பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 36 இசைத்தமிழ் கலம்பகம் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 36 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1966 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 28 + 252 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். குறியீட்டு விளக்கம் 1. பாட்டுறுப்புப் பெயர்கள் பல்லவி என்னுஞ்சொல் வடமொழியிலின்மையாலும், நீண்ட காலமாய்த் தமிழ்நாட்டுலக வழக்கில் வழங்கிவருவதனாலும், கருநாடக சங்கீதம் என்பது பண்டை இசைத்தமிழின் பெயர் மாற்றமே யாதலாலும், அது இப் பனுவலில் தென்சொல்லாகவே கொள்ளப் பெற்றுள்ளது. துணைப் பல்லவியாலும் பிற வுறுப்புகளாலும் பல்லவி பன்முறையும் அவாவப் பெற்று நிற்பதால் பல்லவாவி என்னும் சொல் பல்லவி என்று மருவி யிருக்கலாம். பல்லவிக்குத் துணையாயிருப்பது துணைப் பல்லவி. சரணம் என்னும் வடசொல் அடி அல்லது பாதம் என்னும் பொருள தாகையாலும், அடி (அல்லது பாதம்) என்னும் சொல் தமிழில் வேறு உறுப்புப் பெயராக (அதாவது சரணத்தின் பகுதியைக் குறிக்கும் சொல்லாக) வழங்குவதாலும், பாட்டிற்கு உரு எனும் பெயருண்மை யாலும், சரணம் என்னும் உறுப்பு இங்கு உருவடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. தொகையரா என்னும் உருதுச்சொற்கு, உரைப்பாட்டு என்பது ஒத்த தமிழ்ச்சொல்லாகும். 2. தாளப் பெயர்கள் பாணி, தாளம் என்னும் இரண்டும், பண்டை யிசைத்தமிழ் நூல்களில் ஒருபொருட் சொல்லாக ஆளப் பெற்றுள. பாடுவார் கையினால் தட்டுவது பாணி என்றும், ஆடுவார் பாதத்தினால் தட்டுவது தாளம் என்றும் பெயர் பெற்றனவாகத் தெரிகின்றன. பண்-பாணி = கை. பண்ணுவது பாணி. பண்ணுதல் செய்தல். பாட்டைக் குறிக்கும் பாணி என்னும் சொல், இராகம் என்று பொருள்படும் பண் என்னும் சொல்லினின்று பிறந்ததாகும். கையைக் குறிக்கும் பாணி என்னும் சொல், கடல்கோளுக்குப்பின் தமிழில் வழக்கற்றது போலும்! வடமொழியில் இச் சொற்கு வேரில்லை. தாள்-தாளம். தாள்-பாதம். தாளப் பெயர்கள் இப் பனுவலில் பின்வருமாறு ஆளப்பெற்றுள: பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல் ஏகம்(வ.) ஒற்றை ஆதி (வ.)முன்னை %பகம் (வ.) ஈரொற்று பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல் சம்பை (வ.) மூவொற்று திரிபுடை(வ.) முப்புடை சாப்பு (உருது) இணையொற்று இவற்றை, முறையே மூன்றெண் தாளம், எட்டெண் தாளம், ஈரொற்று வாரம், ஐந்தெண் சார்பு, ஏழெண் சார்பு, சார்பு எனக் குறிப்பர், இசையறிஞர் குடந்தைச் சுந்தரேசனார் என்னும் அழகவுடையார். ஒற்றுதல் தாளந்தட்டுதல். ஒற்று-தட்டு. தமிழ்ச்சொல் அல்லாத பண்ணுப் பெயர்களெல்லாம் பிறைக்கோட்டுள் அடைக்கப்பட்டுள. பழந்தமிழ்ப் பண்ணுப் பெயர்களுள் மாபெரும்பாலன இறந்துபட்டமையால், இந் நிலைமை நேர்ந்துளது. áல பண்களுக்குச் áலர்bதன்சொற்bபயர்Fறிப்பினும்,mவைபற்றிïiசவாணர்க்குக்கUத்தொருமையி‹iமயால்,அtஇங்Fக்குறி¡f¥g£oy. FW¡க விளக்கம் குறுக்கம் முழுச்சொல் உ. உருவடி து. ப. துணைப் பல்லவி ப. பல்லவி வ. வடசொல் உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு .vi சான்றிதழ் .viii குறியீட்டு லிளக்கம் .x நூல் பாயிரம் .xxiv கடவுள் வாழ்த்து .xv 1. கடவுள் வணக்கம் .1 2. கடவுளை வேண்டல் .2 3. இறைவணக்கம் .2 4. கடவுள் வழுத்து .3 5. இசைமாணவர் இறைவனை வேண்டல் .3 6. இசையின்பம் .4 7. தமிழன் பள்ளியெழுச்சி 5 8. பழந்தமிழன் சிறப்பு 7 9. இதுவும் அது (தமிழ நாகரிக முன்மை) 8 10.தமிழ்வரலாறு...9 11. தமிழினமுதுமையும்இளமையும்... 11 12. முதல் தாய்மொழி... 11 13. செந்தமிழ்ச் சிறப்பியல்... 12 14. தமிழின் பதினாறு தன்மை... 13 15. செந்தமிழ்ச் சிறப்பு... 14 16. செந்தமிழ்ச்செய்யுட்சிறப்பு... 15 17. தமிழின்பம்(நாலடியார்,137)... 15 18. தமிழே தனிமொழி 16 19. தமிழே தேவமொழி .16 20. தென்சொல் வளம் .17 21. தமிழின் என்றுமிளமை .18 22. தமிழின் தன்னேரின்மை 18 23. தமிழின்பம் 19 24. பொருளிலக்கணச் சிறப்பு .20 25. திருக்குறள் .21 26. திருக்குறட் சிறப்பு .21 27. திருவள்ளுவர் .22 28. சிலப்பதிகாரச் சிறப்பு .23 29. இளங்கோவடிகள் .23 30. யார் யார் எவ்வெப் பாவல்லார்? . 24 31. தமிழ்நாடு .25 32. தாய்நாட்டு வழுத்து 26 33. நாவலம் முதலில் `மூவர் தண்பொழில்' 27 34. செந்தமிழ் நிலம் .28 35. பழம் பாண்டிநாட்டைக் கடல் கொண்டாமை .29 36. தென்பெருங்கடல் (இந்துமாவாரி) ஆராய்ச்சி 30 37. தமிழ்நாடு தனிநாடு 31 38. குமரிமலைக் குறத்தி 31 39. வடமொழி வந்தவழி .33 40. தமிழ் இயல்புந் திரிபும் 33 41. வடமொழி தமிழினின்று கடன்கொண்டவை .36 42. வடமொழியில் தமிழ்க்கலப்பு 36 43. தமிழன் தானே கெட்டமை .37 44. தமிழரே தம்மைக் கெடுத்தமை 38 45. வடமொழியால்தமிழுக்குவந்தகேடு... 39 46. வடமொழியால் தமிழ்கெட்lவகைகள் ... 40 47. நக்கீரர்அங்கதம்...41 48. தமிழின் படிமுறைத்தாழ்வு... 42 49. தமிழ்நாடு வரவரத்தேய்ந்தமை ... 43 50. ïறªJg£l jமிழ்நூல்கள்... 44 51. மாவலி மாவேந்தன் ... 45 52. தமிழன் வீழ்ச்சி ...46 53. தமிழ்ப்புலவர்க்குப்பிழைப்பின்மை... 47 54.பாண்டிநாட்டின்பண்பிழப்பு... 48 55. அயன்மொழியால் தமிழ் கெடுதல்... 49 56. தமிழ் ஏத்து... 49 57. மறைமலையடிகள் மாண்பு... 50 58. அடிகள்தமிழனுக்குஅறிவுறுத்தல்... 51 59. மொழித்திருத்தத்தின்தேவை...52 60. தமிழ்க் கல்விப்பயன்... 52 61. மொழி நாகரிகம்... 53 62. இந்திய நாகரிகம் தமிழரதே ... 54 63. குமரிநாட்டுச் சிவன் மால் வழிபாடு ... 55 64. nகயில் வழிபாட்டு மொழி 56 65. இந்து என்னும் சொல் ஏற்புடையதாகாமை... 57 66. முத்திருமேனியர் (திரிமூர்த்திக்) கொள்கை தமிழரதாகாk... 59 67. தமிழ்த் திருமணம்... 59 68. தமிழன் முன்னேறும் வழி... 60 69. தமிழுயரத் தமிழனுயர்தல்...61 70. தமிழிசை நாடகமே கருநாடக சங்கீதமும் பரதநாட்டியமும்...61 71. தமிழைமறைப்பதால்முந்நூல்கெடுதல் ... 62 72. மொழி வாழிடம் மக்கள் வாயே ... 63 73. வழக்கற்றதென்சொல்லைவழங்கல்...64 74. mயன்மொழிbயழுத்தைaகற்றல்...65 75. பழந்தமிழ்த் தூய்மை .66 76. தமிழே தனித்தமிழ் .66 77. தமிழ் இயன்மொழிதிரவிடம்திரிமொழி... 68 78. தமிழர் தமிழ்ப் பெயரே தாங்கல்... 69 79. தாய்மொழிப் பற்று... 70 80. நிலைத்த தமிழ்ப்பற்று...71 81. தனித்தமிழிற் பேசாத தமிழாசிரியனின் தகுதியின்மை 72 82. செந்தமிழ்ச் செம்மை 72 83. நாட்டுமொழியின் கட்சிப் பொதுமை... 73 84. தமிழனுக்கு அறிவுறுத்தல்... 74 85. பகுத்தறிவைப்பயன்படுத்தல்... 75 86. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை ...76 87. பாண்டிநாட்டில் தமிழுணர்ச்சியின்மை...77 88. பழந்தமிழே திரவிடத்தாய் .78 89. தமிழைப் பழித்தல் 79 90. தாய்மொழிப் பற்றின்றித் தாய்நாட்டுப் பற்றின்மை 80 91. எந்நாட் கண்ணி 81 92. குலப் பிரிவினைக் கேடு 82 93. எக்குலத்தான் நல்லமைச்சன்? 83 94. தமிழனுக்குத் தகுதியுண்மை 84 95. தமிழன் தாழ்வுணர்ச்சி 85 96. தமிழன் குலம் 85 97. ஆங்கிலஆரியப்பண்பாடுவேற்றுமை... 86 98. நன்றி மறவாமை... 87 99. ஆங்கிலத்தில் தீமையின்மை... 88 100. ஆங்கிலமுந் தமிழும் அமைவாதல் ... 89 101. ஆங்கில இந்தி வேற்றுமை... 91 102. இந்திய மொழிகள் பதினைந்து ... 91 103. இந்தியின்அயன்மை...92 104. எது தலைசிறந்த இந்தியப் பொதுமொழி ... 93 105. தமிழ்நிலைகண்டுதமிழன்வருந்தல் ... 93 106. இலக்கணவறிவில்லாஎழுத்தாளர்... 95 107. சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதியின்சீர்கேடு ...96 108. புலமையில்லாரும் புலவரொடு bசாற்பொழிவாற்றல்...97 109. தமிழ் கடன்கொண்டு வளராது 98 110. ஏமாற்றுந் தமிழ்க் காவலர் 98 111. தமிழைக் காட்டிக்கொடுக்கும் தமிழ்ப் பேராசிரியர் 99 112. தனித்தமிழ்ப் பகைவர் 100 113. தமிழ்ப்பற்றில்லார் தமிழ்வளர்த்தல்... 101 114. இந்தியேற்பார்க்குத்தமிழ்ப்பற்றின்மை... 102 115. ஆங்கிலத்தையெதிர்ப்பதுதமிழ்ப்பற்றாலன்று ... 103 116. தமிழ்ப்பற்றில்லார்தமிழ்பேணுதல் ... 104 117. இரண்டில்எதுவேண்டும்?...105118.jiyt® பிணங்கித்தமிHவெறுத்தš... 106 119. தமிழருக்குத் தக்க தலைவனின்மை... 106 120. தமிழர் பின்பற்றவேண்டிய தலைவர் இருவர்... 107 121. இந்நாட்டிற்கு இந்நிலையில் முன்னேற்றமில்லை... 108 122. இந்தியஆரியஏமாற்று... 108 123. இதுவும் அது... 109 124. Vமாறல் ...109 125. தமிழ் வளர்ச்சிக்குத் தகுந்த நிலையின்மை... 110 126. தமிழன் அடிமைத்தனம்... 110 127. தனித்தமிழ்ப் புலவர்க்குத் தாங்கலின்மை...111 128. தமிழன் nபதைமை...112 129. தமிழன் பேதைமை ...113 130. தமிழரின்ஐவகைஅடிமைத்தனம்... 114 131. தன்மானமிழந்ததமிழன்... 114 132. பிராமணர் நிலத்தேவரன்மை... 115 133. ஏமாறுந் தமிழன்... 116 134. தமிழன்அடிமைத்தன«... 116 135. தமிழில எடுப்பொலி யில்லையென்பாரின் தாழ்நிலை ... 117 136. தமிழைத்தமிழனேதாழ்த்துதல்... 118 137. தமிழர்பேதைமை... 118 138. பிராமணியம்... 119 139. பிராமணியவுண்மை... 120 140. தமிழப் பிராமணரைக்கெடுப்பவர்தமிழரே...121 141. காடைமடம் ...122 142. கட்சித் தலைவரைக் கண்மூடித்தனமாய்ப் ãன்பற்றுதல்...123 143. தாழ்மையும் தாழ்வும் வெவ்வேறு ... 124 144. புலவரைத் போற்றாமை... 124 145. அத்திலீபின் ஆராயாச் செயல் ...125 146. போலிக் குடியரசு... 126 147. ஆரியத்தை வளர்த்துத் தமிழைத் தளர்த்தல் ... 126 148. தமிழனுக்குரிமையின்மை... 127 149. தமிழ் விடுதலையேதமிழன்விடுதலை...128 150. விடுதலைதமிழுக்குமாறன்மை... 129 151. விடுதலைக் காலத்தும் நாட்டுவாழ்த்து வேற்றுமொழி... 129 152. இன்று குடியரசிற்கேற்ற நிலையின்மை... 130 153. குடியாட்சிக் கூட்டுடைமை (Democratic Socialism) கூடாமை ... 130 154. இந்தியக்குடியரசு... 131 155. இந்தியாவின்ஈரியல்... 132 156. கல்லாமையும் குலப்பிரிவும்கட்டாaஇந்தியு« உள்ளவரை இந்தியாவிற்கு விடுதலையின்மை ... 132 157. இந்திய ஒருமைப்பாடு ...134 158. பேராயத் தலைவர் தமிழ்நாட்டுப் படிநிகராளியர் (பிரதிநிதிகள்) ஆகாமை... 135 159. இலவசக் கட்டாயத்துவக்கக்கல்வி... 135 160. இருவகை யதிகாரம்... 136 161. தமிழர் ஏமாற்றம் அடைந்தமை ... 137 162. நேருவின்சொற்பிறழ்வு... 137 163. வடவர் நம் தலைவரல்லர்... 138 164. gண்பாட்டுயர்வு .139 165. தமிழ்த்தாய் விலங்குச்சிறை 140 166. தமிழ்த்தாய் அழுகை 140 167. தமிழ்த்தாய் புலம்பல் 141 168. தமிழன்னை புலம்பல் 142 169. தமிழன் உடமை தமிழ் ஒன்றே 143 170. தமிழ்நாட்டு மந்திரிமார் தமிழைக் காட்டிக்கொடுத்தல் 144 171. fமராசர் திட்டம் 144 172. தமிழ்ப் புலவர் வாய்ப்பூட்டு 145 173. இந்திக்குப் பொதுமொழித் தகுதியின்மை 146 174. இந்தியெதிர்ப்பு 147 175. கட்டாய இந்தி வேண்டாமை 147 176. இந்திக்கும் விடுதலைக்கும் தொடர்பின்மை .148 177. சொல்லொன்று செயலொன்று 150 178. தமிழகத்தில் இந்தியைப் புகுத்த அமைச்சருக் கதிகாரமின்மை 150 179. தேவநாகரியால் தேசவொற்றுமைக் கிடமின்மை 151 180. இந்தியயெதிர்ப் பில்லையென ஏமாறல் 152 181. அரசியற் கட்சியார் கல்வித்துறையில் தலையிடல் 153 182. கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றல் 154 183. இந்தியா ஒரு நாடன்மை 154 184. இந்தியால் வரும் ஏதம் 155 185. இந்தியால் ஒற்றுமை யில்லை 156 186. இருமொழிக் கொள்கை 157 187. இந்தி வடமொழியால் தேயவொற்றுமைக் கிடமின்மை 158 188. இந்தி தேவையின்மை 159 189. இந்திக்குப் பெரும்பான்மையின்மை 159 190. தமிழமாணவர்க்கு மும்மொழிக் கல்வி தகாமை 160 191. இந்தியெதிர்ப்பிற்குப் பெருமாள் துணை 161 192. கல்வி வாயில் 161 193. பயனில்மொழி கற்கக் காலமின்மை 162 194. தாய் தன்மகளைக் கடிந்துரைத்தல் 163 195. சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு 164 196. தீக்குளித்த சின்னச்சாமி (சின்னாண்டான்) புலம்பல் 165 197. இந்தியொழிப்பு 166 198. கம்ப துளசிதாசர் ஏற்றத்தாழ்வு 166 199. தமிழ் கெடவரும் வளர்ச்சித்திட்டம் பயனற்றது 167 200. இந்தியார் ஏய்ப்பு 169 201. இந்தியாசிரியருக்கு அறிவுரை 170 202. தமிழ்க் காப்புப்படை 171 203. தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல் 172 204. இந்திப்போருக் கழைப்பு 173 205. மாணவரே தமிழ் கற்கும் மறவர் 173 206. தமிழ்த்தொண்டர் படையெழுச்சி 174 207. தமிழ்தொண்டர் படைச்செலவு 175 208. இந்திப் போருக்கு ஏவல் 176 209. தமிழுக்கு நற்காலக் குறி 177 210. தமிழ் வெற்றிமுரசு 178 211. தமிழன் நற்காலத் தொடக்கம் 178 212. தமிழ்க்கொடி 179 213. தமிழ் மீண்டும் தலைமை பெறல் 180 214. தமிழன் கண்ட கனா 181 215. தமிழன் தன் தவறுகண் டிரங்கல் 181 216. தமிழைக் காக்கும் வழிகள் 182 217. தமிழக மொழியியல் தன்னாட்சி 183 218. தமிழனே தமிழைக் காத்தல் 183 219. மொழிபெயர்ப்பு முறை 184 220. தமிழத் தமிழ்ப் புலவர் மாநாடே இந்திபற்றி முடிவு செய்யத் தக்கது 185 221. தனித்தமிழ் கற்றல் 185 222. தமிழ்ப் புலவரை இருவகையராய்ப் பிரித்தறிக! 186 223. தமிழொன்றே தருக்கத்திற்கிடமான பாடமாதல் 187 224. மொழிவழி நாடு 188 225. தமிழுக்குக் கலைக்கல்லூரி யின்மை 188 226. தமிழ்வாயிற் கல்வி பயன்படாமை 189 227. சட்டத்தைத் திருத்துதல் 189 228. தமிழர் மாகழகம் 190 229. முழுத் தாய்மொழியன்பரே மொழிப்புலமை பெறமுடிதல் 191 230. தாய்மொழிக் கல்வி என்னும் தமிழ்வாயிற் கல்வி 192 231. வண்ணனை மொழியியலின் (Descriptive Linguistics) வழுவியல் 192 232. என் அண்ணாமலை பல்கலைக் கழகப்பணி 193 233. `தேன்மொழி' 195 234. ஆசிரியனே கல்வியமைச்ச னாதற்குரியன் 196 235. இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல் 197 236. வரலாற்றின் இன்றியமையாமை 198 237. தமிழ்நாட்டுத் தலைவர் தகுதி 199 238. தமிழ்ப் பல்கலைக்கழகம் 199 239. பண்டாரகர் மணவாளராமானுசம் 200 240. தமிழ் முதன்மொழி ஆங்கிலம் வழிமொழி 200 241. ஆங்கிலம் இன்றி அறிவியல் இல்லை 201 242. தமிழைக் கல்லாமைக்குப் பற்றின்மையே கரணியம் (காரணம்) 201 243. சாமிநாதையர் பதிப்பு 202 244. பல்வேறு தகுதியில்லார் 203 245. பாண்டியர் தமிழ்க்கழகம் வேண்டியதாதல் 204 246. தமிழ் வரலாறு தமிழரே எழுதுகை 205 247. இந்நாள் எவன் தமிழன்? 206 248. தமிழர் என்போரெல்லாம் தமிழராகார் 207 249. ஒற்றுமையுரம் 208 250. பிராமணர் தமிழன்பராகித் தமிழ்நாட்டை வழிவழி யாள்க 209 251. ஆரியர் தமிழர் ஒற்றுமை 210 252. தாலாட்டுப் பாட்டு 211 253. குழந்தைக்குப் பேச்சுப் பயிற்றல் 212 254. பாங்கன் கழறலும் தலைவன் கழற்றெதிர் மறுத்தலும் 213 255. பார்ப்பார் யார்? 214 256. அந்தணர் யார்? 214 257. தமிழகம் அனைவர்க்கும் தாயகம் 215 258. எண்கோள் கூடல் 216 259. உலகில் நன்மை ஓங்க 217 260. தண்டமிழ்த் தொண்டர் 217 261. அ. இராமசாமிக் கவுண்டார் 218 262. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 220 263. சேலம் தமிழ்ப் பேரவை 220 264. சேலம் குகைத் திருக்குறட் கழகம் 221 265. செங்காட்டுப்பட்டி முத்தமிழ்க் கழக வண்மை 221 266. மதுரை எழுத்தாளர் மன்றம் 222 267. செட்டிகுளம் 222 268. ஈப்போப் பாவாணர் தமிழ் மன்றம் 223 269. மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் 223 270. தமிழ்ப் பெருங் கழகம் 224 271. பண்டாரகர் மெ.சுந்தரம் 224 272. குன்றக்குடியடிகள் 225 273. மதுரைத் திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை 226 274. மதுரைமாநகர் 226 275. மாந்தன் செருக்கடக்கம் 227 276. பொங்கல் 228 277. எறும்பின் ஏற்றம் 229 278. கும்மிப் பாட்டு 230 279. கோலாட்டப் பாட்டு 231 280. கற்புடைப் பெண்ணே நற்பெரும் பேறு 232 281. உழவன் உயர்வு 233 282. மக்கள்தொகை மிகையால் தொல்லை 233 283. மணமக்கள் வாழ்த்து 234 284. தமிழ் வாழ்த்து 235 285. தமிழர் வாழ்த்து 235 286. தமிழ்நாட்டு வாழ்த்து 236 287. இந்திய ஒன்றிய வாழ்த்து 237 288. ஒன்றிய பன்னாட்டின வாழ்த்து 238 289. உலக வாழ்த்து 238 290. பண்டைத் தமிழுணர்ச்சி 239 291. செந்தமிழ் அரண் அதன் செம்மையே 240 292. தமிழின் செம்மையும் தூய்மையும் 240 293. தமிழைக் கெடுக்கும் இருமொழிகள் 241 294. இந்தியெதிப்பார் எதிர்க்கட்சியார் என்னும் பேதைமை 241 295. மதுரை அறுவாட் படுகொலை 242 296. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் 243 297. தொண்டர்படைப் பணி 244 298. தீக்குளித்த வேறு நால்வர் 244 299. தீக்குளித்தல் ஆண்மை யன்று 245 300. புத்திரசிகாமணி 246 301. இற்றைத் தமிழன் இழிநிலை 246 302. இந்திப் போராட்டத்தில் இறந்தவர்க்கு அமைதி 247 303. மாணவர்க்கு அறிவுரை 247 304. குடியரசு குடிகளின் அரசு 248 305. மங்களம்... 248 பாயிரம் மறைமலை யடிகளும் மாமதி யழகரும் கறையுறும் இந்தியைக் கடிந்தும் தொண்டர்பின் சிறையுழந் தின்னுயிர் சிந்தியும் வடவர்தாம் இறையுமெ ணாதிவண் இந்தியைப் புகுத்தினர். இந்நில வரலாறும் இன்றமிழ்ப் பெருமையும் என்றுமே யறியாமல் இறைமை தாங்கிய jன்னலtடிவெனுந்jமிழப்nபாலியர் கன்னலந் தமிழையுங் காட்டிக் கொடுத்தனர். தமிழ லாதுயிர் தமிழனுக் கின்மையால் தமிழன் தன்னிலம் தன்னுயிர் தாங்கவே இமையுந் தாழ்விலா தியன்ற யாவையும் அமையச் செய்குவிர் அயன்மொழி யொழியவே. தன்மை யிழந்து தவிக்கின்ற தமிழன்தன் முன்மை யுணர்ந்து முன்னேறிச் சென்றிட உண்மை வடிவெனும் ஒருவன் உணர்த்தவும் இன்னி திசைத்தேன் இசைத்தமிழ்க் கலம்பகம். குறையும் எழுத்தினாற் கூடுவ தினிமையே அறையும் அளபெடை யாக்கியே யெழுத்தொலி நிறையும் அளவுற நீட்டுக இதற்கேயிம் முறையும் சிலவிடம் முதன்மையாய் ஆண்டுளேன். பாடற்குழாம் ஒன்றேற் படுத்துக வூர்தொறும் கூடற் குரியவாய்க் குறித்திட்ட நாள்களில் தேடற் கரியதாம் தீந்தமிழ் தெருவெலாம் பாடிப் பராவுக பயிற்சியைப் பெற்றபின். இந்தி யொழிந்தபின் இருமொழிக் கொள்கையே செந்தமிழ் நாட்டிலே சீராக வேரூன்றி வந்தவ ருந்தமிழ் வாணரும் வாழ்ந்திட முந்திய இறைவனும் முழுமையும் அருளவே. கடவுள் வாழ்த்து காப்பு குமரி நிலத்தெழுத்த கோமொழி யேனும் தமிழர் அடிமைத் தனத்தால் - சிமிழ்ந்திருக்கும் ஆரிய ஞாட்பின் அருந்தமிழை மீட்கவொரு சீரிய மீட்பன் துணை. இசையாசிரிய வணக்கம் இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் லெழில்முகத்தான் என்னிடை யன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள் மன்னுக என்றன் மனத்து. இசைத்தமிழ் கலம்பகம் தமிழ் ஏத்து ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். (தண்டியலங்கார வுரைமேற்கோள்) 1. கடவுள் வணக்கம் (படர்க்கைப் பரவல்) பசனை செய்வோம் கண்ணன் நாமம் என்ற மெட்டு இசைந்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை ப. காலையிலே விழித்தெழுவோம் - முதற் கடவுளின் அழகிய கழலிணை விழுவோம் கைகுவித்தே தொழுவோம் (நாளும்) (காலை) அ. வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி வினைகளை முறையே நிறைவேற்றி மாலையில் நல்ல மனவமைதியுடன் மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்) (காலை) பனுவல் 2. கடவுளை வேண்டல் மாசில் வீணையும் என்ற மெட்டு பண் - (பூரிகலியாணி) தாளம் - முன்னை 1 உலகம் யாவையும் உள்ளன வாக்கலும் நிலைநி றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாய்தனித் தலைவா உன்திருத் தாளில்எம் தலையே. 2 மருளுறும் இந்த மாநிலம் யாங்களே தெருளுறும் வண்ணம் தீந்தமிழ்ப் பாணியால் பொருளுறும் உன்றன் புகழேபு ரிந்தனம் அருளுவாய் இன்றே அறமுது கடலே. 3 குலமொன் றாகியே கோவேஎம் தந்தையே உலக ஆட்சியும் ஒன்றாக வோங்கியெம் புலமை யன்பினாற் போரெது மின்றியே நலமாய் வாழ்ந்திட நன்மதி யருளே. 3. இறைவணக்கம் பண் - (பந்துவராளி) தாளம் - முன்னை ப. எங்கும் நிறைந்த பொருளே - இன்றருளே து.g. தன்கண் பூதம் ஐந்தும் தங்கும்படி விரிந்தும் நுண்பொருளும் நுழைந்தும் நுண்ணியதின் நுணித்தும் (எங்கும்) உ. இங்கண் சங்கதமுடன் இந்தியும் வந்தடர்ந்த எந்தமிழ்இற எரியொடு நெய்யுற அங்கண நின்னடி அணிந்தனெம் முடிமிசை அறிவுரிமை பெற அடிமையெலாம் அற (எங்கும்) 4. கடவுள் வழுத்து பண் - (பந்துவராளி) தாளம் - ஈரொற்று ப. இறைவா ஏனோ மறைவாய் இருப்பாய் - எந்நாளும் து.g. பறைவாயிற் பற்றில்லிகள் பரமாநீ இ(ல்)லையென்றே அறைகாலும் அமைந்துற்றாய் அஞ்செவியே உனக்கின்றோ (இறைவா) உ. அறைவாய்ப் பூங்குழவி அன்னையின் பால்அருந்தினும் அவளைக் காணாமைபோல் ஆனதேஎன் நிலைமை நிறைவாய் எல்லாமாய் நீயெங்கும் இருக்கும்மெய் நினைவுறுத்து கின்றாயோ நினையறியா தென்புலமை (இறைவா) 5. இசைமாணவர் இறைவனை வேண்டல் லம்போதரா லகுமிகரா என்ற மெட்டு பண் - (மலகரி) தாளம் - ஈரொற்று ப. அன்பே வடிவெனும் அறவா து. ப. இன்பே தரும் இசையறிவருள் (அன்பே) அ. 1 எங்கும் நிறை இறைவா உன்றன் எழிலார் கழல் இணைபணி கின்றேன் (அன்பே) 2 தேவா உன் திருப்புகழ் பாட தென்னோர் பண்ணுந் திறமுங்கூட (அன்பே) 3 தீங்கே விளைத்திடுஞ் சொல்லெலாம் தீரவருள் தீந்தமிழிலே (அன்பே) இதிலுள்ள அளபெடைகள் வருமாறு :* ப. - அஅன்பேஎ. து.g. - இஇன்பேஎ. அ. 1. எஎங்குஉம். இறைவாஆ. எழிலாஅர். 2. தேஎவாஆஆ. தெஎன்னோஒர். திறமுஉம் 3. தீஇங்கேஎ. சொஒல். தீஇருஉம். தீஇம். (குற்றுயிர் அடுக்கியிசைப்பது குறிலடுக்கிசையாம் நெடில் அளபெடுத்தல் உயிரளபெடையாம். அஅன்பே - குறிலடுக்கு அன்பேஎ - உயிரளபெடை - பதிப்பாசிரியர்) *F¿¥ò :இப் பாட்டு இசைமாணவர்க்கென்றே இயற்றப்பட்டது. தனித்தமிழ்ப் பாட்டை விரும்புவார் இதைப் பாடலாம். 6. இசையின்பம் கொலுமவரெகத என்ற மெட்டு பண்- (தோடி) தாளம் - முன்னை ப. இசையினும் இன்பம் வேறுண்டோ எவ்வகை யுயிர்க்கும் து.g. வசையற வாழுலகில் வழங்கறம் இரண்டிலும் இசைபெற ஈரின்பமும் இருமடி யாக்கும் (இசை) அ. மரஞ்செடி கொடிபயிர் மகிழ்ந்து முந்திவளரும் மருவறு நச்சுப்பாம்பும் நடஞ்செயும் நல்லபாம்பாம் முறஞ்செவி யானையும் முதையில் மயங்கிநிற்கும் முளையிளஞ் சேய்முதல் மூதும்நோயும் முடிவும் (இசை) 7. தமிழன் பள்ளியெழுச்சி பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் என்ற மெட்டு பண் - ( பூபாளம்) தாளம் - ஈரொற்று 1 கதிரவன் எழுந்துபல் கன்னலு மாகிக் கருமங்கள் செய்யவே போகின்றார் மாந்தர் குதிகொள் சிறாருந்தம் சுவடிகள் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியாய்ச் செல்கின்றார் பள்ளி எதிரிகள் உன்னையே இறந்தானென் றின்னே எடுத்துப் புதைக்கவும் எழுவது காணாய் மதியுணர் வின்றியே மடிவெனுந் தூக்கம் மயங்கிக் கிடக்கின்றாய் மறுத்தெழு தமிழா. 2 இரந்தவருமின்று புரந்தவ ரானார் எளியவ ரும்இன்று வலியவ ரானார் புரந்தவர் கொற்றமும் போற்றின வுன்னை இரந்தவர் பாலேநீ இரக்கின்றாய் இன்றே பரந்த வெளியிற்பல் லாயிரங் கல்லே பறந்துதிங்கள்செவ்வாய் பார்க்கின்றார் ஏனோர் கரந்தும் அண்டைவீட்டுள் கால்வைத்த லின்றிக் கண்மூடித் தூங்குவாய் கடிதெழு தமிழா. 3 பெருநாமப் பொறிகளைப் புனைந்தெயி லேற்றிப் புலமைபல் துறையிலும் பொலிந்தார்உன் முன்னோர் அருநூல்கள் முதன்முதல் ஆக்கினார் அவரே அறியாமை மீதூரும் அஃறிணை நீயே கருநாடகமான கரடுறு சகடே கண்மூடித் தனமாகக் காலமுஞ் செய்து வருமானங் குன்றியே வறியவ னானாய் வாழ்நாள் வீணாகாமல் வல்லெழு தமிழா. 4 உறவுபகை யென்றே ஓராது மாந்தர் ஊனைத் தின்றுவாழ்ந்த பேரிருள் நாடும் அறிவு மிகும்உயர் ஐரோப் பியரையும் அடக்க முனைகின்ற ஆற்றல்கொள் காலம் வறியவரா யிங்கு வந்துன்னை யண்டி வாழ்வு கலைபொருள் வாய்மொழி பெற்றும் அறுசுவை யுண்டியே ஆக்கிடின் உன்கை அருந்த மறுக்கின்றார் ஆய்ந்தெழு தமிழா. 5 உலக முதன்மொழி யாகும்உன் தமிழே ஒன்றுபலவாக உலைந்துபோய்ப் பிரிந்து கலவை இணைஅதி கரிப்பொடு சுருக்கம் கடன்இடு குறியினால் பிறமொழிப் பெருக்கம் பலதிற நாடுசேர் நாவலந் தேயம் பாழாக இந்திவந் துன்மொழி தேயும் ஒலியொடு வரியும்பின் ஒழியவே அண்மை உறும்தேவ நாகரி உணர்ந்தெழு தமிழா. 8. பழந்தமிழன் சிறப்பு ரகுபதி ராகவ ராசாராம் என்ற மெட்டு 1 தமிழா உன்றன் முன்னவரே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே. 2 பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம் (தமிழா) 3 யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம் ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம் (தமிழா) 4 கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம் (தமிழா) 5 தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம் அடுத்தவனாம் (தமிழா) 6 காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம் கங்கை வடக்கும் எட்டினனாம் கயலைப் பனிமலை நட்டினனாம் (தமிழா) 7 நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம் (தமிழா) 8 அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி நெய்தானாம் அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிர விளைநன் செய்தானாம். (தமிழா) 9 நானில மெங்கும் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு நாகரி கம்நற்பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு (தமிழா) 9. இதுவும் அது (தமிழ நாகரிக முன்மை) `கப்பற்பாட்டு' மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு 1 மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! 2 மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! 3 பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! 4 பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே! 5 அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே! 6 அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே! 7 பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே! 8 கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே! 9 வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே! 10 துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! 11 இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே! 12 கடவுளென்று முழுமுதலைக் கண்டவனும் தமிழனே கரையிலின்பம் நுகரவழி காட்டியவன் தமிழனே! 10. தமிழ் வரலாறு உன்னையே அன்புடனே வாரியணைந்தேன் என்ற மெட்டு 1 குமரிமா மலைப்பிறந்த குழவித் தமிழே குலவுமலர் முல்லையணை கிடந்த தமிழே ஏனை நிலம்நின்றே இங்குவந்தாய் என்றே வானைமறை உன்பகைவர் வம்புரைத்தார் முன்றே 2 மருதநன் னிலத்துருண்டு புரண்ட தமிழே மருவியகற் காலந்தலை யெடுத்த தமிழே வடதிசையில் நின்றே வடமொழிதான் முன்றே கடவஇங்கே வந்தைஎன்றார் கட்டியுரைத் தொன்றே 3 செம்மையாய்ச் செம்பொன் எழுந்திருந்த தமிழே சீரியநல் லிரும்பில் தவழ்ந்தூர்ந்த தமிழே சீனநிலம் நின்றே சிறந்துவந்தாய் என்றே மானமொழி நூலறியார் மயங்கிவிட்டார் பின்றே 4 திண்ணியோர் காதல்மறம் நின்ற தமிழே தெரிந்ததிரு முனிவருளம் நடந்த தமிழே நண்ணிலத்தில் நன்றே நண்ணுகடல் நின்றே எண்ணியிங்கே வந்தையென இயம்புபவர் உண்டே 5 பாண்டியன் கழகம் மகிழ்ந்தோடு தமிழே பாணரது வாயிலே பண்பாடு தமிழே பிரித்தானியம் நின்றே பெயர்ந்து வந்தாய் என்றே பொருத்தமின்றி யுண்மையெனப் புகன்றவரும் உண்டே 6 தாண்டியே கூத்தர்வயின் ஆடு தமிழே தலைக்கழகம் முழுவளர்ச்சி யடைந்த தமிழே இருண்டகண்டம் நின்றே இங்குவந்தாய் என்றே தெருண்டறியார் தம்மனத்தின் திரிபுரைத்தார் இன்றே. 7 பலதிசை சென்றுமிகத் திரிந்த தமிழே பற்பலவாம் சேய்களையும் பெற்ற தமிழே பலதிசையி னின்றே பற்பலகால் வந்தே கலவிநின்றா யென்றுரைக்குங் கரியகண்டர் உண்டே 8 என்றுமே இளமைநிலை கொண்ட தமிழே இறைவனெனப் பலமொழிப்பின் எஞ்சுந் தமிழே உலகமெல்லாம் இன்றே ஒன்றுசேர நன்றே உறுதுணைசெய் உன்முதிய உறவுகொண்டு நின்றே. 11. தமிழின் முதுமையும் இளமையும் சித்தாதி சித்தர்கள் நித்தம் துதித்திடும் என்ற மெட்டு 1 எண்ணிற்கு மெட்டாத தென்னர் புலத்தான கன்னித் தனித்தமிழே என்உளமகிழ் வண்ணக் கருத்துமிழே இங்கே - ஏனைமொழி யுன்னால் ஈனை பெற முன்னே தானே தனித் தோன்றினாய் பெருஞ்சொல்வளத் தானே கிளைத்தூன்றினாய் 2 பேரச் சிறாரிறந்து தீரப்பின்னும் வலிமை சீருற்றிருந்தோ னென்ன இளமைநலம் - பாரித்திருந்தாய் இன்னும் பல ஆரிய மாமொழிகள் சீரிய வேனுமுனே பாரில் வழக்கிறந்து போயின வுன்றன் - பேரே வரச் சிறந்து. 12. முதல் தாய்மொழி ரகுநாயக என்ற மெட்டு பண்-(அமிசதொனி) தாளம் - முன்னை ப. முதல்தாய்மொழி மூவாத முத்தமிழ் பேதைத்தமிழரால் ãw§fh* தமிழ் து.g. முதுநாள் நிலத்தென் முனையேநிகழ் முதன் மாந்தர் வாயின் முளையா முகிழ் (முதல்) *F¿¥ò : பிறங்காது அமிழ் எனப் பிரிக்க. உ. வடுகாய் முன்தோன்றி வடநாவலே வளராரியத்தின் கிளைகள்பின் பல்கிக் குடமேற் பலகுடும் பாகிய கோலங் கொண்டபின்னும் குமரியா மன்னும் (முதல்) 13. செந்தமிழ்ச் சிறப்பியல் அருட்சோதித் தெய்வம் என்னை என்ற மெட்டு பண் - (பந்துவராளி) தாளம் - ஈரொற்று 1 பாரில்முதல் தாய்மொழியாய்ப் பரந்தெழுந்த செல்வம் பனிமலையுந் தோன்றுமுன்பே பயின்றுவந்த செல்வம் காருலவு குமரிமலைக் கண்வளர்ந்த செல்வம் கண்ணுதலாற் குமரிமக்கள் கண்டறிந்த செல்வம் ஆரியத்தின் அடிப்படையாய் அமைந்தபெருஞ் செல்வம் ஆனபெரு மொழியிலெல்லாம் அளவிநின்ற செல்வம் ஏரணமெய் முதற்பலநூல் இயன்றகலைச் செல்வம் இலக்கணஞ்சற் றிணையுமின்றி இலங்குகின்ற செல்வம். 2 எளிவருமுப் பானொலியால் இயங்குகின்ற செல்வம் எப்பொருளும் தகுந்தசொல்லால் இசைக்கவல செல்வம் அளிமிகுநன் னடுநிலையாய் ஆண்டுவந்த செல்வம் அனைவரையும் உறவென்றெண்ணும் அன்புநிலைச் செல்வம் வளிநிலையில் வாழ்முனிவர் வகுத்தமறைச் செல்வம் வையகத்தும் வீடுபெற வழியுரைக்குஞ் செல்வம் களிமகிழ்கொண் டாடமுதற் கடவுள்கண்ட செல்வம் கலித்தொகைதீந் திருக்கோவை கருத்துருக்குஞ் செல்வம். 3 மொழியொடுமன் வரலாற்றின் மூலமெனுஞ் செல்வம் முத்தமிழும் முதற்கழகம் முதிர்ந்திருந்த செல்வம் வழிவழியாய்ப் பாண்டியரே வளர்த்துவந்த செல்வம் வள்ளுவனார் உலகவறம் வகுத்ததிருச் செல்வம் பொழிகடும்பாப் புலவர்பலர் புனைந்தவருஞ் செல்வம் பொன்னுலக வின்பமிங்கே பொங்குகின்ற செல்வம் கழிபலவா மகமொழிகள் கலித்தெழுந்த செல்வம் கன்னியென முன்னைநிலை காணநிற்குஞ் செல்வம். 14. தமிழின் பதினாறு தன்மை 1 தொன்மையொடு முன்மை தென்மையொடு நன்மை தாய்மையொடு தூய்மை தழுவிளமை வளமை. 2 எண்மையொடும் ஒண்மை இனிமையொடுந் தனிமை செம்மையொடு மும்மை திருமையொடும் அருமை. 3 இங்ஙன்பதி னாறு இலகுந் தமிழ்க் கூறு எங்குமேயிவ் வாறு எடுத்துமிகக் கூறு. 15. செந்தமிழ்ச் சிறப்பு மண்டலத்தில் இதுவரை கண்டதில்லை என்ற மெட்டு 1 இந்த வுலகத்தினிலே எந்தமொழி கற்றிடினும் செந்தமிழெனெச் சிறந்ததில்லை இது - முந்து தென்னிலத்திருந்த எல்லை வழி - மோனை யெதுகையமை தேனை நிகரினிமைப் பாவே நூலும் நாவு மேலும். 2 இன்னிசையுடன் நடனம் பன்னிலம் இருந்திடினும் இந்நிலமே மொழியொடு தோதும் நன்று - கண்ணியே முத்தமிழ் என ஓதும் தமிழ் - பொருளிலக்கண மொழி அருளிலக்கிய வழி உண்மை தேறும் நன்மை கூறும். 3 மண்ணுலகில் உயிரினம் எண்ணரிய பகுத்தறி வொண்ணிய மாந்தனே உயர்திணையே மிசை - விண்ணுலக வேந்துமில்லை இணையே தமிழ் - உலகவழக்கும் இதை இலக விளக்கி விடும் குமரி நிலமே எமரின் புலமே. 16. செந்தமிழ்ச் செய்யுட் சிறப்பு ஐயா சிறுவன் என்ற மெட்டு ப. செய்யுள்எந்த மொழியிலுந்தான் சிறந்த நடையே - அது சீர்மையொடு முதன்முதற் செந்தமிழ ரிடையே - மிகச் செறிந்த தொடையே உ. 1 வையகமே மருளத்தமிழ் வண்புல வோரே - தம் வாயுரையும் செய்யுளிலே வழங்கிவந் தாரே - அவ் வழமையினால் நூலுரையின் வடிவதன் சீரே - உரித் தொகுதியும் பாரே (செய்.) 2 வெள்ளைகலிப் பாவுமுண்டோ வேறு மொழியே - ஒலி வீறுதமிழ் வண்ணங்களும் கூறும் வழியே - ஒரு வாறுமில்லை கடுமையுந்தான் பாடும் நிலையே - எதும் கூடவில்லையே (செய்.) 17. தமிழின்பம் (நாலடியார், 137) ஆனந்தம் என் சொல்வேனே என்ற மெட்டுவகை எந்நாளுமே இன்பமே - தமிழ் தென்னாடரின் தென்புமே - இது விண்ணாடும் இல் என்பமே (உரைப்பாட்டு) தொன்னூற் பெருங்கேள்வித் துறைபோய நல்லறிஞர் தொகையாகக் கூடிப் பகையே என்னேனு மின்றியுளம் இசைந்துகூர் ஒண்மதியால் இனியவுரை யாடி நகையே (எந்.) 