பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 40 மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 40 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+ 120 = 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 80/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii வான்மழை வளசிறப்பு .v நூல் 1. மொழியாராய்ச்சி .1 2. உலக மொழிகளின் தொடர்பு .11 3. முதற்றாய் மொழியின் இயல்புகள் .16 4. வாய்ச்செய்கை யொலிச்சொற்கள் .20 5. சொற்குலமுங் குடும்பமும் 28 6. சொற்பொரு ளாராய்ச்சி 58 7. சொல்வேர் காண்வழிகள் 60 8. ககரசகரப்பரிமாற்றம்...69 9. மொழியாராய்ச்சியும்மொழியகழ்வாராய்ச்சியு«ஒன்w 76 10. மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள் 80 11. சேயும் சேய்மையும் 85 12. ஆலமரப் பெயர் மூலம் 90 13.fU¥ò« கறுப்பும் 92 14. தெளிதேனும் களிமதுவும் 98 15. கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் 102 பாவாணர் பொன்மொழிகள் 110 தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று 116 பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் 118 மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் 1 மொழியாராய்ச்சி (Comparative Philology) உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப்பெருங் கவைகளா யடங்கும். இவற்றுள் ஒவ்வொரு கவையும் பற்பல கிளைகளாய்ப் பிரியும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மொழித்தொகுதி யாகும். இவற்றுள், துரேனியக் கவையில் திராவிடக் (Dravidian) கிளைக்குத் தலைமையாகக் கருதப்படுவது அமிழ்தினுமினிய தமிழ்மொழியே. ஒரு மரத்தில், சிறு கிளைகட்கு நேர் இயைபு இன்றேனும் அவற்றைத் தாங்கும் பெருங்கவைகட்கு அடிமரத்துடன் நேர் இயைபிருப்பதுபோல, உலக மொழித்தொகுதிகட்குள் சிறு பிரிவுகட்கு நேர் இயைபின்றேனும் அவற்றிற்கு மூலமான பெரும் பிரிவுகட்கு நேரியைபு திட்டமாயுள்ளதாம். எல்லாக் கிளைகட்கும் மூலமான ஓர் அடிமரமிருப்பதுபோல எல்லா மொழிகட்கும் மூலமான ஒரு தாய்மொழியு மிருத்தல்வேண்டும். உலகத்தி லுள்ள மக்களெல்லாம் ஒருதாய் வழியினராதலின் அவர் வழங்கும் மொழிகளும் ஒருதாய் வயிற்று வழியிலாதல் வேண்டும். உலகத்தின் மக்கள் முதன்முதல் தோன்றினவிடம் கி.மு. 2000 ஆண்டுகட்குமுன் இந்துமகா சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனதும் தலைச்சங்கமிருந்ததுமான குமரிநாடே. ஆத்திரேலியா, தென்னிந்தியா, தென்னாப்பிரிக்கா என்ற மூன்றும் ஆதியில் நிலத்தா லிசைந்திருந்தன வென்று மேனாட்டுப் பண்டிதர்கள் கண்ட வுண்மையே இதற்குப் போதிய சான்றாம். ஆகவே, மக்கள் முதன்முதற் பேசிய மொழி தமிழேயாதல் வேண்டும். எல்லா மொழிகளும் இயற்கை செயற்கையென இருபாலா யடங்கும். இவற்றுள் தமிழ் ஒன்றுமே இயற்கை. ஏனையவெல்லாம் செயற்கை. ஆதலான், தமிழ் இயன்மொழி (Primitive Language) என்றும், ஏனைய திரிமொழி (Derivative Languages) என்றும் கூறப்படும். எல்லா மொழிகட்கு முள்ள பெரும்பாற் சொற்களைப் பகுதிப் பொருளுடன் இயற்கை வடிவில் வழங்குவது தமிழே யென்று மொழிநூலால் (Philology) விளங்குகின்றது. அவற்றுள் ஆங்கிலம் (English), கிரேக்கு (Greek), இலத்தீன் (Latin) என்ற மும்மொழிகளிலும் சென்று வழங்கும் தென்சொற்கள் ஆயிரக்கணக்கின வென்பதை ஐந்நூற்றுக்கு மேற்பட்டவற்றால் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் காட்டுதும் : Abba - அப்பன் Abbey - a monastery presided over by an abbot. Abbot - the father of an abbey Abide, a + bide. bide - வதி: பதி - வதி - வதிதல் = தங்குதல் Abode, bode - பதி. Accumulate, ad + cumulus. cumu- lus - கும்மல். குமி - கும்மல், குமியல். Acre, Gk. agros - அகரம். Add - அடு, அடை, அடுக்கு. Admire, ad + mire. L. miror - மருள். Agony, Gk. agon - இகல். Agriculture, agros - அகரம். cul- ture - கல்லல். Ah, Aha - ஆ! Alias, Gk. allos - அல்லது . All - எல்லாம். Allegory - அல்லகுறி (a descrip- tion of one thing under the im- age of another). Alone, all + one. one - ஒன்று. Along, long - ஒழுங்கு - நீளம். “th®jš போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். சொல். உரி. 19) ஒழுகு - ஒழுங்கு - ஒழுக்கம். Aloof - அலக்கு, அலாக்கு. Alum - அளம். Amalgam, malgam - முள்கு. முள்கல் = கலத்தல். Amateur, L. amo - அமர், to love “mk®jš மேவல் (தொல். சொல். உரி. 84) “M¤â சூடி யமர்ந்த தேவனை (ஔவை) Amaze, a + maze. maze - மய, மயங்கு, மசங்கு. Amethyst, Gk. amethystos. a - அ, methu - மது. Amiable, amo - அமர். Amicable, amo - அமர். Amour, L. amor - அமர், to love Anaglyph, Gk. ana - அண்ணம் - மேல், glypho - குழிப்பு. Analogue - அண்ண இலக்கம். இலக்கம் = சொல். Anatomy, Gk. ano - அண்ணம், temno - துமி. Anchor - நங்கூரம். L. ancora, Gk. agkura Anemometer, Gk. anemos - ஆன்மா. meter - மாத்திரை. Angel - அஞ்சல் Animal, L. anima, Gk. anemos - ஆன்மா Anna - அணா. Annual, L. annus - ஆண்டு . Anus - அண்டி. Anxiety - ஏங்கு, ஏக்கம். Aorta, Gk. aeiro - ஏர் = எழுச்சி. “cyf முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுருகு..) Apply - அப்பு. Apprehend, ad + prehend. prehend - புரிந்துகொள்; hend - get - கொள். Appeal, L. ad + pello; pello - விளி (பிலிசு - தெலுங்கு). Arch - அரசு. Archon - அரசன். Architect - அரசத்தச்சன். Are - இரு. Area - அழுவம். Ashes - அடலை. Assert, L. ad + sero. sero - சேர். Assign, L. ad + signum; signum - சின்னம். Astrology, star - தாரகை, logy - இலக்கம் or இலக்கியம். At - இடை. Attack - தாக்கு (prosthesis). Attar - அத்தர். Attorney - அத்தாணி. Attract, L. ad + traho. traho, draw - திரை. திரைத்தல்=இழுத்தல். திரைத்துக் கட்டு என்னும் வழக்கு நோக்குக. Audacity - அடம். Augment - ஆக்கம். Avail, L. ad + valeo, valeo - வலி, to be strong. Avarice, L. avaritia - இவறல் “ïtwY« மாண்பிறந்த மானமும் (குறள். 432). Axle - அச்சு. Babe - பார்ப்பு, பாப்பா. Back - பிறக்கு(இடைக்குறை). Bandy - பண்டி. Bag - பக்கறை. Baggage - பக்கறை. Ban - பன். Bang, Bangue - பங்கி. Banyan - வாணியன், the Indian fig-tree so called by the English because the Banyans (merchants) held their markets under it. Bar - பார், பாரை, a rod; v.t. to hinder “ghå‰ றிருந்த காலை பாரறச் சென்ற கேள்வி (சீவக. க. பா. 1) பாரற = தடையற. Bard - பாணன். Bark - படகு. Barometer - பாரமாத்திரை. Barrel - புழை. Barrier - பார். Barrister - one qualified to plead at the bar. Basket, perhaps -பழக்கூடை . Bat - மட்டை. Battalion - பட்டாளம். Battery - பட்டறை. Bay - பாய். “bPÄ®jY« பாய்தலும் பரத்தற் பொருள (தொல். சொல். உரி. 63). Beak - மூக்கு. Bear - பொறு. Beauty, from beau - பொ, பொல், பொன். பொலி + உ = பொலிவு. பொலி + அம் = பொலம். பொல் + பு = பொற்பு. பொல் + தி = பொற்றி - beauty “bgh‰wnjh® பவழந் தன்மேல் (சீவக. 2247). பொற்றது = பொலிவு பெற்றது. பொல் பகுதி. Bed - படை, படுக்கை. Bee - வீ, ஈ. Beetle - விட்டில். Betel - வெற்றிலை. Bhang - பங்கி. Bill, L. bulla - புள்ளி. “gŸË¡ கணக்குப் புள்ளிக் குதவாது (உலக வழக்கு). Bird - பறவை. Birth - பிறப்பு. Bolt - பாள் (கம்பி). Bore - பொள். Borough - புரம், bourg, burgh. Bottle - புட்டில். Bowl - வள்ளம், a round cup. Boy - பையன். Blame - பிழை. Blare - பிளிறு. Bleach - வெளு. Blink - விழி. Blunt - மழுங்கு. Boast - பீத்து(கொச்சை). Boat - ஓடம். Body - படிவம் - வடிவம். Break - பிள. Broad - பரந்த. Breadth - பரப்பு. Brush - பரசு, பரசுதல் = பெருக்குதல். Bud - மொட்டு. Bull - புல்லம். “VbwhL மூரி புல்லம் (சூடா..) Bull - புள்ளி. Bun - பணி, பண்ணிகாரம் - பணிகாரம் - பணியாரம். Bunch - மஞ்சரி. Burden - பொறை. Burial - புதையல். Bush - புதர். Butler - bottler - புட்டிலர். Butt - புட்டி, முட்டி. Buttock - புட்டம். Cachirration - கெக்கரித்தல். Caitiff - கைதி. Calamity - கலி. Calf - களபம். Calico - a cloth from Calicut, கோழிக் கோடு, கள்ளிக்கோட்டை. Can - கூடு. Can - கெண்டி. Candy - கண்டு - சர்க்கரை. Cane - கன்னல், a reed. Canton - கண்டம், cantonment. Canto - காண்டம். Canvas, Gk. cannabis - சணப்பு. Card - கடிதம். Care, L. carus - கரிசு. Carve - குழி. Cash - காசு. Catamaran - கட்டுமரம். Caution, L. Caveo - கவல், கவனி. Cave - குவை, குகை. Cellar - கல்லறை. Chaff - சாவி. Chair - குறிச்சி (ch = k). Cheetah - சிறுத்தை. Cheroot - சுருட்டு. Chew - சவை. Child - குழந்தை (ch = k). Chit - சிட்டு. Choir, L. chorus - குரவை, a dance in a ring. Clan - குலன். Class - குழு. Clay - களி. Clock - கடிகை. Coat - குடி. குடித்துணி (உலக வழக்கு). Cold - குளிர்ந்த. Collar, L. collum - களம், கழுத்து. College - fHf«, originally a collection of men.(Chambers’ Dictionary). Colon - குழல் - குடல். Colour - bfG. “FUî§ கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். உரி.5). Column - கால். Comedy - கோமாளி, originally a ludicrous spectacle. Gk. komoidia. Comely - காமர். Comic - adj. of comedy. Cone - கொனை, a point. Cool - குளிர். Coolie - கூலி. Coot - கூழை. Copper - செப்பு (c = ch). Corn - சோளம். Corner - கோணம். Cot - குடி. Cottage - குடிசை. Cotton - கொட்டை = பஞ்சு. Court - கோட்டம். Gk. chortos. Cover - கவி. Covet - கவர் = விரும்பு. Cow - கோ. Coward - கோழை. குவளை - கோழை. Crab - கடப்பான். Crack - கிறுக்கு. Crane - குருகு. Crew - குழு. Crime - கருமம். Crook - கொடுக்கு. Cross - குறுக்கு. Crow - கரை. Cry - கரை. Crypt - கரப்பு. Cuddy - கூடு. Culture - கல், பகுதி. Cumber - கும்பல். Cumulate - கும்மலிடு. Curl - சுருள் (c = s). Curry - கறி. Cycle - சக்கரம். Cyclopaedia, Gk. kyklos - சக்கரம், paideia - படிப்பு. Daddy - தாதை. Dance - தாண்டவம். Dare - தீரம். Deity - தெய்வம். Dense - திண். Derive - திரி. Desert, L. de + sero. sero - சேர். Devotion - தபம் - தவம். Digest, L. dis - gero. gero - செரி. Dignity - தகை. Divine - தெய்வ, திவ்விய. Donation, L. donum - தானம். Drag - திரை. Draw - திரை. Drive - துர. Drone - சுரும்பு = ஆண்வண்டு. Ear - அள் - கலப்பை. Ear - அள் - காது. Ear - ஏர் - கலப்பை. Early - ஏல. Echo - இசை. Economy - சிக்கனம். Err - இழுகு. Every - ஒவ்வொரு. Face - முகம் (c = k). Facility - ஏந்து, வசதி. Fade - வாடு. Fairy, from fay - பேய். Falcon - வலியன். Fall - விழு. Fallacy - மாலம். Fascinate - வசி. Faste - விசை. Fast - பசி. Fate - விதி. Fault - வழு. Fay - பேய். Fear - வெருவு. Feed - ஊட்டு. Fiddle - விடலை. (see violin in Chambers’). Fiend - பேந்து. Filial, L. filus - பிள்ளை. Firm - உரம். Flag - விலோதம். Flash - பளிச்சு (ஒளிக்குறிப்பு). Flesh - விழுக்கு. Flog - விளாசு. Flood - வழாறு. Flora - மலர். florin, a coin stamped with the lily flower. Flower - மலர். Folio - ஓலை. Fool - மாளி, கோமாளி - a court fool Foot - பாதம். Forest - புறவு. Form - உருவம். Frame - வரம்பு. Freeze - உறை. Frill - விறையல். Fry - வறு. Full - முழு. Fury - வெறி. Fuss - பூசல் = ஆரவாரம். Galleon - கலம் - கப்பல். Gallery - கலவறை. கலம் = அணி. Gallon - கலம். Gallop - கலிப்பு or கெலிப்பு. Gate - கடை, கடவு. Gather - கூடு. Gaunt - கோதை. Geology, Gk. ge - கூ, logos - இலக்கம். Geometry, Gk. ge - கூ, metry - மாத்திரை. Get - கொள். Ghoul - கூளி. Giddy - கிடுகிடுத்த. Ginger - இஞ்சி. Girl - குருளை, a child. Globe - கோளம். Goal - கழை. God - கடவுள். Gore - கறை. Grain - களஞ்சு - கழஞ்சு. Granary - களஞ்சியம். Grave - குழி. Grease - கொழுப்பு. Group - கருவி (தொகுதி). Guano - சாணி. Guava - கொய்யா. Guide - காட்டு. Gulf - குலவு. Hail - ஆலி (=ஆலங்கட்டி). Hall - சாலை Hang - தூங்கு. Hard - கடினம். Haricot - அவரைக்கொட்டை. Heap - குப்பை. Hear - கேள். Heath - இதை, a barren open country. Heathen, from heath. Hell - அளி, அளறு. Herd - கிடை. Heritage - உரித்து. Hero - வீரன். High - உக. “cf¥ng யுயர்வு (தொல். சொல். உரி.9). Hoarse - கோரம். Hockey - hookey - கொக்கி. Hole - குழி. Honour - மானம். Hood - கூடு. Hook - கொக்கி. Hookah - உக்கா. Horn - கோணம் - கோடு. Horror - அரள். How - எவ்வது. Howl - ஊளை. Huge - உகந்த. Hut - குடி. Hyperbole - உப்பர்ப்போலி, உம்பர் - உப்பர், புகலி - போலி. In - இல். Inn - இல். Iron - இரும்பு. Isagon, Gk. isos - இசை, gonia - கோணம். Item, Skt. இதம் - இப்படி, இ. பகுதி. Jackass, Jack - சேவு (= ஆண்). Jar - சால், சாடி. Javelin - சவளம். Jeer - கேலி. Joint - சந்து. Jury - சூள். Kail - கீரை. Keen - கூர். Kid - குட்டி, குட்டன் = வெள்ளாட்டுக் குட்டி. Kill - கொல். Kiln - காள(வாய்). Kin - கிளை. Kiss - கொஞ்சு. Knee, Gk. gonu - கணு. Lakh - இலக்கம். Leather - உதள். Legible, L. lego - இலகு. Lemon - எலாமிச்சை. Lime - எலாமிச்சை. Local, L. locus - இலக்கு = இடம். Logic, Gk. logos - இலக்கம் = தருக்கம். Lone, alone, all + one - எல்லாம் ஒன்று - தனிமை. Long - ஒழுங்கு. Lull - லாலாட்டு. Mad - மத்த. Maid - மாது. Mall - மழு. Mammoth - மாமதம். Man - மன். Manage, to handle. L. manus, H. manicas - மணிக்கை. Mango - மாங்காய். Mantle - மீந்தோல், a loose outer garment Manub, from manus Many - மன் - மிகுந்த. Mare - மறி, (= பெண்குதிரை). Marine, L. marinus - வாரணம். Marrow - மூளை. Marvel - மருள். Mat - மாற்று. Match - மட்டம். Maze - மச, மசங்கு, மய - மச. Mead - மட்டு - மது. Meal - மெல்லப்படுவது. Meat - மடை. Melon - முலாம். Melt - மெல்கு. Mere - வெறு. Merge - முழுகு. Mess - மிசை. Metre - மாத்திரை. Might - மைந்து. Mind - மனம். Miracle - மருட்கை. Miser - பிசிரி. Moan - முணங்கு. Mole - மறு. Money - மனவு, மணி. Mood - படி. Moor - முல்லை. Moringa - முருங்கை. Mosquito, dim. of musca - மசகு. Moss - பாசி. Moth - மூட்டைப் (பாச்சா). Mould - புழுதி. Mould - முழை. mouldwarp - முழைவார்ப்பு. Mouth - மடை. Much - மிக. Mucus - மூக்கு. Mud - மண். Mural adj. L. murus - புரிசை. Murmur - முறுமுறு. Myth - மித்தை. Nacre, a white matter - நிகர் (ஒளி). Nadir - நாட (= போல). Nag - நாகு. Nation - நாடு, native - நாட்டான். Nature -eh‰w«. நாறு = தோன்று. Navigate, L. navis - நாவாய், ago - உகை. Near - நெருங்கு. Need - நாடு. Nerve - நரம்பு. Nice - நயம். Ninny - நன்னி. Nod - நடுங்கு. Nook - முக்கு. Note - நோடு . Notion - நோட்டம். Nut - நெற்று. On - அண் (= மேல்). One - ஒன்று. Opium - அபின். Page - பாங்கன். Page - பக்கம். Pain - பையுள். Palace - மாளிகை. Palaeology, Gk. Palaios - பழைய; logos - இலக்கம். Palanquin - பல்லக்கு. Pan - பானை Pandit - பண்டிதன். Par - புரை (= ஒப்பு). Passion - பாடு. Paste - பசை. Path - பாதை. Pathos - வாதை. Pave - பாவு. Peak - மூக்கு. Pawn - பணயம். Pearl - பரல். Pecuniary, L. pecu - பசு. Pedagogue, Gk. paidos - பைதல்; ago - உகை. Peer - புரை (= ஒப்பு, உயர்வு). Peril - பருவரல். Perry, Pear - பேரி. Pestle - முசலி (= உலக்கை). Petal - மடல் (= இதழ்). Petty - பிட்டு (= சிறிய). Philology, Gk. philos - விழைவு; logos - இலக்கம். Phonetic, Gk. phone - வாணி. Pick, syncope of பொறுக்கு. Piece - பிச்சு. பிய் + சு = பிய்ச்சு - பிச்சு. Pitcher - பத்தர் (= குடம்). Place - வளாகம் (p = k). Plain - வெளி. Plank - பலகை. Play - விளை(யாடு). Plausible - பழிச்சவல்ல. “guî« பழிச்சும் வழுத்தின் பொருள (தொல். உரி. 84). Ply - வளை. Pock - பொக்குளம். Poem - பா, பண். Police, the system of regulations of a town, Gk. Polis - பாழி = நகர். Polish - (பள)பளப்பு. Politics, from polis. Polygon - பலகோணம். Pool (பாழி = சிறுகுளம்). Pore (புரை = துளை). Port - புதவு. Portia - பூவரசு. Pot - பாண்டம். Pouch - பொச்சு. Pour - வார். Powder - பொடி. Practise - பழகு. Praise - பரசு. Prate - பினாத்து. Price - பரிசு = விலை. Prize - பரிசு. Pride - பெருமை. Puberty - பூப்பு, பூப்படைவு. Pulpit - பலிபீடம். Pupa - பார்ப்பு. Pussy - பூசை - பூனை. Put - போடு. Putty - புட்டி. Puzzle - மசக்கு. Pyre - பொறி. Race - இராசி. Rajah - அரசன். Red - இரத்த. Rice - அரிசி. Ring - கறங்கு. Roar - உரறு. Roll - உருள். Round - உருண்ட. Rude - முரடு. Saccharine - சருக்கரை. Sack - சாக்கு. Saddle - சேணம். Sail - சேலை. Sake - சாக்கு. Salaam - சலாம் (= வளைவு, வணக்கம்) “jªjiy தாழ்தல் சலாஞ் செய்தல் (உரிச்சொல் நிகண்டு). Saloon - சாலை. Sandal - சாந்தம் - சந்தனம். Satan - சாத்தான். Savour - சுவை. Scale - சிலும்பு. Sculpture - சிற்பம். Semblance, L. similis - சமம். Series, L. sero - சேர். Sermon - சேர்மானம். Serry - செறி. Serum - சீலம். Shake - அசைக்கு for அசை (வடார்க் காட்டு வழக்கு). Share - கூறு (sh = k). Sharp - கூர்ப்பு (ஆன). Shawl - சால்வை. Shell - சோழி. Sheet - சீட்டு. Shed - சிந்து. Shed - கொட்டு - கொட்டகை. Ship - கப்பல். Shirt, a short garment - குட்டை. Shore - கரை. Short - குட்டை. Shrink - சுருங்கு. Sign - சின்னம். Simile - சமம். Sky - காயம் = ஆகாயம். Slack - சுணக்கம். Slave - சிலதி. Slip - சறுக்கு. Slope - சரிவு. Smoke - புகை. Smooth - மெது. Snake - நாகம். Sneak - நகர், to creep. Solar, adj. L. sol - சூரன். Sound - சந்தம். Soup - சூப்பு. Speech - பேச்சு. Spire - புரி = வளைவு. Spot - பொட்டு. Spread - பரத்து. Spy - வேய். Squash - கசக்கு. Squirrel, dim. of Gk. skiouros - கீரி. Star - தாரகை. Sugar - சருக்கரை. Summit - சிமை. “MLfiH நரலுஞ் சேட்சிமை (புறம். 120). Sup - சப்பு. Swear - சூள். Taber, Tambour - தம்புரு. Tank - தாங்கல் (= குளம்). Tarry - தரி. Teak - தேக்கு. Telephone - தொலைவாணி. Terminus - தீர்மானம். Terrace - தளம். Territory - தரைத்தலம். Theology, Gk. theos - தெய்வம், logos - இலக்கம். Through - துருவ. Thread - திரி. Thrive - தழை. Thrust - துருத்து. Till - தொள், to cultivate, to dig. Timid - திமிர். Tire - அயர். Tissue - தசை. Toleration - தாளுதல் (= பொறுத்தல்). Tone - தொனி. Tract - திரை = இழு. Train - திரை. Transact, L. trans - துருவ, ago - உகை. Transparent - துருவிப் பார்க்கும். Tree - தரு. Trick - திருக்கு. Trophy - திருப்பு. Truck - திரிகை, a wheel. Tube - தூம்பு. Turn - திரும்பு. Umber - அம்பர், ஒரு பிசின். Vain - வீண். Valiant - வலியுள்ள. Value - விலை. Vary - வேறு(படு). Varnish - வண்ணம். Vault - வளைவு. Vermicule, L. vermis - உலம், culus - குழவு. Very - உறு. Vest - வேட்டி. Victory - வெற்றி. Viol, Violin, Low L. vidula - விடலை. Vulture - வலசார். Walk - ஒழுகு (= நட). Wall, L. vallum - வாளம். Want - வேண்டு. Wanton - வேண்டுமென்று செய்பவன். War - போர். Warm - உரும் (= வெப்பம்). Wax - வீங்கு. Way - வாய். Wet - ஓதம். Wether - உதள். “bkh¤ijí« தகரும் உதளும் அப்பரும். யாத்த என்ப பாட்டின் கண்ணே (தொல். மரபு. 47). While - வேளை. White - வெள்ளை, வெட்டை. Wide - வீதி. Will - உள்ளம். Wind - வளி. With - உடன். Wonder - விந்தை. Worm - உலம் - புழு. Worth - பெறுதி. Yean - ஈன். Yet - இன்னும். Yoke - நுகம். Yonder - ஆண்டை. Zenith - சென்னி. 2 உலக மொழிகளின் தொடர்பு உலக மாந்தரெல்லாம் ஒரு தாய் வழியினர் என்பது மாந்தனூலால் தெரியவருவதால், அவர் வழங்கிவரும் பல்வேறு மொழிகளும் ஒரு தாய்வழியினவாய்த்தா னிருத்தல்வேண்டும். ஆயினும், மாந்தன் தோன்றிய குமரிநாட்டினின்று, முதற்றாய்மொழி வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் மக்கள் பல்வேறு திசையிலுள்ள பல்வேறிடங்கட்குப் பிரிந்துபோனதனால், இடத்தாலும் காலத்தாலும் நெட்டிடைப்படப் பிரிந்துபோன அம் மக்களின் மொழிகள் பல்வேறு வகைகளில் வளர்ந்து திரிந்து மூலமொழியின் வேறு பட்டும் மாறுபட்டும் உள்ளன. ஆயினும், ஆய்ந்து நோக்கின், உலகமொழி கட்கெல்லாம் மூல நிலையான ஒரு மொழி உண்டென்பது புலனாகும். எல்லா மொழிகட்கும், முதலாவது மரபியல் (Geneology), வடிவியல் (Morphology) என்னும் இருவகையில் உறவு காணலாம். மரபியலாவது, பாட்டனும் தந்தையும் மகனும் பேரனும் போல, அல்லது அடியுங் கவையும் கொம்புங் கிளையும்போல, ஒன்றினொன்று பிறந்தும் கிளைத்தும் வரும் தொடர்ச்சி பற்றியது. மேனாட்டில் ஆரிய செருமானிய ஆங்கில மொழிகளும், கீழ்நாட்டில் தமிழ் கன்னட படக மொழிகளும் இத் தொடர்பிற் கெடுத்துக்காட்டாம். குணங்குறிகளிற் பெற்றோர்க்கும் பிள்ளைகட்குமுள்ள ஒப்புமைபோல, சொன்னிலையிலும் சொல்லாக்க நெறிமுறையிலும் மரபியலுறவுற்ற மொழிகளிடை ஒப்புமை யுண்டு. வடிவியலாவது, குழவி நிலையும் பிள்ளைமையும் இளமையும் மகன்மையும் முதன்மையும்போல, அல்லது புல்லும் பூண்டும் செடியும் கொடியும் மரமும்போல, மொழிவளர்ச்சி தொடர்ச்சிகளின் பல்வேறு நிலைகளைப் பற்றியது. அந் நிலைகள் அசைநிலை (Monosyllabic), புணர்நிலை (Com- pounding), பகுசொன்னிலை (Inflexional), திரிநிலை, கொளுவுநிலை (Agglutivative), தொகைநிலை (Synthetic), சிதைநிலை என எழுவகைய. அவற்றுள், அசைநிலையாவது, மா, பொன் என்பவைபோல, ஒரு மொழிச் சொற்களெல்லாம் ஓரசைச் சொற்களாயிருந்து, குரல் வேறுபாட்டாலும் இட வேறுபாட்டாலும் வெவ்வேறு பொருள் பயப்பனவாயும் வெவ்வேறு சொல்வகைப் படுவனவாயுமிருத்தல். சீன மொழிகளும் இந்து-சீன (Indo-Chinese) மொழிகளும் இத்தகைய. எடுத்துக்காட்டாக, சன் (Shan) என்னும் இந்து - சீன மொழியில், கௌ என்னும் அசைச்சொல்லுக்கு, `நான்', `பழைமையாயிரு' `ஒன்பது', `கொண்டை', `பேய்க் கஞ்சாமை', `ஆந்தை', `முறையீடு', `கெண்டைக்கால்', `புதியாமரம்', `பால்சம் செடி', ஆலை எனப் பலபொருளுள. இப் பொருள்களெல்லாம் குரல் வேறுபாட்டால் குறிக்கப்படுவன. சில மொழிகளிற் பதினைந்திற்குமேலும் குரல் வேறுபாடுண்டு. ஒரே சொல் வடிவு திரியாது இடவேறுபாட்டால் வெவ்வேறு சொல்வகைப்படுவது பல மொழிகட்கும் பொதுவேனும், அசைநிலை மொழிகட்குச் சிறப்பாம். அது `பொன் யாது', இது `பொன்', `பொன் வளையல்', `நெல் பொன் விளைந்தது' என்னும் தொடர்களில் பொன் என்னும் சொல், முறையே, பெயரும் வினையும் பெயரெச்சமும் வினையெச்சமுமாயிருத்தல் போன்றது. புணர்நிலையாவது, `பாய்மா, `மாசெல்சுரம்' என்றாற் போலச் சொற்கள் திரியாது புணர்ந்து ஒரு சொற்றன்மைப்பட்டு நிற்றல். பகுசொன்னிலையாவது, வில்லவன்-வில்லான்-வில்லன் என இருசொற் புணர்ந்து, நிலைச்சொல் பகுதியும் வருஞ்சொல் விகுதியுமாக மாறி ஒரு சொல்லாய் நிற்றல். திரிநிலையாவது, ஆங்கிலத்தில், `man' என்னும் பெயர்ச்சொல் பன்மை குறிக்க `men' என்றும், `give' என்னும் வினைச் சொல் இறந்தகாலங்காட்ட `gave' என்றும் திரிந்தாற் போன்றது. இதை, உள்திரிநிலை அல்லது இடைதிரிநிலை எனவுங் கூறலாம். சேமிய (Semitic) மொழிகள் திரிநிலைக்குச் சிறந்தவை. அவற்றுள் வேர்ச்சொற்களெல்லாம் மும்மெய்யாலமைந்தவை. அவற்றினின்று திரிந்த சொற்கூட்டங்கள் பெரும்பாலும் மூவிடவுயிர் வேறுபட்டாலேயே பொருள் வேறுபாட்டை யுணர்த்துகின்றன. எ-கா: அரபிமொழியில் க்த்ப் என்ற மும்மெய்ச் சேர்க்கை ஒரு வேர்ச்சொல். இதனின்று பிறந்த சொற்களாவன: கதப = எழுதினான்; கத்ப்=எழுத்து; காதிப் = எழுத்தாளன்; மக்தூப் = எழுதி; தக்திப் = எழுதுவித்தல்; முக்காதபத் = எழுத்துப் போக்குவரத்து நடத்தல்; இக்தாப் = சொல்வ தெழுதுவித்தல்; தக்காதுப் = ஒருவர்க்கொருவர் எழுதுதல்; முத்தக்காதிப் = எழுத்துப்போக்குவரத்து நடத்துவோன்; மக்தப் = எழுதும் பள்ளி; கித்தாப் = புத்தகம்; கித்பத் அல்லது கித்தாபத் = வெட்டெழுத்து. கொளுவுநிலையாவது, ஒரு நெடுஞ்சொற்றொடர்ப் பொருளமையு மாறு, ஒரு சொல்லொடு பல ஈறுகளை மேன்மேலும் சங்கிலிபோற் கொளுவிவைத்தல். தமிழில், `போக்குவிப்பி' என்பதுபோன்ற மும்மடி யேவல் கொளுவுநிலைப்பட்டதே. சித்தியமொழிகளும் முண்டாமொழிகளும் கொளுவுநிலைக்குச் சிறந்தவை. எ-கா : முண்டாமொழியில், `தல்' என்பது `அடி' எனப் பொருள்படும் வினைச்சொல். `த - ப - ல் - ஒச்சொ - அகன் - தஃன் - தயெ - திங் - அ - எ' என்னும் கொளுவுநிலைத் தொடர், `என்னவனுடையவன் தன்னைப் பொருவிக்கவிடத் தொடர்வான்' (`He who belongs to him who belongs to me, will continue letting himself be caused to fight.) எனப் பொருள்படுவதாகும். இது `தல்' என்னும் பகுதியொடு பல ஈறுகள் கொளுவிய தொடர். தொகைநிலையாவது, பலசொற்கள் இடைதொகப் புணர்ந்து ஒரு தொடராய் நிற்றல். அமெரிக்க மொழிகள், அவற்றுள்ளும் சிறப்பாக மெக்சிக (Mexican) மொழிகள், தொகைநிலைக்குச் சிறந்தவை. எ-கா : மெக்சிக மொழியில், `அல்த்'= நீர்; `சிச்சில்திக்'=சிவந்த; த்லக்த்ல்=மாந்தன்; சொரிய = அழு. இச் சொற்கள், `அச்சிச்சில்லகச் சொகன்' என்னும் தொகைநிலைத் தொடராகப் புணர்ந்து `நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழுமிடம்' எனப் பொருள் தருகின்றது. இங்ஙனம் பல சொற்கள் தொக்க தொகைநிலையைப் பல்தொகை நிலை (Polysynthetic) அல்லது இணைப்புநிலை (Incorporating) என அழைப்பர். சிதைநிலையாவது, சோம்பல், நாகரிகத்தாழ்வு, தட்பவெப்ப நிலை வேறுபாடு முதலிய காரணங்களால் சொற்கள் குறுகியும் திரிந்தும் சிதைந்துநிற்றல். சிதைநிலைக்கு இந்திமொழி சிறந்த எடுத்துக்காட்டாம். தமிழ் இந்தி வடமொழி இந்தி புகல் - போல் க்ருஹம் - கர் நோக்கு - தேக் கருமம் - காம் கொஞ்சம் - குச் வ்ருச்சிகம் - பிச்சு நேரம் - தேர் வார்த்தா - பாத் ஓரம் - ஓர் பஞ்சம் - பாஞ்ச் உழுந்து - உடத் கர்ணம் - கான் மேற்காட்டிய எழுநிலைகளுள், அசைநிலை புணர்நிலை பகுசொன்னிலை ஆகிய