பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 35 செந்தமிழ்க் காஞ்சி ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப்பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 35 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1968 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 160 = 168 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 105/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிடமொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர் பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். 1 கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் செந்தமிழ்க்காஞ்சி உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு .v சான்றிதழ் .vii நூல் 1. தமிழ் வணக்கம் .5 2. தமிழ்த்தாய் .5 3. தமிழ் வாழ்த்து 6 4. செந்தமிழ்ச் சிறப்பு 7 5. தமிழின் பெருமை 7 6. தமிழ்நாடு 8 7. பழந்தமிழ்நாடு 10 8.jÄœ நூல்கள் 11 9. தமிழப் பார்ப்பனர்க்கு ஓர்வேண்டுகோள்... 12 10. ஆரியப் பார்ப்பனர் தமிழுக்குச்செய்தநன்மை... 12 11. கட்டாய இந்திக் கல்வியால் தமிழ்க்கு வருங்கேடு... 13 12. கட்டாயஇந்திக்கல்வியின்அநியாயம் ... 15 13. தமிழின் இன்றியமையாமை 15 14. தமிழ் அரசியல் மொழியானதால்தான் தமிழ்நாட்டிக்குச் சுயவரசாகும் 16 15. தமிழற்ற வரசு தன்னரசோ? . 17 16. தமிழரின் அடிமைத்தன்மை 17 17. ஜாதிப் பிரிவினையால்தமிழுக்குவந்தகேடு ... 18 18. தமிழ்த்தொண்டர் படையின்வஞ்சிநடைப்பதம்...19 19. தமிழுக்கும் உறிஞ்சிருக்கும்உள்ளதாரதம்மியம்...20 20. இந்திக்குப் பிறபாஷையார் இணக்கம் 21 21. சமகிருத நூல்களைப் பயன்படுத்தும்விதம்... 22 22. இந்திய பலதேசம் சேர்ந்த ஒரு சிறுகண்ட«... 22 23. இந்தியர்க்குஇன்றியமையாதமூன்றுபாஷை...23 24. தமிழர்க்குக் கட்டாயஇந்திக்கல்Éவேண்டாk... 23 25. அழிந்துபோனதமிழ்நூல்களும்கலைகளும்...24 26. சங்ககாலச் சமுதாய நிலை...26 27. ஆரிய திராவிட வருணபேதம் 27 28. தமிழ்ப்பண்டிதர் தமிழைக்காக்கஅஞ்சுதல் ... 28 29. ஜாதி வித்தியாசம் மனிதன்கட்டுப்பாL... 28 30. தமிழ்ப் பண்டிதர்களேதமிழுக்குஅதிகாரிகள்... 29 31. ஒரு பாஷையால்ஒற்றுமையுண்டாகாk... 30 32. தாய்மொழியில் அரசே நன்னரசு... 30 33. இந்தியாவில் ஆறு மாகாணங்களில் இந்திப் பேச்சின்மை... 31 34.தமிழனைத்தட்டியெழுப்பல்... 31 35. தமிழ்நாட்டுப்பணத்தாšவடமொÊவளர்த்தš...32 36. திருச்சிமதுர«டாக்டர்குருமருந்துகËன்குzம் ... 33 பாவாணர்வாழ்க்கை¢சுவடுகள் ... 156 குறுக்க விளக்கம் ப. - பல்லவி து.ப. - துணைப்பல்லவி உ. - உருவடி (சரணம்) ப.எ. - பல்லவி எடுப்பு 1. தமிழ் வணக்கம் கஜமுகவதனா என்ற மெட்டு பல்லவி அருந்தமி ழனையே!அரவணை baனையே திUªj¿ வினையே தினமருள் துணையே. சரணம் மருந்துறழ் மானே! மகிழ்தரு தேனே! மலர்புரை யுனதடி மனந்தொழு தேனே (அருந்) 2. தமிழ்த்தாய் எமுனாகல்யாணி - ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே அயன்மொழி பயில்வதும் தமிழே அயன்மொழி நினைவதும் தமிழே குலமெனப் படுவதும் தமிழே கோவெனப் படுவதும் தமிழே நலமெனப் படுவதும் தமிழே நாடெனப் படுவதும் தமிழே தனிமொழி யானதும் தமிழே தாய்மொழி யானதும் தமிழே கனிமொழி யானதும் தமிழே கலைமொழி யானதும் தமிழே. 3. தமிழ் வாழ்த்து கற்பிற் சிறந்த எந்தன் கனியே என்ற மெட்டு முத்தமிழ் எனுந்திரு மொழியே பர வழியே புல விழியே கறும் பிழியே (முத்தமிழ்) இத்தரை தனிமுதல் இயற்கையி லெழுந்தே எழிலுந் திரவிடம் எனுங்குலக் கொழுந்தே முத்திற மொழிகளும் முகமுற விழுந்தே முக்கிய மாகவுனைப் போற்ற முடி யேற்ற பெரு வீற்ற பணி யாற்ற (முத்தமிழ்) ஏனைய மொழியினும் இலக்கண வரம்பே இருப்பதால் அமரர்க்கும் இன்சுவைக் கரும்பே நானில மொழிகளின் நடுவுறு நரம்பே நடுவாகப் பலமத குலமே நுகர் நலமே விளை நிலமே அருங் கலமே (முத்தமிழ்) ஓதுதற் கெளியவாய் உணர்வதற் கரிய உத்தம மறைபல உனக்கென உரிய வாதவூரர் மூவரே வலமைகள் புரிய வாய்த்ததோர் பெருந்திருப் படையே கவி நடையே செவி மடையே எனை யடையே (முத்தமிழ்) 4. செந்தமிழ்ச் சிறப்பு மருவே செறித்த' என்ற திருப்புகழ் மெட்டு தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற வ ண்ணம் தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன் மகவோரே கவலா திருந்து வௌமீ தெறிந்து கறையா னருந்த விடலானார் பனிலாரி வந்து பலகா லெழுந்து பலவா யிருந்த நினவாய கலைவாரி யிந்த நிலையாக விண்டு முலவா திருந்த கனியாளே! 5. தமிழின் பெருமை மாற்றறி யாத செழும்பசும் பொன்னே என்ற மெட்டு 1. தோற்ற மறிவராத் தொல்பெருந் தமிழே துணையொன்றும் வேண்டாத தூயசெந் தமிழே மாற்ற மெளியவாய் மன்னிய தமிழே மறைந்த லெமூரியா நிறைந்தசெந் தமிழே போற்று முதனூல்கள் பொருந்திய தமிழே பூமியெங் கும்புடை போகிய தமிழே கூற்ற மெனக்கடல் குணிப்பருங் கலைகள் கொள்ளை கொண்டும்வளம் கொண்டதோர் தமிழே. 2. சேயரும் எளிமையாய்ச் செப்பிடுந் தமிழே செம்பொருள் கொண்டதோர் சீரிய தமிழே தூய ஞானந்தரும் தத்துவத் தமிழே தரணியெல் லாம்புகழ் தாங்கிய தமிழே பாயும் விடையான் பாடிய தமிழே பாய்சுருட்ட மாலைப் பண்ணிய தமிழே மாயுந் தமிழ்மக்கள் மடமொடு கடலே மாய்த்திடக் கலைநூல்கள் மங்கிய தமிழே 3. பாவகை விரிந்தியல் பண்டைமுத் தமிழே பண்ணொடு பொருந்திய பண்பட்ட தமிழே தேவியல் முனிவரும் தேர்ந்துரை தமிழே திருந்திய இலக்கணத் திவ்வியத் தமிழே யாவரும் போற்றிடும் தீவிய தமிழே யவனமுஞ் சென்று வயங்கிய தமிழே கூவுங் குயில்கிள்ளை குழலொடு யாழே கொஞ்சும் மழலையினும் விஞ்சுதீந் தமிழே! 6. தமிழ்நாடு சத்யமெங்குமே தளரா நாடு என்ற மெட்டு தாரணி யிலுயர் தமிழ்நாடு திருத் தாண்ட வம்புரி கற்பகக் காடு ஆரண முனிவர் மலைக்கோடு அதை அடைந்த வர்க்கும் பேரின்ப வீடு 2 பொன்னும் மணியும் விளையும் நாடு ஞானப் பொற்புடன் சாலமோன் புகழ்நாடு கன்னலொடு செந்நெல் வளர்நாடு பல கற்ப காலமாய் விளங்கும் நாடு 3 காவிய மிகுந்த கலைநாடு பண்டே கடல் வாணிகம் புரிந்த நாடு ஓவிய மிகுந்த திருநாடு மிக உன்னத கோபுர முள்ள நாடு. 4 நாகரிகமே மிகுந்த நாடு மிக நடுநிலை யான தமிழ்நாடு ஏகமனமா யிருந்த நாடு மிக ஏதிலரை ஆதரித்த நாடு 5 வள்ளுவன் பிறந்த திருநாடு பெரு வள்ளல்கள் திகழ்ந்த பெருநாடு மள்ளர் நடுகல்லி லுள்ளநாடு ஒரு மாத மூன்றுமழை பெய்தநாடு 6 கம்பனும் பிறந்த தமிழ்நாடு கடுங் காள மேகமும் பிறந்தநாடு நம்ப னடியார்க்கு விளையாடித் திரு நடனமைந்து மன்று புரிநாடு 7 பாவினிற் சிறந்த தமிழ்நாடு நெடும் பாபிலோ னுறவு கொண்டநாடு காவலர் உயர்ந்த திருநாடு பெருங் கற்ப ரசிகள் திகழ்ந்தநாடு 8 முத்தமிழ் முதல்வளர்ந்த நாடு மோன முத்தர்க ளிருந்த திருநாடு சித்தர்க ளிருந்த திருநாடு மிகச் செத்தவர் பிழைத்த திருநாடு 9 காணாமலே நட்ட திருநாடு நண்பர் கட்டை யேறிவிட்ட திருநாடு கோணாமல் கரும்பு தின்னநீடு பெருங் கூலியுங் கொடுத்த வளநாடு 10 வேளாண்மை சிறந்த தமிழ்நாடு மிக விருந்தினரைப் பேணியநாடு தாளாண்மை சிறந்த தமிழ்நாடு எழு தண்ணீருங் கடந்த தமிழ்நாடு 11 நன்றி யறிவுள்ள திருநாடு பல நாவலர் திகழ்ந்த பெருநாடு தஞ்சமென்று சொல்லிய பிற்பாடு மிகத் தன்னுட லுந்தந்த தமிழ்நாடு 12 மைந்தனையுங்கொன்ற நீதிநாடு பாண்டி மன்னவன் தன்கை குறைத்த நாடு ஐந்தனையும் வென்ற தமிழ்நாடு பல அருஞ்செயல் புரிந்த தமிழ்நாடு 13 நாயன்மார் பிறந்த தமிழ்நாடு மூன்று நால்வராம் ஆழ்வார் பிறந்த நாடு சீயமா இராமன் சீதையோடு வந்து சீரிய துணைபெற்ற திருநாடு 7. பழந்தமிழ்நாடு பச்சைமலை பவளமலை என்ற மெட்டு 1. குட்டமலை குமரிமலை எங்கள்மலை நாடு கொடியபெருந் தென்கடலே கொண்டதெங்கள் நாடு பொற்றைமலை பொதியமலை எங்கள்மலை நாடு புகலரிய பழைமையுள்ள தெங்கள்மலை நாடு. 2. தென்கடலில் எழுநூற்றுக் காதமெங்கள் நாடு தேய்பிறைபோல் பலமுறையாய்த் திரைபுகுந்த நாடு இன்குமரி பஃறுளிக்கே இடையிலுள்ள நாடு இலமூரியா என்றுபெய ரிட்டதெங்கள் நாடு. 3. ஆளியன்னம் நீர்நாயென் றரியவுயிர் நாடு ஐந்திணையாய் எமதுமுன்னோர் அமர்ந்திருந்த நாடு வீளியர்போல் குலங்களெல்லாம் வீரங்கொண்ட நாடு வேற்றரசர் வரலிடாமல் வெற்றிபெற்ற நாடு. 4. வடமொழியே கலவாமல் வளர்ந்ததமிழ் நாடு வளமாகத் திராவிடரே வாழ்ந்துவந்த நாடு திடமுடன் ஒற்றுமையாய்த் திகழ்ந்ததெங்கள் நாடு தேவரையும் வசிகரித்த திருமிகுந்த நாடு. 5. முத்தமிழும் பயின்றிருந்த மூதறிஞர் நாடு மூடருடன் பேதைமதி கேடரில்லா நாடு வித்தைகலை கைத்தொழில்கள் விஞ்சியுள்ள நாடு வேறுபடா தூண்மணத்தில் விரவிவாழ்ந்த நாடு. 6. நீர்நிலத்து வாணிகம் நிகழ்ந்ததெங்கள் நாடு நெடுந்தூரத் தரசருடன் நேயமுற்ற நாடு பார்நிலத்து நாகரிகப் பைந்தமிழ் நாடு பலமான சேரசோழ பாண்டியநன் னாடு. 8. தமிழ்நூல்கள் நொண்டிச் சிந்து வெண்பா புகழேந்தி - மிகவும் வியந்திடும் பரணிக்குச் சயங்கொண்டான் விருத்தம் உயர்கம்பன் - விரித்த விழுமிய கவிப்பொருட் கொழுமையென்ன கடுத்தே கவிபாடும் - அந்தக் காளமேக வசையுஞ்சி லேடையழகே. அருண கிரிநாதர் - அடைந்த அருட்பொலி வாகும்அவர் திருப்புகழே. தொல்காப்பிய வழிநூல் - இன்று தொன்மைபெற்ற நூல்களிலே முன்மைபெற்றதே. தெய்வத் திருக்குறளே - எல்லாத் தேயத்தாரும் போற்றும் நடுத்திற நீதி. திருவா சகத்திற்கே - உருகார் ஒருவா சகத்திற்குமே உருகாரே. ஆல்வேல் பற்குறுதி - சால அழகிய நாலிரண்டு மொழிக்குறுதி. கதியே கதியென்றார் - முன்னைக் கதியே கம்பருடன் மெய்த்திருவள்ளுவர் சிலப்பதி காரமென்னும் - காவியம் செப்பிய ஒவ்வொரு சொல்லும் கொப்பின் தெளிதேன். சிந்தா மணிச்செய்யுள் - புலவர் சிந்தையுள்ள குறையெல்லாம் தந்து நிறைக்கும். மணிமே கலைநூலே - தமிழின் மாகலை மீதேயணியும் மேகலையாகும். தேனார் திருக்கோவை - பலர்தம் திறத்தினுக் கேற்றபடி தெரியக் காண்பார் தேவாரத் திவ்யப் - பதிகம் செழிய பக்திச் சுவையை வழியவூட்டும் கற்றோர் புகழ்ந்தேத்தும் - அகநூற் கலித்தொகை தீர்க்கும்மணக் கலித்தொகையே. 9. தமிழப் பார்ப்பனர்க்கு ஓர் வேண்டுகோள் சிந்து பைரவி - முன்னை பார்ப்பனரே! பார்ப்பனரே! பழந்தமிழ்ப் பார்ப்பனரே! பார்த்திடுக கண்தமிழ்மேல் பாராதீர்ஓர் கையதன்மேல் ஆண்டுகள் ஐயாயிரமாய் அருந்தமிழே தாய்மொழியாய் வேண்டுவவெல் லாமொருங்கே வேண்டியாங்குப் பெற்றீரதனால் அகத்தியரே முதலாக ஆரியரே தமிழ்வளர்த்தார் மகத்துவமாய்ச் சங்கங்களில் வகித்துவந்தார் தலைமையுமே சூரிய நாராயணமா சாஸ்திரியார் காலம்வரை ஆரியர்க் கிருந்ததமிழ் அன்பினுக்கோர் அளவுண்டோ? வலிந்துதென் சொற்கள் கலைகள் வடமொழியாய்க் காட்டுகின்றீர் மெலிந்த சமயங்கண்டு தமிழ்மேற் சென்றாணை செலுத்துவதோ நாடுமக்குத் தமிழ்நாடு நவிலும் தமிழே தாய்மொழியாம் நீடு குலமுந் திரவிடமே நினையாதீர் வேறாக உமை தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தயவுசெய்து காத்திடுவீர் வாய்மை இந்திக் கட்டாயம் வரினே தமிழோ கெட்டுவிடும். 10. ஆரியப்பார்ப்பனர் தமிழுக்குச் செய்த நன்மை கனகசபாபதி தரிசனம் ஒருநாள் என்ற மெட்டு ப. ஆரியர் தமிழுக்கே ஆற்றிய பெரும்பணி அளவிட்டுச் சொலவாமோ. து. ப. சீரிய தமிழிற்கல் லாதுகிடந்த நூலைச் சேர்த்தவர் கல்லாவிடின் செந்தமிழ் உளதாமோ (ஆரியர்) அ. 1. ஆரியர் இங்குவந்த போதவர் நூல்களெல்லாம் வேதமொரு நான்கே சீரிய தமிழ்க்கலை சேணிலத் தேயறிந்து திரள்திர ளாகவந்து சேர்ந்தமர்ந் தனர்ஈங்கே (ஆரியர்) 2. அகத்தியர் முதலிய மகத்துவா ரியரேமுன் மிகத்தமிழ் வளர்த்தவராம் சகத்திலே வழுதியர் சதுருற நடத்திய சபைமூன்றினும் புலமைத் தலைமை வகித்தவராம் (ஆரியர்) 11. கட்டாய இந்திக் கல்வியால் தமிழ்க்கு வருங்கேடு நந்த வனத்திலோ ராண்டி - என்ற மெட்டு செந்தமிழ்க் கிந்தியின் தொந்தம் - மிகச் சிறையற்ற நரியாட்டிற் குள்ளசம் பந்தம். இந்தியி னால்வருந் தீமை - இன்று இயம்புவேன் கேள்வெறுப் பேதுமில் லாமை. செந்தமிழ் ஒலிகளோ எளிய - மிகச் செயற்கையாம் இந்தியின் ஒலிகளோ வலிய. இரண்டுமொன் றாய்இசைந் தாலோ - தமிழ் எழுத்துக ளின்ஒலி இலகா பின்மாலே. முந்தியே தென்சொற்கள் மறையும் - இந்தி முக்கிய மாய்விடின் மிகவின்னுங் குறையும். கலந்திடு முன்னமே கெட்ட - தூய்மை கலந்தால் இந்தி தமிழ்கெடுவது முற்ற. முன்னமே வடமொழி மூலம் - காட்டி முத்தமிழ் கெடுத்தவர்க் கொத்தது காலம். எத்துணை யோதமிழ்ச் சொற்கள் - பலர் நத்தும் பாஷையாம் சமஸ்கிரு தத்துள். வடமொழி கடன்கொள்ளா தென்றார் - ஏனை வையக மொழியெல்லாம் வடமொழி யென்றார். மொழிநூலே யறியாதார் முற்றும் - சொல்லும் முறையற்ற சொற்களுக் குரையுண்டோ சற்றும். இயற்கையாம் தென்மொழித் தன்மை - மிகச் செயற்கையாய்ச் செய்ததே ஆரியத் தன்மை. இந்திய மொழியெல்லாம் ஒன்றே - என்றால் இந்தியர்க் கூண்மண சம்பந்த முண்டே அண்மை இந்திஎளி தென்றீர் - அந்த ஆங்கில ஒலிகளோ எளியன கண்டீர். ஆங்கிலம் போலவே இந்தி - ஒரு ஆரியக் கிளைமொழி யானது சிந்தி. உடன்பிறந் தார்க்கெல்லாம் அன்போ - நம துடன்பிறந் தேகொல்லும் நோயொடு நண்போ? தமிழ்நாடோ ஒருசிறு பாகம் - என்று தள்ளாதீர் பாரதத் தலையது வாகும். பலர்இந்தி பேசுவ தாலே - தமிழ்ச் சிலர்அதைத் கற்றறிடுஞ் சிரமமுங் காலோ. ஓநாயாட் டுக்குட்டி நியாயம் - அறி வுள்ளவ ரெல்லாரும் தள்ளுவர் மாதோ. ஆரியங் கலப்பதி னாலே - முற்றும் அழிந்துபோம் தமிழ்இதை அறிவீர்இக் காலே. தமிழென்றே ஒருமொழி யுண்டோ - என்று சந்தேகிக் குங்காலம் சமீபமா யுண்டே. தமிழாஉன் மடிகட்டிக் கொண்டு - இன்று தற்காத்துக் கொள்உன்றன் தாய்மொழி நன்று. 12. கட்டாய் இந்திக் கல்வியின் அநியாயம் சுஜன ஜீவனா என்ற மெட்டு ப. இதுவும் நியாயமோ பகையின் உபாயமோ. து. ப. புதிய தேயமோ தமிழ் புதைய மாயுமோ மிகப் - புல்லிய இந்தி மெல்லவே இங்கு புகுத்து கின்றனர் - போருடன் (இதுவும்) உ. பேசுறாத பாஷையுடனே பெருகியந்தணர் பிறங்கிய தமிழ்த்தென்னாடு பேணிவந்தனர் பாஷை நாட்டுடன் திருப்பண்ணை வீட்டுடன் பெரும் பாரகாவிய நூலும் சீரிய பதமும் பெற்றபின் பழிக்கவே. (இதுவும்) 13. தமிழின் இன்றியமையாமை பியாக் - ஆதி ப. நானில முழுவதும் நம்மர சாயினும் நறுந்தமிழ் இழந்திடின் நன்மை யென்ன? உ. 1. தேனிலும் தெளிகிளைத் தேனிலு மினிமை தேவரும் விரும்பிடும் திவ்விய கணிமை நானெனத் தமிழ்மிகத் தழைத்திடுந் தன்மை தகையொடு பசியையுந் தணித்திடும் பணிமை 2. மாணிக்க வாசகர் மனத்தையு முருக்கும் மதியோடு நடையையும் மாணவே பெருக்கும் பாணிக் கிசையுந்திருப் பண்ணோடு தருக்கும் பலகுல நலமுறப் பைந்தமி ழிருக்கும். 3. குழவிகள் வாயினுங் குணம்பெறுந் தமிழே கோதறும் பொருட்கருக் கொண்டதுந் தமிழே அழகிய நடுநிலை அறைமறைத் தமிழே அனையினுஞ் சிறந்திடும் அரும்பெருந் தமிழே. 14. தமிழ் அரசியல் மொழியானால்தான் தமிழ்நாட்டிற்குச் சுயவரசாகும் பச்சைமா மலைபோல் மேனி என்ற மெட்டு (காம்போதி) 1. ஆங்கிலர் எவரு மின்றி அலுவல்க ளனைத்தும் நம்மோர் தாங்கினும் நம்கை யால்பல் தாரமும் செய்வ மேனும் தேங்கமழ் பொதிகைத் தென்பால் தென்னவன் திருவவைக்கண் ஓங்கிய தமிழின் றேல்வே றொன்றையும் உகந்திடேனே. 2. வெள்ளையர் எவரு மின்றி விழுமிய தேசமேனும் சள்ளைசச் சரவுநீங்கிச் சமநிலை யாவமேனும் கள்ளையுண் டளிகள் பாடுங் கழனிசூழ் பாண்டிநாட்டுத் தள்ளையாம் தமிழின்றேல்எத் துணையும்நான் உகந்திடேனே. 3. வறுமையே சிறிது மின்றி வளம்பெற வாழ்வமேனும் மறுமையாய் இந்துதேசம் மாணவோர் குலமானாலும் செறுமைசேர்ந் தாலிவீழும் செந்தமிழ்க் கன்னிநாட்டு நறுமையாம் தமிழே தாழின் நானெதும் உகந்திடேனே. 4. என்றனக் கிந்துதேசத் திறைமைவந் தெய்திற்றேனும் என்றமர் அமைச்சராகி என்பணி கேட்பரேனும் குன்றுயர் பொதிகைவாழும் குறுமுனி நயந்த செம்மை துன்னுபைந் தமிழின்றேல்எத் துணையும்நான் உகந்திடேனே. 5. செப்பிய படைகள் மூன்றுஞ் சிறந்துபன் னாட்டுச் சங்கம் ஒப்பிய தலைமை யாகி ஓங்கினும் பரத கண்டம் துப்புறழ் கொவ்வைச் செவ்வாய்த் துடியிடைத் தோகைமாதே தப்பருந் தமிழின்றேலெத் தனையும்நான் உகந்திடேனே. 15. தமிழற்ற வரசு தன்னரசோ? `கலிலோ என்ற மெட்டு ப. தமிழா செந்தமி ழறவருவது தானொரு தன்னரசோ தனையுணராத் தமிழா. து. ப. அமிழாதுன் அருமொழியதனை அரவணையிது தருணம் அசதியுள (தமிழா) உ. 1. சமமான குடியர செதுமொரு தாய்மொழியதில் நிகழும் சகமெங்கும் தாய்மொழி யுயிரெனத் தழுவியதனைப் புகழும் தமிழ்நாடே பகைமொழி சிரமேல் தாங்கித் தமிழையிகழும் தவமகிழும் (தமிழா) 2. கலைவாயில் தமிழெனில் அதில்ஒரு கடுகதுமிலை பயனே கருத்தாக மாணவர் தமிழிலே கற்பரோ இலக்கியமே அலுவல்கள் தருமொழியதுதான் அன்பொடு பரிசயமே அதன் வயமே (தமிழா) 16. தமிழரின் அடிமைத்தன்மை சரவணபவ என்ற மெட்டு ப. அடிமைத் தமிழா அடை விடுதலை து. ப. மடிமை யதில்தன் மகிமை யறியா மாற்றவர்க்குச் சேவை ஆற்றிக்கெட்டுச் சாவை (அடிமைத்) உ. தேசமுங் கல்வியும் திருவும் குலமும் பேசும் நாகரிகம் பிறவும் தாய்மொழி ஏசவே தமிழை இழந்து பெறூஉம் இம்மைப் பேறுமுண்டோ செம்மையா கக்கண்டால் (அடிமைத்) 17. ஜாதிப் பிரிவினையால் தமிழுக்கு வந்த கேடு ஆண்டிப் பண்டாரம் என்ற மெட்டு ப. ஜாதி வித்தியாசம் - தமிழ்த் தாரணியே நாசம். உ. ஒற்றுமை யாயிருந்து உன்னத நாகரிகம் பெற்றுத் திகழ்ந்தவர்க்குள் பிரிவினையுண் டாய்விட்டதே (ஜாதி) 2 வடமொழி வார்த்தைகளே வல்லவை என்றுசொல்லித் திடமுளதென் சொற்களைத் தெரியாமல் மறைத்துவிட்டார் (ஜாதி) 3 பாணரென்னும் இசைக்குலத்தைப் பாழ்படவே தள்ளியதால் மானமுள்ள இசைத்தமிழும் மறைத்திட்டதே வழங்காமல் (ஜாதி) 4 ஏனை மொழிக்களிப்பர் ஏராள மாகப்பணம் தேனார் தமிழ்க்களிக்கத் தினையளவு மில்லைமனம் (ஜாதி) 5 ஆனைதனைக் கட்டத்தொடர் தானெடுத்துக் கொடுப்பதைப்போல் ஏனைமொழிக் கிணங்கிஇருந் தமிழைத் துரத்துகின்றார் (ஜாதி) 6 தென்னாட்டு நாகரிகம் தெரியாமல் பழிதூற்றி மன்னாட்டு நாகரிகம் மாணதென மகிழ்ந்துரைப்பார் (ஜாதி) 7 தாய்மொழிக ளில்தமிழே தலைமையா யிருந்தாலும் சேய்மொழி யெனத்திருத்தம் செய்யாமல் ஒதுக்கிவிட்டார் (ஜாதி) 8 தேசுபெறு கலைநூல்கள் தெரியாமல் ஒழித்ததுடன் பாஷையையுங் கெடுக்கவின்று பலமாய்மார் தட்டுகின்றார் (ஜாதி) 18. தமிழ்த் தொண்டர் படையின் வஞ்சி நடைப்பதம் ஓம் நமச்சிவாயனே என்ற மெட்டு தாரணியி லெம்மொழியுந் தமிழுக்கிணை யாகுமோ தாய்மொழியைப் புன்மொழிக்குத் தள்ளிவிடல் நீதமோ பார்ப்பனர் பலர்தமிழ்க்குப் பண்ணினர் துரோகமே கூர்த்தறிவில் லாப்பிறரும் கொண்டனர்இவ் ரோகமே. பெற்றதாயிற் பிறந்தநாட்டிற் பெரிதுகாணும் தாய்மொழி பற்றலர் கூடித்தமிழைப் பழிக்கவழி தேடினர் இலக்கண வரம்புகொண்ட தில்வுலகில் எம்மொழி, விலக்கமின்றி எவ்வகுப்பும் வித்தைகற்ற தெம்மொழி, இந்துமுஸ்லீம் கிறிஸ்தவர்க்கும் ஏனைப்பௌத்த ஜைனர்க்கும் எந்தமதத் தார்க்கும்வேதம் இருப்பதாகும் எம்மொழி, பக்ஷபாதக மில்லாமல் பற்பலவாம் ஜாதிக்கும் தக்கநீதி கூறும்நல்ல தருமநூலே திருக்குறள் ஆதியறி வாராதேஎம் அருமையான தொன்மொழி வாதவூரர் நைந்துருக வசிகரித்த தென்மொழி கம்பரிளங் கோவடிகள் காவியந்தேன் பொழியுமே உம்பர்அமிர் தம்அதற்கு உவமையின்றி ஒழியுமே வீரமா முனிவர் போப்பு வித்தகமெய்க் கால்டுவல் வேறுதேச மேனும்வாஞ்சை விஞ்சினர்செந் தமிழின்மேல் செந்தமிழைச் சீரழிக்கச் சிறுவர்மடி கட்டினர் மந்தமாகத் தூங்குந்தமிழ் மக்களே! விழித்தெழும் தமிழிலன்றி வருமரசு தன்னரசே யாகுமோ? எமரேயின்று ஒன்றுகூடி இந்தியை எதிர்த்திடும். சாதிமத பேதமின்றிச் சகலரும்முன் வாருங்கள் நீதியாய்த் தமிழரசு நிறுவுங்கள்இந் நாட்டிலே எங்கும்இந்தி கட்டாயம்தான் என்பதென்ன அண்டப்பொய் வங்காளத்தில் ஒருநாளும் வைத்திடுவ தில்லையே. இந்தியில்லா ஏனைநாட்டில் இந்தப்பேச்சே யில்லையே மந்தமுள்ள தமிழனைத்தான் மாட்டுகின்றார் வலையிலே தாய்மொழியைத் தள்ளுபவன் தானேபெரிய அடிமையன் வாய்மையா யவற்குவீடு வாய்ப்பதில்லை யென்றுமே, காங்கிரஸ்என் றால்அதற்குக் கங்குகரை யில்லையோ? தீங்கதி லிருந்தால்அதைத் தீர்த்துவிட வேண்டாவோ? பிழைக்கவோ இறக்கவோநீர் பேணிமருந்தை யருந்துவீர்? தழைக்கவோநம் நாடுஇந்தத் தாறுமாறு செய்கிறீர். குளிக்கப் போய்ப்பின் சேற்றைப்பூசிக் கொண்டதைப்போல் அடிமையை ஒளிக்கவகை தேடிமற்றும் ஓர்அடிமை யாவதோ? அறுப்பவனை நம்புகிற ஆட்டைப்போலும் பேதைகாள்! பொறுப்புடன் உமக்குச் சொல்லும் பொன்னுரையைக் கேளுங்கள். 