பெற்றோரும் பலர். ஆனால் அவர்...? நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும் அவர் சொந்தச் சொத்து எனினும், அந்தக் கண்களிலே தோன்றும் சோகம் தமிழகத்தின் பெரும்பாவத்தின் விளைவு ! பாரதி எங்கெங்கும் மனித சக்தியைக் கண்டு உருகியவர். அந்த மகாசக்தியின் வேகத்தையும் வல்லமையையும் அவருடைய சொற்கள் பிரதிபலித்துக் கொண்டே நிலைத்திருக்கும். அந்த மகாகவியின் தாசனாகத் தம்மைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு வெற்றியுலா வந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பாரதியின் கவிதா வேகமும் புதுமை காணும் துடிப்பும் சம தர்மப் பார்வையும், பெண்களின் முன்னேற்றமும், ஆழ்ந்த செந்தமிழ்ப் பற்றும் பாரதிதாசனிடமும் பிரதிபலித்தன. ஆனால், பாரதி, அனைத்தையும் பராசக்தியின் அருளாகக் கொண்டவர்! பாரதத்தின் பழமையான பாரம்பரிய தர்மங்களிலே பற்று உடையவர். இடைக்காலத்தில் அந்தப் பாரம்பரியம் சிதைந்து கெட்டது என்று குமுறியவர். அந்தச் சிதைவைப் போக்கிப் புதிய பாரதத்தின் எழுச்சியைக் காணத் துடித்தவர்; அந்தத் துடிப்பின், கருணை உள்ளத்தின் சொல்லோவியங்களே அவர் வாக்குகள். பாரதிதாசனார் எல்லாச் சிறப்புக்களிலும் பாரதி பரம்பரையின் தலைமை நிலைக்கு முற்றவும் தம்மை ஈடுபடுத்தி நின்றவர்; என்றாலும், தம்முடைய குருநாதரின் தெய்வப் பற்று மகாசக்தியின் தாசனாகத் தன்னை அர்ப்பணித்து உலகமெல்லாம் சக்தியின் உறை விடங்களாக உயர்தல் வேண்டும் என்னும் கோட்பாடு பற்றிய மட்டில் வேறுபட்டு ஒதுங்கி நின்றவர். அனைத்தையும் அறிவின் சக்தியாகவும் மக்கள் சக்தியாகவும் கொண்ட புதுமைக் கருத்துகளின் உத்வேகத்தைக் கவிதைக் கனலாக்கிப் பரப்பியவர். பகுத்தறிவு இயக்கம் தமிழகத்தில் பரவி வந்த காலம் பாரதி தாசனின் புதுமைக் கோட்பாட்டுக்குக் காலவேகம் காரணமாயிற்று.இருந்தாலும், தமிழர் பண்பாடு, தமிழின உயர்வு, தமிழ் மக்களின் வருங்காலம் என்பவற்றில் பாரதிதாசனின் கோட்பாடு பாரதியின் சித்தாந்த வேகத் தின் விளைவான, வளர்ச்சி பெற்ற ஒரு கோட்பாடே என்று கருதலாம். ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்பாக, டாக்டர் மே.மாசிலாமணி முதலியாரவர்கள் நடத்தி வந்த தமிழரசு திங்க ளிதழில் பாரதிதாசன் கவிதைகளைப் படித்தவன், அவற்றின் இனிமை யிலும் வேகத்திலும் மனங்கலந்தவன்; எட்டணா விலையில் அப்போது வெளிவந்த பாரதிதாசன் பாடல்களை ஆர்வத்தோடு வாங்கித் திரும்ப திரும்பப் படித்து அவற்றின் தமிழ் இனிமையில் மயங்கியவன். அந்தக் காலத்திலேயே தஞ்சைமாவட்டத்து அம்பிகை நாதன் என்பவரின் பகுத்தறிவுப் பாடல்கள். பகுத்தறிவு இயக்கத் தாரின் முழக்கப் பாடல்களாக விளங்கின. அதன்பின், பாரதிதாசன் அவர்களோடு எனக்கேற்பட்ட தொடர்பு 1947, 1948- ஆம் ஆண்டுகளில் ஆகும். இதற்கு