பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 41 இலக்கணக் கட்டுரைகள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 41 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 144 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii வான்மழை வளசிறப்பு v நூல் 1. தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை 1 2. இலக்கணவுரை வழுக்கள் 7 3. உரிச்சொல் விளக்கம் 19 4. ஙம் முதல் 29 5. தழுவுதொடரும் தழாத்தொடரும் 32 6. நிகழ்கால வினை 35 7. படர்க்கை `இ' விகுதி 43 8. காரம், காரன், காரி 50 9. குற்றியலுகரம் உயிரீறே (1) 56 10. குற்றியலுகரம் உயிரீறே (2) 64 11. ஒலியழுத்தம் 81 12. தமிழெழுத்துத் தோற்றம் 87 13. நெடுங்கணக்கு (அரிவரி) 92 14. தமிழ் எழுத்து மாற்றம் 99 15. தமிழ் நெடுங்கணக்கு 105 16. `ஐ ஔ' `அய் அவ்' தானா? 116 17. எகர ஒகர இயற்கை 126 18. உயிர்மெய் வரிவடிவுகளின் ஓரியலின்மை 136 தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று 143 இலக்கணக் கட்டுரைகள் 1 தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை தொல்காப்பியர் அகத்தியர் மாணவரேனும் தொல்காப்பியத்திற்கும் அகத்தியத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மக்களுக்கு அறிவும் ஆற்றலும் ஆயுளும் மிக்கிருந்த அகத்தியர் காலத்து நூல்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட பல இலக்கணங்கள், அவை குறைந்த தொல்காப்பியர் காலத்தில் விரிவாகக் கூறப்பட வேண்டியவாயின. அதற்கென்றே தொல்காப்பியர், "தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ண வேண்டியதாயிற்று. அல்லாக்கால் அகத்திய முள்ளிட்ட முதனூலாராய்ச் சியே அமைந்திருக்கும். இதுபோதுள்ள இலக்கண நூல்கள் எல்லா வற்றுள்ளும் தொல்காப்பியம் முழுமதி போன்ற ஒரு தனிச் சிறப்பினதேனும் அதனிடத்துள்ள களங்கங்களையும் உண்மை யுரைத்தல் என்னுமோர் மதம்பற்றி ஈண்டெடுத்துக் கூறுதல் இழுக்காகாது. இஃதோர் அடக்க வழுவமைதி யென்றே கொள்க. குறிப்புகள் வருமாறு: 1. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔஎனும் மூன்றலங் கடையே. (தொல். எழுத்து. 62) சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை. என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள். (நன். 51). தமிழில் இதுபோதுள்ள சகரமுதற் சொற்கள் நூற்றுக்கு மேற்படு கின்றன. சொற்களெல்லாம் ஆதியிலேயே அமைந்துள்ளன. ஒலிக்குறிப்புச் சொற்களும் பிற குறிப்புச் சொற்களுமே புதிது புதிதாய்த் தோன்றுவனவாம். சங்கிலி, சந்தம், சலி, சடுதி, துப்பாக்கி, குடாக்கு, கிண்கிணி, சதங்கை, மிருதங்கம் போல்வன ஒலிக்குறிப்புச் சொற்கள் (onomatopoeia). சடை, சருச்சரை, சப்பாணி, பச்சை, மதர்ப்பு, மெத்தை முதலியன பிற குறிப்புச் சொற்கள். ஆங்கிலத்தில் சொற்கள் புதிது புதிதாய்த் தோன்றுகின்றனவே யெனின், அவை பிற மொழிகளினின்றும் கடன் கொண்ட திசைச்சொற்களே யன்றிப் புதுச் சொற்க ளாகாவென மறுக்க. ஒருசார் திரிசொற்களும் (Derivatives) புதிதாய்த் திரிக்கப்படுவனவாம். சட்டி, சக்கை, சண்டை, சதை, சப்பு, சமை, சரி, சற்று முதலிய செந்தமிழ்ப் பழஞ் சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழிலில்லை யென்று சொல்லுதல் எள்ளளவும் பொருந்தா தென்பது அவற்றின் பொருளை ஆராய்வார்க்கு எளிதிற் புலனாகும். 2. குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொல். எழுத்து. 67) என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாராலோ வெனின், நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்துஞ் - சந்திக் குயிர்முதலா வந்தணையு மெய்ப்புணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று. இதை விரித்துரைத்து விதியும் அறிந்துகொள்க என்பது நன்னூல் மயிலைநாத ருரை. (நன். 51) 3. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன (தொல். எழுத்து. 82) என்று எகின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலான், கடான் என வரும் ஒன்பதும் மயங்காதனவெனக் கொள்ளின், பலியன், வலியன், வயான், கயான், அலவன், கலவன், கலுழன், மறையன், செகிலன் முதலாயின மயங்கப் பெறாவென மறுக்க என்பது நன்னூல் மயிலைநாதருரை (நன். 67). 4. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகரம் ஆகும். (தொல். எழுத்து. 445) ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது - தொன்பது - ஒன்பது. ஒன்பது = 90. எழுபது எண்பது ஒன்பது என்று ஒப்புநோக்குக. தொண்டு + நூறு = தொண்ணூறு = 900. எழுநூறு, எண்ணூறு, தொண் ணூறு என்று ஒப்புநோக்குக. தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் = 9000. ஏழாயிரம், எண்ணா யிரம், தொள்ளாயிரம் என்று ஒப்புநோக்குக. தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ தொல்காப்பியர் காலத்தில் உலக வழக்கற்றது. ஆயினும் செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத்தொகை கூறுமிடத்து, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (தொல். 1358) என்று கூறியுள்ளார். தொண்டு என்னும் ஒன்றாம் தானப்பெயர் மறையவே பத்தாம் தானப் பெயர் ஒன்றாம் தானத்திற்கும் நூறாம் தானப்பெயர் பத்தாம் தானத்திற்கும், ஆயிரத்தாம் தானப்பெயர் நூறாம் தானத்திற்கும் கீழிறங்கி வழங்கத் தலைப்பட்டன. பின்பு ஆயிரத்தாம் தானத்திற்கு ஒன்பதாயிரம் என்ன வேண்டியதாயிற்று. சொற்படி பார்ப்பின் ஒன்பதினாயிரம் 90 x 1000 = 90000 ஆகும். ஒன்று முதல் பத்துவரை ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் தனி மொழிகளாகவும் ஒன்பதுமட்டும் தொடர்மொழியாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயரே முதன்மெய் நீங்கி ஒன்பது என வழங்கும். தெலுங்கில் முதன்மெய் நீங்காது தொனுமிதி எனவே வழங்குகின்றது. சொற்கள் எங்ஙனம் நிலைமாறினும் புணர்ச்சி செய்யுங்கால் சொற்றொடர்ப்படியே செய்யவேண்டும். அஃதன்றி ஒன்பது + பத்து = தொண்ணூறு, ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் எனப் புணர்த்து விகார விதியுங் கூறுதல் புணரியலொடு மாறுபடுவ தொன்றாம். 5. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ ஆகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும். (தொல். எழுத்து. 463) இதுவுமது. 6. நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே (தொல். எழுத்து. 325) ``அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர இய்யிடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பால் மொழிவயின் இயற்கை ஆகும் (தொல். எழுத்து. 326) இவற்றைப் பிரயோகவிவேக நூலார் பற்றுக்கோடாகக் கொண்டு, இனித் தொல்காப்பியரும், தமிழில் `எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே என்றாராயினும், வடநூலில் எழுவாய்வேற்றுமை இவ்வா றிருக்குமென் றறிதற்கு நும் என்னுமொரு பெயரை மாத்திரம் எழுவாய் வேற்றுமை யாக்காது பிராதிபதிக மாக்கி, பின்னர் நும்மை நுங்கண் என இரண்டு முதல் ஏழிறுதியும் வேறுபடுத்து வேற்றுமை யாக்கினாற் போல, `அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை என்னுஞ் சூத்திர விதிகொண்டு நீயிரென வேறுபடுத்து, எழுவாய்வேற்றுமை யென்னும் பிரதமாவிபத்தி யாக்குவர். இவ்வாறு நின், தன், தம், என், எம், நம் என்பனவற்றையும் பிராதிபதிகமாக்கி, பின் நீ, தான், தாம், யான், யாம், நாம் எனத் திரிந்தனவற்றை எழுவாய்வேற்றுமை யாக்காமையானும், `எல்லா நீயிர் நீ எ-ம். `நீயிர் நீயென வரூஉங் கிளவி எ-ம் பெயரியலுள் பெயர்ப் பிராதிபதிகமாகச் சூத்திரஞ் செய்தலானும், `அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை என்னுஞ் சூத்திரத்தை வடமொழிக்கு எழுவாய்வேற்றுமை இவ்வாறிருக்குமென்று தமிழ்நூலார் அறிதற்கே செய்தாரென்க. நிலைமொழி விகாரமொழி எட்டாம் வேற்றுமை யானாற்போல நும்மென்னு நிலைமொழி விகாரம் முதற் வேற்றுமையா மென்க எனக் கூறியுள்ளார் (பிர. சூ. 7, உரை). நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் வேற்றுமைப்படும் போது நும் என்று திரியுமேயன்றி, நும் மென்னும் வேற்றுமைத் திரிபு பெயர் நீயிரென்று திரியாது. முன்னிலைப் பெயர்கள் வேற்றுமைத் திரிபு நீன் - நீ நின் - நுன் - உன் நீம் நும் - உம் நீம் + கள் = நீங்கள் நுங்கள் - உங்கள் நீ + இர் = நீயிர், நீவிர் - நீர் நும் - உம் நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்னும் தென்னாட்டுலகவழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல, நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படு கின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுணர்த் தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. நீவிர் என்பது இலக்கணப் போலி. நீயிர் என்னும் சொல்லே நீர் என இடைக்குறைந்து நின்றது. இங்ஙனமன்றி நும் என்பது நீயிர் எனத் திரியுமென்றல் ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றதனோ டொக்குமென்க. 7. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. (தொல். சொல். 397) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (தொல். சொல். 401) இச் சூத்திரங்களால் மொழியாராய்ச்சி சிறிது முட்டுப்படுகின்றது. வடசொற்கள் தொல்காப்பியர் காலத்து நூல்களில் வழங்கினவாகத் தெரியவில்லை. தொல்காப்பியத்தில் வடசொல்லென் றையுறக் கிடக்கும் சில சொற்கள் செந்தமிழ்ச் சொற்களே. இடப்பெயரும் இயற்பெயருமான சில வடசொற்களே வடவெழுத் தொருவியும் ஒருவாதும் வழங்கியிருத்தல் வேண்டும். அல்லாக்கால் தென்சொற்களே வடசொற்களாகத் திரிபுணர்ச் சியாற் கருதப்பட்டிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் சுருக்கமாகக் குறித்துள்ள வடசொல்லைப் பவணந்தியார் விரிவாகக் கூறிவிட்டனர். வடசொல்லாகாத் தென்சொற்கள் ஐயன் : தந்தையைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்; அரசன், ஆசிரியன், தந்தை, அண்ணன் என்னும் நாற்குரவரையுங் கடவுளையும் அந்தணனையும் முனிவனையும் பெரியோனையும் பொதுவா யுணர்த்துவது; ஆரியன் என்பதின் சிதைவன்று. பெண்பால் ஐயை. ஆசிரியன் : ஆசு + இரியன். ஆசு = குற்றம், இரிதல் = போக்குதல். அந்தணன் :அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்'' (குறள். 