18. தமிழே தனிமொழி நாடெங்கும் புகழும் கிரீடாதிபநிதி என்ற மெட்டு ப. தானாக முந்திய தாய்மொழியாய் வந்த தமிழே தனிமொழி உ.1 மேனாடுசார் இலத்தீன மொழியிலும் மேவுங் கிரேக்கஞ் செர்மானியிலும் வானோர் மொழியென்கீர் வாணமதிலும் நாம் காணும் பல சொல்வேர் மாணுந்தமிழ் (தானாக) 2 ஆயிரக் கணக்கில் தூய தமிழ்ச்சொற்கள் சேயநாள் மறைந்து போய்விடினும் ஆயும் பொருளெது வாயினும் இந்நாளும் ஏயும் தென்சொல் புதிதா யுடனும் (தானாக) 19. தமிழே தேவமொழி நீலகண்ட மகாதேவா என்ற மெட்டு பண் - (வசந்தா) தாளம் - ஈரொற்று தேவ மொழியுந் தென்னன் தமிழே தெளிவு கொண்டு திளைக்க அமிழே து. ப. ஆவி யிறந்த மாந்தர் போன்றே ஆரியந் தெய்வ மாகுஞ் சான்றே (தேவ) அ. தானே தோன்றித் தலைமை கொண்டு தனியொரே குலங்கடவுள் கண்டு நானிலம் நண்நடுவு நின்று நாடும்பொது நன்மறையும் விண்டு (தேவ) 20. தென்சொல் வளம் சூகி முகுந்தேசி என்ற மெட்டு ப. செந்தமிழ்ச் சொல்வளமே - சேருளமே. 1 முந்தே யழிந்தன முன்னருந் தொகையே பிந்தே யுளசொலும் பெருமைகொள் வகையே (செந்) 2 இல்லகம் குடியே இருப்பிடம் மனையே உள்ளன உறையுளும் உணர்த்த வீட்டினையே (செந்) 3 இலைதாள் தோகை ஏனைவல் லோலை இருக்கும் தன்மையில் இலைவகை நாலே (செந்) 4 அரும்பே போதே அலர்வீ செம்மல் ஐந்தும் மலர்நிலை அறைந்திடும் செம்மை (செந்) 5 பிஞ்சே காயாம் பெரிதாய்க் கனியாம் பிஞ்சும் மூசொடு வடுகச்சல் தனியாம் (செந்) 6 ஆதன் உறவி அறியும் புலம்பன் ஓதும் முழுவியல் உயிரினை விளம்பும் (செந்) 7 எழுவகை யிளம்பெண் ஏற்றன பெயரும் தழுவும் குரவர்பேர் தலையுமைந் துயரும் (செந்) 8 திரவிட மொழியும் தீர்வட வழியும் விரவிய அடிப்படை விழுத்தமிழ் விழியும் (செந்) 21. தமிழின் என்றுமிளமை கண்ணா கருமைநிறக் கண்ணா என்ற மெட்டு ப. என்னே! தமிழ் இளமை என்னே! - அதற் கீடான தொன்றில்லையே - இதை மறுப்பாருண்டோ என்றும் மறைப்பாருண்டோ - எதிர் மாற்றாரும் மறப்பாருண்டோ (என்னே) அ. 1 முதன்மாந்த ரொடுதோன்றி முதிதாயினும் - மக மொழியாவும் பலவாகக் கிளைபோயினும் இதுபோதும் முன்போல்மெல் லியல்தாங்கியே இளஞ்சேயர் பிணியார்வாய் எளிதாகவே (என்னே) 2 இலத்தீனம் வடநாவல் மறையாரியம் ஏராளந் துணைகொண்டும் இழவானவே இனத்தாரும் வேற்றாரும் நெடுங்காலமாய் எதிர்த்தேதீங் கிழைத்தாலும் இருக்கும் தமிழே (என்னே) 22. தமிழின் தன்னேரின்மை பண் - (காப்பி) தாளம் - முன்னை ப. தானே தனக்குவமை - தமிழ் இம்மை தேனே கரும்பே தெளிவே தேவர் உண்ணும் தீஞ்சுவை யின்னமுதே யென்ப தவமே (தானே) உ. 1 தேனேபோல் இனிதாம்நெய் தேடற்கெங்கும் முட்டும் தேரின் மருந்தாகும் தெரிந்தேயுள்ள மட்டும் ஆனாலும் தெவிட்டும் அளியும் அதிற் கொட்டும் அறிவு மயங்கும்உள் அனலும்நரை கிட்டும் (தானே) 2 கரும்பை யினிதென்று கண்டுசீனம் நின்று கலத்திற் சேரர்தந்த கதைவரலா றுண்டு விரும்பிய தைத்தின்ன விடலைப்பல்லே நன்று வெம்மை அதன்சாறு விளைக்கும் தெரிஇன்று (தானே) 3 தெளிவே பனஞ்சாறக் காரநீர்என் றாரும் தீங்கள் நறாவென்று தெரியும்பத நீரும் களியால் உணர்கொல்லும் கடும்பேரிசிவு நேரும் காலங் குன்றவழிகோலும்அது பாரும் (தானே) 4 தேவர்தம் அமுதென்று தெட்டுவதோ வம்பு திரைகடல் மீதது திரியும்குதிரைக் கொம்பு மூவர்தம் முன்னென்று மொழியும்அசுர் முன்பு முயன்று கடைந்ததை முகர்ந்திலராம் பின்பு (தானே) 23. தமிழின்பம் கோரினவர மொசகுமைய என்ற மெட்டு பண் - (இராமப் பிரியம்) தாளம் - ஈரொற்று ப. பேரிலுந்தமிழ் இனிமைதங்கும் பேரின்ப வாரி து.g. சாரும் எதுகை மோனை வண்ணம் சற்றுந்தவறாது நண்ணும். (பேரிலுந்) அ. சீராரும் மொழியின் மும்மை சிறந்த மறையாங் குறளின் செம்மை சிலம்பொடு தனிப்பாடல் சுவையும் செப்புதற் குண்டோ உவமை எவையும் தேரும் நல்லகப் பொருளின் இன்பம் திருக்கோவை கலித்தொகையிற் பொங்கும் திருமாமணி வாசகர்மயங்கும். - (பேரிலுந்) 24. பொருளிலக்கணச் சிறப்பு கொலுமவரெகத என்ற மெட்டு பண் - (தோடி) தாளம் - முன்னை ப. பொருளிலக் கணமே போலெங்கு மில்லை து.g. மருளுறும் பொறிகளால் மறுவுலகங்கள் செலும் பரவெளி யூர்திகள் பற்பலவாகிய காலும் (பொருளி) உ. தெருளுறுஞ் சித்தர்கூடித் தீந்தமிழ் செய்ததினால் திருவடியா ரும்தேரும் திறமேகோ வையும்ஒன்றி அருள்பெறுந் தாயெனும் அன்பொடு காமஞ் சேர்காதல் அகம்பிற பொருளெலாம் ஆகும்புற மென்றே (பொருளி) 25. திருக்குறள் மருகேலரா என்ற மெட்டு பண் - (சயந்தத்திரு) தாளம் - முன்னை ப. குறள்மாமறை கொள்வாயுறை து.g. அறவாழி யருளால் அறவாழ்வும் துறவும் அரசாள்வும் பொருளும் அகவின் பமும் (குறள்) அ. 1 பிறப்பாலே யாரும் பிறங்காரே பாரும் சிறப்பாலே வேறு செயும்வினைப் பேறு அறப்பா லிரண்டும் அனைவர்க்கும் ஒன்றும் அருட்பாலை ஓவார் அந்தணாள ராவார் (குறள்) 2 வேளாளனே யாவான் விழுமியே வாழ்வான் விருந்தோம்பும் ஆறு வீடும்பெறும் பேறு தாளாளன் தன்மானம் தவாது நால்வலியும் தகவெண் தீர்மானம் தரும்வென் வினை (குறள்) 26. திருக்குறட் சிறப்பு எதுடநி லிசிதே என்ற மெட்டு ப. இணையாமோ முப்பாற்கே ஏனை நூலே இந்த ஞால மே து.g. இணையடிகளால் எல்லா ரெண்ணமும் அளந்து தினைநீர்ப் பனைபோல் தெள்ளத் தெளிக்க (இணை) உ.1 எனாதெ னாதென எலாம தங்களும் எநாளும் போரிட எனேஇ தன்திறம் முனேப லோர்உரை சொனாரே ஆயினும் பொனேயெ னும்பொருள் மனேந வில்தொறும் (இணை) 2 மறையென நல்லறத் துறையென அரச முறையென நற்காம வரையறை யுமெனக் குறையெது மிலாது நிறைவுற இனிய நறையெனுந் தமிழில் அறைநூல் இன்குறளே (இணை) 27. திருவள்ளுவர் நாயக மேநபி நாயகமே என்ற மெட்டு ப. நாவல னேபெரு நாவலனே நடுவே யுரைபெரு நாவலனே து.g. நால்வேறு பாலும் வாழ்வார நூலும் நடுவே யுரைபெரு நாவலனே (நாவலனே) உ.1 வேளாண் மறையெனும் நாலடி யும்பினே விளையும் தமிழ்மறை நாவலனே வியனுல கதையே பொதுமறை யாக விரும்பும் முறைதரு நாவலனே (நாவலனே) 2 ஆரியன் தேவெனும் ஏமாற் றைஅற அன்றே அகற்றிய நாவலனே சீரிய முறையில் பேரின்ப நெறியும் செப்பிய தமிழ்மறை நாவலனே (நாவலனே) 3 பிறப்பால் சிறப்பிலே யெனும்உண் மைஇகம் பிறங்கவே யுரைதிரு நாவலனே பிறந்தகம் பெற்றோர் பிறரறி யாமை பேணிய பெருந்தமிழ் நாவலனே (நாவலனே) 28. சிலப்பதிகாரச் சிறப்பு பண் - (வசந்தா) தாளம் - முன்னை ப. சிலப்பதி காரம் செந்தமிழ் வீறும் து.g. புலத்துறை போல்மறம் பொன்மலை காறும் (சிலப்) உ.1 நிலத்தொடு முந்திய நெடுவர லாறும் நிலவுநல் இயலிசை நாடகக் கூறும் கலத்தினிற் சூழ்வினை காணிடந் தோறும் கன்னித்தமிழ்ச் சிலம்பு கலின்கலின் மாறும் (சிலப்) 2 சேரனை முன்வைத்த சீர்ஒரு திறமே செங்குட்டு வன்இளங் கோவர்செந் திறமே பாரினிற் பழந்தமிழ்ப் பண்பொடு மறமே பட்டய மெனப்பகர் பாவின்செந் திறமே (சிலப்) 29. இளங்கோவடிகள் சித்திரம் பேசுதடி என்ற மெட்டு ப. முத்தமிழ் மாமுனிவன் - தவம் நத்திளங்கோ என்பவன். து.g. முத்திறமும் நடுவன் - மிக ஒத்துரைக்கும் குடவன் (முத்.) உ. உடன்பிறப் பன்பென்பதே - வடி வுற்றவன்கொள் பண்பிதே மடந்தபச் சொன்ன புதை - தமிழ் மறந்திகழ் கற்பின் கதை. (முத்.) 30. யார் யார் எவ்வெப்பா வல்லார்? (இசைந்த மெட்டிற் பாடுக) 1 வெண்பா விற்கே புகழேந்தி விரியும் அகவற் கிளங்கோவே பின்பாங் கலியே பெருங்கடுங்கோ பிரிவஞ் சியுருத் திரங்கண்ணன். 2 குறள்வெண் பாவில் திருவள்ளுவன் குறையின் னிசைமுன் றுறையரையன் திரள்பஃ றொடையுமா பதிசிவனாம் திரியுங் கலிவெண் பாகூத்தன். 3 கொச்சகத் தரவருள் மொழித்தேவன் கோவைத் துறைமணி வாசகனார் மெச்சுங் கலித்துறை திருத்தக்கார் மேவும் திலதமுங் கோவையெலாம். 4 தாழிசைத் தலைவன் சயங்கொண்டான் தகும்பல் k©oy«* பெருங்கம்பன் பாழிசை மருட்பா ஆரிதனார் பரிபா டல்நல் லந்துவனார். 5 வண்ணத் திற்கே அருணகிரி வசைபா டற்கே காளமேகம் எண்ணிக் கொடுத்த அடிமுடிப்பில் இலகும் முனிவர் சிவஞானம். 6 கடும்பா விற்குக் காளமேகம் கருதும் இன்பா வெண்காடர் அரும்பா மாம்பழப் பாவரிமா அகலப் பாவும் மிகுகம்பன். * மண்டிலம் = விருத்தம் 31. தமிழ்நாடு பாருக் குள்ளே நல்ல நாடு என்ற மெட்டு ப. நானி லத்தே நல்ல நாடு - என்றும் நம்தமிழ் நாடு அ.1 நானிலத் தும்மிகு நன்னிலத் தில்விளை நால்வகைச் செல்வமும் சால்வதுடன் வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலைபின் விளைநில மாவதிந் நாடு (நானிலத்) 2 பொன்னொடு வெள்ளியும் போற்றும்பல் விரையும் போர்வை பல்லணியுடை வேர்மருந்தும் மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற மேலுலகும் விரும்பும் நாடு (நானிலத்) 3 கன்றுதனை யிழந்து கதறிய ஆவினால் கடைமணி யசையவும் காவலனும் கொன்றுதன் மகனையே கொடுமையை நிமிர்த்துச்செங் கோன்முறை குலவிய நாடு (நானிலத்) 4 கூலிகொடுத் தினிய கரும்புதினச் சொல்லிக் கூடிய விருந்தின்பின் மிச்சிலுண்டு நீலியின் கணவற்கு நிகழ்த்திய வாய்மொழி நிறைவேற்றின வேளாளர் நாடு (நானிலத்) 5 வறுமையால் வாடிய வண்டமிழ்ப் புலவனும் வாழவென் றரசன்தன் தலையுந் தந்தே அறியாது முரசணை அயர்ந்திடும் புலவர்க்கும் ஆலவட்டம் விசிறும் நாடு (நானிலத்) 6 முத்தமி ழிலக்கணம் முதுமறை மந்திரம் முன்னரும் பல்கலை இன்குறளே சித்தரின் மருத்துவம் சிறந்தபொன் னாக்கமும் சிலம்பொடு திகழ்ந்ததிந் நாடு (நானிலத்) 32. தாய்நாட்டு வழுத்து வந்தே மாதரம் என்ற மெட்டுவகை ப. தாய்நாடே போற்றி உ. 1 சேயரின் வாழ்நாள் சிறந்திடக் கனியும் சீரிய வுணவும் செம்பொனும் மணியும் வாயுறை பலவும் வழங்குவை இனியும் வண்பெருந் தமிழே வழிவழி யணியும் (தாய்) 2 சேரல சோழ பாண்டியர் என்று செந்தமிழ் வேந்தர் மூவரும் நின்று போரற நாவல் புரந்திட நன்று பொலிந்தனை நீடு புகழவே பண்டு (தாய்) 3 முல்லையும் வண்டும் முருகுயர் மயிலும் முதலிய பலவும் முனிவறப் பயிலும் வல்லமை யில்லார் வந்திடின் இயலும் வகைபல தருவை வாழவே அயலும் (தாய்) 33. நாவலம் முதலில் மூவர் தண்பொழில் திரிலோகமும் புகழும் சுந்தர என்ற மெட்டு பண் - (மத்தியமாவதி) தாளம் - ஈரொற்று ப. மூவேந்தரே முதலில் நாவலம் மூன்று நாடாய் ஆண்டு வந்தார். து.g. முந்நாட்டுஞ் சேரவே மண்ணாட்டு நாரதன் மூன்றென் உலகு தோன்ற வுலவும் (மூவேந்) அ.1 பாவேந்தர்முன் பரவு குமரி பரவை கொண்டது பழநற் பாண்டி தாவீந்தருள் திருவிற் பாண்டியன் தந்த கூற்றம் தான்பிற் பாண்டி (மூவேந்) 2 வடநாடு திராவிட மானபின் வந்த தாரியம் இந்தியா என்ன இடமே குன்றி எல்லைதென் தள்ளியே இன்றமிழ்நா டின்றிந் நிலைமை (மூவேந்) 3 கடையாந் தமிழ்க் கழகத்தின் பின்னே காவலர் பிறர்மேவித் தென்னகம் முடிவேந்தொடு முந்தமிழ்ப் பண்பாடும் முழுதுங் கெட்டுப் பழுதுபட்ட (மூவேந்) 34. செந்தமிழ் நிலம் குன்றநகர் வாழும் என்ற மெட்டு ப. செந்தமிழ் நிலமே - தென்பாண்டிச் செழியன் மென்புலமே - எந்நாளும் (செந்) து.g. முந்தும்அவன் வலமே - தென்வாரி முழுகி யின்றிலமே - என்றாலும் (செந்) உ. 1 முத்தமிழ்க் கழகம் - மூன்றுமுன்னே முடிவேம்பன் உலகம் - பின்னாளும் எத்தமிழ்க் கழகம் - ஏனைநிலம் எழில் தமிழ் இலகும் - உயர்தனிச் (செந்) 2 வேழ மிகுகோடு - வில்லவனாம் வேந்தன் மலங்காடு - விளையுநெல் சோழம் நிறைகூடு - பாண்டியமே சொக்குந் தமிழ்நாடு - முத்தம் மின்னும் (செந்) 3 வைகையொடு மருதம் - தென்வடக்கு மருவூரொடு கருவும் - கீழ்மேற்கு வைகும்நில முழுதும் - செந்தமிழாய் வனைதல் பொய்கருதும் - சொல்லினிய (செந்) 4 இங்கன் இருந்தாலும் - பாண்டியிலே இல்லை தமிழுணர்ச்சி - இந்நாளே கொங்குநிலம் சோழம் - கொண்டாடும் குலவு தமிழ்மலர்ச்சி - மொழியிலே (செந்) 35. பழம் பாண்டிநாட்டைக் கடல் கொண்டமை எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தி என்ற மெட்டு ப. வடபா லுயர்ந்து தென்பாலே தாழ்ந்து வழுதிநா டுண்டது வார்கடலே உ.1 இடமான நாடும் எழுநூறு காதம் எல்லையில் பொருளோடும் இரையானதோ இடைமன்ற மும்மேல் எண்ணா யிரம்நூல் ஏதுமே யில்லாமல் இறந்தாழ்ந்ததோ (வடபா) 2 பல்லா யிரஞ்சொல் பல்வேறு நுண்மைப் பாகுபாடு செய்தும் பாழானவோ இல்லாத சொல்லும் இணைத்தென்றும் கொள்ள இருந்தபல் வேர்ச்சொல்லும் ஏதானவோ (வடபா) 3 தலையாக நின்று தன்மானத் தோடு தமிழன்தான் முன்னேறத் தடைவேறுண்டோ நிலையேது மின்றி நெடிதாகக் குன்றி நின்ற துயர்தீரும் நிலைதா னுண்டோ (வடபா) 36. தென்பெருங்கடல் (இந்துமாவாரி) ஆராய்ச்சி சிங்கார லகரி என்ற மெட்டு பண் - (நீலாம்பரி) தாளம் - முன்னை ப. தென்பாலி முகமே - திரைகடலின் அகமே து.g. மென்பாலாம் தென்பார் முன்னே வடமாபனி மலைகடலடித் தங்குகாலும் பலவூழி நிலாவிய முதுதிருத் (தென்) சிட்டை ச்; ; ரிச்நிப - ச்நிபமகமபா ; ; கமபசநிப கமபநி ச்ரிச்நி - ச்நிபம - பநிபம - பமகம - ரிகமரிகரி - பாமா, காமபநி ச்சிநிப - நிநிபம - பபமக - மமகச - மகபம - நிபச்நி - பமகம பநிதநி பதப - பமகச - பமகச - நிபமகச - ச்நிபம கச - ரிசநிபம- காமபநி (தென்) உ நின்கண் மேலைக் கடலின்கலைப் புலவர் இன்னே - லமேகொடு வந்துபின் தென்கண் மூழ்கிய மலைகாணவே மனங்கொளினே நண்கடலணை நிலமே தமிழ் தோன்றிய தென்று கூறு மவர்நாணுற வாய்மலர் - (தென்) 37. தமிழ்நாடு தனிநாடு கழுகு மலையின் கந்தவேளே என்ற மெட்டு பண் - (காப்பி) தாளம் - முன்னை ப. தனிநாடு தான் தமிழ்நாடு - இனத் தாழ்வினால் இடை கேடு து.g. வடம் வேங்கடத் திருக்கோடு குடங்கீழ்தென் வார் கடல் நீடு (தனி) உ. மொழிகலை நூல்உணா முதியபண் பாடு முதலிய வடவரின் முழுவேறு பாடு வழிவழி யாகவே வருந்தொழு வாடு வடமொழி யால்இங்கு வன்பெரும் பாடு வந்துள இந்தியும் வல்லெதிர்ப் பாடு (தனி) 38. குமரிமலைக் குறத்தி பச்சைமலை பவழமலை என்ற மெட்டு 1 திங்களவன் தென்குமரி எங்கள்மலை நாடு தென்கடலில் மூழ்கியதே எங்கள்மலை நாடு 2 பனிமலையும் பைங்கடலில் பதுங்கிநின்ற போது தனிமலையாய் எழுந்திருந்த தெங்கள்மலை நாடு 3 பஃறுளியாற் றங்கரையில் பன்மணிகள் மின்னும் பஃறிகளில் நள்ளிரவும் பலசரக்கு நண்ணும் 4 ஆரியமோ சேமியமோ பேருமறி யாது சீரியநற் செந்தமிழே பேசினோம்வ ழாது 5 திணைப்பிரிவே யன்றிவேறு குலப்பிரிவும் இல்லை தினைத்துணையும் பகையின்றித் திளைத்தனம்நான் கெல்லை 6 முருகனொடு வள்ளியெங்கள் முன்னோரின் தெய்வம் சரவணன்என் றொருகதைபின் சாற்றினார்என் செய்வம். 7 தினைமாவைத் தெள்ளியதில் தேன்கலந்தே தின்போம் மலையோரம் மேயவரும் மான்கறியும் உண்போம் 8 பாண்டியரும் வேட்டம்வரின் பாங்காகி விளிப்போம் வேண்டியபல் லாட்டுகளும் விளையாடிக் களிப்போம் 9 மரவுரியும் மான்றோலும் துறவிகளுக் கிறைப்போம் மருந்துகளும் சித்தருக்கு மருங்கிருந்தே யரைப்போம் 10 அடிமையென்றும் வறுமையென்றும் அறிந்ததில்லை நாங்கள் குடிமைஎன்னும் ஓரினமாய்க் கூடிவாழ்ந்தோம் ஆங்கே. 39. வடமொழி வந்தவழி பண் - (பியாகு) தாளம் - முன்னை ப. வடமொழி வந்தவழி - தெரியுமா? உ. 1 வடமேற் கணவாய் வழியாக வந்து வதித்தனர் ஆரியர் முதற்கணே சிந்து கடுமை யுடன்சிறு பான்மை கலந்து கரந்ததே யவர்மொழி கடுகி மறந்து (வட) 2 ஆரிய அடியும் அருந்தமிழ் நிலவும் அதனொடு வடதிர விடம்மறை குலவும் சீரிய செந்தமிழ்ச் சொற்களே பலவும் செயற்கை யாம்சமற் கிருதத்தொடு நிலவும் (வட) 3 வெண்ணிறத் தால்நிலத் தேவரே என்று வேதியர் தம்மையே விளம்பிய துண்டு நண்ணிய அவர்மொழி விண்மொழி என்று நம்பியே தமிழரும் நயந்தனர் பண்டு (வட) 40. தமிழ் இயல்புந் திரிபும் (இசைந்த மெட்டிற் பாடுக) 1 அருமை முத்தமிழ்ச் சீரும் ஆரி யத்தடி வேரும் திரவி டப்பெருந் தூரும் தென்மொ ழித்திறம் தேரும். 2 குமரி நாட்டுத் தமிழே கோணிப் பின்கொடுந் தமிழாய்ச் சுமரி யத்தின் பின்னே சுழன்ற தாரி யம்மே. 3 மேலை யாரி யத்தின் மிகுந்த மூப்புக் கிளையே கீழை நாவ லத்தில் கிளந்த வேத மொழியாம் 4 வேத மொழியும் வறந்து விளம்பும் தொகையும் உறந்து ஓதும் கடுமை சிறந்து உலக வழக்கும் இறந்து 5 போன நிலையிற் பெரிதும் புணர்த்த பிராகி ருதமே ஆன சமற்கி ருதமாம் அரைச்செ யற்கைப் பதமாம் 6 மாக தியேபை சாசி மருவு சூர சேனி பேசு தமிழின் பாணி பிராகி ருதநான் மேனி 7 ஆரி யத்தின் வழியே அமைந்த எழுத்து மொழியாய்ச் சாரும் சமற்கி ருதமே சாற்று வடமா மொழியாம் 8 கொடுந்த மிழ்வட மொழியைக் கூடி நின்ற வழியே கடுந்தி ரவிட மொழிகள் கலித்தெ ழுந்தன விழியே 9 குச்ச ரம்ம ராடம் கூர்வ டுகுகன் னாடம் பச்சைத் தமிழி னோடும் பஞ்ச திரவிடம் ஓடும். 10 முன்னி ரண்டுமிக் காலம் முற்றும் ஆரியம் போலும் பின்னரே மலையாளம் பிறமொ ழிபதி னேழும். 11 தெரியும் செந்தமிழ் இயல்பே திரவி டம்அதன் திரிபே இருமை யும்தென் மொழியே இவைதென் குமரி வழியே 12 தேவ மொழியொன் றில்லை திரைக டலுல கெல்லை தீவி யதமிழ்ச் சொல்லைத் தேரின் அதற்கே முல்லை 41. வடமொழி தமிழினின்று கடன்கொண்டவை (இசைந்த மெட்டிற் பாடுக) ப. வடமொழி தமிழினத்திலே கடன் கொண்டதற்குக் கணக்கிலே உ. 1 நெடுங் கணக்கதன் முறைவரி நீளள பெடை வருடொலி கடும்புணர்ச்சி நூற்பா வுடன் கடனாம் எழுத்துச் சாரியை (வட) 2 அடிப் படையோடு மேற்படை ஆயிரக் கணக்கான சொல் வெடிக்கும் தமிழே வேருடன் வேயும் திரிபு விலகவே (வட) 3 இலக்க ணம்இசை நாடகம் இலகெண் கணியம் மருத்துவம் அளக்கும் மெய்ந்நூல் ஏரணம் அறம்பொ ருள்முதல் பெயர்த்தேவ (வட) 42. வடமொழியில் தமிழ்க்கலப்பு சின்னஞ்சிறு வயதுமுதல் என்ற மெட்டு ப. நாற்பதுநூற் றாண்டுகளாய் நண்ணியுள்ள வடமொழியே ஏற்றிலையோர் தென்சொலென்றால் என்னதொரு புதுமையிதே (நாற்பது) அ. 1 ஐந்திலிரு பகுதிதமிழ் ஆகிவட மொழியிருக்க எந்தமொழி யேனும்பெற ஈவதன்றி ஏற்காதென்பார் (நாற்பது) 2 தம்மைநிலத் தேவரென்றும் தம்மொழிவிண் ணோரதென்றும் இம்மையில்எல் லாரையுந்தான் என்றுமேயே மாற்றலாமோ! (நாற்பது) 3 ஆங்கிலத்திற் கலந்திருக்கும் அயல்நாட்டுச் சொற்களெல்லாம் ஆங்கிலரே விளக்குகின்றார் அழகாய்ச்சொற் களஞ்சியத்தில் (நாற்பது) 4 ஆனதிர விடத்தாயும் ஆரியத்தின் மூலமுமாம் தேனெனுமுத் தமிழையினித் தென்மொழியார் போற்றல் வேண்டும் (நாற்பது) 43. தமிழன் தானே கெட்டமை அநாதுடநுகாநு என்ற மெட்டு பண் - (சிங்கலம்) தாளம் - முன்னை ப. தன்னாலே தான்கெட்டான் - தமிழனே து. ப. குன்னா னொன்றெதிர்த்துக் கோளரி மாய்ந்ததெனச் சொன்ன லொன்றுளதோ என்னேனும் பொருளே (தன்) அ. 1 முந்நாளில் மூவேந்தர் - முடிதான் மண்ணாரவே வீழ்ந்தார் அந்நாள் தொட்டடிமை யாயினும் தமிழர்தாம் இந்நாளும் அதுவேல் என்னே யிம்மடமை (தன்) 2 ஏமாறி யில்லாமல் - எவனும் ஏமாற்ற வழியுண்டோ தாமாகத் தம்மைத் தணித்துக்கொண் டயலார்மேல் தப்பாகச் சுமத்தின் தங்காது பழியே (தன்) 3 நூற்றிற்கு மூவர் என்றும் - பிறரை மாற்றிக் கெடுத்த லுண்டோ வேற்று மொழியினை விண்ணவரது வென்றே ஏற்றித் தொழுததால் இழிந்தது தமிழே (தன்) 4 காட்டிக் கொடுப்ப வர்தாம் - தமரைக் கேட்டிற்குள் ளாக்கு கின்றார் மீட்டும் முற்பெருமை மேற்கொளத் தமிழனையே நாட்டின் அரியணை நன்றாகும் பிறவும் (தன்) 5 வெள்ளை நிறப்பொலிவும் - ஆரியர் விள்ளுங் கனைப்பொலியும் நள்ளுந் தெய்வமென நம்பவே செய்ததினால் எள்ளும் தாழ்நிலையை ஏற்றார் தமிழரே (தன்) 44. தமிழரே தம்மைக் கெடுத்தமை சுசன சீவனா என்ற மெட்டு பண் - (கமாசு) தாளம் - ஈரொற்று ப. தமிழரே தமைமிகத் தடிந்த பேதைமை தீதே து. ப. தமியர் ஏதுமே படைதழுவா தேதமே தமக்கிந்த நாளும்பு ரிந்தனர் எனின் தமிழர் மீதுமே கோதே (தமிழரே) உ. பல்வேள்விச் சாலை முதுகுடுமிப்பேர் வழுதி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளிபோல் எள்ளளவும் உண்மைஉளந் தெள்ளி யறியாமை வடவாரியம் தெய்வச் சீரியம் எனும் திரிபில் நாட்டினர் கேட்டை (தமிழரே) 45. வடமொழியால் தமிழுக்கு வந்தகேடு டம்பனவன் வீடேலம் என்ற மெட்டு வகை 1 வடமொழியாற் செந்தமிழ்க்கே வந்தகேட்டைச் சொல்வேன் மடமையற முந்தவற்றை நின்றுகேட்டுச் செல்வீர். 2 நூலழிவு கலையழிவு நுவலும்மொழி யிழிவு மேலும்மொழி வளராமை மெய்வரலாற் றழிவு. 3 சொல்லிழிபு சொன்மறைவு சொல்லின்வழக் கழிவு சொற்பொருளின் மாற்றமொடு சோர்வுபின்னே யொழிவு. 4 தூயபல தென்சொல்வட சொல்லெனவே தோற்ற ஆயினசொல் வந்தவழி ஐயமொடு மாற்றம். 5 தமிழ்வளமும் தூய்மையும்போய்த் தன்மைகெட்ட தாலே தமிழனுக்கும் வறுமைவந்து தாழ்வுமுட்டு மேலே. 6 தமிழனுக்கே முன்பிருந்த தாய்மொழியிற் பற்றே குமரிமலை சென்றதெனக் குன்றியேபோ யிற்றே. 7 வடமொழியைத் தேவமொழி யென்றுமிக நம்பி தடமொழியைத் தாழ்த்திவிட்டான் தமிழனே திரும்பி. 46. வடமொழியால் தமிழ் கெட்ட வகைகள் `சிலுவை சுமந்திதோ செல்கின்றார்' என்ற மெட்டு 1 வடமொழி யால்தமிழ் வாழ்வை யிழந்ததே மடமையி னால்தமிழ் மாந்தரும் தந்ததே. 2 வழிபாட்டு மொழியாக வழங்காத படிதமிழ் இழிவாகச் சிறுமையில் இயன்றது நெடிதுமே. 3 அந்தநாள் கொடுந்தமிழ் ஆனபல் திரவிடம் செந்தமிழ்ப் பகையெனச் சேர்ந்தஆ ரியத்திடம். 4 தமிழையே தாழ்வென்று தமிழர்என் போருமே தள்ளினர் தமிழ்நூல்கள் வெள்ளமே சேருமே. 5 வழங்காமை யாற்பல வண்டமிழ்ச் சொற்களே விளங்காது போய்ப்பல வீழ்ந்துபின் பட்டன. 6 தம்பொருள் இழந்தன தமிழ்ச்சொற்கள் சிலவுமே எம்மொழி யோவென இடந்தந்து நிலவுமே. 7 தலையிடைக் கழகத்துத் தனித்தமிழ் நூலெல்லாம் அலையிடைத் தப்பினும் அழிந்தனபின் னெல்லை. 8 கடைத்தமிழ்க் கழகமும் கலைந்தது மாயமே நடைத்திறம் ஓலிசொல்லும் நற்றமிழ் நோயுமே. 9 வரலாறு மறைந்ததால் வடமேல்நின் றிங்குற்றே வடமொழியால் தமிழ்வளம் பெற்றதென் றிட்டார். 10 தமிழ்இந்த நாள்ஒரு தனிப்பட்ட கட்சியும் தாழ்த்தப்பட் டோருமே தழுவுறப் பெற்றது. 11 தாய்மொழி யுணர்வின்றித் தமிழர்பன் மொழிச்சொல்லைத் தமிழோடு கலந்ததால் தவிர்ந்ததே வழக்கெனல். 12 வையாபுரி போல்வார் வளமாக வாழ்கின்றார் மெய்யான தமிழரே மிடியுண்டு வீழ்கின்றார். 47. நக்கீரர் அங்கதம் பண் - (சிந்து பைரவி) தாளம் - ஒற்றை 1 ஆரியம் நன்று செந்தமிழ் அன்று பாரினில் என்று பண்பாடு விண்டு கூறின துண்டு கொண்டானும் முன்று கீரனுங் கண்டு வெஞ்சினங் கொண்டு தீரவே ஒன்று பாடினன் அன்று தீர்ந்தனனே. 2 முரணெது மின்றி முத்தமிழ் கூறி அரணாயி ருந்த அகத்தியன் வாழி பரணரும் வாழி பாங்காய மர்ந்து பாரியைப் பாடும் கபிலரும் வாழி இறந்த கொண்டானும் வாழியே என்ன எழுந்தனனே. 48. தமிழின் படிமுறைத் தாழ்வு மண்டலம் புகழும் என்ற மெட்டு 1 இந்த வுலகினில் முந்தி யரியணை கொண்டது செந்தமிழ் நீடு பிந்தியா ரியரை யுந்தெய்வ மென்றுமேற் கொண்டதால் வந்ததுகேடு. (இந்த) 2 தேவ மொழியென்று கோவில் வழிபடப் பாவிய தாரிய வாழ்வு கோவர சேயிதை ஏவிய பின்தமிழ் மேவிய தேபெருந் தாழ்வு (இந்த) 3 நூலுங் கலைகளும் சாலுந் தமிழ்நின்று கோலும் வடமொழி பேர்ந்த மூலம் படிகளே போலுந் தெரிந்துபின் மீளு நிலையின்றித் தீர்ந்த (இந்த) 4 ஆரிய வன்சொல்லைச் சாரு முயர்வென்று வாரி வழங்கியே பேணிச் சீரிய செந்தமிழ் பேரிழப் புண்டது சோறென்று சொல்லவும் நாணி (இந்த) 5 தாய்மொழிப் பற்றெலாம் மாய்ந்துபோய் விட்டதால் தன்னது வேறென்றே யில்லை வாய்மொழி யிற்றைநாள் தோய்ந்தது முற்றுமே வண்ணமில் வேறுபல் சொல்லை (இந்த) 49. தமிழ்நாடு வரவரத் தேய்ந்தமை நானிருப்ப தேழடுக்கு மாடி என்ற மெட்டு 1 நாவலம் எல்லாம்முன் தமிழ்நாடு - அதில் நண்ணியது செந்தமிழ்ப் பண்பாடு மூவரான வேந்தர் முடியொடு - அதை முன்னர்ஆண்டு வந்தனரே நீடு (நாவலம்) 2 தென்குமரி மலைமுது பாண்டி - நிலம் திரைகடல் புகுந்தது காண்டி செந்தமிழ் நிலத்தின்எல்லை தாண்டி - மிகச் சிறுகிவந்த தேதேரை தீண்டி (நாவலம்) 3 ஆரியம் வந்துபுகுந்த அன்றே - விந்தம் அடைந்தது வடவெல்லை யென்றே சீரிய தமிழ்திரிந்த பின்றே - வடம் செப்பின எல்லை வேங்கடக் குன்றே (நாவலம்) 4 கழகத்தின் பின்னேகரு நடமும் - மெல்லக் கரைந்துவந்த கொங்குநாட் டிடமும் அழகிற் சிறந்தசேரன் குடமும் - ஆகும் அரையாரி யத்தென்திர விடமும் (நாவலம்) 5 இன்றுதமிழ் நாட்டுவடம் சென்னை - அதும் எதிர்ப்பு மிகுந்ததிடை யென்னை முன்று தமிழ்ப்பேரு மில்லை பின்னை - முற்றும் முடித்திடுவாரோ தமிழ் தன்னை (நாவலம்) 50. இறந்துபட்ட தமிழ்நூல்கள் எப்படிப் பாடினரோ என்ற மெட்டு ப. எத்திறம் இறந்தனவோ அத்திறம் அவன் அறிவான். அ. 1 முத்தமிழ் நூல்களும் முதுநாரை யுங்குருகும் வித்திய களரியா விரைவியாழ மாலையும் (எத்திறம்) 2 சித்தரின் பொன்னாக்கமும் சிறந்த மருத்துவமும் எத்தகை யென்றுபண்டே எவருக்குந் தெரியாமல் (எத்திறம்) 3 இன்னறு பாக்களும் இருபது வண்ணமும் எண்பெரு வனப்பொடு எழுநிலச் செய்யுள்களும் (எத்திறம்) 4 ஏரணம் உருவமும் எண்ணொடு கணியமும் வாரணம் ஒன்றேகலை வகையெ(ல்)லாம் வாரியதோ (எத்திறம்) 5 இடைக்கழகத் திருந்த எண்ணாயிர நூல்களும் கிடைக்காமற் போனதென்ன கிளந்த பெயரினோடும் (எத்திறம்) 6 வேந்தரின் பேதமையோ விரிகடற் கொடுமையோ தீந்தமிழோர் வறுமைத் தீயோ பிறர்பகையோ (எத்திறம்) 7 தில்லைப்பொன் னம்பலத்தில் தேவாரம் பெரும்பாலும் செல்லரித் திடச்சிவன் திருவுளங் கொண்டதென்னோ (எத்திறம்) 8 ஆண்டுதொறுங் கூடி ஆடிப்பதி னெட்டாம்நாள் ஈண்டிவருங் காவிரி எறிந்ததமிழ் நூலெல்லாம் (எத்திறம்) 9 பாண்டித் துரைத்தேவர் பாடுபட்டுத் தொகுத்த பண்டைத்தமிழ் நூல்கள்தீப் பற்றியே மதுரையில் (எத்திறம்) 51. மாவலி மாவேந்தன் `சுயராசியம் அதிகத் தூரமில்லை' என்னும் மெட்டுவகை ப. மாவலி யென்பானொரு மாபெருஞ் சேரவேந்தன், மானமிகுந் தமிழ மறவனன்றோ. து. ப. பாவலரும் பின்னரே பகையொடு சேர்ந்தவனைப் பழித்துவரும் மடமைத் திறமும் நன்றோ (மாவலி) உ.1 நாவலந் தீவிலெங்கும் நாயகச்செங் கோலோச்சி நன்மை பலவுஞ் செய்த காவலனே யாவரும் எதிர்க்கினும் யானைத்திரளைக் கொல்லும் யாளிபோல் வெல்லும் பெருமாவலனே (மாவலி) 2 தேவருக் கென்றும்பல தீமைசெய்து வந்ததால் திருமாலின் அடியினால் தீர்ந்தான் என்பார் தேவுரையே மாற்றிலும் திருப்பற்று வாய்மை வண்மை திடமாயவன் கொண்டதைத் தேர்ந்து முன்பார் (மாவலி) 3 மாவலி மரபிலே வந்த சீர்த்தியைக் கிள்ளி வளவனுந் தேவியாக மணந்திருந்தான் மாவலி மருகராம் வாணகோ வரையரும் வளவன்கீழ்ச் சிற்றரசாய் இணைந்திருந்தார் (மாவலி) 4 ஆரியத்தை யெதிர்த்த அருந்தமிழ் வேந்தரெல்லாம் அசுரரென்றே பண்டைநாள் அழிக்கப்பட்டார் சீரிய அறிவியல் செழித்துவரு மிந்நாளும் செந்தமிழ்த் தலைவரே பழிக்கப்பட்டார் (மாவலி) 5 திருவோண நாளிலின்றும் குடிகளின் நலங்காணத் திரும்பிவரும் மாவலி என்று சொல்வார் அருளோடும் அவன்அந்நாள் அரசுபுரிந்த வுண்மை அறிவிக்கும் இதுவொன்றே கண்டு கொள்வீர் (மாவலி) 52. தமிழன் வீழ்ச்சி பூமியில் மானிடர் சென்ம மடைந்துமோர் என்ற மெட்டு 1 மாநிலத் தில்முனம் மற்றையர் யாவரும் மல்கிய இருளில் மயங்கிய நாள் மாநலத் தன்மனை மாணுற வாழ்ந்தவன் மருவிய குமரித் தமிழன்தான். 2 குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்தது குடிபுகுந் திரந்தவன் கோவானான் ஒற்றுமை யில்லாமல் உலைந்துபோய்த் தமிழன்தான் ஊமை யடிமையென உழல்கின்றான். 3 பட்ட மெனமிசை பறந்துபோய் மேலையர் பரவெளி நாடும் காலமிதே கட்டை வண்டிசெய்து கையிறாட்டை சுற்றிக் கரடுறு நூலிழைப் பான்தமிழன். 4 பல்கலைக் கழகத்துப் பட்டமெல்லாம் பெற்றும் பாரெங்குஞ் சுற்றியும் பதவி கொண்டும் தள்ளியே தான்தன்னைத் தாழ்ந்தவ னென்றெண்ணித் தண்ணீருஞ் சிலர்க்கிடத் தயங்குகின்றான். 5 ஆரியர் வருமுனம் அருந்தமி ழிருந்தநூல் ஆயிரக் கணக்கவை அழிந்தனவே சீரிய தமிழ்க்கலை செயற்கையாம் வடமொழிச் சென்றுதிரிந் தயலாய்க் கழிந்தனவே. 6 நாற்றிறத் தொழிலரை நால்வேறு பாலென்று நற்றமிழரை யெல்லாம் நான்காவதாம் சூத்திரனென் றாரியன் சொலத்தன் னைச்சற் சூத்திர னென்றனன் வேளாளன். 7 வெண்ணிற மாய்வந்த வேற்றவர் மொழியுடன் விண்ணவர் வழியென்று வீழ்ந்து கெட்டான் கண்ணிய மாகமுன் கருதிய தமிழனே கண்ணான தமிழைப் புண்ணாக்கி விட்டான். 53. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை படிக்காசுப் புலவர் புலம்பல் மீளாத நரகினுக் காளாக்கும் குடியே என்ற மெட்டு வகை ப. பாழானதே என் வாழ்வு பண்ணாருந் தமிழே ஏழாங் கடையிலும் என் எண்ணம் நீர்க் குமிழே து.g. தாழாத பணியெனும் தாளாண்மை யுழவே வாழாது கழிந்ததென் வாளாண்மை மழவே (பாழா) உ.1 செப்படி மயக்கமே செய்கலையும் - மிகச் சேணுயர் கழைக்கூத்துந் தெரிந்தோமில்லை தப்பிய மகளிராய்ப் பிறந்தோமில்லை - செல்வத் தையலார் குற்றேவலும் செய்தோமில்லை (பாழா) 2 மூவேந்தரொடுவேளிர் முதுகுமணன் - கொடை முதிர்ந்த நல்லியக் கோடன் முனம் மறைந்தார் ஈவேந்தன் சீதக்காதி இரகுநாதன் - பின்னே இலவம் பஞ்சேதமிழ்ப் புலவ ரெல்லாம் (பாழா) 3 பிள்ளைப் பாண்டியனொடு வில்லியில்லை - பிழை பேணாத சாத்தனொடு கூத்தனில்லை கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை - இன்று காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை (பாழா) 54. பாண்டி நாட்டின் பண்பிழப்பு மாது சிரோன்மணியே என்ற மெட்டு பண் - (நாதநாமக் கிரியை) தாளம் - முன்னை 1 பைந்தமிழ்ப் பாண்டியமே - உன்னைப் பன்முறை வேண்டியுமே ஐந்தாம்படை நேயமே - கொண்டாய் அருந்தமிழும் தேயுமே. 2 இந்தி யெதிர்ப்பவரே - இங்கே இந்நாளுமே யெவரே அந்தமிழ்க் கானவரே - என்னும் ஆசான்மார் வாணிகரே. 3 மாணவர்க்கோ முனமே - இங்கே மாயும் தமிழ்மனமே ஊணிற் கலந்த தெனுமே - தமிழ் ஊட்டாது தாயினமே. 55. அயன்மொழியால் தமிழ் கெடுதல் கொடியசைந்ததும் காற்று வந்ததா என்ற மெட்டு 1 நோயிருக் கையில் வியாதி வந்தது வியாதி வந்தபின் சீக்கு வந்தது சீக்கி ருக்கவே பீமார் வந்திடும் பீமார் வந்திட ஏமாறாதீர்கள். 2 இப்படி யெல்லாச் சொல்லும் மாறினால் எப்படித் தமிழ் இருக்கும் பின்னரே தப்பாய் இந்தியால் தமிழ் கெடாதென்பார் எப்போதும் தாம்மேல் இருக்க எண்ணுவார். 56. தமிழ் ஏத்து கசமுக வதனா என்ற மெட்டு ப. எழுங்கதிர் எனவே இணையில் தமிழும் இருளெலாம் ஒழிய எல்லே உமிழும் (எழுங்) உ. 1 வழுதியர் கடைசெய் வழுவினால் நீடு வடமொழிக் கடலுளே மறைந்து பிற்பாடு (எழுங்) 2 இமைகலை நிறையும் எழில்மதி யுறையும் இலகுறு மறைமலை யிடையொரு முறையும் (எழுங்) 3 உண்மையே மாற்றும் ஒன்னலர் விழவே உலக முழுதுமுணர் உயர்ந்தவர் தொழவே (எழுங்) குறிப்பு : இமைகலை... மறைமலை என்பது இரட்டுறல். 57. மறைமலையடிகள் மாண்பு பண் - (கலியாணி) தாளம் - ஈரொற்று ப. தவத்திரு மறைமலையடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள் து.g. தகைத்து நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே தவிடுபொடிகள் சிவத்திரு வருள்கொடு மானச் செந்தமிழ் விடுதலை காணச் சவக்கடு வடமொழி யான சடங்கொடு வழிபடல் நாணத் (தவத்) உ. 1 தமிழொடு வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத் தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம் கனியப்பெற்று ஆன்றவிந் தடங்கிய கொள்கை சான்றெதிர் மடங்கிட வெல்கை ஏன்றரு நூல்களை நல்கை எதிரியும் வாழ்ந்திடவுள்கைத் (தவத்) 2 தகத் தகவெனத் தங்கமேனி தலையுத் தாங்குத்துவர் ஓர் வானி தமிழுணர்ச்சி ததும்பும் மானி தருஞ் சொற்பொழிவு தவழும் ஆனி காமுறு பண்குர லென்னத் தாமரை கண்களை யுன்ன மாமறை நுண்பொருள் துன்னத் தாமுரை பண்பருள் ஒன்னத் (தவத்) 58. அடிகள் தமிழனுக்கு அறிவுறுத்தல் பண் - (சிந்து பைரவி) தாளம் - முன்னை 1 ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தே அறியாமை மீதூர அடிமையாய்த் தளர்ந்தே சீரிய கோமகன் சேயைநீ யுணர்ந்தே செந்தமிழ் பொழியினால் தேறுவை யணர்ந்தே. 2 ஆங்கில வரசினால் அகக்கணுந் திறந்தே அறிவினால் மறுமுறை அகமதிற் பிறந்தே ஈங்குநல் லாட்சியை யேற்றினை சிறந்தே ஏதிலர் ஏமாற்றை எதிர்த்தனை விறந்தே. 3 ஈரடி மைத்தனம் ஈங்கிருந் தனவே இவற்றுளே ஆரியம் எரியள றெனவே சாரயல் ஆங்கிலம் சாய்ந்ததும் கிழமை சாணள வேறியே சறுக்கின முழமே. 4 விடுதலை புகுந்ததாய் வியந்தனை புகழ்ந்தே விழுத்தமிழ் அரணையே வீழ்க்குவை அகழ்ந்தே அடிதலை தடுமாறி அறிவுரை யிகழ்ந்தே அவலைநி னைத்துரலை இடித்தனை மகிழ்ந்தே. 5 தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே எமதுமெய் வரலாறே எழுகவே வலமே. 6 சிவநெறி மால்நெறி செந்தமிழ் நெறியே செம்மையிற் சிவனடி சேரவே குறியே அவமுற வடமொழி அறைவது வெறியே அதுதெய்வ மொழியெனல் அறியாமை அறியே. 59. மொழித் திருத்தத்தின் தேவை (இசைந்த மெட்டிற் பாடுக) மொழியென்ப தொருவன்றன் உளமுள்ள நினைவேனோர் உணரச்செய் ஒலியென்பதே வழுவென்றும் இயலென்றும் தமிழென்றும் பிறிதென்றும் வரைசெய்தல் தகுமோ என்பார். 2 உணவென்ப தொருவன்றன் பசிதீர எதும்வாயுள் இடலாகும் பொருளென்பதோ மணமுள்ள சுவையான பதமாக நலமேவ முறையோடும் விளைவுண்பதோ. 3 உயிரெல்லாம் உணவாடை உறையென்னும் இவைமூன்றும் ஒருதன்மை யெனவாகுமே உயர்வான திணையென்னும் மகனோதன் வினையெல்லாம் உயர்வாகச் செயல்வேண்டுமோ. 