முன்பாகக் கவிஞர் அவர்களின் புகழ் தமிழ் உள்ளங்களில் பரவி நிலை பெற்று உயர்ந்து நின்றது. கவிஞர் அவர்களிடம் பயபக்தியோடு கூடிய அன்பும் பற்றுதலும் எனக்கு இளமையிலேயே உண்டாதலால், அவர்களைச் சந்தித்தபோது, அதனை, அந்தச் சந்திப்பைப் பெரியதொரு பாக்கிய மாகவே கருதினேன். பாரதிதாசன் நூல்கள் இதற்கு முன்பாகவே, அழகும் அருமையும் விளங்க, அண்ணன் முல்லை முத்தையா தொடங்கியிருந்த முல்லைப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்து தமிழ் மணத்தை நாடெங்கும் பரப்பியிருந்தன. என்னுடைய நூல்களில் மற்றும் சிலவற்றையும் சிறப்பாக வெளிவருவதற்கு வேண்டிய செயல்களைச் செய்வதற்கு நீ தான் பொறுப் பேற்க வேண்டும் என்று கவிஞரின் ஆணை அப்போது பிறந்தது. அந்த ஆணையிலே தோன்றிய பாசத்திற்கும் உறுதிக்கும் நானும் பணிய வேண்டியவனானேன், நான் பணியேற்றிருந்த தாபனத்தின் பொறுப்பு அந்த ஆணையை முற்றவும் நிறை வேற்றுவதற்கு ஒத்துவராததென்பதை விளக்கி, என் தம்பியும் என்னோடு அப்போது இருந்து, இப்போது அமரனாகி விட்டவனு மான திரு பிச்சையனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தேன். பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் பாகமும், சேரதாண்டவம், காதலா கடமையா, பாரதிதாசன் நாடங்கள் ஆகிய பல நூற்களும் அப்போது அச்சிடப்பட்டு வெளிவந்தன. கவிஞரின் மகிழ்ச்சி சொல்லி முடியாது. எல்லாம் அவர்தம் சொந்த வெளியீடுகள். அவர் பெருமிதம் பாராட்டுகளாக மலர்ந்தன. இதன்பின் - என் தம்பி பிச்சையன் பாரதிதாசன் அவர்களுடன் நெருங்கிப் பழகி, கவிஞருடைய அன்புக்குரிய சீடனாகவே மாறிவிட்டான். பாரதிதாசனின் குடும்பவிளக்கு மூன்று பதிப்பகங்களால் வெளியிடப்பெற்றிருந்தது. கவிஞரின் திருமகள் திருமணத்தின் போது. அனைத்தையும் ஒன்றாகக்கட்டி பளபளக்கும் ரெக்சின் பைண்டு செய்து, மேலே பொன்னெழுத்துக்களால் புத்தகப் பெயரையும் பொறித்துத் தருமாறு ஏற்பாடு செய்தேன். அந்தப் பிரதிகளைக் கண்டு கவிஞர் அடைந்த மகிழ்ச்சியும் சொல்லிய பாராட்டுக்களும் இன்றும் நினைவிற் பசுமையாக உள்ளன. பின்னரும், பல ஆண்டுகள் பாரதிதாசன் அவர்கள் தொடர்பும், அன்புப் பேச்சும் எனக்குக் கிடைத்து வந்தன. கவிஞர் அவர்கள் குழந்தையுள்ளமும், வீரஞ்செறிந்த கம்பீரமான தோற்றமும் நடையும், கனல் கக்கும் சொற்களும், சில சமயங்களிலே கனிவின் எல்லையைக் கண்டுவிடும் பேச்சின் நயமும் மறக்கவே முடியாதவை. புதியதோர் தமிழுலகம் காணத் துடித்தெழுந்து முழங்கிய கவியேறு நம் கவிஞர். தமிழியக்கம் தமிழர்களின் உள்ளக் கோட் பாடுகளாகி, வலுவடைந்து, தமிழாட்சியும். தமிழ் மாண்பும் சிறக்க வேண்டும் என்று விரும்பியவர்; உறுதியோடு அதற்காகக் கால மெல்லாம் சிந்தித்து உழைத்து உயர்ந்தவர்! பாரதிதாசனின் உள்ளம் குழந்தையுள்ளம் என்றேன் அந்தக் குழந்தையுள்ளம், சில