பாவேந்தம் – 1 இறைமை இலக்கியம் நாட்டுப்பாடல் இலக்கியம் ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 1 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2009 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 258 = 288 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 270/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர்நகர் சென்னை – 17. தொலைபேசி : 044 2433 9030 பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி . - இரா. இளங்குமரன்  அறிஞர்கள் பார்வையில் கோ.இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள்முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத் தக்கதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. இளவழகனார், திருவள்ளுவர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப் பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்பது புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  அறிஞர்கள் பார்வையில் கோ.இளவழகன் பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன் நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத்தின் அளவுப் பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒருசேர நூல்களாக வெளி யிட்டமை தமிழ்ப் பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி. கந்தையா, ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளையெல்லாம் தேடி யெடுத்து ‘இந்தா’ என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. முனைவர் இரா. இளவரசு வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. இதனை எதிர்த்துப் பெரியார் தலைமையில் மறைமலை அடிகள், திரு.வி.க., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப் படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின் மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  அறிஞர்கள் பார்வையில் கோ.இளவழகன் இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப் பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்தநாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ் மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். முனைவர் கா. காளிமுத்து, முன்னைப் பேரவைத் தலைவர், தமிழகசட்டப்பேரவை. பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  அறிஞர்கள் பார்வையில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்க்கவி; தமிழரின் கவி; தமிழின் மறுமலர்ச்சிக் காகத் தோன்றிய கவி; தமிழரின் புகழ் மீண்டும் மேதினியில் ஓங்க வேண்டு மெனப் பிறந்த கவி; அவர் நமது கவி. - கோவை அ. அய்யாமுத்து  நிமிர்ந்த பார்வை, அச்சமில்லை என்ற முறுக்கான மீசை வயதை விழுங்கிய வாலிப வீறு உரப்பான பேச்சு புதுமை வேட்கை கொண்ட உள்ளம் - இவையே பாரதிதாசர்! - சுத்தானந்த பாரதியார்  பாரதிதாசன் மொழிவரையறையால் தமிழ்க் கவிஞர் ஆனால் கருத் தளவையால், கவிதைச் சுவையளவையால், மொழி எல்லையையும், நாட்டு எல்லையையும், கால எல்லையையும் கடந்த உலகக் கவிஞர் களுள் ஒருவர். - கா. அப்பாத்துரையார்  மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் தர்மத்தின் பேராலும் நீதியின் பேராலும் யார் யார் கொள்ளையடிக்கிறார்களோ, யார் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ யார் யார் பிறர் உழைப்பில் இன்பம் அனுபவிக்கின்றார்களோ அத்தனை பேர்களையும் துவேசிக்கிறார் பாரதிதாசன். - ஏ.கே. செட்டியார்  சாதி மதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க குருட்டுப் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிய, பகுத்தறிவை விரிவாக்க, தமிழ்ப் பற்று பொங்கியெழ, பெண்ணடிமைத்தனம் நொறுங்க, பொதுவாக நில, பண முதலாளிகளின் கொடுமையை உணர்த்த, சுருங்கச் சொன்னால் தொழி லாளித்துவ சீர்திருத்தமான பாடல்களைத் தந்துள்ளார் பாரதிதாசன் - ப. ஜீவானந்தம்  பாரதியாரின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்ச்சியை உண்டுபண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டி வருகின்றன என்றால் மிகையாகாது. மதங்களிலும், பழைய ஆசாரங்களிலும் ஊறிக் கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி. அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன். தமிழ் நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன் - கவிமணி தேசி விநாயகம் பிள்ளை  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் பதிப்பாசிரியர்களின் குறிப்புகள் முதுமுனைவர் இரா. இளங்குமரன் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டுப் பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. சான்றோர் தொடர்பு : முந்தைய தலைமுறை: மறைமலையடிகள், திரு.வி.க. கா.சு. பிள்ளை, தேவநேயப் பாவாணர், இலக்குவனார். இன்றைய தலைமுறை: முனைவர் தமிழண்ணல், முனைவர் இரா. இளவரசு முதலியோர். முனைவர் இரா. இளவரசு பிறப்பு : 12. 6. 1939 பெற்றோர் : மு. இராமசாமி - அருக்காணி (வேளாண்குடி) ஊர் : இராமநாதபுரம், இலால்குடி வட்டம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - பூவாளூர் உயர்நிலைக் கல்வி - இலால்குடி கல்லூரிக் கல்வி - திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தேசிய கல்லூரி முதுகலைத் தமிழ் - காரைக்குடி அழகப்பா கல்லூரி ஆசிரியர்கள் : புலவர் இல. க. செல்லையா, பேரா. இராதாகிருட்டிணன், முனைவர் வ.சுப. மாணிக்கம், முனைவர் வ.அய். சுப்பிரமணியம் ஆய்வு : முனைவர் - பெருங்கதை மொழியமைப்பு, திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக் கழகம். ஆசிரியப் பணி : தமிழாசிரியர் - திருச்சிராப்பள்ளி காசாமியான் உயர்நிலைப் பள்ளி பேராசிரியர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி 28 ஆண்டுகள் - சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட அரசுக் கல்லூரிகள் பல்கலைப் பணி : திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகம், பாரதிதாசன் உயராய்வு மையம், தலைவர் மற்றும் பேராசிரியர் - ஐந்து ஆண்டுகள். நெறிகாட்டல் பணி : முனைவர் பட்டம் - ஒன்பதின்மர் ஆய்வியல் நிறைஞர் - இருபதின்மர் கொள்கை : தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை இயக்கப் பணி : தமிழ்ப் பேராயம், உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், தமிழக - ஈழ நட்புறவுக் கழகம், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், ஓய்வுபெற்ற அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம். சிறப்பு விருது : தலைநகர் தமிழ்ச்சங்கம் - ‘தமிழவேள்’ - விருது. திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், ‘தமிழ் மாமணி’ - விருது தமிழ்நாட்டரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது உலகத் தமிழர் பேரமைப்பு - ‘உலகப் பெருந்தமிழர்’ - விருது ... ஆற்றல் : கேட்டார்ப் பிணிக்கும் பொழிஞர், கட்டுரை வன்மையர், அறிஞர் போற்றும் ஆய்வர், அஞ்சாத உரைஞர், தமிழியக்கப் போராளி திறன் : பாவேந்தர் வழிப் பாவலர், சிறுகதைஞர், இதழாளர், பாவேந்தர் ஆய்வில் தோய்வு அறிஞர் குழாம் : பெருஞ்சித்திரன், தமிழ்க்குடிமகன், முனைவர் கா. சிவத்தம்பி, முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் தமிழண்ணல், முனைவர் இ. சுந்தரமூர்த்தி, முனைவர் பொற்கோ, முனைவர் பொன்னவைக்கோ முதலியோர் அன்பிற்குரியர். நூல்கள் : விடுதலை, தமிழும் தமிழுரும், இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன், பாரதிதாசன் உலகநோக்கு, அலைகள் (நாட்குறிப்பு இலக்கியம்) நண்பகல் ஞாயிறு (கவிதைத் தொகுப்பு) நிறைந்த அன்புடன் (அணிந்துரை இலக்கியம்), வரும் புயல் நாங்கள், பாரதிதாசன் பழம் புதுப்பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் தலைப்பு, முதற்குறிப்பு அகரவரிசை, பாரதிதாசன் கடிதங்கள். முனைவர் கு. திருமாறன் பிறப்பு : 26. 12. 1941 பெற்றோர் : ஆசிரியர் மா. இரா. குகநாதர் - பாப்பு அம்மாள் ஊர் : முசிறி வட்டம் சூரம்பட்டி கல்வி : தொடக்கக் கல்வி - தந்தையிடம் உள்ளூரில் உயர்நிலைக் கல்வி - கொளக்குடி, முசிறி திருவரங்கம் பள்ளிகள் கல்லூரிக் கல்வி - திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி - பொருளியல் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி தமிழ் முதுகலை, தனித்தேர்வர் கல்வியியல் பட்டயம் : இதழியல், சிவனியக் கொன் முடிபு ஆசிரியப் பணி: அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் 7 ஆண்டுகள், அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் 30 ஆண்டுகள் ஆய்வு: முனைவர் இரா. இளவரசு வழிகாட்டலில் ‘தனித் தமிழியக்கம்’ ஓய்வுக்குப் பின் பணி: தஞ்சாவூர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி முதல்வர், ஏழாண்டுகள் தேசிய மங்கலம் (குளித்தலை) வி.கே.எசு. பொறியியற் கல்லூரிச் செயலராய்த் தொடர்கிறார் இயக்கப் பணி: திராவிட இயக்க ஈடுபாடு, உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், தமிழ்நாட்டு கலை, இலக்கியப் பெருமன்றம், தமிழ் ஈழ நட்புறவுக் கழகம், தமிழகப் புலவர் குழு முதலிய தமிழ்சார் அமைப்புகள். திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளைச் செயலர், திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர். ஆற்றல் : உரத்த சிந்தனைகளைக் கேட்போர் மனங்கொள உரையாற்றுபவர். பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், தற்கால இலக்கியங்களில் ஈடுபாடு. பதிப்புப் பணி: தேவநேயம், ந.மு.வே. நாட்டார் நூற்றொகுதி. n முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், ‘சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள்’ ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி: திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரிகளில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (புலவர் பாடநூல்) வழக்குச் சொல் அகராதி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன் vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiv இறைமைப் பாடல்கள் 1 பழம் புதுப் பாடல்கள் 59 மொழிபெயர்ப்புப் பாடல்கள் 82 இந்திய விடுதலை இயக்கப் பாடல்கள் 103 சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 122 தொண்டர்படைப் பாட்டு 154 பழம் புதுப் பாடல்கள் 160 பாட்டு முதற்குறிப்பு அகராதி 217 இறைமைப் பாடல்கள் மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு – 1920 ² குகமயம் காப்பு - வெண்பா உலகுக்கு நற்பாட் டுரைக்கவெனக் காசை நிலைசெயல்அ ழித்தல் நினது - வலியாகும் தும்பிமுகா காப்பாற்று சொல்வண்ண மெல்லாமுன் தம்பிகுகன் ஷண்முகன்மேல் தான். 1 நாட்டுச்சிறப்பு தேசிகதோடி – அடசாப்பு சீர்கொண்ட தென்மயி லாசல நாடென்ற பேர்கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு கார்கொண்டல் விண்ணடுத்து உல கோரஞ்ச மின்விடுத் து - அதி ராக இடி இடித்து - மிக்க மழைமுத்து மாலை விழவைத்த தாலே வழியற்று ஞாலம் குழிவுற்று மேலே வருநதியின் காட்சிசொலும் வகையறி யேனே மலைவிட்டு நீங்கிப்பொன் னலைகொட்டி மூங்கிற்றன் குலமுற்றும் வாங்கிப்பன் மலரிட்டு வேங்கைத்தன் தலைமுட்டு நதிவெள்ளமே - ஏரி குளங்குட்டை யவையுள்ளுமே - இரு நிலமுற்றும் குதிகொள்ளுமே - எங்கும் உழவர்கள் ஓடி விழவுகொண் டாடி தொழுதெய்வம் நாடி கழனிகள் தேடிக் கனஎருதின் ஏர்பூட்டி நிலமுழுவாரே பதனிட்ட நிலமுற்றும் விதைநட்ட தயல்நட்டுக் களைவெட்ட வருமாதர் மதியொத்த முகம்நாண மரைமொட்டு விரிவெய்தலும் - அவர் விழியொத்த கருநெய்தலும் - நத்தை தருமுத்து நகைசெய்தலும் - கண்டு காலால் மிதித்ததன் மேலே பகைத்தவர் போலே எடுத்தரி வாளால் அறுத்தெரி கரைசேர்ந்த களைக்குலத்தில் வண்டுபண் பாட எருவைத்து வரநித்தம் பிறையொத்து வளரப்பின் கதிர்விட்டு முதிரத்தன் தலைநட்டு விளையக்கண் டகமுற்ற மிகுமாசையால் - நிலம் விளைவுற்ற தொகை பேசுவார் - அறு வடை செய்ய விடையேசெய்வார் - பின்னர்க் குப்பல்செய் ததுமோதி நெற்பதர் கெடத்தூவிச் சுப்புரத்தினம் ஓதும் நற்கவிப் பொருள்போலும் மலைபோல்நெல் வீடுவர இனிதினுகர் நாடே. 2 நகரச்சிறப்பு தேசிகதோடி - ஏகம் கொட்டுமது சீதளக்க டப்பமலர் மீதுறத்த? ரித்தமுரு கோனமர்ப்ர சித்தமயி லாசலந கர்ப்புகழை யோதிடக்கு றித்ததிவ் வண்ணம் - இதை முடிப்பது திண்ணம் அட்டதிசை யோடிவிண்மு கட்டினையு மோதிரவி வட்டமுமி டாதுயுக முற்றினும்வி ழாதபடி இட்டநகர் மாலையெனக் கட்டு மதிலும் - அதனைச் சுற்றி அகழும் மின்னுமணிக் கோபுரங்க ளின்சிகர மீதணிந்த பொன்னுடைநி கேதனங்கள் விண்ணகரின் மாதர்தமை இந்நகரில் வாருமென ஆடி அழைக்கும் - அவரை ஓடி இழுக்கும். வெள்ளிமலை போலுயர முள்ளபல மாளிகையிற் புள்ளுலவு நேரமதை அள்ளிமணி யாலெறியும் பிள்ளைகளு லாவுமந்த வீதிப் பெருமை - அதனை ஓத லருமை சித்திரங்கொள் ஆலயத்தில் உற்றமுரு கேசனுக்கு நற்றிருவி ழாவைபவ முற்றுபயில் நாலுவரு ணத்தவர்கள் வீதிதனில் கீத முழக்கம் - அதிக வேத ஒழுக்கம். பூரணகும் பங்கள்வைத்துத் தோரணம லங்கரித்து நாரின்விளக் கும்கொளுத்து வாரிலக்கி ழத்தியர்க்கு நாரணன்கொள் ளுந்திருவை ஒப்பு ரைத்தனன் - கனக சுப்புரத் தினம். 3 மயில மலைச் சிறப்பு ஆநந்த பைரவி - அடசாப்பு (கஜல்) அறுபொறியின் வடிவாகி அங்கையிலே பரைதந்த சத்திவாங்கி அமரர்படுந் துயர்நீங்கச் சயமோங்க அசுரர்குல மூலந்தன்னை (துரிதம்) அடிகொண்டு களைகின்ற இளமைந்த னமர்கின்ற அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற இதுவண்ணம் அங்கண் ஞாலத் திருப்பவர் வானவர் அங்ஙனே நின்று கண்டு துதித்திடத் திங்கள் சூடுஞ் சிகரமு நாற்றிசைச் சேருஞ் சாரலுஞ் சீதளத் தூற்றலும் (துரிதம்) திரிகின்ற புயல்வேழ மரிகண்ட வுடனோடச் சரிகின்ற மலையென்று நரிகண்டங் ககம்வாட. 1 (கஜல்) மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுமொழி பனியும்சந் திரதாரையும் மஞ்சனநீராய்த் தவத்தர்செஞ் சடையில்சோர மங்களப்பண் பாடிவண்டு (துரிதம்) மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச மல்லி கைப்புதர் வெண்ணகை யாடவும் மாது ளங்கனி ஆலிலை போர்த்திடும் நல்ல தென்ற லணைந்திடக் கன்னிமா நாணி மேனிச் சிலிர்த்துக் குலைந்திடும். (துரிதம்) நளிருற்ற குரவஞ்சந் தனமற்ற(த்) தருவுந்தம் நறைகொட்ட நிறையுஞ்செங் கமலப்பொற் றடமுற்றும் 2 (கஜல்) அரவுதரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற வச்சிரம்பொற் சன்னராசி அற்புதங்கொள் ஜோதிவல்லி யிற்கலந்த போதிவல்லின் (துரிதம்) இருள்முற்று மொளியாக மிகுரத்ந மணிமாலை எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற ளெனவோத எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி இடையில் வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள் தொங்கு மாலையின் வெள்ளரு விக்குலம் தூர நின்றிழி போதொரு சந்தப்பண் (துரிதம்) தொழுபத்தர் முருகாஎன் றழுகைக்கண் ணெழுமோசை சுரமொத்த கரதாளம் நிரையொத்த திடிமேளம். 3 (கஜல்) குஞ்சரி யோர்பாகம் குறவள்ளி யோர்பாகம் கொஞ்சக்கைவேல் கொழிக்குமொளி விழிக்கொழியாக் கருணைநோக்கும் குளிர்வதன மீராறும் நளிர்பதமும் கொண்டகோயில் (துரிதம்) குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி குகனேஷண் முகனேஎன் றடிசோர நடமாடிக் குப்ப லாகப்பொற் காவடித் தோள்தூக்கிக் கொள்கை யாவுங் குமாரன்தன் மேலாக்கிச் சுப்பு ரத்தினம் சொற்றமிழ்ப் பாவாக்கிற் சூழத் தென்மயி லாசல மேநோக்கிச் சுராதிபனை வாழ்த்திநலம் துய்ப்பரதி சோபிதமே. 4 4 நூல் செஞ்சுருட்டி - ஏகம் சூரர்குலம் வேரறுக்க ஒருவேலும் - நான் துணைஎனப் பிடித்திட இருகாலும் - எண்ணும் காரியத்தை முன்னிட்டுவிற் கோலெடுத்து வேடர்புனம் மானைவிட்டுன் மெய்யுருவம் வேறுபட்டு நீமணந்த ஏர்குறத்தி அணைத்திட அறுதோளும் - தெய்வ யானையு மணைத்திடமற் றறுதோளும் - எண்ண எந்நாளும் - என் துயர்மாளும் ஓர்குடிமற் றோர்குடியைக் கெடப்பார்க்கும் - இந்த உலகத்தை நினைத்திடில் உளம்வேர்க்கும் - கொடும் மாரன்விடும் பாணமதி லேமனது நோகஇள மாதர்வச மாகியலை யாதுசுக மேபெருகச் சீர்கடப்பந் தார்குலுங்க மயில்மேலே - அலை சீறுகடல் மேலுதித்த வெயில்போலே - வர இதுவேளை - குகப் பெருமாளே கற்பகப்பொ தும்பரிடைக் குயில்பாடும் - க லாபமயில் ஓடிஅங்கு நடமாடும் - உயர் நற்றருக்கள் வாசமலர் உட்குடைந்து தேனினங்கள் பொற்பொடியைச் சூரையிடும் அற்புதங்கொள் வான் மயிலம் சுற்றிவரு வார்குடியி லுதிப்பேனோ - உனை சுப்புரத்தி னம்தமிழிற் றுதிப்பேனோ - எக் கதிதானோ - மால் மருகோனே! 5 சஹானா - ஏகம் பொன்னடியைத் தந்தரு ளப்பா இப்போ தொப்பாய் - நான் உன்னடிமை யல்லவோ செப்பாய் செப்பாய் செப்பாய் சின்னமங்கை யர்செய் மனப்பே திப்பா லிப்பால் - நான் செய்வதறி யேன்மனக்கொ திப்பால் அப்பால் தப்பாதுனது. (பொ) பூதலத்தை எண்ணஇத யம்பயம் செய்யும் - இதில் புலைநடை கொள்விலை நயம் நயம் நயம் ஆதலினின் சீதவிழி யம்புயம் பெயும் - நல் அருள்தர வேண்டுமிச் சமயம்உயும் வயம்தெரிந்து (பொ) ஏறுமயில் கார்கடல் என்னும் வன்னம் துன்னும் - அதில் இலங்குகண் மீனென மின்னும் மின்னும் மின்னும் ஆறுகதிர் போல்முக மன்னும் என்னெஞ் சின்னம் - அதில் ஆவல்கெடச் சேவைசெய உன்னும் பின்னும்உன் னன்பனுக்குப் (பொ) சுந்தரி பராபரி மைந்தா எந்தாய் கந்தா - அர விந்தனை ஜயித்தவா வந்தாள் வந்தாள் வந்தாள் தந்தைக்கு மந்திர முவந்தே தந்தாய் அந்தோ - இங்குத் தாசன் சுப்புரத்தின நலிந்தேன் சிந்தா குலந்தவிர்க்க 6 (நன்னபியாராமா) என்ற வர்னமெட்டு இராகம் : தேசிகதோடி தாளம் : ஏகம் கந்தப்பா வந்திப்போ தர விந்த(ப்)பா தங்கள் நீதர எந்தப்போ தாகு மென்றே ஏங்கிமனம் வாடு கின்றேன் சந்தப்பண் ஓதி நின்றேன் சாருமயூர கெம்பீர உதாரகுண (க) உலகம் கனவெனில் அதிலும் கலகம் மலையெனப் பயிலும் தொலையா விசாரம் உற்றேன் தூயநிலைக் காசை வைத்தேன் தலைமேல் கரங்கு வித்தேன் சரஹண பவகுக நினதுச முகமிக வுரைத்தேன் (க) மனமே குரங்கெனத் திரியும் தினமே பவவினை புரியும் தனமாதர்க் கூட்ட எண்ணும் தாய்க்கிழவி வீட்டின் கண்ணும் இனிமேற் புகாத வண்ணம் ஈகநற் போகம்உற் சாகமென் மேலிடவே (க) வள்ளிமேல் சிந்தைகொண் டன்பாய் புள்ளிமான் வந்ததோ என்பாய் கள்ளத் தனமாக வஞ்சி காதடைக்கு தென்று கெஞ்சி அள்ளித் தருமாவைக் கொஞ்சி அத்தனையிற் சுப்புரத்தின நற்கவி மட்டுக்கலந்துணுவாய் (க) 7 இராகம் : நாட்டை தாளம் : ஆதி கதிர்விடு மறுமுக வடிவே – மிகு கன்னிக் குறவஞ்சி தெய்வ குஞ்சரிக்கு நடுவே (கதி) கவின்தரு மகுடஞ்சண் முகங்கிடந் தொளிரும்விண் ணகம்படும் புகரின மிடுநவ மிடையே (கதி) காதளந்துமுனை கூடிவந்துநுதற் கீழுகந்தரு ளெலாம்பொழிந்து கமலமிதெனக் கயலினமென அமுதெனக் கண்டுகளித்திடும் பன்னிரண்டு விழிக்கிடையே (கதி) கன்னலி னினித்துக் ககன மதில்விடுத்த மின்னலி னொளித்து மிளிரு நளினமல ரின்னிதழ் விரித்து மிதய மதிலுதித்த தண்ணருள் உகுத்துத் தரளச் சரம்குலுங்கப் புன்னகை கொழிக்கு மிடை (கதி) கடம்பணிந் தலங்க்ரு தம்பொலிந் திளந்தனங் குழைந்திலங் குசந்தனம் புனைந்தறம் பிறழ்ந்தவன் குலந்தனின் முனிந்திருஞ் சிலம்பின் உயர்ந்த ஜயங்கொள் புயங்க ளிடையே (கதி) கனமணி வயிரப் பதக்கமிட் டிரட்டைச்சர நெறிவுறப் பவளத்தடுக்கு மிட்டுக் கெட்டி முத்தச் சரவகை யொடுருத்ர னக்கமிட்டொளிக்கச் சித்ர நவநிலா பலவந் துதய மாவதென நவினமாலை புனைந் துயருமார்பி னிடைக் (கதி) கனகாம்பரம் சிறந்து கச்சுப்படையிற் சுரிகை அவிழாவகை வரிந்து பச்சைப்பட்டி னுத்தரியம் புயநாலி வந்து குச்சுக்கட்டுடுக்கை எனப் புகழோங்கி நின்ற பொற்கிளை யிடுப்பினிடை (கதி) கண்டையணி யும்பதமி ரண்டுமிணை முண்டகங்கள் கண்டுபணி வோரதனில் வண்டுபொர மண்டிவெகு கற்பகத்தி னற்குளிர்கி டப்பதென்று ளத்தெழுந்த சுப்புரத்தி னம்உரைத்த நற்பதத்தை யுச்சரிப்பர். (கதி) 8 இந்துஸ்தான் ஆதி சிங்கார ஷண்முகனே ஷண்முகனே பரைமகனே நற்குகனே இங்கே யுன்னடி யவனிமேல் தங்கேன் மலரிணை யருள்கனிவால் சம்சார சோகமய மேயலாது - சுக சஞ்சார மேதுஇக மேபொலாது - இதில் சந்தேக மேதுன் சுகமே நிலையாகும் நீயேகதியாக கதியாக சுகபோக முண்டாக நினைத்தனன் பரணருள் பாலா அநந்தநாள் சுரர்மகிழ் வேலா நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா நிராதரன் மீதே நின்பாதார விந்தம் அருளப் போகாதா வாதா நாதா சீராருநன் மயிலம் நன் மயிலம் வளமியலும் அன்பர்பயிலும் திருவடி நிழலென அமையும் தருவின மழகொடு குளிரும் (சீராரு) சிங்கார கோகிலம் கீதமோத மிருதங்கம் சிற்றலைபோய் மோதப்பட்சிஜாலம் சிறைகொட்ட ரீங்கார வண்டுசுர நீடமயி லாடரங்கமாம் சுப்புரத்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன் சுகமெது வெனிலுன தருளெனவே சொலும்இதிற் பிறிதொரு பொருள்கனவே சூரசம்மாரா குமாரா மயூரா - சுகுண தீரா உதாரா புவனாதாரா - துயர் தீரவாரா திராய் கெம்பீரா. 9 (பாலாபிஷேகப் பழநிமலையப்பன் என்ற மெட்டு) மாசி மஹோத்ஸவ மாம்எங்கள் வாத்ஸல்யன் மாமமயி லாசல னேவருநாள் பாசாதி பந்தம் தொலைந்தோம் கனிந்தோமவ் வீசன் தரிசனமே ஆநந்தம் பராபரன் மயூரன் பார்வதி குமாரன் தராதலா தாரன் ஜயவீரன் உதாரன் பரிந்தகுஞ்சரி வள்ளிக் கதிக ஒய்யாரன் பகையசுரரை வெல்லும் சுராதிகாரன் பாலன் வடிவேலன் ஞாலம்புகழ் மேலோன் பகரும் சதுர்மறை யுறையும் நன்மூலன் மயிலாசலன் கருணைப்ரவாக விலோசனன் மகாசீலன் அநுகூல ஸாஜ்வல்யன் மிகுகோலன் மதியணிந் தவன்மகன் அதிக வைபோகன் அதிகுண நிதிபதி கதிதரும் ஏகன் அத்தன்பரி சுத்தன்நல் வித்தைப்ர சித்தன் நித்தம்புகழ் சுப்புரத்தின மிஷ்டன் 10 பைரவி - ரூபகம் ஜாலம் செய்வதனால் அருள்தர (ஜால) அனுகூலமுண்டோ முருகா உளமுருகா தினியும் (ஜா) காலன் கடைவிழி பொறிபட வேலின் முனையெனைக் கொலைசெய்யும் ஞாலத் துயர்பொறுக்கேன் உயிர்துறப்பேன் உனைமறப்பேன் இனி கோல விழிப்படுகுழி மேலும் விழக்கடுவழி போலும் ஒழிக்குமிப்புவி (ஜா) கோலாகல மயிலாசல வேலாயுத அசுரோர்குல காலனேபரை பாலனேவள்ளி லோலனேமறை மூலனேஇனி (ஜா) ஞானம் ப்ரதானம் நானுன் பெயர்தானும் நவின்றறியேன் - பெரியோர்பாற் பயின்றறியேன் எனினும் நலனே அறிகிலனே புலனே சஞ்சலமே புலைநடை எனதொரு குலநடை கலைமுறை தலைமுறை யறிகிலன் பொன்னெல்லாம் - இந்த மண்ணெலாம் - உயர் விண்ணெலாம் - பிற எண்ணெலாம் ஈகுவ தாயினும் வேண்டேன் இனியுன தருள்வழித் தாண்டேன் எந்தையே - புவி விந்தையே - சுற்றம் சந்தையே - முற்றும் நிந்தையே - இதில் ஏதுநலம் உனை அணுகிட தாதுகலங்கிடு மெனதிடம் (ஜா) ஈககுகா முருகா - இனி இத்தரணிச் சுகம், மதிக்கேன் - சுப்பு ரத்தினம் தருவிற்திறுப் பேன் - உனை (ஜா) 11 பைரவி - ஆதி குஞ்சரி வள்ளிக்குமாரன் கொன்றை கூன்பிறையான்நற்கு மாரன் அவன் கஞ்சக்கழற்பதம் வாழ்க செங் கலாபங்கொள் மாமயில் வாழ்க பகை அஞ்சப்பிறங்கும்வை வேலும் ஜயம் ஆர்த்திடும் கோழியும் வாழ்க உயர் விஞ்சையர் போற்றுமிந் நாடும் மறை விண் அறம் ஞானமும் வாழ்க. (கு) சுபம். மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் – 1925 விநாயகர் காப்பு வெண்பா பொன்னார் புதுவை நகர்செய்த புண்ணியத்தால் இன்னே மயில மலைவேலன் - தன்பாத சேவை தருகின்றான் செந்தமிழாற் பாடுகின்றேன் காவலனாம் ஐந்துகரன் காப்பு. 1 நூல் பன்னிருசீர் விருத்தம் உலகிற் பிறந்துநான் கண்டபயன் ஒன்றில்லை உற்றஇள வயதுதூண்ட ஒருத்தியை மணந்தவுடன் அவளொடு தொடர்ந்தவைகள் ஒருகோடி யாம்விசாரம் சிலகணம் இருந்தகளி மறுகணம் கண்ணிலே தின்னவரு விவகாரமிச் சென்மமேன் மனைவியேன் உறவுசொல் தீமையேன் எனநைந்து வாடுநேரம் - மலரனைய நயனமும் வளர்கின்ற சிறுமார்பும் மலையரசி தந்தபாலே வடிகின்ற குவிவாயும் எழிலாடு தளர்நடையும் வாய்ப்பஎன் அகமீதிலே கலகலென மயிலினொடு விளையாடி வருகோலம் காண்பனேற் கவலையுண்டா கன்னலென வயலெலாம் செந்நெல்வளர் மயிலம்வாழ் கந்தா குழந்தைவேலா! 2 வரிசைமா மணிவீடு மண்டுசெந் நெற்குவியல் வளம்வேண்டி வேண்டிஎன்கை வைத்ததலை வைத்தபடி வசையிட்டு நின்னைநான் வாய்சோர ஏசுநேரம் பரிசுற்ற வறியர்போல் கார்த்திகைப் பெண்களென் பால குமாரவென்று பளிங்குகன் னஞ்சேர முத்திடுவர் அவணீங்கிப் பாய்புனற் கங்கையன்னை விரைவினில் அழைத்தனள் என்றோடி வருகையில் வெண்கங்கை தாவநீபோய் விமலையாம் அன்னையைக் கண்டிடப் போவதாய் விடைபெற்றெ னகமீதிலே கருமலை பொடித்தவடி வேல்தூக்கி வருகோலம் காணிலென் வறுமையுண்டோ கற்புடைய மாதர்சூழ் வெற்பணியு மயிலம்வாழ் கந்தா குழந்தைவேலா! 3 தன்னிலையில் இன்றிநல் வாதமும் பித்தமும் சிலேட்டுமமு முறைபிறழ்ந்த தன்மையாற் கண்குழிந் தெழில்மேனி தசைதிரைந் தெந்நேர முங்கவன்று தின்பன தவிர்ந்துதின் னாதன விழுங்கிமனை சேர்ந்தஅனை வருநோயினாற் செய்வதறி யாதுவரு வார்போவர் தம்மிடம் செப்பியுழல் கின்றநேரம் அன்பிலுரை அருணகிரி யின்தமிழின் நவநீதம் அள்ளிஅறு வாய்மலர்மேல் அப்பிநற் கரிமுகன் தம்பிவா, என்னவும் அம்மான் அணைக்கவரவும், கன்னலென என்றனக மீதுவரல் காணில்தலை காட்டுமோ பிணிகளென்பால் கரிவண்டெ லாம்பண்கள் சொரிகின்ற மயிலம்வாழ் கந்தா குழந்தைவேலா! 