பாவேந்தம் 7 கதை, கவிதை, நாடக இலக்கியம் ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 7 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 224 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 160/- கெட்டி அட்டை : உருபா. 220/- படிகள் : 1000 நூலாக்கம் : ர்மநிர் வ. மலர், நிழூட்குகஒகூஹி சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப் பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  கதவு திறக்கும் கதைப் பாடல்! பல்வேறு புதிய போக்குகளைத் தமிழிலக்கியம் சந்தித்தது, பாவேந்தர் பாரதிதாசன் வழியாகத்தான்! தமிழ்ப் பாவலர்களில் முதன்முதல் நாடகம் எழுதியவர் அவரே; கவிதை இதழ் நடத்தியவரும் அவரே! மதுவிலக்கு, குடும்பக் கட்டுப் பாடு முதலியவற்றைப் பாட்டு வண்டியில் ஏற்றிய முதற்பெருமையைப் பெற்றவரும் அவரே! கதைப் பாடல் என்னும் புதிய வடிவத்தை விரிந்த அளவில் வெளிப்படுத்தியவரும் பாவேந்தரே! உரைநடையின் செல்வாக்குக் கூடியபோது, காப்பியங்கள் புதினங்களாகவும் கதைப் பாடல்களாகவும் இருவேறு பிறப்பெடுத்தன. காப்பியத்தின் சுருங்கிய வடிவமான கதைப்பாடல், பாரதியிடம் பாஞ்சாலி சபதமாகவும், குயிற் பாட்டாகவும் முகங் காட்டியது. தனிக் கவிதைகள் ஆட்சி செலுத்தத் தொடங்கிவிட்ட சூழலில் - கதைப் பாடல்கள் பாவேந்தர் வழியாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்தன. புதுக்கவிதை வெள்ளம் ஓடத் தொடங்கியபோதும் கதைப் பாடல் அலை ஓயவில்லை; சிற்பியின் சிகரங்கள் பொடியாகும், கோவை ஞானியின் கல்லிகை, இன்குலாப்பின் கண்மணி ராசம் என வளர்ந்தபடி உள்ளது. கதைப் பாடல் வடிவம் பாவேந்தரிடம் கவிதை நாடகமாகவும், புதிய ஒப்பனையைப் பெற்று வளர்ந்தது. பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகள் அனைத்தையும் திரட்டிய ஒரு பெருந்தொகுதி (OMNI BUS) வெளியாக வேண்டுமென்பது அறிவுலகின் நீண்டகால ஏக்கம். தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் அரு முயற்சியில் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளும் பாவேந்தம் எனும் பெருந்தொகுப்பாய் வெளிவருவது, ஏக்கம் தீர்க்கும் பரிசு! பாவேந்தம் தொகுப்பின் ஏழாம் தொகுதியாக வருகிறது பாவேந்தரின் கதைப் பாடல்கள். பதின்மூன்று கதைப் பாடல்களும், ஏழு கவிதை நாடகங்களும் அடங்கிய இருபது படைப்புகள் இத் தொகுப்பில் உள்ளன. தமிழ்க் குமுகாயத்தின் கடந்த நூறாண்டு காலக் கருத்துச் சூழலையும், வாழ்க்கைச் சூழலையும் கவிதை நயத்துடன் பாவேந்தர் காட்டியிருப்பதை இத் தொகுப்பின் படைப்புகள் காட்டும். உழைப்பால் இந்த நாட்டை உருவாக்கியவர்கள், படுப்பதற்கு ஈச்சம்பாய்கூடக் கிடைக்காமல் தவிப்பதும் உண்டு. உல்லாசவாசிகளின் பொழுதுபோக்க உதவும் நாய்களுக்குத், தங்கக் கட்டிலில் ஓய்வெடுக்கும் வாய்ப்பு கிடைப்பதும் உண்டு. சமத்துவமற்ற குமுகாய அமைப்பைப் பாவேந்தர் காட்டும்போது, அவரின் கவிதைச் சாட்டை நம் நெஞ்சைச் சுற்றும்! அவிழ்ந்ததலை முடிவதற்கும் ஓயாக் கையால் அணிநாட்டைப் பெற்றவர்கள் கண்ணு றங்கிக் கவிழ்வதற்கோர் ஈச்சம்பாய் இல்லை! தங்கக் கட்டிலிலே ஆளவந்தார் நாய்உ றங்கும். (இந்நூல் ப. 152) கதைப் பாடல்கள் காட்டும் இதுபோன்ற காட்சிகள் நம் மனத்தைக் கனமாக்கும். இதற்கு நேர்மாறாக, மனத்தைப் பஞ்சுபோல் மகிழ்ச்சியில் மிதக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் இத்தொகுப்பில் பஞ்சமில்லை. கழுதை கத்தும் கனைத்தீர் என்று எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன் உம்மைஎப் போதும் உள்ளத்தில் வைத்ததால் அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள் சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள் கழுதை நீங்கள் குதிரை நீங்கள் எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும். (இந்நூல் ப. 197 - 198) அம்மாக்கண்ணு கூறும் இந்த அன்புமொழிகள் எழுப்பும் நகைச்சுவையுணர்வு நல்லமுத்துக் கதையில் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும். இத் தொகுப்பில் உள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி இரண்டு கதைப்பாடல்களும் அளவால் நீண்டவை; தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மூடப் பழக்கம் முடிவுற்ற கண்ணுறக்கம் ஓடுவது என்றோ ஒழிவது என்றோ? (இந்நூல் ப.15) எனும் பாவேந்தர் ஏக்கத்தின் கலை வடிவமே சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என 1930இல் வெளிப்பட்டது. மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டிக்கும் ஒரு கற்பனைக் காதற் கதை எனும் தலைப்புடன் அப்போது இது வெளிப்பட்டுள்ளது. ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம் (இந்நூல் ப.34) என எழுச்சிப் பண்பாடும் புரட்சிக் கவி பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞராக இனங்காணத் துணைசெய்த அரிய படைப்பு. இரண்டனா விலையில் புதுவை துரைராசனால் 1933இல் இது வெளியிடப் பெற்றது. பாவேந்தர் இதனை நாடக வடிவத்திற்கும் மாற்றி 5.2.1944இல் சேலத்தில் அரங்கேற்றினார். உவமைக் கவிஞர் சுரதா இந் நாடகத்தின் நடிகர்களில் ஒருவர். அதிகார எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, கலப்புமண ஆதரவு, தொழிலாளர் உயர்வு - என இன்றைக்கும் தேவைப்படும் உணர்வுகளைப் புரட்சிக் கவி கதைப்பாடல் ஆழமாகப் பதியவைக்கும் ஆற்றலுடையது. பெண்களுக்குச் சொத்து உரிமையும் பிற உரிமைகளும் வழங்கப் படவேண்டும் என வலியுறுத்தும் பெண்கள் விடுதலை குயில் இதழில் 1.1.1948இல் வெளிவந்தது. தன்மனைவி செத்தால்தான் வேறுமணம் தான்செயலாம் இன்னல் மனைவிக்கு இழைத்தல் கொலைக்குற்றம் (இந்நூல் ப. 42) என நடைபோடும் இக் கதைப்பாடல் மதவாத மூடநம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கும் நோக்கமுடையது. குயில் 15.06.1948 இதழில் வெளிவந்த புதுமையான கதைப் பாடல் எது பழிப்பு? பெண்கள் மறுமணத்தை வலியுறுத்தும். சஞ்சீவி பர்வதத்தின் சாரல் சாயலில் பாவேந்தர் எழுதியுள்ள கடவுளைக் கண்டீர் கதைப்பாடல் அவரின் கடவுள் கோட்பாட்டை விளக்க எழுந்தது. கோயிலி னுள்ளே குருக்கள்மார் காட்டுகின்ற தூய உருவங்கள் கல்தச்சர் தோற்றுவித்தார் (இந்நூல் ப.59) எனச் சிலையைக் கலையாகக் காட்டி, கடவுளைக் கேள்விக்குறி யாக்குவது இப்பாவியம். தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் தாய்க் குதிரையாகவும் குட்டிக் குதிரையாகவும் உருவகப்படுத்தி பாவேந்தர் எழுதிய ‘உரிமைக் கொண்டாட்டமா? குயில் 15.8.1948 இதழில் வெளிவந்தது. ஆழமான அரசியல் பார்வையை முன்வைத்து இப் படைப்பில் அன்றைய காலச் சூழலை நமக்குக் காட்டும் பாவேந்தர் - டி.கே.சி. பதிப்பித்த காலே அரைக்கால் ராமாயணத்தையும் விட்டு வைக்கவில்லை. சிதம்பர நாதர் திருவரு ளாலே அரையே அரைக்கால் அழிந்தது போக மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன் காலே அரைக்கால் கம்பரா மாயணம் அச்சிடப் பட்டதை அறியீ ரோநீர்? (இந்நூல் ப. 195) இப்படி நம்மைப் பார்த்து வினவும் பாவேந்தர், காட்டும் அன்றைய காட்சி அதிர்ச்சி தருவது. அவர் காட்டும் திருவாரூர்த் தேர் (ப...) பாட்டிலே அசைந்து வந்தாலும், படிப்போர் மனத்திலே அசையாமல் நின்று விடுகிறது. ஒரு திருவிழாவை இவ்வளவு கூர்மையாகப் பார்த்து விவரிக்க முடியுமா என வியக்கவைக்கும் கதைப்பாடல் அது! சாதி, மதம் ஏற்படுத்தும் தீமையை விளக்கும் கவிதை நாடகமாகப் பாவேந்தர் படைத்தது கடல்மேற் குமிழிகள் பிற படைப்புகளில் இல்லாத புதுமையாக 38 பிரிவுகளோடும் இடம், நேரம், உறுப்பினர் விளக்கங் களோடும் இதனை உருவாக்கியுள்ளார். உழையானை நோயாளி ஊர்திருடி என்போம் (இந்நூல் ப.175) எனப் புதுமொழி பேசுவது இந்தக் கவிதை நாடகம். இத் தொகுப்பில் உள்ள இருபது படைப்புகளும் வெவ்வேறு காலத்தில் வெளியிட்டிருந்தாலும், சமத்துவ வாழ்வை நோக்கி நடைபோட வைக்கும் ஒரே நோக்கத்தை உள்ளடக்கியவை. தமிழிலக்கிய வரலாற்றில், பிறர் பேசத் துணியாத செய்திகளைப் பேசியவர் பாவேந்தர்! அதனால்தான் அவர் புரட்சிக் கவிஞர். உள்ள பகுத்தறிவுக்(கு) ஒவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது (இந்நூல் ப.14) இப்படித் துணிவு காட்டிய பாரதிதாசனைத் தமிழ்நாடு புரட்சிக் கவிஞராகப் போற்றியது. மேடுபள் ளங்களைக் கண்டே - நலம் விதைக்க எழுத்துழு வோன்எழுத் தாளன் என்று-எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தைக் கூறிய பாவேந்தர், தாமே எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார். வாழும் மண்ணையும், பேசும் மொழியையும் நேசிக்கும் மக்கள் வாழும்வரை - பாவேந்தர் வாழ்வார்; பாவேந்தம் வாழும். தாயகம் எசு.வி.எல். நகர், சூலூர், கோவை - 641 402. - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் ..  பொருளடக்கம் பொங்கல் மாமழை v நுழையுமுன்... ix வலுவூட்டும்வரலாறு xii பதிப்பின் மதிப்பு xvi கதவுதிறக்கும்கதைப்பாடல் xix 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 3 2. புரட்சிக் கவி 19 3. பெண்கள் விடுதலை 38 4. எது பழிப்பு? 45 5. வெப்பத்திற்கு மருந்து 51 6. கடவுளைக் கண்டீர் 55 7. உரிமைக் கொண்டாட்டமா? 61 8. வீட்டுக் கோழியும்கட்டுக்கோழியும் 65 9. கற்புக் காப்பியம் 69 10. நீலவண்ணன் புறப்பாடு 77 11. இறைப்பது vளிதுbபாறுக்குவதுmரிது! 85 12. பச்சைக்கிளி 87 13. திருவாரூர்த் தேர்! 90 கவிதை நாடகங்கள் 14. வீரத்தாய் 98 15. கடல்மேற் குமிழிகள் 111 16. அகத்தியன் விட்ட புதுக்கரடி 179 17. நல்லமுத்துக் கதை 185 18. போர் மறவன் 209 19. ஒன்பது சுவை 213 20. அமிழ்து எது? 221  கதைப் பாடல்கள் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஸமர்ப்பணம் எளிய நடை, கவி நயம், உயர்ந்த கருத்துக்கள், கதையில் ஓர் ஆச்சர்ய உணர்ச்சி, காதுக்கினிய வார்த்தைகள் - இவை அனைத்தும் தோன்ற இச்சிறு நூலை எழுதி முடிக்க வேண்டும் என்பது எனது அவா. நூல் முடிந்தது. இதை மாத்திரம் உறுதியாய்ச் சொல்லுகிறேன். மற்றொன்று - தேச மக்களின் மனத்தில் ஊறிக் கிடக்கும் எண்ணம், அவர்கள் நடை இவற்றை எதிர்க்குமுறையில்தான் நாட்டுக்கு நலன் உண்டு என்று தோன்றினால் அஞ்சாது எதிர்ப்பவர் வீரர், தேச பக்தர், அவ்வகைச் சுயமரியாதை வீரர்களின் பாதங்களில் இந்நூலைச் ஸமர்ப்பணம் செய்கிறேன். - ஆசிரியன் 1 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள் தொறும் சென்றுதே 5 னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்; வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு; காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு; நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார். 10 *** சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில் கொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே குப்பன் எனும்வேடக் குமரன் தனியிருந்து செப்புச் சிலைபோலே தென்திசையைப் பார்த்தபடி ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின், 15 வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான், வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச் சுரக்கின்ற காதலொடு சென்றான். - ‘bjhlhÔ®fŸ! என்றுசொன் னாள்வஞ்சி. இளையான் திடுக்கிட்டான். *** குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்: 20 கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோ டுண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்! தாழச் சுடுவெய்யில் தாளாமல் நான்குளிர்ந்த நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்! தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய்! நேற்றுப் 25 பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ? உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்: என்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்! நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டி னாய்! இன்று சேற்றிலே தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை. 30 என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, காதலரே! அன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு மூலிகையைச் சஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்க் கொஞ்சம் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன். இல்லையென்றால் ஆவி இரா தென்றாள்.வேட்டுவன் 35 கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்என்றுரைத்தான். கால்இரண்டும் நோவதற்குக் காரணமில் லைநெஞ்சம், மூலிகைஇ ரண்டின்மேல் மொய்த்திருப்ப தால்என்றாள். பாழ்விலங்கால் அந்தோ! படுமோசம் நேரும்என்றான். வாழ்விலெங்கும் உள்ளதுதான் வாருங்கள் என்றுரைத்தாள். 40 அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும், இவ்விடத்திற் கேட்டுக்கொள் என்றுரைப் பான்குப்பன்: ஒன்றைத்தின் றால்இவ் வுலகமக்கள் பேசுவது நன்றாகக் கேட்கும்மற் றொன்றைவா யில்போட்டால் மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி 45 கண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்; ஆதலால் மூலிகையின் ஆசை தணிஎன்றான். மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசைஎன்றாள். என்னடி! பெண்ணேநான் எவ்வளவு சொன்னாலும் சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்; 50 பெண்ணுக் கிதுதகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே, எண்ணம்வே றாகி இருக்கின்றேன் நான்என்று கண்ணைஅவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான். *** பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? 55 பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே. ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு. புலன்அற்ற பேதையாய்ப் பெண்ணைச்செய் தால்அந் 60 நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே. சித்ரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற் புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது? சற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ் சீவிமலை உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன்; 65 மூலிகையைத் தேட முடியாவிட் டால்,மலையின் மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன். ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும் சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார். தோகை மயிலே! இதைநீகேள் சொல்லு கின்றேன். 70 நாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு. பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல் வேன் என்றாள். *** அச்சுப் பதுமையே! ஆரணங்கே! நில்லேடி! நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே! ஏனிந்தக் கோபம்? எழிலான காதலியே 75 என்றுகுப்பன் ஓடி இளவஞ்சி யைத்தழுவி நின்றான். இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள். அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீஆசை இவ்வளவு கொண்டிருத்தல் இப்போது தான்அறிந்தேன் கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்; 80 நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்? என்று மொழிந்தான் எழுங்காத லால்குப்பன். முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிறகென்றாள். ‘v‹»Ëna ÚK¤j« v¤jid< thŒ?என்றான் என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி 85 நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப் பேன்என்றாள். ஆசையால் ஓர்முத்தம் அச்சாரம் போடென்றான். கேலிக்கு நேரம் இதுவல்ல, கேளுங்கள்; மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும் என்றாள். *** குப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால் 90 எப்போது நாம்உச்சிக் கேறித் தொலைப்பதென அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை! கண்ணாட்டி தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான். வஞ்சிஅப் போது மணாளன் மலைப்பதனைக் கொஞ்சம் அவமதித்துக் கோவை உதடு 95 திறந்தாள், திறந்து சிரிக்குமுன், குப்பன் பறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே. கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் 100 மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம். மாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ, நாம்மலைக்கக் குப்பன் விரைவாய் நடந்தானோ, மங்கையினைக் கீழிறக்கி, மாதே! இவைகளே அங்குரைத்த மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள் 105 என்றுரைத்தான் குப்பன். இளவஞ்சி தான்மகிழ்ந்து சென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி வந்தார்கள். அங்கோர் மரத்து நிழலிலே சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள். *** மூலிகையில் ஓர்இனத்தை முன்னே இருவருமாய் 110 ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள். வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின் நெஞ்சம் வசமாக நேரில்அவர் பேசுதல்போல் செந்தமிழில் தங்கள் செவியிற்கேட் கப்பெற்றார். அந்த மொழிகள் அடியில் வருமாறு: 115 இத்தாலி தேசம் இருந்துநீ இங்குவந்தாய்; பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண இவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்! எவ்வாறு நான்சகிப்பேன் இந்தக் கறுப்பன் எனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை என்றாய்; 120 தனக்கெனவே நல்உணவுச் சாலைஒன் றுண்டாக்கி அங்கவன் சென்றால் அடுக்கும் எனஉரைத்தாய்; இத்தாலிச் சோதரனே! என்ன மதியுனக்கே? செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும் இவ்வுலக மக்களிலே என்னபே தங்கண்டாய்? 125 செவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார். எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ! போ! போ! பேதம்கொண் டோர்க்குப் பிராஞ்சில் இடமில்லை 130 *** என்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன் நன்று பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார். பின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள். அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு: *** நல்ல அமரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற 135 எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான். பொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும் செல்வனாய் வாழத் தினமும் நினைந்திடுவான். நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன் சொல்லும் இதுகேட்ட தோகையும் குப்பனும், 140 கொத்தடிமை யாகிக் குறைவுபடும் நாட்டுக்கு மெத்ததுணை யாகியிவன் மேன்மை அடைக என்றார். இங்கிலந்து தேசம் இருந்தொருவன் பேசினான்; இங்கிருந்து கேட்டார் இருவரும். என்னவென்றால்: *** ஓ! என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்! 145 நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது. வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்; ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான். ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே? 150 பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்! சாதிச்சண் டைவளர்க்கத் தக்கஇதி காசங்கள்! கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார். தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு 155 வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார். இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை எந்தவிதம் நீங்கி நமைஎதிப்பார்? இன்னமும், சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி 160 ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச் சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே. இந்த நிலையிற் சுதந்தரப் போரெங்கே? 165 கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே? தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்; போகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம் மற்றுமிந்தப் பாழுலகம் பொய்யே பரமபதம் போஎன்னும் தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம். 170 சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும், நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும், மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே ஓடச்செய் தால்நமையும் ஓடச்செய் வார்என்பேன். இந்தப் பிரசங்கம் இவ்விருவர் கேட்டார்கள்; 175 சொந்த நிலைக்குத் துயருற்றார். வஞ்சி சிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின் நாட்டின் நிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்! பச்சிலையால் நல்ல பயன்விளையும் என்று சொன்னான்! பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள் 180 இந்த இலையால் இனிநன்மை கொள்க என்று சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து. வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி சொல்லிஎனைத் தூக்கிவந்து சூக்ஷுமத்தைக் காட்டிய, கண் ணாளர்தாம் வாழ்வடைக என்றாள்; அவனுடைய 185 தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள். அச்சமயம் குப்பன், அழகியதன் தாய்நாட்டார் பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான். குப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ இப்பக்கம் பார்த்தான்; வஞ்சி இளங்கையால் 190 தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க் கட்டிக் கரும்பே! கவனம் எனக்கு நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில் அமைந்து கிடக்கு தென்றான். வஞ்சி அதுகேட்டே அன்னியர்கள் பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்: 195 கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்க ளென்றாள். அன்பும் உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான் இன்பக் கிளியே! எனக்களிப்பாய் முத்த மென்றான். *** கையோடு கைகலந்தார்; முத்தமிடப் போகையிலே ஐயையோ! ஐயையோ! என்ற அவலமொழி 200 காதிலே வீழ்ந்தது! முத்தம் கலைந்ததே! ஈதென்ன விந்தை? எழில்வஞ்சி! கேள்என்றான். வஞ்சி கவனித்தாள். சத்தம் வரும்வழியாய் நெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும். *** ‘ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய் 205 வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே! இப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள். குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான். வஞ்சி யவள்நகைத்தே இன்ப மணாளரே! சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும் 210 மனிதரும் இல்லை! மலையும் அசையாது! இனிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர் என்றுரைத்தாள் வஞ்சி. இதுசொல்லித் தீருமுன். *** நன்றாக உங்களுக்கு ராமன் அருளுண்டு; வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே; 215 ஏனிங்கு நின்றீர்? எடுத்துவரு வீர்மலையை *** என்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன் குன்று பெயர்வது கொஞ்சமும்பொய் யல்லவென்று குப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம் மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும் 220 அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை இந்தச்சஞ் சீவிமலை தன்னை யெடுத்துவர அந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான். நாலடியில் இங்கு நடந்துவந்து நாம்மலையின் மேலிருக்கும் போதே வெடுக்கென்று தூக்கிடுவான், 225 இங்கு வருமுன் இருவரும் கீழ்இறங்கி அங்குள்ள சாரல் அடைந்திடுவோம் வாவென்றான். *** ராமனெங்கே! ராமன் அருளெங்கே! rŠÓÉ khkiyia¤ ö¡FbkhU tšyikv§ nf!இவற்றில் கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப் 230 பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்பதரி தாகி அடிமையாய் வாழோமே? M©ikjh‹ ï‹¿ ÄoikÆš MœªJ ÉÊnahnk? என்றந்த வஞ்சி யுரைத்தாள்.பின் மற்றோர் பெருஞ்சத்தம், அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே: 235 *** அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே உம்எதிரில் வைக்கின்றேன் ஊஹுஹு ஊஹுஹு *** குப்பன் பதைத்தான் குடல்அறுந்து போனதுபோல். எப்படித்தாம் நாம்பிழைப்போம்? ஏதும் அறிகிலேன் சஞ்சீவி பர்வதத்தைத் தாவித் தரையோடு 240 பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன்எவனோ தூக்குகின்றான்! வஞ்சி! சுகித்திருக்க எண்ணினையே! சாக்காடு வந்ததடி! தக்கவிதம் முன்னமே நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல் வம்பு புரிந்தாய்! மலையும் அதிர்ந்திடுதே! 245 முத்தம் கொடுத்து முழுநேர மும்தொலைத்தாய் செத்துமடி யும்போது முத்தம் ஒருகேடா? என்றனுயி ருக்கே எமனாக வாய்த்தாயே! உன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக் கொண்டாயா? தூக்கிவிட்டான்! தூக்கிவிட்டான்! தூக்கிப்போய்த் தூளாக 250 ஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்! எவ்வாறு நாம்பிழைப்போம்? Vo, ïijÚjh‹ br›itahŒ nahá¤J¢ br¥ghnah X®kh®¡f«? *** என்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி நின்று நகைத்துத்தன் நேசனைக்கை யால்அணைத்தே 255 இப்புவிதான் உண்டாகி எவ்வளவு நாளிருக்கும், அப்போது தொட்டிந்த அந்திநே ரம்வரைக்கும் மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை. ஓமண வாளரே! இன்னம் உரைக்கின்றேன். மன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும் 260 பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை. அவ்வாறே ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும் எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லைஇல்லை; காதல் நிசம்.இக் கனிமுத்தம் மிக்கஉண்மை! மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும். 265 நம்புங்கள் மெய்யாய் நடக்கும்விஷ யங்களிவை. சம்பவித்த உண்மை அசம்பவத்தால் தாக்குறுமோ? வாழ்க்கை நதிக்குவீண் வார்த்தைமலை யும்தடையோ? வாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை! பொய்யுரைப்பார் இந்தப் புவியைஒரு சிற்றெறும்பு 270 கையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ? முத்தத்தைக் கொள்க முழுப்பயத்தில் ஒப்படைத்த சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில். என்றுரைத்தாள் வஞ்சி. இதனாற் பயனில்லை; குன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம்அழிந்தான்; 275 *** இந்நேரம் போயிருப்பார்! இந்நேரம் பேர்த்தெடுப்பார்! இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்! உஎன்று கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில்! விவரூ பங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார் *** இம்மொழிகேட் டான்குப்பன்; ஐயோ எனஉரைத்தான். 280 அம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே. உண்மை யறிந்தும் உரைக்கா திருக்கின்ற பெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து, மனத்தை விடாதீர் மணாளரே காதில் இனிவிழப் போவதையும் கேளுங்கள் என்றுரைத்தாள். 285 வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில் நெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்: *** இப்படி யாக அனுமார் எழும்பிப்போய் அப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல் சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பறந்துமே 290 கொஞ்சநே ரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து வைத்தார். உடனே மலைமருந்தின் சக்தியால் செத்த இராமனும் லக்ஷ்மணனும் சேர்ந்தெழுந்தார் *** உற்றிதனைக் கேட்டகுப்பன் ஓகோ மலையதுதான் சற்றும் அசையாமல் தான்தூக்கிப் போனானே! 295 லங்கையிலே வைத்தானே! y§ifÆšeh« j¥nghnk! என்றான். நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை. இன்னும் பொறுங்கள் எனஉரைத்தாள் வஞ்சி. *** பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர் இருந்த இடத்தில் அநுமார், எடுத்தேகி 300 வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன். செத்தார்க் குயிர்கொடுத்தார். bj©lK« ngh£LËwh®! *** குப்பனிது கேட்டுக் குலுக்கென்று தான்நகைத்தான். அப்போதே நானினைத்தேன் ஆபத் திராதென்று. நான்நினைத்த வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம். 305 ஏனடி! வஞ்சி! இனியச்சம் இல்லை யென்றான். *** ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்; நானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு சந்தேகம் கேட்கிறேன். தக்க விடையளிப்பீர்! இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த 310 ஆச்சரிய சம்பவந்தான் என்ன? அதையுரைப்பீர்! பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை என்றாள் இளவஞ்சி. குப்பன் இசைக்கிறான்: *** என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா? நாமிங்கு வந்தோம். நமக்கோர் நலிவின்றி 315 மாமலையை அவ்வநுமார் தூக்கி வழிநடந்து லங்கையிலே வைத்தது! ராமன் எழுந்ததும். இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது! கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல் 320 தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி! *** ஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான். பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒருசத்தம்: *** இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்; 325 செம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றைச் சத்தியரா மாயணத்திற் சத்தான இப்பகுதி உத்தியாய்க் கேட்டோர் உரைத்தோர்எல் லாருமே இங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பர்; அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்; 330 ஜானகீ காந்த மரணே! ஜயஜயராம்! *** மானேஈ தென்னஎன்றான் வையம்அறி யாக்குப்பன் முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே சொன்ன ஐயையோ தொடங்கி இதுவரைக்கும் ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற 335 ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும் பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே. ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப் பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான். சித்தம் மலைக்கச் சிறிதுமிதில் இல்லை யென்று. 340 கையி லிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள் என்றந்தக் குப்பனிடம் ஈந்துதா னும்தின்றாள். தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில், மாளிகையி னுள்ளே மனிதர்கூட் டத்தையும், 345 ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும், பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத் தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும் கண்டார்கள்; கண்டு கடகடவென் றேசிரித்தார். 350 வண்டு விழியுடைய வஞ்சி யுரைக்கின்றாள்: *** வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள், ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர், ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும். விவரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள், 355 உஎன்ற சத்தங்கள், அஎன்ற சத்தங்கள், எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும். செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும். இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? 360 உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள் ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத் தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும். மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை 365 எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும். மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ? 370 மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை நாடா திருப்பதற்கு நானுங் களையின்று சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய் அஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம். உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட 371 பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள் இங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன். தங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே சாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை. ஈர மலையிலே யான்தந்தேன். ஏற்கவில்லை. 375 சத்தத்தை எண்ணிச் சலித்தீர். அச் சத்தத்தால் முத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும் உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால் செம்மைமுத்தம் கொள்ளவில்லை. சேர்ந்துமுத்தம் கொள்வீரே! *** ஏஏஏ நான்இன்றைக் கேளனத்துக் காளானேன். 380 நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை? ராமா யணமென்ற நலிவு தருங்கதை பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன். நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தங்கள் நலம் சம்பாதிக் கின்ற சரித்திரக் காரர்களால் 390 நாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன். தோடு புனைந்த சுடர்க்கொடியே நன்றுசொன்னாய்! நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி, வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள், 395 தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள், இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம் 400 ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன். பாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான். சார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி! மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுது பார்! சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார். 405 என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி? என்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார் என்றுரைத்தான். *** தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே கன்னி யுடல்சிலிர்க்கக் காதலரே நாம்விரைவாய்ச் சாரல் அடைவோமே, காதலுக்குத் தக்கஇடம். 410 சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக் குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோல மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற் காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு; 415 பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தொறும் சென்றுதே னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும். அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி! 