பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 28 திரவிடத்தாய் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 28 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1944 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 120 = 136 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 85/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்ப8ளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை உலக மொழிகளுள் தலைமையானவற்றுள் தமிழும் ஒன்றெனினும், பல்குழுவும் பாழ்செயும் உட்பகையும் தமிழகத்திலிருந்துகொண்டு, தமிழின் பெருமையைப் பிறநாடுகள் மட்டுமன்றித் தமிழ்நாடும் அறியாதபடி, அதனை மறைத்து வருவது மிக மிக இரங்கத்தக்கதொன்றாம். ஆராய்ச்சியாளரோ வெனின், ஓரிருவர் நீங்கலாகப் பிறரெல்லாம், பிறநாட்டுச் செய்திகளாயின் மறைந்த வுண்மையை வெளிப்படுத்துவதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின் வெளிப்பட்ட வுண்மையை மறைத்து வைப்பதுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆயினும், கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒருநாள் திகழ்ந்து தோன்றுவதுபோல், தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. தமிழே திரவிடத்தாய் என்பது மிகத் தெளிவாயிருப்பினும், 1891ஆம் ஆண்டிலேயே, கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் திட்டமாய்க் கூறியிருப்பவும், ஆராய்ச்சியின்மையாலோ, கவலையின்மையாலோ, துணிவின்மையாலோ, தமிழ்ப்புலவர் எடுத்துக் காட்டாததினால், தமிழின் திரவிடத்தாய்மை பொதுமக்களால் அறியப்படாதிருப்பதுடன், தமிழ் ஒரு புன்சிறு புது மொழியினும் தாழ்வாகக் கருதப்படு கின்றது. பெலுச்சித்தானத்திலும் வடஇந்தியாவிலும் இன்னும் திரவிட மொழிகள் வழங்குவதையும், வடநாட்டு ஆரிய மொழிகளிலும் திரவிட நெறிமுறைகளே அடிப்படையாய் அமைந்து கிடப்பதையும், குச்சரமும் (குசராத்தி), மராட்டியும் பண்டைக் காலத்தில் பஞ்சத் திராவிடிகளில் இரண்டாக வடமொழியாளராலேயே கொள்ளப்பட்டதையும், இந்திய மொழிகளிலெல்லாம் மூவிடப்பெயர்களும் முக்கியமான முறைப்பெயர்களும் தமிழ்ச் சொற்களாய் அல்லது தமிழ் வேரடிப் பிறந்தனவாயிருப்பதையும், சென்ற நூற்றாண்டில் தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் சென்ற தமிழ்க் குறவர் (எறுக்கலவாரு அல்லது கொரவரு) கூட, இன்று தமிழைத் தெலுங்கும் கன்னடமும் போல ஒலித்துப் பேசுவதையும், நோக்குமிடத்துத் தமிழிற் புணர்ச்சியும் பருசொன்னிலையும் தோன்றாத தொன்முது காலத்தில், தமிழே இந்தியா முழுதும் தனிப் பேராட்சி பெற்றிருந்தமை புலனாம். தட்ப வெப்ப நிலையினாலும், ஒலிமுறைச் சோம்பலினாலும், இலக்கிய விலக்கண அணைகரை யின்மையாலும், ஆரியக் கலப்பினாலும், தமிழர் விழிப்பின்மையாலும், நாவலந் தீவு முழுவதும் ஒருதனியாய் வழங்கிய முதுபழந்தமிழ், பல்வேறு மொழிகளாய்ப் பிரிந்து, வடநாட்டில் ஆரியமயமாயும் தென்னாட்டில் ஆரியக் கலப்பினதாயும் வேறுபட்டதுடன், ஆரியச்சார்பு மிக்க திரவிட மொழிகள் மேன்மேலும் தமிழை நெருக்கி நெருக்கித் தெற்கே தள்ளிக்கொண்டே வருகின்றன. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு என்னும் இளங்கோவடிகள் கூற்றால், கி.பி.2ஆம் நூற்றாண்டு வரை வேங்கடத்தை வடவெல்லையாகக் கொண்ட தென்னாடு முழுதும் பிறமொழி வழங்காத தமிழ்நாடாயிருந்தமை புலனாம். ஆனால், 12ஆம் நூற்றாண்டில் சேரநாட்டின் வடபாகத்திற் கன்னடம் புகுந்துவிட்டது. இதை, வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி. கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம் ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர் தெற்குப் பினாகி திகழிருப தின்காதம் நற்றொண்டை நாடெனவே நாட்டு. வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின் ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம் சேரநாட் டெல்லையெனச் செப்பு என்னும் கம்பர் செய்யுட்களானறிக. இற்றைநிலையிலோ, சேரநாட்டின் மேல்பாகம் முழுதும் மலையாள நாடாயும் கீழ்பாகத்தின் வடபகுதி கன்னட நாடாயும் மாறியிருப்பதுடன் சோழநாட்டின் வடமுனைப் பகுதி (தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டம்) தெலுங்கிற் கிடந்தந்து இருமொழி நாடாய் வேறுபடுகின்றது. உண்மையில் ஒரு பெருமையுமில்லாத புன்சிறு புது மொழிகளை யெல்லாம் அவ்வம் மொழியார் பலபடப் பாராட்டி வளர்த்து வருகையில், பல வகையில் தலைசிறந்த தனிப்பெருந் தாய்மொழியாகிய தமிழைத் தமிழர் நெகிழவிடுவதும், எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றிருப்பதும், தமிழப் பிறப்பிற்கு முற்றும் தகாத செய்தியாம். தமிழையும் பிற திரவிடமொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையு மறிவதுடன், உலக முழுதுந் தழீஇய குலநூல் (Ethnology), வரலாற்றுநூல் (History), மொழிநூல் (Philology) ஆகிய முக்கலை களின் திறவுகோலையும் காணப் பெறுவதாயிருத்தலின், இனிமேலாயினுந் தமிழர் தம் கடமை யுணர்ந்து கடைப்பிடிப்பாராக. எனது ஒப்பியன் மொழி நூலின் முதன் மடல் 3ஆம் பாகத்தின் பிற்பகுதி யாய் வெளிவரும் இந் நூல், தமிழே திரவிடத் தாய் என்று நாட்ட வெழுந்தது. இதை நடுவுநிலையாய்ப் படிப்பார்க்கெல்லாம் இவ்வுண்மை புலனாகுமென்பது திண்ணம். ஒரு மொழிக்கு அடிப்படையானவும் இன்றியமையாதனவுமான, மூவிடப் பெயர்கள், முறைப் பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், அக்கம்பக்கப் பொருட் பெயர்கள், பேரிடப் பெயர்கள், வா, போ முதலிய முக்கிய வினைகள், பல்வகைப் பண்புப்பெயர்கள், கை கால் முதலிய சினைப்பெயர்கள் ஆகிய இவை, இயற்கையான வடிவிலும் வேர்ப்பொருள் தாங்கியும் எம்மொழியிலுள்ளனவோ, அம் மொழியே அதற்குத் தாய் எனத் துணிதல் வேண்டும். ஆரியவெழுத்துப்போல் எடுத்தும் உரப்பியும் ஒலிக்கும் மூச்செழுத்துகளும் ஓசையெழுத்துகளும் (Aspirated and voiced letters) தமிழுக்கின்மையின் தமிழுக்குரிய பொது வெழுத்துகளாலேயே பெரும்பாலும் பிற திரவிடச்சொற்கள் காட்டப்பட்டுள்ளன. பிற திரவிட மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களையெல்லாம் எடுத்தெழுதின் பல அகராதிகளாக விரியுமாதலின், எடுத்துக்காட்டுக்கு வேண்டிய அளவான சொற்களே இங்குக் காட்டப்படுகின்றன வென அறிக. இந் நூலின் திருத்தம்பற்றிய கருத்துகளை அறிஞர் தெரிவிப்பின், அவற்றை நன்றியறிவுடன் ஏற்றுக்கொண்டு, அடுத்த பதிப்புகளிற் பயன்படுத்தும் வாய்ப்புடை யேனாவேன். குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன். சென்னை, 27-1-1944 ஞா. தேவநேயன் திரவிட மொழியார் தொகை (1931) தமிழர் 20,412,652 தெலுங்கர் 26,373,727 கன்னடர் 11,206,380 மலையாளியர் 9,137,615 துளுவர் 500,000 (1971) குறுக்க விளக்கம் (Abbreviations) ஆ.பா. - ஆண்பால் நி.கா. - நிகழ்காலம் இ.கா. - இறந்தகாலம் நற். - நற்றிணை எ.கா. - எதிர்காலம் நன். - நன்னூல் எ.டு. - எடுத்துக்காட்டு ப. - பன்மை ஏ. - ஏவல்வினை பக். - பக்கம் ஒ. - ஒருமை பத். - பத்துப்பாட்டு க. - கன்னடம் புறம். - புறநானூறு சிலப். - சிலப்பதிகாரம் பெ.பா. - பெண்பால் த. - தமிழ் ம. - மலையாளம் தொல். - தொல்காப்பியம் மயிலை. - மயிலைநாதர் தெ. - தெலுங்கு வி.எ. - வினையெச்சம் உள்ளடக்கம் திரவிடத்தாய் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு .vi சான்றிதழ் .viii முகவுரை .x நூல் முன்னுரை .1 மலையாளம் .30 கன்னடம் .55 தெலுங்கு... 81 துளு .103 முடிவு .115 கருவிநூற்பட்டி... 120 திரவிடத்தாய் - 1 முன்னுரை 1. மொழி என்றால் என்ன? ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தற்குக் கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே மொழியாம். அவ் வொலி bசால்லுஞ்bசாற்றொடருமாயிருக்கும்.brhšY« ஓரெழுத்துச் சொல் ஈரெழுத்தச் சொல் முதலியவாகப் பலவகைத்து, ஓர் ஒலி வேறு; அதனால் உணர்த்தப்படும் பொருள்வேறு. ஒலிக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு வரிவடி வெழுத்திற்கும் ஒலிவடி வெழுத்திற்கும் உள்ளதே. காற்று இயங்குவதினாலும் இரு அல்லது பல பொருள்கள் ஒன்றோடொன்று உராய்வதனாலும் ஓசை பிறக்கும். அவ் வோசைக்கு இயல்பாய்ப் பொருளில்லை. அவ் வோசையைப் பொருளுணர்த்தும் அடையாளமாகக் கொண்டதே மொழியாம். காற்றியக்கம் வெள்ளிடையியங்குவதும் உயிரி (பிராணி)களின் வாய்வழி இயங்குவதும் என இருவகைத்து. இவற்றுள், பின்னதன் பயனாய ஒலிகளே பெரும்பாலும் மொழிக் கருவியாம். ஒலிக்கு இயல்பாய்ப் பொருளுணர்த்தும் தன்மை யிருப்பின், உலகமெங்கும் என்றும் ஒரு மொழியாயும் அதுவும் கல்லாமலே அறியப்படுவதாயு மிருக்கும். அங்ஙனம் இன்மையறிக. மொழிநூலின் திறமறியாத சிலர், ஓசை நிலைப்பானது ஆகவே ஓசைவடிவான மொழிகளும் நிலைப்பானவை என்று கூறுவர். இது, இரும்பு நிலைப்பானது; ஆகவே, இரும்பு வடிவான இயந்திரங்களும் நிலைப்பானவை; புதிதாயுண்டாயவையல்ல என்று கூறுவது போன்றதே. ஒவ்வொரு நாட்டாரும் பெரும்பாலும் வெவ்வேறு மொழியைப் பேசிவருகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் மொழியைக் கற்றாலொழியப் பேச முடியாது. ஒரு நாட்டாருள்ளும் குழந்தைகள் பெரியோர் வாயிலாய்க் கேட்டாலொழியத் தம் தாய் மொழியைப் பேசமுடியாது. குழவிப் பருவத்திலேயே தம் நாட்டாரினின்று பிரிக்கப்பட்டு மொழி வழங்காத அல்லது தாய்மொழி வழங்காத இடத்தில் நிலையாய் வாழ்ந்தவர்கள் தாய்மொழியைப் பேச முடியாது. முழுச் செவிடர் பிறர் பேசுவதைக் கேட்க இயலாமையாலேயே பெரும்பாலும் ஊமையராகின்றனர். விலங்குகளையும் பறவைகளையும் போன்று, மிகச் சில ஒலிகளால் மிகச் சில கருத்துகளைத் தெரிவித்துக் கொண்ட தமக்கென மொழியில்லாத அநாகரிக மக்களும் சில காடுகளில் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந்துள்ளது. ஒருவனுக்குப் பிறப்பிலேயே தாய்மொழி யறிவில்லை; அதைப் பேசுந்திறன் அல்லது கற்குந்திறன் மட்டுமுண்டு. ஓராண்டுக் குழந்தை அம்மா, அப்பா, பாச்சி (பால்), சோச்சி (சோறு) முதலிய பெயர்களையும், ஒன்றரையாண்டுக் குழந்தை அவற்றொடு வா, போ முதலிய வினைகளையும், ஈராண்டுக் குழந்தை தன் கருத்திற்குரிய சொற்களெல்லாவற்றையும் சொல்லக் கற்றுக்கொள்கிறது. அல்லது கற்பிக்கப்படுகிறது. மூவாண்டுக் குழந்தை நன்றாய்ப் பேசுகிறது; பின்பு வீட்டைவிட்டு வெளியேறிப் பொருள்களையும் செய்திகளையும் அறியஅறியச் சொற்றொகுதி யும் பெருகி வருகிறது; அதன்பின் கல்வியினால் பல சொற்கள் புதிதாய் அறியப்படுகின்றன. இங்ஙனம் ஒருவன் வளர வளர, அறிவு பெருகப் பெருக, தன் சொற்றொகுதியை மிகுத்துக் கொண்டே போகின்றான். ஒரு குழந்தை தன் பெற்றோரிடத் தினின்று பேசக் கற்றுக்கொண்டாற்போல, ஒரு நாட்டார் தம் முன்னோரிடத்தினின்று பேசக் கற்றுக்கொள்கின்றனர். மேற்கூறிய காரணங்களால், மாந்தன் ஒரு காலத்தில் மொழியில்லாதிருந்தான் என்பதும், மொழியமைந்த பின் வழிவழிப் பின்னோரெல்லாம் முன்னோரிடத்தினின்று மொழியைக் கற்று வருகின்றனர் என்பதும் உய்த்துணரப்படும். உலகிலுள்ள மக்களெல்லாம் ஓரிடத்தினின்றே பரவிப் போயினர் என்பதும், ஒரு தாய்வயிற்றினரே என்பதும் ஆராய்ச்சியாற் கண்ட முடிபுகளாம். மாந்தன் முதலாவது தோன்றிய இடத்தில் மக்கள் மொழியில்லாமலே சிலகாலம் வாழ்ந்து வந்தனர். மொழியில்லாத நிலையில் சில முறையும் மொழி தோன்றியபின் சில முறையுமாக மக்கள் பலதிசைக்கும் பல முறை பரவிப் போயிருக்கின்றனர். மொழியில்லாது பிரிந்துபோனவர் தாம் போன இடங்களில் புதிதாய்த் தத்தமக்கு ஏற்றவாறும் இயன்றவாறும் இயன்மொழிகளை ஆக்கிக்கொண்டனர். மொழி தோன்றியபின் பிரிந்து போனவர் தத்தம் சுற்றுச் சார்பிற்கேற்பப் புதுச் சொற்களை அமைத்தும் தட்பவெப்ப நிலைக்கேற்பப் பழஞ் சொற்களைத் திரித்துங் கொண்டனர். ஆயினும், தொடர்புடைய மக்களெல்லாம் தொடர்புடைய மொழிகளைப் பேசி வருவதும், மக்கள் தொடர்பின் பெருமை சிறுமைக்கேற்ப அவர்கள் மொழிகளின் தொடர்பும் மிக்கும் குறைந்து மிருப்பதும் இயல்பாம். இதற்கு, அமெரிக்க நீகிரோவைப் போல அநாகரிக மொழியராயும் கோவாப் போர்த்துக்கீசியரைப் போலச் சிறுபான்மையராயுமிருந்து, அயன்மொழிகளைக் கடைப்பிடிப்பது விலக்காம். வேறு சில விலக்குகளு முள; அவை வேண்டுமிடத்துக் கூறப்படும். 2. தமிழ்மொழி எது? பனிமலை தோன்றாத முதற்காலத்தில் நாவலந்தேய முழுதும், தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கும் (தெற்கே யமிழ்ந்துபோன) குமரிமலைக்கும் இடையிலும் வழங்கிவந்து, தற்போது வேங்கடத்திற்கும் குமரிமுனைக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் மைசூர்ச் சீமைக்கும் கிழக்கில் வழங்கிவருவது தமிழ்மொழியாம். 3. தமிழ் என்னும் பெயர் தமிழ் என்னும் பெயர்க்குப் பொருத்தமான பொருள்கள் தனிமையாக ழகரத்தைக் கொண்டது, (2) தனிமை என இரண்டு. இவற்றுள், முன்னது பொருளாயின் உலகில் பிறமொழி அல்லது மொழிகள் தோன்றின அல்லது திரிந்த பின்னும் தமிழில் ழகரந் தோன்றின பின்னும் தமிழுக்குப் பெயர் ஏற்பட்டிருத்தல்வேண்டும். பின்னது பொருளாயின் தமிழ் என்னும் பெயர் முதலிலேயே தமிழையோ முதலாவது தமிழர்க்குப் பெயராகிப் பின்பு தமிழையோ குறித்திருத்தல் வேண்டும். இதுவும் பிறநாடும் பிறமொழியும் தோன்றிய பின்னரே நிகழ்ந்திருத்தல் கூடும். பல மொழி வழங்காத போது ஒரு மொழிக்குமட்டும் சிறப்புப் பெயர் அமைதல் அரிது. இவ் வியல்பு பிற பொருள்கட்கும் ஏற்கும். தனிமை என்று பொருள்படும் தமிழ் என்னுஞ் சொல் முதலாவது தமிழரைக் குறித்திருப்பது அவரின் தனிப்பட்ட நாகரிகம்பற்றி. பண்டைக் காலத்தில் நாவலந்தேயத்தில் (இந்தியாவில்) மட்டுமல்ல, உலக முழுவதிலுமே தமிழர் தலைசிறந்த நாகரிகராயிருந்ததினால் தனிப்பட்டவர் என்னும் பொருளில் தமிழர் எனப்பட்டனர். பழந்தமிழரின் நாகரிகத்தை, அவருடைய பழக்கவழக்கம், சிறந்த கருத்துகள், செய்யுள்வன்மை, அவர் செய்திருந்த பொறிகள், தமிழின் அமைதி, முத்தமிழ்ப் புணர்ப்பு, தமிழ்க்கலை நூல்கள் முதலியவற்றால் அறியலாம். அவரது சிறந்த ஒழுக்கத்தினாலேயே, வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து எனப் பண்டைத் தமிழகத்தைப் பாராட்டிக் கூறினர் பனம் பாரனாரும். நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம். 187) என்றார் ஔவையாரும். ஒரு குலத்தாரின் அல்லது நாட்டாரின் பெயர் திரிந்தும் திரியாதும் அவரது மொழியைக் குறிப்பது இயல்பே. ஆங்கிலரது (Angles) மொழி ஆங்கிலம் (English) என்றும், செருமனியரது (Germans) மொழி செருமனியம் (German) என்றும் கூறப்படுதல் காண்க. தமிழ் என்னும் சொல் தனிமை என்று பொருள்படும் போது, அதன் ழகரம், அமிழ் இமிழ் உமிழ் குமிழ் என்பவற்றிற்போல ஒரு விகுதியாம். தமிழ் இனிமையா யிருத்தலின், தமிழ் என்னுஞ் சொல்லுக்கு இனிமைப் பொருள் கூறுவர். இது வழிப்பொருளேயன்றி வேர்ப்பொருளன்று. 4. குமரி நாடே (Lemuria) தமிழ் (திரவிடம்) தோன்றிய இடம் உலகில் இதுபோது திரவிடமிருப்பது இந்தியாவே; இந்தியாவிலும் திரவிடத்திற்குச் சிறந்தது தென்னாடே; தென் னாட்டிலும் சிறந்தது தமிழ்நாடே; தமிழ்நாட்டிலும் மொழித் திருத்தம் தெற்கு நோக்கியதே. முத்தமிழ் நாடுகளில் பாண்டி நாட்டையே தமிழ் நாடென்றும், முத்தமிழரசருள் பாண்டியனையே தமிழ்நாடன் என்றும், பண்டைக் காலத்திலேயே சிறப்பித்துக் கூறினர். இன்றும் பாண்டிநாட் டெல்லையில்தான் தமிழின் வளத்தையும் தூய்மையை யும் ஒரு சிறிது காணலாம். பாண்டி நாட்டின் பெரும்பகுதி ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே சிறிது சிறிதாகத் தென்பெருங் கடலில் மூழ்கிவிட்டது. பாண்டியர் இரீஇய முக்கழகங் (முச்சங்கங்)களும் நீடித்த காலத்தன; நெட்டிடையிட்டன. இறையனாரகப்பொருளுரையில் முக்கழக வரலாற்றில், தலைச்சங்க மிருந்தார்...ehyhÆu¤J நானூற்றுநாற்பதிற்றியாண்Lசங்fமிருந்தhரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார்காய்சினவழுâமுதலாக¡கடுங்கோனீறாfஎண்பத்தொன்பதின்kரென்ப.....mt®....jÄHhuhŒªjJ கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. .....ïil¢r§f ÄUªjh®....மூthÆu¤bjG நூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாற ÜறாகIம்பத்தொன்பதின்kbரன்ப....அt® தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது. கடைச்சங்கமிருந்தது.....jÄHhuhŒªJ ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டுஎன்ப....r§fÄßïÆdh® கடல்கொள்ளப்பட்டுப்போந்திருந்தமுடத்திருமாறன்முதலாகஉக்கிரப்பெருவழுதியீறாகநாற்பத்தொன்பதின்மரென்ப...jÄHhuhŒªjJ உத்தர மதுரை யென்ப என்று கூறப்பட்டு உள்ளது. தமிழ்நூல்களைக் கல்லாமலே பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்னே குமரிமுனைக்குத் தெற்கே, இந்தியா தென்கண்டம் (ஆஸ்திரேலியா) ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டங்களையும் இணைத்துக்கொண்டு ஒரு பெருநிலப் பரப்பிருந்ததென்றும், அங்கேதான் மாந்தன் தோன்றினானென்றும், ஊரும் உயிரிகள் கூட அங்கேதான் தோன்றினவென்றும், அது பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற பின் பல கடல்கோள்களால் தென் பெருங்கடலில் மூழ்கி விட்டதென்றும் ஹெக்கேல், ஸ்காட் எலியட் முதலிய மேலையாராய்ச்சியாளர் கூறி, அதற்கு லெமூரியா, காண்டுவானா (Gondwana) என்ற பெயர்களையும் இட்டிருக் கின்றனர். வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரித லின்று (குறள். 955) என்னுங் குறளுரையில், பழங்குடிக்கு எடுத்துக்காட்டாக, சேர சோழ பாண்டியர் குடிபோலும் படைப்புக் காலந்தொட்டு மேம் பட்டு வருங் குடி எனக் குறிப்பிட்டுள்ளார் பரிமேலழகர். முத்தமிழரசக் குடிகளுள் பாண்டியர் குடியே முதலாவது தோன்றியதென்றும், பின்பு முறையே சோழ சேரக் குடிகள் தோன்றினவென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்கி வருகின்றது. வடமொழியில் முதற் பாவிய(காவிய)மாகிய வான்மீகி யிராமாயணத்தில் சேர சோழ பாண்டியர் மூவரும் கூறப்பட் டுள்ளனர். கி.மு. 2000 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட தொல் காப்பியத்திலேயே, போந்தே வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (பொருள். 60) என்றும், வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் (பொருள்.381) என்றும் மூவேந்தர் குடிகளும், முதுகுடி எனத் தமிழ் மறவர் குலமும் பழைமையாகக் கூறப்பட்டுள்ளன. மறவர் குடியை, கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி (பு.பொ.வெ.35) என்னும் புறப்பொருள் வெண்பா மாலையும். பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தலைக்கழகம் முத்தமிழ்க் கழகமாயிருந்ததினால்; அதற்குமுன் முத்தமிழ் தொகுதற்கும், அதற்குமுன் இயற்றமிழ் தோன்றற்கும், அதற்குமுன் இலக்கணமும் அதற்குமுன் இலக்கியமும் அதற்குமுன் எழுத்தும் அதற்குமுன் மொழியும் தோன்றற்கும் கணக்கிட முடியாத காலஞ்சென்றிருத்தல் வேண்டும். பொருளதிகாரத்தில் கூறப்படும் ஐந்திணை நிலையும் தழைகொண்டு சேறல், இயற்கைப் புணர்ச்சி முதலிய பகுதிகளும், தமிழர் துவக்கந்தொட்டுத் தென்னாட்டிற்கே உரியர் என்பதை உணர்த்தும். தமிழ் இயல்பாய்த் தோன்றிய மொழியாதலானும், தெற்கிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுதலானும், மிகத் தொன்மை வாய்ந்ததாதலானும், அது தோன்றியது குமரிநாடே என்று துணியப்படும். பழந்தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றமையாலும், தெற்கே அமிழ்ந்துபோன குமரிநாடே தமிழர் தொல்லகம் என்பது ணரப்படும். எதிர்த் திசைகளைக் குறிக்கும் போது கிழமேல் தென்வடல் என்று கூறுவதே மரபு; மேல்கிழக்கு வடதெற்கு என்று கூறுவது மரபன்று. நாகரிக மக்கள் கீழிருந்தே மேற்செல்ல வேண்டியிருப்பதாலும், கதிரவன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதாலும் கிழக்கு முற்கூறப்பட்டது. தமிழர் தெற்கேயிருந்தே வடக்கு வந்தவராதலின் தெற்கு முற்கூறப்பட்டது என்க. 5. தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது பண்டைக் காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பெரும்பாலும் அம் ஈறு பெற்றே வழங்கின. எ-டு: சிங்களம், கடாரம், ஆரியம். தமிழும் தமிழம் என வழங்கிக் குலத்தையும் நாட்டையும் மொழியையுங் குறித்தது. தமிழக் கூத்து தமிழ வண்ணான் என்னும் புணர்மொழிகளில், தமிழ் என்னுஞ்சொல் அகரச்சாரியை பெற்றுப் புணர்ந்ததென்று கொள்வதைவிட, தமிழம் என்னுஞ் சொல்லே நிலைமொழியாக நின்று ஈறுகெட்டுப் புணர்ந்ததென்று கொள்வது சாலச் சிறந்தது. தமிழம் என்பது குலமும் நாடும் மொழியும் ஆகிய மூன்றையும் குறிக்குஞ் சொல்லாதலின், தெளிவின் பொருட்டு நாட்டைக் குறிக்கும்போது தமிழகம் என வழங்கினர். வையக வரைப்பில் தமிழகங் கேட்ப (புறம். 168:18). தமிழகம் என்னும் பெயரையே பண்டைக் கிரேக்க உரோம சரித்திராசிரியர் `டமிரிக்க (Damirica), `டமெரிக்கெ (Damarice) எனத் திரித்து வழங்கினர். வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய்ம் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம் த்ரவிடம், எனத் திரிந்தது. ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. கால்டுவெல் கண்காணியார் குமரிநாட்டுச் சரித்திரத்தையும் தொல்காப்பியத்தையும் மேற்கணக்கு நூல்களையும் அறியாத வராதலின், தமிழரை வடக்கிருந்து வந்தவராகவும் ஆரியரால் நாகரிகமடைந்தவராகவும் கொண்டு த்ரமிளம் என்னும் வடசொல்லினின்று தமிழ் என்னுஞ் சொல் பிறந்ததென்று கூறினார். ஆனால், பண்டிதர் கிரையர்சன் இதை மறுத்துத் தமிழம் என்பதே த்ரவிடம் என்பதன் மூலம் எனத் தமது இந்திய மொழியாராய்ச்சி (Linguistic Survey of India) என்னும் நூலில் நாட்டியுள்ளார். ஆண்டுக் காண்க. தமிழுக்குத் திரவிடம் என்னும் பெயர் தமிழ்நாட்டில் வழங்காமையானும், தமிழ் என்னும் வடிவத்தை யொட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும், திரவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே யிருந்தமையானும், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும். 6. தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந்தமை தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திரவிடம் என்று திரிந்ததோ, அங்ஙனமே தமிழாகிய மொழியும் பிற திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க. தலைக்கழகக் காலத்தில், தமிழ், செந்தமிழ் கொடுந்தமிழ் என இரண்டாக வகுக்கப்பட்டது. இவை வழங்கும் நாடுகளும் செந்தமிழ் நாடு கொடுந்தமிழ் நாடு எனப்பட்டன. செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நாடுகள் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்தன. இலக்கணம் நிரம்பிய சிறந்த வழக்கான தமிழ் செந்தமிழ், அது திரிந்தது கொடுந்தமிழ். செம்மை நேர்மை; கொடுமை வளைவு. செங்கோல் கொடுங்கோல் என்னுஞ் சொற்களை நோக்குக. செந்தமிழ்ச் சொற்கள், இயற்சொல் (Primitives) திரிசொல் (Derivatives) என இரண்டாக வகுக்கப்பட்டன. இயல்பான சொல் இயற்சொல்; அதினின்று திரிக்கப்பட்ட சொல் திரிசொல். கிள், சேர் என்பன இயற்சொற்கள்; கிள்ளை, சேரி என்பன திரிசொற்கள். இயற்சொல் வேறு; வேர்ச்சொல் வேறு; பகுதியும் வேறு. கிள் என்பதற்குக் கில் என்பதும், சேர் என்பதற்குச் சே என்பதும் வேர்ச் சொற்களாம். வேர்ச்சொல் முந்தினது, இயற்சொல் பிந்தினது. இற்றை யியற்சொற்கள் தோன்றாத முதற்காலத்தில் வேர்ச் சொற்களே இயற்சொற்களாயும், இயற்சொற்களே திரிசொற்களா யுமிருந்தன. வேர்ச்சொற்கள் (1) ஆணிவேர்ச் சொற்கள் (primary roots), (2) பக்கவேர்ச் சொற்கள் (secondary roots), (3) சல்லி வேர்ச் சொற்கள் (tertiary roots) என மூவகைப்படும். வேர்ச் சொற்கட்கும் மூலமான விதைச் சொற்கள் என்பன உண்டு. அவையே சுட்டு விளக்கத்திற் கூறப்பட்ட ஐஞ்சுட்டுகள். பகுதி என்பது வேர்ச் சொல்லாயும் இயற்சொல்லாயும் திரிசொல்லாயும் இவற்றின் மிகைபாடாயும் பகு சொல்லின் முதனிலையாயிருப்பது. இவற்றிற் கெடுத்துக்காட்டுகளை, முறையே, கில்லினான் கிள்ளினான் கிளைத்தான் கிளைப்பட்டான் என்னும் பகுசொற்களிற் காண்க. இவற்றின் நுட்பங்கள் செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைகள் என்னும் நூலில் விளக்கப்படும். இங்ஙனமெல்லாம் சொன் மூலங்களை அடிநிலை வரைக்குமே ஆராய்ந்து செல்லத் தமிழில்தான் இயலும். ஆரிய நூல்களில் வேர்ச்சொற்களாகக் காட்டப்படுபவற்றிற் பல திரி சொற்களும் அவற்றின் திரிபுகளுமே யென்றறிக. கொடுந்தமிழ்ச் சொற்கள் செந்தமிழ் நாட்டைச் சூழப் பல திசையிலும் வழங்கினமையின் திசைச்சொற்க ளெனப்பட்டன. மேற்கூறிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என்னும் மூன்றுடன், இடைக்கழகக் காலத்தில் புதிதாய் வந்து வழங்கிய ஒருசில வடசொற்கள் தமிழிற் கலந்த அயன்மொழி யென்ற வகையில் வடசொற்க ளென்றே கூறப்பட்டன. அக்காலத்தில் தமிழிற் கலந்த அயன்மொழி வடமொழி யொன்றே. இம் முறைப்படி இக்காலத்திலும், தமிழிற் கலந்த ஆங்கிலச் சொல் போர்த்துக்கீசியச்சொல் முதலியவற்றை அவ்வம் மொழிப் பெயரால் ஆங்கிலச் சொல் போர்த்துக்கீசியச்சொல் எனக் கூறல் வேண்டுமே யன்றித் திசைச்சொற்களெனக் கூறுதல் கூடாது. இதுபோது கிளைமொழிகளாய் அல்லது இனமொழிகளாய்ப் பிரிந்துபோயுள்ள தெலுங்கு கன்னடம் முதலியவையெல்லாம், பழங்காலத்தில் கொடுத்தமிழா யிருந்ததினாலேயே கொடுந்தமிழுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டன என்பதை மறத்தல் கூடாது. கொடுந்தமிழ்ச் சொற்கள் அல்லது திசைச்சொற்கள் மூவகைப் படும். அவையாவன: (1) பொருள் திரிந்த சொல். எ-டு: செப்பு (தமிழ்) = விடைசொல்; செப்பு (தெலுங்கு) = சொல். (2) வடிவு திரிந்த சொல். எ-டு: போயினான் (த.) - போயினாடு (தெ.) (3) புதுச்சொல். எ-டு: அடுகு (தெ.) = கேள். புதுச்சொல்லும் மறைந்த வேர்ச்சொல் (அம்மு (தெ.) = Éš) மறையா வேர்ச்சொல் (mŸ(fhJ)-mLF) என இருவகைப்படும். இங்ஙனம் மூவகைப்பட்ட திசைச்சொற்கள் மிகுந்த அல்லது கலந்த தமிழ் கொடுந்தமிழாம். தொல்காப்பியர், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே (சொல். 