முதல் மூன்றும் அடைந்துள்ளது தமிழ். இம் மூன்றே இயல்பாக முழுவளர்ச்சியுற்ற ஒருமொழி அடைய வேண்டியவை. ஏனையவெல்லாம் மொழியினங்களின் தனிப்பட்ட இயல்புகளேயன்றி மேல்வளர்ச்சி நிலைகளல்ல. தமிழே திரிந்து திரவிடமாகியிருப்பதால், தமிழுக்கும் திரவிட மொழிகட்கு முள்ள மரபியலுறவு மிகத் தெளிவாம். திரவிடத்தின் திரிபு ஆரியமாதலால், தமிழுக்கும் ஆரியத்திற்கும் இரண்டாங் கூட்டுறவுண்டு. ஆயினும், ஆராய்ச்சி யின்மையால் பலர் இதை அறிவதில்லை. தமிழுக்கும் ஆரியத்திற்குமுள்ள தொடர்பு எனது `வடமொழி வரலாறு' என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும். திரவிடம்போல அத்துணை மரபியலுறவுறாது சேய்மைப்பட்ட பிறமொழிகள்கூட, சில பல தமிழ்ச்சொற்களையும் நெறிமுறைகளையுங் கொண்டிருப்பதுடன், மொழிகட்கெல்லாம் அடிப்படையான சொல் வரிசையைச் சேர்ந்த மூவிடப்பெயர்கட்கும் தமிழ்ச்சொற்களையே அல்லது அவற்றின் திரிபையே கொண்டுள்ளன. தமிழ் மூவிடப்பெயர்களுள் அல்லது அவற்றின் திரிபுகளுள் ஒன்றேனும் இல்லாத அல்லது வழங்காத மொழியே உலகிலில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். எ-கா : நூன், நூம்; நீன், நீம் என்பன பழந்தமிழ் முன்னிலைப் பெயர்கள். இவற்றின் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். இவற்றுள், நீன் என்னுஞ் சொல் இன்றும் தென்னாட்டு வழக்கிலுள்ளது. நூன் நூம் என்பன இருவகை வழக்கும் அறினும், அவற்றின் வேற்றுமைத் திரிபான நுன் நும் என்னும் அடிகள் இன்றும் செய்யுள் வழக்கிலுள்ளன. நீன் என்னுஞ் சொல்லின் கடைக்குறையான நீ என்பது இருவகை வழக்கிலும் உள்ளது. நூன் என்பது `தூ', `து', `தௌ', `த்வம்', என்றும்; நூம் என்பது `தும்', `யூ', `யூயம்' என்றும் ஆரியத்தில் வழங்குகின்றன. நூன் - நூ - தூ - து - தௌ - த்வம். நூம் - தூம் - தும். ந - த, போலி. நூம் - யூம் - யூ; யூம் - யூயம். ந - ய, போலி. நீ என்பது சீன மொழியில் `நி' எனக் குறுகி வழங்குகின்றது; நிமென் என்பது இதன் பன்மை. பொர்னு என்னும் ஆப்பிரிக்க மொழியில் `நி' என்பதே முன்னிலை யொருமைப் பெயர் சில பழஞ் சித்திய மொழிகளில் நீ என்னும் பெயர் தமிழிற் போன்றே சிறிதும் திரியாமல் வழங்கிவந்தது. ஆத்திரேலிய மொழிகளின் முன்னிலை யொருமை `நின்ன', `ஙின்னீ' `ஙிந்தெ', என்பன: இருமை `நிவ', `நுர' என்பன; பன்மை `நிமெதூ' என்பது. இங்ஙனமே, ஏனை யிடப்பெயர்களும் இயல்புவடிவில் அல்லது திரிபுவடிவில் ஏறத்தாழ எல்லா மொழிகட்கும் பொதுவாகவுள்ளன. இதனால், மூவிடப்பெயர்களைப்பற்றிக் கால்டுவெல் ஐயர் பின்வரு மாறு கூறுகின்றார்: ``மொழிகட்கும் மொழிக்குடும்பங்கட்குமுள்ள உறவைப் பதிற் பெயர்கள் மிக விளக்கிக் காட்டுகின்றன. ஏனெனில், மூவிடப் பதிற் பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப் பெயர்கள், பிறசொல் வகைகளைவிட நிலைத்தவையா யிருந்து நெட்டூழி கழியினும் பெரும்பாலும் திரிவதேயில்லை. அவை, எண்ணுப் பெயர்களினும், வேற்றுமை யுருபுகளினும், வினையீறுகளினும் நிலைப்புத் தன்மை யுடையன. அவை ஏனையவற்றைப் போன்றே திரிதற்கிட மிருப்பினும், அவற்றின் தொடர்புகளையும் கிளைப்புகளையும், ஏறத்தாழ உலகமொழிக ளெல்லாவற்றிலும், அவை காலத்தாலும் இடத்தாலும் எத்துணைச் சேய்மைப்பட்டிருப்பினும் காணலாம். முதலாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்திருந்து, பின்னர், காலக்கடப்பாலும் திரிபுமிகையாலும் வேறினப்பட்ட சில மொழிகளின் தொடர்பை அல்லது உறவைக் காட்டுவதாயிருப்பது, மூவிடப் பெயராகிய சொல்வகையொன்றே. இக் குறிப்பு, சிறப்பாக எல்லாச் சொல்வகைகளுள்ளும் மிகுந்த நிலைப்புத்தன்மை யுள்ளனவாகத் தோன்று கின்ற தன்மைப்பெயர்கட் கேற்கும்.'' (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம், 2ஆம் பதிப்பு, ப. 254). மூவிடப் பெயர்களைப்போன்றே, அம்மை அப்பன் என்ற முறைப் பெயர்களும், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும், ஏதேனும் ஒரு வடிவில் காணப்படுகின்றன. குழந்தை முதன்முதற் கற்றுக்கொள்வனவும் தமிழுக்கே சிறப்பாக வுரியவுமான இவ் விரு முறைப்பெயர்களும், எல்லா மொழிகளி லும் வழங்கி வருவது, அவற்றின் உறவைக்காட்டும் சான்றேயாம். இதுகாறுங் கூறியவற்றால், மக்களினங்கட்குள்ள தொடர்பு போன்றே மொழிக்குடும்பங்கட்குள்ள தொடர்பும் அண்மையும் சேய்மையுமாகப் பலபடி நிலைப்பட்டதென்றும், சொற்கள் ஒத்திராவிடத்துச் சொல்லாக்க நெறிமுறைகளும், சொல்லாக்க நெறிமுறைகள் ஒத்திராவிடத்து மொழி வளர்ச்சிநிலைகளும், மொழிவளர்ச்சி நிலைகள் ஒத்திராவிடத்து மூவிடப் பெயர் இருகுரவர் பெயர்களும் ஒத்திருக்குமென்றும்; ஒத்த சொற்களின் பெரும்பான்மை சிறுபான்மை ஒரு சின்மைகள் பன்மொழி யுறவின் பல்வேறு அளவைக் காட்டுமென்றும்; எல்லா மொழிகட்கும் பொதுவாக ஒருசில சொற்களும் நெறிமுறைகளுமேனும் இருக்கவே இருக்கும் என்றும்: மாந்தன் தோன்றிய குமரிநாட்டினின்று அந்நாட்டு மொழிவளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் மக்கள் பல்வேறிடங்கட்குப் பிரிந்துபோய்ப் பல்வேறு வகைகளில் தங்கள் மொழிகளை வளர்த்துக்கொண்டமையே, உலகமொழிகளின் வேறுபாட்டிற்கும் தமிழுக்கும் பிறவற்றிற்கு முள்ள தொடர்பிற்குங் காரணமென்றும் அறிந்துகொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' திசம்பர் 1948 3 முதற்றாய் மொழியின் இயல்புகள் உலகமொழிகள் பல்லாயிரக்கணக்காகப் பரவிக்கிடப்பினும், அவற்றுக்கெல்லாம் ஓரளவில் மூலமாக அல்லது முதலாக ஒரு பெருந் தாய் மொழி யிருந்திருத்தல் வேண்டும் என்பது, மொழிநூலாற் போந்த முடிபாம். மக்களெல்லாம் ஒரு தாய் வயிற்றினர் என்று கொள்ளப்படாவிடினும், மாந்தன் தோன்றிய இடம் ஒன்றே என்பது மாந்தனூலால் தெரிய வருதலால், உலகமொழிகட்கெல்லாம் ஆதியில் ஏதேனுமொரு தொடர்பிருந்திருத்தல் வேண்டும். மொழிகள் யாவும் சிற்றளவாகவும் பேரளவாகவும் திரிந்துகொண்டே யிருப்பதால், அவற்றுக்குள்ள தொடர்பு முதற்காலத்திலிருந்ததுபோல் இக்காலத்தில் தெளிவாயில்லை. ஆயினும், ஆழ்ந்து ஆராயுங்கால், அப் பழந்தொடர்பைக் கண்டறிதற்குச் சில சான்றுகள் கிடைக்கின்றன. இதுபோதுள்ள மொழிகளுள், முதற்றாய்மொழியாகக் கருதப்படக் கூடியவை, வடமொழி (சமற்கிருதம்), தென்மொழி (தமிழ்) என்னும் இரண்டே. இவற்றுள் வடமொழி யொன்றே மேனாட்டாரால் விரிவாகவும் விளக்கமாகவும் அறியப்பட்டுள்ளது. தமிழைத் தமிழரும் செவ்வையா யறிந்தாரல்லர். அதனால், வடமொழி யொன்றையே, முதற்றாய்மொழியா யிருந்திருக்கலாம் என மேனாட்டார் கருதிவருவதில், யாதொரு குற்றமும் தப்பெண்ணமு மில்லை. ஒரு போலிக்கொள்கையை அல்லது பொய்க்கொள்கையை எத்துணைப் பேர் கொண்டிருப்பினும், அது நீடித்து நில்லாது, உண்மை என்றைக்கேனும் வெளிப்படுவது திண்ணம். முதற்றாய்மொழிக்கு, அதற்குரிய சில சிறப்பியல்புகளும் நிலைமை களும் உண்டு. அவை, வடமொழி, தென்மொழி என்னும் இரண்டுள் எதற்குள் ளன என்று பார்ப்போமாயின், முதற்றாய் மொழியைக் கண்டுவிடலாம். முதற்றாய் மொழியின் இயல்புகள் 1. மிகப் பழைமையானதா யிருத்தல். 2. பெரும்பாலும் எல்லா மொழிக்கும் பொதுவான எளிய ஒலிகளையே கொண்டிருத்தல். 3. கூட்டுவரி(சம்யுக்தாக்ஷரம்), மெய்ம்முதல், க ச த ப மெய்களின் பின் வேற்றுமெய் வரவு(வேற்றுநிலை மெய்ம்மயக்கம்), வல்லின மெய்யீறு முதலியன வில்லாதிருத்தல். 4. முன்னொட்டுகளை(உபசர்க்கங்களை) மிகுதியாகக் கொள் ளாமை. 5. இடுகுறிப்பெய ரில்லாதிருத்தல். 6. ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல். 7. பல மொழிகட்கும் அடிப்படைச்சொல் வழங்கி யிருத்தல். 8. பன்மொழிப் பொதுச்சொற்களின் மூல வடிவத்தைக் கொண் டிருத்தல். 9. சொல்வளமுடைமை. 10. நெடுங்காலம் கழியினும் மிகச் சிறிதே திரிதல். 11. இயற்கையான முறையில் வளர்ந்திருத்தல். 12. இயன்மொழியாயன்றித் திரிமொழியா யில்லாதிருத்தல். 13. பொருள்பற்றியன்றி ஈறுபற்றிப் பாலுணர்த்தாமை. 14. பொருட்பாகுபாடு செய்வதில் எளிய முறையைத் தழுவி யிருத்தல். 15. முதற்கால மக்களின் எளிய கருத்துகளைக் கொண்டிருத்தல். முதற்றாய்மொழியின் நிலைமைகள் 1. மாந்தன் தோன்றியிருக்கக்கூடிய இடத்தில் தோன்றியிருத்தல். 2. உலகப் பழங்குடி மக்களாற் பேசப்பட்டிருத்தல். இங்குக் கூறப்பட்ட இயல்புகளும் நிலைமைகளும் இருமொழி களுள்ளும் எதற்குரியனவென்று வினவின், தமிழுக்கே யுரியனவென்று பகைவரும் விடையிறுப்பர், பகுத்தறிவும் நடுநிலையும் உடையராயின். .........................................................................ne®Ã‹W காக்கை வெளிதென்பார் என்சொலார்தாய்க்கொy சால்புடைத் தென்பாரு முண்டு. ஆதலால், வேண்டுமென்று சொல்பவர் எதையும் சொல்வர். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்நேர் இலாத தமிழ். என்று பழங்காலத்திலும் தமிழின் தாய்மையைப்பற்றித் jமிழறிஞர்க்குeல்லுணர்ச்சியிருந்தது.flªj மூவாயிரம் Mண்டுகளாகத்bதாடர்ந்துவரும்Fலப்பிரிவினையினால்,jமிழர்க்குண்டானjழ்வுணர்ச்சியினாலேயே,jமிழின்jலைமையைxப்புக்கொள்ளும்Jணிவில்லை.ï¤ துணி வின்மையே தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதுந் தடையாயுள்ளது. ஆயினும் தமிழர் தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி இனிமேலாயினும் உண்மை யறியவும் தாய்மொழியைப் பேணவும் தலைப்படுவாராக. எத்துணை வடசொற்கள் தமிழிற் கலந்திருப்பினும், அவை எட்டுணையும் தமிழுக்கு வேண்டியவல்ல. வேண்டுமாயின், தமிழ் தன்னிடத்துள்ள வடசொற்களை முற்றும் விலக்குவது மட்டுமன்று; வடமொழித் துணையின்றியே தழைத்தோங்குதலும் கூடும் என்று கால்டுவெல் கண்காணியார் கூறியது முற்றும் உண்மையே. தமிழ்ச்சொற்கள் வடமொழிச் சென்று வழங்கின், அவற்றைத் தமிழ்ச் சொற்களென்று கொள்வதல்லது வடசொற்க ளென்று மயங்குவது, பகுத்தறிவிற்குப் பொருந்தாது. கலை என்னும் தமிழ்ச்சொல், வடமொழிச் சென்று வழங்குவதினால் மட்டும் வடசொல்லாகிவிடாது. கலை என்பது, கல் என்னும் பகுதியடி யாய்ப் பிறந்த தொழிற்பெயர்; நில்-நிலை, வில்-விலை, கொல்-கொலை என்பனபோல. இனி, கற்றேன் கற்கிறேன் கற்பேன்; கற்றேம் கற்கின்றேம் கற்பேம்; கற்றாய் கற்கின்றாய் கற்பாய்; கற்றீர் கற்கின்றீர் கற்பீர்; கற்றான் கற்கின்றான் கற்பான்; கற்றாள் கற்கின்றாள் கற்பாள்; கற்றார் கற்கின்றார் கற்பார்; கற்றது கற்கின்றது கற்கும்; கற்றன கற்கின்றன கற்கும் என இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் புடைபெயர்ந்தது கல் என்னும் வினை. வடமொழியிலோ பகுதியுமின்றிப் புடைபெயர்ச்சியுமின்றிக் கலா என்னும் சொல் தனித்தே நிற்கும். மேலும், கலா என்னும் சொல்லுக்கு வடமொழியிற் கூறப்படும் பகுதிப்பொருள், பிரிவு அல்லது பகுதி என்பதே. மதியின் பிரிவைக் குறிக்கும் கலை என்னும் சொல்லுக்கு இப் பொருள் பொருந்துமேயன்றிக் கல்வியின் பிரிவைக் குறிக்கும் கலை என்னும் சொல்லுக்குப் பொருந்தாது; பொருந்துவதாகத் தோன்றினும் உண்மை யாகாது. பொருத்தம் வேறு; உண்மை வேறு. கல்லென்னும் பகுதியினின்று, கற்றல், கற்கை, கல்வி, கலை, கற்பு முதலிய பல மொழிப்பெயர்கள் தோன்றும். இவையெல்லாம் பகுதிப் பொருளில் ஒன்றாயிருப்பினும், விகுதிப்பொருளில் வேறென்பதை அறிதல் வேண்டும். பொருள் திரியும்போது சொல்லும் உடன் திரியவேண்டும் என்னும் சொல்லாக்க நெறிமுறைபற்றி, வெவ்வேறு விகுதிகள் பகுதியோடு சேர்ந்து வெவ்வேறு நுண்பொருளை யுணர்த்தும். விகுதி புணர்வதெல்லாம் பொருளை வேறுபடுத்தற்கே. பகுதிப்பொருள் விகுதிகூட ஓரளவு பொருளை வேறுபடுத்தத்தான் செய்யும். அவ் வேறுபாடு மிக நுண்ணிதா யிருப்பதால், அதைக் கவனிப்பதில்லை. ஒப்பில் போலி எனப்படுவதிலும் எங்ஙனம் சிறிது ஒப்புண்டோ, அங்ஙனமே பகுதிப்பொருள் விகுதி என்பதிலும் சிறிது பொருள் வேறுபாட்டில் இடமுண்டு. ஒவ்வொரு சொல்லுக்கும் முதற்பொருள் வழிப்பொருள் என இருவகைப் பொருளுண்டு. காரணச் சொற்களிலெல்லாம் முதற்பொருள் வேர்ப்பொருளையே பற்றியிருக்கும். தமிழிற் காரணச் சொல்லன்றி இடுகுறிச் சொல்லில்லை. வழிப்பொருள் காரணம்பற்றியு மிருக்கலாம்; ஆட்சி பற்றியு மிருக்கலாம். ஆட்சிப்பொருள் வேர்ப்பொருளைத் தழுவவேண்டுவதில்லை. நீர்நிலையில் மக்கள் கூடும் இடத்திற்குத் துறை என்று பெயர். துறுதல் = நெருங்குதல், கூடுதல். துறுவது துறை (துறு + ஐ). இச் சொல் நிலத்திலும் மக்கள் கூடும் இடத்தையும், அகப்பொருள் நாடகத்தில் தலைவன் தலைவி முதலியோர் ஒருவரோடொருவர் அல்லது ஒருவரோடு பிறர் கூடும் இடத்தையும், அங்ஙனம் கூடி ஒருவர் கூறும் கூற்றையும், அக் கூற்றைப் பாடும் ஒருவகைச் செய்யுளையும், ஒவ்வோர் இடமும் அல்லது கூற்றும் அல்லது செய்யுளும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பிரிவை யுணர்த்துதலால் ஒன்றன் பிரிவையும் (Department, Branch) முறையே குறிக்கும். இவற்றுள் பிரிவு என்பது வழிப்பொருளே யன்றி முதற் பொருளன்று. துறை என்னும் சொல்லின் வேர் கூட்டத்தைக் குறிக்குமேயன்றி அதன் மறுதலையான பிரிவைக் குறிக்காது. இங்ஙனமே கலை என்னும் சொல்லின் வழிப்பொருளும் பகுதி என்பதாகும். ஒவ்வொரு கலையும் கல்வியின் ஒரு துறையாய் அல்லது பகுதியாயிருப்பதால், கலை என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் பொருள் தோன்றிற்று. கல்வித்துறை பகுதி என்னும் இரு பொருள்களுள், முந்தினது முன்னதேயன்றிப் பின்னதன்று. கல் என்னும் வினைப் பகுதிக்குக் கலைப்பொருள் உரியதே யன்றிப் பகுதி அல்லது பிரிவுப்பொருள் உரியதன்று. ஆதலால், வடமொழி யிற் கூறப்படும் பகுதிப்பொருளும் தமிழ்ப்பொருளை அடிப்படையாய்க் கொண்டதே. கலை என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் பொருள் ஒருவகையிற் பொருந்திற்றேனும், மீனம் (மீன் + அம்) என்னுஞ் சொல்லுக்குச் `சஞ்சரிப்பது' என்னும் பொருள் ஒருசிறிதும் பொருந்தாது. மின்னுவது மீன் என்பது மிகத் தெளிவாகவும் இயல்பாகவுமிருக்க, அதை விலக்கிவிட்டுச் சஞ்சரிப்பது என்று பொருள் கூறுவது, மீனம் என்னும் தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டியே. இங்ஙனம் பொருந்தப் புளுகலும் பொருந்தாப் புளுகலும் எல்லாம், தமிழரின் பேதைமை காரணமாக எழுபவையே. ஆதலால், பகுத்தறிவு படைத்த தமிழர் யாவரும் இனிமேலாயினும் பேதைமை விட்டு மேதைமை மேற்கொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' சனவரி 1949 4 வாய்ச்செய்கை யொலிச்சொற்கள் மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற் கேற்ற வாய்வடிவை யமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அச் செயல்களைக் குறிக்கும் சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ் வொலிகள் வாய்ச்செய்கை யொலிகளாம். அவற்றுள் ஒன்று இங்கு விளக்கப்பெறும். அவ்(வு) ஒன்றைக் கவ்வுதலை யொத்த வாய்ச்சைகைநிலை, அவ் என்னும் ஒலியைத் தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப் பல் கீழுதட்டொடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். இந் நிலை வகரமெய் யொலிப்பிற்கே ஏற்கும். பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும் (தொல். 98) மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (நன். 85) அவ் - கவ் - வவ். அவ் - அவ்வு - கவ்வு - வவ்வு. முதற்காலத்தில் அவ் என்னும் வடிவே, வாயினாலும் கையினாலும் மனத்தாலும் பற்றும் மூவகைப் பற்றையும் குறித்தது. பிற்காலத்தில் அவ்வுதல் என்னுஞ் சொல் மனத்தினாற் பற்றுதலுக்கும், கவ்வுதல் என்னுஞ் சொல் வாயினாற் பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னுஞ் சொல் கையினாற் பற்றுதலுக்கும் வரையறுக்கப் பெற்றன. ஆயினும், இன்றும், அவ்வுதல் என்பது உலக வழக்கில் வாயினாற் பற்றுதலை உணர்த்தும். எ-கா: கன்று புல்லை அவ்வித் தின்கிறது. அவ் - ஔ, கவ் - கௌ, வவ் - வௌ. அவ்வு - ஔவு, கவ்வு - கௌவு, வவ்வு - வௌவு. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் (தொல். 56) என்பதற் கொத்து, அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஔஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்றொரு நூற்பாவும் இருந்திருத்தல் வேண்டும். கன்று புல்லை ஔவித் தின்கிறது. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் (நாலடி. 70) தெ. கவியு வௌவிய வஞ்சி வலம்புனைய (பு.வெ. 3 : 2) வாய் ஒன்றைக் கௌவும்போது மேல்வாயும் கீழ்வாயும் குறட்டின் ஈரலகுபோற் பற்றுவதால், கவ்வுதல்(அல்லது கௌவுதல்) என்னும் சொற்குக் குறடுபோற் கவைத்திருத்தல் என்னும் கருத்துத் தோன்றிற்று. வாயின் கவைத் தன்மையை, மாந்தன் வாயினும் விலங்கு மூஞ்சியும், விலங்கு மூஞ்சியினும் பறவை மூக்கும் தெளிவாய்க் காட்டும். அவ் என்னும் சொல்லினின்று, வாயினாற் பற்றுதலையும் மனத்தினாற் பற்றுதலையுங் குறிக்கும் சில சொற்கள் தோன்றியுள்ளன. அவக்கு என்பது விரைந்து கௌவுதலையும், அவக்காசி என்பது விரைந்து கௌவும் ஆசையையும் உணர்த்தும். அவ் - அவா - அவவு. அவா = ஆசை. அவவு = அவா. அவவுக்கை விடுதலு முண்டு (கலித். 14) அவவு - அவாவு. அவாவுதல் = விரும்புதல். அவாய்நிலை = ஒரு சொல் தன்னொடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய இன்னொரு சொல்லை அவாவி(வேண்டி) நிற்றல். அவாவு - ஆவு. ஆவுதல் = விரும்புதல். செந்நெலங் கழனிச் செய்வேட் டாவிய மறையோன் (உபதேசகா. சிவத்துரோ. 120) ஆவிச் சேர்ந்து கட்டினான் என்பது உலக வழக்கு. ஆவு - ஆவல். ம. ஆவல். கவ்வு என்னும் சொல்லினின்று, கௌவுதற் கருத்தை அடிப்படை யாகக் கொண்ட சில சொற்களும், கவைத்தற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல சொற்களும், கையினாற் பற்றுதலைக் குறிக்கும் சில சொற் களும், மனத்தால் அல்லது மனத்தைப் பற்றும் சில சொற்களும் தோன்றி யுள்ளன. கௌவுதல் கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் (நாலடி. 322) கவுள் = கன்னம். கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050) கவளம் = கௌவும் அல்லது வாய்கொள்ளும் அளவான உண வுருண்டை. கவளம் - கவழம். கவழ மறியான் கைபுனை வேழம் (கலித். 80) கவ்வு - கப்பு. கப்புதல் = கொள்ளுமளவு வாயிலிட்டு மொக்குதல் அல்லது விழுங்குதல். “mtšbghÇ கப்பிய கரிமுகன் (திருப்பு. விநாயகர். 1) கவியம் = கடிவாளம்(பிங்.). fÉa«-Pkt. kaviya. கவிகம் = கடிவாள இரும்பு. fÉf«-Skt. kavika. கவைத்தல் கவ் - கவல் - கவர். கவ்வு = கவட்டை. கவர்தல் = பல காலாகப் பிரிதல். காவிரி வந்து கவர்பூட்ட (புறம். 35 : 8) கவர்த்தல் = 1. வழிகள் பிரிதல், அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் (சிலப். 11 : 73) k., தெ. கவ, க. கவலு. 2. கவடுபடுதல். கவர் = 1. நீர்க்காற் கிளை. “bj‰Fneh¡» நீர்பாய்கிற கவருக்கு (S.I.I. iii, 45) 2. பல்பிரிவு. மகளிர் நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது (சீவக. 1212) 3. மரக்கிளை. 4. சூலக்கிளையலகு, k., bj., து. கவ, க. கவல். கவர்க்கால் (கவராயுள்ள முட்டுக்கட்டை, கவையுள்ள மரம், கிளை வாய்க்கால்), கவர்க் குளம்பு, கவர்ச்சுத்தியல், கவர்த்தடி, கவர்நெறி, ftuhr«(divider) முதலிய சொற்களை நோக்குக. கவர்படு பொருண்மொழி = பல்வேறு பொருள்தரும் சொல் அல்லது சொற்றொடர். கவர்கோடல் = பலவாறாகக் கருதி ஐயுறல். கவர்கோடல் தோன்றாது (மணிமே. 27 : 22) கவடு = 1. மரக்கிளை, கவருள்ள மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு (சீவக. 1389) 2. தொடைச்சந்து. கவடு நுழைந்த பயல் என்பது உலக வழக்கு. கவட்டி = ஓர் எட்டு. 3. பகுப்பு கவடுபடக்கவைஇய.........cªâ” (மலைபடு. 34) தெ. கவட்ட. கவட்டடி =மரக்கிளை¡கவர்,கவை. ம. கவ, க. கவத்த. கவட்டை = கவை, கவண். கவண் = கவைபோல் இருபுறமும் கயிறு அல்லது வாருள்ள கல்லெறி கருவி. கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல் (அகம். 292) ம. ft©, f., து, கவணெ. கவண்-கவணை. கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும் (கலித். 23)கவண்-கவண்டு-கவண்டி. கவணம் = சீலைத்துணியை இரண்டாகக் கவர்படக் கிழித்துக் கட்டும் காயக்கட்டு. கவணி = கவணத்திற் குதவும் மெல்லிய சீலை. ம. கவணி. கவணை = கவைபோல் அமைக்கும் மாட்டுத்தொட்டி. கவையணை-கவணை. தெ. கவணமு. கவடு-கவடி = பிளவுபட்ட பலகறை. k., க. கவடி, தெ. f›t(gavva). கவடி-காடி = மாட்டுத்தொட்டி. கவளி = 1. கவண்போல் அமைத்துத் தூக்கும் பொத்தகக் கட்டு. புத்தகக் கவளி யேந்தி (பெரியபு. மெய்ப். 7) 2. புத்தகக் கட்டுப்போன்ற வெற்றிலைக் கட்டு. கவளி-கவளிகை = சிறு கவளி. புத்தகங் கட்டி யார்த்த கவளிகையே கொலோ (சேதுபு. இராமதீர். 49) ftËif-Skt. kavalika (ftÈ¡fh). கவான் = 1. கவைபோன்ற தொடைச்சந்து, தொடை. கழுமிய வுவகையிற் கவாற்கொண் டிருந்து (மணிமே. பதி. 27) 2. தொடைச்சந்து போன்ற மலைப்பக்கம். மால்வரைக் கவான் (பட்டினப். 138). கவை = பிளவு, பிரிவு, கவர், கிளை, கவட்டை. கவைக்கால், கவைக்குளம்பு, கவைக்கொம்பு, கவைக்கோல், கவைத்தாம்பு, கவைத்தாளலவன் (பெரும்பாண். 208), கவைநா, கவைமுட் கருவி, கவையடி முதலிய தொடர்ச்சொற்களை நோக்குக. ம. கவ. கவ்வு-கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு. கப்புங் கவரும் என்பது உலக வழக்கு. கப்பு-கப்பி. கப்பித்தல் = கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது (பெரும்பாண். 208, உரை) கப்பு-கப்பை. கப்பைக்கால் = கவட்டுக்கால். கவ்வு-காவு. காவுதல் = 1. தண்டின் இருபுறமும் கவைபோற் கலத்தை அல்லது பொருளைத் தொங்கவிட்டுத் தோளிற் சுமத்தல். காவினெங் கலனே (புறம். 206) 2. தோளிற் சுமத்தல், சுமத்தல். ஊனைக் காவி யுழிதர்வர் (தேவா. 338: 1) காவு + அடி = காவடி = 1. காவுதடி. 2. முருகன் காவடி. 3. சோற்றுக் காவடி. 4. தண்ணீர்க் காவடி. காவடி-காவட்டு = கள்ளுக் காவடி. காவு-கா = 1. காவடித் தண்டு. காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள். 1163) 2. காவடி போன்ற துலாக்கோல். 3. துலாம் போன்ற ஒரு நிறை. காவென் நிறையும் (தொல். எழுத்து. 169) கப்பு = காவுந்தோள். கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த (திவ். பெரியாழ். 3 : 1 : 5) கவல்-கவலை = 1. மரக்கிளை(பிங்.). 2. கவர்த்த வழி, பல தெருக்கள் கூடுமிடம். மன்றமுங் கவலையும்.....âǪJ” (சிலப். 14 : 24) கவலை முற்றம் (முல்லைப். 30) 3. மனக்கவற்சி, மனவருத்தம்(கவர்த்த எண்ணம்). ம. கவல. 4. அச்சத்தோடு கூடிய அக்கறை. கவலுதல் = பலவாறாகக் கருதி வருந்துதல். க. கவலு. கவல்-கவலம், கவலை.fவல்-கவலி. கவலித்தல் = fவலுதல்.fit = கரிசனை, அக்கறை. கவ்வை = கவலை. கவ்வையாற் கலங்குமனம் (திருக்காளத். பு. 18 : 27) கைப்பற்று கவ-கவவு = 1. கையால் தழுவுதல். கண்ணு நுதலுங் கவுளுங் கவவியார்க்கு (கலித். 83 : 17) 2. முயங்குதல் கவவிநாம் விடுத்தக்கால் (கலித். 35) கவவொடு மயங்கிய காலை யான (தொல். பொருள். 173) இரு கையாலும் தழுவுதல் ஈரலகாற் கவ்வுதல் போலிருத்தல் காண்க. 3. அகத்திடுதல். கவவகத் திடுதல் (தொல். சொல். 357) செவ்வாய் கவவின வாணகை (திருக்கோ. 108) 4. உள்ளீடு. கவவொடு பிடித்த வகையமை மோதகம் (மதுரைக். 626) கவவுக்கை = அணைத்த கை. திங்கண் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய் (சிலப். 7:52) கவர்தல் = 1. முயங்குதல். கவர்கணைச் சாமனார் தம்முன் (கலித். 94 : 33) 2. அகப்படுத்துதல், பற்றுதல். மூங்கிற் கவர்கிளை போல (பதிற்றுப். 84 : 12) 3. பறித்தல், பறித்துண்ணுதல். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள். 100) 4. கொள்ளையடித்தல். வீடறக் கவர்ந்த வினைமொழிந் தன்று (பு. வெ. 3 : 15, கொளு) 5. பெறுதல். வறியோர்கவர........v¿ªJ” (தஞ்சைவா. 20) கவர்ந்தூண் =அடித்துண்ணு«உணவு. பசியெருவை கவர்ந்தூ ணோதையும் (மணிமே. 6 : 117) கவைத்தல் = 1. அணைத்தல். ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ (குறிஞ்சிப். 185) 2. அகத்திடுதல். ஆரங் கவைஇய மார்பே (புறம். 19 : 18) கவறு = 1. பிறர் பொருளைக் கவரும் சூதாட்டம். ..........................fŸS§ கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள். 920) 2. சூதாடு கருவி. அரும்பொற் கவறங் குருள (சீவக. 927) மனப்பற்று கவர்தல் = விரும்புதல். கவர்வுவிருப் பாகும் (தொல். சொல். 362) கவவுதல் = விரும்புதல். கலிங்கம் .......ftÉ¡ கிடந்த குறங்கினாள் (சீவக. 1058) கவற்சி = Éருப்பம்.ft®¢á = மனத்தை இழுக்கை. கப்பு = fவர்ச்சி.f¥ã‹wh Ûசன்fழல்(சிவ.ngh. 11, 5, வெண்.) கவ - கா. காதல் = விரும்புதல், பேரன்பு கொள்ளுதல். கா - காவு. காவுதல் = நச்சுதல். தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள் (தேவா. 338 : 1) கா + அம் - காம் = விருப்பம், காதல். ஒ.நோ: ஏ + உம் = ஏம் - யாம் - நாம். காம் + உறு = காமுறு. காமுறுதல் = 1. விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையர் (நாலடி. 60) 2. வேண்டுதல். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித். 16) காம் - காமு - காமம். ஒ.நோ: விழு - விழும் - விழுமு - விழுமம். குழு - குழும் - குழுமு - குழுமம், பரு - பரும் - பருமு - பருமன். காமு - காமுகம் - காமுகன் - Skt. kamuka(fhK¡f). காம் + மரு - காமரு - காமர் = விரும்பத்தக்க, அழகிய. காமர் கடும்புனல் (கலித். 39). காமர் கயல்புரள (நளவெ.) காம் + அர் - காமர் = காமுகர். காம் + இ - காமி = காமுகன். களிமடி மானி காமி கள்வன் (நன். 38) fhÄ-Skt. kamin(fhÄ‹). காமித்தல் = 1. விரும்புதல். ஒ.நோ: காதல்-காதலி. தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமி யாதே (கம்பரா. நிந்த. 54) 2. காமங் கொள்ளுதல். காமம் = கணவன் மனைவியரிடைப்பட்ட காதல், மணம். காமத்துப் பால் என்னும் திருக்குறட் பகுதிப் பெயரை நோக்குக. சிவகாமி = சிவனைக் காதலிக்கும் மலைமகள். ஒ.நோ: வேட்டல் = விரும்புதல், காதலித்தல். வேள் = திருமணம். fhk«-Gk. gamos(marriage), Skt. kama(fhk). காமம் என்னும் சொல் முதற்காலத்திற் பொதுவான ஆசையையே குறித்தது. காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். (குறள். 360) நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (குறள். 