410  ஆசிரியர் முன்னுரை பில்கணீயம் - என்ற நூல் சம்கிருதம் முதலிய பல பாஷைகளில் காணப்படுகிறது. தமிழிலும் அதைத்தழுவி - தற்கால இந்தியாவுக்கு ஏற்ற முறையில் - எழுதினேன். கவிதை பயிற்றுவிக்க வந்த கவிஞனை அரசன் மகள் காதலித்தாள். இருவர் உள்ளமும் கலந்தது. மட்ட ஜாதி ஆள், தன் மகளிடம் உறவானது பற்றி அரசன் அவனுக்குக் கொலைத் தண்டனை இடுகிறான். இந்த உயர்வு தாழ்வு மனப்பான்மை தீரவேண்டும் என்றுதான் இன்று பாரதநாடு தவங்கிடக்கிறது. கவிஞன் தன் சொல்லாற்றலால் - சொந்தச் செல்வாக்கால் குடிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டு - சாவிலிருந்து மீளுகிறான். இதுதான் அவன் செய்த புரட்சி. புரட்சிக் கவி என்றது அந்தக கதாநாயக னாகிய கவிஞனை புத்தகத்தின் பேரைப் பார்த்ததும் பயப்படும் சுபாவமுள்ளவர் பயப்படாதிருக்க, இதை முன் மொழிந்தேன். ஓய்வு நேரமும் உற்சாகமும் ஒன்றுபடும்போது நான் ஒன்றை எழுதி முடிப்பதுண்டு. சூழ்ந்துள்ள தோழர்கள் காப்பாற்றினால் உண்டு; அல்லாவிடில் அவைகள் காணடிந்து போகும். இந்த விஷயத்தில் ஜாக்ரதையாயிருப்பவர்கள் தோழர்கள் சிவப்ரகாசம், துரைராஜன் ஆவார். புரட்சிக்கவி முதலிய சில சிறு நூற்களை என்னிடம் காட்டி, இவை நீங்கள் எழுதியவைகள்; அச்சிடுகிறோம் என்றார்கள். ஆயிரம் தரம் நன்றி செலுத்தினேன் அவர்கட்கு. - பாரதிதாஸன் 2 புரட்சிக் கவி (பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் jGÉaJ) அகவல் அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்: அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்! தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்; ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்; அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள் கவிதை புனையக் கற்றா ளில்லை. மலரும், பாடும் வண்டும், தளிரும், மலையும், கடலும், வாவியும், ஓடையும், விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும் தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும், காலைஅம் பரிதியும், மாலை மதியமும் கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால் என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்! ஏற்றஓர் ஆசான் எங்குளான்? தோற்றிய வாறு சொல்க அமைச்சரே எண்சீர் விருத்தம் தலைமைஅமைச் சன்புகல்வான்: எனது மன்னா, சகலகலை வல்லவன்;இவ் வுலகோர் போற்றும் புலவன்; உயர் கவிஞன்; அவன் பேர்உ தாரன்! புதல்விக்குத் தக்கஉபாத் தியாயன் அன்னோன். இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்! எனினும், அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன். குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால் குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்! ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்: அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும் தெரிந்துகொள்ள முடியாமல் திரைவி டுக்க! பானல்விழி மங்கையிடம் உதார னுக்குப் பார்வையில்லை குருடனென்று சொல்லி வைக்க! ஞானமுறும் உதாரனிடம் ‘அமுத வல்லி நலிகுஷ்ட ரோகி’ என எச்ச ரிக்க! தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! ஆம் ஆம் தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை; பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர் என்றான். பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார். தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச் செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான். பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப் `பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம் என்றான். சிந்து கண்ணி மன்னவன் ஆணைப்படி-கன்னி மாடத்தைச் சேர்ந்ததொரு பன்னரும் பூஞ்சோலை-நடுப் பாங்கில்ஓர் பொன்மேடை! அன்னதோர் மேடையிலே-திரை ஆர்ந்த மறைவினிலே மின்னொளி கேட்டிருப்பாள்-கவி வேந்தன் உரைத்திடுவான்! யாப்பு முறைஉரைப்பான்-அணி யாவும் உரைத்திடுவான்; பாப்புனை தற்கான-அநு பவங்கள் பலபுகல்வான். தீர்ப்புற அன்னவளும்-ஆசு சித்திரம் நன்மதுரம் சேர்ப்புறு வித்தாரம்-எனும் தீங்கவி தையனைத்தும், கற்று வரலானாள்-அது கால பரியந்தம் சற்றும் அவன்முகத்தை-அவள்1 சந்திக்க வில்லை! விழி அற்றவ னைப்பார்த்தல்-ஓர் அபச குனமென்றே!2 உற்றதோர் நோயுடையாள்-என் றுதாரனும் பார்த்ததில்லை! இவ்விதம் நாட்கள்பலப்-பல ஏகிட ஓர்தினத்தில் வெவ்விழி வேலுடையாள்-அந்த மேடையிற் காத்திருந்தாள். அவ்வம யந்தனிலே-விண் அத்தனை யும்ஒளியால் கவ்வி உயர்ந்ததுபார்-இருட் காட்டை அழித்த நிலா! எண்சீர் விருத்தம் அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே. இமையாது நோக்கினான் முழுநி லாவை! இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்! சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம் தூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்! அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி: நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ! அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்! அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்; பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்! சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ! உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ! உன்னைஎன திருவிழியாற் காணுகின்றேன்; ஒளிபெறுகின் றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்; இன்னலெலாம் தவிர்கின்றேன்; களிகொள் கின்றேன்; எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்! அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்! இன்பமெனும் பால்நுரையே! குளிர்வி ளக்கே! எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்த தாலே! வேறு சிந்து கண்ணி வியனிலைச் சிந்து கண்ணி இவ்வித மாக உதாரனும் - தன தின்குர லால்வெண்ணி லாவையே திவ்விய வர்ணனை பாடவே - செவி தேக்கிய கன்னங் கருங்குயில், அவ்வறி ஞன்கவி வல்லவன் - விழி அற்றவ னாயின், நிலாவினை எவ்விதம் பார்த்தனன், பாடினன்? - இதில் எத்துக்கள் உண்டென ஓடியே, சாதுரி யச்சொல் உதாரனை - அவன் தாமரைக் கண்ணொடும் கண்டனள்! ஓது மலைக்குலம் போலவே - அவன் ஓங்கிய தோள்களைக் கண்டனள்! ஏதிது போன்றஓ ராண்எழில் - குறை இன்றித் திருந்திய சித்திரம்? சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச் சுந்தர னோகறை ஒன்றிலான்! என்று வியப்புடன் நின்றனள்; - அந்த ஏந்திழை தன்னெதிர் நின்றதைத் தன்னிக ரற்ற உதாரனும் - கண்டு தன்னை மறந்தவ னாகியே என்ன வியப்பிது? வானிலே - இருந் திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதி ரேவந்து வாய்த்ததோ? - புவிக் கேதிது போலொரு தண்ஒளி! மின்னற் குலத்தில் விளைந்ததோ? - வான் வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக் கற்பனை யேஉருப் பெற்றதோ? பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ? - ஒரு பூங்கொடி யோ? மலர்க் கூட்டமோ?’ என்று நினைத்த உதாரன்தான் - ‘நீ யார்? என்ற ஓர்உரை போக்கினான். ‘அமுத வல்லியன் றோ!என்றாள் - அந்த அமைச்ச னும்முடி வேந்தனும் நமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை நாட்டம் இல்லாதவன் என்றனர்! சமுச யப்பட நீஇன்று - மதி தரிச ன ம்அதைப் பாடினை! கமலங் கள்எனும் கண்ணுடன் - உனைக் காணப் பெற்றதென் கண் என்றாள். எண்சீர் விருத்தம் இன்னொன்று கேளாயோ அமுத வல்லி! என்னிடத்தில் உன்தந்தை என்ம கட்கு முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து மூண்டதெ னச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ, மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லை என்றுரைத்தான், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்: காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ? கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ? பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ? நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால் நிறைதொழிலா ளர்உணர்வு மறைந்து போமோ? சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத் திரையிட்டு மறைத்தார்கள்! என்று சொன்னான். பஃறொடை வெண்பா கலி வெண்பா வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும் மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும் நானோக்கி நோக்கி நலிவதனைக்1 காணாயோ? சித்திரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக் கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும், சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும். உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்! குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைத் காதற் பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ? என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல் சென்றுதன் னெஞ்சம்2 தெரிவித்தாள் சேல்விழியாள்! நன்று மடமயிலே! நான்பசியால் வாடுகின்றேன்; குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்! உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும் வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி! எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான் உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல் நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில் மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம் நீயன்றோ பெண்ணே! நினைப்பை யகற்றிவிடு! நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு! வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே! பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே! கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு! காதல் நெருப்பால் flY‹nkš1 தாவிடுவேன் சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடி! பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால் நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்? கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே? ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக் காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ? பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக் கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ? என்றழுதான் விம்மி இளையான், கவியரசன். குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்! ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்திரங்கும்! சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்? ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்? அத்தருணம் அந்த அமுதவல்லி ஈதுசொல்வாள்2 வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும், காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும், தாளை அடைந்தஇத் தையல்உளம் மாறாதே!3 ஆதரவு காட்டாமல் ஐய! எனைவிடுத்தால் பாதரக்ஷை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி, வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம் சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ? ஆரத் தழுவி அடுத்தவினா டிக்குள்உயிர் தீர வரும்எனிலும் தேன்போல் வரவேற்பேன்! அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன? நாட்டின் இளவரசி நான்ஒருத்தி1 ஆதலினால் கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை! கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால், சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்! சாதி உயர்வென்றும், தனத்தால் உயர்வென்றும், போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம் மெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரைஎல்லாம் கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்! இதனை நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்! இன்னுமென்ன? என்றாள், உதாரன் விரைந்தோடி அன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான். இன்ப உலகில் இருவரும் நாள்கழித்தார். பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம் மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள் வேறு வழியின்றி வேந்தனிடம் ஓடியே மன்னவனே! உன்அருமை மங்கை அமுதவல்லி தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ, காதல்எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த் தோன்றுகிறாள். மற்றிதனை மேன்மைச் சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம் என்றார். அமைதி யுடைய அரசன் அதன்உண்மை கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்! வந்த உதாரன்எழில் மங்கைக்கு கைலாகு தந்து, தமிழில் தனிக்கா தலைக்கலந்து பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும் கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள் மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து மாளிகைக்குச் சென்றான். மறுநாள் விடியலிலே வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச் சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர ஏவினான். அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம். இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்; அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார். ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும். ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம். அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான். சிங்கா தனத்திலே சேர்ந்து: ஆறுமுகவடி வேலவனே என்ற காவடிச் சிந்து மெட்டு கொற்றவன் பெற்ற குலக்கொடி யைக்கவி கற்கஉன் பால்விடுத்தேன் - அட! குற்றம் புரிந்தனை யாஇல்லை யாஇதை மட்டும் உரைத்து விடு! வெற்றிஎட் டுத்திக்கு முற்றிலு மேசென்று மேவிட ஆள்பவன் நான் - அட இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை என்னென்றுதா னினைத்தாய்? வாள்பிடித் தேபுவி ஆளுமி ராசர்என் தாள் பிடித் தேகிடப்பார்! - அட ஆள்பிடித் தால் பிடிஒன்றிருப் பாய்என்ன ஆணவ மோ உனக்கு? மீள்வதற் கோஇந்தத் தீமை புரிந்தனை வெல்லத் தகுந்தவனோ? - இல்லை! மாள்வதற் கேஇன்று மாள்வதற் கேஎன்று மன்னன் உரைத்திட வே. மாமயில் கண்டு மகிழ்ந்தா டும்முகில் வார்க்கும் மழைநாடா! – குற்றம் ஆம்என்று நீயுரைத் தால்குற்ற மே! குற்றம் அன்றெனில் அவ்விதமே! கோமகள் என்னைக் குறையிரந் தாள்அவள் கொள்ளை வனப்பினிலே - எனைக் காமனும் தள்ளிடக் காலிட றிற்றுக் கவிழ்ந்தவண் ணம்வீழ்ந்தேன்! பழகும் இருட்டினில் நானிருந் தேன்எதிர் பால்நில வாயிரம்போல் - அவள் அழகு வெளிச்சம் அடித்ததென் மேல்அடி யேன்செய்த தொன்றுமில்லை. பிழைபுரிந் தேனென்று தண்டனை போடுமுன் பெற்று வளர்த்தஉன்றன் இழைபுரிச் சிற்றிடை அமுதவல் லிக்குள்ள இன்னல் மறப்பதுண்டோ? நொண்டிச் சிந்து கவிஞன்இவ் வாறுரைத்தான் - புவி காப்பவன் இடி யெனக் கனன்றுரைப்பான்: குவிந்தஉன் உடற்சதையைப் - பல கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன். தவந்தனில் ஈன்றஎன்பெண் - மனம் தாங்குவ தில்லெனிற் கவலையில்லை! நவிலுமுன் பெரும் பிழைக்கே - தக்க ராசதண் டனையுண்டு! மாற்றமுண்டோ? அரசனின் புதல்வி அவள் - எனில் அயலவ னிடம்மனம் அடைதலுண்டோ? சரச நிலையிருந்தீர் - அந்தத் தையலும் நீயும், அத் தருணமதில் இருவிழி யாற் பார்த்தேன்! - அறி விலிஉன தொருகுடி அடியோடே விரைவில்என் ஆட்சி யிலே - ஒரு வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்! கொலைஞர்கள் வருக என்றான் - அவன் கூப்பிடு முன்வந்து கூடிவிட்டார். சிலையிடை இவனை வைத்தே - சிரச் சேதம் புரிக எனச் செப்புமுனம் மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம் வந்தது! வந்தனள் அமுதவல்லி! இலைஉனக் கதிகாரம் - அந்த எழிலுடை யான்பிழை இழைக்கவில்லை. ஒருவனும் ஒருத்தியுமாய் - மனம் உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ? அரசென ஒருசாதி - அதற் கயலென வேறொரு சாதியுண்டோ? கரிசன நால்வருணம் - தனைக் காத்திடும் கருத்தெனில், இலக்கணந்தான் தரும்படி அவனைஇங்கே - நீ தருவித்த வகையது சரிதானோ? என்மனம் காதலனைச் - சென் றிழுத்தபின் னேஅவன் இணங்கினதால் அன்னவன் பிழையிலனாம்! - அதற் கணங்கெனைத் தண்டித்தல் முறையெனினும், மன்ன,நின் ஒருமகள்நான் - எனை வருத்திட உனக்கதி காரமில்லை! உன்குடிக் கூறிழைத்தான் - எனில் ஊர்மக்கள் இடம்அதை உரைத்தல் கடன்! என்றபற் பலவார்த்தை - வான் இடியென உரைத்துமின் னெனநகைத்தே முன்னின்ற கொலைஞர்வசம் - நின்ற முழுதுணர் கவிஞனைத் தனதுயிரை மென்மலர்க் கரத்தாலே - சென்று மீட்டனள் வெடுக்கெனத் தாட்டிகத்தால். மன்னவன் இருவிழியும் - பொறி வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடுவான்: கும்மி நாயை இழுத்துப் புறம்விடுப் பீர்கெட்ட நாவை அறுத்துத் தொலைக்குமுன்னே! - இந்தப் பேயினை நான்பெற்ற பெண்ணென வேசொல்லும் பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்! - என் தூய குடிக்கொரு தோஷத்தை யேதந்த துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை - தன்னில் போய்அடைப் பீர்!அந்தப் பொய்யனை ஊரெதிர் போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்! என்றுரைத் தான்.இரு சேவகர் கள்அந்த ஏந்திழை அண்டை நெருங்கிவிட்டார்! - அயல் நின்ற கொலைஞர், உதாரனை யும்நட நீ என் றதட்டினார்! அச்சமயம் - அந்த மன்றி லிருந்தஓர் மந்திரி தான்முடி மன்னனை நோக்கி யுரைத்திடுவான் - நீதி அன்றிது மங்கைக் கிழைத்திருக் கும்தண்டம்: அன்னது நீக்கி யருள்க என்றான். எண்சீர் விருத்தம் காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங் கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட நீதிநன்று மந்திரியே! அவன்இ றந்தால் நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்! சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்; தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்; ஓதுகஇவ் விரண்டிலொன்று மன்ன வன்வாய்! உயிர்எமக்கு வெல்லமல்ல என்றாள் மங்கை. என்ஆணை மறுப்பீரோ சபையி லுள்ளீர்! இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார் பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ? பிழைபுரிந்தால் சகியேன்நான்! உறுதி கண்டீர் என் ஆணை! என்ஆணை!! உதார னோடே எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக் கன்மீதி லேகிடத்திக் கொலைசெய் வீர்கள் கடிதுசெல்வீர்! கடிதுவெல்வீர் !!, என்றான் மன்னன். அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை; அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்! சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல் தோகையவள் என்காதல் துரையே கேளாய்! எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோம்; இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள் நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை. இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம் இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்! பருந்தும்,கண் மூடாத நரியும் நாயும், பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும் பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன் பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை அருந்தட்டும்! என்றாள்.கா தலர்கள் சென்றார்! அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக்கின்றேன்: கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள் கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்; அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும் சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசி யாகச் சிலபேச்சுப் பேசிடுக என்று சொல்லித் தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்; தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்; பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே, என் பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்! நீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள் நிறைந்துபெருங் காடாக்க, பெருவி லங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின் நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில் புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி! சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்? கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை? பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப் போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு? அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார். இக்கால நால்வருணம் அன்றி ருந்தால் இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப் புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும் புனலுக்கும் அனலுக்கும் சேற்றினுக்கும் கக்கும்விஷப் பாம்பினுக்கும் பிலத்தி னுக்கும் கடும்பசிக்கும் இடையறா நோய்க ளுக்கும், பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடைய தாகத் தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின் றார்கள்? ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப் புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா? அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான் சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும் சாவதென்றே1 தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்! ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்! இருவர் இதோ சாகின்றோம்! நாளை நீங்கள் இருப்பதுமெய் என்றெண்ணி யிருக்கின் றீர்கள்! தன்மகளுக் கெனைஅழைத்துக் கவிதை சொல்லித் தரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப் பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால் புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்! என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன் எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த மன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு மனநடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேளீர்; தமிழறிந்த தால்வேந்தன் எனைஅ ழைத்தான்; தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்! அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்,என் னாவி அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று சமுதாயம் நினைத்திடுமோ? Ia nfh!என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ? உமைஒன்று வேண்டுகின்றேன். மாசில் லாத உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்! அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ? அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்! சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறியகதை; நமக்கெல்லாம் உயிரின் வாதை! அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம் ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்! ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்! அழகியஎன் திருநாடே! அன்பு நாடே! வையகத்தில் உன்பெருமை தன்னை,நல்ல மணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப் பெய்யுநறுஞ் சோலையினை, தமிழாற் பாடும் பேராவல் தீர்ந்ததில்லை! அப்பே ராவல் மெய்யிதயம் அறுபடவும், அவ்வி ரத்த வெள்ளந்தான் வெளிப்படவும் தீரு மன்றோ? வாழியஎன் நன்னாடு பொன்னா டாக! வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே! வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி! ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்! என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்! ஆழ்க என்றன் குருதியெலாம் அன்பு நாட்டில் ஆழ்க என்றான்! தலைகுனிந்தான் கத்தி யின்கீழ்! படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம் அடிசேர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்! ஆவென்று கதறினாள்! ‘அன்பு செய்தோர் படிமீது வாழாரோ? என்று சொல்லிப் பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள் கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக் கொலையாளர் உயிர்தப்ப ஓட லானார்! கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்! காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்; புவியாட்சி தனைஉனக்குத் தாரோம் என்று போயுரைப்பாய் என்றார்கள்! போகா முன்பே, செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்! செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்! நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!  3 பெண்கள் விடுதலை கிழக்கு வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம் வழக்கப் படிவீட்டு வாயிற் படிதுலக்கிக் கோலமிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே ஏழுமணிக் காலை எழுந்தாள் அவள்மாமி! வாழுகின்ற பெண்ணாநீ வாடிஎன்றாள் தங்கத்தை, இந்நேரம் தூங்கி யிருந்தாயா? என்பிள்ளை எந்நேரம் காத்திருப்பான் இட்டலிக்கும் காப்பிக்கும்? என்றே அதட்டி இழுத்துத் தலைமயிரை நின்றபொற் பாவை நிலத்தில் விழச்செய்தாள். வாரிச் சுருட்டி மலர்க்குழலைத் தான்செருகி கூரிய வேல்விழியாள் கொண்டதுயர் காட்டாமல் தொட்ட பணிமுடித்துச் சுள்ளி அடுப்பேற்றி இட்டலியும் பச்சடியும் இட்டஒரு தட்டுடனும் காய்சுவை நீருடனும் கொண்டான் தனிஅறையில் போய்ப்பார்த்தாள் இன்னும் பொழுது விடியவில்லை, என்று நினைத்தே இருவிழி திறக்காமல் பன்றிபோல் பாயில் படுத்துப் புரளுகின்ற அத்தான் நிலைகண்டாள்; அத்தைசொல் தான்நினையாள்; முத்தான வாய்திறந்து மொய்குழலாள் கூறலுற்றாள். எட்டுமணி அத்தான் எழுந்திருப்பீர், தந்தையார் திட்டுவார் கண்கள் திறப்பீர், விரைவாகக் காலைக் கடன்முடித்துக் காப்பி முடித்துடனே வேலைக்குப் போவீரே என்று விளம்பக் கழுதைபோல் தன்னிரண்டு கால்கள் உயர்த்தி அழகு மனையாளை அப்படியே தானுதைத்தே தூக்கத்தில் வந்தெனக்குத் தொல்லை கொடுக்கின்றாய் போக்கற்ற நாயே,நீ போடி எனப்புகன்றான். செம்போடும் தட்டோடும் சேயிழையாள் கூடத்தில் வெம்பும் உளத்தோடும் மீளவந்து பார்க்கையிலே மாமனார் வந்து மலைபோலக் காத்திருக்க ஊமைபோல் சென்றே உணவை எதிர்வைத்தாள் எங்கே உன் அத்தான்? எழுந்திருக்க வில்லையோ? எங்கிருந்து வந்தாய் நீ என்குடித்த னம்கெடுக்க? இன்னுமா தூங்குகின்றான் ஏன்குரங்கே மூஞ்சியைப்பார். ஒன்பதுக்கெ ழுந்திருந்து பத்துமணிக் கூண்முடித்துக் கையில் குடையேந்திக் காலிற் செருப்பணிந்தே ஐயாதம் வேலைக்குச் சென்றால் அடுத்தநாள் வீட்டுக்குப் போக விடைபெறலாம் அல்லவோ காட்டுக் குறத்திபோல் கண்ணெதிரில் நிற்காதே என்றுதன் பிள்ளை இழைத்த பிழைக்காகக் கன்னல் மொழியாள்மேல் காய்ந்துவிழுந் தேமாமன் உண்ணத் தலைப்பட்டான் இட்டலியை, ஒண்டொடியாள் எண்ணத் தலைப்பட்டாள் தன்னிலையை! என் செய்வாள்? அத்தான் எழுந்தான் அரைநொடியிற் பல்துலக்கிப் பொத்தல்நாற் காலியின்மேல் பொத்தென்று குந்தினான் உள்ளே விழுந்தபடி ஓவென்று கூச்சலிட்டான். பிள்ளை நிலைகண்டும் பெற்றோர் அங்கிருந்தும் கொல்லைக் கிணற்றில் குடிதண்ணீர் மொண்டிருந்த மெல்லி விரைந்துவந்து மேலே எடுத்துவிட்டாள். புண்பட்ட தோஎன்று பூவையவள் பார்க்கையிலே, கண்கெட்ட துண்டோ! கடியநீ ஓடிவந்து தூக்கினால் என்ன தொலைந்துபோ என்றுரைத்துத் தாக்கினான், தையல் தலைசாய வீழ்ந்தெழுந்தாள். அப்போது மாமி அருமை மகனிடத்தில் கொப்பேறிக் குந்தும் குரங்குபோல் உன்மனைவி மேலேறிக் குந்திய நாற்காலி மேற்பிரம்பைக் கேலிபிறர் செய்யக் கிழித்துத் தொலைத்துவிட்டாள் என்றாள். அருகில் இருந்திட்ட மாமனோ நின்றால் அடித்திடுவான் நீபோஎன் றேஉரைக்க அப்படியே பிள்ளையும் ஐந்தாறு தந்திடவே பொற்பாவை கண்ணில் புனல்சாய உட்சென்றாள்! மாலை ஒருமணிக்கு மங்கை அடுப்பருகில் வேலைசெய் யும்போது முற்பகுதி வீட்டறையில் எண்ணெய்ஏ னத்தை எலிஉருட்டிப் போயிருக்கப் பெண்ணுடைத்தாள் என்று பெரும்பழியை மாமிஅவள் சூட்டினாள்; அந்தத் துடுக்குமகன் தாயின்சொல் கேட்டுக் கயிற்றால் கிளிமொழியை ஓர்தூணில் கட்டினான்; கட்டிக் கழியால் அடிக்கையிலே மங்கையைப் பெற்றவர்கள் வந்தார் நிலைகண்டார்! தங்கமே என்று தலைமீது கைவைத்துத் தேம்பி அழுது சிறிது பொறுப்பீரோ கட்டவிழ்க்க மாட்டீரோ என்று கதற,அவன் கண்ணான பெண்ணாளைக் கட்டவிழ்த்துப் போஎன்றான். பெண்ணாளின் மாமியவள் பெண்ணென்றால் இப்படியா? கொண்டவனை மீறுவதா? கொண்டவனை அண்டாமல் கண்டவனை அண்டிக் கதைபேசப் போவதுண்டா? என்று பலபொய் எடுத்தெடுத்து வீசலுற்றாள்; என்றைக்கும் வாழாள் இவளென்றான் மாமனும்! அந்நாள் இரவில் அணங்குதனைப் பெற்றவர்கள் பொன்னையன் வீட்டுக்குப் போய்இதனைக் கூறி எதுசெயலாம் என்று வினவ,அவன் சொல்வான் இதுவெல்லாம் முன்னாள் பிரமன் எழுதியதாம் ஆரும் அழிக்க முடியாது; கொண்டவனால் நேருவதை நாம்தடுக்க எண்ணுவதும் நேர்மையில்லை; பெண்டாட்டி என்றும் பிழைசெய்யக் கூடியவள்; கொண்டவன் கொல்வான், அணைப்பான் அவன்விருப்பம். இந்நாள் இதுவெல்லாம் நான்சொல்லும் சொல்லல்ல; அந்நாள் மனுவே அழுத்தி எழுதியவை! என்றுரைக்கப், பெற்றவர்கள் உள்ளம் எரிந்தவராய்க் கன்றைப் பிரிக்கும் கறவைஎனக் காலையிலே பெண்ணைப் பிரிந்து பெருந்துன்பம் மேலிட்டு வெண்ணெய்நல்லூர் வண்டியின் மேலேறிச் சென்றார்கள். ‘வஞ்சி மரச்சருகு வானூர்ச் சாலையிலே கொஞ்சநஞ்ச மல்ல குவிந்து கிடந்திடுதே ஆலைச்சங் கூதும் அதிகாலையில் நீபோய் நாலுசுமை கட்டிவந்தால் நாலுபணம் மீதியன்றோ? என்றுரைத்தாள் மாமி. இதுகேட்ட தங்கம்தன் பொன்னான அத்தான்பால் போயுரைக்க லாயினாள். வஞ்சிச் சருகுக்கு மாமியார் போஎன்றார் கொஞ்சம் விலையே கொடுத்தால் அதுகிடைக்கும். பத்துக்கல் ஓடிப் படாப்பாடு பட்டிடநாம் சொத்தில்லா ஏழைகளா சொல்லுங்க ளென்றுரைத்தாள். நன்செயிலும் புன்செயிலும் நானூறு காணியுண்டு இன்னுமுண்டு தோப்பும் இருப்பும் இருந்தாலும் என்தாயின் சொல்லைநீ ஏன்மறுத்தாய்? நாள்தோறும் சென்று சுமந்துவர வேண்டுமென்றான் தீயவனும்! நெஞ்சம் துடித்தாள், நிலைதளர்ந்தாள் அத்தானைக் கெஞ்சினாள், அந்தப் பழக்கம் கிடையாதே? ஒன்றியாய்ப் போவதற்கும் என்னுள்ளம் ஒப்பாதே சென்றுரைப்பீர் மாமியிடம் செல்லா வகைசெய்ய என்றாள் பயனில்லை. இரவு கழிந்தவுடன் சென்றாக வேண்டுமென்று சிங்கக் கனாக்கண்டாள்! மாடியிலே மங்கையர்க ளோடிருந்து பந்தாடி வாடினேன் என்று வலஞ்சுழியும் அப்பவகை உண்ணென்று தாய்எனக்கே ஊட்டுகையில் நானவற்றை மண்ணென் றுமிழ்ந்ததெல்லாம் எண்ணி அழுவேனா! சூட்டுமலர் வாடமணிச் சுட்டியொடு நான்களைந்தே போட்டு வயிரப் புதுச்சுட்டி வாங்கியதை எண்ணி அழுவேனா! எருமைமுது கென்புபோல் பண்ணிய தங்கமணிக் கோவை பழையதென்று வேலைக் காரிக்கு விடியலில் நான்தந்து மாலையிலே மற்றொன்று வாங்கியதை எண்ணி அழுவேனா! மான்குட்டி கேட்ட அளவில் எழுதி வரவழைத்த தெண்ணி அழுவேனா! தன்னாடை மேலென்றாள் தான்காண நான்அன்றே பொன்னாடை பூண்டதை எண்ணி அழுவேனா! அண்டைத் தெருவுக்கும் ஆடும் இருகுதிரை வண்டிஎன்றால் வந்துநின்ற தெண்ணி அழுவேனா? இந்நாளில் என்கணவர் இல்லத்தில் நாள்தோறும் தொன்னையிலே நொய்க்கஞ்சி தூக்கிக் குடிஎன்னும் அன்பில்லார்க் காட்பட்ட தெண்ணி அழுவேனா! என்பொடிய நான்உழைப்ப தெண்ணி அழுவேனோ உள்ளம் அறிய ஒருபிழைசெய் யாவிடினும் தள்ளித் தலையுடைப்ப தெண்ணி அழுவேனா? வஞ்சிச் சருகெடுத்து வாஎன்ற சொல்லுக்கே அஞ்சி நடுங்குவ தெண்ணி அழுவேனா! என்று துடித்தழுதாள்; ஏனழுதாய் என்றுரைத்த முன்வீட்டு முத்தம்மா என்னும் முதியவள்பால் அப்போது தங்கத்தின் அத்தானும் மாமனும் எப்போதும் போல இருந்தார்கள் திண்ணையிலே. ஆளவந்தார்க் காளாய் அமைந்திட்ட காவலர்கள், வாள்இடுப்பில் கட்டி வலக்கையில் செப்பேட்டை ஏந்தி இவர்கள் எதிரினிலே வந்துநின்று சூழ்ந்துள்ள மக்களுக்குச் சொல்வார் பெருங்குரலில்; பெண்டாட்டி என்ற பெயரடைந்த நாள்முதலே ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதி உண்டுரிமை தன்மனைவி செத்தால்தான் வேறுமணம் தான்செயலாம் இன்னல் மனைவிக் கிழைத்தால் கொலைக்குற்றம் ஆளவந்தார் ஆணைஇது, வென்றே அறிவித்து வாளுருவிக் காட்டி வழிநடந்து சென்றார்கள்! மங்கைஅது கேட்டாள்! மணவாள னும்கேட்டான்! அங்கிருந்த மாமனும் கேட்டான். அவன்சென்று தன்மனைவி காதில் தனியாக நின்றுரைத்தான். முன்னிகழ்ந்த துன்ப வரலாறு முற்றிற்றே. பின்பொருநாள் வீட்டுப் பெருங்கணக்கு மாறுபட என்னவகை கண்டறிவ தென்றறியா மாமன்தான் தன்மகனைக் கேட்டும் சரிசெய்யத் தோன்றாமல் அன்பு மருமகளை அண்டிஒரு விண்ணப்பம் என்றான். மருமகளும் என்னவென்றாள் இக்கணத்தில் நின்ற பிழைதன்னை நேராக்க வேண்டுமென்றான். இன்னும் அரைமணிக்குப் பின்னால் நினைப்பூட்டிச் சொன்னால் சரிபார்க்கத் தோதுபடும் என்றுரைத்தாள். அப்போது மங்கையின் அன்னையும் தந்தையும் எப்போதும் போல்பார்க்க எண்ணியங்கு வந்தார்கள். வீட்டுத் தனியறையில் மெல்லியிருந் தாள்தலையை நீட்டாம லேவெளியில் நின்றிருந்தார் மாமனார்; அத்தான் அலுவ லகத்தினின்று வீடுவந்து முத்து நகைக்காரி முகம்பார்க்க எண்ணி மனைவியின் அறைக்குள் வரலாமா என்று தனிவிரலால் கதவைத் தட்டி வெளிநின்றான். காத்திருக்கச் சொன்னாள் கனிமொழியாள் தான்கணக்குப் பார்த்தபின் பெற்றோரைப் பார்த்துப் பலபேசி மாமன் கணக்கை வகைசெய்து காட்டியபின் நாமலர்ந்தாள் நல்லத்தா னோடு. - குயில், கவிதை இதழ், இசை - 1, குயில் 4; 1. 1. 48  4 எது பழிப்பு? பஃறொடை வெண்பா கலி வெண்பா 1 பத்து வயதில் பழனியப்பன் வீட்டினிலே முத்தம்மை என்னும் முதிராத செங்கரும்பு வேலைசெய்தி ருக்கையிலே வேம்பென்னும் தாயிறந்தாள்; மேலுமோர் ஆண்டின்பின் தந்தையார் வீரப்பன் தானும் இறந்தான், தனியாக முத்தம்மை கூனன் வரினும் குனிந்துபுகும் தன்குடிலில் வாழ்ந்திருந்தாள்; அண்டைஅயல் வாழ்வார் துணையோடு தாழ்ந்திடுதல் இன்றியே தன்வருமா னத்திலே நாளைக் கழித்துவரும் நங்கை பருவமுற்றாள். தோளை அழகுவந்து சுற்றியது: முத்தம்மை கண்ணை ஒளிவந்து கௌவியது: முன்னிருந்த வண்ண முகமேதான் வட்டநிலா ஆகியது; மொட்டு மலர்ந்தவுடன் மொய்க்கின்ற வண்டுகள்போல் கட்டழகி அன்னவள்மேல் கண்வைத்தார் ஆடவர்கள். 2 அச்சகத்தில் வேலைசெய்யும் அங்கமுத்துத் தான்ஒருநாள் மெச்சுமெழில் முத்தம்மை மெல்லியினைத் தான்கண்டு தன்னை மணந்துகொண்டால் நல்லதென்று சாற்றினான்: இன்ன வருமானம் இன்னநிலை என்பவெல்லாம் நன்றாய்த் தெரிந்துகொண்டு நல்லதென்றாள் முத்தம்மை. ஊரார்கள் கூடி ஒருநாள் திருமணத்தைச் சீராய் முடித்தார்கள்; செந்தமிழும் பாட்டும்போல் அங்கமுத்து முத்தம்மா அன்புடனே வாழ்ந்து வந்தார்; இங்கிவர்கள் வாழ்க்கை இரண்டாண்டு பெற்றதுண்டு; 3 வாய்ச்சொல்லாய்த் தோளில் வலிஎன்றான்; மட்டாகக் காய்ச்சலென்று சொன்னார் மருத்துவரும் கைபார்த்து! நாலுநாட் பின்னை நளிர்ஏற நாவடங்கிப் பாலும்உட் செல்லாத பான்மை அடைந்தே இறந்துவிட்டான் அங்கமுத்து; முத்தம்மை மார்பில் அறைந்தபடி கூவி அழுது புரளுகையில் அண்டை அயலுள்ளார் அங்கமுத்தின் மெய்கழுவி தொண்டர் சுமக்கச் சுடுகாட்டை எய்துவித்தார் நாட்கள்நில் லாது நடந்தன! முத்தம்மை வாட்டுகின்ற ஒவ்வோர் நொடிக்கும் மனம்பதைத்தாள் அங்கமுத்து மாண்டான் அறுபதுநாள் சென்றபின்னும் எங்கும் அவனே எனஅழுதாள் முத்தம்மை: மாதங்கள் மூன்று மறைந்தபின்னும் அங்கமுத்தின் காதில்விழும் என்றழைப்பாள் கண்ணாளா என்று! 4 துணைவனைச் சுட்ட சுடுகாட்டை நோக்கி இணைவிழிகள் நீர்பெருகச் சென்றாள். இடையிலே நள்ளிரவில் மக்கள் நடப்பற்ற தோப்பினிலே பிள்ளையின் பேர்சொல்லிக் கூவினாள் அங்கொருத்தி ‘தங்கமுத்தே தங்கமுத்தே’ என்றபெயர் தான்கேட்ட மங்கையவள் முத்தம்மை வந்தான் கணவனென்று நின்றாள்; விழியால் நெடிதாய்வாள் தோப்பெல்லாம் தன்துணைவன் போலத் தனியாக வந்து நின்றான்: யார்?