30) இராவணன் : இராவண்ணன். இரா = இருள் = கருமை. இருள்நிறப் பன்றியை ஏன மென்றலும்(தொல்.பொருள். 613) கும்பகர்ணன் : கும்பகன்னன். கன்னம் = காது. இராக்கதன் : இரா + கதன்; கதி + அன் = கதன். கதி = செலவு; இரவில் செல்லுபவன்; இதே பொருளில் நிசாசரன் என்பர் வடமொழியில். நிசி = இரவு; சரம் = செலவு. இராக்கதன் - இராக்கன் - அரக்கன். ராக்ஷஸன் என்பதன் திரிபன்று. அரக்கன் என்பதற்கு அழிப்பவன் என்றும் பொருள் கூறலாம். இத்துணையும் சில மாதிரிக் கெடுத்துக் கூறப்பட்டன. இங்ஙனமே ஏனையவும். இவற்றின் விரிவை யெல்லாம் எமது முதற்றாய்மொழியிற் கண்டுகொள்க. 1. உச்ச காரம் இருமொழிக் குரித்தே. (தொல் எழுத்து. 42) உசு, முசு என்ற இரு சொற்களே யன்றி, பசு, கொசு முதலிய பிறவும் உச்சகார வீற்றுச் சொற்களாதல் காண்க. பசுவென்பதை ஆரியச் சிதை வென்பர் நச்சினார்க்கினியர். அது அஃதன்று. 2. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும் (தொல். சொல். 491) து ஒன்றுமே அஃறிணை ஒருமை விகுதியாம். ஏனைய அதன் புணர்ச்சித் திரிபாம். எ-டு : போ + இன் + து = போயிற்று. போ + இன் + அ + து = போயினது. பால் + து = பாற்று. தாள் + து = தாட்டு, குறுந்தாட்டு. கண் + து = கட்டு, குண்டுகட்டு. 3. ``அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. (தொல். சொல். 153) அம்ம என்பது முறைப்பெயரோடு சிவணாமைக்கு எத்துணையோ காலஞ் சென்றிருத்தல் வேண்டும். அம்ம என்னும் முறைப்பெயர் விளியே கேட்பிக்கும் பொருளில் வரும். அம்மையும் அப்பனுமாகிய இருமுதுகுர வரும் ஒருவர்க்கு முன்னறி தெய்வமும் இன்றியமையாதவரு மாதலின், அவர் பெயரே பெரும்பாலும் விளி, வியப்பு, முறையீடு முதலிய பொருள்களில் வரும். எ-டு : அம்மை - அம்மே! அம்மா! ஐயன் - ஐய! ஐயோ! அன்னை - அன்னே! அன்னோ! அப்பன் - அப்பா! அச்சன் - அச்சோ! அத்தன் - அத்தோ! அந்தோ! (மெலித்தல்) 4. ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். (தொல். சொல். 217) இது முன்னர்க் கூறப்பட்டது. 5. ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ (தொல். எழுத்து. 32) இதில் எ, யா கூறப்படவில்லை. எ, ஏகாரத்தினும், யா, ஆகாரத்தினும் அடங்குமெனக் கொண்டார் போலும். நச்சினார்க்கினியர் உரையும் அஃதே. 6. ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (தொல். எழுத்து. 72) இதில் நொ பகுதியாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் நோ என்பதே பகுதியாகி நொ எனக் குறுகி நிற்கும். ஏவல் இ.காலம் நி.காலம் எ.காலம் பெயர் நோ நொந்தான் நோகிறான் நோவான் நோய் காண் கண்டான் காண்கிறான் காண்பான் காட்சி - ``செந்தமிழ்ச் செல்வி'' துலை 1931 2 இலக்கணவுரை வழுக்கள் 1. ஒற்றளபெடை ஙஞண நமன என்னும் நன்னூற் சூத்திரத்திற்கு, சூத்திரத்துக் கூறப்பட்ட பத்தொற்றும் ஆய்தம் ஒன்றுமாகப் பதினோ ரெழுத்தும், குறிற்கீழிடை, குறிற்கீழ்க்கடை, குறிலிணைக் கீழிடை, குறி லிணைக் கீழ்க்கடை என்னும் நான்கிடத்தும் அளபெடுக்க ஒற்றள பெடை மொத்தம் நாற்பத்து நான்காம். அவற்றுள் ஆய்தமானது இயல்பீறாக வேனும் விதியீறாகவேனும் சொல்லுக் கீற்றில் வாராமையால் குறிற் கீழ்க்கடை குறிலிணைக் கீழ்க்கடை என்னும் இரண்டிடத்தையுங் கழிக்க ஒற்றளபெடை நாற்பத்திரண்டாதல் காண்க என்றே முன்னைப் பின்னை உரையாசிரிய ரெல்லாம் உரைத்தார். குற்றியலுகரம் குறிற்கீழன்றிக் குறிலிணைக்கீழ் வாராதென்பது, குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே என்னும் சூத்திரத்தாற் றெளிவாம். அதன் உரையிலும், விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத ரிலஃஃகு முத்தி னினம் என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற்பொருட்டு ஒற்றில்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க என்றார் மயிலைநாதர். ஆகவே குறிலிணைக்கீழ் ஆய்தம் வாராதென்பது பெறப்பட்டது. இனி, அல் + திணை = அஃறிணை, முள் + தீது = முஃடீது, அவ் + கடிய = அஃகடிய என விதியீறாய் ஆய்தம் வருதலின் ஈற்றில் வாரா தென்பதும் போலி யுரையென மறுக்கப்படும். ஆகவே, ஆய்தம் குறிற் கீழிடை குறிற்கீழ்க்கடை என்னும் ஈரிடத்தும் வந்து அளபெழும் என்றும், குறிலிணைக் கீழிடை குறிலிணைக் கீழ்க்கடை என்னு மீரிடத்தும் வாரா தென்றும், அவ் விரண்டிடத்தையுமே கழிக்க ஒற்றளபெடை மொத்தம் நாற்பத்திரண்டாம் என்றும் கண்டுகொள்க. 2. ஏவலொருமை ‘elth மடிசீ என்னும் ஏவல்வினைச் சூத்திர உரையில் செய் என்னும் பகுதியொடு ஆய் விகுதி புணர்ந்து செய்யாய் என நின்று, பின்பு அவ் விகுதி கெட்டு மீண்டும் செய் என நிற்பதே ஏவலொருமை யெனச் சிலர் உரைத்தார். விகுதி புணர்ந்து கெடுவது இங்கிலீசு சமற்கிருதம் போன்ற ஆரியமொழிகட் கியல்பேயன்றித் தமிழுக்கியல்பாகாது. Cut, set என்னும் வினைகள் இறந்த காலத்தில் விகுதி பெற்றிழந்து மீண்டும் பகுதி யளவாகவே யிருக்கும். விகுதி புணர்ந்து கெடுவதாயின், அங்ஙனம் கெடாத சில வினைகளு மிருத்தல்வேண்டும். அங்ஙன மின்மையின் செய் என்னும் வாய்பாடே ஏவலொருமை யென்று துணியப்படும். மேலும், செய்யாய் என்பது முன்னிலை எதிர்மறை ஒருமை எதிர்கால வினைமுற்றுச் சொல். அது ஓசை வேறுபாட்டான் வேண்டு கோளாங்கால் செய்யாயா என வினாப்பொருள் பட்டுப் பின்பு அவ் வினாவே செய் என உடன்பாட்டுப் பொருள் தந்து நிற்கும். ஏவலொருமை விகுதி புணர்ந்து கெடுவதாயின் ஏவற்பன்மையும் விகுதி புணர்ந்து கெடல் வேண்டும். அங்ஙனம் கெடாமையின், ஒருமை விகுதி மட்டும் புணர்ந்து கெடுமென்றல் பொருந்தாது. இன்னோரன்ன இடங்களிலெல்லாம் வடமொழியியல் வேறு தென்மொழியியல் வேறு என்பதைத் தெற்றென வுணர்தல் வேண்டும். அங்ஙனம் உணராதாரே, செய்என் ஏவல் வினைப்பகாப் பதமே என வெள்ளிடையாய் ஆசிரியர் கூறினும் அதனையும் உணராது இவ்வாறு மயங்கக் கூறுவர். 3. தொழிற்பெயர் விகுதி பாடு என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி யென்றும், கோட்பாடு என்பது அதற்குதாரண மென்றும் மாணவர்க்குப் பாடமாயுள்ள இலக்கணங்க ளெல்லாம் மயங்கிக் கூறாநிற்கும். கோள் என்பது ஒரு முதனிலை திரிந்த தொழிற்பெயர். பின்பு படு என்னும் துணைவினை சேர்ந்து அதுவும் முதனிலை திரிந்து பாடு என்றாயிற்று. பாடு என்பது விகுதியாயின் கோள் என்பது பகுதியாதல் வேண்டும். அங்ஙனமாகாமையின் அஃதுரை யன்மை யறிக. புறப்படு, கடப்படு என்பவை புறப்பாடு கடப்பாடு என்றானாற்போலக் கோட்படு என்பதும் கோட்பாடு என்றாயிற்று. வாய்பாடு என்பதிலோ வெனின் அதிலும் படு என்னும் துணை வினையே முதனிலை திரிந்ததாதல் வேண்டும். 4. எழுவாயுருபு அவற்றுள், எழுவா யுருபு திரிபில் பெயரே என்னும் சூத்திர வுரையில், தமக்கென வாராய்ச்சி யின்றிச் சுவாமிநாத தேசிகர் போன்ற பிறர் கூற்றுகளையே கொண்டு கூறும் ஒருசார் ஆசிரியர், “vGthŒ வேற்றுமைக்கு ஐ முதலானவை போன்ற உருபு இல்லா திருந்தாலும், உரையிற்கோடல் என்கிற உத்தியால் ஆனவன், ஆகின்றவன், ஆவான்; என்றவன், என்கின்றவன், என்பவன்; அவன் முதலாக ஐம்பாலி லும் வருகிற சொல்லுருபுகள் உண்டெனக் கொள்க என்று வழுப்பட வுரைத்தனர். அவர் தமிழிலக்கணத்தையே அறியார். எழுவாய்க்கு இயற்கை வடிவன்றி வேறுருபில்லை யென்று தொல்காப்பியமும் நன்னூலும் துலங்கக் கூறும். ஆனவன் முதலிய மூன்றும், என்றவன் முதலிய மூன்றும் முறையே ஆ (ஆகு), என் என்ற வினைப்பகுதிகளினின்றும் பிறந்த வினையாலணை யும் பெயர்கள். வேற்றுமை உருபெல்லாம் பெயர்க்கு ஈறாயன்றித் தமித்து வாரா. இடைச்சொல்லாதலின் தமித்து வருவதும் பெயர்ச்சொல்லா யிருப்பதும், ஐம்பால் காட்டுவதும் அவற்றுக்கு இலக்கண மாகா. ஒரு பெயர்க்கு மற்றொரு பெயர் உருபாய் வருமென்றல் எட்டுணையும் பொருந்தாத தொன்றாம். கொண்டு, நிமித்தம் முதலிய வினையும் பெயரும் பிற வேற்றுமை களுக்குச் சொல்லுருபாய் வருமே யெனின், அவையும் அவ்வவ் வேற்றுமைப் பொருள்பட வருமே யன்றி அவைதாமே வேற்றுமையுரு பன்மையும், இடைச்சொல் லாகாமையும் அறிந்துகொள்க. ஆனவன் முதலிய ஆறு பெயர்களும், சாத்தன், சாத்தி என்ற பெயர்களைப் போலவே ஆனவனை, ஆனவனால், ஆனவனுக்கு என எண் வேற்றுமைப்படுதலின், அவை பெயர்களேயன்றி வேற்றுமை யுருபாகாமை யறிக. பெயருக்கு வேற்றுமை யன்றி வேற்றுமை யுருபிற்கு வேற்றுமை யின்று. சாத்தன், சாத்தி முதலிய பெயர்கள் மிகக் குறுகி யிருத்தலின், கட்டுரை வகையான் ஓசை நீடற்பொருட்டு சாத்தனானவன், சாத்தியானவள் என்று சிலராற் கூறப்படுவதன்றிப் பிற வேற்றுமை யுருபுகளைப் போல எவ்விடத்தும் எல்லாரானும் கூறப்படுவதல்ல. ஆகவே முதல் வேற்றுமைக்கு உருபுண்டென்பது போலியுரையென மறுக்க. 5. எழுவாய்ச் சொல் எழுவாய் பெயர்ச்சொல்லாகவே யிருக்குமென்று இதுகாறும் எல்லாச் சிற்றிலக்கணங்களுள்ளும் கூறப்பட்டது. அது ஆராய்ச்சியின்றி வழிவழி வந்ததோர் கூற்றாம். எழுவாய் நிகழ்கால வினையெச்சமாகவும் இருக்கும். எ-டு : அவனுக்குப் பாடத் தெரியும் = அவனுக்குப் பாட்டுத் தெரியும். பாட என்பது எழுவாய். ஆங்கிலத்தில் infinitive mood (Ãfœfhy வினையெச்சம்) எழுவாயாய் வருதலை ஒப்புநோக்குக. இன்னோரன்ன இடங்களிலெல்லாம் ஒத்துப் பார்வை இலக்கணமே (Comparative Grammar) பயன்படு மென்க. இனிச் செயப்படுபொருளும் எழுவாய் போல நிகழ்கால வினை யெச்சமா யிருக்குமென்றறிக. எ-டு : அவன் பாடத் தெரிந்துகொண்டான் = அவன் பாட்டைத் தெரிந்துகொண்டான். பாட செயப்படுபொருள். 6. உரிச்சொல் (Poetic Diction) உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை .............................................................. எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (தொல்.சொல். 782) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்குச் சேனாவரையர், “jk¡»ašãšyh விடைச்சொற் போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின், உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாரு முளர். ``இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி ஒரு சொல் ஒருபொருட் குரித்தாதலே யன்றி ஒருசொற் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல் லென்றும், அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் வெளிப்படாதவற்றை வெளிப்பட்டவற்றோடு சார்த்தித் தம்மை யெடுத்தோதியே அப் பொரு ளுணர்த்தப்படு மென்றும், உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையு முணர்த்தியவாறு. மெய்தடுமாறலும் ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணமாவது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட் குரியவாய் வருதலே யாம் என்று உரை வரைந்தார். நச்சினார்க்கினியரும் இவ்வாறே உரை கூறினார். எல்லாச் சொற்களும் பெரும்பாலும் இசை குறிப்புப் பண்புபற்றியே தோன்றி யிருத்தலின், இசை குறிப்புப் பண்பிற்குரியன உரிச்சொல்லென்பது பொருந்தாது; பொருந்துமாயின் இசை குறிப்புப் பண்புபற்றிய சொற்க ளெல்லாம் உரிச்சொல்லாதல் வேண்டும். அங்ஙன மாகாமையும், இசையுங் குறிப்பும் பண்பிலடங்குதலும், பண்புப் பெயர் அறுவகைப் பெயருள் ஒன்றாதலும், ஒருசார் தொழிலும் பண்பின்பாற்பட்டுத் தொழிற் பண்பெனப் படுதலும், வினைச்சொற்களிற் பெரும்பாலன இசையுங் குறிப்பும்பற்றி வருதலும், இலக்கண முணர்ந்தார்க் கெல்லாம் எளிது புலனாம். மெய்தடுமாறல் சொற்களுக்கெல்லாம் பொதுவியல்பாதலின் அதுவும் ஒரு சிறப்பிலக்கணமன்று. ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமை யும் பெயர் வினை யிடை யுரி நான்கிற்கும் பொதுவான திரிசொல் இலக்கணமாதலை, ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி (தொல். 882) என்பதனாற் கண்டுகொள்க. பெயர்க்கும் வினைக்கும் உரிமை பூண்டு நிற்பன உரிச்சொல் லெனின், இடைச்சொல்லும் அங்ஙனம் உரிமை பூண்டு நிற்றலின் அதுவும் இலக்கணமன்மை யறிக. இனி, உரிச்சொல் இலக்கணந்தான் என்னையோ வெனிற் கூறுதும்: சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே (தொல். 643) என்பதால் இலக்கண வகையிற் சொற்கள் பெயர் வினை என இரண்டே யென்பதும், இடைச்சொல்லாவன அப் பெயரிடையும் வினையிடையும் வரும் உறுப்புகளென்பதும், அவ் வுறுப்புகளின்றிப் பெயர்ப் பகுபதங்களும் வினைப்பகுபதங்களுமில்லை யென்பதும், தனித்து வரும் இடைச்சொற்க ளெல்லாம் பெயர் வினை யொன்றனுள் அடங்கு மென்பதும், உரிச்சொல் லென்பதோர் இலக்கணவகைச் சொல்லன் றென்பதும், அது பெயராகவும் வினையாகவு மிருக்குமென்பதும், செய்யுட்குரிய திரிசொற்கட் கெல்லாம் பொருளுணர்த்துவதே உரியியலென்பதும், செய்யுட்குரிய சொற்களே உரிச்சொல் லெனப்பட்டன வென்பதும் அறியப்படும். நன்னூலாரும், "பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (நன். 442) எனத் தெள்ளிதிற் றெரித்தார். அதுவுமன்றி, இன்ன தின்னுழி இன்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலில் நயந்தனர் கொளலே. (நன். 460) எனவும் புறனடை யோதினார். இதில் பிங்கல முதலிய நிகண்டுகளை யெல்லாம் உரிச்சொல் லென்றமையும், அவை செய்யுட்குரிய பலவகை யருஞ்சொற்களுக்கும் பொருள் கூறுதலையும், அவற்றுள் காங்கேயர் நிகண்டு உரிச்சொல்லென்றே பெயர் பெற்றமையும் கண்டுகொள்க. தமிழறிவும் திரிசொல் வழக்கும் மிக்கிருந்த காலத்தில் செய்யுட் சொற்களெல்லாம் இயற்சொற்போல் எளிதாய்ப் பொருள் விளக்குவனவாயின. பின்பு அவை குன்றிய காலத்து அவற்றைத் தனித்தனி அகராதி யியல்பில் எடுத்தோதிப் பொருள்கூற வேண்டியதாயிற்று. “bgaU« வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகா மையின், தம்மை யெடுத்தோதியே அப் பொருளுணர்த்தப்படுதலானும் என்றார் சேனாவரையரும். ஒவ்வொரு சொல்லையும் தனித்தனி யெடுத்தோதிப் பொருள் கூறுவதென்றால், அது செய்யுட் சொல்லாய் உலக வழக்கி லில்லாததென்பது எளிதிற் புலனாம். உரிச்சொற்கட்கெல்லாம் பொருள் கூறுவதைத் தொல்காப்பிய உரியியலுட் கண்டுகொள்க. உரியிய லென்பதே செய்யுட்குரிய அருஞ்சொற்கட் கெல்லாம் பொருளுணர்த்தும் அகராதித் தொடக்கம். பின்பு அது விரிவான நூலாய் நீண்டு `நிகண்டு எனப்பட்டது. நிகள்-நீள். அகலம் நிகளம் என்பதோர் பண்டை வழக்கு. நிகளம் - சங்கிலி; நீளமாயிருப்பது. நிகளம் நீளமென மருவிற்று. பொருட்குப் பொருடெரியி னதுவரம் பின்றே (தொல். சொல். 874) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். சொல். 877) எனத் தொல்காப்பியர் உரியியலுட் பொதுப்படக் கூறுவதும் இதனை வலியுறுத்தும். பெயரும் வினையுமே முதன்முத லுண்டான சொற்கள். அவற்றி னின்றும் பிற்காலத்து இடைச்சொல் வகுக்கப்பட்டது. அதற்கும் பின்பு உரிச்சொற் பாகுபாடுண்டாயிற்று. 7. இடுகுறிப் பெயர் அ, ஆ என்றற் றொடக்கத்தன, இடுகுறிச் சிறப்புப் பெயர் என்பது நன்னூற் பழையவுரை. அ, ஆ என்பவை எழுத்துகளே யன்றி அவற்றின் பெயர்களாகா. எழுத்தாவது ஒலி. ஒரு பொருள் வேறு, அதன் பெயர் வேறு. குடம் என்பது ஒரு பொருள். அப் பொருள் வேறு; அதைக் குறிக்கும் குடம் என்னும் சொல் வேறு. அ, ஆ என்பவை எழுத்துகளாகிய பொருள்கள். உயிர், குறில், நெடில் என்பனவே அவற்றின் பெயர்கள், ஒரு பொருள் பெயரின்றியும் யாதானு மோர் புலனாகச் சுட்டப்படும். அ, ஆ என்பவை பெயர்களாயின் அவற்றாற் குறிக்கப்படும் பொருள்கள் அவையன்றி வேறாதல் வேண்டும். அங்ஙன மின்மையின் அஃதுரை யன்மை யறிக. அன்றியும் இடுகுறியென்றோர் பெயர் யாண்டுமிலது. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே, மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அற்றேல், மக்கட்கிடும் இயற்பெயர்களோவெனின், அவையும் முதலாவது இடப்படும்போது காரணப் பெயர்களாகவே யிருந்திருத்தல் வேண்டும். (எ-டு : முருகன் = இளைஞன். Victor = வெற்றி பெற்றவன்) பின்னரும் அவை, தெய்வப்பற்று, அதிகாரிமாட்டன்பு, இனமுறை, இன்னோசை, விழுமிய பொருள், உயர்நோக்கம் என்பவற்றுள் ஒன்று பற்றியே மக்கட்கிடப்பட்டு வருகின்றன. மக்கட்கிடப்படும் இயற்பெயரெல்லாம் முதலாவது பொருள் குறித்தனவென்றும், பின்பு மக்கட்பன்மையால் மகன்றோறும் புதுப்பெய ரிடுதலருமைபற்றிப் பழம்பெயர்களே மீண்டும் மீண்டும் பிறர்க்கிடப்படு கின்றன வென்றும் பெயின் (Bain) என்னும் ஆங்கிலப் புலவர் தம் இலக்கணத்திற் கூறியுள்ளார். இடுகுறிப்பெய ருண்டென்னும் இழுக்குணர்ச்சியே சிலர் தவற்றா ராய்ச்சிக்கும் காரணமாயிருந்து வருகின்றது. தாவரங்களுள் இடுகுறிப் பெயருடையவை யெல்லாம் தமிழ்நாட்டிற் குரியவென்றும், காரணப்பெய ருடையவை யெல்லாம் அயல்நாட்டிற் குரியவென்றும், வெற்றிலை (வெறுமை + இலை) மிளகாய் (மிளகு + காய்) முதலியவை காரணப் பெயருடைமையால் அயல்நாட்டினின்று வந்தவை யென்றும், வாழை, வேம்பு முதலியவை இடுகுறிப்பெயருடைமையால் தமிழ்நாட்டிற்குரிய வென்றும், ‘ïa‰if¥bghU£ கட்டுரை என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் தனிமொழியாயும் தொடர்மொழியாயும் ஒன்றும் பலவும் பெயரிருக்கு மென்றும், சொற்கள் தோன்றி ஊழிக் கணக்கான காலங்களாகி யிருத்தலின் அவற்றுட் பலவற்றின் பொருள்கள் இறந்தும் மறைந்தும் இருக்கின்றன வென்றும், வெற்றிலைக்கு அடை என்ற மறுபெயர் பண்டை நூல்களிற் கூறப்பட்டுள்ளதென்றும், அவரை யினத்தைச் சேர்ந்த காய் கொத்தவரை யென்னப்பட்டாற்போல, மிள கினத்தைச் சேர்ந்த காய் மிளகா யென்னப்பட்டதென்றும், வழவழ வென் றிருப்பது வாழையென்றும், வெம்மையான காலத்தில் தழைப்பது வேம்பு என்றும் அந் நூலாசிரியர் அறிந்திலர் போலும். இக்காலத்திற் சிலர் ஆங்கிலமுணர்ந்த மாத்திரையானே தமிழு முணர்ந்தமென்று தமிழாராயத் தொடங்குகின்றனர். அது நால்வர் கண்ணிலார் நால்வாய் கண்ட தொக்கும். இதுகாறும் கூறியவற்றை ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. 8. போலி: (நன். 122, உரை) “Kj‰nghÈ இடைப்போலிகளின்பின் முறையே சொல்ல வேண்டிய இவ் விறுதிப் போலியை முன்னே சொன்னதனால், சுரும்பு - சுரும்பர், வண்டு - வண்டர், சிறகு - சிறகர், இடக்கு - இடக்கர் எனச் சில குற்றியலுகரப் பெயரினிறுதி உகரத்துக்கு அர் என்பது போலியாக வருதலும்...... கொள்க என்பது. கடைப்போலியின் சிறப்புப்பற்றியும் அதன் பெருவழக்குப் பற்றியுமே அது முதலிற் கூறப்பட்டது. அது ஒருகால் ஒன்றைக் குறிப்பினும், பந்தல் - பந்தர், குடல் - குடர் போன்ற போலிகளே கொள்ளப்படுமல்லது வண்டு - வண்டர், சிறகு - சிறகர் என்பவை கொள்ளப்படா. குற்றியலுகரங்கள் மிகக் குறுகிய ஓசையுடையனவாய்ச் சொல்லுக் கீற்றிலிருப்பது உச்சரிப்பிற் கெளிதாயிராமைபற்றி அவற்றை (Ú£o) எளிதாக்குவதற்கு அம், அல், அர், இ முதலிய சாரியைகள் வருவதுண்டு. அவை போலியாகா. அர் என்பது போலியாயின் ஏனையவும் போலி யாதல் வேண்டும். அவை சாரியையாதலின் அஃது போலியுரையென மறுக்க. எ-டு : குன்று - குன்றம் சுக்கு - சுக்கல் நெஞ்சு - நெஞ்சம் குச்சு - குச்சி இடக்கு - இடக்கர் குஞ்சு - குஞ்சி வண்டு - வண்டர் `அர்' என்பது சாரியையாக நூல்களிற் கூறப்படவில்லை. ஆயினும், அது சாரியை யென்றே கொள்ளற்பாற்று. அல் என்பதன் ஈற்றுப்போலி எனினும் அமையும். இனி, பித்து - பிச்சு, வைத்த - வைச்ச எனத் தகரத்துக்குச் சகரம் போலியாக வருதலும் அடங்கும் வழியறிந்து அமைத்துக்கொள்க என்பது மேற்சூத்திர முடிவுரையாகும். பிச்சு, வைச்ச என்பவை செய்யுள் விகாரமேயன்றிப் போலியாகா. அவை போலியாயின் கொச்சை (Barbarism) யென்பதொன்றின்றிக் கல்லா மாக்கள் பேசுவதெல்லாம் போலியுளடங்கு மென்றும், ஆச்சென்றா லாயிரம் பாட்டா காதா "ஆப்பிட்டுக்கொண் டடிபட்ட சொக்கேசருக் காசைப்பட்டு என்னும் செய்யுளடிகளிலுள்ள ஆச்சு, ஆப்பிட்டு என்பவும் உலக வழக்கில் திருந்திய மொழிகளாகுமென்றும் மறுக்க. 9. பதவியல் நன்னூற் பதவிய லுரைமுகத்தில், “ï› வியலுக்கு ஆதாரம் பெரும்பாலும் வடமொழியாதலால் அது தோன்ற `மொழியியல் எனப் பெயர் குறியாமல் `பதவியல் எனப் பெயர் குறித்தார் போலும் என்று ஆசிரியர் கருத்தை ஒருவாறு ஊடுருவி யறிந்தாற்போற் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்திற் பதவிய லென்றோர் இயலில் பகுபத உறுப்புக ளெல்லாம் தொகுத்துக் கூறப்படாவிடினும் எழுத்ததிகாரம் சொல்லதி காரமென்னு மீரதிகாரங்களிலும் ஆங்காங்கு வேறு வேறு கூறப்பட்டுள்ளன. பகுதியும் விகுதியும் பெயரியல் வினையியல் இடையியல்களுள் ளும், சாரியையும் விகாரமும் புணரியல்களுள்ளும், இடைநிலையொன்றும் புணரியல் இடையியல்களுள்ளும் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளமை காண்க. தொல்காப்பியக் காலத்து மக்கள் நுண்ணறிவினராதலின், அவர்க்குப் பலவியல்களுள்ளும் வேறு வேறு கூறப்பட்டுள்ள பகுபத வுறுப்புகளை மீண்டுமோரியலில் தொகுத்துக் கூற வேண்டாதாயிற்று. நன்னூற் காலத்தில் மக்களறிவு குறைந்தமையின் அவற்றைத் தொகுத்துக் கூறவும் வேண்டிய தாயிற்று. தொல்காப்பியத்திற் கூறப்படாத பகுபத விலக்கணத்தை வடமொழி தழுவிப் புதிதாய்ச் செய்தார் பவணந்தியாரெனின், அவர் காலம் வரையும் தமிழானது ஆங்கிலம்போலப் பதவியன் மொழியா யிருந்தில தெனவும், அவரது நன்னூலாலேயே வடமொழிபோலப் பதவியன் மொழியாயிற்றெனவும் இயற்கைக்கும் மொழிநூலுக்கும் முரண்படுமன்றோ? ஆதலால் தொல்காப்பியர் காலத்திலேயே பகுபத விலக்கண மிருந்ததென் றும், அது தொல்காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ளதென்றும், அதை மறுத்து மோரியலில் தொகுத்துக் கூறுவது அற்றை முறைப்படி கூறியது கூறலென்னும் குற்றமாகுமென்றும் உய்த்துணர்ந்து கொள்க. 10. திசைச்சொல் திசைச்சொல்லானது பன்னிரு கொடுந்தமிழ் நாட்டினின்றும் வந்து செந்தமிழில் வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களேயன்றிப் பிறமொழிச் சொற்களாகா. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். சொல். 883) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அதை யுணராது, செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (நன். 273) என்று பதினெண்மொழி நிலங்களையும் கூட்டி யுரைத்தார் பவணந்தியார். சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரிய ரெல்லாம் கொடுந்தமிழ்ச் சொற்களையே திசைச்சொற்கு உதாரணங் காட்டினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளெல்லாம் பண்டைக் கொடுந்தமிழ்களாதலின் திசைச்சொற் குதாரணங் காட்டப்பட்டன. வடமொழியொன்றே தொல்காப்பியர் காலத்து இந்து தேசத்தில் வழங்கின பிறமொழியாகும். அது திசைச்சொல்லினின்றும் பிரிக்கப்பட்டு வடசொல் லென விதந்து கூறப்பட்டது. இதனால் கொடுந்தமிழ்ச் சொற்களே திசைச் சொற்களென்றும் பிற மொழிகளெல்லாம் வடசொற்போல அவ்வம் மொழிப் பெயராலேயே குறிக்கப்படுமென்றும், அவை திசைச்சொல்லு ளடங்கா வென்றும் பெறப்படுமாறு காண்க. இங்கிலீசு, இந்துத்தானி, போர்த்துக்கீஸ் முதலிய பிறமொழிச் சொற்களை யெல்லாம் திசைச்சொல்லாக இற்றைச் சிற்றிலக்கணங்கள் கூறாநிற்கும். அவற்றை ஆங்கிலச் சொல், இந்துத்தானிச் சொல், போர்த்துக்கீசியச் சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே குறித்தல் வேண்டும். இவை அக்காலத் தின்மையின் தொல்காப்பியத்திற் கூறப்பட்டில. பிறமொழிச் சொற்களையெல்லாம் தாராளமாய்த் தமிழில் வழங்குமாறு திசைச்சொல்லாக் கொள்ள இலக்கணிகள் இடந் தந்தாராயின், ஏராளமான பிறமொழிச் சொற்கள் யாதும் வரம்பின்றித் தமிழிற் கலந்து அதன் இனிமையையும் தனிமையையும் குலைத்துவிடுதல் திண்ணம். அதோடு அவை தமிழுக்கு இன்றியமையாதவை யென்றும், அவையின்றித் தமிழில் முற்றப் பொருளறிவுறுத்தலமையா தென்றும், எண்ணப்படும். ஆதலின் இலக்கணிகள் இடந்தந்திலர். இங்கிலீசு போன்ற மொழிகட்கே திசைச்சொற்கள் இன்றியமையாதவையாகும். தமிழிலிருந்த எத்துணையோ சொற்கள் வழக்கின்றி இறந்தொழிந்தன. ஆயினும் இற்றைக் காலத்தும், பிறசொற் கலவாது கருத்தெல்லாவற்றையும் உணர்த்த வல்லது தமிழ் ஒன்றேயாகும். ஆங்கிலத்தை வடமொழி யுதவியின்றித் தமிழில் மொழி பெயர்க்க முடியாதென்று சிலர் கருதுகின்றனர். மூலப்பகுதிகளினின்றும் இயற்சொற்களினின்றும் திரிசொற்களும் தொடர்ச்சொற்களும் ஆக்குமாறு அவரறிந்தாராயின் அங்ஙனம் கருதார். ஒவ்வொரு மொழியினும் பிறமொழியைச் செவ்வையாய் மொழிபெயர்ப்பது அரிதாகும். ஆயினும், தமிழில் ஏனையவற்றிற்போல் அத்துணை அரிதன்று. இதுபோது நூல் வழக்கினும் உலக வழக்கிலுமுள்ள தமிழ்ச்சொற்களையே தமிழ்மக்கள் அறிந்திலர். தமிழுக்கு வடமொழி யுதவி வேண்டாதிருக்க, வடசொல்லை யேன் தமிழிலக்கணங் கூறவேண்டுமெனின், வடமொழி தமிழுக்கு இடத்தால் அணித்தாதலின் போக்குவரவுபற்றியும் மொழிபெயர்ப்புப்பற்றியும் வடமொழியிலுள்ள நூற்பெயர்களும் ஆட்பெயர்களுமாய்த் தமிழில் வந்து வழங்கிய சிறப்புப் பெயர்களே வடசொல்லெனப் பட்டனவென்றும், மொழி வழக்கிற்கும் கருத்தறிவிப்பிற்கும் வேண்டிய பிற பொதுச்சொற்கள் தமிழில் வந்து வழங்குமாறு கூறப்பட்டிலவென்றும் பண்டை நூல்களெல்லாம் வடமொழி விரவாத செந்தமிழ் நூல்களென்றும் கூறிவிடுக்க. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் ............................................................. ......................................âir¢brhš” (நள். 273) எனவே, செந்தமிழ் நாட்டை நாற்றிசையும் சூழ்ந்த பன்னிரு கொடுந் தமிழ்நாடுகளினின்று வந்து வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களே திசைச் சொற்களென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழுக்கு வேண்டுவ வல்லவென் றும், ஒருகால் வேண்டினும், வடசொற்போல அவ்வம் மொழியாற் Fறிக்கப்gடுமென்றும்,m¿ந்துfhŸf. 11. எதிர்மறையும்மை சாத்தன் வருதற்கு முரியன் vன்பது tராமைக்குKÇயன்எ‹Dம்எதி®kறையைஒழிபhகவுடை¤தாய்நிற்றÈன்,எதிர்kறையும்மை என்றh®சேனாtரையர். அதைa, சாத்தன் வருதற்கு முரியன் என்பது வாராமைக்கும் உரிய னென எதிர்மறையை ஒழிபாக உடைத்தாய் நிற்றலின், எதிர்மறை. இஃது அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே எனப் பண்புபற்றியும் வரும். இது பிறிதோர் பொருளைத் தழுவாது ஒரு பொருளின் வினையை மறுத்து நிற்றலின் எச்சத்தின் வேறாயிற்று. மேல் ஆசிரியர் `எதிர்மறை எச்சம்' என்றமையின் இஃது எச்சத்தின் கூறாகும் என்று விரித்துக் கூறினார் நச்சினார்க்கினியர். இதே உதாரணத்தை ஏனைச் சிற்றிலக்கணத்தா ரெல்லாரும் வழிவழி காட்டி வந்தனர். சாத்தன் வருதற்கு முரியன் என்பது வராமைக்கு முரியனென்பதைத் தழுவி நிற்றலின், அது ஏனையது தழீஇய எச்சவும்மையன்றி எதிர்மறை யும்மை யாகாது. அது பிறிதொரு பொருளைத் தழுவாவிடினும் பிறிதொரு வினையைத் தழுவி நிற்குமாறறிக. சாத்தன் வருதற்கு முரியன் என்பது எதிர்மறை யும்மையாயின், சாத்தன் வராமைக்கு முரியன் என்பது உடன்பாட்டும்மை யாதல் வேண்டும், உடன்பாட்டை ஒழிபாயுடைத்தாய் நிற்றலின். அவ்வாறு உடன்பாட்டும்மை சூத்திரத்திற் கூறப்படாமையின் அஃதுரையன்மை யறிக. பின்னை யாதோதான் எதிர்மறையும்மை யெனின்; நாள் தவறினும் நாத்தவறான் என்புழி, நாள் தவறினும் என்பது தவறாது என்னும் ஒழிபை உடைத்தாய் நிற்றலின் அதுவே எதிர்மறையும்மை யென்க. கடல் வற்றினுங் கங்கை வற்றாது, தெய்வம் தீமை செய்யினும் கொற்றன் தீமை செய்யான் என்பனவும் இவை போன்ற பிறவுமதற் குதாரணம். - ``செந்தமிழ்ச் செல்வி'' சுறவம் 1932 3 உரிச்சொல் விளக்கம் ``உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்'' (தொல். 782) என்பது தொல்காப்பிய உரிச்சொல் இலக்கணச் சூத்திரம். இதற்கு, இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாருமுளர் என்று சேனாவரையர் உரை கூறியுள்ளார். இதனால் சேனாவரையர் காலத்திலேயே உரிச்சொல் செய்யுட்குரிய சொல் என்று ஒருவரோ பலரோ உரை கூறியுள்ளதாகத் தெரிகின்றது. நால்வகைச் சொற்களில் பெயர், வினை, இடை என்ற மூன்றே இலக்கண வகைச் சொற்களாகும். உரிச்சொல்லென்பது ஓர் இலக்கியவகைச் சொல்லே யன்றி இலக்கணவகைச் சொல்லன்று. அது பெயராகவு மிருக்கும், வினையாகவு மிருக்கும் , இடையாகவு மிருக்கும். எ-டு: பெயர் வினை இடை மாலை (இயல்பு) வார்தல் (நீடல்) பே - அச்சக்குறிப்பு எறுழ் (வலி) இரங்கல் (வருந்தல்) ஐ - வியப்புக்குறிப்பு பண்ணை (விளையாட்டு) பாய்தல் (பரத்தல்). சேனாவரையரும் கறுப்பு, தவ வென்பன பெயர் வினைப்போலி. துவைத்தல், துவைக்கு மென்பன பெயர் வினைக்கு முதனிலையாயின என்று கூறியுள்ளார். சூத்திரத்தில், இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றல், பெயரி னும் வினையினும் மெய்தடுமாறல், ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமையும் தோன்றல், பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல் என உரிச்சொற்குக் கூறிய நான் கிலக்கணங்களுள் முதல் மூன்றும் எல்லாச் சொற்கும் பொதுவாம். இறுதி யொன்றே உரிச்சொற்குச் சிறப்பாம். பெயரும் வினையும் இடையும் பெரும்பாலும் இசை குறிப்புப் பண்பிற் றோன்றியவையே. எ-டு: இசை குறிப்பு பண்பு பெயர் ஒலி துணி வெள்ளை வினை ஒலித்தல் துணித்தல் வெளுத்தல் இடை ஒல் துண் வெள் ‘bgaÇD« வினையினும் மெய் தடுமாறி என்னும் பகுதிக்கு, ``பெயரினும் வினையினும் மெய்தடுமாறி என்பது உரிச்சொல்லாகிய உருபு பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் தடுமாறி எ-று. அவை தடுமாறுங் கால் பெயர் வினைகளைச் சார்ந்தும், அவற்றிற்கு அங்கமாகியும் வரும். உறுவளி என்பது பெயரைச் சார்ந்து வந்தது. உறக்கொண்டான் என்பது வினையைச் சார்ந்து வந்தது. `உறுவன்' என்றவழிப் பெயர்க்கு அங்க மாயிற்று. `உற்றான்' என்றவழி வினைக்கு அங்கமாயிற்று'', என்று உரை வரைந்தார் தெய்வச்சிலையார். இதனின்றும் பெயர் வினை இடைகள் மெய் தடுமாறுவதும் எளிதா யுணரப்படும். மெய்தடுமாறல் வடிவந் திரிதல். சேவடி என்பதிற் பெயர் பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. ஒருப்பட்டான் என்பதிற் பெயர் வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. கண்ணன் என்பதிற் பெயர் பெயருக்கு அங்கமாயிற்று, (கடைக்)கணித்தான் என்பதிற் பெயர் வினைக்கு அங்கமாயிற்று. வார்கயிறு என்பதில் வினை பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. சாக்குத்தினான் என்பதில் வினை வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. பாடகன் என்பதில் வினை பெயருக்கு அங்கமாயிற்று. வந்தான் என்பதில் வினை வினைக்கு அங்கமாயிற்று. தில்லைச்சொல் என்பதில் இடை பெயரைச் சார்ந்து மெய் தடு மாறிற்று. ஒல்ல ஒலித்தது என்பதில் இடை வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. மற்றவன் என்பதில் இடை பெயருக்கு அங்கமாயிற்று. என்றான் என்பதில் இடை வினைக்கு அங்கமாயிற்று. இனி, ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமையும் ஒவ்வோர் சொல்லிலுமுள்ள பலபொரு ளொருசொல்லும் ஒருபொருட் பலசொல்லுமாகும். வேழம் என்பது கரும்பு, மூங்கில், யானை என்று பலபொருள்படும் பலபொரு ளொருசொற் பெயர். வரைந்தான் என்பது எழுதினான், மணந்தான், நீக்கினான் என்று பல பொருள்படும் பலபொரு ளொருசொல் வினை. கொன் என்பது அச்சம், பயனின்மை, காலம், பெருமை எனப் பல பொருள்படும் பலபொரு ளொருசொல் இடை. தாவு என்பது வலி, வருத்தம் எனப் பலபொருள்படும் பலபொரு ளொருசொல் உரி. வேழம், கைம்மலை, ஓங்கல் என்பன யானையைக் குறிக்கும் ஒருபொருட் பலசொற் பெயர். நீக்கினான், அகற்றினான், விலக்கினான் என்பன ஒருபொருட் பலசொல் வினை. ஆ, ஏ, ஓ என்பன வினாப் பொருளில் வரும் ஒருபொருட் பலசொல் இடை. சால, உறு, தவ, நனி என்பன மிகுதிப் பொருளை யுணர்த்தும் ஒருபொருட் பலசொல் உரி. ஒருபொருட் பலசொல், பலபொரு ளொருசொல் என்பன திரிசொற் பாகுபாடுமாகும். `ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி'' (தொல். 