பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 38 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப்பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 38 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1995 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 80 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 60/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிடமொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர் பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை ஒரு மொழியின் பெருமை அல்லது வலிமை அதன் சொல்வளத்தால் அறியப்படும். சொல்வளத்தைக் காட்டுவது அகராதியென்றும் சொற்களஞ்சியம். பிற நாடுகளிலெல்லாம், தன் மொழி செம்மொழியாயின், அதற்கே முதலிடமும் உயர்வும் தரப்படும். தமிழ்நாட்டிலோ, தன் மொழி உயர்தனிச் செம்மொழியா யிருந்தும், அது அயலாரால் மட்டுமன்றித் தமிழராலும் மறைக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் பழிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றது. வயவர் (Sir) பிரடெரிக்கு நிக்கல்சன் என்னும் துரைமகனாரின் தூண்டுதலின்மேல், சென்னைப் பல்கலைக்கழகம் 1913 முதல் 1939 வரை 27 ஆண்டுகளாக 4,10,100 உருபா செலவழித்து, ஒரு தமிழகராதி தொகுத்தது. அது சிலவகையில் முந்திய சொற்களஞ்சியங்களினும் மிக விரிவுபட்டதாயிருந்தும், அதைத் தலைமையாயிருந்து தொகுத்தவரின் தகுதியின்மையால், பலவகையில் மிகக் குறைபாடுள்ளதும் தமிழுக்குக் கேடானதுமாக முடிந்தது. அதன் ஆறு மடலங்களுள் (Vols.) ஐந்து வெளிவந்தபின், 1934 - ல், அவ் வைந்திலு மில்லாத இருநூறு சொற்களைத் தொகுத்து, அதன் பதிப்பாசிரியரான திரு. வையாபுரிப்பிள்ளைவர்கட் கனுப்பினேன். அவர்கள் என் பெயரைச் சொல்லுதவினார் பட்டியிற் சேர்க்காது கருத்துதவினார் பட்டியில் மட்டும் சேர்த்துக் கொண்டு, அகராதியின் ஒரு தொகுதியை இலவசமாக எனக்கு அனுப்பு வித்தார்கள். ஆயின், மாதம் நூறுருபாச் சம்பளத்தில் என்னை ஈராண்டிற்கு அமர்த்திக் கொண்டால், ஆயிரக்கணக்கான சொற் களைத் தொகுத்துத்தரமுடியும் என்று நான் இட்ட கருத்தை, அவர்கள் முற்றும் புறக்கணித்துவிட்டார்கள். அதனால், மேற்கொண்டு ஒன்றும் அனுப்பவில்லை. இது நான் திருச்சிராப்பள்ளியிலிருந்தபோது நிகழ்ந்தது. நான் சேலங்கல்லூரி சென்றபின், ‘A Vritical Survey of the Madras University Tami.l Lexicon’ என்னும் பெயரால், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் ஐம்பாற்பட்ட 41 வகைக் குற்றங்குறைகளை எடுத்துக்காட்டுடன் ஆங்கிலத்தில் எழுதி அச்சிட்டுச் சுவடி வடிவில், 17.16.1955 அன்று, ஓர் ஆராய்ச்சித் திறனாய்வைச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவிற் கனுப்பினேன். இன்றுவரை அதனிடமிருந்து எவ்வகை மறுமொழியுமில்லை. ஈராண்டிற்குமுன், பண்டாரகர் (Dr.) சேதுப் பிள்ளையவர் களிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியைப்பற்றி நீங்கள் எழுதிவிடுத்த திறனாய்வு குறித்து பர். (Dr.) இலக்குமணசாமி முதலியார் அவர்கள் என்னைக் கேட்டார்கள். நான் அவ்வகராதியில் இரண்டொரு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அடுத்த பதிப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடேன் என்று (தங்கட்கியல்பான வேறு நடையில்) தங்கள் பதவிச்செருக்கினால் துணிச்சலாகச் சொன்னதினின்று, பர். இலக்குமணசாமி முதலியார் அவர்கள் எத்துணை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும், நான் எவ்வளவு மறைக்கப்பட்டுள்ளேன் என்றும் கண்டுகொண்டேன். இனி பிள்ளை அவர்கள் முதலியார் அவர்களிடம் நேரில் என்ன சொன்னார்களோ, அது இறைவனுக்குத்தான் தெரியும். 1956 ஆம் ஆண்டு சூலை மாதம், தமிழ் வேர்ச்சொல் அகராதித் தொகுப்பிற்கென்றே, அரசவயவர் (Rajah sir) முத்தையாச் செட்டியார் அவர்களின் சிறப்பதிகாரத்தினாலும் தமிழ்ப்பற்றினாலும், வலுத்த எதிர்ப்பிற்கிடையே அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறையில் வாசகனாக (Reader) அமர்த்தப்பெற்றேன். ஆயின், என் வேலையை மேற்பார்க்கும் தகுதி மறைமலையடிகட்குப்பின் எவருக்கும் இல்லாவிடினும், அத் தகுதியுடையதாக அமர்த்தப்பட்ட குழுவின் தலைவரான வங்கப்பெருமான் பர் (ள.மு.) சட்டர்சி இட்ட பணியைச் செய்ய வேண்டியிருந்ததினால், முதலீராண்டு அகராதித் தொகுப்பில் ஈடுபட முடியவில்லை. அச்சன் என்பது அத்தன் (தந்தை) என்பதன் திரிபான தென்சொல் என்றும், தமிழர் முழுகிப்போன குமரிக்கண்டத்தில் தோன்றி வடக்கே சென்றனர் என்றும் நான் எழுதியதை மறுத்து, அச்சன் என்பது வடசொற் நிரிபென்றும் (ஆர்ய > அஜ்ஜ (பிராகிருதம்) ழூ அச்சன்). தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று (Mediterranean Region) வந்தவரென்றும், பர். சட்டர்சி கூறியதை நான் ஒப்புக்கொள்ளாமையால், 1958 - ல் பொதுவாராய்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டேன். அதிலிருந்து மூவாண்டிற்குள், நான் கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சியின் பயனாகத் தொகுத்தனவும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியில் இல்லாதவுமான, 4500 தனிச்சொற்களையும் தொடர்ச்சொற்களையும் பட்டியெடுத்து அவற்றை (1) தனிச் சொல்லும் கூட்டுச்சொல்லும் (Simple and Compourd words), (2) மரபுதொடர்மொழிகள் (idioms and ßarases), (3) இணைமொழிகள் (Words in Pairs) என மூவகையாகப் பாகுபடுத்தி, அவற்றுள் 2500 தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும் அகராதி முறையிற் பொருளெழுதிக் கொடுத்தும் மேற்கொண்டு ஓராண்டிருந்து யான் மேற்கொண்ட வேலையை முடிக்கா வண்ணம், என் அறுபதாம் அகவை முடியுமுன்னரே, கல்வியாண்டுத் தொடக்கத்தில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தினின்று விலக்கப்பட்டு விட்டேன். அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்தில், தமிழ்நாடு முழு விடுதலையடைந்து விட்டதாகத் தருக்கி மிகழும் இக்காலத்தில், தமிழாட்சியும் தமிழ்வாயிற் கல்லூரிக் கல்வியும் வந்துவிட்டன வென்று தம்பட்டமறையும் இக்காலத்தில், தகுதிபற்றியே வேலையளித்தல் வேண்டுமென்று மிகுதியாகக் கூக்குரலிடும் இக்காலத்தில், தமிழாக்கத்திற் கின்றியமையாததும் என்னையன்றி வேறெவரும் செய்யவியலாததுமான தென்சொல் தொகுப்பை சென்னைப் பல்கலைக்கழகத்திலன்றித் தமிழ் வளர்ச்சிக்கென்றே ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலும் செய்தற்கிடமின்றேல், தமிழுக்குத் தமிழ் நாட்டிலும் இடமில்லையென்றே தெரிய வருகின்றது. புக்கி லமைந்தின்று கொல்லோ சிலரிடைத்துச்சி லிருந்த தமிழ்க்கு! புலவரும் பொதுமக்களும், தமிழுக்கு இலங்கையிற் போன்றே இத் தென்நாட்டிலும் ஏற்பட்டுள்ள இரங்கத்தக்க நிலையை நோக்கி, என்றுமுள தென் தமிழ் என்னும் கம்பர் கூற்றுப் பொய்க் காவண்ணம், தமிழ் தமிழாதற்கும் இன்றுந் தமிழாயிருத்தற்கும் விரைந்து ஆவன செய்வாராக! புதுவை 20.8.1961 ஞா. தேவநேயன். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு v சான்றிதழ் vii முகவுரை ix நூலடக்கம் I. சொல்வழுக்கள் 1. சொல்லின்மை 1 1. தனிச்சொல் 1 2. கூட்டுச்சொல் 3. மரபுவினைச்சொல் 4. இணைமொழி 2. சொல்லின் மறுவடி வின்மை 3. சொல்லின் இலக்கண வகை வடிவின்மை 1. செயப்படுபொருள் குன்றிய வினை 2. நிகழ்கால வினையெச்சம் 4. கூட்டுச் சொல்லின் உறுப்பைத் தனியாகக் கூறாமை 5. மிகைபாடு சொற்கள் 6. விளக்கமேற்கோளில் வருஞ்சொல்லைக் குறியாமை 7. சொல்லின் கொச்சை வடிவைச் சொல்வரிசையிற் சேர்த்தல் 1. கொச்சை வடிவுமட்டும் 2. கொச்சை வடிவம் திருந்திய வடிவம் 3. திருந்திய வடிவம் கொச்சை வடிவம் வேற்றுமொழி வடிவம் 8. சொல்லின் வழுவடிவைக் குறித்தல் 9. குறிக்க வேண்டாத சொல்லைக் குறித்தல் 10. தமிழுக்கு வேண்டாத வேற்றுச்சொல்லைக் குறித்தல் 1. தன்னெழுத்துச் சொல் 2. வேற்றெழுத்துச்சொல் 3. ஈரெழுத்திலும் வேற்றுச்சொல் 4. பல்வடிவு வேற்றுச்சொல் 11. இனச்சொல் இன்மை 12. திசைச்சொல் இன்மை 13. எழுத்துக் கூட்டல் வழு 14. ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு முறைத்தவறு II. பொருள் வழுக்கள் 1. இயல்விளக்கம் அல்லது சொற்பொருள் தமிழிற் கூறப்பெறாமை 2. குன்றக் கூறல் 3. மிகைபடக் கூறல் 4. வழுப்படக் கூறல் 5. சிலபொருள் கூறப்படாமை 6. பொருள்வரிசையின்மை 7. வடமொழியிற்பொருள் கூறல் 8. ஒரு பொருட் பலசொற்களின் வேறுபாடு காட்டாமை 9. எதிர்ச்சொற்களின் வேறுபாடுகாட்டமை 10. எடுத்துக்காட்டின்மை 11. கூறியது கூறல் III. வேர் வழுக்கள் 1. தென்சொல்லை வடசொல்லெனல் 2. சொல்வேர் காட்டாமை 3. வழுவேர் காட்டல் 4. ஐயுற்றுக் கூறல் 5. தலைமாற்றிக்கூறல் 6. கூட்டுச்சொல்லை வழுப்படப்பிரித்தல் 7. ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல் 8. பல சொல்லை ஒரு சொல்லாகக் காட்டல் iv. இலக்கண வழுக்கள் 1. இலக்கணக் குறிப்பு வழு 2. ஏவல் வினையின் எண் குறியாமை v. மரபு வழுக்கள் 1. சொல் வழு 2. உருபு வழு vi. அகராதியமைப்பு வழுக்கள் 1. ஒரேயளவான எழுத்தால் எல்லாச் சொற்களையுங் குறித்தல் 2. பிறந்தையின் கீழ் இனங்களையும் இனத்தின் கீழ் வகைகளையும் காட்டாமை vii. அகராதியாசிரியர் குறைகள் 1. தமிழ்ப்பற்றின்மை 2. தவறான கருத்துடைமை 3. கவனமின்மை 4. சொற்றொகுப்பு முறையறியாமை 5. தொல்காப்பியர் கூற்றைப் பிறழவுணர்தல் 6. புலாலுண வறியாமை vii. சென்னைப் பல்கலைக்கழக அமைப்புக் குறைகள் 1. அதிகாரிகளைப் பற்றியவை 2. தமிழ்த்துறைத் தலைவரைப்பற்றியவை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு I சொல்வழுக்கள் 1. சொல்லின்மை சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் முப்பெருங்குறைகளுள், முதலது பல்வகைச் சொல்லின்மையாகும். எடுத்துக்காட்டு: (1) தனிச்சொல் அமுக்கலான், பெ. ஒரு மருந்துச்செடி. அரணை, பெ. எகிர். இள-த்தல், வி. மென்மையாதல். உரம்பு, பெ. ஒரு பூண்டு. ஊதி, பெ. இசைக்குழல். கருத்தை, பெ. கரிய பெண் அல்லது காளை. காம்பு-தல்,வி. அரிசி, பயிறு, முதலிய உணவுப்பொருள்கள் நீண்ட நாட்குப்பின் சுவையற்றுப்போதல். குமுறி, பெ. ஒருவகைப் புறா. குன்னு-தல், வி. ஒடுங்கியிருத்தல். கூந்தை, பெ. நுங்கெடுத்த பனங்காய். சிலுப்பி, பெ. சிறு மத்து. சிவத்தை, பெ. சிவப்பாயிருக்கும் பெண் அல்லது காளை. சின்னான், பெ. சிறுவன், சில்லாளி. தக்கட்டி, பெ. ஒருவகைச் சிறுகனி, கணபட்டையில் வரும் சிறு கட்டி (Sty). தகைப்பு, பெ. யாழின் ஓர் உறுப்பு. தொளுமான், பெ. ஒருவகை மீன். நாங்கள், த. ப. பெ. நெக்கினி, பெ. ஒருவகை மரம். நோங்கு - தல், வி. ஓரிடத்துக்குப் போகுமாறு உள்ளத்தால் அதை நோக்குதல். பரக்கை பெ. அநாகரிகமாய்த் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண். புக்கா, பெ. ஒருவகைப் புறா. புடங்கு, பெ. நீண்ட மண்டையின் பின்புறம். பொண்டான் பெ. எலியின் மறைவான பக்கவளை. போஞ்சான், பெ. போலி (வேலை). போந்தான், பெ. பெருங்கோழி. மீ-தல், வி. மீந்திருத்தல். மீ-த்தல், வி. மீத்து வைத்தல். மோள்(ளு)தல், வி. சிறுநீர் பெய்தல். யாங்கள், த.ப.பெ. வழமை, பெ. வழக்கம். (2) கூட்டுச்சொல் அசையாக்கட்டை,பெ. ஒருவகைச் செடி. அஞ்சறைப்பெட்டி முறுக்கு, பெ. கெண்டி முறுக்கு. அடங்காமரம், பெ. ஒருவகை மரம். உப்புத் தீயல், பெ. ஒருவகைக் கருவாட்டுச்சாறு. உலையாப்பம், பெ. ஒரு வகை ஆப்பம். ஓட்டியடைந்த நேரம், பெ. கன்று காலிகளைத் தொழுவிலடைக்கும் மயங்கு பொழுது. கவைமகன், பெ. உடலொட்டிய இரட்டைப்பிள்ளை. (Siamese twins) கருங்களமர், பெ. உழுதுண்ணும் வேளாளர், பண்ணையாள்கள். காரொக்கல், பெ. வறிய சுற்றம். குச்சுக்கிழங்கு, பெ. மரவள்ளிக்கிழங்கு (tapioca). கொறு கலப்பை, பெ. ஒரு விண்மீன் கூட்டம் (Orion). கோட்டான்காய், பெ. கூகைக்காய். சட்டாலொட்டா, பெ. ஒருவகைக் கடல்மீன். செஞ்செவ்வாப்பு, பெ. புதிதாய்ப் பிறந்த குழந்தையுடம்பில் செம்படைகள் தோன்றும் நோய் நிலை. கருஞ்செவ்வாப்பினும் வேறானது. தலைவெட்டிக் கருவாடு, பெ. தலையில்லாது விற்கும் ஒருவகைக் கருவாடு. நாய்ச்சுறா, பெ. ஒருவகைச் சுறாமீன். பத்தநடை (பற்றுநடை), பெ. கமலையேற்றத்தில் காளைகள் கூனையை இழுத்துச் செல்லும் இறக்கம் பேய் வெள்ளரி, பெ. தீய வெள்ளரி. பேரவை, பெ. பண்டைப் போர்ப்பயிற்சிக் கூடம். மயிர்க்கிழங்கு, பெ. வேர்க்கிழங்கு (சிறுவள்ளிக்கிழங்கு). முரண்களரி, பெ. போரவை. மூவடிமுக்கால், பெ. வெண்பாலிவிற் கொருபெயர். வண்ணான் தாழி, பெ. ஒருவகை விளையாட்டு. வறட்பனி, பெ. ஈரமில்லாப் பனி. வெள்ளப்பம், பெ. ஒருவகை அப்பம். வேப்பிலைக்கெண்டை, பெ. கெண்டைமீனின் ஒருவகை. வைத்தூற்றி, பெ. எண்ணெயூற்றும் கருவி (funnel) (eh.) சென்னைப் ப.க.க.த. அகராதியில் விடப்பட்டுள்ள கூட்டுச்சொற்களின் மாபெருந் தொகையை, பின்வரும் இரு சொல்வரிசைகளை நோக்கிக் காண்க. அகவினா அரைக்காற்சட்டை அஞ்சுமணிப்பூ அரைக்கைச்சட்டை அடக்கவிலை அரைச்சாப்பாடு அடித்துப்பிடுங்குகிற சுத்தியல் அரைச்சாப்பு அணைகல் அரைச்சீட்டு அந்தரக்கோல் அரைச்சீர் அமிஞை அரைத்தவளை அரங்கொழி செய்யுள் அரைப்பட்டம் அரசப்பள்ளி அரைப்பள்ளி அரசிலை வாளி அரைப்புள்ளி அரிசிக்களா அரைப்பேச்சு அரிசித்தழுப்பு அரையெழுத்து அரிப்பு வலை அரைவகுப்பு அல்லித்தேங்காய் அரைவயிறு அவக்காச்சி அரைவெட்டு அறுவாள் அரைவேக்காடு (3) மரபுவினைச்சொல் அடித்துப்பேசுதல் அடித்தொண்டையிற் பேசுதல் அடிமடியில் நெருப்பைக் கட்டுதல் அடிமேலடியடித்தல் அடியெடுத்துக் கொடுத்தல் அடுத்துக்கெடுத்தல் ஒடித்துக் கேட்டல் கவ்விப் பேசுதல் கொடித்தட்டல் சும்மாவிருத்தல் தாக்குப்பிடித்தல் நட்டுக்கொண்டு நிற்றல் பழைய பல்லவி பாடுதல் மொல்லையிற் போடுதல் வாய்க்குங் கைக்குமாயிருத்தல் சிலர், இத்தகைய தொடர்ச்சொற்கள் அகராதியில் இடம்பெறலாமா வென்று கருதலாம். வீடும் விளக்குமாய் வைத்தல், வெட்டொன்று துண்டிரண் டாகப் பேசுதல் முதலிய தொடர்ச்சொற்கள் சென்னையகராதியில் இடம் பெற்றிருப்பதைக் காணின், அவர் அங்ஙனங் கருதார். (4) இணைமொழி அச்சலத்தி புச்சலத்தி அழன்று குழன்று அஞ்சிலே பிஞ்சிலே அழிந்து ஒழிந்து அடக்கவொடுக்கம் அழுகையுங் கண்ணீரும் அடிப்பும் அணைப்பும் அழுங்கிப்புழுங்கி அடுப்புந்துடுப்பும் அழுத்தந்திருத்தம் அண்டபிண்டம் அழுதுதொழுது அண்டை வீடு அடுத்த வீடு அறிந்துதெரிந்து அயர்த்தது மறந்தது அறிவு ஆற்றல் அருமை பெருமை அறுக்கப் பொறுக்க அரைவயிறுங் குறைவயிறும் அன்று மறுநாள் அலுக்கிக் குலுக்கி அன்னந் தண்ணீர் அலுத்துப் புலுத்து அன்னலுந் துன்னலும் அலைத்துக் குலைத்து நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்புறத்து மூதாட்டியர் பேச்சில், இணைமொழிகள் அணியணியாய் அமைந்து கிடக்கின்றன. எ-டு: அரிசி தவசி பம்பை பறட்டை கன்று கயந்தலை பயறு பச்சை காணங் கப்பி புல் புளிச்சி கேப்பை கொட்டி மயக்கமுந் தியக்கமும் சோளஞ் சொங்கு மரம் மட்டை தூசி துப்பட்டை விறகு வெங்கழி நன்னியுங் குன்னியும் விருந்து வேற்று இத்தகைய இணைமொழிகள் அகராதியிலில்லாதன ஐந்நூற்றிற்கு மேலுள்ளன. சென்னையகராதி சில பழக்கவழக்கங்களைக் குறிக்கும்போது, அவற்றிற்குரிய பெயரையன்றி வினையைக் குறித்திலது. எ.டு: குறிக்கப்பட்ட பெயர் விடப்பட்ட வினை கொடும்பாவி கட்டியிழுத்தல் 2. சொல்லின் மறுவடிவின்மை சில சொற்களின் மறுவடிவம் சென்னை யகராதியிற் குறிக்கப்படவில்லை. எ-டு: குறிக்கப்பட்ட வடிவம் விடப்பட்ட வடிவம் அடுப்பங்கரை அடுப்பங்கடை அடைக்கலாங்குருவி அடைக்கலத்தான் எத்தாப்பு ஏத்தாப்பு கணியான் கணியன் கரட்டான் கரட்டை குறவை குறத்தை கொட்டன் கொட்டலான் துடுமை துடும்பு தொலி தொலும்பு நீ நீன் பத்து மாற்றுத் தங்கம் பத்தரை மாற்றுத் தங்கம் வே வேரு வேகவை வேலி 3. சொல்லின் இலக்கண வடிவின்மை (1) செயப்படுபொருள் குன்றிய வினை குறிக்கப்பட்ட செயப்படு பொருள் விடப்பட்ட செயப்படுபொருள் குன்றாவினை வடிவம் குன்றிய வினைவடிவம் உணத்து உண. உணத்தல் காய்தல். உணத்துதல் காயவைத்தல். உசும்பு, உசுப்பு என்னும் இரண்டும், முறையே, ஒரு பொருள் பற்றிய தன் வினையும் பிறவினையுமாகும். உசுப்பு என்பதற்கு எழுப்புதல் என்னும் பொருள் குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆயின், உசும்பு என்னுஞ் சொற்கு துயிலுணர்தல் அல்லது துயிலுணரத் தொடங்குதல் என்னும் பொருள் குறிக்கப்படவில்லை. (2) நிகழ்கால வினையெச்சம் சில வினைகளின் நிகழ்கால வினையெச்சவடிவம் மரபு வினையெச்சமாக வழங்கி வருகின்றது. அது தனியாக எடுத்துக் கூறப்படவில்லை. எ-டு: அண்ணாக்க, மேலாக. அண்ணாக்கக் குடித்தான், மேலாக எடுத்தான் என்னும் வழக்குகளை நோக்குக. 4. கூட்டுச்சொல்லின் உறுப்பைத் தனியாகக் கூறாமை அண்டிதள்ளுகை, அண்டிமாங்கொட்டை, எகிர்க் கொழுப்பு, தொண்ணைத்தடி என்னும் கூட்டுச்சொற்கள் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. ஆயின், அண்டி (anus), அண்டிமா (முந்திரி), எகிர் (அரணை), தொண்ணை (பருமன்) என்னும் தனிச்சொற்கள் குறிக்கப்படவில்லை. 5. மிகைபடு சொற்கள் (Redundant Words) சில சொற்கள் மிகைபடு சொற்களாயினும், உலக வழக்கில் வழங்கத்தான் செய்கின்றன. அவற்றையும் அகராதியில் குறித்தல் தக்கதே. ஆயின், அவற்றுட் பல குறிக்கப்படவில்லை. எ.டு: அரைஞாண் கயிறு அரைஞாண் கொடி ஆண்பிள்ளைப் பிள்ளை பெண்பிள்ளைப் பிள்ளை இவை, முறையே, அரணாக்கயிறு (அண்ணாக்கயிறு), அரணாக்கொடி, ஆம்பிளப்பிள்ளை, பொம்பிளப்பிள்ளை எனக் கொச்சைவடிவில் வழங்குகின்றன. இவ் வடிவைக் குறித்தல் கூடாது. இவற்றின் திருந்திய வடிவைக் குறிக்கலாம். சாவல் (சேவல்),வேங்கு (வாங்கு) முதலிய கொச்சை வடிவுகளை வேண்டாது குறித்திருக்கும்போது, மிகைபடு சொற்களின் திருந்திய வடிவை ஏன் குறித்தல் கூடாது? 6. விளக்க மேற்கோளில் வருஞ்சொல்லைக் குறியாமை சில சொற்கள் விளக்கமேற்கோளில் வந்திருக்கின்றன. ஆயினும், அவற்றைக் கண்டுபிடித்து அகராதிச் சொல்வரிசையில் சேர்த்திலர். எ.டு: உடும்போடி - உடும்பு ஓடினதினால் ஆகாதென்று தள்ளிய நிலம். குறித்துவருகிளவி - புணர்மொழியில் வருமொழி. சிறிய திருவடி - அனுமான். ஆமைதவழி என்னுஞ் சொல்லை விளக்கும் மேற்கோள் “cL«ngho ஆமைதவழி புற்றும் என்பது. நிறுத்த சொல் என்பதை விளக்க வந்த மேற்கோள் நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று என்பது. பெரிய திருவடி என்பதை, சிறிய திருவடியினின்று வேறுபடுத்தப்பட்ட தென்று ஆங்கிலத்திற் குறித்துள்ளனர். இங்ஙனம், மேற்குறித்த முச்சொல்லும் விளக்கமேற்கோளில் வந்திருப்பினும், அவற்றை அவற்றோடொத்த அல்லது அவற்றிற்கெதிரான சொற்களைப்போல், சொல்வரிசையிற் சேர்க்கவில்லை. 7. சொல்லின் கொச்சை வடிவைச் சொல்வரிசையிற் சேர்த்தல் (1) கொச்சை வடிவுமட்டும் சில சொற்களின் கொச்சை வடிவையே சொல் வரிசையிற் சேர்த்து, அவற்றின் திருந்திய வடிவை மூலக் குறிப்பில் மட்டும் பெரும்பாலும் அரைகுறையாய்க் காட்டிவிட்டிருக்கின்றனர். குறித்த சொல் காட்டிய மூலம் எ.