பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 23 உயர்தரக் கட்டுரை இலக்கணம் - 1 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 23 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1950 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 10 + 270 = 280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். முகவுரை எந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் உரைநடையிலக்கணம் இன்றியமையாத தென்பது, எல்லார்க்கும் தெரிந்ததே. பண்டைத் தமிழிலக்கியம் பெரும்பாலும் செய்யுள் வடிவாயிருந்தமையின், பழந்தமிழிலக்கணங்கள் பெரும்பாலும் செய்யுட்கே இலக்கணம் கூறி வரலாயின. பல மொழியமைதிகளும் நெறிமுறைகளும் செய்யுட்கும் உரைநடைக்கும் பொதுவாயிருத்தலின், அப்பொதுவான பகுதியே பழந்தமிழிலக்கண நூல்களினின்று தற்காலத் தமிழ் உரைநடையிலக்கண நூல்கட்கு எடுத்துக் கொள்ளப்படுவதாயுள்ளது. ஆங்கில உரைநடையிலக்கணம் மிக விரிவாகவும், நிறைவாகவும் வரையப்பட்டிருத்தலானும், ஆங்கில வுரைநடையைப் பின்பற்றியே தமிழ் உரைநடை வளர்க்கப்பட்டு வருதலானும், ரென்னும் மார்ட்டினும் (Wren and Martin) இணைந்தியற்றிய ஆங்கில விலக்கண நூலைத் தழுவியே சென்னை அரசியலார் தமிழ்க் கட்டுரையிலக்கணப் பாடத்திட்டம் வகுத்திருத்தலானும், அந்நூலைத் தழுவியே இந்நூலும் வரையப் பட்டுள்ளது. எத்துணையோ வேறுபட்ட மொழிகளும் பல மொழியமைதிகளிலும் நெறிமுறைகளிலும் ஒத்திருத்தலானும், எத்துறையிலும் முற்கால நூல்களினும் பிற்கால நூல்கள் விரிவும் விளக்கமும் பெற்றிருக்கு மாதலானும், முன்னோர்க்கு இலைமறை காய்போல் மறைந்துகிடந்த இலக்கண அமைதிகள் பின்னோர்க்கு விளங்கித் தோன்றுமாதலானும், தொன்மொழியாகிய தமிழின் உரைநடைக்குப் பின்மொழியாகிய ஆங்கிலத்தின் உரைநடையிலக்கணத்தைத் தழுவி இலக்கணம் வரைவது, இயற்கைக்கு மாறானதன்று. எடுத்துக்காட்டாக, நிகழ்கால வினையெச்ச எழுவாயையும் (Noun-Infinitive) வாக்கியப் பாகுபாட்டையும் காண்க. ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்போதே பல வேற்றுமைகளுமிருத்தலின், ஆங்கிலவிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள சில அமைதிகள் தமிழுக்கேற்றவாறு மாற்றிக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு: He who steals எனச் சுட்டுப்பெயரும் அதைத் தழுவிய பெயரெச்சக் கிளவியமுமாக (Adjective clause) வரும் ஆங்கிலச் சொற்றொடர், தமிழில், திருடுகிறவன் என வினையாலணையும் பெயராதல் காண்க. ஒரு பாடப்புத்தகத்தை ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு அல்லது தேர்விற்குத் தகுந்ததாகக் கூறுவதே முறையாயினும், உயர்நிலைப் பள்ளி மாணவர் பள்ளியிறுதி (S.S.L.C) தேறியவுடன் கல்லூரி மாணவராய் விடுதலானும், தமிழிலக்கணவறிவைப் பொறுத்தமட்டில் உயர்நிலைப்பள்ளி மாணவரும், கல்லூரி மாணவரும் பெரும்பாலும் ஒரே தரத்தினர யிருத்தலானும், தமிழ்க் கட்டுரை யிலக்கணத்தைப் பற்றிய பல செய்திகள் அவ்விரு சாரார்க்கும் பொதுவாய்த் தெரிந்திருக்க வேண்டியிருத்தலானும், இந்நூல்அவ்விருசார் மாணவர்க்கும் பொதுவானதென்பது பொருத்த மாகும். ஆயினும், எழுவாய் பயனிலை செயப்படுபொருள் தொகுமிடங் களைக் கூறும் பகுதியும், கதம்ப வாக்கிய வியல்பைக் கூறும் பகுதியும், சிறப்பாகக் கல்லூரி மாணவர்க்கு உரியனவாகக் கூறுவது தக்கதாகும். இந்நூல், தொடரியல், மரபியல், கட்டுரையியல் என மூவியல்புகளை யுடையது; விரிவுபாடு கருதி இருபாகமாக வெளியிடப் பெற்றுளது. முதற்பாகம் முதலியலையும், இரண்டாம் பாகம் ஏனையியல்களையும் கொண்டவை. இந்நூல் ஒரு புது முறையில் முதன்முதல் எழுதப்பெற்றதாகலின், இதிலுள்ள குற்றங்குறைகளை அறிஞர் எடுத்துக்காட்டின், அவற்றை அடுத்த பதிப்பில் நன்றியறிவுடன் திருத்திக் கொள்வேன். இந்நூலிலுள்ள இயற்பிரிவுகளின் உட்பிரிவுகளும் விதிகளும் மறுபதிப்பில் எண்ணீடு பெறும். சேலம், 4.11.1950 ஞா.தேவநேயன் உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு .v முகவுரை .ix i. தொடரியல் - Syntax 1. தொடர் வகைகள் .1 2. வாக்கியம் - Sentence .3 வாக்கிய வுறுப்புக்கள் .3 எழுவாய் தொகும் இடங்கள் .7 பயனிலை தொகும் இடங்கள் .11 செயப்படுபொருள் தொகும் இடங்கள் .17 3. கிளவியம் - Clause 21 4. தொடர்மொழி...22 5. தொடர்மொழி வகைகள் Phrase... 23 பெயர்த் தொடர்மொழி - Noun Phrase .23 பெயரெச்சத்தொடர்மொழி - Adjective Phrase... 25 வினையெச்சத்தொடர்மொழி - Adverb Phrase ... 28 6. கிளவிய வகைகள் .33 பெயர்க்கிளவியம் - Noun Clause . 33 பெயரெச்சக் கிளவியம் - Adjective Clause ..34 வினையெச்சக் கிளவியம் - Adverb Clause .36 கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம் 39 7. வாக்கிய வகைகள் 42 தனிவாக்கியம் - Simple Sentence 42 கூட்டுவாக்கியம் - Compound Sentence 43 கலப்புவாக்கியம் - Complex Sentence... 47 கதம்பவாக்கியம் - Mixed Sentence 49 8. சொல்முறை - Order of Words .53 9. வேற்றுமைப் பொருத்தம் - Appropriate Post positions... 64 10. இசைபு - Concord or Agreement 69 11. காலமுடிபு - The Sequence of Tenses .98 12. ஒப்பீட்டுத்தரங்கள் - Degrees of Comparison .112 13. வாக்கியக்கூறுபடுப்பு - Analysis of Sentences .117 தனிவாக்கியக் கூறுபடுப்பு 117 கூட்டுவாக்கியக்கூறுபடுப்பு... 122 கலப்புவாக்கியக் கூறுபடுப்பு 128 கதம்பவாக்கியக்கூறுபடுப்பு... 135 14. வாக்கியப்பகுதிகளின்வடிவுகளும்பொருள்வகைகளும்... 141 எழுவாய் வடிவுகள் 141 எழுவாயடை வடிவுகள் .144 செயப்படுபொருளடைப் பொருள் வகைகள்... 149 பயனிலை வடிவுகள்... 149 பயனிலையடை வடிவுகள் .152 பயனிலையடைப் பொருள் வகைகள் .153 நிலைப்பாடு உணர்த்தப்பெறும் வகைகள்... 154 நிரப்பிய வடிவுகள் - The Different Formsof Complement 157 15. வாக்கிய ஒன்றுசேர்ப்பு - Synthesis of Sentences ...160 பெயரெச்ச கிளவிய கலப்பு வாக்கியம் .176 வினையெச்ச கிளவிய கலப்பு வாக்கியம்... 176 பyதனிவாக்கியங்கsஒUகதம்பவாக்கிaமாக்கš... 181 16. வாக்கிய வடிவு மாற்றம் - Transformation of Sentences... 183 சொல்வகை¥பரிமாற்ற« - Interchange of one Part of Speech for another... 183 சொற் பரிமாற்றம் - Different ways of Expressing the same idea .188 நிலைப்பாட்டு வாக்கிய வடிவு மாற்றம் Ways of Expressing a Condition 194 இணக்க அல்லது மாறுகோள் வாக்கிய வடிவு மாற்றம் - Ways of Expressing a Concession or Contrast .197 ஒப்பீட்டுத்தரப் பரிமாற்றம் Interchange of the Degree of Comparision .198 செய்வினை செயப்பாட்டுவினைப் பரிமாற்றம் Interchange of Active and Passive Voice .199 உடன்பாட்டுவினை எதிர்மறைவினைப் பரிமாற்றம் - Interchange of Affirmative and Negative sentences .203 வினாவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம் - Interchange of Interrogative and Assertive sentences .205 உணர்ச்சிவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம் - Interchange of Exclamatory and Assertive sentences .206 17. வாக்கிய வடிவு மாற்றம் - (தொடர்ச்சி) .208 தனிவாக்கியத்தைக் கூட்டுவாக்கியமாக மாற்றல் - Conversion of Simple sentences to Complex sentences 208 கூட்டுவாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல் - Conversion of Compound sentences to Complex sentences .210 தனி வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல் - Conversion of Simple sentences to Complex sentences .214 கலப்புவாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல் - Conversion of Complex sentences to Simple sentences .218 கூட்டு வாக்கியத்தை கலப்பு வாக்கியமாக மாற்றல் - Conversion of Compound sentences to Complex sentences .223 கலப்பு வாக்கியத்தைக் கூட்டு வாக்கியமாக மாற்றல் - Conversion of Complex sentences to Compound sentences 225 தலைமைக்கிளவியச் சார்புக்கிளவியப் பரிமாற்றம் - Interchange of Principal and Subordinate Clauses .228 18. நேர்கூற்று, நேரல்கூற்று - Direct and Indirect Speech 231 19. நிறுத்தக்குறிகள் - Punctuation 248 உயர்தரக் கட்டுரை இலக்கணம் - 1 1 தொடரியல் (Syntex) 1. தொடர் வகைகள் சொற்கள், தனித்து நிற்பதும் தொடர்ந்து நிற்பதும்பற்றி, (1) தனிச்சொல், (2) தொடர்ச்சொல் என இருவகைப்படும். தொடர்ச்சொல் எனினும் சொற்றொடர் எனினும் ஒக்கும். எடுத்துக்காட்டு : கடவுள், துணை, செய்வார் - தனிச்சொல். கடவுள்துணை, கடவுள் துணைசெய்வார் - தொடர்ச்சொல். தொடர்ச்சொற்கள் அல்லது bசாற்றொடர்கள்,mவற்றில்mமைந்துள்ளbசாற்களின்bதாகைபற்றி,(1)ïருசொற்றொடர், (2)gல்சொற்றொடர்vனïருவகைப்படும்.ïu©nl bசாற்கள்nசர்ந்தbதாடர்ïருசொற்றொடர்;ïரண்டிற்குnkற்பட்டrற்கள்rர்ந்தjடர்பšrh‰bwhl®. எ-டு :gழனிமலை,Kருகன்tருவான்- ïருbrற்றொடர்அwஞ்செயவிUம்பு.bjhšfh¥ãa¤ij¥ பல்காற் பயில்க. ஒழுக்கமற்றவன் உயர்திணையைச் சேர்ந்தவ னல்லன். இருசொற்றொடர், புணர்ச்சொல் அல்லது புணர்மொழி எனவும் பெயர்பெறும். குறிப்பு : பெயரொடும் வினையொடும் சேர்ந்தன்றிக் தனித்துவராத பலவகை விகுதிகளும், வேற்றுமையுருபுகளும், ஆ ஏ ஓ உம் முதலிய இடைச்சொற்களும், ஈற்று வினாவெழுத்துகளும், சாரியைகளும், துணைவினைகளும், இவைபோன்ற பிறவும், சொற்களாக எண்ணப்பெறா. ஆடு, இடு, இரு, உறு, கொள், படு, போ, போடு, வா, விடு முதலிய பல சொற்கள், பெயரொடும் வினையொடும் சேர்ந்து துணைவினைகளாக வரும். எ-டு: உரையாடு, வந்திடு, எழுந்திரு, கண்ணுறு, வேண்டிக்கொள், வரையப்படு, கொண்டுபோ, உடைத்துப்போடு, கொண்டுவா, தந்துவிடு. இச் சொற்கள் தனித்துவந்து தத்தம் பொருளை முற்றும் உணர்த்துவதுபோன்றே பெயரொடும் வினையொடும் சேர்ந்து வரும்போதும் உணர்த்தின், தனிவினைகளாம்; அன்று தனி எண்ணிக்கை பெறும். எ-டு : மயிலாடுதுறை, இரப்போர்க்கிடு, எழுந்து இரு, விதியுறு, விலைக்குக்கொள், பாடுபடு, எடுத்துப்போ, நிலத்திற்போடு, எடுத்துவா, குடியைவிடு. வினைகள் துணைவினையாக வரும்போது பொருட் பாட்டில் பின்வருமாறு முந்நிலை யடையும். (1) பொருள் வேறுபடுதல். எ-டு : உரையாடு, வரையப்படு. (2) பொருளிழத்தல். எ-டு : எழுந்திரு = எழு. (3) பிரிக்க முடியாமை. எ-டு : கொண்டுவா, கொண்டுபோ. கொண்டுவா அல்லது கொண்டுபோ, என்னும் இருசொற் களும் பொருளால் இணைந்து ஒருசொற்றன்மைப்பட்டு நிற்றல் காண்க. ஆளன், ஆளி, காரன், காரி முதலிய bபயரீறுகளும்;ïடம்,fடு,gடு,kனம்Kதலியbதாழிற்பெயர்Éகுதிகளும்;bகாண்டு,ïருந்து,cடைய,ïடத்தில்Kதலியnவற்றுமையுருபுகளும்;cடைய,cள்ள,Mன,MகியKதலியbபயரெச்சÉகுதிகளும்;Mய்,ïடத்து,fல்,xழியKதலியÉனையெச்சÉகுதிகளும்;jனிvண்ணிக்கைbபறும்jகுதியற்றதுபோல,Jணைவினைகளும்jகுதியற்றவை.Mfnt, இரு சொற்களைத் jனிச்சொல்லாbjhடர்ச்rhல்லாஎ‹wறிதற்கு,அtஇர©டும்தiyமைச்rh‰களாய்வந்துŸளனவா,அவ‰Wள்ஒன்று துணை¢சொšலாய்வந்துŸளதாஎன்று காணுjல்வேண்Lம்.தyik¢ சொற்களைஎண்ணிக்கையிற்சேர்த்து,துணைச்சொற்களைவிட்டுவிடல்வேண்டும்.தலைமைச் சொல்லும் துணைச் சொல்லும் சேர்ந்த தொடர்,சொல்லால்இருசொல்yயினும்bபாருளால்xருbசால்லாம்.xnu bசால்jலைமைச்சொல்லும்Jணைச்சொல்லும்Mவதைக்Ñழ்வரும்brல்வரிசையிற்கhண்க. தiyik¢brhš துணைச்சொல் காரியம் ஆனபோது அழகான பறவை gணம் ஆய்விட்டது நன்றாய் இருக்கிறது எ‹ இடத்தில் என்னிடத்தில் முருகனையுடைய முருகனுடைய பெருமகன் (பெரிய மகன்) பெருமகன் (பொருமான்) வில் அவன் தந்தான் வில்லவன் தந்தான் சொற்றொடர்கள், அவற்றின் பொருள் முடிபுபற்றி, (1) தொடர்மொழி (Phrase) (2) கிளவியம் (Clause) (3) வாக்கியம் (Sentence) என மூவகைப்படும். வாக்கிய வுறுப்புகள் 2. வாக்கியம் (Sentence) எழுவாயும் பயனிலையும் அமைந்து கருத்து முடிந்த இரு சொற்றொடரும் பல்சொற்றொடரும் வாக்கியம் எனப்படும். நாம் பேசும்போது பல வாக்கியங்களாகப் பேசுகிறோம். நாம் பேசுவதையே (அல்லது பேசும் முறைப்படியே) எழுதுவதினால், எழுதும்போதும் அங்ஙனமே வாக்கியங்களாக எழுதுகிறோம். ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு முடிந்த கருத்தையுடையது. ஒரு வாக்கியத்தில் பல கருத்துகளிருந்தாலும், முடிந்த கருத்து ஒன்றுதான் இருக்கும். ஒரு சொற்றொடர் முடிந்த கருத்தையுடையதா யிருப்பதற்கு இரு நிலைமைகள் வேண்டும். ஒன்று எழுவாயும் பயனிலையு மிருத்தல்; இன்னொன்று பயனிலை முற்றுச்சொல்லா யிருத்தல். ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒரு பொருளைப்பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும். எந்தப் பொருளைப்பற்றி ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்தப் பொருளைக் குறிக்கும் சொல் எழுவாய் எனப்படும். ஒரு பொருளைப்பற்றி என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கிறதோ, அன்ன செய்தியைக் குறிக்கும் சொல் பயனிலை எனப்படும். கந்தன் வந்தான் என்பது ஒரு வாக்கியம். இதில் கந்தன் என்பவனைப்பற்றி வந்தான் என்னும் செய்தி சொல்லப்பட் டிருக்கின்றது. ஆகையால், கந்தன் என்பது எழுவாய்; வந்தான் என்பது பயனிலை. கந்தன் வந்து என்னும் சொற்றொடரும் அதே எழுவாயும் அதே பயனிலையும் கொண்டுள்ளதே; ஆயினும், வாக்கிய மாகாது. ஏனெனின், வந்து என்னும் பயனிலை முற்றுச்சொல்லா யில்லை. அது வேறொரு சொல்லைக்கொண்டு பொருள் முடிவதா யிருக்கின்றது. கந்தன் வந்து போனான் என வேறொரு முற்றுச் சொல் வந்துதான் அதன் பொருள் முடிதல் வேண்டும். அன்றுதான் கந்தன் வந்து என்னும் தொடரும் பொருள் முடியும். கந்தன் வந்தான், கந்தன் வந்து போனான் என்னும் சொற்றொடர்கள், முற்றுச்சொற்களைப் பயனிலையாகக் கொண்டுள்ளமையால் வாக்கியமாகும். வந்தான், போனான் என்பன முற்றுச்சொற்கள். ஆகவே, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை எனப் பயனிலை இருவகைப்படும் என்பதும், எழுவாயும் முற்றுப் பயனிலையும் கொண்டுள்ள தொடரே வாக்கியம் என்பதும் அறியப்படும். எந்த வாக்கியமும் ஒரு பொருளைப்பற்றி ஒரு செய்தி சொல்வதென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஒரு பொருளில்லா விட்டால் எங்ஙனம் அதைப்பற்றிய செய்தியுமில்லையோ, அங்ஙனமே ஒரு பொருளைக் குறிக்கும் சொல் இல்லாவிட்டால் அதைப்பற்றிய செய்தியைக் குறிக்கும் சொல்லுமில்லை. இவ் விரு சொல்லுமின்றி வாக்கியமுமில்லை. ஆதலால், ஒரு பொருளைக் குறிக்கும் சொல்லே (அதைப்பற்றி) ஒரு வாக்கியம் உண்டாவதற்குக் காரணமாம். இதனால், அஃது எழுவாய் எனப்பட்டது. வாக்கியம் எழுவதற்கு (உண்டாவதற்கு) வாயாக (இடமாக) இருப்பது எழுவாய். எழுவாயின் பயன் (பொருள்) நிற்குமிடம் பயனிலை. கந்தன் என்று மட்டும் சொன்னால், அதன் பொருள் முடியவில்லை. அது, கந்தன் என்ன செய்தான்? கந்தனைப்பற்றி என்ன செய்தி? என்னும் வினாக்கட்கு இடந்தரும். கந்தன் வந்தான், கந்தன் நல்லவன் என வேறொரு முற்றுச் சொல்லைச் சேர்த்துக் சொன்னால்மட்டும் அதன் பொருள் முடியும். வந்தான், நல்லவன் என்பன கந்தன் என்னும் எழுவாயின் பொருள் நிற்குமிடம் அல்லது முடிந்து நிற்குமிடமாதலால், அவை அதன் பயனிலையாகும். பெயரெச்சமும் வினையெச்சமுமாகிய எச்சவினைகள் எழுவாயின் பொருள் முடிந்து நிற்குமிடமல்லவாயினும், ஓரளவு அதன் பொருளைக்கொண்டு நிற்றலால் எச்சப் பயனிலை என்னும் பெயர்க்குரியவையாகும். ஆகவே, ஒரு வாக்கியத்திற்கு எழுவாய் பயனிலை ஆகிய இரண்டும் இன்றியமையாதவை என்பதும், அவற்றுள் எழுவாய் வாக்கியத்தைத் துவக்கும் சொல்லும் பயனிலை அதை (வாக்கி யத்தை) முடிக்கும் சொல்லும் ஆகும் என்பதும், அறியப்படும். எழுவாயும் பயனிலையும் சொல்லையுங் குறிக்கும்; பொருளையுங் குறிக்கும். பொருள், சொற்பொருள் பொருட்பொருள் என இருவகைப்படும். ஒரு சொல்லின் பொருட்பாடு (meaning) சொற்பொருள்; சொற்களால் நேரடியாய்க் குறிக்கப் பெறும் காட்சியுங் கருத்துமாகிய இருதிணைப்பொருளும் பொருட்பொருள். சொல்லையும் சொற்பொருளையும் குறிக்கும்போது, எழுவாயும் பயனிலையும் எச்சொல்லாகவும் இருக்கலாம். பொருட்பொருளைக் குறிக்கும்போது, எழுவாய் பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக விருக்கும்; பெயர்ச்சொல்லா யிருப்பின் முதல் வேற்றுமையிலேயே இருக்கும்; பயனிலை பெயராகவு மிருக்கும்; வினையாகவு மிருக்கும். எ-டு: எழுவாய் (1) மாதிரி ஆங்கிலச்சொல் - பெயர் விழைந்து விரும்பி வினையெச்சம் } (சொல்) (2) யானை மலையில் வாழும். பெயர்(பொருட் முருகன் வள்ளியை மணந்தான். } பொருள்) பயனிலை (1) அவன் பெயர் அரங்கநாயகன் - பெயர் (சொல்) (2) விழைந்து விரும்பி - வினையெச்சம் (சொற்பொருள்) (3) அது மரம், அவன் சிவன் - பெயர் மரம் வளர்கின்றது. பொருட்பொருள் சிவன் நடிக்கின்றான் - ÉidK‰W} விழைந்து விரும்பி என்பது ஒரு வாக்கியம். விழைந்து என்னும் சொல் விரும்பி என்று பொருள்படும் என்பது இவ் வாக்கியத்தின் பொருள். இவ் வாக்கியம் இலக்கண முறைப்படி சரியான தாயினும், தெளிவு நோக்கி விழைதல் விரும்புதல் என வினையெச்ச வடிவு தொழிற்பெயர் வடிவாக மாற்றி எழுதப் பெறும். மேற்காட்டிய வாக்கியங்களில் : மாதிரி, விழைந்து என்னும் எழுவாய்களும், அரங்கநாயகன் என்னும் பயனிலையும் அவ்வச் சொற்களையே குறித்தலையும்; யானை, முருகன் என்னும் எழுவாய்களும், மரம், சிவன், வளர்கின்றது, நடிக்கின்றான் என்னும் பயனிலைகளும் பொருட்பொருள்களைக் குறித்தலையும்; விரும்பி என்னும் பயனிலை சொற்பொருளைக் குறித்தலையும் காண்க. செயப்படுபொருள் குன்றாவினைகள் பயனிலையாக வரும் வாக்கியங்களில், எழுவாய் பயனிலையோடு செயப்படுபொருள் என வேறோர் உறுப்புமுண்டு. எ-டு : சேரன் செங்குட்டுவன் கனகவிசயரை வென்றான், அதிகமான் xsitahU¡F அருநெல்லிக்கனி யீந்தான். இவற்றுள், முதல் வாக்கியத்தில் கனகவிசயர் என்பதும், இரண்டாம் வாக்கியத்தில் அருநெல்லிக்கனி என்பதும், செயப்படுபொருளாம். செயப்படுபொருளைச் செய்பொருள் என்பதும் உண்டு. செயப்படுபொருள் குன்றாவினைகள் செயப்படு பொரு ளின்றிப் பொருள் நிரம்பா. வென்றான் என்றால் யாரை வென்றான் என்றும், ஈந்தான் என்றால் எதை யீந்தான் என்றும் கேள்விகள் தாமாய் எழலையும்; கனகவிசயர் அருநெல்லிக்கனி என்னும் செயப்படுபொருள்களோடு கூடியே வென்றான் ஈந்தான் என்னும் வினைகள் பொருள் நிரம்புவதையும் காண்க. செயப்படுபொருள் எப்போதும் இரண்டாம் வேற்றுமையி லேயே இருக்கும். சில வேளைகளில் அவ் வேற்றுமை யுருபு தொக்கு (மறைந்து) நிற்பதுமுண்டு. கனகவிசயரை என்பதில் (ஐ என்னும்) 2ஆம் வேற்றுமையுருபு விரிந்து (வெளிப்பட்டு) நிற்பதையும், அருநெல்லிக்கனி என்பதில் அவ் வுருபு தொக்கு நிற்பதையும் காண்க. செயப்படுபொருள் குன்றிய வினைகள் பயனிலையாக வரும் வாக்கியங்களில், செயப்படுபொருள் இராது. எ-டு : மருதன் வருகிறான், கராச்சியிலிருந்து இங்கிலாந்திற்கு வானவூர்தியிற் செல்ல இரண்டு நாள்கள் செல்லும். இவ் வாக்கியங்களில், வருகிறான், செல்லும் என்பன செயப்படுபொருள் குன்றிய வினைகள். ஆதலால், இவற்றில் செயப்படுபொருள் இல்லை. மேற்கூறியவற்றால், எழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆகிய மூன்றும் வாக்கிய வுறுப்புகள் என்பதும், அவற்றுள் எழுவாயும் பயனிலையும் வாக்கியத்திற்கு இன்றியமையாதவை என்பதும், செயப்படுபொருள் குன்றாவினை பயனிலையானால் செயப்படுபொருள் அமைந்தும், செயப்படுபொருள் குன்றியவினை பயனிலையானால் செயப்படுபொருள் அமையாதும் இருக்கும் என்பதும் அறியப்படும். எழுவாய் சில வாக்கியங்களில் தொக்கு நிற்பதுமுண்டு; அது தொகையெழுவாய் அல்லது தோன்றா எழுவாய் எனப்படும். (தொக்கு நிற்றல் = மறைந்து நிற்றல். தொகுதல் = மறைதல்.) எ- டு : நாளைக்கு வருவேன். இதில் நான் என்னும் எழுவாய் தொக்குநின்றது. எழுவாய் தொகும் இடங்கள் (1) உரையாட்டிலும், பேச்சிலும் மூவிடப் பதிற்பெயர்கள் (Personal Pronouns) தொகும். எ-டு : (நான்) ஒன்று சொல்கிறேன், (நீ) கேள். இனி (நாம்) நாளைக்கு என்ன செய்கிறது? (நீ) என்ன சொன்னாய்? (அவன்) நன்றாயிருக்கிறானா? (அது) போனால் போகிறது. (2) செய்தி வினவலில் செய்தி என்னும் சொல் தொகும். எ-டு : (செய்தி) என்ன? (3) வினாவிற் குறித்த எழுவாய் விடைகளில் தொகும். எ-டு : வினா : முச்சங்கம் இருந்தனவா? விடை : (முச்சங்கம்) இருந்தன. (4) மரபுச் செய்திகளையும் கேள்விச் செய்திகளையும் அறிவிக்கும் வாக்கியங்களில், அச் செய்தி கூறுவாரைக் குறிக்கும் எழுவாய் தொகும். எ-டு : (அறிஞர்) இடைச்சங்க நூலகத்தில் எண்ணாயிரத் தெச்சம் நூல்க ளிருந்தன என்பர். (மூத்தோர்) கூட்டத்தில் ஒருவரைச் சுட்டக்கூடாது என்று சொல்லுவர். (மக்கள்) விளக்கேற்றா வீட்டில் வேதாளம் குடிபுகும் என்பர். (சிலர்) இந்தியப் பொதுவுடைமைக் கட்சியார்க்கு இரசியாவி லிருந்து பணம் வருகிறதாகக் கூறுகின்றனர். (5) கணக்குதலைமைச் வாக்கியங்களில் முடிப்புச் சொல்லின் எழுவாய் தொகும். எ-டு : பத்தில் நான்கு போனால் (மீதி) ஆறு. (6) தீவினையும் மடச்செயலும்பற்றி ஒருவரைக் கடியும் வினாவில், பொதுவாய் எழுவாய் தொகும். அவ் வெழுவாய் இடத்திற்கேற்ப மூவிடப்பொருள் எதுவாகவு மிருக்கலாம். ஆனால், வினா முன்பின் தொடர்பின்றிப் பழமொழிபோலத் தனித்து நிற்கும்போது, ஒருவன் என்னும் எழுவாயை வருவித்துக்கொள்வது நன்று. இத்தகைய எழுவாய்களைத் திட்டமற்ற எழுவாய் என்னலாம். எ-டு : (நீ) பச்சைப்பிள்ளைக்கு இப்படி நெடுநேரம் பால் கொடாம லிருக்கலாமா? (அவன்) பெற்றவள் பட்டினியிருக்கப் பிறருக் கெல்லாம் விருந்து வைக்கிறது சரியா? (ஒருவன்) உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணலாமா? (ஒருவன்) மடிநிறையப் பணத்தை வைத்துக்கொண்டு தனிவழியே போகலாமா? (7) விதிவிலக்குகளில் முன்னிலை யெழுவாயும் திட்டமற்ற எழுவாயும் தொகும். எ-டு : (நீ) செய்வன திருந்தச் செய். (ஒருவன்) பலனை விரும்பினால் விதி பாடுபட வேண்டும். } (நீ) கண்டொன்று சொல்லேல். (ஒருவன்) அழுகிற ஆடவனையும் விலக்கு சிரிக்கிற பெண்டையும் நம்பக்கூடாது. } (8) தனிப்பட்ட மக்களியல்பையும் பொது உண்மையையும் கூறும் வாக்கியங்களில், மூவிடப் பதிற்பெயரும் திட்டமற்ற எழுவாயும் தொகும். எ-டு : (இவன்) இவனுக்கு வந்த விருந்தோ என்றிருக்கிறது. (அவன்) கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான். (ஒருவன்) ஆடிக்கறக்கிற மாட்டைப்ஆடிக் கறக்கவேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும். (நான், நீ, அவன்) இருந்தால் பூனை, எழுந்தால் புலி. குறிப்பு : பழமொழிகளிற் குறிக்கப்படும் மக்களியல்பு எல்லார்க்கு முரியதாகவு மிருக்கலாம்; பலர்க்கோ சிலர்க்கோ வுரியதாகவு மிருக்கலாம்; ஒருவனுக்கே யுரியதாகவு மிருக்கலாம். பயனிலையின் பாலுக்கும் எண்ணுக்கும் ஏற்றபடி ஏதேனுமொரு பொது எழுவாய் வருவித்துக்கொள்ளலாம். (9) பழமொழிகளிலும் பழமொழிபோல் வழக்கூன்றிய சொலவுகளிலும், உலகறி எழுவாய்கள் தொகும். எ-டு : (ஆண்டவன்) ஆட்டுக்கும் வால் அளந்துதான் வைத்திருக் கிறான். (திருவையாற்றான்) பாடென்றால் பாடமாட்டானாம், பாடாதே என்றால் பாடுவானாம். (10) விடுகதைகளில் எழுவாய் தொகும். எ-டு : பச்சைப் பச்சென்றிருக்கும், பாகற்காயன்று; பக்கமெல்லாம் முள்ளிருக்கும், பலாக்காயன்று; உள்ளே வெளுத்திருக்கும், தேங்காயன்று; உருக்கினால் நெய் வடியும், நெய்யுமன்று. இதன் எழுவாய் ஆமணக்கங்காய் என்பது. (11) உண்மை கூறும் வாக்கியங்களில், எதிர்கால வினையெச் சத்தின் பின் வினையாலணையும்பெயர் அல்லது தொழிற்பெயர் தொகும். அவ் வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும் அவ் எதிர்கால வினையெச்ச வினையடிப் பிறந்திருக்கும். எ-டு : கொடுத்தால் (கொடுத்தவன்) நல்லவன்; கொடாவிட்டால் (கொடாதவன்) கெட்டவன். சூடு முற்றினால் (முற்றினது) பித்தம். மலையில் விளைந்தால் (விளைந்தது) மாகாளி, நாட்டில் விளைந்தால் (விளைந்து) நன்னாரி. ஆகாத மாமியார்க்குக் கைபட்டால் (பட்டது) குற்றம், கால்பட்டால் (பட்டது) குற்றம். கொன்றால் (கொல்வது) பாவம். (12) நாலாம் வேற்றுமைக்குப்பின் காலப்பெயரும் பிறசொல்லும் தொகும். எ-டு : இன்றைக்குத் திங்கள் = இன்றைக்குக் கிழமை திங்கள். அதைப்பற்றி உனக்கென்ன? = அதைப்பற்றி உனக்குக் கவலை என்ன? இன்று திங்கள் என்னும் தொடரில், இன்று என்பதே பெயர்ச்சொல்லாயும், அதனால் எழுவாயாயும் இருக்கலாம். (13) உடல்நிலை, உளநிலை, சூழ்நிலை, வானிலை, காலநிலை, செல்வநிலை முதலிய பலவகை நிலைகளைக் குறிக்கும் வாக்கியங்களில், எழுவாய் தொகும். எ-டு : எனக்கு ஒருபடியாய் வருகிறது = எனக்கு உடல்நிலை ஒரு படியாய் வருகிறது. அவருக்குக் கோபங்கோபமாய் வருகிறது = அவருக்கு உளநிலை கோபங்கோபமாய் வருகிறது. எனக்குச் சீயென்றிருக்கிறது = எனக்குச் சூழ்நிலை சீயென்றிருக்கிறது. (இவ்விடம்) புழுக்கமாயிருக்கிறது. (நேரம்) இருட்டிவிட்டது. (நிலைமை) சாப்பாட்டிற்குத் திண்டாட்டமாயிருக்கிறது. (14) காலக் கழிவினாலும் வினைத்துய்ப்பினாலும் உண்மை யறியப்படுவதைக் குறிக்கும் வாக்கியங்களில், வினை யெச்சத்திற்கும் தெரியும் என்னும் பயனிலைக்கும் இடையில், உண்மை என்னும் எழுவாய் தொகும். எ-டு : போகப்போகத் தெரியும். யாராத்தாள் செத்தாலும் பொழுதுவிடிந்தால் தெரியும். பட்டால் தெரியும் முட்டாளுக்கு. இவற்றில், தெரியும் என்னும் பயனிலைக்குமுன் உண்மை என்னும் எழுவாய் தொக்குநிற்றல் காண்க. நாளடைவில் தெரியும் என்னும் வாக்கியத்தில் நாளடைவில் என்பது வினையெச்சத்தொழில் செய்யும் தொடர்மொழியாகும். (15) உடம்பிற்கும் உறுப்பிற்கும் நேரும் ஊற்றைக் கூறும் வாக்கியங்களில், ஊறுசெய்யும் பொருள்களைக் குறிக்கும் எழுவாய் தொகும். (ஊறு = தீங்கு, சேதம்) எ-டு : பட்ட காலிற் படும். இதில், படும் என்னும் பயனிலையைக்கொண்டு முடியும் எழுவாய் தொக்கது. அது கல், குச்சு, கால் முதலிய சொற்களில் எதுவாகவுமிருக்கலாம். (16) நிலைப்பாடு (condition) உணர்த்தும் ஏவலின் பின், விளைவு குறித்துவரும் பயனிலையின் எழுவாய் தொகும். எ-டு : கேளுங்கள், (கேட்பது) கொடுக்கப்படும். போங்கள், (அது) கிடைக்கும். சில வாக்கியங்களில் பயனிலை தொகுவதுமுண்டு. அது தொகைப் பயனிலை எனப்படும். பயனிலை தொகும் இடங்கள் (1) விளைவு குறித்த வாக்கியங்களில், எதிர்கால வினை யெச்சத்தின் பின்வரும் எழுவாயின் பயனிலை தொகும். எ-டு : கிட்ட இருந்தால் முட்டப் பகை (நேரும்). அகல இருந்தால் நிகள உறவு (உண்டாகும்). அரணை தீண்டினால் மரணம் (நேரும்). இடும்புக்குத் தின்றால் உடம்புக்குப் பலம் (உண்டாகும்). ஆடிமாதம் அவரைபோட்டால் கார்த்திகை மாதம் காய் (காய்க்கும்). விடுமுறையென்றால் இன்பம் (உண்டாகிறது), வேலை யென்றால் துன்பம் (உண்டாகிறது). இவ்வழி போனால் நாய் (இருக்கிறது), அவ்வழி போனால் முள் (இருக்கிறது). குறிப்பு : இவ் விதி, எழுவாய் தொகும் இடங்களைக் கூறும் விதிகளுட் பதினொன்றாவதுடன் முரணுவதுபோல அல்லது மயங்குவதுபோலத் தோன்றும். அத்தகைய முரண்பாடும் மயக்கமுமின்மை பொருள்நோக்கிக் கண்டுகொள்க. ஆடிமாதம்....fhŒ’ என்னும் வாக்கியத்தில், போட்டது காய் என்று இசையாமையாலும்; இவ்வழி... முள் என்னும் வாக்கியத் தில், போனது நாய்,போவJமுŸஎன்Wஇசையாமையாலும்;இவற்றிலு«இத்தகைaபிறவற்றிலு«எதிர்காyவினையெ¢சத்திலிருந்Jவினையாலணையு«பெயரு«தொழிற்பெயருமாdதொகையெழுவாŒவருவிக்காJஇறுதியில்xருதொfப்பயனிலைiயவருவித்துக்கொŸளவேண்டு«. கொன்றால் (கொல்வது) பாவம் என்னும் வாக்கியத்தில், கொல்வது என்னும் தொழிற்பெயரும், பாவம் என்னும் இறுதிச்சொல்லு«ஒuபொருளை¡குறித்தலையும்;ஆடிமாதம்... காய் என்னும் வாக்கியத்தில் போட்டால் என்னும் வினையெச்சமும் காய் என்னும் இறுதிச்சொல்லும் காரண காரியமாக வெவ்வேறு பொருளையுணர்த்தலையும் காண்க. ஆகவே, இத்தகைய வாக்கியங்களில், வினையெச்சமும் இறுதிச்சொல்லும் ஒரே பொருளை யுணர்த்தும்போது தொகை யெழுவாய் வருவித்தல் வேண்டுமென்றும், காரணகாரியமாக வெவ்வேறு பொருளையுணர்த்தும்போது தொகைப் பயனிலை வருவித்தல்வேண்டுமென்றும், அறிந்துகொள்க. (2) cண்மையைக்Tறும்tக்கியங்களில்,eலாம்nவற்றுமைnயற்றbபயர்க்குப்ãன்வரும்vழுவாய்களின்gயனிலைbதாகும்.v-L : இன்றைக்கு விடுமுறை (உண்டு), நாளைக்குப் பள்ளிக் கூடும் (உண்டு). அவனுக்குக் fய்ச்சல்(அடிக்கிறது). கல்லார்க்கு இரண்டு கண் (உண்டு), கற்றார்க்கு மூன்று கண் (உண்டு)! இரு வீட்டிற்கு ஒரு முற்றம் (இருக்கிறது). ஊழுக்குக் கூத்தன் (பாடுவான்), கூழுக்கு xளவை(பாடுவாள்). தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் (கிடைத்தது), விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும் (கிடைத்தது). அல்லது, தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும் விசுவாசக் காரனுக்கு வெந்நீரும் பருக்கையும் (கிடைத்தன). சோற்றுக்குத்தான் பஞ்சம் (உண்டு), சொல்லுக்குமா பஞ்சம் (உண்டு)? ‘nrh‰W¡F¥ gŠr«, brhšY¡F« gŠrkh?’ v‹gij, ‘nrh‰W¡F¥ gŠr« c©L, brhšY¡F« gŠr« c©lh? என்று விரித்தல் வேண்டும். குறிப்பு : கல்லார்க்கு இரண்டு கண் என்பதை, கல்லார்க்குக் கண் இரண்டு என மாற்றினால், கண் என்பது எழுவாயும் இரண்டு என்பது பயனிலையும் ஆகிவிடும். இங்ஙனமே பெயருக்கும் பெயரெச்சத்திற்கும் பொதுவான எண்ணுச்சொற்கள் வரும் பிற வாக்கியங்களும் இரட்டுறல் நிலையடையும். எ-டு : ஒருவனுக்கு நாலு கால். ஒருவனுக்குக் கால் நாலு. இவற்றுள் : முன்னதில் நாலுகால் என்பது பெயரெச்சத் தொடராகும்; பின்னதில் அது எழுவாய்த் தொடராகும். நாலுகால் என்பதையே வினைமுற்றுத்தொடராகக் கொள்ளின், அது பயனிலையும் எழுவாயுமாக மாறிவிடும். பயனிலை முன்னும் எழுவாய் பின்னும் வருவது வினைமுற்றுத் தொடர். ஒரு, இரு முதலிய பெயரெச்ச வடிவுகள்* இரட்டுறலுக்கு இடந்தரா. எ-டு : கல்லார்க்கு இரு கண் (உண்டு), கற்றார்க்கு முக்கண் (உண்டு). இதில், இருகண் முக்கண் என்பன பெயரெச்சத் தொடர். இவை என்றும் இங்ஙனமே யிருக்கும். பெயரெச்சம் முன்னும் பெயர் பின்னும் வருவது பெயரெச்சத்தொடர். (3) சிறந்த பொருள்களை எடுத்துக்கூறும் வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின் வரும் எழுவாய்களின் பயனிலை தொகும். எ-டு : பட்டினத்திற்கு வீடும் பட்டிக்குக் காடும் (சிறந்தவை). வில்லுக்கு ஓரி, சொல்லுக்கு மாவலி, கொடைக்குக் குமணன், நடைக்கு நக்கீரன் (சிறந்தவர்). வில்லிற் சேரன், சொல்லிற் கீரன் (சிறந்தவர்). வெண்பாவிற் புகழேந்தி, விருத்தத்திற் கம்பன் (சிறந்தவர்). (4) ஒருதன்மைப்பட்ட பல பொருள்களைச் சேர்த்துக் கூறும் பழமொழிகளிற் பயனிலை தொகும். எ-டு : ஊர்வாரிக் கொல்லையும் உத்திரட்டாதிப் பிள்ளையும் (நல்லவை). மாங்காயிற் பெரியதும் தேங்காயிற் சிறியதும் (நல்லவை). பகைவன் வாளும் பகைபோற் கேளும் (கொடியவை). பிரிட்டிசு நீதியும் பிரெஞ்சு வீதியும் (நேர்மையானவை). (5) உண்மையும் நிகழ்ச்சியும் குறித்த வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றமையேற்ற பெயர்க்குப்பின் வரும் எழுவாயின் பயனிலை தொகும். எ-டு : அவனுக்குக் காலிலே புண் (இருக்கிறது). கந்தனுக்கு நாலுநாளாய்க் காய்ச்சல் (அடிக்கிறது). மரத்திலே கொக்கு (இருக்கிறது). ஊரிலே கலியாணம் (நடக்கிறது), மாரிலே சந்தனம் (பூசியிருக்கிறது). (6) அளவு குறித்த வாக்கியங்களில், நிகழ்கால வினை யெச்சத்தின் பின்னும் நாலாம் வேற்றுமையேற்ற பெயர்க்குப் பின்னும் வரும் எழுவாயின் பயனிலை தொகும். எ-டு : கோழியடிக்கக் குறுந்தடியா? = கோழியடிக்கக் குறுந்தடி வேண்டுமா? நல்ல மாட்டிற்கு ஒரு சூடு (போதும்), நல்ல பிள்ளைக்கு ஒரு சொல் (போதும்). அவரைக்கு ஒரு கொடியும் அகம்படிக்கு ஒரு குடியும் (போதும்). முழுத்த ஆண்பிள்ளைக்கு மூன்று வெற்றிலை (வேண்டும், போதும்). கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை (அளவு); குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை (அளவு). விருந்தும் மருந்தும் மூன்று வேளை (உண்ண வேண்டும்). கொம்புளதற்கு ஐந்துமுழம் (விலக வேண்டும்), குதிரைக்குப் பத்து முழம் (விலக வேண்டும்). * ஒரு இரு முதலிய எண்ணுச் சொற்கள் பெயருரிச்சொல் எனச் சில உரையாசிரியராற் குறிக்கப்பட்டிருப்பினும், உண்மையில் பெயர் வினை இடை என மூவகையல்லது வேறுவகைச் சொல் இல்லையென்றும், பெயரைத் தழுவுவதெல்லாம் பெயரெச்சமும், வினையைத் தழுவுவதெல்லாம் வினையெச்சமுமாகும் என்றும் அறிந்துகொள்க. (7) பொருள்களின் தகுதி குறிக்கும் வாக்கியங்களில், நாலாம் வேற்றுமை யேற்ற பெயர்க்குப் பின்வரும் எழுவாயின் பயனிலை தொகும். எ-டு : மனைக்கு வேம்பு (ஏற்றது), மன்றுக்குப் புளி (ஏற்றது). மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு மண்ணாங்கட்டிப் பணியாரம் (தக்கது). மட்டிப்பயலுக்குத் துட்டக் குருக்கள் (தகும்). கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன் (ஏற்றவன்). கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் (ஏற்றது). கண்ணுக்குக் கண் என்பது தண்டனையின் தகுதியைக் குறித்தது. கண்ணைக் கெடுத்தவனுக்குக் கண்ணைக் கெடுக்க வேண்டும் என்பது அதன் பொருள். கொலைக்குக் கொலை என்பதும் பழிக்குப் பழி என்பதும் தண்டனைத் தகுதி குறித்தவையே. இங்ஙனமே பிறவும். (8) ஒன்றுக்குள்ளது இன்னொன்றுக்கு என்னும் கருத்துப் பற்றிய வாக்கியங்களின் இறுதியில் வரும் பயனிலை தொகும். எ-டு : முன் ஏருக்கு வந்தது பின் ஏருக்கு (வரும்). அவனுக்குச் சொன்னது உனக்கும் (சொன்னது). (9) பல சிற்றளவுகள் சேர்ந்து ஒரு பேரளவாவதைக் குறிக்கும் வாக்கியங்களின் பயனிலை தொகும். எ-டு : துளிதுளியாய் வெள்ளம் (ஆகும்). ஒவ்வொன்றாய் நூறா? ஒருமிக்க நூறா? = ஒவ்வொன்றாய் நூறு ஆகுமா? ஒருமிக்க நூறு ஆகுமா? (10) இன்னதற்கு இன்னது வேண்டும் என்னும் கருத்துப்பற்றிய வாக்கியங்களின் பயனிலை தொகும். எ-டு : மாடத்திற்கு ஓவியம் (வேண்டும்), மாநகருக்குக் கோபுரம் (வேண்டும்). ஆணுக்கு அறிவு (வேண்டும்), பெண்ணுக்கு அழகு (வேண்டும்). இங்கு வேண்டுமென்றது தேவையை. தேவை வேறு, தகுதி வேறு. இவற்றின் வேறுபாடறிக. இரண்டாம் வாக்கியத்தில் வேண்டுமென்றது மிக வேண்டியதை. சில வாக்கியங்களில் ஈரெழுவாய்கள் தொகும். எ-டு : (மழை) பெய்தும் (பயிர்) கெட்டது, (மழை) பெய்யாதும் (பயிர்) கெட்டது. (ஒருவன்) சொன்னால், (இன்னொருவன்) கேட்கவேண்டும். அல்லது, (நான்) சொன்னால் (நீ) கேட்கவேண்டும். சில வாக்கியங்களில் எழுவாய் பயனிலை இரண்டும் தொகும். எ-டு : (வாங்குவார்) இன்றைக்குக் கைக்காசு (கொடுக்க வேண்டும்), நாளைக்குக் கடன் (கேட்கவேண்டும்). (அவன்) கண்டால் ஒரு பேச்சு(ப் பேசுகிறான்), காணா விட்டால் ஒரு பேச்சு(ப் பேசுகிறான்). களவு, (காரியம்) வாய்த்தால் நமக்கு (நன்மை), இல்லா விட்டால் பிள்ளையாருக்கு (நன்மை). (அவன்) போனால் போன இடம் (இருந்துகொள்கிறான்), வந்தால் வந்த இடம் (இருந்துகொள்கிறான்). (ஒருவன்) ஆற்றிலே போகிறதை ஐயா குடி அம்மா குடி (என்று சொல்லவேண்டும்). (அவன்) ஆறு கடக்குமட்டும் அண்ணன் தம்பி (என்றான், என்கிறது.) mj‰F¥ã‹ Ú ah®?நானார்? (என்கிறான், என்கிறது.) சில வாக்கியங்களில் பல எழுவாயுடன் பயனிலை தொகும். எ-டு : (அவன்) என் வீட்டிற்கு (நீ) வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டிற்கு (நான்) வந்தால் என்ன கொடுக்கிறாய்? (என்கிறான், என்று கேட்கிறான்). சில வாக்கியங்கள் வெவ்வேறெழுவாய் விரித்தற்கிடந்தரும். எ-டு : (சோறு) இருந்தால் சாப்பாடு (உண்டு), இல்லாவிட்டால் பட்டினி (நேரும்). (சோறு) இருந்தால் (நாங்கள்) சாப்பாடு (சாப்பிடுவோம்), இல்லாவிட்டால் பட்டினி (இருப்போம்). எழுவாயும் பயனிலையும்போலச் சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் தொகும். அது தொகைச் செயப்படு பொருள் எனப்படும். செயப்படுபொருள் தொகும் இடங்கள் (1) உரையாட்டில், முன் தொடர்பினால் பொருளுணர்த்தும் வாக்கியங்களில் இயற்பெயரும் சுட்டுப்பெயருமான செயப்படு பொருள் தொகும். எ-டு : அவர் ஒரு வாரத்திற்கு முன்னமே (பணத்தை) அனுப்பி விட்டாராம் - இயற்பெயர். அவர் ஒரு வாரத்திற்கு முன்னமே (அதை) அனுப்பிவிட்டாராம் - சுட்டுப்பெயர். (2) வினாவிற் குறித்த செயப்படுபொருள், விடையில் தொகும். எ-டு : வினா : அவர் வீடு வாங்கிவிட்டாரா? விடை : அவர் போன மாதமே (வீடு) வாங்கிவிட்டார். (3) எதிர்கால வினையெச்சத்தின்பின், அவ் வினையடிப் பிறந்த வினையாலணையும் பெயரும் தொழிற்பெயருமானசெயப்படு பொருள் தொகும். எ-டு : சொன்னால் (சொன்னதைக்) கேட்க வேண்டும். வலியக்கொடுத்தால் (கொடுத்ததை) யார்தான் வாங்க மாட்டார்? - வினையாலணையும் பெயர். போனால் (போவதைத்) தடுப்பவர் இல்லை - தொழிற்பெயர். (4) எதிர்கால வினையெச்சத்தின்முன் திட்டமற்ற செயப்படு பொருள் விரிப்பின், அதன்பின் சுட்டுப்பெயர் தொகும். எ-டு : (ஒன்றைச்) சொன்னால் (அதைக்) கேட்கவேண்டும். (5) திட்டமற்ற செயப்படுபொருள் பொதுவாய்த் தொகும். எ-டு : இரப்போருக்கு (ஒன்றை) இடு. (ஒன்றை) எழுதுவதற்குத் தாளும் இறகியும் மையும் வேண்டும். (ஒன்றைக்) கொடுக்கிறவன் நல்லவன். (6) செயப்படுபொருள் இன்னதெனத் தெளிவாய் அறியக் கூடிய (அதாவது பயனிலையின் வினையடியாய்ப் பிறந்த பெயராகவுள்ள) இடங்களில், அது தொகும். எ-டு : புலவர் சிவக்கொழுந்து நன்றாய்ப் (பாட்டுப்) பாடுகிறார் மலையப்பன் இன்று ஒழுங்காய்ப் (பாடம்) படிக்கிறான். குறிப்பு : இத்தகைய செயப்படுபொருளை உறவுடைச் செயப்படுபொருள் (Cognate Object) என்பர் ஆங்கில இலக்கணியர். (7) (பற்பல) தொழில் குறிக்கும் வினைகட்குரிய செயப்படு பொருள், சொல்லாமல் அறியக்கூடிய இடங்களில் தொகும். எ-டு : உழவன் (நிலத்தை) உழுகிறான். (நிலத்தை) அகல உழுவதினும் ஆழ உழுவது நல்லது. குயவன் (கலங்களை) வனைகிறான். சில வாக்கியங்களில் எழுவாய் செயப்படுபொருள் இரண்டும் ஒருங்கே தொகும். எ-டு : (ஒருவன் ஒன்றைச்) சொன்னால் (இன்னொருவன் அதைக்) கேட்கவேண்டும். குறிப்பு : பல எழுவாய்களும் பயனிலையும் தொக்கு நிற்பன, பழமொழிகளும் அவற்றைப்போற் சுருக்கமான வணிகக் கூற்றுகளும் உரையாட்டு வாக்கியங்களுமாகும். மாணவர் எழுதும் கட்டுரைகளில், இத்தகைய தொகைநடையைக் கையாளுதல் கூடாது; இயன்றவரை வாக்கிய உறுப்புகளை யெல்லாம் விரித்தே யெழுதுதல் வேண்டும். உறவினருக்கும் நெருங்கிய நண்பருக்கும் எழுதும் கடிதங்களிலும் விளம்பரம் வணிகக்கடிதம் முதலிய வற்றிலும் இத்தகைய தொகைநடையைக் கையாளலாம். எழுவாய் பயனிலையில்லாமல் வாக்கியமில்லை என்பதை அறிவித்தற்கும், வாக்கியக் கூறுபடுப்பில் வாக்கியவுறுப்புகளைக் குறிக்கும்போது தொகை எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களை வருவித்துக்கொள்ளும் வகையைக் காட்டற்குமே, எழுவாய் பயனிலை செயப்படுபொருள்கள் தொகுமிடங்கள் இங்குக் கூறப்பட்டன என அறிக. பயிற்சி (1) பின்வரும் வாக்கியங்களிலுள்ள எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களைக் குறிப்பிடுக : (1) தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும். (2) பெற்றவர்களுக்குத் தெரியும் பிள்ளையி னருமை. (3) ஒருநாட் காய்ச்சல் ஆறுமாத வலுவைப் போக்கும். (4) பிறப்பால் சிறப்பில்லை. (5) எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. (6) காலம் செய்வது ஞாலம் செய்யாது. (7) திராவிடமொழிகள் மொத்தம் பதின்மூன்று. (8) நாற்பதடுக்கு மாடிகள் நியூயார்க்கில் பல உள. (9) இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று. (10) ஒன்று விடியட்டும் விடியட்டும் என்கிறது; ஒன்று விடிய வேண்டா விடிய வேண்டா என்கிறது; ஒன்று விடிந்தாலும் சரி, விடியாவிட்டாலும் சரி என்கிறது. (11) திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் சுந்தரமூர்த்திகள் எனத் தேவார ஆசிரியர் மூவர். (12) தனித்தமிழை வளர்த்த பெருமை பல்லவபுரம் பொது நிலைக் கழகத் தலைவர் தெய்வத்திரு மறைமலையடி கட்குரியது. (13) மாவலி (மகாபலி) ஒரு மாட்சிமை பெற்ற திராவிடப் பேரரசன். (14) தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எண்வகை வனப்புள் இயைபுவகைப்பட்டவை, சிலப்பதிகாரமும் மணி மேகலையும். (15) மின்னுவதெல்லாம் பொன்னாமா? (16) திருக்குறள், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று பால்களையுடையது. (17) வருவது வந்தே தீரும். (18) வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை (19) பண்டைத் தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க மூன்று சங்கங்கள் இருந்தன. (20) குறிஞ்சிநிலத் தமிழ்மக்கள் தொன்றுதொட்டு முருகனை வணங்கி வருகின்றனர். (21) பழந்தமிழ்நாட்டின் பெரும்பகுதியாகிய குமரிநாடு கடலுள் முழுகிக் கிடக்கின்றது. (22) ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) கடலுக்குள் இருந்தது. (23) தமிழ், இந்திய மொழிகளுக்குள் மிக முந்தியது. (24) இற்றைத் தமிழ் நூல்களுக்குள் தொல்காப்பியம் மிகப் பழைமையானது. (25) காரிகை கற்றுக் கவி பாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று. பயிற்சி (2) பின் வரும் வாக்கியங்களில் தொக்குள்ள எழுவாய் பயனிலை செயப்படுபொருள்களை விரித்தெழுதுக : கவனிப்பு : விரிக்கும் சொல் எதுவாயினும் ஆகுக; பொருத்தமா யிருந்தாற் போதும். (1) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமா? (2) ஒன்று சொன்னால் ஒன்பது சொல்வான். (3) இருவீட்டுக்கு ஒரு முகடு. (4) தவத்திற் கொருவர், கல்விக்கிருவர், வழிக்கு மூவர். (5) குட்டித் திருவாசகம் என்று எதற்குப் பெயர்? (6) தன் குற்றம் இருக்கப் பிறர்குற்றம் பார்க்கிறதா? (7) நின்றால் நெடுஞ்சுவர், விழுந்தால் குட்டிச்சுவர். (8) சித்திரை என்று சிறுக்கிறதுமில்லை, பங்குனி என்று பருக்கிறதுமில்லை. (9) ஒன்றே செய்யவும் வேண்டும்; ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்; நன்றும் இன்றே செய்யவும் வேண்டும். (10) துளித் துளியாய் வெள்ளமா? துடுமென்று வெள்ளமா? (11) குத்துக் குத்தாய் நட்டால், கோட்டை கோட்டையாய் விளையுமா? (12) சும்மா இரு. (13) பேசினால் மெல்லப் பேசவேண்டும். (14) எங்குப் பார்த்தாலும் வெள்ளம். (15) நாளைக்கு என்ன செய்கிறது? (16) சோற்றுக்குத்தான் பஞ்சம், சொல்லுக்கும் பஞ்சமா? (17) விதைத்தவன் அறுக்கிறான். (18) இன்றைக்கு ஆவணி, நாளைக்குப் புரட்டாசி. (19) எனக்கும் பங்கு, என் மகனுக்கும் பங்கு. (20) அழகனுக்கு ஆண்டுச் சம்பளம், மாதச் சம்பளமன்று. (21) பார்த்துப் போ. (22) சொன்னபடி செய். (23) போகப் போகத் தெரியும். (24) கண்டால் காமாட்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர். (25) பாலுக்குச் சருக்கரை, கூழுக்கு உப்பு. 3. கிளவியம் (Clause) எழுவாயும் பயனிலையும் அமைந்து கருத்து முடியாத சொற்றொடர்கள், கிளவியம் எனப்படும். எ-டு : (1) நான் சொல்லி. (2) நான் சொல்லி இருநாளுக்குப் பின்பு. (3) அரசனே வந்து என்னை அழைத்தாலும். (4) கம்பர் பாட்டுகளிற் பல இடைச்செருகல் என்று. (5) நான் உன்னை ஒருபோதும் கைவிடேன் என்று சொன்ன. இவை எழுவாயும் பயனிலையும் அமைந்த சொற்றொடர் களாயினும், கருத்து முடியாமையின் கிளவியமாயின. இவற்றுள் : (1)-லும் (2)-லும், நான் எழுவாய்; சொல்லி பயனிலை. (3)-ல், அரசனே எழுவாய்; அழைத்தாலும் பயனிலை. இவற்றில் ஒன்றிலேனும் முற்றுச்சொல் பயனிலையா யில்லாமையால், கருத்து முடியவில்லை. (4)-ல், பல எழுவாய்; இடைச்செருகல் பயனிலை. (5)-ல், நான் எழுவாய்; கைவிடேன் பயனிலை. இவற்றில், பயனிலைகள் முற்றுச் சொல்லாயினும், என்று என்று சொன்ன என்னும் சொல்லோடும் சொற்றொடரோடும் சேர்ந்து விட்டதனால், தம் முற்றுத் தன்மையை இழந்துவிட்டன. 4. தொடர்மொழி எழுவாயும் பயனிலையும் அமையாத சொற்றொடர்கள், தொடர்மொழி எனப்படும். எ-டு : (1) கையெழுத்து, (2) தெற்கும் வடக்கும், (3) இலைமறை காய் போல், (4) அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும், (5) இளமையிலேயே இலக்கண விலக்கியங்களை யெல்லாம் முற்றக் கற்பதற்கு. இத் தொடர்கள் எழுவாய் பயனிலையில்லாதவை; அல்லது அவற்றுள் ஒன்றையே கொண்டவை; அதனால், தொடர்மொழி எனப்படுவன. குறிப்பு : வாக்கிய உறுப்புகளின் தொகையை அல்லது சொற்றொடர்களின் இயல்பை நோக்கின், தொடர்மொழி, கிளவியம், வாக்கியம் என்ற முறையில் கூறுவதே பொருத்தமா யினும், எழுவாய் பயனிலை யறிவு அம் மூன்றன் உணர்ச்சிக்கும் வேண்டுதலின், அவ் வுறுப்புகள் நிரம்பிய வாக்கியம் முன்னும், அவை நிரம்பாக் கிளவியம் இடையும், அவையில்லாத் தொடர்மொழி இறுதியும் கூறப்பட்டன என அறிக. பயிற்சி பின்வரும் சொற்றொடர்களுள் ஒவ்வொன்றும் (தொடர்மொழி, கிளவியம், வாக்கியம் என்னும்) மூவகைத் தொடர்களில் எதுவென்று குறித்து, அதற்குக் காரணமுங் காட்டுக; (1) வடமொழி தென்மொழி யிரண்டிலும் வல்லுநரான சிவஞான முனிவர். (2) அழுத கண்ணும் சிந்திய மூக்கும். (3) ஓவியம் சித்திரம். (4) முன்னுக்குப்பின் முரண். (5) பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே. (6) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். (7) கோடியுந் தேடிக் கொடிமரமும் நாட்டி. (8) கண்டேன் காதலியை. (9) என்னதைச் சொல்லி என்ன பயன். (10) எல்லார்க்கும் விடுதலை. (11) கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல். (12) கைபட்டாற் கண்ணாடி. (13) ஊரெலாம் சேற்று நாற்றம். (14) மீன்சாறோ தேன்சாறோ. (15) ஆயிரம் பிறை கண்டவன். (16) ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால். (17) ஆல் பழுத்தால் அங்கே, அரசு பழுத்தால் இங்கே. (18) ஆகட்டும் ஆகட்டும். (19) என்று விடியும் எனக்கு? (20) ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன். (21) தொன்றுதொட்டு இன்றுகாறும். (22) எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய். (23) உண்டே மறுமை! (24) நல்லநல்ல குதிரையெல்லாம் கொள்ளைத் தின்னும்போது. (25) பிறபின். 