605) என்னும் குறள்களை நோக்குக. பிற்காலத்தில், அச் சொல் காதல் என்னும் சொற்போல் ஆடவரின் பெண்ணாசையையும் பெண்டிரின் ஆணாசையையும் சிறப்பாய்க் குறிக்கலாயிற்று. அப் பொருளிலும், உயரிய இருதலைக் காமத்தையும் ஒருமனை மணத்தையுமே குறிக்க அது திருவள்ளுவரால் ஆளப்பெற்றது. ஆயின், இன்று, அது இடங்கழியையும் இணைவிழைச்சு விருப்பத்தை யுமே குறிக்குமளவு இழிபடைந்துள்ளது. காமம்-காமன் = மணக்காதல் உண்டாக்கும் தெய்வம், The Indian Cupid. fhk‹-Skt. kama(fhk). - ``செந்தமிழ்ச் செல்வி'' திசம்பர் 1966 5 சொற்குலமுங் குடும்பமும் மக்களைப்போன்றே சொற்களும் குடும்பங் குடும்பமாகவும் குலங் குலமாகவும் தொடர்புற்று இயங்குகின்றன. ஒவ்வொரு மொழியும் ஒரு நாடும், ஒவ்வொரு வேர்வழிச் சொற்றொகுதியும் ஒரு குலமும், ஒவ்வோர் அடிவழிச் சொற்றொகுதியும் ஒரு குடும்பமும் போல்வன. ஒரு நாட்டான் அயல்நாடு சென்று பல்லாண்டு தங்கிக் குடியுரிமை பெற்றுவிடினும், அவன் அயன்மையை மறைக்க முடியாது. யாரேனும் மறைக்க முயலின், வரலாற்றாராய்ச்சி அதை வெளிப்படுத்திவிடும். அங்ஙனமே, ஒருமொழிச் சொல்லும் பிறமொழிச் சென்று வழக்கூன்றினும் அதன் அயன்மையை மறைக்க முடியாது; யாரேனும் மறைக்க முயலின், வரலாற்றாராய்ச்சி அதனை வெளிப்படுத்திவிடும். இவ் வீருண்மைகளையும் விளக்குமாறு ஒரு சொற்குலத்தையும் மூன்று சொற்குடும்பங்களையும் ஈண்டுக் காட்டுவோம். சொற்குலம் கல் - கல் என்பது கருமையைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல். கல்-கன்-கன்னல் = கரிய கரும்பு. x.neh.: Gk. kanna, L. canna, Fr. canna, E. canne, cane = a reed. sugar cane = கரும்பு; கன்னங்கரேர் என்னும் வழக்கை நோக்குக. கல்-கால் = கருமை. கால்-காலா (இந்தி) = கருமை. கல்-கன் - கன்று. கன்றுதல் = வெயிலாற் கருகுதல், வேலையிற் பயின்று கை கருத்தல், முகங்கருத்துச் சினத்தல், சினந்து பகைத்தல். கன்று-அன்று. கல்-கள்-கள்ளம் = கருமை, கரிய இருள் போன்ற மறைப்பு, மறைப்பாகிய திருட்டு, வஞ்சனை. கள்-கள்ளன் = திருடன். கள்-களவு = மறைப்பு, திருட்டு. கள்-கள்வு-கள்வன்-களவன் = கருநண்டு. புள்ளிக் கள்வன் (ஐங். 21), புள்ளிக் களவன் (கலித். 88). களவன்-கடப்பான் (உலக வழக்கு). ஒ.நோ: A.S. crabba, Ger. crabba, E. crab. ட-ர, போலி. எ-டு: முகடி- முகரி, படவர்-பரவர். fŸ-fŸî-fŸt‹ = fÇat‹ (ã§.), fÇa ahid (ã§.), திருடன், வஞ்சகன். fŸt‹-kalabha (t.) = யானை. கள்-களவு = மறைப்பு, திருட்டு. L. clepo, to steal, Gk. chlapeis. கள்-களம் = கருமை. களம்-களர் = கருப்பு. களம்-களங்கு-களங்கம் = கருப்பு, கறை, குற்றம். களங்கம்-களக்கம் = குற்றம். களக்கம்-களக்கர் = இருளர் போன்ற வேடர். கள்-கள-களர்-களவு-களவம் = கரிய களாம்பழம். கள்-களி(களிமண்) = கரிய மண், களிமண்போற் கெட்டியான உண்டி அல்லது மருந்து களி. A.S. cloeg, E. clay; cog. with Dan. kloeg, Dut. klai, Ger. klei. களி-களிம்பு = களிப்பக்குவமுள்ள மருந்து. கள்-புலனை மறைக்கும் மது. கள்-களி = கட்குடியன், யானை மதம். களித்தல் = கட்குடித்தல், வெறித்தல், வெறுத்து மகிழ்தல், மகிழ்தல். fË-A.S. gal, merry; E. gala-gala-day. களி-களிறு =மதவெறிகொண்ட ஆண்யானை, ஆண்யானை. களி(ம.) = களித்து விளையாடு. களி-கேளி-கேல். (இ.) கள்ளாட்டு, களியாட்டு என்னும் வழக்குகளை நோக்குக. கள்-கள்ளுதல் அல்லது கட்டல் = மறைத்தல், நீக்குதல், களை யெடுத்தல். கள்-களை. களைதல் = நீக்குதல். களை = நீக்க வேண்டிய பயிர் அல்லது கூறு. கள்-கடு. கடுதல் = களை பிடுங்குதல். கடைசியர்கள் கடுங்களையின் (பெரியபு. மானக்கஞ். 2) கள்-களம்-கயம்-கசம் = கருமை, கரிக்குருவி, கரிய ஆழம், ஆழமான குளம், பள்ளம், கீழ்மை, கரிய நீர், நீர்போன்ற மென்மை. இருட்டுக்கசம் என்னும் உலக வழக்கை நோக்குக. கயம்-கயவன் = கீழ்மகன். கயமை = கீழ்மை. வடமொழி யானைப் பெயராகிய கஜம், ‘Gaj’ (to sound, roar; to be drunk, to be confused or inebriated) என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாக மானியர் உவில்லியம்ஸ் தம் சமற்கிருத ஆங்கில அகராதியிற் கூறுவர். கஜம் என்னும் சொல் கயம் - கசம் - கஜம் எனத் திரிந்து கருமைக் கருத்தைக் கொண்டதல்லதாயின், களி என்னும் பகுதியடியாய்ப் பிறந்ததாகக் கொள்ளப்படுதற்கு ஏற்றதே. ழகரத்தைப் போன்றே ளகரமும், கொடுந்தமிழ்களிலும் பிற மொழிகளிலும் சகரவகையாகத் திரிதல் இயல்பே. இனிக் கலி, களி, கத்து முதலிய சொற்களுள் ஒன்றன் அடியாகக் கொள்ளின், ‘to roar’, என்ற மொழிப்பொருட் காரணமும் பொருந்தும். கயம் - கயவு = கரிக்குருவி, கீழ்மை, மென்மை, பெருமை. கயம் - காயம் = கரிய வானம். விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் (தொல். எழுத்து. 305) fa«-fhr«-Mfhr (t.), ஆ ஒரு முன்னொட்டு (உபசர்க்கம்). பல்வேறு முன்னொட்டுகளை முற்சேர்த்தல், வடவர் தென்சொற்களை வட சொற்களாக்கும் வகைகளில் ஒன்றாம். காயம்-காயா = கரிய மலர்கொண்ட ஒருவகை மரம். காயாம்பூ வண்ணன் = கரிய திருமால். காயம்-காயல் = கரிய உப்பங்கழி. காயல்பட்டினம் என்னும் துறைநகர்ப் பெயரை நோக்குக. கள்-காள்-காளம் = கருமை, காளமேகம் = கருமேகம். காள்-காளி = கரிய மாரியம்மை. ஒ.நோ: மா-மாயோள் (காளி) = கரியாள். மாமை = கருமை. காளம்-காளான் = கரிய ஆம்பி. காள + ஆம்பி = காளாம்பி (கருங்காளான்). காள்-காளை = கரிய எருது, எருது. காள்-காழ், காழ்த்தல் = கருத்தல், கருத்து வயிரங் கொள்ளுதல், வேலை செய்து கை வயிரங் கொள்ளுதல், முதிர்தல், கடுத்தல், உறைத்தல். காழ்ப்பேறுதல் என்னும் வழக்கை நோக்குக. காழ்ப்பு = வயிரம், கைவயிரங் கொள்வதால் ஏற்படும் தழும்பு, உறைப்பு. காழ் = கருமை, குற்றம், மரவயிரம், கரியவிதை, விதை, விதை போன்ற மணி அல்லது முத்து, முத்தின் ஒளி. காழ்-காழகம் = கருமை. காழ்-காய், காய்தல் = வெப்பத்தால் கருகுதல், வெப்பங் கொள்ளுதல், உலர்தல், வெப்பத்தால் எரிதல், எரிதல்போற் சினத்தல். காய்-காய்ச்சு = வெப்பத்தாற் சமை. காய்-காய்ச்சல். காய்த்தல் = வேலை செய்து கையில் தழும்பேறல் (கருங்கை, கையிற் காய்ப்புக் காய்த்தல் முதலிய வழக்குகளை நோக்குக.) வயிரங் கொள்ளுதல், முதிர்தல், மரம் முதிர்ந்து பலன் தருதல். காய்ப்பது காய். காழ் - காசு = கருப்பு, குற்றம், விதைபோன்ற மணி, மணியொத்த பொன், பொன்னால் செய்யப்பட்ட நாணயம். காசு -ஆசு = குற்றம். Cash என்னும் ஆங்கிலச் சொல்லை முதலாவது பணப்பெட்டியை யும் பின்பு பணத்தையும் குறித்ததாகக் கொண்டு, இத்தாலியத்தில் பெட்டியைக் குறிக்கும் cassa (L. capsa) என்னும் சொல்லடியதாகக் கொள்வதைவிட, காசு என்னும் தமிழ்ச்சொல்லடியதாகக் கொள்வதே பொருத்தமாம். காசு - E. cash, O.F. casse, Sp., and Pg. caxa. காய்-காயம் = தழும்பு, தழும்பு விழுப்புண், தழும்புபோன்ற நிலைப்பு, நிலையாத உடல் (மங்கல வழக்கு), எரிகுணம் அல்லது உறைப்புள்ள பொருள் (எ-டு: வெங்காயம், பெருங்காயம்). கள்-(கள்கு)-(கட்கு)-கட்கம் = மறைவான அக்குள். ஒ.நோ: வெள்-வெள்கு-வெட்கு-வெட்கம். கட்கம்-கக்கம்-கக்ஷ(வ.). கள்-கடு, கடுத்தல் = எரிதல், கோபித்தல், எரிதல்போல் நோதல், முதிர்தல், மிகுதல், விரைவு மிகுதல். கடு = கடிய சுவை, கடிய நஞ்சு, (குருதியைக் கருப்பாக்கும் நஞ்சு எனினுமாம்). கள்-கம் = மறைவு, மறைவு போன்ற அடக்கம். கம் என்றிரு, கம் என்றிருக்கிறது என்னும் வழக்குகளை நோக்குக. ஒ.நோ: வள்-வம்-வம்பு, கொள்-கொம்-கொம்பு. கம்-கமு. கமுக்கூடு = மறைவான அக்குள். கமு-கமுக்கம் = மறைவு, அடக்கம். கல் - கர் - கரு = கருமை. கரு - கருப்பு = கருமை, கரிய பேய், கரிய இருள் போன்ற பஞ்சம். கரு - கருத்தை, கரு-கருவல். கரு - கருப்பை = கரிய எலி, எலி. கரு - கரும்பு = கரிய தண்டையுடைய பயிர். கரு - கருப்பு - கருப்பம் - garbha (t.) = கரிய மேகத்தின் சூல், சூல், சூல் போன்ற உட்பொருள். கரு - கருகு. கருகுதல் = காய்ந்து அல்லது வறுக்கப்பட்டுக் கருத்தல். fUF-fU¡F = fUf¢brŒ(É.), கருகச் செய்து இறக்கிய கஷாயம், பனைமட்டையின் கரிய ஓரம், அதுபோன்ற கூர்மை. கருக்கு - கருக்கல் = இருண்ட விடியல். கருகு - கருகல் = இருளில் பொருள் தெரியாமைபோல் ஏதேனும் ஒரு செய்தி விளங்காமை. கருகு - கருக்கம் = கார்மேகம். கரு - கருள் = இருள். கரு - கருமு-கருமி = கொடாது மறைக்கும் உலோபி. கரு - கருனை = கருக வறுத்த பொரிக்கறி, பொரியல். கரு - கருமை = முதிர்வு, மிகுதி, பெருமை. கரு - கர - கரப்பு = மறைப்பு. கர - கரவு = மறைப்பு, வஞ்சனை. கரவு - கரவடம் = களவு, வஞ்சனை. கரப்பு - கரப்பான் = கரிய சிரங்கு, கரந்து அல்லது இருளில் வழங்கும் பூச்சி. கர - கரம்பு = கரியநிலம், திருந்தா நிலம். ஒ.நோ: கருந்தரை = பாழ்நிலம். கரம்பு - கரம்பை = காய்ந்த களிமண். கர - கரா - கராம் = கரிய முதலை. கர - கரவாகம் = கரிய காக்கை. கர - கரந்தை = கரிய அல்லது நீல மலரையுடைய செடி, அதன் மலரைச் சூடி நிரை மீட்டல். கரு - கரி = கரிய அவிந்த தழல், கரிய யானை, கரிய குருவி. கரிதல் = கருகுதல். கரி - கரியல் = குற்றம். கரியன் = கரிய திருமால். கரியான், கரிச்சான் = கரிக்குருவி. கரி - கரிசு = கருப்பு, குற்றம். கரிசு - கரிசல் = கரிய நிலம். கரியல் = வளராது கருத்தமரம். கரியான் = கருங்குதிரை வகை. கர - கரை. கரைதல் = மறைதல், சிறுத்து மறைதல், சிறுத்தல், அல்லது குறைதல். கரை = மண் கரையும் நீர்நிலை யோரம், நீர்நிலை யெல்லை, எல்லை மேடு, எல்லை, அளவு, எல்லை குறிக்கப்படும் பங்குநிலம், பங்கு. கரு - கார் = கருமை, கரிய மேகம், மேகம் மிகுந்து பெய்யுங் காலம், மழைநீரால் தோன்றும் அழகு. கார் - காரி = கரிய எருது, கரிய சனி. கார் - காரிகை = அழகு, அழகிய பெண், பெண். கரு - கறு - கறுப்பு = கருப்பு, சினத்தால் முகங் கருத்தல், சினம். கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். உரி. 74) சினக்கும்போது, கருப்பன் முகம் மிகக் கருப்பதும், சிவப்பன் முகம் மிகச் சிவப்பதும் இயல்பு. கறு - கறுவு = நீங்காச் சினம். கறு - கறை = கருப்பு, களங்கம், குற்றம், குருதிக்கறை, குருதி. கறு - கறள் = கறை. கறு - கறுக்கன் = கருத்த மட்ட வெள்ளி. கறு - காறு. காறுதல் = கருத்தல், கருத்து வயிரங்கொள்ளுதல், வயிரங் கொள்ளுதல். கள் - கண். ஒ.நோ: பெள் - பெண், கோள் - கோண். கண் - கண்ணன் = கரியன், கரிய திருமால். ஒ.நோ: மால் = கரியன், மாயோன் = கரியன். கிருஷ்ணன் என்னும் வடசொல் கண்ணன் என்று திரிந்ததென்று கொள்வதைவிட, கள் என்னும் தென்சொல்லே ணகர வீறாய்த் திரிந்து ஈறு பெற்றதென்று கொள்வது சாலச் சிறந்தது. கிருஷ் என்னும் வடசொற் பகுதியும் கரு என்னும் தென்சொற் பகுதியின் திரிபே. கண் = கரிய விழி, விழி. கண் - கண்ணவன் - கணவன். கண் - கண்ணு - gan (t.). கண்ணுதல் = அகக்கண்ணாற் காணு தலாகிய கருதுதல், அளவிடுதல். கண் + இயம் = கண்ணியம் - ganya (t.). கண்ணியம் = சிறப்பாகக் கருதுதல், மதித்தல், மதிப்பு. கண் + அக்கு = கணக்கு. அக்கு ஓர் ஈறு. கணக்கு - ganaka (t.) = அளவீடு, எண்ணிக்கை, தொகை, கணிதநூல், நூல், எழுத்து. கணக்கு - கணக்கன் = கணக்கெழுதுவோன், கணக்கெழுதுவதைக் குலத்தொழிலாகக் கொண்டவன், நூலாசிரியன், ஆசிரியன். கணக்காயர், சமயக்கணக்கர், மேற்கணக்கு, கீழ்க்கணக்கு, நெடுங்கணக்கு முதலிய பண்டை வழக்குகளை நோக்குக. கண் - கணி - gani (t.) = மதி, அளவிடு, கணக்கிடு; (பெ.) கணிப்பவன், சோதிடன். fÂf‹, கணியான், கணிவன் = சோதிடன். கணி - கணியன் = சோதிடன், காலங்கணித்து ஆடுபவன். கணி - கணிகை - ganika (t.) = காலங்கணித்து ஆடுபவள். கணி - கணிதம் - ganita (t.) = மதிப்பு, கணக்கு. கணிதம் - கணிசம் = மதிப்பு, நிதானம். கணிசம் - கணிசி. கணிசித்தல் = மதித்தல், உய்த்துணர்தல், சிந்தித்தல். கணி - குணி. குணித்தல் = மதித்தல், அளவிடுதல். கண் = கண் போன்ற வரையுள்ள மூங்கில் முதலியவற்றின் கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (பெருந்தொ. 634) கண் - கணு. கணு - கணை = கணுப்போன்ற திரட்சி. கணைக்கால் = கணுக்கால். கணை-கணையம் = திரண்டமரம். கண் = இடம், பக்கம். கண் + சி - கட்சி-கக்ஷ்யா (வ.). கண் - கண்டு = கணுப்போன்ற துண்டு, துண்டாகிய கட்டி, நூலுருண்டை. f©L-f©l«-khanda(t.) = துண்டு, நிலப்பகுதி, பகுதி. உப்புக் கண்டம், கண்டங் கண்டமாய் நறுக்குதல் முதலிய வழக்குகளை நோக்குக. ஒ.நோ: துண்டு - துண்டம். கண்டம் - fh©l«-kanda(t.) = நூற்பகுதி. கண்டம் - கண்டிகை = நிலப்பகுதி. கண்டிகை-காண்டிகை = khandika(t.) = துண்டுபோற் சுருங்கிய வுரை. f©L-f©o-khand(t.). ஒ.நோ: துண்டு - துண்டி. கண்டித்தல் = துண்டித்தல், துண்டித்தல் போலக் கடிதல், வரையறுத்தல், கண்டிப்பு = வரையறவு, கடுமையான ஒழுங்கு. கண்டி - கடி. ஒ.நோ: தண்டி - தடி(வி.). கடிதல் = கண்டித்தல், விலக்குதல். கண்டி + அனம் = கண்டனம் - kandana (t.). கண்டி - கண்டிதம் - khandita (t.) = கண்டிப்பு, வரையறவு. கண்டிதம் - கண்டிசம். கண் - கண்ணி = கண்கண்ணாகக் கட்டிய மாலை, கண்போன்ற துவாரமுள்ள வலை, துவார முள்ளது. (எ-கா : பலகண்ணி-பலகணி = சன்னல்). கண் - காண் = கண்ணால் பார்(வி.). காண் - காணம் = மேற்பார்வை. கண்காணம் என்பது வழக்கு. கண்காணி = மேற்பார்ப்பவன். கண்காணியார் = அத்தியட்சர் (Bishop), சபையை மேற்பார்ப்பவர். காண்-காட்சி = பார்வை, அறிவு, ஞானம். காண்-காணி. காணித்தல் = மேற்பார்த்தல், காத்தல். காணிக்கை = கடவுள் காத்தற்கு இடும் படைப்பு அல்லது செலுத்தும் பணம். கண் = அறிவு, ஞானம். கள்ளொற்றிக் கண்சாய் பவர் (குறள். 927) காண் - A.S. cunnan, to know; E. cunning, knowing; M.E. con, to study carefully, Goth. kunnan, to know, O.H.G. chann. காண் என்னும் தென்சொல் க்ணா-க்னா என்று சில ஆரிய மொழிகளில் மாறியும், ‘gna’ என்று சில ஆரிய மொழிகளில் மாறித் திரிந்தும், ஜ்ஞா என்று வேத ஆரியத்தில் மேலும் திரிந்தும் வழங்கும். A.S. cnawan; Ice. kna; E. know; L. gna, Gk. gno; Skt. jna; Russ. jna. பிற்காலத்து ஆங்கிலச் சொற்களில் ‘gna’ அடியும் (எ-டு: cognisance, prognosticate, ignorance) முற்காலத்து ஆங்கிலச் சொற்களில் ‘con’ அல்லது ‘kon’ அடியும் இருப்பதையும், ஜ்ஞானம் என்னும் சமற் கிருதச் சொல் உட்பட ‘know’ என்னும் ஆங்கிலச் சொற்கினமான எல்லா வற்றுக்கும் ‘kon’ என்பதையே மூலமாக மேலை மொழிநூலார் குறித் திருப்பதையும், காண் என்னும் தென்சொல்லின் இயல்பையும், அதன் வழிப்பட்ட ஆரியச் சொற்களின் திரிபையும், அவற்றுள் சமற்கிருதச் சொல்லும் ரசியச் சொல்லும் அடைந்துள்ள திரிபின் கோடியையும் உற்று நோக்குக. தமிழ்க் கண்ணிலிருந்து சமற்கிருதம் ஞானம் பெற்றது என்பது, சொல்லளவிலும் பொருளளவிலும் உண்மையாயிருத்தல் நோக்கத்தக்கது. சொற்குடும்பங்கள் 1. தில்என்பது, பருமனால் ஆகிய திண்மையையும், அதனால் ஏற்படும் வலிமையையும், அதுகொண்டு செய்யப்படும் முரண்டையும் குறிக்கும். ஒ.நோ: முரண் = பெருமை, வலிமை, மாறுபாடு. முரண் - முரடு = பருமன், கரடு, வன்குணம். முரண்-முரண்டு = மாறுபாடு, பிடிவாதம், ஏறுமாறு. முரடு-முருடு. தில்லுமுல்லு(ஏறுமாறு, முரண்டு) என்னும் வழக்கை நோக்குக. தில்-திர்-திர-திரம் = திண்ணம், உரம், வலிமை, உறுதி, நிலைவரம், மலை, நிலையான வீடு (முத்தி). திரம்-ஸ்திர(வ.). திரம் + ஆணி = திராணி. திர-திரங்கு-திரக்கு. திரங்குதல் = திரண்டு சுருங்குதல், சுருங்குதல். திரக்கு = திரட்சி, கூட்டம், நெருக்கடி. திருவிழாத் திரக்கு என்னும் தென்னாட்டு வழக்கை நோக்குக. திரம் - திரல் - திரள் - திரளை = திரட்சி, உருண்டை. திரளை - திரணை = திரண்ட மேடை, திண்ணை. திரள் - திரட்டு. திரள் - திரடு = மேடு. திரம் - திறம் - திறன் - திறல். திறம் - திறமை. ரகர றகரம் இரண்டுள், முன்னது முந்தியும் பின்னது பிந்தியும் தோன்றிற்றென்றும், றகரம் பிந்தித் தோன்றியதினாலேயே நெடுங்கணக்கின் இறுதியடுத்து வைக்கப்பெற்ற தென்றும், அறிதல்வேண்டும். மாந்தர் வாயில் மெல்லொலி முந்தியும் வல்லொலி பிந்தியும் எழுதலே இயற்கையாம். ரகரம் உரத்து றகரம் ஆயிற்றென்க. ஒ.நோ: ஒளி-ஒளிர்-ஒளிறு, கரு-கறு. திறம் = திண்ணம், உறுதி, வலிமை, வலிய தன்மை, தன்மை, தன்மைபோன்ற கூறுபாடு, நூற்பகுதி. ஒரு பொருளின் வலிமை அதன் தன்மையா யிருப்பதாலும், அதன் ஒவ்வொரு தன்மையும் அதன் கூறா யிருப்பதாலும், வலிமையைக் குறிக்கும் சொல், தன்மையையுங் கூறுபாட்டையுங் குறித்ததென்க. இயல் என்னும் சொல் தன்மையையும் நூற்பகுதியையுங் குறித்தல் போன்றே, திறம் என்னும் சொல்லும் தன்மையையும் நூற்பகுதியையுங் குறிக்கும். திர்-திரு-ஸ்ரீ (Sri) = திரண்ட அல்லது திரட்டப்பட்ட செல்வம். ஸ்ரீ-சீ. ஒ.நோ: கோழிக்கோடு - (Calicut) கள்ளிக்கோட்டை. திர-திரை. திரைதல் = திரளுதல், இடையிடை திரளுதல். திரை = திரண்ட நீரலை, நீரலைபோல இடையிடை தோல் திரங்கிய நிலை, திரட்டப்படும் அல்லது சுருட்டப்படும் மறைப்புத் துணி. அணிந்திருக்கும் ஆடையை மேல்நோக்கித் திரட்டுதலைத் திரைத்தல் என்று சொல்லும் வழக்கை நோக்குக. திறம் என்னும் சொல் தன்மையைக் குறித்தல்போல, அதற்கு இனமான திரம், திரை என்னும் சொற்களும் தன்மையைக் குறித்துத் தொழிற்பெயர் விகுதியாகும். எ-டு : மா + திரம் = மாத்திரம், (அளவு). மா + திரை = மாத்திரை (அளவு). உரு + திரம் = உருத்திரம்(சினம்). மாத்தல் = அளத்தல், உருத்தல் = சினத்தல். மா என்னும் வினை வழக்கு வீழ்ந்தது. ஆயினும், மா (1/20 வேலி) என்னும் நிலவளவுப் பெயரும், அரைமா ஒருமா இருமா என்னும் எண்ணளவைப் பெயர்களும், மானம்(அளவு, படி, மதிப்பு) என்னும் தொழிற் பெயர் அல்லது தொழிலாகு பெயரும், இன்றும் வழக்கிலுள்ளன. தில்-திள்-திண்-திண்மை. ஒ.நோ: L. densus, E. dense, F. dense. திண்படுதல் = வலிபெறுதல். திண்பொறுத்தல் = பாரந் தாங்குதல். திண்-திண்ணெனவு-திண்ணனவு = தேற்றம், நெஞ்சுரம். திண்-திண்ணம் = தடிப்பம், வலிமை, தேற்றம் (நிச்சயம்). திண்மைக் கருத்தினின்று தேற்றக் கருத்துத் தோன்றிற்று. ஒ.நோ: உறுதி = திண்மை, தேற்றம். திண்ணம் - திண்ணக்கம் = நெஞ்சுரம். திண் - திண்ணிமை = மனவுறுதி. திண்ணியன் = வலியவன், மனவுறுதி யுள்ளவன். திண் - திண்ணை = திரண்ட மேடை. திண் - திணை = திரட்சி, கூட்டம், குலம், பகுப்பு, குலவொழுக்கம், ஒழுக்கம். திண் - திணம் = திண்மை. திணமணி மாடத் திருவிடைக் கழியில் (திருவிசை. சேந். திருவிடை. 5) திணம் - திணர் = செறிவு. திணரார் மேகமெனக் களிறு சேரும் (திருவாய். 6 : 10 : 5) திணர்த்தல் = கடினமாகப் படிந்திருத்தல், நெருக்கமாதல். திணர்த்த வண்டல்கள்மேல் (திருவாய். 6 : 1 : 5) வண்டு திணர்த்த வயல் (திவ். திருப்பள்ளி. தனியன்) திண் - திணி. திணிதல் = செறிதல், இறுகுதல். திணித்தல் = செறிய உட்புகுத்துதல். திணிமூங்கில் = கெட்டி மூங்கில். திணி-திணிகம் = இருபடையும் செறிந்து செய்யும் போர். திணியன் = பருத்த ஆள் அல்லது விலங்கு. திணிவு = வன்மை, நெருக்கம், திணி - திணிம்பு - திணிப்பு. திணிம்பு = செறிவு, திணிப்பு = வலிமை. திண் - திணுங்கு - திணுக்கம். திணுங்குதல் = செறிதல், உறைதல். திணுக்கம் = செறிவு, கட்டி. திண் - திண்டு = பருமன், திரண்ட மேடை, திரண்ட பஞ்சணை, மாறுபாடு. திண்டுக்கட்டை = பருத்த கட்டை, பயனற்ற தடியன். திண்டு தலையணை, திண்டுமுண்டு என்னும் வழக்குகளை நோக்குக. திண்டுமுண்டு என்பதனுடன் தில்லுமுல்லு என்பதை ஒப்பு நோக்குக. திண்டு - திண்டன் = தடியன். திண்டு - திண்டி = பருமன், தடிச்சி, யானை. திண்டி வயிற்றுச் சிறுகட்பூதம் (தேவா. 1225 : 7) திண் - திட்பு - திட்பம் = செறிவு, உறுதி, வலிமை, தேற்றம். திட்பு - திட்பை - திப்பை = பருத்தது, மேடு. திண்டு - திட்டு - திட்டை = திண்ணை, மேடு. திட்டு = மேடு, மேடான ஆற்றிடைக்குறை அல்லது நீரிடைக்குறை. திட்டு - திட்டம் = தேற்றம், நிலைவரம், உறுதியான ஏற்பாடு, உறுதியான வரையறவு. திட்டவட்டம் என்னும் வழக்கை நோக்குக. திட்டு - திட்டி = சிறுமேடு. திட்டு - திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை. சத்திரச் சாலையும் ஒத்ததிட் டாணியும் (இராமநா. சந். 4) திட்டம் - திடம் = உறுதி, மனவுறுதி, தேற்றம், நிலைவரம். திடம் - திடல்-திடர்-திடறு = மேடு. திடல் = மேடு, குப்பைமேடு, மேடான சிறு தீவு. மஞ்சள் திடல் என்பது மேடான ஓர் ஊர்ப் பெயர். திடம் - drdha(t.). திடம் - திடாரி - திடாரிக்கம். திடாரி = தைரியசாலி. திடாரிக்கம் = மனத்திடம், தைரியம். திண் - திடு - திடுமல் - திடுமலி. திடுமல் = ml§fh¤j‹ik(J.). திடுமலி = ml§fhjtŸ(J.). திள் - திம் - திம்மை = பருமன். திம் - திம்மன் = தடியன், பருத்த ஆண்குரங்கு. திம் - திம்மல் - திம்மலி = உடல் gU¤jtŸ(J.) திம் - திம்மாக்கு - dimag(c.) = பெருமை, வீண் பெருமை. திம் - திமி = பெருமீன்(திவா.). âÄ-timi(t.). திமி - திமிதம் = உறுதி. திம் - திமி - திமிசு = இளகிய தரையை இறுகச் செய்யும் கருவி. திமி - திமில் - திமிள் = எருதின் பருத்த முரிப்பு. திமில் - திமிலி = உடல் பருத்தவள். திமில் - திமிலம்-திமில(வ.) = பெருமீன் வகை. திமில் - திமிர். திமிர்த்தல் = மரம்போல் கெட்டியாதல், கை கால் மரத்தல், கொழுத்துத் தடித்தல். திமிர் = கை கால் மரப்பு, மரப்புப்போன்ற நோய் (திமிர்வாதம்), மனத்தடிப்பு. ஒ.நோ: L. temere-temeritas, E. temerity. 2. வகு. வகுதல் = பிளத்தல், பிரிதல். வகுத்தல் = பிரித்தல், பிரித்தமைத்தல், அமைத்தல், படைத்தல். வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது (குறள். 377) என்னை வகுத்திலையேல் இடும்பைக்கிடம் யாது சொல்லே (தேவா. 643 : 2) ஒ.நோ: L. Facio, to make, do, E. manufacture. வகு - வக்கு = வகுத்த வழி, வழி, இடம். வக்கில்லை, வழிவகுத்தல் என்னும் வழக்குகளை நோக்குக. வகு - வகம் = வழி. வகு-வகுந்து = வழி. “tFªJbrš வருத்தத்து (சிலப். 11 : 167) வக்கு - வாக்கு = வழி, திசை, பக்கம். காற்று வாக்கு என்னும் வழக்கை நோக்குக. வகு - வகுப்பு. வகு - வகுதி = வகுப்பு. “tFâÆ‹ வசத்தன (கம்பரா. இரணியன். 69) வகு - வகிர் = பிளவு, பிளந்த துண்டு, வகுத்த தலைமயி ரிடைவெளி. வகிர் - வகிடு = வகுத்த தலைமயி ரிடைவெளி. வகு - வகை. வகைதல் = பிளவுபடுதல், பிரிதல். வகு - வங்கு - வங்கை = பகை. வகு - வாகு = வகுப்பு, வகுத்த ஒழுங்கு, ஒழுங்கின் அழகு. வாகு - bagu(bj.). வகு - பகு. வகரம் சிறுபான்மை தமிழில் பகரமாகத் திரியும். எ-கா : வள் - வண்டி - பண்டி - பாண்டி - பாண்டில். உருவு - உருபு. அளவு - அளபு. பகுதல் = பிளத்தல், பிரிதல். பகுத்தல் = பிரித்தல். பகுவாய் = அகன்ற வாய், அகன்ற வாயையுடைய தாழி அல்லது பிழா. பகு - பகுப்பு. பகு - பகுதி - பாதி. பகுதி = பாகம், இரண்டிலொரு பாகம், ஆறிலொரு பாகமாகிய நிலவரி. பகுதிக்கிளவி = தகுதியும் வழக்குமாகிய பகுதிபற்றிய சொற்கள். பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. (தொல். சொல். 17) பகு - பக்கு = பிளவு. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். (குறள். 1068) பகு - பக்கம் = பகுதி, மாதத்தின் பகுதி(பாதி), அதில் 1/15 பகுதி, இடப்பகுதி, இடம், புறம், திசை, தாளின் ஒரு புறம், நூற்பகுதி, நூல், அருகான இடம், அருகான அல்லது நெருங்கிய இனம், இனத்தார்போற் செய்யும் அன்பு, இருபுறத்துமுள்ள விலா, இருபுறத்துமுள்ள சிறகு , அம்பின் இறகு. பக்கம் - paksha(t.). பகுதிக்கிளவி பக்கச்சொல் எனப்படுதலானும்; பக்கம் என்னும் சொல், பொருள் இடம் காலம் என்னும் மூன்றனுள் ஒன்றன் பகுதியைக் குறித்துச் செய்யுளிலும், புறம் அருகு இடம் என்னும் பொருள்பற்றி உலக வழக்கிலும் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கி வருதலானும்; பக்கம் என்னும் சொற்குரிய பொருளெல்லாம் பகுதி என்னுங் கருத்தையே அடிப்படையாய்க் கொண்டிருத்தலானும்; வடமொழியில் பக்ஷம் என்னும் சொல்லுக்குக் கூறப்படும் பொருளெல்லாம் தென்மொழியில் பக்கம் என்னும் சொல்லுக்கும் ஏற்றலாலும்; பக்கம் என்னும் சொல் பகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தமிழ்ச்சொல்லே யெனத் தெளிக. பக்கம் - L. pagina, F. page, E. page. பக்கம் - பக்கர் = இனத்தார். பக்கம் = பக்கல். g¡f« - g¡fz« = ïl¥gFâ, ïl«, C®(Nlh.), ஊர்ப் பகுதி யான வீதி; வேடர் வீதி(திவா.). பக்கம்-பாக்கம் = இடப்பகுதி, ஊர்ப்பகுதி, ஊர், நெய்தற் பகுதி யிலுள்ள ஊர், அருகு. பாக்கத்து விரிச்சி = பக்கத்திற் கேட்கப்படும் நற்சொல். பக்கு-பாக்கு = பகுதி, கூறுபாடு, இடம். இடப்பெயர்கள் அல்லது இடத்தைக் குறிக்கும் சொற்கள், தொழிற் பெயர் விகுதியாகவும் வினையெச்ச விகுதியாகவும் அமைவது இயல்பு. எ-கா: விடு + தலை = விடுதலை. எழு + இல் = எழில். தொழிற்பெயர் விக்கு + உள் = விக்குள். } கடை - மாணாக்கடை. உழி - உற்றுழி }Éidba¢r¥ghy இடப்பொருள் கொண்ட பாக்கு என்னும் சொல், தொழிற்பெயர் விகுதியாகவும் வினையெச்ச விகுதியாகவும் வரும். எ-கா: கரப்பாக்கு = கரத்தல். வேபாக்கு = வேதல். கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து. (குறள். 1127) நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. (குறள். 1128) உண்பாக்கு வந்தேன் = உண்ண(உண்ணும் பகுதியாய்) வந்தேன். பாக்கு + இயம் - gh¡»a«-bhagya(t.) = பகுதி, நல்ல பகுதி, பேறு, செல்வம். சிலப்பதிகார அடைக்கலக்காதையில் வரும் பால்வாய்க் குழவி என்னும் தொடருக்கு மேற்பெறக் கடவ நல்ல பகுதியைத் தன்னிடத்தே யுடைய குழவி என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்திருத்தலைக் காண்க. அலரெழ வாருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் (குறள். 1141) என்றார் திருவள்ளுவர். வடசொல்லாகிய bhagya என்பதையும், bhaga (ghf«) என்னும் சொல்லின் திரிவாகக்கொண்டு, நற்பகுதியாகிய பேறு என்றே பொருட் காரணங் காட்டுவர் வடமொழி யாங்கில வகராதி யாசிரியர் மானியர் வில்லியம்சு பேராசிரியர். பாக்கியம் என்னும் சொல், மேனோக்கில் ஆரியம் போலத் தோன்றி னும், ஆராய்ந்து பார்க்கின், அது தென்சொல்லே யென்பது தெளிவாகும். வடமொழி தேவமொழி யென்றும், எடுப்பிசையாய் ஒலிக்கும் வடசொல் எல்லாம் ஆரியச் சொல்லே யென்றும், தவறான கருத்துகள் 18 நூற்றாண் டாகத் தமிழர் மனத்தில் வேரூன்றி விட்டதனால், வழக்கற்றும் வேர்ப் பொருள் மறைந்தும்போன பழந்தமிழ்ச் சொற்கள் அயற்சொற் போலத் தோன்றுகின்றன என்க. பகு - பகம் = பகுப்பு, பகிர்வு பகம் - பகவன் = பொருள்களைப் பகிர்ந்தளித்துக் காப்பவன், வள்ளல், தலைவன், கடவுள், கடவுள் தன்மையுள்ள முனிவன். பகவன்-பகவான். ஒ.நோ: Skt. Bhaga, apportioner of food, a liberal master, gracious lord. zend. bhaga; O.Pers. baga, a lord; Slav. bog, a lord; Lith. Ma-bagas = a poor man, bagatas = rich; Goth. gabigs, Skt. Bhagavan = the gracious one, a god, God. பகு - பகவு = பிளவு, பிரிவு, துண்டு. பகு - பகல் = பகலவன், பகலோன்.. பகல் - பால் = பிரிவு, பகுதி, பக்கம், குலம், புறம், பாதி, இடம், திசை. “ghdhŸ” (கலித். 90) பானாள் = அரைநாள். “T⮥ பானாள் (நெடுநல். 12) = நள்ளிரவு. பகல் = பாதி, நடு, உச்சிப்பொழுது, ஒளியுள்ள அரைநாள். பகல் - பகர் - பகரம் = ஒளிவேளை, ஒளி, அழகு. பகர்தல் = ஒளிவிடுதல். பகரம் - பகாரம் = அழகு. பகர்-பகரிப்பு = ஒளி, அழகு. பகல் - பகர் - பகரு = பிளவு, பிரிவு, பகை. பகு - பகிர் - பகர். பகர்தல் = பொருள்களைப் பகர்தல், பகிர்ந்து விற்றல், விலை கூறி விற்றல், விலை கூறுதல், கூறுதல். இனி, விடையங்களைப் பகுத்துக்கூறுதல் பகர்தல் எனினுமாம். பகு - பகை - பகைவன். பகு - பகம் = வகுத்த வழி. ஆறு (வழி) மதநெறி, மதநெறியின் தொகை (6). ஆறு என்னும் சொல், வழியையும் 6 என்னும் எண்ணையும் குறித்தல் காண்க. பகு - பாகு = பகுதி, பக்கம், இருபக்கத்திலுமுள்ள கை, பக்கத்தி லிருந்து பேணும் பாகன். பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம் (சிலப். 