4 ஐம்பெரும் பூதங்கள் என்னையர சாளவும் அவர்சொல்லில் நானாடவும், ஐங்குரவர் சொன்னெறிகள் திரணமாய் எண்ணியிங் கல்லனபு ரிந்துநெஞ்சம் வெம்புகடல் வாய்ப்படு துரும்பாய் அலைந்துபல வெறுமனிதர் காணிலச்சம் மேலாக, நாலாவி தத்திலுமிவ் வாபத்தில் மீளநான் வாடுநேரம், சம்பிரம வாடகத் தம்பமிசை ஆரமாம் சங்கிலியி சைத்ததொட்டில் தாலாட்ட மலைவல்லி பாலூட்டெ னாஅவளும் தன்தோளை நீட்டஅன்றே கம்பிமயில் மீதுநீட் டிஎனதகம் வரல்காணில் கனமையல் எனையண்டுமோ? கான்குரவர் கவணேறிவான்மோது மயிலம்வாழ் கந்தா குழந்தைவேலா! 5 மனிதர்மனி தர்க்கடிமை ஆகுமொரு தீக்கனவு மண்ணிடை யிருப்பதில்லா வகைக்கெனது நாட்டினர் அறப்போர் நடந்திடுவர் வாய்மையிற் பண்டை நாளில்; எனினுமென தன்பான “நாடின்று மற்றோர் இனத்தவர்க் கடிமையாதல்” என்னுமிக் கோலத்தை எண்ணியென் தோள்பார்த்து நான் பார்த் திருக்குநேரம் கனியுதடு புன்னகை கொழிக்கமுக நிலவுதொறும் கட்டவிழ்கு ழல்மொய்ப்பதைக் கையால் விலக்கியே ஒய்யார மாகநடை காட்டியென் கைமீதிலே கனல்மேனி இருள்கூடிய வருகோல மதுகாணக் கடும்பகை இருப்பதுண்டோ? கதியிதென உலகெலாம் வதியுமெழில் மயிலம்வாழ் கந்தா குழந்தைவேலா! வாழி வெண்பா வாழ்கமுரு கன்பாத மாமலர்கள்! வேல்மயில்நற் கோழிஅறம் வான்உலகு கோதில்மறை - வாழியவே எல்லா உயிரும் இனிதாக எங்கள்தமிழ்ச் சொல்லமுதாய் ஓங்கபுகழ் சூழ்ந்து. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது – 1946 ² சிறப்புக்கவி செந்தமிழ்ப் புலவரும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் உதவியக்கிராசனரும், கல்வே காலேஜ் தமிழ்ப் பண்டிதரும், தமிழ்மகவுப் பத்திராதிபரும், கண்ணப்பர் கலம்பக ஆசிரியரும் ஆகிய திருவாளர் வீ. துரைசாமி முதலியாரவர்களியற்றியது. கட்டளைக் கலித்துறை. தெய்வப் பிடிவள்ளி காந்தனற் சேந்தன் றிருவடிக்கு மெய்வைத்த சீர்ச்சுப்பு ரத்தினப் பேர்கொளும் வேளிசைத்த மையற்ற பாவி னினிமைகற் றார்கள் வழூஉக்கவிகள் பொய்யுற் றெழுது மவர்க்கினிப் புத்தி புகட்டுவரே. வேலேந்து சேவகன் மாமயி லாசல மேவுபிரான் காலேந்து மித்துதி யோதினுங் கேட்பினுங் காணுநலம் மாலேந்து சிந்தை மயக்கறு நல்ல மகிழ்வுவரும் நூலேந்து சீர்தெரிந் தாசறலா நசைஇ நோக்குமினே. ² வேலுமயிலுந் துணை மயிலம் சுப்பிரமணியர் துதியமுது விநாயகர் காப்பு வெண்பா சீர்மணக்குந் தென்மயில வெற்பிற் றிருமுருகன் பேர்மணக்கும் பாட்டிற் பிழையகல - ஓர்மணக்கு ளத்தனப்பன் நற்களிற்றி ணைப்பதத்தி னைத்துதிப்பன் எத்தனப்ப டிக்குவெற்றி யெற்கு. 1 விநாயகர் துதி வண்ணம் இராகம் : நாட்டை தாளம் : ரூபகம் உலகுதி னமுனெழில் மலரடி உளமதி னினைகுவ தெனிலவர் உறுவினை எவைகளு மிலையென இனிதாமால் உமையவள் தருமுதன் மகனுனை உளமொழி மெய்களினி லடியவன் உவகையொ டுதொழுகு வதையினி மறவேனே மலியவல் பொரியொடு பயறுகள் மதுநிகர் கனிவகை யனுதினம் வரையென நிறையவு னதுதிரு வடிவேலே மனமகி ழஇடுவ னருள்ககு மரனழ ஒருகனி யையரனை வலமிடு வதிலுணு மரிமகிழ் மருகோனே மலைமத கரிஇடர் புரியுமொர் மதியிலி அசுரனை ஒருநொடி மடியவ மரர்துயர் களையுமொர் அடல்வீரா வருபுதை யலினிதி யெனமலை வழியரு வியெனவெ னதுகவி வளமொடு புதியன வெனவிரி புவிமேலே பொலிதர அவைபுகழ் பெறமிகு புலவரெ வருமினி தெனநனி புவியினர் உளமதி லொளிதர அருள்வாயே புரைதவிர் தெருவரி சையொடமர் புனிதமொ ழியரிவை யர்களுறை புதுவையி லமர்கய முகமுறு பெருமாளே. 2 சிவபெருமான் துதி வண்ணம் இராகம் : தேசிகம் தாளம் : ஆதி நதியொடும் பிறையணிந் திடுபரம் பொருளெனுஞ் சிவனைவந் தனைபுரிந் தாலே - உயர் நலமரு விடுநிறை கலைகுடி புகவரும்* அறிவுபெ ருகிவிடும் உலகுபு கழ்பரவும் ஆருமெச்சு வார்பகைவர் போர்நினைத்தி டார்நிதிகு பேரனுக்கு மேல்நிறையும் வாழ்வளிக்கு மேமனித ரேயுமக்கெ லாமளிக்க வேவிருப்ப மாயிருக்கி றானிருக்கு மாலையத்தி லேமிதித்த காலடிக்கு நேரிலுற்று வாழ்வளிக்க வேணுமப்ப னேயெனச்சொ னால்நொடிக்கு ளேயளிப்பன் இப்புவிக்கு மெப்புவிக்கும் எப்பொருட்கு மப்பன்வித்து தோலுடையா னாடரவே தானணிவான் மாமுடிமேல் (ந) உலகமுஞ் சடவுடம் பெவைகளுங் கணமறைந் தழிவுறுஞ் சிறிதுநம் பாதீர் - தொகை நகையுடை பொருள்நிலம், மனைமக ளுறவினர், பரிகரி முதலியவை, களிலொரு பயனிலை காலன்விட்ட பாசமதை நேர்விலக்கு மோஇவைகள் போமுயிர்க்கு வீதிவரை தான்வரச்சொ னால்வருவ தேதுசற்று நீரிழைத்த ஓர் அறத்தொ டேபெருத்த பாவமொக்க வேவழிக்கு நாடிநிற்ப தாலதற்கு ளேயெனப்ப னாணைசற்று மேமறுத்தி டாதுநற்ற போதனர்க்கு நேசம்வைத்து நித்தநித்த மெய்த்தவத்தொ டுற்றபத்தி பெற்றிருப்பிர் ஈதலவோ மானிடரே பூதலமே லாதரவே (ந) அமரர்தம் பகைகெடும் திரிபுரம் பொரிபடும் பரமனம் பகம்விரிந் தாலே - நிறை அருளினி லுலகமு நிலைபெறு வனமறை முடிவினில் நடமிடு பொருளென அறைகுவர் ஆசைவிட்டு நாடுமன தோரிடத்தி லேவிடுத போதனர்க்கு மாமுனிவர் ஆனவர்க்கு மாமலரி லேயிருக்கும் வேதனுக்கும் மாயனுக்கு மேகிடக்கி லாதவஸ்து மாமலைக்கு ளேமுளைத்த ஓர்கொடிக்கு நேயவஸ்து மாபுவிக்கு தாரவஸ்து யாவினுக்கு மூலவஸ்து தேனையொத்த சுப்புரத்தி னத்தினற்ப தத்தினுக்கி னித்தவஸ்து வாதலினீ ரேபுவிமே லீதுணர்வீர் வாழ்குவிரே (ந) 3 உமை துதி வண்ணம் இராகம் : தேசிகம் தாளம் : ஆதி வாய்திறந்தழு மோர்குழந்தையின் மேலிரங்கிடு வாய்தினம்படு வாதைகொஞ்சம தோமுனஞ்சிறு பாலனங்கழ வேகறந்தமு தேதருங்கரு ணாலையந்தனி லேவணங்கிடு பேதையுங்கடு காகிலும்பெற வேநினைந்தனன் யாதையுங்கரு தாமலின்றெனை ஆளலுனது பாதமலது வேறுகதியு லோகமதனில் ஏதுபுவன நாயகியுமை பார்வதியுப காரிய மலி அட்டதிக்குவிண் யாவுமீன்ற அன்னை காமாக்ஷியே பேயெனும்படி தாரணிந்தெழி லாய்நடந்திடு தோளொடுங்கனி வாயொடுந்தளிர் மேனியெங்குமொ ரேமணந்தர வாரிடுங்குழல் காரெனும்படி மார்பில்வெண்துகில் ஊரறிந்திட வேதிறந்தெனை மாதெனும்பெரு மேதிவந்தினி மேலும்வஞ்சனையால்நெருங்குமுன் வாசிவபெரு மானிடையினி லேபடர்கொடி யேஇமமலை மாதவமணி சோதனைபுரி யாதுனதிரு மாமலரடி மற்றுவப்புடன் ஈதல்வேண்டும் வல்லி காமாக்ஷியே, சாதியுஞ்சம யாதியுந்தணி யாதசண்டையி லேமுயன்றன நீதியுங்கிடை யாதறங்கிடை யாதினம்பரி காசமும்பட வேபணந்தனை யேநினைந்ததி காரமும்பெற நீசதந்திர மேபுரிந்திடு மானிடந்தனி லேகிடந்தலை யாதுவந்தெனை யாவருமொரு சோதரரென மாசமரச ஞானமுதய மாகிடும்வண மேமிகுதிற னாயனுதின மேயினிமையின் மெய்க்குழைத்திடும் வீரமாண்பு செய்ய மீனாக்ஷியே. நோய்களும்பல கோடியுண்டதி னால்வருந்திடு போதுவந்தவு ஷாதிதந்துமொர் சோதிடன்குண மாகுமென்றதி லேபணங்குறை யாதுதந்தொரு நாள்கடந்தபின் ஓலைவந்தது மேலிருந்தென ஓடிவந்தெம தூதருந்தம தூர்வரும்படி கூவுமுன்பெனை ஆதரிமுன மோர்நொடியினி லேயசுரரின் வேரழிவுற வேயெழில்மயில் வாகனனிடம் வேலுதவிய தாய்நிருமலி சுப்புரத்தினம் நாளும்வேண்டும் அம்மை மீனாக்ஷியே. 4 திருமால் துதி வண்ணம் இராகம் : சகானா தாளம் : ஆதி பாலாழி மேலினிது கண்துயிலும் மாதவனே மாலேயுன் மார்பிலணி வண்துளப மாலையிலே வந்துமொய்த்தி டுஞ்சிறைப்பொன் வண்டினுக்கி ருந்தமெய்த்த வந்தனிற்று ரும்பிடைக்கி சைந்தெனக்கி டும்படிக்கு மட்டினிக்கு மெய்ப்பதத்தி ளைத்துதித்தி ளைத்துநிற்கும் மகன்மேலே மூலாவி லாசவிழி யின்கடையி னாலெனையே ஏலாதெ னாதருள்க மங்களகு ணாலையனே எண்டிசைக்கு ளங்கணுற்ற உம்பருக்கு ளெங்கெனக்குன் அம்புயப்ப தந்தனக்கி ணைந்தநற்சு கங்கிடைக்கும் இச்சகத்தி னைக்களிப்பி னிற்படைத்த ளித்தழிக்கும் எழிலோனே! மேனாளி லேமுதலை தின்றிடுமு னேயரியே கோனேயு னாதரவு தந்தருளு வாயெனுமோர் குன்றையொத்த வெஞ்சினப்பெ ருங்கரிக்கி ரங்கியக்கண் அந்தரத்தி ருந்துவப்பொ டும்புவிக்கு வந்தடுத்த ரைக்கணத்தி லக்கரிக்கு மெய்ப்பதத்தி னைக்கொடுத்த அருளாளா! தேனாறு பாய்குவது கண்டுருகி னேனதையே நானார வேயுணுத லென்றுனது கோயிலிலே மன்றில்விட்டி கழ்ந்துதுட்ட னன்றிழுக்க மங்கைவிக்கி னந்தவிர்த்து வஞ்சமற்ற பஞ்சவர்க்கு ரங்கொடுத்து வித்தைகற்கு மிச்சைசுப்பு ரத்தினத்தி னுக்களித்த பெருமாளே! 5 சரஸ்வதி துதி (பக்ஷமிருக்கவேணும் என்ற மெட்டு) இராகம் : இந்துஸ்தான் காப்பி தாளம் : ஆதி ஞானந் தரும்இறைவி கவிராணி - என்றன் நாவில்வந் தருள்புரி கலைவாணி கானுறை மயிலே கவிதையின் உருவே (ஞான) வான மிருந்திழியும் மழைபோலே - கொட்டும் வாக்குத் தருகமலர்க் குழலாளே நான்முகன் மனையே நாடினேன் உனையே (ஞான) வெள்ளைக் கமலமிசை நடிப்பவளே - இசை வீணை தனிலமுதம் வடிப்பவளே அள்ளித் தருவதால் ஆர்ந்திடுந் தேனே (ஞான) தெள்ளுதமிழ்ச் சுப்புரத் தினம்பாடும் - கலைத் தெய்விக மேவருக அருளோடும் (ஞான) 6 அவையடக்கம் வெண்பா திருமயிலம் வாழ்கந்த வேள்மேல் சிலசொல் பெரியார் மணிவாக்கின் பீடு - தெரிவதற்குச் செப்புகின்றேன் ஆதல் சிறுமை புதல்வரின்பால் ஒப்புதல்போல் ஒப்ப உவந்து. 7 நாட்டுச் சிறப்பு இராகம் : தேசிகதோடி தாளம் : அடசாப்பு சீர்கொண்ட தென்மயி லாசல நாடென்ற பேர்கண்டு நாடிப் பெருங்கடல் நீர்மொண்டு வார்கொண்டல் விண்ணடுத்துப் - புவி யோரஞ்ச மின்னல் விடுத் - ததி ராக இடிஇடித்து - மிக்க மழைமுத்து மாலை விழவைத்த தாலே வழியற்று ஞாலம் குழிவுற்று மேலே வருநதியின் காட்சிசொலும் வகையறியேனே மலைவிட்டு நீங்கிப்பொன் னலைகொட்டி மூங்கிலின் குலமுற்றும் வாங்கிப்பன் மலரிட்டு வேங்கையின் தலைமுட்டு நதிவெள்ளமே - ஏரி குளங்குட்டை யவையுள்ளுமே - இரு நிலமுற்றும் குதிகொள்ளுமே - எங்கும் உழவர்கள் ஓடி விழவுகொண் டாடித் தொழுதெய்வம் நாடிக் கழனிகள் தேடிக் கனஎருதின் ஏர்பூட்டி நிலமுழு வாரே பதனிட்ட நிலமுற்றும் விதைநட்ட தயல்நட்டுக் களைவெட்ட வருமாதர் மதியொத்த முகம்நாண மரைமொட்டு விரிவெய்தலும் - அவர் விழியொத்த கருநெய்தலும் - நத்தை தருமுத்து நகைசெய்தலும் - கண்டு காலால் மிதித்ததன் மேலே பகைத்தவர் போலே எடுத்தரி வாளால் அறுத்தெறி கரைசேர்த்த களைக்குலத்தில் வண்டுபண் பாட எருவைத்து வரநித்தம் பிறையொத்து வளரப்பின் கதிர்விட்டு முதிரத்தன் தலைநட்டு வளையக்கண் டகமுற்ற மிகுமாசையால் - நிலம் விளைவுற்ற தொகைபேசுவார் - அறு வடைசெய்ய விடைசெய்குவார் - பின்னர்க் குப்பல்செய் ததுமோதி நெற்பதர் கெடத்தூவிச் சுப்புரத் தினம்ஓதும் நற்கவிப் பொருள்போலும் மலைபோல்நெல் வீடுவர இனிதுநுகர் நாடே 8 நகரச் சிறப்பு இராகம் : தேசிகதோடி தாளம் : ஆதி கொட்டுமது சீதளக்க டப்பமலர் தோளுறத்த ரித்தமுரு கோனமர்ப்ர சித்தமயி லாசலந கர்ப்புகழை யோதிடற்கு நற்றிற மில்லை - சேடனி னைக்கினுந் தொல்லை அட்டதிசை யோடிவிண்மு கட்டினையு மோதிரவி வட்டமுமி டாதுயுக முற்றினும்வி ழாதபடி இட்டநகர் மாலையெனக் கட்டு மதிலும் - அதனைச் சுற்றி யகழும் மின்னுமணிக் கோபுரங்க ளின்சிகர மீதணிந்த பொன்னுடைநி கேதனங்கள் விண்ணகரின் மாதர்தமை இந்நகரில் வாருமென ஆடி யழைக்கும் - அவரை ஓடி யிழுக்கும். வெள்ளிமலை போலுயர முள்ளபல மாளிகையிற் புள்ளுலவு நேரமதில் அள்ளிமணி யாலெறியும் பிள்ளைகள்உ லாவுமந்த வீதிப் பெருமை - அதனை ஓதலருமை சித்திரங்கொள் ஆலயத்தில் உற்றமுரு கேசனுக்கு நற்றிருவி ழாவைபவ மெத்தவுறு நாலுவரு ணத்தவரின் வீதிதனில் கீத முழக்கம் - அதிக வேத ஒழுக்கம் பூரணகும் பங்கள்வைத்துத் தோரணம லங்கரித்து நாரின்விளக் கங்கொளுத்து வாரிலக்கி ழத்தியர்க்கு நாரணன்கொ ளுந்திருவை ஒப்பு ரைத்தனன் - கனக சுப்பு ரத்தினம் 9 மயில மலைச் சிறப்பு இராகம் : ஆனந்த பைரவி தாளம் : அடசாப்பு (கஜல்) அறுபொறியின் வடிவாகி யங்கையிலே பரைதந்த சக்திவாங்கி அமரர்படுந் துயர்நீங்கச் சயமோங்க அசுரர்குல மூலந்தன்னை (துரிதம்) அடிகொண்டு களைகின்ற இளமைந்த னமர்கின்ற அசலங்கொள் புகழ்தன்னை அறைகின்ற முறைகொண்மின் அங்கண் ஞாலத் திருப்பவர் வானவர் அங்ஙனே நின்று கண்டு துதித்திடத் திங்கள் சூடும் சிகரமும் நாற்றிசைச் சேருஞ் சாரலும் சீதளத் தூற்றலும் (துரிதம்) திரிகின்ற புயல்வேழம் அரிகண்ட உடனோடச் சரிகின்ற மலையென்று நரிகண்டங் ககம்வாட (1) (கஜல்) மலர்க்குலங்கள் பொழிதேனும் மஞ்சுபொழி பனியும்சந் திரதாரையும் மஞ்சனநீ ராய்த்தவத்தர் செஞ்சடையில் சோரமங்களப் பண்பாடிவண்டு (துரிதம்) மகரந்தப் பொடிவாரித் துகள்மிஞ்சப் புவிவீச வதிகின்ற குறமாதர் இருகெண்டை விழிகூச மல்லி கைப்புதர் வெண்ணகை யாடவும் மாது ளங்கனி ஆலிலை போர்த்தவும் நல்ல தென்ற லணைந்திடக் கன்னிமா நாணி மேனிச் சிலிர்த்துக் குலைந்திடும் (துரிதம்) நளிருற்ற குரவஞ்சந் தனமற்றத் தருவுந்தம் நறைகொட்ட நிறையுஞ்செங் கமலப்பொற் றடமுற்றும் (2) (கஜல்) அரவுதரு மாணிக்கம் மரைமுத்தம் வரையீன்ற வச்சிரம்பொற் சன்னராசி அற்புதங்கொள் ஜோதிவல்லி யிற்கலந்த போதுவல்ல (துரிதம்) இருள்முற்றும் ஒளியாகும் மிகுரத்ந மணிமாலை எழிலுற்ற மலைமாது மிலைவுற்ற தெனவோத எங்கு நோக்கினும் புள்ளினத் தின்னொலி இடையில் வேடர்செய் ஆட்டங்கள் பாட்டுகள் தொங்கு மாலையின் வெள்ளரு விக்குலம் தூர நின்றிழி போதொரு சந்தப்பண் (துரிதம்) தொழுபத்தர் முருகாஎன் றழுகைக்கண் ணெழுமோசை சுரமொத்த கரதாளம் நிரையொத்த திடிமேளம் (3) (கஜல்) குஞ்சரி யோர்பாகம் குறவள்ளி யோர்பாகம் கொஞ்சக்கைவேல் கொட்டொளியும் தழைத்தொளிரும் கருணைநோக்கும் குளிர்வதன மீராறும் நளிர்பதமும் கொண்டகோயில் (துரிதம்) குறைதீர விரைவாக வருவார்கள் ஒருகோடி குகனேஷண் முகனேஎன் றடிசோர நடமாடிக் குப்ப லாகப்பொற் காவடி(த்) தோள்தூக்கிக் கொள்கை யாவுங் குமாரன்தன் மேலாக்கிச் சுப்பு ரத்தினம் கொற்றமிழ்ப் பாவாக்கில் சூழத் தென்மயி லாசல மேநோக்கிச் (முடிவு) சுராதிபனை வாழ்த்தி நலம் துய்ப்பரதி சோபிதமே. 10 நூல் (பாலசந்த்ர சேகரா என்ற மெட்டு) இராகம் : சங்கராபரணம் தாளம் : ரூபகம் பல்லவி பாலசுப்ர மண்யனே! நீலமாமயில் மேலுலாவிடும் (பால) அனுபல்லவி ஞால மீதினில் அமுதச் செந்தமிழ் நலமுதலிய பொதிகையிலமர் குறுமுனிவனுக் கினிதருள்செயும் (பால) சரணம் வேலு மயிலும் கோழிக் கொடியும் விரவிய அன்பர் உளமார் வாழ்த்தும் கோல வாயிதழ்க் கொடியி டையினர் குலவு பாங்கும் கண்டின் பங்கொளக் கோரிடுமிப் பாலன்மனத் தாவல்கெடச் சேவைதர நேரிடுமோ நாளுமிமை யோர்பணியுங் காவலனே! நித்தமு னைப்பணி பத்தியெ னக்கிலை எனவிடுவாயோ? நித்தா! சுத்தா! அத்தா! முத்தா! நினதொருபுகழ் தனைமொழிந்த அருணகிரிக் கருள்புரிந்த (பால) கீரன் துயரம் நீக்கத் தண்ணிய கேடில் பூம்பதம் தந்த புண்ணிய! பூர ணாபுவ னாதி யண்டம் புரந்தி டுங்கந் தாசிந் தாகுலம் போக்கிடுதல் உனக்கரிதோ தாய்க்குமகன் முழுப்பகையோ! யார்க்கிதில்நீ பயப்படுவாய் ஆக்கியழித் தருள்முதலே? அக்கணி முக்கண னுக்கினி திற்ப்ரண வப்பொருள் ஓதும நாதி ஆதி சோதி யாதிங் கடிமலரினை விடஒருகதி படிமிசையுள தோஉரைததி (பால) தேவ ரைச்சிறை மீட்க ஆங்குச் சென்று மையிடம் சக்தி வாங்கித் தாவிச் சூரனூர் வீர வாகுவைத் தூது போக்கிப் போர்க்குண் டாகிய சயமுரசடி படஅமரர்கள் சயசயவெனு மொலிதிசையுறப் புயவலியசு ரரைஎதிர்கொடு புகையொடுகன லெழஇருபுடை புக்கம ரிற்புய மொக்கஎ திர்த்துடல் வெட்டின ரிடையே சூரன் மார்பின் மேலுன் வேலைத் தொடுத்தவன்குலத் தொடுமடித்திடு சுரர்க்கதிபதி யுனக்கடைக்கலம் (பால) நாழி கைஅரை யேனும் சகியேன் நச்சுப் பொய்கையன் றோஇப் பூமி தாழ்கு ழல்தன மாதர் கண்எனும் தடுக்கொ ணாக்கூர் வாள்என் மீதினில் தாக்கநலிந் தேன்பிணிகள் மாய்க்கநினைந் தனபொருள்கள் போர்க்குவளைந் தனமனிதர் போக்கிலிழிந் தார்எதிரே புறப்பட் டிருட்டில் திருட்டில் கயிற்றைக் கழுத்திற் கருநமன் வீசா முன்னை ஈசா என்னை விரைந்துவந்திடு சுப்புரத்தினம்சொல் நறுங்கவிக்கிரங்கி யருள்புரியும் (பால) 11 தலைவி தூதுபோக்கல் (தேவகி மைந்தனான கண்ணனைத் தேடுவோம் என்ற மெட்டு) இராகம் : இந்துஸ்தான் பியாக் தாளம் : ஏகம் பல்லவி வானவர் போற்றும் வேலவனிடம் மாது நீ ஓதடி (வா) அநுபல்லவி மாமயில நன்மலையிற் சென்று வஞ்சிஎன்னிலை தன்னை இன்று (வா) சரணம் நானவனுக்கும் அவனெனக்குங் கட னாவதென உண்டு - சாசனம் - அதற் கேனில்லை இன்னும்வி மோசனம் - என (வா) தாளமுடிவ தில்லை முருகன்மேல் தையலெனக் குள்ள காதலை - மத வேளின்கணை பட்டுச் சாதலை - அந்த (வா) ஆதியி லேசெட்டி வீதியி லேசொன்ன சேதியெல்லாம் உள்ளம் மறந்ததோ - உன் சாதியில் இக்குணம் பிறந்ததோ - என்று (வா) பாசி மயில்மிசை மாசி மகத்தன்று நேசி யருடன்நீ வந்தனை - நின்று பேசிடில் நேருமோ நிந்தனை - என (வா) வாதனை தீர மணப்பதின்றி யின்னும் சோதனை செய்திட வேண் டுமோ - இந்த மாது பிறன்கையைத் தீண்டுமோ - என (வா) கைப்பிடி யிற்கொண்டு வாகுகனை - நயம் காட்டியோ மையல் கூட்டியோ சுப்புரத்தி னம்சொல் நீட்டியோ - அடி (வா) 12 வண்ணம் (மருவே செறித்த என்ற மெட்டு) மயிலா சலத்து முருகா எனக்கு வரமே யளிக்க நினையாயோ மயலார் தடக்கண் மடவார் தனத்தில் மனதே செலுத்தி யழியாமே வெயிலே துடித்த புழுவா கிநித்தம் விஷயாதி கட்குள் உழலாமே விரைவே கழற்று நமனார் கயிற்றை யுடலோ டுசுற்றி யழையாமே மயில்மே லினிக்க வருவாய் சுரர்க்கி னமுதே பரைக்கு மகனே நீ மலரே நிகர்த்த பதநீ ழலுக்குள் வகையே சுகிக்க அருள்தாராய் வயவே லெடுத்த அறுமா முகத்து வலனார் பயத்து மகிபா சீர் வனமார் கொடிக்கண் மகவான் மகட்கண் விளையா டியிக்கண் வருவாயே 13 மனதுக் கினிதுரைத்தல் இராகம் : அடானா தாளம் : ரூபகம் பல்லவி குமரனை நினை கோலமாமயில் (கும) அநு பல்லவி உமையாள் தரும் பாலசுப்ரமண்யன் உலகத் தெதிரிற் றரிசித் தருளைப் பெறவுற் றிடுமக் (கும) சரணம் மணியும் துகிலும் கரியும் பரியும் சுவையும் புவியிங் கெவையும் தினையும் தனியுன் கூடவராவாம் வளமிக் குளநற் களியும் இளமைப் பருவப் பயனும் வளர்கட் டுடல்மட் கலமும் வீடுதராவாம் துணைபோ லணியா பரணா தியினால் மயலே தருமா தரைநீ யடைவா யெனிலோ அதனால் துயர் துயர் துயர் (கும) குளிர்மதி அறுமுகம் ஒழுகிய அருளினைத் தெளிதமி ழினிலொரு துதிகவி உரைசெயச் சொரிபவன் ஆனபெருமான் கோரிய கீரனி னார்துயர் தீரமுன் ஓடிய வேலவ னாமுனை ஆளவு நேரினில் ஓடிவருவான் குகன்கடம் பணிந்தவன் பதம்பணிந் ததும்பவம் பறந்திடுமே பறந்திடுமே மறந்திடுமே (கும) போதன்தனை ஓதுஞ்சிறை போகும்படி ஏவுங்குரு நாதன்வடி வேலன்புகழ் பாடு நெஞ்சே பொய்ப்பகட்டை விட்டுச்சுப்பு ரத்தினத்தி னற்றமிழ்ப்பண் செப்பியப்பன் மெய்ப்பதத்தைத் தேடுநெஞ்சே புலப்படும் பொருள்நசித் திடுமதில் கலப்புற இனித்தலைப் படுவதைத் தொலை ததியடைந்தி டப்பனைத் ததியடைந்தி டப்பனைத் ததியடைந்தி டப்பனைக் (கும) 14 தினந் துதிப்பாய் நெஞ்சே என்ற மெட்டு இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி பிரமனை ஜயித்தகந் தாவரம் தந்தாள் அரனருள் மகனே அரியின்ம ருகனே (சரண) சரணமல் லால்துணை ஏதுமண் மீது ஷண்முக வடிவே சதுர்மறை முடிவே (தாயும்) தாயுந்தந் தையுமென வந்துள்ளு வந்து தாவினோம் வாராய் சஞ்சலம் தீராய் (சாயும்) சாயும் கிழவனென வனத்திலோர் தினத்தில் தனிவள்ளி தோளே தரச்செய்யும் வேளே (கீர) கீரனுக் கருளிய வீரா மயூரா கீர்த்திகொள் வேலா காத்தருள் மூலா (சூர) சூரன்கி ளையோடன்று தீர்த்தருள் மூர்த்தி சுப்புரத் தினம்தரு ஒப்பிடும் சிவகுரு (பிர) 15 தலைவி பாங்கியிடம் கூறல் இராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி பல்லவி மனமிருந்தால் வரலாம் மயில்வாகனன் வந்தெனக்கின்பம் தரலாம் - என் அநு பல்லவி இனமெ நம்பினேன் இல்லை எல்லாம் மறந்தேன் தில்லை வனநாதன் மகன் மேலே வைத்தேன் மோகமக் காலே (மனமி) சரணம் புனையுங் கடப்பந் தாரும் புன்னகை செய்யும் சீரும் நனையும் மலர்க்கண் ணோரம் நல்லரு ளோஅ பாரம் எனையாளத் தகுமென்றே இவனைநம்பி னேன்அன்றே மனைமாருந் தானுமாகி மறைந்தான் மயிலமேகி (மனமி) அன்றுவந் தாற்போல் வந்தான் அரைநொடி யில்ம றைந்தான் நன்றோ அவன்செ யல்தான் நாலா விதத்தும் கந்தன் குன்றென்று நினைத்தென்னைக் கொடுமைபுரிந் தான்முன்னைச் சென்றுகுறப் பெண்ஈயும் தேன்மாவுண்ட தோஞாயம் (மனமி) அந்நாள் முதலிந் நாளாய் அவன்மோக மேகூர் வாளாய் மின்ன லிடையைத் தூளாய் வீசு தென்குறை கேளாய் கன்னியவன் தெரிந்தே கருவில்வைத் தான்மருந்தே அன்பன்சுப்பு ரத்நம்பண் இன்றேல்தேற்று வார்ஆர்பின் (மனமி) 16 பாரத நாட்டின் விடுதலை வேண்டல் (காவடிச் சிந்தில் பாளைவாய்க் கமுகில் என்ற மெட்டு) வீழ்தலும்யாம் வாழ்தலுமே வேலவாஉன் கையிலுண்டு வீணில்நாங்கள் பட்டதெல்லாம் சொல்லவோ - நின்பால் வேண்டிநிற்ப தெல்லாம்இன்ப மல்லவோ - இந்த ஆழ்கடல்புவி மேலெமக்கினி தானபாரத பூமியைநீ அட்டதிக்கும் போற்றும்வண்ணம் ஆக்குவாய் - வானில் எட்டவே உரிமைக்கொடி தூக்குவாய் பாழ்படச்செய் தாரிந்நாட்டை ஊழ்வினைதா னோஅறியேம் பாரதத்தார் கொத்தடிமை ஆயினார் - சிலர் பசிதொலைக்க வேறுதேசம் போயினார் - அந்தோ ஏழ்கடல்செலும் கீர்த்திபோயின தீனர்யாமெனும் பேருமாயின திக்கணம் கடைக்கண் பார்த்தால் ஓர்நொடி - தனில் எங்குலப் பகையனைத்தும் மண்பொடி. மாக்கடல்நீர் தீப்படக்கை வேல்விடுங்கந் தனேஉன்னை வழிபடும்போ தும்குறைவு நேர்வதோ - வீரர் மனதிலும்பொல் லாதசோர்வு சேர்வதோ - கெட்ட வறுமைநோய்கள் அச்சமுதலாம் வழிமறிக்குமிக் கலிதவிர்த்தினி வரவிடாதே எமதுநாட்டிற் கெடுதலை - சுக வாழ்க்கையில்நல் வாழ்க்கையாகும் விடுதலை. 17 இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி சூரர்குலம் வேரறுக்க ஒருவேலும் - நான் துணையெனப் பிடித்திட இருகாலும் - எண்ணும் காரியத்தை முன்னிட்டுவிற் கோலெடுத்து வேடர்புனம் மானைவிட்டுன் மெய்யுருவம் வேறுபட்டு நீமணந்த ஏர்குறத்தி யணைத்திட அறுதோளும் - தெய்வ யானையும் அணைத்திடமற் றதுதோளும் - எண்ண எந்த நாளும் - என் துயர் மாளும்! ஓர்குடிமற் றோர்குடியைக் கெடப்பார்க்கும் - இந்த உலகத்தை நினைத்திடில் உளம்வேர்க்கும் - கொடு மாரன்விடும் பாணமதி லேமனது நோகஇள மாதர்வச மாகியலை யாதுசுக மேபெருகச் சீர்கடப்பந் தார்குலுங்க மயில்மேலே - அலை சீறுகடல் மேலுதித்த வெயில்போலே - வர இது வேளை - குகப் பெரு மாளே. கற்பகப்பொ தும்பரிடைக் குயில்பாடும் - க லாபமயி லோடிஅங்கு நடமாடும் - உயர் நற்றருக்கள் வாசமலர் உட்குடைந்து தேனினங்கள் பொற்பொடியைச் சூரையிடும் அற்புதங்கொள் வான்மயிலம் சுற்றிவரு வார்குடியி லுதிப்பேனோ உனைச் சுப்புரத்தினம் தமிழில் துதிப்பேனோ எக் கதி தானோ அருள் முரு கோனே 18 நெஞ்சுக் குறுதி கூறல் இராகம் : இந்துஸ்தான் பியாக் தாளம் : ஏகம் கெடுதலைச்செய்யும் அசுரர்கள்தம்மைப் படுகொலைசெய்யும் வயிரவேல் கீர்த்திகொள்புயம் தூக்கியபடி குகன்எழுந்தனன் மயிலின்மேல் சுடுமணற்பொரி யறுமுகனைத் திரிபுரமெரித் தவன்மகனைத் தொடுகழற்பணி வாய்மனமே விடுதலைஇனி விடுதலைஎங்கும் (கெடு) நிதம்தரும்சுகம் அவன்மலர்ப்பதம் எனநினைத்திடு நெஞ்சமே நிசத்தினிலந்தச் சுரர்க்கதிபதி தனக்குநீயென்றும் தஞ்சமே சதுர்முகத்தனைத் தோற்கடிக்கும் ஷண்முகனே காப்புனக்கே அதர்மமிங்கினித் தலையெடாது சுதந்தரம் இனிச் சுதந்தரம்எங்கும் (கெடு) சமயம் வருதல்மெய் எனதுறவினர் சரவணபவ ஓம்எனச் சாற்றினர்பகை நாற்புறம்வளைத் தேநொறுக்கிடு வோமினிக் கையில்அவனருள் உண்டுகண்டாய் கந்தன்படைச்செங் குந்தர்களாய்த் துயர்ஒழித்தெழு வோமினிமேல் பயமிலைகுலம் உய்யும்உய்யும்உய்யும் (கெடு) மலையெனப்பெரு முடலெடுத்திடு கிரவுஞ்சனுயிர் மாய்ப்பவன் மயிலநற்றல மதிலிருந்துநம் குலமுழுவதுங் காப்பவன் தலையணிந்தவன் குருவுமவன் சகலஉயிர்க்கும் வேருமவன் நிலையெனது சொல் பார்மனமே புலையும் மறமும் தொலையும் தொலையும் (கெடு) 19 நெஞ்சுக்கு நீதி கூறல் இராகம் : தேசிகதோடி தாளம் : ரூபகம் பல்லவி ஒன்று கேள் மனமே அநுபல்லவி இன்றுதொட்டு நீ ஒருவழி நின்று நல்ல சுகமணுகிட (ஒ) சரணம் சென்று சென்றுபழி பாவத்தில் வீழாதே செல்வாக்கை யெண்ணிப் பிறர்கையில் தாழாதே வென்றிகொள் மாமயி லேறிய வேலனை விகசித மலரடி இணைகளை உனதொரு புகலிட மெனநினை (ஒ) அந்நிய மாதரைத் தாய்என்பா யேகண்டு அந்தகனை வாட்டக் குமரன்கை வேலுண்டு சின்ன மிழைத்திடு நோய்களும் பாசமும் சிதறக் குமரக் குரிசிற் பெயரைத் தினமுச் சரியினி (ஒ) கானக் குறத்தியிடம் கெஞ்சிப் பேசுவான் கட்டொடு சூர்குலம் வேல்கொண்டு வீசுவான் ஞானக் குறுமுனிக் கின்னருள் செய்தவனை நத்திச் சுப்பு ரத்தி னத்தி னற்ப தத்தி னைப்பு கலுவை (ஒ) 20 தலைவி வண்டினைத் தூதுபோக்கல் (“ஐயா கணபதி யுன்றன் அடிமலர் துதிசெய்தேனே” என்ற மெட்டு) இராகம் : உசேனி தாளம் : ஆதி பல்லவி மயிலேறி வரச் செய்குவாய் எழில் மதுகரமே குமரனை நீ (மயி) அநுபல்லவி வெயிலில் வாடும் புழுவாய் மிகவும் துடிக்கிறேனே விரைவில் முருகன் வராவிடிலோ பிழைக்கிலேனே (மயி) சரணம் தொல்லை யடைகின்றதைச் சொல்லிக் குமரன்மனக் கல்லைக் கரைத்துனது நல்லிசையின் வல்லமையினால் பல்லக்கில் ஏறிவரிற் பலநாழி கைகழியும் வில்லிற் றொடுசரம்போல் விரைந்து பறந்துவரும் (மயி) வள்ளிதந் திரம்கற்ற கள்ளி வனத்திலன்று புள்ளிமயில் வாகனன் நள்ளிருளில் உள்ளமயங்கித் துள்ளி வரமருந்தே உள்ளிச்செய் தாளதுபோல் எள்ளத் தனையிருந்தால் சள்ளைக்கு வழியுண்டோ (மயி) சாரும்குக னைச்சென்ற வாரம் தழுவிவெகு தூரம்சொல்லியுமந்த நேரமே யதனை மறந்தான் ஆரம்ப நாள்முதல்கு மாரன் செயலிதுவே அடுத்திரண்டு மூன்றுநாள் அகத்தினிற் றங்குகிலான் (மயி) நாட்டி லிருந்திடுசீ மாட்டிகள் என்றனைப்போல் வீட்டி னதிபதியைக் கோட்டுமலை மங்கையரிடம் கூட்டி யனுப்பிவிட்டுக் கூகூவென் றழுவாரோ கேட்டிலிருந் தென்றனை மீட்டிட விரைந்துபோய் (மயி) ஏது குகன்நினைத்த போது வருவதெனல் தீது நொடிக்குநொடி மாதுகந்தன் மீதுமயலாய்த் தாது கலங்குவதால் தாஸன்சுப்பு ரத்தினம் ஓதும் பண்பாடி யகமீதே நிலைத்திருக்க (மயி) 21 இராகம் : சகானா தாளம் : ஆதி பொன்னடியைத் தந்தரு ளப்பா இப்போ தொப்பாய் - நான் உன்னடிமை