டு: அண்ணாக் கயிறு அரைநாண்+ அப்பப்போ அவ்வப்போது அருணாக்கயிறு அரைநாண்+ ஆமக்கன் ஆண்மகன் இப்பவும் இப்போதும் கடிச்சவாய்தடிச்சான் கடி+ சோத்தான் சோறு+ பிடிச்சராவி பிடி+அராவு பொட்டச்சி பெட்டை இனி, அர்ணாள் என்னும் கொச்சை வடிவைக் குறித்து அரைநாண் என்று மூலங்காட்டி, அர்ணாட்கொடி, அர்ணாட் கயிறு, என எடுத்துக்காட்டுத் தந்திருப்பது அகராதிக்கு மிகமிக இழுக்குத்தருவதாகும். (Vol.I ப.113). (2) கொச்சைவடிவும் திருந்திய வடிவும் திருந்திய வடிவு கொச்சை வடிவு அகப்பை ஆப்பை அஞ்சறைப்பெட்டி அஞ்சலப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி அடைய வளைந்தான் அடைய வளைஞ்சான் அப்பத்தாள் அப்தான் அப்பளம் அப்பளாம் அப்போது அப்பம், அப்போ அரைநாண் அருணான் இடைகழி இரேழி, ரேழி இரண்டு ரெண்டு இரா ரா கடைத்தேறு கடத்தேறு சாப்பிடு சாப்படு சேவல் சாவல் நிரம்ப ரெம்ப, ரொம்ப பட்டறை பட்டரை பெட்டை பொட்டை வாங்கு வேங்கு இங்ஙனம், திருந்திய வடிவைப் போன்றே கொச்சை வடிவையும் அகராதியிற் சேர்த்துப் பொருள் கூறியிருப்பின், மாணவர் எங்ஙனம் திருந்தமுடியும்? திருத்தமா யெழுதும் மாணவரையும் கொச்சையாய் எழுதும்படியன்றோ இவ் வடிவுகள் தூண்டுகின்றன! இனி, வரச்சூலை, வரட்சி, வரட்சுண்டி, வரட்குலை, வரட்சொரி, வரட்டடைப்பான் வரட்டி வாட்டுதல், வரட்டு, வரட்டுச்சோகை, வரட்டுப்பசு, வரள், வரள்வாயு என றகரம் வரவேண்டிய சொற்களையெல்லாம் ஒழுங்காய் ரகரம் வைத்து குறித்திருப்பது, எத்துணைக் குறும்புத்தனமும் தமிழைக் கெடுக்கும் சூழ்ச்சியும் ஆகும்! (3) திருந்திய வடிவும் கொச்சை வடிவும் வேற்றுமொழி வடிவும் திருந்திய வடிவு கொச்சை வடிவு வேற்றுமொழி வடிவு உயர்த்தி உசத்தி ஒஸ்தி சட்டுப்புட்டு ஜட்பட் சல்லி ஜல்லி சடைச்குச்சு ஜடகொச்சு 8. சொல்லின் வழுவடிவைக் குறித்தல் குறிக்கப்பட்ட வழுவடிவம் குறிக்கப்படாத திருந்திய வடிவம் அரிவாள்மணைப்பூண்டு அரிவாள்முனைப்பூண்டு ஆமவடை ஆமைவடை ஆள்வள்ளி ஆழ்வள்ளி கிழியஞ்சட்டி கிழியஞ்சிட்டி நாசமற்றுப்போவான் நாசமுற்றுப்போவான் பாளையரிவாள் பாளையறுவாள் பொட்டைக்காடு பொட்டற்காடு பொது நிறம் புது நிறம் வீச்சரிவாள் வீச்சறுவாள் வெட்டரிவாள் வெட்டறுவாள் அரிவாள்முனைப்பூண்டென்பது, மணையரிவாளின் முனையிலுள்ள தேங்காய் திருகிபோல், ஓரத்திற் பல்வடிவான முனையுள்ள வட்ட இலையுடைய பூண்டு. அரிவாள்மணையென்பது அரிவாளைப் பதித்திருக்குங் கட்டை. அதைப் போன்ற பூண்டென்பது பொருளற்றது. ஆமைவடையென்பது, உழுந்துவடைபோல் தட்டையாயிராது ஆமை யோட்டைப்போல் வெளிவளைவாக வுள்ளது. ஆமைத்தாலி, ஆமைப்பூட்டு, ஆமைமடி, ஆமையாழ் முதலிய சொற்களையும் அவை குறிக்கும் பொருள்களின் வடிவையும் நோக்குக. சட்டி என்பது பெரியது, சிட்டி சிறியது. அகலுக்குச் சிட்டியென்னும் பெயரே பொருந்தும். நெல்லை மாவட்டத்திலும் கிழியஞ்சிட்டியென்றே சொல்வர். அரிவாள் என்பது காய்கறிகளைச் சிறிதாய் அரியும் கத்தி அல்லது மணையலகு. அறுவாள் என்பது பெரிதாய் அறுக்கும் அல்லது வெட்டும் கத்தி வகை. பன்னறுவாள், பானையறுவாள், வீச்சறுவாள், வெட்டறுவாள் முதலியவற்றை அறுவாள் என்று சொல்வதே வழக்கம். அரிவாள் என்று சொல்வா ஒருவருமில்லை. கதிரறுப்பெல்லாம் அறுப்பு அறுவடையென்றே சொல்லப்படும். அரிதாள் என்னும் கூட்டுச்சொல்லில் மட்டும், அரி என்னும் சொல் வந்துளது. அது நெல், புல், தினை, வரகு, சாமை போன்ற சிறு பயிர்களின் தாளையே குறிப்பது. “eh¡fÇíª தயமுகனார் என்று கம்பர் கூறியது செய்யுள் வழக்கு. அறுவாள் என்னும் சொல் தனித்தேனும் பிற சொல்லொடு சேர்ந்தேனும் அகராதியில் ஓரிடத்திலும் வராதிருப்பது, மிக வியப்பாயிருக்கின்றது. கம்பர் செய்யுளொன்றில், யாழ், வாழ், பாழ் என்னுஞ் சொற்களுக்கேற்ப, நாள் என்பது நாழ் என்று திரிந்துள்ளது. அது உலகவழக்கிற் கேற்காது. செய்யுளிலும் நாள் என்றிருப்பின் குற்றமன்று. நாழ் என்பது ஏட்டுப்பிழையாகவு மிருக்கலாம். ஆதலால், அவ் வடிவத்தை அகராதியிற் குறித்திருப்பது வழுவாம். 9. குறிக்கவேண்டாத சொல்லைக் குறித்தல் கீழ்வருஞ் சொற்களையும் அவை போன்றவற்றையும் அகராதியிற் குறிக்கத் தேவையில்லை. அணியிழை - பெண். அழாஅல் - அழுகை. அத்தத்தாவெனல் - தந்தையை அப்பப்பா என்றழைத்தல். முக்குழிச்சட்டி - மூன்று குழியுள்ள பணியாரச்சட்டி. அணியிழை என்பது ஓர் அன்மொழித்தொகை. இங்ஙனம் நூற்றுக் கணக்கானவை உள. அழல் அல்லது அழால் என்பதன் அளபெடை வடிவே அழாஅல் என்பது. ஒற்றைக்குழிச்சட்டி, நாற்குழிச்சட்டி, ஐங்குழிச்சட்டி, அறுகுழிச்சட்டி, ஏழ்குழிச்சட்டி எனப் பன்னிருகுழிச்சட்டிவரை யிருப்பதால், முக்குழிச்சட்டியை விதந்து குறிக்கவேண்டியதில்லை. 10. தமிழுக்கு வேண்டாத வேற்றுச்சொல்லைக் குறித்தல் (1) தன்னெழுத்துச் சொல் சமற்கிருதம் சேமியம் ஆங்கிலம் அச்சரவாகன் இசுமூ அண்டிமாண்டு அசப்பியம் இத்தத்து அவிடவெட்டு அசம்பிரேட்சிய காரித்துவம் இத்தா ஆக்கர் அசமஞ்சசம் இத்திகாத்து ஆபீசு அசமதாகம் இத்திகாபு இஞ்சின் அசமந்திபம் இத்திபார் ஏட்டு அசமருதம் இத்திராசு கேசு அசமோதகம் இத்திலா கோர்ட்டு அசனபன்னி இதிபாரா சீக்கு அசிதாம்புருகம் இந்துவி துருப்பு அசிபத்திரகம் இப்பா நம்பர், நபர் அசுமாரோபணம் இபாதத்து பத்தாந்து அசுவத்தம் இபாரத்து புலீன் அசுவதட்டிரம் இபுதார் பேப்பர் அசுவாரசியம் இபுனு போலீசு சேமியம் (Semitic) என்பது அரபி, எபிரேயம், உருது முதலிய இசுலாமிய மொழித்தொகுதி. (2) வேற்றெழுத்துச் சொல் சமற்கிருதம் சேமியம் ஆங்கிலம் ஜ்ரும்பா இஜ்ஜத்து ஒட்ராப்பு ஜகத்ஜ்யோதி இஜாபா டக்கு ஜகதீச்வரன் இஜார்நாமா டயன் ஜங்கமலிங்கம் இஜாரா டீ ஜங்காரம் இஜாஸத்து டெலிபோன் ஜஞ்ஜாமாருதம் இஷா டைகிளாட்டு ஜபாகுஸுமம் இஷாரா டை ஜம்புத்லீபம் இஷுக்கு பலஞ்ஜீப்மத்தான்காயீ ஜயகோஷம் இஷுராக்கு பற்றக்சார் ஜயவிஜயீபவ இஸ்கால் நோட்டேபாண்ட் ஜர்ஜஜரம் இஸ்தவா ரப்பு ஜலத்வேஷரோகம் இஸ்திக்பார் ரயில்பாக் ஜலஸ்தம்போதரம் இஸ்திமிரார் ராங்கி ஜன்மஸ்பாவம் இஸ்தியார் ரீப்பா ஜன்மோத்ஸவம் இஸ்திலாக்கு ரூலர் ஜனரஞ்ஜகம் இஸஸா ஜட்ஜி ஜஹதஜஹல்லக்ஷணை இஸுராப ஜோக்கு திரு. வையாபுரிப் பிள்ளை, வேலூர் மகிழ்நனார் ஒருமுறை பாடப் பொத்தகக்குழு வொப்பத்திற்கு விடுத்த ஐந்தாம் வகுப்புப் பொத்தகத்தில் இருந்த பைம்புல்வெளி என்னுஞ் சொல், சிறுவர் வாயில் நுழையாதென்று அப் பொத்தகத்தைத் தள்ளிவிட்டாராம். ஆயின், அவர், பெரியோர் வாயிலும் நுழையாத ரக்திஷ்டீலி, சந்நிபாதசுரம், பரியது யோச்சியோ பேக்ஷணம், ஜஹத ஜஹல்லக்ஷனை, ஸ்படிசஜபாகுஸும நியாயம் என்னுஞ் சொற்களை, எந்த வகையில் அகராதியிற் சேர்த்தாரோ தெரியவில்லை. இவற்றையெல்லாம் சமற்கிருத அகராதியி லன்றித் தமிழகராதியிற் குறித்தல் கூடாது. (3) ஈரெழுத்திலும் வேற்றுச்சொல் (சமற்கிருதம்) தன்னெழுத்துச்சொல் வேற்றெழுத்துச்சொல் அசகசாந்தரம் அஜகஜாந்தரம் அசாக்கிரதை அஜாக்கிரதை அசாகளத்தனம் அஜாகளஸ்தனம் அட்டகம் அஷ்டகம் அட்டதிக்கயம் அஷ்டதிக்கஜம் அட்டதிக்குப்பாலகர் அஷ்டதிக்குப்பாலகர் அட்டபந்தனம் அஷ்டதிக்கஜம் அட்டபந்தனம் அஷ்டபந்தனம் அட்டமச்சனி அஷ்டமச்சனியன் (4) பல்வடிவு வேற்றுச்சொல் இராக்கதன், இராட்சசன், ராட்சதன், ராக்ஷஸன். இருடி, ரிஷி, ருஷி. இலக்குமி, இலட்சுமி, லட்சுமி, லக்ஷ்மி. சட்டி, சஷ்டி, ஷஷ்டி. சபாசு, சவ்வாசு, சவாசு, சபாஷ், ஷபாஷ், ஸபாஷ். சிருவை, ஜிஹ்வா, ஜிஹ்வை. பாசை, பாடை, பாஷை. ராக்கடி, ராக்கிடி, ராக்குடி, ராக்கொடி, ராக்கோடி. ருப்பு ருப்பு, ரூப்ரூ, ரூப்ரூப். ஜிராயத்து, ஜிராயதி, ஜிராயித். இங்ஙனம், பல வேற்றுச்சொற்கள் பலவடிவிற் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ் மிகுந்த சொல்வளமுள்ள மொழியாதலால், அதற்கு மேற்காட்டிய சொற்கள் தேவையேயில்லை. தேவையில்லாது பிறமொழிச் சொற்களைக் கடன் கொள்வதால், தமிழ் தன் தூய்மையும் சிறப்போசையும் இழந்து கலவை மொழியாவதுடன், நாளடைவில் திரவிட மொழிகள்போல் ஆரிய வண்ணமாய் மாறிவிடும். வேற்றுச்சொற்கள் வழங்கும்போது, தன் சொற்கள் வழக்கற்றுப் பொருளிழப்பதுடன், நாளடைவில் மறைந்துபோய் மீளாநிலை யடைகின்றன. கீழ்வரும் வேற்றுச்சொற்கள் போன்றவை தமிழுக்கு முற்றும் வேண்டாதவை. சமற்கிருதம் தென்சொல் சேமியம் தென்சொல் இருதயம் - நெஞ்சாங்குலை, கிராக்கி - அருந்தல் நெஞ்சம் சனி(க்கிழமை) - காரி சவால் - அறைகூவல் சிகிச்சை - பண்டுவம் சிபார்சு - தகவுரை, பரிந்துரை தந்தம் - மருப்பு, பர்வா(யில்லை) - தாவில்லை,தாவிலை தருமம் - அறம் பாக்கி - நிலுவை திருப்தி - பொந்திகை ராசி - ஒப்புரவு பிராணி - உயிர்மெய் லாகா - திணைக்களம் சுத்தம் - துப்புரவு வசூல் - தண்டல் மேகம் - முகில் வார்சு - பிறங்கடை மைத்துனன் -அளியன் ஸாமான் - பண்டம், உருப்படி நித்தியம் - நித்தல் ஷோக்கு - பகட்டு, தளுக்கு தமிழுக்கு இன்றியமையாத வேற்றுச்சொல்லாயின், தமிழில் மொழி பெயர்த்தே வழங்குதல் வேண்டும். இம் முறையைக் கடைப்பிடித்தே, கரும்பு, மிளகாய், உருளை(க்கிழங்கு), புகையிலை, வான்கோழி, மிதிவண்டி, வைத்தூற்றி முதலிய சொற்களைப் பொதுமக்கள் புனைந்திருக்கின்றனர். மொழிபெயர்க்க முடியாத சிறப்புப்பெயராயின், தமிழில் எழுத்துப் பெயர்த்தே வழங்குதல் வேண்டும். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (884) சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (885) என்று தொல்காப்பியர் அக்காலத்திற்கேற்பச் சுருக்கிக் கூறினார். நன்னூலாசிரியரான பவணந்தியாரோ, எவ்வெவ் வடவெழுத்தை எவ்வெவ்விடத்தில் எவ்வெத் தமிழெழுத்தாய்த் திரித்தல் வேண்டுமென்பதைப் பற்றி, ஏழாமுயிர் இய்யும் இருவும்ஐ வருக்கத் திடையின் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே அகவும் ஐந்திரு கவ்வும் ஆவீ றையும் ஈயீ றிகரமும் (147) ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யும் மொழிமுத லாகிமுன் வருமே. (148) இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி உவ்வு மாம்பிற. (149) என்று விளக்கமாகக் கூறியுள்ளார். இந்நூற்பாக்கள் (N¤âu§fŸ) வடவெழுத் துகளை மாற்றும் முறையைச் சொன்னவையேயன்றி, வடசொற்களைக் கடன் கொள்ளுமாறு தூண்டியவையல்ல. தமிழில் எல்லாவெழுத்துகளும், பிற மொழிகளிற்போல், சொல்லில் மூவிடத்தும் வருவனவல்ல. முதனிலை யெழுத்துகளும் இடைநிலை யெழுத்து களும் இறுதிநிலை யெழுத்துகளும், இன்னின்னவென்று இலக்கணத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வரம்புமீறி நூற்றுக்கணக்கான அயற்சொற்கள் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. ரகர உயிர்மெய்களுள் ரை தவிர மற்றப் பதினொன்றும், லகர உயிர்மெய்களுள் லை தவிர மற்றப் பதினொன்றும், டகர வுயிர்மெய்களுள் டு தவிர மற்றப் பதினொன்றும், மொழிமுதலெழுத்துகளாகக் காட்டப்பட்டுள்ளன. இது தமிழிலக்கணத்தை,அடியோடு ஒழித்தலன்றி வெறெதனை நோக்கமாகக் கொண்டிருத்தல் கூடும்? எ.டு: முதனிலை இடைநிலை இறுதிநிலை டம்ளர் காப்தாரி சநி த்ரப்ஸம் பால்யன் ரப் ரஹ்மத் ரக்தம் ரயத் வோரகம் ரத்னம் ஷட் ஸ்தலம் ஜிஹ்வா ஷபாஷ் முகமதிய மன்னராட்சியில் உருதுச் சொற்கள் தமிழ்நாட்டில் வழங்கின வெனின், அவற்றைத் தனியாகத் தொகுத்து வெளியிடவேண்டுமே யன்றி, தமிழ்ச் சொற்களொடு கலத்தல் கூடாது. சென்னை யகராதியில் அவற்றையெல்லாச் சேர்த்தது. வேண்டுமென்று தமிழின் தூய்மையைக் குலைத்தற்கேயன்றி வேறன்று. ஆகவே, அதற்குத் தென்னிந்திய அகராதி (South Indian Lexicon) என்னும் பெயரே பொருத்தமாம். 11. இனச்சொல் இன்மை பல தமிழ்ச்சொற்கட்குத் திரவிடமொழியினச் சொற்கள் அகராதியிற் குறிக்கப்படவில்லை. எ.டு: தமிழ்ச்சொல் குறிக்கப்படாத் தெலுங்கினச்சொல் அது அதி அவன் வாடு, வாண்டு உள் லோ தமிழ்ச்சொல் குறிக்கப்படாத் தெலுங்கினச்சொல் எழு லெய் எழுபது டெப்பது ஏன் ஏலா ஒன்பது தொம்மிதி நம்பு நம்மு மீது மீத வடை வட 12. திசைச்சொல் இன்மை எ.டு: சொல் பொருள் இடம் ஒடக்கான் ஓணான் கோவை பெருக்கான் பெருச்சாளி ,, கூடப்போதல் தொலைந்துபோதல் ,, (கோபி) எங்கைக்கு எவ்விடத்திற்கு வடார்க்காடு எந்தண்டை எப்பக்கம் ,, தூர்தல் புகுதல் ,, 13. எழுத்துக்கூட்டல் வழு சில சொற்கள் தவறாக எழுத்துக் கூட்டப்பட்டுள்ளன. எ-டு: குழிசீலை, மாறாப்பு. இவை; முறையே குளிசீலை, மாராப்பு என்றிருத்தல் வேண்டும். Tumbler (FoÚ®¡Ftis) என்னும் ஆங்கிலச்சொல், டம்ளர், தமிளர், தமிழர் என்னும் மூவடிவிற் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர் (jÄœk¡fŸ) என்னும் இனப்பெயரான தமிழ்ச்சொல்லையே பொதுவாகத் தமிளர் என்று மக்கள் தவறாய்ப் பலுக்கும்போது, தமிளர் (குவளை) என்னும் கலப் பெயரான ஆங்கிலச் சொல்லையா தமிழர் என்று சிறப்புழகரங் கொடுத்துத் தவறின்றிப் பலுக்குவர்! இது எத்துனைக் குறும்புத்தனமான குறிப்பு! 14. ஆங்கிலத்தில் எழுத்துப்பெயர்ப்பு முறைத்தவறு தமிழ் வல்லினமெய்கள், தமிழிலுள்ள பிற மெய்களை நோக்க, வல்லினமேயன்றி, வடமொழி வல்லினம் போல அத்துணை வல்லோசை யுடையனவல்ல. தமிழில் இரு ககரம் சேர்ந்தால்தான் வடமொழியில் அல்லது ஆங்கிலத்தில் ஒரு ககரத்திற்குச் சமமாகும். எ.டு: தேக்கு - teak. தமிழ் வல்லினம் மெல்லினத்திற்கு முன்வரின், எடுப்பொலி பெறும். இதை நோக்காது, வடமொழி வல்லினவொலிவகை நான்கனுள் முதல்வகையென்றே கருதிக்கொண்டு, தமிழ் வல்லின மெய்களை ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்த் திருப்பது, தமிழுக்கு மாறானதும் அயல்நாட்டார்க்குத் தவறான வழி காட்டுவது மாகும். எ-டு: தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் எழுத்துப் இருக்கவேண்டிய பெயர்க்கப்பட்டுள்ள முறை முறை அங்கு anku angu அஞ்சு anchu anju அண்டு antu andu அந்து anthu andu அம்பு ampu ambu ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப, என்னும் வன்கூட்டொலிகள் தெலுங்கிலன்றித் தமிழிலில்லை. II. பொருள் வழுக்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் இரண்டாம் பெருங்குறை, சொல்லிற்குத் தரப்பட்டிற்கும் பொருளின் வழுவாம். 1. இயல்விளக்கம் அல்லது சொற்பொருள் தமிழிற் கூறப்பெறாமை அகச்சுட்டு என்னும் சொல்லிற்கு, ஆங்கில விளக்கத்திலுள்ள எடுத்துக் காட்டுகளைத்தவிர, தமிழில் விளக்கமாவது பொருளாவது கூறப்படவில்லை. ஆகவே, ஆங்கிலம் அறியாதார்க்கு இத்தகைய விளக்கம் பயனற்றதாம். அசாக்கிரதை யென்னும் சொற்கு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பொருள் கூறப்பட்டுள்ளது. அஞ்சுருவாணி யென்னும் சொற்கு ஆங்கிலத்தில் விளக்கம் கூறி, தமிழில் அச்சாணி என்ற சொல் மட்டுங் குறிக்கப்பட்டுளது. 2. குன்றக்கூறல் எ-டு: சொல் குன்றக்கூறல் நிறைவான பொருள் எத்தாப்பு வஸ்திரம் மார்பின் குறுக்காக அணியும் மேலாடை எருகுதல் மாடுகழிதல் இருதிணை யுயிரிகளும் திண்ணிய குழம்பாகக் கழிதல். கரிக்கோடிடுதல் மோவாயில் மீசை முளைக்கத் தொடங்குதல். மயிர் அரும்புதல் காக்காய்ப்பிசின் கருவேலம்பிசின் கருவேல மரத்தினின்று வடியும் மக்குப்போன்ற கரிய போலிப்பிசின். குக்கல் நாய் குள்ளநாய். குண்டுக்கழுதை ஆண்கழுதை இள ஆண்கழுதை. குத்துப்பழி பெருஞ்சண்டை கத்திக்குத்து நேருஞ் சண்டை. குளுகுளுத்தல் அழுகிப்போதல் மிகக் கனிந்து குழைதல். கொழுப்புக்குடல் ஆட்டின் சிறுகுடல் ஆட்டின் சிலுப்பிக்குடல். துரிஞ்சில் வாவல் சிறு வௌவால். பன்றிவார் பன்றியின் மாமிசம் பன்றியின் தோல். மண்ணுக்குப் கடுஞ்சிறையிலிடுதல் அந்தமான் தீவிற்கனுப்புதல். போடுதல் வடை உழுந்தாற் செய்யப்படும் உழுந்து, கடலைப்பருப்பு ஒருவகைப் முதலியவற்றாற் செய்யும் ஒரு பண்ணிகாரம் வகைப் பலகாரம். 3. மிகைபடக் கூறல் கரித்தல் என்னும் சொல்லிற்கு, “to be saltish to the taste; உப்புச் சுவை மிகுதல். ``இந்தக் கறி உப்புக்கரிக்கிறது என்று பொருளும் எடுத்துக் காட்டும் தரப்பட்டுள்ளன. கரித்தல் என்னும் வினைச்சொல்லிற்கு, மிகுதல் என்பதுதான் பொருளே யன்றி உப்புக்கரித்தல் என்பதன்று. உப்புக்கரித்தல் என்பதே பொருளாயின், எடுத்துக்காட்டு, இந்தக் கறி கரிக்கின்றது என்றன்றோ இருத்தல் வேண்டும். அங்ஙன மிருப்பின் பொருள் வேறுபட்டுவிடும். உப்பு என்னும் சொல்லொடு கூடினாலன்றி, கரித்தல் என்னும் சொல்லிற்கு உப்புச்சுவைப் பொருள்தரும் ஆற்றலில்லை. உப்புக்கரித்தல் என்னும் மரபுவினை, தனியாகவும் அகராதியில் அதற்குரிய இடத்திற் குறிக்கப்பட்டு, உவர்ப்பு மிகுதல் என்னும் பொருள் கூறப்பட்டிருத்தல் காண்க. 4. வழுப்படக்கூறல் அளைமறிபாப்பு என்னும் சொற்கு. “A mode of construing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse, or with one in the beginning of another verse, one of eight porulkol; பாட்டின் ஈற்றினின்ற சொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படும் முறை. என்று விளக்கங் கூறப்பட்டுள்ளது. இது தாப்பிசைப் பொருள்கோளுக்கு அல்லது விளக்கணிக்கு ஒருவாறு பொருந்துமேயன்றி, அளைமறிபாப்புப் பொருள்கோளுக்குப் பொருந்தவே பொருந்தாது. அளைமறிபாப்புப் பொருள் கோளாவது, தலை முன்னும் வால் பின்னுமாக வளைக்குட் புகுந்த பாம்பு, அங்ஙனமே திரும்பாது திரும்பவும் தலை முன்னாக வளைந்து மாறிக் கொள்வதுபோல், ஒரு செய்யுள் தலைகீழாய் அடியடியாக வெடுத்துப் பொருள் கொள்ளப்படுவது. சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார்தாமும் தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே. இச்செய்யுளில், 4ஆம் அடி முதலடியாகவும், 3ஆம் அடி 2ஆம் அடியாகவும், 2ஆம் அடி 3ஆம் அடியாகவும், முதலடி 4ஆம் அடியாகவும், மாறியமைந்து பொருள் படுதல் காண்க. ஈர்ங்கை என்னும் சொல்லிற்கு, “Wet hand, fig. hand that has been washed after taking one’s meal; உண்டு பூசியகை. ஈர்ங்கை விதிரார் கயவர் (குறள். 1077) என்று விளக்கங் கூறப்பட்டுள்ளது. ஈர்ங்கை யென்பது எச்சிற்கையே யன்றி உண்டு பூசிய கையன்று. எச்சிற்கையிற் காக்கை விரட்டாதவன் என்னும் வழக்கையும் நோக்குக. கசகர்ணம் என்னும் சொற்கு, “1. Lit. elephants’ ear, term used to denote the art of moving or waving one’s ears in imitation of the elephants; காதாட்டும் வித்தை. 2. A task involving stupendous effort; பெருமுயற்சியால் ஆக வேண்டிய காரியம். என்றும், அதனை அடுத்துள்ள கசகர்ணம் போடுதல் என்னும் மரபு வினைக்கு, “> id. +. To put forth unusual or extraordinary effort to realize an object; பெருமுயற்சி செய்தல். அவன் அந்த வேலையைப் பெறச் கசகர்ணம் போட்டான் என்றும் விளக்கங் கூறப்பட்டுள்ளது. இதில், கர்ணம் என்பது கரணம் (somersault); காதன்று. கசகர்ணம் போடுதலாவது, யானை கரணம் போட்டாற்போல் அரும்பெருமுயற்சி செய்தல். போடுதல் என்னும் வினை கரணத்திற்கன்றிக் காதிற்குப் பொருந்தாமை. நோக்குக. யானை காதாட்டுவதுபோல் ஒருவன் காதாட்டி என்ன கருமத்தை நிறைவேற்ற முடியும்? இது எத்துணை நகைப்பிற்கிடமான செய்தி! பொருள் வழுக்கள் அகராதி முழுவதும் ஆங்காங்கு பலவுள. எ-டு: சொல் வழுப்பொருள் சரியான பொருள் கண்ட சித்தி ஆசுகவி சொல்லும் புறக்கண்ணாற் காணாததை வல்லமை அகக்கண்ணாற்கண்டு (clairvoyance) கடுத்துப் பாடுதல். கற்பயறு A kind of greengram பாசிப்பயற்றினின்றும் வேறான தனிப்பயற்றுவகை. குறவை வரால் வராலினும் வேறான மீன். கெத்துதல் கோழி முதலியன முட்டையிட்ட கோழி கொக்கரித்தல் அடைகாக்கக் கத்துதல். கேருதல் கோழி முட்டையிடக் கத்துதல். கொம்மை பதர் சிறு கூலங்களின் உமி. சுவரொட்டி Liver மண்ணீரல் (Spleen). செந்துரிப்போதல் மட்பாண்டத்தின் மண்பாண்டத்தின் அடியில் ஓட்டையை அரக்கால் சிறு ஓட்டை விழுதல். அடைத்தல் பொத்தி வரால் குறவை. மயற்பனை (e‹. 33) ஆண்பனை பெண்பனை. மாங்காய் மூத்திராசயம் நெஞ்சாங்குலை. வள்ளி (புறம். 63) வளையல் கொடி, தண்டு. வள்ளி என்பது கொடி; வளைந்தது என்னும் பொருளது. ஒப்புநோக்க கொடு-கொடி. கொடுமை=வளைவு. ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் என்னும் புறப்பாட்டிக்கு, “M«g‰w©lh‰ செய்த வளையணிந்த கையினை யுடைய மகளிர் என்று பழையவுரையாசிரியர் உரைத்திருத்தல் காண்க. தொடி என்பதே வளையல். இதைக் கவனியாத சென்னை யகராதித் தொகுப்பாளர், வள்ளியென்னுஞ் சொற்கு வளையல் என்று பொருள் குறித்துள்ளனர். வரால் என்னும் சொற்கு,கெண்டை யென்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. வரால்மீன் வேறு; கெண்டைமீன் வேறு. இனி, வரால் 3 அடியும் 4 அடியும் வளரும் என்று கூறியிருப்பது வியப்பையும் நகைப்பையும் விளைக்கின்றது. தானே தரக்கொளி னன்றித் தன்பால் மேலிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை (நன். 33) என்று, மாணவர் விரும்பும்போது ஒன்றைச் சொல்லாமல் தாமாக விரும்பும் போது அதைச் சொல்லும் ஆசிரியர்க்கு, தானாகக் காற்றடித்து விழுந்தாலன்றி ஒருவன் விரும்பும்போது ஏறிப் பழம் பறித்துக்கொள்ளமுடியாத கருக்கு மட்டையறுக்காத பெண்பனையைத் தெளிவாக உவமை கூறியிருக்கவும், அதை ஆண்பனை யென்று நூற்பாவையும் காட்டிக் குறிப்பது எத்துணைப் பொறுப்பற்ற செயலாகும். 5. சில பொருள் கூறப்படாமை பல சொற்கட்கு உரிய பொருள்களுள் ஒன்றும் பலவும் கூறப்படவில்லை. இக் குற்றத்தை அகராதி நெடுகலும் பார்க்கலாம். சொல் குறிக்கப்படாத பொருள் அச்சி அக்கை. அடைதல் களிமண் சாணம் முதலியவற்றை மொத்தமாகச் (செ. குன்றா.வி.) சேர்த்துவைத்தல். இந்த மரம் கலப்பைக்காகும். ஆதல் பயன்படுதல். உடக்கு (1) தோலுடன் கூடிய எலும்புக்கூடு, (2) செயற்கையுடல். குதிரையுடக்கு (பொய்க்குதிரை). எங்கே (1) போல. இவன் ïவனுடையmப்பனெங்கே bயன்றிருக்கிறான்.(2) இருவரிடை மிகுந்த வேறுபாடுண்மையை உணர்த்தும் குறிப்பு. அவன் எங்கே? இவன் எங்கே? (3)ãறர்bபாருளைக்fவரும்ïடம்nதடுதற்Fறிப்பு. எங்கே யென்று அலைகிறான். ஒடியல் வறுத்து அவிக்கும் முறை. ஏற்றியிறக்குதல் (1) உயர்த்தித் தாழ்த்துதல். (2) புகழ்ந்து பழித்தல். கட்டியடித்தல் உழுத நிலத்தில் மண்கட்டிகளை உடைத்தல். கண்டகம் ஒரு முகத்தலளவை. கண்வலிப்பூ காந்தட்பூ. கல்லுப்பொறுக்கி கண்ணில் விழுந்துள்ள கல் மண்ணை விளக்கெண்ணெய் தடவி யெடுக்கும் பெண். கவணை மிருதங்கத்தின் இடக்கண். சக்களத்தி பயிர் பச்சையுடன் கூட விளையும் சிறப்புகளை. சாணை போரடிக்குங் களத்தில் அரிக்கட்டுக்களை அல்லது கதிர்களைச் சேர்த்து வைக்கும் சூடு. சுவரொட்டி (1) சுவரில் ஒட்டும் விளம்பரத்தாள். (2) எறிந்தால் சுவரில் ஒட்டிக்கொள்ளக்கூடிய ஒருவகைப் புறா. செள்(ளு) பேன்குஞ்சி. சை செல்வம். தலையாரி ஒருவகைப் பம்பர விளையாட்டு. தொண்டலம் கமலையேற்றச்சாலின் தோல்வால். பனுக்குதல் விரல்களை மடக்கி மிருதங்கத்தின் இடப் பக்கத்தில் நுண்திறமாய் இயக்குதல். பெட்டிபோடுதல் சலவை செய்த துணிகளை இரும்பு அல்லது வெண்கலப் பெட்டியால் தேய்த்தல். மலம்பிஞ்சி ஒரு மருந்துச்செடி. வணர் யாழ்க்கோட்டின் (வீணைத் தண்டியின்) வளைந்த கடை. 