5. தொடர்மொழி வகைகள் (Phrase) தொடர்மொழிகள், (1) பெயர்த் தொடர்மொழி, (2) பெயரெச்சத் தொடர்மொழி, (3) வினையெச்சத் தொடர்மொழி, என மூவகைப்படும். பெயர்த் தொடர்மொழி (Noun phrase) பெயர்த்தன்மையுடைய (அல்லது பெயரின் தொழிலைச் செய்யும்) தொடர்மொழி, பெயர்த் தொடர்மொழியாகும். எழுவாயும் செயப்படுபொருளுமாதலும் வேற்றுமையேற்றலும், பெயர்த்தன்மையாம். ஒரு தொடர்புபட்டுப் பெயரில் முடிவனவும் பெயர்போற் பயன்படுவனவுமான சொற்றொடர்களெல்லாம் பெயர்த்தொடர் மொழிகள். எ-டு : (1) காலையில் எழுந்திருத்தல் காக்கையின் சிறந்த குணங்களுள் ஒன்று. (2) (வானொலிப் பெட்டியை) எப்படிப் பயன்படுத்துவ தென்பது பலர்க்குத் தெரியாது. (3) ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி. (4) கண்ணப்பனுக்குப் பாட்டுப்பாடத் தெரியும். (5) நற்றா மரைக்கயத்தில் உனக்குத் தெரியுமா? இவற்றுள் : (1)-லும் (2)-லும் (3)-லும் உள்ள பெயர்த் தொடர்கள் பெயரில் முடிவன. (4)-ல் உள்ள பாட்டுப்பாட என்பது, பாட்டுப்பாடுதல் என்று பொருள்படுவதாகும். இதைத் தொழிற்பெயர் நிகழ்கால வினை யெச்சம் (Noun Infinitive) என்னலாம். (5)-ல் உள்ள நற்றா மரைக்கயத்தில் என்பது அங்ஙனம் தொடங்கும் வெண்பாவைக் குறிக்கும். இங்ஙனமே எல்லாப் பாட்டு முதற்குறிப்புகளும் அவ்வப் பாட்டைக் குறிக்கும் பெயர்த்தொடர் மொழிகளாம் : இந் நால்வகைப் பெயர்த்தொடர்களுள்ளும், நிகழ்கால வினையெச்சத்தில் (Infinitive mood) முடியும் தொடர் வேற்றுமை யேற்காது; ஏனைய மூன்றும் வேற்றுமையேற்கும். எ-டு : காலையி லெழுந்திருத்தலைச் சிறந்த பழக்கமாகக் கூறுவர். வானொலிப் பெட்டியை எப்படிப் பயன்படுத்துவ தென்பதைப் பலர் அறியார். நற்றா மரைக்கயத்திலை ப் பாடியவர் யார்? பயிற்சி பின்வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்த்தொடர் மொழி களைக் குறிப்பிடுக : (1) இல்லையென்பவர்க்கு இல்லையென்னாமை கொடை யாளிகளின் இயல்பு. (2) எப்படிப் பாடினரோ மிக நல்ல பாட்டு. (3) பிறர்நலம் பேணுதல் மக்கட்பண்பிற்கு இன்றியமையாத குணம். (4) உடலைப் பேணாமை அறிவுள்ள செயலன்று. (5) குரங்கிற்குக் கூடுகட்டத் தெரியாது; ஆனால், கட்டின கூட்டைப் பிரிக்கத் தெரியும். (6) மதுரை பாராதவன் மாபாவி. (7) ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் தமிழ்ச்சிறார் படிக்கும் ஒழுக்க நூல்கள். (8) இப்போது எதைப் பேசுவது என்று தெரியவில்லை. பெயரெச்சத் தொடர்மொழி (Adjective Phrase) பெயரெச்சம்போற் பெயரைத் தழுவும் தொடர்மொழி பெயரெச்சத் தொடர்மொழியாம். பின்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : (1) நல்ல பிள்ளைக்கு ஒரு சொல். நல்ல குணமுள்ள பிள்ளைக்கு ஒரு சொல். (2) பொன் நகை வெள்ளி நகையைவிட விலையுயர்ந்தது. பொன்னால் செய்யப்பட்ட நகை வெள்ளியால் செய்யப்பட்ட நகையைவிட விலையுயர்ந்தது. (3) காட்டு விலங்கு மிகக் கொடியது. காட்டில் வாழும் விலங்கு மிகக் கொடியது. (4) செந்தாமரை திருமகளுக்கு உறைவிடம். செந்நிறமான தாமரை திருமகளுக்கு உறைவிடம். (5) புள்ளிமான் பார்வைக்கு அழகானது. புள்ளியுடைய மான் பார்வைக்கு அழகானது. (6) சாரணனுக்கு எப்போதும் சிரித்த முகம் இருக்க வேண்டும். சாரணனுக்கு எப்போதும் சிரிப்போடு கூடிய முகம் இருக்கவேண்டும். மேற்கண்ட ஒவ்வொரு வாக்கிய இணையிலும், முதலாவது ஒரு தனிச்சொல் ஒரு பெயரைத் தழுவி அப் பெயராற் குறிக்கப்பட்ட பொருளை வரணிக்கின்றது. பின்பு ஒரு தொடர்ச்சொல் அதே பெயரைத் தழுவி அங்ஙனமே அப் பெயராற் குறிக்கப்பட்ட பொருளை வரணிக்கின்றது. எடுத்துக்காட்டாக, நல்ல என்னும் தனிச்சொல்லும் நல்ல குணமுள்ள என்னும் தொடர்ச்சொல்லும் பிள்ளை என்னும் ஒரே பெயரைத்தழுவி, அப் பெயராற் குறிக்கப்பட்ட பொருளை ஒரே வகையில் வரணிக்கின்றன. நல்ல என்னும் பெயரெச்சம் போன்றே நல்ல குணமுள்ள என்னும் தொடர்ச்சொல்லும் பெயரைத் தழுவுவதால், பெயர்த்தொடர்மொழி எனப்படும். பெயரெச்சத்தின் தொழிலைச் செய்யும் தொடர்மொழி பெயரெச்சத் தொடர்மொழி. குறிப்பு : தொகைதொடர் இலக்கணப்படி, மேற்கண்ட வாக்கிய இணைகளிலுள்ள பொன்நகை காட்டு விலங்கு புள்ளிமான் என்பவை வேற்றுமைத்தொகை என்றும், செந்தாமரை என்பது பண்புத்தொகை என்றும், தமிழிலக்கண நூல்களிற் கூறப்படினும்; அங்ஙனம் கூறுவது புணரியலுக்குரிய தொடர்ச்சொல் இலக்கணமென்றும்,மேற்காட்டிய தொடர்ச்சொற்களிலுள்ள பொன், காட்டு, புள்ளி, செம் என்ற நிலைச்சொல் நான்கும் தனிப்பட்ட முறையில் பெயரெச்சம்போல் ஒவ்வொரு பெயரைத் தழுவி நிற்பதால் உண்மையில் பெயரெச்சமே யென்றும், சொல்லிலக்கணம் கூறுவது தனிச் சொல்லுக்கேயன்றித் தொடர்ச்சொல்லுக்கன்று என்றும், சொல்வடிவு எதுவாயினும் ஆட்சி (பிரயோக)ப்படியே சொல்வகை யறியப்படும் என்றும் அறிந்துகொள்க. பயிற்சி (1) பின்வரும் வாக்கியத்திலுள்ள பெயரெச்சத் தொடர் மொழிகளை எடுத்தெழுதுக : (1) இனிய சுவையுள்ள பண்டம் எல்லார்க்கும் ஏற்கும். (2) குறுகிய அளவுள்ள பாவகைகளுள் குறள் ஒன்று. (3) செல்வம் மிகுந்த மக்கட்குச் செருக்கு இயல்பு. (4) தீமை விளைக்கும் பொருள்களைத் தீண்டுதலும் கூடாது. (5) தேரோட்டம் சித்திரை மாதம் நடக்கும் திருவிழா. (6) குளிர்ந்த நிலையிலுள்ள நீர் கோடைக் கேற்றது. (7) பேய்த்தன்மையுள்ள மாந்தர் நன்மைக்கும் தீமை செய்வர். (8) காட்டுவழியாகச் செல்லும் பாதை பாதுகாப்பற்றது. (9) ஈயம் மிக எடையுள்ள உலோகம். (10) மூவேந்தர் சின்னங்களும் ஒருங்கே கொண்டது தமிழ் நாட்டுக் கொடி. (11) இளம்பருவக் காளைக்குக் காளங்கன்று என்று பெயர். (12) ஒன்றும் எழுதப்படாத தாள் வெற்றுத்தாள். (13) மேடுபள்ள மில்லாதவெளி சமவெளி. பயிற்சி (2) கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயரெச்சங்கட்குப் பதிலாகப் பெயரெச்சத் தொடர்மொழிகளை அமைக்க : (1) இல்வாழ்க்கையே நல்வாழ்க்கை (2) வீண்பேச்சுப் பேசுகிறவன் வேலையைத் திறம்படச் செய்யமாட்டான். (3) விடுதி மாணவர்க்கில்லாத சில வசதிகள் வீட்டு மாணவர்க் குண்டு. (4) புன்குடிலாயினும் தன்குடிலா யிருத்தல் வேண்டும். (5) சீமைச் சரக்கோ சீர்மைச் சரக்கோ! (6) பஞ்சுத் துணியினும் பட்டுத்துணி விலை மிகுதி. (7) மண்கலத்திற் சமைத்துண்பது உடல்நலத்திற் கேது வானது. (8) இந்தியக் கொடி மூவரண முள்ளது. (9) வெட்டிவேலை செய்கிறவன் வீணன். (10) தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். (11) கெட்ட பழக்கங்களை விட்டுவிடல் வேண்டும். பயிற்சி (3) பின்வரும் வாக்கியங்களிலுள்ள பெயரெச்சத்தொடர் மொழிகட்குப் பதிலாகப் பெயரெச்சங்களை அமைக்க : (1) ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட காரியங்களைக் கவனிக்கலாகாது. (2) நீர்வற்றிய கிணறுகளே பாலைநிலத்தில் உண்டு. (3) உள்ளீடற்ற கடிதம் ஒன்று இன்று எனக்கு வந்தது. (4) நான் சென்னைக்குச் சென்று நீண்ட அளவான காலம் ஆகிவிட்டது. (5) பொய்யில்லாத பொதுமறை திருக்குறள். (6) கண்ணாற் கண்ட செய்தியும் சிலவேளை பொய்யாகும். (7) அளவுக்கு மிஞ்சிப் பழுத்துக்கெட்ட பழங்கள் இலவச மாய்க் கிடைத்தாலும் உண்ணக்கூடாது. (8) இழை நெருக்கமில்லாத துணி விரைந்து கிழியும். (9) பசுமையில்லாத ஓலை சலசலக்கும். (10) வளமில்லாத நிலம் பாலை. (11) கருநிற விலங்குகளுட் பெரியது யானை. (12) வெளிச்சமில்லாத வீட்டில் குடியிருப்பவரை வேதாளம் போன்ற நோய் அலைக்கழிக்கும். வினையெச்சத் தொடர்மொழி (Adverb Phrase) வினையெச்சம்போல் வினையையும் வினையடிச்சொல் லையும் தழுவும் தொடர்மொழி, வினையெச்சத் தொடர் மொழியாம். வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய மூன்றும் வினைச்சொல் என்றும், தொழிற்பெயர் வினையாலணையும் பெயர் ஆகிய இரண்டும் வினையடிச்சொல் என்றும், அறிக. பின்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : (1) இக் கட்டுரை நன்றாய் இருக்கிறது : இக் கட்டுரை நல்ல முறையில் இருக்கிறது. (2) அவர் கோபமாய் இருகிறார். அவர் கோபமான நிலையில் இருக்கிறார். (3) அன்று புகைவண்டி யில்லை. அக்காலத்தில் புகைவண்டி யில்லை. (4) புத்தகம் கீழே யிருக்கிறது. புத்தகம் தரையின்மேல் இருக்கிறது. (5) கடவுள் எங்கும் இருக்கிறார். கடவுள் எல்லாவிடத்திலும் இருக்கிறார். (6) இவ் வீடு பாழாய்க் கிடக்கிறது. இவ் வீடு ஒருவரும் குடியில்லாமல் கிடக்கிறது. (7) காட்டுவழியாய்த் தனியே போகக்கூடாது. காட்டுவழியாய்த் துணையில்லாமல் போகக்கூடாது. (8) தென்னை நெய்தல்நிலத்தில் மிகுதியாக வளரும். தென்னை நெய்தல்நிலத்தில் மிகுந்த அளவாக வளரும். (9) வீரமாய்ப் பொருத படை வெற்றியடைந்தது. வீரத்தன்மையோடு பொருத படை வெற்றியடைந்தது. (10) பச்சையாய் இருந்தால் பார்வைக்குக் குளிர்ச்சி. பச்சைநிறமாய் இருந்தால் பார்வைக்குக் குளிர்ச்சி. (11) குருடாய் இருத்தல் மிகத் துன்பமானது. கட்புலனில்லாமல் இருத்தல் மிகத் துன்பமானது. (12) சும்மா இருப்பவன் சோம்பேறி. ஒருவேலையும் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி. மேற்கண்ட ஒவ்வொரு வாக்கிய இணையிலும், முதலாவது ஒரு தனிச்சொல் ஒரு வினைச்சொல்லை அல்லது வினையடிச் சொல்லைத் தழுவி அதன் பொருளை வேறுபடுத்துகின்றது; பின்பு ஒரு தொடர்மொழி அதே சொல்லைத் தழுவி அதே வகையில் அதன் பொருளை வேறுபடுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, நன்றாய் என்னும் தனிச்சொல்லும் நல்ல முறையில் என்னும் தொடர்மொழியும், இருக்கிறது என்னும் ஒரே வினையைத் தழுவி அதன் பொருளை ஒரே வகையில் வேறு படுத்துகின்றன. நன்றாய் என்னும் வினையெச்சம் போன்றே நல்ல முறையில் என்னும் தொடர்ச்சொல்லும் வினையைத் தழுவுவதால், வினையெச்சத் தொடர்மொழி எனப்படும். வினையெச்சத்தின் தொழிலைச் செய்யும் தொடர்மொழி, வினையெச்சத் தொடர்மொழி. பயிற்சி (1) பின்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சத் தொடர் மொழிகளை எடுத்தெழுதுக : (1) எல்லாரும் எல்லாவகையிலும் ஏற்றத்தாழ்வில்லாமல் இருத்தல் முடியாது. (2) புகை வண்டிகளுள் அஞ்சல்வண்டி (Mail) மிக வேகமாய்ச் செல்லும். (3) பணமில்லாமல் ஒரு காரியமும் நடவாது. (4) எளிய நிலையில் இருப்பவர் ஏளனத்திற்கு ஆளாவர். (5) குறைந்த வேகத்தில் செல்லும் வண்டி மாட்டுவண்டி. (6) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம். (7) பொருள்கள் சிற்றளவாக இருப்பதே பங்கீட்டுக்குக் காரணம். (8) இராவேளையில் வேலை செய்வது இயற்கைக்கு மாறானது. (9) கண்ணுக்கினிமையாய் இருந்தால் கவர்ச்சியாயிருக்கும். (10) பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழகுதல் வேண்டும். (11) பச்சை நிறமாய் இருக்கும் பலபொருள்கள் பச்சை யெனப் பெயர்பெறும். (12) நோயில்லாமல் இருப்பதற்கு, நல்லுணவு உழைப்பு துப்புரவு (சுத்தம்) மகிழ்ச்சி முதலிய பல நிலைமைகள் வேண்டும். பயிற்சி (2) பின்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சங்கட்குப் பதிலாக, வினையெச்சத் தொடர்மொழிகளை அமைக்க. (1) திருவாளர் பாரதிதாசனார் அழகாகச் செய்யுள் இயற்றுகிறார். (2) ஒன்றைச் செய்தால் சரியாய்ச் செய்யவேண்டும். (3) எளிதாய் வந்த பொருளின் அருமை தெரிவதில்லை. (4) ஆதியில் மக்கள் உணவுப் பொருள்களைப் பச்சையாகவே உண்டுவந்தனர். (5) வகுப்பிற்குப் பிந்திவரும் மாணவன் தன் பாடங்களைச் செவ்வையாய்ப் படிக்கமாட்டான். (6) புகைவண்டி நிலையத்தில் வழிப்போக்கர் வரிசையாய் நின்று சீட்டு வாங்கவேண்டும். (7) நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயது. (8) இலவசமாய்ப் பொருள்களை வாங்குவதற்கு வறியாரைப் போன்றே செல்வரும் விரும்புகின்றனர். (9) முன்பு நம் தேசத்தில் இருப்புப் பாதை இல்லை. (10) எந்தப் பொருளையும் மொத்தமாய் வாங்கினால் விலை குறையும். (11) நிரடாகச் செய்யுள் இயற்றுவது திறமையன்று. (12) முந்தித் தூங்கினால் முந்தி எழலாம். பயிற்சி (3) பின்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சத் தொடர் மொழிகட்குப் பதிலாக, வினையெச்சங்களை அமைக்க : (1) கட்டுரை யெழுதிப் பயின்ற மாணவனின் நடை திருந்திய முறையில் இருக்கும். (2) கடாரம் (பர்மா) இந்தியாவிற்குக் கீழ்த்திசையில் உள்ளது. (3) ஒருவர் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, கேட்போர் ஒன்றும் பேசாது இருத்தல்வேண்டும். (4) பாடிகாவலதிகாரி கலகக்காரரை நோக்கி ``இன்னே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் சுட்டுவிடுவோம் என்றார். (5) அதிகாரிகட்கு அணுகிய இடத்தில் இருத்தலால் நன்மையு முண்டு; தீமையுமுண்டு. (6) குழந்தை குறைந்த வேகத்தில் நடக்கும். (7) சரக்கு மிகுந்த அளவாயிருந்தால் சந்தைக்கு வரும். (8) சிற்றளவாகக் கட்டிப் பேரளவாக வாழவேண்டும். (9) மனத்தில் மாசில்லாதிருத்தலே அறத்தின் இலக்கணமாம். (10) முக்காலத்திலும் உள்ள உண்மையை நிகழ்கால வினையாற் கூறவேண்டும். (11) உரத்த குரலிற் பேசினால் நெடுந்தொலைவிற்குக் கேட்கும். (12) அவ்விடத்திற்குப் போனால் அவரைக் காணலாம். பயிற்சி (4) பின்வரும் வாக்கியங்களிலுள்ள தொடர்மொழிகளை இன்னின்ன தொடர்மொழி என்று குறிப்பிட்டு, அதற்குக் காரணமுங் காட்டுக. (1) ஒருகாலத்தில், காவிரிப்பூம்பட்டினத்தில், கரும்பு தின்னக் கைக்கூலி கொடுக்கும் ஒரு வேளாளன் இருந்தான். (2) கூரத்தாழ்வான் காலம் ஏறத்தாழ எண்ணூறாண்டுகட்கு முற்பட்டதாகும். (3) வீரசோழியம் வடமொழி வழக்கைத் தழுவிய தமிழ் இலக்கணம். (4) கங்கர் குலத்திற் பிறந்தவனும் பவணந்தி முனிவரைப் போற்றியவனுமான அமராபரண சீயகங்கன், மூன்றாம் குலோத்துங்கச்சோழனுக் கடங்கிய சிற்றரசன். (5) தொல்காப்பியம், எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என மூன்றதிகாரங்களை யுடையது. (6) கல்வெட்டாராய்ச்சி பழம்பொருட் கலையில் ஒரு பிரிவாகும். (7) பிழையின்றிப் பேசும் முறையை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளவேண்டும். (8) பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதினெட்டாம் பெருக்கிற் கிரையாவதினின்று மீட்டுக் கொடுத்தவர், காலஞ் சென்ற மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர். (9) எதையும் ஐயந்திரிபற அறிவதே மெய்யறிவாம். (10) தூங்கெயிலெறிந்ததொடித்தோட்செம்பியன், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட சோழருள் ஒருவன். (11) சிவபெருமானின் தலைமை யுணர்த்தும் இடம், திருவண்ணாமலை. (12) கல்வி யறிவொழுக்கங்களிற் சிறந்தவர் கற்றோர். (13) மணமக்களை ஆயிரங்காலத்துப் பயிர் என்பது வழக்கு. (14) காலஞ்சென்ற செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார், மக்களார் மறக்கப்பட்ட வள்ளல்களுள் ஒருவர். (15) மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர் இயற்றிய அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணம், பன்னீராயிரஞ் சூத்திரங்களை யுடையது. (16) பல்லாயிரக் கணக்கான பழந்தமிழ் நூல்கள், இருந்த விடமுந் தெரியாது போனவிடமுந் தெரியாது, இறந்துபட் டொழிந்தன. (17) மாயவரத்தின் பழங்காலப்பெயர் மயிலாடுதுறை. (18) அவன் இருந்தாற்போலிருந்து எழுந்து போய்விட்டான். (19) ஆடையணி யழகினும் அறிவு சிறந்தது. (20) மனிதவுடம்பை யெடுத்தமட்டில் ஒருவன் மனிதனாகி விடமாட்டான். (21) அருந்தமிழ்நூல்களைமுதன்முதல்அழகாக அச்சிட்டுத் தந்தவர் ஆறுமுக நாவலர். (22) நுண்மாண் நுழைபுலம் மண்வாழ் மாந்தருள் ஒரு சிலர்க்கே யுண்டு. (23) நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கூடிய வழக்குப் புலனெறி வழக்கு எனப்படும். (24) இருதலைக்கொள்ளி யெறும்புபோல் இடர்ப் படுபவனுக்கு இன்பம் ஏது? (25) கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்கு? 6. கிளவிய வகைகள் தொடர்மொழிபோன்றே, கிளவியமும், (1) பெயர்க் கிளவியம் (Noun Clause), (2) பெயரெச்சக் கிளவியம் (Adjective Clause), (3) வினையெச்சக் கிளவியம் (Adverb Clause) என மூவகைப்படும். பெயர்க்கிளவியம் (Noun Clause) பெயர்த்தன்மையுடைய கிளவியம் பெயர்க்கிளவியம். அது எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் வரும். என்பது அல்லது என்று என்னும் சொல் அதைப் பயனிலையுடன் இணைக்கும். பெயர்க்கிளவியம் எழுவாயாயின் என்பது என்னும் இணைப்புச்சொல் முதல் வேற்றுமையிலும், அது செயப்படு பொருளாயின், அவ் இணைப்புச்சொல் இரண்டாம் வேற்றுமை யிலும் இருக்கும். அவ் இரண்டாம் வேற்றுமை யுருபு விரிந்தும் தொக்கும் நிற்கும்; ஆயினும், விரிந்து நிற்பதே பெரும்பான்மை. எ-டு: எழுவாய் குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடும் என்பது பலர்க்குத் தெரியாது. குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடும் என்று பலர்க்குத் தெரியாது. இவற்றில், குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடும் என்பது எழுவாய்; தெரியாது என்பது பயனிலை; என்பது, என்று என்பன இணைப்புச்சொற்கள். செயப்படுபொருள் அணுக்குண்டாலும் நன்மையுண்டு என்பதைப் பலர் அறியவில்லை. அணுக்குண்டாலும் நன்மையுண்டு என்று பலர் அறியவில்லை. இவற்றில் பலர் என்பது எழுவாய்; `அறியவில்லை என்பது பயனிலை; அணுக்குண்டாலும் நன்மையுண்டு என்பது செயப் படுபொருள்; என்பது, என்று என்பன இணைப்புச் சொற்கள். என்ற செய்தி, என்னும் உண்மை முதலிய தொடர்கள் அல்லது பெயரொட்டுகளும், என்பது, என்னும் சொல்லைப் போன்று பெயர்க்கிளவியங்களைப் பயனிலையுடன் இணைக்கும். எ-டு : இந்திய விடுதலைக்கு அடிகோலியவர் ஓர் ஆங்கிலேயர் என்ற செய்தி வியக்கத்தக்க தொன்றாம். (எழுவாய்) மொழி மாந்தன் செயற்கை என்னும் உண்மையை இன்னும் பலர் உணரவில்லை. (செயப்படுபொருள்) பெயரெச்சக் கிளவியம் (Adjective Clause) பெயரெச்சம்போல் பெயரைத் தழுவி நிற்கும் கிளவியம் பெயரெச்சக் கிளவியம். எ-டு : தச்சன் செய்த (பெட்டி). வள்ளுவர் வகுத்த (வழி). இராவ்சாகிபு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆண்டு பலவாக அரும்பாடுபட்டாராய்ந்தெழுதிய (கருணாமிர்த சாகரம்). (பெயரொட்டு - Noun in Apposition) குறிப்பு: (1) எழுவாய்த் தொடர் முறையிலுள்ள இரு சொற்றொடரான பெயரெச்சக் கிளவியங்கள், முறை மாற்றப்படின், பெயரெச்சக் கிளவியமாகாது பெயரெச்சத் தொடராம். எ-டு : செய்த தச்சன் வகுத்த வள்ளுவர் (2) பெயரெச்சக் கிளவியங்களின் எழுவாய் பிற வேற்றுமைப் பெயராக மாற்றப்படினும், அக் கிளவியத்தன்மை கெடும். அன்று அவை பெயரெச்சத் தொடர்மொழியாம். எ-டு : (நீ விரும்பும்) - உனக்கு விருப்பமான (அதிகன் ஔவைக்குக் கொடுத்த) - அதிகனால் ஔவைக்குக் கொடுக்கப்பட்ட (3) இரு சொற்றொடரான பெயரெச்சக் கிளவியங்கள் பயனிலை தொக்குப் பெயரொடு கூடின், வேற்றுமைத் தொடராம். எ-டு : கபிலர் பாடிய (பாட்டு) - கபிலர் பாட்டு மழை பெய்யும் (நாள்) - மழை நாள். (4) உள்ள, இல்லாத, தெரியாத முதலிய சொற்களில் முடியும் சில தொடர்கள், கூறுவான் குறிப்பின்படி, பெயரெச்ச மாகவும், பெயரெச்சக் கிளவியமாகவும் கொள்ளப்படலாம். ஆயினும், பெயரெச்சமாகக் கொள்வதே பொருத்தமாம். எ-டு : அறிவுள்ள (பிள்ளை) அழகில்லாத (மலர்) கண்தெரியாத (கிழவன்) உள்ள, இல்லாத, தெரியாத முதலிய சொற்கள் பெயரொடு சேர்ந்து பெயரெச்ச விகுதித்தன்மை யடையாது தெளிவான வினைகளைக் குறிப்பின், அவற்றில் முடியும் தொடர்கள் பெயரெச்சக் கிளவியமாம். எ-டு : தண்ணீர் உள்ள (இடம்) பணப்புழக்கம் இல்லாத (காலம்) விடை தெரியாத (வினா) வினையெச்சக் கிளவியம் (Adverb Clause) வினையெச்சம்போல், வினைமுற்றையும் பெயரெச்சத்தையும் வேறோர் வினையெச்சத்தையும் தொழிற்பெயரையும் வினையா லணையும் பெயரையும் தழுவும் கிளவியம் வினையெச்சக்கிளவியம். எ-டு : மழை பெய்து * (பயிர் விளைகிறது) மழை பெய்து (பயிர் விளைகின்ற காடு மானாமாரிக் காடு) மழை பெய்து (பயிர் விளைந்தால் நாடு செழிக்கும்) மழை பெய்து (பயிர் விளைதல் நல்லது) மழை பெய்து (விளைவது மானாமாரிப் பயிர்) இவற்றுள், மழை பெய்து என்னும் வினையெச்சக் கிளவியம், விளைகிறது என்னும் வினைமுற்றையும் விளைகின்ற என்னும் பெயரெச்சத்தையும் விளைந்தால் என்னும் (வேறொரு) வினையெச்சத்தையும், விளைதல் என்னும் தொழிற்பெயரையும், விளைவது என்னும் வினையாலணையும் பெயரையும், முறையே தழுவிநிற்றல் காண்க. இவற்றுள், பெய்து என்னும் வினையெச்சம் தன்வினை கொண்டு முடியாது பிறிதின்வினைகொண்டு முடிந்தது. அதாவது, பெய்து என்னும் மழையின் வினை விளைகிறது முதலிய பயிரின் வினைகொண்டு முடிந்தது. இங்ஙனமன்றி, வினையெச்சக் கிளவியம் தன்வினை கொண்டு முடியின், அதன் தனித்தன்மை கெடும். எ-டு : மாணவன் படித்து (த் தேறுகின்றான்) மாணவன் படித்து (த் தேறுகின்ற) மாணவன் படித்து (த் தேறினால்) இவற்றுள், மாணவன் படித்து என்னும் வினையெச்சக் கிளவியம், தேறுகின்றான் என்னும் வினைமுற்றோடு கூடி வாக்கியமாகவும், தேறுகின்ற என்னும் பெயரெச்சத்தோடு கூடிப் பெயரெச்சக் கிளவியமாகவும், தேறினால் என்னும் வினையெச்சத்தோடு கூடி வேறொரு வினையெச்சமாகவும் மாறித் தன் தனித்தன்மை யிழந்து நிற்றல் காண்க. * `செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் தன்வினை கொண்டன்றிப் பிறிதின் வினைகொண்டு முடியாதென்று தொல்காப்பியம் கூறும்; ஆயினும், இக்காலத்தில் அது கவனிக்கப்பெறாது.. வினையெச்சக் கிளவியப் பொருள்கள் வினையெச்சக் கிளவியம் பின்வருமாறு பல பொருள் பற்றி வரும் : 1. காலம் எ-டு : வடமொழியாளர் தென்னாட்டிற்கு வருமுன் (வடசொற்கள் தமிழிற் கலக்கவில்லை). 2. இடம் எ-டு : கலைமகள் இருக்குமிடத்தில் (திருமகள் இருப்பது அரிது). 3. நோக்கம் எ-டு : மக்கள் நலமடையும்பொருட்டு (மருத்துவசாலைகள் ஆங்காங்கு நிறுவப்பட்டுள). 4. காரணம் எ-டு : தமிழர் தமிழைப் பேணாததினால் (அளவிறந்த தமிழ்நூல்கள் அழிந்து போயின). 5. விளைவு எ-டு : கணக்கற்ற மக்கள் கதறியழுமாறு (காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்). 6. நிலைப்பாடு (Condition) எ-டு : ஆண்டான் கூலியைக் குறைத்தால் (அடிமை வேலையைக் குறைப்பான்). மாணவர் குறித்த காலத்தில் பணங்கட்டினால்தான் (அவர் தேர்வெழுத முடியும்). 7. ஒப்பீடு (Comparison) எ-டு : அருணகிரிநாதர் பாடியதைப்போல (வண்ணம் பாடுகின்றவர் முன்னுமில்லை, பின்னுமில்லை). 8. வைத்துக்கொள்வு (Supposition) அல்லது இணக்கம் (Concession) எ-டு : உலகமெல்லாம் நிலைமாறினும் (சான்றோர் ஒழுக்கநிலை மாறார்). கம்பர் எத்துணையோ உருக்கமாய்த் தடுத்து மொழிந்தும் (மூன்றாங் குலோத்துங்கச்சோழன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டான்). 9. மாறு (Contrast) எ-டு : மனுதரும சாத்திரம் கூறுவதற்கு மாறாக (எல்லார்க்கும் ஒப்பத் தண்டம் விதிப்பது திருக்குறள்). 10. அளவு எ-டு : திருடன் உண்மையை ஒப்புக்கொள்ளும் வரையும் காவற்சேவகர் அவனைக் கடுக வதைத்தனர்.) விலாப்புடைக்க (விருந்துண்டான்). பயிற்சி பின்வரும் வாக்கியங்களிலுள்ள கிளவியங்களை எடுத் தெழுதி, அவற்றுள் ஒவ்வொன்றும் இன்னின்னதென்று குறிப்பிட்டு, அதற்குக் காரணமுங் காட்டுக : (1) உன் சொல் எல்லார்க்கும் கேட்குமாறு தெளிவாய்ப் பேசல்வேண்டும். (2) பசிவந்தாற் பத்தும் பறந்துபோம். (3) வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்தை நல்லாப் பிள்ளையார் நிறைவித்தார். (4) அகத்தியர் இன்றும் பொதியமலையி லிருக்கிறார் என்று நம்புவாரும் உளர். (5) கும்பகோணத்தான் கொள்ளை கொண்டுபோகத் தஞ்சா வூரான் தண்டங் கொடுத்தானாம். (6) இன்றைக்கிருந்தார் நாளைக்கிருப்பர் என்று எண்ணும் நிலைமையில்லை. (7) யாராத்தாள் செந்தாலும் பொழுதுவிடிந்தால் தெரியும். (8) காடு வா என்கிறது, வீடு போ என்கிறது. (9) ஈ என இரத்தல் இழிந்தது. (10) பனி பெய்து கடல் நிறையுமா? (11) பேதை பெருஞ்செல்வம் அடைந்தால் அயலார் கொழுக்கத் தமர் பசிப்பர். (12) பரிமாறுகிறவன் தன்னவனானால், தலைப்பந்தியி லிருந்தாலென்ன? கடைப்பந்தியி லிருந்தாலென்ன? (13) காடுகெட ஆடு விடு, ஆறுகெட நாணலிடு. (14) நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கிறது போகாது. (15) மயிலே! மயிலே! இறகுபோடு என்றால் போடுமா? (16) உரு ஏறத் திரு ஏறும். (17) ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். (18) விளையாட்டுப்பிள்ளைகள் செய்த வேளாண்மை வீடுவந்து சேராது. (19) சிறுபிள்ளை யில்லாத வீடும் சீரகமில்லாத கறியு செவ்வையா யிரா. (20) ஆனையிருந்தாண்ட இடத்தில் பூனையிருந்து புலம்பி யழுகிறது. (21) யான் பெற்றபேறு இவ் வையகம் பெறுக. (22) கரும்பு இனிக்கிறதென்று வேரோடு பிடுங்கலாமா? (23) வடநூலார் கூறும் நால்வருணமும் தென்னூலார் கூறும் நாற்குலமும் வேறுபட்டவை. (24) ஊர்வாரியிலுள்ள கொல்லையும் உத்திரட்டாதியிற் பிறக்கும் பிள்ளையும். (25) நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான். கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம் மூவகைக் கிளவியங்களும் தனித்தனி வேறு பெயர்க் கிளவியத்தைத் தம்முள்ளிட்டும் வரும். அன்று அவை கிளவியத்தை உள்ளிட்ட கிளவியங்களாம். எ-டு : (1) அறிவியலால் (விஞ்ஞானத்தினால்) என்றும் தீமையே விளையும் என்று பலர் கூறுவது அறியாமைப் பாற்பட்டதே. (2) தேர்வு வேண்டா என்று மாணவர் சொல்லுகிற காலம் இது. (3) தொழிலாளிகளின் நிலைமை உயர்த்தப்பட வேண்டும் என்று யார் சொன்னாலும், முதலாளி கட்குக் கோபம் வரத்தான் செய்யும். இவை மூன்றும், முறையே, கிளவியத்தை உள்ளிட்ட பெயர்க் கியவியமும் பெயரெச்சக் கிளவியமும் வினையெச்சக் கிளவியமு மாகும். 1 ஆவதில், அறிவியலால்... விளையும் என்பது ஒரு பெயர்க் கிளவியம்; அறிவியலால்... கூறுவது என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட பெயர்க் கிளவியம். 2 ஆவதில், தேர்வு வேண்டா என்பது ஒரு பெயர்க் கிளவியம்; தேர்வு.... சொல்லுகிற என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட பெயரெச்சக் கிளவியம். 3 ஆவதில், தொழிலாளிகளின்.... வேண்டும் என்பது ஒரு பெயர்க் கிளவியம்; தொழிலாளிகளின்.... சொன்னாலும் என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட வினையெச்சக் கிளவியாம். இனி, கிளவியங்களை உள்ளிட்ட கிளவியமும் உண்டு. எ-டு : அன்பே கடவுள் என்று திருமூல நாயனார் கூறியது அனைவர்க்கும் உடன்பாடே என்று ஆசிரியர் மறைமலை அடிகள் சொல்வதும் ஒரு சிலர்க்கு வருத்தத்தை விளைப்பின், வேறு எதைத்தான் இந் நாட்டார்க்கு எடுத்துச் சொல்வது? இதில், அன்பே கடவுள் என்பது ஒரு பெயர்க்கிளவியம்; அன்பே.... கூறியது என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட பெயர்க்கிளவியம்; அன்பே..... உடன்பாடே என்பது அவ்விரு கிளவியங்களையும் உள்ளிட்ட பெயர்க்கிளவியம்; அன்பே.... சொல்வதும் என்பது, அம் முக்கிளவியங்களையும் உள்ளிட்ட பெயர்க்கிளவியம். இங்ஙனம் இது மும்முடிக் கிளவியத்தை உள்ளிட்ட கிளவியமாகும். பயிற்சி கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள உட்கிளவியங்களையும் உள்ளிட்ட கிளவியங்களையும் எடுத்தெழுதுக : (1) ஐரோப்பியன் திறமை இந்தியனுக்கு வராதென்று நீ சொன்னது மெய்தானா? (2) வடமொழி தேவமொழி யென்று நீ குருட்டுத்தனமாய் நம்பினால், அதற்கு நானென்ன செய்கிறது? (3) தீமை செய்தவனுக்கும் நன்மை செய் என்று இயேசு சொன்னதைப்போல, திருவள்ளுவரும் சொல்லியிருக் கிறார். (4) கடவுளில்லை யென்று ஒருவன் சொன்னால், அவனைக் கண்டிக்கவாவது தண்டிக்கவாவது யாருக்கும் அதிகார மில்லை. (5) அவர் அடித்தாரென்று அவர் மகனே சொல்லும்போது, வேறென்ன சான்று வேண்டியிருக்கின்றது? (6) மூன்று மந்திரிமார் ஆளுக்கு ஐந்நூறு கசம் துணி திருட்டுத் தனமாய் வாங்கினரென்று நீ கூறியதை மெய்ப்பிக்க வேண்டும். (7) இந்தக் கிணற்றுக்குள் விழு என்று ஒருவன் சொன்னால், விழுந்துவிடுவையா? (8) பண்டைத் தமிழரசர் விழாக்காலங்களில் சமய குரவரை நோக்கிப் பட்டிமண்டபம் ஏறுமின் என்று கூறியது, அவரைக்கொண்டு உண்மையறிதற்கே. (9) ஞாலம் கதிரவனிடத்திலிருந்து விழுந்த துண்டென்று வானநூலார் கூறுவது, உத்திக்குப் பொருந்தவில்லை. (10) ஆங்கிலேயர் ஆட்சிமுறை சிறந்ததென்று பகைவரும் கூறும்போது, அதை நம்பாமலிருக்க முடியுமா? (11) இலண்டன்மாநகரக் காவற்சேவகர் இவ் வுலகத்திலேயே தலைசிறந்தவர் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றோம். (12) வாய்மை யென்பது தீது சொல்லாமை என்று வள்ளுவர் கூறியது, என்றும் வாய்மைக் கிலக்கணமாகும். (13) கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்று ஒருவன் சொன்னால், கேட்பார்க்கு மதி எங்கே போயிற்று? (14) நஞ்சும் மருந்தாம் என்று மருத்துவர் கூறுவது உண்மையே. (15) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம் என்று நான் அடிக்கடி சொல்லியும், அவன் இன்னும் உண்டி சுருக்க வில்லை. (16) பிறப்பால் சிறப்பில்லை என்று ஒருவர் சொன்னமட்டில், அவரைத் திராவிடர் கழகத்தாரென்று நினைத்துக் கொள்கின்றனர். (17) குடி கெட்டதென்று குடிகாரன் சொல்வதில் ஏதேனும் பொருளுண்டா? (18) கூட்டுடைமையாட்சி (Socialism) நல்லதென்று முதலாளி கள் சொன்னால், அதற்கு மிகுந்த மதிப்புண்டு. (19) தமிழ நாகரிகம் எகிபதிய நாகரிகத்திற்கும் முந்திய தென்று நான் உண்மையைச் சொல்லும்போது, தமிழரும் எள்ளி நகையாடுகின்றனர். (20) கடவுள் ஒருவரே என்னும் உண்மையைப் பலர் உணர்ந்திருந்தால், இவ்வளவு மதச்சண்டை இராது. (21) மூன்றாம் உலகப்போர் நெருங்கிவிட்டதென்று ஆசிரியர் கூறியது உனக்கு நினைவிருக்கிறதா? (22) தண்டனை யச்சத்தினாலேயே கீழ்மக்கள் ஓரளவு திருந்திய வொழுக்கத்தினரா யிருக்கின்றனர் என்று வள்ளுவர் கூறுவது, முற்றும் உண்மையாகும். (23) கொள்ளைக்காரருள்ளும் நல்லவருண்டென்று நான் சொல்வது, ஒருகால் உனக்கு வியப்பை விளைக்கலாம். (24) இனிமேல் நான் பொய் சொல்லமாட்டேன் என்று நீ சொன்ன இடம் இதுவே. (25) இயற்கைத் தெரிப்பு முறையால் உயிரினத் தோற்றம் (Origin of Species by means of Natural Selection) என்று டார்வின் கூறுவதை, பலர் இன்னும் சரியாய் அறியவில்லை. 7. வாக்கிய வகைகள் வாக்கியங்கள் அமைப்புமுறைபற்றி, (1) தனி வாக்கியம் (Simple Sentence), (2) கூட்டு வாக்கியம் (Compound Sentence), (3) கலப்பு வாக்கியம் (Complex Sentence), (4) கதம்ப வாக்கியம் (Mixed Sentence) என நால்வகைப்படும். தனி வாக்கியம் (Simple Sentence) ஒரே எழுவாயும் ஒரே முற்றுப் பயனிலையும் உள்ள வாக்கியம் தனி வாக்கியம். எ-டு : (1) மயில் ஆடுகிறது. (2) ஒரு மயில் ஆடுகிறது. (3) ஒரு மயில் சோலையில் ஆடுகிறது. (4) ஓர் அழகான மயில் சோலையில் ஆடுகிறது. (5) ஓர் அழகான மயில் சோலையில் தோகை விரித்தாடுகிறது. (6) ஓர் அழகான மயில் மேலைமலைச் சோலையில் தோகை விரித்தாடுகிறது. (7) ஓர் அழகான மயில் மேலைமலைச் சோலையில் நாள் தொறும் தோகை விரித்தாடுகிறது. (8) ஓர் அழகான மயில் மேலைமலைப் பூஞ்சோலையில் நாள்தொறும் தோகை விரித்தாடுகிறது. (9) ஓர் அழகான மயில் மேலைமலைப் பூஞ்சோலையில் நாள்தொறும் காலை மாலை தோகை விரித்தாடுகிறது. (10) ஓர் அழகான ஆண்மயில் மேலைமலைப் பூஞ்சோலையில் நாள்தொறும் காலை மாலை தோகை விரித்தாடுகிறது. (11) ஒரு மிக அழகான ஆண்மயில் மேலைமலைப் பூஞ்சோலை யில் நாள்தொறும் காலை மாலை தோகை விரித்தாடுகிறது. (12) ஒரு மிக அழகான ஆண்மயில் மேலைமலைப் பூஞ்சோலை யில் நாள்தொறும் காலை மாலை களிப்புடன் தோகை விரித்தாடுகிறது. இவை பன்னிரண்டும் தனி வாக்கியங்கள். இவை யாவும் ஒரே கருத்தின் சுருக்கமும் விரிவுமாகும். முதல் வாக்கியத்தில் இரு சொற்களாய்ச் சுருங்கிய கருத்து, இறுதி வாக்கியத்தில் பதினாறு சொற்களாக விரிகின்றது. இன்னும் விரிக்கலாம். ஆனால், இதற்குமேல் விரிக்க விரிக்க, வாக்கியத்தின் இயற்கைத் தன்மையும் அழகும் கெடும். சொற்கள் மேலும் மேலும் கூடிக்கொண்டே போனாலும், முதல் வாக்கியத்திலுள்ள வாக்கிய வுறுப்புகளே (ஓர் எழுவாயும் ஒரு முற்றுப் பயனிலையும், இறுதிவரை தொடர்கின்றன. வாக்கிய வுறுப்புகளைப் பொறுத்த வரையில், முதல் வாக்கியமும் இறுதி வாக்கியமும் ஒன்றே. ஆகையால், அப் பன்னிரு வாக்கியங் களும் தனி வாக்கியமாகும். குறிப்பு : ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முற்றுப் புள்ளியிருத்தல் வேண்டும். முற்றுப்புள்ளியே வாக்கிய முடிவிற் கடையாளம். கூட்டு வாக்கியம் (Compound Sentence) ஓர் எழுவாயும் பல முற்றுப் பயனிலைகளுங்கொண்ட வாக்கியமும், பல எழுவாயும் பல முற்றுப் பயனிலையும் கொண்ட வாக்கியமும் கூட்டுவாக்கியமாகும். எ-டு : (1) மாணவரே! நீங்கள் உங்கள் பாடத்தை நன்றாய்ப் படிக்கவேண்டும்; தேர்வில் சிறப்பாகத் தேற வேண்டும். (2) திருவாளர் கா. சுப்பிரமணியப் பிள்ளை இளமை யிலேயே ஆங்கிலம் தமிழ் சமற்கிருதம் மூன்றையுங் கற்றார்; அவற்றில் கலைத்தலைவன் (M.A.) பட்டம் பெற்றார்; பின்பு சட்டக்கல்லூரியிற் பயின்று சட்டத் தலைவன் (M.L.) பட்டமும் பெற்றார்; அதன்பின் சட்டக்கல்லூரியில் ஈராண்டு விரிவுரையாளரா யிருந்தார்; பின்னர் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் சிலகாலம் தொண்டு செய்தார்; இறுதியில் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்திற் பேராசிரியராக அமர்ந்தார்; அங்கு நோய்வாய்ப்பட்டு நெல்லை சென்றார்; சில மாதங்கட்குப்பின் 50ஆம் அகவையில் தம் இல்லத்தில் இறையடி யெய்தினார். இவ்விரு வாக்கியங்களும் ஒரே எழுவாயும் பல முற்றுப் பயனிலைகளுங் கொண்டவை. இவை ஒரே எழுவாய் கொண்டன வாயினும், முதற்பயனிலைக்குப் பிற்பட்ட பயனிலைதொறும் எழுவாய்க்கேற்ற பதிற்பெயரை வருவித்து அதை எழுவாயாகக் கருதல் வேண்டும். அல்லாக்கால் கூட்டுவாக்கியம் என்னும் பெயர் பொருந்தாது. கூட்டு வாக்கியங்களில், ஓர் எழுவாயும் அதன் முற்றுப் பயனிலையும் சேர்ந்த பகுதி ஒரு கிளவியம் ஆகும். மேற்கண்ட வாக்கியங்களுள், முன்னது இரு கிளவியங்களையும், பின்னது எண் (எட்டுக்) கிளவியங்களையும் கொண்டது. முன்னதில் உள்ளவை : (1) மாணவரே! நீங்கள் உங்கள் பாடத்தை நன்றாய்ப் படிக்க வேண்டும். (2) (மாணவரே!) நீங்கள் தேர்வில் சிறப்பாகத் தேற வேண்டும். பின்னதில் உள்ளவற்றைப் பின்வருமாறு விரித்துக் கண்டுகொள்க. (1) திருவாளர் கா. சுப்பிரமணியப்பிள்ளை இளமையிலேயே ஆங்கிலம், தமிழ், சமற்கிருதம் மூன்றையுங் கற்றார். (2) அவர் அவற்றில் கலைத்தலைவன் (M.A.) பட்டம் பெற்றார். இங்ஙனமே எஞ்சியவும். கூட்டு வாக்கியங்களில் உள்ள கிளவியங்களெல்லாம் ஒன்றையொன்று சாராத சமநிலைக் கிளவியங்கள் (Co-ordinate Clauses). ஒரு கூட்டு வாக்கியத்தில் இரு கிளவியங்களாயினும் பல கிளவியங்களாயினும் இருக்கலாம். இரு கிளவியங்கள் உள்ளதைப் புணர் வாக்கியம் (Double) என்றும், பல கிளவியங்கள் உள்ளதைத் துணர்வாக்கியம் (Multiple) என்றும் அழைக்கலாம். கூட்டு வாக்கியங்களின் பொருள் தொடர்பு, பின்வருமாறு பலவகையில் அமையலாம் : 1. காரண காரியம் எ-டு : மழை பெய்கிறது; பயிர்விளைகிறது. தோட்டிபோல உழைக்கவேண்டும்; துரைபோலச் சாப்பிட வேண்டும். மடியிற் கனமில்லை; வழியிற் பயமில்லை. 2. முன்பின்மை எ-டு : மணியடித்தது; கைகாட்டி சாய்ந்தது; வண்டி வந்துவிட்டது. 3. உடனிகழ்ச்சி எ-டு : இங்கொருவர் வினவுகின்றனர்; அங்கொருவர் வினவு கின்றனர். நம்பி வருகின்றான்; நாயும் உடன்வருகின்றது. சிலர் மாட்டுவண்டியிற் செல்கின்றனர்; சிலர் குதிரை வண்டியிற் செல்கின்றனர். சிலர் இயங்கி (motor)Ɖ செல்கின்றனர்; சிலர் இழுவண்டி (rikshaw)Ɖ செல் கின்றனர்; சிலர் நடந்து செல்கின்றனர்; வழிநெடுகப் பெருங் கூட்டம். ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராகவும் இருந்தார்; அமைச்சராகவும் இருந்தார். 4. kWÃiy(Alternative) எ-டு : அங்கதன் செல்லவேண்டும்; இல்லாவிட்டால் அனுமன் செல்லவேண்டும். மாவைத் தின்றால் பணியாரமில்லை; பணியாரத்தைத் தின்றால் மாவில்லை. சிலநேரம் படிப்பேன்; சிலநேரம் எழுதுவேன். 5. முரணிலை எ-டு : ஊரெங்கும் பேர்; வீடு பட்டினி. அவர் எத்துணையோ சொல்வார்; ஆனால், ஒன்றுகூடச் செய்யமாட்டார். கூட்டம் நிகழும்; ஆனால் மழைவந்துவிட்டது. பொழுதடைந்து இருட்டிவிட்டது; வழி தெரியவில்லை; போகவேண்டிய இடமோ மிகத் தொலைவு! 6. பலநிலை எ-டு : உலகம் இப்படியும் சொல்லும்; அப்படியும் சொல்லும். காடாண்டவரும் பாண்டவர்; நாடாண்டவரும் பாண்டவர். ஒன்றா சொல்கிறான்? ஒருவழியா போகிறான்? பொதுவாக, மணமகனின் அழகை விரும்புவன் மணமகள்; அவனது கல்வியை விரும்புவன் அவளின் தந்தை; அவனது செல்வத்தை விரும்புவள் அவளின் தாய்; அவனது குலப்பிறப்பை விரும்புவர் அவளின் உறவினர். 7. ஒப்பீடு (Comparison) அல்லது வேற்றுமை (Contrast) எ-டு : இரப்பது எல்லாவற்றிலும் இழிவு; அதிலும் இழிவு இரப்போனுக்கு இல்லையென்றல். ஒன்றைச் சொல்லாது கொடுப்பவர் பூவாது காய்க்கும் மரம் போல்வர்; சொல்லிக் கொடுப்பவர் பூத்துக் காய்க்கும் மரம் போல்வர்; சொல்லியுங் கொடாதவர் பூத்துங் காயாத மரம் போல்வர். தீமைக்கும் நன்மை செய்வது தேவ இயல்பு; நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் செய்வது மக்கள் இயல்பு; நன்மைக்குந் தீமை செய்வது பேய் இயல்பு. 8. ஒப்புமைக் கூட்டம் எ-டு : குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள். போன மாட்டைத் தேடுவாருமில்லை; வந்த மாட்டைக் கட்டுவாருமில்லை. பிள்ளையைப் பெற்றெடுப்பவன் ஒரு தந்தை; அதைப் பேணி வளர்ப்பவன் ஒரு தந்தை; அதற்குக் கல்வி புகட்டுபவன் ஒரு தந்தை; அதற்குச் செல்வங் கொடுப்பவன் ஒரு தந்தை; அதை மனையறம் படுத்துபவன் ஒரு தந்தை; அதை மாண்தொழிற் படுத்துபவன் ஒரு தந்தை. கூட்டு வாக்கியங்களிலுள்ள பல கிளவிய எழுவாய்களும் ஒரே சொல்லைத் தனித்தனி பயனிலையாகக்கொண்டு முடியின், அவற்றை ஒரே பயனிலைகொண்டு முடியுமாறு புணர்த்தெழுதுவது வழக்கம். எ-டு : அறிஞர் கல்வியைச் சிறப்பாக விரும்புவர்; அறிவிலிகள் செல்வத்தைச் சிறப்பாக விரும்புவர். இவ் வாக்கியம் சுருக்கம்பற்றி, அறிஞர் கல்வியையும் அறிவிலிகள் செல்வத்தையும் சிறப்பாக விரும்புவர், என்றெழுதப் பெறும். ஒரே சொல்லைப் பயனிலையாகக்கொண்டு முடியும் பல எழுவாய்கள் ஒரே செயப்படுபொருள் கொண்டிருப்பின், கூட்டு வாக்கியமாய் எழுதப்பெறாது தனி வாக்கியமாய் எழுதப்பெறுவதே பெரும்பான்மை. எ-டு : அறிஞரும் அறிவிலிகளும் இன்னிசையை விரும்புவர். இங்ஙனமன்றி, அறிஞரும் இன்னிசையை விரும்புவர்; அறிவிலிகளும் இன்னிசையை விரும்புவர், என்றெழுதுவது ஒரு கருத்தை வற்புறுத்துமாயின் பொருத்தமுடைய தாம். இவ் வடிவில் அது கூட்டுவாக்கியமாகும். ஓர் எழுவாயின் பல வினைகள் தொடர்ந்துவரின், அவை யெல்லாம் ஆங்கிலக் கூட்டுவாக்கியத்தில் முற்றுவினையாகவே யிருக்கும்; ஆனால், தமிழிலோ, அவற்றுள் இறுதி வினை தவிர ஏனையவெல்லாம் எச்சவினையாகவும் இருக்கலாம். ஆதலால், ஆங்கிலத்தில் கூட்டு வாக்கிய மாயிருப்பது தமிழிலும் கூட்டு வாக்கியமா யிருத்தல்வேண்டும் என்னும் யாப்புரவு (நியதி) இல்லை. எ-டு : Nambi went to school and learnt his lessons. நம்பி பள்ளிக்கூடம் சென்று தன் பாடங்களைப் படித்தான். இங்ஙனம், ஆங்கிலத்திற் கூட்டு வாக்கியமாயிருப்பது, தமிழில் தனிவாக்கியமாய் அமைதல் காண்க. கலப்பு வாக்கியம் (Complex Sentence) ஒரு தலைமைக் கிளவியமும் (Principal or Main Clause) ஓர் அல்லது பல சார்பு கிளவியமும் (Subordinate or Dependent Clause or Clauses) கொண்ட வாக்கியம், கலப்பு வாக்கியம் ஆகும். தலைமைக் கிளவியம் தன்னில் தானே கருத்து முடிந்ததா யிருக்கும்; சார்பு கிளவியம் தன்னளவில் கருத்து முடியாமல் தலைமைக் கிளவியத்தைச் சார்ந்தே கருத்து முடிவதாயிருக்கும். சார்பு கிளவியம், மூவகைக் கிளவியங்களுள், எதாகவும் இருக்கலாம். (1) கால்டுவெல் கண்காணியர், தமிழ் ஒரு தனிமொழி என விளக்கியுள்ளார். (2) கூற்றுவன் வரும் வேளை யாருக்கும் தெரியாது. (3) ஆயிரம்பேர் வந்தாலும், யான் அணுவளவும் அஞ்சேன். (4) ஏசுபெருமான், தாம் சிலுவையி லறையுண்டிருந்த போது, தம் வலப்புறத்திலிருந்த கள்ளனை நோக்கி, `இன்றைக்கு நீ என்னோடுகூடப் பரதீசிலிருப்பாய்,என்று திருவாய் மலர்ந்தருளினார். (5) நக்கீரர் சிவபெருமானை நோக்கி, நீர் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே, என்று உரத்துக் கூறினார். இவற்றுள் : முதல் வாக்கியத்தில், கால்டுவெல் கண்காணியார் விளக்கி யுள்ளார் என்பது தலைமைக் கிளவியம்; தமிழ் ஒரு தனிமொழி என்பது சார்பு கிளவியம். 2ஆம் வாக்கியத்தில், வேளை யாருக்கும் தெரியாது என்பது தலைமைக் கிளவியம்; கூற்றுவன் வரும் என்பது சார்பு கிளவியம். 3ஆம் வாக்கியத்தில், யான் அணுவளவும் அஞ்சேன் என்பது தலைமைக் கிளவியம்; ஆயிரம்பேர் வந்தாலும் என்பது சார்பு கிளவியம். 4ஆம் வாக்கியத்தில், ஏசுபெருமான் திருவாய்மலர்ந் தருளினார் என்பது தலைமைக் கிளவியம்; தாம் சிலுவை யிலறை யுண்டிருந்தபோது,இன்றைக்கு நீ என்னோடுகூடப் பரதீசிலிருப்பாய் என்பன சார்பு கிளவியங்கள். 5ஆம் வாக்கியத்தில், நக்கீரர் கூறினார் என்பது தலைமைக் கிளவியம்; நீர் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்பது சார்பு கிளவியம். 1ஆம் 2ஆம் 3ஆம் 5ஆம் வாக்கியங்களில் ஒவ்வொரு சார்பு கிளவியமும், 4ஆம் வாக்கியத்தில் இருசார்பு கிளவியமும் வந்தன. 1ஆம் 5ஆம் வாக்கியங்களில் பெயர்க்கிளவியமும், 2ஆம் வாக்கியத்தில் பெயரெச்சக் கிளவியமும், 3ஆம் வாக்கியத்தில் வினையெச்சக் கிளவியமும், சார்பு கிளவியமாக வந்தன. 4ஆம் வாக்கியத்தில் வந்துள்ள இரு சார்பு கிளவியங்களுள்; முன்னது வினையெச்சக் கிளவியம்; பின்னது பெயர்க்கிளவியம். 5ஆம் வாக்கியத்தில், சார்பு கிளவியத்துள் ஒரு சார்பு கிளவியம் வந்துள்ளது. நீர்.... குற்றமே என்பது உள்ளிட்ட சார்பு கிளவியம்; நீர் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் என்பது உட்சார்பு கிளவியம். மேற்கண்ட வாக்கியங்களில், பெயர்க்கிளவியம் செயப்படு பொருளாக வந்துள்ளது. அதனால், அது வரும் வாக்கியம் பல கிளவியங்களாகப் பகுக்கப்படக்கூடியதாக வுள்ளது. அது எழுவாயாக வரும் வாக்கியம் கிளவியத்தை உள்ளிட்ட கிளவிய மாயிருக்குமே யன்றிப் பல கிளவியங்களாகப் பகுக்கப்படக் கூடியதாகாது. எ-டு : நன்றி மறப்பது நன்றன்று என்பது வள்ளுவர் கூற்று. இதில், தலைமை சார்பு எனப் பிரிக்க முடியாமல் எல்லாம் ஒரே வாக்கியமாக இருப்பதையும், நன்றி மறப்பது நன்றன்று என்பது உட்கிளவியமாக இருப்பதையும் காண்க. எழுவாயே ஒரு கிளவியமாக இருப்பதினாலும் எழுவாயில்லாமல் பயனிலையால் மட்டும் ஒரு கிளவியம் அமையாமையாலும், இந் நிலைமை ஏற்பட்டுள்ளதென அறிக. `நன்றி மறப்பது நன்றன்று வள்ளுவர் கூற்று என்னும் அமைப்பிற்கும் இலக்கணம் இடந்தருதலானும்; `என்பது வள்ளுவர் கூற்று என்னும் பகுதியில் கருத்து முடிந்திராமையானும்; `நன்றிமறப்பது நன்றன்று என்பது தலைமைக் கிளவிய மாகாமையானும்; இவ் வாக்கியம் முழுவதையும் ஒரே கிளவியமாகக் கொள்வதே சாலப் பொருத்தமாம். ஆங்கிலத்திலும் இவ் வியல்பே உள்ளது. நன்றி மறப்பது நன்றன்று என்ற கூற்று வள்ளுவர் கூற்று என்று விரித்து, கூற்று வள்ளுவர் கூற்று என்பது தலைமைக் கிளவியம் எனக் கூறுவதும் பொருந்தாது. கதம்ப வாக்கியம் (Mixed Sentence) கூட்டு வாக்கியமும் கலப்பு வாக்கியமும் கலந்து வருவது கதம்ப வாக்கியம். எ-டு : ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சி வேளாகிய கட்டபொம்முவிடம் கப்பங் கேட்டபோது, அவர் வானம் பெய்கிறது; ஞாலம் (பூமி) விளைகிறது. நாங்கள் ஏன் உங்கட்குக் கப்பங் கட்டவேண்டும்? என்று செப்பினாராம். இதில், ஆங்கிலேயர்.......... கேட்டபோது என்னும் வினை யெச்சச் சார்புகிளவியமும், அவர் செப்பினாராம் என்னும் தலைமைக்கிளவியமும், சேர்ந்து ஒரு கலப்பு வாக்கியமாகும். இனி, அவர்.... செப்பினாராம் என்னும் பகுதி, மீண்டும் ஒரு கலப்பு வாக்கியமாகும். இது கலப்பு வாக்கியத்துள் வந்த கலப்பு வாக்கியம். இதில், அவர் செப்பினாராம் என்பது தலைமைக் கிளவியம்; வானம்....... கட்டவேண்டும் என்பது பெயர்ச் சார்பு கிளவியம். இப் பெயர்ச் சார்புகிளவியம், தன்னளவில் ஒரு கூட்டு வாக்கியமாகும். ïâYŸs rkÃiy¡ »sÉa§fŸ ‘thd« bgŒ»wJ’, ‘Phy« Éis»wJ’, ‘eh§fŸ V‹ c§f£F¡ f¥g§ f£lnt©L«? என்னும் மூன்றுமாகும். இங்ஙனம் இருவகை வாக்கியங்களும், ஒரே கதம்ப வாக்கியமாகக் கலந்துள்ளமை காண்க. குறிப்பு : நெசுபீல்டு (Nesfield) உள்ளிட்ட சில ஆங்கில இலக்கணியர் கதம்பவாக்கியம் (Mixed Sentence) என ஒன்று வகுப்பர்; ரென் (Wren), மார்ட்டின் (Martin) முதலிய ஆசிரியர் கதம்ப வாக்கி யத்தைக் கூட்டுவாக்கியத்துள்ளும் கலப்புவாக்கியத்துள்ளும் அடக்குவர். இவருள் முன்சாரார் கருத்துப்படி கதம்பவாக்கியம் இந் நூலில் தனிவகையாகக் கூறப்பட்டது. பயிற்சி பின்வரும் வாக்கியங்களுள், ஒவ்வொன்றையும் இன்ன வகை யென்று குறிப்பிட்டு, அதற்குக் காரணமுங் காட்டுக : (1) ஆசிரியர் கல்லூரி வந்து சேர்ந்ததும், மணியடித்தது. (2) மனம் இருந்தால் மலையுஞ் சாயும். (3) அகதிசொல் அம்பலம் ஏறாது. (4) அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா! எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்குச் சீ! கைகால் பட்டுக் கிழியப்போகிறது, மடித்துப் பெட்டியிலே வை, என்கிறான் அப்பன். (5) சிலர் பெருமையுள்ளவராகப் பிறக்கிறார்கள்; சிலர் பெருமையை அடைகிறார்கள்; சிலர்மேல் பெருமை சுமத்தப்படுகிறது. (6) அடிக்கும் ஒரு கை, அரவணைக்கும் ஒருகை. (7) ஐயர் வருமட்டும், அமாவாசை காத்திருக்குமா? (8) போனது போகட்டும். (9) இறைக்கிற கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும். (10) முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? (11) கையில் காசில்லை; கடன்கொடுப்பார் யாருமில்லை. (12) இளையான்குடிமாறநாயனார் வீட்டிற்கு நள்ளிரவில் ஒரு சிவனடியார் வந்துவிட்டார்; வீட்டில் ஒன்றுமில்லை; எல்லாரிடத்திலும் கடன்வாங்கி விட்டபடியால், கடன் கொடுப்பாரும் யாருமில்லை; யாரிடத்திலும் போய்க் கடன் கேட்கலாமென்றாலும், எல்லாரும் கதவடைத்து அயர்ந்து தூங்கிவிட்டார்கள்; சிவனடியாருக்கும் அமுது படைத்தாகவேண்டும்; அவரோ பசியுடன் வந்திருக் கின்றார்; வரவரப் பசி கடுகவுஞ் செய்கின்றது; சிவனடி யாரை விருந்தோம்புவதையே உயிர்நாடியாகக் கொண்ட நாயனார், இந் நிலையில் என்ன செய்வார்! (13) சாதலினுந் துன்பந்தருவது ஒன்றுமில்லை; அதுவும் ஈதல் இசையாதவிடத்து இன்பந் தருவதாகும்; என்கிறார் வள்ளுவர். (14) உண்மையைக் குறிக்கத் தமிழில் மூன்று சொற்கள் உள. அவை, உண்மை வாய்மை மெய்ம்மை என்பன. உள்ளத்தைப்பற்றியது உண்மை; வாயைப்பற்றியது வாய்மை; மெய்யைப்பற்றியது மெய்ம்மை. மெய் என்பது உடம்பு. (4 வாக்கியம்) (15) வடமொழி தேவமொழி என்னுங் கொள்கையினாலும், பிறப்பொடு தொடர்புண்ட குலப்பிரிவினாலும், தமிழுக்கு நேர்ந்த தீங்கு கொஞ்சநஞ்சமன்று. (16) கடல்கோளால் அழிந்த தமிழ்நூல்களினும், பதினெட் டாம் பெருக்கில் அழிந்த தமிழ்நூல்கள் கழிபல. (17) ஏசுபெருமான் கடவுளை நோக்கி, தம்மைச் சிலுவையில் அறைந்தவரைக் குறித்து, எந்தையே! இவர்களை மன்னியும்; இவர்கள் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள், என்று வேண்டினார். (18) தாழ்வில்லை. (19) தலையால் வந்ததைக் காலால் தள்ளுகிறான். (20) ஆல் பழுத்தால் அங்கே, அரசு பழுத்தால் இங்கே. (21) உலகிலேயே தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு ஒன்றுதான். (22) குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது. (23) கொல்லுவதுங் கொலை; கொல்லக் கருதுவதும் கொலை. (24) சீரைத் தேடின் ஏரைத் தேடு. குறிப்பு : (1) வாக்கிய வகைகளுள் : தனிவாக்கியம், தனித்து நின்று தொழில் நடத்தும் ஒரு தலைவனைப் போன்றது; கூட்டுவாக்கியம், கூட்டாகவிருந்து தொழில் நடத்தும் பல தலைவரைப் போன்றது; கலப்புவாக்கியம், ஏவலருடன் சேர்ந்து தொழில் நடத்தும் ஒரு தலைவனைப் போன்றது; கதம்ப வாக்கியம், ஒரு பெருந்தொழில் நடத்துதற்குக் கூட்டுத் தலைவரும் ஏவலரைக் கொண்ட தலைவரும் கூடிய பெருங்கூட்டைப் போன்றது. (2) வாக்கியங்கள், பொருட்போங்குபற்றி, (i) விளம்பு வாக்கியம், (Declarative Sentence) அல்லது உறுதலை வாக்கியம் (Assertive or Affirmative Sentence). (ii) ஏவல் வாக்கியம் (Imperative Sentence) (iii) வினா வாக்கியம் (Interrogative Sentence) (iv) உணர்ச்சி வாக்கியம் (Exclamatory Sentence) என நால் வகைப்படும். ஒரு செய்தியை விளம்பும் அல்லது உறுதிப்படுத்திக் கூறும் வாக்கியம் விளம்பு வாக்கியம் அல்லது உறுதலை வாக்கியம். இது சாற்று வாக்கியம் எனவும் படும். எ-டு : இன்று மழை வரும். சேரன் செங்குட்டுவன் குமரிமுதல் பனிமலைவரை தன்னடிப் படுத்தினான். ஏவலும் வேண்டுகோளும் வாழ்த்தும்பற்றிய வாக்கியம் ஏவல் வாக்கியம். எ-டு : செய்வன திருந்தச் செய். எனக்குச் சோறிடுக. தமிழ் வாழ்க! ஒன்றைப்பற்றி வினவும் வாக்கியம் வினா வாக்கியம். எ-டு : கூட்டுடைமை யாட்சிக்கும் (Socialism) பொதுவுடைமை யாட்சிக்கும் (Communism) வேற்றுமை யாது? தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமா? உள்ளத்திலெழும் ஒரு வலிய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம். எ-டு : கற்பகப் பறவை (Paradise Bird) எவ்வளவு அழகாயிருக் கின்றது! காந்தியடிகளைச் சுட்டுக்கொல்ல எத்துணைக் கன்னெஞ்சு வேண்டும்! 8. சொல்முறை (Order of Words) சொற்கள் வாக்கியத்தில் நிற்கும் முறை சொன்முறையாகும். தழுவும் சொல் முன்னும் தழுவப்படும் சொல் பின்னும் நிற்றலே, இயல்பான முறையாம். சொல்லுக்குச் சொன்னது சொற்றொடர்க்கும் ஒக்கும். ஒரு கருத்தை வற்புறுத்துமாயின், சில சொற்களும் தொடர்களும் இயல்பான முறை மாறியும் வரலாம். பெயரெச்சம் எப்போதும் பெயருக்குமுன் நிற்றல் வேண்டும். எ-டு : போன காரியம் பெரிய வீடு வினையெச்சம், வினைமுற்றுக்கும் பெயரெச்சத்திற்கும் பிற வினையெச்சத்திற்கும் முன் நிற்றல் இயல்பு; பின் நிற்றல் ஒரு பயன் நோக்கியது. எ-டு : வந்து போனான் (இயல்பு) போனான் வந்து (பயன் நோக்கியது) குலம் தொழில் புலமை தவம் பட்டம் பதவி முதலியனபற்றி வழங்கும் சிறப்புப் பெயர்கள், இயற்பெயருக்கு முன்னும் பின்னும் நிற்கலாம். முன் நிற்பது பண்டை முறை; பின் நிற்பது இற்றை முறை. முன் நிற்பின், இரு பெயரும் இயல்பாயிருக்கும்; பின் நிற்பின், இயற்பெயரின் இறுதி பெரும்பாலும் திரியும். பண்டை முறை இற்றை முறை குலம் : சோழன் நலங்கிள்ளி நலங்கிள்ளிச்சோழன் குறமகள் இளவெயினி (இளவெயினிக் குறமகள்) தொழில் : மருத்துவன் தாமோதரன் தாமோதர மருத்துவன் ஆசிரியன் முத்துவீரன் முத்துவீரவாசிரியன் புலமை : புலவன் சாத்தன் சாத்தப்புலவன் தெய்வப்புலவன் திருவள்ளுவன் (திருவள்ளுவத் தெய்வப்புலவன்) தவம் : முனிவன் அகத்தியன் அகத்திய முனிவன் பட்டம் : ஏனாதி மாந்தக்கொங்கன் மாந்தக்கொங்கேனாதி பதவி : தலைமையாசிரியர் தியடோர் தியடோர் சாமுவேல் தலைமையாசிரியர் சாமுவேல் முதலமைச்சர் (ஓமாந்தூர்) இராமசாமி (இரெட்டியார்) இராமசாமி முதலமைச்சர் பட்டப்பெயர்களும் பதவிப்பெயர்களும் தவிர மற்றெல்லாச் சிறப்புப் பெயர்களும், இன்று இயற்பெயர்க்குப் பின்னரே வரும். எ-டு : முத்துசாமி ஐயர் சாமிநாத பண்டிதர் பெரியசாமிப் புலவர் குறிப்பு : (1) உயர்ந்தோரைக் குறிக்கும் இயற்பெயரும் சிறப்புப் பெயருமாகிய இருவகைப் பெயர்களும், பெரும்பாலும் உயர்வுப்பன்மை விகுதி பெற்றே வழங்கும். எ-டு : கணக்காயனார் மகனார் நக்கீரனார். (2) உயர்வுப்பன்மை விகுதிபெற்ற சிறப்புப் பெயர்க்கு முன் வரும் இயற்பெயர்கள், உயர்வுப்பன்மை விகுதி பெறா; தனித்துவரின் பெறும். அகத்திய முனிவர் அகத்தியனார், அகத்தியர் பெரியசாமிப் புலவர் பெரியசாமியார் ஐயாத்துரை முதலியார் ஐயாத்துரையார் அகத்தியனார் முனிவர் என்றாவது, பெரியசாமியார் புலவர் என்றாவது, ஐயாத்துரையார் முதலியார் என்றாவது, வராமை காண்க. இக்காலப் பட்டபெயர்களுள், ஆங்கிலக்கல்விப் பட்டங்க ளொழிந்த பிறவெல்லாம் முற்காலப் பட்டப் பெயர்கள் போன்று, இயற்பெயருக்கு முன்னரே நிற்கும். எ-டு : இராவ் சாகிபு ஆபிரகாம் பண்டிதர் வித்துவான் S. ஆறுமுக முதலியார், (M.A., B.O.L., L.T.) பண்டித நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார். மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர். பெரியார் மகான்மா என்னும் பட்டப்பெயர்கள் இயற் பெயருக்கு முன்னும் பின்னும் நிற்கும். எ-டு : பெரியார் ஈ.வே. இராமசாமி, ஈ.வே. இராமசாமிப் பெரியார். மகான்மா காந்தி, காந்தி மகான்மா. பண்டிதர் என்னும் பெயர் பட்டமல்லாது அறிவும் தொழிலும்பற்றியதாயின், இயற்பெயருக்குப் பின் வரலாம். எடுத்துக்காட்டு மேலே காண்க. பண்டிதன் புலவன் வித்துவான் நாவலன் என்னும் பெயர்கள், தொடர்ந்துவரின் பண்டித புலவ வித்துவ நாவல என ஈறுகெட்டுப் பெயரெச்சமாகும். பல காரணம்பற்றிய அடைமொழிகளும் சிறப்புப் பெயர் களும் இயற்பெயருக்குமுன் அடுக்கிவரின், இடப்பெயர் முன்னும் பிறபெயர் அதன் பின்னும் வரும். எ-டு : மாங்குடி மருதனார். (ஊர்ப்பெயர் மட்டும் அடைமொழியாய் வந்தது). சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் - (நாட்டுப் பெயரும் ஊர்ப் பெயரும் இயற்பெயர் போன்ற சிறப்புப் பெயருக்குமுன் வந்தன). கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை - (ஊர்ப் பெயரும் பட்டப்பெயரும்). மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் - (ஊர்ப்பெயரும் தந்தை பெயரும் முறைப்பெயரும்). மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் - (ஊர்ப்பெயரும் தொழிற்பெயரும் பிறபெயரும்). உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - (ஊர்ப்பெயரும் ஊர்ப்பகுதிப் பெயரும் உறுப்புப் பெயரும்). உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - (ஊர்ப்பெயரும் பதவிப் பெயரும்). மதுரை ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் (ஊர்ப்பெயரும் தொழிற்பெயரும் குடிப்பெயரும்). சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் - (நாட்டுப் பெயரும் ஊர்ப்பெயரும் குலப்பெயரும் கோத்திரப் பெயரும்.) இவற்றில், இறுதியில் வந்தவை பெரும்பாலும் இயற்பெயர். முதுகண் என்பது, ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்து, அரசர்க்கும் அரசியர்க்கும் அறிவுரை கூறும் இருபாலாரின் பொதுப்பெயர். இடப்பெயர் சிறுபான்மை இயற்பெயரையொட்டி வழங்குவதுண்டு. அங்ஙனம் வழங்கும்போது முதலெழுத்தளவில் குறுகியும் வழங்கும். எ-டு : உ. வே. சாமிநாதையர், உ - உத்தமதானபுரம். இடப்பெயரல்லாத பிற பெயர்கள் வரின், பின்வரும் முறையில் வரலாம். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன். (தொல். கிளவியாக்கம், 42, சேனா. உரை) இத் தொடரில், ஆசிரியன் என்பது தொழிற்பெயர்; பேரூர்கிழான் என்பது செட்டிநாட்டரசர் என்பது போன்ற பட்டப்பெயர்; செயிற்றியன் என்பது புலமைபற்றிய பெயர்; இளங் கண்ணன் என்பது முதுகண்ணனுக்குக் கீழ்ப்பட்ட பதவிப்பெயர்; சாத்தன் என்பது இயற்பெயர். அரசர் பெயர்கள் பின்வரும் முறையில் வரும். சோழன் செங்கணான் - குடிப்பெயரும் இயற்பெயரும். சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி - குடிப்யெரும் உடைமைபற்றிய பெயரும் இயற்பெயரும். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் - குடிப்பெயரும் அருஞ்செயல்பற்றிய பெயரும் இயற்பெயரும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் - குடிப்பெயரும் வெற்றிபற்றிய பெயரும் இயற் பெயரும். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி - குடிப்பெயரும் இறந்தகம்பற்றிய பெயரும் இயற்பெயரும். மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன் - குடிப் பெயரும் பட்டப்பெயரும் இயற்பெயரும். குடி என்றது இங்கு மரபு (வமிசம்). குணமும் உறுப்பும் பொருளும்பற்றிய சொற்கள் சேர்ந்து வரும் பெயர்த்தொடர் மொழிகளில், குணச்சொல் முன்பும் உறுப்புச் சொல் இடையும் பொருட்சொல் கடையும் நிற்கும். பொருள் என்பது உறுப்புகளையுடைய உடம்பு. எ-டு : முத்தலைச் சூலம் செங்கால் நாரை பெருந்தலைச் சாத்தன் இங்ஙனம் வரும் பெயர்த்தொடர் மொழிக்கு வண்ணச் சினைச்சொல் என்று பெயர். வண்ணம் என்பது நிறத்தை யுள்ளிட்ட குணம். சினை என்பது உறுப்பு. வண்ணச் சொல்லையும் சினைச் சொல்லையும் உடைய பொருட்சொல், வண்ணச்சினைச் சொல். இதை அடைசினை முதற்பெயர் என்றும் அழைக்கலாம். அடை என்பது குணத்தைக் குறிக்கும் அடைமொழி. முதல் என்பது உடம்பு. அடைமொழி சினைப்பெயர் முதற்பெயர் என்னும் முறையில் வரும் தொடர்ப்பெயர், அடைசினை முதற்பெயர். கால்செந்நாரை தலைப்பெருஞ்சாத்தன் என, வேறு முறையில் வண்ணச்சினைச் சொல் வரா. அடை சினை என்னும் இரண்டில் ஒன்றே முதலையடுத்து வருவதுமுண்டு. எ-டு: வெண்ணெல், வால்மிளகு செந்நாரை, மண்டையெறும்பு பெருஞ்சித்திரனார், முடமோசியர் இவ்விரண்டாக இணைந்து வழங்கும் இனைமொழிகளில், எச்சொல் மரபாக முன் நிற்கிறதோ அச் சொல்லே என்றும் முன் நிற்றல் nt©L«. எ-டு : ஏறத்தாழ, சீரும் சிறப்பும், வீடுவாசல். இவற்றை முறைமாற்றல் கூடாது. வாக்கியங்களில், எழுவாய் முன்னும் செயப்படுபொருள் இடையும் பயனிலை கடையும் நிற்றல் இயல்பாம். எ-டு : மறுமை உண்டு. உதயகுமரன் மணிமேகலையைக் கண்டான். பொருளை வற்புறுத்துவதற்காக, இம் முறை மாறி வருவது முண்டு. எ-டு : உண்டு மறுமை. கண்டான் மணிமேகலையை உதயகுமரன். f©K‹ ïuhj gl®¡if¥ bghUŸfis¥g‰¿¡ TW«nghJ« vGJ«nghJ«, ïa‰bgaiu K‹D« R£L¥bgaiu¥ ã‹D« Twnt©L«.