19. தமிழுக்கும் ஹிந்திக்கும் உள்ள தாரதம்மியம் பழனி மாமலை வாழும் என்ற மெட்டு அருந்தமிழுக்கு ஹிந்தி ஆமோச மானம் ஆனைக்கும் பூனைக்கும் அறையுப மானம் 2 செந்தமிழ் பிறந்தது செப்பொணாப் பழமை இந்திஐந்து நூற்றாண்டே எழுந்தசிற் றிளமை (அருந்) 3 இலக்கியம் நிறைந்ததும் இனியசெந் தமிழே இந்தியில் வடமொழி எழுந்திடும் அமுலே (அருந்) 4 முத்தமிழ் இலக்கணம் முனிவரை யுருக்கும் எத்தனை ஒழுங்கீனம் இந்தியி லிருக்கும் (அருந்) 5 செந்தமிழ் ஒலிகளோ சிறுவர்க்கும் எளிய இந்தியின் ஒலிகளோ இளைப்புற வலிய (அருந்) 6 ஏனைய மொழியின்றி இருந்தமிழ் தூய்மை இந்தியென் றொருமொழி இல்லையே வாய்மை (அருந்) 7 இந்தியின் துணைதமிழ்க் கிம்மியும் வேண்டா இந்தியில் தமிழ்ச்சொற்கள் எனையவோ ஆண்டார் (அருந்) 8 தென்மொழிக் கருத்துகள் தேவரும் புகழ்வர் தேவமொழிக் கருத்தை யாவரும் இகழ்வர். (அருந்) 20. இந்திக்குப் பிறபாஷையார் இணக்கம் பாண்டியன் ஈன்ற மீனாட்சி என்ற மெட்டு பல்லவி பாண்டியன் பஃறுளி நாட்டுத் தமிழையே பலமுடன் நாட்டு வேண்டிய வேறுசொற் கூட்டு வேண்டாத விலக்கியே ஓட்டு உரைப்பாட்டு இந்தியாவில் ஆரிய மொழிகளெல்லாம் எழுந்தவை சமஸ்கிருதத் தினின்றே இந்தியைக் கட்டாயமாக்கின் எமதுடன் பிறப்பென்று இட்டமாயவை யேற்குமன்றே பல்லவி தென்னாட்டுத் திராவிட மொழிகள் - இந்தியினால் திறம்பிடும் வழிகள். உரைப்பாட்டு திராவிட மொழிகளிலே தெலுங்குமலை யாளமிலை தேவ மொழியால் வளருமன்றே திராட விடமின்றித் தமிழே விமரிசையாய் வளர்ந்து வேறு மொழியாய் வளரும் நன்றே. பல்லவி இந்திக்கு மகமதியர் துணையே - உருததை மானுமெனுந் துணையே. உரைப்பாட்டு மானத்திலும் பாஷாபி மானத்திலும் வங்காளரைப் பின்பற்றுவாயே ஞானத்தி லும்சுயா தீனத்திலும் நன்றாகத் தமிழ்வளர்ப் பாயே. (பாண்டி) 21. சமஸ்கிருத நூல்களைப் பயன்படுத்தும் விதம் காலுக்குத் தண்டை கொலுசு என்ற மெட்டு 1. வடமொழி நூற்கலை வளம் - பயன்படுத்தும் வகைசொல்வேன் ஏற்றிடும் உளம் - கொள்ளீர் விளம் 2. கடினமாம் வடமொழியே - பாஷையும் நன்றாய்க் கற்கப் பத்தாண்டு கழியும் - காலழியும் 3. இறந்தமொழியின் நூல்களை இன்றுயிருடன் இயங்குமொழி பெயர்த்திழை - இன்றேல் பிழை 4. வடமொழி வளரவேண்டும் - என்றால் பழைய வையகம் வந்திட மீண்டும் - வழிகாண்டும் 22. இந்திய பலதேசம் சேர்ந்த ஒரு சிறு கண்டம் சூழ்ந்து சர்க்கா என்ற மெட்டு 1. இந்தியா ஓர்தேச மென்றே இயம்புவார் அறியார் முந்தியே நம்முன்னோ ரெல்லாம் மொழிந்தார் பரத கண்டமென 2. இங்கிலீஷ்காரர் பலத்தால் ஏகாதிபத்யம் இந்தியாவில் வந்ததின்னும் இதற்குளாகா நாடுபல 3. ஜாதி பாஷையொன்றே யானால் சாரும்ஒரு தேசம் பேதமுள்ள பலதேசம் பிறங்கு மிந்தியா கண்டம் 4. சென்னை நாட்டிலுஞ் சிறிய தேசம் எத்தனையோ என்ன காரணத்தினாலும் ஏற்குமோ அவை பிறபாஷை 5. சீனா ரஷ்யா மிகப்பெரிய தேசமானாலும் காணுமோ நிறம் பாஷையில் கடுகளவுதான் பேதம் 6. அரசியற்கே இந்தியாவில் ஆகும் ஒற்றுமையே பரசு தாய்ப்பாஷை யழியப் பார்த்துக்கொண்டிரார் தமிழர் 7. இந்தியப் பொதுத்தலைமை இந்தி யரசாகும் ஏனைய மாகாணமெல்லாம் ஏற்குமரசு தாய்மொழியே 8. இந்தியா ஒரே விதமாய் எல்லா விஷயத்திலும் இருக்க வேண்டுமானால் பலர்க்கே இருமை வண்ணம் பூசிவிடும். 23. இந்தியர்க்கு இன்றியமையாத மூன்று பாஷை உஷ்ணத்தேரா என்ற மெட்டு ப. இந்தியர்க்கே மூன்று பாஷை இன்றியமையாதன து. ப. முந்தியே தமிழ்மொழிபின் ஹிந்தி மூன்றாவதாம் இங்கிலீஷ் உ. 1 தாய்மொழியில் நடந்திடில்தான் தன்னரசாம் உண்மையில் நேயமாக அலுவல்மொழியே நிரம்பக் கற்பர் மாணவர் (இந்தி) 2 இந்தி விருப்பப் பாடமாயே ஏற்படுத்தல் நீதியாம் இந்தியால்தான் ஒற்றுமையென் றியம்புவதோ பேதைமை (இந்தி) 3 ஆங்கிலத்தில் தான்கால அருங்கலைகள் உள்ளன ஆங்கிலத்தைப் படிப்பதாலே அடிமைத்தனம் ஆகுமோ (இந்தி) 24. தமிழர்க்குக் கட்டாய இந்திக்கல்வி வேண்டாமை மாங்காய்ப்பா லுண்டு என்ற மெட்டு 1. எந்தக் கருத்தையும் இயம்பும் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி 2. ஏனைய மொழியின்றி இயங்கும் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி 3. இலக்கியம் நிரம்பவே இருக்கும் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி 4. ஏற்கெனவே பாடம் இருக்கும் மாணவர்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி 5. இந்திக்கும் முற்றும்நேர் எதிராம் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி 6. எளிய ஒலிகளும் இயம்ப முடியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி. 25. அழிந்துபோன தமிழ்நூல்களும் கலைகளும் கப்பல் பாட்டு மெட்டு ப. ஏல ஏல ஏல ஏல - இருந்தமிழ்நூல் இறந்தொழிந்த எத்தனையோ - என்னே மாயை! உ. பாட்டுரை நூலுடன் வாய்மொழி பிசியே அங்கதம் முதுமொழி ஆமேழு வகையும் எண்வகை வனப்புடன் இருபது வண்ணம் பண்ணத்தி யென்றொரு பாட்டு வகையில் தொல்காப் பியத்தினில் சொல்காப்பி யம்பா. (ஏல) ஏரணம் உருயோகம் இசைகணக் கிரதம் தாரணம் மதம்சந்தம் தம்பநீர் லோகம் மாரணம் பொருள்நிலம் மருத்துவம் சாலம் வாரணங் கொண்டதே மாளவே பேரும் (ஏல) தலைச்சங்க நூல்களைச் சாற்றவே கேளாய் பரிபாடல் முதுநாரை முதுகுரு கோடே களரியா விரையுடன் அகத்தி யம்முதல் (ஏல) இடைச்சங்க நூல்களை இயம்புவேன் கேளாய் வெண்டாளி கலிகுருகு வியாழமாலை யகவல் பூத புராணம் புகல்மா புராணம் இசைநுணுக் கத்துடன் எண்ணற்ற நூல்கள் (ஏல) கடைச்சங்க நூல்களைக் கட்டுரைப் பேன்கேள் சிற்றிசை பேரிசை கூத்தொடு வரியே பரிபாடல் பதிற்றுப் பத்திற்சில பாடல் (ஏல) பற்பல நூல்களைப் பகிருலேன் கேளாய் அடிநூலே அணியியல் அவிநயத் தோடே அவிந்த மாலையோ டசதிக் கோவையே ஆகிரியி முறியுடன் ஆனந்த வியலே இளந்திரை யத்துடன் இராமா யணமே இந்திர காளியம் ஐந்திரம் இன்னும் கணக்கியல் கலியாண காதையே களவு கவிமயக் கிறையே கலைக்கோட்டுத் தண்டு கால கேசியுடன் காக்கை பாடினியம் குண்டல கேசி குணநூல் கோள்நூலே சங்க யாப்போடு சயந்தமே சிந்தம் சச்சபுட வெண்பா சாதவா கனமே சிறுகாக்கை பாடினியம் செய்யு ளியலோடு சுத்தானந் தப்பிர காசமே பன்னும் செயன்முறை செயிற்றியம் செந்தமி ழான செஞ்சிக் கலம்பகம் தும்பிப் பாட்டோடு தகடூர் யாத்திரையே தாள சமுத்ரம் தாள வகையியல் தேசிக மாலை நீலகேசி பஞ்ச பாரதீயம் பரதம் பஞ்ச மரபுடன் பரதசேனா பதியம் பல்காயம் அந்தாதி பன்மணி மாலை பன்னிரு படலம் பாலைப்பாட் டுடனே பாட்டியன் மரபு பாரதம் பரிநூல் புணர்ப்பாலை புதையல் புராண சாகரமே பெரிய ப்ரம்மம் பெருவல்ல மேநல்ல பொய்கையார் நூலோடு போக்கியம் என்றே மணியாரம் மந்திரநூல் மயேச்சுரர் யாப்பே மதிவாணர் நாடகத் தமிழ்நூலே பின்னும் மார்க்கண்டேயர் காஞ்சி முறுவல் சிறந்த முத்தொள்ளா யிரமே மூப்பெட்டுச் செய்யுள் வளையாபதி வாய்ப்பியம் விளக்கத்தார் கூத்தே இவையாதி யெண்ணற்ற இருந்தமிழ் நூல்கள். (ஏல) 26. சங்ககாலச் சமுதாய நிலை ஆசை லீலா என்ற மெட்டு ப. சங்ககாலச் சமுதாயம் சாதிமத பேதமாயும் உ. 1 சைவருடன் வைஷ்ணவரும் ஜைனரும்சில் பௌத்தரும் தெய்வமில்லை என்பவரும் சேர்ந்துதமிழ் ஆய்ந்தனர். (சங்க) 2 கற்றவன்கீழ்க் குலத்தனேனும் கனமகிமை பெற்றனன் மற்றவன்மேற் குலத்தனேனும் மதிப்பேதும் அற்றனன் 3 பாணரென்னும் இசைக்குலத்தார் பறையருள்ஓர் மரபினர் நாணமின்றி அரசவைக்கண் நாயகமாய் விளங்கினர் (சங்க) 4 பார்ப்பனர்எக் குலத்தினோடும் பக்கமாகப் பழகினர் பாக்களிலே அவர்இயல்பைப் பகர்ந்தனர்நல் அழகுடன் (சங்க) 5 பிறப்பினாலே எவருக்கேனும் பெருமையில்லை என்றனர் சிறப்புநேரும் அறிவொழுக்கம் சிறந்ததாலே என்றனர் (சங்க) 6 தெய்வம் ஒன்றிற்கே சிறந்த திருவிழாவும் நிகழ்ந்திடின் தெய்வம் ஏனைய வற்றிற்கெல்லாம் சிறந்தபூஜை செய்தனர் (சங்க) 27. ஆரிய திராவிட வருணபேதம் பியாக் - முன்னை 1 ஆரியவருண பேதம்வேறே அருந்திராவிட வருணபேதம் வேறே கரிய அறிஞர் இல்லாத போதுதம் கொள்கையிங் காரியர் நாட்டிவிட்டார். 2 ஆரியப் பிராமணர் வேதங்களே என்றும் ஓதுகின்ற ஒரு ஜாதியாராம் திராவிட அந்தணர் எவ்வுயிர்க் கும்அருட் செந்தண்மை பூண்டிடும் துறவிகளே 3 ஆரிய க்ஷத்ரியர் போர்புரியும்பெரு வீரமுள்ள பல ஜாதிகளே திராவிட அரசர் தென்னாட் டிலேபல முன்னாட்டும் அரச குடும்பத்தினர் 4 ஆரிய வைசியர் உழவுட னேபெரு வாணிகமும் ஒன்றாய்ச் செய்துவந்தார். திராவிட வணிகர் வாணிக மேநடுச் சீராக நேராய்ச் செய்துவந்தார். 5 ஆரிய சூத்ரர் அடிமைகள் போற்பணி அனைவருக் கும்மிக ஆற்றி வந்தார். திராவிட வேளாளர் குலமோ இந்தத் தென்னொட் டிலேதலை சிறந்ததாகும். 6 தலைசிறந்த வேளாளரை யேமிகத் தந்திர மாகநற் சூத்ரரென்று தமிழ ரெல்லாருக்கும் அந்தப்பட்டம் பின்பு தாராள மாகவே தந்துவிட்டார். 7 மக்க ளிடைநால் வருணங் களைத்தம் மனம்போல ஆரியர் அமைத்ததுடன் அக்கரம் செய்யுள் தெய்வம் மரம்முதல் அரும்பொருட் கும்மிக வகுத்து விட்டார். 8 தமதுளத் தாலே சூத்திரப்பேர் மிகத்தாழ்ந்த தென்றாரியர் கொண்டிருந்தே தமிழரோ அதனால் பெருமை கூறிமிகத் தாங்கியே தலைமேற் கொள்ள வைத்தார். 28. தமிழ்ப் பண்டிதர் தமிழைக் காக்க அஞ்சுதல் மாடு மேய்க்கும் கண்ணே என்ற மெட்டு ப. முன்னோர்பிர தாபம் - நாம் சொன்னாலுமோ பாபம் உ. 1. ஏனைநா டெல்லாம்அக இருளில் இருந்தபோது வானேரும் நாகரிகம் வண்டமிழர் கண்டாரென்றே (முன்) 2. ஆரியர் வருமுன்னமே அரியகலை கள்பல அறிந்திருந்தார் தமிழர் ஆராய்ந்தறிவாய் என்றே (முன்) 3. வடமொழித் துணையின்றியே வளரவல் லதுதமிழ் திடமுளதென் சொற்களும் தேவமொழி யுளவென்றே (முன்) 4. கட்டாய மாகும்இந்திக் கல்வியி னாலேதமிழ் கெட்டே விடும்வரவே ஒட்டோம் இந்தியை என்றே (முன்) 5. தமிழைத்தற் காத்திடவும் தற்சமயம் முட்டாமானம் தமிழைத்தான் பேசவும்ஓர் தட்டொருகால் வந்திடுமோ (முன்) 29. ஜாதி வித்தியாசம் மனிதன் கட்டுப்பாடு சுருளிமலை மீதுலவும் சீலா என்ற மெட்டு 1. ஜாதிவித்தி யாசம்என்ற நாமம் - இந்தச் சம்புத்தீவி லேதான்சுக க்ஷேமம் - இதைத் தாண்டியொரு தேசஞ் சென்றால் தாழ்வுயர்வு நாகரிகத் தாலே - வரும்பாலே 2. ஜாதிகளைப் பிரமாவே படைத்தார் - என்றால் சம்புத் தீவிற்குள் ஏன்தம்மை அடைத்தார் - இந்தத் தாரணியில் ஒரு நாட்டில் தாமே பிரிவினை செய்யின் தலையோ - நடுநிலையோ 3. நிறத்திற் சிறந்தவரே மேலோர் - என்று நிறுவினால் குஷ்டர்உயர் பாலோர் - இந்த நீணிலத்தில் தட்பவெப்ப நிலையினா லாகுமைந்து நிறமே - பல திறமே 4. மாரிலே நூலணிவதன் பெருமை - இந்து மாநிலத்தில் பல்குலத்திற் குரிமை - புது மனை கட்டும்போது செங்கல் எடைகட்டும் சுற்றுவது நூலே - தவிர்மாலே. 5. பார்ப்பனி வயிற்றில்ஒரு மகனும் - ஒரு பறைச்சி வயிற்றில்ஒரு மகனும் - வரப் பழவினை காரணமோ மணவினையால் கருவுறாதோ - பிறக்காதோ. 6. சந்திர சூரியரென்றே சுடரும் - எல்லாச் சாதிகட்கும் ஒன்றாய் வானம் படரும் - மிகச் சாடுகின்ற காற்றுமழை சாதிக்கொரு வேற்றுமையோ சாற்றும் - எந்தவாற்றும் 7. எழுவகை யானஉடல் தாது - ஒன்றாய் இருக்குமெல் லாருக்குமென் றோது - மிக இழிந்துயர் குலங்களாய் இருபாலுங் கூடி வாழ இசையும் - இல்லை வசையும். 30. தமிழ்ப் பண்டிதர்களே தமிழுக்கு அதிகாரிகள் இராகம் - இங்கிலீஷ் தாளம் - ஒற்றை 1. பண்டிதர் மட்டுமே பலமாகக் கத்துவர் என்றுரை மந்திரி ஏளனஞ் செய்குவர் பண்டிதரும் பாதுகாவாவிடின் சென்றுவிடும் செந்தமிழ் பார்ப்பன ரிற்பலர் பற்றுவிட்டார் காங்கிரசா ரெல்லாம் கைவிட்டனர் பாமரர் கண் அற்றவர் 2. கட்டாய மாமிந்திக் கல்வியி னால்தமிழ் கெட்டுவிடும் விடாதென்று கிளந்திட உற்றவர் பண்டிதரே அவரை மெத்தென எண்ண வேண்டா தமிழறி யாதவர் சொல்லுவதைத் தான்பிர மாணமாய்க் கொள்ளுவதோ தமிழையுந் தள்ளுவதோ. 31. ஒரு பாஷையால் ஒற்றுமையுண்டாகாமை ராம பஜனக் கோரியாம்8 என்ற மெட்டு ப. பாஷையால் ஒற்றுமையாமோ - பகையும் போமோ. உ. 1. ஆங்கிலர் அமெரிக்கர் அனைமொழி ஒன்றானாலும் நீங்கியே நெடும்பகையை நிகழ்த்துகின்றார் (பாஷை) 2. விடுதலை விருப்பமே வேற்றுமை யறுத்தது வேறொன்று மில்லை அறிவீர் - விவேகம் கொள்வீர் (பாஷை) 3. ஊண்மண சம்பந்தமே உண்டாயின் இன்றே நம்மில் ஒற்றுமை உண்டாய்விடும் - உம் ஐயம் விடும் (பாஷை) 4. என்மொழி முன்னோர்மொழி எனவட மொழிக்கிளை இந்தியைப் புகுத்துவோரே - எண்ணும் பிறரை (பாஷை) 5. இந்தியால் ஒற்றுமையேல் ஏன்முனே சொற்றதில்லை மந்திரியா கும்வரையும் மறைத்து வைத்தார். (பாஷை) 32. தாய்மொழியில் அரசே தன்னரசு (சுயராஜியம்) பண்டித மோத்திலால் நேரை என்ற மெட்டு ப. தாய்மொழியில் இல்லாவரசும் தன்னர சாமோ தன்னர சாமோ அது பின்னமாய்ச் சாமோ ஏய்மொழியினால் இவ்வரை ஏமாற்றினர் எம்மவரை இன்று திடுமென்றே இந்தியிங் கிருத்துகின் றாரே இருத்துகின் றாரேஎமை வருத்தநின் றாரே. உரைப்பாட்டு குடிகளுக்குத் தெரியாத பாஷையிலே கொண்டுசெலுத்துமரசு கொடுமை யாகுமன்றோ அடிகளுக்குப் பயந்தளிக்கும் ஆதரவும் அடிமைத்தன மாகுமன்றோ ப. எழுத்தே யறியாமக்கள் இருந்தார் அறியாமைக்குள் இன்னவரை அதிகாரத்தில் இசையச் செய்வதோ இசையச் செய்வதோ பெருவசையைப் பெய்வதோ உரைப்பாட்டு ஓரிடத்தில் தாய்ப்பாஷையில் ஓரிடத்தில் அயற்பாஷையில் ஓர் அரசுநடப்பின் ஈடுவாமோ. மாரிடத்திலே தாயும் பாலொழுகி ஒரு பக்கம் நீர் ஒழுகத்தான்மனம் ஆமோ. (தாய்) 33. இந்தியாவில் ஆறு மாகாணங்களில் இந்திப் பேச்சின்மை ஜோர் ஜோர் ஜோர் என்ற மெட்டு 1. பாரத தேசமுற்றும் பதின்மூன்றாம் மாகாணங்கள் ஆறுமா காணம்இந்தி அறைவதில்லை காணுங்கள் 2. இந்தியில்லா மாகாணம் ஏனைய இந்திப் பேச்சில்லை வங்காள நாட்டில் இந்தி வையார் இவ்யுகத் தெல்லை. 3. சென்னை மாகாணத்தில்தான் செலுத்துவார் இந்திஅமுல் என்ன பேதைகளாக இருக்கின்றார் இந்நாட்டவர். 34. தமிழனைத் தட்டியெழுப்பல் கழுகுமலையின் கந்தவேளே என்ற மெட்டு தனையேதான் கெடுத்து விழாது தமிழாளன் விழிப்ப தெப்போது மனையே பற்றியெரியும் போது மடிந்தே உறங்குவதொண் ணாது (தனையே) உ. ஆலகா லத்துடனே அமிர்தம் வந்தாலும் அன்னம்போல் பிரித்ததை அடைவதே சாலும் அறிவு கலங்கி ஐந்து மொடுங்கி சாலவே பசித்துடன் சாகின்ற காலும் தமக்கை தரும் நச்சப்பம் தருவது போலும் (தனையே) 35. தமிழ்நாட்டுப் பணத்தால் வடமொழி வளர்த்தல் சுதேச மகமதல்லி என்ற மெட்டு ப. தமிழ்நாட்டுப் பணங்காசும் வடநாட்டு மணம்வீசும் தமிழ்நாட்ட மனங்கூசும் வடசொல் நாட்டத் தினம்பேசும் உரைப்பாட்டு சீரான மொழிகளிலே சிறந்த மொழியான செந்தமிழையே தளர்த்துவந்து ஈராயிரம் ஆண்டுகளாய் இந்நாட்டுப் பணத்தாலே இறந்த மொழியை வளர்த்துவந்து. ப. கட்டாய மாக இந்திக் கல்வி நுழைக்க முந்தி விட்டார் தமிழைச் சந்தி விரைவி லதற்குக் காலம் அந்தி உரைப்பாட்டு பத்திரம்நூல் பூஜைமணம் பத்தினாக சடங்குரையாம் பலவிதத்தும் வடமொழியைப் பெய்தார் இத்தமிழ்நாட் டெல்லைதனில் இந்தியையும் புகுத்தவின்று ஏகோபித்தே கிளர்ச்சி செய்தார். தாய்நாடே போற்றி! தமிழ்நாடே போற்றி! தமிழே போற்றி! தொல்காப்பியர்க்கு வெற்றி! திருவள்ளுவர்க்கு வெற்றி! மாணிக்க வாசகர்க்கு வெற்றி! கம்பருக்கு வெற்றி! 36. திருச்சி மதுரம் டாக்டர் குருமருந்துகளின் குணம் பாண்டியன் ஈன்ற மீனாட்சி என்ற மெட்டு பல்லவி மதுரம் - டாக்டர் குருமருந்து - நோயாளி யார்க்கும் திருவிருந்து - குணங்கள் வாய்க்குமதை யருந்து - நோயுடனே வழிச்செலும் பறந்து - மதுரம் உரைப்பாட்டு வையகத்தி லெத்தனையோ பேர் வைத்திய ரென்றுபேர் வைத்துக்கொண்டு வசதியாய் வாழ்ந்து வருகின்றார் மெய்யாக வைத்தியம் தெரிந்து வியாதியைப் போக்கும் சிலருள் மதுரமன்றோ. பல்லவியெடுப்பு திருச்சிக் குருமருத்துவமே - கொண்டினி நம் உருவைத் திருத்துவமே (மதுரம்) 2 இசையரங்கு இன்னிசைக் கோவை உள்ளடக்கம் 1. கடவுள் வாழ்த்து .39 2. தமிழே முதல்தாய்மொழி 39 3. தமிழின்பம் 39 4. பழந்தமிழன் பெருமை 40 5. திருவள்ளுவர் திருத்தொண்டு 41 6. திருக்குறள் படித்தல் 42 7. திருக்குறள் பொதுமறை 43 8. நக்கீரன் 44 9. பரிதிமாற் கலைஞன் 44 10. மறைமலையடிகள் மாண்பு 45 11. தமிழ்ப்பெயர் தாங்கல் 46 12. தமிழே தனித்தமிழ் 47 13. பெரியார் 48 14. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை 49 15. வாழ்க்கை யமைப்பு முரண் 50 16. மூவகையர் ஏமாற்றல் 50 17. தமிழ்ப் பகைவர் 51 18. தமிழ்கெடவரும் வளர்ச்சித் திட்டம் தீங்குவிளைவிப்பது 51 19. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை 53 20. தமிழன் உடமை தமிழ் ஒன்றே 54 21. செந்தமிழே தமிழன் செல்வம் 55 22. எது தமிழ்? 56 23. தமிழன் குலம் `தமிழன்' 56 24. தமிழ்ப்பற்று 57 25. தமிழைக் காட்டிக் கொடாமை 58 26. சேலங்கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் 58 27. தமிழ்த்தொண்டர் படைச்செலவு 59 28. தமிழுக்கு நற்கால அண்மை 60 29. தமிழ் வெற்றிமுரசு 61 30. தமிழ்வாழ்த்து 62 31. உலகத்மிழ்க் கழகம் 62 32. பறம்புக்குடி 63 33. திரு இரா. முத்துக்கிருட்டிணன் 63 34. மங்களம் 64 1. கடவுள் வாழ்த்து பண் - கானடா தாளம் - முன்னை (ஆதி) மூவுல குந்தொழும் முத்தொழில் முதல்வா முன்னிய தமிழிசை யின்னிலை யுறவா முனைந்தருள் வாய்எம் அவா. 