6. பொருள் வரிசையின்மை சொற்களின் பொருள் வரிசை, (1) சொற்பிறப்பியல் முறை (Etymological order), (2) வரலாற்று முறை அல்லது காலமுறை, (Historical or Chronological order), (3) ஏரண முறை (Logical order) என மூவகைப்படும். பண்டை யிலக்கியம் அழியாத (சமற்கிருதம் போன்ற) மொழிகட்கும், (இந்தி போன்ற) புதிய மொழிகட்கும்தான், சொற்பிறப்பியல் முறையையும் வரலாற்று முறையையும் கையாளமுடியும். தொன்முது பழங்காலத்தில் தோன்றியதும் பண்டையிலக்கியம் முற்றும் அழிந்து போனதுமான தமிழுக்கோ, ஏரண முறையைத்தான் கையாள முடியும். களித்தல் என்னும் சொல்லிற்குரிய நாற்பொருள்கள் சென்னையகர முதலிற் கீழ்வரும் வரிசையிற் குறிக்கப்பட்டுள்ளன. (1) மகிழ்வடைதல். (2) கள்ளைப் பருகி வெறி கொள்ளுதல். (3) மதமுடையதாதல். (4) செருக்குறுதல். களி என்னும் வினை, கள் என்னும் பெயரினின்று தோன்றிக் கட்குடி தலையே முதற்கண் உணர்த்துவதால், மேற்காட்டப்பட்டுள்ள நாற்பொருளும் பின்வருமாறு மாறியமைதல் வேண்டும். (1) கள்ளைப் பருகி வெறி கொள்ளுதல். (2) மதமுடையதாதல். (3) மகிழ்வடைதல். (4) செருக்குறுதல். ஆக்கசுபோர்டுச் சிற்றகராதியிலும் (The Concise Oxford Dictionary) Intoxicate என்னும் சொல்லுக்கு இம் முறையிலேயே பொருள் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 7. வடமொழியிற் பொருள் கூறல் எ-டு: ஆமென்... Verily, sol be it, used by Christians usu. at the close of prayer or hymn; ததாஸ்து. இதில், தமிழ்ச்சொல்லே யில்லை. ததாஸ்து என்னும் வடசொற்குப் பதிலாக, அஃதாக, அங்ஙனமே, அவ்வாறாகுக, அப்படியே ஆகக்கடவது என்பவற்றுள் ஒன்று இருக்கலாமே! சென்னை யகராதி தமிழருக்கேற்பட்டதா? வடமொழியாளர்க் கேற்பட்டதா? பொதுமக்கள் இதைக் கவனிக்க. 8. ஒருபொருட் பலசொற்களின் வேறுபாடு காட்டாமை ஒவ்வொரு செம்மொழியிலும் ஒருபொருட் பலசொற்கள் நிரம்பவுள. அவை பருப்பொருளில் ஒன்றுபட்டிருப்பினும் நுண்பொருளில் வேறுபட்டவை. சொல்வளத்திற் சிறந்த தமிழ் ஒருபொருட் பலசொற்களிலும் சிறந்துள்ளது. ஆயின், அவற்றின் நுண்பொருள் வேறுபாட்டைச் சென்னை யகராதி பொதுவாய் எடுத்துக்காட்டுவதில்லை. சொல்லுதலைப்பற்றிப் பல சொற்கள் தமிழில் உள. அவற்றுட் பலவற்றின் சிறப்புப்பொருளை அகராதி எடுத்துக்கூறவில்லை. எ-டு: சொல் நுண்பொருள் அறைதல் ஓங்கிப்பேசுதல், வன்மையாகச் சொல்லுதல். இயம்புதல் இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி வியக்கிச் சொல்லுதல். இசைத்தல் கோவையாகச் சொல்லுதல். உரைத்தல் நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச் சொல்லுதல். கூறுதல் பாகுபடுத்திச் சொல்லுதல். சாற்றுதல் பலரறிய நல்லுரை கூறுதல். நவிலுதல் நாவினால் ஒலித்துப் பயிலுதல். நுதலுதல் சொல்லித் தொடங்குதல் நுவலுதல் நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல். பகர்தல் பண்டங்களின் விலை கூறுதல். பறைதல் உரத்துச் சொல்லுதல். பன்னுதல் பணிக்காய் (விவரமாய்)ச் சொல்லுதல். புகலுதல் விரும்பிச் சொல்லுதல். புலம்புதல் தனிமையிற் சொல்லுதல். பேசுதல் ஒரு மொழியிற் சொல்லுதல். மாறுதல் திருப்பிச் சொல்லுதல், மறுமொழி கூறுதல். மொழிதல் சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல். ஆய், யாய், ஞாய், தாய் என்னும் நான்கும் அன்னையைக் குறிக்கும் சொற்கள். இவை இடம்பற்றி வேறுபட்டவையாயினும், அகராதி சிறிதும் வேறுபடுத்திக் காட்டவில்லை. ஆய் - (பொது) யாய் - (எம்+ஆய்) எம் அன்னை (தன்மைத்தொடர்பு) ஞாய் - (நும்+ஆய்) நும் அன்னை (முன்னிலைத் தொடர்பு) தாய் - (தம்+ஆய்) தம் அன்னை (படர்க்கைத் தொடர்பு) “ahí« ஞாயும் யாரா கியரோ என்னும் குறுந்தொகைச் (40) செய்யுட்கு பண்டாரகர் (Dr.) உ. வே. சாமிநாதையக் உரைத்துள்ள உரையைக் காண்க. 9. எதிர்ச்சொற்களின் வேறுபாடு காட்டாமை எ.டு : ஆணிடி (தாக்குவது) X பெண்ணிடி (தாக்காதது) இடுமுள்வேலி (பட்டுப்போனது) X முள்வாழ்வேலி (வளர்வது) ஒட்டிப்பாடுதல் (சொல்லொற்றிப் X வெட்டிப்பாடுதல் (சொல்லொற்றாது பாடுதல், சார்ந்து பாடுதல்) பாடுதல், மாறாய்ப்பாடுதல்) ஒட்டிப்பேசுதல் (சார்பாய்ப் X வெட்டிப்பேசுதல் (khwhŒ¥ பேசுதல்) பேசுதல்) கருங்களமர் (உழுதுண்பார்) X வெண்களமர் (உழுவித்துண்பார்) காரொக்கல் (வறிய சுற்றம்) X வெள்ளொக்கல் (செல்வச் சுற்றம்) கொட்டுக்கலியாணம் X கட்டுத்தாலி (nksÄšyhjJ) (மேளத்துடன் கூடியது) * தென்னைமரத்தடியில் ஒருவரே இளநீர் குடிப்பின் சொத்தையாவது ஒல்லித்தேங்காய் என்றும், கோட்டான் உட்கார்ந்து சொத்தையாவது அல்லித் தேங்காய் என்றும், தஞ்சை மாவட்டத்திற் கூறுகின்றனர். அல்லித்தேங்காய், ஆணிடி, பெண்ணிடி, இடுமுள்வேலி, முள்வாழ்வேலி ஒட்டிப்பாடு, ஒட்டிப்பேசு, கருங்களமர், காரொக்கல், கொட்டுக்கலியாண என்னும் சொற்கள் அகராதியில் இல்லை. 10. எடுத்துக்காட்டின்மை வந்து என்னுஞ் சொல் அசைச்சொல் என்பதற்கு எடுத்துக்காட்டொன்றும் குறிக்கப்படவில்லை. நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்னும் நால்வகை அசை களுள், நிரையசை ஒன்றிற்கே, அதுவும் ஆங்கிலத்தில் மட்டும், எடுத்துக்காட்டுத் தரப்பட்டுளது. 11. கூறியது கூறல் (1) களைக்கொத்து என்னும் சொல் ககரத்திற்குரிய 2ஆம் மடலத்தில் 817ஆம் பக்கத்திலும், பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) 207-M« பக்கத்திலும், பொருள்காட்டவும் குறிக்கவும் பட்டுக் கூறியது கூறலாகவுள்ளது. (2) “m¢rjªbjˤjš... To sprinkle a mixture of rice and cynodon grass, as on a newly married couple; அறுகும் அரிசியும் இடல்... (Vol.I.p.24). “m¢Rjª தெளித்தல்... To sprinkle a mixture of rice and cyrodon grass, as on a newly couple; அறுகும் அரிசியும் இடுதல்... (Vol.I.p. 25). இவற்றுள், அச்சுதந் தெளித்தல் என்னும் சொல்லுக்கு ‘see அச்சதந் தெளித்தல்' என மாட்டெறிந்தாற் போதும். மீண்டும் முன்போல் விளக்கங் கூறவேண்டுவதில்லை. அசாகளத்தனம், அஜாகளஸ்தனம் என்னும் சொற்கட்கும், இங்ஙனமே தனித்தனி முழு விளக்கங் கூறப்பட்டுளது. III வேர் வழுக்கள் சென்னைப் ப.க.க.த. அகராதியின் முப்பெருங்குறைகளுள், மூன்றாவதும் தமிழைக் கெடுப்பதில் முதற்றரமானதும், மூலவழுவாம். 1. தென்சொல்லை வடசொல்லெனல் பொதுவாக, வடமொழியைப்பற்றி இறப்புவுயர்ந்த எண்ணமும், தமிழைப் பற்றி இறப்பத்தாழ்ந்த எண்ணமும் இருப்பதால், ஒரு சொல்லை வடசொல்லா தென்சொல்லா என்று ஆராயுமுன், வடமொழியின் வரலாற்றையும இயல்பையும் அறிந்துகொள்ளல் வேண்டும். வேத ஆரியர் நாவலந் தேயத்திற்குள் கால் வைத்த காலம் கி.மு. 2500. பண்டைக் குமரிக்கண்டத் தமிழர் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே. மொழி வளர்ச்சி முற்றிப் பல்துறை யிலக்கியம் படைத்து, நாகரிகப் பண்பாட்டில் நாயகம் பெற்றிருந்தனர். வேத ஆரியர் வேத காலத்திலேயே தமிழரோடு தொடர்பு கொண்டு, தம் மொழியைத் தமிழால் வளம்படுத்தி மெல்ல மெல்லத் தமிழர் கலைநூல்களையும் அதில் மொழிபெயர்த்துக் கொண்டனர். அங்ஙனம் மொழி பெயர்த்ததற்குப் போதிய சொல்வளம் வழக்கற்றுப் போன வேத ஆரிய மொழிக்கின்மையால், அதனொடு அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைச் சேர்த்து, அமைத்துக்கொண்ட அரைச்செயற்கையான இலக்கியமொழியே சமற்கிருதமாம். அக்காலத்துப் பிராகிருத மொழிகளுள் தலைமையானது தமிழ். ஆகவே, சமய்கிருதத்தில் 2/5 பங்கு தமிழ்ச்சொற்களும் தமிழ் வேர்ச்சொற்களினின்று திரிந்த சொற்களுமா யிருக்கின்றன. வேதத்தி லேயே, அகவு, தா, சாயம் (சாயுங்காலம்), முத்தம் முதலிய நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் உள்ளன. சமற்கிருதம் தேவமொழியென்னும் தவறான கருத்துப் பண்டைத் தமிழர் உள்ளத்திற் பதிந்துவிட்டதனால், ஆங்கிலேய ஆட்சி வாயிலாய் ஆங்கிலக் கல்வி ஏற்படும் வரை, பல தென்சொற்களையும் வடசொற்களென்று தமிழர் மயங்கியிருந்தனர். இன்று அம் மயக்கந் தெளிந்து வருகின்றது. ஆயினும், நீண்ட காலமாக அடிமைத்தனத்திற் கிடந்து ஊறிப் போனதினால், இன்றும் சில தமிழரும் தமிழ்ப் பேராசிரியரும் தன்னலங் கருதித் தமிழ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யிடுகின்றனர். எனினும் உண்மை அண்மையில் வெளியாம். சென்னை அகராதியில் அச்சன், அச்சு, அப்பம், ஆப்பம், அம் (ஆம், அம்பு, அம்பலம், அரக்கு, அரங்கு (அரங்கம்),அரசு, அரத்தம், ஆசிரியன், (ஆசிரியம்) ஆணி, ஆமைவடை, ஆயிரம், உவணம் (கவணம்), உவமை, உரு (உருவு, உருவம், உருவு), உலகம், ஐயன், கட்டை, கடகம், கணக்கு, கணி, கம்பு (கம்பம்), கலகம், கலுழன், கலை, காகம், காமம், காலம், குடில் (குடிசை), குடும்பு (குடும்பம்), குண்டம், குமரன் (குமரி), குலம், சமம், சமயம், சாமை, சாயுங்காலம் (சாயுந்தரம்), சாயை, சாலை, சிப்பி (இப்பி), சிவன், சீர்த்தி, சுக்கு, சும, சுரம், திறம், தூண், தூணி, தூது, தூள், தெய்வம், தோணி, நகர் (நகரி, நகரம்,நாக ரிகம்), நாகம், நாடி, நாவாய், நாழி, நாழிகை, நானா, நிலையம், நேயம், பக்கம், பஞ்சி, பட்டம், பட்டயம், பட்டை, படி (படிமம், படிமை, படிவு, படிவம், வடிவு, வடிவம்), பதிகம், பள்ளி, பல்லி, பாண்டியன், பார்ப்பான், புடல்(புடலை), பிழா, பெட்டி, பெட்டகம், பேழை, புரி, மண்டகம் (மண்டபம்), மதுரை, மந்திரம், மனம், மாதம், மாயை, மாலை, மானம், மீன் (மீனம்), முகிழ் (முகை, மொக்குள்), முத்து (முத்தம்), முரசு, முனி (முனிவன்,முனை, முனைவன்), மெது, வட்டம், வடவை, வடை, வண்ணம், வணிகம், வரி, வலம், வால், விடி, வேட்டி முதலிய நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள், தமிழ் வடமொழியின் கிளையென்று அயலாரும் ஆராய்ச்சியில்லா தாரும் கருதும் வண்ணம் வடசொற்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், ஆயிரம், ஐயன், காலம், குடும்பு, பெட்டி, முகம், வாய், முதலியவை தமிழுக்கு அடிப்படையானவை. ஆசிரியன், சமயம், சிவன், நகர், நாவாய், மந்திரம், வணிகம், முதலியவை தமிழ் நாகரிகச் சான்றாய் நிற்பவை. பாண்டியன், மதுரை, குமரன், குமரி முதலிய சொற்களை வடசொல்லெனக் கூறுவதால், தமிழர் தலைக்கழகக் காலத்திலேயே ஆரியத் தொடர்புகொண்டு விட்டனரென்றும்; ஆசிரியன், ஐயன், கலை, சிவன், பார்ப்பான், மந்திரம், முனிவன் முதலியவற்றை அங்ஙனங் கூறுவதால், தமிழர் ஆரியரால் நாகரிகப்படுத்தப்பட்டனரென்றும்; அம்பு, ஆசிரியம், உவமை, உருபு, தரங்கம், வண்ணம் முதலியவற்றை அங்ஙனங் கூறுவதால் தொல்காப்பியம் அல்லது தமிழிலக்கணம் வடமொழியிலக்கண வழியதென்றும்; சில ஆரியவழியினரும் கொண்டான்மாருங் காட்ட முயல்கின்றனர். இனி, ஒருசில பேராசிரியர் தமக்கென ஆராய்ச்சியின்றி மேலை மொழி நூலாசிரியர் எழுதியவற்றை மட்டும் படித்துக்கொண்டு, சில பழந்தமிழ்ச் செய்யுட்களையோ நூற்பாக்களையோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பட்டம் பெற்ற துணையானே, தாமும் மொழிநூ லதிகாரிகளெனத் தருக்கி, ஆராய்ச்சியின் பெயரால் வடசொற்களை யெல்லாம் தென்சொற்களென்று நான் கூறிவருகின்றேன் என்று குழறிவருவதாகக் கேள்வி. இதற்கு அறியாமையும் அழுக்காறும் தன்னலமும் தமிழ்ப்பற்றின்மையுமே காரணம். ஆய்விலா தாரும் அறிவுடையார் ஆய்ந்தார்முன் வாய்திறவா துள்ள விடத்து. மேலை மொழிநூல் வல்லார் வேதத்திலும் தமிழ்ச்சொல் கண்டு வெளி யிடும்போது, கீழைத்தமிழ்ப் பேராசிரியர் தூய தென்சொல்லையும் வடசொல்லனத் துணிவது எத்துணைக் கேடானது! சென்னை யகராதிப் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் வரைந்துள்ள முன்னுரையில், அவ் வகராதி மற்றெல்லா வகராதிகளினுஞ் சிறந்ததெனக் காட்டுதற்கு எடுத்துக்கொண்ட இரு சொற்களுள் ஒன்றான வரி என்பதற்கு, அரசிறை யென்னும் பொருளில் பலி யென்னும் வடசொல்லை வலமாகக் குறித்துள்ளார். இவ் விருசொற்கும் சொல்லளவில் ஒரு தொடர்பில்லை. வரி என்பது வரித்தல் என்னுஞ் சொல்லினின்று பிறந்தது. வரித்தல்-சுற்றிக்கட்டுதல், உழவன் பொலிக்களத்தில் ஆறிலொரு பங்குத் தவசத்தை அரசிறையாகக் கோணிப்பையிற் கட்டுதல். மேற்குறித்த சொற்றொகுதியுள், உவமை யென்பது 1959ஆம் ஆட்டைத் தென்றல் மலரிலும், முகம் என்பது அவ் வாட்டைப் பொழிலிலும், தென் சொல்லென விளக்கப்பட்டுள. ஆண்டுக் காண்க. இங்கு, ஆயிரம், உலகம் ஐயன், வடவை, என்னும் நாற்சொல்லே விளக்கப்பெறும். ஏனையவற்றை என் தமிழ் வரலாற்றிலும் வடமொழி வரலாற்றிலும் கண்டு கொள்க. அயிர்=நுண்மணல். அயிர் - (அயிரம்)-ஆயிரம் = மணல்போற் பெருந் தொகை (1000). ஒப்புநோக்க: நூறு = பொடி, மா, பத்துப்பத்து. அயிரம் - அசிரம் - ஹஸ்ர. ஸ+ஹஸ்ர - ஸஹஸ்ர (வ.). அசிரம் - ஹசார் (hazar, H.) hazar (P.). வடமொழியில் ஸஹஸ்ர என்னும் சொல்லிற்கு வேர்ப்பொரு ளில்லை. சொல்லாக்கத்தில், உயிர்முதற் சொற்கள் மெய்ம்முன்னிட்டு உயிர் மெய்ம்முதற் சொற்களாவது இயல்பு. எ-டு: அனல் - கனல் எண் - சேண் இமை - நிமை உம்பர் - ஊப்பர் (இ.) - super (L.) யகரம் சகரமாகத் திரிவது பெருவழக்கு. எ-டு: பயறு - பெசறு (க.) உயிர் - உசிர் (க.) வயிறு - பசிறு (க.) யகர மெய் சிறுபான்மை வகரமெய்யாகவும் சொல்லிடைத் திரியும். எ-டு: நீயிர் - நீவிர் இம் மூவகைத் திரிபும் பெற்று, ஆயிரம் என்னுஞ் சொல் கன்னடத்தில் சாவிர சாசிர என வழங்குகின்றது. இதை யறியாது, பரோவும் எமனோவும் தொகுத்த திரவிடச் சொல்லியலகராதியில், ஸகஸ்ர என்னும் வடசொல்லே ஆயிரம் என்னும் தமிழெண்ணுப் பெயருக்கு மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. ஸகஸ்ரம் என்பது ஸாவிர எனத் திரிவதைவிட, ஆயிரம் என்பது ஸாவிர எனத் திரிவதே இயல்பு. தென்னாட்டுத் திரவிடச் சொல் ஸகஸ்ர என்னும் வட சொல்லைத் தழுவினதெனின், வடநாட்டு இந்திச் சொல் (hazar) ஏன் அதைத் தழுவவில்லை? மலையாளத்திலும் குடகிலும் ஆயிரம் என்னும் தமிழ் வடிவே உள்ளது. ஆதலால், சாவிர என்பது திரவிட வடிவே. சாஹிர என்னும் வடிவே ஸகஸ்ர என்பதன் திரிபாய் இருக்கமுடியும். அதற்கும் அடிப்படை ஆயிரமே. ஆம்பல் (ஏறத்தாழ 565 கோடி), தாமரை (ஏறத்தாழ 4522 கோடி), வெள்ளம் (ஏறத்தாழ 21 இலக்கங் கோடி) என்னும் பேரெண்கள் வழங்கிய தமிழனுக்கா ஆயிரத்தைக் குறிக்கச் சொல்லில்லை? உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல். உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல். உலக்கை = உருண்டு நீண்ட (பூண்கட்டிய) பெருந்தடி. உலண்டு = உருண்டு நீண்ட புழு. உலம்-உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல். உலவை = சுற்றி வீசுங் காற்று, உலா = சுற்றி வருதல், அரசன் வலமாகச் சுற்றிவருகை, அதைப் பாடிய பனுவல். உலாவுதல் = சுற்றித்திரிதல். உலாத்துதல் = சுற்றித்திரிதல். உலாஞ்சுதல் = தலை சுற்றுதல். உலம் - உலவு - உலகு. ஓ.நோ: புறம் - புறவு - புறகு உலகு = உருண்டையானது. உலகு - உலகம். அண்டம், கோளம், globe, sphere முதலிய பிற அல்லது பிறமொழிச் சொற்களும், உருட்சிபற்றி உலகத்தைக் குறித்தல் காண்க. உலகம் என்பது உலகத்திலுள்ள மக்களை அல்லது உயர்ந்தோரைக் குறிப்பது இடவாகுபெயர் என்றறிக. உலகம் என்பது வடமொழியில் லோக்க (loka) என்று திரியும். அதற்கு லோக் என்பதை வேராகக்கொண்டு, பார்த்தல் (look) என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது (M.S.D). ஆகவே, லோக்க என்பதற்குப் பார்க்கப்பட்ட இடம் என்பது இரண்டாம் பொருளாம். இது பொருந்துமா வென்பதை அறிஞர் கண்டுகொள்க. ஐயன் என்பது வியக்கத்தக்க பெரியோன் என்று பொருள்படும் தமிழ்ச் சொல். இது ஐ என்றும் நிற்கும். ``என்ஐமுன் நில்லன்மின்'' (குறள்.771) ``ஐவியப் பாகும்''. என்பது தொல்காப்பியம் *(868) ஐ+அன்= ஐயன், கடவுள், அரசன், தந்தை, தாய், அண்ணன் என, ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்கட்கெல்லாம் ஐ என்னும் பெயர், அல்லது அதனின்று திரிந்த பெயர் பொதுவாம். தாயைக் குறிக்கும்போது ஐயை என்று திரியும். அண்ணனைக் குறிக்கும்போது தமையன் (தம்+ஐயன்) என்று அமையும். தமிழருட் பல வகுப்பார், அவருள்ளும் சிறப்பாய்த் தாழ்த்தப்பட்டவர் தந்தையை ஐயன் என்றே அழைக்கின்றனர். ஆசிரியனும் ஒருவகையில் தந்தையொப்பான் என்னும் கருத்துப்பற்றி ஐயன் என்று அழைக்கப்படுவதுண்டு. வடார்க்காட்டுப் பகுதியில் ஆசிரியர் எவ்வகுப்பினராயினும் ஐயர் என்றே அழைக்கப்பெறுகின்றனர். பெரியோரையெல்லாம் என்றும் ஐயா என்றே அழைப்பது தமிழர் வழக்கம். அது ஐயன் என்பதின் விளிவேற்றுமை வடிவமாகும். மக்களுட் பெரியோர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ்நூன் மரபு. ``பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'' (தொல். 1091) என்று கூறுவது இம் மரபுபற்றியே. இங்ஙன மெல்லாயிருப்பினும், ஐயன் என்பது ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்று சென்னையகராதி கூறுவது எத்துணை இழிவான செயல்! வடவை அல்லது வடந்தை என்பது, வடம் (வடக்கு) என்னும் திசைப் பெயரினின்று திரிந்து, வடதிசையில் தோன்றும் நெருப்பு என்று பொருள்படும் தூய தென்சொல். இதற்கு நேரான (Aurora borealis என்னும் இலத்தீன் சொல்லும், வடக்கத்து நெருப்பு என்றே பொருள்படுவதாகும். தாயுமானவர் `வடவனல்' என்றே தெளிவாகச் சொல்லுகின்றார். அங்ஙனமிருந்தும், வடவை என்பதை வடவா-வடவாமுகம்-படபாமுகம் எனத் திரித்து, பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றும் நெருப்பு எனப் பொருள் கூறுவது, உத்திக்கும் உண்மைக்கும் பொருந்துமா என்று பகுத்தறிவுடையார் கண்டுகொள்க. இருமொழிகள் சிறிது காலம் அடுத்தடுத்து வழங்கினும், ஒன்றினின் றொன்று கடன் கொள்வது இயல்பு. ஐயாயிரம் ஆண்டுகளாக, நாகரிகம் நிரம்பாது வந்த ஆரியர் மொழியும் நாகரிகம் நிரம்பியிருந்த தமிழர் மொழியும் ஒரேயிடத்தில் வழங்கி வந்திருப்பின், முன்னது பின்னதினின்று எத்துனை ஆயிரக்கணக்கான சொற்களைக் கடன்கொண்டிருத்தல் வேண்டும்! தமிழரும் பெரும்பாலார் தம் தாழ்வுணர்ச்சியால் இதையுணரும் மதுகையில்லாதிருப்பினும், வடமொழி தேவ மொழியாதலால் பிறமொழியினின்று கடன்கொள்ளாதென்னும் ஏமாற்றுரை, ஆராய்ச்சியாளரிடம் எங்ஙனம் செல்லும்? வடமொழியில் ஆயிரக்கணக்கான தென்சொற்களிலிருந்தும், வடமொழியகராதிகளுள் ஒன்றுகூட ஒரு சொல்லையும் தென்சொலென ஒப்புக்கொள்வதில்லை. இஃதொன்றே, வடமொழியாருக்குத் தென்மொழி மீதுள்ள வெறுப்பைக் காட்டப் போதுமே! சென்னை யகராதியில், அகரம் முதல் ஊகாரம் வரை, 506 பக்கம் ஏராளமான தென்சொற்களை, சிறப்பாக, கூட்டுச்சொற்களையும் தொடர்ச் சொற் களையும், வரை துறையின்றி விருப்பம்போல் உடுக்குறியிட்டு வடசொல்லாகக் காட்டியிருக்கின்றனர். கூட்டுச்சொற்களிலும் தொடர்ச் சொற்களிலும் ஒரு சிறுசொல்லை வடசொல்லாக் கருதினும், அல்லது காட்ட விரும்பினும், உடனே உடுக்குறி யிட்டுவிடுவது வழக்கமா யிருந்திருக்கின்றது. எ-டு: அகப்பாட்டுவண்ணம், அட்டிற்சாலை, அடுகளம், அரங்கேற்றம், அரசரறுதொழில், அவையல்கிளவி, ஆழிவலியான் மணி, இராப்பள்ளிக்கூடம், ஈரற்பித்து, இருப்பாணி, ஈமத்தாழி, உண்ணாழிகை வாரியம், உதவாக்கட்டை, உம்பருலகு. உரைகாரர், உவகைமுத்து, உவமையாகுபெயர், ஊசற்பயற்றுக்காரி, ஊர்க்கணக்கன். இனி, உம்பரார், உயர்ந்தவன் என்னும் இம்மியும் ஐயுறவிற் கிடமில்லாத தென்சொற்கட்கும் உடுக்குறியிட்டிருப்பதும், பிழைதிருத்தப்பட்டியில் அவற்றைக் குறியாதிருப்பதும், தொகுப்பாளர் கண்மூடிக்கொண்டு வேலை செய்த கவலையற்ற தன்மையையே காட்டுகின்றது. 2. சொல்வேர் காட்டாமை பேசுங்குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் ஏதேனு மொன்றைக் கண்டு அஞ்சினும், வியக்கினும், இரங்கினும், தம் பெற்றோரை விளிப்பது வழக்கம். இதை அடிப்படையாகக் கொண்டு, பெற்றோரைக் குறிக்கும் பல பெயர்கள் அச்சம், வியப்பு, இரக்கம் முதலியனபற்றிய குறிப்புச்சொற்களாகத் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. இவையெல்லாம் ஒரேயொழுங்காகவும் தெளிவாகவும் இருப்பினும், இவற்றை அகராதித் தொகுப்பாளர் பெற்றோர் பெயரடிப் பிறந்தனவாக ஓரிடத்திலும் எடுத்துக்காட்டியிலர். எ.