* எ-டு (1) பரிதிமாற் கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார், அளவிறந்த தமிழ்ப்பற்றுடையவர். அவர் எழுதிய நூல்களைப் படித்தவர்க்கு இவ் வுண்மை விளங்கும். (2) தீக்கோழி பாலைநிலத்தில் வாழும் மிகப் பெரிய பறவை. அதற்கு இரண்டே விரல்களுண்டு. காரணத்தையும் ஏதுவையும் குறிக்கும் சுட்டடியிடைச் சொல்லும், காரணக் கூற்றிற்குப் பின்னரே வரும். எ-டு : (1) தமிழ்நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தற்குறிகள். அதனால், தமிழ் தழைத்தோங்குவதற்கு மிகுதியாய் இடமில்லை. (2) பனி (இமய) மலை யுச்சியில் சில கடற்பொருள்கள் கிடைக்கின்றன. இதனால், அது ஒருகாலத்தில் கடலுக் குள் மூழ்கியிருந்தமை ஊகிக்கப்பெறும். * இயற்பெயர்க்குப் பின்வரும் சுட்டுப்பெயரைப் பண்டறிசுட்டு என்பர். உலகறி சுட்டானால் இயற்பெயரின்றியுங் கூறப்படும், உலகமுழுதும் அறிந்த சுட்டு உலகறிசுட்டு. எ-டு : அவனன்றி அணுவும் அசையாது. இதில், அவன் என்பது ஆண்டவனைக் குறிக்குமென்று உலகமுழுதும் அறிந்திருப்பதால், அச் சொல் உலகறிசுட்டாகும். கண் முன்னுள்ள பொருள்களைச் சுட்டும்பெயர் இயற் பெயருக்கு முன்னும் பின்னும் வரலாம். எ-டு : அவன் முருகன், முருகன் அவன்; அது மரம், மரம் அது எண்ணுச் சொற்கள் பெயரைத் தழுவும்போது, இரண்டொரு சொற்களோடு சேர்ந்துவரின் அவற்றின் முன்னும், தெரிநிலைப் பெயரெச்சத்தில் முடியும் நெடுந்தொடரொடு சேர்ந்துவரின் அதற்குப் பின்னும், நிற்கும். எ-டு : ஒரு நல்ல பையன், ஒரு படிக்கிற பிள்ளை, இரு பழுத்த பழம், ஒரு கெட்ட குணம், மூன்று பெரிய வீடு, பத்து அழுகல் தேங்காய், ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர். இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் பாடும் ஒரு புலவர். இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணூறும் பாடும் ஒரு சிறந்த தமிழ்ப் புலவர். இங்ஙனமன்றி, நல்ல ஒரு பையன், பழுத்த இருபழம் என்று வரா. இதிலிருந்து, ஒரே சொல்லொடு கூடி வரும்போதெல்லாம் எண்ணுச்சொல் முன்நிற்கும் என அறிந்து கொள்க. பொறுப்பு வாய்ந்த ஒரு தலைவர் என்றும் கூறலாம். தழுவப்படுவது அஃறிணைப் பெயராயின், நல்லது என்னும் குறிப்பு வினையாலணையும் பெயருக்குப் பின் எண்ணுச் சொல் வரலாம். எ-டு : நல்லதொரு காலம். ஒரு நல்ல வேலை செய்கிற பிள்ளை, வேலை செய்கிற ஒரு நல்ல பிள்ளை, என்னும் தொடர்கள் பொருள் வேறுபடுதலால், அவ்வப் பொருட்குத் தக்கவாறு எண்ணுச்சொற்களை நிறுத்தல் வேண்டும். எண்ணுச் சொற்களோடு கூடிவரும் பல சொற்கள் பிளவுபடா திசைப்பின், அவற்றுக்கு முன்னரே எண்ணுச்சொல் நிற்றல் வேண்டும். எ-டு : ஒரு நல்ல தென்னாட்டுத் தமிழ்ப் பையன் ஒரு சிறு நல்ல பெண்பிள்ளை. இவற்றில், தெரிநிலைப் பெயரெச்சமின்மையே பிளவுபடா திசைத்தற்காரணம். இவற்றை அளவையாகக் கொண்டு குறிப்புப் பெயரெச்சங்கள் தொடர்ந்துவரும் முறை அறிக. வாக்கியங்களிற் சொற்கள் அமைந்து கிடக்கும் முறை பலவகைப்படும். அவற்றுள், உரைநடைக்குரியன அல்லது மாணவர் கையாளத்தக்கன மூன்று. அவை, ஆற்றுநீர், நிரனிறை, அளைமறி பாம்பு என்பன. ஒரே தொடர்ச்சியாய்ச் செல்லும் ஆற்றுநீர்போல், ஒரே தொடர்ச்சியாய்ப் பொருள் செல்லுமாறு சொற்கள் அமைந்து கிடக்கும் முறை, ஆற்றுநீர் ஆகும். எ-டு (1) நாங்கள் நால்வரும் நேற்று ஒரு காட்டுணா (Picnic)ɉfhf¥ போனோம். காட்டிற்குப் போனவுடன் எங்கள் மூட்டை முடிச்சுகளை யெல்லாம் இறக்கி ஒரு மரத்தடியில் வைத்துவிட்டுச் சிறிதுநேரம் விளையாடிக் கொண்டிருந்தோம். திடுமென்று ஒரு புலிக்குரல் கேட்டது. நாங்கள் யாவரும் திகிலடைந்து மெல்ல நடந்து, பக்கத்திலுள்ள ஒரு புதரிற்போய்ப் பதுங்கிக்கொண் டோம். சிறிதுநேரத்திற்குள் புலி வந்துவிட்டது. அன்று எங்கள் உயிர் எங்களிடமில்லை. ஆனால், கடவுளருளால், அது எங்களைக் காணவே யில்லை; இரண்டொரு நொடிநேரம் நின்று அங்குமிங்கும் பார்த்துவிட்டு, எங்கள் அருகாகவே கடந்து போய்விட்டது. அது போகிற அரவம் அடங்கியபின், சில நிமையம் பொறுத்து, மெல்ல மரத்தடிக்குச் சென்று, முக்கியமானவும் எளிதாய்ச் சுமக்கக் கூடியனவுமான பொருள்களைமட்டும் எடுத்துக் கொண்டு, ஒரே ஓட்டமாய் ஓடிவந்துவிட்டோம். வீடுவந்து சேர்ந்தபின்தான் எங்கள் நெஞ்சாங்குலைத் துடிப்பு நின்றது. (2) பிற நாடுகளிலெல்லாம் அரசியற்கட்சி பல விருப்பினும், நாட்டுமொழி அவை யெல்லாவற்றிற்கும் பொதுவாகும். இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டிலோ, ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி தொடர்புறுத்தப்படு கிறது. அதிலுங் கேடாக, நாட்டுமொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. மொழியல்லவா மக்கள் முன்னேறும் வழி? தாய்மொழியைப் பேணாத நாடு தமிழ்நாடு தவிர வேறு ஏதேனும் உண்டா? பொதுவான பயனிலையுஞ் செயப்படுபொருளும் கொண்ட கிளவியங்களைப் புணர்த்தெழுதும்போது, இடையிட்டு நிற்கும் தொடர்புற்ற சொற்களை, முன்னின்றதொடு தொடர்புடையதை முன்னும் பின்னின்றதொடு தொடர்புடையதைப் பின்னுமாக, நிரல்பட (வரிசைப்பட) நிறுத்துவது நிரனிறை எனப்படும். எ-டு : (1) முருகனும் பெருமாளும் கணக்கில் முறையே நாற்பது வரையமும் ஐம்பது வரையமும் பெற்றார்கள். (வரையம் = Mark) (2) மயிலுங் குயிலும் கார்காலத்தை முறையே விரும்புவதும் வெறுப்பதும் இயல்பு. தலை முன்னும் வால் பின்னுமாக வளைக்குள் புகுந்து வால் முன்னும் தலை பின்னுமாக மடங்கி நிற்கும் பாம்புபோல, கடை முதலும் முதல் கடையுமாக மாறிநின்றும் பொருள்படக்கூடிய சொன்முறை, அளைமறிபாம்பு எனப்படும். அளை - வளை. மறிதல் - மடங்குதல். எ-டு : (1) குத்தினான் வேங்கையைக் கத்தியால். (2) எடுத்தான் தடியைப் பெருமாள்; அடித்தான் புலியை அவனே. இவை, கத்தியால் வேங்கையைக் குத்தினான், பெருமாள் தடியை எடுத்தான்; அவனே புலியை அடித்தான், என்று கடை தலையாக மாறியும் பொருள்படுதல் காண்க. இங்ஙனம் அமைப்பது இயற்கையன்மையாலும், கருத்து மாற்றத்தை யுண்டுபண்ணுவதாலும், நெடுகலும் இம் முறையைக் கையாளுவது வழுவாகும். வலிகருதிய இடத்தில்மட்டும் கையாளலாம். சொற்கிடக்கை முறைக்கு இலக்கணத்தில் பொருள்கோள் என்று பெயர். பொருள்கொள்ளும் முறை பொருள்கோள். வினா மரபு ஒரு பொருளைப்பற்றி வினவும்போது, வினவப்படும் பொருளைக் குறிக்கும் சொல்லின் ஈற்றில் வினாவெழுத்திருத்தல் வேண்டும். வினா வினவப்படும் பொருள் எ-டு : கண்ணானா வந்தான்? ஆள் கண்ணன் நேற்றா வந்தான்? காலம் கண்ணன் நேற்று என்னிடமா வந்தான்? இடம் கண்ணன் நேற்று என்னிடம் வண்டியிலா வந்தான்? ஊர்தி கண்ணன் நேற்று என்னிடம் வேகமாகவா வந்தான்? வந்தவகை கண்ணன் நேற்று என்னிடம் புத்தகமா தந்தான்? பொருள் ஐயமும் சினமும் பற்றிய வினாவில், சிறிதறியப்பட்ட பொருளும் உண்மைப் பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும். எ-டு : அவ் வுருவம் மாந்தனா? மரமா? - ஐயவினா. நீ மனிதனா? மாடா? - சின வினா. ஒரு வினாவில், உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும் அல்லது நன்மைச் சொல்லும் தீமைச்சொல்லும் அடுத்துவரின், பொதுவாய் உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் முன்னர்க் கூறப்படும். எ-டு : தமிழ்நாட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாவா? எந்திரத்தினால் நன்மையா? தீமையா? வினவுவான் கருத்தின்படி, எதிர்மறைச்சொல்லும் தீமைச் சொல்லும் உண்மை குறிப்பின், அவை முன்வரலாம். எ-டு : உனக்குத் தண்டனை வேண்டாவா? வேண்டுமா? குடியினால் தீமையா? நன்மையா? குறித்த கருத்தின்றிக் கேட்கப்பெறும் வினாக்களிலெல்லாம், எதிர்மறைச் சொல்லும் தீமைச்சொல்லும், உண்மை குறிக்கும் போதுகூட, பின்வருவதே இயல்பாம். எ-டு : ஆள் வரி (poll-tax) விதிக்கலாமா? விதிக்கக்கூடாதா? சூதாட்டம் நல்லதா? கெட்டதா? மூவிடப் பதிற்பெயர்களையும் சேர்த்துக் கூறும்போது, முன்னிலைப் பெயரை முதலிலும் தன்மைப் பெயரை இடை யிலும் படர்க்கைப் பெயரை இறுதியிலும் கூறுவது நன்று. எ-டு : நீயும் நானும் நீயும் நானும் அவனும் தன்மைப் பெயரை முதலிற் கூறுவது மரபல்லாமை மட்டுமன்று; தற்புகழ்ச்சி அல்லது அகங்காரமுமாகும். ஒரு சொல் முன்நிற்கும்போது இரட்டுறலையோ மயக்கத் தையோ விளைக்குமாயின், அதைப் பின்நிறுத்தல் வேண்டும். எ-டு : ஆடு எருமை மாடு என்னுமிவற்றின் நிரை முந்நிரை எனப்படும். இதை, ஆடு மாடு எருமை என்னுமிவற்றின் நிரை முந்நிரை எனப்படும் என மாற்றுக. பயனிலை, முற்றுப் பயனிலை எச்சப்பயனிலை என இருவகைப்படும் என்பது, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை எனப் பயனிலை இருவகைப்படும் என்றிருத்தல் நல்லது. அமங்கலச் சொல்லை ஒருவரது பெயரொட்ட நிறுத்துதல் கூடாது. எ-டு : பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், மரணத்தின்பின் மாந்தன் நிலையைப்பற்றி மிக அருமை யாகப் பேசினார்கள். நாட்டார் அவர்கள் காலஞ்சென்றுவிட்டதனால் இவ் வாக்கியத்தில் அமங்கலக் குற்றத்திற்கு இடமில்லை. ஆனால், இன்றும் உயிர் வாழ்பவருடைய பெயரையொட்ட அமங்கலச் சொல்லை நிறுத்துதல் கூடாது. மரணத்தின் பின் மாந்தன் நிலை என்னும் நூலின் ஆசிரியர் மறைமலையடிகள் என்று, இயற்பெயரை அமங்கலச் சொற்குப் பின் நிறுத்துதல் வேண்டும். ஆங்கிலக் கலைப்பட்டங்களைப் பெயரொடு சேர்த்துக் கூறும்போது, அவர்கள் என்னும் உயர்வுச் சொல்லின்பின் அவற்றை நிறுத்துதல் வேண்டும். v-L : brªjÄœ¥ òuty® jÄHntŸ ckhknfRtu« ãŸis mt®fŸ, ã.V., பி.எல். அவர்கள் என்னும் சொல் வராதபோது, கலைப்பட்டங்கள் இயற்பெயரை அடுத்துநிற்கும். கனம் லீத்து, எம்.ஏ. 9. வேற்றுமைப் பொருத்தம் (Appropriate post-positions) வேற்றுமைத் தொடர்மொழிகளிற் பல, தொகைநிலைத் தொடர்களாகவே வழங்குகின்றன. அவற்றை அங்ஙனமே வழங்குதல்வேண்டும். எ-டு : பால் குடிக்கிற பிள்ளை, காய்ச்சல் மருந்து, சாத்தன் புத்தகம், தம்பி மகன், மலைவாழ்நர். இவற்றைப் பொதுவாய் உருபு விரிக்கவேண்டியதில்லை. ஆனால், ஒரு பயன் நோக்கிச் சிலவிடத்து விரிக்கலாம். கூலிவேலை என்பது வேலையின் வகையையும், கூலிக்கு வேலை என்பது வேலையின் நோக்கத்தையும் குறிக்கின்றது. பால் குடிக்கிற பூனை என்பது பொதுவாகப் பால் குடிக்கும் பூனையையும், பாலைக் குடிக்கிற பூனை என்பது பாலைக் களவிற் குடிக்கும் பூனையையும் உணர்த்தும். இங்ஙனமே, சோறுண்கிறான் என்பது பொதுவான பொருளிலும், சோற்றை யுண்கிறான் என்பது குறிப்பிட்ட சோற்றையுண்கிறான் என்னும் சிறப்புப் பொருளிலும் வழங்கலாம். வேற்றுமையுருபுகளைச் சிலவிடத்து விரித்தே வழங்குதல் கூடும். அவனைக் கூப்பிடு என்பதை அவன் கூப்பிடு என்றும், மரத்திலிருந்து விழுகிறது என்பதை மரம் விழுகிறது என்றும் சொல்லமுடியாது. வேற்றுமையுருபுகளைப் பெயரொடு சேர்க்கும்போது, அவ்வப் பொருட்குரியவற்றையே சேர்த்தல்வேண்டும். உருபு மாறின் பொருளும் மாறிவிடும்; அல்லது பொருள இராது. தலைவலிக்கிறது என்பது நெற்றி முழுதும் வலிக்கிறது என்றும், தலையில் வலிக்கிறது என்பது தலையில் ஏதோ ஒரு பகுதி வலிக்கிறது என்றும், பொருள்படும். கல்லை யெறிந்தான் என்பது குறியில்லாமற் கல்லையெறிவதையும், கல்லால் எறிந்தான் என்பது குறிமேற் கல்லையெறிவதையும் குறிக்கும். தொழிலைப் பயில்கிறான் என்பது ஒரு குறித்த தொழிலைக் கற்றலையும், தொழிலிற் பயில்கிறான் என்பது ஒரு குறித்த தொழிலிற் பழகுதலையும், உணர்த்தும். இங்ஙனமே பிறவும். பல பொருளுக்குப் பல வேற்றுமையுருபுகள் ஏற்கும். அவற்றுள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், செய்யுள் வழக்கைவிட உலக வழக்கையும், உலக வழக்கிலும் பெருவழக்கையும், தழுவுதல் நன்று. சில பொருட்கு உருபுமட்டும் வரும்; சில பொருட்கு உருபுஞ் சொல்லும் வரும். சார்பு : கருமச் சார்பு கருமமல்லாச் சார்பு எனச் சார்பு இருவகைப்படும். உடம்பால் தொடுதல் கருமச்சார்பு; உதவியை நாடல் கருமமல்லாச் சார்பு. இவ்விரு பொருளிலும் 2ஆம் வேற்றுமையும் 7ஆம் வேற்றுமையும் வரும். எ-டு : தூணைச் சார்ந்தான், தூணின்கட் சார்ந்தான், தூண்மேற் சாய்ந்தான் } - கருமச் சார்பு அரசனைச் சார்ந்தான், அரசன்கட் சார்ந்தான், அரசனிடம் சார்ந்தான் } கருமமல்லாச்சார்பு nr®î : nr®î¥bghU£F 2M« nt.-í« 3M« nt.-í« tU«; mšyJ, 3M« nt.-í« 7-M« nt.-í« வரும். எ-டு : முசலொனி இற்றிலரைச் சேர்ந்தவர், முசலொனி இற்றில ரோடு சேர்ந்தவர். குடும்பத்தொடு சேர்ந்துகொண்டான், குடும்பத்தில் சேர்ந்து கொண்டான். Ú§fš : 2M« nt.-í« 4-M« nt.-í« 5-M« nt.-í« வரும். எ-டு : ஊரை நீங்கினான், ஊரைவிட்டு நீங்கினான். ஊருக்கு நீங்கினான் (செ.) ஊரின் நீங்கினான், ஊரினின்று நீங்கினான். x¥ò : 2M« nt.-í«, 4M« nt.-í«. எ-டு : அதையொத்தது அதற்கொத்தது x¥ÕL : 2M« nt.-í«, 4M« nt.-í«, 5M« nt.-í«. எ-டு : சாத்தனைவிட நெடியன் சாத்தற்கு நெடியன் சாத்தனின் நெடியன், சாத்தனில் நெடியன், சாத்தனிலும் நெடியன். všiy mšyJ âir : 4M« nt.-í«, 5M« nt.-í« வரும். எ-டு : மதுரைக்கு வடக்குத் தில்லை. மதுரையில் வடக்குத் தில்லை. bjhiyî : 4M« nt.-í« 5M« nt.-í« வரும். எ-டு : சென்னைக்குத் தில்லி (Delhi) தொலைவு. சென்னையிலிருந்து தில்லி தொலைவு. fUÉ mšyJ fhuz« : 3M« nt.-í«, 5M« nt.-í« வரும். எ-டு : மண்ணாற் செய்த குடம், வாணிகத்தால் முன்னேறினான். மண்ணிற் செய்த குடம், வாணிகத்தின் முன்னேறினான். bghU£L : 3M« nt.-í«, 4M« nt.-í« வரும். எ-டு : இப் பிள்ளையினால் உயிர் வாழ்கிறேன். இப் பிள்ளைக்காக உயிர் வாழ்கிறேன், இப் பிள்ளையின் பொருட்டு உயிர் வாழ்கிறேன். m¢r« : 2M« nt.-í« 4M« nt.-í« 5M« nt.-í« வரும். எ-டு : பழியை அஞ்சுவேன். (செ.) பழிக்கு அஞ்சுவேன். பழியின் அஞ்சுவேன். (செ.) செய்யுள் வழக்கில், 5ஆம் வேற்றுமைக் கொப்பாகப் பழியால் அஞ்சுவேன் என 3ஆம் வேற்றுமையும் வரும். áw¥ò mšyJ jiyik : 4M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : பூவிற்குச் சிறந்தது தாமரை, காவியத்திற்குச் சிறந்தது சிலப்பதிகாரம். பூவிற் சிறந்தது தாமரை, காவியத்திற் சிறந்தது சிலப்பதிகாரம். cÇik : 4M« nt.-í«, 6M« nt.-í« வரும். எ-டு : தேவர்க்குப் பலி. தேவரது பலி. பெயராய் வரும்போது தேவர்பலி எனத் தொகையாய் இருத்தலே நன்று. ïdKiw : 4M« nt.-í« 6-M« nt.-í« வரும். எ-டு : கண்ணனுக்குத் தம்பி, நம்பிக்கு மகன். கண்ணனுடைய தம்பி, நம்பியின் மகன். பெயராய் வரும்போது, கண்ணன் தம்பி, நம்பிமகன் எனத் தொகையாயிருத்தலே நன்று. bghU£ghL : 4M« nt.-í«, 6M« nt.-í« வரும். எ-டு : இச் சொற்குப் பொருளென்ன? இச் சொல்லின் பொருளென்ன? bghUËštuš : 4M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : அச்சப் பொருட்கு எந்த வேற்றுமை வரும்? அச்சப் பொருளில் எந்த வேற்றுமை வரும்? bgaÇÈU¤jš : 4M« nt.-í«, 7M« nt.-í« வரும். எ-டு : இந்த ஆவணம் (பத்திரம்) யார் பேருக்கு இருக்கின்றது? இந்த ஆவணம் யார் பேரில் இருக்கின்றது? Ia« : 2M« nt.-í«, 4M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : அதைப்பற்றி ஐயமில்லை. அதற்கு ஐயமில்லை. அதில் ஐயமில்லை. gUt« : 3M« nt.-í«, 7M« nt.-í« வரும். எ-டு : ஆண்டால் மூத்தவன், அறிவால் மூத்தவன். ஆண்டில் மூத்தவன், அறிவில் மூத்தவன். ஆண்டால் இளைஞன், அறிவால் இளைஞன். ஆண்டில் இளைஞன், அறிவில் இளைஞன். இப் பொருளில் 7ஆம் வே. வருவதே சிறப்பாம். bryî : 2M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : வழியைச் சென்றான், நெறியைச் சென்றான் (செ.) வழியிற் சென்றான், நெறியிற் சென்றான், நெறிக்கண் சென்றான். M‰¿yoí©L nghj‰bghUËš 3M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : ஆற்றோடு போய்விட்டான், வெள்ளத்தோடு போய்விட்டான். ஆற்றிலே போய்விட்டான், வெள்ளத்திலே போய்விட்டான். நோயாலிறத்தலைக் குறிக்க 7ஆம் வே. வரும். எ-டு : காய்ச்சலிற் போய்விட்டான், கொள்ளையிலே போக. bt‰¿ : 2M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : போரை வென்றான். போரில் வென்றான். fhy« : 4M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : வருகிற ஆவணிக்குக் கலியாணம். வருகிற ஆவணியிற் கலியாணம். F‰w§Twš : 2M« nt.-í« 4M« nt.-í« 6M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : நூலைக் குற்றங் கூறினான். நூலுக்குக் குற்றங் கூறினான். நூலது குற்றங் கூறினான். நூலின்கண் குற்றங் கூறினான். ntiy brŒjš : 4M« nt.-í« 6M« nt.-í« வரும். எ-டு : முதலியாருக்கு வேலை செய்கிறான், ஆசிரியனுக்கு ஏவல் செய்கிறான். முதலியாரது வேலை செய்கிறான், ஆசிரியனது ஏவல் செய்கிறான். இப் பொருளில் 4ஆம் வேற்றுமையே பெருவழக்காம். å© braš : 4M« nt.-í« 7M« nt.-í« வரும். எ-டு : வீணுக்கு உழைக்கிறான். வீணில் உழைக்கிறான். tU¤jK« k»œ¢áí« : 2« nt.-í«, 3M« nt.-í«, 4M« nt.-í« வரும். எ-டு : அதுபற்றி வருந்தினான், மகிழ்ந்தான். அதனால் வருந்தினான், மகிழ்ந்தான். அதற்கு வருந்தினான், மகிழ்ந்தான். 3ஆம் வேற்றுமை ஒடு உருபு சிறந்தவர்கள் பெயரொடு சேர்ந்துவரும். எ-டு : தந்தையொடு மக்கள் வந்தார், நம்பியொடு நாய் வந்தது. இரு சாராரும் சமமானவராயின், 3ஆம் வேற்றுமையிற் கூறாது முதல்வேற்றுமையிற் கூறல்வேண்டும். எ-டு : முதலியாரும் செட்டியாரும் வந்தார்கள், நாயும் கழுதையும் வந்தன. இருவரிடைப்பட்ட தொடர்பும் நட்பும் பகையும்பற்றிய கூற்று, பின்வருமாறு வேற்றுமை பெறும்: எனக்கும் அவருக்கும் தொடர்புண்டு. எனக்கு அவரொடு தொடர்புண்டு. எனக்கு அவருடைய தொடர்புண்டு. எனக்கு அவன் நட்பு. எனக்கும் அவனுக்கும் நட்பு, நட்புண்டு. எனக்கு அவனொடு நட்பு, நட்புண்டு. எனக்கு அவனுடைய நட்புண்டு. எனக்கு அவன் பகை. எனக்கும் அவனுக்கும் பகை, பகையுண்டு. எனக்கு அவனொடு பகை, பகையுண்டு. எனக்கு அவனுடைய பகையுண்டு. குறிப்பு : நட்பும் பகையும் குறித்து 4ஆம் வேற்றுமையும் 6ஆம் வேற்றுமையும் வரும் வாக்கியங்கள், கூறுவான் குறிப்பின்படி, ஒருதலை நட்பு பகையையும் உணர்த்தலாம். எ-டு : எனக்கு அவனுடைய நட்புண்டு = அவன் என்னிடத்து அன்பு பூண்டிருக்கின்றான்; ஆனால், யான் அவனிடத்து அன்பு பூணவில்லை. இங்ஙனமே பிறிதும். ஒரு பொருளின் பகுதியைக் குறித்தலைக் கூறும் கூற்றில், முதற்பெயர் 6ஆம் வேற்றுமையுருபையேற்றால் சினைப்பெயர் 2ஆம் வேற்றுமையுருபையேற்கும்; முதற்பெயர் 2ஆம் வேற்றுமை யுருபை யேற்றால் சினைப்பெயர் 7ஆம் வேற்றுமையுருபை யேற்கும். எ-டு : யானையின் காலை வெட்டினான். யானையைக் காலின்கண் வெட்டினான். குடத்தின் விளிம்பைக் குறைத்தான். குடத்தை விளிம்பின்கண் குறைத்தான். 10. இசைபு (Concord or Agreement) தழுவுஞ்சொல்லும் தழுவப்படும் சொல்லும், திணை பால் எண் இடங்களில் ஒத்திருத்தல் இசைபு ஆகும். ஈரெச்ச முடிபு பெயரெச்சமும் வினையெச்சமும், இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். பெயரெச்சம் எ-டு : வந்த - யான் (நான்), யாம், யாங்கள், நாம், நாங்கள் வந்த - நீ, நீர் (நீயிர், நீவிர்), நீம், நீங்கள் வந்த - அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை யான்(நான்), யாம், யாங்கள், நாம், நாங்கள் - வந்த (காலம்) நீ, நீர், நீம், நீங்கள் - வந்த (காலம்) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை - வந்த (காலம்) வினையெச்சம் வந்து - போனேன், போனோம் வந்து - போனாய், போனீர், போனீர்கள் வந்து - போனான், போனாள், போனார், போனார்கள், போனது, போயின. யான் (நான்), யாம், யாங்கள், நாம், நாங்கள் - வந்து நீ, நீர், நீங்கள் - வந்து அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை - வந்து குறிப்பு : (1) ஒரு இரு இரண்டு மூன்று சில பல முதலிய எண்ணுப் பெயரெச்சங்கள் அஃறிணையீறு கொண்டுள்ளமையால் உயர்திணைப் பெயர்களைத் தழுவா வென்றும், இரு மக்கள் சில மாணவர் என்று கூறாமல் இருவர் மக்கள் சிலர் மாணவர் அல்லது மக்கள் இருவர் மாணவர் சிலர் என்று கூறுதல் வேண்டுமென்றும், சில அறிஞர் கருதுவர். பெயரெச்ச ஈறுகள் திணைபால் காட்டாமை யாலும், கிழமை வேற்றுமைப் பெயரெச்சமொழிந்த எல்லாப் பெயரெச்சங்களும் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாகையாலும், இறந்தகால நிகழ்காலப் பெயரெச்சங்களும் பல குறிப்புப் பெயரெச்சங்களும் அகரவீறு கொண்டுள்ளமை யாலும், எண்ணுப் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்ச வகையாத லாலும், இரு மக்கள், இரண்டுபேர், மூன்று மாணவர், மூவாசிரியர், சிலமாந்தர் என்று கூறுவதெல்லாம் வழுவல்ல என்றறிக. (2) ஒரு இரு முதலிய சொற்களும், சில் பல் என்னும் சொற்களும், எப்போதும் பெயரெச்சமாகவே யிருக்கும். இரண்டு மூன்று முதலிய சொற்களும், சில பல என்னும் சொற்களும், பெயராகவும் பெயரெச்சமாகவும் இருக்கும். ஒன்று என்னும் சொல், என்றும் பெயராகவே யிருக்கும். எ-டு : ஒரு சொல், சில் நாள் - பெயரெச்சம். இரண்டு வீடு, சில மாணவர் - பெயரெச்சம். ஒன்றுஇருந்தது,சிலஇரண்டு சென்றன, வந்தன. - பெயர் (3) அவை சில என்னும் வாக்கியத்தில் சில என்பது அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று என்றும், சில மாணவர் என்னும் பெயரெச்சத்தொடரில் சில என்பது குறிப்புப் பெயரெச்சம் என்றும் அறிதல் வேண்டும். சில என்னும் பெயரெச்சம் பன்மையுணர்த்துவது, பகுதிப்பொருள்பற்றியே யன்றி ஈறுபற்றி யன்று. (4) ஒன்று இரண்டு என்னும் எண்ணுப் பெயர்களின் பெயரெச்ச வடிவுகள், உயிர்முதற் சொற்களுக்கு முன் நீண்ட வடிவிலும், மெய்ம்முதற் சொற்களுக்குமுன் குறுகிய வடிவிலும் இருக்கும். எ-டு : ஓர் ஆள் ஒரு வீடு. ஈர் உடல் இரு திணை. கிழமை வேற்றுமை முடிபு 6ஆம் வேற்றுமையுருபுகளுள், அது ஆது என்பன அஃறிணையொருமையையும், அ என்பது அஃறிணைப் பன்மையை யும், உடைய என்பது அவ் விரண்டையும் உணர்த்தும். எ-டு : எனது கை, எனாது கை, முருகனது வேல் அஃறிணை யொருமை என கைகள், முருகன் கைகள் - அஃறிணைப் பன்மை. என்னுடைய கை, என்னுடைய கைகள், முருகனுடைய கை, முருகனுடைய கைகள். } 6ஆம் வேற்றுமைத்தொகை இருமைக்கும் பொதுவாம். ஒருமை பன்மை எ-டு : என் கை என் கைகள் எம் வீடு எம் வீடுகள் முருகன் புத்தகம் முருகன் புத்தகங்கள் 6ஆம் வேற்றுமைத்தொகை, தன் தம் என்னும் சாரியை பெற்றுவரினும், இருமைக்கும் பொதுவாம். ஒருமைப் பெயர் தன் சாரியையும், பன்மைப் பெயர் தம் சாரியையும் பெறும். ஒருமை பன்மை எ-டு: என்தன் கை என்தன் கைகள் எம்தம் வீடு எம்தம் வீடுகள் முருகன்தன் கை முருகன்தன் கைகள் மக்கள்தம் மொழி மக்கள்தம் மொழிகள் என்றன், எந்தம், முருகன்றன் எனப் புணர்த்தும் எழுதலாம். உயர்திணைக் கிழமைப்பொருள், பின்வருமாறு மூவகையாய் உணர்த்தப்பெறும். (1) வேற்றுமைத் தொகை எ-டு : முருகன் தேவி, முருகன் தேவிமார். (2) சாரியையேற்ற பெயர் எ-டு : முருகன்தன் தேவி. மக்கள்தம் உறவினர். (3) உருபேற்ற பெயர் எ-டு : முருகனுடைய தேவி, முருகனுடைய தேவிமார். சாரியை யேற்ற பெயர் ஒருமை அல்லது பன்மை எண்ணையே உணர்த்தலையும், மற்றவிரண்டும் பொதுவாயிருத் தலையும் நோக்குக. முன்னின்றைப் பெயரும் (Antecedent) பதிற்பெயரும் (Pronoun) வாக்கியங்களில் முன்நிற்கும் பெயர்கட்குப் பதிலாய் வரும் சுட்டுப்பெயர்களுள் (Demonstrative Pronouns), ஒவ்வொன்றும் தன்தன் முன்னின்றையுடன் திணை பால் எண் இடங்களில் ஒத்திருத்தல்வேண்டும். எ-டு : ஆசிரியன் - அவன், இவன். ஆசிரியை - அவள், இவள். ஆசிரியர் - அவர், இவர். ஆசிரியர்கள் - அவர்கள், இவர்கள். ஆசிரியன்மார் - அவர்கள், இவர்கள். முருகன் - அவன், இவன். முருகப்பன், முருகையன் - அவன், இவன். முருகப்பனார், முருகையனார் - அவர், இவர். வள்ளி - அவள், இவள். வள்ளியம்மை - அவள், இவள். வள்ளியம்மையார் - அவர், இவர். மரம் - அது, இது. மரங்கள் - அவை, இவை. எவன் - அவன், இவன். எவள் - அவள், இவள். எவர் - அவர், இவர். எவர்கள் - அவர்கள், இவர்கள். யார் - அவர், இவர். எது - அது, இது. என்னது - அன்னது, இன்னது. எவை - அவை, இவை. என்ன - அன்ன, இன்ன. குறிப்பு : சாமுவேல் அவர்கள், மேனன் அவர்கள், ஐயர் அவர்கள், என ஒருமைப்பெயருக்கும் ஒற்றைப் பன்மைப் பெயருக்கும் பின் இரட்டைப் பன்மைப் பெயர் வருவது வழுவமைதியாம். படர்க்கைப் பெயர்கட்கு முன்னும் பின்னும் வரும் தற்சுட்டுப் பெயர்கள் (Reflective Pronouns), தம் முன்னின்றையுடன் எண் இடங்களில் ஒத்திருத்தல் வேண்டும். அவன் - தான் அவை - தாம் அவள் - தான் முருகன் - தான் அவர் - தாம் வள்ளி - தான் அவர்கள் - தாங்கள் மக்கள் - தாம், தாங்கள் அது - தான் தானே பெரியவன் என்று முருகன் நினைத்துக்கொண் டிருக்கின்றான், முருகன் தானே பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்-இவற்றில் தற்சுட்டுப் பெயர் படர்க்கைப் பெயருக்கு முன்னும் பின்னும் வந்தமை காண்க. பதிற்பெயர்களும் தற்சுட்டுப் பெயர்களும், வேற்றுமை யேற்கும்போது, தம் நெடுமுதல் குறுகும். எ-டு: தன்மை: யான், நான் - என் யாம் - எம் யாங்கள், நாங்கள் - எங்கள் நாம் - நம் முன்னிலை: நீ, நீன் - உன், நின், நுன் (செ.) நீம், நீர் - நும், (செ.) உம். நீங்கள் - உங்கள், நுங்கள் (செ.) படர்க்கை: தான் - தன் தாம் - தம் தாங்கள் - தங்கள். சிறப்புப்பெயரும் இயற்பெயரும் இயற்பெயரும் அதற்கு அடைமொழியாக வரும் சிறப்புப் பெயரும், திணை பால் எண் இடங்களில் ஒத்திருத்தல் வேண்டும். ஒருமையீற்றில் கூறவேண்டின் எல்லாவற்றையும் ஒருமை யீற்றிலும், உயர்வுப் பன்மையீற்றில் கூறவேண்டின் எல்லாவற்றை யும் உயர்வுப் பன்மையீற்றிலும் கூறவேண்டும். இயற்பெயர் பன்மையாயின், சிறப்புப்பெயரும் பன்மையி லிருத்தல் வேண்டும். எ-டு : மதுரை ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் திருவாளன் நெடுஞ்செழியன் திருவாட்டி இன்பவல்லி - ஒருமை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் திருவாளர் அன்பழகனார் திருவாட்டியார் கயற்கண்ணியார் - உயர்வுப் பன்மை புலவர் கபிலபரணர் திருவாளன்மார் அன்பழக நெடுஞ்செழியர் திருவாட்டிமார் அங்கவைசங்கவையார் - பன்மை மதுரைக் கணக்காயன் மகனார் நக்கீரனார் என்னுந் தொடரில், கணக்காயன் என்பது நக்கீரனாரின் தந்தையைக் குறித்தலால், அதையும் உயர்வுப்பன்மையிற் கூறத் தேவையில்லை. ஆனால், மதுரைக் கூலவாணிகனார் சீத்தலைச் சாத்தனார் என்றே கூறல் வேண்டும். ஆயினும், கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் என்பது ஒரு தொடர்ப் பெயராகக் கொள்ளப்பட்டு ஈற்றில் மட்டும் உயர்வுப் பன்மையீறு ஏற்றதென்று அமைக்கப் பெறும். மருத்துவன் தாமோதரனார் என்பதும் இங்ஙனமே. திருவாளர் பேரின்பம், திருவாளர் அச்சுதமேனன் எனச் சிறப்புப்பெயரும் இயற்பெயரும் விகுதியொவ்வாது வருவன வெல்லாம் வழுவமைதியாகும். குறிப்பு : (1) உயர்வுப் பன்மையீறு, (i) ஒருமையீற்றிற்குப் பதிலாகப் பன்மையீறு வருவதும், (ii) ஒருமையீற்றொடு பன்மையீறு வருவதும் என இருவகை. எ.டு : (1) அறிவன்-அறிவர், அரசன் - அரசர். நக்கீரன் - நக்கீரர். (2) அறிவன் - அறிவனார், தகப்பன் - தகப்பனார். நக்கீரன் -நக்கீரனார், அரசி - அரசியார். (2) அரசி நம்பி முதலிய இகரவிகுதிப் பெயர்கள், ஒருமையீற்றொடு பன்மையீறுபெற்றே உயர்வுப் பன்மை வடிவங்கொள்ளும். எ-டு : அரசியார், நம்பியார். (3) ஆண் பெண் பாலீறு பெறாத உயர்திணையொருமைப் பெயர்களும், பன்மையீறு பெற்று உயர்வுப் பன்மையாகும். எ-டு : வள்ளல் - வள்ளலார், தாய் - தாயார். (4) அப்பன் தகப்பன் (தமப்பன்) முதலிய சில முறைப் பெயர்கள் ஒருமையீற்றொடு பன்மையீறு பெற்றே உயர்வுப் பன்மை வடிவு பெறும். எ-டு : அப்பனார், தகப்பனார். அப்பர் என்பது திருநாவுக்கரசரைக் குறிக்கும். கண்ணப்பன் பொன்னப்பன் முதலிய அடைபெற்ற பெயர்கள், இருவகையிலும் உயர்வுப் பன்மை வடிவு பெறும். எ-டு : கண்ணப்பர், கண்ணப்பனார். (5) பலர்பால் போன்றே, உயர்வுப் பன்மையும், ஆண்மை பெண்மை பொதுமை என முத்திறப்படும். எ-டு : மகனார், நம்பியார் - ஆண்மை. மகளார், நங்கையார் - பெண்மை. அவர், ஒருவர், பெரியார் - பொதுமை. மூவிடப்பெயரும் எல்லாம் என்னும் பெயரும் மூவிடப்பன்மைப் பெயர்களோடு கூடிவரும் எல்லாம் என்னும் முற்றுப்பன்மைப் பெயர், பின்வருமாறு வடிவு கொள்ளும். யாம் எல்லேமும், நாம் எல்லாமும் நாம் எல்லோமும் நீம் எல்லீமும், நீர் எல்லீரும் அவர் எல்லாரும், மக்கள் எல்லாரும் அவை எல்லாம், மரங்கள் எல்லாம் தாம் எல்லாம், தாங்கள் எல்லாம். நாமெல்லாரும் நீரெல்லாரும் என எல்லாரும் என்னும் படர்க்கை முற்றுப் பன்மைச்சொல் தன்மை முன்னிலையிலும் வருவது, வழக்குப்பற்றிய வழுவமைதியாகும். நாங்கள் எல்லேங்களும், நீங்கள் எல்லீர்களும், அவர்கள் எல்லார்களும் என இரட்டைப்பன்மையிலிருக்க வேண்டியவை; நாங்கள் எல்லேமும் (நாங்கள் எல்லாரும்), நீங்கள் எல்லீரும் (நீங்கள் எல்லாரும்), அவர்கள் எல்லாரும், என ஒற்றைப் பன்மையிலிருப்பதும்; வழக்குப்பற்றிய வழுவமைதியே. எழுவாயும் பயனிலையும் எழுவாயும் பயனிலையும் திணை பால் எண் இடங்களில் ஒத்திருத்தல் வேண்டும். தன்மை : யான் (நான்) வந்தேன். யாம் வந்தேம். நாம் வந்தோம். முன்னிலை : நீ வந்தை, வந்தனை, வந்தாய் நீம் வந்தீம், நீர் வந்தீர். நீங்கள் வந்தீர்கள். (யாங்கள் வந்தேங்கள், நாங்கள் வந்தோங்கள் என்பன வழக்கற்றன) படர்க்கை : அவன் வந்தனன், வந்தான் ஒருவன் வந்தனன், வந்தான் - ஆண்பால் மகன் வந்தனன், வந்தான் அவள் வந்தனள், வந்தாள் ஒருத்தி வந்தனள், வந்தாள் - பெண்பால் மகள் வந்தனள், வந்தாள் அவர் வந்தனர், வந்தார் சிலர் வந்தனர், வந்தார் - பலர்பால் அவர்கள் வந்தார்கள் அது வந்தது மாடு வந்தது - ஒன்றன்பால் ஒன்று வந்தது அவை வந்தன மாடுகள் வந்தன - பலவின்பால் சில வந்தன யாம் என்பது, தனித்தன்மைப் பன்மையையாவது படர்க்கையை உட்படுத்திய தன்மைப் பன்மையையாவது குறிக்கும்; நாம் என்பது, முன்னிலையை உட்படுத்திய தன்மைப் பன்மையை யாவது முன்னிலையையும் படர்க்கையையும் உட்படுத்திய தன்மைப் பன்மையையாவது குறிக்கும். சில என்பது இங்குப் பெயர்ச்சொல்; பெயரெச்சமன்று. ஒருவனுக்குப் பிறர் இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் என மூவகைப்படுதலால், அம் மூவகையர்க்கும் ஏற்ப, அவரைக் குறிக்கும் பெயர்களையும், அவற்றின் வினைகளையும், முறையே, ஒருமை யிலும் ஒற்றைப் பன்மையிலும் இரட்டைப் பன்மையிலும் கூறல் வேண்டும். ஒருவரைக் குறிக்கும் பன்மையெல்லாம் உயர்வுப் பன்மையாம். முன்னிலை : எ-டு : நீ வா - இழிந்தோன் வினை (ஒருமை) நீர் (நீம்) வாரும் - ஒத்தோன் வினை - உயர்வுப்பன்மை நீங்கள் வாருங்கள் - உயர்ந்தோன் வினை படர்க்கை : அவன் வந்தான் - இழிந்தோன் வினை (ஒருமை) அவர் வந்தார் - ஒத்தோன் வினை - உயர்வுப்பன்மை அவர்கள் வந்தார்கள் - உயர்ந்தோன் வினை இவற்றிலிருந்து, ஒருவரைக் குறிக்கும் உயர்வுப் பன்மை, ஒற்றைப்பன்மை இரட்டைப்பன்மை என இருவகைப்படு மென்பதும், அவற்றுள் முன்னது சிறிது உயர்வையும் பின்னது மிகுந்த உயர்வையுங் குறிக்குமென்பதும் அறியப்படும். மேற்குறித்த மூவகை நிலைமையும் மேலோரை நோக்கிக் கூறியதாகும். கீழோர்க்குள் இழிந்தோன் இல்லாமையின், அவருள் ஒருவனைப்பற்றி அல்லது நோக்கி ஒருவன் கூறும் போது, இழிந்தோன் சொல்லாலேயே கூறல் வேண்டும். எ-டு : நீ வா, அவன் சொன்னான். பொதுவாக, ஒருமையீற்றுப் பெயர்கள் ஒருமையீற்று வினைகொண்டும், பன்மையீற்றுப் பெயர்கள் பன்மையீற்று வினைகொண்டும், முடிதல்வேண்டும். ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் இகர விகுதியும் ஒருமையீறாகும். உயர்வுப்பன்மை பன்மையுள் அடங்கும். எ-டு : மகள் வந்தாள். விறகுவெட்டி வந்தான். - ஒருமையீறு ஒருவன் வந்தான். பெருமான் வந்தான். மகளார் வந்தார். ஒருவர் வந்தார். - பன்மையீறு பெருமானார் வந்தார். சிலர் வந்தார். பொதுவாக, பன்மைப்பெயர்களுள் ஒற்றைப் பன்மைப் பெயர் ஒற்றைப் பன்மை வினைகொண்டும் இரட்டைப் பன்மைப் பெயர் இரட்டைப்பன்மை வினைகொண்டும், முடிதல் வேண்டும். எ-டு : அவர் வந்தார். அவர்கள் வந்தார்கள். உயர்வுப்பன்மை வடிவுகொள்ளும்போது சில படர்க்கைப் பெயர்கள் ஒற்றைப்பன்மையே ஏற்கும். அவை இரட்டைப் பன்மைச் சொற்களோடு பொருந்தி வருவது வழக்குப்பற்றிய வழுவமைதியாகும். எ-டு : நீங்கள் ஒருவர். அவர்கள் யார்? இவர்கள் எம் ஆசிரியரின் மகனார். ஒருவர்கள் யார்கள் மகனார்கள் என்னும் வழக்கின்மை காண்க. குடிகள் மக்கள் முதலிய கள் ஈற்றுப் பன்மைப் பெயர்கள், ஒற்றைப்பன்மை வினைகொண்டும் இரட்டைப்பன்மை வினை கொண்டும் முடியும். எ-டு : குடிகள் மகிழ்ந்தனர் (மகிழ்ந்தார்), மகிழ்ந்தார்கள். மக்கள் பொருதனர் (பொருதார்), பொருதார்கள். குறிப்பு : மகிழ்ந்தனர் பொருதனர் என அன் சாரியை பெற்று வரும் வினைமுற்றுகள், அச் சாரியை பெறாத வினைமுற்றுகளினும் பன்மை யுணர்த்தற்குச் சிறந்தனவாம். குருக்கள் என்னும் பெயர், உண்மைப் பன்மையாயினும் உயர்வுப் பன்மையாயினும், குடிகள் என்னும் பெயர் போல் முடியும். எ-டு : குருக்கள் வந்தனர் (வந்தார்), வந்தார்கள். அடிகள் என்னும் பெயர், ஆர் விகுதியை மேற் கொள்ளினும் கொள்ளாவிடினும், குடிகள் என்னும் பெயர் போன்றே முடியும். இப் பெயர் என்றும் உயர்வுப் பன்மையேயாம். எ-டு : அடிகள் கூறினர் (கூறினார்), கூறினார்கள். அடிகளார் கூறினர் (கூறினார்), கூறினார்கள். மார் ஈற்றுப் பன்மைப்பெயர்கள், ஒற்றைப் பன்மை வினைகொண்டும் இரட்டைப் பன்மை வினைகொண்டும் முடியும். இவை உயர்வுப் பன்மையாய் வரவே வரா. எ-டு : குருமார் வந்தனர் (வந்தார்), வந்தார்கள். ஆசிரியன்மார் வந்தனர் (வந்தார்), வந்தார்கள். அடிகண்மார் வந்தனர் (வந்தார்), வந்தார்கள். ஒற்றைப் பன்மையாய் வரும் அர் ஆர் விகுதிகள் பெரும்பாலும் ஒருமை குறித்து உயர்வுப் பன்மையாக வழங்குதலின், அவை உலகவழக்கில் பன்மை குறிக்கத் தவறும்போது விகுதிமேல் விகுதி என்னும் இரட்டைப் பன்மை வேண்டப்படும். எ-டு : எல்லாரும் வந்தார்கள். எல்லாரும் வந்தார் என்பது, செய்யுள் நடைக்கும் புலவர் எழுதும் இலக்கிய நடைக்கும் ஏற்கும். எல்லார்களும் வந்தார்கள் என்பது வழக்கில் இல்லை. அன் சாரியை பெற்ற அர் ஈற்று வினையாயின், விகுதிமேல் விகுதி வேண்டியதின்று. எ-டு : எல்லாரும் வந்தனர். அவையார் (சபையார்) வந்தனர். அவர்கள் என்னும் உயர்வுச் சொல்லைப் பின்னாற் கொண்ட பெயர்கள், ஒருமையுணர்த்தினும் பன்மை வினைகொண்டே முடிதல் வேண்டும். எ-டு : திருமான் அ. இராசாமிக் கவுண்டர் அவர்கள் இன்று மாலை திரு மரியம்மை மண்டபத்தில் திருக்குறளைப்பற்றி ஓர் அரிய சொற்பொழிவாற்றுவார்கள். மூவிடப்பெயரும் எண்ணடிப் பெயரும் மூவிடப்பெயர்களும் எண்ணடிப் பெயர்களைப் பயனிலை யாகக் கொண்டு முடியின், பின்வருமாறு முடியும்: நான் ஒருவன், ஒருத்தன் நீ ஒருவன், ஒருத்தன் - ஆண்பால் அவன் ஒருவன், ஒருத்தன் } நான் ஒருத்தி நீ ஒருத்தி - பெண்பால் அவள் ஒருத்தி } அவர் ஒருவர் நீர் ஒருவர் } - உயர்வுப் பன்மை நாம் இருவர், சிலர், பலர் நீர் இருவர், சிலர், பலர் - பலர்பால் அவர் இருவர், சிலர், பலர் } அரசர் இருவர், சிலர், பலர் அது ஒன்று - ஒன்றன்பால் அவை இரண்டு, சில, பல - பலவின்பால் இவை இக்கால வழக்கிலுள்ளவை. இவற்றுள் படர்க்கை முடிபெல்லாம் வழாநிலையும், ஏனை யீரிட முடிபுகளும் வழக்குப் பற்றிய வழுவமைதியும், ஆகும். தன்மை முன்னிலைகளில் வழாநிலையாய் முடிவன வருமாறு: நான் ஒருவனேன், ஒருத்தனேன் - ஆண்பால் நீ ஒருவனை, ஒருத்தனை } நான் ஒருத்தியேன் - பெண்பால் நீ ஒருத்தியை } நீர் ஒருவரீர் - உயர்வுப் பன்மை யாம் இருவேம் (இருவரேம்), சிலரேம், பலரேம் நாம் இருவோம் (இருவரோம்), சிலரோம், பலரோம் - பலர்பால் நீம் இருவீம் (இருவரீம்), சிலரீம், பலரீம் நீர் இருவீர் (இருவரீர்), சிலரீர், பலரீர் இவை இக்காலத்து வழக்கற்றன; ஆயினும் உயரிய இலக்கிய நடையில் ஆளப்பெறலாம். மூவிடப்பெயரும் உண்மைச்சொல்லும் மூவிடப் பெயர்களும் உண்மைச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்: தன்மை : நான் உள்ளேன், உளேன் யாம் உள்ளேம், உளேம், உளம்; நாம் உள்ளோம், உளோம், உளம் முன்னிலை : நீ உள்ளை, உளை, உள்ளாய், உளாய் நீம் உள்ளீம், உளீம்; நீர் உள்ளீர், உளீர் படர்க்கை : அவன் உள்ளான், உளான், உளன் அவள் உள்ளாள், உளாள், உளள் அவர் உள்ளார், உளார், உளர் அது உள்ளது, உளது, உண்டு அவை உள்ளன; உள்ள, உள ஒன்றன்பாற்குரிய உண்டு என்னும் சொல், இன்று இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். மூவிடப்பெயரும் இன்மைச்சொல்லும் மூவிடப்பெயர்களும் இன்மைச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும். தன்மை : நான் இல்லேன், இலேன் யாம் இல்லேம், இலேம், இலம்; நாம் இல்லோம், இலோம், இலம் முன்னிலை : நீ இல்லை, இலை, இல்லாய், இலாய் நீம் இல்லீம், இலீம்; நீர் இல்லீர், இலீர் படர்க்கை : அவன் இல்லன், இலன், இல்லான், இலான் அவள் இல்லள், இலள், இல்லாள், இலாள் அவர் இல்லர், இலர், இல்லார், இலார் அது இல்லது, இலது, இன்று அவை இல்லன, இல்ல, இல முன்னிலை யொருமைக்குரிய இல்லை என்னும் சொல் இன்று இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். மூவிடப்பெயரும் அன்மைச்சொல்லும் மூவிடப்பெயர்களும் அன்மைச்சொல்லைப் பயனிலை யாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்: தன்மை : நான் அல்லேன், அலேன் யாம் அல்லேம், அலேம், அலம்; நாம் அல்லோம், அலோம், அலம் முன்னிலை : நீ அல்லை, அலை, அல்லாய், அலாய் நீம் அல்லீம், அலீம்; நீர் அல்லீர், அலீர் படர்க்கை : அவன் அல்லன், அலன், அல்லான், அலான் அவள் அல்லள், அலள், அல்லாள், அலாள் அவர் அல்லர், அலர், அல்லார், அலார் அது அல்லது, அலது, அன்று அவை அல்லன, அல்ல, அல படர்க்கைப் பலவின்பாற்குரிய அல்ல என்னும் சொல், இன்று உலகவழக்கில் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாக வழங்குகின்றது. இது வழுவாதலின் விலக்கப்படல் வேண்டும். இரட்டைப் பன்மைவினை வழக்கிலில்லாவிடின், ஒற்றைப்பன்மை வினைகொண்டும் இரட்டைப் பன்மை யெழுவாய்களை முடிக்கலாம். எ-டு : நாங்கள் அல்லேம். நீங்கள் அல்லீர். அவர்கள் அல்லர். மூவிடப்பெயரும் காணாமைச் சொல்லும் ஒரு பொருள் காணாமற் போனதைக் கூறுமிடத்து மூவிடப்பெயரும் பின்வருமாறு முடிதல் வேண்டும்: தன்மை : நான் காணேன். யாம் காணோம், நாம் காணோம். முன்னிலை : நீ காணாய், நீம் காணீம்; நீர் காணீர். படர்க்கை : அவன் காணான். அவள் காணாள். அவர் காணார். அது காணாது. அவை காணா. காணோம் என்னும் தன்மைப் பன்மைச் சொல்லைக் காணேன் என்னும் தன்மை யொருமைப் பொருளில் - அதுவும் காணும் என்னும் கொச்சை வடிவில் - வழங்குவது இருமடி வழுவாகும். பெண்மகன், பெட்டைப்பசன் என்னும் பெயர்களின் முடிபு சிறு பெண்பிள்ளையைப் பெண்மகன் என்று மாறோக்கத் தாரும், பெட்டையப்பசன் என்று வடார்க்காட்டாரும், சொல்வது வழக்கம். இவ்விரு கூட்டுப் பெயர்களும், வருமொழிக் கேற்ப ஆண்பால் வினைகொண்டு முடியாது நிலைமொழிக்கேற்பப் பெண்பால் வினைகொண்டு முடியும். எ-டு : பெண்மகன் வந்தாள். பெட்டைப்பசன் விளையாடுகிறாள். [khnwh¡f« கொற்கையைச் சூழ்ந்த வட்டாரம். பையன் -பயன் - gr‹.] தெய்வப்பெயர் முடிபு முழுமுதற் கடவுட் பெயரை, ஆண்பால் வினைகொண்டும் உயர்வுப் பன்மை வினைகொண்டும் ஒன்றன்பால் வினை கொண்டும் முடிக்கலாம். எ-டு : கடவுள் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது. தெய்வம் இருக்கிறான், இருக்கிறார், இருக்கிறது. தெய்வப் பெயர்கள் விகுதி பெற்றவையாயின், அவ்வவ் விகுதிக்கேற்ற வினைகொண்டு முடியும். எ-டு : ஆண்டவன் வந்தான், ஆண்டவர் வந்தார். தேவன் வந்தான், தேவி வந்தாள். தேவர் வந்தார், தேவர்கள் வந்தார்கள். தேவியர் வந்தார், தேவிமார் வந்தனர் (வந்தார்கள்). சிவன் வந்தான், சிவை வந்தாள். பரன் வந்தான், பரை வந்தாள். முருகன் வந்தான், வள்ளி வந்தாள். நான்முகன் வந்தான், கலைமகள் வந்தாள். திருமகன் வந்தான், திருமகள் வந்தாள். பாலீறு பெறாத ஆண்தெய்வப் பெயர்கள், ஆண்பால் வினைகொண்டும் உயர்வுப்பன்மை வினைகொண்டும் முடியும். எ-டு : திருமால் வந்தான், வந்தார். பெருமாள் வந்தான், வந்தார். இளமைப்பெயர் முடிபு கைக்குழந்தையைக் குறிக்கும் குழவி குழந்தை சேய் பிள்ளை மகவு என்னும் பெயர்கள், ஒன்றன்பால் வினைகொண்டு முடியும். எ-டு : குழவி அழுகிறது, குழந்தை தவழ்கிறது, சேய் தூங்குகிறது, பிள்ளை பிறந்தது, மகவு பால் குடிக்கிறது. குறிப்பு : குழவிப்பருவம், பிள்ளைப்பருவம், பையற்பருவம் அல்லது சிற்றிளமைப் பருவம், இளமைப்பருவம் அல்லது விடலைப்பருவம், இடைமைப்பருவம் அல்லது நடுப்பருவம், முதுமைப்பருவம் என மக்கட்பருவம் அறுதிறப்படும். அவற்றுள்: குழவிப்பருவம் ஒன்றன்பால் முடிபிற்கே யுரிய தென்றும், பிள்ளைப்பருவம் ஒன்றன்பால் முடிபிற்கும் ஆண்பால் பெண்பால் முடிபிற்கும் உரியதென்றும், ஏனைப் பருவமெல்லாம் ஆண்பால் பெண்பால் முடிபிற்கே யுரியவென்றும் அறிதல் வேண்டும். பகுத்தறிவுண்மையின்மை பற்றியே, பொருள்கள் உயர்திணை அஃறிணையென இருபாற் படுத்துக் கூறப்படுதலின், பகுத்தறிவு தோன்றாத குழவிப்பருவம் அஃறிணைப் பாற்பட்டதாகக் கொள்ளப்படும் என்க. விடலைப்பருவம் எனினும் காளைப்பருவம் எனினும் ஒக்கும். குழவிப்பருவங் கடந்து பகுத்தறிவு விளங்காத சிறு பிள்ளையைக் குறிக்கும் குழந்தை பிள்ளை முதலிய பெயர்கள், பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பால் வினைகொண்டும், பருவத்திற் கேற்ப ஒன்றன்பால் வினைகொண்டும் முடியும். குழந்தை (பிள்ளை) வருகிறான் - ஆண்பால் குழந்தை (பிள்ளை) வருகிறாள் - பெண்பால் குழந்தை (பிள்ளை) வருகிறது - இருபாற்பொது ஆண் பெண் என்னும் அடையடுத்துப் பிள்ளை என்னும் பெயர் பெரிய ஆளைக் குறிப்பின், பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பால் வினைகொண்டு முடியும். எ-டு : ஆண்பிள்ளை வருகிறான் - ஆண்பால் பெண்பிள்ளை வருகிறாள் - பெண்பால் அம்மான்சேய் என்னும் பெயர், ஆண்பால் வினைகொண்டு முடியும். எ-டு : அம்மான்சேய் வருகிறான். உயர்வுப்பன்மை வினைகொண்டு முடிக்க விரும்பின், பெயரையும் உயர்வுப் பன்மையாக்குதல் வேண்டும். எ-டு : அம்மான்சேயார் வருகிறார். தலைச்சன் இடைச்சன் கடைச்சன் கடைக்குட்டி என்னும் பெயர்கள், குழந்தையைக் குறிப்பின் பருவத்திற்கேற்ப ஒன்றன்பாற் சொல் கொண்டும், பெரிய ஆளைக் குறிப்பின் பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பாற் சொல் கொண்டும் முடியும். எ-டு : தலைச்சன் இது, தலைச்சன் வருகிறது - இருபாற்பொது தலைச்சன் இவன், தலைச்சன் வருகிறான் - ஆண்பால் தலைச்சன் இவள், தலைச்சன் வருகிறாள் - பெண்பால் கடைக்குட்டி இது, கடைக்குட்டி வருகிறது - இருபாற்பொது கடைக்குட்டி இவன், கடைக்குட்டி வருகிறான் - ஆண்பால் கடைக்குட்டி இவள், கடைக்குட்டி வருகிறாள் - பெண்பால் உயர்வுப் பன்மையாயின், தலைச்சனார் இவர், கடைக் குட்டியார் இவர், என வரும். இது தலைச்சன், இவன் தலைச்சன்; இது கடைக்குட்டி, இவன் கடைக்குட்டி எனச் சுட்டுப் பெயரைப் பயனிலையாக்கிக் கூறினும், முடிபொன்றே. ஆள் என்னும் பெயர் முடிபு ஆள் என்னும் பெயர், பாலறியப்படாவிடத்து உயர்வுப் பன்மை வினைகொண்டும், பாலறியப்பட்ட விடத்துப் பாலுக்கேற்ப ஆண்பால் அல்லது பெண்பால் வினைகொண்டும், சொல்லுவான் கருத்திற்கேற்ப உயர்வுப்பன்மை வினை கொண்டும், முடியும். எ-டு : ஓர் ஆள் வருகிறார் - உயர்வுப்பன்மை (பாலறியாவிடம்) ஓர் ஆள் வருகிறான் - ஆண்பால் ஓர் ஆள் வருகிறாள் - பெண்பால் - பாலறிந்தவிடம் ஓர் ஆள் வருகிறார் - உயர்வுப்பன்மை குறிப்பு : ஓர் ஆள் வருகிறது என ஒன்றன்பால் வினைகொண்டு முடிப்பதே உலக வழக்காயினும், ஆண்பிள்ளையாள் பெண்பிள்ளையாள் என்னும் உலகவழக்குண்மையாலும், பகுத்தறிவுள்ள பெரிய ஆளை அஃறிணைச் சொல்லாற் கூறுவது பொருந்தாமையாலும், அது வழுவென்று விலக்கப்படும். முறைப்பெயர்கள் முடிபு முறைப்பெயர்கள், ஆண்பால் அல்லது பெண்பால் ஈறு கொண்டிருந்தால் அதற்கேற்ற முடிபும், உயர்வுப்பன்மை வடிவும் விளிவேற்றுமை வடிவங் கொண்டிருந்தால் உயர்வுப்பன்மை முடிபும், கொள்ளும். எ-டு : அப்பன் (ஐயன்) வந்தான். அப்பனார் (ஐயனார்) வந்தார். (அப்பா (ஐயா) வந்தார், வந்தார்கள்) அம்மை வந்தாள். அம்மையார் வந்தார். (அம்மா வந்தார், வந்தார்கள்) குறிப்பு : அப்பா ஐயா அம்மா என்னும் விளிவேற்றுமை வடிவுகளை முதல் வேற்றுமையாக வழங்குவது இன்று பெருவழக் காயினும், அது இலக்கண நடைக்கேற்காது. ஆதலின், இலக்கியக் கட்டுரைகளில் அதை விலக்கல் வேண்டும். அம்மா வருகிறது என்னும் அஃறிணை முடிபு முற்றும் வழுவாம். அம்மாள் என விளிவேற்றுமை வடிவொடு பெண்பால் விகுதி சேர்ப்பதும், அப்பார் ஐயார் அண்ணா என அவ்வடி வொடு உயர்வுப் பன்மையீறு சேர்ப்பதும், வழுவே. திரிபாற்பெயர் முடிபு பெண்டன்மை கொண்ட ஆடவனைக் குறிக்கும் பேடி என்னும் பெயரும், ஆண்டன்மை கொண்ட பெண்டைக் குறிக்கும் பேடன் என்னும் பெயரும், ஆண்டன்மையும் பெண்டன்மையும் அற்ற ஆணையும் பெண்ணையும் பொதுவாகக் குறிக்கும் பேடு என்னும் பெயரும், ஆணும் பெண்ணுமல்லாத மக்கட் பிறவியைக் குறிக்கும் அலி என்னும் பெயரும், திரிபாற் பெயர்களாம். இவை பின் வருமாறு முடிபு கொள்ளும். திரிந்த பாலின் பெயர் திரிபாற்பெயர். ஒருமை பன்மை பேடி வருகிறாள். பேடியர் வருகின்றனர், வருகிறார்கள். பேடன் வருகிறான். பேடர் வருகின்றனர், வருகிறார்கள். பேடு (ஆணுரு) வருகிறான். பேடுகள் வருகின்றனர், வருகிறார்கள். பேடு (பெண்ணுரு) வருகிறாள். பேடுகள் வருகின்றனர், வருகிறார்கள். அலி வருகிறது. அலிகள் வருகின்றன. அலி வருகிறான் (ஆணுடை பற்றி) அலிகள் வருகின்றனர், வருகிறார்கள் அலி வருகிறாள் (பெண்ணுடைபற்றி), அலிகள் வருகின்றனர், வருகிறார்கள் பேடி வருகிறான் என்பதே உலக வழக்கு. உருவம்பற்றி இம் முடிபும் ஒருவாறு பொருந்துமாதலின், அமைக்கப்பெறும். குறிப்பு : பெண்டன்மையும் பெண்ணுடையும் கொண்ட ஆணைக் குறிக்கும் பேடி என்னும் பெயரும், இருளுக்கும் போருக்கும் தனிமைக்கும் அஞ்சும் ஆணைக் குறிக்கும் பேடி என்னும் பெயரும், பொருளால் வேறு என்பதை அறிதல் வேண்டும். விரவுப்பெயர் முடிபு இருதிணைக்கும் பொதுவான விரவுப்பெயர்கள், உயர் திணையைக் குறிப்பின் உயர்திணை வினைகொண்டும், அஃறிணை யைக் குறிப்பின் அஃறிணை வினைகொண்டும், முடியும். இருதிணையிலும் விரவும்பெயர் விரவுப்பெயர். விரவுதல் -கலத்தல். எ-டு : உயர்திணை அஃறிணை தந்தை வந்தான். தந்தை வந்தது. தாய் வந்தாள். தாய் வந்தது. பிள்ளை வந்தான், பிள்ளை வந்தது. வந்தாள். ஆண் வந்தான். ஆண் வந்தது. பெண் வந்தாள். பெண் வந்தது. சாத்தன் வந்தான். சாத்தன் வந்தது (காளை). சாத்தி வந்தாள். சாத்தி வந்தது (ஆ). குறிப்பு : வீட்டு விலங்குகட்கும் பறவைகட்கும், சிறப்பாக விலங்குகட்கு, அன்புபற்றி மக்கட் பெயர்களை இடுவது வழக்கம். ஆணுக்கு ஆடவன் பெயரும், பெண்ணுக்குப் பெண்டின் பெயரும், இடப்படும். இங்ஙனம் இடப்பட்ட இயற்பெயர்களும் விரவுப்பெயராம். பால்பகா அஃறிணைப்பெயர் முடிபு து என்னும் ஒன்றன்பால் விகுதியும் அ, வை என்னும் பலவின் பால் விகுதிகளும் பெறாத அஃறிணைப் பெயர்களெல்லாம், ஒருமை பன்மை ஆகிய இருமைக்கும் பொதுவாம். அவற்றை ஒருமையாகவும் பன்மையாகவும் ஆளலாம். அவற்றின் எண்ணை, அவற்றின் பயனிலைகள் அல்லது எண்ணுப் பெயரெச்சங்கள் காட்டும். இத்தகைய பெயர்கள் பால்பகா அஃறிணைப்பெயர் எனப்படும். எ-டு : ஒருமை பன்மை மரம் வளர்கின்றது. மரம் வளர்கின்றன. குதிரை ஓடுகின்றது. குதிரை ஓடுகின்றன. ஒருகாய் வாங்கினேன். நூறுகாய் வாங்கினேன். குறிப்பு : சில கூட்டுச் சொற்களிலும் தொடர்களிலும், உயர்திணைப் பெயர்கள் வடிவில் ஒருமையாயிருப்பினும் பொருளிற் பன்மையாகும். அவை வகுப்பொருமைப் பெயர் எனப்படும். எ-டு : பத்துப்பிள்ளைக்காரி. நூறாள் வேலை. பெற்ற தாயைப் பேணாத மூடர். எச்சப் பிறவிப்பெயர் முடிபு மதியிலியும் உறுப்பிலியுமாகிய மக்கட்பிறப்பு எச்சப் பிறவியாகும். மதிப்புலனற்ற பிறவியைக் குறிக்கும் மருள் என்னும் பெயரும், உறுப்புக்குறையைக் குறிக்கும் கூன் குருடு முதலிய பெயர்களும், ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் கொள்ளாக்கால், அஃறிணை முடிபுகொள்ளும். எ-டு : ஒருமை பன்மை மருள் வருகின்றது. மருள்கள் வருகின்றன. ஊமை வருகிறது. ஊமைகள் வருகின்றன. கூன் வருகிறது. கூன்கள் வருகின்றன. குறள் வருகிறது. குறள்கள் வருகின்றன. குருடு வருகிறது. குருடுகள் வருகின்றன. செவிடு வருகிறது. செவிடுகள் வருகின்றன. இப் பெயர்கள் ஆண்பால் விகுதியும் பெண்பால் விகுதியும் பலர்பால் விகுதியும் பெறின், அவ்வப் பால் வினைகொண்டு முடியும். எ-டு : ஊமையன் வருகின்றான். செவிடன் வருகின்றான். ஊமைச்சி வருகின்றாள். செவிடி வருகின்றாள். ஊமையர் வருகின்றார். செவிடர் வருகின்றார். பேதை, மக்கு, மண்டு முதலிய பெயர்கள் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாம். எ-டு : இவன் பேதை, பேதை வந்தான் - ஆண்பால் இவள் பேதை, பேதை வந்தாள் - பெண்பால் இவன் மண்டு, மண்டு வந்தான் - ஆண்பால் இவள் மண்டு, மண்டு வந்தாள் - பெண்பால் பேதை, நல்லதைத் தீயதென்றும் தீயதை நல்லதென்றும் பிறழக் கருதும் ஆடவன் அல்லது பெண்டு. முதுமைப்பெயர் முடிபு முதுமைப் பெயர்களும், உறுப்புக்குறைப் பெயர்கள் போன்று உயர்திணை விகுதி பெற்றக்கால் உயர்திணை முடிபும், அவ் விகுதி பெறாக்கால் அஃறிணை முடிபும், பெறும். எ-டு : கிழவன் செல்கின்றான் - ஆண்பால் கிழவி செல்கின்றாள் - பெண்பால் கிழவர் செல்கின்றார் - பலர்பால் ஒருமை பன்மை கிழம் செல்கின்றது. கிழங்கள் செல்கின்றன. கிழடு செல்கின்றது. கிழடுகள் செல்கின்றன. குறிப்பு : ஊமை, குருடு, கிழம், கிழடு முதலிய வடிவுகள் இகழ்ச்சி பற்றியவையாதலின், திருந்திய நடையில் விலக்கப்படல் வேண்டும். இகர விகுதியேற்ற ஒருமைப்பெயர் முடிபு பெண்பால் விகுதியல்லாத இகர வீற்றை யேற்ற பெயர்கள், சிலவிடத்து உயர்திணை யொருமைப் பால்கள் இரண்டிற்கும், சிலவிடத்து இருதிணை யொருமைப் பால்கள் மூன்றிற்கும், பொதுவாம். எ-டு : வழிகாட்டி வந்தான், வந்தாள் -உயர்திணை கற்றுச் சொல்லி வந்தான், வந்தாள் கண்ணிலி வந்தான், வந்தாள், வந்தது. சேர்ந்தாரைக்கொல்லி வந்தான், - இருதிணை வந்தாள், வந்தது. பேர், பேர்வழி என்னும் பெயர் முடிபு பேர் என்னும் பெயர் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாம்; ஒருமையில் வராது; கள் விகுதி பெற்றும் பெறாதும் பன்மையிலேயே வரும். எ-டு : இரண்டு பேர் வந்தார்கள். எத்தனை பேர் வந்தார்கள்? நூறு பேர்கள் வந்தார்கள். எத்தனை பேர்கள் வந்தார்கள்? இவற்றுள், விகுதி பெறாத வடிவே இயல்பாம். எ-டு : ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன். பேர்வழி என்னும் பெயரும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாம்; ஆனால் ஒருமையிலும் வரும்; பன்மையில் விகுதி பெற்றே வரும். எ-டு : ஒரு பேர்வழி வருகிறான். பத்துப் பேர்வழிகள் வருகிறார்கள். குறிப்பு : பேர்வழி என்னும் சொல் உயர்வழக்கிற் குரியதன்று. ஆகுபெயர் அன்மொழித்தொகை முடிபு ஆகுபெயர்களும் அன்மொழித் தொகைகளும் தத்தம் பொருட்கேற்ப முடிபுகொள்ளும்; பன்மை விகுதிபெறின் பன்மை முடிபு கொள்ளும். எ-டு : ஆகுபெயர் மடங்கல் (அரிமா போன்றவன்) வந்தான் - ஆண்பால் தோகை (மயில் போன்றவள்) வந்தாள் - பெண்பால் மடங்கலர் வந்தார், தோகையர் வந்தார் - பலர்பால் மடங்கல் (மடங்கிப் பார்க்கும் அரிமா) வந்தது கோலிகன் (கோலிகனால் நெய்யப்பட்ட ஆடை) வந்தது தோகை (தோகையுடைய மயில்) வந்தது மடங்கல்கள் வந்தன, தோகைகள் வந்தன, கோலிகன்கள் வந்தன - பலவின்பால் அன்மொழித்தொகை பெருந்தகை வந்தான், திரிதாடி வந்தான் - ஆண்பால் பெருந்தகை வந்தாள், பைந்தொடி வந்தாள் - பெண்பால் பெருந்தகையர் வந்தார், திரிதாடியர் வந்தார், பைந்தொடியர் வந்தார் - பலர்பால் கடுவாய் (புலி) வந்தது கயந்தலை (யானைக்குட்டி) வந்தது - ஒன்றன்பால் கடுவாய்கள் வந்தன; கயந்தலைகள் வந்தன - பலவின்பால் குறிப்பு : உயர்திணைப் பன்மைப் பெயர்களை, இயன்றவரை, கள் விகுதியல்லாத பிற விகுதிகள் கொண்டே அமைத்தல் வேண்டும். அது இயலாவிடத்துக் கள் விகுதிகொண் டமைக்கலாம். எ-டு : பேதையர், அண்ணன்மார் மக்கள், பிள்ளைகள், குடிகள், மண்டுகள் அஃறிணை வடிவுகொண்ட உயர்திணைப்பெயர் முடிபு அரசு வேந்து தூது விருந்து முதலிய பெயர்கள், உயர் திணையைக் குறிப்பினும் அஃறிணை முடிபே கொள்ளும். இவை சொல்லால் அஃறிணையாயினும், பொருளால் உயர்திணையாம். எ-டு : அரசு ஆண்டது, வேந்து வென்றது. தூது சென்றது, விருந்து வந்தது. இப் பெயர்கள், பன்மையில் விகுதி பெற்றும் பெறாதும் வரும். எ-டு : அரசு ஆண்டன, அரசுகள் ஆண்டன. விருந்து வந்தன, விருந்துகள் வந்தன. இவை, உயர்திணை விகுதிபெறின் உயர்திணை வினை கொண்டே முடியும். எ-டு : அரசன் ஆண்டான், தூதன் சென்றான், விருந்தினன் உண்டான் - ஆண்பால் அரசி ஆண்டாள், தூதி சென்றாள், விருந்தினள் உண்டாள் - பெண்பால் அரசர் ஆண்டார், தூதர் சென்றார், விருந்தினர் உண்டார் - பலர்பால் உயர்திணை வடிவுகொண்ட அஃறிணைப் பெயர் முடிபு அலவன் ,இடவன் வலவன் கடுவன் கத்தரிப்பான் சுணங்கன் சுடுகாடுமீட்டான் முதலிய பெயர்கள், உயர்திணை வடிவி லிருப்பினும் அஃறிணையைக் குறித்தலால் அஃறிணை வினை கொண்டே முடியும் . அலவன் - ஆண் நண்டு. இடவன் - இடப்புறக் காளை. வலவன் - வலப்புறக் காளை. கடுவன் - ஆண்குரங்கு. கத்தரிப்பான் -கத்தரிக்கோல். சுணங்கன் - நாய். சுடுகாடுமீட்டான் - முடக் கொற்றான் கொடி. எ-டு : இடவன் நன்றாய்ப் போகிறது. கத்தரிப்பான் நன்றாய்க் கத்தரிக்கிறது. திணைபாலிடப் பொதுவினை முற்றுகள் வியங்கோள் வினையும், வேறு இல்லை உண்டு என்னும் குறிப்பு வினைமுற்றுகளும், இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். தன்மை: யான், யாம், நாம் வாழ்க முன்னிலை: நீ, நீம், நீர் வேறு படர்க்கை: அவன், அவள்,அவர், இல்லை அது, அவை உண்டு செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, படர்க்கையில் பலர்பாலொழிந்த நாற்பாற்கும் பொதுவாம்; தன்மையிலும் முன்னிலையிலும் இக்காலத்து வராது. அவன், முருகன் அவள், வள்ளி அது, மாடு அவை, மாடுகள் குறிப்பு : இவ் வினைமுற்றை உயர்திணையில் ஆள்வது இலக்கிய நடைக்கே ஏற்கும். குலப்பெயர் முடிபு ஒருவனது குலம் ஆண்பால் பலர்பால் பண்புப்பெயர் ஆகிய மூவடிவிற் குறிக்கப் பெறலாம். எ-டு : இவன் குலம் வேளாளன், பார்ப்பான். இவன் குலம் வேளாளர், பார்ப்பார். இவன் குலம் வேளாண், பார்ப்பு. குறிப்பு : பலர்பாலிற் குறிப்பது அத்துணைச் சிறப்புடைய தன்று. ஒரு குலத்தார் பெயர்கள், அவற்றின் விகுதிக்கேற்ப உயர்திணை முடிபு கொள்ளும். எ-டு : வேளாளன் வந்தான் - ஆண்பால் வேளாட்டி வந்தாள் - பெண்பால் வேளாளர் வந்தார் - பலர்பால் இருதிணை யெழுவாய்களின் கூட்டு முடிபு உயர்திணை எழுவாயும் அஃறிணை யெழுவாயும் கலந்து ஒரு முடிபு கொள்ளும்போது, பொதுவாய் உயர்திணை வினைகொண்டு முடியும். எ-டு : நம்பியும் நாயும் வந்தனர். இருதிணை எழுவாய்களும் கலந்துவரும்போது உயர்திணை யெழுவாய் இழிவுபற்றியதாயின், இரண்டும் ஒருங்கே அஃறிணை வினைகொண்டு முடியும். எ-டு : பேதையும் நாயும் வந்தன. குறடும் பேதையும் கொண்டது விடா. இருதிணைக்குமுரிய பல பெயர்கள் விரவிவரின் மிகுதி (பெரும்பான்மை) பற்றி ஒரு திணை வினைகொண்டு முடியும். அதாவது, உயர்திணை மிகுந்திருப்பின் உயர்திணை வினை கொண்டும், அஃறிணை மிகுந்திருப்பின் அஃறிணை வினை கொண்டும் முடியும். எ-டு : அரசன் ஆசிரியன் உழவன் ஆ (பசு) ஆகிய நால்வரும் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவர். (உயர்திணை மிகுதி) பெற்றோரும் தாய்மொழியும் தாய்நாடும் பேணப்படத் தக்கவை. (அஃறிணை மிகுதி) முதல் என்று முடியும் தொகுதிப்பெயர் முடிபு ஆதி அல்லது முதல் என்று முடியும் தொகுதிப் பெயர்கள், அவற்றுள் அடங்கிய பலவற்றையும் வகுத்துச் சுட்டின் பன்மை வினை கொண்டும், தொகுத்துச் சுட்டின் ஒருமை வினை கொண்டும் முடியும். எ-டு : கரிமுதல் பொருதன. (பன்மை வினை) ஏலாதி உடம்பிற்கு நல்லது. (ஒருமை வினை) கரிமுதல் - கரி முதலிய நாற்படைகள் (கரி, பரி, தேர், கால்) கரி - யானை. பரி - குதிரை. ஏலாதி -ஏலம் சுக்கு மிளகு முதலிய ஆறு சரக்குகள் சேர்ந்த கலவை மருந்து. வேறு வினைப்பெயர்களின் கூட்டு முடிபு வெவ்வேறு சிறப்பு வினைக்குரிய பல பொருட்பெயர்கள், தனித்தனியாகவேனும் தொகுதியாகவேனும் கூறப்பட்டு ஒருவினை கொண்டு முடியின், அவற்றின் பொதுவினை கொண்டு முடியும். எ-டு : சோறும் கறியும் பாலும் தேனும் உண்ணப்பட்டன. நால்வகை யுண்டியும். நால்வகை யுண்டிகள், உண்பது தின்பது நக்குவது பருகுவது என்பன. சோறு உண்பது; கறி தின்பது; தேன் நக்குவது; பால் பருகுவது. வெவ்வேறு சிறப்புவினை கொண்டு முடியும் பல எழுவாய்கள் ஒன்றுசேர்ந்து பொதுவினை கொண்டு முடியின், ஒவ்வோர் எழுவாயும் தனித்தனி அப்பொது வினைக்கு ஏற்றதாயிருத்தல் வேண்டும். எ-டு : விளையாட்டும் உடற்பயிற்சியும் நிகழ்ந்தன. இவ்வாறன்றி, விளையாட்டும் உடற்பயிற்சியும் செய்யப் பட்டன எனக் கூறின், விளையாட்டு என்னும் எழுவாய்க்குச் செய்யப்பட்டது என்னும் வினை ஏற்காமை காண்க. ஒருபொருட் பலபெயர் முடிபு ஒருவரைப் பல பெயராற் பாராட்டிப் பெயர்தொறும் வினை கொடுப்பின், ஒரே வினைகொடுத்துக் கூறவேண்டும். எ-டு : ஐய! வருக, அண்ணால்! வருக, அறிஞ! வருக. இங்ஙனமன்றி, ஐய வருக! வருக அண்ணால்! அமர்க, அறிஞ! செல்க, எனப் பெயர்தொறும் வேறு வினை கொடுப்பின், எழுவாய் வேறுபடல் காண்க. உம்மைத்தொகை தொடர் முடிபு உம்மைத் தொகையான உயர்திணைப் பெயர்கள், இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றுப் பலர்பால் வினைகொண்டு முடியும். எ-டு : கபிலபரணர் பாடினர். சேரசோழபாண்டியர் ஆண்டனர். உம்மைத் தொகையான முறைப்பெயர்கள் இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றும் பெறாதும் பலர்பால் வினைகொண்டு முடியும். எ-டு : தாய்தந்தையர் வந்தனர். தாய் தந்தை வந்தனர். உம்மைத் தொகையான அஃறிணைப் பெயர்கள், இறுதியிற் பலவின்பால் விகுதி பெற்றும் பெறாதும் பலவின்பால் வினைகொண்டு முடியும். எ-டு : இராப் பகல்கள் மாறிமாறி வருகின்றன. இராப் பகல் மாறிமாறி வருகின்றன. ஒன்றாகக் கலந்த இரு பொருட்பெயர்கள், அல்லது, ஒரே பொருள் குறித்த இருபெயர்கள், ஒருமை வினைகொண்டு முடியும். எ-டு : அவனுக்குத் தயிரும் சோறும் கிடைத்தது. உனக்கு மானம் ஈனம் இருக்கிறதா? வினா முடிபு யார் என்னும் வினாப்பெயர் உயர்திணை முப்பாற்கும் பொதுவாம். எ-டு : அவன் அவள் யார்? அவர் என் என்னை எவன் என்னும் வினாப்பெயர்கள், அஃறிணை யிருபாற்கும் பொதுவாம். அது அவை குறிப்பு : உயர்திணையைச் சேர்ந்த எவன் என்னும் வினாப்பெயரும், அஃறிணையைச் சேர்ந்த எவன் என்னும் வினாப்பெயரும், வெவ்வேறு. என் என்னும் வினாச்சொல், ஒருமையில் என்னது என்றும் பன்மையில் என்ன என்றும் இருக்கும். என்ன என்னும் சொல் ஒருமையில் வழங்குவது வழுவமைதி. ஒரு பொருளின் திணையைப்பற்றிய ஐயவினாவை, உரு உருவு உருவம் என்னும் சொற்களுள் ஒன்றைக்கொண்டு முடித்தல் வேண்டும். எ-டு : மாந்தனா மரமா அவ் வுருவம்? ஐயப்பட்ட பொருள் மாந்தனாயின், அவ் வுருவம் மரமன்று, மாந்தன் என்றாவது, அவன் மரமல்லன், மாந்தன் என்றாவது, முடித்தல் வேண்டும். ஐயப்பட்ட பொருள் மரமாயின், அவ் வுருவம் மாந்தனன்று, மரம், என்றாவது, mJ khªjd‹W, ku«., என்றாவது முடித்தல் வேண்டும். திணை தெரிந்து பால் தெரியாத பொருள்களையும் திணை தெரிந்து எண் தெரியாத பொருள்களையும்பற்றிய ஐயவினாவை, பன்மைச் சொல்லால் முடித்தல் வேண்டும். எ-டு : ஆடவனா பெண்டா அங்குத் தோன்றுபவர்? - பால் ஐயம். ஒருவரா பலரா இதைச் செய்தவர்? ஒன்றா பலவா இங்கு விழுந்தவை? பால் ஐயம் நீங்கியபின், உண்மைக் கேற்ப, m§F njh‹Wgt‹ bg©lšy‹ Mlt‹., என்றாவது, அங்குத் தோன்றுபவள் ஆடவனல்லள், பெண்டு, என்றாவது, முடித்தல் வேண்டும். உயர்திணை எண் ஐயம் நீங்கியபின், உண்மைக்கேற்ப, இதைச் செய்தவர் பலரல்லர், ஒருவர், என்றாவது, இதைச் செய்தவர் ஒருவரல்லர், பலர், என்றாவது, முடித்தல் வேண்டும். அஃறிணை எண் ஐயம் நீங்கியபின், உண்மைக்றேப, இங்கு விழுந்தது பலவன்று, ஒன்று, என்றாவது, இங்கு விழுந்தவை ஒன்றல்ல, பல, என்றாவது, முடித்தல் வேண்டும். அஃறிணைப் பால் ஐயவினாவைப் பால்பகா அஃறிணைப் பெயரும் முடிக்கும். எ-டு : ஒன்றோ பலவோ அவன் கொண்ட புத்தகம்? இவ் வினாவிற்கு விடை : அவன் கொண்ட புத்தகம் பலவன்று, ஒன்று, அல்லது, அவன் கொண்ட புத்தகம் ஒன்றல்ல, பல, என்பது. இருதிணையிலும், ஆண்மை பெண்மைபற்றிய ஐய வினாவைப் பொதுச் சொல்லும் முடிக்கும். எ-டு : ஆடவனா பெண்டா அவ் ஆள்? - உயர்திணையில் ஐயம் காளையா ஆவா அம் மாடு? - அஃறிணையில் ஐயம் இவ் வினாக்கட்கு விடைகள் : (1) அவ் ஆள் பெண்டல்லன், ஆடவன். அல்லது, அவ் ஆள் ஆடவனல்லள், பெண்டு. (2) அம் மாடு ஆவன்று, காளை. அல்லது, அம் மாடு காளையன்று, ஆ. சிறிதும் அறியப்படாத பொருளைப்பற்றி வினவும் வினா, யாது அல்லது எவன் என்னும் சொல்லைக்கொண்டு முடிதல் வேண்டும். எ-டு : இச் சொற்குப் பொருள் யாது? இச் சொற்குப் பொருள் எவன்? சிறிது அறியப்பட்ட பொருளைப்பற்றி வினவும் வினா, எது என்னும் சொல்லைக்கொண்டு முடிதல்வேண்டும். எ-டு : இம் மரங்களுள் கருங்காலி எது? கண்ணிற்கு மறைந்து நிற்பவரைப்பற்றி வினவும் வினா, யார் அவர்? என்றிருத்தல் வேண்டும். யார் அது? என்று வினவுவது வழுவாம். குறிப்பு : பொதுவாக, வினாச்சொற்களுள், யகரவடிச் சொற்கள் பொதுப்படையான பொருளைப்பற்றியும், எகரவடிச் சொற்கள் ஒரு குழுவைச் சேர்ந்த பொருளைப்பற்றியும் வினவும். எ-டு : பொதுப்படையான பொருள்; ஒரு குழுவைச் சேர்ந்த பொருள் : யாவன் ஏவன் - ஆண்பால் யாவள் எவள் - பெண்பால் யாவர், யார் எவர் - பலர்பால் யாது எது, ஏது - ஒன்றன்பால் யா, யாவை எவை - பலவின்பால் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த பொருள்களுள், ஒன்றையேனும் பலவற்றையேனும் திட்டமின்றி வினாச் சொல்லாற் குறிப்பின், ஏதேனும் (எதேனும்) ஒன்று, எவையேனும் இரண்டு, எனக் குறித்தல் வேண்டும். யாதேனும் ஒன்று, யாவேனும் இரண்டு, என்பன, ஒரு பரந்த வகுப்பிற்குரிய பொருளை அல்லது பொருள்களைக் குறிப்பனவாகும். 