2. தமிழே முதல் தாய்மொழி கொலுமவரெகத என்ற மெட்டு ப. தமிழே முதல்தாய் மொழி தன்னிகர் தானே து. ப. இமிழ்கடல் சூழுலகில் இருமுது பெற்றோர்பெயர் எழில்தமி ழாகவே இருக்கின்ற வகையானே (தமிழே) உ. குமரிநிலத்தென் தோன்றிக் குறிஞ்சி முதல்முந்நிலை குலவி வளர்ந்தே நாற்பாக் கொண்ட தென்மொழி செம்மை திமிறிய கொடுந்தமிழ் திரவிடமாகி மேலைத் திகழும் ஆரியம் எனத் திரிந்தது மேனே (தமிழே) 3. தமிழின்பம் கோரினவர மொசகுமைய என்ற மெட்டு ப. பேரிலுந் தமிழ்இனிமை தங்கும் பேரின்ப வாரி து. ப. சாரும் எதுகை மோனை வண்ணம் சற்றுந் தவறாது நண்ணும் (பேரிலுந்) உ சீராரும் மொழியின் மும்மை சிறந்த மறையாங் குறளின் செம்மை சிலம்பொடு தனிப்பாடல் சுவையும் செப்புதற் குண்டோ உவமை எவையும் தேரும் நல்லகப் பொருளின் இன்பம் திருக்கோவை கலித்தொகையிற் பொங்கும் திருமாமணி வாசகர் மயங்கும் (பேரிலுந்) 4. பழந்தமிழன் பெருமை ரகுபதி ராகவ ராசாராம் என்ற மெட்டு 1 தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி யன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே (தமிழா) 2 பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம் (தமிழா) 3 யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம் ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம் (தமிழா) 4 கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம்(தமிழா) 5 தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம் அடுத்தவனாம் (தமிழா) 6 காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம் கங்கை வடக்கும் எட்டினனாம் கயிலைப் பனிமலை நட்டினனாம் (தமிழா) 7 நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம் (தமிழா) 8 அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி செய்தானாம் அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிரம் விளைநன் செய்தானாம் (தமிழா) 9 நானில மெங்குந் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு நாகரி கம்நற் பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு (தமிழா) 5. திருவள்ளுவர் திருத்தொண்டு பண் - பந்துவராளி தாளம் - முன்னை ப. தென்னாட ருய்யவந்த திருவள்ளுவர் தெரிந்துமெய்ப் பொருளெல்லாந் திடங்கொள்ளுவர் து. ப. பன்னாடரும் இன்புறும்படி யுள்ளுவர் - அதன் பாங்காகப் பொதுமறைப் பயன்தெள்ளுவர் (தென்) உ. 1 மண்ணோ ரெல்லாரும் ஒரேவகை பிறந்தார் - அவர் பண்ணா ருயர்வினையாற் பதஞ்சிறந்தார் தண்ணா ரருளினார் அந்தணர் துறந்தார் - என்று கண்ணாரத் தமிழனின் கண்திறந்தார் (தென்) 2 ஒழுக்க முடைமையாகும் உயர்குலமே - என்றும் ஓதும் வேதத்தா லில்லை ஒருநலமே இழுக்க முடையானெனின் இழிகுலமே - என்றார் ஏதுகொண் டெதிர்க்கவே இடமிலமே (தென்) 3 உழுவா ருலகத்திற்கே ஆணியென்பார் - அவர் ஒருவரையுந் தொழாத உயர்ந்த பண்பார் வழுவாது முறைசெய்யக் காவலன்பார் - இன்றேல் வசிட்டனும் மறையோத வழியில் என்பார் (தென்) 6. திருக்குறள் படித்தல் பண் - முல்லை (மோகனம்) தாளம் - முன்னை ப. திருக்குறள் படித்தல் வேண்டும் - தென்னோரே யாண்டும் து.ப. இருக்கிற பகல்தொறும் இரண்டொரு குறள்களே இசையினும் தெளிபொருள் இலகுற மீண்டும் மீண்டும் (திருக்) உ.1 பிறப்பினிற் சிறப்பில்லை பெருமையுஞ் சிறுமையும் பேணுந் தொழிலொழுக்கம் பெற்றியாலே விளைக்கும் இறப்புவரை தமிழன் இழிவுற வகுத்தின்றும் ஏமாற்றும் ஆரியனை ஈமேற்றவே முளைக்கும் (திருக்) 2 இல்லறம் நல்லறமாய் இயற்றித்தம் வாழ்நாளெல்லாம் இன்ப மைந்தும் ஒருங்கே இனிது நுகர்ந்து நன்றே தொல்லுல காண்ட சேரசோழ பாண்டியர் வழி தோன்றிய தமிழரே துரைத்தனஞ் செய்ய இன்றே (திருக்) 3 ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும் பாயிரத்தோடு நன்றாய்ப் படித்தபின்னே யொருக்கப் போயொருத்தர் வாய்க்கேட்கப் புதிய பொருளுமுண்டோ வாயறப் பலரையும் வணக்கிய வீற்றிருக்க(த்) (திருக்) 7. திருக்குறள் பொதுமறை திவ்ய தரிசனந் தரலாகாதா என்ற மெட்டு ப. திருக்குறள் பொதுமறையெனத் திகழும் - தீந்தமிழேந்திய (திருக்) உ. 1 தருக்கிய பொருள்கள் தாம்பல வேறாய்த் தழங்குவர் அறுவகை மதத்தார் ஒருக்க வெல்லாரும் உண்மையீ தென்றே உடம்பட விளம்பிய திறத்தால் (திருக்) 2 முத்திரு மேனிகள் அற்றொரு பொருளாய் மூவுல கும்பல முறையும் முத்தொழிற் படுத்தும் எத்தகை யிடத்தும் முழுமுதற் கடவுளென் றறையும் (திருக்) 3 பிறப்பினா லெவர்க்கும் பெருமையொன் றில்லை பேசுறு குலம்செயுந் தொழிலே சிறப்புறு மொழுக்கம் செல்வமாங் கல்வி சிறுமையாம் இழுக்கம்இப் பொழிலே (திருக்) 4 தமிழ்நிலந் தனிலோர் தமிழ்மகன் மதியால் தமிழிலே தோன்றினும் என்றும் இமிழ்கட லுலகம் எவணும்மே லையர்தாம் இலகுறு மதிமிசை சென்று (திருக்) 5 நிறம்புனை யுடையும் நிலைபெறு வாழ்வும் நிலந்தொறும் பலதிற மெனினும் அறம்பொரு ளின்பும் அவற்றொடு வீடும் அனைத்துல குங்கொளும் அளவினும் (திருக்) 8. நக்கீரன் பண் - காப்பி தாளம் - இரட்டை (சாப்பு) ப. நல்ல தமிழன் நக்கீரன் - அவன் நானிலத் தில்ஒரு நாவன்மைப் பேரன் (நல்ல) து.ப. சொல்லும் பொருளொன்றும் சோராத கூரன் சூலன்வந் தாலும்பின் தோலாத சூரன் (நல்ல) உ. தெள்ளும் பொருள்தன்னைத் தேரதி காரன் தேறாத இறைவன்பேர் நூலுரை காரன் எள்ளுங்கொண் டானன்றே இறக்கச்செய் சீரன் என்றாலும் பின்மீள இரக்கங்கொள் நீரன் (நல்ல) 9. பரிதிமாற் கலைஞன் பண் - வசந்தா தாளம் - முன்னை ப. பரிதிமாற் கலைஞன் பயன்முதிர் இளைஞன் து.ப. விரிதமிழ் வலைஞன் விழுமுது விளைஞன் (பரிதி) உ. தனித்தமிழ் வித்துத் தானே விதைத்து தண்ணீ ருகுத்துத் தணந்த புறத்து இனித்த கனித்து எனும்மரம் கொத்து ஈயும் நிலத்து இந்தக் காலத்து (பரிதி) 10. மறைமலையடிகள் மாண்பு பண் - கலியாணி தாளம் - ஈரொற்று (ரூபகம்) ப. தவத்திரு மறைமலை யடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள் து. ப. தகைத்து நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே தவிடு பொடிகள் சிவத்திரு வருள்கொடு மானச் செந்தமிழ் விடுதலை காணச் சவக்கடு வடமொழி யான சடங்கொடு வழிபடல் நாணத் (தவத்) உ.1 தமிழொடு வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத் தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம்கனியப் பெற்று ஆன்றவிந் தடங்கிய கொள்கை சான்றெதிர் மடங்கிட வெல்கை ஏன்றரு நூல்களை நல்கை எதிரியும் வாழ்ந்திட வுள்கைத் (தவத்) 2 தகத்தக வெனத்தங்க மேனி தலையுந் தாங்குந் துவர்ஓர் வானி தமிழுணர்ச்சி ததும்பும் மானி தருஞ்சொற் பொழிவு தவழும் ஆனி காமுறு பண்குர லென்னத் தாமரை கண்களை யுன்ன மாமறை நுண்பொருள் துன்னத் தாமுரை பண்பருள் ஒன்னத் (தவத்) 11. தமிழ்ப்பெயர் தாங்கல் சாந்தமுலேகா என்ற மெட்டு ப. தமிழிலே பேரைத் தாங்ககில் லாரைத் தமிழரெனவுந் தகுமோ து. ப. அமிழ்தினு மினியபூ வுமிழ்தரு தேனாம் (தமிழிலே) உ.1 தாயை மறுதலிக்கை தாயிடத் தன்போ தூய தமிழ்ப்பெயரின் தொடர்பின்மை பண்போ (தமிழிலே) 2 மொழிகளுக் கரசியாம் முதுதமிழ்ச் சொல்லை இழிவெனக் கருதுகை இழிதக வெல்லை (தமிழிலே) 3 தன்பெயர் தமிழாகத் தாங்கியிரா விடமே செந்தமிழை யுயர்த்திச் சிறப்பித்தல்என் மடமே (தமிழிலே) 4 பிறமொழிப் பேர்கொண்டாரின் பேர்இடம் தாங்கின் பெயர்வதில்லா மல்தமிழ்ப் பெருமையே நீங்கும் (தமிழிலே) 5 அச்சமோ நாண்மடமோ அடிமை மூடநம்பிக்கை எச்சம்மா றன்பின்மையோ எழில்தமிழ்ப்பேர் தாங்காமை (தமிழிலே) 6 சமயமொழி பேர்என்று சாற்றவொன் றில்லை அமையுமொழி யிறைவன் அறியாத தில்லை (தமிழிலே) 12. தமிழே தனித்தமிழ் சந்திரசூரியார் போங்கதி மாறினும் என்ற மெட்டு ப. தமிழென ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழியில்லை தமிழது தானே தனித்தமி ழாகும் தவிர்ந்திடின் பிறசொல்லை உரைப்பாட்டு தனிப்பாலென்று சொல்வது தருபவர் பாலொடு தண்ணீர் கலந்த பின்பே தனித்தமிழென்று சொல்வதும் தமிழொடு பிறசொல்லைத் தகவிலார் கலந்த பின்பே ப. கடன்கொள்ளு மொழிகளே கடுகி வளருமென்று கழறுவரே சிறியார் வடமொழிகளுக் கெல்லாம் வாழ்வருள் தமிழின்சொல் வளந்தனை அவரறியார். உரைப்பாட்டு பெருஞ்செல்வன் வேண்டாது பிறர்பாற் கடன்கொள்ளின் பெயரும் பொருளுங் கெடுமே பிறசொல்லை வேண்டாத தமிழுங் கடன்கொண்டு பெரிதுங் கெட்டது திடமே. தமிழைக் கெடுப்ப தொன்றே தம்பெரும் பணியெனத் தாங்கியுள்ளார் சிலரே அவரைத் தெரிந்துகொண்டு அகன்று விலகிநிற்க அருந்தமிழ் ஆர்வலரே (தமிழென) 13. பெரியார் பண் - காப்பி தாளம் - முன்னை ப. செயற்கரிய செய்தவர் பெரியார் - செம்பொற் சிலைபெறும் புகழுக்கே சிறப்பாக வுரியார் து.ப. மயற்கை யொடுமடமை அரியார் - பல மதகரி களுக்கே கோடரியார் (செயற்) உ. 1 பையற் பருவத்துஞ் சாமி யென்று - வட பார்ப்பனர் பாதத்தில் விழுந்து கையிற் பொருள் காணிக்கையாத் தந்து - மிகக் களிக்கும் வழக்கம்போம் விழுந்து (செயற்) 2 உண்டிச் சாலை யுள்ளறை யுண்டு - பின்னே ஒழிந்த வேதியன் எச்சில் நன்று உண்டுவந்தான் தமிழன் அன்று - அதை ஒழித்தவர் பெரியாரே வென்று (செயற்) 3 சூத்திரன் தமிழனாய்ச் சொல்லி - அவன் சொந்த நாட்டிலவனைத் தள்ளி மேல்தொடுவது மின்றி யெள்ளி - றூவன் மிதித்த நிலைக்கு வைத்தார் கொள்ளி (செயற்) 14. தமிழ்ப் புலவர்க்குப் பிழைப்பின்மை படிக்காசுப் புலவர் புலம்பல் மீளாத நரகினுக் காளாக்கும் குடியே என்ற மெட்டு ப. பாழானதே என்வாழ்வு பண்ணாருந் தமிழே ஏழாங் கடையிலும்என் எண்ணம் நீர்க்குமிழே. து. ப. தாழாத பணியெனுந் தாளாண்மை யுழவே வாழாது கழிந்ததென் வாளாண்மை மழவே (பாழா) உ. 1 செப்படி மயக்கமே செய்கலையும் - மிகச் சேணுயர் கழைக்கூத்துந் தெரிந்தோ மில்லை தப்பிய மகளிராய்ப் பிறந்தோ மில்லை - செல்வத் தையலார் குற்றவேலுஞ் செய்தோ மில்லை (பாழா) 2 மூவேந்த ரொடுவேளிர் முதுகுமணன் - கொடை முதிர்ந்த நல்லியக்கோடன் முனம்மறைந்தார் ஈவேந்தன் சீதக்காதி இரகுநாதன் பின்னே இலவம் பஞ்சே தமிழ்ப்புலவ ரெல்லாம் (பாழா) 3 பிள்ளைப் பாண்டியனொடு வில்லி யில்லை - பிழை பேணாத சாத்தனொடு கூத்த னில்லை கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை - இன்று காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை (பாழா) 15. வாழ்க்கை யமைப்பு முரண் பண் - சிம்மேந்திர மத்திமம் தாளம் - முன்னை சுரைக்குடுவை யமிழ அரைக்கும் அம்மி மிதக்க வரைக்கரி நீத்து முயல்நிலை யேனோ உரைக்கும் இச்சுனை தமிழ்நிலந் தானோ துரைத்தனம் இதற்கொரு துணை யீனோ சிறிது கற்றோர் பெருகி வாழ பெரிது கற்றோர் சிறுகி வீழ (சுரைக்) 16. மூவகையர் ஏமாற்றல் பண் - பியாகு தாளம் - முன்னை ப. ஏமாற்றல் ஏன் இன்னுமே - இவ்வண்ணமே உ. 1 நாமேற்றும் ஆரியனும் நண்ணுந் திராவிடனும் நம்மவனுந் தமிழன் தெம்மாடி யென்றே யின்னும் (ஏமா) 2 ஆரியம் தேவமொழி அதிலே வழிபாடென்று பூரிய அயலாரே புன்சிறு பான்மை நின்று (ஏமா) 3 தமிழுக் கொன்றுஞ் செய்யாதும் தமிழ்த்தொண்டரைப் போற்றாதும் தமிழை வளர்த்தோ மென்று தருக்கி யரசு கூறும் (ஏமா) 4 கலவை மொழியிற் கல்வி கற்பிக்குந் திட்டமொன்றைக் குலவுந் தமிழே யென்று கொண்டாடுங் கட்சியின்றே (ஏமா) 5 திரைப்பட மொழியையே தீவிய தமிழென்று உரைப்பிட மெல்லாஞ் சொல்லி உண்மை யறியாதாரை (ஏமா) 17. தமிழ்ப் பகைவர் வதனமோ சந்த்ர பிம்பமோ என்ற மெட்டு ப. இதுவொரு புதுமையானதே - இழிவு தருவதே து.ப. இத்தமிழகத் திருந்தயலார் இதனை யெதிர்ப்பதே (இது) உ. 1 முத்தமிழ் மறைமலையடிகள் ஒத்த தமிழும் ஒருதமிழா எத்தனையும தின்பமுண்டோ எனவினவுவதே (இது) 2 முந்து தொல்காப்பியத் தெழுத்தன்றும் பிந்தியசோகன் கல்வெட்டி னின்றும் வந்தென வுலகரங்கி லின்றும், வழிவிளம்புவதே (இது) 3 மாமறை மலையடிகள் நாட்டும் சோம சுந்தர பாரதி கூற்றும் பாரதி தாசன் பைந்தமிழ்ப் பாட்டும் பகரும் தீதென்பதே (இது) 18. தமிழ் கெடவரும் வளர்ச்சித் திட்டம் தீங்குவிளைப்பது தோடுடைய செவியன் என்ற மெட்டு வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளியிளந் தெங்கின் பாளைமிசை வாளின்மிளிர் பண்ணைநீர்ப் பாசனங்கண் டாலும் காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத்தமிழ் நைய நாளைவட இந்தியொடு நாகரி நலியின்ஒரு நன்றோ! 2 இரும்பும்இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்புநிலக் கரியும் பரும்பெனக்கு விந்துதொழிற் சாலைகள் பலவும்எழுந் தாலும் விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்ததமிழ் நைய உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறுசெயின் நன்றோ? 3 கீழ்கரைநின் றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை மேல்கரைநேர் சேரவிணை யாகிப்பின் மின்னோட்டம்வந் தாலும் சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின்ஒரு நன்றோ? 4 பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டிதொட்டி யெல்லாம் நள்ளியெதுங் கட்டணமே யின்றிநல் கூர்ந்தாருங் கற்றாலும் வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்ததமிழ் நைய கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ? 5 முதியோரெலாம் இளமைவர மூப்புச்சம் பளமும் பெற்று வாழ்ந்து பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள்பெற் றாலும் மதிசூடிமுன் மதுரையமர் மன்றஞ்சேர்ந் தாய்ந்ததமிழ் நைய புதிதாய்வரும் இந்தியொடு நாகரி புகுமேல்ஒரு நன்றோழூ 6 நண்ணும்நடுப் பகல்மாணவர் நாட்டுள்ள பள்ளிகளி லெல்லாம் உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியேவந் தாலும் பெண்ணியிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்ததமிழ் நைய எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல்செயின் நன்றோ? 7 புத்தாடைபல் பொத்தகங்கள் பூந்துகிற் பொக்கணத்தி லிட்டுத் தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற்றந் தாலும் பித்தனென்னும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்ததமிழ் நைய எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின்ஒரு நன்றோ? 8 ஊர்தோறும்பல் உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே வாங்கும் நேர்மைவிலைக் கடைகள்பல அண்மையில் நிலையாயிருந் தாலும் நீர்மேவிய சடையன்முனம் நீடியே ஆய்ந்ததமிழ் நைய நீர்மையிலா இந்தியொடு நாகரி நெருங்கிவரின் நன்றோ? 9 கற்றோருடன் மற்றோரெலாங் கண்ணிய பணியாற்பெரு வருவாய் வற்றாநல வாழ்விற்பெறும் இன்பமே வழிவழியுற் றாலும் பொற்றாமரைக் குளமேற்சிவப் புங்கவன் ஆய்ந்ததமிழ் நைய முற்றாவியல் இந்தியொடு நாகரி முடுகிவரின் நன்றோ? 10 பலகலைதேர் கழகமெனப் பைந்தமிழ் நாட்டிலுள வெல்லாம் மலைபோற்குவி நல்கைமகிழ் கூரவே மதிதோறுமுற் றாலும் கலகலென வொலிக்குங்கழற் கண்ணுளன் ஆய்ந்ததமிழ் நையக் கலகம்விளை இந்தியொடு நாகரி கறுவிவரின் நன்றோ? 19. தமிழனின் தாய்மொழிப் பற்றின்மை ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே என்ற மெட்டு ப. தமிழனே இன்றும் தாய்மொழி பேணாதவன் இமிழ்கடல் உலகினில் இவனுக்கோ ரிணையுண்டோ? (தமிழனே) உ. 1 தாயென மேலாய்த் தன்னைத் தாங்கிவளர்த் திருந்தும் நாயினுங் கீழாய் அதை நடத்தமனம் பொருந்தும் (தமிழனே) 2 ஆழ்ந்துகற் றாய்ந்தபின்னும் அமுதச் சோறென்னுஞ் சொல்லும் தாழ்ந்தவர் சொல்லென்றின்னும் தள்ளவே மனம் ஒல்லும் (தமிழனே) 3 வடமொழியின் கிளையே வண்டமிழ் என்று காட்டும் மடவகர முதலிய மன்னும் இத்தமிழ் நாட்டும் (தமிழனே) 4 மறைமலை யடிகளை மறைத்தனர் முற்றும் இங்கே மறையவர் கையிற் சேரின் மலர்வது தமிழ் எங்கே? (தமிழனே) 5 அரியணை மேல்தமிழை அமர்த்தினோம் என்றே சொல்லிப் புரியணை மேலிருத்திப் பொருத்துவர் பின்னே கொள்ளி (தமிழனே) 6 இந்தியும் எந்தா யென்றே ஏற்றித் தொழுது நின்றார் நந்தமிழ் அந்தோ சொந்த நாட்டிலும் வாழ ஒன்றார் (தமிழனே) 7 ஆரியன் தெய்வ மென்றே அடிமைத் தனத்தில் வாழ்ந்தான் ஏரண உண்மை கண்டும் இழிந்த விலங்காய்த் தாழ்ந்தான் (தமிழனே) 20. தமிழன் உடைமை தமிழ் ஒன்றே நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்ற மெட்டு 1 இருப்ப தெல்லாம் தமிழனுக்கே இன்பத்தமிழ் ஒன்றே இனியதையும் இழந்து விட்டால் இங்கேவாழ் வில்லை பொருத்தமுறும் தாய்க்கொலையும் புரிகஎன் றுரைத்தால் பொதுமதியால் அவ்வுரையின் புன்மையறிந் திடுவீர் (இருப்ப) 2 தன்வீட் டுள்ள நெருப்பும் தப்பா மற்சுடும் தொடினே தன்னாட் டுளதே யென்றோர் கட்சி தழுவின் தீயது தீங்காகும் பின்னாட் கேஅது தெரிந்தால் பிரிந்தே விடவேண்டும் தன்கேட்டைத் தான்தேடின் தடுப்பார் யாருமில்லை (இருப்ப) 3 உரிமை யெல்லாம் இழந்தால் - பின் உலக வாழ்வும் எதற்கே உரிமை யென்றே அடிமைத் தனத்தை உரைத்தால் உரிமை யாகாது இருமொழியாம் கொள்கை யிங்கே என்றும் நிலவுகவே இருமொழியும் தேர்ச்சி பெற்றால் எங்கும் அதுபோதும் (இருப்ப) 21. செந்தமிழே தமிழன் செல்வம் இசைந்த மெட்டிற் பாடுக ப. செந்தமிழ் ஒன்றேநம் செல்வம் சேர்ந்தது கொண்டேமுன் செல்வம் து. ப. வந்தெதிர் பகையைநாம் வெல்வம் வையமெல்லாம் ஓர்இனம் சொல்வம் (செந்தமிழ்) உ. முந்திய தமிழின்முறை யுள்வம் மூதுல கெங்கும்இது தெள்வம் இந்தியி னாட்சிதான் தள்வம் எவ்வகை மொழியும்நாம் கொள்வம் (செந்தமிழ்) 22. எது தமிழ்? தயார் தயார் என்ற மெட்டு ப. எது தமிழ் - எந்நாளும் து. ப. இறையனா ரகப்பொரு ளுரைமுதல் இதுவரை யுளபல வகைகளுள் (எது) முதுகுமரியில் முகிழ்த்து மலர்ந்த முதன்மை யுலகத் தாய்மொழி மதுரையில் முதற்கழகம் ஆய்ந்த மதுரம் மிகுந்த தூய்மொழி மறைமலை யடிகளே நிறைநிலை அறைமொழியது பிறமொழியொலி இறைமொழியெதும் இறையுமேயிலி (எது) 23. தமிழன் குலம் தமிழன் பண் - சிந்துபைரவி தாளம் - முன்னை ப. நானொரு தமிழன் நான்வந்த வழியே தேனினு மினிய செந்தமிழ் மொழியே து. ப. வானுற வெனும்பொய் வடமொழி யொழியே வண்டமிழ் கெடவழி வகுத்தது பழியே (நானொரு) உ. கோனவன் பிறப்பும் குடிகளின் வழியே குலைந்திடும் ஆட்சியும் குறுவாழ்வுச் சுழியே மாநிலத் தொழில்கள் மனங்கொள்ளும் உழியே மருவிய குலவினம் மன்னில மொழியே (நானொரு) 24. தமிழ்ப்பற்று பண் - சிந்துபைரவி' தாளம் - முன்னை ப. பற்றிருந் தாலும் போதும் பைந்தமிழ்மேல் உ. 1 கற்றவரே தமிழைக் காட்டிக் கொடுத்து நின்றார் கல்லாத பேரே தமிழ்க் காவல ராகி வென்றார் (பற்றி) 2 சின்னச் சாமி யிளைஞன் செந்தமிழ் கற்ற துண்டோ அன்னைத் தமிழைக் காக்க அழலிற் குளித்தா னன்றோ (பற்றி) 3 கோடிக் கணக்கிற் செல்வம் குவித்தார் கொடாத கண்டர் ஓடியாடித் தொகுத்தே உதவினார் ஏழைத் தொண்டர் (பற்றி) 4 மாண்டபின் னருந்தமிழ் மாணவ னென்ன அன்பு பூண்டனர் போப்பையரும் பொறிக்கக் கல்லறை முன்பு (பற்றி) 5 காசை யிழக்கவேண்டா கடுஞ்சிறை செல்ல வேண்டா பேசும் தமிழின் தூய்மை பேணியே காக்க வேண்டும் (பற்றி) 6 நற்றமிழ் மாண்பை யெல்லாம் நாடி யறியா தோரும் பெற்றவள் போலே யின்று பிழைக்க வுதவும் பாரும் (பற்றி) 25. தமிழைக் காட்டிக்கொடாமை எளியோரைத் தாழ்த்தி என்ற மெட்டு ப. கனவாகும் பொழுதும் கண்ணான தமிழைக் காட்டிக் கொடுத்திடக் கருதாதே. உ. மனம்போலப் பொருளும் மாவேந்தப் பதமும் மருவினும் சாவாத மருந்தாகுமோ எனவேனும் உடமை எதுவேனும் நிலைமை இறந்தபின் உடன்வந்தே யிருந்தாகுமோ (கன) 26. சேலங்கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர் பண் - காப்பி தாளம் - முன்னை ப. சேலங்கல் லூரித்தலை சிறந்த முதல்வர் என்றம் சாலும்புகழ் இராமசாமிக் கவுண்டர் அன்றோ. து. ப. ஞால முழுதும்தமிழ் நன்கு பரவ அடி கோலவந் தவரென்று கூறுதல் மிகையுண்டோ (சேலங்) உ. 1 வாணியம் பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு பானொடு மூன்றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை மாணவே முதலென மாற்றி யேழைமாணவர் மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே (சேலங்) 2 ஆரியரே பெரும்பால் ஆசிரியன்மார் அங்கே அமர்ந்திருந்தார் அத்தீங்கை அகற்றவே பல்துறையும் சீரிய தமிழரே சிறந்த தலைவரெனச் சேர்ந்து பணிசெய்யவே செய்தனர் நன்முறையே (சேலங்) 3 பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும் மன்னவர் குலமென எண்ண வுறுவனவே புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே (சேலங்) 27. தமிழ்த்தொண்டர் படைச்செலவு ராசன் வந்தனம் என்ற மெட்டு 1 படையெடுக்கவே கடு நடைதொடுக்கவே பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத்தமிழ் மறவரே பாரெலாம் ஊரெலாம் பண்டை முத்தமிழ் பரப்புவோம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் 2 பரவைதன் னடிதொழப் பணித்த பாண்டியன் பாங்கிலே வளர்ந்து பண்பில்ஓங்கு பாண்டி மறவரே பரண்மனை அரண்மனை பைந்தமிழையே பரப்புவோம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் 3 தூங்கெயில் கொண்ட தொடித்தோள்நற் செம்பியன் தோன்றிவந்த குடியின் மானம் ஈண்டுசோழ மறவரே தொழிலகம் பொழிலகம் தூயதமிழைப் பரப்புவோம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் 4 தென்குமரிமேல் வடபனி மலைவரை சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே தெருவிலும் செருவிலும் தீந்தமிழ்தனைப் பரப்புவோம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் 5 வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய் வீறுகொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும் வெல்லுவோம் செல்லுவோம் வெண்ணிலவையுங் கொள்ளுவோம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் இடம்வலம் 28. தமிழுக்கு நற்கால அண்மை எந்தன் இடது தோளும் என்ற மெட்டு ப. நல்ல காலந் தமிழை நண்ணி வருவதென நான்செவி யுற்றேன் நல்ல சொல் சொல் சொல் இன்றே (நல்ல) து.