டு: பெற்றோர்பெயர் குறிப்புச்சொல் அக்கை அக்கே, அக்கோ, அகோ அச்சன் அச்சோ அத்தன் அத்தோ, அந்தோ அப்பன் அப்பா அம்மை அம்ம, அம்மவோ, அம்மகோ, அம்மா, அம்மனையோ, அம்மே, அம்மோ அன்னை அன்னே, அன்னோ ஐயன் ஐய, ஐயவோ, ஐயகோ, ஐயா, ஐயே, ஐயோ வழுவேர் காட்டல் கோவணம் என்னும் வடசொற்கு நேர் தென்சொல் குளிசீலை, தாய்ச்சீலை, நீர்ச்சீலை என்பன. குளிசீலை என்பது குளிக்கும்போது கட்டிக்கொள்ளும் துணி என்று பொருள்படுவது. இதைக் குழிசீலை என்ற வடிவிலும் காட்டி, குழி என்பதை, குழியாக்குதல் அல்லது செதுக்குதல் என்று பொருள்படுஞ் சொல்லாகக் குறித்திருக்கின்றது. சென்னையகராதி. தக்காளி என்பது, மணித்தக்காளி, எருமைத்தக்காளி, சீமைத்தக்காளி எனப் பலதிறப்படும். இவற்றுள் மிகச் சிறியது மணித்தக்காளி. மணி என்பது சிறுமைப்பொருள் உணர்த்தும் முன்னொட்டு. மணிக்கயிறு, மணிக்காக்கை, மணிக்காடை, மணிக்குடல், மணிப்பயறு, மணிப்புறா என்னும் சொற்களை நோக்குக. சென்னையகராதி, மணித்தக்காளி என்பதை மணத்தக்காளி எனத் தவறான வடிவிலுங் குறித்ததோடமையாது. அதையே மூலமாகவும் கொண்டு மணமுள்ள தக்காளி எனப் பொருள் கூறியிருக்கின்றது. தேங்காய் திருகியைத் தேங்காய் துருவி எனக் குறித்துத் தேங்காய் துருவுங் கருவி எனப் பொருட்காரணங் காட்டுகின்றது சென்னையகராதி. திருகு -சுறண்டியெடுத்தல். துருவுதல்-ஊடுருவுதல். ஆமைவடை யென்பதை வடசொல்லாகக் காட்டவேண்டி, `ஆமை'யை என மாற்றி, நன்றாய் வேகாதது எனப் பொருள் கூறியுள்ளனர் அகராதியாளர். நன்றாய் வேகாத வடையை நாள்தோறும் சுடுவாரும் விற்பாரும் தின்பாரு எத்துணைப் பேதையராய் இருத்தல் வேண்டும்! 4. ஐயுற்றுக் கூறல் பகுதி அல்லது பிரிவு என்று பொருள்படும் பால் என்னும் சொல்லிற்கு பகு என்பதும், மருமகனை அல்லது வழிவந்தோனைக் குறிக்கும் மருகன் என்னும் சொல்லிற்கு மரு (மருவு) என்பதும், தெளிவான மூலமாய் அல்லது பகுதியா யிருந்தும், ஒருகால் (perhaps) என்றும், மெய்வாய்ப்புள்ளதா (probably) என்றும், அடைகொடுத்து உண்மையின் திண்மையைக் குறைத்திருக்கின்றனர். வேந்தன் என்னும் தூய தென்சொல்லைத் தேவேந்தர் என்பதோடும், மருந்து என்னும் தனித்தமிழ்ச்சொல்லை அம்ருத என்பதோடும், ஒப்பு நோக்குமாறு குறும்புத்தனமாய்க் குறித்திருக்கின்றது சென்னையகராதி. வேய்ந்தோன் (முடியணிந்தோன்) - வேந்தன், தேவ + இந்திரன் = தேவேந்திரன். மருந்து - சிறப்பான மணமுள்ள தழை அல்லது சரக்கு. அம்ருத - மரணத்தைத் தவிர்ப்பது என்று சொல்லப்படுவது. 5. தலைமாற்றிக் கூறல் குமரிக்கண்டத் தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்தது. வடகோடித் திரவிடம் நாளடைவில் பிராகிருதமாய் மாறியது. வேத காலத்தில் விந்திய மலைக்கு வடக்கில் பைசாசம், சூரசேனம், மாகதம் என மூன்று பிராகிருதங்களும், அதற்குத் தெற்கில், தமிழ், ஆந்திரம் (தெலுங்கு), கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்னும் ஐந்துதிரவிடங்களும் (பஞ்சதிராவிடம்) வழங்கி வந்தன. பிற்காலத்தில், ஐந்திரவிடங்களுள், மகாராட்டிரம் ஒரு பிராகிருதமாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்றும் சேர்ந்து (திராவிடீ என்னும்) ஒரு பிராகிருதமாகவும் கொள்ளப்பட்டன. மாகதத்தின் பிற்காலத் திரிவு பாலி. பிராகிருதம் என்னுஞ் சொல் தமிழில் பாகதம் எனத் திரியும். வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின், அதனொடு ஐம்பிராகிருதங் களையும் கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய மொழியை அமைத்தனர். பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது. சமற்கிருதம்-நன்றாய்ச் செய்யப்பட்டது. ஆகவே, சமற்கிருதத்திற்கு முந்தியது பிராகிருதம், பிராகிருதத்திற்கு முந்தியது திரவிடம். திரவிடத்திற்கு முந்தியது தமிழ். இவ் வுண்மையை மறைத்துப் பின் வருமாறு பல தமிழ்ச்சொற்கட்குத் தலைகீழாய் மூலங்காட்டப்பட்டு வருகின்றது; சென்னையகராதியிலுங் காட்டப்பட்டுள்ளது. எ-டு: சமற்கிருதம் பிராகிருதம் தமிழ் வ்ருத்த > வட்ட > வட்டம் ஸ்நேக > நேயம் > நேயம் அய்ய > ஐயன் கட்ட > கட்டை கம்ப > கம்பம் இப் பட்டியைக் கீழ்வருமாறு தலைமாற்றுக தமிழ் பிராகிருதம் சமற்கிருதம் வட்டம் > வட்ட > வ்ருத்த கம்பம் கம்ப அய்ய, கட்ட, கம்ப என்னும் பிராகிருதச் சொற்கட்கு, ஆர்ய, காஷ்ட்ட, ஸ்தம்ப என்னும் சமற்கிருதச் சொற்களை, முறையே, மூலமாகக் காட்டுவர். அது முழுவழு. இதன் விரிவெல்லாம் என் வடமொழி வரலாறு என்னும் நூலுட் கண்டு கொள்க. இனி, சில தமிழ்ச்சொற்களைத் திரவிட வுருதுச்சொற்களின் திரிபாகவுங் காட்டுவர். எ-டு: கும்பு < T. கும்பு (கூட்டம்), வாங்கா - வங்கா < U. பாங்கா. 6. கூட்டுச்சொல்லை வழுப்படப் பிரித்தல் ஒருவர் மெலிந்து தோலும் எலும்புமாய்ப் போவதை, உடக்கெடுத்துப்போதல் என்பது மரபு. உடக்கு-தோலும் எலும்புமான நிலை. உடக்கு எடுத்தல் உடக்கெடுத்தல். இதை உடல் கெடுத்தல் என்று பிரிக்கின்றது அகராதி. மாலை நேரத்தில் கதிரவன் இறங்குவதைப் பொழுது சாய்தல் என்பது மரபு. பொழுது சாய வந்தான் என்பது இன்றும் வழக்கமாயிருக்கின்றது. பொழுது சாயும் மாலை சாயுங்காலம் எனப்படும். இதைச் சாயுந்தரம் என்றும் சொல்வர். சாயுங்காலம் என்பது சாயங்காலம், சாய்ங்காலம் என்றும், சாயுந்தரம் என்பது சாயந்தரம், சாய்ந்தரம் என்றும் மருவும், வடமொழியாளர் சாயங்காலம் என்பதைச் சாயம் காலம் எனப் பிரித்து, சாயம் என்னும் சொல்லை மாலை என்னும் பொருளில் ஆண்டுகொண்டனர். அதன்பின், சாயம் (ஸாயம்) என்னும் வடசொல்லினின்றே சாயங்காலம் என்னும் தமிழ்சொல் வந்ததென்று சொல்லவுந் துணிந்துவிட்டனர். இக் கொள்கையை சென்னை யகராதியுங் கொண்டுள்ளது. அதனால், சாயுங்காலம், சாயுந்தரம் என்னும் வடிவுகளை அது காட்டவில்லை. அதோடு, சாயந்தரம் என்பதை சாயம்+அந்தர(ம்) என்றும் பிரித்துள்ளது. இங்ஙனமே, முகம்-முகன் (mukha) என்பதை மு+கன் என்றும், நிலையம் (நிலய) என்பதை நி+லய என்றும், பிரித்து வடசொல்லாகக் காட்டுவர். முகு+அம்= முகம். நில்-நிலை-நிலையம். இவ்வாறு தென்சொற்களைத் தன் சொற்களென்று காட்டும் வடநூல் ஏமாற்றமெல்லாம் என் வடமொழி வரலாறு விரிவாக விளக்கும். 7. ஒரு சொல்லைப் பல சொல்லாகக் காட்டல் இறுத்தல் என்னும் சொல்லுக்குரிய, முடித்தல் (தீர்த்தல்), வரிகொடுத்தல் என்னும் இருபொருளும் நெருங்கிய தொடர்புடையவை. ஒரு காவலன் தன் குடிகளைக் காக்கின்றான். அக் காப்புப்பற்றிக் குடிகள் அவனுக்குக் கடன்பட் டுள்ளனர். அக் கடனைத் தீர்ப்பதே இறை அல்லது வரி. இறுப்பது இறை. இறுத்தல்-தீர்த்தல், கடன் தீர்த்தல். தீர்த்தல் (முடித்தல்), வரி கொடுத்தல் ஆகிய இருபொருளையும் வேறாகக்கொண்டு, இறுத்தல் என்னும் ஒரே சொல்லை இருசொல்லாகக் காட்டியுள்ளது சென்னை யகராதி. இங்ஙனமே, தீர்த்தல், தீர்வை என்னும் இரண்டும் தீர் என்னும் ஒரே சொல்லாகும். இதனையும் இருசொல்லாகக் காட்டியுள்ளது அவ் வகராதி. Fine என்னும் சொல்லைப்பற்றி ஆக்கசு போர்டு சிற்றகராதி எழுதியிருப்பதைப் படித்து, இவ் வுண்மை தெளிக. 8. பல சொல்லை ஒரு சொல்லாகக் காட்டல் கரைதல் என்னும் சொல்லிற்கு, 1. கரைந்துபோதல், 5. வருந்துதல், 9. பதனழிதல், 2. உருகுதல், 6. தாமதித்தல், 10. அழைத்தல், 3. இளைத்தல், 7. ஒலித்தல், 11. சொல்லுதல் 4. கெடுதல், 8. அழுதல், எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள. இவற்றுள், முதலாறும் ஒன்பதாவதும் மறைதற் பொருள்தரும் கர என்னும் வேரினின்று பிறந்த கரை என்னும் சொல்லிற்குரியவாம்; ஏனையவெல்லாம் ஒலித்தற் பொருள் கொண்ட கர என்னும் வேரினின்று தோன்றிய வேறொரு கரை என்னும் சொல்லிற்குரியவாம். இங்ஙனம், இரு வேறு சொற்கள் வடிவொப்புமைபற்றி ஒரு சொல்லாகக் காட்டப்பட்டுள. கள் என்னும் வேரினின்று பிறந்த கட்டை (திரண்ட மரத்துண்டு) யென்னும் சொல்லும், குள் என்னும் வேரினின்று பிறந்த குட்டையென்னுஞ் சொல்லின் திரிபான கட்டை யென்னும் சொல்லும், வெவ்வேறாம். ஆயினும், இவற்றை ஒரே சொல்லாகக் கொண்டுள்ளது அகராதி. இதற்கெல்லாம் தொகுத்தவரின் சொல்லாராய்ச்சியின்மையே காரணம். 9. தொழிற்பெயரின் திரிபே முதனிலையெனல் பொதுவாக, முதனிலையினின்றே தொழிற்பெயர் திரிக்கப்படும் ஆயின், சென்னை யகராதி தொழிற்பெயரினின்று முதனிலையைத் திரிக்கின்றது. எ-டு: நடம் > நடி. இதற்குக் காரணம், நடி என்னும் சொல்லை வடசொல்லாகக் காட்டவேண்டும் என்பதே. நள்-நளி, நள்ளுதல் = பொருந்துதல். `நளிய' ஓர் உவம வுருபு. நளிதல் = ஒத்தல். நளி-நடி. ஒ.நோ: களிறு - கடிறு. நடித்தல் = ஒத்துச் செய்தல். நடி+அம் = நடம். ஒ.நோ. குறி+ அம் = குறம். நடம்-நட்டம்-நட்ட (பி.) - ந்ருத்த (வ.). ஒ.நோ: படம்-பட்டம் = துணி. x.neh: tŸ-t£L-t£l«-t£l (ã.)-வ்U¤j (வ.). நட்டம்-நட்டணம், நட்டணை, ஒ.நோ: வட்டம்-வட்டணம், வட்டணை. நட்டம்- நட்டவம்-நட்டுவம்-நட்டுவன். ``நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு... பங்கு'' (S.I.I. ii, 274). ஒ.நோ: குட்டம்-குட்டுவன்= குட்ட நாட்டான், சேரன். நடு என்னுஞ் சொல்லொடுகூடி, நட்டுவம் என்பது நட்டு எனக் குறுகிற்று. முட்டு = நட்டுவ இசைக்கருவிகள். நட்டுமுட்டுவர் = நட்டுவ மேளகாரர். நடி+ அனம் = நடனம், ஒ.நோ: படி + அனம் = படனம். நடனம் - நடலம் (கொச்சை). நடி+அகம் = நாடகம். ஒ.நோ: படி + அகம்= பாடகம். தலைக்கழகக் காலத்திலிருந்து, தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வழங்கி வந்திருக்கின்றது. இயல், இசை என்பன போன்றே, நாடகம் என்பதும் தமிழ்ச்சொல். கூத்து என்னும் வேறொரு சொல்லிருப்பதால் மொழி யாராய்ச்சி யில்லாதாரும் தென்சொல்வளத்தை யறியாதாரும், நாடகம் என்பதை வடசொல்லெனக் கருதுகின்றனர். கால்டுவெல் கண்காணியார் தமிழின் சொல் வளத்தை விளக்கவந்த விடத்து, ``தமிழ் தனக்கே யுரிய வீடு என்னுஞ் சொல்லோடு, தெலுங்கில் வழங்கும் இல் என்னுஞ் சொல்லையும், கன்னடத்திற் சிறப்பாய் வழங்கும் மனை என்னுஞ் சொல்லையும், சமற்கிருத்ததிலும் பின்னிய (Finnish) மொழிகள் எல்லாவற்றிலும் வழங்கும் குடி என்னுஞ் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளது'' என்று கூறியிருத்தலை நோக்குக. நட்ட என்னும் பிராகிருத வடிவினின்று நாட்டிய(ம்) (நாட்ய) என்னும் வட சொல்லை வடவர் அமைத்துக்கொண்டு, ந்ருத்த என்னும் வடிவின் முதலசையாகிய ந்ருத் என்பதையே, நடி என்னும் பகுதியினின்று தோன்றியுள்ள எல்லாச் சொற்கட்கும் மூலமாகக் காட்டுகின்றனர். ந்ருத் என்பதற்கு வேர்ப் பொருளே இல்லை. ஆயினும், முன்பு காட்டியதுபோல், ந்ருத் = ந்ருத்த (வ.) > நட்ட (பி.) > நடி (த.) எனத் தலைகீழாய்க் காட்டுகின்றனர். நடனம் என்பதை நட்டன(வ.) என்பதன் திரிபாகவும், நட்டணம், நட்டண என்பவற்றை நர்த்தன என்பதன் திரிபாகவும், காட்டுகின்றனர். ந்ருத் - ந்ர்த்த - நர்த்தந (வ.) > நட்டணம் (த.) என்பது வடமொழியாளர் கொள்கை. அடி, கடி, பிடி என்னுஞ் சொற்கள் போன்றே, நடி என்பதும், தமிழில் ஆட்டம் என்னும் பொருளில் முதனிலைத் தொழிற்பெயராய் வழங்கும். ``நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்'' (தேவா. 216,5) நடம் என்னும் தொழிற்பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற் பெயரும் நடி (பிங்.) என்னும் பெண்பாற் பெயரும் தோன்றும். ``வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி'' (பரிபா. 22 : 42.) நடனம் என்னும் தொழிற் பெயரினின்று, நடனன் என்னும் ஆண்பாற் பெயரும் நடனி என்னும் பெண்பாற் பெயரும் தோன்றியுள்ளன. ``நடனன் பாங்குற நடிப்பது'' (இரகு: குடனயோத்தி: 98) ``நடனியர் தம்மின் மன்னோ'' (இரகு. ஆற்று. 20) நடிகன், நடிகை என்னும் இருபாற் பெயரும், முறையே, natika, natika என்னும் வடசொற்களின் திரிபென்றும், இக்காலத்தனவென்றும், சென்னை யகராதியிற் குறிக்கப்பட்டுள்ளது. nata, nataka என்பவை நடிகனைக் குறிக்கும் பெயர்கள் என்று மானி உல்லியம் அகராதியிலும், நடன், நடி என்னும் இரு தென்சொல்லும் nata, nati என்னும் வடசொல்லின் திரிபென்று சென்னை யகராதியிலும் குறிக்கப்பட் டுள்ளன. ஒருவன் தன்னிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் காட்டிப் பாசாங்கு செய்யும்போது, கூத்தாடுகிறான் என்று சொல்லாமல் நடிக்கிறான் என்று சொல்வதையும், இவ் வழக்கு நாட்டுப்புற மக்கள் பேச்சிலும் தொன்றுதொட்டு இருந்துவருவதையும், ஊன்றி நோக்குக. IV. இலக்கண வழுக்கள் 1. இலக்கணக் குறிப்பு வழு அக்கடாலெனல் ஓர் ஒலிக்குறிப்பு வெளிப்பாடு (Onomatopoetic Expression) என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. அது ஓர் அசாவிடுதற் குறிப்பே (Exclamation of repose). அகச்சுட்டு என்பது, சுட்டு முன்னொட்டு (Demonstrative prefix) அன்று; சுட்டடியே (Demonstrative base). அஞ்சலப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி என்பவை அஞ்சறைப் பெட்டி என்பதன் கிளை வழக்கு வேறுபாடு (Dialectic variation) அல்ல; கொச்சைத் திரிபே. செய்யட்டும் என்னும் ஏவல் வினையில் அட்டும் என்பது வியங்கோள் விகுதியன்று; ஒரு துணைவினையே. 2. ஏவல் வினையின் எண் குறியாமை. செய்யட்டு என்னும் ஏவல்வினை ஒருமையும், செய்யட்டும் என்னும் ஏவல் வினை பன்மையும் ஆகும்; செய்யவிடு, செய்யவிடும் என்பவை போல், இவ் வெண்வேறுபாடு அகராதியிற் குறிக்கப்படவில்லை. V. மரபு வழுக்கள் 1. சொல் வழு அம்மை வார்த்தலை அம்மை போடுதல் என்பது மரபு. அதை அம்மை கட்டுதல் என்று குறித்து, அவ் வழுவை அழுத்திக் காட்டினாற்போல் வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டியிருக்கிறது என்று எடுத்துக்காட்டும் தரப்பட்டிருக்கின்றது. போட்டு என்பது புகட்டு என்பதன் மரூஉ. பால் போன்ற நீர்பொருள்தான் போட்டப்படும். 2. உருபு வழு கரைத்துக் குடித்தல் என்னும் கூட்டுவினைச் சொற்கு, உணவு முதலியவற்றைத் திரவ பதார்த்தத்தால் கலக்கி உட்கொள்ளுதல் எனப் பொருள் கூறப்பட்டிருக்கின்றது. இதில், திரவ பதார்த்தத்தால் என்பது திரவ பதார்த்தத்தில் என்றிருத்தல் வேண்டும். VI. அகராதியமைப்பு வழுக்கள் 1. ஒரேயளவான எழுத்தால் எல்லாச் சொற்களையுங் குறித்தல் வின்சிலோ (Winslow) அகராதியில், அடிப்படைச் சொற்கள் பெரிய எழுத்திலும், அவற்றினின்று திரிந்துள்ள தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் சிறிய எழுத்திலும், அச்சிடப்பட்டிருக்கின்றன. அதுவே சரியான முறையாம். சென்னையகராதியில் அஃதன்றி, எல்லாச் சொற்களும் சிறிதும் வேறுபாடின்றி ஒரேயளவான எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இதனால், ஆராய்ச்சியில்லா தார் அல்லது புலவரல்லாதார் சொற்றிரிவு முறையை அறியவும், இயற் சொல்லையும் திரிசொல்லையும் பிரித்துணரவும் இயலாதிருக்கின்றது. 2. பிறந்தையின்கீழ் இனங்களையும் இனத்தின்கீழ் வகைகளையும் காட்டாமை வின்சிலோ அகராதியில், பருத்தி என்னும் சொல்லின்கீழ், காட்டுப்பருத்தி, செம்பருத்தி, தாளிப்பருத்தி, பட்டுப்பருத்தி, பூப்பருத்தி, பேய்ப்பருத்தி, மலைப் பருத்தி, வெண்பருத்தி, வேலிப்பருத்தி முதலிய பலவகைகள் காட்டப்பட்டுள்ளன. இங்ஙனமே பிற பொருள்வகைகளும் அவ்வவ்விடத்திற் காட்டப்பட்டுள்ளன. இம் முறையினால், ஒரு பொருளின் வகைகளையெல்லாம் ஒரேயிடத்தில் ஒருங்கே காணமுடிகின்றது. விடுபட்டுப்போன வகைகளையும் உடனே கண்டுகொள்ளலாம். சென்னையகராதியில், எல்லாப் பொருள்களையும் அவற்றைக் குறிக்கும் சொற்களின் அகர வரிசைப்படி குறித்திருப்பதால், ஒரு பொருளின் வகைகளைக் காண்பதற்கு எல்லா மடலங்களையும் புரட்டவேண்டியிருக்கின்றது. இது இயலாத செயல். அதோடு, விடுபட்டுப்போன வகைகளையும் எளிதாய் அறிந்து கொள்ளமுடிவதில்லை. எடுத்துக்காட்டாக, அவரை வகைகளைச் சொல்லலாம். ஆரால்மீன் அவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை முதலிய வகைகள் சென்னையகராதியிற் குறிக்கப்படவில்லை. இங்ஙனமே, உருண்டையரம், கத்தியரம், சீட்டியரம், பூவரம், பொந்தவரம், துகரம், முள்ளரம் முதலிய அரவகைகள் விடப்பட்டுள்ளன. VII. அகராதியாசிரியர் குறைகள் சென்னைப், பல்கலைக்கழகத் தமிழ் அகராதியைத் தொகுத்த ஆசிரியருள் தலைமையான பொறுப்பு வாய்ந்தவர், அகராதிப் பணிக்குழுவின் தலைமைத் தமிழ்ப் பண்டிதரான பெரும்புலவர் மு. இராகவையங்காரும் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளையும் ஆவர். மறைமலையடிகளும், தமிழ் வடமொழித் துணை அல்லது பிறமொழித் துணை வேண்டாத தனிமொழியென்னுங் கொள்கை யினரும், அகராதியாசிரியர் குழுவிற் சேர்க்கப்படவேயில்லை. 1. தமிழ்ப் பற்றின்மை திரு. வையாப்புரிப் பிள்ளை இருபதாம் நூற்றாண்டுக் கொண்டான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது சிறந்த ஆராய்ச்சியெல்லாம், தென்சொல்லை வடசொல் என்பதும், தென்னூலை வடநூன் மொழிபெயர்ப் பென்பதும், தமிழ்க்கலையை ஆரியக்கலை யென்பதுமே. அவர் வடமொழி யறிஞர்தாம். பின் வடசொல் தென்சொல் வேறுபாடறியும் மொழிநூலறிஞரல்லர். பெரும்புலவர் மு. இராகவையங்கார், செட்டி மக்கள் வாசல்வழி என்னும் கம்பர் வெண்பாவில், முட்டிபுகும் பார்ப்பார் என்னும் தொடரில், முட்டி புகும்என்பதை இட்டமுடன் என்று மாற்றியவர்; ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்னும் தொல்காப்பிய அடியில் வரும் ஐயர் என்னுஞ் சொல்லுக்கு ஆரிய மேலோர் என்று பொருளெழுதியவர். பட்டயப் பாவலர் வரலாறு என்று பெயரிடக்கூடிய தம் வெட்டெழுத்துப் புலவர் வரலாற்றிற்குச் சமமான தமிழ்க்கவி சரிதம் எனப் பெயரிட்டவர். 2. தவறான கருத்துடைமை இவ் விருவரும், தமிழ் வடமொழி வழியதென்று தவறான கருத்துடையவர். 3. கவனமின்மை இருவரும், ஏறத்தாழ 750 அச்சுப்பிழைகள் நேரவிட்டும், அவற்றுள் மட்டும் பிழைதிருத்தப்பட்டியிற் காட்டியும், பிந்தித் தொகுத்த சில சொற்களைப் பின்னிணைப்பு மடலத்திலும் சேர்க்காதும், கவலையற்றும் கவனமின்றியும் அகராதியை வெளியிட்டவர். 4. சொற்றொகுப்பு முறையறியாமை இருவரும் முதற்கண் சொற்றொகுக்கும் முறையை அறியாது, வின்சிலோ அகராதியையே அடிப்படையாக வைத்துக்கொண்டு வேலை செய்து வந்தனர். பின்னர், பண்டைத் தமிழிலக்கியத்தில் பன்னூற்றுக் கணக்கான சொற் களுடைமையையும், அதன்பின்னர், உலகவழக்கில் ஆயிரக்கணக்கான சொற்களுண்மையையும், தாமாகவும் பிறர்க்காட்டவும் கண்டுகொண்டு, அவற்றையெல்லாங் தொகுத்தனுப்பும்படி பல கழகங்களையும் தனிப்பட்ட அறிஞர்களையும் வேண்டி இலவசமாகப் பேருதவி பெற்று வந்தனர். அதன்பின்பும், நெடுஞ்சினை, சினைமுதற்பெயர், வண்ணச்சினைச் சொல் தடுமாறு தொழிற்பெயர் முதலிய தொல்காப்பியச் சொற்களும்; அந்தரக்கோல், கண்ணெழுத்து, பண்மொழி நரம்பு முதலிய சிலப்பதிகாரச் சொற்களும் தகைப்பு, புகுவாயில், புறப்படுவாயில் முதலிய அடியார்க்கு நல்லாருரைச் சொற்களும்; கருங்களமர், கருமுகமந்தி, செம்பினேற்றை முதலிய நச்சினார்க்கினியருரைச் சொற்களும்; இல்லற வெள்ளை, ஐம்படை விருத்தம், செந்தமிழ் மாலை, யானைத்தொழில், வேந்தன்குடைமங்கலம் முதலிய பன்னிரு பாட்டியற் சொற்களும்; கணக்குவாரியம், கலிங்குவாரியம், குடும்புவாரியம், தடிவழிவாரியம், பொன்வாரியம் முதலிய கல்வெட்டுச் சொற்களும்; நூற்றுக் கணக்கான உலக வழக்குச் சொற்களும், அகராதியில் இடம் பெறவில்லை. தமிழுக்கு வேண்டாத டர் (அச்சம்), லக்கிடி (விறகு) போன்ற இந்திச்சொற்கள் மட்டும் ஏராளமாய் இடம்பெற்றுள்ளன. வின்சிலோ அகராதியை அடிமணையாகக் கொண்டிருந்தும், அதிலுள்ள பொருள்களைக்கூடச் சரியாய்ப் பெயர்த்தெழுதவில்லை. எ-டு; பன்னுகிறேன்..... 4. To recite or interpret word by word விவரிக்க இவற்றையெல்லாம் நோக்கும்போது, தமிழைக் கெடுக்கவேண்டுமென்றே இருவருங்கூடி வேலை செய்தார்போலும், என்றெண்ண இடந்தருகின்றது. கனம் சான்றிலர் (Rev. J.S. Chandler) துரைமகனார் முதல் நான்காண்டு அகராதிக்குழுத் தலைவரா யிருந்தபோது, பாம்பன் சென்று, துறைமுக அதிகாரியையும், தமிழ மீகாமரையும், செம்படவரையும் கண்டு, நாவாய்த்துறைச் சொற்களையும் அவற்றின் சரியான பொருள்களையும் கேட்டறிந்து வழிகாட்டியும், அதைப் பின்பற்றியிலர். 5. தொல்காப்பியர் கூற்றைப் பிறழவுணர்தல் தமிழ் வடமொழிக்கு முந்திய முழுவியற்கை மொழியாதலால் அதிலுள்ள எல்லாச் சொற்களும் வேர்ப்பொருள் கொண்ட கரணிய (காரண)க் குறிகள். சமற்கிருதம் தமிழுக்குப் பிற்பட்ட அரைச் செயற்கை மொழியாதலின், அதிலுள்ள சொற்களுள் ஒரு சாரன கரணியக் குறிகள்; ஒரு சாரன வேர்ப்பொருளற்ற இடுகுறிகள். திரு. வையாபுரிப் பிள்ளை வடமொழியடிப்படையில் தமிழ் கற்றவராதலின், தமிழ்ச்சொற்களுள்ளும் இடுகுறி யுண்டெனப் பவணந்தியார் கூறியதை நம்பியதுடன், தம் அறியாமையைத் தொல்காப்பியர்மீதும் ஏற்றி, அவர் மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா, (877) என்று கூறியதற்கு, சொற்களின் பொருட்கரணியத்தைக் கண்டுபிடிக்க முடியாதென்று பொருள் கொண்டார். தொல்காப்பியர் ‘njh‹wh’ என்று மட்டுங் கூறாமல், விழிப்பத் தோன்றா என்று கூறியுள்ளார். ஒருவனது பேசுந் திறனைக் குறிக்கும்போது, விரைவாய்ப் பேசமாட்டான் என்பதற்கும், பேசமாட்டான் என்பதற்கும் மிகுந்த வேறுபாடுண்டு. அங்ஙனமே, “njh‹wh’ என்பதற்கும் ``விழிப்பத் தோன்றா'' என்பதற்கும் விழிப்பத் தோன்றா என்பது விளக்கமாய் அல்லது பார்த்தமட்டில் தோன்றாது என்றே பொருள்படும். ஆகவே, ஊன்றி நோக்கினால் தோன்றும் என்பதாம். புடலங்காய் என்னும் தமிழ்ச்சொல். மலையாளங் கன்னடத்தில் படோலங்கா என்றும், சமற்கிருதத்தில் பட்டோலிக்கா என்றும் திரிந்து வழங்குகின்றது. சமற்கிருத வடிவிற்கு வேர்ப்பொருளே காண முடியாது. மலையாள வடிவிற்கு நீண்ட ஆராய்ச்சி செய்துதான் காண முடியும். தமிழ் வடிவிற்கோ, பார்த்தமட்டில் முடியாவிடினும், சற்று ஊன்றி நோக்கினால் எளிதாய் முடியும். புடலை+காய் = புடலங்காய். புடல்-புடலை. ஒ.