60. தமிழ்க் கல்விப் பயன் எனக்குன் இருபதம் நினைக்க வரமருள்வாய் என்ற மெட்டு பண் - (சௌராட்டிரம்) தாளம் - முப்புடை (திரிபுடை) ப. தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய் - பண்ணாருந் தெய்வத் தனித்த மொழி யெனும் இனித்த தமிழ்அறிவாய் உ.1 பனித்த குமரியில் துனித்த துறவியல் முனித்தவரை யுளங் கனித்துலகு நடுக் குனித்த சிவனுங்க வனித்தறிவரொடு நுனித்த இசைநடத் துனிப் பயிலுமுத் (தனித்த) 2 மறந்தும் இயல்நெறி பிறழ்ந்து வரலறக் கறந்த நிலையெனத் திறந்த வுளமொடு சிறந்த நடையினில் அறந்தழுவு முதற் பிறந்த மொழியெனப் புறந்தரவுமே (தனித்த) 3 ஏழை நிலைமையிற் கோழை மனமொடு தாழுந் தமிழநீ வாழவுலகினில் வேழ மலையவன் சோழ வளவன்நீ டூழி தழுவிய பூழியனிசை (தனித்த) 4 மொழிகள் பெருகிய வழிக ளறியக விழிபெ றவுமிக இழிவு தரும்பல பழிகள் அடியொடும் ஓழிய நறுங்கனிப் பிழியும் நிகரறு செழிய நறவத் (தனித்த) 5 கவலை மிகவரும் அவல மறவெதும் உவமை யிலனிரு கவினடி தொழுது துவர உலகியல் தவிரும் உயரிய தவவலி மைதரு சிவம துறவும் (தனித்த) 61. மொழி நாகரிகம் தாயினுஞ் சிறந்தது தமிழே என்ற மெட்டு 1 நாகரிக முறையில் வினையே - செயும் நன்மக்களே யிங்குயர் திணையே ஆகுடம்பால் அந்நிலை தனையே - என்றும் அடைவதில்லை வேந்தனும் தினையே. 2 மொழிநா கரிக அடிப்படையே - சொல்லின் முழுத்தூய்மை இலக்கண நடையே இழிவாகப் பேசுபவர் களிடையே - இவர்க் கில்லை வேற்றுமை விலங்கிடையே. 3 கருத்தைத் தெரிவிப்பதே மொழியாம் - அது கலவையா யிருப்பினும் விழியாம் திருத்தமாய்ப் பேசுவதோ பழியாம் - என்று தெரிப்பது விலங்கின வழியாம். 4 உண்பது பசியாற்ற வேனும் - அதை ஒழுங்கின்றிச் செய்வதுண்டோ காணும் பண்புறு தமிழியல் பேணும் - அதைப் பாரில் நிகர்க்குமோ எதேனும். 5 கண்ணிலி வழிகாட்டல் போலே - தமிழ் கல்லாதார் வரைந்திடும் நூலே எண்ணிய பாண்டியர் இக்காலே - இங்கே இன்மையால் இவர்குரல் மேலே. 62. இந்திய நாகரிகம் தமிழரதே பண் - (பியாகு) தாளம் - முன்னை ப. நாவலந் தீவுயர் நாகரிகம் நாடின் நம் தமிழென நாம் அறிகம். உ.1 தேவுறு முனிவரும் தென்கலை வாணரும் தெளிவுறு நுதற்கண்ணால் தெரிந்ததனால் பாவுறு நூல்களும் பற்பல கலைகளும் பஃறுளி நாட்டினிற் புரிந்தனரே (நாவலந்) 2 பேதைமையா லும்மதப் பித்தத்தினா லும்இனப் பிரிவினை யாலும்கெட்டுத் தாழ்ந்த பின்னே மேதகை தமிழனே மீண்டும்பெற வள்ளுவன் மேலாம் வழிவகுத்தான் சூழ்ந்து முன்னே (நாவலந்) 3 தென்முது நூலெல்லாம் வடமொழிப் பெயர்ந்தபின் தென்னவர் மடமையால் தீர்ந்தனவே இந்நிலை வடமொழி யிருக்கின்ற நூலெல்லாம் ஏனையர் நூலெனத் தோன்றுபவே (நாவலந்) 63. குமரிநாட்டுச் சிவன் மால் வழிபாடு பண் - (தன்னியாசி) தாளம் - முன்னை கனகசபாபதி தரிசனம் ஒருநாள் என்ற மெட்டுவகை ப. குமரிநாடே முதலிற் குறிஞ்சி முல்லை நிலத்தே குமரன் மால் வழிபாடாம். து. ப. தமிழன்மதம் இவையே தகுமொரு சான்றிதுவே அமையும் இதை யறியாராயினே கழி கேடாம் (குமரி) உ.1 சமயம்என்னும் சொல்லையும் சமற்கிருதமே என்பார் சாய்ந்துபின் வேறென் சொல்லார் சமைஎன்னும் முதலையும் அமைஎன்னும் அடியையும் அமைய நோக்கியே பாரும் அம்என்னும் அடிவேரும் (குமரி) 2 வேள்வி வணக்கமதே ஆரிய மதமென்று கேள்வி மறையே புகலும் ஆள்வினைத் தமிழரும் ஆற்றிய பூசனைகள் ஆரிய மொழியேனும் ஆமோ தெய்வம் அயலும் (குமரி) 3 தொல்கதை களும்பல தோற்றரவுக் கதையும் தோன்றின வடமொழியே தெள்ளியே அவற்றையும் தேர்ந்து பார்ப்பின் மூலங்கள் தென்னவர் கண்டவென்று தெரியுங் கயல்விழியே (குமரி) 64. கோயில் வழிபாட்டு மொழி பண் - (காப்பி) தாளம் - முன்னை ப. கோயில் வழிபாடுகள் தாய்மொழியிற் செய்யினே வாய்மையாகும் அதனை ஆயுமின் நீரே து.g. தூயமொழி யென்றேனைத் தேய மொழியிலே வாயிலும் அயலவன் ஆயினென் சீரே - கோ. உ.1 தந்தையோடே பிள்ளை தானுரை யாடவும் வந்திடை நிற்பனோ மற்றொரு மொழியன் முந்திய இறைவனை முன்னியே தொழவும் பிந்திய செயன்மொழிப் பட்டனோ வழியன் (கோயில்) 2 கொஞ்சமுந் திருந்தாத குழந்தையின் மழலையே கொண்டாடி மகிழ்ந்திடும் தந்தையும் பாரும் எந்தொரு கல்வியும் இல்லாதான் மொழியே எம்பெரு மானுக்கும் இன்பமாம் தேரும் (கோயில்) 3 கும்பிடும் அடியவன் நம்பனை வழுத்தலும் கோருவ கூறலும் குலவுதாய் மொழியே முன்பெதுந் தெரியாத வன்புறு மொழியில் முன்னாத பொருள்பிறன் முரலுதல் பழியே (கோயில்) 4 சிவனொடு மாயவன் சென்றநாள் குமரியில் செந்தமிழ ரேதொழும் தென்றமிழ்த் தெய்வம் அவமுற இரண்டும்பின் ஆரிய மெனவே ஆக்கினர் அதனைநாம் மாற்றவே செய்வம் (கோயில்) 5 ஏமுறும் வடமொழி இழுக்குற வொலித்திடின் இன்னலே தருமென ஏமாற்றி வருவர் தேமுறு தமிழிலே திண்ணிய மனத்துடன் தெய்வத்தைப் போற்றிடின் திருவருள் பெருகும் (கோயில்) 6 கண்ணப்பன் வழிபாடு காளத்தி மலையிலே கண்ணுதல் மகிழுறப் பண்ணினன் தமிழே பின்னப்பன் சம்பந்தன் சுந்தரன் முதலோர் பேணிய மொழியெண்ணிப் பேரின்பத் தமிழே (கோயில்) 65. இந்து என்னும் சொல் ஏற்புடையதாகாமை பண்டித மோத்திலால் நேருவை என்ற மெட்டு ப. இந்துமதம் என்றே தனியொன் றெதுவு மில்லையே எதுவு மில்லையே - அது முதிய தொல்லையே. உ.1 மித்திரன் வருணன் முதலாய் வேறு தெய்வம் ஆரியர்க்கே எத்திறமும் சிவன் திருமால் இலைய வற்றுள்ளே இலைய வற்றுள்ளே - தனி நிலையும் மற்றுள்ளே (இந்து) 2 வேள்வியிலே காவையிட்டு விண்ணிற் சிறு தெய்வங்களை வேண்டுவதே ஆரியமதம் வேறெதுமில்லை வேறுறெதுமில்லை - வீடு பேறு தென்னெல்லை (இந்து) 3 சிந்துவெனும் ஆற்றுவெளி சேர்ந்த வேத ஆரியரால் இந்துவென நாவலம் பொழில் ஏற்றது பெயரே ஏற்றது பெயரே - மதம் மேற்றதுந் துயரே (இந்து) 4 செந்தமிழ மதமிரண்டு சிவனியம் மாலியமே என்று சீரறு நான்முகனை யவற்றில் சேர்த்ததே யிந்து சேர்த்ததே யிந்து - அதைத் தீர்த்தலே நன்று (இந்து) 5 நான்முகனைத் தமிழமக்கள் நம்பினதே யிலை வழக்கில் நாடும் வழிபாடவனுக்கு நடப்ப தில்லையே நடப்ப தில்லையே - கதை தொடுக்கும் சில்லையே (இந்து) 6 சிவநெறியும் மால்நெறியும் சேர்வதில்லாத் தனிநெறிகள் சிவனெனவே மாலும் முத்தொழில் செய்வன் என்பாரே செய்வன் என்பாரே - அதன் மெய்ம்மையும் பாரே (இந்து) 7 முத்திரு மேனியர் முறையே முத்தொழிலர் எனுந்துறையே வைத்ததினால் பெரியன் யாரென வழக்கு மூண்டதே வழக்கு மூண்டதே - பெருஞ் சழக்கு நீண்டதே (இந்து) 8 இருதமிழ மதமும் இந்து என்றாரியம் ஏய்க்கும் வந்து என்மதமே சிவனியம் அன்றேல் மாலியம் என்பாய் மாலியம் என்பாய் - அதே மாயவம் முன்பாய் (இந்து) 66. முத்திருமேனியர் (திரிமூர்த்திக்) கொள்கை தமிழரதாகாமை தங்கத்தி லேயொரு குறையிருந் தாலும் என்ற மெட்டு 1 முத்திரு மேனியர் கொள்கை யிந்நாட்டில் எத்துணையும் இல்லை -பெரு முத்தொழி லும்இறை ஆற்றுவன் என்பதே ஒத்ததாம்இவ்வெல்லை. 2 சிவனொடு திருமால் செந்தமிழ்த் தெய்வம் சீரிய வரலாறே சொலும் இவரிரு வருமோர் இறையே எய்திய இடத்தாற் பெயர் வேறே. 3 சிவன்திரு மாலெனும் இருவரும் ஒண்ணே அறியார் வாயில்மண் - ஓர் அரியநல் லுண்மை அறிவாய் இந்த அழகாம் பழமொழிக் கண். 4 சிவன்முத் தொழிலைச் செய்வான் என்றே செப்பும் மெய்கண்டான் - கரி யவனும் அதுவாக் கடவுள் வாழ்த்துக் கம்பன் செய்கின்றான். 5 பிரமனைத் தெய்வம் என்றே தமிழர் பேணியதே யில்லை - தமிழ் மரபுறு மதத்தை ஆரியப் படுத்த மருவும்அவன் தொல்லை. 67. தமிழ்த் திருமணம் பசனை செய்வோம் கண்ணன் நாமம் என்ற மெட்டு ப. தமிழிலே திருமணஞ் செய்க - பழந் தமிழரின் முறைகளே தழுவியமைக தன் மதிப்புடன் வைக (என்றும்) (தமிழிலே) உ.1 இமையவர் மொழியென் றேமாற்றி யின்றும் இம்மியும் விளங்காஅயன் மொழியே சமயமுஞ் சாராச் சடங்கொடு குழறிச் சழக்குறும் அயல்வழியே ஒழியே (தமிழிலே) 2 கணவனைத் தொழுதே காலையில் எழும்பும் கற்புடை மகளிற்மயல் வழியே மணமுதல் முந்நாள் மதிமுதல் மூவர் மருவுக வெனும்பழியே ஒழியே (தமிழிலே) 3 குலமென்ப தொன்றே கும்பிடுந் தெய்வக் கொள்கையும் ஒன்றேஅக லிடத்தே குலவிய காதல் கூடியக் கண்ணே குருவனும் அயலான இடத்தும் (தமிழிலே) 68. தமிழன் முன்னேறும் வழி மேரே மௌலாபுலா என்ற மெட்டு முன்னேறும் வழியே முத்தமிழ் மொழியே இன்னேகண் விழியே எத்துகை ஒழியே. முத்தமிழ வேந்தரும் முன்மொழியில் ஓன்றி நின்றனர் மற்றவர் இந்நாடு கொள்ள வழியில்லாது சென்றனர் அந்நாளிங் காரியம் ஐயம் புகுந்ததே விண்ணோர் மொழியென வெய்யபொய் தந்ததே தாய்மொழியைத் தாழ்ந்ததென்று தமிழவேந்தர் தள்ளவும் வாய்மொழியில் வழிபடற்கே வடமொழியைக் கொள்ளவும் மூன்றாங் கழகமே முற்றும் ஒழிந்தது மூவேந்த ரும்பின்னே முட்டி யழிந்தனர் வள்ளுவர்கோள் நூலிழந்து வறிய வாழ்வை யுற்றனர் தெள்ளுதமிழ்ப் பாணரும்பின் தீண்டுநிலைமை யற்றனர். பல்லா யிரந்தமிழ்ப் பண்டைநூல் போயின கல்லாது தமிழர் கண்டகர் ஆயினர் எளியரும் நல்வலியராம் இவ் விருபதாம் நூற்றாண்டிலும் இழிஞன் என்னும் பிறப்புநீங்கி இழந்த பெருமை ஈண்டவே. தேவ மொழியெனத் தெட்டுங்கீழ் ஆரியம் தீவிய தமிழின் தெற்றெனத் தேறியே கோயில் வழிபாடரங்கு குடும்பச் சடங்கு திருமணம் வாயில்மொழி தமிழே யென்றும் வழங்கி வாழி தமிழனே. 69. தமிழுயரத் தமிழனுயர்தல் பசனை செய்மனமே என்ற மெட்டு ப. தமிழன் உயர்வழியே தமிழின் உயர்நிலையே - தன்மான மிழந்துள்ள து.g. இமிழும் வடமொழியே இறைவன் வழிபாடத னின்றும் ஒழியே (தமிழன்) உ. அமிழ்தரு குமரியில் அமைந்த செந்தமிழே ஆரிய மதனுக்கும் அடிமணை முதலே உமிழும் இழிவு தமிழ் உறவே அடிமைத் திறமடைந் துழலும் (தமிழன்) 70. தமிழிசை நாடகமே கருநாடக சங்கீதமும் பரதநாட்டியமும் கீதம் இனிய குயிலே என்ற மெட்டு 1 கூவும் இனிய குயிலே குமரிநிலத் தென்னிசையே மேவு கருநாடகமாய் மிளிர்கின்ற தெனக் கூவாய். 2 ஆடும் அழகார் மயிலே அற்றை நாடகத் தமிழே கூடும் பரதம் என்றே குலவும் இன்றென அகவாய் 3 பவழக் கூர்வாய்க் கிளியே பண்டை முத்தமிழ் நூல்கள் எவணி றந்தன எனவே இனிய குரலிற் கிளவாய். 71. தமிழை மறைப்பதால் முந்நூல் கெடுதல் கைத்தலம் நிறைகனி என்ற மெட்டு 1 தமிழை மறைப்பதாலே தாங்கெடுமே முந்நூலே தாழாமலே யிக்காலே தடுமாலே இமிழ்நீர் வரைப்பின்மேலே இல்லை வேறிது போலே எய்தா தடிமைப் பாலே எடு வேலே. 2 வரலாறு மாந்தனூலும் வளர்கின்ற மொழிநூலும் வழி தெரியாமல் மேலை நாட்டாரும் திரிவாகும் ஆரியத்தைத் தென்னூலின் முன்னூலாகத் திண்டாடி மெய்யறிய மாட்டாரே. 3 உண்மையை மாற்ற என்றும் ஒருவராலு மாகாதே ஒல்லும் இறையு மாற்றின் இறையாகான் ஒண்மையொடு நன்மையும் ஓங்கும் குடியரசே உண்மை கடைப்பிடித்தல் முறையாகும். 4 தமிழே உலகமுற்றும் தழுவிய மொழியாகும் தகுதியாய் இதையொத்துக் கொள்வீரே திமித குமுதமென்று திமிலர்போல் விண்ணிற் சென்று திங்களை யுற்றவர்க்குச் சொல்வீரே. (அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம்) மொழியோடு போவ தில்லை முத்தமிழ் அழியின் மும்மா விழிதரும் அறிவி யல்கள் வியனிலம் மயங்கு வண்ணம் அழிவுறும் அதனால் மேலை றிஞரே தமிழைக் காக்க பழிமிகும் இழிவை நச்சும் பதர்களே தமிழர் மன்னோ. 72. மொழி வாழிடம் மக்கள் வாயே பண் - (காப்பி) தாளம் - முன்னை சித்தார் வண்ணம் 1 தமிழ் - வாழ்வது தமிழர் வாயினிலே அவர் - வழங்கா விடின்அது மாய்ந்துவிடும் எந்த - வாழ்மொழியும் மக்கள் வாயொலியே தனி - வடிவ மன்றுபெரு வாய்மையிதே. 2 தமிழ் - பெருமொழியே கெடப் பெறுவதில்லை என்று - பேசுவதோ மிகப் பெரு மடமை முதல் - வறுமொழியாய் வந்த வடமொழியால் தமிழ் - வளமை யெல்லாங் கெட்டு வறண்டதுவே. 3 முனம் - ஆங்கிலத்தால் தமிழ் அழிந்ததோ பார் இனி - ஈங்கிந்தியும் வரின் இறவாதென்பார் அந்த - ஆங்கிலம் தமிழையோ அழித்ததில்லை ஆயின் - ஈங்குள்ள ஆரியம் அழிப்பதுவே 4 இன்று - நாட்டிலே வழங்கும் நடையறிவார் தமிழ் - கேட்டை யடையுமென்று கிளந்திடுவார் இதை - மாற்றி யுரைப்பவரோ மொழியறியார் விளக் - கேற்றிய தறியவரோ விழிதெரியார். 5 பலர் - வண்டமி ழென்றுபல் வடசொற்களை மிக - வழங்கியே பெரிதும் மகிழுகின்றார் மொழிப் - பண்டித மில்லாத படியினாலே கடும் - பாம்பையே மீனெனப் பற்றுகின்றார். 6 பெரும் - பட்டம் பெற்றாருமே பதவிபெறின் அதிற் - பதிவுற வேவழி பார்த்திடுவார். இனிச் - சற்றும் உயர்கல்வி சாராதார் பெருந் - தலைமை பெறின்எந்த நிலைமையரே. 73. வழக்கற்ற தென்சொல்லை வழங்கல் விளக்கு மாற்றை யெடுத்துக்கொள்ளடி என்ற மெட்டு 1 வழங்காத தென்சொல்லை வழங்க வேண்டும் - அதை வழங்க வேண்டாவென்றே வம்பர் சொல்வார் - தமிழ் அன்பில்லா தார் வேறே என் சொல்லுவார் (வழங்) 2 வடசொல்லைத் தமிழர்முன் வழங்கவில்லை - அதன் வழக்காற்றை வடவர்கள்தாம் ஆற்றினார் - அது தே மாற்றமே என ஏமாற்றியே (வழங்) 3 இருபதி னாயிரம் சொற்கள் ஈண்டும் - அந்த இந்தியைப் பேசவே கற்க வேண்டும் - ஆயின் வழங்காச் சில தென்சொல் விளங்காவென்பார் (வழங்) 4 முன்மொழி யாம்தமிழ் மென்மொழியே - அது வன்மொழி சேர்ந்திடின் வாழ்வதில்லை - இங்ஙன் வீழ்வுறாமல் வழி சூழ் விரைவாய் (வழங்.) 5 தாயையுங் கொல்லவே தயங்கார் சிலர் - அவர் தாய்மொழி யைக்கொல்லத் தாராளமே - கொள்வர் பாராளவே - கொடுங் காராளரே (வழங்) 6 தமிழறியார் தமிழ் அதிகாரிகள் - எனத் தான்றோன்றித் தனமானத் தருக்கி யின்றே - மிகச் செருக்கி நின்றார் - உரை பெருக்குகின்றார் (வழங்) 7 தமிழொன்றே உலகத்தில் தனிமொழியாம் - அதன் தனிச்சொல்லை வீழ்த்த வந்தன வடசொல் - அங்ஙன் வீழ்ந்த சொல்லை - நாமே மீண்டும் கொள்வோம் (வழங்) 74. அயன்மொழி யெழுத்தை யகற்றல் (இசைந்த மெட்டிற் பாடுக.) 1 அயன்மொழிச் சொற்களைப் போன்றே அயன்மொழி யெழுத்தும் வேண்டா இயலறி தமிழச் சான்றோர் இயல்தமி ழெழுத்தே ஆண்டார். 2 ஒற்றரே வருவது முன்னே உறுபடை வருவது பின்னே மற்றொரு மொழியெழுத் தின்னே மருவிடின் சொலும்வரும் மன்னே. 3 வடசொல் தமிழெழுத் தாலே வழங்குக வென்றது நூலே குடசொல் ஒன்றிலை மேலே குறித்ததொல் காப்பியக் காலே. 4 வணிகர் முறையிலே தமிழை வடவெழுத் தோடும் வளர்ப்பார் துணிவாய் ஆங்கில வொலியும் தொடர்ந்துசெந் தமிழைத் தளர்ப்பார். 5 மொழியென் பதொரு சொற்றொகுதி ஒலியென் பதொரு சொற்பகுதி பொழிபொருட் சொல்லே தகுதி பொலிவிலே ஒலியின் மிகுதி. 75. பழந்தமிழ்த் தூய்மை கிருட்ணா முகுந்தா முராரே என்ற மெட்டு ப. முன்னே முழுத்தூய்மை மொழியே - தமிழ் உ.1 இந்நா டாங்கிலர் எய்து முன் சொலுமே இருந்ததோ தமிழில் ஆங்கிலமே - மு. 2 ஆரியர் இங்குவத் தணைந்திடு முன்னே ஆரியம் இங்குண்டோ ஆய் இன்னே (முன்னே) 3 முதலிரு கழகமும் முழுவதும் தமிழே எதுபொரு ளெனினுஞ்சொல் அத்தமிழே (முன்னே) 76. தமிழே தனித்தமிழ் சந்திர சூரியர் போங்கதி மாறினும் என்ற மெட்டு வகை ப. தமிழ்என ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழியில்லை தமிழது தானே தனித்தமி ழாகும் தவிர்ந்திடின் பிறசொல்லை. உரைப்பாட்டு தனிப்பா லென்று சொல்வது தருபவர் பாலொடு தண்ணீர் கலந்த பின்பே தனித்தமி ழென்று சொல்வதும் தமிழொடு பிறசொல்லைத் தகவிலார் கலந்த பின்பே ப. கடன்கொள்ளு மொழிகளே கடுகி வளருமென்று கழறுவ ரேசிறியார் வடமொழிகளுக் கெல்லாம் வாழ்வருள் தமிழின்சொல் வளந்தனை அவரறியார் (உரைப்பாட்டு) பெருஞ்செல்வன் வேண்டாது பிறர்பாற்கடன் கொள்ளின் பெயரும் பொருளும் கெடுமே பிறசொல்லை வேண்டாத தமிழுங் கடன்கொண்டு பெரிதுங் கெட்டது திடமே. ப. தமிழைக் கெடுப்பதே தம்பெரும் பணியெனத் தாங்கியுள்ளார் சிலரே அவரைத் தெரிந்துகொண் டகன்று விலகிநிற்க அருந்தமிழ் ஆர்வலரே. உரைப்பாட்டு பெற்ற தாயைக் கொல்லுவதும் பெரிதுந் தகுமென்பார் பிறந்துளார் இவ்வுலகிலே உற்ற தமிழைத் தள்ளுவதும் உகந்த தென்பார் தீயவழி உறுபொருள் சேர்ந்த அளவிலே. ப. கலவை மொழிதன்னைக் கைவந்த தமிழென்று காட்டுவர் போலியரே கலந்துள்ள பிறமொழிச் சொற்களை யகற்றிடின் காண்பது கால்தமிழே உரைப்பாட்டு நன்கூலம் ஒன்றையே நாடி வந்தொருவன் நாய்கன் கடையிற் கேட்டால் எண்கூலக் கலவையில் நீகேட்ட திருப்பதால் ஏற்றுக்கொள் என்ன மாட்டான். (தமிழ்) 77. தமிழ் இயன்மொழி திரவிடம் திரிமொழி சங்கரா சிவ சங்கரா சிவ என்ற மெட்டு 1 வாழிய தமிழ் வாழிய தமிழ் நாடெனும் பெயர் என்றுமே வாழியவே திராவி டம்எனில் வடவர் நாடதில் துன்றுமே. 2 திரவிடம் என்னும்பேர் தமிழ்என்னும் தென்சொல்லின் திரிபாயினும் தீந்தமிழ் தன்னைக் குறித்த காலமும் தென்மலை யேறிப் போனதே. 3 தந்தை யின்பெயர் தாங்கினும் மக்கள் தந்தையின் வேறேயல்லரோ செந்தமிழ் திரி திரவிடங்களும் செந்தமிழாக வல்லவோ. 4 எந்த மன்மொழி பேசினும் பிறர்இந்த நாடொரே யுரிமை செந்தமிழ்க் கெதும்தீங்கு செய்யாமற் சேர்ந்து வாழ்ந்திடின் அறிமெய். 5 எந்த நாடுமே கொண்டுள்ள பெயர் சொந்தமாமொழி யாலன்றோ அந்த நாட்டினில் ஏனையர் குடிஅண்டி வாழ்வது தானின்றோ. 6 ஏந்து தாய்மொழி என்ன வென்றுதான் எடுத்துரைக்கவே விரும்பின் ஆந்திரத் தமிழன் எனத்தகும் அடைமொழி கொடுத்திடுமின். 7 திரைந்த பால்தயி ராயி னும்அது திரும்பவும் பாலே யாகுமோ திரிந்து போகிய திரவிடம் பின்னும் தெளிந்த நற்றமிழ் ஆகுமோ. 8 ஆரியச் சொல்லே சேரச் சேரவும் அணிபெற் றோங்கும் திராவிடம் ஏலவுள் ளவும்தீரத் தீரவே இன்றமிழ் தூய்மையாய் விடும் 9 கொடுந்தமிழ் என்று கழக நாளிலே கூறிய தமிழ் மாறியே நெடுங்கணக்கு முதல் திராவிடம் நீளவும் எல்லாம் ஆரியம். 10 வங்க மும்வட பெலுச்சித் தானமும் வழங்குமே திரவிடமொழி அங்கு மேநெடுந் திரவிட நாடும் அடையுமோ இந்த மடம் ஒழி. 78. தமிழர் தமிழ்ப் பெயரே தாங்கல் சாந்தமுலேகா என்ற மெட்டு பண் - (சாமம்) தாளம் - முன்னை ப. தமிழிலே பேரைத் தாங்ககில் லாரைத் தமிழரெனவுந் தகுமோ. து.g. அமிழ்தினு மினியபூ வுமிழ்தரு தேனாம் (தமிழிலே) உ.1 தாயை மறுதலிக்கை தாயிடத் தன்போ தூய தமிழ்ப்பெயரின் தொடர்பின்மை பண்போ (தமிழிலே) 2 மொழிகளுக் கரசியாம் முதுதமிழ்ச் சொல்லை இழிவெனக் கருதுகை இழிதக வெல்லை (தமிழிலே) 3 முத்தமிழ்ப் பெருமையை முழங்கியென் பயனே தற்பெயர் தமிழாகத் தழங்காத விடனே (தமிழிலே) 4 பிறமொழிப்பேர் கொண்டாரின் பெயர்பெறின் தமிழ்குன்ற இறுதிவரை யிடங்கள் ஏந்தியே நிற்குமன்றோ (தமிழிலே) 5 அச்சமோ நாண்மடமோ அடிமைபுன் னம்பிக்கையோ எச்சமாறன் பின்மையோ எழில்தமிழ்ப்பேர் தாங்காமை (தமிழிலே) 6 சமயமொழி பேர்என்னச் சாரவொன்றில்லை அமையும் இறைவன் ஒன்றே அனைத்துல கெல்லை (தமிழிலே) 79. தாய்மொழிப் பற்று ராம பசன கோரிய என்ற மெட்டு ப. தாய்மொழிப் பற்றெங்ஙன் போகும் - தமிழன் ஆகம் உ.1 சேய்நிலையி லிருந்து சிறந்த தாய்மொழி கொண்டு சீருடன் வாழ நேருமே சிறியோருமே (தாய்) 2 பெற்றதா யிருக்கவும் பிறத்தியைத் தாயென்பதோ பெற்றதாய் மொழியும் அதே உன்னுவீர் இதே (தாய்) 3 தமிழ்ஒன்றே உலகினில் தனிநிலைச் செம்மொழியாம் தள்ளுதற் கெதுங் குறையே அதில் மொழியே (தாய்) 4 மென்மொழி இன்பமாக மிழற்றும் தமிழமுதே மெலிந்தநோய் முதுநிலையும் மேவும் எளிதே (தாய்) 5 அறிவு வளர்வதற்கே அடிப்படைதாய் மொழியே அதையேனும் உணர்ந்தறி வாய்அன்பு வழியே (தாய்) 6 பிறப்பொடு தொடர்ந்தவை பிறபல வுளவேனும் பெற்றதாய்க் கடுத்தவழி பெயரா மொழி (தாய்) 7 பழிவினைக்கே யஞ்சாது பண்பா டெதுவுமின்றி இழிதகவான கயமை இருந்தா லன்றி (தாய்) 80. நிலைத்த தமிழ்ப் பற்று நான் விடமாட்டேன் என் ஏசுவை என்ற மெட்டு பண் - (காப்பி) தாளம் - முன்னை ப. இனி - ஒருபோதும் நான் மறவேன் என் - உயிரான தமிழமுதை (இனி) உ.1 மாநிலமெல்லாம் எந்நாளும் - ஒரு - மாபெரு வேந்தனாய் ஆளும் மாநிலைமையே வந்தாலும் - அதில் - மயங்கியே நொடிக் காலும் (இனி) 2 பல்லாயிரம் பொன்னின் மேலும் - வரும் - பட்டம் பதவி போனாலும் பொல்லாத வறுமை நாளும் - அறு - பொழுதும் வருத்துங் காலும் (இனி) 3 அரசிற்கு மாறான தென்று - நமை - ஆளுநர் சிறைசெய் தாலும் கரிசிற் கொடிதென்று கொண்டு - முறை - கடந்து தலைகொய் தாலும் (இனி) 81. தனித்தமிழிற்பேசாத தமிழாசிரியனின் தகுதியின்மை பண் - (கானடா) தாளம் - முன்னை 1 தமிழாசிரிய னென்று தானே அமர்ந்துகொண்டு தமிழிற் பேசாதவன் தமிழாசிரியனோ தமிழா சிறியவனே. 2 தமிழ்ப்புல வோனென்று தான்பெயர் தாங்கிக்கொண்டு தமிழிற் பேசாதவன் தமிழ்ப் புலவோனோ தமிழைப் புலந்தவனே. 3 தமிழில்வல் லானென்று தான்றனைச் சொல்லிக்கொண்டு தமிழ்ப் பேசாதவன் தமிழில் வல்லானோ தமிழிற வல்லாதவன். 82. செந்தமிழ்ச் செம்மை (இசைந்த மெட்டிற் பாடுக) 1 உள்ளக் கருத்தை யெல்லாம் தெள்ளத் தெளிவாய் என்றும் சொல்லற் குரிய தன்றோ மொழியாகும் தள்ளத் தகுந்த தில்லை கொள்ளச்சொல் எல்லா மென்னும் பிள்ளைத் தனமும் நல்ல வழியாமோ. 2 உண்பது பசிதீர உணவையுட் கொள்ளுவதே ஒழுங்கு வேண்டிய தில்லை என்பாரோ நன்கு பல்லைத் துலக்கி நன்னீரிற் குளித்தபின் நாகரிக மாயிருந் துண்பாரே. 3 உயிரின வரிசையில் உயர்ந்தவன் மாந்த னாகும் உயர்வா யிருத்தல் வேண்டும் வினையாவும் பயிலும் ஒலிக ளெல்லாம் பகரும் மொழியா மென்றால் பறவை விலங்கும் உயர் திணையாமே. 4 பன்னெடுங் காலமாகப் பற்பலர் முனிவரும் பண்படுத்தி யமைத்தார் செந்தமிழை எண்ணு மறிவில்லாத இற்றைப் போலித் தமிழர் எள்ளியதை யிகழ்வார் எந்த நிலை! 5 செந்தமிழ் என்ற சொல்லும் செங்கோல் என்பது போலச் சிறப்பாக இனம்சுட்டும் அடையாகும் குன்றிய தமிழ்பல கொடுந்தமிழாய் ஒருசார் கொச்சையெனும் இழிந்த நடையாகும். 6 பேசுவதே மொழியாம் பிழையற்ற வழக்கெல்லாம் பெரும்புல நூலிலுள்ள நடையென்பார் காசு பெற்றுத் தமிழைக் காட்டிக் கொடுப்பார் அதைக் காக்கும் செம்மைக் கரையை உடையென்பார். 7 அடுக்குகின்ற அருமை உடைக்கும்நாய் அறியுமோ அமைத்ததைக் குலைப்பரே எளியாரும் தொடுக்குந் தமிழறிந்தார் தொல்லாசிரியர் வழித் தூய மறைமலையார் தெளிவீரே. 83. நாட்டுமொழியின் கட்சிப் பொதுமை செந்தாழம் பூவுந் தேன் கமழும் என்ற மெட்டு ப. எந்நாட்டிலுமே தன்னாட்டு மொழி எல்லாக் கட்சிக்கும் பொதுவன்றோ. உ.1 இந்நாட்டிற்பலர் தென்னாட்டு மொழி இங்கோர் கட்சிக்கே யுரியதா மன்னாட்டு மொழி யின்னாட்டமுற வந்தே மாற்றியே மயக்குவார் (எந்) 2 நன்றா யிருக்கும் நாயைக் கொல்லவே நண்ணா வெறிச்சொல் ஏற்றுவார் இன்றே தமிழை யொழிக்கப் பகைவர் இங்கோர் கட்சியைச் சார்த்துவார் (எந்) 3 பெற்றோ ரைமிகப் பேணுகின்றதும் பின்னே தீங்கெனப் பேசுவார் மற்றோர் கெடுதி மொழியினும் நலம் மன்னா நஞ்சென வீசவே (எந்) 4 பன்னாட் டொன்றியம் தந்தேயம் இதிற் பன்னான் மொழிகள் பாங்குறும் மன்னாட்சி மொழிஇந் நாவலுற எந்நாளும் பொதுவாங்கிலம் (எந்) 84. தமிழனுக்கு அறிவுறுத்தல் ஓடி விளையாடு பாப்பா என்ற மெட்டு 1 தன்மான மில்லாத தமிழா - உன்றன் தந்தையர் மாவேந்தர் தமிழா இந்நாண நிலைகொண்டாய் தமிழா - தீய ஏதிலரை நம்பித் தமிழா. 2 பிறப்பாலே சிறப்பில்லை தமிழா - இதைப் பெருநாவ லன்சொன்னான் தமிழா மறத்தாலும் திறத்தாலும் தமிழா - மேன்மை மதியறி வொழுக்கத்தால் தமிழா. 3 இந்தியா வின்குலம் தமிழா - ஏதும் ஏனைநாட் டில்இல்லை தமிழா வந்தவர் வாழவே தமிழா - நன்மை வகுத்த வகை யிது தமிழா. 4 இறகற்ற பறவைபோல் தமிழா - வினை இயற்றாத இடக்கைபோல் தமிழா திறமையில் லாவாறு தமிழா - கல்வி தீர்ந்தனை நெடுங்காலம் தமிழா. 5 ஆரிய வேடரால் தமிழா - உன்றன் அரசப் பிறப்பற்றாய் தமிழா சீரிய மறைமலை தமிழா - நீயும் சீருறும் வழிசொன்னான் தமிழா. 85. பகுத்தறிவைப் பயன்படுத்தல் பண் - (பியாகு) தாளம் - முன்னை ப. பகுத்தறிவை நீ பயன்படுத்து பாரிலே பெரிய ஏ மாறியாம் தமிழனே (பகுத்) உ.1 வகுத்த மூவாயிரம் வழங்குமொழி களுள்ளே வளம்பெறு தமிழ்முதல் தாய்மொழியே உகுத்தபல் சொற்களால் உண்டான செயற்கையாம் உயிரற்ற வடமொழி உயர்வழியோ (பகுத்) 2 பெற்ற தந்தையுடனே பிள்ளைகள் பேசுதற்குப் பிறிதொரு மொழிஞனைப் பெறவேண்டுமோ முற்றும் விளங்காமொழி முணுமுணுக் கும்பிறனே மூலத் தந்தையைத்தொழ வரவேண்டுமோ (பகுத்) 3 விடுதலைப் போராட்டம் வேற்றவ ராட்சியை விலக்கி நல்வாழ்வையே விளைப்பதற்கோ வடதலை நாட்டினர் வறிய இந்தி புகுத்தி வண்டமிழ் மொழியையே ஒழிப்பதற்கோ (பகுத்) 4 தன்னகத் தண்ணீரூற்றித் தன்பழ மட்கலத்தில் தயிரைத் தருபவளும் தமிழப் பெண்ணே மன்னரும் மாசெல்வரும் மரக்கறி வேளாளரும் மடைதரின் ஒருசிலர் மறுத்தற் கண்ணே (பகுத்) 5 ஆயிரந் தலைமுறை ஆனபின்னரும் முன்னோர் ஆற்றிய தொழின்முறை அடைகுலமோ மாயிருந் தமிழினம் மலையும்பல் பிரிவுண்டு மடியவே பகைசெய்த வகைவலமோ (பகுத்) 86. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே என்ற மெட்டு ப. தமிழனே உலகில் தாய்மொழி பேணாதவன் து.g. இமிழ்கடல் சூழுலகில் இதுவும் ஓர் இறும்பூதே (தமிழனே) அ.1 ஏனைய உயர்நிலை இலக்கியச் செம்மொழிகள் இறந்த பின்னரும் தமிழ்இளமை குன்றா வழியும் (தமிழனே) 2 ஞாலமிதி லெழுந்த நாயக மொழிகளின் மூலமாகத் திகழும் முதுமொழி தமிழேனும் (தமிழனே) 3 அறுக்கிற வனைநம்பும் ஆடதுபோல் தமிழை வெறுக்கிற வனைநம்பி வேற்றுமொழி விரும்பும் (தமிழனே) 4 பொருவரு நூல்களுடன் பொருளிலக்கணங் கொண்டு முருகனும் மாலும்தோன்றும் முத்தமிழ்நிலை கண்டும் (தமிழனே) 5 எத்தனை சான்றுரைகள் எடுத்துரைத்தும் நம்பாது பித்தனைப் போலேநின்று பேணிமனங் கொளாத (தமிழனே) 87. பாண்டி நாட்டில் தமிழுணர்ச்சி யின்மை மலையே உன் நிலையே நீ பாராய் என்ற மெட்டு ப. செந்தமிழ்ப் பாண்டிய நாடே சிறிதுந்தென் பண்பாடு சேராது சீர்கேடே (செந்) உ. முந்தே விளங்கிய முத்தமிழ் மன்றானே செந்தீ வண்ணன்அங்கே சேர்ந்தேஇன் புற்றானே இந்தநிலை ஆரியம் வருமுன் தானே இன்றோ உணர்ச்சி என்னும் இல்லையே. (உரைப்பாட்டு) பாரில் மொழி தோன்றியது தொட்டுப் பாண்டியன் வளர்த்த தமிழ் பாங்காய் வளர்வதின்று கொங்கு நாடே சேர சோழ பாண்டியர் என்று சேருந் தொடர்ச் சொன்முறையும் சீராகக் காட்டு மிந்த முரண்பாடே (உருத் தொடர்ச்சி) இந்தியிந் நாட்டிலே வந்த நாளில் நின்று ஏதும் பொதுமக்கள் எதிர்த்ததே அங்கின்று எந்தப் பொதுத் தேர்தலும் புலவோர் நின்று இன்றமிழ் காத்திடவும் இல்லையே (செந்) 88. பழந்தமிழே திரவிடத்தாய் செந்தாழம் பூவுந் தேன் கமழும் என்ற மெட்டு ப. எல்லா மக்களும் மறுதலிக்கினும் ஈன்றவள் அயலாகுமோ. உ.1 சொல்லா லறியும் சான்றுகளுடன் தொன்னூலும் வரலாறுமே எல்லா வழியும் திரவிடத்தாய் என்றே தமிழைக் கூறுமே (எல்லா) 2 தென்னோர் தாயகம் குமரி நாடெனத் தீந்தமிழினால் தெரியுமே என்னேனும் திரவிட மொழியிதை இயம்புமோ வொரு வரியுமே (எல்லா) 3 இந்நாவலத் தின்கண்ணே வழங்கும் எல்லாத் தமிழ மொழிகளும் தென்னே நோக்கி வரவரமிகத் திருந்தும் இயலும் ஒலிகளும் (எல்லா) 4 மெல்லோசைகளே தமிழில் இன்றும் மிகுந்திருக்கவும் திரவிடம் வல்லோசைகளே மிகவும் அன்றும் வதிந்திருக்கவே பெறுமிடம் (எல்லா) 5 தென்னூல் ஆயிரம் ஆண்டுகட்குமுன் திரவிடத் தெதும் இல்லையே பன்னூல் துறையும் தமிழிலக்கியம் பழமதுரையின் எல்லையே (எல்லா) 6 பின்னே யாரியம் மேற்படை யெனப் பெருகினும் அது பிரியுமே முன்னே தமிழே அடிப்படையென முதுதிரவிடம் தெரியுமே (எல்லா) 89. தமிழைப் பழித்தல் பண் - (காப்பி) தாளம் - சார்பு ப. தமிழைப் பழிக்க லாமோ - தாயான து.g. இமிழ்நீர் வரைப்பில் இதன்நேர் சொல்லப் போமோ எதிராளரானாலும் இதைமறுப்பார் தாமோ (தமிழைப்) உ.1 குமரிக் கண்ணே மாந்தன் குழவிக் காலந் தோன்றிக் குறிஞ்சி முல்லைப் பின்னர் மருதந் தவழ்ந்தோங்கித் திமிறிக் கொடுந்தமிழ் திரவிடமாய்ச் சென்று திகழும் ஆரியத்தின் திரள்முதலாய் நின்ற (தமிழைப்) 2 உள்ளக் கருத்தெல்லாம் தெள்ளக் களிபொங்க உணர்த்திப் புலனைந்தும் திளைத்துப் பிழைப்பிங்குக் கொள்ளத் துணையாகிக் குன்றாப் பன்னூல் தந்து கூறும் இருமைநற் பேறும் பெறவந்த (தமிழைப்) 3 உலகெல்லாம் தனியேஓர் குடையின்கீ ழாண்டாலும் உம்பர் மாதர்என்றும் தொண்டாற்றி வந்தாலும் இலகும்நூல் ஒன்றின்றி இகலாரியம் சாலும் இந்தியை இந்நாட்டில் இனியும் ஏற்று மேலும் (தமிழைப்) 90. தாய்மொழிப் பற்றின்றித் தாய்நாட்டுப் பற்றின்மை மாற்றறியாத செழும்பசும் பொன்னே என்ற மெட்டு பண் - சுருட்டி தாளம் - சார்பு 1 தாய்மொழிப் பற்றில்லாத் தன்னாட்டுப் பற்றே தன்னினங் கொல்லவே தான்கொண்ட புற்றே ஆய்மதப் பற்றில்லா அடியார்பற் றுண்டோ ஆண்டவன் தளியிடித் தவரைக்காப் பின்றே. 2 தானேயெங் குஞ்செல்லின் தன்னாடும் வருமோ தன்மொழி விட்டுமே தான்சொல்லப் பெறுமோ பூனைக ளேஉற்ற இடத்தோடும் ஒன்றும் புல்லிய விலங்குபோல் ஒழுகுதல் நன்றோ. 3 மொழியினா லேமாந்தர் இனமொன்று தோன்றும் இனம்பர வியஇடம் நாடாமெஞ் ஞான்றும் மொழியொன் றில்லாமலே இனமொன்று மில்லை இனமொன்றில் லாமலே நாடென்று மில்லை. 4 நாட்டுப்பற் றொன்றையே நலமென்று சொல்வார் நாயகமா யுள்ள மொழியொன்று கொல்வார் வேற்றுப் புலத்தவ ரேயிது செய்வார் வேடர்போ லேஅறி வில்லார்மீ தெய்வார். 91. எந்நாட் கண்ணி 1 ஆட்பெயர் போல்ஊர்ப் பெயரும் அழகான செந்தமிழில் ஏற்பட்டுத் தமிழகமே இன்புறுவ தெந்நாளோ? 2 சீரங்கம் தன்னைத் திருவரங்க மென்று முன்போல் கூறுங்கள் என்றாள்வார் குறிப்பதுவும் எந்நாளோ? 3 வேதா ரணியமென விளம்புகின்ற பேர்மறைந்தே ஈதே மறைக்காடென் றியம்புவதும் எந்நாளோ? 4 மாயூரந் தன்னை மயிலாடு துறையென்று வாயாரச் சொல்லி வழங்குவதும் எந்நாளோ? 5 வைத்தீசு வரன்கோயில் வினைதீர்த்தான் கோயிலென்று வைத்தபழம் பெயர்மீண்டும் வழங்குவதும் எந்நாளோ? 6 சிதம்பரம் தன்னைச் சிற்றம்பலம் அல்லது தில்லையென்று கூறித் திளைப்பதுவும் எந்நாளோ? 7 விருந்தா சலந்தன்னை விரும்புபழ மலையென்று கருத்தாகக் கூறிக் களிப்பதுவும் எந்நாளோ? 8 திண்டி வனந்தன்னைத் திகழ்புளியங் கானமென்று பண்டே போலெங்கும் பகர்ந்திடுவ தெந்நாளோ? 9 நீல கிரியை நீலமலை யென்றுமுன்னோர் போலப் புகன்றுமகிழ் பொங்குவதும் எந்நாளோ? 10 உதக மண்டலத்தை ஒற்றைக்கல் மந்தையென்று முதலில் இருந்ததுபோல் மொழிவதுவும் எந்நாளோ? 11 கல்கத்தா என்று காணும்வங்க வூர்ப்பெயரைக் காளிக்கோட் டம்என்று காட்டுவதும் எந்நாளோ? 12 ஆங்கிலத்தில் தான்வழங்கும் அந்தமிழ்நாட் டிடப்பெயர்கள் நீங்கிப்பின் தனித்தமிழில் நிகழ்வதுவும் எந்நாளோ? 92. குலப் பிரிவினைக் கேடு துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ என்ற மெட்டு 1 குலமென் னுஞ்சிறைக் கூண்டிற் குள்ளேநீ கொடிய தாழும் போட்டாயா - தமிழா கொடிய தாழும் போட்டாயா நலம தென்னுமே நாயனார் சொலின் நாடிக் கேட்கமாட் டாயா - தமிழா நாடிக் கேட்கமாட் டாயா (குல) 2 தமிழர் ஒற்றுமை தனையே மாற்றலர் தகர்க்க வைத்தபல் கூண்டை - என்றும் தகர்க்க வைத்தபல் கூண்டைக் குமிழ மூக்கினைக் கொண்ட தமிழனே குமைத்து வரமாட்டாயா - இன்னே குமைத்து வரமாட்டாயா (குல) 3 பிறப்பி னால்ஒரு சிறப்பு மில்லெனப் பெரிய புலவரே சொன்னார் - தமிழ்ப் பெரிய புலவரே சொன்னார் சிறப்பு றும்தொழில் செய்வ தேகுலம் தெரிந்து வரமாட்டாயா - உண்மை தெரிந்து வரமாட்டாயா (குல) 4 குறுகும் இனத்துள்ளே கொண்டு கொடுத்ததால் கூர்மதி யில்லா மக்கள் - சற்றும் கூர்மதி யில்லா மக்கள் பெருகுங் கல்வியாற் பேரறி வில்லாப் பிழையும் நோக்க மாட் டாயா - உன்றன் பிழையும் நோக்கமாட் டாயா (குல) 5 பேதைமையினாற் பெருமை பொருளொடு பிழைக்கும் வழிகளும் இழந்தாய் - நீ பிழைக்கும் வழிகளும் இழந்தாய் தீது தீரவே தேவர் சொற்படி திறந்து வரமாட்டாயா - கூண்டைத் திறந்து வரமாட் டாயா (குல) 6 தமிழன் என்னுமோர் இனமே யில்லெனத் தலைக்கு வந்ததே கேடு - இன்று தலைக்கு வந்ததே கேடு இமியுந் தாழ்க்காமல் இனிநீ வெளிவர இறைவன் அருளமாட் டானா - ஐயோ இறைவன் அருளமாட் டானா - கு. 93. எக்குலத்தான் நல்லமைச்சன்? (இசைந்த மெட்டிற் பாடுக) சோழன் வினா ஔவையாரே ஔவையாரே அறிதல் வேண்டும் யானொன்று செவ்வையான மந்திரியைத் தேருங் குலமும் ஏதாகும். ஔவையார் விடை நூலென்றாலோ கோல்சாயும் நுந்தமரென்றால் வெஞ்சமராம் கோலென்றாலோ குடிசாயும்! கொள்ளும் அமைச்சன் வேளாளன். 94. தமிழனுக்குத் தகுதியுண்மை கூடி மருந்தரைப்போம் என்ற மெட்டு ப. தகுதியில் தாழ்ந்தவனோ - தமிழன் தானாக வீழ்ந்தவனோ. உ.1 இகமிதில் ஏனையர் மோதும் இருளில் கிடந்துழல் போதும் தகும்பல் கலையிறும் பூதும் தமிழன் கண்டான் ஓதும் ஓதும் (தகுதி) 2 வலங்கை யிடங்கை ஒன்று வழங்கா மல்இடம் பின்று குலமுறை யாற்கலை யின்று குறைந்தான் தமிழன் இன்று இன்று (தகுதி) 3 இன்றும் பல்துறைக் கலையே இருந்தான் தமிழன் தலையே நன்றே திருந்தின் நிலையே நண்ணும் மேலையர் துலையேதுலையே (தகுதி) 95. தமிழன் தாழ்வுணர்ச்சி காக்காய்க் கண்ணுக்கு என்ற மெட்டு 1 சூத்திரன் என்று சொல்லாதே சொல்பவ ரோடே ஒல்லாதே மாத்திறந் தன்னைக் கொல்லாதே மடமைத் தாழ்வு பொல்லாதே. 2 நாற்பால் என்பது நாற்றொழிலே நடத்துந் தொழிலே நங்குலமாம் ஏற்கா வகையிற் பிறப்போடே இணைத்தார் ஆரியர் இழுக்காக. 3 யானை கட்ட வன்றொடரி தானே எடுத்துத் தருதல்போல் மானங் கெட்ட தமிழன்தான் தானே தன்னைத் தாழ்த்திக்கொண்டான். 