11. கால முடிபு (Sequence of Tenses and Verbs) வினைச்சொல் தனித்து வரினும் தொடர்ந்து வரினும், முன்பின் சொல்லொடு காலத்திற் பொருந்தவேண்டும். கால வகைகளும் அவற்றின் உட்பிரிவுகளும் காலம், (1) இறந்த காலம் (2) நிகழ்காலம் (3) எதிர்காலம் என மூவகைப்படும். அவற்றுள், ஒவ்வொன்றும், (1) தனிப்பு (Indefinite) (2) தொடர்ச்சி (Continuous) (3) நிறைவு (Perfect) (4) நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous) என நான்கு உட்பிரிவு கொள்ளும். எ-டு : இறந்தகாலப் பிரிவுகள் : (1) நான் எழுதினேன் - தனிப்பு (2) நான் எழுதிக்கொண்டிருந்தேன் - தொடர்ச்சி (3) நான் எழுதியிருந்தேன் - நிறைவு (4) (நான் எழுதிக்கொண்டிருந்திருந்தேன்) - நிறைவுத் தொடர்ச்சி நிகழ்காலப் பிரிவுகள்: (1) நான் எழுதுகிறேன் - தனிப்பு (2) நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் - தொடர்ச்சி (3) நான் எழுதியிருக்கிறேன் - நிறைவு (4) நான் எழுதிக்கொண்டிருந்திருக்கிறேன் - நிறைவுத் தொடர்ச்சி எதிர்காலப் பிரிவுகள் : (1) நான் எழுதுவேன் - தனிப்பு (2) நான் எழுதிக்கொண்டிருப்பேன் - தொடர்ச்சி (3) நான் எழுதியிருப்பேன் - நிறைவு (4) நான் எழுதிக்கொண்டிருந்திருப்பேன் - நிறைவுத் தொடர்ச்சி இங்ஙனமே, ஏனை யிடம் பால்களொடும் ஒட்டுக. குறிப்பு : (1) ஒரு காலப் பிரிவு நான்கனுள், தனிப்பைத் தனிக்காலம் என்றும், ஏனையவற்றைக் கலவைக்காலம் அல்லது கூட்டுக் காலம் என்றும், கூறலாம். (2) இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி இன்று வழக்கற்றது. (3) எதிர்காலப் பிரிவுகளுள்: தனிப்பு, இறந்தகால வழக்கவினையைக் கூறற்கும் ஏற்கும். எ-டு : நான் சிறுவனா யிருந்தபோது, கற்பலகையில்தான் எழுதுவேன். நிறைவு, மறதியை அல்லது ஊகிப்பை அல்லது இழந்த வாய்ப்பை உணர்த்தும் இறந்தகால வினையைக் கூறற்கும் ஏற்கும். தனது வினையாயின் மறதிக்கும், பிறன் வினையாயின் ஊகிப்பிற்கும் இடமாம்; இழந்த வாய்ப்பு அவ் விரு வினைக்கும் பொதுவாம். தனது வினை எ-டு : நான் இளமையில் அவரைப் பார்த்திருப்பேன். (மறதி) அவன் வந்திருந்தால் நான் கொடுத்திருப்பேன். (இழந்த வாய்ப்பு) பிறன் வினை வேலன் குடிவெறியில் உளறியிருப்பான். (ஊகிப்பு) நீ கோபத்தில் ஒருவேளை அங்ஙனம் சொல்லியிருப்பாய். (ஊகிப்பு) நான் கேட்டிருந்தால் அவர் கொடுத்திருப்பார். (இழந்த வாய்ப்பு) நிறைவுத் தொடர்ச்சி, எதிர்கால வடிவிலிருப்பினும், இறந்த காலத்தையும் குறிக்கும். அன்று, மறதியை அல்லது ஊகிப்பை உணர்த்தும். இழந்த வாய்ப்புக் கருத்தில் இக்காலப் பிரிவு வழங்காவிடினும், வழங்குதற்கு இடமுண்டு. எ-டு : அவர் என் வீட்டிற்கு வந்தபோது, நான் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பேன். (மறதி) நீ நேற்று மாலை 4 மணிக்குத் தூங்கிக் கொண்டிருந்திருப்பாய். (ஊகிப்பு) மேற்காட்டிய காலப் பிரிவுகளுள் அடங்காத இரு கூட்டுக் காலங்கள் உண்டு. அவை, (1) எழுதியிருந்திருக்கிறேன், (2) எழுதியிருந்திருப்பேன், என்பன. இவற்றை, ஏனையிடம் பால்களொடும் ஒட்டிக்கொள்க. இவை, முறையே, நிகழ்கால வடிவிலும் எதிர்கால வடிவிலும் இருப்பினும், கருத்தில் இறந்த காலமாகும்; காலப் பிரிவில் நிறைவு ஆகும். இவற்றுள், முன்னது ஊகிப்பும் மறதியும்பற்றியும், பின்னது ஊகிப்பும் மறதியும் இழந்த வாய்ப்பும்பற்றியும் வரும். முற்கூறிய வாறே, மறதி தனது வினைக்கும் ஊகிப்பு பிறன் வினைக்கும் உரியனவாகும். எ-டு : (1) நான் கடைக்குப் போனபோது, அவனும் கூடவே வந்திருக்கிறான். (ஊகிப்பு) அந்தச் சுற்றறிக்கையில் நானும் கையெழுத்து வைத்திருந் திருக்கிறேன். (மறதி) (2) நாகப்பன் சுருட்டுக்குடிக்கு முன்பே, வீடு தீப்பற்றி யிருந்திருக்கும். (ஊகிப்பு) நான் கோபத்தில் ஒருகால் அதைச் சொல்லியிருந்திருப்பேன். (மறதி) முக்காலப் பெயரெச்சம் எழுதின (எழுதிய) - இறந்த காலம் எழுதுகிற (எழுதுகின்ற) - நிகழ்காலம் எழுதும் - எதிர்காலம் முக்காலப் பெயரெச்சத்தின் காலப் பிரிவுகள் இறந்தகாலப் பிரிவுகள் (1) எழுதின - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருந்த - தொடர்ச்சி (3) எழுதியிருந்த - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருந்த - நிறைவுத் தொடர்ச்சி நிகழ்காலப் பிரிவுகள் (1) எழுதுகின்ற - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருக்கின்ற - தொடர்ச்சி (3) எழுதியிருக்கின்ற - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருக்கின்ற - நிறைவுத்தொடர்ச்சி எதிர்காலப் பிரிவுகள் (1) எழுதும் (2) எழுதிக்கொண்டிருக்கும் (3) எழுதியிருக்கும் (4) எழுதிக்கொண்டிருந்திருக்கும் குறிப்பு : உலக வழக்கில், நிகழ்காலப் பிரிவுகட்குப் பதிலாக எதிர்காலப் பிரிவுகளே வழங்குகின்றன. அவ் வழக்கை விலக்கல் வேண்டும். முக்கால வினையெச்சம் எழுதி - இறந்த காலம் எழுத - நிகழ்காலம் எழுதின் (எழுதினால்) - எதிர்காலம் குறிப்பு : செய என்னும் வாய்பாட்டு எச்சவினை, விளக்கேற்ற மணியடித்தது, என்றாற் போன்ற வாக்கியங்களில் உடனிகழ்ச்சிப் பொருள் தருதல்பற்றியே, நிகழ்கால வினையெச்சம் எனப் பெயர்பெற்றது. மற்றப் பொருள்களி லெல்லாம், அது ஏனை யிரு காலத்தையே, சிறப்பாக எதிர்காலத்தையே காட்டுவதாகும். முக்கால வினையெச்சத்தின் காலப்பிரிவுகள் இறந்தகாலப் பிரிவுகள்: (1) எழுதி - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருந்து - தொடர்ச்சி (3) எழுதியிருந்து - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருந்து - நிறைவுத் தொடர்ச்சி நிகழ்காலப் பிரிவுகள் (1) எழுத - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருக்க - தொடர்ச்சி (3) எழுதியிருக்க - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருக்க - நிறைவுத் தொடர்ச்சி எதிர்காலப் பிரிவுகள் (1) எழுதின் - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருப்பின் - தொடர்ச்சி (3) எழுதியிருப்பின் - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருப்பின் - நிறைவுத் தொடர்ச்சி குறிப்பு : (1) எழுதினால் என்பது பொது நடைக்கும், எழுதின் என்பது இலக்கிய நடைக்கும், ஏற்ற வடிவங்களாகும். (2) இருப்பின் எனினும் இருக்கின் எனினும் ஒன்றே. (3) எதிர்கால வினைமுற்றின் நிறைவும் நிறைவுத் தொடர்ச்சி யும் போன்றே எதிர்கால வினையெச்சத்தின் நிறைவும் நிறைவுத் தொடர்ச்சியும், இறந்தகாலம்பற்றி வரும். எ-டு : நீ இதில் தலையிட்டிருப்பின், (உனக்குப் பெருந் தீங்கு விளைந்திருக்கும்) - நிறைவு நீ இவர்களொடு முதலிலிருந்து கலந்துகொண்டிருந் திருப்பின், (நேர்மாறான விளைவு நிகழ்ந்திருக்கும்) - நிறைவுத் தொடர்ச்சி. எதிர்மறைப் பெயரெச்சக் காலப்பிரிவுகள் எதிர்மறைப் பெயரெச்சம் முக்காலத்திற்கும் பொதுவாக ஒரே நான்கு பிரிவுகளையுடையது. அவையாவன : (1) எழுதாத - தனிப்பு (2) எழுதிக்கொண்டிராத - தொடர்ச்சி (3) எழுதியிராத - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திராத - நிறைவுத் தொடர்ச்சி எதிர்மறை வினையெச்சம் எதிர்மறை வினையெச்சம் முக்காலத்திற்கும் தனித்தனி வெவ்வேறு பிரிவுகளையுடையது. இறந்தகாலப் பிரிவுகள் (1) எழுதாமல் (எழுதாது) - தனிப்பு (2) எழுதிக்கொண்டிராமல் - தொடர்ச்சி (3) எழுதியிராமல் - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திராமல் - நிறைவுத் தொடர்ச்சி குறிப்பு : எழுதாமல் என்பது பொதுநடைக்கும், எழுதாது என்பது இலக்கிய நடைக்கும் ஏற்ற எதிர்மறை வினையெச்ச வடிவுகளாகும். நிகழ்காலப் பிரிவுகள் (1) (தேவை) - தனிப்பு (2) எழுதிக்கொண்டிராதிருக்க - தொடர்ச்சி (3) எழுதாதிருக்க - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திராதிருக்க - நிறைவுத்தொடர்ச்சி எதிர்காலப் பிரிவுகள் (1) எழுதாவிடின் - தனிப்பு (2) எழுதிக்கொண்டிராவிடின் - தொடர்ச்சி (3) எழுதியிராவிடின் - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திராவிடின் - நிறைவுத் தொடர்ச்சி ஏவல் வினையின் காலப்பிரிவுகள் (ஒருமை) (1) எழுது - தனிப்பு (2) எழுதிக்கொண்டிரு - தொடர்ச்சி (3) எழுதியிரு - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திரு - நிறைவுத் தொடர்ச்சி வியங்கோள் வினையின் காலப்பிரிவுகள் (1) எழுதுக - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருக்க - தொடர்ச்சி (3) எழுதியிருக்க - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருக்க - நிறைவுத் தொடர்ச்சி குறிப்பு : ஏவலும் வியங்கோளும் எதிர்காலத்திற்கே யுரியன. தொழிற்பெயரின் காலப்பிரிவுகள் கை விகுதித் தொழிற்பெயர் (1) எழுதுகை - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருக்கை - தொடர்ச்சி (3) எழுதியிருக்கை - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருக்கை - நிறைவுத் தொடர்ச்சி கை விகுதித் தொழிற்பெயர் போன்றே, தல் விகுதித் தொழிற்பெயரும் வரும். துவ்விகுதித் தொழிற்பெயர் இறந்தகாலப் பிரிவுகள் (1) எழுதினது - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருந்தது - தொடர்ச்சி (3) எழுதியிருந்தது - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருந்தது - நிறைவுத் தொடர்ச்சி நிகழ்காலப் பிரிவுகள் (1) எழுதுகிறது - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருக்கிறது - தொடர்ச்சி (3) எழுதியிருக்கிறது - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருக்கிறது - நிறைவுத் தொடர்ச்சி எதிர்காலப் பிரிவுகள் (1) எழுதுவது - தனிப்பு (2) எழுதிக்கொண்டிருப்பது - தொடர்ச்சி (3) எழுதியிருப்பது - நிறைவு (4) எழுதிக்கொண்டிருந்திருப்பது - நிறைவுத் தொடர்ச்சி குறிப்பு : கை விகுதித் தொழிற்பெயரும் தல் விகுதித் தொழிற்பெயரும் முக்காலத்திற்கும் பொதுவான ஒரே நான்கு பிரிவுடையவா யிருக்க, துவ் விகுதித் தொழிற்பெயர் முக்காலத் திற்கும் வெவ்வேறு நந்நான்கு பிரிவுடையதா யிருத்தல் காண்க. மேற்காட்டிய பல்வகை வினைச்சொற்களுக்கும் வினையடிச் சொற்களுக்கும் உரிய காலப்பிரிவுகளை, அவ்வக் காலத்திலும் ஏற்புடைய பிறகாலத்திலும் வழுவாது வழங்குதல் வேண்டும். தொழிற்பெயர் முடிபு வினைநிகழ்ச்சி குறிக்கும் தொழிற்பெயர்கள் 7ஆம் வேற்றுமை யுருபேற்ற நிலையில், முக்காலத் தொடர்ச்சியையும் உணர்த்தலாம். எ-டு : தியாகராச பாகவதர் பாடுகையில் மிக அமைதியாக விருந்தது - இறந்தகாலத் தொடர்ச்சி நீ பாடுகையில், நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் - நிகழ்காலத் தொடர்ச்சி அவன் பாடுகையில், எல்லாரும் தூங்கிக் கொண்டிருப் பார்கள் - எதிர்காலத் தொடர்ச்சி பெயரெச்ச முடிபு காலப்பெயரைத் தழுவிநிற்கும் முக்காலப் பெயரெச்சங்களும், தத்தங் காலவினைகளைக் கொண்டே முடிதல் வேண்டும். எ-டு : போனபோது கொடுத்தான் - இறந்தகாலம் போகிறபோது கொடுக்கிறான் - நிகழ்காலம் போகும்போது கொடுப்பான் - எதிர்காலம் நான் இங்கிலாந்திற் படித்தபோது, போர் நடந்து கொண்டிருந்தது - இறந்த காலம். நான் விளையாடுகிறபோது மழை பெய்து கொண்டிருக்கிறது - நிகழ் காலம். நான் தூங்கும்போது அவர்களெல்லாரும் சீட்டாடிக் கொண்டிருப்பார்கள் - எதிர்காலம். இவ்வாறன்றி, வேறு காலவினையொடு முடிவதெல்லாம் வழுவாம். பிழை (1) போம்போது கொடுத்தான். (2) நான் படிக்கும்போது, கன்னையா நாயுடு குழும்பு (Company) நாடகம் நடித்துக்கொண்டிருந்தது. (3) நான் படிக்கிறபோது, வானொலியைப்பற்றிக் கேள்விப்பட்டதே யில்லை. (4) நான் படிக்கும்போது, நீ ஏன் கூடப் படிக்கிறாய்? திருத்தம் (1) போம்போது கொடுப்பான்; (அல்லது) போனபோது கொடுத்தான். (2) நான் படித்தபோது, கன்னையா நாயுடு குழும்பு நாடகம் நடித்துக்கொண்டிருந்தது. (3) நான் படித்தபோது, வானொலியைப்பற்றிக் கேள்விப் பட்டதே யில்லை. (4) நான் படிக்கிறபோது, நீ ஏன் கூடப் படிக்கிறாய்? எதிர்காலப் பெயரெச்சம் இறந்தகால வழக்க வினையைக் குறிக்குமாயின், அதன்பின் வரும் வினைமுற்றும் எதிர்காலத்தி லிருத்தல்வேண்டும். எ-டு : நான் முன்பு இங்கு விளையாடும்போது, வேறு சில பிள்ளைகளும் வந்து விளையாடுவார்கள். இறந்தகாலப் பெயரெச்சம் பின்மைச் சொல்லையும், எதிர்காலப் பெயரெச்சம் முன்மைச் சொல்லையும் தழுவும். நிகழ்காலப் பெயரெச்சமும் எதிர்மறைப் பெயரெச்சமும், இவற்றுள் ஒன்றையும் தழுவா. எ-டு : வந்த பின், பின்பு, பின்னர், பிறகு வரு முன், முன்பு, முன்னர், முன்னம் வராதமுன் என்பது வழுவமைதியாம். வினையாலணையும் பெயர் முடிபு வினையாலணையும் பெயர்கள் விளைவு குறித்த வினை களொடு முடியின், இறந்தகால வினையாலணையும் பெயர்கள் முக்கால வினைகளொடும், நிகழ்கால எதிர்கால வினையாலணை யும் பெயர்கள் எதிர்கால வினையொடும் முடியும். எ-டு : பந்தயத்தில் முந்திவந்தவன் பரிசு பெற்றான், பெறுகிறான், பெறுவான். பந்தயத்தில் முந்தி வருகிறவன் பரிசு பெறுவான். பந்தயத்தில் முந்தி வருபவன் பரிசு பெறுவான். நிகழ்கால வினையாலணையும் பெயர்: வழக்க வினையைக் குறிப்பின் நிகழ்கால வினைகொண்டும் முடியும். எ-டு : பாடுகிறவன் பரிசு பெறுகிறான். வினையெச்ச முடிபு முக்கால வினையெச்சங்களும், முதலுக்கும் சினைக்கும் பொதுவான தன்வினை பிறிதின்வினை ஆகிய இரண்டொடும் முடியும். முதல் - உடம்பு, உறுப்புடைப் பொருள். சினை - உறுப்பு. எ-டு : இ.கா. வந்து போனான் - தன்வினை காலொடிந்து விழுந்தது - தன்வினை கந்தன் விழுந்து காலொடிந்தது - பிறிதின்வினை மழை பெய்து பயிர்விளைந்தது - பிறிதின்வினை காலொடிந்து விழுந்தான் - பிறிதின்வினை நி.கா. படிக்க விரும்பினான் - தன்வினை கண் சிவக்கக் கலங்கிற்று - தன்வினை கண்ணன் சினக்கக் கண்சிவந்தது - பிறிதின்வினை காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது - பிறிதின்வினை விலாப்புடைக்க வுண்டான் - பிறிதின்வினை எ.கா. வரின் உண்பான் - தன்வினை கண்கலங்கினால் சிவக்கும் - தன்வினை குழந்தை நடப்பின் கால் நோகும் - பிறிதின்வினை ஆசிரியன் கற்பித்தால் மாணவன் கற்பான் - பிறிதின்வினை கைதவறினால் விழுவான் - பிறிதின்வினை முக்கால வினையெச்சங்களும் முதல்வினையாகிய தன் வினையொடு முடியும்போது, இறந்தகால வினையெச்சமும் நிகழ்கால வினையெச்சமும் முக்கால வினையொடும் முடியும்; எதிர்கால வினையெச்சம் பொதுவாக எதிர்கால வினையொடு மட்டும் முடியும். இவை வழாநிலையாம். எ-டு : வந்து போனான் - இ.கா.வி. வந்து போகிறான் - நி.கா.வி. வந்து போவான் - எ.கா.வி. வர விரும்பினான் - இ.கா.வி. வர விரும்புகிறான் - நி.கா.வி. வர விரும்புவான் - எ.கா.வி. வரின் உண்பான் - எ.கா.வி. இறந்தகால வினையெச்சம், காரணம் முன்மை ஆகிய இருபொருள்பற்றி வரும். எ-டு : மழைபெய்து பயிர் விளைந்தது - காரணம் வண்டிவந்து மழை தொடங்கிற்று - முன்மை நிகழ்கால வினையெச்சம், காரணம் முன்மை உடனிகழ்ச்சி நோக்கம் விளைவு ஆகிய ஐம்பொருள் பற்றிவரும். மழை பெய்யக் குளம் நிரம்பிற்று - காரணம் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது - முன்மை சங்கூத மணி யடித்தது - உடனிகழ்ச்சி பரிசுபெறப் பாடம் படித்தான் - நோக்கம் கால் நோக வழிநடந்தான் - விளைவு எதிர்கால வினையெச்சம், காரணம் முன்மை உடனிகழ்ச்சி நேர்ச்சி நிலைப்பாடு (Condition) ஐயநிகழ்ச்சி ஆகிய அறுபொருள் பற்றிவரும். எ-டு : மழைபெய்யின் பயிர் விளையும் - காரணம் கோழிகூவின் பொழுது விடியும் - முன்மை முன்கை நீளின் முழங்கை நீளும் - உடனிகழ்ச்சி ஒரு புதையல் கிடைத்தால் (நன்றாயிருக்கும்) - நேர்ச்சி கூலிகொடுத்தால் வேலைசெய்வான் - நிலைப்பாடு வந்தால் வருவான் - ஐயநிகழ்ச்சி செயற்கு அல்லது செய்தற்கு என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம், நோக்கம் விளைவு ஆகிய இருபொருள்பற்றி வரும். எ-டு : படித்தற்கு வந்தான் - நோக்கம் பணத்தைப் பறிகொடுத்தற்கு இவ்வழி போகின்றான் - விளைவு முற்றெச்ச முடிபு முக்கால வினைமுற்றுகளும் எச்சப் பொருளில் வருங்கால் இறந்தகால வினைமுற்று, (1) உடன்தொடர்ச்சி (2) உடனிகழ்ச்சி என்னும் இரு பொருளும்; நிகழ்கால வினைமுற்று, உடனிகழ்ச்சி என்னும் பொருளும்; எதிர்கால வினைமுற்று, (1)நோக்கம் (2) விளைவு என்னும் இரு பொருளும்; பற்றிவரும். இறந்தகால முற்றெச்சம் எ-டு : கண்டனன் எடுத்தான் = கண்டவுடன் எடுத்தான் = கண்டு எடுத்தான் - உடன் தொடர்ச்சி பாடினன் வந்தான் = பாடிக்கொண்டு வந்தான் - உடனிகழ்ச்சி நிகழ்கால முற்றெச்சம் காண்கின்றான் தொழுகின்றான் = கண்டுகொண்டு தொழுகின்றான் - உடனிகழ்ச்சி எதிர்கால முற்றெச்சம் காண்பான் வந்தான் = காண வந்தான் - நோக்கம் காலொடிவான் விழுந்தான் = காலொடிய விழுந்தான் - விளைவு பண்டை முறைப்படி ஆண்பாற் படர்க்கை எதிர்கால முற்றெச்சமாகிய செய்வான் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இன்று ஏனை யிடம் பால்களிலும் வழங்கும். எ-டு : செய்வான் வந்தேன், வந்தேம் செய்வான் வந்தாய், வந்தீர் செய்வான் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன. செய்வான் என்னும் வினையெச்சம் எல்லா இடம் பால் களிலும் வழங்கினும், இன்றும், அவ்வவ் விடத்திற்கும் பாலிற்கும் உரிய முற்றெச்சங்களை வழங்கத் தடையில்லை. எ-டு : செய்வேன் வந்தேன். செய்வேம் வந்தேம். செய்வாய் வந்தாய். செய்வீர் வந்தீர். செய்வான் வந்தான். செய்வாள் வந்தாள். செய்வார் வந்தார். (செய்வது வந்தது) (செய்வன வந்தன) இவற்றுள், செய்வார் என்னும் பலர்பாற் படர்க்கை முற்றெச்சம், செய்யுளிலும் இலக்கிய நடையிலும் செய்மார் என்னும் வடிவில் வழங்கும். எ-டு : செய்மார் வந்தார். செய்வான் என்னும் வினையெச்சம், ஆண்பால் எதிர்கால வினைமுற்று வடிவில் பகர இடைநிலை பெறும் வினையாயின் பான் விகுதி பெற்றும், வகர இடைநிலை பெறும் வினையாயின் வான் விகுதி பெற்றும் இருக்கும். ஆண்பால் வான் பான் ஈற்று எதிர்கால எதிர்கால வினைமுற்று வினையெச்சம் செய்வான் செய்வான் வருவான் வருவான் காண்பான் காண்பான் படிப்பான் படிப்பான் குறிப்புவினைமுற்றும் எச்சப்பொருள்பட்டு எச்சமாவ துண்டு. அன்று பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் வரும். கழலினன் (கழலினனான) நெடுஞ்செழியன் - பெயரெச்சம் கழலினன் (கழலினனாய்) வந்தான் - வினையெச்சம் செய்வான் செயற்கு என்னும் இரு வினையெச்சங்களும், ஏனை வினையெச்சம்போன்றே, சினைவினை முதல்வினை தன்வினை பிறிதின்வினை ஆகிய நால்வகை வினையொடும் முடியும். எ-டு : படிப்பான் வந்தான் - முதல்வினையாகிய தன்வினை கண்சிவப்பான் கலங்கிற்று - வினைவினையாகிய தன்வினை இறப்பான் குடல்சரிந்தது சினைவினையாகிய பிறிதின்வினை காலொடிவான் விழுந்தான் முதல்வினையாகிய பிறிதின்வினை யான்கொள்வான் கொடுத்தான் - வேறு முதல்வினையாகிய பிறிதின்வினை படித்தற்கு வந்தான்- முதல்வினையாகிய தன்வினை கையுரத்தற்குக் காய்த்தது - சினைவினையாகிய தன்வினை விழுதற்குக் கைதவறினது - சினைவினையாகிய பிறிதின்வினை கால்நோதற்கு நடந்தான் - முதல்வினையாகிய பிறிதின்வினை யான் உண்டற்குக் கொடுத்தான் - வேறு முதல்வினையாகிய பிறிதின்வினை செய்தற்கு என்னும் வினையெச்சம், உலகவழக்கில், செய்யாமைக்கு ஏதுவாக என்று பொருள்படவருவது முண்டு. எ-டு : யான்போதற்குக் காலில் கட்டி புறப்பட்டிருக்கின்றது. குறிப்பு : செய்தற்கு என்னும் வினையெச்சம் 4ஆம் வேற்றுமையேற்ற தொழிற் பெயராதலின், செய்கிறதற்கு செய்வதற்கு என்னும் வடிவுங் கொள்ளும். செய்வான் செயற்கு என்னும் ஈரெச்சங்களுள், முன்னது இலக்கிய நடைக்கும் பின்னது பொதுநடைக்கும் உரியவாம். செய்யவில்லை என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினை முற்றும், செய்யாமை என்னும் வாய்பாட்டு எதிர்மறைத் தொழிற்பெயரும், முக்காலத்திற்கும் பொதுவாம். எ-டு : நேற்றுச் செய்யவில்லை - இ.கா. இன்று செய்யவில்லை - நி.கா. நாளைச் செய்யவில்லை - எ.கா. நேற்றுச் செய்யாமை - இ.கா. இன்று செய்யாமை - நி.கா. நாளைச் செய்யாமை - எ.கா. வழக்கவினைக் காலம் மக்கள் வழக்கமாகச் செய்யும் தொழில்வினைகளை நிகழ் காலத்திலாவது எதிர்காலத்திலாவது கூறுதல் வேண்டும். எ-டு : தச்சன் மரவேலை செய்கிறான், செய்வான். முக்கால நிகழ்ச்சிவினைக் காலம் முக்காலத்தும் தொடர்ந்து நிகழும் வினைகளை, நிகழ்காலத்திற் குறித்தல்வேண்டும். எ-டு : கடவுள் இருக்கிறார். கதிரவன் கிழக்கில் தோன்றுகிறது. கால வழுவமைதி விரைவு மிகுதி (பெரும்பான்மை), தேற்றம் (நிச்சயம்) ஆகிய முப்பொருள்பற்றி, எதிர்கால வினைகள் இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் கூறப்பெறும். எ-டு : இதோ ஐந்து நிமையத்திற்குள் வந்தேன், வருகிறேன் - விரைவு படித்தால் தேறினான், தேறுகிறான் - மிகுதி நஞ்சுண்டால் செத்தான், சாகிறான் - தேற்றம் 12. ஒப்பீட்டுத்தரங்கள் (Degrees of Comparison) பொருள்களைக் குணங்களில் ஒன்றோடொன்று ஒப்பிடும் போது கவனிக்கப்படும் தரங்கள் மூன்று. அவை, (1) ஒப்புத்தரம் (Positive Degree) (2) உறழ்தரம் (Comparative Degree) (3) உச்சத்தரம் (Superlative Degree) என்பன. இரு அல்லது பல பொருள்கள் ஏற்றத்தாழ்வின்றி ஒத்திருப் பின் ஒப்புத்தரமாம்; ஒன்றைவிட இன்னொன்று உயர்ந்திருப்பின் உறழ்தரமாம்; ஒரு பொருளினத்தில் தலைசிறந்து அல்லது உச்சநிலையில் இருப்பது உச்சத்தரமாம். ஒப்புத்தரம், அன்ன இன்ன அச்சில் இசைய ஆட்டம் ஒப்ப கணக்காய் சமமாய் சரியாய் நிகர நேர போல முதலிய உவமையுருபு களால் உணர்த்தப்பெறும். இது 2ஆம் வேற்றுமையும், 3ஆம் வேற்றுமையும், 4ஆம் வேற்றுமையும், சிறுபான்மை 5ஆம் வேற்றுமையும் ஏற்கும். எ-டு : அரங்கன் அண்ணாமலையைப்போல் நல்லவன். நாயோடொப்ப நன்றியறிவுள்ள உயிரி வேறொன்றுமில்லை. பூவரச வயிரம் உறுதியில் தேக்கிற்கு ஒப்பானது. காக்கையின் கரியது களம்பழம். காக்கையின் = காக்கையைப்போல். உறழ்தரம் பின்வருமாறு பலவகையில் உணர்த்தப்பெறும்: (1) விட காண காணின் காட்டில் நோக்க முதலிய சொற்களுள் ஒன்றுடன் வரும் 2ஆம் வேற்றுமையால், எ-டு : அமைச்சனைவிட அரசன் பெரியவன். அண்ணனைக்காட்டில் தம்பி நல்லவன். காளிக்கோட்டத்தை (Calcutta) நோக்கச் சென்னை சிறுநகர். (2) 4ஆம் வேற்றுமையால், எ-டு : இல்லதிற்கு உள்ளது மேல். இளங்கோவடிகட்கு மூத்தவன் சேரன் செங்குட்டுவன். அதற்கிது பெரியது. (3) 5ஆம் வேற்றுமையால், எ-டு : காவிரியிற் பெரியது கங்கை. காக்கையிற் கரிது களம்பழம். காக்கையின் = காக்கையைவிட. ஆகவே, 5ஆம் வேற்றுமை ஒப்புத்தரத்தையும் உறழ் தரத்தையும் உணர்த்தும் என்பது அறியப்படும். இது மயக்கத்திற் கிட மாதலால், உறழ்தரத்தைத் தெளிவுபடுத்தற்கு வேற்றுமை யுருபுடன் உம் இடைச்சொல் சேர்க்கப்படும். எ-டு : நிலத்தினும் மிகுந்தது நீர். காக்கையினும் கரியது களாப்பழம். (4) நிரம்ப மிக தவ அதிக முதலிய சொற்களால், எ-டு : யானை பெரியது; திமிங்கிலம் நிரம்பப் பெரியது. சாத்தன் நல்லவன்; கொற்றன் மிக நல்லவன். இவ் வெடுத்துக்காட்டுகளில் தாழ்பொருட் பெயரும் உயர்பொருட் பெயரும் ஒரே தனி வாக்கியத்தால் இணைக்கப் படாமல் ஒரு கூட்டுவாக்கியத்தின் வெவ்வேறு கிளவிய எழுவாயாய் வருதல் காண்க. வினாக்களில், தரங்குறிக்கும் சொல்லின்றியும் இரு பொருள்களுள் ஒன்றன் உயர்தரம் வினவப்படும். சொல்லுவான் அல்லது கேட்பான் கருத்தின்படி ஒன்றன் உயர்வு குறிப்பாய்க் கொள்ளப்படும். ஆனால், விடையில், உயர்ந்த பொருள் வெளிப்படையாய்க் குறிக்கப்பெறும், அதுவும் தரச்சொல்லின்றி நிகழும். எ-டு : வினா : ஊன்கறி நல்லதா? மரக்கறி நல்லதா? விடை : மரக்கறி நல்லது. உச்சத்தரம் பின்வருமாறு பல வகையில் உணர்த்தப் பெறும்: (1) 4ஆம் வேற்றுமைப் பெயரையடுத்த சிறப்புச் சொல்லால், எ-டு : கீழ்நாட்டுப் பூவிற்குச் சிறந்தது தாமரை. கோவைக்குச் சிறந்தது திருக்கோவை. (2) 7ஆம் வேற்றுமைப் பெயரையடுத்த சிறப்புச் சொல்லால், எ-டு : புறஉறுப்பிற் சிறந்தது கண். அறநூலிற் சிறந்தது திருக்குறள். பறவையினத்திற் பெரியது தீக்கோழி. (3) மிகமிக என்னும் அடுக்குச்சொல்லால், இதற்கு எடுத்துக்காட்டு கூட்டுவாக்கியமாக வரும். எ-டு : எருமை பெரியது; யானை மிகப் பெரியது; திமிங்கிலம் மிகமிகப் பெரியது. வெள்ளி ஒளியுள்ளது; திங்கள் மிக ஒளியுள்ளது; கதிரவன் மிகமிக ஒளியுள்ளது. (4) நனிமிக கழிபெரு முதலிய மீமிசைச் சொற்களால், இதற்கும் எடுத்துக்காட்டுக் கூட்டுவாக்கியமாகத்தான் வரும். எ-டு : துரும்பு நொய்யது; பஞ்சு மிக நொய்யது; வறியவன் நனிமிக நொய்யன். (நொய்ம்மை = கனமின்மை) ஒருவனுக்கு உடல்நலமிருப்பின் மகிழ்ச்சிக் கிடமாம்; அத னொடு செல்வமிருப்பின் பெருமகிழ்ச்சிக் கிடமாம்; அவற்றொடு கல்வியுமிருப்பின் கழிபெரு மகிழ்ச்சிக் கிடமாம். (5) தலைசிறந்த என்னும் பெயரெச்சத்தாலும் தலைசிறந்தவன் தலைசிறந்தவள் முதலிய முற்றுச்சொற்களாலும், எ-டு : அகத்தியம் முத்தமிழும்பற்றியதாதலால் தலைசிறந்த இலக்கணமாகும். இற்றையுலகில், செருமானியர் மதிவளர்ச்சியில் தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றனர். (6) எல்லாவற்றிலும் பெரியது என்பது போன்ற தொடரால், எ-டு : எல்லாப் புலவருள்ளும் சிறந்தவர் திருவள்ளுவர். நகரங்க ளெல்லாவற்றிலும் பெரியது இலண்டன் (மாநகரம்) முத்தரங்களையும் ஒருங்கே கூறுவதற்குத் தலை இடை கடை என்னும் சொற்களும் பயன்படும். ஆனால், இவை முத்தரங்களையும் இணைத்துக் கூறா. எ-டு : பயிர்செய்யும் நிலங்களுள் மருதம் தலை; முல்லை இடை; குறிஞ்சி கடை. சொன்னதிற்கு மேலும் அறியும் மாணவர் தலையாயவர்; சொன்னதையே அறியும் மாணவர் இடையாயவர்; சொன்னதையும் அறியாத மாணவர் கடையாயவர். இனி, எண்ணலளவைப் பெயர்களால் பொருள்களின் தரத்தைக் குறிப்பதுமுண்டு. எ-டு : முழுப்புல்லை; முக்கால் மயிலை; அரைச்சிவலை; கால் கருப்பு இம் முறையால், மூன்றிற்கு மேற்பட்ட தரங்களையும் குறிக்கலாம். உறழ்தர முறையாலும், பலதரங்களைக் குறிக்கலாம். எ-டு : குறளினும் நெடியது சிந்து; சிந்தினும் நெடியது அளவு; அளவினும் நெடியது நெடில்; நெடிலினும் நெடியது கழிநெடில். எல்லாக் குணங்களிலும் பொருள்கட்குள்ள முத்தரங் களையும் தமிழில் ஒழுங்காய்க் கூறவேண்டுமாயின், இரு வாய் பாடுகளைக் கையாளலாம்; ஒன்று, நல்லது, அதைவிட நல்லது, எல்லாவற்றிலும் நல்லது, என்பது; இன்னொன்று, நல்லது, மிகநல்லது, மிகமிக நல்லது, என்பது. எ-டு : (1) புல்லாங்குழற்குக் கருங்காலி நல்லது; வெண்கலம் அதைவிட நல்லது; மூங்கில் எல்லாவற்றிலும் நல்லது. கொக்கு வெளிது; பால் கொக்கைவிட வெளிது; பஞ்சு எல்லாவற்றிலும் வெளிது. (2) புல்லாங்குழற்குக் கருங்காலி நல்லது; வெண்கலம் மிக நல்லது; மூங்கில் மிகமிக நல்லது. கொக்கு வெளிது; பால் மிக வெளிது; பஞ்சு மிக மிக வெளிது. இவற்றுள் முன்முறை சிறந்தது. அதைவிட என்னும் உறழ் சொல்லுக்குப் பதிலாக, அதினும் என்பதையும் பயன்படுத்தலாம். எ-டு : கொக்கினும் வெளிது பால். ஒரு பொருளுக்குள்ள உயர்வுத்தரத்தின் சிற்றளவு பேரளவுகளை அடைமொழிகொடுத்துக் குறிக்கலாம். எ-டு : மாட்டினும் எருமை சிறிது பெரிது. நம்பியைவிட நாகன் மிக நல்லவன். பயிற்சி பின்வரும் வாக்கியங்களிலுள்ள ஒப்பீட்டுத்தரங்களை, இன்ன தரமென்று குறிப்பிடுக : (1) ஆமையிற் பெரியது கடலாமை. (2) அனிச்சப்பூவினும் மெல்லியது விருந்தினர் முகம். (3) ஆனையினும் பெரியது எது? (4) ஈயைப்போல் துப்புரவும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும். (5) கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (6) கோளிற் பெரியது கதிரவன்; சிறியது திங்கள். (7) கதிரவனுக்கு மிகமிக நெருங்கிய கோள் அறிவன் (புதன்). (8) கதிரவனிலும் பெரிய உடுக்கள் (வெள்ளிகள்) உண்டு. (9) தீவிற்குக் கிரீன்லாந்து; தீவகற்பத்திற்கு இந்தியா. (10) கல்வி சிறந்ததா? செல்வம் சிறந்ததா? (11) பயன்தூக்கார் செய்த வுதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. (12) இரசியாவிலுள்ள இனத்திய நூலகம் (National Library) ஏனைய நூலகம் எல்லாவற்றிலும் பெரியது. (13) எது முந்தியது? தமிழா, சமற்கிருதமா? (14) சோற்றை நோக்க நீரும், நீரை நோக்கக் காற்றும் இன்றியமையாதவை. (15) பெரியது எது? கொடியது எது? (16) கல் கனமுள்ளது; மணல் எடையுள்ளது; மூடனுடைய மனமோ இவ் விரண்டிலும் பளுவானது. (17) புறங்குன்றி கண்டனையர் எனினும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. (18) ஆறுகளுள் அகன்றது அமேசான்; நீண்டது நைல்நதி (19) வறுமை நோய் உறுப்புக்குறை என்னும் மூன்றுள் எது மிகக் கொடியது? (20) ஊமை வாயனுக்கு உளறுவாயன் மேல். (21) மேட்டூர் அணைக்கட்டினும் பெரியது வடஅமெரிக்கா விலுள்ள போல்டர் அணைக்கட்டு; அதுவே உலகில் தலைசிறந்தது. (22) பம்பாய் சென்னையை நோக்கப் பெரியது; காளிக் கோட்டத்தை (கல்கத்தாவை) நோக்கச் சிறியது. (23) கூந்தலும் மனமுங் கரியவள்; புருவமும் செயலும் கொடியவள்; அருளும் இடையும் சிறியவள்; ஆசையும் கண்ணும் பெரியவள். (24) நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. (25) புலனில் தாழ்ந்தவை பயிர்பச்சை; அவற்றினும் உயர்ந்தவை சங்குசிப்பி; அவற்றினும் உயர்ந்தவை எறும்பு கறையான்; அவற்றினும் உயர்ந்தவை நண்டு தும்பி; அவற்றினும் உயர்ந்தவை விலங்கு பறவை; அவற்றினும் உயர்ந்தவன் மாந்தன். 13. வாக்கியக் கூறுபடுப்பு (Analysis of Sentences) ஒரு வாக்கியத்திலுள்ள எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களையும் அவற்றின் அடைகளையும் பிரித்துக் காட்டுவது, வாக்கியக் கூறுபடுப்பாகும். தனிவாக்கியக் கூறுபடுப்பு ஓர் எழுவாயும் ஒரு முற்றுப் பயனிலையுஞ் சேர்ந்தது ஒரு தனி வாக்கியமென்று முன்னர்க் கண்டோம். எழுவாயையும் பயனிலையையும் குறிக்க ஒவ்வொரு சொல்லே போதுமாதலால், இரு சொல்லைக்கொண்டே ஒரு தனி வாக்கியம் அமைத்து விடலாம். எ-டு : குயில் கூவுகிறது. இதில், குயில் எழுவாய் (Subject); கூவுகிறது பயனிலை (Predicate). சில வாக்கியங்களில், எழுவாய் அல்லது பயனிலை அல்லது அவ் விரண்டும் அடையடுத்து வரும். ஒரு குயில் கூவுகிறது, என்னும் வாக்கியத்தில் ஒரு என்பது எழுவாய்க்கு அடையாய் வந்தது. இதை எழுவாயடை (Enlargement or Attribute) என்னலாம். குயில் இனிதாகக் கூவுகிறது, என்னும் வாக்கியத்தில், இனிதாக என்பது பயனிலைக்கு அடையாக வந்தது. இதைப் பயனிலையடை (Extension or Adverbial Qualification) என்னலாம். ஒரு குயில் இனிதாகக் கூவுகிறது, என்னும் வாக்கியத்தில், எழுவாயும் பயனிலையும் அடையடுத்துவந்தன. சில வாக்கியங்களில், பயனிலையின் பொருள் அதை யடுத்து வரும் வேறொரு சொல்லால் அல்லது சொற்றொடரால் நிரம்பும். அதை நிரப்பியம் (Complement) என்னலாம். எ-டு : தம்பி பெரியவனானான். இதில், தம்பி எழுவாய்; ஆனான் பயனிலை; பெரியவன் நிரப்பியம். பெரியவன் என்னும் சொல்லின்றி, ஆனான் என்னும் வினை, பொருள் நிரம்பாமை காண்க. இந்த மரம் ஆறு மாதத்தில் பெரிதாய்விட்டது. இவ் வாக்கியத்தில், இந்த எழுவாயடை; ஆறு மாதத்தில் பயனிலையடை; பெரிது நிரப்பியம். சில கூட்டுச்சொற்களில், துணைவினை பயனிலை போன்றும் அதனொடு சேர்ந்த சொல் நிரப்பியம் துணைபோலும் தோன்றும். அவையிரண்டும் சேர்ந்தே ஒரு சொல்லாகும். ஆதலால், அத்தகைய சொற்களைப் பிரித்தல் கூடாது. எ-டு : உரையாடு, குடியிரு, கொண்டுவா, செய்யமுடியும். இவற்றில், ஆடு இரு வா முடியும் என்னும் சொற்கள் துணைவினைகள். இவை, உரையாடு குடியிரு முதலிய கூட்டுச் சொற்களின் உறுப்புகள். ஆதலால், இவற்றைப் பிரித்தல் கூடாது. செயப்படுபொருள் குன்றாவினைகள் பயனிலையாக வரும்போது செயப்படுபொருள் (Object) தொக்கோ வெளிப் பட்டோ வரும் என்பது முன்னர்க் கூறப்பட்டது. சாத்தன் உண்டான், என்னும் வாக்கியத்தில் செயப்படு பொருள் தொக்கும்; சாத்தான் சோற்றை உண்டான், என்னும் வாக்கியத்தில் அது வெளிப்பட்டும் வந்தது. செயப்படுபொருளும் எழுவாய் பயனிலைபோல் அடை யடுத்து வரும். அவ் வடையைச் செயப்படுபொருளடை என்னலாம். எ-டு : அதியமான் ஔவையாருக்கு அருநெல்லிக்கனியை அளித்தான். இதில், அருநெல்லி என்பது செயப்படுபொருளடை. கவனிப்பு: ஆங்கில விலக்கணத்தில், செயப்படுபொருளில் நேர் செயப்படுபொருள் (Direct Object), நேரல் செயப்படுபொருள் (Indirect Object) என இருவகையுண்டு. அவற்றுள், நேரல் செயப்படு பொருள் தமிழிற் பயனிலை யடையாகவே கொள்ளப்படும். மேற்காட்டிய வாக்கியத்தில், ஔவையாருக்கு என்பது ஆங்கில முறைப்படி நேரல் செயப்படுபொருளும், தமிழ் முறைப்படி பயனிலையடையுமாகும். ஆங்கில இலக்கணம் கற்ற மாணவர் இதைக் கவனிக்க. பயனிலைப்பொருளை நிரப்பும் சொல், செயப்படுபொருள் குன்றியவினையை அடுத்துவரின் எழுவாயையும், செயப்படு பொருள் குன்றாவினையை அடுத்துவரின் செயப்படுபொருளையும், பொருளால் தழுவும். எ-டு : (1) ஓமந்தூர் இராமசாமி இரெட்டியார் 1947-ல், சென்னை மாகாண முதலமைச்சர் ஆனார். (2) ஓமந்தூர் இராமசாமி இரெட்டியாரை 1947-ல், சென்னை மாகாண முதலமைச்சர் ஆக்கினர். இவற்றுள், முன் வாக்கியத்தில், முதலமைச்சர் என்னும் நிரப்பியம் எழுவாயையும்; பின் வாக்கியத்தில் செயப்படு பொருளையும்; பொருளால் தழுவுதல் காண்க. எழுவாயைத் தழுவுவதை எழுவாய் தழீஇய நிரப்பியம் (Subjective Complement) என்றும், செயப்படுபொருளைத் தழுவுவதைச் செயப்படுபொருள் தழீஇய நிரப்பியம் (Objective Complement) என்றும் கூறலாம். செயப்படுபொருள் குன்றியவினை வரும் வாக்கியத்தில் எழுவாயாயிருப்பது செயப்படுபொருள் குன்றாவினை வரும் வாக்கியத்தில் செயப்படுபொருளா யிருப்பதே, முன்னதில் எழுவாய் தழீஇய நிரப்பிய மாயிருப்பது பின்னதில் செயப்படுபொருள் தழீஇய நிரப்பிய மாவதற்குக் காரணம் என அறிக. பொருள் நிரம்புதற்கு ஒரு நிரப்பியத்தை வேண்டும் வினை செயப்படுபொருள் குன்றிய வினையாயின், முடியாப் பயனிலைப் பாட்டுச் செயப்படுபொருள் குன்றிய வினை (Intransitive Verb of Incomplete Predication) என்றும், செயப்படுபொருள் குன்றாவினை யாயின் முடியாப் பயனிலைப்பாட்டுச் செயப்படு பொருள் குன்றாவினை (Transitive Verb of Incomplete Predication or Facitive Verb) என்றும் கூறப்படும். தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியினர், ஓமந்தூர் இராமசாமி இரெட்டியாரை, 1947ஆம் ஆண்டில், சென்னை மாகாண முதலமைச்சர் ஆக்கினர். இவ் வாக்கியத்தில், தமிழ்நாட்டுக் காங்கிரசு என்பது எழுவாயடை; 1947ஆம் ஆண்டில் என்பது பயனிலையடை; ஓமந்தூர், இரெட்டியார் என்பன செயப்படு பொருளடை; சென்னை மாகாண முதலமைச்சர் என்பது நிரப்பியம். மூவகை அடைகளும் பற்பலவாய் அடுக்கியும் வரும். இதுவே வாக்கியம் நீள்வதற்குக் காரணம். எ-டு : ஓர் அழகான கொண்டைக்கிளி, பலநாளாக என் தோப்பிலுள்ள நடுச்சாலை மாம்பழங்களையெல்லாம், தாறுமாறாய்க் கொத்திவருகின்றது. இதில், ஓர், அழகான, கொண்டை - எழுவாயடை பலநாளாக, தாறுமாறாய் - பயனிலையடை என் தோப்பிலுள்ள, நடுச்சாலை, மா, எல்லாம் - செயப்படுபொருளடை குறிப்பு : கொத்திவருகின்றது என்பது ஒரு சொல். வருகின்றது என்பது இங்கு தொடர்ச்சி குறிக்கும் துணைவினையேயன்றி, வருதல் தொழிலைக் குறிக்கும் தனிவினை யன்று. கொத்தி வருகின்றது என்பது, கொத்திக்கொண்டு நடந்து அல்லது பறந்து வருதலைக் குறிப்பின், வருகின்றது என்பது பயனிலையும், கொத்தி என்பது பயனிலை யடையுமாகும். முன் விளக்கியபடி, சில வாக்கியங்களில், எழுவாய் அல்லது பயனிலை அல்லது செயப்படுபொருள் தொக்கு நிற்கும். தனிவாக்கியக் கூறுபடுப்பைக் கீழ்வருமாறு கட்டமிட்டுக் காட்டலாம். (1) மழை பெய்கிறது. (2) இருட்டிவிட்டது. எழுவாய் பயனிலை 1. மழை பெய்கிறது 2. (நேரம்) இருட்டிவிட்டது (1) தம்பீ! இங்கே வா. (2) இந்தக் கடிகாரம் நன்றாய் ஓடும். எழுவாய் பயனிலை எழுவாய்ச்சொல் எழுவாயடை பயனிலைச்சொல் பயனிலையடை 1. தம்பீ! (நீ) வா இங்கே 2. கடிகாரம் இந்த ஓடும் நன்றாய் (1) கியூரியம்மையார் கதிரியைக் கண்டுபிடித்தார். (2) குலப்பிரிவு தமிழனைக் கெடுத்தது. எழுவாய் பயனிலை செயப்படுபொருள் 1. கியூரியம்மையார் கண்டுபிடித்தார் கதிரியை 2. குலப்பிரிவு கெடுத்தது தமிழனை (1) தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் பிள்ளை தமிழ்நாட்டில் தேசியவுணர்ச்சியை வளர்த்தார். (2) தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் பிள்ளை தமிழ்நாட்டில் தேசிய வுணர்ச்சியை வளர்த்தவருள் ஒருவர். எழுவாய் பயனிலை செயப்படுபொருள் எழுவாய்ச் எழுவாயடை பயனிலைச் பயனிலையடை செயப்படு செயப்படு சொல் சொல் பொருள் பொரு சொல் ளடை 1. சிதம்பரம் தூத்துக்குடி, வளர்த்தார் தமிழ் நாட்டில் உணர்ச்சியை தேசிய பிள்ளை வ.உ. 2. சிதம்பரம் தூத்துக்குடி, ஒருவர் தமிழ்நாட்டில் பிள்ளை வ.உ. தேசிய வுணர்ச்சியை வளர்த்தவருள் பயிற்சி : கீழ்வரும் தனி வாக்கியங்களைக் கூறுபடுத்துக் காட்டுக : கவனிப்பு : ஒவ்வொரு வாக்கியக் கூறுபடுப்பையும் கட்டமிட்டே காட்டுதல்வேண்டும். (1) அத்திப் பூவை ஆர் அறிவார்? (2) உப்பிட்டவரை உள்ளளவும் நினை. (3) அடுப்புக்கட்டிக்கு அழகு வேண்டுமா? (4) நாளைவரும் பலாக்காயினும் இன்றுவரும் களாக்காய் மேல். (5) புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? (6) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும். (7) பல துளி பெருவெள்ளம். (8) அமரிக்கை ஆயிரம் பெறும். (9) கோழியிற் பெட்டையும், வான்கோழியிற் சேவலும். (10) கடுநட்பு கண்ணைக் கெடுக்கும். (11) அடுத்தவனைக் கெடுக்கலாமா? (12) அந்த வெட்கக்கேட்டை ஆரோடே சொல்லுகிறது? (13) அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? (14) ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போய்விட்டது. (15) அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா? (16) ஆனைக்கும் அடி சறுக்கும். (17) ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை மருத்துவன். (18) ஆசை வெட்கம் அறியாது. (19) தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். (20) பொதியமலையிலே பிறந்து, பாண்டியன் புகழிலே கிடந்து, சங்கப் பலகையிலே இருந்து, வைகை யேட்டிலே தவழ்ந்து, நெருப்பிலே நின்று, புலவர் கருத்திலே நடந்து, நிலமகள் இடுப்பிலே வளர்கின்ற பேதை யார்? (21) கண்ணாற் கண்டு காதாற் கேட்டு மூக்கால் முகர்ந்து நாவாற் சுவைத்து உடலால் தொட்டு அறிகின்ற, ஐம்புலன்களையும் கொண்ட உயிர்கள் எவை? (22) குறடும் பேதையும் கொண்டது விடா. (23) குழவிக்கு இல்லை குலமும் பகையும். (24) நன்றாய்ப் பழுத்ததும் சுவையுள்ளதும் பெரியதும் வாடாததுமான பழத்தைத் தெரிந்துகொண்டான். கூட்டுவாக்கியக் கூறுபடுப்பு வட்டுவாக்கியத்தைக் கூறுபடுத்தற்கு, முதலாவது அதிலுள்ள கிளவியங்களைப் பிரித்துக்கொள்ளல் வேண்டும். பின்பு, ஒவ்வொரு கிளவியத்தையும் தனிவாக்கியம்போற் கூறுபடுத்தவேண்டும். கிளவியங்கட்கிடையில் ஏதேனும் இணைப்புச்சொல் (Connective or Conjunction) இருந்தால், அதைத் தனியாகக் காட்டவேண்டும். எ-டு : நாய்போன்ற நட்புவேண்டும்; யானைபோன்ற நட்புக் கூடாது; யானை அறிந்தறிந்தும் தன் பாகனையே கொல்லும்; நாயோ எந்நிலையிலும் தன் உடையானைக் காக்கும். இது ஒரு கூட்டு வாக்கியம். இதிலுள்ள கிளவியங்களாவன :- (1) நாய்போன்ற நட்பு வேண்டும். (2) யானை போன்ற நட்பு கூடாது. (3) யானை அறிந்தறிந்தும் தன் பாகனையே கொல்லும். (4) நாயோ எந்நிலையிலும் தன் உடையானைக் காக்கும். இவற்றைப் பின்வருமாறு கட்டமிட்டுக் கூறுபடுத்திக் காட்டலாம். சில கூட்டு வாக்கியங்களில் கிளவியங்கட்கிடையே இணைப்புச்சொல் வரும். எ-டு : இவ்வாண்டு மழை பெய்தது; ஆனால், குளம் நிரம்பவில்லை. இதில், ஆனால் என்பது இணைப்புச்சொல். இணைப்புச் சொல், தனித்து வரின் தனியிணைப்புச்சொல் என்றும், பல சேர்ந்து வரின் கூட்டிணைப்புச்சொல் (Compound Conjunction) என்றும், இவ்விரண்டாய் உறவுபூண்டுவரின் உடனுறவிணைப்புச் சொல் (Correlative Conjunction) என்றும், பெயர் பெறும். எ-டு : ஆனால், இருந்தாலும் - தனியிணைப்புச் சொல். ஆனபோதிலும், இருந்தாற்கூட - கூட்டிணைப்புச் சொல். மட்டுமன்று ........ உம் - உடனுறவிணைப்புச் சொல். எ-டு : அவன் சிறுவன்தான்; ஆனாலும், கெட்டிக்காரன். இவர் பெருமுதல் போட்டிருக்கிறாராம்; இருந்தாற் கூட இப்படியா கொள்ளை அடிக்கிறது? அவனுக்கு வீடுமட்டுமன்று; காடும் இருக்கிறது. இம் மூன்று வாக்கியங்களிலும், மேற்காட்டிய மூவகை இணைப்புச்சொல்லும் முறையே வந்துள்ளமை காண்க. இணைப்புச் சொல், மீண்டும் இணைக்கப்படும் தொடர்களின் இயல்புபற்றி, 1. சமவியல் இணைப்புச்சொல் (Co-ordinating Conjunction) 2. சார்பியல் இணைப்புச்சொல் (Subordinating Conjunction) என இருவகைப்படும். சமநிலைக் கிளவியங்களை ஒன்றோடொன்று இணைக்கும் சொல் சமவியல் இணைப்புச் சொல்லும், சார்நிலைக் கிளவியத்தைத் தலைமைக் கிளவியத்துடன் இணைக்கும் சொல் சார்பியல் இணைப்புச் சொல்லும் ஆகும். இவற்றுள், முன்னது கூட்டுவாக்கியத்திற்கும் பின்னது கலப்பு வாக்கியத்திற்கும் உரியவை. சமவியல் இணைப்புச்சொல், பொருளியல்புபற்றி, 1. அடுக்கிணைப்புச்சொல் (Cumulative or Copulative Conjunction.) 2. மறுப்பிணைப்புச்சொல் (Adversative Conjunction.) 3. மறுநிலை யிணைப்புச்சொல் (Alternative or Disjunctive Conjunction.) 4. முடிபிணைப்புச்சொல் (Illative Conjunction) என நால்வகைப்படும். அடுக்கிணைப்புச்சொல் ஒருநிலைப்பட்ட பல கிளவியங் களை அடுக்கும் அல்லது சேர்க்கும். எ-டு : திருவாளர் சேதுப்பிள்ளை நன்றாய்ப் பேசுவதும் உண்டு; எழுதுவதும் உண்டு. அறிவை வளர்க்கவேண்டும்; அதோடு அதைப் பயன்படுத்த nt©L«. மறுப்பிணைப்புச்சொல் மாறுபட்ட கருத்துள்ள கிளவியங் களை இணைக்கும். எ-டு : அவர் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்தாம்; ஆனால், அவருக்கு ஆள்வினைத்திறமை யில்லை. மறுநிலை யிணைப்புச்சொல்,ஒன்றில்லையானால் மற் றொன்றைக் குறிக்கும் கிளவியங்களை இணைக்கும். எ-டு : ஒருவனுக்குச் சொன்மதி யிருக்கவேண்டும்; அல்லது தன்மதி இருக்கவேண்டும். இக் கட்டை பலாவாயிருக்கும்; இல்லாவிட்டால் வேங்கையா யிருக்கும். உங்கள் பணத்தைக் காசாகக் கொடுத்தாலும் சரி; காசோலையாகக் கொடுத்தாலும் சரி. (காசோலை - cheque.) முடிபிணைப்புச்சொல், ஓர் ஏதுவைக்கொண்டு ஊகிப்பதை யாவது ஒரு சான்றைக்கொண்டு துணிவதையாவது குறிக்கும் கிளவியங்களை இணைக்கும். பல தொகைகளைக் கூறும் கிளவியங்களுடன், அவற்றின் கூட்டு, கழிப்பு முதலிய முடிபைக் குறிக்கும் கிளவியத்தையும் இதுவே இணைக்கும். எ-டு : இங்கே புகையிருக்கிறது; ஆகவே நெருப்பிருத்தல் வேண்டும். தமிழ் வடமொழிக்கு முந்தியது; ஆகையால் தமிழ் வட மொழியின் கிளையாயிருக்க முடியாது. என் சம்பளம் 50 ரூ; பஞ்சப்படி 18 ரூ; தனிவேற்றுக் கற்பிப்பில் வருவது 20 ரூ; ஆக, என் மாத வருமானம் மொத்தம் 88 ரூ. தனிவேற்று கற்பிப்பு - Private tuition அடுக்குப் பொருளில் : உம், அதோடு, மேலும், இன்னும், இனி, அதுபோல, முதலிய இணைப்புச் சொற்கள் வரும். மறுப்புப் பொருளில் : ஆனால், ஆனாலும், இருந்தாலும், இருந்தபோதிலும், என்றாலும், என்றபோதிலும், முதலிய இணைப்புச் சொற்கள் வரும். மறுநிலைப் பொருளில் : அல்லது, ஆதல், ஆவது, ஆயினும், இல்லாவிட்டால், என்றாலும், எனினும், ஏனும், ஓ முதலிய இணைப்புச் சொற்கள் வரும். முடிபுப் பொருளில் : ஆக, ஆகவே, ஆகையால், ஆதலால், அதனால், இதனால், அதுபற்றி, அதுகொண்டு, எனவே, ஏனென்றால் முதலிய இணைப்புச் சொற்கள் வரும். இணைப்புச்சொல் வரும் கூட்டுவாக்கியத்தைப் பின்வரு மாறு கட்டமிட்டுக் கூறுபடுத்திக் காட்டலாம். உணவினாலேயே உடல் வளரும்; உடலின்றி உயிரில்லை; ஆகையால், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோராவர். இது ஒரு கூட்டு வாக்கியம் பயிற்சி பின்வரும் கூட்டுவாக்கியங்களைக் கூறுபடுத்திக் காட்டுக : (1) அன்பே சிவம்; சிவமே அன்பு. (2) அன்புஞ் சிவமும் இரண்டல்ல, ஒன்றே. (3) உடம்பு குற்றமுள்ளதன்று; உடம்பிற்குள் உள்ளம் இருக்கின்றது; உள்ளம் இறைவன் கோயில்; ஆகையால், உடம்பை ஒவ்வொருவரும் கருத்தாய்ப் பேண வேண்டும். (4) உடம்பின்றி உயிரில்லை; ஆகையால், உடம்பை வளர்த்தோரே உயிரை வளர்த்தோராவர். (5) அகதி பெறுவது பெண்பிள்ளை; அதுவும் வெள்ளி பூராடம். (6) அக்கை உறவும் அத்தான் பகையுமா? (7) அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும். (8) அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே. (9) நாய்தான் குரைக்கும்; நாய்விற்ற காசுமா குரைக்கும்? (10) ஈட்டி எட்டிய வரையும் பாயும்; பணம் பாதாளம் வரையும் பாயும். (11) கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் ஒழுக்கத்தால் நற்கதியும் பயனாம். (12) நாளும் வேளையும் பார்த்துச் செய்யும் கீழ்நாட்டவரின் சராசரி வாழ்நாள் 25 ஆண்டு; அவற்றைப் பாராது செய்யும் மேல்நாட்டாரின் சராசரி வாழ்நாள் 60 ஆண்டு. (13) மறைந்த உண்மையை வெளிப்படுத்துவது மேல்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் இயல்பு; வெளிப்பட்ட வுண் மையை மறைப்பது கீழ்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் இயல்பு. (14) செல்வக் காலத்தில் தாழ்மை வேண்டும்; வறுமைக் காலத்தில் மேன்மை வேண்டும். (15) அகங்காரம் உள்ளவர்க்கு ஆண்பிள்ளை; புண்ணியம் செய்தவர்க்குப் பெண்பிள்ளை. (16) யானை, பாகன் செய்த நன்மையை யெல்லாம் மறந்து விடும்; அவன் செய்த தீமையை நினைத்துக்கொண்டிருக் கும்; அதுபோல, சிறியோர் ஒருவர் செய்த நன்மையை யெல்லாம் மறந்துவிடுவர்; அவர் செய்த தீமையையே நினைத்துக்கொண்டிருப்பர் : நாயோ, இதற்கு மாறாக, உடையவன் செய்த தீமையை யெல்லாம் மறந்துவிடும்; அவன் செய்த நன்மையையே நினைத்துக்கொண்டிருக் கும்; அதுபோல, பெரியோர் ஒருவர் செய்த தீமையை யெல்லாம் மறந்துவிடுவர்; அவர் செய்த நன்மையையே நினைத்துக் கொண்டிருப்பர். (17) தந்தை மக்களைப் படிக்கவைக்கவேண்டும்; அல்லது அவர்க்குப் பணந்தேடி வைக்கவேண்டும். (18) இங்கிருப்பவர் முருகன் அழகன் நம்பி ஆகிய மூவரே; ஆகையால், இதை முருகன் செய்திருக்கவேண்டும்; அல்லது அழகன் செய்திருக்கவேண்டும்; அல்லது நம்பி செய்திருக்கவேண்டும்; இவரைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும்? (19) பணமாய்க் கொடு; இல்லாவிட்டால் பண்டமாய்க் கொடு. (20) உலகங்களை யெல்லாம் உருவாக்குகிறவரும் கடவுள்; அவற்றை நிலைபெறுத்துகிறவரும் கடவுள்; அவற்றை அழிக்கிறவரும் கடவுள். (21) நாய் தாழ்ந்த விலங்குதான்; இருந்தாலும் அதன் நன்றியறிவு இலக்கத்தில் ஒருவர்க்குக்கூட இல்லையே! (22) சோம்பேறிகள் எறும்பைக் கவனிக்கவேண்டும்; சொந்த இனத்தை வெறுப்பவர் காகத்தைக் கவனிக்கவேண்டும். (23) ஓரறிவு ஊறு (ஸ்பரிசம்); ஈரறிவு அதனொடு சுவை; மூவறிவு அவற்றொடு நாற்றம்; நாலறிவு அவற்றொடு காட்சி; ஐயறிவு அவற்றொடு கேள்வி; ஆறறிவு அவற்றொடு கருத்து. (24) உணவு சமைக்கக் காயறுப்பதும் கத்தி; உயிரைப் போக்கக் கழுத்தறுப்பதும் கத்தி; ஆகவே, ஒவ்வொரு பொருளாலும் நன்மையுமுண்டு, தீமையுமுண்டு; நன்மைக்கு ஒன்றைப் பயன்படுத்தல் வேண்டும்; தீமைக்குப் பயன்படுத்தல் கூடாது. கலப்புவாக்கியக் கூறுபடுப்பு கலப்பு வாக்கியத்தைக் கூறுபடுத்தும்போது, முதலாவது, முழுவாக்கியத்தையும் ஒன்றாகக்கொண்டு தனிவாக்கியம்போற் கூறுபடுத்தல்வேண்டும்; பின்பு, அதன் கிளவியங்களையெல்லாம் பிரித்துக்கொண்டு, எவ்வொரு கிளவியமாகக் கூறுபடுத்தல் வேண்டும். இணைப்புச் சொல்லைத் தனியே குறித்தல்வேண்டும். கிளவியங்களுள், தலைமைக் கிளவியத்தை முன்னும் சார்பு கிளவியங்களைப் பின்னும் கூறல்வேண்டும். பெயர்க்கிளவியம் : எழுவாய், செயப்படுபொருள், பெயரொட்டு (Noun in Apposition), நிரப்பியம் என்னும் நால்வகையாய் வரும். எ-டு : (1) அவர் சொன்னது முற்றும் உண்மை - எழுவாய் (2) அவர் உதவுவார் என்று நம்பினேன் - செயப்படு பொருள் (3) இப் புத்தகம் அவனுக்குப் பரிசாகக் கிடைத்தது என்னும் கூற்று, நம்பத்தக்கதன்று - பெயரொட்டு (4) இது சேனாவரையர் கூறியது ஆகும் - நிரப்பியம் கலப்பு வாக்கியத்தைப் பின்வருமாறு கட்டமிட்டுக் கூறுபடுத்திக் காட்டலாம். அன்பே கடவுள் என்றறிந்த பின்பும் உயிர்களிடத்து அன்பில்லாதவர், உண்மையான கடவுள் நம்பிக்கையாளர் ஆவரா? இது ஒரு கலப்பு வாக்கியம். இதன் கூறுபடுப்பு : 1 எழுவாய் பயனிலை நிரப்பியம் பயனிலையடை உயர்களிடத்து ஆவரா? உண்மையான அன்பே கடவுள் அன்பில்லா கடவுள் என்றறிந்த தவர் நம்பிக்கையாளர் பின்பும் 2 கிளவியத்தின் பயனிலை கிளவியம் வகையும் எழுவாய் பயனிலைச் நிரப்பியம் இணைப்புச் தொழிலும் சொல் சொல் 1. உயிர்களிடத்து தலைமைக் உயிர்களி ஆவாரா? உண்மை அன்பில்லா கிளவியம் டத்து அன் யான கட தவர் கடவுள் பில்லாதவர் வுள் நம் நம்பிக்கை பிக்கை யாளர் யாளர் ஆவாரா? 