நோ. குழல்-குடல். பிற காய்கள் போல் கட்டியாயிராது புழலாய் (c£LisíŸs காய்) இருப்பது புடலங்காய். “ÉÊ¥g¤ தோன்றா என்பது தோன்றா என்றே பொருள்படுவதாயின், எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (640) என்று வேறோரிடத்தில் அவரே எங்ஙனம் முரண்படக் கூறியிருக்க முடியும்? இதைக்கூடப் பதிப்பாசிரியர் எண்ணிப்பார்த்திலர். மேலும், பழம் பாண்டிநாடான குமரிக்கண்டம் முழுகிப் பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் இறந்துபட்டு ஆயிரக்கணக்கான சொற்கள் மறைந்து, பண்டைக் கழகத்தின் பின் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டு கழிந்துள்ள இற்றை நிலையிலும், நூற்றுமேனி 75 சொற்கட்கு வேர்ப்பொருள் காணலாமெனின், கி.மு. 7 நூற்றாண்கட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச்சொற்கட் கெல்லாம் வேர்ப்பொருள் காணும் வாய்ப்பு எத்துணை மிகுதியா யிருந்திருக்கும். 6. புலாலுணவறியாமை தலைமைத் தமிழ்ப் பண்டிதரும் பதிப்பாசிரியருமாகிய இருவரும் மரக்கறி உணவினர். அதனால், ஊனுணவுப் பொருள்களை, தாமாக அறியவோ, பிறர் அவற்றைப்பற்றித் தவறாயெழுதின் அத் தவற்றைக் கண்டுபிடிக்கவோ, ஆற்ற லிலராயினர். அதனாலேயே, குறவையை வராலென்றும், வராலைக் கொண்டை யென்றும், மண்ணீரலைக் கல்லீரலென்றும், கொழுப்புக் குடலைச் சிறுகுட லென்றும், தம்போல்வார் எழுதியனுப்பியதை எழுதியபடியே அச்சிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி இத்துணைச் சீர்கேடடை தற்கு, அவ் வகராதிக் குழுத்தலைவரும் உறுப்பினரும் ஓரளவு கரணியம் (காரணம்) ஆவர். அகராதிக் குழுத் தலைவராயிருந்த நால்வருள், பின் மூவரும் பிராமணர். தொடக்கத்தில் அமைந்திருந்த அகராதிக்குழுவில் பல மேனாட்டார் இருந்தாரேனும், அவருடைய அயன்மையும் தனித்தமிழ் கலவைத் தமிழ் வேறுபாடறியாமையும், தமிழிலக்கணப் புலமையின்மையும், அகராதிப் பணியைச் செவ்வனே ஆற்றுதற்குத் தடையாயிருந்தன. அகராதிப் பணிக் குழுவிலிருந்த சமற்கிருதப் பண்டிதர்மட்டுமன்றித் தமிழ்ப் பண்டிதரும், தனித் தமிழாற்றல் அற்றவராகவே யிருந்தனர். அகராதிக் குழுவுறுப்பினருள் ஒருவரான பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையரும் தனித்தமிழ்ப் பற்றற்றவரே. இடைக்கழகக் காலத்திலிருந்தே பிராமணர் தென்னாட்டிற்கு வந்து கொண்டிருந்தும், இற்றைத் தமிழ்நாட்டுப் பிராமணர்க்குப் பெரும்பான்மை தமிழும் சிறுபான்மை தமிழொடு திரவிடமும் தாய்மொழியாயிருந்தும், அவர் முன்னோரது இலக்கிய மொழியாகிய சமற்கிருதத்திலேயே அவர்க்குப் பற்றுளது. என்றும் சமற்கிருதத்தைத் தலைமையாகவும் தமிழை அதற்கு அடிப்படுத்தியும் வைத்தலே அவர்க்கு விருப்பம். தமிழரொடு உறவாடாமை, தமிழ்ச்சொல்லை விரும்பாமை, வடசொல்லையே பெரும்பாலும் வழங்குதலோடு தமிழர் வழக்கிலும் புகுத்துதல், ஆகிய கரணியங்களால் தூய தமிழ் வழக்கை இன்னும் அவர் சரியாய் உணர்ந்து கொள்ளவில்லை. அதனால், நச்சினார்க்கினியர் நகைச்சுவைக்கு ஆரியர் தமிழை எடுத்துக் காட்டியதற்கு இலக்காக, அம்மை போடுதலை அம்மை போட்டுதல் என்று அகராதியிற் குறித்திருக்கின்றனர். பிராமணர்க்குத் தென்னாட்டில் தலைமையான செல்வாக்கு உள்ளவரை அல்லது அவர் உண்மையான தமிழன்பர் ஆகும்வரை, இந் நிலைமையே நீடிக்கும். சமற்கிருதத் தைத் தேவமொழியென்று நம்புதற்கேற்ற பேதைமை பண்டைத் தமிழ்நாட்டில் மிகுதியாய் இருந்ததேனும், இற்றைத் தமிழ்நாட்டில் அத்துணை யில்லை. அறிவு வளர வளரப் பழைய மடநம்பிக்கை படிப்படியாய் ஒழியும். ஆதலால், காலத்தின் இயல்பிற்கேற்ப அவர் தம் கருத்தை மாற்றிக் கொள்க. தன்னலம்பற்றித் தமிழைக் காட்டிக் கொடுக்கும் ஒருசில தமிழ்ப் பேராசிரியரைக் கண்டு, தவற்றில் நிலையற்க. இது அவர்மீது பற்றுவைத்துச் சொல்வதே யன்றிப் பகைகொண்டு சொல்வதன்று. உலக முழுவதையும் தழுவிய ஒரு பெரு வரலாற்றுண்மையை மறைப்பது நன்றன்று. VIII. சென்னைப் பல்கலைக்கழக அமைப்புக் குறைகள் (1) அதிகாரிகளைப் பற்றியவை சென்னைப் பல்கலைக்கழகக் கண்காணகர் (Chancellors) ஆங்கிலேய ஆட்சிக் காலமெல்லாம் ஆங்கிலேயரா யிருந்தனர். அதனால், அவர் தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொள்ளவில்லை. அதன்பின், தமிழ்நாட்டிற்கு விடுதலை வந்ததென்று சொல்லப்பட்டும், தமிழரோ, தமிழறிந்தவரோ தலைவராகாது, தமிழறியாத வடநாட்டாரே தலைவராகி வருகின்றனர். பல்கலைக்கழகத் தமிழகராதி தொகுக்கப்பட்ட காலமெல்லாம் (1913-39) துணைக் கண்காணகரா யிருந்தவரும் தமிழறியாதாரும் தமிழ்ப்பற்றற்றவருமான ஐரோப்பியரும் பிராமணரும் தெலுங்கரும் மலையாளியருமே. யாரேனும் ஒருவர் தமிழ்க்குடிவழிவந்து தமிழக்குலப் பட்டப்பெயரே தாங்கித் தமிழரென்று கருதத்தக்கவரா யிருப்பினும், அவர் தம்மைத் தெலுங்கரென்று சொல்பவராயும், பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளையெல்லாம் ஆங்கிலத்திலேயே ஆற்றுபவ ராயும் தனித்தமிழை வெறுப்பவராயு முள்ளனர். எதிர்காலத்தில் பண்டாரகர் மணவாள இராமானுசம் போன்றவர் துணைத் தலைவரானா லொழிய, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்தற்கிடமே யில்லை. பல்கலைக்கழக ஆட்சிக்குழு வுறுப்பினருள்ளும், தமிழ்ப் புலவரோ, தமிழ் மரபைப் போற்றுபவரோ ஒருவருமில்லை. வடமொழிச் சார்பான ஒரு கட்சியாட்சியைத் துணைக்கொண்டு, வடமொழிக்கின்றுள்ள தலைமையை நிலைநிறுத்திவிட வேண்டுமென்பது, கண்ணாடிக் கூடைக்காரன் கனவாகவே முடியும். (2) தமிழ்த்துறைத் தலைவரைப் பற்றியவை மொழித்துறையில் தமிழ்நாட்டிலும் சமற்கிருதமே தலைமையாயிருப்பது போல், கூட்டரவு (சமுதாய)த் துறையில் வடமொழிப்பற்றுள்ள பிராமணரே தலைமையா யிருப்பதால், தனித்தமிழ்ப் பற்றுள்ள ஒரு புலவரும் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பதவியைத் தாங்கும் நிலைமை யிருந்ததில்லை. அதனால், பட்டம் பதவி பெறுவதையும் பெரும்பொரு ளீட்டுவதையும் குறிக்கோளாகக் கொண்ட தனித்தமிழ்ப் பற்றற்ற தமிழ்ப் புலவரே, பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக முடிந்தது. மறைமலையடிகள் ஒருவர் தவிர மற்றெல்லாத் தமிழ்ப் புலவர்க்குள்ளும், சிறப்பாகக் கல்லூரி பல்கலைக்கழகப் பேராசிரியர்க்குள், அழுக்காறு இன்னும் போகவில்லை. பதவி சற்று உயர்ந்தவுடன், அதனொடு செல்வமுஞ் சற்றுச் சேர்ந்துவிடின். சிறியரே, மதிக்கு மிந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே வறியபுன் செருக்குமூடி வாயுள்ளோர் மூக ராவர் பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர் குறிபெறுங் கண்ணு ளாருங் குருடராய் முடிவ ரன்றே. என்னுஞ் செய்யுட்குச் சிறந்த இலக்கியமாகிவிடுகின்றனர். ஒரு தேர்வும் தேறாத ஒருவர் ஒரு பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகிவிடின், தம்மினுஞ் சிறந்தார் ஒருவருமில்லையென்று காட்டவேண்டி, நெஞ்சாரப் பொய்த்து வாயாரத் துணிந்து தன்னேரில்லாத் தமிழாராய்ச்சியாளரையும் தமிழ் வெறியன் என்றும், திராவிடர் கழகத்தான் என்றும், வடமொழிப் பகைவன் என்றும், கோணைமதியன் குறுக்குச் சூழ்ச்சியன் (குயுக்தியான்) என்றும், கூறி மறைத்துவிடுகின்றனர். தமிழறிவற்ற தலைமை யதிகாரிகளும், அவர் ஒரு மேடைப்பேச்சாளராயின் அவரை மேலான புலவரென்று கருதி மேம்படுத்தி விடுகின்றனர். அரசன் முத்தினால் அரம்பை என்னும் பழமொழிக்கேற்ப, அவ் வாசிரியரும் தம்மைத் தலைமையாகக் கருதி அறியாத்துறைக்கும் அதிகாரிகளாகிவிடுகின்றனர். இத்தகைய ஆசிரியர், தன்னலமொன்றே கருதித் தமிழைக் கெடுப்பதுடன் காலத்திற்கேற்பத் திருந்திவரும் பிராமணரையும் கெடுக்கின்றனர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றப் பாடத்துறைகட்கெல்லாம் அவ்வத் துறையில் தலைமைப் பட்டம் பெற்ற தகுதியாளரையே அமர்த்துகின்றது. ஆயின், தமிழுக்கு மட்டும் சட்டத்துறைப்பட்டம் அமையுமென்று கருதுகிறது. அதோடு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரெல்லாம் தமிழ் மொழிநூலதிகாதிக ளென்றும் கருதிக்கொள்கிறது. இதனால், அவ் வாசிரியரும் தம்மைத் தவறாக மதித்துக் கெடநேர்கிறது. காலஞ் சென்ற பண்டாரகர் ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள், சேலத்தி லிருந்து நான் விடுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதித் திறனாய்வைப் பற்றி, பர். இலக்குமணசாமி முதலியார் அவர்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லியிருப்பின், இதற்குள், அவ் வகராதி முழுதும் செவ்வனே திருத்தப் பெற்றிருக்கும். ஆயின், அவரே அதற்குத் தடைநின்றார். நான் கடந்த முப்பானாண்டுகளாக மொழியாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் முறைப்படி செய்து வந்திருந்தும், கால்டுவெலுக்குப்பின் அறிவியன் முறையில் ஒருவரும் தமிழ்ச்சொல்லாராய்ச்சி செய்யவில்லையென்று, துணிந்து எழுதினார். பர். சேதுப்பிள்ளை சொல்லாராய்ச்சிக்கும் என் சொல்லாராய்ச்சிக்கும் வேறுபாடு, கீழ்க்குறித்தவற்றினின்று அறிஞர் தாமே அறிந்துகொள்க. சென்னைப் பல்கலைக்கழக அகராதியைத் திருத்துவது சேதுப் பிள்ளைக்கு விருப்பமன்று. அவ் வகராதி சென்னைப் பல்கலைக்கழகத்தைக் கடுங்கறைப்படுத்திய கருசெயல்வடிவாய் இருந்தும், அவர் அதை அப் பல்கலைக் கழகம் தமிழுக்குச் செய்த தலைசிறந்த தொண்டென்று அதன் வெள்ளிவிழாவிற் புகழ்ந்தார். இத்தகைய கருத்துடையவர் அதை யெங்ஙனத் திருத்த இசைவர்! அவர் கருதியபடியே அவர் காலமெல்லாம் அது திருத்தப்படாமற் போயிற்று. சொல் சேதுப்பிள்ளை யாராய்ச்சி என் ஆராய்ச்சி அணில் அணி=அழகு, அழகான மூவரிகளை அணி = வரி, வரிசை. முதுகிலுடையது அணில் முதுகிலுடையது அணில். வேந்தன் தீமையை நீக்குவதற்கு வெம்மையாகக் வேய்ந்தோன்-வேந்தன் கோலோச்சுபவன் வேந்தன் வெம்மை, வேவு என்பதிற்போல் வேகு, வெயில் என்பனவும் வேந்தன் யகரமெய்தொக்கது. வேய் என்பதும் ஒருவேரினின்று பிறந்தவை தல் = முடியணிதல். முதற் காலத்தில், தமிழ்நாட்டில் முடியணியும் உரிமை முத்தமிழ் வேந்தர்க்கேயிருந் தது. கொன்றை வேயந் தோன் - கொன்றை வேந்தன் பள்ளி முதற்பொருள் இடம் என்பது, பிற முதற்பொருள் படுக்கை பொருள்கள் பிந்தியவை. அல்லது படுக்கையறை என்பது, பிறபொருள்கள் பிந்தியவை. அகவிலை அகவிலை ஏறிவிட்டது என்பதில், அகவிலை என்பது அஃக `அகவிலை' என்பது `அதிகவிலை' விலை என்பதன் மரூஉ. அஃகம் = தவசம், கூலம். சேதுப்பிள்ளை ஒருமுறை அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு மண்டபத்தில் கல்வியமைச்சர் தலைமையில் பேசியபோது, மொழிநூலறிவின் இன்றியமையாமைக்குச் சிற்றம்பலம் சிதம்பரம் எனத் திரிந்ததை எடுத்துக் காட்டினார். இது சொல்லாராய்ச்சியின் (Etymology) ஒரு பிரிவான இடப் பெயராய்ச்சியே (Toponomy) யன்றி மொழியாராய்ச்சியன்று. மொழியாராய்ச்சி செய்யாதவர் சொல்லாராய்ச்சியில் இறங்குதல் கூடாது. இறங்கின், பல சொல்வேர்களைத் தவறாகக் காட்ட நேரும். சில வேர்கள் சரியாயிருப்பின் அவை எவரும் எளிதாய்க் கண்டுகொள்ளத்தக்கனவாயிருக்கும்; அல்லது, ஏரலெழுத்துப் போல் அமைந்தனவா யிருக்கும். இனி ஒருசில தமிழ்ப்பேராசிரியர், தாம் மொழிநூல் கற்றிருப்பதுபற்றி என் ஆராய்ச்சியை இகழ்வதாகத் தெரிகின்றது. கல்வி வேறு, ஆராய்ச்சி வேறு என்பதையும், என் கல்விப்பரப்பையும் ஆராய்ச்சியாழ்வையும், அவர் இன்னும் அறிந்திலர். அவர் உண்மையில் என்போன்று ஆராய்ந்தவராயின், சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் இல்லாச் சொற்களையும் இல்லாப் பொருள்களையும் உள்ள பிழைகளையும் எடுத்தெழுதுவாராக; அறைகூவி அழைக்கின்றேன். என்னைத்தவிர வேறெவரும் இப் பணியைச் செய்யவியலாதென்று அறிந்திருந் தும், தமிழ் கெடினும் தம் பெயர் கெடக்கூடாதென்று அவ் வகராதித் திருத்தத் தைத் தடுத்துவிட்டனர். இனி, சென்னைப் பல்கலைக்கழகம் தொகுத்த அகராதிக்குறைகளை அண்ணாமலை பல்கலைக்கழகம் எடுத்துக்காட்டக்கூடாதென்றும், அண்ணா மலை பல்கலைக்கழகம் தமிழைத் தூய்மையாக அல்லது சிறப்பாக வளர்ப்பின் பல்கலைக்கழக நல்கைக்குழு (U.G.C.) நல்கும் நல்கை குன்றிவிடுமென்றும், இரு கருத்துகள் உலவி வருகின்றன. இவற்றையெல்லாம் நோக்கும்போது, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியைத் திருத்தவேண்டிய முழுப்பொறுப்பும், கடமையும், சென்னைப் பல்கலைக்கழகத்தையே சார்கின்றது. அகராதியைப்பற்றிக் ‘FiwT¿dhš வேலை போய்விடுமோவென்றும், தேர்வாண்மையும் (Examinership), பாடக்குழு வுறுப்பாண்மையும் (Membership of Board of Studies) பிற வாய்ப்புகளும் நீங்கி விடுமோவென்றும்; தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்பேராசிரியரும் அஞ்சி வாய்திறவா திருக்கும் நிலையில், பொதுமக்கள் பணத்தில் பெருந்தொகையைச் செலவிட்டுப் பக்கந்தொறும் பிழைமலியத் தொகுத்ததும், தமிழ் வடமொழிக் கிளையான ஒரு கலவைமொழி என்று காட்டி தமிழுக்குக் கேடும் தமிழனுக்கு இழிவும் உண்டாக்குவதுமான (4351 பக்கங்கொண்ட) அகராதியை உடனே திருத்த ஏற்பாடு செய்யுமாறு, இத் தமிழாட்சிக் காலத்திலேனும் தமிழ்க்கழகங்களும் பொறுப்புவாய்ந்த பொதுமக்களும், சட்டசவை யுறுப்பினரும், சென்னைப் பல்கலைக்கழக அதிகாரிகளை வற்புறுத்துவாராக. சென்னைப் பல்கலைக்கழகம் செய்த வழுவைச் சென்னைப் பல்கலைக்கழகமே களைதல் வேண்டும். அப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியாற்றுமாறு தகுதியுள்ள எவரையும் அமர்த்திக்கொள்ள, அப் பல்கலைக்கழக அதிகாரிகட்கு முழு உரிமையுண்டு. ஆயின், தகுதியில்லாதவரை யமர்த்தித் தமிழைக் கெடுக்க அதிகாரமோ உரிமையோ அவர்கட்கு அணுவளவுமில்லை. ஆதலால், சென்னைப் பல்கலைக்கழகம் அது வெளியிட்ட அகராதியை உடனே திருத்தாவிடின், தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகமே நிறுவப்பெறுதல் வேண்டும். என் அண்ணாமலை நகர் வாழ்க்கை உள்ளடக்கம் 1. முயற்சிப் படலம் 51 அமர்த்தப்படலம் 54 பணி செயற்படலம் முதற்பகுதி 57 பணி செயற்படலம் 2ஆம் பகுதி 62 2. இந்திய இனமொழிப்பண்பாட்டுக்கலப்பு... 67 துறைமாற்றப்படலம் .70 நிலைமை எதிர்ப்படலம் .71 நீக்கப்படலம் 74 1. முயற்சிப் படலம் உயர்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளுமான கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பெறும் பாடங்களுள், தமிழ் ஒன்றே அடி முதல் முடிவரை தருக்கத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடமானதாம். இஃது ஆரியத்தினால் தமிழுக்கு விளைந்த தீங்குகளுள் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கே ஆரியத்தினின்று திரிந்ததாகக் கால்டுவெல் கண்காணியாரும் கூறிவிட்டார். இஃது, ஏற்கெனவே வெறுவாயை மென்று கொண்டிருந்த வடமொழி வெறியர்க்கும் அவரடியார்க்கும் அவல் கிடைத்தது போலாயிற்று. கால்டுவெலார் நுண்மாண் நுழைமதியாரும் நிறைகோல் நடுநிலையாருமா யிருந்தாரேனும், அவர் காலத்திற் கழக (சங்க) நூல் வெளிப்பாடும் குமரிக்கண்ட வரலாறும் kறைமலையடிகள்nபாலும்òலவரும்jனித்தமிழ்Mராய்ச்சியும்ïன்மையால்,jமிழின்cண்மைத்jன்மையைmவர்fணïயலாதுnபாயிற்று.ïjdhš அவர் பெயருக்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. இயல்பான எளிய தமிழெழுத்துகளும் ஆரியவல்லெழுத்துகளின் மெலிவென்றும், தூய தென்றமிழ்ச் சொற்களும் வடசொற்களின் திரிபென்றும், வலம்புரி முத்திற் புலஞ்சிறந்த தலைத்தமிழ் நூல்களும் சமற்கிருத நூல்களின் மொழிபெயர்ப்பென்றும், செந்தமிழ்க்கே சிறப்பான கலைகளும் அறிவியல்களும், இலக்கண வமைதியும் வடநூல் அடிப்படையினவென்றும், இனி, முழுப் பூசனிக் காயைச் சோற்றில் முழுக்குவது போலத் தமிழ் என்னும் பெயரே திரவிடம் என்பதன் திரிபென்றும், பரவெளி ஆராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டி லும் நெஞ்சழுத்தங்கொண்டு நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைவதும், மொழிநூற் பெயரில் வெளியிடுவதுமா யிருப்பதால், வையாபுரி வழியினரும் மறைமலையடிகள் வழியினருமாகத் தமிழ்ப் புலவரும் தமிழாசிரியரும் இருவகையர். ஆலைத்தொழில் முதல் அரசியல் வரை எல்லாத் துறைகளிலும் ஆரியம் வேரூன்றி யிருப்பதால், தமிழின் உண்மைத் தன்மையை எடுத்துரைத்தற்கும், காத்தற்கும், நுண்மதி, தமிழாங்கிலப் புலமை, ஆய்வுத் திறன், நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை ஆகிய அறுதிறம் இன்றியமையாது வேண்டும். இவ் வாறும் தவத்திரு மறைமலையடிகளிடம் நிறைவுற விருந்தன. அதனால், தமிழ்ப் புலமையில் பனிமலைபோல் தனிமலையாக இருந்தாரேனும், அவர்கட்கு உறைவுக் காலத்திலும் மறைவுக் காலத்திலும் வேத்தியலாராலும் பொதுவியலாராலும் பாராட்டுமில்லை; பரிசுமில்லை. இந் நிலைமையே அவர் வழியினருக்கும். ஆரியச் சார்பான எக்கல்வி நிலையத்திலும் அவர்க்கு அலுவலுமில்லை; சொற்பொழிவு வாய்ப்புமில்லை. யான் ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும், இருபத்தீராண்டு உயர் நிலைப்பள்ளிகளிலும், பன்னீராண்டு கல்லூரியிலும், தமிழாசிரியனாகப் பணியாற்றினேன். இவற்றுள் உயர்நிலைப்பள்ளி யிரண்டு, கல்லூரி ஒன்றும் ஆக முக்கல்வி நிலையங்களே கிறித்தவ மதச் சார்பற்றவை. ஏனையவெல்லாம் கிறித்தவக் கல்வி நிலையங்களாதலின், அவற்றில் எளிதாய் எனக்கு வேலை கிடைத்தது. உயர்நிலைப்பள்ளி யிரண்டனுள், முதலது பிரம்பூர்க்கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளி; இரண்டாவது சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி. முதலதில் வேலை கிடைத்தற்குக் கரணியம், பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர் பெற்ற அறுவையரும் (Surgeon) பிராமணருமான காலஞ்சென்ற பண்டகர் (Dr.) மல்லையாவின் பரிந்துரையே. மேலும், அக்காலத்தில் என் மொழியாராய்ச்சி அரும்பியிருந்ததேயன்றி மலர்ந்திலது. இரண்டாவதில், பண்டாரகர் (Dr.) அரசமாணிக்கனாரின் பரிந்துரையும், தமிழ்ப் பெருமகன் (C.D.) நாயகம் அவர்களின் தமிழ்ப்பற்றும், அற்றைப் பள்ளியாளுங் கணத்தாரின் தமிழவுணர்ச்சியுமே கரணியம். கல்லூரி, சேலத்து அற்றை நகராட்சிக் கல்லூரி. அதில் முன்பு தலைமைத் தமிழாசிரியப் பதவியும் பின்பு தமிழ்ப் பேராசிரியப் பதவியும், ஈடும் எடுப்புமற்ற உயர்திரு. இராமசாமி அவர்களின் தமிழார்வத்தாலும், நகராட்சித் தலைவர் திரு. இரத்தினசாமி அவர்களின் தமிழ்ப் பண்பாட்டாலும், நகராட்சித் தலைவர் திரு. இராமலிங்கனார் அவர்களின் தமிழ்ப் பற்றாலும் எனக்குக் கிட்டின. தமிழ்நாட்டில் தமிழரையே முதல்வராகக் கொண்ட எத்தனையோ கல்லூரிகளிருந்தும் சேலங் கல்லூரி ஒன்றிலேயே எனக்கு வேலை கிடைத்ததும், அங்குப் பன்னீராண்டு பணியாற்றியும் இன்று சொற்பொழிவாற்றவும் எனக்கதில் இடமில்லாதிருப்பதும், பேராசிரியர் இராமசாமியார் அவர்கள் தமிழ்ப்பற்றின் பேரெல்லையை உணர்த்துகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமா யிருந்தும் அதில் தமிழ் சரியாய்ப் பேணவும் கவனிக்கவும் பெறாமையால், தமிழ் மொழியிலக்கியப் பண்பாட்டைத் தகுந்த முறையில் வளர்ப்பதையும், உலக முழுதும் பரப்புவதையுமே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகம் காலஞ்சென்ற அரசவயவர் அண்ணாமலையார் அவர்களின் அருமுயற்சி யால், 1929ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பெற்றதென்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், கால் நூற்றாண்டிற்கும் மேற்பட அஃது எனக்கு அண்ணாமலை யாகவே இருந்தது. அதில், தமிழ் ஆராய்ச்சித்துறை ஏற்பட்டபொழுது துறைத் தலைவரைத் தெரிந்தெடுத்தமைத்தற்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் முப்பெயர்ப் பட்டியொன்றை வேண்டியதாகவும், அவ் வேண்டுகோட்கிணங்கி என் பெயர் உள்ளிட்ட ஒன்றைத் தாங்கள் விடுத்ததாகவும் தவத்திரு மறைமலையடிகள் என்னிடம் சொன்னார்கள். அதற்கேற்ப, பண்டாரகர் (Dr.) மணவாள இராமா னுசம் அவர்கள் அப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகராயிருந்தபொழுது, சேலம் நகராட்சிக் கல்லூரிச் சம்பளத்திற்குமேல் ஈராட்டைக் கூடுதல் தருவதாகக் கூறி என்னை அப் பதவிக்கு அழைத்தார்கள். எனக்கு அப் பல்கலைக்கழகத்தின் அற்றை நிலை முற்றும் ஏற்றதா யிருந்ததேனும், வடமொழி வெறியர் ஒருவர் அதற்குத் துணைக் கண்காணகராய் வரக்கூடிய பிற்றை நிலை நோக்கி அப் பதவியளிப்பை ஏற்கவில்லை. நான் அஞ்சியவாறே நேரவுஞ் செய்தது. ஆயினும், ஒரு பல்கலைக்கழகத்திற்குத் தாவக்கூடிய அளவு பேராசிரியர் இராமசாமியார் அவர்களால் உயர்த்தப் பெற்றிருந்த என் நிலைமையெண்ணி மகிழ்ந்தேன். 