96. தமிழன் குலம் பண் - சிந்து பைரவி தாளம் - முன்னை ப. நானொரு தமிழன் நான்வந்த வழியே தேனினு மினிய செந்தமிழ் மொழியே. து. ப. நானிலம் முழுதும் நல்லக விழியே நண்ணமுன் எழுந்தது நறுந்தமிழ் ஒளியே (நானொரு) உ.1 வானவர் மொழியென வரும்வட மொழியே வாய்ந்தது தமிழினால் வலந்திரிந் துழியே ஏனுயர் தமிழனும் இழிவுறும் பழியே எய்தினன் இனியேனும் ஏமாறல் ஒழியே (நானொரு) 2 முந்தியே பெறுவது மொழிதரும் பேரே முன்கையே தோளினும் முன்னுறும் பாரே இந்தியன் எனும்பெயர் இரண்டாவ தோரே இதன்பின்னே ஆசியன் என்பது நேரே (நானொரு) 3 பார்முதல் பண்பாடு பயின்றவன் தமிழன் பலரையும் உறவெனப் பகர்ந்தவன் தமிழன் ஊரெலாம் சொந்தமாய் உள்ளினான் தமிழன் ஒருவனே தேவன்என் றுணர்ந்தவன் தமிழன் (நானொரு) 97. ஆங்கில ஆரியப் பண்பாடு வேற்றுமை ஆரியோகே ஓய் என்ற மெட்டு 1 தாழ்ந்தவன் உயர்ந்ததே ஆங்கி லத்தினால் - அவன் தலைவருக் குணவிட்டான் தங்கமே தங்கம் உயர்ந்தவன் தாழ்ந்ததோ ஆரி யத்தினால் - அவன் உணவமைத்தல் இழந்தான் தங்கமே தங்கம். 2 உடலைப் பிணித்ததுவே ஆங்கில வாட்சி - அதும் ஒழிந்துபோய் விட்டதுகாண் தங்கமே தங்கம் உளத்தைப் பிணித்ததுகீழ் ஆரிய வாட்சி - அது உள்ளரித்துக் கொண்டிருக்கும் தங்கமே தங்கம். 3 நடுநிலைத் தண்டனைதான் ஆங்கிலத் தீர்ப்பு - அது நாயனாரின் தமிழ்முறை தங்கமே தங்கம் குடிநிலைத் தண்டனைகீழ் ஆரியத் தீர்ப்பு - அது கொடிய மனுமுறையே தங்கமே தங்கம். 4 கல்வியெல் லாருக்கும்பொது ஆங்கிலமுறை - அதிற் கண்ணிய தொழில்செய்யலாம் தங்கமே தங்கம் கல்வியொரு குலமேகீழ் ஆரியமுறை - பிறர் கைத்தொழிலைச் செய்ய வேண்டும் தங்கமே தங்கம். 5 அறிவை வளர்த்ததுநல் ஆங்கிலக் கல்வி - அது மதியைக்கூ ராக்கியது தங்கமே தங்கம் அறிவைத் தளர்த்ததுகீழ் ஆரியக் கல்வி - அது மதியை மழுக்கியது தங்கமே தங்கம். 6 மறைந்தமெய் வெளிப்படல் ஆங்கி லத்துறை - அது மாண்புடைய ஆராய்ச்சி தங்கமே தங்கம் வெளிவந்த மெய்மறைதல் ஆரி யத்துறை - அது வீணர்செயும் சூழ்ச்சியாகும் தங்கமே தங்கம். 98. நன்றி மறவாமை தூங்காதே தம்பி தூங்காதே என்ற மெட்டு ப. மறவாதே நன்றி மறவாதே - மனம் மாறி நாயினுங் கீழாய்ப் பிறவாதே. உ.1 உன்- குறுமுடித் தலையும் அணிந்திருக்கும் - நல்ல கோலங்கள் உள்ள பலவகை யுடையும் குணக்கிந்தியக் குழும்பின் அரசுனக்கு - முனங் கொடுத்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் (மறவாதே) 2 காலைப் பலகாரமும் குளம்பிக் குடிப்பும்பழங் காலத்துப் பழையதைத் தோற்க டிக்கும் வேலைசெய் யிடத்திற்குச் சாலக்குறை செலவில் விரைவு வண்டிகள்உனை ஏற்றிச் செல்லும் பொறிவினை கற்றவரே பொருள்சி றந்தார் - அந்த அறிவினுக் காங்கிலரே வழிதி றந்தார் (மறவாதே) 3 ஆங்கில ஆட்சியினால் ஒற்றுமைப் பட்டோம் - அந்த ஒற்றுமை யாலேநாமும் உரிமை பெற்றோம் ஆங்கிலக் கல்வியினால் அறிவை யுற்றோம் - அந்த அறிவினால் நல்லவகை ஆட்சி கற்றோம் அறிவிலிக ளும்சிலர் தலையெ டுப்பார் - நல்ல ஆங்கிலத்தின் மீதென்றும் பழிதொ டுப்பார் (மறவாதே) குளம்பி நீர் - காப்பி (Coffee) 99. ஆங்கிலத்தில் தீமையின்மை நந்த வனத்திலோ ராண்டி என்ற மெட்டு 1 ஆங்கிலந் தீயதே யன்று - அதை ஆய்ந்துகண் டால்தமிழ் அடிப்படை யுண்டு ஈங்கும் அதைத்தாயாய்க் கொண்டு - பலர் இருக்கின்றார் ஆங்கில இந்தியர் என்று (ஆங்) 2 குடமொழி யால்மிகக் கேடு - என்று கூறாதே வந்தது குணமத னோடு வடமொழி இந்திதென் னாடு - வந்து வழங்குவ தாற்பல வன்பெரும் பாடு (ஆங்) 3 ஆரியத் தின்தமிழ் வேறு - இந்தி ஆங்கில வடமொழி ஓரினம் தேறு ஆரியர்க் காரியம் மாறு - எனின் ஆரியம் தமிழருக் காவதெவ் வாறு (ஆங்) 4 ஆங்கிலம் நூற்றிலெண் பானே - அந்த அரிய கிரேக்கத் தோடா மிலத்தீனே ஆங்கில சாகசன் பானே - பிற ஆகும் மொழியெல்லாம் மற்றொரு பானே (ஆங்) 5 ஆயிரங் கல்லள விந்தி - நல்ல ஆங்கிலம் சேய்மையா லாகுமோ வெந்தீ சேய தெல்லாம்தீய தொன்றோ - மிகச் சேர நெருங்கிய தெல்லாமே நன்றோ (ஆங்) 6 ஆங்கிலம் நற்கரு வூலம் - அதை அறியா திருப்ப தென்னஅலங் கோலம் பூங்குளத்தைச் சீறி மேலும் - அதிற் புனலருந் தாமலே போவது போலும் (ஆங்) 100. ஆங்கிலமுந் தமிழும் அமைவாதல் கைத்தலம் நிறை கனி என்ற திருப்புகழ் வண்ணத்தின் போலி வகை பண் - நாட்டை தாளம் - முன்னை 1 ஆங்கிலமுந் தமிழும் போதுந் தமிழனுக்கே அதிக மாகவே மொழிஎதும் வேண்டா ஓங்கிய அறிவியல் ஆங்கிலத்தா லமையும் உயரற நூல்களெல்லாம் தமிழாகும். 2 பண்டை மொழி வகையில் தண்டமிழினும் வேறு பண்பாடமைந்த மொழி இலையன்றோ இன்றைய செய்தியெல்லாம் நன்றா யறிந்துகொள்ள இங்கிலாந்தின் மொழியே இறை கண்டாய். 3 கீழை மொழிவகையில் சாலமிகுந் தமிழே கிளரும் பலவுண்மைகள் கிளந்தோதும் மேலை மொழிவகைபில் மேலான மொழியாக மிகுதியுந் திகழ்வதாங் கிலமாகும். 4 குலமுந்து தமிழ்தனி குமரிநாடு பிறந்து குலவிவரும் பெருந்தாய் மொழியாகும் பலவுங் கலந்தநல்ல கலவை மொழியாங்கிலம் பகருமொழி நூலுறுந் துணையாகும். 5 இங்கிருந் துற்ற கல்வி கொண்டு வாழ்க்கைதனையே ஏந்தி நடத்திவரத் தமிழ்போதும் எங்குஞ் சென்றேயுலகில் பொன்றுந் துணையுங் கல்வி ஈண்டு மறிவுறஆங் கிலமோதும். 6 குளிர்ந்த நாடுகளிலே கூடிய வாழ்நாளிலே குலவுமிரு மொழியே பலர்கற்பார் முளிந்த நாடிதனிலே மூதுவிரை வாழ்விலே முழுதும் வேறான மூன்றுமொழி கற்போ. 7 அறிவுத் துறையில்முந்தி அரசியலைக் கலந்தே அரிதிற் கற்கத் தொடங்கும் சிறுவோரை வறிதிற் பயிலஇந்தி வலுவிற் கட்டாயந் தண்டும் வலியர்க்குத் தான்அ தொன்றும் தெரியாதே. 101. ஆங்கில இந்தி வேற்றுமை (இசைந்த மெட்டிற் பாடுக) 1 ஆனையும் பூனையும் ஒன்றாமோ ஆங்கிலம் போலிந்தி நன்றாமோ தேனயிர் நீரே என்றாமோ தீங்குறு நஞ்சும் தின்றாமோ 2 இலக்கண அமைதி இல்லாதே இலங்கிய நூலுங் கொள்ளாதே துலக்கிய சொல்லும் ஒல்லாதே துவங்கிய இந்தி கல்லாதே. 3 இந்தியின் மக்கள் பெருந்தொகையேல் ஏனையர் அதனைப் பெறுந்தகையோ இந்தியா சீனம் அறிந்தகையோ இங்ஙனே பிறகும் வருந்துகையோ. 4 ஆங்கிலர் அயலார் என்றாலும் ஆண்டனர் நம்மை நன்றாக ஈங்குள இந்தியர் இன்றோநம் இன்றமிழ் அழிய நின்றாரே. 102. இந்திய மொழிகள் பதினைந்து கர்த்தர் கட்டாராகில் வீட்டை என்ற மெட்டு பண்- (சிந்து பைரவி) தாளம் - முன்னை ப. இந்தியாவின் சொந்தம் போலும் இன்றுள மொழிகள் பதினைந்தாம். இந்தியாளர் வஞ்சமாக எண்ணிய மொழிகள் பதினான்காம். து.g. ஆங்கிலம் ஈங்கில்லை என்றதை அகற்றுதல் ஆங்கில இந்தியரை அகற்றல் (இந்தி) அ.1 உடன்பிறந்தவரே அகவை வேறெனும் உரிமையைப் பெறுவதில் ஒருசம நிலையர் உடனியல் மொழிகளும் மொழிபவர் குறையினும் உரிமைகொள் தகுதியில் ஒருசமமே. (இந்தி) 2 பெறுமதிக் கெண்ணின் பெருமையே என்றும் பேணிய அளவை என்பது தகுமோ சிறுபுதுச் சல்லிகள் ஆயிரம் சேரினும் செம்பொனின் ஒரு மணிக்கி ணையாமோ (இந்தி) 3 சேய்மொழி யியலாம் சிறுபால் வடமொழி செயற்கை யதெனினும் சிறப்பி னையுறுமே தாய்மொழி யாகிய தமிழே என்றும் தாழ்வினில் வீழ்ந்து தளர்ப்புறுமோ (இந்தி) 4 ஆங்கிலம் இந்திய மொழியுமின் றாகும் அதுவே ஆட்சி மொழியென லாகும் தூங்கிய தமிழனும் விழித்தெழுந் தினியே தொல்லையில் நின்றும் உயலாகும் (இந்தி) 103. இந்தியின் அயன்மை மேரே தில்லியப் புக்காரே என்ற மெட்டு ப. இங்கே ஆங்கிலம் நின்றாலும் அதே இந்தி ஆளுகை வந்தாலும் அதே. து.g. இரு மொழியும் அயல் இனவழி யாரியம் (இங்கே) அ. இருநூ றாண்டுமுன் இங்குவந் தெம்மையே அறிவூட்டி முன்னேற்றிய பின் ஒரு போரின்றியே ஆங்கில ராட்சியின் நமை மீட்டமொழி ஆங்கிலம் அறிவியன் மொழியாம் பொதுவியன் மொழியாம் உலகியன் மொழியாம் இன்றிந்தியன் மொழியும் அதுவாகும் (இங்கே) 104. எது தலைசிறந்த இந்தியப் பொதுமொழி? நல்ல பெண்மணி என்ற மெட்டு ப. சிறந்த பொதுமொழி - தலை சிறந்த பொதுமொழி. து.g. நாம் - சேர்ந்து தாழ்வு தீர்ந்து வாழச் செய்த தெம்மொழி அதுவே (சிறந்த) உ. திறந்த வெளிபோல் பலதுண்டாகக் கிடந்த இத்தேயம் - தம் திறமையால் ஆங்கிலர் இணைத்த புதுவிறல் தாயம் கறந்த மேனியாகக் கல்வி காந்தியின் வாயும் - மிகக் கலந்து நல்ல விடுதலை பின் கண்டதெம் மொழி அதுவே (சிறந்த) 105. தமிழ்நிலை கண்டு தமிழன் வருந்தல் செந்தில்மா நகரந்தனில் மேவிய என்ற மெட்டு நாவ லம்பொழில் தீவெனுந் தென்கண்டம் நண்ணிய ஆப்பிரிக் காவே - உண்டு பண்ணிய மாநிலத் தாவே - அன்று கங்கை கூடிய பனிம லைகடல் தங்கி நீடிய தெறிய லையுடன் அந்த நாளிலே தென்புல மாமலை அடிவாரத்தின் கண்ணே தோன்றி - முல்லை ஆயர் புல்லாம் பண்ணே யூன்றிப் - பின்பு மருத நாடகம் மருவி யூரொடு கருது நாடகம் கல்வி மூவகை கொண்டதே தமிழ் கூறுமுக் காலமும் குறித்தே முனைவரும் கூடிக் - கல்வி கூர்ந்தார் அனைவரும் நாடி - நன்று முந்து முத்தமிழ் இலக்கி யம்பல கண்டு முத்தமிழ் இலக்க ணந்தரப் பாண்டியன் பின்னே பஃறுளி மதுரையில் பைந்தமிழ்க் கழகமே கண்டான் - விண்ணும் பரவிய பெரும்புகழ் கொண்டான் - பின்னர்த் திடுதி டும்மென நடுநடுங்கியே கிடுகி டும்நிலம் கடல்வி ழுங்கவும் கைதவன் இடைக் கழகம் அலைவாயில் கண்டான் அதுங்கடல் கொள்ள - இன்று காணும் வைகைக் கரை யுள்ள - வட மதுரையிற் கடைக்கழகம் வகுத்தனன் அதனை யும்முது குடுமி ஒழித்தனன். அன்றி ருந்திங்கே ஆரியம் ஈரியல் அரசரை யும்பற்றிக் கொண்டு - தமிழ் ஆகாது வழிபாட்டிற் கென்று - மிகத் தாழ்த்தி வைத்தது தமிழ ரும்அதை ஆழ்த்தி விட்டனர் அடிமை யாகியே எண்ணரு நூல்கள் இருந்தன தமிழிலே எல்லாமே ஆரியஞ் சென்ற - பின்னே இறந்தன தமிழிலே மன்ற - எஞ்சி இருந்த சொற்பல இழிந்து வழக்கினில் இறந்து பட்டன இகழ்ந்து விலக்கவும் இறுதி யாய்த்தமிழ் எழுத்தையும் ஒழித்திட எண்ணினார் தமிழ்ப்பகை யோரே - நன்றி என்னேனும் இல்லாத பேரே - இனித் தமிழின வேரறின் தடையொன் றின்றியே தனிமை யாரியம் தழையும் என்பதே இந்நிலை யறிந்தின்னே தமிழ் மக்கள் எல்லாரும் ஒன்றாகச் சேரும் - தமிழ் இன்னலே இல்லாது பாரும். 106. இலக்கணவறிவில்லா எழுத்தாளர் மாங்காய்ப்பாலுண்டு என்ற மெட்டு 1 இலக்கண மேயின்றி இந்நாளி லேபலர் இலக்கியம் இயற்றுகின்றார் - அவரை விலக்கியே பயிற்றல் நன்றே. 2 எழுத்தை யறிந்ததும் எழுத்தாளர் என்றுபேர் ஏற்றுக் கொள்வார் பலரே - அதனை மாற்றச் சொல்வார் இலரே. 3 அறிவிய லுணர்வின்றி அமருங் காதல்ஒன்றே வெறியாகச் செய்யுள் செய்வார் - பொருளும் எரியாகும் நெய்யிற் பெய்வார். 4 புலமையில் லாதவர் புதுநூலி யற்றுதல் நிலமே யில்லா வெற்றனே - மனையும் வளமானதாய்க் கட்டலே. 5 இணையாரு மில்லாத எழிலாரும் மறைமலை எழுத்தும் ஓரெழுத்தோ வென்றான் - நெஞ்சின் அழுத்தமோ அழுத்த நின்றான். 6 தென்சொல்லின் புணர்ச்சியே தினையேனும் அறியாதார் முன்சொல் ஈற்றில் லகர - மெய்ப்பின் என்கொல் வன்மெய் பகர. 7 தமிழை அறியாதார் தமிழெழுத்தை மாற்றத் தகுதியுண்டோ நாட்டிலே - வாழ்வார் மிகுதியும் ஏமாற்றிலே. 107. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு நன்றுடையானை என்ற மெட்டு பண் - குறிஞ்சி தாளம் - இணையொற்று 1 பற்றொன்று மில்லாப் பற்பலர் கூடிப் பலவாறு குற்றங்கள் மல்கக் கொச்சை வெஞ்சொல்லும் இனமல்லா மற்றும் பல்வேறும் மட்டின்றிக்கொண்டு தூய்மையைச் செற்றது சென்னைத் தமிழகராதி சிறப்பின்றே. 2 பக்கம் ஒவ்வொன்றும் பல்பிழை சேரப் பொதுவாகும் மக்கள் பணம்மே மாதொகை வீணிற் செலவிட்டு மிக்கதென் சொல்லை வடசொல்லாய்க் காட்டி மிடியுறத் தொக்கது சென்னைத் தமிழகராதி துணிவென்னே. 3 ஆண்டுகால் நூறும் ஆகியும் பல்தென் சொல்லின்றித் தூண்டியும் நன்று தொகுக்காது சொல்லின் பொருளும்மே வேண்டிய வாறே வேறாகக் கூறி மயல்கொள்ள ஈண்டிய சென்னைத் தமிழகராதி இழிவன்றோ. 4 ஆங்கிலம் முன்னும் அருந்தமிழ் பின்னும் அகராதி தேங்கிய தீங்கு தெளிவாகக் காட்டும் திறனாய்வு பாங்காய் விடுத்தும் பல்கலை மன்றம் பார்க்காதே தூங்கிய சென்னைத் தமிழகராதி தொடரும்மே. 5 புலவர்க்குங் கற்ற பொதுமக்கட் கும்ஆங்கிலக் கல்வி வலவர்க்குங் கட்சித் தலைவர்க்குங் கல்வி யமைச்சர்க்கும் பலவர்க்கும் ஈது தெரிவித்தும் இன்னும் பல்லாண்டு செலவுயக்குஞ் சென்னைத் தமிழகராதி திருந்தாதே. 108. புலமையில்லாரும் புலவரொடு சொற்பொழிவாற்றல் பண் - செஞ்சுருட்டி தாளம் - முன்னை ப. அடியார்நின் றாடுகின்ற திருக்கூத்தில் - வந்து குடிகாரர் ஆடுகின்ற தெருக்கூத்தே. து.g. படியார்தம் பதவியால் செருக்கேற்றித் - தமிழ் படித்தவருடனும் சொற்பெருக்காற்றே (அடியார்) உ.1 கண்ணையே கவர்நீலக் கண்பீலி - மிகக் காண்வரு தோகையை முன்தான் கோலி வண்ண நடஞ்செய்கின்ற மயிற்போலி - நிற வாகில்லாக் கருநட வான்கோழி (அடியார்) 2 கணக்காயர் பள்ளியிலே ஒரு பாட்டு - வேறு கல்லாத பேதையுமே தான் கேட்டு வணக்கமில்லா தவையிற் சொல வேட்டு - மிக வாய்திறப்பது தீயவிளை யாட்டு (அடியார்) 3 செந்தமிழ் வரலாறே அறியாது - அதன் சீரிய இலக்கணம் தெரியாது எந்த மொழியென் றாய்தல் எமக்கேது - நடு இருப்பதெம் கருத்தெனல் பெருந்தீது (அடியார்) 4 நூற்றினுக் கெண்பதுபேர் கல்லாமை - இந்த நாட்டிற் புகுந்திருக்கும் வல்லாமை ஏட்டுக்கல்வி யால்அதைக் கொல்லாமை - இன்று ஆட்சிப் பதவியார்சொல் எல்லாம்மெய் (அடியார்) 109. தமிழ் கடன்கொண்டு வளராது சித்தார்வண்ணம் பண் - பீன் பலாசு தாளம் - முன்னை ப. கடன் வாங்குவதால் தமிழ் வளருமென்றே - பலர் வலிந்துரைப்பார் மொழிவகை யறியார். து.g. கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே - பல வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால் - தமிழ் வளமிகக் குன்றி வருகின்றதே (கடன்) உ. ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால் - கடன் வாங்கியே செய்தல் வகையாகும் கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின் - அவன் வண்பொருள் குன்றி வருவதுடன் - கடன் வாங்கியென் றிழிவும் வந்துவிடும். (கடன்) 110. ஏமாற்றுந் தமிழ்க்காவலர் சிங்கார வேலனே வா என்ற மெட்டு ப. இந்த நாளிற் பல பேரே - இங்கே இன்றமிழ்ப் பேராலே ஏமாற்று வோரே. து.g. சொந்த நலத்தை முன்தூக்கிச் செய்வாரே சும்மா செய்யார் தமிழ்க் கிம்மியும் பாரே. (இந்த) உ.1 அந்தமிழ்க் காவலர் என்பார் - அவர் அறியும் தமிழ்ப்பேரைச் சிறிதும் விரும்பார் எந்தெந்த வேளைக்கும் ஏற்றமை பண்பார் இந்தியெதிர்ப்பாளர் ஏனையர் என்பார் (இந்த) 2 பலதமிழ்க் காவலர் என்பார் - அவர் ஒருதமிழ்க்கும் ஒன்றும் உதவாத பண்பார் கலவை மொழிஎன்றும் கையாளுந் தென் பார் கற்றவர்க்கே தமிழ்ச் சொற்றூய்மை என்பார் (இந்த) 3 தனித்தமிழ்க் காவலர் என்பார் - அவர் தனித்தமிழ் வல்லாரே தழைக்க விரும்பார் நுனித்த தமிழ்ச் சொல்லை நோக்காத பண்பார் நொய்ய வகையெல்லாம் பொய்சொல்லும் வன்பார் (இந்த) 111. தமிழைக் காட்டிக்கொடுக்கும் தமிழ்ப் பேராசிரியர் மகமதியர் குலத்தில் மாணிக்கமாய் விளங்கும் என்ற மெட்டு 1 தமிழைக் காட்டிக் கொடுத்துத் தலைமைப்பதவி தாங்கும் தமிழாசிரியர் கூட்டமே - இல்லையோ நாண் தான் ஒரு முழ நீட்டமே. 2 காட்டிக் கொடுத்துத் தமிழ் நாட்டைக் கெடுப்பவரைக் கேட்டிற்குள் ளாக்குமுறையும் - ஒன்றில்லையா கூட்டிற்குள் ளாக்குஞ் சிறையும். 3 மன்னல மெதுமின்றித் தன்னலமதை யென்றும் முன்னலமாக வைப்பவர் - இந்நிலத்தில் எந்நலமாக நிற்பவர். 4 மாணவரினும் நடைகோணிய ஆசிரிய வீணரைத்தான் விலக்கவே - இக்காலத்தும் ஆள்நரைத்தான் பொறுத்ததே 5 உள்ளத்தை ஆசான் விற்று வெள்ளப் பொன்பெறலினும் கள்ளச்சரக்கை விற்பதும் - நன்றாகுமே கொள்ளைத்தனத்தில் நிற்பதும். 6 பேணுந் தனித்தமிழைப் பேசா திருத்தலோடு பேசுவோரையுந் தடுக்கும் - கோளெங்ஙனம் பேராசிரியர்க் கடுக்கும். 112. தனித்தமிழ்ப் பகைவர் வதனமோ சந்திர பிம்பமோ என்ற மெட்டு ப. இதுவொரு புதுமையானதே - இழிவு தருவதே இதுவும் ஓர் புதுமையானதே. து.g. இத்தமிழகத் திருந்தயலார் இதனை எதிர்ப்பதே. உ.1 முத்தமிழ் மறைமலையடிகள் ஒத்த தமிழும் ஒரு தமிழா எத்தனை யுமதின் பமுண்டோ என வினவுவதே (இது) 2 புள்ளொடு பறவையென்றொருசொல் பொன்னெனுந் தமிழ்வழக் கிருக்கத் தள்ளியவற் றைப்பட்சி யெனுஞ்சொல் தனைவற் புறுத்தலே (இது) 3 தன்மொழிச் சொல்லைஅயல் பழிக்கத் தாங்குவ தில்லைபிற நிலத்தார் தன்மதிப் பின்றிவிலங் கொத்தவன் தமிழன் ஒருவனே (இது) 4 வாழ்கதமிழ் என்றொரு சொலவும் வண்டமிழ்த் திருநாள் விழவும் தாழ்விலாத் தமிழ்நாட் டுணர்வும் தடைசெய்க என்பதே (இது) 113. தமிழ்ப்பற்றில்லார் தமிழ் வளர்த்தல் உசுநத்தேரா கைசநம்கே என்ற மெட்டு 1 அன்பில்லாதார் மக்களேனும் அன்னையைத்தான் காப்பரோ பண்பில்லாதார் தமிழரேனும் பகைபோல் தமிழைத் தீர்ப்பரே (அன்பி) 2 மறைமலையாம் அடிகள் கூட்டம் மகிழ்ந்து தனித்தமிழ் வளர்க்குமே குறைகொள் வையாபுரிகள் கூட்டம் கொடுந்தமிழையும் தளர்க்குமே (அன்பி) 3 கல்லூரியில் கல்விவாயில் கலவைத் தமிழாய்ப் புகுத்தலே மெல்ல இங்கே இந்திரைவே மிகுந்த வழியை வகுத்தலே (அன்பி) 4 மும்மொழிகள் கற்கும் நிலைமை முத்தமிழ் நாட்டில்லையே பொம்மலாம் ஆங்கிலமுந் தமிழும் போதும்மிகுதி தொல்லையே (அன்பி) 5 வாழும்நாளே குறுகி மேன்மேல் வளருங்கல்வி பெருகுமே ஆழமாக அறிவியல்கள் அறிதலே நற்கருமமே. (அன்பி) 114. இந்தியேற்பார்க்குத் தமிழ்ப் பற்றின்மை பண் - (தேவகாந்தாரி) தாளம் - இணையொற்று ப. இம்மியுந் தமிழன் புண்டோ - இவர் ஏனோரை ஏமாற்றல் நன்றோ. து.g. எம்மொழி தமிழைக் கொல்லும் - அவை தம்மை இவர்மனம் கொள்ளும் - (இவர்க்கு) (இம்மி) உ.1 இந்தியை நல்வர வேற்பார் - அதை எதிர்ப்ப வரைஎதி ரேற்பார் முந்தியே தமிழை மாற்றும் - வட மொழியிற் சடங்கெலாம் ஆற்றும்- (இவர்க்கு) (இம்மி) 2 செந்தமி ழின்வர லாறே - ஒரு சிறிதும் ஆய்ந்தறியா தாரே வந்த மொழிகளுள் சீரே - தரும் வண்மையாங் கிலம்எள் வாரே - (இவர்க்கு) (இம்மி) 3 தண்டமிழ்ப் பேரையே தாங்கார் - தனித் தமிழறி வோரகம் நோங்கார் கொண்டதோர் கொள்கையும் நீங்கார்- பழங் குறடுபோ லும்பேதைப் போங்கார் - (இவர்க்கு) (இம்மி) 115. ஆங்கிலத்தை யெதிர்ப்பது தமிழ்ப்பற்றாலன்று வெள்ளிப் பிடியறுவாள் என்ற மெட்டு 1 ஆங்கிலத்தை யெதிர்ப்ப தெல்லாம் ஆரிய இந்தியை ஏற்க ஆய்ந்து கண்டமுடிபதுவே அன்னைத் தமிழையுந் தீர்க்க. 2 ஆங்கிலமே இந்திபொது ஆகத்தடை யானமலை நீங்கினதும் அதனிடத்தில் நேரேவரும் இந்தியலை. 3 ஆட்சியுடன் கல்விதமிழ் ஆகவேண்டு மின்றே யென்பார் மாட்சிமிகும் அவர் தமிழோ மாறுவடம் முக்காற் பங்காம். 4 ஆங்கிலமும் வரலாறும் அருந்தமிழும் கல்லாமாந்தர் ஓங்கியுள்ள நிலைமை நீட உற்ற தடை ஒன்றும் வேண்டார். 5 ஆங்கிலத்தை எதிர்ப்ப வர்க்கே அந்தமிழிற் பற்றே யில்லை ஈங்கெவரும் மாறு கொண்டால் இன்றிலவு காத்த கிள்ளை. 116. தமிழ்ப்பற்றில்லார் தமிழ் பேணுதல் அடுக்கு மல்லிகை தொடுத்த மெத்தையிலே என்ற மெட்டு ப. ஆட்டு மந்தையைக் காக்கும் ஓநாய்போல் - சில்லாள்களே நாட்டிலே தமிழ்நாட்ட வந்தனர் முடுக்கு ஆங்கிலத்தையே அறவகற்றவும் தாங்கு கட்சியின் தலைமை நிற்கவும் ப. எடுப்பு தமிழிற் பற்றுத் ததும்பி வழிதல்போல் - கல்லூரியில் தாய்மொ ழிக்கலை வாயில் விரும்பினார். முடுக்கு ஆங்கிலமொழி நீங்கினவுடன் ஈங்கும் இந்தியே ஓங்குவதற்கு ப.v. வழியை வகுக்கும் வகையே ஈதென - வடநாடரும் விழியை வைத்து விரைவில் ஏவினர். முடுக்கு மறைமலைவழி முறைதமிழ் பல துறைபுரப்பவர் நிறைய நிற்கவும் ப.v. கவலை நிறைந்து கலவை நடைத்தமிழ் செந்தமிழென்றே அவலை நினைத்து உரலை இடிக்கின்றார். முடுக்கு தமிழை யிங்ஙனங் கெடுத்த லின்றித் தமது தொழிலை நடத்தல் நன்று (ஆட்டு) 117. இரண்டில் எதுவேண்டும்? (இசைந்த மெட்டிற் பாடுக) ப. உனக்குக் - கன்னித்தமிழே வேண்டுமா - இந்திக் கட்சித் தலைவர் வேண்டுமா. து.g. எண்ணித் துணிக ஒன்றையே - என்றும் ஏமாறிக் கெடுகின்றையே (கன்னித்) உ.1 கன்னித்தமிழ் வேண்டுமென்றால் - இந்திக் கட்சியை நீவிட்டு நீங்கின்றே என்னத்தைப் பெறினும் பின்றே - தமிழ்க் கிம்மியேனும் ஈடிணை யின்றே (கன்னித்) 2 என்னேனும் தமிழறியார் - அது இறவாதே இந்தியால் என்பார் எந்நாளும் பதவி கொள்வார் - அதற் கெதுவே னும்செயத் துணிவார் (கன்னித்) 3 காசுமிகத் தொகுக்கவே - சிலர் கட்சியை யமைத்திருக் கின்றார் பேசுவ தெல்லாம் முரணே - பெரும் பேதைகள் அவருக் கரணே (கன்னித்) 118. தலைவர் பிணங்கித் தமிழை வெறுத்தல் (இசைந்த மெட்டிற் பாடுக) பண் - தாளம் ப. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகா தென்றால் அன்னையும் தம்பிக்கே ஆகாது போமோ. து.g. அன்னையே கண்ணுறும் அன்பெனுந் தெய்வம் அவளருமை சொல்ல எவருக்கும் ஆமோ (அண்ண) 2 எண்ணங்கள் வேறுபட் டிருத்தல் இயல்பே இதனாலே கட்சிவிட் டேகுதல் அழகோ பின்னே யிந்தியேற்றுப் பேரின்பத் தமிழைப் பேணா திருத்தலே பேரறி விழவோ. (அண்ண) 119. தமிழருக்குத் தக்க தலைவனின்மை (இசைந்த மெட்டிற் பாடுக) 1 தமிழருக்கே நல்ல தலைவனே இல்லை தலைவரென் றிருப்போர்க்குத் தமிழப்பண் பில்லை இமிழ்கடல் தாண்டினும் இடந்தமிழ்க் கில்லை இந்திக்கித் தென்னாட்டும் இல்லாத தில்லை. 2 தலைமைத் தமிழ்ப்பேரா சிரியர்க்கிவ் வெல்லை தமிழிற் பற்றே எள்ளத் தனையுமே யில்லை நிலைமையில் தாழ்பள்ளிப் புலவர்க்கோ வல்லை நீங்கும் வேலை தமிழால் என்னுந் தொல்லை 3 ஆயனில் லாமந்தை அங்கலாய் கடமாம் அருந்தமிழ் நாடெங்கும் அடிமைசேர் மடமாம் தேயுந் தமிழ்நாடும் திறந்துள்ள மடமாம் திசையெட் டாரும்வந்து சேரவே இடமாம். 4 பணத்தைச் சுருட்டுவார் பழகிய தலைவர் பதவியோடு பட்டம் பெறுவாரே சிலவர் கனத்தைப் புகழோடு கருதுவார் புலவர் கழகத்தால் வணிகத்தைப் பெருக்குவார் வலவர் 5 மறைமலை யடிகளும் மாண்டனர் முன்னே மறைந்தார் பன்னீர்ச்செல்வம் முந்நீரிற் பின்னே இறைவனே தமிழர்க்குத் தலைவனாம் இன்னே இறைஞ்சி வணங்குக அவனடி மன்னே. 120. தமிழர் பின்பற்றவேண்டிய தலைவர் இருவர் பண் - செஞ்சுருட்டி தாளம் - முன்னை ப. எந்தக் கட்சியிலேநீ யிருந்தாலும் - என்றும் முந்திப்பற்றும் தலைவர் வள்ளுவரே. து.g. பிந்தித் தலைவர் மறைமலை யடிகள் - பிறர் சொந்தப் பெருநலமே கொள்ளுவரே (எந்தக்) உ. வாழ்வினில் அனைவரும் உயர்வடையத் - திரு வள்ளுவர் வகுத்தனர் நல்வழியே தாழ்வற மறைமலை யடிகள் பின்னே - மிகத் தந்தனர் தனித்தமிழ் இன்மொழியே (எந்தக்) 121. இந்நாட்டிற்கு இந்நிலையில் முன்னேற்றமின்மை பரமானந்த மெய்ப்பரங் குன்றோன் என்ற மெட்டு ப. முன்னேற்றமே இந்நாட்டிற் கில்லை - முட்டுக் கட்டையாய் முதிரும் உட்பகையாலே தொல்லை - முற்றும்நீங் காக்கால் து.g. முதுதமிழ் வழிமறித் திட்டனர் கல்லை முதல்வனைத் தொழவட மொழிதமிழ் எல்லை முதிர்தரும் இன்னிசை தெலுங்கெனும் சொல்லை மொழியவே யிழிந்தது முத்தமிழ் நெல்லை (முன்) பல்லவி உருவடித் தொடர் இந்நாள் பல்வகைத் தமிழ்ப்பகைவர் - எல்லாருங்கூடி இந்தியே இந்திய வொன்றியங் கொண்டிடும் மொழியாம் - அதையறியார் இன்றேப யின்றேவி ரைந்தேய றிந்தால் நல் விழியாம் - இன்றே பொதுவாய் ஈங்கினிதாளும் ஆங்கிலமொழியும் நீங்கிடின் இந்தி ஓங்கிவளர்ந்திட வழியாம் - என்றேயுளறி ஆரியம் அரபியொடு பாரசீகம் எனுமூன்றில் தேறிய தலைப்புலவர் தில்லியில் மானியம்பெறப் பாரியாக வடமொழிப் பல்கலைக் கழகங்காண வாரியே குடியிறையை வழங்கியிறை யிந்நிலை (முன்) 122. இந்திய ஆரிய ஏமாற்று ப்ரோவ சமைய என்ற மெட்டு ப. எந்த நாளுமே ஏமாறும் நாளோ. து.g. அந்த நாளிற்போலே அறவன் பேராலே இந்த நாளும்மேலே எழுந்து செல்காலே (எந்த) உ. தென்சொல் மூலமெல்லாம் தேரும் வடசொல்லாம் திருக்குறள் நூலும் திரிவர்க்கப் பாலாம் பண்கொள்ளுந் தென்நடமும் பரதநாட் டியமாம் பகர்தொல் காப்பியமும் பாணினீய வயமாம் (எந்த) 123. இதுவும் அது மாதர்பிறைக் கண்ணி யானை என்ற மெட்டுவகை ப. நீல நரிக்கதை போலும் - வட நூலவர் செய்கையக் காலம். து.g. வாலிய நிறத்தின் மேலும் - பொலி வல்லோசை மொழியி னாலும் (நீல) உ. மாலை நரியூளை கொண்டே - மற்ற மாவினம் தெளிந்த அன்றே மேலை யாரியமுங் கண்டே - தமிழ் மெய்யறிய வில்லை இன்றே (நீல) 124. ஏமாறல் (இசைந்த மெட்டிற் பாடுக.) 1 ஏமாறி யில்லாதோர் ஏமாற்றி யில்லை ஏற்பாரே யில்லாத தொன்றீவாருமில்லை ஏமாளிக்கும் ஒன்றே ஏமாறும் எல்லை ஏன் மேலும் தமிழன்தான் ஏமாறித்தொல்லை. 2 தாமாகக் கையூட்டுத் தந்தாலும் குற்றம் ஏமாற்றின் மேன்மேலும் ஏமாறல் குற்றம் ஏமாற்றொன் றாலேயே இறுப்பாரின் அற்றம் எல்லாம் வல்லானன்றி எவராலே முற்றும். 125. தமிழ் வளர்ச்சிக்குத் தகுந்த நிலையின்மை தியானமே வரமைன என்ற மெட்டு பண் - (தன்னியாசி) தாளம் - முன்னை ப. ஏதுமே இடமில்லை இங்கே இன்றமிழ் வளர (இன்னும்) து.g. தீதும் நன்றும் தெரியாத் தமிழ மாந்தர் தேரின் நூற்றெண்பான் திகைதற் குறியானால் (ஏதுமே) உ. காதுறும் பாடல் கலவை யரங்கு கடவுள் வணக்கமும் வடமொழிப் பங்கு ஓதுங்கலை ஆட்சியும் ஒன்றுமேல் இந்தி உள்ள தமிழும் ஒழிந்தேபோகும் பிந்தி (ஏதுமே) 126. தமிழன் அடிமைத்தனம் மாடுமேய்க்கும் கண்ணே என்ற மெட்டு ப. தமிழன் இந்த நாளும் - ஏன் தாழ்ந்து நின்றான் கேளும். உ.1 வெள்ளையனை விரட்டி விட்டோம் விடுதலையும் வந்ததென்று சொல்லி முன்னை யடிமைத்தனம் சுமந்துவர முன்போ லின்று ( தமிழன்) 2 சோறெனுஞ்சொல் அழகான தூயதமி ழாயிருக்க மாறியதைச் சாதமென்று மானமின்றி வழங்கி நிற்கும் (தமிழன்) 3 சேயசிவன் திருமாலே செந்தமிழ வழியேனும் கோயில் வழிபாடு முற்றும்கூற வடமொழி காணும் ( தமிழன்) 4 நாட்டுமொழி இந்தியினி வீட்டுமொழி தமிழெனவே கேட்டுவழி நின்றுமதி கெட்டுரைத்தான் தமிழனுமே ( தமிழன்) 5 தூயமரக் கறியுணவே துய்க்குமுயர் தமிழன்அன்னே தீயனெனச் சமையற்பணித் திறமொருசார் இழந்ததென்னே (தமிழன்) 6 பிள்ளையாரைப் பிடித்ததுன்பம் பின்னரசைப் பிடித்ததைப்போல் வெள்ளைமனத் தமிழன்நிலை விழுத்தமிழைப் பிடித்ததப்பால் (தமிழன்) 7 சீர்த்ததிருச் செந்தமிழில் சிவனுமிட்டான் கையெழுத்தே சாத்துகின்றார் சங்கிருதம் தம்பிரான்மார் தலையெழுத்தே ( தமிழன்) 127. தனித்தமிழ்ப் புலவர்க்குத் தாங்கலின்மை பொருளே யில்லார்க்குத் தொல்லையா என்ற மெட்டு ப. தமிழ்நா டெனவொன் றில்லையா - அதில் தமிழர் இல்லையா - தனித் தமிழைப்பேணும் புலவர்க்கேஒரு தாங்கல் இல்லையா. உ.1 குமரிநாட்டில் தமிழொன்றே முன்குலவ வில்லையா இன்றும் - நிலவ வில்லையா தமிழ்நாடென்னும் பேரைச் சொல்லவும் தாங்காத் தொல்லையா இந்தத் - தமிழன் எந்நாள் அடைவானோ விடுதலைதான் சொல்லையா (தமிழ்) 2 சிவனும் மாலும் தமிழர் தெய்வம் தெரிய வில்லையா ஆய்வும் - புரிய வில்லையா செயற்கை மொழியில் வழிபடுவதைத் தீர்த்தல் தொல்லையா இந்தச் சிறுமைத் தமிழன் மயலும் எந்நாள் தெளியும் சொல்லையா (தமிழ்) 3 இந்தியாலே என்ன நன்மை எண்ண வில்லையா மனத் - திண்மை யில்லையா இலக்கியநலம் இல்லாமொழியை விலக்கல் தொல்லையா இந்த - எளிமைத் தமிழன் வலிமை எந்நாள் எய்தும் சொல்லையா (தமிழ்) 4 தேயவொற்றுமை ஆங்கிலத்தால் திகழ வில்லையா நாமும் - புகழ வில்லையா தேவநாகரி வேண்டாவென்று தெரித்தல் தொல்லையா இந்தத் - தீங்கெல்லாம் இந்நாட்டில் எந்நாள் நீங்கும் சொல்லையா (தமிழ்) 128. தமிழன் பேதைமை கண்டதுண்டோ கலியுகத்தில் என்ற மெட்டு ப. ஏதமேகொண் டூதியத்தை இழப்பதே யன்னோ - பெரும் பேதைமையென் றேபுலவர் பெருமகன் சொன்னான். து.g. ஏதிலரை நம்பி இந்த ஏழைத் தமிழன்றான் - இன்னும் ஏதும் அறிவே யில்லாமல் இடரில் அமிழ்கின்றான்(ஏதமே) (உரைப்பாட்டு) இனிதான தேங்கதலி யிருக்கவும் அதைவிட்டே எட்டிக் கனிபறித்துண் டிறப்பதுபோல் கனிவான செந்தமிழும் கண்திறந்த ஆங்கிலமும் கற்காமல் இந்தியைக்கற் றுழப்பதுவே (ஏதமே) 129. தமிழன் பேதைமை கத்தன வாரிகி என்ற மெட்டு பண் - (தோடி) தாளம் - முன்னை ப. எத்தனை சொன்னாலும் எட்டுணையேனுந் தெரியவில்லை பித்தமோ தமிழனுக்கே பேதைமையோ பேய்க்கோளோ (எத்தனை) து.g. முத்தமிழ் நாகரிகம் முத்தைநாள் குமரிகண்ட சித்தர்பின் னோரிது கேடுற ஏவர் சாவிப்போ (எத்தனை) அ. எத்துகையே மேற்கொண்டார் இத்தமிழ் நாடுதான் வந்து புத்தேளிர் மரபென்று போற்றவே தம்மை மெத்தெனும் ஒலிமிஞ்சும் நற்றமிழைக் கோவில் நீக்கிப் பொற்றா மரைக்குள மன்றமும் போக ஆரியங் கொண்டான் (எத்தனை) 130. தமிழரின் ஐவகை அடிமைத்தனம் தாதாபாய் நவரோசி என்ற மெட்டு ப. ஆரிய அடிமைத்தனம் து.g. அந்தோ தமிழர் முந்தே யமிழும் (ஆரிய) உ ஐந்தறுவர் மந்திரிமார் ஆகமுழு அடிமைத்தனம் அந்தமிழர் விடுதலையாய் அழகிய பெயர் பெறவைத்தனம். (உரைப்பாட்டு) அடிமைத்தனத்தையே உரிமைத்தனமாய்க் கொள்ளுதல் அவ்விரண்டின் வேறுபாடறியாமை மடிமைத்தனத்தாற் பொறுத்தல் தன்னலம் பெறுதல் மாறாயெதிர்த்தல் தமிழர் நிலையாமே உ செந்தமிழைச் சிறையில் வைக்கும் செவ்வுரைஞர் வேலை நீக்கும் வந்தவரை வாழவைக்கும் வதிபழங்குடி மாளநோக்கும் (ஆரிய) 131. தன்மானமிழந்த தமிழன் சங்கல்ப மெட்டிதோ மனசா என்ற மெட்டு பண் - (கரகரப்பிரியை) தாளம் - முன்னை ப. தன்மானமே தமிழன்பால் இல்லை தாழ்வுணர்ச்சி யாலே தானேகெடும் ஒல்லை. து.g. தென்மாநிலம் திகழ்தமிழ் எல்லை திருவள்ளுவன் தெளிவித்தும் தென்சொல்லை. (தன்) உ.1 முன்னாளில் தான்கல்வி முறையின்றிக் கண்கள் மூடியிருந் தேதும் முன்னேற்றமே யில்லை இந்நாளிலே எத்துணையோ கற்றும் ஏனையவுயர் நாடுகண்டும் ஏன் தொல்லை (தன்) 2 தொழில் எதுவேனும் துப்புர விருந்தால் தோழமை கொண்டன்பாய் மேலையரின் றுண்பார் எழில் வெண்ணிறம் ஏத்துங்குல வேலை இருந்துந் தமிழரைப் பிறர்இழி வென்பார் (தன்) 3 மூவேளை முழுகிப் பூவாடை புனைந்து முடையூனை விண்டு முகமணம் பூசித் தூவாழ்வையே தொடர்ந்து மேற்கொண்டுந் துப்புரவில்லை தமிழன் என்பார் ஏசி (தன்) 132. பிராமணர் நிலத்தேவரன்மை சங்கம் முழங்குந் தமிழ் என்ற மெட்டு ப. இன்னுந் தமிழனுக்கே இந்திய ஆரியரை இந்நிலத் தேவரென்றே எண்ணும் மயக்க முண்டோ து.g. மன்னும் அறிவியலால் உண்மை விளங்கியிரு கண்ணுந் திறந்துகொண்ட பின்னும் பேதைமையென்னே. (இன்னும்) உ.1 வெண்மை நிறத்தவரை விண்ணவரென்று கொள்ளின் வெற்றி பெறுவார் அமெரிக்கர் ஐரோப்பியரே வன்மை யொலிகள் தெய்வத்தன்மை யுறுவவெனின் வண்ணான் கழுதைபெற வொண்ணும் வழிபாடரோ (இன்னும்) 133. ஏமாறுந் தமிழன் மாயப்பிர பஞ்சத்தில் என்ற மெட்டு 1 தமிழன்போல் ஏமாறிதான் இங்குவே றில்லை தன்மானம் இழந்துபின் தவிப்பானும் வேறில்லை இருண்ட நாடுகளும் முன்னேறிய காலம் இரசியர் அமெரிக்கர் பரவெளிக் கோலம் இன்னும் கையாலே பஞ்சின் இழையதை நூற்று இந்திக் கட்டாயக்கல்வி இருகையால் ஏற்றுத் தாய்மொழி யாம்தமிழ் தாழ்ந்து கெடும் - அந்தத் தறுவாயும் அயல்வட மொழியினில் வழிபடும் (தமிழன்) 2 வெண்ணிற வடவரின் வெடிப்பொலி கண்டு விண்ணவர் மொழியென்று விரும்பியே கொண்டு முன்னாளில் மடமையால் மூவேந்தர் வணங்கினும் இந்நாளி லும்அதை ஏற்பது நன்றோ திண்ண மாய்அது தமிழ்த்திரிபு கண்டீர் - இந்த உண்மையை உணர்ந்தபின் உளந்திருந்துவீர் இன்றே (தமிழன்) 134. தமிழன் அடிமைத்தனம் இது அதிசயமே என்ற மெட்டு ப. இது வியப்பதொன்றே இன்னும் விளங்காததே - பர வெளிபுகுங் காலத்திலும் - பகல் விழிகுருடெனவுள தமிழன் நிலை. உ.1 நயத்தகு தமிழ்மத நாகரிகம் நானில முதலென நன்கறிந்தும் மயக்கமுடன் அரைச்செயற்கை யாகும் - அயல் வடமொழி வழிபட வழங்குவதே. (இது) 2 கிளிப்பிள்ளைக் கொருமொழி பலமுறையும் கிளப்பது போலநக் கீரன்முதல் சீரியா ரேபலர் கூறிவந்தும் - வட ஆரியம் உயர்வெனத் தேறுவதே. (இது) 3 அறிவியற் கலைபல ஆய்ந்தறிந்தும் ஆடையைத் தூயதாய் அணிந்திருந்தும் ஆரிய னேஉடல் தூயனென - மதி மாறிய தமிழனே தாழுவதே. (இது) 135. தமிழில் எடுப்பொலியில்லையென்பாரின் தாழ்நிலை பண் - (செஞ்சுருட்டி) தாளம் - முன்னை ப. கண்கவர் வண்ணம் ஒட்டிற் கிலையென்றே - புளிங் காட்டுமாங் கனியுண்ணுங் காட்டானே து.g. பண்படு தமிழ் எடுப்பொலி யில்லை - என்றே பாட்டின் பொருளறிய மாட்டானே (கண்) உ. சின்னஞ்சிறுவர் எனச்சிறு பண்பே - மிகச் சீரியதென்று கொள்ளுஞ் சிறியோனே தன்னந்தனியே திருக்குறள் கோவை - முதல் தமிழ்நூலின் இன்னோசை கேட்டறி யானே (கண்) 136. தமிழைத் தமிழனே தாழ்த்துதல் உன்னைக் கண்டு மயங்காத என்ற மெட்டு ப. தமிழ்நாடுபோற் கேடுகொள் நாடுமுண்டோ. உ.1 தன்சொலைத் தாழ்வெனத் தள்ளியே வடசொல் விண்சொலென வியந்து விரும்பியுற. (தமிழ்) 2 உடைய மதம்தமிழ் உரிமையா யிருக்க வடமொழிதனிலே வழிபடவே. (தமிழ்) 3 சிற்றடி மைத்தனம் செற்றுரி மையென முற்றடி மைத்தனம் பெற்றிடவே. (தமிழ்) 137. தமிழர் பேதைமை மார்கழி மாதம் திருவாதிரை நாள் என்ற மெட்டு 1 வீட்டவர் இளைக்கவும் வேற்றவர் கொழுக்கவே வேளாண்மை செய்வார் கோட்டியர் போலத்தம் குடும்பத்தைக் கொன்றிடும் கோளாறே மெய்பார். 2 நாட்டவர் பசியினால் நைந்தெதிர் நிற்கவும் நண்ணி வேற்றவரைக் கூட்டிவந் தவரடி கும்பிட்டு வீழ்ந்துபின் கொடுப்பார் கேட்டவரை. 3 விருதுநகர் செல்லும் வினையதை என்னது வீடுவரை யின்றே வருகவென் றதுபோல வம்பலரை வேந்தர் வரவழைத்தார் பண்டே. 4 தன்மையும் தனிமையும் தலைமையும் தழுவிய தாய்மொழியைத் தள்ளிப் புன்மையும் புதுமையும் புரைமையும் புணர்மொழிப் போலியை மேற்கொள்வார். 5 முழுமுதற் கடவுளை வழிபடும் விழுமிய முதுபழ மதமிருக்க வழுவிய கருத்தினாற் கெழுமிய சிறுதெய்வத் தொழுகையே புரிந்திடுவார். 138. பிராமணியம் பச்சைமலை பவழமலை என்ற மெட்டு 1 ஆரியம்பி ராமணியம் ஆயிரண்டும் ஒன்றே சாரும்ஒரு சார்தமிழர் சார்புகொண்டு நின்றே. 