பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 11 வடமொழிவரலாறு - 1 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 11 ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1967 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 176 = 192 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 120/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை இவ்வுலகில் இதுவரை நிகழ்ந்துவந்த பெரிய ஏமாற்றுக் களுள் தலைமையானது, வடமொழி தேவமொழி என்பதே. எங்ஙனமெனின், பழங்குடி மக்களான தமிழரும் திரவிடமும் ஏனையிந்தியருமட்டுமன்றி, இற்றையறிவியல் கண்ட ஆங்கிலரும் ஐரோப்பியரும் அமெரிக்கரும் இவ்வேமாற்றிற்கு ஆளாகி யுள்ளனர். தமிழர், சிறப்பாகத் தமிழ வேந்தர், ஏமாறியதற்றுக் கரணியம், அவரது (பகுத்தறிவைப் பயன்படுத்தாத) பழங்குடிப் பேதைமையும் கொடைமடமும் மதவெறியுமே. வேத ஆரியரின் ஏமாற்றிற்கு அவரது வெண்ணிறிமும் அவரது வேதமொழியின் ஆரவாரவொலியும் துணைநின்றன. மேலையர் ஏமாறியதற்கோ, தமிழ்மறைப்புண்டு கிடப்பதும் தமிழர் ஆரியர்க்கு அடிமைப் பட்டிருப்பதுமே கரணியமாகும். கால்டுவெலார் செந்தமிழ் நாட்டு நடுவே அரை நூற்றாண்டு செந்தமிழை ஆராய்ந்தேனும், தமிழரின் பல்துறைத் தாழ்வும் தாழ்வுணர்ச்சியும், ஆரியர்க்கு முற்பட்ட தமிழிலக்கிய முற்றழிவும், கடைக்கழக எச்ச நூலின் அற்றை மறைவும், தமிழின் தென்மை தொன்மை முன்மைத் தன்மைகளைக் காண முடியாவாறு அவர் கண்களை இறுகக் கட்டிவிட்டன. இந்நூற்றாண்டில் மறைமலையடிகள் கிளர்ந்தெழுந்து தமிழ்த் தூய்மையைப் பதுக்கியிருப்பினும், பல்வகைப்பட்ட கோடன்மாரின் இரண்டகச் செயல்களால், அதன் முன்னேற்றம் பெரிதும் தடைப்பட்டுளது. வேற்றவராலும் தன்னவராலும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழுக்குச் செய்யப்பட்டுவரும் தீங்கு, ஏட்டிலடங்கா; எண்ணத் தொலையா. இருக்கின்ற நெருக்கடி போதாதென்று இன்று இந்தியும் வந்து தமிழை அடர்க்கின்றது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை, தமிழின் அரியணையில் ஆரியம் அமர்ந்திருப்பதே. ஆதலால், தமிழை வடமொழியினின்று மீட்டு மீண்டும் அதை அரியணையில் அமர்த்தினாலன்றி, தமிழும் தமிழனும் வாழ வழியில்லை. ஆகவே, இந்நூலை எழுதத் துணிந்தேன். தமிழ் திரவிடத்திற்குத் தாயாக மட்டுமன்றி, ஆரியத்திற்கு மூலமாகவும் உள்ளதென்னும் உண்மையை, இந்நூலாற் கண்டு தெளிக. இந்நூலை எழுதுவதற்குத் துணையாகச் சில அரிய ஆராய்ச்சி நூல்களை அன்பளிப்பாகவும் கடனாகவும் தந்துதவிய, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும் துணை முதல்வருமாகிய, பேரா. கோ.இராமச்சந்திரனார் (எம்.ஏ.) அவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன். கடந்த பல்லாண்டாக என் மனவமைதி குலையாமற் காத்த, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ் விரிவுரையாளர் பர். மெ. Rªjudh® (v«.V., v«.È£L., பிஎச்.டி.) அவர்கட்கும், திரு பு. மனோகரனார்க்கும், `தமிழ்ப்பாவை' ஆசிரியர் திரு கருணையார்க்கும், என் நெஞ்சார்ந்த நன்றி. இந்நூல் அச்சீட்டுத் தொடர்பாகவும் வெளியீட்டுத் தொடர்பாகவும், திருநெல்வேலித் தென்னிந்திய சை. சி. நூ. ப. க. ஆட்சியாளர் திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் செய்த உதவிகளும் குறிக்கத்தக்கனவே. தாய்மொழிப் பற்றினால் தானும் பிழைதிருத்தி வாய்மொழிக் கேற்ற வடித்தெழுத்தும் - தேமொழிப்பேர் ஆரிய வாற்றையு மச்சிட் டுதவினன்காண் நாரா யணஞ்செட்டி நன்கு. காட்டுப்பாடு, ஞா.தேவநேயன் 6.12.1967 குறுக்க விளக்கம் (Abbreviations) 1. இலக்கணக் குறியீடுகளும் பொதுச்சொற்களும் m gh.- அலிப்பால் அ. ம. ப. க. க. - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆ. பா. - ஆண்பால் இ. கா. = இறந்தகாலம் உ. த. - உயர்தரம் உ. வ. - உலக வழக்கு எ. கா. - எதிர்காலம் எ - டு - எடுத்துக்காட்டு ஒ. நோ : - ஒப்பு நோக்க ஒ. பா. - ஒன்றன் பால் கி. பி. கிறித்துவிற்குப் பின் கி. மு. கிறித்துவிற்கு முன் செ. வ. - செய்யுள் வழக்கு த. வி. தன்வினை தொ. பெ. - தொழிற்பெயர் தோரா. - தோராயம் (உத்தேசம்) நி. கா. - நிகழ்காலம் நூற். நூற்றாண்டு பக். - பக்கம் ப. பா. - பலர்பால் பர். - பண்டாரகர் பல.பா. - பலவின்பால் பி. வி. - பிறவினை பெ. - பெயர்ச்சொல் பெ. எ. - பெயரெச்சம் பெ. பா. - பெண்பால் பேரா. - பேராசிரியர் வ. மூ. இ. - வடமொழியில் மூலம் இல்லை வி. - வினைச்சொல் வி. எ. - வினையெச்சம் வி. மு. - வினைமுற்று வே. உ. - வேற்றுமையுருபு com. - comparative dim. - diminutive pfx. - prefix pron. - pronoun suf., sfx. - suffix sup. – superlative 2. மேற்கோள் நூற்பெயர்கள் அக. நி. - அகராதி நிகண்டு அகம். - அகநானூறு அரிச். பு. - அரிச்சந்திர புராணம் அ. வே. - அதர்வ வேதம் இரகு. - இரகு வமிசம் இராமநா. - இராம நாடகம் இலக். அ. - இலக்கிய அகராதி இ. வே. - இருக்கு வேதம் இறை. - இறையனார் அகப்பொருள் உபதேசகா. - உபதேசகாண்டம் I§., ஐங்குறு, - ஐங்குறுநூறு கந்தபு. - கந்தபுராணம் கம்பரா. - கம்பராமாயணம் கல்லா. - கல்லாடம் கலிங். - கலிங்கத்துப் பரணி கலித். - கலித்தொகை காஞ்சிப்பு. - காஞ்சிப்புராணம் குமர. பிர. - குமர குருபரர் பிரபந்தத் திரட்டு குற்றா. தல. - குற்றாலத்தல புராணம் குறள். - திருக்குறள் குறுந். - குறுந்தொகை சிலப். - சிலப்பதிகாரம் சிறுபாண். - சிறுபாணாற்றுப் படை சீதக். - சீதக்காதி சீவக. - சீவக சிந்தாமணி சூடா. - சூடாமணி நிகண்டு சூளா. - சூளாமணி சேதுபு. - சேதுபுராணம் சொல். - சொல்லதிகாரம் சௌந்தரி. - சௌந்தரிய லகரி ஞானா. - ஞானாமிர்தம் தணிகைப்பு. - தணிகைப்புராணம் தாயு. - தாயுமானவர் பாடற் றிரட்டு âÇ., திரிகடுக. - திரிகடுகம் திருக்கோ. - திருக்கோவை திருப்பு. - திருப்புகழ் திருமந். - திருமந்திரம் திருமுரு. - திருமுருகாற்றுப்படை திருவாச. - திருவாசகம் திருவாலவா. - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் திருவிளை. - திருவிளையாடற் புராணம் திவ். - திவ்வியப் பிரபந்தம் திவா. - திவாகரம் தேவா. - தேவாரம் தைலவ. - தைலவகைப் பரணி தொண்டை. சத. - தொண்டை மண்டல சதகம் தொல். - தொல்காப்பியம் நள. - நளவெண்பா நன். - நன்னூல் நாமதீப. - நாமதீப நிகண்டு நாலடி. - நாலடியார் நான்மணி. - நான்மணிக் கடிகை நீதிவெண். - நீதிவெண்பா நெடுநல். - நெடுநல் வாடை ப. க. க. அ. - பல்கலைக் கழகத் தமிழ் அகராதி பதார்த்த. - பதார்த்தகுண சிந்தாமணி பதிற்றுப். - பதிற்றுப்பத்து பரிபா. - பரிபாடல் பழ. - பழமொழி பாகவத. - பாகவத புராணம் பாரத. - வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பிங். - பிங்கல நிகண்டு பிரபு. - பிரபுலிங்க லீலை ãunghj.- பிரபோத சந்திரோதயம் பிரமோத். - பிரமோத்தர காண்டம் பு.வெ. - புறப்பொருள் வெண்பாமாலை புறம். - புறநானூறு பெரியபு. - பெரியபுராணம் பெருங். - பெருங்கதை பெரும்பாண். - பெரும்பாணாற்றுப் படை பொ. - பொருளதிகாரம் மணி. - மணிமேகலை மலை. - மலையகராதி மலைபடு. - மலைபடுகடாம் மா. வி. அ. - மானியர் வில்லியம்சு சமற்கிருத அகராதி மூ. அ. - மூலிகை அகராதி மேருமந். - மேருமந்தர புராணம் விநாயகபு. - விநாயக புராணம் COD - The Concise Oxford Dictionary S. I. I.- South Indian Inscriptions இ. - இந்தி இலத். - இலத்தீன் க. - கன்னடம் கி. - கிரேக்கம் கு. - குடகு (குடகம்) கோ. - கோத்தம் ச. - சமற்கிருதம் த. - தமிழ் து. - துளு (துளுவம்) துட. - துடவம் தெ. - தெலுங்கு பர். - பர்சி (பர்ஜி) பி. - பிராகுவீ பிரா. - பிராகிருதம் பெர். - பெர்சியன் (பாரசீகம்) ம. - மலையாளம் மரா. - மராத்தி யா. - யாழ்ப்பாணத்தமிழ் வ. - வடமொழி AS - Anglo - Saxon Dan - Danish Du. Dutch F - French G., Ger - German Gk - Greek Goth - Gothic L - Latin Lith - Lithuanian LL - late Latin LG - Low German ME - Middle English MLG - Middle Low German Mod G - Modern German OE - Old English OF - Old French OHG - Old High German ON - Old Norse OS - Old Saxon S., Skt - Sanskrit Slav - Slavonic Sw – Swedish குறிவிளக்கம் (Symbols) குறி விளக்கம் - இடைக்கோடு (hyphen) - வலமுறைத் திரிவுக் குறி = சமக்குறி, பொருட்பாட்டுக் குறி + புணர்ச்சிக் குறி x எதிர்நிலைக் குறி, முரண்பாட்டுக் குறி , ,, மேற்படிக் குறிகள் . விடுபாட்டுக் குறி பொருளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு .v சான்றிதழ் .vii முகவுரை .ix குறுக்க விளக்கம், குறி விளக்கம் .xi முன்னுரை 1. தமிழின் தென்மை .1 2. தமிழின் திரிபு வளர்ச்சி .12 3. ஆரிய மொழிக் குடும்பம் .19 4. வடமொழிப் பெயர்கள் .21 5. ஆரியர்க்குப் பிறந்தகமின்மை .25 6. வடமொழியின் ஐந்நிலை .26 7. இந்திய ஆரியர் வருகை 30 8. வேதமும் வேதமொழியும் .32 9. வேத ஆரியர் தென்னாடு வருகை .37 10. சமற்கிருதவாக்கம் .41 11. தொல்காப்பியமும் பாணினீயமும் .43 12. ஆரிய ஏமாற்று .44 13. மூவகை வடசொற்கள் .45 14. முக்கால வடமொழித் தமிழ்ச் சொற்கள் 46 15. மேலையர் திரிபுணர்ச்சி .46 16. தென்மொழி வடமொழி வேறுபாடு .49 17. தென்மொழி வடமொழிப் போராட்டம் .50 நூல் I. மொழியதிகாரம் .54 1. மேலையாரிய இனச்சொற்கள் 54 2. பிராகிருதச் சொற்கள் .60 3. வடமொழிப் புகுந்த தென்சொற்கள் 60 வடமொழி வரலாறு - 1 முன்னுரை 1. தமிழின் தென்மை பரந்த பாகுபாட்டில் ஒரு கூட்டுக் குடும்பமாய் அமைகின்ற, இந்திய ஐரோப்பிய மொழித் தொகுதியின் தொடக்கநிலை தமிழாயும் முடிவுநிலை சமற்கிருதமாயும் இருப்பதால், வடமொழி யின் வரலாற்றை அல்லது இயல்பைத் தெளிவாய் அறிதற்கு, தமிழின் பிறந்தகம் எதுவென்று முதற்கண் காணல் இன்றியமையாததாம். தமிழ் தோன்றிய இடம் தெற்கே முழுகிப் போன குமரிக் கண்டமே (Lemuria) என்பதற்குச் சான்றுகளாவன: (1) தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கே செல்லச் செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது சொற்றிரிந்தும் ஒடுங்கியும் இலக்கிய மற்றும் இடையீடுபட்டும், தெற்கே வரவர மெல்லொலி மிக்கும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும். (2) நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலைமொழிகளிலுள்ள தென்சொற்கட் கெல்லாம் தமிழி லேயே வேரிருத்தல். (3) தென்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நாற்பெரு மொழிகளுள், முழுத் தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டின் தென்கோடியில் வழங்குதல். (4) தமிழ்நாட்டுள்ளும், தெற்கே செல்லச் செல்லத் தமிழ் திருந்தியிருத்தலும், நெல்லை வட்டாரத் தமிழ் சொல் வளமும் சொற்றூய்மையும் தொல்வடிவச் சொல்வழக்கும் குமரிநாட்டு முறையொட்டிய தூய ஒலிப் பலுக்கமும் (உச்சரிப்பும்) கொண்டிருத்தலும். நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ்(வு) இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்'' என்னும் பழம்பாவும், பாண்டியனுக்குச் சிறப்பாகத் தமிழ் நாடன் என்னும் பெயருண்மையும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்' என்னும் வழக்கும், இங்குக் கவனிக்கத் தக்கன. (5) தமிழ், வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வல்லொலிகளின்றி, சிறுவரும் முதியோரும் நோயாளிகளும் பலுக்கக் கூடிய பெரும் பாலும் எளிய முப்பான் ஒலிகளே கொண்டிருத்தலும்; எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்த தீவுகளிலும் வழங்குதலும். (6) ஆத்திரேலியாவையும் ஆப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு ஏறத்தாழ ஈராயிரங் கல் தொலைவு தெற்கே நீண்டிருந்த, குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளியாற்றங்கரை மதுரையில் தலைக்கழகம் இருந் தமையும்; குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டா நிலநூலியல் (Geological) தொன்மையும், அதன் பெரும்பகுதிவரலாற்றுக்காலத்திற்குமுன்பேமுழுகிப் போனமையும். (7) தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென் கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடு இருந்தமை யும், தென் என்னும் சொல் தென்னைமரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும். தென்னுதல் = கோணுதல். தென்னியிருப்பது தென்னை. (8) பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப் பெற்றுள்ள காரோதிமமும் (காரன்னம்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் (Tasmania) தீவில் இன்று மிருத்தல். (9) வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற்றெல் லாக் கருப்பொருள்களும், அறுபெரும் பொழுதும் ஐந்நில வகைகளுமாகிய முதற்பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல். (10) மக்களின் இயற்கையான நாகரிக வளர்ச்சியையும் நிலையையும் உணர்த்தும் ஐந்திணைப் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாடாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற் புலனெறி வழக்கமாகத் தொன்றுதொட்டுக் கூறப்பட்டு வருதலும்; நிலையான குறிஞ்சி முல்லை மருத நெய்தலும் நிலையற்ற பாலையுமான ஐந்திணை நிலப் பாகுபாடு, தமிழ்நாட்டிற் போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைந்திராமையும். (11) தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும். (12) தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒரு சான்றுமின்மை. (13) தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்றமிழ், தென்னன் அல்லது தென்னவன் (பாண்டியன்), தென்கலை, தென்னுரை என்னும் பெயர்கள், தமிழ் நாட்டையும் தமிழரையும் தமிழையும் முதல் தமிழ் வேந்தனாகிய பாண்டியனையும் தமிழ்க்கலையையும் குறித்துத் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றமை. (14) குமரிக்கண்டத் தென்பகுதி முழுகிப் போனபின் பண்டைத் தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென்புலத்தார் என்றும், அவரிருக்கு மிடத்தைத் தென்புலம் அல்லது தென்னுலகு என்றும், கூற்றுவனைத் தென்புலக்கோன், தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன் என்றும் வழங்கிவந்தமை. (15) இலக்கணம் இலக்கியம் சொல்வளம் முதலிய எல்லா வகையிலும், தென்னாட்டார்க்குச் சிறப்பாகவுரிய நாகரிகத் தைத் தமிழே காட்டி நிற்றல். (16) தமிழே தென்மொழியின் பிறந்தகத்தையும் அம் மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையும் காட்டி, தென்னோரின் மொழி வரலாற்றையும் இன வரலாற்றையும் வரைதற் கேற்ற வரலாற்றுக் குறிப்புகளைத் தாங்கி நிற்றல். (17) தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரி கின்றான், தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில் தென்றிசை முதலிற் குறிக்கப் பெறுதல். (18) எண்டிசைத் தலைவருள் வடபால் மூவர் தவிர ஏனை யைவரும், குமரிநாட்டிற்குப் பொருத்தமானவாறே அமைந் திருத்தல். கிழக்கில் சாலி (சாவக) நாட்டரசன் இந்திரன் (வேந்தன்) வழியினன் என்னப் பெற்றமையையும், தென்கிழக்கில் அமைதி மாவாரியில் சில எரிமலைக ளுண்மையையும், தென்மேற்கில் தென்னாப்பிரிக்க ரிருப்பதையும், குட (அரபிக்) கடல் குண (வங்காளக்) கடலினும் தொன்மை யதாயிருப்பதையும் நோக்குக. (19) மேனாடுகளுள் முதன்முதல் நாகரிகம் பெற்றிருந்த எகிபது குமரிநாட்டுத் தமிழரொடு வணிகவுறவு கொண்டிருந்தமை. (20) பிறமொழிச் சென்று வழங்கும் சொற்களும் இனமொழிச் சொற்களும் உட்பட, தமிழ்ச்சொற்களெல்லாம், வேறெம் மொழியிலும் இல்லாவாறு கொத்துக் கொத்தாகவும் குலங்குலமாகவும் தொடர்புகொண்டு தென்னாட்டுத் தென்கோடியிலேயே தொன்றுதொட்டு வழங்கி வருதல். எ - டு: உல் என்னும் முதலடி சொன்முதன் மெய்கள் ஆறொடு கூடி, குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் வழியடிகளைத் தோற்றுவிக்கும். அவற்றுள் குல் என்னும் வழியடி வளைவுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு நூற்றுக்கணக்கான சொற்களைப் பிறப்பித் திருத்தல் காண்க. குல் குல் - குலவு. குலவுதல் = வளைதல். குலவு - குலாவு. குலுத்தம் = வளைந்த காயுள்ள கொள். குலுக்கை = உருண்டு நீண்ட குதிர். குல் - (கொல்) - கோல் = உருட்சி, திரட்சி. கோல் - கோலி = சிற்றுருண்டை. குல் - குள் - குளம் = வளைந்த நெற்றி, வெல்ல வுருண்டை. குளம் - குளகம் = வெல்ல வுருண்டை. குளியம் = உருண்டை. குளிகை = உருண்ட மாத்திரை. குளியம் - குழியம் = வளைதடி, விரை (வாசனை) யுருண்டை. குள் - குழல். குழலுதல் = சுருளுதல். குள் - (குய்) - குயம் = வளைந்த