1956ஆம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் திரவிட மொழியாராய்ச்சித் துறை சூன் மாதம் ஏற்படுமென்றும், அதற்குத் துணைப் பேராசிரியர் முதலில் அமர்த்தப்பெறுவாரென்றும், முதற்கண் மேற்கொள்ளும் பணி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி (அகராதி)த் தொகுப்பு என்றும், செய்தித்தாள்களில் வெளியான விளம்பரம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. தமிழ் வேர்ச்சொல் அகரமுதலி என்னையன்றி வேறெவராலும் தொகுக்க முடியாதாத லானும், என் உற்ற நண்பர் தூண்டுதலானும், ஊக்கங் கொண்டு, துணைப் பேராசிரியப் பதவியினின்று நாளடைவில் பேராசிரியப் பதவிக்கு உயரலாமென்னும் நம்பிக்கையுடன், அப் பதவிக்கு வேண்டுகோள் விடுக்கத் துணிந்தேன். இதற்கிடையில், சேலங்கல்லூரி இராமசாமி அவர்கள் மாணவர் விடுதியைத் திறந்துவைக்க அரசவயவர், முத்தையா அவர்கள் சேலம் வந்திருந்தார்கள்; அவ் வமயம், சேலங்கல்லூரி முதல்வர் பேரா. அச்சுதரும், பேரா. சொக்கப்பாவும், பேரா. கோவிந்தராசனாரும் என் தகுதியைப்பற்றி (அண்ணாமலை பல்கலைக்கழக இணைக் கண்காணகர்) அரசவயவர் முத்தையா அவர்களிடம் சிறப்பாய் எடுத்துக் கூறினார்கள். திரு. முத்தையா அவர்களும் வேண்டுகோள் விடுக்கச் சொன்னது மன்றி, அண்ணாமலை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கும் என்னைச் சிறப்பு விருந்தினனாக வரவழைத்தார்கள். இதையடுத்து, மதுரைத் தியாகராசர் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் பண்டாரகர் அரசமாணிக்கனாரும் துணைத் தமிழ்ப் பேராசிரியர் ஔவை சு. துரைசாமி அவர்களும் எனக்காக அண்ணாமலை பல்கலைக்கழக இணைக் கண்காணகர்க்கும் துணைக் கண்காணகர்க்கும் பரிந்தெழுதி யிருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் அப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விற்குச் சென்றிருந்த பொழுது துணைக் கண்காணகர் திரு. T.M. நாராயணசாமி அவர்கள் என்னிடம் உங்களைப்பற்றி அரசமாணிக்கனாரும், ஔவை சு. துரை சாமி அவர்களும் எழுதியிருக்கிறார்கள். அதனால், எனக்கென்ன தமிழ் தெரியும்? சேதுவும் (தெ. பொ.) மீனாட்சிசுந்தரம் அவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தாம் கவனிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதினின்று எனக்குள்ள வாய்ப்பியல்பை உய்த்துணர்ந்து கொண்டேன். திருச்சிராப்பள்ளி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் சென்றவிட மெங்கும் பேசும்பொழுதெல்லாம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கு நானே தக்கவனென்று பெருமுழக்கம் செய்தார். ஆயினும், திரு. நாராயணசாமி அவர்கள் பேரா. சேது அவர்கள் கீறின கோட்டைத் தாண்ட விரும்பவில்லை. பேரா. சேது அவர்கள் என்மீதும் தனித்தமிழிலும் பற்றற்றவர் என்பது எனக்கு முன்னரே நன்றாய்த் தெரியும். அதோடு, அண்ணாமலை நகரில் நடைபெற்ற கீழைக்கலை மாநாட்டில் பேரா.தெ.பொ.மீ. யொடு நான் கருத்து வேறுபட்டமையும் என் அமர்த்தத்திற்குப் பெருந்தடையாம் என்று சிலர் பேசிக் கொண்டனர். வேண்டுகோள் விடுத்து அரையாண்டாயிற்று. எத்தகை விளைவும் நேர்ந்திலது. முப் பேராசிரியர் முரண்டுகொண்டு எனக்கு முட்டுக்கட்டை யிடுவதாக, செவிச்செய்திகள் வானில் உலாவின. இந்நிலையில், காலஞ் சென்ற பண்டகர் வரதராசலு அவர்கள் சேலம் வந்து, பண்டகர் இராசாராம் வளமனையில் விருந்தினராகத் தங்கினார்கள். அப்பொழுது பின்னர் (பண்டகர் இராசாராம்) அண்ணாமலை பல்கலைக்கழக வேலையைப்பற்றியும் என்னைப்பற்றியும் முன்னவரிடம் எடுத்துரைத்தார். முன்னவரும் ஆவன செய்வதாகச் சொன்னார். அமர்த்தப் படலம் பண்டகர் வரதராசலு அவர்கள் சென்னை சென்றபின் அரசவயவர் முத்தையா அவர்கள் திருமுகம் வந்தது. அதன் பின், யான் அண்ணாமலைநகர் செல்லும் நாள் அண்ணணித்தென்று எண்ணினேன். அரசவயவர் முத்தையா அவர்கள் தங்கள் தந்தையார் போன்றே தமிழ்ப்பற்று நிரம்பியவர்கள். ஆயின், பண்டாரகர் சேதுவும் பேராசிரியர் தெ.பொ.மீ.யும் (வேறொரு பிராமணப் பேராசிரியரும்) முத்தமிழ் வேங்கையரென்று கருதப்பட்டதனாலும், துணைக்கண்காணகர் திரு. நாராயணசாமி அவர்களின் அதிகார உரிமை மதிக்கப்பட வேண்டியிருந்ததனாலும் உடனடியாய் என்னை அமர்த்த விரும்பவில்லை. அதே சமயத்தில், அறிக்கழஞ்சு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் இருவரும் அரசியற் கட்சித் தலைவர் ஒருவரும் கூறிய பரிந்துரையைப் பொருட்படுத்தாதிருக்கவும் இயலவில்லை. இங்ஙனம் இருதலைக்கொள்ளி எறும்புபோல் இடர்ப்பட்டதனால், நீண்டநாளாக என்னை அமர்த்துவது அறத்தடுமாற்றமாகவே யிருந்தது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகக் கீழைக் கலைத்துறைத் தலைவரும் அருந்தமிழன்பரும் பெரும்பொறுப்பாளருமான பேராசிரியர் இலெ.பெ.கரு. இராமநாதன் அவர்களின் கருத்தை அரசவயவர் முத்தையா அவர்கள் கேட்டிருக்கின்றனர். பேராசிரியர் முற்றும் இசையவே, அரசவயவர் தடுமாற்றந் தீர்ந்திருக்கின்றது. அதன்பின் துணைக் கண்காணகரை இணக்குவதும் எளிதாயிருந்திருக்கின்றது. இச் செய்திகள் முன்பு எனக்கு மறைவாயிருந்து பின்பு வெளிப்படுத்தப்பட்டன. நீண்டநாளாக ஒன்றும் தெரியாமையால், அண்ணாமலை பல்கலைக்கழக வேலையைப்பற்றி நான் ஐயுற்றுக் கொண்டிருந்தபொழுது, ஒருநாள் எதிர்பாராத நிலையில் துணைக் கண்காணகரிடமிருந்து அமர்த்தோலை வந்தது. ஓரளவு பசியடங்கினவன் பெற்ற உணவுபோல் அதைப் பெற்றுக்கொண்டேன். ஆயினும் துணைக்கண்காணகரின் அன்பார்ந்த முடங்கலும், தமிழ் வேர்ச்சொல்லகர முதலித் தொகுப்புப்பற்றிய எண்ணமும், இன்புறுத்தின. இவ் வின்பம் இரண்டொரு நாளே யிருந்தது. ஏனெனின், எனக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தினின்று வந்தவுணவு நஞ்சூட்டப்பட்டதென்பது பின்புதான் தெரியவந்தது. அமர்த்தோலை வந்து இருநாட் சென்றபின், அதன் தொடர்ச்சியாக மற்றோர் ஓலை வந்தது. அதன் உறையைப் பிரித்துப் பார்த்தேன். என் அண்ணாமலை பல்கலைக்கழகப் பணியை மேற்பார்க்குமாறு, 1. வங்கச் சட்டமன்றத் தலைவரும் ஓய்வு பெற்ற சமற்கிருதப் பேராசிரியரும் மொழிநூலாசிரியருமான பண்டாரகர் சுநீதிக் குமார சட்டர்சி (தலைவர்). 2. பூனாப் பட்டக் கல்விப் பின்னை ஆசிரியப் பயிற்சி யாராய்ச்சித் தக்கணக் கல்லூரித் தலைவர் பர். கத்தரே, 3. மைசூர்ப் பல்கலைக்கழகக் கன்னடத் துறைத்தலைவர், பேராசிரியர், சீகண்டையா, 4. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர். சேது, 5. சென்னை மண்டலக் கல்லூரி ஓய்வு பெற்ற தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், 6. சென்னை மண்டலக் கல்லூரிச் சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தம், 7. அண்ணாமலை பல்கலைக்கழகக் கீழைக்கலைத் தமிழ்த் தலைவர், பேராசிரியர், இலெ.பெ.கரு இராமநாதன், 8. அண்ணாமலை பல்கலைக் கழகக் கலைத்துறைத் தமிழ்த் தலைவர், பேராசிரியர் சிதம்பரநாதன், 9. அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைத்தலைவர் பேராசிரியர், கோ. சுப்பிரமணியம், ஆகிய ஒன்பதின்மரைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டிருந்தமை தெரிந்தது. இவ் வேற்பாடு நான் எள்ளளவும் எதிர்பாராதது. இக் குழுவில் என்னளவு தமிழாராய்ந்தவரேனும், என் பணியை மேற்பார்க்கத் தக்கவரேனும் ஒருவருமிலர். ஆயினும், எனக்கும் தமிழுக்கும் மாறான இருவராலோ மூவராலோ சூழ்ச்சியாக இஃது ஏற்படுத்தப்பட்டது. என்னை அண்ணாமலை நகரினின்று விரைந்து வெளியேற்றுவதற்கு அமைத்த தள்ளிவெட்டி இதுவென்பதை உடனே கண்டு கொண்டேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சியாளராக விருந்த பேராசிரியர் இரா. இராகவையங்காரும் சமற்கிருதப் பேராசிரியராகவிருந்த பர். சுப்பிரமணிய (rh¤âÇah)U«, தாம் எழுதியுள்ள நூல்களில் உண்மைக்கு மாறாகத் தமிழை எத்துணையோ ஆழ்த்தியும் தாழ்த்தியும் கூறியுள்ளனர். ஆயினும்,அவரைத் தடுக்கவோ விடுக்கவோ எத்தமிழ்ப் பேராசிரியர்க்கும் எள்ளளவும் உரமில்லாது போயிற்று. முப்பதாண்டுகளாக இரவும் பகலும் அரும்பாடுபட்டுத் தமிழாராய்ந்து,உள்ளதை உள்ளவாறு கூறிய எனக்கோ, இல்வாழ்க்கைக்கும் இடமில்லாதபடி தமிழரே, அதுவும் தமிழ்ப்பேராசிரியரே,வலுத்த முட்டுக்கட்டையிட்டனர். கால்டுவெலும் மாக்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்தகைய கட்டுப்பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருந்திருப்பின், அவர் மனநிலை எங்ஙன மிருந்திருக்கும் என்பதை எண்ணிக் காண்க. ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மார் தமிழைக் காட்டிக்கொடுத்துப் பட்டமும் பதவியும் பெயரும் புகழும் பாராட்டும் பரிசும் பெறுவாராயின், பிராமணர் நிலத்தேவரென்றும் அவர் முன்னோர் மொழி தேவமொழியென்றும் முற்றும் நம்பப்பட்டிருந்த பண்டைக்காலத்தில், தமிழ் நிலையும் தமிழன் நிலையும் தன்மானத் தமிழ்ப் புலவன் நிலையும் எத்துணைத் தாழ்ந்திருத்தல் வேண்டு மென்பதை, கடுகளவேனும் பகுத்தறிவுள்ளார் உய்த்துணர்ந்து கொள்க. பர். சட்டர்சி தமிழை நேர்வழியிற் கல்லாது, தமிழைப் பிறழவுணர்ந்த அல்லது திரித்துக் கூறுகின்ற பிராமணவாசிரியர் எழுதிய ஆங்கில நூல் வாயிலாய்க் கற்ற வங்காளியர். அவர் தமிழறிவு எத்தகைய தென்பது அடுத்த படலத்தில் விளக்கப் பெறும். பர். கத்தரே ஒரு சமற்கிருத வெறியரான கொங்கணிப் பிராமணர். தமிழ்ப் பெருமையைச் சற்றும் அறியாதவர். பேராசிரியர் சீகண்டையா ஒரு கன்னடப்பிராமணர். இவரேனும் ஒரு திராவிட மொழிப் பெரும்புலவர்; என் திராவிடமொழி யாராய்ச்சித் துறையொடு தொடர்புள்ளவர். வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுநரான சட்டர்சிக்கும், கொங்கணியிலும் சமற்கிருதத்திலும் வன்புலவரான கத்தரேக்கும் தமிழொடு என்ன தொடர்பு? ஆரியமொழிகட்குள் மட்டுமன்றி இந்திய மொழிகட்குள்ளும் சமற்கிருதத்தைத் தலைமையாகக் கொண்ட இவ் விருவரொடும்,(தமிழைத் தலைமையாகக் கொண்ட) நான் விரைந்து முட்டுவேன் என்பதும், அதனால் என் பணி முட்டுப்படும் என்பதுமே,இவ் விருவரையும் முறையே மேற்பார்வைக் குழுத் தலைவராகவும் துணைத்தலைவர் போன்றும் அமர்த்தியவர் எதிர் பார்த்தவை. அவ் வெதிர்பார்ப்பு அண்மையிலோ பின்னரோ நிறைவேறும் என்பதும் எனக்குத் தெரியும். பேராசிரியர் சேது இலக்கணப் புலமையில்லாதவர்; இலக்கியப் புலமையும் பெரும்பாலும் பதவிக்கு வந்தபின் பெற்றவர். தனித்தமிழ்க் கொள்கையற்றவர்; வழக்கறிஞர். பேராசிரியர் தெ.பொ.மீ.சென்னைவாணர்; சென்னைத் தமிழையன்றிப் பாண்டிநாட்டுத் தமிழை யறியாதவர்; வேதாந்தியர்;(இரண்டன்மைக் கொள்கை யர்); வையாபுரி வழியினர்; வழக்கறிஞர்; பேராயக்கட்சியர்; தமிழாராய்ச்சி நிரம்பாதவர்; சமற்கிருதத்தைத் தலைமையாகக் கொண்டவர்; (ஆயினும் பேராசிரியர் சேதுபோலாது தம் கொள்கையை வெளிப்படையாய்க் கூறுபவர். திரு.வையாபுரி போன்றே பெரும்புலமை பெற்றவர். தனித்தமிழ்க் கொள்கையும் குமரித் தமிழ் நம்பிக்கையும் அற்றவர். குழுவாருள் தமிழ்ப் பற்றுள்ள பிற உறுப்பினரோ,பெரும்பதவியும் செல்வாக்கு முள்ள பிராமணரையும் சமற்கிருதப் பேராசிரியரையும் காணின், விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கின்றவர். ஓரிருவர் அங்குமிங்கும் சாரும் இருதலைமணியார்; எதற்கிணங்கியும் பதவியை இறுகப் பற்றிக்கொள்பவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக அதிகாரிகளோ அரசியலாரைத் தழுவியும் வருவாயைக் கவனித்தும் ஒழுக வேண்டியவர். இந்நிலையில் அண்ணாமலைநகர் செல்வதா இல்லையா என்று மீண்டும் சூழ்வு பிறந்தது. என் நண்பரெலாம் செல்லவே தூண்டினர். எனக்கு அகவை அன்று 54. அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் அகவை. அதற்குமேல் ஓராண்டு நீடிப்புக் கிடைக்கலாம். ஆகவே, ஈராண்டிற்குமேல் இச் சேலங் கல்லூரியில் இருத்தல் இயலாது. அண்ணாமலை செல்லின் ஐந்தாண்டேனும் ஈராண்டேனும் அலுவலிருக்கும்.அதற்குள் தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியையும் ஒருவாறு தொகுத்துவிடலாம். அதன்பின் வேலை இருப்பினும் சரி, இல்லாவிடினும் சரி என்றிவ்வாறு எண்ணிச் செல்லவே துணிந்தேன். என் உண்மை நண்பரும் நீங்கள் திராவிட மொழியாராய்ச்சிக் குழுவில் செயலாளராக விருப்பதால், இடர்ப்பாடுகள் நேரினும் எதிர்த்துக்கொண்டு சமாளிக்கலாம் என்று ஊக்கினர். பணிசெயற்படலம் முதற்பகுதி நான் சேலங் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனும் பேராசிரியனுமா யிருந்த பொழுது, 1956ஆம் ஆண்டு 6ஆம் மாத இறுதியில், 26-6-1956 என்னும் பக்கல் (தேதி) இட்டு அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. மீனாட்சிசுந்தரனாரிடமிருந்து எனக்கு வந்த அமர்த்தோலையில், பல்கலைக்கழக ஆசிரிய வூதியம்பற்றிய நெறிகட்கு உட்பட்டு, 270-25-500 உருபா என்னும் சம்பளத் திட்டத்தில் மாதத்திற்கு 250 உருபாவும் அரசியலார் விழுக்காட்டுப்படி அருந்தற்படியும் பெறுமாறு, ஓராண்டிற்கு நான் ஆய்வு நிலையில் அமர்த்தப் பட்டிருப்பதாகவும், தமிழாராய்ச்சித்துறைத் தலைவரிடம் சென்று வேலையை ஒப்புக்கொள்ளும்படியும் குறித்திருந்தது. அதையடுத்து 6-7-1956 என்னும் பக்கலிட்டு வந்த திருமுகத்தில், நான் பதிவாளரிடம் சென்று வேலையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், மொழிநூல் துறைத் தலைவராகப் பேராசிரியர் ஒருவர் அமர்த்தப் பெறுவாரென்றும். அத் துறை வேலையை வழிப்படுத்தப் பெயர் பெற்ற தமிழறிஞரைக் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பெறு மென்றும், குறித்திருந்தது. யார் யார் அக் குழுவுறுப்பினர் என்பது அன்று தெரிந்திலது. ஆயினும் ஒருசிலரை உய்த்தறிந்து கொண்டேன். எனக்கு அண்ணாமலை பல்கலைக்கழக வேலையமர்த்தம் கல்வியாண்டு தொடங்கியபின் ஆனதினால், பள்ளிகளிற் சேர்ந்து படித்துக்கொண்டிருந்த என் மக்களை உடன் கொண்டுசெல்ல வியலாமல், அண்ணாமலை நகருக்குத் தனித்தே செல்ல நேர்ந்தது. சேலம் நகராண்மைக் கல்லூரியினின்று விடுவிப்புப் பெறச் சின்னாட் சென்றுவிட்டமையால், 12-7-56 அன்றே அ.ம.ப.க.க. வேலையை ஒப்புக்கொள்ள இயன்றது. அண்ணாமலைநகர் சென்றவுடன் பல்கலைக்கழக வீடு எனக்குக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வாய்ப்பு, பேராசிரியர், துணைப்பேராசிரியர், விரிவுரையாளர் ஆகிய முத்திறத்தார்க்கும், முறையே, தலையிடை கடையாம். எனினும், துணைக் கண்காணகர் திரு. நாராயணசாமியார் கண்ணோட்டத்தாலும் பதிவாளர் அன்பாலும், விருந்தினர் விடுதியில் எனக்கு ஏந்தான (வசதியான) இடங் கிடைத்தது. அதோடு ஒரு கிழமைக்குள், கொற்றவன்குடி விரிவுரையாளர் குடியிருப்பு வரிசையில் 7ஆம் எண் உறையுளும் ஒதுக்கப்பட்டது. அது வெறுமையானவுடன், அதிற் குடியமர்ந்து கொண்டேன். ஓராண்டு தனித்திருக்க நேர்ந்ததினாலும், உண்டிச்சாலை உணவு என் உடம்பிற் கொவ்வாமையாலும், முதலாண்டு முழுதும் நானே சமைத்துண்டேன். கைச்சமையல் உடல் நலத்திற் கேற்றதேனும், நான் விரும்பியவாறு முழு நேரமும் பல்கலைக்கழகப் பணிக்குச் செலவிட முடியாது போயிற்று. 12.9.1956அன்று துணைக் கண்காண கரிடமிருந்து ஓர் ஓலை வந்தது. அதன் உள்ளடக்கம் (மொழிபெயர்ப்பு) வருமாறு: “ï¥ பல்கலைக்கழகத்திற் புதிதாய் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பிய ல் மொழித் துறையைச் சேர்ந்த வாசகர்க்கு அறிவுரை கூறவும், வழிகாட்டவும், அவர் பணியைப்பற்றி உசாவவும் ஒரு திறவோர்குழு இப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டுள்ளதென்று நான் கூற வேண்டியுளது. அக் குழுத் தலைவர் காளிக்கோட்ட மேலை வங்கச் சட்டமன்றத் தலைவர் பண்டாரகர் (எசு. கே.) சட்டர்சி. இப் பல்கலைக்கழக ஒப்பியல் மொழித்துறை வாசகரான திரு. ஞா. தேவநேயப் பாவாணர், அக் குழுவின் உறுப்பினரும் செயலாளருமாவார். ஏனையுறுப்பின ராவார் : பண்டாரகர் (எசு.எம்.) f¤nu (v«.V.ã.v¢.o.), இயக்குநர், தெக்காணக் கல்லூரி, பட்டக் கல்விப் பின்னை ஆராய்ச்சிக்களரி, பூனா - 6. திரு (ஏ.) சுப்பையா அவர்கள், துணைத் தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கலைமன்றம், தெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை. பேரா. ரா.பி. nrJ mt®fŸ (ã.V.,ã.vš.), தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை. பேரா. லெ. பெ. கரு. இராமநாதன் அவர்கள், பண்டித வித்துவான், தமிழ்ப் பேராசிரியர் (கீழைக்கலை), அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். பர்.அ. áj«guehj‹ mt®fŸ, (v«.V., ãv¢.o.), தமிழ்ப் பேராசிரியர் (கலைத்துறை), அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர். பேரா. கோ. R¥ãukÂadh® (v«.V.,ã.vš.), தமிழ்ப் பேராசிரியர் (ஆராய்ச்சித் துறை), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர். பேரா. தெ.பொ. Ûdh£áRªju« (v«.V.,ã.vš., v«.X.vš.), தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், மண்டலக் கல்லூரி, சென்னை. திரு. (தி.என்.) Óf©ilah (v«.V.), கன்னடப் பேராசிரியர், கன்னடப் பல்கலைக்கழகம், தார்வார். [f‹dl«] திரு. கொரடா இராமகிருட்டிண ஐயா, மே/பா. மகாதேவ சாத்திரி, 33, சங்கராச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 5. [bjY§F] திரு. (எம்.பி.) ehuhznkd‹ (ã.V.), அடங்காப் பள்ளிகளின் ஓய்வுபெற்ற தலைமை உண்ணோட்டகர், 43, நந்தனார் குடியேற்றம், சைதாப்பேட்டை, சென்னை - 15. [kiyahs«] நீர் இக் குழுவில் உறுப்பினராயிருக்க ஒப்பி இப் புதுத் துறைப் பணிக்கு உம் அரிய பட்டறிவைக்கொண்டு உதவி நலம் புரியுமாறு உம்மை வேண்டு கின்றேன். இக் குழுச் சென்னையிலாவது அண்ணாமலை நகரிலாவது தேவைக் கேற்ப அடிக்கடி கூடும். அக் கூட்டங்கட்கு நீர் செல்வதற்கு, இப் பல்கலைக்கழக நெறிப்படி உமக்கு வழிச்செலவுப்படி தரப்படும். அக் குழுவில் உம் உறுப்பாண்மையை இயன்ற விரைவில் ஏற்றுதவுமாறு வேண்டிக்கொள்கின்றேன். இங்ஙனம் என் இசைவை வேண்டுவதுபோல் எழுதப் பட்டிருந்ததேனும், எல்லாத் திட்டங்களும் அமைப்புகளும் என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை யென்றும், அவற்றிற்கெல்லாம் வினைமுதல்கள் அண்ணாமலை பல்கலைக்கழக மொழிநூல் துறையை அரக்கர்போல் ஆட்டிவைக்கும் இரு தமிழ்ப்பேராசிரியரென் றும் உணர்ந்துகொண்டேன். ஆதலால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வேண்டின், ஆரியத் தலைமையை யேற்றுத் தமிழைக் காட்டிக் கொடுத்தல் தவிர மற்றெல்லா நிலைப்பாடுகட்கும் இணங்கியே ஆகல் வேண்டும் என்னும் முடிவிற்கு வந்துவிட்டேன். குழுவுறுப்பினர் பன்னிருவருட் பெரும்பாலார் ஆரியச் சார்பாயிருத்தலின், பர். அரசமாணிக்கனாரையும் பர். மு.வ. வையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளுமாறு துணைக் கண்காணகரை வேண்டினேன். அவர்களும் இசைந்தார்கள். ஆயினும் நான் எதிர்பார்த்தவாறு என் கை வலியுறவில்லை. ஆரியம் அத்துணை ஓங்கியிருந்தது. புதிதாய் இருவர் சேர்க்கப் பெற்றதினாலோ, பிறிதொரு கரணியத்தாலோ, பின்னர் மாற்றி அமைக்கப்பட்ட குழுவில் திரு. கொரடா இராமகிருட்டிண ஐயாவும் திரு. நாராயண மேனனும் இடம்பெறவில்லை. சென்னை மண்டலக் கல்லூரிச் சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தனார் (எம்.