யல்லவோ செப்பாய் செப்பாய் செப்பாய் சின்னமங்கை யர்செய் மனப்பே திப்பால் இப்பால் - நான் செய்வதறி யேன்மனக்கொ திப்பால் அப்பால் எனாதுனது (பொ) பூதலத்தை எண்ணஇத யம்பயம் செயும் - இதிற் புலைநடை கொள்விலை நயம் நயம் நயம் ஆதலினின் சீதவிழி யம்புயம்பெயும் - நல் அருள்தர வேண்டுமிச் சமயம்உயும் வயந்தெரிந்து (பொ) ஏறுமயில் கார்கடல் என்னும் வன்னம் துன்னும் - அதில் இலங்குகண் மீனென மின்னும் மின்னும் மின்னும் ஆறுகதிர் போல்முகம் மன்னும் என்னெஞ் சின்னும் அதில் ஆவல்கெடச் சேவைசெய உன்னும் பின்னும் உன் அன்பனுக்கும் (பொ) சுந்தரி பராபரி மைந்தா எந்தாய் கந்தா - அர விந்தனை ஜயித்தவா வந்தாள் வந்தாள் வந்தாள் தந்தைக்கு மந்திர முவந்தே தந்தோய்அந்தோ - இங்குத் தாஸன்சுப்பு ரத்தினம் நலிந்தேன் சிந்தா குலந்தவிர்க்கப் (பொ) 22 (பாலாபிஷேகம் பழநிமலையப்பன், என்ற மெட்டு) இராகம் : இந்துஸ்தான் பியாக் தாளம் : சாப்பு மாசி மகோத்ஸவ மாமிந்த நாள்எங்கள் மாமயி லாசல னேவந்தனன், பாசாதி பந்தம் கடந்தோம் களித்தோமவ் வீசன் தரிசனம் பெற்ற தினால் பராபரன் மயூரன் பார்வதி குமாரன் தரா தலா தாரன் ஜெயவீரன் உதாரன் பரிந்த குஞ்சரிவள்ளிக் கதிக ஒய்யாரன் பகையசு ரரை வெல்லும் சுரரதிகாரன் பாலன் வடிவேலன் ஞாலம்புகழ் மேலோன் பகரும் சதுர்மறை யுறையுநன் மூலன் (மாசி) மயில்வாகனன் கருணைப்ரவாகவி லோசனன் மகாசீலன் அனுகூலன் ஸாஜ்வல்யன் மிகுகோலன் மதியணிந் தவன்மகன் அதிக வைபோகன் அதிகுண நிதிபதி கதிதரும் ஏகன் அத்தன்பரி சுத்தன்மிகு வித்தைப்ரசித்தன் நித்தம் புகழ் சுப்பு ரத்தின மிஷ்டன் (மாசி) 23 (நன்னபியா ராமா என்ற மெட்டு) இராகம் : தேசிக தோடி தாளம் : ஏகம் கந்தப்பா வந்திப்போ தர விந்தப்பா தங்கள்நீ தர எந்தப்போ தாகு மென்றே ஏங்கிமனம் வாடு கின்றேன் சந்தப்பண் ஓதி நின்றேன் சாருமயூர! கெம்பீர! உதார குண! (கந்த) உலகம் கனவெனில் அதிலும் கலகம் மலையெனப் பயிலும் தொலையா விசார முற்றேன் தூயநிலைக் காசை வைத்தேன் தலைமேல் கரங்குவித்தேன் சரவணபவகுக நினதுச முகமிக உரைத்தேன் (கந்த) மனமே குரங்கெனத் திரியும் தினமே பவத்தொழில் புரியும் தனமாதைச் சேர்க்க எண்ணும் தாய்க்கிழவி வீட்டின் கண்ணும் இனிமேற் புகாத வண்ணம் ஈ கநற் போதம் உற்சாகம் ஐயா விரைவாய் (கந்த) வள்ளிமேல் சிந்தைகொண் டன்பாய்ப் புள்ளிமான் வந்ததோ என்பாய் கள்ளத்தன மாக வஞ்சி காதடைக்கு தென்று கெஞ்சி அள்ளித் தருமாவைக் கொஞ்சி அத்தனையிற் சுப்புரத்தின நற்கவி மட்டுக் கலந்துண்ணுவாய் 24 நெஞ்சுக்குத் தெளிவு கூறல் இராகம் : நாட்டை தாளம் : ரூபகம் வனிதையர் தரு சுகமது பெரிதா? நெஞ்சேயுரைசெய் தினமடியரை யடைவது பெரிதா? கனமையல் தன்னில் அழுந்தல் சுகமா? கலைகொண் டவிவே கமதைத் தொலையப் புரிவது சுசுமா? - வனிதையர் மகளிர் ஊட வருந்தல் இனிதோ? மயிலவன் கழல் வாழ்த்தல் இனிதோ? தொகைப் பொருள் நிலம் உடன் வருமோ? தூய்மைப் படவே நீ செயும் ஓர் நற்றவமே வருமோ? கற்பக நீழற் குளிர்ஓர்பால் - அரம்பையாதி பொற்புடையார் நற்களிஓர்பால் - சுரர்மனிதர் ஒத்தெவரும்சொற் புகழ்ஓர்பால் - தினம்புசிக்கும் புத்தமுதத்திற் சுவைஓர்பால் - மிகவேதுலங்க ஐரா வதமதன் பிடர்தனில் அமர்வுற அமரரும் முனிவரும் கைதாம் தொழுதிட ஒருகுடை அழகுடன் நிழலிட அனையதோர் இந்திர போகம் தரிலோர் முந்திரி நேரந் தனில்வீ ழுந்தரமாம் சொந்தமுள தோ? - அந்தங்கடைதீர் கந்தனையே சிந்தைசெயின் எந்தவித முந்தனியா நந்தமிதிற் சங்கையுள தோ? - அருளா லென்அப்பன் உலகத்தினை உண்டாக்கிடல் உலகத்தையி ரக்ஷித்திடல் உலகத்தை மறைத்திடல்இப் பலபற்பல அற்புதமிடு கங்கைவைத்த வான்சடைமேல் திங்கள்வைத்து மங்கையையோர் பங்கில்வைத்தவன் மகனைக் - குற நங்கையணை மார்பகனை - ஷண் முகனைக் - குகனை இப்பவத்தினைத் தொலைத்திட இமையளவுமே உளமலைவறச் சுப்புரத்தி னத்தினற்ப தத்தினிற்று திப்பதைவிட (வ) 25 குமாரா குருபராசிவனே என்ற மெட்டு (எனினும் அதன் முன் கஜலும் துரிதமும் சேர்க்கப்பட்டிருக்கின்றன) இராகம் : தேசிகம் தாளம் : ஆதி உளமொத்த ஒருவனிடம் ஒருத்தி போகம் விளைவித்த விந்துசுரோ ணிதமேற் பாயக் களிமொய்க்க அவள்வயிற்றில் கருநி றைந்து வளர்பத்து மாதத்தில் மதலை யாகி (துரிதம்) மலர்புவி தனிற்பிறந் தனுதினம் பிணிகளில் உலவியைந் துவயதை யடையுமிச் சிறுவனைத் திருவுளத் தெண்ணா - திருந்தால் செய்வ தேதெண்ணா! - உமையாம் பரைதருந் தேனே - மயில்மேல் பவனிவரு வோனே - என்கோனே (கஜல்) குருவையடைந் துயர்கலைகள் கற்றுத் தக்க பருவமுறு மங்கையர்கள் மோகம் கொள்ளும் உருவமொடு திருவனையாள் தனைம ணந்து மருவிடுசு கோததியில் ஆழ்ந்து பின்பு (துரிதம்) வளநிதி வருவித மதில்மன தினைவிட விளைவன கெடுதிகள் பலபல வாகுமிந் நலியினா லுருகா - திருக்கும் நிலையருள் முருகா! - தமிழ்த்தேன் குலவுமலர் வாயா! - என்நேயா! குளிர்செய் காங்கேயா! - நற்றூயா! (கஜல்) வாலிபம்போய் வலிவெலாம்போய் நரைமி குத்துக் காலிருந்த இடநோக்கித் தலையும் சாய மூலைவிட்டு நகர்வதெனில் முனைந்து கையிற் கோலையெடுத் தூன்றநடை கோணி வீழச் (துரிதம்) சிறுவய தினரிதை நகைபுரி கையில்மன முறுசின மதில்வசை மொழிவர்இ வைபலவும் வருவதன் முன்னே - நின்பார்வை வசத்திலாக் கென்னை - கயிலா புரியினோன் பாலா! - நன்மூலா பூணுங் கதிர்வேலா! - நற் சீலா (கஜல்) நாச்சற்றும் நிலைநிற்க மாட்டாது நனிகுழறப் பேச்சற்று விழியினிலே ஒளியற்றுப் பிரக்ஞையற்றுப் போச்சுதுயிர் எனஉற்றார் பிடிப்பற்று வாடுமுடல் மூச்சற்றுப் போகுமுன்னே இவ்வேழை மகனுக்கு (துரிதம்) முழுமதி நிகரறு முகமொடு விழிமலர் அழகொடு பெருகிய அருளொடு விரைவிலென் அப்பனே வந்தாள் - இப்போதே மெய்ப்பதந் தந்தாள் - உன் தாஸன் சுப்புரத்நந் தான் - தருந்தேன் ஒப்புமாறே நான் - சொரிந்தேன். (அப்பனே) 26 இராகம் : அசாவேரி தாளம் : ஆதி பச்சைமயி லேறிவருவான் - அன்பர்கள்குறை அத்தருண மேகளைகுவான் - ஷண்முகனொரு (பச்) நிச்சயமி தேததியி னிற்சரண மேயடைவிர் அச்சமில்லை வேலவனி னிச்சையினை நீர்பெறிலோர் (பச்) நச்சுவடி வேலுமுடையான் - வெம்பகைவரைப் புய்த்துடலை வாரியெறிவான் ஷண்முக னொரு (நச்) மெச்சுவிக் கீரனது பத்தியினி லேயிளகி மொய்த்தொரரக் கன்சிரநி லத்தினில்வி ழச்செய்யுமோர் (நச்) தொத்துகிளி போல்விரைகுவான் - உண்மையிலவன் பத்தருள மேயுறைகுவான் - ஷண்முகனொரு (தொத்) முத்துநிகர் வாய்க்குறவர் பெற்றகுற மாதுதரும் அத்தினைதே னோடுமவள் பொற்றனமு மேயுணவொர் (தொத்) கொத்தடிமை யாய்நலிகுவார் - விண்ணவர்சிறை முற்றுமவர் மீளஅருள்வான் - ஷண்முகனொரு (கொ) பொய்த்தஒரு சூரர்குலம் அத்தனைஒ ரேநொடிவி டுத்துநிரு மூலமிடு சுப்புரத்தி னம் புகலும் (பச்) 27 வேல் வண்ணம் இராகம் : இந்துஸ்தான் பியாம் தாளம் : ஏகம் தருமங் குன்றுந் தருணங் கண்டன் றேநேரே தவிரென் கந்தன் பகைகண் டஞ்சும் கூர்வேல்வேல் எரியஞ் சுங்கண் புவியஞ் சுந்திண் சூர்மார்பே இருதுண் டங்கண் டுயிர்சிந் தும்பைந் தார்வேல்வேல் கிரவுஞ் சன்றன் பெருமங் கந்துண் டாமாறே கெடவும் பண்டங் குமைதந் தின்பங் கூர்வேல்வேல் திருவும் பண்புங் கலையுந் தந்திங் கேவாழ்வே செயவென் றன்பங் கினில்வந் தண்டுஞ் சீர்வேலே வரைதங் குஞ்செங் கதிரும் பொங்கும் பாரீரோ வளரண் டங்கண் டுயருஞ் செம்பொன் தோய்வேல்வேல் அரிதென் றண்டும் கருமம் பஞ்சென் றோடாதோ. அலைபொங் குந்தண் கடலுண் குந்திண் கூர்வேல்வேல் பரைமைந் தன்கந் தனுரந் தங்குந் தோள்மேலே பழகுஞ் செஞ்சந் தனமிஞ் சுந்தண் சீர்வேல்வேல் மரையென் குங்கஞ் சமுகந் தங்கும் தூயோர்வாழ் மயிலந் தங்கும் சுரர் தம் பங்கம் தீர்வேலே 28 மயில் இராகம் : அசாவேரி தாளம் : சாப்பு குகனேறும் மாமயிலே - ஷண் முகனேறும் மாமயிலே குளிர்வா னிடையே குவிதா ரகைபோ லொளிர்தோ கையிலே சுடர்கா சுகளார் (குக) இறகின் விரிவிங் ககிலம் ககனம் பிறவும் புகஅங் கிடமின் றெனுமென் (குக) நவரத் தினமுற் றிடுபொற் பணிபெற் றுயர்நர்த் தனமிட் டபதத் துடனற் (குக) கொந்திடும் சஞ்சலம் கண்டதும் சென்றிடும் சுத்தரம் தன்வணம் சுந்தரம் சிந்துறும் (குக) அணிவயி ரவலகு தலைமிசை எழில்முடி மணியென ஒளிவிழி மரகத மலைநிகர் (குக) மணிமா முடிமீ தினினீள் உலகே அணிசே டனைஓர் புழுவா யெணுவாய் (குக) மயிலமே உறைசுரா திபஎனா தெதிரில்வா வெயிலிலே புழுவெனா உருகினே னருளவா (குக) சுப்புரத் நத்தினற் சொற்குவப் புற்றெனக் கிக்கணத் திற்சுகத் தைக்கொடுத் துக்கொணற் (குக) வாழி வாழ்ககுகன் பாத மலர்வேல் மயில்சேவல் சூழ்க நனியின்பம் தொல்புவிவான் - வீழ்கபுனல் மல்கவளஞ் செந்நெல் வளர்க அறம்வேள்வி வெல்கஇனி மைத்தமிழின் வீறு. 1 விண்ணோர் பதியே! காணும் பொருளிலெல்லாம் கண்ணாஉன் இன்னுருவம் காணேனோ பூணும்என் உள்ளமெல்லாம் புன்மைதீர்ந் துன்பதத்தைப் பூணேனோ கேட்கும் ஒலியனைத்தும் கேசவா என்றென் காதில் கேட்காதோ - நான் வேட்கும் பொருளனைத்தும் விண்ணோர் பதியே நீயாய் விளையாயோ! - (1911க்கு முன்) குமுதம் வார இதழ் 16.3.1961; பழம் புதுப் பாடல்கள், ப.35, 2005 குறிப்பு: ‘குமுதம்’ இதழில் “வழிகாட்டிகள்” எனும் தலைப்பில் பாரதிதாசன் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள பாடல் இது. பாரதியாரைக் காணுமுன்னரே தன்னால் பாடப்பெற்ற பல்லாயிரம் பாடல்களில் ஒன்றாகப் பாரதிதாசன் இதனைக் குறிப்பிடுகின்றார். இதிலிருந்து இப்பாடல் 1911க்கு முன் பாடப்பெற்றதாகக் கருதலாம். 2 சக்திப் பாட்டு எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள் மந்த நகையங்கு மின்னுதடா! காளை ஒருவன் கவிச் சுவையை - கரை காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த வையமுழுவதும் துண்டு செய்வேன் - என நீள இடையினின்றி நீ நினைத்தால் - அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே! - சுதேசமித்திரன், தேசசேவகன் 8. 5. 1923; பாரதிதாசன் கவிதைகள் முதற்பகுதி, நான்காம் பதிப்பு, 1944 3 பராசக்தியிடம் முறையிடல் (நொண்டிச்சிந்து மெட்டு) கெஞ்சுவதன் பயனோடி - அம்மா கேடுவந்து சேருவதுன் தயவோடி - எனை மிஞ்சவிட மனமில்லையோ நாங்கள்1 மேநிலையி லிருந்ததை அறியாயோ - இந்த மஞ்சிலுயர் வானமறிய - இந்த மண்அறியத் தேவி உந்தன்2 மனமறிய - நாங்கள் பஞ்சை யெனப்பறந்த துண்டோ - இந்தப் பாரிலுள்ள தேசங்கள் இகழ்ந்ததுண்டோ? - உன்னைக் கெஞ்சுவதன் ராமன்என ஓர்அரசன் - அவன் ராச்சியத்திலே வறுமைப் பேச்சுக்கள் உண்டோ? - இந்த(ப்) பூமிமுழு தாண்டிருந்தவன் - ஒரு பூததயை யேயுடைய மாயவனுந்தான் - அன்று சாமியென்றும் அடிமையென்றும் - ஒரு சாதன மென்றால் பலவி வாதமிடுவார் - என்று நாமறியக் கேட்டது முண்டோ - நித்தம் நாளுக்கொரு துன்பம் எனவளர்வ தெல்லாம் - உன்னைக் கெஞ்சுவதன் முப்பத்து முக்கோடி ஜனங்கள் - நாங்கள் மோசமறியா திருந்தோம் முனிவர் மக்கள் - இதைச் செப்பிடினும் பிறர்அறியார் - இந்தச் சகமுழுதிலும் கொண்ட பகைமையிலே - நமர் ஒப்பி அந்தத் துரைத்தனத்தார் ஐயம் ஓங்கிநிற்கவே படை தாங்கியிருந்தோம் - நாம் கப்பல்மிசைக் கடல்கடந்தோம் - முன்னர்(க்) கண்டறிந் திடாதபல தேசமடைந்தோம் - உன்னைக் கெஞ்சுவதன் சீறிவரும் குண்டின் இடையே - அங்கு(ச்) சிங்கம்எனப் பாய்ந்துவரும் பகைவர்முன்னே - நமை நீறுசெய்யும் விஷப்பந்துகள் - நாம் நிற்கையில் உறங்குகையில் இடிபோல வீறுகொள வெடித்திடுமே - நமை வெற்றிபெறச் சேகரித்த மாயப்புகையில் - நமை மீறிவரும் மயக்கத்திலே - சிலர் மீண்டுவரப் பலபேர் ஆவிதுறந்தார் - உன்னைக் கெஞ்சுவதன் ஆள்கொடுத்த பெருநாடு - பின்னும் அளவின்றிப் பொருட்குவை கொடுத்திருக்க - இங்கு(க்) கோல்நடத்தும் துரைமார்கள் - நமைக் கொடியதோர் சட்டமிட்டுக் கடுமைசெய்தால் - அந்த நாள்கொடுத்த வாக்குறுதியை - நிலை நாட்டுவது துரைமன்னர் கடமையன்றோ - இது நீள்புவிக்குள் அதிசயமே - இங்கு நியாயமென்ப தனைவர்க்கும் பொதுவில்லையோ? - உன்னைக் கெஞ்சுவதன் - பழம்புதுப் பாடல்கள், ப.39-41, 2005; எந்தையும் தாயும், ப. 29-30, 1918; பாரதிதாசன் பார்வையில் பாரதி, ப. 228 குறிப்பு : பாரதியார் கேட்டுக் கொண்டதற்கிணங்கக் கனக சுப்புரத்தினம் இயற்றிய தாகக் குறிப்பிடப்படும் ‘எங்கெங்கு காணினும்’ எனத் தொடங்கும் சக்திப் பாட்டைப் பலரும் அறிவர். பின்வரும் பாட்டோ பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாள் பாரதி ‘எந்தை யும் தாயும்’ என்னும் நூலில் உலகுக்கு அளித்துள்ள பாரதிதாசனின் பாட்டு. இப்பாட்டின் முற்குறிப்பு அன்றைய கனக சுப்புரத்தினத்தை அழகாகப் படம்பிடிக்கிறது: “இன்று புரட்சிக் கவிஞர் என்று புகழப்படும் பாரதிதாசன் அன்று வாத்தியார் சுப்புரத்தினம். கையில் தங்கக் காப்புடனும் உருமாலைப் பட்டு அங்க வஸ்திரம் தோளில் துலங்கவும், நான் தமிழன் என்ற எக்களிப்பும் இறுமாப்பும் விழிகளில் மிதக்கத் தோன்றுவார். பராசக்தியை அவர் போற்றிய பாட்டு இப்பொழுது அவர் கவிதைத் தொகுப்பில் காணப்பட வில்லை. நாட்டின் இழிநிலையைக் கண்டு கொதிக்கும் கவிஞனின் உள்ளத்தை அந்தப் பாட்டிலிருந்து அறிந்துகொள்ளலாம்.” 4 சக்திக்கு விண்ணப்பம் (காவடிச் சிந்து) தேசத்திலே இந்த நேரத்திலே நல்ல தீரரை ஆக்கிடுவாய் - இன்றே அச்சப் பேய்தன்னைப் போக்கிடுவாய் - எங்கள் பூசையெலாம் உனதாக்கி எமைஅண்டும் பேதமை நீக்கிடுவாய். நீசத்திலே அரைவீச மெங்கள் நினைப்பில் வராதவிதம் - நன்றே உன்றன் நேசம்உண் டாக்குநிதம் - கொண்ட ஆசை தணிந்திடக் கேட்பதெல்லாம் அடி அன்னையுன் தண்டைப்பதம். தன்னுயிர் நீத்தும் பிறர்க்கிதம் தேடிடும் தன்மை எமக்கருள்வாய் - அம்மாஎங்கள் வன்மைப் புயத்தமர்வாய் - எங்கள் இன்னல் தவிர்க்கும் குலத்தெய்வமே நெஞ்சில் ஏக்கம் தவிர்த்திடுவாய். பண்ணும் சமூக நினைப்புக்கு மாறான பாவிகள் சாகட்டுமே - அல்லாமல் இனி நேர்மையி லேகட்டுமே - அடி இன்னும் பொறுக்க வென்றால் தகுமோ இக்கண் எம்முயிர் போகட்டுமே. உண்ணக் கொடுத்தவளே எங்களுக்குநல் லூகம் கொடுத்தவளே! - இங்கே யறம் பண்ணப் படைத்தவளே! - எமக் கெண்ணம் எவ்வாறந்த வண்ணம் செயல்செய்யும் திண்மை கொடுத்திடுவாய். தண்ணமுதைப் பிறன் “தீ” என்று சொல்லென்னில் சந்தோஷமா யுரைப்பார் - சமூகம்வ ருந்திடத் தாம் நகைப்பார் - இவர் பண்ணிடு மோசங்கள் உன்னரு ளோஇந்தப் பாரினை ஈன்றவளே? - பழம்புதுப் பாடல்கள், ப.48, 2005; தேச சேவகன், 7.11.1922 5 தேவியின் திட்டம் பாரதத் தேர்வந்து இன்பநிலை சேரப் பாய்க மனக்குதிரை சோர்வினை அச்சத்தை இட்டு மிதிப்பதில் தூளி படுத்திடுக. வீரியின் சாட்டையடா அடடேயினி வீண்கதை போக்கிடுவீர் ஆரிய நாடு சுகம்பெற இன்னும் அரைக்ஷணம் உள்ளதென்றாள் பாய்க மனக்குதிரை அடடேயிது பக்குவ காலமடா! வாய்மை யிருப்பதில் தேவியின் இன்னருள் வந்து கிடைத்ததடா. போய்த்தொடுவோம் அந்த விண்ணை அமுதத்தைப் பூமிக் கெலாந்தருவோம் தாய்கொடுத்தா ளிந்தச் சத்திய வேல்என்று தாரணி ஆண்டிடுவோம் ஏழைகள் கையிருப் புள்ளவர் என்னும் இரட்டையைக் கொன்றிடுவோம் கூழுக் கொருத்தன் அழும்படி ஆண்டிடும் கோலை முறித்திடுவோம் வாழ்வுக்கு நேரம் அரைக்ஷண மாம்என்று மங்கை குறித்துவிட்டாள் ஊழையும் அன்னை மடித்திடு வாள்இனி ஓடுக இன்பத்திலே. - பழம்புதுப் பாடல்கள், ப.62, 2005; தேசசேவகன், 6.3.1923 6 பராசக்தி திருப்புகழ் தானன தத்தத் தானன தானன தானன தத்தத் தானன தானன தனதான பூநிறை பச்சைச் சோலைகள் மாகனி தேனிலி னிக்கத் தாவிய நீணதி பலவோடு போர்மலை ஒக்கத் தூவுநெல் வாழைகள் நேர்கழை சித்ரத் தாமரை வாவிகள் வளமாக நானில மெச்சக் கூடிய பாரதம் மேனிலை கெட்டுப் போவதி லேமன முருகாத நாயென விட்டுத் தூரவு லாவுதல் தாயுன ருட்கு மாவதை மாவதை நினைவாயென் மேனியை வச்ரத் தூணென வேயுளம் ஞானவி ரத்னப் பூணென வேசெய வரவேணும்! மேதினி இச்சைக் கானவ ளேகொடு சூதசு ரர்க்குக் கோளரி யேயுன திருபாத மானகு ளிர்ச்சிக் காவண நீழலில் நானுமி ருக்கத் தோதருள் வாயினி உலகாரு மானிடர் கட்டைச் சாடிடு வேனருள் மாசிவ சக்தித் தாயுன தீரடி மலர் வாழ்க! தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன தனதான கங்கைத் திருநதி யமுதென வுலவிய திங்கட் பனிமலை யெவையினு முயரிய தென்றற் கலகல வெனவெகு குளிர்தரும் எழில்நாடு! கந்தப் பொடிகுழல் மகளிர்கள் உலவிய பந்தித் தெருவினி லுயருயர் மலையென விந்தைப் படமுறை படநிறை பலபல மணவீடு பங்கப் படவிவை பிறரிட மடிமைபொ ருந்திக் கெடுவதை விடுதலை செயஒரு சிங்கத் தினைநிகர் மனவலி அருளுக இதுதேதி பஞ்சத் தினைஒரு நொடியினி லயலவர் நெஞ்சப் புகைதனை அரைநொடி தனிலவர் வஞ்சச் செயல்களை அதைவிட விரைவினில்இலையாக இங்குப் பழமையின் நிலைதரு குவனடி! தங்கத் துருகிய இளநகை ஒளிசெய இன்பக் கடலிடை அமுதென மருவிய எழில்வீரி! எந்தத் தருணமு முலகினில் நிகழ்வன எந்தச் செயல்களும் விழியெதிர் அறிகுவை எந்தப் பொருளிலு நிறைபொரு ளுனைவிட எனதாவல் பொங்கிக் கவிழ்வதை எவர்நிலை புரிபவர்? அங்கத் தனைபுய வலிபெற விசயனை முந்தச் செயுமருள் எனதுள மிசையுற வரவேணும்! புன்மைத் தொழில்புரி மகிடனை உறவொடு சின்னப் படஉல கினிலற நிலைபெற மன்னிப் புரிபரை உனதழ கியபத மலர்வாழ்க! - பழம்புதுப் பாடல்கள், ப.65, 2005; தேசசேவகன், 3.4.1923 குறிப்பு:இருவேறு சந்தக் குழிப்புகளில் அமைந்துள்ளதால் இரண்டு பாடல் களாகவும் கருத வாய்ப்புள்ளது 7 சக்திப் பாட்டு வானத்தில் மின்னற் சிரிப்பைக் கண்டேன் - இந்த வையத்தில் உன்னிரு பாதங் கண்டேன். ஊனமில் காற்றினில் சுத்தவெளி - தனில் ஓங்கி யெழுந்ததுன் மேனியடீ! ஞானச் சுடர்நில வோடுகனல் - இவை நங்கை யுனக்கொரு மூன்றுவிழி சோலைக் குளிர்புனல் உன்னிதயம் - அதில் சொட்டொன்று தான் என்றேன் இன்பக்கடல். எத்தனைக் கோடி எழிற்குலங்கள் - அந்த எண்ணருங் கோடி உடம்பிலெல்லாம் தொத்தி யியக்கும் உயிர்க்கிளியே - பல தோற்றமு மான தனிப்பரையே. சித்த மினித்திடு துன்னினைவால் - என்னைச் சேர இழுத்திடும் காந்தமணி! ஒத்தது காதல் எனப்புகல்வாய் - நொடி ஒன்றினில் என்குலம் ஓங்கவைப்பேன். - பழம்புதுப் பாடல்கள், ப.76, 2005; தேசசேவகன், 8.5.1923 8 காளிக்கு விண்ணப்பம் (கலிவெண்பா) பாரததே சத்தை விடுவிப்பேன் பண்டைநாள் ஆரியரை உற்பத்தி ஆக்கிடுவேன் - வீரியத்தில் சிங்கத்தை ஒத்தவரைச் செய்வேன் செயும்தொழில்கள் எங்கைக்கும் மேலாய் இயற்றுவிப்பேன் - தங்கம் குவிக்கின்ற வாணிபத்தைக் கூட்டுவேன். நாட்டை(ப்) புவிக்குத் தலையாக்கிப் போட்டுத் - தவிர்ப்பின்றி எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்பதாய் நல்லதொரு சட்டம் நடத்துவிப்பேன் - பொல்லா வறுமையினை மாய்த்திடுவேன் எல்லோரும் தெய்வப் பிறவிகள்; ஈசன் பெற்றபேர்கள்; - உறவினர்கள் என்ற உணர்வை எழுப்பிடுவேன் மற்றவரின் பொன்னுக்கும் பூமிக்கும் போரிட்டுக் - கன்னமிடும் செய்தி யறவொழிப்பேன், சின்னவரை வல்லோர்கள் நையப் புரிவதெல்லாம் நான்தொலைப்பேன் - துய்யமன எண்ணிக்கை யெல்லாம் உனது வடிவழகில் நண்ணுதற்கே என்றஉண்மை நாட்டிடுவேன் - கண்ணெதிரில் ஈயெறும்பு கோடி எண்ணற் றனஉயிர்கள் தாய்பெற்ற சேதி சகமுரைப்பேன் - நோயின்றி இன்பமே ஓங்கவைப்பேன் இத்தனையும் காளியே! உன்னருளில் ஓர்துளியின் உண்டு. - பழம்புதுப் பாடல்கள், ப.85, 2005; தேசசேவகன், 12.6.1923 9 மகாசக்திக்கு விண்ணப்பம் (திருக்கடையூர்தனிலே சித்ரத் தேரோடும் வீதியிலே என்ற மெட்டு) அன்பு கொடுத்திடுவாய்! - உயிர் அத்தனைக்கும் இனிதாய் வன்பு கொடுத்த மலைக்குமரி! புவி வாய்மை வாய்மை வாய்மை வளர்த்திட. - அன்பு முன்பு வகுத்தபடி - உன்றன் மூச்சில் இயங்குமுயிர் ஒன்றினை ஒன்று நலிப்ப தில்லாவகை ஒத்தல் ஒத்தல் ஒத்தல் நிலைத்திட - அன்பு பக்தி வரப்புரிவாய்! - உன்றன் பாத மலர்களிலே முக்தி கொடுக்கும் முதற்பொருளே! புவி மூர்க்கம் மூர்க்கம் மூர்க்கம் தொலைத்திட - பக்தி சக்தி யென்றே பிழைப்பேன் - கெட்ட சாவைத் தொலைத்திடுவேன் மித்தை யிந்தப்புவி என்னுமோர் கொள்கையை வீழ்த்தி வீழ்த்தி வீழ்த்தி விடும்படி - பக்தி அறிவை வளர்த்திடடீ! - புவி ஆக்கம் வளர்த்திடுவேன் உறவிற் கலந்தவளே! எளிமைத்தனம் ஓட ஓட ஓடும்படி செய்ய - அறிவை குறுகிய நோக்கத்தையும் - வெறுங் கோணற் பிழைப்பினையும் அறஇங் கொழித்திடில் மீதியி லாகுவ தாண்மை ஆண்மை ஆண்மை வெளிப்பட - அறிவை வீரம் மிகத்தருவாய்! நெஞ்சில் வேட்கை தவிர்த்திடுவேன். சேரும் பகைப்பிணி தீரப் பலப்பல தேசம் தேசம் தேசம் சுகப்பட - வீரம் ஆரும் உனக்கடிமை உயிர் அத்தனைக்கும் உரிமை. கோரிப் பிறன்பங்கின் கோட்டை மித்திடல்1 கொட்டம் கொட்டம் கொட்ட மடங்கிட - வீரம் கந்த மலர்களடி! புவிக் காரியம் எண்ணிக்கைகள் விந்தை அருச்சனை உன்றனுக் காக்கிடில் வெற்றி வெற்றி வெற்றி நிலைத்திடும் - கந்த இந்தப் புவித்தலைமை எனக் கிந்தத் தினம்கொடுப்பாய் சந்தித்து நீசொல்லும் சட்டப் படிக்கெங்கும் சாந்தி சாந்தி சாந்தி புரிகுவென் - கந்த - பழம்புதுப் பாடல்கள், ப.93, 2005; ஆத்ம சக்தி, ஆகஸ்டு 1923 10 திரு (இலக்ஷ]மி) கண் நிமிராமல் - மனதிற் கபடு வையாமல் திண்ணிய தோள்கள் - இரண்டும் செயல் இளைக்காமல் நண்ணிய உழவன் - தனைப்போய் நாடிடுந் திருவே! மண்ணினை மணியாய்ப் - புரிவாய் வாழிய திருவே! பொய்ம்மையும் வார்த்தைப் - புளுகும் போக்கும் இல்லாதான் கைம்முதற் செட்டி - அவன்தோள் கலந்திடுந் திருவே! இம்மெனு முன்னர் - அவன்சீர் எழுந்திடப் புரிவாய் மெய்ம்மலர் தனிலே - அமுதாய் மேவிய திருவே! காட்சியும் நினைவும் - செவியில் கலந்தன யாவும் மீட்சியின் பொருள்கள் - எனவே மேவிடும் குலத்தார் ஆட்சி யிப்புவியாய் - நொடியில் ஆக்கிடுந் திருவே! மாட்சி மிக்கவளே! - வறுமை மாய்த்திட வருவாய். தாமரைப் பூவும், - கழனித் தடங்களும் சோலை, கோமகன் மொழியும் - பசுவும் குலவிய திருவே! ஆமையின் முதுகை, - மடிநாய் ஆட்டிய வாலைத், தூமதி யனையாய்! மறந்தும் சோம்பலின் புயத்தை வெறுத்திடுந் திருவே! - இனிநான் விளம்புதல் கேட்பாய்; நறுக்கிய மணியில் - ஒளிபோல் நாவினிற் சுடரும் சிறப்புறு கவிஞர் - புலவோர் திருவெனில் பகையாம் வெறுப்பு மிக்கதடி - இதனை வீழ்த்திடு திருவே. - பழம்புதுப் பாடல்கள், ப.96, 2005; ஆத்மசக்தி, 1923 கார்த்திகை 11 வாணி (சரஸ்வதி) வாணியை என்றும் வணங்கிடுவோம் புவி மாயம் அனைத்தும் விளக்கிடுவாள் பூணும் இருட்டை மனத்தைவிட்டே நொடி போக்கும் நிலாவை வெறுப்பதுண்டோ? காணப் பதங்கள் புவிக்கினிதாய் அகக் கண்ணில் நமக்குச் சொரிந்திடுவாள் வீணை யெடுத்துப் பிழிந்தனளே ஒலி வெள்ளம் அனைத்தும் எழுத்தெழுத்தாய்! காதல் நமக்கவள் தந்திடுவாள் அவள் கழலில் நமக்குண்டு கீர்த்தியெலாம் ஊதி வடிக்கின்ற பொன்னினைப்போல் நெஞ்சில் ஒளியைக் கொடுக்கின்ற தெய்வமவள்! தீதில் நடக்கின்ற மாந்தரெலாம் அந்தத் தெய்வம் தனைக்கண்ட தில்லையென்போம் வேதன் சுவைக்கின்ற நாவினிலே கலை வேண்டும் படைக்கின்ற போதினிலே வெள்ளை மலர்க்குள் இருந்திடுவாள்! நல்ல வேதங்க ளுக்குள் இருந்திடுவாள்! பிள்ளை மொழிக்கு மகிழ்ந்திருந்தே அவர் பெற்றவை பின்னர்ப் புவிக்குரைப்பாள்! கள்ளை வடிக்கும் உதட்டினிலே நல்ல கற்பனை கொட்டும் நகைப்புடையாள்! தெள்ளிய ஞானச் சுடர்முகத்தாள் அவள் செய்யும் நலங்கள் கணக்கிலுண்டோ? ஒன்றும் வழக்கம் அறிந்திடுமுன் நமை ஒப்பிடச் செய்து மணந்தவளாம் அன்று தொடங்கிஎந் நாளும்அவள் இன்பம் ஆக்குவ தென்பது நோக்கமன்றோ? சென்றநம் உள்ளம் மறப்பதுண்டோ அவள் சீத விழிக்குள் நனைந்தபின்னும்? என்றும் இனிப்பது மாத்திரமோ கலை ஏறிட ஏறிட இன்பமன்றோ? - பழம்புதுப் பாடல்கள், ப.98, 2005; ஆத்மசக்தி, 1924 தை 12 மறந்தறியேன் மறந்தறியேன், தருவாய் - முருகா திருவடி மறந்தறியேன் பிறந்துவிட்டேன் முன்னே வினைப்பயனதனால் பெற்றதுன்பம் போதும் நானுன்னை என்றும் ஒருநொடியில்1 - மறந்தறியேன் அடியார் உள்ளமெனும் அழகிய மயில்மேல் அமரும் சுடரொளியே உனதருளால் குடமுனி உய்ந்தான் கீரனும் உய்ந்தான் கொலைசெய்யும் குறவரைக் காத்தாய் உனதருளில் ஒருதுளி அருளுவாய் கனவிலுமுனை - மறந்தறியேன் - பழம்புதுப் பாடல்கள், ப.101, 2005; பாரதிதாசன் குயில், 10.11.1967 குறிப்பு : இந்தப் பாடல் புதுவை இசை ஆசிரியர் ஒருவர் கொடுத்த மெட்டை வைத்து எழுதியது. ‘முந்தைய நிலைகாட்டும் முருகன் பாட்டு’ எனுந்தலைப்பில் மன்னர் மன்னன் எழுதிய ‘நினைவு மண்டபப்’ பகுதியில் இப்பாடல் தரப் பட்டுள்ளது. பாடலுக்கு முன் “மாரியம்மன் விழாவாயிருந்தாலும் அதற்கான பாடலை எழுதி அரங்கேற்றி அச்சிட்டு வழங்குவார். தாமே இசையோடு பாடுவார். திருமண வாழ்த்து அழைப்பிதழ் எழுதும்படி எவரேனும் கோரினால், விநாயகர் காப்பு, சரசுவதி இலக்குமி வாழ்த்து முதலியவை எழுதி விட்டே அழைப்புச் செய்தியைப் போடுவார்” என்னுங் குறிப்பு காணப்படுகின்றது. மேலும் மன்னர் மன்னன் பிறப்புக்கு முந்தைய நிலையாகவும் இது குறிப்பிடப்படுகின்றது. இவற்றிலிருந்து 1928க்கு முன் இப்பாடல் இயற்றப்பட்டதாகக் கொள்ளலாம். 1. ‘ஒருநொடியும்’ என இருப்பின் நன்று. 