அரிவாள். குல் - குர் - குரங்கு. குரங்குதல் = வளைதல். குரங்கு - குரங்கி = வளைந்த அல்லது வட்டமான மதி. குரவை = வட்டமாய் நின்று பாடியாடுங் கூத்து. குருள் = மயிர்ச்சுருள். குருளுதல் = சுருளுதல். குருகு = வளையல், வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவைப் பொது, ஓதிமம் (அன்னம்). குரகம் = நீர்வாழ் பறவைப் பொது. குர் - குறு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு = காற்றாடி. கறங்குதல் = சுழலுதல். குறள்- குறழ். குறழ்தல் = குனிதல். குறள் - குறண்டு. குறண்டுதல் = வளைதல், சுருளுதல். குறடு = வளைந்த அலகுள்ள பற்றுக் கருவி. குறண்டல் = கூனல். குறு - கிறு. கிறுகிறுத்தல் = சுற்றுதல். கிறு - கிறுக்கு = தலைச்சுற்று, கோட்டி (பைத்தியம்). குல் - குன் - குனி. குனிதல் = வளைதல். உடம்பு வளைதல். குனி = வில். குனுகுதல் = சிறுத்து உடம்பு வளைதல். குன் - கூன் = வளைவு, முதுகு வளைவு. கூன் - கூனல். கூன் - கூனி = வளைந்த சிற்றிறால். கூன் = கூனை = நான்மூலையும் கூனுள்ள நீர்ச்சால். குள் - கூள் - கூளி = வளைந்த வாழைப்பழம். கூள் - கூண்டு = தட்டிவளைவு, வண்டிக்கூண்டு போன்ற பறவைக் கூடு, விலங்குக் கூண்டு. கூண்டு - கூடு = நெற்கூடு, கூண்டு, உறை, உள்ளீடின்மை. குள் - கொள் = வளைந்த காயுள்ள பயற்றுவகை. கொள் - கோள் = சுற்றிவரும் விண்மீன் (கிரகம்). கோள் - கோளம் = வட்டம், உருண்டை. கோளம்- கோளகை = வட்ட வடிவம், மண்டலிப் பாம்பு. கோளம் = கோளகம் = (உருண்ட)மிளகு. கோள் = கோளா = பொரித்த உருண்டைக் கறி. கொள் - கொட்டு. கொட்டுதல் = கொள்கலத்தைச் சாய்த்து உள்ளீட்டை வீழ்த்துதல். கொள் = கொட்பு = வளைவு, சுழற்சி, சுற்றுகை. கொட்டு = வட்டமான நெற்கூடு, கொட்டு - கொட்டம், கொட்டில், கொட்டாரம். கொட்டில் = வட்டமான தொழு. கொட்டு - கொட்டை = உருண்ட வடிவம், பஞ்சுச் சுருள், உருண்ட தலையணை. கொட்டாரம் = வட்டமான களஞ்சியம். கொட்டு - கொட்டம் = வட்டமான தொழு, நூற்குங் கொட்டை. கொட்டகை = சாய்ப்புப் பந்தல். கொள் - கொட்கு. கொட்குதல் = சுற்றுதல், திரிதல். கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. கொட்கி - கொக்கி = வளைந்த மாட்டி. கொக்கை = கொக்கி. கொக்கரை = வளைவு, வில், வலம்புரிச் சங்கு. கொக்கட்டி = (குறுகி) வளைந்த பனங்கிழங்கு. குள் - குண்டு = உருண்டை, உருட்சி. குண்டன் = உருண்டு திரண்டவன். குண்டை = உருண்டு திரண்ட காளை. குண்டடியன் - உருண்டு திரண்ட ஆண்சிறுத்தை. குண்டான் - குண்டா - உருண்ட வடிவான கலம். குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம், காயம் (ஆகாயம்), ஆடவர் காதுவளையம். குண்டலம் - குண்டலி = மூல நிலைக்கள (ஆதார) வட்டம். குண்டலி - குண்டலினி = மூல நிலைக்களத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஆற்றலி (சக்தி), மாமாயை. குண்டி = உருண்ட புட்டம். குண்டு - கண்டு = நூற்பந்து. (குண்டகம்) - கண்டகம் = வட்டமான மரக்கால். கண்டி = ஒருகலம், ஓர் அளவு. கண்டி - கண்டிகை = பதக்கம், தோட்கடகம். கண்டிகை - கடிகை = நாழிகை வட்டில், நாழிகை, தோள் வளை, காப்பு. கடிகையாரம் - கடிகாரம். குள் - குண் - குணம் = குடம் (உருண்ட கலம்). குணக்கு = வளைவு. குணக்குதல் = வளைத்தல். குணலை = நாணத்தால் உடல் வளைகை. குணுக்கு = இளமகளிர் அணியும் கனத்த காது வளையம். குணம் - குடம், வளைவு, உருண்ட கலம், சக்கரக்குறடு. குடந்தம் = வளைவு, வணக்கம். குடக்கு - குடக்கி = வளைவானது. (குடகம்) - கடகம் = வட்டமான பெருநார்ப்பெட்டி. கடகம் - கடாகம் = வானவட்டம். குடலை = உருண்டு நீண்ட பூக்கூடை. குடம்பை = முட்டை, வட்டமான கூடு. குடம்பை - குதம்பை = காதோலைச் சுருள். குடா = வளைகடல், குடா - குடாவு. குடாவடி = வளைந்த அடியுள்ள கரடி. குடாரி = யானைத்தோட்டி. குடி = வளைந்த புருவம். குடி - குடில் - குடிலம் = வளைவு. குடிலை = வளைந்த ஓங்கார வடிவம், தூய மாயை. கொள் - கொண்டி = கொக்கி. கோள் - கோண் - கோணு, கோணல், கோணம், கோணை. கோண் = வளைவு, கோணம், மாறுபாடு, கொடுங் கோன்மை. கோணம் - வளைவு, மூலை, கூன்வாள், யானைத் தோட்டி. கோணம் - காணம் = கொட்பயறு. ஒ.நோ : ஓட்டம் - ஆட்டம் (உவமவுருபு). ஓடுதல் = ஒத்தல். நோட்டம் - நாட்டம் (கண்). நோடு - நாடு. நாடுதல் = பார்த்தல், கவனித்தல், ஆய்தல், தேடுதல், விரும்புதல். கொள் - (கொண்) - கொடு = வளைவு, வளைவான. கொடுமை = வளைவு, தீமை, கடுமை. கொடுமரம் = வில். கொடுவரி = புலி. கொடுந்தமிழ் = செந்தமிழினின்று திரிந்த தமிழ். கொடுமலையாளம்= எளிதில் விளங்காத பழமலையாளம். கொடும்பனி = கடும்பனி. கொடுவினை = தீவினை. கொடுக்கு = வளைந்த தொங்கல், தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு. கொடுக்கன் - கொடுக்கான் = தேள்வகை. கொடுக்கி=தேட்கொடுக்கி, கொக்கி. கொடு - கொடுகு. கொடுகுதல் = கொடியதாதல். கொடும்பு = கொடுமை. கொடுவை = தீய தன்மை. கொடுப்பு - குறடுபோன்ற கதுப்பு (அலகு). கொடு - கொடி = வளைந்து படரும் நிலைத்திணை வகை. கொடிறு = குறடு, கதுப்பு (cheek, jaw). கொள் - கொண் - (கொண்பு) - கொம்பு = வளைந்த மரக் கிளை, கிளை, கிளைபோன்ற விலங்குக் கொம்பு. கொம்பு = கொப்பு = கிளை, அணிகலவகை. கோண் - கோடு = வளைவு, வளைந்த சங்கு, குளக்கரை, வீணைத்தண்டு, கொம்பு, வளைந்த வரி, வரி, கொடுமை. கோடுதல் = வளைதல். கோட்டம் = வளைவு, வணக்கம், மதியைச் சூழ்ந்த ஒளி வட்டம், மதில் சூழ்ந்த கோவில், குளக்கரை , வட்டம், நிலப்பிரிவு, கோட்டகம் = குளக்கரை. கோட்டை = அரண்மனையை அல்லது நகரைச் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த இடம், மதியைச் சூழ்ந்த ஒளி வட்டம், வட்டமான நெற்களஞ்சியம், ஒரு பெரு முகத்தலளவு. கோட்டுதல் = வளைத்தல், திரித்தல். கோட்டி = அறிவின் திரிபு, பித்தியம் (பைத்தியம்). (கோடகம்) - கேடகம் = வட்டமான தடுபடை. ஒ.நோ : பரி - பரிசை = வட்டமான கேடகம். கேடகம் - கிடுகு (shield). கோடல் = வளைவு, வளைந்த இதழுள்ள காந்தள். கோடை = காந்தள். கோடரம் = மரக்கிளை. கோடி = வளைவு. கோடலம் = பிறைபோல் வளைந்த மாலைவகை. கோடணை = கொடுமை. கோடம் - கோரம் = வட்டில். கோடு - கோசு. கோசுவிழுதல் = துணி வெட்டும்போது கோணிப் போதல். ட - ச, போலி. ஒ.நோ: ஒடி - ஒசி, vide - vise. குல் என்னும் அடிப்பிறந்த வளைவுக் கருத்துச் சொற்கள் இன்னுஞ் சிலவுள. அவை மிகையென்று இங்குக் குறிக்கப்பெற வில்லை. இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்களுட் சில மேலை யாரியத் திலுஞ் சென்று வழங்குகின்றன. எ - டு : கறங்கு (சுழல், காற்றாடி) ON. hringr. OHG.,OS.,OE. hring, E. ring. கிறு, கிறுகிறு - Gk. guros, E. gyrate. குரங்கு - OE. cranc, crinc, E. crank. குரவை - Gk. koros (orig. a dance in ring), E. chorus. FUF, Fuf« - OHG., OS. krano, OE. cran, E. crane. FUŸ - LG., Du. OFris. krul, G. krol, OE. crol, crul, E. crul. குலவு - L. curvus, E. curve. குளியம், குழியம், கோளம் - L. globus, E. globe. கொக்கி - Du. hock, MLG. hok, OE. hoc, E. hook. கொடுக்கு - ON. krokr, F. croc, ME. croc, E. crook. கோணம் - Gk. gonia. இத்தகைய சொற்கள் மேலையாரியத்தில் அயல்நாடு சென்ற தனி மக்கள்போல் தனிப்பிரிந்தே நிற்றல் காண்க. தமிழ்ச்சொற்கள் குடும்பங் குடும்பமாகவும் குலங்குலமாகவும் தொடர்புகொண் டிருப்பது போன்ற நிலைமை, வேறெம் மொழியிலுங் காண்டற் கரிது. ஆங்கில மொழிவரலாறு எங்ஙனம் ஆங்கிலநாட்டு வரலாற் றொடு இரண்டறக் கலந்துள்ளதோ, அங்ஙனமே தென்மொழி வரலாறும் தென்னாடு அல்லது குமரிநாட்டு வரலாற்றொடு இரண்டறக் கலந்துள்ளதென அறிக. மேற்காட்டிய தமிழ்ச்சொற்களுட் சில வடசொற்கள்போல் தோன்றலாம். அவை அங்ஙனமன்மை இந் நூல் முழுதும் படிப் பார்க்குத் தெற்றெனத் தெரிந்துவிடும். கிரேக்க மொழியிற் சில தமிழ்ச்சொற்க ளிருப்பது கொண்டு, கிரேக்க நாட்டினின்று தமிழர் வந்தாரென்பது, ஒரு மரத்தினின்று பறிக்கப்பட்டு வேறிடத்திலுள்ள சில இலைகளினின்றே அம் மரந் தோன்றிற்றென்பதை யொக்கும். இதனால், தமிழின் பிறந்தகம் குமரிநாடென்பதை அறியா தார், தமிழ்மொழியை ஆழ்ந்தாராயாதார் என்பது வெள்ளிடை மலையாம். இனி, உல் என்னும் முதலடியும், குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் வழியடிகளும், எவ்வாறு ஒரே அடிப்படைக் கருத்துப் பற்றிப் பல்வேறு சொற்களைப் பிறப்பிக்கின்றன என்பதை, பின்வரும் எடுத்துக்காட்டால் அறிந்து கொள்க. குத்தல் அல்லது கிள்ளுதல் குத்தற்கு அல்லது கிள்ளுதற்குக் கூரிய உறுப்பு அல்லது கருவி வேண்டும். உல் என்னும் லகர வீற்றடி, பிற்காலத்தில் உள் என்னும் ளகர வீற்றடியாகத் திரிந்துள்ளது. இங்ஙனமே ஏனையவும். உள் - உல் = 1. தேங்கா யுரிக்கும் கூர்ங்கம்பி. 2. கழு. உல் - அல் - அல்கு - அஃகு. அஃகுதல் = கூராதல், நுண்ணிதாதல். அஃகு - அக்கு = முட்போன்ற முனையுள்ள காய்மணி (உருத்திராக்கம்). அக்கு - அக்கம். அம்' - பெ.பொ.பி. ஒ.நோ : முண்மணி = அக்குமணி. அல் - அலம் = கொட்டும் தேள்(திவா.). அல் - அலகு = கூர்மை. அல் -அலவு - அலவன் = கூரிய கால்களையுடைய நண்டு, கடகவோரை (திவா.). உல் - உள் - அள் = கூர்மை (திவா.). அள் - அளி = கொட்டும் தேனீ அல்லது வண்டு. உள் - உளி = கூரிய செதுக்குக் கருவி. உளி - உளியம் = கூரிய உகிருள்ள கரடி. உளி - உகிர் = கூரிய விரலுறுப்பு. உளி - உசி - ஊசி. ஒ.நோ : இளி - இசி. குள் - குல் - குறு - குற்று - குத்து - கொத்து - கொட்டு. குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லை வழக்கு). குள் - குளவி = கொட்டும் தேனீ. FŸ - FË® = e©L (ã§.), flfnthiu (âth.), சூலம் (சூடா.). குளிர் - குளிரம் = நண்டு. நண்டு கூரிய கால்களை யுடையதாயும் நிலத்தைக் கிண்டிச் செல்வதாயு மிருத்தலைக் காண்க. குள் - கள் = முள். கள் - கள்ளி = முட்புதர்வகை. fŸ - fL = KŸ (âth.), முள்ளி(மலை.). கள் - கண்டு = முள்ளுள்ள கண்டங்கத்தரி (மலை.). f©L - f©l« = fŸË (kiy.), vG¤jh (ã§.), thŸ (ã§.), முட்கத்தரி (கண்டங்கத்தரி.) கண்டம் - கண்டகம் = முள் (இறை.41: 172), நீர்முள்ளி (தேவா. 268:2), thŸ (Nlh.), உடைவாள் (திவா.). கண்டகம் - கண்டகி = தாழை, மூங்கில்வகை, இலந்தை. f©L - f©lš = jhiH (ehyo.), KŸË(Nlh.), நீர்முள்ளி (மலை.). கண்டல் - கண்டலம் = முள்ளி (மூ.அ.). கண்டு - கண்டி = அக்கமாலை (தேவா. 586:6). கண்டி - கண்டிகை = அக்கமாலை (பிங்.). குள் - கிள் - கிள்ளி - கிளி. கிள் - கிள்ளை = கூரிய மூக்காற் கிள்ளும் பறவை. கிள் - கெள் - கெளிறு = வாயருகுள்ள முள்ளாற் கொட்டும் மீன். கெளிறு - கெளிற்றி - கெளுத்தி. கெளிறு - கெடிறு. சுள் சுல் - சூலம். சுல் - சுர் - சுரிகை = உடைவாள் (பெரும் பாண். 73). சுர் - சுறு - சுறுக்கு = குத்தலுணர்ச்சி. சுரி - சூரி = கூர்ங்கத்தி. சுரி - சுரணை = குத்துணர்ச்சி. சுல் - சுள். சுள்சுள்ளென்று குத்துகிறது என்பது உலக வழக்கு. சுளிக்கு = கூர்முனைக்கோல். சுள்ளான் = முட்குத்துவதுபோற் கடிக்கும் எறும்பு. சுள் - (சுளை) - சுணை = கூர்மை, சிறுமுள், குத்துணர்ச்சி. சுணை - சுணைப்பு = குத்துணர்ச்சி. சுறு - சுறா - சுற = கூரிய செதிளால் வெட்டுங் கடல்மீன் (பொருந. 203), சுறா (திவா.). சுற - சுறவு (புறம். 13:7). சுறவு - சுறவம். துள் துல் - துலம் = நீர்முள்ளி. துல் - துள் - (தெள்) - தேள் = கொட்டும் நச்சுயிரி. தெள் - தெறு. தெறுதல் = கொட்டுதல். தெறு - தேறு = கொட்டுகை (பதிற். 71:6). ஒ.நோ : வெள் - வெறு. bjW¡fhš = njŸ (âth.), கடகவோரை (சூடா.). தெறுப்பதம் = தெறுக்கால். தேள் - தேளி = தேள்போல் வாலில் முள்ளுள்ள மீன். தேட்கொடுக்கி = தேட்கொடுக்குப் போன்ற முட்காய்ச் செடி. நுள் நுள்ளுதல் = கிள்ளுதல். நுள் - நுள்ளான் = நுள்ளுவது போற் கடிக்கும் சிற்றெறும்பு. நுள் - நுள்ளல் - நொள்ளல் = சிற்றுலங்கு. நுள் - நள் - நள்ளி = நண்டு (திவ்.திருவாய். 9:10:2), கடகவோரை (சூடா.). நள்ளி - நளி = தேள் (பிங்.). நளி - நளிர் = நண்டு (சூடா.). நள் - நண்டு. நண்டுத்தெறுக்கால் = நட்டுவாய்க்காலி. நண்டல் = கிண்டல். நண்டல் பிண்டல் என்னும் வழக்கை நோக்குக. புள் புள் - புள்ளி = குத்து. புள்ளுதல் என்னும் வினை, உள்ளுதல் துள்ளுதல் என்பன போன்றே பிற்காலத்து வழக்கற்றுப் போயிற்று. அதனின்று திரிந்த புட்டு, பொட்டு, பொட்டி என்னும் வினைகளும் வழக் கிறந்தன. புள் - பொள் - பொறி = புள்ளி. பொள் - பொட்டு = புள்ளி. முள் முள்ளுதல் = கிள்ளுதல். முள் - முள்ளி = முட்செடி, முட்கத்தரி, தாழை. முளி = செம்முள்ளி. முள் - முளா - முளவு = முள்ளம்பன்றி (புறம். 325), முட்கோல். KŸ - KsÇ = E©ik (Nlh.), K£bro (ã§.), முட்சுள்ளி (நற். 384). முள் - முளை = கூர்மை (கலித். 4). முளை - முனை. KŸ - K©L - K©lf« = KŸ, KŸSil¤ öW (ã§.), jhiH (ã§.), Ú®KŸË (âth.), கழிமுள்ளி (மதுரைக். 96), கருக்குவாய்ச்சி. முள் - வள் = கூர்மை. இத்தகைய ஒழுங்குபட்ட ஏழடிச் சொற்றிரிவு வேறெம் மொழியினுங் காணவியலாது. தமிழினின்று திரிந்த திரவிட மொழிகளும், எத்துணை வளர்ச்சி பெற்றிருப்பினும், இத்தகை வளமுற்றவையல்ல. இங்ஙனம் இயற்கை, மென்மை, ஒழுங்கு, வளம் என்னுந் திறங்களை ஒருங்கே கொண்ட தமிழ், தொன்றுதொட்டுத் தென்னாட்டொடு இரண்டறத் தொடர்பு கொண்டிருப்பது பெரிதுங் கவனிக்கத் தக்கது. 2. தமிழின் திரிபு வளர்ச்சி மூவிடப்பெயர் தமிழ் தன்மை முன்னிலை படர்க்கை (சுட்டு) ஒருமை : (ஏன்) - யான் - நான் (ஊன்) - நூன் - நீன் - நீ அவன், அவர், அது பன்மை : (ஏம்) - யாம் - நாம் (ஊம்) - நூம் - நீம் நீயிர் - நீவிர் - நீர் அவர், அவர்கள்,அவை தெலுங்கு ஒருமை: நேனு நீவு வாடு, அதன் - அதடு; mâ (bg.gh., ஒ.பா.) பன்மை: மேமு மீரு வாரு, வாண்ட்லு, அவி இந்தி ஒருமை : மைன் து வஹ் (அவன், அவள், அது) பன்மை : ஹம் தும் வே (அவர்கள், அவை) தியூத்தானியம் (பழைய ஆங்கிலம்) ஒருமை : ic tu (du) he,heo (she), hit (it) பன்மை : we ye hi (they) இலத்தீனம் (Latin) ஒருமை : ego thou is (he), ea (she), id (it) or ille, illa, illud பன்மை : nos vos ii (i) or ei, eae, ea or illi, illae, illa கிரேக்கம் ஒருமை : ego$ su autos, aute$, auto இருமை : no$ spho$ --- --- பன்மை : he$meis humeis autoi, autai, auta வேதமொழியும் சமற்கிருதமும் ஆ.பா. பெ.பா. அ.பா. ஒருமை : அஹம் த்வம் ஸ: ஸா தத் இருமை : ஆவாம் யுவாம் தௌ தே தே பன்மை : வயம் யூயம் தே தா: தானி கவனிப்பு: (1) தன்மைப் பெயரின் நகர முதல், தெலுங்கிலும் இந்தியிலும் மகர முதலாகவும், தியூத்தானியத்திலும் சமற்கிருதத்திலும் வகர முதலாகவும், திரிந்துள்ளது. ந - ம - வ. (2) தன்மையொருமைப் பெயர், வேற்றுமையடியில் (Oblique base) me, my என்று ஆங்கிலத்திலும், me, mihi என்று இலத்தீனிலும், eme, emoi என்ற கிரேக்கத்திலும், மாம், மயா என்று சமற் கிருதத்திலும், திரிந்திருப்பதால், அதன் எழுவாயடியும் முதற்காலத் தில் மகர முதலியாகவே யிருந்து, அது வழக்கற்றுப் போனபின் வேறொரு (அகரமுதற்) சொல் ஆட்சிக்கு வந்திருக்கலாம். அவ் வகர முதற்சொல் மனத்தைக் குறிக்கும் அகம் என்னும் தமிழ்ச் சொல்லாகவு மிருக்கலாம். மனம் ஆதனையும் (soul) ஆதன் தன்னையும் (self) குறிப்பது இயல்பே. (3) நும் என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் வேற்றுமை யடியை எழுவாய்ப் பெயரென்று தொல்காப்பியர் (தவறாகக்) குறித்திருப்பதால், அதுவே மராத்தி இந்தி முதலிய வடநாட்டு மொழிகளில் தும் (நீர்) என்று திரிந்திருக்கலாம். நூம் என்பது தும் என்றாயின், நூன் என்பது துன் என்றாவது இயல்பே. நீன் என்பது நீ என்று கடைக்குறைந்தது போல், துன் என்பதும் து என்று கடைக்குறைந்தது. முன்னிலை யொருமைப்பெயர் தியூத்தானியத்திலும் இலத் தீனிலும் து, தௌ என்று சற்றே திரிந்தும், வேத ஆரியத்தில் த்வம் என்று மிகத் திரிந்தும்; கிரேக்கத்தில் சு என்று போலியாக மாறியும் உள்ளமை காண்க. (4) தியூத்தானியத்திலும் இலத்தீனிலும் இருமையெண் இன்மையால், அது கிரேக்கத்திலேயே தோன்றி வேத ஆரியத்திலும் சமற்கிருதத்திலும் தொடர்ந்திருத்தல் வேண்டும். மராத்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளிலும் இருமையெண் இல்லை. அம் மொழிகளை ஆரியமென மயங்கி, அவற்றில் இருமையெண் இறந்துபட்டதென்பது திரிபுணர்ச்சியே. தியூத்தானியத்திலும் அது மறைந்ததென்பது பொருத்தமானதன்று. இவ் வுண்மை பின்னரும் சொல்லியலில் விளக்கப் பெறும். (5) தமிழ்த் தன்மையிடப் பெயர்களுள், ஏன் ஏம் என்னும் உயிர்முதற் சொற்கட்கும் நான் நாம் என்னும் நகரமுதற் சொற்கட்கும் இடையில், யான் யாம் என்னும் யகரமுதற் சொற்கள் இருப்பது போன்றே, ஆரிய முன்னிலை யிடப்பெயர்களுள்ளும் ye, you, yuyam என்னும் யகரமுதற் சொற்கள் உள்ளனவென அறிக. (6) jfu« rfukhfî« rfu« Afukhfî« âÇjš ïaš ghjyhš, mj‹ (bj.), அது, அதி (தெ.) முதலியவற்றின் தகர வடியே, ஆரிய மொழிகளில் சகரமுதலாகவும் ஹகரமுதலாகவும் திரிந்திருத்தல் வேண்டும். ஆயினும், தியூத்தானியத்தை மட்டும் தனிப்பட நோக்கின், பொதுவகையில் திரிந்த த - ச - ஹ முறை சிறப்பு வகையில் மீண்டும் ஹ - ச - த எனத் தலைகீழாக ஒருசில சொற்களில் மாறியுள்ளதாகத் தெரிகின்றது. எ-டு: முதற்கால நிலை - he, heo இடைக்கால நிலை - se, seo இக்கால நிலை - the, they இங்ஙனம், வேறுபட்ட மொழிகளில் எதிர்வழிப் போக்காகச் சொற்றிரிபு நிகழ்வதும் இயல்பே. இனி, இத் தலைகீழ்ச் சொற்றிரிபு இலக்கிய வழக்கிற்கேயுரியது எனலும் ஒன்று. (7) தன்மையிடப் பெயர் ஏகார வடியினின்றும், முன்னிலை யிடப் பெயர் முன்மைச் சுட்டாகிய ஊகார வடியினின்றும், படர்க்கைச் சுட்டுப் பெயர் சேய்மைச் சுட்டாகிய ஆகார வடியினின்றும் தோன்றியுள்ளன வென்னும் அடிப்படையுண்மை யுணரின், ஆரிய மூவிடப் பகரப் பெயர்களின் (pronouns) திரிமுறையை எளிதில் அறிந்துகொள்ளலாம். ஏகு என்னும் வினை உ - உய். உய்தல் = செல்லுதல் (த. வி.). உய்த்தல் = செலுத்துதல் (பி. வி.). உய் - உயவு = செலவு. உயவுநெய் = வண்டி செல்வதற்கிடும் நெய். உய் - இய் - இயவு = 1. செலவு. இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில் (சிலப்.11:168) 2. வழி. “ïaÉil tUnth‹” (மணிமே. 