15 : 46) பாகுபடுதல் = பிரிதல். பாகிடுதல் = பிரித்தல். பாகு - பாகம் - baha(t.) = இருபாகத்திலு முள்ள கையை நீட்டிய அளவு. பாகு - bahu(t.) = கை. பாகு - வாகு. வாகு tisa«-bahu valaya(t.) = தோள்கடகம். பாகு - பாகி. பாகித்தல் = பங்கிடுதல். பாகு - ghf«-bhaga(t.) = பகுதி, பங்கு. பாகு - பாகை = பிரிவு, வரை. பக்கு - பங்கு = பாகம். பங்கு - g§f«-bhanga(t.) = பகுதி, பிரிவு, பங்கு, துண்டு, சிறுதுகில், குறைவு, விகாரம், குற்றம், மானக்குறைவு, வெட்கம், தோல்வி, கேடு, இடர். பங்கு + அறை = பங்கறை. பங்கறை = பகுதி பகுதியாய் அறுக்கப்பட் டிருத்தல், அழகின்மை. ஒழுங்கில்லாமற் கொத்தியிருப்பதைப் பங்கறைக் கொத்து என்பது உலக வழக்கு. பாக்கு - பாங்கு. ஒ.நோ: போக்கு-போங்கு. பாங்கு = பக்கம், பகுப்பு, ஒழுங்கு, அமைப்பொழுங்கைப் ‘gh§F பரிசனை என்பது வழக்கு. பாங்கு - பாங்கர் = பக்கம். பாங்கு - பாங்கன் = பக்கமாயிருந்து பேணும் துணைவன். ஒ.நோ: It. paggis, F. page, E. page. பகு - பா. பாத்தல் = பகுத்தல். பா - பாத்தி = பகுப்பு, புன்செய்ப் பகுப்பு, பங்கு. மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே (தொல். எழுத்து. 172) பா - பாது = பகிர்வு. பாதிடுதல் = பகிர்தல். தந்துநிறை பாதீடு உண்டாட் டுக்கொடை. (தொல். பொருள். 1004) பாது + கா - பாதுகா. பாதுகாத்தல் = உணவுப்பொருள்களைப் பகிர்ந்தளித்துக் காத்தல். வகு என்னும் அடியின்கீழ்க் காட்டப்பட்ட சொற்களெல்லாம், கொட்பாட்டன் - பாட்டன் - மகன் - பேரன் - கொட்பேரன் என்ற தொடர்பு போலத் தொடர்புபட்டிருப்பதையும், வகு என்பதன் திரிபான பகு என்னும் அடியே வடமொழியில் வழங்குவதையும் அதுவும் bhaj என்ற திரிவடிவிற் காட்டப்படுவதையும், பகு என்பதன் அடிப்பிறந்த வடமொழிச் சொற்கள் தென்மொழிச் சொற்கள் போலப் பல்கியும் தொடர்புபட்டும் இராமையையும், பகு என்னும் ஒரே யடியினின்று திரிந்துள்ள பக்கம், பாகு, பாகம் என்னும் சொற்கள், வடமொழியில் முறையே paksha, bahu, bhaga என வெவ்வேறு முதலெழுத்துடன் வழங்குவதையும், செவ்வன் ஆய்ந்து காண்க. 3. வீழ். வீழ்தல் = ஒருவர்மேற் காதல்கொண்டு விழுதல், அங்ஙன் விழுமாறு காதலித்தல், காதலித்தல், விரும்புதல். ‘To fall in love with’ என்னும் ஆங்கில வழக்கை நோக்குக. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (குறள். 1103) என்றார் திருவள்ளுவர். வீழ்-விழு. விழுதல் = விரும்புதல். விழுத்தல் = பிறர் விரும்பும்படி சிறத்தல். ஒருவர்க்கு வேண்டியவரைச் சிறந்தார் என்று சொல்வதையும், விரும்பப்படுகின்றவர் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையும், நம்பு நய என்னும் பகுதிகளிலிருந்து தலைமை குறிக்கும் நம்பன், நாயகன் என்னும் பெயர்கள் தோன்றியிருத்தலையும் நோக்குக. வடுக வரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் என்பது பழைய வழக்கு. விழுக்கழஞ்சு, விழுப்புண், விழுப்பேறு முதலிய தொடர்களில், விழுச்சொல் சிறப்புக் குறித்தல் காண்க. விழு - விழுமு. விழுமுதல் = சிறத்தல். விழுமிய = சிறந்த. ஒ.நோ: குழு - குழுமு - குழுமிய. விழுமு - விழுமம் = சிறப்பு. விழு - விழுப்பு-விழுப்பம் = சிறப்பு. விழுப்பு + அரையன் = விழுப்பரையன். விழு - விழா - விழவு = விரும்பிச்செய்யும் கொண்டாட்டம். விழா-வ்ரா (வ.). அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடாகிய தமிழ் வரலாறு என்னும் போலியாராய்ச்சி நூலில், வ்ரா என்னும் வடசொல்லினின்று விழா என்னும் தென்சொல் பிறந்துள்ளதாகக் கூறியுள்ள கூற்றின் புன்மையையும் புரைமையையும் நோக்கித் தெளிக. விழு - விழை. Gk. philos, desire. Philanthropy, Philology முதலிய ஆங்கிலச் சொற்களின் முதனிலை விழைவுச் சொல்லே. விழை - விழைச்சி = இன்பநுகர்ச்சி, புணர்ச்சி. விழை - விழைச்சு = புணர்ச்சி. விழை - விழாய்-விடாய் = நீர்வேட்கை, விருப்பம். விழு - விள் - விரு - விருந்து = விரும்பியிடும் சிறந்த வூண், அவ் வூணுக்குரிய புத்தாள், புதுமை. விரு - விரும் - விரும்பு. விள் - வெள் - வெம். வெம்மை = விருப்பம். வெம்மை வேண்டல் (தொல். 817) வெம்மை-வெய்யோன் = விரும்புகின்றவன், விரும்பப்படத் தக்கவன். ஒ.நோ: செம்மை - செய்யோன் - சேயோன். btŸ-ntŸ = ÉU«ò (É.), விரும்பத்தக்க தலைவன், தலைவன், சிற்றரசன், காதலை யுண்டுபண்ணும் காமன், குறிஞ்சித் தலைவனாகிய முருகன். வேள் + ஆளன் - வேளாளன் = பிறரை விரும்பி விருந்தோம்பும் உழவன். வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் (திரிகடு. 12) வேள் + ஆண்மை (ஆள் + மை) = வேளாண்மை = வேளாளன் தன்மையாகிய விருந்தோம்பல், அவன் செய்யும் பயிர்த்தொழில். வேள் - வேளான் = முருகன் கோயிற் பூசாரியாகிய குயவன். வேள் + கோ = வேட்கோ = குயவர் தலைவன், குயவன். வேள் - வேண் = விருப்பம். வேண் + அவா = வேணவா. வேள் - வேண்டு, ஒ.நோ: E. want. வேண்டு - வேண்டும் (தன்மைப் பன்மை உடன்பாடு) வேண்டு - வேண்டாம்-வேண்டா (தன்மைப்பன்மை எதிர்மறை) வேள் - வேட்கை = விருப்பம், நீர் விருப்பம் (தாகம்). வேள் - வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம், விருந் தோம்பல், திருமணம், விழா. வேள் - வேள்வு = யாகம், திருமண வரிசை. வேள் - வேட்டம் = உயிரிகளை விரும்பிப் பிடித்தல். வேள் - வேட்டை = உயிரிகளை விரும்பிப் பிடித்தல் வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு - வேடன் = வேட்டைத் தொழிலோன். விள் - பிள் - பிண் - பிணா - பிணவு - பிணவல் = விரும்பப்படும் பெண், பெண்விலங்கு. பிண் - பிணை = பெண் விலங்கு. பிண் - (பிணி) - பிடி. வெள் - பெள் - பெட்பு = விருப்பம், காதல். பெள் - பெண் - ஆடவனால் விரும்பப்படுபவள். பெள் - (பெட்டு) - E. Pet. பெண் - பெண்டு. பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி. பெண் - பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை. பெண்ணை - பெண்ணையன் = பெண்டன்மையன். பெண் - பேண். பேணுதல் = விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல். பெள் - பெட்டு - பெட்டை - பெடை - பேடை - பேடு - பேடன், பேடி. இதுகாறும், மூன்று சொற்குடும்பங்கள் காட்டப்பட்டன. கல் என்னும் வேரடிச் சொற்றொகுதிகள் காழ் கண் என்னும் அடிகளினின்று பிறந்து கருமை என்னும் வேர்க்கருத்து மறைந்து, விளையாடு, எரி, பார், கா முதலிய வினைப்பொருள்களைப் பெற்ற, களி காய் கண் காணி முதலிய சொற்களைக் கொண்ட தொகுதியாதலின், சொற்குலமென்றும்; ஈண்டுக் காட்டப்பட்ட தில் வகு வீழ் என்னும் மூவடிச் சொற்றொகுதிகள், திண்மை, பகுப்பு, விருப்பம் ஆகிய மூலக் கருத்துகளுள் ஒவ்வொன்றையே தழுவிய சொற் கூட்டங்களாதலின், சொற்குடும்ப மென்றும் கூறப்பட்டன. ஒரு குடும்பம் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமுங் சேர்ந்து ஒரு குலமாதலும் போல, ஒரு சொற்குடும்பமும் பல குடும்பங்களைத் தோற்றுவித்தலும், அப் பல குடும்பமுஞ் சேர்ந்து ஒரு குலமாதலும் உண்டு. எடுத்துக்காட்டாக, தின், திரி, திருகு, திரும்பு, திறம்பு, திமிறு முதலிய சொற்களோடு சேர்க்கப்படின், தில் குடும்பமும் ஒரு குலமாகி விடும். அதன் திறமெல்லாம் ஈண்டு விரிப்பின் பெருகும். எம் ஏனை நூல்களுட் கண்டுகொள்க. குடும்பு, குடும்பம், குடி, குலம், பால், இனம், வரணம் என மேன்மேல் விரியும் மக்கட் கூட்டப் பகுப்பு, சொற்களுக்கும் ஏற்கும். இப் பகுப்புகளுள் ஒவ்வொன்றும் சிறியது பெரியது என இருதிறப்படும். சொற்பெருங் குலம் மக்கட்டொகுதி, குடும்பம் முதல் வரணம்வரை பல்வகைத் தொகுதி யாகப் பகுக்கப் பெறும். கணவனும் மனைவியும் மணமாகாத மக்களுமாகக் கூடிவாழுங் கூட்டம் குடும்பாகும். பெற்றோரும் மணமாகிப் பிள்ளைபெற்ற மக்களு மாகக் கூடிவாழுங் கூட்டம் குடும்பமாகும். அம்மீறு பெருமைப் பொருள் விகுதியாதலின், குடும்பிற் பெரியது குடும்ப மென்றும், இவ் விரு பெயர் களும் உலகவழக்கில் தடுமாறி வழங்குகின்றன வென்றும் அறிதல் வேண்டும். அம்மீறு பெருமைப்பொருள் விகுதியாதலை, கண்டு - கண்டம், கம்பு - கம்பம் என்னும் பெயரிணைகளிற் காண்க. பல தலைமுறையாகத் தொடர்ந்துவரும் குடும்பம் குடியாகும். குடியைக் கோத்திர மென்பர் வடமொழியாளர். தொடர்புள்ள பல குடிகள் சேர்ந்தது குலமாகும். செட்டியார் முதலியார் என்பன குலங்கள். குறவர், மறவர், இடையர், குடியானவர் (உழவர்), செம்படவர் என்பன முதற்காலத்தில் ஐந்திணைக் குடிகளாக விருந்து, பின்பு ஐங்குலங்களாக மாறிவிட்டன. தனித்தவரும் தொகுதியானவருமாகத் தொழிலொத்த பல குலங்கள் அல்லது குலத்தார் சேர்ந்தது பாலாகும். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன தமிழகத்து நாற்பால்கள். அந்தணர் என்பார், அருள் முதிர்ந்த முனிவர். குடியானவர், கவுண்டர், அகம்படியர் முதலிய உழுதுண்ணுங் குலங்களும் முதலியார், வெள்ளாளர் முதலிய உழுவித் துண்ணுங் குலங்களும் சேர்ந்தது வேளாண் பாலாகும். இங்ஙனமே பிறவும். பல பால்கள் சேர்ந்தது இனம். தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளியர் முதலியன இனங்கள். இனத்திற்கு மேற்பட்டது வரணம். ஆரியர், திராவிடர், மங்கோலியர் முதலியர் வரணங்கள். வரணம் என்னும் சொல்லின் இயற்பொருள் நிறம் என்பதே. ஆதலால், நிற வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டதே வரணப் பகுப்பாகும். ஆரியர் வெண் ணிறத்தர்; மங்கோலியர் பொன்னிறத்தர்; திராவிடர் புகர் நிறத்தர். மக்கட் கலப்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் வரணத் தாரின் நிறம் மாறுவதுண்டு. குடும்பு முதல் வரணம் வரை ஒவ்வொரு தொகுதியும் அளவும் தொடர்பும்பற்றிச் சிறியதும் பெரியதும் என இருதிறப்படும். மக்கள்போன்றே சொற்களும் குடும்பு முதல் வரணம் வரை பலவகைத் தொகுதிகளாகப் பகுத்தற் கேற்றன. தமிழிலுள்ள சொற்களெல்லாம், தமிழரைப்போல் குடும்பு முதல் பால் வரை ஐவகைத் தொகுதிகளாகப் பகுக்கப் பெறும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிக ளெல்லாம் இனமொழிகளாதலின், அவற்றிலுள்ள பொதுச்சொற்களெல்லாம் இனச் சொற்களாகும். திராவிடச் சொல்லோடு தொடர்புள்ள ஆரியச் சொற்களும், சித்தியச் சொற்களும், அவை போன்ற பிறவும், வரணம் என்னும் தொகுதிப்பட்டன. ஆதிதிராவிட மக்கள் தட்பவெப்பநிலை வேறுபாட்டால் எங்ஙனம் ஆரிய ரானாரோ, அங்ஙனமே அவர் சொற்களும் ஆரியமாய் மாறிவிட்டன என்க. இக் கட்டுரையின் தொடக்கத்தில் காட்டப்பெற்ற சொற்குலத்தில், முதலிலிருந்து கன்று-அன்று என்பது வரையும் ஒரு சொற்குடும்பமாகும். அதனொடு கள்-களம் என்பது வரையுள்ள பகுதியைச் சேர்த்துக்கொள்ளின் ஒரு சொற்குடும்பமாகும். அதனொடு கறு-காறு என்பதுவரை சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குடியாகும்; அதனொடு இறுதிவரை சேர்த்துக் கொள்ளின் ஒரு சொற்குலமாகும். கல் என்னும் வேர், குல் என்னும் வேரின் திரிபாகும். சொல்லாக்கத் திரிவில் சிறுபான்மை உகரம் அகரமாகத் திரிதல் உண்டு. எ-கா: முடங்கு-மடங்கு குரும்-கரம் (இந்தி) குடும்பு-கடும்பு குடம்-கடம் (வடமொழி) Butt (K£L), cuckoo(F¡T) முதலிய ஆங்கிலச் சொற்களில் உகரம் அகரமாக ஒலிப்பது இக் காரணம் பற்றியே. குல்என்னும் வேர்ச்சொற் பொருள் பொருந்தல் அல்லது கலத்தல். குல் - குலவு = பொருந்து, கூடு. குலவு - குலாவு. குல் - குலம் = கூட்டம், வகுப்பு. குல் - குலை = கூட்டம், கொத்து. குள் - குழு = கூட்டம், திரட்சி. குழு - குழூஉ. குழு - குழாம், குழு-குழை = திரண்ட காதணி. குழு - குழுமு - குழுமம், ஒ.நோ: L. glomus, E. glomerate, globe, etc. குழு - குழவி = உருண்ட அறைகல். குள் - குண்டு = திரண்டது, உருண்டையானது. பல பொருள்கள் அல்லது பகுதிகள் ஒன்று சேரும்போது திரட்சியும் அதனால் உருட்சியும் உண்டாகும். ஒன்றோடொன்று ஒட்டாப் பொருளாயின் திரட்சிமட்டும் உண்டாகுமென்றும், ஒட்டும் பொருளாயின் திரட்சியோடு உருட்சியும் உண்டாகுமென்றும் பகுத்தறிதல் வேண்டும். மக்கட்டிரளையும் மட்டிரளையும் நினைத்துக் காண்க. குண்டு - குண்டை = உருண்டு திரண்ட எருது. குண்டு - குண்டன் = திரண்டவன், உடல் வலிமையால் பிறரை வருத்துபவன். குண்டு - குண்டான் = திரண்ட தடி. குண்டு - குண்டா = திரண்ட வடிவான கலம். குண்டு - குண்டலம் = திரண்ட காதணி. குல் - கல் - கல = பொருந்து, கூடு. கல் - கல்வி, கலவை, கலப்பு. கல - கலம்பு - கலம்பம் - கதம்பம். கலம்பு - கலம்பகம். கல - கலகம் = பலர் கலந்து செய்யும் சண்டை. கைகலத்தல் என்னும் வழக்கை நோக்குக. கல - கலாம், ஒ.நோ: பொரு-போர். பொருதல் = பொருந்துதல், கலத்தல். கல - கலங்கு - கலக்கு - கலக்கம். கலங்கல் = பல பொருள்கள் கூடுதல், அதனால் உண்டாகும் மயக்கம். மண் தூசி முதலிய பிற பொருள்களுடன் கலந்த நீர் கலங்கல் நீராகும். பல பொருள்கள் கலந்திருக்கும்போது, அவற்றுள் வேண்டியதைப் பிரித்தறிய முடியாத கலக்கம் ஏற்படுதலின், கலத்தற் கருத்தினின்று கலக்கக் கருத்துத் தோன்றிற்று. அதுவோ, இதுவோ, அன்றி வேறெதுவோ என்றிப்படி ஒன்றைத் துணியமுடியாதவாறு பல கருத்துகள் மனத்திற் கலத்தல் மனக்கலக்கம் என்றறிக. கவர்வழிகளைக் காணும்போது வழிப் போக்கனுக்கும், ஒருநிலைப்பட்டவர் பலர் கூடியிருக்கும்போது அவருள் ஒருவரைக் காண விரும்பும் புதியோனுக்கும் மனக்கலக்கம் ஏற்படுதல் காண்க. நளன் வடிவில் நால்வரைக் கண்ட தமயந்தி கலக்கத்தையும் நினைத்துக் காண்க. கலக்கம் என்பதன் ஒருபொருட் சொற்களான மயக்கம், மருள் என்னும் சொற்களும் இதே மொழிப்பொருட் காரணத்தைக் கொண்டவையே. மயங்கு - மயக்கம். மயங்குதல் = கலத்தல், கலங்குதல். திணைகளும், வேற்றுமைகளும் தம்முள் ஒன்றோடொன்று கலத்தல் திணைமயக்கம் என்றும் வேற்றுமை மயக்கம் என்றும் கூறப்படும். பகலும் இரவும் கலக்கும் மாலையை மயங்குபொழுது என்பர். இது நூல்வழக்கில் மருண்மாலை எனப்படும். இனி, ஒளியின்மையாலோ, காதலர்ப் பிரிந்தமையாலோ மக்கள் மனங்கலங்கும் மாலை மருண்மாலை எனினுமாம். மருட்சி = மயக்கம். மரு - மருள். மருவுதல் = பொருந்துதல், கலத்தல். மரு - மருமம் - மருமர் - மம்மர் = மயக்கம். Confusion என்னும் ஆங்கிலச் சொல்லும் கலத்தல் என்னுங் கருத்தடியாகவே மயக்கப் பொருளைக் கொண்டதாகும். (con = together, fuse = mix) கல - கலுழ் - கலுழி. கலுழ்தல் = கலத்தல், கலங்குதல். கலுழி = கலங்கல் நீர், மையொடு கலந்த அல்லது மனங்கலங்கி யழும் கண்ணீர். கலக்கக் கருத்தினின்று இருட்கருத்தும், இருட்கருத்தினின்று கருமைக் கருத்தும் தோன்றும். அறிவு அகவொளி யாதலின், அறியாமை அல்லது மயக்கம் அகவிருள் எனப்படும். ஒன்றன் உண்மை யறியாது கலங்கும் கலக்கம் பொருள் தெரியாத இருள்போன்ற நிலையே. ‘To be left in the dark’ என்பர் ஆங்கிலரும். இருள் கருநிறம் ஆகையால், கலக்கப் பொருட்சொல் கருமைப் பொருளைத் தழுவிற்று. கல் - கால் = கருப்பு. கல் - கன்று = வெயிலாற் கருகு. ஒரு சொற்கு ஒரு பொருண்மை, உத்திக்குப் பொருந்துவதோடு ஒப்புமையால் உறுதிப்பட வேண்டும். கலத்தற்பொருள் தரும் கல் என்னும் சொல் கருமைப்பொருள் குறித்தல் போன்றே, அதன் ஒருபொருட் சொல்லான மய என்னும் சொல்லும் கருமைப் பொருள் குறிக்கும். மயங்கு என்னும் சொல்லின் வேர் மய என்பதே. கலங்கு என்னும் சொல்லின் வேர் கல என்றிருத்தல் காண்க. மய - மயங்கு - மசங்கு. மய = மயல் - மால். மயல் - மையல் = காதல் மயக்கம். மால் = மயக்கம், கருமை, கரிய மேகம், கரிய விண்டு (விஷ்ணு). மால் - மழை. மால் - மாரி = கரியாள், காளி, மழை. மால் - மாலம் = மயக்கம், ஏமாற்றம். மால் - மாலை = மயக்கம், பலபொருள் கலந்த வரிசை, மயங்கும் வேளை. மாலை-மாலா (வ.). மால் - மா - மை. மாமை = கருமை. மாயோன் = கரியன், விண்டு. ஒ.நோ: E. malbino = கரியன். மை = கருப்பு, மேகம், வெள்ளாடு(காராடு), கரிய பசை அல்லது குழம்பு, பசைப்பொருள். மை - மசி - மசகு = வண்டி மை. காட்சிப்பொருட் கருத்து, கருத்துப்பொருட் கருத்து என்னும் இருவகைக் கருத்துள், முன்னதினின்று பின்னது தோன்றுவதே இயல்பாயி னும், இன்னதினின்றே இன்னது தோன்றவேண்டு மென்னும் யாப்புற வில்லை. இவ் விரண்டுள் எதனின்றும் எதுவும் தோன்றலாம். அல்லாக்கால் சொல்லாக்கம் பெரிதும் முட்டுப்படும். இக் கட்டுரையின் முதற் பகுதியில் வரையப்பெற்ற கல் என்னும் சொற்குலத்தோடு, அதன் முற்படையாக இங்குக் காட்டப்பெற்ற பகுதியைச் சேர்த்துக்கொள்ளின், ஒருசொற் பெருங்குல மாகும். எல்லாத் தமிழ்ச் சொற்களும் பெரும்பாலும் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் ஐந்நெடில்களினின்றே பிறந்திருப்பதால் அவ் வைந்தும் சொற்பா லடிகளாகும். இனமும் வரணமும் முன்னர்க் குறிக்கப்பட்டன. இவற்றின் விளக்கத்தை இனிவரும் நூல்களிற் கண்டுகொள்க. இதுகாறும் கூறியவற்றால், மக்கள் போன்றே சொற்களும், குடும்பு முதல் வரணம் ஈறாகப் பல்வகைத் தொகுதிகளாக விரிந்து இயங்குகின்றன வென்றும், மக்கட்குள்ள தொடர்பு போன்றே அவர் சொற்கட்கும் மொழி கட்கும் தொடர்புண்டென்றும் நடுநிலையாகவும் நெறிப்படவும் நுட்பமாக வும் ஆய்ந்து நோக்குவார்க்குச் சொற்றொடர்பும் மொழித்தொடர்பும் புலனாவது திண்ணமென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. அடிச்சொல் காண்வழி பல மரங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டிருப் பின், பார்த்தமட்டில் அவற்றின் அடிகளைக் காண்பது அரிதாகும். அவற்றின் நுனிக்கொழுந்திலிருந்து இணுக்கும், வளாரும், குச்சும், போத்தும், சினையும், கொம்பும், கிளையும் கவையுமாக ஒவ்வொன்றாய்க் கீழ்நோக்கிப் பிரித்துக்கொண்டேவரின், இறுதியில், நிலத்தின்மேல் முதற் கீழ்ப்பகுதியாகவுள்ள அடியைக் காணலாம். அதன்பின் அவற்றின் வேரைக் காண்பது தேற்றமாயினும், நிலத்தைத் தோண்டினாலன்றிக் காண முடியாது. இப் பன்மரப் பிணையல் போன்றே, பல அடிகளினின்று கவைத்துக் கிளைத்துப் பல்கிப் பெருகியுள்ள சொற்றொகுதிகளும், பார்த்தமட்டில் பிரித்துணரப்படாவாறு, தம்முள் மயங்கிக் கிடக்கின்றன. அவற்றின் அடியைக் காண்பதற்கும் மேலிருந்து கீழ்நோக்கி வரல் வேண்டும். அடியைக் கண்டபின், ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி வேரைக் காண முடியாது. இதைக் குறித்தற்கே, எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். பெயர். 1) என்று கூறிய தொல்காப்பியர், மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். உரி. 96) என்று வரையிட்டார். இதனை யுணரமாட்டாத பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரியர், சொன்மூலத்தைக் காணவே முடியாதென்று தொல்காப்பியர் கூறியதாகத் தம் அறியாமையை அவர்மீது ஏற்றிக் கூறினர். சொல்லடி காண்வழியைக் காட்டுமுகமாக, கோடு என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு, அதன் அடியை ஈண்டு ஆய்கின்றேன். கோடுஎன்னும் சொல், கோணுதல் அல்லது வளைதல் என்னும் பொருளைக் கொண்டு, பெயராகவும் வினையாகவும் வழங்கும் சொல். இதன் வழியாகச் சில சொற்கள் பிறந்துள்ளன. வளைதற் கருத்தினின்று வட்டக் கருத்தும், வட்டக் கருத்தினின்று சூழ்தற் கருத்தும் தோன்றும். ஒரே பொருள் வட்டமாக, மேன்மேல் வளைந்து செல்வது திருகல்முறுகலான புரிதலாதலின், வளைவுக் கருத்தி னின்று புரிதற் கருத்தும் தோன்றும். எ-கா: வளை - வளையம் (வட்டம்) வளை - வளைசல் (சூழ்வு) வளை - வளை (சங்கின் வல இடப் புரிவு.) கோடுதல் = வளைதல்.கோட்டம் = வளைவு, மதிலால் வளையப்பட்ட கோவில் அல்லது சிறைச்சாலை, வேலியால் வளையப்பட்ட மாட்டுக் கொட்டில். கோட்டை = வளைந்த மதில், வட்டமான நெற்கூடு, மதியைச் சூழ்ந்துள்ள ஊர்கோள். கோட்டகம் = வளைந்த குளக்கரை, கரை. கோடு = வளைவு, வளைந்த வரி, வரி. கோடு = வளைந்த மரக்கிளை, கிளை. கோடு = வளைந்த கொம்பு, கொம்பு. கோடு = வளைந்த கரை, கரை. கோடு = வளைந்த சங்கு, சங்கு. மலையைக் குறிக்கும் `கோடு' என்னும் சொல் `குவடு' என்னும் சொல்லின் திரிபாதலின், வேறாம். கோட்டம் என்னும் தென்சொல்லே, வட மொழியில் கோஷ்ட என்றும் இலத்தீனில் castrum என்றும், அதன் வழியாய் ஆங்கிலத்தில் ‘caster’, ‘chester’ என்றும் திரியும். ஆங்கிலத் திரிவுகள் ஊர்ப்பெய ரீறாகவும் வழங்கும். எ-கா: doncaster, colchester, exeter(excester). இப் பெயர்களை, அறுப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை முதலிய தமிழ்நாட்டு ஊர்ப்பெயர்களுடன் ஒப்புநோக்குக. கோடு என்பதன் நேர்மூலம் கோண். ஒ.நோ: பாண் - பாடு, பேண் - பேடு. கோண்என்னும் பகுதியினின்று, கோணு, கோணல், கோணம், கோணை முதலிய சொற்கள் பிறக்கும். கோணம்என்னும் தென்சொல்லே, கிரேக்கத்தில் ‘gonia’(angle) என்றும், அதன் வழியாய் ஆங்கிலத் தொடர்ச்சொற்களில் gon என்றும் திரியும். எ-கா: Trigonometry (âÇnfhz மாத்திரை). polygon (gy கோணம்). கோண்என்பதன் நேர்மூலம் கோள். ஒ.நோ: பெள் - பெண், வேள் - வேண். கோள் = வளைவு, வட்டம், உருண்டை, உருண்டையான கிரகம். ஊர்கோள் = மதியைச்சுற்றி ஊர்ந்துள்ள வட்டம். கோள்என்னும் பகுதியினின்று, கோளம், கோளா, கோளகை முதலிய சொற்கள் பிறக்கும். வட்டக் கருத்தினின்று உருட்சிக் கருத்தும், உருட்சிக் கருத்தினின்று திரட்சிக் கருத்தும் தோன்றும். வளைவு முற்றியதே வட்டம். கன வடிவான வட்டமே உருண்டை. கோள் + அம் = கோளம். கோளம் = உருண்டை. பூகோளம், குடகோளம், குணகோளம், அண்டகோளம் முதலிய தொடர்களில் கோளம் என்னும் சொல்லின் பொருளை நோக்குக. கோள் + ஆ = கோளா. ஆ ஒரு தொழிற்பெயர் விகுதி. எ-கா : உண் + ஆ = உணா. இரு + ஆ = இரா. இருத்தல் = கருத்தல். கோளா = உருண்டையான ஒருவகைச் சிற்றுண்டி. கோள் + அகை = கோளகை. கோளகை = உருண்டை. `அகை' ஓர் ஈறு; வாடகை கொட்டகை என்பவற்றிற் போல. கோளம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கு அருகியமையாலும், வடமொழியில் வழக்குப் பெருகியமையாலும், வடசொற்கள்போலத் தோன்றுகின்றன. இங்ஙனமே வடமொழிச் சென்ற பிற தென்சொற்களிற் பலவும் என்க. ல, ள, ழ ஆகிய மூன்றும், முறையே பிஞ்சும், காயும், கனியும் போல, மெலிந்தும் திரண்டும் முதிர்ந்தும் உள்ள ஒரே ஒலியின் வேறுபாடுக ளாதலின், சொற்களில் ஒன்றுக்கொன்று போலியாக வருவதுண்டு. எ-கா : வேலை-வேளை, பவளம்-பவழம். இம் முறையில், கோள் என்னும் சொல், கோல் என்னும் வடிவும் கொள்ளும். உண்மையில், கோல் என்பதே முந்தியதாகும். கோல் = வளைவு, உருட்சி, திரட்சி. திரண்ட தடி, தடி, தண்டு, அடி, காம்பு. கோல்தொடி = திரண்ட வளையல். கோல் + இ = கோலி. கோலி = உருண்டை, கல் மண் கண்ணாடி முதலியவற்றாலாய சிற்றுருண்டை. கோள்என்பதன் நேர்மூலம் கொள். கொள் = (வி.) வளை, சுற்று, சுழல். கொள் = (பெ.) வளைவு, வளைந்த காணக்காய், காணம். காயும் கோணக்காய் சொல்லடா மைத்துனா கதையும் விடுவித்தேன் கொள்ளடா மைத்துனா என்பது ஒரு விடுகதை உரையாட்டு. கொள்-கோள்(முதனிலை திரிந்த தொழிற்பெயர்) = கதிரவனைச் சுற்றிவரும் கிரகம் எனினுமாம். கொள் + பு = கொட்பு. கொட்பு = சுற்றுகை. கொள் என்னும் பகுதியினின்று , கொக்கி, கொண்டி முதலிய சொற்களும், கொட்டு, கொடு முதலிய வழியடிகளும் பிறக்கும். கொள்-கொட்கி-கொக்கி = வளைந்த கொளுவி. ஒ.நோ: A.S. hoc, hooc; D. hook; Ice. haki; Ger. haken; O.H.G. hako; L.G. hake; E. hook. கொள்-கொட்கு-கொக்கு = கொக்கிபோல் வளைந்த கழுத்தையுடைய பறவை. கொள்-கொண்டி. ஒ.நோ: வள்-வண்டி. கொண்டி = கொக்கி அல்லது வளையமுள்ள நாதாங்கி. கொள்-கொம்-கொம்பு = வளைந்த கிளை, கிளை, வளைந்த மருப்பு அல்லது கோடு. கொம்பு என்னும் சொல், தெலுங்கில் இன்றும் கொம்மு என்றே வழங்கும். ஒ.நோ: வள் - வம் - வம்பு. கொம்பு - கொப்பு. கொம்பு - கம்பு. கொள் - கொட்டு - கொட்டம். ஒ.நோ: வள் - வட்டு - வட்டம். கொட்டம் = வளைவு, வட்டமான மாட்டுத் தொழுவம் அல்லது பட்டி, நேர்மையில்லாத, அஃதாவது, நீதி நெறியினின்று கோணிய கொடிய ஆரவாரம். முதற் காலத்தில் ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் வட்ட வடிவமாகவே அமைக்கப்பட்டன; பிற்காலத்தில் மழைக் காப்பிற்குக் கூரை யமைந்தபோது கூடமாகக் கட்டப்பட்டன. கொட்டு + இல் = கொட்டில் = மாட்டுத் தொழுவம், தொழுவம் போன்ற கூடம், பட்டறை, ஆயுதசாலை. கொட்டு + அகை = கொட்டகை. கொட்டகை = தொழுவம், கூடம். இன்றும் வடார்க்காட்டார் மாட்டுத் தொழுவத்தைக் கொட்டகை என்பர். கொட்டு + ஆரம் - கொட்டாரம். ஆரம் என்பது ஓர் ஈறு; கூடாரம், வட்டாரம், பணியாரம் என்பவற்றிற் போல. கொட்டாரம் = வட்டமான களஞ்சியம், களஞ்சியமுள்ள புறக்கடை, புறக்கடை. இன்றும் நெற்கூடுகள் வட்டமாகவே கட்டப்படுகின்றன. கொள்-கொடு-கொடுமை = வளைவு, நீதிநெறியினின்று கோணிச் செய்யும் தீங்கு. கொடுமையுடையார், கொடியார். கொடுங்கோல் = வளைந்த கோல், வளைந்த கோற்போல் நீதிநெறியினின்று கோணிய ஆட்சி. கொடுந்தமிழ் = இலக்கணநெறியினின்று கோணிய தமிழ். கொடுக்காய் = வளைந்த காய். கொடுக்காய்ப் புளி, கோணப் புளியங்காய் என்னும் சொற்களை நோக்குக. கொடு - கொடுக்கு = வளைந்த முள்ளுறுப்பு. கொடுக்கு - E. crook; W. croog; F. croc. ட - ர, போலி. எ-டு: படவர் - பரவர், முகடி - முகரி. கொடு - கொடி = வளைந்த தண்டுள்ள செடி. கொடு - கொடி = வளைவு. கருங்கொடிப் புருவத்து(மணிமே. 3 : 119). கொடு - கொடி = கதிரவன் எழுந்து வளையும் கிழக்கு. கொள் என்பதன் நேர்மூலம் குள். குள் - குண் - குணம் = வளைவு, கதிரவன் எழுந்து வளையும் கிழக்கு. குணம் - குணகு - குணக்கு = வளைவு, கிழக்கு. குணகுதல் = வளைதல். நாய்வாலைக் குணக்கெடுக்கலாமா? என்பது பழமொழி. குணக்கு - குணுக்கு = காதுவளையம். குணம் - குடம் = வளைவு, கதிரவன் வளைந்துவிழும் மேற்கு, உருண்ட கலம். குடம் - கடம்(வ.). குடம் - குடந்தம் = வளைவு, வணக்கம்(உடல் வளைவு), வழிபாடு. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி (திருமுருகு. 229) குடம் - குடா = வளைந்த கடல். குடாவடி = வளைந்த பாதம். குடம் - குடி = வட்டமான அல்லது வளைந்த குடியிருப்பு, வீடு, வீட்டுத் தொகுதியாகிய சேரி அல்லது ஊர், வீட்டிலுள்ள மனைவி, மனைவியோடு தொடங்கும் குடும்பம், குடும்பத்தின் பெருக்கமான குலம், வீட்டுவாசம், வீட்டுவாசி. வளைந்த புருவம்(பிங்.). குறிஞ்சி நிலத்தூர் சிறுகுடி எனப்படும். காரைக்குடி மன்னார்குடி எனப் பல வூர்ப்பெயர்கள் குடி என்னுஞ் சொல்லை ஈறாகக் கொண்டுள்ளன. ஏழை மக்கள் சிலர் மூங்கில் தட்டியை வளைத்த கூண்டுகளையே குடியிருப்பாக வைத்துக்கொண்டு வாழ்வதை இன்றுங் காணலாம். ஒ.