என்று கேட்டாள்.நீ யார்என்றான் வந்தவனும்; தேரோடும் போதே தெருவில்அது சாய்ந்ததுபோல் மாண்டார்என் அத்தான் மறைந்தார்; சுடுகாட்டில் ஈண்டுநான் வந்தேன் எதிரில் உமைக்கண்டேன்; உம்பெயரை யாரோ உரைத்தார், அதுதுணைவர் தம்பேர்போல் கேட்டதனால் தையலுளம் பூரித்தேன்; என் பெயரோ முத்தம்மை என்றாள்; அதுகேட்டுத் தன் பெயர் தங்கமுத் தென்றான்; தளர்வுற்றாள். தூயோன் எரிந்த சுடுகாடு போகலுற்றாள் நீயேன் சுடுகாட்டை நேர்கின்றாய் மங்கையே தச்சுவே லைசெய்யும் தங்கமுத்துப் பேர் சொன்னால் மெச்சாதார் யாருமில்லை; மெய்ம்மைஇது கேட்டுப்பார்: தன்னந் தனியாய்நீ வந்ததுவும் தக்கதல்ல: உன்வீடு செல்வாய்நீ நானும் உடன்வருவேன் என்றான்: அவளும் எதிரொன்றும் கூறாமல் சென்றாள்; உடன்சென்றான்; செங்கதிரும் கீழ்க்கடலில் தோன்றியது. தோகைக்கும் தங்கமுத்தின் மேல்உள்ளம் ஊன்றியது; தாமே உறுதிசெய்தார் தம்மணத்தை தங்கமுத்தின் அன்னை தளர்ந்த பருவத்தாள் மங்காத செல்வம்போல் வாய்த்த மருமகளைக் காணும்போ தெல்லாம் மகிழ்ச்சிக் கடல்படிவாள். ஆணழகன் தன்மகனும் அன்பு மருமகளும் வேலையிலாப் போது விளையாடல் தான்கண்டு மூலையினில் குந்தி முழுதின்ப மேநுகர்வாள். ஆண்டொன்று செல்லஅவள் ஆண்குழந்தை ஒன்றுபெற்றாள் ஈண்டக் குழந்தைக் கிரண்டுவய தானவுடன் தங்கமுத்து மாண்டான்; தளர்ந்தழுதாள் முத்தம்மை. மங்கை நிலைக்கு வருந்தினாள் அக்கிழவி. 5 மாமிதன் வீட்டினை நூறு வராகனுக்குச் சாமியப்ப னுக்குவிற்றுத் தையலிடம் தந்து கடையொன்று வைக்கக் கழறினாள்; அன்னாள் உடனே கடைதிறந்தாள் ஊர்மதிப்பும் தான்பெற்று வாழ்கையில் ஓர்நாள் மனைவி தனைஇழந்த கூழப்பன், மங்கையிடம் தன்குறையைக் கூறலுற்றான். மாடப் புறாப்போல் மயில்போல் குயில்போலத் தேடி மணந்தேனா பத்தாண்டும் செல்லப்பின் பிள்ளையில்லை வேறே ஓர் பெண்ணையும் நீமணந்து கொள்என்றாள்; கோதையே நீயிருக்கு மட்டும் எவளையும் தீண்டேன் நான்என்று முடித்தேன். அவள்அன்று மாலை அனல்மூழ்கி மாண்டுவிட்டாள். இப்படிச்செய் வாள்என் றெனக்குத் தெரிந்திருந்தால் அப்படிநான் சொல்ல அணுவளவும் ஒப்பேன் மணம்புரிய வேண்டும்நான் மக்கள்பெறவேண்டும் தணல்மூழ் கினாளது எண்ணமிது தான்என்றான். கேட்டிருந்த முத்தம்மை கிள்ளிஎறி பூங்கொடிபோல் வாட்டம் அடைந்தாள்; மனமெல்லாம் அன்பானாள். என்னை மணப்பீரோ என்றன் அருமைமகன் தன்னைஉம் பிள்ளையெனத் தாங்கத் திருவுளமோ? ஐயாவே என்றாள். உடனே அருகிலுறும் பையனைஅன் னோன்தூக்கிப் பத்துமுறை முத்தமிட்டாள். 6 தங்கமுத்தின் தாய்கண்டாள், கூழப்ப னின் உருவில் தங்கமுத்தைக் கண்டாள்! தணியாத அன்பினாள் வாழ்த்தினாள் முத்தம்மை கூழப்பன் மாமணத்தை! வீழ்த்தினார் அவ்விருவர் மேல்வீழ்ந்த துன்பத்தை! பூவும் மணமும்போல் பொன்னும் ஒளியும்போல் கோவையிதழ் முத்தம்மை கூழப்பன் இவ்விருவர் ஒத்தின்ப வாழ்வில் உயர்ந்தார். வாணிகமும் பத்துப்பங் கேறியது. பையன் வயதும் இருபதா யிற்று; மணஞ்செய்ய எண்ணிப் பெருமாளின் பெண்ணைப்போய்ப் பேசுவதாய்த் திட்டமிட்டார். 7 மாலையிலே முல்லை மலர்ப்பொடியைத் தானள்ளிச் சோலையெலாம் வண்டிருந்து சூறையிடும் தென்றலிலே மேலாடை சோர விளையாடும் தோகைஎதிர் வேலன் வரலானான். கண்டாள் விளம்புகின்றாள்: உம்மைக் கடைத்தெருவில் கண்டேன் நெடுநாள்பின் மெய்ம்மறவர் வாழ்தெருவில் கண்டு வியந்ததுண்டு. எந்தப்பெண் ணுக்காக இவ்வுலகில் வாழ்கின்றீர்? அந்தப்பெண் உம்மை அடையப் புரிந்ததவம் யாதென்றாள் வேலன் இயம்பத் தலைப்பட்டான். காதலெனும் பாம்புக் கடிமருந்து நீஎன்று தேடிவந்தேன் ஒப்புதலைச் செப்பிவிடு. நீவெறுத்தால் ஓடி இதோஎன் உயிர்மாய்த்துக் கொள்ளுகின்றேன். என்றான் உனக்குநான் என்றாள்; உவப்புற்றான். நின்றாளின் நேர்நின்றான்; நீட்டியகைம் மேல்விழுந்தாள்; மாலை மறைந்ததையும் வல்லிருட்டு வந்ததையும் சோலை விளக்கம் தொலைந்ததையும் தாம்உணரார். குப்பத்து நாய்தான் இடிபோற் குரைத்ததனால் ஒப்பாமல் ஒப்பி உலகை நினைத்தார்கள். விட்டுப் பிரியமனம் வெம்பிப் பிறர்விழிக்குத் தட்டுப் படாதிருக்கத் தத்தம் இடம்சேர்ந்தார். 8 பெருமா ளிடம்சென்றான் கூழப்பன், பெற்ற ஒருமகளை வேலனுக்கே ஒப்படைக்க வேண்டுமென்றான். தாயோ பழியுடையாள் தந்தையும் நீயல்லை சேயோ திருவில்லான் என்றான் பெருமாள். மருமக னாவதற்கு வாய்த்தபல பண்புகள் பையனிடம் உண்டா எனப்பாரும் மற்றவரை நைய உரைத்தல் நலமில்லை என்றுரைத்தான். விண்ணில் இருக்கின்றாள் தோகை, பழிவேலன் மண்ணில் கிடக்கின்றான்; மாற்றம் உணர்ந்தாயோ என்றான் பெருமாள். எதிரேஆள் நீள்அஞ்சல் ஒன்றைப் பெருமாள்பால் நீட்டிவிட் டோடிவிட்டான். வீட்டின் ஒரேஅறைக்குள் வேலனும் தோகையும் காட்டுப் புறாக்களைப்போல் காதல்நலம் காணுகின்றார். ஒத்த உளத்தை உயர்ந்த திருமணத்தைப் பத்துப்பே ரைக்கூட்டிப் பாராட்ட எண்ணமுண்டோ? பாராட்டு நல்விழா எந்நாள்? இருபெற்றோர் நேரே உரைத்திடுக. நெல்லிமர வீட்டிலுள்ளார் இங்ஙனம் தோகையாள் வேலன் இருவர்ஒப்பம். அங்கே இதைப்படித்தான் ஆம் ஆம் பொருத்தம்என்றான் வேலவன் தோகை விழைவின் விழாவையே ஞாலமே வாழ்த்தியது நன்று. - குயில், கவிதை இதழ், இசை - 1, குயில் 9; 15. 6. 48  5 வெப்பத்திற்கு மருந்து (பொன்னியும் வெற்றியும் பேசிப்போகிறார்கள்) ஏதிந்த நேரம் பெண்ணே எங்கேநீ செல்லு கின்றாய்? ஓதென்றான் வெற்றி வேலன் உடைவாங்க என்றாள் பொன்னி தீதான வெயிலும் உன்னைத் தீய்க்காதோ என்றான் வெற்றி. போதோடு சேலை தேவை புறப்பட்டேன் வெயிலில் என்றாள். உலையிலே இரும்பு போல வெயிலிலே உடல்வெ தும்பும் நிலையிலே என்ன செய்வார் நீணில மக்கள் என்றான். இலையாட வில்லை கொண்ட புழுக்கத்திற் கெல்லை யில்லை அலைமோதும் கடலோ ரத்தும் அணுக்காற்றும் இல்லை என்றாள். 2 என்குடை நிழலில் வந்தால் உனக்கென்ன குறைந்து போகும்? பொன்போல வரலாம், மேனி பொசுங்கிட வேண்டாம் என்றான். நன்றென நெருங்க லானாள் நடந்தனர் இரண்டு பேரும்; குன்றும்பூங் கொடியும் போல அருகினில் கடைகள் கண்டார். இக்கடை களிலே உள்ள சேலைகள் மட்டம் என்றாள். அக்கடை தொலைவா னாலும் அங்குதான் நல்ல சேலை விற்குமென் றுரைக்கின் றார்கள் விலைமலி வென்கின் றார்கள் கைக்குடை உண்டு பெண்ணே கடிதுவா போவோம் என்றான். 3 உழவனும் உழத்தி தானும் ஒவ்வாத உளத்த ராக அழலெனத் தாம்சி னந்தே அடுக்காத மொழிகள் பேசி வழியினில் வரலா னார்கள்: உழத்தியோ வெயிலால் வாடி தழைத்தஓர் மரத்தின் கீழே சாய்ந்தனள்; அவனும் சாய்ந்தான். இரங்கிடத் தக்க காட்சி இருவரும் கண்டார். பொன்னி மருந்துண்டோ வெப்பத் திற்கு மாய்கின்றார் இவர்கள் என்றாள்: சரேலென வெற்றி வேலன் தையலோ டங்கே சென்றே எரிந்திடும் வெயிலால் நேர்ந்த இன்னலா? என்று கேட்டான். 4 வெய்யிலில் சாகின் றேன்நான் மெய்ம்மைதான் பிழைக்க அந்தத் தையல்பால் மருந்தி ருந்தும் கொடேனென்று சாற்று கின்றாள். ஐயனே அவள்உ ளத்தின் அன்பள்ளித் தன்கை யால்என் மெய்தட விட்டால் வெப்பம் தீரும்என் றுழவன் சொன்னான். உனக்கென்ன துன்பம் என்றே உழத்தியைப் பொன்னி கேட்டாள்: எனையலால் வேறு பெண்ணை எண்ணுவ தில்லை என்று மனமார உழவன் இங்கு மாறிலா உறுதி சொன்னால் கனல்வெயில் குளிரும் என்றாள் வியப்பிடைக் கலந்தாள் பொன்னி. 5 உழவனும் உறுதி சொன்னான். உழத்தியும் உளம்ம லர்ந்தே தழைஅன்பால் எழுக என்றே தளிர்க்கையால் தொட்டி ழுக்க மழையிடை எருமை கள்போல் மகிழ்வொடும் நடந்து சென்றார்: வழியிலே வெப்பம் தீர்க்கும் மருந்தினை இருவர் கண்டார். பொன்னியின் இரண்டு கைகள் வெற்றியின் பொன்னந் தோளில் மன்னிட, இருவர் நோக்கும் மருவிட, வெப்பத் திற்கோர் நன்மருந் தருந்தி னார்கள்; நாளெல்லாம் வெப்பம் ஏதும் ஒன்றாத இன்ப வாழ்க்கை ஒப்பந்தம் ஒன்றும் கண்டார்! - குயில், கிழமை இதழ், இசை - 1, குயில் 9; 15. 6. 48  6 கடவுளைக் கண்டீர் தாய்: பாம்பு கடித்ததம்மா பச்சைக் குழந்தையினை மாம்பூ மலையில் மருந்திருக்கும் என்கின்றார், நீதான் மருத்துவச்சி நீயதனை நன்கறிவாய், தீது வருமுன்னே தேடிவந்து தந்திடுவாய். மருத்துவச்சி: சிட்டாய்ப் பறந்திடுவேன்; சேயிழையே அஞ்சாதே; கட்டாயம் பிள்ளையினைக் காத்திடுவேன் அஞ்சாதே; கூடக் கணவனையும் கூட்டிநான் போய்வருவேன் காடுசெடி தாண்டிக் கடிதுநான் போய் வருவேன். (போதல்) மருத்துவன்: எங்கேநீ சென்றிருந்தாய் என்னருமைக் கண்ணாட்டி? தங்கமே நீபிரிந்தால் தாங்கிடுமோ என்னுள்ளம்? மருத்துவச்சி: தெற்குத் தெருவினிலே செங்கேணி ஆச்சிபிள்ளை பற்கிட்டித் தொல்லைப் படுகின்ற நேரமிது, பாம்பு கடித்ததத்தான் பச்சிலைக்குப் போவோமே, மாம்பூ மலை நோக்கி வாராய் விரைவாக; (போகின்றார்கள்) மருத்துவன்: வெய்யில் நடப்பாரை வேகடிக்கும் நேரமடி, ஐயோ நடுவழியில் அல்லல் மிகுந்ததடி. மருத்துவச்சி: அல்லல் மிகுத்தாலும் அத்தானே ஆச்சி பெற்ற செல்வனை நாம் காப்பாற்றச் செல்வோம் விரைவாக செங்காடு தாண்டிச் செழுங்காட்டை நாமடைந்தோம், வெங்காயக் காட்டை விலக்கி, அதோதெரியும் மாம்பூ மலையில் மருந்தெடுக்க மாட்டோமோ? பாம்புக் கடிவிலக்கும் பச்சிலையைத் தேடோமோ? (போகிறார்கள்) மருத்துவச்சி: அத்தான்என் காலிலே ஆணிமுள் தைத்ததுவே, தைத்த இடத்தினின்று செங்குருதி சாய்ந்திடுதே மருத்துவன்: கண்ணே, மணியே,என் கட்டிக் கரும்பனையாய் வண்ணாத்திப் பூச்சி இறகைபோல் வாய்த்த உன் மெல்லடியின் உட்புறத்தில் வேல்பாய்ந்தால் என்னாகும் சொல்லடிநீ மேல் நடக்கத் தோதுபடு மாஎன்ன? மருந்துவச்சி: ஆணிமுள்ளை வாங்கிவிட்டேன் அத்தானே புண்வாயைப் பேணத் துணிகிழித்துக் கட்டிவிட்டேன் பேச்சென்ன? இன்னும் விரைவாய் நடப்போம் இளயானைத் தின்னுமந்த நஞ்சுதனைத் தின்ன இலைபறிப்போம். (போகிறார்கள்) மருத்துவன்: புள்ளிச் சிறுத்தைஒன்று போர்முரசு கொட்டியது அள்ளிச் சொரிந்ததுவே நம்மேல் அனல் விழியை. மருத்துவச்சி: அத்தானே, அத்தானே என்அண்டை வந்திடுவாய், செத்தாலும் சாகின்றேன் நீஎதிரே செல்லாதே. பாயும் சிறுத்தைமேல் பாய்ச்சிடுவேன் என்கத்தி, நாயின் விலாவின் நடுப்பாயும் என்கத்தி! மருத்துவன்: சாக்காட்டுக் கஞ்சும் சழக்கன்நான் இல்லையடி, நோக்காட்டுக் காலோடு நூலிழையே செல்லாதே வெள்ளரிக்காய் என்கத்தி வீச்சுக்கு நிற்குமா? தள்ளடிநீ அச்சத்தைத் தங்கடிநீ இவ்விடத்தில். மருத்துவச்சி: கத்தியினை மேலெடுத்துக் காட்டினையோ இல்லையோ பத்தரிசிக் கோடுகின்ற பார்ப்பான்போல் ஓடிற்று! வந்த சிறுத்தையது வாலடங்க ஓடியது. முந்தநாம் சென்று முடிப்போம் நமது பணி. (போதல்) மருத்துவன்: செங்குத்தாய் நிற்குமலை! தேனே நீ பார்த்தேறாய் அங்குள்ள பள்ளத்தை ஆயிழையே பார்த்துநட (ஏறிப் போகிறார்கள்) மருத்துவச்சி: அத்தானே நாம் தேடும் அம்மருந்தைக் காணோமே, எத் தொல்லை பட்டேனும் இங்கதனைத் தேடுவமே. (தேடுகிறார்கள்) மருத்துவன்: பாராய் இளமானே, பச்சைப் பசேலென்று நேரே இலைகள் நெருங்கப் படர்ந்தகொடி, எட்டா உயரத்தில் உள்ளதடி, என்மயிலே நெட்ட நெடும்பாறை நீளுச்சி மேலேறிக் கையில் பறிக்கையிலே கால்தவறி விட்டாலோ பொய்யாகிப் போகுமடி வாழ்வு புதுநிலவே! மருத்துவச்சி: நானேறு கின்றேன் நலிவின்றி நீயிருப்பாய் ஊனெடுத்தோம் என்னபயன்? ஊருக்கு ழைப்போமே! மருத்துவன்: கட்டாணி முத்தே,என் காதலியே, நீ பொறுப்பாய் எட்டா இலைதன்னை எட்டிப் பறித்திடுவேன். (ஏறுகிறான், பறிக்கிறான்) மருத்துவச்சி: பாறை வழுக்கிடுதே பாவையே என் செய்வேன்? வாராத சாக்காடு வந்ததடி வந்ததடி. (விழுகிறான், மனைவி முதுகால் தாங்குகிறாள். இருவரும் தரையில் வீழ்ந்து அடிப்பட்டுக் கிடக்கிறார்கள்-எழுகிறார்கள்) மருத்துவன்: மெல்ல நடப்போம்நாம் வேளையுடன் வீடுசெல்வோம் சொல்லிய வண்ணம் சுருக்காக நாம்செல்வோம் பாம்பால் கடிபட்ட பச்சைக் குழந்தைக்கு நாம் போய் உயிர்மீட்போம் நல்லத்தான் வாராயோ? (போகிறார்கள்) தாய்: வந்தீரோ, ஐயோ இலைகொண்டு வந்தீரோ? தந்தால்என் பிள்ளை தலையேறும் நஞ்சுதனை நீக்கலாம் இல்லைஎனில் நீங்குமே பிள்ளையுயிர், வாய்க்குள் இலைச்சாற்றை வார்க்கவோ சொல்லுகின்றீர்? (இலைச்சாற்றைப் பிள்ளைக்கு வார்க்கிறாள்) மருத்துவச்சி: பிள்ளை விழித்ததுவே, பெற்றவளே, பார்த்தாயா! துள்ளி எழுந்ததுவே, தூயவளே, உன் பிள்ளை! சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி: என்ன புதுமை இறந்தோன் உயிர் பெற்றான், சின்னஞ் சிறியோன் திடுக்கென் றெழுந்தானே! மற்றொருவன்: செத்தார் பிழைக்கவைக்கும் சின்னஇலை கொண்டுவந்த இத்தூய் மருத்துவருக் கென்கொடுத்தா லுந்தகுமே! தாடி நிறைந்த தள்ளாதவர்: அன்புடையீர், என்றன் அருமை மருத்துவரே, என்பேரன் உம்மால் பிறந்தான், இறந்த பின்பு பாடெல்லாம் பட்டீர் பகலெல்லாம் வெய்யிலிலே! காடெல்லாம் சுற்றிக் களைப்பில் மலையேறி, வீழ்ந்து புண் பட்டு விரைவில் குழந்தைநிலை ஆழ்ந்து நினைத்தேபின் அல்லலொடும் இங்குவந்தீர்! காத்தீர் உமக்கென்ன கைம்மாறு வேண்டும்அதை ஆத்தா நீ சொல்வாய்,என் அன்பனே நீ சொல்வாய்? மருத்துவன்: அப்பரே நீர்ஓர் அறிஞரென எண்ணுகின்றேன்; ஒப்பார் இலாத உயர்புலவர் நீர்போலும்; உம்மைநான் கேட்பதெலாம் ஒன்றுதான்; என்னவெனில் கைம்மேற் கனிபோல் கடவுளைநீர் காட்டிடுவீர், உம்போன்றோர் இந்த உலகில் கடவுளை எம்போன்றார் காண எதிரினிலே காட்டினராம். நானும்என் காதலியாம் நங்கையும் காணும்வகை ஆனது செய்தால் அதுபோதும் போதும்! தாடி: கடவுளை நான் உங்கட்குக் காட்டல் எளிதே, நடையுலகில் நீங்களது நம்பல் அரிதாகும். கோயிலி னுள்ளே குருக்கள்மார் காட்டுகின்ற தூய உருவங்கள் கல்தச்சர் தோற்றுவித்தார். கண்டீர் அவைதாம் கடவுள்கள் அல்ல அல்ல. குண்டான் பெருவயிறு கொண்டிருக்கும் ஓர் உருவம், ஆறுமுகம், ஐந்துமுகம், நாலுமுகம் ஆகுமென்று கூறுமுகம் யாவும் கடவுளெனக் கூறாதீர்! இந்துமதம் சொல்லுகின்ற யாதும் கடவுளல்ல; ஓது நபி காட்டும் ஒலியும் கடவுளல்ல; எவ்வுருவும் எப்பெயரும் இல்லை கடவுளுக்கே. அவ்வியமோ பற்றோ கடவுள் அடைவதில்லை. ஊருக் குழைக்கும் உணர்வே கடவுள்ஆம்; ஊருக் குழைக்கும் உணர்வேஉம் முள்கண்டீர்; கண்டீர் நீர் அந்தக் கடவுளையே மெய்யாகக் கண்ட கடவுள்தான் காட்டியதோர் இன்பத்தைப் பெற்றீர் அதைவிளக்கிப் பேசுகின்றேன் கேட்டிடுவீர். தொல்லைஎலாம் ஏற்றீர்கள். தூயதாம் பச்சிலையால் அல்லல் அடைந்த அயலாரின் பிள்ளையின் ஆருயிர் காத்தீர், அகமார இன்புற்றீர். உம்மைநான் வாழ்த்துகின்றேன் நெஞ்சார, ஒப்பிலா அம்மையே அப்பா இனிது. - குயில், கவிதை இதழ், இசை - 1, குயில் 10; 15. 7. 48  5 உரிமைக் கொண்டாட்டமா? உரிமை மிகத் தொலைவில் இருக்கிறதே! அறுசீர் ஆசிரிய விருத்தம் புல்வெளி, சிறிய குன்று புனல்வற்றா ஓடை சார்ந்த நல்லதோர் காடு நோக்கி நடந்தனர் வேடர் சில்லோர். வல்வலை கட்டி னார்கள்; விலங்குகள் வளைக்க லானார்: ஒல்லெனப் பறை,தப் பட்டை ஒலித்தனர் காட்டில் எங்கும்! தாய்க்குதி ரைதன் குட்டி தன்னோடு நடுக்கம் எய்தி, ஏய்ப்பவர் கட்டி வைத்த வலையினில் ஏகி வீழச், சாய்த்தனர் தரையில் வேடர் தாம்பினால் கட்டிச் சென்றார்! தாய் செல்லும் குட்டி செல்லும் தம்காட்டைப் பார்த்த வண்ணம்! குட்டியைத் தாயை, வேடர் குப்பன்பால் விற்று விட்டார். அட்டியில் லாது குப்பன் அவற்றினை வளர்த்து வந்தான். குட்டிதான் வண்டி காக்கும் குதிரைவீரன் என்று கண்டான். கொட்டிலில் தாய்வ ருந்திக் கிடந்தது காட்டை எண்ணி. மண்டிடு தீனி தின்று வளர்ந்திட்ட குட்டி தன்னை, வண்டியிற் பூட்ட லானார்! வருத்தத்தை வழக்க மாக்கிக் கொண்டது குட்டி! ஓர்நாள் குடைசாய்ந்து போன தாலே வண்டியாற் பட்ட பாட்டை வந்துதன் தாய்க்குக் கூறும்: வண்டியிற் கட்டப் பட்டு வருந்திடு கின்றேன் நாளும்! புண்தொடை தன்னில் கொண்டேன்; புழுவெனத் துடித்தேன் அம்மா! கொண்டதோர் அடிமை தாளேன், குன்றொத்த வண்டி தன்னை அண்டாத நிலைமை பெற்றால் அதுவேஎன் உரிமை வாழ்வாம்! என்றது குதிரைக் குட்டி! இதற்குள்ளே குப்பன் வந்து குன்றுநேர் குட்டி தன்னை வண்டிக்குக் கொண்டு போனான்; நின்றிட நேர மில்லை நெடுவண்டி தனைஇ ழுத்துச் சென்றிடும்; இவ்வா றாகச் சென்றன பத்துத் திங்கள். வண்டியை இழுக்கக் குட்டி மறுத்தது! கண்ட குப்பன் சண்டியே, இனிமேல் நீயோர் தனிஏறு குதிரை என்றான். குண்டான்கூழ் பெற்ற ஏழை குதிப்பெனக் குதித்துக் குட்டி, வண்டியி னின்று பெற்ற விடுதலை வாழ்த்திற் றங்கே! தன்ஏறு குதிரை மீது தான்ஏறிக் குப்பன் செல்வான், மின்போல உடல்நெ ளித்து விரைமான்போல் ஓடும் குட்டி, பின்புறம் வண்டி யில்லை பெற்றேன்நான் விடுத லைதான் என்றெண்ணி மகிழும்! ஓர்நாள் ஏகிற்றுத் தாயின் அண்டை. அம்மாநான் உரிமை பெற்றேன், அம்மாநான் மகிழ்ச்சி பெற்றேன், இம்மட்டும் நான டைந்த இன்னல்கள் நீங்கப் பெற்றேன், அம்மிசுண் டெலிமேல் ஏறி அமிழ்த்தல்போல் என்னை வண்டி இம்மண்ணில் இனி அமிழ்த்தா தென்றது குதிரைக் குட்டி. கடிவாளத் தால்கி ழிந்த கடைவாயில் குருதி யாறு வடிந்திட எதிரில் நின்று மகிழ்ந்திடும் குட்டி தன்னை, உடைந்தஉள் ளத்தால் நோக்கி உரைத்தது: கிழித்தாய் ஏ ஏ அடிமையே உனைப்பி ணித்த ஆங்கில வண்டி யில்லை. வடக்குள குப்பன் உன்றன் வன்முது கின்மேல் ஏறிக் கடிவாளம் இறுக்கு கின்றான் கருதினாய் இல்லை! வாயில் வடிகின்ற குருதி காணாய்! வலிஉணர் கின்றா யில்லை அடிமையை வியந்தாய், உன்றன் அகத்தினில் இருளைச் சேர்த்தாய். வீழ்ந்தனை அடிமைச் சேற்றில், விடுதலை விழாமேற் கொண்டாய், ஆழ்ந்துபார் உன்நா டெங்கே? அருங்கலை ஒழுக்க மெங்கே? தாழ்ந்துதாழ்ந் தெவனை நீபோய்த் தாங்கிட ஒப்பு கின்றாய்? வாழ்ந்தநம் உரிமை வாழ்வை நினைக்கவும் மறுக்கின் றாயா? கடிவாளப் பிடிப்புக் கப்பால், கதைத்திடு மதமென் கின்ற நெடுங்குன்றுக் கப்பால், சாதி நிறைமுள்ளுக் காட்டுக் கப்பால், மடிவிலாக் கலைசொல் பூக்கும் மணிப்புனல் ஓடை தன்னை உடையபுல் வெளியி லன்றோ உன்முழு துரிமை உண்டு? என்றுதாய்ப் பரிஉ ரைத்தே எதிரில்தன் குட்டி தன்னை நன்றொரு முறையும் நோக்கி நளிர்புனல் ஓடை தன்னை, மின்னுபுல் வெளியை நெஞ்ச வெளியினில் நோக்கி நோக்கித் தன்னுயிர் விட்ட தங்கே தன்குட்டிக் குரிமை காட்டி! - குயில், கவிதை இதழ், இசை - 1, குயில் 11; 15. 8. 48  8 வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் நேரிசை ஆசிரியப்பா வீட்டுக்கோழி: காலையில் எனக்குக் கம்பு போடுவர் மாலையில் தவிடு பிசைந்து வைப்பர் இட்டலி உண்கையில் என்னையும் அழைத்துப் பிட்டுப் பிட்டுப் போட்டு மகிழ்வர் இரவில் எனக்கோர் இன்னல் வராமல் ஒருபெருங் கூடை கவிழ்ப்பர்! வருபிணி வராமல் வசம்புநீர் வார்த்துக் கழுவுவர் என்னை வளர்ப்பவர் எனக்குச் செய்யும் நன்மை நவிலத் தக்க தன்று. காட்டுக்கோழி: உன்னால் அவர்க்கு நன்மை யில்லையா? வீட்டுக்கோழி: முட்டை இடுவதற்கு மூலை யடைவேன் எதிர்பார்த் திருந்த என்வீட் டார்கள் சட்டியை அடுப்பில் இட்டுநெய் விட்டுஉடன் என்னைக் கூடையில் இட்டுக் கவிழ்ப்பர் பன்முறை கூடையைத் திறந்து பார்ப்பர் வெளிவரும் முட்டையை வெடுக்கென் றெடுத்தே அடைசுட்டு உண்டு மகிழ்வர் அனைவரும். காட்டுக்கோழி: அடைகாத் திடவும் முட்டைகள் அமைப்பரோ? வீட்டுக்கோழி: ஒருபெருங் கூடையில் உமிப ரப்பி அதன்மேல் ஐந்தோ பத்தோ முட்டையை அமைத்து மேல்எனை அமைத்து மூடுவர் இருபத் திரண்டு நாட்கள் அடைகாத்துக் குஞ்சு வெளிப்பட நெஞ்சம் மகிழ்வேன். இதனிடை எனக்குத் தீனியும் இடுவர் குஞ்சுகண்டு நான்கொள் மகிழ்ச்சி யைவிட வளர்ப்பவர் கொள்ளும் மகிழ்ச்சி பெரிது. காட்டுக்கோழி: குஞ்சுகள் அவர்க்கு என்ன கொடுக்கும்? வீட்டுக்கோழி: பதினைந்து நாளில்என் பசுங்குஞ் சுகளில் இதுநன்று மற்றை யதுநன் றென்று வாட்டம் பார்த்தே ஓட்டமாய் ஓடி இரண்டு மூன்றைப் பற்றித் தலையைப் பாளையிற் பாக்குக் காய்போல் திருகிப் பஞ்சு டம்பின் பஞ்சுமயிர் சிரைத்துக் குருதி கொட்டக் கூறிட்ட சதையை நெய்யோடு நெய்யாய் நீர்ப்பதம் எய்தச் சொய்எனத் தாளித்துச் சூப்பென்று அருந்துவர் அப்போது நானோ அழுதுகொண் டிருப்பேன். காட்டுக்கோழி: வடக்கன் தெற்குவாழ் தமிழர்க்கு அள்ளிக் கொடுப்பதாய்ச் சொல்லிக் குதிக்கின் றார்கள் உன்போல்! உன்போல்! உரைப்பது கேட்பாய் இங்குளார் உழைப்பின் பயனை யெல்லாம் வடவர் அடியோடு விழுங்கி வாழ்பவர் அடிமைகள் தமிழர்கள் என்றே அறைபவர் இதனை எண்ணி அழுதிடும் தமிழரும் முட்டைகள் குஞ்சுகள் முற்றும் இழக்கையில் அழுதிடும் உன்னையே ஒப்பவர் ஆவார் வீட்டுக் கோழியே வீட்டுக் கோழியே கேட்பேன் உன்னையோர் கேள்வி! உன்றன் தாயகம் எது? அதைச் சாற்ற முடியுமா? வீட்டுக்கோழி: சேலத்தி லிருந்து ஓசூர் செல்லும் வழியில் அழகு வழங்கு கின்றஓர் ஈக்காடு வேய்ங்குழல் இசைத்தட்டு வைக்கும் பூக்காட் டின்கீழ்ப் புதர்என் தாயகம் என்றே என்றன் பாட்டி சொன்னதாய் என் தாய் எனக்குச் சொல்லிய துண்டு. காட்டுக்கோழி: ஆசை மலர்க்கொடி யூசல் ஆடி அகமகிழ்ந் திருக்கும்என் அன்னை நாடும் அதுதான்! இதுகேள் உடன்பி றந்தோய் பூச்சி புழுக்கள் பொன்னிற மணிகள் உண்டு தன்மா னத்துடன் சேவலின் முன் மார்பு, கதிர் முகம் பார்க்கும் கண்ணாடி! ஒளியை இறைக்கும் வாலின் சிறகுகள் தரையிற் புரள்வது தனிஒரு காட்சி! பலவின் அடியில் இலவம் பஞ்சுமேல் இட்ட முட்டை யெலாம்பொறித் திட்ட பெட்டை, மாம்பழ மேனிப் பிள்ளைகள் யாழும் குழலும் இசைத்துச் சூழ நரிகள் அஞ்சிப் பறக்கும் அங்கே! கம்பு போட்டுக் கழுத்தை அறுக்கும் வடக்கன் ஆட்சி போன்ற இடக்கு நம்தாய கத்தில் நாம்கேட் டறியோம் ஆதலின் பற! நம் தாயகம் பெறவே! வீட்டுக்கோழி: இறக்கை இருந்தும் பறக்க வகையிலேன். காட்டுக்கோழி: என்றன் முதுகில் ஏறு துன்ப மில்லாத விடுதலை தோய்கவே! - குயில், குரல் 2, இசை - 17, 3. 11. 59  9 கற்புக் காப்பியம் பொன்னி : வருக அத்தான் இரவில்! எட்டுமணி ஆகிவிட்டதே! ஆக்கிய சோறும் ஆறி விட்டதே (என்று கூறிப்) பொன்னனை வரவேற் றுள்ளே போய்அவன் சட்டையைக் கழற்றி வைக்கச் சொல்லி இட்டநாற் காலியில் இருக்க வைத்து விசிறியால் மெல்ல விசிறிப் பின்னர் கைக்கு நீர் வார்த்துக் கழுவ விட்டே இட்ட இலையில் இருத்திச் சோறு, கறி இட்டு கணவனுக் கருத்தி மகிழ்ந்தாள். பொன்னன்: பொன்னியே, வெளியில் போக வேண்டும் அன்பர் ஒருவர் என்வரு கைக்குக் காத்தி ருப்பார், கதவைத் தாழிட்டுப் படுத்து றங்கு. பதினொரு மணிக்கெல்லாம் வந்து விடுவேன் வருத்தம் வேண்டாம். பொன்னி: தொல்லைக் கெல்லை இல்லை அத்தான்! விடிய வெயிலும் எழுமுன் சென்றீர் எட்டு மணிமுதல் இடைவி டாமல் தச்சு வேலையில் தளரா துழைத்தீர் பாயிட்டுத் தலையணை இட்டேன்! படுங்கள்; காலுக்கு வருடுவேன்! காற்றுக்கு விசுறுவேன்; விருப்பம் முடித்து விடியும் வரைக்கும் தூங்கலாம்! சொல்லுவ தைக்கே ளுங்கள். தாழ்இடு! போய்ப்படு, தடுக்க வேண்டாம். (என்று வெளியிற் சென்று விட்டான்.) பொன்னி தாழிட்டுப் போய்ப்ப டுத்தாள் துன்பம் அவனுக்குத் தோன்றுமோ என்று நினைத்து நினைத்து நெஞ்சம் உருகினாள். இரவோ பதினொரு மணியை எய்தியது. தெருவின் திண்ணையில் இருவர் பேசுவது மெதுவாய்ப் பொன்னி காதில் விழுந்தது. குப்பன்: பரத்தை ஒருத்தி; அவளிடத் தில்ஒரு கம்மாளன் கும்மாளம் போட வந்தான்; இருவரும் வீட்டினுள் பேசி இருக்கையில் மளமள வென்று மஞ்சினி என்பவன் வருவதைப் பரத்தை வகையில் உணர்ந்து கம்மா ளன்தனை அறைக்குள் சாத்தி மஞ்சி னிக்கு வரவேற் பளித்தாள். மஞ்சினி மனத்தில் ஐயம் வந்தது கதவைத் திறந்து காட்டென்று கேட்டான். அதற்குப் பரத்தை அவன்என் மாமன் கண்ணில் லாதவன் காதுகே ளாதவன் என்று கூறிச் சென்று, கதவைத் திறந்து பொன்னனின் செங்கை பற்றி விரைந்து வெளியே சென்று விட்டாள் வருவாள் என்று மஞ்சினி இருந்தான். (குப்பன் இப்படிச் செப்பக்கேட்ட கண்ணம்மா எனும் கைம்பெண் கூறுவாள்:) கண்ணம்மா: ஐயா இவையெல்லாம் எங்கே நடந்தன? அந்தத் தெருப்பெயர் என்ன? அந்த வீட்டின் எண்ணையும் விளம்ப வேண்டும். குப்பன்: தெருவின் பெயரும் எனக்குத் தெரியாது, வீட்டின் எண்ணும் விளம்ப அறியேன், (இதனை அறையில் இருந்து பொன்னி கேட்டவள் திடுக்கென்று கதவைத் திறந்து வெளியில் வந்து குப்பனை வேண்டுவாள்:-) பொன்னி: அந்த இடத்தைநான் அடைய வேண்டும் காட்ட முடியுமா? காட்ட முடியுமா? குப்பன்: அவன்உன் கணவனா? ஆனால் வருவாய்! கண்ணம்மா: என்னைத் தனியே விட்டுநீர் எங்கே போக எண்ணினீர்! புதுமை புதுமை! குப்பன்: புதுமை ஒன்று மில்லை! இதுமெய், வீடு காட்டி விட்டு மீளுவேன். (திண்ணையில் கண்ணம்மா இருந்தாள், இருவரும் பரத்தை வீடு நோக்கிப் பறந்தனர். பொன்னி பரத்தை வீட்டினுள் புகுந்தாள். குப்பன் தெருவில் குந்தி இருந்தான், வீட்டிற் புகுந்த பொன்னி, வீட்டின் அறையை எட்டிப் பார்த்தாள், அதிர்ந்தாள்.) மஞ்சினி: நீயார்? யாரைப் பார்க்கின் றாய்நீ எதற்கஞ்சு கின்றாய்? எல்லாம் தருவேன். (என்ற குரலைப் பொன்னி கேட்டாள்.) பொன்னி: என்றன் கணவரைத் தேடி இங்கே வந்தேன். (என்று வருந்தி நின்றாள்) மஞ்சினி: நானும் மனிதன்! நாயா! பேயா! (என்று கூறி எதிரில் வந்து கையைப் பற்றி, மற்றொரு கையால் தெருவின் கதவைத் திடுக்கெனச் சாத்தினான். பொன்னனும் பரத்தையும் போனார், வழியில் வடிவுதன் வீட்டு வாயிலில் நின்று காரிருள் பிளந்து கண்ணைச் செலுத்தினாள்.) வடிவு: முகவரி முற்றிலும் மறந்து போனதா? (என்றாள். பொன்னன், பரத்தை நீட்டிய இருகை விலக்கி வடிவின் இல்லம் நோக்கி நடந்தான். நுணுக்கம் அறிந்தே! வருவான் என்ற வடிவுதன் வீட்டின் அறையை அணுகினாள் அங்கொரு கரும்பேய்! அழுது கொண்டி ருந்தது.) வடிவு: பேய் பேய் ஐயோ ஐயோ பேய் பேய், (இக்குரல் கேட்ட பொன்னன் ஓட்டம் பிடித்தான் பேயும் பேசிற் றங்கே:-) பேய்: பேய்நான், பிழைசெய்யும் பெண்கட்குத் தாய்நான் காசுக் குடலைவிற்கும் கயமை வேண்டாம் உயிர்தந்தும் கற்பைக் காப்பதே உயர்வாம். என் வலக் கையை அயலான் இடதுகை தொட்டதக் கையைத் தொலைத்த தென்கை. ஒருகையால் என்னை ஒருகை பார்ப்பதாய் அம்மியின் குழவிகொண்டென் தலையில் அடித்தான்; மண்டை உடைந்த புண்ணின் குருதிபார்! ஆயினும் அவனால் தூக்க இயலா அம்மி தூக்கி அவன்மேல் எறிந்தேன்; அம்மியே தோளிற் பட்டிருந் தால்அவன் இருப்பான்; மார்பில் பட்ட தென்றால் இறப்பான். தோட்ட வழியால் இங்கே வந்தேன். இனி நீ வாழ்வாய் அம்மா என்றுதன் வீட்டை நோக்கி ஏவினாள். தெருக்கதவு சாத்தி யிருந்தது. தெரிந்த பரத்தை, தெருவில் குப்பனைப் பார்த்தாள். பரத்தை: யாவர் நீவிர்? எங்கு வந்தீர்? யாருக் காக, காத்திருக் கின்றீர்? குப்பன்: உன்னிடம் வந்தவன் வேறொ ருத்தியை அன்பு வேண்டி அறையில் உள்ளான். வேறொ ருத்தியை விரும்பிய எனக்கு நீதர வேண்டும் நிலைத்த இன்பம், வாராய் என்னிடம்! (என்று வணங்கி) இருவர் அடுத்துள்ள இலுப்பைத் தோப்பை அடைந்தனர் அன்பு செய்வ தற்குமுன் பேசிப் பேசிக் காலங் கடத்தினார்; அதே நேரத்தில் பேயொன்று கண்டனர் பேய்: எந்தப் பரத்தை? எந்த மனிதன்? என்ன வேலை? இயம்ப வேண்டும் பரத்தை பறந்தாள்! குப்பனும் எடுத்தான் ஓட்டம்; பேய்பேய் என்றே. பொன்னன் வீட்டை அடைந்தான். அறையில் கண்ணம் மாவைக் கட்டிலில் கண்டான். பொன்னன்: நீயார்? புதிய நிலைகாண் கின்றேன் அஞ்சுதல் வேண்டாம், படுத்திரு, படுத்திரு. கண்ணம்மா: நானும் குப்பனும் திண்ணையை நண்ணினோம் குப்பன் பொன்னிக்கு வீடு குறிக்கப் போனான். நானோ இங்குப் புலம்பினேன். பொன்னன்: புலம்ப வேண்டாம். பெண்ணே கண்ணே எனக்கும் இந்தப் படுக்கையில் இடங்கொடு. கண்ணம்மா: திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் பொன்னியைத் தாய்வீடு போகச் சொல்லுக. பொன்னன்: அதுவும் சரிதான். அவளும் உன்போல் அழகுடை யவளும் அல்லள் அல்லள், என்று கூறிக் கண்ணம் மாவிடம் நெருங்கிப் படுத்தான்! ஒருகுரல் கேட்டான்- குரல்: பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்ப டாது, மாதரும் கற்பை மறப்பா ராயின் தீதெல்லாம் செழித்து வளரும் நாட்டில்! ஒருத்தியைக் கண்டால் ஒன்பது நாய்கள் துரத்துவது தொலைவ தெந்த நாளோ? காசுக்குக் கற்பி ழக்கும் பெண்கள் மாசுக் கேவாழ் கின்றனர் நாட்டில்! பொன்னியின் முழக்கம் கேட்ட பொன்னன் கண்ணம் மாவின் கழுத்தைப் பிடித்துத் தோட்டத்துப் பக்கம் துரத்தி வந்தான். பொன்னி வீட்டிற் புகுந்தாள், தலையில் செந்நீர் ஆறு தோளெலாம் செறிந்தது. அவள்தலை அவிழ்ந்து மெய்யை மறைத்தது; பெருமூச்சுத் தீகக்கும் பெருமலை! அவளைப் பொன்னன் கண்டான் அஞ்சிடான். பொன்னன்: இரவு மூன்று மணிஎய் திற்று வீட்டை விட்டுநீ எங்கே சென்றாய்? என்று கேட்டான்; நின்று நடுங்கினாள். அதேநே ரத்தில் கண்ணம் மாவும் அங்கு வந்தாள் அலற லானாள்:- கண்ணம்மா: திருமணம் என்னைச் செய்து கொள்வதாய்ப் புகன்றனை. என்னைப் புணர்ந்தனை இந்தப் பரத்தை இடத்திலும் பழக எண்ணினை என்றுதோற் பாவை எழுந்தா டல்போல் ஆடினாள். அங்கே அதேநே ரத்தில் மஞ்சினி தன்னை மார்பில் சாய்த்துத் தோகை என்பவள் தோன்ற லானாள். தோகை: என்றன் கணவனை இந்தப் பொன்னி அம்மியால் தோளில் அடித்து வீழ்த்தி இங்கே வந்து கொஞ்சு கின்றாள். பழிக்குப் பழிவாங் கிடுதல் வேண்டும் என்று பொன்னியை இருகையால் தாவினாள். தோகையைப் பொன்னன் இருவென்று சொல்லிப் பொன்னியை நோக்கிப் பின்னும் கேட்டான். பொன்னன்: எதற்குத் தனியாய் வீட்டைவிட் டோடினாய் கற்பை விலைக்குக் காட்டவா சென்றாய்? போகும் உயிரைப் போகாது காத்து நாவும் குழறப் பொன்னி நவில்வாள்: பொன்னி: பரத்தை வீட்டில் படுதுயர் நீக்க எண்ணினேன், வந்தேன். நீங்கள் இல்லை மஞ்சினி என்னை மடக்கிப் பிடித்தான் கையை முறித்தேன். குழவியால் அடித்தான், அம்மி தூக்கி அவன்மேல் எறிந்து கொல்லையில் ஓடி உம்மைக் கூவிய வடிவுக்கு வாய்மை கூறி வந்தேன் என்று கூறினாள். பொன்னன் இயம்புவான்: பொன்னன்: நீயேன் வீட்டைவிட்டு நீங்கினாய் அதைச்சொல்? இதற்குள் தோகை அங்கே இருந்த கொடுவாள் ஒன்றை எடுத்துக் கொண்டாள்; பொன்னனும் அங்கொரு புதிய உலக்கையைக் கையில் எடுத்துக் கண்சிவந் திட்டான். இருவர் முயற்சியும் பயன்படு வதற்குள் குவளை விழிகளும் கூம்பின, பொன்னி துவளத் துவள இடைஆ டியது அடியற்ற மரமே ஆயினாள்! வீழ்ந்தாள். அவளொரு பரத்தையா? அந்தக் கற்பரசி கொலையா செய்தனள்? இந்த நிலவுலகு பொன்னி பின்சென்று நிலைகவே. - குயில், குரல் 3, இசை 19; 25. 10. 60  10 நீலவண்ணன் புறப்பாடு பார்ப்பனப் பூண்டறுக்க மூவேந்தர் எழுந்தனர் நீலவண்ணன் நிலவிற் சென்றான் நீல வண்ணன் நல்ல நிலவில் சாலையில் தனியே செல்லும்போது தன்மான மில்லாத் தமிழன் ஒருவனை, என்மா மாஎனைத் தெரியுமா என்றான். எங்கோ பார்த்ததாய் எனக்கு நினைவுதான்! உங்கள் முகவரி உரைப்பீர் என்றான். இப்படி இளிச்சவாய்த் தமிழன் கேட்கவே, முற்பட உங்கள் முகவரி சொல்வீர் என்றன் முகவரி பின்னர் இயம்புவேன் என்று நீல வண்ணன் இயம்பினான். தமிழன் தன் முகவரி சாற்றுவான் இந்தத் தெருவே இந்தத் திருச்சிதான் அதோதெரி கின்றதே அதுஎன் வீடுதான்! என்றன் மகளை மணந்தவன் எங்கோ சென்றவன் பத்தாண்டு சென்றதும் வரவே யில்லை! என்ன செய்து தொலைவேன்! நேற்றுச் சோதிடம் கேட்க நேர்ந்தது; மருமகன் ஊருக்கு வந்து விட்டான். வீடு தெரியாது அலைகின் றான்,இனித் தெரிந்து கொள்வான் வீட்டைச் சேருவான் என்று நன்றாய் இயம்பினார். ஆதலால் என்றன் மருமகனை எதிர்கொண் டழைக்கவே இப்படிக் கிளம்பினேன் என்று முடித்தான். நீலவண்ணன் திடீர்ப் புளுகு உங்கள் மருமகன், உங்கள் மருமகன், நான்தான் மாமா, நான்தான் மாமா வேறுயார் மாமா? வேறுயார் மாமா? என்கண் ணீரும் உள்ளே இழுத்துக் கொண்டது மாமா! தொண்டையும் அடைத்துக் கொண்டது மாமா கூ கூ என்று,நான், அழவும் முடிய வில்லை, மாமா, தொடவும் முடிய வில்லை தொட்டுநான் கட்டிப் புரண்டு கழுதையைப் போல வெட்டிக்கு அலறவும் விலாவும், கையும், இடந்தர வில்லை, என்றன் மாமா நடந்ததை மறந்து விடுவது நல்லது. நானே கொடுமையாய் நடந்திருந் தாலும் ஏனோ அதையெலாம் இழுக்க வேண்டும்? மகளைப் பார்க்க வேண்டும் மாமா, மகளைக் காட்ட வேண்டும் மாமா, வாரும் மாமா நிற்க லாமா என்று நீல வண்ணன் துடிக்கவே. தமிழன் தடதடா தடதடா என்று சவாரிக் குதிரைபோல் தன்மரு மகனோடும் ஓடினான். ஓடி மகளைக் கூப்பிட்டுப் பாப்பா பார் உன் பல்லாய் நெய்யை! இந்தா உன்றன் எள்ளடை! உண்பாய்! போடுசாப் பாட்டைப்! பொட்டணத் தைஅவிழ்! கைத்தட் டினிலே கணிச மாய்வை! பாக்கை நீயே கொடு! போ! துன்பம் பச்சைப் புறாவாய்ப் பறந்து விட்டது! மிச்ச மெல்லாம் விடிந்தால் பேசலாம். என்று தமிழன் இயம்பினான்! தமிழ்மகள், விரைவில் அனைத்தையும் முடித்து வீட்டின் தெருப்பு றத்தில் தெற்குப் பார்த்த சன்னல் அறைக்குள் இன்பம் நுகர்ந்தாள். குறிப்பு: (நீல வண்ணன் நிகழ்த்திய வண்ணமே தமிழன் தனது முகவரி தந்தான். முகவரி மட்டுமா? முன்வரி பின்வரி அனைத்தையும் அடுக்கினான்! நீல வண்ணனை உன்றன் முகவரி தன்னில் ஒருதுளி கிளத்துவாய் என்று கேட்டதுண்டா? இல்லவே இல்லை. இட்டுக் கொண்டுபோய் மகளோடு சேர்த்த மடச்சாம் பிராணி அவன்யார் என்பதை நன்றாய் அறிய எண்ணிய துண்டா? இல்லவே யில்லை!) நீல வண்ணனோ, நீளக் கூந்தலை விழிக்கெண் டைகளைக் கிளிப்பேச்சுக் காரியைப் பெண்டா ளுவதோர் பெருநிலை பெற்றான். மறுநாள் மாமனார் பெட்டிச் சாவியைக் கைப்பற்ற லானான்; கடைசி யாக தமிழன் வீட்டின் தனிஅதி காரியும் ஆனான். ஐந்தாறு திங்களும் ஆயின! ஒருநாள் நடுப்பகல் ஒரும ணிக்குக் குளிக்கும் நீல வண்ணனுக்குக் கோதை முதுகு தேய்த்துக் கொண்டிருக் கையில் இலங்கை யினின்று முத்தன் வந்து முன்கட்டில் நின்ற படியே பின்கட்டில் வண்ணன் மனைவியைக் கண்டு கொதித்தான்; யாரடா நீஎன்று ஓர்அதட்டு அதட்டினான். தமிழ் மகளேஉன் சாயம் வெளுத்ததா? என்று சொல்லி எரிந்து நின்றான். அவள் அவனைப் பார்த்தாள் அப்போது அழகோடு கணவனைப் பார்த்த தமிழ் மகள், தனது தடித்த னத்தை எண்ணினாள், நடுங்கினாள்! அதற்குள் எதிரில் நீலவண்ணன் மூக்கு உடைந்தது நின்ற நீல வண்ணன் மூக்கில் முத்தன் குத்தினான்; ஒருகுத்துக் கொளகொள என்று குழைந்தது; நீலன் மூஞ்சி மூக்கிருந்த இடத்தில் நீல னுக்குச் செந்நீர்க் கிணறு திடீரென்று திறந்தது. அதற்குள் தந்தையும் அங்கு வந்தான் தமிழ்மகள் தந்தையும் வந்து, முத்தனைக் கண்டான்! கண்ணை நாணம் மறைத்தது, ஏமாற்றி னாயே நாயே என்று நீல வண்ணனை நோக்கி நிகழ்த்தினான். என்மகள் எங்கே எங்கே? என்றான், கிளிமகள் இல்லை; கிணற்றின் அண்டையில் துணிகள் துவைக்கும் கல்லும் இல்லை. மகளே மகளே என்று கிணற்றை எட்டிப் பார்த்தான்; எழிலுறு கூந்தலே மிதந்தது! தாவணி, பூவணி மிதந்தன! இறந்தாள் என்கிளி, இறந்தாள் என் மகள், இவனால் இறந்தாள் என்று கூவினான். முத்தன் முடுகு நீல வண்ணன் நெட்டைக் கழுத்தைப் பிடித்தி ருந்த முத்தன், திடீரென்று கிணற்றில் பாய்ந்து, கிளியைத் தூக்கி மேலே வந்தான். மெல்லியை நோக்கினான். சாகவில்லை என்று கண்டான்; தடாலென்று கீழே அடித்தான் உடம்பு கிழிந்தது; தொலைந்தாள் என்று நீலனைத் தொட்டான். நீலவண்ணன் அலறல் ஒன்று கேளுங்கள்! ஒன்று கேளுங்கள்!’ ஒன்றைக் கேட்டபின் கொன்று! என்று கைகளை ஏந்தினான் நீலன், நீலன் சொன்ன தென்ன? குற்ற வாளி, நான்குற்ற வாளி! ஆயினும் என்னை அடிப்பது தவறு; காரணம் நானோ கண்ணை யர்மகன்; பார்ப்பான்; என்னை ஒறுப்பது பாவம். தந்தை கும்பிட்டான் என்றே இயம்பக் கேட்ட தந்தை சாமி நீங்களா? சாமி நீங்களா? என்று கும்பிடக் கையை எடுக்குமுன், முத்தன் ஒன்று வைத்தான் மாமனை. மூலையில் வீழ்ந்தான் முட்டாள் மாமன், நீல வண்ணன் நின்றா இருப்பான்? நீலவண்ணன் ஓட்டம் ஓடினான், ஓடினான், துரத்தத் துரத்த ஓடினான், ஓடினான், ஓடினான் மறைந்தான். பாண்டி நாட்டில் சேரன், பாண்டி நாடு புகுவதாய் வீரன் ஒருவன் வந்து விளம்பினான். அதனைப் பாண்டிய மன்னன் கேட்டதும், வீட்டுக் கொருத்தன் படைவீடு சேர்க, நாட்டுக்கு வருவதோர் நலிவு தீர்க்க, என்று கட்டாய ஆணை இசைத்தான். பாண்டியன் பாசறை பாண்டி நாடே படைவீ டானது; அங்கங் குள்ள மங்கையர் அனைவரும் பொன்நிகர் கணவரைப் போருக் கனுப்பி கல்நிகர் மனமும் கரைய அழுதனர்; மீன்நிகர் கண்களில் நீரைப் பெருக்கினர். கணவரைப் போருக்கு அனுப்பிய தெண்டிரை தேன்நிகர் சொல்லாள், தெண்டிரை என்பவள் ஆளனை அறப்போர்க்கு அனுப்பு கின்றவள், வெற்றி மாலையோடு மீளுக அல்லது பெற்ற புகழுடல் என்னைப் பேணுக என்று கூறி, வாளை எடுத்து நன்று தழுவி நடையழகு பார்த்தாள். தெண்டிரை பிரிவைப் பொறாள் ஆயினும் அன்னவன் அகன்றதால், பிரிவு நோயினால், நுண்ணிடை மளுக்கென்று முறியப் பஞ்சணை ஏறிப் படுத்தவள், படுத்தவள். தெண்டிரை மகன் அவள் மகன், ஒருபுறம் அழுதுகொண் டிருந்தான். பசி பசி என்று பகர்ந்தது வயிறு, கூவி அழுத ஓசை கேட்டொரு முக்கா டிட்ட கிழவி முன்வந்து பக்கத்தி லிருந்து வேடிக்கை பார்த்தாள். பையனின் அழுகையோ பஞ்சணை தன்னைக் குலுக்கிய தாலே குப்புறக் கிடந்த அன்னை தலைநிமிர்ந்து என்ன வேண்டும்? சோறும் கறியும் சூடாறும் முன்னம் போய்நீ உண்பாய் என்று புகன்றாள். அழுத பையன் அங்கே செல்லுமுன், கிழவி ஓடிக் கிடைத்தவை அனைத்தையும் பானையோடு சட்டியோடு கொல்லைப் பக்கம் திருடிச் சென்றாள்! சிறிய பிள்ளையோ சிறிது நேரம் சென்றபின் வந்து தேடினான் சிறிதும் அங்கே இல்லை. வாடினான் மயங்கி வீழ்ந்தான், இறந்தான். பஞ்சணைப் பாவை நிலை பஞ்சணைப் பாவையின் நெஞ்சமோ அறையில் காதற் பாட்டுப் பாடி யிருந்தது. பையன் இறந்ததும் பதைத்ததும் தமிழ்மகள் அறியவே இல்லை. இந்த அழகில் தமிழ்மகள் தன்னைப் பெற்ற தாயார் அங்கு வந்தாள். அவள்நிலை அறிந்தாள் பையனைத் தேடினாள்; கொல்லையிற் பார்த்தாள்; இறந்து கிடந்த பேரனைக் கண்டதும் அலறினாள்; அடிஎன் மகளே ஓடிவா என்று கூவினாள், ஏந்திழை கேட்டாள். தமிழ்மகள் பிணத்தைக் கண்டாள் ஓடி வந்தாள்! வாடிய மாலையை அள்ளி அணைத்துக் கூவி அழுது, பிள்ளையைத் தரையில் போட்டுப் பின்புறக் கொல்லை வழியாய்க் குடுகுடு வென்றே சென்று பார்வையை நாற்புறம் செலுத்தினாள். முக்காட்டுக் கிழவியும் செக்கெனப் பருத்த பார்ப்பனன் ஒருவனும் பலாஇலை தைத்ததை விரித்துச் சோற்றில் குழம்பை விட்டுப் பிசைவதும் மிசைவது மாக இருக்கையில், கண்டு கடிதில் நெருங்கிக் காலால். நீலன் மாற்றுடை கழன்றது மண்டையில் உதைக்கையில், நீல வண்ணன் தன்னுருக் காட்டித் தரையில் வீழ்ந்தனன். அன்னவன் சொன்ன தென்ன வென்றால்: பசிக்குச் சோற்றுப் பானை திருடினேன் நசுக்கி என்னைக் கொல்லுதல் நல்லதா? நானொரு பார்ப்பனன்? நானொரு பார்ப்பனன் என்றான். மற்றொரு பார்ப்பனன், இஞ்சி தின்ற குரங்குபோல் இருந்தான் அங்கே, குழந்தை உண்ணும் சோற்றைக் கிழவிபோல் வந்து திருடிய நீல வண்ணனால் குழந்தை இறந்த செய்தி கூறவே முத்தன் காதிற் பட்டது, முத்தன் மன்னன் காதில் மாட்டினான்! மன்னன் கள்வனை விடாதீர் என்று கழன்றான்: அந்நே ரத்தில் அரசனும் எதிரியும் சண்டை நிறுத்தித் தம்மில் ஒத்தனர்! தமிழே தமிழர் தாய்மொழி என்றும் தமிழே தனிமொழி சார்வு மொழியல்ல என்றும் நடுவில் எழுந்த ஐயம் இரண்டர சர்க்கும் இல்லா தொழிந்தது. பாண்டியன், சோழன் படைத்தலை வர்கள் ஈண்டினர் அரண்மனை தன்னில் ஈண்டி நீல வண்ணனை எம்முன் நிறுத்துவீர் சோறு திருடிய தொழும்பனைக் கொணர்க, பிள்ளையைக் கொன்ற பேடியை எம்முன் நிறுத்துக நிறுத்துக என்று நிகழ்த்தினர். எதிரில் கூட்ட நடுவில் இழிவுறு கோழைப் பார்ப்பான் கூறு கின்றான்: அரசரே, அந்த நீல வண்ணன் இங்கே இல்லை, தேவர் உலகம் சென்று விட்டான். தேட முடியுமா? - குயில், குரல் 3, இசை 2; 8. 11. 60  11 இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! எண்சீர் ஆசிரிய விருத்தம் என்கணக்கன் எல்லப்பன் இல்லா நேரம் இரிசப்பன் என்னிடத்தில் வந்து குந்தி உன்கணக்கன் பெரும்பொய்யன் என்று சொன்னான். உண்மையிலே அவன்தீயன் என்று சொன்னான். அன்னவனை இன்றைக்கே நீக்க வேண்டும். அன்பினால் இதைஉன்பால் சொல்லு கின்றேன் என்றுரைத்தான். இரிசப்பா என்க ணக்கன் ஏன்தீயன்? உரையப்பா என்றுகேட்டேன். நேரிலும்நான் அறிந்ததுண்டு பிறர்வா யாலும் நிறைய நான் கேட்டதுண்டு, பொய்யா சொல்வேன்? பாரில்அவ னைப்போல முடிச்சு மாறிப் பையனைநாம் பார்த்திடவும் முடியா தென்றான். சீரியஎன் எல்லப்பன் தீயன் ஆன சேதியைநான் இன்றுதான் கேட்க லானேன் ஏரோட்டப் போகாமல் இரிசப் பன்தான் எல்லப்பன் மேற்பழியை அடுக்கு கின்றான். என்நலத்துக் குழைப்பதாய்ச் சொல்லிச் சொல்லி, இயல்புடையார், நண்புடையார், சொந்தக் காரர், தந்நலத்தை எண்ணிஎனை ஏய்த்துச் சென்றார். தனிஓர்ஆள் எல்லப்பன் துணையாய் நின்றான்; அன்னவனும் போய்விட்டால் நிலைமை என்ன? ஆம்! எனினும், அன்புள்ள இரிசப் பாநீ சொன்னபடி எல்லனைநான் நீக்கி விட்டேன், தோதாய்நீ வேலைபார் என்று சொல்லி. போய்வாஎன் றேஉரைத்தேன்! இரிசன் போனான், புதன்கிழமை மாலையிலே சாலை ஓரம், நேயனாம் கணக்கனிடம் இரிசன் என்ற நெருப்புமனக் கொடும்பாவி நிகழ்த்து கின்றான். நாயேடா எல்லப்பா உனைத்தொ லைத்தேன் நான்தாண்டா இனிக்கணக்கன்; என்வி ருப்பம் தீயேஎன் றாலும்அது தென்றல்; என்றான்; செவிமடுத்தேன் அவன்சொல்லை மறைந்து நின்றே. அலுவலகம் இரிசனார் அதிகா ரத்தில் அடங்கிற்று, நானும்உள் ளூரில் இல்லை: தொலைநோக்கிச் சென்றுவிட்ட தாய்நி னைத்தான். தொடங்கினார் காரியத்தை இரிச னாரும். விலைஏறப் பெற்றஎன் மேசை யைத்தன் வீட்டுக்கு வண்டியிலே ஏற்றிச் சென்றான்; குலைகுலையாய்ப் பழந்தொங்கும் மாம ரத்தைக் கொலைகாரன் சூளைக்கு விற்று விட்டான், வெட்டுமுன்னே குறுக்கிட்டான், வெட்டா வண்ணம் வெடுக்கென்று கோடரியைப் பறித்துக் காத்தேன்; பெட்டியிலே இருப்பென்ன என்று பார்த்தேன். பெரியதொகை காணவில்லை. என்ன என்றேன். எட்டுநூ றெடுத்துள்ளேன் என்பற் றாக எழுதிவைத்தேன் பார்கணக்கை என்று சொன்னான் இட்டார்கள் சிறையினிலே இரிச னாரை எல்லப்ப னைக்கெஞ்ச யாரால் ஆகும்? - குயில், குரல் 1, இசை 5; 15. 6. 62  12 பச்சைக்கிளி பஃறொடை வெண்பா கலி வெண்பா காட்டுக் கதிகாரி கண்ணையன், காலையிலே வீட்டுக்குப் போக மிதிவண்டி ஏறினான். ஆலஞ்சா லைதாண்டி அல்லிக் குளம்தாண்டி வேலங்கா டொன்றும் விலக்கிச் செலும்போது செந்தாழை வேலிக்குத் தென்னண்டை ஓர்புலியை அந்தோஎன் றான்கண்டே! அங்கோர் இளவஞ்சி பாவாடை கட்டிப் பலாவின்கீழ் மென்பட்டுப் பூவாடை போர்த்துப் புனலொழுகு கண்மூடி நீளக் கிடந்தாள்! நிலாமுகத்தைத் தின்னாமல் வேளைப் புதர்ஓரம் வெள்ளாட்டைத் தின்னுதற்குப் போன புலிகண்ட கண்ணையன் போபோஎன் மானை விடுத்தாயே என்று மனந்தேறி நின்றான்! மிதிவண்டி என்செய்வான்? நீண்டபனை ஒன்றின்மேல் சார்த்தி உணர்ச்சிப் பெருக்கால் வழியை மறிக்கும் மலர்ஓடை தாண்ட விழியூன்றி நீரில் விரல்பட்ட நேரத்தில் நில்லப்பா என்றசொல் கேட்டான் நிலைமாறிச் சொல்வந்த திக்கைச் சுவைத்தான் இருவிழியால்! நீண்ட சடைமுடியை, நெற்றித் திருநீற்றை ஆண்டியைக் கண்டான், அடஇழவே என்றெண்ணி ஓடையின் அப்புறத்தில் ஓவியத்தைத் தான் காட்டிக் காடு விழுங்குமுன்னே காப்பாற்ற வேண்டுமென்றான். ஆண்டி சிரித்துரைப்பான்: அப்பனே, காப்பவன் ஈண்டுநீ தானா! - இது கேட்ட கண்ணையன் உம்மால் முடிந்தால் ஒருதொல்லை இல்லைஎன்றான். என்னால் முடிவதென்றால் என்னப்பன் ஏன் என் றுரைத்தான் துறவி! உமக்கப்பன் இங்கே வரத்தகுந்த போது வரட்டும், அதற்குள்ளே ஓநாய் கடித்துண்ணும் ஓநாய்க்கு மீட்சிதர ஏனோ தயக்கம்? எனக்கேட்டான் கண்ணையன். வேண்டாம் குழந்தாய்கேள்! மெய்யான பெண்ணல்ல தூண்டிலே! நீயோர் துடுக்குமீன். அண்டாதே! பற்றுள்ள கண்ணுக்குப் பச்சைக் கிளிஅவள் பற்றற்றுக் காண்பாய் புரளும் மலைப்பாம்பை என்றான் துறவி! அதேநேரம் ஏந்திழையும் நன்று விழிமலர்ந்தாள் நாற்புறமும் நோக்கினாள், ஆண்டிக்குக் கும்பிட்டாள்! ஆளனைக்கை ஏந்தினாள்! கண்ணையன் விண்ணிற் பறந்தானா! காரோடைத் தெண்ணீரை நீந்தித்தான் சென்றானா யார் கண்டார்? பெண்ணருகில் நின்று, பிறைநுதலே என் என்றான் அன்னைஇல்லை தந்தைஇல்லை அத்தையிடம் நான்வளர்ந்தேன் என்னைஎன் அத்தைமகன் ஏற்றுக்கொள் என்றான் ஒழுக்கம் இலாஇடத்தை உள்ளம் தொடுமா? வழிக்கு வரமாட்டேன் என்ப துணர்ந்தான் கசக்கிப் பிழிந்துண்ணக் காத்திருந்தான் காட்டின் பசிக்கிரை ஆவதுவும் பாக்கியமென் றிங்குற்றேன் என்றாள். அதே நேரம் நீந்தி எதிர்வந்து நின்றான் துறவி! நிலைஆய்ந்தாள் நேரிழையாள் என்ன குறைஉனக்குப் பெண்ணே எனக் கேட்டான் பின்னையும் ஆண்டியவன் பேசத் தொடங்குமுன்னே கண்ணையன் தோள்புறத்தில் கானமயில் போய்மறைந்தாள் திண்ணமிவள் என்னைத் தெரிந்துகொண்டாள் என்றெண்ணிக் கத்தி யெடுத்துக் கடிமுனையை நேர்நிறுத்தி ஒத்துக்கொள் என்னை! மறுத்தால் ஒழிந்துபோ என்று துறவிசொல்ல - என்ன இது என்ன இது? நின்ற துறவிஉன் நேர்மாம னாஎன்று கண்ணையன் கேட்டான். கன்னல் பதைத்துரைத்தாள்: பெண்ணாசை தீர்ந்த பெருமான் இவன்அல்லன் அத்தை மகன்தான். அறங்காணாத் தீயன்அவன். கத்தியால் குத்தட்டும், கண்டதுண்ட மாக்கட்டும். கண்டிருங்கள்! ஆனால்இக் கைகாரன் என்உடலைக் கொண்டுபோ காமல் குழிபறித்து மூடிடுங்கள். என்றாள்-எதிர்வந்தாள்; எடுத்துக்கொள் கத்தி என்றாள். நின்றாள் இடியைச் சிரிப்பாக்கி நேர்இறைத்தாள்! கண்ணையன், அத்தீயோன் கத்தியைக் கைப்பற்றிப் பெண்மணியைக் கொல்லுமுன் பேதாய் எனைக்கொல்க என்றான். துறவிதான் ஏந்திய கத்தியைத் தன்மார்பிற் பாய்ச்சிக் குருதி தனில்மிதந்தான். கண்ணொப்பாள் கண்ணும் கருத்தும் புரிந்ததென்ன? விண்ணும் விரிபுனலும் வேடிக்கை பார்த்தனவாம். செத்தான்மேல் கண்ணீர் செலுத்தி உயிர்காத்த அத்தான்மேல் வைத்தாள்மெய் யன்பு. - இனமுழக்கம், 8.3.63; குயில் பாடல்கள், செப்டம்பர் 1977  13 திருவாரூர்த் தேர்! நேரிசைக் கலி வெண்பா திருவாரூர்த் தேர்திரு வாரூர்த்தே ரென்று தெருவாரும் ஊராரும் சேர்ந்த - திருநாட்டார் நெல்லுப் பொரிபோற் குதித்தார்கள், நீள் அன்பால் கல்லுப்பாய் நெஞ்சு கரைந்தார்கள்! - செல்வர்கள், பின்னாள் புகைவண்டிச் சீட்டுப் பெறும் பொருட்டு முன்னாள் பதிவை முடித்தார்கள் - நன்செய் நிலத்தை அடகு வைத்து, நீள்வெள்ளிக் கூசா, புலித்தோலாற் கைப்பெட்டி, போர்வை - விலை கொட்டி வாங்கினார்! வாடகையாம் உந்துவண்டிக் கச்சாரம் பாங்காய் அளித்தார்கள் பற்பலர்! - நீங்கா உறவினரை ஓடி அழைத்தார்கள் மற்றும் பிறரிடம் பேசிக் களித்தார் - நிறையப் பொரிவிளங்காய் உண்டையும் போளியும் செய்தே ஒரு பெரிய பெட்டியின் உள்ளே - இரும் என்றார். நல்லவகை எள்ளுருண்டை நானூறு! கண்ணான வெல்லக் கொழுக்கட்டை, வேர்க்கடலை-கொல்லிமலை வாழைச் சுழியன் வடை,பொரிமா, உப்புமா பேழை பிதுங்க எருக்கங்காய், - தாழாமல் வேகையிலே நெய்மணக்கும்; வெந்தபின் எள்மணக்கும் பாகத்துக் கைமுறுக்கும் பண்ணியே, - தோகையரும் ஆடவரும், பானை,சட்டி, பெட்டி, அழகுசால் தேடி அவற்றினிலே சேர்த்திடுவார் - கூடத்தில் குந்தியே கையோடு கொண்டுபோ கும்சிப்பம் ஐந்தாபத் தாஎன் றவைஎண்ணிச் - சிந்தாமல் பொட்டுக் கடலை, பொரி, போம்போது தின்னவென்றே எட்டுத் தகரத்தில் ஏற்றினார் - நட்டபடி! தேருக்குச் சென்று திரும்புகையில் என்னென்ன ஊருக்கு வாங்கி வருவதென்றே - காரியத்தை எண்ணி எழுதி முடிக்கையிலே, அங்கிருந்த பெண்ணாள் துடைப்பமென்பாள். பேர்த்தியோ - மண்சட்டி என்பாள். மருகி வடிதட்டு! வீட்டுப்பெண் சின்னக் கரண்டி என்பாள், சீப்பென்பாள் - முன்னின்ற மூத்தபெண் முத்து வளையல்என்பாள்! பார்த்திருந்த காத்த முத்து நீலக்கண் ணாடிஎன்பான் - கோத்த மணி நடுவில் குண்டு மணி கோத்த - நல்ல அணிமாலை வேண்டுமென்பாள் அண்ணி, - துணியில்லை, பட்டுக் கரைவேட்டி பார்த்தெடுக்க வேண்டுமென்று சொட்டைத் தலையப்பன் சொல்லிநிற்பான். - கிட்டக் கமலாலை யத்துக் கடையிலுள்ள சீட்டி எமலோகம் ஏகிடினும் சாயம் கமராது, வாங்கத்தான் என்றுமணப் பெண்ணாள் வாய்திறப்பாள்; பூங்கத்தா ழைநிறத்தில் புள்ளிவைத்த - பாங்கான சேலைஒன்று கேட்டுநிற்பாள் தேன்மொழியாள், மான்விழியாள் ஓலை தடுக்கொன்றே ஒன்றெ ன்றாள் - வேலை முடிந்தது பட்டியல். முன்னிரவும் போக விடிந்தது போழ்து; விரைவாய் - முடிந்திருந்த மாடவிழ்த்துக் கட்டிய வண்டிமேல் கூண்டு கட்டி மேடுபட வைக்கோலை உட்பரப்பி - மூடிய சாக்குமெத்தை மேலே சரியாய் இருபதுபேர் பாக்கடைத்த பையாக உள்ளடைவார்; - ஏர்க்காலில் ஓட்டுவா னோடொருவன் ஓட்டுவான் இம்முனையில் பாட்டன் படிக்கட்டைப் பார்த்தேறி, வேட்டி ஒருகையால் பற்றி, ஒருதொடையால் குந்தி, சொரிசிரங்கும் தொப்பையுமாய்த் தொங்கி - இருப்பார். பெரியவ ரோடு பிறரும் அமர உரியபெட்டி பேழையும் உய்க்க - விரிந்த இடம் வேண்டும் என்றே இரண்டாள்கள் ஏங்கிக் குடம், பானை, பெட்டி, குவளை - அடங்கிய மூட்டைகளை வண்டிமேல் போட்டு, முழுசாக்கை நீட்டுப் படுக்கைகளை வண்டியின்கீழ் - நீட்டுக் கயிற்றினால் தொங்கவிட்டுக் கைப்பெட்டி எல்லாம் குயில்மாதர் தம்மடிமேல் குந்த - முயற்சி செய்து வெற்றிலை பாக்குப்பெட்டி, வெல்லம் ஒரு துணியில் சுற்றி,வீட் டம்மா சுமந்திடவே - ஒற்றிக் குழந்தைக்குக் கூண்டிலே ஏணைகட்டிக் கால்கள் முழந்தொங்க விட்டு, முணகி - அழும்பிள்ளை பாட்டி மடியில் பதுங்கவைத்து, வண்டியினை ஓட்டென்று சொல்லவே ஓடுமாம் மாட்டுவண்டி! ஒன்றல்ல நூறல்ல ஓரா யிரமிருக்கும் இன்றல்ல நேற்றல்ல எவ்வாண்டும் - சென்றவண்டி, மாட்டுவண்டி மட்டுமல்ல, மட்டக் குதிரைவண்டி ஓட்டுவண்டி ஆயிரமாம்! உள்ளங்கால் - நீட்டுமுள்ளால் செங்குருதி பாயச் சிவசிவா என்றுரைத்தே அங்கு நடப்பார் அரைக்கோடி! - திங்கள் இன்று காலைப் புகைவண்டி என்று கலைந்தோடி மூலை முடுக்கெல்லாம் முட்டவே - நாலுதிக்கும் கொள்ளாத மக்கள் நிலையத்திற் கூடியே உள்ளே புகமுயன்ற ஓர்காட்சி - விள்ளரிது! கண்டவண்டி நிற்கக் கதவு திறக்குமுன்னே, பெண்டாட்டி பிள்ளையின் கைப்பற்றிக் - குண்டானை ஓர்கையில் ஏந்தியே உட்செல்லப் பார்ப்பாரை ஆர் தடுப்பார்? அங்கே தடுத்தாலும் - ஆர்கேட்பார்? உள்ளிருக்கும் கூட்டம் இறங்கும்; அதேநேரம் துள்ளி ஒருகூட்டம் தொடர்ந்தேறும்; - வள்வள் இரைச்சல் ஒருபக்கம்! இடிபட்டு நாய்போல் குரைச்சல் ஒருபக்கம்! கூட்டநெருக்கடியில் எள்ளைப்போட் டாலும்எள் கீழே விழாதானால் எள்ளிடு வார்நெருங்கக் கூட்டத்தில் - எள்ளளவும் இல்லை இடம்! புகை வண்டி நிலையமே இல்லை! தமிழ்நா டிருந்தது! - தொல்லை இருந்தது! வண்டி நிலையமெல்லாம் இவ்வா றிருந்தது! தேரூரை எண்ணித் - தெரிந்தமட்டும் சென்ற புகைவண்டி ஆயிரம் தேறுமன்றோ? ஒன்றையொன்று தள்ளியே ஓடிய - மின்வண்டி ஆயிரத்துக் கப்பன்! அதற்கப்பன் காயும் வெயில் தாயிட்ட செவ்வெண்ணெய் தான்சுழல, - ஓயாமல் மேனி எரிக்க, வியர்வைஅதைப் போய்நனைக்க கால்நடையாய்ச் செல்வார் கணக்கு! நேரிசை ஆசிரியப்பா கிழிந்த ஆடையும், கேடற்ற உள்ளமும், அழிந்துபோ வார்மேல் அருளைப் பொழியும் இரண்டு கண்களும், இவைபோற் பிறவும் திரண்ட ஒன்றைச் செல்லப்பர் என்பர். இல்லப்ப ராய்ப்பின் எவர்க்கும் நலம் செயச் செல்லப்பர் ஆகித் திருவாரூ ரில் ஓர் ஆலின் அடியில் அமர்ந்தி ருந்தார். தேருக் காகச் செந்தமிழ் நாடே ஊரில் இறங்கும்ஓர் உருக்கக் காட்சியை அப்பர் காண்பார். ஐயோ என்பார். புளிஇலை இடத்தில் நெளியும் பெருந்தொகைப் புழுக்கள் போலப் புகும்பெரு மக்களில் ஒருவர்மேல் ஒருவர் விழுந்தும் எழுந்தும் உருண்டும் புரண்டும் ஒட்டியும் நெட்டியும் வெருண்டும் வெகுண்டும் அடித்தும் கடித்தும் செல்வது தானா திருவிழா? என்றார். ஆலை உருளையில் அகப்படு கரும்பெனச் செக்கில் எள்எனக் கிழவியர் சிற்சிலர் அளவிலா நெருக்கால் அடிபட்டு மிதிபட்டு கொளகொள வென்று குருதிபாய் தோலாய்க் கிடப்பதும், உயிர்தான் துடிப்பதும் அறியாது தேர்தேர் என்று மேற்செல்லு கின்றனர். திருமணம் முடித்துச் சிலநாள் சென்றும் அயலார் விரல்பட் டறியா ஒருபெண், திண்டாடி வேறொரு சேயுடன் செல்கையில், பெண்டாட்டி எங்கென்று பின்னிருந் தொருவன் கூவி மற்றொரு கோதையைத் தொட்டதால் பாவி என் றேஅவள் பளீரென அறைவாள்! தேர் எங்கே? என்று கேட்ட சேயிழையைப் பார்அதோ என்று பரிந்து விரைந்து தோளில் தூக்கினான்! தோகை குதித்தாள், குதித்த இடமும் மற்றொரு குரிசிலின் தோளே! தோகை தொத்திய தோளும் அயலான் தோளே: அவ்வா றேஅவள் தோளே வழியாய்த் தொத்தி நடந்து மாமா, மாமா, என்றே அலறி, ஆமைபோல் கைக்குள் மார்பை அடக்கி, வெற்பைத் தாவும் பொற்புறு புள்ளெனக் கற்பைக் காக்கச் சாக்காடு காண்பாள்! மலையி னின்று மளமள வென்று சரியும் சரிவின் நடுவிற் கொடியைப் பிடுங்குவான் போலப் பேதை ஒருத்தியை, மக்கள் நெருக்கில் சிக்காது காக்க அணைத்தபடி சென்ற அருமைக் கணவன், சிறிது தொலைவு சென்று திரும்பி அவள்முகம் கண்டான், ஆயினும் அவளின் இடுப்புக் குழந்தையின் தலையைக் காணான்! அன்னையர் அழுவார், தந்தையர் அழுவார், கன்னியர் அழுவார், காளையர் அழுவார், ஏன்என்று கேட்பார் எவருமே இல்லை! தள்ளலும் இடித்தலும் தளரலும் உளறலும் குறைந்தபா டில்லை எங்கும் குறைபாடு. நிறைபா டாகும்அந் நேரம் டும்! டும்: விலகு விலகென ஓசை கேட்டது. கரையிலா தோடும் மக்கள் காட்டாறு இப்புறம் அப்புறம் ஒதுங்கி நடுப்புறம் வழிவிட, மடத்தம் பிரானார் சிவிகையில் அழகொடு வரச்செல் லப்பர் கண்டு கண்ணில் களிப்புப் பொங்க, அடிகளே, கண்டீரோ மக்கள் கலக்கம்? நெருக்கம் நீக்க நீவிர் என்னஏற் பாடு செய்தீர்? என்று செப்பிய அளவில் - ஆரூர்ப் பெருமான் ஆற்றல் விளக்கம் இதுஎன் றியம்பி அருளினார் தம்பிரானார்! ஐயன் ஆற்றலை விளக்க மக்களை நைய விடுவதா? நம்செயல் அன்று; அல்லல் புரிவதும் அவன் அருள் தானா? அறவுளார் இதனை அல்லல் என்றார், சாற்றுவ தென்ன? தவம்என்று சொல்வார். உருவ வணக்கமாம் ஒழுக்கக் கேட்டில் தவமும் தோன்றா, உருவில் தங்கி! எண்ணுவார் நெஞ்சில் தன்னுருக் காட்டித் தண்ணருள் புரிவது சதாசிவன் வேலை; அப்படி யிருக்க மக்கள் ஐயோ ஆரூர் வருவதேன்? அல்லல் அடைவதேன்? என்றுசெல் லப்பர் இயம்பி, மக்களை நோக்கிக் கைதூக்கி உரக்க நுவலுவார்: மக்களே, மக்களே! திருவா ரூர்க்கு வருதல் வேண்டா! வாழ்ந்திருக் கின்ற அங்கங் கிருந்தே அப்பனை எண்ணுவீர், அகத்தில் அப்பனைக் கண்டு தொழுவீர், இங்குவந் திப்படி இன்னல்எய் தாதீர். ஒத்துத் தம்பிரான் உங்களை நன்றாய்ப் பத்தாயிரம் ஆண்டு சிவத்தில் பயிற்றினார்! ஆருர் அப்பனை அங்கி ருந்தபடி தேரோடு நெஞ்சில் சேர்க்கும்ஓர் ஆற்றலைப் பெற்றிட வில்லை என்றால் வெற்று வெடிக்கஞ்சிய நாள்கள் வீணே! - இனமுழக்கம், 5.4.63, குயில் பாடல்கள், செப். 1977  14 வீரத்தாய் (ஒரு சிறு நாடகம்) இன்னிசைக் கலிவெண்பா காட்சி - 1 (மணிபுரி மாளிகையில் ஒரு தனி இடம். சேனாபதி காங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்.) சேனாபதி: மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்! மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா நமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள். அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி எனக்கன்றோ! அன்றியும் என்னரும் நண்ப. உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்! மந்திரி: ஒன்றுகேள் சேனைத் தலைவ, பகைப்புலம் இன்றில்லை ஆயினும் நாளை முளைக்கும்; அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்! தரையினர் bk¢R«1 சர்வ கலையினள்! சேனாபதி: அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே! மந்திரி: நெஞ்சில்நான் பெண்ணை vËjhŒ2 நினைக்கிலேன். சேனாபதி: ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும், அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம், மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி! ஆனமற் றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்! எவ்வாறா னாலும்கேள் சேனையெலாம் என்னிடத்தில்! செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி! மந்திரி: (சிரித்துச் சொல்வான்) மானுஷிகம் மேல்என்பார், வன்மை உடையதென்பார் ஆன அதனை அளித்ததெது? மீனக் கடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னை நடக்கும்வகை செய்வதெது? நல்லதொரு சக்தி வடிவமெது? மாமகளிர் கூட்டமன்றோ? உன்சொற் கொடிது! குறையுடைத்து! மேலும் அதுகிடக்க; மன்னன் இளமைந்தன் எட்டு வயதுடையான், இன்னும் சிலநாளில் ஆட்சி எனக்கென்பான்! சேனாபதி: கல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும் நல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில் வைத்துள்ளேன்; அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான். இத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்! மந்திரி: ஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே! சாமார்த்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன் நீ! உன்எண்ணம் என்னசொல்? நான்உனக் கொத்திருப்பேன்! முன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு! சேனாபதி: ராசாங்க பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்;பின் தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே ஆட்சிசெய வேண்டும்என் ஆசையிது! காலத்தை நீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்! மந்திரி: பொக்கிஷத்தை யார்திறப்பார்? பூட்டின் அமைப்பைஅதன் மிக்க வலிமைதனைக் கண்டோர் வியக்கின்றார். தண்டோராப் போட்டுச் சகலர்க்கும் சொல்லிடுவோம் அண்டிவந்து தாழ்திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம். சேனாபதி: தேவிலை! நீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில் ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா! காட்சி - 2 (சேனாபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி வைக்கக் கருதிக் காடு சேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வியில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்கிறான். கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக் கொண்டு உடன் வசிக்கிறார்.) காளிமுத்து: என்னா கெழவா? பொடியனெங்கே? இங்கேவா! கன்னாபின் னாஇண்ணு கத்துறியே என்னாது? மாடுவுளை மேய்க்கவுடு! மாந்தோப்பில் ஆடவுடு! காடுவுளே சுத்தவிடு! கல்விசொல்லித் தாராதே! கிழவர்: மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும் கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்! மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன். காளிமுத்து: ஆனாநீ போய்வா, அழைச்சிப்போ பையனையும் ஓநாயில் லாதஇடம் ஓட்டு! காட்சி - 3 (கிழவர் ஓர் தனியிடத்தில் சுதர்மனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார்.) (எண்சீர் ஆசிரிய விருத்தம்) கிழவர்: விற்கோலை இடக்கரத்தால் தூக்கி, நாணை விரைந்தேற்றித் தெறித்துப்பார்! தூணீ ரத்தில், பற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப் பழுதின்றிக் குறிபார்த்து, லட்சி யத்தைப் பற்றவிடு! மற்றொன்று, மேலும் ஒன்று படபடெனச் சரமாரி பொழி! சு தர்மா நிற்கையில்நீ நிமிர்ந்துநிற்பாய் குன்றத் தைப்போல்! நெளியாதே! லாவகத்தில் தேர்ச்சி கொள்நீ! சுதர்மன்: கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும் கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு மற்போரும், விற்போரும், வாளின் போரும், வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்! நற்போத காசிரியப் பெரியீர், இங்கு நானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்! அற்புதமாம்! தங்களைநான் இன்னா ரென்றே அறிந்ததில்லை; நீரும்அதை விளக்க வில்லை. கிழவர்: இன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ள இச்சையுற வேண்டாங்காண் சுதர்மா. என்னைப் பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு பூத்த பெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன்ப கைவன் என்பகைவன்; உன்னாசை என்றன் ஆசை! இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை மின்னாத வானம்இனி மின்னும்! அன்பு வெறிகாட்டத் தக்கநாள் தூர மில்லை! காட்சி - 4 (சுதர்மனும் கிழவரும் இருக்குமிடத்தில் தண்டோராச் சத்தம் கேட்கிறது.) தண்டோராக்காரன்: அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறப்பா ருண்டா? ஆயிரரூ பாய்பரிசாய்ப் பெறலாங் கண்டீர்! வரவிருப்பம் உடையவர்கள் வருக! தீம்! தீம்! மன்னர்இடும் ஆணையிது தீம்தீம் தீம்தீம்! கிழவர்: சரிஇதுதான் நற்சமயம்! நான்போய் அந்தத் தருக்குடைய சேனாதி பதியைக் காண்பேன் வரும்வரைக்கும் பத்திரமாய் இரு! நான் சென்று வருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா! காட்சி - 5 (மந்திரியின் முன்னிலையில் கிழவர் அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறக்கிறார். மந்திரி கிழவரைக் கூட்டிக் கொண்டு சேனாபதியிடம் வருகிறார்.) மந்திரி: தள்ளாத கிழவரிவர் பொக்கி ஷத்தின் தாழ்தன்னைச் சிரமமின்றிச் திறந்து விட்டார்! சேனாபதி: கொள்ளாத ஆச்சரியம்! பரிசு தன்னைக் கொடுத்து விடு! கொடுத்து விடு! சீக்கி ரத்தில்! மந்திரி: விள்ளுதல்கேள்! இப்பெரியார் நமக்கு வேண்டும், வேலையிலே அமைத்துவிடு ராசாங் கத்தில்: சேனாபதி: உள்ளதுநீ சொன்னபடி செய்க (கிழவரை நோக்கி) ஐயா, ஊர்தோறும் அலையாதீர்! இங்கி ருப்பீர்! கிழவர்: அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்ச ரிக்க அனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங் கத்தில் விரைவில்பல ரகசியங்கள் வெளியாம்! என்று விளங்குகின்ற தென்கருத்தில்! சொல்லி விட்டேன். சேனாபதி: பெரியாரே, அவ்வாறே! அட்டி யில்லை. மந்திரி: பேதமில்லை, இன்றுமுதல் நீரு மிந்த அரசபிர தானியரில் ஒருவர் ஆனீர் அறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்! காட்சி - 6 (சேனாபதி காங்கேயன், தானே மணிபுரி அரசனென்று நாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப் போகின்றான். வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின் நிலைமையைச் சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.) (நேரிசை ஆசிரியப்பா) மந்திரி: மணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி யில்லை! அணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்! பாடகர் பாடிலர்! பதுமம் போன்ற ஆடவர் முகங்கள் அழகு குன்றின! வீதியில் தோரணம் விளங்க வில்லை! சோதி குறைந்தன, தொல்நகர் வீடுகள்! அரச குலத்தோர் அகம்கொ தித்தனர்! முரசம் எங்கும் முழங்குதல் இல்லை! சேனாபதி: எனக்குப் பட்டம் என்றதும், மக்கள் மனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா? அராஜகம் ஒன்றும் அணுகா வண்ணம் இராஜக சேவகர் ஏற்றது செய்க! வெள்ளி நாட்டு வேந்தன் வரவை, வள்ளி நாட்டு மகிபன் வரவைக் கொன்றை நாட்டுக் கோமான் வரவைக் குன்ற நாட்டுக் கொற்றவன் வரவை ஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும் போற்றியும் புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும் தீதற நாளைநான் திருமுடி புனைய ஆதர வளிக்க; அனைத்தும் புரிக. மந்திரி: ஆர வாரம்! அதுகேட் டாயா? பாராள் வேந்தர் பலரும் வரும்ஒலி! சேனாபதி: லிகிதம் கண்ட மன்னர் சகலரும் வருகின்றார் சகலமும் புரிகநீ! காட்சி - 7 (அயல்நாட்டு வேந்தர்கள் வருகிறார்கள்; சேனாபதி அவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை ஆதரிக்க வேண்டுகிறான்) (எண்சீர் ஆசிரிய விருத்தம்) சேனாபதி: மணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டு மனங்கெட்டுப் போய்விட்டார். விஜய ராணி தணியாத காமத்தால் வெளியே சென்றாள் தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான், அணியாத அணியில்லை! அமுதே உண்பான்; அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை. பிணிபோல m‹dt‹ghš1 தீயொ ழுக்கம் பெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும் என்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம் ஏடெழுதி னேன்நீரும் விஜயம் செய்தீர்; சென்னியினால் வணங்குகின்றேன், மகுடம் பூணச் செய்தென்னை ஆதரிக்க வேண்டுகின்றேன் மன்னாதி மன்னர்களே, என்விண் ணப்பம்! மணிமுடியை நான்புனைந்தால் உம்மை மீறேன்; எந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்! என்னாட்சி நல்லாட்சி யாயி ருக்கும்! வெள்ளிநாட்டு வேந்தன் (கோபத்தோடு கூறுகிறான்.) காங்கேய சேனாதி பதியே நீர்ஓர் கதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோம். தாங்காத வருத்தத்தால் விஜய ராணி தனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ள தீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்! திருமுடியை நீர்கவர, அரச ருக்குப் பாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம் பண்ணிவைத்தீர்! அதிகாரம் அபக ரித்தீர். மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும் மறைவாக வசிக்கின்றார்! அறிந்து கொள்ளும்! கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன் கல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றி ஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர். உம்எண்ணம் இருந்தபடி என்னே! என்னே! ஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன் ஆயகலை வல்லவனாய் விளங்கு கின்றான். வள்ளிநாட்டு மன்னன்: (இடை மறுத்து உரைக்கின்றான்.) சுதர்மனை நாம்கண்ணால்1 பார்க்க வேண்டும், சொந்தநாட் டார்எண்ணம் அறிய வேண்டும். இதம்அதிகம் தெரியாமல் உம்மை நாங்கள் எள்ளளவும் ஆதரிக்க மாட்டோம் கண்டீர்! கொன்றைநாட்டுக் கோமான்: (கோபத்தோடு கூறுகிறான்.) சதிபுரிந்த துண்மையெனில் நண்ப ரே,நீர் சகிக்கமுடி யாததுயர் அடைய நேரும். குன்றநாட்டுக் கொற்றவன் (இடியென இயம்புவான்.) அதிவிரைவில் நீர்நிரப ராதி என்ப தத்தனையும் எண்பிக்க வேண்டும் சொன்னோம்! (குறள் வெண்பா) சேனாபதி: (பயந்து ஈனசுரத்தோடு) அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச் செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று. காட்சி - 8 (சேனாபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத்தைத் தெரிவித்து வருந்துவான்.) (பஃறொடை வெண்பா) சேனாபதி: வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை தரைமட்டம் ஆயினதா? அந்தோ! தனிமையிலே ராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சிதனைக் காண இதயம் கலக்கம் அடைந்திடுதே! வேந்தன் மகனுக்கு வித்தையெலாம் வந்தனவாம்! ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில் போதித்த தார்? இதனைப் போயறிவாம்வாவாவா!! வாதிக்குதென்ற‹மனம்: (அறுசீர் ஆசிரியவிருத்தம்) மந்திரி: பொக்கிஷந் திறந்த அந்தப் புலனுறுபெரியார்‘எங்கே?அக்கிழ வர்பால் இந்த அசந்தர்ப்பம் சொல்லிக்கட்டி இக்கணம் மகுடம்பூண ஏற்றதோர் சூழ்ச்சி கேட்போம்; தக்கநல்லறிரின்றித் தரணியும் நடவாதன்றோ! (கிழவர் காணப்படாததறிந்து மந்திரி வருந்துவான்.) திருவிலார் இவர்என் றெண்ணித் தீங்கினை எண்ணி, அந்தப் பெரியாரும் நம்மை விட்டுப் பிரிந்தனர் போலும்! நண்பா! அரிவையர் கூட்ட மெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய், புரிவரோ விஜய ராணி புரிந்தவிச் செயல்கள் மற்றோர்! (குறள் வெண்பா) சேனாபதி: இன்னலெலாம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை. மன்னன்மக னைப்பார்ப்போம் வா! காட்சி - 9 (கிழவர் சுதர்மனுக்கு வாட்போர் கற்பிக்கிறார். இதனை ஒரு புறமிருந்து சேனாபதியும் மந்திரியும் கவனிக்கிறார்கள்.) சேனாபதி: தாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப் பாழ்திறந்து நெஞ்சத்தில் பல்கலையும் சேர்க்கின்றான். வஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலே நஞ்சைக் கலப்பதற்கு நம்மைஅன்று நண்ணினான். வாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான் தோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா! (சேனாபதி கோபத்தோடு சுதர்மனை அணுகிக் கூறுவான்:) ஏடா சுதர்மா! இவன்யார் நரைக்கிழவன்? கேடகமும் கத்தியும்ஏன்? கெட்டொழியத் தக்கவனே! சுதர்மன்: என்நாட்டை நான்ஆள ஏற்ற கலையுதவும் தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்! சேனாபதி: உன்நாட்டை நீஆள ஒண்ணுமோ சொல்லடா! சுதர்மன்: என்நாட்டை நான் ஆள்வேன்! எள்ளளவும் ஐயமில்லை! (சேனாபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன்மேல் ஓங்கியபடி கூறுவான்.) உன்நாடு சாக்காடே! ஓடிமறைவாய்!பார்! மின்னுகின்ற வாள்இதுதான்! வீச்சும் இதுவே! (கிழவர் கணத்தில், சேனாபதி ஓங்கிய வாளைத் தமது வாளினால் துண்டித்துக் கூறுவார்:) உருவியவாள் எங்கே? உனதுடல்மேல் என்வாள் வருகுதுபார், மானங்கொள்! இன்றேல் புறங்காட்டு! (என வாளை லாவகத்தோடு ஓங்கவே, சேனாபதி தன்னைக் காத்துக் கொள்ள முடியாமலும், சாகத்துணியாமலும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும் சுதர்மனும் சபையை நோக்கி ஓடும் சேனாபதியைத் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள்.) காட்சி - 10 (கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர்களிடம் சேனாபதி ஓடிவந்து சேர்கிறான். அவனைத் தொடர்ந்து கிழவரும், சுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.) வெள்ளிநாட்டு வேந்தன்: ஆடுகின்ற நெஞ்சும், அழுங்கண்ணு மாகநீ ஓடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்? சேனா பதியே, தெரிவிப்பாய் நன்றாக! (சேனாபதி ஒருபுறம் உட்கார்தல்) மானைத் துரத்திவந்த வாளரிபோல் வந்து குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்; நீவிர்யார் கூறும்? (என்று பெரியவரை நோக்கிக் கூறிப் பின் அயல்நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான்:) பறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம் பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே, நீயார்? கிழவர்: இருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்! மன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும், என்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும், செல்வனையும் தன்னிடத்தே சேர்த்துப் பழிவாங்கக் கல்வி தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும் பட்டாபி ஷேகமனப் பால்குடித்தான் காங்கேயன்! தொட்டவாள் துண்டித்தேன் தோள்திருப்பி இங்குவந்தான். (தான் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவைகளைக் களைகிறாள், கிழவராய் நடித்த விஜயராணி) தாடியும்பொய்! என்றன் தலைப்பாகை யும்பொய்யே! கூடியுள்ள அங்கியும்பொய்! கொண்ட முதுமையும்பொய்! நான்விஜய ராணி! - நகைக்கப் புவியினிலே ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்! கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப் புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்! வெள்ளி நாட்டரசன்: (ஆச்சரியத்தோடு கூறுவான்) நீரன்றோ அன்னையார்! நீரன்றோ வீரியார்! ஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை! வள்ளிநாட்டு மகிபன்: ஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக் கோவித்த தாயினெதிர் கொல்படைதான் என்செய்யும்? கொன்றைநாட்டுக் கோமான்: அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும் என்னும் படிஅமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம் ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம் போகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்! அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த மின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன் குன்றநாட்டுக் கொற்றவன்: உங்கள் விருப்பம் உரைப்பீர்கள் இவ்விளைய சிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்! தீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்ட காங்கேய னுக்கும் கடுந்தண் டனையிடலாம்! ராணி: கண்மணியே! உன்றன் கருத்தென்ன நீயேசொல்! சுதர்மன்: எண்ணம் உரைக்கின்றேன்! என்உதவி வேந்தர்களே, இந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச் சொந்த உடைமை! சுதந்தரர்கள் எல்லாரும்! ஆதலினால் இந்த அழகு மணிபுரியை ஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்! அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான் மானம் உணர்ந்து, வளர்ந்து, எழுச்சியுற்றுக் கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்! ஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென்பேன்; தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே! மன்னர்கள்: அவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பில்லாய்! செவ்வனே அன்புத் திருநாடு வாழியவே! சேய்த்தன்மை காட்டவந்த செம்மால்! செழியன்புத் தாய்த்தன்மை தந்த தமிழரசி வாழியவே! சுதர்மன்: எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே! எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக! எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக! வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக: வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும் விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!  