2 ஆரியப்பி ராமணரும் அவர்வழியி னோரும் பாரிலுள்ள தேவரெனல் பிராமணியம் பாரும். 3 ஆரியப்பி ராமணரைத் தேவரென்ற தானே அவர்மொழியும் தேவமொழி யாயினது தானே. 4 அறுப்பவனை நம்புகின்ற ஆடுபோன்ற தமிழர் திருக்குறளை நம்பாது திறனிழந்தார் திமிறி. 5 பல்வேள்விச் சாலைமுது குடுமிப்பெரு வழுதி வல்லோசை வடமொழியை வளர்த்துவிட்டான் வழுவி. 6 கடைக்கழகம் அவன்செயலாற் கலைந்துபோன தாலே கொடைக்காவல் தமிழ்மொழிக்கே குன்றியது மேலே. 7 எழுநிலத்தும் செய்யுள்வகை இயற்றிவந்த தமிழர் எழுநூறாண் டுயர்கல்வி யிழந்துவிட்டார் அமிழ. 8 இனமொழிநா டென்றிவற்றின் வரலாறே யறியார் இங்கவர்நூற் றெண்பதின்மர் இன்னமுந்தற் குறியார். 9 பகுத்தறிவு தன்மானம் நெஞ்சுரமே யின்றிப் படித்தவரும் படியாதார் என்றிருப்பர் குன்றி. 10 தகுதியில்லாத் தமிழர்இன்று தலைமைபெற நாடி மிகுதியாக ஆரியத்தை மேம்படுத்தார் கூடி. 139. பிராமணிய வுண்மை பண் - (காம்போதி) தாளம் - இணை ப. என்றும் பிராமணரை ஏற்றித் தமிழரேதம் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் இழிவே பிராமணியம் து.g. குன்றும் திறமையுள்ளோர் கோடரிக்காம்பா யன்றிக் கொள்ளமுடியு மோசொல் கோவியல் மாமணியம் (என்றும்) உ.1 கொண்டான்போல் இன்றுங்கூறிக் கொழுத்தபதவி தாங்கிக் குலமொழியைக் கெடுப்பார் பலரேபே ராசிரியர் கொண்டாடும் ஆள்வினையும் குலத்தில் தம்மையே தாழ்த்திக் கொண்டார் தந்நலம் மிகக்கொண்டாரே மாசிறியர் (என்றும்) 2 குன்றேபோலும் யானையைக் கொல்லவொண்ணும் எளிதாய்க் கொடும்பெருஞ் சுடுகலம் கொண்டே குறுமகனும் குன்றாத அதிகாரம் குடவோலையாற் குடிகள் கொடுத்தபின் கொண்டவரைக் குறைகூறுவ தெங்ஙனம் (என்றும்) 3 குட்டக்குட்டக் குனிந்து கொடுக்கின்றவனும் முட்டாள் குனியக்குனிய மேலுங் குட்டுபவனும் முட்டாள் இட்டுக்கட்டி மேன்மேலும் ஏமாற்றுவோனும் முட்டாள் என்றும் தெளியாமலே ஏமாறுவோனும் முட்டாள் (என்றும்) 4 இருவர் இணைந்து செய்யும் இழுக்கான செயலிலே ஒருவரையே கடிந்தால் ஒருபக்க மான குற்றம் அரிய தமிழ்த் தொண்டுகள் அழகாய்ப் பிராமணரே ஆற்றியுள்ளார் சிலரும் தூற்றாதீர் குலம் முற்றும் (என்றும்) 140. தமிழப் பிராமணரைக் கெடுப்பவர் தமிழரே மகமதியர் குலத்தில் என்ற மெட்டு 1 தமிழப் பிராமணரைத் தமிழரே கெடுக்கின்றார் தந்நலமாயிந் நாளுமே - இன்றேல் அவர் தாமாய்த் திருந்த ஏலுமே. 2 இருபதாம் நூற்றாண்டிலும் ஏமாற்றுத் தொழிலிலே ஈடுபடுத்தி யவர்மேல் - இழிவையே ஏற்றிவிடுமே இவர்கோள். 3 ஆரியத்தை யுயர்த்தி அரிய தமிழைத் தாழ்த்தும் பேராசிரியர் அடிமைத் - தனம்பிறர் பின்பற்றினாரே குடிமை. 4 கலப்பு மணத்தினிலும் குலத்தை யொழிப்பதிலும் நலத்துறை பிறிதிலுமே - பிராமணர் நாயகர் எனச் சொலுமே. 5 தன்மான மொன்றுமின்றித் தன்னையே தாழ்த்திநின்று தானாகத் தமிழன் கெட்டால் - பிராமணர் தாமோ பொறுப்பதற் குற்றார். 6 காலத்தோ டிடத்திற்கும் சாலத்தகுந்த மட்டும் கோலத்தைப் பூண எவரே - பிராமணர் போலத்தான் காணுபவரே. 141. கொடை மடம் பண் - (காம்போதி) தாளம் - ஈரொற்று ப. கொடைமடம் முற்றியின்று கூர்கெடும் தமிழ்நாடு கொடிமயிலும் பெற்றில்லை கோலத்தேர் போர்வையோடு து.g. படைமடமுற் றுத்தமிழ் பழுதுபட்ட பிற்பாடு பாவலர் பட்டபாடு பகரவே பற்றா தேடு (கொடை) 1 இலக்கண மறியாமல் எதுகைநடை வலித்தால் எங்கெங்கும் பொன்னாடைகள் ஏராளமாய்க் குவியும் மலக்கமில் தனித்தமிழ் மறைமலை யடிகளின் மாணுறு நூலுன் ஒன்றைக் காணவும்கண் அவியும். (கொடை) 2 தமிழை ஆரியமாகத் தாறுமாறாய்த் திரித்தல் தருவர் நாடாப்பதிவுப் பொறிபெற மாபதவி குமரி யிருந்தபடி கோணாமல் ஒலிப்பார்க்குக் கொடுத்த சிறுபணியும் எடுப்பர் செய்யார் உதவி. (கொடை) 3 விளக்கமின்றிக் கோவலன் வெறுங்கதை சொல்பவர்க்கே வெண்பொற்காசு பிரியும் ஐம்பதி னாயிரமும் சிலப்பதிகாரம் முற்றும் செவ்வையாய்க் கற்றவர்க்குச் சின்மொழிப் பாராட்டிற்கும் சேராது வாயுரமும் (கொடை) 4 ஆரியம் ஒழிகென்று வாயினால் சொல்பவர்க்கே அளிப்பது பல்வகையில் அடுக்கிய பல்லிலக்கம் சீரிய முறையந்தச் செந்தமிழ்ப் பகைமுற்றும் சிதைப்பவர் செயலையோ செவியுறவும் விலக்கம் (கொடை) 5 மொழிப்புலமையும் பற்றும் முழுக்கவும் இல்லாதார்க்கு முதன்மையே பலகலைக் களஞ்சியம் நெடுகலும் கொழுத்தசம்பளம் பெற்றுக் குறுந்தமிழ் தொகுத்தபின் கொடுப்பாரே பெரும்பண முடிப்புகள் முடிவிலும். (கொடை) 6 ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும் பாயிரத்தோடு கற்றுப்பல தெள்ளுரை கண்டாலும் கூயுற வினத்தோடு குலமத கட்சியென்னும் ஆயநாற் சார்பிலன்றி அளியாரேசீர் ஒன்றாலும் (கொடை) 142. கட்சித் தலைவரைக் கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுதல் (இசைந்த மெட்டிற் பாடுக) ப. குறடென் பேதைகள் கொண்டதைவிடா கொண்ட தலைவனை என்றுங்கைவிடா. து.g. முரடுவாய்ந்து நன்மொழியைக் கொண்டிடா மூங்கை செவிடொடு தூங்கு குருடடா. (குற) உ. கரடென் இந்தியை எதிர்த்து நின்றுவெங் காவற் சிறையுளுங் கடுகிச் சென்றுபின் முரண இந்தியை ஏற்றுக் கொண்டொரு முறையின் றிப்பகர் தலைவர்க் கண்டுமே (குற) 143. தாழ்மையும் தாழ்வும் வெவ்வேறு (இசைந்த மெட்டிற் பாடுக) ப. தாழ்மை வேறு தாழ்வு வேறு. து.g. ஏழ்மைப் பிறப்பும் எழுமை வீறு. (தாழ்மை) உ.1 வாழ்வில் வேண்டும் வணங்கும் பணிவு வளரும் அதனால் வனப்பின் அணிவு தாழ்வில் வேண்டும் தருக்கும் உயர்வு தளரும் மானம் தழைக்கும் இயவு. (தாழ்மை) 144. புலவரைப் போற்றாமை ஏன் இந்த வாதம் என்ற மெட்டு ப. ஏன் மாயமாலம் ஈகையர் கோலம் ஏழைப்புலவர் இறந்தேகின காலம். து.g. நானிலத் திருந்த நாளெலாம் வறுமை நலிந்தபோ தொருவரும் நல்காத சிறுமை. (உரைப்பாட்டு) இருந்த நாளெல்லாம் எரிவாயிருந் தெல்லையிலாத் துன்புற்றே இறந்தபின் அமைதியுற் றிருக்கும் நிலையே பொருந்தாத முறையில் ஒளிப்படங்கட்குப் பூச்சாத்தி வணங்குதல் புண்படுத்துவதன்றி ஒரு பயன் இலையே. (ஏன்) 145. அத்திலீபின் ஆராயாச் செயல் (இசைந்த மெட்டிற் பாடுக) ப. அத்திலீப் பெருமகன் ஆட்சி அத்திலா மரபறு மாட்சி. து.g. மெத்திய அரசியல் சூழ்ச்சி மெத்தவும் இருதலை வீழ்ச்சி (அத்திலீப்) உ.1 இந்தியா இருதுண் டாக இன்னலும் எல்லை போகப் பிந்தியும் அமைதி ஏகப் பிணங்கிய நிலையிற் சாக. (அத்திலீப்) 2 சிறிதும் பொறுப்பில் லாது சிக்கல் களைத்தீர்க் காது வறிதே வடவர் மீது வைத்தார் நாவலம் தீது (அத்திலீப்) 3 எளிதாய்ப் பேர்பெற எண்ணி ஈந்தார் விடுதலை அண்ணி வலிதாய்க் கூடப் பண்ணி வகுத்தார் வழிவழி கண்ணி. (அத்திலீப்) அத்து - வழி, பொருத்தம். மரபுறு - மரபறுத்த 146. போலிக் குடியரசு பாலாபிடேகப் பழனி மலையப்பன் என்ற மெட்டு ப. ஆங்கில ஆட்சியே நீங்கினதும் இன்பம் அடையவில்லை நாமென்றறிந்தே அந்நாள் காங்கிர சென்னும்பேர் ஓங்கு பேராயத்தைக் கலைத்துவிடக் காந்தியடிகள் சொன்னார். (உரைப்பாட்டு) ஏராளமான பணி இந்திய வறுமையைப் போக்குதற் கிருக்கவே வேறான செய்திகளில் வீணாகப் பெருந்தொகை வீசியே இறைக்கின்றார் ப. எடுப்பு இந்திய விடுதலை யென்பதெல்லாம் வட இந்தியைப் பொதுமொழி யாக்குவதே இந்திய வொருமைப்பா டென்பதெல்லாம் மெல்ல எந்தமிழை யிங்கே நீக்குவதே (உரைப்பாட்டு) அறியாமையோடு குலப்பிரிவினை யென்னும் பேய் அலைத்துவரும் மக்களைப் பெருவாரியாய்க் கொண்டு பெயருக்குக் குடியரசு பேணிவருதல் வெட்கமே. (ஆங்.) 147. ஆரியத்தை வளர்த்துத் தமிழைத் தளர்த்தல் பண் - (வசந்தா) தாளம் - முன்னை ப. இந்திய விடுதலை இதுதானோ முந்தி யாரியம் வளர்ப்பதும் ஏனோ உ.1 இந்தியைப் பொதுமொழி யென்றாக்கிப் - பின்னே எழிற்கலை யாங்கிலந்தனைத் தாக்கி இந்திய வொருமைப்பா டென்றூக்கி - வர எந்தமி ழயிரையும் இனிநீக்கி. (இந்திய) 2 சமற்கிருதக் குழு அமைத்திட்டார் - பின்பு சாப்பிள்ளை மணியணை தனிலிட்டார் திமித்திமி யெனப்பணம் செலவிட்டார் - எந்தம் தீந்தமிழ்தனை நடுத்தெரு விட்டார். (இந்திய) 3 விடுதலை விழவினில் மொழி மூன்று - பெரு வேத்தியற் சிறப்புறும் பல்லாண்டு அடிதலை தடுமாறும் அயல்ஈண்டு - மிக அகத்தவர் பசிக்கவே விருந்தான்று. (இந்திய) 148. தமிழனுக் குரிமையின்மை (இசைந்த மெட்டிற் பாடுக) 1 ஆங்கில ஆட்சியே நீங்கிய விடுதலை ஊன்றிய வேனிலில் தோன்றிய கானலே. 2 ஈரடி மைத்தனம் இன்றமிழ் நாட்டிலே ஆரியம் ஆங்கிலம் ஆம்பெயர் சாற்றினே. 3 ஆங்கிலத் தினுமிக ஆரியம் கொடியது பாங்கவை எறும்பையும் பாம்பையும் நிகருமே. 4 உடலையே பிணித்திடும் ஓங்கிய ஆங்கிலம் உளத்தையும் பிணிப்பதே ஊன்றிய ஆரியம். 5 ஆரியத் தால்விலங் கானவன் தமிழனே ஆங்கிலத் தாற்பினும் ஆயினன் மாந்தனே. 6 ஆங்கிலத் தோடேயே ஆரியம் நீங்கிடின் ஓங்கிய தமிழனுக் குண்மையாம் விடுதலை. 7 ஆங்கிலத் தின்பினே ஓங்கின தாரியம் ஈங்கே தமிழ்கெட இந்தியும் வந்ததே. 8 மாணுறு தமிழகம் காணுமிந் நிலையினில் சாண்முனே யேறியும் சறுக்கின தொருமுழம். 9 தமிழனுக் குரிமையே தமிழ்கெடின் இல்லையே இமிழ்கடல் சூழ்நிலம் இருப்பது தொல்லையே. 10 உரிமையொன் றின்றியே உளதுபோற் காப்பதும் அவலை நினைத்துவெற் றுரலையி டிப்பதே. 149. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை வந்தே மாதரமே என்ற மெட்டு ப. தமிழன் விடுதலை தமிழின் விடுதலையே. து.g. இ(ம்)மியும் உரிமையில்லை இ(ன்)னுந்தமிழக எல்லை (தமிழன்) அ. இந்தியாவில் விடுதலை இந்திநாடே பெற்றது ஏனைய திராவிடங்கள் ஏதோ சிறிதுற்றன இருட்கண்ட நாடுகளும் இன்று - மிக ஏற்றமான விடுதலை கண்டு எக்களிக்கும் நேரம் இந்தியத் தென்னோரம் தத்தளிக்க நேரும் தமிழர் எல்லாரும் (தமிழன்) 150. விடுதலை தமிழுக்கு மாறன்மை மோட்சமு கலதா என்ற மெட்டு பண் - (சாரமதி) தாளம் - முன்னை ப. தாய்மொழிப் பகைதான் விடுதலையா தன்மதிமானம் தானிலையா. து.g. வாய்மையே சொன்னான் வாரதா வாணன் நற்காந்தி வகைதலையா (தாய்) உ. சேய்மை யாங்கிலச் சீமையிலுள்ள சிறந்த முக்கட்சிகளும் செறியுமொரே மொழியே தூய்மை யாந்தமிழ் தோதிலா இந்தியினால் தொலைதல் திண்ணம் சொன்னான் மறைமலையே (தாய்) 151. விடுதலைக் காலத்தும் நாட்டுவாழ்த்து வேற்று மொழி அன்றுவந்ததும் அதே நிலா என்ற மெட்டு ப. அன்றிருந்ததும் அயன்மொழி இன்று வந்ததும் அயன்மொழி என்று தான்இங்குத் தமிழ்மொழி ஏத்து நாட்டினை வாழ்த்துமொழி து.g. ஆங்கிலர் கீழே அடிமையாய் ஆங்கி லத்தினில் பாடிவந்தோம் ஈங்கு விடுதலை யானபின்னும் ஏனோ வங்கத்திற் பாடுகின்றோம் (அன்றி) 152. இன்று குடியரசிற்கேற்ற நிலையின்மை பேயாண்டி தன்னைக்கண்டு என்ற மெட்டு பண் - (காம்போதி) தாளம் - ஈரொற்று ப. பாதிப் பேருங் கல்லாத போது குடியரசு ஏதித் தமிழ்நாட்டிலே ஓது நடுவுறவே. து.g. காதிற்கினிய சொல்லைக் காதற்கிளவி யென்னப் பேதைத்தனமாய்ச் சொல்லிப் பேது மிகவுறவோ (பாதிப்) உ. தித்தியெக் காலுமென்று தேக்கவே தின்றுவிட்டால் தீக்குணம் போய்விடுமோ பேய்க்கரும்பான தெல்லாம் பித்தளைக்கும் பொன்னென்னப் பெட்பாக மெருகிட்டால் பேக்கல்லாதவர் அதைப் பார்க்கத் தகுமோ சொல்லாய். (பாதிப்) 153. குடியாட்சிக் கூட்டுடைமை (Democratic Socialism) கூடாமை காணாத கண்ணென்ன கண் என்ற மெட்டு ப. குடியாட்சிக் கூட்டுடைமை - கொள்ளாதிடமே உ.1 படியாதார் நூற்றிற்கே யெண் பதின்மராகும் இந்நாட்டில் குடியாட்சிக் கிடமில்லை குலப்பிரிவினையிற் கூட்டுடைமை கூடுமென் றெண்ணல் மடமை குலத்தை நீக்குங் கடமை கொள்ளா விடமே. (குடி) 2 பிறப்போடு தொடர்புள்ள பேய்க்குலப் பிரிவினை சிறப்பாக வுள்ளஇந்தச் சிறுமைமிகும் இந்திய தேயம் சீருமுரிமை மாயும் சேரும் அடிமை நோயும் செவ்வனே ஆயும். (குடி) 3 குலவகுப் பில்லாததோர் குமுகாயம் வகுப்பதெம் கொள்கையென்ற பேராயம் குலவழியிலே இன்றுசெல்லும் குறித்த தேர்தல் வெல்லும் கொடுவலிமை புல்லும் குணமோ சொல்லும். (குடி) 154. இந்தியக் குடியரசு நீலாற்றின் தீரத்திலே என்ற மெட்டு ப. இந்தியாவிற் குடியரசும் எந்தமுறை நடப்பதென்றே ஏனைய நாட்டுள்ளவர்க்கே எள்ளளவுத் தெரியாது. து. ப. சொந்தமொழி நூற்றிற்குத் தொண்ணூறு கல்லாமை சொல்லளவாங் குலப்பிரிவு கொள்ளுங்குடியர சேது. (இந்தி) 2 தாய்மொழியிற் கையெழுத்தும் தாமாக இடத்தெரியாத் தற்குறியும் சட்டவவை பாராளு மன்றனையும் ஆய்பொருளும் அங்கியலும் அனைத்துமறி யாதுதலை ஆட்டிக்கொண்டே கருத்தெடுக்கும் அன்று தூக்குங் கையிணையும். (இந்தி) உ.1 வேட்பாளர் தகுதியையும் விரும்பியுற்ற கட்சியையும் விழித்தறியார் குடவோலையர் வெள்ளைகுலம் வென்றாடும் காட்டும் தேர்தல் சாவடியில் காண்பர் தேசப்படம் தம்பேரைக் கண்டதிற் குத்மேசையிட் டுக்கையிலும் பின் கொண்டோடுவர். (இந்தி) 155. இந்தியாவின் ஈரியல் சோதிக்கலாபமயில் மீது நடனமிடு என்ற மெட்டு பண் - (தோடி) தாளம் - முன்னை ப. ஆரியத் தமிழ்என ஈரியலுண்மை யிங்கே அறிகவே பகுத்தரசே. து.g. நீருடன் நெய்யா யொன்று சேரினுமே யிரண்டு நேரியமுறை கண்டார் நெறியின் நாவுக்கரசே (ஆரியத்) உ.1 ஆரியர் வருமுன்னே சீரிய நாகரிகம் அமைந்தது தமிழகமே சேரியல் மிகையெல்லாம் ஆரிய மறையவர் நேரியல் தெய்வமென்று நிவந்து புகழ்முகமே. (ஆரியத்) 2 வாழ்த்து வணக்கங்கல்வி பேச்சு வழக்காறிசை தோற்ற முணவும் வேற்றுமை தாழ்த்திமுன் தமிழைப்பின் வீழ்த்தவும் வருமொரு பாழ்த்த மொழிமேல் தமிழ்ச் சீற்றம் பறைசாற்றுமே. 156. கல்லாமையும் குலப்பிரிவும் கட்டாய இந்தியும் உள்ளவரை இந்தியாவிற்கு விடுதலையின்மை நொண்டிச் சிந்து 1 திட்டம் வகுப்போரே - உமக்குத் தெரியவேண்டிய செய்தித்திறங் கேளும் 2 எந்த நாடேனும் - என்றும் ஏற்றமுறக் கல்லாமையைத் தீர்த்திடவேண்டும் 3 சென்ற நூற்றாண்டே - ஆங்கிலர் சிறந்த கல்விமுறையைச் செய்துவிட்டனர் 4 இங்கே கல்லாதார் - தொகையே ஏறத்தாழ நூற்றிற்குத் தொண்ணூறு பேராகும் 5 இந்த நிலைமையே - தொடரின் இந்தியாவின் விடுதலை என்றுமே யில்லை 6 இலவசத் துவக்கக் கல்வி - இன்றே எங்குமே கட்டாயமாக இருத்திடுவீர் 7 இந்தி பொதுவென்னும் - கனவை இந்நொடியே விட்டுவிடுமின் அடியோடே 8 இந்தியா ஒருநாடன்று - அதனால் இன்றுபோல ஆங்கிலமே என்றுமிருக்க 9 இந்தியால் ஒற்றுமையாம் - என்றால் எண்ணெயினால் நெருப்பையே என்றுமணைப்பீர் 10 ஆங்கிலம் போல் இந்தியும் - எமக்கே ஆரியமாய் அயன்மொழியாகும் அறிவீர் 11 ஏனை நாட்டவர்போல் - இங்கே இந்தியரும் குலப்பிரிவின்றி யிருக்க 12 இதற்கும் கல்வியொன்றே - கருவி எந்த நலத்திற்குமிதே இன்னடிப்படை 13 ஒற்றுமை உண்மையாக - விரும்பின் ஊக்கமாய் இம்மூன்றினையும் நீக்கிவிடுமின் 14 நடுநிலையாய்ச் சொன்னேன் - இதையே நன்றெனக் கொள்ளாவிடின்நாம் துண்டுபடுவோம். 157. இந்திய ஒருமைப்பாடு கலிலோ என்ற மெட்டு ப. ஒருமை யிந்திய முறவேண்டுமெனின் ஒருவழியது கேளும் உடன்கை யாளும். (ஒருமை) து. ப. எரிமெய்யாய் அணைந்திட விரும்பின் இடுவதோ நெய்மேலும் இனியெந் நாளும். (ஒருமை) 2 நிலையாக இந்தியப் பொதுமொழி நிலவுக ஆங்கிலமே கலையாம் அறிவியல் இலா இந்தியின் கட்டாயம் ஒழிக தலையாக மொழியியல் துறையில் தமிழகம் தனி யுரிமை பெறவுறுமே. (ஒருமை) 158. பேராயத் தலைவர் தமிழ்நாட்டுப் படிநிகராளியர் (பிரதிநிதிகள்) ஆகாமை பண் - (காம்போதி) தாளம் - முன்னே ப. ஆராயின் தமிழ்நாட்டிற் பேராயத் தலைவரே ஆவாரோ படிநிகராளியர் எத்துணையும். து.g. ஓரேடும் இலக்கியம் பாரா திருப்பதுடன் ஓவாத தமிழ்மீதும் உற்றாரோ பற்றினையும். (ஆரா) உ. சீரான பலகலை ஆராய் கழகத்தமிழ்ப் பேரா சிரியருமே தேராத வரலாறு பேரேனும் எழுதாதார் பாராளுமன் றகராத் தேராயம் எங்ஙனம்ஓர் கூறேனும் தெரியாறு (ஆரா) 159. இலவசக் கட்டாயத் துவக்கக்கல்வி அந்தரங்கமாக வந்த நீர் என்ற மெட்டு பண் - (அமிசதொனி) தாளம் - ஈரொற்று ப. இந்தியாவின் முந்து தேவையும் என்னவென்றே தான் - நன்றாய் எண்ணியின்றே காண். அ. 1 எழுதப்படிக்கத் தெரியார் நூற்றிற்கே இருப்பர் எண்பது பேர் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி இயன்று வருதல் சீர் - அதற் (கு) ஏற்பாடு செய்தல் நேர் (இந்தி) 2 கள்ளுண்ணாமையால் வருநலங்களே கைகண்ட வேனும் கல்வியை முதற்கொண்டு வராமலே தள்ளி வைத்திடுதல் - வண்டி தனைமா முன்னிடுதல் (இந்தி) 3 தீண்டாமைதனை ஒழிக்கச் செய்வழி தேரின் நன்றாமோ தெள்ளிய கல்வி திளைப்பின் தாழினம் தேறும் துப்புரவு - அதால் தேற்றம் தொட்டுறவு (இந்தி) 160. இருவகை யதிகாரம் தலைவாரிப் பூச்சூடி உன்னை என்ற மெட்டு 1 அதிகாரம் இருவேறு வகையாம் - அவை ஆளும் வினைகல்வி யறிவென்னுந் தகையாம் எதுவேனும் வரைமீறின் மிகையாம் - அதே எய்தும்தண் டனையொன்றும் இல்லாயின் நகையாம் (அதி) 2 அதிகாரம் ஒன்றேஇன் னொன்றை - மிக அடையின் அதால்என்றும் ஆகுமோ நன்றே மதிவாணர் எளியோர்தாம் என்றே - தமிழ் மன்றேறி யாளுதல் மந்திரிக் கன்றே (அதி) 3 ஒழுகும் நடையறி வாளி - கோணின் உண்டான தண்டனைக் குரியநல் லாளி மொழியின் நடைஅர சாளி - கோணின் முறையாகத் தீர்ப்பாகும் முழுக்குற்ற வாளி (அதி) 4 குலத்தைக் கெடுத்துமுன் னேறும் - தீய கோடரிக் காம்புகள் கோணியே கூறும் நலத்தைக் கெடுக்காத வாறும் - தமிழ் நாடாளு வோர்இதை நன்றாகத் தேறும். (அதி) 5 அறிவுத் துறையதி காரம் - என்றும் அழியாமல் நிற்கும்இவ் வுலகென்பார் யாரும் அரசுற்ற புல்லதி காரம் - மக்கள் அளிக்கின்ற குடவோலை நின்றாலே தீரும் (அதி) 161. தமிழர் ஏமாற்றம் அடைந்தமை வானபராபரனே என்ற மெட்டு 1 தேவரும் அசுரருமே - சேர்ந்து திருப்பாற் கடல்க டைந்தார் தீவிய சுரை கண்டதும் - தேவர் திடுமென்று கவர்ந்து கொண்டார் ஆவலொடுபன் னெடு நாள் உழந்தும் அசுரர் அவல முண்டார் (தேவரும்) 2 வடவரும் தென்னவரும் - ஆங்கில வல்லரசைக் களைந்தார் வடவர்தம் இந்தியையே - ஆளும் வன்மொழி யாத்துணிந்தார் மடமையை இன்றே தென்னவர் உணர்ந்து வண்டமிழ் காத்திடுவீர். (தேவரும்) 162. நேருவின் சொற்பிறழ்வு (இசைந்த மெட்டிற் பாடுக) ப. மாறி விட்டாரே - நேரு சொல் மாறி விட்டாரே து. ப. தேறியுற்ற தென்னகத்தைத் திடுமென்றுபின் திகைக்கவிட்டு (மாறி) உ. 1 வேறுபட்ட மொழியா ரெல்லாம் வேண்டு மட்டும் ஆங்கிலமாம் பேறுபெற்று வாழ்க வெனப் பெருந்தனமாய்ப் பன்முறையும் கூறுபட்ட சொற்களெல்லாங் கொண்டுறுதி கூறியபின் ஈறுமட்டும் பதவி தாங்க எண்ணியிந்தி யார்மகிழ (மாறி) 2 முழுமதியின் தன்னரசை மூதறிஞர் எனத்தொடங்கி விழுமதியின் பின்முறையாய் வேறுபட்டுக் காருவாப்போல் வழுமதியர் மொழிகேட்டு வன்மை நடுவின்மையுடன் குழுமி நின்ற குடியுரிமை குலைத்துநெடுங் கொடுங்கோற்கே (மாறி) 163. வடவர் நம் தலைவரல்லர் சமரசம் உலாவும் இடமே என்ற மெட்டு ப. வடவரோடு நாமும் சமமே - எவ் வகையிலுந்தான். உ. 1 முந்தியிங் காங்கிலர் வருவதன் முன்பும் பிந்தியும் அவரே நீங்கிய பின்பும் இந்தியார் நம்மை ஆள்வதோர் பண்பும் இல்லையே சிறிதும் எவ்வகையி லுந்தான் (வடவ) 2 இந்தியின் றாரியம் இன்றமிழ் வேறு இரண்டும் ஒன்றாக இசையுமோ கூறு இந்தியும் தமிழ்மேல் இறைகொளு மாறு இல்லையே இயல்பும் எவ்வகையிலுந்தான் (வடவ) 3 கல்வியென் றாலும் காட்சியென் றாலும் கலைகளென் றாலும் காவலென் றாலும் பல்வகைப் பட்டம் பதவியென் றாலும் பகர்வதென் றாலும் எவ்வகையி லுந்தான் (வடவ) 164. பண்பாட்டுயர்வு தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற மெட்டு பண் - (சிந்துபைரவி) தாளம் - முன்னை ப. பண்பாடே மேலான பேறு - அந்தப் பண்டைத் தமிழ்வாணன் கண்டுள்ள வாறு. து.g. உண்ப தெறும்புமே சோறு - அது ஒன்றே போதுமெனின் ஒவ்வாத கூறு (பண்) உ. 1 இந்தி மொழியாலிந் நாடு - முன்னே இருந்தபண் பாடுந்தான் எய்துமே கேடு செந்தமிழ் போனபிற் பாடு - இது செஞ்சிக்கோட் டைபோலச் சீர்கெட்ட காடு. (பண்) 2 உடலுக்கே வேண்டுவ கண்டு - அவை உண்டாக்கத் தூண்டுவார் ஒருவாறே யின்று உடலிற் சிறந்துள்ளம் உண்டு - அதை ஓம்பியவன் தான்மேல் உயர்திணை யென்று (பண்) 3 பன்னெடுங் காலங்க ளாக - மிகப் பாடுபட் டுக்கண்ட பண்பாடு போகத் தன்னலத் தாரேமே லாக - நல்ல தமிழைக் கெடுப்பதோ தன்மானஞ் சாகப் (பண்) 4 சீயென்று தள்ளிய நாயும் - உயிர் செல்லும்போ தும்நல்ல செம்மையே தோயும் நேயம்வே ளாண்மையும் வாயும் - நடு நேர்மை யுடன்மானம் சீர்மையும் வேயும் (பண்) 165. தமிழ்த்தாய் விலங்குச்சிறை மன்மத லீலையை வென்றார் என்ற மெட்டு ப. இங்ஙனம் கொடுமை வேறெங்கே கண்டோம் இங்கே தமிழ்க் கென்னென்ன பாடுகள். (இங்) து. ப. சொந்த நன்மனை தமிழ்சூழ மக்கள் காண வந்தபுன் மொழிகளே வாழத்தளை பூண (இங்) உ. இந்தியா வில்முனம் வாணிகஞ் செய்ய வந்த ஆங்கிலேயரால் - அவர் இன்மொழி யாட்சியால் செங்கோலின் மாட்சியால் பின்னே நேர்மைக் கட்சியால் அந்தமிழ் தூயதாய் ஆக்கிய மறைமலை அடிகள் தனித்தொண்டினால் அறவுமே தளர்ந்தே ஆங்கிலர் நீங்கவும் அழுந்தும் கைகால் விலங்கே தமிழ்க்கே (இங்) 166. தமிழ்த்தாய் அழுகை பண் - (சாருகேசி) தாளம் - முன்னை ப. கண்ணீர்விட்டுக் கதறி அழுதாள் - இரு கன்னமும் வீங்கித் தமிழ் அன்னையே விம்மி விம்மி(க்) (கண்) உ. 1 என்னருமை மைந்தரே என்பகையொடு கூடி என்பெயர் இயல்நாடும் இயம்பல் தடுத்தா ரென்றே. (கண்) 2 அறுப்பவனையே நம்பும் ஆடுகள்போல் என்மகார் ஆரியரொடு கூடி அழிவுறுகின்றா ரென்றே (கண்) 3 பாரில் முதல்மொழியாய்ப் பலகிளை பெற்ற என்றன் சீரிய வரலாற்றைச் சிதைக்கத் துணிந்தா ரென்றே (கண்) 4 என்னுயி ருள்ளவரை என்மகார் கண்திறக்கும் இந்நிலை கண்டென்னையும் எண்ணினார் கொல்லவென்றே (கண்) 5 முன்னே மதுரையிலும் பின்னேமா சென்னையிலும் அண்ணா மலைநகரும் என்னைத் தள்ளினார் என்றே. (கண்) 167. தமிழ்த்தாய் புலம்பல் (இசைந்த துயரச்சுவை மெட்டிற் பாடுக) ப. ஏழை யாயினேன் - மிக ஏழை யாயினேன். து. ப. கீழை மொழியுள்ளும் - மிகக் கீழை மேயினேன் (ஏழை) உ. 1 பேழைக் கணக்கிலே - பொருள் பேணி வைத்தஎன் மாழை மக்களும் - எனை மறுகில் விட்டனர் (ஏழை) 2 கோடிக் கணக்கிலே - பொருள் குவித்து வைத்தவர் நாடிக் கேட்டபின் - மிக நழுவி விட்டனர் (ஏழை) 3 இலக்கக் கணக்கிலே - பொருள் ஈட்டி வைத்தவர் கலக்க விரித்திரு - கையும் காட்டி விட்டனர் (ஏழை) 4 பள்ளி மாணவர் - தரும் பத்துச் சல்லியும் மெள்ள வாங்கியென் - பழ மேன்மை வெளியிட்டேன் (ஏழை) 5 என்னை யிங்ஙனம் - மிக ஏளனம் செய்தும் அன்னை என்றனர் - இவர்க் கறிவு நாணின்றோ (ஏழை) 168. தமிழன்னை புலம்பல் உள்ளம் உருகுதையா என்ற மெட்டு 1 நெஞ்சம் வெடிக்கிறதே - உயிர் நீங்கத் துடிக்கிறதே நஞ்ச மனத்தாரோடே - என்றன் நாடின்று வல்லக்காடே. 2 பஞ்சையராய் என்மக்கள் - முற்றும் பண்டை நூலை யிழந்தார் எஞ்சியுள்ள நிலையும் - இனி இந்தியாற் போம்அழிந்தே. 3 தஞ்சமே யாருமில்லை - இன்று தன்னவரும் பகையே அஞ்சும் ஒடுங்கியினி - என்றும் அடிமையாகும் வகையே. 169. தமிழன் உடமை தமிழ் ஒன்றே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்ற மெட்டு 1 இருப்ப தெல்லாம் தமிழனுக்கே இன்பத் தமிழொன்றே இனியதையும் இழந்துவிட்டால் இங்கே வாழ்வில்லை பொருத்தமுறும் தாய்க்கொலையும் புரிக என்றுரைத்தால் பொதுமதியால் அவ்வுரையின் புன்மை அறிந்திடுவீர். (இருப்ப) 2 தன்வீட்டுள்ள நெருப்பும் - மிகத் தப்பாமற் சுடும்தொடினே தன்னாட் டுளதே யென்றோர் கட்சி தழுவின் தீயது தீங்காகும் பின்னாட்கே அதுதெரிந்தால் பிரிந்தே விடவேண்டும் தன்கேட்டைத் தான்தேடின் தடுப்பார் யாருமில்லை. (இருப்ப) 3 உரிமையெல்லாம் இழந்தால் - பின் உலக வாழ்க்கையும் எதற்கே உரிமை யென்றே அடிமைத் தனத்தை உரைத்தால் உரிமை யாகாது இருமொழியாம் கொள்கையிங்கே என்றும் நிலவுகவே இருமொழியும் தேர்ச்சி பெற்றால் எங்கும் அதுபோதும். (இருப்ப) 170. தமிழ்நாட்டு மந்திரிமார் தமிழைக் காட்டிக் கொடுத்தல் உங்கள் பொன்னான கைகள் என்ற மெட்டு இரு கண்ணான தமிழை மண்ணாளப் பெறினும் காட்டிக் கொடுக்க லாமா எண்ணமும் வருமோ எவ்வாறு தானோ விண்ணோரும் விரும்பும் பண்ணாருந் தமிழைக் கல்லாத பெயரேநீர் தாயாம் செந்தமிழே நோயாம் இந்தியினால் மாயாதென் றுளறுகின்றீர் கீழான அடிமைக் காளாகும் மந்திரி வாழ்வும் ஒருவாழ்வோ - தமிழ் நாடு பாழ்படக் கேடு சூழ்கிறீர் ஈதோ விடுதலைதான் (இரு) 171. காமராசர் திட்டம் தேரத்திலே தில்குசத்தா என்ற மெட்டு வகை 1 தலையணையைத் திருப்பிப் போட்டால் தலைவலிதான் தீருமா? தலைமையில்லார் பதவி மாறின் தாறுமாறு மாறுமா? 2 உலகமுள்ள அளவும் இங்கே ஒருகட்சியின் ஆட்சியே நிலைநிறுத்தப் பலகொடுமை நிகழ்த்துவது மாட்சியோ. 3 சிறுபதவி விட்டுவிட்டுப் பெரும்பதவி தாங்குதல் சிறந்ததோதன் னலவிழப்போ செப்பும்உண்மை ஓங்கவே 4 ஆங்கிலத்தை ஆட்சிமொழி யாக்கி யிந்தி நீக்குக அணிகலப்பொன் தூயதாக்கி அதிக வரியை மாற்றுக. 5 இந்தியாலே தமிழ்கெடுதல் இலங்கும் அங்கை நெல்லியே மந்திரியாம் பதவிநோக்கி மக்கள் தாயைக் கொல்வதோ! 6 பணத்தினாலும் பதவியாலும் பற்றுங்குலத்தி னாலுமே இணக்கியெல் லாத்தமிழரையும் என்றும் ஏய்க்க ஏலுமோ? 7 நேர்மையுடன் பொதுநலத்தை நேர்ந்தேயரசு செய்பவர் தேர்தலுக்கு முன்பதவி தீர்த்து முயற்சி செய்கவே 8 குடியரசின் பெயரைக்கொண்டு கொடுங்கோ லாட்சி செய்பவர் அடியோடழியு மாறிறைவன் அருளும் நிறையப் பெய்யுமே! 172. தமிழ்ப் புலவர் வாய்ப்பூட்டு 1 மொழியென்னும் துறையாளும் அதிகாரி புலவோனே முடையின்றி மனைவாழ்வு நடையாக வுரியோனே இழிவுண்டு பழிமேலும் அழிவேதன் மொழிக்காயின் எதிர்நின்று போராடி ஈடேற்றக் கடவோனே. 2 இந்நாட்டிற் கேயிந்தி இறையேனும் ஏற்காது இதனாலே தமிழ்பின்னே இடருண்டு கெடுமென்றே சொன்னாலும் அலுவல்போம் சோராதீர் வாயென்றே இந்நாள்மந் திரிமாரே எச்சரித் திருக்கின்றார். 3 இந்திக்கே தமிழ்நாட்டில் எதிர்ப்பில்லை திராவிட முன்னேற்றக் கழகந்தான் முரண்பட்ட எதிர்ப்பென்றே இன்றைக்கும் பேராய மந்திரி மார்சொல்வார் எவ்வாறு புலவர்தாம் எதிர்ப்பார்வாய்ப் பூட்டோடே. 173. இந்திக்குப் பொதுமொழித் தகுதியின்மை வரமுலோசகிப்ரோ சுடனீ என்ற மெட்டு ப. பொதுமொழி யெனவுந் தகுமோ - பொதியம்வரையும் இந்தியப் (பொது) து. ப. புதுமொழியாய் அறிவியலிற் பொருள்நூல் ஏதும் இல்லா இந்தி (பொது) உ. முதுசெந்தமிழும் ஈங்கிருக்க முறையில்லாது சிறிய மொழியை முகந்தது பேசுவார் தொகையை அளவை கொண்ட கேடதுவே. கதுமென விந்தி வளர்ந்திடவே கரையில்லாது வடசொல்லையே கடன்கொண் டின்று புனைகின்றார் சொல் கடைவாய்ப்பல்லும் உடைந்துபோக. (பொது) 174. இந்தியெதிர்ப்பு தீரே தீரே என்ற மெட்டு ப. ஏனோ தானோ என்றிராமல் இன்றே இந்தியை எதிர்க்க இன்னுஞ் சின்னாள் ஏகினாலே எதுவும் இயலாது து. ப. போன நாளே பொன்னும் புலமும் ஏனை யாவும் போஒய் இந்நாள் எஞ்சும் மொழியொன்றே இந்தி யாலே அதுவும் போகின் இருக்கும் எழுத்தும்பின் ஏதமிழா! இருந்த இடமுந் தெரியாதே போம் எதிரும் நாகரியால் (ஏனோ) 175. கட்டாய இந்தி வேண்டாமை விளக்குமாற்றை யெடுத்துக் கொள்ளடி என்ற மெட்டு வகை 1 கட்டாய இந்தி ஏன் கற்கவேண்டும் - நாமே கைகட்டி ஏன் வடவர்க்கு யாண்டும் - முன்னே நிற்கவேண்டும் - இழி விற்கு மீண்டும் (கட்டாய) 2 வடமொழி யாலிங்கு வந்த கேடு - பல வாயிற்சொல்ல முடியாத பாடு - அவை வளரும் நீடு - இல்லை வரைய ஏடு. (கட்டாய) 3 இந்தியினால் தமிழ்க் கென்ன நன்மை - அதால் எல்லாச் சொல்லும் ஈறு கெட்ட தன்மை - எய்தும் மற்றும் வன்மை - இது முற்றும் உண்மை. (கட்டாய) 4 மறைமலையார் இந்தி மறுத்துவந்தார் - நாமும் பொறைமலையாய் நீடு பொறுத்திருந்தோம் -இன்று வெறுத்து நின்றோம் - வலி யுறுத்துகின்றோம் (கட்டாய) 5 இந்தியாளர் செய்த தீர்மானமே - நாமும் எங்ஙனம் கட்டும்ஓர் சேர்மானமே - ஒரு சார்காணுமே - வட வோர் காணுமே (கட்டாய) 6 இந்தியினால் வரும் வேற்றுமையே - அதை இதுவரை நேர்ந்தது தேற்றும் மெய்யே - உடன் மாற்றுகையே - பறை சாற்றிவையே (கட்டாய) 7 அறிவியற் கல்விக்கே ஆகும் பன்னாள் - நல்ல ஆங்கிலம் தமிழுடன் அறியவே நாள் - இல்லை தெரியவே கேள் - கல்விக் குரியவே வேள் (கட்டாய) இந்தியால் தமிழ்ச்சொல் ஈறு கெடுதல் : எ-டு : ஆறுமுகம் - ஆர்முக், அரங்கன் - ரங்க். 176. இந்திக்கும் விடுதலைக்கும் தொடர்பின்மை பண் - (காப்பி) தாளம் - சார்பு 1 இந்திக்கும் விடுதலைக்கும் என்ன தொந்தம் இந்தியார்க்கே இந்தியா என்ன சொந்தம் முந்திய தமிழினம் மொய்த்தே யிருந்தும் மொழியாலே சிறுபான்மை எங்ஙன் பொருந்தும். (இந்தி) 2 இந்நிலம் ஆங்கிலர் நீங்கின போது இந்தியே பொதுமொழி என்றாரோ ஓது தென்னவர் தெம்மாடி யானதே தீது திரளானோர் கல்லாமைத் திறமுமே தோது. (இந்தி) 3 ஏருழு வோன்மிக இளப்பமா னாலே எருதுந்தான் அளியனாம் இனமுறை யாலே ஆரியந் தெய்வமென் றேறிய மாலே அரும்பி வரும்இந்தி அளவில்லா மேலே. (இந்தி) 4 தென்மொழி யெல்லாமே தீந்தமிழ் சேரும் திரவிடர் இவ்வுண்மை தெளியார்எல் லாரும் தன்மொழி யாரெல்லாம் எண்ணுங்கால் நேரும் தமிழுக்கும் நல்லதோர் பெரும்பான்மை பாரும். (இந்தி) 5 இந்தியால் ஒற்றுமை என்றுமே இல்லை இனிவரார் ஆங்கிலர் இந்திய எல்லை இந்தியார் சூழ்ச்சியை இனியறிந் தொல்லை இருத்துக ஆங்கிலம் இல்லையே தொல்லை (இந்தி) 6 சீனத்தை நோக்கவே சிறுதேசம் இந்து சீனங்கட் டாயமாய்ச் சேருமோ வந்து ஏனைத் திசையுள்ள இந்தி வலிந்து ஏனிந்த நாட்டிற்குள் எய்தும் புகுந்து (இந்தி) 7 ஆசியா தானொரு மாபெருங் கண்டம் அதனுள்ளே இந்தியா அமையும் உட்கண்டம் பேசுறும் பற்பல மொழிகளைக் கொண்டும் பேணுவீர் இவ்வுண்மை பிறவும்உட் கொண்டும் (இந்தி) 177. சொல்லொன்று செயலொன்று சின்னப்பாப்பா எங்கள் செல்லப்பாப்பா என்ற மெட்டு ப. சொல்வதொன்று - அவர் - செய்வதொன்று து.g. எல்லவர்க்கும் தொல்லையொன்றும் இல்லையென்று (சொல்) உ. 1 வெள்ளையர்முன் ஆண்டகாலம் வேற்று மொழியையே விழுமிதாக வளர்த்ததாலே வீழ்ந்த நம்மொழி நல்லகாலம் வந்ததின்று நறுந்தமிழ்க் கென்றே நஞ்சமாக இந்தியையிந் நாட்டிற் புகுத்தினார் (சொல்) 2 ஆட்சிமொழியும் அறிவுமொழியும் அருமைத் தாய்மொழி ஆகவேண்டும் என்றுபறையும் அறைந்து கூறுவார் மாட்சியாகும் ஆங்கிலச்சொல் மாற்றி னாற்பொது மக்களுக்கு விளங்காதென்று மறுத்தும் ஆளுவார் (சொல்) 3 இந்தியிங்கு வந்திடின்நம் இன்றமிழ் கெடும் என்றுநாடி மறைமலைதாம் நன்றுமுன் சொன்னார் இன்றுசெந் தமிழ்கல்லாத மந்திரி மாரே இந்தியால் தமிழ்கெடாதே என்று சொல்கின்றார் (சொல்) 178. தமிழகத்தில் இந்தியைப் புகுத்த அமைச்சருக் கதிகாரமின்மை பண் - (சிம்மேந்திரமத்திமம்) தாளம் - முன்னை ப. இந்தியைப் புகுத்திட மந்திரிமார் களுக்கே எந்த வதிகார முண்டிந்நாடே. து. ப. செந்தமிழ் வரலாறு தெரியாது மந்தையாடுகள் போன்றார் தென்னாடர் தெருவில் விளக்கை நிறுவ நின்றால் குருடர் கருத்தை அறிதல் உண்டோ. (இந்தி) உ.1 தண்டமிழ்ப் பகைவராய்த் தலைமைப் பதவி தாங்கும் தறிதலைகள் கருத்தைத் தடைப்படுக்க வண்டமிழ்ப் புலவரின் மாநாடு கண்டதன் முடிவினைக் கடைப்பிடிக்க பகைவன் பெரிய புலவன் எனினும் மொழியின் உரிமை சிறுதும் உறுமோ (இந்தி) 179. தேவநாகரியால் தேசவொற்றுமைக் கிடமின்மை கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கித்தருவேன் என்ற மெட்டு ப. இந்து தேச மெல்லாம் ஒன்றாமோ தேவ நாகரியால். (இந்து) உ.1 ஏன் இந்த மாற்றம் இனும் ஏமாற்றம் இருக்கும் மாற்றத்துடன் (இந்து) 2 எத்தனை வகையோ இந்திய மக்கள் இனமே வேறாகும் (இந்து) 3 ஆரியந் தமிழே நீடிய காலம் தீராப் போராட்டம் (இந்து) 4 தீந்தமி ழொலியை வடவல் லெழுத்தால் தெரிவிப் பியன்றிடுமோ (இந்து) 5 தேயம் முழுவதும் நேயமுறவொரு சாயம் பூசுவதோ (இந்து) 6 குளிக்கப் போனார் சேற்றைப்பூசிக் கொள்ளல் முறையாமோ (இந்து) 7 ஒற்றுமை மிகவே பெற்றிட முயல்வதும் உற்றதை யிழந்திடவோ. (இந்து) 180. இந்தியெதிர்ப்பில்லையென ஏமாறல் ப. இந்தியை எதிர்ப்பவர் இந்நாட்டில் இல்லையா - அதை எங்கும் எதிர்த்தே நடக்கும் கூட்டம் இல்லையா - அதைக் கேட்டதில்லையா. உ. 1 முந்தியேநல் மறைமலையார் முனைந்தெதிர்த்தாரே - அந்த முனையைச் சோமசுந்தர பாரதியடுத் தாரே - மிக முதன்மையான பெருமக்களும் துணைகொடுத்தாரே - அந்த வினைமிகுத் தாரே. (இந்தி.) 2 தமிழரத்தம் ஓடுகின்ற புலவரெல் லாரும் - அந்தத் தகுதியில்லா இந்தியையே புகுதவொல் லாரே - பெரு தடையிருப்ப தாலேவாயைத் திறந்துசொல் லாரே - இதை அறிந்துகொள் வீரே (இந்தி) 3 இந்தியை எதிர்ப்பதெல்லாம் எதிர்க்கட்சி என்பார் - இனி எத்தனைநாள் இங்ஙனம் ஏமாற்றுவர் பின்பார் - மிக எதிர்த்துவரும் பொதுத்தேர்தலில் என்னசெய்குவார் - அடி மண்ணைக் கௌவுவார். (இந்தி) 181. அரசியற் கட்சியார் கல்வித்துறையில் தலையிடல் சீரகுவர சுகுணாலய என்ற மெட்டு பண் - (பைரவி) தாளம் - முன்னை ப. ஆசிரியருக் கறிவில்லையா அரசியலார் கலைத்துறை தலையிட (ஆசிரி) து.g. அடாததென்று விடாது சொல்லியும் வடாதுமொழி யிந்தியே வலுக்கட்டாயம் (ஆசிரி) உ. 1 ஆள்வினைப் பாலே அதிகாரத் தாலே கேள்வியிலை யென்றுசெய் கேடிரு பாலே. (ஆசிரி) 2 இருமொழிக் கொள்கை ஏற்குமிவ் வெல்கை இந்தியைப் புகுத்தவே மும்மொழிக் கொள்கை (ஆசிரி) 3 ஆங்கிலம் நீங்கின் அறிவுபின் வாங்கும் ஓங்கும் ஒற்றுமையற உரிமை ஏங்கும் (ஆசிரி) 182. கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றல் (இசைந்த பண்ணிற் பாடுக) தாளம் - முன்னை 1 ஆயிரம் பாட்டிற்கடி அறிந்தும் ஒன்றன் உருவும் அறியா திருந்தால்பயன் என்னே என்னே மாயிரு மொழிகளை மறுவறக் கற்ற லின்றி மாணவர்க் கிந்திஎதற் கின்னே இன்னே. 