நோ: இல் = மனை, மனைவி, குடும்பம், குடி, குலம். குடி - குடிகை = சிறு வீடு, சிறு கோயில். கை ஒரு குறுமைப் பெயரீறு. குடிகை - குடிசை = சிறு வீடு, cottage. குடு - குடில் = சிறு வீடு. இல் ஒரு குறுமைப் பெயரீறு. எ-டு : தொட்டி-தொட்டில். குடில்-குடிலம் = வளைவு, சிறு வீடு. குடிலம்-குடீரம்(வ.). குடி - A.S. cote; E. cot; Ger. kot, koth, kote; Ice. and D. kot = hut or small house. குடி - (குடிம்பு) - குடும்பு - குடும்பம் - kutumba(t.). குடும்பு - கடும்பு = குடும்பம்,சுற்றம். கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது (புறம். 68 : 2) உ-அ, போலி. v-L.: முடங்கு-மடங்கு, முறி-மறி, குடம்-கடம்(வ.). குடம் - குடுவை-குடுக்கை = உருண்டைக் கலம், சுரைக்கலம். குள் என்பதன் நேர் மூலம் குல். குல் - குலம் = வட்டமான குடியிருப்பு, வீடு, வீட்டிலுள்ள குடும்பம், குடும்பத்தின் பெருக்கமான மக்கள் வகுப்பு, கூட்டம், தொகுதி. தேவகுலம் = கோயில். குலம் - குலன். E. clan; Gael. clann; It. clann, cland. முதற்காலத்தில் குடிசைகளும் வீடுகளும் வட்ட வடிவாய்க் கட்டப்பட்டன; அல்லது வளைந்த கூரையுடையனவா யிருந்தன. வட்ட வடிவான சிறு வீடுகளை இன்றும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணலாம். குல் - குலவு, குலாவுதல் = வளைதல். குலவு - L. curvus, E. curve. குலவு - குலாவு. குலாவுதல் = வளைதல். குல் - குர் - குரம் = வட்டமான குதிரைக் குளம்பு. குரம் - குரங்கு = வளைவு, கொக்கி. குரங்குதல் = வளைதல். குரம் - குரம்பை = வளைந்த குடில், குடில். குரம் - குரவை = மகளிர் வட்டமாக நின்று ஆடுங் கூத்து. குரவை - Gk. choros = originally a dance in a ring. L. chorus, coracle. குல் - குன். குன்னுதல் = வளைதல், வளைந்து குறுகுதல். குன் - குனி. குனிதல் = வளைதல். குன் - குனுகு. குனுகுதல் = உடல் வளைதல். குன் - கூன் = முதுகு வளைவு. குல் என்பதன் நேர் மூலம் உல். உல் - உலம் = உருட்சி, திரட்சி, திரண்ட கல். உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல். உலம் - உலகு - உலகம்-லோக(வ.) = உருண்டையான மாநிலம் அல்லது சுழலும் கோள். உல் - உல - உலவு. உலவுதல் = சுற்றுதல். உல - உலா = நகரத்தைச் சுற்றி வருதல், அரசனது வெற்றியுலாவை வருணிக்கும் நூல். உலா - உலாவு = (வி.) நகரத்தைச் சுற்றிவா, சுற்றி வா. உல் - உர் - உருள். உருளுதல் = வட்டமாகச் சுழன்று செல்லுதல். உருள் - E. whirl, L. roll. உருள் - உருளை - உருடை - ரோதை - L. rota = a wheel. இதுகாறும் காட்டப்பட்ட சொற்கள் கண்ட வளவில் தொடர்பறியப் படாது பன்மரப் பிணையல் போலப் பிற சொற்களுடன் பின்னிக் கிடப்பி னும், ஒரு முறை பிரித்துக் காட்டப்பட்டபின் எவர்க்கும் தொடர்பு விளங்காதிரா. கோடு என்னும் உச்சிக் கொழுந்திலிருந்து உல் என்னும் அடி வரை பிரித்துக் காட்டப்பட்டது. உல் என்பதற்கு மூலமாகிய வேரோ ஆழ்ந்த ஆராய்ச்சியினாலன்றி அறியவும் அறிவிக்கவும் முடியாது. அவ் வாராய்ச் சியை என் ஊகாரச் சுட்டு வளர்ச்சி என்னும் நூலிற் கண்டுகொள்க. இச் சொல்லாராய்ச்சிக் கட்டுரையால் விளக்கப்பெறும் சொன்னூல் மொழிநூல் உண்மைகளும் நெறிமுறைகளுமாவன: (1) உலகத்திற் பல மொழிகள், சிறப்பாகத் திருந்திய மொழிகள், ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன. (2) தமிழிலுள்ள பன்மொழிப் பொதுச் சொற்கட்குத் தமிழில்தான் வேருண்டு. (3) ஒரே பெருங் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மூலத்தினின்று மேலும் மேலும் பல அடிகளும் வழியடிகளும் தோன்றிப் பற்பல சொற்களைப் பிறப்பிக்கின்றன. (4) ஒரு கருத்தினின்று மற்றொரு கிளைக்கருத்துத் தோன்றும். (5) பொருள் திரியும்போது சொல்லும் திரிய வேண்டும். (6) சொற்கள் திரியும்போது பல்வகை வேறுபாடுகளையும் ஏற்கும். (7) எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. ஆனால், மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (8) தமிழ் ஓர் இயன்மொழி; அஃதாவது தானே இயற்கை நெறியில் தோன்றிய தாய்மொழி. (9) மொழி, ஒரு சில மூலவொலிகளினின்று தோன்றி வளர்ந்த வளர்ச்சியே. (10) மொழி மாந்தன் அமைப்பே; கடவுள் படைப்பன்று. - ``செந்தமிழ்ச் செல்வி'' செப்பிடெம்பர் 1947 6 சொற்பொரு ளாராய்ச்சி எந்நாட்டிலும் எம்மொழியிலும் பொதுமக்கள் வாயிலாய்த் தோன்றிய இயற்கைச் சொற்கள் எல்லாம் ஒவ்வோர் பொருளைக் கொண்டவையே. இதனாலேயே, ``எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். சொல். 640) என்றார் தொல்காப்பியர். தனிச்சொல்லெல்லாம் பொருள் குறித்தனவே யெனின், அத் தனிச் சொற்களாலான தொடர்ச்சொற்களும் பொருள் குறித்தனவே யென்பது சொல்லாமலே பெறப்படும். மேனாட்டாரியரும் கீழ்நாட்டாரியரும் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தத்தம் மொழிச்சொற்கட்கு மூலம் கண்டு வைத்திருக்க, இவ் விருபதாம் நூற்றாண்டிலும், தக்க துணையிருந்தும், கால்டுவெல் போன்ற அயல்நாட்டறிஞர் வழிகாட்டியும் தமிழ்ச்சொற்களின் வேர்களையும் மூலத்தையும் தமிழர் காணாதும் கவனியாதுமிருப்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். திரிபினாலுருவான ஆரிய மொழிகளிலும் சொல்லாராய்ச்சி பயன்படுவதாயின், இளங் குழந்தை வாயிற் றோன்றினாற் போல் இயல்பாயெழுந்த தமிழ்மொழியில் மிகமிகப் பயன்படுமென்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. தனிச்சொல் தொடர்ச்சொல் ஆகிய இருவகைச் சொற்களில், முன்னதற்கு வேர் காண்பது அரிதாயினும் பின்னதற்கு மூலங் காண்பது எளிதென்றே கூறத்தகும். அதை மெய்ப்பிக்கும் அளவாகச் சில தொடர்ச் சொற்களின் வரலாற்றைக் காட்டுகின்றேன். சீர்தூக்கல்: சீர் = துலைத்தட்டு. தூக்கல் = தூக்கி நிறுத்தல். சீர் தூக்கல் = சரக்கெடையை நிறுத்தறிந்தாற்போலப் பொருள்களின் இயல்பை எண்ணியறிதல். அரவணைத்தல்: அரவு = பாம்பு. அணைத்தல் = தழுவல். அர வணைத்தல் = பாம்பு பின்னித் தழுவினாற்போல நெருங்கக் கட்டி யணைத்தல், அங்ஙனம் அணைத்தாற்போலப் பாதுகாத்தல். கட்டாயம்: கட்டு = செலுத்து. ஆயம் = வரி. கட்டாயம் = வரி செலுத்துதல்போற் கண்டிப்பு. ஏராளம்: ஏர் = கலப்பை. ஆள் + அம் = ஆளம் = ஆளின் தன்மை. ஏராளம் = உழவன் வருவாய்போல் மிகுதியாயிருத்தல். உழவன் நேரடியாயும் மிகுதியாயும் உணவுப்பொருளை விளைவித்தலின் பொருள் மிகுதி ஏராளமெனப்பட்டது. அம் மிகுதியினாலேயே உழவன் வேளாண்மை செய்து வேளாளனாயினன். `வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான்''. (திரிகடு. 12) தாராளம்: தார் = சேனை. ஆளம் = தன்மை. தாராளம் = படைமறவர் போல், விருப்பம் போலப் பிறர் பொருளைக் கையாடுதல் அல்லது வழங்கல். இன்றும் படைமறவர் பிறர்பொருளை மனம்போற் பயன் படுத்தலும் கொள்ளை யடித்தலும் காண்க. சிங்கியடித்தல்: சிங்கி = தாளம். அடித்தல் = தட்டுதல். சிங்கி யடித்தல் = இரப்போன் தாளம் தட்டி இரப்பதுபோல் திண்டாடுதல். தாளக்கருவியை உருவக(ரூபக) தாளத்தில் தட்டினால் சிங்சீயான் என்ற ஒலியெழும். இதனால், தாளக்கருவிக்குச் சிங்கியென்றும் சீயான் என்றும் இருபெயருண்டு. தாயமாடல்: தாய் + அம் = தாயம் = தாயினின்று பெறும் உரிமை. ஆடல் = விளையாடல். தாயமாடல் = சீட்டுப் போடுவதுபோல் முத்தும் பலகறையும் போட்டு உடன்பிறந்தார் பாகம் பிரித்தல்; முத்தினாலும் பலகறையாலும் விளையாடிப் பிறர் உரிமையைப் பெறுதல் அல்லது பறித்தல்; தாயமாடிக் காலத்தை வீண்போக்குவதுபோல் வேலை செய்யாமற் காலங் கழித்தல் அல்லது தாழ்த்தல்; வேலை தாயமாடுகிறது என்னும் வழக்கை நோக்குக. மினுக்கிடுதல்: >Äd¡»Ljš > மெனக்கிடுதல், மினுக்கிடுதல் = அலங்கரித்தல். அலங்காரத்திலேயே கருத்தாயிருந்து வேலையைக் கை நெகிழவிடல். வேலை மினக்கிடுதல் என்னும் வழக்கையும் தேவடியாள் சிங்காரிக்குமுன் தேர் நிலைக்கு வந்துவிட்டது என்னும் பழமொழியையும் நோக்குக. - ``செந்தமிழ்ச் செல்வி'' சுறவம் 1943 7 சொல்வேர் காண்வழிகள் brh‰ãw¥ãaš(Etymology) ஒரு தனி மொழிநூற்றுறை என்பதைப் பலர் உணர்வதில்லை. புலவர் தேர்வு தேறியமட்டில், அல்லது கல்லூரியாசிரியப் பதவி பெற்றமட்டில், எல்லாச் சொற்கும் வேர்காணும் ஆற்றல் தமக்கு வந்துவிட்டதாகப் பலர் கருதிவிடுகின்றனர். இனி, தமிழ்ப் பேராசிரியராக, அவருள்ளும் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக, இருப்பவரோவெனின், மேலையறிஞர் எழுதியுள்ள மொழிநூலைக் கற்றவுடன், தம்மையும் மொழிநூல் ஆசிரியராக அல்லது அதிகாரிகளாகக் கருதிக்கொள்கின்றனர். கல்வி வேறு, ஆராய்ச்சி வேறு என்பதை அவர் அறிகின்றிலர். சொற்பிறப்பியல் என்பது சொற்களின் உண்மையான வரலாற்றைக் கூறுவதே யன்றி ஒலிமுறை தழுவியும் உன்னிப்பாகவும் குறிக்கோள் கொண்டும் கூறுவதன்று. இதை `Etymology' என்னும் பெயரே உணர்த்தும். Gk. etumos = true; etumon = original form of a word; etumologia-E. etymology = account of facts relating to formation and meaning of word. சொற்பிறப்பியல் என்பது ஒரு தனி அறிவியற் றுறையாதலின், அதற்குரிய நெறிமுறைகளையெல்லாம் அறிந்த பின்னரே சொற்கட்கு வேர்காணும் ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும். அல்லாக்கால், பின்வருமாறு எழுவகை வழுமுடிபாகவே முடியும். 1. ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology) எ-கா: பாராளுமன்று - Parliament(F. Parleiament.) பார், ஆளும், மன்று என முப்பெயர்ச் சொல் கொண்டது தமிழ்ச் சொற்றொடர். Parler (to speak) என்னும் பிரெஞ்சு வினைமுதனிலையும் ment என்னும் ஈறும் கொண்டது ஆங்கிலச்சொல். ஆதலால் இரண்டும் வெவ்வேறாம். 2. உன்னிப்புச் brhšÈaš(Guessing Etymology) எ-கா: வடு-வடை(நடுவில் துளையாகிய குற்றமுள்ளது.). இது சரியன்று. உழுத்தமா பிசுபிசுப்புத் தன்மையுடைமையால், எளிதில் எண்ணெய் ஊடுருவி வேகுமாறு உழுந்து வடையின் நடுவில் துளையிடப் பெறும். இது வடுவன்று. வள்-வட்டை-வடை-வ. வடா. வட்டமானது வடை. இதுவே உண்மையான பொருள். 3. குறிக்கோட் brhšÈaš(Tendentious Etymology) எ-கா: வெறு-வெறுக்கை(வெறுக்கப்படத்தக்கது) = செல்வம். வ. முக்தா (சிப்பியினின்று விடுதலை பெற்றது) - த. முத்தம்-முத்து. இக் கூற்றுகள் சரியல்ல. இவற்றுள் முன்னது துறவியர் கூற்று; பின்னது வடவர் கூற்று. வெறுத்தல் = செறிதல், நிறைதல். வெறுக்கை = திரண்ட செல்வம். விறப்பும் உறப்பும் வெறிப்புஞ் செறிவே. (தொல். சொல். 830) முத்து = உருண்டையானது. முத்து-முத்தம் - வ. முக்தா. இவையே உண்மையான பொருள். 4. அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology) எ-கா: உண்மை = உள்ளத்தொடு(கருத்தொடு) பொருந்தியது. வாய்மை = வாயொடு (சொல்லொடு) பொருந்தியது. மெய்ம்மை = உடம் பொடு (செயலொடு) பொருந்தியது. இம் முறைப் பொருட்கூற்றுச் சரியன்று. உண்மை = உள்ளது, வாய்மை = தேற்றமாய் வாய்ப்பது(நிறைவேறுவது). மெய்ம்மை = உடம்புபோற் கண்கூடானது (substantiality). இங்ஙனம் கொள்வதே பொருத்தமானது. 5. நகையாட்டுச் brhšÈaš(Playful Etymology) எ-கா: தோசை = சுடும்போது இருமுறை சை யென்ற ஓசை கேட்பது. இஃது ஒரு வேடிக்கைக் கூற்று. தோய்தல் = மாப்புளித்தல். தோய்-தோயை-தோசை என்பதே பொருத்தம். தோசையைத் தோயப்பம் என்னும் வழக்கை நோக்குக. 6. பொருந்தப் புகல்வுச் brhšÈaš(Plausible Etymology) எ-கா: பெருச்சாளி = பெரிய பணப்பை போன்றது. இது காளமேகர் கூற்று. பெருத்த எலி = பெருச்சாளி என்பதே உண்மையோடு பொருந்தியது. 7. அறிவாரவாரச் brhšÈaš(Pedantic Etymology) கீழ் = ஞாலம் உருளும்போது கிழக்குத் திசையிற் கீழ்நோக்கிச் செல்வது; மேல் = அது அங்ஙனம் உருளும்போது மேற்குத் திசையில் மேனோக்கி எழுவது. இது கணியர் திறம்படக் கூறுவது. கீழ் = தமிழ் நிலப்பரப்புக் கீழ்க்கோடியில் கடலாற் பள்ளமாயிருப்பது. மேல் = அது மேற்கோடியில் மலைத்தொடரால் மேடாயிருப்பது. இது கால்டுவெலார் கூற்று. இதுவே உண்மையானது. இனி, உண்மைச் சொல்லியல் நெறிமுறைகளும் சொல்வேர் காணும் வழிவகைகளும் வருமாறு: 1. இலக்கணஅறிவுடைமை ஒவ்வொரு பகுசொற்கும், முதனிலை, ஈறு, இடைநிலை, சாரியை, புணர்ச்சி, திரிபு ஆகிய அறுவகை யுறுப்புகளுள் அமைந்துள்ளவரை பகுத்தறியத் தெரிதல் வேண்டும். 2. மொழிநூலறிவும் மொழியாராய்ச்சியும் வரலாற்று bkhÊüš(Philology) அறிவும் சொந்த மொழி யாராய்ச்சியும் அடுத்து வேண்டப்பெறும் இன்றியமையாத் தகுதியாகும். 3. சொல்லிய லறிவுப்பேறு щW(Skeat) எழுதியுள்ள ஆங்கிலச் சொல்லியல் நெறிமுறை களையும் (Principles of English Etymology - 2 Vols), அவரும் சேம்பரரும் (Chambers) தொகுத்த ஆங்கிலச் brhšÈaš(Etymological) அகர முதலிகளையும், கற்றுத் தெளிதல் வேண்டும். 4. அயன்மொழி யறிவு மலையாளம் தெலுங்கு போன்ற அகப்புற மொழிகளையும், மராட்டி இந்தி போன்ற புறமொழிகளையும், ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம் போன்ற புறப்புறமொழிகளையும் ஓரளவு கற்றலும் வேண்டும். தன்சொற்போல் தமிழில் வந்து வழங்கும் வேற்றுச் சொல்லையும், வேற்றுச் சொற்போல் பிறமொழிச் சென்று வழங்கும் தன் சொல்லையும் பிரித்தறிதற்கு அயன்மொழியறிவு இன்றியமையாததாம். 5. பெரும்பால் தமிழ்ச்சொற் பொருளறிவு இருவகை வழக்கிலுமுள்ள தமிழ்ச் சொற்களும் பெரும்பாலான வற்றின் பொருளை அறிந்திருத்தல் வேண்டும். 6. தமிழ் ஒலியியல்பறிதல் தமிழ் முதன்முதல் குமரிநாட்டில் தோன்றிய மெல்லொலி மொழியாதலின், வல்லொலி மிக்க திராவிடமொழிகளையும் ஆரிய மொழிகளையும் அடிப்படையாக வைத்தாராயின், உண்மை காண முடியாது. தமிழின் உண்மையான ஒலியியல்பையும் சொற்றூய்மையையும் அறிய விரும்புவார், இற்றைத் தென்பாண்டி நாடாகிய நெல்லை வட்டார நாட்டுப்புற உலக வழக்கை அறிதல் இன்றியமையாததாம். தமிழின் மெல்லொலிகளே திராவிடத்திலும் ஆரியத்திலும் வல்லொலிகளாய்த் திரிந்துள்ளன. v-fh : brŒ - ceyu (bj.), F«ò - gumpu(bj.), fš - khal(ãuh.), பாகம் - bhaga (வ.). 7. எழுத்துகளின் திரிபுகளை யறிதல் சொல்லாக்க முறையில், ஒவ்வோரெழுத்தும் சில்வேறெழுத்தும் பல்வேறெழுத்துமாகத் திரிகின்றது. அத் திரிபுகளையெல்லாம் அறியாக் கால் பல சொல்வேர்களைக் காண்டல் அரிதாம். எ-கா: ள - ஃ : எள்கு - எஃகு, வெள்கு - வெஃகு. ள - க : உளி - உகிர், தளை - தகை. ள - ச : உளி - உசி - ஊசி - வ. சூசி. ள - ட : நளி - நடி, மகள் - மகடூஉ. ள - ண : பெள் - பெண், வள் - வளர் - வணர். ள - ய : தொள் - தொய், மாள் - மாய். ள - ர : நீள் - நீர், வள் - வார். ள - ல : கொள் - கொல். ள - ழ : காள் - காழ், துளசி - துழாய். ள - ற : தெள் - தெறு - தெற்று, வெள் - வெறு. ள - ன : முளை - முனை, வளை - வனை. 8. சொற்றிரிபறிதல் எ-கா: அரம்(சிவப்பு)-அரத்தம்(சிவப்பு)-அரத்தி-அத்தி = சிவந்த பழம், அப் பழமரம். அகல்-ஆல் = அகன்று படரும் மரம். கோநாய்-ஓநாய். தமப்பன்-தகப்பன். தகு + அப்பன் என்று பிரிப்பது தவறாம். 9. சொற்களின் திருந்திய வடிவறிதல் இடைகழி-டேழி(கொச்சை)-ரேழி(கொச்சை). மணித்தக்காளி - மணத்தக்காளி(கொச்சை). டேழி, ரேழி, மணத்தக்காளி என்னும் கொச்சை வடிகளினின்று, வேரையும் வேர்ப்பொருளையும் அறியமுடியாது. 10. பலபொரு ளொருவடிவுச் சொற்களைப் பகுத்தறிதல் சில சொற்கள் வெவ்வேறு பொருள்கொண்ட வெவ்வேறு வேரி னின்று பிறந்து ஒரு வடிவுகொண்டு நிற்கும். அவற்றை வேறுபடுத்தியறிதல் வேண்டும். எ-கா: மணி1 = கரியது. மல் - மால் = கருமை, முகில், கரிய திருமால். மால் - மாரி = முகில், மழை, கரிய காளி. மால் - மா = கருமை. மா - மாயோன் = கரிய திருமால். மாயோள் = கரிய காளி. மல்-மள்-மறு = களங்கம், கரும்புள்ளி. மள் - (மய்)-மை = கருமை, முகில், காராடு. மள்-மழை = முகில், முகில் நீர். மள் - மண் - மணி = நீலக்கல், கரும்பாசி. மணிமிடற்றோன் = கரிய கழுத்துள்ள சிவன். மணிவண்ணன் = கரிய திருமால். மணி2 = வட்டமானது. முள் - முரு - முருகு = வளைந்த காதணி. முரு - முரி - மூரி = வளைவு. முரி - முறி - மறி. முரு - முறு - முற்று. முறு - முறை - மிறை = வளைவு. முள் - (முண்) - (முணம்) - முடம். (முணம்) - முணங்கு - முடங்கு - மடங்கு. முள் - (மள்) - மண்டு - மண்டலம் = வட்டம். மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை வளைத்தல். முள் - முட்டு - முட்டை = உருண்டையானது. முள்-முண்டு = உருண்ட கட்டை. முள் - முடி - முடிச்சு. முள் - (முண்) - (மண்) - மணி = ஓசைமிக்க வட்டமான வெண்கலத் தட்டு, அதைப்போல் ஒலிக்கும் நாழிமணி, வட்டமான கடிகையாரம்(கடிகாரம்). மணி3 = சிறியது. முல் - முன் - முனி = யானைக்குட்டி. முன் - முன்னி, முன்னை = சிறுபயறு. முல் - முள் - முளை - முளையன் = சிறுவன். முள் - முட்டு - மொட்டு - மொட்டை. முட்டுக் குரும்பை = இளங் குரும்பை. மொட்டைப் பையன் = சிறுவன், இளைஞன். முள் - மள் - மழ - மழவு = இளமை. மள் - மண் - மணி = சிறியது. மணிக்காடை, மணிக்காக்கை, மணிக்குடல், மணிப்பயறு, மணிப்புறா முதலிய வழக்குகளை நோக்குக. மணி - மாணி = சிறுவன், பள்ளிச் சிறுவன், மணமாகா இளைஞன். மணி4 = ஒளியுள்ளது. மண்ணுதல் = கழுவுதல், மினுக்குதல். மண்ணுறு மணியின் (புறம். 147) மண் - மண்ணி - மணி = ஒளிக்கல். 11. சொற்களைச் செவ்வையாய்ப் பிரித்தல் உடக்கெடுத்துப் போதல் = உடக்கு + எடுத்துப் போதல் (கூடாதல், தோலும் எலும்புமாதல், மிக மெலிதல்). இதை உடல் கெடுத்துப் போதல் என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி பிரித்திருப்பது தவறாம். உடங்கு - உடக்கு = உடம்புக் கூடு. 12. பொருள்களின் சிறப்பியல்பறிதல் ஒவ்வொரு பொருளின் (பார்த்தமட்டிற் கண்ணைக் கவரும்) சிறப்பியல்பையும் உற்றுநோக்கியே, அததற்குரிய பெயரை இட்டிருக் கின்றனர் முன்னைத் தமிழர். எ-கா : காகா(காக்கா) என்று கரைவது காகம்(காக்கை). மூன்று அணிகளை (வரிகளை) முதுகில் உடையது அணில். இருமை(கருமை)யான மாட்டினம் எருமை. வழுவழுவென்றிருக்கும் மரம் வாழை. முடிவேய்ந்த பேரரசன் வேந்தன். வேய்தல் = முடியணிதல். வேய்ந்தோன்-வேந்தன். கொன்றை வேய்ந்தானை(சிவனைக்) கொன்றை வேந்தன் என்று கூறுதல் காண்க. சேர சோழ பாண்டிய முக்குடியரசர்க்கே முடியணியும் உரிமை முதற்காலத்திலிருந்தது. 13. பொருள் வரிசையறிதல் எ-கா : அருகுதல் = சிறுத்தல், ஒடுங்குதல். அரு-அரை = சிறுத்த அல்லது ஒடுங்கிய இடை, உடம்பின் நடு, பாதி. கோல்-கால் = கம்பம், தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு, உடம்பின் காற்பகுதி, காற்பகுதி (நாலிலொன்று). உடம்பின் பாதியளவாயிருப்பது அரையென்றும், நாலிலொரு பகுதி யாயிருப்பது காலென்றும், தலைகீழாய்ப் பொருட்கரணியங் காட்டுவது உண்மைக்கு நேர்மாறாம். 14. x¥òikaik¥ò(Analogy) அறிதல் எ-கா: குழல் - குடல், புழல் - புடல் - புடலை - க. படல, தெ. பொட்ல, வ. பட்டோலிக்கா, கடை - கடலை, விடை - விடலை - L. vitula. மை - மயிர், தை - தயிர்; தைத்தல் குத்துதல். முட்குத்தினால் முள் தைத்தது என்பர். பாலிற் பிரைமோர் ஊற்றுதலைப் பிரைகுத்துதல் என்பது உலக வழக்கு. பிரை தைத்தது தயிர் - வ. ததி (dadhi), இ. தஹீ. 15. வரலாற்றறிவையும் ஞாலநூலறிவையும் துணைக்கோடல் எ-கா: பாண்டவர் தோன்று முன்னரே பாண்டியர் தென்னாட்டை ஆண்டுவந்தனர். பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் திருநீராடத் தென்னாடு வந்து, சித்திராங்கதன் என்று பாரதங் கூறும் ஒரு பாண்டியன் மகளை மணந்தான். ஆரியர் இந்தியாவிற்குள் அடி வைக்கு முன்னரே, பாண்டியர் வரலாற்றிற் கெட்டாத தொன்மையிலிருந்து கணக்கில் காலம் தென்றமிழ் நாட்டை ஆண்டு வந்திருக்கின்றனர். திருக்குறளுக்கு ஆரிய அடிப்படையில் உரை வரைந்த பரிமேலழகரும், பழங்குடிக்குப் ``படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டுவரும் சேர சோழ பாண்டியர் குடிகள்'' என்று மூவேந்தர் குடிகளை எடுத்துக் காட்டினர். இங்ஙனமிருந்தும், பாண்டியன் என்னும் பெயர் gh©£a(Pandya) என்னும் வடசொல்லினின்று திரிந்ததாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி நெஞ்சாரப் பொய்க்கின்றது. இதை ஊழியிறுதிச் சூறாவளிபோற் சுழற்றி யெறிவது குமரிக்கண்டத் தமிழக வரலாறே. பாண்டி = காளை, மறவன். பாண்டி - பாண்டியன். சாமை படைப்புக்காலந் தொட்டுத் தென்னாட்டில் விளைந்துவரும் தொண்(ஒன்பான்) கூலங்களுள் ஒன்றாகும். இன்றும் அது நாட்டுப்புற உழவர்க்கு உரிய ஒழுங்கான உணவு வகைகளுள் ஒன்றாக இருந்து வருகின்றது. ஆயினும், அதன் பெயர் ச்யாமா என்னும் வடசொல்லின் திரிபாக, மேற்குறித்த பொய்க்களஞ்சியம் துணிந்து கூறுகின்றது. இதனை வெட்டி வீழ்ப்பது ஞால நூலறிவே. சாமைப் பயிர்போல் ஒரு புல்லும் உண்டு. அது சாமைப்புல் எனப்படும். சாமை என்னும் தென்சொல்லையே வடமொழியாளர் ச்யாமா என்று திரித்துத் தமிழரை ஏமாற்றிவருகின்றனர். 16. இடுகுறி தமிழில் இல்லையென் றுணர்தல் தமிழ் தானே தோன்றிய இயன்மொழி யாதலின், அதிலுள்ள எல்லாச் சொற்களும் கரணியக் குறிகளே. சிலவற்றின் வேர்ப்பொருள் பார்த்தமட்டில் தெரியும். எ-கா: சுடலை < சுடல் < சுடு < சுள். சிலவற்றின் வேர்ப்பொருள் ஆழ்ந்து ஆய்ந்தாலன்றித் தோன்றா. எ-கா: வினை < விளை. இவ் வுண்மைகளையே, எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். 640) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். 877) என்று தொல்காப்பியர் குறித்தார். நன்னூலுரையாசிரியர் இடுகுறியாகக் காட்டியுள்ள தமிழ்ச் சொற்களெல்லாம் கரணியக் குறிகளே. பலா = பருத்த பழத்தை யுடையது. பனை = கூரிய பல்போன்ற கருக்குமட்டை யுள்ளது. பொன் = பொற்பு அல்லது பொலிவுள்ளது. மரம் = மரத்தது அல்லது உணர்ச்சியற்றது போன்றிருப்பது. மா = கொட்டைக்குள் வண்டுள்ளது. ஆரிய மொழிகள் திரிபுடை மொழிகளாதலின், அவற்றிற் பல சொற்கள் வேர்ப்பொருள் தோன்றாவாறு திரிந்திருப்பதுடன், பல இடுகுறிச் சொற்களும், சிறப்பாகச் சமற்கிருதத்தில் அமைந்துள்ளன. அதனால் சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்தாய்ந்த மேலை மொழிநூலாசிரியர், எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பதை அடிப்படை நெறிமுறையாகக் கொண்ட வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) என்னும் வழுப்பட்ட மொழியியல் வகையை உலகமுழுதும் பரப்பி tU»‹wd®. உண்மையான வரலாற்று மொழியாராய்ச்சியால் சமற்கிருத இழிவும் ஆரிய ஏமாற்றமும் உலகிற்கு வெளிப்பட்டுவிடுமே யென்று அஞ்சும் வடமொழியாளர், புதிதாய்த் தோன்றியுள்ள வண்ணனை மொழிநூல் தமக்கொரு கேடகமாயிருப்பது கண்டு, அதனை நெஞ்சார நினைந்து வாயார வாழ்த்தி வளர்த்து வருகின்றனர். அவரடியாரான கொண்டான்மாரும் தமிழைக் காட்டிக் கொடுப்பதற்கு இது தலைசிறந்த வழியா யிருப்பதறிந்து, இதனைத் தலைமேல் தாங்கி நிற்கின்றனர். ஒரு பொருளை எங்கெங்குந் தேடியும் காணமுடியாதென்று முழு நம்பிக்கை கொண்டவனுக்கு, எங்ஙன் தேடன் முயற்சி பிறக்கும்? எல்லாச் சொல்லும் இடுகுறிகளே யென்றும், எல்லா மொழிகளும் ஆயிரம் ஆண்டிற்கொருமுறை அடியோடு மாறிவிடுகின்றன என்றும் நம்புகின்ற வனுக்கு எங்ஙன் மொழியாராய்ச்சி வேட்கை எழும்? ஆதலால், வண்ணனை மொழிநூல் அறிவுவளர்ச்சிக்கு மாபெரு முட்டுக்கட்டை யென்று அறவே புறக்கணிக்க. 17. பகுத்தறிவைப் பயன்படுத்தல் எ-கா: வடவை = வடமுனையில் தோன்றும் ஒருவகை நெருப்பு அல்லது ஒளி. வடம்-வடவை (பிங்.) = வடவனல். “tlit¡ கனலை வைத்தூதி (அந்தகக்கவி வீரராகவர் தனிப்பாடல்.) வடம் - வடந்தை = வடகாற்று, வடவைத் தீ. “Rl®ªbjÇ வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு. இருபத். 384) “m¡flÈ‹ÛJ வடவனல் நிற்க விலையோ (தாயுமானவர்.) ஒ.நோ: Aurora Borealis = Northern Light. இங்ஙனம் வடவை என்பது தென்சொல்லென்றும் வடமுனை நெருப்பின் பெயரென்றும் தெளிவாயிருக்கவும், அதை வடவா என்று திரித்துப் பெண்குதிரை என்று பொருளுரைப்பர் வடவர். இத்தகைய சொல்லியல்களிற் பகுத்தறிவைப் பயன்படுத்துவது இன்றியமையாதது. 18. அஞ்சாமை ஆயிரக்கணக்கான தென்சொற்களை வடவர் கடன்கொண்டிருப்ப தால், அவற்றையெல்லாம் தென்சொல்லென்று ஒப்புக்கொள்ளின், சமற்கிருதத்திற்குத் தமிழே மூலம் என்பது வெட்டவெளியாம். அதனால், அதை மறைத்தற்குப் பல சொற்கட்குப் பொருந்தப் புகலலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறியும், சிலவற்றை இடுகுறி யென்று முத்திரையிட்டும் வருகின்றனர். இவற்றை மறுத்து உண்மை கூறுபவர்க்குப் பதவி அல்லது அலுவல் போய்விடும் என்னும் அச்சம் தமிழர் உள்ளத்திற் குடிகொண்டிருப்பதால், வடமொழியில் வழங்கும் தமிழ்ச்சொற்கட்கு வேர்காணத் தனிமறம் வேண்டுவது ஒருதலை. 19. நடுநிலை காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும். (அறநெறி. 22) கவி என்பது வடசொல். பா, செய்யுள் என்பனவே தென்சொல். ஆதலாற் கவிஞனைப் பாவலன் என்றும், கவியரங்கைச் செய்யுளரங்கு அல்லது பாவரங்கு என்றுமே சொல்லுதல் வேண்டும். கவிந்துகொள்வது கவி என்றும், தருவது தருமம் என்றும், நாயை வைத்திருப்பவன் நாயன் என்றும், உள்தணமாயிருப்பது உட்டணம் என்றும், இரவுகசிதல் இரகசியம் என்றும், பெரிய வித்து என்று பொருள்படும் வான்வித்து என்பது வித்துவான் என்று தலைமாறிய தென்றும், இவை போன்று பிறவும் கூறுவதெல்லாம் அறிவு முறைப்பட்டன வல்லவென்று கூறி விடுக்க. 20. பொறுமை சில சொற்கட்கு வேர்காட்டும் உறவுச் சொற்கள் இறந்துபட்டிருப்ப தால், அவற்றின் வேர் காண்டற்கு நாட்பலவன்றி ஆண்டு பலவும் ஆகலாம். ஆதலால், சொல்லாராய்ச்சிக்கு மிகுந்த பொறுமையும் வேண்டும். ஆண்டு பலவாகியும் வேர்காண வியலாது போகவும் நேரும். அதனால் உள்ளந் தளர்தல் கூடாது. நெறியறிந்து ஆர அமர ஆராயின், இற்றைத் தமிழ்ச்சொற்களுள் நூற்றிற்கெழுபத்தைந்திற்கு வேர்காண வியலும். எனினும் இறைவன் ஏற்பாட்டின்படியே ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு துறையில் ஆற்ற லமையும் என்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. (ஔவையார்) - ``செந்தமிழ்ச் செல்வி'' மார்ச்சு 1967 8 ககர சகரப் பரிமாற்றம் எம் மொழியையும் வரலாற்றடிப்படையில் ஆய்ந்தால்தான், அதன் உண்மையான இயல்பை அறிய முடியும். அவ் வரலாறும், தோன்றல், திரிதல், கெடுதலின்றி, உள்ளதை உள்ளவாறுரைப்பதாய் இருத்தல் வேண்டும். தமிழும் தமிழ் வரலாறும் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக, முறையே, சிதைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் வருதலின் , நடுநிலையும் நெஞ்சுரமும் ஆழ்நோக்கும் உடைய உள்நாட்டு ஆராய்ச்சியாளரன்றி, பிறர் அவற்றின் உண்மையியல்பை முற்றும் உணரல் அரிது. கனமிகு கால்டுவெல் கண்காணியார், காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆயும் பெருந்தகையரேனும், திரவிட மொழிநூலைத் தோற்றுவிக்க இறைவனாலே அழைக்கப்பெற்றவரேனும், எதிர்காலத் திரவிட மொழிநூல் ஆராய்ச்சியாளர்க்கெல்லாம் இன்றியமையாத வழிகாட்டியாரேனும், காண்டற்கரிய வேர்ச்சொற்களைக் கண்டறிந்து நுண்மாண் நுழைபுலத்தரேனும், தம் அயன்மை காரணமாகவே, சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் முத்தமிழ் நாட்டு மக்கட் பெயர்களென்றும், வட சொற்களென்றும், பிறழக் கொண்டார். சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் குடிகளும் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வந்தவை எனப் பாராட்டத்தக்க முதுகுடிக ளாதலானும், தமிழ், ஆரியர் நாவலந்தீவிற் கால்வைக்கு முன்னரே குமரிக் கண்டத்தில் தோன்றி முழு வளர்ச்சியடைந்திருந்த மொழியாதலானும், மூவேந்தர் குடிப்பெயர்களை வடசொல்லெனக் கொள்வதற்குக் காட்டப் பட்டுள்ள காரணம் ஒன்றும் பொருந்தாமையானும், அவற்றைத் தமிழ மரபிற்கேற்பத் தென்சொல்லென்று கொள்வதே தக்கதாம். தமிழ் படிப்படியாக நீண்டகாலம் பண்படுத்தப்பெற்று உயர்நிலை யடைந்த தனிமொழியென்றும், அதன் சொற்களை அதை அடிப்படை யாகக் கொண்டே விளக்க வேண்டுமென்றும் அங்ஙனம் விளக்க முடியாத சொற்கட்கே அயன்மொழி மூலந் தேடலாமென்றும், அத்தகை நிலையிலும் அவற்றின் தமிழ் மூலச்சான்று காலக்கடப்பில் மறைந்து போயிற்றென்று கொள்வதல்லது, தமிழர் அயன்மொழித் துணைகொண்டு தமக்கு வேண்டிய சொற்களை அமைத்துக்கொண்டனர் என்று கொள்வது பொருந்தா தென்றும், தம் திரவிட ஒப்பியல் இலக்கண முகவுரையிலேயே தெளிவாகக் கூறியுள்ள கால்டுவெல் கண்காணியார், மூவேந்தர் குடிப்பெயர்களை வடசொல்லெனக் கொண்டமையினாலேயே, குடவன் குடிப்பெயரை ஆயுமிடத்து, கேரன் என்பதே மெய்பிக்கத்தக்க முந்திய வடிவென்றும், கேரளன் என்பது அதன் வடமொழித்திரிவும், சேரன் சேரல் சேரலன் என்பன அதன் தென்மொழித் திரிவும் ஆகுமென்றும், தமிழிற் ககரம் சகரமாக மெலிந்ததென்றும், அடி சறுக்கிவிட்டனர். இச் சறுக்கலைத் துணைக்கொண்டே, ``இருக்கு வேதத்தில் (1-115-116) கேலன் என்பவனொருவன் கூறப்படுகின்றான். சாயநர் இவன் அரச னென்றும் இவன் புரோகிதர் அகத்தியரென்றும் கூறுவர்...... அகத்தியரைப் புரோகிதராகவுடைய இருக்குவேதங் குறித்த கேலன் சேரனாவன் என நினைத்தல் தகும். கேலன் கேரனாகி அவனே சேரனாயினான் போலும். கேரலர் என வருதல் காண்க'' என எழுதத் துணிந்தார் பெரும் புலவர் ரா. இராகவையங்கார் (தமிழ் வரலாறு, பக். 