15 கடல்மேற் குமிழிகள் முன்னுரை திங்கள்தோறும் வெளிவரும் நம் குயிலின் 12 குரல்கள் நிறைவுற்றன; முதலாவதாண்டு நிறைவுபெற்றது. அதன் நினைவாக இக் குரல் ஆண்டு மலர் என வெளியிடுகிறோம். - பாரதிதாசன் கதை உறுப்பினர்: திறல்நாடு புலித்திறல் ... மன்னன் புலித்திறல் மன்னி ... மனைவி வையத்திறல் .. மகன் செம்மறித்திறல் ... மன்னன்தம்பி பொன்னி ... மன்னன்கொழுந்தி ஆண்டி ... காவற்காரன் அழகன் ... மகன் ஆண்டாள் ... பூக்காரி மின்னொளி ... மகள் பெருநாடு பெருநாட்டான்...அரசன்பெருந்திரு...மfள் பிச்சன்... அமைச்சன் மலைநாடு மலையன் ...அரசன் மலர்க்குழல் ... மகள் 1 இடம் : திறல் நாட்டின் அரண்மனைத் தனியிடம். நேரம் : பகல் உணவுக்குப் பின். உறுப்பினர் : புலித்திறல் மன்னன், அவன் தம்பி செம்மறித்திறல். அகவல் (நிலைமண்டில ஆசிரியப்பா) புலித்திறல் உண்டபின் பொன்னொளிர் கட்டிலில் ஒருபுறம் தனிமையில் உட்கார்ந்திருந்தான். செம்மறித்திறல் அங்கு வந்தான். இம்மொழி கேட்பாய் என்றான் வணங்கியே விருத்தம் (அறுசீர்ஆசிரியவிருத்தம்) பொன்னியை மணக்க வேண்டும் அதைத்தானே புகல வந்தாய்? பொன்னிஎன் கொழுந்தி, நீயோ புலைச்சியின் மகனே அன்றோ? என்னருந் தந்தை, வேட ரினத்தவள் தன்னைக் கூடி உன்னைஇங் கீன்றார், என்பால் உறவுகொண் டாட வந்தாய்? புலித்திறல் இவ்வா றோதப், புலைச்சி என் தாய்! என் தந்தை நிலத்தினை ஆளும் வேந்தன் நின்தந்தை அன்றோ அண்ணா? புலப்பட உரைக்கின் றேன்நான், பொன்னிஉன் கொழுந்தி என்னைக் கலப்புறு மணத்தாற் கொள்ளக் கருதினாள் மறுப்ப தேனோ? என்றுசெம் மறிதான் கூற புலித்திறல் இராதே என்றான். பொன்னிஅந் நேரம் ஆங்கே பொதுக்கென எதிரில் வந்து தன்எழில் மூத்தார் காலைத் தளிர்க்கையால் பற்றி, என்னை உன்தம்பி மணக்கும் வண்ணம் உதவுக என்று சொன்னாள். தமக்கையை எனக்க ளித்தாய் சாதியில் இழிவு பெற்று நமக்கெல்லாம் பழிப்பா வானை நங்கைநீ நாடு கின்றாய் இமைக்குமுன் புறஞ்செல் உன்றன் எண்ணந்தான் மாறு மட்டும் அமைக்கின்றேன் உன்னை என்றன் அரண்மனைக் காவல் தன்னில் என்றுகா வலரைக் கூவ, இருவர்வந் தழைத்துச் சென்றார். நின்றசெம் மறித்தி றற்கு நிகழ்த்துவான்; அரண்ம னைக்குள் என்றுமே நுழைதல் வேண்டாம் ஏகுக என்று சொல்ல, நன்றெனக் குன்றத் தோட்செம் மறித்திறல் நடக்க லானான். 2 இடம் : அரண்மனையில் ஒரு காவல் அறை. நேரம் : மாலை. உறுப்பினர் : பொன்னி, புலித்திறல் மன்னி, காவலர். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) உலக மக்களில் உயர்வுதாழ் வுரைக்கும் கலக மக்களைக் கருத்தால் தூற்றிக் காதற் கண்ணீர் வெளிப்பட மாது நின்றனள் வன்காப் பறையிலே. கண்ணி என்ன உனக்கில்லை பொன்னி? - உனக் கேனிந்த எண்ணம்? புலைச்சி தன்மகன் மேல்மைய லுற்றாய் - எமைத் தாழ்வு படுத்த நினைத்தாய் என்று புலித்திறல் மன்னி - மிக ஏசிக்கொண் டேஎதிர் வந்தாள்! இந்நில மக்கள்எல் லோரும் - நிகர் என்று புகன்றனள் பொன்னி. நாலு வகுப்பினர் மக்கள் - எனில் நானிலம் ஆள்பவர் நாமே மேலொரு பார்ப்பனர் கூட்டம் - உண்டு! மூன்றா மவர்பொருள் விற்போர்! காலத னாலிட்ட வேலை - தனைக் கைகளி னாற்செய்து வாழும் கூலி வகுப்பினன் அன்னோன் - என்று கூறி முடித்தனள் மன்னி. ஆளப் பிறந்தவர் தாமும் - மே லானவர் என்பவர் தாமும் கூளங்கள் அல்லர்; கடல்மேல் - காணும் குமிழிகள் அன்னவர் என்பேன் மாளாப் பெருங்கடல் மக்கள் - அங்கு மறைபவர் ஆள்பவர் என்பேன் வேளை வரும்அக்கா - தீரும் வேற்றுமை என்றனள் பொன்னி. உன்னை மணந்திட வேண்டி - இவ் வுலகிடை எண்ணிக்கை யில்லா மன்னர்கள் உள்ளனர் பொன்னி - உன் மனநிலை மாறுதல் வேண்டும் அன்னது மட்டும் கிடப்பாய் - பிறர் அண்டுதல் இல்லா அறைக்குள் என்னடி வேண்டும்இப் போது - சொல் என்றாள் புலித்திறல் மன்னி. கன்னங் கறுப்புடை ஒன்றும் - மாற்றிக் கட்டிடப் பின்னொன்றும் வேண்டும் என்றே உரைத்தனள் பொன்னி - ஒன் றீந்தாள் புலித்திறல் மன்னி. என்னுயிர் போன்றவன் தன்னை - இனி யானடைந் தின்புறு மட்டும் என்னுடை நீஎன் றுடுத்தாள் - நகை யாவும் கழற்றினள் பொன்னி. 3 இடம் : ஆற்றிடை என்னும் சிற்றூர். நேரம் : நிலவெரிக்கும் இரவு. உறுப்பினர் : செம்மறித்திறல். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) இந்நி லத்தில் இருகுரல் ஒன்று, மன்னர் நாங்கள் என்பது; மற்றொன்று; பெருநிலத் தில்யாம் பெருமக் கள்என்பதாம். சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர் அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்? சமையம் சாதி தவிர்வ தெந்நாள்? என்றுசெம் மறித்திறல் கறுப்புடை ஒன்றினை ஏந்தி உரைப்பான் ஆங்கே. பஃறொடை வெண்பா (இன்னிசைக் கலிவெண்பா) மன்னர் பலரும் மணக்க இருக்கையிலும் என்னை மணப்பதென்றே எண்ணினாள் எண்ணியதால் என்ன இடர்ப்பட்டாள்! ஏச்செல்லாம் ஏற்றாளே! அன்னவளை நான்மணக்கும் ஆவலினால் வாழ்கின்றேன்! தன்னன்பு மூத்தாளைத் தானிழக்க வுந்துணிந்தாள் இன்னந்தன் மேன்மை எலாமிழக்க வுந்துணிந்தாள் என்னன்பு நோக்கினிலே யான்நோக்கத் தன்னருமைத் தென்னம்பா ளைச்சிரிப்பால் தின்னுவளே என்ஆவி! போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின் ஏகுமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான்திரும்பித் தோகையினை மட்டாக நோக்கினால் தான்குனிந்து சாகுமட்டும் நான்மறவாப் புன்னகையைச் சாய்த்திடுவாள். மூத்தாள் மணாளன் முடிவேந்தைக் கேட்டபின் போய்த்தார் மணமன்றில் பூண்போம்; பெருமக்கள் வாழ்த்திடும் வாழ்த்தால் மகிழ்வோம்பின், பஞ்சணையில் தீர்த்தோம்நம் ஆவல்எனச் சேர்ந்திருப்போம் என்றுரைப்பாள். பொன்னால் மணியால் புனைந்த நகையிழந்தாள் தன்னால் முடியாத தொல்லையினால் சாய்ந்தாளோ! மின்னால் செயப்பட்ட மெல்லிடைக்கு நேர்ந்தவெல்லாம் என்னால்என் னால்என்னால் காராடை ஏற்கிறேன்! தண்ணிலவு கொண்ட மகிழ்ச்சி தனைக்கருதி வெண்மை உடையணிந்து விண்ணில் துலங்குவதாம் துன்பம் உடையேன் கரிய துகில்பூண்டேன் என்னருமைப் பொன்னியைநான் எந்நாள் மணப்பேனோ? பொன்னியும் நானும்ஒரு காதற் புனல்முழுகா திந்நாள் தடுப்பதெது? மண்ணாள ஏற்றவர்கள் இன்னலுற ஏற்றவர்கள் என்னும் பிளவன்றோ? இந்நிலையை மாற்றா திரேன். 4 இருபது ஆண்டுகளின் பின் ஒரு நாள் இடம் : அரண்மனை நேரம் : மாலை உறுப்பினர்கள் : புலித்திறல் மன்னி, அவள் மகன் வையத்திறல், ஆண்டாள், அவள் மகள் மின்னொளி, காவற்காரன் மகன் அழகன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) மன்னியைச் சுமந்த பொன்னூசல், கூடத்தில் தென்னாட்டுத் தோழியர் செந்தமிழ்ப் பாட்டில் மிதந்துகொண் டிருந்தது மென்கை அசைத்ததால்! எதிரில் ஆண்டாள், இவள்மகள் மின்னொளி மன்னி ஆணைக்கு வாய்பார்த் திருந்தனர் மன்னி திருவாய் மலர்ந்தருள் கின்றாள்; வையத் திறல்நம் பையன் பிறந்தநாள்! நாளை! அவ்விழா நன்மலர் அனைத்தும் வேளையோடு நீதரல் வேண்டும். அதன்விலைப் பொன்னும் பெறுவாய், பரிசிலும் பூணுவாய். மின்னொளி யுடன்நீ விருந்தும் அருந்தலாம். என்றாள்! ஆண்டாள் இளித்தாள்! நின்ற மின்னொளி ஆழ்ந்தாள் நினைவிலே. கண்ணிகள் வாழிய வாழிய மன்னீ - ஊசல் மகிழ்ந்தாடு கின்றனை மன்னீ தோழியர் ஆட்டினர் ஊசல் - கை சோர்ந்திட நின்றனர் மன்னீ தோழிய ரும்சற்று நேரம் - ஆடச் சொல்லுக என்னருந் தாயே! வாழிய வாழிய மன்னீ - அவர் மகிழ்ந்தாட வும்செய்க தாயே! என்றனள் மின்னொளி தானும்! - மன்னி எள்ளி நகைத்துப் புகல்வாள்; மன்னியும் தோழியர் தாமும் - நில மாந்தரில் ஒப்புடை யாரோ? என்னடி மின்னொளி இன்னும் - உனக் கேதும் தெரிந்திட வில்லை? என்றுரைத் தாள் அந்த நேரம் - மகன் என்ன வென் றேஅங்கு வந்தான். தூண்டா விளக்கேஎன் கண்ணே - என் தூயவை யத்திறல் மைந்தா! ஆண்டாள் மகள்சொன்ன தைக்கேள் - ஊசல் ஆட்டிய தோழிகள் ஆட வேண்டுமென் றேசொல்லி நின்றாள் - இவள் வேற்றுமை காணாத பேதை வேண்டாம்இப் பேச்சுக்கள் என்றேன் - என்று விண்டனள் சேயிடம் மன்னி! மாவடு வொத்தகண் ணாளை - இள வஞ்சிக் கொடிக்கிணை யாளைத் தாவிநல் வாயிதழ் ஓரம் - உயிர் தாக்கிடும் புன்சிரிப் பாளைத் தேவைஉன் எண்ணமும் பெண்ணே - அதில் தீங்கில்லை வையத்துக் கென்றான். பாவையும் அம்மொழி கேட்டாள் - எனில் பாங்கியர் ஆடுதல் காணாள். அழகனும் அவ்விடம் வந்தான் - தன் அன்புறு தோழனை நோக்கி எழுதிய ஓவியந் தன்னை - நீ ஏன்வந்து பார்த்திட வில்லை? பிழையிருந் தால்உரைப் பாயே - என் பின்வரு வாய்என்று சொல்ல வழியில்லை தப்புதற் கென்றே - அவ் வையத் திறல்பிரிந் திட்டான். 5 இடம் : அரண்மனைக் கூடம். நேரம் : நடுவேளை. உறுப்பினர் : ஆளவந்தார் கூட்டம், புலித்திறல் மன்னன், வையத்திறல், மின்னொளி, ஆண்டாள், தோழியர் அகவல் (நேரிசை ஆசிரியப்பா) திறல்நாட்டு மன்னனின் திருமகன் இருபதாண்டு நிறைவு விழாவில் நிகழ்ந்த விருந்தில் ஆளப் பிறந்தார் அனைவரும் வேளையோடு வந்தார் விருப்போ டுண்ணவே கண்ணிகள் பத்தாயி ரம்பெயர்கள் - அரண்மனைப் பாங்கிலோர் கூடத்திலே ஒத்த தலைவாழை - இலைக்கெதிர் உண்டிட வந்தமர்ந்தார் எத்தாவி லும்கிடையா - தெனும்படி எண்ணி ரண்டுவகையாம் புத்தம் புதிய கறிகள் - நறுமணம் பூரிக்க வேபடைத்தார். தித்திக்கும் பண்ணியங்கள், - அப்பவகை தேடரு முக்கனிகள். தைத்திடும் கல்லையிலே - நறுநெய்யும் தயிர்ஒரு குடமும் அத்தனை பேர்களுக்கும் - எதிரினில் அமைத்து நெய்ச்சோறு முத்துக் குவித்தாற்போல் - பருப்போடு முயங்க வேபடைத்தார்! முன்உண்ண அள்ளிடுவார் - உயர்த்திய முழங்கை நெய்வழியும் பின்உண்ண ஊன்றியகை - கறிவகை பெற்றிட ஆவலுறும் மன்னவன் உண்டிருந்தான் -அவன்மகன் வையத் திறலினுடன்! இன்ன நிலைமைஎல்லாம் - அரண்மனை ஏழையர் பார்த்திருந்தார். ஏழைப் பணியாளர் - ஒருபுறம் ஏங்கி இருந்தார்கள்; கூழைக் கரைத்தவுடன் - ஒருபுறம் கூப்பிடப் பட்டார்கள் தோழியர் கூழ்குடித்தார் - ஒருபுறம் தோகைநல் மின்னொளிதான் தாழையின் தொன்னையிலே - கூழினைத் தாங்கிக் குடித்திருந்தாள். விழவு தீர்ந்தவுடன் - சிறப்புடன் விருந்து தீர்ந்தவுடன் அழகு மின்னொளிபால் - அவள்தாய் ஆண்டாள் என் மகளே, விழவு மிக்கநன்றே - அவ்விருந்தும் மேல்! என்று சொல்ல, அவள் இழவு பெற்றார்கள் என் - அன்னாய் ஏழையர்என்றுரைத்தாள். “ ஆளும் இனத்தார்க்கும் - பார்ப்பனர் அத்தனை பேர்களுக்கும் தாளா மகிழ்ச்சியன்றோ!-இதுதான் தனிச்சி றப்பன்றோ! ஆளாகி வாழும்இடம் - விருந்துண்ண ஆவலும் கொள்வதுவோ? நாளும் அவர்மகிழ்ச்சி - நம் மகிழ்ச்சி! என்று நவின்றாள் தாய்! 6 இடம் : அரண்மனையில் தனியறை. நேரம் : உணவுக்குப் பின், இரவு. உறுப்பினர் : வையத்திறல், அழகன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) நிலவு குளிர்வார்க்கக் காற்று நெளிய, அலைகடல் இசையை அளிக்க மலர்சேர் பஞ்சணையில் தனியே படூத்தான்1 நெஞ்சில் அவள்கூத்து நிகழ்த்துகின் றாளே! கண்ணிகள் மின்னொளி இன்முக நிலவே - நிலவு! விண்ணில வேஅக லாயோ! அன்னவள் இன்சொல் இசையே - இசையாம் ஆர்கடல் வாயடக் காயோ! கன்னங் கருங்குழல் மணமே - மணமாம்! காட்டில் மலர்காள் அகல்வீர்! என்ன உரைப்பினும் இனியும் - எனையேன் இன்னற் படுத்துகின் றீர்கள்? காவற் பணிசெயும் அழகன் - இன்னும் காணப் படவில்லை இங்கே! ஆவலெல் லாம்அவ னிடமே - கூறி ஆவன செய்திட வேண்டும். பாவைஅம் மின்னொளி தன்னை - நானே பார்க்கவும் பேசவும் வேண்டும்; தேவைப் படுமிந்த நேரம் - தெரிந்தும் தீமை புரிந்திடு கின்றான். என்று துடிக்கின்ற வேளை - அழகன் இளவர சேஎன்று வந்தான். ஒன்றுசெய் ஒன்றுசெய் அழகா - அழகா! ஒண்டொடி வீட்டுக்குச் செல்வாய் நன்று கிழவனை நோக்கிப் - பழங்கள் நாலைந்து கொண்டுவ ரச்சொல் சென்றிடு வான்பழத் தோட்டம் - நோக்கிச் செல்லுக என்றான் இளங்கோ! (அழகன் போகின்றான்) 7 இடம் : சிற்றூர், மின்னொளி வீடு நேரம் : நள்ளிரவு உறுப்பினர் : மின்னொளி, அவள் தந்தையாகிய கிழவன், அழகன், வையத்திறல் அகவல் (நேரிசை ஆசிரியப்பா) அன்னைஇன் றிரவில் அரசர் அரண்மனை தன்னில் தங்கினாள் போலும்! தந்தையே, சிறிது நேரம், செந்தமிழ்ப் பாட்டொன்று பாடுக என்றாள் மின்னொளி! பாடுமுன் வந்தான் அழகன் பரிந்தே! இன்னிசைக் கலிவெண்பா அன்பு முதிர்ந்தவரே, ஐயா, விரைவில்நீர் மன்னர் மகன்விரும்பும் மாங்கனிகள் ஐந்தாறு தூயனவாய்க் கொண்டுவரத் தோப்புக்குப் போய்வாரும் வாயூறிப் போகின்றான் வையத் திறல்அங்கே என்றான் அழகன்,உடன் ஏகினான் அம்முதியோன்! மன்றிடை ஆடும் மயிலேநல் மின்னொளியே! மாவின் கனிமீது மையலுற்ற நம்இளங்கோ, மாவின்மேல் ஏறியிங்கு வந்திடுவான் இந்நேரம்! என்றான் - இளமங்கை ஏன்நீ நடந்துவந்தாய்? மன்னன் மகன்குதிரை எறி வருவதென்ன? உன்னிளங்கால் நோகா திருக்குமா? மன்னன்மகன் தன்கால்கள் மட்டுமா மென்கால்கள்? என்றே அழகன் நிலைமைக் கிரங்கி அவனை முழுதன்பால் போக்கி முகநிலவு சாய்த்திருந்தாள். வையத் திறல்வந்தான், வஞ்சி வரவேற்றாள். கையால் தடுக்கிட்டாள் காற்சிலம்பால் பாட்டிசைத்தாள் இன்பஉருக் காட்டி எதிரினிலே நின்றிருந்தாள்; அன்பால் அமர்க என வையத் திறல்சொன்னான்; சற்றே விலகித் தரையினிலே கையூன்றி மற்றுமிரு வாழைத் துடைகள் ஒருக்கணித்து மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடை தான்திருத்தி மின்னொளியே வீட்டில் விருந்தும் அருந்தினையோ? என்று வினவினான், கேட்ட எழில்வஞ்சி, அந்தப் பெரியவிருந் தேழைக் கருந்தினையோ? இந்தவகை நீமட்டும் ஏன்தான் அருந்தினையோ? கூழ்குடித்தார் இவ்வூர்க் குடித்தனத்தார் எல்லோரும் வாழ்வுக்கே வந்தவர்கள் வாய்ப்பாய் விழுங்கினரே என்றாள் முகஞ்சுருக்கி. உளங்கவர மன்னர் வகுப்பென்றும் மற்ற வகுப்பென்றும் இந்நாட்டில் இல்லா தினிமேற் புரிந்திடுவேன்” என்றான் அவ் வேளை முதியோன் எதிர்வந்து தித்திக்கும் மாம்பழங்கள் தேடிக் கொணர்ந்தேன்நான் பத்துக்கு மேலிருக்கும் பாராய் இளங்கோவே என்றான். பழத்தோடு வையத் திறலோ,தன் குன்றை நிகர்த்த குதிரைஏ றிச்சென்றான்! போய்வருவேன் என்றான் அழகன்; இளவஞ்சி வாயு மிரங்க; மனமிரங்க நீநடந்தா போகின்றாய்? என்றாள். புதிதல்ல என்றழகன் ஏகலுற்றான் மின்னொளியை ஏய்த்து. 8 இடம் : அரண்மனை நேரம் : காலை உறுப்பினர் : பெருநாட்டின் அமைச்சன், புலித்திறல். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) அரியணை அமர்ந்த அரசனின் எதிரில் பெருநாட் டமைச்சன் பிச்சனும் அமர்ந்தே அரசே, உன்னைநான் அணுகிய தேன்எனில் பெருநாட்டு மன்னனின் ஒருமக ளான பெருந்திரு என்னும்அப் பேரெழி லாளைஉன் திருமகன் வையத் திறல்ம ணப்பது பெருவான், நிலாவைப் பெறுவ தாகும்! இந்த உறவினால், இவ்வை யத்தில் எந்தப் பகைவரும் இல்லா தொழிவர்; அதனால், திறல்நாடும் அப்பெரு நாடும் எதனாலும் மேன்மை எய்துதல் கூடும்! திருவுளம் யா தெனக் கேட்டான். அரசன் மகிழ்ச்சியால் அறைவான் ஆங்கே: (கண்ணிகள்) மிக்க மகிழ்ச்சி அமைச்சே - மிக மேன்மை யுடையதிவ் வெண்ணம் சிக்கல்கள் பற்பல தீரும் - பல தீமைகள் மாய்வது திண்ணம்; திக்கை நடுங்கிட வைக்கும் - இத் திருமண வுறவு!மெய் யன்றோ! விக்குள் எடுக்கையில் தண்ணீர் – உன் விண்ணப்பம் என்றனன் மன்னன். வையத் திறற்கிதைச் சொல்க - அவன் மணந்துகொள் ளத்தக்க வண்ணம் செய்க எனக்கிதை நாளை - நீ தெரிவிக்க என்றனன் பிச்சன். செய்திடு வேனிதை இன்றே - நான் செப்பிடு வேன்பதில் நாளை! துய்யஎன் மன்னி கருத்தும் - கேட்டுச் சொல்லுவேன் என்றனன் மன்னன். 9 இடம் : அரண்மனை மகளிர் இல்லம் நேரம் : முதிர்காலை உறுப்பினர் : புலித்திறல், மன்னி. (நேரிசை ஆசிரியப்பா) பாங்கியர் அப்புறப் படுத்தப் பட்டனர் ஆங்கொரு கட்டிலில் அரசனும், மன்னியும் விரைவில்வந் தமர்ந்தனர்; வேந்தன் முகத்தில் புதுமை கண்டாள் மன்னி! அதனை யறிய ஆவல் கொண்டனளே! (கண்ணிகள்) பெண்ணேஉன் மகனுக்குப் பெருநாட்டான் - தன் பெண்ணைக் கொடுப்பதெனும் நல்லசெய்தியைக் கொண்டுவந்தான் அமைச்சன்என்ன சொல்கின்றாய் - உன் கொள்கையும் தெரிந்திட வேண்டுமல்லவோ! அண்டைநாட் டரசனின் உறவாலே - நமக் கல்லல் குறையுமெனல் உண்மையல்லவா? தொண்டைக் கனிநிகர்த்த இதழாளே - எண்ணம் சொல்லுக என்றுமன்னன் சொன்னஅளவில், அண்ணன் எனக்கிருக்க மகளிருக்கப் - பெண் அயலிற் கொள்வது தக்கதல்லவே! வெண்ணெயை வைத்துநறு நெய்க்கழுவதா - என்ன வேடிக்கை என்றுமன்னி துன்பமடைந்தாள்! கண்ணுக்குப் பிடித்தவள் அண்ணன்மகளா - அக் கட்டழகி யாஇதனை, மைந்தனிடமே எண்ணி யுரைக்கும்படி சொல்லிவிடுவோம் - அவன் எண்ணப்படி நடப்பம் என்றனன் மன்னன். சேயை அழைத்துவரச் சொல்லுக வென்றான் -அவள் தேரேறி நகர்வலம் சென்றனன் என்றாள்! ஆயினும் காவலரை விரைந்தனுப்பி - இங் கழைப்பிக்க வேண்டுமென மன்னன்உரைத்தான் தூயஎல் லைப்புறத்தின் காட்சிதனையே - அவன் துய்த்திடச் சென்றதுண்டு வந்தபிறகே ஆயஇச் செய்திதனை அறிவிக்கலாம் - என அரசி அரசனிடம் சொல்லி மறுத்தாள்! 10 இடம் : அரண்மனைத் தனியறை. நேரம் : காலை. உறுப்பினர் : மன்னி, வையத்திறல், மன்னன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) வையத் திறலை மன்னி யழைத்துத் துய்ய மகனே, வையத் திறலே, உன்மணம் பற்றி உன்னிடம் பேச மன்னர் தேடினார் மகன்இல்லை என்று சொன்னேன். உன்னை முன்னே நான்கண் டென்க ருத்தினை இயம்ப எண்ணினேன். பெருநாட் டானின் பெருந்திரு தனைநீ திருமணம் செய்யத் திட்ட மிட்டனர். என்னருந் தமையன் ஈன்ற பெண்ணாள் உன்னரும் பண்புக் கொத்தவள் அன்றோ? அழகிற் குறைவா? அன்பிற் குறைவா? ஒழுக்கம் அனைத்தும் ஓருரு வானவள் அவளைநீ மணப்ப தாக அவரிடம் கூறுவாய் என்றாள் அரசியே! (கண்ணிகள்) ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அம்மா - நான் ஆய்ந்தபின் னேமணம் ஆர்ந்திட எண்ணினேன் அம்மா தீயன நல்லன காணாத இப்பரு வத்தே - ஒரு சேயிழை யோடறம் செய்வதெவ் வாறுளம் ஒத்தே? தூயஇந் நாட்டினை ஆளுந் திறம்பெற வேண்டும் - நான் தொல்லறி வோரிடம் கல்வி பயின்றிட வேண்டும் பாயும் பகைவர் தமக்கிடை யேஉல காள - எனைப் பாரோடு போராடும் வண்ணம் பயிற்றுக என்றான். வையத் திறல்சொன்ன பேச்சினைக் கேட்டனள் மன்னி - தன் வாயை அடக்கினள் ஏதும்சொல் லாம லிருந்தாள். பையவந் தானந்த நேரத்தி லஎழில் மன்னன், - எந்தப் பாவையை நீமணம் செய்திட எண்ணினை என்றே துய்யதன் மைந்தனைக் கேட்டனன். அன்னை யுரைப்பாள்-அவன் துய்க்க நினைப்பது பல்கலை யேஎன்று சொன்னாள். வையக மாளும் புலித்திறல் மன்னவன் கேட்டே - தன் மைந்தன் கருத்தினை நன்றெனச் சொல்லி நடந்தான். 11 இடம் : அரண்மனை நேரம் : மறுநாட் காலை உறுப்பினர் : புலித்திறல், பிச்சன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) ஏந்தலைப் பிச்சன் எதிர்பார்த் தபடி அரண்மனைத் தனியிடத் தமர்ந்தி ருந்தான். புலித்திறல் ஏந்தல் புறப்படு கதிர்போல் வந்தான் பிச்சன் மழைநாட் குருவிபோல் ஆவலோடு வணங்கி அமர அமர்ந்தான் என்மகன் வேறோர் எழிலுறு பாவைபால் தன்உளம் போக்கினான் என்றான் மன்னன். அவள்யார் என்றான் கவலையொடு பிச்சன். பல்கலைப் பெண்என்று மன்னன் சொல்ல, அமைச்சன் சொல்வான் எழுந்தே. (கண்ணிகள்) வையத் திறல்மொழி பொய்யே - அவன் மணம் வெறுத்திட வில்லை தையல் ஒருத்தியை மைந்தன் - உள்ளம் தாவி யிருப்பது மெய்ம்மை. துய்யவ னாம்பெரு நாட்டான் - பெற்ற தோகை மணத்தை விலக்கப் பொய்யுரைத் தான்!கலை மீது - நெஞ்சு போனதென் றான்!அது பொய்யே! காளை முகத்தினிற் கண்டேன் - உயிர் காதல் வருத்தத்தின் வீச்சு மீளவும் மைந்தனி டத்தே - மண மேன்மையைச் சொல்லுக என்றான். காளை யுரைத்தது மெய்யே - அவன் கருத்தில் ஐயுற வில்லை மீளவும் மைந்தனிடத்தே - சொல்லல் வீணென்று மன்னவன் - சொன்னான். மலையன் எம்பகை மன்னன் - அவன் மகளைக் கட்டுவ தால்உன் நிலையு யர்ந்திடும் என்றே - நீ நினைத்தி ருக்கவும் கூடும்; பல பலநினை யாதே - எம் பாவையை ஒப்புக என்றான். கலைப யில்கஎன் மைந்தன் - என்று கழறி னன்புலித் திறலே. (அமைச்சன் சென்றான்) 12 இடம் : திறல்நாட்டின் வயல்வெளி நேரம் : காலை உறுப்பினர் : காருடை பூண்ட செம்மறித்திறல், வயலுழுவோர். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) மேழி பிடித்தகை மேலாம் இடதுகை தாழாக் கோல்கை வலது கையாக முழங்கால் சேற்றில் முழுக, வாய்திறந்து பழந்தமிழ் பாடினர் வயலில் உழுவோர். அவ்வழி அணுகிய செம்மறித் திறலின் விழிகள் தொழிற்படும் உழவர்பால் விரைந்தன கருத்தோ கடலுலகு நிலைமையில் ஆழ்ந்தது! செம்ம றித்திறல் பாடுவான் அம்முழு துழைப்போர் அகத்தை நோக்கியே. பாட்டு எடுப்பு ஆளுவோர் என்றே சிலரை அமைத்த துண்டோ நீ உலகே? - உடனெடுப்பு மீளுமா றின்றி மிகுபெரு மக்களைக் கருவினில் விளைத்ததும் உண்டோ? - தொடுப்பு வாளொடு பெற்ற துண்டோ சிலரை? வடுவொடு பெற்றாயோ பலரை? நாளும் உழைப்பவர் தமைப்பெற்ற தாயே, நயவஞ்சகரைப் பெற்று ளாயோ? மேலவர் என்றொரு சாதியையும், வீழ்ந்தவர் என்றொரு சாதியையும் தோலில் குருதியில் அமைந்திடுமாறு தோற்றுவித் தாயோ கூறு! அகவல் நிலைமண்டில ஆசிரியப்பா உழைப்பவர் என்றே ஓரினம் உண்டோ, பழிப்பிலா துலகின் பயனை நுகரும் ஓரினம் உண்டோ பிறவியில்? என்றே ஏரும் நிறுத்தி எண்ணினர் உழுநரே! (செம்மறித்திறல் செல்கிறான்) 13 இடம் : மின்னொளி வீட்டின் எதிரிலுள்ள தோட்டம். நேரம் : இரவு, உண்டபின். உறுப்பினர் : அழகன், மின்னொளி, வையத்திறல், கிழவன் (நேரிசை ஆசிரியப்பா) பழத்தோட் டத்தைக் கிழவன் நண்ணினான் அழகன், மின்னொளி அருகரு கமர்ந்தே, அரசன் மகன்தான் அனுப்பிய பண்ணியம் அருந்து கின்றனர். அழகன் அருந்த மின்னொளி விரும்பி, வேண்டுவாள் அவனை, அதனை மின்னொளிக் களிப்பான் அழகன், உற்றதந் தைக்கென ஒருபங்கு வைத்து மற்றவை இருவர் அருந்தினர். தெற்றென வந்தான் அரசன் சேயே. (கண்ணிகள்) பெருநாட்டு மன்னவன் பெண்ணை - நான் பெற்றிட வேண்டுமென் றார்கள் ஒருநாட்டு மன்னவன் பெண்ணும் -எனக் குண்மையில் வேண்டுவ தில்லை திருநாட்டி லேயொரு பாவை - அவள் செல்வத்தின் நேர்பகை யாவாள். இருநாட்டம் அன்னவள் மேலே - நான் இட்டுவிட் டேன்என்று சொன்னேன். இவ்வாறு நான்சொன்ன தாலே - எனை ஈன்றவர் ஒப்பிட லானார்; அவ்விடத் தேபெரு நாட்டின் - ஓர் அமைச்ச னிடத்திலும் சொன்னார். வெவ்வுளத் தோடவன் சென்றான் - இந்த வேடிக்கை எப்படி? என்றே மைவிழி மின்னொளி தன்பால் - எழில் வையத் திறல்வந்து சொன்னான். இத்திரு நாட்டினிற் பாவை - அவள் யார்? என்று கேட்டனள் வஞ்சி. முத்தமிழ் என்றனன் செம்மல்! - இதை மொய்குழல் கேட்டு வியந்தாள். தித்திக்கப் பேசும் திறந்தான் - பெருஞ் செல்வர்கட் கேவரக்கூடும்! மெத்த வியப்புறும் பேச்சும் - நல்ல வேந்தருக் கேவரக் கூடும்! ஏழையர் கற்றது மில்லை - கல்வி எய்திட வும்வழி இல்லை. கூழை அருந்திக் கிடப்பார் - தம் கூரையில் தூங்கி எழுந்தே பாழும் உழைப்பினில் ஆழ்வார் - நல்ல பாங்கினில் பேசுதல் எங்கே? வீழும் நிலைகொண்ட மக்கள் - எந்நாள் மீளுவர்? என்றனள் பாவை. இன்புறப் பேசி இருப்போம் - என எண்ணிஇங் கேவரும் போதில் துன்புறும் பேச்சுக்கள் பேசி - எனைத் துன்பத்தில் ஆழ்த்திடு கின்றாய்! தன்னலக் காரரை எண்ணி - மிகத் தாழ்ந்தவர் தம்நிலை எண்ணி மின்னொளி யேஎனை நொந்தாய் - இது வீண்செயல், என்றனன் செம்மல். மேலும் வையத்திறல் சொல்வான்; - நீ வேண்டிய நற்பண்ணி யங்கள் சால அனுப்பிவைத் தேனே - அவை தக்கன வோஎனக் கேட்டான். ஏலுமட் டும்புசித் தேன்நான் - அவை ஏழையர் அத்தனை பேர்க்கும் ஞாலத்தில் எந்நாள் கிடைக்கும்? - என நங்கை உரைத்தனள் ஆங்கே! மாம்பழம் கொண்டுவந் திட்டான்- அம் மங்கையின் தந்தை; விரைவில் கூம்பும் முகத்தோடு செம்மல் - பழங் கொண்டுசென் றான்பரி யேறி ஆம்பல் நிகர்த்திடும் வாயாள் - அங் கழகனை நோக்கிப் புகழ்வாள்; பாம்பு கிடந்திடும் பாதை - நன்று பார்த்துச் செல் என்றனள்; சென்றான். 14 இடம் : பெருநாடு, ஆய்வு மன்றம். நேரம் : காலை உறுப்பினர் : பெருநாட்டு மன்னன், அமைச்சனான பிச்சன், படைத் தலைவன். (நேரிசை ஆசிரியப்பா) வையத் திறல்என் மகளை மறுத்தான், பெருநாட்டுப் பெருமையைத் திறல்நாடு மறுத்தது! இதனை ஆய்க என்று பதறினான் மன்னன் பாங்குளார் இடத்தே. ஆனந்தக் களிப்பு (எடுப்பு) திறல்நாடும், மலைநாடும் சேர்ந்தே - நம் திருநாட்டை மாய்த்திட ஒருநாட்டம் வைத்தான் நறுமலர்க் கூந்தலி னாளை - நல்ல நம்பெண்ணைப் பின்ஏன் மணக்க மறுத்தான்! திறலற்ற மலையவன் பெண்ணை - அவன் திருமணம் செய்திட வேநினைக் கின்றான். இறையே படையெடுப் போம்நாம் - என் றியம்பினன் ஆங்கே படைத்தலை வன்தான். அந்தத் திறல்நாட்டு மன்னன் - நம் ஆயிழை தன்னை மறுத்தது மெய்தான்! மந்தி மலையவன் பெண்ணை - அந்த வையத் திறல்மணம் செய்ய நினைத்தல் எந்த வகைஅறிந் தாய்நீ - அதை எப்படி நம்புவ தென்றனன் மன்னன்; குந்தி யிருந்த அமைச்சன் - தன் கோவை வணங்கி யுரைத்திட லானான்; தேர்ந்தநல் ஒற்றர்கள் வேண்டும் - அத் திறல்நாட்டி லேஅவர் தங்குதல் வேண்டும். நேர்ந்த நிகழ்ச்சிகள் யாவும் - அங்கு நேரில் உணர்ந்து நிகழ்த்துதல் வேண்டும். சேர்ந்து மலையவன் பெண்ணை - அவன் திருமணம் செய்திடல் மெய்யெனக் கண்டால், ஆர்ந்த பெரும்படை கூட்டி - அவன் ஆட்சியைக் கைப்பற்ற லாம் என்று சொன்னான். நன்றிது என்றனன் மன்னன் -உடன் நால்வர்நல் ஒற்றர்கள் தம்மைய ழைத்தான் இன்று திறல்நாடு சென்றே - அங் கியலும் நிலைமைகள் யாவையும் இங்கே அன்றன் றுரைத்திட வேண்டும் - இடை அஞ்சற் படுத்திடும் ஆட்களி னோடு சென்றிடு வீ ரென்று சொன்னான் - உடன் சென்றனர் ஒற்றர்கள், கோவை வணங்கி. 15 இடம் : திறல்நாட்டின் புற நகரான வெண்ணகர். நேரம் : மாலை உறுப்பினர் : புலித்திறல் மன்னன், நகரமக்கள்,செம்மறித்திறல். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) திறல்நாடு சார்ந்த வெண்ணகர் சென்று அறநிலை யங்களை, பிறநிறு வனங்களை வழக்குத் தீர்ப்பார் ஒழுக்க மதனைச் செழிப்பினை ஆய்ந்து, திருநகர் மக்கள் விரும்பிய வண்ணம் வீற்றிருக் கின்றான் பெருமணி மன்றில் அரும்புலித் திறல்தான் ஆங்கே ஒருகுரல் எழுந்தது! மாங்குயில் அன்றது மக்கள் பாட்டே! (கண்ணிகள்) குரல் மாந்தரில் நான்கு வகுப்புக்கள் என்பதும் இல்லை - இல்லை மன்னவ னாகப் பிறந்தவன் யாவனு மில்லை! புலித்திறல் மாந்தரில் நான்கு வகுப்புக்கள் உண்டெனல் மெய்யே - மெய்யே! மன்னவ னாகப் பிறந்தவன் நான்எனல் மெய்யே! குரல் நால்வகுப் பென்பது நூல்வகுப் பாதமிழ் நாட்டில் நற்றமிழ் மக்கள் ஒரேவகுப் பேதமிழ் ஏட்டில் புலித்திறல் நால்வகுப் பென்பது நன்மனு வேசொன்ன தாகும் - அது நற்றமிழ் மக்கள் எவர்க்கும் பொருந்துவ தாகும். குரல் மேல்வர எண்ணிய ஆரியர் நூல்கள் நமக்கோ - மிகு வீழ்ச்சியும் தாழ்ச்சியும் செந்தமிழ் மக்கள் தமக்கோ? புலித்திறல் கோல்கைக் கொண்டுள மன்னவன் நான்என்றன் ஆணை - அக் கொள்கையைப் பின்பற்ற ஒப்பா தவர்நிலை கோணை குரல் கோலை எடுத்தவன் மேலெனக் கூறுதல் குற்றம் - பெருங் குற்றமன் றோமக்கள் தாழ்வென்று கூறுதல் முற்றும்? புலித்திறல் நூலை மறுத்துநம் கோலை எதிர்ப்பவர் தம்மை - நாம் நோவ ஒறுத்திடில் யார் தடுப் பார்இங்கு நம்மை? குரல் ஆள்பவர் சிற்சிலர்! ஆட்பட் டிருப்பவர் பல்லோர் -எனில் அல்லல் அடைபவர் அப்படியே என்றும் நில்லார். புலித்திறல் வாளுண்டு கையினில் இன்றைக்கும் நாளைக்கும் உண்டு - நிலை மாற்ற நினைப்பவர் வந்திட லாமே திரண்டு! அகவல் (நேரிசை ஆசிரியப்பா) செம்ம றித்திறல் அரையடி செப்பவும் புலித்திறல் அரையடி புகலவும் ஆக அங்குள குடிகள், அனைத்தும் அறிந்தார் இங்கிது கண்ட புலித்திறல், எங்கே செம்மறி என்றெழுந் தானே! (அறுசீர் ஆசிரிய விருத்தம்) இருக்கைவிட் டெழுந்தான் சீறி ஏகினான் வெளிப்பு றத்தே! ஒருத்தனை - உணர்ச்சி மிக்க செம்மறித் திறலை நோக்கிப் பிரித்தேன்உன் ஆவி என்றான் மன்னவன் பிடித்த வாளைச் சிரித்தசெம் மறித்தி றல்வாள் சிதைத்தது, திகைத்தான் மன்னன். செம்மறி செப்பு கின்றான்; திறல்நாட்டு மக்கள் தம்பால் மெய்ம்மையே புகல்வேன்! மக்கள் மேல்என்றும் மட்ட மென்றும் பொய்ம்மையால் புகலும் ஏட்டை புகலுவார் தம்ஏற் பாட்டை, இம்மாநி லத்தில் மாற்ற ஆவன இயற்றித் தீர்வேன். இதுவேநான் மக்கட் கிந்நாள் இயற்றிட எண்ணும் தொண்டு முதியோன் நீ உடன்பி றந்தாய் உன்னுயிர் முடிப்ப துன்றன் அதிகாரம், அல்லால் என்கை அவ்வினை செய்வ தில்லை! பொதுமக்கள் உள்ளம் நோக்கிப் போகின்றேன் என்று போனான். 16 இடம் : திறல் நாட்டின் நகர்ப்புறத்தில் ஒரு குளக்கரை. நேரம் : காலை உறுப்பினர் : அழகன், பெருநாட்டின் ஒற்றனான வேலன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) குளக்கரை தன்னில் கொம்பு கொண்டு, பல் விளக்கும் அழகனை வேலன் அணுகி, எவ்வூர்? என அவன் இவ்வூர் என்றான். என்ன அலுவல்? என்றான், அழகன், மன்னன் மகனின் துணையாள் என்றான். வேலன் வணக்கம் என்றான்! (அறுசீர் ஆசிரிய விருத்தம்) பொன்னாற்றூர் முத்துச் செட்டி புதல்வன்நான் வாணி கத்தில் பொன்னெலாம் இழந்தேன் என்றன் புதுமனை யாளும் செத்தாள் என்னைநீ காக்க வேண்டும் எளியன்நான் என்றான் வேலன். என்னநான் செய்யக் கூடும் என்றந்த அழகன் சொன்னான். அரண்மனை அலுவல் ஒன்று சின்னதாய் அடைந்தால் போதும் அரசரின் மகனுக் கோநீ அன்பான துணைவன் அன்றோ? உரைத்தால்நீ, இளங்கோ கேட்பான் ஒருகாலும் மறுக்க மாட்டான் அருள்என்மேல் வைக்க வேண்டும் அன்பனே என்றான் வேலன். நாளைவா நண்பா என்றே அழகனும் நவின்றான். வேலன் வேளைநான் தவற மாட்டேன் வருகின்றேன் எனவி ளம்பிக் காளை அவ் வரசன் மைந்தன் கடிமணம் எப்போ தென்றான். கேளாதே அதனை என்று கிளத்தினான் அழகன் ஆங்கே! கேட்டது குற்ற மானால் மன்னிப்புக் கேட்கின் றேன்நான்! நாட்டினில் நானோர் ஏழை நாளைக்கே அலுவல் ஒன்று காட்டினால் மிகநன் றாகும் கைக்கூலி நூறு பொன்னும் நீட்டுவேன் உனக்கே என்று நிகழ்த்திட லானான் வேலன். ஏழைநீ நூறு பொன்னும் எனக்கெவ்வா றீதல் கூடும்? தோழனே, உன்றன் சொல்லில் ஐயமே தோன்றச் செய்தாய் வாழிநீ உண்மை கூறு மறையேல் என் றழகன் கூறத், தோழனே நாளை வந்து சொல்லுவேன் என்று போனான். 17 இடம் : படைவீடு. நேரம் : இரவு உண்டபின். உறுப்பினர் : படைமறவர், செம்மறித்திறல். (நேரிசை ஆசிரியப்பா) படைமறவர் உண்டார், படுக்கை சார்ந்தார் இடைவானம் ஈந்த அமுதுபோல் ஒருகுரல் காதிற் புகுந்தது மறவர் யாதெனக் கருத்தில் ஏற்கலா யினரே. குரல் இந்த நாடு பொதுமக்கள் சிறையே! எவரும் நிகரென்ற பொதுவுரி மைதனைப் பொந்தில்ஆந் தைநிகர் மன்னன் பறித்தான் போரின் மறவரே உங்களின் துணையினால்! கந்தை யின்றி உணவின்றிப் பொதுவினர் காலந் தள்ளி வருவது கண்டிரோ? இந்த நாடு பொதுமக்கள் நாடன்றோ? நீவிரெல் லீரும் இந்நாட்டு மன்னரே! மன்னராகப் பிறந்திட்டோம் என்கின்றார் மக்கள் ஆட்படப் பிறந்தவர் என்கின்றார் இன்ன வர்க்கு நுந்துணை இல்லையேல் மன்னர் எங்கே, பெரும்படை மறவரே? இந்நி லத்துப் பெருமக்கள் ஓர்கடல் இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள், இன்று கருதுக குடிகளே, மறவரே. நாளைக் கேகுடி யரசினை நாட்டலாம். தமிழ்மொ ழிக்குள ஆக்கத்தைப் போக்கினார் தமிழர் கொள்கையைத் தலைசாய்க்க எண்ணியே அமுதை நீக்கியோர் நஞ்சைவார்க் கின்றனர் அத்த னைக்கும் நும்துணை கேட்கின்றார்; உமையெ லாம்அந்த மன்னவர் கைகளின் உளிக ளாக்கி; நாட்டைப் பிளப்பதோ? நமது கொள்கை மக்களெ லாம்நிகர் நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே. அகவல் (நேரிசை ஆசிரியப்பா) படைவீட்டுப் படுக்கையில் இக்குரல் புகுந்து நடைமுறை தன்னில், நாணிட வைத்தது. மறவர்கள் தூக்கம் மாய்ந்திட இறவாப் பெருவிருப் பெய்தினர் ஆங்கே. 18 இடம் : திறல்நாடு, அரண்மனையின் உட்புறம் நேரம் : காலை உறுப்பினர் : ஆண்டாள், மின்னொளி. அகவல் (நிலைமண்டில ஆசிரியப்பா) அரண்மனை தன்னில் ஆங்காங்குச் சென்று மின்னொளி தன்தாய் தன்னைத் தேடினாள்; காவல் அறையில் பொன்னி யோடு மேவி இருப்பது கண்டுவியந் தாளே! (கண்ணிகள்) வீட்டை மறந்தாயோ - எனையும் வேம்பென விட்டாயோ? நாட்டில் அரண்மனையே - உனக்கு நன்றெனக் கொண்டாயோ? போட்டது போட்டபடி - விடுத்தே போனாள் அரண்மனைக்கே கேட்டுவா என்றுரைத்தார் - தந்தையார் என்றனள் கிள்ளை மின்னாள். மன்னர் கொழுந்தியடி - நிலைமை மங்கிட லானதடி கன்னல் மொழியாளை - மன்னவன் காவலில் வைத்தானே என்னைத் துணையாக - வைத்தனன் ஏந்தலின் நன்மகன்தான்! உன்னை மறக்கவில்லை - தந்தையை உள்ளம் மறந்ததில்லை என்றனள் ஆண்டாள்தான் - இந்நிலை ஏனென்று கேட்டவளாய் மின்னொளி நின்றிருந்தாள் - அவள்தாய் மேலும் உரைக்கின்றாள்; மன்னவன் தம்பியினை - அச், செம் மறித்தி றல்தனையே பொன்னியும் காதலித்தாள் - இதனைப் புலித்தி றல்எதிர்த்தான். புகலும் செம்மறிதான் - வேடர்தம் புலைச்சி யின்மகனாம் இகழத் தக்கவனாம் - அவனை இவ்விடம் வைக்காமல் அகற்றி விட்டார்கள் - இந்தநல் அரண்ம னைக்குடையார் மிகஇ ரக்கமடி - நினைத்தால் வெந்திடும் உள்ள மென்றாள். வேட்டுவ மங்கையிடம் - மறிதான் வேந்தனுக் கேபிறந்தான் நாட்டில் அவன்புலையன் - எனவே நவிலல் என்னமுறை? ஏட்டினில் உள்ளதுவோ - தமிழர் இனத்தில் வேற்றுமைதான்? வேட்டுவர், மக்களன்றோ - எனவே விண்டனள் மின்னொளிதான். தோட்டத்தில் ஆடியிரு - மகளே தூயவை யத்திறலைக் கேட்டு வருகின்றேன் - விரைவில் கிள்ளையே வீட்டுக் கென நாட்டம் உரைத்தாளே - ஆண்டாளும்! மின்னொளி நன்றென்றே தோட்டம் புகுந்தாளே - அழகிய தோகை மயில் கண்டாள். 19 இடம் : அரண்மனைத் தோட்டம். நேரம் : காலை. உறுப்பினர் : மின்னொளி, வையத்திறல், ஆண்டாள், மன்னி. அகவல் (நேரிசை ஆசிரியப்பா) பசும்புற் பச்சைப் பட்டு விரித்த விசும்பு நிகர்த்த விரிதரை தன்னில் முல்லை படர்ந்துபோய் விளாவை அளாவச் செல்வச் செழுமலர் கொன்றை திரட்டி ஆயிரம் கிளைக்கையால் அளித்து நிற்க வாய டங்காத மணிப்புள் பாடப் புன்னை மலர்க்கிளை தென்றற் பூரிப்பொடு மின்னொளி வருகென அழைக்க அன்ன நடையாள் அணுகினாள் ஆங்கே. (நேரிசை வெண்பா) வளர்ப்பு மயில்தான் மரத்தடியில் ஓடிக் களித்தாடக் கண்டு களித்தாள் - கிளிப்பேடு கெஞ்சியது சேவற் கிளிவந் தருள்புரிய வஞ்சியது கண்டாள் மகிழ்ந்து. தனியிருக்கும் தாழ்பலவைக் கண்டாள்பின் வேரில் கனியிருக்கக் கண்டு வியந்தாள் - இனியவாம் பூக்கண்டாள் பூவில் புதியபண் பாடுகின்ற ஈக்கண்டாள் இன்பங்கண் டாள். கோணிக்கொம் பாட்டியசெங் கொத்தலரிப் பூக்கண்டாள் மாணிக்கம் கண்டாள் மகிழ்கொண்டாள் - சேண்நிற்கும் தென்னையிலே பாளை சிரிக்கச் சிரிக்கின்றாள் புன்னை யிலே போய்க்கண்டாள் முத்து. மின்னொளி ஆங்கே வெயிலில் உலவுகின்றாள் மன்னன் மகனோ தொலைவினிலே - நின்றபடி கண்டு களிக்கின்றான் கட்டழகைத் தன்னுளத்தால் உண்டு களிக்கின்றான் உற்று. மான்கண்டு பூரிக்கும் மங்கையினை மன்னன்மகன் தான்கண்டு பூரிப்பான்; தையல்நல்லாள் - வான்கண்ட செம்மா துளங்கண்டு; சேல்விழிபூ ரிக்கஅவள் அம்மா துளங்காண்பான் ஆங்கு! கோவைக் கனிகண்டு கோவையிதழ் பூரிக்கும் பாவை எழில்கண்டு பதறுகின்றான் - பூவைதான், மாங்கனிக்குத் தாவுகின்றாள் மன்னன்மகன் உள்ளம்அத் தீங்கனிக்குத் தாவும் தெரிந்து. மின்னிடையும் தானசைய மேலாடை யும்பறக்க அன்னநடை போடும் அழகுகண்டும் - அன்னவளின் பஞ்சேறு மெல்லடியைப் பாடாமல் தன்காதல் நெஞ்சேற நின்றான் நிலைத்து. தேசு வெயிலதுதான் தேக்குநிழற் கீழேபொற் காசு கிடப்பதுபோல் காட்சிதர - மாசில்லாள் செங்காந்தட் கைமுகவாய் சேர்த்தாள் இளங்கோவாய் அங்காந்தான் அண்ணாந்த வாறு. அன்னோன் நிலையனைத்தும் அங்கவனைத் தேடிவந்த மன்னி மறைந்திருந்து பார்க்கின்றாள் - மின்னொளிமேற் கண்ணானான் பிள்ளை கருத்தழிந்தா னோஎன்று புண்ணானாள் நெஞ்சு புகைந்து. வையத் திறலே, மகனே, திருவமுது செய்யவா! செந்தீ விளைக்கின்ற - வெய்யில் விழிபார்த்தல் தீமை விளைக்கும், அரசர் வழிபார்த் திருக்கின்றார் வா! என்றுரைக்க மன்னி எதிரேதும் சொல்லாமல் சென்றான் திறலோன் அரண்மனைக்கே - பின்னர்அங்கே ஆண்டாளும் வந்தாள் அழைத்திட்டாள் தன்மகளை மீண்டாள்தன் வீட்டுக்கு மின். 