2 கல்வி கரையில்லாமல் கடலினும் விரிந்ததைக் கற்பவர் நாள்குறையும் எல்லை எல்லை செல்வ மெனச்சிறந்த செய்ய கலையிருக்கச் சிறுமொழி கற்கநாளும் இல்லை இல்லை. 3 ஆனையைப் போன்றேஒரு பூனையும் விலங்கேனும் ஆனையாமோ பூனையும் சொல்லும் சொல்லும் ஆங்கிலம் போன்றேஇன இந்தியும் மொழியேனும் ஆங்கிலமா யெங்ஙனம் செல்லும் செல்லும். 4 இந்திய ரெல்லாருமே இந்தியப் பொதுமொழி இந்தியென் றேற்றுக்கொண்ட துண்டோ உண்டோ மந்திரி மாரும்அதை முந்தியெண்ணா மல் - இங்கே இந்தியைப் புகுத்துதல் நன்றோ நன்றோ. 183. இந்தியா ஒரு நாடன்மை சாமி விவேகானந்தா என்ற மெட்டு வகை ப. இந்தியா ஒரே நாடென்று இருந்த காலம் என்று து.g. இங்கிலாந்தின் வலிமை மாட்சி இருந்ததாலே ஒருமை யாட்சி (இந்தி) மூவேந்த ராட்சியுள்ளும் நாவலந் தேயம் பல நாடுகளாம் இனப்பாகு பாடுகளாம் மதத்தொழு வாடுகளாம் இருந்தாலும் யாவும் தம்மைப் போற்றி நின்றாற் போது மென்றே ஆட்சி கண்டார் (இந்தி) 2 பன்னிரு கொடுந்தமிழின் பாங்கான பதினெண் மொழி நாடுகளும் செய்தபோர்க் கேடுகளும் இனங்கள்ஒவ் வாமைசொலும் இந்நிலையின் பின்னர்நாடும் ஐம்பத்தாறு பெருகி வந்தவே பன்னூறு (இந்தி) 3 ஆந்திரர் கன்னடரே ஆனதமிழ் மலையாளர் ஓரினமே இன்றுபல வேறினமாம் மொழிநடை பேரினமாம் இவைபோன்றே மாந்தர் தன்மை வடபன்னாட்டும் நேர்ந்த உண்மை நிறுவிக்காட்டும் (இந்தி) 184. இந்தியால் வரும் ஏதம் வைணவ சனத்தோ என்ற மெட்டு ப. இந்தியால் வருமே என்றும் அடிமை இரண்டாந்தர நிலைமை (தமிழா) (இந்தி) உ. 1 முந்தியே வடமொழி மூலம் குறைந்தாய் இந்தியால் மறைந்திடுவாய் (தமிழா) (இந்தி) 2 ஆங்கிலம் அயன்மொழியானால் வடக்கே ஈங்கயல் நமக்கிந்தியும் (தமிழா) (இந்தி) 3 தமிழெனும் மொழியும் தமிழனென்பேரும் அமிழ்ந் தடியொடு தீரும் (தமிழா) (இந்தி) 4 வள்ளுவன் வழியும் மறைமலை மொழியும் தெள்ளுக தீங்கொழியும் (தமிழா) (இந்தி) 5 இயற்பெய ரெல்லாம் இழக்கும் ஈறும் மயற்பட வடிவுமாறும் (தமிழா) (இந்தி) 185. இந்தியால் ஒற்றுமை யில்லை ‘â›a jÇrdª juyhfhjh? என்ற மெட்டு ப. இந்தி மொழியினால் வருமெனல் மடமே இந்திய ஒற்றுமை (இந்தி) உ. 1 முந்தியே குழுவினில் முரண்படு சமமே முடிபொரு தலைவன் தப்பிதமே பிந்திய எதிர்ப்பும் பேணார் சிறிதுமே பிடிவிடா திருப்பது மதமே (இந்தி) 2 மறைமலை யடிகளின் உரைவழி படியும் மாண்புறு தமிழன்எப் படியும் இறைபெறா அவையில் ஏதிலர் முடிபும் எம்மவர் கொள எங்ஙன் முடியும் (இந்தி) 3 பொன்னுடன் இரும்பெதும் பொருந்துவ தில்லை பொருந்துமோ வடமுந்தென் எல்லை தென்னில மருங்கில் தெளிதமிழ் முல்லை திருந்திடா மொழிவரல் தொல்லை. (இந்தி) 4 நெருப்பையே அணைத்திட நெய்யிடார் நிலமே திகழ்வதால் தெளிந்திடல் புலமே இருக்கும் ஒற்றுமையும் ஈந்ததாங் கிலமே இனிஇந் திவரின் அதும் இலமே (இந்தி) 186. இருமொழிக் கொள்கை சுகுணமுலே செப்பு கொம்டி என்ற மெட்டு பண் - (சக்கரவாகம்) தாளம் - ஈரொற்று இருமொழிக் கொள்கையே நன்று இன்றமிழ் நிலமென்றும் (இரு) து. ப. ஒருவழியும் தமிழருக்கே உதவாக்கடை இந்தியன்றோ (இரு) உ. ஆங்கிலத்தை அகற்றி இந்தி அதனிடத்தில் அமைக்க நின்றார் தாம்பதவி நீடிக்கவே தன்னலமாய் மந்திரிமார் (இரு) 187. இந்தி வடமொழியால் தேயவொற்றுமைக் கிடமின்மை 1 பேசுமொழி யொன்றெனவே ஆகி விடினே - உடனே பேசுமிடம் ஒற்றுமையாய்ப் போய்விடு மென்பார் நேசமாகப் பன்மொழியார் பாரில் இல்லையோ - போரும் நேரிடத்தொரே மொழியார் மாய்வதில்லை யோ. 2 கேழ்வரகில் நெய்யொழுகும் என்று கிளந்தால் - அதைக் கேட்பவர்க்குக் கொஞ்சமேனும் மதியில்லையா வாழ்வரசில் ஒற்றுமைக்கு வடமொழியோ - எரி வன்னெருப்பை அணைத்தற்கு எண்ணெய் வழியோ 3 ஆரியத்தால் வந்ததமிழ்க் கேடுகளையே - இன்று அளவிட்டுச் சொல்ல எவராலே முடியும் சேரிடத்தைத் தானறிந்து செம்மையுறாமல் - நாம் சிறுமையுற்றோம் இதென்று தீரவிடியும். 4 ஒற்றுமையே உரமென்ப துண்மையா னாலும் - எங்கும் ஒரேயளவாக எல்லாம் ஒன்றுபடுமோ பெற்றவயி றொன்றில்உடன் பிறந்தவரும் - வேறு பிரிகின்றாரே மணத்தின் பின்னர் இடமே. 5 தாயும் பிள்ளையுமானாலும் தன்னலத்திலே - அவர் வாயும் வயிறும் வேறென்று தாம்அறையுமே தேயமதிலுள்ள பற்றுத் தேயுமென்றாலும் - என்றும் தாய்மொழியிலுள்ள பற்றுத்தான் குறையுமோ 6 வலியச் சண்டையிடுதல் வகை கெட்டது - மேலும் வந்த சண்டை விடுவதும் வகை கெட்டது நலியத்தான் வரும் இந்தி நாகரியையே - இந்த நாட்டை விட்டுத் துரத்துதல் நன்மையுற்றதே. 188. இந்தி தேவையின்மை பண் - (பியாகு) தாளம் - முன்னை ப. ஏனிந்த நாட்டிற்கிந்தி? - எதிர்முந்தி! உ.1 மான முடன்தொழில் மருவியே வாழவும் மதிமிகும் அறிவியல் மாணவே கற்கவும் ஏனைய நாட்டொடும் இனிதுற வாடவும் இருந்தமிழ் ஆங்கிலம் இருமொழி யிருக்கவும் (ஏனிந்த) 2 கல்வியே கரையில கற்பவர் நாட்சில மெல்லவே நினைத்திடின் மிடலறும் பிணிபல தெள்ளிதின் ஆய்ந்துபின் தேறுக கலைமொழி தள்ளுக அறிவியல் தகுதியில் வறுமொழி (ஏனிந்த) 189. இந்திக்கும் பெரும்பான்மையின்மை பண் - (காம்போதி) தாளம் - முன்னை ப. பெரும்பான்மை பெறும் பெற்றியோ - பேராய இந்தி து. ப. (முடுக்கு) பெற்றுள ஒற்றுமை அற்றிட உற்றது (பெரும்) பிழையும் இலக்கணம் நிலையும் எனக்கொளி (பெரும்) பெரிதாங் கிலமொடு சிறிதாந் தமிழெனப் (பெரும்) பேசிய நூற்றினில் வாசியும் நாற்பது (பெரும்) பேரறி வியலது தீரவும் இலதொரு (பெரும்) பிரிவுகள் பலவொடு திரிபுகள் மிகுவது (பெரும்) பித்துக் கொளிகளே மெத்தப் பலவட சொற்பிற் புகுத்திய புத்தப் புதுமொழி (பெரும்) உ விரும்பாத நிலையினில் வேற்றுமொழி யாளர்மேல் விரகுநெறிகள் பல விரிவாகக் கையாண்டு இரும்பான மனத்துடன் எத்துணை யெதிர்ப்பையும் எதும்பொருட் படுத்தாமே இறுகும்வகை யீண்டு (பெரும்) 190. தமிழமாணவர்க்கு மும்மொழிக் கல்வி தகாமை பண் - (நாதநாமக்கிரியை) தாளம் - உருவகம் பித்தா பிறைசூடீ என்ற வண்ணத்திற் பாடுக. 1 பாரே யுயர் மேலையவர் பலவாயின் கட்டாயம் சீராயொரே யினமாமொழி செம்மை யுறக்கற்பார் நீரோடு நெய்யிதளே நிகராகத் தமிழ் நாட்டில் சேராத மும்மொழி கற்கவே செய்தல் நலமாமோ? 2 குடும்பின் வழிதொடர்ந்தே குலத்தொழிலாய்ப் பயின்றாலும் வடுவின்றியே கற்கப் பொது வலிமை இருமொழிக்கே நெடுங்கால மாயுயர் கல்வியை நீத்த தமிழ் நாட்டில் திடுமென்று மும்மொழி கற்கவே தெரித்தல் நலமாமோ? 3 பனிமா மழையல்லா நிலை பகல்போல நள்ளிரவும் சுனையே குளித்தெழுந்தாலும் பின் சோரு முடல் புழுங்கக் கனலாய் வருங்கதிரோன் சினங்கடுகுந் தமிழ்நாட்டில் வினையாக மும்மொழி கற்கவே விளைத்தல் நலமாமோ? 4 குறிதாகிய வாழ்நாள் பினுங் குறுகிவரும் நாளில் அறிவாகிய துறையே பல அறிதல் மிக அறிவாம் சிறிதாயினும் இந்திமொழி செல்லாத் தமிழ் நாட்டில் வறிதாக மும்மொழி கற்கவே வகுத்தல் நலமாமோ? 5 கொளவே யிதுவழி நன்றெனக் குறித்தோன் அதைத் தானே உளமாரமுன் வெளியாகவே ஒழுகி வரல் வேண்டும் அளவாயிரு மொழியேஅறி அமைச்சர் தமிழ் நாட்டில் வளமாக மும்மொழி கற்கவே வலித்தல் நலமாமோ? 191. இந்தியெதிர்ப்பிற்குப் பெருமாள் துணை மாதர்பிறைக் கண்ணியானை என்ற மெட்டு 1 சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் - தமிழ் தன்னை வண்ணஞ்செய்ய வருநாள் இன்னும் இந்தி வந்து பொருமேல் - படை என்ன எய்தும் வெல்லும் திருமால். 2 காஞ்சிநகர் வாழ்எல் லாரும் - இன்று கன்னித் தமிழ்காக்க வாரும் காஞ்சி சூடும்கடும் போரும் - வரின் காணும் வெற்றியேபின் பாரும் 192. கல்வி வாயில் (இசைந்த மெட்டிற் பாடுக.) இந்நாட்டு மக்கள் எல்லார்க்கும் - என்றும் இருமொழித் திட்டமே ஏற்கும் முன்னாட்டும் இந்தியே தோற்கும் - அது முழுமடத் தன்மையே போர்க்கும். 2 வாழ்க்கைக்கே கல்வியை ஓதும் - அந்த வகையாருக் குத்தமிழ் போதும் மேற்கல்விக் கேவெளிப் போதும் - அவர் மேற்கொள்ள ஆங்கிலத் தோதும். 3 கல்வி வாயில்இரு மொழியும் - ஆகும் கற்பிக்கவே நல்ல வழியும் தெள்ளுந் தமிழ்வளம் பொழியும் - இங்குத் தேங்கு மடமையும் ஒழியும். 4 செந்தமிழே தமிழ் தேரும் - அதிற் செய்த கலைநூலைச் சேரும் ஏந்து மொழியிலும் பேரும் - சொல்லும் எந்தமி ழாகாது பாரும். 5 மந்திரி மார்தமி ழறியார் - அதன் வரலாற்றி லும்மிக வறியார் இந்தியைப் புகுத்தும் நெறியார் - அவர் என்றும் பதவிகொள் குறியார். 193. பயனில் மொழி கற்கக் காலமின்மை அன்னையும் தந்தையும் தானே என்ற மெட்டு ப. நாம்இந்தி கற்கநாள் ஏது - பல நல்லறி வியற்கேநாள் இல்லாத போது (நாம்) து.g. காமுறு கல்வியிப் போது - பல கரையறு கடல்களாய்ப் பரவும் ஓயாது ஏமுற நாம் நிலமீது - இன்று இருக்கும் நாள் வரவரச் சுருக்கமென்றோது (நாம்) 2 தீந்தமிழ் ஆங்கிலம் தானே - இங்குத் திறமுறக் கற்றிடின் பிறமொழி ஏனே மாந்தரின் மொழித்திறம் இன்றே - நன்று மருவும் சராசரி இருமொழி யென்றே 3 ஏந்தியே இந்தியைத் தாங்கும் - பலர் ஏதும் அதையறியார் என்றசொல் ஓங்கும் வாழ்ந்திட ஒருபொருள் வேண்டும் - எனின் வாங்க எவர்மனமும் தானாகத் தூண்டும். (நாம்) 194. தாய் தன் மகனைக் கடிந்துரைத்தல் போகாதே போகாதே என் கணவா என்ற மெட்டு போடாதே குடவோலை என்மகனே - அந்தப் பொல்லாத இந்திக்கே என்று சொன்னேன் கூடாத பேரோடு கூடி நீயும் - மிகக் கூர்கெட்டுப் போனாய்நான் என்ன செய்வேன். 2 ஆரியத் தாலேநம் செந்தமிழ்க்கே - முன்னே ஆயின கேட்டினுக் களவேயில்லை சீரிய செம்மையால் மீந்திருக்கும் - அந்தச் சிற்றள வும்இந்தி யால்அழியும். 3 இந்தியால் தந்தமிழ் கெடுவதில்லை - என்று இந்நாட்டைக் காட்டிக் கொடுப்பார் சொல்வார் முந்தியே மறைமலை யடிகள் சொன்ன - நல்ல மூதுரை யேதலை மேற்கொள்ளுவாய். 4 பயனில்சொல் பாராட்டு வானை முன்னே - மக்கட் பதரென்று சொன்னாரே வள்ளுவரும் பயனிறைத் தீங்கே தரும் இந்தியை - இன்று பயில்வாரை என்னென்று சொல்லுவதே. 5 நல்ல தமிழ்க்குடி நாம் பிறந்தோம் - முன்னே நாகரிகங் கண்டார் நம்மவரே தெள்ளுந் தமிழ்இன்றி இவ்வுலகில் - நாமே தீண்டா விலங்குக ளாய்விடுவோம். 6 கேளாதே கேளாதே என்மகனே - அந்தக் கேடுசெய் கோடரிக் காம்புகள் சொல் வாளாலே நம்தமிழ் மானத்தையே - காத்து வாழுவம் வள்ளுவன் சொன்ன வழி. 195. சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு பண் (நாதநாமக்கிரியை) தாளம் - முன்னை ப. தீக்குளித்தே யிறந்தான் - சின்னச்சாமி தீக்குளித்தே யிறந்தான் - திடுக்கிடத் து.g. தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்) உ.1 ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் (தீக்) 2 நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும் நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத் (தீக்) 3 வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனை விருவிருத் தேறினும் வீறுகொண் டேறென எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத் (தீக்) 4 பைந்தமிழை முன்காட்டிப் பகைவ ரிடங்கொடுத்துப் பணங்கொழுக் குந்தலைமைப் பண்பற்றபே ராசான்மார் ஐந்தாம் வகுப்பே கற்றோன் அடைந்தபண் பாடுமின்றி அஃறிணை யாயிருத்தல் அறிவாரெல் லாருந்தான் பார் (தீக்) 5 எருமைபோல் உணர்வின்றி என்றும்கீழ் அடிமையாய் இருந்தேகும் தமிழாநீ இனியேனும் மடந்தீரப் பெருமைபேர் எழுதிக்கல் பெருஞ்சின்னச் சாமிக்குப் பிறைமாடக் கோயிற்கண் பெயராது நடவாராய் (தீக்) 196. தீக்குளித்த சின்னச்சாமி (சின்னாண்டான்) புலம்பல் ஆசையும் என் நேசமும் என்ற மெட்டு கொளு தீயினுந் தீயது தென்னிந்தி யாட்சியப்பா. தாயையுங் கொல்வது தன்னல மாட்சியப்பா. ப. மானமும் தன் மானமும் - கெட்டு வாழ்வதினும் மாளுவதே மேலானதாம் செந்- தேனெனும் தென் தீந்தமிழ் - கெட்டுத் தீருவதைக் கேள்வியுறல் ஏலாததாம். உ. மண்தோன்றாக் காலத்திலே மாண்குமரி நாட்டினிலே மதிநுதற் கண்ணார் மாண்பாய் வளர்த்த தமிழ் வடமொழியால் தளர்ந்த பின்னே மறைமலையாலே வளங்கொண்டும் மேலே மாய்வதுவோ (மானமும்) 197. இந்தியொழிப்பு வந்தேமாதரம் என்னுங்க என்ற மெட்டு ப. இன்னே இந்தியொழி யுங்கள் - இனிமேல் இங்கே இன்றமிழே வாழவை யுங்கள். து. ப. முன்னே மறைமலைகள் முனைந்து தடுத்தும் இந்தி வெந்நோய் எனவே நாட்டில் விரைந்து பரவும் முந்தி (இன்னே) உ. என்னேனும் தீங்கு வரினே - முன்னமேயதை ஏற்றவகை தீர்த்திட வேண்டும். பின்னே தடுப்பம் எனினே - நம் வாழ்விழந்து பேருமற்றுப் போக நேருமே சின்னாளின் பின்னிந்தியைச் சிறிதும் எதிர்ப்பவர்க்கும் எந்நாளும் கடுஞ்சிறை இயலும் கொலைத் தண்டமும் (இன்னே) 198. கம்ப துளசிதாசர் ஏற்றத்தாழ்வு மீவல்ல குணதோஷ மேமி என்ற மெட்டு வகை பண் - (காப்பி) தாளம் - மூவொற்று ப. துளசி தாசுங் கம்பனாமோ -துறைபோமோ து. ப. விளை சீரில்லா இந்தி விழுமுந் தமிழாமோ (துளசி) உ. 1 வண்ணந்தொண் ணூற்றாறு வளரும்வண் ணனைவேறு விண்ணுங்கொள் ளுமாறு விளங்குங்கம் பன்வீறு (துளசி) 2 பத்தாயிரம் மேலும் பற்றாருந் தாம்மேவும் மெத்த வான்மீகியை மெத்துங் கம்பன்பாவும் (துளசி) 3 சுடரோன் வெங்கதிராலே சொலிக்குந் தண்மதிபோலத் தொடர்புங் கம்பன் பாங்கே துளசிதாசன் போங்கும் (துளசி) 4 இராமகதை மூலம் இந்திபுகுத் தெண்ணம் இராமல் எந்தக்காலும் இருக்க நல்லவண்ணம். (துளசி) 199. தமிழ்கெடவரும் வளர்ச்சித்திட்டம் பயனற்றது தோடுடைய செவியன் என்ற மெட்டு பண் - நாட்டை தாளம் - முன்னை 1 வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளி யிளந்தெங்கின் பாளைமிசை வாளின்மிளிர் பண்ணை நீர்ப் பாசனங் கண்டாலும் காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத் தமிழ்நைய நாளைவட இந்தியொடு நாகரி நலியின் ஒருநன்றோ. 2 இரும்பும் இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்பு நிலக்கரியும் பரும்பெனக் குவிந்து தொழிற்சாலைகள் பலவும் எழுந்தாலும் விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்த தமிழ்நைய உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறு செயின்நன்றோ. 3 கீழ்கரை நின்றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை மேல்கரை நேர்சேர விணையாகிப்பின் மின்னோட்டம் வந்தாலும் சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின் ஒருநன்றோ 4 பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டி தொட்டியெல்லாம் நள்ளியெதுங் கட்டணமேயின்றி நல்கூர்ந்தாருங் கற்றாலும் வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்த தமிழ்நைய கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ. 5 முதியோரெலாம் இளமைவர மூப்புச் சம்பளமும் பெற்று வாழ்ந்து பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள் பெற்றாலும் மதிசூடி முன்மதுரை யமர்மன்றஞ் சேர்ந்தாய்ந்த தமிழ்நைய புதிதாய்வரும் இந்தியோடு நாகரி புகுமேல் ஒருநன்றோ. 6 நண்ணும் நடுப்பகல் மாணவர் நாட்டுள்ள பள்ளி களிலெல்லாம் உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியே வந்தாலும் பெண்ணையிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்த தமிழ்நைய எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல் செயின்நன்றோ. 7 புத்தாடை பல புத்தகங்கள் பூத்துகிற் பொக்கணத்தி லிட்டுத் தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற் றந்தாலும் பித்தன்எனும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்த தமிழ்நைய எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின் ஒருநன்றோ. 8 ஊர்தோறும் பல் உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே வாங்கும் நேர்மைவிலைக் கடைகள்பல அண்மையில் நிலையா யிருந்தாலும் நீர்மேவிய சடையன்முனம் நீடியே ஆழ்ந்த தமிழ்நைய நீர்மையிலா இந்தியொடு நாகரி நெருங்கி வரின்நன்றோ. 9 கற்றோருடன் மற்றோரெலாங் கண்ணிய பணியாற் பெரு வருவாய் வற்றாநல வாழ்விற்பெறும் இன்பமே வழி வழியுற்றாலும் பொற்றாமரைக் குளமேற் சிவப் புங்கவன் ஆய்ந்த தமிழ்நைய முற்றாவியல் இந்தியொடு நாகரி முடுகி வரின்நன்றோ. 10 பலகலைதேர் கழகமெனப் பைந்தமிழ் நாட்டிலுள வெல்லாம் மலைபோற் குவிநல்கை மகிழ்கூரவே மதிதோறு முற்றாலும் கலகலென வொலிக்குங் கழற் கண்ணுளன் ஆய்ந்த தமிழ் நையக் கலகம்விளை இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ. 200. இந்தியார் ஏய்ப்பு தேரத்திலே தில்கு சத்தா என்ற மெட்டு 1 இந்தியார்க்கும் சீனருக்கும் என்ன வேற்றுமை இந்தியாரும் தம்மொழியால் எம்மைத் தாக்கினார். 2 விருப்பமின்றி இந்தியையாம் புகுத்தோம் என்றனர் பொருத்தமின்றி மேன்மேல்அதைப் புகுத்தி நின்றனர் (இந்தி) 3 எள்ளளவும் தகுதியில்லா இந்தி மொழியை எள்ளிநகை யாடச்செய்தார் இந்த வழியே (இந்தி) 4 நட்பெனவே நடித்துக் கொண்டு நாணமில்லாமல் உட்பகையைப் பிடித்தெமக்கே ஊறு செய்கின்றார் (இந்தி) 5 மாட்சிமிகும் ஆங்கி லத்தை மாற்றுவதினால் ஆட்சி செயத் தகுதியின்மை காட்டுகின்றனர் (இந்தி) 6 ஆங்கிலரே நீங்கினபின் அவரிடத்திலே ஆளுகின்ற மாந்தரென அமரவுற்றாரே (இந்தி) 7 ஏமாளிகள் தமிழரென எண்ணி விட்டாரே இறுதியிலே கவுரவர்தாம் எனவே கெட்டாரே (இந்தி) 201. இந்தியாசிரியருக்கு அறிவுரை காமசுந்தராங்கி உனது என்ற மெட்டு பண் - (தன்னியாசி) தாளம் - ஈரொற்று ப. இந்தியா சிரியருக் கொன்று இயம்புவேன் அன்பாக இன்று து.g. முந்தி அவரே அறிவர் நன்று மூலத்தமிழ் இந்தியை யொர் காலத்திலுங் கொள்ளாதென (இந்தி) உ இன்றிருந்து நற்றமிழைக் கற்க எதிர்காலத்தில் தமிழைக் கற்பிக்க அன்றி வட நாடனைந்து நிற்க அருமைத் தமிழறிவங்குள பெருமக்களின் உளம் நன்குற (இந்தி) 202. தமிழ்க்காப்புப் படை வந்தேன் வரம் பெறவே நானே என்ற மெட்டு 1 இந்தியை எதிர்த்துவந்தோம் நீண்டும் எத்தியே புகுத்துகின்றார் மீண்டும் செந்தமிழைக் காக்கும்படை வேண்டும் செம்மையுடன் நின்றுபொர யாண்டும் 2 செந்தமிழ்த்தென் நாட்டிற்கிந்தி ஏனோ சென்றநா ளெதிர்ப்பெலாம் வீண்தானோ இந்தியாளன் எம்மனோர்க்குங் கோனோ இந்த வாழ்வும் இன்பம்நீடு வானோ. 3 ஆரியம் தமிழ்இடை சொற்போரே ஆண்டுகள் மூவாயிரம்என் பாரே சீரிய தலைபோங் காலம் நேரே செந்தமிழ்க்கும் வந்ததுதீர்ப் பீரே. 4 நூற்றில் எண்பதின்மர் கல்வி யில்லார் நாட்டின் வரலாறறிய கில்லார் வேற்றுமை யில்லாதவாறே எல்லார் வீட்டிலும் புகுந்துசொல்க வல்லார். 5 தமிழ் அரத்தம் ஓடுவார்எல் லாரும் தண்டிலே முன்னாகவந்து சேரும் இமிழ்திரைக் கடல்கடந்து நேரும் எங்குமே தமிழ்முழக்கி ஆரும் 203. தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல் கழுகுமலை குருவிகுளம் என்ற மெட்டு வகை ப. இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி) உ.1 என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி) 2 அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி) 3 அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி) 4 வரவரவே வாழுநாள் வரம்புகுன்றி வருகையில் அறிவியற்கே நிறைவிலா அரியகாலம் பயனறவே (இந்தி) 5 ஆரியத்தால் செந்தமிழ் அடைந்ததுபல் கேடுகள் சீரியநல் எச்சமும் சிதையும்வகை மதியிலாது (இந்தி) 6 இந்தி யில்லாப் பள்ளியே இந்தநாட்டில் இல்லையேல் அந்த நாள் வரும்வரை அகத்திருந்தே கற்றிடுவேன் (இந்தி) 7 மானமும்தன் மானமும் மருவுதமிழ் மாணவர் தானையிலே சேர்ந்துநான் தண்டமிழைக் காத்திடுவேன் (இந்தி) 204. இந்திப்போருக் கழைப்பு (இசைந்த மெட்டிற் பாடுக) 1 தண்டமிழ்த்தாய் தன்னைக் காக்க வா வா வா தமிழனென்று தன்னைச் சொல்வோன் வா வா வா தண்டெடுத்து மண்டு போர்க்கு வா வா வா தன்னலமில் லாமல் இன்னே வா வா வா 2 ஆண்மை யென்னும் பான்மை யுள்ளோன் வா வா வா ஐயீ ராட்டைப் பையனேனும் வா வா வா நாண்மை யுள்ள தாயே இன்று வா வா வா நன்மகற்கு வன்மை யூட்ட வா வா வா 3 மான முள்ள ஆசிரியன் வா வா வா மறமிகுந்த மாண வன்நீ வா வா வா ஏன மேந்தி இரக்கின் றோனும் வா வா வா இந்தியைத் துரத்த இன்றே வா வா வா கலித்துறை கலையி ழந்தனம் கழகநூ லிழந்தனம் கடமா மலையி ழந்தனம் மானமி ழந்தனம் செல்வ நிலையி ழந்தனம் நீணில மிழந்தனம் இனியே தலையி ழக்கினும் தமிழையி ழக்கிலம் தகவே. 205. மாணவரே தமிழ் காக்கும் மறவர் பரமண்டலங்களில் வசிக்கும் எங்கள் என்ற மெட்டு 1 மாணவரே தமிழ் மறவர் படை மற்றோர் யாவரும் மறந்தக்கடை காணவே வெற்றி கரந்தையிடை கைதர இந்திக்குக் கடுகிவிடை (மாண) 2 கல்லூ ரியிற்பயில் மாணவரே கட்சித் தளைகளைக் களைவீரே நல்லதும் பொல்லதும் நாடுவீரே நற்றமிழ் மக்கள் எனநீரே (மாண) 3 ஆங்கிலம் நல்ல அறிவுக்கண் அதனால் ஆகும் ஆண்தறுகண் ஈங்குள இந்தி தான்இடுக்கண் இதனின் நீங்கும் இந்நிலைக் கண் (மாண) 206. தமிழ்த்தொண்டர் படையெழுச்சி தயார் தயார் என்ற மெட்டு ப. புறப்படு - போருக்குப் புறப்படு. து.g. பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப் (புறப்படு) உ.1 மாணவர் தாம் ஆசிரிய ரோடு சேரல் மூலமே மன்னுந் தமிழ் நாட்டிற் கின்று மருவும் நல்ல காலமே படையெடு வீறு நடைதொடு பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப் (புறப்படு) இந்தி யிந்த நாட்டிற்குள்ளே எங்ஙன் காலை வைத்தது இந்திக் கல்வி வகுப்பிற்குள்ளே என்றுங் காலை வைத்திடேல் நீக்கிடின் பின்னர் ஆக்கமாம் பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கக் (புறப்படு) 3 அறிவியல்கள் ஆய்ந்து நல்ல அரிய பொறிகள் ஆக்கவும் அருமைத் தமிழுக் கெந்த வகையும் அழிவிலாது காக்கவும் ஆங்கிலம் துறை போங்கலம் பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப் (புறப்படு) 207. தமிழ்த்தொண்டர் படைச் செலவு ராசன் வந்தனம் என்ற மெட்டு 1 படையெடுக்கவே கடு நடை தொடுக்கவே பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத் தமிழ் மறவரே பாரெலாம் ஊரெலாம் பண்டை முத்தமிழ் பரப்புவோம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் 2 பரவை தன்னடி தொழப் பணித்த பாண்டியன் பாங்கிலே வளர்ந்து பண்பில் ஓங்கு பாண்டி மறவரே பரண்மனை அரண்மனை பைந்தமிழையே பரப்புவோம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் தூங்கெயில் கொண்ட தொடித்தோள் நற்செம்பியன் தோன்றி வந்த குடியின் மானம் ஈண்டு சோழ மறவரே தொழிலகம் பொழிலகம் தூய தமிழைப் பரப்புவோம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் 4 தென் குமரிமேல் வடபனி மலைவரை சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே தெருவிலும் மருவிலும் தீந்தமிழ் தனைப் பரப்புவோம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் 5 வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய் வீறு கொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும் வெல்லுவோம் செல்லு வோம் வெண்ணிலவையுங் கொள்ளுவோம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் இடம் வலம் 208. இந்திப் போருக்கு ஏவல் (இசைந்த மெட்டிற் பாடுக.) 1 செந்த மிழ்நி லம்பு குந்து சிந்து கின்ற இந்தியை இந்த நாள்நெ ருங்கிமுந்தி இங்கு நின்றும் உந்துவீர் கொந்த ழல்வி ரிந்த குண்டெ னுந்த டைகள் வந்திடின் கந்து போலொ ருங்கு நின்று கன்றி யேவி லங்குவீர் 2 சட்ட மன்றத் தேர்தல் நேரும் சமையம் நாட்டி லெங்கணும் பட்டி தொட்டி பாடி குப்பம் பட்டி னங்கள் நகரெலாம் சுற்றி வந்து சந்து பொந்து சிற்றில் மாளி கைகளும் உற்ற வர்நம் செந்த மிழ்க்கே ஓலை போடச் செய்குவீர் 3 மண்ட லம்வ ளைந்து சென்று மண்டு கின்ற தொண்டரின் தண்டு கள்நி ரம்ப வெங்கும் தண்ட மிழ்மு ழங்குவீர் வெண்ட யங்கள் கிண்கி ணென்று விம்ம வென்றி கண்டிடும் எண்டி சைக ளும்பு கழ்ந்தி டுங்க லங்கள் கொண்டிடும். 209. தமிழுக்கு நற்காலக் குறி எந்தன் இடது தோளும் என்ற மெட்டு ப. நல்ல காலந்தமிழை நண்ணி வருவதென நான் செவியுற்றேன் நல்ல சொல் சொல் சொல் இன்றே து.g. பல்லவ புரங்கண்ட பாக்கத்து விரிச்சியும் பாங்காயொத் திசைத்தது சில் சில் சில் என்றே (நல்ல) உ.1 நள்ளிர விலேசென்று தில்லை யம்பலத்திலே நானிருந்தேன் நெஞ்சமும் நள் நள் நள் என்றே தெள்ளிய ஒலியொன்று தேனூறத் திணிந்ததே தென்றமிழ் உலகெலாம் தெள் தெள் தெள் என்றே (நல்ல) 2 வைகறையி லேயொரு மெய்யெனக் கனவினில் வந்தனள் தமிழ்மகள் வெல் வெல் வெல் என்றே வல்லியர் சூழ நின்றோர் வாயில்லா மகளையே வரைந்தனர் அணைநின்று செல் செல் செல் என்றே (நல்ல) 210. தமிழ் வெற்றிமுரசு ரத்ன மகுட ரஞ்சித பூசணி என்ற மெட்டு 1 வள்ளுவன் யானைமே லேறி வலம் வந்து வார்முரசம் இடிபோல முழங்கவே அறை அறை அறை தெள்ளுந் தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித் தீர்ந்தது சிறையென் றறை அறை (வள்ளு) 2 நாட்டிலுள் ளதிருக் கோயில்களி லெல்லாம் நல்ல தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை கூட்டுறவாய் ஒன்றுகூடி யெல்லாருமே கும்பிட வாருமென் றறை அறை (வள்ளு) 3 மண்ணுல கெங்கணும் மன்னரொடு கூடி மாட்சிமை யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை உண்மையான வரலாறே யெந்நாட்டிலும் ஓங்கி வளர்கென அறை அறை (வள்ளு) 211. தமிழன் நற்காலத் தொடக்கம் பண் - புன்னாகவராளி தாளம் - முன்னை ப. ஆடுபாம்பே எழுந்தாடு பாம்பே - இனி அழியாது தமிழென்றே ஆடுபாம்பே. உ.1 ஆரியத்தி னாலடைந்த தாழ்வு நீங்கித் - தமிழ் அரியணை யுற்ற தென்றே ஆடு பாம்பே சீரியநற் செந்தமிழைப் பேசுபவரே - நல்ல சிறப்பை யடைவரென்றே ஆடு பாம்பே (ஆடு) 2 ஆங்கி லத்திலுள்ள பல அவியல்கள் - இன்று ஆகின்றன தமிழிலென் றாடு பாம்பே ஈங் குளவருமே இனிச்சிறு காலத்தில் - பல இறும்பூது கண்டிடுவர் ஆடு பாம்பே (ஆடு) 3 நச்சுப் பகைமை யெல்லாம் நைந்தொழிந்து - தமிழ் நாடொருமை நண்ணுமென்றே ஆடு பாம்பே அச்சத்தை அடியோடும் அகற்றி விட்டுத் - தமிழ் ஆசிரியர் வாழுவரென் றாடு பாம்பே (ஆடு) 212. தமிழ்க் கொடி கொடி பறக்குது கொடி பறக்குது என்ற மெட்டு ப. கயற்கொடியிது கயற்கொடியிது கயற்கொடியிது தானடா கயற்கணியொடு கணவன்மகனுங் கைக்கொண்டகொடி காணடா அ. கீழைத்தீவுக் கணத்தைவென்று கிளருந்தமிழிற் பெயரிட்டுச் சாலித்தீவிற் கடலின்அலைகள் சாலவடிம்பை யலம்பவே தாளைப்பொறித்துக் கரையிலிட்டுத் தழைக்கும் வணிகத் தூதினால் மேலையவனர் தொடர்புகொண்டு மிகுந்த பாண்டிக் கொடியடா. ப. புலிக்கொடியிது புலிக்கொடியிது புலிக்கொடியிது தானடா பொன்மலையடி வாழ்கோமான்கள் புடைபெயர் கொடி காணடா. உ. தொங்கும் எயில்கள் மூன்றெறிந்து தோற்ற வடவர் மண்டபம் தங்குபந்தர் வாயிலோடு தரவே கொண்டு சிறைஞராய் இங்குவந்த ஈழவர்கள் இலங்கு பொன்னிக் கரையிடக் கங்கைகொண்ட சோழன் வெற்றி கண்ட வேங்கைக் கொடியடா. ப. விற்கொடியிது விற்கொடியிது விற்கொடியிது தானடா விளம்புவான வரம்பன் கொண்ட வெல்கொடியிது காணடா உ. குமரியிருந்து பனிமிகுந்த கோடுவரையும் ஒருமொழி தமிழிலாண்டு பாரதத்தும் தகுந்தசோறு வழங்கியே திமிரரான கனகவிசயர் திணிந்ததோளிற் கல்லையே சுமைகொணர்ந்து சிறுமைகாணச் சொன்னசேரன் கொடியடா. 213. தமிழ் மீண்டும் தலைமை பெறல் கதர்க்கப்பல் கொடி தோணுதே என்ற மெட்டு பண் - (நாதநாமக்கிரியை) தாளம் - (முன்னை) ப. பைந்தமிழ்த் தேவி பார் அதோ பன்மொழிக் கழகத்தே பொன்மணி யரியணை (பைந்) உ. பறவையுந் தோன்றுமுன்பு பலவெனும் ஊழிநின்ற பஃறுளிநாடு பின்பு பழையகற் காலங்கண்ட மொழியாகிப் பல்கலையாம் வழிபோகிப் பாண்டியன் வளர்த்த கன்னிப் (பைந்) 214. தமிழன் கண்ட கனா பண் - (மோகனம்) தாளம் - முன்னை ப. காணாத கனவொன்று கண்டேன் - களிகொண்டேன் து.g. வீணாக இரவெல்லாம் விழித்திருந்த என் கண்ணே தேனாருந் துயிலொன்று திளைத்த விடியற் கண்ணே (காணாத) உ. மேலைத் திசையிற்பல மெல்லியலார் இறந்த மேனியொன்றைத் தாயென்று பேணி விரையிற் கொண்டார் கீழைத் திசையினின்று கிளர்ந்தொரு கிழத்தியே கிளந்த வுறவால் அவள் கேடில்தாயென்று கண்டார் (காணாத) 215. தமிழன் தன் தவறுகண் டிரங்கல் என் உயர் தவப்பயன் அம்மையே அப்பா என்ற மெட்டு பண் - (அடாணா) தாளம் - முன்னை தென்மொழி உலகினில் முன்மொழி யன்றோ திசையுறு கொடுந்தமி ழான திரவிடத் தாய்மொழி செந்தமி ழன்றோ தேவரின் ஆரிய மொழிக்கும் தெள்ளிய மூலமே தீந்தமி ழன்றோ திருத்தனி மொழிதமிழ் என்றே தேற்றினர் மறைமலை யடிகளா ரன்றோ தமிழைமுன் தாழ்வெனக் கருதித் தமிழென்று சொல்லவுந் தயங்கினேன் நாணித் தாயைத் தள்ளினேன் அருந்தமிழ்த் தாயைத் தள்ளினேன். 216. தமிழைக் காக்கும் வழிகள் தெண்டனிட்டேன் அடியேன் என்ற மெட்டு பண் - தோடி தாளம் - முன்னை ப. வகுத்துரைப்பேன் வழிகள் து.g. இரு - வகைபடு தமிழ்உயர் தகையொடு நிலைபெற (வகுத்) உ.1 தகவுற முதல்தமிழ் அகம்தமிழ் நாடெனத் தாங்குக பெயர்அதில் ஓங்கியமொழி தன்னால் மிகவுற மொழிகலை தொகுதமிழ்ப் பண்பாடு மேனாளின் மாட்சிபெறத் தானே தன்னாட்சி பின்னால் (வகுத்) 2 உலக வழக்குமொழி கலவை நடையொழிய உடன்இறை வழிபாடும் உறுக தமிழ் வழிய இலகுநூல் வழக்கெலாம் இன்றமிழ்ச்சொல் மொழிய இயங்கு தமிழ்மக்களும் எங்குந்தமிழ் பொழிய (வகுத்) 3 வருங்காலத் தமிழகம் வரகல்வி யமைச்சராய் மறைமலை யடிவழி நிறைதமி ழாசிரியர் ஒருங்குறத் தமிழகம் உறும்பல இடங்களும் உயர்தனித் தமிழ்ப்பெயர் உறைபழ மாசிரியர் (வகுத்) 217. தமிழக மொழியியல் தன்னாட்சி நனு பாலிம்ப என்ற மெட்டு பண் - மோகனம் தாளம் - முன்னை ப. மு(ன்)னமே வேண்டும் மொழியியல் தன்னாட்சி மூவேந்தர் நாடே. து.g. தனிமொழித் தமிழ்தான் தலைமை பெறாவிடின் தமிழனும் விடுதலை தனையடைந் ததேயிலை (முனமே) உ. கடல்புகு குமரிக் கண்டமதில் எழுந்த கன்னித் தமிழ்மரபு காத்து வளர்ந்துவர வடமொழித் தலைமை வள்ளிதாய் நீங்க வம்பமொழி யிந்தி வந்தவழிச் செல (முனமே) 218. தமிழனே தமிழைக் காத்தல் தினமணி வம்ச என்ற மெட்டு பண் - அரிகாம்போதி தாளம் - முன்னை ப. தமிழினைப் பேணத் தமிழனே வேண்டும் தாழ்வற மீண்டும் து.g. அமிழ்தினைக் காத்திட அமைவது பூனையோ அமருங் கிடைக்காவல் அடவி நரியோ (தமிழினை) உ. துறைதொறும் ஆரியம் துடைத்தற நீக்கி இறைமையா யிருந்தே ஏனையர் ஏமுற மறைமலை யடிகளின் மலரடி பின்பற்றி நிறைபுல நக்கீரன் நெஞ்சுரங் கொண்டு (தமிழினை) 219. மொழிபெயர்ப்பு முறை சாம்பசதா சிவா என்ற மெட்டு 1 தூய தமிழ்மொழி தூய தமிழ்மொழி தூய மொழியெனத் தொன்றுதொட் டொன்றே. 2 பிறமொழி தமிழிற் பெயர்ப்பவர் தம்முளம் நெறிமுறை பலவும் நிறுவுதல் வேண்டும் (தூய) 3 பொதுவகை யான பிறசொல் லெல்லாம் புதுநிலை தமிழிற் புனைசொல் லாகும் (தூய) 4 வலுத்1தியல் மொழியில் வருமியற் பெயரே எழுத்தொடு புணர்ந்த இயற்றமிழ்ச் சொல்லாம் (தூய) 5 ஆங்கிலந் தமிழே அன்பொடு மொழிநூல் அறிசொல் வல்லார் அமருக முதலே (தூய) 6 இயற்பொருள் ஆகு பொருள்அணி ஆட்சி வினைப்பொருள் தொகுசொல் எனப்பொருள் ஆறாம் (தூய) 7 அவ்வத் துறையின் அறிஞரைக் கலந்தே அதுபொருள் முறையில் ஆக்குக கலைச்சொல் (தூய) 8 இம்முறை தழுவின் எத்துறைச் சொல்லும் இன்றமிழ் மென்மெல இனிதாய் ஒல்லும். (தூய) 1. வலுத்து - வலுவுகொண்டு, வலித்து 220. தமிழத் தமிழ்ப் புலவர் மாநாடே இந்திபற்றி முடிவு செய்யத் தக்கது மயங்குகிறாள் ஒரு மாது என்ற மெட்டு ப. தயங்குவதேன் தமிழ்நாடு - நல்ல தமிழுக்கும் இந்திக்கும் இடையிலே நீடு து.g. தமிழ்ப் புலவர்மா நாடே இந்திவந்தால் நன்றோ அன்றோ எனநாடும் (தயங்கு) உ.1 நீடிய தமிழ்இங்கு நிலையில்லையா நெறியில்லையா பகுத்தறி வில்லையா நாடெலாம் எதிர்ப்புகண் படவில்லையா இந்தி யாலே ஒன்றாய் இன்றே இந்தி யாவே நன்றாம் என்றால் பொருளுண்டோ (தயங்கு) 2 நெருப்பையே நெய்யினால் அணைப்பதுண்டோ நீரினால் நெருப்பையும் வளர்ப்பதுண்டோ பொறுப்பிலாத் தன்னலப் புலிகளேதாம் இந்தி யாலே ஒன்றாய் இன்றே இந்தியாவே நன்றாம் என்றால் பொருளுண்டோ (தயங்கு) 221. தனித்தமிழ் கற்றல் மணற் பாறை மாடு கட்டி என்ற மெட்டு 1 மறைமலையார் அடிகள்வழி மறத்தமிழப் புலவரிடம் முறையாகப் பாடங்கேட்டுச் செல்லமுத்து - நீ முயன்றுபயில் தனித்தமிழைச் செல்லமுத்து. 2 நெடுங்கணக்கு முதலாக நேரான வொலிகளுடன் கொடுந்தமிழுங் கலவாமல் செல்லமுத்து - பயில் குமரிநிலத் திருந்தபடி செல்லமுத்து. 3 உரைநடையில் மறைமலையார் உயர்கா.சு. வுடன்மகிழ்நன் வரைநூல்கள் வாங்கிப்படி செல்லமுத்து - அவை வழக்கில்வரப் பழக்கம்பண்ணு செல்லமுத்து. 4 செய்யுளிலே மேற்கணக்கும் சிலம்புதிருக் கோவையுடன் பொய்யாத குறளும்படி செல்லமுத்து - அறம் பொருந்தியநா லடியும்படி செல்லமுத்து. 