1) அவற்றுள் இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாஅமை யிசைக்குஞ் சொல்லே (சொல். 2) ஒருபொருள் குறித்த வேறு சொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி (சொல். 3) செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (சொல். 4) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (சொல்: 5) என்று கூறியிருப்பதால், நால்வகைச் சொல்லுள் வடசொல் அயற்சொல் என்பதும், திசைச்சொல் கொடுந்தமிழ் என்பதும், ஏனையிரண்டும் செந்தமிழ் என்பதும், அறியக் கிடத்தல் காண்க. செந்தமிழ் நிலம் வைகையாற்றின் மேற்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம் என்று இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால உரையாசிரியர் உரைத்தனர். இதில், வைகையாற்றின் தெற்குள்ள சிறந்த செந்தமிழ் நிலப்பகுதி விலக்கப்பட்டிருப் பதனாலும், பழங்காலத்தில் சேரசோழ பாண்டிய முத்தமிழ் நாடுமே செந்தமிழ் நிலமாயிருந்ததினாலும், இவ் வுரை தவறாகும். செந்தமிழ் நாடாவது: வைகையாற்றின் வடக்கும், ..... மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வைகையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு: வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து, வேங்கட மலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப என்று தெய்வச்சிலையார் பிறனுடன்பட்டது தானுடன்படுதலாகக் கூறிய உரையே உண்மையானதாம். கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டையும், தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாத சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண் என்னும் வெண்பாவாற் குறித்து, தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றமென்றும்; குடநாட்டார் தாயைத் தள்ளையென்றும், நாயை ஞெள்ளை என்றும்; குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; சீத நாட்டார் ஏடா வென்பதனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவையென்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலியென்றும், சிறு குளத்தைப் பாழியென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும், சிறுகுளத்தைக் கேணியென்றும்; அருவா வட தலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குப என்று நச்சினார்க்கினியர் முதலியோர் காட்டுக் கூறியது கி.பி. 12ஆம் நூற்றாண்டிற் கேற்றதாதலின், கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கேற்காது. இனிச் சிங்களம் அந்தோ வென்பது; கருநடங்கரைக் சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது; ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க என்று நச்சினார்க்கினியரும்; பன்னிரு நிலமாவன:.... பொங்கர் நாடு.... அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால் பிற நாடாதல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு:..... பன்னிருநில மாவன: குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும், பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவை யைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க. அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா, எ- று; குடாவடி யுளியம் என்றவழி குடாவடி என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழி, கரைதல் என்பது கருநாடர் விளிப் பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டுகொள்க எனக் கொண்டு கூற்றாகத் தெய்வச்சிலையாரும் கூறியதே ஏற்ற உரையாம். தொல்காப்பியர் காலத்தில் கொடுந்தமிழ் நாடுகளாயிருந்த பழந்தீபமும் சிங்களமும் கருநடமும் வடுகும் (தெலுங்கமும்) கலிங்கமும் பிற்காலத்தில் பிறமொழி நாடுகளாய் வேறுபட்டு விட்டன. நாவலந் தேயத்திலுள்ள மொழி வேறுபட்ட நாடுகள் தமிழுட்பட மொத்தம் பதினெட்டாகக் கணக்கிடப்பட்டன. அப் பதினெட்டும் பிற்காலத்தில் ஐம்பத்தாறாய்ப் பிரிந்து போனமை புராணங் கூறும். பத்தாம் நூற்றாண்டில் இருந்த அல்லது அதையடுத்து இருந்த இலக்கணவுரையாசிரியர், அக்கால நிலைக் கேற்ப அற்றைத் தமிழ்நாட்டின் நடுவொழிந்த பெரும்பாகத்தைத் தொகைபற்றிய பழைய மரபை விடாமல் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளாகப் பிரித்தனர். அவற்றுள் சேர நாட்டுப் பகுதிகளான குட்டம் குடம் வேண் மலாடு என்பன உள்ளன, அக்காலத்து மலையாளமொழி தோன்றாமையின். நன்னூலார் தங்காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் தொல்காப்பியர் காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் மனத்துட்கொண்டு, செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி என நூற்பாச் செய்தார். பதினெண் நிலங்களை, சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்க கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் வங்கம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்ப னேழ்புதிவி தாமிவையே என்றும் செய்யுள் கூறும். இதிற் கூறிய சாவகம் சீனம் கடாரம் என்பவை முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளைச் சேர்ந்தவையல்ல. தமிழொழிந்த பதினேழ் நிலங்களிற் பல முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளா யிருந்தமையின் கொடுந்தமிழ் நாடல்லாத பிறவற்றையுஞ் சேர்த்துக் கூறிவிட்டார் பவணந்தியார். செந்தமிழ் தொல்காப்பியர் காலத்தில் வேங்கடம் வரை வழங்கியதாலும், அதையடுத்து வடக்குள்ள கன்னடமுந் தெலுங்கும் முற்காலத்தில் கொடுந்தமிழா யிருந்தமையாலும், அவற்றுக்கப்பால் தற்போது ஆரிய வடிவாயுள்ள மகாராட்டிரம் (மராட்டி) கூர்ச்சரம் (குசராத்தி) என்பவற்றையும் தமிழ் தெலுங்கு கன்னடத்தோடு சேர்த்துப் பஞ்சத் திராவிடம் என வடநூலார் பண்டைக்காலத்தில் வழங்கியமையாலும், வடநாட்டாரிய மொழிகளில் திரவிடக் கூறான சொற்களும் நெறிமுறைகளும் கலந்துள்ளமையாலும், முதலை கூட்டம் முதலிய தமிழ்ச் சொற்கள் நேபாள நாட்டு மலைவாணர் மொழியிலும் வழங்குவதாகத் தெரிகின்றமையாலும், இந்தியாவின் வடமேற்கில் பெலுச்சித்தானத்திலுள்ள மலைவாணர் பிராகுயி என்னும் திரவிடமொழியைப் பேசுகின் றமையாலும், ஒரு காலத்தில் நாவலந்தேய முழுவதும் தமிழல்லா விடினும் திரவிடமாவது வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஊகிக்கப்படும். இன்றும் தென்னாட்டில் ஓரளவு செவ்வையாய்ப் பேசப்படும் தமிழ் வடக்கு நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து முதலாவது கொடுந்தமிழாயும் பின்பு திரவிடமாயும் திரிவதையும், திரவிடமும் ஆரியக்கலப்பால் காலாரியமாய் மாறுவதையும், அதற்கப்பால் முறையே அரையாரிய மொழிகளும் முழு ஆரிய மொழிகளும் வழங்குவதையும், ஆரியர் பழங்குடிச் சொற்களை யெல்லாம் அகற்றிவிட்டு அவற்றிடத்தில் ஆரியச் சொற்களையே வழங்குவதில் கண்ணுங் கருத்துமாயிருந்து இக் கேட்டுத்தொழிலை வடக்கிருந்து தென்கோடிவரை செய்து வருவதையும் நோக்கின், முதற் காலத்தில் ஒரு மொழியே நாவலந்தேய முழுதும் தென்கோடியிலிருந்து வடகோடி நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து வழங்கிய தென்பதையும், ஆரியக் கலப்பில்லாவிட்டால் இன்றும் வடநாட்டில் திரவிடமே வழங்கும் என்பதையும் உய்த்துணரலாம். ஒரு மொழியே சிறிது சிறிதாய்ப் பெயர்ந்து வழங்கியமை யாலேயே, வடநாடுகளை வேற்றுமொழி நாடென்னாது மொழி பெயர் தேயம் என்றனர் முன்னோர். மொழிபெயர் தேஎத்த ராயினும். (குறுந். 11) தமிழினின்று முதலாவது பிரிந்துபோன கொடுந் தமிழ்மொழிகள் கூர்ச்சரமும் மகாராட்டிரமுமாமும். அதன் பின் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் முறையே பிரிந்தன. தமிழ் அல்லது தமிழம் என்னும் பெயர் போன்றே, திரவிடம் என்பதும், முதலாவது செந்தமிழ் கொடுந்தமிழ் ஆகிய இருவகைத் தமிழையும் ஒரே மொழியாகக்கொண்ட அவற்றை ஒருங்கே உணர்த்தி வந்தது. தெலுங்கு தனியாய்ப் பிரிந்துபோனபின்பு, திரவிட மொழிகளை ஆந்திர திரவிட பாஷை என்னும் இணைமொழிப் பெயரால் அழைத்தனர் வடநூலார். இப்பெயரில் திரவிடம் என்னும் வருமொழி தெலுங்கொழிந்த திரவிடத்தை யெல்லாம் ஒரு மொழியாகக் கொண்டது. இப் பெயரை 7ஆம் நூற்றாண்டில் குமரிலபட்டர் வழங்கினார். பின்பு கன்னடமும் மலையாளமும் பிரிந்து போனபின், தமிழ் என்னும் பெயர் பொருள் சுருங்கிச் சோழ பாண்டிய நாட்டுத் தமிழ்ப் பகுதியை மட்டும் குறிக்கும் சிறப்புப் பெயராயும், திரவிடம் என்பது ஒரோவிடத்துத் தமிழையும் ஒரோவிடத்துத் திரவிட மொழிகள் எல்லாவற்றையுங் குறிக்கும் பெயராயும் வழங்கி வந்தன. சென்ற நூற்றாண்டில்தான் கால்டுவெல் கண்காணியார் திரவிடம் என்னும் சொல்லைத் திரவிடமொழிகளின் பொதுப்பெயராகவும் தொகுதிப் பெயராகவும் வரையறுத்தனர். சேரநாட்டுத் தமிழ் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழாயும், பின்பு 16ஆம் நூற்றாண்டுவரை கொடுந் தமிழாயுமிருந்து, அதன் பின் ஆரியக்கலப்பால் மலையாளம் என்னும் திரவிடமொழியாய்த் திரிந்தது. இதைக் கடைக்கழக நூல்களாலும், சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை, சேரமான்பெருமாள் செய்யுள், நம்பியாரூரர் தேவாரம், குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி என்னும் சேரநாட்டுச் செந்தமிழ் நூல்களாலும், அந் நாட்டுக் கல்வெட்டுகளாலும், செப்புப்பட்டயங்களாலும், மலையாள நூல்களாலும் அறியலாம். வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் - தமிழ் கூறு நல்லுலகத்து என்று பனம்பாரனாரும். வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் என்று காக்கைபாடினியாரும், வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்கம் என்று சிறுகாக்கைபாடினியாரும், வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்தான் கெல்லை தமிழது வழக்கே என்று சிகண்டியாரும், தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை என்று குறுங்கோழியூர்கிழாரும், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு என்று இளங்கோவடிகளும், இவ் வடிகளின் உரையில், வடதிசைக்கண் வடுகொழிந்த திரிபுடைமொழி பலவுளவாக லான் மலையெல்லை கூறி ஒழிந்த திசை மூன்றிற்கும் திரிபின்மையாற் கடலெல்லை கூறினாரெனினு மமையும் என்று அடியார்க்கு நல்லாருங் கூறியிருத்தலால், தொல்காப்பியர் காலத்தில் கன்னடந் தோன்றவில்லை யென்பதும், தெலுங்கு கொடுந்தமிழ் நிலையில் நின்ற தென்பதும், வேங்கட வெல்லைக்குத் தெற்கிலுள்ள நிலப்பகுதி முழுதும் செந்தமிழே வழங்கின தென்பதும் அறியப்படும். தெலுங்கு பிரிந்தது கி.பி. சுமார் 2ஆம் நூற்றாண்டு என்றும், கன்னடம் பிரிந்தது கி.பி. சுமார் 6ஆம் நூற்றாண்டு என்றும் கூறலாம். கொடுந்தமிழான திசைச்சொற்கட்குச் செப்பு சிக்கு அச்சன் முதலிய தெலுங்குச் சொற்களையும் கன்னடச் சொற்களையும் மலையாளச்சொற்களையும்எடுத்துக்காட்டாகஇலக்கணவுரையாசிரியரெல்லாம்தொன்றுதொட்டுமரபுமுறையிற்கூறிவருவதால்,தமிழில் -திரவிடமொழிகளெல்லாம்பண்டைக்காலத்தில்கொடுந்தமிழ்களாயிருந்தேபின்புஒவ்வொருகாலத்தில்வெவ்வேறாய்ப்பிரிந்துபோயினஎன்று அறிந்துகொள்க.தென்பாண்டி.....eh£bl©என்Dம்பிற்கhலவெண்பாÉல்கன்னடKந்தெலுங்Fங்குறிக்கப்படவில்லைnயஎ‹றுஐயுறுவா®,குட்டKம்குடKம்வேணுமா»யமலையhளநாடுகsக்கொடுந்தÄழ்நாடhகஅâற்குறித்ததினின்றாவJ. பிறவும் இங்ஙனமே அதற்குமுன் ஒவ்வொரு காலத்திற் பிரிந்துபோயிருக்க வேண்டுமென்று தெளிந்துகொள்க. இன்றும், `பச்சமலயாளம், `ஹளகன்னடம், `அச்சதெலுங்கு என்னும் பழந்திரவிட மொழிநிலைகளை நோக்கின், அவற்றுக்கும் தமிழுக்குமுள்ள நெருங்கிய தொடர்பு புலனாம். இந்நிலையில்கூட, தம்பிராட்டி, கைநீட்டக்காசு முதலிய மலையாளச் சொற்களும்; கொண்டாடு, திக்கில்லாத முதலியகன்னடச்சொற்களும்;ஓடச்சரக்கு,மூக்குப்பொடிமுதலியதெலுங்குச்bசாற்களும்vத்துணைத்jமிழ்மணங்fமழ்வன! 7. தமிழினின்று பிற திரவிட மொழிகள் வேறுபடக் காரணங்கள் (1) தமிழ் அல்லது திரவிட மக்கட் பெருக்கம் ஒரு மொழியார் மிகப் பலராகப் பெருகிவிடின், அவர் நெடுந்தொலை சென்று பரவ நேரும். அப்போது தட்ப வெப்பநிலை வேறுபாட்டாலும் சுற்றுச் சார்பினாலும் பழஞ்சொல் மாற்றினாலும் தனி விருப்பத்தாலும் சொற்கள் திரியவும் புதிதாகத் தோன்றவும் பெறும். பொதுவாக, சுமார் 500 கல் தொலைவாயின் புதுச் சொற்கள் தோன்றுவதும் மொழி திரிவதும் இயல்பு. (2) எழுத்தொலித் திரிபு இது தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் சோம்பலாலும் நிகழ்வது . மலையாளம் கன்னடம் தெலுங்கு ந - ஞ ப - ஹ ழ - ட - தட்பவெப்பநிலை ஐ - அ ஐ - எ ண - ன - சோம்பல் இனி ஊண், தொழில், பழக்கவழக்கம், அயன்மொழிக் கலப்பு முதலியவற்றாலும் எழுத்தொலி திரியும். எழுத்தொலித் திரிபு தட்பவெப்பநிலை ஊண் முதலியவற்றால் திரிவது கிளைமொழியாக்கத் (Dialectic variation)â‰F¡ காரணமாம்; சோம்பலால் திரிவது ஒலிமுறைக் கேடாம் (Phonetic decay). (3) சொல் திரிபு (4) பொருள் திரிபு எ-டு: வெள்ளம் (த.) = வெள்ளையான புதுப்பெருக்கு நீர்; வெள்ளம் (ம.) = நீர். (5) இயற்கைத் தெரிப்பு (Natural Selection) தாய்மொழியாகிய தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பல சொற்களில், தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மன என்னுஞ் சொல்லையும் தெரிந்துகொண்டன. (6) வழக்கற்ற சொல் வழங்கல் v-L: J‹D = ij, (k.), தெவு = தெகு(க.). நெய்த்தோர் = நெத்துரு (தெ.) வழக்கற்ற சொல் வழங்கலாவது தமிழில் இதுபோது பேச்சுவழக்கற்று எழுத்துவழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிற திரவிட மொழிகளிற் பேச்சு வழக்கில் வழங்குவது. (7) குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) v-L: nghœ (k.)=nghœJ. கொம்மு (தெ.) = கொம்பு. குடியேற்றப் பாதுகாப்பாவது இதுபோது தமிழில் வழங்கா விடினும் குமரிநாட்டில் வழங்கியவாகத் தெரிகின்ற சொற்களும் சொல் வடிவங்களும் பிற திரவிட மொழிகளிற் பாதுகாக்கப் பட்டிருத்தல். (8) புத்தாக்கச் சொல் எ-டு: மேடி(ம.) = வாங்கு, வெள்ளு (தெ.) = செல். (9) தாயொடு (தமிழொடு) தொடர்பின்மை. (10) வடசொற் கலப்பு. (11) வடமொழி எழுத்தையும் இலக்கணத்தையும் மேற்கொள்ளல். (12) தமிழின் பண்படுத்தம் (Cultivation). 8. திரவிடத்திற்கு ஆரியக் கலப்பால் வந்த கேடு. (1) தாய்மொழிக்கும் சேய்மொழிக்கும் தொடர்பு அறவு. (2) திரவிடமொழிப் பிரிவினையும் மக்கட் பிரிவினையும். (3) திரவிட வொலித் திரிபும் சொற்றிரிபும். (4) திரவிடச்சொல் வழக்கொழிவும் மறைவும். (5) சரித்திர மறைப்பும் மலைவும். (6) புதுச்சொல்லாக்கத் தடை. (7) திரவிடர்க்குத் தாய்மொழி யுணர்ச்சியின்மை. (8) திரவிடக் கலை வளர்ச்சியின்மை. (9) திரவிட மொழி மறைவு. (10) சொல்வழி ஐயப்பாடு. (அதாவது சில சொற்கள் ஆரியமா திரவிடமா என்று ஐயுறப்படுதல்.) ஆரியர் வடமொழியைத் தேவமொழியென்று சொல்லித் திரவிட மொழிகளிலெல்லாம் எண்ணிறந்து வேண்டாத வடசொற்களைப் புகுத்தி, தமிழொழிந்தவற்றிற்கு வடமொழி யெழுத்துகளையும் இலக்கணத்தையும் வகுத்துச் சரித்திரத்தை மாற்றி, திரவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகக் காட்டி, வடமொழியையே திரவிடத் தாயென்று கருதும்படி செய்து விட்டனர். தமிழரல் - திரவிடரும் வடமொழித் தொடர்பை உயர்வாகவும் தமிழத் தொடர்பை இழிவாகவும் கருதி, ஆரியச் சார்பில்லாத தமிழையும் தமிழரையும் பழிக்கின்றனர். இது, மூக்கறையன் பிறரையும் மூக்கறுக்கச் சொன்ன கதையேயன்றி வேறன்று. 9. திரவிட மொழிகளெல்லாம் சேர்ந்ததே முழுத்திரவிடம் மொழிகள் வழங்குவது வாயினால். பல சொற்கள் சேர்ந்தே மொழி. சொற்களை ஒவ்வொன்றாய் வழங்காதுவிட்டால் பின்பு மொழியும் வழக்கற்றொழியும். எழுத்து வடிவிலிருப்பது மட்டும் மொழிவழக்கன்று. கோதியம் (Gothic), இலத்தீன், சமற்கிருதம், முதலிய வழக்கற்ற மொழிகளெல்லாம் எழுத்து வடிவில் இன்னுமுள. ஆரியச் சொற்களைத் தேவையின்றிக் கலந்ததினால் அவற்றின் நிலையிலிருந்த திரவிடச் சொற்களெல்லாம் வழக்கிறந்தும் மறைந்தும் போய்விட்டன. இலக்கியமுள்ள மொழியானால் வழக்கற்ற சொற்கள் இலக்கியத்திற் போற்றப்பட்டிருக்கும். அஃதில்லாததாயின் மீட்பற இறந்தொழியும். வருஷம், வார்த்தை, வியாதி, வீரன், வேதம், வைத்தியம் முதலிய வடசொற்கள் முறையே ஆண்டு, சொல், நோய், மறவன் அல்லது மழவன், மறை, மருத்துவம் அல்லது பண்டுவம் முதலிய தென்சொற்களை வழக்கு வீழ்த்தியுள்ளன. இலக்கியமில்லாத வடநாட்டுத் திரவிட மொழிகளோ, ஆரியச் சொற் கலப்பால் திரிந்தும் மறைந்தும் வருகின்றன. கோண்டி (Gondi), பத்ரீ (Bhatri), மால்ற்றோ (Malto), போய் (Bhoi) முதலிய திரவிட மொழிகள் மெள்ள மெள்ள ஆரிய மயமாவதை அல்லது மறைந்து போவதைப் பண்டிதர் கிரையர்சன் 1906ஆம் ஆண்டே தமது இந்திய மொழியியல் அளவீடு என்னும் நூலிற் கூறியுள்ளார். தமிழை ஆரியத்தினின்று விலக்காவிட்டால், சிறிது சிறிதாய்த் தெற்கே தள்ளிப்போய் இறுதியில் தென்மொழி தென்புலத்தார் மொழியாகிவிடும். இதுவே ஆரியர் விரும்புவது. செந்தமிழும் கொடுந்தமிழும் சேர்ந்ததே தமிழாதலானும், தமிழல்-திரவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந்தமிழ்களே யாதலானும், திரவிடரெல்லாம் ஒரு குலத்தாரேயாதலானும், ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும் இயற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத்திரவிடமாகும். திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்னும் நான்குமே சிறந்தனவாகும். திரவிடர்க்குச் சிறப்பாக வுரிய தூய-பழைய-பல துறைப்பட்ட-உயர்நிலை இலக்கியம் தமிழிலேயே யிருத்தலானும், தமிழல்-திரவிட மொழிகளில் உள்ள இலக்கியங்கள் பிற்பட்டனவும் பலதுறைப் படாதனவும் பெரும்பாலும் ஆரியச் சார்புள்ளனவும் கழக நூல்நிலைக்குத் தாழ்ந்தனவுமாயிருத்தலானும், தமிழரல்-திரவிடரெல்லாம் தத்தம் இலக்கியத்தைப் போன்றே பிற திரவிட இலக்கியங்களையும் பேணுவதுடன் தமிழிலக்கியத்தையே சிறப்பாகப் பேணிக் கற்றற்குரியர். தமிழில் வழங்காத சில தூய, சிறந்த திரவிடச் சொற்கள் பிற திரவிட மொழிகளில் வழங்குதலின், தமிழரும் பிற திரவிட மொழிகளைப் பேணிக் கற்றற்குரியர். திரவிட மொழிகளிலுள்ள திரவிடச் சொன்னூற்கலை யனைத்தும் திரவிடரெல்லார்க்கும் பொதுவுடைமையென்றறிதல் வேண்டும். தமிழும் பிற திரவிடமும் முறையே இலக்கியத்திலும் சொல்லிலும் ஒன்றுக்கொன்று உதவும் நிலை தாயும் மக்களும் போல ஆதலின், தமிழரல்-திராவிடர் இனிமேலாயினும் ஆரியச் சார்பை இயன்றவரை அகற்றிவிட்டுத் தமிழைத் தழுவுவாராக. ஆரியக் கலப்பினாலேயே மாபெருந் திரவிட நாடு சீர் குலைந்து சின்னபின்னமாய்ச் சிதைந்து கிடக்கின்றதென்க. வைத்தூற்றி (Funnel) என்னும் மலையாளச் சொல்லும், கெம்பு என்னும் கன்னடச் சொல்லும், எச்சரிக்கை என்னும் கன்னட தெலுங்குச் சொல்லும் தமிழுக்கு இன்றியமையாதனவே. தெவுக்கொளற் பொருட்டே. (தொல். 345) செய்யுன்னோன் (செய்நன்) என்னும் மலையாளச் சொல்லையும், தெகு (தெவு) என்னும் கன்னடச் சொல்லையும், அட்ட (அட்டை) என்னும் கன்னட தெலுங்குச் சொல்லையும்1, அறியும்போதே, அச் சொற்கட்குத் தமிழிற் கூறும் பொருள் நன்றாய் விளங்குகின்றது; வழுவுந் தெரிகின்றது. 1. அட்டையாடல் என்னுந் தொடரில், அட்டை யென்பது தலையில்லா முண்டத்தைக் குறிக்கும். அட்ட அல்லது அட்டெ என்னும் கன்னட தெலுங்குச் சொல்லுக்கு இதுவே பொருள். 10. தமிழ்ப் பண்படுத்தம் சிலர், வடநாட்டில் பிராகிருதம் என்னும் பழைய மொழிகளைப் பண்படுத்திச் சமற்கிருதம் அமைத்தாற் போலத் தென்னாட்டிலும் திரவிடமொழிகளைப் பண்படுத்தி அமைத்ததே செந்தமிழ் என்றும், தமிழுக்குப் பிற திரவிட மொழிகள் கிளைமொழி யெனப்படும் சேய்மொழிக ளாகாது இனமொழி யெனப்படும் உடன்பிறப்பு மொழிகளே யென்றும், திரவிடச் சொற்களின் வேர்களையெல்லாம் செந்தமிழல்லாத திரவிட மொழிகளில்தான் காணவேண்டும் என்றும் கூறுகின்றனர். இவர் திரவிட சரித்திரத்தையும் மொழி நூலையும் தமிழின் இயல்பையும் அறிந்திருந்தால் இங்ஙனங் கூறார். தமிழ் பண்படுத்தப்பட்டது உண்மையே. ஆனால், அப்பண்படுத்தம் ஆரியமுறையில் வேர்ச்சொல் மறையும்படி திரித்துச் செய்யப்பட்டதன்று. முதற்றமிழரின் ஒலிமுறையும், சொற்களின் பழைய அல்லது திருத்த வடிவம், நுண்பொருள் விளக்கமும், சொற்றொடரின் வழாநிலையும் காத்துக்கொள்ளும் வரம்பீடே செந்தமிழப் பண்படுத்தமாம். டண முதலிய (மொழிமுதலாகா) வெழுத்துகளைக் கொண்டு முதற்றமிழரின் சொற்கள் தொடங்கவில்லை. அதனால், தமிழுக்கு முதன்முதல் இலக்கணம் வகுத்தபோது, அக்காலை மொழிமுதலாகா வெழுத்துகள் மொழிமுதலெழுத்துகளாகக் கொள்ளப்பட்டில. கொச்சை வழக்கில், சொற்களின் னகரவீறுகள் ன், ம் என்னும் ஈரெழுத்திற் கிடைப்பட்ட ஒலியாயும், ஐகார வீறுகள் அகர எகர ஈறுகளாகவும் ஒலிக்கும். எ - டு: நான் - நா(ன்); விலை - வில, நடத்தை - நடத்தெ. இவை தமிழில் வழுவாம்; ஆனால், இந்தியிலும் பிற திரவிட மொழிகளிலும் வழாநிலையாம். அவர்கள் என்னும் சொல்லை அவக என்று ஒலிப்பர். இது தமிழில் வழுவாம். ஆங்கிலத்தில் வழா நிலையாம். (Pearl என்னும் சொல்லின் ரகத்தை நோக்குக). இங்ஙனம் தமிழுக்கு இயல்பும் வழாநிலையும் அடிப்படையாயின், பிறமொழிகட்குத் திரிபும் வழாநிலையும் அடிப்படையாம். அவன், போயினான் என்னும் சொற்கள் தெலுங்கில் வாடு, போயினாடு எனத் திரிகின்றன. தமிழில் கான் என்பது காடு எனத் திரிந்து சிறிது பொருள் வேறுபடுகின்றது. ஆனால், வாடு, போயினாடு என்பன அங்ஙனமல்ல. வருது (வருகிறது), பேயும் (பெய்யும்) முதலிய வடிவுகளும் செந்தமிழ்க்குரியவல்ல. மூரி (மூ - மூர் - மூரி) என்பது கிழ எருது. இதை மலையாளத் தில் எருது என்னும் பொருள்படப் பொதுப்பித்தல் (Generalisation) நுண்பொருள் விளக்கத்திற்கு மாறானது. ஒருவன் ஒருவனிடத்தில் ஒரு பொருளைக் கேட்கும்போது, இழிந்தோன் ஈ என்றும், ஒத்தோன் தா என்றும் உயர்ந்தோன் கொடு என்றும் கூற விதித்தனர் முன்னோர். ஆனால், இதைத் தமிழரும் தற்போது கைக்கொள்வதில்லை. நான் அவனுக்குத் தந்தேன். அவன் எனக்குக் கொடுத்தான் என்பன வினைவழாநிலைபற்றிய சொற்றொடர்கள். இனி, புணர்ச்சித் திரிபையும் பண்படுத்தத்தின் பாற்படுத் தலாம். மூவகைப் புணர்ச்சித் திரிபுகளுள், திரிதல் ஒன்றே பண்படுத்தத்தின்பாற்பட்டது. அதிலும், தேங்குடம் வேப்பிலை போன்ற திரிபுகள் அதன்பாற்படா. கண் + கடை = கட்கடை, மண் + தாழி = மட்டாழி, பல் + பொடி = பற்பொடி, கல் + பு = கற்பு, கல் + தாழை = கற்றாழை, முள் + செடி = முட்செடி, நள் + பு = நட்பு, தாள் + துணை = தாட்டுணை, பொன் + குடம் = பொற்குடம், பின் + பாடு = பிற்பாடு, பொன் + தட்டு = பொற்றட்டு என்பன போன்றவையே பண்படுத்தமாகும். அன்பு + தளை = அற்புத்தளை என்பது செய்யுட்கே யுரியது. ஏனைத் தோன்றல் கெடுதல் ஆகிய இரண்டும் இயல்பாகவே நேர்ந்தன. தலை + கட்டு = தலைக்கட்டு என்று தமிழில் புணர்ந்தது தலகெட்டு என்று தெலுங்கில் வலிக்காது வழங்குகின்றதேயெனின் ஆரியத்திலும் ஆரியத் தன்மை சான்ற தெலுங்கிலுமுள்ள வல்லினங்களெல்லாம் தமிழ் வல்லினங்களின் இரட்டியாதலின், தலகெட்டு என்னும் தெலுங்குப் புணர்மொழி ஓசையில் தலைக்கட்டு என்னும் தமிழ்ப் புணர்மொழியை யொத்ததே யென்று கூறி விடுக்க. தோன்றல் திரிபு தனித்தனி நின்ற சொற்களின் இணைப்பைக் காட்டுகிறது. சொல்லிணைப்பு பொருளிணைப் பைக் குறிக்கும். நிலைமொழியின் ஈற்றுவலி யிரட்டலும் இடைநின்ற மெலி வலித்தலும் இங்ஙனமே. வாழை, காய், காடு, ஆறு ; வேம்பு, இலை என்னும் சொற்கள் தனித்தனி நின்றபோது தனித்தனிப் பொருளையே உணர்த்தும். அவை, வாழைக்காய் காட்டாறு வேப்பிலை எனப் புணர்ந்த போதோ, வாழையின் காய், காட்டிலுள்ள ஆறு, வேம்பின் இலை என அவற்றின் பொருள்கள் தொடர்புபட்ட நிலையைக் காட்டும். முதன்முதல் இம் முறையைக் கையாண்டவர் பொதுமக்களே. உயிரும் உயிரும் புணரும்போது யகரவகர உடம்படு மெய்கள் தோன்றுவது எம்மொழிக்கும் இயல்பாம். ஆனால், அதை வரிவடிவில் முதன் முதற் காட்டினவர் தமிழரே. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், 140ஆம் நூற்பாவுரையில் வரையாரென்ற தனான் உடம்படுமெய் கோடல் ஒருதலையன்று. கிளி அரிது, மூங்கா இல்லை எனவும் வரும் என்றும், 259ஆம் நூற்பாவுரையில் `அதா அன்று என்னும் எடுத்துக்காட்டும், 284ஆம் நூற்பாவுரை யில் பனாஅட்டு என்னும் எடுத்துக்காட்டும், 294ஆம் நூற்பாவுரை யில் கோஒன் என்னும் எடுத்துக்காட்டும் கூறியிருப்பதால், தமிழிலும் முதற்காலத்தில் உடம்படுமெய்யின்றி யெழுதப் பட்டதென ஊகிக்கலாம். திரவிடம் தோன்றினது குமரிநாடாதலானும், குமரிநாட்டு மொழி தமிழேயாதலானும், திரவிடச் சொற்கட்கெல்லாம் பெரும்பாலும் வேர் தமிழிலேயே இருத்தலானும், தமிழ்ச்சொற்களிற் பெரும்பாலன இன்னும் தொல்லை வடிவிலேயே வழங்குதலானும், செய்யுள் வழக்கில் திரிந்துள்ள ஒருசில சொற்களும் உலக வழக்கில் இயல்பு வடிவில் இருத்தலானும், தமிழொலிகளெல்லாம் இயல்பும் தூய்மையுமாயிருத்தலானும், தமிழிலேயே திரவிட வேர்ப்பொருள் காண முடியும். இதைப் பிற்காட்டும் எடுத்துக்காட்டு விளக்கங் களால் படிப்போர் தாமே வெள்ளிடைமலையாய்க் காண்பர். 11. கால்டுவெல் தமிழைப் சிறப்பித்துக் கூறுவன திராவிட மொழியும் கிளைமொழியுமான ஒவ்வொன்றின் இலக்கண அமைப்பையும் அதன்தன் தகுதிக்கும் ஆசிரியர்க்கு அதிலுள்ள பயிற்சிக்கும் தக்கவாறு மிகவோ குறையவோ ஆராய்ந்து விளக்கும்போதே, தாம் முப்பத்தேழாண்டுகட்கு மேலாகப் பயின்று வந்ததும் தம் மதத்தொண்டிற்குப் பயன்படுத்தியதும் திரவிட மொழிகளுட் பெரும்பாலும் முதன்முதற் பண்படுத்தப் பெற்றதும் தலைசிறந்த முறையில் வளர்க்கப் பெற்றதும் பலவகையிலும் திரவிடக் குடும்பத்திற்குப் பதின்மை தாங்குவதுமான, தமிழமைப்பை அடிக்கடி எடுத்துக் காட்டுவது ஆசிரியரின் சிறப்பு நோக்கமாகும். (திரவிட ஒப்பியல் இலக்கணம் - முன்னுரை, ப. 1) இக் குடும்பம் (திரவிடம்) ஒரு காலத்தில் ஐரோப்பிய ஆசிரியரால் தமிழியம் (Tamulian or Tamulic) என அழைக்கப்பட்டது. ஆனால், தமிழ் பெரும்பாலும் இக் குடும்பத்தில் மிகத் தொன்மையானதும் மிக வுயர்வாகப் பண்படுத்தப் பெற்றதும் இக் குடும்பத்திற்குரிய வடிவங்களிலும் வேர்களிலும் பெரும்பாலான வற்றைப் பெற்றிருப்பதுமான மொழியாயிருந்தாலு..... (. - ப. 4) தமிழ்-இம்மொழி திரவிட மொழிகளுள் பெரும்பாலும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் மிகுந்த வளமுள்ளதும் ஐயமறப் பழைமையான வடிவங்களுள் பெரும்பகுதியையும் மிகப்பல வகைகளையும் கொண்டுள்ளதுமானதாதலின், தன் தகுதிக்கேற்றபடி, பட்டியில் முதலில் குறிக்கப்பெற்றுள்ளது. (. - ப. 9) எவ்வகையிலும் திரவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப் பெற்ற தமிழ் வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன். தனித்து வழங்குதல் மட்டுமன்று; அதன் உதவியின்றித் தழைத்தோங்கவும் இயலும். ஏறத்தாழ எல்லா நூல்களும் எழுதப்பட்டுள்ள செந்தமிழ் என்னும் பழைய அல்லது இலக்கியத் தமிழ் மிகமிகக் குறைந்த வடசொற்களையுடையது; வடசொற்களையும் வடமொழி யெழுத்துகளையும் புறக்கணித்துத் தூய பழந்திரவிட வொலிகளையும் வடிவங்களையும் வேர்களையுமே கொண்டிருப் பதற்குக் காரணமாக ஊக்கத்தோடும் பொறாமையோடுங் கூடிய அக்கறை காட்டுவதில் உலக வழக்கு அல்லது உரைநடையினின்று வேறுபடுவது. ஒரு தமிழ்ச் செய்யுள், பிற திரவிட மொழிகளிற் போலாது, தான் கொண்டுள்ள வடசொற்களின் மிகுதிக்குத் தக்கவாறன்றி அவற்றின் குறைவுக்குத் தக்கவாறே சுவையும் இலக்கியத் தன்மையும் நிரம்பியதென்று கருதப்படும் அவ்வளவு, இவ் வடசொற் பொறாமை படித்த தமிழர் மனத்தில் முற்றிலும் பதிந்துள்ளது. மிக வொதுங்கியுள்ள நாட்டுப்புறங்களில் வாழும் நனி தாழ்ந்தோர் மொழி வடசொற்களை விலக்குந் திறத்தில் பேரளவு இலக்கிய மொழியை ஒத்திருக்கின்றது. (. - ப. 49) தமிழ் தன்னிடத்துக் கொண்டுள்ள வடசொற்களிற் பெரும்பாலனவற்றை அல்லது அவையெல்லாவற்றையும் உடனே நீக்கமுடியும். அங்ஙனம் நீக்குவதனால் அது நடை உயர்ந்து மிகத் தூய்மையும் நேர்த்தியுமடைகிறது. (. - ப. 50) தமிழின் இலக்கியப் பண்படுத்தத்தின் மிகுதொன்மை பிற திரவிட மொழிகளின் இலக்கிய நடை அவற்றின் உலக நடையினின்று வேறுபட்டிருப்பதைவிடத் தமிழின் இலக்கிய நடை அதன் உலக நடையினின்று வேறுபட்டுள்ளது. ii. தமிழின் அளவிறந்த சொல்வளமும் செந்தமிழிலக்கண வடிவுகளின் தொகைவகைகளும் மற்றொரு சான்றாகும். செந்தமிழிலக்கணம் வழக்கறிந்த வடிவங்களும் விலக்கப்பட்ட விகுதிகளும் வியப்பான வழுவமைதிகளும் செறிந்துள்ளபொருட்களம்.....jÄÊ‹ அளவிறந்த சொல்வளத்தை யாழ்ப்பாணத்து விடையூழியர் (Missionaries) வெளியிட்டுள்ள ஒரு பள்ளித் தமிழகராதி 58,500 சொற்களைக் கொண்டுள்ளமையே காட்டிவிடும். இன்னம் அவற்றோடு, அவ் வகராதியை நிறைவாக்க, பல்லாயிரங் குறியீடுகளையும் திசைச்சொற்களையும் ஆயிரக்கணக்கான புணர்ச்சொற்களையும் சேர்க்க வேண்டியதிருக்கும். பிற திரவிட மொழிகளின் அகராதிகளை ஆயும்போது, mவைjÄழகராதிகளிலுள்ளஒUபொருட்பybசாற்பட்oகளைக்கா£டாமைஒரு படி¥பாளியின்மன¤தில்மிக¤ தெளிtய்ப்படும். தமிழில்k£L« வழங்குகிற அளவில் தமிழுக்குரியவையென்று கருதப்படும் சொற்களை மட்டுமல்ல, தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகட்குரிய சொற்களையும் தமிழ் கொண்டுள்ளது. இங்ஙனம், இயல்பான தமிழில் உறைவிடத்திற்குரிய சொல் வீடு என்பது. ஆனால், தெலுங்கிற்குரிய இல், (தெ. இல்லு) என்னுஞ் சொல்லும், கன்னடத்திற்குரிய மனை (க. மன) என்னுஞ் சொல்லும் வட தமிழிலிருப்பதுடன் சமையாசமையங்களில் வழங்கவுஞ் செய்கின்றன. குடி என்னும் இன்னொரு சொல் தமிழுக்கும் வடமொழிக்கும் பின்னிய (Finnish) மொழிகள் எல்லாவற்றிற்கும் பொதுவாக வழங்குகின்றது. தமிழ் இலக்கணமும் சொற்றொகுதியும் இங்ஙனம் பேரளவில் திரவிட வடிவங்களுக்கும் வேர்களுக்கும் பொதுக் களஞ்சியமாகும். iii. தற்காலக் கன்னடமும் தற்காலத் தெலுங்கும் தமிழினின்று வேறுபடுஞ் செய்திகளில் பழங்கன்னடமும், பழ மலையாளமும், துளுவும், துடவும், கோண்டும், கூவும் தமிழுடன் ஒத்திருத்தல் தமிழின் தொன்மைக்கும் தூய்மைக்கும் மற்றொரு சான்றாகும். iv. பல தெலுங்கு வேர்களும் விகுதிகளும் தமிழ் வடிவங்களின் திரிபாயுள்ளமை, பின்னவற்றின் மிகு தொன்மையை வலிமையாய் உறுதிப்படுத்தும். v. தமிழின் தொன்மைக்கு மற்றொரு சான்று அதிலுள்ள வடசொல் தற்பவங்களின் பெருஞ்சிதைவாகும். vi. தமிழின் இலக்கியப் பண்படுத்தத்தின் மிகுதொன்மை கல்வெட்டுகளாலும் ஊகித்தறியப்படும். (. - ப. 83-9) (கிறித்தவ மறையில்) அரசர்கள் (இராஜாக்கள்) நாளாகமம் என்னும் புத்தகங்களின் எபிரேய மூலத்தில், கி.மு. சுமார் 1000 ஆண்டுகட்குமுன் தர்சீசு அல்லது ஒப்பீர் என்னும் துறைமுகத்தினின்று சாலோமோன் கப்பல்களிற் கொண்டு போகப்பட்ட சரக்குகளைக் குறித்த பட்டியில், மயிலுக்குக் கூறப்பட்டுள்ள சொல் உலகத்தில் எழுத்திற் காணப்படும் திராவிடச் சொற்களில் முற்பட்டதாகும். இது அரசர்களில் துகி என்றும் நாளாகமத்தில் தூகி என்றும் உள்ளது.... மயிலுக்குப் பழஞ் செய்யுளிலுள்ள தூய தமிழ் மலையாளப் பெயர் (அழகிய) தோகையை யுடையது என்று பொருள்படும் தோகை என்பது. (. - ப. 91) தமிழ் இலக்கியம் தெலுங்கு கன்னட விலக்கியத்திற்கு முற்பட்டது; மலையாள விலக்கியத்திற்கு மிக முற்பட்டது. (. - ப. 126) கால்டுவெல் கண்ட மொழிநூன் முடிபுகள் மொழிகள் மொழிக் குடும்பங்கள் ஆகியவற்றின் உறவைப் பதிற்பெயர்கள் (Pronouns) மிக விளக்குகின்றன. ஏனென்றால், பதிற்பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப் பெயர்கள், பிற சொல்வகைகளைவிட மிகுதியாக நிலைப்புத் தன்மையைக் காட்டுகின்றன; பல்லூழிக் கடப்பிலும் மிகச் சிறிதே திரிவனவாகப் பொதுவாகக் காணப்படுகின்றன; எண்ணுப் பெயர்களினும், வேற்றுமையுருபுகளினும், வினை விகுதிகளினுங் கூட மிக நிலைத்தவையாயிருக்கின்றன; அவை பிறவற்றைப் போன்றே திரிவதற்கிடமிருப்பினும், அவற்றின் தொடர்புகளும் கிளைப்புகளும், காலத்தாலும் இடத்தாலும் எத்துணை அகன்று கிடப்பினும் ஏறத்தாழ மக்கள்மொழிகள் எல்லாவற்றிலும் கண்டு பிடிக்கப்படும். சிலவிடத்து, மூவிடப் பெயர்கள் மட்டுமே. முதலாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந் தனவாயிருந்து பின்பு காலக் கடப்பினாலும் திரிபின் வளர்ச்சியினாலும் பொது முறையாக வேறுபட்டுள்ள மொழிகளின் தொடர்புக் குறிப்பாய் அல்லது உறவுச் சான்றாயுள்ளன. இக் குறிப்பு, சிறப்பாகச் சொல்வகைகள் யாவற்றிலும் மிக நிலைப்பாய்த் தோன்றுகின்ற தன்மைப் பெயர்களைத் தழுவும். (. - ப. 254) பின்வரும் சொல்வரிசைகள் நாம் இலக்கண ஒப்பீட்டினால் கண்ட முடிபுக்கே தத்தம் அளவில் தனிப்பட்ட முறையில் சான்று பகர்கின்றன. அதாவது : திரவிட மொழிகள், இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் முதுதாயாகக் கருதப்படுகின்ற - வடமொழிக்கு முற்பட்ட - ஆரிய மொழியொடு தமக்குள்ள தொன்மையான வேரூன்றிய தொடர்பைக் காட்டும்போதே, அவற்றுக்குச் சித்திய (Scythian) மொழிக் குடும்பத்துடன், சிறப்பாக உக்கிரீய (Ugrian) மொழிகளுடன், உள்ள உறவடையாளங்கள் மொத்தத்தில் மிக நெருங்கியும் மிகத் தெளிவாயும் மிகமுக்கியமாயும் காண்கின்றன என்பதே. (. - ப. 452) கால்டுவெல் கண்காணியார் மேற்கூறியவாறு திரவிட மொழிகளை, சிறப்பாகத் தமிழை, ஆராய்ந்து பல உண்மைகளைக் கண்டாரெனினும், தொல்காப்பியத்தையும், கழக (சங்க) நூல்களையுங் கல்லாமையாலும், குமரிநாட்டு வரலாற்றை அறியாமையாலும், தமிழின் திரவிடத் தாய்மையைக் காணாததுடன், திரவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகப் பிறழக் கொண்டு சில தனித் தமிழ்ச் சொற்களையும் வடசொற்களாகக் கூறிவிட்டனர். ஆயினும், கழகநூற் பயிற்சியும் தனித் தமிழுணர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் அயல்நாட்டாரான அவர் ஆரியத்தினின்று திரவிடத்தைப் பிரித்துக் காட்டின அத்துணையே மிகச் சிறந்ததென்று கொண்டு பெருமகிழ்ச்சியுடன் அவருக்கு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். தமிழில் - திரவிடச் சொற் பாகுபாடு தமிழல்லாத பிற திரவிடச் சொற்களெல்லாம், 1.brªjÄœ¢ சொற்கள், 2 கொடுந்தமிழ்ச் சொற்கள், 3.tlbrh‰fŸ என மூவகைப்படும். 1 மலையாளம் மலையாளப் பெயர் கேரளம், மலையாளம் என்பன தற்போது மலையாள நாட்டையும், அங்கு வழங்கும் மொழியையும் குறிக்கும் பெயர்களாம். கழக (சங்க)க் காலத்தில் முத்தமிழ் நாடுகளில் ஒன்றாயிருந்த சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடா யிருக்கின்றது. கீழ்ப்பாகம் கொங்குநாடும் (கோயம்புத்தூர், சேலம் , கோட்டகப் பகுதிகள்), கங்கநாடும் (சேலம் மைசூர்ச் சீமைப் பகுதிகள்) ஆகும். மறன், திறன் முதலிய பெயர்கள் முறையே மறல், திறல் என்று திரிந்தாற் போல, சேரன் என்னும் பெயரும் சேரல் எனப் போலியாகிப் பின்பு அன் ஈறு பெற்றுச் சேரலன் என வழங்கிற்று. எ-டு: சேரன் செங்குட்டுவன்; களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ் சேரல். தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்) செறுமா வுகைக்கும் சேரலன் காண்க (திருமுகப்பாசுரம்) சேரலன் என்னும் பெயர் முறையே கேரலன், கேரளன் என மருவிற்று, இம் மரூஉ வடிவங்கள் பழந்தமிழ் நூல்களில் ஓரிடத்துங் காணப்படவில்லை; பிந்திய நூல்களில்தாம் காணப்படுகின்றன. இதனால் இவை பிற்காலத்தன என்பது தெளிவு. ச-க, போலிஒ.நோ: சீர்த்தி-கீர்த்தி, செம்பு-கெம்பு (க.) ல-ள, போலி, ஒ. நோ: செதில் - செதிள், வேலை - வேளை. பாண்டியன் என்னும் பெயர் பாண்டியம் என ஈறு திரிந்து பாண்டியன் செய்திகளைக் குறித்தாற்போல, கேரலன் கேரளன் என்னும் பெயர்களும், கேரலம் கேரளம் என ஈறு திரிந்து சேர நாட்டையும், அந் நாட்டு மொழியையுங் குறிக்கும். மலையாள நாட்டெல்லை மேற்குத் தொடர்ச்சி (குட) மலைக்கு மேற்கே, வடக்கில் மங்களூரி(மங்களபுரம்)லிருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரைக்கும், தென்கன்னடம் மலபார் கொச்சி திருவிதங்கோடு (திருவாங்கூர்) என்னும் நான்கு சீமைகளில் தாய்மொழியாகப் பேசப்படுவது மலையாளம். தென்னை மரத்தின் வடமொழிப் பெயராகிய நாளிகேரம் என்பது, கேரம் என முதற்குறையாய்ப் பின்பு கேரளம் என விரிந்து அம் மரம் மிகுதியாய் வளரும் மலையாள நாட்டைக் குறித்ததென்பது பொருந்தக் கூறும் பொய்ம்மைக் கூற்றாகும். வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் உயர்வும் அதனால் தமிழுக்கும் தமிழர்க்கும் இழிவும் கற்பிக்கப்பட்ட புராணக் காலத்தில், வடமொழித் தொடர்பை உயர்வென மயங்கிய மலையாள நாட்டார், கேரளம் என்னும் பெயர்க்கு வடமொழி மூலத்தையும், கேரள நாட்டிற்குப் பரசுராமக்ஷேத்திரம் என்னும் புதுப்பெயரையும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டனர். பரசுராமர்க்கு முந்தியே வழங்கிய பெயர் சேரநாடு என்பதும், அவர் இறுதிக் காலத்தில் தவஞ் செய்த இடமாகக் கூறியிருப்பது சேரநாட்டிற்கு வடக்கிலுள்ள கடற்கரைப்பகுதி யென்பதும் அறிதல் வேண்டும். * பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நம்பூதிரிப் பார்ப் பனரால் இயற்றப்பட்டதாகத் தெரிகின்ற கேரளோத்பத்தி என்னும் புராணத்தில், பிராமணர் பஞ்சாபினின்று பரசுராமரால் தென்கன்னடத்திலுள்ள கோகர்ணத்தில் முதல் முதல் குடியேற்றப் பட்டனர் என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதை S. சீனிவாச ஐயங்கார் தமது தமிழாராய்ச்சி (Tamil Studies) என்னும் நூலில் (ப. 348) மறுத்து, பிராமணரைக் கோகர்ணத்தில் குடியேற்றியவன் கடம்ப மரபினரின் முதல்வனான மயூரவர்மன் என்றும், அவன் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியென்றுங் கூறி யுள்ளார். ஆண்டுக் காண்க. * பண்டைச் சேரநாடு கூர்ச்சரம் (குஜரத் வரையில் தொடர்ந்திருந்ததாலும், வடநாட்டு ஆரியர் தென்னாட்டிலும் வந்து குடி புகுந்ததாலும், பரசுராமர் தவஞ்செய்த இடத்திற்கு ஏற்பட்ட பரசுராம க்ஷேத்திரம் என்னும் பெயர் அவ்விடத்தோடு தொடர்ந்த தென்பாகத்தையும் பிற்காலத்தில் தழுவலாயிற்று. இந்து (சிந்து) என்னும் வடநாட்டுப் பகுதியின் பெயர் தென்னாட்டையும் தழுவினாற்போல. மலையாளம் என்னும் பெயர் அண்மையில் தோன்றிய தாகும். சேரநாடு மலைநாடாதலால் சேரநாட்டான் மலையாளி யெனப்பட்டான். மலை+ஆளி=மலையாளி. ஆளி=ஆள். முதலாளி, தொழிலாளி, வங்காளி, பங்காளி முதலிய பெயர்களை நோக்குக. மலையாளியின் நாடும் மொழியும் மலையாளம் எனப்பட்டன. ஒ. நோ : வங்காளி - வங்காளம். மலையாளத் திரிபு சேரநாடு கி.பி. 10M« ü‰wh©L tiu brªjÄHurU« brªjÄœ¥ òytU« âfœªj brªjÄœ ehlhÆUªjJ.* ஐங்குறு நூறும் பதிற்றுப்பத்தும் ஆகிய கழக நூல்களும், சிலப்பதிகாரம் ஆகிய கழக மருவிய நூலும், புறப்பொருள் வெண்பா மாலையும், சேரமான் பெருமாள் நாயனாரின் ஆதியுலாவும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியும் மலையாள நாடெனப்படும் சேர நாட்டில் எழுந்த செந்தமிழ் நூல்களே. பதினாலாம் நூற்றாண்டில் (கி.பி. 1320)வீரராகவ சக்கரவர்த்தியால் பொறிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டு மொழி வாதில் (வாயில்) ஒண்டாயில் (உண்டாகில்), எழுந்நள்ளி (எழுந்தருளி) முதலிய சில மலையாளத் திரிபுகளுடன் கூடிய தமிழே. அதே நூற்றாண்டில் (கி.பி. 1350) இயற்றப்பட்ட கண்ணசப் பணிக்கர் இராமாயண மொழியும் இத்தகையதே. எ-டு: கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்து திங்ஙும், குந்தள பாரமோடு முகில் குலத்திட மின்னல் போலே, புண்டரீகேக்ஷணந் நரிகெப் பொலிந்தவள சீத சொந்நாள். இதில், குந்தளபாரம் புண்டரீகேக்ஷணன் என்னும் இரண்டே வடசொற்கள். இவற்றுள்ளும் குந்தளம் என்பது * நன்னூற் சிறப்புப்பாயிரத்தில் குணகடல் குடகம் குமரி வேங்கடம், எனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலுள் என்று கூறியிருத்தலால் 12ஆம் நூற்றாண்டில் சேரநாடு கொடுத்தமிழ் நாடாயிருந்தமை பெறப்படும். கூந்தல் - என்னும் தென்சொல் திரிபு: வார்ந்து - வார்ந்நு திணுங்கும் - திங்ஙும். இடை - இட. அருகே - அரிகெ. போர்த்துக்கீசிய விடைத்தொண்டர் (Missionaries) முதன்முதல் மலையாளக் கரையில் வந்திறங்கினர் என்றும், மலையாள நாட்டு மொழியைத் தமக்கு முந்திய அரபியர் போல மலபார் என்றழைத்தனர் என்றும், கீழ்கரையிலும் இலங்கைக் கரையிலும் வழங்கிய மொழி (தமிழ்) அதை யொத்திருக்கக் கண்டு அதையும் அப் பெயரால் அழைத்தனர் என்றும் அவர்கள் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காட்டில் 1577 அல்லது 9இல் முதன் முதல் தமிழெழுத்தில் அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ் (Malavar or Tamil) என்று குறித்தனர் என்றும் கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார். (முன்னுரை பக். 10-12) இதனால், 16ஆம் நூற்றாண்டுவரை மலையாள நாட்டு மொழி கொடுந்தமிழாயிருந்த தென்றும், அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற் றென்றும் அறியலாம். மலையாளம் மிகத் தெளிவாய்ப் பிரிந்துபோனது 17ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1650) ஆரிய வெழுத்தை வகுத்தும், பெருவாரியாய் ஆரியச் சொற்களையும் விகுதிகளையும் புகுத்தியும், சேரநாட்டு மொழியைச் சிதைத்த துஞ்சத்து எழுத்தச்சனாலேயே. 1860 ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19ஆம் நூற்றாண்டுவரை மலையாளியர் தமிழையும் கற்றுவந்தனரென்றும் அதன் பின்புதான் அவ் வழக்கம் அடியோடு விடப்பட்டதென்றும் முதியோர் கூறுகின்றனர். மலையாள நாட்டில் பார்ப்பனரொழிந்த மற்றக் குலத்தா ரெல்லாம் தமிழர் அல்லது திரவிடரே. குயவர், பணிக்கர், பாணர், ஆயர், ஈழவர், கவுடர் (கவுண்டர்) முதலிய பல குலத்தினர் தமிழ்நாட்டிலும் உள்ளனர். நாயர், நாயாடி, வாரியர், செறுமன் முதலிய குலத்தினர் மலையாளத்திற்குச் சிறப்பாயிருந்த தாலும், அவர் குடிப்பெயரெல்லாம் தனித் தமிழே. தாழ்ந்தது உயர்ந்தது என்று முறையே பொருள் தரும் கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள் குடமலைக் கீழ்நாட்டிற்கே ஏற்றவை. இவை மலையாளத்திலும் வழங்குவது மலையாளநாடு தமிழ்நாட்டுப் பகுதியே யென்பதையும் மலையாளியர் தமிழ் மரபினரே என்பதையும் உணர்த்தும். பிற்காலத்தில் மேற்குத் திசைக்குப் படுஞாயிறு என ஒரு பெயரை அவர்கள் புனைந்து கொண் டாலும், அதுவும் தனித்தமிழே என்பதை அறிதல் வேண்டும். மலையாள நாட்டு அல்லது சேரநாட்டுத் துறைமுகங்கள் பழந்தமிழ் நூல்களில் பெருங் கடல் வாணிக நிலையங்களாகக் கூறப்பட்டுள்ளன. செங்கோற், குட்டுவன் தொண்டி (ஐங்.178) ..........................................nruy® சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரைகலங்f யவனர் தந்த வியன்மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிரி யார்ப்பென (அகம்.148) கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமும் கடற்றாரமும், தலைப்பெய்து மருநர்க்கீயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்குகடல் முழவின் முசிரி யன்ன (புறம். 343) இயற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சி ( பத்.3) மலையாள நாட்டிலுள்ள பல சிவநகரங்களும் விண் ணகரங்களும் நாயன்மாராலும் ஆழ்வாராலும் பாடப் பட்டுள்ளன. கோகர்ணம் âருச்செங்குன்றூர் (கொல்லத்திற்fருகிலுள்ளது)vன்பனmப்பராலும்rம்பந்தராலும்7ஆம்üற்றாண்டிலும்,âருவஞ்சைக்களம்Rந்தரரால்9ஆம்üற்றாண்டிலும்,nநரிற்gடப்பட்டுள்ளன.âUKÊ¡fs«, திருநாவாய், திருவல்லவாழ் என்பன திருமங்கையாழ்வார் 8ஆம் நூற்றாண்டில் நேரிற் சென்று கண்டவை. இவற்றுடன் திருவனந்தபுரம், திருவண்பரிகாரம், திருக்காட்கரை, திருப்புலியூர், திருச்செங்குன்றூர், திருவண்வண்டூர், திருவத்தரு, திருக்கடித் தானம், திருவாறன்விளை என்பன நம்மாழ்வாரால் (கி.பி. 920) குறிக்கப்படுகின்றன. வித்துவக்கோடு குலசேகராழ்வாரால் 8ஆம் நூற்றாண்டிற் பாடப்பட்டது (தமிழாராய்ச்சி, ப. 347) மேற்கூறிய திருநகரங்கள் 10ஆம் நூற்றாண்டுவரை செந்தமிழ் நிலையங்களா யிருந்திராவிட்டால் பாடல் பெற்ற நகரங்களாயிரா என்பது திண்ணம். மலையாளத்திலுள்ள பழைமையான ஊர்ப் பெயர் களெல்லாம் இன்றும் தனித்தமிழாயே யிருக்கின்றன. கோடு (கோழிக்கோடு - Calicut), சேரி (தலைச்சேரி), குளம் (எர்ணாக் குளம்), புரம் (அங்காடிபுரம்), நாடு (வலையநாடு), ஊர் (கண்ணனூர்), குன்றம் (பூங்குன்னம்), கா (கன்னங்காவு), காடு (பாலைக்காடு - Palghat), குடி (சாக்குடி), வாசல் (பள்ளிவாசல்), அங்காடி (பரப்பனங்காடி), தோட்டம், பாடி, துறை (திருப்புனித்துறை), குறிச்சி, ஏரி, கரை (கொட்டாரக் கரை), களம் (திருவஞ்சைக் களம்), இருப்பு முதலியன தனித்தமிழ் ஊர்ப் பெயரீறுகளாம். கோடு = மலை. கா=சோலை. பழஞ்சேரநாட்டின் கீழ்ப்பகுதியின் தென்பாகம் (கொங்கு நாடு) இன்றும் தமிழ்நாடா யிருக்கின்றது; வடபாகத்திற் கன்னடம் புகுந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் கொடுந்தமிழ் நாடுகளாகக் குறிக்கப்பட்ட வேணாடு, பூழி நாடு, குட்ட நாடு, குட நாடு, மலை நாடு என்பன இற்றை மலையாள நாட்டுப் பகுதிகளாயுள்ளன. பூழியன் உதியன் கொங்கன் பொறையன் வானவன் கட்டுவன் வான வரம்பன் வில்லவன் குடநாடன் வஞ்சி வேந்தன் கொல்லிச் சிலம்பன் கோதை கேரளன் போந்தின் கண்ணிக்கோன் பொருநைத் துறைவன் சேரன் மலையமான் கோச் சேரன் பெயரே என்பது திவாகரம். இவற்றுள் கொங்கன், கொல்லிச் சிலம்பன், பொருநை (ஆன்பொருநை)த் துறைவன் என்னும் பெயர்கள், கோயம்புத்தூர் சேலம் ஆகிய இரு கோட்டகங்களும் சேரநாட்டைச் சேர்ந்தன என்பதை விளக்கும். கொங்கன் = கொங்கு நாட்டரசன். கொங்கு நாடு கோயம்புத்தூர்க் கோட்டகப் பகுதி. கொல்லிமலை சேலங் கோட்டகத்தைச் சேர்ந்தது. சேரர் குடியில் ஒரு கிளையினரான அதிகமான் மரபினர் சேலத்தைச் சேர்ந்த தகடூரை (தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டல், திதியைப் பக்க மென்றல் முதலிய பழந்தமிழ் வழக்கங்கள் இன்றும் மலையாள நாட்டில் தானுள்ளன. தொன்றுதொட்டுச் சேரநாட்டு மெலித்தல் திரிபு சொற்கள் சில சோழ பாண்டி நாடுகளிலும் இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றன. எ-டு: திரிநவும் (தொல்.83) பழனி, (புறம் 113) பழுனிய (மணி,328) அறியுனன் (புறம் 134) (திரிகின்ற திரிகுன்ன - திரியுன்ன - திரியுன-திரின-திரிந) பழுத்து - பழுன்னு - பழுன்னு - பழுநி - பழுதி, மகிழ்கின்றான் - மகிழுன்னான் - மகிழுநன் - மகிழ்நன். வாழ்கின்றான் - வாழுன்னான் - வாழுநன் - வாழ்நன் - வாணன். இனி, திரியும் - திரியுன் + அ = திரியுன - திரின - திரிந என்றுமாம். இங்ஙனமே பிறவும், னகரத்தினும் நகரம் முந்தினதெனக் கொள்ளவும் இடமுண்டு. ஆங்கனம் - அங்கனம் - அங்ஙனம் - அன்னணம். ஆஓ வாகும் பெயருமா ருளவே. ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே (தொல். 680) என்று கூறியதும் சேரநாட்டிற்கே சிறப்பாய் ஏற்கும். இவற்றால், பண்டை முத்தமிழ் நாட்டுத் தொடர்பை யும், சேரநாட்டு வினைமுற்றுகள் பாலீறு பெற்றதையும் அறியலாம். .....t©lÄ ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசையனும் செங்குட்டு வன்றன் சினவலைப் படுதலும் என்று சிலப்பதிகாரத்திலும், வடதிசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ (பதித். 