நேரங்களில், கொதித்துச் சீறுவதும் உண்டு. இதனால், கவிஞருடன் மிக நெருக்கமாக நெடுங்காலம் தொடர்ந்து பழகியவர்கள் என்போர் எப்போதும் மிகக் குறைவாகவேதான் இருப்பார்கள். உணர்வின் குமுறல், சாதாரண நிலையிலுள்ள பலரையும் நெருங்கமுடியாதபடி செய்துவிடும். ஒரு வகையில் இது கவிஞரின் தனித்தன்மையை எப்போதும் காத்து வந்தது என்றும் நினைக்கலாம். ஆனால் ஒதுங்குபவர்களும் கவிஞர் மீதுள்ள பற்றையும் ஈடுபாட்டையும் என்றும் மறப்பதில்லை. கவிஞர் அவர்கள் தமிழார்வம் மிகமிகப் பெரியது தமிழுக்காக எத்தனையோ செய்ய வேண்டும் என்ற பெரு விருப்பம் கொண்டவர். அவை எல்லாம், அவர் நினைத்தபடி எல்லாம் நிறைவேற்றி யிருந்தால் தமிழ் உலகம் இன்னமும் பெருவளம் பெற்றிருக்கும். தேனருவி நூல் வெளியிடும்போது, ஒரு சில பாடல்களே முதலில் கவிஞர் எழுதியிருந்தார். இவர்கள் எல்லாம் விடு பட்டுள்ளனரே, என்று சில பெரியவர்களின் பெயரைக் கூறினேன். ஆம்! ஆம்! kwªJ É£nlnd! என்று சொன்னவர் மளமள வென்று எழுதித் தந்தார் ஏறக்குறைய பத்துப் பன்னிரண்டு பாடல்கள். அவை அனைத்தும் குறித்த தலைவர்களின் ஏற்றத்தை அப்படியே ஓவியப்படுத்தின. அந்த அளவிற்குச் செறிவோடும் விரைவோடும் பாடக்கூடிய வளமை கவிஞரது இயல்பாகும். பாரதிதாசன் இப்போதுள்ள கவிஞர்களுள் பலருக்கும் இலட்சியத் தலைவனாக ஒளி வீசுகின்ற சிறப்புடையவர். அவருடைய பாணியும் கருத்தும் பலரின் புதுக்கவிதை- களில் பலப்பல வேடமிட்டு நடனமிடுவதை நாம் காணலாம். பாடலைப் போலவே உரைநடையிலும் கவிஞர் தனித் தன்மை படைத்தவர். உரைநடையும் கவிதையாக மணக்கும். நறுக்கென்று உள்ளத்தைத் தொடும். எள்ளல் அவர் உரைநடையில் எழிலொடு பரவிநிற்கும். இனிமையோ எழுத்துக்கு எழுத்து நடனமிடும். சொற்களைச் சுடுசரமாகச் செலுத்தும் வன்மை அவர்க்கே சொந்தமான தன்மை. நாடகம், காவியம், இசைப்பாடல், தனிப்பாடல் எது வானாலும், அதிலே அவர்தம் உயிரோட்டம் கம்பீரமாக உலாவந்து கொண் டிருக்கும். பாரதிதாசன் 20-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் வாழ்ந் திருந்த தமிழ்க் கவிமன்னர்! அவரைப் போற்றுவது, தமிழ் மனத்தார்க்கு இனிப்பது! அவர் புகழ் வளர்க! அவர் கவிதைகள் எங்கும் பரவித் தமிழ் உணர்வு ஊட்டுக. அவர் நினைவு மாறாதது! மறையாத பசுமை உடையது! சாரதி தமிழின் நேர்க்குச் சமரிடைப் பகையை வீழ்த்தப் போரதில் முழக்கம் தந்தே புலியெனத் திகழச் செய்வான் பாரதி உயிர்ப்பும் வாக்கும் பழந்தமிழ் மரபும் கூட்டிப் பாரதி தாசன் என்றே பாக்கடல் தந்தான் வென்றான் மடமைகள் மாய்க்கச் சொன்னான் மறுத்திடும் துணிவைத் தந்தான் கடமைகள் வகுத்துக் காட்டிக் காத்திடல் மானம் என்றான் திறமைகள் மறந்து சோர்ந்து தேம்பிட்ட தமிழர்க் கெல்லாம் உரிமைகள் பெறுதற் கெல்லாம் உரைத்தனன் உயர்ந்தான் என்றும்! - புலியூர்க்கேசிகன் 