882) என்பது தொல்காப்பியம். ஆகவே மேற்கூறிய மூன்றும் உரிச்சொல் லிலக்கண மன்மை பெறப்படும். இனி உரிச்சொல் இலக்கணம் யாதெனின், ``பயிலாதவற்றை........bghUŸntW கிளத்தல்'' (தொல். சொல். 297) என்பதேயாம். இதற்கு, ‘nf£ghdh‰ பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றோடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின்கண் யாதானு மொரு சொல்லாயினும் வேறுவேறு பொருளுணர்த்தப்படும் என்றவாறு என்று சேனாவரையரும், ‘gÆyhjt‰iw¥ பயின்றவை சார்த்தித் jத்தம்kரபிற்bசன்றுÃiலமU§கின்'என்gJஉரிச்bசாற்கள்தத்த« மரபினh‰சென்றுÉகுமிடத்J,வழக்கின்க£பயின்றுநlவாதbசாற்கsப்பயின்றrற்கsடுசேர்த்திv-று.gயிலாத சொல்லாவன: உறு, தவ, நனி. பயின்ற சொல்லாவன : மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சேர்த்துதலாவது இச்சொற்கள் இச்சொல்லின் பொருள்படும் எனக் கூட்டுதல். எச்சொல்லாயினும் பொருள்வேறு கிளத்தல் என்பது யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் காட்டுக எ-று என்று தெய்வச்சிலையாரும் உரை கூறியுள்ளனர். இதனால் உரிச்சொற்கள் வழக்கிற் பயிலாத சொற்களென்றும், அவை செய்யுட்கே யுரியவென்றும், அவற்றிற்கு இடம் நோக்கிப் பொருள்கொள்ள வேண்டுமென்றும், அவற்றுட் சில பகுதிப்பொருள் தராமற் பிறபொருள் தருமென்றும் அறிந்துகொள்க. உரிச்சொல் செய்யுட் சொல் என்பது உறு, கெழு, மல்லல், அலமரல், மழவு, கதழ்வு, கெடவரல், தட, நிழத்தல், துவன்று, முரஞ்சல், பொற்பு, பணைத்தல், பையுள், தெவ், சும்மை, கழும், விழுமம், கமம், கவவு, இலம்பாடு, வியல், நாம்(அச்சம்), வய, துய, உசா, வயா, நொசிவு, புனிறு, யாணர், யாணு, வை (T®ik), எறுழ் முதலிய உரிச்சொற்களைக் கண்ட வளவானே அல்லது கேட்ட வளவானே அறியப்படும். உரிச்சொற்கள் செய்யுட் சொற்கள் ஆனமைபற்றியே ஒவ்வோர் உரிச்சொல்லையும் தனித்தனி எடுத்துக் கூறிப் பொருள் கூறினர் ஆசிரியர். பெயர் வினை இடையென்ற மற்ற மூன்று சொற்கட்கும் இலக்கணம் மட்டுங் கூறியவர் உரிச்சொற்குத் தனித்தனி பொருள் கூறிச் செல்கின்றனர். அக்காலத்து அகராதி யின்மையால், செய்யுளில் வரும் அருஞ்சொற் கட்கெல்லாம் ஆசிரியரே பொருள் கூறவேண்டியதாயிற்று. நிகண்டு களெல்லாம் நெடுங்காலத்திற்குப் பிற்பட்டவையே. முதன்முத லெழுந்த நிகண்டு திவாகரம். பின்பு பிங்கலந்தை,சூடாமணி முதலிய நிகண்டுகள் தோன்றின. திவாகரத்தின் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு. தொல்காப்பியத்தின் காலமோ கிறித்துவுக்குப் பன்னூற்றாண்டு முந்தியதாகும். தொல்காப்பியக் காலத்தைக் கி.மு. பத்தாம் நூற்றாண்டென் றும், நான்காம் நூற்றாண்டென்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். ஆயினும், கிறித்துவுக்கு முற்பட்ட தென்பது மட்டும் தேற்றமாகும். உரிச்சொல் செய்யுட்சொல் என்பதை அறிந்தே, ``பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்'' (நன்.442) என விளங்கக் கூறினர் பவணந்தியார். உரி என்பது உரிமை. உரிச்சொல் என்பது ஒன்றற்குரிய சொல். எதற்குரிய சொல் என்பதுமட்டும் குறிப்பிற் கூறினரேயன்றி வெளிப்படை யாய்க் கூறிற்றிலர் தொல்காப்பியர். அதோடு ‘xUbrh‰ பலபொருட் குரிமை, பலசொல் ஒருபொருட் குரிமை' என உரிச்சொல் லிலக்கணச் சூத்திரத்தில் பிற சொற்றொடர்களோடு உரி என்னும் சொல்லைப் புணர்த்தது, அதன் சிறப்புப் பொருள் குன்றிச் சிலர்க்குக் கவர்படு பொருள் நிலையாகத் தோன்றற்குக் காரணமாயிற்று. நன்னூலில் செய்யுட் குரியன என்னும் ஒரே சொற்றொடரில் உரி என்னும் சொல்லைப் புணர்த்து அதன் சிறப்புப் பொருள் தோன்றச் செய்தார் பவணந்தியார். ``இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி'' என்று தொல்காப்பியத்திலும், ``பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி'' (நன். 442) என்று நன்னூலிலும் உரியென்னும் சொல்லைப் புணர்த்தாது உரிச்சொற் பொருட் பாகுபாடே அல்லது உரிச்சொல் நிலைக்களப் பாகுபாடே கூறியிருப்பதால், `இசைகுறிப்புப் பண்பென்னும் பொருட்கு உரிய சொல் உரிச்சொல் என்று சேனாவரையர் கூறுவது பொருந்தாது, `ஒருசொற் பலபொருட் குரிமை, ‘gybrhš ஒருபொருட் குரிமை என்று தொல் காப்பியர் உரியென்ற சொல்லைப் புணர்த்துக் கூறிய சொற்றொடர்களையும், ஒருகுணம் பலகுணந் தழுவி என மாற்றிக் கூறினார் பவணந்தியார். இதனால் உரிச்சொல் செய்யுட்சொல்லே யென்பதை வெள்ளிடை மலைபோல் விளங்க வைத்தனர். தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களிற் கூறப்பட்ட உரியியலே செய்யு ளகராதிகளான நிகண்டுகட்குத் தோற்றுவாயாகும். செய்யுளிற் சிறப்பாக வழங்கிப் பொருள் விளங்காத அருஞ்சொற்களை யெல்லாம் தனித்தனி யெடுத்துப் பொருள் கூறினர் முன்னை யாசிரியர். மக்கட்கு அறிவாற்றலும் நினைவாற்றலும் குறைந்த பிற்காலத்தில் மிகப்பல செய்யுட் சொற்கட்குப் பொருள் கூறவேண்டி யிருந்ததினாலும், அவை யெல்லாவற்றையும் கூற ஓர் இலக்கண நூல் இடந்தராமையானும், அவற்றைக் கூறுதற்கென்றே நிகண்டு என்னும் சிறப்பு நூல் எழுந்தது. ஒரு மாணாக்கன் செய்யுள் வழக்கான சிறப்புச் சொற்களை யெல்லாம் முன்னமே யறிந்தானாயின் பின்பு செய்யுள் நூல்களைக் கற்கும்போது பொருளுணர்ச்சி எளிதாயிருக்கும். இதனால் செய்யுட் சொற்களிற் பெரும்பாலானவற்றை மாணாக்கர் மனப்பாடம் செய்ய வைத்தனர் பண்டைக் கணக்காயர். இதே நோக்கத்துடன்தான் நிகண்டுகளும் எழுதப்பட்டன. மக்கட்கு இளமையில் நினைவாற்றல் மிக்கிருப்பதால் அதைப் பயன்படுத்தக் கருதியே மாணாக்கர்க்கு நிகண்டுகளை மனப்பாடஞ் செய்வித்தனர். நிகண்டுகள் நிறைவும் விளக்கமும் பற்ற வரவர நீண்டு வந்தன. திவாகரத்தினும் பிங்கலமும், பிங்கலத்தினும் சூடாமணியும் நீண்டிருத்தல் காண்க. நிகண்டுகள் செய்யுட் சொற்களைக் கூறுவனவே யன்றி உலகவழக்குச் சொற்களைக் கூறுவனவல்ல. இற்றைய அகராதிகளே இருவகை வழக்குச் சொற்களையும் எடுத்துக் கூறும். நிகண்டுகள் உரிச்சொல் லகராதிகள் அல்லது செய்யுட்சொல் லகராதிகள் என்பதை, `இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலாம் நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே' (நன். 460) என்னும் நன்னூல் உரியியற் புறனடைச் சூத்திரத்தானு முணர்க. உரிச்சொல் நிகண்டு என்றே ஒரு நிகண்டுமுள்ளது. அகராதி என்பது அகரமுதற் சொற்களைக் கூறுவதென்றே பொருள்படினும், இனவிலக்கணமாக நிகண்டிற்கும் பெயராகக் கொள்ளப்படும். இங்ஙனம் உரிச்சொல் செய்யுட் சொல்லா யிருக்கவும்,உரிச்சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானே யன்றே ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்,பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர். எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற் கிளவி என்று ஓதினமையால், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவை யென்று கொள்ளப்படும், அவையும் குறைச்சொல் லாதலான். அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம் இதனுள் ஓதினாரோ எனின், வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (சூ.2) என்றாராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்கள் ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க. தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின், அவ் விருசொற்கும் m§fkh.....ண்L¡ கூறப்படுகின்றன என்றார் தெய்வச்சிலையார். இதையே சிவஞான முனிவருந் தழுவினர். உரிச்சொல் தாது(வினைப்பகுதி)ஆயின் தாதுவைக் குறியாது அலமரல், தெருமரல், கூர்ப்பு, வார்தல் என்று தொழிற்பெயர்களை ஏன் குறித்தல் வேண்டும்? தொழிற்பெயர் தமிழில் தாதுவைக் குறிக்கும் வகைகளில் ஒன்றென்று கூறின், குரு, மல்லல், மழவு, பண்ணை, வம்பு, தெவ், நாம், வாள், எறுழ் முதலிய பெயர்ச்சொற்கள் ஏன் காட்டப்படுகின்றன? பெயர்ச்சொற்கட்குப் பிரதிபதிகமே யன்றித் தாதுவின்றே! இனி, வினைச்சொற்களுள்ளும் பகுதிப்பொருள் ஒன்றும், உரிச்சொற் பொருளொன்றுமா யிருத்தலின், பகுதியைக் கூறி என்ன பயன்? செல்லல் என்னும் தொழிற்பெயர் உரிச்சொல்லாகி இன்னாமையை உணர்த்தும்; செல் என்னும் பகுதி போதலையே உணர்த்தும். கருவி என்னும் தொழிற்பெயர் உரிச்சொல்லாகித் தொகுதியை உணர்த்தும்; கரு என்னும் பகுதி கருத்தலையே உணர்த்தும். எய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் உரிச்சொல்லாகி அறியாமையை உணர்த்தும்; எய்தல் என்னும் உடன்பாட்டு வினை அம்பு விடுத்தலையே உணர்த்தும். இதை, ‘m¿j‰ பொருட்டாய் எய்தலென்றானும், எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறை யன்மை யறிக என்னும் சேனாவரைய ருரையானு மறிக. உலக வழக்கினுள்ளும் உடன்பாட்டி லொன்றும் எதிர்மறையி லொன்றுமாக வெவ்வேறு பொருள்படும் வினைகளுள. எ-டு: உடன்பாடு எதிர்மறை பொறுமை (patience) பொறாமை (jealousy) தொல்காப்பிய எழுத்ததிகார ஈற்றயற் சூத்திரத்தில், `குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி' (தொல். எழுத்து. 