2. (தாம்) சார்புக் (தாம்) அறிந்த அறிந்த கிளவியம், பின்பும் பின்பும் தலைமைக் கிளவியத்தின் பயனிலைக்கு அடை 3. அன்பே சார்புக் கிள அன்பே கடவுள் என்று கடவுள் வியம், 1ஆம் என்று சார்புக் கிள வியத்தின் செயப்படு பொருள் குறிப்பு : (1) மேற்காட்டிய வாக்கியத்தில் தாம் என்பது தொகை யெழுவாய். (2) தலைமைக் கிளவியப் பயனிலையும் சார்பு கிளவியப் பயனிலையும் போல ஒரே யெழுவாய்க்குரிய பயனிலைகள் வரும் வாக்கியத்தை, தனிவாக்கியமாகவே கொள்ளல் வேண்டும். எ-டு : எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது. இதில், கொழுத்தால் என்பது பயனிலையடையாதலின், இவ் வாக்கியம் தனி வாக்கியமாகும். எருது கொழுத்தால் (அது) தொழுவத்தில் இராது என்று சுட்டுப்பெயர் இடையில் விரித்தல் கூடாது. (3) திட்டமற்ற தொகை யெழுவாயைக்கொண்ட சார்பு கிளவியத்தை, தனிக்கிளவியமாக்காது தலைமைக் கிளவியப் பயனிலைக்கு அடையாக்குவது, மாணவர்க்கு எளிதாம்.இம் முறைப்படி கலப்பு வாக்கியம் தனிவாக்கியமாகும். எ-டு : எந்நிலத்தில் விதைத்தாலும் எட்டிக்காய் தெங்காகாது. இதை, (ஒருவன்) எந்நிலத்தில் விதைத்தாலும் எட்டிக்காய் தெங்காகாது, என விரிப்பின், இது கலப்பு வாக்கியம். எந்நிலத்தில் விதைத்தாலும் என்பதைத் தெங்காகாது என்னும் பயனிலைக்கு அடையாக்கி, இவ் வாக்கியத்தைத் தனிவாக்கியமாகக் கொள்வது கீழ்வகுப்பு மாணவர்க்கு ஏற்றது. (4) தலைமைக் கிளவியத்தில் எழுவாயேனும் பயனிலை யேனும் தொக்கியிருப்பின், அதை விரித்தே தீரல் வேண்டும். எ-டு : எமன் ஏறுகிற கடாவாயிருந்தாலும் உழுதுவிடுவான். இதில், (அவன்) உழுதுவிடுவான் என்பது, தலைமைக் கிளவியம்; அவன் தொகை எழுவாய். இத்தகைய வாக்கியங்கள் இடர்ப்பாட்டை விளைப்பதால், அவற்றைத் தனிவாக்கியமாகக் கொள்வதே மாணவர்க்கு ஏற்றதாம். மேற்கூறிய எமன்... விடுவான் என்னும் வாக்கியத்தை, கீழ் வகுப்பு மாணவர் மேல்வகுப்பு மாணவர் புலவர் ஆகிய முத்திறப் பட்டோரும், தத்தம் அறிவுநிலைக்கேற்றபடி, கீழ்க்காணும் முறையே, மூவகையாகக் கூறுபடுத்தலாம். எமன் ஏறுகிற கடாவாயிருந்தாலும் என்பதை, (பயனிலை யடையான) ஒரு தொடர்மொழியாகக் கீழ்வகுப்பு மாணவரும், ஒரு கிளவியத்தை உள்ளிட்ட தொடர்மொழியாக மேல்வகுப்பு மாணவரும், கொள்ளலாம். (அது) எமன் ஏறுகிற கடாவா யிருந்தாலும் என விரித்து, அதை ஒரு கிளவியத்தை யுள்ளிட்ட கிளவியமாகக் கொள்வது புலவர்க்கு ஏற்றதாம். (5) தலைமைக் கிளவியப் பயனிலையும் சார்பு கிளவியப் பயனிலையும் ஒரே எழுவாய்க்குரியவேனும், அவை முதல் வினையும் சினை வினையுமாகப் பிரித்துக் கூறப்படும் வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாகவே கொள்ளல் வேண்டும். எ-டு : நீ கட்குடித்தால் உன் கண் சிவக்கும். - முதல் வினையும் நான் நடந்தால் ஏன் கால் நோகும். } - சினை வினையும் கண் இருண்டால் உடல் இருளும் - சினை வினையும் கால் ஓய்ந்தால் உடல் சோரும் } - முதல் வினையும் (6) சார்புகிளவியப் பயனிலை முதல் வினையாயிருக்கும் வாக்கியத்தில் அம் முதலைக் குறிக்கும் எழுவாய் தொக்கிருப்பின், அவ்வாக்கியத்தைத் தனி வாக்கியமாகக் கொள்ளலாம். எ-டு : கட்குடித்தால் கண் சிவக்கும். நடந்தால் கால் நோகும். இவற்றுள் : 1ஆம் வாக்கியத்தில் உள்ள கட்குடித்தல் வினைமுதலுக்கே உரியது; 2ஆம் வாக்கியத்திலுள்ள நடத்தல் வினைமுதலும் சினையும் ஆகிய இரண்டிற்கும் உரியது. ஆயினும், இவ் விரு வாக்கியங்களையும், வாக்கியக் கூறுபடுப்பில், ஒரு தன்மையவாகக் கொள்ளலாம். திட்டமற்ற எழுவாய்கள் தொக்கு நிற்கும் வாக்கியங் களிலெல்லாம், இயன்றவரை அவ் வெழுவாய்களை விரிக்காம லிருத்தலே, மாணவர்க்கு ஏற்றதாம். இம் முறைப்படி, மேற்காட்டிய வாக்கியங்களில், கட் குடித்தல், நடந்தால் என்பவை பயனிலையடைகளாகக் கொள்ளப்படும். குற்றமற்ற அறிஞர் கூடிய களம், இறையுருவம் இருக்கும் இடம்போல, வானவரும் வணங்குமாறு தெய்வத்தன்மை வாய்ந்ததாகும். இது ஒரு கலப்பு வாக்கியம். இதன் கூறுபடுப்பு வருமாறு : 1 எழுவாய் பயனிலை எழுவாய்ச் எழுவா பயனிலை நிரப்பியம் பயனிலையடை சொல் யடை களம் குற்றமற்ற ஆகும் தெய்வத் 1. இறையுருவம் அறிஞர் தன்மை இருக்கும் இடம் கூடிய வாய்ந்தது போல 2. வானவரும் வணங்குமாறு கிளவியம் கிளவியத்தின் எழுவாய் அல்லது அல்லது உட்கிள எழுவாய்ச் எழுவாயடை உட்கிளவியம் வியத்தின் வகை சொல் யும் தொழிலும் கிளவியங்கள் 1. களம் தெய்வத் தலைமைக் களம் தன்மைவாய்ந்த கிளவியம் தாகும் 2. குற்றமற்ற அறி பெயரெச்சக் கிளவியம், அறிஞர் குற்றமற்ற கூடிய `களம் என்னும் எழு வாய்க்கு அடை 3. இறையுருவம் வினையெச்சக் இருக்கும் இடம் கிளவியம், `ஆகும் போல என்னும் பயனிலைக்கு அடை 4. வானவரும் வினையெச்சக் கிள வானவரும் வணங்குமாறு வியம், `ஆகும் என்னும் பய னிலைக்கு அடை உட்கிளவியங்கள் பெயர்க்கிளவியம், தன்மை தெய்வ 1. தெய்வத் தன் `ஆகும் என்னும் மை வாய்ந்தது பயனிலைக்கு நிரப்பியம் 2. இறை யுருவம் பெயரெச்சக் கிளவியம், உருவம் இறை இருக்கும் 3-ஆம் கிளவியத்தில் இடம் என்னும் பெய ருக்கு அடை பயனிலை செயப்படுபொருள் பயனிலைச்சொல் நிரப்பியம் ஆகும் தெய்வத்தன்மை வாய்ந்தது கூடிய போல இறையுரு இருக்கும் இடம் வணங்குமாறு வாய்ந்தது இருக்கும் பயிற்சி பின்வரும் கலப்பு வாக்கியங்களைக் கூறுபடுத்திக் காட்டுக : (1) கல்லுளிச் சித்தன் போனவழி கடு மேடெல்லாம் தவிடு பொடி. (2) கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு. (3) உயிர் போனாலும் உள்ளதைச் சொல்லமாட்டான். (4) எளியாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும். (5) எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? (6) அரிசி உழக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும். (7) நீச்சுநிலை இல்லாத ஆற்றிலே நின்றெப்படி முழுகுகிறது? (8) பட்டப் பகல்போல நிலவெறிக்கக் குட்டிச்சுவரில் முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா? (9) ஆறு நிறைய நீர்போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். (10) காற்றடிக்கும்போதே தூற்றிக்கொள்ள வேண்டும். (11) இத்தனை அத்தனையானால், அத்தனை எத்தனை யாகும்? (12) சம்பளம் மிகக் குறைவானாலும் பேர் பெரிய பேர். (13) உன் கண்ணில் உத்தரம் இருக்கும்போது பிறன் கண்ணி லுள்ள துரும்பைப் பாராதே. (14) பெரும! கிள்ளிவளவ! நீர்செறிந்த பெரிய கடல் எல்லையாகக் காற்று ஊடுபோகாத வானத்தைச் சூடிய மண் செறிந்த உலகத்தின்கண், குளிர்ந்த தமிழ்நாட்டிற் குரியராகிய முரசொலிக்கும் படையினை யுடையமூவேந்தர் அரசுள்ளும்,அரசென்று சிறப்பித்துச் சொல்லப்படற் குரியது நினதே! (15) விளங்கிய கதிரையுடைய ஞாயிறு (சூரியன்) நான்கு திசையினும் தோன்றினும், விளங்கிய தியையுடைய வெள்ளிமீன் தென்திசைக்கண் செல்லினும், அழகிய குளிர்ந்த காவிரி வந்து பலகாலா யோடி யூட்ட, தொகுதி கொண்ட வேலின் தோற்றம்போலக் கரும்பின் வெண்பூ அசையும் நாடென்று சொல்லப்படுவது சோழனதே. (16) அறக்கடவுள் ஆராய்ந்தாற்போன்ற ஆராய்ச்சியையுடைய நீதியை வேண்டும் காலத்திற் பெற்றோர், மழை வேண்டுங் காலத்தில் அதைப் பெற்றவராவர். (17) அரசனது வானளாவிய வெண்கொற்றக் குடை, ஞாயிற்றைத் தன்மேற்கொண்டு உயர்ந்த வானத்தின் நடுவே நின்று வெயிலை மறைக்கும் முகிலைப்போல, வெயிலை மறைத்தற்குக் கொண்டதன்று. (18) பனந்துண்டம்போலக் கைகால்கள் வேறுவேறு துணி பட்டுக் கிடக்கும்படி, யானைக் கூட்டங்கள் பொரும் பரந்த போர்க்களத்தின்கண், தாக்கவரும் பகைவர் படையை எதிர்த்து அது தோற்றோடும்போது ஆரவாரிக்கும் படைபெறும் வெற்றியும், உழவுசாலில் விளைந்த நெல்லின் பயனே. (19) மழை பெய்யுங்காலத்துப் பெய்யாதொழியினும், விளைவு குறையினும், இயல்பல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினும், காவலரைப் பழிக்கும் இப் பரந்த உலகம். (20) ஓர் அரசன், குறளை கூறுவாருடைய சொல்லைக் கொள் ளாது உழவர் குடியைப் பாதுகாத்து, அதன் வாயிலாய் ஏனைக் குடிகளையும் பாதுகாப்பானாயின், அவன் அடியைப் போற்றுவர் அவன் பகைவர். (21) இனிய வுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (22) பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின். (23) ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகமுடையாள் மெய்நோவ அடிமை சாவ மாவீரம் போகுமென விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள்வந்து தட்சிணைக்குக் குறுக்கே நிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே. (24) மூவேந் தரும்அற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றோ டெட்டுக் கோவேந் தரும்அற்று மற்றொரு வேந்தன் கொடையும் அற்றுப் பாவேந்தர் காற்றில் இலவம்பஞ் சாகப் பறக்கையிலே தேவேந்த்ர தாருஒத் தாய்ரகு நாத சயதுங்கனே. (25) அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி கமலத் தாள்சேர் வெண்ணெய்மன் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. கதம்ப வாக்கியக் கூறுபடுப்பு கதம்ப வாக்கியத்தைப் பின்வருமாறு கூறுபடுத்தல் வேண்டும்: முதலாவது, கதம்பவாக்கியம் முழுவதையும் ஒன்றாகக் கொண்டு தனிவாக்கியம்போற் கூறுபடுத்தல் வேண்டும். இரண்டாவது, கதம்பவாக்கியத்திற் கலந்துள்ள வாக்கிய வகைகளைப் பிரித்துக் காட்டல்வேண்டும். மூன்றாவது, ஒவ்வொரு வாக்கிய வகையையும் சேர்ந்த கிளவியத்தை அல்லது கிளவியங்களைத் தனித்தனி கூறுபடுத்தல் வேண்டும். குறிப்பு: சில கதம்பவாக்கியங்கட்கு முதல்வகைக் கூறுபடுப்பு அமையாது. அவற்றிற்கெல்லாம் ஏனையிரு வகைகளே அமையும். எ-டு : யானை போன்றவருடன் நட்டல்கூடாது; நாய் போன்றவருட னேயே நட்டல்வேண்டும்; யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்; நாயோ உடையான் எறிந்த வேல் தன் உடம்பை ஊடுருவி யுள்ளபோதும் தன் வாலையாட்டும். பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று மாட்டுக்காரப் பையன் கேட்டதற்கு, அப்பா! சுட்டபழம் வேண்டா, சுடாத பழமே போடு என்றார் ஔவையார். இது ஒரு கதம்பவாக்கியம். இதன் கூறுபடுப்பாவது. முதற்கூறுபடுப்பு ஔவையார் எழுவாய்; என்றார் பயனிலை; அப்பா!.... போடு செயப்படுபொருள்; பாட்டி!..... கேட்டதற்கு பயனிலையடை. இதன் கட்ட அமைப்பு எழுவாய் பயனிலை செயப்படுபொருள் பயனிலைச் பயனிலையடை சொல் xsitah® v‹wh® “gh£o!பாட்டி! அப்பா! சுட்ட உனக்குச் சுட்ட பழம் வேண்டாம், பழம் வேண்டுமா? சுடாத பழமே சுடாத பழம் போடு nt©Lkh? என்று மாட்டுக் காரப் பையன் கேட்டதற்கு இரண்டாம் கூறுபடுப்பு பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? - இது ஒரு கூட்டு வாக்கியம். பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று மாட்டுக்காரப்பையன் கேட்டதற்கு - இது இரு கிளவியங்களை உள்ளிட்ட ஒரு வினையெச்சக் கிளவியம். அப்பா! சுட்டபழம் வேண்டா, சுடாத பழமே போடு - இது ஒரு கூட்டு வாக்கியம். அப்பா! சுட்டபழம் வேண்டா, சுடாத பழமே போடு என்றார் ஔவையார் - இது ஒரு கலப்பு வாக்கியம். ஆகவே, இரு கூட்டுவாக்கியங்களை யுள்ளிட்ட ஒரு கலப்பு வாக்கியமாக வுள்ளது இக் கதம்ப வாக்கியம். இதன் கட்ட அமைப்பு எழுவாய் பயனிலை செயப்படுபொருள் 1. ஔவையார் என்றார் அப்பா! சுட்டபழம் வேண்டாம், சுடாத பழமே போடு 2. மாட்டுக்காரப் கேட்டதற்கு பாட்டி! பாட்டி! பையன் உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா என்று மூன்றாம் கூறுபடுப்பு 1. ஔவையார் என்றார். 2. அப்பா! சுட்ட பழம் வேண்டா. 3. சுடாத பழமே போடு. 4. மாட்டுக்காரப் பையன் கேட்டதற்கு. 5. பாட்டி! பாட்டி! உனக்குச் சுட்டபழம் வேண்டுமா? 6. சுடாத பழம் வேண்டுமா? இதன் கட்ட அமைப்பு (அடுத்த பக்கத்திற் காண்க.) குறிப்பு : விரிவான கூறுபடுப்பிலெல்லாம், விளிப்பெயரை எழுவாய்க் கட்டத்தின் உட்பிரிவான விளிப்பெயர்க் கட்டத் திலேயே அமைத்துக் காட்டல் வேண்டும். பயிற்சி பின்வரும் கதம்ப வாக்கியங்களைக் கூறுபடுத்திக் காட்டுக : (1) எல்லா மதங்களும் இது என் தெய்வம் என்று வழக்கிடுதற் குரியதாயிருப்பது எது? (2) ஒருவர் உண்டென்பதைப் பிறர் இல்லை என்பர்; ஒருவர் இல்லை என்பதைப் பிறர் உண்டென்பர்; இங்ஙனமே அறு சமயத்தாரும் வாதாடுவர்; ஆனால், வள்ளுவர் கூறிய மொழியோ எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்றாம். (3) பாலெல்லாம் ஆவின் பாலாகுமா? அதுபோல, நூலெல்லாம் வள்ளுவர் நூலாகுமா? என்று பாடியவர் யார்? (4) சிலர் இயேசுவினிடம் வந்து, அரையனுக்கு வரி செலுத்துவது முறையா? முறையன்றா? என வினவிய போது, அவர் அரையனுடையதை அரையனுக்கும் ஆண்டவனுடையதை ஆண்டவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (5) காதல்பற்றிச் சிறுவனை யானை யென்றலும் ஆகுபெயராமன்றோவெனின் : யாதானுமோர் இயைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காயது ஆகுபெயராம்; இயைபு கருதாது காதல் முதலாயின வற்றான் யானை யென்றவழி ஆகுபெயருள் அடங்காவென்பது. (6) அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமென் றாரும் அறிந்திலார் அன்பே சிவமென் றாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (7) இருதுபன்னன் தன் வலவனாகிய நளனை நோக்கி, மேலாடை வீழ்ந்தது, எடு என்றான். (8) பாலுக்குப்போடச் சர்க்கரையில்லை என்பார்க்கும், பருக்கையற்ற கூழுக்குப்போட உப்பில்லை என்பார்க் கும், காலுக்குப் போடச் செருப்பில்லை என்பார்க்கும், பல்லக்கின் மேலுக்குப் போட மெத்தையில்லை என்பார்க்கும், கவலை ஒன்றா? வேறா? (9) காண்டாமாவும் காட்டெருமையும் போர் செய்யின் எதுவெல்லும் எது தோற்கும் என்று, சொல்வதரிது. (10) என்னதை உண்போம்? என்னதைக் குடிப்போம்? என்று நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். (11) ஆறு கடக்குமட்டும் அண்ணன் தம்பி என்றான்; அதற்குப்பின் நீ யார் நானார் என்கிறான். (12) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும், என்றார் சுந்தரம் பிள்ளை. (13) எண்ணான்கு முப்பத் திரண்டுபற் காட்டி யிசையுடனே பண்ணாகச் செந்தமிழ் பாடி வந்தாலும்இப் பாரி லுள்ளோர் அண்ணாந்து கேட்பர் அழகழ கென்பர் அதன்பிறகு சுண்ணாம்பு பட்ட இலையும்கொ டார்கவி சொன்னவர்க்கே (14) இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளைதினம் இருபோர் தின்னும் சட்டமுடன் கொள்ளுண்ணும் புல்லுண்ணும் அதைப் பண்டி தன்னிற் பூட்டக் கிட்டவரின் முட்டவரும் தொட்டவர்மே லேகழியும் கீழே வீழும் எட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்தி ராதே. (15) காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின் வாரொன்று பூண்மார்பத் தாய்ச்சியர்கை யுற்றக்கால் மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே. (16) பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம் திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள் இருந்த இடத்தில் இராமையினால் ஐயோ பருந்தெடுத்துப் போகிறதே பார். (17) நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர் பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாம் காளமேன் குஞ்சரமேன் கார்க்கடல்போ முழங்கும் மேளமேன் ராசாங்க மேன். (18) கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை யன்னம் இலையிலிட வெள்ளி எழும். (19) ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம் உற்றிடுபாம் பெள்ளெனவே ஓது. (20) ஒருசொல் வெல்லும், ஒருசொல் கொல்லும் என்பது பழமொழி. (21) ஒருவரையொருவர் புதிதாகக் கண்டால், உங்கட்குப் பிள்ளை எத்தனை பெண் எத்தனை என்று வினவுவது வழக்கம். (22) கண்ணிற்குக் கண் பல்லிற்குப் பல் என்பது பழைய ஏற்பாட்டுக் கொள்கை. (23) எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது, பசுமாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும். (24) தென்னை மரத்தில் ஏனடா ஏறினாய் என்றால், புல்பிடுங்க ஏறினேன் புல்லில்லை என்கிறான். (25) கல்லுக்குள் இருக்கும் தேரையையும் முட்டைக்குள் இருக்கும் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பவர் யார் என்று தெரியுமா? தெரியாதா? குறிப்பு : கதம்பவாக்கியங்கள் மிக நீண்டிருந்தால், அவற்றைக் கிளவியங்களாகப் பிரித்தாலும் போதும். கீழ்வகுப்பு மாணவர் கதம்ப வாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாகவே கொள்ளலாம். 14. வாக்கியப் பகுதிகளின் வடிவுகள் 1. எழுவாய் வடிவுகள் 1. தனிப்பெயர் எ-டு : மழை பெய்கிறது - பொருட்பெயர் அவன் பெரியவன் - சுட்டுப்பெயர் படிப்பு ஒவ்வொருவனுக்கும் வேண்டும் - தொழிற்பெயர் காளை வந்தான் - ஆகுபெயர் போனது வருமா? - வினையாலணையும்பெயர் 2. பல பெயர் எ-டு: சேர சோழ பாண்டியர் தமிழ்நாட்டைத் தொன்றுதொட்டு ஆண்டு வந்தவர். நீயும் நானும் போவோம். 3. தொடர்மொழி எ-டு : நன்றி மறப்பது நன்றன்று. கூலி வாங்கிவிட்டு வேலை செய்யாதவன் கொள்ளைக்காரன். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான். 4. அன்மொழித்தொகை எ-டு : தேன்மொழி வந்தாள். கயந்தலை நீருண்ணுகின்றது. கயந்தலை = யானைக்கன்று, குழவி. 5. உரிச்சொல் எ-டு : சீர்த்தி உலகப் பேறுகளுள் ஒன்று. சீர்த்தி = மிகு புகழ். 6. நிகழ்கால வினையெச்சம் (Infinitive) எ-டு : அவனுக்குப் பாடத்தெரியும். இந்தக் குழந்தைக்குப் பேசத்தெரியுமா? இவற்றில், பாட என்பது பாடுதல் என்றும், பேச என்பது பேசுதல் என்றும் பொருள்படுவதையும், எவ்வகையிலும் வேறெழுவாய் காட்ட முடியாமையையும் காண்க. பாட்டுப் பாடத் தெரியும் என்பதிலும், பாட்டு என்பது பாட என்னும் வினைக்குச் செயப்படுபொருளேயன்றித் தெரியும் என்னும் வினைக்கு எழுவாயன்று. எனக்கு வரத்தெரியும் என்பதில், வரவு வரத்தெரியும் என்று விரித்தற் கிசையாமையையும் கண்டுகொள்க. 7. பிறவகையான ஏதேனுமொருசொல் அல்லது ஒலி எ-டு : இறைஞ்சி வணங்கி. இன்னும் கொஞ்சநேரத்தில் டிங் ஒலிக்கும். முதல் வாக்கியத்தின் பொருள் : இறைஞ்சி என்பது வணங்கி என்று பொருள்படும் என்பது. இரண்டாம் வாக்கியத்தின் பொருள் : இன்னும் கொஞ்ச நேரத்தில் டிங் என்னும் ஒலி கேட்கும் என்பது. 8. பெயரல்லாத ஏதேனுமொரு தொடர்மொழி தோள்கண்டார் தோளே கண்டார் மிக நல்ல செய்யுள். எ-டு : டிங்கி நானே உனக்குத் தெரியுமா? டிங்கினானே - மரத்தைப் பிடுங்கினானே என்பதை மரத்தேப்பூ டிங்கினானே என ஒருவன் பிரித்துப் பாடிய வரலாறு. 9. ஒரு கிளவியம் எ-டு : தீமையினாலும் நன்மை வரும் என்பது, அறிஞர் கூறியதும் பலர் தம் வாழ்க்கையிற் கண்டறிந்ததுமான உண்மை. இதில், தீமையினாலும் நன்மை வரும் என்பது எழுவாய். 10. கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம் எ-டு : தீமையினாலும் நன்மைவரும் என்று அவர் சொன்னது உனக்கு நினைவிருக்கிறதா? இதில் தீமையினாலும் நன்மை வரும் என்பது ஒரு கிளவியம். அதை யுள்ளிட்ட கிளவியம் தீமையினாலும்... சொன்னது என்பது. குறிப்பு : விளிவேற்றுமைப்பெயர் வரும் வாக்கியங்களில் முன்னிலைப் பெயரும் (தொக்கேனும் வெளிப்பட்டேனும்) வருவதனாலும், சில பயனிலைகளோடு விளிப்பெயர் இசையாமையாலும், விளிப்பெயரை எழுவாயாகக் கூறாது தனிப்படப் பிரித்துக் கூறுவதே பொருத்தமாம். எ-டு : (1) பொன்னா! சென்னை போ. (2) பொன்னா! நீ சென்னை போ. (3) பொன்னா! நீ சென்னை போகவேண்டும். (4) பொன்னா! உன்னைச் சென்னைக்கு மாற்றியிருக்கிற தினால் நீ அங்கே போகவேண்டும். இவற்றுள், முன்னிரு வாக்கியங்களிலும் முன்னிலைப் பெயர் தொக்கும் வெளிப்பட்டும் வருவதையும், பின்னிரு வாக்கியங்களிலும் முன்னிலைப் பெயரின்றி விளிப்பெயர் பயனிலையொடு பொருந்தா மையையும் காண்க. இதனால், வாக்கியப் பிரிப்பில், எழுவாய்க்குரிய கட்டத்தில் அல்லது இடத்தில், நீ எழுவாய், பொன்னா விளிப்பெயர், என்று குறிப்பதே பொருத்தமாகும். செயப்படுபொருள் வடிவுகள் செயப்படுபொருளும் சொன்னிலையில் எழுவாயை ஒத்திருத்தலின் எழுவாய் வடிவுகளைத் தானும் அடையும். அவை வருமாறு : 1. தனிப்பெயர் எ-டு : வண்ணம் பாடுவதில் யார் அருணகிரியாரை வென்றவர்? 2. பல பெயர் எ-டு : சேரசோழ பாண்டியரை அசோகனும் வெல்ல முடியவில்லை . 3. தொடர்மொழிப் பெயர் எ-டு : மதுரைக் கூலவாணிகனார் சீத்தலைச்சாத்தனாரை மதப்பற்று ஓரளவு மடம்படுத்திற்று. 4. அன்மொழித்தொகை எ-டு : நால்வாயைப்போல் அசைகின்றது நாவாய். நால்வாய் = யானை. நாவாய் = கப்பல். 5. உரிச்சொல் எ-டு : சீர்த்தியை யாரும் விரும்புவர். 6. நிகழ்கால வினையெச்சம் எ-டு : வானத்தின்மீது மயிலாடக் கண்டேன். 7. ஏதேனுமொரு சொல் Rthfhití« ïWâƉbfh©lJ ஒரு தமிழ்ப் பாட்டு. 8. ஏதேனுமொரு தொடர்மொழி எ-டு : எப்படிப் பாடினரோ வைப்பாடு. 9. ஒரு கிளவியம் எ-டு : எல்லாம் நன்மைக்கே என்பதைப் பலர் ஒப்புக்கொள்வதில்லை. 10. கிளவியத்தையுள்ளிட்ட கிளவியம்; எ-டு : எல்லாம் நன்மைக்கே என்பதைப் பலர் ஒப்புக்கொள்வ தில்லை என்பது உனக்குத் தெரியுமா? இதில், எல்லாம் நன்மைக்கே என்பது ஒரு கிளவியம். இதை உள்ளிட்ட கிளவியம், எல்லாம்... கொள்வதில்லை, என்பது. எழுவாயடை வடிவுகள் எழுவாயடை பின்வருமாறு பல வடிவுகளில் வரும். 1. பெயரெச்சம் எ-டு : போகிற (போக்கு) - தெரிநிலைப் பெயரெச்சம் நல்ல (வழி) - குறிப்புப் பெயரெச்சம். 2. வேற்றுமையேற்ற பெயர் எ-டு : எனது (புத்தகம்). குன்றத்துக் (கூகை). 3. பெயரொட்டு எ-டு : பனை (மரம்) காவிரி (யாறு) இங்குப் பெயரொட்டு என்றது இருபெயரொட்டில் முதற்பெயரை. 4. சிறப்புப்பெயர் எ-டு : சோழன் (கரிகாலன்) புலவன் (வள்ளுவன்) கணியன் (பூங்குன்றன்) பல்வகைச் சிறப்புப்பெயரும் இவ்வகையுள் அடங்கும். 5. குறிப்பு முற்றெச்சம் எ-டு : கழலினன் (நள்ளி) கழலினன் = கழலையணிந்த, கழலையுடைய 6. இடைச்சொல் எ-டு : இன் (ஒன்று) = இன்னொன்று மற்று (என்னை ?) குறிப்பு : உண்மையில் இவை குறிப்புப் பெயரெச்சமேயன்றி இடைச்சொல் அல்ல; ஆயினும், தமிழிலக்கண நூல்களிற் குறிக்கப்பட்டுள்ளபடி இங்குக் குறிக்கப்பட்டன. 7. உரிச்சொல் எ-டு : வடி (வேல்) வியன் (உலகம்) வடி = கூர்மையான. வியன் = பரந்த. 8. பண்புச்சொல் எ-டு : செம், வட்ட - தொகை செம்மையான, வட்டமான - விரி இவையும் நல்ல, பெரிய என்பவற்றைப்போலக் குறிப்புப் பெயரெச்சமேயாயினும், பண்புத்தொகை என ஒரு தனித்தொகை தமிழிற் கூறப்படுவதுபற்றி இங்கு வேறு பிரித்துக் கூறப்பட்டன. 9. தொடர்மொழி எ-டு : நன்றியறிவுள்ள (நாய்) ஆரியப் படைகடந்த (நெடுஞ்செழியன்) 10. கிளவியம் எ-டு : மாந்தன் பேச்சின்றியிருந்த காலமும் உண்டு. 11. கிளவியத்தையுள்ளிட்ட கிளவியம் எ-டு : கடவுளில்லையென்று சொல்லுகிற காலம் இது. இதில், கடவுளில்லை என்பது ஒரு கிளவியம். கடவுளில்லை யென்று (பலர்) சொல்லுகிற காலம் என்பது கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம். செயப்படுபொருளடை வடிவுகள் எழுவாயும் செயப்படுபொருளும் ஒத்த சொல்லாதலின், எழுவாயடை வடிவுகளே செயப்படுபொருளடை வடிவுகளும் என அறிக. எடுத்துக்காட்டுகள் மேற்காண்க. எழுவாயடைப் பொருள்வகைகள் எழுவாயடைப் பொருள்கள் (1) காலம் (8) செய்பொருள் (2) இடம் (9) விளைவு (3) செயல் (10) நிலைப்பாடு (Condition) (4) செய்பவன் (11) ஒப்பீடு (Comparison) (5) நோக்கம் (12) தன்மை (6) கருவி (13) அளவு (7) காரணம் (14) உடைமை எனப் பதினான்கு வகைப்படும். 1. காலம் எ-டு : மாலைப் (பதனீர்) கார்காலத்து (மயில்) 2. இடம் எ-டு : சீமைச் (சரக்கு) ஆப்பிரிக்க (மடங்கல்) கீழிந்தியக் (குழும்பு) - East India Company நாட்டுப்புறத்து (மக்கள்) 3. செயல் எ-டு : படித்த (மக்கள்) படியாத (ஆள்கள்) தச்சு (வேலை) மருத்துவன் (தாமோதரன்) இந்தியத் தலைமை மந்திரியார் (சவகர்லால் நேரு) குடிகாரக் (கோவிந்தன்) 4. செய்பவன் எ-டு : தட்டான் (வேலை) செருமானியப் (போர்) 5. நோக்கம் எ-டு : பரிசு பெறும் (படிப்பு) வந்த (காரியம்) 6. கருவி எ-டு : உளி (வெட்டு) தாள் (வேலை) 7. காரணம் எ-டு : வெட்டு (க்காயம்) கத்திபட்ட (புண்) வழிநடந்த (உளைச்சல்) வேலை செய்த (களைப்பு) 8. செய்பொருள் எ-டு : நகை (வேலை) சுருட்டு (த்தொழில்) 9. விளைவு எ-டு : அழுத பிள்ளையும் வாய்மூடும் (அதிகாரம்) வாயூறும் (மாங்கனி) கண்கவர் (கட்டடம்) 10. நிலைப்பாடு எ-டு : நாள்வட்டி கொடுக்கும் (கடன்) 11. ஒப்பீடு எ-டு : மிகச் சிறந்த (புத்தகம்) தேனினு மினிய (சொல்) 12. தன்மை எ-டு : நல்ல (பிள்ளை) புலவன் (வள்ளுவன்) பாண்டியன் (நெடுஞ்செழியன்) திறமை குடிப்பிறப்பு முதலியவெல்லாம் தன்மையுள் அடங்கும். 13. அளவு எ-டு : சிறிய (வீடு) இரு (வினை) வண்டி(ப் பாரம்) நாலுமுழ(த் துணி) கல (அரிசி) சேய்மை (யிடம்) 14. உடைமை எ-டு : உடைய (பெருமாள்) குழைகொண்டு கோழியெறியும் (வாழ்க்கையர்) ஏழை (ப் பையன்) குறிப்பு : எழுவாயடைப் பொருளை அறிதற்கு அடையை நோக்க வேண்டுமேயன்றி எழுவாயை நோக்குதல் கூடாது. கோடிச்செல்வன் என்பதில், கோடி என்பது அளவுப் பொருளடை; உடைமைப் பொருளடையன்று. ஒரு கருத்துப்பற்றிய அடை பல்வேறு வடிவில் வரலாம்; கருத்திற்கேற்ப அதனை வகைப்படுத்திக் கூறல் வேண்டும். எ-டு : கண்தெரியாத (குருடன்) குருட்டுக் (கொக்கு) கண்ணுடைய (வள்ளல்) - தன்மையடை கண்ணில்லாத (ஏழை) } செயப்படுபொருளடைப் பொருள்வகைகள் செயப்படுபொருளுடைப் பொருள்வகைகளும், எழு வாயடைப் பொருள்வகைகளே. எடுத்துக்காட்டுகள் மேற்காண்க. பயனிலை வடிவுகள் எச்சப் பயனிலை வடிவுகள் எச்சப்பயனிலை, (1) பெயரெச்சம், (2) வினையெச்சம், (3) தொழிற்பெயர், ஆகிய மூவடிவில் வரும். 1. பெயரெச்சம் எ-டு : முருகன் வந்த - இ.கா. முருகன் வருகிற - நி.கா. முருகன் வரும் - எ.கா. 2. வினையெச்சம் எ-டு : முருகன் வந்து - இ.கா. முருகன் வர - நி.கா. முருகன் வரின், வந்தால், எ.கா. வருவான், வரற்கு, வருவதற்கு, வரும்படிக்கு, வருமாறு 3. தொழிற்பெயர் எ-டு : முருகன் வருதல். முற்றுப் பயனிலை வடிவுகள் முற்றுப்பயனிலை பின்வருமாறு பல வடிவுகளில் வரும்: 1. பெயரெச்சம்; எ-டு : அது மரம், இது கருங்காலி, இவன் தச்சன், அவர் கா. அப்பாத்துரை, அவன் படித்தவன் - தனிப்பெயர் தமிழ்நாட்டில் சமணத்தைத் தொலைத்தவர் அப்பரும் சம்பந்தரும், எசுக்கிமோவர் (Eskimos) உணவு ஊனும் மீனும் - பலபெயர் 2. வினைமுற்று எ-டு : கந்தன் வந்தான். - தெரிநிலை இரெட்டியார் நல்லவர். - குறிப்பு நீ வா. - ஏவல் இறைவன் அருள்க! - வியங்கோள் 3. இடைச்சொல் எ-டு : இது மற்றையது. ஆண்மையும் முயற்சியும் உள்ளவனுக்கு அரசும் தஞ்சம். தஞ்சம் = எளிமை.மற்றையது தஞ்சம் என்னும் இரண்டும் உண்மையிற் பெயர்ச்சொற்களே. 4. உரிச்சொல் எ-டு : இக் காய் வம்பு. வறுமையும் ஒரு சிறுமை. வம்பு = பருவமல்லாக் காலத்தில் தோன்றுவது. சிறுமை = நோய். 5. ஏதேனுமொருசொல் எ-டு : அவர் சொன்னது இயங்கி (Motor). அவர் சொன்ன சொல் இயங்கி. 6. தொடர்மொழி எ-டு : வந்தான் என்பது செயப்படுபொருள் குன்றியவினை. சோழவரசை மீண்டும் நாட்டியவன் முதலாம் இராசராசன். 7. கிளவியம் எ-டு : உயிர்நூலார் கருத்து, போரும் ஒரு தேவ ஏற்பாடு என்பது. பயனிலைப் பொருள்வகைகள் பயனிலைப் பொருள்கள் பின்வருமாறு எண்வகைப்படும்: 1. சொன்மை குறித்தல் எ-டு : கம்பர் மகன் பெயர் அம்பிகாபதி. சேக்கிழார் பொன்னம்பலத்திற் கேட்ட சொல் உலகெலாம். 2. சொற்பொருண்மை அல்லது பொருட்பாடு (Meaning) குறித்தல் எ-டு : உசாவே சூழ்ச்சி. உசா என்னும் சொல்லின் பொருள் சூழ்ச்சி என்பது, இவ் வாக்கியப் பொருள். 3. பொருண்மை குறித்தல் எ-டு : அவர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை. இது நீர்மூழ்கி (Submarine). 4. செய்கை குறித்தல் எ-டு : நக்கீரர் இறையனார் அகப்பொருளுக்கு உரை கூறினார். இந்த மாம்பழம் இனிக்கிறது. 5. பண்பு குறித்தல் எ-டு : வள்ளுவர் குறளில் tšyt®. பால் விகுதியேற்ற இந்த மாம்பழம் இனியது. பண்புச்சொல். கோபம் சண்டாளம். பால் விகுதியேலாப் கூத்தாளுக்கு இருகண்ணும் குருடு. பண்புச்சொல். கடும்பா (ஆசுகவி) பாடுவது கடினம் 6. ஏவல் குறித்தல் எ-டு : புதன் சனி முழுகு. கண்டொன்று சொல்லேல். - மதிப்பற்ற ஏவல் ஐயா! வருக! இதை யாரிடமும் சொல்லற்க! - மதிப்புற்ற ஏவல் 7. நோக்கங் குறித்தல் எ-டு : தமிழ் வாழ்க! கள்ளவிலைக் கொள்ளைக்காரர் ஒழிக! 8. வினாக்குறித்தல் எ-டு : ஒரே நாளில் எழு பகையரசரை வென்ற இளம் பாண்டியன் யார்? - அறிவினா வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? - அறிவினா வானூர்தியின் மணி வேகம் எவ்வளவு? - அறியா வினா ஒரு புகைவண்டியின் விலை என்ன? - அறியா வினா குறிப்பு : இனிக்கிறது, இனியது என்னும் இருசொற்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாயினும், இவற்றுள் முன்னது தொழில் வடிவிலும் பின்னது பண்பு வடிவிலும் இருக்கின்றன என, வேறுபாடறிதல் வேண்டும். பயனிலையடை வடிவுகள் பயனிலையடை பின்வருமாறு பல வடிவுகளில் வரும்: 1. வினையெச்சம் எ-டு : வந்து (போனான்) - தெரிநிலை இல்லாது (இருக்கிறான்) - குறிப்பு 2. வேற்றுமையேற்ற பெயர் எ-டு : வீட்டில் (இருக்கிறான்) மரத்தினின்று (விழுந்தது) 3. இப்பெயரையும் காலப்பெயரையும் தழுவிய பெயரெச்சம் எ-டு : வந்தவிடத்து (நேர்ந்தது) சொல்லும்போது (நன்றாயிருந்தது) 4. இடைச்சொல் எ-டு : கொன்னே (கழிந்தது) கொன்னே = வீணாக. 5. உரிச்சொல் எ-டு : சால (உண்டான்) நனி (சிறந்தது) 6. தொடர்மொழி எ-டு : ஆறுமாத காலமாக (நடக்கிறது) எத்தனைமுறை சொன்னாலும் (தெரியவில்லை) 7. கிளவியம் எ-டு : உயிர்போனாலும் (சொல்லமாட்டான்) 8. கிளவியத்தை யுள்ளிட்ட கிளவியம் எ-டு : மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா? இதன் விரிவு : மயிலே மயிலே நீ இறகு போடு என்று ஒருவர் சொன்னால் அது போடுமா? என்பது. இதில், மயிலே மயிலே இறகு போடு என்பது ஒரு கிளவியம். இதையுள்ளிட்ட கிளவியம் மயிலே! மயிலே! இறகு போடு என்றால் என்பது. பயனிலையடைப் பொருள்வகைகள் பயனிலையடைப்பொருள் பின்வருமாறு பலவகைப்படும்: 1. காலம் எ-டு : நேற்று (வந்தான்). மழைநாள்களில் (வளரும்). 2. இடம் எ-டு : இங்கே (இருக்கிறான்). ஐந்து கண்டத்திலும் (அதைக் காணலாம்). 3. நோக்கம் எ-டு : பரிசுபெறும் பொருட்டுப் (படித்தான்). மகனைப் படிக்கவைத்தற்காக (அவர் இங்கே வந்திருக்கிறார்). 4. காரணம் எ-டு : சூதாடித் (தோற்றான் பொருளையெல்லாம்). அடிப்படையில்லாததினால் (கட்டடம் விழுந்தது). 5. விளைவு எ-டு : ஊரெல்லாம் கேட்கும்படி (உரக்கக் கத்தினான்). பிறர் நெஞ்சம் புண்படும்படி (பேசக்கூடாது). 6. நிலைப்பாடு (Condition) எ-டு : இம் மாதம் 20ஆம் நாளுக்குள் பணம் கட்டிவிட்டால் (வட்டி வேண்டியதில்லை). இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்காவிட்டால் (தண்டனை ஏற்படும்). 7. ஒப்பீடு எ-டு : முன்னிலும் சிறப்பாகப் (பேசினார்). (ஞாலம்) திங்களைவிட ஐம்பத்தைந்து மடங்கு (பெரியது). 8. வைத்துக்கொள்வு (Supposition) அல்லது இணக்கம் (concession) எ-டு : அவர் நேரில் வந்து கேட்டாலும் (என் புத்தகத்தை இரவல் கொடுக்க முடியாது). அடாத மழை பெய்தாலும் (விடாது வகுப்பு நடத்தப்பெறும்). 9. தன்மை எ-டு : நன்றாய் (இருக்கிறது படம்). அன்போடு (அளவளாவுவார்). 10. அளவு எ-டு : சரிசமமாய் (இருக்க விரும்புகிறான்). நெடுங்காலமாக (அந்தப் பேச்சு நடந்துவருகிறது). ஆனைக்கும் பூனைக்கும் உள்ள அளவு (அவருக்கும் எனக்கும் வேற்றுமையுண்டு). (தான் வாங்கின ஒரு படியை) இருபடியாகக் (கொடுத்து விட்டான்). நிலைப்பாடு உணர்த்தப்பெறும் வகைகள் 1. எதிர்கால வினையெச்சம் எ-டு : அவன் வந்தால் கிடைக்கும் - உடன்பாடு அவன் வராவிடின் கிடையாது. - எதிர்மறை. 2. ஏவல் எ-டு : கேள், கொடுப்பார். 3. ஒழிய என்னும் சொல்லொடுகூடிய எதிர்கால வினையெச்சம் எ-டு : இவ் வேலையை முடித்தாலொழிய உனக்குக் கூலி கிடையாது. இவ்வகை என்றும் எதிர்மறையே குறிக்கும். 4. காலப்பெயரோடும் இடப்பெயரோடும் கூடிய பெயரெச்சம் எ-டு : அவர் இங்கு வரும் பக்கத்தில், ஆயிரம் உருபா வேண்டுமாயினும் தருகின்றேன். அவர் இங்கு வரும்போது கொடுப்பேன். 5. வினையாலணையும் பெயர் எ-டு : படித்தவன் தேறுகின்றான். போனவனுக்குக் கிடைக்கின்றது. 6. வினாச்சொல்லும் அப்படியானால் என்னும் இணைப்புச் சொல்லும் எ-டு : நீயும் அவர்களில் ஒருவனா? அப்படியானால் இங்கே இராதே. நீ எதிர்க் கட்சிக் கூட்டத்திற்குப் போனாயா? அப்படியானால் உனக்கு வேலையில்லை, போ. 7. ஆனால், எனில் முதலிய சொற்களில் ஒன்றோடுகூடிய பெயரும் வினைமுற்றும் எ-டு : நீ இந்தக் கடிதத்தைப் படித்தாயானால் உனக்கு உண்மை விளங்கும். அது புலியானால் என் செய்வோம்? வரப்போகிற கல்வியமைச்சர் தமிழரானால் தமிழுக்கு ஆக்கம் உண்டாகும். 8. ஆய் என்னும் விகுதியோடும், இருந்தால் என்னும் சொல்லோடும் கூடிய துவ்விகுதித் தொழிற்பெயர், எ-டு : அவர் வருகிறதாயிருந்தால் சொல், வண்டியனுப்புகின்றேன். 9. வினைமுற்று எ-டு : அவன் அங்குப் போனான், செத்தான். இப் பொருளில் பெரும்பாலும் இறந்தகால வினைமுற்றும் சிறுபான்மை நிகழ்கால வினைமுற்றும் வரும்; எதிர்கால வினைமுற்று வரவே வராது. இப் பொருளில் வரும் வினைமுற்றை ஒலிக்கும்போது குரல் வேறுபடும். 10. முற்றுப்பயனிலையும் என்று வைத்துக்கொள் என்னும் தொடரும் இதில், வைத்துக்கொள் என்னும் ஏவற்குப் பதிலாக வைத்துக்கொள்வோம் என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றும், வைத்துக்கொண்டால் என்னும் எதிர்கால வினையெச்ச மும் வரும். எ-டு: இன்றைக்குத் திடுமென்று உண்ணோட்டகர் (Inspector) வந்துவிட்டார் என்று வைத்துக்கொள் (வைத்துக்கொள்வோம்); அப்போது எப்படிக் கணக்குக் காட்டுகிறது? 11. முற்றுப்பயனிலையும் அப்போது அல்லது அப்படியானால்என்னும் சொல்லும் எ-டு : ஐயா, இன்றைக்கு மழையே வந்துவிட்டது, அப்போது இவற்றையெல்லாம் எப்படி அள்ளுவது? நீ ஒரு சிறு பையன்; அப்படியானால் என்ன செய்வாய்? 12. இறந்தகால வினையெச்சம் எ-டு : படித்துத் தேறவேண்டும் = படித்தால் தேறலாம். 13. நிகழ்கால வினையெச்சம் எ-டு : வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்; நெல்லுயரக் குடியுயரும்; குடியுயரக் கோனுயரும்; கோனுயரக் கோலுயரும். 14. செய்யவேண்டும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று எ-டு : தேடவேண்டும்; தின்னவேண்டும். படிக்கவேண்டும், தேறவேண்டும். தேடினால் தின்னலாம், படித்தால் தேறலாம் என்பது இவற்றின் பொருள். வைத்துக்கொள்வு அல்லது இணக்கம் உணர்த்தப்பெறும் வகைகள் 1. உம்மீறு பெற்ற இறந்தகால வினையெச்சம் எ-டு : இவ்வூருக்கு வந்தும் என்னைப் பாராது போயிருக்கின்றான். நான் பலமுறை சொல்லியும், அவன் கேட்கவில்லை. 2. உம்மீறு பெற்ற எதிர்கால வினையெச்சம் எ-டு : ஆயிரம் உருபா கொடுத்தாலும் அவன் இதற்கு இணங்கமாட்டான். பால் புளிப்பினும் பகல் இருளினும் நீ இவளைக் கைவிடல் கூடாது. உன் பெற்றோர் உன்னைக் காவாவிட்டாலும், நான் உன்னைக் காப்பேன். 3. போதிலும் என்னும் சொல்லோடு கூடிய இறந்தகாலப் பெயரெச்சம் எ-டு : அவன் உன்னைத் தடுத்தபோதிலும், உன் வாக்கை மாற்றக் கூடாது. 4. ஏவல் வினை எ-டு : நீ ஆயிரம் சொல், அவன் கேட்கமாட்டான். 5. ஏவல் வினையும் ஆனாலும் என்னும் சொல்லும் எ-டு : நீ ஆயிரம் சொல்; ஆனாலும் அவன் கேட்கமாட்டான். 6. முன்னிலை வினைமுற்று எ-டு : நீ ஆயிரம் சொன்னாய்; அவன் கேட்கமாட்டான். 7. முன்னிலை வினைமுற்றும் ஆனாலும் என்னும் சொல்லும் எ-டு : நீ ஆயிரம் சொன்னாய், ஆனாலும் அவன் கேட்கமாட்டான். 8. வினைமுற்றும், ஆனாலும் ஆனபோதிலும் இருந்தாலும் இருந்த போதிலும் என்றாலும் என்றபோதும் என்னும் சொற்களில் ஒன்றும் எ-டு : அவன் உன் பொருளைத் திருடியேவிட்டான். ஆனாலும் இப்படி முரட்டுத்தனமாய் அடிக்கலாமா? அவன் ஒரு கொலைகாரன்தான்; ஆனாலும் அவனைத் திருத்தக் கூடாதா? 9. வினைமுற்றும் என்று வைத்துக்கொண்டாலும் என்னும் தொடரும் எ-டு: அவன் திருடன் என்று வைத்துக்கொண்டாலும், நமக் கொரு தீங்கும் செய்யவில்லையே! நிரப்பிய வடிவுகள் (The Different Forms of Complement) நிரப்பியம் பின்வருமாறு பல வடிவுகொள்ளும்: 1. பெயர்ச்சொல் எ-டு : இன்று இருட்டாயிற்று. 2. வேற்றுமையேற்ற பெயர் எ-டு : மாட்சிமை தங்கிய 6ஆம் சியார்சு மன்னர் 19ஆம் அகவையில் பட்டத்திற்கு வந்தார். 3. வினைமுற்று எ-டு : இன்று மழை வரும் போலும். 4. வினையெச்சம் எ-டு : படம் நன்றாயிருக்கிறது. 5. இடைச்சொல் எ-டு : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும். காலம் பார்த்துச் செய்பவருக்கு ஞாலங் கொள்வதும் தஞ்சம் ஆகும். தஞ்சம் = எளிமை. 6. உரிச்சொல் எ-டு : இதில் ஐந்துக்கு மூன்று பழுதாகும். 7. தொடர்மொழி எ-டு :மேன்மை தங்கிய பெருமகனார் சக்கரவர்த்தி அரச கோபாலாச்சாரியார் 1948ஆம் ஆண்டில் இந்தியப் பதிலரையர் (Viceroy ) ஆனார். குறிப்பு : ஒரே சொல் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு பொருள்படலாம். பொருள் நோக்கி நிரப்பியத்தைக் கண்டுபிடித்தல் வேண்டும். நேரம் ஆய்விட்டது என்னும் தொடரில், ஆய்விட்டது என்பது, வந்துவிட்டது என்றாவது சென்றுவிட்டது என்றாவது முடிந்துவிட்டது என்றாவது பொருள்படும் வினைமுற்று; நேரம் என்பது எழுவாய். இன்று இருட்டாய்விட்டது என்னும் தொடரில் இருட்டாய்விட்டது என்பது இருட்டாக மாறிவிட்டது என்று பொருள்படும் தொடர்மொழி. இதில், இன்று எழுவாய்; ஆய்விட்டது பயனிலை; இருட்டு நிரப்பியம். துணைவினைகளை யடுத்துவரும் பிறசொற்களை நிரப்பிய மென்று மயங்குதல் கூடாது. எ-டு : குடியிரு, எடுத்துவிடு. இவற்றில், இரு எடு என்பன துணைவினைகள். பயிற்சி பின்வரும் வாக்கியங்களிலுள்ள மூவகை யடைகளையும் நிரப்பியங்களையும் எடுத்தெழுதி, அவற்றுள் ஒவ்வொன்றும் இன்னின்ன வகையென்று குறிப்பிடுக: (1) அண்மையில் வந்த வெள்ளத்தினால், மேடு பள்ள மாயிற்று; பள்ளம் மேடாயிற்று. (2) முதல் குலோத்துங்கன் பொருதே முடிசூட முடிந்தது. (3) இவர் போனமாதம் சாகப் பிழைக்கக் கிடந்தார். (4) கண்கட்டி வித்தைக்காரன் மணலைக் கடலையாக்குவான். (5) நாம் போய்க் கேட்பது நன்றாயிருக்காது. (6) அது மாடுபோல் தெரிகின்றது. (7) நேற்று மணி கீழே விழுந்து கணீர் என்று விட்டது. (8) இந்தியத் துணைத்தலைமை மந்திரியார் மதிதகு திருவாளர் படேல் அவர்கள் நாளை இங்கு வருவார்கள் போலும். (9) பெருமாள் ஆறுமாதமாகப் பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிறான். (10) கூத்தாளும் அவள் மூத்தாளும் அவள் ஆத்தாளும் பழையபடி குருடியர் ஆயினர். (11) சாப்பிடும்போது சம்மணங் கூட்டியிருத்தல் வேண்டும். (12) நீ சொன்னபடியெல்லாம் செய்தற்கு நான் உன் அடிமையல்லேன். (13) நேற்று நடந்த கலகத்தினால், எல்லாரையும் புகைவண்டி நிலையத்திற்குள்ளே சீட்டில்லாமல் விட்டுவிட்டார்கள். (14) முதலாம் இராசராசன் கி.பி. 985ஆம் ஆண்டில் அரியணை யேறினான். (15) கண்டறிவதைக் கண்டறியவும் கேட்டறிவதைக் கேட் டறியவும் வேண்டும். (16) இந்தப் பெட்டி ஒருபுறம் சரிந்திருக்கிறது. (17) அவர் இரத்தினம் பிள்ளை யல்லர். (18) இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால், இங்கே இருக்கிறவர் கதி என்னாகும்? (19) அவர் இப்போது ஆசிரியராயில்லை; கணக்கரா யிருக்கிறார். (20) கிளி கீச்சுக் கீச்சென்கிறது. (21) முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? (22) ஆளைப் பார்த்தால் மலைபோலிருக்கிறான். (23) பலகணிகளை யெல்லாம் திறந்துவிட்டால் இவ்விடம் வெளிச்சமாகும். (24) அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா? (25) அமரிக்கை ஆயிரம் பெறும். 15. வாக்கிய ஒன்றுசேர்ப்பு (Synthesis of Sentences) பல தனி வாக்கியங்களை, ஒரு தனி வாக்கியமாகவேனும், ஒரு கூட்டு வாக்கியமாகவேனும், ஒரு கலப்பு வாக்கியமாகவேனும், ஒரு கதம்ப வாக்கியமாகவேனும், ஒன்றுசேர்ப்பது வாக்கிய ஒன்று சேர்ப்பு ஆகும். பல தனி வாக்கியங்களை ஒரு தனி வாக்கியமாக்கும் வழிகள் 1. வினைமுற்றை வினையெச்ச மாக்கல் எ-டு : அரங்கன் பல வீடுகள் கட்டினான். அவற்றை அவன் வாடகைக்கு விட்டான். அவன் ஏராளமாய்ப் பணம் சேர்த்தான். அரங்கன் பல வீடுகள் கட்டி அவற்றை வாடகைக்கு விட்டு ஏராளமாய்ப் பணம் சேர்த்தான். அவன் இங்கு வருவான். அதை அவன் விரும்புகிறான். அவன் இங்கு வர விரும்புகிறான். மல்லிகை மலரும். அது அன்று மணம் தரும். மல்லிகை மலரின் மணம் தரும். கந்தன் வந்தான். அவன் உடனே திரும்பினான் கந்தன் வந்தவுடனே திரும்பினான். அவன் நன்றாய்ப் படித்தான். அவன் தேறவில்லை. அவன் நன்றாய்ப் படித்தும் தேறவில்லை. அரசன் உறங்குவான். அவன் அன்றும் உலகைக் காக்கிறான். அரசன் உறங்கும்போதும் உலகைக் காக்கிறான். 2. வினைமுற்றைப் பெயரெச்சமாக்கல் எ-டு : மயில் ஒருவகைப் பறவை. அது மிக அழகானது. மயில் மிக அழகான பறவை. பிள்ளை தூங்குகிறது. அதை எழுப்பக்கூடாது. தூங்குகிற பிள்ளையை எழுப்பக்கூடாது. 3. வினைமுற்றைத் தொழிற்பெயராக்கல் எ-டு : இந்நகர வணிகரெல்லாரும் இன்று கடை யடைத்தார்கள் அவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். இந்நகர வணிகரெல்லாரும் இன்று கடையடைப்பால் தங்கள் வருத்தத்ததைத் தெரிவித்தார்கள். வழிச்செலவு முடிந்தது. கதிரவன் மறைந்தான். வழிச்செலவு (வழிச்செலவின்) முடிவில் கதிரவன் மறைந்தான். 4. வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கல் எ-டு : பந்தயத்தில் ஒருவன் முந்திவருவான். அவனுக்குப் பரிசு கிடைக்கும். பந்தயத்தில் முந்தி வருகிறவனுக்குப் பரிசு கிடைக்கும். 5. ஒரு அல்லது பல வாக்கியத்தைப் பெயரொட்டாக்கல் எ-டு : பாண்டித்துரைத்தேவர் இற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். அவர் பாற்கர சேதுபதியின் தமையனார். பாற்கர சேதுபதியின் தமையனார் பாண்டித்துரைத் தேவர் இற்றை மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார். 6. ஒரு வாக்கியத்தை அடைமொழி அல்லது பின்னொட்டாக்கல் எ-டு : நாராயணசாமி ஐயர் நற்றிணையை வெளியிட்டார். அவர் பின்னத்தூரார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணையை வெளியிட்டார். தாசுமகாலைக் கட்டின சிற்பியின் கண் பிடுங்கப்பட்டது. இங்ஙனம் மக்கள் சொல்லுகிறார்கள். தாசுமகாலைக் கட்டின சிற்பியின் கண் பிடுங்கப்பட்டதாம். 7. ஒன்றுக்கு மேற்பட்ட வினைமுற்றை விலக்கல் எ-டு : நேற்றிரவு என் தோட்டத்தில் ஒரு திருடன் ஒளிந்து கொண் டிருந்தான். அவன் துப்பாக்கி வைத்திருந்தான். நேற்றிரவு என் தோட்டத்தில் ஒரு திருடன் துப்பாக்கியுடன் x˪Jbfh©oUªjh‹. 8. அடுக்கிணைப்புச் சொல்லால் சொற்களை இணைத்தல் குறிப்பு : இவ் வகைக்குரிய வாக்கியங்கள் வினைப்பயனிலை கொண்டிருப்பின், அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வினை விலக்கப்படும். எ-டு : ஓரி ஒரு கொடையாளி. அவன் ஒரு வில்லாளி. அவன் ஓர் அறிஞன். அவன் ஒரு தமிழரசன். ஓரி ஒரு கொடையாளியும் வில்லாளியும் அறிஞனுமான தமிழரசன். கிளிமூக்கு வளைந்திருக்கும். அது கூராயிருக்கும். அது சிவப்பாயிருக்கும். கிளிமூக்கு வளைந்தும் கூராயும் சிவப்பாயும் இருக்கும். இனி, மேற்கூறிய வகைகளுள் பலவற்றை ஒருங்கே கையாண்டும், பல தனிவாக்கியங்களை ஒரு தனிவாக்கிய மாக்கலாம். எ-டு : நாகப்பன் கோட்டூரில் பிறந்தவன். அவன் இங்கிலாந்திற்குச் சென்றான். அவன் அங்குக் கல்வி கற்றான். அவன் தேறவில்லை. அவன் இங்குத் திரும்பிவந்தான். கோட்டூர் நாகப்பன் இங்கிலாந்திற்குச் சென்று கற்றும் தேறாமல் இங்குத் திரும்பிவந்தான். பயிற்சி 1 வினைமுற்றை வினையெச்சமாக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) பாண்டவர் சூதாடினார். அவர் தம் நாட்டை இழந்தார். அவர் காட்டிற்குச் சென்றார். (2) சம்புலிங்கம் ஈயாத செல்வரைக் கொள்ளையடித்தார். அவர் ஏழைகட்குக் கொடுத்தார். அவர் பெயர் பெற்றார். (3) ஆல்பிரடு நோபெல் ஒரு வெடிமருந்தைக் கண்டுபிடித் தார். அவர் பெரும்பொருள் ஈட்டினார். அவர் ஓர் உலகப் பெரும்பரிசு நிறுவினார். (4) மாணவர் திருத்தமாகப் பேசவும் எழுதவும் வேண்டும். அவர் அதற்கு இலக்கணம் கற்க வேண்டும். (5) யானை மதம் படலாம். அது அன்று பாகனுக்கு அடங்காது. அது அவனைக் கொல்லும். (6) சேரமான்பெருமாள் நாயனார் யானை யேறினார். அவர் கயிலை சென்றார். (7) நாளை நான் வானொலியிற் பேசவேண்டியிருக்கின்றது. நான் அதற்குத் திருச்சிராப்பள்ளி செல்லவேண்டும். (8) நண்டு கொழுக்கும். அது அதன்பின் வளையிலிராது. பயிற்சி 2 வினைமுற்றைப் பெயரெச்சமாக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை ஒவ்வொரு தனிவாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) கனவிற் பணம் காணப்பட்டது. அது கைக்குதவுமா? (2) உயிர் போனது. அது திரும்பி வராது. (3) ஓலை வற்றினது. அது சலசலக்கும். (4) அவனுக்கு ஒரு துன்பம் வந்தது. அவன் அதை எதிர் பார்க்கவில்லை. (5) முயல் ஓடிப்போனது. அது பெரிய முயல். (6) நேற்று ஒரு கூட்டம் நடந்தது. அது மிகப் பெரியது. (7) ஒருவகை வேங்கை பாயாது. அது ஒருவகை மரம். (8) ஒரு மாடு துள்ளுகிறது. அது பொதி சுமக்கும். பயிற்சி 3 வினைமுற்றைத் தொழிற்பெயராக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனிவாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) கம்பர் விருத்தம் பாடினார். அவர் அதில் தேர்ச்சி பெற்றார். (2) ஒவ்வொருவரும் உண்மை பேச வேண்டும். ஒவ்வொருவரும் அதையே விரும்பவேண்டும். (3) வள்ளுவர் ஓருயிரையும் கொல்லவில்லை. அவர் அதை வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். (4) உயிர்கள் இறக்கும். அதை அவை தடுக்கமுடியாது. (5) வெள்ளாடு கருவேலங்காய் தின்னும். அது அதனால் கொழுக்கும். (6) மாணவர் ஒழுங்காய்ப் படிக்கவேண்டும். அவர் ஒழுங்காய் நடக்கவேண்டும். அவர் இவற்றால் முன்னேறலாம். (7) தலைமாணவன் தன் பாடங்களை ஒழுங்காய்ப் படிப்பான். அவன் அதில் கண்ணுங்கருத்துமா யிருப்பான். (8) சர் ஏ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் சொற்பொழி வாற்றுவார். அவர் அதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பயிற்சி 4 வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) அவன் நேற்றுப் பிறந்தான். அவனுக்கு என்ன தெரியும்? (2) அங்கு ஒருவர் போகிறார். அவர் யார்? (3) சிலர் உழுதுண்டு வாழ்வார். அவரே வாழ்வார். (4) ஒருவன் போன காரியத்தை நினைக்கிறான். அவன் புத்திகெட்டவன். (5) ஒருவன் அலைகடலில் முழுகுகிறான். அவனுக்கு ஆற்றில் முழுகுவது அரிதா? (6) துணிந்தவன் எவன்? அவனுக்குத் துக்கமில்லை. (7) நலிந்தோர் யார்? அவருக்கு நாளும் கிழமையும் இல்லை. (8) இக் கனிகளுள் ஒன்று இனியது. அது எனக்கு. பயிற்சி 5 ஓர் அல்லது பல வாக்கியத்தை அல்லது வாக்கியப் பகுதியைப் பெயரொட்டாக்கும் வகையால், கீழ்வரும் தனி வாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனிவாக்கிய மாகச் சேர்த்தெழுதுக : (1) அ. இராமசாமிக் கவுண்டர் சேலங் கல்லூரித் தலைவரா யிருந்தார். அவர் பல்கலை வல்லார். (2) பிரகத்தன் ஓர் ஆரிய வரசன். அவனுக்குத் தமிழறி வுறுத்தற்குக் கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார். (3) செங்குட்டுவன் ஒரு சேரன். அவன் இந்தியா முழுவதையும் தன் அடிப்படுத்தினான். (4) மதுரையில் ஒரு கணக்காயனார் இருந்தார். அவருக்கு ஒரு மகனார் இருந்தார். அவர் பெயர் நக்கீரனார். அவர் திரு முருகாற்றுப்படையை இயற்றினார். (5) மனோன்மணீயத்தை இயற்றினவர் சுந்தரம் பிள்ளை. அவர் திருவாங்கூர் அரசர் கல்லூரியில் மெய்ப்பொருள்நூற் பேராசிரியரா யிருந்தார். (6) உ.