ஏ.) ஒரு புத்துறுப்பின ராயினர். மொழிநூல் துறையின் முதற்பணி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பென்று விளம்பரஞ் செய்யப்பட்டிருந்ததேனும், குழு ஆற்றுப்படுத்திய வாறே என் பணி நடைபெறல் வேண்டுமென்று அமர்த்தோலைப் பின்னிணைப்பிற் குறிக்கப்பட்டிருந்ததால், குழுக்கூடும் வரை அப் பணியிலீடுபட என்னால் இயல வில்லை. ஆராய்ச்சித்துறைக் கூடத்தில் மொழிநூல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடமும், ஒரு நாற்காலியும், ஒரு நிலைமேடையும் (மேசையும்) தவிர வேறொன்றுமில்லாமலும், ஒரு நெடும்பக்கம் மறைப்பின்றியும் இருந்தது. பன்னாட்பின் 8-4-1957 அன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத் திராவிட மொழிநூல் துறைத் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் தவிர உறுப்பினர் அனைவரும் வந்திருந்தனர். தலைவர் பர். சட்டர்சி விரிவான தலைமையுரையொன்று நிகழ்த்தினார். கூட்டம் முழுதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. செயலாளர் என்ற முறையில், நான் ஒர் அறிக்கை எழுதிப் படித்தேன். தலைவர் தம் உரையிடையே ஒவ்வொரு நாட்டிலும் நாகரிகம் அந் நாட்டு மொழியோடு தொடர்புள்ளது. இந்திய நாகரிகமெல்லாம் சமற்கிருத இலக்கியத்திலேயே எழுதப்பட்டுள்ளது. ஆதலால் இந்திய நாகரிகம் ஆரியரதே என்று கூறியதால், என் அறிக்கையையொட்டி, இந்திய நாகரிக மெல்லாம் முதன் முதல் தமிழிலக்கியத்திலேயே எழுதப்பட்டிருந்தது. அவ் விலக்கியம் முழுதும் இறந்துபட்டபின், அதன் மொழிபெயர்ப்பான சமற்கிருத இலக்கியமே மூலம்போற் காட்சியளிக்கின்றது. ஒரு புகைவண்டி வழிப்போக்கன் கையிற் சீட்டில்லாவிடின், அம்மட்டிலேயே அவன் சீட்டு வாங்காமற் செல்பவன் என்று முடிவு கொண்டு விடமுடியாது. ஒருகால் சீட்டுத் தவறிப் போயிருக்கலாம்; அல்லது அடுத்தவன் திருடியிருப்பான் என்றுரைத்து அவர் கூற்றை மறுக்க வேண்டியதாயிற்று. கூட்டம் முடிந்தபின், பர். சட்டர்சி புன்னகையுடன், திருவாளர் தேவநேயரீர்! நீர் அந்தச் சீட்டைக் காட்ட வேண்டும் என்று விளையாட்டாகவும் வினையாகவும் சொன்னார். நான் சீட்டுக் காட்டமுடியாது; ஆயின், சீட்டு வாங்கியதற்குச் சான்று காட்டமுடியும் என்று செப்பினேன். அவர் உள்ளத்திற் கள்ளமற்றவர்தாம். ஆயின், தமிழைப்பற்றி அவருக்குத் தெள்ளிய அறிவில்லை. இதற்குத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே பொறுப்பாளர். பர். சேதுவோ, `இனிமேல் அந்தப் புகைவண்டிச் சீட்டுவமையை எங்கும் சொல்லாதீர்கள் என்று நல்லது சொல்வதுபோல் எச்சரித்தார். பர். கத்தரே என்னைப்பற்றிய கருத்தை உள்ளத்தில் மறைவாய் வைத்துக்கொண்டார். அன்று எற்பாடு (சாயுங்காலம்), பர். சட்டர்சியைச் சிறப்பிக்க ஒரு சிற்றுண்டி விருந்து நடந்தது. அதில் அவரைப் பாராட்டிப் பேசிய பர். சேது, அவர் தம் பெயரை நன்னெறி முருகன் என்று குறிப்பிடுவர் என்றும், தமிழ்ப்பற்று நிரம்பியவர் என்றும், சிறப்பாய்க் குறிப்பிட்டார். அதன் உட்குறிப்பு மொழிநூல் பற்றிய அவரது நடுநிலை முடிபே கொள்ளத்தக்கதென்றும், தமிழ் வெறியால் தேவநேயன் கூறுவது தள்ளத்தக்கதென்பதுமே. தமிழ் கெடினும் கெடுக; தேவநேயன் பெயர் ஓங்கக் கூடா தென்பதே அவர் குறிக்கோள். பர். சட்டர்சிக்குத் தமிழ் தெரியாது. அதிற் பேசவோ எழுதவோ அவருக்கு இயலாது. தமிழைப்பற்றி ஆங்கில நூல் வாயிலாகவே கற்றவர். சுநீதி குமார் சட்டர்சி என்னும் தம் பெயரின் முன்னிரு சொற்களை மட்டும் நன்னெறி முருகன் என்று மொழிபெயர்த்து, அவற்றைத் தமிழெழுத்திற் குறிக்கக் கற்றிருக்கின்றார். நெறி என்பது வழி அல்லது விதி. நீதியைக் குறிக்க அதினுஞ் சிறந்த சொற்கள் நயம், நேர்மை என்பன. குமார் என்பது குமரன் (=KUf‹) என்னும் தென் சொல்லின் திரிபே. ஆயின், முருகன் ஆரியத்தெய்வம் என்பது, முருகன் என்பது சுப்பிரமணியன் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பென்பதும் அவர் நம்பிக்கை. தமிழை ஆங்கில வாயிலாய்க் கற்றதினால், சில தமிழ் நூற்பெயர் களைக்கூட அவர் சரியாய் ஒலிப்பதில்லை. பத்துப்பாட்டு என்பதைப் பத்துப்பத்து என்று அண்ணாமலை நகரில் ஒரு முறை படித்தார். வேறிடங்களில் பட்பட் என்றும் பட்டுப்பட்டு என்றும் படித்ததாகக் கேள்வி. தொடக்கக் கூட்டத்திற்கு மறுநாட்காலை குழுக்கூட்டம் நடைபெற்றது. அதிற் பின்வருமாறு முடிவுகள் செய்யப்பட்டன: 1. பரோ என்னும் ஆங்கிலப் பேராசிரியரையாவது, எமனோ என்னும் அமெரிக்கப் பேராசிரியரையாவது அண்ணாமலை பல்கலைக்கழக மொழிநூல் துறைப் பேராசிரியராக அமர்த்தல் வேண்டும். 2. வாசகராகவிருக்கும் ஞா. தேவநேயனார் தாம் தொகுக்கவிருக்கும் தமிழ்ச்சொற் பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக, முதற்கண் யாவேனும் ஐம்பது சொற்கட்கு எழுதிக் காட்டல் வேண்டும். அதற்குக் கையாளும் நெறிமுறைகளையும் குறிப்பிடல் வேண்டும். 3. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்மொழிக்கும் ஒவ்வொரு விரிவுரையாளரை அமர்த்தல் வேண்டும். 4. கழக (சங்க) இலக்கியத்தை ஒவ்வொரு நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வரிபெயர்த்தும், பொருளும் மொழியமைதியும் அயலார்க்கு விளங்குமாறு வெளியிடுதல் வேண்டும். குறிப்பு : இதற்கு முந்திய கட்டுரை முழுதும் நினைவிலிருந்தெழுதியதால், குழுவமைப்பையும் அதன் உறுப்பாண்மையும் பற்றிய சில செய்திகள் பிறழக் கூறப்பட்டுள்ளன. இக் கட்டுரையிற் கூறப்பட்டுள்ளனவே சரியெனக் கொள்க. பணிசெயற்படலம் 2ஆம் பகுதி அண்ணாமலை பல்கலைக்கழகத் திராவிட மொழியியற் குழுவின் முதற் கூட்டத்தில் முடிபு செய்தவாறு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்மொழிக்கும் ஒவ்வொரு விரிவுரையாளரை அமர்த்த முயற்சி தொடங்கியது. முதற்கண் திருவாளர் இராதாகிருட்டிணனார் (எம்.ஏ.) தமிழுக்கு அமர்த்தப் பெற்றார். இவர் பூனாத் தெக்காணக் கல்லூரி நடத்திவரும் வேனிற் பள்ளியிலும் (இலை) உதிர்காலப் பள்ளியிலும் வண்ணனை மொழியியற் பயிற்சி பெற்றவர். நானும், எனக்குப் பணிக்கப்பட்டவாறு, நான் தொகுக்கவிருந்த தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக, ஐம்பது சொற்கட்கு வேரும் வரலாறும் பொருளும் விளக்கமும் எழுதத் தொடங்கினேன். வழக்கப்படி, தெக்காணக் கல்லூரியின் வேனில் மொழியியற்பள்ளி மேழ (சித்திரை) மாத நடுவில் (அதாவது மே மாத முதலாம் பக்கல்) தொடங்குமென அறிவிப்பு வந்தது. என் மொழிநூற் கல்விப் பரப்பையும் ஆராய்ச்சி யாழத்தையும் நிலைத்த கொள்கையையும் மாறா மனப்பான்மையையும் வாழ்க்கைக் குறிக்கோளையும் அறியாத என் எதிரிகள், என்னைத் தம்வழித் திருப்புமாறு, துணைக் கண்காணகர் திரு. நாராயணசாமியார் அவர்களிடம் சென்று, என்னை மேற்குறித்த வேனில் மொழியியற் பள்ளிக்குப் பயிற்சிபெற அனுப்ப வேண்டு மென்று வேண்டியதாகத் தெரிகின்றது. துணைக் கண்காணகரும் என் விருப்பத்தை வினவினார்கள். இறைவனருளால், அற்றைப் பள்ளி தேராதூனில் (Dehra Dun) நடைபெற்றது. பல்வகைப் பயனையும் முன்னோக்கிப் பெருமகிழ்ச்சியுடன் உடனே இசைந்தேன். பின்பு, இருதிசை வழிச்செலவிற்கும் ஒன்றரை மாதத் தங்கற்கும் பல்கலைக்கழகத்திற் பணம் பெற்றுக்கொண்டு, தேராதூன் சென்றேன். பல்வேறு நாட்டினரும் பல்வேறு மொழியினரும் பல்வேறு மதத்தினரும் பல்வேறு இனத்தினரும் பல்வேறு குலத்தினருமான ஆசிரியரும் மாணவரும், அங்கு ஒன்று கூடி உடன்பிறப்புப்போற் பழகியது மிக்க மகிழ்ச்சியைத் தந்து கிளர்ச்சியை உண்டு பண்ணியது. வண்ணனை மொழியியல் என்ன வென்பது ஏற்கெனவே அறிஞர் கிளீசன் எழுதிய வண்ணனை மொழியியற் புகுநூல் (An Introduction to Descriptive Linguistics) வாயிலாய் அறிந்திருந்தேனெனினும். அதன் முழுப்பரப்பையும் பயிற்சி முறையையும் தேராதூன் பள்ளியில்தான் தெளிவாகக் கண்டேன். கடவை (Course) யிறுதியில் நிகழ்ந்த தேர்விலும் தேறினேன். ஆயின், அஃது எனக்கும் உண்மையான மொழிநூற்கும் பயன்படுவதன்று. வடநாட்டு மக்களின் வாழ்க்கை முறையும் மொழிவழக்கும், ஆக்ரா (Agra) தில்லி (Delhi)¡ காட்சிகளும் கங்கையாறும் பனிமலையும் பற்றிய அறிவே, இவ் வுலகில் எனக்கு என்றும் பயன் தரும். இதுபற்றி என் எதிரிகட்கும் நன்றிகூறும் கடப்பாடுடையேன். தேராதூன் பள்ளியில் பயின்றபோது, தமிழில் நால் நிறத்திற்கே சொற்களுண்டென்று பேராசிரியர் தெ.பொ. மீ. கூறியதாகக் கிளீசன் துரை வகுப்பிற் சொன்னதும்; அப் பேராசிரியரின் சென்னை மாணவியர் Bank என்பதற்குத் தமிழ்ச்சொல் பாங்கி என்று வகுப்பில் எழுந்து அத் துரை மகனார்க்கு விடையிறுத்ததும்; பேரா. சீகண்டையா ஹொன் என்னும் கன்னடச் சொல் பொன் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபென்று மாணவர்க்குக் கூறிய போது, வண்ணனை மொழியியல் வகுப்பில் வரலாற்று மொழியியலைப் புகுத்தல் தகாது என்று பேரா. தெ. பொ. மீ. கண்டித்ததும், தமிழில் எட்டு வேற்றுமையும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றினவென்று கால்டுவெல் தவறாகக் கூறியதை மறுக்காது, அதையே தேற்றஞ் செய்து வடநாட்டுத் தமிழ் மாணவர்க்குத் தமிழைப்பற்றித் தாழ்வான எண்ணம் படுமாறு அவர் கற்பித்ததாக நான் கேள்விப்பட்டதும் மிக வருந்தத்தக்க செய்திகளாகும். வேனிற் பள்ளி முடிந்தபின் அண்ணா மலைநகர் திரும்பினேன். பர். சட்டர்சியின் அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறைத் திறப்புவிழாத் தலைமையுரை, பின்னர் நீட்டியுங் கூட்டியும் வரையப்பட்டு வெளியிடப் பெற்றது. அது பகுதியளவில் (demy size) சிறு குக்கில் (small pica) எழுத்தில் 34 பக்கங்கொண்டது. அதில், அவர் தமிழைப் பற்றிய தம் மதிப்பீட்டைப் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார்: “c©ikÆš கழக (சங்க) இலக்கியமென்னும் பழந்தமிழிலக்கியப் பகுதிகளை நான் முதன்முதல் (ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாய்ப்) படித்தபோது, சமற்கிருத இலக்கியத்திலும் மறைவில்லாது அதன் சூழ்வெளிக்கு அல்லது வட்டத்திற்கு உட்பட்ட பிற இந்திய இலக்கியத்திலும் இல்லாத புதுமையை அஃது அளித்ததைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். முதுபழங்காலத்துத் தமிழக் குமுகாய (சமுதாய)ச் சூழ்வெளி, இராமாயணம் மகாபாரதம் போன்ற வற்றாலும், புராணங்களாலும், செந்திறச் சமற்கிருத இலக்கியத்தாலும், வட இந்திய ஆரிய மொழிகளிற் போன்றே தென்னிந்தியத் திராவிட மொழிகளிலு மிருக்கும் இடைக்கால இலக்கியங்களாலும், காட்டப்பெறும் சூழ்வெளியினின்றும் வேறுபட்ட சில கூறுகளைக் காட்டுவதாய்த் தோன்றிற்று. தமிழிலக்கியத்தில் வாழ்க்கையை அடுக்கும் வழியும், அதன் மறநிலைச் சூழ்வெளியும், இந்திய இலக்கியத்துறைக் களத்தில் ஒரு தனிப்பட்ட நிலைமையைக் காட்டின. களவென்றும் கற்பென்றும் இருபெருந் தொகுதிகளாக அல்லது வகுப்பாகக் காதலை வகுத்த பழந்தமிழ் வகையீடு, ஆரிய இலக்கியம் என்பதின் அல்லது சமற்கிருதத்தின் கண்டிப்பான மரபியற் கருத்திற்கு மாறாகப் போவதாய்த் தோன்றிற்று. (களவென்பது வளர்ச்சியடைந்த இளந்தையரிடைப்பட்ட ஒருவகைக் கட்டுப்பாடற்ற காதலைக் குறிக்கும். இது, நன்று திருந்தின குமுகாயத்திற்போல் வளர்நிலையர் அல்லது இளந்தையரிடைப்பட்ட உறவியல்கள் சிறந்த முறையில் மரபியலொழுங்குபடுத்தப் பெறாத முந்தியல் மாந்தரினத்துள் மிக இயற்கையாகக் காணப்படுவதாகும். கற்பென்பது, சட்டமுறைத் திருமணத்தின் பிற்பட்ட ஒழுங்கான மரபியற் காதலைக் குறிக்கும். இஃது இருபாலிடைப்பட்ட உறவியல்களுள் முதன்மை பெற்றதாகும்) மீண்டும், தொல்காப்பிய நெறி மொழிகட்கு மூலமான முந்து தமிழ்நூல்களில் காதல் விரிவாகக் கூறப்பட்ட வகை, முற்றிலும் புதுமையானதாகவும் அனைத்திந்தியச் சமற்கிருத அடிப்படைச் சார்பற்றதாகவும், தோன்றிற்று. இங்ஙனம், வேறுபட்ட வாழ்க்கைக் கூறுகளும் பொருளியற் பண்பாட்டு நிலைக்களங்களும் காதலுணர்ச்சி பயிற்சிகளும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் விரிவான உள்ளிடை யுறவும், உண்மையில் அவை யிருக்கிறபடியே, அதாவது பழந் தமிழிலக்கியத்தின் ஒரு புது முதன்மையாகக் காட்சியளித்தன. இவையெல்லாம் காட்டும் கலைவனப்பும் புதுமையும் எனக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சியூட்டின. அதனால், இவ்வகையால் 1500 முதல் 2000 வரைப்பட்ட ஆண்டுகட்கு முந்திய தமிழகத்தை இந்தியாவின் பிற பாகங்களினின்றும் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டுவதொன் றுண்டென்னும் நிலைமையை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று, என் உள்ளத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. பண்டைத் தமிழிலக்கியத்திற் சமற்கிருதச் சொற்களும் கருத்துகளும் மிகக் குறைவென்று பழந்தமிழ் ஆர்வலர் சிலராலும் மிகத் திட்டவட்டமாய்ச் சொல்லப்பட்டது. இவ் விரு செய்திகளும், [fHf இலக்கியத்திற் ngh‹nw] தமிழிலக்கிய மரபு முற்றும் சமற்கிருதச் சார்பற்றதென நிலைநாட்டுவதாய்த் தோன்றின. இது, தமிழிலக்கியப் பண்பாடுகளின் புது முதன்மையிலும் ஒப்பியல் முன்மையிலும் எளிதாக உணரக்கூடியதும் முறைப் பட்டதுமான பெருமை கொள்வதற்கு உணர்வெழுப்பும் தேற்றமான ஊற்றாக உண்மையில் ஆகிவிட்டது; அதனால், பிரிவுணர்ச்சியை மிகுதியும் தூண்டி விட்டது. இவ் வுணர்ச்சி, இற்றை நாளில், குமுகாயம், அரசியல், சமயம் ஆகிய பிற துறைகளிலும் ஊக்கப் பெறுகின்றது. இதுவே ஒரு வெளியார்க்குத் தோன்றும் கருத்து. “jÄœ இங்ஙனமிருப்பினும், ஏறத்தாழ உடன் அடுத்தே, கழக நூல்களை முன்னினும் ஆழ்ந்து கற்று [Mdhš ஆங்கில மொழிபெயர்ப்பு thÆyhf¤jh‹] நான் அயலானேயல்லன் என்பதைக் கண்டேன். இன்புறுத்துவனவும் மிகத் திட்டவட்டமாய்ப் புதுமுதலானவுமான கூறுகளைக் கொண்டிருந்தும், மிகப் பழைய தமிழ் நூல்களிற் காணும் சூழ்வெளி உட்சாறான அல்லது அடிப்படையான செய்திகளில், மிகுதியும் மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் புராணங்களிலும் காண்பதாகவே யிருந்தது. கழக நூன்மொழி [eh‹ எங்கெங்கே மூலத்தை neh¡»D«] மிகப் பெரும்பால் இந்திய மொழிகளில் தூய தற்சமங்கள் அல்லது திரிபடையாச் சொற்கள் மிகுதியாயிருப்பதைக் கருதும் பொழுது, உண்மையில் புதுமையாகவே தோன்றிற்று. ஆனால் [Äf¥ ãªâ¤jh‹], சமற்கிருதச் சொற்களும் பிற ஆரியச் சொற்களும் தமிழிற் புகுந்து தன் சொல்லாகும் பொழுது அடையும் மாறுதல்களைப்பற்றி, அனவரதவிநாயகம் திறம்பட வரைந்த நூலைப் பார்வையிட்டபின், புதுமையாகவும் விளங்காமலுமிருந்த பல சொற்கள் தெளிவானவும் தெரிந்தனவுமாயின. புது முகங்களின் பின் அறிமுகங்கள் காட்சியளிக்கத் தொடங்கினவென்று சொல்ல வேண்டும். சமற்கிருதச் `சபா பழந்தமிழில் `அவை என்று திரிந்ததைக் கண்டபோது திடுக்கிட்டுவிட்டேன். இங்ஙனமே, சந்தி, சகசிர, [rf°u], அச [m#], பூர்வாசாட சிராவண [Þuhtz], காவ்ய, தர்ம, கோபால, கன்யகா, தூணா, [°özh], இசுத்தி [°¤ß], துலசீ, லோக்க, பிராமண [¥uhàkz], துரோணீ [¤nuhÙ], சிநேக் [°neA], தேச முதலிய நூற்றுக்கணக்கான சமற்கிருதச் சொற்களும் பெயர்களும் அதேபோல் வடிவு மாற்றப்பட்டும், அவ் வடிவு மாற்றத்தில் அந்தி, ஆயிரம், அயன், பூராடம், ஆவணி, காப்பியம், தருமம், கோவலன், கண்ணகி, தூணம், தி, துழாய், உலகு , பார்ப்பான்,தோணி, நேயம், தேயம் என்பன போல் வடிவு மறைந்தும், உள்ளன. யோ தேவ-நாமான் றகிலானி தகுதே பரம் பொருளே கடவுளின் பல்வேறு பெயர்களாலும் மக்களிடை வழங்கும் வெவ்வேறு தெய்வங்களாலும் அறியப்படுகின்றது. ஆகையால், விட்டுணுவை மால் அல்லது மாயோனிலும், குமாரனை முருகன் அல்லது சேயோனிலும், துர்க்கையைக் கொற்றவையிலும், வேறு சில தேவரையும் தேவியரையும் தென்னிந்தியாவில் வழங்கும் அவரின் புதுப் பெயர்களிலும் கண்டு மகிழ்ந்தேன். கருத்துலகும் சமயக் காட்சியுலகும் முற்றும் ஒத்திருந்தன. இவை சமற்கிருத இலக்கணத்திற்போல் பிராமண இந்து மதத்தையும், தழுவியவை. இவற்றிற்கு வேதங்கள் அடிப்படை. இவற்றைச் சார்ந்தவை வேள்வியும் தீ வளர்ப்பும், மலர்ப் பூசையும் தெய்வ வழிபாடும், நாற்பெருங் குலமும் நால்வகை வாழ்க்கை நிலையும் பற்றிய பிராமணக் கருத்துகளும் ஆகும். இந் நாற்குலமும் நால்வகை நிலையும் பண்டைத் தமிழகத்தாரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு கால், வடஇந்தியா விற்போல் அவை அடைந்த வளர்ச்சியில் அவரின் ஒத்தாசையும் பெற்றிருக்கலாம். இனி அவற்றொடு சமண புத்த மதங்களும் தமிழகத்திருந்தன. வினையும் [f®k] உலக வாழ்க்கையும் [[«[hu] பற்றிய பொதுவான பட்டாங்குநூற் கருத்துகளும் [âUtŸStÇ‹ உடன்பிறப்பாட்டியரான ஔவையாரால் ஒரு பெரு வழக்கான வெண்பாவில் மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் இயல் tiuaW¡f¥g£l] அறம் பொருளின்பம் வீடு [j®kh®¤j காம nkhB] என்னும் நாற்பால் [rJ®t®¡f] பற்றிய ஏடல்களும், வேறுபல அனைத்திந்தியக் கருத்துகளும் அங்குள்ளன. இந்தியாவின் தலைசிறந்த செவியறிவுறூஉச் செய்யுளான திருக்குறள் முப்பாலை (âÇt®¡f) மட்டும் எடுத்துக் கூறியது, தக்கதே என்று எனக்குப் பட்டது, அதன் ஆசிரியரான பேரறிவர் தம் அறிவுடைமையால், நாலாம் பாலாகிய வீட்டைப்பற்றிக் கூறாது, அதுபற்றிய கருத்தை, காணப்படாத மெய்ப்பொருளை அவரவர் அடையும் வழிக்கேற்பத் தனிப்பட்டவர்க்கு விட்டுவிட்டார். ஒருவன் தன் பாட்டிக்கு (நூல் நூற்கக்) கற்றுக் கொடுப்பது அடாச் செயலே. கொல்லத் தெருவில் ஊசிவிற்க வேண்டியதில்லை. நெடுநாளுக்கு முன் என் மனத்தில் உரத்துப்பட்டது என்னவென்றால். பழந் தமிழிலக்கியம் மிக மிக இன்பந்தரும் கூறுகளிற் சிலவற்றை அமைக்கும் வெளிப்படையானவும் மேற்பட்டுத் தோன்றுவனவுமான பல புது முதன்மைக் குறிப்புகளைக் கொண்டிருப்பினும், சமற்கிருதத்தினின்றும் ஏனை யிந்திய யிலக்கியத்தினின்றும் பிரிக்கப்பட முடியாதென்பதும். இந்து என்னும் சொல்லை அதன் மிகப்பெரு விரிவான பொருளில் ஆண்டால், அது (பழந்தமிழிலக்கியம்) பெரிதும் அனைத்திந்திய இந்து இலக்கிய வட்டத்திற்கு உட்பட்டதென்பதும், இவைபற்றி ஐயம் ஏதும் இருக்க முடியாதென்பதுமே. இது, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை தரும் நாயன்மாரென்னும் சிவத்தூயரும் ஆழ்வா ரென்னும் திருமாலடியாரும் இயற்றிய பாடல்கள் பற்றிய செய்தியில் மிக வுண்மை யாகும். அப் பாடல்கள் தம் ஆழமுடைமையாலும் அழகினாலும், தம் தேவியல் மாந்தியல் தன்மையாலும், இந்த வுலகத்திற்கு மட்டுமன்றி மன்பதை முழுவதற்கு முள்ள ஆவிக்குரிய வாழ்வையும் நாட்டங் களையும் வளம்படுத்தியுள்ளன. சூழ்வெளி = atmosphere. ஏடல் = idea. பட்டாங்கு நூல் = philosophy. 2. இந்திய இனமொழிப் பண்பாட்டுக் கலப்பு செய்தியின் உண்மை அடிப்படையில் இதுவாகும் (வெவ்வேறு குழுவில் தோன்றிய) பல்வேறுவகைப் பண்பாடுகள் ஒன்றுகூடி ஒரே வாழ்நிலையில் வளர்வதால். பெரிதோ சிறிதோ ஒத்த பொருளாட்சி நிலைமையோடும் பொது வரலாற்றோடும் கூடிய ஒரு சிறப்புவகைப் பண்பாடு ஒரு குறிப்பிட்ட நிலவெல்லைக்குள் தோன்றுகின்றது. இதைச் சுருக்கமாய்ச் சொன்னால், நாட்டினப் பண்பாடுகளின் தொடர்பாலும் முரண்பாட்டாலும் ஒப்புரவாதலாலும் எழுகின்றன என லாம். புதிய வுலகத்தில் இதுவே நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இனப் பண்பாட்டுக் கலப்பிற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளுள் ஒன்று இந்தியாவாற் காட்டப்படுகின்றது. அதன் பெருமைக்கும் முற்றுந் தழுவியற்கும், இற்றை நாளில் அமெரிக்காவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இனப் பண்பாட்டுக் கலப்புக்கூட இணையன்று. இப் புலனத்தைப்பற்றி மீண்டும் ஒருமுறை பேசத் தேவையில்லை. நான் முற்கூறியபடி, இதைப்பற்றிய என் கருத்துகளை வேறோரிடத்தில் தெரிவித்திருக்கின்றேன். நமக்குள்ள இந்துப் பண்பாடென்னும் இந்தியாவின் பழமையான பண்பாடு, எண்ணுக்கு மெட்டாத காலத்திலேயே இந்தியாவிற்கு வந்து, அதன் மண்ணிற் பக்கம் பக்கமாய் வாழ்ந்த பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனத்தாரின் கூட்டுவேலை என்னும் பேருண்மை, இன்று நிலவுகின்றது. இருக்கக்கூடிய வகையில், கோல் இனத்தாரின் முன்னோராகிய நிசாதர் அல்லது ஆத்திரியரே இக் கலவைப் பண்பாட்டின் முற்கூறுகளை அமைத்தவராவார். அவர்க்கு முந்தி வந்தவரும் இந்திய நிலத்தினின்று மறைந்து போனவராகத் தெரிபவருமான நீக்கிரோவரை விட்டுவிடலாம். பின்பு, முதற்கண் நண்ணிலக் கடற்கரைவாணராயிருந்தவரும் கிரேக்க நாட்டிலும் அதைச் சேர்ந்த தீவுகளிலும் மேலைச் சின்ன ஆசியாவிலும், எல்லெனிய முன்னை ஆயேகிய நாகரிகத்தை அமைத்தவரொடு தொடர்புகொண்டவருமாகச் சிலரால் நம்பப்படுகின்ற (இதுவே என் கருத்தும்) திராவிட மொழியாளர் வந்தனர். அதன்பின், சீன திபேத்திய மொழிகளைப் பேசும் கிராதர் அல்லது மங்கோலியர், இந்திய மாந்தனின் அமைப்பில் மூன்றாம் பெருங்கூறாய் வந்தமைந்தனர். ஆயின், அவர்களின் செல்வாக்கு தெக்காணத்திற்குத் தெற்கே சென்றதாகத் தெரியவில்லை. இறுதியாக, நம் ஆரியர் வந்து, இந்திய நாகரிகத்தை முற்றுவித்து, அதன் அமைப்பிற்குச் சமற்கிருதம் ஆகிய முதன்மையான வெளியீட்டு வாயிலைத் தந்துதவினார்கள். அவர்கள் இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக அல்லது ஆளும் இனமாக வந்து, தமக்கு முந்திய இனத்தாரையெல்லாம் மேற்கொண்டார்கள். ஆயின், கிரேக்க நாடு தன்னைச் சிறைபிடித்தவரைச் சிறைபிடித்த நிலைமை இந்தியாவிலும் ஏற்பட்டது. ஆரியமொழி, நிசாத அல்லது ஆத்திரிய மொழிகளும் சீன - திபேத்திய மொழிகளும் திராவிட மொழிகளும், பேசிய மக்கள் பக்கம் பக்கமாக வாழ்ந்துகொண்டிருந்த வடஇந்தியாவில், உள்ள மொழிக் குழப்பத்திலும் முரண்பாட்டிலும், ஒன்றுபடுத்தி யிணைக்கும் கருவி என ஆயிற்று. வடஇந்தியாவில் ஆரிய முன்னை மக்களால் ஏற்கெனவே ஏற்பட்ட மொழிக் குழப்பத்தில் ஆரிய மொழிக்கு அதன் பெரு வாய்ப்பிருந்தது. பெருந்திரளான வடஇந்திய மக்கள் ஆரிய மொழியை ஏற்றுக்கொண்டு, அதைத் தங்கள் தேவைக்கேற்பச் சரிப்படுத்தும் நிலையில் அதைப் பெரிதும் மாற்றினார்கள். அதனால், அது வேத மொழியிலிருந்து இலக்கியச் சமற்கிருதமாக வும் அதே சமயத்திற் பழம் பிராகிருதங்களாகவும், அதன்பின் இற்றை மொழிகளாகிய புதிய இந்தாரிய மொழிகளாகவும் பெயர்ந்தது. பர். சட்டர்சி தலைமையுரை, (ப. 18, 19). இக் கருத்துகளைக் காணின், அண்மையில் நீலகண்ட (சாத்திரியார்) தமிழ் வரலாறும் பண்பாடும் என்னும் நூலில் தமிழரைத் தாழ்த்திக் கூறியிருப்பது புதுமையாகத் தோன்றாது. ஏற்கெனவே 1952ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட நந்த மௌரியர் காலம் (Age of the Nandas and Mauryos) என்னும் தொகுப்பு