13 எழுந்தருளும் தெய்வங்களிடம் புதுமையாக வேண்டுதல் காசியும் போலிசும் கவர்னரும் கையிலென் றோதித் தேமாற்ற உன்னுவர் அழிக்கவா! மாம்பராய்1 வந்தபின் மக்களை வெருட்டுஞ் சோம்பற் குழுவினைத் தொலைக்க வேலா வா! பட்டுத் துணியால் பாழாகும் புதுவையே நாட்டுத் துணியால் நலம்பெறச் செய்யவா - ரங்கா! இருதலைக் கொள்ளி போலிலகு கக்ஷியனடு ஒருநலக் கவர்னர் நின்றோங்க ரங்கா வா! தேர்தலின் பெயரால் திருடிப் பிழைக்கும் பேர்களை யொழிக்கப் பெருமான் வருக! சிலர்வயிறு நிரம்ப சிறைபுகா திருக்க வா வரும் எலக்சியத்தில்2 வம்பிலா தருள வா! வரும் சேனாத்தேர்3 வண்4டிரை பீசா திரு லெமோ னிக்கா4 செப்புவாய் முருகா! தலைவ ராதற்குச் சனங்களின் தயவையே எதிர்பார்த் திருப்போர் எழிலுறச் செய்ய வா! மாநிலம் புகழும் மகாத்மா வாழ வா பொதுவுக் குழைக்கும் புனிதர்கள் வாழ வா! - பழம் புதுப் பாடல்கள், 2005; கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல் குறிப்பு: ஒவ்வோராண்டும் மாசிமக விழாவின்போது மயிலம் சுப்பிரமணியரும் செஞ்சி அரங்கநாதரும் புதுவைக்கு எழுந்தருளுவர். மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் அவ்விழாக் காலத்தில் மேற்குறித்த பாடல் அடிகள் விழாப் பந்தலின் நாற்புறமும் தட்டிகளிலும் துணித் திரைகளிலும் எழுதப்பட்டிருக்கும் நடப்புநிலை அரசியலைக் கிண்டற் சுவை மலிய, பிரெஞ்சு வடிவச் சொல்லாட்சி கலந்து எடுத்துக் காட்டுவன இவை. ‘பாரதிதாசன் கவிதைகள் (முழுவதும்)’ எனப் பாரதி பதிப்பகம் வெளி யிட்டுள்ள தொகுப்பில் (ப.612-613) பட்டுத்துணியால், தேர்தலின் பெயரால், எனத் தொடங்கும் இரண்டு கண்ணிக ளோடு இப்பாடலில் இடம்பெறாத ‘கோட்டான் போல்வந்த கோட்டா சிஸ்டத்தை ஓட்டாம லிங்கேன் உலாவந்தாய் முருகா?’ என்னும் புதிய கண்ணி ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஏனைய ஏழு கண்ணிகள் அத்தொகுப்பில் இடம்பெற வில்லை. 1. மாம்பராய் - மெம்பராய் 2. எலக்சியம் - எலக்சன் 3. சேனாத்தேர் - செனட்டர் 4. டிரைபீஸ், லெமோனிக் - செனட்டர் தேர்தல் வேட்பாளர்கள் 14 கூவிஅழை கண்ணனையே! கண்ணபிரான் என்னகத்தில் காலைவைத்த நாள்முதலாய் எண்ணமெலாம் அன்னவன்மேல் - கிளியே ஏகியபின் மீளவில்லை பண்மகிழும் கண்ணனின்வாய் பறித்தெடுத்த தாமரையோ கண்மகிழ்ந்து போகுதடி - கிளியே கட்டழகன் காட்சியினால். மெய்சிலிர்க்கு தேடிகண்ணன் வேய்ங்குழலை நானினைத்தால் கைசிலிர்க்கும் உயிர்சிலிர்க்கும் - கிளியே கண்ணனென்ற பேருரைத்தால் வையம்புகழ் கண்ணனொடு வாழுமின்ப வாழ்க்கையல்லால் உய்யும்நெறி காணுகிலேன் - கிளியே உண்மைஇது பொய்யல்லவே. ஊர்முழுதும் கண்ணபிரான் ஓவியமே காணுகின்றேன் பார்முழுதும் அப்பெருமான் - கிளியே பண்ணும்விளை யாடலடி ஆர்சொல்லி யனுப்பிடுவார் ஆசைக்கண்ணன் வந்தெனது பேர்சொல்லி யழைத்துவிட்டால் - கிளியே பெற்றபெரும் பேறதுவே. ஆ விநிகர் கண்ணனுக்கே அன்பிருந்தால் வந்தெனையே பூவிரலால் தொட்டுவிட்டால் - கிளியே போதுமடி வாழ்விலின்பம். தூவிவைத்த பஞ்சணைப்பூந் தோடழிந்து வாடுதடி கூவிஅழை கண்ணனையே - கிளியே கோதையினாள் வாழும்படி. - பழம்புதுப் பாடல்கள் ப.215, 2005; பிரசண்ட விகடன் பொங்கல்மலர், ஏப்ரல் 1944 குறிப்பு: பாரதிதாசன் பகுத்தறிவு நெறியில் பயணந் தொடங்கிய பின்பும் அன்புக் குரிய பிறரின் வேண்டுகோளை மறுக்காமல் கடவுள் பேரில் பாடல்களை யும் திருமண வாழ்த்துப் பாடல்களையும் மெட்டுக்கேற்ற பாடல்களையும் எழுதிக் கொடுத்துள்ளார். இப் பாடலும் அவ்வாறு எழுதப்பட்ட தென்பதை “இசை ஆசிரியர் ஒருவர் மிகவும் அச்சத்தோடு கண்ணன் பேரில் கிளிக்கண்ணி ஒன்றைக் கேட்டார்; பலமுறை அவர் வற்புறுத்தி யதை மறுத்திட வெண்ணாமல்: ‘கண்ணனவன் என்னகத்தில் காலைவைத்த நாள்முதலாய் எண்ணமெலாம் அன்னவன்மேல் - கிளியே ஏகியபின் மீளவில்லை. என்று தொடங்கிப் பத்துக் கண்ணிகளை எழுதிக் கொடுத்தார் கவிஞர்” என்னும் மன்னர்மன்னனின் கூற்று (பாரதிதாசன் குயில், ப.12, 10.10.1967) புலப் படுத்துகின்றது. இதே பாடல் ‘கண்மகிழ்ந்து போகுதடி-கிளியே என்று பழம் பாடல் ஒன்று பாவேந்தர் பாடக்கேட்டுத் தலைநிமிர்கிறது’ என்னும் குறிப்போடு பாரதி தாசனுக்கு நெருக்கமானவராகிய நாவரசு, பின்னாளில் நடத்திய ‘பைங்கிளி’ என்னும் திங்களிதழில் (சித்திரை 13.4.64) ‘கண் மகிழ்ந்து போகுதடி கிளியே’ - என்னும் தலைப்பு மாற்றத்துடன் ‘கண்ணபிரான்’ என்னும் சொல்லை இரண்டு இடங் களிலும் ‘கண்ணனவன்’ என மாற்றியும் வெளியிட்டுள்ளார். 15 வா கண்ணா! இராகம் : அடாணா தாளம் : ஆதி பல்லவி வாமலர் வாயினிற் குழலூதி கண்ணா மகிழ இசைநல்கி வாழ்வு நலமுற (வா) அனுபல்லவி தாமரையோ முகம் தாமரை யோவிழி தருக உனது காட்சி இன்பம் பொழி (வா) சரணம் தேவை இல்லையோ நான்செந் தேனே தித்திக்கும் கரும்பே பெருமானே ஆவல் தணியும்படி அசைந்தாடி - என் அங்கமெலாம் மகிழும் படியே (வா) - பழம்புதுப் பாடல்கள், ப.456, 2005; ஸ்ரீசுப்ரமண்யபாரதி கவிதா மண்டலம், ஆவணி - புரட்டாசி 1983 குறிப்பு:‘பாரதிதாசன் பாடல்’ என்ற தலைப்பிடப்பட்டு, பாட்டின் அடியில் ‘தொகுப்பு - இரா. வேங்கடேசன்’ என்று ‘குறிக்கப்பட்டு ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் இதழில் வெளியிடப் பட்டுள்ளது. ‘நீ இரங்காயெனில்’ - என்ற மெட்டு இராகம் : அடாணா தாளம் : ஆதி எடுப்பு வா மலர்வா யினில் குழலூதி கண்ணா! மகிழ இசை நல்கி - வாழ்வு நலமுற (வா) தொடுப்பு தாமரை யோமுகம் தாமரை யோவிழி தருக உனது காட்சி - இன்பம் பொழி (வா) முடிப்பு தேவை யில்லையோ நான் செந்தேனே தித்திக்கும் கரும்பே பெருமானே ஆவல் தணியும்படி அசைந்தாடி - என் அங்க மெலாம் மகிழும் படியே - கண்ணா (வா) - பழம் புதுப் பாடல்கள் ப. 456 - 457, 2005; பாவேந்தருடன் பயின்ற நாள்கள், ப. 161-162 தாமரையோ முகம் = என்பதில் உள்ள தாமரை முகத்தையும், தாமரையோ விழி - என்பதில் உள்ள தாமரை (தா+மரை) என மான் விழியையும் குறிப்பன. குறிப்பு : முந்தைய பாடலின் இன்னொரு வடிவமே இங்குத் தரப்பட்டுள்ளது.பாடலின் உருவாக்கம் தொடர்பான கூடுதல் செய்தியும் பாரதிதாசனின் மாணவரான பாவலர் மணிசித்தன் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அச்செய்தி: “டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் இசைத்தட்டில் ‘நீ இரங்கா யெனில் புகலேது’ என்ற பாடலைப் பாடியிருந்தார். பலரால் விரும்பப்பெற்ற பாடல் இது. இப்பாடலை ஒருமுறை இசை நிகழ்ச்சி யொன்றில் இராமர் பாடினார். பாவேந்தர் அப்பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். இராமர் யாதவ மரபினர்; கண்ணனின் பத்தர், ஆதலால் இந்தப் பண்ணில் கண்ணனைப் பற்றியோர் பாடல் இயற்றித் தரவேண்டுமென்று பாவேந்தரை வேண்டினார். மீண்டும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி அவ் இசைக்கேற்பப் பாட லொன்றைச் சில மணித்துளிகளில் எழுதி இராமரிடம் கொடுத்தார். பஜனையில் அப்பாடலை இராமர் தவறாமல் பாடுவார். அப்பாடலை இராமர் தம் உறவினரான இரா. வேங்கடேசனுக்கும் கற்றுத் தந்தார். இன்றும் அவர் இப்பாடலை அதே இசையில் பாடி வருகிறார்.” மொழிபெயர்ப்புப் பாடல்கள் தியாகராசர் கீர்த்தனைகளின் தமிழ் மொழிபெயர்ப்புப் பாடல்கள் பாரதிதாசன் கவிஞர்களுக்கு விடுத்த வேண்டுகோள்களில் ஒன்று “பிறமொழியில் உள்ள பாட்டுக்களைத் தமிழ்ப் பாட்டுக் களாக்கித் தருக!” என்பது (1935). அவரே தியாகராசரின் தெலுங்குக் கீர்த்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது பலரும் அறியவேண்டிய செய்தி. ஸ்ரீசுப்ர மண்ய பாரதி கவிதா மண்டலம் இதழில் (1935) ‘சங்கீதப்பகுதி’ என்னும் பொதுத்தலைப்பின் கீழ் தியாகராசரின் பதினொரு கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்துள் ளார். கீர்த்தனை, கீர்த்தனம் ஆகிய இரண்டு சொற்களுமே இதழில் ஆளப்பட்டுள்ளன. பல கீர்த்தனைகள் இசை அலகிடப்பட்டுச் சுரக் குறிப்புகளுடன் அளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ‘மொழி பெயர்ப்பு’ என்றும் சில பாடல்களுக்குத் ‘தமிழ்மொழிபெயர்ப்பு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கவிதா மண்டலம் இதழை வெளியிடுவதில் பாரதிதாசனோடு பணியாற்றியவரும், அதே பெயரில் எண்பதுகளில் இதழ் நடத்தியவரும், கவிஞருக்கு மிக நெருக்கமானவருமாகிய எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் பாரதிதாசன் தியாகராசர் கீர்த்தனைகளை மொழிபெயர்க்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்கியுள்ளார். அவர் விளக்கம்: “பச்சையப்ப உடையார் என்பவர், தாளத்தில் வல்லவர். 108 தாளங்களிலும் தனக்குப் பயிற்சி உண்டு என்று சொல்லுவார். பாவேந்தரும் அவரது தாள ஞானத்தில் அதிக மதிப்பு வைத்திருந் தார்... கவிதா மண்டலம் காரியாலயத்தில் ஒருநாள் பச்சையப்ப உடையார், குயில் சிவா நாய்க்கர், தம்புசாமி முதலியார், பேராசிரியர் பஞ்சாபிகேசய்யர் முதலியோர் அமர்ந்திருந்தனர். பஞ்சாபிகே சய்யர் தெலுங்கு, சமஸ்கிருதம் போன்று தமிழில் கீர்த்தனைகள் பாட முடியாது. அப்படி ஏதோ பாடினாலும் அவை தாளத்திற்கு சங்கதி போட்டுப் பாடுவதற்கும் ஒத்துவராது என்றார். அது என்னாப்பா அப்டி சொல்றான். தமிழில் ஏன் முடியாது? எவ்வளவு கடினமான தாளத்திலும் தமிழில் பாடமுடியும். லாவணியை சவுக்கதாளத்தில் பாடுவது கடினம். பாட்டிலிருக்கிறது இதோ பார் என்று “ஸ்ரீமதி இவளார்” என்ற அவரது லாவணியைப் பாடிக் காட்டினார். உடையாரே தாளம்போடு என்றார். அப்போது அவர் பாடியது தாளத்தில் எத்தகைய அபார ஞானம் அவருக்கு இருந்தது என்பது வெளியாயிற்று. தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் முடியாது என்று மறு படியும் வற்புறுத்தினார் பேராசிரியர். பேச்சு ஒருவாறு முடிந்து, 12 மணிக்கு எல்லோரும் எழுந்தனர். கவிஞர் மட்டும் உட்கார்ந் திருந்தார். “சுப்ரமண்யா” அவன் என்ன சொன்னான்? தியாகராசர் கீர்த்தனை போல் தமிழில் பாடமுடியாது. அது என்ன தியாகராசர் கீர்த்தனை? இங்கு ஏதாவது இருக்கிறதா? இருக்கிறது என்று சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையில் மொழி பெயர்ப்பும், இசையமைப்பும் என்ற பத்து கீர்த்தனைகளை கொடுத்தேன். சாப்பிட்டு வந்தவுடன் கவிஞர் எழுதினார். “நிஜமர்ம முலயனு” என்ற தியாகய்யர் கீர்த்தனையின் மொழிபெயர்ப்பு தியாகராசருடைய முத்திரையுடன் எழுதினார். “உடையாரே” பாடு என்றார் அவருடன் சேர்ந்தும் பாடினார். அவன் என்னமோ சொன்னானே “சங்கதி” அதெல்லாம் போட்டுப் பாடு என்றார். அவரும் பாடிவிட்டு, இந்தப் பாட்டு அற்புதம், அற்புதம் என்றார். பத்துக் கீர்த்தனைகளை மொழி பெயர்த்துக் கவிதா மண்டலத்தில் வெளியிட்டோம்” - பழம் புதுப் பாடல்கள் ப. 458 - 477, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், பாரதிதாசன் மலர் - 1983; சித்திரை 1983, ப. 32. 1 ததிகூட்டி வாராய் (த்ஸனி தோடி என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு) தாளம் : சதுர்ஸ ஷாதி திரிபுடை பல்லவி ததி கூட்டி வாராய் ஓ மனமே! அனுபல்லவி தயவுடன் எனைக் கண்டு, கரம்பிடித் து(ள்)ள காலமும் சுகமனுபவிக்க ஓடிநீ(ததி) சரணம் பதிதரைக் காக்கும் பட்டாதி காரியைப் பரமார்த்த மருள் வசிஷ்டானு சாரியை அதி மன்மத ஜய சுந்தராங்கனை ப்ரதான த்யாகராஜன் மனப்போதினில் ஹரிகாம்போஜி (28வது மேளம்) பல்லவி த தி கூட் டி வா ராய் ஓ ம ன மே சூ தா பாதநீ நிததப மகரிக பா பாம பத நீ கபம அனுபல்லவி த ய வு டன் எ ’’ னைக் கண் டு க ரம்’’ பி டித் து ள ம நீ த நி ஸாதாநி ஸாகிஸா ரி நீ ஸ ஸ நி தநி ஸா ரிகா கா ல மும் சு க மனு ’’ப விக் க ஓ டி நீ ஸநிக ரீ ஸா ஸநி நிதி தாரீத நிஸா ஸாரிஸ நீஸநி தாநிதபா மக மா சரணம் ப தி த ரைக் காக் கும் பட் டா தி கா ரி யைப் தா தா நீ தா பா நிநிதப மகா மா பா மகரீ கா மா ப ர மார்த் த ம ருள் வ சிஷ் டா னு சா ரி யை ச நீ தபமா ரிக மக கரி ஸா ஸா சா மா பாகாமபா பா (இதற்குமேல் அனுபல்லவியைப் போன்றது) - பழம் புதுப் பாடல்கள் ப. 461-462, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.31, வெ. 2, 1935 குறிப்பு: இதழில் இடம்பெறும் தியாகராசர் கீர்த்தனங்களின் தமிழாக்கப் பாடல் களில் முதற்பாடலாக அமைவது இது பாடலுக்கு அடுத்து‘ஹரிகாம்போஜி’ ‘28வது மேளம்’ என இராகதாளம் குறிக்கப்பட்டுப் பல்லவி, அநுபல்லவி, சரணத்தின் முதலிரண்டடிகள் ஆகியவற்றுக்கு இசை அலகிடப்பட்டுச் சுரக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன ‘இதற்குமேல் அனு பல்லவியைப் போன்றது’ எனுங்குறிப்பு இறுதியில் இடம்பெற்றுள்ளது. 2 ஓர் இசையாம் அமுதார்ந்(து) ராகஸூ தாரஸபானமுஜேசி என்ற கீர்த்தனத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு இராகம் : அந்தோளிகா தாளம் : ஆதி பல்லவி ஓர் இசையாம் அமுதார்ந்திவண் நீயே ஓதெங்கணும் மனமே! (ஓர்) அனுபல்லவி யோக யாக த்யாக யோக பலம் உளதாம் சரணம் சதாசிவ மயமெனும் நாதோங்கா ரஸ்வர அறிஞர் ஜீவன் முக்தரென த்யாகராஜன் அறியும் (ஓர்) - பழம் புதுப் பாடல்கள், ப. 463, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.10, வெ. 2, 1935 3 இதர தெய்வமெனில் இதர தைவ முல வல்ல என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு இராகம் : சாயாதரங்கிணி தாளம் : ரூபகம் பல்லவி இதர தெய்வமெனில் உன்ற னைவிட ஸெளக்யமா ராமா! அனுபல்லவி மதபேதமிலாது சதா மனதில் நினைவு கொண்ட எனக்கு சரணம் மனதுதெரிந்து காத்திடினும் மறந்திடினும் நீயே உனதாள் எனக்கொள இதுநாள் த்யாக ராஜன் அண்டிய (இ) - பழம் புதுப் பாடல்கள், ப. 464, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.10, வெ. 2, 1935 4 இலகு குஞ்சி சூழ்முகம் அலக லல்ல வாடககநி என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இராகம் : மாயமாதி தாளம் : ரூபகம் பல்லவி இலகு குஞ்சி சூழ்முகம் கண்டே யாதா நந்தம் முனி பெற்றானோ அனுபல்லவி மலியும் கோலமுற மாரீசனை மதமழித்த வேளை யிலும் - இலகு சரணம் முனியின் சைகைதெ ரிந்துசிவ தனுவினை முறிதரு சமயந் தனிலேயும் த்யாக ரா ஜனெந் நாளிலும் வந்திக்கும் - இலகு இராகம் : மாயமாதி தாளம் : ரூபகம் பல்லவி இ ல கு குஞ் சி சூழ் மு கம் கண் டே யா தா நந் தம் மு னி பெற் றா ப ம ரி ஸா ஸ நிஸரீ ரீ ரீ நிஸ ரி மாரி ரிமப பா ப ப ம பம ரிஸ னோ ரீ அனுபல்லவி ம லி யும் கோ ல மு ற மா ரீ ச னை ம த ம ழித் தவேளையி லும் ரீ ரீ ரி ரீ ரி ரிஸ ரிம ரீ ஸ ரிரி ஸ ரிஸ நி நி ப பநிஸாஸ ஸநிபமரி ம சரணம் மு னி யின் சை கை தெ ரிந் து சி வ த னு வி னை மு றி தரு ச மயம் ப ம ப ரீ மரிப ம பல பம ரி ஸ பநி ப பநி ம ப ம ரிமபாம பபப (இரண்டாவது பாகம் அனுபல்லவியைப் போன்றது) - பழம் புதுப் பாடல்கள், ப. 465-466, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.25, வெ. 3, 1935 குறிப்பு : பாடலுக்கு அடுத்துப் பல்லவி, அனுபல்லவி, சரணத்தின் முதலிரண் டடிகள் ஆகியவற்றுக்கு இசை அலகிடப்பட்டுச் சுரக்குறிப்புகள் தரப் பட்டுள்ளன. 5 ப்ருந்தாவன லோல ப்ருந்தாவன லோல! என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு இராகம் : தோடி தாளம் : ரூபகம் பல்லவி ப்ருந்தாவன லோல! கோவிந்த! அரவிந்த முக அனுபல்லவி சுந்த ராங்க! திகிரிகை ஏந்து சுடர்நீ அடியவர் பகைசிந்தும் - ப்ருந்தா சரணம் காத்தருள் வாய் திருவே மகிழ் மதனா அடியார் நண்ப ராம தாஸன் தாஸன் த்யாக ராஜன் துதி சரித! - ப்ருந்தா இராகம்: தோடி தாளம்: ரூபகம் பல்லவி ப்ருந் தா வன லோல கோ விந் த அ ர விந் த மு க மா கா ரிஸ தநி ஸா ஸரீ கமமா பா தா ப ம கா ஸரீ கா அனுபல்லவி சுந் த ராங் க திகி ரி கை ஏ ந் து சு டர் நீ அ டி ய தா தப கா ம ப த நி ஸ h ஸ ரீ ஸ நீத ப த சரணம் காத் த ருள் வாய் தி ரு வே ம கிழ் ம த னாஅ டி யார் நண் ப பா ம ப பமகபா ப த நீ ஸ ஸ த நி ஸா ஸா ஸநி நீஸரீஸரீ ரா ம தா ஸன் தா ஸன் த்யா க ரா ஜன் து தி ச ரி த தா த க்ரி ஸ தா நி ஸா ஸ ஸா நீ த பத நீத பம சகரிக - பழம் புதுப் பாடல்கள், ப. 467-468, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.26, வெ. 3, 1935 குறிப்பு: பாடலை அடுத்துப் பாடல் முழுமைக்கும் இசை அலகிடப் பட்டுச் சுரக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. 6 நீலவண்ணம் வாய்ந்தோய் ச்யாம சுந்தராங்க என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பல்லவி நீல வண்ணம் வாய்ந்தோய்! சகல சக்தியும் நீயேடா அனுபல்லவி தாமச முதல் நவை தீர்ந்தோய் தரணி இலகும் ராம சந்த்ரா! சரணம் துஷ்டர்களின் கொழுமை1 சாடிச் சிஷ்டர்களின் இதயமதை நாடும் இஷ்டதெய்வமும் நீ யாவாய் புவியில் த்யாக ராஜன் வேறா? இராகம் : தன்யாஸி தாளம் : ரூபகம் பல்லவி நீ ல வண்ணம் வாய்ந் தோய் ச க ல சக் தி யும் நீ யே டா பா ப கா ம பா ப மக ம ப நீ ஸ ரி ஸா பநிஸாபநிஸாநிதபா அனுபல்லவி தா ம ச மு தல் ந வை தீர்ந் தோய் த ர ணி இ ல கும் ரா ம சந் சா கா கா கா கா ரீ மக ரீரி ஸ ஸாஸ ஸா நிதா ப ப கா ம கம ப ரா பநி ஸா 1. ‘கொடுமை’ என இருப்பின் நன்று சரணம் துஷ்டர்க ளின் கொ ழு மை சா டி சிஷ்டர் க ளின்இத ய ம தை பா பா மகரீ ஸ மக ம பா ப ப நி ஸ ஸ ஸ பம பத ப நா டும் மகா ரி இ ஷ் ட தெய் வ மும் நீ யா வாய் பு வி யில் த்யா க ரா ஜன் வே றா கா க கா த க காமகரீ ஸா ஸ ஸ ஸ ஸ நிதா ப கா ம கமபநிஸா - பழம் புதுப் பாடல்கள், ப. 469-470, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.7, வெ. 4-5, 1935 குறிப்பு : பாடலுக்கு அடுத்துத் ‘தன்யாஸி’ ‘ரூபகம்’ என இராக தாளம் குறிக்கப் பட்டுப் பாடல் முழுமைக்கும் இசை அலகிடப்பட்டுச் சுரக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. 7 துளசி, வில்வம், மல்லிகை துளசி பில்வமல்லி என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் தமிழ்மொழிபெயர்ப்பு பல்லவி துளசி வில்வம் மல்லிகை ஜாஜி வனசாதியின் பூசைகைக் கொள்வாய் அனுபல்லவி மலர்மேலயன் சனகாதி கரார்ச்சித! மழைத்தேகா! சுநாபா; நல் ஆதவன் இரு தயோததியின் சந்த்ரா சுகந்த (துளசி) சரணம் உரமதில் முகமதில் சிரமதில் புயமதில் கரமதில் நேத்ரமதில் திருவடிகளில் கருணையால் அன்பினால் பரமா நந்தமதால் அநுதினமும் ஸ்ரீத்யாகராஜூ நிர்உபாதியுடன் அர்ச்சிக்கும் (துளசி) இராகம் : கேதாரகௌள தாளம் : ஆதி பல்லவி து ள சி வில் வம் மல் லி கை ஜா ஜி ரி ரி ரீகரிரீகரி ஸா ஸ நிஸரீ ஸ ரிஸநித தா ப வ ன ஜா தி யின் பூ சை கைக் கொள் வாய் ப ப பா ரீ ரி ரீ ரிமபா நிகதப மாகா ரீகரி அனுபல்லவி ம லர் மே ல யன் ச ன கா தி க ரார்ச்சி த ஸ ஸ ஸா ஸரி தா தா பா பாநி ஸ ரீ ரீ ரீ ரி ம ழைத் தே கா சு நா பா நல் ஆ த வன் இரு ரி ரி மக ரி ரி கரி ஸ ரி ஸா நி நி ஸா த யோத தி யின் சந்த் ரா க கந்த ரி ஸா நி த ப பா ம மக ரிகரிஸ சரணம் உ ர ம தில் மு க ம தில் சி ர ம தில் பு ய மதில் ப பா ப பா மா கரி ம பா ரி மா ப தா தப மகரி கரீ க ர ம தில் நேத்ர ம தில் தி ரு வ டி க ளில் தா பா ம தா ரீ மா கரி ஸ நி ஸா ரி மா மகநீ மபா க ரு ண யால் அன் பி னால் ப ர மா நந் த ம தால் ஸ ஸா ஸ ஸா நித பார் நீஸா ஸந ஸா ரீஸா நித பா நீ ஸா அ நு தி ன மும் ஸ்ரீ த்யா க ரா ஜூ ரி ரி மக ரி ரி கரி ஸாரி ஸ நிதபாநி ஸா நிர் உ பா தி யு டன் அர்ச் சிக் கும் ஸ ரி ஸா நி த பா ம கா ரிரிகஸ - பழம் புதுப் பாடல்கள், ப. 471-472, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.8, வெ. 4-5, 1953 8 நிச மர்ம மதை நிஜமர்ம முலனு - என்ற கீர்த்தனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பல்லவி நிசமர்ம மதை அறிந்துள்ள பேர்களை நீ அலையவிடல் ஏதுக்கோ ராமா! அனுபல்லவி பசுபதி பங்கயன் அரிமும் மூர்த்தி பாரில் தெய்வம் யாவை யுமுன் லீலை என்னவே நடத்தும் (நி) சரணம் சுருதி சாஸ்த்ர புராணிக ராதி தொன்மத அறிஞரைப், பேர்துதிப் போர்தமை, அரசர்தமை, அங்கமதில் அபி மானமே ஆக்கும் ஆக்கமே தியாகராஜன் போற்றும் உன் (நி) இராகம் : உமாபரணம் தாளம் : ஆதி பல்லவி நி ஜ மர் ம ம தை அ றிந் துள் ள பேர் க ளை ரி க மாபா தநி தநி பதநீ ஸ நீ ப ம கா ம ரி நீ அ லை ய விடல் ஏ துக் கோ ரா மா பமகம ஸ்ரீ ல ஸநிஸரி ஸநிபா நிஸரீ ரி கமபம கம ஸமஸ அனுபல்லவி ப சு ப தி பங் க யன் அ ரி மும் மூர்த்தி ம ப த நி ஸாநி ஸா ஸ ரிக ம ரீ ஸா ஸநிப பா ரில் தெய் வம் யா வை யுமுன் லீ லை என் ன வே நடத் தும் தா நி ஸா நி பா ம ரிகமப தா நி பா ம கமபம கமரிஸ சரணம் சுரு தி சாஸ்த் ர பு ரா ணி க ரா தி சூ ப பா பம ரீ கா ம ரீ ஸா ஸா நி தொன் ம த அறிஞ ரைப்பேர் து திப் போர் த மை பா ரி ரி ரீ ரிக ம ரிகமா ப ப தநிஸநிஸா நி பா (இதற்குமேல் அனுபல்லவியைப் போன்றது.) - பழம் புதுப் பாடல்கள், ப. 473-474, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.23, 1935 குறிப்பு: தலைப்பில் ‘தமிழ்’ எனுஞ் சொல் விடுபட்டுள்ளது. 9 மறைவென்ன காண் மருகேலரா என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு பல்லவி மறைவென்ன காண் ஓ ராகவா? அனுபல்லவி மறைவேன் அனைத்தின் உருவான மேலோய் மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோய் - மறை சரணம் யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில் தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே னையா தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன் காக்கவேண்டும் என்னை த்யாகராஜன் அன்பே! - மறை இராகம் : ஷயத்தஸ்ரீ தாளம் : ஆதி பல்லவி ம றை வென் ன காண் ஓ ரா க வா ப ம பா ம கஸாநிஸ கா ம பா அனுபல்லவி ம றை வேன் அ னை த் தின் உ ரு வா ன மே லோய் த த தா நி த மா த நி ஸா நி தநி ஸா ம தி யோ டு சூர் யன் வி ழி யாய்க் கொண் டோய் ஸ க ஸா ஸா க ஸா நி ஸ நீ த தமா சரணம் யா வும் நீ யே என் றென் அந் த ரங் க ம தில் பா பா பா ம பா மா க ஸ கா ஸ க ஸா தே வி ரத் தில் தே டித் தெ ரிந் து கொண் டே னை யா ஸ நி ஸா நி ஸா ஸா ஸ ஸ ஸா கா க மா மா (இதற்கு மேல் அனுபல்லவியைப் போன்றது) - பழம் புதுப் பாடல்கள், ப. 475, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.24, வெ. 6,1935 குறிப்பு: தலைப்பில் ‘தமிழ்’ எனுஞ்சொல் விடுபட்டுள்ளது. 10 ரசிகனே நற்சாம ஸரச ஸாமதான என்ற கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பு பல்லவி ரசிகனே நற்சாம தானபேத தண்ட சதுரன் நின்னின் தெய்வம் ஏது? காத்தருள் (ரசி) அனுபல்லவி தசமுகன் சிவபக்தனா யிருந்தும் நிசமிதை அந்நாள் அறியவில்லை யன்றோ! (ரசி) சரணம் இதமதான வார்த்தை யாவும் நன்றுரைத்தாய்! ‘எனதயோத்தி நாடுஉன” தென்றனை பதவி சோதரனுக் கீந்தும் வாராததால் அதமே நீபுரிந்தாய் த்யாக ராஜன் அன்பே! (ரசி) - பழம் புதுப் பாடல்கள், ப. 476, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.24, வெ. 6, 1935 குறிப்பு: தலைப்பில் ‘தமிழ்’ எனுஞ் சொல் விடுபட்டுள்ளது. 11 மனசே ஸ்ரீராம சந்த்ரனை “மனஸா ஸ்ரீ ராமசந்த்ருனி” என்ற தியாகராஜ கீர்த்தனையின் தமிழ்மொழி பெயர்ப்பு பல்லவி மனசே ஸ்ரீ ராம சந்த்ரனை மறந்திடேல் ஏமாறாதே ஓ - (மனசே) அனுபல்லவி முனர் புற்றினில் உற்றிடு மௌனி செய்த மூன்று நால த்யாமலை பார்ப்பையே (மனசே) சரணம் ஆக்கல் காத்தல் தீர்த்தல் ஆன செயலை நலமல்ல எனஎணித் திரிமூர்த்தி களுக்களித்துப் பாக்கியம் அகலா ஸத் பக்த மனோ பீஷ்ட முடிக்கும் த்யாகராஜன் (மனசே) பல்லவி இராகம் : ஈசமனோகரி தாளம் : ஆதி ம ன சே ஸ்ரீ ரா ம சந்த் ர னை ப ப தானிதபா பமகாமா ரீ ரி கபகரி ஸா ஸா ம றந்தி டே ல் ,, ஏ மா றா தே,, ஓ நீ நீ நீ ஸா ,, நிஸரிக கா ரீ கா ரிஸாரிகபம அனுபல்லவி மு னர் புற் றினில் உற் றிடு மௌனி செ ய் த நி நி ஸா நி ரி ஸரிகா ரிக மாரீ கரி ஸா மூ ன்று நா லத் யா ய மவை பார் ப்பை யே ஸா நி நீ தா பா ப ம ரீ காரி ஸ ரிகப சரணம் ஆ க் கல் காத் தல் தீர்த் தல் ஆ ன செ ய லை பா ப பா ப பதநீ த பாமா ரிக மா ரி ஸா ந ல மல்ல எ ன எ ணித்திரி மூர்த்தி களுக் களி த்து ரீ க ம ப பா தாநீ தனஸா நிதநீ த பா - பழம் புதுப் பாடல்கள், ப. 477-478, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், யுவ, புரட்டாசி (1935), வெ. 