ப. பல்லவ புரங்கண்ட பாக்கத்து விரிச்சியும் பாங்காயொத் திசைத்தது சில் சில் சில் என்றே (நல்ல) உ. 1 நள்ளிரவிலே சென்று தில்லை யம்பலத்திலே நானிருந்தேன் நெஞ்சமும் நள் நள் நள் என்றே தெள்ளிய ஒலியொன்று தேனூறத் திணிந்ததே தீந்தமிழ் உலகெலாம் தெள் தெள் தெள் என்றே (நல்ல) 2 வைகறை யிலேயொரு மெய்யெனக் கனவினில் வந்தனள் தமிழ்மக்கள் வெல் வெல் வெல் என்றே வல்லியர் சூழநின்றோர் வாயில்லா மகளையே வரைந்தனர் அணைநின்று செல் செல் செல் என்றே (நல்ல) 29. தமிழ் வெற்றி முரசு ரத்ன மகுட ரஞ்சித பூசணி என்ற மெட்டு 1 வள்ளுவன் யானைமேலேறி வலம்வந்து வார்முரசம் இடிபோல முழங்கவே அறை அறை அறை தெள்ளுந் தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித் தீர்ந்தது சிறையென் றறை அறை (வள்ளு) நாட்டிலுள்ள திருக்கோயில் களிலெல்லாம் நல்ல தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை கூட்டுறவாய் ஒன்றுகூடி யெல்லாருமே கும்பிட வாருமென் றறை அறை (வள்ளு) 3 மண்ணுல கெங்கணும் மன்னரொடு கூடி மாட்சிமை யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை உண்மையான வரலாறே யிந்நாட்டினி ஓங்கி வளர்கென அறை அறை (வள்ளு) 30. தமிழ்வாழ்த்து பண் - காப்பி தாளம் - ஒற்றை ப. வாழிய வேங்கடந் தென்குமரி வைகிய ஆயிடைச் செந்தமிழே உ. வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே வேறுபல் நூல்தமிழ் வீறுகவே ஏழிசை நாடகம் எல்லாந் தமிழாக இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக இந்தியும் செல்லுக வந்தவழி (வாழிய) 31. உலகத் தமிழ்க் கழகம் தெண்டனிட்டேன் அடியேன் என்ற மெட்டு ப. உலகத் தமிழ்க் கழகம் - உயர்ந்தொழுகும் து. ப. பலகற் றுயர்ந்துதனிப் பைந்தமிழ்ச் செல்வங்கண்ட அலகற்ற மறைமலை அடிகளைத்தன் மேற்கொண்ட (உலகத்) உ. குலமுத் தமிழைக் கொல்லுங் கொண்டான்மா ரோடுகூடிக் கோலாலம்பூர் சென்னையிற் குடவரும் வடவரும் பலகுற்றமாய்த் தமிழைப் பழித்த விருளகற்றப் பகலவனெனத் தோன்றிப் பல்கதி ரோடுவரும் (உலகத்) 32. பறம்புக்குடி குரும்பைநிகர் மென்முலையாள் என்ற மெட்டு 1 உலகத்தமிழ்க் கழகக்கிளை யுற்றபல மாவட்டங்கள் முலமுலெனக் கிளைகள் மொய்ந்த முதன்மையது முகவையாகும் பலகிளையும் பாங்கா மேனும் படைப்புமுறைத் தலைமை சொல்லின் தலைவன்தமிழ்க் குடிமகனே தங்கியதாம் பறம்புக்குடி. 2 கழக முதலாட்டைச் சீர்நாள் காணரிய வள்ளுவர்தம் பொழுதுகழிந் தீராயிரம் புகலுமிந்த ஆண்டயர்வும் பழகுபரி மேலழகர் பளகறுக்கும் உரைவிழாவும் விழுமியவாய் நடக்குமாற்றால் விஞ்சியதாம் பறம்புக்குடி. 33. திரு. இரா. முத்துக்கிருட்டிணன் மண்டலம் புகழும் மாணிக்கமாய் விளங்கம் என்ற மெட்டு 1 மெத்தப் பெருந்தகை யொத்துப் பிறந்தவன் முத்துக் கிருட்டிணன் அன்றோ இற்றைக் கிருந்தமிழ்ப் பற்றிற் சிறந்தவோர் கொற்றத் திருமகன் ஒன்றோ (மெத்தப்) 2 கோப்பெருஞ் சோழனும் மாப்பிசி ராந்தையும் கோப்புமாறிப் பிறந்தன்றே யாப்புற வேயின்றிக் கேட்பினா லேயொன்றிக் காப்பவன் முன்வந்தானின்றே (மெத்தப்) 3 தென்னன் தமிழ்பேணும் மன்னன் ஒருவனும் சென்னையிலே யின்றே யில்லை தன்னந் தனிவள்ளல் அன்ன இவனின்றேல் என்னென் னவோபெருந் தொல்லை (மெத்தப்) 34. மங்களம் நீ நாம ரூப முலரு என்ற மெட்டு ப. எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம் து. ப. பொல்லாப் பகையும் பசியும் பிணியும் இல்லாமல் எங்கும் நன்கனம் (எல்லா) 3 சிறுவர் பாடல் திரட்டு முகவுரை ஒருவன் எந்தப் பொருளையும் தான் உணர்ந்தவாறே பிறரை உணரச்செய்வதுதான் சரியான உபாத்திமத் தொழில். இப்படி அறியச் செய்வதற்கு வேண்டுவன இரண்டு. முதலாவது உபாத்தியாயர் சொல் வன்மை. இரண்டாவது கேட்பவரின் கவனம், கேட்பவர் கவனிப்பதற்குக் காரணமாவது, தாம் படிக்கவேண்டும் என்னும் ஆசையே. இவ் வாசை ஒருவனுக்குப் பகுத்தறிவு வந்தவுடன் உண்டாகும். பகுத்தறிவில்லாத சிறுவர்க்கு இவ் வாசையில்லை. ஆகவே அவர்க்கு ஆசையை உண்டாக் கவேண்டும். எப்படி? அவர்க்குப் பிரியமானவற்றைச் செய்யவேண்டும். அவையாவன : 1. பாட்டு : பாட்டைப் படிக்கவும் கேட்கவும் பெரியோர்க்குப் பிரியம். சிறுவர்க்கோ சொல்லவேண்டுவதில்லை. பாட்டிலே அவர்களுக்கு அதிக உற்சாகம். பாட்டின் மூலமாயே பல பொருள்களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். பாடிக்கொண்டு செய்யச்சொன்னால் பிரியமில்லாத வற்றையும் செய்வார்கள். உதாரணமாக தேகாப்பியரசம் (Drill) அவர்களுக்குப் பிரியமில்லை. பாடிச் செய்யச்சொன்னால் பிரியம். அப்படிப் பாடும்போது சைகைகளோடு பொருந்தப் பாடச்செய்வது நலம். இராகமும் நன்றாய் இருக்கவேண்டும். 2. விளையாட்டு : இது சிறுவர் தாமாய்ப் பிரியமானபடி விளையாடுவது. இதற்கு ஒரு நேரமுண்டு. 3. கதை : இது சிறுவர்க்கு ஏற்றபடி சிறு சிறு கதைகளை எளிய நடையில் தெளிவாய்ச் சொல்வது. 4. கைவேலை: இது, சட்டி பண்ணுதல் குச்சடுக்குதல் முதலியன. தம் கையினால் ஒரு பொருளைச் செய்வது சிறுவர்க்கு ஒரு பெரிய பெருமை. அப்படிச் செய்யும்போது அந்தந்தப் பொருளைப்பற்றிய பாட்டைப் பாடிக்கொண்டு செய்யச் சொல்லவேண்டும். ஆகவே சிறுவர்க்குரிய பாடங்களைப்பற்றியும் விளையாட்டுகளைப் பற்றியும் பாட்டுப்புத்தகம் ஒன்று இருப்பது நல்லது. இதுவரை அவ்வகையான விரிவான புத்தகங்கள் அநேகம் இல்லை, வந்தவற்றில் உள்ள பாட்டுகள், பெரும்பாலும் கருத்தில்லாமல் குருட்டுப் பாடல்களா யிருக்கின்றன. ஆகவே இந் நூல் வந்தது. இது பொருட்பாடம், கதை, விளையாட்டு, கைவேலை முதலியவைமேல் 29 பாடல்கொண்டது. ஒவ்வொரு பாட்டுக்கும் மேலே மெட்டுக் குறிப்பிட்டிருக்கிறது. எல்லாப் பாடல்களும் இரண்டாம் வகுப்புமட்டும் பயன்படுவன. பாட்டுகளில், அருமையாய் ஆங்காங்குச் சில அரும்பதங்கள் உண்டு. அவற்றின் பொருளை இந் நூலின் கடைசியிலுள்ள பாடக்குறிப்பு விளக்கம் என்னும் பாகத்தில் கண்டுகொள்க. திருவல்லிக்கேணி இங்ஙனம் 26-8-1924 ஞா. தேவநேயப் பாவாணர் பொருளடக்கம் பாடம் பக்கம் முகவுரை 67 1. கடவுள் வணக்கம் 71 2. இராஜ வாழ்த்து 72 3. புகைவண்டி 73 4. கப்பல் 74 5. கடல் 75 6. வண்ணாத்திப் பூச்சி 76 7. பூப்பறித்தல் 78 8. மண்ணாங்கட்டி விருந்து 79 9. மழை 80 10. குழந்தையைக் குளிப்பாட்டல் 81 11. நிலா வழைத்தல் 82 12. தாலாட்டு 83 13. பிச்சைக்காரன் 84 14. கழுதை 84 15. நாய் 85 16. சேவல் 86 17. சிட்டுக்குருவி 87 18. வாழைமரம் 88 19. கொக்கும் நரியும் 89 20. குச்சடுக்கல் 90 21. களிமண் வேலை 90 22. முத்தடுக்கல் 91 23. பாய் முடைதல் 92 24. கண்ணாம்பூச்சி 92 25. பூனைகளும் பாற்கட்டியும் 93 26. சோறுட்டல் 94 27. கத்தரித்தோட்டம் 94 28. மாணவர் காலை வேலை 95 29. வாசிக்கும் முறை 96 1ஆம் பாடம் கடவுள் வணக்கம் வாசுதேவனே வந்தாளும் மைந்தனை என்ற மெட்டு 1. தேவனே உன்னைத் தேடி வந்தோமே காவ லாகவே கருணை செய்குவாய். 2. சாமி நாதனே சாற்றினேன் உன்னை தீமை யாவையும் தீர்ப்பாய் இன்னுமே. 3. என்றன் நாடெல்லாம் இறைவனே உன்னை என்றும் ஏத்திய இசைந்து வாழச்செய். 4. அன்னை தந்தைநீ அண்ணன் தம்பிநீ முன்னும் பின்னும்நீ மூவா மருந்துநீ. 5. அழியும் பொருள்களை அகற்றி யுன்னைநாம் செழிய பொருளெனத் தேடச் செய்குவாய். 6. கலகம் நீங்கியோர் கட்டா யிருக்கவே உலகம் யாவையும் ஒருமைப் படுத்துவாய். 7. அறிவில் லாமையை அகற்றி எங்கட்கு அறிவை ஆக்கியே அரவ ணைத்திடாய். 2ஆம் பாடம் இராஜ வாழ்த்துப் பாடல் வாசுதேவனே என்ற மெட்டு. பின்னடி முடுக்கு 1. வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே ஆழி குழும் அவனி ஆளும் அரசன் வாழ்கவே. 2. மாத மாதமாய் மாரி வாழ்கவே சாதிகளைச் சரிப்படுத்தும் சதுரன் வாழ்கவே. 3. வேதம் வாழ்கவே வேள்வி வாழ்கவே நீதியாவும் நிலைநிறுத்தும் நிருபன் வாழ்கவே. 4. மறையோர் வாழ்கவே மணங்கள் வாழ்கவே குறைகள் யாவும் நீக்கும் ஜார்ஜு கோமான் வாழ்கவே. 5. போகம் வாழ்கவே புண்யம் வாழ்கவே ஏக மாக ஆளும் ஜார்ஜு இறைவன் வாழ்கவே. 6. தர்மம் வாழ்கவே தனமும் வாழ்கவே ஜெர்மன் சண்டை யில்ஜெயித்த சேயன் வாழ்கவே. 7. தந்தை தாயைப்போல் தாமே முதல்முதல் இந்தியாவில் பட்டம் பெற்ற இருவர் வாழ்கவே. 8. வாழ்க வாழ்கவே வையம் வாழ்கவே ஊழி ஊழி ஐந்தாம் ஜார்ஜு உரகன் வாழ்கவே! 3ஆம் பாடம் புகைவண்டி போகுது புகைவண்டி - இந்தப் பூதலத்தில் உள்ளவர்க்குச் சுகவண்டி (போகுது) 1. முன்னே ஓரி யந்திரம்தான் - முடுகிப் பின்னேயுள்ள வண்டிகளைப் பின்னி இழுத்து (போகுது) 2. கம்பீரமாய் இரண்டு - இரும்புக் கம்பிகள்மேல் தங்கலின்றி விரைவாக (போகுது) 3. சன்னலின் வழிக்காணும் - காட்சியை நன்னயமாய்க் கண்டுசனம் நகைத்திருக்க (போகுது) 4. புகைளைப் புரைவழியாய்ப் - புதிய வகைவகையாய் வெளியே வரவிட்டு (போகுது) 5. இனியதோர் குழல்ஊதும் - இதற்கு இனியும் உலகில்நிகர் ஏதும் வருமோ? (போகுது) 6. மடமட வென்றிரைந்து - முழங்கிக் கடகட வென்று காற்றாய்ப் பறந்தோடி (போகுது) 7. கடைசியில் கார்டு இருந்து - பச்சைக் கொடியை வெளியில் காட்டத் திடமாக (போகுது) 8. சாமியின் கருணையினால் - தன்னை ஜேம்ஸ் வாட்ட ஜார்ஜ் ஸ்டீபன் செய்ததைச் சொல்லி (போகுது) 4ஆம் பாடம் கப்பல் பாட்டு முத்திநெறி அறியாத என்ற மெட்டு 1. கப்பலைப் பார்! கப்பலைப் பார்! கடலுள்ளே கப்பலைப் பார்! தெப்பத்தேர் ஓட்டம்போல் தெரிகின்ற கப்பலைப் பார்! 2. புத்தியுள்ள பெரியோர்கள் புண்ணியமாய்ச் செய்த கப்பல் மெத்தை வீடு போலடுக்காய் மிகவினிதாய்க் காண்கிறதே! 3. பட்சிகளின் இறகுகள்போல் பலமாகப் பாய்களுமே உச்சியிலே உரத்தடிக்க ஓடுகின்ற கப்பலைப் பார்! 4. விசிறுகன்ற காற்றாலோ? வேறான சூழ்ச்சியாலோ? பசியகடல் மேலாகப் பாய்ந்தோடிப் போகிறதே. 5. அலைமேலே தொட்டில்போல் ஆடியாடிப் போகிறதே உலைமேலே புகைபோலே உயரத்தான் புகைகிறதே 6. ஊஞ்சலிலே இருப்பதைப்போல் உள்ளேபல பேர்இருக்க நீஞ்சி நீஞ்சி நீர்மேலே நெடுந்தூரம் போய்விட்டதே. *********** 5ஆம் பாடம் கடல் பாட்டு இதற்குக் குறிப்பிட்ட மெட்டு இல்லை. இசைந்தபடி பாடலாம். 1. ஓ! ஓ! கடலே! ஒலித்த கடலே! வா! வா! கடலே! வளைத்த கடலே! 2. அலைகள் பெரிய மலைபோல் முந்தி பலமாய் வந்து பாய்கிற கடலே! 3. சோப்பை நீரில் தோய்த்தது யாரே? தாக்கிய நுரைகள் தங்கிய கடலே! 4. நல்ல வானில் நட்சத் திரம்போல் உள்ளே மீனை ஒளித்த கடலே! 5. வானம் போல வண்ணக் கடலே! கூனி யிருக்கும் குளிர்ந்த கடலே! 6. உப்புக் கடுக்கும் உவர்த்த கடலே! சிப்பி ஒதுக்கும் சிறந்த கடலே! 7. அமைதி யாகு அலைந்த கடலே! எமதுமணல் வீட்டில் ஏறாதே! கடலே! 6ஆம் பாடம் வண்ணாத்திப் பூச்சிப் பாட்டு யாரம்மா வண்டியிலே என்ற மெட்டு பூச்சியைக் காணுதல் 1. வண்ணாத்திப் பூச்சியே! வர்ணமிட்ட பூச்சியே! கண்ணோக்க நேர்த்தியாம் காட்சியான பூச்சியே! கவனித்தல் 2. விசிறிபோல வீசுவாய் விரைந்தென் கையில் சேருவாய் விசிறவேண்டா நோகுமே வேடிக்கைநான் பார்க்கிறேன். பூச்சி தூரமாய்ப் போகுதல் 3. அதிக தூரம் போய்மலர் அதிலே தேனைக் குடிப்பாயே மெதுவாய்ப் பின்னா லேவந்து மேவிக் கையில் பிடிக்கிறேன். பூச்சி உயரப் பறந்து போகுதல் 4. மேலே மேலே போயினும் மிகுந்த வரையில் குதித்துநான் சீலை யாலே யுன்னையே சேர்த்துப் பிடிக்கி றேன்இதோ! கையில் பிடித்தல் 5. உன்னைக் கையில் பிடிக்கவும் உதிர்ந்த பொடியும் ஒட்டுதே அன்னை வாச னைப்பொடி அன்பாய்ப் பூசி யிட்டாளோ? வண்ணம் கண்டு மகிழ்தல் 6. வண்ணாத்தி பலவித வண்ணச் சேலை தோய்த்தபின் தண்ணீரைப் பிழிந்துதான் தரையில் காயப் போடுவாள். 7. அதுபோலவுன் சிறகிலே அழகழகாய் நிறங்களாம் இதனாலேதான் பொருத்தமாய் இந்தப் பேரை இட்டதோ? பூச்சி நோவால் காலாட்டுதல் 8. அதிக மாய்உன் கால்களை ஆட்டு கின்றாய் நோகுதோ? வதை செய் யாமல் சிலநேரம் வைத்தி ருப்பேன் கையிலே. பூச்சியின் சிறகு ஓடிதல் 9. ஐயை யோநான் என்செய்வேன் அருமை யான சிறகொன்று பிய்ந்து போன தேவிட்டுப் பிரிந்து விட்டேன் இப்போதே. மனம் பதைத்தல் 10. பதைக் குதேஎன் உள்ளமும் பாவம் பூச்சி களைஇனி வதைக்க மாட்டேன் அன்னையும் வந்தால் சொல்வேன் உண்மையே 7ஆம் பாடம் பூப்பறித்தல் என்னருமைக் குஞ்சுகளாம் என்ற மெட்டு. 1. தோட்டத்திலே பூப்பறிக்க கூட்டமாக வாரும் பாட்டுப் பாடிப் பலமலரைக் கூட்டிக் கூட்டிச் சேரும். 2. மல்லிகையும் மருக்கொழுந்தும் வாசமான ரோஜா நல்ல நல்ல மருகுடனே நலமாகப் பறிப்போம். 3. கிண்ணம்போல வண்ணமாகக் கிளையிலுள்ள பூவை கண்ணிகண்ணி யாகக்கட்டி கழுத்திலேநாம் அணிவோம். 4. ஊதுகிற குழல்போல உள்ள நல்ல பூவை ஊதியதன் உள்ளிருந்தே ஒழுகும் தேனைக் குடிப்போம் 5. வானத்து நக்ஷத்திர வகைபோன்ற பூவை ஏனத்தில் பறித்திடுப்பில் இடுக்குவோமே வாரும். 6. அடுக்குமல்லி சாமந்தி அலரிஇவை எல்லாம் தொடுத்துடனே மாலையாகத் தொங்கவிட்டுப் பார்ப்போம். 7. கம்மல் போன்ற பூக்களைநாம் கனமாகப் பறித்து பொம்மை காதில் ஒட்டிஒட்டிப் போட்டழகு பார்ப்போம். 8. கூட்டிச் சேர்த்த பூவை எல்லாம் கூடையிலே கொட்டி வீட்டுக்குப்போய் அன்னையார்க்குக் காட்டுவோமே வாரும். 8ஆம் பாடம் மண்ணாங் கட்டிவிருந்து என்னருமைக் குஞ்சுகளாம் என்ற மெட்டு. 1. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு மண்ணாங்கட்டிப் பெண்ணே மண்ணாங்கட்டிச் சாப்பாட்டுக்கு மண்ணாங்கட்டித் தண்ணீர் 2. ஓடெடுத்துக் கல்லடுப்பில் உலையேற்றிக் கீழே சூடெடுக்கத் தட்டித் தட்டிச் சுக்காங்கல்லை வைத்து 3. அடுப்பூதி அடிக்கடியே அம்மா! சோளத் தட்டைத் துடுப்பாலே உலைகிண்டித் தூசி உப்பைத் தூவி 4. சோறாக்கி இப்படியே சுகமான குழம்பும் வேறாக்கிக் கலியாண விருந்திடுவோம் வாரும் 5. எல்லாரும் சாப்பிட்டே இருந்த மீதிச் சோற்றில் தண்ணீரை ஊற்றி இந்தத் தனிஅறையில் வைப்போம். 9ஆம் பாடம் மழைப் பாட்டு இதற்குக் குறிப்பிட்ட மெட்டு இல்லை, இசைந்தபடி பாடலாம். 1. சார மழை பெய்யுதே சம்பாக் கோழி கூவுதே கூரை மேலே மழைத்தண்ணீர் கொள்ளக் கிழே விழுகுதே. 2. காடெல்லாம் வெள்ளம் மேடெல்லாம் பள்ளம் வீடெல்லாம் சொட்டுச் சொட்டாய் விழுந்த நீரும் துள்ளும் 3. மின்னல் எல்லாம் மின்னுதே! மேலெல்லாம் குளிருதே அன்னை யண்டை அடுப்போரமாய் அனலில்குளிர் காயுவேன் 4. சுவரே இடியுதே சுக்காங்கல்லும் உருளுதே அவரைக்கொடிப் பந்தல் எல்லாம் ஆடியாடி அசையுதே 5. குமிழி எல்லாம் பொங்குதே கூட்டில்கிளி தொங்குதே அமளி செய்த பெருச்சாளி ஆடி யோடித் திரியுதே 6. மழைமழை ஓய்ந்து போ மடுவெல்லாம் பாய்ந்து போ அழகாகத் தெருவெளியே அணைகள் கட்டப் போகிறேன். 10ஆம் பாடம் குழந்தையைக் குளிப்பாட்டல் இது தாய் சொல்வது குறிப்பிட்ட மெட்டு இல்லை. 1. குழந்தையே வாஇங்கே - உன்னைக் குளிப்பாட்டப் போகிறேனே 2. அழுகாதே அழுகாதே - உன்னை அடித்திடுவேன் பார்இப்போ 3. கைகாலை ஆட்டாதே - உன் ஐயாவைக் கூப்பிடுவேன் 4. குளிராது குளிராது - நீ கொஞ்சநேரம் பொறுத்துக்கொள்ளேன் 5. முதுகைக் குனிஇப்போ - நான் மெதுவாகத் தேய்க்கிறேன் பார் 6. சோப்புப் போட்டு உடம்பை - நான் சுகமாகத் தேய்க்கிறேனே 7. கண்ணே கண்ணை மூடு - உன் கண்ணெல்லாம் காந்திவிடும் 8. இன்னும் தலைமேலே - நான் இரண்டு செம்பு ஊற்றுகிறேன் 9. இப்போ எழுந்துவாடா - உன் ஈரத்தை துடைக்கவேணும் 10. வெளுத்த கமுசுடுத்து - உனக்கு வெகுநேர்த்தி யாயிருக்கும். 11ஆம் பாடம் நிலா வழைத்தல் 1. நிலா! நிலா! ஓடிவா நில்லாதே ஓடிவா நிலா! நிலா! ஓடிவா நெல்லெடுத்துக் கொண்டுவா. 2. கண்ணை மூடிக் கொள்ளுறேன் கண்முன்னே ஓடிவா எண்ணி மூன்று முடிக்குமுன் என்முன்னே ஓடிவா. 3. மிட்டாயும் தருகிறேன் மெள்ள மெள்ள ஓடிவா கட்டாயம் ஓடிவா காசுனக்குத் தருகிறேன். 4. ஆனைமேலே ஏறிவா அம்பாரி வைத்துவா சீனியெல்லாம் தருகிறேன் சீக்கிரமாய் ஓடிவா. 5. கண்ணாடி கொண்டுவா கையெடுத்து வீசிவா பொன்னாலே மணியாலே பூமுடித்துக் கொண்டுவா. 12ஆம் பாடம் தாலாட்டுப் பாட்டு இது தாய் சொல்வது, நாதநாமக் கிரியையில் நீட்டிப் பாடவேண்டும். ரா ரா ரோ ரா ரா ரோ..... ரா ரா ரோ ரா ரா ரோ..... 1. கண்ணே! உறங்கு உறங்கு - என் கண்மணி உறங்கு உறங்கு பொன்னே! உறங்கு உறங்கு - என் பொன்மணி உறங்கு உறங்கு 2. காலுங் கடுத்தே - நான் கடுகி வழிநடந்தேன் பாலும் கையிலேந்தி - நான் பார்த்தகண்ணும் பூத்துப்போச்சு 3. பச்சைக் கிளியே! நீ பனிக்கெல்லாம் எங்கிருந்தாய்? இச்சித்த தினைக்கதிரை ஏக்கமறத் தின்றாயோ? 4. மாடப் புறாவேநீ! மழைக்கெல்லாம் எங்கிருந்தாய்! காடான காடெல்லாம் - நீ கண்டுவரப் போனாயோ? 5. கூவுங் குயிலே! நீ - முன் குளிருக்கே எங்கிருந்தாய்? மூவா மருந்தே - நான் முத்தமிடக் காணேனே. 6. கப்பல் தனித்தேறி - முன் கைப்பொருளைத் தேடப்போன அப்பன் வரக்காணேன் - என் ஆசைக்கிளி நீஉறங்கு. 13ஆம் பாடம் பிச்சைக்காரன் 1. பிச்சைக்காரா! பிச்சைக்காரா! பெரும்பசியோ? உன்தனுக்கு இச்சிக்கும் உணவுகளை என்னிடம்சொல், இட்டிடுவேன். 2. பேசக்கூட முடியவில்லை பெரிதும் தொண்டை கட்டினதோ? நேசத்துடன் மருந்திடுவார் நினைக்கில்லையா? என்செய்வேன் 3. மூடஒரு துணியின்றி முன்பனியில் இரவிலே நீ நீடுவேளை நிலாவெளியில் நிற்கிறாயே! பாவம்! பாவம்! 4. நில்லாதே, கால்நோகும் நினக்கு ஒன்றும் பலமில்லை எல்லாம்என் அன்னையிடம் எடுத்துச்சொல்வேன் இங்கு உட்கார் 14ஆம் பாடம் கழுதைப் பாட்டு உந்தனைச் சும்மாவிடுவேனோ என்ற மெட்டு - இங்கே வார்த்தைக்கு இசைந்தபடி நிறுத்திப் பாடவேண்டும். 1. கழுதை! கழுதை! இப்போதே அழுதே அழுதே கத்தாதே. 2. காலைத் தட்டி நடக்கிறாயே பாலைக் குட்டி குடிக்கிறதே 3. மூக்குங் கரிபோல் கருப்பாகும் காக்கை முதுகில் இருப்பாகும். 4. எட்டி எட்டி வாராதே கட்டி எடுத்துப் போடுவேன் 5. கொழுக்கப் புல்லைத் தின்பாயே அழுக்குச் சுமையைச் சுமப்பாயே 6. உன்னைப் போலப் பொறுமையுடன் ஊழியம் செய்வார் உலகினில் யார்? 7. வண்ணான் தேடி வருகிறான் அன்னை என்னைத் தேடுவாள். 15ஆம் பாடம் நாய் பாவஞ்செய்யாதிரு நெஞ்சே என்ற மெட்டு 1. நாய்ஒரு நல்ல பிராணி - அது நன்றி மறவாத நாற்கால் பிராணி. 2. ஓநாய் நரிஅதன் இனமே - அது பூனையைக் கண்டதும் பொங்கிடும் சினமே. 3. நாக்கு நன்றாய் மெதுமாகும் - அது நக்கி நக்கி நீரைக் குடிப்பதற்காகும். 4. நெஞ்சு பெரிதாக இருக்கும் - அது நெடுந்தூரம் போகவே உதவியா யிருக்கும். 5. வாலில் இருப்பது வளைவு - அது மட்டை வைத்துக் கட்டினாலும் மாறாது. 6. எசமானைக் கண்டால் வாலாட்டும் - அதன் நிசமான மகிழ்ச்சியை நின்றாடிக் காட்டும். 7. ஊளை யிட்டுத் துயர்கூறும் - அது உறுமி உறுமியே கோபத்தில் சீறும். 