13:16) இய் - இயல். இயலுதல் = 1. செல்லுதல், நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங்.175) 2. நடத்தல், நிகழ்தல், நேர்தல். இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா. குகப்.10.) 3. கூடியதாதல். இயல்வது கரவேல். (ஆத்திசூடி) இயல் (பெ.) = நடத்தை, தன்மை, பொருளின் தன்மையைக் கூறும் நூற்பகுதி. இயல் - இயல்பு. இயல் - இயற்கை. இய் - இய - இயங்கு. இயங்குதல் = செல்லுதல், அசைதல். இயங்கு - இயக்கு - இயக்கம் = செலவு, அசைவு. இய் - எய் - ஏ - ஏகு. ஏகுதல் = செல்லுதல். ம. ஏகு, தெ. ஏகு (g). ஒ.நோ : இயல் - ஏல். போ - போகு. ஏலுதல் = இயலுதல் (கூடியதாதல்) .ஏ - யா - யாத்திரை = செலவு. யா - ஜா - ஜாத்ரா (இ.). ஒ.நோ : ஏன் - யான், ஏது - யாது, ஏமம் - யாமம், ஏனை - யானை. ஜா என்னும் இந்தி வினை இறந்தகாலத்தில் கயா (gaya#) என்றே புடைபெயரும். சகரம் ககரமாவது போல் ஜகரம் ‘g’ ஆகும். இந்திக்கு மூலமான சூரசேனியில் ஜா என்னும் இந்தி வினை ஏ அல்லது யா என்றே வழங்கியிருக்கலாம். தியூத்தானியத்தில் ஜா என்னும் போதல் வினை ga# எனத் திரியும். OS., OE. ga#n, OHG. ga#n, ge#n, E. go. ஆ ஓவாகத் திரிதல் தமிழிலுமுண்டு. எ-டு: பெரியார்- பெரியோர், ஆம் - ஓம். ஓமோமென வோங்கிய தோர்சொல் (திருவாலவா.38:4) தமிழில் யகரம் சகரமாகவும் சகரம் ககரமாகவும் திரிதல் போல், திரவிட மொழிகளிலும் வடநாட்டு மொழிகளிலும் ஆரிய மொழிகளிலும் யகரம் ஜகரமாகவும் ஜகரம் ‘g’ ஆகவும் திரிகின்றன. எ-டு: நெயவு - நெசவு, செய் - (கெய்) - கை. யமன் (வ.) - #KL (bj.), யோகி (வ.) - n#h» (ï.), bastd (t.)- juvenis (L) ஜா - ga#. உய் என்னும் தமிழ்வினை வேத ஆரியத்தில் அய் என்று திரிந்து வழங்குகின்றது. அய் - அயத்தே (ayate, இ. வே. i, 127: 3) = இயங்குகின்றான், செல்கின்றான். அய = செலவு, இயக்கம். mad = bryî (th.ஸ. XXII, 7), இயக்கம். அயனம் = இயக்கம், நடக்கை. சாலை, வழி (ï.nt.III, 33: 7). அயத்த, அயத்தம் = பாதம் (இ.வே. X 28: 10, 11). இய் என்னும் தமிழ்வினை ஆரிய மொழிகளில் இ என்று குறுகி வழங்குகின்றது. Gk. imen, L. imus, iter; Slav. idu = I go, iti = to go, Goth. iddja = I went. இ (இ. nt., அ. nt.),= செல். இத் = செல்கை. இத்த = போய். இத்தம் = வழி (ச.பி.). இயங்கு - இக் (ikh) = இயங்கு, செல்; இயங்கு - இங்க் (inkh) = இயங்கு, செல். இயங்கு - இங் (இ. வே. ing) = இயங்கு, செல். ஏ (இ. வே.) = ஏகு, நெருங்கு, அடை. ஏத்த = சென்று, அடைந்து (இ. வே.). ஏ - யா. (இ. வே.) = செல். யாத்த = போய் (இ. வே.). யாத்ரி (இ. வே.) = செலவு, வழிப்போக்கு. இ (இய்), ஏ (ஏகு) என்னும் இருவினைகளையும், வேத மொழியில் செல்லுதல், சென்றடைதல், அடைதல், பெறுதல் என்னும் பொருள்களில் ஆண்டிருக்கின்றனர். இப் பொருள்களில் அவை எய்து என்னும் வினையை ஒத்திருக்கின்றன. எய்துதல் = சென்றடைதல், அடைதல், பெறுதல். இய் - எய் - எய்து. செல்லுதல் என்னும் பொருளில் வேதமொழியில் வழங்கும் கம் (gam) என்னுஞ் சொல், தியூத்தானியத்திலுள்ள gan (E.go) என்னுஞ் சொல்லைப் பெரிதும் ஒத்திருத்தல் காண்க. செலவு என்று பொருள்படும் கம (gama), கமன (gamana) முதலிய சொற்களில் கம் என்பது முதனிலையா யிருப்பினும், கத (போய்), கதி (போக்கு) முதலிய சொற்களில் க (ga) என்பதே முதனிலையா யிருப்பது கவனிக்கத் தக்கது. மேலும், gan என்பது gam என்று திரிதலும் இயல்பே. வந்த என்னும் எண்ணுப் பெயர் தெலுங்கில் நூற்றைக் குறிக்க, நூறு என்னுஞ் சொல்லொடு வந்த என்னுஞ் சொல்லுமுளது. இச் சொல் இலத்தீனிலுள்ள centum என்னும் நூற்றுப்பெயரை ஒத்துளது. இதன் ஆங்கிலப் பலுக்கம் செந்தும் என்று சகர முதலா யிருப்பினும், இலத்தீன் பலுக்கம் கெந்தும் என்பதே. கிரேக்கத்தி லுள்ள ஹெகந்தொன் என்னும் பெயரும் இதன் மறுவடிவே. கிரேக்கம் இலத்தீனைவிடத் திரிந்த மொழியாதலால், அவ்விரு மொழிக்கும் பொதுவான சொற்கள் பெரும்பாலும் கிரேக்கத்தில் சற்றுத் திரிந்தேயிருக்கும். அத் திரிபு பெரும்பாலும் முன்மிகை யாகவே யிருக்கும். v-L :L.nomen, Goth., OS., OHG. namo, OE. nama, E. name, Gk. onoma. இம் முறையில், நூற்றைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லும் முன்மிகை கொண்டுள்ளது. Hundred என்னும் ஆங்கிலச் சொல் centum என்பதினும் வேறுபட்டதாய்த் தோன்றினும், உண்மையில் அது பின்னொட்டுப் பெற்ற இலத்தீன் சொற்றிரிபே. Hund என்பது நூற்றைக் குறிக்கும் பழைய ஆங்கிலச் சொல். அது எண் (number) என்று பொருள்படும் red என்னும் பின்னொட்டைக் கொண்டுள்ளது. Goth. rathjo (=number) - rath - red. ஹகரம் ககரத்திற்கு இனமாதலால், centum என்பது hund எனத் திரிந்தது. நூற்றைக் குறிக்கும் பிற ஆரிய மொழிச் சொற்களாவன: Ir.cet, Toch. kant, Lith. szimtas, Goth. hunda, Germ. hundert, O.Sl. suto, VL. sata, Skt. satam, Av. satam. மேலையாரிய மொழிகளிலெல்லாம் நூற்றுப்பெயர் இடையில் மெல்லின மெய்கொண்டிருக்க, கீழையாரியம் வேத மொழியில் மட்டும் அச் சொல் அது தொக்கிருப்பது, அதன் திரிபொடு பின்மையையுங் காட்டுவதாகும். . மேலையாரியத்தினும் கீழையாரியம் பிந்தியதென்பது பின்னரும் பல்வேறிடத்து விளக்கப் பெறும். வகரம் சகரமாகத் திரிவது பெரும்பான்மையாவதால், வந்த என்னும் தெலுங்குச் சொல் கெந்த அல்லது கெந்து(ம்) எனத் திரிந்திருப்பது, உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்ததே. வந்த என்பது போன்றே, வேறுசில தெலுங்குச் சொற்களும் சொல் வடிவுகளும் மேலையாரியத்துச் சென்று வழங்குவது கவனிக் கத்தக்கது. தெலுங்கு மேலையாரியம் கிந்த - க்ரிந்த Gk. cata (down) பம்பு Gk. pempo (to send) பிள்ளை (த.) - பில்லி L feles (cat) மிக்கு (த.) - மிக்கிலி OS. mikil, OHG. mihhile, ON. mikell, Goth. mikils, E. mickle மக (த.) - மொக L. mas (a male) அறை (த.) - ராய் Gk. laia (a stone) btŸS OS., OE., E wend (to go) Bowels என்னும் ஆங்கிலச் சொற்கு ஆங்கில அகரமுதலிகளிற் காட்டப்பட்டுள்ள மூலம், அத்துணைப் பொருத்தமாய்த் தோன்ற வில்லை. அது பேகுலு என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபா யிருக்கலாம். சதுவு என்னும் தெலுங்குச் சொல் studium (E. study) என்னும் இலத்தீனச் சொல்லொடு தொடர்புகொண்டதா என்பது ஆராயத்தக்கது. இலத்தீனிலும் கிரேக்கத்திலுமுள்ள பல ககரமுதற் சொற்கள், ஆங்கிலத்திற் சகர முதலாகத் திரிந்து வழங்குகின்றன. எ- டு: இலத்தீன் ஆங்கிலம் கிரேக்கம் ஆங்கிலம் celebrare celebrate kentron centre civicus civic kinema cinema c = k (L) இம் முறையிலேயே, கெந்தும் என்னும் இலத்தீன் சொல்லும் சில மேலையாரிய மொழிகளிலும் கீழையாரிய மொழிகளிலும் சகர முதலாகத் திரிந்துள்ள தென்க. ஆரியமொழிக் குடும்பத்திலுள்ள பிற எண்ணுப் பெயர்களும், தென்மொழித் தொடர்புடையவை யென்பது பின்னர்க் காட்டப்பெறும். நூற்றைக் குறிக்கும் எண்ணுப் பெயரின் முதலெழுத்துப்பற்றி, ஆரிய மொழிகளைக் கெந்தும் மொழிகள் என்றும் சதம் மொழிகள் என்றும் இருபாலாகப் பகுத்துள்ளனர். ஆயின், தியூத்தானியச் சொற்கள் ஹகர முதலா யிருப்பதைக் கவனித்திலர். 3. ஆரியமொழிக் குடும்பம் உலக மொழிகள் மொத்தம் ஏறத்தாழ மூவாயிரம். அவை முப்பது குடும்பம்போற் பகுக்கப்பெறும். அவற்றுள் முதன்மை யானவை ஆரியம், சேமியம், சித்தியம் (அல்லது துரேனியம்) என மூன்றாகச் சொல்லப் பெறும். அவற்றுள்ளும் ஆரியம் முதன்மை யாகக் கொள்ளப்பெறும். தமிழும் அதன்வழிப்பட்ட திரவிடமும் சேர்ந்த தென் மொழிக் குடும்பத்தை, சிலர் ஆரியத்துள்ளும் சிலர் சித்தியத் துள்ளும் அடக்குவர். உண்மையில் அது அவை யிரண்டிற்கும் பொதுமூலமாகும். ஆரியக் குடும்பத்தைப் பின்வருமாறு பதினொரு பிரிவாகப் பகுப்பர். (1) இந்திய ஆரியம் (Indo-Aryan) (2) ஐரேனியம் (3) பாலத்திய சிலாவோனியம் (Baltic-Slavonic) (4) அர்மீனியம் (5) அல்பானியம் (6) கிரேக்கம் (7) இலத்தீனம் (8) செலத்தியம் (Celtic) (9) தியூத்தானியம் (அல்லது செருமானியம்) (10) தொக்காரியம் (Tocharian) (11) இத்தைத்தம் (Hittite) இனி இவற்றொடு திரேசியம் (Thracian), பிரிகியம் (Phrygian) முதலிய வேறு அறு சிறு பிரிவுகளையும் சேர்த்துக் காட்டுவர் பேரா. பரோ. அவை அத்துணைச் சிறப்புடையனவல்ல. இவற்றுள் முதன்முதலாக ஆரியம் எனப் பெயர் பெற்றது இந்திய ஆரியமே. இந்திய ஆரியருள் ஒரு கூட்டத்தார் மேற்கு நோக்கிப் பிரிந்து சென்று கீழைப் பாரசீகத்திற் குடியேறியபின், அவர் நாட்டிற்கு ஆரியா அல்லது ஆரியானா என்று பெயர் ஏற்பட்ட தாகத் தெரிகின்றது. ஆரியானா என்பது பின்னர் இரான் என மருவிற்று. இம் மரூஉவினின்றே ஐரேனியம் (Iranian) என்னும் மொழிப்பெயர் தோன்றியுள்ளது. கி.பி. 1796-ல், வில்லியம் சோன்சு (William Jones) என்னும் ஆங்கிலேயர், கிரேக்க இலத்தீன செருமானிய கோதிய செலத்திய மொழிகட்கும் சமற்கிருதத்திற்கும் இடைப்பட்ட நெருங்கிய உறவைக் கண்டுபிடித்தார். அதினின்று செருமனியிற் சமற்கிருதக் கல்வி மிக ஊக்கமாய் மேற்கொள்ளப் பெற்றது. அதன் விளைவாகத் தோன்றிய பிரடெரிக்கு மாக்கசு முல்லர் (Friedrich Max Muller, 1823 - 1900) என்னும் செருமானிய மொழிநூற் பேரறிஞர், ஆரியம் என்னும் சொல்லைச் சமற்கிருதத்திற்கினமான ஐரோப்பிய மொழிகட்கும் பெயராக விரிவுபடுத்தினார். அதனால், ஆரியர் என்றொரு தனி மக்கட் பேரினம் இருப்பதாகவும் தவறான கருத்தெழுந்தது. இன்றும் ஆரியம் என்னும் பெயர் ஒரு மொழிக் குடும் பத்தைப் பொதுவாகக் குறிப்பதுடன், இந்திய ஆரியத்தைத் தனிப்படச் சுட்டவுஞ் செய்யும். அதனால், தெளிவு நோக்கி, ஆரியமொழிக் குடும்பம் இந்திய - ஐரோப்பியம் (Indo - European) அல்லது இந்திய - செருமானியம் (Indo - Germanic) என்று சொல்லப்பெறும். 4. வடமொழிப் பெயர்கள் வேதமொழி அல்லது அதன் செயற்கை வளர்ச்சியான இலக்கிய நடைமொழி (Literary dialect), வடக்கினின்று வந்ததால் வடமொழி என்றும், நன்றாகச் செய்யப்பட்டது என்னும் பொருளில் சமற்கிருதம் (ஸம்ஸ்க்ருத) என்றும், தேவர் பேசுவது என்னும் பொருளில் தேவமொழி (தேவபாஷா) அல்லது கீர்வாணம் என்றும், ஆரியர் மொழி என்னும் பொருளில் ஆரியம் என்றும் பெயர் பெறும். இவற்றுள் பின் மூன்றும், ஆரியர் அல்லது பிராமணர் தமிழரின் ஏமாறுந் தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு, தம் அளவிறந்த செருக்கினால் தற்புகழ்ச்சியாகத் தாமே இட்டுக் கொண்ட பெயராகும். ஆரியம் என்னும் சொல் பிற்காலத்தில் ஆரிய அமைப்புள்ள மொழிகட்கெல்லாம் பொதுப்பெய ராகிவிட்டதனால், வேத மொழி அல்லது சமற்கிருதம் இந்திய ஆரியம் என்று அடை கொடுத்துக் குறிக்கப்பெறும். ஆரியன் என்னும் சொற்கு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியில், ஆரிய வகுப்பினன், ஆரியாவர்த்த வாசி, பெரியோன், ஆசாரியன், அறிவுடையோன், உபாத்தியாயன், ஐயனார், மிலேச்சன் என்னும் எண் பொருள்கள் கூறப்பட்டுள. இவற்றுள் ஈற்றயல் ஐந்தும் பிராமணர்க்குத் தென்னாட்டில் ஏற்றம் ஏற்பட்டபின் தோன்றியவை. ஆசாரியனைக் குரவன் என்பதும், உபாத்தியாயனை ஆசிரியன் என்பதும் தமிழ்மரபு. வடநாட்டு ஆரியர் பல்வேறு தொழிலரா யிருந்திருக்க லாமேனும், தென்னாட்டிற்கு வந்த ஆரியர் வேதமோதிப் பிழைத்த பிராமணரே. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலும், ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் (தேவா. 844 : 5) என்று திருநாவுக்கரசர் ஆரியரையும் தமிழரையும் வேறுபடுத்திப் பாடுதல் காண்க. முசலீம் மக்கள் தமிழ்நாட்டாரைப் `பாமன் தமில் (பிராமணன் தமிழன்) என்று பகுத்ததும் கவனிக்கத் தக்கதாம். கி.பி. 3ஆம் நூற்றாண்டிலெழுந்த மணிமேகலையில், பிராமணன் (ஆரியப் பார்ப்பான்) வடமொழியாளன் என்றும், பிராமணத்தி (ஆரியப் பார்ப்பனி) வடமொழியாட்டி என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். ``வடமொழி யாளரொடு வருவோன் கண்டு'' (மணிமே.5:40) ``வடமொழி யாட்டி மறைமுறை யெய்தி'' (மணிமே.13:73) ஆரியம், வடமொழி என்னும் இரண்டும் ஒருபொருட் சொற்களாகவே தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்திருக்கின்றன. ``வடமொழி வாசகம் செய்தநல் லேடு'' (சிலப். 15:58) ``ஆரியம் முதலிய பதினெண் பாடையின்'' (கம்பரா.பம்பா.14) ஆரியன் என்னும் சொற்கு உழவன் என்று பொருள்கொண்டு யச என்னும் இலத்தீன் சொல்லை மூலமாகக் காட்டினர் மாக்கசு முல்லர். உழவுத்தொழிலில் முதன்முதற் சிறந்தவர் தமிழராதலாலும், யச என்னும் இலத்தீன் சொல்லும் நயச என்னும் ஆங்கில சாகசனியச் சொல்லும் ஏர் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாத லாலும், வேத ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையிலிருந்தமையாலும், "ஆரியர் மிலேச்சர்" என்று திவாகரம் கூறுதலானும், உயர்நாகரிகத்திற்கு அடிப்படையான உழவுத் தொழிலர்க்கு அநாகரிகர் (மிலேச்சர்) என்னும் பெயர் பொருந் தாமையானும், கி.பி.2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மனுதரும சாத்திரத்திலும், "சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. VbdÅš, ïU«ig Kf¤ânyíila fy¥igí« k©bt£oí« óÄia í« óÄÆY©lhd gygy b#ªJ¡fisí« bt£L»wjš yth?" (இராமநுஜாசாரியர் மொழிபெயர்ப்பு) என்று கூறியிருத்த லானும், ஏரைக் குறிக்குஞ் சொல் இந்திய ஆரியத்தி லின்மையாலும், ஆரியன் என்னும் பெயர் முதன்முதல் வேத ஆரியனுக்கே ஏற்பட்டதாகத் தெரிதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. வேத ஆரியர்க்கு இனமானவரும், செந்து (Zend) பழம்பாரசீகம் (Old Persian) ஆகிய ஆரிய மொழிகளைப் பேசினவரும், வேத ஆரியர் போன்றே நெருப்பு வழிபாட்டினருமாகிய, பழம்பாரசீக ஆரியர் இந்திய ஆரியரினின்று பிரிந்து போனவரே யாதலாலும், ஆரியன் என்னும் பெயர் இந்தியாவிலேயே ஏற்பட்டுவிட்டமையாலும், அச் சொல்லிற்கு வேத மொழியிலேயே கரணியங் காணுதல் வேண்டும். ஒரு நாட்டினத்திற்கு அல்லது மக்களினத்திற்கு நாடு அல்லது இடம், மொழி, நிறம், தொழில், சிறப்பியல்பு முதலியவற்றாற் பெயர் தோன்றும். அப் பெயர் ஓர் இனத்தார்க்குப் பிறரால் இடப்பெற லாம்; அல்லது அவ் வினத்தாரே தமக்கு இட்டுக்கொள்ளலாம். வேதஆரியர் வெண்ணிறமா யிருந்ததினாலும், எடுப்போசை யும் மூச்சொலியும் மிக்க முன்னோர் மொழியைக் கொண்டிருந்த தினாலும், அவையில்லாத வடநாட்டுத் திரவிடரையும் தென் னாட்டுத் தமிழரையும் ஏமாற்றி, தாமே தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும் தம் முன்னோர் மொழியையும் அதனொடு வடதிரவிடங் கலந்த வேதமொழியையும் தேவமொழி (தேவபாஷா) என்றும் சொல்லிக்கொண்டது போன்றே, ஆரியன் என்னும் பெயரையும் தமக்கு இட்டுக்கொண்டனர். முதன் முதலாகத் தென்னாட்டிற்கு வந்த பிராமணரும் வெண் ணிறத்தாரே என்பது, ``நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென் றின்னவை முடித்த நன்னிறச் சென்னியன் ............................................................................ முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியொ(டு) ஆதிப் பூதத் ததிபதிக் கடவுளும்'' (சிலப். 22: 16-35) என்னும் பிராமணப்பூத வண்ணனையினின்று அறிந்துகொள்க. ``அகத்தெழு வளியிசை அரில்தப நாடி அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே'' (தொல்.102) என்பது ஆரிய மூச்சொலி மிகவைக் குறிக்கும். மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலியில், ஆரிய (ஆர்ய) என்னுஞ் சொற்கு, “a respectable or honourable or faithful man” என்று பொருள் கூறி, அர்ய என்பது மூலமாகக் காட்டப் பட்டுள்ளது. அர்ய என்னுஞ் சொற்கு, “kind, favourable, R V; attached to, true, devoted, dear, R V; exccllent, L." என்று பொருளும் ஆட்சி நூலுங் குறிக்கப்பட்டுள்ளன. அர்ய என்பதற்கு ரு என்பதை வேராகக் காட்டுவது எத்துணையும் பொருந்தாது. அருமை என்னும் தமிழ்ச்சொற்கு எளிதாய்க் கிடையாமை, பெருமை, மேன்மை என்பவற்றொடு பேரன்பிற்குரிமை (endearment) என்பதும் பொருளாயிருத்தல் கவனிக்கத்தக்கது. இச் சொல்லின் முதனிலையான அரு என்பது ஆரி என்றுந் திரியும். ஆரி = 1. அருமை. ஆரிப்படுகர் (மலைபடு. 161) 2. மேன்மை. ஆரி யாகவஞ் சாந்தந் தளித்தபின் (சீவக. 129) 3. அழகு (சூடா.). ஆரி என்னுஞ் சொல் அன்னீறு பெற்று ஆரியன் (மேலோன், உயர்ந்தோன்) என்றாவது, மிக எளிதும் இயல்புமாகும். இச் சொல் ஆரியமொழியில் ஆர்ய என்ற வடிவே ஏற்கும். ஆயினும், சிந்துவெளியிலிருந்த ஆரியனுக்குத் தென்னாட்டுத் தமிழ்ச்சொல்லால் எங்ஙனம் பெயர் அமைந்திருக்கு மென்று, பலர் ஐயுறலாம். ஆரிய வருகைக்கு முன்பும் வடஇந்தியாவில் திரவிடரே பெரும்பாலராய்ப் பரவியிருந்தனர் என்பதையும், வேதப் பெயரும் வேதப் பிரிவின் பெயரும் தென்சொற் றிரிபே என்பதையும், இந்தியாவிற்கு வருமுன்னரே வேத ஆரியரின் முன்னோர் மொழியில் தமிழ்ச்சொற்கள் கலந்திருந்தன என்பதையும், வேதக் காலத்திலேயே வேத ஆரியர்க்குத் தமிழரொடு தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதையும் உணர்வார்க்கு, இதில் எள்ளளவும் ஐயத்திற்கிட மில்லையென்க. வேதப் பெயரும் வேதப் பிரிவின் பெயரும் இலக்கிய வியலில் விளக்கப்பெறும். ஆண்டுக் காண்க. ஒ.நோ : அரிய = மேலான. Gk. aristos = best noble; isto (sup. suf.). கடைக்கழகக் காலத்துப் பேதை வேந்தரும் அவரைப் பின்பற்றிய பேதை மாந்தரும் பிராமணரை நிலத்தேவரென்றே நம்பி வணங்கியதால், ஆரியன் என்னும் சொற்கு அர்ச்சிக்க (வணங்க)ப் படத்தக்கவன் என்று பொருள் கூறி, அர்ச் என்னும் ஆரியச் சொல் லையும் அதற்கு மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர். அர்ச் என்ப திலுள்ள சகரம் ஆர்ய என்பதிலின்மையால், அது பொருந்தாது. இராமன் சிறந்த அரசனாகவும் திருமாலின் அல்லது இறைவனின் தோற்றரவாகவும் கருதப் பெற்றதினாலேயே அவனை ஆரியன் என்று குறித்தனர் புலவர்; அவன் ஆரிய இனத்தினன் என்னுங் கருத்தினா லன்று. அஞ்சிலே யொன்றா றாக ஆரியற் காக வேகி (கம்பரா. தனியன்) ஆரியன் உரைப்ப தானான் அனைவரும் அதனைக் கேட்டார் (கம்பரா. வீடண. 106) இராமன் கதிரவக்குல அரசனாதலின், சோழர்குடிக் கிளையினனே. இது தமிழர் வரலாறு என்னும் நூலில் விளக்கப் பெறும். ஒரு மொழிக்கு, அதைப் பேசும் மக்களால், அல்லது அது வழங்கும் இடத்தினால், அல்லது அது எழுதப் பெற்ற நூலினால், அல்லது அதன் எழுத்து வடிவினால், அல்லது அதன் ஒலிச் சிறப்பியல்பால் பெயர் ஏற்படும். இவற்றுள் முதல் வகையால், ஆரியன் மொழி ஆரியம் எனப் பெற்றது. 5. ஆரியர்க்குப் பிறந்தகமின்மை ஆரிய இனத்தின் பிறந்தகம் எதுவென்று இரு நூற்றாண்டாக ஆராய்ச்சி நடைபெற்றுவரினும், இன்னும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிபிற்கு வரமுடியவில்லை. சிலர் காண்டினேவிய மென்றும், சிலர் செருமனியென்றும், சிலர் காக்கேசிய மலைவாரம் என்றும், சிலர் பாரசீகம் என்றும், சிலர் நடுவாசியா என்றும், சிலர் காரக்கோர மலைவாரம் என்றும், சிலர் சிந்துவெளியென்றும் பலரும் பலவாறு கூறிவருவாராயினர். இங்ஙனம் முரண்பட்ட பல்வேறு கொள்கைகளையும் ஆழ்ந்து நோக்கின், ஒவ்வொன்றிலும் ஒருசிறிது உண்மையு மிருக்கக் காணலாம். ஆரியம் என்பது ஒரு தனிமொழியையும் ஒரு குறுகிய காலத்தையும் இடத்தையும் தழுவிய ஒரு தனியினமன்று. கிறித்து விற்கு முன் ஏறத்தாழ 5000 ஆண்டுக் காலத்தையும், இந்தியா முதல் காண்டினேவியம் வரை பல்லாயிரக்கணக்கான இடப் பரப்பையும் தழுவி, திரவிட நிலையிலிருந்து கீழையாரிய நிலைவரை திரிந்து, பல்வேறு அரசியல் நாடுகனையும் மக்கட் கூட்டங்களையும் தோற்றுவித்த, நெடுந்தொடர்த் திரிபினமே ஆரியமாகும். திரவிடம் வடமேற்காகத் தொடர்ந்து சென்று காண்டினேவி யத்தை முட்டித் திரும்பி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியபின், மீண்டும் தென்கிழக்காக வந்து வடஇந்தியாவில் வேத ஆரியத்தையும் தென்னிந்தியத் தொடர்பினாற் சமற்கிருதத்தையும் பிறப்பித்திருப்பதால், இந்தியாவும் ஐரோப்பாவும் ஆகிய இருகோடிகளும் இவற்றிற்கிடைப்பட்ட பல இடங்களும் ஒவ்வொரு வகையில் ஒவ்வோரளவு ஆரியப் பிறந்தகமாக, வெவ் வேறு கோணத்தில் நோக்குவார்க்குத் தனித்தனி காட்சியளிக்கின்றன. இந்துக்குச (Hindukush) மலைத்தொடருக்கும் காரக்கோர (Karakorum) மலைத்தொடருக்கும் இடைப்பட்ட மலையடி வாரமான வடகோகித்தானமே (Northern Kohistan) ஆரியரின் பிறந்தகம் என்று மேலையாரியத்தையும் கீழையாரியத்தையும் ஒப்புநோக்கி யாராய்ந்த மாக்கசு முல்லர் கூறியுள்ளார். இது பிறர் முடிபினுஞ் சற்றே சிறந்ததன்றி முழுவுண்மையான தன்று. அவர் கூறும் வடகோகித்தானம், கீழையாரியர் இந்தியாவிற்கு வருமுன் நெடுங்காலந் தங்கியிருந்த இடத்தையே குறிக்குமாதலால், அவர் கூற்றுக் குன்றக் கூறல் அல்லது குறைப்பரவல் (அவ்வியாப்தி) என்னுங் குற்றந் தங்குவதாகும். ஆரியமொழிகட்குள் வேத ஆரியமும் அதன் கொடுமுடி அல்லது விரிவளர்ச்சியான சமற்கிருதமுமே பிறங்கித் தோன்று வதாலும், அவற்றை அடிப்படையாக வைத்தே ஆரியமொழிக் கூட்டுக் குடும்பங்களை யமைத்து மேனாட்டார் ஆய்ந்து வருவ தாலும், அவற்றை நீக்கிய ஆரியநிலை, அவர் கருத்துப்படி குறைத்தலை யுடம்பே யென்று கூறி விடுக்க. இந்தியாவிற்குள் எங்ஙனம் பிராமணர்க்குத் தனி நாடில்லையோ அங்ஙனமே விரிநீர் வியனுலகிலும் ஆரியத்திற்குப் பிறந்தகமாகக் கூறும் தனியிடமில்லையென்று, தெற்றெனத் தெரிந்துகொள்க. 6. வடமொழியின் ஐந்நிலை வடமொழி ஒரு திரிமொழியும் கலவை மொழியுமாதலின், அது பின்வருமாறு ஐவேறு நிலை கொண்டதாகும். (1) தென்திரவிடம் (வடுகு) முதன் முதல் வடதிசையாற் பெயர் பெற்ற மொழி வடுகு என்னும் தெலுங்கே. அது வேதக் காலத்திலேயே தமிழினின்று திரிந்திருந்தது. வடம் - வடகு - வடுகு - வடுகம். வடகு என்னும் சொல்லிடையுள்ள டகரம், அதையடுத்து ஈற்றிலுள்ள குகரச் சார்பால் டுகரமாயிற்று. இங்ஙனம் அகரம் உகரமாய்த் திரிந்தது உயிரிசைவு மாற்றம் (Harmonic Sequence of Vowels) என்னும் நெறிமுறையாகும். ஒ.நோ: கேடகம் - கிடுகு தமிழையடுத்து வடக்கிலுள்ள வடுகு, பல்வேறு வகையில் வலித்தும் திரிந்தும் விரிந்தும் ஆரிய அமைப்பிற்கு அடிகோலு கின்றது. (1) எடுப்பொலி எ-டு : குடி- gudi (கோவில்), கூன் - gu$nu. சடை - ஜட. (2) வலிப்பொலி எ-டு : செய் - cey, போடு - பெட்டு. இங்க்கா = இன்னும், கொஞ்ச்செமு = கொஞ்சம், அண்ட்டாரு = என்றார், எந்த்த = எவ்வளவு, கும்ப்பு = கும்பு. இங்ஙனம் ஆரியத்தன்மையடைந்த ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப என்னும் வல்மெலிவலி யிணைகள் முதன்முதல் வடுகிலேயே தோன்றுகின்றன. தமிழில் இத்தகைய வொலிகள் மருந்திற்குங் காணக்கிடையா. அதிலுள்ளவை யெல்லாம் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய மென்மெலிவலி யிணைகளே. தெலுங்கிற்கு வடக்கிலுள்ள திரவிட மொழிகளும், இங்ஙனம் வலித்தே யொலித்துப் படிப்படியாக ஆரியமாய்த் திரிந்து, வட இந்தியாவில் ஆரியமாகவே மாறிவிடுகின்றன. பெலுச்சித்தானத் திலுள்ள பிராகுவி மூச்சொலியும் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. எ-டு : கண் - khan, பால் - phalt. தமிழின் தென்மையை அறியாத வடவரும் மேலையரும் அவர் வழிப்பட்ட கோடன்மாரும், ஆரியத்தில் மட்டுமன்றித் திரவிடத்திலுமுள்ள எடுப்பொலிகளே தமிழில் எடுப்பில வொலிகளாக அடங்கிவிட்டன என்று கூறுவர். அவர்தம் அறியாமையை நடுநிலை யறிஞர் ஆய்ந்து காண்க. (3) முதனிலை விரிப்பு எ-டு : அடி - அடுச்சு, நட - நடுச்சு. (4) இடையின இடைச்செருகல் எ டு: கிந்த - க்ரிந்த, பொத்து - ப்ரொத்து, மிங்கு - ம்ரிங்கு. (5) பெயர்ச்சொல் வடசொல்லாதல் எ-டு : f©£l(g) - கண்ட்ட (gh), வந்த - சத, ஆலி(மனைவி) - ஆலி (பெண்ணின் தோழி) (6) வினைச்சொல் வடசொல்லாதல் எ-டு: இச்சு (to offer) - யஜ்(வே.) வத்து (must not, don’t) - மத் (பி.) - மா (a particle of prohibition or negation)- nk(Gk). மத் என்னும் இந்திச்சொல் சூரசேனியில் மத்து என்றிருந் திருக்கும். வத்து என்னும் தெலுங்குச் சொல் வலது என்பதன் எதிர் மறையாம். வேதமொழியில் இது மா என்று குறுகியிருக்கின்றது. (2) வடதிரவிடம் (பிராகிருதம்) பிராகிருதம் என்பது சமற்கிருதம் தோன்றுவதற்கு முன்பு வேதக் காலத்திலேயே, இந்தியா முழுதும் வழங்கிவந்த வட்டார மொழிகளாகும். பிராகிருதம் என்னும் சொல், முந்திச் செய்யப் பெற்றது அல்லது இயற்கையாக வுள்ளது என்று பொருள்படும். பைசாசி, சூரசேனி, மாகதி, மகாராட்டிரி, திராவிடீ எனப் பிராகிருதம் ஐந்தாக வகுக்கப் பெற்றிருந்தது. இவற்றுள் முன் நான்கே பெரும்பாலும் பிராகிருதம் எனப்படும். அவற்றுள்ளும், மகாராட்டிரம் முதற்காலத்தில் பஞ்ச திராவிடத்துள் ஒன்றாகக் கொள்ளப்பெற்றது. விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள கூர்ச்சரம், மகாராட்டிரம்,ஆந்திரம், கன்னடம், திராவிடம் (தமிழ்) ஆகிய ஐந்நாடுகளும் பஞ்ச திராவிடம் என வழங்கிவந்தன. ஆகவே, முதற்காலப் பிராகிருதம், பைசாசம், சூரசேனி, மாகதி என்னும் மூன்றே. இவற்றையும் மொழியளவி லன்றிச் சொல்லளவில் வேறு படுத்திக் காட்டுவது வழக்கமன்று. மூவகைப் பிராகிருதச் சொற்களையும் பிராகிருதம் என்று பொதுப்படக் குறிப்பதே வழக்கம். வடஇந்தியப் பிராகிருதமும் ஒருகாலத்தில் திரவிட மாயிருந்து திரிந்ததே. அது வேதக் காலத்திற்கு மிக முந்தியதாகும். ஆகவே,வேத ஆரியர் வருகைக்கு முன், இந்தியப் பழங்குடி மக்கள் மொழிகளெல்லாம், தெற்கில் தமிழும் வடக்கில் திரவிடமுமாக இருவேறு நிலைப்பட்டிருந்தனவென் றறிதல் வேண்டும். திரவிடமும் தென்திரவிடம், நடுத்திரவிடம், வடதிரவிடம் என மூவகைப் பட்டிருந்தது. தென்திரவிடம் வடுகு போன்ற கொடுந் தமிழ்; நடுத்திரவிடம் மராட்டிரமும் குச்சரமும்; வடதிரவிடம் வட இந்தியப் பிராகிருதம். காலக் கடப்பினால் மட்டுமன்றி இடச்சேய்மையினாலும் மொழிகள் திரிகின்றன. தமிழ் போன்ற இயன்மொழியில்தான் செம்மை என்னும் வரம்பிட்டு, இலக்கிய வாயிலாகவும் உயர்ந்தோ ருலக வழக்கு வாயிலாகவும் அதன் திரிபைத் தடுக்க முடியும். தெலுங்கு, மராத்தி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய திரிமொழிகளெல்லாம் திரிபினாலேயே தோன்றியுள்ளன. ஆதலால், அவற்றின் திரிபைத் தடுக்குமாறும் விலக்குமாறும் இல்லை. திரிபை நீக்கிவிடின் திரிமொழிகள் அவ்வம் மொழிகளாகா. தெலுங்குத் திரிபை நீக்கிவிடின், அது தமிழாய்விடும். அங்ஙனமே பிரெஞ்சுத் திரிபை நீக்கிவிடின், அது இலத்தீ னாகிவிடும். திரிபிற்கு ஓர் எல்லையுமில்லை; ஒரு தனிப்பட்ட வகையு மில்லை. திரிமொழிகள் பல்வேறு வகையில் மேன்மேலுந் திரியத்திரிய, புதுப்புது மொழிகள் தோன்றிக்கொண்டே அல்லது பிரிந்துகொண்டே போகும். இதனால், ஓர் இயன்மொழிக்கும் அதன் திரிமொழிகட்கும் இடைப்பட்ட உறவு அல்லது தொடர்பு, திரிபின் அளவிற்கேற்ப நெருங்கியோ நீங்கியோ இருக்கும். திரிமொழிகட்குள்ளும் ஒரு தாய்மொழிக்கும் அதன் கிளைமொழி கட்கும் இடைப்பட்ட உறவும் இத்தகையதே. பாலினின்றே தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவை உருவாக்கப் பெறுகின்றன. ஆயின், இவற்றிற் கிடைப்பட்ட உறவு திரிபிற்கேற்பத் தோற்றத்திலும் பண்பிலும், வேறுபட்டுள்ளது. உருக்கின நெய் தோற்றத்திற் பாலினின்று முற்றும் வேறுபட்டு விடுகின்றது. நெய் உருவாகும் வகையை அறியாதவன் நெய்க்கும் பாலிற்குமுள்ள தொடர்பை உணர முடியாது. இங்ஙனமே மொழிகட் கிடைப்பட்ட உறவுமென்க. வடதிரவிடம் என்னும் பிராகிருதம், தமிழுக்கு எத்துணை நெருக்கமா யிருந்ததென்பதைப் பின்வருஞ் சொற்களாற்கண்டு கொள்க. தமிழ் பிராகிருதம் அச்சன் அஜ்ஜ அத்தன் அத்த அத்தை அத்தா அப்பன் அப்ப இதோ இதோ எட்டி - செட்டி சேட்டி ஏழகம்(ஆடு) ஏளக ஐயவி சசவ ஐயன் அய்ய கச்சை கச்ச கசடு கசட, சகட கட்டை கட்ட (t|h) கந்தன் கந்த கப்பரை கப்பர (kh) கற்பூரம் கப்பர கம்பம் கம்ப (kh.bh) கம்மாளன் கம்மார கலாவம் கலாவ கவாளம் கவாட்ட காவு காவ் (gh) குள்ளம் குல்ல (kh) கொக்கு கொக்கை சகடி சாடீ (t |) சரி(ஒப்பு) சரி தமிழ் பிராகிருதம் சாவம் சாவ சிப்பி-இப்பி சிப்பீ சுண்ணம் சுண்ண சுன்னம் சுன்ன செட்டி சேட்டி சேணி சேணி சொக்கம் சொக்க நட்டம் - (நடம்) நட்ட நீல் - நீலம் நீல் நேயம் நே அம் படிக்கம் படிக்கஹ படிமை படிமா பரிவட்டணை பரிவட்டண பரிவட்டம் பரிவட்ட பல்லக்கு பல்லங்க (nk) பளிங்கு பலிக (ph) புடவி புடவீ (d|h) பேய் பேந்து, பேத பையுள் பய்யாவுல மண்டபம் மண்டவ மாது மாது வக்கணம் வக்கண (gg) வக்கு வக்க வட்டம் வட்ட வண்ணம் வண்ண (3) கீழையாரியம் கீழையாரியம் என்பது, வேத ஆரியரின் முன்னோர் வட கோகித்தானிலிருந்தபோது அவர் மொழிநிலை. அது கிரேக்கத்திற்கு மிக நெருங்கியதா யிருந்தமை உய்த்துணரப்படும். (4) வேதமொழி இது பின்னர்க் கூறப்பெறும். (5) சமற்கிருதம் இதுவும் பின்னர்க் கூறப்பெறும். மேலும், இந் நூலிற் பெரும் பகுதி சமற்கிருதம் பற்றியதே. 7. இந்திய ஆரியர் வருகை இந்திய ஆரியர், இந்தியாவிற்குட் புகுந்தபோது, கிரேக்கத் திற்கு நெருங்கிய மொழியைப் பேசிக்கொண்டு ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையிலேயே இருந்தனர். பன்றி, மாடு, குதிரை முதலிய பல விலங்கிறைச்சியையும் அவர் உண்டுவந்தனர். சோமக்கொடிச் சாற்றினின்று உருவாக்கிய கள்ளை யுண்டு களிப்பதும் அதைத் தெய்வமாகப் புகழ்ந்து பாடுவதும் அவர் வழக்கம். அக் கள்ளை வழிபட்ட தெய்வங்கட்கும் படைத்தனர். கதிரவன், நெருப்பு, காற்று, மழைமுகில் முதலிய இயற்கைப் பொருள்களை வணங்குவதும், வேள்வியில் சிறுதெய்வங்கட்கு விலங்குகளைக் காவுகொடுப்பதும், இறந்த முன்னோர்க்கு உரிய நாளிற் பிண்டம் படைப்பதுமே அவர் மதம். அவருக்கு எழுத்துமில்லை; இலக்கியமுமில்லை. முன்னோர் வரலாற்றுக் கதைகளும் சிறுதெய்வ வழுத்துகளும் செவிமரபாகவே வழங்கிவந்தன. அவருள் அறிவிற் சிறந்த பூசாரியர் (புரோகிதர்) மனமும், வேள்வித் தூண், சுருவம், உரல், அம்பு முதலிய உயிரிலாப் பொருள்களுடன் பேசுவதும், இயங்கும் கார்முகில்களைப் பறக்கும் மலைகளாகவும் மின்னலை அவற்றை வெட்டி வீழ்த்தும் மழைத் தெய்வத்தின் வெண் படைக்கலமாகவும் கருதுவதும், இரவு பகலையும் விடியற்காலத்தையும் தெய்வங்களாகப் போற்றுவதும் போன்ற சிறுபிள்ளைத் தன்மையளவே வளர்ச்சியடைந்திருந்தது. குமுகாய (சமுதாய) அமைப்பு முறையில், அவர் வெவ்வேறு சரவடியாக (கோத்திரமாக)ப் பிரிந்திருந்தனர். ஒவ்வொரு சரவடியும் உறவுத் தொடர்புள்ள பல குடும்பங்களையும் ஒரு தலைவனையும் ஒரு பூசாரியையும் கொண்டிருந்தது. தலைவனைப் போன்றே பூசாரியும் அவ்வச் சரவடியிற் பிறந்தவனாகவே யிருந்தான். பழமுறையைப் பின்பற்றிவரும் தமிழருள்ளும், ஒவ்வொரு குலத்தார்க்கும் அவ்வக் குலத்தானே சமயக் குரவனாயிருத்தலை இன்றுங் காண்க. இந்திய ஆரியர் படையெடுத்துப் பிற நாடுகளைக் கைப்பற்றுமளவு பெருந்தொகையினராய் வரவுமில்லை. அவருக்குள் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நாற்பாற் பகுப்புமில்லை. இப் பகுப்பெல்லாம் பிற்காலத்தில் வடஇந்தியத் திரவிடரொடும் தென்னிந்தியத் தமிழரொடும் தொடர்புகொண்ட பின்பு, ஆரியப் பூசாரியரான பிராமணர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ்ப் பொருளிலக்கணப் பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியர்க்குள் வகுத்தமைத்தவையே. ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே. ஆரியர் வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு கைப்பற்றியதாக வேதத்திற் கூறப்பட்டிருப்ப தெல்லாம், பிராமணர் திரவிடரைக் கொண்டு திரவிடரை வென்ற சூழ்ச்சியே இது. விரல்விட் டெண்ணத்தக்க அகத்தியர் நாரதர் முதலிய ஒருசில வேதக்கால பிராமணர் தென்னாட்டிற்கு வந்து, தம்மை நிலத்தேவ ரென்று கூறிச் சேர சோழ பாண்டிய முத்தமிழ் நாட்டையும் அடிமைப்படுத்தியதையும்; அறிவாராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், பிராமணர் தமிழர் முன்னேற்றத் திற்கென் றமைக்கப்பெற்ற நயன்மைக் கட்சியைத் (Justice Party) தன்னலத் தமிழரைக் கொண்டே வீழ்த்தியதையும்; நோக்குவார்க்கு இனிது விளங்கும். ஆரியர் வருமுன்பே, தமிழர் இம்மை மறுமையாகிய இருமைக்கு மேற்ற பல துறைகளிலும் உயர்நாகரிக மடைந்திருந் தனர். தமிழர் கண்ட கலைகளும் அறிவியல்களுமே வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டும் விரிவாக்கப் பெற்றும் உள்ளன. மேலை யறிஞர் இதையறியாது இந்திய நாகரிகம் முழுவதும் ஆரியரதென மயங்கிவிட்டனர். இஃது, ஓர் இரவலன் தன் சூழ்ச்சியாற் புரவல னான பின், அவனை அரசர்குடிப் பிறந்தவனாகக் கருதுவதொத்ததே. இந்திய ஆரியர் வந்த காலம் இந்திய ஆரியரின் முதல் இலக்கியமான இருக்கு வேதத்தின் காலம் கி. மு.1200-1000 என்று மாக்கசு முல்லரும் (Max Muller), கி.மு.2400-2000 என்று வின்றர்நீட்சும் (Winternitz), கி.மு.3000 ஆண்டிற்கு முன்னென்று சி.வி. வைத்தியாவும், கி.மு.4500-3000 என்று யாக்கோபியும் (Jacobi), கி.மு.6000 என்று உலோகமானிய திலகரும், வெவ்வேறு கரணியமுங் கணிப்புங் கொண்டு கூறியுள்ளனர். இவருட் கடையிருவரும், இருக்கு வேதத்திற் கூறப்பட்டுள்ள ஆரல் (கார்த்திகை) நாண்மீனின்(நட்சத்திரத்தின்) நிலையிலிருந்து கணித்துள்ளனர். கணியமுறைக் கணிப்புக் கருத்து வேறுபாட் டிற்கும் ஐயந்திரிபிற்கும் இடமானதாதலால், அறிவியன் முறைப்படி திட்டவட்டமானதன்று. ஆரிய வருகைக்கு முற்பட்ட அரப்பா - மொகஞ்சதாரோ (Harrappa-Mohenjodaro) நாகரிக முடிவுக்காலம், வயவர் சாண் மார்சலால் (Sri John Marshal) கி.மு.3000 என முடிவு செய்யப் பெற்றுள்ளது. அந் நாகரிகத்திற்கும் வேத ஆரியர் நாகரிக நிலைக்கும் யாதொரு தொடர்புமில்லை. வேத மந்திரங்களை நால்வேதமாக வகுத்ததாகச் சொல்லப்படும் வியாசர் காலமாகிய பாரதக் காலம் கி.மு.1000 என, இந்திய வரலாற்றாசிரியரும் ஆராய்ச்சியாளரும் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர். மொகஞ்சதாரோ நாகரிகத்திற்கும் இந்திய ஆரியர் வருகைக்கும் இடையே நெட்டிடை கழிந்திருக்கு மாதலாலும்; பல்லாயிரக்கணக் கான வேத மந்திரங்கள் (10415) இயற்றப்படவும், அவை நால்வேறு தொகுப்புகளாக (ஸம்ஹிதைகளாக)த் தொகுக்கப் பெறவும், வேத ஆரியர் சிந்துவெளி கங்கைவெளி முழுதும் பரவவும், குறைந்த பக்கம் 500 ஆண்டு சென்றிருக்குமாதலாலும்; இந்திய ஆரியர் வருகைக்காலம் கி.மு.2000-1500 எனக் கொள்வது எல்லா வகையிலும் மிகப் பொருத்தமானதாகும். 8. வேதமும் வேதமொழியும் இந்திய ஆரியரின் முதல் இலக்கியமாகிய வேதம் இந்தியா விலேயே இயற்றப்பெற்றது; தமிழ் மதங்களாகிய சிவநெறி திருமால் நெறி ஆகிய இரண்டொடும் சிறிதும் தொடர்பற்றது. ஆரிய மதமாகிய சிறுதெய்வ வேள்வி வணக்கத்தைத் தமிழரும் திரவிடரும் ஏற்றுக்கொள்ளாமையின், ஆரியர் அடுத்துக் கெடுத்தல் முறையில் தமிழ் மதங்களையே மேற்கொண்டு, புதுத் தெய்வங்களைப் படைத்தும் பல்வேறு புராணம் என்னும் தொல்கதைகளைக் கட்டியும், அவற்றை ஆரியப்படுத்தித் தமிழையுங் தமிழ்ப் பூசாரியரையும் தள்ளிவிட்டு, பிராமணரே ஆரியமொழியிற் கோயில் வழிபாடு செய்துவரும்படி ஏற்பாடு செய்துவிட்டனர். வேதத் தெய்வங்கள் (1) சில தெய்வங்கள் மேலையாரியத் தெய்வங்கள் எ-டு: பெயர் மாறாத் தெய்வம் இ.வே. (R.V.)g®#‹ah (மழைத் தெய்வம்) Lith.perkunas. Goth. fairguni, Ice. fiorgyn. பெயர் மாறிய தெய்வம் இ.வே. (சு.ஏ.). யமன் (யம); Gk.plouton, E pluto. யமன் இறந்தோர் போய்ச் சேரும் கீழுலகத் தலைவன். இறந்த வுயிர்கள் கடக்கும் வழியில், நாற்கண்ணும் அகன்ற மூக்குத் துளையு முள்ள (யமனுடைய) இரு கொடிய நாய்கள் உள்ளன. - வேத ஆரியர் கொள்கை. புளூட்டோ இறந்த வுயிர்கள் சென்றடையும் (Hades என்னும்) கீழுலகத் தலைவன். முத்தலையுள்ள கெர்பெரோசு (Gk. kerberos , E. cerberus) என்னும் நாய் கீழுலக வாயிலைக் காக்கின்றது. - கிரேக்கர் கொள்கை. உஷஸ் என்னும் விடியல் தெய்வம் ஈயோஸ் (Eos) என்னும் கிரேக்கத் தெய்வத்தையும் ஔரோரா (Aurora) என்னும் உரோமத் தெய்வத்தையும் ஒத்தது. (2) எல்லா வேதத் தெய்வங்களும் சிறு தெய்வங்களே. இது நூலில் விளக்கப்பெறும். (3) பல தெய்வங்கள் இன்றும் தமிழர் கேட்டறியாதவை. எ-டு : மித்ரா, பூஷன், உஷாஸ், அஸ்வினிகள், ரிபுக்கள், பிரஜாபதி. (4) சில தெய்வங்கள் பழந்தமிழ்த் தெய்வங்களே. எ-டு : மேனாடு சென்றது. வாரணன் - Gk. Ouranos, இ.வே.வருணா. இந் நாட்டிலிருந்தது: இந்திரன் - இந்த்ரா. வேந்தன் என்னும் மருதநிலத் தெய்வப் பெயரே வடநாட்டில் இந்திரன் என்று மொழிபெயர்ந்து வழங்கி வந்தது. கடைக்கழகக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் கொண் டாடப் பெற்று வந்தது வேந்தன் விழாவே. (5) சில தெய்வங்களின் நிலைமை காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கின்றது. எ-டு : த்யெஸ் (வானம்), வருணா, இந்த்ரா, அக்னி, ருத்ரா என்னும் தெய்வங்கள், வெவ்வேறு காலத்தில் மண்ணுலக அரசர்போல் தலைமைபெற்று வந்திருக்கின்றன. (6) சில தெய்வங்கள் ஒன்றோடொன்று மயக்கத் தக்கனவா யுள்ளன. எ-டு : ஆதித்யர், சூர்ய, விஷ்ணு, சாவித்திரி என்னும் நான்கும் ஒரே தெய்வத்தைக் குறிக்கின்றன. சூரியன் பகற்காலத்திற்கும் சாவித்திரி இராக்காலத்திற்கும் உரியனவென்று, சாயனர் வேறுபாடு காட்டி யுள்ளனர். ஆதித்தர் பன்னிருவரும் பன்னிரு மாதத்திற்கு உரியவர் என்று கூறலாம். ஆயின், முதலில் அறுவரும் இடையில் எண்மரு மாகவே ஆதித்தர் குறிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. விஷ்ணுவைப் பற்றிச் சிறப்பாகக் கூறியிருப்பதெல்லாம், அது எழுச்சி உயர்ச்சி வீழ்ச்சி ஆகிய மூவெட்டுகளால் வானைக் கடந்தது அல்லது கடக்கின்றது என்பதே. இது அதனைச் சூரியனினின்று வேறு படுத்திக் காட்டுவ தாகாது. (7) சில வேதத் தெய்வப் பெயர்கள் அல்லது அவற்றின் அடைமொழிகள் தமிழ்த் தெய்வங்களைக் குறிப்பனவல்ல. எ-டு : É© - É©L = thd« (Nlh.), K»š (ã§.), திருமால் (பிங்.). விஷ்ணு = கதிரவன் (வே.). விண்டு என்பதை விஷ்ணு என்பதனொடு மயக்கிவிட்டனர் பிற்கால ஆரியர். சிவன் என்னும் பெயர் சிவந்தவன் என்று பொருள்பட்டுச் சேயோன் என்னும் முருகனை முன்னும் முத்தொழி லிறைவனைப் பின்னும் குறிக்கும் தூய தமிழ்ச்சொல். வேதத்தில் அக்கினிக்கும் இந்திரனுக்கும் உருத்திரனுக்கும் பொது அடைமொழியாக வரும் சிவ என்னும் சொல், மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும் பெயரெச்சம். இவ் விரண்டிற்கும் தொடர்பில்லை. (8) சில தெய்வப் பெயர்கள் தூய தமிழ்ச்சொற்களே. எ-டு : வள் - வர் - வார் - வாரணம் = நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருக்கும் கடல். வாரணம் - வாரணன் = நெய்தல் நிலத்திற்குரிய கடல்தெய்வம். வாரணன் - வருணா (இ.வே.). இந்திய ஆரியர் நீண்ட காலமாகக் கடலையறியாது நிலவழியாய் வந்தவராதலின், நீலக்கடல் தெய்வத்தை நீலவானத் தெய்வமாக மாற்றிவிட்டனர். பின்னர்த் தமிழரொடு தொடர்பு கொண்டபின், மீண்டும் பழம்பொருளை ஓரளவு ஊட்டிக்கொண்டனர். உருத்தல் = சினத்தல். உருத்திரம் = சினம். உருத்திரம் - உருத் திரன் = சினந்த கடுங்காற்றுத் தெய்வம். உருத்திரன் - ருத்ர (இ.வே.). ருத்ர (rudra) என்னுஞ் சொற்கு ஊளையிடுபவன் (howler) அல்லது உரறி (roarer) என்று பொருள் கூறுவர் மாக்கசு முல்லர். U¤(rud) = mG, ஊளையிடு, உரறு. இனி, ருத்ர என்னும் வடசொல்லைச் சிவன் என்னும் தென் சொல்லின் மொழிபெயர்ப்பாகவும் கொள்வர். இது வேதக் காலத்திற் கொவ்வாது. ருத் (rud - rudh) = சிவப்பாயிரு. ருதிர (rudhira) = சிவப்பு, செந்நீர் (அரத்தம்), செவ்வாய், செம்மணி (மாணிக்கம்). இப் பொருளில் ருதிர என்னுஞ் சொல் அரத்தம் என்னும் தென்சொல்லின் திரிபாகும். (9) சில தெய்வங்களைப்பற்றி ஓரளவு முரண்பட்ட செய்திகள் வெவ்வேறிடத்திற் கூறப்பட்டுள்ளன. (10) சோமக்கள்ளைத் தெய்வமாக வணங்கி வந்ததும். அதற்கு 114 இருக்குவேதப் பாட்டுகள் பாடப்பட்டிருப்பதும், வேத ஆரியரின் பிள்ளை மனநிலையைக் காட்டப் போதியன வாம். (11) முருகன், சிவன், திருமால், காளி என்பவர் வேதங்களிற் சொல்லப்படவுமில்லை; அவர் ஆரியத் தெய்வங்களு மல்லர். அவர் தூய தமிழ்த் தெய்வங்களே என்பது, என் தமிழர் மதம் என்னும் நூலில் விளக்கப்பெறும். (12) வேத ஆரியர் தமிழரொடு தொடர்புகொண்டபின், சில வேதத் தெய்வங்களைத் தமிழ்த் தெய்வங்களோடு இணைத் திருக்கின்றனர். எ-டு : வேதத் தெய்வம் தமிழ்த்தெய்வம் உருத்திரன் சிவன் விஷ்ணு(சூரியன்) திருமால் வேதமொழி (1) வேதமொழி மேலையாரியத்திற் கினமானது. இது பின்னர்க் காட்டப்பெறும். (2) வேதமொழி மேலையாரியத்தின் திரிபானது. v-L.: தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் வேதமொழி அகரம் (மருத - அகெர் (g) m¡nuh°(g) அஜ்ர நிலத்தூர்) அதோள் திதெர் - - தத்ர இதோள் ஹிதெர் கித்ர - அத்ர இரு ஆர்,இஸ் எஸ் எஸ் அஸ் இரும்பு இரன், ஈரிஸ் - அயஸ் அயெர்ன் இல் (உள்) உந்தர் இந்த்தெர் - அந்த்தர் இலக்கம்(எல்) லைற்(று) லக்ஸ் லியூக்கோஸ் ருச் (சு) உகம் - நுகம் யுக் யுகும் (g) - யுக (g) உகை - அகை அ(க்)க அகோ (g) அகோ (g) அஜ் (செலுத்து) எல்ல ஹல்லோ - - அரே, ரே ஏழகம் எல்கெ (k) - - ஏடக (k) - எல்க் கணு (க்)னீ கெனு (g) கொனு (g) ஜானு கத்து - (கத்தி) கத், கட் - - க்ருத் காண் கான் - கன், (¡)ndh(g) ¡ndh(g) ஜ்ஞா கென், (க்)னா - (க்)னோ கிழ(ம்) - - கெரான் (g), ஜர, ஜெரான் ஜரா குத்து - குந்து ஸ்குவாத் br¤(d) - ஸத் (d) கும் - கும்ம - கும் ஸிம் - ஸின் ஸம் கோ(ஆன்) கோ, கௌ - - கோ (g) சோம்பு - சோம்னுஸ் - ஸ்வப் துமி - - தெம்(னோ) தூ துருத்து த்ரஸ்ற்(று) த்ருதோ - துத் துருவு த்ரூ த்ரான்ஸ் - த்ரூ, தார்,தீர் துளை (வாசல்) தோர் - துர த்வார் நாவாய் - நாவிஸ் நௌஸ் நௌ நூன்-நூ-(நீ) து, தௌ து தூ த்வம் பார் - பரெ - பஸ் பிடுங்கு ப்ரிக் (b) ப்ரங்கோ (f) - ப்ரஜ் (bh) ப்ரேக் (b) பிறங்கு ப்ரைற்(று) - - ப்ராஜ் பொறு பெர் (b) பெர் (f) பெர் (ph) பர் (bh) பேர் (b) மடி - (மரி) மொர்த் மொரி - ம்ரு (சாவு) மாது - மாதர் மொதொர் மாதெர் மெதர் மாத்ரு (பெண்) (தாய்) (தாய்) (தாய்) (தாய்) முழுகு - மெர்கு (g) - மஜ்ஜ் தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் வேதமொழி முன் - முன்னு முன் - - மன் (கருது) மெது ஸ்மூத் - - ம்ருது வதுவை வெத் (d)  - - வதூ (dh) (திருமணம், (மண) மணமகள்) (3) வேதம் இந்தியாவிலேயே இயற்றப் பெற்றது. இதற்கு ஏதுக்கள் : 1. வேதமொழி பிராகிருதம் என்னும் வடதிரவிடச் சொற் கலந்தது. மேலையாரியத்திலும் தமிழிலும் தென்திரவிடத்திலும் இல்லாத வேதச் சொற்களெல்லாம் பெரும்பாலும் வடதிரவிடச் சொற்களே. 2. வேதமொழிச் சொற்றொடரமைப்பு, வடநாட்டு மொழிகள்போற் பெரும்பாலும் தமிழ் முறையைத் தழுவியது. 3. வடநாட்டு மொழிகள் போன்றே வேதமொழியும் எகர ஒகரக் குறிலற்றது. 4. வேதத்திற் சிந்துவெளியிலும் கங்கைவெளியிலு முள்ள இடம் பொருள்களே குறிக்கப்பட்டுள்ளன. (4) வேத ஆரியர் வடநாட்டுத் திரவிடரிடைச் சிறுபான்மை யரா யிருந்ததினால் அவர் முன்னோர் மொழி வேதக் காலத்திலேயே வழக்கற்றுப் போய்விட்டது. அதனால், வேதவொலிகளைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறையைக் கூறும் சிட்சை (சிக்ஷா) நூல்களும் வேதச் சொற்களின் பொருளை விளக்கும் நிருத்த (நிருக்த) நூலும் எழுந்தன. 9. வேத ஆரியர் தென்னாடு வருகை நாரதமுனிவர் காஞ்சி வருகை கடவுள் மாமுனி நாரதன் முன்னொரு காலையின் இடனு டைத்திருக் காஞ்சியின் ஏகம்ப நாதரைச் சுடரும் மாடக யாழிசை யால்தொழு தேத்துவான் தடவு வெள்ளிப் பருப்பத நின்றுந் தணந்தனன். (காஞ்சிப்பு.தழுவக். 185) அகத்திய முனிவர் தமிழகம் வருகை அகத்தியர் காசியின் நீங்கியது பாணித்தல் அமையும் இன்னே படர்கெனும் பவளச் செவ்வாய் வாணிக்கு மணாளன் தன்னை விடைகொண்டு மகிழ்ச்சி கூர ஆணிப்பொன் மாடக் கோயில் அகிலநா யகரை யன்பால் பேணித்தாழ்ந் தெழுந்து காசிப் பெரும்பதி தணந்து போந்தான்.'' (காஞ்சிப்பு. தழுவக். 218) அகத்தியர் விந்தமலை யடைந்தது கச்சிமா நகரங் காணும் ஆதரங் கைம்மிக் கீர்ப்ப நச்சணி மிடற்றார் பாத நகைமலர் மனத்துட் கொண்டு பொச்சமில் மனையா ளோடும் வான்நெறிப் போது கின்ற விச்சைதேர் முனிவன் தன்னைக் கண்டது விந்த நாகம். (காஞ்சிப்பு. தழுவக். 219) அகத்தியர் தண்டகக்கா டடைந்தது பண்டயன் பயந்தருள் பால கில்லரும் முண்டரு மோனரு முதலி னோர்களத் தண்டக வனத்துறை தவத்து ளோர்கடாம் கண்டன ரிராமனைக் களிக்குஞ் சிந்தையார். (3) ஐந்து மைந்து மமைதியி னாண்டவண் மைந்தர் தீதிலர் வைகினர் மாதவர் சிந்தை யெண்ணி யகத்தியற் சேர்கென இந்து நன்னுதல் தன்னொடு மேகினார். (26) விடர கங்களும் வேய்செறி கானமும் படருஞ் சின்னெறி பைப்பய நீங்கினார் சுடரு மேனிச் சுதீக்கண னென்னுமவ் விடரி லானுறை சோலைசென் றெய்தினார். (27) மறைவ லானெதிர் வள்ளலுங் கூறுவான் இறைவ நின்னரு ளெத்தவத் திற்கெளி தறைவ தீண்டொன் றகத்தியற் காண்பதோர் குறைகி டந்த தினியெனக் கூறினான். (36) வழியுங் கூறி வரம்பக லாசிகள் மொழியு மாதவன் மொய்ம்மலர்த் தாடொழாப் பிழியுந் தேனிற் பிறங்கரு வித்திரள் பொழியுஞ் சோலை விரைவினிற் போயினார். (35) ஆண்டகைய ரவ்வயி னடைந்தமை யறிந்தான் ஈண்டுவகை வேலைதுணை யேழுலக மெய்த மாண்டவர தன்சரண் வழங்கவெதிர் வந்தான் நீண்டதமி ழாலுலகை நேமியி னளந்தான். (36) (கம்பரா. ஆரணிய. அகத்தியப் படலம்) அகத்தியர் காஞ்சி யடைந்தது குன்றிடை முட்டி மறுகுங் குரீஇயின் தடையுண் டழுங்கி நின்ற அருக்கன் முதலொர் நெறிகொளச் செல்ல விடுத்துத் தன்றுணைப் பாவையி னோடுஞ் சார்தரு தாபத வேந்து மன்றலம் பூம்பொழிற் காஞ்சி வளநகர் தன்னைமுன் கண்டான். கண்டு தொழுது வணங்கிக் கையிணை உச்சியிற் கூம்ப மண்டிய காதலிற் புக்கு மரபுளிச் செய்கட னாற்றி அண்டர் பிரானார் தளிகள் அனைத்தும் முறையான் இறைஞ்சிப் பண்டை மறைகள் முழங்கும் படரொளி ஏகம்பஞ் சார்ந்தான். மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன் செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின் உன்னணுக்க னாகியினி துறைந்திடவும் பெறவேண்டும் இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான். (காஞ்சிப்பு. தழுவக். 226 - 7, 245) அகத்தியர் சையமலை யடைந்தது என்றிவை யுலக மெல்லாம் உய்யுமா றியம்பி வேளை வென்றவர் தழுவித் தேற்றி விடைகொடுத் தருளப் பெற்று வன்றிறல் முனிவர் கோமான் மகிழ்ந்தடி வணங்கிப் போந்து தன்றுணைக் கிழத்தி யோடுஞ் சையமால் வரையைச் சார்ந்தான். (காஞ்சிப்பு. தழுவக். 285) அகத்தியர் பொதிகைமலை யடைந்தது ``சலம்ப டைத்தவா தாவிவில் வலன்றனைச் சவட்டிய பெருநோன்பின் வலம்ப டைத்தவன் அவ்வரை யணுகலும் மறிதிரைக் கடலாடை நிலம்ப டைத்தது தொன்னிலை யாவரும் நிறைபெருங் களிகூர்ந்தார் நலம்ப டைத்தசீர் உறுவனும் ஆயிடை வதிந்துதென் மலைநண்ணி தென்றற் பிள்ளையை வயிறுளைந் தீன்றுதீம் பொருநைநீர் குளிப்பாட்டி மன்றற் சந்தனப் பொதும்பரின் தமிழொடு வளர்த்துமென் மெலஞால முன்றிற் பால்விளை யாடவிட் டமர்முது மலயவெற் பினுஞ்சையக் குன்றத்தும் அகத்தீ சத்தும் முறைமுறை குலவிவீற் றிருக்கின்றான். (காஞ்சிப்பு. தழுவக். 