20 இடம் : அரண்மனைத் தனியறை. நேரம் : காலை. உறுப்பினர் : புலித்திறல், புலித்திறல் மன்னி. அகவல் (நேரிசை ஆசிரியப்பா) வேண்டுகோள் விட்டாள் வேந்தன் வந்தான் ஈண்டமர்க ஈண்டமர்க என்றாள் மன்னி மன்னன் முகத்தை மலர்க்கையால் ஈர்த்தே ஐயம் அடைந்தேன் என்றாள். வையத் திறலின் வகையுரைப் பாளே! (நேரிசை பஃறொடை வெண்பா) பூக்காரி யின்மகளைப் பூங்காவில் நம்பிள்ளை நோக்கிய நோக்கின் நிலையினைநான் - போய்க்கண்டேன். கீழ்மகளைப் பிள்ளைமனம் கிட்டிற்றா? அல்லதவள் தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? - வாழ்வில் தனக்கு நிகரில்லாத் தையல்பால் பிள்ளை மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் - எனினும், தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும்? - வெடுக்கென்று வையத் திறலுக்கென் அண்ணன் மகளைமணம் செய்துவைத்தல் நல்லதெனச் செப்பினாள் - துய்யதென்று மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கச் சொன்னான்; தொடர்ந்தாள்அம் மாது. 21 இடம் : அரண்மனைத் தனியிடம். நேரம் : முதிர்காலை. உறுப்பினர் : புலித்திறல், வையத்திறல், மன்னி. (நேரிசை ஆசிரியப்பா) மன்னனும் மன்னியும் மைந்தனை நில் என்று கூறித் தமது கொள்கையைக் கூறு கின்றார் சீறும்உளத் தோடே! (கண்ணிகள்) மணம்செய்து கொள்ளுதல் வேண்டும் - உன் மாமனின் பெண்ணை மணந்திட வேண்டும் இணங்கிட வேண்டும் இதற்கே - நீ ஏதும் தடைசொல்ல லாகாது கண்டாய். அணுகும்உன் அன்னையின் அண்ணன் - பெற்ற ஆரெழில் மங்கையை நீமணந் திட்டால் வணங்குமிந் நானிலம் உன்னை - என்று மன்னவன் சொல்ல, மறுத்துரைப் பான்சேய்: மணம்செய்து கொள்பவன் நானா? - அன்றி மாநிலம் ஆளும்இம் மன்னவன் தானோ? இணங்கிட வேண்டுமென் கின்றீர் - எனில் என்மன மோமணம் ஒப்பிடவில்லை; அணங்கினை மாமனின் பெண்ணை - எனை அச்சுறுத் திப்பெறு மாறு புகன்றீர் வணங்குகின் றேன் தந்தை தாயே - நான் மணம்புரி யேன்என்று செம்மல் மறுத்தான். காவலர் தம்மை அழைத்தான் மன்னன் கட்டுக இங்கிவன் கைகளை என்றான். ஆவல் மறுத்ததி னாலே - என்றன் ஆணைக்குக் கீழ்ப்படி யாததி னாலே காவற் சிறைக்கிவன் செல்க - என்றன் கட்டளை தன்னை மறுத்திடு வீரேல் சாவது மெய் யென்று சொன்னான் - அந்தத் தறுகண்ணர் செம்மலைச் சிறையினிற் சேர்த்தார். வையத் திறல்சிறை சென்றான் - பின்னர் மன்னவன் தன்மனை யாளிடம் சொல்வான்; பையனை விட்டுவைத் திட்டால் - அந்தப் பாவையைக் கூட்டி நடந்திடல் கூடும் வையம் பழித்திடு முன்னே - அவன் மனது திரும்பிடும் என்று நினைத்தே வெய்ய சிறைதன்னில் வைத்தேன் - என்று வேந்தன் உரைத்தனன், மன்னி மகிழ்ந்தாள். 22 இடம் : அரண்மனையில் வையத்திறல் அறை. நேரம் : முன் மாலை. உறுப்பினர் : அழகன், மன்னன், மன்னி. அகவல் (நேரிசை ஆசிரியப்பா) அழகன், வையத்திறல் அறைக்குச் சென்றான் முழுதும் ஆய்ந்த விழிகள் ஏமாந்தன புலித்திறல் மன்னிபால் போனான் நலிப்புடன் அவளிடம் நவிலலா யினனே. (கண்ணிகள்) வையத் திறல்வந்த துண்டோ - அன்னாய் மற்றெங்குச் சென்றனன் சொல்வாய் வெய்யில் கொதிக்கின்ற நேரம் - அவன் வேறெங்கும் சென்றிட மாட்டான் துய்யவன் தன்னறை பார்த்தேன் - அங்கும் தோன்றலை நான்காண வில்லை; எய்தநல் அம்பினைப் போல - உடன் இங்குவந் தேன் என்று சொன்னான் ஆண்டாள் மகள்மீதில் அன்பால் - என்றன் அண்ணனின் பெண்ணை மறுத்தான் பூண்டான் பெரும்பழி தன்னை! - மனம் புண்படச் செய்ததி னாலே ஈண்டு சிறைப்பட லானான் - அவன் எண்ணம் திருந்திட வேண்டும் யாண்டும் இதைச்சொல்ல வேண்டாம் - இது என் ஆணை என்றனள் மன்னி. இப்பிழை செய்திட வில்லை - நெஞ்சம் ஏந்திழை மேல்வைத்த தில்லை செப்புவ துண்மைஎன் தாயே - அவன் சிறையிடை வாழ்வது முறையோ கற்பது தான்அவன் நோக்கம் - பின்னர் கடிமணம் செய்வது நோக்கம் மெய்ப்பட வேஉரைக் கின்றேன் - அவன் மீளும் வகைசெய்க என்றான். மன்னன் அவ்விடம் வந்தான் - அந்த மன்னவன் மைந்தரின் நண்பன் பின்னும் உரைத்திட லானான் - உன்றன் பிள்ளையின் மேற்பிழை யில்லை மின்னொளி மேற்கருத் தில்லை - அவன் வெஞ்சிறை வாழ்வது நன்றோ என்றுரைத் தேநின்ற போது - மன்னன் என் அழ காஇது கேட்பாய்; அன்னவன் உள்ளக் கிடக்கை - நானும் ஆய்ந்திட வேண்டும்; அதற்குள் உன்மொழி நம்பிட மாட்டேன் - அவன் உற்ற சிறைமீட்க மாட்டேன்; இன்ன நிகழ்ச்சிகள் யாவும் - நீயே எங்கும் உரைத்திட வேண்டாம் என்றான் புலித்திறல் மன்னன் - சரி என்றுரைத் தான்அழ கன்தான். 23 இடம் : சிறைக்கூடம். நேரம் : முன்னிரவு. உறுப்பினர் : வேல்விழி, சிறைக் காவற்காரன், செக்கான். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) சிறையில் வையத் திறலிருக் கின்றான் காவற் காரன் கடிது சென்று, மின்னொளி பார்க்க வேண்டு மென்றாள் என்று சொன்னான் இட்டுவா இட்டுவா என்றான் இளங்கோ! வேல்விழி யாளவள் முகமலர் மறைய முக்கா டிட்டு விரைந்தாள்! இரும்பு வேலிப் புறத்தே இருக்கும் செம்மல் இருவிழி மலர்ந்தே மின்னொளி! மின்னொளி! விளையாடும் மயிலே! உன்மேல் வைத்த காதல் உளவறிந்து மன்னவன் என்னைச் சிறையில் வைத்தான்! என்றன் உயிரே வாவா என்றனன். மின்னொளி அன்றுநான் வேல்விழி அன்றோ மன்னியின் அண்ணன் மகள்நான் அன்றோ என்னை மணந்துகொள் என்றாள். மன்னவன் மகனின் உள்ளம் எரிந்ததே. (கண்ணிகள்) என்னெதிர் நிற்கவும் வேண்டாம் - இங் கேதும் புகன்றிட வேண்டாம் உன்னை மணந்திட மாட்டேன் - நீ ஒட்டாரம் செய்திட வேண்டாம் மின்னொளி என்னுயிர் என்றான் - வந்த வேல்விழி ஓடி மறைந்தாள். 24 இடம் : சிறைக்கூடம். நேரம் : இரவு. உறுப்பினர் : புலித்திறல், வையத்திறல், அழகன் அகவல் (நேரிசை ஆசிரியப்பா) வையத் திறலை மன்னன் அணுகினான். சிறையின் கதவு திறக்கப் பட்டது. புலித்திறல் புகுந்தான் புதல்வனைப் பற்றி வலிதில் இழுத்து மண்ணிற் சாய்த்துச் சாட்டையாற் கைகள் சலிக்க அடித்தான். ஆட்படும் இனத்தின் அணங்கை மணப்பதா? வாட்படை மன்னரின் மாண்பைக் குறைப்பதா? மின்னொளி தன்னை வெறுப்ப தாகவும் வேல்விழி தன்னை விரும்புவ தாகவும் விளம்பும் வரைக்கும் மீள மாட்டாய் என்று கூறி, மன்னன் ஏகினான். அழகன் உணவுடன் அங்கு வந்தான். குருதிப் பெருக்கில் கொற்ற வன்மகன் கிடந்தது கண்டு நடுங்கி, அன்பனே, எவரால் நேர்ந்த இன்னல்? ஐயோ? என்று பதறினான். இளங்கோ, அழகனே, வேல்விழி தன்னை வெறுத்ததால் என்னைத் தந்தை சாட்டையால் அடித்தார் என்றான். அழகன் அவ்வுரை கேட்டே அழல்படு நெஞ்சுடன் சென்றான் அயலிலே. 25 இடம் : திறல் நாட்டின் நகர்ப்புறம். நேரம் : நள்ளிரவு. உறுப்பினர் : பெருநாட்டின் ஒற்றர், அழகன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) அனல்பட்டுத் தாண்டுவான் போலும் அழகன் பெருநாட்டின் ஒற்றர் எதிரில் விரைந்தோடி நின்றான் விளம்புகின் றானே. கலி வெண்பா பஃறொடை கலிவெண்பா பெருநாட்டான் பெற்ற பெருந்திருவை அன்றி ஒருநாட்டு மங்கையையும் நான்மணக்க ஒப்பேனே என்றுரைத்தான் மன்னன்மகன். என்ன பிழையிதிலே? அன்றே சிறைவைத்தான் ஆணழகை அவ்வரசன் காட்டுமலை யன்மகளைக் கட்டிக்கொள் என்றுசொல்லிச் சாட்டையினால் சாகப் புடைக்கின்றான் தன்கையால்! செங்குருதிச் சேற்றில் சிறையில் மடிகின்றான்! எங்கிதனைச் சொல்வேன் இரக்கம் உமக்கிலையோ? அஞ்சல் எழுதிவிட்டான் ஆட்களையும் போகவிட்டான்! வஞ்சியொடும் அந்த மலைவேந்தன் வந்திடுவான். ஏழெட்டு நாளிலந்த ஏந்திழையைத் தான்மணந்து வாழட்டும் அல்லதவன் மாயட்டும் என்கின்றான். பெண்ணில் பெருந்திருவை யான்மணப்பேன் அல்லாது மண்ணில் மறைந்திடுவேன் என்கின்றான் மன்னன்மகன் என்றே துடித்தான் அழகன்! இதுகேட்டு நின்றிருந்த ஒற்றர் நெடுமூச் செறிந்தவராய் இங்கிதனை யாரிடத்தும் சொல்லாதே; நாளைக்கே அங்குள்ள எங்கள் அரசர் பெரும்படைதான் பொங்கும் கடல்போற் புறப்பட்டு வந்துவிடும் மங்காத நெஞ்சத்து வையத் திறல்மீள்வான் அன்றே பெருந்திருவை அன்னோன் மணந்திடலாம் இன்றே இதோநாங்கள் செல்கின்றோம் என்றுரைத்தே தம்குதிரை மேலேறித் தட்டினார்! நல்லழகன் அங்கே மகிழ்ந்திருந்தான் அன்று. 26 இடம் : ஏரிக்கரை. நேரம் : காலை உறுப்பினர் : மண்ணெடுப்போர், அழகன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) ஏரி தூர்க்குமண் எடுப்பார் பல்லோர் ஆங்கே அழகன் சென்றுதன் தாங்காத் துயரம் சாற்றினான் மிகவே. எண்சீர் ஆசிரிய விருத்தம் ஏரியிலே மண்ணெடுத்துக் கரைஉ யர்த்தும் தோழர்களே இப்பெரிய நாட்டின் ஆணி வேரினிலே பெருநெற்றி வியர்வை நீரை விட்டுவளர்த் திடுகின்ற நாட்டு மக்காள் ஊரினிலே தெருவினிலே வீட்டில் எங்கும் உம்உழைப்பைப் பொன்னெழுத்தால் காண்ப தன்றி ஆரிங்கே உழைத்தார்கள் அரசன் என்போன் அரசியொடு பொன்னூசல் ஆடு கின்றான். சடுகுடுவென் றேநெய்வீர் கந்தை யில்லை தார்வேந்தன் கட்டுவது சரிகை வேட்டி கடல்நடுவில் முத்தெடுப்பீர் கஞ்சி யில்லை கடனறியா வேந்துக்கு முத்துத் தொங்கல் மடுப்புனலும் செங்குருதிப் புனலும் வார்த்து வளவயலில் களைஎடுத்துக் காத்த செந்நெல் அடுக்களையில் கண்டீரோ! அரசன் வீட்டில் ஆன்நெய்யில் சீரகச்சம் பாமி தக்கும்! எவன்படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை எவன்காத்தான்? காக்கின்றான்? காப்பான்? கேளீர்! தவழ்ந்தெழுந்து நடந்துவளர் குழந்தை போலும் தரை, வீடு, தெரு, சிற்றூர், நகரம் ஆக அவிழ்ந்ததலை முடிவதற்கும் ஓயாக் கையால் அணிநாட்டைப் பெற்றவர்கள் கண்ணு றங்கிக் கவிழ்ந்திடஓர் ஈச்சம்பாய் இல்லை; தங்கக் கட்டிலிலே ஆளவந்தார் நாயு றங்கும்! சிற்றூரில் ஆயிரம்பேர், செழுந கர்க்குள் திகழ்பன்னூ றாயிரம்பேர் விழுக்கா டாக முற்றுமுள நாட்டிலுறு மக்கள், எண்ண முடியாத தொகையினர்கள், அவர்கள் எல்லாம் கொற்றவரின், பார்ப்பனரின் விரல்விட் டெண்ணும் குடும்பங்கள் இடும்பணிக்குத் தலைவ ணங்கிக் குற்றேவல் செயப்பிறந்தார் என்றார்; மற்றும் கொழுக்கட்டை யாய்ப்பிறந்தோம் நாங்கள் என்றார். மின்னொளிமேல் மன்னன்மகன் எண்ணம் வைத்தான் மின்னொளியோ நம்மவரின் பெண்ணே அந்த மின்னொளிதான் மிகத்தாழ்ந்த சாதிப் பெண்ணாம்! மின்னொளியைத் தன்மைந்தன் எண்ணும் போதே மன்னனெனும் தன்சாதிக் கிழிவா யிற்றாம்! மன்னன்மகன் சிறையினிலே வைக்கப் பட்டான். தன்சாதிக் குமிழிகளை நிலைஎன் கின்றான் தடங்கடலின் மக்களினம் தாழ்வென் கின்றான். மக்களிலே தாழ்வுயர்வே இல்லை என்று மன்னன்மகன் எண்ணுவதும் பிழையாம் அன்றோ! கக்குமுடற் குருதியிலே சேய்மி தக்கக் கைச்சாட்டை ஓயுமட்டும் அடித்தான் மன்னன். மிக்குயர்ந்த சாதிகீழ்ச் சாதி என்னும் வேற்றுமைகள் தமிழ்க்கில்லை; தமிழர்க் கில்லை. பொய்க்கூற்றே சாதிஎனல், ஆரியச் சொல் புறநஞ்சு! பொன்விலங்கு; பகையின் ஈட்டி! கடற்குமிழி உடைந்திடுக சாதி, வீழ்க கடல்மக்க ளிடைவேந்தர் மறைந்து போகக் குடியரசு தழைக என அழகன் சொல்லிக் கொடிவழியைத் தாண்டிஅயற் புறத்தே சென்றான். நெடிதுழைப்போர் மேடழித்தே உணர்ச்சி என்னும் நீர்மட்டம் கண்டார்கள். உழைத்த நாளுக் கடைகூலி காற்பொன்னே! மாதந் தோறும்! ஆள்வாருக் கறுபதினா யிரம்பொன் என்றார். 27 இடம் : அரண்மனையில் காவலறை. நேரம் : இரவு உறுப்பினர் : செம்மறித்திறல், பொன்னி, காவற்காரர், படைமறவர், மன்னன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) உணவு வட்டில் ஒருகையில் மறுகையில் குடிநீர்ச் செம்பும் கொண்டு, காவல் அறையில் பொன்னியை அணுகினான் ஒருவன் நிறைநி லாமுகம் நிலத்திற் கவிழக் கருங்குழல் அவிழக் கண்ணீர் உகுக்க இருளிற் கிடந்த பொன்னி எழுந்தாள். செம்மறித் திறல்நான் என்ற தீங்குரல், மெல்லெனப் பொன்னி காதில் விழுந்ததே. அவள்அவன் அணைப்பும் பிணைப்பும் ஆனார் உள்ளம் இரண்டும் உலகை மறந்தன. வாயிலோர் அழகன் வராததேன் வெளியில்? போயினான் என்ன புரிந்தான் இன்னும்? என்றனர்; ஐயம் எய்தினர், ஒருவன் அறைக்குள், ஒருகண் அரைமுகம் சாய்த்தான்; இரண்டுடல் ஒன்றிலொன் றிறுகுதல் கண்டான்; அவன்பதைத் தோடினான் அரச னிடத்தில்! அரசன், மறவர் ஒருசில ரோடு விரைவில், வந்தான், வெளியில் வருவீர் இருவரும் என்று பெருங்குரல் பாய்ச்சினான். அழகன் உடையில் அங்குச் செம்மறி மழமழ வென்று வந்து நின்று கொழகொழ வென்று சிலசொற் கூறினான் முக்காடு நீக்கி முடியரசன் கண்டான் இவனைக் கட்டி இழுத்துச் செல்க சிறைக்கென்று! மன்னன் செப்பினான்; மறவர் அவ்வாறு பிணித்தே அழைத்துச் சென்றனர். காவலிற் பொன்னியைக் கண்ணால் வெதுப்பிப் புலைச்சி மகனைப் புணர்ந்த புலைச்சி கொலைக்குக் காத்திரு என்று நிலத்திடி எனவேந்து நேர்நடந் தானே. 28 இடம் : அரண்மனைவாயில், தெருக்கள், தொழிற்சாலை. நேரம் : காலை முதல் இரவு வரைக்கும். உறுப்பினர் : அழகன், தோழிமார், தெருவினர், தொழிற்சாலையினர். (இணைக்குறள் ஆசிரியப்பா) தூய்மொழி என்னும் தோழி, அரண்மனை வாயிலில் நின்றாள். அவளை, அழகன் அணுகிக் கூறு கின்றான்: நாமெலாம் தாழ்ந்தவர், தாமெலாம் உயர்ந்தவர் என்று மன்னர் இயம்பினார் அன்றோ? நம்மில் ஒருத்தியை அம்மன் னன்மகன் மணக்க நினைத்தான் என்று சிறையில் வைத்ததும் தெரிந்தாய் அன்றோ? மன்னியின் தங்கையாம் பொன்னி செம்மறியை மணக்க நினைத்ததால் மாளப் போவதை அறிவா யன்றோ? செம்மறித் திறலும் சிறையில் உள்ளான் அம்மங் கைதனை அணுகிய தாலே கண்டாய் அன்றோ? தன்மா னத்தைத் தமிழர் இழப்பதா? பொன்னே தரினும் மன்னன் அரண்மனை வாயிலை மிதிப்பதும் தீயதே என்றான் அழகன். புருவம் நெற்றி ஏற இருவிழி எரியைச் சொரிய என்போன் றார்க்கும் இங்கென்ன வேலை? என்றே அங்கிருப் போரை அணுகினாள் விரைந்தே! சில நாழிகையில், தோழிமார் அரண்மனை துறந்தனர். பணிப்பெண் டிர்கள் பறந்தனர். காவலர் போயினர். பாவலர் எட்டியும் பாரோம் என்றனர். மெய்காப் பாளரும் வீடு திரும்பினர். அடுக்களை ஆக்குநர் இல்லை. அரண்மனை இவ்வாறாகத் தெருவெலாம் தெருவின் வீடெலாம், வீட்டின் விருந்தினர் பொருந்தினோர் வருந்த லானார். பிறப்பில் தாழ்ந்தது பெருமக்கள் கூட்டமா? பிறப்பில் உயர்ந்ததச் சிறிய கூட்டமா? என்றே ஆர்த்தார்த்து எழுந்தனர் - ஆலைத் தொழிலினர் அங்கொரு பாங்கில் கூலிக் கென்றே ஞாலத்திற் பிறந்தோம் கோலைத் தாங்கியே பிறந்தனர் கொற்றவர் என்றனர்; மன்னன் வீழ்க! என்றனர், பார்ப்பனர் வீழ்க! என்று கூவினர். மனத்தாங் கல்கள் வளர்ந்தன! இனத்தின் எழுச்சி நாடெலாம் எழுந்ததே. 29 இடம் : அரன்மனைக் கூடம். நேரம் : காலை உறுப்பினர் : புலித்திறல், மன்னி, பார்ப்பனர், அழகன். (இணைக்குறள் ஆசிரியப்பா) யாமிட்ட சோறுகறி எப்படி என்று நாட்டு மன்னனைக் கேட்டனர் பார்ப்பனர். நன்று மிகவும் என்றான் மன்னன். மேலும் மன்னன் விளம்புவான்: தாழ்ந்தவர் தம்மில் ஒன்று சேர்ந்தனர்; உயர்ந்தவர் நாமும் ஒன்று சேர்ந்தோம் என்றான் - பார்ப்பனர், இப்படி விடுவதும் ஏற்ற தல்ல தாழ்ந்தோர் போக்கைத் தடுக்கவேண்டும், அவர்களின் நன்மைக் காகவே! அவர்மேல் படையை அனுப்ப வேண்டும். அவர்கள் நன்மை கருதியே! அரண்மனை வேலையை அவர்கள் மறுத்தது குற்ற மன்றோ? பொறுக்க லாமோ? ஒறுக்க வேண்டும் அவர்நன் மைக்கே! அவர்களில் ஓரா யிரம்பேர் ஒழிந்துபோ கட்டுமே? மற்றவர், வழிக்கு வருவா ரன்றோ? திருத்த வேண்டும், திருந்துவர்; மக்களைத் திருத்தல் மன்னன் கடமை. மனுநூல் நாட்டில் வழங்க வேண்டுமே? அதற்குப் பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்; ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி ஆள வேண்டும். விளைபொருள் விற்பவர் வேண்டும் வளவயல் உழவும், குளச்சே றெடுக்கவும், இரும்ப டிக்கவும், கரும்பு நடவும், உப்புக் காய்ச்சவும், தப்ப டிக்கவும், சுவர்எ ழுப்பவும், உவர்மண் எடுக்கவும், பருப்புப் புடைக்கவும், செருப்புத் தைக்கவும், மாடு மேய்க்கவும், ஆடு காக்கவும், வழிகள் அமைக்கவும், கழிவடை சுமக்கவும் திருவடி தொழுதுநம் பெருமை காக்கவும், வரும்படி நமக்கு வைத்து வணங்கவும், நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே என்றனர். படைத் தலைவரைக் கடிதில் அழைப்பிக்க என்றான் மன்னன். குதித்தோடி னான்ஒரு குள்ளப் பார்ப்பான். பார்ப்ப னர்பால் பகர்வான் மன்னன்: அரண்மனை வேலைகள் அனைத்தும் நீவிர் பார்த்திட வேண்டும், பணியாளர்கள் வரும் வரைக்கும் என்ன, அடடா! செருப்புத் துடைப்பது முதல் அடுப்புத் தொழில்வரை நடத்துவோம் என்றனர். பார்ப்பன ஆடவர் பார்ப்பனப் பெண்டிர் அனைவரும் பணிசெய அரண்மனை வந்தனர்; மன்னனும் மன்னியும் மகிழ்ந்தி ருந்தனர்; அழகன் வந்தான். எங்குவந் தாய்? என எரிந்தான் மன்னன். செம்மறித் திறலும் சேல்விழிப் பொன்னியும் பொன்னூசல் ஆடிப் பொழுதுபோக்கு கின்றார்; வையத் திறலோ மாசுடை நீக்கித் தேசுடை அணிவான்; ஏனெனில், ஆண்டா ளானதன் அன்பு மாமி மாப்பிள்ளை பார்க்க வருகின் றாளாம் என்றான். மன்னி அழுதாள், மன்னவன் சீறி, இவர்கள் சிறையினின் றெப்படி வந்தனர்? என்று கேட்டான். காவலர் எவரும் காணேன் அங்கே என்றான் அழகன். எப்படி வரலாம், இவர்கள்? என்று மன்னன்கேட்டான். அவர்களைக் கேட்க வேண்டும். அவர்கள் வாளைக் கையில் வைத்திருக் கின்றனர் என்றான் அழகன். பார்ப்பனர் தம்மைக் கூப்பிட்டு மன்னன், வையத் திறலை, மறியை, வஞ்சியைக் கடுஞ்சிறை வைத்துக் காவ லிருங்கள்; என்றன் ஆணை இது வெனக் கூறினான். புல்லேந்து கையில் வில்லேந்து வோம்யாம் என்று பார்ப்பனர் இயம்பினர். மகிழ்ச்சி என்றான் மன்னன். ஆயினும், மல்லேந்து மன்னர்க்குச் செல்வாக் கில்லையே! எப்படி அதுசெய ஏலும்? என்றனர். அழகன் சிரித்தான். நன்றென மன்னன் இஞ்சி தின்ற குரங்குபோல் திகைத்தான் குந்தியே. 30 இடம் : அரண்மனை நேரம் : மாலை உறுப்பினர் : படைத்தலைவன், மன்னன் அகவல் (நேரிசை ஆசிரியப்பா) தாங்கா ஆவலில் தன்படைத் தலைவனை ஆங்கெதிர் பார்த்தமர்ந் திருந்தான் அரசன். அன்னவன் வந்து வணங்கினான் தன்ஆணை மன்னன் சாற்றுவான் மிகவே: அறுசீர் ஆசிரிய விருத்தம் விரைந்துசெல்! மானம் காப்பாய் அரண்மனை வேலைக் காரர் புரிந்தனர் தீமை விட்டுப் போயினர் காவ லர்கள் பிரிந்தனர் சிறைதி றந்து பெயர்ந்தனர் குற்றஞ் செய்தோர்! விரைந்துசெல் பணியா ளர்கள் வேண்டும்இப் போதே என்றான். மேலுமே உரைப்பான் மன்னன்: வெந்திறல் மறவர் தம்மை வேலொடு தெருவி லெல்லாம் நிறுத்திவைத் திடுதல் வேண்டும். வாலசைத் திடுவார் தம்மை மண்ணிடைப் புதைக்க வேண்டும் தோலினை உரிப்பாய் நம்மைத் தூற்றுவார் தம்மை என்றான். படைத்தலை வன்பு கல்வான் படைசார்ந்த மறவர் எல்லாம் கடைச்சாதி என்று நாமே கழறிய துண்டோ? என்றான் விடுத்தஇவ் வினாவைக் கேட்ட வேந்தனும், ஆம் ஆம்! என்றான். கெடுத்தனிர் அரசே அந்தக் கீழ்மக்கள் வருந்தி னார்கள். ஆயினும் அவர்கட் கான ஆறுதல் கூறு கின்றேன் போயினி நீங்கள் சொன்ன செயலினைப் புரிய வேண்டும் நாயினும் தாழ்ந்தா ரேனும் நாட்டினிற் பெருங்கூட் டத்தார்! பாயுமேல் மக்கள் வெள்ளம் நம்மாள்வார் பறக்க வேண்டும். உயர்சாதிப் படைத்த லைவன் இங்ஙனம் உரைத்துச் சென்றான். துயர்பாதி அச்சம் பாதி தொடர்ந்திடத் தூக்க மென்னும் அயலுல கடைந்தான் மன்னன் உணவுண் ணான்அவன் விருப்பம்! கயல்மீனும் சோறும் பார்ப்பார் கட்டாய உணவாய்க் கொண்டார்! 31 இடம் : அரண்மனை நேரம் : காலை உறுப்பினர் : ஆளும்சாதி அதிகாரிகள், அரசன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) ஆளும் சாதியார் அதிகா ரத்தினர் வாளும் கையுமாய் வந்து மன்னனை, நாலாஞ் சாதியும் மேலாஞ் சாதியும் ஆலும் விழுதும் ஆவார் இதனை நாமறி வோமே. அறிந்தும்இத் தீமை புரிந்தது தீமைஎன் றாரே! அறுசீர் ஆசிரிய விருத்தம் நேர்ந்திட்ட நிலைமை தன்னை நிகழ்த்துவேன் உறவி னோரே சார்ந்திட்ட ஆண்டாள் என்னும் பூக்காரி தன்பெண் ணாளைத் தேர்ந்திட்டான் மணமே செய்யத் திருமகன் என்றான் மன்னன்! ஆர்ந்தது விழியிற் செந்தீ; ஐயையோ என்றார் வந்தோர். அன்றியும் என்கொ ழுந்தி செம்மறித் திறலை அண்டி நின்றனள். சிறையில் வைத்தேன்; நிலைகெட்ட செம்ம றிக்கும் பன்முறை சொன்னேன்; கேளான். படுசிறை என்றேன். மேலும் என்பிள்ளை என்றும் பாரேன் சிறையினில் இருக்கச் செய்தேன். பணியாளர் தோழி மார்கள் இதையெல்லாம் பார்த்தி ருந்தார் அணியணி யாகச் சென்றார் அரண்மனை வேலை விட்டே! துணிவுடன் நகரைக் கூட்டித் தூற்றினார் மேல்வ குப்பை! பணிவுடன் பணிகள் செய்து பார்ப்பனர் உதவு கின்றார். அரண்மனைப் பின்பு றத்தே அம்மறித் திறலும், பொன்னி ஒருத்தியோ டுள்ளான் என்றன் உயர்மைந்தன் பணிப்பெண் ணாளைத் திருமணம் புரிய வேண்டி ஆவன செய்கின் றானாம். அருஞ்சிறைக் காவல் இல்லை அனைவரும் இவ்வா றானார் என்றனன் மன்னன்; இந்த இழிவினைக் கேட்டி ருந்த மன்னரின் மரபி னோர்கள் வாளொடு கிளம்பி னார்கள் புன்றொழில் புரிந்து ளாரைப் புதைக்கின்றோம் எனக்கொ தித்தார். சென்றனர், சாதி வாழ்க தீயர்கள் வீழ்க என்றே. போயினார் அரண்ம னைக்குப் புறக்கட்டில், அவர்கள் இல்லை. தீயர்கள் மறைந்தார் என்று செப்பினார். அரசன் கேட்டு நாயினை ஒப்பா ரோடு நகரினிற் கலகம் செய்யப் போயினார். போவீர் என்றான் அஞ்சினர் பொய்கை யாள்வார். 32 இடம் : திறல் நாட்டு நகர். நேரம் : காலை உறுப்பினர் : ஒற்றர் படைத் தலைவன், பெருமக்கள். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) பெருநாட் டுப்படை, திருநாடு தன்னை முற்றுகை யிட்டதே முற்றுகை யிட்டதே என்று கூவினர் எங்கணும் மக்கள்! தீமை குறித்தது செழுநகர்ப் பெருமணி! அரசன், படையை அழைத்தான் விரைவில்! படையின் தலைவன் பரபரப் புற்றான். தேர்ப்படை ஒன்று சேர்ப்பீர் என்றான் பரிப்படை எழுக என்று பகர்ந்தான் யானைப் படையும் எழுக என்றான் காலாட் படையும் காண்க என்றான் நாலாஞ் சாதியார் நாமாட்டோம் என்றனர். மூன்றாஞ் சாதியார் முணுமு ணுத்தனர் இரண்டாம் சாதியார் இருநூறு பேர்கள் திரண்டெ ழுந்தனர் மருண்ட நெஞ்சோடு முதன்மைச் சாதியார் மூக்கைப் பிடிக்க அரண்மனைச் சோற்றை அருந்துவ தன்றிப் போரை யணுகோ மேநமோ நாராயணா என்று நவின்றுசென் றனரே. 33 இடம் : நகரின் நடுவில் ஓர் பெருவொளி. நேரம் : இரவு உறுப்பினர் : வையத்திறல், செம்மறித்திறல், பெருமக்கள். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) நாட்டுமக் கட்கு நல்வழி காட்டச் சேய்வை யத்திறல், செம்ம றித்திறல் சொற்பெருக் காற்றுவார் என்று நற்பெரு மக்கள் நண்ணினார் ஆங்கே. எண்சீர் ஆசிரிய விருத்தம் மேடையின்மேல் ஏறிநின்றான் மன்னன் மைந்தன் விருப்பத்தால் நகரமக்கள் வாழ்க என்றார். வாடாத மலர்முகத்தான் வணக்கம் கூறி மாண்புடையீர். திறல்நாட்டு மக்காள், கேளீர்! பீடுடைய நம்திறல்நா டதனை நோக்கிப் பெருநாட்டான் பெரும்படையைக் கூட்டி வந்தான் வாடிடநாம் முற்றுகையும் போட்டு விட்டான் மன்னவரின் அதிர்வெடியில் மருந்தே யில்லை. பிரமன்உடல் தனில்நான்கு வகையாம் மக்கள் பிறந்தாராம், பார்த்தானாம் என்றன் தந்தை. பிரமன்முகந் தனிற்பார்ப்பார் பிறந்திட்ட டாராம் பிரமன்தோள் பெற்றதுவாம் மன்னர் தம்மைப் பிரமனிடை தனிற்பிறந்தார் வாணி கர்கள் பிரமனடி தனிற்பிறந்தார் உலகி லுள்ள பெருமக்கள் இதுமனுநூல் ஆரி யர்சொல் பிழைக்கவந்த ஏமாற்றுக் காரர் சூழ்ச்சி. அரசன்மகன் உங்களினப் பெண்ணை நத்தல் அடுக்காதாம் அதற்கென்னைச் சிறையில் வைத்தான் அரசன்எழிற் கொழுந்தியார் என்சிற் றன்னை அகம்பறித்தார் செம்மறியார் அதுவும் குற்றம் பெருஞ்சிறையில் மூவருமே அடைக்கப் பட்டோம் பெருமக்காள் இதையறிந்தீர்: தன்மா னத்தால் வருந்துகின்றீர்; ஆள்வோர்பால் ஒத்து ழைக்க மறுத்துவிட்டீர்; வாழ்கநீர் வாழ்க வாழ்க! பெருநாட்டான் படையெடுப்பைத் தகர்க்க வேண்டும் பெருமறவர் கூட்டமே வாரீர் என்று திருநாடாம் திறல்நாட்டின் மன்னர் சென்று திருமுழங்காற் படியிட்டுக் கெஞ்ச லானார் வரமாட்டோம் எனமறவர் மறுத்து விட்டார் வாழ்கநனி வாழ்கஅவர் வாழ்க வாழ்க! இருசாதி தான்மீதி, மன்னர் கையில் இவர்சாதி ஒன்றுமற்றொன் றினாம்தார் கூட்டம். அரண்மனையின் அறைக்குள்ளே வாள்சு ழற்ற அட்டியில்லை என்றததோ அரசச் சாதி! பிரமனார் திருமுகத்துப் பெருங்கா யங்கள் பெண்டாட்டி பிள்ளையுடன் அரண்ம னைக்குள் பெருநாட்டான் அருள்பெற்று விபீஷ ணன்தான் பெற்றபயன் பெறுவோமா எனக்க யிற்றை அருணாச லப்பெரும்பு ராணம் சாத்தி அவனடியே உய்யும்வழி என்கின் றார்கள். மேற்சாதி யார்நிலைமை இவ்வா றாக மேலும்நாம் செயத்தக்க தின்ன தென்று சேற்கருங்கண் பொன்னியார்க் கன்ப ரான செம்மறியார் என்னருமைச் சிறிய தந்தை சாற்றிடுவார் கருத்தோடு கேட்பீர் என்று தன்னுரையை முடித்தமர்ந்தான் மன்னன் மைந்தன் மாற்றுயர்ந்த பொன்போன்ற திறல்நாட் டாரே வணங்குகின்றேன் என்றுரைத்து மறிபு கல்வான்: திறல்நாட்டின் மேல்வந்த பெருநாட் டானைச் சிதறடிக்க வேண்டுமெனச் செப்பு கின்றீர். பொறுத்திருங்கள் பெருநாட்டான் வரட்டும் உள்ளே போடட்டும் தன்கொடியை! மகிழ்ந்தி டட்டும் வெறுக்காதீர் படைமறவர் விளையா டட்டும் வெற்றிவிழாக் கொண்டாட்டம் நடந்தே றட்டும் திறல்நாட்டின் தம்மறவர் தமக்கும் இந்தத் திட்டத்தை நன்றாகச் சொல்லி வைப்பீர். தனித்தனியே பகைமறவர் தம்மைக் கண்டு தாழ்சாதி எனநம்மேல் உயர்ந்தோர் வைத்த மனப்போக்கை அவர்மனத்தில் ஏற்ற வேண்டும் மற்றவற்றை யாமுரைப்போம் அவ்வப் போதில். இனத்தோடு இனம்சேரும்! ஆளும் சாதி இங்குள்ள ஆளுஞ்சாதி யையே சேரும் அனைத்துள்ள கோல்கொண்டார் நூல்கொண் டாரை ஆட்கொள்ள வேண்டியவர் நாமே என்றான். (கூட்டம் முடிந்தது) 34 இடம் : திறல்நாட்டு நகர் காலம் : காலை உறுப்பினர் : பெருநாட்டு மன்னன், பெருநாட்டுப் படைகள், திறல்நாட்டு மக்கள். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) கோட்டைமேல் வெள்ளைக் கொடிப றந்தது பேட்டையில் பெருநாட்டுப் படைகள் நுழைந்தன பெரும்படை பின்வர ஒருமணித் தேரில் பெருநாட்டு மன்னன் திருநகர் புகுங்கால், நேற்றுப் புலித்திறல் சோற்றை உண்ட சிறுமதிப் பார்ப்பனர் நிறைநீர்க் குடத்தொடும் நறுமலர்த் தாரொடும் நன்றெதிர் கொண்டு வருக பெருநாட்டு மன்னரே வருக! திருமால் பிறப்பெனும் செம்மலே வருக! புலித்திறல் மன்னனால் பட்டது போதும் மனுநூல் தன்னை மன்னரே காக்க! இனிமேல் எங்கள் தனிநலந் தன்னை நாடுக நாடுக நன்றே வாழ்க சூடுக மாலை என்று சூட்டி நல்வர வேற்பு நடத்திய அளவில், அரசனும் வணங்கி, அறம்பிச காமல் பெருமை மனுநூல் பிழைப டாமல் பார்ப்பனர் நன்மை பழுதுப டாமல் காப்போம் என்று கதறி முடித்தான். நாற்படை முழக்கொடு நகர்மேற் சென்றன தேன்கூட்டில் ஈக்கள் செறிந்தன போல வானுயர் வீடுதொறும் வாயிலில் மக்கள் தலைவைத் திருந்தார் தம்முளம் மறைத்தே. பெருநாட்டுப் பிறைக்கொடி திறல்நாடு பெற்றது பெருநாட்டு மன்னனும் பெரும்படை மறவரும் திறல்நாட் டரண்மனை சேர்ந்தனர் உடனே. புலித்திறல் சிறையில் புகுத்தப் பட்டான் பிரமன் தோளிற் பிறந்த பெட்டைகள் மரியா தையாகப் பெருஞ்சிறை சென்றனர். மருமக னாகும் வையத் திறலை விரைவில் தேட விடுத்தான் ஆட்களை. பெருநாட் டான்தன் பெரும்படை மறவர்க்கு விடுமுறை தந்தான், வேண்டிப் பார்ப்பனர் அரண்மனை அரிசியில் விருந்துண் பித்தார். முரசறை வோனை அரசன் அழைத்தே, அரசியல் திட்டம் அமைப்ப தற்கும் வையத் திறலை என் மகளுக் காகத் திருமண உறுதி செய்வ தற்கும் நாளைக் காலை நாட்டு மக்கள் மாளிகை வரும்படி மணிமுர சறைக என்றான். யானை வள்ளுவன் நன்றெனப் பணிந்து நடந்தான் ஆங்கே. 35 இடம் : திறல் நாட்டுமணி மாளிகை. நேரம் : காலை உறுப்பினர் : அனைவரும். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) மென்பட்டு மெத்தை விரித்த பெருந்தரை, நன்முறை ஓவிய நாற்பு றச்சுவர் கற்றச்சர் கைத்திறம் காட்டும் ஆயிரங்கால், பொற்கட்டில் பன்மணி புதைத்த மேன்மூட்டு வருகெனப் பொற்பாவை வரவேற்கும் முன்வாயில் பெருமக்கள் மகிழ்ந்துபோம் பின்புறப் பெருவாயில், - நறுந்தென்றல் வார்க்கும் நாற்சுவர்ச் சன்னல்கள் நிறந்தரு பவழம், நீலம், மாணிக்கம், சுடர்விடு முத்துத் தொங்கல்கள் இடையிடை, அடைசுவர் சேர அங்குக் கலைப்பொருள் ஆனமா ளிகைநடு அடலேறு சுமப்பதோர் வானில வெறித்த மணிக்குடை இருக்கையில் வென்ற பெருநாட் டான்வீற் றிருந்தான். அன்னோன் அமைச்சன் அருகினில் இருந்தான் படையின் தலைவனும் பாங்கில் அமர்ந்தான். முரசு முழங்கும் முன்புற வாயிலால் வரும்பெரு மக்கள் மலைபுரள் அருவி! திறல்நாட்டு மறவரும் செம்மறித் திறலும் வையத் திறலும் தம்முரு மாற்றி நீறு பூத்த நெருப்பென இருந்தனர். ஆண்டாள் ஒரு புறம் அவள்மகள் ஒருபுறம் ஈண்டிழைப் பொன்னி ஒருபுறம் இருந்தனர். தொலைவிலோர் மூலையில் தோன்றா வண்ணம் அழகன் இருந்தான் அச்சத் தோடே, பழந்திறல் நாட்டினர் பல்லா யிரவர், பெருநாட்டு மறவர் ஒருசில நூற்றுவர் ஆங்கே கலந்தபடி அமர்ந்திருந்தனர். பெருநாட்டு மன்னன் பேசத் தொடங்குமுன் வையத் திறலோன் வந்துவிட் டானா? என்று பன்முறை கேட்டான்? இல்லை என்று சொன்னார். சொற்பொழிவு தொடங்கினான்: திறல்நாட்டு மக்களே, செப்புதல் கேட்பீர்: இத்திறல் நாடோ, என்பகை யான மலைநாட் டோடு கலந்து கொள்ள இருப்பதால் நான்படை எடுக்க நேர்ந்தது வென்றேன். சிறையில்உம் வேந்தரை அடைத்தேன். திறல்நாடு தனில்என் பிறைக்கொடி ஏற்றினேன். இவ்வா றிருக்க, இனிஇந் நாட்டின் ஆட்சிமுறை எவ்வா றமைய வேண்டும்? என்பது பற்றி இயம்பு கின்றேன் என்றன் உறவினன், மன்னர் மரபினன் ஆன ஒருவனே இந்நாட் டரசன். வரும்அவ் வரசன் பெருநாட் டுக்குப் போர்த்துணை நாளும் புரிய வேண்டும். மேலும் அந்த வேந்தன், பார்ப்பனர் மறைநூ லுக்கு மதிப்பீய வேண்டும். இதனைக் கருதி இந்நாட்டு மன்னரின் மகனுக் கேஎம் மகளைத் தரவும் விரும்பினேன். அவனும் விரும்புவ தாக அறிந்தேன்; மகிழ்ந்தேன். ஆதலால் இந்தத் திறல்நாட்டை யாள்வோன் திறல்நாட் டினனே! வையத் திறல்என் மகளை மணப்பதாய் இன்றே உறுதி இயம்பினால், நாளையே மணமு டித்து மணிமுடி பெறலாம்! வையத் திறலோன் வராமை யாலே அன்னோன் சார்பில் இந்நாட் டார்கள் உறுதி கூறினும் ஒப்புக் கொள்வேன் என்று மன்னன் இயம்பிய அளவில், கூனும் கோலும் குள்ளமும் வெள்ளைத் தாடியும் மீசையும் தள்ளா உடலுமாய் எழுந்து நின்றான் எதிர் ஒரு கிழவன்; அரசனைக் கேட்டான் ஆங்கே: (இணைக்குறள் ஆசிரியப்பா) உங்கள் உறவுதான் ஊராள வேண்டுமோ? வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ? என்று கிழவன் கேட்டான். கேட்பீர் கேட்பீர் என்று முன்னுள்ள மக்கள் முழக்கஞ் செய்தனர்! எங்கள் உறவுதான் ஆள ஏற்றவன்; வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டும் என்றான் வேந்தன். எங்களில் ஒருவன் ஏன்ஆளக் கூடாது? சொல்க என்றான் கிழவன். நாடாள்வ தன்று நாலாஞ் சாதி என்றான் மன்னன். சாதி ஒழிக சாதி ஒழிக என்று முழங்கினர் எதிரில் மக்கள்! எங்கள் நாட்டுக் கினிவரும் மன்னன் உங்கட்குப் போரில் உதவ வேண்டுமோ? பாரோர் நாட்டைநீர் பறிக்க நினைத்தால் சீராம் திறல்நாடு சேர வேண்டுமோ? என்று கேட்டான் முதியோன். நன்று கேட்டீர் நன்று கேட்டீர் என்றனர் மக்கள். ஆம் ஆம்! என்றே அதிர்ந்தான் மன்னன். பார்ப்பனர் மறையைப் பைந்தமிழ் மக்கள் மாய்ப்பது தீதோ வளர்ப்பது கடனோ? என்றான் முதியோன். ஆம்! என்று மன்னன் தீமுகம் காட்டினான். பார்ப்பனர் பொய்ம்மறை பாழ்பட என்று கூப்பாடு போட்டனர் மக்கள். வையத் திறல்உம் மகளை மணக்கும் எண்ணம் அவனுக் கிருந்த தில்லை; இருக்கப் போவதும் இல்லை; இதனை இளங்கோ சார்பில் யானுரைக் கின்றேன் என்றான் முதியோன். ஆம் ஆம் என்றே அனைவரும் கூவினர்! சின்ன முகத்துடன் மன்னன், கிழவரே! வையத் திறலை மன்னன் ஒறுத்தது பொய்யோ! என்றான். மன்னன் தன்னன்பு மைத்துனர் மகளை மணக்கச் சொன்னான்; மறுத்தான் வையன்; அதனால் ஒறுத்தான் என்றான். சிறைமீட்டு வருக புலித்திறலை என்று பெருநாட்டு மன்னன் உரைத்தான். திறல்நாட்டு மன்னன் அவ்விடம் சேர்ந்தான் வையத் திறலைச் சிறையில்வைத்தனை மெய்யாய்க் காரணம் விளம் பெனக் கேட்கப் புலித்திறல் புகல்வான்: உன்மகள் தனையும் என்மகன் மறுத்தான் என்மைத் துனன்மகள் தன்னையும் மறுத்தான் வேலைக்காரி மின்னொளி தன்னை மாலை யிட்டு மன்னர் மரபையே அழிக்க எண்ணினான்! அடைத்தேன் சிறையில்! என்ன, பெருநாட்டான், வாள் உருவி புரட்சியோ! புரட்சியோ! கிழவரே, உரைப்ப தென்ன? என்று மன்னன் கேட்கக் கிழவன், மன்னா! கிளத்துதல் கேட்க சாதி யில்லை! பார்ப்பன வகுப்பும் பார்ப்பன நூற்களும் பொய்யே! மதம்எனல் தமிழ்வை யத்தின் பகை! ஆள்வோர் என்றும் அடங்குவோர் என்றும் பிறந்தார் என்பது சரடு! தனிஒரு மனிதன் தன்விருப் பப்படி இனிநாட்டை ஆள்வதென்பதில்லை! மக்கள் சரிநிகர்! எல்லாத் துறையிலும் எவரும் நிகரே! நெடுநாட்டு மக்களின் படியினர் (பிரதிநிதிகள்): குடியரசு நாட்டல்எம் கொள்கை யாகும் என்று கிழவன் இளைஞனாய் நின்றான். மன்னன் வையத் திறலைக் கண்டான். கையால் தன்வாள் காட்டி, என் மகள் பெருந்திரு என்னும் மங்கையை மணந்துகொள்; இன்றேல் மன்னன் மைத்துனன் மகளை மணந்து கொள்! மக்களில் தாழ்ந்த மின்னொளி தன்னை விரும்புதல் நீக்குக; என்னொளி வாளுக் கிரையா காதே என்றான். ஏஏ! என்றனர் இருந்த மக்கள்! வையத் திறல்தன் வாளை உருவினான். படையின் தலைவனே பற்றுக இவனை என்று படைத்தலை வனுக்குக் கட்டளை யிட்டான் மன்னன்! எட்டிற்று மறித்திறல் இடிக்குரல் எங்குமே. இசைப் பாட்டு மக்களின் உரிமைக்குத் தூக்குவீர் வாளை மன்னரின் தனியாட்சி வீழ்க - நாட்டு மக்கள் உரிமைக்கு... (திறல் நாட்டு மறவரின், மக்களின் வாள்கள் சுழலுகின்றன. பெருநாட்டுப் படைத்தலைவனும், அவனைச் சார்ந்த சில மறவர்களும் எதிர்க் கிறார்கள்.) மக்கட் கடலில் மறைக் குமிழிகள் மறுப்பவர் மாள்க மாள்கவே - நாட்டு மக்கள் உரிமைக்கு... (எதிர்த்தோர் இறந்து படுகின்றனர். இரு மன்னரும், படைத்தலைவர் களும், ஆளும் இனத்தோரும் பிணிக்கப்படுகின்றனர்.) தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம் சரிநிகர் எல்லோரும் என்றோம். பொய்க்கதை மறையெனல் புரட்டே புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே! (பிணிக்கப் பெற்றவர் சிறை சேர்க்கப் பெற்றனர்.) 36 இடம் : நகர்கள், சிற்றூர்கள். நேரம் : மாலை உறுப்பினர் : முரசறைவோன். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) யானைமேல் வள்ளுவன் இயம்புவான் முரசறைந்து: பூனைக்கண் போலும் பொரிக்கறிக் காக ஆளுக் கிரண்டுகத் தரிக்காய் அடைக. செங்கை இரண்டளவு சீரகச் சம்பா அடைக அங்கங்கு மக்கள் அனைவரும். பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும் ஒருகை யளவு பெறுகஒவ் வொருவரும். பாகற் புளிக்குழம்பும் பழமிள கின்சாறும் ஆகத் தக்கன அடைக எவரும்! ஆழாக் குத்தயிர் அடைகாய் ஒவ்வொரு வாழை இலைஇவை வழங்குவார் தெருத்தோறும் விருந்தே நாளை விடியலில் அனைவரும் அருந்துக குடியாட்சி அமைக்கும் நினைவிலே! இதுகேட்டுத் தெருத்தோறும் பொதுவில்லம் எதுவெனக் கேட்டே ஏகினர் அதுவது பெற்றே அடைந்தனர் வீட்டையே. 37 இடம் : மின்னொளி வீட்டு முன்வெளி. நேரம் : விடியல் உறுப்பினர் : மின்னொளி, ஆண்டாள், விருந்தினர், வையத்திறல். அகவல் (நேரிசை ஆசிரியப்பா) வீட்டெதிர் ஆண்டாள், மின்னொ ளிக்குத் தலைவாரு கின்றாள். தையல் மின்னொளியே மன்னன் மகனைநீ மணந்த பின்னர் என்னை மறப்பாயோ? என்றாள் அன்னை. ஏழைகள் அனைவரும் கூழைக் குடிக்க, வாழை இலையில் வார்த்தநெய் ஓடையில் மிதக்கும் பல்கறிச் சோறு விழுங்கும் மன்னன் மகனை மணக்கவே மாட்டேன் என்றாள் மின்னொளி. அன்னை திடுக்கிட்டு, முன்னர் உன்காதல் மொய்த்த தெவன்மேல்? என்று கேட்டாள் ஏந்திழை. அம்மா ஏழ்மை கண்ட இடமெல்லாம் காதல் தாழ்மைமேல் என்உளம் தாவுதல் அன்றி உடல்மிசைக் காதல் உற்றிலேன் என்றாள். அழகனை உன்உளம் அண்டிற்றோ என அன்னை மின்னொளி தன்னைக் கேட்டாள். அழகன் ஏழ்மையை அணுகிய தென்னுளம் என்னுடல் அவனுடற் கில்லை என்றாள். மின்னொளி என்னுடன் விரைவில் வருக, அருந்திட வேண்டும் விருந்தென் றாள்தாய். இருவரும் எழுந்தார் விருந்துக் கேகினார். வாகை நீழலில் மறித்திறல், பொன்னி ஓகை யோடும் உண்டனர் விருந்தே! அரசின் நீழலில் அழகனும் பிறரும் அருந்தினர் இனிய விருந்து மகிழ்ந்தே! வேங்கையின் நீழலில் வேறு பலப்பலர் தாங்கா மகிழ்ச்சியில் தாம்உண் டிருந்தார்! மாவின் நீழலில் வையத் திறலோன் பாவை யைஎதிர் பார்த்தி ருந்தனன். வீட்டினர் யாரும் விருந்துண் ணுநிலை பார்த்து வந்தாள் பாவை மின்னொளி, மரத்து நீழலில் வாயார உண்பார் சரிநிலை கண்டாள் தையல் மின்னொளி, அரசின் நீழலில் ஆழகனைக் கண்டாள் அழகன் வையனை அணுகுநீ என்றான். அழகன்பால் ஏழ்மை அறிகிலாள் மின்னொளி! மாவின் நீழலில் வையனைக் கண்டாள். மன்னன் மகனை வையத் திறலிடம் காணு கில்லாள்! கண்ட வையத்திறல் அண்டையில் அமர்கென ஆவலில் அழைத்தான். கெண்டை விழியாள் கிட்ட அமர்ந்தாள். கத்தரிப் பொரியலும், கரும்பாகற் குழம்பும், புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும், மிளகின் சாறும், புளியாத தயிரும் அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி, உனக்கொன் றதிகம் என்றுரைத்தான் வையன். என்ன என்றாள் மின்னொளி. சின்னதோர் முத்தம் தந்தான். அன்னத னோடே அருந்தினாள் விருந்தே! 