5 இலக்கணத்திற் காரிகையும் இலங்கியதொல் காப்பியமும் விளக்கமாகப் பயின்றுதெளி செல்லமுத்து - மிக விலக்கிவட கூறுகளைச் செல்லமுத்து. 222. தமிழ்ப் புலவரை இருவகையராய்ப் பிரித்தறிக! (இசைந்த மெட்டிற் பாடுக) 1 மறைமலை யடிகள் வழியர் வேறு வையா புரியார் வழியர் வேறு பிறைநிலைத் தமிழே பெரிதாமாறு பேணும் புலவரைப் பிரித்திவ் வாறு. 2 திருவைக் காக்கத் திருடர் துணையோ தெவ்வரைத் தன்னொடு சேர்த்தல் வினையோ குரவர் சொல்லெலாம் கொள்படிப் பினையோ குறிப்பது செய்யக் கொடுவினை தனையோ. 3 வடமொழி யிந்தி மனங்கொள் தகையர் வண்டமிழ்க் கென்றும் வன்பெரும் பகையர் இடமுற இரண்டும் ஏற்றிடும் வகையர் எலியோடு பூனை ஏந்திய நகையர். 4 பகையாம் இருவர் பாங்கினும் ஒருவர் பண்பாய் நட்பென யாங்கனம் வருவர் வகையாய் வாழ வழியவர் தெரிவர் வாய்மையில் ஐயுற வேயிடந் தருவர். 5 தன்னலத் தாரைத் தழுவல் தீது தாயையுங் கொல்வர் தாம்தயங் காது மன்னலம் மானம் மதியவர்க் கேது மதிக்கும் பதவி வந்துறும் போது. 223. தமிழொன்றே தருக்கத்திற்கிடமான பாடமாதல் பண் - காப்பி தாளம் - முன்னை 1 தமிழகக் கல்விப் பாடப்பொருள்கள் தவப்பல விருந்தாலும் தமிழொன்றேதான் அடிமுதல் முடியும் தருக்கத்திற்கிடமாம் இமிழ்கடலுலகில் இந்நிலைமைவே றெந்நாட்டிற் சாலும் இலகும் உண்மை மறையின் அடிமைக் கேதுவாம் மடமாம். 2 தன்னாட்டினமும் தன்னியல் மொழியும் தாழ்வாம் இந்நாளும் மன்னாட்டினமும் மாய்ந்துள மொழியும் வாழ்வாம் எந்நாளும் இந்நாள் இதனின் விலகும் வழியும் என்னென்றே கேளும் இனிதாம் மறைமலை யடிகள் தமிழே என்றுங் கையாளும். 224. மொழிவழி நாடு பாலும் பழமும் கைகளி லேந்தி என்ற மெட்டு ப. முன்னும் உலகில் மொழிவழி நாடு மொழியும் இனமும் ஒருவழிப் பாடு சென்னை யெனுந்துறைத் தலைநக ரோடு சிறந்தே ஓங்கும் செந்தமிழ் நாடு. து. ப. நகரின் பெயரால் நாட்டொரு கூறே நடையில் முரண்தமிழ் நாட்டின் பேரே பகரும் மொழியால் பகுத்துள வாறே பரவு தமிழ்நா டென்பது சீரே. (முன்னும்) 224. தமிழுக்குக் கலைக்கல்லூரி யின்மை பாலிருக்கும் பழமிருக்கும் என்ற மெட்டு ப. தமிழகத்திற் கலைக்கல்லூரி தமிழ்க்கிருக்காது தனித்தமிழ்க் கல்லூரியிலே கலையிருக்காது து.g. தமிழுக்கென்றே கலைக்கல்லூரி வகுப்பிருந்தாலும் கலைச்சொற்களிற் பலவும் நோக்கின் தமிழிருக்காது உ. ஆளுகின்ற கட்சிக்கிதில் அக்கறை யில்லை ஆசிரியர்க்கும் தமிழில் ஆற்றலே யில்லை வேலைதரும் சொல்லைநிறை வேற்றவும் இல்லை விரும்பித்தமிழ் கற்பதற்கும் உதவியும் இல்லை (தமிழக) 226. தமிழ்வாயிற் கல்வி பயன்படாமை பாடிப்பாடி உன் பாதத்தைக் காணேனே என்ற மெட்டு ப. பைந்தமிழிற் பயின்றாலோர் பயனில்லையே - மிகப் பாடுபட்டுந் தொல்லையே - தமிழா! உ.1 பற்றினாற் பயிலவும் படிப்புதவி யில்லை பட்டம் பெற்றாலும் பின் பதவியில்லை (பைந்) 2 ஏனைக் கல்லூரியெலாம் இருப்பதொன்றாங்கிலம் இரண்டொன்றில் வகுப்பேநம் இன்றமிழ்க்காம். (பைந்) 3 தமிழ்வாயில் கல்லூரிகள் தாமெல்லாம் தாங்கும் வரை அமைவுறும் கலைவாயில் ஆங்கிலமே. (பைந்) 227. சட்டத்தைத் திருத்துதல் பண் - சிந்துபைரவி தாளம் - இணையொற்று 1 சட்டமிருப்பது மக்களுக் கென்றே மக்க ளிருப்பது சட்டத்திற் கன்றே சட்டையைத் தைப்பது சடலத்திற் கன்றோ சடலத்தைச் சட்டைக்குத் தகவைத்தல் நன்றோ. 2 உண்மை நடுநிலை அன்பிவை மட்டும் உள்ளவை யேஉண்மை யானநற் சட்டம் வன்மை நடுநிலை யின்மைபொய் முற்றும் வந்தவை கொள்ளைக்கே வலைவீசும் திட்டம். 3 செந்தமிழ் வடவர்தாம் தெரிந்திலர் சற்றும் சென்றவ ருந்தமிழ் கண்டிலர் கற்றும் இந்தியோ டாங்கிலம் எண்சமம் உற்றும் இந்தியார் தலைமையால் இட்டதே சட்டம். 4 வழுவாத மாந்தரே மாநிலத் துண்டோ வழுவைத் திருத்தலே வாகான தொன்றே பழுதான சட்டத்தைப் பாதுகாப் பின்றே பழுதையை வெள்ளத்திற் பற்றுதல் அன்றோ. 5 பன்னாடு கொண்டது பாரும்இத் தேயம் படியாத மாபெரும் பான்மையர் தாயம் எந்நாளும் ஆளவே எண்ணும்பே ராயம் இறைவனென் றொருவனும் இருப்பதை ஆயும். 228. தமிழர் மாகழகம் செய செய பாரததேவீ கண் பாராய் என்ற மெட்டு ப. உண்மைத்தமிழர் இன்றே ஒன்றாகச் சேரும் ஓங்கும் தமிழ்க் கழக உறுப்பாயெல்லாரும். உ.1 வண்மெய்த் தமிழ்அழிய வரும்இந்தி பாரும் வாளா இருப்பின்அது வாளாகித் தீரும். (உண்மை) 2 தொன்மை முன்மை வளமை தூய்மையே தாய்மைத் தன்மைத் தமிழ்உலகில் தலையாகும் வாய்மை. (உண்மை) 3 அடிமைத் தனத்தை முழு விடுதலை யெனவே அகமகிழ்ந் திருப்பதோர் அறியாமைக் கனவே. (உண்மை) 229. முழுத் தாய்மொழியன்பரே மொழிப்புலமை பெறமுடிதல் தாதாபாய் நவரோசி என்ற மெட்டு ப. தாய்மொழித் தகைமை விழி து.g. தன்னோர்க் கேயன்றி மன்னோர்க் கில்லையே. (தாய்) உ.1 வாய்மொழியாய் வழங்குமொழி மனத்தெழுந்த மரபுகொளி ஆய்வினாலே நூலின்வழி அறியார்அயலார் மரபினுழி. (தாய்) 2 இறைமைபெறத் தமிழ்நூ லெல்லாம் இலங்கி நுழைந்தாய்ந்த வெல்லை மறைமலைபோற் சாமிநாதன் மரபுச் சொற்புலம் வாய்ந்ததில்லை. (தாய்) 3 வேற்றவரே தலைமை பூண்டு விரவு சென்னை கால்நூற் றாண்டு சேர்த்த தமிழ்ச் சொற்கள் ஈண்டு செயிர்கள் சொல்லின் செல்லும் நீண்டு. (தாய்) 229. தாய்மொழிக் கல்வி என்னும் தமிழ்வாயிற் கல்வி அன்னையுந் தந்தையுந் தானே என்ற மெட்டு ப. தாய்மொழிக் கல்வியுந் தானே - தமிழ்த் தூய்மொழி யன்றெனில் தொடங்குவ தேனே. (தாய்) து.ப. வாய்மையில் தமிழன்பு தானோ - தமிழ் வல்லவரை விலக்கித் தள்ளுவ தேனோ தேயநின் றாங்கில நீக்கம் - பின்னே திடுமென இந்தியைப் புகுத்தலே நோக்கம். (தாய்) அ. ஆடு நனைகின்ற தென்றே - ஓநாய் அழுது கண்ணீர் விடுவ துண்மையோ அன்றே நாடியே தமிழதன் நன்றே - முன்பு நயவாத பேர்நயக் கின்றனர் இன்றே தேடியே உலகெங்குஞ் சென்றே - காணின் திருந்திய தூய்மொழி தீந்தமிழ் ஒன்றே கூடிய தூயசொல் கண்டே - பின்பு கோவையிற் புகுத்துக தூவுளங் கொண்டே. (தாய்) 231. வண்ணனை மொழியியலின் (Descriptive Linguistics) வழுவியல் மாதாட பாரதேனோ என்ற மெட்டு பண் - கமாசு தாளம் - ஈரொற்று வண்ணனை மொழியியலே - வழிமயலே உ.1 முன்னமே மொழிமுதல் மூலமுண்மையைக் கண்டார் இந்நிலை மொழியெலாம் இடுகுறியெனக் கொண்டார் (வண்ண) 2 கண்ணிய பொருளொன்றைக் காணச் செல்வான் முன்னே கண்ணைக் கட்டிக்கொண்டு கால்தடுமாறல் என்னே (வண்ண) 3 மொழிநூலின் திறவுகோல் மூழ்கியிருக்குந் தமிழ் வழிதவறித் திரி வடமொழியிலே அமிழ் (வண்ண) 4 ஆவின் வருவதெல்லாம் அருந்திடும் பாலாகுமோ அமெரிக்கர் சொல்வதெல்லாம் அரியமெய்ந் நூலாகுமோ (வண்ண) 5 ஆரிய வெறியரும் அணையுங் கொண்டான் மாரும் வேரியல் தெரிவதை விலக்க வழியாய்க் கோரும் (வண்ண) 6 ஆங்கிலத்தைச் சிறந்த அளவையாக் கொண்டேனவும் ஆயிரவாண்டுள் எல்லாம் அடியோடு மாறுமென்னும் (வண்ண) 7 எந்தமொழியும் மாந்தர் இயம்புங் கொச்சையே யென்று செந்தமிழின் செம்மையைச் சிதைக்க வழியாம் இன்று (வண்ண) 232. என் அண்ணாமலை பல்கலைக் கழகப் பணி புள்ளிக் கலாப மயிற்பாகன் என்ற மெட்டு 1 அண்ணாமலை பல்கலைக் கழகம் - என்றும் அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் - அங்கே ஆரியம் வேரூன்றித் தமிழ் சீரழிந்து போனதாரே கண்டார் வெளி விண்டார். 2 திரவிட மொழியியல் துறையே - அங்குத் திறந்து வெள்ளிவிழா முறையே - தமிழ் வேர்ச்சொல் வரிசை முதலே சேர்ப்பதென்று விளம்பரம் செய்தார் தாளிற் பெய்தார். 3 தமிழுக்கு வந்தது நற்காலம் - என்று தருக்கி விடுத்தேன் வேண்டுகோளும் - தமிழ்த் தலைமை யிருந்தவர் அந் `நிலைமையறிந்து வழி சூழ்ந்தார் - தமிழ் கீழ்ந்தார்.1' 1. கீழ்தல் - சிதைத்தல் 4 சட்டர்சி யென்னும் வங்காளியரே - அன்று சமைந்த குழுவில் மாபெரியரே - தமிழ்ச் சார்புகொண்டென் வேலையைமேற் பார்வை செய்ய வந்ததலங் கோலம் கெடு காலம். 5 தமிழர் கிரேக்க நாட்டார் என்றார் - அவர் தமிழ்ச்சொல்லும் ஆரியமாய்க் கொண்டார் - அது தவறென்று விளக்கவும் கவனியா திழுக்கென மறுத்தார் மிக வெறுத்தார். 6 எதிரிகள் இதே யெதிர்பார்த்தார் - என்னை ஏனைத் துறைக்குத் தள்ளித் தீர்த்தார் - அங்கே இருந்து மூவாண்டின் பின்நான் அருந்தமிழோடு வெளியேற்றம் திடு மாற்றம் 7 வேர்ச்சொற் களஞ்சியம் வேறாரும் - செய்யும் விறலுள்ளார் உண்டோவென்று பாரும் - வினை வியங் கொள்ளா தென்னை யின்று வினை செய்யவில்லை யென்றார் மெய்யோ கயமையோ. 233. தென்மொழி பண் - காம்போதி தாளம் - முன்னை ப. தென்னாட ருய்யவருந் தென்னார்க்காடு மாவட்டத் திருப்பாதிரிப் புலியூர்த் தென்மொழியே. து.g. தன்னேரி லாததமிழ் தழைத்தோங்கி மீண்டுமிங்குத் தமிழர் உயரஒரே பொன்வழியே (தென்) உ.1 முன்னாள் நாவுக்கரசர் கன்மாமிதவை கொண்டு முந்நீரினின்று கரை யேறுமூதூர் இந்நாளில் தமிழையும் ஏதிலர் உட்பகையால் இந்திக் கடல்தள்ளினார் ஏறவேதூர் (தென்) 2 சிறப்பா சிரியனென்று தேவநேயனைக் கொண்டு திரவிடமுந் தமிழும் தெள்ளும்வழி திறப்பாகத் தமிழ்திர விடத்தாய் ஆரியமூலம் எனத்தான் எவருங்கண்டு கொள்ளும்வழி (தென்) 3 திங்கட்குலத் தமிழைத் திங்கள்போல விளக்கும் திங்களிதழும் இன்று தென்மொழியே தங்கட் கியன்றவரை திங்கட்கா சளிக்கவே தங்கக் கட்டிலணையத் தென்மொழியே (தென்) 234. ஆசிரியனே கல்வியமைச்சனாதற்குரியன் பழனிமாமலையில் வாழும் என்ற மெட்டு 1 ஆசிரியனே கல்வி அமைச்சனும் ஆவான் மாசறு கல்விமுறை மற்றையர் மேவார். 2 செல்வமுங் கல்வியுமோ செறிந்தென்றும் நில்லா சேரும் வாரியங்களும் செவ்வையாய்க் கொள்ளா. 3 இருண்டநா டுகளில்தான் இரண்டுமே சேரும் தெருண்ட நாடுகள்வேறு தேரவே நேரும். 4 ஆசிரியனுக் குண்டோ அமைந்ததோர் வாழ்வே மாசிறிய னாகவே மதிப்பவர் ஆள்வார். 5 ஆங்கிலமுந் தமிழும் அமையும்இந் நாடு தீங்கென வரும்இந்தி தீர்ந்திட நாடு. 6 ஆங்கிலம் நீங்கிவிடின் அறியாமை ஈண்டும் ஆதலால் இருமொழி வாயிலும் வேண்டும். 235. இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல் கனகசபாபதி தரிசனம் ஒருநாள் என்ற மெட்டு வகை ப. இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் தொடங்க என்றனன் சுந்தரமே. து.g. பிந்திய சீநிவாசன் பிறங்கிராமச்சந்திரன் பெருமித மாயதனைப் பேணிவரைந் தனரே (இந்திய) உ.1 இந்நாளிற் சிலவரே இந்தியவியல் நூலார் முன்னேவைத் தாரியத்தைக் கண்ணார் நிலவொளியைக் கதிரோன் இரந்தானென்னத் தென்னோரைப் பழித்தனர் தெரிகநன் றேயித்தை (இந்திய) 2 தென்பாலி முகத்தமிழ்த் தேமெல்லொலி கிரேக்கத் திரிபென்று கூறுவரே வன்பாய் முதிர்ந்து மாங்காய் வடியாக மாறலுண்டோ முன்பாலைப் பின்பால் வைத்த முட்டாளர் தேறிவரே (இந்திய) 3 இந்திய நாகரிகம் இசைந்த பண்பாட்டுடனே முந்திய தமிழரதே இந்த நிலையில்அதைப் பிந்து மாரியமெனல் தந்தையை மகனெனும் தன்மையில் முடிவதே (இந்திய) 4 தமிழை மறைப்பதினால்தானே விளையுந் தீங்கு தமிழொடு போவதில்லை இமிழ்கடல் நூலும்வாறும் இன்மொழி மாந்தனூலும் அமிழ்ந்தே பெரிதுங்கெடும் அறிஞரும் காணாவெல்லை (இந்திய) 236. வரலாற்றின் இன்றியமையாமை விளக்குமாற்றை யெடுத்துக் கொள்ளடி என்ற மெட்டுவகை 1 வீட்டிற்குரிமை பெற ஆவணமே - ஒரு நாட்டிற்கு மெய் வரலாறெனுமே தமிழ்நாட்டிற்கிது வரை - ஏட்டிலில்லை (வீட்) 2 தமிழ்நாட்டு வரலாறுதனை யுடனே - மிகத் தக்காரே எழுதுதல்தான் கடனே தனிக் - கட்சியாளர் பழு துற்றகோளர் (வீட்) 3 எழுதத் தகுவார் என்றும் தமிழன்பரே - பிறர் ஏறுமாறா யெழுதும் வம்பரே வடமொழிவெறியார் தமிழ் - வழியறியார் (வீட்) 4 வரலாறின்றி விடுதலை யில்லையே - அது வரும்வரை தமிழர்க்குப் பெருந்தொல்லையே இதை - வற்புறுத்தும் அது - நற்பொருத்தம் (வீட்) 5 தமிழறியாதவர் தமிழ்நாட்டையே - என்றுந் தாங்கி நடத்துகை தருங் கேட்டையே அவர் தந்நலமே கொள்வர் - இந்நிலமே (வீட்) 237 தமிழ்நாட்டுத் தலைவர் தகுதி வந்தனங்கள் தந்தோமே என்ற மெட்டு ப. தமிழ்நாட்டில் இனித் தலைமைபெற - முனம் தழுவுக மூன்றுநிலை யின்றே. து.g. தமிழராயினும் அயலராயினும் தமிழைப் போற்றுவார் தரமொன்றே (தமிழ்) உ.1 கோயில் இறைவன் வழிபாடு - மிகக் குலவுந் தமிழில் நடைபெறுக கோதி லாமலே ஓதுவார்செயின் குலமே வரையறைத் தடையறுக (தமிழ்) 2 தமிழின் உண்மை வரலாறே - எதுந் தடையில் லாமல் வெளிவருக தலைகீழாகிய நிலைமை மாறியே தகவே குமரி வழியுறுக (தமிழ்) 3 இந்தி யெனும்புன் வடமொழியை - இனி இந்நாட் டறவே எடுத்திடுக இந்தியா வெங்கும் இயலும் ஆங்கிலம் என்றும் பொதுவென் றேற்படுக (தமிழ்) 238. தமிழ்ப் பல்கலைக்கழகம் பண் - காப்பி தாளம் - முன்னை பல்கலைக் கழகமே பைந்தமிழ்த் தேவை பழையவை யிரண்டுமே பாரதப் பாவை. து. ப. நல்கையைத் தருவதால் நாடிய வாவை நன்கனம் பெறுவதே நடுவதன் கோவை (பல்கலை) உ. பல்கிய தமிழியம் பத்தொன்பான் மொழியும் பயிற்றவேண் டும்நேராய்ப் பற்பல வழியும் மெல்கிய தனித்தமிழ் மேன்மையாய்ப் பொழியும் மேலைநாள் இடரெல்லாம் மிகுதியும் ஒழியும் (பல்கலை) 239. பண்டாரகர் மணவாள ராமானுசம் பண் - மோகனம் தாளம் - முன்னை ப. மணவாள ராமானுசம் - மாபெருஞ்சொம். து. ப தணமான மதிபோலுந் தகைசான்ற ஒளிவீசும் தணியாத தன்மானத் தலைபாகு தமிழ்பேசும் (மண) உ. கனமேவு சென்னைப்பல் கலையாருங் கழகத்தின் கறைமேவு தமிழுற்ற குறையாவும் உடன்தீர இனமேவு பண்பொத்த எழிலாரும் பணியாற்ற இறைமேவு கண்காணத் துரையாம்நல் லிடஞ்சேர. (மண) 240. தமிழ் முதன்மொழி ஆங்கிலம் வழிமொழி உலகம் பிறந்ததும் எனக்காக என்ற மெட்டு ப. தலைமை மொழியினித் தமிழாக தமிழர் அரசியல் தமிழாக கலைகல் வியுமுழுத் தமிழாக கருது மொழிநனித் தமிழாக. து. ப அனைத்திந் தியமொழி நிலையாக அறிவியல் மிகும்ஆங் கிலமாக இணைத்த நிலங்களில் துணையாக இயலும் வழிமொழி அதுவாக (தலைமை) 241. ஆங்கிலம் இன்றி அறிவியல் இல்லை ஏர் முனைக்கு நேர் என்ற மெட்டு ப. ஆங்கிலம் இன்றேல் இங்கே அறிவியல் இல்லை அறிவியல் இன்றேல் இங்கே உரிமையும் இல்லை உ. ஆங்கிலம் இங்கே வருமுன் அடிமைஎம் முன்னோர் ஆங்கிலத்தால் மாந்தரென ஆயினார் அன்னோர் ஆங்கிலரே நீங்கியபின் மீண்டும் எம்மனோர் அடிமையாக வந்ததிந்தி ஆளவே என்நேர்? (ஆங்கி) என் நேர் - என்ன முறை? 242. தமிழைக் கல்லாமைக்குப் பற்றின்மையே கரணியம் (காரணம்) ஆடிப்பாடி வேலை செய்தால் என்ற மெட்டு ப. தாய்மொழிமேல் நேயங்கொண்டால் தடையொன் றிராது -அதில் தகுந்த சொல்லை அறிவதற்குத் தயக்க மிராது. உ.1 சேய்மைநிலத்து மொழியும் வெட்கை சிறந்து கற்கும் நிலைமை - அதிற் செறிந்தபல்லா யிரஞ்சொற்களைத் தெரிந்து நிற்கும் எளிமை (தாய்) 2 பிழைக்கும் வழியும் பெருஞ்சம்பளமும் பெயர் மதிப்பதிகாரம் மிகத் தழைக்கும் வழியே தமிழில் இல்லை தாழ்வுதானிது பாரும் (தாய்) 3 ஆட்சிமொழியென் றாகிவிட்டால் அரியதென்னும் தமிழும் - மிக மாட்சிமையாம் அதையே பயிலமனமும் நன்றாய் அமிழும் (தாய்) 243. சாமிநாதையர் பதிப்பு பண் - தோடி தாளம் - முன்னை ப. சாமிநாதையர் மதிப்பே சாற்றும் பதிப்பே து.g. தேமுறு தமிழ்நூலைத் திருத்தியே பதித்தவர் தாம் உறுதவப் பலர் தம்முளே தலைக்கிவர் (சாமி) உ.1 ஏமுறு பாடங்கொள்வும் இலகருஞ் சொல்லொழுங்கும் ஏனைப் பாடக்குறிப்பும் இயலொப்புமை மேற்கோளும் வேமுறு பசியினர் விரும்பும் உணவை யெல்லாம் விரவியுண்ணும் அளவில் வேறு வேறிட்ட போலும் (சாமி) 2 தென்கலைச் செல்வன் சென்னை மண்டலக் கல்லூரியில் தென்மொழித் தலையெனத் திகழ்ந்தபெரும் பேராசான் பண்டிதன் பண்டாரகன் என்று பெரிதாய்ச் சொல்லும் பட்டம் பதவியெல் லாம்சற்றும் தேவையே யில்லை (சாமி) 3 நூற்பதிப் போரெல்லாரும் நோக்க பதிப்புக்கலை நுண்தொழில் திறனெல்லாம் பண்படும் தனிமேற்கே பார்ப்பதற் கழகாப் பட்டுக்கட் டடஞ்செய்யும் பரிசுப் பதிப்புகளும் பயனில்லை படிப்பார்க்கே (சாமி) 244. பல்வேறு தகுதியில்லார் (இசைந்த மெட்டிற் பாடுக) ப. இதென்ன கெட்ட வழக்கம் இனியேனும் அதை விலக்கும் து.g. மடமையான ஒழுக்கம் வழமை யேனும் இழுக்கம் (இதென்ன) உ.1 வடமொழிமிக வேட்பார் வரஇந்திதனை ஏற்பார் மடம்தமிழதிற் சீர்ப்பார் மறைமலைபுகழ் ஆர்ப்பார். (இதென்ன) 2 கட்சித்தலைவர் கருத்தே காணும் நூலிற் பெருத்தே வெற்றுச் செல்வர் வரத்தே விழவில் தலைமைக் குரித்தே (இதென்ன) 3 ஆசிரியரே யல்லார் அமைச்சர் கல்விக்குள்ளார் மாசு கூறவே வல்லார் மருவுந் தமிழ்ப் பற்றில்லார் (இதென்ன) 4 மருத்துவத் துறையுலகும் வழக்குத் தீர்க்கும் உலகும் திருத்து பல்கலைக் கழகம் திகழ் தலைமையாய்ப் பழகும் (இதென்ன) 5 அமையக் கல்லா மடமை அமைக்கும் சட்டம் முடமே தமிழைக் காக்கும் கடமை தமிழ ரல்லா ரிடமே (இதென்ன) 245. பாண்டியர் தமிழ்க்கழகம் வேண்டியதாதல் இந்த வுலகில் இருக்கும் மாந்தருள் என்ற மெட்டு ப. பண்டை யுலகில் இருந்த பாண்டியன் பைந்தமிழ்க் கழகமே வேண்டும் - (தூய) து.g. இன்றே நேர்ந்துள குழுவில் ஈர்ந்தமிழ் இறந்து படுவதே தோன்றும் - (தமிழ்) (பண்டை) உ.1 தமிழில் ஆர்வமும் தகுந்த புலமையும் தாங்கிய முதியவர் இன்றே - (புலமை) குமரிமுதல் வடகோடி வரையுமே கூடுக தொகைவரம் பின்றே - (இன்றே) (பண்டை) 2 தீய பகைவரின் வகையுந் தமிழுக்கே தெரியின் எத்தனை தமிழா - (அந்தோ) தேங்கு பல்கலைக் கழகம் அரசொடு தீங்கு செய்திடின் தவிர்க்க - (தமிழ்க்கே) தூய தமிழ்ப் பெயர்த் தொடர்பு கொள்ளுக தோன்றும் இடம்பொரு ளெல்லாம் - (இங்கே) தொல்ப ழந்திருக் குமரித் தீந்தமிழ் துலங்கி நிலவுக தமிழா - (மீண்டும்) (பண்டை) 246. தமிழ் வரலாறு தமிழரே எழுதுகை சந்தமா மயிலொடு என்ற மெட்டு 1 சொந்தமா மொழியையே சொல்வர லாறின்றேல் வந்தெலா மொழியுமே வல்வழி மேலென்றாம். 2 இந்தமா நாட்டிலே ஏதிலர் ஆரியம் வந்ததே மாற்றியே வானவர் பேரிலே. 3 தேவரின் மொழியெனத் திண்பொழில் ஒன்றில்லை வாயதொன் றுளதெனின் வண்டமிழ் என்பதே. 4 முந்துதான் பேதைமை மூழ்கினர் தமிழரே இன்றுமேன் ஏதைமை ஏலவும் தெளியவே 5 தான்செயா வேலையே தவறுபு கெடுவதே ஈன்றமிழ் வாறுமே எழுதுக தமிழரே. 247. இந்நாள் எவன் தமிழன்? பித்தாபிறை சூடீ என்ற மெட்டு பண் - இந்தளம் தாளம் - ஈரொற்று 1 தென்பாலி முகத்தேயிருந் திங்கேகுடி தொடர்ந்தும் தன்பால்தமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ வன்பாரொடு கடல்தாண்டிய வடமேலைய னெனினும் அன்பாய்த்தமிழ் கொள்வானெனின் அவனேநல்ல தமிழன். 2 உள்ளேமனை வெளியேதமிழ் ஒன்றேமொழிந் தாலும் தள்ளாத்தமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ எள்ளாயினும் தமிழ்பேசவே இயலாதவ னெனினும் அள்ளுறநற் றமிழ்கொள்பவன் அவனேநல்ல தமிழன். 3 இனித்ததமிழ் நூல்கள்செய்யு ளெல்லாங் கரைகண்டும் தனித்ததமிழ்ப் பற்றில்லெனில் தமிழன்என லாமோ பனித்ததுளி யேனும்தமிழ் படியாதவ னெனினும் அனித்தமெலித் தமிழ்கொள்பவன் அவனேநல்ல தமிழன். அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம் குமரிநா டிருந்த ஞான்றே குடிபுகுந் திந்நாள் காறும் தமிழையே பேசினாலும் தமிழரோ அதனைக் காய்வார் இமிழ்திரை கடலுக் கப்பால் எனையசே ணாட்டா ரேனும் அமிழ்துறழ் தமிழைப் போற்றும் அன்பரே தமிழர் கண்டீர் எனைய - எத்துணை 248. தமிழர் என்போரெல்லாம் தமிழராகார் கல்லிலே கலைவண்ணங் கண்டான் என்ற மெட்டு ப. தமிழர் என்றிருப்போர் எல்லாரும் - நல்ல தமிழன்பரோ நெஞ்சைத் தடவியே பாரும். து.g. தமிழர் என்றில்லாத பேரும் - நல்ல தமிழுக்குத் தொண்டுசெய்துள்ளாரே தேரும். (தமிழர்) உ.1 நக்கீரன் திருவாத வூரன் - நல்ல நாவல்ல பரிதிமாற் கலைஞன் என் பேரன் தக்காங்குத் தமிழதி காரன் - ஆன சாமிநாதை யன்பார்ப் பாவாரோ தேரின். (தமிழர்) 2 பாவேந்தன் வீரமா முனிவன் - தமிழ்ப் பன்னூல் மொழிபெயர்ப் பாளன்போப் பினியன் தாவியாராய் கால்டு வேலும் - நாமே தலைமேற் கொள்ளுந் தமிழாளர்எக் காலும். (தமிழர்) 3 கொண்டான் புத்தமித்தி ரன்தான் - தமிழ் கொத்திய தேசிகன் சாமிநா தன்காண் தண்டா வையாபுரி யென்பான் - இவர் தவறிக் கனாவிலும் தமிழர்ஆ கார்தான். (தமிழர்) 249. ஒற்றுமையுரம் ஆரகிம்பவே என்ற மெட்டு பண் - தோடி தாளம் - ஈரொற்று ப. சேர்ந்து வாழ்வதே - (நம்) - சிறந்த வலிமை து.g. சிறுகோலும் செறிந்து நின்றிடின் சேர்த்தொடிக்கவே ஏலுமோ. (சேர்ந்து) உ.1 சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்துநின்ற கால முழுதும் வேறரசர் யாரும் வெல்ல விரற்கிடையும் இயன்ற தில்லை. (சேர்ந்து) 2 மூவரால் தொண்ணூற் றெழுவர் முறியடிப்புண் டாரென் சொல்லை ஏவர் நம்புவார் இவ்வுலகில் இதனிலும் வேறிழிவே யில்லை. (சேர்ந்து) 3 பல்குழுவொடு பாழ் செயுட்பகை பைந்தமிழைக் கொல் குறும்பே கல்லாமையொடு கொண்டுவந்த கட்டாய இந்தி யிங்கே. (சேர்ந்து) 4 பென்னம்பெரிய தமிழினந்தான் பிறப்பொடு தொடர்புற்ற பல சின்னஞ்சிறிய குலங்களாகச் சிதைந்து பழஞ்சீர் கெட்டதே. (சேர்ந்து) 250. பிராமணர் தமிழன்பராகித் தமிழ்நாட்டை வழிவழியாள்க இந்து நேச வங்க தேச பந்துவை யிழந்தனம் என்ற மெட்டு வகை பண் - சிந்துபைரவி தாளம் - ஈரொற்று 1 எந்த வூருஞ் சொந்த வூரே எவரும் உலகில் உறவினர் என்ற கொள்கை யினியர் தமிழர் ஏற்க வேபி ராமணர். 2 வந்த நாட்டின் வழமை கொள்ளல் வந்த வர்தம் கடமையே செந்த மிழ்பி ராம ணர்க்கும் சொந்த அன்னை நன்மொழி. 3 வழக்கில் இல்லா வடமொ ழிக்கு வருமோ தெய்வத் தன்மையே வழக்கில் திரிந்த தமிழே பின்னர் மாறி யுள்ள தாரியம். 4 வீட்டி லும்பி ராம ணர்தாம் போற்றும் பூசை தமிழிலே ஆற்றின் என்றும் ஆளும் வினையே சாற்றில் நூறும் ஏற்கவே. 5 முந்து நாள்பி ராம ணர்தாம் மொழிந்தார் இருபொய் நாட்டிலே இந்த நாளும் ஏமாற் றங்கள் ஏற்கு மோநன் றெண்ணுவீர். 251. ஆரியர் தமிழர் ஒற்றுமை வள்ளிக் கணவன் பேரை என்ற மெட்டு 1 ஆரியர் தமிழரே வேறு பாடெதுமின்றி ஓரிய லாகவேண்டும் - நல்ல தங்கமே ஒருமித்து வாழவேண்டும். 2 தமிழரும் ஆரியரும் சமநிலை யுணர்வோடு தமிழையே தாங்கவேண்டும் - நல்ல தங்கமே தமிழகம் ஓங்கவேண்டும். 3 இந்திய வரலாறு முந்திய நிலைகூறத் தென்றிசை சேர வேண்டும் - நல்ல தங்கமே திரிதலுந் தீரவேண்டும். 4 நினைவு வலிமையெல்லா வினைகளுக்குமே யொன்றாய் முனையுந் திறமேயன்று - நல்ல தங்கமே முதன்மையாய்ப் பிறவுமுண்டு. 5 நலனாக வாழ்வதற்குக் குலவகை தீருமட்டும் நிலையிதே நிற்கவேண்டும் - நல்ல தங்கமே நேர்மையுங் கற்கவேண்டும். 252. தாலாட்டுப் பாட்டு கனிமொழியே எனதுயிரே என்ற மெட்டு ப. கண்மணியே கண்வளராய் தங்கமே தங்கம் - என் கனியுந்தமிழ் காதுறவே தங்கமே தங்கம் உ.1 எண்ணம் எதும்இன்றி இன்றே தங்கமே தங்கம் - நீ இளைப்பாறித் தூங்கிவிடு தங்கமே தங்கம் கண்மலர்ந்த பின்னெழுந்தே தங்கமே தங்கம் - சிறு கால்கையசைத் தாடலாமே தங்கமே தங்கம் (கண்) 2 முன்னவர்முன் கடல்கடந்து தங்கமே தங்கம் - மிக முறியடித்தார் எதிர்த்தவரைத் தங்கமே தங்கம் இன்னுஞ்சில ஆண்டுகளில் தங்கமே தங்கம் - நீ இனியதமிழ் பரவச் செல்வாய் தங்கமே தங்கம் (கண்) 3 இந்தியிந்த நாட்டில்வரத் தங்கமே தங்கம் - சிலர் எண்ணியதும் திண்ணெனவே தங்கமே தங்கம் முந்தியதை யொழிக்கக் சொன்னார் தங்கமே தங்கம் - தனி மொழியில்மறை மலையடிகள் தங்கமே தங்கம் (கண்) 4 அறிவுகண்டார் தமிழர்முதல் தங்கமே தங்கம் - பின் ஆரியத்தால் அறிவிழந்தார் தங்கமே தங்கம் பொறிவினைகள் பொலியுமின்று தங்கமே தங்கம் - நீ புகுந்திடுவாய் திங்கள்செவ்வாய் தங்கமே தங்கம் (கண்) 5 எல்லவரும் ஓரினமே தங்கமே தங்கம் - இடம் எங்கும்ஒரே தெய்வமுண்டு தங்கமே தங்கம் நல்லமைதி நானிலமே தங்கமே தங்கம் - உடன் நண்ணியன்பு பொங்குகவே தங்கமே தங்கம் (கண்) 253. குழந்தைக்குப் பேச்சுப் பயிற்றல் (பிள்ளைத் தமிழ் முறை) சொல்லு பாப்பா என்ற மெட்டு ப. பேசு பாப்பா தமிழ் பேசு பாப்பா பேசும் அகவையிது பேசு பாப்பா உ.1 பாசி பாசி என்று சொல்லிப் பயில் பாப்பா - அதைப் பாலென்று திருத்தவரும் காலம் பாப்பா சோசி யென்று சொல்லுவதும் சோறு பாப்பா - தமிழ் சொக்கமாகக் கொச்சையேனும் சொல்லு பாப்பா (பேசு) 2 அம்மா அப்பா என்று நீதான் அழைத்துவரும் - உன் அன்னை தந்தை யிருவரும் முன்னறி தெய்வம் அம்மையப்பன் என்றே ஒரே ஆண்டவனை - நீயும் அழைக்கின்ற காலம் அது பின்னறி தெய்வம் (பேசு) 3 அமிழ்தினும் இனியது தமிழ் பாப்பா - அது அறிவரை மயக்கிய மொழி பாப்பா குமுதவாய் திறந்தின்று குயில் பாப்பா - உன் குதலையும் இனிமையைத் தரும் பாப்பா (பேசு) 4 குழலும் யாழும் போலும்உன் குரல் பாப்பா - அது கொம்புத்தேன் போலினிக்கும் கொஞ்சு பாப்பா மழலை மொழி குழறும் மழ பாப்பா - அது மதிமிகு வள்ளுவன்சொல் மதி பாப்பா (பேசு) 5 எளிதாகப் பேசும் மொழிதமிழ் பாப்பா - மூச்(சு) இழுக்கும் வல்லொலி யதில்இல்லை பாப்பா தெளிவாகப் பேசி மெள்ளத் தேறு பாப்பா - பின்னர்த் தேவர் கண்ட நாவலனாய்த் திகழ் பாப்பா (பேசு) 254. பாங்கன் கழறலும் தலைவன் கழற்றெதிர் மறுத்தலும் (திருக்கோவை, 20, 21, 22, 23) (இசைந்த பண்ணிற் பாடுக) பண் - காப்பி தாளம் - முன்னை 1. பாங்கன் வினவல் தகை - வாடுகின்றதும் ஏனே தமிழ் - வயத்ததோ மனம் கோனே இனிப் - பாடும் இன்னிசை யானே இந்தப் - படியோ சொல்தணிப் பேனே. 2. தலைவன் விடுத்தல் மலஞ் - சோலை யோரிள மானே கண்டு - சோர்ந்த தென்மனம் தானே முந்து - காலை இறைவனின் மேனே முழுக் - கருத்தும் செலுத்துவென் நானே. 3. பாங்கன் கழறல் ஒரு - சோலை யிற்சிறுமானே கண்டு - சோர்ந்த னைபெருமானே முனம் - மேலெ னும்அறிவானே மதி - மிகவும் கூறுவை நீனே. 4. தலைவன் கழற்றெதிர் மறுத்தல் இனித் - தோழ நான்என்ன செய்வேன் காணாத் - தொலைவில் நின்றுநீ வைவேன்? இந்த - வேளை நீசெலின் உய்வேன் இன்றேல் - விரைந்துயிர் இங்கே பெய்வேன். வைவு + ஏன்? = வைவேன்? 255. பார்ப்பார் யார்? சித்தார் வண்ணம் ப. பார்ப்பார் யார் - தமிழ்ப் பாரினில் தமிழ்நூல் பார்ப்பவரே - பிறர் பார்ப்பனர் ஆகார் பார் பார் பார். து. ப. குரு - போற்றியே உவச்சன் பூசாரி திரு - புலவன் பண்டாரம் ஆசிரியன் உருத் - தேற்றியே ஓதுவான் நம்பி எனத் - திகழும் இல்லறத்தார் தான்பார்ப்பார். (பார்ப்பார்) 256. அந்தணர் யார்? வண்ணப் புறாவே நீ யார் என்ற மெட்டு வகை ப. அந்தணர் என்பவர் யார் - அருள் அறியாத பேரையே தெரியாது கூறுவீர். து.g. செந்தமிழ் மாமரபே - மெய்யாய்ச் செப்பாத நூற்படி தப்பாகக் கூறாதீர் (அந்தணர்) உ.1 வெந்தன்மை நீங்கியே எந்த வுயிருக்கும் செந்தண்மை பூண்டோர்தாம் அந்தண ராவாரே வந்த விருந்தினரை - வெளி வாயிற்காக்க வைத்தே மீயுஞ்சோற்றைக் கொட்டார் (அந்தணர்) 2 நாய்போற் பெற்றதுண்டு தாய்போற் பெண்டிர்க்கொண்டு பேய்போல் திரிந்தெங்கும் சேய்நிகர்ப்பார் ஐயர் நாயகராய்ச் செருக்கித் - தம்மை நானிலம் வந்துள்ள வானவர் என்னாரே (அந்தணர்) 3 முற்றுந் துறந்தபின் முக்காலச் செய்தியும் உற்றுத் தெளிந்தொன்றும் உண்ணாரே அந்தணர் சற்றுந் துறவாமலே - நகர்ச் சார்பா யிருந்தேயிற் சீராக வாழாரே (அந்தணர்) 257. தமிழகம் அனைவர்க்கும் தாயகம் ஒன்றையே நினைத்திருந்து என்ற மெட்டு 1 உயர்திணை தோன்றி வந்து உலகமுன் மொழியெ ழுந்து ஒருகுலம் ஒருதே வென்று உணர்த்து கின்ற தாயகம் உலகம் போற்றும் தாயகம் உயர்ந்த தமிழன் தாயகம் இலகு முதனூல் தாயகம் என்று முள்ள தாயகம். (உயர்) 2 எந்த வூருஞ் சொந்த வூராம் என்று ரைக்கும் தாயகம் எவரையும்நல் உறவென் றெண்ணி ஏற்கும் நல்ல தாயகம் வந்தவரையே வாழ வைக்கும் வண்மை மிக்க தாயகம் வாளிற் கொடிய இரண்ட கர்க்கும் வாழ்வு நல்கும் தாயகம் (உயர்) 258. எண்கோள் கூடல் குரும்பைநிகர் மென்முலையாள் என்ற மெட்டு பண் - காம்போதி தாளம் - முன்னை 1 பலதிசையும் பெரும்பான் மக்கள் பஞ்சையரா யிறத்தல் கண்டும் அலகறும்பொற் செலவிற் செய்யும் அணுக்குண்டுப் பயிற்சி நாளில் இலகுறுகோள் எட்டுஞ் சேர எய்திநின்ற குறிப்பை நோக்கின் உலகமெல்லாம் ஓரரசாய் ஒன்றுகவே என்ப போலும். 2 விண்ணிடத்தின் அன்றமையும் விரிநீரும் நஞ்சமாகப் பண்ணுமழி படைப்பயிற்சி பலர்தடுத்துந் தொடரு நாளில் எண்ணுறுகோள் இறும்பூதாக எய்திநின்ற குறிப்பை நோக்கின் மண்ணகமே ஓரரசாய் மன்னுகவே என்ப போலும். 3 போரெனவே யிருவன்னாடு போட்டியிட்டுப் பின்பின்னேவ ஏரவுயர் பெருங்கலங்கள் இயங்குகின்ற பரவெளியில் சீருடைய கோள்களெட்டும் செறிந்துநின்ற குறிப்பை நோக்கின் பாரனைத்தும் ஓரரசாய்ப் பண்படுக என்பபோலும். 4 ஈனுலகில் எறும்புதேனீ இன்னலமாய் மன்னிவாழ மானமிகச் செருக்குமாந்தர் மாளமுரண் மூளுநாளில் வானகமெண் கோள்கள்சேர வந்துநின்ற குறிப்பை நோக்கின் மாநிலமே ஓரரசாய் மருவுகவே என்ப போலும். 5 பெருவெள்ளமும் கடுங்குளிரும் பிதிர்மலையும் நிலநடுக்கும் உருமிகவிந் நிலமீதெங்கும் உண்டாக வியன்மா வானில் ஒருகுலம்போல் இருநால்கோளும் ஒருங்குநின்ற குறிப்பை நோக்கின் இருநிலமே ஓரரசாய் இணைந்திடுக என்ப போலும். 259. உலகில் நன்மை ஓங்க ஒருதாய் மக்கள் நாமென்போம் என்ற மெட்டு ப. ஒன்றே குலமென் றுணர்ந்திடுவோம் ஒருவனே தேவன் வழிபடுவோம் ஒன்றே ஆட்சி அமைத்திடுவோம் ஒற்றுமை உலகில் வளர்த்திடுவோம். உ.1 என்றும் ஏமாற் றொழிந்திடவும் இனிதாந் தமிழ்முன் னிடம்பெறவும் ஒன்றும் ஆங்கிலம் பொதுவுறவும் ஒன்றாய் அனைவரும் உயர்ந்திடவும் (ஒன்றே) 2 உழவனே நாட்டில் தலைமைபெற ஒவ்வொரு தொழிலும் வளர்ச்சியுற விழுமுறு பசியும் பிணியுமற வெம்மையும் பஞ்சமும் விலகியிற (ஒன்றே) 3 அன்பும் இன்பும் அழகொழுக அறிவுடன் அமைதி உறவுகொள நண்பும் பண்பும் நடம்புரிய நடுநிலை நயனே நலம்பெருக. (ஒன்றே) 261. தண்டமிழ்த் தொண்டர் அஞ்சலி செய்திடுவோம் என்ற மெட்டு ப. என்றுமே கொண்டாடுவோம் - இன்பமுடன் நாம் து. ப. தண்டமிழுக்குச் செய்த தொண்டுகளை நினைந்து (என்றுமே) உ. 1. பண்டுநக் கீரன்பின்னே பரஞ்சோதி சிவஞானம் பரவிய சுந்தரம் பண்பட்ட பூரணலிங்கம் மண்டிய பரிதிமால் மறைமலை நீலாம்பிகை மாணிக்கம் துடிசையார் மகிழ்நன் நமச்சிவாயம். (என்றுமே) 2 காசுவேங் கடசாமி கதிரேசன் இராமசாமி கரந்தை யுமாமகேசன் கழகத் திருவரங்கம் ஆசறு கலைகளும் ஆட்சியும் தமிழிலே அமைசுப்பிர மணியம் அருஞ்சாமி வேலாயுதம் (என்றுமே) 3 ஆபிரகாம் பண்டிதர் அண்ணா மலையரசர் அரியபாணர் கைவழி வரகுண பாண்டியனார் சோமசுந் தரம்கந்த சாமி வரதநஞ்சை சொல்லரும் புரட்சிப்பா வல்லன் பாரதிதாசன் (என்றுமே) 4 ஆங்கிலத் திற்குறளும் அருந்திரு வாசகமும் அழகிய நாலடியும் மொழிபெயர் போப்பையரும் ஈங்குள திரவிட இனம்படு மொழிகளின் இயல்புறும் ஒப்பியலை இயற்றிய கால்டுவெலும் (என்றுமே) 261. அ. இராமசாமிக் கவுண்டார் பண் - காப்பி தாளம் - முன்னை ப. சேலங் கல்லூரித் தலைசிறந்த முதல்வர் என்றும் சாலும் புகழ்இராம சாமிக் கவுண்டர் அன்றோ. து. ப. ஞாலமுழு தும்தமிழ் நன்கு பரவஅடி கோலவந் தவரென்று கூறுதல் மிகையுண்டோ (சேலங்) உ. 1 மாலவர் அனுமந்த ராயற்கும் அங்கம்மைக்கும் மாடப்பள்ளி யில்முதல்மகனெனத் தோன்றினரே காலமே கல்விகற்றுக் கற்பிப்புப் பட்டம்பெற்றுக் கணிதநல் லாசிரியப் பணிசெய வூன்றினரே. (சேலங்) 2 வாணியம் பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு பானொடுமூன் றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை மாணவே முதலென மாற்றியேழை மாணவர் மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே. (சேலங்) 3 பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும் மன்னவர் குலமென எண்ண வுறுவனவே புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே (சேலங்) 4 மனையுறு தகையெலாம் மருவுகன கம்மையை மாறுகொண் டிகழ்வார்முன் ஏறுபோல் நடையுறக் கனையுறு முழவுடன் கடிமணம் புரிந்தனர் கண்ணப்பன் முதல்நான்கே எண்ணப்பிள் ளைகள்பெற. (சேலங்) 5 ஆயிரத்தின் மேலேதொள் ளாயிரத் தைம்பதான ஆண்டினில் எட்டாம்மாதம் அணைந்தபத் தொன்பதாம்நாள் மாயிருள் தமிழக மனத்திடை பரவவே மறைந்த திராமசாமிக் கவுண்டர்எனும் பொன்பானாள். (சேலங்) 262. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பண் - வசந்தா தாளம் - முன்னை ப. சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் - திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் (சைவ) து.g. தெய்வப் பற்றார்ந்த திருவரங்கம் பிள்ளை திண்ணிய ராகமுன் எண்ணியாங் கொழுகும் (சைவ) உ பொய்ம்மையில் தீர்ந்த புலவரே பழகும் பொன்மொழித் தமிழுக்கோர் பல்கலைக் கழகம் செய்கையில் தேர்ந்த சுப்பையா வுழவும் சேர்ந்ததே மறைமலை நூலக வழகும். (சைவ) 263. சேலம் தமிழ்ப் பேரவை வள்ளிக் கணவன் பேரை என்ற மெட்டு வகை 1 சேலம் தமிழ்ப் பேரவை செய்தவை பொன்நேரவை ஞாலம் அதுபோல் வேறவை - முன்னெதுவே நன்று செய்தது கூறுவை. 2 சொக்கப்பனார் என்றுபேர் மிக்குப் பெருகு புகழ் தக்க பேராசிரியரே - தந்தனர்முன் தொக்க வெண்பொன்னும் ஐந்நூறே. 