286,288) இங்குக் காட்டப்பட்டுள்ள வரலாறு துல்லிய வழிப்போக்கு வண்ணனையன்று. இச் செய்யுள்களினின்று அறியக் கூடியதெல் லாம், வேதக் காலத்திலேயே நாரதர், அகத்தியர் முதலிய ஆரியர் தென்னாடு வந்து முத்தமிழையுங் கற்றனர் என்பதே. தேவரெல்லாருங் கூடி, யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண் டிருத்தற்குரியர் என்று வேண்டிக்கொள்ள, அவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண் மரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாள ரையுங் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின் கணிருந்து" என்னும் நச்சினார்க்கினியர் கூற்றும், உண்மையைப் பல்வேறு கட்டுக் கதைகளுடன் புனைந்து கூறுவதே. இதிற் பதினெண் கோடி என்பது பதினெண் குடி என்றிருத்தல் வேண்டும். வடதிசை தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது என்பதும், அகத்தியர் அவ் விருதிசையையும் சமப்படுத்தினார் என்பதும், குமரிமலை முழுகுமுன் பனிமலை கடற்குள்ளிருந்தது என்பதையும்; அவர் கடலைக் குடித்தார் என்பது, பனிமலையை அடியிற் கொண்டிருந்த கடல் அம் மலை யெழுந்ததினால் மறைந்தது என்பதையும்; அவர் குடித்த கடலை உமிழ்ந்தார் என்பது, கீழ்த்திசையி லிருந்த நாகநாடு மூழ்கியபின் வங்காளக் குடாக் கடல் தோன்றியதையும்; அவர் விந்தத்தை அடக்கினார் என்பது, பனிமலை யெழுமுன் விந்தமே வடஇந்திய உயர்மலை யாயிருந்தது என்பதையும்; அவர் துவராபதிப் போந்து பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தார் என்பது, வேதக் காலத்தில் தமிழ மரபினரே வடஇந்தியாவிற் பெரும்பால ராயிருந்தார் என்பதையும்; அவர் காடு கெடுத்து நாடாக்கினார் என்பது, அக்காலத்து நாவலந் தேயத்திற் பெரும்பகுதி மரமடர்ந்த காடாயிருந்தது என்பதையுமே உணர்த்தும். அகத்தியர் வருமுன்பே தமிழ் இருவகை வழக்கிலும் சிறந்து வேதமொழியினும் உயர்ந்திருந்த தென்பதும், அவர் இறைவ னருளைத் துணைக்கொண்டு தமிழ் கற்றுத் தேர்ந்து வழிநூ லியற்றினார் என்பதும், தமிழ்த் தோற்றம் வரலாற்றிற் கெட்டாதது என்பதும். உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட் lH‰òiu Rl®¡flîŸ jªjjÄœ jªjh‹." என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டான். (ஆரணிய. 3 : 41, 47) என்னும் கம்பர் கூற்றாலறியப் பெறும். உழக்குமறை என்பது வேதமொழியின் திரிபு முதிர்ச்சி, செயற்கைத் தன்மை, ஓதற்கருமை முதலியவற்றையும்; `மதிக்கவி' என்பது தமிழ்ச் செய்யுட் பொருட் சிறப்பையும்; `மரபு' என்பது செந்தமிழ்ப் பண்பாட்டையும் உணர்த்தும். அகத்தியரைத் `தமிழ் முனிவன்' என்று தமிழர் போற்றியது புனைந்துரை பற்றியதேயன்றி இனஞ்சுட்டியதன்று. கான்சுத்தாந் தியசு பெசுக்கியை வீரமாமுனிவர் என்றும், பர். உ. வே. சாமிநாதை யரைச் சிலர் தமிழ்த்தெய்வம் என்றும் கூறுவதை நோக்குக. தண்டக அடவியில் தனித்தனியாகவும் கூட்டங் கூட்டமாக வும் ஆரிய மறையோர் இராமர் காலத்திருந்தமை, அவர் வேதக் காலத்திலேயே படிப்படியாகத் தென்னாடு நோக்கி வந்தமையைக் காட்டும் . 10 . சமற்கிருதவாக்கம் வேத ஆரியர் தென்னாட்டுத் தமிழரோடு தொடர்பு கொள்ளுமுன், வடநாட்டில் இயற்றியவை யெல்லாம் வேதமந்திரங் களும் பிராமணங்களுமே. அவற்றின் பின் ஏற்பட்ட ஆரணியகங் களும் அவற்றின் முதிர்ச்சியான உபநிடதங்களும் தமிழ் ஓத்துகளின் மொழிபெயர்ப்பே. சிறுதெய்வ வழுத்துகளாகிய வேத மந்திரங் கட்கும், முழுமுதற் கடவுளின் உருவிலா வழிபாட்டை அடிப்படை யாகக் கொண்ட உயரிய மெய்ப்பொருள் நூலுக்கும் இடைப்பட்ட வேறுபாடு, மடுவிற்கும் மலைக்கும் இடைப்பட்ட தாகும். வேத சாகைகட்கு ஏற்பட்ட பிராதிசாக்கியம் என்னும் ஒலியிலக்கணங்களும், தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றிய கிரந்தாட்சரம் என்னும் வண்ணமாலையும் வரிவடிவும் வேதமொழி யொடு ஆயிரக்கணக்கான தென்சொற்களைச் சேர்த்தமைத்த சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான நடைமொழியும், தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருத எழுத்திற்கும் சொல்லிற்கும் வகுத்த ஐந்திரம் என்னும் வியாகரணமும், வேத ஆரியரான பிராமணர் தமிழரொடு தொடர்புகொண்டபின் இயன்றவையே. பல்வேறு துறைப்பட்ட பல்வேறு வடநூலாசிரியரும் காவியப் புலவரும் தொன்றுதொட்டுத் தென்னாட்டினராக இருந்து வந்திருக்கின்றனர். பாணினீயத்திற்கு வார்த்திகம் என்னும் பொழிப்புரை வரைந்த காத்தியாயனரும், மாபாடியம் என்னும் விரிவுரை வரைந்த பதஞ்சலியும் காவியதரிசம் என்னும் அணியிலக்கணம் இயற்றிய தண்டியும் வேதங்கட்கு விளக்கவுரை செய்த சாயனரும், தென்னாட்டாரே. பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாகலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅள் திருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே (புறம்.358) என்னும் புறநானூற்றுப் பாட்டு வான்மீகியார் என்னும் புலவரால் இயற்றப் பெற்றதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. இப் பாட்டுத் துறவறத்தின் உயர்வைக் கூறுவதையும் வடமொழி வான்மீகி துறவியாயிருந்ததையும், இராமாயணக் கதை நிகழ்ச்சியின் பெரும்பகுதி தென்னாட்டில் நிகழ்ந்ததையும், வடமொழி வான்மீகியின் தென்னாட்டு இயற்கையமைப் பறிவையும், தருமபுத்திரனைக் கோதமனார் பாடிய பாட்டொன்று (366) புறநானூற்றில் உண்மையையும், பாரதப்போரில் முத்தமிழ் வேந்தரும் கலந்துகொண்டதையும், பாரதக் காலத்திற்கு ஓரிரு தலைமுறைக்கு முந்தியே இராமனிருந்ததையும், ஆரிய வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பஃறுளி நெடியோன் செய்தி புறநானூற்றிற் (9), கூறப்பட்டிருப்பதையும் நோக்கும்போது, புறநானூற்று வான்மீகி வடமொழி யிராமாயண வான்மீகிதானோ என ஐயுற இடமுண்டாகின்றது. இன்றும், வடநாட்டுச் சமற்கிருதப் புலவரினும் தென் னாட்டுச் சமற்கிருதப் புலவர் வல்லுநராயிருப்பது கவனிக்கத் தக்கது. 11 . தொல்காப்பியமும் பாணினீயமும் தமிழிலக்கணத்தை வடமொழி வழித்தாகக் காட்டல் வேண்டி, ஆரிய வெறியால் நடுநிலை திறம்பிய வரலாற்றாசிரியரும் பிராமணத் தமிழ்ப் புலவரும் தொல்காப்பியத்தைப் பாணினீயத் திற்குப் பிற்பட்டதாகக் காட்டி வருகின்றனர். பாணினியின் காலம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டென்று வரலாற்று நூலாசிரியராலும் மொழியாராய்ச்சியாளராலும் வரையறுக்கப் பெற்றுள்ளது. தொல்காப்பியம் பாணினீயத்திற்கு முந்தியதும் பாரதக் காலத்திற்கும் (கி.மு. 1000) கடைக்கழகத் தொடக்கத்திற்கும் (கி.மு. 5 ஆம் நூற்.) இடைப்பட்டதுமாதலின், கி.மு. 7ஆம் நூற்றாண்டின தாகும். இதற்கு ஏதுக்களாவன: (1) தொல்காப்பியம் பாரதக்கால நான்மறை வகுப்பிற்குப் பிற்பட்டமை. (2) தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திற் பாணினீயத்திற்கு முந்திய ஐந்திரமே குறிக்கப்பெற்றுள்ளமை. (3) தொல்காப்பியம் கடைக்கழகத்திற்கு முந்திய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அரங்கேறியமையும், கடைக்கழகத் தோற்றம் கி. மு. 5ஆம் நூற்றாண்டென்று இராமச்சந்திர தீட்சிதரால் நிறுவப்பெற்றுள்ளமையும். (4) தொல்காப்பியர் தம் காலத் தமிழகத்தில் வேற்றரசர் படை யெடுப்பும் சிற்றரசர் தலையெடுப்பு மின்மையை, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (1336) என்னுந் தொடராற் குறித்திருத்தல். (5) அற்றைத் தமிழக எல்லை வடவேங்கடமும் தென்குமரியும் குணகடலும் குடமலையும் என அறியுமாறு, நாற்பெய ரெல்லை (1336) எனத் தொல்காப்பியத்திற் குறிக்கப் பெற்றிருத்தல். (6) இரண்டொரு தொல்காப்பிய இலக்கண வரம்பு கடைக் கழகச் செய்யுளிற் கைக்கொள்ளப் பெறாமை. (7) தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய மூவதிகாரங் கொண்டிருத்தலும், பாணினீயம் எழுத்தும் சொல்லுமாகிய ஈரதிகாரத்ததே யாதலும், ஆகவே முன்னதி னின்று பின்னதன்றிப் பின்னதினின்று முன்னது தோன்றற் கிடமின்மையும். தொல்காப்பியப் பொருளதிகாரம் யாப்பணிகளையும் தன்னுட் கொண்டதாகும். இன்னும் இதன் விரிவை என் தொல்காப்பிய விளக்கத்திற் கண்டுகொள்க. 12 . ஆரிய ஏமாற்று வேதப் பிராமணர், தம் வெண்ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் ஆரவார வொலியையும், தமிழ திரவிடரின் பழங்குடிப் பேதைமைகளையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும், அளவிறந்து பயன்படுத்திக்கொண்டு, தம்மை நிலத்தேவராகவும் தம் முன்னோர் மொழியையும் தம் இலக்கியச் செயற்கை மொழியையும் தேவமொழியாகவும் காட்டி, அவற்றைப் பழங்குடி மக்கள் நம்புமாறு செய்துவிட்டனர். அதனால் தமிழ் கோயில்வழிபாட் டிற்கும் இருவகைச் சடங்குகட்கும் ஏற்காததென்று தள்ளப்பட்டு, சமற்கிருதமே அவ் வினைகட்குப் பிராமணரால் ஆளப்பெற்று வருகின்றது. ஆரிய வேத மந்திரங்கள் பெரும்பாலும் ஆரிய மக்களால் இயற்றப்பட்டு அவர் பெயர்களைக் கொண்டிருக்கவும், அப் பெயர்கள் அம் மந்திரங்களைக் கண்டவர் பெயரேயன்றி இயற்றியவர் பெயரல்ல வென்றும், அம் மந்திரங்கள் ஒருவராலும் ஆக்கப்பெறாமல் இறைவன் போன்றே என்றுமுள்ளன வென்றும், இன்றும் ஏமாற்றி வருகின்றனர். வடமொழி யெழுத்தும் சொல்லும் இலக்கியமும் இலக்கணமும் பெரும்பாலும் தமிழைப் பின்பற்றி அமைந்திருக் கவும், வடமொழி வண்ணமாலையைக் குறிக்கும் பாணினீயத் தொடக்கப் பதினால் நூற்பாக்களும் சிவபெருமான் இயக்கிய உடுக்கையினின்று ஒலித்தவையென்றும், அதனால் அவை மகேசுவர அல்லது சிவ சூத்திரங்கள் எனப்பெறு மென்றும், ஏமாற்றி வருகின்றனர். வடமொழி தேவமொழியாதலால் அது எம்மொழி யினின்றும் கடன் கொள்ளாதென்றும், அதிலுள்ளவை யெல்லாம் வடசொற்களே யென்றும், ஆங்கில ஆட்சி தோன்றிய பின்பும் கூறி வருவது துணிச்சலான ஏமாற்றே. சிவன் (சேயோன்), திருமால் (மாயோன்), வேந்தன் (இந்திரன்), வாரணன் (வருணன்), காளி என்னும் தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களென்றும், வடமொழியிலுள்ள மொழிபெயர்ப்பு நூல்களையும் தழீஇய நூல்களையுமெல்லாம் முதனூல்களென்றும், கூறுவது மதத்துறையிலும் இலக்கியத் துறையிலும் நிகழ்ந்துவரும் ஆரிய ஏமாற்றுகளாகும். இனி, இறைவனே பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என்னும் நால்மக்கள் வகுப்பைப் படைத்தான் என்றும், அவை அவன் தலை மார்பு தொடை பாதத்தில் தோன்றியவை யென்றும், அதனாற் பின் மூன்றும் முறையே தாழ்ந்தவை யென்றும், அவற்றுள் ஒவ்வொன்றும் மேல் வகுப்புகட்கு அல்லது வகுப்பிற்குத் தொண்டு செய்வதே இறைவன் நோக்கமென்றும், இதை இறைவனே வரைந்தான் என்றும் கண்ணன் வடிவிற் சொன்னானென்றும், இருக்கு வேதத்திலும் பகவற்கீதையிலும் எழுதி வைத்திருப்பது, மன்பதை முழுவதையும் தழுவுவதால், எல்லா ஏமாற்றிற்கும் முடிமணிபோற் சிறந்ததாகும். 13 . மூவகை வடசொற்கள் இந்தியாவிற்குட்பட்ட வடமொழி நிலைகள் மூன்றாதலால், தமிழில் வழங்கும் அல்லது குறிக்கப்படும் வடசொற்களும் மூவகைப் படும். அவை வருமாறு : (1) பிராகிருத வடசொல் எ-டு : ஆதி, இந்திரன். (2) வேத வடசொல் எ-டு : இயந்திரம், தருமம். (3) சமற்கிருத வடசொல் எ-டு : சாமி (ஸ்வாமி), பங்கயம் (பங்கஜ). 14. முக்கால வடமொழித் தமிழ்ச்சொற்கள் வடமொழியிலுள்ள தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவேறு காலத்திற் புகுந்தனவாகும். (1) மேலையாரியத் தமிழ்ச்சொற்கள் எ-டு : தமிழ் மேலையாரியம் வடமொழி அம்மை அம்மா, மம்மா அம்பா இரும்பு இரன், அயெர்ன், ஈரிஸ் அயஸ் உகை - அகை அகோ (g) அஜ் நாவாய் நாவிஸ், நௌஸ் நௌ பொறு பெர் (b),bg® (f),bg® (bh) பர் (bh) வலி, வலம் வலி பல (b) (2) வேதத் தமிழ்ச்சொற்கள் எ-டு : தமிழ் வேதமொழி ஆணி ஆணி கடு - கடுகு - கடுகம் கடுக சுவணம் சுபர்ண (3) சமற்கிருதத் தமிழ்ச்சொற்கள் எ-டு: தமிழ் சமற்கிருதம் மீன் - மீனம் மீன முகம் முக (kh) 15 . மேலையர் திரிபுணர்ச்சி மேலையறிஞரும் ஆராய்ச்சியாளரும், தமிழைச் செவ்வையாய் ஆராயாமையாலும் இனவுணர்ச்சியாலும் சில முற்கோளாலும் (prejudices), வடமொழியாளரை முற்றும் நம்பித் தமிழைப்பற்றித் தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். அவையாவன : (1) தமிழர் (அல்லது திரவிடர்), நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்து இந்தியாவிற் குடிபுகுந்து, ஆரியரால் தென்கோடிக்குத் துரத்தப்பட்டார் என்பது. (2) சமற்கிருதத்தினின்று பிராகிருதம் பிறந்ததென்பது. பேரா. பரோ இந்திய ஆரியத்தைப் பின்வருமாறு முந்நிலை யாய் வகுத்திருக்கின்றார். 1. பண்டை இந்திய ஆரியம் (Old Indo-Aryan) (1) வேதமொழி (2) சமற்கிருதம் 2. இடை இந்திய ஆரியம் (Middle Indo-Aryan) (1) பாளி (2) செந்நிலை இலக்கியப் பிராகிருதம் (Standard Literary Prakrit) (3) அபப்பிரஞ்சம் (Apabhramsa) 3. இற்றை இந்திய ஆரியம் (Modern Indo-Aryan) மராத்தி, குசராத்தி, இந்தி, வங்காளம் முதலியன. பர் (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார் இந்திய ஆரியத்தைப் பின்வருமாறு நானிலையாக வகுப்பர். 1. வைதிக மொழி 2. இதிகாச மொழி (இராமாயண பாரத மொழி) இதனைப் பாணினியாசிரியர் பாஷா என்பர்; பதஞ்சலி முனிவர் லௌகிகீ என்பர். 3. பிராகிருதங்கள் 4. பிராகிருதச் சிதைவுகள் இவை இந்தி, பஞ்சாபி, காசுமீரி முதலியன. கீழையாரியமும் வடஇந்தியப் பிராகிருதமுஞ் சேர்ந்து வேத மொழியும், வேதமொழியும் தமிழுஞ் சேர்ந்து சமற்கிருதமும் அமைந்திருக்கவும், பெயரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில் சமற்கிருதத்தினின்று பிராகிருதம் பிறந்ததென்னும் தலைகீழ் முடிபிற்கு உந்தப்படுவது, தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்று கொள்ளும் அடிப்படைத் தவற்றினாலேயே. (1) மராத்தி, குசராத்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளெல்லாம் சொல்லிலும் சொற்றொடரமைதியிலும் தமிழடிப்படை கொண்டவை யென்பதை, பி. தி. சீநிவாச ஐயங்கார் எழுதியுள்ள இந்தியக் கற்காலம் (Stone Age in India) என்னும் நூலிற் கண்டு தெளிக. (2) தம்மம் (தர்ம), பொக்கரிணீ (புஷ்கரிணீ) எனப் பிரா கிருதத்திற் சிலபல வடசொற்கள் சிதைந்து வழங்கிய மட்டில், அவை வடமொழி வழிப்பட்டவை எனக் கொள்ளல் தகாது. தமிழிலும் சோத்தம் (ஸ்தோத்ர), திட்டாந்தம் (த்ருஷ்டாந்த) எனச் சில வடசொற்கள் இடைக்காலத்தில் திரிந்து வழங்கித்தான் இருக் கின்றன. இதனால், தமிழ் வடமொழியினின்று கிளைத்ததென ஆகிவிடாது. தமிழிற் பல தன் சொற்கள் இன்றும் இறந்துபடா திருப்பதால், வேற்றுச் சொற்களை என்றும் விலக்க முடியும். இந் நிலைமை வடநாட்டு மொழிகட்கில்லை. தொன்னூலும் மொழிச் செம்மையும் போற்றாமையால், அவை அதை முன்னரே இழந்து விட்டன. பிராகிருதம் (முந்திச் செய்யப்பெற்றது), சமற்கிருதம் (நன்றாய்ச் செய்யப்பெற்றது) என்னும் சொற்பொருளே, அப் பெயர்கொண்ட மொழிகளின் முன்மை பின்மையை உணர்த்துதல் காண்க. (3) சிவ மதமும் திருமால் மதமும் ஆரியர் கண்டவை எனல். இதனால், தூய தமிழ் மதங்களாகிய இவ்விரு தென்மதங் கட்கும் பிராமண மதம் (Braminical religion) எனப் பெயரிட் டிருக்கின்றனர். (4) தமிழிலக்கணம் வடமொழியிலக்கணத்தைப் பின்பற்றிய தெனல். தமிழுக்கே சிறப்பாக வுள்ள பொருளிலக்கணத்தின் அருமை பெருமைகளை மேலையர் அறிவாராயின், பவணந்தியின் நன்னூல் போல் கூறும் பாணினீயத்தை அவர் சிறிதும் போற்றார் என்பது திண்ணம். தமிழ் யாப்பிலக்கணமும் பிற மொழிகளிலும் மிக மேம்பட்ட வகைகளும் விரிவும் உடையதே. தமிழகத்தில், அதிலும் பழைய செந்தமிழ்ப் பாண்டி நாட்டில், கால்டுவெலார் ஏறத்தாழ அரை நூற்றாண்டிருந்தும், தொல் காப்பியத்தையும் கடைக்கழகச் செய்யுள்களையும் காணப் பெறாமையாலேயே அவர் மேற்குறித்த முடிபிற்கு வரலானார். (5) இந்திய நாகரிகமே ஆரியரதெனல். இதற்குச் சில கரணியங்களும் உள. அவையாவன : 1. இந்திய நாகரிகத்தைக் காட்டும் நூல்களெல்லாம் இன்று பெரும்பாலும் வடமொழிலேயே இருத்தல். 2. பிராமணர் எல்லாத் துறையிலும் மேம்பட்டுள்ளமை. 3. தமிழைத் தாழ்த்தியும் சமற்கிருதத்தை உயர்த்தியும் பார் முழுதும் பரப்புரை செய்யப்பட்டு வருதல். 4. இற்றை அறிவியல் நாகரிகத்தைக் கண்டவர் மேலை யாரிய மொழி பேசுபவராயிருத்தல். இனி, இதற்குச் சார்பாகவே இற்றைத் தமிழர் நிலைமையும் பின்வருமாறு உள்ளது: 1. ஆயிரக்கணக்கான முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்களும் அழிந்தும் அழிக்கப்பட்டும் போனமை. 2. இற்றைத் தமிழ்நூல்களிலெல்லாம் வடசொல்லோ ஆரியக் கருத்தோ சிறிதும் பெரிதும் கலந்துள்ளமை. 3. தமிழர் குமுகாய (சமுதாய)த் துறையில் பிராமண ருக்குக் கீழ்ப்பட்டிருத்தலும், அதை எதிர்க்கும் தன்மான வுணர்ச்சி அவருக்கின்மையும். 4. நூற்றிற் கெண்பதுபேர் எழுத்தறியாதிருப்பதும் பெரும் பாலார்க்குத் தாய்மொழியுணர்ச்சி யின்மையும். 5. பிறப்பொடு தொடர்புபட்ட ஆரியக் குலப்பிரி வினையால் சின்ன பின்னமாய்ச் சிதையுண்டு, நாட்டின வுணர்ச்சியும் ஒற்றுமையுமின்றி முந்தியல் குக்குலங்கள் போல் வேறுபட்டிருத்தல். 6. கோயில் வழிபாடும் இருவகைச் சடங்கும் பெரும் பாலும் பிராமணப் பூசாரியரால் வடமொழியில் நடத்தப்பட்டு வருதல். 7. தந்நலப் போலித் தமிழ்ப் புலவர், தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பதவிகளைக் கைப்பற்றித் தமிழாக்க முயற்சிகளையெல்லாம் தடுத்து வருதல். இதனால் மேனாட்டார் தமிழின் சிறப்பை அறிதற்கு இதுவரை வாய்ப்பு நேர்ந்த தில்லை. 8. தமிழ்நாட்டு அரசும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும் தமிழைப் போற்றாமை. 9. தமிழ்நாட்டுத் தலைமைப் பதவிகளைப் பெரும்பாலும் தமிழரல்லார் தாங்கி வருதல். 