வே. சாமிநாதையர் பழைய ஏட்டுச் சுவடிகளை அரும் பாடுபட்டச்சிட்டுத் தமிழுக்கு ஒப்புயர்வற்ற தொண் டாற்றினார். அவர் மகா மகோபாத்தியாயர், தாட்சி ணாத்திய கலாநிதி,டாக்டர் என்னும் பட்டங்களைப் பெற்றார். (7) திருவள்ளுவர் ஒரு தெய்வப் புலவர். அவர் காலம் கிறித்துவுக்கு முற்பட்டது. (8) இற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவினவர் பாண்டித் துரைத் தேவர். அவர் பாலைவனத்தம் வேள் (சமீந்தார்). பயிற்சி 6 ஒரு வாக்கியத்தை அல்லது அதன் பகுதியை அடைமொழி யாகச் சுருக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனிவாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) நாயனாப் பிள்ளை காஞ்சிபுரத்தார். அவருடைய தலைமை மாணவர் சுப்பிரமணியப் பிள்ளை. அவர் சித்தூரார். (2) சுந்தரம்பிள்ளை நன்றாய்ப் பாடுவார். அவர் பைரவி பாடுவதிற் சிறந்தவர். (3) கோவிந்தன் கோடையிடிபோல் தபேலா அடிப்பான். அவன் உறையூரான். (4) வீராசாமிச் செட்டியார் ஒரு சிறந்த புலவர். அவர் எண் கவனம் (அஷ்டாவதானம்) பயின்றவர். (5) குப்புசாமிப் புலவர் சென்னைக் குசப்பேட்டையில் வாழ்ந்தவர். அவர் திருக்குறள் அறிவைப் பரப்பினார். (6) அப்பாத்துரை ஆச்சாரியார் தேவாரம் பாடுவதிற் பெயர் பெற்றவர். அவர் மகனார் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார். (7) உதியஞ்சேரலாதன் பாரதப் போர்ப்படைகட்குப் பெருஞ் சோறு வழங்கினான். அவனை முடிநாகராயர் பாடினார். (8) பரணர் என்று பலர் இருந்தனர். அவருள் ஒருவர் நெடுங்கழுத்தை யுடையவரா யிருந்தார். அவர் புறநானூற் றைப் பாடிய புலவருள் ஒருவர். பயிற்சி 7 ஒன்றுக்கு மேற்பட்ட வினைமுற்றுகளை விலக்கும் வகை யால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) ஞாலம் (பூமி) சுழன்றுகொண்டே யிருக்கிறது. அது கதிரவனைச் சுற்றிவருகின்றது. (2) ஏர்க்காட்டில் ஒரு செடி இருக்கிறது. அது பன்னீராண் டிற்கொரு முறைதான் பூக்கும். (3) யானை போகிறது. அது ஆடியாடிப் போகிறது. (4) ஒருவன் தன் வேலையைச் செய்யவேண்டும். அவன் அதைச் செவ்வையாய்ச் செய்யவேண்டும். (5) யானை மலையில் வாழும். அது அங்கு கூட்டங் கூட்டமா யிருக்கும். (6) சென்னையில் பெருந்துத்தனார் (லம்போதரர்) என்ற ஓர் இசைவாணர் இருக்கின்றார். அவர் நன்றாய்ப் பாடுகின்றார். (7) சேலம் பண்டகர் (டாக்டர்) ராஜாராம் சிறந்த மருந்து கொடுப்பார். அவர் அதைக் கனிந்த வுள்ளத்துடன் கொடுப்பார். (8) இவ் வேலை என்னால் முடியும். அது ஒருவாரம் பொறுத்துத் தான் முடியும். பயிற்சி 8 அடுக்கிணைப்புச் சொல்லால் சொற்களை இணைக்கும் வகையால், கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) கற்பகப்பறவை பல வடிவாயிருக்கும். அது பல வண்ணமா யிருக்கும். அது பல அளவாயிருக்கும். அது மிக அழகா யிருக்கும். (2) திருவாளர் பாரதிதாசன் நன்றாய்ச் செய்யுளியற்றுவார். திருவாளர் தேசிகவிநாயகம் பிள்ளை நன்றாய்ச் செய்யு ளியற்றுவார். திருவாளர் இராமலிங்கம்பிள்ளை நன்றாய்ச் செய்யுளியற்றுவார். (3) இராவ்சாகிபு இரத்தினசாமிப் பிள்ளை கூட்டத்திற்கு வந்திருந்தார். டாக்டர் வரதராஜலு நாயுடு கூட்டத்திற்கு வந்திருந்தார். (4) அ. இராமசாமிக் கவுண்டர் ஒரு நூலாசிரியர். அவர் ஒரு நூலாசிரியர் (போதகாசிரியர்). அவர் ஓர் உரையாசிரியர். அவர் ஒரு சிறந்த அறிஞர். (5) தந்தை தன் குடும்பத்தார்க்குத் தெய்வம். அவன் அவர்க்கு அரசன். அவன் அவர்க்கு ஆசிரியன். அவன் அவர்க்கு நெருங்கிய உறவினன். (6) ஓய்மான் நல்லியக்கோடன் இரவலர்க்கு உணவளித்தான். அவன் அவர்க்கு உடையளித்தான். அவன் அவர்க்கு உடமையளித்தான். அவன் அவர்க்கு ஊர்தியளித்தான். (7) ஆலைத்துணி மெல்லியதாயிருக்கும். அது உறுதியாயிருக் கும். அது அழகாயிருக்கும். அது விலைகுறை வாயிருக்கும். அது நல்ல பொருள். (8) படங்கு ஒருவகைப் புறா. கரணன் (லோட்டின்) ஒருவகைப் புறா. முக்காட்டான் (கன்னியாஸ்திரீ) ஒருவகைப் புறா. விசிறிவாலி (லக்கா) ஒருவகைப் புறா. புக்கா ஒருவகைப் புறா. குமுறி ஒருவகைப் புறா. சுவரொட்டி ஒருவகைப் புறா. வானீலி (ஷாப்ஜா) ஒருவகைப் புறா. செம்புகரி (ஷீராஜ்) ஒருவகைப் புறா. காடன் (ஜங்கலீ) ஒருவகைப் புறா. திரிவான் (ரோமர்) ஒருவகைப் புறா. கொண்டையன் ஒருவகைப் புறா. தென்கண்டத்தான் (ஆஸ்திரேலியன்) ஒருவகைப் புறா. பயிற்சி 9 மேற்காட்டிய பல முறைகளை ஒருங்கே கையாண்டு, கீழ்வரும் தனி வாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை ஒவ்வொரு தனி வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) கொல்லிமலையில் ஒரு செடி உள்ளது. அது ஆட்காட்டி எனப்படும். அது ஆள்வரவைக் காட்டும். (2) காந்தியின் பெயரால் ஒரு முட்செடி இருக்கின்றது. அது புதிதாய் முளைத்தது. அது காலில் மிகுதியாய்த் தைக்கும். (3) வீட்டு விலங்குகளுள் சில அமைதியானவை. அவற்றுள் ஒன்று ஆவு. அது மாந்தருக்கு மிகப் பயன்படுவது. (4) திருமான் சிவசங்கர முதலியார் கன்னஞ்குறிச்சி வேள். அவரின் உறவினர் பண்டகர் (டாக்டர்) நமச்சிவாயம். அவர் மேகநோய் மருத்துவத் திறவோர். அவர் குடியிருப்பது சூரமங்கலம். (5) சென்னை மாகாணத்தில் முதலமைச்சராயிருந்த (Premier) முதல் இந்தியர் இராமசாமியார். அவர் ஓமந்தூரார். அவர் இரெட்டியார் குலத்தினர். அவர் சிறந்த ஒழுக்க முள்ளவர். அவர் கட்டொழுங்குடையவர். (6) சூயசு கால்வாயை டீலெசெப்சு வெட்டினார். அவர் பிரெஞ்சுக்காரர். அவர் பெருந்திறவோர். (7) முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டினான். அவன் அதற்குப் பத்துகல் தொலைவு சாரம் அமைத்திருந்தான். இங்ஙனம் மக்கள் கூறுகின்றனர். (8) அறிவியல்நூல் ஒரு மறை. இசைநூல் ஒரு மறை. மருத்துவ நூல் ஒரு மறை. பிற கலைநூல்களும் மறைகள். இது தேற்றம். வாக்கிய ஒன்றுசேர்ப்பு (தொடர்ச்சி) பல தனி வாக்கியங்களை ஒரு கூட்டு வாக்கியமாக்கும் வழிகள்: கூட்டு வாக்கியங்களிலுள்ள இணைப்புச் சொற்கள், (1) அடுக்கிணைப்புச் சொல், (2) மறுப்பிணைப்புச் சொல், (3) மறுநிலை யிணைப்புச் சொல், (4) முடிபிணைப்புச் சொல் என நால்வகைப்படுமென்று முன்னர்க் கண்டோம். அவற்றுள் ஒரு வகையைக்கொண்டு, பல தனிவாக்கியங்களை ஒரு கூட்டு வாக்கியமாக்கலாம். அடுக்கிணைப்புச் சொல் எ-டு : (1) மாதவி ஆடலில் வல்லவள். அவள் பாடலில் வல்லவள். மாதவி ஆடலிலும் வள்ளவள்; பாடலிலும் வல்லவள். சர் ஆ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் நன்றாய்ப் பேசுவார். அவர் ஆங்கிலத்தில் நன்றாய் எழுதுவார். சர் ஆ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் நன்றாய்ப் பேசவும் செய்வர்; எழுதவும் செய்வர். (2) தென்மொழி மக்கள் மொழி. வடமொழி மக்கள் மொழி. தென்மொழியும் மக்கள் மொழி; வடமொழியும் மக்கள் மொழி. மக்கள் மொழி தென்மொழி மட்டுமன்று; வடமொழியு மாகும். (3) திருமான் கோ. துரைச்சாமி நாயுடு இயந்திரப் புனைவு வல்லார். அவர் சிறந்த செல்வர். திருமான் கோ. துரைச்சாமி நாயுடு இயந்திரப் புனைவு வல்லார்; அதோடு, சிறந்த செல்வர். (4) பிள்ளைகளைப் புறக்கணிப்பார் சிலர். அவர்களை விற்பார் உளர். பிள்ளைகளைப் புறக்கணிப்பார் சிலர்; இனி, அவர்களை விற்பாரும் உளர். மறுப்பிணைப்புச் சொல் (1) விநோதரச மஞ்சரி மாணவர்க்கு நல்ல புத்தகம். அதில் வடசொற்கள் மிகுதியாக வுள. விநோதரச மஞ்சரி மாணவர்க்கு நல்ல புத்தகம்; ஆனால், அதில் வடசொற்கள் மிகுதியாக வுள. (2) உண்மையான நண்பர் சொற்கள் கடுமையா யிருக்கலாம். அவற்றில் அன்பு கலந்திருக்கும். உண்மையான நண்பர் சொற்கள் கடுமையா யிருக்கலாம்; ஆனாலும், அவற்றில் அன்பு கலந்திருக்கும். (3) அவன் என்னுடைய வேலைக்காரன்தான். நான் அவனை மதிப்பாய் நடத்துகிறேன். அவன் என்னுடைய வேலைக்காரன்தான்; இருந்தா லும், நான் அவனை மதிப்பாய் நடத்துகிறேன். துணி நல்லதுதான். அதற்கு இவ்வளவு விலையா? துணி நல்லதுதான்; இருந்தாற்கூட, அதற்கு இவ்வளவு விலையா? மறுநிலை யிணைப்புச் சொல் (1) நீ படிக்கவேண்டும். நீ எழுதவேண்டும். நீ இவ்விரண்டிலொன்று செய்யவேண்டும். நீ படிக்கவேண்டும்; அல்லது எழுதவேண்டும். (2) ஆள்வேண்டும். பொருள்வேண்டும் இவ் விரண்டில் முன்னது நல்லது . ஆள்வேண்டும்; இல்லாவிட்டால் பொருளாவது வேண்டும். (3) நீ போகவேண்டும். நான் போகவேண்டும். நம்மிருவருள் ஒருவர் போகவேண்டும். ஒன்று நீ போகவேண்டும்; இல்லாவிட்டால் நான் போக வேண்டும். (அல்லது) நீ போகவேண்டும், ஒன்று; இல்லாவிட்டால் நான் போக வேண்டும், ஒன்று. (அல்லது) நீயாவது போகவேண்டும்; அல்லது நானாவது போக வேண்டும். (4) இங்கிலாந்திற்குக் கப்பலிற் செல்லலாம். அவ்விடத்திற்கு வானூர்தியிற் செல்லலாம். இங்கிலாந்திற்குக் கப்பலிலும் செல்லலாம்; வானூர்தி யிலும் செல்லலாம். (5) நோயாளி மருந்துண்ணவேண்டும். அவன் பிழைக்க மாட்டான். நோயாளி மருந்துண்ணவேண்டும்; இல்லாவிட்டால் பிழைக்கமாட்டான். முடிபிணைப்புச் சொல் (1) இன்று மழை வரும். கூட்டத்தை முந்தி முடிக்க வேண்டும். இன்று மழை வரும்; ஆகையால், கூட்டத்தை முந்தி முடிக்க வேண்டும். (2) அவனுக்குக் காலில் முள் தைத்திருக்கிறது. அவனுக்கு நடக்க முடியவில்லை. அவனுக்குக் காலில் முள் தைத்திருக்கிறது; அதனால், அவனுக்கு நடக்க முடியவில்லை. (3) இருட்டில் விளக்கோடு செல்லவேண்டும். பூச்சி பொட்டை இருக்கும். இருட்டில் விளக்கோடு செல்லவேண்டும்; ஏனென்றால், பூச்சி பொட்டை யிருக்கும். (4) மருதவாணனுக்கு வீடு இருக்கிறது. அவனுக்கு நிலம் இருக்கிறது. அவனுக்கு வட்டிப்பணம் வருகிறது. அவனுக்கு மாதச் சம்பளம் உண்டு. அவனுக்கு ஒரு குறைவும் இல்லை. மருதவாணனுக்கு வீடு இருக்கிறது; நிலம் இருக்கிறது; வட்டிப்பணம் வருகிறது; மாதச் சம்பளம் உண்டு; ஆகவே, ஒரு குறைவும் இல்லை. (5) பிஞ்சு ஐந்து. காய் எட்டு. பழம் பத்து. அழுகல் ஏழு. அவை மொத்தம் முப்பது. பிஞ்சு ஐந்து; காய் எட்டு; பழம் பத்து; அழுகல் ஏழு; ஆக, மொத்தம் முப்பது. குறிப்பு : (1) ஒரே எழுவாய்க்குரிய ஒரே வினையான பல பயனிலைகளை ஒரு பயனிலையாகச் சுருக்கின், பல தனிவாக்கியங்களும் ஒரு கூட்டு வாக்கியமும் ஒரு தனிவாக்கியமாக மாறிவிடும். எ-டு : மாதவி ஆடலில் வல்லவள். அவள் பாடலில் வல்லவள். - பல தனி வாக்கியம். மாதவி ஆடலிலும் வல்லவள்; பாடலிலும் வல்லவள். - ஒரு கூட்டு வாக்கியம். மாதவி ஆடலிலும் பாடலிலும் வல்லவள். - ஒரு தனி வாக்கியம். (2) சில வாக்கியங்கள், ஒரு கூட்டு வாக்கியம் போன்றும், பல தனிவாக்கியங்கள் போன்றும், தோன்றும். உறவுடைப் பொருள் களைப்பற்றிக் கூறுமவற்றை ஒரு கூட்டு வாக்கியமாகவும், உறவிலாப் பொருள்களைப்பற்றிக் கூறுமவற்றைப் பல தனிவாக்கியங்களாக வும் கொள்ளலாம். எ-டு : சேரனுக்கு விற்கொடி; சோழனுக்குப் புலிக்கொடி; பாண்டியனுக்கு மீன்கொடி - ஒரு கூட்டு வாக்கியம். செயங்கொண்டார் முதற் குலோத்துங்கள் காலத்தவர்; ஒட்டக்கூத்தர் இரண்டாங் குலோத்துங்கன் காலத்தவர்; கம்பர் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவர் - ஒரு கூட்டு வாக்கியம். முருகனுக்குச் சேவற்கொடி. தருமனுக்கு முரசக் கொடி. உழவனுக்கு மேழிக்கொடி - பல தனி வாக்கியம். சீத்தலைச்சாத்தனார் செங்குட்டுவன் காலத்தவர். பொய்யாமொழிப் புலவர் வணங்காமுடிமாறன் காலத்தவர். சேக்கிழார் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவர் - பல தனி வாக்கியம். (3) அவனால், என்னும் காரணச்சொல், இரு கிளவியங்கட் கிடையில் தனித்தும் வரும்; முந்தின கிளவியத்தின் இறுதிச் சொல்லான தொழிற்பெயருடன் இணைந்தும் வரும். தனித்து வருவது கூட்டு வாக்கியம் என்றும், இணைந்து வருவது கலப்பு வாக்கியம் என்றும், அறிதல் வேண்டும். எ-டு : இன்று மழை வந்தது; அதனால் கூட்டமில்லை - கூட்டு வாக்கியம். இன்று மழை வந்ததனால் கூட்டமில்லை - கலப்பு வாக்கியம். பயிற்சி 1 கீழ்வரும் தனி வாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, அடுக்கிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) அம்பலவாணனுக்குத் தன்மதியில்லை. அவனுக்குச் சொன்மதியில்லை. (2) மக்கட்கு இன்னிசை விருப்பம். விலங்குகட்கு இன்னிசை விருப்பம். (3) இற்றிலருக்குப் பொருளாதார நெருக்கடி மிகுந்தது. அவருடைய படைகட்குள் ஒற்றுமை குலைந்தது. (4) மக்கட்கு உணவு வேண்டும். அவர்க்கு உழைப்பு வேண்டும். (5) பலர் பெற்றோரைப் பேணுவதில்லை. பெற்றோரைப் புடைப்பார் உளர். (6) நான் இதைச் செய்யவில்லை. நான் அன்று இவ்வூரி லில்லை. (7) குடிகாரனுக்குப் பொருள்கெடும். அவனுக்கு மானம் போகும். (8) குயில் கூவினது. வேட்டைக்காரன் அதைப் போன்று கூவினான். (9) காடாண்டவர் பாண்டவர். நாடாண்டவர் பாண்டவர். (10) இம் மரத்தில் கனியில்லை. இதில் காயில்லை. இதிற் பூவில்லை. இதில் இலையில்லை. (11) பல்லுயிரையும் படைக்கின்றவன் அவன். அவற்றைக் காக்கின்றவன் அவன். அவற்றை அழிக்கின்றவன் அவன். (12) காசுக்கிரண்டு குதிரைவேண்டும். அவை காற்றாய்ப் பறக்க வேண்டும். பயிற்சி 2 கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, மறுப்பிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) கண்ணையன் மதிநுட்பமுள்ளவன். அவன் சோம்பேறி. (2) சம்புலிங்கம் ஒரு கொள்ளைக்காரன். அவன் ஏழைகட்கு உதவினான். (3) ஆயிரம் வரலாம். இத்தனை ஆத்திரம் ஆகாது. (4) பொழுது இருட்டிவிட்டது. நடக்கவேண்டிய வழி தூரம். (5) செல்வன் உயர்ந்த உணவு உண்கின்றான். அவன் நலமாயில்லை. ஏழை தாழ்ந்த உணவு உண்கின்றான். அவன் நலமாயிருக்கின்றான். (6) வேலை மிகுதி. வேலையாள்கள் சிலர். (7) அவன் பெரிய குற்றவாளிதான். அவனை இப்படியா தண்டிக்கிறது? (8) அவன் மற்றோர்க்கு அரசன். அவன் பெற்றோர்க்குப் பிள்ளை. (9) பனைவித்துப் பெரியது. அதன் மரம் ஒருவர்க்குக்கூட நிழல் தராது. ஆலவித்துச் சிறியது. அதன் மரம் ஆயிரக் கணக்கானவர்க்கு நிழல்தரும். (10) பண்டைத்தமிழ்ப் புலவரும் வறியவர்தான். அவர் ஒழுக்கம் தவறியதில்லை. (11) மேல்நாட்டார் நாளும் வேளையும் பார்ப்பதில்லை. அவர் நீண்டநாள் வாழ்கின்றனர். (12) இந்தியர் மேனாட்டாருடன் இருநூற்றாண்டுகளாகப் பழகியுள்ளனர். மேனாட்டாருடைய ஒழுங்குமுறைகளை இந்தியர் கற்கவில்லை. பயிற்சி 3 கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, மறுநிலையிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) ஒருவனுக்குத் தன்மதி இருக்கவேண்டும். அவனுக்குச் சொன்மதி இருக்கவேண்டும். அவனுக்கு இவ் விரண்டி லொன்று இருக்கவேண்டும். (2) சென்னைக்குப் பழமலை (விருத்தாசலம்) வழியாகச் செல்லலாம். அவ்விடத்திற்குச் சோலார்பேட்டை வழியாகச் செல்லலாம். (3) குருடனுக்கு வெளிச்சமிருக்கலாம். அவனுக்கு இருட்டு இருக்கலாம். (4) மக்கட்குச் செல்வமிருக்கவேண்டும். அவர்கட்குக் கல்வி இருக்கவேண்டும். அவர்கட்கு இவ் விரண்டிலொன்று இருக்கவேண்டும். (5) நாடு கேள். ஐந்து நகரம் கேள். ஐந்து இல்லம் கேள். போர் கேள். வரிசையாய் இவற்றுள் ஒன்று கேள். (6) நான் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆசிரியர் அடிப்பார். (7) ஒரு வேலைபெறப் பரிந்துரை (சிபார்சு) வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அதற்கு இவ் விரண்டிலொன்று வேண்டும். (8) பத்து உருபா கொடு. ஐந்து உருபா கொடு. (9) நீ திருடனாயிருக்கவேண்டும். நான் பொய்யனாயிருக்க வேண்டும். இவ் விரண்டிலொன்று உண்மையா யிருக்க வேண்டும். (10) நான் நீண்ட விடுமுறை யெடுப்பேன். நான் வேலையை விட்டுவிடுவேன். நான் இவ் விரண்டிலொன்று செய்வேன். (11) நீ கட்டணத்தைப் பணவிடை (Money Order) செய்யலாம். நீ அதை நேரிற் செலுத்தலாம். (12) உன் கடனைப் பணமாகக் கொடு. அதைப் பண்டமாகக் கொடு. பயிற்சி 4 கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, முடிபிணைப்புச் சொல்லால் ஒவ்வொரு கூட்டு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) வேலைமிகுதி. நான் அங்கு வரமுடியவில்லை. (2) பொதுவியங்கியிற் (Bus -š) போகவேண்டா. அதில் வசதி குறைவு. (3) இன்றைக்கு நகைச்சுவையரசு கிருட்டிணன் கதையிசை (காலக்ஷேபம்). முந்திக்கொள்ள வேண்டும். இடம் கிடையாது. (4) திருவள்ளுவர் குரானை அறிந்திருக்க முடியாது. அவர் மகமது பிரானுக்குக் குறைந்தது ஏழு நூற்றாண்டிற்கு முற்பட்டவர். (5) ஆட்புகைவண்டியில் அதிகச் செலவாகும். பொருட்புகை வண்டியில் சரக்கை அனுப்பு. (6) திருவேங்கடம் செட்டியார் இருமூட்டை சுதைநீற்றைக் கள்ளவிலைக்கு விற்றுவிட்டார். அவர்மேல் மன்றத்தில் வழக்கு நடக்கின்றது. (சுதைநீறு - cement) (7) நேற்று அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைத் தலைவர் திருவாளர் மணவாளராமானுசம் எங்கள் கல்லூரி ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார். இன்று எங்கட்கு விடுமுறை. (8) கணக்கில் 30 வரையம் (Marks). ஆங்கிலத்தில் 40 வரையம். அறிவியலில் 45 வரையம். வரலாற்று நூலில் 35 வரையம். ஞாலநூலில் 22 வரையம். தமிழில் 28 வரையம். அவை மொத்தம் 200 வரையம். (ஞாலநூல் - Geography) (9) என் வேலைக்காரன் ஓடிப்போய்விட்டான். என் கடிகாரத்தைக் காணவில்லை. அவன் அதை எடுத்திருக்க வேண்டும். (10) அவர் ஆங்கிலேயரல்லர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. (11) சிறியார் உதவியும் பெரியார்க்கு வேண்டியிருக்கும். அவரை இகழக்கூடாது. (12) அது மடங்கல் (சிங்கம்) அன்று. அது கனைக்கின்றது. அது வேங்கையன்று. அதற்கு வரியில்லை. அது சிறுத்தையன்று. அதற்குப் புள்ளியில்லை. அது வேறொன்றாயிருக்கும். வாக்கிய ஒன்றுசேர்ப்பு (தொடர்ச்சி) பல தனிவாக்கியங்களை ஒரு கலப்பு வாக்கியமாக மாற்றும் வழிகள் பல தனிவாக்கியங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும், பெயர்க் கிளவியமாகவோ பெயரெச்சக் கிளவியமாகவோ வினையெச்சக் கிளவியமாகவோ மாற்றுவதால், அவற்றைக் கலப்பு வாக்கியமாக்கலாம். பெயர்க் கிளவியக் கலப்பு வாக்கியம் (1) ஒரு தனிவாக்கியத்தின்பின் என்பது அல்லது என்று என்னும் சொல்லைச் சேர்த்தல். எ-டு : நல்வாழ்க்கையே நற்சமயம். இது நல்ல கொள்கை. நல்வாழ்க்கையே நற்சமயம் என்பது நல்ல கொள்கை. இவ்வழி போகக்கூடாது. இது எனக்குத் தெரியாது. இவ்வழி போகக்கூடாது என்று எனக்குத் தெரியாது. (2) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைத் தொழிற் பெயராக்கல். எ-டு : நேற்றிரவு மழை பெய்தது. இது எல்லாருக்கும் தெரியும். நேற்றிரவு மழை பெய்தது எல்லாருக்கும் தெரியும். (3) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கல். எ-டு : பெரியோர் ஒன்று கொடுப்பார். அதைத் தட்டாமல் வாங்கவேண்டும். பெரியோர் கொடுப்பதைத் தட்டாமல் வாங்க வேண்டும். பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியம் ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைப் பெயரெச்சமாக்கு வதால், பல தனிவாக்கியங்களை ஒரு பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றலாம். எ-டு : செருமானியர் பல பொருள்கள் செய்கின்றனர். அவையெல்லாம் சிறந்தவை. செருமானியர் செய்கின்ற பொருள்களெல்லாம் சிறந்தவை வினையெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியம் (1) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை வினையெச்ச மாக்கல். எ-டு : மழை பெய்யும். பயிர் விளையும். மழை பெய்து பயிர் விளையும். (அல்லது) மழை பெய்யப் பயிர் விளையும். (அல்லது) மழை பெய்யின் பயிர் விளையும். தொலைவரி (தந்தி) வந்தது. செய்தி தெரிந்தது. தொலைவரி வந்து செய்தி தெரிந்தது. தென்னம்பிள்ளை வளர்ந்து பலன் தரும். அதற்கு எட்டாண்டு செல்லும். தென்னம்பிள்ளை வளர்ந்து பலன் தர எட்டாண்டு செல்லும். புத்தகம் கொடு. படிக்கிறேன். புத்தகம் கொடுத்தால் படிக்கிறேன். (2) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை வினையெச்சமாக்கி, அதனொடு உம் என்னும் இடைச்சொல்லைச் சேர்த்தல். எ-டு : அவனுக்கு நான் எவ்வளவோ சொன்னேன். அவன் கேட்கவில்லை. அவனுக்கு நான் எவ்வளவோ சொல்லியும், (அவன்) கேட்கவில்லை. ஆயிரம் பேர் வரலாம். நான் அஞ்சேன். ஆயிரம் பேர் வந்தாலும் (நான்) அஞ்சேன். (3) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைப் பெயரெச்சமாக்கி, அதனொடு காலப்பெயரை அல்லது இடப்பெயரைச் சேர்த்தல். எ-டு : ஆங்கிலேயர் இங்கு வாணிகஞ் செய்ய வந்தார். இத் தேசம் நூற்றுக் கணக்கான சீமைகளாகப் பிரிந்து கிடந்தது. ஆங்கிலேயர் இங்கு வாணிகஞ் செய்ய வந்தபோது, இத் தேசம் நூற்றுக் கணக்கான சீமைகளாகப் பிரிந்து கிடந்தது. தலைவி பூக்கொய்யச் சென்றான். ஒரு களிறு பிளிறிக் கொண்டு வந்தது. தலைவி பூக்கொய்யச் சென்றவிடத்து, ஒரு களிறு பிளிறிக் கொண்டு வந்தது. மூப்பு வரும். பொருள் தேடி வைத்துக்கொள்ள வேண்டும். மூப்பு வருமுன் பொருள் தேடி வைத்துக்கொள்ள வேண்டும். (4) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைப் பெயரெச்சமாக்கி, அதனொடு ஆறு, படி, பொருட்டு முதலிய சொற்களுள் ஒன்றைச் சேர்த்தல். எ-டு : குழந்தை நலமடையவேண்டும். தாய் பத்தியங் காக்கவேண்டும். குழந்தை நலமடையுமாறு, தாய் பத்தியங் காக்க வேண்டும். நீ சொன்னாய். மழை வந்துவிட்டது. நீ சொன்னவாறு மழை வந்துவிட்டது. வரும்படி வரும். நீ முயற்சி செய்யவேண்டும். வரும்படி வரும்படி நீ முயற்சி செய்யவேண்டும். தலைவன் சொல்வான். வேலைக்காரன் செய்ய வேண்டும். தலைவன் சொன்னபடி வேலைக்காரன் செய்ய வேண்டும். (5) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றை 4ஆம் வேற்றுமை யேற்ற தொழிற்பெயராக்கல். எ-டு : தென்னாப்பிரிக்க இந்தியர் விடுதலை யடைய வேண்டி யிருந்தது. பெரியான்மா காந்தியார் அங்கு சென்றார். தென்னாப்பிரிக்க இந்தியர் விடுதலை பெறுதற்காக (பெறுதற்பொருட்டு), பெரியான்மா காந்தியார் அங்கு சென்றார். (6) ஒரு தனிவாக்கியத்தின் முற்றுப் பயனிலையோடு காரண விடைச்சொலைச் சேர்த்தல். எ-டு : பவணந்தி முனிவர் சமணர். அவருக்குப் பொருளதிகாரம் விருப்பமன்று. பவணந்தி முனிவர் சமணரானதினால், அவருக்குப் பொருளதிகாரம் விருப்பமன்று. இந்தியா விடுதலை யடைந்தது. வெள்ளைக்காரர் வெளியேறினர். இந்தியா விடுதலை யடைந்ததினால், வெள்ளைக்காரர் வெளியேறினர். (7) ஒரு தனிவாக்கியத்தின் வினைமுற்றைத் தொழிற்பெயர் அல்லது எதிர்கால வினையெச்சமாக்கி, அதனொடு உவமவுருபைச் சேர்த்தல். எ-டு : புலி யானைகளின்மேற் பாயும். செங்குட்டுவன் அங்ஙனம் வடவரசர்மேற் பாய்ந்தான். புலி யானைகளின்மேற் பாய்வது போலச் செங்குட்டுவன் வடவரசர்மேற் பாய்ந்தான். நான் சொன்னேன். அங்ஙனம் செய். நான் சொன்னாற்போலச் செய். பயிற்சி 1 கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை, ஒவ்வொரு பெயர்க் கிளவியக் கலப்பு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) அன்பே ஆண்டவன். இது உலகப் பொதுக் கொள்கை. (2) கடவுளுக்கு உருவமில்லை. இவ் வுண்மையைப் பலர் உணராதிருக்கின்றனர். (3) ஆடு கொழுக்கின்றது. அது இடையனுக்கு ஊதியம். (4) உதிரம் உறவறியும். இது ஒரு பண்டைப் பழமொழி. (5) அன்பும் சிவமும் ஒன்று. இங்ஙனம் திருமூலர் கூறினார். (6) நேற்றுவரை காட்சிச்சாலை இருந்திருக்கிறது. இது எனக்குத் தெரியாது போயிற்று. (7) மக்களெல்லாரும் ஒருதாய் வயிற்றினர். இது மாந்தனூலால் அறியப்பட்ட உண்மை. (8) தமிழ் ஒரு தனிமொழி. இதை முதன்முதல் உலகிற்கு விளக்கியவர் கால்டுவெல் கண்காணியார். (9) இல்லறத்தான் இரப்போர்க்கு ஈயவேண்டும். அது இறைவனுக்கு ஈவதாகும். (10) ஒருவன் உளந் தூயனாயிருத்தலே அறம். இது அறத்தின் தலைசிறந்த இலக்கணம். (11) இந்தியா விடுதலை யடைந்தது. இது இந்தியர்க்கு ஒரு பெரிய நன்மை. (12) கொடுப்பார் கொடுப்பார். கெடுப்பார் கெடுப்பார். பயிற்சி 2 கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை, ஒவ்வொரு பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொன்னார். அது இது. (2) இறப்பு ஒருநாள் வரும். அந் நாளை ஒருவரும் முன்னதாக அறிய முடியாது. (3) அவன் சம்பளம் வாங்குகிறான். அது அவனுக்குப் போதவில்லை. (4) விளையாட்டுப்பிள்ளை வேளாண்மை செய்யலாம். அது வீடு வந்து சேராது. (5) தமிழர் சில மாதங்களில் திருமணம் செய்வார்கள். அவை சித்திரை, ஆனி, ஆவணி, தை என்பன. (6) தலைச்சங்கம் தென்மதுரையில் இருந்தது. அது இன்று கடலுள் முழுகிக் கிடக்கின்றது. (7) பாண்டித்துரைத்தேவர் ஏராளமாகப் பழந்தமிழ்ச் சுவடிகளைத் தொகுத்து வைத்திருந்தார். அவை யாவும் ஒரு நாள் எரிவாய்ப்பட்டன. (8) காந்தியடிகள் திடுமென்று கொலையுண்டார். அச் செய்தி காட்டுத்தீப் போற் பரவிற்று. (9) ஆனை ஒரு வேலையைச் செய்யமுடியவில்லை. அதைப் பூனை செய்யுமா? (10) கோடரி ஒரு தண்டுக்கு நாணும். அது வாழை. (11) ஒருவர் ஒரு நாளில் பிறப்பார். ஒருவர் அந் நாளில் இறப்பார். (12) ஒருவர் ஒரு நோய் கொள்ளலாம். அது பல தலை முறைக்குப் பின்னும் அவர் வழியினர்க்கு வரும். பயிற்சி 3 கீழ்வரும் தனிவாக்கிய இணைகளை அல்லது தொகுதிகளை, ஒவ்வொரு வினையெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) பொழுது புறப்படும். வண்டி புறப்படும். (2) இடி விழுந்தது. கட்டடம் விழுந்தது. (3) வெள்ளம் வரும். அணை கோலிக்கொள்ள வேண்டும். (4) மூன்று பேர் முன்னே நின்று ஒரு குதிரையின் கடிவாளத் தைப் பிடித்து இழுத்தார்கள். இரண்டு பேர் பின்னே நின்று அதைத் தள்ளினார்கள். ஒருவன் மேலேயிருந்து அதைத் தூண்டினான். அது மாதம் காதவழி போயிற்று. (5) ஒருவன் ஒரு கதை சொன்னான். ஒருவன் ஒரு கேள்வி கேட்டான். ஒருவன் சில கற்களை எறிந்து கொண் டிருந்தான். ஒருவன் மணியடித்துக் கொண்டிருந்தான். ஒருவன் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தான். ஒருவன் ஒரு கணக்குப் போட்டான். ஒருவன் ஒரு விடுகதை சொன்னான். ஒருவன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். வீராசாமிச் செட்டியார் எண்கவனம் நடந்தது. (6) காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையார் பாட்டுப் பாடினார். சென்னை அழகநம்பியார் மதங்கம் (மிருதங்கம்) இசைத் தார். புதுக்கோட்டைத் தட்சிணாமூர்த்தியார் கஞ்சுரா அடித்தார். மதுரை வேணுச் செட்டியார் டோலக்குத் தட்டினார். தில்லைக் கோவிந்தசாமிப் பிள்ளையார் கின்னரி (Fiddle) எழுவினார். மன்னார்குடிப் பக்கிரிசாமிப் பிள்ளையார் குணக்குரல் ஒலித்தார். இன்னிசையரங்கு நள்ளிரவுவரை நடந்தது. (7) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மாண்டான். சேரன் செங்குட்டுவன் ஆண்டான். (8) நான் திருமணத்திற்கு வருவேன். நீ உடன் வரவேண்டும். (9) நான் பந்தயத்தில் ஓடுகிறேன். பள்ளிக்குப் பெயர் வருவது என் நோக்கம். (10) சிறப்பியங்கி (pleasure car) கடு வேகமாக ஓடும். பொது வியங்கி கடுவேகமாக ஓடாது. (11) கத்துகிறான். காது வெடிக்கிறது. (12) ஒருவனுக்கு அருமையுறவினர் சாவு நினைவிற்கு வருகிறது. அழுகை வருகிறது. வாக்கிய ஒன்றுசேர்ப்பு (தொடர்ச்சி) பல தனிவாக்கியங்களை ஒரு கதம்ப வாக்கியமாக்கல்: எ-டு : கண் ஒன்றைக் காண்கிறது. காது ஒன்றைக் கேட்கிறது. கை ஒன்றைத் தேடுகிறது. கருத்து ஒன்றை நாடுகிறது. இந்நிலையில் பூசை எங்ஙனம் நடைபெறும்? இங்ஙனம் பட்டினத்தார் கவல்கின்றார். கண் ஒன்றைக் காண்கிறது; காது ஒன்றைக் கேட்கிறது; கை ஒன்றைத் தேடுகிறது; கருத்து ஒன்றை நாடுகிறது; இந் நிலையில் பூசை எங்ஙனம் நடைபெறும்? என்று பட்டினத் தார் கவல்கின்றார். பயிற்சி கீழ்வரும் தனிவாக்கியத் தொகுதிகளை, ஒவ்வொரு கதம்ப வாக்கியமாகச் சேர்த்தெழுதுக : (1) உணவால் உடம்பு வளரும். உடம்பால் உயிர் வளரும். உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். இதை அறிக. (2) நீ யார்? உன் பேர் என்ன? சொல். (3) மனைவி மனைமாட்சி யுடையவளா யிருத்தல்வேண்டும். மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியிருத்தல் வேண்டும். ஏவலாளர் ஏவாது செய்ய வேண்டும். அரசன் செங்கோல் செலுத்த வேண்டும். சுற்றுச் சூழலில் அறிஞர் பலர் இருத்தல் வேண்டும். ஒருவனுக்கு வாழ்நாள் நீடிக்கும். அவனுக்கு நரையிராது. இங்ஙனம் பிசிராந்தையார் கூறுகின்றார். (4) குட்டுவதற்குப் பிள்ளைப்பாண்டிய னில்லை. காதறுப் பதற்கு வில்லிபுத்தூரரில்லை. முடிவெட்டுவித்தற்கு ஒட்டக் கூத்தரில்லை. அறிவிலிகளும் புலவராய்விட்டனர். இங்ஙனம் படிக்காசுப்புலவர் வருந்துகின்றார். (5) ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான். பலரைக் கொன்றவன் பட்டமாள்வாள். இது உண்மை. (6) கார் வந்தது. மயில் கிளர்ந்தது. குயில் தளர்ந்தது. (7) ஒருவன் நீடித்து உயிரோடிருக்க விரும்பலாம். அவன் உழைக்க வேண்டும். அவன் இரக்க வேண்டும். அவன் திருட வேண்டும். (8) நீ நல்ல பிள்ளையா? நீ பாடம் படி. நீ ஒரு வேலை செய். இவ் விரண்டிலொன்று செய். குறிப்பு : கல்லூரிக்குக் கீழ்ப்பட்ட மாணவர் கதம்ப வாக்கியத்தையும் கலப்பு வாக்கியம்போற் கொள்ளலாம். பல தனிவாக்கியத் தொகுதிகள் அல்லது இணைகள், ஒரு கூட்டு வாக்கியமாகவும், கலப்பு வாக்கியமாகவும், தனி வாக்கிய மாகவும், மாற்றப்பட இடந்தரும். எ-டு : (1) மணிமேகலை கற்பிற் சிறந்தவள். அவள் பொற்பிற் சிறந்தவள். - பல தனிவாக்கியம் மணிமேகலை கற்பிலுஞ் சிறந்தவள்; பொற்பிலுஞ் சிறந்தவள். - ஒரு கூட்டுவாக்கியம் மணிமேகலை கற்பிற் சிறந்தது போன்றே, பொற்பிலுஞ் சிறந்தவள். - ஒரு கலப்பு வாக்கியம் மணிமேகலை கற்பிலும் பொற்பிலுஞ் சிறந்தவள். - ஒரு தனிவாக்கியம் (2) உண்டி வேண்டும். தின்றி வேண்டும். இவ் விரண்டி லொன்றுவேண்டும். - பல தனிவாக்கியம் உண்டிவேண்டும்; இல்லாவிட்டால் தின்றிவேண்டும் - ஒரு கூட்டுவாக்கியம் உண்டியில்லாவிட்டால், தின்றிவேண்டும். - ஒரு கலப்பு வாக்கியம் உண்டியேனும் தின்றியேனும் வேண்டும். - ஒரு தனிவாக்கியம் (3) புலி பாய்ந்தது. புல்லி பாய்ந்தான். இருவர் செயலும் ஒத்திருந்தன. - பல தனிவாக்கியம் புலி பாய்ந்தது; அதுபோன்று புல்லியும் பாய்ந்தான். - ஒரு கூட்டுவாக்கியம் புலி பாய்ந்தது போன்று புல்லியும் பாய்ந்தான். - ஒரு கலப்பு வாக்கியம் புலிபோற் புல்லியும் பாய்ந்தான். - ஒரு தனிவாக்கியம் (4) ஆதன் நல்லவன். பூதன் நல்லவன். பின்னவன் மிக நல்லவன். - பல தனிவாக்கியம் ஆதன் நல்லவன்; ஆனால், பூதன் அவனிலும் நல்லவன். - ஒரு கூட்டுவாக்கியம் ஆதன் நல்லவனா யிருத்தலைவிடப் பூதன் நல்லவனா யிருக்கின்றான். - ஒரு கலப்பு வாக்கியம் ஆதனிலும் பூதன் நல்லவன். - ஒரு தனிவாக்கியம் (5) திருமலை நாயக்கர் பிறந்தாராம். ஒரு கழுதை பிறந்ததாம். இரண்டும் ஒரேநேரத்தில் நிகழ்ந்தனவாம். - பல தனிவாக்கியம் ஒரேநேரத்தில், திருமலை நாயக்கரும் பிறந்தாராம்; ஒரு கழுதையும் பிறந்ததாம். - ஒரு கூட்டுவாக்கியம் திருமலை நாயக்கர் பிறந்தநேரத்தில், ஒரு கழுதையும் பிறந்ததாம். - ஒரு கலப்பு வாக்கியம் திருமலை நாயக்கரும் ஒரு கழுதையும் ஒரேநேரத்தில் பிறந்தனராம். - ஒரு தனிவாக்கியம் (6) மருதன் மருத்துவம் பயின்றான். மாடலன் சட்டம் பயின்றான். - பல தனிவாக்கியம் மருதன் மருத்துவம் பயின்றான். மாடலனோ சட்டம் பயின்றான். - ஒரு கூட்டுவாக்கியம் மருதன் மருத்துவம் பயில, மாடலன் சட்டம் பயின்றான். - ஒரு கலப்பு வாக்கியம் மருதனும் மாடலனும், முறையே, மருத்துவமுஞ் சட்டமும் பயின்றனர். - ஒரு தனிவாக்கியம் 16. வாக்கிய வடிவு மாற்றம் (Transformation of Sentences) ஒரு வாக்கியத்தின் பொருளை மாற்றாமலே அதன் வடிவை அல்லது வகையை மாற்றுவது, வாக்கிய வடிவு மாற்றம் ஆகும். சொல்வகைப் பரிமாற்றம் (Interchange of one Part of Speech for another) பின் வரும் வாக்கியங்களை ஆய்க : (1) பாண்டிய நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்தது, மதிக்குலத்தை மறுப்படுத்திற்று. வெற்றிவேற் செழியன் கோவலனைக் கொல்வித்ததனால், மதிக்குலத்திற்கு மறு உண்டாயிற்று. (2) உன்னைக் கண்டது எனக்குப் பெருமகிழ்ச்சி. உன்னைக் கண்டு நான் பெரிது மகிழ்கின்றேன். (3) ஒரு நூலை ஒருவர் மொழிபெயர்க்க வேண்டுமாயின், அந் நூலாசிரியர் அதற்கு உடன்பட வேண்டும். ஒரு நூலை ஒருவர் மொழிபெயர்க்கவேண்டுமாயின், அதற்கு அந் நூலாசிரியரின் உடன்பாடு வேண்டும். (4) என்றும் படித்துக்கொண்டிருப்பதே ஒருசிலர்க்கு இன்பம். என்றும் படித்துக்கொண்டிருப்பதனாலேயே ஒருசிலர் இன்புறுகின்றனர். என்றும் படித்துக்கொண்டிருப்பதே ஒரு சிலர்க்கு இன்பமான வாழ்க்கை. என்றும் படித்துக்கொண்டிருப்பதனாலேயே ஒருசிலர் இன்பமாய் வாழ்கின்றனர். (5) இவன் வேகமாய் நடக்கின்றான். இவன் வேக நடையன். இவன் நடைக்கு வேகம் உண்டு. (6) இராமசாமிக் கவுண்டர் நாள்தொறும் கடவுளை வழிபடுவார். இராமசாமிக் கவுண்டர் நாள்தொறும் கடவுள் வழிபாடு செய்வார். இராமசாமிக் கவுண்டருக்கு நாள்தொறும் கடவுளை வழிபடுகிற வழக்கமுண்டு. இராமசாமிக் கவுண்டர் நாள்தொறும் கடவுளை வழிபட்டு வாழ்ந்தார். (7) திருவரங்கம் பிள்ளை நல்ல குணம் உள்ளவர். திருவரங்கம் பிள்ளை குணநலம் உள்ளவர். திருவரங்கம் பிள்ளை குணம் நன்றாய் இருக்கிறது. (8) அழகிரிசாமி சிறந்த பேச்சாளி. அழகிரிசாமி சிறப்பாய்ப் பேசுவார். அழகிரிசாமி பேச்சிற் சிறந்தவர். அழகிரிசாமி பேச்சுச் சிறப்பு வாய்ந்தவர். (9) திருவெண்காடர் செல்வம் நிறைந்தவர். திருவெண்காடர் நிறைந்த செல்வர். திருவெண்காடர் நிறையச் செல்வமுள்ளவர். திருவெண்காடர் செல்வ நிறைவு உள்ளவர். (10) ஒரு தேங்காயின் விலை நாலணா. ஒரு தேங்காய் நாலணாவிற்கு விற்கும். (11) மேனாட்டார் ஒழுங்காய் வாழ்பவர். மேனாட்டார் ஒழுங்கான வாழ்க்கையர். மேனாட்டார் வாழ்க்கையில் ஒழுங்கு உண்டு. (12) காந்தியடிகட்குச் செல்லிய வினை (Surgical Operation) நிகழ்ந்த முக்கால் மணி நேரமும், தேசிய மக்கட்கு மிகக் கவலை யாய் இருந்தது. காந்தியடிகட்குச் செல்லிய வினை நிகழ்ந்த முக்கால் மணி நேரமும், தேசிய மக்கட்கு மிகக் கவலை இருந்தது. (13) பரிமேலழகர் உரையும் சிலவிடத்துத் தவறாக உள்ளது. பரிமேலழகர் உரையிலும் சிலவிடத்துத் தவறு உள்ளது. பரிமேலழகரும் சிலவிடத்துத் தவறான உரை கூறி யுள்ளனர். (14) அன்மொழித் தொகை ஆகுபெயரின் வேறுபட்டது. அன்மொழித் தொகைக்கும் ஆகுபெயர்க்கும் வேறுபாடு உண்டு. அன்மொழித்தொகையும் ஆகுபெயரும் வேறுபட்ட இலக்கண முறைகள். (15) திருக்குறள் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது. திருக்குறள் சொற் சுருங்கியது; பொருள் பெருகியது. திருக்குறள் சொற் சுருங்கிப் பொருள் பெருகியுள்ளது. திருக்குறள் சொற் சுருங்கிய தன்மையும் பொருள் பெருகிய தன்மையும் உடையது. திருக்குறள் சொற் சுருங்கிய அல்லது பொருள் பெருகிய நூல். பயிற்சி 1 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்களை வினையாக அல்லது வினைமுற்றாக மாற்றுக: (1) காந்தியடிகள் இறப்பும் சிலர்க்கு மகிழ்ச்சி. (2) ஓரூர்ப் பேச்சு ஓரூர்க்கு ஏச்சு. (3) இன்றைக்கு இறையுருவப் புறப்பாடு எத்தனை மணிக்கு? (4) ஐம்பதில் ஆட்டம் அறுபதில் ஓட்டம். (5) இற்றை வணிகத்தில் பல பண்டங்கட்கு அரசியற் கட்டுப் பாடு உண்டு. (6) மதுரைப் பஞ்சாலைகளில் நேற்று வேலைநிறுத்தம். (7) ஆறுமுகத்திற்கு நாலுநாளாய்க் காய்ச்சல். (8) இது ஒரு பெரிய மானக்கேடு. பயிற்சி 2 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள வினைமுற்றுக்களைப் பெயராக மாற்றுக : (1) சில முயற்சியாளர் சிலவற்றைக் கண்டுபிடித்தனர். சில ஆராய்ச்சியாளர் சிலவற்றைப் புதிதாகப் புனைந்தனர். இவற்றால் உலகம் மிக முன்னேறியுள்ளது. (2) கதிரவன் தோன்றி மறைகின்றது. இங்ஙனமே உயிர்களும் தோன்றி மறைகின்றன. (3) கடவுள் நாள்தொறும் படைக்கின்றார், காக்கின்றார், அழிக்கின்றார். (4) ஏன் என்னை அச்சுறுத்துகின்றீர்? (5) ஆழ்வார்கள் நமக்குப் பல திருப்பாக்களை அருளிச் செய்தார்கள். அவற்றின் தொகுதியே நாலாயிர திவ்வியப் பனுவல் என வழங்குவது. (6) உலகத்திற் பல பொருள்களின் இயல்பை வரையறுத் துள்ளனர். (7) காணாமற்போதலைக் கூடப்போதல் என்று கோபிச் செட்டிப் பாளையத்தார் வழங்குகின்றனர். (8) செந்தமிழ்ச் செல்வி திங்கள்தொறும் வெளியிடப் படுகின்றது. பயிற்சி 3 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள பெயரெச்சங்களை வினை யெச்சமாக மாற்றுக : (1) டார்வின் எழுதிய உயிரினத் தோற்றம் எனக்கு விருப்ப மான புத்தகம். (2) தற்காலக் கொடையாளிகளுள் மிக்க புகழ்பெற்றவர் ஆல்பிரடு நோபெல். (3) நேர்மையான ஒழுக்கமுள்ளவர்க்குப் பெரும்பாலும் முன்னேற்றமில்லை. (4) இது சென்னைக்கு நேரான வழி. (5) தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரம் அழகான தோற்றமுடையது. (6) இச் சட்டை எனக்கேற்ற அளவெடுத்துத் தைக்கப்பட்டது. (7) நாகரிகம் வளர வளர மூடநம்பிக்கையாளர் தொகை குறையும். (8) முரட்டுத்தனமான வேலைக்காரருக்கு உயர்ந்த சம்பளம் தகாது. பயிற்சி 4 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சங்களைப் பெயரெச்சமாக மாற்றுக : (1) மக்கள் பெற்றோர்க்கும் மாணவர் ஆசிரியர்க்கும் மனமார நன்றி செலுத்தவேண்டும். (2) நான் கேட்ட கேள்விக்கு விளக்கமாக விடைதர வேண்டும். (3) அன்பாகப் பேசுவது அனைவருக்கும் இன்பந்தரும். (4) மட்டாக வுண்ணுதல் மனத்திற்கு மகிழ்ச்சி. (5) எப்போதும் தேநீரைச் சூடாகக் குடிக்கவேண்டும். (6) கள்ளத்தனமாய் விற்றுப் பொருளீட்டிய வணிகர் கழிபலர். (7) நோயற்று வாழ்வதே வாழ்வு. (8) விளைச்சற் காலத்திற் பயிர்களை விழிப்பாய்க் காக்க வேண்டும். பயிற்சி 5 கீழ்வரும் வாக்கியங்களிற் கோடிட்ட சொற்களைப் பல்வேறு சொல்வகையாக மாற்றுக : (1) காந்தியடிகள் இந்தியராற் கொல்லப்பட்டது இந்தியா விற்கே மானக்கேடு. (2) வறுமையிலும் செம்மையாய் வாழவேண்டும். (3) நல்ல பாம்பிலும் நச்சுத்தன்மையானவர் ஒவ்வொரு நாட்டிலுமுண்டு. (4) புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது. (5) நல்லாரைக் காண்பதுவும் நன்று. (6) அரங்கன் அமெரிக்காவிற் படிக்க விரும்புகின்றான். (7) பெருஞ்சொல் விளக்கனார் சரவண முதலியார் நகைப்புக் கதை பல சொல்வார். (8) ஈகையாளனுக்கே இருகையும் பயன்படும். சொற்பரிமாற்றம் (Different Ways of Expressing the Same Idea) (1) எல்லாம் i. நீ யெல்லாம் ஒரு பெரிய மனிதனா? நீ கூட ஒரு பெரிய மனிதனா? நீயும் ஒரு பெரிய மனிதனா? ii. நாங்களெல்லாம் இப்படிக் கஞ்சத்தனம் பண்ண மாட்டோம். நாங்களென்றால் (நாங்களெனின்) இப்படிக் கஞ்சத்தனம் பண்ணமாட்டோம். நாங்களானால் இப்படிக் கஞ்சத்தனம் பண்ண மாட்டோம். நாங்களோ இப்படிக் கஞ்சத்தனம் பண்ணமாட்டோம். நாங்களோவெனின் இப்படிக் கஞ்சத்தனம் பண்ண மாட்டோம். நாங்கள் இப்படிக் கஞ்சத்தனம் பண்ணமாட்டோம். iii. ஐந்துமணிக்கெல்லாம் விளக்கேற்றிவிட்டார்கள். ஐந்துமணிக்கே விளக்கேற்றிவிட்டார்கள். (2) சும்மா i. சும்மாவிருந்து நேரத்தைப் போக்குகின்றான். சோம்பியிருந்து நேரத்தைப் போக்குகின்றான். ii. ஈராண்டுகளாய்ச் சும்மாவிருக்கிறார். ஈராண்டுகளாய் வேலை செய்யாமல் (வேலை விட்டோய்ந்து, வேலையின்றி) இருக்கிறார். iii சும்மாவிருக்கின்றார். போய்ப்பார். ஒன்றுஞ் செய்யாமல் உட்கார்ந்திருக்கின்றார். போய்ப்பார். iv. சும்மாவிரு. அமைதியாய் (பேசாமல், குறும்பு செய்யாமல்) இரு. v. இப்போது சும்மா விருக்கின்றார். இப்போது நலமாய் (நோயில்லாமல்) இருக்கின்றார். vi. சும்மாயிருக்கின்ற திறம் அரிது. சிந்தையை அடக்கி யோகிருக்கின்ற திறம் அரிது. vii. சும்மா போனார். வெறுங்கையாய்ப் (ஒன்றையும் எடுத்துக்கொண்டு போகாமல்) போனார், சும்மா போனார். குடை கொண்டுபோய்க் கொடு. குடையில்லாமல் போனார். குடை கொண்டுபோய்க் கொடு. viii.R«kh வந்தது. இலவசமாய் வந்தது. ix. சும்மா (சும்மா சும்மா) இங்கே வருகிறார். அடிக்கடி இங்கே வருகிறார். சும்மா திட்டிக்கொண்டே யிருக்கின்றான். ஓயாமல் (இடைவிடாமல்) திட்டிக்கொண்டே யிருக் கின்றான். x. சும்மா சொல், நான் கோபப்படமாட்டேன். தாராளமாய் (அச்சமின்றி)ச் சொல், நான் கோபப் படமாட்டேன். xi. அவர் எத்தனையோ தடவை உதவித்தானிருக்கிறார், சும்மா சொல்லக்கூடாது. அவர் எத்தனையோ தடவை உதவித்தானிருக்கின்றார். குற்றமாகச் சொல்லக்கூடாது. xii. சும்மா வந்தேன். காரியமின்றி (பயன் கருதாது) வந்தேன். (3) அல்லது: காடு அல்லது வீடு வாங்கவேண்டும். காடு இல்லாவிட்டால் வீடு வாங்கவேண்டும். காடாவது வீடாவது வாங்க வேண்டும். காடாயினும் வீடாயினும் வாங்கவேண்டும் காடாதல் (காடாகல்) வீடாதல் (வீடாகல்) வாங்க வேண்டும். காடெனினும் (காடேனும்) வீடெனினும் (வீடேனும்) வாங்க வேண்டும். காடென்றாலும் வீடென்றாலும் வாங்க வேண்டும். காடோ வீடோ வாங்கவேண்டும். (4) ஆகட்டும்: ஒருவன் நல்லவனாகட்டும் கெட்டவனாகட்டும்; நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனாகுக, கெட்டவனாகுக; நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செதுவிடவேண்டும். ஒருவன் நல்லவனானாலும் கெட்டவனானாலும், நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனானாலும் சரி, கெட்டவனா னாலும் சரி; நாம் செய்யவேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனென்றாலும் கெட்டவனென் றாலும், நாம் செய்யவேண்டிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனென்றாலும் சரி, கெட்டவ னென்றாலும் சரி; நாம் செய்ய வேணடிய நன்மையைச் செய்துவிட வேண்டும். ஒருவன் நல்லவனோ கெட்டவனோ, நாம் செய்ய வேண்டிய நன்மையைச் செய்து விடவேண்டும். (5) கூட : i. இதை ஒரு சிறு பிள்ளைகூடச் செய்துவிடும். இதை ஒரு சிறு பிள்ளையும் செய்துவிடும். இதை ஒரு சிறு பிள்ளையே செய்துவிடும். ii. அண்ணன் கூடத் தம்பி போனான். அண்ணனோடு தம்பி போனான். (6) தவிர: ஆங்கிலம் தவிர மற்றப் பாடங்களிலெல்லாம் தேறி விட்டான். ஆங்கிலம் ஒழிந்த மற்றப் பாடங்களிலெல்லாம் தேறி விட்டான். ஆங்கில மல்லாத மற்றப் பாடங்களிலெல்லாம் தேறி விட்டான். ஆங்கிலம் நீங்கலாக மற்றப் பாடங்களிலெல்லாம் தேறிவிட்டான். (7) ஒழிய: கேட்டாலொழியக் கிடையாது. கேட்டாலன்றிக் கிடையாது. கேளாவிட்டால் (கேளாதிருந்தால்) கிடையாது. கேட்டால் (கேட்டக்கால்) தான் கிடைக்கும். கேட்கும் பக்கம் (பட்சம்) தான் கிடைக்கும். (8) மட்டும்: i. நான் மட்டும் நடந்துபோக வேண்டுமா? நான் ஒருவனே நடந்துபோக வேண்டுமா? ii. இந்நாள் மட்டும் அவன் வரவில்லை. இந்நாள் அளவும் அவன் வரவில்லை. இந்நாள் வரையும் (வரைக்கும்) அவன் வரவில்லை. இந்நாள் காறும் அவன் வரவில்லை. (9) ஆக: i. தானாகச் செய்தான். தானே செய்தான். தனியனாய்ச் செய்தான். ii. தானாக வந்தான். அழையாமல் (ஏவப்படாமல்) வந்தான். தானாகக் கனிந்தது. பழுக்க வைக்காமல் (இயற்கையாகக்) கனிந்தது. (10) தான்: i. அவன்தான் திருடன். அவனே திருடன். ii. நான் வரத்தான் செய்வேன். நான் வரத்தான் வருவேன். நான் வரவே வருவேன். நான் கட்டாயம் வருவேன். (11) உடன்: நாலுமணியானவுடன் புறப்பட்டுவிட்டான். நாலுமணியானதும் புறப்பட்டுவிட்டான். நாலுமணியானதுதான், உடனே புறப்பட்டு விட்டான். நாலுமணியானதோ இல்லையோ, உடனே புறப் பட்டுவிட்டான். நாலுமணியானதுதான் தாழ்ப்பு (தாமதம்), உடனே புறப்பட்டுவிட்டான். (12) உம்: எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் என, தமிழ் இலக்கணம் ஐந்து. எழுத்தே சொல்லே பொருளே யாப்பே அணியே என, தமிழ் இலக்கணம் ஐந்து. எழுத்தென்றும் சொல்லென்றும் பொருளென்றும் யாப்பென்றும் அணியென்றும், தமிழ் இலக்கணம் ஐந்து. எழுத்தெனச் சொல்லெனப் பொருளென யாப்பென அணியென, தமிழ் இலக்கணம் ஐந்து. (13) கூடும்: நான் இது செய்யக் கூடும். நான் இது செய்ய முடியும். நான் இது செய்ய வொண்ணும். நான் இது செய்ய மாட்டுவேன். (14) கூடாது: நீ போகக் கூடாது. நீ போகப் படாது. நீ போகல் ஆகாது. உன்னைப் போகவொட்டேன். உன்னைப் போகவிடேன். (15) முடியவில்லை: எழுந்திருக்க முடியவில்லை. எழுந்திருக்கப் படவில்லை. எழுந்திருக்கக் கூடவில்லை. எழுந்திருக்க வலுவில்லை. (16) வேண்டா: i. எனக்கு அது வேண்டா. எனக்கு அது தேவையில்லை. நான் அதை விரும்பவில்லை. ii. செய்யவேண்டா (வேண்டியதில்லை). செய்யத் தேவையில்லை. செய்யாதே (செய்யாதீர்), செய்யற்க. (17) மாட்டேன், மாட்டேம்: வரமாட்டேன், வரமாட்டேம். வரமுடியாது. வரேன் (வாரேன்), வரேம் (வாரேம்). (18) செய்யட்டு, செய்யட்டும்: அவன் செய்யட்டு, செய்யட்டும். அவனைச் செய்யவிடு, செய்ய விடும். அவன் செய்யட்டு (Thou let him do) - ஒருமை. அவன் செய்யட்டும் (You let him do) - பன்மை. பயிற்சி 1 கீழ்வரும் வாக்கியங்களில் தடிப்பெழுத்துச் சொற்களுக்குப் பதிலாக, வெவ்வேறு சொல்லை அமைத்தெழுதுக: (1) நாங்களெல்லாம் கணியம் (சோதிடம்) பார்த்து ஒன்றைச் செய்யமாட்டோம். (2) சும்மா உட்கார். அதைப்பற்றிக் குற்றமில்லை. (3) ஓநாயாவது நரியாவது ஆட்டைக் கொண்டு போயிருக்க வேண்டும். (4) பங்கீட்டுக் கடைகளில், அரிசியளப்பவனுக்குக்கூடக் கையூட்டுக் கொடுக்க வேண்டும். (5) நீ கேட்டது தவிர எல்லாம் கிடைக்கும். (6) வண்டி கொண்டுவந்தா லொழியப் போகக்கூடாது. (7) இவனுக்கு மட்டும் இருபங்கு. (8) நாள் முழுதும் சும்மா சுற்றிக்கொண்டு திரிகிறான். (9) உனக்கெல்லாம் மந்திரிப் பதவி கிடைக்குமா? (10) மாணவர் தாமே கட்டுரை வரைந்துவிட்டனர். (11) கொயினாப்பொடி கசக்கத்தான் செய்யும்; ஆனாலும், காய்ச்சற்காரன் அதை உட்கொள்ளத்தான் வேண்டும். (12) சும்மாவிருக்கிற நாயை வாலைப் பிடித்திழுக்கிறான். (13) புகைவண்டி நின்றதும், திருடன் வெளியே குதித்து விட்டான். (14) இன்றோ பிறகோ, நாம் கட்டாயம் ஒருமுறை ஆக்கிரா போய்வரவேண்டும். (15) என்னால் ஒரு நாளைக்கு இருபது குறள் மனப்பாடம் செய்ய முடியும். (16) நீ இனிமேல் கடன் கொடுக்கவேண்டா. (17) முன்னறிவிப்பில்லாமல் என்னை ஒரு கூட்டத்திற்கும் கூப்பிடாதீர்கள். (18) தலைகீழாய் நின்றாலும், நான் என் மிதிவண்டியை ஒருவருக்கும் இரவல் கொடுக்கமாட்டேன். (19) நிலமே நீரே தீயே வளியே வெளியே எனப் பூதம் ஐந்து. (20) உறவினனானாலும் அயலானானாலும், பந்தியில் உண்ண அமர்ந்தவனை வெளியேற்றக்கூடாது. (21) தந்தையைக் கொன்ற பழி சும்மா போகுமா? (22) காடன் புறா தானாய்க் காட்டிற்குப்போய் மேய்ந்து வரும். (23) இந்திய சமுதாயம் திருந்துவதற்கு இறைவனே வர வேண்டும்; அல்லது, இன்னோர் ஊழி வரவேண்டும் என்கின்றனர். (24) சிறியவனோ பெரியவனோ, யாரானாலும் சினத்தை அடக்க வேண்டும். நிலைப்பாட்டு வாக்கிய வடிவு மாற்றம் (Ways of Expressing a Condition) கீழ்வரும் வாக்கியங்களை ஆய்க : (1) நோயாளி மருந்துண்டால் (மருந்துண்ணின்) பிழைப்பான். (2) நோயாளி மருந்துண்டு பிழைப்பான். நோயாளி மருந்துண்ணப் பிழைப்பான். நோயாளி மருந்துண்பானாயின் பிழைப்பான். நோயாளி மருந்துண்ணும்பக்கம் பிழைப்பான். நோயாளி மருந்துண்ணுங்கால் (மருந்துண்டக்கால்) பிழைப்பான். நோயாளி மருந்துண்கிறதாயிருந்தால் பிழைப்பான். நோயாளி மருந்துண்ணாவிடின் பிழையான். நோயாளி மருந்துண்ணாக்கால் பிழையான். நோயாளி மருந்துண்ணானாயின் பிழையான். நோயாளி மருந்துண்டாலொழியப் பிழையான். மேற்காட்டியவற்றுள் இறுதி நான்கும் எதிர்மறை வடிவி லுள்ளவை. (2) அவன் இவ்வழி போனான், செத்தான். நீ உன் வாயைத் திறந்தாய், உன் மதிப்புப் போய்விடும். அவன் ஏன் சொல்லைக் கேட்கவில்லை, இனிமேல் ஓர் உதவியும் அவன் என்னிடம் பெற முடியாது. இவற்றில், போனான், திறந்தாய், கேட்கவில்லை என்னும் இறந்தகால முற்றுகள், முறையே போனால், திறந்தால் கேட்காவிடில் என எச்சப்பொருள் படுவன. (3) கேள், கிடைக்கும். முயற்சி செய், வெற்றி பெறலாம். படி, தேறுவாய். இவற்றில், ஏவல் வினைகள் எதிர்கால வினையெச்சப் பொருள்படுவன. (4) நீ இயந்திரக் கல்லூரியிற் சேர விரும்புகின்றாயா? அப்படியானால், கணக்குப் பயிலவேண்டும். நீ விரைந்து ஊருக்குச் செல்லவேண்டுமா? அப்படியானால், முதல் வண்டியில் ஏறிக்கொள். அவர் வருமானவரி அதிகாரியா? அப்போது, அவரிடம் பணம் வாங்காதே. இவற்றில், வினாச்சொல்லும் அப்படியானால் அல்லது அப்போது என்னும் இணைப்புச் சொல்லும் சேர்ந்து நிலைப் பாட்டை உணர்த்தும். இத்தகைய வாக்கியங்களில் இணைப்புச்சொல் தொக்கும் வரும். எ-டு : நீ இயந்திரக் கல்லூரியிற் சேரவேண்டுமா? கணக்குப்பயில். (5) ஒரு நெருங்கிய உறவினர் வந்தார் என்று வைத்துக் கொள்வோம்; அவருக்குத் தங்க இடம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? இன்றைக்குச் சொற்பொழிவாளர் வரவில்லை என்று வைத்துக் கொள்வோம்; யார் சொற்பொழிவாற்றுகிறது? இவற்றில், வந்தார் என்று வைத்துக்கொள்வோம் என்பது வந்தால் என்றும், வரவில்லை என்று வைத்துக் கொள் வோம் என்பது வராவிடில் என்றும் பொருள்படுவது காண்க. இத்தகைய வாக்கியங்களில், என்று வைத்துக்கொள்வோம் என்னும் தொடர் தொக்கும் வரும். எ-டு : ஒரு நெருங்கிய உறவினர் வந்தார்; அவருக்குத் தங்க இடம் கொடுத்துத்தானே ஆகவேண்டும். பயிற்சி கீழ்வரும் வாக்கியங்களைப் பல்வேறு வடிவில் மாற்றி யமைக்க : (1) மழை பெய்யக் குளம் நிறையும். (2) மணியடித்து வண்டி புறப்படும். (3) உனக்குப் புத்தகம் வேண்டுமா? முன்பணங் கொடு. (4) என் தந்தையார் இதுவரை யிருந்திருந்தால், என் குடும்ப நிலை முற்றும் வேறுபட்டிருக்கும். (5) ஒரு சொல் சொல்லுங்கள்; உடனே வேலை கிடைக்கும். (6) அவன்மட்டும் என்னை எதிர்த்துப் பேசினான்; அவன் படுகிற பாட்டைப்பார். (7) நீ அந்த நிலையில் இருந்தாய்; அப்போது என்ன செய்வாய்? (8) எல்லாரும் பல்லக்கேறினால் யார் பல்லக்குத் தூக்குகிறது? (9) உத்தரவின்றி உள்ளே போகக்கூடாது. (10) திடுமென்று ஏதேனும் நேர்ந்ததென்று வைத்துக் கொள் வோம்; யாரிடம் போய்ப் பணங் கேட்பது? (11) திருவாளர் ஆறுமுக முதலியார் தேர்தலுக்கு நிற்கும் பக்கத் தில், நான் என் பெயர்க் குறிப்பீட்டை (Nomination) மீட்டுக்கொள்கின்றேன். (12) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். (13) இல்லாது பிறவாது, அள்ளாது குறையாது. (14) விரையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? (15) பணமிருந்தால் மனமிராது; மனமிருந்தால் பணமிராது. (16) பயிரிடு, பலன் தரும். (17) வாய் நல்லதாயின் ஊரும் நல்லது. (18) நீ விடுதியிற் சேர விரும்புகின்றாயா? அப்படியானால், உடனே பணங்கட்டிப் பதிவு செய்துகொள். (19) இப்போதுள்ள அறிவு என் இளமையில் இருந்திருந்தால், நான் இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டேன். (20) சிறிதுநேரம் விழிப்பாயிருங்கள்; பின்பு காலமெல்லாம் கவலையற்றிருக்கலாம். (21) சிலர் துன்பம் வந்தாலொழியக் கடவுளை நினைப்பதில்லை. (22) தூண்டுதலின்றிப் பலர் தொழில் செய்யார். (23) உனக்கு ஒரு பெரிய புதையல் கிடைத்தது; நீ என்ன செய்வாய்? (24) நான் பிந்தி வருவதாயிருந்தால் கடிதம் எழுதுகிறேன்; திடுமென்று புறப்பட்டால் தொலைவரி (தந்தி) விடுக் கின்றேன். (25) நேர்நின்று காக்கை வெளிதென்று ஒருவன் சொல்வா னாயின், அவனைப்பற்றி என்ன சொல்வதற்கிருக்கின்றது? இணக்க அல்லது மாறுகோள் வாக்கிய வடிவு மாற்றம் (Ways of Expressing a Concession or Contrast) கீழ்வரும் வாக்கியங்களை ஆய்க : (1) பேதை படித்தும் பயனில்லை. கீரன் கெட்டிக்காரனா யிருந்தும் தேறவில்லை. இத்தகைய வாக்கியங்கள் உம்மை தொக்கும் வரும். எ-டு : கீரன் கெட்டிக்காரனாயிருந்து தேறவில்லை. (2) குற்றவாளி அரசன் மகனாயிருந்தாலும் அவனைத் தண்டித்தல் வேண்டும். அவன் என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை. அறிவிலி ஒன்றும் செய்யாவிட்டாலும் அமைதியா யிருந்தால் போதும். கல்லானாலும் கடவுட் படிமை வணங்கப்பெறும். (3) சீராளன் சிறுபிள்ளையா யிருந்தாற்கூடச் செவ்வையாய்ப் பேசுகிறான். சில வாக்கியங்களில், ஆனாலும் என்னும் சொல் தொக்கு வரும். எ-டு : சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை. (4) காந்தியடிகள் தவறு செய்தார் என்று வைத்துக்கொண்டாலும், அவரைச் சுட்டுக்கொல்வது முறையா? (5) ஓமந்தூர் இரெட்டியார் மிகக் கண்டிப்பானவர்தான்; இருந் தாலும் (இருந்தபோதிலும்,) அவரிடத்தில் நேர்மை மிகுதி. நெப்போலியன் குற்றவாளிதான்; என்றாலும் (என்ற போதிலும், என்றாற்கூட) அவனுக்கு இட்ட தண்டனை மிகமிகக் கடுமையானதாகும். ஆறுமுகத்திற்கு முகத்தில் வந்தது சிறு கொப்புளம்தான்; ஆனாலும் (ஆனபோதிலும்), அது அவனுக்கு அளவிறந்த வேதனையைத் தந்து அவனைக் கொன்றுவிட்டது. பயிற்சி கீழ்வரும் வாக்கியங்களைப் பல்வேறு வடிவில் மாற்றிய மைக்க: (1) மெய்கண்டார் அருணந்தி சிவாச்சாரியாருக்கு மிக இளையவர்; ஆயினும், மெய்யுணர்ச்சியில் அவரினும் விஞ்சியவர். (2) அவன் ஆண்டில் இளைஞனேனும் அறிவில் முதியன். (3) பிழைக்க வழி தெரிந்தும் நீ ஏன் இப்படிக் கெட்டுப் போனாய்? (4) மணிமன்றவாணன் படித்தற்கு வேண்டிய வசதிகளெல்லாம் பெற்றிருந்தும் படிக்கவில்லை. (5) ஆயிரம் உடுக்கள் சேர்ந்தாலும் ஒரு திங்களுக்கு நிகராகுமா? (6) அரசன் தெய்வத்தன்மையுள்ளவன் என்று வைத்துக் கொண்டாலும், அவனுடைய மகளை ஒரு சிறந்த புலவன் மணப்பது அவமானமாகுமா? (7) குலோத்துங்கச் சோழன் எத்துணைக் கோபங் கொண் டிருந்திருப்பினும், அம்பிகாபதியைக் கொன்றது அளவிறந்த கொடுமையாகும். (8) ஒருவன் அகங்காரமே வடிவெடுத்து வந்தாற்போன் றிருந்தாலும், ஒரு மாங்கனியை எடுத்ததற்காக ஒரு மங்கையைக் கொல்ல அவனுக்கு மனம் வருமா? ஒப்பீட்டுத்தரப் பரிமாற்றம் கீழ்வரும் வாக்கியங்களை ஆய்க : ஒப்புத்தரம் : திருக்குறளைப் போன்ற அறநூல் வேறொன்று மில்லை. உறழ்தரம் : திருக்குறள் மற்றெல்லா அறநூல்களினும் சிறந்தது. உச்சத்தரம் : திருக்குறள் அறநூல்களுள் தலைசிறந்தது. ஒப்புத்தரம் : வெள்ளி பொன்னைப்போல் உயர்ந்ததன்று. உறழ்தரம் : வெள்ளியைவிடப் பொன் உயர்ந்தது. ஒப்புத்தரம் : கோவேறுகழுதை குதிரையைப் போல அழகானதன்று. உறழ்தரம் : கோவேறு கழுதையைவிடக் குதிரை அழகானது. ஒப்புத்தரம் : தேக்கு தோதகத்தியைப்போல் கடினமான தன்று. உறழ்தரம் : தேக்கைவிடத் தோதகத்தி கடினமானது. ஒப்புத்தரம் : வயிரத்தைப்போல் சிறந்த மணி வேறொன் றுமில்லை . உறழ்தரம் : வயிரம் மற்றெல்லா மணிகளினும் சிறந்தது. உச்சத்தரம் : வயிரம் மணிகளுட் சிறந்தது. பயிற்சி கீழ்வரும் வாக்கியங்களின் பொருளை மாற்றாமல் ஒப்பீட்டுத் தரத்தை மாற்றுக : (1) சாத்தனைப்போலக் கொற்றன் படிப்பவனல்லன். (2) தமிழ்நாட்டில் மாபெருநகரம் சென்னை. (3) மலபார்த் தேக்கைவிட இரங்கூன் தேக்கு உறுதியானது. (4) அன்பு அறமனைத்தையும் தழுவியது. (5) ஊமை வாயனுக்கு உளறுவாயன் மேல். (6) யாழோசை மிக இனிமையானது. (7) மாட்டைப்போல மாந்தனுக்குப் பயன்படுவது வேறு எந்த விலங்கு? (8) இன்றைக்கு நாளைக்கு என்று இழுத்துக் கடத்துவதினும், இல்லை யென்பது நல்லது. செய்வினை செயப்பாட்டுவினைப் பரிமாற்றம் கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : செய்வினை : கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டி னான். செயப்பாட்டு வினை : கரிகாலனாற் காவிரிக்குக் கரை கட்டப் பட்டது. செய்வினை : வணங்காமுடிமாறன் சொன்னதை யெல்லாம் பொய்யாமொழிப் புலவர் செய்து காட்டினார். செயப்பாட்டு வினை : வணங்காமுடி மாறன் சொன்னதெல் லாம் பொய்யாமொழிப் புலவராற் செய்துகாட்டப்பட்டது. செய்வினை : ஒருவன் சொன்ன சொல்லைக் காக்க வேண்டும். செயப்பாட்டு வினை : ஒருவனால் சொல்லப்பட்ட சொல் அவனால் காக்கப்பட வேண்டும். ஒருவன் சொன்ன சொல் அவனால் காக்கப்பட வேண்டும். சொன்ன சொல் காக்கப்பட வேண்டும். செய்வினை : செய்வன திருந்தச் செய். செயப்பாட்டு வினை : உன்னாற் செய்யப்படுவன திருந்தச் செய்யப்படட்டு(ம்). உன்னாற் செய்யப்பட வேண்டுவன திருந்தச் செய்யப்படட்டும். செய்வினை : உத்தரவு கொடுங்கள். செயப்பாட்டு வினை : உத்தரவு உங்களால் கொடுக்கப்படட் டும். செய்வினை : கேளுங்கள், கொடுப்பர்; தட்டுங்கள், திறப்பர். செயப்பாட்டு வினை : கேளுங்கள், கொடுக்கப்படும்; தட் டுங்கள், திறக்கப்படும். செய்வினை : விடை கூறுக. செயப்பாட்டு வினை : விடை கூறப்படுக. செய்வினை : அருணகிரிநாதர் பாடிய கந்தரந் தாதிக்கு வில்லிபுத்தூரர் உடனுடன் உரை கூறிவந்தார். செயப்பாட்டுவினை : அருணகிரிநாதர் பாடிய கந்தரந் தாதிக்கு வில்லிபுத்தூரால் உடனுடன் உரை கூறப்பட்டுவந்தது. செய்வினை : திருஞான சம்பந்தர் பாடிய யாழ்முரிப் பண்ணைத் திருநீலகண்ட யாழ்ப் பாணர் யாழிலிட்டுக் காட்ட முடிய வில்லை. செயப்பாட்டு வினை : திருஞானசம்பந்தராற் பாடப் பட்ட யாழ்முரிப்பண், திருநீலகண்ட யாழ்ப் பாணரால் யாழிலிட்டுக் காட்டப் படமுடிய வில்லை. செய்வினை : இன்று மாலைக்குள் இதை நீ எழுதி முடிக்க வேண்டும். செயப்பாட்டு வினை : இன்று மாலைக்குள் இது உன்னால் எழுதி முடிக்கப்பட வேண்டும். செய்வினை : உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் கொன்றான். செயப்பாட்டு வினை : உதயகுமரன் காயசண்டிகையின் கணவனால் கொல்லப்பட்டான் (கொலைப்பட்டான், கொலையுண் டான், கொல்லுண்டான்). செய்வினை : ஆசிரியர் ஒருநாளும் பாடவில்லை. செயப்பாட்டுவினை : ஆசிரியரால் ஒருநாளும் பாடப் படவில்லை. செய்வினை : ஆசிரியர் ஒருநாளும் பாடிய தில்லை. செயப்பாட்டுவினை : ஆசிரியரால் ஒருநாளும் பாடப்பட்ட தில்லை. செய்வினை : ஆசிரியர் ஒருநாளும் பாடியிலர். செயப்பாட்டுவினை : ஆசிரியரால் ஒருநாளும் பாடப் பட்டிலது.. இருமடியேவலொருமை செய்வினை : அவன் கதை சொல்லட்டு. செயப்பாட்டு வினை : அவனால் கதை சொல்லப்பட்டு. இருமடியேவற் பன்மை செய்வினை : அவன் கதை சொல்லட்டும். செயப்பாட்டுவினை : அவனால் கதை சொல்லப்படட்டும். செய்வினை : திரிசிரபுரம்பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஒரு நாளைக்கு முந்நூறு பாட்டுப் பாடுவது முண்டு. செயப்பாட்டு வினை : திரிசிபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையால், ஒரு நாளைக்கு முந்நூறு பாட்டுப் பாடப்படுவது முண்டு. செய்வினை : பதனீரைச் சென்னையார் பனஞ் சாறென்பர். செயப்பாட்டுவினை : பதனீர்சென்னையாராற் பனஞ்சா றெனப்படும். செய்வினை : பண்டைக்காலத்தில் தீராப் பெருங் கடன்பட்டவரெல்லாம் பெரும் பாலும் அடிமையராயினர். செயப்பாட்டுவினை : பண்டைக் காலத்தில் தீரா பெருங் கடன் பட்டவரெல்லாம் பெரும் பாலும் அடிமையராக்கப்பட்டனர். பயிற்சி 1 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள செய்வினைகளைச் செயப்பாட்டு வினையாக மாற்றுக : (1) பிரான்சிசு திரேக்கு உலகமுழுதும் சுற்றிவந்தார். (2) அச்சுத்தொழில் முதன்முதல் சீனத்தில் தோன்றியது. (3) ஒரு பழஞ் சோழவேந்தன் கரும்பைச் சாலித் தீவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்தான். (4) செருமானியரான இராண்டுசென் (ROENTGEN) 1895-ல் உட்காட்டியை (X-ray) கண்டமைத்தார். (5) இற்றிலர் HITLER இந்தியாவைக் கைப்பற்றிவிடுவார் என்று இந்தியருள் யார் யார் எதிர்பார்த்தனரோ, அவரெல்லாம் செருமானிய மொழியைக் கற்கத் தொடங்கினர். (6) ஆங்கிலேயர் இரசியாவைச் செருமானிய உறவிலிருந்து பிரிப்பதற்கு ஒரு சூழ்ச்சி செய்தனர். (7) பொதுவாக, நாட்டாண்மை நகராண்மைத் தேர்தல்கள் மூன்றாண்டிற் கொருமுறை நடைபெறும். (8) நாட்டுமொழி யிலக்கிய வளர்ச்சியின் பொருட்டு, ஆண்டு தொறும் பற்பல புதிய நூல்கட்குப் பல்கலைக் கழகத்தார் பரிசு வழங்குகின்றனர். பயிற்சி 2 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள செயப்பாட்டு வினைகளைச் செய்வினையாக மாற்றுக : (1) இந்தியச் சட்டசபை முதன்முதல் 1853-ல் தோற்று விக்கப்பெற்றது என்னலாம். (2) நோபெல் பரிசு, ஆண்டுதோறும், இலக்கியம் பூதநூல் வேதிநூல் மருத்துவம் சமாதானம் ஆகிய ஐந்துறையில் அருந்தொண்டாற்றியவர்க்கு அளிக்கப்பெறும். (3) இத்தாலி தேசத்து மார்க்கோனியால் கம்பியிலி (Wireless) 1895-ல் புதிதாய்ப் புனையப்பெற்றது. (4) பண்டைக்காலத்திற் பழிக்குப்பழி வாங்கப்பட்டது. (5) இந்தியா இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது நல்லதன்று. (6) வகுப்புவாரித் திட்டத்தை விலக்கும்பொருட்டுச் சென்னை உயர்நிலைமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அதை விலக்குமாறு தீர்ப்பும் கூறப்பட்டுள்ளது. (7) 1912-ல் இந்தியாவின் ஆங்கில ஆட்சித் தலைமை நிலையம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது. (8) நீ அளக்கிற அளவின்படியே உனக்கு அளக்கப்படும். உடன்பாட்டுவினை எதிர்மறைவினைப் பரிமாற்றம் (Interchange of Affirmative and Negative Sentences) கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : (1) பேதை தானே தனக்குக் கேடு செய்து கொள்கின்றான். பேதைக்குக் கேடு செய்ய வேறொருவர் வேண்டுவ தில்லை. (2) உலகில் மக்கட் செறிவு மிகுந்த இடம் சாவகம். உலகில் சாவகத்தைப்போல் மக்கட் செறிவு மிகுந்த இடம் வேறொன்று மில்லை. (3) அதிகங் கற்றவரிடத்திலும் அறியாமை யுண்டு. அதிகங் கற்றவரிடத்திலும் அறியாமை இல்லாமலில்லை. (4) இப் பாட்டின் பொருள் கருகலாயிருக்கின்றது. இப்பாட்டின் பொருள் தெளிவாயில்லை. (5) பாரதம் இராமாயணத்திற்குப் பிந்தியது. பாரதம் இராமாயணத்திற்கு முந்தியதன்று. பயிற்சி 1 கீழ்வரும் வாக்கியங்களின் பொருளை எதிர்மறை வடிவில் அமைத்துக் காட்டுக : (1) வியாழன் மிகப் பெரிய கோள். (2) தேசியப் போராட்டம் காந்தியடிகளின் முயற்சியால் வலுத்தது. (3) அவர் என்னைவிடத் தகுதிவாய்ந்தவர். (4) என் தந்தையார்க்குக் கண்ணாடியிருந்தால்தான் படிக்க முடியும். (5) கம்பராமாயணத்தில் சில உயர்வுநவிற்சிகள் வரம்பு கடந்தன. (6) தூங்கினவன் கன்று சேங்கன்று. (7) தமிழ் மிகப் பழைமையான மொழி என்பது அனை வர்க்கும் உடன்பாடு. (8) ஆசிரியர் சில சமையங்களில் முட்டாள்தனமாய்ப் பேசுவதுண்டு. பயிற்சி 2 கீழ்வரும் எதிர்மறை வாக்கியங்களின் பொருளை உடன் பாட்டு வடிவில் அமைத்துக்காட்டுக : (1) பாண்டவரும் கௌரவரும் ஒருபோதும் ஒற்றுமையா யிருந்ததில்லை. (2) பட்டினத்தாருக்கிருந்த செல்வம் கொஞ்சநஞ்சமன்று. (3) பன்னீர்ச்செல்வம் மறைந்த இடம் இன்னதென்று இன்னும் ஒருவருக்கும் தெரியவில்லை. (4) வித்தில்லாமல் விளைவுண்டா? (5) யாரும் பிறந்தவுடன் பேசமுடியாது. (6) வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான். (7) வள்ளுவர் வாக்கு வாய்க்காமற் போகாது. (8) இதை வேறொருவரும் செய்திருக்க முடியாது. வினாவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம் (Interchange of Interrogative and Assertive Sentences) கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : (1) நீ சொன்னபடியெல்லாம் செய்வதற்கு நான் உன் அடிமையா? நீ சொன்னபடியெல்லாம் செய்வதற்கு நான் உன் அடிமை யல்லேன். (2) நாம் வேலைபெறுதற்கு மட்டுமா கல்வி பயில்வது? நாம் கல்வி பயில்வது வேலைபெறுதற்கு மட்டுமன்று. (3) தீமை செய்கிறவனைத் தண்டிப்பதற்கு, அவனுக்கு நன்மை செய்வதைவிடச் சிறந்த வழி ஏது? தீமை செய்கிறவனைத் தண்டிப்பதற்கு, அவனுக்கு நன்மை செய்வதே சிறந்த வழி. (4) எத்தனையோ அறிவியல் முழுமணி நூல்கள் உள்ள இக்காலத்தும், குட்டிக்கதைகளை ஏன் படிக்க வேண்டும்? எத்துணையோ அறிவியல் முழுமணி நூல்கள் உள்ள இக்காலத்தும், குட்டிக்கதைகளைப் படிப்பது அறிவுடை மையாகாது. (5) சிவிங்கி தன் புள்ளியையும் எத்தியோப்பியன் தன் கருமை யையும் மாற்ற முடியுமா? சிவிங்கி தன் புள்ளியையும் எத்தியோப்பியன் தன் கருமை யையும் மாற்ற முடியாது. (6) இத்தனை ஆயிரம்பேர் உண்ணுமிடத்தில், இச் சிறு பிள்ளைக்கு உணவளிப்பதனாலா செலவு மிகுந்துவிடும்? இத்தனை ஆயிரம்பேர் உண்ணுமிடத்தில், இச் சிறு பிள்ளைக்கு உணவளிப்பதனால் செலவொன்றும் மிகுந்து விடாது. (7) கோடிக்கணக்கான செல்வமுள்ளவனுக்கு ஒரு காசு போனால்தானென்ன? கோடிக்கணக்கான செல்வமுள்ளவனுக்கு ஒரு காசு போனதினால் ஒன்றும் கெட்டுவிடாது. பயிற்சி 1 கீழ்வரும் வினாவாக்கியங்களைச் சாற்று வாக்கியங்களாக மாற்றுக : (1) மாந்தனுக்காகச் சட்டம் ஏற்பட்டதா? சட்டத்திற்காக மாந்தன் ஏற்பட்டானா? (2) உயிர் பெரிதா? பணம் பெரிதா? (3) வணிகரும் வழக்கறிஞரும் பொய்சொல்லாம லிருக்க முடியுமா? (4) இவ்வுலக வாழ்க்கை யாருக்குத்தான் காயம்? (5) எத்தனை காரியங்களை ஒருவன் கவனிக்கமுடியும்? (6) ஆசிரியன் தவறி நடக்கலாமா? அகராதியிற் பிழையிருக்க லாமா? (7) இத்தனை செய்திகளையும் எப்படி நினைவில் வைத் திருக்கிறது? (8) ஆயிரம் உருபா வந்தாலென்ன, ஆயிரம் உருபா போனா லென்ன? பயிற்சி 2 கீழ்வரும் சாற்று வாக்கியங்களை வினாவாக்கியங்களாக மாற்றுக : (1) தென்னைமரத்தைக் கோணலாக்கியவரும் தேக்குமரத்தை நேராக்கியவரும் இல்லை. (2) பசியால் வருந்துகிறவனுக்குப் பணமலை யிருந்தும் பயனில்லை. (3) கற்புடை மனைவியே பொற்புடைச் செல்வம். (4) களங்காய் இருண்டிருப்பதும் விளங்காய் திரண்டிருப் பதும் இயற்கை. (5) கடன் வாங்கியும் பட்டினி; கலியாணம் செய்தும் துறவி. (6) கவலைப்படுவதினால் ஒருவனும் தன் உடம்புடன் ஒரு முழத்தைக் கூட்டமுடியாது. (7) மறதியிருப்பது மாணவனுக்கு நன்றன்று. (8) சோவியத்து அரண்மனையைப்போல உயரமான கட்டடம் வேறொன்றுமில்லை. உணர்ச்சிவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம் (Interchange of Exclamatory and Assertive Sentences) கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : (1) என்னே அழகு இம் மலைக்காட்சி! இம் மலைக்காட்சி மிக அழகாயிருக்கின்றது. (2) ஆகா! நான்மட்டும் அரசனா யிருந்திருந்தால்! நான் அரசனாயிருந்திருந்தால் மிக நன்றாயிருந்திருக்கும். (3) என்னே உலக வாழ்க்கை! உலக வாழ்க்கை நிலையற்றதும் துன்பம் நிறைந்தது மானது. (4) ஓ! என் இளமை திரும்பிவரட்டுமே! என் இளமை திரும்பி வரவேண்டுமென்பது என் வேணவா. (5) என்னத்தைச் சொல்ல! நான் சொல்லமுடியாதபடி (எது சொல்லியும் பயனிலாத வாறு) கேடு விளைந்துள்ளது. (6) ஆ! என் அருமை நண்பனை மீளவும் காணப் பெறேனா! என் அருமை நண்பனை மீளவும் காணப்பெற்றால் மிக இன்பமாயிருக்கும். (7) தமிழ் வாழ்க! தமிழ் அழியாதிருக்கவேண்டும். (8) அந்தோ! என் செய்வேன்! நான் என்ன செய்தும் தப்பமுடியாத துன்பத்தில் அகப் பட்டு வருந்துகின்றேன். பயிற்சி 1 கீழ்வரும் உணர்ச்சி வாக்கியங்களைச் சாற்று வாக்கியங் களாக மாற்றுக : (1) என்ன கொடுமை இளங் குழவிகளையும் குண்டு போட்டுக் கொல்வது! (2) ஐயோ! பாவம்! இவ் அகதிக் குருடன் நிலை. (3) நான் நினைத்தவிடமெல்லாம் செல்லும் சித்தி பெற்றிருந்தால் எவ்வளவு வசதியாயிருக்கும்! (4) என்னிடம் பணமிருந்தால் உனக்கென்னதான் வாங்கித் தரமாட்டேன்! (5) பசியாதிருக்க வழியில்லையா! (6) இவ்விடத்தில் ஒரு புதையல் இருக்கட்டுமே! (7) நான் ஒரு நிமையம் (நிமிஷம்) பிந்தியிருந்தால், என் கதி என்னவாயிருக்கும்! (8) என்னே இனிமை இன்று யான் வாங்கிய மாங்கனி! (9) என்றைக்குத் தீருமோ என் வறுமை! (10) நான் என்ன செய்யட்டும்! (11) நான்மட்டும் அந்தச் சமையத்தில் அங்கிருந்திருக்க வேண்டும்! (12) என் தந்தையார் உயிரோடில்லையே! பயிற்சி 2 கீழ்வரும் சாற்று வாக்கியங்களை உணர்ச்சி வாக்கியங் களாக மாற்றுக : (1) சப்பானிய வானூர்தி குண்டுபோட்ட அன்று, சென்னை நிலை மிக அஞ்சத்தக்கதாயிருந்தது. (2) நகரங்களிலும் சில தெருக்கள் மிக அருவருப்பாயுள்ளன. (3) தொழு (குஷ்ட) நோயரையும் தொத்துநோயரையும் தெருக்களுக்கு வரவிடுவது மிகக் கேடானது. (4) கணவனையிழந்த கைம்பெண்கள் கைக்குழந்தையை ஏந்திக்கொண்டு கண்டவிடமெல்லாம் இரந்து திரிவது, மிகத் துன்பமான காட்சி. (5) நான் என் சொந்தவூர் போய்ச் சேர்ந்தால் நன்றாயிருக்கும். (6) கற்றவரும் பெருஞ் சம்பளக்காரருமான அதிகாரிகள் கையூட்டு (லஞ்சம்) வாங்குவது மிக இழிவானது. (7) தந்தையிறந்த பின்பும் கந்தன் கவலையற்றிருப்பது வருந்தத்தக்கது. (8) இச் செய்தி நம்ப முடியாததாயிருக்கின்றது. 17. வாக்கிய வடிவு மாற்றம் (தொடர்ச்சி) தனி வாக்கியத்தை கூட்டு வாக்கியமாக மாற்றல் (Conversion of Simple Sentences to Complex Sentences) கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : தனிவாக்கியம் : கேடிலியப்பர் சிவபெருமானை நோக் கித் தவங்கிடந்து தாயுமானவரைப் பெற்றார். கூட்டுவாக்கியம் : கேடிலியப்பர் சிவபெருமானை நோக் கித் தவங்கிடந்தார்; அதன் பயனாய்த் தாயுமானவரைப் பெற்றார். தனிவாக்கியம் : பாணபத்திரர் பரிசுபெறும் பொருட்டுச் சேரமான் பெருமாள் நாயனாரிடம் சென்றார். கூட்டுவாக்கியம் : பாணபத்திரர் பரிசுபெற விரும்பினார்; அதற்காகச் சேரமான் பெருமாள் நாய னாரிடம் சென்றார். தனிவாக்கியம் : தலைமையாசிரியர்மாணிக்கம் பிள்ளை இங்கிலாந்திற்கு மேற்கல்வி பயிலச்சென்றார். கூட்டுவாக்கியம் : தலைமையாசிரியர் மாணிக்கம் பிள்ளை மேற்கல்வி பயில விரும்பினார்; அதற் காக இங்கிலாந்திற்குச் சென்றார். தனிவாக்கியம் : திருநாவுக்கரசர் பரடு தேயக் கயிலைக்கு நடந்தார். கூட்டுவாக்கியம் : திருநாவுக்கரசர் கயிலைக்கு நடந்தார்; அதனால் அவருக்குப் பரடு தேய்ந்தது. தனிவாக்கியம் : யானை கொழுத்தால் பாகனுக் கடங் காது. கூட்டுவாக்கியம் : யானை ஒருசமையம் கொழுக்கும்; அதன்பின் பாகனுக்கு அடங்காது. தனிவாக்கியம் : மருதன் நன்றாய்ப் படித்தும் தேற வில்லை. கூட்டுவாக்கியம் : மருதன் நன்றாய்ப் படித்தான்; ஆனா லும் தேறவில்லை. தனிவாக்கியம் : வடமலையன் சேலங் கல்லூரியிற் சேர்ந்து கற்றுத்தேறிப் பதவிபெற்று வாழ்ந்தான். கூட்டுவாக்கியம் : வடமலையன் சேலங் கல்லூரியிற் சேர்ந்தான், கற்றான், தேறினான், பதவி பெற்றான், வாழ்ந்தான். தனிவாக்கியம் : மாணிக்கவாசகர் திருவாதவூரிற் பிறந்து, மதுரையில் அமைச்சராயிருந்து, திருப் பெருந்துறையில் உலகப் பற்றைத் துறந்து, தில்லையில் யோக மர்ந்து, சிவபெருமான் திருவடிநீழ லடைந்தார். கூட்டுவாக்கியம் : மாணிக்கவாசகர் திருவாதவூரிற் பிறந்தார்; மதுரையில் அமைச்சரா யிருந்தார்;திருப்பெருந்துறையில் உலகப் பற்றைத் துறந்தார்; தில்லையில் யோக மர்ந்தார்; சிவபெருமான் திருவடி நீழலடைந்தார். பயிற்சி கீழ்வரும் தனிவாக்கியங்களைக் கூட்டுவாக்கியமாக மாற்றுக: (1) செங்கோடன் மாடுபிடிக்கக் காங்கேயம் போயிருக் கின்றான். (2) வாலேசு கீழிந்தியத் தீவகணத்திற்குச் சென்று, ஆயிரக் கணக்கான பூச்சி புழுவகைகளைச் சேர்த்தார். (3) உதிபெருத்தால் உத்திரத்திற்காகுமா? (4) நக்கீரனார் இரந்துண்டு வாழாமல் சங்கை அரிந்துண்டு வாழ்ந்தார். (5) சர் தி. முத்துசாமி ஐயர் தெருவிளக்கிற் படித்துத் தேறி, உயர்நிலைமன்றத் தீர்ப்பாளரானார். (6) சிலர் கருமந் தொலைத்தற்பொருட்டுக் கங்கையில் முழுகுகின்றனர். (7) சிலர் குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கின்றனர். (8) எழுந்து படி. (9) சின்னப்பன் சென்னை சென்றும் கடலைப் பார்க்கவில்லை. (10) ஆடாமல் பாடாமல் அமைதியாயிரு. கூட்டுவாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல் கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : கூட்டுவாக்கியம் : ஒரு வண்டு விழுந்தது, எழுந்தது, பறந்தது, போய்விட்டது. தனிவாக்கியம் : ஒரு வண்டு விழுந்தெழுந்து பறந்து போய்விட்டது. கூட்டுவாக்கியம் : எருது ஏருழும்; பரம்படிக்கும்; நீரிறைக்கும்; வண்டியிழுக்கும். தனிவாக்கியம் : எருது ஏருழுது பரம்படித்து நீரிறைத்து வண்டியிழுக்கும். கூட்டுவாக்கியம் : நாயும் வந்தது; நம்பியும் வந்தான். தனிவாக்கியம் : நாயொடு நம்பி வந்தான். கூட்டுவாக்கியம் : தங்கம் அழகா யிருப்பது மட்டுமன்று; உறுதியாகவும் இருக்கின்றது. தனிவாக்கியம் : தங்கம் அழகாகவும் உறுதியாகவும் இருக்கின்றது. கூட்டுவாக்கியம் : யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன். தனிவாக்கியம் : யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன். கூட்டுவாக்கியம் : பெருமாள் எழுதடவை தேர்வெழுதி னான்; ஒருதடவையும் தேறவில்லை. தனிவாக்கியம் : பெருமாள் எழுதடவை தேர்வெழுதி யும் ஒரு தடவையும் தேறவில்லை. கூட்டுவாக்கியம் : அவர் பலமுறை தண்டிக்கப்பட்டார்; ஆயினும், திருந்தவில்லை. தனிவாக்கியம் : அவர் பலமுறை தண்டிக்கப்பட்டும் திருந்தவில்லை. கூட்டுவாக்கியம் : ஆபிரகாம் லிங்கன் அடிமை வணி கத்தை ஒழிக்க விரும்பினார்; அதற்கு அரும்பாடுபட்டார். தனிவாக்கியம் : ஆபிரகாம் லிங்கன் அடிமை வணி கத்தை ஒழிக்க அரும்பாடுபட்டார். கூட்டுவாக்கியம் : நாம் கற்கவேண்டும்; இல்லாவிட்டால் அறிவு பெறமுடியாது. தனிவாக்கியம் : நாம் கற்காவிட்டால் அறிவுபெற முடியாது. கூட்டுவாக்கியம் : தோட்டிபோல் உழைக்கவேண்டும்; அதன் பயனாய், துரைபோல் உண்ண லாம். தனிவாக்கியம் : தோட்டிபோல் உழைத்தால் துரை போல் உண்ணலாம். கூட்டுவாக்கியம் : ஒவ்வொருவரும் இறப்பார்; அதன் பின் திரும்பார். தனிவாக்கியம் : இறந்தவர் திரும்பார். கூட்டுவாக்கியம் : எடிசன் ஒருமுறை மூன்று நாள்களாய் உறங்கவில்லை; அவ்வகையாய் ஆராய்ச்சி நடத்தினார். தனிவாக்கியம் : எடிசன் ஒருமுறை மூன்று நாள்களாய் உறங்காமல் ஆராய்ச்சி நடத்தினார். கூட்டுவாக்கியம் : பலர் ஆள விரும்பலாம்; ஆனால், அவரெல்லாரும்அரசராக முடியாது. தனிவாக்கியம் : ஆள விரும்புகிறவரெல்லாம் அரசராக முடியாது. கூட்டுவாக்கியம் : ஒருவன் கோளரிவாய்க்குள் தன் தலையைக் கொடுக்கலாம்; ஆனால், அத் தலை மீளுவதரிது. தனிவாக்கியம் : கோளரிவாய்த்தலை மீளுவதரிது. கூட்டுவாக்கியம் : புதன் கதிரவனைச் சுற்றிவரும்; அதற்கு 88 நாட் கொள்ளும். தனிவாக்கியம் : புதன் 88 நாளில் கதிரவனைச் சுற்றி வரும். பயிற்சி கீழ்வரும் கூட்டுவாக்கியங்களைத் தனிவாக்கியங்களாக மாற்றுக : (1) எடிசன் இளமையில் செய்தித்தாள் விற்றார்; அவ்வகையில் பிழைத்தார். (2) இன்றைக்கு நீ பணங்கட்டவேண்டும்; இல்லாவிட்டால் தேர்வெழுத முடியாது. (3) தாவீது சிறுவன்தான்; ஆயினும், கோலியாத் தரக்கனைக் கொன்றுவிட்டான். (4) இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டு மூவேந்தரும் ஒற்றுமை யில்லாதிருந்தனர்; அதனால், தம் நாட்டையிழந்தனர். (5) கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்றான்; அதன்பின் அரசனானான். (6) அவ் விலங்கு புலியா யிருக்கமுடியாது; ஏனென்றால், அது புல் தின்கின்றது. (7) மதிற்காவலர் விழிப்பாயிருந்தனர்; இருந்தும், கோட்டை யை விட்டுவிட்டனர். (8) தேசியப்பாவலர் சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக் கேணிப் பார்த்தசாரதி கோயில் யானையால் மிதியுண்டார்; அதனால் இறந்தார். (9) சோம்பேறி உழைக்கிறதில்லை; ஆனால், சுவையாய் உண்ண விரும்புகின்றான். (10) தொடக்கத்தில் பலர் முந்தினார்; ஆனால், இறுதியில் பிந்திவிட்டனர். (11) பெற்றோர் பிள்ளைகளைப் பெறுகின்றனர், வளர்க்கின் றனர், பயிற்றுவிக்கின்றனர், மணஞ் செய்விக்கின்றனர், பிழைக்கும் வழிப்படுத்துகின்றனர். (12) மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும். (13) அவர் வாடகையையும் கொடுக்கவில்லை; வீட்டையும் விடவில்லை. (14) இக்காலப் போர்களில் போர் செய்வார்மட்டும் கொல்லப் படுகின்றாரல்லர்; போர் செய்யாதவரும் கொல்லப்படு கின்றனர். (15) ஆபிரகாம் பண்டிதர் கருணானந்த முனிவரைக் காண விரும்பினார்; அதற்குச் சுருளிமலை சென்றார். (16) நாம் உழைக்கவேண்டும்; இல்லாவிட்டால் உரம்பெற முடியாது. (17) பாடுபடவேண்டும்; அதனால் பலனடையலாம். (18) நீ இனிமேல் இங்கு வரக்கூடாது; வந்தால் சிறை செய்யப் படுவாய். (19) நமச்சிவாய முதலியார் பலர்க்குத் தமிழ் கற்பித்தது மட்டுமன்று, வேலையும் வாங்கிக்கொடுத்தார். (20) இந்தியர் பெரும்பாலும் கல்வியிற் பிற்போக்காளர்; அதனால் பல துறையில் முன்னேற முடியவில்லை. (21) சிலர் கல்வியில் தாழ்ந்தவர்; ஆயினும், ஒழுக்கத்தில் உயர்ந்தவர். (22) கந்தன் வழியில் ஒரு பணப்பையைக் கண்டான்; அதை எடுத்தான். (23) அசோகன் தமிழரசரை வெல்ல முடியவில்லை; அதனால், அவருடன் நட்புப்பூண்டான். (24) ஒவ்வொரு காரியத்தையும் தீர எண்ணவேண்டும்; அதன் பின்பு செய்யவேண்டும். தனிவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல் ஒரு சொல்லையாவது தொடர்மொழியையாவது கிள வியமாக விரிப்பதனாலும், வாக்கிய அமைப்பை மாற்றுவதனாலும், ஒரு தனிவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றலாம். கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : தனிவாக்கியம் : அமைச்சரது வரவு எனக்குத் தெரியாது. கலப்புவாக்கியம் : அமைச்சர் வருவார் என்பது எனக்குத் தெரியாது. தனிவாக்கியம் : அனைவரும் ஆங்கிலேயர் ஒழுங்கை ஒத்துக்கொள்வர். கலப்புவாக்கியம் : அனைவரும் ஆங்கிலேயர் ஒழுங் குள்ளவர் என்பதை ஒத்துக்கொள்வர். தனிவாக்கியம் : ஒருகடவுட் கொள்கை இன்னும் உலகில் சரியாய்ப் பரவவில்லை. கலப்புவாக்கியம் : கடவுள் ஒருவரே என்னும் கொள்கை இன்னும் உலகில் சரியாய்ப் பரவவில்லை. தனிவாக்கியம் : இன்றைக்கு நான் மழையை எதிர் பார்த்தேன். கலப்புவாக்கியம் : இன்றைக்கு நான் மழை வருமென்று எதிர்பார்த்தேன். தனிவாக்கியம் : அவர் தன்மையை ஒருவரும் அறியார். கலப்புவாக்கியம் : அவர் இன்ன தன்மையரென்று ஒருவரும் அறியார். பயிற்சி கீழ்வரும் தனிவாக்கியங்களைப் பெயர்க்கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றுக : (1) ஒருவன் அயலார் உதவியை எதிர்பார்க்கக்கூடாது. (2) நடந்ததைச் சொல். (3) மதுவிலக்குச் சட்டம் இன்று ஆட்சியி லிருக்கின்றது. (4) நான் கணக்கைக் கடினமெனக் கருதவில்லை. (5) நாளை நிகழ்ச்சி நமக்குத் தெரியாது. (6) இன்று என் தந்தையார் கடிதத்தை எதிர்பார்க்கின்றேன். (7) தம் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றவர் மிகமிகச் சிலர். (8) உன் வாய்மையில் எனக்கு நம்பிக்கையில்லை. (9) அவருடைய ஆங்கில அறிவு சிறந்ததாகக் கருதப்பட வில்லை. (10) மக்கட்சமத்துவம் என் கொள்கை. (11) உலக அமைதி நோபெல் நாட்டங்களுள் ஒன்று. (12) உடன்கட்டை யேறுதல் பெண்டிங்குப் பிரபுவால் நிறுத்தப்பட்டது. கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : தனிவாக்கியம் : செருமானியர் வேலையெல்லாம் மிகச் சிறந்ததாகும். கலப்புவாக்கியம் : செருமானியர் செய்யும் வேலை யெல்லாம் மிகச் சிறந்ததாகும். தனிவாக்கியம் : சிசரோ கடிதங்கள் இன்று சிறந்த இலக்கியமாக உள்ளன. கலப்புவாக்கியம் : சிசரோ எழுதிய கடிதங்கள் இன்று சிறந்த இலக்கியமாக உள்ளன. தனிவாக்கியம் : முதற்கால மாந்தர் மொழி ஒருசில ஒலிகளையே கொண்டது. கலப்புவாக்கியம் : முதற்கால மாந்தர் பேசிய மொழி ஒருசில ஒலிகளையே கொண்டது. தனிவாக்கியம் : மழைநாளில் மக்கள் நடமாட்டம் குறையும். கலப்புவாக்கியம் : மழைபெய்கிற நாளில் மக்கள் நடமாட்டம் குறையும். தனிவாக்கியம் : வெந்நீர்க்கிணறுசிவகாசியில் ஒன்றுண்டு. கலப்புவாக்கியம் : வெந்நீருள்ள கிணறு சிவகாசியில் ஒன்றுண்டு. பயிற்சி கீழ்வரும் தனிவாக்கியங்களைப் பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றுக : (1) சேவற்போர் சிலர்க்கு ஒரு சிறந்த வேடிக்கை. (2) சம்பளநாள் எல்லார்க்கும் மகிழ்ச்சியைத் தரும். (3) மாட்டுவண்டி வேகமாய்ச் செல்லாது. (4) மறைமலையடிகளின் நூல்களிற் பல இன்று கிடைப்ப தில்லை. (5) தண்ணீர்க் காய்களெல்லாம் தடுமத்தை (ஜலதோஷத்தை) யுண்டாக்கும். (6) பூவாது காய்க்கும் மரங்களைப் பேய்மரம் என்பர். (7) சோமசுந்தர நாயகர் சொற்பொழிவெல்லாம் சொற்சுவை பொருட்சுவை மிகுந்தவை. (8) வெள்ளையர் உடை விலையுயர்ந்தது. (9) கூலிக்காரன் உணவு மாறிவருகின்றது. (10) இளவட்டக்கலைத் தென்னாட்டுச் சிற்றூர்களில் காணலாம். (11) இடையர் ஊரே முதலில் சேரி எனப்பட்டது. (12) வண்டு மாங்கனி மிக இனிமையா யிருக்கும். கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : தனிவாக்கியம் : மாதவி கோபத்தினால் கனகவிசயர் தலைநொந்தது. கலப்புவாக்கியம் : மாதவி கோபித்ததினால் கனகவிசயர் தலைநொந்தது. தனிவாக்கியம் : பெரும் போர்க்குப் பின்பு, பஞ்சம் அல்லது கொள்ளைநோய் உண் டாகும். கலப்புவாக்கியம் : பெரும்போர் நிகழ்ந்தபின்பு, பஞ்சம் அல்லது கொள்ளைநோய் உண்டாகும். தனிவாக்கியம் : ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் சமத்துவ நீதி நிலைநிறுத்தப் பெற்றது. கலப்புவாக்கியம் : ஆங்கிலேயர்ஆண்டபோது, இந்தியா வில் சமத்துவநீதி நிலை நிறுத்தப் பெற்றது. தனிவாக்கியம் : தேசிய விடுதலையை வேண்டி எத் துணையோ இந்தியர் தம் உயிரை நீத்தனர். கலப்புவாக்கியம் : தேசம் விடுதலை பெறவேண்டு மென்று, எத்துணையோ இந்தியர் தம் உயிரை நீத்தனர். தனிவாக்கியம் : கேளாத நிலையில் எனக்கு இந்தப் பணங் கிடைத்தது. கலப்புவாக்கியம் : நான் கேளாதபோது, எனக்கு இந்தப் பணங் கிடைத்தது. தனிவாக்கியம் : மானிகட்கு மானக்கேட்டால் உயிர் நீங்கும். கலப்புவாக்கியம் : மானிகட்கு மானங்கெட்டால் உயிர் நீங்கும். தனிவாக்கியம் : மாணவர்க்குக் கணக்கைவிட இலக் கணம் கடினமாகத் தோன்றுகின்றது. கலப்புவாக்கியம் : மாணவர்க்குக் கணக்கு கடினமா யிருப்பதைவிட இலக்கணம் கடின மாயிருப்பதாகத் தோன்றுகின்றது. பயிற்சி கீழ்வரும் தனிவாக்கியங்களை வினையெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றுக: (1) மாணவர் தொகைக் குறைவால், திருச்சிராப்பள்ளி ஈபர்க் கல்லூரி எடுக்கப்பட்டுவிட்டது. (2) காந்தியடிகள் வாழ்நாளில், தாழ்த்தப்பட்டவர்க்குப் பற்பல நன்மைகள் ஏற்பட்டன. (3) எதிர்பாராதவகையில் அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது. (4) பிறர் வாழ்விற்காகப் போர்மறவர் போரில் மாள்கின்றனர். (5) மரக்குறைவால் மழை குறையும். (6) குமரகுருபரர் தம் ஐந்தாம் ஆண்டுவரை ஊமையா யிருந்தார். (7) மழையால் தெருவெல்லாம் சேறாகும். (8) மந்திரியின் மதியளவு நாடு முன்னேறும். (9) இலங்கைவாசிக்கே இலங்கையில் வேலை கிடைக்கும். (10) கணவன் மனைவியரின் குலவேறுபாட்டால் பிள்ளை களின் திறமை மிகும். (11) நீராவியைவிட மின்சாரம் மிகப் பயன்படுகின்றது. (12) இன்றைக்குக் காலை ஏழு மணிக்கு மழை தொடங்கிற்று. குறிப்பு : இருக்கின்ற உள்ள இல்லாத இன்றி முதலிய சொற்கள், பொருள் குன்றிப் பெயரெச்ச வினையெச்ச விகுதிகள் போல வழங்கின், அவற்றை யிறுதியாகக் கொண்ட சொற்றொடர்களைக் கிளவியமாகக் கொள்ளாது தனிச் சொற்களாகவே கொள்ளலாம். எ-டு : அறிவுள்ள, அறிவின்றி. கலப்பு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல் ஒரு கிளவியத்தை அல்லது பல கிளவியங்களைத் தொடர் மொழியாகவேனும் தனிச்சொல்லாகவேனும் சுருக்குவதனாலும், வாக்கிய அமைப்பை மாற்றுவதனாலும், கலப்பு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றலாம். கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : கலப்புவாக்கியம் : நீ என்ன வேலை செய்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. தனிவாக்கியம் : உன் வேலையைப்பற்றி எனக்குத் தெரியாது. கலப்புவாக்கியம் : இன்னும் இருவாரத்திற்கு இருவருக்கு மேல் கூடிப் பேசக்கூடாதென்பது, ஊர்காவல் தலைவர் ஆணை. தனிவாக்கியம் : ஊர்காவல் தலைவர் ஆணைப்படி, இன்னும் இருவாரத்திற்கு இருவருக்கு மேல் கூடிப் பேசக்கூடாது. கலப்புவாக்கியம் : சகதீசச் சந்திரபோசு, நிலைத்திணை (தாவர) யுயிரிகள் எங்ஙனம் இன்ப துன்பம் நுகர்கின்றன என்பதை விளக்கிக்காட்டினார். தனிவாக்கியம் : சகதீசச் சந்திரபோசு, நிலைத்திணை யுயிரிகளின் இன்பதுன்ப நுகர்ச்சியை விளக்கிக்காட்டினார். கலப்புவாக்கியம் : பேராசிரியர் இரத்தினசாமியின் சொற் பொழிவு, ஆங்கிலக் குடியரசு சிறந்த தென்பதைப்பற்றியது. தனிவாக்கியம் : பேராசிரியர் இரத்தினசாமியின் சொற் பொழிவு ஆங்கிலக் குடியரசின் சிறப்புப் பற்றியது. கலப்புவாக்கியம் : மகன் பட்டம் பெற்றான் என்ற செய்தி, பெற்றோர்க்கு மகிழ்ச்சியை விளைத்தது. தனிவாக்கியம் : மகன் பட்டப்பேற்றுச் செய்தி பெற் றோர்க்கு மகிழ்ச்சியை விளைத்தது. பயிற்சி கீழ்வரும் பெயர்க் கிளவியக் கலப்பு வாக்கியங்களைத் தனிவாக்கியமாக மாற்றுக : (1) உன் கருத்து என்னவென்று எனக்குத் தெரியவில்லை. (2) முத்துராமலிங்க சேதுபதி வழக்கில் வென்றது பெரும் பயனளிக்கவில்லை. (3) எதிர்காலத்தில் என்னென்ன நிகழுமென்று யார் திட்டமாய்ச் சொல்லமுடியும்? (4) அவன் அமைதியாயிருப்பது அவனது உடன் பாட்டைத் தெரிவிக்கும். (5) உனக்கு அதைப்பற்றித் தெரியாது என்பது, உன் குற்றத்தை மிகுத்துக் காட்டுகின்றது. (6) கூட்டம் தடுக்கப்படவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (7) நான் எவ்வளவு படிக்கவேண்டுமென்பது என் தந்தையாரின் விருப்பத்தைப் பொறுத்தது. (8) இராமலிங்க அடிகள் எப்படி மறைந்தார் என்பதைப் பற்றி, இருவேறு கருத்துகள் வழங்கிவருகின்றன. (9) பல தலைவர் பிரிந்துபோவது ஒரு கட்சியின் வலுவை மிகக் குறைக்கும். (10) இங்கிலாந்திற்குப்போன என் நண்பன் நலத்தோடு திரும்பி வரவேண்டுமென்பது என் பேரவா. (11) காந்தியடிகள் தென்னாட்டிற்கு ஏன் வந்தார் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. (12) மரம் நல்லது என்பது அதன் கனியால் அறியப்படும். கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : கலப்புவாக்கியம் : அவன் செய்த வேலை அவனுக்கே பிடிக்கவில்லை. தனிவாக்கியம் : அவன் வேலை அவனுக்கே பிடிக்க வில்லை. கலப்புவாக்கியம் : மணம் நடக்கும் அறை பிணம் கிடக்கும் அறையாக மாறலாம். தனிவாக்கியம் : மணவறை பிணவறையாக மாறலாம். கலப்புவாக்கியம் : தங்கம் விளையும் வயல் குவளால புரத்தில் உள்ளது. தனிவாக்கியம் : தங்கவயல்குவளாலபுரத்தில் உள்ளது. கலப்புவாக்கியம் : கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரண் டாம் நூற்றாண்டு. தனிவாக்கியம் : கம்பர் காலம் பன்னிரண்டாம் நூற் றாண்டு. கலப்புவாக்கியம் : வண்டி செல்லும் பாதை ஏறத்தாழ எல்லாவூர்க்கும் உண்டு. தனிவாக்கியம் : வண்டிப்பாதை ஏறத்தாழ எல்லா வூர்க்கும் உண்டு. பயிற்சி கீழ்வரும் பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியங்களைத் தனிவாக்கியமாக மாற்றுக : (1) அவரவர் பெற்ற பிள்ளை அவரவர்க்குப் பெரிது. (2) குழவி பேசும் மொழி குழலினும் யாழினும் இனிது. (3) யான் பிறந்த வூர் தென்னூர். (4) முத்தையா இருக்கும் இடம் எது? (5) இது காக்கைகள் தங்கும் தோப்பு. (6) அகதி சொல்லும் சொல் அம்பலமேறாது. (7) புகைவண்டி நிற்கும் நிலையங்களுட் பெரியது நியூயார்க்கில் உள்ளது. (8) விளையாட்டுப் பிள்ளைகள் செய்யும் வேளாண்மை வீடு வந்து சேராது. (9) ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும். (10) இந்திய சமுதாயச் சீர்திருத்தம் ஆமை செல்லும் வேகத்திற் செல்கின்றது. (11) முடவனுக்குக் கொம்பிலுள்ள தேன் கிட்டுமா? (12) அவனுக்குக் கிடைத்தது அரசன் உண்ணும் உணவு. கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : கலப்புவாக்கியம் : நீ விரும்பியபடி நான் செய்ய முடியாது. தனிவாக்கியம் : உன் விருப்பப்படி நான் செய்ய முடியாது. கலப்புவாக்கியம் : ஒருவர்கிறித்தவராயிருந்தால் அவரைச் சைவ மடத்தில் மாணவராகச் சேர்க்க மாட்டார்கள். தனிவாக்கியம் : கிறித்தவரைச் சைவ மடத்தில் மாணவ ராகச் சேர்க்கமாட்டார்கள். கலப்புவாக்கியம் : நாடு விடுதலையடைந்தும் பஞ்சம் நீங்கவில்லை. தனிவாக்கியம் : நாட்டு விடுதலைக்குப்பின்பும் பஞ்சம் நீங்கவில்லை. கலப்புவாக்கியம் : மழை பெய்யவேண்டுமென்று மரநட்டு விழாக் கொண்டாடப்பட்டது. தனிவாக்கியம் : மழைக்காக மரநட்டு விழாக் கொண் டாடப்பட்டது. கலப்புவாக்கியம் : ஆங்கிலேயர் அணுக்குண்டைக் கண்டு பிடித்ததினால், சிறிது காலம் அமைதி ஏற்பட்டது. தனிவாக்கியம் : ஆங்கிலேயரின் அணுக்குண்டுக் கண்டு பிடிப்பால் (அணுக்குண்டால்), சிறிது காலம் அமைதி ஏற்பட்டது. பயிற்சி கீழ்வரும் வினையெச்சக் கலப்பு வாக்கியங்களைத் தனி வாக்கியமாக மாற்றுக : (1) எங்கெங்கு ஊர் உண்டோ, அங்கெல்லாம் நீர்நிலையுண்டு. (2) ஒருவன் உழைப்பாளியா யிருந்தால், அவன் கை உரத்திருக்கும். (3) நான் இளமையாயிருந்தபோது இவ் வீடு கட்டப்பட்டது. (4) கல்வி நிலையங்கள் ஒழுங்கா யிருப்பதற்குத் தலைமை யாசிரியர் கண்டிப்பாயிருத்தல் வேண்டும். (5) சிவனடியார் எந்நேரம் சென்றாலும், இளையான்குடி மாறநாயனார் விருந்தளிப்பார். (6) ஒருவர் பாடுபட இன்னொருவர் பலன் பெற்றார். (7) பனிமலை (இமயம்) தடுத்ததினால், கரிகால் வளவன் படையெடுப்பு அதற்கப்பால் செல்லவில்லை. (8) உயிரினத்தோற்ற வகையை டார்வின் கண்டுபிடித்த காலத்தில், வாலேசும் கண்டுபிடித்தார். (9) தொழிலாளி ஒத்துழைத்து முதலாளி தொழில் நடத்த வேண்டும். (10) ஒருவன் எந்த மருந்தை யுண்டாலும் சாவு தப்பாது. (11) இளங்கோவடிகட்கு உடன்பிறப்பன்பு மிக்கிருந்ததினால், அவர் இளமையிலேயே உலகப்பற்றைத் துறக்கநேரிட்டது. (12) சர் தி. முத்துசாமி ஐயர் உயர்ந்த பதவியிலிருந்தபோதும், தாழ்ந்தவருடன் அன்பாகப் பேசினார். (13) இலவசக் கட்டாயத் துவக்கக்கல்வி ஏற்பட்டால்தான், இந்தியா முன்னேறமுடியும். (14) அவன் நோய்ப்பட்டதினால் ஏராளமான வருமானம் நின்று போயிற்று. (15) ஒருவன் குருடனாயிருந்தால் அவனுக்கு வெளிச்சம் வேண்டியதில்லை. (16) மழை நின்றபின் கூட்டம் நடத்தப்பட்டது. (17) பண்டைத் தமிழன் எவ்வளவு உயர்ந்திருந்தானோ, அவ்வளவு தாழ்ந்துள்ளான் இற்றைத் தமிழன். (18) யாருக்குப் பொருள் மிகுந்திருக்கின்றதோ, அவனுக்குக் கவலை மிகுந்திருக்கும். (19) ஒருவன் எவ்வளவு வறியவனாயிருந்தாலும், அவனிடத்தில் செம்மையிருக்கமுடியும். (20) ஒருவர் பேசும்போது இன்னொருவர் பேசக்கூடாது. (21) மருந்து இனிப்பாயிருந்தால் யாரும் குடித்துவிடுவர். (22) அரசர் உடல்நலம் பெறுமாறு கோயிலில் வழிபாடு நடந்தது. (23) நீ தீயவழியில் ஒழுகியதினால் இந்த நோய் வந்தது. (24) ஒருவன் இவ் வழியில் எந்த விடத்தில் நின்றாலும், திருவில்லிபுத்தூர்க் கோபுரம் தெரியும். கூட்டுவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல் கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : கூட்டுவாக்கியம் : ஆல்பிரெடு நோபெல் ஒருவகை வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்; அதனால் அவருக்குப் பெரும் பொருள் திரண் டது. கலப்புவாக்கியம் : ஆல்பிரெடு நோபெல் ஒருவகை வெடிமருந்தைக் கண்டுபிடித்ததினால், அவருக்குப் பெரும்பொருள் திரண்டது. கூட்டுவாக்கியம் : மழை பெய்கிறது; அதோடு காற்றடிக் கிறது. கலப்புவாக்கியம் : மழை பெய்யும்போதே காற்றும் அடிக் கிறது. கூட்டுவாக்கியம் : சிலர் முன்னேற்றத்திற்கு வழிகோலு கின்றனர்; சிலர் அதற்கு முட்டுக் கட்டை போடுகின்றனர். கலப்புவாக்கியம் : சிலர் முன்னேற்றத்திற்கு வழிகோல, சிலர் அதற்கு முட்டுக்கட்டை போடு கின்றனர். கூட்டுவாக்கியம் : பயிர் விளைந்தது; ஆனால், வெள்ளத் தினால் அழிந்துவிட்டது; அதனால் பயன் இல்லாதுபோயிற்று. கலப்புவாக்கியம் : பயிர் விளைந்தும் வெள்ளத்தினால் அழியுண்டு பயன் இல்லாது போயிற்று. கூட்டுவாக்கியம் : நீ நேர்மையாய் நடந்துகொள்ள வேண் டும்; இல்லாவிட்டால் மானம் கெடும்; வேலையும் போய்விடும். கலப்புவாக்கியம் : நீ நேர்மையாய் நடந்துகொள்ளா விட்டால்,மானங்கெட்டு வேலையும் போய்விடும். கூட்டுவாக்கியம் : சில சீர்திருத்தங்கட்குச் சட்டம் இடந்தர வில்லை; ஆகையால் சட்டத்தை மாற்றவேண்டும். கலப்புவாக்கியம் : சில சீர்திருத்தங்கட்குச் சட்டம் இடந் தராததினால், அதை மாற்ற வேண்டும். பயிற்சி கீழ்வரும் கூட்டு வாக்கியங்களைக் கலப்பு வாக்கியங்களாக மாற்றுக : (1) இன்று எனக்குச் சம்பளம் வரவில்லை; அதனால் ஊருக்குப் போகமுடியவில்லை. (2) கேள், கிடைக்கும். (3) காசுமீரத் தொல்லை நீங்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் அமைதி இராது. (4) பழையகாலத்தில் படிப்புவசதி குறைவு; இருந்தாலும், பலர் திறமையாய்ப் படித்திருந்தனர். (5) குண்டு படும்; குருவி விழும். (6) நாளைக்கு ஆள்வரும்; இல்லாவிட்டால் கடிதம் வரும். (7) களவு மிகுகிறது; ஆகையால் காவல் மிகவேண்டும். (8) வருமானம் மிகுதிதான்; ஆயினும், சிறிதும் மிஞ்சவில்லை. (9) அவன் கடன் வாங்கிக்கொண்டே போகின்றான்; அதனால், அவன் செல்வம் குறைந்துகொண்டே வருகின்றது. (10) எத்தனையோ வாய்ப்புகள் வந்தன; ஆயினும், ஒன்றைக் கூடப் பயன்படுத்தவில்லை. (11) தக்க பயிற்சி யிருக்கவேண்டும்; இருந்தால், இன்றும் கடும்பா (ஆசுகவி) பாடலாம். (12) பிறர் குற்றத்தைப் பார்ப்பவர் மிகப் பலர்; பிறர் குணத்தைப் பார்ப்பவர் மிகச் சிலர். (13) பெற்றோர் நல்லவரா யிருக்கவேண்டும்; அப்படியானால் பிள்ளைகளும் நல்லவரா யிருப்பர். (14) உலகில் அறிவு மிகுந்துவருகின்றது; அதே சமையத்தில் ஒழுக்கமின்மையும் மிகுந்துவருகின்றது. (15) ஒருவன் குற்றஞ் செய்கின்றான்; இன்னொருவன் தண்டனையடைகின்றான். (16) அமராபண சீயகங்கன் ஏவினான்; பவணந்தி முனிவர் இயற்றினார். (17) உயிர் போகலாம்; ஆனாலும், ஒழுக்கம் தப்பக் கூடாது. (18) ஆண்மகன் முன் நின்று எய்வான்; பேடி பின் நின்று எய்வான். (19) குமரப்பன் கோபக்காரன்; ஆயினும், கொடையாளி. (20) மக்கள்தொகை மிகக்கூடாது; மிகுந்தால், போர் மிகும். (21) பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டும்; இல்லாவிட்டால், உயர்திணைத்தன்மை நீங்கும். (22) யாரும் வருக; ஆயின், தமிழ்ப்பகைவன்மட்டும் வரற்க. (23) எம்மொழியும் பேசுக! ஆயின், அது தூய்மையா யிருக் கட்டும். (24) ஆசிரியன் அறிவிக்கின்றான்; அதனால் அனைவரும் அறிகின்றனர். கலப்பு வாக்கியத்தைக் கூட்டுவாக்கியமாக மாற்றல் கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : கலப்புவாக்கியம் : இக்காலத்தில் எத்துணையோ சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பினும், தாசுமகாலுக்கு ஈடாக ஒன்றுமில்லை. கூட்டுவாக்கியம் : இக்காலத்தில் எத்துணையோ சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; ஆயினும், தாசுமகாலுக்கு ஈடாக ஒன்றுமில்லை. கலப்புவாக்கியம் : திரைப்படம் வந்ததனால் நாடகம் நின்றது. கூட்டுவாக்கியம் : திரைப்படம் வந்தது; நாடகம் நின்றது. கலப்புவாக்கியம் : அவன் கட்டிய வீடு விழுந்துவிட்டது. கூட்டுவாக்கியம் : அவன் ஒரு வீடு கட்டினான்; ஆனால், அது விழுந்துவிட்டது. கலப்புவாக்கியம் : ஒவ்வொருவனும் தன்னைப்போல் பிறனும்வாழவேண்டுமென்று விரும்ப வேண்டும். கூட்டுவாக்கியம் : ஒவ்வொருவனும் தன் வாழ்வையும் விரும்ப வேண்டும்; பிறன் வாழ்வையும் விரும்பவேண்டும். கலப்புவாக்கியம் : ஊரார் புகழ விருந்துவைத்தான். கூட்டுவாக்கியம் : ஊரார் புகழ்ச்சியை விரும்பினான்; அதற்காக விருந்துவைத்தான். கலப்புவாக்கியம் : நாள்தொறும் உலவிவந்தால் நலம் கிடைக்கும். கூட்டுவாக்கியம் : நாள்தொறும் உலவி வா; நலம் கிடைக்கும் கலப்புவாக்கியம் : செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் செல்வத்தை யிழந்த பின்பும், இரவலரும் இரப்போரும் அவரால் புரக்கப் பெற்றனர். கூட்டுவாக்கியம் : செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார் செல்வத்தை யிழந்தார்; அதன் பின்பும் இரவலரையும் இரப்போரையும் புரந்தார். பயிற்சி கீழ்வரும் கலப்பு வாக்கியங்களைக் கூட்டுவாக்கியமாக மாற்றுக : (1) புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எழுத்தாளியா யிருக்கிற வளவு பேச்சாளியா யில்லை. (2) அவனுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும், தெரிந்தது போற் காட்டிக்கொள்ளுகிறான். (3) விழிப்பாயிராவிட்டால் வேலை போய்விடும். (4) ஒருநாளைக்கு ஆறு மணிநேரம் எழுதினால், ஓராண் டிற்குள் புத்தகம் முடிந்துவிடும். (5) அவன் பலமுறை பயிரிட்டும் ஒருமுறையும் விளைய வில்லை. (6) வேகமாய்ப்போனால் வண்டி கிடைக்கும். (7) இரஞ்சிட்சிங்கு ஒரு கண் குருடாயிருந்தாலும், அவன் படைமறவர் அவனைக் கண்டு நடுங்கினர். (8) அவ்விடத்திற் புலியிருக்கின்றதினால், அங்கொருவரும் போகவேண்டா. (9) அக் குடிசை குருவிகட்டிய கூடுபோன்றதாயினும், ஒருவன் அதிற் குடியிருக்கமுடியும். (10) பலமுறை பட்டும் எனக்கு மதிவரவில்லை. (11) இக்காலத்தில், கற்றவர் கெட்டிருப்பதைப்போலக் கல்லாதவர் கெட்டிலர். (12) அழைப்பில்லாமல் நான் வரமுடியாது. (13) பல கடைகள் பார்த்தும் ஆலைத்துணி கிடைக்கவில்லை. (14) பொருள் வாங்குவோர் கடைகாரர் உதவியை நாடும் நிலை என்று நீங்குமோ! (15) பங்கீட்டுத் தவறே யொழிய அரிசித் தட்டில்லை. (16) ஆள் குடியிராவிட்டாலும் வீடு வீடுதான். (17) சேம (Reserve)ñ®fhty® வந்து கலகம் அடங்கிற்று. (18) வழக்காளி குறை என்னவென்பதையும், எதிர்வழக்காளி குறை என்னவென்பதையும், தீர்ப்பாளர் கவனிக்க வேண்டும். (19) கடவுளிருக்கிறார் என்னும் கொள்கைக்கும், கடவுளில்லை யென்னும் கொள்கைக்கும், ஏதுக்கள் உள. (20) நான் எம்.ஏ. வரை என் செலவிற் படிக்க வைத்த ஏழைப்பயல், எனக்குக் கேடு சூழ்ந்தான். (21) வெற்றி உறுதியில்லாவிட்டாலும், முயற்சியை விட்டு விடாதே. (22) கண் மருத்துவம் பயிலாதவர் விற்கும் கண்ணாடி விலை குறைவாயிருப்பினும், வாங்குதல் கூடாது. (23) நான் அந்தப் பாம்பைக் கண்டிருந்தால் எப்படியாவது கொன்றிருப்பேன். (24) வணக்கமாய் வினவினால் வணக்கமான விடை கிடைக்கும். தலைமைக்கிளவியச் சார்புகிளவியப் பரிமாற்றம் கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க : (1) தலைமைச் சங்கமிருந்த தென்மதுரை இன்று கடலுள் முழுகிக்கிடக்கின்றது. இன்று கடலுள் முழுகிக்கிடக்கின்ற தென்மதுரையில் தலைச்சங்கமிருந்தது. (2) நெருப்பணைக்கும் இயந்திரம் வருமுன் வீடு வெந்து விட்டது. வீடு வெந்தபின்பு நெருப்பணைக்கும் இயந்திரம் வந்தது. (3) கோயிற் பணத்தை மதமல்லாத காரியங்கட்குச் செலவிடக் கூடாதென்று, சில சட்டசபை யுறுப்பினர் கூறுகின்றனர். சில சட்டசபை யுறுப்பினர் கூறுகின்றபடி, கோயிற் பணத்தை மதமல்லாத காரியங்கட்குச் செலவிடக் கூடாது. (4) பண்டைத் தமிழிலக்கியம் மறைந்துவிட்டமையால், தமிழின் பெருமை தமிழருக்கும் தெரியவில்லை. தமிழின் பெருமை தமிழருக்கும் தெரியாதவாறு, பண்டைத் தமிழிலக்கியம் மறைந்துவிட்டது. பயிற்சி 1 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள தலைமைக் கிளவியங்களைச் சார்பு கிளவியங்களாக மாற்றுக : (1) கடன்காரன் வந்தவுடன் கடனாளி மறைந்துவிட்டான். (2) நாங்கள் ஊர்போய்ச் சேரும்வரை பொழுதடைய வில்லை. (3) சென்றமாத விற்பனையில், நான் எதிர்பார்த்ததிற்குமேல் ஊதியங் கிடைத்தது. (4) பள்ளிக்கூடம் விட்டதும் பிள்ளைகள் பெருங் கூச்ச லிட்டார்கள். (5) மறைமலையடிகள் எழுதிய நூல்களுள் பெரியது மாணிக்கவாசகர் வரலாறும் காலமும். (6) நான் கோழிக்கோட்டிற்குச் செல்லப் பல நாளாகும். (7) ஐயாயிரம் உருபா இல்லாமல் இக்காலத்தில் ஒரு சிறு காரைவீடும் கட்டமுடியாது. (8) என் நண்பனுடைய நோய், நான் கேள்விப்பட்ட அளவு அவ்வளவு கடுமையாயில்லை. (9) கல்லூரித் திறப்புநாளில் வரவுப் பதிவுப் புத்தகத்தில் கையெழுத்து வைத்தால்தான், ஆசிரியர்க்கு விடுமுறைச் சம்பளங் கிடைக்கும். (10) மணஞ் செய்யுமுன்பே கல்வி முடிந்துவிடவேண்டும். (11) கடவுளுக்கு உருவமில்லை யென்பது சித்த மதம். (12) மாட்டிற்கிருக்கிற மதிகூடச் சில மாந்தர்க்கில்லை. (13) சிறிது சிறிதாய் மேகம் வந்து வானம் முழுவதையும் மறைத்துவிட்டது. (14) காலில் முள் தைத்திருப்பதால் நடக்கமுடியவில்லை. (15) ஒருவன் பிறரால் நேசிக்கப்படவேண்டுமாயின், தான் பிறரை நேசிக்கவேண்டும். (16) நாம் காண்கின்றவை யெல்லாம் நிலையானவை யல்ல. (17) இரவில் உண்டது செரிக்குமுன் படுக்கக்கூடாது. (18) முன்பணம் சென்றால்தான் சரக்கு வரும். (19) வண்டி மரத்தில் மோதுவதற்கு ஒரு நொடிக்குமுன் வலவன் (driver) குதித்துவிட்டான். (20) அவன் சொன்ன சொல்லை இதுவரை காப்பாற்றினதே யில்லை. (21) ஏமாற்றம் எத்தனை நாள் நடந்தாலும், உண்மை ஒரு காலத்தில் வெளிப்படாமற் போகாது. (22) கேடுவரு முன்பே மதி கெட்டுவரும். (23) நோய் நீங்கவேண்டுமென்று மருந்துண்கிறோம். (24) டாக்டர் வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை, எல்லார்க்கும் விளங்குமாறு எளியநடையில் எழுதப் பெற்றுள்ளது. பயிற்சி 2 கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள சார்பு கிளவியங்களைத் தலைமைக் கிளவியமாக மாற்றுக : (1) சாதுவன் கூறிய அறவுரையைக் கேட்ட நக்கசாரணர் தலைவன் கள்ளுங் கொலையுந் தவிர்ந்தான். (2) படைத்தலைவன் ஏவிய விடமெல்லாம் படை செல்ல வேண்டும். (3) நான் கண்ட மாந்தருள் ஒருவனாவது ஏழடிக்குமேல் உயரமாய் இருந்ததில்லை. (4) அநாகரிக மக்களும் உண்மையுள்ளவர் என்பது, உவாலேசு கண்டறிந்த வுண்மை. (5) இயந்திரத்தினாற் செய்யப்படும் பொருள்போன்றே, கையினாற் செய்யப்படும் பொருளும் உறுதியாயிருக்க முடியும். (6) அயலாரெல்லாம் உயர்வானவரென்று கருதுவது தற்காலத் தமிழன் இயல்பு. (7) காவேரி நீர் வந்தபின்பே, சேலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். (8) பணம் இருக்கும்வரை அதன் அருமை சரியாய்த் தெரியாது. (9) நம் படை வென்றது நமக்குப் பெருமகிழ்ச்சியை விளைக்கின்றது. (10) பொருளுதவி யில்லாதபோது ஆளுதவியாவது வேண்டும். (11) இந்தியா விடுதலைபெற்ற செய்தி வெளியானவுடன், இந்தியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. (12) மாணவன் தேர்வெழுதும்போதுதான், காலத்தின் அருமை அவனுக்கு விளங்கும். (13) தலைக்கோட்டையில் இராமராயரது தலை கழையில் மாட்டிக் காட்டப்பட்டதுதான், விசயநகரப் படைகள் மருண்டோடியவகை இன்னதுதான் என்று சொல்ல முடியாது. (14) கோயம்புத்தூர்த் திருவாளர் துரைச்சாமி நாயுடு சரியானபடி ஊக்குவிக்கப்பெற்றிருந்தால், இன்று அவரது இயந்திரப் புலமை நுணுக்கத்தை உலகம் கொண்டாடி யிருக்கும். (15) ஒரு குடும்பத்தில் பின் பிறக்கும் பிள்ளையே அறிவிற் சிறந்திருக்குமென்பது, உளநூல் கூறும் உண்மை. (16) ஒருவன் கொடியவனல்லன் என்பது, அவனுடைய வேலைக்காரரை அன்பாய் நடத்தும்வகையில் விளங்கும். (17) ஒரு மொழியிற் பற்றுள்ளவர் கல்வியமைச்சரா யிருக்கும் போதே, அம் மொழி மிகுந்த வளர்ச்சியடையும். (18) வழக்கறிஞர் திறமையாக வாதாடுவதனாலேயே, பெரும்பாலும் வழக்குகள் வெற்றிபெறுகின்றன. (19) நாவன்மை நினைவாற்றல் ஏரணவறிவு சட்டப்புலமை மதிநுட்பம் முதலியன விருந்தால்தான், ஒருவர் சிறந்த வழக்கறிஞராகமுடியும். (20) நாலு படி கறக்கும் மாடொன்று கால்நடை மருத்துவம் செய்யப்படும் சாலையில் உள்ளது. (21) தமிழ் வழங்காத நாட்டில் அவன் வளர்ந்திருக்கின்றான். (22) படகு மூழ்கும்படி மலைபோல் அலை யெழுந்தது. (23) நம்பி வரும்போதெல்லாம் நாயும் கூடவரும். (24) கோடைமழை பெய்யும்போது மரத்தடியில் நிற்கக் கூடாது. 17. நேர்கூற்று, நேரல் கூற்று (Direct and Indirect Speech) ஒருவர் கூற்றை, அவர் கூறியபடியே ஒரு சொல்லையும் மாற்றாது தன்மையிடத்திற்கேற்பக் கூறுவது, நேர்கூற்று ஆகும்; அதைப் பொருள் மாற்றாது ஆங்காங்கு சொன்மாற்றிப் படர்க்கையிடத்திற்கேற்பக் கூறுவது, நேரல் கூற்று ஆகும். நேராகக் கூறப்படுவது நேர்கூற்று; நேரல்லாமற் கூறப்படுவது நேரல்கூற்று. இவை, முறையே, தற்கூற்று, அயற்கூற்று எனவும் படும். தமிழில், நேர்கூற்றே நேரல்கூற்றினும் பெருவழக்காய் வழங்குவது. ஆகையால், நேர்கூற்று முறையையே, நேரல்கூற்று முறையை அறியாத மாணவரெல்லாம் தழுவ வேண்டும். நேர்கூற்று, என்றான், என்று சொன்னான், எனச் சொன்னான் என்னும் முறைபற்றிய சொற்றொடர்களுள் ஒன்றாலும்; நேரல் கூற்று, ஆகச்சொன்னான், என்பதாகச் சொன்னான், என்று சொன்னான் என்னும் முறைபற்றிய சொற்றொடர்களுள் ஒன்றாலும் முடிக்கப்பெறும். எ-டு : அவன் நான் வருவேன் என்றான். - நேர்கூற்று அவன் தான் வருவதாகச் சொன்னான். - நேரல் கூற்று நீ நாளை மண வழகனார் வீட்டிற்கு வந்தால் , அவரிட மிருந்து உனக் கொரு புத்தகம் வாங்கித் தருகின்றேன் என்று, இளவழகனார் என்னிடம் சொன்னார். - நேர்கூற்று நான் மறுநாள் மணவழகனார் வீட்டிற்குச் சென்றால், அவரிடமிருந்து எனக்கொரு புத்தகம் வாங்கித் தருவதாக, இளவழகனார் என்னிடம் சொன்னார். - நேரல்கூற்று எனது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர் களா யிருப்பதால், அவர்க்கு அறிவுபுகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாக, யான் அரும்பாடுபட்டுப் பல்கலைகளும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதாயிற்று, என்று மறைமலையடிகள் கூறுகின்றார். - நேர்கூற்று தமது நாட்டார் பெரும்பாலும் அறியாமையுள்ளவர் களா யிருப்பதால், அவர்க்கு அறிவுபுகட்டுவான் வேண்டி, கடந்த நாற்பதாண்டுகளாக, தாம் அரும்பாடு பட்டுப் பல்கலைகளும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூலியற்றவும் வேண்டியதாயிற்றென்று, மறைமலையடிகள் கூறுகின்றார். - நேரல்கூற்று தமிழில், சில கூற்றுகள் அல்லது வாக்கியங்கள், நேர் கூற்றிலும் நேரல்கூற்றிலும் ஒரே வடிவாயிருக்கும். எ-டு : இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே, பிறவிக் கடலை நீந்துதல் கூடும் என்கின்றார் வள்ளுவர். - நேர்கூற்று இறைவன் திருவடிகளை யடைந்தவர்க்கே, பிறவிக் கடலை நீந்துதல்கூடும், என்கின்றார் (என்பதாகக் கூறுகின்றார்) வள்ளுவர். - நேரல்கூற்று நேர்கூற்று நேரல்கூற்றாக மாறும்போது, சில சொற்கள் பின் வருமாறு மாறும் அல்லது மாறாதிருக்கும் : (1) மூவிடப் பதிற்பெயர்கள் நேர்கூற்று நேரல்கூற்று நான் தான் என் தன், அவன்றன் நீ நான், அவன், இவன் உன் என், தன், அவன்றன், இவன்றன் அவன் நீ, அவன், இவன் அவன்றன் உன், அவன்றன், இவன்றன் இவன் நீ, அவன், இவன் இவன்றன் உன், அவன்றன், இவன்றன் எ-டு : நான் ஆனி மாதம் வருவேன். எனக்குப் புத்தகம் வாங்கிவைஎன்று வேலன் சொன்னான். - நேர்கூற்று தான் ஆனி மாதம் வருவதாகவும், அவனுக்குப் புத்தகம் வாங்கிவைக்க வேண்டும் என்பதாகவும், வேலன் சொன்னான். - நேரல்கூற்று நான் என் வீட்டை விற்கப்போகின்றேன் என்று காடவன் கூறுகின்றான். - நேர்கூற்று தான் தன் வீட்டை விற்கப்போவதாகக் காடவன் கூறுகின்றான் - நேரல்கூற்று நீ தேறிவிட்டாய், என்று கடம்பன் என்னிடம் சொன்னான். - நேர்கூற்று நான் தேறிவிட்டதாகக் கடம்பன் என்னிடம் சொன்னான். - நேரல்கூற்று நீ தேறிவிட்டாய், என்று கடம்பன் அவனிடம் சொன்னான். - நேர்கூற்று அவன் தேறிவிட்டதாகக் கடம்பன் அவனிடம் சொன்னான். - நேரல்கூற்று நீ தேறிவிட்டாய், என்று கடம்பன் இவனிடம் சொன்னான். - நேர்கூற்று இவன் தேறிவிட்டதாகக் கடம்பன் இவனிடம் சொன்னான். - நேரல்கூற்று நீ உன் பணத்தை வாங்கிக்கொள்ளலாம், என்று நாகன் எனக்கு எழுதியிருக்கின்றான். - நேர்கூற்று நான் என் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று (என்பதாக) நாகன் எனக்கு எழுதியிருக்கின்றான். - நேரல்கூற்று நீ உன் பணத்தை வாங்கிக்கொள்ளலாம், என்று நாகன் அவனுக்கு எழுதியிருக்கின்றான். - நேர்கூற்று அவன் தன் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று (என்பதாக) நாகன் அவனுக்கு எழுதியிருக்கின்றான். - நேரல்கூற்று அவன் நல்லவன், என்று ஐயப்பன் உன்னைப்பற்றிச் சொன்னான். - நேர்கூற்று நீ நல்லவன் என்பதாக ஐயப்பன் உன்னைப்பற்றிச் சொன்னான். - நேரல்கூற்று அவன் நல்லவன், என்று ஐயப்பன் அவனைப்பற்றிச் சொன்னான். - நேர்கூற்று அவன் நல்லவன் என்பதாக ஐயப்பன் அவனைப்பற்றிச் சொன்னான் - நேரல்கூற்று அவன் தன் பெயரைச் சொல்லவில்லை, என்று மாடலன் உன்னைப்பற்றிக் குறைகூறினான். - நேர்கூற்று நீ உன் பெயரைச் சொல்லவில்லை யென்பதாக, மாடலன் உன்னைப்பற்றிக் குறைகூறினான் - நேரல்கூற்று இவன் ஏன் வரவில்லை, என்று பொன்னன் உன்னைப் பற்றிக் கேட்டான். - நேர்கூற்று நீ ஏன் வரவில்லை என்று பொன்னன் உன்னைப்பற்றிக் கேட்டான். - நேரல்கூற்று இவன் ஏன் வரவில்லை, என்று பொன்னன் அவனைப் பற்றிக் கேட்டான். - நேர்கூற்று அவன் ஏன் வரவில்லை யென்று பொன்னன் அவனைப் பற்றிக் கேட்டான். - நேரல்கூற்று இவன் தன் வேலையை விட்டுவிட்டான், என்று மழவன் உன்னைப்பற்றிச் சொன்னான். - நேர்கூற்று நீ உன் வேலையை விட்டுவிட்டதாக, மழவன் உன்னைப் பற்றிச் சொன்னான். - நேரல்கூற்று (2) அண்மைச் சுட்டுச் சொற்கள் நேர்கூற்று நேரல்கூற்று இ அ இந்த அந்த இவன் அவன் இங்கு அங்கு இன்று அன்று ஈண்டு ஆண்டு எ-டு : இவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை, என்று முத்தையன் சொன்னான். - நேர்கூற்று அவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை யென்பதாக முத்தையன் சொன்னான். - நேரல்கூற்று இவன் அமெரிக்காவிற்குப் போகின்றான், என்று நன்னன் அறிவித்தான். - நேர்கூற்று அவன் அமெரிக்காவிற்குப் போகின்றதாக நன்னன் அறிவித்தான். - நேரல்கூற்று இன்று ஒரு திருவிழா, என்று ஒருவன் சொன்னான். - நேர்கூற்று அன்று ஒரு திருவிழா என்பதாக ஒருவன் சொன்னான். - நேரல்கூற்று பொருள்களின் அண்மைநிலை இருவகைக் கூற்றுக்கும் பொதுவாயின், அண்மைச் சுட்டுச்சொற்கள் நேரல்கூற்றில் மாறா. எ-டு : இவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை யென்பதாக முத்தையன் சொன்னான். இவன் அமெரிக்காவிற்குப் போகின்றதாக நன்னன் அறிவித்தான். இன்று ஒரு திருவிழா என்பதாக ஒருவன் சொன்னான். (3) சில காலக்குறிப்பு வினையெச்சங்கள் நேர்கூற்று நேரல்கூற்று நேற்று நேற்று, முந்தாநாள், கடந்த நாலாம் நாள், முந்தினநாள் முந்தாநாள் முந்தாநாள், கடந்த நாலாம் நாள் இன்று இன்று, நேற்று, முந்தாநாள், அன்று நாளை நாளை, இன்று, நேற்று, மறுநாள், (அடுத்த நாள்) நாளைநின்று நாளைநின்று, நாளை, இன்று, நேற்று, முந்தாநாள், அடுத்த மூன்றாநாள் எ-டு :நேற்று வந்தார், என்று இன்று சொல்லப்படுகின்றது. - நேர்கூற்று நேற்று வந்ததாக இன்று சொல்லப்படுகின்றது. - நேரல்கூற்று முந்தாநாள் (கடந்த மூன்றாநாள்) வந்ததாக நேற்றுச் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று நேற்று வந்தார், என்று முந்தாநாள் சொல்லப்பட்டது. - நேர்கூற்று கடந்த நாலாநாள் வந்ததாக முந்தாநாள் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று நேற்று வந்தார், என்று அன்று சொல்லப்பட்டது. - நேர்கூற்று முந்தினநாள் வந்ததாக அன்று சொல்லப்பட்டது. - நேரல்கூற்று இன்று வருகிறார், என்று இன்று சொல்லப் படுகின்றது. - நேர்கூற்று இன்று வருகிறதாக இன்று சொல்லப்படுகின்றது. - நேரல்கூற்று இன்று வருகிறார், என்று நேற்றுச் சொல்லப்பட்டது. - நேர்கூற்று நேற்று வருவதாக நேற்றுச் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று இன்று வருகிறார், என்று முந்தாநாள் சொல்லப்பட்டது. - நேர்கூற்று முந்தாநாள் வருவதாக முந்தாநாள் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று இன்று வருகிறார், என்று அன்று சொல்லப்பட்டது. - நேர்கூற்று அன்று வருவதாக அன்று சொல்லப்பட்டது. - நேரல்கூற்று நாளை வருவார், என்று இன்று சொல்லப்படுகின்றது. - நேர்கூற்று நாளை வருவதாக இன்று சொல்லப்படுகின்றது. - நேரல்கூற்று நாளை வருவார், என்று நேற்றுச் சொல்லப்பட்டது. - நேர்கூற்று இன்று வருவதாக நேற்றுச் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று நாளை வருவார், என்று முந்தாநாள் சொல்லப் பட்டது. - நேர்கூற்று நேற்று வருவதாக முந்தாநாள் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று நாளை வருவார், என்று அன்று சொல்லப்பட்டது. - நேர்கூற்று அடுத்தநாள் (மறுநாள்) வருவதாக அன்று சொல்லப் பட்டது. - நேரல்கூற்று இங்ஙனமே, கால முன்பின்மையைக் கவனித்து, ஏனைநேர்கூற்றுச் சொற்களையும் மாற்றிக்கொள்க. எ-டு : நேற்று வந்தார், என்று நாளைச் சொல்லப்படும். - நேர்கூற்று இன்று வந்ததாக நாளைச் சொல்லப்படும். - நேரல்கூற்று நாளை வருவார், என்று நாளைச் சொல்லப்படும். - நேர்கூற்று நாளை நின்று வருவதாக நாளைச் சொல்லப்படும். - நேரல்கூற்று அவர் அடுத்த மாதம் வருவார் என்று போனமாதம் சொல்லப்பட்டது. - நேர்கூற்று அவர் இந்த மாதம் வருவதாகப் போனமாதம் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று (4) சில வினைச்சொற்கள் நேர்கூற்று நேரல்கூற்று வா போ (செல்) போ(செல்) வா எ-டு : இம்மாதம் 25ஆம் நாள் மறைமலையடிகள் இங்கு வருவார், என்று இடைக்காடன் சொன்னான். - நேர்கூற்று இம்மாதம் 25ஆம் மறைமலையடிகள் அங்கு செல்வதாக இடைக்காடன் சொன்னான். - நேரல்கூற்று கல்வியமைச்சர் சேலம் செல்வார், என்று சென்னையில் ஒருவர் சொன்னார். - நேர்கூற்று கல்வியமைச்சர் இங்கு (சேலத்திற்கு) வருவதாகச் சென்னையில் ஒருவர் சொன்னார். - நேரல்கூற்று. (5) சில வினைச்சொல் வடிவங்கள் நேர்கூற்று நேரல்கூற்று செய், செய்யுங்கள், செய்ய செய்க செய்யும்படி செய்யவேண்டும் செய்யேல், செய்யாதீர், செய்யற்க செய்யக்கூடாது. எ-டு : ஊர்போய்ச் சேர்ந்தவுடன் கடிதம் எழுது (எழுதுங்கள், எழுதுக,) என்று சொக்கப்பனார் என்னிடம் சொன்னார். - நேர்கூற்று. ஊர்போய்ச் சேர்ந்தவுடன் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார் சொக்கப்பனார். - நேரல்கூற்று (அல்லது) ஊர்போய்ச் சேர்ந்தவுடன் நான் கடிதம் எழுதவேண்டு மென்பதாகச் சொன்னார் சொக்கப்பனார். - நேரல்கூற்று எந்தக்காரணத்தையிட்டும் வகுப்பிற் பேசேல் (பேசாதீர்), என்பது ஆசிரியரின் கட்டளை. - நேர்கூற்று எந்தக் காரணத்தையிட்டும் வகுப்பிற் பேசக்கூடா தென்பதாக ஆசிரியரின் கட்டளை. - நேரல்கூற்று கடவுள் மழை அருள்க, என்பது மக்கள் வேண்டுகோள். - நேர்கூற்று கடவுள் மழை யருளவேண்டு மென்பதாக மக்கள் வேண்டு கோள். - நேரல்கூற்று கவனிப்பு : செய்ய, செய்யும்படி என்னும் வாய்பாட்டுச் சொற்கள் வரின், என்று என்னும் இணைப்புச் சொல் வராது. (6) வினைச்சொற் காலம் நேர்கூற்று நேரல்கூற்று செய்கிறது செய்தது எ-டு : மருந்து கசப்பாயிருக்கிறது என்றான் நோயாளி. மருந்து கசப்பாயிருந்ததாகக் கூறினான் நோயாளி. - நேரல் கூற்று மேற்காட்டியவற்றிலிருந்து, நேர்கூற்றுச் சொற்களை நேரல் கூற்றுக் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும்; இருவகைக் கூற்றினாலும் குறிக்கப்படும் காலமும் இடமும் ஒன்றாயிருப்பின், நேர்கூற்றுச்சொற்கள் நேரல்கூற்றில் மாறுவதில்லையென்றும்; அறிந்துகொள்க. நேர்கூற்று வாக்கியம், கூறுவான் பெயரொடு தொடங்கி, என்றான் அல்லது என்று சொன்னான் என்னும் முறைமையில் முடிவது இயல்பு. கூற்றுக்குமுன், சொன்னான் அல்லது கூறினான் என்பதுபோன்ற கூறுதல் வினைச்சொல்லை நிறுத்தி முன் முடிபு வாக்கியமாகக் கூறின், என்று என்னும் சொல் இறுதியில் நிற்றல் வேண்டும். எ-டு : பெரியண்ணச் செட்டியார் நாளைக்கு நல்ல சம்பா அரிசி வருகிறது என்றார் (என்று சொன்னார்). தம்மண்ணச் செட்டியார் சொன்னார், இராமசாமிக் கவுண்டர் இளைஞராயினும் அறிவாற்றல் மிகப்படைத்தவர் என்று. நேர்கூற்று, சொன்னது அல்லது சொன்னதாவது என்னுங் தொடருக்குப் பின்வரின், என்பது என்னும் சொல்லால் முடிக்கப்படுதல் வேண்டும். எ-டு : இராவ்சாகிபு இரத்தினசாமிப் பிள்ளை இராமசாமிக் கவுண்டருக்கு 1942-ல் சொன்னது, இச் சேலங் கல் லூரியை இன்னும் ஓராண்டிற்குள் முதல்தரக் கல்லூரியாக்கி விடுவேன்; ஆகையால், நீங்கள் வேறெங்கும் செல்ல வேண்டா என்பது. நேர்கூற்றில் மேற்கோட்குறி இருப்பினும் இராவிடினும், என்றான் (என்று சொன்னான்) அல்லது என்பது என்னும் முடிப்புச்சொல் இன்றியமையாததாகும். முருகன் சொன்னான், நான் வருவேன், - என்று ஆங்கிலத்திற்போ லெழுதுதல் வழுவாகும். அழகன் சொன்னதாவது, நான் எழுதுவேன் என்பது, என்னும் முன்முடிபு அமைப்பினும், அழகன் நான் எழுதுவேன் என்றான் என்னும் பின்முடிபு அமைப்பே இயல்பானதும் இனியதுமாகும். ஓர் உரையாட்டிலுள்ள கூற்றுகளை முடிப்புச் சொற்களின்றி மாறிமாறி யெழுதுவது, உரையாட்டு நடையேயன் றிக் கட்டுரை நடையன்று. குறுகிய கூற்றுகளேயன்றி, நீண்ட கூற்றுகள் நேரல் கூற்றிற்கு ஏற்கா. பயிற்சி 1 கீழ்வரும் நேர்கூற்று வாக்கியங்களை நேரல்கூற்றாக மாற்றுக: (1) மறைமலையடிகளை இராவ்சாகிபு இரத்தினசாமிப் பிள்ளையவர்களின் மகளார் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அழைத்ததற்கு, அவர் யான் இன்று பாயும் படுக்கையுமாயுள்ளேன். ஆதலால், யான் வருதற்கில்லை. ஆனால், என் மூத்த மகன் மாணிக்கவாசகத்தை அனுப்பி வைக்கின்றேன். ஏற்றுக்கொள்க, என்று பதிலெழுதி விட்டாராம். (2) ஒரு துறவி, மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு செம்பட வனை நோக்கி, ஐயோ! நீ எப்போது கரையேறுவாய்? என்று கேட்டார். அதற்கு அவன் ஐயா, என் பறிநிரம்பினால் கரையேறுவேன் என்றான். (3) ஒரு பெரியார் வழக்குக் கேள்விக்கு (Hearing) வந்தது. தீர்ப்பாளர் குற்றாலம் பிள்ளை அவரை நோக்கி, நீர் நாமக்கல்லில் நிகழ்த்திய சொற்பொழிவினின்று, நீர் வகுப்புப் பகைமை மூட்டிவருவது தெளிவாகின்றது. ஆதலால், உமக்கு 500 ரூ. தண்டம், அது கொடுக்கத் தவறினால் ஆறு மாதக் கடுங்காவல், விதிக்கின்றேன், என்று தீர்ப்பளித்தார். அதற்கு அப் பெரியார், எனக்குத் தண்டங்கொடுக்க விருப்பமில்லை. ஆறுமாதக் கடுங்காவலே அடைகின்றேன், என்று கூறிக் காவற்கூடஞ் சென்றார். (4) ஒரு முரட்டுச்சேவகன் தன் மனைவியை நாள்தோறும் காரணமில்லாமல் அடித்துக்கொண்டிருந்தான். ஒருநாள் வழக்கப்படி அவளை அடிக்கையில், அவள் நீ ஏன் இப்படி என்னை அடிக்கின்றாய்? என்று கேட்டாள். அதற்கு அவன், நான் சொன்னபடி செய்யாமையால் அடிக்கின்றேன், என்று சொன்னான். உடனே அவள் அவனுக்கு மதி கற்பிக்க எண்ணி, இனிமேல் நீ சொன்ன படியே செய்கின்றேன். ஆனால், என்னை அடிக்கக் கூடாது, என்று சூள் (ஆணை) இடுவித்துக் கொண்டாள். பின்பு ஒருநாள், அடி! அடி! எங்கே போகிறாய்? என்று கேட்டான். அவள் ஓடிவந்து அவனை இருமுறை அடித்து, நீ சொன்னபடியே செய்தேன் என்றாள். மற்றொரு நாள், அவன் அவள் தலையில் உமியைப் பார்த்து அடி! தலையில் உமி என்றான். அவள் உடனே அவனை ஓரடியடித்து அவன் தலையில் உமிழ்ந்தாள். வேறொரு நாள் கொஞ்சம் பணங் கொண்டுவந்து கொடுத்து, இதை வீட்டுக்குள்ளே வை என்றான். அவள் அதை வீட்டுக்குள்ளே கொண்டுபோய், மூடனுடைய பணமே! முரடனுடைய பணமே! என்று வைது கொண்டிருந்தாள். அவன் இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து, அறிவடைந்து, அதற்குமேல் அவளை அடிப்பதை நிறுத்திவிட்டான். (5) சென்ற நகராண்மைத் தேர்தலில், சின்னையன் நன்னை யனிடம், உனக்கு எப்படியாவது நூறு குட வோலைகளை (Votes) வாங்கித்தருகின்றேன். ஆனால், நீ தேர்ந் தெடுக்கப்பட்டவுடன், என் வீட்டுத் தாழ்வாரத்தை இடிப்பதற்குப் பிறப்பித்துள்ள உத்தரவை நீக்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும், என்று ஒப்பந்தஞ் செய்து கொண்டான். (6) 500 ரூபா தாள் நாணயம் (நோட்டு) உள்ள என் பணப்பை நேற்று மாலை புகைவண்டி நிலையத்திற்குப் போன வழியில் தவறிவிட்டது. அதை யெடுத்தவர் என்னிடங் கொண்டுவந்து கொடுத்தால், உடனே 100 ரூபா நன்கொடை யளிக்கின்றேன், என்று பெரியண்ணச் செட்டியார் விளம்பரஞ் செய்திருக்கின்றார். (7) ஒரு பேராசைப் பேயன் ஒரு தெய்வத்தினிடம் வரங் கேட்கச் சென்றபோது, அத் தெய்வம் அவன் பேராசையை அறிந்து, நீ பல வரங்கேட்டால் கொடுக்கமாட்டேன். ஒரே வரங்கேள்.