7, ப.29 இந்திய விடுதலை இயக்கப் பாடல்கள் பாரததேவி வெண்பா விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப் பண்கொள் குமரி பணிதாளாய் - மண்கொள் வளமேதன் மேனியாய் வாய்ந்த“தாய்” வீரர் உளமேதன் மேனிக் குவப்பு. ² வந்தே மாதரம் ஜன்ம பூமியின் சிறப்பு வெண்பா தேர்நின்ற வீதிச் செயபேரி கைமுழங்கப் போர்நின்ற வீரர்குலம் பூத்தநிலம் - பார்நின்று அடல்வளர்த்துப் பாரதநற் புத்திரன்நான் ஆக உடல்வளர்த்த நாடுஎன் உயிர். குறிப்பு: அடல் வளர்த்து - (என் தேக) பலத்தை வளரச் செய்து காந்தியடிகளும் கதரும் பறை முழக்கம் சுவை : வீரம் “அன்னியர் நூலைத் தொடோம்” என்றசேதி அறைந்திடடா புவி முற்றும் - எங்கள் அறுபது கோடித் தடக்கைகள் ராட்டினம் சுற்றும் - சுற்றும் – சுற்றும் இன்னும் செல்லாது பிறர்செய்யும் சூழ்ச்சிகள் என்று சொல்லிப் புயம் தட்டு - அட யானையின்மேல் வள்ளுவா சென்று நீபறை கொட்டு - கொட்டு – கொட்டு தடக்கைகள் - நீண்ட கைகள் இன்னல் செய்தார்க்கும் இடர்செய்திடாமல் இராட்டினம் சுற்றென்று சொல்லும் - எங்கள் ஏதமில் காந்தியடிகள் அறச்செயல் வெல்லும் - வெல்லும் – வெல்லும் கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல் கழறுகின்றேன் அதைக் கேளே - நீவிர் கதரணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத் தூளே - தூளே – தூளே இன்னல் - துன்பம் ஏதமில் காந்தியடிகள் - குற்றமில்லாத காந்தியடிகள் கன்னல் - கரும்பு பால்நுரை போலப் பருத்தியுண்டு சொந்தப் பாரத தேசத்தில் எங்கும் - எனில் பண்டைமுதல் இழை நூற்பதிலே யாம் சிங்கம் - சிங்கம் - சிங்கம் வானம் புனல்சுடர் நாணும் படிஉடை வர்ணமும் சொர்ணமுங் கொண்டு - பெரும் வையம் களித்திட நெய்யும் திறம்எமக் குண்டு - உண்டு - உண்டு பண்டைமுதல் - ஆதி முதல் சுடர் - சூரியன் ஆனஇந் நாட்டினைச் சந்தையென் றாக்கிய அந்நியர் போக்கையும் கண்டோம் - எனில் ஆக்கந் தருவது சக்கரம் ஆம்எனக் கொண்டோம் - கொண்டோம் - கொண்டோம் பானல் விழியுடை யாளெங்கள் தாயிந்தப் பாரினை யாள்பவள் என்றே - நெஞ்சில் பாயும் எழுச்சிக் கனல்சொன்ன தாகச்சொல் நன்றே - நன்றே - நன்றே பானல் விழி - பானல் பூப்போன்ற கண் எழுச்சிக்கனல் - ஆவேசத் தீ சுதந்தரதேவியும், கதரும் சுவை: சிங்காரம் இராகம்: பியாக் தாளம்: சாப்பு ஆளை மயக்கிடும் மாதொருத்தி - உடல் அத்தனையும் பொன்னை ஒத்திருந்தாள் - அவள் பாளை பிளந்த சிரிப்பினிலே - என்னைப் பார்த்துரைத்தாள் “எந்த நாளையிலே - உன்றன் தோளைத் தழுவிடக் கூடும்” என்றே - “அடி! சுந்தரி உன்பெயர் ஊர் எதெ”ன்றேன் - அவள் “காளி யனுப்பிய கன்னி”யென்றாள் - என்றன் காதற் சுதந்தர மங்கையன்றோ அவள் - ஆளை “இந்தத் தினம்இந்த நேரத்திலே - நல்ல இன்ப மிகுக்கக் கலந்திடுவோம் - இதில் பிந்தி யெதற்கடி மாதரசீ இங்குப் பேசிய நேரமும் வீண்கழித்தோம்” - என்று சிந்தை களிக்க உரைத்துநின்றேன் - “ஒரு சேதியிருக்குது கேள்”என்றனள் - அந்த விந்தையைக் கேட்கவும் ஆவலுற்றேன் - என் வேட்கை பொறுக்கவும் கூடவில்லை - பின்பு - ஆளை கன்னி யுரைத்தது கேட்டிடுவீர்; - உள்ளக் காதல் இருப்பது மெய்எனிலோ - அட சின்ன இராட்டின நூலிழைப்பாய் - அதில் தீட்டின்றி நெய்த உடைஉடுப்பாய் - வரும் அன்னியர் நூலைத் தலைகவிழ்ப்பாய் - அதற் கப்புறம் என்னைக் கலந்திடுவாய்” - என்று கன்னி யுரைத்து மறைந்துவிட்டாள் - அவள் கட்டளை தன்னை மறப்பதுண்டோ - அந்த - ஆளை - ஆத்ம சக்தி, ஜுலை, 1923 குறிப்பு: இராட்டினத்தில் நூலிழைத்து செய்து உடுத்தவேண்டும். அந்நியர் நூலைத் தொலைக்கவேண்டும் அதன் பின்புதான் சுதந்தரம் பெறமுடியும் என்பது இதன் கருத்து. தேசத்தாரின் பிரதான வேலை சுவை: சாந்தம் நாடகங்களில் “கொச்சிமலை குடகுமலை எங்களது நாடு” என்று பாடுவதுண்டு. அந்தக் குறத்திப் பாட்டின் மெட்டு. பால்நுரைபோல் பாரதத்தில் பஞ்சுவிளைப் பீரே - நல்ல பஞ்சுவிளைப் பீரே - அந்தப் பஞ்சுதனைச் சுத்திசெய்வீர் பனிமலைபோல் நீரே. தேனருந்தும் ஈக்களெல்லாம் சேர்ந்து மொய்த்தல்போலே - மிகச் சேர்ந்து மொய்த்தல்போலே - முழுத் தேசமின்று ராட்டினத்தைச் சேர்ந்து சுற்றுவீரே. ஆனமட்டும் சிலந்தியிழை போல மெலிதாக - அது போல மெலிதாக - உம் ஐந்துவிரல் தேர்ச்சியிலே அழகிழை நூற்பீரே. ஏனத்தினிற் சோறுகேட்கும் ஏழையரும் யாரும் - நம் ஏழையரும் யாரும் - பஞ் சிழையை நூற்றுத் தறிநெய்வதால் கொத்தடிமை தீரும். தாய்நிலம்போய் மற்றவரைத் தலைவணங்க லாமோ? - தன் தலைவணங்க லாமோ? - இனித் தறித்தொழிலின் நன்மையினை மறப்பதுண்டோ நாமே? காய்நினைத்துக் கனியிழக்கும் கதைமறப்பீர் நீரே - அந்தக் கதைமறப்பீர் நீரே - உங்கள் கதிநினைத்து வறுமையென்னும் கனல்அவிக்க வாரீர். போயழிக்கும் நமதுரிமை போக்கநினைப் போரை - மெல்லப் போக்கநினைப் போரை - மிகப் போற்றுகநீர் இப்பணியெப் போது மறவாமே தோய்மதுவாய்க் காதில்வந்து வீழ்ந்ததொரு வாக்கு - வந்து வீழ்ந்ததொரு வாக்கு - அது தொல்லைகெட வந்துதித்த காந்திஅண்ணல் வாக்கு “கதரணிவீர்” என்றுரைத்த காந்தியண்ணல் ஆணை - எழிற் காந்தியண்ணல் ஆணை - அதைக் கருதிடுவீர் அதுஉமக்கு நாரதனார் வீணை கதரணிவீர் என்றமொழி அடிமையுற்ற நேரம் - நாம் அடிமையுற்ற நேரம் கருதிடுவீர் அதுநமக்கு நான்மறையின் சாரம் கதரணிவீர் எனும்அடிகள் காந்தியின் வாய்க்குமுதம் - நல்ல காந்தியின் வாய்க்குமுதம் - மிகக் கருதிடுவீர் அதுநமது வாழ்வினுக்கோர் அமுதம் கதரணிவீர் என்னும் வார்த்தை யுடனொழுகும் அன்பும் - அத னுடன்ஒழுகும் அன்பும் - நம் காந்தியண்ணல் அன்புமொழி யால்விளையும் இன்பம் சதுர்நமக்குத் தோளிலுண்டு மானமுண்டு பாரீர் - நல்ல மானமுண்டு பாரீர் சதைவருத்தித் தாயடிமைத் தனம்அகற்ற வாரீர். விதிநமக்கு வாய்த்ததுண்டோ வேற்றுவர்கை பார்க்க - நாம் வேற்றுவர்கை பார்க்க விளையும்பஞ்சில் விரல்பொருந்த விடுதலைநீர் காண்பீர் அதிகமுண்டு விளைவுநிலம் அதிகமுண்டு மக்கள் - இங் கதிகமுண்டு மக்கள் நிதிகளெலாம் பிறருக்கிட்டு வறுமைகொள்ள வேண்டாம் கதரணிவோம் ஒன்றுகூடிக் கலிதொலைக்க நாமே - தீக் கலிதொலைக்க நாமே - தீக் கலிதொலைத்துக் கிருதயுகம் காணப்பெறு வோமே. சொற்பொருள் : பனி - வேலை, ஆணை - கட்டளை மது - தேன், வாய்க்குமுதம் - வாயாகிய அல்லி மலர், சதுர் – பலம் இராட்டினச் சிறப்பு சுவை : சிங்காரம் (“தன்னைய றிந்தின்பமுற வெண்ணிலாவே” என்ற மெட்டு) கூட்டமுதம் நானுனக்கு ராட்டினப் பெண்ணே - அடி கொஞ்சுகிளி நீஎனக்கு ராட்டினப் பெண்ணே பாட்டினிக்கப் பாடுகின்ற ராட்டினப் பெண்ணே - பண்டு பாரதத்தி லேபிறந்த ராட்டினப் பெண்ணே ஊட்டமுறத் தோளுரமும் உடலழகும் - எனக் கூக்கமும் கொடுத்துவரும் ராட்டினப் பெண்ணே காட்டுமலர்த் தேனுருசி வண்டறிதல்போல் - நாம் கைகலந்த பின்புசுகம் கண்டு மகிழ்ந்தேன், தொட்ட கைகள் விட்டதில்லை மாதமும் பல - உன்னைச் சூல்படுத்தி என்னை இன்பம் தோய வைத்தன எட்டுத்திசை யோர்அடையும் இன்பமனைத்தும் - நமக் கின்றளித்த தெய்வமதை என்றும் மறவோம் சுட்டிநமை வாழ்த்துதடி இந்த உலகம் - நாம் துள்ளிவிளை யாடஒரு பிள்ளை பெற்றதால் இட்டுவழங் கும்படிசெய் இவ்வுல கெங்கும் - நாம் ஈன்றசுதந் தரப்பிள்ளை காப்ப ரிசியே. அன்னைக்கு ஆடை வளர்க சுவை : சோகம் பஃறொடை வெண்பா “ஆவி இழக்கலாம் ஆடை இழப்பதுண்டோ கூவிக் குரல்இழக்கும் கோதைதுயர் கண்டிருந்தும் வீரர்களும் மன்னர்களும் மீட்கக் கருதீரோ! காரிகைஎன் மானமுங்கள் கண்முன் இழப்பதுண்டோ?” என்று துடித்தழுதாள் அன்றந்தப் பாஞ்சாலி சென்றுதுர்ச் சாதனன்தான் சேலை பறிந்திடுங்கால் முப்பத்து முக்கோடி மொய்ம்புடைய மைந்தர்களை இப்புவியிற் பெற்ற எழில்பார தத்தாளின் ஆடை பறித்தார் அதிகாரம் கொண்டவர்கள் ஓடி அவளின் உடைமீட்க வேண்டாமோ! பஞ்சு விளைவிக்கப் பறந்தோட வேண்டாமோ மிஞ்சு பொதிபொதியாய் மெல்இழைதான் நூற்கோமோ நெய்துநெய்து வேறு நிலத்தார்க்கும் நாமுதவச் செய்து குவியோமோ சிறந்த கதராடை ஓகோநம் பாரதத்தாய் உற்றதன் மைந்தரிடம் சோகத்தால் வாய்விட்டுச் சொல்லுவதும் கேளீர் :- “ ஆவி யிழக்கலாம் ஆடை இழப்பதுண்டோ கூவிக் குரலிழக்கும் கோதைதுயர் கண்டிருந்தும் வீரர்களும் மன்னர்களும் மீட்கக் கருதீரோ காரிகைஎன் மானமுங்கள் கண்முன் இழப்பதுண்டோ” கேட்டீரோ நம்மவரே கீர்த்தியுள்ள பாரதரே? வாட்டுகின்ற தந்தோநம் மாதாவின் இம்மொழிகள் “தீயார் துகில்பறித்துத் தீர்க்கின்றார் என்மானம் மாயா மலர்க்கண்ணா வந்துதுயர் தீர்த்திடுவாய்” என்று பாஞ்சாலி இசைக்க அதுகேட்டுச் சென்று மலர்க்கண்ணன் “ சித்திரஞ்சேர் ஆடை வளர்ந்திடுக” என்றான் அறம்வளர்க்க வந்தோன் - வளர்ந்ததுவாம் வண்கடல்போல் வான்போல் மலையைப்போல் - இங்கதுபோல் தேசம் இளமைந்தர் நம்மிடத்தில் சிங்கம் கதறுதல்போல் தேம்பி அழுதழுது “தீயர் துகில்பறித்துத் தீர்க்கின்றார் என்மானம் மாயா மலர்க்கண்ணா வந்துதுயர் தீர்த்திடுவாய்” என்று ரைத்திட்டாள் இதனைச் செவியுற்றுச் சென்றுகண் ணக்காந்தி “ சித்திரஞ் சேர்ஆடை வளர்ந்திடுக” என்றான் அறம்வளர்க்க வந்தோன் - வளர்க வளர்கநம் வாழ்வு. பாரததேவி வாழ்த்து அகவல் பொன்னிறக் கதிர்விளை நன்செயிற் புத்தொளி வடிவமர் அன்னாய் நின்னெழில் வாழ்க! கணுவகல் கரும்பின் இனியநற் சாறும் கதலியும் செந்நெலும் உடையைநீ வாழ்க! தென்றலின் குளிரும் தேன்சுவைப் பழமும் நன்றியல் சோலை நலத்தினாய் வாழ்க! வானுயர் பனிமலை வண்புனற் கங்கையென் றுலகெலாம் உரைக்கும் பெரும்புகழ் உடையைநீ முப்பது கோடியர் முனிவராய் வீரராய்ப் பெற்றிடும் தேவிநீ வீறுகொள் பெற்றியாய், கலிப்பகை வென்றே தலைநிமிர் குன்றனாய், கடையுகம் முற்றினும் திறல்கெடாக் காளிநீ, அறமெனும் வயிரக் குலிசத் தோளுடை அன்னைநீ வாழ்க! அன்னைநீ வாழ்கவே! வந்தேமாதரம். - ஆத்ம சக்தி, பிப்ரவரி 6, 1923 ² வந்தே மாதரம் பாரததேவி வாழ்த்து வெண்பா சொல்வாய்ந்த 1பாரதத்தைத் தோளில் அறங்காக்க வில்லாய்ந்த என்றன் 2விறல்நாட்டைக் - கல்லாய்ந்த விண்ணி லுயர் நல்லிமய வெற்பாளை நெஞ்சமே! மண்ணிலுயர் தாளென்று வாழ்த்து, சக்தி பாட்டு இராகம் : சஹானா தாளம் : ஆதி “அப்பா பழநிமலை” என்ற மெட்டோடு ஒருவாறு ஒத்தது. பாரத நாட்டுக்குத் தாயடி நீ! - உன் பாதத்தை நம்பிய 1சேயடி யான்! பாரத நாட்டுக்கு வந்த கதி - தனைப் பார்த்திருந்தும் அதைத் தீர்த்த தில்லை அடி! - பா வீரர்தம் நாட்டுக் குலதெய்வமே - எம் வெற்றிப் புயத்தினில் வாழ்பவளே! சாரஎம் வாழ்வில் சனிபுகுந்தான் - இங்குச் சக்திக்குத் தொண்டர் தலைகுனிந்தோம் அடி! - பா இட்ட தலைவிதி தீர்வதில்லை - என்ற ஈனக் கருத்திலும் உண்மை யுண்டோ? துட்ட விதிகளிற் கோடியினர் - தமைச் சூரைப் படுத்திய சுந்தரியே! அடி! - பா வட்ட நிலாநின் முகத்தொளியில் - எம் வாழ்க்கையின் வெற்றி மலர்வ தடீ! தொட்டவை ஓங்க வசப்படுவாய் - எம் தொழும்பு2 போக்கிடு! சுந்தரியே! அடி! - பா காளையர் எழுச்சி “சென்று கனிபறித்துக் கொண்டு” என்ற மெட்டு. மன்னும் இமயமலை வடக்காம் - புகழ் வாய்ந்திருக் கும்1குமரி தெற்காம் - நாம் பன்னும் தொடர்ச்சிமலை இரண்டு - மற்ற பக்கங்களில் அமைந்த துண்டு. பாரதநன் னாடு பழமைபெற்ற நாடு - தினம் சாரத் தமிழிலதைப் பாடு! முன்னை வணங்கும் உமைபோன்றாள் - அவள் முப்பது கோடி மைந்தர் ஈன்றாள் அன்னை வாழ்கஎன வாழ்த்தி - மற்றும் அவளுக் குறும்பகையைத் தாழ்த்தி, ஆர்வத்தினில் ஏறு தாரணிக்குள் வீறு - கொண்ட பாரதபுத்ர னென்று கூறு. ஆய புகழ்மிகுந்த தேயம் - இந்நாள் அடிமை அடைந்ததென்ன மாயம்! - உனைத் தாயதோ அழைக்கின் றாளே - தன் தளையை நீக்கச்சொன் னாளே தமிழன் எலிஅன்று தாவும் புலிஎன்று - நீ தாரணி அறியச்செய் இன்று. வாய்மை2 படைத்துப் பொய்ம்மை விடுப்பாய் - நீ வல்லாளன் என்று பெயர்எடுப்பாய் - மிகத் தூய்மை உடைய உன்றன் தாய்க்கு - நீ தொன்மை நிலையை உண்டாக்கு. சுடர்அடிக்கும் அங்கம் உடன்பிறந்த சிங்கங் - களைத் தொண்டுசெய வரச்சொல் எங்கும் அடிமை நீங்க இந்த நரியும் - மண்ணில் ஆர்க்கும் உயர்வென்பது தெரியும் அடிமையாகும் அந்த காரம் - அதை அகற்றினால் தெரியும் வீரம் ஆண்மையினில் ஒழுகு வேண்டுந்தொழில் பழகு - நின் மாண்பு3டைய குலத்துக் கழகு. உடைமை சிறந்த 4இந்துஸ் தானம் - தன் உரிமை பறிகொடுத்த தீனம் - உன் கடமை தனைநினைந்து பாராய் - குறி கண்ணிற் றெரிகின்றது நேராய்! காளையுளம் செல்க! கதிபுவிக்கு நல்க! - உன்றன் தோளை யுயர்த்திநாடி வெல்க! - ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 தேசீய விடுகவிகள் கங்கைநதி தலையில்உண்டு சிவனார் அல்ல. காலடியிற் குமரியுண்டு ராமன் அல்ல. சங்கையற்ற வயதுண்டு கிழவி அல்ல, சாத்திரத்தின் ஊற்றனையால் கலைமா தல்ல. எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன் அல்ல. ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப் பல்ல. மங்கைஎன்று பாடிடுவர் புலவ ரெல்லாம். மற்றிதனை இன்னதென வழுத்து வீரே. (1) “ பாவம் ஒன்றினுக்கே அஞ்சும் பழக்கம் ரணசூ ரருக்கும் சலியாத ஆண்மை தவமே தனக்குத் துணையென்ற எண்ணம் வானொத்த வாழ்வு வாய்ந்திட்ட கீர்த்தி சிவனார் தமக்கே பிரியாத தொண்டு” சொல்லும்இவ் வைந்தின் தொடக்கம் தன்னைக் கூட்டிப் பார்த்துக் கூறினால் நாட்டை விட்டவன் நற்பெயர் தோன்றுமே (2) அதிக உயரத்தில் ஆகாய வாணி அவளூர்க்கும் நம்மூர்க்கும் வைத்ததோர் ஏணி மதிப்புக் கடங்குமோ அவ்வேணி உயரம் மனிதர்சிலர் ஏறப்பார்த் தடைந்தனர் துயரம் குதித்துக் குதித்திறங் கிடுவர்சில பெண்கள் குளிரில் இறங்குகையில் பாடிடுவர் பண்கள் இதற்கு விடைசொல்லக் கூடுமோ உன்னால் ஏற்ற பரிசளிக்க லாகும் இது சொன்னால் (3) ஏழ்மையைப் போக்கிவிடும் இலக்ஷ&மி அல்ல. எதிரிற் சுழலும்அது சூரியன் அல்ல. தாழ்மையைப் போக்கிவிடும் சற்குரு அல்ல. தாய்மானம் காக்கும்அது கண்ணனும் அல்ல: தோழியாய்க் கொண்டதுண்டு காந்தியடிகள். தொழும்பை அகற்றும்என்பர் காந்தியடிகள் ஆழ்ந்து நினைந்துபார் பாரத மைந்தா! அதன்பிற கின்னதென்று கூறி விடுவாய். (4) ஒன்று சேர்ந்த “தரை” ஆக்க ஒன்று சேர்ந்த “வலை”கொண்டார் ஒன்று சேர்ந்த “படம்” அற்றார் உடனே தமது கண்முன்னே இன்று பாரதம் விடுபட்டால் இரண்டு சேர்ந்த “வகை”கொள்வார் என்றேன் இதனை விவரித்தால் எட்டுச் சேர்ந்த “வலை”அளிப்பேன். (5) ஆமை, அருமை, பெருமை, சிறுமை, அடிமை, கடுமை, மடமையே ஊமை; உண்மை, இன்மை, இளமை, உரிமை, திறமை, இவைகளில் தீமை செய்து பாரதத்தைச் சீர ழிப்ப தெதுசொல்வாய்? நாமடைய வேண்டு வதையும் நன்கு பார்த்துக் கூறுவாய், (6) ஈக்கள், எறும்புகள், எலிகள், பூனைகள் எருதுகள், குதிரைகள், பூக்கள், மரங்கள், செடிகள், கொடிகள் புளிகள், மிளகாய்கள், ஊக்கம் கெடவைத் துங்கள் பணத்தை ஒழித்துப் பாரதத்தை ஏக்கம் கொள்ள அறிவை மயக்குவ திவற்றில் எது சொல்வாய்? (7) தேசீய விடுகவிகளின் விடை 1-வது பாரத தேவி. 2-வது நாட்டைவிட்டவன் நற்பெயர்; முதல் ஐந்து வரிகளின் தொடக்கம் அதாவது முதலொழுத்துகளைக் கூட்டிப்பார்க்க, பாரதவாசி என்றாகிறது காண்க. 3-வது இமயமலை, வெள்ளைக்காரர்கள் ஏற முயன்று தொல்லையடைந்தது வெளிப்படை. குதித்துக் குதித்து இறங்கிடுவர் சில பெண்கள் என்பது மேலிருந்து இறங்கும் கங்கை, சிந்து முதலிய நதிகள். 4-வது இராட்டினம். 5-வது ஒன்று என்பது தமிழ் இலக்கியம் அதாவது க, ஒன்று சேர்ந்த தரை ஆக்க க + தரை = கதரை உற்பத்தி செய்ய. ஒன்று சேர்ந்தவலை கொண்டார்: கவலை கொண்டார். ஒன்று சேர்ந்த படம் அற்றார் கபடம் நீங்கியவர், இன்று பாரதம் விடுபட்டால், இரண்டு அதாவது உ. சேர்ந்த வகைகொள்வார்; உவகை கொள்வார். எட்டுச் சேர்ந்த வலை அளிப்பேன் (எட்டு அ) அவலை அளிப்பேன். எனவே, இதில் பிரஸ்தாபிக்கப்படுபவர் மகாத்மா காந்தி. 6-வது தீமை செய்து பாரதத்தைச் சீரழிப்பது; அடிமை. நாமடைய வேண்டுவது; உரிமை. 7-வது மன உறுதியைக் கெடவைத்துப் பணத்தை அழித்து அழிவையும் மயங்க வைப்பது புளிகள். புளிக்கக் கூடிய கள் என்று இதற்கு அர்த்தம். வந்தேமாதரம் சிட்டுக்குருவிப் பாட்டு சிட்டுக் குருவிச் சிறுபெண்ணே, சித்தம் போலச் செய்பவளே. கொட்டிக் கிடக்கும் தானியமும் கொல்லைப் புழுவும் தின்பவளே, எட்டிப் பறந்தால் மண்முழுதும் ஏறிப் பறந்தால் வானமெல்லாம் இஷ்டப் படிநீ செய்கையிலே ஏன்?என் பாரைச் “சீ” என்பாய். உன்னைக் கேட்பேன் ஒருசேதி, உரிமைத் தெய்வத்1 தின்மகளே, தின்னத் தீனி தந்திடுவேன். தெரிவிக் காமல் ஓடாதே; மன்னன் அடிமைப் பிணியில்லான். வாய்மைச் சிறகால் உலகேழும், மன்னும் காந்திப் பெருமானார் மகிழும் தோழி நீ தானா? - தேச சேவகன், 9. 1. 1923; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 நிலாப்பாட்டு நிலவே நிலவே எங்கெங்குப் போனாய்? உலக முற்றும் உலாவப் போனேன். உலாவல் எதற்கு விலாசத் தீபமே? காடும், மலையும் மனிதரும் காண காண்ப தெதற்குக் களிக்கும் பூவே? சூரிய வெப்பம் நீங்கிக் குளிர, குளிர்ச்சி எதற்கு வெளிச்சப் பொருளே? செய்யுந் தொழிலிற் சித்தங் களிக்க. சித்தங் களிக்கச் செய்வ தெதற்கு? நித்தமும் நாட்டை நிலையில் உயர்த்த, நாட்டை உயர்த்தும் நாட்டம் எதற்கு? வீட்டைச் சுரண்டும் அடிமை விலக்க. அடிமை விலக்கும் அதுதான் எதற்கு? கொடுமை தவிர்த்துக் குலத்தைக் காக்க. குலத்தைக் காக்கும் குறிதான் எதற்கு? நிலத்துச் சண்டையைச் சாந்தியில் நிறுத்த. சாந்தி ஆக்கும் அதுதான் எதற்கோ? ஏய்ந்திடும் உயிரெலாந் தேவராய் இருக்க, பதந்தனில் அமர வாழ்வுதான் எதற்கு? சுதந்தர முடிவின் சுகநிலை காணவே. - தேச சேவகன், 9. 1. 1923; ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 சுதந்தரம் உயிரின் இயற்கை நாய்ப் பாட்டு மெத்தை வீட்டு வெள்ளைநாய், வீட்டு வாசற் படியிற்போய்க் கத்திக் கொண்டே சற்றுநின்று கறுப்பு நாயை வாஎன்று கத்திக் கத்திக் கூவிற்று. “கறுப்புத் தெருநாய் போயிற்று” “மெத்தை வீட்டில் வசிக்கின்றாய் வேளைக் கென்ன புசிக்கின்றாய்?” என்று கறுப்பு, வெள்ளையுடன் இளித்துக் கொண்டே சொன்னவுடன், “ஒன்றும் இங்கே குறைஇல்லை உரைப்பேன் கேட்பாய் என்சொல்லை” “அன்றன் றைக்கும் பாற்சாதம் அப்பம் ரொட்டி 1நவநீதம் பன்றியைப் போல் வீங்குகின்றேன் பட்டுமெத்தையில் தூங்குகின்றேன் இருப்பாய் நீயும் என்னோடே” என்றது வெள்ளை அன்போடே, காதால் கேட்ட கறுப்புதான் “கழுத்தில் வடுவாய் இருப்பதேன்? ஏதோ சொல்வாய்” என்றதே இளித்துக் கொண்டே நின்றதே. “ஏதாகிலும் செய்யாமல் எனது கழுத்து நையாமல் காதோ ரத்தில் வார்கொண்டு கட்டி வைக்கும் வடிவுண்டு” அதனைக் கேட்ட கறுப்புதான் “ அடிமை யாய்நீ இருப்பதேன்! கதிதான் கெடநீ நடப்பதா? கட்டுப் பட்டுக் கிடப்பதா? சதிராய் உன்னிடம் அண்டேனே! சதையில் ரத்தம் சுண்டேனே!” இதனால் அஞ்சி ஓடுதுபார்! இன்னும் ஓடுது ஓடுதுபார். - ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி கவிதா மண்டலம், ப.20, 1935 தேசிய விளையாட்டு நாடு பிடிக்கும் விளையாட்டு (விசாலமான நான்குமூலைக் கோடுகிழிக்க வேண்டும். ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருவர் நிற்கவேண்டும்; அப்படி நிற்பவர்கள் பாரத நாட்டார். ஒருவன் நடுவில் நிற்பான், அவன்தான் அயலானாகிய கோட்டான்.) கோட்டான் : நாட்டாரே நாட்டாரே நாட்டில் என்ன செய்கின்றீர். நாட்டார் : கோட்டானே! கோட்டானே? கோட்டில் நின்றோம் கோட்டானே. கோட்டான் : கோட்டிற் கொஞ்சம் தூங்குங்கள் குலதர் மத்தில் நீங்குங்கள் நாட்டார் : பாட்டன் காலம் பழுத்தது பாரதநாடு விழித்தது. (நாட்டார்கள் ஜாக்கிரதையாய்த் தமது கோட்டிலிருந்து மாற வேண்டும் கோட்டானுக்கு மூலையைப் பற்றி கொடுத்துவிடக் கூடாது. பறிகொடுத்தவன் கோட்டானாக நிற்கவேண்டும். அடுத்த ஆட்டம் தொடங்கும்போதும் பாட்டைச் சொல்லவேண்டும்.) நியாயசபை விளையாட்டு (சீமானுக்கும் வைத்தியருக்கும் சம்பாஷணை; வைத்தியரைக் கேலிசெய்து தாம் கொழுத்திருப்பதற்கு மருந்து கேட்கிறார் சீமான்). சீமான் : கைப்பார்ப் பீரோ வைத்தியரே? கால்பார்ப் பீரோ வைத்தியரே? வைத்தியர் : கைபார்க் கின்றோம் சீமானே! கதியைச் சொல்வோம் சீமானே! சீமான் : மெய்யாய் உடம்பு கொழுக்குதே? மேனி சரிந்து பழுக்குதே? வைத்தியர் : நையப் பலரை இழுப்பிரே! நாட்டுக் கவருடன் உழைப்பிரே! (இந்தக் குற்றத்திற்காகச் சேவகன் வைத்தியரை இழுத்துக் கொண்டு போய் நியாயாதிபதியிடம் நிறுத்துகிறான்) நியாயாதிபதி : நாட்டுக் குழைக்க முன்நீரே, நால்வர் அறியச் சொன்னீரே? வைத்தியர் : பாட்டுப் பாடி எங்கும்நான், பறைகொட் டாதது குற்றந்தான், நியாயாதிபதி : போட்டேன் உம்மை ஓர்வருடம் போவீர் சிறைக்குத் தீரும்அடம் வைத்தியர் : பாட்டும் பறையும் முழக்கினீர் பாரத மக்களை எழுப்பினீர் (சேவகன் வைத்தியரைச் சிறைக்கிழுத்துக் கொண்டு போகுதல்). ஓடிப்பிடிக்கும் புறா விளையாட்டு (சிறுவர்கள் சமமாகப் பிரிந்து பாதிப்பேர் ஒரு பொது மனிதர்வசம் நிற்க வேண்டும்; அவர்கள் வீட்டுப் புறாக்கள். மற்றவர்கள் காட்டுப் புறாக்கள்.) வீ. : கூட்டம் போட்டீர் காட்டுப் புறாக்களே? கா. : குலமொத்திருந்தோம் வீட்டுப் புறாக்களே! வீ. : ஊட்டம்கிடைக்குதோ காட்டுப் புறாக்களே? கா. : ஓடிப்பொறுக்குவோம் வீட்டுப் புறாக்களே! வீ. : ஓட்டம் எமக்கில்லை காட்டுப் புறாக்களே? கா. : உரிமை தொலைந்ததோ வீட்டுப்புறாக்களே! வீ. : வாட்டமாய் வாருங்கள் காட்டுப்புறாக்களே? கா. : வந்தாற் பிடிக்கலாம் வீட்டுப் புறாக்களே. (காட்டுப் புறாக்களை வீட்டுப் புறாக்கள் பிடிக்க ஓடுகின்றன பொது மனிதரைத் தொட்டு விட்டால் காட்டுப் புறாக்களுக்கு ஜயம். ஒரு காட்டுப் புறா அகப்பட்டுவிட்டாலும் எல்லாம் அகப்பட்ட மாதிரிதான் பிறகு ஜயித்தவர் காட்டுப் புறாவாக ஆட்டந் தொடங்கும்.) தேசீய உபாத்தியாயர் பிள்ளைகளே கேளீர் உமக்கோர் பெருஞ்சேதி! வெள்ளைக்கா ரத்துரைகள் வெள்ளையரின் நாட்டினின்று பாரதத்தில் ஏன்வந்தார்? என்றால் பலபொருளைப் பாரதத்தில் விற்கவந்தார். இவ்விடத்தில் பாரதத்தார் ஒத்து மறுத்துவிட்டால் தொல்லை ஒழிந்துவிடும் பத்துநாள் போதும்இந்தப் பாரதத்தை நன்றாக்க, “ ஆங்கிலரின் சாமான்கள் அத்தனையும் நீக்குங்கள் வாங்காதீர்” என்று 1மகாமன்றும் சொன்னதுண்டு. உங்கள் தகப்பன்மார் இதனை உணராமல் மங்க உரைத்தால் மறுத்துரைப்பீர் மாணவரே. நானுரைக்கச் சொல்லு(வ)தை நன்றா யுரைத்திடுங்கள் ஏனப்பா நீங்கள் இறந்தபின் உங்களைப்போல் வெள்கி “அடிமைசெய வேண்டுமா?” உங்களைப்போல் பிள்ளைகளும் பின்னாளிற் சாகப் பிரியமுண்டோ? சொத்தெமக்கு வைப்பதாய்ச் சொல்லுவது சொத்தன்று சொத்தெமக்கு நல்ல சுதந்தரந்தான் என்றுரைப்பீர். பிள்ளைகளே வீரர்க்குப் பேரர்களே “உம்உரிமை” நொள்ளைகள்போல் விட்டுவிட்டு நோயால் வருந்துவது தந்தைமார் செய்கின்ற தப்பன்றோ? ஆதலால் வெந்துயரைத் தீருங்கள் வெற்றிபெறப் பாரதத்தை மீட்டுக் கொடுங்கள் எனத்தினமும் தந்தையரைக் கேட்டுக்கொள் ளுங்கள் இனி. தேசீயத் தாலாட்டுகள் ஆண் குழந்தையைத் தாலாட்டல். (சர்வ சாதாரணமாகப் பெண்டிர் தாலாட்டுப்பாடும் மெட்டு) ஆராரோ - ஆரிரரோ ஆராரோ - ஆரிரரோ வீர மகனே, வேலவனே, விண்ணவர்கள் கோரும் உரிமை கொடுக்கவரும் ஆணழகே! நீல விழிகள்! நிலவுமுகம்! தாமரைவாய்! கோலும் உதடு கொட்டுதமி ழின்அரும்பு! வேளைக்கு வேளை விறல்வளரும் பாரதனே, நாளைய வெற்றி இன்றலரும் நாட்டானே! அமுத முனக்குப் பாரதத்தாய் அன்பெல்லாம் சமர்விளைக்க வந்த தமிழா இளங்குமரா, இன்பம் உனக்குப் பாரதப்போர் ஏற்பதிலே, அன்று முடிபூண்ட ஆரியனே வேல்1மறவா பொம்மை உனக்குப் பொன்விழுங்கும் பூதங்கள்! வெம்மைப் பகையுனது வேலுக் கிலக்கியமாம். நல்ல இமயமலை நாடிவரும் கங்கைநதி; வெல்லத் தமிழ்பிறந்த மேன்மைப் பொதியமலை, வைகை, யமுனை, வளங்கொழிக்கும் பெண்ணைநதி, பொய்கை, மலர்ச்சோலை பூணுகின்ற பாரதனே, வில்மறவர், வேல்மறவர், 2வெற்பொத்த தோள்மறவர், பன்னு தமிழ்நாட்டுப் பலவீரர் பார்த்திருக்கச் செல்வம் பறிபோதல் எண்ணிச் சிரித்தாயே! “வெல்வம்” என்று நீதான் விழிதுயில்வாய் பாரதனே வீரியத்தைக் காட்டும் புலிபோல் விழிதுயில்வாய் ஆரியர்கள் நாட்டின் அனலே விழிதுயில்வாய். பெண் குழந்தையைத் தாலாட்டுதல் தீராத ஆசையெல்லாம் தீர்க்கவந்த பெண்ணரசி! வாராத செல்வமெல்லாம் வந்துதரும் தெய்விகமே! தாமரையின் வாய்திறந்தால் சாதிசனம் வாய்திறக்கும் சாமத்தி லும்பிரியாத் தாய்நாடு வாய்திறக்கும் ஒத்திருக்கும் உன்சமுகம் ஊமையரென் றெண்ணாதே. மொய்த்திருக்கும் உன்சமுகம் முப்பத்து முக்கோடி! ஏதோ உனதுகுறை ஏந்திவரும் கட்டழகே! போதேநீ கண்ணுறங்கு பொன்னான தொட்டிலிலே. அங்கம் பதைத்தே அசத்தியத்தைக் கொன்றிடுவார் வங்கத்து வீரருன்றன் வாழ்க்கையிலே சம்பந்தி, தேசத் துருக்கரெலாம் தேவியுன்றன் அண்ணன்மார், மீசைத் தெலுங்கர்களும் வில்லர்களும் மைத்துனர்கள் அமிழ்தக் கவிகள் அம்புலிக்குச் சொல்லிவைத்த தமிழ்நாட்டு வீரரெலாம் சண்பகமே, சொந்தத்தார். நாட்டுக்கு நூலிழைக்கும் நங்கையருன் அக்கையர்கள், வீட்டில் துணிநெய்யும் வீரருன்றன் அம்மான்கள், கன்னியா குமரிமுதல் கங்கைஇம யம்வரைக்கும் உன்னிரத்தம் சேர்ந்த உடம்புடையார் பாரதத்தார் ஆசை தவிர்ந்ததுண்டோ ஆரியத்துப் பெண்ணுனக்கு நேசம் குறைந்ததுண்டோ நீதரெலாம் வாழ்நாட்டில். கூட்டத்தில் வாழும்மயில் கோலம் குறைந்ததுண்டோ? நாட்டின் குலவிளக்கே நாயகமே கண்ணுறங்கு. தேச முனக்குத் திரவியங்கள் உன்னுடைமை யாசகமாய் வந்தவரைப் “போ”என்றால் ஏனிருப்பார்? சந்தனக் காடு தவமலைகள் உன்னுடைமை. சிந்துநதி கங்கைநதி தித்திக்கும் பாற்குளங்கள், யாவும் உனக்கே இளைய பெருமாட்டி! தாவும் பொடிவாசச் சோலைகளும் உன்னுடைமை. பாடப் பழங்கவிகள் பல்கோடி உன்னருகே. தேடிப் பிடிப்பதில்லை சிந்தைமகிழ் காவியங்கள். நாலு மறைகள், நவில்ஆறு, சாத்திரங்கள். மூல தருமம், முடிவில்லாக் கைத்தொழில்கள் உடைமை சிறந்ததுண்டாம் உன்னுடைய பாரதத்தில் படையிற் சிறந்தவராம் பாரதத்தாய் பெற்றமக்கள் கோயில், மணிவீடு, கொட்டடிகள், சத்திரங்கள், வாயிலிலே பொன்சிந்தும் மாளிகைகள் கோடியுண்டு. நெல்லும் மணிவகையும் நின்நாட்டில் வேண்டுமட்டும். வெல்லக் கரும்பும் விளைவதுண்டாம் உன்நாட்டில் எத்தாற் குறைச்சல் எவ்விதத்தால் தாழ்வுனக்கு? தித்திக்கும் கற்கண்டே தேசமுத்தே கண்வளராய். - ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி கவிதா மண்டலம், 1935 பாரதத்தாய் மாணவர்க்குக் கூறுவது: கண்ணிகள் என்னா ருயிராக யான்பெற்றேன் உம்மையெல்லாம் அன்னையென் றென்னை அறியீரோ மாணவரே? அடிமையுற்ற அன்னை அரசுபெற உங்களது கடமைஇன்ன தென்றுதான் கருதினிரோ மாணவரே? அன்னைக்குப் புத்துயிரும் ஆக்கமும் கீர்த்தியும்நீர் இன்னே1 தரநினைத்தால் யார்தடுப்பார் மாணவரே? புத்தறிவும் தெய்வப் பொதுநோக்கும் வாடாது மொய்த்த இளம்பருவம் முனைகருகிப் போகாதீர், மாசற்ற நெஞ்சும் மகிழும் இளமாண்பும் தேசத்துக் கன்றிச் சிதடருக்கோ மாணவரே? விழிக்குங்கால் உங்கள் வெறுந்தேசம் கண்டீரே; பழக்கிவரும் கல்வியிலே பாரதத்துக் காவதுண்டோ? சாங்கால மட்டும் சலித்துப் புடைத்தாலும் ஆங்கிலத்தில் உம்நிலைமை அறிவதுண்டோ மாணவரே? வெள்ளைநிறம் என்செல்வம் வேட்டையிட நீங்களதை அள்ளிச்செப் பம்செயவோ அக்கலையைக் கற்றீர்கள்! அயலார் வெறும்பாஷை அறிவதால் உங்கள்சாண் வயிறுநிறை யும்என்ற வார்த்தையில்தான் உண்மைஉண்டா? தட்டிக் கொடுத்துப்பின் தம்பாஷைக் குட்படுத்திப் பட்டப் பரிசுதரும் பான்மையிலே ஏதுகண்டீர்? முப்பதுகோ டிப்பெயர்கள் முழுதும் பிறர்பாடம் ஒப்பித்தா லன்றி உணவின்றிச் சாவீரோ? செந்தமிழாற் கம்பன் சிறந்தானா நேற்றிங்கு வந்தவரின் ஆங்கிலத்தால் வயிறு வளர்த்தானா? கழற்று மணிமுடிநான் காணப் பிறர்பாஷை சுழற்றி எறிந்துசொந்தத் தேசத்தை