16. தென்மொழி வடமொழி வேறுபாடு செந்தமிழாகிய தமிழும் கொடுந்தமிழ்களாகிய திரவிட மொழிகளும் சேர்ந்தது தென்மொழியாகும். தென்மொழி வடமொழி (1) தெற்கில் தோன்றியது. வடக்கினின்று வந்தது (2) இயற்கையாய் அல்லது திராவிடத்தினின்று திரிந்து தானாய்த்தோன்றிய தமிழால் வளம்படுத்தப் இயன்மொழி பெற்ற திரிமொழி. (3) தூய ஓரினத் தாய்மொழி. ஈரினக் கலவை மொழி. (4) உலக வழக்கு மொழி. வழங்கா நூன்மொழி; அதனால் வாழும் உண்ணிமொழி. பிறமொழிகளையே சார்ந்து வாழும் உண்ணிமொழி. (5) இந்திய ஐரோப்பிய இந்திய ஐரோப்பிய மொழிக் மொழிக் கோவையின் கோவையின் இறுதிநிலை. முதனிலை (6) மென்மொழி. வன்மொழி (7) இயற்கைப் பால் மொழி. செயற்கைப் பால் மொழி. (8) பொருளிலக்கணத்தால் பொருளிலக்கணமின்மையால் இலக்கண நிறைமொழி. இலக்கணக் குறைமொழி. (9) செம்மை வரம்பு மொழி. செம்மை வரம்பிலா மொழி. (10) பெரும்பாலும் மூல பெரும்பாலும் மொழிபெயர்ப் இலக்கிய மொழி. பிலக்கிய மொழி. (11) உண்மை, சமன்மை, பொய்ம்மை, பிரிவினை, ஒரு அன்பு முதலியவற்றை குல முன்னேற்றம் முதலிய உணர்த்தும் பண்பாட்டு வற்றை யுணர்த்தும் பண் மொழி. பாடற்ற மொழி. (12) மக்கள் மொழியென்று தேவ மொழியென்று ஏமாற்றும் ஒப்பும் மொழி. மொழி. 17. தென்மொழி வடமொழிப் போராட்டம் தென்னாடு வந்த வேதப் பிராமணரையும் அவர் வழியினரை யும் நிலத்தேவரென்றே தமிழர் நீண்டகாலம் நம்பியதினாலும், அவ் வாரியரும் தமிழ்வழி நூலியற்றித் தமிழ்ப்பற்றினர்போல் நடித்துத் தமிழர்க்குப் புலனாகாவாறு சன்னஞ் சன்னமாய் ஆரியக் கருத்து களை நுண்ணிதிற் புகுத்தி வந்ததினாலும், திருவள்ளுவர் காலம் வரை ஆரியத் தீங்கு தமிழர் கண்ணிற்குத் தெரியாது மறைந்திருந்தது. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (972) அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். (300) மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134) ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் (560) என்று திருவள்ளுவரே முதன்முதல் ஆரியத்தைச் சமயத் துறையிலும் குமுகாயத் துறையிலும் கண்டித்தார். அதன்பின், கி.பி.2ஆம் நூற்றாண்டில், சுவாமிநாத தேசிகன் போல் தன் வடமொழியாசிரியனால் ஏவப்பட்டுத் தமிழைப் பழித்த குயக்கோடனை, நக்கீரர் சாவப் பாடினார் என்பது, ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானை என்னும் வெண்பாப் பகுதி உணர்த்தும். திருவிளையாடற் புராணத்திலுள்ள, கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ. "தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்" (திருநாட்.57-8) என்னும் பரஞ்சோதி முனிவர் பாட்டுகள் 16ஆம் நூற்றாண்டி லிருந்த தென்மொழி வடமொழிப் போராட்டத்தை ஒருவாறு தெரிவிக்கின்றன. 17ஆம் நூற்றாண்டிற் பாடப்பெற்ற, மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம் என்னும் சீகாளத்திப் புராணத் தமிழ்வாழ்த்துச் செய்யுளில், `உறழ்தரு' என்னுஞ் சொல், `ஒத்திருக்கின்ற' என்னும் பொரு ளினும் மாறுபடுகின்ற என்னும் பொருளே சிறந்துபடுகின்றது. 18ஆம் நூற்றாண்டிற் சிவஞான முனிவர் பாடிய, வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி லிதன்பெருமை யாவரே கணித்தறிவார். இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ (காஞ்சிப்பு. தழுவக். 248-9) என்னும் செய்யுள்கள் மாறுபடும் இரு சாராரையும் ஒப்புரவாக்கும் நடுவர் கூற்றுப்போல் ஒலிப்பதால், தென்மொழி வடமொழிப் போராட்டத்தை மறைமுகமாகத் தெரிவிப்பனவே. 19ஆம் நூற்றாண்டில், சுந்தரம்பிள்ளை தம் மனோன்மணீயத் தமிழ்த்தெய்வ வணக்கச் செய்யுளில். (தரவு - 2) ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே. (தாழிசை - 3) சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே. (தாழிசை - 10) பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே. (தாழிசை - 11) வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி. (தாழிசை - 12) மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ என்று வெளிப்படையாய் இப் போராட்டத்தைக் காட்டினார். இனி, ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் என்னும் பாடினார் பெயர் தெரியாத தண்டியலங்கார வுரைப் பழைய வெண்பா, தமிழே உலகமுத லிலக்கியச் செம்மொழி யென்று கூறி, அது ஆரியத்திற்கு மூலமென்பதை ஏரணமுறையி லுணர்த்துகின்றது. தென்மொழி வடமொழிப் போராட்டம்பற்றிய உரைநடைப் பகுதிகள் பலவாகவும் விரிவாகவுமிருத்தலின், அவை இங்குக் கூறப் பட்டில. 1916ஆம் ஆண்டு, மறைமலையடிகளும் அவர்களின் அருமை முதன்மகளார் நீலாம்பிகை யம்மையாரும் வடசொல் லுள்ளிட்ட வேற்றுச் சொற்களைக் களைந்து நல்லுரமிட்டு நன்னீர் பாய்ச்சிக் கண்ணுங் கருத்துமாய்ப் பேணி வளர்க்கத் தொடங்கியதினின்று, தமிழ்ப்பயிர் தழைத்தோங்கி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. அதே சமையத்தில், அகப் பகையும் புறப் பகையுமான பல்வகைத் தமிழ்ப் பகைவரும், வேற்றுச் சொற்களை மீண்டும் மீண்டும் ஊடு விதைத்துக்கொண்டும் விலங்கு பறவைகளை ஏவிக்கொண்டும் வரத்தான் செய்கின்றனர். ஆயினும் அவர் படுதோல்வி யடைந்து அடியோடு அழித்தொழிந்து போவது அண்ணணித்தே. சென்ற நூற்றாண்டின் இறுதியிலேயே, சூரியநாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞன் என்று மாற்றித் தமிழர்க்குத் தனித்தமிழுணர்ச்சி யூட்டினாரேனும், அது செயலளவில் தொடராது உணர்ச்சியளவிலேயே நின்றுவிட்டது. அதனால், தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி, முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிரளித்தவர், மாநிலத்தில் மக்களுள்ளவரை மறையாப் புகழ் பெற்ற மறைமலையடிகளே. 1 மொழியதிகாரம் பண்பட்ட மொழியில் ஒரு கருத்தைத் தெரிவிப்பது பெரும் பாலும் சொற்றொடரேயாயினும் ஒவ்வொரு மொழியும் சொற்களாக வன்றிச் சொற்றொடர்களாகத் தோன்றாமையால், உண்மையில் மொழி என்பது முழுநிறைவான சொற்றொகுதியே. வேத ஆரியரின் முன்னோர் மேனாட்டினின்று வந்தமையால், அவர் மொழி மேலையாரிய மொழிகளை ஒத்திருந்தது. 1. மேலையாரிய இனச்சொற்கள் எ-டு : தன்மை முன்னிலைப் பெயர்கள் பொருள் Gk. L. Ger. E. Skt. யான் - நான் ego ego ich ic(OE), Iaham யாம், நாம் hemeis nos nir we vayam நீ su tu du thou tvam நீம் (நீர்) humeis vos euch, ihr you yuyam சில முறைப்பெயர்கள் தந்தை pater pater vater father pitru தாய் meter mater mutter mother matru மகன் - - sohn son sunu மகள் thugatar - tochter daughter duhitru உடன்பிறந்தான் frater frater bruder brother bhratru உடன்பிறந்தாள் - (sostor schwester sister svasru sosor) சில உறுப்புப் பெயர்கள் பொருள் Skt. Gk. L. Ger. E. தலை kapala kafale eaput haupt head பொருள் Skt. Gk. L. Ger. E. புருவம் bhru o - phrus - - brow கண் aks@@a osse oculos auge eye மூக்கு na#si - nasus nase nose பல் dant ontas dens zahn tooth களம் (மிடறு) gala - collum - - gula நெஞ்சாங்குலை hrudaya kardia cordis herza heart வயிறு (கருப்பை) udara delphis uterus - - கால்முட்டி(கணு) janu gonu genu knie knee பாதம் pada, pada pod ped fuss foot உகிர்(நகம்) nakha - - - nail தோல் carma derma - - - எலும்பு asthi osteon - - - எலும்பு மூளை majja - - marg marrow மனம் manas - mens - mind சில எண்ணுப் பெயர்கள் ஒன்று eka eis, en unus eins one இரண்டு dvi duo duo zwei two மூன்று thri treis tres drei three நான்கு chathur rettares quatuor vier four ஐந்து panchan pente quinque funf five ஆறு s|as| hex sex sechs six ஏழு sapthan hepta septem steben seven எட்டு as@t@am okto octo acht eight ஒன்பது navan ennea novem neun nine பத்து dasan deka decem zehn ten இருபது vimsathi cikosi(n) viginti zwanzig twenty நூறு satha ekaton centum hundert hundred சில பொதுச்சொற்கள் பொருள் வடமொழி மேலையாரியம் வளைவு anka Gk. hankas, L. uncus அச்சு aks|a L. axis, Gk. axon, OG. ahsa, Mod Ger. achse, Lith. assis தீ agni L. ignis முடிவு anta E. end, OE. ende, OS. endi, OHG. enti, ON. endir, Goth. andeis. பொருள் வடமொழி மேலையாரியம் நுனி agra Gk. akros நீர் ap L. aqua, Goth. ahva (river), OG. aha affa, Lith.uppe (river). அப்பால் apa Gk. apo, L. ab, Goth of, E. of. எதிர்முக abhi L. ob. குதிரை asva L. equus, Gk. hippos. எருது uks|an E. ox, OE. oxa, Goth. auhsa, Armen esn. நீர் udaka Gk. hudor, L. unda, E. water, Ger. wasser. எழு udi L. ori. உம்பர் upari OG. obar, Mod G. uber, E. over, Goth. ufar, L. super Gk. huper. காலவகை karan|a Gk. chronos நடுவண் kendra Gk. kentron, L. centrum, E. centre. வீடு gr|ha (?) E. kirk, ON. kirkja, OE.,OS. circe, kirika, OHG. kirihha, E. church. வெப்பம் gharma (ghr| v.i) E. warm, Ger. warm, Goth. varmya, L. formus, Gk. thermos. சக்கரம் cakra L. circum, E. circle, Gk. kuklos. ஞாலம் ku Gk. ge. தச்சன் taks|a Gk. tekton. மரம் taru, dru, daru Gk. durs, E. tree. Ger. zehren, trewo, Goth. triu. வெள்ளி(உடு) ta$raka E. star, Gk. aster, L. stella. துளை (வாசல்) dva$r Gk. thura, E. door, Ger. tor, L. fores, porta. வீடு dama L. domus, Gk. domos. தெய்வம் daiva L. devo, Gk. theos. நிலம் dhara L. terra. நாகம் na$ga E. snake, OE. snace, MLG. snake, ON. snakr. பெயர் na$man E. name, OE. nama, OS.,OHG. namo,Ger. name, Goth. namo, ON. nafn, L. nomen, Gk. onoma. கீழ் ni, nica E. neath, OE. neoth, OS. nith,OHG. nid, ON. neth, AS. nither, Ger. nider, Slav. nizu,Gk. eni. முதல் pratama Gk. protos, L. primus. பொருள் வடமொழி மேலையாரியம் ஆடவன்,மூவி purus|a (?)L. persona, E. person. டத்துளொன்று முன் puras, pura$ Gk. pro, L. pro, Slav. pra, pro pu$rva, pra Lith. pra , E. fore, Goth. faur,faura, Ger. vor. ஒருவகை மரம் bhu$rja E. birch, OHG. birihha, OE. bierce, berc, ON. bjork. கரு bhrun|a L. embryo, Gk. embruon. மீன் matsya L. piscis, E. fish. மத்தம்(கிறுக்கு) matta, mad E. mad, OS. med, OHG. meit,Goth. maiths மது(கள்,தேன்) madhu medu, Slav. medu, E. mead, Ger. meth, Lith. midus, L. mel. நடுவண் madhya L. medius, E. mid, middle, Ger. mitte, Gk. messos. மா (பெரிய) mah L. magnus, Gk. megas. மன்(மாந்தன்) manu, manus|a E. man, OE. man(n), OS. OHG. man, Goth. manna, ON.mathr. மாத்திரம், matra$ Gk. metron, metreo L.metior, மாத்திரை, mensus, mersura, E. measure, Slav. (அளவு) mera, Lith. mera, E. meter,metre. வடிவம் mu$rta Gk. morphe. எலி,சுண்டெலி mu$s|ika L. mus, OS., OHG., ON., mus, OE. mus, E. mouse. இப்பொழுது nu,nu$ Gk. nu, nun, L. nune, Ger. nu, nun, AS. nu, nu, OE. nu, E. now. நுகம் yuga E. Yoke, L. jugum. உண்மையான yata$ Gk. etumos, eteos. மணப்பெண் vadhu$ E. wed (to marry). பன்றி vara$ka Du. varken, L. pork. ஆடை vastra L. vestis, E. vesture. brhš va$rtha$ E., OE., OS. word, OHG. wort, ON. orth, Goth. waurd, Ger. worte, L. verbam. வாரி(கடல்) va$ridhi L. mare. வால் va$la, va$ra Gk. oura. உருவம் vlgraha L. flgura, E. figure. வெள்ளை sveta E. white, OE., OS. hwit, OHG. (h)wiz, ON. hvitr, Goth. hweits. பொருள் வடமொழி மேலையாரியம் நாய் sunaka L. canis. பன்றி su$kara L. sukula. நரி sr|ga$la E. jackal, Turk. chakal, Pers. shagal. சொந்த sva L. suus, Gk. sphos, Goth. sik, Ger. sich. பனி hima L. hiems, Gk. kheimon, khimos, Slav. zima, Lith. zema. சில வினைச்சொற்கள் அருந்து (உண்) ad E. eat, Goth. it, L. ed, Gk. ed, Ger. ess, Arm. ut. நெருக்கித் u$rj L. urge, Gk. orago, Goth. vrik, தூண்டு Lith. verz. போ gam E. go, OE., OS gan, OHG. gan, gen. பேராசைப்படு gr|dh E. greed (n.), OE. graedig (adj), OS. gradag, OHG. gratac, ON. grathugr, Goth. gredags. ஆராய் circ (?)E. search, L. circare. பிற jan Gk. gen, L. gen (erare), E. kin. வாழ் jiv Gk. zoo. நீட்டு tan L. tens, E. tend. வெப்பமாயிரு tap L. tepere, E. tepid (adj.). துர - துரத்து tur E. drive, OE. drif, OS. drib, OHG. trib, ON. drifa, Goth. dreib பழக்கு dam L. domare, Gk. dmos, E. tame ஓடித்திரி dram Gk. dromos. தா da$ L. do, donare குடி(பருகு) pa$ L. bib, E. bib. கூ,கூவு ku, ku$ E. coo, Gk. kokuo. மடி, மரி mr| L. mori. முழுகு majj L. mergo, mers, E. merge. நுகம்பூட்டு yuj E. yoke, OE. geoc, OHG. joh, OS., Goth. juk, ON. ok, L. jurgare. சிவப்பாயிரு rudh E. red, AS. read, Ger. rot., Goth. rauths, Slave. rudreu,Lith. rudas, raudas, L. ruber, rufus, Gk. eruthros. வரிசைப்படுத்து rac E. range. வெட்டு lup E. lop. நோக்கு(பார்) lo$k E. look, OE. locian, OS. locon, OHG. luogen. பேசு vad Lith. vad. பொருள் வடமொழி மேலையாரியம் சிதைத்துத் vadh Gk. Pathos துன்புறுத்து வெல் van E. win, L. venia, Goth. gawinnan, Ger. gewinnen அறி vid L. vid, Slav. ved, Goth. wit, wait, Ger. wizz, wiss, AS wat, E. wot, wit, Gk. edein. நெய் ve E. weave, OE. wef, ON. vefa, OHG.web. வீங்கு svi E. swell, OE., OS., OHG. swellan, ON. svella. உட்கார் sat E. sit, L. sed. தை siv E. sew, OE. si(o)w, OHG. siuw, ON. syj, Goth. siuj, L. sue. நில் stha$ L. sta, E, OE., OS, Goth., ON. stand, OHG. stant, Ger. stan, Slav. sta. Lith. sto, Gk. i-sta. திருடு sten L. steal, OE., OS., OHG. stel, ON. stel, Goth. stil. வியர் vid E. sweat, ME. swet(e). OE. swat, OS. swet, OHG. sweiz, ON sveit, Ger. swizzz, L. sudare, Gk. idros. மகிழ் hlad E. glad (v.t), OE. glaed, OS. glad, ON. glathr, OHG. glat. ஒலி svan E. swan; Ger. schwan, AS. swin, L. sonare. இன்சுவை svad E. sweet (a. & n.) OE. swete, யாயிரு OS. swoti, HOG. s (w) uozi , ON. soetr, L. suavis, suad, Goth. suts. (`இரு' என்னும் துணை வினைச்சொல்) பொருள் Skt. Gk. L. Ger. E. இருக்கிறேன் asmi esmi sum bin am இருக்கிறோம் 'smas esmes 'sumus sind are இருக்கிறாய் asi eis es bist art இருக்கிறீர்(கள்) stha este estis seid are இருக் - கிறான் - ள், asti esti est ist is கின்றது இருக் - கிறார்(கள்) santi eisi sunt sind are - கின்றன இதுகாறுங் காட்டப் பெற்றவை எடுத்துக்காட்டுச் சொற்களே. இவற்றினின்று, வேத ஆரியரின் முன்னோர் மொழி எவ்வாறு மேலை யாரிய மொழிகட்கு இனமாயிருந்த தென்பதைத் தெளிவாய்க் கண்டுகொள்ளலாம். பொதுவாக, மேலையாரிய மொழிக் குடும்பங்கட்குள் தியூத்தானியம் முந்திய நிலையையும், கிரேக்கம், சிலாவோனியம் முதலியவை பிந்திய நிலையையும் காட்டுகின்றன. இதனால், ஐரோப்பாவின் வடமேற்கோடியிலிருந்து தென்கீழ்க்கோடி நோக்கி ஆரிய மொழிகள் படிப்படியாய்த் திரிந்து வந்திருப்பதை அறியலாம். சில சொற்கள் இப் பொதுவியல்பிற்கு மாறாகத் தியூத் தானியத்தில் மிகத் திரிந்துள்ளன. இதற்கு அவை இந்தியாவினின்று முதலில் ஐரோப்பா சென்றுள்ளமையே கரணியம். எ-டு : எண்ணுப் பெயர்களும் சிலவுறுப்புப் பெயர்களும். ஆரிய மொழிகளுள் மிகத் திரிந்தது கீழையாரியம் என்பது முன்பு காட்டப்பட்டது. ஒருசில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய வழியாகவும் நேரடியாகவும் வடமொழியிற் புகுந்துள்ளன. எ -டு : ருத் (rudh) - மேலைவழி ரக்த (அரத்த) - நேர்வழி அரத்தம் என்னும் குருதிப் பெயரே பண்பியாகு பெயராக அதன் நிறத்தையுங் குறிக்கும். 2. பிராகிருதச் சொற்கள் மேலையாரியத்திலும் தமிழிலும் தென்திரவிடத்திலும் இல்லாத வேதமொழிச் சொற்களெல்லாம், பிராகிருதச் சொற்களே. எ-டு: ஆதி, கிராமம். 3. வடமொழிப் புகுந்த தென்சொற்கள் கீழ்வரும் சொல்லிணைகளில் இடச்சொல் தென்சொல்லும் வலச்சொல் வடசொல்லும் ஆகும். அக்கம்1 - அர்க்க அஃகல் = சிறிதாதல் (திவா.) அஃகுதல் = சுருங்குதல், சிறுத்தல், நுண்ணிதாதல். அஃகு = அஃகம் = அக்கம் = 1/12 காசு. காசு என்பது பழங்காலத்தில் ஒரு சிறு செப்புக்காசா யிருந்ததாகத் தெரிகின்றது. நெஞ்சே யுனையோர் காசா மதியேன் (தாயு. உடல்பொய். 