8. வீட்டைக் காக்கும் சிலநாய்கள் - அவை வேற்றாளைக் கண்டாலோ விரைந்துமேல் பாயும். 9. வேட்டையும் சிலநாய்கள் பிடிக்கும் - அவை காட்டுப் பன்றிகளின் கன்னத்தில் கடிக்கும். 10. நாயை வளர்ப்பது நன்று - அது நம்பத்தக்க காவல்காரருள் ஒன்று. 16-ம் பாடம் சேவல் பாட்டு ஆண்டிப் பண்டாரம் என்ற மெட்டு. சேவல் கூவுதே - சின்னச் சேவல் கூவுதே 1. கொக் கொக் கோ வென்று கூவுது விடிந்தது பார்! இக்காலை நித்திரைவிட் டெழுந்திருங்கள் என்று சொல்லி (சேவல்) 2. காலையும் ஆய்விட்டது கருத்தாக எல்லாரும் வேலைக்குப் போய்விடுங்கள் வேளைஇதே என்றுசொல்லி (சேவல்) 3. படபட வென்றொலிக்கப் பக்கத்தில் சிறகடித்து கடவுளைக் கோ! கோ! என்று கழுத்தை நீட்டி மேல்பார்த்து (சேவல்) 4. கனமாகத் தூங்குவாரைக் கைதட்டி எழுப்புதல்போல் மனமாகச் சிறகுகளை மறுபடியும் அடித்தடித்து (சேவல்) 5. காலிலே சலங்கைகட்டி கன்னத்தில் முத்தமிட்டு வாலை வளைத்து நாமும் வளர்த்துவந்த அழகான (சேவல்) 17ஆம் பாடம் சிட்டுக்குருவிப் பாட்டு சித்தாதி சித்தர்கள் என்ற மெட்டு 1. சிட்டுக் குருவி முகட்டில் சிறுகூடு கட்டி யிருக்குது பார் - அதில் இரண்டு முட்டை இருந்தன பார். 2. முட்டை வெடித்தது குஞ்சு பொரித்தது எட்டி எட்டிப் பார்க்குதே - இரண்டு கண்ணும் தட்டித் தட்டிப் பார்க்குதே. 3. இன்னும் உரோமந்தான் ஒன்றும் இல்லை நன்றாய்க் கண்ணும் தெரியவில்லை - அது தெரிய இன்னும் சிலநாள் செல்லும். 4. தாய்க்குருவி தூரம்போய்த் தான்இரை தேடி வாய்க்குள்ளே வைத்துக்கொண்டு - வந்து குஞ்சுக்கு வாய்க்குள்ளே வைக்குது பார். 5. அந்தப் பக்கத்திலே தந்தைக் குருவியும் குந்தி யிருக்கிறது - இதை நமது தந்தைக்குச் சொல்வோம் வாரும். 18ஆம் பாடம் வாழைமரப் பாட்டு கத்தரிக்காய் கொண்டுவா என்ற மெட்டு ப. வாழையைப் பார் தோழா - வகையுடனே வாழையைப் பார் தோழா. உ. 1. கீழேயிருந்து பக்கம் கிளைத்துள்ள கன்றுகளே தாயொடு பிள்ளைகள்போல் - தழைத்திருக்கும் (வாழை) 2. வழுக்கை மரத்தின் மேலே பழுத்த பழத்தைப் பாராய் கிளிப்பிள்ளை கொத்தித் தின்று - கீழே விழுந்தும் (வாழை) 3. உலர்ந்த தண்டை இதோ பார் ஒடுங்கின தீரமில்லை கிழமையில் நம்மழகும் - கெடுமிவ்வாறே (வாழை) 4. கனிய பழத்தைத் தின்றால் இனிமையாய் இருக்குதே இனிமேலே நாம் பிறர்க்கே - இனியசெய்வோம் (வாழை) 5. உறுப்புகள் யாவும் நன்றாய் உதவிடும் வாழையைப் பார் ஒருப்பட எல்லார்க்கும் - உதவுவோம் நாம் (வாழை) 6. கோழிதன் குஞ்சுகளைக் கூட்டி யணைப்பதுபோல் வாழைப்பூப் பிஞ்சுகளை - மறைப்பதைப் பார் (வாழை) 19ஆம் பாடம் கொக்கும் நரியும் முத்திநெறி அறியாத என்ற மெட்டு 1. ஒருஊரில் ஒருகொக்கும் ஒருநரியும் இருந்தனவே ஒருநாளில் நரிகொக்கை ஒருவிருந்துக்(கு) அழைத்தது பார் 2. குறித்த நாளும் வந்தவுடன் கொக்குநரி வீட்டுக்குப் போய்ப் பொறுத்திருந்து பசிமிகவே போசனத்தில் ஆசைவைக்க 3. தட்டையான கலத்தில் கஞ்சித் தண்ணீரை விட்டு நன்றாய்க் குட்டைநரி குடித்ததுவே கொக்குக்கோ முடியவில்லை 4. கொக்கதன்பின் பதில்விருந்தில் கூசாவில் கறிவைத்துத் தக்கபடி தின்றுதின்று தான்ஏப்பம் இட்டதுவே 5. கூசாவில் நரிதலையைக் கொண்டுபோக முடியாமல் பேசாமல் இருந்திருந்து பிறகுதான்போய் விட்டதுவே 6. எப்படிநாம் பிறருக்கு ஏதொன்றைச் செய்கிறோமோ அப்படியே பிறர்நமக்கும் ஐயமறச் செய்திடுவார். 20ஆம் பாடம் குச்சடுக்குதல் பச்சைமலை பவளமலை என்ற மெட்டு 1. குச்சடுக்க என்னுடனே கூடவேநீ வாராய் மச்சுவீடு கட்டிஅதில் வாழ்ந்திருக்க வாராய் 2. தச்சனைப்போல் சன்னல்ஒன்று தைத்திடுவோம் வாராய் மச்சுவீட்டுல் பின்னாலே வைத்திடுவோம் வாராய் 3. ஏணியொன்று செய்திடவே என்னுடனே வாராய் கோணலாகச் சார்த்தியேறிக் கூரைக்குநாம் போவோம் 4. குச்சாலே கோப்பைசெய்து கொண்டபசி தீர நிச்சமாய்ச் சாப்பிடவே நேர்மையுடன் வாராய் 5. முக்கோணம் நாற்சதுரம் முதலான வடிவம் எக்கோணம் ஆனாலும் எடுத்தடுக்க வாராய் 6. சிறப்பான பட்டமொன்று செய்தபின்னே அதையே பறக்கவிட்டுப் பார்த்திடுவோம் பக்கமாக வாராய் 7. பெட்டிஒன்று பெரிதாகச் செய்திடுவோம் வாராய் தட்டுமுட்டை அதில்வைக்கத் தானிங்கே வாராய் 8. கிளிக்கூடு கட்டியதில் கிளியை வைப்போம் தம்பி வெளிக்கோட வழியில்லாமல் நெருக்கிவைப்போம் கம்பி 21ஆம் பாடம் களிமண் வேலை தந்தம் தந்தம் தந்தினனா என்ற மெட்டு 1. களிமண் எடுத்துக் கையில் வைத்து களியாய்ப் பிசைந்தே கல் எடுத்தேன் 2. குசவன் போலே நீரைவிட்டு வசமாய்க் குழைத்து வைத்தேன் பார் 3. தட்டை யாக்கி மேலெழுப்பித் தட்டி வளைத்தேன் சுற்றெல்லாம் 4. வாயும் மேலே சுருக்கி வைத்தேன் காயும் முன்னால் திருத்தி விட்டேன் 5. மேடு பள்ளம் இல்லாமல் ஓடும் எடுத்துத் தட்டிவைத்தேன் 6. குடமும் ஒன்று வந்ததுபார் சுடுவேன் இன்று சூளையிலே 7. கழுத்தும் வாயும் விரிவானால் அழுத்தமான பானை சட்டி 8. குருட்டுப் பிடியாய்க் கைமண்ணை உருட்டிச் செய்தேன் ஒருமிளகாய் 9. கிண்ணம் செய்து காம்பு வைத்தால் நண்ணி வருமே நல்லகப்பை. 22ஆம் பாடம் முத்தடுக்கல் பச்சைமலை பவளமலை என்ற மெட்டு. குறத்திப்பாட்டுப் போல் பாடவேண்டும். 1. குன்றிமுத்து, புளியமுத்து, இலுப்பைமுத்து இன்னும் குறுக்குமுத்து, வேப்பமுத்து, ஆமணக்கு முத்து 2. வெள்ளைக்குன்றி முத்தெடுத்து வெள்ளிக்கிண்ணம் வைத்து கருப்புக்குன்றி முத்தெடுத்து கருப்புக்கிண்ணம் வைப்பாய் 3. சிவப்புக்குன்றி முத்தெடுத்துச் சிவப்புமுட்டை போடு சிவப்புமுட்டை பார்த்திருக்க மாட்டாய் சின்னத் தம்பி! 4. ஆமணக்கு முத்தெடுத்து அ ஆ வை எழுது பூமணக்கும் புளியமுத்தால் பு பூ வை எழுது 5. குறுக்குமுத்தை எடுத்தேஒரு குறுங்கட்டில் போடு நெருக்கமாக இலுப்பை முத்தால் நேர்கோடு போடு 6. நாய்வேம்பு முத்தெடுத்து நாற்கோணம் வரைவாய் நல்லவேம்பு முத்தெடுத்து நாற்காலி வரைவாய். 23ஆம் பாடம் பாய் முடைதல் கத்தரிக்காய் கொண்டுவா என்ற மெட்டு ப. காகிதப்பாய் முடைவோம் - கருத்துடன் நாம் காகிகப்பாய் முடைவோம். உ. 1. காகிதத்தை மடித்துக் கத்தரியைப் பிடித்து காகிதத்தின் நடுவில் கால்விட் டரிந்து (காகிதப்) 2. மூங்கிலில் ஈக்கறுத்து முனியைப் பிளந்து சீவி பாங்குடன் சல்லித்தாளைப் பையப் பொருத்தி (காகிதப்) 3. ஈக்கைப் பிடித்துத் தாளின் இழையை நீக்கிச் செலுத்தி தூக்கியே முறைதோறும் நுட்பமாகவே (காகிதப்) 4. ஓரிழை தள்ளிப் பின்ன ஒழுங்கான ஓலைப்பாயாம் ஈரிழை தள்ளினாலோ இது மூங்கிற்பாய் (காகிதப்) 5. நேராய் இழைஇருத்தி செய்வது கோரைப் பாய்தான் மாறாகச் சாய்ந்திருப்பின் மற்றப் பாய்களாம் (காகிதப்) 24ஆம் பாடம் கண்ணாம்பூச்சி விளையாட அழைத்தல் என்னருமைப் பெண்களே இந்தவேளை தன்னிலே கண்ணாம்பூச்சி யாடவே களிப்புடனே வாருங்கள். பிள்ளைகள் ஒளிதல் 1. பெண்களே நீர்எல்லாம் பேசாது ஒளிந்திருங்கள் கண்ணம்மாளே வாஉன் கண்ணைமூடு கின்றேன் கண்ணை மூடுதல் 2. கண்ணாம்பூச்சி யாரே கண்ணாம்பூச்சி யாரே எண்ணாமல் சொல்பழங்கள் எத்தனைதான் பறித்தாய்? கேள்விக்கு உத்தரவு 3. மூன்று பழங்கள் பறித்தேன் முழுதும் பைக்குள் வைத்தேன் ஒன்றைக் காணேன் இன்று ஒளிந்த வகையும் அறியேன். தேடச் சொல்லல் 4. ஒன்றைப் புளித்த நீரில் ஒளித்து ஒன்றைத் தின்று ஒன்றைத் தேடிக் கண்டு உடனே வருவாய் இன்று தேடிக் கண்டுபிடித்தல் 5. அப்படியே சென்று அங்கும் இங்கும் பார்ப்பேன் இப்போ பழத்தைக் கண்டேன் எனது கையிற் கொண்டேன். 25ஆம் பாடம் பூனைகளும் பாற்கட்டியும் நொண்டிச் சிந்து 1. ஓர்இடைக் குடியிருப்பாம் - அதில் உள்ளஇரு பூனைகளும் ஒருதரமாய் 2. திருடிய பாற்கட்டி - இரண்டு சிறிதும் பெரியதுமாய் இருந்தனவே 3. எனக்கே பெரியதென்று - பூனை இரண்டும் தனித்தனியே முரண்டு செய்து 4. கொடியதோர் குரங்கினிடம் - கொடுத்துக் குறையறப் பகிர்ந்திடக் கூறினவே 5. குரங்கோ பெருங்கட்டியைத் - தனது கூரிய பல்லாற் கடித்துக் குறைத்துத் தின்று 6. சிறிதைப் பெரிதாக்கி - முன்போலப் பெரிதையும் சிறியதாய்ப் பிரித்துண்டது 7. இப்படியே எல்லாம் - தின்று ஏப்பமிட்டுக் கொண்டுநன்றாய் இருந்தது பார் 8. இரண்டு பூனைகளும் - இழந்து ஏங்கி ஏங்கி இருப்பிடம் ஏகினவே. 26ஆம் பாடம் குழந்தைக்குச் சோறூட்டல் 1. தின்னாய் திருக்குழந்தை - இந்தத் தீஞ்சோற்றைத் தின்னாய்கொஞ்சம் 2. அப்பனுக்கு இரண்டுருண்டை - வெகு ஆசையுடன் தின்னாய் நீ 3. அன்னைக்கும் ஓர்கவளம் - நீ அன்பாகத் தின்பாயே 4. அக்காளுக்கு ஓர்பிடிதான் - நீ அழகாகத் தின்பாயே 5. அண்ணனுக்கு ஒரேஒரு வாய் - இன்று ஆனந்தமாய்த் தின்பாயே 6. நாய்வந்து தின்றுவிடும் - அதற்குள் நன்றாகத் தின்றுகொள்ளேன் 7. இன்னும் இருபருக்கை - நீ இன்பமுடன் தின்றுவிடு. 27ஆம் பாடம் கத்தரித் தோட்டம் இந்த உடலை நம்பி என்ற மெட்டு 1. கத்தரிக்காய்த் தோட்டக் கதையைக் கேளாய் - இது பத்திரமாய் மனம் பதியக் கேளாய். 2. மண்ணை முதல்வெட்டிக் கரம்பையிட்டு - கட்டி மண்ணை உடைத்தபின் உரத்தையிட்டேன். 3. மேடு பள்ளமின்றி மிகத்திருத்தி - மிக மேலான பழத்துள்ள விதை விதைத்தேன். 4. காலையும் மாலையும் தண்ணீர்விட - இது நாளையி லேசிறு முளைகள் கண்டேன். 5. இரண்டுமூன் றாய்ப்பல தளிர்கள் விட்டு - நன்றாய்த் திரண்டு வளர்ந்தன தினந்தினமும் 6. நாற்றுகள் அரையடி ஆனவுடன் - நீக்கி வெற்றிடம் நீர்விட்டு நட்டுவைத்தேன் 7. இலைகளும் கிளைகளு மாகவாய்ந்து - நல்ல விலையான காய்களைக் காய்த்தனவே! 28ஆம் பாடம் மாணவர் காலை வேலை ஜோர் ஜோர் ஜோர் ஜோர் ஜோர் மைனா என்ற மெட்டு 1. காலையி லெழுந்திருந்து கடவுளைத் தொழுதிடாய் சீலச் செயல்களெல்லாம் சீர்பெற முடித்திடு 2. பல்லைப் பொடியால் தேய்த்துப் பாலைப்போல் விளக்கியே நல்ல நீரில் குளித்து நல்கும் உணவை உண்ணுவாய் 3. பாடத்தைப் படித்து நல்ல பயனை மனத்தில் பதித்தபின் நாடிப் பெற்றோர்க்கு வேலை நயந்து திருந்தச் செய்குவாய் 4. வேளை யானவுடனே விரும்பிப் புத்தகத்துடன் சால விரைந்துபாட சாலைக்குச் செல்லுவாய். 29ஆம் பாடம் வாசிக்கும் முறை கரிவதனா ஈசன் என்ற மெட்டு 1. எழுந்து நின்றதும் நூலை இடக்கையில் பிடிப்பாய் அழுந்த ஒலித்துப் பொருள் அறியவே படிப்பாய் 2. நேராக நின்று கைகால் நெகிழ விடாதே மார்புமுன் நூலைப்பிடி முகம்மறைக் காதே 3. காற்புள்ளி யென்ற காமா கண்டொரு நொடியில் மேற்செமிக் கோலனுக்கு மேலொரு நொடிநில் 4. கோல னிருக்குமிடம் குறித்துமுந் நொடிநில் சீல முற்றுப் புள்ளிக்குச் சேர்த்துநால் நொடிநில் 5. ஏற்றியும் இறக்கியும் இடந்தகக் குரலே மாற்றி மாற்றி வாசிப்பாய் மாண்பது நாலே. 4 கிறித்தவக் கீர்த்தனம் முகவுரை கிறித்தவக் கீர்த்தனம் என்னும் பெயர் தாங்கி மொழியியற் செல்வர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களின் பாக்கள் வெளியாகின்றன. மொழியிலேயே மூழ்கிக் கிடந்த பேரறிஞரவர்களுக்குப் பாவாணர் என்ற சிறப்புப் பெயர் வழங்குவதேனோ என்று சிலருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஐயப்பாட்டினை இந்த நூல் அகற்றிவிடுகிறது. கவிதையும் கட்டுரைப் பாங்கும் ஒருங்கே ஒருவரிடத்தே அமைவது என்பது அரிதாகும். பாவாணரவர் களிடத்து இவையனைத்தும் காணப்பட்டன. தேவநேயரவர்களின் மொழியியல் ஆராய்ச்சிகளைப்பற்றி யான் இங்கு ஒருசிறிதும் கூறவில்லை. அது கடல்; பெருங் கடல். இங்கே இப்போது வெளியாகியுள்ள பாட்டு நூலைப்பற்றி மட்டுமே ஓரிரு கருத்துகளைச் சொல்லி மகிழ்வேன். இந்த நூல் அளவில் சிறிது; பொருளில் பெரிது; மிகப் பெரிது. இந்த நூலினை மேற்போக்காகப் பார்த்தால்கூடப் பாவாணரின் இசையறிவும், அது பரந்து பரவிக் கொண்டிருந்த எல்லைகளின் விரிவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவற்றைப் படைத்து வழங்கியிருக்கிற பாவாணர் எப்படிப் பாடினரோ நாம் கேட்கவில்லை, என்பதோர் ஏக்கம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த நூலில் உள்ள பாட்டுகள் அனைத்திற்குமே இராகம், தாளம், மெட்டு ஆகிய பல குறிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பாட்டுகள் பலவற்றிற்குக் கருநாடக இசைவழியான பண்கள் இவை எனக் குறிப்பிடப் பட்டுள்ளன. தியாகராசருடைய கீர்த்தன மெட்டுகளில் பாட்டுகள் பல அமைந்துள்ளன. தேவார திருவாசக இசைநடைகளைப் பின்பற்றிய பாடல்களும் இந் நூலின்கண் உள்ளன. மெட்டுக் குறிப்பிடாமல் இராகம் இன்னது தாளம் இன்னது என்ற குறிப்புகளைமட்டும் பெற்றிருக்கிற பாடல்களும் உள்ளன. இவையல்லாமல், நாட்டுப்புற மக்கள் விரும்பிப் பாடுகின்ற தெம்மாங்கு, சிந்து ஆகிய மெட்டுகளிலும் பாடல்கள் அமைத் திருக்கிறார். பாவாணரவர்களின் இளமைக் காலத்தில் நாடக மேடைகளில் புகழ் மிக்க பாடல்களாகக் கருதப்பட்டிருக்கக் கூடிய தசரத ராஜகுமாரா முதலிய பாட்டுகளின் மெட்டுகளில் இந்த நூல் பாடல்கள் அமைந்திருக் கின்றன. போதாக் குறைக்கு அக்காலத்தே பாமர மக்களால் பெரிதும் மகிழ்ந்து பாடப்பட்டுவந்த `மேரே மவுலடில்லா முதலிய ஒருசில உருது பாட்டுகளில் அமைந்த பாட்டுகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. இவற்றைக் கருதிடும்போது, பாவாணர் அவர்களிடத்திருந்த இசையார்வம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கிக் கிடவாமல், எல்லைகள் பலவற்றையும் கடந்து சுதந்தரமாக யாண்டும் சிறகடித்துப் பரந்துகொண்டிருந்தது என்பது நன்கு தெரியும். இயேசு பெருமானின் பிறப்பு முதல், அவருடைய ஊழியமும் பாடுகளும் உயிர்பெற்றெழலும் இடையாக, அவர் திரும்பவருதல் ஈறாகச் செந்தமிழ்ச் சுவை சொட்டச்சொட்ட, பத்திச்சுவை பெருகப் பெருகப் பாடப்பட்டுள்ள பாட்டுகள் இந்த நூலில் உள்ளன. பாவாணர் இந்த நூலின்கண் இடையே கிறித்துவின் பாடுகளின் பெருமையை எடுத்துரைக்கும் முறையில், தம்முடைய கிறித்தவ மன உறுதிப்பாட்டின் அருமையை இனிய எளிய உரைநடையில் எடுத்துரைக் கிறார். எனவே, இந்த நூலினை உரையிடையிட்ட பாட்டு எனவும் ஓதி மகிழலாம். பாவினை இன்றியும் பண்டிதர் உளரால், என்று காப்புச் செய்யுளில் பாடியிருக்கிறார் பாவலர். பாட்டில்லாமல் ஒருவனைக் கற்றவன் என்றே சொல்ல முடியாது என்பது அவருடைய கருத்தாகும். பாட்டைப் படைக்க முடியவில்லையாயினும் அதனைத் துய்த்திடும் ஆற்றலையேனும் கற்றவன் பெற்றிருப்பான் என்பது அவருடைய எண்ணம் எனத் துணியலாம். இவ்வாறு பாடுகின்ற இடத்திலேயே தேவனைப் பாடவும் திருவருள் வேண்டுமே என்று பாடி, பாடுவதற்கு இறையருள் இன்றியமையாதது என்ற உண்மையினை அவர் வலியுறுத்துகிறார். தேவநேயரவர்கள் இளமைக் காலத்தில் செய்யப்பட்ட பாட்டுகள் இவை. அக்காலத்திலேயே அவருக்குப் பழைய தமிழ்நூல்களில் இருந்த ஈடுபாடு இந்த நூலின் வாயிலாகப் புலனாகிறது. சான்றாக ஒன்று. சிலப்பதிகாரத்தில், ஆய்ச்சியர் குரவையில், இடைக்குலப் பெண்கள் திருமாலைப் பாடிப் பரவுகிறார்கள். சேவகன்சீர் கேளாத செலியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே! கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே! என்று கோத்த குரவையுள் தெய்வத்தை ஏத்துகின்றார்கள். இந்தப் பாட்டி லுள்ள தமிழிசையின்பம் பாவாணரவர்களை ஈர்த்திருக்கிறது. எனவே இந்த இனிய செந்தமிழ்த் தொடையைத் தம்மை உய்யக் கொள்ள வந்த இயேசு பெருமானுக்கு உரிமையாக்கிப் பாடுகிறார்கள். இந்த நூலில் குமரற் பராவல் என்ற தலைப்பின்கீழ் இப் பாடல்கள் வருகின்றன. ஒருசில வரிகள்: ஓவறஊ ழியஞ்செய்த உன்னதனாம் ஏசு தேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே! பரந்தேதன் பகைவர்வரப் பருவம்வரு முன்னே கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்விழித்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல் நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே! இவ்வாறு பாடுகிற சிறப்பில் இளங்கோவடிகளார் செவியையும் கண்ணையும் நாவையுமே பாடப் பாவாணரவர்கள் கையையும் நெஞ்சையும் சேர்த்துப் பாடுகிறார். தண்ணளியுந் தானாகித் தனிநின்ற நிலையைக் கண்ணியதுங் குவியாத கையென்ன கையே கைவீசிச் செல்வார்தங் கையென்ன கையே! நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும் எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே உண்மையிலேயே பாவாணருடைய பாடல்களும் சிலம்பினைப் போலவே நம்முடைய நெஞ்சை யள்ளிக்கொள்கின்றன. இதனைத்தான் நாம் தன்னாக்கம் செய்தல் (Indigenization) என் கிறோம். கிறித்தவத் தொழுகையில் வாழைப்பழத்தில் ஊதுவத்திகளைக் குத்தி வைத்துக் கொள்வதையோ, திருநீற்று வேடம் புனைந்து கொள்வதையோ நாம் தன்னாக்கம் என்று கூறுவதில்லை. இத்தனை ஆண்டுக் காலமாக இத்தனை அரிய இன்றமிழ்ப் பாடல்கள். இயேசுவைப் பாடிய இனிய பாடல்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தனவே என்பதை எண்ணும்போது நெஞ்சு வலிக்கிறது. திருச்சபையில் காணப்பட்ட பொருத்தமில்லாத மேலைநாட்டு வாடைகள் பாவாணர் அவர்களை ஒரு ஓரத்தில் துரத்திவிட்டனபோலும். அவரோ மொழியாராய்ச்சி என்னும் கடலில் அரியாசனம் அமைத்துக் கொண்டு விட்டார். பாட்டில்லாத பாட்டுகள் திருச்சபையில் படையெடுத்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் பாட்டெனும் பாட்டாக இந்த நூல் வெளி வருகின்றது. பாவாணரவர்கள் எக்காலத்திலோ தம்முடைய இளமையில் படைத்து அச்சிட்டிருந்த இந்த நூலின் நலிந்த படி ஒன்று எங்கோ மறைந்து கிடக்க, அதனைத் தேடிக்கொணர்ந்து தமிழுலகிற்கு நல்குகின்ற டாக்டர் வீ. ஞானசிகாமணி அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும்; தமிழ்த் திருச்சபை அவருக்கு நன்றி கூறிட வேண்டும். இதுவரை வெளியிடப்படாத மகாகவி கிருஷ்ணப்பிள்ளையவர்களின் அரிய நூல் களையும் இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள், பொருள் வரவு கருதாமல். இவ்வாறு அரிய நூல்களை யாதொரு பொருள் வருவாயையும் கருதாமல் வெளியிடுவதுமன்றி, ஞானசிகாமணி அவர்கள் கிறித்தரசர் தமிழ்ப் பேரவை என்ற அமைப்பின் செயலாளர் பதவியையும் ஏற்றுப் பணிபுரிந்து வருகிறார்கள். கடவுளின் அருள் அவரைச் சூழ்வதாகுக. வாழ்க பாவாணர் நற்பணி! சென்னை கிறித்தவக் கல்லூரி, பேரா.பொன்னு. ஆ. r¤âarh£á, jh«gu«, br‹id-59 v«.V., பி.ஓ.எல். ஏப்பிரல் 1981 பதிப்புரை மொழிப் பேரறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் (1902-1981) பெரும் பகுதியில் வாழ்ந்தவர். இந் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களுக்குள்ளே பன்மொழிப் புலமையுடன், தமிழ்மொழி, இனம், பண்பாடு இவற்றின்மீது தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலையில் பற்று மிகக் கொண்டவர் என்றால் மிகையாகாது. இவற்றின் தலைமைக்காகவே, தன்னேரில்லாத் தன்மைக்காகவே தமது வாழ்வினைத் தியாகமாக்கியவர். அண்மையில் சங்கத் தமிழ் மதுரை மாநகரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிலே பங்குகொள்ளச் சென்று, தம் உயிர்போலப் பாராட்டி வந்த தமிழ்மொழியின் பெருமை குறித்துச் சொற்பெருக்காற்றியதோடு - அவருடைய உயிரும் உலகத் தமிழ் மாநாட்டுச் சூழலுடன் கடவுளின் திருவடிகளை அடைந்தது. அவர் உயிர்நீத்தும் இன்றும் பேசுகின்றார். அவர் தமிழ்மொழிக்கும், இனத்திற்கும், பண்பாட்டிற்கும் செய்த அருந்தொண்டினை அவருடைய ஆராய்ச்சி நூல்கள் பலவும் பேசுகின்றன. தமிழ்மொழியும், உலகமும் உள்ளளவும் அந் நூல்கள் பேசிக்கொண்டே இருக்கும். தூய்மையும், நேர்மையும், துணிவும், நற்பண்பும் நிறைந்த அவருடைய வாழ்க்கையை உருவாக்கியவர் இயேசு பெருமான் என்னும் உண்மையை இங்கு அறிவித்தல் வேண்டும். இயேசு கிறித்துவின் வாழ்க்கை - சிறப்பாக அவருடைய சிலுவைப்பாடுகள் அவரைப் பெரிதும் இளமை முதற்கொண்டே ஆட்கொண்டன. இதற்குச் சான்றாக விளங்குவது அவருடைய கிறித்தவக் கீர்த்தனம் என்னும் இந் நூலாகும். 