264. சேலம் குகைத் திருக்குறட் கழகம் பண் - சிந்துபைரவி தாளம் - முன்னை ப. குகைத் திருக்குறட் கழகம் ஒன்றே குமுறும் வள்ளுவன் தமிழை நன்றே. து.g. தகைத் தமிழகம் முழுதும் இன்றே தகுபுலவரைத் தழுவி நின்றே. (குகைத்) உ. திகைத்தவர் உளந்தெளிக என்றே திருவள்ளுவனைத் தெரிந்து முன்றே பகைத்தவரையும் பரிவில் வென்றே பரமன்அருளும் பெறவே பின்றே (குகைத்) 265. செங்காட்டுப்பட்டி முத்தமிழ்க் கழக வண்மை சாமி நீ துணை செய்குவாய் என்ற மெட்டு பண் - சீராகம் தாளம் - முன்னை ப. செங்கை முத்தமிழ்க் கழகம் - முது செழியன் தமிழ் பழகும் (செங்) து.g. செங்கைப் பொதுவர் முதல் சிறந்த அறுபதின்மர் சிதலை தினும்ஆல் மதலை புரையும் (செங்) உ. கங்கை பனிமலை கொண்ட வேந்தரும் கடந்து போயினார் எங்கே செல்லினும் ஈகை மன்னரும் இலரே Madh®* பொங்கல்தொறும் ஓர்ஏழைப் புலவன் மகிழ்வு பொங்கச் செங்கை நிறைய வெண்பொன் வழங்கும் (செங்) ஆயனார் - ஆய் அன்னார். ஆய் - கடைவள்ளல். 266. மதுரை எழுத்தாளர் மன்றம் பண் - தோடி தாளம் - ஈரொற்று ப. மதுரை எழுத்தாளர் மன்றம் மதியர் தமிழே வதியுங் குன்றம் து.g. கதிரை நிகரும் புகழே மண்டும் கருமுத்து தி. சுந்தரமே கொண்டும் (மதுரை) உ. உரைவேந்தர் துரைசாமி யிலங்கும் ஒளிர்பண்டாரகர் சுந்தரம் பிறங்கும் வரைமனோகர கருணையர் தங்கும் வல்லரண் தமிழ்ப்பாவை யரங்கும் கரைதவிர் மொழிக்கடலிற் கலங்கும் கலங்கரை விளக்கெனவே விளங்கும் திரைகடலடித் திரக்கித் துலங்கும் திருமுத்துக்களைத் தெரிந்து வழங்கும் (மதுரை) 267. செட்டிகுளம் பண் - பூரிகலியாணி தாளம் - முன்னை ப. செந்தமிழ்க்குச் சிறந்த செட்டிகுளம் - அங்குச் சிறுவர்க்கும் பெருந்தகைக் கெட்டியுளம். து.g. முந்துமு மதுநாக முத்துவளம் - பெற முற்றியே தமிழ்வெற்றி பெற்ற களம் (செட்டி) உ. இந்தி வடமொழிகள் ஏகஇன்னே - நல்ல இன்பத் தமிழ்கிளர்ந்தே எழுக முன்னே செந்திறம் தமிழரும் சேர்க மன்னே - நீடிச் செம்மலாம் பச்சைமுத்துச் செறிக பொன்னே (செட்டி) 268. ஈப்போப் பாவாணர் தமிழ் மன்றம் ப. பாவாணர் தமிழ் மன்றம் பைந்தமிழ்த் தண்பரங் குன்றம். உ. மாவாழும் மலையா என்றும் மன்னும் ஈப்போ மகிழ நன்றும் மூவாநற் சுப்பையா ஒன்றும் முப்பான் உறுப்பினர் இப்போது துன்றும் (பாவாணர்) 269. மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் பண் - காம்போதி தாளம் - முன்னை ப. தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் து.g. தமிழ் - தழக்கிய மதுரையில் இலக்குவர் அமைதிருத் தமிழ் - தழுவிய இலக்கிய இலவச வகுப்புறு தமிழ் - தட்டுத் தடையற எட்டுத் திசையினும் முட்டப் பழமையின் விட்டுப் பொலிவுறத் (தமிழ்ப்) உ அமிழ்த்தவே கருதி அமைதமிழ்ப் பகையும் அதனடி வருடும் அடியவர் வகையும் சிமிழ்த்திடு வேடெனச் செறிசிறு தகையும் செயும்இட ரனைத்தையும் சிதைக்கவே அகையும் (தமிழ்ப்) 270. தமிழ்ப் பெருங் கழகம் பண் - சங்கராபரணம் தாளம் - முன்னை ப. தமிழ்த் தனிப் - பெருங் கழகந்தான் தமிழ் தமிழ் தமிழ்எனக் கமழுங்காண். உ.1 தனித்தமிழ்ப் புலவர் சேந்தமாங் குடியார் தருக்கிய தமிழடியார் முனைத்தமிழ்க் கழகம் முகிழ்தரு கிளையை முசிறியில் தோற்றுவித்தார் திருத்துவத் துறையில் திகழ்தமிழ்க் கழகக் கிளையது தோற்றியபின் திருச்சிவட் டகையும் பெருத்த கிளையின்பின் உறுதமிழ்நிலக்கழகம் (தமிழ்) மறைமலை யடிகள் மனமகிழ் கனவும் மதியழகரின் வினவும் நிறையுயிரிழந்தார் நிலைபெறு நினைவும் நிறைவுற நிகழ்நனவும் பிறையென வளரும் பிழிநறுந் தமிழும் பெருந்தமிழ்க் கழகமுமே துறைதொறும் இனிய தூயநல் தமிழ்ச்சொல் தோன்றுக வளமுறவே (தமிழ்) 271. பண்டாரகர் மெ. சுந்தரம் 1 திரு-மதுரையில் முதுதமிழ் புதுமைசெய் மதியர் மெ. சுந்தரம் அன்றோ சுந்தரம் அன்றோ - மை மந்திரம் உண்டோ (திரு) 2 கலைத் - தலைவரொ டிலக்கியத் தலைவர்மெய்ப் பொருள்துறைப் பண்டாரகரே பண்டாரகரே - தமிழ் கண்டார் அவரே (திரு) 3 தமிழ்ப் - பணிதனை மணியென அணிசெய நணியது தந்தை தவமோ தந்தை தவமோ - அது முந்தை சிவமோ 4 இவர் - நலமொடு வலமுற நிலமிசை நிலவியே இன்பமாய் வாழி இன்பமாய் வாழி - புகழ் பொங்கி நீடூழி (திரு) 272. குன்றக்குடியடிகள் தந்தத் தனனதன தந்தத் தனனதன தந்தத் தனனதன தனதானா என்ற வண்ணக் குழிப்பு (இசைந்த மெட்டிற் பாடுக) குன்றத்தொ ளிரமலர் கொன்றைக்கி ழவனடி மன்றற்பெ றுசடையி னழகோடே இன்றைக்கெ மொழிவளர் தொண்டிற்பெ ரியமுனி குன்றக்கு டியடிகள் நெடுவாழ்வே ஒன்றித்தி கழத்தமிழ் ஒன்றுக்கு முதவியில் இந்திப்பி ணிநலிய இறவாதே அன்றைக்கு மறைமலை தந்திட்ட தனிநிலை என்றைக்கு முறவருள் இறையோனே 273. மதுரைத் திருப்புத்தூர் உயர்திரு. ஆறுமுகம்பிள்ளை சுதேச மகமதல்லி என்ற மெட்டு வகை ப. ஆறுமுகம் தமிழ்க் களித்த வகை ஆயிரத் தோருருபா என்ற தொகை மாறுமுகம் இன்றி மலர்ந்தநகை மாயிரு ஞாலமே மகிழுந் தொகை (உரைப்பாட்டு) குலமத கட்சிச் சார்பாக வன்றிக் குமரித் தமிழ்க் கென்றொரு பழஞ்சல்லியும் கொடாத இந்தக் காலத்திலே புலமையிலானும் பொற்கிழி பெற்றதிருப் புத்தூர்ச் செந்தமிழ்ப் புரவலன் ஆறுமுகம் புகழொடு நிலவுக ஞாலத்திலே. 274. மதுரைமாநகர் (இசைந்த மெட்டிற் பாடுக) 1 மதுரைநன் மாநகர் மதிக்குலக் கோநகர் மாநில மெங்கணும் தானிலையே நிகர் மதியணிந் தான்மலை மகளொடு மகன்பகர் மணிமொழி யெனுந்தமிழ் அணிகள் புலவர்நுகர் மன்றமும் நின்று வளர்ந்து - தண்டமிழ் நன்று கிளர்ந்து மதிதிகழ் பனுவல் பிறந்த - மறைபுகழ் குறளுஞ் சிறந்த (மதுரை) 2 பார்க்குள் உயர்விலைப் பருமுத்தம் சுந்தர பாண்டியன் பாதமும் பூண்டன என்றுமுன் மார்க்கோ போலோசொன்ன மாட்சிமைதான் என்ன மயங்கிவிண் ணோஎன்ன நயங்களெல்லாம் மின்ன நாகரிகம் பண்பாடு - மாநகரும் இல்லை ஈடு நளினமும் உணவுமிருந்து - நடனமும் இசையும் விருந்து (மதுரை) 3 அறுபத்து நால்விளை யாடல்க ளைத்திரு அடியவர்க் காய்ச்சிவன் அருளிச்செய் தான்இவண் மறுவுற்ற கோல்நிமிர் மாநெடுஞ் செழியனும் மன்பெருந் தேவியும் மடிந்தனர் தெரியுமுன் மன்பதை இன்பொடு வாழ - அன்புறு நன்னடு நீள மகிழ்தரும் உயிரென வந்து - மதிபரசு லகுபுரந்த (மதுரை) 4 தகுந்ததன் றேதமிழ் தானெனக் குயக்கொண்டான் தருக்கி நக்கீரனால் தணிந்தனன் பெருமடம் மிகுந்த பண்டாரகர் மெ. சுந்தரம் முதல் மேதகை யோர்தமிழ் தீதற வுறும்இடம் மேனகை யரம்பைநாண - மேனிலம் புரிந்தே காண மழலையங் கிளிகுயில் மயிலும் - மழறு முத்தமிழ் முறை யிலும் (மதுரை) 275. மாந்தன் செருக்கடக்கம் வனசாட்சி என்ற மெட்டு பண் - இசைந்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை ப. செருக்கேனோ - சிறுதகை மாந்தனே உ.1 சுருக்கிய நாளிலும் சோர்பிணி யூறு சூழ்கடல் மீனுறும் ஆண்டில்ஐந் நூறு பெருக்கம் ஐயாயிரம் பெறும்மரம் தேறு பெரியவன் நானென்று பேசல்எவ் வாறு? (செருக்) 2 கோழி புறாவொடு குருவிகள் கிள்ளை கொத்தினும் ஊண்கெடல் சற்றுமே இல்லை நாளுமே குளிப்பினும் நன்குமூ வெல்லை நம்பியும் தொடுவது நலங்கெடும் ஒல்லை (செருக்) 3 ஈக்களின் எச்சிலும் இனியசெந் தேனாம் எறும்புறும் பதனீரும் ஏற்றது தானாம் மாக்களில் நாயும்வாய் மடுத்தது தீனாம் மாந்தனின் கைபடின் மறுப்பதும் ஏனாம் (செருக்) 4 ஆவிடு சாணமும் அணிமனை மெழுக்கு அதன்சிறு நீருமே அரிவையர் விழுக்கு கோவிலில் தெய்வமும் கோவைந்து முழுக்கு குலவனின் வியர்வையும் குலவறும் அழுக்கு (செருக்) 5 நன்றியறி வுடைமை நாயில் அமைத்தான் நல்லொழுங் கைஅணி செல்லெறும் புய்த்தான் கன்றிய மானமும் கவரியில் வைத்தான் கரைந்துற வாடலைக் காக்கையில் தைத்தான் (செருக்) 276. பொங்கல் திருப்பரங்கிரிவாசா என்ற மெட்டு ப. தமிழனுக் கொருதிருநாள் - பெருந் தைப்பொங்கல் என வருநாள். உ.1 அமுதமும் புதிரியும் அடுகலம் பொங்கும் அழகிய கோலங்கள் அறிவொடு தங்கும் கமுகமும் வாழையும் கன்னலும் தெங்கும் காய்தரு நெல்லொடு காண்வரும் எங்கும் (தமிழனுக்) 2 மங்கையர் கூந்தலில் மலரும்பே ரரும்பு மகிழுறு சிறுமகார் வாயெல்லாம் கரும்பு பொங்கலிற் பலவகை பொலிந்திடும் பரும்பு புலவர்செந் தமிழ்செவிப் புலனுற விரும்பு (தமிழனுக்) 3 கண்டகம் நிறைந்திடக் கறவைகள் கறக்கும் கண்ணுப்பீ ளைவேம்பு கருதவே சிறக்கும் மண்டுறு பசியென வழங்குசொல் மறக்கும் மருவுதை பிறந்திடின் வழியது திறக்கும் (தமிழனுக்) 4 முல்லையில் மதமிக முழங்கும்கொல் லேறு முதுகுடி மறவரும் முன்னுவர் வீறு தொல்லைநல் வழக்கமே துணையுறு பேறு தூய தமிழர்விழா துணிந்திது கூறு (தமிழனுக்) 5 இரப்பவர் அரையிலும் இருக்கும்புத் தாடை எழிலுறு கணிகையர் ஏறுவர் மேடை பரப்பியே வரும்வளி பசுமஞ்சள் வாடை பரிந்தெடு நோன்புநூல் படிமையின் சாடை (தமிழனுக்) 277. எறும்பின் ஏற்றம் இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் என்ற மெட்டு 1 சிற்றுயி ரானநற் சிற்றெறும்பே செவியுங்கண் ணும்உனக் கில்லையென்பார் கற்றது நீஎந்தக் கல்லூரியில் கலைஞரும் நாணியே தலைவணங்க. 2 ஒற்றரை முன்னுற உய்த்தறிந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்துசென்று உற்ற பொருள்கொள்ள ஒற்றுமையாய் ஓத்துழைக் கும்மிக உன்இனமே. 3 மாரிநாட்கு முன்னே சேர்த்துவைத்து மற்றதை அன்றன்று வாய்மடுத்து பேரும் பெரும்பொருள் சேரத்தள்ளும் பெருந்திறல் உன்இனம் பெற்றுள்ளதே. 4 செல்லும் வரிசையைச் சிதைத்து விட்டால் சிறிதுநே ரத்திலே சேர்ந்துகொண்டு நல்ல படியாக நாயகன்சொல் நாடிக் கடைப்பிடித் தோடிவிடும். 5 ஏனை வளைகளில் வாழ்கின்றவும் ஏனை யெறும்பினம் ஆனவையும் தானான நேர்ச்சியாய்ச் சார்ந்திடினும் சண்டை பெரும்பாலும் இன்றிச்செல்லும். 6 சோம்பி யிராதென்றும் சுற்றிவந்து சுறுசுறுப் பாகத்தம் கடமைசெய்து தேம்பாகும் கூடிய வேறெறும்பும் தின்ன அன்புகொள்ளும் உன்இனமே. 7 எறும்பு வீழ்ந்தபொருள் ஏற்றே யுண்டால் எய்துவர் கூரிய பார்வை யென்பார் இறும்பூதாம் உன்அகக் கண்வலிமை எய்துவர் என்பதோ உட்கருத்தே. 8 உயிரினத் துள்மாந்தன் உயர்ந்தவனாம் ஒருசிலர் மாந்தருள் உயர்ந்தவராம் அயர்ந்துமதம் அறிவியல் ஆற்றலினால் அணுவுந் தீங்கில்லாமை அறிவுரைப்பாய். 277. கும்மிப் பாட்டு அன்புடைய தோழியரே என்ற மெட்டு பண் - காப்பி தாளம் - முன்னை ப. கும்மியடிப் போம்நாம் இன்றே கூடிவாரும் கும்மாள மாகவே எல்லீரும். (கும்மி) உ.1 வட்டமாய் நின்றுபின்னே வலமாகச் சுற்றிவந்து கொட்டிக் கைகள் இடைக்குறுக்கே வைப்போம். (கும்மி) 2 ஆடிவரும் மயில்போல் அழகாய் அடியெடுத்துப் பாடிக் கொண்டின்பமாய்ப் பலமுறையும். (கும்மி) 3 தேனார் மணங்கமழும் தென்றல் நுகர்ந்துகொண்டு மானேர் விழிகளும் மகிழ்கூட. (கும்மி) 4 உள்ளம் ஒடுங்கிநிற்க ஒருபெருங் கடவுளைக் கள்ள மில்லாமலே கைதொழுவோம் (கும்மி) 5 தாயுந்தந்தை யரசும் தனிமொழி யானதமிழ்த் தாயுந் தழைக்கவே நீடூழி. (கும்மி) 279. கோலாட்டப் பாட்டு ராரவேணுகோஒ பாலா என்ற தாளவிசை மெட்டு பண் - பிலகரி தாளம் - முன்னை ப. ஆடுவோம் கோலாட்டம்வாரும் ஆடகர் அனைவரும் புகழ்ந்திடவே து.g.1 கூடிவண்ணக் கோலெடுத்துக் கோலமாக நின்றியங்கிப் பாடி யின்பமாய் இணைதேடியே சென்று வழி மீளவந்து வலமிடம் நெடுகப் பலமுறைதிருமி நலவொலி யடிகொள. (ஆடு) 2 பொலங்கல் வளையல் சிலம்புடனே பலவகை யணிகளும் கலகலெனச் சலங்கை கொஞ்சக் கடிகையென ஒலியிரட்டிச் சலசலசலவென (ஆடு) 3 கால்வலிமையும் கைவலிமையும் மேல்வலிமையும் உண்டாகும் ஞாலம்நெடிது வாழநலமும் சாலமகிழ்வும் நன்றாகும் கேளிரு பெற்றோரும் கேளென வுற்றோரும் சீரிய மற்றோரும் கெழுதகையாய் களிமிகுவர் கிளர்தரு திருவருள் துணையுடன் (ஆடு) 280. கற்புடைப் பெண்ணே நற்பெரும்பேறு உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே என்ற மெட்டு ப. பெண்மணியிற் சிறந்ததொரு பேறும் இங்குண்டோ உ. 1 மண்முழுதும் ஆளும்பெரு மாண்பு பெற்றாலும் மனையாளுங் குலமகட்கே தினையும் ஈடாமோ. (பெண்) 2 தன்னையேதான் காத்துப்பின்தன் தலைவனைப் பேணித் தகைசான்ற வுரைகாத்துத் தளர்ச்சியுறாத (பெண்) 3 புகழ்விரும்பும் மனைவியுளம் பொருந்தி வரினே இகழ்வார்முன் பெருமைபெறும் ஏற்றுநடையே (பெண்) 4 திண்ணமுறுங் கற்பரசி தீந்தமிழ் பேசித் திறமாகக் குழந்தைகளைத் தேற்றி வளர்த்தால் (பெண்) 5 வள்ளுவரே தெள்ளியுரை வாய்மொழி யீது எள்ளாமல் இவ்வுலகில் இன்பம் பெறுவீர். (பெண்) 281. உழவன் உயர்வு சயசயகோ குலபால என்ற மெட்டு பண் - பைரவி தாளம் - ஈரொற்று ப. உழவன் எங்கும் உயர்ந்தோனே உலகருத்தும் உணவோனே தளராதே உழைப்போனே தனியுரிமை உடையோனே. உ.1 விருந்தோம்பும் வேளாண்மை வியனுலகில் மரபாகும் மருந்தாகி நடுவூருள் மருவும்நல்ல மரமாகும் (உழவன்) 2 ஐம்புலத்தும் இல்வாழ்வார் அனைவருக்கும் அளித்துதவி ஐந்நிலத்தும் பொருள்மாற்றே ஆற்றும் கூட்டுறவாளி (உழவன்) 3 அந்தணரின் அருந்துறவும் அரசினரின் ஆள்வினையும் வந்தபொருள் வாணிகமும் வளர்அறிவும் தான்வனையும் (உழவன்) 282. மக்கள்தொகை மிகையால் தொல்லை பண் - காப்பி தாளம் - முன்னை ப. இனிநல்ல காலமே இல்லை - மக்கள் இனப்பெருக் கால்மிக எய்துவர் தொல்லை உ.1 கனிதருஞ் சோலையும் கழனியும் ஒல்லை கரந்து நகர்விரிவு காணுவ இல்லை இனிதெனப் பாலையுந் திருந்திய எல்லை இடம்பல வுணவுகள் விளைவதற் கில்லை (இனி) 2 நாவலந் தேயமே நாற்பானைங் கோடி நானிலம் முழுவதும் நானூறு கோடி தாவுமன் பதைத்தொகை தகுதிமேற் கூடி தடுக்காவிடின் இடுக்கண் அடுக்குவ கோடி (இனி) 3 பக்கத்து நாட்டினர் படர்ந்திங்கு மிகுந்தார் பாக்கித்தான் திபேத்தரும் சேர்க்கவே புகுந்தார் அக்கரை நிலத்தமிழ் மக்கள்மீண் டுவந்தார் அனைவர்க்கும் ஆண்டுதொறும் பிள்ளைகள் பிறந்தார் (இனி) 4 கல்லூரி யில்இடம் கற்கவும் இல்லை கற்றபின் வேலையும் பெற்றிடற் கில்லை எல்லாரும் வாழவே எதுவு மில்லை இட்டிய வுரிமையும் விட்டிடும் எல்லை (இனி) 5 உணவிற்கு வந்ததே ஒருபெருந் தட்டு உடமையும் பலவகை உற்றது முட்டு இனவுணர் வால்எங்கும் எழுந்தது கட்டு இறந்திடும் போர்வரின் எல்லாமே பட்டு. (இனி) 283. மணமக்கள் வாழ்த்து பண் - சிந்து பைரவி தாளம் - முந்து ப. மங்கலம் நீடியே மணமக்கள் வாழி நன்பொருள் கூடியே நலமே நீடூழி து. ப. எங்கணும் நிறைகின்ற இறைவனை நாடி இல்லறம் தரும்பல இன்பங்கொண் டாடி (மங்கலம்) உ திங்களின் வழியெனும் தென்னவன் சார்ந்த தீந்தமிழ் உலகினில் தெருவெலாம் முழங்க வங்கநற் கலமென வாழ்வினில் நீந்த வள்ளுவன் பொதுமறை வழிவழி வழங்க (மங்கலம்) 284. தமிழ் வாழ்த்து பண் - (காப்பி) தாளம் - ஒற்றை ப. வாழிய வேங்கடந் தென்குமரி வைகிய ஆயிடைச் செந்தமிழே உ. வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே வேறுபல் நூல்தமிழ் வீறுகவே ஏழிசை நாடகம் எல்லாம் தமிழ்ஆக இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக இந்தியும் செல்லுக வந்தவழி. 285. தமிழர் வாழ்த்து பண் - கலியாணி தாளம் - முன்னை ப. செந்தமிழ் மக்கள் எங்கும் சீராய் நீடு வாழிய. து. ப. முந்துபண்பாடு கண்ட முத்தமிழோர் வாழிய (செந்) உ. எந்தவூருஞ் சொந்தவூர் எல்லாரும் நல்லினம் ஏத்தும் கடவுள்ஒன்றே என்னும் நல்லோர்வாழிய (செந்) 286. தமிழ்நாட்டு வாழ்த்து வாழ்க அந்தணர் என்ற மெட்டு பண் - நாட்டை தாளம் - முன்னை 1 வாழ்க தமிழகம் வழங்க உரிமைகள் வீழ்க நன்மழை விளைக நிலமெலாம் ஆழ்க அறிவியல் அமைக நன்பொறி சூழ்க நண்பெனச் சுலவு நாடுகள். 2 பல்கு ழுச்செரு பாழ்செ யுட்பகை கொல்கு றும்பொடு குலங்கள் ஒழியவே கல்வி பரவுக கலைகள் வளருக செல்வம் பல்வகை செறிக எங்கணும். 3 பசியும் பிணியும்வன் பாடும் வறுமையும் நசிய முழுவதும் நல்ல ஆட்சியால் கசியும் அன்பொடு கருதும் அறவினை வசிய மாம்பெரு வண்மை நண்ணவே. 4 உழவு கைத்தொழில் ஓங்க வணிகமும் விழவு மேம்பட விஞ்ச இன்பமும் முழவுத் தோள்வலம் முதிர்க மறவரே குழவுத் தன்மையைக் கொள்க துறவியர். 5 புரியுந் தொழிலெலாம் பொறியி னாகுக பரியுங் காளையும் பாடு நீங்குக பெரிய குடும்பமாய்ப் பிறங்கு முலகிலே பிரியுந் தமிழகம் பெருமான் அருளவே. 287. இந்திய ஒன்றிய வாழ்த்து ஜனகணமன என்ற மெட்டு 1 இந்திய ஒன்றியம் இலகியே வாழி ஏதமில் லாதுநீ டூழி தென்றிசைக் குமரிமு னைமுக முதலே வடதிசைப் பனிமலை வரையும் தங்கிய பலமுத் தரமுள நாடும் தழுவிய மதக்கோட் பாடும் நிறமொழி யுடைநடை யூணும் திறமிகு குலமும்வே றேனும் இனமெலாம் ஒருவகை காணும் இந்திய ஒன்றியம் இலகியே வாழி ஏதமில் லாதுநீ டூழி இலகே இலகே இலகே இலகியே நிலவுக வே. 2 இந்திய ஒன்றியம் உலகமே நிலவ இலகிய கதிரென நிலவ கீழையர் முழுவதும் கீழைய ரல்லர் மேலையர் மேலைய ரல்லர் அறிவியல் துறையதில் பெரியவர் குடவர் ஆவியின் வளர்ச்சியில் குணவர் அணுவியற் குண்டுகள் நன்றோ அழிபகை அஃறிணை யன்றோ இழிதகை ஒழிகவே இன்றே எங்கணும் ஒருவனே இறைவனென் றெண்ணி இன்புறு தமிழியல் நண்ணி இலகே இலகே இலகே இந்திய ஒன்றியமே. 288. ஒன்றிய பன்னாட்டின வாழ்த்து மங்களஞ் செழிக்கக் கிருபையருளும் என்ற மெட்டு ப. பாரிலே ஒன்றிய பன்னாட்டினம் நெடும் பல்லாண்டு வாழவே. அ.1 சேரவெல்லா நாடும் ஒன்றாகவே செற்றமில் லாமலே ஒற்றுமையாய் ஓர்இனம் எனவே உலக ஆட்சிபெற்றுச் சீரிய அமைதி செம்மையாய் நிலைக்கத் தீய வணுக்குண்டு தேரும் பயிற்சிகள் தீரவும் ஒழியவே. (பாரிலே) 2 எப்பொழு தும்இரு நாட்டிடையே சச்சரவு வழக்கொன் றிருந்தால் தப்பித மாகவே தருக்கிப் போரிடாமல் செப்ப மாகப்பிறர் தக்க நடுத்தீர்ப்புச் செப்பிய முறையில் ஒப்புரவாகியே உட்பகை தீரவே. (பாரிலே) 289. உலக வாழ்த்து எங்கிருந்தாலும் வாழ்க என்ற மெட்டு ப. வாழ்க! வாழ்க! வையகத் தாரெலாம் வாழ்க! து.g. கீழையர் மேலையர் வாழ்க! - சீர் கிளர்பல நாடரும் வாழ்க! ஏழையர் மாழையர் வாழ்க! - நேர் எந்நிறத் தாருமே வாழ்க! (வாழ்க) உ.1 பரவெளி சுற்றிப் பறந்து படுகுழிச் சுரங்கப் பணிசெய் தாலும் இரவினில் கருங்கடல் தனித்திருந் தாலும் ஏதமில் லாமலே வாழ்க! (வாழ்க) 2 மொழிவெறி குலவெறி மதவெறி யெல்லாம் முற்றிய நாட்டு வெறியுடன் நீங்கி வழிபடு கடவுள் ஒன்றே யென்றதை வணங்கியே யாவரும் வாழ்க! (வாழ்க) 3 பசிபிணி பகையே பறந்திட வேண்டும் பாரெலாம் ஓரர சாகவே வேண்டும் பாழ்வெடிப் பயிற்சி நீங்கவே வேண்டும் பண்புடன் அமைதியும் வாழ்க! (வாழ்க) 290. பண்டைத் தமிழுணர்ச்சி (இசைந்த மெட்டிற் பாடுக.) ப. தமிழுணர்ச்சி யாலே எல்லாம் தாங்கினமுன் தமிழ்ப் பெயரே அமரர் சூழ்ச்சியாலே பின்னே அயற் பொருளெல்லாம் பிற பெயரே. (உரைப்பாட்டு) கரும்பு மிளகாய் உருளைக்கிழங்கு நீலக் கடலை புகையிலை முந்திரிசெந் தாழை கதலிச்சி அண்டிமா இதள் கிள்ளை விரும்பு குதிரை நெடுங்கழுத்தல் வான்கோழி விரையும் புகைவண்டி மிதிவண்டி முதலியன வேற்றுப் பொருட்பேர் தமிழ்ச்சொல்லே செந்தாழை - அன்னாச்சி. கதலிச்சி - கர்ப்பூரம் அண்டிமா - மரமுந்திரி. இதள் - பாதரசம். கிள்ளை - சாதிபத்திரி. நெடுகழுத்தல் - ஒட்டகம் 291. செந்தமிழ் அரண் அதன் செம்மையே பண் - பூரிகலியாணி தாளம் - முன்னை ப. செந்தமிழைக் காத்தது செம்மையென்னும் வரம்பே து.g. முந்தே பாண்டியரும் மூடநம்பிக் கையால் பிந்திய காலம் பேணாது விட்டபின்பே (செந்) உ. தந்தைதாய் மனையொடு தம்மை விற்குங் கயவர் தமிழ்ப்பெரும் பதவிகள் தாங்கி யுள்ளனர் இன்றே இந்தநாள் கலவையாய் இயங்கும் மொழியே தமிழ் என்றதன் அரணை எறிவர் பண்டைய தென்றே (செந்) 292. தமிழின் செம்மையும் தூய்மையும் என் உயிர் தவப்பயன் அம்மையே அப்பா என்ற மெட்டு உரைப்பாட்டு செந்தமிழ்ச் சிறப்பியல் செம்மைசேர் தூய்மை சீரியவுலக மொழிகளுள் முந்திய தமிழுயிர் செம்மைசேர் தூய்மை முக்கழ கங்களால் மும்மை நந்திய தென்றமிழ்ச் செம்மைசேர் தூய்மை நாகர மொழியால் நைந்தே வந்துள திந்தியால் உள்ளதும் நீங்கின் வையகமே தமிழ் இல்லை. ப. எந்து செய்தாயினும் இன்னுயிர்த் தமிழை இன்னே காப்பேன்நான் என்மொழியை இன்னே காப்பேன் நான். 293. தமிழைக் கெடுக்கும் இருமொழிகள் சாலையிலே இரண்டுமரம் என்ற மெட்டு வகை ப. இந்தியாவில் இரண்டு மொழி எந்தமிழைக் கொல்லும் மொழி முந்தி வந்த வடமொழியோ டின்று வரும் இந்தி மொழி. உ. 1 செந்தமிழில் வழிபடுக சிவன் திருமால் தமிழ்த் தெய்வம் செயற்கையான வடமொழியே சென்றுவிட வழிசெய்வம் (இந்தியா) 2 ïªâah®¡F ehkoik ba‹WtU« ïªâ Æ‹nw ɪâa¤â‹ tlkU§nf ÉiuªJ nru cªJ e‹nw.(ïªâah) 3 ஆரியத்துள் செந்தமிழ்க்கே அண்ணியதும் ஆங்கிலமே சீரியநல் லறிவுபெற்றுச் செழித்ததனால் ஓங்குவமே. (இந்தியா) 294. இந்தியெதிர்ப்பார் எதிர்க்கட்சியார் என்னும் பேதைமை பண் - காம்போதி தாளம் - முன்னை ப. என்ன பேதைமை! இந்தியை எதிர்ப்பார் எதிர்க்கட்சி யென்கை. து.g. கண்ணை மூடிக்கொண்டே காரிருளே யெல்லாம் என்னும் பூனையெண்ணம் இதைவிட நன்கே. (என்ன) உ.1 முன்னே மறைமலையார் முதலாய் இந்தியை முத்தமிழ் முனைவர் முனைந்தே யெதிர்த்தார். இன்னே புலவோரை இந்தியை எதிர்த்தால் ஏற்றவேலை நீங்கும் என்றே எச்சரித்தார் (என்ன) 2 தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப்புலவர் தமிழை முன் காத்தல் தலையாய கடமை இலையெம் பணியே யிந்தியை யெதிர்த்தல் இது தி.மு.க. வே எனவுண்டோ இடமே (என்ன) 295. மதுரை அறுவாட் படுகொலை பண் - புன்னாகவராளி தாளம் - முன்னை ப. இது காந்தியமா? படு காலியமா? உ.1 கயற்கண்ணி யாண்ட மதுரையிலே கயற்கொடி பறந்த மறுகினிலே குயக்கொண்டான் சாகப் பகல்வலிமைக் குலத்தமிழ்க் கீரன் நகரினிலே (இது) 2 பாண்டியன் பைந்தமிழ்ப் பாடல்களே ஈண்டிய மாடக் கூடலிலே மூண்டிரு சமயப் போர்முனையில் முழுதும் தமிழ்வெல் லூர்தனிலே (இது) 3 பேரா யத்தின் அலுவலகம் பெருந்தமிழ்ப் பற்றைக் கொலுங்கழகம் தூராய்க் கொள்ளும் நெறிமுறையாம் துன்புறுத் தாமை கடுஞ்சிறையாம் (இது) 4 அமைதியாய்ச் சென்ற மாணவரை அறுவாள் வெட்டே ஆனவரை இமையவ ருங்கண் இமைத்தபுரை இறவாப் பழியுல கிறுதிவரை. (இது) 5 தமிழர் என்னும் பெரும்பெயரைத் தாங்கித்திரியும் உருவங்காள்! இமிழ்கடல் பொங்கி எச்சரித்தும் இன்னும் உணரா நன்மரங்காள். (இது) படுகாலி - படுக்காளி 296. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் கூடி மருந்தரைப்போம் என்ற மெட்டு ப. இதுவே விடுதலைப் போர் - இந்தியை இந்நாட்டில் ஒழித்தேதீர் - ஏ தமிழா! 1 ஆங்கிலர் ஆட்சிமுன் நீங்கி அடைந்தனர் விடுதலை வடவர் ஈங்குநாம் விடுதலை வேண்டின் இந்தியை ஒழித்திட வேண்டும், வேண்டும் (இதுவே) 2 இருமொழித் திட்டமே இனிமேல் இந்நிலம் நிலவுற வேண்டும் அருகிய வாழ்நாள் யாண்டும் அறிவியல் கற்றிடவேண்டும், வேண்டும் (இதுவே) 3 மந்திரிப் பதவியை வேண்டி இந்தியைப் புகுத்தி ஈண்டும் செந்தமிழ்க் கேகுழி தோண்டும் மந்திகள் ஒழியவேண்டும், வேண்டும் (இதுவே) 296. தொண்டர்படைப் பணி (இசைந்த மெட்டிற் பாடுக) நட்ட கல்லைத் தெய்வ மென்று என்னும் செய்யுளோசை. 1 தொண்டர் கள்தி ரண்டு சென்று கண்ட வூரை யண்டுவீர் தண்ட மிழ்த்தி றங்கள் நன்று விண்டு ரைகள் செய்குவீர் இந்தி யிங்கு வந்த பின்னே என்ன தீங்கு நேர்ந்திடும் என்று மக்கள் கண்டு கொள்ள நன்றெ டுத்துக் கூறுவீர். 2 நூற்று மேனி எண்ப தாகு மாக்க ளின்று தாமெதும் ஏட்டை யேபா ராது கையை நாட்டு கின்றோ ராதலால் கூட்டி நல்ல கொள்கை யென்று கேட்கு மாறு கூறுவர் வேற்ற வர்தம் இந்தி செய்யும் கேட்டை நன்று காணவே. 3 பட்டி னங்கள் மாநகர்கள் பாக்கம் எங்கும் செல்லுவீர் விட்டி ருக்கும் விடுமுறைகள் வேண்டு நன்மை கொள்ளுவீர் பட்டி தொட்டி யெங்கும் சென்று பற்ப லர்க்குஞ் சொல்லுவீர் பட்ட தொல்லை பற்றி யூக்கம் விட்டி டாது தெள்ளுவீர். 298. தீக்குளித்த வேறு நால்வர் பண் - நாதநாமக்கிரியை தாளம் - முன்னை ப தீக்குளித்தே யிறந்தார் - நால்வரும் பின் து. ப. 1 தீக்கெம தூனுடல் தீந்தமிழ்க் கின்னுயிர் ஆக்கினம் எனச்சிவ லிங்கம் அரங்கநாதன் (தீக்) 2 ஐயம்பா ளையத்தலை ஆசறும் வீரப்பன் வையகம் தமிழ்கெட வாழ்வதை வெறுத்துப்பின் (தீக்) 3 சத்திய மங்கலம் சார்ந்த தமிழ்உழவர் முத்தெனும் பெயரிய முத்துறழும் மழவர் (தீக்) உ சுற்றமும் நண்பரும் சூழ்தமிழ் வாணரும் எற்றென இரங்கியே என்றென்றும் அலறவும் சற்றுமே இரக்கமும் சார்புமில் விலங்கினர் பித்தமோ வறுமையோ பிணியோ என்றுளறவும் (தீக்) 299. தீக்குளித்தல் ஆண்மை யன்று பண் - பந்துவராளி தாளம் - முன்னை ப. தீக்குளிக் காதீர் தீந்தமிழ்த் திறமே தீழ்ப்புறும் அதனால் தென்றமிழ் மறமே து.g. தாக்கிய இந்தி தகர்ந்துபோம் புறமே தம்பிரான் அருளால் தமிழ்வெற்றி பெறுமே (தீக்) உ.1 வீணாக எரியிலே வெந்துநீர் சாவதால் விரும்பிய பயனின்றி விளைவது நோவதே மாணாக வெல்வழி மறத்துறை போவதே மதிதகு புகழ்தரும் மகிழுவர் தேவரும் (தீக்) 300. புத்திரசிகாமணி பண் - வசந்தா தாளம் - முன்னை ப. புத்திர சிகாமணி புரிந்தது மாபணி. து.g. சித்திர வாகையணி செயஅவற் கேயினி (புத்திர) உ. முத்தமிழைக் காக்கவே முனைந்தவூர் காவலன் முதலமைச் சின்மிஞ்சும் முதுகுடி மாவலன் இத்தரையில் இந்தியே ஒழிகெனும் நாவலன் இதைவலி யுறுத்தியே இருகுண்டும் ஏவலன். 301. இற்றைத் தமிழன் இழிநிலை எம்டன் போட்ட குண்டு என்ற மெட்டு ப. தமிழைச் சுட்டுக் கொல்ல - ஓ தமிழன் கெட்டான் சொல்ல உ.1 ஊர்காவல் துறையில்தான் ஊழியம் செய்தாலும் சீராளன் தாய்மொழியைச் சிதையானே ஒருகாலும் (தமிழைச்) 2 தாயையுங் கொன்றொருவன் தாமரைப் பொன்பெறினும் மாயாமல் இந்நிலத்தே மருவும்நிலை தான்வருமோ (தமிழைச்) 3 ஒழுங்கமைதி காப்பதன்றோ ஊர்காவற் கடமை யெல்லாம் ஒழுங்கின்றி முதல்வரையும் உட்புகுந்தே அடித்த தென்னே(தமிழைச்) 4 மாணவரே இந்நிலையில் மாண்பான தமிழ்மறவர் நாணமின்றி அவரையின்று நாகரெனக் கொலைபுரிவர் (தமிழைச்) 5 வன்செயல்கள் செய்ததற்கு வண்மதுரைப் படுகொலையே முன்செயலாய்த் தூண்டியது முதிர்வித்ததும் சுடுகொலையே (தமிழைச்) 6 இந்தியை யெதிர்ப்பதெல்லாம் இன்றமிழைக் காப்பதுடன் முந்திய அடிமைத்தனம் மூளாமல் தீர்ப்பதற்கே (தமிழைச்) 302. இந்திப்போராட்டத்தில் இறந்தவர்க்கு அமைதி பண் - காப்பி தாளம் - ஒற்றை ப. அமைதி அமைதி அமைதி அமைதி உ.1 அண்ணா மலையார் நகரில் சுட்ட அரசேந் திரனின் ஆவி அடைக (அமைதி) 2 மதுரைக் கயவர் மடவாள் வெட்டால் மாய்ந்த தமிழ மணியும் அடைக (அமைதி) 3 எரிகை சுடுகை இரண்டால் இறந்த ஏனோர் ஆவி எல்லாம் அடைக (அமைதி) 303. மாணவர்க்கு அறிவுரை கைராட்டினமே என்ற மெட்டு ப. இளமாணவரே இது காணு விரே. உ.1 ஆங்கிலந்தான் இங்கிருந்தே நீங்கியபின் - மேல் ஓங்குவ தில்லாமலே பின் வாங்கிடுவோம். (இள) 2 இந்தி யிங்கே ஆட்சிசெய வந்த பின் நாம் - இனி என்றுமே அடிமையராய் இருந்திடுவோம். (இள) 3 இன்றிருந்து நாளை மாளும் மந்திரிமார் - தான் என்சொலினும் வாய்மொழியை நம்ப வேண்டாம் (இள) 4 ஆங்கிலமே ஆட்சிமொழி யாகும்வரை - நீர் ஆன்றமுறை வேண்டுவீரே ஆண்டவனை. (இள) 304. குடியரசு குடிகளின் அரசு சுயராசியம் அதிகத் தூரமில்லை என்ற மெட்டு வகை ப. குடியர சென்பது குடிகளின் அரசே குடியுரி மைதருங் கொடை முரசே. து.ப. தடியடி யரசும் தற்கொலை விரசும் சுடுகொலை யரசும் கொடுவரசே. (குடி) 305. மங்களம் `நீநாமரூப முலகு என்ற மெட்டு பண் - சௌராட்டிரம் தாளம் - முன்னை ப. எல்லாரும் இன்பமுறவே இறைவ னருளால் மங்களம் து.ப. பொல்லாப் பகையும் பசியும் பிணியும் இல்லாமல் எங்கும் நன்கனம். (எல்லாரும்) பாட்டு முதற்குறிப் பகரவரிசை எண் பக்கத்தைக் குறிக்கும் அடியார் 97 அண்ணனுக்கும் 106 அண்ணாமலை 183 அத்திலீப் 125 அதிகாரம் 136 அந்தணர் 214 அமைதி 247 அயன்மொழி 65 அருமை 33 அன்பில்லாதார் 101 அன்பே 3 அன்றிருந்ததும் 129 ஆங்கில ஆட்சியே நீங்கிய 127 ஆங்கில ஆட்சியே நீங்கின 126 ஆங்கிலத்தை 103 ஆங்கிலந் 88 ஆங்கிலம் 201 ஆங்கிலமுந் 89 ஆசிரியருக் 153 ஆசிரியனே 196 ஆட்டுமந்தை 104 ஆட்பெயர் 81 ஆடுபாம்பே 178 ஆடுவோம் 231 ஆயிரம் 154 ஆராயின் 135 ஆரிய அடிமைத்தனம் 114 ஆரியத்தமிழ் 132 ஆரியர் 200 ஆரியம்நன்று 41 ஆரியருக் 41 ஆரியம் பிராமணியம் 119 ஆரியவேடரின் 51 ஆறுமுகம் 226 ஆனையும் 91 இங்கே 92 இங்ஙனம் 140 இசையினும் 4 இணையாமோ 21 இது காந்தியமா 242 இது வியப்ப 116 இதுவே 243 இதுவொரு 100 இதென்ன 203 இந்த நாளிற் 98 இந்த வுலகத் 14 இந்த வுலகினில் 42 இந்திக்கும் 148 இந்தி மொழியினால் 156 இந்திய ஒன்றியம் 237 இந்திய வரலாற்றை 197 இந்திய விடுதலை 126 இந்தியா ஒரே 154 இந்தியாசிரியர்க் 170 இந்தியார்க்கும் 169 இந்தியால் 155 இந்தியாவில் 241 இந்தியாவிற் 131 இந்தியாவின் 91 இந்தியாவின் முந்து 135 இந்தியை எதிர்த்து 171 இந்தியை எதிர்ப்பவர் 152 இந்தியை ஏன் 172 இந்தியைப் புகுத்திட 150 இந்துதேச 151 இந்துமதம் 57 இந்நாட்டு 161 இம்மியுந் 102 இரு கண்ணான 144 இருப்பதெல்லாம் 143 இருமொழிக் 157 இலக்கணமே 95 இளமாணவரே 247 இறைவா 3 இன்னிசை ஆ இன்னுந் 115 இன்னே 166 இனி ஒருபோதும் 71 இனி நல்ல 233 உண்மைத் 190 உயர்திணை 215 உலகம் 2 உழவன் 233 உள்ளக் 72 உனக்குக் 105 எங்கும் 2 எண்ணிற் 11 எத்தனை 113 எத்திறம் 44 எந்தக் கட்சியிலே 107 எந்த நாளுமே 108 எந்த வூருந் 209 எந்நாட்டிலுமே 73 எந்நாளுமே 15 எல்லா 78 எல்லாரும் 248 எழுங்கதிர் 49 என்றும் 120 என்றுமே 217 என்ன 241 என்னே 18 ஏதமே 112 ஏதுமே 110 ஏமாறி 109 ஏழையாயினேன் 161 ஏன் மாயமாலம் 124 ஏனிந்த 159 ஏனோ தானோ 147 ஒருமை 134 ஒன்றே குல 217 ஓங்கலிடை 1 ஔவையாரே 83 கட்டாய இந்தி 147 கடன் வாங்குவதால் 98 கண்கவர் 117 கண்ணீர் 140 கண்மணியே 211 கதிரவன் 5 கயற்கொடி 179 காணாத 181 காலையிலே 1 குகைத்திருக்குறட் 221 குடியரசென்பது 248 குடியாட்சி 130 கும்மியடிப் 230 குமரிநாடே 55 குமரிநிலத் ஆ குமரி மாமலை 9 குலமென்னுந் 82 குறடென் 123 குறள்மாமறை 21 குன்றத்தொளிர 225 கூவும் 61 கொடைமடம் 122 கோயில் 56 சட்டமிருப்பது 189 சாமிநாதையர் 202 சிலப்பதிகாரம் 23 சிற்றுயிரான 229 சிறந்த 93 சூத்திரன் 85 செங்கை 221 செந்தமிழ்க்குச் 222 செந்தமிழ்ச் சிறப்பியல் 240 செந்தமிழ்ச் சொல் 17 செந்தமிழ் நிலமே 28 செந்தமிழ் நிலம் 176 செந்தமிழ்ப் பாண்டி 77 செந்தமிழ் மக்கள் 235 செந்தமிழைக் 240 செய்யுள் 15 செருக்கேனோ 227 சேயரின் 26 சேர்ந்து 208 சேலங்கல்லூரி 218 சேலந்தமிழ்ப் 220 சைவசித்தாந்த 220 சொந்தமா 205 சொல்வதொன்று 150 சொன்னவண்ணஞ் 161 தகுதியில் 84 தகை வாடுகின்ற 213 தண்டமிழ்த்தாய் 173 தமிழ் என 66 தமிழ்த்தனிப் 224 தமிழ்நாட்டில் 199 தமிழ்நாடு 118 தமிழ்நாடென 111 தமிழ்ப்பாதுகாப்பு 223 தமிழ் வாழ்வது 63 தமிழகக் கல்வி 187 தமிழகத்திற் 188 தமிழப் பிராமணரைத் 121 தமிழர் 207 தமிழருக்கே 106 தமிழரே 38 தமிழன் இந்த 110 தமிழன் உயர் 61 தமிழன்போல் 116 தமிழன் விடுதலை 128 தமிழனே 76 தமிழனுக்கொரு 228 தமிழா உன்றன் 7 தமிழாசிரிய 72 தமிழிலே திருமணஞ் 59 தமிழிலே பேரைத் 69 தமிழினைப் 183 தமிழுணர்ச்சியாலே 239 தமிழைக்காட்டி 99 தமிழைச் சுட்டுக் 246 தமிழைப் பழிக்க 79 தமிழை மறைப்பதாலே 62 தயங்குவதேன் 185 தலைமைமொழி 200 தலையணையைத் 144 தவத்திரு 50 தன்மானமில்லாத 74 தன்மானமே 114 தன்னாலே 37 தனித்தமொழி 52 தனிநாடு 31 தாய்மொழிக் கல்வி 192 தாய்மொழித் 191 தாய்மொழிப் பகை 129 தாய்மொழிப் பற் 70 தாய்மொழிப் பற்றில்லாத் 80 தாய்மொழிமேல் 201 தாழ்ந்தவன் 86 தாழ்மை 124 தானாக 16 தானே தனக்குவமை 18 திங்களவன் 31 திட்டம் 132 திரு மதுரையில் 225 தீக்குளிக்காதீர் 245 தீக்குளித்தேயிறந்தார் 244 தீக்குளித்தேயிறந்தான் 164 தீயினுந்தீயது 165 துளசிதாசுங் 166 தூய தமிழ் 184 தென்பாலி முகத்தே 206 தென்பாலி முகமே 30 தென்மொழி 181 தென்னாடருய்ய 195 தேவரும் 137 தேவமொழியுந் 16 தொண்டர்கள் 244 தொன்மையொடு 13 நல்ல காலந் 177 நாகரிக 54 நாம் இந்தி 162 நாவலந் 54 நாவலம் எல்லாம் 43 நாவலம் பொழில் 93 நாவலனே 22 நாற்பது 36 நானிலத்தே 25 நானொரு 85 நீலநரிக் 109 நெஞ்சம் 142 நோயிருக்கையில் 49 பகுத்தறிவை 75 படையெடுக்கவே 175 பண்டையுலகில் 204 பண்பாடே 139 பல்கலைக்கழகமே 199 பலதிசையும் 216 பற்றொன்று 96 பாதிப்பேருங் 130 பார்ப்பார் 214 பாரில் முதல் 12 பாரிலே ஒன்றிய 238 பாரேயுயர் 160 பாவாணர் 223 பாழானதே 47 புத்திரசிகாமணி 246 புறப்படு 174 பெண்மணியிற் 232 பெரும்பான்மை 159 பேசு பாப்பா 212 பேசுமொழி 158 பேரிலுந்தமிழ் 19 பைந்தமிழ்த் 180 பைந்தமிழ்ப் 48 பைந்தமிழிற் 189 பொருளிலக்கணமே 20 பொதுமொழி 146 போடாதே 163 மங்கலம் 234 மணவாளராமானுசம் 200 மதுரை எழுத்தாளர் 222 மதுரைந 226 மறவாதே 87 மறைமலையடிகள் 87 மறைமலையடிகளும் அ மறைமலையார் 186 மாணவரே 173 மாந்தனெனக் 8 மாநிலத்தில் 46 மாவலி 45 மாறிவிட்டாரே 137 முத்தமிழ் 23 முத்திரு 59 முதல் தாய்மொழி 11 மு(ன்)னமே 183 முன்னே 66 முன்னேற்றமே 108 முன்னேறும் 60 முன்னும் 188 மூவேந்தரே 27 மொழியென்ப 52 மொழியென்னும் 145 வகுத்துரைப்பேன் 182 வடபாலுயர்ந்து 29 வடமொழி தமிழின 36 வடமொழியால் 40 வடமொழியாற் 39 வடமொழி வந்த 33 வடவரோடு 138 வண்ணனை 192 வழங்காத 64 வள்ளுவன் 178 வாழ்க தமிழகம் 235 வாழ்க வாழ்க 238 வாழிய தமிழ் 68 வாழிய வேங்கடந் 235 வாளைதவழ் 167 வீட்டவர் 118 வீட்டிற்குரிமை 198 வெண்பா 24