325-6). பண்டாரகர் (Dr.) கால்டுவெல், சேரன் என்னும் பெயரின் மெய்ப் பிக்கத்தக்க முந்திய வடிவம் `கேரன்' என்றும், அச் சொற்றிரிவில் ககரம் சகரமாயிற்றென்றும் மட்டும் சொல்லியிருக்க, இற்றை மேலை மொழி நூல் வல்லார் சிலர், ககரம் சகரமாய்த் திரியுமேயன்றிச் சகரம் ககரமாய்த் திரியா தென்றும், சேரன் என்பது கேரன் என்பதன் திரிபேயென்றும், தேற்றப் படுத்திக் கூறி வருகின்றனர். இது, மாணவரையும் ஆராய்ச்சியில்லா ஆசிரியரையும் மயக்குவதாயுள்ளது. மேலையாரியத்தில் மட்டுமன்றித் தமிழிலும் திரவிடத்திலுங்கூட, ககரம் சகரமாய்த் திரியக் கூடியதே. எ-கா: முழுகு - முழுசு (தமிழ்) கீரை - சீரை (மலையாளம்) கெடு - செடு (தெலுங்கு) இங்ஙனம் திரிவது அருகிய வழக்கே. இதற்கு எதிரான சகர ககரத்திரிபே தமிழிலும் திரவிடத்திலும் பெருவழக்காம். தமிழ் என்பது வட மொழித் துணை வேண்டாத தூய தென்மொழியென்றும், திரவிடம் என்பது தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் போல வடமொழி கலந்த தென் மொழியென்றும், வேறுபாடறிதல் வேண்டும். சகரம் ககரமாய்த் திரிவது, தமிழிலும் திரவிடத்திலும் மட்டுமன்றி, கீழையாரியத்திலும் மேலையாரியத்திலும் இயல்வதே. தமிழ் செய் - (கெய்) - கை (hand) செம்பு - கெம்பு. கெம்பு என்பது தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும், தெலுங்கிலும் பதுமராகத்தின் பெயராதலாலும், `செம்பு நிறையக் கெம்பு' என்பது தமிழச் சிறார் விடுகதையாதலாலும், கன்னடத்திலும் செம்பு என்பது தாமிரத்தின் பெயராதலாலும், கெம்பு என்பதைத் தமிழ்ச்சொல்லொப்பவே கொள்க. திரவிடம் தமிழ் கன்னடம் துளு தெலுங்கு சாண் கேண் சிதலை கெத்தளெ, கெதலு சிரங்கு கெரசு கிர்ம்பு சிரட்டை கெரத்தெ சில்லி கெல்லு கெல்லு சிலும்பு(களிம்பு) கிலுபு சிலை(ஒலி) கெலெ சிறிது கிறிது சிறை(சிறகு) கறி கேரி சினம் கினிசு கினுக்க சீ,சீழ் கீவு கீவு சுவர் கேர் சுறண்டு கெரண்ட்டு செங்கண் கெங்கண் செங்கல் கெங்கல் கெங்கல் செங்காய் கெங்காய் செங்குடை கெங்கொடை செஞ்சுடர் கெஞ்சொடர் செஞ்சோளம் கெஞ்சோளம் செடி கிட செத்து கெத்து செத்தை கெத்தெ கெத்தெ செந்தணல் கெந்தணலு செந்தாமரை கெந்தாவரெ செந்தூள் கெந்தூள் செந்நீர் கெந்நீர் செம்பருத்தி கெம்பத்தி செம்மண் கெம்மண்ணு தமிழ் கன்னடம் துளு தெலுங்கு செய் கெய் கெல் செருக்கு கெச்சு செருத்தல் (udder) கெச்சல் கெர்ந்தெல் செருப்பு கெர்ப்பு செம்மு கெம்மு செருமு கெம்மு செவ்வகத்தி கெம்பகசெ செவ்வகில் கெம்பகிலு செவ்வட்டை கெபட்டே செவ்வரக்கு கெம்பரகு செவ்வரி கெம்பரி செவ்வவரை கெம்பவரே செவ்வாம்பல் கெம்பாவல் செவ்வாழை கெம்புபாளெ செவ்விள நீர் கெம்பௌநீர் செவி கிவி கெவி செவிடு கிவிடு செளிம்பு(களிம்பு) கிலுபு செறும்பு(செற்றம்) கறும்பு சென்னி கென்னெ சே(தங்கு) கே சேர்(சேங்கொட்டை) கேரு கேரு சேம்பு கெசு சேரை(செம்பாம்பு) கேரெ சேனை கேனெ கேனெ தமிழ் ஆரியம் சீர்த்தி கீர்த்தி (வடமொழி) சோழமண்டலம் (Coromandel) கோரமெண்டல் (டச்சு) செல் (Kel) கெல் (கிரேக்கம்) செப்பு (gepo) கெப்போ (கிரேக்கம்) இங்னம், ககர சகரம், தமிழ், திரவிடம், கீழையாரியம், மேலை யாரியம் ஆகிய நால்வகை மொழிகளிலும் தம்முள் பரிமாற்றஞ் செய்யவும், அதைக் கவனியாது, ககரம்தான் சகரமாகுமென்றும், சகரம் ககரமாகா தென்றும், ஒருவரிப் போக்காகக் கூறுவது பொருந்தாதென்பதை மேற் காட்டிய எடுத்துக்காட்டுகளின்று தெற்றெனத் தெரிந்துகொள்க. ஒருகால் கன்னடத்திலுள்ள ககரமுதற் சொற்களையே அவற்றிற்கு நேரான சகரமுதல் தமிழ்ச்சொற்கட்கு மூலமாக ஒருசாரார் கொள்ளலாம். அதன் புரைமையை, அச் சொற்களின் வேர் நோக்கியும்; செங்கதிர (செங்கதிர்), செந்தெங்கு, செம்பு, செம்புகுட்டிக (செம்புகொட்டி), செம்பொன், செம்போத்த (செம்போத்து) முதலிய சொற்கள் கன்னடத்திலும் தமிழிற் போன்றே சகரம் முதலாயிருப்பதை நோக்கியும் தெரிந்து தெளிக. கால்டுவெலாரும் இவற்றை மேலை மொழிநூலார் சிலரும், தமிழ் குமரிக்கண்டத்தின் தென்பால் தோன்றி வளர்ந்து வடக்கு நோக்கிச் சென்று திரிந்ததென்றும், ஆரியத்திற்கு முந்தியதென்றும், ஈரடிப்படை வரலாற் றுண்மைகளை அறியாமையாலேயே, மகன் தந்தையையும் பேரன் பாட்டனையும் பெற்றார் என்பது போல், கேரன் என்பது சேரன் என்பதன் மூலமென்றும், வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வட்டம் எனத் திரிந்த தென்றும், கொள்ளத் துணிந்தனர். இனி, அவர் மட்டுமன்றி, ஆராய்ச்சி யில்லாது நூற்கல்வி யொன்றேயுடையாரும். ஆட்சியிலும் அதிகாரத்திலு மிருப்பவர் கருத்திற்கு மாறாகச் செல்லுதல் கூடாதென்னும் கொள்கையுடை யாரும், ஆகிய இருசார் தமிழ்ப் பேராசிரியரும் அக் கொள்கையே கொண்டிருப்பது மிக மிக வருந்தத்தக்க செய்தியாகும். சேரன் என்னும் சகர முதல்வடிவே முந்தியமென்றும், அது தூய தென் சொல்லேயென்றும் கொள்னின், அதன் பேரும் பொருட் காரணமும் என்னையெனின், கூறுவேன்: சேரன் என்னும் பெயர் சேரல், சேரலன் என்னும் வேறிரு வடிவுகளிலும் தமிழில் வழங்கும். இவற்றுள், சேரல் என்பதே முன்னை வடிவாம். சேரல் என்பது சாரல் என்பதன் திரிபு. சாரல் என்பது மலையும் மலைப்பக்கமும் மலையடிவாரமும். முத்தமிழ் வேந்தருள் சேரனே நெடுமலைத் தொடரைச் சிறப்பாகவுடையவன். அதனால் , அவனுக்குப் பொறையன், மலையன், மலையமான், மலைநாடன், வானவன், வானவரம்பன் என்பன குடிப்பெயர்களாய் வழங்கின. ஒரு பொருட்கு அதன் சிறப்புக் கூறுபற்றிப் பெயர் அமைவதே இயல்பாம். இம் முறைப்படி, பெருமலைத் தொடரையுடைய சேரனுக்கு மலைத் தொடர்பான பெயரமைந்தது பொருத்தமே. ஒரு மலைநாட்டில் மக்கள் பெரும்பாலும் வாழ்வது மலையடிவாரத்திலாதலின், மலைநாடனைச் சாரல் நாடன் என்பது ஒரு செய்யுள் வழக்காம். எ-டு: ``வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட'' (குறுந். 18) ``ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ் சாரல் நாட'' (குறுந். 69) ``ஆரிருள் நடுநாள் வருதி சாரல் நாட'' (குறுந். 141) பரு - பெரு, சத்தான் - செத்தான், அல்லி - எல்லி (இரவு) முதலிய திரிபுகளில் அகரம் எகரமாகத் திரிவதால், அதன் நீள வடிவமான ஆகாரம் ஏகாரமாகத் திரிவதும் இயல்பாம். எ-கா: சாறு - சேறு (திருவிழா) சார் - சேர் சாரல் - சேரல் சாண் - சேண் (கன்னடம்) சாரல் நாடனைச் சாரல் என்றது ஓர் இடவாகு பெயர். அது முன்னரே வழக்கிறந்து, பின்பு அதன் திரிபான சேரல் என்னும் வடிவமே வழங்கலாயிற்று, எனக் கொள்க. லகரமெய் யீறு சில சொற்களில் னகரமெய் யீறாகத் திரிதல் இயல்பு. எ-கா: மேல - மேன வெல் - வென் (வெற்றி) கல் - கன் (தோண்டு) ஆல் - ஆன் (3ஆம் வேற்றுமையுருபு). இம் முறைப்படி, சேரல் என்பது சேரன் எனத் திரிந்தது. சேரல் என்பது அன்னீறு பெறின் சேரலன் என்றாகும். அது வடமொழியிற் கேரல(ன்), கேரள(ன்) எனத் திரியும். கேரலன் என்பது கேரன், கேலன் எனத் தொகும். இவற்றுள், கேரன் என்பதைக் கால்டுவெல் அறிஞரும் கேலன் என்பதை ரா. இராகவையங்காரும் சேரன் என்னும் பெயர்க்கு மூலமாகக் கொண்டனர். இது தலைகாலாகக் கொண்ட தடுமாற்றம். இனி, சார்தல் என்பதற்குச் சாய்தல் என்றும், சார் என்பதற்குத் தாழ் வாரம் என்றும் பொருளிருத்தலால், மலைச்சாரலை அல்லது அடி வாரத்தைக் குறிக்கும் சார் என்னும் சொல்லே சேர் எனத் திரிந்து, வள்ளல் என்பது போல் அல்லீறு பெற்றுச் சேரல் என்றாயது எனக் கொள்ளலும் ஒன்று. இதுகாறுங் கூறியவற்றால், வரலாற்றடிப்படையிலே மொழிகளை ஆய்தல் வேண்டுமென்று, ஒருவழிப்போக்கான ககர சகர மாற்றமன்றி இருவரிப் போக்கான ககர சகரப் பரிமாற்றமே உண்மையாகக் கொள்ளுதற் குரிய தென்றும், சேரன் என்னும் குடவேந்தன் குடிப் பெயர் தூய தென் சொல்லேயென்றும், கேரன், கேலன், கேரளன் என வடமொழியில் வருபவையெல்லாம் சேரல் என்பதன் திரிபேயென்றும், ஐயந்திரிபற அறிந்துகொள்க. சேரன் என்னும் பெயரின் மூலம் அல்லது வரலாறு வேறு வகையாக வும் இருந்திருக்கலாம். இற்றை அறிவு நிலையில் நாம் காட்டக்கூடிய மூலம் சாரல் என்பதே. உண்மை எங்ஙனமிருப்பினும், மூவேந்தர் குடிகளும் தூய தமிழ்க் குடிகளாயிருந்தது போன்றே,. அக் குடிப்பெயர்களும் தூய தமிழ்ச் சொற்களாகவே இருத்தல் வேண்டும் என்பதை மட்டும் உளத்தில் உறுதியாய் இருத்(து)தல் வேண்டும். மேலையாரிய மொழிகளில் ககரம் சகரமாவதே இயல்பு. எ-கா : birk - birch, Kirk - church, whilk - which sik - such,bik - bitch, caster - chester, particle - parcel, kenotopion - cenotaph. இவ் வாரிய மொழியியல்பை அடிப்படையாகக் கொண்டே, தமிழிலும் அவ்வாறு ககரமே சகரமாகுமெனக் கொள்கின்றனர். மேலை மொழிநூலார், தமிழ் வடக்கினின்று வந்ததென அடிப்படையில் அவர் தவறினதே இதற்குக் காரணம். தமிழ் ஆரியத்திற்கு முந்தியதும் மூலமுமாதலின் மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளது. இதை அவர் அறியார். அறியுங்காலம் அணுகி வருகின்றது. - இரா.பி. சேதுப்பிள்ளை மணிவிழா மலர் 1961 9 மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றே மொழி யென்பது, ஒரு மக்களினம் பேசும் பேச்சிலும் இயற்றும் இலக்கியத்திலும் ஆளும் சொற்களின் முழுமையான சொற்றொகுதி. சொற்களன்றி, மொழியென்று தனி வேறாக ஒன்றுமில்லை. ஆதலால், சொல்லாராய்ச்சியே மொழியாராய்ச்சிக்கு அடிப்படை. சொல்லாராய்ச்சி ஒரு அல்லது பல சொற்களின் வரலாறுபற்றி யிருக்கலாம். அங்ஙனமே, மொழி யாராய்ச்சியும் ஒரு அல்லது பல மொழிகளின் வரலாறுபற்றி யிருக்கலாம். மொழியென்பது, சொல்லையும் ஒரு மக்களினத்தின் சொற்றொகுதியையும் குறித்தலால், மொழியாராய்ச்சி என்பது சொல்லாராய்ச்சியைக் குறித்தற்கும் இடமுண்டு. மொழிகளுள், இந்தியும் மலையாளமும் போன்று புதியவும் உள; கிரேக்கமும் இலத்தீனமும் போன்று முதியவும் உள. தமிழோ, முதிய வற்றுள்ளும் முதிய முதன்மொழி. புதுமொழிகளும் முதுமொழிகளின் திரிபாகவே தோன்றியிருத்தலால், சொல்லாராய்ச்சியைப் பொறுத்தமட்டில், இருவகை மொழியும் ஒன்றே. ஆய்தல் என்பது, ஒரு பொருளை நுணுகி நோக்கி அதன் உண்மைத் தன்மையை உணர்தல். ``ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.'' (தொல். உரி. 32) ஆர்தல் நிரம்புதல். ஆர ஆய்தல் ஆராய்தல் அகழ்தல் என்பது தோண்டுதல். மேன்மட்டத்தில் தோன்றாது புதைந்து அல்லது மறைந்து கிடப்பதைக் கல்லியெடுத்தல் தோண்டுதல். அதுபோன்று ஆழ்ந்து ஆராய்தலும் தோண்டுதல். ஒ. நோ: தோண்டு-தேண்டு-தேடு-தேட்டம். நோண்டு-நோடு-நோட்டம், நோடு-நாடு-நாட்டம். நோண்டு-நேண்டு-நேடு-நேட்டம். பொதுவாக, சொற்களின் வேர்ப் பொருளைத் தெளிவாகக் காட்டக் கூடிய மொழி தமிழ் ஒன்றே. அதனால், ``எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.'' (பெய. 1) என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. ஆயினும், தமிழிலும், எல்லாச் சொல்லும் கண்டமட்டில் அல்லது கேட்டமட்டில் வேர்ப்பொரு ளுணர்த்து வன அல்ல. பல சொற்களை ஆழ்ந் தகழ்ந்தாராய்ந்தே, அவற்றின் வேர்ச் சொல்லையும் மூலப்பொருளையும் அறிதல் கூடும். அதனால் ``மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா'' (உரி. 96) என்று தொல்காப்பியமே கூறுகின்றது. சொற்கள், ஒரு பொருட்சொல் என்றும், பல்பொருட்சொல் என்றும், பொருளுணர்த்தும் வகையில் இருவகைப் பட்டுள்ளன. பல்பொருட் சொல்லும், ஒரு வேர்ச்சொல் என்றும், பல்வேர்ச் சொல் என்றும், இருதிறப் பட்டுள்ளன. ஆதலால், வடிவொப்புமையொன்றே நோக்கிப் பல்வேர்ச் சொல்லை ஒருவேர்ச் சொல்லென்று மயங்குதல் தவறாம். எடுத்துக்காட்டாக, வெள் என்னும் இயற்சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இது வெப்பம், வெண்ணிறம், வெறுமை, விருப்பம் முதலிய பல்பொருளுணர்த்துவது. அவற்றுள், வெப்பமும் விருப்பமும், நம்நாட்டுத் தட்பவெப்ப நிலையும் அதன் விளைவாக எழும் மக்கட் கருத்தும் நோக்கின், ஒன்றோடொன்று முரண்பட்டனவாகும். நம்நாடு பொதுவாக வெப்பநாடா யிருப்பினும், கோடைக்காலத்திற் குளிர்ந்த குடிப்பையும் மாரிக்காலத்தில் வெப்பக் குடிப்பையும் விரும்புகின் றோம். சம தட்பவெப்ப நாடுகளிலும் மிகு தட்ப நாடுகளிலும் என்றும் குளிர்ந்திருப்பதால், அந் நாடுகளிலுள்ள மக்கள் வெப்பத்தை விரும்புவது இயல்பே. அதனால், தியாகராசப் பாடகர் பாட்டைச் செவிகுளிரக் கேட்டு இன்புற்றேன் என்று நமர் சொல்வது போன்று, அமெரிக்க நாட்டுத் தலைவர்க்குச் செருமனியில் வெதுவெதுப்பான (warm) வரவேற்பிருந்தது என்று குளிர்நாட்டார் கூறக் கேட்கின்றோம். தமிழில் வெம்மை என்னும் சொல்லிற்கு வெப்பம், விருப்பம் என்னும் இருபொருளும் உள்ளன. ``உருமமும் கருமமும் உருப்பமும் வெப்பமும் அழனமும் கோரமும் அழலும் வெம்மை'' (7 : 105) என்பது பிங்கலம். ``வெம்மை வேண்டல்''.  (தொல். உரி. 36) வெள் - வெட்டை = 1. வெப்பம். ``அனல் வெட்டையாற் சுருண்டு'' (இராமநா. யுத். 14) 2. நிலக்கொதி (W.). 3. காமச்சூடு. ``காம வெட்டை யிலே மதிமயங்கி'' (தனிப்பா.) வெட்டைச்சூடு என்பது பெருவழக்கு. தெ. வெட்ட, க. வெட்டெ. வெள் என்னும் இயற்சொல்லடிப் பிறந்த வெய்ய, வெய்யோன் முதலிய சொற்கள் வெப்பத்தைப் போன்றே விருப்பத்தையும் உணர்த்து கின்றன. இதனால், தமிழரின் முன்னோர் ஒருகாலத்தில் குளிர்நாட்டிலும் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்று சொல்லாராய்ச்சி யில்லார் முடிவுகொள்ள நேர்கின்றது. கடல் கொண்ட குமரிநாட்டின் தென்கோடி வெப்ப மண்டலத் தின் தென்னெல்லைக் குட்பட்டதே. தமிழ்ச்சொற்கள் பெரும்பாலும் உகரச் சுட்டடியிற் பிறந்துள்ளன. உ- உல் என்னும் மூல அடி, குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் ஆறு வழியடிகளாகப் பிரிந்தும், திரிந்தும், பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பிறப்பித்துள்ளன. வகரம் உகரமுதல் கொள்ளாமையால், வுகர அடியாகப் பிறந்த சொல் ஒன்றுமில்லை. ஆதலால், ஒலிக்குறிப்புச் சொற்களொழிந்த வகர மெய்ம்முதற் சொற்களெல்லாம் பகர முதலடியினின்றோ மகர முதலடியினின்றோதான் தோன்றியுள்ளன. வெள் என்னும் இயற்சொல், வெப்பப் பொருளில் மெள் என்னும் அடியினின்றும், விருப்பப் பொருளில் பெள் என்னும் அடியினின்றும் திரிந்துள்ளது. முள் - முளி. முளிதல் = எரிதல். முளி - மிளி - மிளிர். மிளிர்தல் = எரிதல், விளங்குதல். மிள் - மின் = ஒளி. ஒளி நெருப்பின் இயல். முள் - மிள் - மெள் - வெள் - வெய் - வெய்ய = வெப்பமான. வெய்யோன் = வெப்பமானவன், கதிரவன், கொடியோன். ளகரமெய் யகரமாகத் திரிதல் பெரும்பான்மை. எ-கா : கொள் - கொய், தொள் - தொய். பிள் - பிய். பொள் - பொய் - பை. வள் - (வய்) - வை = கூர்மை. புல்லுதல் = பொருந்துதல், விரும்புதல். புல் - புர் - புரி. புரிதல் = விரும்புதல். புல் - புள் - பிள் - பிண் - பிணா, பிணவு, பிணவல், பிணை. பிள் - பெள் - பெண் - பேண். பெட்டல் = விரும்பல். ``பிணையும் பேணும் பெட்பின் பொருள.'' (தொல்.உரி. 40) பெள் - வெள் - வெய்ய = விருப்பமான, வெய்யோன் = விரும்பிய வன், காதலன். வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை = வெப்பம், விருப்பம். திரிசொற்களில் யகரமெய் தொகுவது இயல்பே. எ-கா : வேய் - வேய்ந்தோன் - வேந்தன். தேய் - தேய்வு - தேவு - தேவன். இங்ஙனம், சொற்களின் மூலத்தை ஆழ்ந்தாய்ந்துதான் காண வொண்ணும். தமிழரின் முன்னோர் குமரிநாட்டில் நண்ணிலக்கோட்டை அடுத்தே வாழ்ந்தவர். நாள் முழுதும் வெயிலில் உழைப்பவர் கருத்தும், நிழலில் வாழ்பவர் வெளுத்தும், இருப்பர். வெண் களமர் X கருங்களமர், வெள்ளாளர் X காராளர் என்னும் பெயரிணைகளை நோக்குக. உழுதுண்பவர் வெயிலிலும், உழுவித்துண்போர் நிழலிலும் இன்றும் வாழ்தல் காண்க. இனி, உணவுச் சிறப்பினாலும் உண்ணா வறுமையாலும் வெளுத்தும் கருத்தும் போவதும் உண்டு. வெள்ளொக்கல் X காரொக்கல் என்னும் பெயரிணையை நோக்குக. தமிழர் வெப்பமிக்க குமரிநாட்டினின்றே மேனாடுகட்குச் சென்றமையை, V. R. இராமச்சந்திர தீட்சிதரின் Origin and Spread of the Tamils என்னும் மறுக்கொணா அரிய ஆராய்ச்சி வரலாற்று நூலை நோக்கிக் காண்க. மாந்தன் முதற்பெற்றோர் நண்ணிலக்கோட்டை யடுத்த நாட்டிலேயே வாழ்ந்திருத்தல் கூடும். இதற்குரிய சான்றுகளையெல்லாம் இங்குக் கூற இடமின்மையால், இம்மட்டில் இக் கட்டுரை நிறுத்தப்பட்டுள்ளது. மேலைநாட்டு மொழியாராய்ச்சியாளர் என்னென்ன உண்மை காண்பினும், அவையெல்லாம் குமரிநாட்டு மாந்தன் தோற்றத்திற்கோ தமிழன் தோற்றத்திற்கோ முரணாக இருத்தல் முடியாதென்பதையும், மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றேயென்பதையும், இதனால் திட்டவட்டமாய்த் தெரிந்துகொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' அகுதோவர் 1980 10 மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள் இற்றை அறிவியல்களெல்லாம் மேனாடுகளில் தோன்றி வளர்ந்து வருகின்றமையின் ஏனைத் துறைகளிலும் மேலையர் சொல்வதெல்லாம் மேலான அறிவியலுண்மை யெனப் பலர் கருதுகின்றனர். தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாதலாலும், மொழிநூல் முதன்முதல் தமிழிலேயே கருக்கொண்டமையாலும், அமைப்பில் மட்டுமன்றி இருவகை வழக்கிலும் தமிழே சிறந்து வந்திருப்பதனாலும், மொழிநூற்கு அடிப்படையான இலக்கணம் கி.மு. 10ஆம் நூற்றாண் டிலேயே தமிழில் முழுநிறைவாகத் தோன்றிவிட்டமையாலும், சமற்கிருத இலக்கணத்திற்குத் தமிழிலக்கணமே மூலமாதலாலும், மொழிநூல் என்னும் அறிவியல் குமரிநாட்டுத் தமிழர் கண்டதின் வளர்ச்சியேயன்றி, மேலையர் புதுவதாகப் புணர்த்த தாகாது. முதன்முதல் தமிழகத்தில் வந்து வழங்கிய அயன்மொழி வட மொழியே யாதலால், அக்காலத்து மொழிகளைத் தென்மொழி வடமொழி யென இரு வகுப்பாகவும், தென்மொழியைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என இருவகையாகவும், செந்தமிழை இயற்சொல் (Primitives) திரிசொல் (Derivatives) என இரு கூறாகவும், வகுத்து; கொடுந்தமிழ்நாட்டுச் சிறப்புச் சொற்களை மட்டும் திசைச்சொல் (Provincialism) எனத் தழுவி; திரிசொற்களை யெல்லாம் முதனிலை, ஈறு, உருபு, இடைநிலை, புணர்ச்சி, சாரியை, திரிபு (விகாரம்) என ஏழுறுப்பாகப் பகுத்து, இருவகைச் சொற்கும் இயற்பொருள் ஆக்கப் பொருள் ஆட்சிப் பொருள் வேர்ப்பொருள் (மொழிப்பொருட் காரணம்) என்னும் நால்வகைப் பொருளுங் கண்டு; வலித்தல் மெலித்தல் தொகுத்தல் விரித்தல் நீட்டல் குறுக்கல் என்றும், போலி என்றும், சிதைவு என்றும் குறை என்றும், மரூஉ என்றும், சொற்றிரிபு முறைகட்குப் பெயரிட்டும்; கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல் காப்பியத்திற்கு முன்பே, மொழிநூற்கு அடிகோலிவிட்டனர் நம் மூதறிஞரான முன்னோர். தொல்காப்பியம், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்த சார்பிற் சார்பு நூலாதலின், மேற்கூறிய மொழிநூற் கூறுகளுள், வடசொல் என்பது தவிர ஏனையவெல்லாம், தலைக்கழகக் காலத்தினின்று வழிவழி வந்தனவேயாம். ஆதலால், பிற்காலத் திரிமொழிகளாகிய ஆரியத் தையும் அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத் தையும் அடிப்படையாக வைத்தாய்ந்து, மேலையர் உண்மைக்கும் உத்திக்கும் மாறாகக் கூறும் போலி நெறிமுறைகள் கொள்ளத்தக்கனவல்ல. அவையாவன : 1. மலைவாணரெல்லாரும் பழங்குடி மக்களெனல் மொழியில்லாத முதற்கால (Primitive) அநாகரிக மாந்தரெல்லாரும், இயற்கை விளைவுண்டு மரத்திலும் குகையிலும் தங்கி மலையில் வதிந்தது உண்மையே. ஆயின், நீலமலைத் துடவரும் கோத்தரும் பெலுச்சித்தானப் பிராகுவீயரும், முதற்கால மாந்தர் வழியினர் அல்லர். அவர்கள் நாகரிகக் காலத்தில் கொள்ளைக்கும் போருக்கும் அஞ்சிப் பாதுகாப்பைத் தேடிக் குறிஞ்சி நிலத்திலிருந்தும் முல்லை நிலத்திலிருந்தும், சிறுபான்மை மருத நிலத்திலிருந்தும், மலையேறி உச்சிக்குச் சென்று குடிபுகுந்தவரின் வழியினரே. இதை அவர் ஊணுடை யுறையுளும் தொழிலும் மொழியும் காட்டும். அவர்கள் மொழி கீழ்நிலத்து நாகரிக மொழியின் கொச்சைத் திரிபே. எ-கா : தமிழ் துடவம் யான், நான் ஒன் ஐயன் (தந்தை) இன், எயி மகன் மக் எருது எஸ்த் ஒன்று ஒத் உறங்கு வற்க்ஸ் கும்பிடு குபிட் முந்துகாலத் தமிழர் நிலை குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது. 2. சொற்குறுக்கமெல்லாம் வேர்ச்சொல்லெனல் ஒரு மொழியின் சொற்கள் முந்துநிலையிலும் கொச்சை நிலையிலும் குறுகி நிற்கும். மலைவாணர் பேசுவது கொச்சைநடை யாதலின், அவர் சொற்கள் பெரும்பாலும் ஓரசையாகவும் ஓரெழுத்தாகவும் குறுகி நிற்பது இயல்பு. இதை வேர்ச்சொல்லாகக் கருதி இற்றை மலைவாணரைப் பழங்குடி மக்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வர் மேலையர். எ-கா : தமிழ் பிராகுவீ ஏன் (யான்) ஈ இரு அர் அவர்கள் ஓவ்க் வாய்கள் பாக் எது மூலம்? vJ âÇò? என்பது, சொல்லமைப்பை நோக்கினால் தெரிய வரும். 3. இலக்கியச் சொற்பொருள் வரிசையே இயற்கைச் சொற்பொருள் வரிசையெனல் ஒரு சொல்லின் பல வடிவங்களும் பொருள்களும் தோன்றிய காலவொழுங்கை, அவை முதன்முதலாகத் தோன்றியபொழுதே, அறிய முடியும். இலக்கியத்திற் புதிதாகத் தோன்றியவை தவிரப் பிறவெல்லாம், பழைய மொழிநிலையில் தோன்றிய வரிசைப்படியன்றி, அவ்வவ் விடத்தின் தேவைக்கேற்றவாறே, முன்னது பின்னும் பின்னது முன்னுமாக ஆளப்பெறும். ஆதலால், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சொல்லின் வடிவையோ பொருளையோ முன்னது பின்னதென்று துணியமுடியாது. ஆயின், இயற்கையையும் உளநூலையும் தழுவி ஏரண முறைப்படி, சொற்பொருள் வரிசையொழுங்கைப் பெரும்பாலும் உய்த்துணரலாம். பள்ளி என்னுஞ் சொல்லிற்குப் படுக்கை, தூக்கம், படுக்கையறை, அறை, வீடு, இடம், விலங்கு துயிலிடம், சாலை, அறச்சாலை, மடம், பள்ளிக் கூடம், தவப்பள்ளி, அரண்மனை, கோவில், சமண புத்தர் தொழுகைமனை, பணிக்களம், அரசன், துறவி ஆகியோர் கல்லறை, இடைச்சேரி, சிற்றூர், நகரம் முதலிய பல பொருள்கள் உள. அவற்றுள் இடம் என்பது வீடு என்பதன் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். ஆயின், இற்றைத் தமிழ்நூல்களுள் முதலதாகிய தொல்காப்பியத்தில், சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (எழுத்து.18) என்று, பள்ளி என்னும் சொல் இடம் என்னும் வழிப்பொருளில் ஆளப்பட்டிருப்பதால், அதையே முதற்பொருளாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறித்துள்ளது. இங்ஙனமே, மேலைமொழி நூலாரும், இலக்கியத்தில் முந்தியாளப்பட்ட வடிவும் பொருளும் முந்தியவை யென்றும், பிந்தியாளப்பட்ட வடிவும் பொருளும் பிந்தியவையென்றும், கொண்டிருக்கின்றனர். பள்ளி என்னும் சொல்லின் முதனிலை பள்ளத்தை அல்லது தாழ் மட்டத்தைக் குறிப்பதால், படுக்கை என்பதே அதன் முதற் பொருளாகும். நிற்கையிலும் இருக்கையும், இருக்கையினும் படுக்கையும் அதனாற் படுக்கும் இடம் அல்லது விரிப்பும் தாழ்மட்டமாயிருத்தல் காண்க. பள்ளி கொண்டான் பள்ளியெழுச்சி என்னும் வழக்குகளையும் நோக்குக. பள்-படு-படுக்கை, படை, பாடி. பாடை, பாடு. பாட்டரம் = தட்டையரம். படை என்பது முதலில் அடிப்படையையே குறித்தது. ஆரியமொழிகள் திரிமொழிகளாதலால், அவற்றின் சொற் பொருள்கள் அவற்றிலேயே தோன்றியன வல்ல. 4. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் எனல் எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது தொல் காப்பியம் (பெயரியல், 1). இங்ஙனஞ் சொல்வதும் சொல்லக் கூடியதும் தமிழ் ஒன்றே. ஏனெனின், பெரும்பாற் சொற்களை இன்னும் இயல் வடிவிற் கொண்டுள்ளது அஃதொன்றே. ஏனைமொழிச் சொற்கள் பெரும்பாலும் திரிவடிவிலும் சிதைவடிவிலுமிருப்பதால், அவற்றின் வேர்ப்பொருளைக் காணல் இயலாது. எ-கா : தமிழ் பிறமொழி பொருள் மாறு - மாற்றம் மாட்ட (தெலுங்கு) சொல் இடைகழி தேஹலீ (சமற்கிருதம்) வீட்டின் நடை (இடைகழி - டேகழி -டேழி - ரேழி) (கொச்சைத் திரிபு) டேகழி என்பதன் திரிபே தேஹலீ இஞ்சிவேர் (இஞ்சு-இஞ்சி) ஜிஞ்சர் (ஆங்கிலம்) இஞ்சி பசு-பை-பைது-பைதல் பைதொஸ் (கிரேக்கம்) பையன் வள்-வர்-வார்-வாரணம்-வாரண மாரினஸ் (இலத்தீன்) கடற்குரிய தமிழிலும் பல சொற்களைக் கண்ட அல்லது கேட்டமட்டில் அவற்றின் வேர்ப்பொருளைக் காணமுடியாது. சிலவற்றில் அது விளங்கித் தோன்றும்; சிலவற்றில் மறைந்து நிற்கும். மறைந்து நிற்பவற்றை ஆய்ந்தே காணல் வேண்டும். அதனால், மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் தொல்காப்பியர். (உரி.96). எ-கா : சுள்-சுடு-சுடல்-சுடலை (விழிப்பத் தோன்றுவது) புல்-புள்-புழல்-புடல்-புடலை (விழிப்பத் தோன்றாதது) மேலை மொழிநூலார் இயன்மொழியாகிய தமிழை அடிப்படை யாகக் கொள்ளாது திரிமொழியாகிய சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆய்ந்ததனாலேயே, வேர்ப்பொருள் காணாது குன்று முட்டிய குருடர் போல் இடர்ப்பட்டு, எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்று முடிபு செய்தனர். 