482) என்றதனை வினைப்பகுதி யென்றும் உரிச்சொல்லென்றும் கூறினார் தெய்வச்சிலையார். நச்சினார்க்கினியரும் தம் உரையில், ‘F¿¥ãdhD« பண்பினானும் இசையினானும் பிறந்து, ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும் என்றே முற்கூறினாரேனும், ‘f© விண்ண விணைத்தது, விண் விணைத்தது, இவை குறிப்புரிச் சொல்; ஆடை வெள்ள விளர்த்தது, வெள்விளர்த்தது, இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல ஒலித்தது, ஒல்லொலித்தது, இவை இசையுரிச்சொல். ஒல்லொலி நீர் பாய்வதே போலுந் Jiwt‹' என்றார் செய்யுட்கண்ணும். இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்க லாகாமையின் நெறிப்பட வாரா என்றார். விண்ண விணைத்தது தெறிப்புத் தோன்றத் தெறித்ததென்றும், விண்விணைத்தது தெறிப்புத் தெறித்ததென்றும் ஆம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம் நிற்றலிற் றன்மை குறைந்த சொல்லாயிற்று. ``வினையே குறிப்பே'' (brhš. 258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற்றோடு கூட்டியவழி இடைச் சொல்லாதலின் விண்ணென விணைத்தது எனப் புணர்க்கப்படுமாறு உணர்க என்று பிற்கூறியதிலிருந்து, சூத்திரத்திற் குறைச்சொற் கிளவி யெனக் குறித்தது இடைச்சொல்லே யென்றும், விண்ண, வெள்ள என்று குறையாய் நிற்றலின் குறைச்சொற் கிளவியெனப்பட்டதென்றும் அறிந்து கொள்ளலாம். தொல்காப்பியர் குறைச் சொற்கிளவி என்னும் பெயரால் வினைப் பகுதியையே குறித்திருப்பாராயின், எச்சவியலில், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூவகைக் குறைகளைக் குறிக்குமிடத்து, ``குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்'' எனச் சூத்திரம் செய்திரார். ``குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல'' என்னும் அடுத்த சூத்திரத்தினால் மூவகைக் குறைகளும் பெயர்ச்சொற்களே யென்பது பெறப்படும். ஆகையால், குறைச்சொல் என்பது குறைந்த சொற்கட் கெல்லாம் பொதுப்பெயரேயன்றி வினைப்பகுதிக்கே யுரிய சிறப்புக் குறியீடு அன்றென்பது தெரிந்துகொள்க. உரிச்சொல் லென்பது வினைப்பகுதியே யாயின், வேற்றுமை மயங்கியலுள், ``வினையே செய்வது'' என்னும் சூத்திரத்தில் வினை என்பதனாலும், எச்சவியலுள், ``செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே'' (தொல். சொல். 593) என்னுஞ் சூத்திரத்தானும் வினைப்பகுதியைத் தொல்காப்பியர் குறித் திருத்தலின், அதை மீண்டும் உரியியல் என்றோரியலிற் கூறுவது கூறியது கூறலாமென்க. இனி, ``வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன.'' (தொல். சொல். 783) என்று தொல்காப்பியர் உரிச்சொல்லை வெளிப்படு சொல், வெளிப்படாச் சொல் என இருவகைப்படுத்தி யிருப்பதால், உரிச்சொல் வெளிப்படாச் சொல்லாகவே யிருக்கின்ற செய்யுட் சொல்லன்று எனக் கூறுவர் சிலர். உலகத்திற் பல வகுப்பாருக்குள்ளும் பல குழூஉக்குறிகள் வழங்கி வருகின்றன. ஒரு குழுவினைப் பிறர்க்குத் தெரியாவண்ணம் மறை பொருளனவாகத் தமக்குள் வழங்கிக்கொள்ளும் குறிகளே குழூஉக்குறி யாகும். ஆயினும் நாளடைவில் சில குழூஉக் குறிகளின் பொருள்கள் பிறர்க்கு வெளியாகிவிடுகின்றன. அங்ஙனம் பொருள் வெளியான குழூஉக்குறிகள் உண்மையில் குழூஉக்குறி யல்லவேனும் அவை முன்னிருந்த நிலைமைபற்றிக் குழூஉக்குறி யென்றே கூறப்படுகின்றன. கள்ளைக் குறிக்கும் குதிரை யென்னுஞ் சொல்லும், பொன்னைக் குறிக்கும் பறி யென்னுஞ் சொல்லும் எல்லாரானும் பொருளறியப்படினும் இன்னும் குழூஉக்குறியாகவே கூறப்படும். அதுபோலச் செய்யுட் சொற்களான உரிச்சொற்களும் பொருளறியப்பட்ட பின்னும் உரிச்சொல் லெனவேபடும். ஆனால், உலக வழக்கிற்கு வந்தவைமட்டும் உரிச்சொல்லாகா. சொற்கள் வழக்கு மிகுதிபற்றிப் பொருளறியப்படுவதும், வழக் கின்மைபற்றிப் பொருளறியப்படாமையுமுண்டு. வழக்குக் காலந்தோறும் மாறிக்கொண்டே யிருக்கும். தொல்காப்பியர் தம் காலத்தில் உலகவழக்கில் வழங்காதனவாகக் குறிக்கின்ற பசப்பு, அதிர்வு, தீர்தல், பழுது, முழுது, செழுமை, சேர் முதலிய சொற்கள் இக்காலத்துப் பெருவழக்காக வழங்குகின்றன. தொல்காப்பியர் காலத்தில் இவை வழங்கியிருப்பின் இவற்றுக்குப் பொருள் கூறியிரார். இனித் தம் காலத்தில் புதிதாய் வழங்கினவாக அவர் கூறும் கடுவன், கோட்டான், தத்தை, பூசை முதலிய ஏழு சொற்களில்,கோட்டான், பூசை என்னுமிரண்டே இக்காலத்து வழங்குகின்றன. ஏனைய வழக்கிறந்தன. பூசை என்பது இக்காலத்துப் பூனை என வழங்குகின்றது. ஆகையால், தொல்காப்பியர் கூறிய உரிச்சொற்க ளெல்லாம் அக்காலத்துச் செய்யுட் சொற்களா யிருந்தன வென்றும், அவற்றுட் சில இக்காலத்து உலக வழக்கில் வழங்குகின்றன வென்றும், அவை இக்காலத்து உரிச்சொல் லாகாவென்றும் அறிந்துகொள்க. இனி, உரிச்சொல்லென்பது எல்லோர்க்கும் பொருள்விளங்காத செய்யுட் சொல்லாயின், திரிசொல் என்பதும் எல்லோர்க்கும் பொருள் விளங்காத செய்யுட் சொல்லாயிருத்தலின் உரிச்சொல்லாமோ வெனின், கூறுதும்: இயற்சொல், திரிசொல் என்பன இயல்பாய்ப் பொருளுணர்த்தும் சொல், இயற்சொற் றன்மையினின்றுந் திரிந்து அரிதாய்ப் பொருளுணர்த்தும் சொல் எனப் பொதுவாய்க் கூறப்படினும், சொற்பொருள் நோக்கின் இயல்பான brhš(Primitive word), இயல்பான சொல்லினின்றும் திரிந்த brhš(Derivative) என்றே கூறற்கேற்றன. இது திரிசொற் சூத்திரத்திற்கு, 1. திரிசொல்லாவது உறுப்புத்திரிதலும் முழுவதும் திரிதலுமென இரு வகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்ப உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன. ....... திரிபுடைமையே திரிசொற்கிலக்கணமாதல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் என்பதனாற் பெறவைத்தார் என்று சேனாவரையர் கூறிய உரையானும், இதையொட்டி நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணரப்படும். உரிச்சொல் செய்யுட் சொல்லாகவே யிருத்தலானும், ஓர் இலக்கண வகைச் சொல்லன்மையானும், பெயர், வினை, இடை என்னும் முச்சொல்லாயு மிருத்தலானும், பிரயோகம்பற்றியே இன்ன சொல்லெனக் கூறப்படுவதாகும். தொல்காப்பியர் எச்சவியலுள், இடைச்சொல்லெல்லாம் பிறிதோர் சொல்லை விசேடிக்கும் சொல்லே என்னும் பொருளில், ``இடைச்சொல் லெல்லாம், வேற்றுமைச் சொல்லே'' என்று சூத்திரித்து, இப் பொருளை உரிச்சொல்லும் ஒருபுடை தழுவும்படி அதையடுத்து, ``உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய'' என்று கூறினார். இதற்குச் சேனாவரையர், ‘cÇ¢brhšÈl¤J« வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா என்றவாறு. எனவே, உரிச்சொல்லுள் வேறு படுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இருநிலைமையு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம். ‘ntWgL¡FŠ சொல்லே யாவன உறு, தவ, நனி என்னுந் தொடக் கத்தன. இருநிலைமையுமுடையன குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன. உறுபொருள், தவப்பல, நனிசேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு, கேழ்கிளரகலம், செங்கேழ்; செல்லனோய், அருஞ்செல்லல், இன்னற் குறிப்பு, பெயரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் இருநிலைமையுமுடையவாய் வருமாறும், வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டுகொள்க. குருவிளங்கிற்று; செல்லறீர எனத் தாமே நின்று வினை கொள்வன, விசேடிக்கப்படுந் தன்மை யுடையவாதலின், விசேடிக் கப்படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித்தல்லது வாராதனவும், விசேடித்தும் விசேடி யாதும் வருவனவும், வழக்குஞ் செய்யுளு நோக்கியுணர்க என்று உரை கூறினர். இதனால், உரிச்சொல் என்பது பெயராகவும் வினையாகவும், அவற்றிற்கு அடையாகவும் வருமென்றும், பெயருக்கு அடையாங்கால் குறிப்புப் பெயரெச்சம் போல்வதென்றும், வினைக்கு அடையாங்கால் குறிப்பு வினையெச்சம் போல்வதென்றும், பெயருரிச்சொல் வினையுரிச் சொல் என்னும் இரு வகையுள் எல்லா வுரிச்சொல்லும் அடங்காவென்றும் அறிந்துகொள்க. இதுகாறுங் கூறியவாற்றால் உரிச்சொல் என்பது செய்யுட் சொல்லே யென்றும், அதற்குப் பிறவாறு கூறுவதெல்லாம் போலியுரை யென்றும், உரிச்சொல் ஓர் இலக்கணவகைத் தனிச்சொல் லன்றென்றும், அது பிரயோகத்திற்கேற்ப இன்ன சொல்லென்று கூறப்படுமென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' கடகம் 1935 4 ஙம்முதல் உலக வழக்கிலுள்ள ஒவ்வொரு மொழியிலும் சொற்களும் சொற் றொடர்களும் நாளடைவில் மாறுபடுகின்றன. அம் மாற்றம் தமிழில் மரூஉ, திரிபு, சிதைவு, போலி எனப் பல்பெயராற் கூறப்படும். மொழிகளின் வடிவு மாறவே அவற்றின் முதலிடைகடை யெழுத்துகளும் மாறுபடுகின்றன என்பது சொல்லாமே போதரும். பிறமொழிகளில் மொழிமுதலிடைகடை யெழுத்துகட்கு வரம் பில்லை. தமிழிலோ அவ் வரம்புண்டு. ஒரு தனிமொழியின் அல்லது தனித்து வழங்கக்கூடிய மொழியின் முதலெழுத்து மற்றோரெழுத்தாய்த் திரியின், அத் திரிபெழுத்தே முதலெழுத்தாய்க் கொள்ளப்படும், இலக்கணம் இடந்தரின். எ-டு: நண்டு - ஞண்டு. அரைஞாண் (அரைநாண்), பைஞ்ஞீலி (பைந்நீலி), சேய்ஞலூர் (nrŒešÿ®) முதலிய தொடர்மொழிகளிலுள்ள வருமொழிகள் ஞாண், ஞீலி, ஞல்லூர் எனத் தம் திரிந்த வடிவிலும் தனித்து வழங்குந் தகுதி சிறிதுடைமையின் அவற்றின் முதலிலுள்ள திரிபெழுத்துகளும் மொழிமுத லெழுத்துகளாகக் கொள்ளப்படல் கூடும், ஆனால், ஒரு தொடர்மொழியி லுள்ள வருமொழியின் முதலெழுத்து மொழிமுதலல்லா எழுத்தாகத் திரியின், அவ் விதி முதல் இயல்புமுதலாகக் கொள்ளப்படாது. ஈண்டு இயல்புமுதல் விதிமுதல் என்பவற்றை இயல்பீறு விதியீறு என்பவற்றை யெண்ணி யுணர்க. எ-டு : அல் + தாலம் = அற்றாலம். விண் + நாடு = விண்ணாடு. இவற்றில் றா, ணா என்னும் விதிமுதல்கள் மொழிமுதலெழுத்தா காமை யுணர்க. தொல்காப்பியர் சிறந்த ஆராய்ச்சியுடைய ராதலின், ஙகரம் வரு மொழியின் விதிமுதலாய் மட்டும் வருவது கண்டு அதை மொழிமுத லெழுத்தாகக் கூறியிலர். நன்னூலாரோ அவ் வாராய்ச்சியின்மையின், விதிமுதலாய் வந்த ஙகரத்தை இயல்புமுதலென மயங்கிக் கூறினர். ஙகரம் அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் எனச் சுட்டு வினாமுதற் றொடர்மொழிகளில் வருமொழி விதிமுதலா யிருக்குமே யன்றி, யாண்டும் தனிமொழியில் இயல்பு முதலாய் வருவதன்று. அங்ஙனம், இங்ஙனம் என்பன அவ்விதம் இவ்விதம் என்று பொருள் படுவனவாகும். அவ்வண்ணம், அவ்வகை, அவ்விதம், அப்படி