38 இடம் : திறல்நாட்டு அரண்மனை நேரம் : மாலை உறுப்பினர் : அனைவரும் அகவல் (நேரிசை ஆசிரியப்பா) அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்; செம்ம றித்திறல் எழுந்து கைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே: எண்சீர் ஆசிரிய விருத்தம் நாட்டினிலே குடியரசு நாட்டிவிட்டோம் இந்நாள் நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும் காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே; உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்; கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே! ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம் உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்! திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும், கையில் செங்கோலேந் தும்பிறரும் மக்களைச்சார்ந் தோரே! பெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத்திட் டங்கள் பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர்அமைப் பார்கள் வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்; வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர் என்றான். செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார் திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார். செம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத் திறலுக்கும் நடைபெற்ற திருமணம்பா ராட்டி, நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள். செம்மையுறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித் திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசே என்றார்.  என் முன்னுரை தமிழகத்தை - திராவிட நாட்டைத் தம் வழிப்படுத்த முதன்முதல் தமிழகத்தை அடைந்த ஆரியர் கூட்டத்தின் தலைமைப் பாதிரிதான் அகத்தியன். அவன் தமிழகத்தில் வந்து தமிழ்ப் புலவர்பால் தமிழைக் கற்றுக் கொண்டான். வாலை யவிழ்த்தான். முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனே ஒருவன் அரசனாகி யிருப்பது என்றான். பலவாறு அந்நாள் ஆளவந்தாரைப் பிடிக்க ஏற்றவாறு புளுகினான். அரசனின் செல்வாக்கினால் நாளடைவில், பச்சைத் தமிழர் நூற்களை ஒழித்துத் தன் நஞ்சு கலந்த காப்பித்தூளைப் பரப்பினான். அதை அரசன் அருந்த அனைவரும் அருந்தலாயினர். இதையே சுருக்கமாக அகத்தியன் விட்ட புதுக்கரடியில் சொல்லியுள்ளேன். நல்லமுத்துக் கதை நீ யார்? - உன் நிலை என்ன? - நீ என்ன செய்யவேண்டும்? - என்ற கேள்விகளுக்கு ஏற்ற விடை தெரிதல் வேண்டுமானால் திராவிடர் கழகத்திற் சேரவேண்டும். தமிழகத்தில் - திராவிடத்தில் பிறந்தோன் மடயனாயிருப்பதற்கு அவன் திராவிடர் கழகம் சேராமலிருப்பதுதான் காரணம். இதைத்தான் சொல்லியிருக்கிறேன் இக் கதையில்! - பாரதிதாசன் 16 அகத்தியன் விட்ட புதுக்கரடி அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப் புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்! ஆதலால் குள்ளனை அணுவும்நம் பாதே என்ற பழமொழி அன்று பிறந்தது! *** பழைய திராவிடம் செழுமை மிக்கது. வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது. செந்தமிழ், இலக்கணச் சிறப்புற் றிருந்தது. வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது. செய்யும் தொழில்கள் சிறப்புற்றிருந்தன ஓவியம் தருநரும் பாவியம் புநரும் ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும் திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர் இராததொன் றில்லை திராவிட நாட்டில் இந்த நிலையில் வந்தான் அகத்தியன். *** சந்தனப் பொதிகையில் தமிழ்ப்பெரும் புலவரின் மன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ், நன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ் இயற்றமிழ் இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ் முயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின் நல்லா தரவை நாடுவா னாகிச் செல்வம்முற் பிறப்பிற் செய்தநல் வினைப்பயன் என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான். மன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர். ஒருநாள் மன்னனின் திருமணி மன்றில் அகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை ஆய்ந்திட, மன்னன், அகத்தியோய் அகத்தியோய்! பிறந்த உடலும் பிணைந்த உயிரும் இறந்தபின் இல்லா தொழிந்தன. எதுபின் உயிர்உடல் எய்தும் என்றான். ஆன்மா என்றும் அழியா தென்று, மற்றொரு புதுக்கரடி, தெற்றென விட்டான். மேலும் அகத்தியன் விளம்பு கின்றான்; வேந்த னாக வீற்றிருக் கின்றாய்; ஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம்! செல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன் மணிமுடி பூண்பரோ மக்கள் யாரும்? பணிவொடு வாழ்வது பார்ப்பின், புரியும் சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன் என்னலும்; மன்னன் பின்னொரு நாள்இதைப் புகல்க என்றனன்; போயினன் அகத்தியன். *** அழல்வெரூஉக் கோட்டத்துக் கப்பால் ஒருநாள் பழித்துறைக் கள்வன், பாங்கர் சூழ நகர்அ லைத்து நற்பொருள் பறித்து மிகுபுகழ் உடையேன் வேந்தன்நான் என்றான். *** ஊர்க்கா வலர்கள் ஓடிமன் னன்பால் இன்ன துரைத்தனர் எழுந்தனன் மன்னன். *** பழித்துறைக் கள்வன் படையும் மன்னனின் அழிப்புறு படையும் அழல்வெரூஉக் கோட்டப் பாங்கினில் இருநாள் ஓங்குபோர் விளைக்கவே பழித்துறை பிடிக்கப் பட்டான் அரசனால்! *** மறவர்சூழ் அரச மன்றின் நடுவில் பழித்துறை கட்டப் பட்ட கையுடன் நின்றான். மன்னன் நிகழ்த்து கின்றான்; ஏன்என் ஆட்சியை எதிர்த்தனை? ஏஏ கோன்என் படைவலி பெரிதோ? உன்றன் தோள்வலி பெரிதோ? சொல்லுக சொல்லுக! ஆள்வலி பெரிதோ, அறைக! என்னலும், பழித்துறை மன்னனைப் பார்த்துக் கூறுவான்; இந்நாள் உண்டு பின்னாள் இலைஎனும் வறுமை எமக்கு! வளமை உமக்கோ? ஆள்வலி இல்லை; ஆயினும் நாளை தோள்வலி மறவர் தோன்றுவார்! இந்நாள் என்னுயிர் போக்கல் எளிதாம்! உனக்கே உன்னுயிர் போக்குவர் உண்டா கின்றார். *** சினத்தோடு பழித்துறை இவ்வாறு செப்பலும், மன்னன் அவனைச் சிறையினில் வைத்தான். *** செல்வமுற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன் சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன் இக்கருத்து நாட்டில் எங்கும் பரவினால் மக்கள் எதிர்ப்பரோ மன்னன் ஆட்சியை? எதிர்க்க மாட்டார். தாங்கள் எய்திய சிறுமை முற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன் என்று சும்மா இருப்பர் அன்றோ? *** அகத்தியோய் அகத்தியோய் அனைவ ரிடத்தும் புகுத்துக உன்றன் புதிய கொள்கையை என்று மன்னன் இயம்பினான். அகத்தியன் அன்றுதான் ஒருபடி அதிகாரம் ஏறினான். *** இப்பிறப்பு முற்பிறப் பிருவினை ஆன்மா, ஊழ்இவை யனைத்தும் உரைத்த அகத்தியன், அரசே இன்னும் அறைவேன் கேட்பாய்; மண்ணவர் மண்ணில் வாழ்வார் அதுபோல் விண்ணவர் விண்ணில் மேவினார் என்றான். அன்னவர் நம்மை அணுகுவர் என்றான் இன்னல் ஒழிப்பார் என்று புளுகினான். விண்ணவர் விருப்புற வேண்டு மானால் மண்ணிடை நான்மறை வளர்ப்பாய் என்றான் மறைமொழி தானே மந்திரம் என்றான் மந்திரத் தாலே மகிழ்வர் வானவர் என்று பலப்பல இயம்பிச் சென்றான். *** ஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட் டெரிந்தது; சிற்றூர் எரிந்தது! மக்கள் தெய்யோ தெய்யோ என்றே அரச னிடத்தில் அலறினார் ஓடி! அங்கி ருந்த அகத்தியன், அரசே! தீஒரு தெய்வம் செம்புனல் தெய்வம் காற்றொரு தெய்வம் செம்புனல் தெய்வம் நிலம்ஒரு தெய்வம் நீ இதை உணர்க தெய்எனல் அழிவு! தெய்வம் அழிப்பது. இந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன். மந்திர வேள்வியால் மகிழும்அவ் விந்திரன் என்று கூறி ஏகினான் அகத்தியன். *** அரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர் அரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய் இருத்தல் கண்டார் இரங்கினார். தீய கருத்து நாட்டிற் பரவுதல் கண்டு கொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்? *** ஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி பகைவனை அன்போடு பார்த்தாள், அவனும் அவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான். இருவரும் உயிர்ஒன் றிரண்டுடல் ஆனார். அரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன் இதனை அறிந்தான். அறைவான் ஆங்கே; மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும்; ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால், மணம்எனக் கூறுதல் வாய்மை யன்று! மணம்எனல் பார்ப்பனர் மந்திர வழியே இயலுதல் வேண்டும் என்று கூறினான். அரசன், ஆம்ஆம் ஆம்என் றொப்பினான். அகத்தியன் அரசனே ஆகி விட்டான். அரசனும் அகத்தியன் அடிமை யானான். தமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன. பழந்தமிழ் நூற்கள் பற்றி எரிந்தன. அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில். - டிசம்பர், 1948  17 நல்லமுத்துக் கதை காட்சி - 1 திருமண முயற்சி (விரசலூர் வெள்ளையப்பன் மனைவியாகிய மண்ணாங்கட்டி யிடம் கூறுகிறான்) உன்னைத் தானே; என்னசெய் கின்றாய்? இங்குவா! இதைக்கேள்! இப்படி உட்கார்! பைய னுக்கு மணத்தைப் பண்ணிக் கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன் எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக் காண்டோ இருபதும் ஆகி விட்டது பாண்டியன் தானோ பழைய சோழனோ சேரனே இப்படித் தெருவில்வந் தானோ என்று பலரும் எண்ணு கின்றனர். அத்தனை அழகும் அத்தனை வாட்டமும் உடையவன். திருமணம் முடிக்கா விட்டால் நடையே பிசகி விடவும் கூடும். நாட்டின் நிலையோ நன்றா யில்லை. சாதி என்பதும் சாத்திரம் என்பதும் தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார். பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப் பழிக்கவும் தொடங்கினர் பழிகா ரர்கள். இளைஞரை, அவர்கள் இவ்வாறு கெடுப்பதே வழமை யாக வைத்திருக் கின்றனர். இந்த நிலையில் எவளோ ஒருத்தியைப் பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும்: வெடுக்கென மணத்தை முடித்திடு வார்கள். என்ன? நான் சொல்வ தெப்படி? ஏன்? உம்? மனைவியாகிய மண்ணாங்கட்டி: இன்றுதான் பிறந்ததோ இந்த உறுதி? பைய னுக்குப் பத்து வயசு தொடங்கியதி லிருந்து சொல்லி வந்தேன்; காது கேட்டதா? கருத்தில் பட்டதா? ஐயரை உடனே அழைக்க வேண்டும் பையனின் குறிப்பைப் பார்க்க வேண்டும் கிழக்குத் திசையில் கிடைக்கு மாபெண்? எந்தத் திசையில் இருக்கின் றாள்பெண்? சொத்துள் ளவளா? தோதான இடமா? மங்கை சிவப்பா? - மாஞ்செ வலையா? என்றுபெண் பார்க்க இங்கி ருந்துநாம் புறப்படவேண்டும்? புரிய வேண்டுமே! வெள்ளையப்பன்: புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான், அவனை இராகுகா லத்திலா இங்க ழைப்பது? ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம். நடந்ததை, இனிமேல் நடக்கப் போவதை, நடந்துகொண் டிருப்பதை நன்றாய்ச் சொல்வான் பகைகுறுக் கிடுவதைப் பார்த்துச் சொல்வான். இடையில் குறுக்கிடும் தடைகள் சொல்வான் எல்லாம் சொல்வான்; ஏற்படு கின்ற பொல்லாங் கெல்லாம் போக்கவும் முடியும். ஒருபொழுதுக் கான அரிசி வாங்க அரைரூ பாயையும் அவனுண்டு பண்ண முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும் ஏற்பாடு செய்துகொண் டிட்டு வருவோம். காட்சி - 2 மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல் சொறிபிடித்த கொக்குப் புரோகிதனிடம் வீட்டுக்கார வெள்ளை யப்பன் சொல்லுகிறான் இதுதான் ஐயரே என்மகன் சாதகம் திருமணம் விரைவில் செய்ய வேண்டும் எப்போது முடியும்? எங்கே மணமகள்? மணமகட் குரிய வாய்ப்பெல்லாம் எப்படி? அயலா? உறவா? அணிமையா? சேய்மையா? பொறுமையாய்ப் பார்த்துப் புகல வேண்டும். மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள்: காலையில் வருவதாய்க் கழறி னீரே மாலையில் வந்தீர் என்ன காரணம்? சொறிபிடித்த கொக்கு சொல்லுகிறான்: தெரியா மல்என் பெரிய பெண்ணைத் திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன்; வட்டிக் கடையில் வயிர நகையைப் பெட்டி யோடு தட்டிக் கொண்டதால் சிறைக்குப் போனான், செத்தும் தொலைந்தான் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து மொட்டைத் தலையுடன் மூதேவி போலப் பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது. சின்னப் பெண்ணைப் பின்னத் தூரில் கப்பல் கப்பலாய்க் கருவா டேற்றும் வாச னுக்கு மணம்செய் வித்தேன். மணம்மு டிந்த மறுநாள் தெரிந்தது வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன் வாணிகன் கூலியாள் வாசன் என்பது! ஒருநாள் வாசன் பெருங்குடி வெறியால் நாயைக் கடித்தான் நாயும் கடித்தது நஞ்சே றியதால் நாய்போல் குரைத்தே அஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே இரண்டு நாளின்முன் இறந்து போனான். ஓலை வந்தது காலையில்! கையில் - கேட்டா லுஞ்சரி விட்டா லுஞ்சரி - இரண்டணாக் காசும் இல்லை மெய்யாய்! இந்நேர மட்டும் ஏதே தோநான் தில்லு மல்லுகள் செய்து பார்த்தேன். யாரும் சிறிதும் ஏமாற வில்லை உங்க ளிடத்தில் ஓடி வந்தேன். சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன்; முன்நடந் தவைகளை முதலில் சொல்வேன் ஐயா இதுஓர் ஆணின் சாதகம்; வெள்ளையப்பன்: ஆமாம் அடடா! ஆமாம் மெய்தான்! புரோகிதன்: ஆண்டோ இருப தாயிற்றுப் பிள்ளைக்கு வெள்ளையப்பன்: மெய்தான் மெய்தான்! மேலும் சொல்வீர்! புரோகிதன்: பையனோ நல்ல பையன். அறிஞன். ஈன்றதாய் தந்தை இருக்கின் றார்கள். உங்களுக் கிவனோ ஒரே பையன்தான். பையன் தந்தை பலசரக்கு விற்பவர் தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது. மண்ணாங்கட்டி: அத்தனை யும்சரி அத்தனை யும்சரி. எப்போது திருமணம் ஏற்படக் கூடும்? புரோகிதன்: இந்தவை காசி எட்டுத் தேதிக்கு முந்தியே திருமணம் முடிந்திட வேண்டும். மண்ணாங்கட்டி: அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா? புரோகிதன்: நடுவில் ஒரேஒரு தடையி ருப்பதால் ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி. வெள்ளையப்பன்: ஆடியில் திருமணம் கூடுமா ஐயரே? புரோகிதன்: ஆடிக் கடைசியில் ஆகும் என்றால் ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம். வெள்ளையப்பன்: அப்படிச் சொல்லுக அதுதா னேசரி! மண்ணாங்கட்டி: மணப்பெண் என்ன பணக்காரி தானா? புரோகிதன்: மணப்பெண், கொழுத்த பணக்கா ரன்மகள்; பெற்றவர் கட்கும் உற்றபெண் ஒருத்திதான் மணமு டிந்தபின் மறுமா தத்தில் ஈன்றவர் இருவரும் இறந்துபோ வார்கள். பெண்ணின் சொத்து பிள்ளைக்கு வந்திடும். மண்ணாங்கட்டி: எந்தத் திசையில் இருக்கின் றாள்பெண்? புரோகிதன்: வடகி ழக்கில் மணப்பெண் கிடைப்பாள். தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில் மண்ணாங்கட்டி: அப்படி யானால் அரசலூர் தானா? புரோகிதன்: இருக்கலாம் இருக்கலாம்; ஏன்இருக் காது? வெள்ளையப்பன்: எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே? மண்ணாங்கட்டி: எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்? வெள்ளையப்பன்: யான்மட்டும் போகவா? இருவரும் போகவா? புரோகிதன்: நாளைக் காலையில் நாலு மணிக்கு நீவிர் மட்டும் போவது நேர்மை. நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும். மண்ணாங்கட்டி: இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர்; என்ன என்றால் - வேறொன்று மில்லை எனக்குக் குழந்தை இன்னும் பிறக்குமா? வெள்ளையப்பன்: ஹூக்கும் இனிமேல் உனக்கா பிள்ளை? புரோகிதன்: இனிமேல் பிள்ளை இல்லை இல்லை. மண்ணாங்கட்டி: இந்தா நாலணா எழுந்துபோம் ஐயரே! புரோகிதன்: ஆயினும் இந்த ஆவணிக் குப்பின் பெண் குழந்தை பிறக்கும் உறுதி; போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள் மண்ணாங்கட்டி: சரிஇந் தாரும் ஒருரூ பாய்தான்! காட்சி - 3 புதிய தொடர்பு (அரசலூர் அம்மாக்கண்ணுவிடம் விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்) நிறைய உண்டேன் நீங்கள் இட்டதைக் கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன. அரசலூர் வந்ததை அறிவிக் கின்றேன்; இரிசன் மகளை என்மக னுக்குக் கேட்க வந்தேன்; கேட்டேன் ஒப்பினான். சாப்பிடச் சொன்னான்; சாப்பாடு முடிந்தது; மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்; சரிதான் என்றேன்! வரும்வழி தன்னில் உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன் பெண்கு ழந்தை பெறவில் லைநீ மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக் கின்றான். அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும் உன்றன் கணவர் உயிருடன் இருந்தால் திருமணம் மகனுக்குச் செய்தி ருப்பார். அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்: அவர்இறந் தின்றைக் கந்தாண் டாயின பதினெட்டு வயது பையனுக் காயின. எந்தக் குறையும் எங்களுக் கில்லை. நன்செயில் நறுக்காய் நாற்பது காணியும் புன்செயில் பொறுக்காய் ஒன்பது காணியும் இந்த வீடும் இன்னொரு வீடும் சந்தைத் தோப்பும் தக்கமாந் தோப்பும் சொத்தா கத்தான் வைத்துப் போனார். என்ன குறைஎனில் சின்ன வயதில் என்னை விட்டுச் சென்றார் அதுதான்! பார்ப்பவர் ஏதும் பழுதுசொல் லாது தனியே காலந் தள்ளி வந்தேன் இனிமேல் என்னமோ? யாரதை அறிவார்? விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்: நடந்தது பற்றி நாவருந் தாதே கடந்தது பற்றிக் கண்கலங் காதே நான்இன்று மாலை நாலரை மணிக்கெல்லாம் விரசலூர் போக வேண்டும்! என்ன? அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்: ஹுஹும் நான்அதை ஒப்ப மாட்டேன் இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக் காலையில் அடுப்பில் காய்ந்த வெந்நீரில் ஆர அமர அழகாய் முழுகி இட்டலி மசால்வடை, சுட்டதும், சுடச்சுட வெண்ணெய் உருக்கும், மிளகாய்ப் பொடியும் தொட்டும் தோய்த்தும் ஒட்ட உண்டு சற்று நேரம் கட்டிலில் துயின்றால், இரவில் கண்விழித்த இளைப்புத் தீரும் திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப் போக நினைத்தால் போவது தானே? விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்: அன்பு மிக்க அம்மாக் கண்ணே! பின்புநான் என்ன பேச முடியும்? அப்படி யேஎன் அம்மாக் கண்ணு! சொற்படி நடப்பேன் சொற்படி நடப்பேன். காட்சி - 4 பெண் எப்படி? (விரசலூர் வெள்ளையப்பன் மனைவி மண்ணாங்கட்டிக்குக் கூறுகிறான்) நல்ல உயரம் நல்ல கட்டுடல் நல்ல பண்பு நல்ல சிவப்பே எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம் செல்லாக் காசும் செலவில்லை நமக்கே அனைத்தும் அவர்கள் பொறுப்பே ஆகும். மணமகள் வீட்டில் மணம்வைத் துள்ளார். மண்ணாங்கட்டி: சாதியில் ஏதும் தாழ்த்தி இல்லை! சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை! ஏழு பெண்களில் இவள்தான் தலைச்சனா? எப்படி யாகிலும் இருந்து போகட்டும். பெண்கள் ஏழுபேர் பிறந்தனர்; ஆணோ பிறக்க வில்லை பெரிய குறைதான் எப்படி யாகிலும் இருந்து போகட்டும். எழுபது காணி நன்செய் என்றால் பைய னுக்குப் பத்துக் காணிதான் எழுபதாயிரம் இருப்புப் பணமா? பையனுக்குப் பதினா யிரம்வரும். எப்படி யாகிலும் இருந்து போகட்டும்! மாப்பிள்ளை பார்க்க எப்போது வருவார்? வெள்ளையப்பன் விள்ளுகிறான்: காலையில் வருவார் கட்டாய மாக. காட்சி - 5 மாப்பிள்ளை பார்த்தல் (விரசலூர் வெள்ளையப்பனும் அரசலூர் இரிசனும் பேசுகிறார்கள்.) வெள்ளையப்பன்: வருக வருக இரிசப்ப னாரே அமர்க அமர்க அந்தநாற் காலியில் இருக்கிறேன் நானும் இந்தநாற் காலியில் குடிப்பீர் குடிப்பீர் கொத்த மல்லிநீர் வீட்டில் அனைவரும் மிக நலந் தானே? பிள்ளைகள் எல்லாம் பெருநலந் தானே? என்மகன் இந்த எதிர்த்த அறையில் படித்திருக் கின்றான் பார்க்க லாமே. இரிசன் இயம்புகின்றான்: பையன் முகத்தைப் பார்க்க வேண்டும் பிள்ளையாண் டானொடு பேச வேண்டும் இங்கே இருங்கள் யான்போய்ப் பார்ப்பேன். (நல்லமுத்துவும் இரிசனும் பேசுகின்றார்கள்) நல்லமுத்து: யார்நீர் ஐயா? எங்கு வந்தீர்? ஊர்பேர் அறியேன்! உள்வர லாமா? அப்பா இல்லையா அவ்வி டத்தில்? இரிசன்: அப்பா முந்தாநாள் அரசலூர் வந்தார். எதற்கு வந்தார்? அதுதெரி யாதா? நல்லமுத்து: அரசலூர் சென்றார் அப்பா என்றால் அறியேன், ஏனதை அறிய வேண்டும்? இரிசன்: திருமணம் உனக்குச் செய்ய எண்ணினார். அதற்கா கத்தான் அங்கு வந்தார். உன்பெயர் என்ன? உரைப்பாய் தம்பி. நல்லமுத்து: என்பெயர் நல்ல முத்தென் றிசைப்பார். இரிசன்: என்ன படிக்கிறாய் இந்நே ரத்தில்! நல்லமுத்து: காலே அரைக்கால் கம்பரா மாயணம். இரிசன்: காலே அரைக்கால் கம்பரா மாயண நூலும் உண்டோ நுவலுக தம்பி! நல்லமுத்து: சிதம்பர நாதர் திருவரு ளாலே அரையே அரைக்கால் அழிந்தது போக, மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன் காலே அரைக்கால் கம்பரா மாயணம் அச்சிடப் பட்டதை அறியீ ரோநீர்? இரிசன்: உனக்குத் திருமணம் உடனே நடத்த என்மக ளைத்தான் உன்தந்தை கேட்டார். பெண்ணை உன்தந்தை பேசினார், பார்த்தார். நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய். நல்லமுத்து: அப்பா பார்த்தார் அதுவே போதும். இரிசன்: மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே? நல்லமுத்து: அப்பா இணங்கினார்! அதுவே போதும்! இரிசன்: கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா என்பது தானே எனக்கு வேண்டும். நல்லமுத்து: பெற்ற தந்தைக்குப் பிடித்ததா, இல்லையா? பிடித்தம் என்றால், எனக்கும் பிடித்தமே. இரிசன்: என்மகள், ஒருமுறை உன்னைப் பார்க்க நினைப்ப தாலே நீவர வேண்டும். நல்லமுத்து: அப்பாவைப் பார்த்தாள் அதுவே போதும். அப்பா கருத்துக் கட்டி உண்டோ? இந்தரா மாயணம் இயம்புவ தென்ன? தந்தை சொல்லைத் தட்டலா காதே என்று தானே இயம்பு கின்றது? இரிசன்: மகிழ்ச்சி, தம்பி வருகின் றேன்நான். இரிசன் வெள்ளையப்பனிடம்: நல்ல முத்து மிகவும் நல்லவன் தகப்ப னாரை மிகவும் மதிப்பவன் அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன் பொழுது போயிற்றுப் போய்வரு கின்றேன். வெள்ளையப்பன்: போகலாம் நாளைக்குப் பொழுதுபோ யிற்றே! இரிசன்: பொறுத்துக் கொள்க, போய்வரு கின்றேன். காட்சி - 6 அம்மாக்கண்ணுக்கு ஆளானான் (அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்) வெள்ளையப்பன்: உன்றன் நினைவால் ஓடி வந்தேன் இரண்டு நாள்முன் இரிசன் வந்து மாப்பிளை பார்த்தான் மகிழ்ச்சி கொண்டான். திரும ணத்தின் தேதி குறிக்க வருவது போல வந்தேன் இங்கே. மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள் தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன். அம்மாக்கண்ணு: இன்று நீங்கள் இங்கு வராவிடில் என்றன் உயிரே ஏகி இருக்கும்! பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக் கையால் அள்ளினால் வாயோ கசக்கும்! பச்சைத் தண்ணீர் பருகி யறியேன் ஏக்கம் இருக்கையில் தூக்க மாவரும்? பூனை உருட்டும் பானையை அவ்வொலி நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன். தெருநாய் குரைக்கும் வருகின் றாரோ என்று நினைப்பேன் ஏமாந்து போவேன். கழுதை கத்தும், கனைத்தீர் என்றே எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன் உம்மைஎப் போதும் உள்ளத்தில் வைத்ததால் அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள் சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள் வீடும் நீங்கள் மாடும் நீங்கள் திகைப்ப டைந்து தெருவிற் போனால் மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள் கழுதை நீங்கள் குதிரை நீங்கள் எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும். இனிமேல் நொடியும் என்னை விட்டுப் பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும். வெள்ளையப்பன் சொல்கிறான்: அழாதே, தரையில் அம்மாக் கண்ணு விழாதே, உன்னை விட்டுப் பிரியேன்; துடைகண் ணீரைப், புடைவையும் நனைந்ததே பயித்தியக் காரி பச்சையாய்ச் சொல்வேன் என்னுயிர் இந்தா! பிடி,உன் னதுதான்! அம்மாக்கண்ணு: இரிசன் மகளையும் என்மக னுக்கே பேசி முடிப்பீர்; பின்பு நீங்களும் இங்கே யேதான் தங்கினால் என்ன? என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ? இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே. மண்ணாங் கட்டிதான் மனைவியோ? இங்குள பொன்னாங் கட்டி போயொழிந் தாளோ? வெள்ளையப்பன்: உறுதி உறுதி உன்மக னுக்கே இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன். என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்; மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்! பெண்ணா அவள்? ஒரு பேய்மூ தேவி! இரு! போய் அந்த இரிசனைக் கண்டு பேசி விட்டுப் பின்வரு கின்றேன். காட்சி - 7 வெள்ளையப்பன் மாறுபாடு வெள்ளையப்பன்: இரிசனார் வீட்டில் இருக்கின் றாரா? இரிசன்: உள்ளே வருவீர் வெள்ளை யப்பரே! எப்போது வந்தீர்? இப்போது தானா? மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா? நல்ல முத்து நலமா? அமர்க. வெள்ளையப்பன்: மனைவி வயிற்று வலியோ டிருந்தாள்; பையன் நிலையைப் பகர வந்தேன்; திருமணம் வேண்டாம் என்று செப்பினான். இரிசன்: வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு வெள்ளை யப்பரே வெந்தது நெஞ்சம் பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன், திருமணம் விரைவில் செய்ய எண்ணி எல்லாம் செய்தேன் எவர்க்கும் சொன்னேன். என்னை ஊரார் என்ன நினைப்பார்? எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்? மணம்வேண் டாமென மறுத்த தெதற்கு? அடங்கி நடப்பவன் அல்லவா உன்மகன்? நல்ல முத்தா சொல்லைத் தட்டுவான்? சொல்வது தானே நல்லமுத் துக்கு? வெள்ளையப்பன்: நூறு தடவை கூறிப் பார்த்தேன்: வேண்டாம் மணமென விளம்பி விட்டான். மனம்புண் பட்டு வந்தே னிங்கே. அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத் தங்கள் பெண்ணைத் தருவது நல்லது; வைத்த நாளில் மணத்தை முடிக்கலாம்; என்னசொல் கின்றீர் இரிசப்ப னாரே? இரிசன்: அம்மாக் கண்ணை அறிவேன் நானும், வெள்ளை யப்பரே வீண்பேச் செதற்கு? நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை. காட்சி - 8 வலையில் சிக்கினார் கணவர் இரிசன் மண்ணாங்கட்டியிடம் வந்து கூறுகிறான்: நல்ல முத்து நல்ல பிள்ளை நீங்களும் மிகவும் நேர்மை யுடையவர் வெள்ளை யப்பர் மிகவும் தீயவர் அரச லூரில் அம்மாக் கண்ணின் வலையிற் சிக்கி வாழு கின்றார். அங்கே யேஅவர் தங்கி விட்டார். இன்னும் இங்கே ஏன்வர வில்லை? மான மிழந்து வாழு கின்றார்; அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்! மணம்வேண் டாமென மறுத்தா னாம்மகன்! நேரில் உம்மிடம் நிகழ்த்தவந் தேன்இதை: உங்கள் கருத்தை உரைக்க வேண்டும். மண்ணாங்கட்டி: கெடுத்தா ளாஎன் குடித்த னத்தை? விருந்து வைத்து மருந்தும் வைத்தாள். சோற்றைப் போட்டு மாற்றினாள் மனத்தை! ஏமாந் தாரா என்றன் கணவர்? போய்ப்புகுந் தாரா புலியின் வாயில்? எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை வேண்டா மென்று விளம்ப வில்லையே! அவள்மக னுக்கே அவளைக் கட்ட இப்படி எல்லாம் இயம்பினார் போலும்! மாதம்ஒன் றாகியும் வரவில் லைஅவர். மகனை இங்கே வரவழைக் கின்றேன் சொல்லிப் பார்ப்போம்; சொன்னாற் கேட்பான். (நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும் சொல்லுகிறார்கள்.) மண்ணாங்கட்டி: ஒருமாத மாக உன்றன் தந்தையார் அரச லூரில் அம்மாக் கண்ணிடம் விளையாடு கின்றார்; வீட்டை மறந்தார். அவர்தாம் அப்படி ஆனார் உன்றன் திருமணம் பற்றிய சேதி எப்படி? இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்; உடனே மணத்தை முடிக்க வேண்டும். நல்லமுத்து: அப்பா இல்லை; அதுமுடி யாது. விவாஹ முகூர்த்த விளம்ப ரத்தில் அப்பா கையெழுத் தமைய வேண்டும். பாத பூசை பண்ணிக் கொள்ள அப்பா இல்லை! எப்படி முடியும்? திருமண வேளையில் தெருவில் நின்று வருபவர் தம்மை வரவேற் பதற்கும் அப்பா இல்லை! எப்படி முடியும்? புரோகிதர் தம்மைப் போய ழைக்க அப்பா இல்லை! எப்படி முடியும்? அரசாணிக் கால்நட அம்மி போட நலங்கு வைக்க நாலு பேரை அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன் பூசை போடப் பொங்கல் வைக்க அப்பா இல்லை! எப்படி முடியும்? இரிசன்: அப்பா இல்லையே, அதற்கென்ன செய்வது? நல்லமுத்து: சோற்றை உண்டு சும்மா இருப்பது! மண்ணாங்கட்டி: அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு மகளைக் கட்டி வைக்கச் சொல்லி கெஞ்சினா ராமே இவரை நெஞ்சில் இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே? நல்லமுத்து: என்னருந் தந்தை இயம்பிய படியே இவரின் மகளை அவன்மணக் கட்டும். தெருவில் என்ன பெரிய கூச்சல்? போய்வரு கின்றேன் பொறுப்பீர் என்னை! (நல்லமுத்து போனபின், இரிசனும், மண்ணாங்கட்டியும் பேசுகின்றார்கள்,) மண்ணாங்கட்டி: தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன். உணர்ச்சி இல்லா ஊமை என்மகன். அடிமை எண்ணம் உடையவன் என்மகன் தனக்குப் பார்த்த தையலை, அப்பன் அயலான் மணக்கச் செயலும் செய்தால் துடிக்க வேண்டுமே தடிக்கழு தைமனம்! இல்லவே இல்லை; என்ன செய்யலாம்? சாப்பி டுங்கள், சற்று நேரத்தில் வருவான் பையன் ஒருமுறைக் கிருமுறை சொல்லிப் பார்ப்போம்; துன்பம் வேண்டாம். காட்சி - 9 தமிழ் உணர்ச்சி (இரிசப்பனும் மண்ணாங்கட்டியும் பேசியிருக்கிறார்கள்.) இரிசன்: எங்கே போனான் உங்கள் பிள்ளை? மண்ணாங்கட்டி: கூச்சல் கேட்டதாய்க் கூறிப் போனான். இரிசன்: என்ன கூச்சல்? எங்கே கேட்டது? மண்ணாங்கட்டி: கேட்டது மெய்தான், கிழக்குப் பாங்கில் வாழ்க தமிழே! வீழ்கஇந்தி! என்று. இரிசன்: எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை அந்த இடத்தை அடைந்த தென்ன? மண்ணாங்கட்டி: என்ன இழவோ? யார்கண் டார்கள்? (தமிழ்ப்புலவர் அமுதனார் வந்து, இரிசனிடத்திலும் மண்ணாங் கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.) அமுதனார்: உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்? மண்ணாங்கட்டி: ஆம்ஆம் ஐயா! அன்னவன் எங்கே? அமுதனார்: யானதைச் சொல்லவே இங்கு வந்தேன். இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத் தீய இந்தியைத் திணிக்கின் றார்கள். தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார். நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ? போருக்குத் திராவிடர் புறப்பட் டார்கள். திராவிடர் கழகம் சேர்ந்தான் உங்கள் நல்ல முத்தும்! நல்லது தானே! இரிசன்: எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்? மண்ணாங்கட்டி: திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை அமைத்தி ருந்தார் அவனின் தந்தையார் பாரடா நீபோய்ப் பாவை தன்னை என்றால், அதையும் ஏற்க வில்லை. அந்தப் பெண்ணை அயலொரு வனுக்குத் தரும்படி சொன்னார் தந்தை என்றால், அப்பா மனப்படி ஆகுக என்றான். இப்படிப் பட்டவன் என்ன செய்வான்? அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார் இப்பக் கத்தில் இனிவரார் ஆதலால் திருமணத் தைநீ செய்துகொள் என்றால், ஓலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும், சாலும் கரகம் தனியே வாங்கவும், பாத பூசை பண்ணிக் கொள்ளவும் அப்பா வேண்டும்என் றொப்பனை வைக்கிறான். அமுதனார்: மடமையில் மூழ்கி மடிகின் றான்அவன் தன்மா னத்தைச் சாகடிக் கின்றான். மரக்கட் டைபோல் வாழ்ந்து வந்தான். இந்த நிலைக்கெல்லாம் ஈன்றவர் காரணர் ஆயினும் தமிழ்ப்பற் றவனிடம் இருந்தது. திராவிடர் கழகம் சேர்ந்து விட்டான். இனிமேல் அவனோர் தனியொரு மறவன்! அரசினர் சிறையில் அடைத்தார் அவனை! இரிசன்: என்ன? என்ன? எப்போது விடுவார்? மண்ணாங்கட்டி: இருந்தும் பயனிலான்; இருக்கட்டும் சிறையில். அமுதனார்: எப்போது வருவான் என்ப தறியோம் துப்பிலா அரசினர் சொல்வதே தீர்ப்பு நான்வரு கின்றேன்; நல்ல முத்துவின் திருமணம் விரைவில் சிறப்ப டைக! காட்சி - 10 திருமணம் என் விருப்பம் (இரிசன் வீட்டில் வெள்ளையப்பன் வந்து பேசுகிறான்.) வெள்ளையப்பன்: அம்மாக் கண்தன் சொத்தெலாம் அளிப்பாள். உம்மகள் தன்னை, அம்மாக் கண்ணின் மகனுக் கே.திரு மணம்செய் விப்பீர், என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்! இரிசன்: அம்மாக் கண்ணின் அடியை நத்தி வீணில் வாழும் வெள்ளை யப்பரே! உமது சொல்லில் உயர்வே யில்லை எமது கொள்கை இப்படி யில்லை நல்லமுத் துக்கே நம்பெண் உரியவள் பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம். (அதே நேரத்தில் நல்லமுத்து வந்து, இரிசனிடம் இயம்புகின்றான்.) நல்லமுத்து: உம்மகள் என்னை உயிரென்று மதித்தாள். திருமணம் எனக்கே செய்துவைத் திடுக: (வெள்ளையப்பன், தன் மகனான நல்லமுத்தை நோக்கிக் கூறுகின்றான்:) என்விருப் பத்தை எதிர்க்கவும் துணிந்தாய், உன்விருப் பத்தால் என்ன முடியும்? இன்று தொட்டுநீ என்வீட்டு வாயிலின் வழியும் காலெடுத்து வைக்க வேண்டாம். என்றன் சொத்தில் இம்மியும் அடையாய். நான்சொன் னபடி நடந்து கொண்டால், திருமணம் பிறகு செய்து வைப்பேன். அம்மாக் கண்ணின் அழகு மகனே இந்நாள் இந்த எழில்ம டந்தையை மணந்துகொள் ளட்டும் மறுக்க வேண்டாம். நல்லமுத்து: திருமணம் எனது விருப்ப மாகும். ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தல் திருமணம் என்க. இரிசனார் மகளும் என்னை உயிரென எண்ணி விட்டாள். நானும் என்னை நங்கைக் களித்தேன். உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன்: உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன். நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள் ஏனமும் கையுமாய், எம்நிலை கூறி ஒருசாண் வயிற்றை ஓம்புதல் அரிதோ? ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடுப்பால் துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார். இழுக்குறும் இந்நிலை இடர வேண்டி நானும்என் துணைவியும் நாளும் முயல்வதில் சிறைப்படல் காதல் தேனருந் துவதாம்! இறப்புறல் எங்கள் இன்பத்தி னெல்லையாம். (வெள்ளையப்பனை நோக்கி இரிசன் சொல்லுகிறான்:) இரிசன்: வெள்ளை யப்பரே வெளியில் போவீர் என்மகள் உன்மகன் இருவரும் நாளைக்குக் காதல் திருமணம் காண்பார், நீவிரோ அம்மாக் கண்ணோடும் அழகு மகனொடும் இம்மா நிலத்தில் இன்புற் றிருங்கள். (நல்லமுத்து, தன் திருமணத்திற்குப்பின், துணைவியுடன் இந்தி எதிர்ப்பு மறியலுக்குப் புறப்படுகின்றான்.) நல்லமுத்து: வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர் இந்தி ஒழிக! இந்தி ஒழிக! (சென்றுகொண்டிருக்கையில், நல்லமுத்தின் தாய் அவர்களைத் தொடர்கிறாள்.) மண்ணாங்கட்டி: இன்பத் தமிழுக் கின்னல் விளைக்கையில் கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன்; உற்றார் வேண்டேன்; உடைமை வேண்டேன்; இந்தி வீழ்க! இந்தி வீழ்க! திராவிட நாடு வாழிய! அருமைச் செந்தமிழ் வாழிய நன்றே! - டிசம்பர், 1948  18 போர் மறவன் 1 (காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவள் தலைவி தனியே வருந்துகிறாள்.) தலைவி என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக் குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும் உளம்மறக் காதே ஒருநொடி யேனும்! எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்! வான நிலவும், வண்புனல், தென்றலும் ; ஊனையும் உயிரையும் உருக்கின! இந்தக் கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே! புளித்தது பாலும்! பூநெடி நாற்றம்! (காதலன் வரும் காலடி ஓசையிற் காதைச் செலுத்துகிறாள்.) தலைவி காலடி ஓசை காதில் விழுந்தது, நீள வாள்அரை சுமந்தகண் ணாளன் வருகின் றான்இல்லை அட்டியே! 