5. இந்திய நாகரிகம் ஆரியர் கண்டது எனல் தமிழ் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் ஆழ்ந்து ஆராயாது, தமிழர் நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவரென்றும், கலவை யினத்தாரென்றும், வேத ஆரியரால் நாகரிகப்படுத்தப்பட்டவ ரென்றும், குருட்டுத்தனமாகவும், குரங்குப் பிடியாகவும் கொண்டுள்ளனர். இதற்கு ஆராய்ச்சியின்மை மட்டுமன்றி, இனவுணர்ச்சியும் கரணியமாகும். குமரிநாடு முழுகிப் போனதும், முதலிரு கழக நூல்களும் இறந்துபட்டதும், மதத்துறையில் தமிழும் குமுகாயத்துறையில் தமிழரும் தாழ்த்தப்பட்டிருப்பதும், இவற்றிற்கு மாறாக, இந்திய நாகரிக இலக்கியம் இன்று பெரும்பாலும் சமற்கிருதத்திலிருப்பதும், சமற்கிருதம் தேவமொழி யென்றும் பிராமணர் பிறப்பி லுயர்ந்தவரென்றும் உயர்த்தப்பட்டிருப்பதும், மேனாட்டார் மேலோட்டமாய்க் காணும் வேற்றுமை நிலைமைகளாகும். 6. சமற்கிருதம் ஆரியத்தின் மூலம் எனல் தமிழின் அல்லது தமிழரின் பிறந்தகம் குமரிநாடென்றும், தமிழ் திரிந்து திரவிடமும் திரவிடம் திரிந்து ஆரியமும் ஆயிற்றென்றும், மேனாட்டினின்று வந்து வழக்கற்ற ஆரியம் வடநாட்டுப் பிராகிருதங்க ளொடு கலந்து வேதமொழி யாயிற்றென்றும், வேதமொழி தமிழொடு கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழி (Literary Dialect) தோன்றிற் றென்றும், உண்மையறியாத அல்லது அறிய விரும்பாத மேலை மொழி நூலார், சமற்கிருதத்தையே ஆரியத்தின் மூலமென்று கொண்டு, சட்டைக் கேற்ப உடம்பை வெட்டுவதுபோலப் பல ஒவ்வாத நெறிமுறைகளைக் கொண்டு, வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) என்னும் வழுவியற் போலி யறிவியலை வளர்த்து வருகின்றனர். இதன் விளக்கத்தை, இனி வெளிவரும் என் A Guide to Western Tamilologists என்னும் ஆங்கில நூலிற் கண்டு தெளிக. - கட்டுரைப் பொழில் - கரந்தைத் தமிழ்ச்சங்க மணிவிழா மலர் 1973 11 சேயும் சேய்மையும் சொல்லாராய்ச்சியில் ஈடுபட்ட தமிழன்பர் ஒருவர் இரு மாதங்கட்கு முன் என்னிடம் வந்து, பல சொற்கள் ஒரே வடிவில் நின்று வெவ்வேறு பொருள் குறிக்கின்றனவே! அவற்றிற்கெல்லாம் எங்ஙனம் வேர் காண்பது? எடுத்துக்காட்டாக, சேய் என்னுஞ் சொல் குழவியைக் குறிக்கின்றது; சேய்மை என்னுஞ் சொல் தொலைவைக் குறிக்கின்றது. இதுவரை `செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்துள்ள வேர்ச்சொற் கட்டுரைகளை யெல்லாம் துருவிப் பார்த்தும், இதுபற்றி ஒன்றும் அறிதற்கில்லையே என்று தம் மலைப்பைச் சற்று மன வருத்தத்துடன் வெளியிட்டார். யான் அதற்குச் சுருக்கமாக விடை கூறினேனாயினும், அது விளக்கமாயில்லாமையாலும், விரிவான விடை ஒரு கட்டுரையளவு நீள்வதாலும், அவர்க்கு மட்டுமன்றி எல்லார்க்கும் பயன்படுமாறும், இவ் விளக்கக் கட்டுரை வரையத் துணிந்தேன். செல்வியில் வெளிவந்துள்ள வேர்ச்சொற் கட்டுரைகள் ஒருசில சொற்கட்கே யன்றி எல்லாவற்றிற்குமல்ல. எல்லாவற்றிற்கும் வேர்காண வேண்டின், அது ஒரு சொற்பிறப்பியல் அகரமுதலியில்தான் இயலும். அத்தகைய அகரமுதலியொன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னால் தொகுக்கப்பெறவிருந்ததைச் சிலர் கெடுத்துவிட்டனர். இதை அப் பல்கலைக்கழகமேனும் பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பேராசிரியரேனும் இன்னும் உணரவில்லை. சேய், சேய்மை என்னும் இரு சொல்லும் வெவ்வேறு வடிவின வேனும், ஒரே வடிவிலும் இருத்தல்கூடும். சேய்மை = குழவித் தன்மை, தொலைவு. 1. சேய் என் முதற்றாய்மொழியைப் படித்தவர், முன்வரற் கருத்தில் தோன்றற் கருத்தும், தோன்றற் கருத்தில் இளமைக் கருத்தும், இளமைக் கருத்திற் சிறுமைக் கருத்தும் தோன்றுவதையும், உகரச் சுட்டின் விரிவாகிய உல் என்னும் முதலடியினின்றும் மொழிமுதலெழுத்துகளை முதலிற் கொண்ட குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் ஆறு வழியடிகள் திரிவதையும் பார்த்திருக்கலாம். எ-கா : உல் - உன். உன்னுதல் = முன் தள்ளுதல் (முன்வரல்) உல் - உரு. உருத்தல் = தோன்றுதல் (தோன்றல்) உல் - உல்லரி = தளிர். உல் - உலவை = பசுந்தழை (இளமை) உல் - உள் - இள் - இளம் - இளமை (இளமை) உல் - உல்லி = ஒல்லி. உல்லி - ஒல்லி (சிறுமை) இங்ஙனமே சுல் என்னும் வழியடியும் இளமைக் கருத்தையும் சிறுமைக் கருத்தையும் கொண்ட சொற்களைத் தோற்றுவிக்கும். சுல் - சில் - சில்லான் = குட்டியோணான். சுல் - சுள் - செள் = பேன் குஞ்சு. செள் - செள்ளை = தங்கை. செள்ளை - செல்லெ(தெ.). செள் - (சேள்) - சேய் - குழவி. இவை இளமைபற்றியன. சுல் - சில் = சிறு துண்டு. சில் - சின் - சின்னம். சின்னான் = சிறியவன். சின்னி = சிறியவள். சில் - சிறு - சிற்று = சிற்றாள். சிற்று - சிட்டு = சிறு குருவி. சிட்டு - சீட்டு = ஓலை நறுக்கு. சிட்டு - சிட்டி = சிறுகலம். சிறு - சிறுவன். சிறு - சிறுக்கன் - செறுக்கன்(ம.) - சக்கன்(ம.). சிறு - சிறாய் = சிறு விறகுத் துணுக்கு. சிறு - சிறாம்பு - சினாம்பு. சிறு - செறு - செறும்பு = பனஞ்சிறாம்பு. சுல் - சுள் = சிறுமை. சுள் - சுள்ளல் = மென்மை, சுள்ளலன் = மெலிந்தவன். சுள்ளலி = மெலிந்தவள். சுள்ளாணி = சிறிய ஆணி(மலைபடு. 27, உரை). சுள் - சுள்ளி = சிறுமை. சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும் (கம்பரா. முதற்பே. 139) சுள் - சுண்டு = சிறியது, சிற்றளவு, சிறுகலம். சுண்டுவிரல், சுண்டெலி முதலிய கூட்டுச் சொற்களில் சுண்டு சிறுமை குறித்தல் காண்க. சுண்டு - சிண்டு = சிற்றளவு, சிறுகலம், சிறுகுடுமி. சிண்டு - சிண்டா = சிறுகுடுமி. சுண்டு - சுண்டை = சிறு காய்வகை. சுள் - செள் = கோழிமேல் ஒட்டும் சிறுபூச்சி. இவை சிறுமை பற்றியன. 2. சேய்மை உகரச்சுட்டு உயர்ச்சி குறித்தலை, உக்கம்(தலை), உகள்(குதி), உச்சி-உச்சம், உத்தரம்(மேல்விட்டம், உயரமான வடக்கு), உத்தி (தலையணி), உப்பு (பொங்கியெழு), உம்பு-உம்பர்-உம்பரம், உயர், உவண்-உவணம்-உவணை (மேலிடம், மேலுலகம்), உவர்(உப்பு), உறி, உன்னு(குதித்தெழு) முதலிய சொற்களால் அறியலாம். உகரம் இகரமாகத் திரியும். எ-கா: உவர் - இவர். இவர்தல் = உயர்தல், ஏறுதல். இவர்பரித் தேரினர் (சிலப். 5 : 160) உகரம் எகரமாகவும் ஊகாரம் ஏகாரமாகவும் திரியும். எ-கா: உகள் - எகிர். ஊர் - ஏர். ஊர்தல் = ஏறுதல், ஏறிச்செல்லுதல். ஊர் - ஊர்தி = ஏறிச்செல்லும் விலங்கு அல்லது mÂf«(vehicle). ஊர் - ஊர்த்தம் = மேனோக்கல், உயர்தல், ஊர்த்தம் - வ. ஊர்த்துவம் (urdhva). ஏர்தல் = எழுதல். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுருகு. 1) இதனால் எகர ஏகாரங்களும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்தும். எஃகு, எக்கு, எகிர், எட்டு - எட்டம், எடு, எண், எத்து, எம்பு, எவ்வு, எழு - எழும்பு, எற்று முதலிய சொற்களில் எகரமும்; ஏங்கு, ஏண் - ஏணி, ஏணை, ஏத்து, ஏத்தாப்பு, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு - ஏற்றை முதலிய சொற்களில் ஏகாரமும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்துதல் காண்க. ஏகாரவுயிர் தன்னளவில் ஓரெழுத்துச் சொல்லாய் நின்றும் உயர்ச்சிக் கருத்தை யுணர்த்தும். ஏ = 1. மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87) 2. கழுத்தை நிமிர்த்துதல், தலையெடுப்பு. ஏக்கழுத்தம் என்பது உலக வழக்கு. காதிரண்டு மில்லாதான் ஏக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5) 3. இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7 : 55). 4. அடுக்கு. ஏபெற் றாகும். (தொல். 304). ஏகல் லடுக்கம் (நற். 116). 5. உயர்வு, பெருக்கம், மிகுதி. உயிர்முதற் சொற்கள் ஏதேனுமொரு மெய்யை முன்மிகையாகப் பெறுவது இயல்பு. எ-கா : இளை-சிளை. சிளைத்தல் = சோர்தல், இளைத்தல். அவனைப்போலே பிரிவுக்குச் சிளையாதபடி (ஈடு, 9 : 5 : 3) உதை - சுதை(பிங்.) = உதைகாற் பசு. வருகன் றூட்டாப் புன்சுதை (குற்றா. தல. தக்கன் வேள்வி. 117) இங்ஙனமே ஏண், ஏணி என்னும் பெயர்களும் முறையே சேண், சேணி எனச் சகரமுதலாகும். ஏண் = 1. உயர்ச்சி ஏணிலி ருந்தேன் (திவ். பெரியதி. 1 : 6 : 1) 2. எல்லை (திவ். திருவாய். 2 : 8 : 8. பன்னீ..) 3. இறுமாப்பு. ஏணாப்பு = இறுமாப்பு. 4. செருக்குப் பேச்சு. ஏண்பல பகர்ந்தனை (கந்தபு. அவைபுகு. 153) சேண் = 1. உயரம் (திவா.). சேண வந்தர நோக்கலும் (கம்பரா. இராவணன் வதை. 39) 2. மலைமுகடு (பிங்.). 3. வானம். சேணெல்லாம் புல்லொளி செலுத்தி (கம்பரா. சூர்ப்பநகை. 20). 4. விண்ணுலகம். சேண்மக பதிக்கு நல்கி (கந்தபு. திருநகர. 105) 5. சேய்மை. சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு (புறம். 174 : 2). 6. நீளம் (திவா.). சேணுற நீண்டு மீண்டு (கம்பரா. சூர்ப்பநகை. 46). 7. நெடுங்காலம் சுற்றமொடு முழுது சேண்விளங்கி (புறம். 2 : 19). ஏணி = 1. ஏறுகருவி. 2. அடுக்கு. அண்டத் தேணியின் பரப்பும் (கந்தபு. சூரன்வதை. 485). 3. எண். ஏணி போகிய கீழ்நிலைப் படலமும் (ஞானா. 54 : 1). 4. எல்லை. நளியிரு முந்நீ ரேணி யாக (புறம். 35 : 1). சேணி = 1. ஏணி (திவா.). 2. சேடிய ருலகு. விஞ்சையர் சேணி செலவிட்டு (சூளா. சுயம். 192). சேண் என்னும் சொல் சேய்மையை யுணர்த்துதலால், அது சேய் என்னும் சொல்லோடு தொடர்புள்ளதாகவே யிருத்தல் வேண்டும். உயரமும் சேய்மையும் தொலைவளவில் ஒன்றாதலால், உயர்ச்சிப்பொருட்சொல் சேய்மைப் பொருளு முணர்த்துதல் உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்ததே. உயர்ச்சி மேற்றிசையும் சேய்மை பக்கத்திசையுமா யிருத்தலே அவ் விரண்டிற்கும் வேற்றுமை. பல ணகரமெய்ச் சொற்கள் ளகரமெய்ச் சொற்களின் திரிபாயுள்ளன. எ-கா : ஆள் - ஆண், எள் - எண், கோள் - கோண், பெள் - பெண், வேள் - வேண்; களவாளி - களவாணி, வளரி - வணரி; சுருளை - சுருணை, திரளை - திரணை. ளகரமெய்யீறு பல சொற்களில் யகரமெய்யீறாகத் திரிகின்றது. எ-கா: அள் - (அய்) - அயல், இள் - எள் - எய், கள் - (கய்) - கை(கய - கச), கொள் - கொய், கோள் - கோய், சாள் - சாய், தொள் -தொய், நெள் - நெய், நொள் - நொய், பொள் - பொய், மாள் - மாய், வள் - (வய்) - வை, (கூர்மை), வெள் - வெய். இங்ஙனம், சேய்மையுணர்த்தும் சேய் என்னும் சொல்லும் சேள் என்னும் இறந்துபட்ட சொல்லின் திரிபாயிருத்தல் வேண்டும். ஏ - ஏள் - ஏண், ஏள் - சேள் - சேய். பழம்பாண்டி நாடாகிய, குமரிக்கண்ட முழுக்காலும், முதலிரு கழக இலக்கிய அழிவாலும், பல்லாயிரம் சொற்கள் இறந்துபட்டொழிந்தன. அவற்றுள் ஒன்று, சேண் சேய் என்னும் இரண்டையும் இணைத்துக் கொண்டிருந்த சேள் என்னும் இடைநிலைச் சொல்லென உய்த்துணர்ந்து கொள்க. - ``செந்தமிழ்ச் செல்வி'' மே 1967 12 ஆலமரப் பெயர் மூலம் ஒரு சொல்லின் வேரைக் காண்டற்கு, முதலாவது, அச் சொல், எம்மொழிக்குரியதென்று கண்டுகொள்ளல் வேண்டும். அதன்பின், அதன் திருந்திய அல்லது இயற்கை வடிவத்தையும், அச் சொல்லாற் குறிக்கப்படும் பொருளின் சிறப்பியல்பையும், அதற்கும் அச் சொல்லின் அடிப்பகுதியின் பொருட்குமுள்ள தொடர்பை அல்லது பொருத்தத்தையும் நோக்கல் வேண்டும். ஆகுபெயராயின் அதன் இயற்பொருளையே கொள்ளல் வேண்டும். சிறப்பியல்பு, தனிச்சிறப்பும் பொதுச்சிறப்பும் என இருதிறப்படும். வாழைமரத்தின் வழவழப்பு, தனிச்சிறப்பு; இறால், கொடி, சுழி, திரிகை, நெறிப்பு, பரிதி, முடம், வளையல் முதலியவற்றின் வளைவுத்தன்மை பொதுச்சிறப்பு. ஆலமரத்தின் சிறப்பியல்பு அதன் அகற்சியே. அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, அரசுபோல் ஓங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர் என்னும் வாழ்த்தியல் மரபுத்தொடரில், ஆல்போற் படர்ந்து என்பது கவனிக்கத்தக்கது. ஆல் போல் தழைத்து என்றும் பாட வேறுபாடுண்டு. அது சரியானதன்று. உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும் (நாலடி. 38) என்பது நாலடியார். தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி யாட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே என்பது வெற்றிவேற்கை. (17) இவை ஆலமரத்தின் அகற்சியைச் சிறப்பாய் எடுத்துக்காட்டுகின்றன. அகல் என்னும் சொல், தகழியையும், அகலம் என்னும் சொல் மார்பு, மாநிலம், வானம் முதலியவற்றையும் அகற்சிபற்றிக் குறிக்கும். இவற்றுள், அகல் என்பது தகழிப்பொருளில் ஆல் என்று கொச்சை வழக்கிலும், அகலம் என்பது வான (ஆகாய)ப் பொருளில் ஆலம் என்று இலக்கிய வழக்கிலும் திரிகின்றன. இணைக் குறில்கள் இருவகை வழக்கிலும் ஒரு நெடிலாய்த் திரிவது இயல்பு. எ-கா : கொழுது-கோது சிவ-சே, சிவத்தல்-சேத்தல் தொகுப்பு-தோப்பு நுவல்-நூல் பகு-பா பகுதி-பாதி பகல்-பால் புழுதி-பூதி, பெயர்-பேர் மயல்-மால் மிகு-மீ மிகுதி-மீதி வணங்கு-வாங்கு வியர்-வெயர்-வேர் வெயர்வை-வேர்வை. இங்ஙனமே, அகல் என்னும் சொல்லும் ஆல் எனத் திரிந்து அல்லது மருவி ஆலமரத்தைக் குறிக்கின்றது. பகல்-பால் என்னும் திரிபு, அகல்-ஆல் என்பதற்கு எதுகையாயிருத்தலை நோக்குக. ஆல்-ஆலம். அம் என்பது ஒரு பெருமைப்பொருள் பின்னொட்டு. ஒ.நோ: கால்-காலம், தூண்-தூணம், நிலை-நிலையம், மதி -மதியம், விளக்கு-விளக்கம். சொற்களின் வேர்களை அல்லது மூலத்தை இடையிடைத் தவறாய்க் காட்டிச் செல்லும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதிகூட, ஆல் என்னும் மரப்பெயரை அகல் என்னும் சொல்லின் திரிபாகவே காட்டியுள்ளது. - ``செந்தமிழ்ச் செல்வி'' மார்ச்சு 1964 13 கருப்பும் கறுப்பும் தமிழ்ப் புலவர்க்கெல்லாம், மொழிப்பொருட் காரணம் என்று (877) தொல்காப்பியர் கூறும் வேர்ச்சொற்பொருள் தெரியும் அல்லது தெரிந் திருக்க வேண்டும் என்னும் தவறான கருத்து, பொதுமக்கள் உள்ளத்தில் மட்டுமன்றிப் புலமக்கள் உள்ளத்திலும் இருந்துவருகின்றது. சொல் லாராய்ச்சி ஒரு தனிக்கலை யென்பதை அவ் விருசாராரும் இன்னும் அறிந்திலர். பல மொழிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதால், சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியின்றிச் செய்தல் ஒண்ணாது. ஆங்கிலப் பேராசிரியர் எத்துணைப் பெரும்புலவராயிருப்பினும் மொழி நூலாசிரியர் கருத்தறிந்தே வேர்ச்சொற் பொருள் கூறுவர். தமிழ்ப் பேராசிரியரோ, தம்மை எல்லாமறிந்த சித்தராகக் கருதிக்கொண்டு, ஒருவர் ஒரு சொற்கு வேர் வினவிய மட்டில், பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் ஒன்றைச் சொல்லிவிடுவதுடன், மொழியாராய்ச்சியாளரொடு முரணுவதும் போட்டியிடுவதும் செய்கின்றனர். கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் (403) என்னும் குறட்குப் பொதுக்கல்வி கல்லாதவர் மட்டுமன்றித் தனிக்கலை கல்லாதவரும் இலக்காவர். முப்பதாண்டுகட்கு முன்னரே, ஒரு பெரும்புலவர் வடை என்னுஞ் சொற்கு வடு என்பது வேர் என்றார். இக்காலத்தில், ஒரு பேராசிரியர் காரன், காரி என்னும் ஈறுகள் வடசொற்கள் என்றெழுதுகின்றார். மற்றொருவர், குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் என்னும் தொல்காப்பிய நூற்பாவில் (1568). முடிய வந்த அவ்வழக் குண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே என்று தமிழ்ச்சொற்குக் கூறியதைப் பிறமொழிச்சொற்கும் கூறியதாகப் பிறழ வுணர்ந்து, சைக்கிள், மோட்டார், பசு (Bus), ரேடியோ முதலிய சொற் களையும் தமிழில் தழுவலாம் என்கிறார். இன்னுமொருவர், இந்தியால் தமிழ் கெடவிருப்பதை, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே (நன். 462) என்னும் நூற்பாவால் அமைக்கின்றார். இனி, ஒருசார் பேராசிரியர், விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோல், ஒன்றுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் (437), ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே (463) என்னும் தொல்காப்பிய நூற்பா வழுக்களைத் தெளிவாக அறிந்திருந்தும், பல நூல்களிலுள்ள பாட வேறுபாடுகளைக் கண்டிருந்தும், சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஔஎனும் மூன்றலங் கடையே (62) என்பதின் சரியான பாடம் சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அவைஔ என்னும் ஒன்றலங் கடையே என்பதே என்பதை யுணராது, தொல்காப்பிய வழுவையோ பதிப்பாசிரியர் தவற்றையோ மறைக்குமுகமாகத் தமிழ்ச்சொல்லை மறைத்துத் தமிழின் பெருமையைக் குறைக்கின்றனர். தொல்காப்பியர்க்கு முற்பட்ட சொல்லையும் பிற்பட்ட சொல்லையும் மொழியாராய்ச்சியாளனே அறிய முடியும். தமிழுக்கு அடிப்படையானவும் தொல்காப்பியர்க்கு முந்தியவு மான முப்பத்தைந்து சொற்கள் சகர முதலனவாக வுள்ளன. இனி, ஒருசார் புலவர், சொற்களின் முன்வடிவையும் பின் வடிவையும் முற்பொருளையும் பிற்பொருளையும் ஆய்ந்தறியாது, முன் வடிவெல்லாம் வழுநிலை யென்றும் பின் வடிவே வழாநிலையென்றும் வலிக்கின்றனர். கருமை குறித்த சொல்லின் கருப்பு, கறுப்பு என்னும் இருவடிவுகளுள், முன்னதே முன்னதாம். இம் முடிவிற்கு ஏதுக்கள் மூன்று, அவையாவன : 1. கள் எனும் வேர்ச்சொல்லினின்று கரு என்னும் வடிவே முந்தித் தோன்றல். கள் - கர் -கரு - கறு, ஒ.நோ: குள் - குர் - குரு - குறு; முள் - முர் - முரு - முறு(வளை) தெள்-தெறு, வெள்-வெறு, என்பவற்றில் றகரவடிவு நேரடியாகத் தோன்றியிருப்பினும், அவை ரகர வடிவாகிய இடைநிலையில்லாதன. கறு என்பதோ அவ் இடைநிலையை உடையது. ரகரத்தின் வன்மையே றகரமாதலால், ரகரமே முந்தியதாம். நெடுங்கணக்கிலும் ரகரம் முன்னும் றகரம் பின்னும் வைக்கப்பட்டிருத்தல் காண்க. ஒளிர் - ஒளிறு, முரி-முறி (வளை) என்பனவும் றகரத்தின் பின்மையைக் காட்டும். 2. கருமை குறித்த சொற்களுள், மாபெரும்பாலனவும் இருவகைப் பண்டை வழக்கும் ரகரத்தையே கொண்டிருத்தல். எ-கா : தனிச்சொற்கள் : கரம்பை, கரி, (அடுப்புக்கரி) கரிசல், கரிச்சான், கரியவன் (திருமால்), கருக்கம் (கருமுகில்), கருக்கல், கருக்கு, கருகல், கருப்பை, (கருப்பெலி) கார், காரி (கருங்காளை) கூட்டுச்சொற்கள் : கரிக்குருவி, கரிக்கோடு, கரிச்சட்டி, கரித்துணி, கரிமா, கரியடுப்பு, கரியமால், கரியமான், கருகுமணி, கருங்கடல், கருங்கரப்பான், கருங்கல், கருங்களமர், கருங்காடை, கருங்காணம், கருங்காந்தள், கருங்காலி, கருங்காவி, கருங்கிளி, கருங்குட்டம், கருங்குதிரை, கருங்குரங்கு, கருங்குருவி, கருங்குவளை, கருங்குளவி, கருங்குறுவை, கருங்கொண்டல், கருங்கொல், கருங்கொள், கருங்கோழி, கருங்கோள், கருஞ்சம்பா, கருஞ்சாந்து, கருஞ்சாமை, கருஞ்சாரணை, கருஞ்சாரை, கருஞ்சிவப்பு, கருஞ்சீரகம், கருஞ்சுரை, கருஞ்செவ்வாப்பு, கருஞ்சேரா, கருஞ்சோளம், கருந்திருக்கை, கருந்தேள், கருநந்து, கருநாகம், கருநாடு, கருநார், கருநாரை, கருநிமிளை, கருநெய்தல், கருநெருஞ்சி, கருநெல்லி, கருநொச்சி, கரும்படை, கரும்பலகை, கரும்பிள்ளை, கரும்பிறை, (கரும்பளிங்கு) கரும்புடையன், கரும்புல் (பனை), கரும்புள், கரும்புள்ளி, கரும்புற்று, கரும்புறா, கரும்பூனை, கரும்பேன், கரும்பொன், கருமணித் தக்காளி, கருமணல், கருமணி, கருமருது, கருமலை, கருமா, கருமுகில், காரரிசி, காராடு, காராளர், காரெலி, காரெள், காரொக்கல். 3. றகரங் கொண்ட வடிவு வழிப்பொருட்கே ஏற்றமை. இற்றைத் தமிழ் நூல்களுள் முதலதான தொல்காப்பியத்தில், கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (855) என்று, கறுப்பு என்னும் சொல் சினப்பொருளைக் குறிப்பதாகவே கூறப்பட்டுள்ளது. கறுத்தவரும் சிவந்தவருமாக இருவகை நிறத்தார் தமிழகத்துத் தொன்றுதொட்டுளர். சிவப்பு என்றது பொன்னிறத்தையும் செம்பொன்னிறத்தையும். சினத்தினால், கரியர் முகம் மிகக் கருக்கும்; சிவப்பர் முகம் மிகச்சிவக்கும்; கண் இருநிறத்தார்க்கும் சிவக்கும். செறுவர் நோக்கிய கண்தன் சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே (புறம் : 100) என்னும் புறப்பாட்டடியைக் காண்க. பொருள் மாறும்போது சொல்வடிவும் மாறவேண்டுமென்பது சொல்லாக்க நெறிமுறையாதலால், கருப்பு என்னும் சொல் சினத்தைக் குறிக்கும்போது கறுப்பு என்றாயிற்று. வசையுநர்க் கறுத்த பகைவர் (பதிற்றுப். 32:15) கறுத்தோர் = பகைவர். கறுத்தோ ருறுமுரண் தாங்கிய. (பதிற்றுப். 66:9) கறு-கறுவு=நீள்சினம், மனவயிரம். கறுவி வெகுண்டுரைப்பான் (திரிகடு. 46) கறுத்தல் = மங்கிச் சிறிது கருத்தல், எ.டு : கறுக்கன் வெள்ளி. கறுப்பு = கறை, குற்றம், தழும்பு, கருமேகநோய். கறு - கறை = கருத்த களங்கம். கறைமிடறு (புறம். 1:5) கறை = களங்கம், மாசு, குற்றம், உறைந்து கருத்த அரத்தம். கறுப்புக் கட்டுதல் = பயிர்முதிர்ந்து இருண்ட பச்சைநிறங் கொள்ளுதல். கறுத்தல் = முற்றுதல். கெளவை கறுப்ப (மதுரைக். 371) கறுப்புவெற்றிலை = இருண்ட பச்சை வெற்றிலை. பச்சை, நீலம், கருப்பு மூன்றும் ஓரின நிறங்களாதலால், பயிர் முற்றி இருண்டபசுமை யடைதல் கறுத்தல் எனப்பட்டது. இங்ஙனம் வழிப்பொருள்கட்கே கறுப்பு என்னும் வடிவம் உரியதாம். ஆயினும், 10ஆம் அல்லது 11ஆம் நூற்றாண்டினதான பிங்கலந்தையில் கறுப்பு என்னுஞ் சொற்குக் கருமைப் பொருள் குறிக்கப்பட்டுவிட்டதனால், அதற்குப் பிற்பட்ட இலக்கியத்தில் அது அம் முதற்பொருளிலும் வழங்கலாயிற்று. கம்பராமாயணம், நகர் நீங்கு படலம் 58ஆம் செய்யுளில், கறுத்தாய் என்னும் வடிவம், பொறுத்தாய், இறுத்தாய், வெறுத்தாய் என்னும் ஏனையடி முதற்சீர்கட்கு எதுகையாக வந்ததாகக் கருதலாம். அதே வனப்பில், இலங்கை காண்படலம், 47ஆம் செய்யுளில், நாள் என்னும் சொல், யாழ், வாழ், பாழ் என்பனவற்றிற்கு எதுகையாக நாழ் என்று வந்திருத்தல் காண்க. ஓர் கறுப்பு மில்லாத என்னும் படிக்காசுப் புலவர் பாட்டிலும், ஆர் கறுப்பன், பேர்கறுப்பன் என்பனவற்றிலுள்ள றகரம் எதுகைபற்றியதே. பொதுவாக, பிற்காலத்திலக்கியத்தில் சொற்கள் சிறப்புப் பொருள் கருதாது மோனையெதுகைத் தொடை யொன்றேபற்றி ஆளப்பட்டுள, ஊடல், புலவி, துனி என்னும் மூன்றும் மூவேறு நிலையைக் குறிப்பனவா யினும், ஒரே பொருளில் ஆளப்பட்டிருத்தலைக் காண்க. ஆதலால், கறுகறுத்தல் (மிகுந்த கருநிறமடைதல், இலக்கண விளக்கம், 325, உரை), கறுத்த காக்கட்டான் (கருங்காக்கணம், யாழ்ப்பாண அகராதி), கறுத்தகார் (குறுவை நெல்வகை), கறுத்தவன் (கருநிறமுடையவன்) கறுத்தவுப்பு, கறுப்பன் (கரியவன்), கறுப்புக் கட்டுதல், கறுப்புக் கன்னிமார், கறுப்புக் காஞ்சொறி, கறுப்புக் குங்கிலியம், கறுப்புக் கொள், கறுப்புத்தாமர், (ஒருவகை மரம்), கறுப்புத்தேயிலை, கறுப்புப்பயறு, கறுப்புப்புள்ளி, கறுப்புப்பூலா, கறுப்பு மட்டிவாய், கறுப்பு மணித்தக்காளி, கறுப்புவரால், கறுப்பு வவ்வால், கறுப்பு வீரம் (விளக்குக்கரி) முதலிய பிற்கால இலக்கிய வழக்கும் அகர முதலி வழக்கும் கொள்ளத்தக்கனவல்ல. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில், வரச்சூலை, வரட்சி, வரட்சுண்டி, வரட்சூலை, வரட்சொறி, வரட்டடைப்பான், வரட்டி, வரட்டுதல், வரட்டு, வரட்டுச் சோகை, வரட்டுப்பசு, வரள், வரள்வாயு என றகரம் வரவேண்டிய சொற்களையெல்லாம் ஒழுங்காய் ரகரமிட்டுக் குறித்திருக் கின்றனர். இவை சரியாமா? தமிழ்நாடு அடிமை நாடாதலின், தமிழைப் பற்றிக் கேட்பார் கேள்வியில்லாமலும் எவரேனும் தப்பித் தவறிக் கேட்பின் விடை விளக்கமில்லாமலும் இருக்கின்றது. இத்தகைய அகரமுதலிகளைப் பின்பற்றாது, தூய கருநிறத்தைக் குறிக்கும் சொல்லெல்லாம் ரகரத்தைக் கொண்டவையென்றும், சினம், கறை, முதிர்ச்சி முதலிய வழிப்பொருளைக் குறிப்பனவெல்லாம் றகரத்தைக் கொண்டவையென்றும், தெரிந்துகொள்க. மரவயிரம் கருத்தும் சிவந்தும் இருக்குமாதலால், கருத்ததைக் கருப்பு என்றும் சிவந்ததைச் சேகு என்றும் சொல்லல் வேண்டும். இனி, கருப்பு என்னும் சொல் பஞ்சம் என்னும் பொருட்கேயுரியதாகச் சிலர் கருதுவர். கருப்பு இருளையும், இருள் துன்பத்தையும் நாட்டுத் துன்பங்களுட் கொடிய பஞ்சத்தையும் குறிக்கும். அதனாலேயே, அத்தமிக்கும் போதில் என்னும் காளமேகம் பாட்டுச் சொற்றொடர்க்கு, பஞ்சகாலத்தில் என்றும் பொருள் கூறப்படும். இங்ஙனம் அணிவகைப் பொருள்கள் எல்லா நிறப் பெயர்கட்குமுண்டு. எ-கா : கருப்பு = பேய், வயிரம், சாராயம். வெள்ளை = வெளுத்த ஆடை, சுண்ணாம்பு, வெள்ளாடு, வெண்பா, கள்ளமின்மை, தெளிவு. பச்சை = இழவு வீட்டிற் கொடுக்கும் பயறு, இடக்கர், பச்சை மையிற் குத்திய தொய்யில், மொழியின் இயல்பு நிலை. சிவப்பு = மாணிக்கம் (சிவப்புக்கல்), சினம், மஞ்சள் = காமாலை. இனி, பொதுமக்கள் என்னும் சொல் புதியதென்றும், பொருந்தாத தென்றும், சில புலவர் கருதுகின்றனர். 10.ஆம் நூற்றாண்டினதான பழமொழியில், புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர! பொதுமக்கட் காகாதே பாம்பறியும் பாம்பின கால் என்னும் 7ஆம் செய்யுளில் பொதுமக்கள் என்னும் சொல் வந்திருத்தல் காண்க. இனி, இக்கால அகரமுதலிகளில் (அகராதிகளில்) சில சொற்கட்குத் தவறான பொருள் குறிக்கப்பட்டிருப்பதால் அவற்றை ஆய்ந்து உண்மையைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஓரை என்னும் சொல்லிற்கும் ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் யாதொரு தொடர்புமில்லை. அங்ஙனமே அதற்கும் அவர் (hour) என்னும் ஆங்கிலச் சொல்லிற்கும். கடகவோரை, கன்னியோரை எனக் கணிய நூல்கள் கூறுவது சரியே. ஓரை என்பது கூட்டத்தைக் குறிக்கும் சொல்; அது சிறப்பாக மகளிர் ஓரையையும் உடுக்களின் ஓரையையும் குறிக்கும். மகளிரைக் குறிக்கும் சொல், அவர் விளையாட்டையும் விளையாடும் இடத்தையும் ஆகுபெயராக உணர்த்தும். ஒல்லுதல் = பொருந்துதல், கூடுதல். ஒல்-ஒர்-ஓர்-ஓரை. ஓரையைக் குறிக்கும் இராசி என்னும் வடசொல், கூட்டம் என்னும் பொருளதே. அது பின்னர் இனத்தை உணர்த்தும் இப் பொருளில் அது race என்னும் ஆங்கிலச் சொற்கு இனமாகும். Constellation என்னும் ஆங்கிலச் சொல்லும் உடுக்கூட்டம் என்னும் பொருள்பற்றியே ஓரையைக் குறிக்கும். Con = together stella = star. ஓரை என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்டற்கு, அதைக் கிரேக்கச் சொல்லோடும் ஆங்கிலச் சொல்லோடும் வலிந்து தொடர்புபடுத்தினர். ஆதலால், இனிக் கடகவோரை, கன்னியோரை என்றே குறிப்பிடுக. - தமிழ்ப்பாகை எழுத்தாளர் மன்றச் சிறப்பு மலர் 1964-65 14 தெளிதேனும் களி மதுவும் உண்டற்குரிய நீரும் நீர்ப்பொருளும்; கல் மண் தூசி துப்பட்டை ஈ யெறும்பு முதலிய பிற பொருள்களோடு கலந்திருப்பின், அவற்றை நீக்கித் தெளிந்த நிலையில் உண்ணுவது வழக்கம். பாண்டிநாட்டில் பதநீர் என்றும் சோழ கொங்கு நாடுகளில் தெளிவு என்றும் சென்னையில் பனஞ்சாறு என்றும் சொல்லப்படும். இனிய பனைநீரை இங்ஙனம் வடித்தெடுப்பது இன்றும் கண்கூடு. தேனையும் இங்ஙனம் தெளிவிப்பதால் `தெளிதேன்' என்னும் வழக்கெழுந்தது. ``பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்'' என்றார் ஔவையாரும். தேனும் தேன்வகையுமான இன்னீர்களுள் மயங்கத் தருவதும் தராததுமாக இருவகையுள. கள்ளும் மதுவும் மயக்கந் தருவன; தேனும் தெளிவும் மயக்கந் தராதன. ஒரே பொருளான பனஞ்சாற்றின் இரு நிலைகளுள்; கள் மயக்கந் தருவதையும் தெளிவு அதைத் தராமையையும் நோக்குக. ஆகவே, தேனும் தெளிவும் பொருட்டெளிவால் மட்டுமன்றி அவை விளைக்கும் புலத் தெளிவாலும் அப் பெயர் பெற்றன. கள் = புலனைக் களவு செய்வது, கள் - களி. களித்தல் = வெறித்தல் மது = மதப்பை உண்டுபண்ணுவது மதப்பு - மயக்கம், மத - மதம் = மதுக்களிப்பு, வெறி, தேன், மதம் - மதர். மதர்வு = மயக்கம், களிப்பு மதர்வை = மயக்கம், களிப்பு, செருக்கு. மதம் - மதன் = செருக்கு, காமம். மதனம் - மதனன் = காமுகன், மதம் - மதார் = செருக்கு மதம் - மதத்து = வெறி தரும் கூட்டு மருந்து. மது - மத்து = மயக்கம் தருவது, ஊமத்தை. மத்து - மத்தை, ஊமத்தை, மத்து - மட்டு = கள், தேன், மது - மதுர் - மதுரம் = இனிமை. மதுர் - மதுரி. மதுரித்தல் = இனித்தல். மது என்பது வெறிதரும் தேனேயாதலாலும், வெறி தரும் குடிப்புகள் சில இனிமையூட்டப்படுவதினாலும், கள், மது, தேன், தேறல் (தெளிவு) முதலிய சொற்கள் தம் பொதுவான இயல்பிற்கு மாறாகவும் பொரு ளுணர்த்தும். கள் = தேன், மது = தேன். தேன் = கள். தேறல் = கள். இங்ஙனம் உணர்த்தினும் இச் சொற்கள் தம் வேர்ப்பொருள் மாறா. கள், மது என்னும் சொற்களின் வேர்ப்பொருள் மேற்காட்டப்பட்டது. இனி, தேன், தெளிவு. தேறல் என்னும் சொற்களின் சொல்லியல் வரலாறு வருமாறு: தெல் - தென் - இனிமை. ஒ.