1969-ல் எண்ணூரிலே, பாவாணரின் மகளார் திருவாட்டி மங்கையர்க் கரசி இராபின்சன் வீட்டில் முதன்முதலாக நேரில் அவரைச் சந்திக்கும் பேறு பெற்றேன். அப்பொழுது நான் எண்ணூரில் குடியிருந்தேன். நான் தமிழ் முதுகலை (M.A.) முடித்திருந்த சமையம் அது. நான் இயேசு பெருமானின் ஓர் எளிய அடியான் நற்செய்தி ஊழியன், தமிழ்மொழியில் சிறிது பயிற்சியும் பற்றுமுள்ளவன் என்பதை அறிந்ததும், கிறித்தவக் கீர்த்தனம் என்னும் இந் நூலை என்னிடம் கொடுத்தார். சில பாடல்களையும் பாடிக் காட்டினார். கிறித்து பெருமானிடத்தில் அவருக்கு இருந்த பற்றுமையையும், அவருக்குத் திருப்பணி ஆற்றுவதற்கு அவருக்கு இருந்த இளமைக் கால விருப்பத்தையும் எடுத்துக் கூறினார். கிறித்தவர்களும் தூய தமிழைப் போற்ற வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பாக நல்ல தமிழ்மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியில் அவ்வளவு வரவேற்பும் வாய்ப்பும் காணா நிலையில் அவரது மனத்தை தமிழ்மொழி, இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதையும் அறிவித்தார். என்னிடத்தில் கொடுக்கப்பெற்ற கிறித்தவக் கீர்த்தனம் என்னும் அவருடைய நூலில் நான் விருப்பம் காட்டி, நூற்பொருளின் சிறப்பினைக் கூறியபோது அதனை இயலுமேல் வெளியிட்டுப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தார். அவர் உயிரோடு இருந்த நாள்களிலேயே அதனை வெளியிடுவதற்குப் பலமுறை நான் முயன்றும் வெற்றி பெறவில்லை. சில மாதங்களுக்கு முன்னால் பூக்கூடை இதழுக்கு, அதன் ஆசிரியர் திரு. இராச்குமார் அவர்களுடன் பாவாணரிடம் பேட்டி காணச் சென்றிருந்தேன். அந்தப் பேட்டி பூக்கூடையில் 1980 டிசம்பர், 1981 சனவரி ஆகிய இரு இதழ்களிலும் வெளிவந்தது. இறுதியாக அவருடன் நீண்ட நேரம் பேசுவதற்குக் கிட்டிய வாய்ப்பு அதுதான். பேட்டியை முடித்து வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, முன்னரும் சந்திக்கும் போதெல்லாம் சொல்வதுபோல், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை நிறைவு செய்வதற்காகவே கடவுள் எனக்கு இந்த நல்ல உடல் வளத்தை அருளிச் செய்துள்ளார். தொடர்ந்து எனக்காக மன்றாட்டுச் செய்யுங்கள், என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுதும் அவரது கிறித்தவக் கீர்த்தனம் நூலை விரைவில் வெளியிட எண்ணியிருப்பதாகக் கூறிவந்தேன். ஆனால், அகரமுதலிய நிறைவடைவதற்கு முன்னர் அவருடைய வாழ்வு இவ்வுலகில் நிறைவடைந்துவிட்டது. உலகத் தமிழ் மாநாட்டிற்கு நான் சென்ற நாளிலே, பேருந்து நிலையத்திலேயே அவர் நோயுள்ள செய்தியைக் கேள்விப்பட்டு, மதுரை அரசினர் மருத்துவமனையில் சென்று கண்டேன். அவர் என்னைப் பார்க்கும் நிலையிலோ, பேசும் நிலையிலோ இல்லை. அமைதியாக அவர் அருகில் நின்று இயேசு பெருமானின் திருப்பெயரை முன்னிட்டு மறாட்டுச் செய்துவிட்டு மதுரையிலிருந்து விரைவாகவே சென்னை திரும்பிவிட்டேன். சில நாள்களுக்குள்ளே அவர் உயிர் உலகத்தைவிட்டுப் பிரிந்த செய்தி வந்துவிட்டது. கர்த்தாவே, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன் (எரேமியா 10 : 23) என்பது திருவாக்கு. பாவாணருடைய உயிர் இவ் வுலகத்தைவிட்டுப் பிரிந்த பின்னரே கிறித்தவக் கீர்த்தனம் என்னும் அவருடைய பாடல் நூல் கிறித்துவில் அவர் கொண்டிருந்த பக்திக்கும் பற்றுமைக்கும் சான்றாக வெளிவரல் வேண்டும் என்பது இறைவரின் திருவுளச் சித்தமாகும் என்பது தோன்றுகின்றது. கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் முன்னால் என்னிடம் கொடுக்கப்பட்ட இந் நூலின் இரண்டு அட்டைகளும் கிட்டவில்லை, நூற்பொருளுக்கு முற்பட்ட பக்கங்களும் கிட்டவில்லை. எனவே இது முதலில் எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில் வேதாகம மாணவர் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் முதல் பதிப்பு என்றே குறித்துள்ளேன். கடவுள் வாழ்த்து முதல் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் ஈறாக 28 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன; கடவுள் வாழ்த்து நீங்கலாக 51 பக்திப்பாடல்கள் உள்ளன. இன்றைய திருச்சபை பெரிதும் தமிழ் இசையை மறந்து இருக்கும் நிலையில் இப் பாடல்களை விரும்பிப் போற்றுதல் வேண்டும். தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய பாடல்கள். கிறித்து பெருமானின் முழுவாழ்க்கையும் பாடப்பட்டுள்ளது. அவருடைய சிலுவைப்பாடுகள் நூலின் பெரும் பகுதியாக அமைந்துள்ளது. திருச்சபைக்கு எச்சரிப்பு, கிறித்துவின் இரண்டாம் வருகை, நடுத்தீர்ப்பு, கிறித்து பெருமான் திருமணவாட்டியாம் திருச்சபையில் மேன்மை பெறுதல் வரையில் நிறைவாக நூல் அமைந்துள்ளது. வேதாகம மாணவர் பதிப்பகத்தின் வாயிலாக இந் நூலினை வெளியிடுவதற்கு முழு உரிமையும் வழங்கிய நேசமணி பதிப்பகத்தின் உரிமையாளர், பாவாணரின் மகனார் திருவாளர் தே. மணி அவர்கட்கும், பாவாணர் குடும்பத்தார்க்கும் என் நன்றி உரித்தாகுக. இந் நூலுக்கு ஏற்ற ஒரு முகவுரை எழுதி உதவிய பாவலர், பேராசிரியர் பொ. ஆ. சத்திய சாட்சியார் அவர்களுக்கு என் பணிவார்ந்த நன்றி உரித்தாகுக. இந் நூல் வாயிலாக இயேசு கிறித்து பெருமான் பலருக்கு நன்மை வழங்கி அருள்புரிவாராக. இரட்சணிய யாத்திரிக நிலையம் கிறித்து இயேசுவின் ஊழியன் 23-4-1981 வீ. ஞானசிகாமணி மகாகவி எ.ஆ. கிருட்டிணர் பிறந்த திருநாள் பொருளடக்கம் முகவுரை .99 பதிப்புரை 103 காப்பு 109 கடவுட் பரவல் 109 அவையடக்கம் 110 உலகநேசர்க் குரைப்பது 110 திக்கற்ற பாவிக்குத் தெரிவிப்பது 111 புறமதத்தார்க்குப் புகல்வது 111 குமரற் பரவல் 111 அன்புறு பதிகம் 112 குமரவணக்கம் 114 கிறித்துவின் பிறப்பு 115 காபிரியேல் மரியாளை வாழ்த்தல் 116 ஏசுவின் ஏழைக்கோலம் 117 எட்டாம் நாள் விருத்தசேதனம் 118 தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது 118 இயேசுவின் இளமை 119 திருமுழுக்கு 119 ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது 120 கானாவூர்க் கலியாணம் 120 மலைப் பிரசங்கம் 121 பரமண்டல செபம் 122 கவலைப்படாமை 122 நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கியது 123 விதைக்கிறவன் உவமை 123 காற்றையுங் கடலையு மதட்டினது 124 ஐந்தப்பங்கொண்டு ஐயாயிரவருக்கு உணவளித்தது 125 பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தது 125 மறுரூபமானது 126 பவனி 127 தலைவி தோழிக்குச் சொல்லியது 128 அத்திமரத்தைச் சபித்தது 130 கிறித்துவின் பாடுகள் 130 சிலுவைச் சிந்து 132 யூதாசு காட்டிக்கொடுத்தது, காய்பாவின் விசாரணை, பேதுரு மறுதலித்தது 133 பேதுரு மனங்கசந்தழுதது 135 பொந்தியு பிலாத்துவின் விசாரணை ஏசுவின் மரணாக்கினை 135 ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது 137 ஏசுவைச் சிலுவையி லறைந்தது 138 வலதுபாரிசத்துக் கள்வன் வேண்டுதல் 140 சிலுவையின் ஏழு வசனங்கள் 141 மாதர் புலம்பல் 142 சிலுவைத் தியானம் 143 சுவிசேடகன் கிறித்தியானுக்குச் சிலுவையைக் காட்டிச் சொல்வது 146 உயிர்த்தெழுதல் 147 பரமேறுதல் 148 கிறித்து பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து பாவிகளுக்காகப் பரிந்து பேசுதல் 148 மெய்த்தெய்வம் 149 நெஞ்சோடு கூறல் 150 திருச்சபைக்கு எச்சரிப்பு 151 கிறித்துவை வேண்டுதல் 152 கிறித்துவின் இரண்டாம் வருகை 153 நடுத்தீர்ப்பு 154 ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் 155 காப்பு கலிவிருத்தம் பூவினிற் போகமே புந்தி பொருந்திடும் ஆவன மாந்தருக் கன்று வரைந்தன பாவினை யின்றியும் பண்டித ருள்ளரால் தேவனைப் பாடவுந் திருவருள் வேண்டுமே. கடவுட்பரவல் பிதா அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் மன்னுயி1 ரென்றுங் கெட்டு மாண்டுபோ காம லென்றும் மன்னுயி2 ரடைய வேக மகனைமுன் னளித்துப் பாரில் இன்னதா யன்பு கூர்ந்தா ரெனிற்றிருப் பரம தந்தை என்னதென் றுரைப்பேன் ஈசன் எனக்கருள் செய்த வாறே. 1. மனிதாத்துமா, 2. நித்தியசீவன். குமாரன் பாவியை மீட்க வின்பப் பரத்தைவிட் டிறங்கிப் பாவம் பூவிலோ ரேழை யாகிப் பொறையொடு திரிந்து சுற்றி நாவினா லுரைக்க வொண்ணா நடுக்குறும் பாடு பட்டே ஆவியு மளித்த ஏசு வடியினை முடிமேற் கொள்வாம். பரிசுத்தாவி எண்ணரு மாதி நீர்மே லியங்கியே ஏசு தேவ புண்ணியன் தலைமே லன்று புறவ1மா யிறங்கிச் சீடர் கண்ணிய பெந்தேக் கோத்திற் கனற்பெருங் காற்று வீசி மண்ணியல் மொழிகள் பேச மருவுதூ யாவி போற்றி. 1. புறா. முத்தேவர் நித்திய சீவ னைமுன் நிமலனாந் தந்தை தந்தார் குற்றவூண் மாந்தி மாந்தன் குற்றுயி ரானான் ஏசு நற்றவன் தசையி ரத்தம் நன்மருந் துணவாய் நல்கச் சுத்தமா வாவி யாரும் சுகம்பெற வீசி னாரே. திரியேக தேவன் எங்கணும் நிறைந்த செல்வத் திறைவனி லொருகூ றன்றோ கொங்கலர் நறுந்தண் டாராய் குமரனென் றுரைக்குந் தெய்வம் அங்கவ ரிருவர் கொண்ட ஆவியே பரிசுத் தாவி தங்குமோ ஆவி யின்றித் தம்பிரான் வினையு முண்டோ? அவையடக்கம் பாட்டுடைத் தலைவ னந்தப் பரமனே யவனோர் காலும் கேட்டினை யடையா னாகக் கிளப்பதென் பொருத்த மின்மை நாட்டியல் வழுக்க ளைந்தும் நம்பனோர் பொருளாக் (கொள்ளான் காட்டுறப் பிழைக டோன்றாக் கல்விநூ லுலகத் துண்டோ? உலகநேசர்க் குரைப்பது எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் கவலைமிகு முலகியலோர் கனவாகி யுடம்புவிழும் கண்ணுவதேன் செல்வ போகம் அவநிகழு மாசை1வழிச் சென்றுதிரு வடைந்தாரும் ஆசை2யென எல்லை காணார் பவநெறிசே ரெரிவிலகிப் பண்ணவனாங் கிறித்தேசு பாதார விந்தஞ் சேர்தி அவனிமுழு துடையானும் ஆன்மாவை யிழந்துறூஉம் ஆதாயம் யாது மாதோ. 1. விருப்பம், 2. திசை திக்கற்ற பாவிக்குத் தெரிவிப்பது அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் பாங்கரும் பொருளும் மற்றும் படிவமு மில்லை யென்றே ஏங்கியிங் கிருக்கும் பாவி யெழுமனக் கிளர்ச்சி யோடே நீங்குமோர் பாவி மீளின் நின்மலன் தூத ரெல்லாம் தாங்கரும் பேரா னந்தத் தாண்டவ மாடி நின்றார். புறமதத்தார்க்குப் புகல்வது வானத்தின் கீழே யெங்கும் வணங்குதற் குரிய தெய்வத் தானத்தில் ஏசு வல்லால் தழுவுறப் பிறிதொன் றுண்டோ? மேனித்த வீடு சேர மிகுபல நெறிக ளில்லை நானத்த முயிர்மெய்1 யென்றார் நம்பனா ருலகத் தீரே. 1. வழி, சீவன், சத்தியம். குமரற் பரவல் கொச்சக ஒருபோகு 1. பாவிகளை மீட்டருளப் பாரேழை யாகிச் சேவடியுஞ் சிவந்துளையச் சேணடந்து நாளும் ஓவறஊ ழியஞ்செய்த உன்னதனாம் ஏசு தேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே. 2. சிரந்தானுஞ் சாய்க்கவிடஞ் சிறிதுமின்றி யெங்குங் கரந்தாள்மெய் கண்ணுயிர்வாய் கருதியவர்க்கீந்து பரந்தேதன் பகைவர்வரப் பருவம்வரு முன்னே கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்விழித்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே. 3. மடந்தீரப் பலவுரைத்து மாநிலத்திற் சுற்றிப் படர்ந்தாடும் படவரவு பாதாளஞ் சாவு கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல் நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே நசரேய நமவென்னா நாவென்ன நாவே. 4. விண்ணொளியும் விரிநீரும் விரைந்தபெருங் காற்றும் மண்ணுயிரு மிருடீர மலருமிரு சுடரும் தண்ணளியுந் தானாகித் தனிநின்ற நிலையைக் கண்ணியதுங் குவியாத கையென்ன கையே கைவீசிச் செல்வார்தங் கையென்ன கையே. 5. பண்ணியமைந் தால்வனத்திற் பகருமையா யிரவர் உண்ணியநல் விருந்தளித்த உம்பர்பெருங் கோனை நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும் எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே. அன்புறு பதிகம் அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் பண் - திருநேரிசை 1. கொரி. 13 வெண்கலத் தாளம் போல விண்ணில மொழிகள் பேசி முன்புகல் தரிசி யாகி முழுமறை யறிவுற் றாலும் மன்பெரு மலையைப் பேர்க்கும் மால்விசு வாசி யேனும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. நன்பொருள் யாவு மீந்து நல்கினு முடம்பு தீக்குத் தன்புகழ் கூறா தென்றும் தயவொடு சாந்த மேவி புன்செருக் கழுக்காக றின்றிப் புரிவினைத் தூய்மை கொள்ளும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. தன்பதம் சினமே தீங்கு தழுவிடா தநியா யத்தில் இன்புற வின்றி மெய்யில் எழிலுற மகிழ்ந்தி யாவும் நம்பியே பொறுக்கும் தாங்கும் நலமுடன் விசுவா சிக்கும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. மன்பல பாடை தீர்க்க தரிசன மறிவு மாயும் புன்றலைக் குழவிக் கேற்ற புருடனா யொழித்து விட்டேன் நம்புதல் விசுவா சத்தில் நனிபெரி தாக மன்னும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. யாக். 2 அன்பறு விசுவா சம்மே யமையுமென் றிருத்தல் வேண்டா பண்பறு பேயும் நன்றே பரமனை விசுவா சிக்கும் பின்புநல் வினையில் லாமற் பிழைக்குமோ விசுவா சந்தான் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. குறள் நண்பெனுஞ் சிறப்புக் கொண்ட நவையறு மார்வ மாந்தர் புன்கணீர் பூசல் செய்யப் புதவுடை வெள்ள மாகி என்புயிர் பொருள்க ளெல்லாம் ஏனையோர்க் குரிமை செய்யும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. பொது பண்பெறு மழலை மக்கள் பயிலரு மசுத்த ரேனும் அன்புடை யிருபெற் றோரும் அருகணைத் துவகை பூப்பர் மன்பெருங் குறைக ளெல்லாம் மறைத்துறு பாவம் போக்கும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. நண்பறத் தூய ரேனும் நளிகடற் காதற் றேவன் எண்பதத் தேழை யாகி இழிகுலத் தவரோ டுண்டு புண்படப் பாடு பட்டுப் பொன்றினர் துளிய தேனும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. துன்புறு தவத்தின் யோகத் துறவறந் துவரப் பூண்டு வன்புறு யாக்கை பெற்று வாசியில் வாழ்ந்து நீடி எண்பெருஞ் சித்தி பெற்றே எழிலுறு நிலைநின் றாலும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. பண்புற மறைப யின்று பலபெரும் பட்டம் பெற்றும் இன்புறப் பிரசங் கித்தும் இலகுரை விளக்கங் கூறி நம்புறப் புதுமை செய்து நரருறும் போய்வி டுத்தும் அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே. 1 குமரவணக்கம் கானடா - முன்னை (ஆதி) (இம் மெட்டொன்றும் என் உடனாசிரியர் ஏ.வி. சீநிவாசையர் அவர்கள் தெரிவித்தது) தேவகுமார! உன் திருவடி சரணம் தீனதயாளம் உன் திவ்வியா பரணம் தீரென தாவரணம்1. பூமனு வாகிய புண்ணிய! சரணம் பூரண நீதியிற் பொலிந்தனை கிரணம் போற்றினேன் உன் சரணம்2. தேச மெங்கும் நலம் செய்தவா! சரணம் தீயரை மீட்கவே தெரிந்தனை மரணம் தேகமுற்றாய் விரணம்3. பாவியை மீட்டருள் பரமனே! சரணம் பக்தருக் குன்பதம் பயமறும் அரணம்4 பதிந்தருள் என் கரணம்5. வானவர் போற்றிடும் வலவனே! சரணம் வருந்தியெற் காகவே பரிந்தனை சரணம் வந்தருளாய் தருணம். 1. ஆவரணம் - ஆணவம், 2. சரணம் - நமஸ்காரம், பாதம், அடைக்கலம், 3. விரணம் - காயம், 4. அரணம் - கோட்டை, 5. கரணம் அந்தக்கரணம். 2 நாத விந்து கலாதீ என்ற மெட்டு ஆர ணம்புகழ் ஆதீ நமோ நம ஆத மின்புறு நீதீ நமோ நம ஞான சுந்தர சோதி நமோ நம (நரனாகி) நார ணம்புரி தூயாவி மீதுற நான கன்1 கர ஞானாபி டேகமு னாளு கந்துபி தாவோடு மேவிய (நசரேயா) வார ணங்கலி லேயாவு மாருத வேக முந்தணி வீறான வாசக மாவ குந்துமெ யாவீ நிவாரண (மறியாகி) மார ணம்படு பாதாள மாசுணம் மாய வென்றெழு மாராய! பேய்முதல் மாள என்றனை ஆளாய் மனோகர (மணவாளா) 1. நானகன் - யோவான் திருமுழுக்குநர். 3 கிறித்துவின் பிறப்பு தீர்க்கதரிசனம் : மீகா. 5 : 2; ஏசாயா. 7 : 14 ஜோர் ஜோர் ஜோர் என்ற மெட்டு 1. யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம் யூதாவின் மாகுலத்தில் ஏது நின்போல் இத்தலம் 2. இசுரவேலை யாளும் பிரபும் எழுந்தருளும் உன்மிகை இதோஒரு மகவுயிர்க்கு மென்னும் எளிய கோலக் கன்னிகை. 3. இம்மானு வேல னென்றே இவருக் கிடுவர் இயற்பெயர் நம்மோடு தேவ னென்னும் நலமிகும் பொருள் அதற்குயிர். 4 காபிரியேல் மரியாளை வாழ்த்தல் லூக்கா 1 : 28 - 33 பழனி மாமலை வாழும் என்ற மெட்டு இராகம் - காப்பி தாளம் - ஒற்றை 1. கிருபை பெற்ற மரியே கிளர்ந்துநீ வாழ பரமன் நித்த முனக்குப் பலந்தரு தோழன் 2. அரிவை யருக்குள் நீயே அடைந்தனை ஆசி அஞ்சாதே தேவதிரு அருட்சக வாசி 3. கருப்பவதி யாயொரு கலைஞனைப் பெறுவாய் பெருக்கமுடன் ஏசென்னும் பேரது தருவாய். 4. மாபரமனுக்கவர் மகனெனப் படுவார் தாவீதின் அரியணை தனயனா யடைவார். 5. இசுரவேல் குடும்பத்தை என்றென்றும் ஆளும் இறுதியவ் வரசிற்கே இலையொரு நாளும். 5 கிறித்துவின் பிறப்பு இராகம் - பியாக் தாளம் - முன்னை ப. இத்தரையின் மத்தியினில் பெத்தலையில் சத்திரம் து. ப. அத்தனேக புத்திரன் கிறித்துவு முதித்தனர் (இத்) உ. கர்த்தரின் தூதன் நற்செய்திப் போதம் செய்த்தலைசென்று சொல்ல மைத்தவர் கண்டுகொள்ள (இத்) உன்னதம் மானம் மண்சமா தானம் மன்பதை மேற்பிரியம் மன்னற்காக விண்பாட (இத்) மீனு1 றக் கீழார் வானநன் னூலார் மின்னொளிர் பொன்னே தூபம் வெள்ளைப் போள மிறுக்க (இத்) 1. மீன் - நட்சத்திரம் 6 ஏசுவின் ஏழைக்கோலம் வெடலனு கோதண்டபாணி என்ற மெட்டு தோடி ரூபகம் ப. ஏசையா இதென்ன கோலம் ஏழையோநீ இந்திர சாலம் து. ப. மேசையா மீன்மிளிர ஞாலம் மேலை வானுனை மீச்சொல் காலும் (ஏசையா) உ. காசினிதீ குளிருங் காலம் கன்னியேழை மரியாள் மூலம் காலி சேரயர் காவடித் தோழம் கண்டதில்லை இடம்வி சாலம் (ஏசையா) தூசுபழங் கந்தை மேலும் துய்ய பஞ்சணை புல்லே கீழும் தொழுவர்1 முனமுன் தூதராலும் தோற்ற மறிந்தார் துங்கர் போலும் (ஏசையா) 1. தொழுவர் - இடையர் 7 எட்டாம் நாள் விருத்தசேதனம் சிமியோன் துதி அநாதுடனுகானு என்ற மெட்டு ப. என்னே! எனது பாக்யம் - இம்மையே து. ப. முன்னோன் மகன்வரு முன்னிறப்ப தில்லென முன்னே யுரைகாணவின் றேசுவை (என்னே) உ. கோனே ! உம்மடியேனை நற்சமாதானமாய் விடுகின்றீர் ஏனோருக் கொளியாய் இனத்தில் மகிமையாய் எல்லாருக்குமுன் ஆன ரட்சணியமுற (என்னே) 8 தேவதூதன் யோசேப்புக்குச் சொல்வது ரகுநாயகா என்ற மெட்டு ப. எடுசேயனை யோசேப் உடனே ஏரோது கொல்ல வகை தேடுவான் து. ப. கொடுபோ எகிப்து தாயொடே பின்நான் கூறுமட்டும் ஆங்கே குடிகூடவே. (எடு) உ. (ஏரோது இறந்தபின் தேவதூதன் சொல்வது) நெடுநா ளாகின சேயைக் கொல்லவே நினைத்தார் இறந்தார் எழுந்தேக இனி விடுக யூதேயா ஏரோதின் மகன் வேந்த னானதினால் நாசரேத்தில் வாழ. (எடு) 9 இயேசுவின் இளமை தினமணி வம்ச என்ற மெட்டு ப. இளமையில் ஏசு இலகவே பெற்றோர் ஏவலில் நின்றார் து. ப. எளியரெ னாதுதம் இறைமையு மெணாது குலவினை செய்தொரு குற்றமூ ளாது (இளமை) உ. பெற்றவர் தகைமையைப் பிறர்வியந் தேத்த பெருந்தகை பேணிப் பெரியவர் பணிந்து நித்தனருள் ஞானம் நிலத்தவர் தயவினும் நிறைமதி நீர்மை நீட வளர்ந்தனர் (இளமை) 10 திருமுழுக்கு சங்கற்பமே என்ற மெட்டு ப. யோர்தான் நதி யோவன்னான் சம்மதி யூதகுல பதி யபிடேக வாதி து. ப. பாரில் தேவவதி1 பண்படு உந்திதி பரம்புக மனந்திரும்புவார் கதி (யோர்தான்) வானிறப் புறாவின் வடிவாய்த் தூயாவி வந்திறங்கித் தேவ மைந்தன்மேற் குலாவி வானகப் பிதாவும் வாசகமொன் றேவி வணங்குந் திரியேக திறம் மேவியே (யோர்தான்) 1. வதி - வழி 11 ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது ப்ரோவ சமைய என்ற மெட்டு ப. வனமே வாசம் வானப்பிர தேசம் து. ப. அணவுந் தேவேசும் ஆவியுப தேசம் உணரும் பிரகாசம் ஊழியப்பிர வேசம் (வனமே) உ. உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள் உலகத்தே வானான் உன்னதன்பாற் போனான் தின்பொருளி லிச்சை தேவனைப் பரீட்சை தீயபேய ருச்சை தேறி யேசு ரட்சை (வனமே) 12 கானாவூர்க் கலியாணம் தாதாபாய் நவரோஜி என்ற மெட்டு ப. கானாவூர்க் கலியாணம் கம்பீ ராதன சம்பா கோதனக் (கானாவூர்) உ. காணாது கந்த ரசம் ஆனாவிருந்து நிசம் ஆண்டவா அகம் ஈது குறையென வேண்டி னார்மிக ஏசு பரமனை (கானாவூர்) உரைப்பாட்டு ஆறு சாடிகளின் நீரை அருமை ரசமாகச் செய்த அற்புதமா மகிமைத் தேவன் நீறு மூடுந் தழல்போல நிமலனாம் அவதாரன் நித்திய மாவழி மெய்ச்சீவன் உ. தொடர் ஏதேனில் ஆதி மணம் ஏவாளோ டாதம் முனம் ஈசனே குரு தந்தையும் மாமனும் ஏசுவே திரு இந்தமகா மணம் (கானாவூர்) 13 மலைப் பிரசங்கம் செபிக்கும் முறை வாழலோ சகிப்ரோ என்ற மெட்டு கீரவாணி - ரூபகம் ப. செயம்பெறச் செயவே செபமே செகமே யலகை தீர து. ப. புயபல தானியல் மனமே புவன மன்னும் போகும் பின்னே (செயம்) உ. அதிகவாச கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும் அகவுறை யாண்டவ ரறிவார் அறிய துதிகளே யமையும் இதர சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம் இறையைத் தரையிற் கும்பிட் டேத்தி இளகியன்பு மல்கி நின்றே (செயம்) 14 பரமண்டல செபம் பொன்னார் மேனியனே என்ற மெட்டு 1. விண்ணார் மண்டலத்தில் - மிக - வீற்றிருக்கும் எந்தையே பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப் படுவதாக கண்ணார் உம்மரசு - கடி - தாய்வருக வானில் உம் எண்ணே யாவதுபோல் - ஆக - இப்புவிமே லென்றுமே. 