வாழ்கஎன்பீர். - தேச சேவகன், 23.1.1923; 6.2.1923 விடுதலைக்குச் செல்லும் கப்பல் ஏலப் பாட்டு மெட்டு பொன்னைப் பெருக்கும் சுரங்கத்தை ஒக்கும் போகத்தி லேஅந்த வானை நிகர்க்கும்! மன்னிச் சிறக்கின்ற புகழ்கொண்ட நாடு, வளமைக்கும் அழகுக்கும் இணையற்ற நாடு பன்னக் கிடக்கின்ற சம்பத்து வாய்ந்த பாரதத் திருநாடு பழமைபெறு நாடாம். என்னைப் பிறப்பித்த எழில்நாடு தன்னை, யாத்திரைக் கப்பலாய்ச் செய்யவந் தேனே. சீரான இமயமலை வடகோடி முதலாய்த் தெற்குமுனை கன்னியா குமரிவரை நீளம்! நேரான தொடர்மலைகள் இருபக்கம் உண்டு; நெடிதாய் இருக்குதே எங்களது கப்பல். பாராய் கொடிக்கம்பம் இமமலைச் சிகரம்! பார்வைக்கும் எட்டாத அக்கம்ப மீது, வார்கொண்ட மேகக் கொடிச்சீலை கட்டி, வானிற் பறக்கக் கிளம்புதே கப்பல்! “ உறுதி”என்னும்பாயை விரியடா மேலே “உணர்”வென்ற சுக்கானை நேரே பிடிப்பாய். முறையாய் நடக்கையில் “பேதமாம்” காற்று மோதாத விதமாகப் பாரதத் தாரை நிறையாக ஏற்றடா ஒற்றுமை ஆக்கி நேராக ஓட்டடா பாரதக் கப்பல்! இறைவிமா சத்தியே துணைநிற்க வேண்டும் எதிரே சுதந்தரப் பொன்னாடு காண. “ அடிமை”என் னுங்கடல் நெளியுதே பாராய்! அதுகிழிய ஓடுதே பாரதக் கப்பல்! கொடிதான வறுமையாம் கூட்டச் சுறாக்கள் கொட்டம் குறைந்தது கப்பல் வேகத்தில். தடையொன்று தோன்றுதே இதுவென்ன பாராய்! தன்வாய் திறக்குதே கடல்மீ திருந்தே. திடமுண்டு நெஞ்சிலே உமிழடா காறிச் சிறையாம் திமிங்கலம் நமையென்ன செய்யும்? மலையொன்று தோன்றுதே கடலுக்கு நடுவே! வழியை மறிக்குதே “அயலார் சரக்கு” “ விலைகொண்டு பிறர்பொருள் வாங்கிடோம்” என்ற மேலான மந்திரம் வாய்கொண்ட மட்டும் நிலையாக ஓதடா ஓதடா ஓது! நீசத் தடங்கலை மோதடா மோது? தொலையாத கடலைத் தொலைக்குதே கப்பல்! சுதந்தரப் பொன்னாட்டை எட்டுதே கப்பல்! “ தீண்டாமை” என்கின்ற பாவப் பிசாசு திரளாக வந்தன யாமென்ன செய்வோம்? மாண்டாலும் மேலடா! கருநிறப் பேய்கள் வாயைத் திறந்தால் நடுங்குதே உள்ளம்! வேண்டாம் எனும்போதும் ஐந்தாறு கோடி விழுங்கப் பறந்தன நாமின்று தீர்ந்தோம், தீண்டாமை நீக்கினோம் தீண்டுவோம் என்று செப்புவீர்; செப்பப் பறக்குமே பேய்கள், கடல்கிழிய ஓடுதே எங்களது கப்பல்! காதவழி போகின்ற தேயோர் நொடிக்குள்! விடுதலைப் பொன்னகரம் உயிருக்கும் இனிது! விழிகொண்ட ஆசையோ கடலினும், பெரிது! கெடுதலைகொள் அடிமையோ நரகினுந் தீது! கீழான அடிமையைப் புழுவும் ஒப்பாது! விடுதலைகொள் விடுதலைகொள் என்றதே உள்ளம் விழியென்று காணும்அவ் வாநந்த வெள்ளம்? விண்ணின்று சூரியன் வீழ்ந்ததே மேற்கில்! விழுங்குதே எருமைக் கடாப்போல் இருட்டு! கண்ணற்ற இருளிலே வழிதோன்ற வில்லை கப்பலும் ஓடுதே நொள்ளைகளை நம்பி. எண்ணமும் தேகமும் கப்பலின் மேலே எங்கும் விழாததே இருள்செய்த நன்மை பண்ணான தமிழற்ற தமிழ்மக்கள் போலே பார்வை இல்லைநமக் கிருவிழிகள் உண்டு. ஒளியொன்று தோன்றுதே! வாழ்த்தடா தாயை! ஒளிதான் துரத்துதே இருளென்ற பேயைச் களியுண்டு நெஞ்சிலே இனியேது தொல்லை? கடல்மீது பாயுதே கிரணங்கள் மெல்ல. வெளிவந்த சூரிய வாணவே டிக்கை! விடுகிறான் புவியெலாம் கிரணங்கள் தூவி! துளிஇல்லை சந்தேகம் இனியேது தாபம்? சுதந்தரப் பொன்னாடு மிகவும்ச மீபம்; தீவொன்று தோன்றுதே கொஞ்ச தூரத்தில் சீக்கிரம் போவோம் செலுத்தடா கப்பல் காவலர் மாளிகை, கொடி,அதோ பாராய்! கப்பல் நிறுத்தினோம் வந்திறங் கிட்டோம். “ வா,வா”,எ னச்சொல்லி நமையழைக் கின்றார். வயித்தியச் சோதனை பார்க்கிறோம் என்றார். நோவில்லை ஆனால் அனுப்புவோம் என்றார். நுண்மையாய்ச் சோதனை பார்த்தபடி நின்றார். நாக்கிலே பிறர்கல்வி தீர்ந்ததா? என்றார். நாசிதான் பிறர்வாசம் நத்துமோ? என்றார். நோக்கிலே சமநோக்கு வந்ததா? என்றார், நுண்செவியில் அயல்சூழ்ச்சி நுழையுமோ? என்றார். தாக்கும் புயத்திலே சக்தியெங் கென்றார். தடக்கைகள் தன்கோல் சுமக்குமோ? என்றார். போர்க்குத் திரும்பாத மார்பு காட்டென்றார்; பொங்கும் சுடர்முகம் காட்டென்று கேட்டார். இடையினிற் சொந்தநூ லாடைஎங் கென்றார் இட்டவயி றயலுணவு தொட்டதோ என்றார். உடம்பிலே தன்னொழுக் கம்காட்டு கென்றார். உயிரிலே தன்னுரிமை ஒளிகாட்டு கென்றார். தொடுகின்ற இடமெலாம் பரதர்மம் இன்றிச், சுதர்மமே உள்ளத்தில் உள்ளதா என்றார். அடைவுடன் சோதித்த இவரெலாம் யாவர்? அடடா சுதந்தரப் பொன்னகர்த் தேவர். தாய்நாடு விடுதலைப் பொன்னாடு போகத் தருமென்ற உத்தரவு விரைவாய்க் கொடுப்பார், தாய்நாடு வாழ்கஎன் றேசொல்லி வாழ்த்து! தடையான அடிமையை வேல்கொண்டு வீழ்த்து! தாய்நாடு வெல்கஎன் றேஎழுந் தாடு தமிழான மதுவுண்டு களிகொண்டு பாடு, தாய்நாடு மேலென்று வானிற் செதுக்கு! தமிழென்ற முரசத்தை மண்ணில் முழக்கு! கலியின் கொடுமை (கலி பாரத தேவியிடம் சொல்லுகிறான் “ஞாயந்தானோ நீர் சொல்லும்” என்ற மெட்டு) பல்லவி பாரடீ கலியின் ஆட்சி!- ஏ அநுபல்லவி பாரத தேவியின் மைந்தரைக் கெடுத்தேன் - பா சரணங்கள் மேற்குத் திசையின்சா ராயம் - உன் வீர மைந்தர்க்கதில் நேயம் - உனைச் சோற்றுக் கழவைக்கு முபாயம் - நீ சுதந்தரம் கேட்பதென்ன ஞாயம் - அடி - பா வெறித்துக் குடிக்கிறான் கள்ளை - அடி விழுந்து முறிக்கிறான் முள்ளை - வழி அறிந்து நடக்கக் கண் நொள்ளை - உனக் கரசு தருமோ இப் பிள்ளை - அடி - பா ஆடை அழுக்குடைய கந்தை - இந்த அழகில் அனைவரையும் நிந்தை - சொல்லிப் பாடை தனிலுங்கள் மொந்தை - எண்ணிப் பறந்தனன் மற்றொருகு ழந்தை - அடி - பா ஆசாரம் கெடுமென அஞ்சா - மைந்தர்க் கமுதமும் சாதமும் நஞ்சா? - உயிர் நாசம் புரிந்தே கஞ்சா - கொடி நாட்ட உனக்கிரும்பு நெஞ்சா? - அடி - பா வீட்டுக் காசிலே திருட்டு - நல்ல வீதி எங்கும்புகை யிருட்டு - மிக நீட்டிப் பிடித்தனர் சுருட்டு - நாட்டில் நீசத் தனம்வளர்க்கும் பொருட்டு - அடி - பா நாவற் பழஉதடு கூடி - எங்கும் நாற இருகன்னமும் வாடி - பின்பும் சாவுக்கே பிடிப்பர் பீடி - இந்தத் தறுதலை பாரத னோடி? - அடி - பா மூளை வறண்டுபோம் படியே - முகம் முழுதும் சளியொழுகும் நெடியே - தந் தாளை ஒழிக்குமிந்தப் பொடியே - உனை அழித்திடு மேஅரை நொடியே -அடி - பா தேயிலை காப்பியைப் பிடித்தார் - அவை தித்திக்கு தென்றுதினம் குடித்தார் - பின்பு கோயிலில் வைத்துத்துதி படித்தார் - தேசக் கொள்கையை வேரோடு மடித்தார் - அடி - பா சுதந்தரத் துவக்கமே சுதர்மம் - அந்தச் சுதர்மத்தை வீழ்த்துதல் அதர்மம் - உன் சுதன்1அறி யானிந்த மர்மம் - உனைத் தொல்லை செய்தல் கலி வர்மம் - அடி - பா தேசீய நலங்கு 1. மகள் நலங்கு (“மாதாட பாரதேனோ” என்ற பாட்டு) பல்லவி சுப நலங் கியற்றுவீரே தோகையர் நீரே - சு அநுபல்லவி தூய நாட்டின் தொண்டுக்குத் தோன்றிய கற்கண்டுக்குச் - சு சரணம் அபசார மின்றித் தாய்நாட் டத்தர், கலவை பூசி உபகாரிக்கு நல்லாசி உரைப்பீர்கள் மலர்வீசிச் - சு நொந்தேமா! பண்டை வாழ்வில் நுழையோமா! என்று நாவில் வந்தேமா தரம்பாடும் மணிக்குக் கதம்பம் தூவிச் - சு கருமம் சுமந்த வீரர் கட்டடி மையைச் சாடக் தருமம் சுமந்த தோளில் தையல்நல் வாரம் சூடச் - சு வாதை பெறும் நாட்டுக்கு மாவீர மக்கள் மற்றிக் கோதைபெறுவாள் என்று குழவியெடுத்துச் சுற்றிச் - சு கோலிழைக்கும் குற்றத்தால் கொள்ளைபடும் நாட்டுக்கு நூலிழைக்கும் நோன்பு நோற்கும் சீ மாட்டிக்குச் - சு பதரான மேல்நாட்டார் பழிவாங்கும் ஆடை நீக்கிக் கதராடை பூண்டஎங்கள் கண்மணிக் காலம் தூக்கிச் - சு மதிநாறிப் பாரதத்து மண்ணை மிதித்தோர் கள்ள விதிநாறும் படிபேறு பதினாறும் மகள் கொள்ளச் - சு தாழ்வென்று தமைமற்றோர் சகத்திற்சொல் வதைவீழ்த்தி வாழ்வென்ற “சுதந்தரம்” வாய்ந்திட்ட தெனவாழ்த்திச் - சு 2. மகன் நலங்கு “ஆருக்குப் பொன்னம்பல கிருபை இருக்குதோ அவனே பெரியவனாம்” என்ற மெட்டு பல்லவி பாருக்குள் விடுதலைப் போருக்கு வந்த சேய்க்குப் பரிந்து நலங்கிடுவீர் - பா அநுபல்லவி காருக்கு மகிழ்கின்ற மயிலினமே - மலர்க் காட்டில் இசைகின்ற குயிலினமே! நீவிர் - பா வாள்வைத்த தோளுக்குத் தன்மாதா உரிமை மீட்க நாள்வைத் திருக்கும் சேய்க்குத் தூள்பட அடிமையைத் தொலைத்துநீ நாட்டினை “ஆள்க மகனே”என ஆசி சொல்வீரே - பா நிசியினும் பகலினும் நெடுநிலம் காத்திடும் வில் விசயனின் வழித்தோன்றல் கசிந்திடும் பனிநீர்க் கலசம் கையேந்திக் காளை யுளங்குளிரக் கவிழ்ப்பீரே - பா ஊழையும் எதிர்த்திடும் வீரச் சிவாஜி என்னும் வாழையின் கீழ்க்கன்று ஏழ்கடற் புவிதன்னில் ஈடற்ற பாரதநா டீன்ற மகனுக் கின்பம் தோன்ற மிகவே என்று - பா தேசீய மங்களம் (“கோருங்கள் கோருங்கள் கோருங்களே” என்ற மெட்டு) பல்லவி மங்களம் மங்களம் மங்களமே - சுப மங்களம் மங்களம் மங்களமே. அநுபல்லவி துங்கமுறும் நாட்டினுக்குத் தொண்டுசெய்யும் தம்பதிக்கு - ம சரணம் சிங்கம் சுமந்திடும் ஆசன மேலே செங்கோல் கொள்ளும் ஆதி மன்னர்கள் போலே “எங்கள் நிலத்திற் பிறர்க்கென்ன வேலை” என்றகொள்கை நன்றுதுள்ள இல்லறம்செய் நல்லவர்க்கு - ம பாரத நாட்டிற் பரதர்மம் நீக்கிப் பச்சைச் சுதர்மத்தை எங்கணும் ஆக்கிக் கோரும் சுதந்தர நற்கொடி தூக்கிக் குணமிக்க வாழ்வுபெறும் மணமக்க ளாம்இவர்க்கு - ம வைதிகர் நல்ல துருக்கர்கள் கூடி வாழ விரும்புதல் போல்இவர் நாடி மெய்யும் உயிருமாய் இன்பங்கள் கோடி மேவும்படி மனம்அன்பிற் றாவும்படி ஆனவர்க்கு - ம தேசக் கதர்நெய்யும் சீரிய வழக்கம் செய்வன யாவினும் வைதிக ஒழுக்கம் நீசத் தனத்தினி லேமனப் புழுக்கம் நிறையகொண் டார்கற்பின் முறையைக்கொண் டோரிவர்க்கு - ம பாரத வாசியைக் கீழென மதிக்கும் பாவி இருக்கக் கண்டா லுளம்கொதிக்கும் சீரது வாய்ந்த சிறந்த தம்பதிக்கும் செஞ்சொற்கிளி இனமே! வளம் மிஞ்சப் புகல்வீர் மங்களமே. - ம தேசீய சோபனம் (“கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை” என்ற மெட்டு) சோபனம் சோபனம் சோபனமே - சுப சோபனம் சோபனம் சோபனமே. -சோ பூபனும் அழகிய புனிதையும் ஆகிய புதுமண மக்களுக்குச் சோபனமே. ஏ பாவைகாள் உரைப்பிரே!- நல்ல இந்துஸ்தான் விடுதலை சிந்திப்பவர்க்கே சுப -சோ கண்ணிமை போலே நாட்டினைக் காத்திடும் காந்திய டிகள்போல் கஸ்தூரி பாய்போல் நண்ணிச் சுதர்மத்தினை நடத்திடு வார்க்கு நாட்டினில் உரிமைப்போர் தொடுத்திடு வார்க்குப் பண்ணிற் குழைத்த தமிழால் - நன்கு பாடுகநீர் பாடுகநீர் பாடிடுகவே சுப -சோ ராட்டின மங்கையும் நாட்டினர் செங்கையும் கூட்டிய காதலில் குவித்திடும் பயன்போல் தீட்டிய வாள்போல் செருகிடும் உறைபோல் தீரா இன்பத்தில் ஓருயிர் போலே பூட்டாத வில் நுனிக்கு நாண் - கொண்டு பூட்டுகின்ற புத்திரர்கள் பூணு பவர்க்கே சுப -சோ வாழ்வி லுயர்ந்த எங்கள் பாரதத் தாய்போல் வாழ்ந்திடும் படியே இந்தப் புவியின்மேல் சூழின்பந் தாங்கிச் சுதந்திரம் ஓங்கித் தொல்லை தரும்அடிமைப் பிணிநீங்கி வாழ்வார்கள் வாழ்வார்களே - என்று வாய்மலரக் கைம்மலரிற் சோபனம் கொட்டீர் சுப -சோ தேசீயத் திருமண வாழ்த்து (“மகாவதி குண மாதரே வேகமாய்” என்ற மெட்டு) வாழ்க தம்பதிகள் வாழ்கவே வாழ்கவே! வன்புனற் கங்கையென நன்றெலாம் சூழ்கவே! ஆழ்கடல், ரவி, மதி வான்உள்ள காலம், ஆயுள் அடைக! ஓங்க அநுகூலம் ஆலெனத் தழைந்தும் அறுகென வேரிழிந்தும் மேலுக்கு மேலின்பம் மிகும்அன்பிற் பிழிந்தும் வேலைச் சுமக்கும் பிள்ளைமிகும் எழிற்கிள்ளை கால மெலாம் குடிகனத் தோங்க அடிமையும், மிடிமையும் ஆண்மையால் மாற்றியே ஆவியினும் இனிதாய்த் தேசத்தைப் போற்றியே கடமை நினைந்திரு கையின்மேல் உரிமை கண்டுயர் வெய்துக இத்தரை மேல். வாழ்க தம்பதிகள் வாழ்கநற் சுற்றமே! வாழ்க நற்பாரத சோதரர் முற்றுமே! வாழ்க நற்பாரத தேசமும் புவியும் வாழ்க நற்பரை தாள் மலர் வாழ்க. 1 தெய்விகத் தாய்நாடு நாதந்தி னாதந்தி நாதந்தி னாதந்தி நாதந்தி னாதந்தி - தந்தி னாதந்தி நாதந்தி னாதந்தினா. கலை கற்ற தாய் செல்வ நிலை பெற்ற தாய் காடு மலை பெற்றதாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் புலையற்ற தெய் விகத்தாள். யோகத்தின் தாய் கொள்கை வேகத்தின் தாய் செய்யும் யாகத்தின் தாய் எங்கள்தாய் - எனிற்பாரதத்தாய் ஏகத்தின் தெய் விகத்தாள். சாந்தத்தின் தாய் நல்ல மாந்தர்க்குத் தாய் நீதி வேந்தர்க்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் வாய்ந்திட்ட தெய்விகத்தாள். அன்புக்குத் தாய் தோளின் வன்புக்குத் தாய் வேண்டும் இன்பத்தின் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் சம்பத்தின் தெய்விகத்தாள். வென்றிக்குத் தாய் கீதத் தென்றற்குத் தாய் நீத மன்றுக்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் தன்னொத்த தெய்விகத்தாள். அமருக்குத் தாய் வெற்பின் இமயத்தின் தாய் ஆறு சமயத்தின் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் நமையீன்ற தெய்விகத்தாள். தீரர்க்குத் தாய் ஞான வீரர்க்குத் தாய் கற்பின் நாரீயர் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் சீருள்ள தெய்விகத்தாள். நீதத்தின் தாய் தெய்வ கீதத்தின் தாய் நாலு வேதத்தின் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் போதங் கொள் தெய்விகத்தாள். நீதிக்குத் தாய் நாலு சாதிக்குத் தாய் உண்மை போதிக்குந் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் காதல் செய் தெய்விகத்தாள். சீதைக்குத் தாய் இவர் மாதுக்குத் தாய் நல்அ சோதைக்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் நீ தங்கொள் தெய்விகத்தாள் புத்தர்க்குத் தாய் தேர்ந்த பத்தர்க்குத் தாய் கோடி சித்தர்க்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் வித்தகத் தெய்விகத்தாள். வங்கர்க்குத் தாய் சீனத் சிங்கர்க்குத் தாய் வன்தெ லுங்கர்க்குத் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் இங்குற்ற தெய்விகத்தாள். நாரதன் தாய் நற்ப கீரதன் தாய் சோழ சேரனின் தாய் எங்கள் தாய் வீரங் கொள் தெய்விகத்தாள். கம்பற்குத் தாய் காளி நம்பற்குத் தாய் மற்ற சம்பத்தின் தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் இம்பர்க்குத் தெய்விகத்தாள். விசயற்குத் தாய் கண்ணன் இசை பெற்ற தாய் கீதை ரசமுற்ற தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் வசையற்ற தெய்விகத்தாள். அணி பெற்ற தாய் பொன்னின் மணி பெற்ற தாய் அத்தன் துணை பெற்ற தாய் எங்கள் தாய் - எனிற்பாரதத்தாய் இணையற்ற தெய்விகத்தாள். - பழம்புதுப் பாடல்கள், ப.45-47, 2004; தேசசேவகன், 7.11.1922 குறிப்பு: ‘யாகத்திலே - தவ வேகத்திலே’ எனத் தொடங்கும் பாரதியின் ‘பாரதநாடு’ பாடலின் சாயலை இதில் காணலாம் 2 தொண்டரைச் சேர்த்தல் (ஸ்ரீ குணங்குடி மஸ்தான் “போவோம் குணங்குடிக் கெல்லோரும் - புறப்படுங்கள்” என்று பாடிய மெட்டில் இதனைப் பாடித் தொண்டர்கள் - மற்றும் பாரதப் புத்திரர்களைத் தொண்டர் படையிற் சேரக் கேட்க வேண்டும்.) பல்லவி சேர்வீர் தொண்டர் படைக்கெல்லோரும் - அரை நொடியில் -சே அநுபல்லவி பாரீர் நமக்கு வந்த கேடு! - பொறுக்கவில்லை வாரீர் இதனை அடியோடு கல்ல எம்மோடு -சே சரணங்கள் இன்பம் பொலிந்ததிரு நாட்டை - நவமணிகள் ஈன்றார் குவித்து வைத்த வீட்டை - மறவர் குலம் என்றும் மலிந்திருக்கும் காட்டை - இணையுலகில் இல்லா விதம் கிடைத்த தேட்டைப் பிறர்தளைத்த வன்மை விலங்க கலப்பூட்டை - யுடைத்துக்காட்டச் -சே கண்ணன் வழிப் பிறந்த சாதி - நமக்கருந்த கஞ்சியன்று வயிற்றிற் பாதி - பிணிவகைகள் நண்ணி வருத்துவது மீதி - அடிமையென நம்மைப் பிடித்திட்டவி யாதி - தொலைந்ததென்று விண்ணும் அதிர் சங்கை யூதிப் - “பராக்”கென்றோதிச் -சே காளை யருச்சுனனி றந்தான் - அறம்புரந்த கண்ணன் நம்மைவிட்டுப்ப றந்தான் - சிபியு மிந்த வேளை தனிலின்றிம றைந்தான் - எனினும் அவர் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... தோளே நமக்குமென்றறிந்தோம் - உடன்பிறந்தோம்* -சே வாழ்வே மிகச் சிறிய நேரம் - இதற்கிடையில் மானம் இழப்பதுவி காரம் - உயிர் கொடுத்தும் தாழ்வை யகற்றுவது வீரம் - நமதுரிமை தாங்கி நடத்தல் சமுசாரம் - அரைவயிற்றுக் கூழோ டிறப்பது விசாரம் - அதிக கோரம் -சே சாரைச் சிற்றெறும்பெனக் கூடிச் - சிங்கங்களென்னச் சள்ளைக் கலிப்பகையைச் சாடி - இழந்த பழம் பேரை நமது தலைசூடி - உடன்பிறந்தும் பேதம் கொள்ளும்வரை - வாய்மையெனும் போரை நடத்த இன்று கோடிக் - கணக்கி லோடிச் -சே 2 தமிழ் வீரரின் எழுச்சி லல்லல லல்லல லால - லல லல்லல லல்லல லால - லால ... என்ற வாய்பாடு எங்கள் இளந்தமிழர் வீரர் - அவர் இப்புவி வீழினும் வீரர்! வீரர்! சிங்கப் படையினைப் போலப் - பகைத் தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்! கங்கை தவழ்ந்திடு நாடு - தங்கள் காதல் எலாமந்த நாட்டினோடு தங்க ளினத்தவர்க் காக - உயிர் தன்னையு மீந்திடும் வீரர் ஆவர். - எங்கள் இளந்தமிழர் வீரர் வெற்றி நிலைத்திட வேண்டும் - தங்கள் வீர மெலாம்புவி ஏறவேண்டும் சுற்றம் சுகப்பட வேண்டும் - நற் சுதந்திர வாழ்வினிற் கூடவேண்டும் மற்றிவை; வீரரின் உள்ளம் தனில் மண்டிக் கிளர்வன; வாழி! வாழி சற்றிதிற் சோர்பவர் அல்லர் - இதிற் சாவடைத லொன்று வாழ்தல் ஒன்று! - எங்கள் இளந்தமிழர் வீரர் சோழனென் றேஒரு வீரன் - இந்தத் தொல்புவி காத்தவன் வீரன் - வீரன்! வாழிய பாண்டிய வீரன்! - அவன் வாய்மை யிலேபெரும் வீரன் - வீரன் ஊழிபெ யர்ந்துவந் தாலும் தங்கள் ஊக்கங் கெடாக்குடி தோன்றினோர்கள். வாழ்க! தமிழ்க்குல வீரர் - அந்த வன்மைத் தமிழ்க்குலம் வாழ்க! வாழ்க! - எங்கள் இளந்தமிழர் வீரர் 1 பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் கண்ணிகள் (பராபரக்கண்ணி போற் பாடுக) அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை கைமேற் கண்போலக் கண்டுவிட்டோம் ஏழைகள். பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல் இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்த்தோம். நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமழிந்து நெஞ்சி லுரமிழந்து நிதியிழந்தோ மெந்தாயே. பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி நெஞ்சத்தை எண்ணு1 விஷப்புனலை நீக்கிவிட்டோம். அறிவு விளக்கை அவிக்கும் மதுக்குடத்தை மறுபடியும் காசுதந்து வாங்கோம் மறந்துவிட்டோம் அறமுணர்ந்து கொண்டோம் கடைவைத் ததைவிற்கும் குறிப்பினையும் மாற்றிவிட்டோம் கொற்றத் தனித்தேவி ஈன்றாள் வெறுக்க இல்லாள் நடுநடுங்கச் சான்றோர் அவமதிக்கச் சம்மதித்தோம் இம்மதுவால் ஊன்வேண்டும் கள்வகைக்கே யுரைக்கு மதுவெனும்பேர் தேனுக்கு மிட்டழைத்தால் செம்மலர்கள் நாணாதோ? கள்என்னும் தாயோடு காமம் கொலைகளவுப் பிள்ளைகளும் பெண்டுமாய்ப் பின்தொடர்தல் கண்டுகொண்டோம் தள்ளாப் பெரியோர் சமுகமெனை யேவெறுத்துத் தள்ளவைத்த தீமதுவைத் தள்ளிவிட்டோம் எந்தாயே சோர்வு மதிமயக்கம் துன்பமெல்லாம் ஒன்றாக்கி ஆர்அனுப்பி னார்மதுவென் றறியோம் அருந்தேவீ. நேரில்விட்டால் இப்பேயை ஏமாற்ற நேருமென்று நீரிற் கலந்தனுப்பும் கலிக்கொடியன் நேர்மைகண்டாய் கொள்ளிப் பிசாசென்னும் கொள்கையினை நம்பாதார் கள்ளைப் பிசாசென்றால் காரணமும் கேட்பாரோ? நள்ளிருள்தான் கண்கள் நாணுமை உள்ளமெனில் கள்ளுண்டான் சேதியெல்லாம் துஷ்டக் கனவன்றோ? பருந்துபோல் ஊன்அனைத்தும் தின்னவைக்கும் பாழ்மதுவை மருந்துக்கும் வேண்டாமே எங்கள் மலர்த்தேவீ அரும்பாடு பட்டனம்என் றிம்மதுவை யுண்டதனால் துரும்பாகிப் போனதுண்டு தூய்மைத் திருநாடே உடலுறுதி வீரமிவை உண்டாக்குங் கள்ளென்று மடையர்சிலர் கூறுவது வஞ்சமடி எந்தாயே. குடிக்கும்போ தேயுயிர்போம் கூத்தாடும் போதுயிர்போம் இடித்துவிழுந் தாலுமுயிர்போம் இம்மதுவால் நன்மையுண்டோ? முனிவர்க்குத் தாய்என்னும் முன்னைத் திருநாடு சனிமதுவை2 ஒப்புமெனிற் சகந்தான் சிரிக்காதோ? நினைத்தால் அறிவூறும் ஞானிகட்கு நீதான் தனித்தாய் உனக்கெம்மால் சஞ்சலந்தான் வேண்டாவே அன்னைநீ வாழ்க அறமே வளர்கஇங்குத் “தன்னுரிமை” யாகிய ஓர் இன்பந் தழைத்தோங்க. கன்னி குமரிமுதல் கங்கைஇம யம்வரைக்கும் உன்னரசே ஆகுகஎம் உரிமைத் திருநாடே. வந்தே மாதரம் - பழம் புதுப் பாடல்கள், ப.50-51, 2005 ; தேசசேவகன், 21.11.1922 கண்ணிகள் (முன் தொடர்ச்சி) பருந்துபோல் ஊன் அனைத்தும் தின்னவைக்கும் இஃதை1 மருந்துக்கும் வேண்டாமே எங்கள் மலர்த்திருவே.2 அரும்பாடு பட்டதனால்3 இம்மதுவை உண்டாற்4 துரும்பாகிப் போவதெனிற் சூதோசொல் எந்தாயே.5 உடலுறுதி வீரமிவை உண்டாக்கும் என்று6 மடையரிதைக்7 கூறுவது வஞ்சமடீ எந்தாயே. குடிக்கும்போ தேயுயிர்போம் கூத்தாடும் போதும்8 இடித்துவிழுந் தாலுயிர்போம்9 இம்மதுவால் நன்மையுண்டோ? முனிவர்க்குத் தாயென்னும் முன்னைக்கு மூத்தாள்10 கனிமதுவை ஒப்பின்11 சகந்தான் சிரிக்காதோ? நினைத்தால் அறிவூறும் ஞானிகட்கு நீதான் தனித்தாய் உனக்கெம்மால் சஞ்சலந்தான் வேண்டாவே. அன்னைநீ வாழ்க! அறமே வளர்கவென்றும்!12 தன்னுரிமை யாகியஓர் இன்பம் தழைத்தோங்க! கன்னிக்13 குமரிமுதல் கங்கையிம யம்வரைக்கும் உன்னரசே யாகுகவெம் முரிமைத் திருநாடே - பழம் புதுப் பாடல்கள், ப. 52-52, 2005 ; தேசசேவகன், 27.2.1923 குறிப்பு : இதற்குமுன் இடம்பெற்றுள்ள பாடலின் (21.11.1922) பிற்பகுதி. ‘பருந்து போல்’ எனத் தொடங்கி முடியும் இறுதி எட்டுக் கண்ணிகள் - மீண்டும் பல மாற்றங்களுடன் இப்பாடலாக வடிவெடுத் துள்ளன. ‘முன்தொடர்ச்சி’ எனும் குறிப்போடு மூன்று மாதங்களின் பின்னர் அதே இதழில் வெளியிடப்பெற்ற இப்பாடற் பகுதி செப்பம் குறைந்துள்ளது. இவ் வெட்டுக் கண்ணிகளும் இவற்றிலும் செப்பமாக முன்னரே வெளியிடப் பெற்றன என்னும் ஓர்மையின்மையால் மறு அச்சீடு நேர்ந்திருக்கலாம். படைப்பொருமை கருதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1. பாழ்மதுவை 2. மலர்த்தேனீ 3. பட்டனம் என்(று) 4 யுண்டதனால் 5. துரும்பாகிப் போனதுண்டு தூய்மைத் திருநாடே 6. உண்டாக்கும் கள்ளென்று7.மடையர்சிலர் 8.போதுயிர்போம் 9. தாலுமுயிர்போம்10. முன்னைத் திருநாடு 11.சனிமதுவை ஒப்புமெனிற் 12.