43) என்று பதிற்றுப்பத்திலும் பாடப்பட்டுள்ள சேர நாட்டுச் சீரிய ம றம் இன்று ஆரிய அடிமைப்பட்டு அணுவளவுத் தமிழுணர்ச்சி யின்றிக் கிடப்பது நினைக்குந்தோறும் நெஞ்சைப் புண் படுத்துவதா யிருக்கின்றது. மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள் (1) சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப் பட்டுப் பிற தமிழ் நாடுகளுடன் பெருந் தொடர்பு கொள்ளாதிருந்தமை. (2) 12 ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை. (3) வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற் கலப்பும். (4) மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை. (5) மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் கல்லாமை. (6) மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல். மலையாளம் திரிந்த முறைகள் (1) முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல் எ-டு: வந்தான் - வந்து. (2) மெலித்தல் திரிவு எ-டு: எழுந்து-எழுந்நு, அங்கு-அங்ஙு, கழுகு - கழுங்ஙு, குஞ்சி-குஞ்ஞி, வீழ்ந்து-வீணு. (3) நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடைநிலை உன்னு எனத் திரிதல் எ-டு: செய்கின்ற - செய்குன்னு - செய்யுன்னு. (4) வேற்றுமை யுருபுத் திரிவு. எ-டு: அதினுக்கு - (அதின்கு) - அதின்னு, உடைய - உடே- டே - றே. (5) போலித் திரிவு எ-டு: நரம்பு - ஞரம்பு, செய்ம்மின் - செய்வின். (6) கொச்சைத் திரிவும் தொகுத்தலும் எ-டு: உள்ள - ஒள்ள, மலை - மல, அகற்றுக-அகத்துக, இரு-இரி, புறா - ப்ராவு, கனா - கினாவு, வேண்டும் - வேணம், செய்யவேண்டும் - செய்யேண்டு, போக வேண்டும் - போகேணம். (7) றகர ரகர வேறுபாடின்மை எ-டு: உறவு - உரவு. (8) நிகழ்கால வினையெச்சத்திற்குப் பதிலாக வான் பான் ஈற்று வினையெச்சங்களும் அவற்றின் திரிபுகளும் வழங்கல். எ-டு: குடிப்பான் = குடிக்க, நடப்பான் - நடக்கான் = நடக்க, வருவான் = வர. (9) சிறப்புச் சொற்கள் பொதுப் பொருளில் வழங்கல் எ-டு: வெள்ளம் (புதுப் பெருக்கு நீர்), = நீர். மூரி (கிழஎருது) = எருது, நோக்கு (கூர்ந்து பார்) = பார். (10) சொற்களை ஒருமருங்கு பற்றிய பொருளில் வழங்கல் எ-டு: அதே = ஆம், வளரே = மிக, மதி = போதும்; வலிய = பெரிய. (11) ஒருபொருட் பல சொற்களில் தமிழில் வழங்காத ஒன்றை வழங்கல் எ-டு: சொல் (த.) - giw (k.); கூப்பிடு (த.) - விளி (ம.) (12) ஆய் என்னும் வினையெச்ச வீறு ஆயிட்டு என வழங்கல் எ-டு: சிவப்பாய் - சிவப்பாயிட்டு. (13) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை எ-டு: ஆயாள் (அவ் ஆள்), ஈ மூரி (இம் மூரி) (14) ஏவல் வினைகள் பெரும்பாலும் வியங்கோள் வடிவில் வழங்கல். எ-டு: தா-தரிக, தர. (15) துணை வினை வேறுபாடு எ-டு: பறையுவான் கழியும் (சொல்ல முடியும்), பறையுவான் கழியுன்னில்ல (சொல்லமுடியாது). (16) செய்யும் என்னும் முற்று மூவிடத்தும் வழங்கல். எ-டு: ஞான், நீ, அவன் - போகும். (17) றன்னகரம் தந்நகரமாக எழுதப்படல் (18) வழக்கற்ற சொல் வழங்கல் எ-டு: கைநீட்டக் காசு, தம்பிராட்டி. (19) புதுச் சொற்கள் எ-டு: மேடி = வாங்கு, வெடிப்பி = துப்புரவாக்கு. (20) வினைமரபு வேறுபாடு v-L: K£l òG§¼f (mÉ¡f), És¡F bfL¡f (miz¡f), K£L¡ F¤Jf (bfhL¡f), fhYw K¿¡f (bt£Lf.), மடங்ஙி ( திரும்பி) வருக. குறிப்பு : சேரநாட்டுக் கொடுந்தமிழாகிய மலையாளத்திலுள்ள இருவகைத் தமிழ்ச்சொற்களையும் வழக்கு வீழ்த்தற்கும் மலையாளத்தார் தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டு அதனால் அவர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்படாதபடியும், ஆரியர் வடசொற்களை மிகுதியாய்க் கலந்து மலையாளத்தைக் கெடுத்துத் தமிழுக்கு மிக அயன்மைப்படுத்திவிட்டனர். மலையாளச் சொல் வரிசைகள் (i) பெயர்ச் சொற்கள் 1. மூவிடப்பெயர் தன்மை முன்னிலை படர்க்கை தற்சுட்டு ஒருமை: ஞான் நீ அவன், இவன் தான் அவள், இவள் அது, இது பன்மை: நாம் நிங்கள் அவர், இவர் தங்ஙள் நம்மள் அவ, இவ தாங்ஙள் ஞங்கள் தாங்கள் 2. வினாப் பெயர் ஆண் பெண் பொது அஃறிணை ஒருமை: எவன் எவள் ஆர் எது, யாது, எந்து பன்மை: எவர், யார் எவ, யாவ யாவர் என்னது (த.) = எந்து (ம.) 3. முறைப் பெயர் அப்பன், அம்ம, அம்மாயி (பாட்டி), மகன், மகள், மருமகன், மருமகள், பேரன் முதலிய முறைப்பெயர்கள் செந்தமிழ்ச் சொற்களாகும். மூத்தச்சன், மூத்தப்பன், பேரப்பன்; மூத்தம்ம, மூத்தச்சி; வலியச்சன் (பெரியப்பன்), வலியப்பன், இளையப்பன் குஞ்ஞச்சன் (சிற்றப்பன்), பெண்ணப்பன் (மாமன்), பெண்ணம்ம (மாமி), கெட்டியவன் (கணவன்), கெட்டியவள் (மனைவி) முதலிய முறைப்பெயர்கள் கொடுந் தமிழ்ச் சொற்களாகும். ஜ்யேஷ்டன், ஜ்யேஷ்டத்தி, அனுஜன், அனுஜத்தி முதலிய வடசொற் பெயர்கள் வழக்கூன்றியதால், அண்ணன், அக்கை, தம்பி, தங்கை முதலிய செந்தமிழ்ப் பெயர்கள் மலையாளத்தில் வழக்கு வீழ்ந்தன. அச்சி, அப்பச்சி என்னும் ஒருபான் முறைப்பெயர்கள் செந்தமிழ் நாட்டில் சில குலத்தாரிடை வழங்குகின்றன. இவையும் இவற்றின் ஆண்பால் வடிவங்களான அச்சன், அப்பச்சன் என்பனவும் ஒருங்கே மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன. குறிப்பு: அத்தன்-அச்சன், அத்தி-அச்சி, த-ச, போலி. 4. மக்கட் பெயர் அடியார், அப்பக்காரன், அப்பட்டன், ஆள், ஆள் கொல்லி, இடயன், இரப்பாளி, இளையவன், உடயவன், ஊமன். எளியவன், கணியான், கள்ளன், கன்னியாள், குட்டி (பிள்ளை), குடியன், குருடன், கூலிக்காரன், கொல்லன், சக்காள் (செக்கான்), செவிடன், செறியவன் (சிறியவன்), தச்சன், தாந்தோன்னி (தான்தோன்றி), தூதன், தோழன், நல்லன், பாணன், பைதல் (பையன்), போக்கிரி, மடியன், மந்திரி, மலயாளி, முதலாளி, மூப்பன், வண்டிக்காரன், வம்பன், வலியவன், வழிப்போக்கன் முதலியன. பறயுன்னவன் செய்யுன்னவன் முதலிய வினையா லணையும் பெயர்களும், காணி தின்னி முதலிய செய்வான் பெயர்களுந் தமிழ்முறையி லமைந்தவையே. 5. விலங்குப் பெயர் ஆன (ஆனை), ஆடு, எரும (எருமை), ஒட்டகம், கழுத (கழுதை), வெருகு, கரடி, கன்னு (கன்று), காலிகள், காள (காளை), குதிர (குதிரை), குரங்ஙு (குரங்கு), நரி, நாய், பன்னி (பன்றி), புலி, பூச்ச (பூசை = பூனை), மான், முயலு, மூரி, குறுக்கன் (குறுநரி). 6. பறவைப் பெயர் ஈச்ச (ஈ), கழுக (கழுகு), காக்க (காக்கை), குயில், கூமன் (கூகை), கொக்கு, செங்ஙாலி (செங்காலி=புறா), தாராவு (தாரா), பருந்து, பிடக்கோழி (பெட்டைக் கோழி), ப்ராவு (புறா), மயில், வண்டு, வாவல், தத்த (தத்தை = கிளி), கிளி. 7. ஊர்வனவற்றின் பெயர் இரிம்பு (எறும்பு), ஓந்து (ஓந்தி), எலி, கீரி, சுண்டெலி, தேள், பாம்பு, புழு, ஞாங்கூழ், சிதல். 8. நீர் வாழ்வனவற்றின் பெயர் ஞாண்டு (நண்டு), தவள (தவளை), மீன், அயில (அயிரை), ஆரல், முதல (முதலை) முதலியன. 9. மரஞ்செடிப் பெயர் அவர (அவரை), ஆல், இஞ்சி, உழுன்னு (உழுந்து), எள், ஏலம், கருமுளகு, கீர (கீரை), செடி, செறு பயறு (சிறுபயறு), சேம்பு, சேன (சேனை) தெங்கு, நெல், படோல் (புடலை), பயறு, பருத்தி, பன (பனை), பிலாவு (பலா), புல், புளி, புகையில (புகையிலை) மரம், மஞ்ஞள் (மஞ்சள்), மா, முதிர (முதிரை = காணம்), முள்ளங்கி, வழுதுணங்காய் ( = கத்தரிக்காய்), வாழ (வாழை), வெண்டக்கி (வெண்டைக்காய்), வெள்ளரி, வெற்றில (வெற்றிலை), பட்டாணிப் பயறு, உருளக்கிழங்கு, முந்திரிங்ங (முந்திரிகை), ஞாறு (நாற்று), கள (களை), சூரல் = பிரம்பு), வேம்பு, ஞாணல், ஞாவல் (நாவல்) முதலியன. 10. கருவிப்பெயர் அரம், ஆணி, ஈர்ச்சவாள், உரலு, உலக்க (உலக்கை), ஏத்தம் (ஏற்றம்), உளி, கத்தி, கத்திரி, கரண்டி, கோட்டு, (கொட்டு), கோடாலி, சக்கு (செக்கு), சாட்ட (சாட்டை), சுத்திக (சுத்திகை), சுழிக்குற்றி, சூலம், துடுப்பு, துருத்தி, நுகம், மழு, முள், மூலமட்டம், வாள், வில், குண்டல் (தூண்டில்), நங்கூரம் முதலியன. 11. ஐம்பூதப் பெயர் நிலம், வெள்ளம், தீ, காற்று, விண்ணு. 12. உலோகப் பெயர் இரிம்பு (இரும்பு), ஈயம், உருக்கு, செம்பு, தகரம், துத்தநாகம், பிச்சள (பித்தனை), பொன், வஜ்ரம் (வயிரம்), வெள்ளி. 13. ஊர்திப் பெயர் ஓடி, ஓடம், கப்பல், தேர், தோணி, படகு, வண்டி முதலியன. 14, உணவுப் பெயர் அரி (அரிசி), அப்பம், இர (இரை), இறச்சி (இறைச்சி), உப்பு, உற (உறை மோர்), ஊண், எண்ண (எண்ணெய்), கஞ்ஞி (கஞ்சி), கடுகு, கறி, சோறு, தயிர், தவிடு, தீன், தேன், தை (நெய்), பலஹாரம் (பலகாரம்), பால், மசால (மசாலை), மருன்னு (மருந்து), முட்ட (முட்டை), முளகு தண்ணி (மிளகு தண்ணீர்), மோர், வெண்ண (வெண்ணெய்) முதலியன. 15. ஆடையணிப் பெயர் உடுப்பு, கம்பிளி (கம்பளி), கால் சட்ட, காலுற (காலுறை), குப்பாயம், குடுத்த (குடித்துணி), சிலம்பு, செரிப்பு (செருப்பு), தலக்கெட்டு, தலப்பாவு (தலைப்பாகை), துணி, துவால (துவாலை), பட்டு, பாவாட (பாவாடை), புடவ (புடவை), மோதிரம், மூக்குத்தி, வள (வளை) முதலியன. 16. தட்டுமுட்டுப் பெயர் அண (அணை), கயிறு, கலம், கிண்டி (கெண்டி), குட (குடை), கட்டி, சாக்கு, தொட்டி, பலக (பலகை), பாய், மேச (மேசை), விளக்கு, சீப்பு, கண்ணாடி, புஸ்தகம் (பொத்தகம்), கடியாரம், தட்டு, கிண்ணம், செம்பு, பொக்கணம், பெட்டி, முறம் முதலியன. 17. இடப் பெயர் அகம், அங்ஙாடி (அங்காடி), இட (இடம்), இற (இறவு), உல (உலை), எழுத்துப்பள்ளி (பள்ளிக்கூடம்), கடல், கர (கரை), கல்லற (கல்லறை), காடு, கிணறு, கிழக்கு, குடி (= வீடு), குடில், குழி, குளம், கோட்ட (கோட்டை), சுவர், தீவு, துறமுகம் (துறைமுகம்), தெக்கு, தெரு, தோட்டம், நாடு, பட்டணம், பாற (பாறை), புறம், மல (மலை), மதிலு, மாளிக (மாளிகை), முற்றம், மூல (மூலை), லோகம் (உலகம்), வடக்கு, வயல், வழி, வாதில் (வாசல்), வானம், வீடு, குண்டு, (அறை), சேரி, இல்லம், கழனி, கேணி. 18. காலப் பெயர் காலம், சமயம், நாள், நேரம், பக்கம் (திதி) , பகல், போழ் (போழ்து), மண்டலம், மணி, மாசம் (மாதம்), ராத்திரி (இராத்திரி), ராவு (இரா), ஞான்னு (ஞான்று), முதலியன. 19. சினைப் பெயர் இதள் (இதழ்), இல (இலை), ஈரல், உடல், எச்சில், ஓல (ஓலை), கண்ணு, கழுத்து, காம்பு, காய், கால், கை, குடல், குளம்பு, கொம்பு, சிரட்ட (சிரட்டை), சிறகு, செகிள், செதும்பல், செவி, சோர (சோரி = அரத்தம்), சூச (சூசை), தண்டு, தல (தலை), தல முடி, தளிர், துட (தொடை), தும்பிக்கை, தூவல் (தூவு), தோல், தோள், நரம்பு, நாடி, நார், நாவு, நெஞ்ஞு ( நெஞ்சு), படம், பல்லு, பழம், பாள (பாளை), பித்தம், பூவி, மயிர், முகம், முல (முலை), முள், முள, (முளை), முழங்காலு, மீச (மீசை), முட்டு, மூக்கு, மொட்டு, ரத்தம் (அரத்தம்), வயிறு, வால், பித்து, விரல், வேர், அலர். 20. பல்பொருட் பெயர் ஊஞ்சல், இடி, ஒலி, மெழுகு, பொடி, பேர், கூலி, மஷி (மை), சுமடு (சுமை, புக (புகை), மழ (மழை), சேறு, வில (விலை), வெளிச்சம், படம் (பாடம்), அச்சு, சாண்கம் (சாணம்), கடம் (கடன்), சூது, துண (துணை), பட (படை), வெடி, மண், மணல், பணம், தூண், நூல், கல்லு, சுண்ணாம்பு, உத்தரம், விட்டம், விறகு, கழுக்கோல், வாரி, ஓடு, பட்டிக (பட்டிகை), தலயண (தலையணை), பூட்டு, தாக்கோல் (திறவுகோல்), துரும்பு, சாம்பல், திரி, கொக்க (கொக்கி), பச (பசை), சரடு, கூடு, குஞ்ஞு (குஞ்சு), கந்தகம், சுருட்டு, சவம், பந்தம், பந்து, பம்பரம், கொடி, வெண்சாமரம், மத்தளம், வெயில், வளம், சுடர், நுர (நுரை). 21. குணப்பெயர் அகலம், அயல், அளவு, அழுக்கு, ஆழம், இடுக்கு, இன்பம், உயரம், உரப்பு, (= உறுதி), கரிப்பு, குற்றம், கைப்பு, சூடு, நீளம், பச்ச (பச்சை), மானம், வம்பு, வேகம், கடினம், சிவப்பு, வெள்ள (வெள்ளை), நன்ம, தின்ம (தீமை), பழம, புதும, நீலம், கருப்பு, மேன்ம, நாணம், வல்லம முதலியன. 22. நோய்ப் பெயர் காச்சல் (காய்ச்சல்), குடலேற்றம், குடச்சல் (குடைச்சல்), குரு, சூல (சூலை), பக்கவாதம் முதலியன. 23. எண்ணுப் பெயர் ஒன்ணு பதினொன்னு முப்பது ரண்டு பந்திரண்டு நால்பது மூன்னு பதிமூன்னு அம்பது இரண்டாயிரம் நாலு பதிநாலு அறுபது மூவாயிரம் அஞ்சு பதினஞ்சு எழுபது ஐயாயிரம் ஆறு பதினாறு எண்பது ஒம்பதினாயிரம் ஏழு பதினேழு தொண்ணூறு பதினாயிரம் எட்டு பதினெட்டு நூறு முப்பதினாயிரம் ஒம்பது பத்தொம்பது ஆயிரம் நால்பதினாயிரம் பத்து இருபது எண்ணாயிரம் லக்ஷம் (இலக்கம்) கோடி கீழிலக்கம்: காணி, மாகாணி, அரைக்கால், கால், அர (அரை), முக்கால். எண்ணடி உயர்திணைப் பெயர் : ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், பந்திருவர் (பன்னிருவர்), பதினால்வர், நூற்றுவர் முதலியன. 24. தொழிற் பெயர் (1) முதனிலைத் தொழிற்பெயர்; அடி, பிடி, வெட்டு, களி, பண. (2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்: ஊண், தீன், சூடு, போர். (3) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்; தவி-தாகம், படி-பாடம்; (4) முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர்; ஆடு-ஆட்டு, பாடு-பாட்டு. (5) முதனிலை வலியிரட்டித்து விகுதிபெற்ற தொழிற் பெயர்: ஏறு - ஏற்றம், ஓடு - ஓட்டம். (6) விகுதிபெற்ற பெயர் விகுதி தொழிற்பெயர் விகுதி தொழிற்பெயர் அ(ஐ) பக(பகை) பு பிறப்பு அல் துப்பல் வு(உ) வரவு விறயல் (விறையல்) க(கை) செய்க சல் பாச்சல்(பாய்ச்சல்) தம் பிடித்தல் வி கேள்வி தி பொறுதி (7) காலங்காட்டுந் தொழிற்பெயர்: செய்தது, செய்யுன்னது, செய்வது. (8) எதிர்மறைத் தொழிற்பெயர்: செய்யாய்க, அறியாய்க. (9) பகுதி வழக்கற்ற தொழிற்பெயர்: சண்டை. வினையாலணையும் பெயர் தெரிநிலை: செய்தவன், செய்யுன்னவன், செய்வோன் முதலியன. குறிப்பு: வலியவன், செறியவன், பழையது, புதியது முதலியன. (ii) வினைச்சொற்கள் சில முக்கிய வினைகள் அகல், அஞ்சு, அடி, அடெ (அடை), அமிழ், அரி, அர (அரை), அலறு, அள, அலி (அளி), அறி, ஆகு, ஆடு, ஆழ், ஆள், இடறு, இடி, இடு, இர, இரு, இருள், இறங்ஙு (இறங்கு), உடு, உழு, உணர், உதிர், உந்து, உமிழ், உயிர், உரி, உழு, உறங்ஙு (உறங்கு), எடு, எத்து (எய்து), எதிர், எழு, எழுது, ஏல், ஒலி, ஓம்பு, ஓடு. கடி, கசக்கு, கத்ரி (கத்தரி), கழி, கழுகு (கழுவு), கர (கரை), கரை (= அழு), கவிழ், கற, கன, கா, காணு, காய், கிட, குடி, குத்து, கெட்டு (கட்டு), கெடு, கேள், கொரு, கொத்து, கொல், கோட்டாவி விடு, கோர், கோலு, சாகு, சார், சிரி, சீந்து, சும, சுடு, எருள், சுழல், குழு, செத்து (செதுக்கு), செய், செல், சொறி, ஞெளி (நெளி), தகு, தங்ஙு (தங்கு), தவு, தட்டு, தணி, தழுவு, தள், தா (தரிக), தாளி, தாண்டு, தாழ், தின், தீர், துடெ (துடை), துடங்ஙு (தொடங்கு), துவர்த்து, துற (திற), துப்பு (தும்மூ), துளெ (துளை), தே (தேய்), தொழு, தோள், தோன்னு (தொன்று), நட, நக்கு, நடு, நக (நகை), நடுங்கு, நம்பு, நனெ (நனை), நர (நரை), நல்கு, நாறு, நிரத்து, நில், நிவிர் (நிமிர்), நிறெ (நிறை), நீங்ஙு, நீந்து, நீள், நீற்று, நுழ (நுழை), நூல், நெய், நோ, நோக்கு, நோல். பகெ (பகை), பரி (படி), பழு, பற, பறி, பற்று, பாடு, பாய் , பிரள் (புரள்), பிரி, பிளர், பிற, புகழ், புகு, புளி, புறப்பெடு, பெறு, பொறு, போகு, மற, மறு, மாறு, மிகு, மெதி (மிதி), மேய், ராகு (அராவு), வலிக்கு (இழு), வள (வளை), வறள், வற்று, வா (வரிக), வாங்குபிடி, விடு, வித (விதை), வில், விளி, விள (விளை), விற, (விறை), வீழ், வீள் (மீள்), வெக்க (வைக்க), வெட்டு வெளிப்பெடு வேகு. குறிப்பு : மலையாள வினைகளெல்லாம் ஏவலாகும் போது பெரும்பாலும் வியங்கோள் வடிவு கொள்ளும். எ-டு: செய்-செய்யுக, தா-தரிக. வினைச்சொல் வடிவங்கள் தமிழ் மலையாளம் பகுதி செய் செய் ஏவல் ஒருமை செய் செய்க ஏவல் பன்மை செய்யும் செய்க செய்ம்மின் செய்வின் இணையேவல் ஒருமை செய்யட்டு செய்யட்டே பன்மை செய்யட்டும் செய்யடடே இ. கா. வி. மு. செய்தாள் மு-ன செய்து நி. கா. வி. மு. செய்கின்றாள் செய்யுன்னு செய்கின்றாள் மு-ன. எ. கா. வி. மு. செய்வான், செய்வாள் மு-ன செய்யும் இ. கா. பெ. எ. செய்த செய்த நி. கா. பெ. எ. செய்கிற செய்யுன்ன எ. கா. பெ. எ. செய்யும் செய்யும் எ. ம. பெ. எ. செய்யாதி செய்யாத இ. கா. வி. எ. செய்து செய்து நி. கா. வி. எ. செய்ய செய்வான் எ. கா. வி. எ. செய்யின் செய்கில் செய்தால் செய்தால் எ. ம. வி. எ. செய்யாதே செய்தாதெ விதி. வி. எ. செய்யவேண்டும் செய்யயேணம் விலக்கு. வி. எ. செய்யவேண்டா செய்யேண்ட செயப். வி. செய்யப்படு செய்யப்பெடு ஆற்றல். வி. உ. செய்யமுடியும் செய்வான் பாடுண்டு ஆற்றல். வி. எ. ம. செய்யமுடியாது செய்வான்பாடில்ல எ. ம. ஏ. ஒருமை செய்யாதே செய்யருதெ எ. ம. ஏ. பன்மை செய்யாதேயும் செய்யருதெ குறிப்பு : மலையாள வினை முற்றுக்கள் திணைபால் காட்டா; ஆதலின், இருதிணை யைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். துணைவினைகள் துணைவினை தமிழ் மலையாளம் பொருள் கொள் செய்துகொள் செய்துகொள்ளுக தற்பொருட்டு கொள் செய்து செய்துகொண்டு தொடர்ச்சி கொண்டு வினையெச்சம் இடு செய்திட்டு செய்திட்டு இறந்தகால நிறைவு வினையெச்சம் வை செய்துவை செய்துவெக்க செய்திருக்கை விடு செய்துவிடு செய்துவிடுக செய்து முடிக்கை கொடு செய்துகொடு செய்து கொடுக்க பிறர்க் குதவல் தா செய்து தா செய்து தரிக பிறர்க்குதவல் இரு செய்திரு செய்திரிக்க செய்திருக்கை வா செய்து வா செய்து வரிக வினைத் தொடர்ச்சி தீர் செய்து தீர் செய்து தீருக செய்து முடிப்ப இரு செய்ய இரு செய்வான் இரிக்க தொடங்கு நிலை அருள் செய்தருள் செய்தருளுக வேண்டுதல் ஆகு என்னும் துணைவினை இறந்த காலம்: ஞான் ஆயி = நான் ஆனேன். நீ ஆயி = நீ ஆனாய்? அவன் ஆயி = அவன் ஆனான். நிகழ் காலம்: ஞான் ஆகுன்னு = நான் இருக்கிறேன். நீ ஆகுன்னு = நீ இருக்கிறாய். அவன் ஆகுன்னு = அவன் இருக்கிறான். எதிர் காலம்: ஞான் ஆகும் = நான் இருப்பேன். நீ ஆகும் = நீ இருப்பாய். அவன் ஆகும் = அவன் இருப்பான். இரு என்னும் துணைவினை (கலவைக்காலம்) இ.கா. ஞான் செய்திருன்னு = நான் செய்திருந்தேன் நீ செய்திருன்னு = நீ செய்ந்திருந்தாய். அவன் செய்திருன்னு = அவன் செய்திருந்தான் நி.கா. ஞான் செய்திருக்குன்னு = நான் செய்திருக்கிறேன். நீ செய்திருக்குன்னு = நீ செய்திருக்கிறாய். அவன் செய்திருக்குன்னு = அவன் செய்திருக்கிறான். எ.கா. ஞான் செய்திருக்கும் = நான் செய்திருப்பேன். நீ செய்திருக்கும் = நீ செய்திருப்பாய். அவ செய்திருக்கும் = அவன் செய்திருப்பான். உண்டு இல்லை என்னும் துணைவினைகள் எனிக்குண்டு = எனக்குண்டு எனிக்கில்ல = எனக்கில்லை நினக்குண்டு = உனக்குண்டு நினக்கில்ல = உனக்கில்லை அவனுண்டு = அவனுக்குண்டு அவனிக்கில்ல = அவனுக்கில்லை அல்ல என்னும் துணைவினை ஞான் அல்ல = நான் அல்லேன் நீ அல்ல = நீ அல்லை அவன் அல்ல = அவன் அல்லன் குறிப்பு : தமிழிலும் உலக வழக்கில் அல்ல என்னும் பலவின்பால் வடிவம் வழுவாக இருதிணை யைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாக வழங்கிவருகின்றது. சில புணர்வினைகள் அடுத்துவா, உண்டாகு, காத்திரு, கொண்டுவா, பறஞ்ஞூவெக்க, வைத்திரு, வெளிப்பெடு, கொண்டுபோ, தாணுபோக. தன்வினை பிறவினையாகும் வழிகள் (1) பகுதி வலி யிரட்டல் - எ-டு: உருகு - உருக்கு, உண்டாகு - உண்டாக்கு, மாறு - மாற்று. (2) பகுதி (மெலி) வலித்தல் - எ-டு: கலங்ஙு - கலக்கு. (3) விகுதி பெறுதல் - எ-டு: காண்-காணி (காண்பி) நீள்- நீட்டு, கடி - கடிப்பி, சும - சுமத்து, காய் - காச்சு (காய்ச்சு). குறிப்புப் பெயரெச்சங்கள் வலிய (பெரிய), நல்ல, செறிய (சிறிய), பழய (பழைய), புதிய, சில, பல முதலியன. குறிப்பு : வினை யெச்சங்கள்- நன்னாயி, முழுவன், வேகம், முதலியன. இடைச்சொற்கள் 1. வேற்றுமை யுருபுகள் 1ஆம் வேற்றுமை மகன் ஞான் அவன் வீடு 2ஆம் வேற்றுமை மகனெ என்னெ அவனெ வீட்டினெ 3ஆம் வேற்றுமை மகனால், என்னால், அவனால், வீட்டினால், மகனோடு என்னோடு அவனோடு வீட்டினோடு 4ஆம் வேற்றுமை மகன்னு எனிக்கு அவன்னு வீட்டின்னு 5ஆம் வேற்றுமை மகனில் என்னில் அவனில் வீட்டில் நின்னு நின்னு நின்னு நின்னு 6ஆம் வேற்றுமை மகன்றெ என்றே அவன்றெ வீட்டின்றெ 7ஆம் வேற்றுமை மகனில் என்னில் அவனில் வீட்டில் 8ஆம் வேற்றுமை மகனே - - வீடே 2. சுட்டெழுத்துகள் - அ, ஆ, இ, ஈ 3. வினா வெழுத்துகள் - எ, யா, ஓ 4. எண்ணிடைச் சொல் - உம் 5. உவம உருபு - போலெ, கணக்கே; 6. பால் விகுதிகள் ஆ. பா: அன், ஆன், ஆளன், ஆளி, இ, காரன், ஒன், மன். பெ. பா: அள், ஆள், அத்தி, அச்சி, ஆட்டி, ஆத்தி, இ, இச்சி, ஒள், காரத்தி, மி. ப. பா: அர், ஆர், ஒ, கார், காரர், மர், மார் ஒ. பா: அது, து. பல்.பா: கள், வ. 7. சுட்டடிச் சொற்கள் அப்போள் (அப்போழ்து) , அவிடே (அவ்விடை), அவ்விடம், அன்னு (அன்று), அங்ஙனே (அங்ஙனே), அங்ஙு (அங்கு), அங்ஙோட்டு (அங்கிட்டு). இங்ஙனமே இகரச் சுட்டும். 8. வினாவடிச் சொற்கள் எப்போள், எவிடே, என்னு (என்று) முதலியன. 9. எண்முறை யொட்டு ஆம். எ-டு: ஒன்னாம், ரண்டாம் பத்தாம், பதினெட்டாம், நூறாம். தொடர்ச்சொற்கள் முழம் இடுக. வெயில் தாழுக, இடவும் வலவும், அடவுகள் பிழெக்க, நல்ல அடி, வயிற்றின்னு அடிக்க, சொல்படிக்கு நடக்க, நாடு கடத்துக, நாற்றம் பிடிக்க, அறிமுகம் உண்டாக்க, நாள் போக்குக, நிறய உண்டிட்டு, அறுதி செய்க, நீந்திக் கரேறுக, நூல் ஓட்டுக, ஒன்னின்னும் ஆகா, பட்டிணி கிடக்குக, பள்ளி கொள்க, ஆஞ்சி நோக்குக, பழகிப் போயி, பழி வாங்ஙுக, ஆணயிடுக, பா விடுக, பாளயம் இறங்ஙுக, புறம்காட்டுக, உறக்கம் பிடிக்க, புகஞ்ஞு போயி, புடம் வெக்க, புடம் இடுக, வாயி பொத்துக, உள்ளத்தில் பற்றுக, மனம் பொறுக்க, வீடு எடுக்க, பொத்திப் பிடிக்க, ஒழிச்சுதரிக (Vacate) போயாண்டு, ஒரு நாளு மில்ல, கடம் கொள்க, போக்கு வரவு, கடம் கொடுக்க, கடம் ஒழிக்க, போராதெ போக, குறியிடுக, மழ பெய்க, மழ நில்க்க, கணக்கு தீர்க்க, மாற்றம் செய்க, மாற்று மருன்னு, கப்பல் இறக்க, கப்பல் ஏறுக, மாலயிடுக, மினக் கெடுக, கப்பம் கெட்டுக, கப்பல் ஓட்டுக, காடாயி கிடக்க, தலமுடி வீழுக, முட்டக்கோழி, முறயிடக, முறம் தூற்றுக, தீ காயுக, நிலாவு காயின்னு, மூக்கு சீந்துக, மூரிநிவிர்க, மேளம் கொட்டுக, மேல்கீழாக, கார்யம் நடக்க, மொட்ட அடிக்க, மோதிரக் கை, வயற்றுப்பாட, கூட்டிக்கொண்டு போக, வல வீசக, ஒருவழி கல்பிக்க, வழியெ போயி, கை விடுக, வழிவிடுக, வாரிக்கொடக்க, உப்பு விளயிக்க, விட கொடுக்க, விடகொள்க, விடவாங்ஙுக, வில ஏறுக, தாகம் தீர்க்க, விளக்கு வெக்க, வீறு காட்டுக, வெறும் வயிற்றில், வெள்ள வீசக, வேலி அடெக்க, வேலி கெட்டுக, தாங்ஙி பறக, தாணு கொடுக்க, முட்டெக்கு உலாவுக, திக்க முட்டுக, நாவெடுத்து பறக, உள்ளது கொடுக்க, நோன்பு நோல்க்க, நோன்பு காக்க, மங்களம் கூறுக, மணி தட்டுக, மதிகெடுக்க, மறுமுகம் நோக்க, காடு மறஞ்ஞு பார்க்க, கூட்டிப் பழக, மிழுங்ஙிப் பறக, கெட்டி, நில்குன்ன வெள்ளம், முகத்திட்டடிக்க, கோட்டானி இடுக, கண்டிச்சு பறக, மொழியும் மொழி கேடும், சம்மணம் குத்தி இரிக்க, வழி பிறெக்க, சாடி வீணுகடிக்க, சாகாதது எல்லாம் தின்னுக, வாட்டம் பிடிக்க. (ஒரு பக்கம் சாய்க), பெண்ணினெ வாழிக்க (வாழ்விக்க), புறத்தாக வண்டிகெட்டு, தீன்பண்டம், என்னென்னேக்கும் (என்றென்றைக்கும்), பிறவிக் குருடன், பால் காச்சு, இடவிடாதெ, கள பறி, தீப்பெட்டி முதலியன. பகிர்வுப் பெயர் ஓரோன்னு (ஒவ்வொன்று), ஈரண்டு (இவ்விரண்டு), மும்மூன்னு, நன்னாலு, அய்யஞ்சு, பதுப்பத்து (பப்பத்து). மரபுத் தொடர்கள் அகவும் புறவும் நோக்க, அவன் துலஞ்ஞு போயி, அதின்றெ இப்புறவும் அப்புறவும் நோக்காதே, உருட்டும் பிரட்டும் பறக, பொத்திப் பொதிஞ்ஞு வைக்க, எனிக்கு எந்து போயி, கடிகடி என்னு பறக, கணக்கும் கார்யவும், கண்ணு மிழிக்குன்னதின் மும்பே, கரகண்டவன், முகம் முறிச்சு பறக, களவும் கய்யுமா யகப்படுக, ஒருநாள் முங்கூட்டி, காடு வாவா வீடு போபோ என்னு பறயுன்ன காலம், காணிச்சுக் கொடுக்க, நின்றெ முகத்து மிச முளச் சிட்டில்லே, அவன்றே கார்யம் கழிஞ்ஞு, இதில் கார்யம் ஒன்னுமில்ல, மற்றொருத்தன் சொல்லப்பட்டிக்கு நடக்குன்னவன்; ரண்டும் கெட்ட, ஒரு கையாயிருக்க, கைகண்ட, வெட்டா வெளிச்சம், சூசிமுனயெ கொண்டு குத்து வானுள்ள நிலம் கொடுக்குன்னில்ல, ஊரும் உடலும் இல்ல, என்றெ வீட்டில் எச்சிலும் குப்பயும் ஆயி, இவன் ஒரு ஆணி ஆகுன்னு, ஒன்னும் இறங்ஙாத சமயம், உந்தும் தள்ளம் (அடிபிடி), நஞ்சு தின்னபோலே ஆயி, ஏந்தி ஏந்திக்கொண்டு நடக்க, கண்ணிம கூட்டியில்ல, உந்தலும் பிடியுமாக, கரகாணுக, உடல் ஒம்பதுகாணும் விறெக்க, ரண்டு கையிலும் சிரட்டபிடிச்சு போக. வாக்கியங்கள் (சொற்றொடர்கள்) ஞான் ஆ ஆளோடு ஈ குதிரயெ வாங்கி = நான் அவ் ஆளிடம் இக் குதிரையை வாங்கினேன். அச்சன் புறப்பெட்டு போய சேஷம் ஒருத்தன் வந்நு என்றெ சோறு தின்னு = அத்தன் (அப்பன்) புறப்பட்டுப் போனபின்பு ஒருத்தன் வந்து என்னுடைய சோற்றைத் தின்றான். என்றே செரிப்பு வெடிப்பாக்கெணம் என்னு ஞான் திவஸந் தோறும் கல்பிக்குன்னென்கிலும், நீ இது ஒரிக்கலும் நன்னாயி செய்யாறில்ல = என்னுடைய செருப்பைத் துப்புரவாக்க வேண்டுமென்று நான் நாள்தோறும் சொன்னாலும் நீ இதை ஒருகாலும் நன்றாய்ச் செய்கிறதில்லை. பழமொழிகள் (பழஞ்சொல் - ம.) அகத்திட்டால் புறத்தறியாம். அரி (அரிசி) எறிஞ்ஞால் ஆயிரம் காக்க. அளவு கடன்னால் அம்ருதும் நஞ்சு. ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணாம். ஆயிரம் மாகாணி அறுபத்து ரண்டர. இக்கரனின்னு நோக்கும்போல் அக்கர பச்ச. இரிம்பூர கல்லும் தேயும். ஈர் எடுத்தால் பேன் கூலியோ. கடலில் காயம் கலக்கியது போலெ. காமத்தின்னு கண்ணில்ல. காற்றுள்ள போள் தூற்றணும். கார்யத்தின்னு கழுத காலும் பிடிக்கேணம். குரங்ஙின்றெ கய்யில் பூமால கிட்டியதுபோலெ. குரக்குன்ன நாயி கடிக்கயில்ல. கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம். கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம். தாழே கொய்தவன் ஏறே சுமக்கேணம். தீயில்லாதெ புகயுண்டாக யில்ல. நரி நரெச்சாலும் கடிக்கும். நிலாவினெ நோக்கி நாயி குரக்கும்போலெ. பலதுள்ளி பெரு வெள்ளம். மரத்தின்னு காயி கனமோ? மருன்னும் விருன்னும் மூன்னு நாள். மலர்ன்னு கிடன்னு துப்பியால் மாறத்து விழும். மீங்கண்டம் வேண்டாத பூச்சயில்ல. ரண்டு தோணியில் கால் வெச்சுது போலெ. தாழ = அடியில். ஏற = மிகுதியாக. ஒரு கதை ஒரு அக்ரஹாரத்தில் ஒரு பிராமணன் பார்த்திருன்னு. அவன்னு மகன் ஒன்னே உண்டாயிருன்னு. ஒரு நாள் அவன் ஒரு வழிக்கு யாத்ர புறப்பெட்டு, மகனெயும் கூட்டிக்கொண்டு போயி, வழியில் வெச்சு ஆ செறுக்கன் அச்சனெ விளிச்சு, அய்யோ! புலி வருன்னு என்னு உறக்கே நிலவிளிச்சு. அச்சன் திரிஞ்ஞு நோக்கியபோள் புலியெ கண்டில்ல. அவர் பின்னேயும் குறய தூரம் போயபோள் வாஸ்தவத்தில் ஒரு புலி வன்னு செறுக்கனெ பிடிச்சு, ஆ செறுக்கன் வீண்டும் அச்சனெ விளிச்சு, தன்றெ மகன் மும்பேபோலே களிவாக்க பறயுன்னு என்னு விசாரிச்சு திரிஞ்ஞு நோக்கியில்ல. புலி செறுக்கனெ கொன்னு தின்னு. இதன் சொன்மொழிபெயர்ப்பு ஒரு பார்ப்பனச் சேரியில் ஒரு பார்ப்பான் வதிந்திருந்தான். அவனுக்கு மகன் ஒருவனே உண்டாயிருந்தான். ஒரு நாள் அவன் ஒரு வழிப்போக்குப் புறப்பட்டு மகனையுங் கூட்டிக்கொண்டு போனான். வழியில் வைத்து அச் சிறுக்கன் (சிறுவன்) அத்தனை (அப்பனை) விளித்து, ஐயோ! புலி வருகிறது என்று உரக்கக் கத்தினான். அத்தன் திரும்பி நோக்கிய போழ்து புலியைக் கண்டில்லை. அவர்கள் பின்னேயும் குறைந்த தொலைவு போய போழ்து உண்மையில் ஒரு புலி வந்து சிறுக்கனைப் பிடித்தது. அச் சிறுக்கன் மீண்டும் அத்தனை விளித்தான். தன்னுடைய மகன் முன்பேபோல விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று எண்ணித் திரும்பிப் பார்க்கவில்லை. புலி சிறுக்கனைக் கொன்று தின்றது. குறிப்பு : சிறுக்கன் (ஆ. பா.) - சிறுக்கி (பெ. பா.). தமிழில் சிறுக்கன் செய்யுள் வழக்கு; சிறுக்கி உலக வழக்கு - களி (ம.) விளையாட்டு (த.). 2 கன்னடம் கன்னடம் என்னும் பெயர் மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடர்புள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்துப் பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள் கருநாடு, கருநாடகம் என்பன. கன்னட நாட்டார் கருநாடர் என்றும், கருநடர் என்றும் அழைக்கப்பட்டார். கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இருபொருள்கள் கூறப்படுகின்றன. அவை (1) கரிய நாடு, (2) கருங்கூத்து என்பன. கன்னட நாட்டிற் பெரும்பகுதி கரிசல் நிலமாயிருப்பதால், கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும் (Dr. Gundert) கால்டுவெல் கண்காணியாரும். கூத்துகளில் இழிந்த வகைக்குக் கருங்கூத்து என்று பெயர். முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து(கலித். 65 :29) நடம் = கூத்து. நடன் = கூத்தன். வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க (பரிபா. 22 : 42) நடர் = கூத்தர். விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட (குறள். பரிமே. உரை) நாடகம் = கதை தழுவிவரும் கூத்து. மிகப் பழைமையான அநாகரிக அல்லது கண்மூடிப் பழக்கத்தைப் `பழைய கருநாடகம் என்பர்; இங்குக் `கருநாடகம் என்பது பழைமையான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாயிருக்கலாம். சிலப்பதிகாரத்தில் கருநாடர் குறிக்கப்படும் போதெல்லாம் திருந்தாமையைக் குறிக்கும் `கொடு என்னும் அடை கொடுத்தே குறிக்கப்படுகின்றனர். கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் (சிலப். 25:156) கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும் (சிலப். 26:106) இன்றும் யக்ஷகானம் என்னும் கருங்கூத்து கன்னட நாட்டில் நடிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. ஆயினும் கருநடரைக் கருநாடர் என்னும் வழக்கும் உண்மையானும், கூத்தாகிய காரணத்தினும் நிலவகையாகிய காரணம் பெயர்ப்பேற்றிற்குச் சிறத்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். கரை நாடு என்பது கருநாடு என மருவிற்றென்பர் சிலர். கன்னடநாட் டெல்லை தெற்கே நீலமலை (நீலகிரி) யிலிருந்து வடக்கே பீடார்ப் (Bidar) பகுதி வரை. மைசூர் கன்னடம் தென்மராட்டம் (மகாராஷ்டிரம்) ஐதராபாத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய சீமைகளிற் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது கன்னடம். நீலமலையிலுள்ள படகர் (வடகர்), என்னும் மலைவாணர் கன்னடத்தின் திரிபான ஒரு மொழியைப் பேசுகின்றனர். 16ஆம் நூற்றாண்டில் தென்னாட்டிற்கு வந்த மகமதிய மன்னர், அற்றைத் தமிழ்நாட்டின்மேற் கருநட மன்னர் ஆணை செலுத்தியமை காரணமாகத் தமிழ்நாட்டையும் கன்னட நாட்டோடு சேர்த்துக் கர்நாட்டக் (கருநாடகம்) என்றனர். அதை ஆங்கிலேயர் கர்நாட்டிக் (Carnatic) என்று திரித்தனர். கன்னட நாட்டு வரலாறு கன்னட நாட்டிற் சிறந்த பகுதி மைசூர்ச் சீமையாகும். மைசூரில் தற்போது ஹளெபீடு (Halebid) என வழங்கும் துவரை நகா (துவார சமுத்திரம்) கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்னர்ச் செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததாயிருந்தது. இது துவராபதி எனவும் வழங்கும். நச்சினார்க்கினியர், அகத்தியனார்............ துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி எனத் தொல்காப்பியப் பாயிரவுரையிலும், மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் என அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார். பண்டைச் சேரநாட்டில் மைசூர்ச் சீமையின் தென் பகுதியும் சேர்ந்திருந்தது. கடைக்கழகக் காலத்தில் மைசூர்த் துவரைநகரை ஆண்டவன் இருங்கோவேள் என்னும் தமிழச் சிற்றரசன். அவன் வடபக்கத்தில் ஒரு முனிவரின் ஓம குண்டத்தில் தோன்றித் துவரை நகரை நாற்பத்தொன்பது தலைமுறையாகத் தொன்றுதொட்டு ஆண்டுவந்த வேளிர்களுள் ஒருவன் என்றும், ஒரு முனிவர் தவஞ்செய்து கொண்டிருக்கையில் அவர்க்கு இடையூறு செய்யவந்த ஒரு புலியை அவர் ஏவற்படி கொன்றமையால் புலிகடிமால் எனப்பட்டா னென்றும் கூறப்படுவன். நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் (புறம். 201) என்று கபிலர் பாடுதல் காண்க. இப் பாட்டின் அடிக்குறிப்பில், தபங்கரென்னு முனிவர் ஒரு காட்டில் தவஞ்செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அதுகண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி `ஹொய் ஸள என்று கூற, அவன் அப் புலியைத் தன் அம்பால் எய்து கடிந்தமையால் ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப்பட்டா னென்று சிலர் கூறுவர்; சளகபுரத்தையடுத்த காட்டிலுள்ள தன் குலதேவதையான வாஸத்திகா தேவியைச் சளனென்னும் அரசன் வணங்கச் சென்றபோது புலியால் தடுக்கப்பட்டு வருந்துகையில், அக் கோயிலிலிருந்த பெரியவர் அவனை நோக்கி `ஹொஸ் ஸள என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதுகொண்டு அதனைக் கொன்றமைபற்றி, `ஹொய் ஸளன் என்றும் `புலிகடிமால் என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர் என்று சாமிநாதையர் அவர்கள் வரைந்துள்ளனர். பிற்காலத்தில் 11ஆம் நூற்றாண்டில் துவாரசமுத்திரத்தில் (Halebid) நிறுவப்பட்ட ஹொய்சள பல்லாள மரபு கடைக்கழகக் காலப் புலிகடிமாலின் வழியதே. பல்லாளன் என்னும் பெயர் வல்லாளன் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. வ-ப, போலி, ஒ, நோ: வண்டி - பண்டி, வகு-பகு, வல்லாளன் = வலிய ஆண்மையை யுடையவன். ஒரு மறவனுடைய இல்லையும் ஊரையும் இயல்பையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை மிகுத்துக் கூறும் புறத்துறைக்கு வல்லாண்முல்லை (பு.வெ. 177) என்று பெயர். நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாளநின் மகிழிருக்கையே (புறம். 125) எனத் தேர்வண்மலையனும், விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் லன்ன வல்லா ளன்னே (புறம். 170) எனப் பிட்டங்கொற்றனும், அடிபொலியக் கழறைஇய வல்லாளனை வயவேந்தே (புறம். 40) எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் பாடப் பட்டனர். கடுந்திறமையுள்ள இருபாலாரையும் வல்லாள கண்டன் வல்லாள கண்டி எனப் புகழ்வது இன்றும் தமிழ்நாட்டுலகவழக்கு. திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும் அரபிக் கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்திற்குத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக வுள்ள கொங்கண தேசம் பண்டைக் காலத்தில் கொடுந்தமிழ நாடுகளுன் ஒன்றாயிருந்ததாக இலக்கண நூல்கள் கூறும். கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில வாட்சி அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையில் சொன்னய முடையவும் என்றார் அகத்தியனார் என்பது நன்னூல் மயிலைநாதர் உரை. (ப. 161). இவ் அகத்திய நூற்பாவிற் கூறப்படும் பெயர்கள் முதலாவது நாட்டைக் குறித்தவை யென்றும் பின்பு மொழி திரிந்தபின் மொழியைக் குறித்தனவென்றும் அறிதல் வேண்டும். சேரநாடு கடைக்கழகக் காலத்திலேயே குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்பால் வேறும் கீழ்ப்பால் வேறுமாகப் பிரிந்து போயிற்று. கீழ்ப்பால் நாடு மீண்டும் தெற்கில் கொங்கு நாடும் வடக்கில் கங்கநாடும் இடையில் அதிகைநாடு துவரைநாடு முதலியனவுமாகப் பிரிந்துவிட்டது. அதிகைநாடு தகடூரை (இற்றைத் தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டு வந்தது. கங்கநாடு, அதன் வடக்கில் கங்கமரபினர் குவளாலபுரத்தை (கோலார்)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தது. இது கங்கபாடி என்று கல்வெட்டுகளிற் கூறப்படும். வெங்கை நாடுங் கங்க பாடியும் (S.S.I. I. 94) கங்க மரபினரான சிற்றரசர் கடைக்கழகக் காலத்திலே, மறத்திற் சிறந்து பெயர் பெற்றவராயிருந்தனர். நன்ன னேற்றை றறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி (அகம். 44) பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் (சிலப். 25 : 157) எனப் பழைய நூல்கள் கூறுதல் காண்க. இக் கங்க மரபைச் சேர்ந்தவனே, 12ஆம் நூற்றாண்டில் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தனும், அமராபரணன் ஸ்ரீமத் குவளாலபுர பரமேசுவரன், கங்ககுலோற்பவன் என்று தன் மெய்க்கீர்த்திகளிற் பாராட்டப்பெறுபவனும், பவணந்தி முனிவரைக்கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழிலக்கணத்தை இயற்றுவித்ததினாலும், நன்னூற் சிறப்புப்பாயிரம், குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் என்று கூறுவதாலும், மைசூர் நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை 12ஆம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது அறியப்படும். ஆகவே, பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, வடசொற் கலப்பால் 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்து, பின்பு சிறிது சிறிதாகத் தெற்கே தள்ளிவந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ள தென்க. கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும் என்று சிலப்பதிகாரங் கூறுவதால் கொங்கண நாட்டைச் சேர்ந்த கருநட நாட்டிலேயே கன்னடம் முதலாவது தோன்றியிருத்தல் வேண்டும். இப்போது கொங்கண நாட்டிற்கும் மலபாருக்கும் இடைப்பட்ட மேல்கரை நாடே, தென்கன்னடம் வடகன்னடம் என இரு பகுதியாய்ப் பகுக்கப்பட்டுக் கன்னடம் (Kannada) என்னும் பெயரால் வழங்கி வருகின்றது. வடகன்னடம் கொங்கண நாட்டுப் பகுதியே. இதனால், கரைநாடு என்பதே கருநாடு என மருவிற்று என்று கொள்ளவும் இடமுண்டு. கொங்கணம் என்பது கொண்கனம் என்னும் சொல்லின் திரிபு. கொண்கன் என்பது நெய்தல்நிலத் தலைவன் பெயர். கொங்கணம் ஒரு நெய்தல் நாடாதலால், கொண்கு (நெய்தல்நிலம்) என்னும் பெயர் முறையே கொண்கனம்-கொங்கணம் என்று திரிந்திருக்கலாம். கொங்கண நாட்டினர், கொங்கணர் என்றும் கொங்கணவர் என்றும் கொங்கணியர் என்றும் கூறப்படுவர். bfh§fzh® v‹W xU g©il¤ jÄœ¢ á¤j® ïUªjh®.* மைசூர்ச் சீமையிலுள்ள பலவூர்கள் இன்றும் தமிழ்ச் சொற்களையே தம் பெயரீறாகக் கொண்டுள்ளன. (எ-டு): ஊர் (மைசூர்), புரம் (குவளாலபுரம்), பள்ளி அல்லது ஹள்ளி (சிக்னவகன் ஹள்ளி), பட்டினம் (சீரங்கபட்டினம்), கரை (அரிசிக்கரை), பேட்டை முதலியன. கன்னட நாட்டிலுள்ள கௌடர் (கவுண்டர்), திகழர் (தமிழர்), குறும்பர், உப்பாரர், கொரகர் (குறவர்), ஹொலியர் (புலையர்), பேடர் (வேடர்) முதலிய குலத்தினர் தமிழ் மரபினரே. கன்னடியர் என்னும் பெயரும் மொழிபற்றிக் குலங்குறித்த தமிழ்ச்சொல்லே, மைசூர் அரசரின் இற்பெயரான உடையார் என்பது தனித் தமிழ்ச் சொல்லாயிருப்பது மிக மிக மகிழத்தக்கது. கன்னடம் திரிந்ததற்குக் காரணங்கள் (1) கன்னடச் சீமையில் தமிழ் மன்னராட்சி ஒழிந்தமை. (2) அங்குத் தமிழ் நூல்கள் வழங்காமை. (3) தமிழர் விழிப்பின்மை. (4) தட்பவெப்ப நிலையால் தமிழ் ஒலியும் சொல்லும் திரிந்தமை. (5) வடசொற் கலப்பும் வடமொழியிலக்கண வமைப்பும். கன்னடம் திரிந்த முறைகள் (1) ஒலித்திரிபு எ-டு: ப-ஹ, பள்ளி - ஹள்ளி, பாடு - ஹாடு (2) உயிரீற்றுப் பேறு எ-டு: எதிர் - எதுரு, இருந்தேன் - இருத்தெனெ. * கொங்கண முனிவர் வாசுகியம்மையாரால் கடிந்து கொள்ளப்பட்டதினாலோ, கொங்கண நாட்டாரின் இயல்பான பேதைமையாலோ, கொங்கணன் கொங்கணவன் கொங்கணியன் என்னும் பெயர்கள் பேதைமை குறித்த பெயர்களாக வழங்கி வருகின்றன. (3) தொகுத்தல் திரிபு எ-டு: இருந்தேன் - இத்தேன், இருவர் - இப்பரு. (4) புணர்ச்சியின்மை எ-டு: நினக்கு - நினகெ, ஓலைக்காரன் - ஓல்கார. (5) சொற்றிரிபு எ-டு: மொதலானய, மத்தொந்து (மற்றொன்று) இல்ல. (6) வேற்றுமையுருபு மாற்றம் ËŪj (3 M« nt.), நின்னல்லி (7 ஆம் வே) (7) போலி எ-டு: ப-வ, வேடர்-பேடரு, ச-க, சில-கெலவு. (8) எதிர்மறை யிடைநிலைக் குறுக்கம் எ-டு: இராதே - இரதெ, இரேன் - இரெனு. (9) பொருட் பொதுப்பித்தல் எ-டு: நோடு (த.) = கவனித்துப் பார் (க.) = பார் மாட்டுதல் (த.) செய்ய முடிதல் - மாடுதல் (க.) = செய்தல். (10) இனப்பொருள் வழக்கு எ-டு: சிக்கு (த.) = சிக்கற்படு (க.) அகப்படு. (11) வழக்கற்ற சொல் வழக்கு எ-டு: திங்கள் (மாதம்), தெகு (தெவு-கொள்.) (12) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை எ-டு: ஈ ஹண்ணுகளு. (13) இயற்கைத் தெரிப்பு எ-டு: மனெ (மனை) (14) புதுச்சொல் புனைவு எ-டு: படவனு ஏழையன் கிசி (பற்காட்டு) (15) பெயரீற்றுப்பால் விகுதிக் கேடு எ-டு: குருட (குருடன்), மக (மகன்). (16) ஓசைப்பேறு எ-டு: மக (g), அஜ்ஜி (அச்சி) (17) ற ழ அருகினமை (18) வடசொற் கலப்பு. கன்னடச் சொல் வரிசைகள் 1. மூவிடப் பெயர் தன்மை முன்னிலை படர்க்கை தற்சுட்டு ஒருமை: நானு நீனு அவனு, இவனு தானு அவளு, இவளு அது, இது பன்மை: நாவு நீவு அவரு, இவரு, தாவு நாவுகளு நீவுகளு அவு, இவு அவுகளு, இவுகளு குறிப்பு : நாம்-நாமு-நாவு. வ-ம, போலி, இங்ஙனமே நீவு, நாவு என்பனவும். நாவுகளு = நாங்கள். மூவிடப் பொதுப்பெயர் : எல்லாம். 2. வினாப் பெயர் ஆண் பெண் பொது அஃறிணை ஒருமை : யாவனு யாவளு யாரு ஆரு யாவது யாவுது, எணு பன்மை யாரு யாவுவு 3. முறைப் பெயர் தமிழ் கன்னடம் தமிழ் கன்னடம் தாதை தாத்த அத்தன் அச்ச அப்பன் அப்ப அம்மை அம்ம ஐயன் அய்ய அவ்வை அவ்வெ தந்தை தந்தெ தாய் தாயி அண்ணன் அண்ண அக்கை அக்க தம்பி தம்ம தங்கை தங்கி மாமன் மாவ அத்தை அத்தெ கணவன் கண்ட பெண்டாட்டி ஹெண்டதி நல்லள் நல்லள் (மனைவி) மகன் மக மகள் மகளு மகவு மக, மகு எல்லா எலெ திசைச் சொற்கள் முத்தப்ப அல்லது முத்தாத்த = பூட்டன் (பாட்டன் தந்தை), முத்தம்ம அல்லது முத்தஜ்ஜி = பூட்டி (பாட்டிதாய்), அஜ்ஜ = பாட்டன், அஜ்ஜி = பாட்டி, தொட்டப்ப = பெரியப்பன். தொட்டம்ம அல்லது தொட்டவ்வ = பெரியம்மை, சிக்கப்ப = சிற்றப்பன், சிக்கம்ம அல்லது சிக்கவ்வ = சிறிய தாய். F¿¥ò: முது+அப்ப = முத்தப்ப. அச்சன் - அஜ்ஜன், அச்சி - அஜ்ஜி, தொட்ட (தோடு) = பெரிய, சிக்க = சிறிய. 4. மக்கட் பெயர் ஆளு, மக்களு, அரசு, தோட்டகாரனு, கும்பார (கும்பாகாரன் = குயவன்), ஓலெகார (கடிதம் கொண்டு போகிறவன்), மாத்தாளி (பேச்சாளி. மாற்றம் = சொல்), மாறாளி (விற்கிறவன். மாறு = வில்), சமர்த்த, மந்தி (மாந்தர்), குண்ட்ட (முடவன்), குருட, மூட, ஊமெ, முதுக (கிழவன்), சோமாரி (சோம்பேறி), சிக்கவனு (சிறியவன்), சண்ணவனு (சின்னவன்), ஹொசெயனு (புதியன்), எளெகவனு (இளையவன்), கரியவனு, கரியனு, நெரெயவனு (நெருங்கியவன்), பிளியவனு (வெளியவன்), ஹளெபனு (பழையன்), கள்ளனு, ஒடெய தூத, கம்மார, காவலுகார, அர மகள், நாணிலி, அம்மண்ணி, ஆண்டி ஒட்ட (ஒட்டன்), கன்னெ (கன்னி), குதுரெகார, கொரவ (குறவன்), செம்பு குட்டிக (செம்பு கொட்டி), தலாரி (தலையாரி), திண்டிப் போத்த (தின்றிப்போத்து - ஆகுபெயர்). 5. விலங்குப் பெயர் ஆவு, ஆனெ (ஆனை), எத்து (எருது), ஒண்ட்டெ (ஒட்டை), கரு (கன்று) , குதுரெ, ஆடு, குரி (கொறி = ஆடு), நரி, நாயி, சிரத்தெ (சிறுத்தை), மரி (மறி=குட்டி), ஹுலியு (புலி), கழ்தெ (கழுதை), கடசு (கிடாரி), தகரு (தகர்), மேக்கெ (மோத்தை = வெள்ளாட்டுக்கடா), கூளி, ஹோத்து (போத்து), மொலவு (முயல்), குணி மொலவு (குழி முயல்), ஹந்தி (பன்றி), பெக்கு (வெருகு), எய், எம்மெ (எருமை), கடவெ (கடமை), கரடி, கந்து (கன்று), குட்டி, குரங்கி. 6. பறவைப் பெயர் ஈச்சல் (ஈசல்), அந்தி (அந்து), கிளி, கிணி (கிளி), கோளி (கோழி), காகி (காக்கை), பைரி (வைரி), கூகெ (கூகை), கடல் காகி, நீருகோளி, நவில் (மயில்), பர்து (பருந்து), பாவல், (வாவல்), ஆந்தெக (ஆந்தை), குகில் (குயில்), குளவி, கொக்கரே (கொக்கு). 7. ஊர்வனவற்றின் பெயர் அணில், உடு (உடும்பு), இறும்பு (எறும்பு), ஹாவு (பாம்பு), ஹுளு (புழு), ஹேனு (பேன்), எலி, ஹல்லி (பல்லி), அரணெ, ஹசுருஓதி (பச்சோந்தி), கெத்தல் (சிதல்), ஓதி (ஓந்தி), உடுத்தெ (உறுத்தை = அணில்), கீர (கீரி), சுண்டிலி, தேள். 8. நீர்வாழ்வனவற்றின் பெயர் மீனு, Vo>v©£Ç (நண்டு), அட்டெ (அட்டை), ஆமெ (ஆமை), சொற (சுறா), தவள (தவளை). 9. மரஞ்செடிப் பெயர் மரவு (மரம்), மாவு (மா), ராகி (இராகி), களெ (களை), ஹூல்லு (புல்), பிளி (விளை), பாளி (வாழை), தெங்கு, கோதி (கோதுமை), சணபு (சணல்), சாமெ (சாமை), பாதாமி (வாதுமை), தாளிம்பர (மாதுளை), அவரெ (அவரை), பிதிர் (வெதிர்), பேவு (வேம்பு), கீரெ (கீரை), ஆட்சோகெ (ஆடாதோடை), அகசெ (அகத்தி), ஆல (ஆல்), அரசு, அத்தி, இப்பெ (இலுப்பை),ஹூளி (புளி), பனி (பனை) ஹூவர்சி (பூவரசு), பாகே (வாகை), பேல் (வேல்), கரி மருது, பிளிமத்தி (வெள்ளை மருது), தேகு (தேக்கு), நுக்கே (முருங்கை), எலச்சி (இலந்தை), கடம்ப (கடம்பை), சப்பாத்திக்கள்ளி, முள்ளு, கள்ளி, மாகாளி, நரவள்ளி, நெல்லி, நொச்சி, ஹொங்கெ (புங்கை), சம்பகி (சண்பகம்), துளசி, சீத்தா, பெண்டெ (வெண்டை), அடிகே (அடைக்காய் = பாக்கு), காடு மல்லிகெ (காட்டு மல்லிகை), கொன்னெ (கொன்றை), ஆனெய நெக்குலு (ஆனை நெருஞ்சி), அடும்பு (அடம்பு), கரி (அறுகு), ஆதலு (ஆதனை), ஆபல் (ஆம்பல்), ஆரெ (ஆர்), ஈருள்ளி, உத்து (உழுந்து), இலிமிஞ்சி (எலிமிச்சை), எள், கப்பு (கரும்பு), கல்வெ (களவு = களா), கொத்துமரி (கொத்துமல்லி), கிட (செடி), கொம்பவரெ (செவ்வவரை), கெம்பாவல் (செவ்வாம்பல்), கெம்புபாளெ (செவ்வாழை), ஜோள (சோளம்), தக்காளி, தக்கோல (தக்கோலம்), தாழெ (தாழை), தும்பெ (தும்பை), தொண்டெ (தொண்டை), கெம்பத்தி (செம்பருத்தி). 10. கருவிப் பெயர் ஒரகல் (உரைகல்), ஒலக்கெ (உலக்கை) உளி, ஏரு (ஏர்), கம்பி, கவணெ (கவண்), கிட்டி, கொழல் (குழல்), கூனி (கூனை), கொக்கெ (கொக்கி), கோல், சட்டுக (சட்டுவம்), சாட்டி (சாட்டை), சீப்பு, செக்கு, செண்டு (பந்து), தடி, தப்பட்டெ (தப்பட்டை), தப்பள (தப்பணம்), தப்பெ (தப்பை), தவட்டெ (தவண்டை), தாவு (தாம்பு), தாப்பாலு (தாழ்ப்பாள்), தாழ், தித்தி, திருகாணி, துடுப்பு, தொறடு (துறடு), அர (அரம்), அம்பு, இக்களள் (இடுக்கி), சிமட்டி (சிமிட்டி), பலெ (வலை), ஜல்லடி (சல்லடை), கோடலி (கோடரி), பள்ள (வள்ளம்), ஒரல் (உரல்), நேகில் (நாஞ்சில்), கத்தி, ஹலிவெ (பல்லி), ஈட்டி, அகப்பெ (அகப்பை), ஆபு (ஆப்பு). 11. ஐம்பூதப் பெயர் நெல (நிலம்), நீரு, பொனல் (புனல்), காலி (கால்=காற்று), தீ, ஆகாசம் (காயம்). 12. கனிய (உலோக)ப் பெயர் பெள்ளி வெள்ளி, ஹித்தாளி (பித்தளை), உர்க்கு (உருக்கு), செம்பு, தகர (தகரம்). 13. ஊர்திப் பெயர் அம்பி, ஓட (ஓடம்), நாவெ (நாவாய்), ஹடகு (படகு), தேரு, அம்பாரி, தெப்ப (தெப்பம்), தேர். 14. உணவுப் பெயர் அப்ப (அப்பம்), அப்பள (அப்பளம்), ஹாலு (பால்), உப்பு, மர்து (மருந்து), பிர்து (விருந்து), அக்கி (அரிசி), பெண்ணெ (வெண்ணெய்), எளநீரு (இளநீர்), ஊட்ட (ஊட்டம்), அக்கி (அக்கம் = தானியம்), அவல், அள (அளை = தயிர்), இட்டலி, எரெ (இரை), உண்ணி (உண்டி), ஊட்ட (ஊட்டு), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கள், கறி, கூழ், தவுடு, திண்டி (தின்றி), தீனி. 15. ஆடையணிப் பெயர் உடுபு (உடுப்பு), தேகா (தெழ்கு) தாலி, மணி, அட்டிகெ (அட்டிகை), இண்டெ (இண்டை), உடெ (உடை), கழல், குச்சு, கொப்பு, சட்டெ (சட்டை), சேல (சேலை), கட்டி, செர்ப்பு (செருப்பு), தண்டெ (தண்டை), தலகுட்டெ (தலைக்குட்டை). 16. தட்டுமுட்டுப் பெயர் பெட்டகெ (பெட்டகம்), மேஜு (மேசை), பட்லு (வட்டில்), தொட்டிலு, கூடெ (கூடை), செம்பு, அடப்ப (அடைப்பம்), உறி, கல (கலம்), குட (குடம்), குப்பி, சட்டி, ஜாடி (சாடி), ஜோளிகெ (சோளிகை), தட்டெ (தட்டம்), தடிக்கெ (தடுக்கை), தபலே (தவலை), தளிகெ (தளிகை), தொட்டி. 17. இடப்பெயர் இடெ (இடம்), இடுகு (இடுக்கு), ஊட்டெ (ஊற்று), ஹொல (புலம்), அடவி, தோப்பு, தோட்ட, மூலெ (மூலை), பாகிலு (வாசல்), குணி (குழி), கடல், பெட்டெ (பொற்றை = மலை), அறெ (அறை), கேரி (சேரி), மலெ (மலை), பிந்தில் (இல்லின் பின்னிடம்), கழனி, புத்து (புற்று), மனெ (மனை), கோடெ (கோட்டை = மதில்), ஊரு, அரமனெ, பட்டண (பட்டினம்), ஹள்ளி (பள்ளி), படக (வடக்கு), தெங்க (தெற்கு), குடிசலு (குடிசை, குடி, செரெமனெ (சிறைமனை), அங்காடி, சீமெ (சீமை), பேட்டெ (பேட்டை), ஹள்ள (பள்ளம்), கட்டட, கடெ (கடை), காடு, பேலி (வேலி), அடவி, ஒலெ (உலை=சூளை), கூடாரம், ஆகெ (அகம்), அகழ் (அகழி), அண்டெ (அண்டை), அணெ (அணை), அம்பல (அம்பலம்), அருகு, உக்கட (உக்களம்), உம்பளி (உம்பளம்), எல்லெ (எல்லை), குட்ட (குன்றம்), கேணி, கொட்டகெ (கொட்டகை), கொட்டார (கொட்டாரம்), கொத்தள (கொத்தளம்), கொனெ (கொனை), கோட்ட (கோட்டை), சில்லி, சுடுகாடு, தொணெ (சுனை), திட்டி, திட்டு, தொள (துளை), ஏரி, ஓட்டெ (ஓட்டை),ஓரம் கரெ (கரை), கன (கனம்), கன்ன (கன்னம்), கா, காணி, குழி, கொள (குளம்). 18. காலப் பெயர் சமய, ஹகலு (பகல்), சாயங்கால, ராத்ரி (இராத்திரி), இருள் (இரவு), திங்களு (மாதம்), வார, ஹொத்து (பொழுது), வேளி (வேளை), பிடுவு (விடுவு=ஓய்வு), கடு (தவணை), கோடெ (கோடை). 19. சினைப் பெயர் அடி, எலுபு (எலும்பு), மூகு (மூக்கு), ரத்த (அரத்தம்), எலெ (இலை), தலெ (தலை), முள்ளு, தொகலு (தோல்), பலெவு (பழம்), பாயி (வாய்), தொட (தொடை), நடு (இடை), கண்ணு (கண்), ஹல்லு (பல்), ரெக்கெ (இறக்கை), கொம்பெ (கிளை), ஹூவு (பூ), கொப்பு (கொழுப்பு), பாலவு (வால்), பேரு (வேர்), அலர், காலு, கெய் (கை), நொசல் (நுதல்), மொலெ (முலை), பெரல் (விரல்), பெந் (bt>btǪ=KJF), அணல் (தாடி), சோகெ (தோகை), நுதி (நுதி), நெத்தர் (நெய்த்தோர் = இரத்தம்), முக (முகம்), ஓல (ஓலை), மனசு (மனம்), கிவி (செவி), பக்கெ (பக்கம் = விலா), கொம்பு, கதிர் அம்மி (அம்மம்), எசள் (இதழ்), இமெ (இமை), எறகெ (இறகு), ஈர், உகுர் (உகிர்), உச்சி, ஒதடு (உதடு), உம்மி (உமி), எஞ்சல் (எச்சில்), ஓடு, கவல் (கவை), கத்து (கழுத்து), கன்ன (கன்னம், காவு (காம்பு), காய், கால், குண்டெ (குண்டி), குதி, கொலெ (குலை), கொளக (குளம்பு), கூதல் (கூந்தல்), கொட்டெ (கொட்டை), கொண்டே (கொண்டை), கொத்து, கொம்பு, கெம்பரி (செவ்வரி), தவடெ (தவடை), தாடி, தாட. 20. பண்புப் பெயர் குண, எத்தரவு (ஏத்தம்), தாள்ளி (பொறுமை), அகங்கார, பல (வலம்), செம்பு (செம்பு=சிவப்பு). ஆழ, பிளிப்பு (வெளுப்பு), இர்ப்பு (கருப்பு), செச்சனவு (செக்கெனவு), அகல, மட்டு, ஹாடு (பாழு), ஹசிவு (பசி), அக்கெற (அக்கறை), அகத்ய (அகத்யம்), அசடு, அற (அறம்), ஆழாக்கு, இக்கட்டு, இன் (இனிமை), ஈர (ஈரம்). ஒடமெ (உடைமை), உருப்பு, ஒவர் (உவர்), உழ்கெ (உழுவல்), உறுபு (உறுதி), ஊமெ (ஊமை), எத்து, (எடை), எதிர் ஹேராள (ஏராளம்), ஒண்ட்டி (ஒண்டி), ஒப்பாரி, ஒய்யார, கள வள (கலவரம்), காதல், கார், கார (காரம்), காவி, ஹுளி (புளி), கஹி (கசப்பு), செம்பு (சிவப்பு), மொள (முழம்), அகல (அகலம்), நீலி (நீலம்), நாண் (நாணம்), பல்மெ (வல்லமை), கட்டி (கெட்டி), கொஞ்ச (கொஞ்சம்), கோல (கோலம்), சப்படி (சப்பட்டை), சப்பெ (சப்பை), சேண் (சாண்), சிட்டு, சுட்டி, த்சவி (சுவை), சுள் (உறைப்பு), சுறுக்கு (விரைவு), சேரு (= 8 பலம்), சொக்கு, சொத்த (சொத்தை), சொந்த (சொந்தம்), தட்டெ (தட்டை), தடய (தடியம் = 2 வீசை), தப்பித (தப்பிதம்), தப்பு, தளுக்கு, திட்ட (திட்டம்), துடுக்கு. 