கொடுக்கின்றேன் என்று சொல்ல, அவன் அதற்கிசைந்து, தெய்வமே! என் பேரனுக்குப் பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற்கலத்தில் பாலும் பழமு முண்ண, நான் கண்குளிரக் காணவேண்டும், என்று கேட்டான். (8) மோசே காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, திடுமென்று ஓரிடத்தில் ஒரு முட்செடி தீப்பற்றி யெரிந்தது. அவர் அவ்விடஞ் சென்றபோது, நீ நிற்கு மிடம் தூய்மையானது. உன் பாதக்காப்பைக் கழற்றிவிடு, என்று ஒரு வானொலி கூறிற்று. (9) சீதை அனுமனிடம், இன்னும் ஒரு மாதம் இங்கிருப்பேன். அதற்குள் என் கணவன் இங்கு வராவிடின் நான் உயிர் துறப்பேன், என்று சொன்னாள். (10) நான் சென்னையிலிருந்து திருவாங்கூர் சென்று வேலை யிலமர்ந்தேன். நோய்வந்து நெடுநாளாகத் தீராமையால் வேலை போய்விட்டது. இன்று குடும்பத்துடன் சொந்த வூருக்குத் திரும்பிப்போகின்றேன். கையிற் காசில்லை. ஏதேனுங் கொடுத்துதவுங்கள், என்று இதற்குள் எத்தனையோபேர் என்னிடம் சொல்லி விட்டனர். (11) ஒரு கணியன் (சோதிடன்) என்னிடம் வந்து, நீ பாம்பினாற் கடியுண்டிறப்பாயென்று ஒரு சாபமிருக் கின்றது. எனக்கு 5 ரூபா கொடு. ஒரு குளிசங்கட்டி அச் சாபத்தைப் போக்குகின்றேன், என்று என்னை ஏய்க்கப் பார்த்தான். நான் அதற்கு இடந்தரவில்லை. (12) நான் சென்ற ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த போது, அங்கோர் எத்தன், முன்னதாக வழியில் ஒரு பித்தளை நகையைப் போட்டுவிட்டுவந்து, என்னோடு கூட நடந்து தான். புதிதாய் அந் நகையைக் கண்டெடுத்தது போல் எடுத்து, இதோ பார்! ஒரு நல்ல பொன் நகை! இது 50 ரூபாய் பெறும்போலிருக்கிறது. இது நம்மிருவருக்கும் பொது. கடைக்குப்போய் விற்று நாமிருவரும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், எனக்கு நேரமில்லை. உடனே புகைவண்டிக்குப் போகவேண்டி யிருக்கின்றது. ஆகை யால், நீயே எடுத்துக்கொள். ஒரு மதிப்பாய் விலையிட்டுப் பாதியைக் கொடுத்துவிடு. நான் போகிறேன், என்று சொன்னான். நான் எனக்கு இது வேண்டா. நீதானே எடுத்துக்கொள், என்று சொல்லி விட்டுப் போய் விட்டேன். இங்ஙனம் எத்துணையோ ஏமாற்றங்கள் நடந்து வருகின்றன. (13) படைத்தலைவன் தன் படைமறவரை நோக்கி, இதுவே சமையம். எதிரிகளைத் தாக்குக, என்று கட்டளை யிட்டான். (14) தாசுமகால் என்ன அழகாயிருக்கின்றது! என்று திரும்பத் திரும்ப வியந்தார் நம்முடன் வந்தவர். (15) பழனியப்பன் நன்றாய்ப் படிக்கின்றானா? தேர்விற்கு இன்னும் எத்தனை நாளிருக்கின்றன? அவனுக்கு ஏதேனும் பணம் வேண்டுமா? என்று அவன் தந்தையார் எனக்கு எழுதிக் கேட்டிருக்கின்றார். (16) அடுத்த வாரம் எம் கல்லூரியில் மாணவர் தமிழ்க் கழகத்தின் சார்பாகத் தாங்கள் ஏதேனுமொரு பொருள் பற்றிச் சொற்பொழிவாற்ற முடியுமா? என்று திருவாளர் சோமசுந்தர பாரதியார் அவர்கட்கு எழுதிக் கேட்டதற்கு அவர்கள் இன்னும் இரு மாதம் பொறுத்துத் தெரிவிக் கின்றேன், என்று பதிலெழுதிவிட்டார்கள். (17) அந்தப் பிள்ளையைப் பார்த்தவரெல்லாரும் ஐயோ! பாவம்! என்றிரங்குகின்றனர். (18) இனிமேல், எந்தக் காரணத்தையிட்டும், எழுத்தாளர் அறைக்குட் செல்லக்கூடாது, என்று எம் கல்லூரித் தலைவர் ஆசிரியர்க்குக் கண்டிப்பாய்க் கட்டளை யிட்டு விட்டார். (19) வருகிற நவராத்திரி விடுமுறைக்கு இங்கே வாருங்கள். குளிர்ந்த அருவியிற் குளிக்கலாம். இனிய தென்றல் நுகரலாம். உடல் மிக நலமுறும், என்று குற்றாலத்தி லிருந்து நல்லதம்பிப்பிள்ளை எழுதியிருக்கின்றார். (20) நேற்று நான் திரைப்படத்திற்குப் போகவிருந்தேன். என் தந்தையார் போகவேண்டா என்று தடுத்துவிட்டார். (21) இன்றிருந்து நான் கள்ளையே தொடுவதில்லை என்று எத்தனையோபேர் அன்று நோன்பு பூண்டு கொண்டனர். (22) இந் நிலம் தங்கட்கும் தங்கள் வழியினர்க்கும் கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம் முற்றூட்டாய் (சர்வ மானியமாய்) இருக்கக்கடவது, என்று செப்புப் பட்டயத் திற் கண்டிருக்கின்றது. (23) இத் தொகையைத் தாங்களேனும் தங்கள் உத்தரவு பெற்றவரேனும், என்று கேட்டாலும், வட்டியும் முதலு மாகக் கொடுத்துத் தீர்க்கின்றேன் என்று எழுதிக் கொடுத்திருக்கின்றார். (24) தமிழ் வாழ்க! தமிழ்ப்பகை வீழ்க! அன்பு ஓங்குக! அறியாமை நீங்குக! என்று தலைவர் முன் சொல்ல, அவையோ ரெல்லாரும் பின் சொல்லி ஆரவாரித்தனர். பயிற்சி 2 கீழ்வரும் நேரல்கூற்று வாக்கியங்களை நேர்கூற்றாக மாற்றுக: (1) ஆள்வினையர் தில்லியிலும், பகைவர் காளிக்கோட்டத் திலும், நண்பர் பம்பாயிலும், அடிமையர் சென்னையிலும் இருப்பதாக, கிச்சினர் பிரபு கூறியிருக்கின்றார். (2) திருவனந்தபுரத்தில் அரசர் கோயில் தீப்பற்றியதற்குக் காரணங் கேட்டபோது, அதற்குச் சற்றுமுன்பு அவ் அரசர் இங்கிலாந்து சென்று மீண்டதனால், தெய்வத்திற்குச் சினம் மூண்டதாகச் சொல்லப்பட்டதாம். (3) காந்தியடிகள் இறந்த செய்திகேட்ட ஒரு துறவியார், டாக்டர் அழகப்பச் செட்டியாரிடஞ் சென்று, தமக்கு இறந்தோரைப் பிழைப்பிக்கும் ஆற்றலிருப்பதாகவும், தம்மைத் தில்லிக்கு உடன் கொண்டுசென்றால், காந்தி யடிகளைப் பிழைப்பித்துவிடுவதாகவும் சொல்லி, அவருடன் வானூர்தியிலேறி தில்லிக்குச் சென்றார். (4) சென்ற உலகப் பெரும்போர்த் தொடக்கத்தில், இலண்டன் மாநகர் அழிந்துவிடுவதானால் மிகப் பேரிழப்பாகும் என்பதாக, காந்தியடிகள் கவன்றார். (5) அவர் மறுநாள் எனக்காக விடுமுறை பெற்றுக்கொண்டு வட்டாரக் கல்வியதிகாரியைப் போய்ப் பார்ப்பதாகச் சொல்லி, தாம் மறந்துவிடாதவாறு தம் அரையாடையில் முடிபோட்டுக் கொண்டார். (6) சென்னை மாகாணத்திற் பலவிடங்களில் நச்சுக்கழிச்சல் (பேதி) தோன்றியிருப்பதால், வருகிற மகாமகத்திற்கு வெளியார் ஒருவரும் ஊசி போட்டுக் கொள்ளாமல் கும்பகோணஞ் செல்லக்கூடாதென்பதாக, அரசியலார் உத்தரவிட்டிருக்கின்றனர். (7) கோழி திருடினவளைக் கண்டுபிடித்தற்கு, கோழி திருடி னவள் தலையில் தூவியிருக்குமென்பதாக, மரியாதை ராமன் வலக்காரமாய் (தந்திரமாய்)ச் சொன்னான். உடனே, பல பெண்டிரிடையே நின்ற கோழிதிருடி, தன் தலையைத் தடவிப்பார்த்தாள். அவள் உடனே கண்டு பிடிக்கப் பட்டாள். (8) மனித இனங்களின் அழிவைப்பற்றிக் கூறுமிடத்து -தாசுமேனியாவில் (Tasmania) ஆங்கிலேயர் கால்வைத்த போது, அங்கிருந்து பழங்குடிமக்கள், சிலரால் 7,000 பேர் என்றும், சிலரால் 20,000 பேர் என்றும், மதிக்கப் பட்டதாகவும்; முக்கியமாய் ஆங்கிலேயரோடும் தம்முள் ஒருவரொருவரோடும் பொருததனால், அவர்கள் தொகை விரைந்து குறைந்ததாகவும்; அங்குக் குடியேறினவர்கள் ஆடிய பேர்போன வேட்டைக்குப் பின்பு, எஞ்சி யிருந்தவர்கள் தங்களை அரசியலார்க்கு ஒப்புக் கொடுத்தபோது, அவர்கள் 120 பேராய் இருந்ததாகவும்; அவர்கள் 1832-ல் பிளிந்தர்சு (Flinders) தீவிற்குக் கொண்டு போகப்பட்டதாகவும்; அத் தீவு தாசுமேனியாவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையில், 40 கல் நீளமும் 12 முதல் 18 கல் வரை அகலமுமுள்ளதாகவும்; அது நலத்திற் கேதுவானதாயிருந்து அங்கு அப் பழங்குடிமக்கள் நன்றாக நடத்தப்பட்டும் நலங்குன்றி மிக வருந்தியதாகவும்; 1834-ல் அவர்கள் 47 வளர்ச்சியடைந்த ஆண்களும், 48 வளர்ச்சி யடைந்த பெண்களும், 16 சிறு பிள்ளைகளுமாக மொத்தம் 111 பேராயிருந்ததாகவும்; 1835-ல் அவர்களுள் நூற்றுவரே எஞ்சியதாகவும்; அவர்கள் தொடர்ச்சியாய் விரைந்து குறைந்ததினாலும், தாங்கள் அயலிடத்தில் அவ்வளவு விரைந்து அழிந்துபோகக் கூடாது என்று அவர்களே கருதியதினாலும், தாசுமேனியாவின் தென் பாகத்திலுள்ள கிளிஞ்சிற் குடா (Oyster Cove) என்னு மிடத்திற்கு 1847-ல் அவர்கள் உய்க்கப்பட்டதாகவும்; அவர்கள் அன்று பதினால் ஆடவரும் இருபத்திரு பெண்டிரும் பத்துச் சிறுவருமாக இருந்ததாகவும்; அவ் விடமாற்றம் நன்மை பயக்காததினால், நோவுஞ் சாவும் அவர்களைத் தொடர்ந்து, 1864-ல் ஓர் ஆடவனும் மும்மூதாட்டியருமே எஞ்சி நின்றதாகவும்; அவ்ஆடவனும் 1869-ல் இறந்து போனதாகவும்; டார்வின் வரைந்திருக்கின்றார். (9) பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியார் இருமல் நோயால் துன்புற்றபொழுதும், மாணவரை ஐயன்மீர் என விளித்து, இருமல் தம்முடன் பெருமல் செய்வதாக இரங்கிக் கூறிக்கொண்டே தமிழ்ப்பாடம் நடத்துவாராம். (10) மயில்வாகனர் (பின்னர் விபுலானந்த அடிகள்) ஒருநாள் தம் மாணவரைநோக்கி, சிவபெருமான் அவர்கட்குக் காட்சி தந்து அவர்கட்கு என்ன வரம் வேண்டும் என்பதாகக் கேட்டால், அவர்கள் என்ன கேட்பார்கள் என்பதாகத் திடீரென்று கேட்டாராம். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொன்றைச் சொன்னாராம். இறுதியில் மயில்வாகனர், தம்மைக் கேட்பின் தாம் முத்திதரும்படி கேட்கமாட்டாததாகவும், முத்தி அவரளவில் நின்று விடுவதாகவும், அதைவிட எல்லாரும் இன்புறுமாறு தொண்டுசெய்வதிலுள்ள இன்பம் மிகுதியாதலின், தொண்டுசெய்ய வரந்தரவும் தமிழ்ப்பணிசெய்ய வரமருளவும் தாம் கேட்பதாகவும், முகமலர்ச்சியுடன் கூறினாராம். (11) விபுலானந்த அடிகள், தம் யாழ்நூலை அன்பர் ஒருவர் அச்சிட விரும்பினதாக, தம் நண்பர் ஒருவரிடம் குறிப்பிட் டாராம். அந் நண்பர், அடிகளின் அன்பர் சிறந்த படிப்பாளிபோல் தெரிந்ததாகக் கூறினாராம். அதற்கு அடிகள், அவ் அன்பர் பெரிய படிப்பாளியல்ல ராயினும், தமிழார்வம் மிக்கவரும் நற்பண்புகள் பெற்றவரும் பெருஞ்செல்வரும் ஆனவர் என்பதாகவும்; தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் தமிழ் கற்றார் பலருள்ளும் காணப்படும் பெருங்குறை ஒன்றுள்ளதாகவும்; அது பிறரிடம் நலன் எதுவும் காண விரும்பாமையாகும் என்பதாகவும்; புலவர் பிறர்பாலுள்ள நலன்களைக் கண்டு பொறாமை கொள்கின்றதாகவும்; வெளியில் உதட்டளவில் புகழ்வது தவிர உளமாரப் புகழாததாகவும்; அதனால் அவர் தம்முள மனவொற்றுமையின்றிச் சிதறுண்டு சிறப்பிழந்து தவிக் கின்றதாகவும்; மிகுந்த வருத்தத்துடன் கூறினாராம். (12) கதிரவன் ஒளி காற்றின்வழியே நிலநோக்கி வருகையில் பல நிறங்களோ டுள்ளதாகவும், அப் பலநிறக் கதிர்களும் வாயுவணுக்களால் தனித்தனி பிரிக்கப்படுகின்றதாகவும், அவற்றுள் பிற கதிர்களைவிட மிகுதியாகப் பிரிக்கப் படுகின்ற நீலநிறக்கதிர்களே வானத்திற்கும் கடல்நீருக்கும் நீலநிறத்தை யளிக்கின்றதாகவும், சர் ச. வேங்கடராமன் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். (13) மரஞ்செடி கொடிகளாகிய நிலைத்திணை (தாவர) உயிரிகளும், நம்மைப்போன்று மூச்சுவிடுகின்றதாகவும் இன்பதுன்பம் நுகர்கின்றதாகவும், சர் சகதீசச் சந்திரபோசு காட்டியுள்ளார். (14) எத்துணையோ அருந்தமிழ்க் கலைகள் பெயருந் தெரியாத படி கடலாற் கொள்ளப்பட்டொழிந்ததாக ஒரு புலவர் கூறி வருந்துகின்றார். (15) கோவலன் கண்ணகியைவிட்டுப் பிரிந்து மாதவியுடன் ஒழுகிவரும் நாளில், கண்ணகி தான் கண்ட தீக்கனா வொன்றைத் தன் தோழி தேவந்தியிடம் தெரிவிக்க; அவள் காவிரிப்பூம்பட்டினத்தருகிலுள்ள சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் ஏரிகளில் நீராடிக் காமனைத் தொழுவார், இப் பிறப்பில் கணவருடன் கூடி யின்புறு வதுடன், மறுபிறப்பில் இன்பவுலகிற்போய்ப் பிறப்பதாகக் கூறி, அவற்றில் நீராட வருமாறு கண்ணகியை அழைக்க; அவள், அங்ஙனந் துறைமூழ்கித் தெய்வந் தொழுதல் தன்போன்றார்க் கியல்பன்மை கூறி மறுத்ததாக, சிலப் பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது. (16) பாடச்சொன்னாற் பாடமாட்டான்; பாடாதிருக்கச் சொன்னாற் பாடுவான். (17) ஈயச்சொல்லி இரத்தல் இழிந்தது; ஈதல் மறுத்தல் அதனினும் இழிந்தது; கொள்ளச் சொல்லிக் கொடுத்தல் உயர்ந்தது; கொள்ள மறுத்தல் அதனினும் உயர்ந்தது. (18) படிக்கிற பிள்ளையைத் தடுத்தாலும் படிக்கும்; படிக்காத பிள்ளையைத் தூண்டினாலும் படிக்காது. (19) தீயதை விதித்தாலும் செய்யக்கூடாது; நல்லதை விலக்கினாலும் செய்தல்வேண்டும். (20) அரையனுக்கு வரி செலுத்துவதின் நியாயத்தைப்பற்றி ஒருவன் இயேசுவினிடம் கேட்டான். அவர் ஒரு நாண யத்தைக் கொண்டுவரச்சொல்லி, அதிலுள்ள வடிவத் திற்கும் எழுத்திற்கும் உரியவனைப்பற்றிக் கேட்டார். அவன், அவை அரையனுடையனவாகச் சொன்னான். அங்ஙனமாயின், அரையனுடையதை அரையனுக்கும் ஆண்டவனுடையதை ஆண்டவனுக்கும் செலுத்தச் சொன்னார் இயேசுபெருமானார். (21) மார்க்கசகாயர் என்னும் வேளாளப்பிரபு, தம் பண்ணை யிலிட்ட பயிர்கள் நெடுங்காலமாகப் பட்டுப் பட்டுப் போனமையால், அவற்றை விளையச் செய்பவர்க்குத் தம் மகள் வாசுகியை மணஞ்செய்து கொடுப்பதாக விளம்பரஞ் செய்திருந்தாராம். (22) எங்கள் கல்லூரிக் காற்பந்துக் கட்சிக்கும் திருச்சிராப் பள்ளி சோசப்புக் கல்லூரிக் காற்பந்துக் கட்சிக்கும் நாளை மாலை பந்தயமாதலால், விளையாட்டாளரெல்லாரும் ஒவ்வொரு படுக்கை கொண்டுபோகுமாறும். அவர்கள் இன்று மாலை நாலுமணிக்குப் புகைவண்டிநிலையம் போய்ச்சேருமாறும், எங்கள் உடற்பயிற்சி யாசிரியர் அறிவிப்பு விடுத்திருக்கின்றார். (23) யாதும் ஊரே என்பதாகவும், யாவரும் கேளிர் என்பதாக வும் பாடின புலவர் கணியன் பூங்குன்றனார். (24) ஏறச்சொன்னால் எருதிற்குக் கோபம், இறங்கச் சொன் னால் முடவனுக்குக் கோபம். 18. நிறுத்தக்குறிகள் (Punctuation) நிறுத்தக்குறிகள் வாக்கியப் பிரிவுபாட்டிற்கும் பொருள் தெளிவிற்கும் இன்றியமையாதனவாதலின், அவையின்றி ஒரு வாக்கியமும் எழுதுதல்கூடாது. 1. காற்புள்ளி (Comma) வருமிடங்கள் i. பொருள்களைத் தனித்தனி குறிப்பிடல். எ-டு : சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, சேலம், கோவை (முதலிய பலவிடங்களில், மாணவர் மன்றத்தேர்வு நடைபெறும்.) அறம், பொருள், இன்பம், வீடு (என வாழ்க்கைப் பேறு நான்கு). ii. அடுத்தடுத்துவரும் ஒரே யெழுவாய் பயனிலைகள். எ-டு : கந்தன் வந்தான், இருந்தான், எழுந்தான், சென்றான். அது அறியாமையன்று, கவலையீனம். iii. எச்சச் சொற்றொடர். எ-டு : மக்கள் வாழ்நாள் வரவரக் குறுகி வருதலானும், இன்றியமையாது கற்கவேண்டிய அறிவியல் துறைக்கே காலம் போதாமையானும், அறிந்த பொருள்களையே குறிக்கும் பல்வேறு மொழிச்சொற்களைக் கற்றல் மொழியாராய்ச்சி யாளர்க்கன்றிப் பிறர்க்குப் பெரும் பயன் படாமையானும், உலக மொழியாகிய ஆங்கிலத்தை ஒருவர் எங்ஙனமும் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருத்தலானும், ஆங்கிலமும் தாய் மொழியும் ஆகிய இருமொழிகளைக் கற்றலே, (இக்காலத் திற்குப் போதியதாகும்.) ஒருவர் இன்னொருவருடன் மறைபொருள் (இரகசியம்) பேசிக்கொண்டிருக்கும்போது, மூன்றாமவர் அவர்க்கு எத்துணை நெருங்கிய நண்பராயிருப்பினும், அவ் விடத்திற் குச் சென்று அவர் பேசும் பொருளை அறிய முயல்வது, (திருந்திய மக்கட்குரிய செயலன்று.) iv. பட்டப்பெய ரிடையீடு. v-L : âUths® âanlh® rhKntš mt®fŸ, v«.V., எல்.டி. v. முகவரிச் சொற்கள். எ-டு : கனம் உவாட்சன் அவர்கள், பி.ஏ. (ஆனர்சு), மேலாளர் (Manager), ஈபர் கண்காணியார் உயர்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளி. எண் தானம் vi. எ-டு : (இலண்டன் நகர மக்கள்தொகை 1941ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி), 8, 655,000. vii. எடுத்துக்காட்டுகள் எ-டு : வருதி, வந்தை (வந்தனை), வந்தாய். வாழ்நன் - வாணன், மகிழ்நன் - மகிணன். viii. இணைப்புச் சொல். எ-டு : திருவேங்கடம் தேர்விற்கு வந்தான்; ஆனால், எழுதவில்லை. ix. திருமுக விளி. எ-டு : ஐயா, ஐயன்மீர், ஐயைமீர், x. இணைமொழிகள். எ-டு : நல்லவன் கெட்டவன் செல்வன் ஏழை, இளைஞன் முதியன், சிறியவன் பெரியவன், (என்ற வேறுபாடு கூற்றுவனுக் கில்லை.) xi. நெடுந்தொடரெழுவாய். எ-டு : செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கோர் காரணம் வேண்டும். xii பொருள் மயங்கும் இடம். எ-டு : குக்கு, கெளடோ செலவிற் கல்வி கற்றார். பயனிலை, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை என இரு வகைப்படும். கண்ணகனார், ஊர்போய்ச் சேர்ந்தவுடன் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார். மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதன் நிலையைப் பற்றி வரைந்துள்ளனர். xiii. பொருள் விளக்க இடைப்பிறவைப்பு : எ-டு : மாரியப்பன், அதாவது காவேரி மகன், மணஞ்செய்த மறு நாளே இறந்துபோனான். xiv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல். எ-டு : ஒருவன் பிறரிடத்தில், முக்கியமாய் எளியவரிடத்தில், இன்சொல் வழங்கவேண்டும். xv. வாக்கிய வுறுப்பாய் வரும் மேற்கோள். எ-டு : அன்பே சிவம், என்றார் திருமூலர். xvi. பகுதி குறிக்கப்படும் நூற்பெயர். எ-டு : தொல்காப்பியம், 28 xvii. நூற்பகுதி குறித்தல். எ-டு : ஈடு, 1, 4, 2, 168. xviii. தேதி. எ-டு : 8, ஆனி, உருத்திரோற்காரி, 12, மார்ச்சு, 1942. xix. சொற்பொருள்கள் கூறல். எ-டு : திரு - செல்வம், அழகு, தூய்மை, திருமகள். 2. அரைப்புள்ளி (Semicolon) வருமிடங்கள் i. புணர்வாக்கியம். கூட்டுக்கிளவியப் புணர்வாக்கியம். எ-டு : இயந்திரம் உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கின்றது; இடம் பெயர்விக்கின்றது; அச்சடிக்கின்றது; பொருள் ஆக்குகின்றது; போர் செய்கின்றது; இன்னும் எத்தனையோ வினைகளைச் செய்கின்றது. ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. ஆண்டியும் இறக்கின்றான்; அரசனும் இறக்கின்றான். மறுப்புக்கிளவியப் புணர்வாக்கியம். எ-டு : அறிஞர் அமைந்திருப்பர்; அறிவிலிகள் ஆரவாரிப்பர். யானைக்குத் திறமுண்டு; ஆனால் திடமில்லை. நாய் தீமையை மறந்துவிடும்; யானையோ நன்மையை மறந்துவிடும். மறுநிலைக்கிளவியப் புணர்வாக்கியம் எ-டு : அறநிலையங்கள் அமைத்தற்கு, அரசியலார் முன் வர வேண்டும்; அல்லது பெருஞ்செல்வர் முன்வர வேண்டும். முடிபுக்கிளவியப் புணர்வாக்கியம் எ-டு : ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு; ஆகையால், அறஞ் செய்தலைக் கடத்திவைக்கக்கூடாது. ii. வேறுபட்ட பொருள் கூறல். எ-டு : கால்விடுதல் - காலை உள்ளிடுதல்; கால் செயலறுதல்; முட்டுக்கொடுத்தல்; உறவை நீக்குதல். iii. கருத்தொத்த பலவிடங் கூறல். எ-டு : பிறை தொழப்படுதல்; தொழுதுகாண் பிறை (குறுந் தொகை, 178); மகளிர் உயர்பிறை தொழூஉம் (அகநானூறு, 239); அப்பிறை, பதினெண் கணனு மேத்தவும் படுமே (புறநானூறு, 9-10); குழவித் திங்கள் இமையவ ரேத்த (சிலப்பதிகாரம், 2 : 38-39). 3. முக்காற் புள்ளி (Colon) வருமிடங்கள் i. சிறு தலைப்பு. எ-டு : சார்பெழுத்து : ii. நூற்பகுதியெண். எ-டு : மத்தேயு, 8 : 6. பத்துப்பாட்டு, 2 : 246. iii. தன் முகவரியில் நகர்ப்பெயர். எ-டு : எடின்பரோ : 339, பெருஞ்சாலை (High Road). iv. ஒப்புநோக்காய்வரும் பெருங்கூட்டு வாக்கியம். எ-டு : கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்; செல்வமோ வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும். 4. முற்றுப்புள்ளி (Full Stop or Period) வருமிடங்கள் i. தலைப்பின் இறுதி. எ-டு : மரபியல். ii. வாக்கிய இறுதி. எ-டு : உருவத்தில் மாந்தரா யிருப்பவரெல்லாம் உண்மையில் மாந்தரல்லர். iii. வாக்கிய வுறுப்பாய் வராத மேற்கோள் இறுதி. எ-டு : அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார். - திருமூலர். பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். - திருவள்ளுவர். தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்று, தழைத்தோங்கவும் வல்லது. - கால்டுவெல். ஆரியருட் சாதிவகுப்பு இல்லை. - மறைமலையடிகள். iv. முகவரி யிறுதி. v-L : âUths® ãufhr« rhKntš mt®fŸ, ã.V., vš.o., ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், வாணக்காரக் கொல்லை, ஆம்பூர், வடார்க்காட்டு மாவட்டம். v. தேதியிறுதி. எ-டு : 1-8-1950. vi. சொற்குறுக்கம். எ-டு : தொல். சொல். 58. கி.மு. 500. வே. பா. கமலநாத முதலியார். vii. மணிப்பிரிவு. எ-டு : 2. 30 (2½) viii கையெழுத்து. T.G. நாகலிங்கம் பிள்ளை. 5. வினாக்குறி (Note of Interrogation) ஒரு வினாவாக்கியம், முற்று வாக்கியமாயும் நேர்கூற்று வாக்கியமாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறி பெறும்; நேரல் கூற்று வாக்கியமாயும் புணர்ச்சிபெற்ற நேர்கூற்று வாக்கியமாயு மிருப்பின், வினாக்குறி பெறாது. எ-டு : அது என்ன? நீ வருகிறாயா? என்று கேட்டான். நான் போவேனா என்பதாகக் கேட்டான். நீ வருகிறாயா வென்று கேட்டான். 6. வியப்புக்குறி (Note of Exclamation) வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப்பின்பும், நேர்கூற்று வியப்புவாக்கிய விறுதியிலும் வரும். எ-டு : ஆகா! என்னே இதன் பெருமை! என்றான். நேர்கூற்று வியப்பு வாக்கியமாயினும், புணர்ச்சி பெற்றதாயின் வியப்புக்குறி பெறாது. எ-டு : என்னே யிதன்பெருமை யென்றான். 7. விளிக்குறி (Vocative Sign) எ-டு : அவைத்தலைவீர்! அவையீர்! உடன்பிறப்பாளரே! உடன்பிறப்பாட்டியரே! 8. மேற்கோட்குறி (Quotation Marks or Inverted Commas) மேற்கோட்குறி, ஒற்றைக்குறி இரட்டைக்குறி என இருவகைப்படும். இரட்டைக்குறி வருமிடங்கள்: i. நேர்கூற்று. நான் வருகிறேன், என்றான். ii. மேற்கோள். மநு என்பவன், நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னன், என்றார் மறைமலையடிகள். ஒழுக்கமுடைமை குடிமை, என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடங்கள் i. தற்சுட்டு. தற்சுட்டு என்பது, ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறித்தல். எ-டு : எ என்று என்று சொன்னான் ii. வாய்பாடு. எ-டு : செய்யும், தான iii. வழக்கருகிய அல்லது புதுக்குறியீடு. எ-டு : ஒருவன் தனக்குத் தாழ்வு வந்தவிடத்து, ஊருக்கு வடபுறத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்துறத்தல், வடக்கிருத்தல் எனப்படும். மெய்யிறுதியில் வரும் உடம்படுமெய்யை மெய்யீற்றுடம் படுமெய் என்பர் நச்சினார்க்கினியர். iv. பிறர் கூற்றுப்பகுதி. எ-டு : இணரெரி தோய்வன்ன இன்னா செய்பவர். v. பிறர்குறி மேற்கோள். நெல்லிக்காய் மூட்டை யென்று சில செய்தித்தாளாசிரியரால் குறிக்கப்படும் குழுவினர் யார்? vi. கட்டுரைப் பெயரும் நூற்பெயரும். காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் என்றொரு கட்டுரை வரைந்துள்ளார். செந்தமிழ்ச் செல்வியின் ஆண்டுக் கையொப்பம் ரூ. 4. kiwkiyaofŸ vGâa, ‘k¡fŸ üwh©L thœtbj¥go? என்னும் நூலின் முதற்பகுதிதான் இன்று கிடைக்கும். vii. மேற்கோட்குள் மேற்கொள். எ-டு : இயேசு மக்களை நோக்கி, ஆயக்காரன் கோயிற்கு வெளியே நின்று, `தேவனே! தீயேனாகிய என்பால் இரக்கங்கொள்ளும், என வேண்டினான் என்றார். viii. பழமொழி. உதிரம் உறவறியும். குறிப்பு : பொதுவாக, மேற்கோட் குறிபெற்ற பகுதியினிறுதியிற் புணர்ச்சியிருத்தல் கூடாது. புணர்ச்சி இன்றியமையாத விடத்தில், மேற்கோட்குறியை இயன்றவரை மேற்கோளிறுதி யொட்டிக் குறித்தல்வேண்டும். எ-டு : தமிழ்ப் பொழிலுக்குக் கட்டுரை வழங்குபவர்க்கு, பக்கத் திற்கு அரை யுருபா வீதம் நன்கொடை அளிக்கப்பெறும். 9. பிறைக்கோடு (Brackets) பிறைக்கோடு, ஒற்றைப் பிறைக்கோடு (Single Bracket) இரட்டைப் பிறைக்கோடு (Double Brackets) பகர அடைப்பு (Large Bracket) என மூவகைப்படும். ஒற்றைப் பிறைக்கோடு வருமிடங்கள் : i. மொழிபெயர்ப்பு. எ-டு : தொலைக்காட்சி (Television) அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்ட புதுப்புனைவுகளுள் ஒன்று. ii. பொருள்கூறல். எ-டு : பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன் என்பர். iii. பொருள் விளக்கம். எ-டு : நிலைமொழி (அதாவது முதலில் நிற்கின்ற மொழி). iv. சிறுபிரிவெண். எ-டு : (1), (2); (i), (ii) v. பாடவேறுபாடு. எ-டு : கண்டது கற்கப் பண்டிதனாவான் (பண்டிதனாகான்). vi. உரையிற் சொல் வருவித்தல். எ-டு : மலரடி = (தாமரை) மலர்போன்ற பாதம். இரட்டைப் பிறைக்கோடு வருமிடம் i.gytÇ¥ பொதுமை. எ-டு : சாத்தனது கருமை சாத்தானது வரவு } ii.ÉL¥ngh‹ முகவரி. எ-டு : விடுப்போன்: ïu¤âd« ãŸis, v«.V., vš.o., சேலங்கல்லூரி, சேலம். } iii.É©z¥g¡ காலவிடக் குறிப்பு. எ-டு : சேலம், 8-7-50. } பகர அடைப்பு வருமிடங்கள் i. வரிக்கு மிஞ்சிய பகுதி. ஒருமையுடன் நினதுதிரு வடிதன்னை நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும். ii. பிறைக்கோட்டை உட்கோடல். எ-டு : [ï§F சாரியை (சார்+இயை) என்றது, இரு சொற்களைச் சார்ந்து இயைக்கும் miria.] குறிப்பு : மொழிபெயர்ப்பு பொருள்கூறல் பொருள்விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற்சொற்றொடர் தாம் குறிக்கும் சொற் றொறொடருடன், இயன்றவரை வடிவொத்திருத்தல் வேண்டும். எ-டு : உட்காட்டி (X-ray) ஒரு பெருநலப் புதுப்புனைவு. உட்காட்டியை (X-rayia)¡ கண்டுபிடித்தவர் இராண்டு சென். அறத்தடுமாற்றம் (தருமசங்கடம்) என்பது, இரு வினைகளுள் எது செய்வதென்று தெரியாமல் இடர்ப்படல். இவ்அறத்தடுமாற்றத்தை(தருமசங்கடத்தை) என்னென்பது? 10. இடைப்பிறவைப்புக்குறி அல்லது இரட்டைக்கீற்று (Parantheses or Double Dashes) ஒரு வாக்கியத்தினிடையில், அதனொடு இலக்கணத் தொடர்பில்லாத ஒரு சொற்றொடரை வைப்பது, இடைப் பிறவைப் பாகும். எ-டு : ஐயா! உங்களைக் கண்டபோது - உண்மையைச் சொல்லுகிறேன்-எனக்கு அடையாளமே தெரியவில்லை. 11. கீற்று (Dash) வருமிடங்கள் i. மொழிபெயர்ப்பு. எ-டு : எழுத்தியல் - Orthography ii. பணத்தொகைக் குறிப்பு. எ-டு : ரூ. 125-12-3. iii. தேதிக்குறிப்பு. எ-டு : 15-9-1947. iv. சொற்றிரிபு குறித்தல். எ-டு : வாயில் - வாயல் - வாசல். வித்யா - வித்தை - விச்சை - விஞ்சை. v. பொருள் கூறல். எ-டு : விளித்தல் - கூப்பிடுதல். vi. இலக்கணங்கூறல். எ-டு : கொல்களிறு - வினைத்தொகை vii. தேர்வில் விடை கேட்டல். எ-டு : வெருவு, எறுழ், நனி - பொருள் தருக. viii. தன் கருத்துரைத்தல். எ-டு : இத்தாலியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை நச்சுக் காற்றாற் கொன்றனர் - என்ன கொடுமை! ix. சடுதியான கருத்து மாற்றம். எ-டு : என் தந்தையார் மட்டும் உயிரோடிருந்திருந்தால்! - அதை இன்று சொல்லி என்ன பயன்? x. வெவ்வேறு கூறப்பட்ட பொருள்களைத் தொகுத்துக் கூறல். எ-டு : மாணவர், ஆசிரியர், அலுவலாளர், வணிகர், பொதுமக்கள்- எல்லா வகுப்பினரும் வந்திருந்தனர். xi. இடையளவு. எ-டு : செய்யுள் 1-20. xii. இடையொழிபு. எ-டு : இ-ள். (இதன் பொருள்), எ-று. (என்றவாறு), எ-டு. (எடுத்துக்காட்டு). xiii. மணிக்குறிப்பு. எ-டு : 3-35. xiv. கூட்டுச்சொல். எ-டு : இந்து - முசிலீம் ஒற்றுமை. 12. வரலாற்றுக்குறி வருமிடங்கள் i. வரலாறுரைத்தல். எ-டு : மிக்கோன் உலகளந்த வரலாறு :- ii. பொருள்களை வகுத்துக்கூறல். எ-டு : ஊறு (ஸ்பரிசம்) எண்வகைப்படும். அவையாவன : - வலிமிகுமிடங்கள் :- iii. செய்தியறிவிப்பு. எ-டு : அருமைத்தம்பி அம்பலவாணனுக் கெழுதுவது :- சேலம் தண்டலாளர் (Collector) அவர்கள் முன்னிலையில், செட்டியண்ணக் கவுண்டர் விண்ணப்பித்துக் கொள்வதாவது:- இதனால் இந் நகரவாசிகள் யாவர்க்கும் தெரிவித்துக் கொள்வ தென்னவென்றால் :- iv. தேர்விமினா. எ-டு : பின்வருவதை மொழிபெயர்க்க :- பின்வருபவற்றுள் ஏதேனுமொன்றைப்பற்றி இருபக்கம் ஒரு கட்டுரை வரைக : 13. தொகுநிலைக்குறி (Apostrophe) எ-டு : 8-10-35. 14. மேற்படிக்குறி எ-டு : பாடம்படித்தான் - 2ஆம் வேற்றுமைத் தொகை பாடத்தைப் படித்தான் - 2 ஆம் வேற்றுமை விரி 15. விடுபாட்டுக்குறி ஒரு மேற்கோளில், வேண்டாத பகுதி விடப்படும். அது புள்ளி வரிசையாலாவது உடுக்குறி (Asterisk) வரிசையா லாவது குறிக்கப் பெறும். எ-டு : ............................................................... உடைப்பெருஞ் செல்வ ராயினும்.... ................................................................. ................................................................. ................................................................. ................................................................. ....................... மக்களை யில்லோர்க்கு பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே. (புறம். 188) வடவேங்கடம் ...... படிமை யோனே, என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம். எழுதப்பட்ட ஏடுகளில் ஏதேனும் ஒரு பகுதி அல்லது பகுதிகள் சிதைந்துபோகலாம். அவையும் புள்ளி வரிசையாற் குறிக்கப்பெறும். எ-டு : மதிலு ஞாயி லின்றே கிடங்கு நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளு மூரது நிலைமையு மிதுவே ............................................(òw«. 355) பிறகுறிகள் 1. பொருட்பாட்டுக்குறி அல்லது சரிசமக்குறி எ-டு : பழனம் = வயல். செல் + தல் = சேறல். கோடல் = கொள்ளுதல். 2. புணர்ச்சிக்குறி அல்லது கூட்டற்குறி எ-டு : பூண் + கை ( = பூட்கை) 4 + 2 = (6) 3. முரண்பாட்டுக்குறி அல்லது பெருக்கற்குறி எ-டு : அண்மை x சேய்மை 9 x 3 = ( = 27) கழித்தற்குறி முற்கூறிய கீற்றே. 4. சொன்மூலக்குறி எ-டு : விள் > விளம்பு, விளம்பு < விள். சொன்மூலக்குறியின் விரிவுப்புறத்திலிருப்பது மூலமும், முனைப்புறத்திலிருப்பது திரிபும் ஆகும். 5. செருகற்குறி எ-டு : தமிழ்க் கழகம். 6. அம்புக்குறி எழுதப்பட்ட ஒரு பகுதியின் இடையில் செருக வேண்டிய பகுதிக்கு இடமில்லாதிருப்பின், அதை வரந்தையில் (margin-š) எழுதி, அதனிடத்திலிருந்து அதைச் செருகவேண்டிய இடத்திற்கு இங்ஙனம்  ஓர் அம்புக்குறியிட்டுக் கொள்ளலாம். குறிப்பு : நிறுத்தக் குறிகளிருக்குமிடத்திற் புணர்ச்சியும், புணர்ச்சியிருக்கு மிடத்தில் நிறுத்தக் குறிகளும், பொருந்தா. புணர்ச்சி யின்றியமையாத இடங்களிலெல்லாம், புணர்த்தே எழுத வேண்டும். திரிதற் புணர்ச்சியின்பின் காற்புள்ளியிட்டெழுதும் சில யாழ்ப்பாணப் புலவர் வழக்கம், பின்பற்றத்தக்கதன்று. எ-டு : செல்வம் பெருகப் பெருகக் கவலையும் பெருகுவதனாற், செல்வர்க்கு இன்பப்பெருக் கவ்வளவு துன்பப் பெருக்கு முண்மை அறியப்படும். பயிற்சி 1 கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், காற்புள்ளி யிடுக : (1) அவன் எழுபிறப்புப் பிறந்தாலும் இச் செய்யுட்குப் பொருள் கூற முடியாது. (2) தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு குடகு துட கூ கோண்டி ஒரியா ஒராவோன் இராசமகால் பிராகுவீ எனத் திரவிடமொழிகள் மொத்தம் பதின்மூன்று. (3) செல்வம் தானே வந்தடைந்தாலும் கல்வி தானே வந்தடை யாது. (4) அவனுக்கு அண்ணன் தம்பி அக்கை தங்கை ஒருவரு மில்லை. (5) இந்தியத் தேசிய இயக்கம் முழு வெற்றிபெறுதற்கு அரை நூற்றாண்டாயிற்று. (6) மாந்தன் எவ்வளவோ நாகரிகத்தை யடைந்தும் இன்னும் இன அளவில் விலங்கு நிலையினின்று உயரவில்லை. (7) மாந்தனிடத்திற் பொதுவாய்க் காணமுடியாத பல நற்குணங்களை விலங்கு பறவைகளிடத்துக் காணலாம். (8) கரியன் கபிலன் சிவப்பன் பொன்னன் வெள்ளையன் என நிறம்பற்றி மக்களை ஐவகையாக வகுக்கலாம். (9) என் மொழி தென்மொழி என்று சொல்ல இன்றும் சில தமிழர் பின்வாங்குகின்றனர். (10) தமிழன் நாய் போன்றவன்; ஏனெனின் தன்னினத்தை வெறுக்கின்றான்; வேற்றினத்தை விரும்புகின்றான் என்று பா.வே. மாணிக்க நாயகர் சொல்வது வழக்கம். (11) ஒரு செல்வனிடத்திற் சென்று பாடினால் அவன் காசு கொடுக்காவிட்டாலும் போகின்றான்; காது கொடுக்க மாட்டேன் என்கின்றானே! என்று சர்க்கரைப் புலவர் அடிக்கடி கூறுவர். (12) மன்னார்குடி இராசகோபாலையரும் அவர் தமையனாரும் முறையே யாழிலும் கின்னரியிலும் தேர்ச்சிபெற்றவர். பயிற்சி 2 கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், அரைப் புள்ளி யிடுக : (1) எல்லா மக்கட்கும் பகுத்தறிவுண்மையும் இல்லை எல்லா விலங்கு பறவைகட்கும் பகுத்தறிவின்மையும் இல்லை. (2) வருமுன் காப்போர் தலையர் வருகின்றபோது காப்போர் இடையர் வந்தபின் காப்போர் கடையர் வந்த பின்னுங் காவாதார் மடையர். (3) வெண்பாவிற்குப் புகழேந்தி விருத்தத்திற்குக் கம்பன் குறளுக்கு வள்ளுவர் அகவற்குக் கபிலர். (4) மூத்த பிள்ளைக்கு உடல்வலி மிக்கிருக்கும் இளைய பிள்ளைக்கு மதிவலி மிக்கிருக்கும். (5) பொய்சொல்லி வாழ்வதுமுண்டு மெய்சொல்லிக் கெடுவது முண்டு. (6) மேலோர் வழிகாட்டவேண்டும் கீழோர் வழிச்செல்ல வேண்டும். (7) காதலில் மெய்க்காதலுமுண்டு பொய்க்காதலுமுண்டு உண்மையானதும் நீடிப்பதும் மெய்க்காதல் வஞ்சனை யானதும் குறுகிய காலத்ததும் பொய்க்காதல். (8) அறிஞர் குற்றம் பொறுத்தலை ஆண்மையாகக் கொள்ளு கின்றனர் அறிவிலிகள் பழிக்குப்பழி வாங்குதலை ஆண்மை யாகக் கொள்ளுகின்றனர். (9) பல வுண்மைகளைக் கற்றறியவேண்டும் பல வுண்மை களைப் பட்டறியவேண்டும் பட்டறிவதில் பல்வகை யிழப்புண்டாகலாம் அவற்றைக் கல்விக் கட்டணமாகக் கருத வேண்டும். (10) மூங்கில் எத்தனையோ வகையிற் பயன்படுகின்றது உண வளிக்கின்றது வீடு கட்ட உதவுகின்றது நாற்காலி மேசை செய்யப் பயன்படுகின்றது கொள்கலமாகின்றது. உண் கலமாகின்றது அளவைக்கருவியாகின்றது ஊர்திக் குதவுகின்றது வாராவதியாகின்றது தாள்செய்யப் பயன் படுகின்றது இன்னிசைக் கருவியாகின்றது நீர்க்குழாயா கின்றது வேலிக்குதவுகின்றது ஊதாங்குழலாகின்றது வாணவேடிக்கைக் குதவுகின்றது தேய்வை (Rubber) செய்தற்கு தவுவதாயுள்ளது இவற்றையெல்லாம் நினைக்கின்றோமா? (11) ஒரு நாட்டில் ஒரு கருவிப்பொருள் கிடைக்கின்றது இன் னொரு நாட்டில் அதைக்கொண்டு செய் பொருளாக்கு கின்றனர் வேறுமொரு நாட்டில் அதைப் பயன்படுத்து கின்றனர். (12) இலக்கியத்தாற் சிலர் இன்புறுகின்றனர் சிலர் மதத் தொண்டாற்றுகின்றனர் சிலர் குலத் தொண்டாற்று கின்றனர் சிலர் அரசியல் தொண்டாற்றுகின்றனர் சிலர் மக்களை முன்னேற்றுகின்றனர். பயிற்சி 3 கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், காற் புள்ளியும் அரைப்புள்ளியும் இடுக : (1) பத்தனும் பித்தனைப்போல விழும் எழும் அழும் தொழும். (2) அறநூலுக்கு வள்ளுவன் பெருவனப்பிற்கு (பெருங்காப் பியத்திற்கு) இளங்கோவடிகள் கோவைக்கு மாணிக்க வாசகர் உலாவிற்கு ஒட்டக்கூத்தன் அந்தாதிக்குப் பிள்ளைப் பெருமாள் பரணிக்குச் சயங்கொண்டார் காதலுக்குக் கூளப்பன் மடலுக்கு வருணகுலாதித்தன் சிந்திற்கு அண்ணாமலை. (3) ஒருவன் செய்யாமற் கெட்டவனாகின்றான் ஒருவன் செய்து கெட்டவனாகின்றான். (4) சிலர் இரப்போன் ஊண்வேளைக்கு முந்திவந்தால் சோறு இன்னும் ஆகவில்லை என்பர் ஊண்வேளையில் வந்தால் இப்போதுதான் உண்ணுகிறோம் என்பர் ஊண்வேளைக்குப் பிந்திவந்தால் உண்டெல்லாம் ஆய்விட்டது என்பர். (5) பிள்ளை பிறக்கும்போது பெற்றோர் திறம் எதுவோ அதுவே பிள்ளைக்கும் இருக்கும். (6) பொதுவாக தந்தையியல் மகனுக்கும் தாயியல் மகளுக்கும் அமையும். (7) அரசன் ஒழுகுகின்றபடி குடிகளும் அன்னை தந்தை ஒழுகுகின்றபடி பிள்ளைகளும் ஆசிரியன் ஒழுகுகின்றபடி மாணவரும் ஆண்டை ஒழுகுகின்றபடி அடியரும் ஒழுகுவர். (8) எல்லாம் இறைவன் செயலா அல்லது உயிர்கள் செயலா அல்லது இரண்டும் கலந்த செயலா என்பது இன்னும் திட்டமாய்த் தெரியவில்லை. (9) பிள்ளைகட்கு அறிவு ஆற்றல் வண்ணம் (நிறம்) வடிவு வாழ்நாள் முதலியன அமைக்குந்திறம் ஒருபகுதி பெற்றோர் கையிலுள்ளது. இதைப் பலர் அறியவில்லை. (10) ஆட்சிமுறை பலவகைப்படும். ஒவ்வொரு வகையிலும் குற்றமுண்டு. ஆனால் குற்றம் மிகக் குறைந்த வகை எதுவோ அதையே கடைப்பிடித்தல் வேண்டும். (11) எப்பொருளைப் பற்றியும் விரைந்து தீர்ப்புக் கூறுதல் கூடாது. ஏனெனின் நல்லதென்று நினைத்தது தீயதாக முடியலாம் தீயதென்று நினைத்தது நல்லதாக முடியலாம். (12) முதியோர் இளையோரின் தவறுகளைக் கண்டிப்பது முறையே. ஆனால் தாமும் அத் தவறுகளைத் தம் இளமையிற் செய்ததை மறந்துவிடக்கூடாது. (13) கலையும் கம்மும் (Art and Science) எனக் கல்வி இரு திறப்பட்டது. நூல்வாயிலாகக் கற்றறிவது கலை. செயன்முறையாகப் பயின்றறிவது கம் அல்லது கம்மியம். ஒவ்வொரு கம்மியத்திற்கும் தெரிவியல் (Theory) உண்டு ஒவ்வொரு கலைக்கும் புரிவியல் (Practical) உண்டு. (14) பிள்ளையில்லாதவர் பிள்ளையில்லையே என்று வருந்து கின்றனர். ஆனால் பிள்ளைபெற்றவருட் சிலரோ பிள்ளை பிறந்துவிட்டதே என்று வருந்துகின்றனர். (15) வேலை செய்யாதவரெல்லாம் சோம்பேறிகளல்லர் வேலையைச் செய்யாமலும் சும்மாவிருக்கலாம் வேலை கிடையாமலும் சும்மா இருக்கலாம். (16) மனிதன் அறுபதாண்டு வாழும்போதே இத்துணை அட்டூழியஞ் செய்கின்றான். இனி ஆயிரமாண்டு வாழ் வதானால் எத்துணை அட்டூழியஞ் செய்வானோ தெரிய வில்லை. (17) கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா எது முன்வந்தது என்று அறிதற்கு தாயினி டத்தினின்று பிள்ளையா பிள்ளையினிடத்தினின்று தாயா யார் முன் வந்தது என்று அறிதல்வேண்டும். (18) திருடனுங் கடவுளை வழிபடுவதால் கடவுள் வழி பாட்டால் மட்டும் ஒருவனைப் பத்தனென்று துணியமுடி யாது. (19) ஒருவன் தான் சாகும்போது எளியாரும் நல்லாரும் வருந்துமாறு வாழவேண்டும். (20) உலகவாழ்க்கை துன்பமே நிறைந்தது என்னுங் கொள்கை உண்மைக்கும் உத்திக்கும் பொருந்துவதன்று. (21) மறுமைச் செய்திகளெல்லாம் கண்டுகாட்டக் கூடியவை யல்லவாதலால் அவற்றைப்பற்றிய கருத்து வேறு பாட்டிற்குத் தாராளமாக இடந்தரவேண்டும். (22) பெரும்பான்மையோர் செயலெல்லாம் சிறந்தது என்பது பெரும்பாலும் தவறான கொள்கை. (23) மொழிவளர்ச்சிக்கு இன்னகால மென்றில்லை. என்றும் அது வளர்ந்துகொண்டேயிருக்கும் என்பர் தைலர். (24) ஒவ்வொருவனுக்கும் தன்மொழி பொன்மொழி. ஆனால் தன்மொழியே வளரவேண்டு மென்பதும் பிறன்மொழி தளரவேண்டுமென்பதும் தவறாகும். பயிற்சி 4 கீழ்வரும் வாக்கியங்கட்கு நிறுத்தக் குறியிடுக : (1) ஒவ்வொரு நாட்டிலும் ஆடவரினும் பெண்டிரே நீடு வாழ்பவரா யிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆடவர் பெரும்பாலும் வீட்டினின்று வெளியேறி வேலை செய் வதும் உடலும் மூளையும் வருந்தியுழைப்பதும் இன்ப நுகர்ச்சியில் மிகுதியாய் ஈடுபடுவதும் குடும்பக் கவலை பெருத்திருப்பதும் பகைவருடன் பொருவதும் ஆகும். (2) பழந்தமிழ் நாட்டில் யாரேனும் ஒருவர் தும்மினால் அருகிருப்பவர் சிறப்பாகப் பெண்டிர் நீடுவாழ்க என்று வாழ்த்துவது வழக்கம். (3) கலிபோர்னியாவில் உள்ள சென் செர்மன் Gen Sherman மரம் இப்போது உலகத்திலுள்ள உயிர்ப் பொருள்களெல்லா வற்றினும் மிகப் பழைமையானதாகச் சொல்லப்படு கின்றது அதன் அகவை 4000 ஆண்டுகட்கும் 5000 ஆண்டுகட்கும் இடைப்பட்டதாக மதிக்கப்படுகின்றது. (4) யானையின் வாழ்நாள் 100 ஆண்டு முதலையின் வாழ்நாள் 300 ஆண்டு திமிங்கிலத்தின் வாழ்நாள் 500 ஆண்டு மாந்தன் வாழ்நாள் 100 ஆண்டுகூட இன்று (5) அவை நால்வகைப்படும் அவை நல்லவை தீயவை நிறையவை குறையவை என்பன (6) மோகஞ்சதாரோ நாகரிகம் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டது. (7) ஒரு காலத்தில் நல்வினையாகச் செய்யப்படுவது இன்னொரு காலத்தில் தீவினையாகத் தவிர்க்கப்படுகின்றது ஒரு நாட்டில் ஒழுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவது இன் னொரு நாட்டில் இழுக்கமாக விலக்கப்படுகின்றது ஓர் ஆட்சியில் சட்டத்திற்குட்பட்டதாக ஒப்புக் கொள்ளப் பட்டு உயர்த்தத்திற் கேதுவாயிருப்பது மற்றோர் ஆட்சியில் சட்டத்திற்கு மாறானதாகக் கண்டிக்கப்பட்டுத் தண் டனைக் கேதுவாயிருக்கின்றது இங்ஙனம் அறநிலையாமை யும் உலகத்திலுள்ளது (8) சில ஆண்டுகட்கு முன் சென்னையில் ஒரு சிறுவன் இருந் தான். அவன் திருக்குறளை முழுமையாகவும் பகுதி பகுதி யாகவும் தலைகீழாய் ஒப்புவிப்பான் முதற்சொல்லையோ இறுதிச் சொல்லையோ சொன்னாலும் எண்ணைக் குறித்தாலும் உடனே முழுக்குறளையும் சொல்லிவிடுவான் (9) மேனாட்டார் வருகைக்கு முந்திய நம் முன்னோருள் யாரேனும் இன்று மீண்டும் உலகில் வாழவந்தால் நம்மைக் கண்டவுடன் நம்மெல்லாரையும் பழனி திருப்பதிக்குப் போய்வந்தவராகவோ கடுநோய்ப்பட்டுத் தெளிந்தவ ராகவோ தான் கருதுவர். (10) காந்தியடிகள் அடுகிடை (சத்தியாக்கிரக) இயக்கத்தை துவக்கினார் ஒத்துழையாமை யியக்கத்தை 1920-ல் துவக்கினார் சட்டமறுப்பியக்கத்தை 1930-ல் துவக்கினார் (11) சர் தி. முத்துசாமி ஐயர் தம் மகனை நோக்கி அப்பா நான் உன்னைப்போலச் சிறுவனாயிருந்தபோது எவ்வளவு தொலைவான இடத்திற்கும் நடந்தே போனேன் நீயோ வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குப் போய்வருவதற்குக் குதிரைவையம் coach கேட்கின்றாய் என்று சொன்னாராம் அதற்கு அவன் அப்பா நீங்கள் ஓர் இரப்போன் மகனா யிருந்தீர்கள் அதனால் எங்கும் நடந்துபோனீர்கள் நானோ ஓர் உயர்நிலை மன்றத் தீர்ப்பாளர் High Court Judge மகன் ஆதலால் குதிரைவையம் கேட்கின்றேன் என்றானாம். (12) கீழ்வரும் சொற்கட்குப் பொருள் கூறுக துடவை பிறங்கு வெரு கொன் (13) புலிகடிமால் என்று பெயர் பெற்ற அரசன் யார் (14) பல ஆண்டுகட்குமுன் சேலங் கல்லூரியில் ஒரு மாணவன் இருந்தானாம் அவன் வகுப்புயர்த்த நாளில் ஆசிரியர் அறைக்குச் சென்று ஆசிரியர் அனைவரையும் நோக்கி ஆசிரியன்மீர் இன்று மாணவரை வகுப்புயர்த்தப் போகின் றீர்கள் மதிப்பாய் என்னையும் உயர்த்திவிடுங்கள் இல்லா விட்டால் இதோ பாருங்கள் கத்தி உங்கள் குடலாயிற்று என் மாலையாயிற்று என்று சொல்வானாம் என்ன துணிகரம் (15) திராவிடமொழிகள் மொத்தம் பதின்மூன்று அவையாவன (16) பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை என்பது பழமொழி ஆனால் இது எக்காலத்திலாவது முற்றும் உண்மையாயிருந்ததா என்பது ஆராயத்தக்கது (17) இந்தத் தோப்பைக் குத்தகை யெடுத்ததிலே நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி ஆயிரம் ரூபா என் கையைவிட்டுப் போய்விட்டது (18) நான் பிறந்த தேதி 8-6-42 (19) ஆயிரத்தெண்ணூறாட்டை முற்றமிழர் திருவாளர் கோவிந்தசாமிப் பிள்ளையவர்களிடம் ஒரு படியிருந்தது (20) இல்லறம் மேற்கொண்ட புலவர் தம் எதிரிகளை வென்று விட்டதற்கடையாளமாக குடை கொடி சிவிகை முதலிய வெற்றிச் சின்னங்களை யெடுப்பித்துச் செல்வது வழக்கம் இது துறவறம் மேற்கொண்ட புலவர்க்கு அவர் எத்தனை வெற்றி பெற்றவராயினும் எங்ஙனம் பொருந்தும் (21) பெண்சாதி நல்ல சொல்லன்று (22) நிகழ்கால வினையெச்சத்தின்பின் வல்லெழுத்துவரின் கட்டாயம் மிகும் எ-டு : படிக்கச்சென்றான். (23) இக்காலத்தில் தமிழுக்கே உழைப்பவர்க்கும் தமிழை வளர்ப்பவர்க்கும் தூற்றலும் வேலைக்கேடும் தவிர வேறொன்றுமில்லை ஆனால் தமிழைக் கெடுப்ப வர்க்கோ போற்றலும் பட்டம் பதவிகளும் பரிசளிப்பும் பணமுடிப்பும் நிரம்புவுண்டு (24) சென்றவாரம் ஒரு போலித் துறவி என்னிடம் வந்து நான் கயிலையிலிருந்து வருகின்றேன் குமரியாடித் திரும்ப வேண்டும் அதற்கு 50 ரூ. செல்லும் அதைக் கொடுத்தால் திரும்புகாலில் உனக்குப் பொன்னாக்கம் இரசவாதம் சொல்லித்தருகிறேன் என்று சொன்னான் நான் பொன் னாக்கமும் வேண்டா மண்ணாக்கமும் வேண்டா இனிமேல் நீ இந்தப் பக்கம் வரவும் வேண்டா என்று சொல்லித் துரத்திவிட்டேன் என்று என் நண்பர் ஒருவர் இன்றுதான் சொன்னார் ஆகையால் துறவுக்கோலம் பூண்டவர் யாரேனும் வந்து ஏதேனும் கேட்டால் உணவு தவிர வேறொன்றுங் கொடுக்க வேண்டா. பயிற்சி 5 கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், முக்காற் புள்ளியும் முற்றுப் புள்ளியும் இடுக : (1) இரவில் 10 மணிக்குமேற் படிப்பது நன்றன்று (2) சுமேரியர் பாபிலோனியாவிற் குடியேறிய காலம் கி. மு. 4000 (3) திருவாளர் அ இராமசாமிக் கவுண்டர், தாழ்ந்த மதிப்பெண் (Marks) பெற்ற மாணவரைத் தம் கல்லூரியிற் சேர்த்து, உயர்ந்த விளைவை உண்டுபண்ணினார் (4) முனிவர்க்கும் முக்குணவியல்பு முறை மாறிவரும் (5) இந்திய ஆடவர் முன் தூங்குகின்றனர்; பின் எழுகின்றனர் இந்தியப் பெண்டிர் பின் தூங்குகின்றனர்; முன் எழுகின் றனர் (6) உடலுழைப் பில்லாதவர்க்கெல்லாம் உடற்பயிற்சி இன்றி யமையாதது (7) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமை நிலையம் திருநெல்வேலி, கீழைத்தேர் வீதி, 24ஆம் எண் கட்டடம் (8) துருக்கி நாட்டுப் பல்கலைக்கழகக் கலைகளையும் (சமயம் மெய்ப்பொருளியல் முதலிய) நூல்களையும் கற்க வரும் இந்திய மாணவர்க்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூ. விழுக்காடு ஈராண்டு கல்விப்பரிசு வழங்கப் பெறுமென்று, அந் நாட்டரசியலாரால் விளம்பரஞ் செய்யப் பெற்றுள்ளது தமிழ்மொழி யிலக்கியக் கல்விக்கும் இத்தகைய நிலைமை ஏற்படின் எத்துணை நன்றா யிருக்கும் (9) அரபியர் பாரசீகத்தைக் கைப்பற்றியபின் மதச் சார்பிற் பாரசீக மொழியிற் புகுத்திய அரபிச் சொற்களை யெல்லாம், இற்றைப் பாரசீகர் அகற்றிவிட்டதாகச் சில அறிஞர் கூறுகின்றனர் (10) உலகிற் செல்வத்தை மதியாதவர் ஓரிருவரே ஆதலால், உலகில் இன்புறவும் மதிப்புப் பெறவும் விரும்புவோர் எல்லாரும் இயன்றவரை பொருளீட்டுதல் இன்றியமை யாதது (11) குற்றம் செய்வது இருவகை ஒன்று மறைவு இன்னொன்று வெளிப்படை மறைவிற் செய்வது கண்டுபிடிக்கப் பட்டா லொழியக் குற்றமாகாது வெளிப்படையாய்ச் செய்வதே என்றும் குற்றம். (12) மக்களெல்லாருக்கும் உண்டியும் உடையும் உறையுளும் கிடைக்கும் காலமே பொற்காலம் (13) தனக்கொரு நீதியும் பிறருக்கொரு நீதியும் வழங்குகின்றவன் மக்கட் பகைவன் (14) அயன்மொழி வளர்ச்சிக்கு அளவிறந்து நீளும் சில வள்ளல் களின் கைகள், தமிழுக்கு முடம்படுகின்றன (15) மக்களின் மதிவிளக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலமில்லை ஆதலால், மாணவர்க்கு அகவைமட்டு (age limit) விதிப்பது நன்றன்று (16) எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது அல்லது ஒவ்வொரு திறவோரும் ஒவ்வொன்றில் தேர்ச்சிபெற்றவர் என்பதைப் பல தமிழ்ப்புலவர் அறிந்திலர் (17) புலவரை உயிரோடுள்ள காலமெல்லாம் புறக்கணிப் பதும், அவர் இறந்தபின் போற்றத் தொடங்குவதும், இற்றைத் தமிழர் இயல்பு (18) தன்னலம் பார்ப்பதும் சிலவிடத்துத் தக்கதே (முற்றும்)