வளர்க இங்குத் 13. கன்னி - கன்னியாகுமரி 2 உடமை நாடு காளி உலகத்தை ஓங்கச்செய், ஓ! பரா சக்தி, கலகத்தை நீங்கச்செய் காண். நூல் காலப் பெருங்கடலில் - நாளும் கரைந்த தோற்றமெலாம் பாலப் பருவமுதல் - எங்கள் பாரதத் தாய்அறிவாள் நாலு திசைமுழுதும் - கொள்கை நாற்பதி னாயிரத்தார் ஆலின் கிளையவைகள் - என்னில் ஆக்கும் மரம் இவள்தான். சோர மிழைப்பதெவன்? - இங்கு(ச்) சூட்சுமம் செய்வதெவன்? தீர மிகுந்தவள்காண்! - பிறன் தீங்கை யெதிர்ப்பவள்காண்! ஆரு மறிந்தவள்தாய் - புவிக் கரங்கம் ஒற்றவளாம் நேரிற் பகைவருங்கால் - அன்னை நெஞ்சிற் கனல்பிறக்கும் வேத மறிந்தவள்தாய் - நல்ல விரிந்த கொள்கையினால் நீத மிதுவெனவே - அன்னை நீணிலத் துக்குரைப்பாள் மோதும் படையெனவே - நெஞ்சில் முதிர்ந்த சத்தியத்தாள் சாதிகள் நால்வகையாய்த் - தொழில் தன்னிற் பிரித்துரைத்தாள் “இயக்கல்” “மாற்றுத”லும் - ஒருங் “கிணைத்தல்” “உணர்த்தலா”ம் செயலின் நான்குபெயர் - இவை செய்வது நால்வருணம் இயக்கல் சூத்திரராம் - மாற்றல் இயம்பும் வாணிபராம் முயற்சி கொண்டிணைத்தல் - தன்னை முடித்தல் வல்லரசர். உணர்த்தல் பாரப்பனராம் - அன்னை உரையின் சீர்த்திகண்டாய்!1 பணத்தில் சாதியில்லை - ஏழைப் பறையர் தாழ்மையில்லை பிணத்தில் செய்கையில்லை - அது பெரிதும் தாழ்ந்ததுதான் துணைக்கு நான்குமல்லால் - ஒன்றைத் தூண்டிடல் தீமையென்பாள். உலகு தூங்கவில்லை - இன்று ஒழிவு கொள்ளவில்லை. பலபல் மானிடமும் - ஒளி படைத்து வாழ்ந்திடவே செல்லும் அழகையெல்லாம் - அன்னை சிரித்துப் பார்த்திருப்பாள் கலகச் சூழ்ச்சியினை - அன்னை காரி2 யுமிழ்ந்திடுவாள் அறம்வ ளர்த்தவள்காண் - யுத்த அமளி கண்டவளாம் துறவில் மிக்கவள்தாய் - மனத் தூய்மை யுடையவளாம் இறைவன் “ஒற்றை” யென்பாள் - அதில் எண்பது கோடிவண்ணம் முறையிற் பாடிடுவாள் - அன்னை மூதறி வானவள்காண் முனிவர் யோகியர்கள் - கல்வி முழுதுங் கற்றவர்கள் மனதை விட்டகலா - நிறை வாய்மை யுடையவர்கள் முனையில் வாழ்ந்திடுவார் - மணி முடிகொள் நன்மறவர் தனைம றந்தவராய் - என்றும் தருமம் காப்பவராய். முப்பது கோடிமக்கள் - பெற்ற முதன்மைத் தெய்விகத்தாள் கற்புக் கரசியராய்த் - தெய்வக் கனிகள் தந்தவள்காண் கைப்படத் தாலிகட்டும் - சொந்தக் கணவன் தெய்வமென்பார் இப்புவி யெங்குமுண்டோ - கற்பின் ஏற்ற மறிந்தவர்கள்? மானிடச் சாதியெலாம் - நன்கு மதிக்குந் தெய்விகங்காண் கானில் வெறுவெளியில் - இவள் கண்ட அமுதனையாள் ஊனும் சிலிர்க்குதுகாண் - அன்னை உடைமை பாடுவதால் தானம் மிகுந்தவள்காண் - அவள் சந்ததம் வாழ்க! என்பேன். - பழம் புதுப் பாடல்கள், ப.54-56, 2005; தேசசேவகன், 28.11.1922 3 மதுவிலக்குப் பாட்டு நோட்டு, தாளம் ஒற்றை மதுவிலக்கு மதுவிலக்கு மனைவிமக்கள் வாழியே! மதிகலக்கும் மதுவைவிட்டு மகிழ்வுபெற்று வாழ்குவாய்! நிதியனைத்தும் வீணிலாக்கும் நிலைமைகண்டு நீங்குவாய்! நிதமிழுத்து நலியவைக்கும் நேசர்கையி லேங்குவாய்! -மதுவி சதியனைத்தும் காசுதந்து சம்மதித்து வாங்கவோ? சதையனைத்தும் நையவைத்து நிதமரைப்பொன் தேடுறாய் மதுவிலக்கு மதிதுலக்கு மனிதவாழ்வில் மேன்மைகொள் மகிதலத்தில் உனதுநாட்டை வடுவகற்ற நோன்புகொள் -மதுவி அறிவுனக்கு மணிவிளக்கம் அதைவிருத்தி செய்குவாய்! அறமிதென்றும் மறமிதென்றும் அறியவேண்டு மல்லவோ? நிறைகுளத்தைப் பாசிமூடி நிலைகெடுக்கும் வாறுபோல் நின்மனத்தில் தெளியவிக்கும் நீசமதுவை நீக்குவாய்! -மதுவி பொறுமைகொண்டு புகழடைந்து பொன்மிகுந்த தமிழிலே புலமைகொண்டு வாழ்வதென்ற புதுநினைவு கொள்ளுவாய்! திறலிழந்து செயலிழந்து தெருவிலெங்கும் வெறியனாய்த் திரியவைக்கும் குடியைவிட்டுத் தேசசேவை செய்குவாய்! -மதுவி - பழம் புதுப் பாடல்கள், ப.57, 2005; தேசசேவகன், 12.12.1922 4 பாரத சமூக மன்றம் (காங்கிரஸ்) சொல்லுகிறது கும்மி மெட்டு நட்ட நடுவினில் ஈனத்தனம் - இந்த நாட்டினில் வந்து குடிபுகவே இட்டது செய்யென்று நானுரைத்தால் - அதை ஏற்க மறுத்தனர் பற்பலபேர். இட்டது சட்ட மெனப்பிறரால் - இன்று ஏவப் படுவதை ஒப்புகின்றார் சட்டமென் றேஒரு தெய்வமில்லை - ஒரு சமுகம் ஒப்புதல் சட்டமடா! பஞ்சின் நுணுக்கமும் இன்னும்சிலச் - சில பக்குவம் நானன்று சொன்னதுண்டு மிஞ்சி விட்டீரதை மிஞ்சிவிட்டீர் என்றும் மிஞ்சி விடாதவர் மிஞ்சீவிட்டீர் நெஞ்சி லிருக்குது தேசப்பணி - இந்த நேரத்தில் மாயை மறைக்குதென்றீர்! அஞ்சிக் கிடப்பதில் ஆசையெனில் - உங்கள் ஆண்மைக் குடிக்குள்ள ஆண்மையெங்கே? “கள்ளை அகற்றுதல்” தேசக்கலை - கற்றல் காட்டிய மற்றும் சிறுபணிகள் கொள்ளப் படாதனவோ? இவை - கொண்டிடில்2 குந்தகம் வந்துபு குந்திடுமோ? எள்ளும் கடைசி வருஷம்வரை - மிச்சம் இல்லையென் றாக்கிய கொத்தடிமை தள்ள எண்ணாவிடில் சாதல்நன்று - கெட்ட சாவை எதிர்ப்பவர் சாதல்நன்று. பண்ணிற் குழந்தை3 பசுக்குலம்போல் - நதிப் பள்ளத்தி லோடும் சலத்திரள்போல் கிண்ணத் திலிட்ட மணித்திரள்போல் - இனி கேடடைந்த பல கோடியினர். கண்ணிய மெண்ணி ஒரேமனதாய் - ஒரு காரிய மாயின் அரைநொடியில் பண்ணிவிட் டால்இந்தப் பார்மதிக்கும் - இந்தப் பாரத நாட்டினைப் பார்மதிக்கும். - பழம் புதுப் பாடல்கள், ப.58-59, 2005; தேசசேவகன், 26.12.1922 5 கொள்கைத் திருநாடு நீதிமன்னர் பலஞானிய ரின்னுடல் நீத்தன ரேயிந்த மண்ணிலே - அவர் காதல் முகத்தினை எண்ணுவதால் நல்ல கதைகள் தோற்றுதென் கண்ணிலே - எங்கள் தாதையரே எனக் கூப்பிடும் போதினிற் சத்தியங் கேட்குதென் செவியிலே - அவர் ஆதி நலந்தனைப் பாட நினைத்திடில் ஆண்மை தொனிக்குதென் கவியிலே கண்ணன் அருச்சுனன் வில்விதுரன் அறங் காத்தனரே அந்த நாளிலே - எங்கள் விண்ணின் மதியொத்த வாழ்வு நினைத்திடில் வீரமுண் டாகுதென் தோளிலே - அன்று அண்ணன் உதிட்டிரன் நீள்பகை வீழ்த்திய அத்தனை வாய்மை கொள்நிலத்திலே - இன்று எண்ணிய எண்ணமிங் கேழ்பு விக்குத்தகும் வண்ண முதிக்குதென் குலத்திலே கம்பன் அருங்கவி காளியின் நற்கன வார்ந்ததுவும் இந்தத் தேசமே - எனில் இம்பரிற் கோள் நிலைஎண் குறியாவும் அப் பாற்கர னுருப தேசமே1 அம்புவிக் காட்டினி லாடிய பாரத அன்னையின் வீரிய வரம்பிலே - நின் றென்பல பற்பல கால்வழியே தொடர்ந் தேறுது “சக்தி” யென் நரம்பிலே. கற்பி னருந்ததி சீதை திரௌபதி காதலறம் செயும்போதிலே - அவர் பொற்புறு நெஞ்சிற் சுவைநினைத் தால்இன்பு போந்திடு தென்னுள மீதிலே - பல சிற்ப முதற்கலை காவிய வல்லுநர் செய்ய மனத்தெழும் ஊற்றிலே - எழும் அற்புத வாடை கலக்குது வந்தென் அறிவுப் பெருங்குளிர் காற்றிலே. நீதிமன்னர் - பழம் புதுப் பாடல்கள், ப.60-61, 2005; தேசசேவகன், ப.4, 20.2.1923 6 தேச மகா மன்றம் (காங்கிரஸ்) மன்றத்தைப் போற்றுவதா லுங்கள் செய்கைகள் மாதவ மாகுமடா - அவை மாதவ மாகுமடா - அந்தக் குன்றத்தை வாய்மைக் குணக்கூட்டை மீறுதல் குற்றம் பெருங்குற்றமாம் - அது குற்றம் பெருங்குற்றமாம் தின்றிடும் சோறும் பிடுங்கப் படாதது தேசமன் றத்துணையால் - இந்தத் தேசமன் றத்துணையால் - ஒரு கன்றுக்குச் சொந்தம் கறந்திடும் பால்இக் கருத்தை நிசம்புரிவீர் - இக் கருத்தை நிசம்புரிவீர். முப்பத்து முக்கோடி மாந்தர் கருத்தில் முளைத்த பெருந்தெய்வமாய் - நன்கு முளைத்த பெருந்தெய்வமாய் - ஒரு மெய்ப்பதம் உண்டெனில் உம்மினும் வேறொரு வீரக் குலம்புகல்வாய் - ஒரு1 வீரக் குலம்புகல்வாய் இப்பொழு தேஉங்கள் தெய்வ மகாமன் றினையற்ற2 தாக்கிடுவீர் - சென் றினையற்ற2 தாக்கிடுவீர் - நீர் அர்ப்பணம் செய்திடுவீர் அந்த மன்றத்தின் ஆணைக் குயிர்பொருள்கள் - அதன் ஆணைக் குயிர்பொருள்கள் கெட்ட நெடுங்கதை கட்டுவ தும்வெறும் கீர்த்திக்குப் பேசுவதும் - வெறும் கீர்த்திக்குப் பேசுவதும் - இனி முட்டுந் தடையின்றி மன்றத்தின் வேகத்தில் மூச்சை நடத்திடடா - உன் மூச்சை நடத்திடடா. கொட்டும் பறைவாய்மை முற்றும் ஒரேவழிக் கோலி முழக்குவதால் - நன்கு கோலி முழக்குவதால் - திசை எட்டும் நமக்குள்ள கீர்த்தி விரிந்திடும் இன்பம் நிலைத்துவிடும் - நமக் கின்பம் நிலைத்துவிடும் இத்தனை கோடி யிளம்புயங்கள் விடும் எண்ணம் பெறாம்1 பெரும்வேல் - விடும் எண்ணம் பெரும்பெரும்வேல் - அவை அத்தனை யுங்குறி வைத்தெறி யத்தகும் யுத்த களம்புகல்வேன் - ஒரு யுத்த களம்புகல்வேன் - அது சத்திய மன்றிச் சழக்கிய லாவகை தாயரு ளாகுமன்றம் - அது தாயரு ளாகுமன்றம் - அந்த உத்தம மன்றினை வாழ்த்திடு வீர் - அதை ஓங்கப் புரிந்திடுவீர் - வெற்றி ஓங்கப் புரிந்திடுவீர். - பழம் புதுப் பாடல்கள், ப.63-64, 2005; தேசசேவகன், 13.3.1923 7 பசுத் தெய்வம் (நொண்டிச் சிந்து) நல்லதொரு தெய்வ முரைப்பேன் - எங்கள் நாட்டினர் நலத்தையுல கூட்ட நினைத்தே - நான் சொல்லில் மட்டும் உரைப்பதன்றாம் - எங்கள் சுருதியுரைத்த பல தெய்வங்களிலே - நல்ல புல்லருந்தும் பசுமாடு - இன்பம் பொழிந்து நிதம் உடலைப் பிழிந்து தரும் - புவிக் கெல்லையற்ற உபகாரம் - நம்மை இன்புறச் செயுந் தெய்வமென்று தொழுவோம் - அந்த - நல்லதொரு பசுவுக்குத் தனி நிலங்கள் - முன்னர்(ப்) பசும்புல் வளர்க்கவென்று தனிநிலங்கள் - இட வசதியை உரைப்பதென்றால் - பசு வாசம்புரியு மிடம் மணிக்கோயில் - அரு கிசைந்திடும் நிலைத்தீபம் - எனில் இரவுபகல் மனிதர் வழிபாடாம் - உடல் கசங்குதல் சிறிதின்று - முலை கறந்திடும் போதினில் இசைப்பாட்டாம் - எங்கள் - நல்லதொரு காவலர் கடமையிலே - பசுக் காப்பது தலையெனக் காத்துநின்றார் - எங்கள் பாவலர் வாழ்த்திலெல்லாம் தெய்வப் பசுவினை மறந்தொரு பாட்டினையாம்1 - திரு தாவுதல் பூவெனிலோ - அவள் சந்ததம் கிடப்பது பசுவிடமாம் - அறத் தேவர்கள் கூட்டமெல்லாம் - பசுத் தெய்வத்தினிடம் வந்து நடம்புரிவார் - இன்று - நல்லதொரு எண்ணான் கறங்களிலே - பசு இன்னுடல் உரஞ்சிடத் தரிநடுதல்1 - இது பண்ணா திருப்பவரும் - தெய்வம்2 பசுவினை வழிபட மறந்தவரும் - முன்னர்க் கண்ணாற் பார்க்கரிதாம் - அந்தக் காலத்தைக் கனவிலும் மறப்பதுண்டோ? - ஓ ஓ! புண்ணுங் குழியுலகே - பசுப் புனித மறந்தபெருஞ் சனியுலகே3 இன்று - நல்லதொரு வீரிய அருள் தாயை - இந்த விரிநில மாந்தர்கள் வேண்டுதல்போல் - உளம் கோருதல் பழிப்பாமோ? - பசு குவலயம் தனக்கொரு செவிலியன்றோ? - நல்ல மோரொடு சுளைத்தயிரும் - மணம் மொகுமொகு வெனவரும் நெய்ப்பயனும் - இவை யாரையும் மகிழ்வாக்கும்4 - பால் இன்பங்கள் அனைத்தையும் அரசாளும் - பசு - நல்லதொரு சாணமும் தருஞ்சலமும் - பிணி தாக்கிடும் பொருள்களில் தலையெனவே - மிகப் பேணினர் எங்குலத்தார் - பசுப் பெருமையை யறிந்தவர் பிணியறியார் - மனம் கோணிடப் பசுக்கூட்டம் - ஒரு கொடுமையுடையுமெனில்1 - உலகத்தையே - எதிர் காணாத தீப்பொறியாய்2 - ஒரு கணத்தி லழித்துவிடும் அறக்கடவுள் - இன்று - நல்லதொரு மடியினிற் பால்சுமந்தே - புவி மாந்தருக் களித்திட வருந்தாயை - அதன் அடிகளில் வணங்கிடுதல் - அஃ தருந்தவ மாவதை யாமறிவோம் - இதைக் கொடுமை யிலாக்க வரும் - பிறர் கொடும்பசி தனக்கெங்கள் உயிர்தருவோம் - இதை விடும்படி கெஞ்சிடுவோம் - இதை வெறுத்திடுங் குலத்தினுக் கறம்புகல்வோம் - இன்று - நல்லதொரு எங்கணும் பசுச்சாலை - பசு எழுந்ததும் எழும்பசிக் குணவிடுக - இனி எங்கணும் புல்வெளிகள் - தன் னிச்சையில் மேய்ந்திட3 ஆள்விடுக - மனம் பொங்கிடும் இசைப்பாட்டில் - பசு பூரிக்க இடையிடை புரிந்திடுவீர் - உல கெங்கணும் பசுக்குளங்கள்4- அதன் இன்னுடல் அழுக்கறத் தேய்த்திடுவீர் - நம் - நல்லதொரு மகளிர்கள் பசுப்பூசை - அதன் மணிக்கன்று நினைக்கையில் முலைசேர்ப்பீர் - அதன் சுகந்தரு5 காளைகளும் - ஒரு துயரின்றிக் காத்திட எண்ணிடுவீர் - இனி மிகஇவை செய் உலகே - பசு மிகமிக மனிதரின் இன்பமிகும் - பசு பகையென நினைத்திடுவோர் - அதன் பகையன்று தருமத்தின் பகையாவர்? - நல்லதொரு புத்தனென் றொருபெரியான் - முதல் புலைதவிர் முனிவரன் பலநோன்பு - மிக மொய்த்த இந்நாட்டினிலே - கொலை1 முதலெழுத் துரைப்பதும் போக்கிடுவோம் - ஒரு சத்தியம் காத்திடுவோம் - இந்த ஸகத்தினை அதன்வழி சேர்த்திடுவோம் - நம் மெய்த்துணை பரைத்தேவி2 - இந்த மேதினி “அவள்” என்று வாழ்த்திடுவோம் - பழம் புதுப் பாடல்கள், ப.67-70, 2005; தேசசேவகன், 10.4.1923 குறிப்பு: இந்தப் பாட்டு பெரியவர் சு.ர.சுப்பிரமணியன் 1980களில் நடத்திய ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் இதழில் மறுவெளி யீடு செய்யப்பட்டுள்ளது. அப்பாடலுக்கும் தேசசேவகன் இதழிலும் ‘கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்’ நூலிலும் இடம்பெற்றுள்ள பாடல் வடிவிற்கும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. 1. நொலை (க.கு.), 2. பசுத்தேவி (க.ம.-சு.) 8 அன்பு தரும் பாரதத்தாய் தன்னெழில் காட்டுகின்றாள் - தனைக்கண்டே அன்புமிகச் செய்கின்றாள் - நல்ல சின்னஞ் சிறுவண்டு சித்திரத்தேன் பூக்கள் என்னரும் பாரதத்தாய் இவையாவினும் -தன் தென்ன மரத்தோப்பு - அங்கே நல்ல சீதத் தென்றற்காற்று - அங்கோர் கன்னியும் நாதனும் காதல் அறம்செய்யும் பின்னிய ஓலைக் குடிசை தனக்குள்ளும் -தன் பாய்ந்திடும் வீரப்புலி - அமர்ந்தங்குப் பாடிய சாந்தக் குயில் - கிளை சாய்ந்த பெருங்காடு தவசியரின் கூட்டம் மாய்க்கும் இருட்டுக்குள் மந்திர கீதத்துள் -தன் மாய்ந்த உடற்புழுதி - ரிஷிகள் சென்று தேய்ந்த கொடிப்பாதை - முன்னைப் பேர்ந்த பழஞ்செங்கல் - பிள்ளைப் பழம்பொம்மை தேர்ந்த கதையுரைக்கும் சின்னங் களுக்குள்ளும் -தன் காட்டிற் சிறுகோயில் - அதிலெந்தக் காலத்திலும் பூசை - அங்குப் பாட்டைத் திருடர்கள் பச்சைக் கொலைவேடர் கூட்டத்திலும் தெய்வக் கொள்கை யிருப்பதில் -தன் வீட்டுச் சுவற்றுக்கு1 மேல் - பறவைதங்கக் கூட்டுக்குச் சாணறைகள் - அண்டும் ஆட்டுக்குத் துணைபண்ணை ஆளுக்குத் தயவான நாட்டுப் புறத்தவர் நல்ல வழக்கத்துள் -தன் உழவுத் தொழில்மாடு - புரியும்நன்மைக் குண்மை வழிபாடு - நல்ல நிழலை வெறுத்தங்கு நெல்லை வளர்க்கின்ற தொழில்புரியும் பறைச்சோதரர் தோளுக்குள் -தன் முழுதும் அவள்ரூபம் - எனில்நாட்டின் மோகத்தில் என்வாழ்வு - அவள் எழிலுண்டு கண்ணேரில் இழிவென்ப தொன்றில்லை இதயத்தில் எழுகின்ற எனதன்னை வாழ்த்துக்குள். -தன் - பழம் புதுப் பாடல்கள், ப.71-72, 2005; தேசசேவகன், 17.4.23 9 சுதந்திரம், அமரத் தன்மை ஆநந்தக் களிப்பு (வானம் என்று சொல்லியிருப்பது தெய்வலோகத்தை) துன்ப மிலாதது வானம் - பல தோஷமும் வேஷமும் அற்றது வானம் இன்பம் நிறைந்தது வானம் - அங்கு யாவு மிருக்கும் இலாதவை இல்லை. மேன்மை யுடையது வானம் - எனில் மேலுண்டு கீழில்லை என்பது பொய்யாம். ஆன விடுதலைப் பூமி - எது வாயினும் அஃது நலந்தரும் வானம். கொட்டிய தேன்மலர்க் காடு - வண்டின் கூட்டத்தினுக்கு நலந்தரு வானம் கட்டை விலக்காத நாய்க்கு - நல்ல கைலைமலை நரகாகி வருத்தும் தேவர்கள் வாழ்வது வானம் - எனில் தேவர் திருத்தி யமைத்தது வானம் ஆவலில் வந்தது வானம் - எனில் அச்சமும் சோம்பலும் அற்றது வானம். தேவர்கள் யார்என்று கேட்பீர் - வீரம் சேர்ந்திடும் வாய்மை படைத்தவர் தேவர் ஆவதும் தீவதும் எண்ணா - தறம் ஆண்மைத் தனத்தில் இயற்றுவர் தேவர் வில்லைப் பிடிக்கின்ற தோளும் - நல்ல வேதம் படிக்கின்ற மேலான நெஞ்சும் நல்ல வியாபார நோக்கும் - விதை நட்டுப் பயிர்செய்யும் தாய்போன்ற அன்பும் நாலும் நலங்குத லின்றி - ஒரு நாயும் எறும்பும் அழுங்குர லின்றிச் சீலம் படத்தங்கள் நாட்டைத் - திறம் செய்து முடித்தவர் தேவர்கள் என்பேன். சோனக வீதியிற் பூனை - ஒன்று சோற்றுக் கழப்பிறர் வீரக் குலத்தில் ஆனவர் போல வசிப்பர் - அட! அவரன்று தேவர்கள்! அவரன்று தேவர்!! - தேசசேவகன், 24.4.23 பாயும் சிறுத்தை மனத்தால் - கண்ணிற் பார்த்த நலத்தினிற் பாய்ந்திடும் வன்மை யேயப் படைத்தவர் தேவர் - துன்பம் ஏற்றவ ரின்துயர் மாற்றுவர் தேவர் யாவினும் காணுவர் இன்பம் - பசி என்பது நோயு மிலாதவர் தேவர் தாவும் பகைக ளிலாமல் - இன்ப ஸாத்தியமாம் அமுதத்தினர் தேவர் வெள்ளந் திரண்டது போலே - தன்னுள் மேவிய வாய்மை மலைத்தொடர் மேலே துள்ளிக் குதித்திடை நீங்கா - நற் சுதந்திரம் பெற்றவர் எவ்வெவ ரேனும் அன்னவர் தேவர்க ளாவார் - அஃ தற்றவர் யாவரும் வாடும் புழுக்கள் இன்னில மாந்தர்கள் யாவரும் - தினம் எண்ணித் தவம்பல செய்வதன் நோக்கம் வானவ ராகிடு தற்காம் - தாம் வாழ்கின்ற மண்ணினை வான்செய்வ தற்காம் ஆன விடுதலை யுச்சி - தன்னில் அன்னைப் பராசக்தி யின்னருள் வெள்ளம் தேவர்கள் உண்டு திளைப்பார் - அந்தச் சிவசக்தி அருள்மேனி கூடிக் கலப்பார் கூவிடும் ஓரியைப் போலே - வெறும் கோட்டை யெழுப்ப நினைக்கின்ற நாடே வான மிழந்திட்ட நாடே - வெறும் மண்ணையும் நோயையும் ஒப்பிய நாடே மான மிழந்திட்ட நாடே - முன்னர் மண்ணிடை வானைக் கொணர்ந்திட்ட நாடே தேவ நிலைக்கும் உனக்கும் - இடை சேர்ந்து மறைத்திடும் கொத்தடி மைக்கே ஆவியைப் போக்குதல் நன்றாம் - உங்கள் ஆண்மை யினாலதை வென்றிடல் வேண்டும் மண்ணினை வானென்று செய்வீர் - புவி மாந்தருக் காவன செய்வது கேட்பீர் விண்ணவர் தன்மையைத் தந்து - இந்த மேதினி மேலுயிர் யாவையும் காப்பீர். - பழம் புதுப் பாடல்கள், ப.73-75, 2005; தேசசேவகன், 1.5.1923 குறிப்பு: ஒருபாடல் இரண்டு இதழ்களில் பகுதி பகுதியாக வெளியிடப் பெற்றுள்ளது. 10 வெற்றி நெருக்கம் (கும்மி) வாழ்க்கை யினிக்குதடீ1 இந்த நேரத்தில் மாதர்க்கெலாம் நல்ல பாட்டுரைப்பேன் கேட்டுக் கொண்டே கும்மி தட்டிடுவீர் உங்கள் கீர்த்தியை எண்ணி மகிழ்ந்திடுவீர் வேட்கை யிருக்குதடீ இந்த நேரத்தில் வெற்றி யிருக்குது பார்எதிரே நாட்டில் விடுதலை என்னுமோர் நற்பதம் நம்மை நெருங்குது மாதர்களே மேட்டு நரிகட்கும் மேய்ந்திடும் கூகைக்கும் மேனி நடுங்கிடப் போவதில்லை பூட்டியவண்டிய விழ்ப்பதில்லை உயிர் போகுமட்டும் விடப் போவதில்லை கேட்டிலும் தீமை நினைப்பதில்லை பிறர் கேண்மையை முற்றும் மறப்பதில்லை. ஏட்டிலும் வெற்றி யெழுத்திலும் வெற்றிஎல் லாமினி வெற்றியென்றே மகிழ்வீர். - பழம் புதுப் பாடல்கள், ப.77, 2005; தேசசேவகன், 22.5.23 11 நீச நாகரிகம் (கும்மி மெட்டு) கோயிலிலென்ன குளத்திலென்ன பயன் கும்பிடல் யாவும் வெளிவேஷம் - என்று வாயி லுரைத்தொரு நாகரிகம் இங்கு வந்து குதித்தது பாரதமே. கோயிலைச் சாமியை வேண்டுகிலா தவன் “கொள்கை பிறர்க்கு நலம்புரிதல்” - இன்றி வாயினில் மாத்திரம் ஞானம் வளர்ப்பது வம்பெனச் சொல்லடி பாரதமே. சாத்திரம் பொய்ம்மை சரித்திரம் பொய்யது சள்ளையை விட்டு மறந்திடென்றே - ஒரு கோத்திரம் நீங்கிய நாகரிகம் வந்து கொட்ட மடிக்குது பாரதமே. சாத்திரம் பொய்ம்மை சரித்திரம் பொய்யெனச் சாற்றும் சழக்கர்கள் நல்லதமிழ் - எனும் நேத்திரம் கெட்டவர் நீசப் படிப்பினர் நிச்சய மாமிது பாரதமே. வெள்ளைத் துரைஉடை போலுடுப்போம் மயிர் வெட்டிக் கொள்வோம் தமிழ்துப்பிச் செல்வோம் - எனத் துள்ளுது மற்றொரு நாகரிகம் இதிற் சொக்குதல் பற்பலர் பாரதமே. வெள்ளைத் துரையெனக் கோலமிட்டார் உள்ளம் வெள்ளைக் கிருப்பதறிந்த தில்லை - தம்மைக் கொள்ளை கொடுப்பதை விட்டு விடாப்பெரும் கோளரைத் துப்பிடு பாரதமே. மாந்தர் குலத்தை ஒரேநொடியிற் கொன்று மாய்ப்பவரைப் பெரும் வீரரென்றே - அவர் ஈந்த பணிக்கிணை யில்லையென்றே ஒன் றியம்புது பாரடி பாரதமே. மாந்தர் தலைக்கு விஷம்புரி வார்அவர் மண்டை தனக்கதை மாற்றிவிட - நம்மில் வாய்ந்திடு சத்தியம் உண்டிது பொய்த்தவர் மந்தரென்றே உரை பாரதமே. மாதரின் கற்பை யழித்திடு தந்திரம் மாத்திரம் மிக்க விரித்துரைக்கும் வெள்ளைப் போதகர் செய்துள கட்டுக் கதைகளைப் பொன்னென்னப் போற்றுதொர் நாகரிகம் நூதன நூதனக் கற்பனைப் புத்தகம் நூறு லக்ஷம்தர எண்ணிடினும் - இந்தச் சாதி யொழுக்கம் கெடாவகை செய்யுமின்! தாயெழில் மாற்றுதல் பேடித்தனம். செந்தமிழிற் பெயரிட் டறியாக்கொடு தேயிலை காப்பியை முப்பொழுதும் - உண்டு வந்தனை செய்யென நாகரிக மொன்று வல்லமை காட்டுது பாரதமே. முந்தை வழங்கிய சத்துணவும் நல்ல மூச்சை வளர்த்திடு பானகங்கள் - இன்று நொந்து விலக்கும் பகட்டரெலாம் மெத்த நோயினர் என்றுரை பாரதமே. - தேசசேவகன், 22.5.1923 வெள்ளை வயித்தியம் தெய்விகமாம் - அதை வேண்டி யழைப்பது செய்தவமாம் உள்ள மகிழ்ந்து குதிக்குதிங்கே புலை ஊனர் விரும்பிய நாகரிகம் அள்ளிக் கொடுத்தது நல்லமுதம் - கிழ ஆண்டியின் பச்சிலை பொன்னியற்றும் தெள்ளும் வயித்திய பாரத சாத்திரம் தீயதெனிற் புவி தீயதுவாம். மேலில் மினுக்கி மினுக்கி யனுப்பிய வெள்ளையர் நாட்டு மருந்தினிலே - நீர் நாலும் அழைத்திடிர் என்றொரு பேய்வந்து நாட்டைக் கெடுக்குது பாரதமே! நூலொரு கோடி வயித்தியமாம் வலி நுண்ணிய நாடியிற் காண்பவரின் சீலமிகுந்த நம்மூலிகை எண்ணிடில் சித்த மினிக்குது பாரதமே! தின்னுதல் பூசல் தினம்பழகும் பொருள் சீமையிற் செய்தது நல்லதென்றே - விழி தன்னை மயக்குதொர் நாகரிகம் கையைத் தட்டிப் பறிக்குது பாரதமே! தின்னுதல் பூசல்தினம் பழகும் பொருள் தேசத்தில் உள்ளவை போதுமென்றே பன்னிய உண்மையைக் கண்டறி யாதவர் பாவிக ளாகுவர் பாரதமே! தேசத் திரவியம் பஞ்சிழை யாக்குதல் தெய்வந் தரும்பொருள் ராட்டினமாம் - இதை நாசப்படுத்திப் பிறன்கையை நத்திட நஞ்சை வளர்க்குதொர் நாகரிகம். தேச மிருக்குது கற்பகம் போல்இதில் தேவையெலா முண்டு வாழ்வினுக்கே காசைத் திரட்டிக் கடற்புறம் சேர்ப்பது கட்டடிமைக் குணம் பாரதமே! - பழம் புதுப் பாடல்கள், ப.78-81, 2005; தேசசேவகன், 29.5.1923 குறிப்பு: ஒருபாடல் இரண்டு இதழ்களில் பகுதி பகுதியாக வெளியிடப் பட்டுள்ளது. 12 ஆசையும் அச்சமும் (ஸஹானா) அன்னையெழில் நிறைந்த வார்த்தை - அவள் ஆசை பெருகவைக்கும் கவிகள் - தினம் என்னை யுரைத்திடு கென்றிசைத்தாள் - நெஞ்சில் ஏறும் கனல்நிகர்த்த தேவி பன்னப் புரிவதில்லை இங்கே - என்றன் பாரதத் தேவியின் நற்சீர்த்தி - உயர் மன்னு இமயமலை யோடு - கங்கை வண்புனற் பாய்திரு நாடு. காலை விழித்தெழுந்த போது - நேற்றுக் கண்ட வடிவில் ஒருமேன்மை - எனில் நூலுக்கது பொருத்தமாக - நெஞ்சில் நுழைந்த பொழுதில் ஒருவீரம். கோல முடையநல்ல பறவை - மரக் கூட்டம் விடுதலைகொள் விலங்கு - மிகு சீல முனிவர் தவக்காடு - பல சேர்ந்த மகிமைத்திரு நாடு. வாழ்விற் கலந்திருந்த இன்பம் - உங்கள் வாய்க்குத் தவறி விட்டதென்றே - இந்தப் போழ்தில் உரைக்குவரும் பேச்சில் - உள்ள போக்கில் மலைத்துவிட வேண்டா. ஆழ்ந்து மிதந்துவரும் மீன்கள் - கடல் ஆழந் தனை மலைப்பதுண்டோ - திறல் சூழ்ந்த மறவர் குலத்தோடு - மறைச் சோனை தனில் முளைத்த நாடு. உள்ளந் தனிற்கிளம்பு முளைகள் - இந்த உலகுக் கறிவுதரும் கனலாய்ப் - புகழ் அள்ளும் படிநினைத்தல் செய்வீர் - நொடி அரையில் அரையியற்ற வருவீர். வெள்ளம் மடைதிறந்த வாறே - உங்கள் வீரர் நிலத்தில் வைத்தமோகம் - அதற் குள்ள மனவுறுதி யோடே - அச்சம் ஓட்டிப் பணிபுரிந்து வாழ்வீர். - பழம் புதுப் பாடல்கள், ப.81-82, 2005; தேசசேவகன், 29.5.1923 13 சுதந்திர தேவி ஸ்தோத்ரம் (போனால் வருமோ வாலிபம் என்ற மெட்டு) நெஞ்சத்திலே வரும் எண்ணங்கள் யாவுமுன் நேசத்தி லாக்கும் சுதந்தரமே! கொஞ்சிக் குலாவிட நீவருவாய் - எங்கள் கொத்தடிமைத் தன்மையாம் தொலைப்போம் - அடி கொஞ்சத்திலே முகங் கோணிவிட்டாய். இங்குக் கொள்கையில் மாறிக் கலங்கிவிட்டோம் - இன்று தஞ்சமடீ யுன்றன் பாதத்திலே! - சிங்கத் தன்மை எமக்கருள் நீதத்திலே - எங்கள் அச்சம் பிடித்தவர் கண்டறியார் - எனில் ஆண்மைகொள் தோளில் நடிப்பவளே! எமக் கிச்சை யிருக்குது நாற்றிசையை - எம் இனத்தில் அடக்க வரந்தருவாய் - அடி உச்சி மலையடி உன்னழகு! - தன்னி லோடும் சிறுத்தை மனத்தெளிவு! - கட்டுங் கச்சை யறுத்து வருங்குதிரை - தன் கருத்தினில் வந்து கலப்பவளே! - அடி! வாய்மையும், வேலும் வலக்கையிலே - நல்ல வண்மையும், திண்மையும் மற்றொருபால் - எனத் தூய்மைப் படைசுமக்குந் திருவே! - எங்கள் துன்ப மகற்றும் நிழற்றருவே! - அடி! தேய்ந்து சிதைந்திடப் பார்ப்பதுண்டோ? உன்றன் தெய்விக மிங்கு புதுப்பொருளோ? - பண்டு தோய்ந்த உன்காற் சுகத்தையெல்லாம் - எண்ணச் சொக்குதுபார் இந்த தேசமெல்லாம் - அடி தாவிடுவாய் உள்ளத் தாமரைமேல் - வந்து தாக்குது பாருன்றன் காதற்கனல் - எங்கள் ஆவி, யுடல்பொருள் அத்தனையும் - உன்றன் ஆசை நெருப்பில் துரும்புகளாம் - அடி! தேவை யிருப்பதை நீயறிவாய்! - எங்கள் திண்மையைச் சோதனை செய்பவளே! - உன்றன் கோவை யுதட்டின் குறிப்பறிந்தோம்! - எங்கள் கொள்கையிலே அன்பு கொண்டவளே! - அடி - பழம் புதுப் பாடல்கள், ப.86-87, 2005; தேசசேவகன், 19.6.1923 14 அகாலியரின் ஆண்மை (அகாலியர் கையோடு கிருபான் (ஓர்வித கத்தி) வைத்திருப்பது வழக்கம். சர்க்கார் தங்கள் சட்டத்திற்கு விரோதம் என்று மறுத்தார்கள். அகாலியர் ஸ்வதர்மத்தை விட்டுவிட வில்லை. அவர்கள் சத்யாக்ரஹம் நடத்தி வெற்றியில் ஏறி விட்டார்கள்) கட்டளைக் கலிப்பா எங்கள் சாதித் திருக்கைவ ழக்கமாம் எங்கள் கத்தி எமக்குயிர் போன்றதாம் தங்கள் வன்மையைக் காட்டுக ஆளுவோர் சாதல் நேரினும் கைப்படை விட்டிடோம் பொங்கிப் பாயும் கடலினைப் போலவே போய்ச்சி றைப்படல் எங்கட்கு வெல்லமாம் அங்கிவ் வாறு கிளம்பினார்! வென்றனர் அகாலி வீரரின் ஆண்மையைக் கண்டிரோ! நின்று பாடிக் கிளம்புமாம் கூட்டம்அந் நீளக் கத்தியை ஏந்திய கையொடே, வன்பு கொண்டவர் ‘வா’ சிறைக் கென்பராம். வாய்மைக் கூட்டமும் தோள்தட்டிச் செல்லுமாம் என்பு நோக அடிப்பதுண் டாமதை “ஈச னாரருள்” என்று நகைப்பராம்! அன்றொ டன்றித் தினந்தினம் வெற்றியாம் அகாலி வீரரின் ஆண்மையைக் கண்டிரோ! நாட்டில் இந்தநற் றெய்விகப் போர்த்திறன் நாலு திக்கினும் சென்று கொளுத்துது கேட்ட மாந்தர்கள் கீர்த்தியை வாழ்த்தினார் கீழ்மை போக்கக் குலமொன்று1 சேருது வீட்டி லில்லை துயில்வதி லில்லை யிவ் வீண்ப சப்பினில் இல்லை சுதந்திரம்! ஆட்ப டாது யதேச்சையி லோடிய அகாலி வெற்றி அரும்பணி கண்டி ரோ! - பழம் புதுப் பாடல்கள், ப.88, 2005; தேசசேவகன், 10.7.1923 15 ஸ்வதர்மம் உடை வெண்கலிப்பா இங்கிலந்து தேசத் தினிற்போய் இறங்கியதும் அங்குநான் கண்ட அதிசயத்தைச் சொல்லுகிறேன் எல்லாரும் குல்லாய் தலைமயிரோ கத்தரிப்பு. எல்லாரும் மேலுங்கீ ழும்சட்டை யிட்டிருந்தார். உள்ளங்கால் மூடி உறையிட்ட தன்மேலே வள்ளம்போற் சப்பாத்து மாட்டாதார் யாருமில்லை. எல்லோரும் இவ்விதமே எத்தனையோ நாள்அங்குச் சொல்லா1 இடமெல்லாம் சென்றுநான் பார்த்துவிட்டேன். வேறுவித வேஷத்தைப் பூண்டவரைக் கண்டறியேன். மாறில்லை. சத்தியமே இந்துமனித ரைப்போல் தோள்மேலே உத்தரியம் தொங்குமிடைச் சோமனுடன் ஆளொருவன் வெள்ளையரில் அங்குநான் கண்டதில்லை. அப்போது தானென் அகத்திலொரு சந்தேகம் தொப்பென்று தோன்றிற்று நாம்மாத் திரம்நமது தேச உடையிருக்க வேற்றுடையைத் தீண்டுவதா? யோசிப்பீர் யாருமிதை உற்று. - பழம் புதுப் பாடல்கள், ப.91, 2005; தேசசேவகன், 10.7.1923 16 இராட்டினம் - தெய்விகப் படை ஆசிரியப்பா தேவர்க்கு விடுதலை தந்திடத் தேவி இந்திரன் தோளுக்கு வச்சிரம் ஈந்தனள் பார்த்தனுக் களித்தது பாசுப தாஸ்திரம் இராமனின் உரிமையைக் காப்பதற் கென்றே இராமனின் தோளினில் வில்லொன்றை யிட்டனள். கண்ணன் கையில் சக்கரம் அளித்தனள், கண்ணன் உலகைப் பகைகொன்று காத்தனன், “இதோஉம் விடுதலை” என்றனள். நாமெலாம் “எங்கென்று” கேட்டதில் இராட்டினம் காட்டினாள். இராட்டினம் சுழற்றிச் சுழற்றி எதிரியின் போக்கையும் சுழல வைக்கலாம் போலும்! மூச்செலாம் ராட்டின விசையினில் முடுக்கினால் ஏச்சின்றி வெற்றியில் ஏறலாம் போலும்! இந்திரன் உலக்கையால் எதிரிக்கு நோயெனல் இராட்டின நற்படை நாட்டினை மீட்பதாம். வச்சிரம், பாசுப தாஸ்திரம், வலியவில், சக்கரம் அனைத்திலும் நமக்குத் தந்ததே. நல்லது போலும்! வாழ்ந்தோம் நாமெலாம் இங்கிது வாழ்க! இதற்கொரு தனியறை நாட்டினில் ஒவ்வொரு வீட்டிலும் அமைப்போம். தெய்வப் படைத்திறன் திசையெட்டும் காணக் கையும் மனமும்நாம் சோராது கலப்போம். தோளுக்கு வீரமும் தொழும்புக்கு மீட்சியும் ஆளுக்காள் வேண்டினோம் அவையெலாம் அடைவோம். இராட்டினம் தந்தனள் எங்கள் மாசக்தி. மாசக்தி வாழ்க! அன்னவள் தேசத்தில் வாழ்க! பாரத நிலமிதே! - பழம் புதுப் பாடல்கள், ப.91, 2005; தேசசேவகன், 31.7.1923 17 ஏடுகள் (பத்திரிகைகள்) வாழ்க! வெண்கலிப்பா ஊருக்கோர் ஏடுஅந்த ஏடொன்றில் ஆயிரம்பேர் சேருங்கள்! நல்லமொழி தீட்டுங்கள்! பாரதத்தைப் பாடுங்கள்! எல்லாரும் பார்க்க விடுத்திடுங்கள்! ஓடுங்கள் வெற்றியிலே ஓடுங்கள்! ஓடுங்கள்! நாய்த்தன்மை கொன்று சுதந்தரத்தை நாட்டுங்கள்! காய்த்திருக்கும் நல்ல கனியைஇழக் காதிருங்கள்! தேவி யனுப்பிவிட்டாள் அந்தத் திருவருள்தான் ஆவியொடு காந்தி யவதாரம்! கண்டிடுங்கள்! ஏடெல்லாம் காந்தி இயக்கம் பரப்பிடுங்கள்! ஏடும் இருதயமும் ஒன்றாய் இருந்திடுங்கள்! எத்திசையும் உங்கள் இதயத்தை - ஸத்தியத்தைச் சித்திரித்து வாணிசொல்லத் தூதாய்ச் செலுத்திடுங்கள்! ஏடெல்லாம் வாழ்க! இசைஓங்க! ஒன்றுபத்தாய் நாடெல்லாம் காண்க! நயந்து. - ஆத்மசக்தி, சூலை 1923 18 வளர்ந்த திங்கொரு தீ! 