21. எண்ணுப் பெயர் 1 ஒந்து 11 ஹன்னொந்து 21 இப்பத்தொந்து 200 இன்னூறு 2 எரடு 12 ஹன்னெரடு 30 மூவத்து 300 முன்னூறு 3 மூரு 13 ஹதிமூரு 40 நால்வத்து 400 நானூறு 4 நால்கு 14 ஹதிநால்கு 50 ஐவத்து 500 ஐநூறு 5 ஐது 15 ஹதினைது 60 அரவத்து 600 ஆருநூறு 6 ஆரு 16 ஹதினாரு 70 எப்பத்து 700 ஏளுநூறு 7. ஏளு 17 ஹதினேளு 80 எம்பத்து 800 எண்ட்டுநூறு 8 எண்ட்டு 18 ஹதினெட்டு 90 தொம்பத்து 900 ஒம்பைநூறு 9 ஒம்பத்து 19 ஹத்தொம்பது 100 நூறு 1000 சாவிர 10 ஹத்து 20 இப்பத்து 101 நூறாஒந்து 1001 சாவிர தொந்து 2000 எரடு சாவிர 10,00,000 ஹத்து லக்ஷ 10,000 ஹத்து சாவிர 1,00,00,000 கோட்டி 1,00,000 லக்ஷ கீழிலக்கம் 1/16 வீசெ ½ அரெ 1/8 அரெகாலு ¾ முக்காலு ¼ காலு 1½ ஒந்தூவரே எண்ணடி உயர்திணைப் பெயர் ஒப்பனு (ஒருவன்), ஒப்பளு (பெ. gh.), ஒப்பரு (ஒருவர்), இப்பரு (இருவர்), மூவரு, நால்வரு, ஐவரு, நால்குமந்தி (நான் மாந்தர்), கெலவரு (சிலர்), ஹலவரு (பலர்). 22. நோய்ப் பெயர் ஹுண்ணு (புண்), பனி, சுளுக்கு, ரூரு, துறி (சொறி) 23. உறுப்பறைப் பெயர் குருடி (குருடு), கூன், கிவிடு (செவிடு) 24. பல்பொருட் பெயர் உண்டெ (உண்டை), அஞ்செ (அஞ்சல்=தபால்), அடயாள (அடையாளம்), மஞ்சு, மண்ணு, உசுரு (உயிர்ப்பு = சுவாசம்), சவ (சவம்), நூலு, துண்டு, ஹொகெ (புகை), ஹெசரு (பெயர்), தூள் (தூளி), கோலு (கோல்), பூதி (புழுதி), குருது (குறி), காணிக்கெ (காணிக்கை), கம்ப (கம்பம்), ப்தரெ (திரை), கொண்டி ஹலிகெ (பலகை), நொர (நுரை), மஞ்சு, உய்யல் (ஊசல்), சொடர் (சுடர்), சுத்தம் (சுற்றம்), சேல (சாளி), புடி(பொடி), பாடிகெ (வாடகை), ஹொரெ (பொறை), கத (கதவு), மிஞ்ச்சு (மின்னல்), ஒடம்படிக்கெ, மரளு (மணல்), கடியார, சம்பள, மழெ, கல்லு, ஹணவு (பணம்), கும்ப, துட்டு, ஒடவெ (உடைமை), அட்டி, கூடு, சரக்கு, பிளக்கு (விளக்கு), காசு, கொள்ளி, துண்டு, ஹருகு (பலுகு), பளெ (வளை), வாடிக்கெ (வாடிக்கை), கூடு, அச்சு, அலெ (அலை), ஆகி (ஆலங்கட்டி), ஆவி, ஒடம்பி (உடம்பு), ஒடல் (உடல்), உசிர் (உயிர்), உருளி, இருள், எருபு (எரு); இடரு, எகுமதி (ஏற்றுமதி), ஔ (ஒளி), ஓலக (ஓலக்கம்), கட்டெ (கட்டி), கடவள் (கடவுள்), கதவு, கருடி (கரடி=சிலம்பம்), கரி, கழு, காப்பு, காரெ (காரை=சாந்து), குடிக்கெ (குடுக்கை), குண்ட (குண்டு), குத்திகெ (குத்தகை), குப்பெ (குப்பை), கொரல் (குரல்), கூடு, கூலி, கூறு, கொள்ளி, கோழெ (கோழை), சட்ட (சட்டம்), சிட்டிகெ (சிட்டிகை), சில்லறெ (சில்லறை), சிள்ளு (சீழ்க்கை), சீட்டி (சீட்டு), சுட்டி (சுருட்டு), கேர் (சுவர்), சூடு (அரிக்கட்டுக் குவியல்), சூல், சூருள் (சூள்), செத்தெ (செத்தை), கெம்பரகு (செவ்வரக்கு), தொட்டு (சொட்டு), ஜொண்டு (சொண்டு), நேசறு (ஞாயிறு), தக்கு, தகடு, தத்து, தணல், தளெ (தளை), தொளெ (திரளை), தெரெ (திரை), தீவட்டி, துண்டு, தூசு, தூம்பு, ஹெண்ணு (பெண்). 25. தொழிற்பெயர் (1) முதனிலைத் தொழிற்பெயர் எ-டு: கள், ஹகெ, தப்பு. (2) முதனிலை திரிந்த தொழிற்பெயர் எ-டு: கேடு, ஈடு. (3) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: தாஹ (தாகம்). (4) முதனிலை வலி யிரட்டித்த தொழிற்பெயர் எ-டு: ஊட்டெ (ஊற்று, ஆகுபெயர்). (5) முதனிலை திரிந்து வலி யிரட்டித்த தொழிற்பெயர் எ-டு: குதி - கூத்து (6) முதனிலை வலி யிரட்டித்து விகுதி பெற்ற தொழிற் பெயர் எ-டு: ஆட்ட (ஆட்டம்). (7) விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: விகுதி பெயர் பொருள் கெ (கை) அடிகெ (அடுகை = சமைத்தல்) தெ (தை) நடத்தெ (நடத்தை) ஊ (உள்) பெளெயு (விளையுள்) அலு (அல்) பிக்கலு (விக்கல்) வு (உ) அடவு (அடைவு), சாவு. பு அதிர்ப்பு அண (அணம்) கட்டண (கட்டணம்) பி (வி) கல்பி (கல்வி) (8) முதனிலை வலித்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: பழக்கெ (வழக்கம்), அடக்க (அடக்கம்). (9) பகுதி வழக்கற்ற தொழிற்பெயர் எ-டு: கட்டளை. சில தொழிற்பெயர்கள் ஓணகிலு (உணக்கம்), ஔவு (உளவு), ஏலாம் (ஏலம்), ஓட்ட (ஓட்டம்), ஒப்பிடி (ஒப்படி = அறுவடை), ஒப்பந்த, ஒப்ப (ஒப்பம்), ஓக்கரி (ஒக்காளம்), ஜூது (சூது), தப்படி (தவறு) தாட்டவாட்ட (தாட்டோட்டம்), தீர்ப்பு, தீர்மான (தீர்மானம்), அம்மாலெ (அம்மானை). வினையாலணையும் பெயர் நோடிதவனு (பார்த்தவன்), நோடுவவனு (பார்க்கிற வன்), (பார்ப்பவன்) முதலியன. வேற்றுமைப் பெயர் நான் மரம் குதிரை அரசு 1. நானு மரவு குதுரெயு அரசு 2. நன்னன்னு மரவன்னு குதிரெயன்னு அரசன்னு 3. நன்னிந்த மரதிந்த குதிரெயிந்த அரசினிந்த 4. நனகெ மரக்கெ குதுரெகெ அரசிகெ 5. நன்னிந்த மரதிந்த குதுரெயிந்த அரசினிந்த 6. நன்ன மரத குதுரெய அரசின 7. நன்னல்லி மரதல்லி குதுரெயல்லி அரசினல்லி 8. மரவே குதுரெயே அரசே முக்கிய வினைகள் அகல், அகழ், அசர் (அயர்), அஞ்சு, அடி, அடு (சமை), அடெ (அடை), அண்டிசு (அண்டு), அண்ணெ (அண்ணா), அணுங்கு (அணங்கு), அணெ (அணை), அதட்டு, அதிர், அப்பு, அப்பளிசு (அப்பளி), அமர், அரள், அரெ (அரை), அல்லாடு, அலம்பு, அல (அலு), அலெ (அலை), அழி, அழு, அள, அறி, அறெ (அறை), ஆகு, ஆடு, ஆயு (ஆய்), ஆர் (ஒலி), ஆராயு, ஆரு (ஆர்=நிறை), ஆளு, ஆறு, ஆனு, இடறு, இடி, இடிகு (இடுக்கு), இடு, இரு, இழ் (இழு), இழி (இறங்கு), இழகு (இழுக்கு), இறுகு, ஈ, ஈஜு (நீந்து), ஈழ் (ஈர்), ஈன், உகு, உசிர் (உயிர்), உடு, உண்ணு, உதிர், உப்பு, உய, உரி (எரி), உரிசு (உரி), உருள், உலி (ஒலி), உழு, உளி (ஒளி), உளுக்கு, உறி (உறிஞ்சு), உறு, ஊது, எக்கு, எசெ (எறி), எட்டு, எணிசு (எண்), எத்து (எடு), எதிரிசு (எதிர்), எரெ (இர), எழு, எறகு (இறங்கு), எறச்சு (இறை), ஏய் (எய்), என், ஏறு, ஒசர் (சுர), ஓட்டு, ஓடி, ஒடெ (உடை), ஒணகு (உணங்கு), ஓணர் (உணர்), ஒத்து (ஒற்று), ஒதவு (உதவு), ஒதறு, ஒதுக்கு, ஒதெ (உதை), ஒப்பு, ஒரெ (உருவு), ஒரெ (உரை = தேய்), ஒரெ (உரை=சொல்), ஒழ்கு (ஒழுகு), ஒறங்கு (உறங்கு), ஓடு, ஓது, ஓயு, ஓவு (ஓம்பு). கக்கு, கட்டு, கடி, கடெ (கடை), கசி, கத்தரிசு (கத்தரி), கத்து, கரகு (கரை=தேய்), கரெ (கரை=அழை), கல், கலங்கு, கலசு (கல), கவர், கவலு, கவி, கழல், கழி, கழுஹு (கடவு) கள், களெ (களை), கற, கனல், கா, காண், காய், கிட்டு, கீளு (கிள்), கீறு, குட்டு, குடி, குத்து, குதி, குதுரு (குதிர்), குந்து, குன்று, குளிர், குறி, குனி, கூகு (கூவு), கூடு, கெடு, கெதறு (சிதறு), கெய் (செய்), கெரண்டு (சுரண்டு), கெலு (கெலி), கௌர் (கிளறு), கேளு, கை, கொடு, கொக்கரிசு (கொக்கரி), கொத்து, கொயு, கொல், கொழெ (குழை), கொள், கொளெ (குலை), கொறெ (குறை), கொறுக்கு (கொறி), கோ. சல் (செல்), சவி (சவை), சளி (சலி), சாயு (சா), சார், சாலு, சாறு (சாற்று), சிக்கு, சிமுட்டு (சிமிட்டு ), சீறு, சுடு, சுட்டு, சுண்டு சுத்து (சுற்று), சுர்கு (சுருங்கு), சுரி (சொரி), சுருள், சுழி, செர்கு (செருகு), சேர், சொல், சோர், சோலு (தோல்). தகு (தங்கு), தட்டு, தடெ (தடு), தத்தளிசு, தணி, தப்பு, தரு (தா), தவழ், தழு (தழுவு), தள, தளர், தளிரு, தறி, தாகு (தாக்கு), தாண்டு, தாளிசு (தாளி), தாழ், தாளு, தித்து (திருந்து), திட்டு, திரி, திருகு (திரும்பு), தின்னு, திளி (தெளி), தீர், துறிக (சொறி), துடி, துண்டிசு (துண்டி), துள்ளு, தூகு (தூங்கு), தூறு, தெகு (தெவு), தெறெ (திற), தெரு (தீர்), தே (தேய்), தேகட்டு (தெவிட்டு), தொங்கு, தொடர், தொடங்கு, தொடெ (துடை), தொலகு (துலங்கு), தொழசு (துழவு), தோயு, தொறெ (துற), தோறு (தோன்று). நகு, நடு, நடுகு (நடுங்கு), நடெ (நட), நம்பு, நரெ (நரை), நரக்கு (நறுக்கு), நாட்டு, நாறு, நிமிர், நில்லு, நீகு (நீங்கு), நூலு, நெகழ் (நிகழ்), நெய், நேல் (நால்), நென (நினை), நோ, நோடு, நோனு (நோல்). பகெ (பகை), பசி, படு, படெ (படை), பத்து (பற்று), பய் (வை=திட்டு), பரு (வா), பரெ (வரை), பழி, பளகு (வழங்கு), பளெ (வளை), பளி (வழி), பளகு (வழக்கு) பறி, பாடு (வாடு), பாய், பிக்கு (விக்கு), பிசுடு (விசிறு), பிடி, பிடு (விடு), பித்து (வித்து), பிதிரு (விதிர்), பிந்து, பிரி (விரி), பில் (வில்), பிழி, பீகு (வீங்கு), பீசு (வீசு), பீழு (வீழ்), புரி (பொரி), புழ்கு (புழுங்கு), பூசு, பூண், பெயரு (வெயர்), பெரெ (விறை), பெள்கு (வெள்கு), பௌகு (விளங்கு), பௌர் (வளர்), பெளெ, (விளை), பெர்சு (பெருரு), பெறு, பேடு (வேண்டு), பே (வே=வேகு) பொகழ் (புகழ்), பொணர் (புணர்), பொன்மு (பொருமு), பொதிசு (பொதி), பொரள் (புரள்), பொருது (பொருந்து), பொறு. மக்கு (மங்கு), மடலு (படர்), மடி, மருன், மறெ (மற), மலெ (மலை), மாறு, மாய், மிகு, மிஞ்சு, மீறு, முக்கு (மொக்கு), முகி (முடி), முங்கு (விழுங்கு), முச்சு (மூடு), முட்டு, முடுகு, முணுகு, (முழுகு), முரி, மூசு (மொ), மூது (மூ), மெச்சு, மெத்து, மேயு, மோது, மொள (முளை).வாழ், வீஹதுகு (பதுங்கு). ஹலும்பு (புலம்பு), ஹாடு (பாடு), ஹாயு (பாய்), ஹாறு (பாறு), ஹிடி (பிடி), ஹுதுக்கு (பிதுக்கு), ஹெணகு (பிணங்கு), ஹெறு (பெறு), ஹேலு (பேல்), ஹேளு (கிள), ஹொகு (புகு), ஹொடி (அடி), ஹொயு, பெய், ஹொரு (பொறு), ஹொளி (பொலி), ஹொறடு (புறப்படு), ஹொகு (போகு), ஹோல் (போல்). வினைப் புடைபெயர்ச்சி கரெ (கரை=அழை) என்னும் வினை முற்று: இ.கா. நி.கா. எ.கா. தன்மை: ஒ. கரெதெனு கரெயுத்தேனெ கரெயுவெனு ப. கரெதெவு கரெயுத்தேவெ கரெயுவெவு முன்னிலை: ஒ. கரெதி கரெயுத்தீ கரெயுவீ ப. கரெதிரி கரெயுத்தீரி கரெயுவிவு படர்க்கை: ஆ. கரெதனு கரெயுத்தானெ கரெயுவனு பெ. கரெதளு கரெயுத்தாளெ கரெயுவளு பலர் கரெதரு கரெயுத்தாரெ கரெயுவரு ஒ. கரெயித்து கரெயுத்தரெ கரெயுவுது ப. கரெதவு கரெயுத்தாவெ கரெயுவுவு ஏவல்: ஒ. கரெ ப. கரெயிரி பெயரெச்சம் வினையெச்சம் இ. கா. கரதெ கரெது நி. கா. கரெயுவ கரயெ எ. கா. கரெயுவ கரெயதெ எதிர்மறை : கரெயத தொடர்ச்சி வினையெச்சம் : கரெயுத்தா செயப்பாட்டு வினை : கரெயல்படு பிறவினை : கரெயிசு கலவைக் கால வினை கரெது இத்தெனு = கரைந்திருந்தேன் கரெது இருத்தேனெ = கரைந்திருக்கிறேன் கரெது இருவெனு = கரைந்திருப்பேன் கரெயுத்தா இத்தெனு = கரைந்துகொண்டிருந்தேன் கரெயுத்தா இருத்தென = கரைந்துகொண்டிருக்கிறேன் கரெயுத்தா இருவெனு = கரைந்துகொண்டிருப்பேன் எதிர்மறை வினை (1) பாலிடச் சிறப்பு ஒருமை பன்மை தன்மை கரையெனு கரெயெவு நி.கா. முன்னிலை : கரெயெ கரெயரி எ.கா. படர்க்கை : ஆ. கரெயனு கரெயது இரண்டிற்கும் பெ. கரெயளு பொது ஒ. கரெயது கரெயவு (2) பாலிடப் பொது இ . கா. கரெயலில்ல = நி. கா. வி. எ. + இல்ல. கரெதுதில்ல = இ. கா. தொ. பொ. + இல்ல. கரெதில்ல = இ. கா. வி. எ. + இல்ல. நி.கா. கரெயுவுதில்ல = எ. கா. தொ. பெ. + இல்ல. எ.கா. கரெயலிக்கில்ல = 4ஆம் வே. தொ. பெ. + இல்ல. துணைவினைகள் அல்ல : இது மரவல்ல = இது மரமல்ல. ஆகு : அரசனாகி, கட்டியாகி, தானாகி ஹோயித்து = தானாகப் போயிற்று, நோடுவதக்காகி = பார்ப்பதற்காக, ஊட்ட வாயித்து = உணவாயிற்று, நன்னிந்தாகுவதில்ல = என்னாலாகுவதில்லை, பரெயலாயித்து = வரையலாயிற்று (வரையப் பட்டது). ஆடு : மாத்தாடு = மாற்றமாடு (உரையாடு). ஆறு (ஆற்று) :ஆறெனு = ஆற்றேன் (என்னால் முடியாது). இல்ல : பரலில்ல = வரலில்லை (வரவில்லை), இல்ல (No). இரு : நோடியிரு=பார்த்திரு, மரவிருத்ததெ = மரமிருக்கின்றது. உண்டு : நனகெஹொலவுண்டு = எனக்குப் புலம் (நிலம்) உண்டு. ஒல் : ஒல்லெனு = ஒல்லென் (இசையேன்). கூடு : கூடது = கூடாது (தகாது). கொள் : நித்துகொள் = நின்றுகொள். தகு : பரத்தக்கது = வரத்தக்கது. பல் : பல்லெனு = வல்லேன் (என்னால் முடியும்). பேக்கு : கொடபேக்கு = கொடுக்க வேண்டும். பேடு : தின்னபேடு = தின்னவேண்டும். பேட : தின்னபேட = தின்னவேண்டாம். ஹொகு : ஒடது ஹோயித்து = உடைந்து போயிற்று. சிக்கதெ ஹோதரு = சிக்காது (அகப்படாமல்) போயினர். புணர்வினை பெயரொடுவினை: கைக்கொள்ளு, காப்பாடு (காப்பாற்று), மாத்தாடு, ஈடேரு, நெறவேறு, எதுருகொள்ளு, மேல்படு, புரயேறு, செண்டாடுசு முதலியன. வினையாகுவினை ஆகிரு (=ஆகியிரு), உண்டாகு, கொண்டாடு, இல்லாதே ஹோகு, பிட்டுபிடு, ஓடி ஹோகு, தெளுகொள் ஒப்பிக்கொள் , கொண்டுபரு (கொண்டுவா), கொண்டு கொள்ளு, வாங்கு, பீசாடு (வீசாட்டு) முதலியன. குறிப்புப் பெயரெச்சம் கெல (சில), ஹல (பல), கொஞ்ச, எல்லா, சன்ன (சின்ன), தொட்ட (=பெரிய), எளய (இளைய), ஹளே (பழ = பழைய), ஹொச (புது). குறிப்பு வினையெச்சம் தண்ணகெ (தட்பமாய்), நெட்டனெ, பக்கென (பொக்கென), பேகனெ (வேகமாய்), மெல்லனெ முதலியன. இடைச்சொல் சுட்டடிச் சொற்கள் ஆ, அகோ, அதோ, ஆக = அன்று, ஹாகெ (அப்படி), அந்து (அன்று), அந்த்த (அனைய), அந்த்து (அப்படி). வினாவடிச் சொற்கள் ஏ, ஏகெ (ஏன்), ஏன், எந்த்த (எனைய), எந்த்து (எப்படி), ஓ. குறிப்புச் சொற்கள் அய்யோ (ஐயோ), குய்யோ, மொர்ரோ (முறையோ), சீ, அம்மம்ம, ஜலஜல (சலசல), சும்மனெ, சுரீரென, சுறுசுறென, தளதள. தொடர்புச் சொற்கள் குறித்து, ஔகெ (உள்ளே), கெளகெ (கீழே), முந்தெ, ஹிந்தெ (பின்பு), ஹொரத்தெ (புறத்தே), எதுரு (எதிர்), மேலெ, மேகெ, கூட, நடுவெ, பெளிகெ (வெளுக்க), முஞ்ச்செ (முந்தே), சுத்தலு (சுற்றிலும்), மொதலு, உள, கீழ், முந்தெ (முன்பு), ஹிந்தெ (பின்பு), ஹொறகெ (புறகே). காலம்பற்றிய சொற்கள் இன்னு (இன்று), மொன்னெ (மூன்றாம் நாள்), நின்னெ (நெருநல்), நாளெ (நாளை), நாளித்து (நாளைநின்று), ஒடனெ (உடனே). அளவுபற்றிய சொற்கள் மட்டிகெ (மட்டுக்கு), வரெ, வரிகூ (வரைக்கு), இன்னு (இன்னும்), மத்து (மற்று), பேரெ (வேறெ), கூட. இணைப்புச் சொற்கள் ஆதரெ (ஆனால்), அகலி (அகல்=அல்லது), ஆதரு (ஆனாலும்), ஆதுதரிந்த (ஆதலினாலே), உம், அல்லதெ (அல்லாதே), இல்லதெ. விளிபற்றிய சொற்கள் ஓயி, ஓ, எலே. பால்காட்டும் விகுதிகள் ஆ.பா: அன் > அனெ, அனு, அ. காரன் > கார > ஆர. பெ.பா: அள் >mbs, அளு. இ, இதி, இத்தி > வித்தி > கித்தி. அனி > இனி பலர்பால்: அர் > அரெ, அரு. கள் > களு. ஒ. பா: அது > து, இது, உது. ப. பா: கள் > களு, அவை > அவெ, அவு. தொடர்ச்சொல் காடஜேனு (காட்டுத்தேன்), திக்கில்லாத, கண்ணீரு, நெலமட்ட, மொதலாத (முதலான), மொதலுகொண்டு... வரெகூ, இல்லவேயில்ல, நம்பத்தக்கது, துண்டுதுண்டாகி, பேரெபேரெ (வேறே வேறே), நட்டநடுவே, ஆட்ட பாட்டகளு, ஒந்தொந்து (ஒவ்வொன்று), இன்னெந்து, மத்தொந்து (மற்றொன்று), பேரொந்து (வேறொன்று), ஒந்துவேளி (ஒரு வேளை), நடவளிக்க (நடபடிக்கை), கண்ணாரெ, தலெகட்டு, அட்டுப்பு, எளநகெ (இளநகை), கடஹுட்டு (கடைக்குட்டி), கும்பட்டெ (கும்பு கட்டி), சுத்முத்த (சுற்றுமுற்றும்), கெங்கண் (செங்கண்), கெந்தளிர் (செந்தளிர்), கெந்தூள் (செந்தூள்), மழெகால, தொடெவாழை (தொடைவாழை), நாடாடி (நாடோடி), பச்சகல்லு, பட்டசாலெ, ஹலசரக்கு, ஹள்ளத நாலெ (பள்ளநாலி), ஹள்ளமட (பள்ளமடை), பன்னாடெ, பன்னீர், ஹாவாடிசு (பாம்பாட்டு), ஹாழூரு, பாளெயப்பட்டு, ஹிங்கட்டு முரிகட்டு (பின்கட்டு மறிகட்டு), பீக்கலாட்ட, பெர்பசிறு (பெருவயிறு), மாலுகண் (மாறுகண்), மோடாமோடி, பிளிநரி (வெள்நரி), பச்செல, பெள்ளானெ (வெள்ளானை), பெர்படெ (பெரும் படை), பெந்நீர் (வெந்நீர்), ஹுலிதொகலு (புலித்தோல்), தாயிதந்தெகளு, அண்ண தம்மந்திரு, எந்தெந்திகூ (என்றென்றைக்கும்). சொற்றொடர்கள் அது யாரு? கள்ளரு ஓடி ஹோதரு (போனார்), கோலு முரிது ஹோயீத்து (முறிந்து போயிற்று), மனெகெ ஹோகுவ ஹொத்தாயித்து = மனைக்குப் போகிற பொழுதாயிற்று. ஈ ஊரினல்லி நனகெ ஒந்து மனெயு இதே = இவ்வூரில் எனக்கு ஒரு மனை இருக்கிறது, ஹுடுகரு தோட்டதல்வி திருகாடுத்தா மரகளன்னு ஹத்தூத்தா ஹண்ணு தின்னுத்தா ஒப்பரனொப்பரு கூகுத்தா ஹெகரன்னு ஹிடிது கரையுத்தா நகுத்தா ஆடுத்தா இத்தரு = பையன்கள் தோட்டத்தில் திரிந்து கொண்டும் மரங்களில் ஏறிக்கொண்டும் பழங்கள் தின்று கொண்டும் ஒருவரை யொருவர் கூவி (கூப்பிட்டு)க் கொண்டும் பெயரிட்டுக் கரைந்து (அழைத்துக்) கொண்டும் நகைத்துக் கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். ஹுடுகரு = பொடியர் அல்லது பிடுகர். நீவாகலி நானாகலி ஹோகுவதில்ல = நீங்களாகல் நானாகல் போகுதிவல்லை. ஆகல் = ஆவது. நீவு ஆ கதெயன்னு ஓதித புஸ்தவன்னு நனகெ தோறிசிரி = நீங்கள் அக் கதையை ஓதின (படித்த) புத்தகத்தை எனக்குக் காட்டுங்கள். தோறு > கிதான்று. தோறிசிரி (பி.வி.) நன்ன ஊரன்னு சேரிதகூடலெ நிமகெ ஒந்து காதகவன்னு பரெயுவெனு = என் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் உமக்கு ஒரு காகிதம் வரைவேன். மக்களெல்லரு பாடசாலெயன்னு பிட்டு, தம்ம தம்ம மன களிகெ ஹொறட்டு ஹோத பளிக்க ஜவானனு பாகிலுகளன்னு முச்சி பிடுவன்னு = மக்க (பிள்ளைக) ளெல்லாரும் பாடசாலையை விட்டுத் தம்தம் மலைகளுக்குப் புறப்பட்டுப் போன பிறகு சேவகன் வாசல்களை மூடிவிடுவான். நாளெவார ஊரினல்லி இருவிரோ எம்புதாகி அவரன்னு கேளு = நாளை (அடுத்த) வாரம் ஊரில் இருப்பீரோ என்பதாக அவரைக் கேள். மழெயு பாரதித்தரெ பெளெ யாகுவவுதில்லை = மழை வராதிருந்தால் விளை (விளையுள்) ஆகுவதில்லை. விதைக்கிறவன் உவமை இகோ, பித்துவவனு பித்த ஹொரட்டனு. அவனு பித்துவாக கெலவு மார்கத ஹத்தர பித்து. பஷிகளு பந்து அதன்னுதிந்து பிட்டவு. பேரெ கெலவு பஹள வண்ணு இல்லாத பண்டெஸ்தள களல்லி பித்து; அதக்கெ ஆளவாத மண்ணு இல்லத காரண, சங்கடலே மொளியித்து; ஆதரெ சூர்யனு மூடிதாக அது பெந்து அதக்கெ பேரு இல்லாததரிந்த ஒணகி ஹோயித்து. பேரெ கெலவு முள்ளுகள மேலெ பித்து, முள்ளுகளு பெளெது, அணகிசிதவு, பேரெ கெலவு ஒள்ளே பூமிய, மேலெ பித்து, ஒந்து நூ, ரஷ்டு, ஒந்து அரவத்தஷ்டு, ஒந்து மூவத்தஷ்டு பல கொட்டத்து, கேளுவதற்கெ கிவிகளுள்ளவனு கேளலி. இதோ, வித்துகிறவன் வித்தப் புறப்பட்டான், அவன் வித்துகையில் சில வழியருகே விழுந்து, பறவைகள் வந்து அதைத் தின்றுவிட்டன. வேறே சில மிகுந்த மண் இல்லாதபாறை யிடங்களில் விழுந்தது. அதற்கு ஆழமான மண் இல்லாத காரணமாய் விரைந்து முளைத்தது; ஆனால் வெயில் ஏறினபோது அது வெந்து, அதற்கு வேரில்லாததால் உணங்கிப் போயிற்று, வேறே சில முட்கள் மேலே விழுந்தது. முட்கள் வளர்ந்து அதை நெருக்கிவிட்டன. வேறே சில நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று நூறாகவும் ஒன்று அறுபதாகவும் ஒன்று முப்பதாகவும் பலன் கொடுத்தது. கேட்கிறதற்குச் செவிகளுள்ளவன் கேட்கக் கடவன். குறிப்பு: மெய்மறை (சத்திய வேதம்) என்னும் கிறித்தவ மறையின் மொழிநடை விடைத்தொண்டராதலால், மேற்கூறிய உவமையில் அஃறிணைப் பன்மையெழுவாய்கள் ஒருமை வினையொடு முடிந்தன; பன்மைச் சொற்கு ஒருமைச்சொல் வந்தது. 3 தெலுங்கு தெலுங்குநாட் டெல்லை தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற்காட்டிலிருந்து சிக்காக்கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், கொடுக்கப்பட்ட கோட்டங்கள் (Ceded districs) கர்நூல் ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி நாகபுர நாட்டின் ஒரு பகுதி கோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய் மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு. தெலுங்குப் பெயர் தெலுங்கிற்கு வடுகு ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது; வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆயராலும் இடப்பட்டன. தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் என்பது. இது முதலாவது தெலுங்குநாட்டுப் பெயராயிருந்து பின்பு அந் நாட்டு மொழியைக் குறித்தது. ஆந்திரம் என்பதும் இங்ஙனமே. தாலமி என்னும் ஞால நூலாசிரியர் த்ரிக்ளுப்தொன் த்ரிக்ளுப்தொன், ‘Triglupton’ ‘Triglupton’ என ஒரு கங்கைக் கரை நாட்டையும், பிளினி என்னும் சரித்திராசிரியர் மெர்டொகலி கம் (மூன்று கலிங்கம்) என ஓர் இந்திய நாட்டையும் குறித்திருப்பதனாலும், ஒரு பண்டை இந்திய அரச மரபினர் `திரிகலிங்கத் தலைவர் என்னும் பட்டத்தைச் சூடிக் கொண்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுவதாலும், புராணங்களிலும் ஒரு செப்புப் பட்டயத்திலும் திரிகலிங்கம் என்னும் பெயர் காணப்படுவதா லும், பிளினி என்பவர் fȧf¤âD«(Calingae) வேறாக மக்கோ-கலிங்கே (Macco-Calingae), கங்கரிதெசு - கலிங்கே (Gangaridas-Calingae) என இரு நாடுகளைக் குறிப்பதாலும், பாரதத்துள் கலிங்கர் மும்முறை குறிக்கப்படு வதாலும், கலிங்கம் (ஒரிசா மாகாணமும் கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்கு நாடிருந்ததாலும், பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியா யிருந்ததென்றும், அதனால் திரிகலிங்கம் எனப்பட்ட தென்றும் அறியலாம். திரிகலிங்கம் என்பது, முறையே திரிலிங்கம் - தெலுங்கம் - தெலுங்கு என மருவிற்று. தாரநாதன் என்னும் திபேத்தச் சரித்திராசிரியர் தெலுங்கு நாட்டைத் திரிலிங்கம் என்றும், அதன் ஒரு பகுதியைக் கலிங்கம் என்றும், அதன் தலைநகர் கலிங்கபுரம் என்றும் குறித்துள்ளார். தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க, தெலுகு, தெனுங்கு தெனுகு என்னும் வடிவங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கிவருகின்றது. ït‰WŸ bjDF v‹D« tot¤ij¢ áwªjjhf¡bfh©L mj‰F¤ ‘nj‹ ngh‹wJ’ v‹D« bghUŸ f‰ã¥gJ bjY§F¥ g©oj® tH¡f«!* தெலுங்குநாட்டு வரலாறு முதன் முதன் தெலுங்குநாட்டைப் பற்றிக் குறிப்பாகத் தெரிவிப்பது தொல்காப்பியம். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தாலும், செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி என்னும் தொல்காப்பிய நூற்பாவின் உரையாலும், வடதிசை மருங்கின் வடுகு1 வரம்பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் என்னும் சிறுகாக்கைபாடினியார் கூற்றாலும், தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கு வடக்கில் கொடுந்தமிழ் வழங்கிற்றென்றும், அது பின்பு திரிந்து வடுகு (தெலுங்கு) என்னும் கிளைமொழி யாயிற்றென்றும் அறியலாம். * இது தென்மொழி என்னும் தமிழ்ப்பெயர்க்குத் தேன்மொழி என்று தமிழ்ப் புலவருட் சிலர். பொருள் கூறுவதை ஒக்கும். 1. வடுகு - வடவெல்லையிலுள்ள வடுக நாடு. கலிங்கத்திற்கு வடக்கில் ஆந்திரம்1 என ஒரு தெலுங்கு நாடிருந்ததென்றும், ஓர் ஆந்திர அரச மரபினர் வட இந்தியாவையும் ஆண்டு வந்தனரென்றும், வடமொழி இருக்குவேத ஐத்திரேய பிரமாணத்தாலும் இதிகாச புராணங்களாலும் அறியக் கிடக்கின்றது. ஆந்திரரை ஐத்திரேய பிரமாணம் அநாகரிகராகக் குறிப்பிடினும் பிளினி, ஒரு வலிமைமிக்க நாட்டாராகக் கூறியுள்ளார். பியூட்டிங்கர் பட்டிகை களிலும் (Pautinger Tables) ஆந்திரர் குறிக்கப்படுகின்றனர். சேரன் செங்குட்டுவனுக்கு வடநாட்டுச் செலவில் துணைவரான நூற்றுவர் கன்னர் ஆந்திர மன்னரா யிருந்திருக்கலாம். ஆந்திரர் நெடுங்காலமாக ஒரு தனி மன்பதையராக இருந்து வந்திருக்ன்றனர்; எனினும், அவரது மொழி கடைக் கழகக் காலம் வரயில் கொடுந்தமிழாயும் கிளைமொழியாயுமிருந்து அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் இனமொழியாய்ப் பிரிந்துவிட்டது. கடைக்கழகக் காலத்தில் வேங்கட வெல்லையில் தெலுங்கு இருந்ததில்லை. அன்று வேங்கட மலை புல்லி என்னும் தமிழ் வள்ளலுக் குரியதாயிருந்தது. புல்லிய - வேங்கட விறல்வரைப் பட்ட (புறம்.385) கடுமான் புல்லிய காடிறந் தோரே (அகம்.) தொண்டை மண்டலத்து வேங்கடக் கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான பொத்தப்பி நாடு கண்ணப்ப நாய னார் திருநாடாகும். கண்ணப்பர் திருநா டென்பர்..... பொத்தப்பி நாடு (பெரிய. கண். 1.) வேங்கடமலை தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்தைச் சேர்ந்தது. பல்குன்றக் கோட்டமென்பது தொண்டை நாட்டின் பெரும்பிரிவாகிய 24 கோட்டங்களுள் ஒன்று..... பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் சிலாசாசன (கல்வெட்டு) வாக்கியத்தால் திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல்குன்றக் கோட்டத்துள்ளதென்று தெரிகிறது. குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே (மலைபடு. 583) என்பது இதனை வலியுறுத்தும். (பத். சாமிநா. ப. 57 1. திருகலிங்கத்துள் அடங்காது ஆந்திரம் என ஒரு தெலுங்கு நாடும் இருந்ததேனும் திரிகலிங்கப்பெயர் பொதுப் பெயராவதற்கு இழுக்கில்லை ஆங்கிலர் சாக்சனியர் சூட்டர் ஆகிய மும்மரபினர் குலநாடும் மொழியும் ஆங்கிலம் என்னும் பெயரால் வழங்குதல் காண்க. தெலுங்கு மொழியை முதன் முதலாகக் குறிப்பிட்ட அயலார் 7ஆம் நூற்றாண்டினரான ஹுவென் த்சாங் (Hwen Thsang) என்னும் சீனத் திருப்போக்கர் (யாத்திரிகர்). சுரஞ்செல் கோடுயர் கதுமென விசைக்கு நரம்பொடு கொள்ளு மத்தத் தாங்கட் கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்ற நீந்தி (நற்.212) என்று குடவாயிற் கீரத்தனாரும், குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே (குறுந். 11) என்று மாமூலனாரும், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு (சிலப். 