என்னும் தொடர் மொழிகளிலுள்ள வண்ணம், வகை, விதம், படி என்னும் சொற்கள் தனித்து வழங்குவதுபோல, ஙனம் என்னும் சொல் தனித்து வழங்குவதன்று. அவன் செய்த விதம், அவன் செய்த ஙனம் என்னுந் தொடர்களைக் கூறிக் காண்க. அங்ஙனம், இங்ஙனம் முதலிய தொடர்மொழிகளில் மெல்லோசை சிறந்திருத்தலின், மெலித்தல் (Nasalization) ஓசை மிகுதியும் பயில்கின்ற மலையாள வழக்கில் ஒருகால் ஙனம் என்னும் சொல் தனித்து வழங்கலா மென்று கருதிப் பலவிடத்துமுள்ள மலையாளரைக் கேட்டதில் அவர்களும் ஙனம் என்னும்சொல் தமிழிற்போலவே மலையாளத்திலும் தொடர்மொழிப் பகுதியாய் வழங்குவதன்றித் தனித்து வழங்குவதன்று என ஒருபடித்தாய்ப் பகர்ந்துவிட்டனர். அங்ஙனம், இங்ஙனம் என்னும் சொற்றொடர்கள் பண்டைக் காலத்தில் அங்கனம், இங்கனம் என வழங்கியுள்ளமை சங்க நூல்களா லறியப்படும். இக்காலத்திலும் சிலர் அங்கனம், இங்கனம் என்றே கூறுவதை உலகவழக்கிற் காணலாம். சீவக சிந்தாமணி, விமலையாரிலம்பகம் 54ஆம் செய்யுளில், ``ஈங்கனம் கனையிருளெல்லை நீந்தினாள்' என்னும் ஈற்றடியிலும், புறநானூறு 208ஆம் செய்யுளில், ``ஈங்கனஞ் செல்க தானென என்னை' என்னும் அடியிலும், ஈங்கனம் என்ற வடிவம் வந்துள்ளது. இங்கனம் எனினும் ஈங்கனம் எனினும் ஒன்றே. சுட்டும் வினாவும் நீள்வது இருவகை வழக்கினும் பெரும்பான்மை. அல்லது சுட்டுவினாப் பொருண்மையில் ஒரு குறிலும் அதன் நெடிலும் ஓரெழுத்தே யெனக் கொள்ளினும் அமையும். இனி, அங்கனம், இங்கனம் என்பவற்றின் முதல் வடிவுதான் யாதோவெனிற் கூறுதும். கண் என்னும் இடப்பெயர் சுட்டு வினாவொடு புணர்ந்து, அக்கண், இக்கண், எக்கண் என நிற்கும். பின்பு மெலித்தன் முறையால் அங்கண், இங்கண், எங்கண் எனத் திரியும். எ-டு : ``கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்'' (புறம். 15) அங்கண் எனினும் ஆங்கண் எனினும் ஒன்றே. முன்னதன் நீட்சி பின்னதெனினும் ஒக்கும். இங்ஙனமே பிறவும். அங்கண், இங்கண் என்பன அங்கன், இங்கன் என மருவி மீண்டும் அங்ஙன், இங்ஙன் என மெலியும். எ-டு : ``தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் பேர்த்திங்ஙன்'' (சிலப். ) தமிழ்ச்சொற்கள் பல இன்னோசைபற்றி அம்மீறு பெறுதல் பெரும்பான்மை. (இவ் வியல்பை இலத்தீன் மொழியிலும் காணலாம்.) எ-டு : தூண் - தூணம், குன்று - குன்றம், கால் - காலம், நெஞ்சு - நெஞ்சம், புறவு - புறவம், கண்டு - கண்டம். இங்ஙனமே அங்ஙன், இங்ஙன் முதலிய மரூஉச் சொற்றொடர்களும் அம்மீறு பெற்று அங்ஙனம், இங்ஙனம் என வழங்கும். ஓரிடம் மற்றோரிடத்திற்கு வழியாயிருத்தல்பற்றிப் பொதுவாய் இடப்பெயர்கள் ஒரு வினை செய்யும் வழியை(அதாவது வகையைக்) குறிப்பதுண்டு. எ-டு : ஆங்கு = அது போல, அப்படி. அவ்வழி = அப்படி. இவ் வியைபினால் வகைப்பெயர்கள் தடுமாறி இடத்தைக் குறிப்பது முண்டு. எ-டு : இப்படிப் போ = இவ்வழியாய்ப் போ. அங்ஙனம், இங்ஙனம் முதலிய பெயர்களும் சொற்படி முதலில் இடத்தைக் குறித்தனவேனும், பின்பு இடம்-வழி-வகை என்னும் இயைபுபற்றி ஆகுபெயர்த் தன்மையில் வகை, விதம் என்னும் பொருள் தருவவாயின. இனி, அங்ஙனம், இங்ஙனம் முதலிய சொற்றொடர்த் திரிபுகள் அம்மட்டிலமையாது அன்னணம், இன்னணம் முதலிய திரிபுங் கொள்ளும். நன்னூலாரே, ``இன்ன தின்னுழி யின்னண மியலும்'' (நன். 460) எனத் தம் உரியியற் புறனடையிற் கூறியுள்ளார். ஆதலின், ``சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வு முதலா கும்மே'' (நன். 106) எனச் சூத்திரித்தவர், ``சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி னவ்வு முதலா கும்மே'' எனச் சூத்திரியாதொழிந்தது குன்றக் கூறலாமன்றோ? ஆதலான், தொல்காப்பியர்க்கு முற்காலத் தமிழிலன்றிப் பிற்காலத் தமிழில் ஙம்முதலே யில்லையென்று தெள்ளிதிற் றெளிக. - ``செந்தமிழ்ச் செல்வி'' கடகம் 1936 5 தழுவுதொடரும் தழாத்தொடரும் ``வேற்றுமை யைம்முத லாறா மல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவீ ரேழே.'' (நன். 152) இதன் உரையில், வை.மு. சடகோபராமாநுஜாசாரியாரும், சே. கிருஷ்ண மாசாரியாரும், “ïit தழுவுதொடர் எனவே, அவ் விருவழியிலும், தழாத்தொடரும் சில உள என்றாராயிற்று. `நீர்க்குடம் என்பது நீரையுடைய குடம் என விரிதலால், நீர் என்பது உடைய என்பதைத் தழுவிக் குடம் என்பதைப் பொருளால் தழுவாமல் தொடர்ந்ததனால், இது தழாத்தொடராகிய வேற்றுமைத் தொகை................... `ku¤ij¢ சாத்தன் வெட்டினான்' என்பதில், மரத்தை என்பது வெட்டினான் என்பதைத் தழுவிச் சாத்தன் என்பதைப் பொருளால் தழுவாமல் தொடர்ந்ததனால், இது தழாத்தொடராகிய வேற்றுமை விரி. “RiuahH அம்மி மிதப்ப என்பது சுரைமிதப்ப அம்மி ஆழ எனக் கூட்டப்படுதலால், சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் பொருளால் தழுவாமல் தொடர்ந்தன. இவை தழாத்தொடராகிய அல்வழிப்புணர்ச்சி. தழாத்தொடராவது நிலைமொழி யானது வருமொழியோடு பொருட் பொருத்தமுறத் தழுவாத தொடர். பொருட் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர் எனக் கூறியுள்ளனர். தழுவுதொடர், தழாத்தொடர் என்பன இலக்கணப் பொருத்தமுறத் தழுவுகின்ற தொடர், இலக்கணப் பொருத்தமுறத் தழுவாத தொடர் என்றே பொருள்படு மன்றி, பொருட் பொருத்தமுறத் தழுவுகின்ற தொடர், பொருட் பொருத்தமுறத் தழுவாத தொடர் என்று பொருள்படா. சூத்திரத்துட் கூறப்பட்ட பதினான்கு தொடர்களுள், முதற் பதின் மூன்றும் தழுவுதொடரும், கடையொன்றும் தழாத்தொடருமாகும் என்பதைக் குறித்தற்கே, அடுக்குத் தொடர்க்கு முன் தழுவுதொடர் என்பதைக் கூறிப் பிரித்தனர். ஏனைப் பதின்மூன்றும் தழுவுதொடர் எனவே, இறுதி யொன்றும் அதற்கெதிராகிய தழாத்தொடரென்பது அறியப்படும், மெய்ம் மயக்குச் சூத்திரத்தில் ஒன்றை உடனிலை என்றதினால் இன்னொன்று வேற்றுநிலை யென்றறியப்பட்டாற்போல. இது சூத்திரமாதலின் சொற் சுருங்கற்கு இங்ஙனம் யாக்கப்பட்டது. வேற்றுமைத்தொகை முதலிய ஆறு தொகைகளும், எழுவாய்த் தொடர் முதலிய எட்டுத் தொடர்களும், நிலைமொழியும் வருமொழியும் இலக்கணத்திற் சம்பந்தப்பட்டிருப்பதும், அடுக்குத்தொடர் ஒன்றுமட்டும் சம்பந்தப்படாது நிலைமொழி வருமொழிகள் தனித்தனி நிற்பதும் எடுத்துக்காட்டு வாயிலாய்க் கண்டுகொள்க. எ-டு : சோறுண்டான்-வேற்றுமைத் தொகை - தழுவுதொடர் இராமன் வந்தான் - எழுவாய்த் தொடர் - தழுவுதொடர் பாம்பு பாம்பு - தழாத்தொடர். நீர்க்குடம் என்பது நீரையுடைய குடம் என்று விரியும்போது, நீரை என்பது உடைய என்பதையும், உடைய என்பது குடம் என்பதையும் தழுவுகின்றமை காண்க. நீர்க்குடம் என்று தொகையாய் நிற்கும் போதும், நீர் என்பது (தொக்குநிற்கும்) உடைய என்னுஞ் சொல்லையே அவாய் நிலையால் தழுவும். அல்லாக்கால், வந்தேன் என்னும் தொகை வாக்கியத்தில் நான் என்னும் எழுவாய் அவாய்நிலையால் வருவிக்கப்படாமை காண்க. சாத்தன் மரத்தை வெட்டினான் என்பதே இயல்பான தமிழுரை முறையாத லின், மரத்தைச் சாத்தன் என்பது ஒரு பயன் நோக்கிய முறை மாற்றாகும். சாத்தன் மரத்தை என்பதில் சாத்தன் என்பது எழுவாயும், மரத்தை என்பது எழுவாயின் தொழிலை யடைகின்ற செயப்படுபொருளாயும் எங்ஙனம் இயையுமோ, அங்ஙனமே மரத்தைச் சாத்தன் என்பதிலும் இயையும். வந்த சாத்தன் மகன் என்னுந் தொடரில் வந்த என்பது மகனைத் தழுவுமாயின், அஃது இடைப்பிறவரல் எனப் பொதுவியலில் வேறிலக் கணமாகக் கூறப்படுதலின் ஈண்டைக் கேலாதாகும். ஏற்பின், பொதுவியலின் கூறும் இடைப்பிறவரல் கூறியது கூறலாய்க் குற்றந் தங்கும். ‘Riu யாழ அம்மி மிதப்ப என்பது செய்யுட்குரிய மொழிமாற்றுப் பொருள்கோளாதலின், அதுவும் ஈண்டைக் கேலாது. ஆங்கிலத்திலும் தழுவுதொடர் தழாத்தொடர்கட்கு இலக்கணப் பொருத்த முண்மை யின்மைகளையே இலக்கணமாகக் கொள்வர். Compound words (bjhl®bkhÊfŸ) are subdivided into two classes: I. Unrelated (jHh¤bjhl®) or those in which the simple words are not connected together by any grammatical relation. (These have been also called Juxta-positional). II. Related, (jGîbjhl®) or those in which there is some grammatical relation between the component words. (These have been also called syntactical.) (Nesfield: Book IV) பதினான்கு தொடர்களிலும் தழுவுதொடரும் தழாத்தொடரும் உண்டென்று நன்னூலார் கொண்டிருப்பின், அதை ஒரு தனிச் சூத்திரத்தில் விளங்க வைத்திருப்பாரேயன்றி, இத்துணை உய்த்துணர்விற்கும் மயக்கத்திற்கும் இடந் தந்திரார் என்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' மடங்கல் 1936 6 நிகழ்கால வினை தொல்காப்பியர், நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய செய்யும் செய்த என்னுஞ் சொல்லே. (719) என்னும் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவில், செய்கின்ற (‘brŒ»w’) என்னும் நிகழ்காலப் பெயரெச்ச வாய்பாட்டைக் கூறாமையானும்; வினையெச்ச வாய்பாட்டு நூற்பாவில் அவர் முக்கால வினையெச்சங்களை யும் கூறியிருப்பினும், நிகழ்கால வினையெச்சத்தில் நிகழ்கால இடைநிலை (கின்று-கிறு) இயல்பாய் அமையாமையானும்; முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (725) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு, மலைநிற்கும், ஞாயிறியங்கும் என்பன போன்றும், மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே (727) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு, “jtŠbrŒjh‹ சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என்பன போன்றும், எதிர்காலத்திற்குரிய `செய்யும்' என்னும் முற்றையே உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டி வந்திருப்பதானும், `செய்கின்றான் என்னும் வாய்பாட்டுச் சொல் உருத்தெரியாதவாறு திரிந்தன்றித் தொல் காப்பியத்தில் ஓரிடத்தும் வாராமையானும்; `செய்கின்ற என்னும் வாய்பாட்டுச் சொல்லோ அங்ஙனந் திரிந்தேனும் அதன்கண் வாராமையானும்; இடையியலில் முக்கால இடைநிலைகளைக் குறிப்பிடு மிடத்து, வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் (735) என்று தொல்காப்பியர் பொதுப்படவே தொகுத்துக் கூறியிருத்தலானும்; கின்று என்னும் இடைநிலைபெற்ற நிகழ்காலவினை தொல்காப்பியர் காலத்து உண்டோ என்று சிலர் மருளவும், இல்லை என்று சிலர் பிறழவும் இடமாகின்றது. தொல்காப்பியர் காலத்தில் முக்கால வினைகளும் இருந்தன என்பதும், நிகழ்காலத்திற்குத் தனிவினை இருந்திருத்தல் வேண்டும் என்பதும், காலந் தாமே மூன்றென மொழிப (தொல். 684) இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (தொல். 685) முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் (தொல். 725) வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர் (தொல். 726) மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே (தொல். 727) வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை (தொல். 730) இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி (தொல். 732) ஏனைக் காலமும் மயங்குதல் வரையார் (தொல். 733) என்னுந் தொல்காப்பிய நூற்பாக்களானேயே பெறப்படும். இனி, சேனாவரையரும், உண்கின்றனம், உண்கின்றாம், உண்கின்றனெம், உண்கின்றேம், உண்கின்றனேம்; உண்கின்றன, உண்கின்ற; நடக்கின்றது, உண்கின்றது என்னும் கின்றிடைநிலை வினைமுற்றுகளை நிகழ்கால வினைமுற்றுகளாகத் தம் உரையில் எடுத்துக்காட்டியுள்ளார் (தொல். வினை. 15, 19, 20 உரை). பண்டைச் சேரநாடாகிய கேரள அல்லது மலையாள நாட்டில், இறந்தகால நிகழ்கால வினைமுற்றுகள் இன்று பாலீறு நீங்கிப் பகுதியும் இடைநிலையும் மட்டும் அமைந்த அளவில் வழங்குகின்றன. எ-டு: இறந்தகாலம் தமிழ் முற்று தமிழ் எச்சம் மலையாள முற்று செய்தான் செய்து செய்து அடித்தாள் அடித்து அடிச்சு அறிந்தார் அறிந்து அறிஞ்ஞு ஆயிற்று ஆய் ஆயி வந்தன வந்து வந்நு வாழ்ந்தேன் வாழ்ந்து வாணு பாடினோம் பாடி பாடி புறப்பட்டாய் புறப்பட்டு புறப்பெட்டு வாங்கினீர் வாங்கி வாங்ஙி நிகழ்காலம் தமிழ் முற்று ஈறு நீங்கிய மலையாள முற்று தமிழ் வடிவம் செய்கின்றான் செய்கின்று செய்யுந்நு அடிக்கின்றான் அடிக்கின்று அடிக்குந்நு அறிகின்றார் அறிகின்று அறியுந்நு ஆகின்றது ஆகின்று ஆகுந்நு வருகின்றன வருகின்று வருந்நு வாழ்கின்றேன் வாழ்கின்று வாழுந்நு பாடுகின்றோம் பாடுகின்று பாடுந்நு புறப்படுகின்றாய் புறப்படுகின்று புறப்பெடுந்நு வாங்குகின்றீர் வாங்குகின்று வாங்ஙுந்நு இதனால், கின்று என்னும் நிகழ்கால இடைநிலை மலையாளத்தில் ‘FªE’ அல்லது உந்நு என்று திரிந்திருப்பதைக் காணலாம். ‘brŒí«’ என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்று, பால் காட்டும் ஈறில்லாததாயும், பலபாற்குப் பொதுவான ஈறுள்ளதாயும், பலுக்கு வதற்கு எளிதாயும், இடைநிலையின்றிச் சுருங்கியதாயும், இருத்தலின்; அதுவே மலையாளத்திலும் (மூவிட) எதிர்கால வினைமுற்றாக வழங்கி வருகின்றது. பண்டைச் சேரநாட்டுத் தமிழிற் போன்றே, முதற்கால மலையாளத் திலும் வினைமுற்றுகள் பாலீறுகொண்டு வழங்கியமை, பழைய மலையாளச் செய்யுளாலும், யூதருக்கும் சிரியக் கிறித்தவர்க்கும் அளிக்கப்பட்ட பட்டயத்தாலும், பழமொழிகளாலும் அறியக் கிடக்கின்றது. பாலீறுகொண்ட வினைமுற்றுகள் இன்றும் மலையாளச் செய்யுளில் ஆளப்பெறும். வினைமுற்றை அடிப்படையாகக் கொண்ட வினையாலணையும் பெயர்கள், மலையாள உலக வழக்கில் இயல்பாக வழங்குகின்றன. ஆதலால், 12ஆம் நூற்றாண்டிற்குமேல் சோழபாண்டித் தமிழரொடு உறவுவிட்டுப் போனபின், சொற்களைக் குறுக்கி வழங்குவதற் கேதுவான வாய்ச்சோம்பலாலும், புலவரின் இலக்கணக் கட்டுப்பாடு அற்றுப் போனமையாலும் குடுதுறு -கும்டும் தும்றும் விகுதி பெற்ற தன்மை வினைமுற்றுகளின் தொடர்ப் பாட்டினாலும், மலையாள நாட்டு மக்கள் வினைமுற்றுகளைப் பாலீறு நீக்கி வழங்கத் தலைப்பட்டுவிட்டனர். அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும் உம்மொடு வரூஉங் கடதற என்னும் அந்நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல். வினை. 5) கடதற என்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு என்ஏன் அல்என வரூஉம் ஏழும் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே (தொல். வினை. 6) என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முந்திய தொல்காப்பியத்திலேயே கூறப்பட்டிருப்பதாலும், குடுதுறு -கும்டும் தும்றும் ஈற்றுத் தன்மை வினை முற்றுகள் நெடுகலும் செய்யுளில் ஆளப்பெற்று வந்திருப்பதாலும், முற்காலத்தில் பாலீறில்லா முடிவிலேயே தமிழ் வினைமுற்று வழங்கி வந்திருப்பதாகத் தெரிகின்றது. இதுவே மொழிநூற்கும் பொருந்தும் முடிபாகும். ஆயினும், மலையாள நாட்டில் பாலீற்று வினைமுற்றே அவ்வீறு நீங்கிப் பழைய வடிவில் வழங்கி வருகின்றது. நிகழ்கால வினையாலணையும் பெயர்களும் தொழிற்பெயர்களும் பெயரெச்சங்களும் உள்ள, சில மலையாளப் பழமொழிகளும் சொற்றொடர் களும் வருமாறு: ‘fo¡FªeJ கரிம்பு, பிடிக்குந்நது இரிம்பு. ‘my¡Fªneh‹*bw கழுத போல. பாபம் போக்குந்நோந் ஆர்? ‘ghu« RkªE« el¡Fª nehnu! (மத். 11 : 23) ‘mŠR எரும கறக்குந்நது அயல் அறியும், கஞ்சி வார்த்துண் ணுந்நது நெஞ்சு அறியும். அந்நந்நு வெட்டுந்ந வாளிந்நு நெய்யிடுக. உறங்ஙுந்ந பூச்ச எலிபிடிக்க இல்ல. மலையாளத்தில் றன்னகரம் இல்லை. ஆயினும், மலையாள ஒலியைக் குறித்தற்பொருட்டு இங்கு றன்னகரம் ஆளப்பெற்றது.) கரயுந்ந குட்டிக்கெ பால் உள்ளு. குரெக்குந்ந நாயி கடிக்க யில்ல. மண்ணு திந்நுந்ந மண்டெலியே போல. இம் மலையாளப் பழமொழிகளிலும் சொற்றொடர்களிலும் வந்துள்ள நிகழ்காலச் சொற்கட்கு நேர் தமிழ்ச்சொற்கள் வருமாறு: மலையாளம் தமிழ் கடிக்குந்நது கடிக்கின்றது (வி.மு.) பிடிக்குந்நது பிடிக்கின்றது (வி.மு.) அலக்குந்நோந் அலக்குகின்றோன் (வி.மு.) போக்குந்நோந் போக்குகின்றோன் (வி.மு.) நடக்குந்நோர் நடக்கின்றோர் (வி.மு.) கறக்குந்நது கறக்கின்றது (தொ.பெ.) உண்ணுந்நது உண்கின்றது (தொ.பெ.) வெட்டுந்ந வெட்டுகின்ற (பெ.எ.) உறங்ஙுந்ந உறங்குகின்ற (பெ.எ.) கரயுந்ந கரைகின்ற (பெ.எ.) குரெக்குந்ந குரைக்கின்ற (பெ.எ.) திந்நுந்ந தின்கின்ற (பெ.எ.) இவ் எடுத்துக்காட்டுகளால், செய்கின்றான் என்பது ‘brŒíªehª’ என்றும், செய்கின்றது என்பது செய்யுந்நது என்றும், செய்கின்ற என்பது செய்யுந்ந என்றும், மலையாளத்தில் திரிவது தெளிவு. வினையா லணையும் பெயர்களுள், அஃறிணைப் பெயர்களாயின் அவற்றின் அகரமுதல் ஈறுகள்(அ, அவ) திரியாதும், உயர்திணைப் பெயர்களாயின் அவற்றின் ஆகாரமுதல் ஈறுகள் (ஆன், ஆள், ஆர்) ஓகாரமுதலாகத் திரிந்தும்*, வழங்குகின்றன. எ-டு : தமிழ் மலையாளம் செய்கின்றது செய்யுந்நது செய்கின்றான் செய்யுந்நோந் ‘»‹W’ என்னும் நிகழ்கால இடைநிலையைக் குந்நு அல்லது உந்நு என்று திரித்து வழங்கும் வழக்கம், சேரநாட்டில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றது. அந் நாடு மழை மிகுதியாகப் பெய்யும் மலை நாடாதலின், அங்கத்துத் தமிழ்மக்கள் பேச்சில் மூக்கொலிகளான மெல்லின வெழுத்துகள் பேராட்சி பெற்றுவந்திருக்கின்றன. ஆகாரத்தை ஓகாரமாக ஒலிப்பது மலையாளியர் இயல்பு. காலெஜ் (college) என்பதைக் கோலெஜ் என்றும், சாக் (chalk) என்பதைச் சோக் என்றும், அவர் ஒலித்தல் காண்க.) எ-டு : தமிழ் மலையாளம் நான் ஞான் நாங்கள் ஞங்கள் தந்து தந்நு துடங்கி துடங்ஙி வீழ்ந்து வீணு நான் என்னுஞ் சொல்லின் முதலெழுத்து மெல்லினமேயாயினும், அது மேலும் ஒருபெரு மெல்லொலியான ஞகரமாகத் திரிந்திருப்பது, மலையாள மக்கள் பேச்சின் மெல்லோசை மிகுதியைத் தெளிவாக எடுத்துக் காட்டும். இங்ஙனம் மூக்கொலிகள், சேரநாட்டுத் தமிழிற் பேராட்சிபெற்று வந்திருப்பினும், நூன்மொழி அல்லது இலக்கிய மொழி செந்தமிழாகவே யிருத்தல் வேண்டுமென்னும் இலக்கண மரபுபற்றி, சேரநாட்டு இலக்கியமும் செந்தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. கொங்குநாட்டைச் சேர்ந்த வடார்க்காட்டுப் பாங்கரில் இன்று கொச்சைத் தமிழே வழங்கிவரினும், அங்கும் இலக்கியத் தமிழ் செந்தமிழாகவே யிருந்துவருதல் காண்க. வடார்க்காட்டுத் தமிழுக்கு எடுத்துக்காட்டு வருமாறு: இசுத்து இசுத்து ஒச்சான். (இழுத்து இழுத்து உதைத்தான்.) கொயந்த வாயப்பயத்துக்கு அய்வுது. (குழந்தை வாழைப்பழத்திற்கு அழுகிறது.) பசங்க உள்ளே துண்ராங்க. (பையன்கள் உள்ளே தின்கிறார்கள்.) கண்ணாலம் மூய்க்கணும். (கல்யாணம் முடிக்கவேண்டும்) வந்துகினு போயிகினேக் கீரான். (வந்துகொண்டு போய்க்கொண்டே யிருக்கிறான்.) சேரநாட்டுச் சொற்கள் பல செந்தமிழுக் கொவ்வாவிடினும், திசைச்சொல் வகையில் அவற்றுள் ஒன்றிரண்டு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல். 880) செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். 883) என்று திசைச்சொல்லும் செய்யுளுக்குரியதென்றும், அது கொடுந் தமிழ்நாட்டு வழக்கென்றும், தொல்காப்பியத்திற் கூறப்பட்டிருத்தல் காண்க. நிகழ்கால வினையாலணையும் பெயர்கள் சேரநாட்டியல்புபடி, முதலாவது பின்வருமாறு திரிந்திருத்தல் வேண்டும். செந்தமிழ் சேரநாட்டுக் கொடுந்தமிழ் செய்கின்றான் செய்குந்நான் - செய்குநன் செய்கின்றது செய்குந்நது - செய்குநது செய்கின்ற செய்குந்ந - செய்குந ண ந ன என்னும் மூவெழுத்துள்ளும்,முதல்முதல் தோன்றியது நவ்வே. ரகரத்தின் வன்னிலையாகிய றகரம் தோன்றிய பின்பே, அதற்கின மான னகரம் தோன்றிற்று. இதனாலேயே, றனக்கள் நெடுங்கணக்கில் பமக்களின் பின் வைக்கப்பெறாது, இடையினத்தின்பின் இறுதியில் வைக்கப்பெற்றுள. முதற்காலத்தில் தந்நகரமே றன்னகரத்திற்குப் பதிலாக வழங்கி வந்ததென்பதற்கு, பொருந், வெரிந், பொருநை முதலிய சொற்களே போதிய சான்றாகும். ‘brŒFªeh‹’ என்னும் வடிவம், சற்றுப் பிற்காலத்தில் குகரம் நீங்கி, செய்யுந்நான்-செய்யுநன்-செய்நன் என முறையே திரிந்திருக்கின்றது. இங்ஙனமே, செய்குந்ந என்னும் பெயரெச்சமும், செய்யுந்ந-செய்யுந-செயுந என முறையே திரிந்திருக்கிறது. ‘brŒe‹’ என்ற வாய்பாட்டு வடிவிலேயே, கீழ்க்காணும் பெயர்கள் அமைந்துள்ளன. கொள்நன் - கொழுநன் = கணவன்1 பொருநன் = போர் செய்கின்றவன். மகிழ்நன் - மகிணன் = இன்புறும் மருதநிலத் தலைவன். வாழ்நன் - வாணன் = வசிக்கின்றவன். வருநர், பாடுநர், இகழுநர், வாழ்நர், அறைநர், அடுநை(முன்னிலை யொருமை), விடுநை(மு.ஒ.) jFe, tšYe®, fisíe®, gUFe® , TWe®, bghUe®, ky®¡Fe®, clYe®, EtYe®, KaYe®, tUe, j¥òe, ngQe®, nk«gLe!(ÉË), bfhŒíe®, X«òe‹, m¿íe®,