1. ஆண்ட நாட்கள் பலயுகம் மனமே! - நாம் அடிமைப்பட்டது சிலசில நிமிஷம் மாண்பினி லுயர் பாரத மக்கள் வடுப்பெறுமுன் பகைவர் ஓட வளர்ந்த திங்கொரு தீ! - இன்று வளர்ந்த திங்கொரு தீ! 2. தூண்டுவது போய்பாராத மெங்கும் - அவள் சொரிந்திடும் விழிக்கருணையின் ஊற்று தாண்டிடும் பகைதலை குனிந்திடச் சகத்தினி லெங்கள் நிலை யுயர்ந்திடத் தாவு திங்கொரு தீ! - இன்று தாவு திங்கொரு தீ! 3. இருந்தது புயம்; எழுந்தது குன்றம் - இதை இடர்நினை வார்க்கோதுக மனமே! பெரும்பெரும் செயல்புரிக என்றாள் பெயர்ந்தன தோள்பொய் நசுங்கிடப் புரிந்த திங்கொரு தீ! - இவை புரிந்த திங்கொரு தீ! 4. பெரும்புவிக்கிடை மறம்புகப் பாரோம் - அவள் பேச்சினை எங்கள் மூச்செனக் காப்போம் சரம் சரமென அமுதம் பொழியும் சக்தி என்பதோர் இன்ப ஊற்றில் விரிந்த திங்கொரு தீ! - மனமே! விரிந்த திங்கொரு தீ!! 5. சக்தி யின்னருள் நமக்கமு தளித்தாள் - மனமே! தருமம் கொன்றவர்க் கது பெருந்தீ! தீ! தொத்தும் வறுமை பகையும் கருவில் தொலைந்திட அறம் விடுதலை பெறத் தொடர்ந்த திங்கொரு தீ! - மனமே தொடர்ந்த திங்கொரு தீ!! 6. தடுப்பது துகள் தகிப்பது வாய்மை - நாம் சகத்தைக் காக்கும் சக்தியின் கூட்டம் விடுக்கு மொழியில் விடுதலைக் குரல் விருப்ப மனைத்தும் அமர வாழ்வில் கொடுக்கு திங்கொரு தீ! - மனமே கொடுக்கு திங்கொரு தீ!! 7. இடுக்கிட முதல் எங்கணும் காதல் - உயிர் யாவு மீதோ விடுதலை மீதில்! பிடித்தது நாம் அவள் மலர்த்தாள் பெய்ததங்கே தண்ணருள்காண்! பகைக்கது பெருந்தீ! - மனமே பகைக்கது பெருந்தீ!! - பழம் புதுப் பாடல்கள், ப.129-130, 2005; மணிக்கொடி, ப.6, 5.10.1933 குறிப்பு: மணிக்கொடி இதழில் அதிக அளவில் வெளிவந்த பாடல்கள் பாரதி தாசன் பாடல்களே. இப்பாடல் ‘க.சு.பாரதிதாஸன் எழுதியது’ என்னும் குறிப்புடன் (கொடி 1 மணி 5) வெளியிடப் பட்டுள்ளது. மணிக்கொடி இதழ்களில் ஆக்கியோன் பெயர் ‘பாரதிதாஸன்’ என்றே குறிக்கப் பட்டுள்ளது. 19 புவியன்னை முன்னேறுகின்றாள் உள்ளம் மலர்ந்த சிரிப்போடு மின்னை உதிர்க்கும் முகங்களொ ராயிரங் கோடி கொள்ளும் பெரும்புவி ஆமெங்கள் அன்னை குறைதவிர் ஒற்றைப் பெரும்பதம் நாடி அள்ளும் மகிழ்ச்சியி லேநடக் கின்றாள் அண்டங்கள் ஓட அவற்றொடு விண்ணில் குள்ள நினைப்புகள் பேதங்கள் வென்றால் கோல மெலாம்தரு வாள்மலர்க் கண்ணில் ஊணுடை வீடு படிப்புநல் லின்பம் ஒவ்வொரு வர்க்கும் கிடைப்பது நாடி மாண்புவி அன்னை பலப்பல துன்பம் வாய்த்திடி னும்தொடர் வாள்குறி தேடி வீண்படு பேதங்கள் போரிடும் உள்ளம் மேதினி அன்னைஇப் பீடைகள் நண்ணாள் காணலுற் றாள்பொது அன்பெனும் வெள்ளம் கால்சலி யாள்குறி மேல்வைத்த கண்ணாள். மக்களை மக்கள் படுத்திடும் வெம்மை வஞ்சகம், மிஞ்சும் மதஞ்செயும் தொல்லை, மொய்க்க இருப்பினும் மேதினி அம்மை முன்வைத்த காலினைப் பின்வைப்ப தில்லை அக்கறை கொண்டுமுன் னேறிடு கின்றாள் அண்டிடு தீமை ஒதுக்கினள் தேவி. புக்கன யாவும் பொதுப்பொருள் என்றாள் போதம் விளைத்து நடந்தனள் தாவி. - பழம் புதுப் பாடல்கள், ப.135, 2005; சுதந்திரச் சங்கு, ப.6, 26.1.34 குறிப்பு: ‘சுதந்திரச்சங்கு’ இதழில் பாரதிதாசன் பாடல்கள் பல வெளி வந்துள்ளன. மறுவெளியீடும் செயப்பட்டுள்ளன. அவற்றில் ஆக்கியோன் பெயர் ‘பாரதிதாஸன்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. 20 தாயின் மணிக்கொடி மன்னிய பாரத நாட்டின் கொடிக்கு வணக்கம் புரிந்திடுவோம் - நம் அன்னை மணிக்கொடி வாழிய வேஎன அணிவ குத்திடுவோம் - நம் முன்னைப் பெரும்புகழ் எண்ணிடு வோம்;குறி நோக்கிமுன் னேறிடுவோம் - உயர் குன்றெ னவேநிமிர் வோம்; நடப் போம்பகைக் கூட்டத்தைச் சீறிடுவோம். வானிம யாசலம் தென்குமரிக் கிடை வாய்ந்த பெரும்பூமி - அது கான வரிப்புலி போலும் முப்பத்துமுக் கோடி மக்கள்பூமி - என்று நானில மீதினில் எங்கள் மணிக்கொடி நாளும் பறக்குதங்கே - நம் மானம் அஃதே என எண்ண எண்ணநெஞ்சில் வீரம் பிறக்குதிங்கே. செந்தமிழ் வீரர்கள் வங்கர் தெலுங்கர்கள் சீக்கியர் ராஜபுத்ரர் - உளம் முந்தும் துருக்கர்கள் வில்லினர் வேலினர் வாளினர் மொய்ம்புடையார் - எனும் பந்தியின் வாய்ந்திடு சேனையெ லாம்எங்கள் பாரத அன்னைவசம் - எனில் சந்ததம் வெல்வதும் தாரணி ஆள்வதும் எங்கள் மணித்துவசம் மாக்களைத் தந்த பெரும்புவிக் கேநல்ல மக்களைத் தந்தநிலம் - அது பாக்கியம் என்று பணிந்திடும் எங்களின் பாரத அன்னைநிலம் - எங்கள் ஆக்கையும் ஆவியும் அன்னவட் கேஎனப் பேரிகை ஆர்த்திடுவோம் - அவள் தூக்கும் சுதந்திர மாகொடி நாளும் துலங்கிடக் காத்திடுவோம். - பழம் புதுப் பாடல்கள், ப.163, 2005; ஸ்ரீசுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு, 1935 21 முஸ்லிம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றுசேர் உயர்வுசெய், உன்இ னத்தை! ஒன்றுகொடு விரோதிகளின் உரத்தின் மேலே! நன்றுசெய்! அஞ்சாதே! வெற்றி நோக்கி, நடத்து! முன் வைத்தகால் பின்வைக் காதே! இன்றிந்த நாட்டினிலே பிறந்தோர்க் கெல்லாம், எதுவேண்டும்? போராடும் சக்தி வேண்டும், சென்றிடுமோ உன்னுரிமை? விடாதே! முஸ்லிம், சேனாதி பதியேநீ ஏறுமேன் மேலே! “இந்தியர்கள் யாரும்” எனும் நோக்க மின்றி, இம்மியள வேபேதம் கொண்டிட் டாலும், அந்தநெடும் பாம்பினத்தின் விஷப்பல் லைப்போய் அடியோடு பெயர்த்துவிடு! இரக்கம் வேண்டாம்! சிந்துபொழி யும்தேசம் கேட்ப தெல்லாம், திறல்பொழியும் வீரனைத்தான்! நாயை யன்று! சிந்துமெனில் உன்மானம், சாதல் நன்று! செல்விகத்து முஸ்லிம்நற் சிங்கக் கன்றே! - பழம் புதுப் பாடல்கள், ப.171, 2005; குடிஅரசு. 9.1.1938 குறிப்பு : குடிஅரசு இதழில் முகப்புப்பாடலாக இது வெளிவந்தது. 1937இன் இறுதி, 1938இன் தொடக்கக்காலக் குடிஅரசு இதழ்களில் தன்மான இயக்கமும் முசுலீம் லீக்கும் இணைந்து நெருக்கமாகச் செயல் பட்டமைக்கான பல சான்றுகள் பதிவாகியுள்ளன. பெரியார் ஈ.வெ.ரா. புதுநகரம் முஸ்லீம் லீக் ஆண்டுவிழாக் கொண்டாட் டத்தில் 6.12.37இல் கலந்துகொண்டு ‘எல்லாவற்றையும் விட இந்து - முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் இந்நாடு ஒரு விரற்கிடையளவாவது முன்னேற்றமடையாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமை யில்லாமல் இந் நாட்டு மக்களுக்கு ஒரு கடுகளவு சுதந்தரம்கூட ஏற்பட்டுவிடாது - இந்து முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் இந்நாட்டு மக்களுக்கு விநாடிநேர சாந்தியும் ஏற்பட்டுவிடாது’ எனப் பேசியிருப்பது மனங்கொள்ளத் தக்கது. இந்தப் பின்புலத்தில் இந்தப்பாடல் உருவாகியுள்ளது எனக் கொள்ளலாம். 22 எனது நாடு என்னருமைத் தேசம் எழில்பா ரததேசம் பொன்னும் பொருளும் பொருந்தும் பழநாடு! கங்கை பெருகும். கலகலென ஓசைவரும்! அங்கு மணிப்பறவை அத்தனையும் பண்பாடும்! தூய இமயமலை வானைத் தொடும்! சிந்து பாயும் ஒருபால்! பழமரங்கள் ஓங்கும்! நதிகள் சமுத்திரத்தை நண்ணும் கரையில் நிதிகள் கொழிக்கும்! நிறைகப்பல் நீர்மிதக்கும்! ஈக்கள் சதாகீதம் என்னென்ன இன்பங்கள்! பூக்கள், மகரந்தம், பூந்தேன், புதியமணம் வெள்ளைமலை போற்பசுக்கள் வேண்டுமட்டும் பால்கொடுக்கும்! அள்ளும் தயிர்நறுநெய் ஆர்ந்து கிடக்குமிங்கே! தென்றல் சிலிர்க்கவரும் செவ்விளநீர் தித்திக்கும்! மன்றலுறு தாமரைகள் வாவியெலாம் பூத்திருக்கும்! செந்நெல், கரும்பு, செழும்பலா, தேன்கதலி எந்நலமும் வற்றாச் சமுத்திரம்போல் இங்குண்டு! தேனென்று பாலென்று சேல்விழியார் வாய்முத்தந் தானென்று சொல்லும் தமிழ்க்கவிதை யெல்லாம் புகழ்க்கூட்டம் செய்து, புனிதத் தமிழர் அகத்தே உயிராகி ஆர்ந்து கிடக்குதிங்கே! வீடுதொறும் நல்லறஞ்செய் வெண்(ண)கைசேர் பெண்களெலாம் பாடுதொறும் இன்பஞ்செய் பச்சைப் பசுங்குயில்கள்! ஈர முடையார்; எவர்க்கும் நலம்புரிவார் வீரர்; பகைக்குலத்தை வேரறுப்போர் ஆடுவார்கள்! கோலமுப் பத்தைந்து கோடி குலமக்கள் காலம்பார்க் கின்றார்கள் கட்கத்தை ஓச்சுதற்கு! சாதி யனைத்தும் சமன்செய்தார்; புன்மதத்தால் மோதி யழியாமே முன்னேறிச் செல்கின்றார். கண்ணினிக்கும் காட்சிகளைப் பாடும் கவிஞரெலாம் பெண்ணினத்தை இங்கே பெரிதென்று பாடுகின்றார் மூட வழக்குக்கு முடிவளித்தார்; பேதமெனும் காடழிக்க நல்லறிவுக் கோடரியைக் கைப்பிடித்தார்! எங்கும் புதிய எழுச்சி இலகினதால் அங்கே பகைவரெலாம் அங்கம் நடுங்குகின்றார்! நானிலத்தார் இன்பமெலாம் நன்று நுகர்வதற்குத் தேனென் றினிக்கும் எனது திருநாடு தூக்குந்தோள், வில்லில் தொடுக்குங்கோல், நல்லறத்தால் ஆக்கும்போர், நெஞ்சில் அடக்கும்மூச் சுகளெல்லாம் வெல்கவெல்க! என்நாடு வெல்க! உரிமையெலாம் மல்கநலம் அத்தனையும் வாய்ந்து. - பழம் புதுப் பாடல்கள், ப.166-167, 2005; தமிழரசு, 16.04.1978; மறுஅச்சீடு, 1.5.1990 குறிப்பு: தமிழ்நாடு அரசு நடத்தும் இதழில் முதலில் வெளி வந்த போது இப்பாடல் ‘1937-இல் எழுதியது’ என்னும் குறிப்பும் மறு அச்சீடு செய்யப்பட்டபோது ‘1936-இல் எழுதியது’ எனும் குறிப்பும் காணப் படுகின்றன. 23 எம் கொள்கை ஹிட்லரின் எண்ணம் பலிக்காது - நம தெல்லையில் நாஜிசம் செல்லாது கஷ்டம் விளைத்திட ஜப்பானே - இங்குக் காலைவைத் தாலுயிர் தப்பானே கட்டவொண்ணாது முத்தாலி - தலை காட்டவும் கூடுமோ இத்தாலி கொட்டி முழக்கிடு போர்முரசே - நம் கொள்கை முழக்கிடு போர்முரசே ஹிட்லரிசத்தை விதைத்திடுவார் - அவர் ஏழைகள் தம்மை வதைத்திடுவார் கொட்டாப்புளிக் குள்ளர் ஜப்பானிசம் - லாபக் கொள்ளையடிப்ப பதப் பப்பா நிசம் தொட்டாற் சிணுங்கிகள் நாங்களில்லை - முன் னூன்றிய காலைப்பின் வைப்பதில்லை கொட்டி முழக்கிடு போர்முரசே - நம் கொள்கை முழக்கிடு போர்முரசே ஒற்றுமை உண்டு இந்த நாட்டினிலே - மிக ஊக்கமுண்டு நெஞ்சவீட்டினிலே வெற்றிகொள் வீரர்கள் வாழ்ந்தநிலம் - இது வீராதிவீரரைக் கண்ட நிலம் பெற்ற இந்நாட்டிற் பிறநாடு - வரின் பின்னல்லவோ அறிவார்கேடு கொற்றம் முழக்கிடு போர்முரசே - நம் கொள்கை முழக்கிடு போர்முரசே குறிப்பு: பாரதிதாசன் கையெழுத்துவடிவில் தரப்பட்டுள்ள இப் பாடலின் இறுதியில் தாக்குதல் சராசரங்கள் எ.மெ அதோ பகைவர் படைமுழக்கம்! அங்குவிரைவில் நடப்போம் அங்குவிரைவில் நடப்போம் என்னும் அடிகளையடுத்து சிதைந்த இரண்டு அடிகளுக்குப் பின் பகைவருக்கா அன்றி நமக்கா பகைமீது பாய்ந்தோம் நாம் வாழ்ந்தோம் என்று முடிகின்றது. - பழம் புதுப் பாடல்கள், ப.197-198, 2005; பாரதிதாசன் இதழ்ப்பணிகள், ப.224-225க்கு இடையில் இணைப்பு 24 ஜனநாயகம் ஆட்சியிலே நல்லஆட்சி என்பது - ஜன நாயக ஆட்சி அன்றோ அது சூழ்ச்சியினால் அதை வீழ்த்தவரும் - ஜப்பான் துஷ்டரை வீழ்த்தத் தொடுப்போம் போர் தூங்கியிருந்த பிராஞ்சினையும் - அதன் சொல்லஒண்ணாப் பெருமாண்பினையும் - பழி வாங்கிய பொல்லாத ஜெர்மனியும் - குள்ள வர்க்கமும் வாலாட்டுமோ இனியும்! இந்தியர் உண்டிங்கு நாற்பதுகோ - டியர் ஏய்த்திடும் குள்ளர்க் கிளைத்தவரோ? வந்திருக்கும் நமதாங்கில நண்பர்க்கு வல்லமை இல்லை எனுங் கருத்தோ. - பழம் புதுப் பாடல்கள், ப.199, 2005; பாரதிதாசன் இதழ்ப்பணிகள், ப.224-225க்கு இடையில் இணைப்பு குறிப்பு: பாரதிதாசன் கையெழுத்து வடிவில் தரப்பட்டுள்ள இப்பாடல் முற்றுப் பெறவில்லை இதனையடுத்து இரண்டு வரிகள் சிதைவோடு இடம் பெற்றுள்ளன. 25 பாரத சேனை மக்களின் சம்மதம் பெற்று நடத்திடும் ஆட்சி - அது மாசற்ற தென்றுரைக்கும் ஜனநாயக ஆட்சி முக்கியமாய் ஜனநாயகம் ஹிட்லரின் வைரி - அவன் மூர்க்கம் தொலைப்பதுதான் அறியத்தக்க செய்தி திக்குத் தெரியாத போக்கல்லவா அவன்போக்குப் - பெரும் செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் தெருநாய்க்கே இக்கணமே தொலைப்போம் அந்த ஜெர்மானியரை - முன் னேறுமுன் னேறுமுன் னேறுது பாரதசேனை. - பழம் புதுப் பாடல்கள், ப.200, 2005; பாரதிதாசன் இதழ்ப் பணிகள், ப.215 குறிப்பு: இரண்டாம் உலகப்போரில் இட்லரை எதிர்த்து நேச நாடுகளின் படை முன்னேறிச் செல்வதைக் குறிப்பிடும் பாடல் இது. கவிஞரின் கை யெழுத்து வடிவில் அமைந்த இதைப்போன்ற பல பாடல்கள் அச்சேற வில்லை என்று அறியமுடிகிறது. 26 ஆங்கிலர் அறப்போர் வெற்றி முரசு (ஆநந்தக் களிப்பு மெட்டு) பல்லவி வெற்றி முழக்கஞ்செய் முரசே நல்ல வீரம் செறிந்தநம் ஆங்கில நாட்டின் வெற்றி முழக்கஞ்செய் முரசே! சரணம் 1. சிற்றெறும்பின் சரம் போலே - அந்த ஜெர்மனியர்கள்வந் தாங்கிலர் மேலே கற்றிடும் வித்தையைக் காட்டிப் - புவிக் கலகம் விளைத்தனர் ஆத்திரம் மூட்டி - வெற்றி 2. நாஜிசம் என்னும்அ நீதி - ஜன நாயகத் துக்கது மிக்கவி ரோதி தேசத்தை வாட்டும் வியாதி - அதைத் தீர்த்திடும் ஆங்கிலர் தீரரென்றோதி - வெற்றி 3. மனிதத் தனத்தை மதித்தே - மக்கள் வாழ்வை உயர்த்திடும் சட்டம் விதித்தே இனிமையில் ஆண்டிடும் தேசம் - அந்த இங்கிலாந்துக் குண்டு வையத்தின் நேசம் - வெற்றி 4. நப்போலியன் இரு தோளும் - முன்பு ஞானமிலா ஜெர்மன் ஓச்சிய வாளும் அப்போதும் ஆங்கிலர் கண்டார் - எனில் இப்போதும் காண எழுந்தனர் என்றே - வெற்றி 5. தேச ஜனங்கள் விருப்பம் - ஒரு தீய மனிதனின் காலின் செருப்பாம் நாஜியர் ஆட்சி விஷத்தைக் - கொல்ல நானென்று மார்தட்டும் ஆங்கிலநாட்டின் - வெற்றி 6. பல்கோடி மக்களை ஆளும் - பெரும் பதவிக்குக் காரணம் நல்ல தயாளம் பொல்லாத ஜெர்மனி மாளும் - அதன் போக்குகள் யாவும் அதற்கடையாளம் - வெற்றி 7. இங்கிலாந்தின் அறப்போரில் - நல்ல இந்தியரின் துணை உள்ளதை நேரில்வி ளங்கவைப் போமிந்தப் பாரில் - எனில் வீழ்ந்தது ஜெர்மனி வீழ்ந்தது கோரி - வெற்றி 8. நாட்டுக்கு நல்லது செய்தார் - எந்த நாளும் நமக்குள்ள தீமை களைவார் வீட்டுக்கு வீடாங்கிலர்க்கு - ஒரு வீதம் கொடுப்பது நீதம் பயக்கும் - வெற்றி 9. இன்றல்ல நேற்றல்ல நேசம் - நல்ல இங்கிலாந்தோ பலநாள் சாவாசம் நன்றி செலுத்த உத்தேசம் இதை நாம் மறுத்தால் நமை நம்மனம் ஏசும் - வெற்றி 10. ஜெர்மனியாரின் பதட்டம் - முற்றும் திரிவில்லையெனில் யாருக்கும் நஷ்டம் தர்மத்தின் விழியும் இருட்டும் - நாம் தடையின்றி உதவுதல் நாம்கொண்ட திட்டம் - வெற்றி 11. நாமுண்டு சிங்கங்கள் போலே - செல்வ நாடுண்டு தோளுண்டு குன்றத்தைப் போலே சீமையில் மன்னர்பி ரானார் - ஆட்சி ஜெயமுறும் என்பதொர் நிச்சயமுண்டு - வெற்றி 12. ஏதுண்டு ஜெர்மனி நாய்க்கு - இனி எத்தனை நாளைக்கு ஜெர்மன் வீராப்பு? காதுண்டு கேட்டிடும் வையம் - ஜெர்மனி கரிவேகும் போதது பரிகாசம் செய்யும் - வெற்றி 13. நானில மக்களுக் காக - பல நாட்டின் சுதந்தரம் மீட்பதற்காக மானம் நிலைப்பதற் காக - நின்று மார்தட்டும் ஆங்கிலப் போர்ஒப்பினோம் நாம் - வெற்றி 14. ஆபத்திலே இந்த லோகம் - சிக்க ஆக்கிற்று ஜெர்மனி என்ன சந்தேகம்? கோபித்த ஆங்கிலர் கையில் - நாம் கொடுப்பது வையம் படைப்பதுவாகும் - வெற்றி - பழம் புதுப் பாடல்கள், ப.201-203, 2005 குறிப்பு: இரண்டாம் உலகப்போரின்போது செர்மனி நாசிப்படை யினை எதிர்த்து அதன் வீழ்ச்சியையும் ஆங்கிலேயரின் வெற்றியையும் பாடு பொருளாகக் கொண்ட இப்பாடல் பாவேந்தரின் கையெழுத்து வடிவில் புதுவை பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையத்தில் உள்ளது. 27 ஆளவந்தார் சிந்துகண்ணி ஆளவந் தோம்உல காளவந் தோம்நா டாளவந்த தோம் இனி வெள்ளையனே - நல் வேளையும் வந்தது “போவெளியே” என வெற்றி முழக்கினார் ஆளவந்தார்; மீளவந்த தால்நலம் வெள்ளையன் என்று விளம்பினர் என்னேடி சின்னகண்ணே? - ஆம் ஆளவந் தார்தமக் கண்டை வீட்டாரிடம் அன்பில்லை என்னரும் பொன்னுக்கண்ணே. கோள்அகன் றோம்மனக் கோணலற்றோம் இனிக் குள்ள நினைப்புக்கள் கொள்ளுகிலோம் - கையில் வாளெடுப் போம்ஒத்து வாழ்ந்திருப்போம் - என்று வாய்திறந் தேசொன்ன ஆளவந்தார் - பகல் வேளையிலே இந்த நாட்டுத் துருக்கனை வேம்பென்று சொல்லினர் சின்னகண்ணே - ஆம் ஆளவந் தார்மத மான கண்ணாடி அகற்றத் திருந்துவர் பொன்னுக்கண்ணே. ஆளவந் தார்இவர் முப்பதுபேர் - அவர் ஐயிரண் டானவர் பொய்யல்லவே - இங்கு மூளுவ தாகிய இப்பெருஞ் சண்டையில் மூத்தவ ரேதணி வாய்நடந்தால் சூளையிற் கல்லென வெந்திடு மக்களின் தொல்லை தணிந்திடும் சின்னகண்ணே - ஆம் சூளையின் கல்லுக்குத் தொல்லைவந்தால் அதில் ஆளவந் தார்க்கென்ன பொன்னுக் கண்ணே. ஆயுத மில்லாத போது பிறர்க்கின்னல் ஆக்குதல் தீதென்று சொல்லிவந்தார் - கையில் ஆயுதம் வந்தபின் ஆளவந்தார், தொல்லை ஆளவந்தார் என ஆகிவிட்டார் வாயினில் ஒன்று மனத்திலொன் றாகிட வாழ்ந்திட ஒப்பினர் சின்னகண்ணே - ஆம் வாயாற் பிறர்க்கின்னல் செய்யாதீர் என்றது ஆயுதம் தாம்பெறப் பொன்னுக் கண்ணே. - பழம் புதுப் பாடல்கள், ப.225-226, 2005; பொன்னி, மே 1947 28 தேசத்தைக் காத்தல் செய் பாரத வீரம் பழநாள் தொட்டே வழிவழி வந்த தாகும் இந்நாட்டின் அதனால் அன்றோ ஐயனா ரிதனார் மக்கள் மாநிலம் தோன்றிய போதே வாளோடு தோன்றினான் மாபா ரதத்தான் என்று கூறினார். இதனைக் கூறி இற்றைநாள் ஆயிரத் திருநூறு ஆண்டும் ஆயின. அன்றியும் அவர்க்கு முன்னர் பல்லா யிரமாண்டு பழைய ரான தொல்காப் பியரும் தூய பாரத போர்த்திறம் பற்றிப் புகன்றார்! மேலும் பாரதர் மறத்தனம் பற்றியும் பகர்ந்தார் இங்கி வற்றால் இந்த நாட்டின் வீரம் என்பது புதுச்சரக் கன்று வழிவழி வந்த தாகும் என்பது விளங்கிற் றன்றோ! மேலும் கேளீர்! இந்த நாட்டின் இலக்கியம் அனைத்தும் காதல்வாழ் வென்றும் போர்வாழ் வென்றும் இருபெரும் பிரிவாய் அமைந்தன என்றால் போரி னுக்கும் பாரத ருக்கும் உள்ள தொடர்பின் உண்மை விளங்கும் ஆனால் அன்புறு பாரத வீரரே! இந்நாள் இந்த நாட்டில் “வீரம்” என்ன நிலையை எய்திற் றென்பதை எண்ணினால் கண்ணீர் வாரா திருக்குமோ? தறுகண் ஆண்மையின் தகவலும் உண்டா? பாரத மைந்தன் பன்னா ளாகவே போர்க்களம் புகுந்தான் என்பதும் இல்லை தனது மண்ணை அயலான் மிதித்தான் என்பதற் காக எதிர்த்ததும் இல்லை நானூ றாண்டுகள் இந்த நகைப்புநிலை! ஆயிரம் ஆண்டாய் அடிமையாய் வாழ்ந்தோம்! வீரர் நாடு வீரம் மறந்ததேன்? பாரத நாடு போரை மறந்ததேன்? பண்டைச் சான்றோர் பத்தி ஒன்றையே ஆதரித் தார்கள்; அன்பெனும் பேரால் இன்பப் போரை இல்லா தொழித்தனர் இன்பம் இருப்பிடம் போர்முனை என்னும் பாரத மறத்தின் வேரையே அழித்தனர்! ‘முனைமுகத்து நில்லேல்’ என்று மொழிந்தனர் ‘போர்த்தொழில் புரியேல்’ என்று புகன்றனர் இவ்வா றெல்லாம் எதுகண்டு சொல்லினர்? சேர சோழ பாண்டியர் தாமும் சீரியர் சிற்றர சானவர் தாமும் தமக்குளே என்றும் சண்டை யிட்டனர் சேர நாடும் சோழ நாடும் பாண்டிய நாடும் பற்பல நாடும் பாரத நாடுதான் என்பதை எண்ணினார் அதனால் அந்நாள் சான்றோர் எல்லாம் போரையே - போர்எனும் நினைவையே மாய்க்க எண்ணினர்; எண்ணிச் செய்யுளும் செய்தனர் ஆயினும் என்றன் அன்புறு தோழரே! அந்நாள் அந்த அறிஞர் எல்லாம் சேரனைச் சோழனைப் பாண்டியன் தன்னை ஒன்று கூட்டி “இன்றே நீவிர் மேற்குநா டுகளை வென்று வருவீர்!” மற்றுள வற்றையும் மடக்கி வருவீர் என்று சொல்லி அனுப்பி யிருந்தால் ஆயிரம் ஆண்டுகள் அடிமை யாய்நாம் இருந்திட நேர்ந்திடா தன்றோ? எண்ணுவீர்! நம்மொழி நாகரிக மெல்லாம் நன்று தடைபடாதிருக்கும் அன்றோ? சாற்றுவீர்! கோயிலைக் கட்டுவ தொன்றையே செய்தோம் தாயிலைக் காப்பதைச் சற்றும் மறந்தோம் பத்தியை வளர்த்தோம் பாரதம் காக்கும் கத்தியை ஒடித்தோம்; என்ன கண்டோம் நாம்அ டைந்தஇந் நன்றிலா நிலையில் சீனன் எதிர்த்ததில் சிறிதும் வியப்பேது! ஓணான் குட்டியும் எதிர்த்திடக் கூடுமே ‘முனைமுகத் துநில்லேல்! போர்த்தொழில் புரியேல்! என்னும் பழைய கட்சியை எதிர்ப்போம் “முனையிலே முகத்துநில்; போர்த்தொழில் பழகு; சாவதற் கஞ்சேல்! தேசத்தைக் காத்தல்செய்” என்ற பாரதி கட்சி ஒன்றே சார்வோம் சீனரை ஒழிக்கவே! - பழம் புதுப் பாடல்கள், ப.427-429, 2005; அழகப்பா தமிழ் மன்றச் சிறப்புமலர், தி.பி. 1993-94; கி.பி. 1962-63 29 விட்டுவிடுவேனா? பல்லவி 1. எந்நாட்டில் கால்வைத்தாய் சீனா - நான் உன்நாட்டைச் சும்மாவிடு வேனோ முன்னேறித் தாக்குகின்றாய் சீனா - உன் முழங்காலை முறித்திட மாட்டேனோ 2. பொய்வைத்து(ப்) போர்தொடுத்தாய் சீனா - உன் போக்கறிந்தும் சும்மாவிடு வேனோ கைவைத்தாய் வாளுறையில் சீனா - வந்த குட்டிநாயைச் சும்மாவிடு வேனோ 3. வாளுண்டு தோளுண்டு சீனா - இந்த வையத்தின் ஆதரவும் உண்டு மூளுமிது போரல்ல சீனா - உன் முதலழிக்கும் உலகப்பணி சீனா. 4. அறநெறியில் தோன்றுவதே வீரம் - அந்த அறநெறிக்கும் உனக்கும் மிகு தூரம் இறுதியை நீதேடிக் கொண்டாய்சீனா - உன்னை இருக்கும்படி விட்டுவிடு வேனா. - பழம் புதுப் பாடல்கள், ப.430, 2005 குறிப்பு : இந்திய-சீன எல்லைப்போரின் அடிப்படையில் இயற்றப்பட்ட பாடல். 1963இல் நடத்தப்பெற்ற சீன எதிர்ப்புப் ‘பாரதப் பாசறை’ நாடகத்திற்காக எழுதப்பட்டிருக்கலாம். கவிஞர் பொன்னடியான் பதிப்பாசிரியரிடம் அளித்த கையெழுத்திலமைந்த பாடல் இது. 28 கொடி வணக்கம் பாட்டு பாரத மணிக்கொடி வாழ்க! வீரர்தம் புகழ்க்கொடி வெல்கவே! போரெனில் தாக்கிட வாளினைத் தூக்கும் புனைகழல் மறவரை நாளும்உண் டாக்கும் - பாரத அறம்வே ரூன்ற அன்பே தோன்ற ஆடிடும் மடமயில் மாதரை ஈன்ற - பாரத குறைமதி யுடையஓர் அயலான் தன்னை நிறைமதி பெறும்படி அருளும் அன்னை - பாரத சீனனைப் புறங்கண்டு காப்பாள் எம்மை சிங்கத்தை நிகர்த்தவள் பகைவர்க்கெம் அம்மை - பாரத வானத்திற் பறந்திடுதம் அன்னை மணிக்கொடி சீனத்துக் கோட்டையிற் பறக்கும் மிதேநொடி - பாரத - பழம் புதுப் பாடல்கள், ப.434, 2005; அமுதசுரபி, சூன் 1990 குறிப்பு : சீனப் படையெடுப்பின்போது ‘அமுதசுரபி’க்காக எழுதப்பட்டு 1963 சூன் இதழில் வெளிவந்த இப்பாடல் மீண்டும் அதே இதழில் சூன் 1990இல் வெளியிடப்பட்டது. பாட்டின் முன்குறிப்பாக, “சீனன் பாரதமண்ணில் கால்வைத்தான் என்று பாரதமக்கள் கேள்விப் பட்டார்கள். தெருத்தோறும் ஆடவரும் மகளிரும் போராயத்தம் ஆகிறார்கள். பாரத மணிக்கொடியை வாழ்த்தி வணங்குகிறார்கள்.” எனும் பகுதி இடம்பெற்றுள்ளது. தலைப்பு அகர வரிசை தலைப்பு அகர வரிசை அகாலியரின் ஆண்மை 165 அவையடக்கம் 30 அன்பு தரும் பாரதத்தாய் 155 அன்னைக்கு ஆடை வளர்க 102 ஜனநாயகம் 177 ஆசையும் அச்சமும் 163 ஆளவந்தார் 181 இதர தெய்வமெனில் 82 இலகு குஞ்சி சூழ்முகம் 82 இராட்டினச் சிறப்பு 101 ஸ்வதர்மம் 166 உடமை நாடு 143 உலகிற் பிறந்துநான் 19 உமை துதி 27 உளமொத்த 49 எம் கொள்கை 176 எனது நாடு 174 ஏடுகள் (பத்திரிகைகள்) வாழ்க! 168 ஓடிப்பிடிக்கும் புறா விளையாட்டு 118 ஓர் இசையாம் அமுதார்ந்(து) 81 கந்தப்பா 10 கந்தப்பா வந்திப்போ 47 கலியின் கொடுமை 127 கன்னிக் குறவஞ்சி 11 பாரததேவி 95 காப்பு - வெண்பா 3 காளிக்கு விண்ணப்பம் 63 காளையர் எழுச்சி 109 குஞ்சரி வள்ளிக் 15 குன்றும் மயிலும் 74 கூவிஅழை கண்ணனையே! 69 கொடி வணக்கம் 186 கொள்கைத் திருநாடு 148 பாரததேவி வாழ்த்து 108 சக்திக்கு விண்ணப்பம் 58 சரஸ்வதி துதி 29 சிங்கார சண்முகனே 12 சிட்டுக்குருவிப் பாட்டு 113 சிவபெருமான் துதி 26 சுதந்திரம், அமரத் தன்மை 156 சுதந்திரம் உயிரின் இயற்கை 115 சுதந்திரதேவியும் கதரும் 97 சுதந்திர தேவி ஸ்தோத்ரம் 164 சூரர்குலம் 8 பாரத நாட்டின் விடுதலை வேண்டல் 41 பாரததேவி 95 கொடி வணக்கம் 186 ஜாலம் செய்வதனால் 14 ஸ்வதர்மம் 166 ததிகூட்டி வாராய் 80 தமிழ்நாடு 185 தமிழ் வீரரின் எழுச்சி 138 தலைவி தூதுபோக்கல் 36 தலைவி பாங்கியிடம் கூறல் 40 தலைவி வண்டினைத்தூதுபோக்கல் 44 தன்னிலையில் 20 தாயின் மணிக்கொடி 171 திருமால் துதி 28 துளசி, வில்வம், மல்லிகை 86 தெய்விகத் தாய்நாடு 134 தேசத்தாரின் பிரதான வேலை 98 தேசத்தைக் காத்தல் செய் 182 தேச மகா மன்றம் (காங்கிரஸ்) 150 ஓடிப்பிடிக்கும் புறா விளையாட்டு 118 தேசீய சோபனம் 131 தேசீயத் தாலாட்டுகள் 119 தேசீய திருமண வாழ்த்து 132 தேசீய நலங்கு 128 தேசீய மங்களம் 130 தேசீய விடுகவிகள் 111 தேசீய விடுகவிகளின் விடை 113 தேசிய விளையாட்டு 116 தேவியின் திட்டம் 59 தொண்டரைச் சேர்த்தல் 136 நகரச்சிறப்பு 5 நகரச் சிறப்பு 31 நாட்டுச்சிறப்பு 4 நாட்டுச் சிறப்பு 30 நிச மர்ம மதை 87 நியாயசபை விளையாட்டு 117 நிலாப்பாட்டு 114 நீச நாகரிகம் 159 நீலவண்ணம் வாய்ந்தோய் 84 நெஞ்சுக்கு நீதி கூறல் 43 நெஞ்சுக்குத் தெளிவு கூறல் 48 நெஞ்சுக் குறுதி கூறல் 43 ப்ருந்தாவன லோல! 83 பச்சைமயி லேறி 50 பசுத் தெய்வம் 152 பராசக்தி திருப்புகழ் 60 பராசக்தியிடம் முறையிடல் 56 பாரத சமூக மன்றம் (காங்கிரஸ்) சொல்லுகிறது 147 பாரத சேனை 178 பாரதத்தாய் மாணவர்க்குக் கூறுவது: 122 பாரததேவி 95 பாரத தேவியிடம் குடியர் தம் தெளிவு கூறல் 140 பாரததேவி வாழ்த்து 108 பாரததேவி வாழ்த்து 105 பாரத நாட்டின் விடுதலை வேண்டல் 41 பாலசுப்ரமண்யனே 35 பிரமனை ஜயித்த 39 புவியன்னை முன்னேறுகின்றாள் 170 புரட்சிக் கவிஞரின் அச்சில் வெளிவராத பாடல்கள் 188 பொன்னடியைத் 9 பொன்னடியைத் 45 மகாசக்திக்கு விண்ணப்பம் 64 மதுவிலக்குப் பாட்டு 146 மயில் 52 மயிலாசலத்து 37 மயிலை மலைச் சிறப்பு 6 மயில மலைச் சிறப்பு 32 மறந்தறியேன் 68 மறைவென்ன காண் 88 மனசே ஸ்ரீராம சந்த்ரனை 90 மனிதர் மனிதர்க்கடிமை 21 மனதுக்கினி துரைத்தல் 38 மாசி மஹோத்ஸவ 13 மாசி மகோத்ஸவ 46 முஸ்லிம் இளைஞர்களுக்குவேண்டுகோள் 173 ரசிகனே நற்சாம 89 வரிசைமா மணிவீடு 20 வளர்ந்த திங்கொரு தீ! 169 வா கண்ணா! 71 வாணி (சரஸ்வதி) 67 வாழி 53 வாழி வெண்பா 22 விட்டுவிடுவேனா? 184 விடுதலைக்குச் செல்லும் கப்பல் 123 விண்ணோர் பதியே! 73 விநாயகர் காப்பு வெண்பா 18 விநாயகர் காப்பு வெண்பா 24 விநாயகர் துதி 25 வெற்றி நெருக்கம் 159 வேல் 52