8 : 1 -2) என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், கடைக்கழகக் கலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தெலுங்கு வழங்கவில்லை யென்பது வெளிப்படை. நம்பியாரூரர் (சுந்தரமூர்த்தியடிகள்) சேரநாடு சென்று மீண்டபோது, அவர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்ற பொருளைத் திருமுருகன் பூண்டியில் சில வடுகர் (அல்லது வடுகவடிவில் வந்த சிவபூதங்கள்) வழிப்பறித்ததால், 9ஆம் நூற்றாண்டிலேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறிவிட்டனர் என்பது போதரும். கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொ டாறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டிமா நகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிருந்தீரெம் பிரானிரே என்பது நம்பியாரூரரின் திருமுருகன் பூண்டிப்பதிக முதற் செய்யுள். வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார் (தொல். சொல். சேனா. மேற். 91) என்பது ஒரு பழஞ் செய்யுள். இவற்றினாலும், யாழ்ப்பாண அகராதியில் வடுகன் என்னும் பெயருக்கு மூடன் என்றும் பொருள் கூறியிருப்பதாலும், முதன்முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த வடுகர் (கம்பளத்தார்) முரடராயிருந்தன ரென்றும், தமிழர் அவரொடு உறவாடவில்லை யென்றும் அறியலாம். நீரெலாம் சேற்று நாற்றம் நிலமெலாங் கல்லும் முள்ளும் ஊரெலாம் பட்டி தொட்டி உண்பதோ கம்பஞ் சோறு பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும் காருலாங் கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொ ணாதே வடகலை தென்கலை வடுகு கன்னடம் இடமுள பாடையா தொன்றி னாயினும் திடமுள ரகுகுலத் திராமன் றன்கதை அடை வுடன் கேட்பவ ரமர ராவரே என்று கம்பர் பாடியிருப்பதால், 12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வடுகர் நிலைத்துவிட்டனர் என்பதை அறியலாம். கோதாவரி, கிருட்டிணா கோட்டங்களைச் சேர்ந்ததும் கீழைச் சாளுக்கியம் எனப்பட்டதுமான வேங்கைநாட்டை 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளிற் சோழமன்னர் ஆண்டு வந்தனர்; கீழைச் சாளுக்கியருடன் மணவுறவும் பூண்டனர். முதலாம் இராசேந்திர சோழன் வடக்கிற் படையெடுத்துச் சென்று கங்கை நாடு வரை அடிப்படுத்தினான். கி.பி. 1115-ல் முதற் குலோத்துங் கன் தனக்குக் கலிங்க நாட்டுத் தெலுங்க மன்னன் திறை கொடுக்க மறுத்தமை காரணமாகத் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானை ஏவி அவனொடு பொருது வென்றான். மெய்க்கூத்தாவது, தேசி வடுகு சிங்களமென மூவகைப் படும், சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலாகிய வடுகிற்குரிய கால்களும், ஒற்றையும் இரட்டையும் தேசிக் கூறாகலானும் இரட்டையும் இரட்டைக்கிரட்டையும் வடுகிற் கூறாகலானும், வடுகும் மட்டதாள முதலாக ஏக தாள மீறாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னரென்க. என்னை? `வைசாக நிலையே வடுகிற்கும் வரையார் என்றாராகலின் என்று (சிலப். 3 உரை) அடியார்க்குநல்லார் கூறியிருப்பதால், கடைக்கழகக் காலத்திலேயே வடுகக் கூத்தும் தமிழ்க் கூத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப்பட்டிருந் தமை புலனாம். இதனால், வடுகு தோன்றாத முதற் காலத்திலேயே நாடகத்தமிழ் தோன்றிற்றென்றும், வடுக நாட்டுப் பகுதிக்குரிய தமிழ்க் கூத்தே பின்பு வடுகு என்னும் தனிப் பெயரால் வழங்கத் தலைப்பட்டதென்றும் உய்த்துணரலாம். மாற்றம் (மாட்ட), செப்பு முதலிய தமிழ்ச்சொற்களே பிற்காலத்தில் சிறிது பொருள் திரிந்து தெலுங்குச் சொற்கள் என்று சொல்லப்படுவதை இதனுடன் ஒப்பு நோக்குக. வடுகரச ராயிரவர் மக்களை உடையர், `வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய வரசர் என்னுந் தொடர்களைச் சேனா வரையர் எடுத்துக்காட்டாகக் கூறியிருப்பதால், இடைக்காலத்தில் வடுக வரசர்க்கும் சோழர்க்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு புலனாம். 15ஆம் நூற்றாண்டில் வீரசேகர பாண்டியனுக்கும் சந்திர சேகர சோழனுக்கும் பகைமை நேர்ந்தபோது, முந்தியவன் வேண்டுகோட்கிணங்கி விசயநகரத் தரசராகிய கிருட்டின தேவராயர் தம் படைத் தலைவராகிய நாகம நாயக்கரை அனுப்ப, அவர் சென்று சோழனை வென்றார். அதிலிருந்து சோழ பாண்டி நாடுகள் நாயக்க மன்னர் கைப்பட்டன. தெலுங்கர் பலர் தமிழ்நாட்டிற் குடியேறினர். அவருள் நாய்க்கர் (நாயுடு), இரெட்டியார் என்பவர் தலைமையானவர். கம்பளத்தாரும் சக்கிலியருமாகிய தெலுங்கர் 9ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டிற் குடியேறிவிட்டனர். அவரே முதன்முதல் வடுகர் எனப்பட்டவர். 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் பாண்டியர் வலி குன்றியதாலும், தெலுங்கர் பலர் தமிழ்நாட்டிற் குடியேறிவிட்ட தாலும், பாண்டி நாட்டில் பல தெலுங்க வேளிரும் குறுநில மன்னரும் தோன்றினர். அங்ஙனத் தோன்றிய வேளகங்களுள் எட்டயபுரமும், பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை. தெலுங்கர் தமிழ்நாட்டிற் குடியேறவே, தனித்தமிழ் நிலையங்களாயிருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, திருத்தணிகை முதலிய வடபாற் சிவநகரங்கள் இருமொழி நிலையங்களாக மாறிவிட்டன; தெலுங்குநாட்டை யடுத்த தமிழரும் தெலுங்கைக் கற்றுத் தெலுங்கராக மாறிவருகின்றனர். தெலுங்கு தற்போது மிகுந்த வடமொழிக் கலப்புள்ளதா யிருந்தாலும், ஒரு காலத்தில் வடமொழி மணமேயில்லாத கொடுந்தமிழ் வகையா யிருந்ததே. இன்றும் தெலுங்கு நாட்டூர்ப் பெயர்கள் பல ஊர் (பாலூரு), புரம் (அனந்தபுரம்), மலை (அனிமலை), குடி (தேவகுடி), கோடு (முனுகோடு), கோட்டை (கண்டிகோட்ட), பேட்டை (நேக்குணாம்பேட்ட), பள்ளி (கொத்த பல்லி), குன்றம் (பெல்லம் கொண்ட), கல் (மின்னக்கல்லு), பாலம் (நாயனிப்பாலம்), கூடம் (நடிகூடெம்), குளம் (ஸ்ரீகாகுளம்), வீடு (பட்லவீடு), மந்தை (எல்லமந்த), புரி (நெமலிபுரி), சாலை (கண்ட்டசால), பட்டினம் (விசாகப்பட்ணம்), பாடு (தாவிப்பாடு), தலை (குர்னூதல) எனத் தனித்தமிழ் ஈற்றனவாயே யுள்ளன. தெலுங்கு திரியக் காரணங்கள் 1. தட்பவெப்ப நிலையும் நிலத்தியல்பும். 2. மக்கட்பெருக்கம். 3. பண்டையிலக்கிய விலக்கணமின்மை. 4. தமிழரொடு உறவு கொள்ளாமை. 5. தமிழ் நூல்களைக் கல்லாமை. 6. ஒலிமுறைச் சோம்பல். 7. வடசொற் கலப்பு. தெலுங்குச்சொல் வரிசைகள் 1. பெயர்ச் சொற்கள் 1. மூவிடப் பெயர் (இடம் தமிழும் வலம் தெலுங்கும்) யான், நான் - நேனு; யாம் - மேமு; நாம் - மனமு; நீன், நீ - நீவு; நீர் - மீரு; அவன் - வாடு; அவர் - வாரு; அது - அதி (அவள், அது); அவை - அவி; தான் - தானு; தாம் - தாமு தமரு. 2. வினாப் பெயர் எவன் - எவடு; எவர் - எவரு; ஏது > எது; ஏதி (எவன் எது); எவை - ஏவி. 3. முறைப் பெயர் தாத்தா - தாத்த; தந்தை - தண்ட்ரி; அண்ணன் - அன்ன; தம்பின், தம்பி - தம்முடு; மாமன் - மாம; பிள்ளை - பிட்ட, பில்ல; அவ்வை - அவ்வ; தள்ளை - தல்லி; அக்கை - அக்க; அத்தை - அத்த; பிடுகு - கொடுக்கு, அப்பன் - அப்ப. 4. விலங்குப் பெயர் ஆ - ஆவு; எருது - எத்து; எருமை - எனுகு; குக்கல் - குக்க; கழுதை - காடிதெ; குதிரை - குர்ரமு; கிடாரி - கேதெ; பன்றி - பந்தி; ஏழகம் - ஏலிக்க; கொறி - கொர்ரெ; புலி - புலி; எண்கு - எலுகு; யானை - ஏனுக; நரி - (நரிக) நக்க; சிவிங்கி - சிவங்கி. 5. பறவைப் பெயர் கோழி - கோடி; ஈ - ஈக; வாத்து - பாத்து; மயில் - நெமலி; காக்கை - காக்கி; மின்வெட்டும் பூச்சி - மினுகுருப்பூச்சி; புறவம் - பாவுரமு; தேனீ - தேனெட்டீக; கொக்கு - கொங்க்க; கூகை - கூப; உள்ளான் - உள்ளங்கி. 6. ஊர்வனவற்றின் பெயர் பாம்பு - பாமு; பேன் - பேனு; பல்லி - பல்லி; புழு - புருகு, புருவு; தேள் - தேலு; மூங்கா - முங்கீசு; எலி - எலுக; சுண்டு (எலி) - சுஞ்சு. 7. நீர்வாழ்வனவற்றின் பெயர் மீன் - மீனு; சுறா - சோர; முதலை - மொசலி; நண்டு - எண்ட்ரி; சிப்பி - சிப்பி; நத்தை - நத்த; நீர்நாய் - நீருக்குக்க. 8. மரஞ்செடிப் பெயர் மரம் - ம்ரானு; செடி - செட்டு; சீத்தா - சீத்தா; வேம்பு; வேமு; அத்தி - அத்தி; அரசு - ராய்; பலா - பனச; அன்னாசி; அன்னாச; மா - மாமிடி; தாளி - தாட்டி; அரம்பை - அரட்டி; தெங்கு - தெங்காயச்செட்டு; வாதுமை - பாதமு; வெதிர் (மூங்கில்) - வெதுரு; மல்லிகை - மல்லிக்க; தாமரை - தாமர; நாற்று - நாறு; புதர் - பொத; புல் - புல்லு; பாசி - பாச்சி, அகில் - அகரு. 9. கருவிப் பெயர் ஆணி - ஆணி; காறு - கர்ரு; கத்தி - கத்தி; கத்தரி - கத்திரி; கோடாலி - கொட்டலி; கரண்டி - கரிட்டெ; ஈட்டி - ஈட்டெ; அலகு - அலுகு, ஆக்கு; கறுழ் - கள்ளெமு; முள் - முள்ளு; துப்பாக்கி -துப்பாக்கி; அகப்பை - அப்பக்க; கேடகம் - கேடெமூ; சல்லடை - சல்லெட; நிறுவை (தராசு) - நிலுவ; கதிர் - கதுரு; வில் - வில்லு; கோல் - கோல; கம்பி - கம்மி; கட்டை - கட்டெ; அம்பு - அம்மு; வாணம் - பாணமு; பீரங்கி - பிரங்கி; வல்லயம் - பல்லெமு; செக்கு - செக்கு; உரல் - ரோலு; நாஞ்சில் - நாகேலு; திரிகல் - திருகல்லு; முசலம் (உலக்கை) - முசலமு; கொடுவாள் - கொடவலி; அரம்பம் - ரம்பமு; உளி - உலி; கட்டாரி - கட்டாரி, வாள் - வாலு, அங்குசம் - அங்குசமு. 10. ஐம்பூதப்பெயர் நிலம் - நேல; நீர் - நீரு; நெருப்பு - நிப்பு; கால் - காலி, ஆவி - ஆவி; விண் - வின்னு, வினு. 11. உலோகப் பெயர் இரும்பு - இனுமு; உருக்கு - உக்கு; வெள்ளி - வெண்டி; வங்காரம் - பங்காரு; பித்தளை - இத்தடி; (எர்) இராகி - ராகி (செம்பு), தகரம் - தகரமு. 12. ஊர்திப் பெயர் வண்டி, பண்டி - பண்டி; ஓடம் - ஓட; படகு - படவ; நாவாய் - நாவ; தோணி - தோனெ; சிவிகை - சிபுக்க; பாடை - பாட; தேர் - தேரு. 13. உணவுப்பெயர் தோசை - தோச; இட்டலி - இட்டென; பச்சடி - பச்சடி; இரை - எர; தீனி - தீனி; தின்றி - திண்டி; உப்பு - உப்பு, பால் - பாலு; வெண்ணெய் - வென்ன; அப்பம் - அப்பமு; கஞ்சி - கஞ்சி; நெய் - நேயி; தேன் - தெனெ; தவிடு - தவுடு; பருப்பு - பப்பு; பொட்டு - பொட்டு; உமி - உமக்க; சாமை - சாமலு; கள் - கள்ளு; மிளகு - மிரியமு; மிளகாய் - மிரப்பக்காய; உள்ளி - உல்லிகட்ட; வெள்ளுள்ளி - வெல்லுல்லி; பயறு - பெசலு; இறைச்சி - எறச்சி; அட்டு - அட்டு; அப்பளம் - அப்பளமு; ஆமைவடை - ஆமவட. 14. ஆடையணிப் பெயர் பட்டம் - பட்ட (துணி); பட்டு - பட்டு; கம்பளி - கம்படி; நடுக்கட்டு - நடிக்கட்டு (அரைக்கச்சை); கச்சை - கச்ச; பாகை பாக; கடிகை - கடியமு; பாசி - பூச; மணி - மணி; பவழம் - பகடமு; செருப்பு - செப்பு; அட்டிகை - அட்டிகலு; சட்டை - சட்ட; உடுப்பு. 15. தட்டுமுட்டுப் பெயர் பெட்டி - பெட்ட; குடை - கொடுகு; தொட்டி - தொட்டி; படுக்கை - படக்க; சாய்கை - சாய்ய; மெத்தை - மெத்த; படுப்பு - பருப்பு; புட்டி - புட்டி. 16. இடப்பெயர் நாடு - நாடு; தீவ - தீவ; வைப்பு - வைப்பு; இடம் - எடமு; தாவு - தாவு; இல் - இல்லு; குடிசை - குடிசெ; அறை - அர; தெரு - தெருவு; ஊர் - ஊரு; சந்து - சந்து; தோட்டம் - தோட்ட; கோட்டை - கோட்ட; சாலை - சால; புறக்கடை - பெறடு; பந்தல் - பந்தலி; தோப்பு - தோப்பு; கடல் - கடலி; குன்று - கொண்டெ; கணவாய் - கணம; களஞ்சியம் - கணஜமு; ஆறு - ஏரு; புலம் - பொலமு; களம் - கள்ளமு; செறு (வயல்) - சேனு; வயல் - பயலு; மண் - மன்னு; குகை - குஹ; குண்டு - குண்ட்ட; கால்வாய் - காலுவ; எல்லை - எல்ல; அடவி - அடவி; காடு - காடு; பள்ளி - படி; அகழி - அகட்த; அண்டை - அண்ட; அங்கணம் - அங்கணமு; அணைக்கட்டு - அட்டகட்ட. 17. காலப் பெயர் காலம் - காலமு; நிலா - நெல (மாதம்); பகல் - பகலு; ஆண்டு - ஏடு; வேளை - வேள; நெருநெல் - நின்ன; முன்னாள் - மொன்ன; இன்றைக்கு - நேட்டிக்கு; இராத்திரி - ராத்ரி; சாயுங் காலம் - சாயங்காலமு; பொழுது - ப்ரொத்து; பருவம் - பருவமு; சமையம் - சமயமு; நாள் - நாடு. 18. சினைப்பெயர் தலை - தல; நுதல் - நுதரு; கண் - கன்னு; கண் புருவம்; கனுபொம; கண்ணீர் - கன்னீரு; மூக்கு - மூக்கு; பல் - பல்லு; நாக்கு - நாலுக; செவி - செவி; தாடி - தாடி; தவடை - தவட; முகம் - முகமு; மீசை - மீசமு; எச்சில் - எங்கிலி; மிடறு-மெட; கை-சேயி; முட்டி-முஷ்டி. முழங்கை - மோச்கெயி; விரல்-வேலு, வ்ரேலு; உகிர்-கோரு; உரம் - உரமு; உள்ளம் - உல்லமு; நடுவ - நடுமு; தொடை - தொட; முழங்கால் - மோக்காலு; குதிங்கால் - குதிகாலு; தோல்-தோலு; அகடு-கடுப்பு; அரந்தம் - ரத்தமு; நரம்பு - நரமு; நாடி-நாடி; கொழுப்பு-கொவ்வு; கொம்பு-கொம்மு; வேர்-வேரு; அலக்கு-ஆக்கு; கொம்பு (கிளை)-கொம்ம; நார்-நார; முள்-முல்லு; வார்-வாரு; மூளை-மூளுக (marrow); நெய்த்தோர் - நெத்துரு; பித்தம் - பித்தமு; எலும்பு - எமுக்க; மூளை - மூலுக; தோகை - தோக; இறகு-ஈக்க; காய்-காய; மொக்கு-மொக்க; பூ-புவ்வு; பின்பு - வீப்பு; பட்டை - பட்ட; முளை - மொலக்க (shoot); அடி-அடுகு; மருமம் - ரொம்மு. 19. உறுப்பறைப்பெயர் கூன் - கூனு; குருடு - குட்டு; மூங்கை, மூகு - மூக; நொண்டி - மொண்டி; செவிடு - செவுடு; மூடன் - மூடுகு. 20. வண்ணப் பெயர் வெள்ளை - வெல்ல; தெள் - தெளுப்பு (வெள்ளை); நீலம் - நீலமு; மால்-நலுப்பு (கருப்பு); எர்-எருப்பு (சிவப்பு); காவி-காவி; பச்சை - பச்ச; பழுப்பு - பசுப்பு (மஞ்சள்); செம்பு - கெம்ப்பு. 21. எண்ணுப் பெயர் ஒன்று - ஒகட்டி; இரண்டு - இரடு; மூன்று - மூடு; நால்கு - நால்கு; ஐந்து - அயிது; ஆறு - ஆறு; ஏழு - ஏடு, எட்டு - எனிமிதி; ஒன்பது - தொம்மிதி; பத்து - பதி; பதினொன்று - பதகொண்டு, பதுனோகட்டி; பன்னிரண்டு - பன்னெண்டு, பண்ட்ரெண்டு; பதின்மூன்று - பதமூடு, பதுமூண்டு; பதினான்கு - பத்னாலுகு, பதுநாலுகு; பதினைந்து - பதிஹேனு, பதுனயிது; பதினாறு - பதஹாரு, ப்துனாறு; பதினேழு - பதிஹேடு, பதுனேடு; பதினெட்டு - பத்தெனிமிதி, பதுனெனிமிதி; பத்தொன்பது - பந்தொம்மிதி; இருபது - இருவை, இருவதி; முப்பது - முப்பை, முப்பதி; நாற்பது - நலுபை, நலுவதி; ஐம்பது - யாபை, ஏம்பதி; அறுபது - அருவை, அறுவதி; எழுபது - டெப்பை, டெப்பதி; எண்பது - யெனவை, எனுபதி; தொண்பது - தொம்பை, தொம்பதி; நூறு - நூரு, நூறு; முதல் - மொதட்டி; நாலா - நானா. 22. சுவைப் பெயர் தீம் - தீப்பு; கைது - சேது; காரம் - காரமு; உப்பு - உப்பு; புளிப்பு - புலுசு; துவர் - வகரு. 23. நிறைப் பெயர் பலம் - பலமு; சேர் - சேரு; வீசை - வீச; மணங்கு - மணுகு. 24. நோய்ப் பெயர் தலைநோவு - தலநொப்பி; புண் - புண்ட்டி; குரு - குருப்பு; கட்டி - கட்ட; பெரியம்மை - பெத்தம்மவாரு; சின்னம்மை - சின்ம்மவாரு; திமிர் - திமுரு; காயம் - காயமு; நமை - நவ; காமாலை - காமால; மூலம் - மூலமு; சொறி - சொரி. 2. வினைச்சொற்கள் 1. சில முக்கிய வினைகள் - எண்-எஞ்ச்சு, என்; எரி - எரியு. வா-(வ்)ரா; போ - போ, போவு; நில்-நிலுச்சு; பரி (ஓடு) - பரு, பருகெத்து; வணங்கு (வளை) - வங்கு; எடு - எத்து; தின் - தின்னு; படு - படு; எழு-லெய்; ஈ-இச்சு; கொள் - கொனு; தும்மு - தும்மு; உமி, உமிழ் - உமியு; ஊது - ஊது; திருமு - திருகு; அடி - அடிச்சு; போடு - பெட்டு; நகு - நகு, நவ்வு; அழு-ஏடுச்சு; நக்கு - நாக்கு; கூவு - கூயு; விளி - பிலுச்சு; இழு - ஈடுச்சு; தூக்கு -தூக்கு; தட்டு - தட்டு; அதிர்-அதரு; நறுக்கு - நருக்கு; தொளை - தொளச்சு; முழுகு - முணுகு; சா - சச்சு; மாற்றமாடு - மாட்லாடு; நட - நடுச்சு; துடை - துடுச்சு; ஏற்று - எத்து; முடி - முகிஞ்சு; வை - வெய்; பிடி-பெட்டு; வாடு - வாடு; மேய்-மேயு; மற - மருச்சு; ஆள் - ஏலு; முனங்கு - மூலுகு; பாடு-பாடு; பிசை-பிசக்கு; அறி - எருகு; ஒடுங்கு - ஒருகு; பற - பாறு; முதிர் - முதுரு; கரை - கருகு; துண்டி- துண்டிஞ்சு; விழுங்கு - ம்ரிங்கு; பிடுங்கு - பீக்கு; முக்கு - முஞ்சு; பொழி-போயு; நம்பு - நம்மு; தூங்கு - தூகு; வதி - வதிஞ்சு, நீந்து - ஈது; புதை - பூடுச்சு; பூசு - பூயு; கல-கலியு; ஈன்-ஈனு; சிலுப்பு - சிலுக்கு; என் - அனு; சேர் - சேரு; விடு - விடுச்சு; கழுவு - கடுகு; அண்டு - அண்டு; மெச்சு - மெச்சு; புகழ - பொகடு; கலி - கலுகு; பிற - புட்டு; கிள்ளு - கிள்ளு; ஆடு - ஆடு; நெட்டு - நெட்டு; பொரு - பொரு; வித்து - வித்து; தப்பு - தப்பு; கீறு -கீறு; உடம்படு - ஒடம்படு; முட்டு - முட்டு; மோது - மோது; ஒப்பு - ஒப்பு; கட்டு -கட்டு; திட்டு - திட்டு; முத்தமிடு - முத்துப் பெட்டு; மதி-மதி; நீடு -நீடு; விசிறு - விசரு, விசுரு; பரவு - பருச்சு; மொத்து - மொத்து; வேண்டு - வேடு; கூடு - கூடு; அகப்படு - அக்கப்படு, அடங்கு - அடகு; அடுக்கு - அடுக்கு; அனுப்பு - அனப்பு; அமர் - அமரு; ஆறு - ஆறு; ஆராய் - ஆரயு; ஏற்படு - ஏர்ப்படு; உப்பு - உப்பு. 2. வினைச்சொல் வடிவங்கள் செய் என்னும் வினை தமிழ் செலுங்கு பகுதி - செய் சேசு, சேயு ஏவல் ஒருமை செய் சேயி, செய்யி, சேயுமு ஏவல் பன்மை 1. (செய்யும்) சேயண்டி செய்யுங்கள் செய்யண்டி 2. செய்ம்மின் (படர்க்கை ஆண்பால்) இ. கா. வினைமுற்று செய்தான் சேசினாடு நி. கா. வினைமுற்று செய்கிறான் சேஸ்நாடு எ. கா. வினைமுற்று 1. செய்வான் 1. - 2. செய்யும் 2. சேசுனு, சேயினு இ. கா. பெயரெச்சம் செய்த சேசின நி. கா. பெயரெச்சம் செய்கிற சேசே எ. கா. பெயரெச்சம் செய்யும் சேசே நி. கா. பெயரரெச்சம் 1. செய்து 1. சேசுகொனியுள்ள கொண்டுள்ள 2. - 2. சேஸ்துன்ன இ. கா. வினையெச்சம் செய்து சேசி நி. கா. வினையெச்சம் செய்ய சேய, செய்ய எ. கா. வினையெச்சம் செய்யின் brŒjhš, சேஸ்தே தொடர்ச்சி வினையெச்சம் 1. செய்து கொண்டு 1. சேசுகொனி 2. செய்து கொண்டு 2. சேஸ்து தொழிற்பெயர் செய்தல் சேயுட்ட, சேசுட்ட செய்கை சேயடமு, செயல் செய்யடமு செயப்பாட்டு வினைப்பகுதி செய்யப்படு சேயபடு தற்பொருட்டு வினைப்பகுதி செய்துகொள் சேசுகொனு பிறவினைப்பகுதி செய்வி சேயிஞ்ச்சு குறிப்பு: 1. செய் என்னும் வினையின் தெலுங்கு வடிவங்களிலெல்லாம் முதல் சகரத்தை ச்சு என்றாற்போல வலிதாய் உச்சரிக்க. 2. அடம் என்னும் தொழிற்பெயர் விகுதி தமிழுக்கு முண்டு. ஆகு என்னும் துணைவினைத் திரிபு தமிழ் தெலுங்கு பகுதி ஆ. ஆகு அவு ஏவல் ஒருமை ஆகு கா, கம்மு ஏவல் பன்மை (ஆகும்) ஆகுங்கள் கண்டி (படர்க்கை ஆண்பால்) இ. கா. வினைமுற்று ஆயினான் அயினாடு நி. கா. வினைமுற்று ஆகிறான் அவுத்தாடு எ. கா. வினைமுற்று 1. ஆவான் 1. - 2. ஆகும் 2. அவுனு இ. கா. பெயரெச்சம் ஆயின அயின நி. கா. பெயரெச்சம் ஆகிற அய்யே எ. கா. பெயரெச்சம் ஆகும் அய்யே இ. கா. வினையெச்சம் ஆய், ஆகி அயி நி. கா. வினையெச்சம் ஆக கா எ. கா. வினையெச்சம் ஆயின், ஆனால் அயித்தே தொடர் வினையெச்சம் 1. ஆய்க்கொண்டு அயிக்கொனி 2. 2. அவுத்து தொழிற்பெயர் ஆதல், ஆகை அவுட்ட, காவடமு கட்டளை வினை ஆகவேளும் காவாலா (ஆகவேண்டும்)vâ®kiwÉid ஆகாது காது விலக்கிணைப்புச் சொல் ஆயினும் அயின்து இணக்கவிடைச்சொல் ஆம் (ஆகும்) அவுனு கவனிப்பு: ஆகு என்பது தெலுங்கில் க்+ஆ என்று பிரிந்து முன்பின்னாய் மாறி, கா என இலக்கணப்போலி (Metathesis) யாதல் காண்க. ஆகுங்கள் என்பதில் ங்கள் என்னும் கூறு ண்டி என்றாதலையும் கவனிக்க. பெயரெச்சங்கள் சின்ன - சின்ன; பெரிய - பெத்த; கெட்ட - செட்ட; வேறு, வேறே - வேரே; வெற்று - வட்டி; நீள, நீடிய - நீடுத; குறு - குருச்ச; உள்ள - உன்ன; இலாத - லேனி; புது - கொத்த; பழைய - பாத்த; அரு - அருது, இள - எல; எல்லா - எல்ல; ஒண்டி - ஒண்ட்டி. வினையெச்சங்கள் மெள்ள - மெல்லகா; சரியாய் - சரிகா; முற்றிலும் - பொட்டிகா; முந்தி - முத்துகா; கெட்டியாய் - கட்டிகா; மிகுதியாய் - மிக்கிலிகா. இடைச்சொற்கள் ஏ - ஏ; ஓ-ஓ; ஆவா, ஆகா - ஆஹா, ஓகோ - ஓஹோ; அடே - அரே; அக்கடா - அக்கடா; அப்பா - அப்பா; ஐயோ - அய்யோ; மற்றும் - மறியு; மறித்தும் - மரல; சரி - சரி; குறித்து - குரிஞ்சி; முந்தி - முந்து; அதோ - அதிகோ. உம் - உன்னு, னு னி யு; கள் - லு; ங்கள் - ண்டி. Tl - Tlh; F - F, »; ÛJ - Ûj; Ñœ - »lªj; nkd - gÆd; ã‹D¡F - btD¡f; cŸ - nyh; cŸS¡F - nyh¡»; cS¥gl - nyhgy.` உரிச்சொற்கள் கடு (மிகு); வடி (கூர்) - வாடி; சால் - சாலு; சீர்த்தி, கீர்த்தி - கீர்த்தி. குறிப்பு: தமிழில் உரிச்சொல்லாயிருப்பவை தெலுங்கிலும் உரிச்சொல்லா யிருக்கவேண்டும் என்னும் யாப்புறவில்லை. உலகவழக்கற்ற செய்யுட் சொல்லே அல்லது செய்யுட் பொருள்பட்ட சொல்லே உரிச்சொல்லென் றறிக. சொற்றொடர் தனித்திரவிடச் சொற்றொடர் ஆ சின்னவாடு இப்புடு வ்ராஸ்துன்னாடு = அச் சிறுவன் இப்போது வரைந்து (எழுதிக்) கொண்டிருக்கிறான். எல்லுண்டி ஆவுலு ஆ பொலமுலோ மேஸ்தவி = நாளை நின்று ஆக்கள் அப் புலத்தில் மேயும். இதிவரக்கு செப்பின பனி நீவு சேயக போகா இங்க்கா பனி எட்லா இஸ்தானு = இதுவரைக்கும் சொன்ன பணி நீ செய்யாமலிருக்க (செய்யாது போக) இன்னும் பணி எப்படிக் கொடுக்கிறது (கொடுப்பேன்)? நேனு அதனிக்கி ஆ புஸ்தகமு இச்சினானனி மீத்தோ எவரு செப்பினாரு? நான் அவனுக்கு அப் பொத்தகத்தைக் கொடுத்தே னென்று உனக்கு எவர் சொன்னார்? ஆரியங் கலந்த சொற்றொடர் நேனு ஆ பனி சேயலேக்க போயினந்துன, ஜீதமு இவ்வகுண்டா வெள்ளகொட்டினாடு = நான் அப்பணி (வேலை)யைச் செய்யாது போனதினால், எனக்குச் சம்பளம் ஈயாமல் (கொடாமல்) துரத்திவிட்டான். வெள்ளகொட்டு = போகடி. ஆயன பாக்யவந்துடை உன்னப்பட்டிக்கி, தரித்துருனிவலெ ப்ரவர்த்திஸ்துன்னாடு = அவர் செல்வராயிருந்தாலும் வறியவர் போல நடக்கிறார். ஈரோஜு படவலு ரெண்டு கண்ட்டலதாகா உண்டக, த்வரகா வெள்ளிப் போயினவி = இன்றைக்குப் படகுகள் இரண்டு மணி வரைக்கும் இராமல் சுருக்காய்ப் போய் விட்டான். வர்த்தகமுவல்ல மீக்கு சாலா லாபமு கலுகுத்துன்னதா? வாணிகத்தால் உமக்குச் சாலவும் ஊதியம் பெருகுகிறதா? ஒரு கதை (பார்ப்பனியும் கீரிப்பிள்ளையும்) ``ஒக்க ஊரிலோ ஒக்க ப்ராஹ்மணுடு கலடு. அதனிவத்த ஒக்க முங்கி உண்டெனு. அதடு தான்னி பஹுஜாக்ரதகா பெஞ்ச்சுதூ உண்டெ. ஒக்கநாடு அதனிகி ஒக்க ஊரிகி போவலசின பனி வச்சினதி, கனுக, ஆ முங்கினிதனபாந்யக்கு ஒப்பகிஞ்சி போயெனு, மருநாடு மெதன பிட்டனு தொட்லலோ நித்ரபுச்சி, ஆ முங்கினி தொட்லதகிர காவலி உஞ்ச்சி. நீள்லு தோடுகொனி ராவடானக்கு வெள்ளிதி. அந்தலோ பிட்ட நித்ரிஸ்தூ உண்டே தொட்லவத்திக்கி ஒக்க பாமு வச்செனு, ஆ முங்கி ஆ பாமுனு பட்டி துண்டெமுலு சேசி பாரவேசி, ஜரிகின சங்கதி தல்லிக்கி தெலியச் சேயடானக்கு ஆமெவத்திக்கி வெள்ளினதி. அப்புடு ஆமெ முங்கி மூத்திக்கி அண்டுக்கொனி உன்ன நெத்துரு சூச்சி, அதி தன பிட்டனு கரிச்சி சம்பினதி அனி தலஞ்ச்சுகொனி, ஆ முங்கினி கொட்டி சம்பெனு, தருவாத்த இண்டிக்கி போயி, தொட்லலோ சுகமுகா நித்ரபோத்தூ உன்ன பிட்டனுன்னு தொட்லவத்த முங்கி பட்டி சம்பின பாமுனுன்னு சூச்சி, சாலா துக்கப்படெனு. இதன் மொழிபெயர்ப்பு - ஓர் ஊரிலே ஒரு பார்ப்பனன் இருந்தான் . அவனிடம் ஒரு மூங்கா (கீரி) இருந்தது. அவன் அதை மிக விழிப்பாய் வளர்த்திருந்தான். ஒரு நாள் அவனுக்கு ஓர் ஊருக்குப் போகவேண்டிய பணி (வேலை) வந்தது. ஆகையால் அம் மூங்காவைத் தன் மனைவியிடம் ஒப்புவித்துப் போயினான். மறுநாள் அவள் தன் பிள்ளையைத் தொட்டிலிலே தூங்க வைத்து, அம் மூங்காவைத் தொட்டிற் பக்கம் காவல்வைத்து நீர் (தண்ணீர்) இறைத்துக்கொண்டு வருவதற்குப் போனாள். அதற்குள், பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தபோது தொட்டிற் பக்கம் ஒரு பாம்பு வந்தது. அம் மூங்கா அப் பாம்பைப் பற்றி (பிடித்து)த் துண்டஞ்செய்து போட்டுவிட்டு நடந்த செய்தியைத் தாய்க்குத் தெரியப்படுத்துவதற்கு அவளிடம் போனது. அப்போது அவள் மூங்காவின் மூஞ்சியில் ஒட்டிக்கொண்டிருந்த நெய்த்தோரை (அரத்தத்தை)ப் பார்த்து, அது தன் பிள்ளையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்று நினைத்துக்கொண்டு, அம் மூங்காவை அடித்துக் கொன்றுவிட்டாள். பிறகு, இல்லத்திற்குள் போய்த் தொட்டிலிலே நலமாய்த் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையையும், தொட்டிற் பக்கம் மூங்கா பற்றிக்கொன்ற பாம்பையும் பார்த்துச் சாலவும் வருந்தினாள். (உஞ்ச - உண்டு என்பதன் பிறவினை. உன்ன = உள்ள). தெலுங்குத்திரிபு விளக்கம் தமிழுக்கும் தெலுங்குக்கும் பல சொற்கள் பொதுவாயிருப் பினும், அவற்றுள் எது எதினின்று வந்ததென்று ஆராய்ச்சியில்லாத தார்க்குத் தோன்றாதிருக்கலாம். ஒரு சொல்லின் இரு மொழி வடிவங் களின் பொருளையும் வேரையும் ஆராயின், எது இயற் (Primitive) சொல் எது திரி (Derivative) சொல் என்று அறிந்துகொள்ளலாம். வெண்ணெய் (வெள்+நெய்) என்பது தமிழில் வெள்ளையான நெய் என்று பொருள்படுவது. இதன் திரிபான வென்ன என்னும் தெலுங்குச்சொல் இப் பொருளைத் தருவதன்று. தம்முன் (அண்ணன்) என்பதற்கு எதிராகத் தமக்குப்பின் பிறந்தவனைத் தம்பி என்றனர். அது தம்பி என உலக வழக்கில் கடைக்குறையாய் வழங்குகின்றது. ஆனால், தெலுங்கிலோ தம்முடு எனத் திரிந்து வேர்ப்பொரு ளிழந்துவிட்டது. தெலுங்குச் சொற்கள் தமிழில் திரிந்துள்ள முறைகள் 1. எழுத்துத் திரிபு இ - எ : கோணி - கோனெ; விலை - வெல; திரை - தெர. உ - அ : ஊற்று - ஊட்ட; பாட்டு - பாட்ட; தட்டு - தட்ட; போக்கு - போக்க. உ - ஓ : புகை - பொக; உடல் - ஒடலு; குழி - கோயி; முனை - மொன; குனை - கொன; முளை - மொலி; உரை - ஒர. ஐ - அ : பொம்ம, உவம, குளிக, குப்ப, பக, மந்த, ஓட்ட, நட, மகிம, தீர்வ, கட, குத்தக, வல, மூல, கொள்ள, மாத்ர, அமரிக்க, போலிக்க (போலுகை) தொல, அல, நடத்த, வாடுக்க, வேதன, நிலுவ, சால, சேரிக்க (சேர்க்கை), விடுதல, ஓடம்படிக்க, நம்மிக்க, இட்டிக, தார, மூட்ட, வேடுக்க, தண்டன, வேட்ட, தெர்ரவ (தெரிவை), முதலிய ஏராளமான தெலுங்குச் சொற்கள் தமிழில் ஐகார வீற்றன. ஐ - எ : கட்டை - கட்டெ; திண்ணை - தின்னெ. ண - ன : எண்ணிக்கை - என்னுக்க; துணிக்கை - துனக்க; காணிக்கை - கானுக்க. ந - ம : நீர் - மீரு; நாம் - மேமு. ய - ச : உயிர் - உசுரு; பயறு - பெசலு. ழ - ட : நீழல் - நீட; பாழ் - பாடு; மேழி - மேடி; ஊழியம் -ஊடிகமு; நாழி - நாடி. ற - ர : வேறு - வேரு; மீறு - மீரு. ற்ற - ட்ட : ஊற்று - ஊட்ட; புற்று - புட்ட; மாற்றம் - மாட்ட; சுற்று - சுட்டு; பற்று - பட்டு; தேற்றம் - தேட்ட. ன்ற - ண்ட : என்று (வெயில்) - எண்ட; ஒன்றி - ஒண்டி. சில சொற்கள் முதல் வேற்றுமையில் றகரமும் திரி வேற்றுமையில் இரட்டித்த டகரமும் பெறும். எ-டு : நூறு - நூறு; நூற்று - நூட்ட. 2. சொல் திரிபு 1. ஈறுகேடு : ஓரம் - ஓர; தெப்பம் - தெப்ப; சாயம் - சாய, மாயம் - மாய; பொத்தல் - பொத்த; அஞ்சல் - அஞ்செ. 