நோ: வெல் - வென் - வெற்றி. ``தென்னிசை பாடும் பாணன்''(திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். 56 :. 7) தென் என்னும் சொல் முதலாவது தெளிவு என்று பொருள்பட்டு, பின்பு தெளிவான தேனையும், தேனின் சுவையான இனிமையையும் உணர்த்திற்று. தென் - தென்பு = தெளிவு. தென்பு - தெம்பு = தெளிவு. தெளிவு என்பது முற்கூறியவாறு பொருட்டெளிவு, மனத்தெளிவு ஆகிய இரண்டிற்கும் பொதுவாதலால், தெம்பு என்பது உலகவழக்கில் மனத்தெளிவை உணர்த்திற்று. ஒ.நோ: நல் + பு = நன்பு (நன்மை) தெல் - தெள் - தெளி - தெளிவு. தெல் - (தெர்) - தெரி. தெரிதல் = தெளிவாய்த் தோன்றுதல், புலனாதல். (தெர்) - தெருள். தெருள்தல் = தெளிதல். சொல்லாக்கத்தில், லகர ளகர மெய்கள் ரகர மெய்யாகத் திரிவது பெரும்பான்மை. எ-கா: சாம்பல் - சாம்பர், கள் - (கர்) - கரு - கருப்பு. தெள் - தெறு - தெற்று. ஒ.நோ: வெள் - வெறு - வெற்று, வெள்ளிலை - வெற்றிலை தெற்று = தெளிவு, தேற்றம். தெற்றென = தெளிவாக ``யானுந் தெற்றென வுணரேன்'' (அகம். 48). தெற்றெனவு = தெளிவு. ``தெற்றென வில்லார் தொழில்'' (திரிகடு. 54). தெற்றென்னுதல் = தெளிதல். ``தெற்றென்க மன்னவன் கண்'' (குறள் 581). தெற்றல் = அறிவில் தெள்ளியவன். ``இனையரு திற்றுவீழ நடைகற்ற தெற்றல்'' (திவ். பெரிய திருமொழி 11 : 4 : 9) தெறு - தேறு, தேறுதல் = தெளிதல் தேறு = தெளிவு, தேற்றம், தேற்றாங்கொட்டை. தேறு - தேறல் = தெளிவு, தேன், தெளிந்த கள். தேறு - தேற்று = தெளிவு, தெளிவிக்கை, நீரைத் தெளிவிக்கும் தேற்றாங் கொட்டை. தேற்றுதல் = தெளிவித்தல். தேற்று - தேற்றன்மை = தெளிவு. தேற்று - தேற்றம் = தெளிவு, உறுதி. தேற்று - தேற்றரவு = தேற்றுகை. தேற்று - தேற்றன் = தெளிந்த (உண்மையான) அறிவுள்ளவன். ``தேற்றனே தேற்றத் தெளிவே'' (திருவாச. 1 : 82) தென் - தேன் = மது, கள், இனிமை. தேன் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் தெளிவு (தெளிந்தது) என்பதே. தேன் - தேம் = 1. தேன். `தேம்படு நல்வரை நாட'' (நாலடி. 239) 2. கள் (சூடா.). 3. இனிமை. ``தேங்கொள் சுண்ணம்'' (சீவக. 12) ஒ.நோ: மேன்பாடு - மேம்பாடு. தேம் - தீம். 1. - இனிமை (பெயர்). ``தீங்கதிர்த் தோற்ற மென்னவே'' (சீவக. 2419) 2. இனிய (பெயரெச்சம்) ``நெருநலும் தீம்பல மொழிந்து'' (அகம். 239) ஒ.நோ: தேய் - தே - தீ (நெருப்பு). தீம் - தீமு - தீவு, தீவுதல் = இனித்தல், இனிமையாதல். ம-வ. போலி, ஒ.நோ: தாமணி - தாவணி. நாம் - நாவு (கன்னடம்). தீவிய = இனிய (செ.எ) இனியவை (பெ,) ``செவ்விய தீவிய சொல்லி'' (கலித். 19) தீவியது - தீயது = இனியது (யாழ். அக.) தீவம் - தீயம் = இனிமை (யாழ். அக.) ஒ.நோ: தீவர் - தீயர். இனி, தீவியம் - தீவம் - தீயம் என்றுமாம். ஒ.நோ: ஓவியம் - ஓவம். தீவு - தீ. தீப்பு = இனிப்பு (தீ + தீ) - (தீத்தீ) - தித்தி. தித்தித்தல் = இனித்தல். ஒ.நோ: (சீ + சீ) - சீச்சீ - சிச்சி ``சிச்சி யெனத்தன் மெய்ச்செவி பொத்தி'' (கம்பரா. மாரீசன். 76) நெடின்முதற் சொல்லும் தனிநெடிற் சொல்லும் நிலைமொழி வருமொழியாக நின்றும் வந்தும் புணரும்போது, அந் நெடில்கள் ஒரோவிடத்துக் குறுகும். எ-கா: மேன் + மேலும் = மென்மேலும். ஆ + பீ = ஆப்பி. தனி நெடிற்சொற்கள் இரட்டிப்பின், அதாவது தம்முன் தாம்வரின், இரண்டும் ஒரோவிடத்துக் குறுகும் என்பது. சிச்சி, தித்தி முதலிய புணர்ச்சொல்லில் நிலைமொழி மட்டுங் குறுகிற்று. இதுகாறும் கூறியவற்றால், தேன் என்னும் சொல் தெளிவு என்னும் வேர்ப்பொருள் கொண்ட, தென்சொல்லென்றும்; அது முறையே தேம் - தீம் - தீவு எனத் திரியுமென்றும்; தீ என்னும் பகுதி இரட்டிக்குமிடத்து தித்தி என மருவிப் புணருமென்றும்; தமிழ்ச்சொற்களைத் தமிழடிப்படையாகவே ஆய்தல் வேண்டுமென்றும்; பண்டைத் தனித்தமிழ் நூல்களும் பல்லாயிரக் கணக்கான தென்சொற்களும் மறைந்து, இன்றுள்ள இலக்கண நூல்களும் விளங்காதவிடத்து, மொழித்திறத்தின் முட்டறுப்பது மொழி நூலேயென்றும்; கள், மது என்னும் சொற்கள் மயக்குவது என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட தென்சொற்களென்றும்; தமிழே திரவிடமாகத் திரிந்துள்ள தென்றும்; வடமொழியில் வழங்குந் துணையானே ஒருசொல் வடசொல் லாகி விடாதென்றும்; தெற்றெனத் தெரிந்துகொள்க. ``தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்'' (புறம். 392) ``பாம்பு வெகுண்டன்ன தேறல்'' (சிறுபா. 237) என வருமிடமெல்லாம், பெரு மயக்கஞ் செய்யும் கடும் புளிப்பான மதுக்கள் குறிக்கப்படின், ஆண்டுத் தேறல் என்பது தெளிவாக அரித் தெடுக்கப்படும் பொருட் டெளிவைக் குறிக்குமாதலின் தெளிவுக்கருத்து அங்கும் பொருந்துவ தென்றே தெளிக. அரித்தெடுக்கப்படுவதனாலேயே அரியல் எனப் பெயர்பெறும். சாலி என்னும் செந்நெல்லரிசியினின்று இறக்கப்படும் கள் சான்று எனப்பட்டது என்பது அறிஞர் கருத்து. - ``குயில்'' 25.8.1959 15 கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் தற்காலக் கல்விக் கலைகளிற் பல, மேனாட்டினின்றும் நமக்கு வந்தமையால், அவற்றைப்பற்றிய பெருநூல்களும், குறியீடுகளும் இன்றும் பெரும்பாலும் மேலை மொழிகளிலேயே உள்ளன. தற்போது குடியரசுக் கான வழிதுறைகளை வகுக்குங்கால், தாய்மொழியிற் கல்வி கற்பிக்க வேண்டியிருத்தலின் தமிழ்நாட்டுக் கல்விக்குத் தமிழிற் கலைச்சொற் களையும், குறியீடுகளையும் மொழிபெயர்த்துக் கொள்ளுதலும் ஆக்கிக் கொள்ளுதலும் இன்றியமையாததாகும். இதற்காகப் பல சார்பில் பல முறைகள் பல குழுக்கள் பலவிடத்திற் கூடியாராய்ந்தும் ஓரளவு வேலை செய்தும் வந்திருக்கின்றன; வருகின்றன. ஆனால், கலைச்சொற்களை ஆக்கிக்கொள்ளும் நெறிமுறைகளை இன்னும் அக் குழுக்கள் சரியாய் உணராதிருப்பது பெரிதும் வருந்தத்தக்கது. தமிழிற் கலைச்சொற்களை ஆக்குவார் ஆங்கிலம் தமிழ் இரண்டை யும் நன்றாயறிந்தவராயும் சொல்லாராய்ச்சி யுடையவராயும் தமிழ்ப்பற்று நிரம்பியவராயு மிருத்தல்வேண்டும். தமிழறியாத பெருமாளர் கலைச்சொல்லாக்குவது குருடர் வழிகாட்டு வதையும், சொல்லாராய்ச்சியில்லாதார் ஆக்கும் கலைச்சொல் இளஞ்சிறார் ஓவியத்தையுமே ஒக்கும். தமிழ்ப்பற் றில்லாதவரிடம் கலைச்சொல் லாக்கத்தை ஒப்புவிப்பதோ பெற்ற தாயைப் பற்றலரிடம் ஒப்புவிப்பதே யன்றி வேறன்று. மேற்கூறிய மூவியல்புகள் உள்ளவர் குழுமிய பின்பும் ஆத்திரப்படலாகாது. பல நூற்றாண்டுகளாய் மேலை மொழிகளில் தோன்றிய குறியீடுகளுக்கு ஓரிரு நாளில் அல்லது மாதத்தில் நேர்சொல் காணமுடியாது. பதறிய காரியம் சிதறிக் கெடும்; பதறாத காரியம் சிதறாது. விரைந்து செய்வது மறைந்துபோம். நீடித்துச் செய்வது நிலைத்து நிற்கும். ஐதராபாத்திலுள்ள உசுமானியாப் பல்கலைக்கழகத்தார், பட்டத் தேர்வுகட் குரிய கல்லூரிக் கல்வியை உருதுமொழியிற் புகுத்துமுன், நாலாண்டாகப் பொறுமையுடன் உழைத்துக் கலைச்சொற்களை யெல்லாம் அம் மொழியில் ஆக்கிக்கொண்டனர். நாமும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். தமிழிலுள்ள சொற்களெல்லாம் இன்னும் தொகுக்கப்படவில்லை. நூல்வழக்கிலுள்ள சொற்களே பல்கலைக்கழக அகராதியில் (University Lexicon) முற்றும் இடம்பெறவில்லையாயின், உலகவழக்குச் சொற்களைப் பற்றிச் சொல்லவேண்டுவதேயில்லை. உழவு, கைத்தொழில், உலகியல் முதலியன பற்றிய பல உலக வழக்குச் சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரிதும் பயன்படுவன. ஆகையால், முதலாவது நூல்வழக்கு, உலக வழக்கு, கல்வெட்டு இம் மூன்றினின்றும் இதுகாறும் அகராதியிற் புகாத சொற்களை யெல்லாம் தொகுத்துக்கொள்ளல் வேண்டும். இது செய்யாமற் கலைச்சொல்லாக்குவது கருவியில்லாமற் கருமஞ்செய்வதே போலும். `அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.' (குறள். 401) இரண்டாவது, செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகளில், கலைச் சொல்லாக்கத்திற்கு வேண்டியவற்றை யெல்லாம் தெரிந்துகொள்ளல் வேண்டும். அதாவது, முன்னொட்டுகள், பின்னொட்டுகள், இடை யொட்டுகள், ஈறுகள் என்ற நாற்றிறப்பட்ட சொற்களின் அல்லது குறைச் சொற்களின் பொருள்கள் பயன்களெல்லாவற்றையும் தெரிந்துகொள்ளல் வேண்டும். மூன்றாவது, அவ்வக் கலையில் தேர்ச்சிபெற்ற ஆங்கில அறிஞரைக் கொண்டு மொழிபெயர்க்கவேண்டும். ஆங்கிலக் குறியீடுகளை யெல்லாம் கலைவாரியாக எழுதுவித்துக்கொள்ளல் வேண்டும். நாலாவது, முற்கூறிய மூவகைத் திறனும் ஒருங்கமைந்த திறவோர், ஒருங்கே யமர்ந்து தீர ஆய்ந்து, கலைவாரியாக மொழிபெயர்க்கவோ சொற்புனையவோ வேண்டும். ஒரு மொழியிலுள்ள சொற்கள் அசைநிலை, புணர்நிலை, பகு சொன்னிலை, தொகைநிலை, பல்தொகைநிலை, பிரிநிலை என அறு நிலைகளை யடையுமேனும், அவை யாவும் தனிநிலை, புணர்நிலை என இரண்டா யடங்கும். தனிநிலையாவது சொற்களெல்லாம் தனித்தனியாக அமைந்து கிடக்கும் நிலை; புணர்நிலையாவது அச் சொற்கள் இரண்டும் பலவும் கூடிப் பகுசொற்களாயும் தொடர்மொழிகளாயும் புணர்ந்து நிற்கும் நிலை; தனிநிலையாக்கம் பெரும்பாலும் பண்டைக்காலத்திலேயே முற்றுப்பெற்றது. புணர்நிலையாக்கம் எக்காலத்திற்கும் உரியது. ஆதலால், சொற்களைப் பகுத்தாய்ந்து சொல்லாக்க முறைகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கையாளின் எக்காலத்தும் இயற்கை முறைப்படியே வேண்டு மளவு புதுச்சொற் புனைந்துகொள்ளலாம். தமிழின் சொல்வளத்தை அறியாத சிலர், தமிழிற் போதிய சொல் இல்லையென்றும், அதில் மொழிபெயர்த்தற்கு ஆங்கிலம் அல்லது வடமொழி போன்ற அயன்மொழித் துணை இன்றியமையாததென்றும் கூறுகின்றனர். இவர், கிரேக்கு இலத்தீன் முதலிய ஆரிய மொழிகளில் செந்தமிழ் வேர்கள் செறிந்து கிடப்பதையும், ஆங்கிலக் கலைச்சொற்களின் வேர்ப்பொருள் எளிமையையும், சொல்லமைப்பு நெறிமுறைகளையும், தமிழ் நிகண்டுகளையும் அறிந்திருந்தால் இங்ஙனம் கூறார். ஆரிய மொழிகளிலுள்ள செந்தமிழ் வேர்ச்சொற்களை, எனது ஒப்பியன் மொழிநூல் மூன்றாம் மடலத்திற் பரக்கக் காட்டுவேன். இங்கு ஆங்கிலக் குறியீடுகளின் அமைப்பெளிமையை மட்டும் விளக்குதற்கு, சேம்பரார் (Chambers) ஆங்கிலச் சொல்லியல் அகராதியினின்றும் சில சொல் விளக்கங்களை எடுத்துக்காட்டுகிறேன். (1) Alum : a mineral salt (cf. அளம் = உப்பு) L. alumen Alumina : one of the earth. L. alumen, alum. Aluminium : the metalic base of alumina. (2) Candidate : so called because at Rome, the applicant used to dress in white. L. candidus, white-candeo (cf. காந்து), to shine. (3) Chancellor: Low L. cancellarius, orig. an officer that had charge of records, and stood near the cancelli (L.) the cross-bars that surrounded the judgement-seat. (4) Electric: having the property of attracting and repelling light bodies when rubbed. L. electram-Gk. electron, amber (cf. அம்பர்) in which the above property was first observed. (5) Protein: the common radical of the most essential articles of food. Gk. protos, first, and suffix -in. கலைச்சொற்களைத் தனித்தமிழிலேயே யாத்தல்வேண்டும். அவ் யாப்புக்கூடாத ஒரோ வழி மட்டும் அயன்மொழித் துணை வேண்டப்படும். இது எல்லா மொழிக்கும் பொது. மொழிபெயர்ப்புத் திறனில் தமிழ் எம்மொழிக்கும் இளைத்ததன்று. தனித்தமிழில் குறியீட்டுக்காகப் புனைதற்கு, வழக்கற்ற சொற்களை வழக்கிற்குக் கொணர்தல் வேண்டும். வழங்காமலே சொற்கள் வழக்கறு கின்றன. தமிழ்நாட்டின் வடபாகத்தில் வழங்காத துப்புரவு (=சுத்தம்) என்னும் தென்சொல் தென்பாகத்திலும், தென்பாகத்தில் வழங்காத நூக்கு(=தள்) என்னும் தென்சொல் வடபாகத்திலும், தமிழில் வழங்காத நெய்த்தோர் என்னும் தென்சொல் தெலுங்கில் நெத்துரு என்றும் வழங்குவதை நோக்குக. அன்றியும் தமிழ்ச்சொல் லிருக்க அயற்சொல் நாடல், கையில் வெண்ணெ யிருக்க நெய்க் கலைவதும், ஏதிலார் ஆரத் தமர் பசிக்க விடுதலுமாகும். தமிழிற் கலைச்சொற்க ளாக்கும்போது, ஏற்கெனவே ஆங்கில நேர் தென்சொற்களிருக்குமாயின் எளிதாய் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். அங்ஙன மில்லாவிடத்துமட்டும் புதுச்சொற்கள் புனையப்படும். அப் புனைவுக்கான நெறிமுறைகளாவன: 1. ஒரு பொருளுக்கு ஏதேனும் ஒரு காரணம்பற்றிப் பெயரிடலாம். அக் காரணம், ஒரு சிறிதே பொருந்துமேனும் அமையும். அதே காரணம் பிற பொருளுக்கு ஏற்குமா என்று கவனிக்கவேண்டுவதில்லை. அல்வியன்மை(அவ்வியாப்தி), மிகுவியன்மை (அதிவியாப்தி) என்னுங் குற்றங்கள் வரையறைக்கே (definition) யன்றிச் சொற்கில்லை. 2. பல பொருளுக்கு ஒரே காரணம் ஏற்பின் அவற்றின் பெயர்கள் வெவ்வேறா யமையும்படி, ஒருபொருட் பலசொற்களை ஆளவேண்டும். எ-கா : வளையல் = வளைந்த அணி. கொடுக்கு = வளைந்த உறுப்பு. புரிசை = வளைந்த மதில். குனிவு = முதுகு வளைதல். பரிதி = வட்டமான சூரியன். 3. ஒரே சொல்லைப் பல பொருட்கு வழங்கின், பொருள்தொறும் திரித்துக்கொள்ளவேண்டும். எ-கா : கள்-கர் (வேர்) = கருப்பு, மறைவு. கர, கரம்பு, கரடி, கரந்தை (பூ), கரி, கரிசல், கரிச்சான், கரிசு, கரு, கருகு, கருக்கு, கருத்தை, கருப்பை(எலி), கரும்பு, கருவல், கார், காரி முதலிய சொற்களெல்லாம் கருமை என்னும் ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டு விகுதி வேறுபாட்டால் வெவ்வேறு பொருளைக் குறிப்பன. 4. ஒரே பொருளின் அல்லது கருத்தின் நுட்ப வேறுபாட்டைக் குறிக்கவும் சொல்லைத் திரித்துக்கொள்ளலாம். எ-கா : பரிசு = இகலி(போட்டியிட்டு)ப் பெறுவது. பரிசில் = இகலாது பெறுவது. பரிசம் = பெண்ணுக் களிப்பது. 5. சொற்றிரிப்புப் பல வகைப்படும். ஒன்பான் திரிபு, முக்குறை, மும்மிகை, போலி, இலக்கணப்போலி, திரிபாகுபெயர்(தத்திதாந்தம்), மரூஉ முதலிய வெல்லாம் திரிபின் வகைகளாம். இவை தனித்தும் கலந்தும் வரும். எ-கா : கள்-(=கருப்பு)-களி (=கருமண், களிமண் போன்ற உணவு)- களிம்பு(=களிபோன்ற மருந்து-(ஈற்றுமிகை.) நந்து-நத்தை-(வலித்தலும் ஈற்றுமிகையும்) இர்-இரா, இரும், இருள், இரும்பு இறடி, இறுங்கு பல்வகைத் திரிபு ஏனல், ஏனம் } யானை, (ஏனை) 6. ஈறுகளைப் பொருண்மரபறிந்து புணர்க்கவேண்டும். ஒவ்வோர் ஈறும் ஒவ்வொரு அல்லது சிற்சில பொருள்களை மரபாகக் காட்டும். எ-கா : அல். செம்மல், கருவல், வள்ளல் -உடையோனை உணர்த்திற்று. வறுவல், நொறுவல்- செய்பொருளை உணர்த்திற்று. ஆடல்- தொழிலை உணர்த்திற்று. தோன்றல்- செய்வோனை உணர்த்திற்று. ஒரே பொருட்குப் பல ஈறும் ஏற்கும். ஈறு பெறுஞ் சொல்லின் இறுதிக்கேற்ப ஓர் ஈற்றைச் சேர்க்க வேண்டும். எச்சம், தோன்றல், ஓதுவான், விறகுவெட்டி, வெந்தை என்பவற்றி லுள்ள அம், அல், ஆன், இ, ஐ என்னும் ஈறுகள் செய்வோனையே குறித்தன. குற்றியலுகரச் சொற்களெல்லாம் செய்வோன் பொருளில் இகரவீற்றை ஏற்கும். எ-கா : தோன்றி, ஓதி, வெட்டி, இடுக்கி. 7. ஒரு பொருள் இன்னொன்றின் பெருமைப்பாடாயிருந்தால், பெருமையடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம். எ-கா : நெருஞ்சில் - ஆனைநெருஞ்சில் அடை நாவல் - பெருநாவல் } குன்று - குன்றம்- ஈறு. பெருமைப்பாட்டுப் பெயர்களைப் பெருமைப்பொருள் வேர்களி னின்றும் திரிக்கலாம். எ-கா : கடல், கடப்பான் படாகை. 8. ஒரு பொருள் இன்னொன்றின் குறுமைப்பாடாயிருந்தால், குறுமை யடைகளையும் ஈறுகளையும் பொதுமையான பொருட்பெயரோடு சேர்த்துக்கொள்ளலாம். எ-கா : அறை - கண்ணறை அடை அகத்தி - சிற்றகத்தி } முறம் - (முற்றில்) - முச்சில்- ஈறு. குறுமைப்பாட்டுப் பெயர்களைக் குறுமைப்பொருள் வேர்களினின் றும் திரிக்கலாம். எ-கா : குணில், குக்கல், குற்றி, சிறுக்கன். 9. ஒப்புமைபற்றிச் சில பெயர்களை அடைசேர்த்தும் சேராமலும் உவமையாகுபெயராகவும் திரித்தும் வழங்கலாம். எ-கா : ஈப்புலி, கரடிகை, பெருச்சாளி, மணிப்பவளம். cf. Lens, so called from its likeness to a lentil seed. ஒப்புமை ஏதேனும் ஓர் இயல்புபற்றி இருக்கலாம். எ-கா: தோணிப்பாலம், ஆமைவடை. இவற்றில், தோணி ஆமை என்னும் பெயர்கள் முறையே concave, convex, என்னும் பொருள்படல் காண்க. 10. ஓரினப் பொருள்களை, அவற்றின் நன்மையும் தீமையும் பிற தன்மையும் குறித்த அடைகளைப் பொதுப்பெயருடன் சேர்த்துப் பிரித்துக் கூறலாம். எ-கா : நல்துளசி, நாய்த்துளசி. நன்செய், புன்செய். கரும்பு, பேய்க்கரும்பு. கடலை - கொண்டைக் கடலை, வேர்க்கடலை, பட்டாணிக் கடலை. 11. ஓரினப் பொருள்களைக் குறிக்க ஒருபொருட் சொற்களையும் பயன்படுத்தலாம். எ-கா : காற்று = wind, வளி = gas. ஆங்கிலச் சொற்களை யொத்த தமிழ்ப் போலியொலிகள், ஆங் கிலத்தோடொத்த பொருள்தரின் கொள்ளப்படலாம். எ-கா : parliament - பாராளுமன்று. bracket - பிறைக்கோடு. 12. ஆங்கிலச் சொற்களின் வேர்ப்பொருளை யறிந்து அதற்கேற்ப மொழிபெயர்க்கலாம். எ-கா : colemn-ãH«ò. colonel, (the leader of a column of soldiers) பிழம்பர். phenamenon (an appearance) - தோற்றரவு. `அம் ஈறுபெற்ற தோற்றம் என்னும் சொல் பொதுவான தோற்றத்தைக் குறிக்க வழங்குதலின், அரவு ஈறுபெற்ற தோற்றரவு என்னும் சொல் ஒரு விதப்புத் தோற்றத்தைக் குறித்தற் கேற்றதாதல் காண்க. 13. சில ஆங்கிலச் சொற்களுக்குச் செம்மொழிபெயர்ப்புச் (literal) செய்துகொள்ளலாம். எ-கா : inspect - உண்ணோக்கு. inspection - உண்ணோக்கம். inspector - உண்ணோக்காளர். 14. சில சொற்கள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பொதுவாயிருப்ப தால், அவற்றை அங்ஙனமே வைத்துக்கொள்ளலாம். எ-கா : note - நோட்டு. நோடு = பார், கவனி. நோடுவது நோட்டு, நோட்டம். நோட்டம் என்னும் தொழிற்பெயர் தமிழிலும், நோடு என்னும் பகுதி அல்லது ஏவல் கன்னடத்திலும் வழங்குதல் காண்க. 15. ஓர் ஆங்கிலச் சொற்கு நேரான தமிழ்ச்சொல்லை அவ் வாங்கிலச் சொல் குறிக்கும் பல பொருளிலும் வழங்கலாம். எ-கா : article = உருப்படி = 1. பொருள் (சாமான்) 2. பண்டம். 3. செய்திப் பகுதி. 16. ஒரு பொருளின் பல கூறுகளைக் குறித்தற்கு ஒருபொருட் பல சொற்களை ஆளலாம். எ-கா : pork = பன்றிக்கறி. L. porcus, a pig. தும்பிக்கை = யானைக்கை. தும்பி = யானை. 17. சில ஆட்பெயர்களையும், அவ் வாள்களைப்பற்றிய விதப்புச் செய்திகளைக் குறிக்கும் சொற்களாக வழங்கலாம். எ-கா : Boycott , from Captain Boycott who was excommunicated by his neighbours in Ireland in 1881. 18. சொற்களை இயன்றவரை பொருள் மயக்கமின்றி அமைக்க வேண்டும். 19. அயல் நாட்டினின்று வந்த பொருளுக்கு, அதன் அயன்மொழிப் பெயரே அமையவேண்டுமென்பது யாப்புறவின்று. எ-டு : ostrich = தீக்கோழி. cycle = மிதிவண்டி. 20. தமிழுக்கில்லாது பிறமொழிகட்குள்ள சொல்லாக்க முறைகளில், செந்தமிழ் இயல்பிற் கேற்றவற்றைத் தமிழிலும் தழுவிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாகப் பயன் படுத்துவது பெரும்பான்மை. தமிழிலும், கரும்பு என்னும் சொல், கரும்பை அல்லது அது போன்றதைத் தின்பதைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் வழங்குகின்றது. தொடர்பினால், வழிவழி வெவ்வேறு பொருள்களைக் குறிக்கும் ஆகு பெயர்போன்றே, வெவ்வேறு வினைகளை அல்லது கருத்துகளைக் குறிக்கும் ஆகுவினைகளுமுண்டு. ஆங்கிலத்திலுள்ள focus என்னும் சொல் இலத்தீனில் அடுப்பு என்னும் பொருளது. அது ஆங்கிலத்தில் நெருப்பைச் செலுத்தல், ஒரு பொருளைத் திருப்பல் என்னும் பொருள்களில் வினையாகவும் வழங்குகின்றது. இம் முறையில் தமிழிலும் சொற்களை வழங்கிக்கொள்ளலாம். இம்மட்டும் கலைச்சொல்லாக்க விதிகளும் நெறிமுறைகளும் ஒருவாறு கூறப்பட்டன. தமிழிற் கலைச்சொல்லாக்குவார் எவராயினும் ஆகுக; மேற்கூறிய நெறிமுறைகளை யறிந்து கடைப்பிடிக்க; அஃதன்றி, அரசன் முத்தினால் அரம்பை, கொண்டவன் பலமிருந்தால் குப்பை யேறிச் சண்டைபோடலாம் என்ற பழமொழிகட் கிணங்க நடப்பாராயின், அம்பலத்திற் கிழுக்கப்படுவர் என்பதை அறிவாராக. - ``செந்தமிழ்ச் செல்வி'' மடங்கல் 1941 ---- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1963 (1932) கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. தி.பி. 1965 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1974 (1943) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பாவாணர் அவர்கள் சேலம் கல்லூரியில் பணி யாற்றியபோது தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் அவர்கள் அக்கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத் திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல் லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித்தமைக் காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப்பட்டது. மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ் சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதையும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடை பெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல் நாட்டுப் பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். தாய்மொழிப்பற்றே தலையாயப்பற்று தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை இனமொன்றில் லாமலே நாடொன்று மில்லை! மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம் மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா! கரந்தும் அண்டைவீட்டுள் கால்வைத்த லின்றிக் கண்மூடித் தூங்குவாய் கடிதெழு தமிழா! வருமானங் குன்றியே வறியவ னானாய் வாழ்நாள் வீணாகாமல் வல்லெழு தமிழா! அருசுவை யுண்டியே ஆக்கிடின் உன்கை அருந்த மறுக்கின்றார் ஆய்ந்தெழு தமிழா! ஒலியொடு வரியும்பின் ஒழியவே அண்மை உறும்தேவ நாகரி உணர்ந்தெழு தமிழா! பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன் பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன். பிறப்பாலே சிறப்பில்லை தமிழா - இதைப் பெருநாவ லன்சொன்னான் தமிழா! மறத்தாலும் திறத்தாலும் தமிழா - மேன்மை மதியறி வொழுக்கத்தால் தமிழா! தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே எமதுமெய் வரலாறே எழுகவே வலமே. வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலையின் விளைநில மாவதிந் நாடு மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற மேலுலகும் விரும்பும் நாடு கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங் கோன்முறை குலவிய நாடு நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி நிறைவேற்றின வேளாளர் நாடு அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும் ஆலவட்டம் விசிறும் நாடு சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும் சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு பாவாணர் பொன்மொழிகள் தந்தையும் அரசும் ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம்பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான். அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால். தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே. 2ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மைய ரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Soveriegnity) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?..... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமை யாகும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. ஐந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டுபிடிக்கும்வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமே யாகும். தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவருமே. எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழிபோ லாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய பெரும்புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது மிகையன்று. பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே. இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்விவிட்டது. அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப்படுத்தியவன் ஆங்கிலேயனே. ïªâahš jÄœ bfL« v‹w¿ªnj ‘ïªâ bghJbkhÊah? என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை. பொருளாட்சித் துறையில் எத்துணை முன்னேற்ற மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை, அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். வீட்டிற்கு ஆவணம் போன்றதே நாட்டிற்கு எழுதப்பட்ட வரலாறு; அவ் வரலாறும் உண்மையானதாய் இருத்தல் வேண்டும். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ளதென்னும் உண்மையை அவர் உணர்வராயின் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். துன்பம் வருமுன் காவாவிடினும் வரும்போதேனும் காத்தல் வேண்டும். வந்தபின் காத்தல் வெள்ளம் வந்த பின் அணைகட்டுவதும், குதிரை களவு போனபின் கொட்டகையைப் பூட்டுவதும், நோயாளி இறந்தபின் மருத்துவம் செய்வதும் ஆகும். படிப்பு வேறு, ஆராய்ச்சி வேறு; படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள வேற்றுமை கடற்கரையில் முத்துச் சிப்பிகளைக் காண்பதற்கும், கடலுள் மூழ்கி அவற்றை எடுத்துக்கொண்டு வருதற்கும் உள்ள வேற்றுமையாகும். பிற்காலக் கல்வெட்டுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை அறிவது ஆழியை நாழிகொண்டு அளப்பது போன்றதே. சொல்லும் பொருள்போல் ஒரு செல்வமே. ஒரு செல்வன் பொருளாற் பெறும் நன்மையை ஒரு புலவன் சொல்லாற் பெறுகின்றான். முன்னோர் ஈட்டிய செல்வத்தைப் பெருக்குவதற்குப் பின்னோரும் ஈட்டுவது போல் முன்னோர் ஆக்கிய மொழியை வளம்படுத்துதற்குப் பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.fl‹nfhlyhš ஓர் ஏழைக்கு நன்மை. ஆனால், செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன் சொற்களால் பிற மொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி. 