2. அன்றே ஊணிடும் யாம் - எமக் - காகார்குற் றம்பொறுக்கும் நன்றே போலெமக்கும் - அருள் - நாதனே குற்றம்பொறும் தொன்றார் சோதனையும் - வருந் - துன்பமும் தீர்த்தருளும் மன்றே உம்முடைமை - ராச்சியம் - வல்லமை மாட்சி ஆமென். 15 கவலைப்படாமை கலிலோ என்ற மெட்டு ப. மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை முழ ஒருமை து. ப. தினமே தன்வினை செய்வ தருமை தெரிவதோ தினமறுமை - வெகு சிறுமை (மனமே) உ. எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ முனமாவி மெய்யுட னளித்தவன் முன்னவை மறுப்பானோ வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே தேவகரமே (மனமே ) 16 நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கினது சுஜனஜீவனா என்ற மெட்டு ப. பரமநாதனே திருப் பதும பாதனே ஏசு து. ப. தரும போதனே பெருந்தவ விநோதனே அவதாரநீ யென்னில் சேரநான் ஒரு தகவில்1 லாதவன் ஏதும் (பரம) உ. கோரமென்றன் வேலையாள் திமிர்வாத வேதனை கூறுமீண்டோர் வார்த்தை வினைஞன் குணமே பூரணம் வேறும் வேண்டுமோ என்றன் வீரர் நூறுபேர் எந்த வேளையும் வந்து போவாரே பிறர் வியஞ்செய்வேனுமே ஏவப் (பரம) 1. இல்-வீடு 17 விதைக்கிறவன் உவமை நொண்டிச்சிந்து கேளீர் உவமை யொன்று - முடியக் கிளக்கும் வரையும் உள்ளக் கிளர்ச்சியுடன் விதைக்கும்படி யுழவன் - ஒருவன் விதைக ளெடுத்துக்கொண்டு விரைந்து சென்றான் விதைக்கும் பொழுது சில - விதைகள் விழுந்தன புறமான வழியருகே பறவை பலவந்தே - அவற்றைப் பட்சித்தன முழுவதும் நட்டமாகவே கற்பாறை நிலத்து - விதைகள் கடிதில் முளைத்தன மண்காணாமல் வெயிலேறின போதோ - அவைகள் வெந்து கருகினவே வேரின்றி முள்ளா ரிடம்விழுந்த - விதையும் முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே பண்ணார் நன்னிலத்து - விதைகள் பத்தும்நூறு மாகப்பெரும் பலன்தந்தன விதைப்போன் மனுடமகன் - அந்த விதைகளும் விண்ணரசின் வசனங்களே நிலமோ மனிதர்மனம் - அதுவும் நிகழ்தரும் நால்வகை நிலையறிவீர் 18 காற்றையுங் கடலையு மதட்டினது மருகேலரா என்ற மெட்டு ஜயந்த ஸ்ரீ முன்னை (ஆதி) ப. சரணாகதி சார்ந்த தேம் பதீ து. ப. சரணாவ தாரீ சருவாதி காரீ புயன்மோ திவாரி பொரும் ஆதரி (சரணா) உ. கன்னிகை குமார கண்திறந்து பாரே மன்னுலக மூட மலிதரங்க மையா இன்னே மடிகின்றோம் என்னவே பன்னிருவர் அந்நிலை கடிந்தாய் அலைமாருதம் (சரணா) 19 ஐந்தப்பங்கொண்டு ஐயாயிரவருக்கு உணவளித்தது அமரநபிமாரெ என்ற மெட்டு ப. மனமுருகுந் தனி மாலை வனாந்தரம் து. ப. சனம்பெருகும் இனிச்சால முகாந்தரம் தினகரனே செலத் தீவிர மாந்தரம் (மன) உ. 1. மாசனம் போகியே மருங்கு கிராமம்முன் போசனம் நாடவே புகன்றனர் சீடரும் (மன) 2. போக வேண்டாமவர்க்குப் புதுவிருந்திடு மென்றே ஈகையாண் டவர்கூற இருமீனைந் தப்ப மென்றார் (மன) 3. ஐம்பதைம்பது பேராய் அமர்த்தி யனைவரையும் ஐந்தப்ப மிருமீனை ஐயன்ஆசீர் வதித்தார் (மன) 4. போதியவரை யுண்டு புடைக்க விலாவினூடே மீதிய துணிக்கையும் மிகுந்த பன்னிரு கூடை (மன) 5. பெண்ணே பிள்ளை தவிரப் பெருவிருந் துண்டவர்கள் எண்ணிலை யாயிரவர் இருந்ததாகக் கண்டனர் (மன) 20 பிறவிக்குருடனுக்குப் பார்வையளித்தது காணக்கிடையாத தங்கம் என்ற மெட்டு ப. ஆனந்தப் பேறாமென் அங்கம் - பர மானந்தப் பேறாமென் அங்கம் - அதை மானுங் கரணமில்லை யெங்கம் - மதிவிளங்கும் (ஆனந்த) உ. 1. காணச் சுடர்மணியாம் காமர் முகத்தணியாம் காட்சி நன்மாட்சி சுயாட்சி உரை சாட்சி (ஆனந்த) 2. ஏழையென் மீதிரங்கி யிருகண்ணுந் திறந்தவர் ஈசன் மகேசன் பிரகாசன் கிறித்தேசன் (ஆனந்த) 3. சேற்றைப் பூசி விடுத்தார் சீலோவாம் நீரடுத்தே சென்றேன்கை மொண்டேன் கண் கொண்டேன் உடனே கண்டேன் (ஆனந்த) 4. ஒருவர்க்கு மிவ்வற்புதம் உரையாவகை எவ்விதம் ஓங்கும் நவாங்கம் தான்யாங்கும் உரைத்தாங்கும் (ஆனந்த) 21 மருரூபமானது கொலுமலரெகத என்ற மெட்டு தோடி முன்னை (ஆதி) ப. மகிமை யேசுபர மாதங்க மேனி து. ப. பகலென முகவொளி பனியுறை கட்டிநிகர் வகையவர் தேகமும் வத்திரமும் ஒளியான (மகிமை) உ. 1. மோசே எலியா ஏசு மூவரும் எருசலை ஏசுமுடிவைப் பற்றிப் பேசினர் நேருமுந்திச் சீடர்மா பேதுரு சிறந்த யோவான் யாக்கோபு கூசவே பார்வை மாலைக் கொடிமுடி மேலே (மகிமை) 2. செஞ்சரன் நாத உந்தன் சித்தமேல் முக்கூடாரம் விஞ்ச வறைவோ மென்றே வேண்டினன் பேதுருவும் மஞ்சுமேல் நேச குமரனிவர் என்ற ஒலி அஞ்சினர் சீடர் ஏசும் அபயமளித்தார் (மகிமை) 22 பவனி வங்கார மார்பிலனி என்ற மெட்டு சந்தக்குழிப்பு தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தானதனந் தனதான ஈராறு சீடர்களு மேசுவுன தாணையென நேராக வேகிபெத லேகமெனும் வூரதனில் நாராரு மாகழுதை யோடுமறி யேகொடுவந் தவைமேலே சீரான சீரையணி வார்பணிய மாறரிய வீராநல் வீறுபெற வேறிவல சாரியினை ஏராள மானநரர் சீரைவிரி பாதைபுரிந் திதமாக வேறான பேர்பசிய சாகைவழி பாவவிரு சாரார்கள் தாவிதுகு மாரபர நாமவரர் ஓரோசை யானதுதி யாருனத மோசனாவென் றுரைகூர மாராய மாவெருச லேநகர வீதிகளில் ஆராரு மாரெனவி சாரணைசெய் வார்மருள நேராளர் மாறுநச ரேயகுரு வேசுவெனும் பெருமானே! நீராரு வாவதியும் நேரறுத ணாறுமுகம் ஏராக வாலயம தேகியதி காரமொடு சூரான சூரனென மாறியக வாணிகரும் புறமாக வாரான வாரடியி னால்வெருவி யோடிடவும் மாறாடு காசுபுற வோர்பலகை யாசனமு மாறாக ஓதுசெப வீடுகளர் மாகுகையென் குமரோனே! பாராத பேர்முடவ ரோடுபிணி யாளர்பலர் சீராக நீசெய்தவ மாபுதுமை தாவிதுகு மாராய ஓசனவெ னோசையிடு பாலரொடுஞ் சினமாகி நேராத பாரகர்பு ரோகிதரி தேனெனவும் நீரோது வேதமென ஓர்வசன மோதிவிரி பாரான வாழ்விலொரு மாவயவ ரானபரம் பொருளோனே! 23 தலைவி தோழிக்குச் சொல்லியது வெள்ளிப்பிடி யறுவாள் என்ற மெட்டு ஆரபி - ஒற்றை மானிடருந் திரளாக மாணவக ரொடேகூடக் கானமிளை யவர்பாடக் கல்விமானுங் காணாவாறே பானுவொரு புயன்மேலே பாய்ந்துவரல் போலே சாலேம் மாநகரி லொருபவனி மன்னன்வரக் கண்டேன் நானே. வாகைபெற வயவீரர் வாளெனவே ஓலை வீசி ஓகையுடன் இளையோரும் ஓசன்னா ஓசன்னா வென சாகைதழை பலபேர்கள் சாலையிடச் சாலேம் நகர் மாகழுதை மிசையேறி மன்னன்வரக் கண்டேன் நானே. காவலரார் இவரென்று கண்டவரே கேட்டயர தேவதிரு வரரான தேசிகன் கிறித்தே சென்றார் தாவிதுகு மரனாகத் தங்கமேனி பொங்கவொளி மாவலமை யொடுவீதி மன்னன்வரக் கண்டேன் நானே. ஓலைகரம் பிடித்துயர்த்தி ஓசன்னா ஓசன்னாவென்று பாலகரும் பலமாகப் பண்ணகரம் பாடிவரச் சேலைகிளை பாவுவழிச் சென்றனரே தேவாலயம் மாலெனக்குள் வளர்ந்தேற மன்னன்வரக் கண்டேன் நானே. காசுபுறா வாணிகரைக் கண்டுசினங் கொண்டேயவர் ஆசனத்தைக் கவிழ்த்தோடி ஆச்சரியமா யடித்தார் ஓசன்னா வோசன்னா வென்றேஓயாச் சிறுவர் பாட மாசனத்தின் நடுவாக மன்னன்வரக் கண்டேன் நானே. 24 பாலாபிஷேகம் பழநி என்ற மெட்டு ப. தாவீது ராசகுமார கெம்பீரநீ தந்த பவனித் தரிசனமே கோவேறு மாகழுதை வாகனாரூட கும்பிடவந்தேம் பரிசனமே உரைப்பாட்டு தேவாதி தேவன் பெருந்திரு நாமத்தால் வரும் மூவாத ஏசு பெரும் முருகோலைச் சாமரம் முடுகியல் உடைகளை விரித்தவ ரோசனாபாட மிடைதர நெரித்திடும் மிகுசனங் கூடச் ப. எ. சாலேமின் ராசாநற் சாந்தகுணச் செல்வன் சாரி செய்து சாலேம் மாநகர்க்கே கோலா கலத்துடன் கூட வருவதைக் கூறுவேம் சீயோன் குமாரத்திக்கே உரைப்பாட்டு தேவா லயத்திற்குள் வியாபாரம் நீக்கி நோவாருக்குச் சுத்தம் மேவார வாக்கி முடுகியல் பாலகர் ஓசனா பகரவும் வேத பாரகர் மாசினம் மிகுதியு மோத ப. எ. பாலகர் வாயிற் பரமானந் தத்துதிபாரு மென்றமெய்ப் பராபரனே (தாவீது) 25 அத்திமரத்தைச் சபித்தது தென்பாங்கு 1. அத்தி மரத்துக் கிளி - மிக அழகழகாய்ப் பேசுங் கிளி தித்திக்கும் செங்கனியை - அது தேடிப்பார்த்துங் காணவில்லை. 2. அத்தி மரத்திலே - மிக அழகான பலஇலைகள் எத்திவஞ் சித்ததினால் - கிளி இட்ட சாபம் பட்டதுபார். 3. அத்தி மரம்படவே - கிளை அயன்மரக் கிளியடைந்து மெத்த மதுரமுள்ள - கனி மிகவுண்டு களித்ததுவே. 4. அத்தி மரந்தளிர்க்கும் - அதை அறிகுவீர் வசந்தகாலம் இத்தரை யின்முடிவும் - உடன் எட்டிவரும் பைங்கிளியே! கிறித்துவின் பாடுகள் கிறித்துவின் சீவியம் முழுவதிலும் அவருடைய பாடுகளே பாவிகட்குப் பிரதானமாகும். பாடில்லாமற் பலனில்லை என்றபடி கிறித்துவின் பாடுக ளில்லாவிடிற் பாவிகட்கு மீட்பில்லை. ஒவ்வொரு கிறித்தவனும் தன் மீட்புக்குக் காரணமான கிறித்துவின் பாடுகளையே இரவும் பகலும் எண்ணித் தியானித்தல் வேண்டும். இதே நோக்கத்துடன் கிறித்துவின் பாடுகளெல்லாம் இங்குக் குறைவறப் பாடப்பட்டு இருக்கின்றன. கிறித்து மார்க்க சாரமான அன்பு (Love), ஊழியம் (Service), தியாகம் (Sacrifice) என்னும் மூன்றும் சிலுவைப் பாடுகளிலேயே ஒருங்கு திரண்டு கிடக்கின்றன. கிறித்துவின் தெய்வீகத்தையே நம்பாத காந்தியுங்கூடச் சிலுவைத்தியானத்தினால் உலக முழுதும் நடுங்கத்தக்க வண்ணம் மேற்கூறிய மூன்று சக்திகளையும் பெற்றிருப்பாராயின், கிறித்துவையே மெய்த்தேவனென்று வணங்குங் கிறித்தவர்கள் அவரிலும் எத்துணையோ அதிகமாய் அச் சக்திகளையடையலா மென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? உத்தம கிறித்தவன் ஒருவன் பிறப்பின் பண்டிகையிலும் உயிர்த்தெழுந்த திருநாளிலுங்கூடக் கிறித்துவின் பாடுகளையே தியானிப்பான். கிறித்து பிறந்ததும் உயிர்த்தெழுந்ததும் முன்னமே ஆயிற்று. அவருடைய பாடுகளினால் மீட்புண்டானதே யன்றிப் பிறப்புயிர்த் தெழுதல்களால் மீட்புண்டாகவில்லை. கிறித்து பிறவாமல் எங்ஙனம் பாடுபட முடியுமென்று சிலர் கேட்பர். அது சரியே, ஆனால் கிறித்து பிறந்தும் பாடுபட்டிராவிடின் அவர் பிறப்பினால் என்ன புண்ணியம்? ஆகவே மீட்புக்குக் காரணம் கிறித்துவின் பாடுகளே யென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கவில்லையா? இனி, உயிர்த்தெழுதலோ தெய்வீகத்தா லுண்டானது; மகிமையும் இன்பமும் நிறைந்தது. அதனால் விசுவாசம் மட்டும் சிலர்க்கு உண்டாகும் அல்லது பலப்படும். மீட்போ சிலுவையிலேயே முடிந்துவிட்டது. முடிந்தது என்ற திருவாக்கே இதை வற்புறுத்தும். பிறப்பின் பண்டிகையும், உயிர்த்தெழுந்த திருநாளும் மகிழ்ச்சியும் இன்பமும் விளைக்கத்தக்கவை யாதலின், மீட்பு முழுதும் திரண்டு கிடக்கும் கிறித்துவின் பாடுகளைப்பற்றியும் கிறித்துவை மரணவேதனைப் படுத்தின. தங்கள் பாவங்களைப்பற்றியும் கிறித்தவர்கள் எள்ளளவும் எண்ணாது போகின்றனர். பெரிய வெள்ளிக்கிழமையில் மட்டும் (தங்களுக்காக அல்ல). கிறித் துவுக்காகவே வருந்துவதுபோல் நடிப்பவரும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தில் (ஆத்துமார்த்தமாக அல்ல) சரீரார்த்தமாக அடையும் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. ஆகையால் இடைவிடாத சிலுவைத் தியானத்தினாலேயே கிறித்தவர்கள் அன்பு, ஊழியம், தியாகம் என்ற மூன்று ஆற்றல்களையும் அடைதல் கூடும் என்பதை யறிந்து கொள்க. ஒவ்வொரு கிறித்தவனும் கிறித்தவர்களையல்ல, கிறித்துவையே பின்பற்றவேண்டும். இதுவே மீட்பின் வழி. கிறித்துவின் பாடுகளைப்பற்றி வேதநாயக சாத்திரியாரும், இரத்தினப் பரதேசியாரும், பண்டிதர் சத்தியவாசகம் பிள்ளை அவர்களும் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் அருமையானவை. அவற்றையும் படிப்பின் ஆத்துமாவிற் கானந்த முண்டாகும். 26 சிலுவைச் சிந்து கிறித்துவின் பாடுகளும் மரணமும் இராப்போசனம், கெத்செமனேத்தியானம் என்னடி நான் பெற்ற மங்கை என்ற மெட்டு பண்டிகையின் முதல் நாளை மாலை வேளை தம தாளை - ஏவிப் பட்டினத்தில் ஒரு கேளை - அளி பஸ்கா கொண்டாட வுன் விஸ்தார வீடெனப் பட்சமர் யேசுவுங் கேட்டார் - உடன் சித்தமே செய்தனர் வீட்டார். உங்களி லொருவன் இரவே என்னைக் கரவே காட்டித் தரவே - நேரும் உண்மை யென்றார் ஏசு குருவே - பஸ்கா உண்ணும் சீடர்துயர் நண்ணி நானோவென்று ஒவ்வொரு பேராகக் கேட்கும் - போது உன்னதன் யூதாசைக் காட்டும் ஏசுவே யப்பத்தை யெடுத்தார் ஆசிப்படுத்தார் பிட்டுக்கொடுத்தார் - இதோ என்றன் உடலென்று கொடுத்தார் - பின்னர் ஏனங் கொண்டென் ரத்தம் பானம் பண்ணுமென்றே ஏத்தித்தரச் சீடர் மடுத்தார் - உடன் எல்லாரும் ஒலிவத் தடுத்தார் கெத்செமனே என்ற தானம் இருங் கானம் பெரு மானும் - தனி கீழேவிழுந்து தியானம் - சீடர் கிஞ்சித்து மெண்ணாமல் துஞ்சித்தங் கண்ணாரக் கெட்ட தென்னஅவர் மதியே - மிகத் தட்டவும் மன்னவன் விதியே சாகரமென்ன விசாரம் பவப் பாரம் ஏசு சோரும் - அன்று சாத்தானின் பேரதி காரம் - அந்தச் சங்கடம் நீங்கவே தந்தையை வேண்டியே சாய்ந்து துயில்சீடர் ஓரம் - வந்து தட்டி யெழுப்பினர் நேரம். 27 யூதாசு காட்டிக்கொடுத்தது, காய்பாவின் விசாரணை, பேதுரு மறுதலித்தது பாதி ராத்திரி வேளையில் என்ற மெட்டு காவனந்தனில் ஏசுவின் புறம் காதகன் யூதாசு வந்தான் - அவர் கன்னத்தில் முத்தந் தந்தான் - பணக் காரியத்தைப் புரிந்தான் - யூதர் கர்த்தன் ஏசுவைக் கைப்பற்றச் சீடர் காற்றா யோடிப் பறந்தார். பேதுரு மிகவேக மாயுறை பேர்த்த கூரிய ஈட்டி - உறப் பிடித்த கையைமுன் நீட்டிச் - சினம் பெருகவே மறங்கூட்டி - அங்கே பேராசாரியன் வேலைக்காரனைப் பேதித்தான் காதைத் தீட்டி தம்பிரானது கண்டதும் மனம் தாங்கா மல்முகங் கடுத்து - மிகத் தட்டினார் கையைத் தடுத்து - சீமோன் தரித்தான் வாளுறை மடுத்து - தேவ தாசரும் முனங் கூறிய தீர்க்க தரிசனம் வந்ததடுத்து கோமான் ஏசுவைக் காய்பாவின் மனை கொண்டுபோய் யூதர் சேர்த்தார் - அங்குக் கூடினார் சபை மூத்தார் - உடன் கொல்லவே வழி பார்த்தார் - சிறு குற்றமேனு மகப்படாமையால் கூறிப்பொய்களைக் கோர்த்தார். ஆலயக்குறை கூறினார் பரன் அமைதியாகக் காய்பாவும் - அவர் அரசரீகம் வினாவும் - அவர் ஆமென்ற உரை பாவம் - என ஆடையைக் கிழித் தேசுவை மரத் தறைய மூப்பரை யேவும் காதகப் பெருயூதம் செய்தது காரியத்தாறு மாறும் - ஏசு கன்னத்தில் எச்சில் நாறும் - அவரைக் கடிந்து குட்டிடுந் தோறும் - ஞானக் கண்ணால் யார்வதை பண்ணி னாரென்று கண்டு சொல்லெனக் கூறும். காய்பா வின்மனை யோர மாய்க்குளிர் காய்ந்த பேதுரு இறையே - என்றுங் கண்ட தில்லென்ற மறையே - மிகக் காணவே மூன்று முறையே - கூவுங் காலைச் சேவலைக் கண்டு சிந்தினன் கண்ணீ ருங்குட நிறையே. 28 பேதுரு மனங்கசந் தழுதது தியானமே வரமைன என்ற மெட்டு தன்யாசி - முன்னை (ஆதி) ப. பாவிநான் பரமையன் பங்கே பாகமும் பருகாத் துரோகி (பாவி) து. ப. சேவல் கூவு முனமே மும்முறை தேவ கோவை மறுத்தேன் கொடிதென் பாவக் குறைமேவ (பாவி) உ. கரணமே வேகும் கசந்தழு மேகம் கரைகொன்றது வெள்ளம் கரைந்தெவ னாகும் மருவுவென் ஏசு மாதவன் பாதம் மன்னிப்பு மாகும் மறவே னொருபோதும் (பாவி) 29 பொந்தியுப்பிலாத்தின் விசாரணை ஏசுவின் மரணாக்கினை செந்தில்மா நகர் என்ற மெட்டு பஞ்சபாதக மிஞ்சிய யூதரும் பானு வெழுந்தபின் கூடி - ஏசு வானவனைக் கொல்ல நாடி - மிகு பந்தனத்தொடு பொந்தியுப் பிலாத் தின்கரத்திடை கொண்டுவிட்டனர் பங்கமா மரணந்தனுக் காளான பண்ணவன் தீர்ப்பினைக் கண்டு - யூதாசு பாதக னுந்துயர் கொண்டு முந்து நாளதில் வந்தவெண் காசுகள் மூப்ப ரிடங்கொண்டு சென்று - திரு மூர்த்தியைக் காட்டினே னென்று - அவர் முன்பு தன்பிழை கூறி முப்பது வெண்பணங்களை மீள வைத்திடு முந்தியே யவர் எங்களுக் கேனென முன்னவன் கோயி லெறிந்தான் - பின்பு முடுகிப்போய் நான்று முடிந்தான். அந்த மாபண முங்கறை மாவிலை ஆகாது காணிக்கை யென்றே - உடன் ஆசாரி யர்நிலங் கொண்டார் - அங்கே அன்னியப் பிணமடக்க வேளிடம் இன்னு மப்புலம் இரத்த மாநிலம் அன்றெரேமியா முந்துரை வாசகம் ஆனது வேநிறை வேறி - உரை வீணுறு மோதாசன் கூறி புந்தி யாகவே பொந்தியு ஏசுவைப் பூபதியோ வென்று கேட்டான் - அவர் புகன்றபடி யென்னக் கேட்டான் - யூதர் பொய்ப்பெருங் குறை கூறவே திரு மெய்ப்பரன் பதில் மாறவேயிலை புண்படாது வியந்த தேசாதிபன் போற்றார் பொறாமையைக் கண்டான் - இரு புரையரில் யார்க்குவீ டென்றான் மன்று பீடம மர்ந்துள வேளையில் மகிபன் பிலாத்துவின் தேவி - ஒரு மனிதனையே விரைந்தேவி - அந்த மாதவத்தனை நீவருத்தலி ராவிலத்தனை பாடுபட்டனென் மண்டலாதிப கண்டுகொளே யென மகிணனிடஞ் சொல்லச் சொன்னாள் - ஒரு மழலைமொழிக் கிள்ளை யன்னாள் பண்டி கையுற வந்தவ ரேவலால் பரபா சைவிட வென்று கேட்டார் - ஏசு பரமனை யறையவே வேட்டார் - அந்தப் பாம ரக்குழு படியப் பொந்தியு தான டக்கவு முடிதற் கின்றெனப் பங்கு நானிலை இந்த மகான்பழி பாருமென்றே மண்ணிக் காட்டும் - அந்தப் பழியெங்கள் வழியென்னுங் கூட்டம். அந்த நேரமே பொந்தியு வாணையில் அரிய கள்ளன் சிறை வீடு - தேவ மறியின் சிலுவையிற் பாடு - உடன் அரமனைப் படைவீரர் யாவரும் இருதி றப்பட மேவி யேசுவின் அங்கவாடை விலங்கவே சேயுடை அணிந்து முண்முடி தலை மேலே - கரம் அளித்தொரு மூங்கிற்செங் கோலே முன்பு யூதமன் வந்தனம் வாழ்கென முழங்காற் படியிட்டு வாழ்த்தி - அவர் முகந்தனில் உமிழ்நீரை வீழ்த்திக் - கர மூங்கிலாலவர் சிரமறைந்துடன் வாங்கு சேயுடையது பகிர்ந்தபின் முந்தையாடை யணிந்துட னேகினர் முதுகாடு தான்கொல் கதாவே - பின்பு மொழிய வரவில்லை நாவே. 