2 (தலைவன் வருகை கண்ட தலைவி வணக்கம் புகலுகிறாள்.) தலைவன் வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்! சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை கிளம்பிற்று! முரசொலி கேள்நீ! விடைகொடு! (தலைவி திடுக்கிடுகிறாள். அவள் முகம் துன்பத்தில் தோய்கிறது.) தலைவி மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்! ஒன்றும் என்வாய் உரையாது காண்க! தலைவன் பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்! ஆண்டகை என்கடன் என்ன அன்னமே? நாடு தானே நம்மைப் பெற்றது? நாமே தாமே நாட்டைக் காப்பவர்! உடலும் பொருளும் உயிரும், ஈன்ற கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ? பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த அழுக்குளத் தாரிய அரிவைநீ அன்றே! ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ? வென்றுவா என்று நன்று வாழ்த்திச் சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்! தலைவி பிரியா துன்பால் பெற்ற இன்பத்தை நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது! வாழையடி வாழைஎன வந்தஎன் மாண்பு வாழிய சென்று வருக என்றது. (தலைவன் தலைவியை ஆரத்தழுவிப் பிரியா உளத்தோடு பிரிந்து செல்கின்றான்) 3 (பகைவன் வாளொடு போர்க்களத்தில் எதிர்ப்படுகின்றான்: வாளை உருவுகின்றான். தலைவனும் வாளை உருவுகின்றான்.) தலைவன் பகையே கேள்நீ. பாண்டிமா நாட்டின் மாப்புகழ் மறவரின் வழிவந் தவன்நான்! என்வாள் உன்உயி ரிருக்கும் உடலைச் சின்ன பின்னம் செய்ய வல்லது! வாளை எடுநின் வல்லமை காட்டுக. (இருவரும் வாட்போர் புரிகிறார்கள்.) 4 (தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்கிறான்) தலைவன் ஆஎன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே! (தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும்பார்க்கிறான்.) என்னை நோக்கி என்றன் அருமைக் கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச் சாப்பாடும் இன்றித் தான்நின் றிருப்பாள்; என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்? (வானில் பறவை xன்றுÄதந்துnபாவதைக்fணுகின்றான்.)பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்! நீபோம் பாங்கில் நேரிழை என்மனை, மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில் உலவாது மேனி, உரையாது செவ்வாய், இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய் இருப்பாள் அவள்பால் இனிது கூறுக: பெருமையை உன்றன் அருமை மணாளன் அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக் குயிரைப் படைத்தான். உடலைப் படைத்தான். என்று கூறி ஏகுக மறந்திடேல்! (தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்) பாண்டிமா நாடே, பாவையே, வேண்டினேன் உம்பால் மீளா விடையே! - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, 1949  19 ஒன்பது சுவை 1. உவகை (இரவு! அவள் மாடியில் நின்றபடி, தான் வரச்சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள். அவன் வருகின்றான்.) காதலன் என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்! உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும் பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன். காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன் பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை. மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி நூலே ணியினைக் கால்விரல் பற்றித் தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய் முத்தெழுத் தஞ்சல் எழுதினை; உயிரே இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி. (அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.) காதலன் வாப றந்து! வா வா மயிலே! (அவளைத் தோளில் தாங்கி இறக்குகின்றான்.) காதலன் வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை! ஒரேஒரு முத்தம் உதவு. சரி! பற! (இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர் குதிரைமேல் ஏறி அப்புறப்படுகிறார்கள்.) 2. வியப்பு (இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள். குதிரையை ஒரு மரத்தில் கட்டி.) காதலன் வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்! என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும், உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும் ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்! (இருவரும் உலாவுகின்றார்கள்.) காதலன் சோம்பிக் கிடந்த தோகை மாமயில் தழைவான் கண்டு மழைவான் என்று களித்தாடு கின்றது காணடி! வியப்பிது! (சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.) 3. இழிப்பு காதலன் குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத் திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது! சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்; இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்? நமைநோக்கி €Vdt‹ நகரு கின்றான்? c‰W¥ gh®!அவன் ஒருபெருங் கள்வன். காலடி ஓசை காட்டாது மெல்லஅக் கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை உணர்க! அன்புக் குரியாய் உணர்க! (தம்மை நோக்கி வரும் அத்தீயனை இருவரும் பார்க்கிறார்கள்.) 4. வெகுளி (nfhg«) காதலன் வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்! புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி! (காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன் உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன் தன்னை நெருங்குவதையும் காதலன் காணுகின்றான். காதலி காணுகின்றாள்.) 5. நகை காதலன் நட்டு வீழ்ந்தான் நடைதடு மாறி! கள்ளுண் டான்.அவ் வெள்ளத் திலேதன் உள்ளம் கரைந்தான். உணர்வி ழந்தான். உடைந்தது முன்பல் ஒழுகிற்றுக் குருதி! (இருவரும் சிரிக்கிறார்கள்.) காதலன் ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான். (இருவரும் மறுபுறம் செல்கிறார்கள்.) 6. மறம் (åu«) காதலன் என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்? கால்பட்டுச் சருகு கலகல என்றது. (உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.) காதலன் எவனோ உறையினின் றுருவினான் வாளை; ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே! ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய். நினது தந்தை நீண்முடி மன்னன் அனுப்பிய மறவன் அவனே போலும்! (காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை உற்று நோக்கியிருக்கிறாள்.) காதலன் (தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி) அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ? முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால் அரண்மனை புனைந்த அழகு மாடியில் வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது இத்தோள்; உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்! நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக் கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்! போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும் நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்! உறையி னின்று வாளை உருவினேன் தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான் என்னையும் என்பால் அன்புவைத் தாளையும் நன்று வாழ்த்தி நடவந் தவழி! இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்! (வாட் போர் நடக்கிறது.) காதலன் மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்; வாழி தோழா! நின்பெயர் வாழி! (வந்தவன் இறந்துபடுகிறான்.) 7. அச்சம் (காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கின்றான்.) காதலன் அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே? பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ? கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ! (தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும் அவன் பார்வை சுழல்கின்றது.) 8. அவலம் (காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.) காதலன் ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள். பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி அழகு விளக்கை அவித்தான்! நல்ல கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ! என்றன் அன்பே, என்றன் உயிரே! பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின் சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்! கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை? எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய். தனித்தேன், உய்விலை, தையலே, தையலே, என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச் சுவைக்குமுன் மண்ணில் Rtw1 வைத்துக் கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே! ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்! 9. அறநிலை கல்வி இல்லார்க்கு கல்வி ஈகிலார் செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார் பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது, அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ இன்சொலோ என்ன இருத்தல் கூடும்? வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின் வீழ இடும்பை விளைக்கின் றானே! வையம் உய்யு மாறு செய்வன செய்து கிடப்பேன் இனிதே! - பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி, 1949  முன்னுரை 14. 1. 1951 பொங்கல் நாளில் வானொலி நிலையத்தில் வைத்து ஒலி பரப்பப்பெற்றது கவியரங்கின் நிகழ்ச்சி. அதில் நான் இயற்றிப் படித்தது; அமிழ்து எது? என்னும் இது. இதைத் திருச்சி வானொலி நிலையத் தலைவரின் ஆணை பெற்றுச் சிறு நூலாக அச்சியற்று வித்தேன். அமிழ்து என்பது மழை என்பதை ஆராய்ச்சி வாயிலாக விளக்கியுள்ளேன். படிப்போரின் தீர்ப்புக்கு விடப்பட்டிருக்கிறது. - பாரதிதாசன் 20 அமிழ்து எது? இன்னிசைக் கலி வெண்பா தலைவி இதுதான் தைத் திங்கள் எனக்கடல் மேல் வந்த புதிய இளங்கதிர், பொன் அத்தான்.பொன்! பொன்! பொன்! தலைவன் ஆம்ஆம்என் அன்பின் உருவே அதுசுடர்ப் பொன் நீர்மேல், நிலமேல், நிழல்தரும்பூஞ் சோலைமேல், உன்மேல் தனதொளியை, வீசி உளத்திலெல்லாம் அன்பின் எழுச்சியினை ஆக்கியது. வாழ்க கதிர்! காலை மலர்ந்ததுவே கண்ணேநான் சென்று, வயல் வேலை தொடங்கி விளைச்சல் அறுத்துவந்தே இந்நாளில் இந்தா எனக்கொடுக்கச் செல்கின்றேன் பொன்னே புனலாடி இல்லம் புதுக்கிடுநீ! தலைவி செல்வப் பரிதி சிரித்துவந்த தைக்கண்டீர் கொல்லைக் கொடிகள் குலுங்கச் சிரித்ததுபோல் காலை மலர்ந்ததையும் கண்டீர் - விரைந்து வயல் வேலை தொடங்கி விளைச்சல் அரிந்தஅரிக் கட்டடித்துத் தூற்றியொரு கட்டைவண்டி மேலேற்றிப் பட்டபெரும் பாட்டின் பயனிந்தா என்பீர்; பின் உள்ள மகிழ்ந்துங்கள் உழுதோளை நான்தொழுது வெள்ளத் தெடுத்து விடிவெள்ளி போலரிசி ஆக்கிநல்ல பானையிலே ஆவின் தனிப்பாலைத் தேக்கி அதிலிட்டுச் செங்கரும்பின் கட்டியிட்டு, திங்களோ தைத்திங்கள் செந்தமிழே தாய்மொழியாம் பொங்கலோ பொங்கல் எனப் பொங்கிவரப் புத்துருக்கு நெய்யும் பருப்பும் நறும்பொடியும் நேர்கொடுத்து மெய்யன்பி னோடு தமிழர் விழாவாழ்த்திப் பானை இறக்கிப் பலபேர்க் கிலையிட்டுத் தேனைப் பழச்சுளையைச் சேர்த்துப் படைப்பேன். எடுத்துண்டு நீவிர் அதை என்னவென்று சொல்வீர்? தலைவன் அடடா! இப் பொங்கல் அமிழ்தமிழ் தென்பேன் நான், தலைவி அப்பொங்கல் தன்னை அமிழ்தென்று சொல்வதுண்டோ? ஒப்புவாரோ பொங்கல் அமிழ்தென் றுரைத்துவிட்டால்? தலைவன் ஆமாம்நான் சொல்வேன் அமிழ்துதான் அப்பொங்கல் தீமை என்ன?... தலைவி ... தீமைஒன் றும்இல்லை அத்தான்; நீங்கள் உண்ணும் பொங்கலா அத்தான் அமிழ்து? புகலுங்கள். தலைவன் பொங்கல்அமிழ்துதான். பொய்யில்லை, கட்டிக் கரும்பும் அமிழ்து; கனி அமிழ்து; முல்லை அரும்பமிழ்து; தேனமிழ்து; அப்பம் அமிழ்து குழந்தை குதலை மொழியமிழ்து; குன்றாப் பழந்தமிழும் பாட்டும் அமிழ்து; தமிழ்ப் பண் அமிழ்து; திங்கள் அமிழ்து; திகழ்ஆவின் பாலமிழ்தே! இங்கெனக்கு நீ அமிழ்து,, நானுனக் கெப்படியோ? வாய்மை அமிழ்து; மடிசுமந்து பெற்றுவக்கும் தாய்மை அமிழ்து. தனிஇன்ப வீடமிழ்து தென்றல் அமிழ்து நறுஞ் செவ்விள நீரமிழ்து, ஒன்றல்ல எல்லாம் அமிழ்தென் றுரைக்கலாம். தலைவி ஏன் அத்தான்? எல்லாம் அமிழ்தென்றால் அந்தச்சொல் ஏன் அத்தான்? ஏதோ அமிழ்தொன் றிருக்கும். தலைவன் உயர்ந்த பொருட்கெல்லாம் உயர்வு குறிக்க உயர்ந்தோர் அமிழ்தை உரைப்பார்கள் பெண்ணரசி. தலைவி பேர்இருந்தால் பேர்குறிக்கும் அந்தப் பொருள் இருக்கும் ஆரிடத்தில் இந்த அளப்பை அளக்கின்றீர்? எது அமிழ்தத்தான்? எனக்கதைச் சொன்னால் புதுநாளில் இன்பநறும் பொங்கலுண்ணு முன்னரே நல்ல அமிழ்துதனை நான்கண்ட தாகாதா? சொல்லுவீர் அத்தான் அமிழ்தெது?.... தலைவன் ...khnd புதுநெல் அறுத்துவரப்போம்போதுநீயோஎதுதா‹அமிழ்ததனைச் சொல்åர்எனக்கேட்டhய் அப்படிnயஉன்wன் அருட்gடிஆகட்டும்நhன் செப்புவiதஉற்றுக்fள் தித்திக்Fம்தேnன அமிழ்தென்றhல்மேல்Ãன் றமிGம்உணவா«. அமிழ் என்றும்துவ்வென்றும்சொல்இரண்டுண்டத்தொடரில்.அவ்வளவுதான் இப்போ தேனும் அறிந்தாயா? இவ்வளவோ டென்னைநீ Éட்டிடுவாய்Vந்திழையே!தலைவி இல்லையத்தான்! மேல்நின் றிறங்கும் உணவென்று சொல்லிவிட்டால் போதுமா? ஒன்றுமே தோன்றவில்லை. மேலிருந்து தான்விழும் விளாம்பழமும்; அஃதமிழ்தா? மேலான தாய்இருக்க வேண்டும் அமிழ்து! தெரிந்து கொள்ளக் கேட்டேன்தெரிவித்தா லென்ன? தலைவன் சரி, என்றன் கேள்விக்குச் சற்றே விடைபுகல்வாய்! அவ்வானத் தேஇருந்து - அ மிழ்ந்து வருவதெது? இவ்வுலகுக் கின்பம் பொதுவாக ஈவதெது? கண்ணுக் கெதிரில் கடகடென வீழும், அதை எண்ணிப்பார் இன்னதென்று. தோன்றும் உனக்கதுவே! தலைவி வானத்தி லேயிருந்து வானூர்தி தான்அமிழும் வானூர்தி அஃதா? சிரிப்புவரு கிறதத்தான். தலைவன் தேனேஎன் செல்வமே செப்புகின்றேன் நீகேட்பாய் ஆனதமிழ்ச் சான்றோர் அருளியஓர் செய்யுள்இது; மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகுக் கவனளி போல் மேல் நின்று தான்சுரத்த லான் என்றிளங்கோ தானுரைத்த செய்யுள் தரும்பொருளைக் கண்டுகொள்வாய். தலைவி அச்சோ! மழைதான் மழையேதான் அத்தான். இச்சேதி இப்போது தானத்தான் நானறிந்தேன். தலைவன் தேனான இன்பச் சிலப்பதி காரத்தினிலே மேல்நின்று தான்சுரத்த லான் என்று விண்டதனால், வான்நின் றமிழும் மழைதான் அமிழ்தென்று நீ நன் றறிந்தாயா நேரிழையே இப்போது? தலைவி நன்றாய் மழைதான் அமிழ்தென்று நானுணர்ந்தேன் ஒன்றிருக்க வேறொன்றில் ஓடிற்றென் நெஞ்சம். அருகில் இருக்கும் மழைஅமிழ் தென்று தெரியவில்லை; சொல்லத் தெரிந்துகொண் டேன். ஆனால், மழைதான் அமிழ்தென்றால், மக்கள் அதனைப் பிழைதான் எனச்சொன்னால் என்னபதில் பேசுவது? தலைவன் வானின் றுலகம் வழங்கி வருதலால். தானமிழ்தம் என்றுணரற் பாற் றென்று சாற்றிய வள்ளுவர் பாட்டை வகையாகச் சொல்லி, அதற் குள்ள கருத்தை உரை அதையும் கேட்பாய் அமிழ்தென் றுணரும் அருமை மழைக்கே அமையும் எனஉரைத்தார் வள்ளுவரே! அல்லவா? கண்டவைஎல் லாம்அமிழ்தே என்று கதைபேசிக் கொண்டிருப்போர் பேதமையைக் கண்டேஇவ் வாறுரைத்தார். தலைவி சாவா மருந்தென்று சாற்றுகின்றார் அஃதென்ன? தலைவன் சாவா மருந்து தனியல்ல இவ்வமிழ்தே! வான்பெய்து கொண்டிருக்கும் ஆதலினால் மண்ணுலகம் தான்சிறக்கும் என்றுகுறள் சாற்றியதைக் கேட்டாயே. தலைவி ஐயம்இன்னும் கேட்பேன் அதற்காக நீங்களென்னை வையக் கூடாது... தலைவன் மயிலே வைவேனா? தலைவி அமிழ்தா? அமுதா? அமிழ்தமா? இன்னும் அமுதமா? இங்கிவை அத்தனையும் ஒன்றா? தலைவன் அமிழ்தே அம் சாரியையும் ஆனதிரி பும் பெற்று - அமிழ்தம், அமுதமுதம் என்றாகும் பெண்ணே. தலைவி அமிர்தம்என் றாலென்ன? தலைவன் அதுவா? mமிர்தக்fதையைmறிவிக்கின்nறன்கேள்நீ;nதவர்mசுரரெலாம்rண்டையிட்டுச்bசத்திடுவார்rவைத்jடுக்கஓர்mம்ருதங்fடைவதென்றுâட்டமிட்டார்.nrl‹கயிறாகமேருமலை இட்டமத்தாக்கி இருந்ததிருப்பாற்கடலைச் nசர்ந்துfடைந்தார்கள்nதவர்mRரரெலாம் ஆ®ந்துtளிப்பட்டதே அ«ருதமென்பhர்கள். தலைவி அமிழ்துதனி, அம்ருதம் அஃதொன்றா அத்தான்? தலைவன் அமிழ்துவே றம்ருதம்வே றல்லவா பெண்ணே? தலைவி இரண்டும்சா வைத்தடுப்ப தென்றீர்நீ ரே;பின் இரண்டும் தனித்தனி என்றுரைத்த தென்ன? தலைவன் இரண்டும்சா வைத்தடுப்ப தென்றாலும் அந்த இரண்டுக்கும் வேறுபா டில்லாமல் இல்லை. உணவால் உயிர்நிலைக்கும் ஆகவே பெண்ணே உணவுக்கும் எல்லா உயிர்க்கும்ஆ தாரம் மழை! அத்தேவர் இன்னுயிரும்அவ்வமிழ்தாலேஅமையும்அத்தேவர்அம்ருதத்தின்முன்புஅமிழ்துண்டு பெரிதுலகோடுபிறந்ததமிழ்து.கிரேதாயுகத்திற் கிlத்ததுதான்அம்ருதம். தேவர்க்கு மட்டும் தீரட்டியதே அம்ருதம் யவர்க்கும் ஆதிமுதல் எங்கும் அமிழ் துயிர். தலைவி அத்தானே நான் ஓர் அறிஞர் துணைவியன்றோ! இத்தனைநாள் நானே இதனை அறியேன். மழையே அமிழ்து மழையே உலகை அழியாது காப்பாற்றும். அப்படி இருக்கையிலே ஏனிதனை யாரும் வெளிப்படையாய்ச் சொல்லவில்லை? தலைவன் மானேநம் வள்ளுவர்தாம் வாய்விட்டுச் சொன்னாரே? தலைவி பின்னாள் புலவரிதைப் பேசுவதே இல்லைஅத்தான். தலைவன் பொன்னே புதிய அமிர்தொன்று வந்ததிங்கே! பூட்டாத வீட்டில் புதிதாய் நுழைந்தவர்க்கே நாட்டார் சலுகையெலாம் காட்டுவார். வீட்டில் இருந்தார் இருளில் இருப்பார்கள். வந்த விருந்துக்குத் தாமே விடிவிளக்கு வைப்பார்கள்? என்றும் அமிழ்துண்டு இதன் பெருமை உண்டு; மற் றொன்றும் அமிழ்தென்று போட்டியிட் டோடிவந்தால், நாட்டார் நினைவிலது நாலுநாள் கூத்தாட மாட்டாதா? ஆனாலும் உண்மை மறையாது. தலைவி ஆமத்தான்! ஆமத்தான். ஆனால் மழைஎனும் பேர் நாமும் அறிவோம்; நம் நாட்டாரும் தாமறிவார் அந்தப் பெயர்தான் இருக்க அமிழ்தென்ற இந்தப் பெயர்ஒன் றெதற்காக வீணாக? தலைவன் நன்று நகைமுத்தே காற்றென்ற பேர்இருக்கத் தென்றலென்ற பேர்ஏன்? சிறப்புநிலை காட்டஅன்றோ? நீர், தீ, நிலம்,காற்று விண்ணென்ற ஐம்பொருளில் நீரின் நிலைகேள்: முகிலென்றும் கொண்டலென்றும் விண்ணென்றும் கார்என்றும் மேலும் மழைஎன்றும் அண்ணாந்து நோக்கும் அமிழ்தமென்றும் மாரிஎன்றும் ஆயிரம்உண் டன்றோ? அவற்றில் அமிழ்தென்னும் தூய நிலைகருதித் தோன்றியதே அப்பெயர். முற்றும்கேள்: வெப்பம் முகந்தநீ ரேமுகிலாம்; குற்றமறக் கொண்டநீர் கொண்டல்;அக் கொண்டலோ மேற்போய் இருந்தநிலை விண்வான் விசும்பென்பார்; காற்றால் கருமைபெறக் காராகும்; கார்தான் மழைக்கும் நிலையில் மழையாம்; மழைதான் தழைய அமிழ்உண வாவது தான் அமிழ்து. தலைவி வாழ்வாருக் காக வளங்கொழிக்க, அந்தநீர் வீழும் நிலையில் அதை மேலோர் அமிழ்தென்றார் என்று புகன்றீர் இதிலோர் மனக்குறை: என்னவெனில் இவ்வமிழ்தை மேலான தென்றிருந்தேன் இப்போ தமிழ்து மழைதானே.... என்றவுடன் சப்பென்று போயிற்றுத் தையலாள் என்றனுக்கே. தலைவன் செப்பிய உன்பேச்சில் சிறப்பில்லை, என்கண்ணே. தப்புக் கணக்கிட்டாய் தாங்கும் மழையை. அமிழ்தின் பெருமை அடுக்கடுக்காய்ச் சொன்னேன். அமிழ்தே மழைஎன்றேன் அப்படியும் நீயோ மழையின் உயர்வை மதிக்கவில்லை. இந்தப் பிழையை இளையவரும் செய்யாரே பெண்ணரசி! எங்கும் உளதுமழை. என்றும் உளதுமழை. தாங்கும் உலகுயிரைச் சாவாது காக்குமழை. அந்த மழைதான் அளிக்குமோர் இன்பத்தைச் செந்தமிழால் வள்ளுவரும் நன்றாய்த் தெரிவித்தார்; வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி என்றார்! விள்ளக்கேள் சென்று திரும்பிவந்து சேர்ந்தவர்எ னக்களிக்கும் இன்பந்தான் எவ்வா றிருக்குமென்றால், இவ்வுலகில் வாழ்வார்கள் நல்ல மழைபெற்றாற் போலிருக்கும். யாழ்மொழியே! அந்தக் குறளின் கருத்திதுவே. தலைவி பாவையரின் உள்ளப் படப்பிடிப்பே தானத்தான் ஆவல்இனி ஒன்றே அதையும் அகற்றுங்கள்; இந்த மழைதான் அமிழ்தென்ற எண்ணத்தில் எந்தப் புலவர் எழுதியுள்ளார் செய்யுள்? தலைவன் சிறந்தஒரு கேள்வியே கேட்டாய், திருவே, உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள் என்ற பாட்டில் கமழும் கருத்தைநீ காண்பாய் - உயிர்தளிர்க்கத் தீண்டினாள் தன்துணைவி. அன்னதற்குக் காரணம்அம் மாண்புடையாள் தோளேயாம். அத்தோள் அமிழ்தாம். தளிர்க்கவைப்ப தியாது? மழையன்றோ? அந்தக் குளிர்மழையை அன்னார் அமிழ்தென்றார்! கூறும் அதனால் அமிழ்தை மழைஎன்றே சொன்ன மதியுடையார் சொல்லால் மகிழ்ந்து நலமடைவாய். தலைவி ஐயமே இல்லை, அமிழ்தே மழையத்தான் வைய மழையே அமிழ்தமிழ்து மெய்யாலும்! அத்தான் எனது மகிழ்ச்சிக் களவில்லை முத்து மழைபொழிக முத்தமிழர் நாட்டில்! அமிழ்து பொழிக அழகுதமிழ் நாட்டில்! தமிழ்தான் தழைகவே பொங்கலோ பாற்பொங்கல்! தலைவன் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி இலகுகவே! நன்று தமிழர் நலிவின்றி வாழ்க! அமிழ்தே அனையபாற் பொங்கலோ பொங்கல்! தமிழ்நாடு வாழ்க தழைத்து!  நான் அறிந்த பாரதிதாசனார் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் என்று நாவுக்கரசர் நவின்ற தாண்டக அடிகளுக்கு ஏற்ப நான் முதன் முதலில் பாரதிதாசனார் தம் புதுமைப் பாடல் களைத் தான் படித்துப் பார்க்க நேர்ந்தது. நான் அவரைப் பாராமலேயே அந்தப் பாவேந்தர் மீது பேரன்பு கொள்ளலாயினேன். ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என்று நான் எண்ணுகின்றேன். அப்போது அறிஞர் குத்தூசி குருசாமியார் திரு வல்லிக்கேணியிலே ஒரு சுவடியை வைத்துக் கொண்டு அச்சுப் பிழை பார்த்துக் கொண்டிருந்தார். அதிலுள்ள யாவும் பாடல்களாகவே இருந்தன. அவை என்ன பாடல்கள்? என்று நான் அந்த அறிஞரை வினவினேன். அவர் உடனே பிழை திருத்துவதை நிறுத்திக் கொண்டு அதை என்னிடம் கொடுத்தார். அதிலுள்ள பாடல்கள் தமிழைக் குறித்தனவாகவும் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டனவாகவும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவனவாகவும் கலந்திருந்தன. நான் அந்த அற்புதப் பாடல்களைப் படித்து பார்த்துவிட்டு இவை பாரதியார் பாடல்களையும் விஞ்சியனவாக இருக்கின்றனவே! இவைகளைப் பாடியவர் யாவர்? என வினாவினேன். அப்போது அவர் இந்தப் பாடல்களைப் பாடியவர் பாரதியாரின் மாணவரே ஆவர். கனக சுப்புரத்தினம் என்பது அவர் தம் இயற்பெயர். பாரதிதாசர் என்னும் புனைபெயரால் இவைகளை அவர் பாடியிருக்கிறார். இன்னும் இரண்டொரு நாளில் சுவடியாக வந்துவிடும். என்று அவர் கூறினார். இந்தி எதிர்ப்புக் காலத்தில் அந்தப் புரட்சிப் பாடல்களே எங் களுக்குப் பெரிதும் உதவின. 1937-இல் டாலின் ஜெகதீசன் கட்டாய இந்தி ஒழியவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்துவந்தார். அவருடைய உண்ணாவிரதம் முதலில் செ.த. நாயகம் அவர்கள் இல்லத்தில்தான் துவங் கியது. முதலில் ஒரு சில நாட்களேனும் அவர் உண்ணாவிரதம் இருந்திருக் கலாம். அப்போது சில அன்பர்கள் இந்தி எதிர்ப்புக்காக டாலின் ஜெகதீசன் உண்ணாவிரதம் இருந்து வருதலைத் தெரிவித்துச் சிவஞானம் பூங்காவில் ஒரு கூட்டம் போட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அறிக்கையினைத் தாங்கள் அச்சடித்துக் கொடுப்பதாகவும் கூறினார்கள். அதற்கு இரண்டொரு வாரத்திற்கு முன்பு ஈ.வெ.ரா. பெரியார் கட்டாய இந் தியைக் கண்டித்து எழுதியதோடு கூட்டம் போட்டு இதைக் கண்டிப்பதற்கு எந்தப் புலவனும் முன்வரவில்லையே! என்றும் மனம் வருந்தி எழுதியிருந் தார். அந்தக் கட்டுரை என்னுள்ளத்தைப் பெரிதும் கவர்ந்ததால் சிவஞானம் பூங்காவில் ஒரு கூட்டம் போட்டுக் கண்டிப்பதாக ஒப்புக்கொண்டேன். அப்போது தியாகராய நகரிலுள்ள இராஜாஜி வீட்டு வாயிலில் சில தமிழ் அன்பர்கள் மறியல் செய்தனர். அந்த மறியலைக் கண்ட இராஜாஜி அவர்கள், இந்தி மொழியை எங்கே கற்பிக்கின்றார்களோ அங்கே சென்று மறியல் செய்யுங்கள் என் வீட்டு வாயிலில் மறியல் செய்வது சிறிதும் பொருந்தாது, என்று கூறினார். அப்போது இந்து தியலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் கட்டாய இந்தி வகுப்பு, ஒரு முன் மாதிரியாக நடந்து வந்ததால், அங்கே ஊர்வலமாகச் சென்று அந்தப்பள்ளியின் வாயிலிலேயே மறியல் செய்ய வேண்டும் என்னும் தீர்மானம் ஒன்றை எழுதிச் சிவஞானம் பூங்கா வில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொண்டு வருவதற்காக அன்று தலைமை தாங்கிய பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலி யாரிடம் காட்டினேன். அவர் நீங்கள் முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருப்பதால் இராச கோபாலாச்சாரியார் உங்கட்குப்பல விதத்திலும் தொல்லை தருவார், நான் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய னாக இருப்பதால் என்னை அவரால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி தாமே அதில் கையெழுத்திட்டு அந்தத் தீர்மானத்தை ஒரு மனதாக நிறை வேற்றினார். அப்போது சி.டி. நாயகம் டாலின் ஜெகதீசன், அறிஞர் அண்ணா, சுவாமி அருணகிரி நாதர் முதலிய பலரும் இருந்தனர். அண்ணா அவர்களும், சுவாமி அருணகிரிநாதர் அவர்களும் மிகவும் வன்மையாகக் கண்டித்துப் பேசினர். அதன் காரணமாகத்தான் அண்ணா அவர்களும், சுவாமி அருணகிரிநாதரும் முதன் முதலில் சிறை புக நேர்ந்தது. பிறகு தொடர்ந்து வாரந்தோறும் காசி விவநாதர் ஆலயத்திலிருந்து ஒரு பெரிய ஊர்வலம் புறப்பட ஆரம்பித்தது. அந்த ஊர்வலங்களை எல்லாம் நானே மறைமுகமாக இருந்து நடத்தி வந்திருக்கின்றேன். அவ்விதம் நான் மறைமுகமாக இருந்து நடத்தி வரவேண்டும் என்று என்மீது பேரன்பு வைத்திருந்த என் மாணவர்களும் நண்பர்களுமே கேட்டுக் கொண்டனர். ஆதலால், அந்த ஊர்வலங்களில் இறுதியில் நான் நடந்து வருவது வழக்கம். அப்போது மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் என்னைத் தொடர்ந்து ஒருவர் வந்துகொண்டு இருந்தார். அவர் தம் மிடுக்கான பார்வையும் பெருமிதம் வாய்ந்த நடையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஆதலால் என்னுடன் வந்த என் நண்பர்களுள் ஒருவரை நோக்கி ‘இவர் யார்? என வினவினேன். இவர்தான் பாரதிதாசன் என்பவர்; ஒரு சிறந்த கவிஞர்; இவருடைய பாடல்களைத்தான் நடக்குமுன்னே செல்கின்ற தாய்மார்களும் பிறரும் பாடுகின்றனர் என்றார். நான் இவருடைய அருமை பெருமைகளையெல்லாம் பல அறிஞர்கள் மூலம் கேட்டிருக் கின்றேன். எனினும் அன்றுதான் நேரில் கண்டேன். கவிஞருக்கு இருக்க வேண்டிய முகப்பொலிவு முற்றும் பொருந்தியிருத்தலைக் கண்டு நான் மிகவும் வியந்தேன்; எனினும் நான் அவரிடம் கலந்துரையாடவே இல்லை. டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும், வ.பா. தாமரைக்கண்ணி அம்மையாரும் செந்தமிழைக் காப்பதற்காக சேனை ஒன்று வேண்டும் என்னும் பாரதிதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே இந்தி எதிர்ப்புக்காக மாபெரும் சேனையைத் திரட்டினர். சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் பாவேந்தராகிய பாரதிதாசனாரின் பேச்சுத்திறனைக் கேட்டு வியந்திருக்கின்றேன். ஆதலால், நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட அவர் தோற்றப் பொலிவு என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்டது. மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்னும் பாடலைப் பாடிக் கொண்டே, டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும், மலர் முகத்தம்மையாரும் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு 1938ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாளன்று சிறை புகுந்தனர். அதன்பிறகு நான் புதுவைக்கு அடிக்கடி சென்று கூட்டங்களில் தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றி இருக்கின்றேன். எனினும் நான் பாரதிதாசர் இல்லம் சென்று அவரைக் கண்டதில்லை. தமிழைப் பழிப்போரைத் தாக்கிப் பேசும் அவருடைய கடுமையான பேச்சிலிருந்து அவர் ஒருகால் முரடராய் இருப்பாரோ என்று நான் ஐயம் கொண்டதே அதற்குக் காரணம். எனினும் நான் பேசும் கூட்டங்களில் அவருடைய மாணவர்கள் பெரும்பாலோர் வந்து என் பேச்சைக் கேட்டு மகிழ்வதுண்டு. நான் ஒருநாள் ஓய்வாக இருந்தபோது அவருடைய மாணவர்களுள் ஒருவர் என்னிடம் வந்து பாரதிதாசனார் இளமையிலே முருக பக்தராக இருந்தபோது பாடிய பாடல்களை எல்லாம் என் முன்னிலையில் இசை யோடு பாடிக்காட்டினார். அவை மிகவும் உருக்கமான பாடல்களாக இருந்ததைக் கண்டு நான் வியந்தேன். வேறொரு கூட்டத்தில் புதுவையிலே நான் தலைமை வகித்துப் பேசியபோது, ‘பாரதிதாசரைக் குறித்து உங்கள் எண்ணம் என்ன? என்று ஒருவர் கடிதம் மூலம் கேட்டு எழுதியிருந்தார். நம் பாவேந்தரைப் போற்றாத தமிழன் நம் நாட்டில் இருக்க மாட்டான். அவ்விதம் இருந்தால் அவன் தமிழனல்லன்! ‘தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்! என்று பாடியுள்ள ஒரு வீரத் தமிழ்க் கவிஞருக்கு என் பாராட்டு எந்த மூலை! எனினும் சீர்திருத்தச் செம்ம லாகிய இவர், அடிமை மனப்பான்மையைக் குறிக்கும் தாசன் என்னும் பெயரை வைத்துக்கொண்டதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. பாரதியார் நாட்டு விடுதலைக்காகப் பாடினார். நமது புரட்சிக் கவிஞர் தமிழர்கட்காகவும், தமிழுக்காகவும் பாடினார். ஆதலால் நம் பாவேந்தர் பாரதியாருக்கு எந்த வகையிலும் குறைந்தவரல்லர் என்பது என் எண்ணம் என்று நான் அவருக்குத் தெரிவித்தேன் புலவர் குழு திருச்சியிலும், தஞ்சையிலும் நடந்தபோது நான் அந்தக் கூட்டங்களுக்குச் செல்லவே இல்லை. முத்தமிழ்க் காவலராகிய கி.ஆ.பெ. விசுவநாதம் சென்னை வந்திருந்த போது நீங்கள் ஏன் இரண்டு கூட்டங் களுக்கும் வரவில்லை? நீங்கள் வந்திருந்தால் பாரதிதாசரைப் போல உங்களையும் யானையின் மீது ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவந்து இருப்பேன் என்றார். நீங்கள் அவருக்குச் செய்ததுதான் சிறப்பு. நான் அவருக்கு ஓராண்டு இளையவன் என்று கூறினேன். அடுத்த கூட்டம் மதுரையில் நிகழப் போகின்றது. அதற்கு நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் நேரில் தெரிவித்ததோடு கடிதம் மூலமாகவும் எனக்கு நினைவூட்டினார். நான் அவ்விதமே மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கே சோமசுந்தர பாரதியாருக்கு 70 ஆம் ஆண்டுவிழா நடந்தது. அங்கே சோமசுந்தர பாரதியாரைப் பாராட்டிப் பேசினேன். அதற்கு அடுத்து சென்னையிலும் பிறகு சிதம்பரத்திலும் குழுக் கூட்டங்கள் நடந்தன. சிதம்பரம் கூட்டத்தில்தானே நான் முதன் முதலில் பாரதிதாசரைக் கண்டு பேசி அளவளாவினேன். பிறகு நடந்த புலவர் குழுக் கூட்டங்கட்கு எல்லாம் நானும் பாரதிதாசனும் பெரும்பாலும் சென்றிருக்கின்றோம். நாங்கள் அப்போதெல்லாம் ஒருவருக்கொருவர் அளவளாவி எங்கள் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ளு தலுண்டு. நாங்கள் கோவைக்குச் சென்றிருந்த போது திரும்பி வருவதற்கு எனக்கும், அவருக்கும் இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. பாவேந்தர் ஏறி அமர்ந்திருந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியிலேயே நானும் ஏறுவதற்குச் சென்றேன். சன்னல் பக்கமாக அமர்ந்திருந்தவர் என்னைக் கண்டதும் எனக்கு அந்த இடத்தைக் கொடுத்து விட்டார். நான் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. பிறகு அவர் எனக்குப் படுத்துக் கொள்வதற்கும் இடம் தந்துவிட்டு அவர் உட்கார்ந்த வண்ணமே இருந்தார். அவருடைய கட்டளைக்கு நான் இணங்க வேண்டியனவாகவே இருந்துவிட்டேன். இந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்தே அவர் என்மீது வைத்திருந்த பேரன்பினை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய பெருந்தன்மை வாய்ந்த குணமும், எனக்கு நன்கு தெரிய வந்தது. குயில் பத்திரிகை ஆரம்பிக்கும்போது அவர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் கண்டிருந்தபடி நான் எனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் குயில் இதழின் உறுப்பினர் களாகச் சேர்த்து உதவினேன். இன்னும் எனக்குத் தெரிந்த எத்தனையோ செய்திகளை நான் இந்தச் சுருங்கிய கட்டுரையில் தெரிவிப்பதற்கில்லை. அவர் படக்காட்சித் துறையில் இறங்காமலிருந்தால் நூறாண்டுகட்கு மேலும் வாழ்ந்திருக்கலாம். அவருடைய உடற்கட்டும், உள்ள உறுதியும் அத்தகையன. நான் எந்தக் கட்சியினையும் சார்ந்தவனல்லன் என்று அவர் தம்முடைய இறதிக் காலத்தி லேயே தெரிவித்திருந்தார். அவர் நம் தமிழ் நாட்டுக்காகவும், தமிழுக் காகவும் இதுவரையில் புரிந்துள்ள தொண்டுகளே என்றும் அழியாமல் நிலைத்து நிற்கக் கூடியனவாக உள்ளன. தமிழ்நாட்டார் அனைவரும் அவருக்குக் கடமைப்பட்டவர்கள் ஆகின்றார்கள். தம் கருத்துக்களைப் படக் காட்சிகளின் மூலம் நம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். படத் தொழிலில் ஈடுபட்டுள்ள பேரன்பர்கள் பாண்டியன் பரிசு என்பதனைப் படமாக எடுக்க முன்வந்தால் அவருடைய இறுதிக்கால எண்ணத்தை நிறைவேற்றி வைத்தவர் களாவார்கள். அவர் சென்னையிலே கவிஞர் மாநாடு ஒன்றினைக் கூட்ட எண்ணி யிருந்தார். இராசீபுரக் கவிஞர் அரங்கசாமி என்பவர் அதற்காகவே சென்னைக்கு வந்திருந்தார். தலைவர், திறப்பாளர், பேச்சாளர் மாநாடு நிகழ்த்த வேண்டிய நாள், முதலிய பலவற்றையும் கவிஞர் அரங்கசாமி அவர்களைக் கொண்டு பாவேந்தர் முடிவு செய்து வைத்திருந்தார். அந்த மாநாட்டினை மாணவர் மன்ற நிலையத்திலேயே நடத்துவது என்னும் நம் பாவேந்தர் எண்ணியிருந்தார். அந்த எண்ணம் நிறைவேறுவதற்குள் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் நம்மைவிட்டு மறைந்து விட்டார். பாவேந்தருக்கு இறுதி மரியாதை புரிவதற்காக மாணவர் மன்றச் சார்பில் நான் சென்றிருந்தேன். அப்போது அவர் தம் அருந்தவச் செல்வரான மன்னர் மன்னன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதபோது என்னுள்ளம் பெரிதும் கரைந்துவிட்டது. அவருக்கு எத்தகைய ஆறுதலை யும் கூற அப்போது என்னால் இயலவில்லை. மே மாதம் முதல் தேதியன்று நாங்கள் இரங்கற் கூட்டம் ஒன்று கூட்டி எங்கள் துயரத்தை அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்தோம். மன்னர் மன்னனுக்கும் ஆறுதல் கடிதம் ஒன்று வரைந்து அனுப்பினோம். அந்த அருந்தவச் செல்வரையும் அவர்தம் குடும்பத்தாரையும் ஆதரித்து ஆவன புரிய வேண்டுவது தமிழ் மக்கள் அனைவரது கடமையாகும். அவர் பெயரால் புதுவை மாநகரிலே ஒரு பல்கலைக் கழகம் ஏற்படுத்தினால், அது பலருக்கும் பயன்படும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் வால்ட் விட்மன் என்று பாரதிதாசனாரைப் பாராட்டியுள்ளார். பொதுமைப் பொழில் - புதுமை மலர் - தமிழ்த்தேன் - பாச்சுவை என்று திரு.வி.க. அவர்கள் பாவேந்தரைப் பாராட்டி மகிழ்ந்துள்ளார். நம் கவிஞர் பெருமானை உலக மாபெரும் கவிஞர்களுள் ஒருவ ராகவே மக்கள் என்றும் மதிப்பர். அவர் அயல்நாட்டில் பிறந்திருந்தால் தம் வாழ்நாளிலேயே நம் புரட்சிக் கவிஞர் நோபல் பரிசினைப் பெற்றிருக் கலாம். அவர்தம் பொன்னுடலம் மறைந்தாலும் புகழுடம்பு மறையாது. அவர் தம் பாக்கள் தேனினும் இனியவை. அவருடைய தமிழ்நடை மக்கள் உயிரையும் உடலையும் வளர்ப்பன. அவர்தம் புரட்சிக் கருத்துக்கள் உறங்கும் மக்களையும் விழிப்படையச் செய்வன. அவர்தம் நூற்கள் யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்க பெருமை வாய்ந்தன. அவரை நாம் மறந்தாலும் நம் தமிழ்மொழி மறவாது. பாவேந்தர் பாரதிதாசன் தம் திருப்பெயர் வாழ்க! (பேராசிரியர் மயிலை. சிவமுத்து நூல் : பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம்) 