நூலில், பர். சட்டர்சி பர். இராகவனுடன் இணைந்தெழுதிய மொழியிலக்கியப் பகுதியில். இக் கருத்துகளே கூறப்பட்டுள்ளன. 1955-ல் வெளிவந்த தென்னிந்திய வரலாறு (A History of South India) என்னும் (பேரா. நீலகண்ட சாத்திரியார் எழுதிய) நூலிலும், தமிழர் தாழ்த்தியே கூறப்பட்டுள்ளனர். ஆயினும் என்னைத் தவிர வேறொரு வரும் எதிர்க்கவில்லை. மூவகைக் காப்பாருள் வந்தபின் காப்பாராகக்கூடத் தமிழர் இல்லை; வந்தபின் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் அளவினராகவே யுள்ளனர். அதுவும் விரல்விட் டெண்ணத்தக்க ஒரு சிலரே. பர். சட்டர்சி தலைமையுரையில், தமிழுக்கு மிகக் கேடானதும் அவரையும் மிக இழிவு படுத்துவதுமான செய்தி எதுவெனின், ஸ்த்ரீ என்னும் வடசொல் தி என்னும் பெண்பாலீறாகத் திரிந்தமைந்தது என்பதே. பத்தாண்டிற்குமுன், இப் பொருள்பற்றிய கட்டுரை மதுரைக் கல்லூரி ஆண்டுமலரில் வெளிவந்ததாகச் சொல்லப்பட்டது. நான் அதைச் செந்தமிழ்ச் செல்வியில் மறுத்தேன். ஆதலால், அதோடு அது நின்றுவிட்டதென்று கருதினேன். ஆயின், பர். சட்டர்சி இந்தியச் சமற்கிருதக் குழுத் தலைவராய்த் தமிழ்நாடு வந்த பொழுது, அது மீண்டும் புத்துயிர் பெற்றெழுந்துவிட்டது. தமிழிற் பெண்பால் காட்டும் ஈறு வடமொழி வருமுன் இல்லையாம். ஸ்த்ரீ என்னும் பெயர், வண்ணான், தட்டான் முதலிய பெயர்களோடு சேர்ந்து, வண்ணான் + ஸ்த்ரீ = வண்ணாத்தி, தட்டான் + ஸ்த்ரீ = தட்டாத்தி என்றானதாம். இதைத் தமிழ் பயிலும் கடை மாணவர்கூடக் கடிந்து சினப்பரே! முருகன் ஆரியர் வருகைக்கு முற்பட்ட தூய தமிழ்த் தெய்வமென்பது வெள்ளிடை மலையாய் விளங்கித் தோன்றவும், சுப்பிரமணியன் என்பதைத் தமிழர் முருகன் என்று மொழிபெயர்த்துக் கொண்டனரென்று பர். சட்டர்சி கூறியிருக் கின்றார். அதை ஒருவரும் எதிர்க்காததினாலேயே, அண்மையிற் பேரா. நீலகண்ட சாத்திரியார் முருகன் ஆரியத் தெய்வமென்று கூற முனைந்திருக்கின்றார். ஸகஸ்ர என்பது ஆயிரம் என்றும், பிராமண என்பது பார்ப்பான் என்றும், கன்யகா என்பது கண்ணகி என்றும், ஸ்தூணா என்பது தூண் என்றும், லோக என்பது உலகம் என்றும், த்ரோணீ என்பது தோணி என்றும், ஸ்நேக என்பது நேயம் என்றும் âǪjdbt‹W«; விஷ்ணு, குமார, துர்கா என்பவற்றை, முறையே, மால் அல்லது மாயோன், முருகன் அல்லது சேயோன், கொற்றவை என்றும் திரிவர்க என்பதை முப்பால் என்றும், தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்பவற்றை அறம், பொருள், இன்பம், வீடு என்றும், தமிழர் மொழிபெயர்த்துக் கொண்டனரென்றும், அவர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும், கலவை மொழியாரும் கலவை இனத்தாரும் கலவை நாகரிகருமாவார் என்றும்; கூறிய பின், தமிழ் என ஒரு மொழி உளதோ? தமிழன் என ஓர் இனவன் உளனோ? தமிழாசிரியரும் தமிழ் மாணவரும் தமிழன்பரும் கருதிக் காண்க. பர். சட்டர்சியின் கட்டுரைப் படிகள் சில பெற்றுத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப் புலவர் சிலரிடமும் தமிழன்பர் சிலரிடமும் காட்டினேன். அவருட் சிலர் வருந்தினர்; பலர் அதுவுமில்லை. மேற்கொண்டு சில படிகள் கேட்டபொழுது கிடைக்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளரால் அது பரவுவது தடுக்கப்பட்ட தென்று தெரிந்தது. அதன் பின் நான் நேரிற் சென்று பதிவாளரிடம் கேட்டேன். அவர்கள் வேண்டியவர் எனக்கு நேராக எழுதிப் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டார்கள். சில மாதம் பொறுத்து, பர். சட்டர்சி அண்ணாமலை நகர் வந்து நான் தொகுக்கவிருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையான, ஐம்பான் சொல் விளக்கச் சுவடியைப் பார்வையிட்டனர். எடுத்த அடியிலேயே, தமிழர் குமரிக்கண்டத்தினின்று வந்தவரென்னும் உண்மை வரலாற்றுக் கூற்றையும், அச்சன் என்பது அத்தன் என்னும் தென்சொல்லின் திரிபென்னும் சொல் வரலாற்றையும் அவர் ஒப்புக்கொள்ள மறுத்தனர். நீ தன்னந்தனியாகப் போர் புரிகின்றாய் (You are fighting a lonely fight) என்றார். புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், அடியார்க்குநல்லார் உரை, இறையனார் அகப்பொருளுரை முதலியவற்றினின்று குமரி நாட்டுச் செய்திக்குச் சான்று காட்டி, பர். சாமிநாதையர், பேரா. மு. இராகவையங்கார் முதலியோரும் முக்கழக வரலாற்றை ஒப்புக்கொண்டதாகவும் கூறினேன். ஆயினும், அவர் கருத்து மாறவில்லை. இதைப்பற்றி விரிவாக எழுதி அவருக்கனுப்ப வேண்டு மென்று மட்டும் சொன்னார். அத்தன், அத்தி என்பன முறையே தந்தையையும் தாயையும் குறிக்கும் தென்சொல்லென்றும்; அவை அச்சன் அச்சி என்று திரியுமென்றும்; தகரம் சகரமாகத் தமிழில் திரிவது இயல்பென்றும்; அப்பன் அம்மை என்பன கண்ணப்பன் கண்ணம்மை என்பவற்றில் வருவதுபோல். அத்தன் அத்தி; அச்சன் அச்சி என்னும் தந்தை தாய் பெயரும் ஆண்பால் பெண்பாலீறாய் வருமென்றும்; வண்ணாத்தி தட்டாத்தி என்பவற்றில் அத்தி என்பதும், மருத்துவச்சி, வேட்டு வச்சி என்பவற்றில் அச்சி என்பதும், பெண்பாலீறென்றும்; கூறியபொழுது, இது போல் தகரம் சகரமாகத் திரியும் வேறொரு சொல் சொல் என்றார் பர். சட்டர்சி. நான், நத்து நச்சு என்னும் திரிபைச் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகர முதலியில் எடுத்துக் காட்டினேன். அவர் ஒரு மரம் தோப்பாகாது (“One swallow cannot make a summer”) என்றார். நான் இன்னுமுளதென்று காட்டப் புகுமுன் எனக்கு நேரமாயிற்று. எல்லாவற்றையும் பற்றி விரிவாக யெழுதி எனக்கு நேரே காளிக்கோட்டத்திற் கனுப்பு என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். அடுத்து, தெலுங்கிற்குத் திரு. kfhnjt (rh¤âÇah) U« (v«.V.), கன்னடத்திற்குத் திரு. பதுமநாபனும் (எம்.ஏ.) விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றனர். துறை மாற்றப் படலம் பர். சட்டர்சி, என் கருத்துவேறுபாட்டிற்கு விரிவாகச் சான்றுகாட்டி வரைந்தனுப்ப வேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றாரேனும். தமிழர் கிரேக்க நாட்டுப் பாங்கரிலிருந்து வந்தவரென்றும், தமிழநாகரிகம் பன்னாகரிகக் கலவை யென்றும். திண்ணிய முற்கோளுடையவராதலின். எத்துணைச் சான்று காட்டினும் என் கொள்கையை ஏற்கும் நடுநிலை அவர்க்கில்லையென்பது. எனக்குத் தெரிந்துவிட்டது. பேரா. லெ. பெ. கரு. இராமநாதன் அவர்கள் என்பா லுள்ள அன்பால் நான் பர். சட்டர்சிக்குக் காட்டவேண்டிய போலிகைச் சொற்பட்டியில். எள்ளளவும் கருத்து வேறுபாட்டிற்கும் ஐயுறவிற்கும் மறுப்பிற்கும் தருக்கத்திற்கும் இடந்தராத ஐம்பது சொற்களையே சேர்க்கவேண்டுமென்று அறிவுரை கூறினார்கள். ஆயின், நான் அஃதை ஏற்றுக்கொண்டிலேன். தமிழைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சவேண்டும்? இங்ஙனம் எத்தனை நாளைக்கு அஞ்சியஞ்சி அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் தமிழன் மூழ்கிக்கிடப்பது! ஆரியச்சார்பினர் கருங்காக்கையை வெண்காக்கை யென்று எத்தனை துணிச்சலோடும் திடாரிக்கத்தோடும் கூறிவருகின்றனர்! அண்ணாமலை பல்கலைக்கழகத் திராவிடமொழி நூல் துறைத் திறப்பு விழாவிற்குப்பின், பர். காட்டிரே நெடுகலும் என்னைப்பற்றித் தீதாய்ப் பல்கலைக் கழக அதிகாரிகட்கு எழுதி வந்ததும். என் செவிக்கெட்டிற்று. துணைக் கண் காணகர் திரு. நாராயணசாமியார் அவர்களும். பல்கலைக்கழகப் பொதுக்கூட்டங் களில். அமெரிக்கா சென்றிருக்கும் திரு. சண்முகனார் பயிற்சி முடிந்து திரும்பிவந்தபின் திராவிட மொழிநூல் துறை மிகச் சீர்ப்படும் என்று சொல்வது வழக்கம். எனக்குத் திரு. சண்முகனாரைப்பற்றி ஒரு வருத்தமுமில்லை. அவருடைய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரே தமிழைச் சரியாய் அறியாதிருக்கும்போது, அவர் மாணவர் போன்றாரைப்பற்றி என் சொல்லக் கிடக்கின்றது! பர். சட்டர்சி பேரா. சேதுவிடம் என்னைப்பற்றி அவர் படிசு எனக்குப் பொந்திகைப்படவில்லை. (I am not satisfied with his mood) என்று கூறியதாக வும். அதனால் என்னை மொழிநூல் துறையினின்று பொதுத் துறைக்கு மாற்றியிருப்பதாகவும். பேரா. சேது சொன்னதாக, (ஓய்வு பெற்ற) குமரபாளைய ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி முதல்வர் பேரா. ஆறுமுகனார் என் னிடம் கூறினார். நான் இதை அ.ம.ப.க.க. புகுமுன்னரே எதிர்பார்த்தேனாதலின், எனக்கு இதில் ஒன்றும் வியப்பில்லை. ஆண்டிறுதியில், திரு. சண்முகனாரும் அமெரிக்காவினின்று திரும்பி வந்தார். அவர் பெற்ற வண்ணனை மொழியியற் பயிற்சிப்படி அவர் பணியைத் தொடங்கினார். சில மாதம் ஒரே அறையில் அவருடன் இருந்தேன். அது திரிசங்கு வானக நிலை போன்றது. ஆண்டு முடிந்து வேனில் விடுமுறை விடப்பட்டது. அடுத்த கல்வியாண்டுத் தொடக்கத்தில், பேரா. கோ. சுப்பிரமணியனார் தலைமையிலிருந்த தமிழாராய்ச்சிப் பொதுத்துறைக் கூடத்தில் எனக்கொரு நாற்காலி யிடப்பட்டது. நாற்காலியென்றது இயற்பொருளிலேயே. ஆங்கிலத்திற் போல் ஆகுபெயர்ப் பொருளிலன்று. அன்றிருந்த நிலைமேடையும் பலர்க்குப் பொது. அதனால் வடநாட்டுப் புகலிலிபோன்ற அயன்மையுணர்ச்சி எனக்கு நீண்டநா ளிருந்துவந்தது. நிலைமை தெரி படலம் நான் மொழிநூல் துறையில் தனிப்பட்ட துணைப் பேராசிரியனா யிருந்த பொழுதே, என் அறையில் எனக்கேற்ற நூல்நிலையம் இல்லை. மொழியியல் துறை நூல்நிலையத்திற்கு வேண்டிய நூற்பெயர்ப்பட்டியை மட்டும் விரிவாகத் தொகுத்து அனுப்பச்சொல்லி, அடிக்கடி ஓலை வந்தது. யானும் உடனுடன் தொகுத்துவிடுத்தேன். ஆயினும், அந் நூல்களும் அவற்றைத் தாங்கும் இருப்பு நிலைப் பேழைகளும் வந்துசேர ஓராண்டாயிற்று. அதையடுத்து நானும் துறை மாற்றப்பட்டேன். பொதுத்துறைக் கூடத்தைச் சேர்ந்த ஒரு சிறு நூல்நிலையம் உண்டு. அதிலுள்ளவை பெரும்பாலும் தமிழ்நூல்களே. எனக்குரிய வரலாற்று நூல், மொழி நூல், மாந்த நூல் (Anthropology) ஆகிய முத்துறைபற்றிய ஆங்கில நூல்கள் அதில் இல்லை. அதனால், என் உறையுளிலுள்ள என் சொந்த நூல் நிலையத்தை அங்கு மாற்றக் கருதி, பொதுத்துறைக் கூடத்தின் ஒரு கோடியில் இருபாக அகலத்தில் எனக்கு இடம் ஒதுக்கித் தருமாறு பேரா. கோ. சுப்பிரமணியனாரைக் கேட்டேன். அவர் இசைந்ததுபோற் காட்டினும் ஒன்றும் செய்யவில்லை. அது அவர் குற்றமன்று, அன்று நான் தாங்கிய பதவிநிலையே அதற்குக் கரணியம். நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அமர்த்தப் பட்டது மொழிநூல் துறைக்கு, அதன்பின் கொண்டான்மார் சூழ்ச்சியால் புகுத்தப்பட்டது பொது ஆராய்ச்சித் துறை. அதற்கும் மொழிநூல் துறைக்கும் யாதொரு தொடர்புமின்று. பேரா. கோ. சுப்பிரமணியனாரும் மொழிநூலறிஞ ரல்லர். என்னைப்பற்றிப் பேராசிரியரும் பெருமக்களும் பலர் பரிந்துரைத்திருந்ததினால், அரசவயவர் முத்தையா அவர்கட்கும் என்னை உடனே விலக்க விருப்பமில்லை. பேராசிரியரும் தனித்துறைத் தலைவரும் தவிரப் பிறரெல்லாம் ஒரு பேராசிரியரின் கீழேயே இருத்தல்வேண்டுமென்பது பல்கலைக்கழக ஒழுங்கு. எனக்கொரு தனித்துறை யின்மையால், எழுத்துப்போக்குவரத்து வாயிற்காக வேனும் ஒரு பேராசிரியரின் கீழ் அமர்தல் வேண்டும். நான் சேரக்கூடிய துறை தமிழாராய்ச்சி பொதுத்துறை ஒன்றே. ஆதலால் அதில் சேர்க்கப்பட்டேன். ஆயினும் என் நிலைமை துணைக் கண்காணகரும் இணைக் கண்காணகருமே கவனிக்கத் தக்கவாறு தனிப்பட்டிருந்ததினால் பேரா. கோ. சுப்பிரமணியனார் நான் விரும்பியவாறு ஏந்து (வசதி) செய்துதர இயலாது போயிற்று. மேலதிகாரிகள் ஏவினாலொழிய எனக்கென்று ஒரு தனி ஏற்பாடு செய்து தரும் அதிகாரம் அவரிடத்தில்லை. நான் பொதுத்துறையிலிருந்து, ஓர் அரசியல் தூதன் அயல் நாட்டிலிருந்தது போன்றே. நான் மொழிநூல் துறையினின்று விலக்கப்பட்டதிற்குக் கொண்டான்மார் சூழ்ச்சியே கரணியமாயினும், என் தகுதியின்மையோ ஆராய்ச்சித் தவறோ கரணியமென்று அதிகாரிகட்கும் பிற துறையினர்க்கும் மாணவர்க்கும் பொதுமக்கட்கும் தோன்றுமாதலால், அத் தவற்றெண்ணத்தை நீக்குதற்கு, துணைக் கண்காணகரிடம் சென்று, தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர் மாநாடொன்று கூட்டவேண்டு மென்றும், அதில் என் எதிரிகளும் நானும் அவரவர் மொழிநூற் கொள்கையை எடுத்துக்கூற வேண்டுமென்றும், மாநாட்டின் பெரும்பான்மைத் தீர்ப்பை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும், எனது கொள்கை தவறென்று தீர்க்கப்படின் உடனே வேலையை விட்டுவிடுகிறேன் என்றும் சொன்னேன். அதற்கு அவர்கள் அதென்ன, வழியிற் போவாரையெல்லாம் கூப்பிட்டுக் கேட்கிறது? என்று விடையிறுத்துவிட்டார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை பெறவேண்டினும் நிலைக்க வேண்டினும், முதலாவது இணைக் கண்காணகர் இசைவு வேண்டும்; இரண்டாவது, துணைக் கண்காணகர் கண்ணோட்டம் வேண்டும்; மூன்றாவது, இரு பேராசிரியரின் நல்லெண்ணம் வேண்டும்; நான்காவது, பிராமண ஆசிரியரின் வெறுப்பின்மை வேண்டும்; ஐந்தாவது, ஆளுங் கட்சியைத் தாக்காதிருத்தல் வேண்டும்; இவ் வைந்தனுள்ளும் முதலது ஒன்றிருந்தாலும் போதும்; ஆயின் பல்கலைக்கழக வருமானம் குன்றாதிருத்தல் வேண்டும். ஆங்கில ஆட்சி நீங்கிய பின், ஆரியப் பேய் மீண்டும் தலைவிரித்தாடுகின்றது. ஆரியத்திற்கு மாறாய்த் தமிழை வளர்ப்பின், நடுவணரசு நல்கை (Central Govt. Grant) அடியோடு நீங்காவிடினும் அடிமட்டத்திற்கு வந்துவிடும். ஆரியத்தை வளர்ப்பதற்கே பல்கலைக்கழக நல்கைக் குழுவும் (U.G.C.) சமற்கிருதக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாட்சியும் அத்திட்டத்தைச் சேர்ந்ததே. அதனால், வங்கப்பாட்டும் வந்தே மாதரப் பாட்டும் தமிழிற்கும் தமிழிசைக்கும் தோன்றிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை விட்டு நீங்கிய பாடில்லை. புதுக்கோட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்ப்பணி செவ்வையாய் நடைபெறவில்லையாமே யென்று ஒருவர் கேட்டதற்கு, அரசவயவர் முத்தையா அவர்கள் அது தவறென்று சொன்னதுடன் அமையாது, வடநாட்டினின்று பணம் வரவேண்டியிருக்கிறது. அது வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். பேரா. தெ.பொ.மீ. ஆரியக் கொள்கையினராதலால், வடநாட்டில் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதென்றும், அதனாற் பல்கலைக் கழகத்திற்கு நிரம்பப் பணம் வந்து சேர்கிறதென்றும் சொல்லப்படுகின்றது. என்னாலோ, வருகின்ற பணம் குறையுமேயன்றிக் கூடாது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையினும் அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சீர்கெட்டது. அறிவியல் துறைக் கட்டடத்திற்கு அடிப்படைக்கல் நாட்டத் தில்லையிலிருந்து ஒரு பிராமணர் வந்து ஆரிய மந்திரமோதித் தீ வளர்த்தார். ஆகவே, ஆரிய ஏமாற்றம் அடியோ டொழிந்தாலொழிய, தமிழுக்கு இனி நற்காலமில்லை யென்பதைத் தெளிவாய் உணர்ந்தேன். என்பாற் பற்றுள்ள என் நண்பரோ, ஏனைய தமிழ்ப் பேராசிரியரெல்லாம் ஆரியத்தோடு ஒத்துப் போகும் பொழுது. நீங்கள் மட்டும் ஏன் தனியாக அதை எதிர்க்கிறீர்கள்? நீங்களும் ஒத்துப் போகிறதுதானே! இன்னுஞ் சில்லாண்டு பதவியிலிருக்கலாமே! இந்தக் காலத்தில் வேறெங்கே ஐந்நூறுருபா கிடைக்கும்? என்றெல்லாம் சொன்னார்கள். ஆயினும் உளம் ஒப்பவில்லை. என்ன தீங்கு நேரினும் உண்மையை எடுத்துச் சொல்வது ஆராய்ச்சியாளன் கடமையென்றும் மிகக் கொடுமையாய் வடமொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழை அதனின்றும் மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோளென்றும், இதற்காகவே என்னை இறைவன் படைத்தானென்றும், அதனால் அது நிறைவேறியே தீருமென்றும் நான் கூறினேன். பொதுவாராய்ச்சித் துறையிற் சேர்ந்து சில மாதமான பின் 3 அடி நீளமும் 2 1/2 அடி அகலமுமுள்ள ஒரு புதுத் தேக்குமர நிலைமேடை எனக்கு வந்து சேர்ந்தது. ஆயினும், அடிக்கடி சொன்னிகழ்த்த நேரும் பன்னிருவர் அடுத்தடுத் துள்ள ஒரு கூடத்தில் ஆராய்ச்சி செய்வதென்பது, சந்தை நடுவே ஓகத்தில் அமர்ந்திருப்பது போன்றே தோன்றிற்று. எனினும், பண்டாரகர் மணவாள ராமானுசன் போன்ற தமிழன்பர் துணைக் கண்காணகராய் வரநேரின், தமிழ் நிலையும் என் நிலைமையும் சீர்திருந்தும் என்னும் எண்ணத்தினால் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தேன். நீக்கப்படலம் ஐந்தாண்டாயிற்று, நான் செய்துவந்த வேலை ஒருவர்க்கும் வெளிப் படையாய்த் தெரிந்திலது. அதற்கு வாய்ப்பிருந்தும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேரா. லெ. பெ. கரு. இராமநாதரிடத்தும் துணைக் கண்காண கர் திரு. நாராயணசாமியாரிடத்தும் நான் செய்து வந்த வேலையை அடிக்கடி தெரி வித்து வந்தேன். அது போதுமென்று கருதினேன். பேரா. சேதுவினிடத்தும் என் வேலையை எழுத்து வடிவிற் காட்டச் சென்றேன். அவர் மறுநாள் வரச்சொல்லி விட்டுக் குற்றாலத்திற்குக் கிண்ணிவிட்டார். ஓர் உண்மையான ஆராய்ச்சியாளன் ஒரு நாளும் ஆராயாதிருக்க முடியாது. அவன் ஆராயாவிடினும் அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென் றும் நனவென்றும் ஊண் வேளையென்றும் உறக்க வேளையென்று மில்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் எனக்கு இயல்பாக இன்பந்தருங் கலைகள். அவ் வாராய்ச்சித் தொடர்பில், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலியில் இல்லாத ஆயிரக்கணக்கான சொற்களை இருவகை வழக்கி னின்றும் தொகுத்து வைத்தேன். ஆங்கில முறையில் தொகுத்ததினால், எளிய சொற்களும் அதில் இடம்பெற்றுள. அவற்றை நோக்காது அருஞ்சொற்களை நோக்கினால்தான், அத் தொகுப்பின் அருமை புலனாகும். எ-டு :பொண்டான் = எலிவளையின் பக்கவளை - (உலகவழக்கு) கவைமகன் = ஈருடலொட்டிய மகவிரட்டை (twins) - இலக்கிய வழக்கு நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அமர்த்தப் பெற்றதே செந் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கே. அதற்கு அடிப்படையாய் வேண்டுவது இதுவரை அகரமுதலியில் இடம்பெறாத சொற்றொகுப்பே. இது நிற்றல் இருத்தல் கிடத்தல் என்னும் முந்நிலையிலும் நிகழும். வினைபற்றி எனக்கு எல்லா நாளும் வேலை நாள், விழைவுபற்றி எனக்கு எல்லா நாளும் விடுமுறை நாள். மொழிநூலின் ஆங்கிலப் பெயரும் (Philology) விழைவுநூல் என்னும் பொருளதே. ஐந்தாம் ஆண்டிறுதியில், துணைக் கண்காணகரைக் கண்டு, (mj‹ மேலும்) ஓராண்டு பொறுக்கவேண்டுமென்றும், அதற்குள் என் சொற்றொகுப்பை முடித்துத் தந்துவிடுவேனென்றும், அதற்குமேல் எனக்கு வேலை வேண்டிய தில்லையென்றும் சொன்னேன். அவர்களும் இசைந்தார்கள். மகிழ்ந்திருந்தேன். ஆயின், 6ஆம் கல்வியாண்டுத் தொடக்கத்தில், நான் எதிர்பார்த்ததற்கு முற்றும் மாறாகக் கண்காணகர் மாறினார்; புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப்பற்றுச் சிறிதுமில்லை. பேராசிரியன்மாரின் பெருமையுணரும் திறமுமில்லை. தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கொண்டான்மாருங் கூடித் தமிழுக்குக் கெடும்பு செய்துவிட்டனர். திடுமென்று, எனக்கு வேலை நீங்கினதாக ஓலை வந்தது. மேற்கொண்டு ஓராண்டு வேலையை நீட்டிக்கும்படி கரணியங்காட்டி வேண்டினேன்; நீட்டித்திலர். இலக்கணப் புலமையில்லாத பர். சேதுவின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது. செத்துங் கொடுத்தான் சீதக்காதி. செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர். “M©o எப்பொழுது சாவான், மடம் எப்பொழுது ஒழியும் என்று என் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாட் காத்திருந்தவரும் உண்டு. முறைப்படி எனக்கு மும்மாத அறிவிப்புக் கொடுத்தல் வேண்டும். அதையுங் கொடுத்திலர். ஆயினும் பல்கலைக்கழக உறையுளில் மேற்கொண்டு மும்மாதம் குடியிருக்க இடந் தந்தனர். 1961ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 23 ஆம் பக்கல் அண்ணா மலை நகரைவிட்டு வெளியேறினேன். என்னோடு தமிழும் வெளியேறியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எனக்குப் பதவியூன்றாமையாலேயே இக் கட்டுரைத் தொடருக்கு `என் அண்ணாமலை நகர் வாழ்க்கை என்று பெயரிட்டேன். நான் வெளியேறியபின், எனக்குக் குறிக்கப்பட்ட பணியைச் செவ்வை யாய்ச் செய்யவில்லை யென்று என்மேற் குறைகூறுவதாகத் தெரிகின்றது. ஒருவன் கையைக் கட்டிவிட்டு அவன் வேலை செய்யவில்லையெனின், எங்ஙன் பொருந்தும்? மொழியியல் துறையின் முதற்பணியாக விளம்பரஞ் செய்யப்பெற்ற, சொற்பிறப்பியல் தமிழ் அகரமுதலியை இன்னும் ஓராண்டுக்குள்ளேனும் தொகுப்பார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எவரேனும் உண்டோ? அறைகூவி அழைக்கின்றேன். ***** மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி.இலக்குவனார், முனைவர் வ.சுப.மாணிக் கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான் றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட் டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். *****