30 ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது இராகம் - செஞ்சுட்டி தாளம் - சாப்பு கண்ணிகள் சிலுவை சுமந்திதோ செல்கிறார் சாமியே கொலுவை நினைந்தொரு கொல்கதாப் பூமியே கட்டியங் காரனுங் காரணம் கூறவும் திட்டியே சேவகர் தீவிரஞ் சேரவும் பாரிலுள் ளோர்செய்த பாவங்கள் யாவுமே பாரமாக எய்தப் பாரித்த வேதமே ஆகார முண்ணாமல் ஆவி யொடுங்கவும் தேகமோ புண்களால் தேங்கி நடுங்கவும் நித்திரை யில்லாமல் நியாயம் விசாரித்துக் கட்டியே கண்களும் காந்தி யெரிவுற்று வையமெய் பேயுடன் வாகைமல் லாடியே கையயர்ந்து பின்னே கால்கள்தள் ளாடியே கேடுகெட் டபவக் கேளைத் தழுவுறப் பாடுபட் டேவரும் பாரச் சிலுவையைத் தாங்க முடியாமல் தஞ்சமே வீழவும் ஆங்கொரு சீமோனை அன்றினர் ஆளவும் கல்வாரி மாமலை கண்டு சமீபமே கொல்வாரே கோதில்லாக் குன்றைஎன் பாவமே. 31 ஏசுவைச் சிலுவையி லறைந்தது திருவுற்றிலகு கங்கை என்ற மெட்டு அமரச் சேவகரேசு குமரக் கடவுளானை அறையச் சிலுவை யோடு சென்றனர் - அந்தப் பொறையைச் சீமனதாகு மென்றனர் - களி ஆடு கூளிகள் பல்கிமேவுக பால மேநிறை கொல்கதாவிடம் அடையக் கசந்த கள்ளைத் தந்தனர் - கொள்ளப் பரமற் கிருந்ததில்லை சிந்தையே குருசிற்பெரிய வாணி யுருவப் பரமனேசு குருவைக் கையொடு காலறைந்தனர் - அவர் உடையைப் பகிரவே விரைந்தனர் - அந்தக் கோதி லாத குமரனை யன்றிவர் யூத காவல னென வரைந்ததைக் குருசிற் சிறந்தமிசை மாட்டினர் - ஏசு குரிசிற் புரிந்தபிழை காட்டினர் கிருபைக் குமரனோடும் இருபக்க மிருசோரர் கெழுமச் சிலுவையறை மேவினர் - வீரர் குழுமிப் புரியு நீடு காவலர் - அங்கே கேசகம்பித பாதசாரிகள் கீழிறங்கும கேசனேயெனில் கிருதிற் கோயிலழித்த பின்றைநாள் மூன்றில் நிருமிப் பாயுனை ரட்சி யென்றனர் அவரைப் போலவே யூத குரவப் பாரகமூதர் இவனிப்போ திறங்குக நம்புவோம் - இவன் அயலுக்கே புரந்த வரம்பினான் - முனம் ஆண்ட வன்கரம் நம்பி னானவர் வேண்டிலின்று மிரங்க வேயென அருகிற் சிலுவையிடச் சோரனும் - அந்த அறுமிக்க மணியாதி நவமுற்ற மணிகாறும் அவனிக்கிருள் பரக்கத் தேவனை - ஏசு அகதிப் படவுரக்கக் கூவினர் - சிலர் வகையிற் பழிமொழியைக் கூறினன் அகவினா னெலியாவை யென்னவோர் மகனறாவுறு காடி தன்னையே அவருக்கொரு கழையில் நீட்டினன் - அவர் அகவித் தமதுயிரை வீட்டினர் வலமைத் தேவக நீடு திரையிற் கீழ்வரை கீள மகிமிக்கே யதிர்ந்தது கம்பமாய் - பெரு மலைமிக்கே பிளந்தன துன்பமாய் - பல வால மாதவர் உயிர்த்தெழுந்தபின் சால மாநகரிடைத் தெரிந்தனர் மகிமைக் காரியமாகக் கண்டவர் - இவர் அருமைத் தேவகுமாரன் என்றனர் சரணப் பணிவிடைகள் புரியப் பரமனோடு சதுரக் கலிலேயாவை நீங்கின - பல மகரக் குழையமாதர் ஏங்கினர் - கதிர் சாயும் வேளை யோசேப்பு நம்பனின் காய மோது பிலாத்து வுந்தரத் தயிலத்தினை மிகுத்துப் பெய்தனன் - ஒரு சயிலத்திலே யடக்கஞ் செய்தனன் திருடிப் பழகிநாமும் சிலுவைப்பட நியாயம் சிரமப் படவே யிந்தத் தூயவர் - என்ன கருமப் பதகஞ் செய்ய லாயினர் - என்று தேவனே யுமதரசி லென்னையும் காவுமே யெனவலது கள்ளனும் திருவிற் பெரிய பரதீசிலே - இன்று மருவப் பெறுவை யென்றார் ஈசனும். 32 வலதுபாரிசத்துக் கள்வன் வேண்டுதல் ஸ்ரீரகுவர என்ற மெட்டு (வேண்டுதல்) ப. ஆண்டவா உன தடியேனையும் அரசுறும் வேளையில் ஆளாய் சீராளா (ஆண்டவா) (நெஞ்சொடு கூறல்) து. ப. நாமேதம் செய்தம் நன்றாகுந் தண்டனை கோமா னிவரிற் கூறவோர் கோதுமேது (ஆண்டவா) (பரதீசு பெற்றபின் பரவல்) உ. தேவகு மாரா திருஅவ தாரா பாவி யெனக்கும் பரதீ சுபகாரா (ஆண்டவா) 33 சிலுவையின் ஏழு வசனங்கள் இராகம் - காப்பி தாளம் - திஸ்ர ஏகம் முகவுரை பாவிகட்காய்ப் பாரில் வந்தே பாடுபட்டுத் தேகநைந்து தேவமகன் சிலுவையுரை திவ்யமணி ஏழுமன்பு சேவைபலித் தேசுபெறச் சிந்தி நெஞ்சே 1. எந்தையேநீர் இவர்களுக்கு மன்னித்திடும் தங்கள் செயல் இன்னதென்றே அறியாதிருக் கின்றனரென் றேசிரந்தார் முன்புரைத்த அன்புபொறை பண்புறவே 2. என்னையுந்தன் அரசிலெண்ணும் என்றவலக் கள்வனுக்கே இன்றைக்கு நீ என்னுடனே பரதீசிருப் பாயென்றனர் எம்பெருமான் வீடளிக்கும் எத்தரர்க்கும் 3. மாதேயதோ உன்றன்மகன் யோவானதோ உன்றா யென்றார் மாதாகடன் அன்புமிகும் மாணவனின் மைந்த நிலை போதரத்தம் தேவிகமும் புண்ணியனார் 4. என்தேவனே என்தேவனே ஏனென்னைக் கைவிட்டீ ரென்றே ஏனைமொழி ஏலிஏலி லாமாசபக் தானி யென்றார் மானிடனாய்ப் பாடுபட்டே மாண்டதிறம் 5. தேகமதால் நீரின்மேலும் தேவிகத்தாற் பாவிமேலும் தாகமாக இருக்கிறேன் நான்என்று சொன்னார் தம்பிரானும் பானமின்றிப் பாய்ந்திரத்தம் போன நிலை 6. பாவம்பட நாகஞ்சாவு பாதளம் பேய்மீது வெற்றி சேவகமோ வேதனையோ சீவமீட்போ முடிந்ததென்றார் பாவபலி யானபெருந் தேவமறி 7. எந்தையேஉம் கைகளிலென் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்றுரக்கக் கூவியுடன் எம்பெருமான் மாய்ந்தனரே தந்தையொடு தாமொருவ ரென்றதகை. 34 மாதர் புலம்பல் மேலே மௌலா என்ற மெட்டு பாதார விந்தமே பாவியின் சொந்தமே நாதா பணிந்தமே நம்பி யிருந்தமே நானிலத்தும் மேனிலத்தும் நாதனே நல்வேதனே ஈனரைப்போல் ஏனுனக்கே எல்லை யில்லா வேதனை என்னோ கொடுமையீ தெங்கணு முள்ளதோ முன்னோர் கனவிலும் முன்னின தில்லையே பாதகப் பகைவர்பல பந்தமாய்நிர்ப் பந்தமாய்க் கோதில்லா மெய்க்கோ வுனையுங் கொல்லமனம் வந்ததோ குற்றமில்லாமலே கொல்லவும் நீதமோ கொற்றவ னாணையும் கொல்லுவார் போதமோ ஆணிகை காலேறி ரத்தம் அருவியாய்ப் பாய்ந்தோடுதே மேனியெல்லாம் மாறித் தாகம் மிஞ்சிமுகம் வாடுதே ஐயோஇத் தொல்லையை ஆரிடஞ் சொல்லுவேன் மெய்யேஇப் புல்லரை மேதினி கொள்ளுமோ? வாரடிகள் வீங்கியந்தோ வரைவரையாய்த் தெரியுதே வாதையெங்ஙன் ஆற்றுவாயென் வயிறுபற்றி யெரியுதே வல்லோரைத் தெய்வமும் வருத்த வில்லையே பொல்லா விரோதிகள் புத்திர முள்ளதே தேகமெல்லாம் நோவு மீறித் தியங்கிநீ கலங்கவும் ஆகடிய மாய்ப்பலரும் அவதூறு முழங்கவும் தேவாஇவ் வேளையோர் திக்குமில் லாமலே ஆவாநீ போகமுன் அக்கர மானதோ பாவிகளுக் காகவேயிப் பாரில்பாடு பட்டவா காவகச் சிலுவைமீது கதறியாவி விட்டவா கல்லே யெனாதகம் கையறும் வேளையும் வல்லே யறாதினும் வைகுமென் ஆவியும் ஏசையா உன்இன் முகத்தை என்றுநான்கண் டாறுவேன் இன்னல்வாரி யின்நடுவில் எங்ஙன்கரை யேறுவேன்? 35 சிலுவைத் தியானம் கத்தனவாரிகி என்ற மெட்டு ப. எத்தனை வேதனை இத்தகை ஈனக் குருசின் மீது இத்தகை யாவும் ஏது குற்றம் செய்தாய் து. ப. அத்தனே ஏன் என்னைக்கை விட்டீரென் றரற்றியொரு சுத்தவ நாதையாய்த் துன்புற ஏது காரணம் (எத்தனை) உ. மட்டில்லா மகிமையின்பம் விட்டு மாநிலத்தில் வந்து எட்டுணையும் இதமின்றி ஏளனமாகிச் சுட்டெரிக்கவு முதவாத சட்டகம் நானென்று பற்றிக் கெட்டதோர் நாயினுங் கேடுறுங் கேவலம் எனைமீட்க (எத்தனை) 36 புள்ளிக்கலாப மயிற் பாகன் என்ற மெட்டு வெள்ளிக்கிழமை வெயில் நேரம் - மனம் வேகுங் கல்வாரிமலை யோரம் - மன வேதனை மிகக்கடந்த வேதனை மரத்தறைந்த வீரர் பழிகாரர் முள்ளின் மகுடம்முடி மேலே - ஒரு மூங்கிற்கழை கரச்செங் கோலே - அந்த மூவுலக வேந்த னொரு பாவமிகு மாந்தனெனச் சிலுவை பெறுங் கொலுவை ஆணி கைகா லிணைகள் ஏறிப் - பல அருவிப்பட இரத்தம் பீறி - மிக அவதிப்படத் துறந்த அகதித் திறத்திறந்த தேனேபழி நானே வாரிலொரு வடமேபின்னி - உடன் வளைத்து வருத்த ரத்தங் கன்னிப் - புலி வருணம் பெற உடம்பு விரணம் படுந்தழும்பு தடிக்கும் ஒவ்வோர் நொடிக்கும் பச்சைப் புண்ணிலே வடிவேலே - உறப் பதித்த பெருங்கொடுமை போலே - குட்டுப் பட்டதலை குத்துமொரு கட்டுமுள்ளை யிட்டதெனச் சிரமோ அது மரமோ சுந்தர முகமெல்லாம் எச்சம் - பவ சோதனைக் காரன்வந்து மெச்சும் - இரு சோரரொடு பாத சாரி வீரர்பலர் கூறும்பரி காசம் அலை கேசம் தாங்க முடியாப் பசி தாகம் - பச்சைத் தண்ணீரு மில்லையவர் பாகம் - திருத் தங்கமேனி வற்றலெனப் பங்கமாக நிற்றலெனப் பாவம் பரிதாபம் பஞ்ச பாதக பரிகாரம் - அவர் படிவத்தி லைந்து காயம் பாரும் - திருப் பாதத்தே விழுந்தழுது பாவத்தை முனங்கழுவ வாரும் கண்ணீர் வாரும் 37 மஞ்சுநிகர் குந்தள மின்னே என்ற மெட்டு நெஞ்சமே, நினைந்துபார் முன்னே - நிருதவீரர் குருசிலார நிந்தையா யறைந்த மாமன்னே - அந்த நீதனும்பெரு வேதனையுற மோது மென்பவ மேதுசெய்குவேன் நின்று முழங்காலில் நீடியே - அழுதலறித் தொழுதிடுவென் நேசமா மகாரை நாடியே முப்பதின்மேல் மூன்றும் அரையும் - பருவம்வரச் சிலுவையதில் மூப்ப ராசாரியர் அறையும் - ஒரு முள்ளின் மாமுடி யெள்ளவே பெருங் கள்ள னாயினர் வள்ள லேசுவும் முன்பு யூதர் கொண்ட மதமே - முடியும் வரை ஒரு பிடியாய் முண்டு செய்து கண்ட வதமே பொந்தியுப் பிலாத்து பதியே - புரையரினம் இரைய மனம் போலவே மயங்கும் விதியே - யூதர் புத்திரத்தையே பெற்றதில்லையோ எத்திறத்தவர் செற்ற தென்னையே புல்லியர்க்கே யிந்த ஞாலமே - புனிதமுள இனியகுண நல்லவர்க்கோ இல்லை காலமே சிந்துர மிகுந்த காயமே - சிந்தாமணியோ நந்தாவொளியோ சேயிடை பரந்து பாயுமே - அதைச் சிந்தை நொந்து மிகுந்து சிந்தியே அந்தி சந்தி விழுந்து வந்தியே சீரை யோடிருந்த வண்ணமே - செந்நீர் பருகிப் பின்னே முழுகச் சேரும் வெள்ளைத் தூயவண்ணமே! 38 தோடுடைய செவியன் என்ற மெட்டு பாரின்பவப் பலியாய்ப் பர மாசுதன் பாவிகளை மேவி சோரும் வெயில் கரங்கால்களில் சோரவோர் சோரிமிகுமாரி கூரும்பல குடையாணிகள் கூடமே கொண்டறைய வன்றே சோரன் போலச்சிலுவை யறையுண்டதும் சுணங்க னென்னாலன்றோ! முள்ளின்முடி யுமிழ்நீரொடு சேயுடை மூங்கிற்கழை தாங்கி எள்ளன்மொழி யெழுதியெதிர் ஏசவும் ஏதும்புக லாதே வெள்ளம் போலக் குருதிவழிந் தோடநீர் வேட்கை மிகவிஞ்சி கள்ளன் போலச் சிலுவையறை யுண்டதும் கயவனென் னாலன்றோ! பருமன் மிகுமட மாமதப் பாதகர் பட்டினியிற் குட்டிக் கருமன் வினைக் கரமே கொடு மோதவும் கன்னஞ்செனி கன்னித் திருகும் வெயிற் பசிதாகமும் தீராமல் தேக மெலிவாகத் திருடன் போலச் சிலுவையறை யுண்டதும் தீயேனென் னாலன்றோ! 39 சுவிசேடகன் கிறித்தியானுக்குச் சிலுவையைக் காட்டிச் சொல்வது கதர்க்கப்பல் கொடி தோணுதே என்ற மெட்டு வசந்தா - முன்னை (ஆதி) (நாதநாமக்கிரியை - ஆதியிலும் பாடலாம்) ப. பவச்சுமை தாங்கி பாரதோ! பரும்பின்மேல் ஏசுகிரு பாகரன் சமாதியோரம் து. ப. பாவியிளைப் பாறுந்தானம் பரிசுத்தாவி யாதீனம் சீவியப்பிர சாதபானம் சிறந்த கற்பகங்கானம் (பவச்) உ. 1. வருந்திச் சுமக்கும் பாவி வகுந்து1 விரைந்து மேவி பொருந்திச் சிலுவை சேவி புரண்டுபோம் பாரந் தாவி புனை2 மாறும் பண்டை வினைபாறும் புத்தகம்பின் பாதை கூறும் (பவச்) 2. தேவமறி தாகங்கொண்டு தேடிவந் தன்பாய்த் திரண்டு பாவியுனக் காகவன்று பாடுபட்டுத் தேகம் நைந்த பலிக்கம்பம் வெற்றிக் கொடித்தம்பம் பக்கம் சென்றாலும் பேரின்பம் (பவச்) 1. வகுந்து - வழி. 2.. புனை - ஆடை. 40 உயிர்த்தெழுதல் தசரத ராஜ குமாரா என்ற மெட்டு கதிரவன் நாளதிகாலே மரி யாளே பரி வாலே விரை வாளே கல்லறை வெறுமையாக் கண்டனள் முனமே கர்த்த னுயிர்த்தா ரென்று கழறுந் தேவினமே மெல்லிய லழுதுபின் மீளுறு கணமே மேசையன் வடிவென்று கொண்டார் அயல் நின்றார் மரி யென்றார் தமை விண்டார் ஏசு மறைந்தவுடன் இன்புறு மரியாள் ஏகினள் சீடரிடம் இமையதுந் தரியாள் தேசுறு மகிழுரை தெரிப்பதற் குரியாள் தேவ மகிமையறி சீடர் மகிழ் கூட நடமாடத் துதிபாட எம்மா வூருக்கிருவர் ஏகினர் சீடர் இடைவிழ மருவினர் ஏசுவுங் கூடத் தம்மா லியன்றவரை தகவுரை யாடத் தமையறியாது வழிபோகும் பெரு வேகம் கதி ரேகும் இரு ளாகும் கோமக னுரைகளைக் கோளாளர் தெரிந்தார் கூறிய போதேயுளங் கொழுந்துவிட் டெரிந்தார் சேம விடியல்வரச் செல்லுமென் றிரந்தார் தேசிகனு மிணங்கி யிருந்தார் ஒரு விருந்தார் முற்று மருந்தார் உருக் கரந்தார் 41 பரமேறுதல் நீலகண்ட மகாதேவா என்ற மெட்டு இராகம் - வசந்தா தாளம் - ரூபகம் ப. மேக வாகன மீதி லேறி மேசை யாபர மேவி யேறும் து. ப. தேக மோடுயிர்த் தெழுந்து மேலே ஆக நாற்பதும் அருமை நாளே (மேக) உ. ஆவலாய்ச் சீடர் அவனி நீட அணந்து நின்றனர் ஆற்ற வொண்ணுமோ தேவ தூதரும் இவ்வகை ஏசு திரும்பு மென்றனர் தேற்ற வெண்ணியே (மேக) 42 கிறித்து பிதாவின் வலப்பாரிசத்திலிருந்து பாவிகளுக்காகப் பரிந்து பேசுதல் நன்னுபாலிம்ப என்ற மெட்டு ப. மன்னியுந் தேவ மகிமை எகொ வாவே மாந்தர் பாவமே து. ப. கனிதரா மரமே கனலுற வேண்டா தொட்டே1 இனிதெரு விடுவேன்நான் இனுமொரே ஆண்டுமட்டே (மன்னி) உ. நிலவுல கேகி நிரப்பொடு2 நிந்தையாகி நிலந்தலை சாய்க்கவும் நிற்கவும் நேரமின்றிச் சிலுவையில் வேதனை சிறந்து பாடுபட்டுச் சிறுமையுடன் மரித்தே தீர்த்தனென் பாவப்பாரம் (மன்னி) 1. தொட்டு - தோண்டி, கொத்தி. 2. நிரப்பு - வறுமை. 43 மெய்த்தெய்வம் அருட்சோதித் தெய்வமென்னை என்ற மெட்டு பந்துவராளி - ரூபகம் நாதாந்தத் தெய்வமென்னை நாடிவந்த தெய்வம் நம்பனிடத் துயிரொளியும் நண்ணியமெய்த் தெய்வம் ஏதேன்றன் இறைவன்பணி எதிருரைத்த தெய்வம் ஈசனடி யார்களுமுன் இசைத்தபெருந் தெய்வம் வேதாந்த சூரியனாய் விளங்கியமெய்த் தெய்வம் வியனிலத்தில் மாமிசமாய் விளைந்தமகத் தெய்வம் போதாந்தம் படவருக்கே புகன்றளித்த தெய்வம் பூமியெங்குந் திரிந்துநலம் புரிந்தபெருந் தெய்வம். மனந்திரும்பும் அரசுரைவாய் மலர்ந்தபெருந் தெய்வம் மறுவுடையு மில்லாமல் வறுமைகொண்ட தெய்வம் தினந்தினமும் நடந்துபதம் தேய்ந்துளைந்த தெய்வம் சிரஞ்சாய்க்க இடமின்றிச் சிரமமுற்ற தெய்வம் இனஞ்சனமாய்ப் பாவிகளை ஏற்றபெருந் தெய்வம் ஈனருடன் விருந்துண்ட எளியவரின் தெய்வம் சினஞ்சிறிய வருக்குமிகச் சேவைசெய்த தெய்வம் சீடரடி கழுவியவர் செருக்கழித்த தெய்வம். பட்டினியாய்ப் பசிதாகம் பரந்தெழுந்த தெய்வம் பலமான வாரடியும் பட்டபெருந் தெய்வம் குட்டிமிகு பாதகரும் குறைவுறுத்த தெய்வம் கோரமிகுஞ் சிலுவையிலே கொலையுண்ட தெய்வம் மட்டில்பெரும் பகைவருக்கும் மன்னிப்புரை தெய்வம் மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதித்தபெருந் தெய்வம் திட்டியிடச் சோரனுமுன் சிறுமைசெய்த தெய்வம் திருடனுக்கும் பெரியபர தீசளித்த தெய்வம். படமுடியாப் பாடுபட்டே பரிதபித்த தெய்வம் பாவியெனக் காருயிரும் பரிந்தளித்த தெய்வம் சடமுடனே உயிர்த்தெழுந்த சத்தியமாந் தெய்வம் தரிசனமுஞ் சீடருக்குத் தந்தபெருந் தெய்வம் படருமொளி மேகமிசை பரத்தெழுந்த தெய்வம் பரமவலம் வீற்றிருந்து பரிந்துரைக்குந் தெய்வம் திடமுறவே யெனையாண்ட திருக்குமர தெய்வம் திருவருளைச் சிறந்தளிக்கும் திவ்வியமெய்த் தெய்வம். தானாகித் தனியாகித் தழைத்தபெருந் தெய்வம் தனக்கெனவா ழாதபெருந் தனிக்கருணைத் தெய்வம் கோனாகிக் குருவாகிக் கூறுவிக்குந் தெய்வம் கொடியனெனை யாளுகந்து கொண்டாடுந் தெய்வம் ஊனாகி யுயிராகி உள்ளமர்ந்த தெய்வம் உடம்பிறப்பு முறையுமெனக் குவந்தளிக்குந் தெய்வம் தேனாகித் தெளிவாகித் தெவிட்டறியாத் தெய்வம் திருவலமன் றாடுகின்ற தெய்வமதே தெய்வம். 44 நெஞ்சோடு கூறல் புரிகல்யாணி - சாப்பு ஏசு தேவனே இந்நிலத் தார்பலர் ஏசு மேழையாய் இன்னுயிர் ஈந்ததால் நீச நாயன நீயும்பின் பேரின்ப வாச னான வகைநினை மனமே. பாடு பட்டிரும் பாரச் சிலுவையிற் கூடு விட்டிகங் குலையுங் கோமகன் கேடு கெட்டறக் கீழான வுன்னையும் வீடு விட்ட விதம்தெரி மனமே. காவு பாரத்தைக் கடிதி லகற்றியே தாவம் நீடுயிர்த் தண்ணீரி லாற்றுவென் பாவி காளெனப் பரிந்தழைக் கும்பரன் ஆவ லெண்ணியும் அறிதியோ மனமே. பொன்னைத் தானியப் பூமியைக் கானடை தன்னைப் பேணிலாத் தற்பரன் எண்மையில் உன்னை வேண்டவும் உறழுதியோ நெஞ்சே என்னைப் பேதமை இனைய வருளரே. தூண்டி லின்பமே துவன்று முலகுனை ஆண்டு கொள்ளவும் ஆசைப் படுதியே நீண்ட இன்பமே நின்னை யுறுத்தவும் வேண்டு மேசுவை விடுவதோ மனமே. விரும்பி யாவையும் விட்டுனைக் கண்கணீர் அரும்ப ஏசுவும் ஆனந்த மேந்தினர் கரும்பு தின்னவுங் காமறு வாரெவர் இரும்பு கல்பிற இளகுவ மனமே. மலைவ ருந்துயர் மாயுங் கதிர்ப்பனி அலைவ ரும்பகை ஆயிரர் என்செய்வர் தலைவ ருந்திருத் தள்பவோ தாளினால் துலைவ ரும்ஏனம் துன்மன முனக்கே. 45 திருச்சபைக்கு எச்சரிப்பு சத்திய வேதத் திருச்சபையே தவிர் நவையே கிறித் துவையே பணி குவையே பத்தியின் கனியில்லாப் பாழ்மரம் இனியே பரசினா லறையுண்டு படர்ந்திடும் வனியே அத்திமரம் பட்டதே அளியாது கனியே ஐயா இவ்வாண்டு மிந்த மரமே இட உரமே கனி தரமே எனுஞ் சிரமே பொறுமை யுடன் கிருபை புகழ்பரி தாபம் பொற்பரன் கொண்டபோதே போக்குவாய் பாவம் இறுதியி லடைகுவர் எல்லையில் கோபம் ஏதுஞ் செய்து மாறாத நீதம் ஒரு போதும் இலை போதம் தெளி வேதம் திருடன்போல் மணவாளன் திடுமென வருவார் தெரிந்துகொண் டவருக்கே திகழ்பரந் தருவார் கருடன்கண்ட பனிபோல் கலங்குவர் மருவார் காலமெல் லாமவர் நிக்கிரகம் கல்லு முருகும் எரி நகரம் துயர் பெருகும். 46 கிறித்துவை வேண்டுதல் காப்பி - ஒற்றை மகிதலந் தனில்வந்த மனுவேலா - பெரு மாபாவி களுக்கோர் அனுகூலா மறமதை வெறுத்தே திறமுடன் பொறுத்தீர் மலைமிசை திகழ்வரு மறுரூபா - மன மாயாதி கடந்த மகதேவா மரமுதல் இறந்தே பரமதில் சிறந்தீர் மகிமையில் வருமெழில் மணவாளா - என்றும் மாறாத தரும குணசீலா மகிழ்பரந் தருவீர் புகழ்பெருந் திருவீர். 47 கிறித்துவின் இரண்டாம் வருகை சந்தக் குழிப்பு தான தனன தன தனாதனாதன தான தனன தன தனாதனாதன தான தனன தன தனாதனாதன தனதான பாதி யிரவு புயல் பளீர் பளீர் என மீது கடவு பர மகா மகா முன மோது முறைமை வரு களா களா வென அமரோடே மாதிர முழுவது மடா மடாவென போதென வுதிருடு பொலீர் பொலீ ரென வேது படவு மிடி திடீர் திடீ ரென வரு நாளில் மேதினி கலறைகள் படீர் படீரென பாதகர் வயிறகம் பகீர் பகீரென நீதியர் முக முழு நிலா நிலாவென நகையாக கோதுறு நரகெரி குபீர் குபீரென மீதல சுகவறை மினா முனாவுற ஏதை யெனையுமுள மெணாதிரேல் ஒளிர்திரு மணவாளா. 48 பைரவி - ரூபகம் ப. தினகரதீ விரகோடி திகம்பர மாதிரமூடி திரளாய் வானோர் கூடி தேவமா மணமோடி து. ப. தேவரடியவர் சகிதம் தீவிய காகள நாதம் தேவசுதன் திரு மாரதம் தேசோமயமே வாரிதம் (தினகர) உ. வானே மீன் உகுபோதே வையகம் பகமீதே ஈனே கயவர் கோதே ஏகாங்கி புகவேதே (தினகர) புனைமங்க ளாகரமே புதுநிலமுங் ககனமுமே வினைமுதிர் சிங்காசனமே விகசிதம் ஆளுகை சதமே. (தினகர) 49 நடுத்தீர்ப்பு ஏசு வலப் பக்கத்தார்க்குச் சொல்வது ப. வலமுக மெய்ப் பக்தரின்றே வந்துற வரபோகம் து. ப. உலக முண்டானது முதலாய் உங்கட் கமைந்த அரசுற (வலமுக) உ. நானோ பசிதாகம் பிணி ஆனேன் அயலெனினும் போனக பானாதிகள் உவந்தளித்த பாரோப காரிகணீர் (வலமுக) 50 இடப்பக்கத்தார்க்குச் சொல்வது ப. இதொடேக இடவீர் ஏது மின்றி ஏற்றீர் சாபமே து. ப. இதி1 தன் தூதரோ டிறங்கவே யமைந்த இறுவா யில்லெரி ஏகி வேமினே (இதொ) உ. தரா தலமுனமென் சிறார்பசி மிகவே பராமுக மிருந்து தராதுண வுடைகள் உறாநொது மல்பிணி யறாநிலை சிறையில் வரா திருந்ததென்? அபராதிகளே சொலும். (இதொ) 1. இதி - சாத்தான். 51 ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் இராகம் - காம்போதி தாளம் - முன்னை மழவர்மிகுந் தேவசேனை மகிமையுடன் கூடிமண முழவறைந்தார் திசைகளெல்லாம் முழங்கிடவே யீருலகும் விழவயரு மென்றேயொரு விளம்பரமுஞ் செய்ததென்னே அழகுயரும் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்! பரமபதந் தனைவிட்டுப் பாரின்மிக ஏழையாகிச் சிரமமுடன் பாரந்தாங்கிச் சிரஞ்சாய்க்க இடமின்றி மரமதிலே மடலேறி மணமகளை மீட்டெழுந்த அருவரனாம் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கலியாணம்! மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்''நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென்மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட் டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர் களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். **********