2. ஈறுமிகை : தெய்வமு, கோணமு, ஏலமு, பக்கமு, பாகமு, சுங்கமு, மேனமு, கீலு, காரு, மதமு, கொட்டமு, நூலு, சமமு, கனமு, கூட்டமு, வேகமு, பட்டமு, தீபமு, பாடமு, கொஞ்சமு, பேரு, கோபுரமு, குலமு, நாளமு, களங்கமு, உருமு (இடி), பிசினி, பள்ளமு, சின்னமு, மந்தாரமு, கலகமு, கடினமு, மயிக்கமு, மொத்தமு, நாடகமு, குடும்பமு, ஒப்பந்தமு, காவலி, மந்தமு முதலிய எண்ணிறந்த சொற்கள் தமிழில் மெய்யீறாய் வழங்குவன. 3. தொகுத்தல் : திருப்பு - திப்பு; திருத்து - தித்து; உருண்டை - உண்ட; விருந்து - விந்து; சுருட்டு - சுட்ட; மருந்து - மந்து; வணக்கு (வளை) - வங்கு; காய்ச்சு - காச்சு. 4. இலக்கணப்போலி (Transposition or Metathesis) : அவன் - வாடு; அவர் - வாரு, காரு; இவன் - வீடு; இவர் - வீரு; இலது - லேது; நாம் - மனமு; அறை (கல்) - ராய்; உள் - லோ; ஆக - கா. எழுது - டெப்பதி; அரசு - ராஜு; எழு - லெய். அவன் என்பதிலுள்ள அவ் என்னும் பகுதி வ் + அ என்று மாறிப் பின்பு னகர வீறு டகர வீறாய் வாடு என்னும் வடிவம் பிறந்தது. இங்ஙனமே பிறவும். சில தெலுங்குச் சொற்கள் முதல் வேற்றுமையில் திரியாதிருந்து பிற வேற்றுமையில் திரியும். எ-டு: மு. வே. பி. வே. மு. வே. பி. வே. அதி தானி அவி வாட்டி இதி தீனி இவி வீட்டி ஏதி தேனி ஏவி வேட்டி 5. உயிரிசைவு மாற்றம் (Harmonious Sequence of Vowels) : சொற்களிலுள்ள உயிர்கள் முன் பின் வரும் உயிர்களுக் கேற்றபடி மாறுதல் உயிரிசைவுமாற்றம் எனப்படும். தமிழில் இ ஈ ஏ ஐ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகக்கொண்ட பெயர்களின் 4ஆம் வேற்றுமை உருபு கி எனத் திரிந்தும், பிறவீற்றைக் கொண்ட பெயர்களில் கு எனத் திரியாதும், உலக வழக்கில் வழங்குகின்றன. எ-டு: கிளிக்கி, கடைக்கி, வீட்டுக்கு, பலாவுக்கு. இங்ஙனமே தெலுங்கில் கத்தி என்பது பன்மையில் கத்துலு என்று திரியும். பதில் திகில் என்பன முறையே பதுலு திகுலு என்று திரியும். சிறியிலை, பொதியில், அடிசில், கோயில் என்னும் தமிழ்ச்சொற்களும் இம் முறை பற்றியனவே. 3. பொருள் திரிபு சொல் தமிழ்ப் பொருள் தெலுங்குப் பொருள் செப்பு விடை சொல் சொல் ஈ தாழ்ந்தவனுக்குக் கொடு கொடு கொட்டு மேளம் அடி அடி உண்டு உள்ளது இரு குக்கல் குள்ள நாய் நாய் 4. இயற்கைத் தெரிப்பு (Natural Selection) வீடு, மனை, இல், குடி, அகம், பள்ளி முதலிய பல வீட்டுப் பெயர்களில் இல் என்பதையும், மூங்கில், கழை, பணை, வேய், அமை, வெதிர், வேழம் முதலிய பல மூங்கிற் பெயர்களில் வெதிர் என்பதையும் தெலுங்கு தெரிந்துகொண்டது இயற்கைத் தெரிப்பாகும். 5. விதப்புச் சொற்கள் 1. மறைந்த வேரின : சதுவு, அம்மு (sell) முதலியன. 2. மறையா வேரின : திகு (இறங்கு), வம்பு (வளைவு) முதலியன. இ > திகு. வள் < வம்பு. 6. மொழிபெயர்ப்புச் சொற்கள் புகையிலை - பொகாக்கு; நாய்க்குடை (காளான்) - குக்க கொடுகு. 7. தொடர்ச் சொற்கள் கட்டுக்கத, கட்டுமானு, கட்டுமூட்ட, தூக்குமானு, இதிவரக்கு, தப்பிஞ்சுக்கொனிப்பரு, தெலியப்பருச்சு, வென்னெலெ (வெண்ணிலா), வெலுப்பலகா (வெளிப் படையாய்), குண்டுச் சூதி விடிகத, நிட்டூர்ப்பு (நெட்டுயிர்ப்பு), சரியயின, சோமாரி, (சோம்பேறி), ஊனுகோல, திட்டிவாக்கிலி (திட்டிவாசல்), தேனெ கூடு, போக்கிரி, கட்டக்கட்டு, கொனியாடு (கொண்டாடு), நெலமாளிகா, கட்டெ நிப்பு, ஓடச்சரக்கு, ஏற்பரச்சு, பட்டங்கட்டுமு, செல்லுச்சீட்டி, இட்டகுமுந்து, ஒண்டுவிடிச்சின, யொகட்டி, மிக்கிவிகானுண்டு, கூடப்போ, நிலிப்பிப்பெட்டு, கனிப்பெட்டு (கண்டுபிடி), முந்துப்போயின, தப்புலேதனுட்ட, நெரவேர்ச்சு, மூக்குப்பொடி, முளுகோல, ஏற்பாடு, சேயு முதலிய எண்ணிறந்த தொடர்மொழிகள் தமிழ் முறையின. 8. வாக்கியங்கள் தெலுங்கு எவ்வளவு திரிந்திருப்பினும், இன்றும் பல வாக்கியங்கள் தமிழ்ச்சொற்களாலேயே அமைவன. தமிழ் : அவருக்கு இருவர் பிள்ளைகள். தெலுங்கு : வாரிக்கு இத்தரு பில்லகாயலு. தமிழ் : அப் பணி செய்கிறதற்கு உனக்குப் பத்து உருபா ஈகிறேன். தெலுங்கு : ஆ பனி சேசேதானிக்கு நீக்கு பது ரூபாயிலு இஸ்தானு. 9. திரியாச் சொற்கள் முனி, மஞ்சு, கணக்கு, ஒட்டு (oath), சேக்கு, அச்சு, மதி, தொட்டி, பொடி, சாக்கு, எதிரி, துண்டு, வித்து, பட்டி (list), தப்பு, பொட்டு, வெறி, கூலி, சக்கிமுக்கி, கொக்கி, கொண்டி, முடி, காந்தி, மட்டுப்படு, போராடு, பாசி, கொடி, மப்பு, தீர்ப்பு, வசதி, கருக்கு முதலிய எண்ணிறந்த சொற்கள் இன்றும் இரு மொழியிலும் ஒரே வடிவாய் வழங்குகின்றன. 10. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) தெலுங்கில் ஆ, ஈ முதலிய நெடுஞ்சுட்டும் ஏ என்னும் நெடு வினாவும் ஏடு (ஆண்டு), சச்சி (செத்து) முதலிய சில சொற்களும் தொன்னிலையி லுள்ளன. இங்ஙனம் ஒரு சில சொற்கள் மட்டும் தெலுங்கில் தமிழினும் இயற்கை நிலையிலுள்ளன. இந்நிலை குடியேற்றச் சொற் காப்பின் பாற்படும். 4 துளு துளு வியல்பு: குடகுக்கு மிகநெருங்கி, கன்னடத்தினின்று சிறிதும் மலையாளத்தினின்று பெரிதும் வேறுபட்டுத் திருந்திய திரவிட மொழிகளுள் ஒன்றாய், தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என்னும் நான்கிற் கடுத்தாற்போற் சொல்லத்தக்கது துளுவாகும். துளுவிற்குத் தனியெழுத்தும் தனி அல்லது பழைய இலக்கியமுமில்லை. மங்களூர்ப் பேசெல் (Basel) விடைத் தொண்டரால் கன்னடவெழுத்திலும், துளுவப் பார்ப்பனரால் மலையாளவெழுத்திலும் துளு எழுதப்பட்டுவருகின்றது. துளு வழங்கெல்லை: மேல்கரை நாட்டில் கன்னடத்திற்குத் தெற்கில், சந்திரகிரி கல்யாணபுரி ஆறுகட்கிடையில், பெரும் பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது துளு. துளுவநாட்டு வரலாறு: கொடுந்தமிழ் நாடுகளைப்பற்றிய, சிங்களஞ் சோனகஞ் சராவகஞ் சீனந் துளுக்குடகம் கொங்கணத் துளுவங் குடகம் கன்னடம் (நன். மயிலை) என்னும் பழஞ் செய்யுள்களில் துளுவுங் கூறப்பட்டிருப்பதால், கொங்கணம் கன்னடம் குடகு முதலிய நாடுகளைப்போன்றே, துளுவநாடும் பழைமையான தென்றறியலாம். ஆயினும், துளுவ நாட்டுக் கொடுந்தமிழ் கிளைமொழியாய்ப் பிரிந்து போனது 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே யென்பதை உணர்தல் வேண்டும். துளுவநாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டைமண்டலத்திற் குடிவந்தனர். அவர் தொண்டைமண்டலம் துளுவவேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத் தமிழே. பெயர்ச்சொல் 1. மூவிடப் பெயர் தன்மை முன்னிலை தற்சுட்டு ஒருமை: யானு ச தானு பன்மை: எங்குளு, ஈரு தனுகுளு நம நிகுளு சுட்டுப்பெயர் ஆண் பெண் பலர் ஒன்று பல அண்மை: இம்பெ மோளு மேரு(ஆ.) இந்து, உந்தெகுளு மோகுS(பெ.) உந்து சேய்மை: ஆயெ ஆளு ஆரு (ஆ.) அவு ஐகுளு ஆகுS(பெ.) குறிப்பு: 1. நம (தாம்) -உளப்பாட்டு¤தன்மை¥பன்மை¥பெயர். எங்குளு (யாங்கள்) - தனித்தன்மைப் பெயர். 2. ஈரு (நீர்), ஆரு (அவர்) என்பவை உயர்வுப் பன்மை (Honorific plural)ahf வழங்கும். 2. வினாப் பெயர் யேரு = யார்? தாதவு = யாவது? யாது? தானெ = என்ன? 3. மக்கட் பெயர் ஆள், ஒண்ட்டிகெ (ஒண்டிக்காரன்), கள்வெ (கள்வன்), குசவெ (குசவன்), செம்பு குட்டி (செம்பு கொட்டி), சோமாரி (சோம்பேறி), தோட்டி, நஞ்சுண்டெ (நஞ்சுண்டவன்), பிள்ளே (பிள்ளை), வேட்ட (வேடன்), குருக்குளு (குருக்கள்). 4. முறைப் பெயர் அஜ்ஜெ (அச்சன்), அம்ம (அம்மை), அத்தெ (அத்தை), அக்க. 5. விலங்குப் பெயர் ஏடு (ஆடு), ஆனெ (ஆனை), பஞ்சி (பன்றி), எயிபஞ்சி (எய்ப்பன்றி), எர்மெ (எருமை), கடம (கடமை), காடி, கத்தெ (கழுதை), குதுரெ (குதிரை), குரு (குருளை), குறி (கொறி), நறி, நாய், பில்லி (புலி), மறி, மான், கஞ்சி (கன்று). 6. பறவைப் பெயர் கொர்ங்கு (கொக்கு), கோரி (கோழி), பாவலி (வாவல்), காடெ (காடை). 7. ஊர்வனவற்றின் பெயர் உடு (உடும்பு), எலி, ஒந்தி, சுண்டெலி, தேள், பாவு (பாம்பு). 8. kரஞ்செடிப் bபயர்mL«ò (அடம்பு), அர்த்தி (அத்தி), ஆம்பல், எண்மெ (எள்), கரும்பு , கொடி, nஜாள்(சோளம்),gஜெ(பாசி),kஞ்சள்,kர(மரம்),gகெ(வாகை),tரெ(வாழை),nபவு(வேம்பு).9. தட்டுமுட்டுப் பெயர் அடப்ப (அடைப்பம்), கர (கலம்), குப்பி, கூடெ (கூடை), சட்டி, ஜாடி (சாடி), செம்பு, ஜோனிகெ (சோளிகை), தொட்டி, தொட்டில், மேஜி (மேசை). 10. உணவுப் பெயர் அப்ப (அப்பம்), அரி (அரிசி), உப்பு, ஊட்ட (ஊட்டம்), எண்ணெ (எண்ணெய்), கஞ்சி, கலி (கள்), கூளு (கூழ்), சாரு (சாறு), தீனி, நஞ்சு, புண்டி (பிண்டி), மர்து (மருந்து). 11. ஆடையணிப் பெயர் கொப்பு, பாசி, வக்கி (வங்கி), சல்லண (சல்லடம்). 12. ஊர்திப் பெயர் அம்பாரி, உஜ்ஜாலு (ஊஞ்சல்), ஓட (ஓடம்), கப்பல், தேரு (தேர்), தோணி. 13. கருவிப் பெயர் அம்பு, அர (அரம்), இக்குளி (இடுக்கி), உளி, கத்தி, கம்பி, கவணெ (கவணை), கொக்கெ (கொக்கி), கோலு (கோல்), கோளி (கோலி), சட்டுக (சட்டுவம்), செண்டு (பந்து), செண்டெ (செண்டை = ஓர் இசைக்கருவி), தித்தி, பகட (பகடை = தாயக்கருவி), பாரெங்கி (பாரை), பிர் (வில்). 14. இடப் பெயர் அம்பில (அம்பலம்), அரு (அருகு), இடெ (இடம்), ஊட்டி ஊற்று), கடலு, கடெ (கடை), காணி, கட்ட (குன்றம்), கொட்ய (கொட்டகை), கொட்டார, கொனெ (கொனை), சுடலெ (சுடலை), சுடுகாடு, தொளு (தொளை), தோட்ட, நடு, நாடு, பயல் (வயல்), பின்னு (விண்), கணி (கேணி), பட்ண (பட்டினம்), ஊரு (ஊர்), இல்லு (இல்), காடு. 15. காலப் பெயர் கடு (கெடு), பொர்து (பொழுது). 16. சினைப் பெயர் அடி, இமெ (இமை), எலெ (இலை), உகுரு (உகிர்), உமி, ஏலு (எலும்பு), ஓடு, ஓலெ (ஓலை), கண்ணு, கடெக்கண்ணு, கவ (கவை), காவு (காம்பு), காயி (காய்), காலு, கொரலு (குரல் = கதிர்), கை கொட்டாஞ்சி (கொட்டாங்கச்சி), கொட்டெ (கொட்டை), கொண்டெ (கொண்டை) கொம்பு, கெவி (செவி), தொண்டெ (தொண்டை), தோகெ (தோகை), நாலாயி (நாக்கு), நாரு (நார்), நெசலு (நுதல்), நெத்தி (நெற்றி), பீலி, மட்டெ (மட்டை), முரெய் (மூலை), முள், மூக்கு, மோரே (முசரை), வித்து, பெதெ (விதை), பெரெல் (விரல்), கொம்மெ (கொழுப்பு), தோளு (தோள்). 17. பண்புப் பெயர் அல (அளவு), இக்கட்டு, ஒகர் (உவர்), எதுரு (எதிர்), ஹேரள(ஏராளம்), ஒய்யார, கார், கார (காரம்), காவி, குருடி (குருடு)கூனு, கொந்த்ர (கொஞ்சம்), சிட்டு, சுட்டி, உளுக்கு, சுருக்கு (விரைவு), செடி (தீயநாற்றம்), சேரு (சேர்), சொட்டு (குற்றம்), சொத்த (சொத்தை), தப்பு, நய (நயம்), நரெ (நரை), நாத்த (நாற்றம்), நேரே (நேர்), நோவு, முழம், மெருகு, மெலியுனி, வரடெ (வறடு), வேசெ (வீசை), பெப்பு (வெப்பு), தாள்மெ (மென்மை), மேரே (மேரை), பண்டவால் (வண்டவாளம்), (தாழ்மை), நம்பிகெ (நம்பிக்கை), பேனெ (பையுள்), கத்தலெ (கருக்கல்), பொர்லு (பொற்பு). எண்ணுப் பெயர் 1 - ஓஞ்சி 50 - ஐவ 2 - ரட்டு 60 - அஜிப 3 - மூஜி 70 - யெள்ப 4 - நாலு 80 - யெண்ப 5 - ஐனு 90 - சொண்ப 6 - ஆஜி 100 - நூது 7 - ஏளு 101 - நூத்த வொஞ்சி 8 - எண்ம 102 - நூத்தரட்டு 9 - ஒம்பத்து 200 - இர்நூது 10 - பத்து 300 - முந்நூது 11 - பத்தொஞ்சி 400 - நாலுநூது, நானூது 12 - பதுராடு 500 - ஐநூது 13 - பதுமூஜி 600 - ஆஜிநூது 14 - பதுநாலு 700 - ஏளுநூது 15 - பதினைனு 800 - எண்மநூது 16 - பதுனாஜி 900 - வொர்ம்பநூது 17 - பதுனேளு 1000 - சார 18 - பதுனெண்ம 1001 - சாரத்த வொஞ்சி 19 - பதுனொர்ம்ப 1100 - சாரத்த நூது 20 - இர்வ 10000 - பத்து சார 21 - இர்வத்தொஞ்சி 11000 - பத்தொஞ்சி சார 22 - இர்வத்து ரட்டு 100000 - லக்ஷ 30 - முப்ப 10000000 - கோட்டி 40 - நால்ப எண்ணடி உயர்திணைப் பெயர் தமிழ் துளு தமிழ் துளு ஒருவன் வொரி நால்வர் நாலவெரு ஒருத்தி வொர்த்தி ஐவர் ஐவெரு இருவர் இர்வெரு அறுவர் ஆஜ்வெரு மூவர் மூவெரு எழுவர் யேள்வரு எண்மர் யெண்ம மந்தெ பதின்மர் பத்து மந்தெ ஒன்பதின்மர் வொர்மபமந்தெ பதினொருவர் பத்தொஞ்சி மந்தெ ஏழுக்கு மேற்பட்ட எண்ணடி உயர்திணைப் பெயரெல்லாம், எண்ணுப்பெயரொடு மந்தெ என்னும் தொகுதிப் பெயர் கூடியமையும். முறையெண்ணுப் பெயர் தமிழ் துளு தமிழ் துளு ஒன்றாம் வெஞ்சனே நாலாம் நானெல இரண்டாம் ரட்டனெ ஐந்தாம் ஐனனெ மூன்றாம் மூஜனெ பத்தாம் பத்தனெ 18. தொழிற் பெயர் (1) முதனிலைத் தொழிற்பெயர் எ-டு: சுருள். (2) முதனிலை திரிந்த தொழிற்பெயர் எ-டு: ஈடு, கேடு. (3) முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: ஆட்ட (ஆட்டம்), ஓட்ட (ஓட்டம்). (4) விகுதிபெற்ற தொழிற்பெயர் எ-டு: கொலெ (கொலை), சாவு, தீர்ப்பு. சில தொழிற்பெயர்கள்: ஒணகெலு (உணங்கல்), உளவு, எலமு (ஏலம்), ஒப்பந்த, நகலி (நகல்), நடப்பு, நட்டி (நட்டல் = நடுகை), நெனப்பு (நினைப்பு), பக (பகை), புகர (புகழ்), காப்பு, பேலெ (வேலை), மதுமெ (வதுவை). 19. பல்பொருட் பெயர் அலெ (அலை), உக்கி (உக்கம்), உண்டெ (உண்டை), உசுரு (உயிர்), இர்ளு (இருள்), ஓலக (ஒலக்கம்), கரி, காணிக்கே (காணிக்கை), குத்த (குத்தகை), கூட்டு, கூவே (கூம்பு), கூலி, கொள்ளி, சிட்டிக்கி (சிட்டிக்கை), சில்லெர (சில்லறை), சில்லு, சீட்டு, சூடி (சூடு = அரிக்கட்டுக் குவியல்), பொள்ளி (வெள்ளி), தீவட்டி, நூலு, படி, ஹனி (பனி), புண (பிணம்), புதேரு (பெயர்), புடி (பொடி), பொர்லு (பொருள்), மயெ (மயம்), மூரி, முரி (மூரி), வகெ (வகை), மிடெ (விடை), வெள்ளம், பை (வை = வைக்கோல்), ஆமெ (ஆமை), கல்லு, கின்னி (குன்னி), குட்டு, ஆணு, பொண்ணு, மாதெர (மாற்றம்). 20. வேற்றுமையேற்ற பெயர்கள் 1. யானு அம்ம மர மேஜி 2. யென்னு அம்மனு மரொனு மேஜினு 3. யெனட அம்மட மரட்ட மேஜிட 4. யெங்கு அம்மகு மரொக்கு மேஜிகு 5. யெனடுது அம்மடுது மரொடுது மேஜிடுது 6. யென அம்ம மரத மேஜித 7. யெனடு அம்மடு மரொட்டு மேஜிட 8. - அம்மா மரா மேஜியே வினைச்சொல் 1. முக்கிய வினைகள் அண்ட்டு (அண்டு), அண்ணா, அபய் (அவை), அலம்புனி (அலம்பு), அலர், அர்பினி (அழு), ஆடு, ஆய், ஆர்க்குனி (ஆர் = ஒலி), ஆரு (ஆறு), இடு, இழி (இறங்கு), உடெ (உடை), உதுர் (உதிர்), உப்ப, உப்பி (உமிழ்), ஒதெ (உதை), உரி (ஒலி), உரெ (உரை), உள்கு (உளுக்கு), ஊட் (உழு), ஊது, எக்கு, எதுருந்து. (எதிர்), எய், எரி, ஏறு, ஒட்டு, ஒடி, ஓடு, ஓது, கக்கு, கட்டு, கடப்பு, கடெ (கடி), கப்பு, கரகு (கரை), கல், கல, கலங்கு, கபி (கவி), காதுனி (காது), காயி (காய்), குட்டு, குத்து, குரி (குறி), கூடு, கேண் (கேள்), கொணுனி (கொள்), கொதி, சாய் (சா), சுடு, கொன் (கொல்), சுத்து (சுற்று), சேரு (சேர்), ஞாந்த (நீந்து), தப்புனி (தப்பு), தாளுனி ( தாளு), தித்துனி (திருத்து), துலுக்கு (தளும்பு), தெரி, தொடகுனி (தொடங்கு), தோடுனி (தோண்டு), தோல்கு (தொலை), நல்குனி (நக்கு), நடப்புனி (நட), நட்பினி (நடு), நடுகுனி (நடுங்கு), நம்பு, நாடுனி (நாடு), நூக்குனி (நூக்கு), படிப்புனி (படி), பர்பு (பருகு), புட்டு (பிற), பூரு (வீழ்), பெதரு (விதறு), பெரசு (விரவு), பொதெ (புதை), போடு (வேண்டும்), மாய், முகி (முடி), முளெ (முளை), மெச்சுனி (மெச்சு), மெசெலு (மேய்), வரு (வற்று), வாழு, வெதரு (விதிர்). 2. புணர்வினை காத்தொனுனி (காத்திரு), செண்டாடுனி (செண்டாடு) முதலியன. 3. துணைவினை ஆயினி (ஆகு), உப்புனி (உள்), இப்புனி (இரு), தீர், தெரி, கூடு, கொணு (கொள்), உண்டு முதலியன. 4. வினைப்புடைப்பெயர்ச்சி கேணு (கேள) என்னும் வினை ஏவல் ஒருமை - கேண்ல (கேணு) பன்மை - கேணுலெ (கேண்லெ) முற்று இ. கா. நி. கா. எ. கா. யான் கேண்டெ கேணுவெ கேணும்பெ யாம் கேண்ட கேணுவ் கேணும்ப நீ கேண்ட கேணுவ கேணும்ப நீர் கேண்டரு கேணுவரு கேணும்பரு இறங்தகால நிறைவு (Pluperfect) (யான்) கேட்டிருக்கிறேன் - கேணுடித்தெ (யாம்) றோம் - கேணுடித்த (நீ) றாய் - கேணுடித்த (நீர்) றீர் - கோணுடித்தரு தொழிற்பெயர் கேணொண்டு (Gerund) வினையாலணையும் பெயர் - இ. கா. கேண்டிஈயெ (கேட்டவன்) நி. கா. கேணுனாயெ (கேட்கிறவன்) எ. கா. கேணுனாயெ (கேட்பவன்) இடைச்சொல் வியப்பு : ஆஹா, ஓ, ஓஹோ, அப்ப இரக்கம் : அய்யோ, அய்யப்ப வெறுப்பு : ஹே, சீ, சீச்சி வினா : ஆ, னா, ஏ, யேனி? (என்று?) சுட்டு : ஆ, ஆது, ஆனி (அன்று) அடெ (ஆண்டு), அவுளு (அவண்). இடம் : கைதளு (கிட்ட), முட்ட (கிட்ட), மித்து (மேல்), உளயி (உள்), பிடயி (வெளி), சுத்த (சுற்றும்), யெதுரு, பிரவு (பிறகு). காலம் : கடெச (கடந்து), பேக (வேகம்). படி : மெல்ல, நிடுப (நெடுக்க), வொட்டுகு (கூட), ஒப்ப, தேற்றம் - ஏ (ஈயெ). தொடர்ச்சொல் : அக்கக்க (அக்கக்காய்), சுத்த முத்த (சுற்று முற்றும்), ஆணுபிலி, நீருகுட்ட (dropsy), அடிமேலு முதலியன. சொற்றொடர் அரசு ஆளுவெ = அரசன் ஆள்கிறான். கடலு மல்லெ ஆதுண்டு = கடல் பெரிதாயிருக்கின்றது. யென குதுரெகு நினகுதுரெ மல்லெ = என் குதிரைக்கு நின் குதிரை பெரிது. ஆயெ தனனு தானெ ஹாக்கொண்டே = அவன் தன்னைத் தானே அடித்துக் கொண்டான். மல் = பருமை. மல்லல் - வலி. மல்லன்மழவிடை யூர்ந்தார்க்கு (சிலப். 17, கொளு.) மல்கு = மிகு, மல்லல் = மிகுதி (சூடா.) மல்லல் வளனே (தொல். சொல். 303). பழமொழிகள் உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ = உப்புத் தின்றவன் நீர் பருகுகிறான். கர்ம்பு சீபெ அந்துது பேரு முட்ட அக்கியட = கரும்பு தீவியதென்று வேர்முட்டத் தின்னக்கூடாது. கரும்பு இனிக்கிறதென்று வேரோடு தின்னலாமா? (தமிழ்) தானு களுவ ஆண்ட ஊரு களுவெகெ = தான் கள்ளனானால் ஊருங் கள்வனாம். தான் திருடி அசலை நம்பான் (தமிழ்). பஜெ இத்தினாது காரு நீனொடு = பாயிருக்கிற அளவு கால் நீட்டவேண்டும். பல்லடு குள்ளுது பரண்டு பத்தியெ = பள்ளத்திற் குந்திக் குட்டி (அரை)த் தவளையைப் பிடித்தான். பறழ் - பரண்டு (?). மல்ல புதெ மெல்ல ஜாவொடு = மல்ல (பெரிய) பொதியை மெல்ல இறக்கவேண்டும். தன தரெகு தன கை - தன்கையே தனக்குதவி (தமிழ்). காலொகு தக்க கோல, தேசொகு தக்க பாஷெ, தாளொகு தக்க மேள = காலத்துக்குத் தக்க கோலம், தேசத்துக்குத் தக்க பாசை, தாளத்துக்குத் தக்க மேளம். ஆண்டெதபாயி கட்டொலி தூண்டெத பாயிகட்டேல்யா? = அண்டாவாயைக் கட்டலாம் தொண்டை வாயைக் கட்டலாமா? `உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது (தமிழ்). காடு சொர்க்கினவுளு ஏடுனு புடொடு, ஊரு சொர்க கினவுளு கொங்கணனு புடொடு = காடுசொக்கினவுழி (தழைத்தவிடத்து) ஆட்டை விடவேண்டும். ஊர்சொக்கின வழி கொங்கணனை விட வேண்டும். சொக்குதல் : அழகாயிருத்தல், மயக்குதல். நலிபெரெ திரியந்தினாயகு ஜாலு வோரெகெ = நடஞ் செய்யத் தெரியாதவனுக்கு நிலஞ் சமனில்லை. ஆடமாட்டாத தேவடியாள் கூடங் கோணல் என்றாளாம் (தமிழ்). நாயித பீல வோண்டெடு பாடுண்ட சம ஆவா? = நாயின் வாலைக் குழாய்க்குள் விட்டாலும் சமமாகுமா? நாயின் வாலை மட்டைவைத்துக் கட்டினாலும் நேராகுமா? (தமிழ்) பிஜினுகு தாயெகு கர்பத பேலெ? = எறும்புக்கு எதற்கு இரும்பு வேலை? இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? (தமிழ்) பாயிடு மக மக பஞ்சிடு பக பக = வாயில் மகன் மகன் வயிற்றில் பகை பகை. உதட்டில் உறவும் உள்ளே பகையும் (தமிழ்). பெரிகு பூரி பெட்டுலா கர்பொகு கொரி நீருலா பிர பருவா? = பிறக்கு (முதுகு) விழுந்த அடியும் இரும்பு கொண்ட நீரும் பிறகு (திரும்ப) வருமா? மாதிக இல்லுடு உணசு ஆண்ட ப்ராணகு தானெ? = பறையன் இல்லில் உணவானால் பார்ப்பானுக்கு (பிராமணனுக்கு) என்ன? துளுத் திரியக் காரணங்கள் 1. தட்ப வெப்பநிலை. 2. இலக்கண நூலின்மை. 3. தமிழரொடு தொடர்பின்மை. 4. துளுவர் தமிழ்நூலைக் கல்லாமை. 5. வடசொற் கலப்பு. 6. ஒலிமுறைச் சோம்பல். துளுத் திரிந்த வகைகள் (1) ஒலித்திரிபு எ-டு: ழ-ள, கூழ்-கூளு, ச-ஐ, பாசி-பாஜி (2) போலி எ-டு: ஐ-எ, காடை-காடெ; ழ-ர, கோழி-கோரி; வ-ப, வேலை-பேலெ. (3) சொற்றிரிபு எ-டு: பன்றி - பஞ்சி, ஆறு - ஆஜி. (4) ஈறுகேடு எ-டு: (குசவன்) குசவெ - இருபது - இர்வ. (5) இலக்கணப் போலி எ-டு: யாவது - தாதவு. (6) ஈறுமிகை எ-டு: குருக்கள் - குருக்குளு, வாவல் - பாவலி. (7) தொகுத்தல் திரிபு எ-டு: திருத்து - தித்து, கரும்பு - கர்ம்பு. (8) கொச்சை எ-டு: சுற்றும்-சுத்த, பற்று-பத்து, புது-பொசெ. (9) புணர்ச்சியின்மை எ-டு: நீரு குட்ட. (10) வழக்கற்ற சொல் வழங்கல் எ-டு: உணங்கு - ஒணகு, மல்ல = பெரிய. (11) புதுச்சொல் லாக்கம் எ-டு: ஹொட்டகச்சி = பொறாமை. (12) சொல்வடிவ வேறுபாடு எ-டு: இங்கு - இஞ்சி. (13) வடசொல் வழக்கு: எ-டு: பாஷெ, பாபி (பாவி), சங்கட, மார்க, (14) றகர னகரங்கள் வழங்காமை (15) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை எ-டு: ஈ நரமானி = இந் நரன். முடிவு இதுகாறுங் கூறியவற்றால், தமிழல் - திரவிடமொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையும் முக்கியமுமான பகுதிகளிளெல்லாம் தமிழேயென்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புறவணியில் மட்டும் ஆரியந் தழுவினவென்றும், அவ் வாரியமும் (அவை) தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே யென்றும், வடமொழியைத் தமிழல் - திரவிடத்தின் தாயெனக் கூறுவது பெரிதோர் ஏமாற்றமென்றும் தெரிந்துகொள்க. திரவிடச் சொற்களுட் சிலவற்றின் இயற்கை வடிவம் தமிழல் - திரவிட மொழிகளிலேயே இருப்பதுண்மையாயினும், அவை மிகமிகச் சிறுபான்மையவென்றும், அதுவுங் குடியேற்றப் பாதுகாப்பின்பாற் படுமென்றும் நூற்றுக்குத் தொண்ணூறு வீதம் திரவிடச் சொல் வேர்கள் தமிழிலேயே உள்ளனவென்றும் அறிதல் வேண்டும் தமிழல் - திரவிட மொழிகளின் மூவிடப்பெயரும் எண்ணுப் பெயருமே இவ் வுண்மையைத் தெரிவிக்கப் போதிய சான்றாகும். குடியேற்றப் பாதுகாப்பான ஒரு சிறு பகுதியால் தமிழின் தாய்மை குன்றிவிடாது. சில சூழ்ச்சிப்பொறிகளின் பழைய அமைப்புகள் இன்று கீழ்நாட்டில்தான் உள்ளன. இதனால், மேனாட்டார் கீழ்நாட்டாரிடமிருந்து பொறிக்கலையைக் கற்றார் என்றாகாது. இங்ஙனமே குடியேற்றப் பாதுகாப்பும். தமிழ் வாழ்க! (முற்றும்) மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப்பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றி னார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1967 (1936) : கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1972 (1941) : தமிழர் சரித்திரச் சுருக்கம் வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. தமிழன் எப்படிக் கெட்டான் ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ‘A Critical survey of Madras University Lexicon’ என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட தென்மொழி இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. என் அண்ணாமலைநகர் வாழ்க்கை என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் The Primary Classical Language of the World என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் “Is Hindi the logical solution of India” - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh? - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென் மொழியில் அறிவிக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட்டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் செந்தமிழ்ச் செல்வர் என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : ‘Lemurian Language and its Ramifications - An Epitome’ எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெற விருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப் பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். கருவி நூற்பட்டி - (Bibliography) 1. A comparative Grammer of the Dravidan Languages. By R. Caldwell. 2. Linguistic Survey of India - By Grierson 3. A Progressive Grammer of the Malayalsm Language By L.J. Frohnmeyer. 4. Tamil Studies - By S. Srinivasa Iyengar 5. A Kanarese Grammar - By Harold Spencer. 6. A. Progressive Grammer of the Telugu Language - By A.H. Arden. 7. A Companion Telugu Reader - By A.H. Arden. 8. A Grammer of the Tulu Language - By J. Brlgol. *****