72) ஒரு காசிற் பன்னிலொரு பங்கு மதிப்புள்ளது மிகச் சிறிதாயிருந் திருக்குமாதலின், அக்கம் எனப் பெயர்பெற்றது. அர்க்க (arka) என்னும் வடசொற்குச் செம்பு (copper) என்றே. மானியர் வில்லியம்சு வடமொழியாங்கில அகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ளது. ஆயின், செ. ப. க. க. த. அகரமுதலியில் அது அக்கம் என்னும் தென்சொற்கு மூலமாகக் குறிக்கப்பட்டுள்ளது. அக்கம்2 - அக்ஷ அல் - அள் = கூர்மை (திவா.). அல் - அல்கு. அல்குதல் = சுருங்குதல். அல்கு - அஃகு. அஃகுதல் = 1. குறுகுதல் (நன். 60). 2.சுருங்குதல். கற்பக் கழிமட மஃகும்'' (நான்மணி. 29). 3. குவிதல். ஆம்பல்......Û£l~FjY«'' (காஞ்சிப்பு. திருக்கண். 104) 4. நுண்ணிதாதல். அஃகி யகன்றஅறிவென்னாம்'' (குறள். 175) அஃகு - அக்கு = முட்போன்ற முனைகளுள்ள மணி. (உருத்திராக்கம்). அக்கை யணிந்தவர் மெய்யுரை'' (திருவானைக்.கோச்செங். 4) அக்கு - அக்கம் = பெரிய mக்குமணி.m«' பெருமைப்பொருட் பின்னொட்டு. அப்புக் கொக்கிற கக்கம்'' (திருப்பு.416) அக்கு என்பதே இயல்பான சொல் வடிவம். முள்ளுண்மை பற்றி அப் பெயர் தோன்றிற்று. "முண்மணிகள் காய்க்குமரம் முப்பதுட னெட்டே" என்று விருத்தாசலப் புராணம் கூறுதல் காண்க. கண்டம், கண்டி, கண்டிகை என்னும் பெயர்களும் அப் பொருள்பற்றித் தோன்றி னவே. கண்டம் (கள்ளி), கண்டகம் (முள், நீர்முள்ளி), கண்டகி (தாழை), கண்டு, கண்டங்கத்தரி (முட்கத்தரி) முதலிய பெயர்களை நோக்குக. இவற்றின் மூலம் பின்னர் விளக்கப்பெறும். அக்கமணி இந்தியாவில் நேபாள நாட்டிற்கே உரிய இயற்கை விளைபொருள். ஆரியர் வருமுன்பு வடஇந்திய வாணருட் பெரும்பாலர் சிவமதத் திரவிடரே. சிவநெறிக்குரிய குறி (இலிங்க) வழிபாடு செய்துவந்த பழங்குடி மக்கள் சிச்னதேவ' என்று வேத ஆரியராற் பழிக்கப்பட்டனர் (இ.வே.). ஆரிய வருகைக்கு ஆயிரமாண்டுகட்கு முற்பட்ட அரப்பா-மொகஞ்சதாரோ மக்களும் சிவநெறியரே. அந் நெறி தென்னாட்டிலேயே தோன்றிற்று. தென்னா டுடைய சிவனே போற்றி'' (போற்றித் திருவகவல்) தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே'' (சிவபுராணம்) ``பாண்டி நாடே பழம்பதி யாகவும்'' (கீர்த்தித் திருவகவல்) என்று மாணிக்கவாசகர் பாடுதல் காண்க. அக்குமணியணிவு முதலில் மருத்துவ முறையில் தோன்றி, பின்பு சிவநெறியொடு தொடர்புபடுத்தப் பெற்றதாகத் தெரிகின்றது. அக்கம் என்னும் சொல்லை வடமொழியாளர் அக்ஷ என்று திரித்து, அதை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, சிவபெருமான் முப்புர எரிப்பு முயற்சியில் ஆயிரம் தேவயாண்டு மருண்டு விழித்திருந்ததால், அவர் கண்களினின்று வடிந்த கண்ணீரில் அக்குமணி மரங்கள் தோன்றினவென்று அக்ஷ என்னும் வட சொல்லின் கண் என்னும் பொருட்கேற்பக் கதையுங் கட்டி விட்டனர். இக் கதையின் பொய்ம்மையைத் துடிசைகிழாரின் உருத்திராக்க விளக்கம்' என்னும் நூலிற் கண்டு தெளிக. ஆரியர் பிற்காலத்தில் வேத உருத்திரனைத் தமிழ்ச் சிவனொடு மயக்கிவிட்டதால், உருத்திராக்கம் என்னும் சொற்குச் சிவமுண்மணி அல்லது சிவமணி என்பதே பொருந்திய பொருளாம். அக்கை - m¡fh, L acca அகவு - ஹ்வே (இ. வே.) அகில் - அகரு (g) அகில் ஒருவகைக் கள்ளிமரத்தில் விளைவதென்பது, கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும்'' (4) என்னும் நான்மணிக்கடிகை அடியால் அறியப்பெறும். கள்ளி என்பது பெரும்பாலும் முள்ளுள்ள நிலைத்திணை (தாவர) வகை. தேக்குப்போல் அகிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளைவதாகும். குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்'' (பட்டினப். 188) என்றது , உள்நாட் டகிலை. வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலும் (துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமும் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்)'' என்றது கீழ்நாட் டகிலை. பண்டைக் காலத்தில் இங்கிருந்து மேனாடுகட்கு ஏற்றுமதி யான பொருள்களுள் அகிலும் ஒன்றாம். அது தமிழ்வணிகமே யன்றி ஆரிய வணிகமன்று. அக்கு = அகில் (மலை.). அக்கிலு = நெருஞ்சி (மூ. அ.) அக்கு - (அக்கில்) - அகில். ம. அகில். Heb. ahalim, Gk. agallochon, L. aquillaria, agallocha, E. eaglewood, Skt.agaru. மேலை மொழிகளிலெல்லாம் லகர வடிவும், வடமொழியில் அதன் திரிபான தகரவடிவும் இருத்தலை நோக்குக. மானியர் வில்லியம்சு அகரமுதலியில் agaru என்பதை aguru என்றும் காட்டிப் பளுவில்லாதது (not heavy) என்று சொற் பொருட் கரணியங் குறித்திருப்பது, அவர் சொந்தக் கைவரிசையே. அகோ - அஹோ அகோ என்பது மகிழ்ச்சி, வியப்பு, இரக்கம், துயரம் முதலிய உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொல். இது அக்கை என்னும் முறைப்பெயரின் விளிவேற்றுமையாம். அக்கை - அக்கா, அக்கோ - அகோ. ஒ.நோ : ஐயன் - ஐயோ! அத்தன் - அத்தோ! - அந்தோ! அத்தன் - அச்சன் - அச்சோ! அம்மை - அம்மோ! அம்மவோ! அன்னை - அன்னோ!. இங்ஙனம் பெற்றோர் பெயர்கள் பல்வேறு உணர்ச்சிக் குறிப்பிடைச் சொல்லாவது, தமிழிற் பெரும்பான்மையென அறிக. அக்கை என்னுஞ் சொல் தாயையும் மூத்த உடன்பிறந்தாளையும் குறிக்கும். அங்கணம் - அங்கண வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கு - அங்கணம் = வாட்டஞ்சாட்ட மாயிருக்கும் சாலகம். சாலகம், சாய்கடை (சாக்கடை) என்னும் பெயர்களும் இக் கரணியம் பற்றியவையே. வாட்டா யில்லாவிட்டால் நீர் செல்லாது தேங்கி நிற்கும். அங்கணத்து ளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முற் கோட்டி கொளல்'' (குறள்.720) என்னும் குறளில் உள்ள அங்கணம் என்னும் சொற்கு, பரிமேலழகர் முற்றம் என்று பொருளுரைத்திருப்பது பொருந்துவதன்று. கீழோர்க்கு உரைக்கும் மாணுரை வீண்படுவதற்குச் சாலகத்திற் கொட்டிய பாலே தக்க உவமையாம். அங்கு (ang) என்னும் முதனிலைக்குச் செல் (to go) என்று பொருள் கூறி, உலாவுமிடம் அங்கணம் என்று கொள்ளும் வடவர் சொல்லியல் உத்திக்குப் பொருந்துவதன்று. அங்கதம் - அங்கத அங்கு = வளை. அங்கதம் = வளையல், தோள் வளைவி. பொதுவாக உறுப்பைக் குறிக்கும் அங்கம் என்னும் வடசொல்லினின்று அங்கதம் என்னும் சொற் பிறந்ததாக வடவர் கூறுவர். அச்ச - அக்ஷ (axle) அட்டு - அட்டம் = குறுக்கு. அட்டு - அச்சு = குறுக்காக இருப்பது, உருள்கோத்த மரம். அசை - அச் நஞ்சினை யசைவு செய்தவன்'' (தேவா.581 : 3) அசைத்தல் = உண்ணுதல். அசைவு செய்தல்= உண்ணுதல். அசை என்னும் முதனிலை வழக்கிறந்தது. ஒ.நோ : கட்டல் (கள் + தல்) என்னும் வினை வழக்கற்றபின் களவுசெய் என்பது முதனிலையாய் வழங்குதல் காண்க. அட்டம் - அட்டம் (boiled rice) அடு - அடுசில் - அடிசில். அடு - அட்டம். அடுதல் = சமைத்தல். அட்டம்2 - அட்ட (high. lofty) எட்டு - எட்டம் = உயரம். எட்டம் - அட்டம். அட்டம் - அட்டஸ் (வ.) = மதில்மேற் காவற்கூடம். அட்டாலை - அட்டால அட்டம் + ஆலை = அட்டாலை = மதின்மேற் காவற்கூடம் அல்லது கோபுரம். சாலை - ஆலை. கீழ்பா லிஞ்சி யணைய வட்டாலை கட்டு'' (திருவாலவா.20 : 10) அட்டாணி = அட்டாலை. தலையெடுப்பாக வுயர்ந்த அட்டாணியும்'' (இராமநா. சுந்.3) ஆரியர் வருமுன்பே, பல்வகை யரணுறுப்புகளைக் கொண்ட கோட்டை கொத்தளங்கள் தமிழகத்திலிருந்தன. அட்டாலை - அட்டாளை(யா.) அடக்கம் - டக்கா (d|h) அடக்கம் = அடங்கிய ஓசையுடைய தோற்கருவி. நிசாளந் துடுமை சிறுபறை யடக்கம்'' (சிலப். 3 : 27, உரை) அடவி - அடவீ (t|) அடு - அடர் - (அடர்வி) - அடவி = மரமடர்ந்த சோலை அல்லது காடு. இனி, அடு - அடவி என்றுமாம். அடுத்தல் = நெருங்குதல், சேர்தல், அடர்தல். வடமொழியாளர் காட்டும் சொற்பொருட் கரணியம் வருமாறு: அட் = திரி (to roam), அலை (to wander about). அடவீ = திரியுமிடம் (place to roam in), மரமடர் காடு (forest). அடு - அச் (இ.வே.) அடுத்தல் = நெருங்குதல், அடைதல். அத்தம் - m¤t‹(dh) அற்றம் - அத்தம் = ஆளில்லாத காடு, அருநெறி. ஆளி லத்த மாகிய காடே" (புறம். 23) அத்தவனக் காடு என்பது உலக வழக்கு. ஆள் வழக்கற்ற காட்டுவழி என்னும் சிறப்புப் பொருளை இழந்து, வழி என்னும் பொதுப்பொருளையே அத்வன் என்னும் வடசொல் உணர்த்துகின்றது (அ.வே.). அதி - அதி (ati, adhi) அதித்தல் = வீங்குதல், பருத்தல், மிகுதல். மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை'' (குறள். 636) அதி + இகம் = அதிகம். அதி + அனம் = அதனம் = மிகுதி. அதிகன் = 1. மிக்கோன். பகைஞர்க் கெல்லா மதிகனாய்'' (பிரபோத. 26 : 110) 2. பரம்பொருள், இறைவன். அதிகன் வேணியி லார்தரு கங்கையை'' (கந்தபு. திருக்கயி. 20) அதிகர் = பெரியோர். அதிகருக் கமுத மேந்தல்'' (சூடா. 11:99) அதி + அகம் = அதகம் - அதகன் = வலிமையோன். உறுதுயர் தீர்த்த வதகன்'' (திவ்.பெரியாழ். 2 : 1 : 9) அதி - அதை. அதைத்தல் = வீங்குதல், செருக்குதல். அதி என்னும் வினை பிற்காலத்தில் வழக்கற்றது. அதி என்பது வடமொழியில் முன்னொட்டாகிய இடைச் சொல்லேயன்றி வினைச்சொல்லன்று. அது இருவடிவிற் காட்டப் படினும் ஒரு சொல்லே. அதிகாரம் - அதிகார அதி என்னுஞ் சொல் முற்கூறியதே. கடுத்தல் = மிகுதல். கடு - கடி - கரி. கரித்தல் = மிகுதல். உப்புக் கரித்தல் என்னும் வழக்கை நோக்குக. கரி - காரம் = மிகுதி, கடுமை, வலிமை, கடுஞ்சுவையான உறைப்பு. அதிகரித்தல் (மீமிசைச்சொல்) = மிகுதல், பேரளவாதல். அதிகரி - அதிகாரம் = ஆட்சிவலிமை, நூலின் பெரும்பகுதி. அதிகாரி = அதிகாரமுள்ளோன். வடமொழியில் அதிக்ரு என்னும் கூட்டுச்சொல்லை மூலமாகக் காட்டி, அதற்குத் தலைமையாயிருத்தல் என்று பொருளுரைப்பர். க்ரு(செய்) என்னும் சொற்சேர்க்கையால் அப் பொருள் பெறப்படாமை காண்க. மேலும், அதிகாரம் என்னும் சொல் வடமொழியில் நூற் சிறுபிரிவைக் குறிப்பதாக மானியர் வில்லியம்சு குறிப்பர். தமிழில் தொல்காப்பியத்திற்போல் நூற் பெரும்பிரிவைக் குறிப்பதே மரபு. திருக்குறளில் பதிகம் என்னும் பெயருக் கீடாக அதிகாரம் என்னும் சொல்லைப் புகுத்தியது உரையாசிரியர் தவறு போலும்! அதிகாரி - அதிகாரின் அந்த - ஹந்த (nt) - இ.வே. அத்தன் (தந்தை) - அத்தோ! - அந்தோ! - அந்த! அந்த! - அந்தவோ! - அந்தகோ! சிறு பிள்ளைகள் ஏதேனுமொன்று கண்டு வியக்கும் அல்லது அஞ்சும் அல்லது இரங்கும் அல்லது வருந்தும் நிலையில், தம் பெற்றோரை (சிறுவர் தந்தையையும் சிறுமியர் தாயையும்) விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயரின் விளிவடிவுகள் மேற்குறித்த உணர்ச்சிகளை வெளியிடும் குறிப்பிடைச் சொற்களாயின. ஒ.நோ : அச்சன் - அச்சோ; ஐயன் - ஐய - ஐயவோ - ஐயகோ, ஐயோ. அந்தி - சந்தி (dh) உத்து (ஒத்து) - அத்து. அத்துதுல் = ஒட்டுதல், பொருத்தித் தைத்தல். அத்து - அந்து - அந்தி. அந்தித்தல் = 1. நெருங்குதல். வேத மந்தித்து மறியான்'' (திருவிளை. நகர. 106) 2. கூடுதல், ஒன்றுசேர்தல் இனி, உம் - உந்து - அந்து - அந்தி என்றுமாம். இரவும் பகலும் அல்லது பகலும் இரவும் கலக்கும் இடை வேளையே காலவகையில் அந்தி யெனப்பட்டது. காலையில் நிகழ்வது காலையந்தி யென்றும், மாலையில் நிகழ்வது மாலையந்தி யென்றும் சொல்லப்பெறும். காலை யந்தியும் மாலை யந்தியும்'' (புறம். 34) காலையந்திக்கு முன்னந்தி, வெள்ளந்தியென்றும், மாலை யந்திக்குப் பின்னந்தி, செவ்வந்தியென்றும் பெயருண்டு. அந்தியென்னும் பொதுச்சொல் சிறப்பாக ஆளப்பெறும் போது மாலையந்தியையே குறிக்குமென்பது, அந்திக்கடை, அந்திக் காப்பு, அந்திமல்லிகை, அந்திவண்ணன், அந்திவேளை முதலிய சொல்வழக்கால் அறியப்படும். இடவகையில், அந்தி என்பது முத்தெருக்கள் கூடுமிடத்தைக் குறிக்கும். அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும்'' (சிலப். 14 : 213) பிற்காலத்தில் அந்தி என்னுஞ் சொல் சகரமெய் முன்னிடப் பெற்றுச் சந்தி என்றாயிற்று. ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை, ஏண் - சேண். சந்தி = 1. காலை அல்லது மாலை வழிபாடு. சந்தி செயத்தாள் விளக்க'' (நள.கலிதொ. 32) 2. மாலை (சூடா.). சந்திக்காப்பு' (உ.வ.). அந்திசந்தி = காலை மாலை 3. முத்தெருக் கூடுமிடம். ``சதுக்கமுஞ் சந்தியும்'' (திருமுருகு. 225) அந்தி அல்லது சந்தி என்னுஞ் சொல் தலைக்கூடுதற் பொருளில் பண்டையிலக்கியத்தில் அருகியே வழங்கியமையாலும், சொற்புணர்ச்சியைக் குறிக்கச் சந்தி என்னும் சொல் வடமொழி யிலேயே ஆளப் பெறுவதாலும், தமிழ்ப்பற்றுள்ள பெரும்புலவரும் சந்தி என்பது வடசொல்லென்றே மயங்கி வருகின்றனர். ஆயின், ஆய்ந்து பார்க்குங்கால், இதன் தென்சொல் மூலம் வெளிப்படுவது வியக்கத்தக்கதா யிருக்கின்றது. இச் சொல் முதலில் தமிழில் வழங்கிய வடிவம் அந்து என்பதே. அந்துதல் = கூடுதல். அந்து - அந்தி = கூடியது, கூடிய நேரம் அல்லது இடம். அந்து - சந்து (முதனிலைத் தொழிற்பெயர்) = 1. பொருத்து (பிங்.) 2. cl‰bghU¤J (ã§.), தொடைப்பொருத்து, இடுப்பு. 3. இரு பகைவர் பொருந்துதல் (ஒப்புரவாதல்). உயிரனையாய் சந்துபட வுரைத்தருள்" (பாரத. கிருட்டிணன்றூ. 6), நடுநின்றா ரிருவருக்குஞ் சந்து சொல்ல" (சிலப். 8 : 101, உரை). 4. பலவழி கூடுமிடம். சந்து நீவி" (மலைபடு. 393). சந்து - சந்தை = பல கடைகள் கூடுமிடம். இனி, வடவர் காட்டும் வரலாறு வருமாறு: ஸம் + jh(dha$) = ஸந்தா. ஸம் = கூட. தா = வை, போடு (to place or put) ஸந்தா = 1. வி. கூடு, ஒன்றுசேர், புணர், ஒப்புரவாகு முதலியன. 2. பெ. கூட்டம், சேர்க்கை, புணர்ச்சி, உடன்பாடு, கலவை முதலியன. ஸம் + தி (dhi) = ஸந்தி = கூட்டமுள்ளது, கூட்டம், கூடுகை, கூட்டு, இணைப்பு, சேர்க்கை, ஒன்றியம், அவை, உடன்பாடு, அந்தி, புணர்ச்சி, சொற்புணர்ச்சி முதலியன. ஸம் + த்யா (dhya$) = ஸந்த்யா = ஒன்றுசேர்க்கை, கூட்டம், கூடுகை, ஒன்றியம், காலையந்தி, மாலையந்தி முதலியன. இதினின்று அறியக் கூடியவை: (1) சந்தி என்னும் தென்சொல்லும் ஸந்தா என்னும் வடசொல்லும் வெவ்வேறு மூலத்தன. (2) ஸம் என்னும் வடமொழி முன்னொட்டு கும் என்னும் தென் சொற் றிரிபு. இது பின்னர் விளக்கப் பெறும். (3) தி (dhi), த்யா (dhya$) என்னும் ஈறுகள் தா (dha$) என்னும் முதனிலையொடு தொடர்புடையனவல்ல. கன்னி என்பதைக் கன்யா என்று திரித்தது போல், சந்தி என்பதைச் சந்த்யா என்று திரித்திருக்கின்றனர். (4) சந்தை என்னும் சொல்லும் பொருளும் வடமொழியில் இல்லை. (5) சந்தி என்னும் தென்சொல்லே ஸந்தா என்னும் வடசொல் லொடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. (6) சந்தி என்னும் தென்சொல் தனிச்சொல்; ஸந்தா என்னும் வட சொல் கூட்டுச்சொல். (7) அந்தித்தல், சந்தித்தல் என்னும் வினைகளும் வடமொழியில் இல்லை. இவற்றால், அந்தி என்பதன் முன்மிகை வடிவான சந்தி என்பது தென்சொல்லே யென்பது தெளிவாம். சந்திப்பைக் குறிக்கும் junction அல்லது juncture என்னும் ஆங்கிலச் சொல்லின் முதனிலையான join என்பதும், jungere என்னும் இலத்தீன் சொல்லின் திரிபாம். அவ் விலத்தீன் சொல் jugare என்பதன் திரிபாம். L.jugare = E. join, L. jugam = E. yoke. ஆகவே, சந்திப்பைக் குறிக்கும் இலத்தீன் சொல்லும், சமற்கிருதச் சொல்லினின்று வேறுபட்ட தனிச்சொல் என்பதை அறிக. சந்தி என்னும் வடிவமும் ஓசையும் ஆராய்ச்சியில்லாத் தமிழ்ப் புலவரை மயக்கலாம். இதற்கொத்த வடிவும் பொருளுமுள்ள சொற்கள், ஏனைச் சொன்முதல் மெய்களைக் கொண்டும் தமிழில் அமைந்திருத்தல் காண்க. கும் - (குந்து) - குத்து - கொத்து = குலை, குடும்பம், திரள். F« - f« - fªJ = cl‰rªJ (âth.), மாடு பிணைக்குந் தும்பு. கந்துவான் = மாடுபிணைக்குங் கயிறு. கந்துகளம் = நெல்லும் பதருங் கலந்த களம். கந்துமங்கல் = கப்பும் மங்கலுங் கலந்த சாயம். கந்து மாறுதல் = நுகத்திற் பூட்டிய எருதுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல். சந்தி என்பது அந்தி என்பதன் முன்மிகை. சும் - சும்மை = தொகுதி. சும் - சொம் = திரண்ட செல்வம். சொம் - (சொந்து) - சொத்து. சொந்து - சொந்தம் = தொடர்பு, உடைமை. தும் - துந்து - தொந்து - தொந்தம் = தொடர்பு, தொடுப்பு. தொந்து - தொத்து = வி. ஒட்டு; பெ. கொத்து. நும் - நம் - நந்து. நந்துதல் = வளர்தல். பும் - பொம். பொம்முதல் = மிகுதல். அதிர்குரல் பொம்ம'' (பாரத. பதினான். 112) பொம் - பொம்மல் = கூட்டம். பொலிந்தன உடுவின் பொம்மல்'' (கந்தபு.காசிபன் புல. 28) பொம் - பொந்து = திரட்சி. பொந்து - பொந்தன். மும் - (மொம்) - மொந்து = திரட்சி, பருமை. மொந்து - மொந்தன். சந்தி என்னும் சொல், சொற்புணர்ச்சி என்னும் பொருளில் எவ்வகைத் தமிழ் வழக்கிலும் இதுகாறும் இடம்பெறாமற் போயினும் தெருப்புணர்ச்சி என்னும் பொருளில் சந்திக்கிழுத்தல், சந்தி சிரித்தல், சந்தியில் நிற்றல், சந்தி மறித்தல், சந்தியில் விடுதல் என்று உலக வழக்கிலும், சந்தி மிதித்தல் (திருவிளை. உக்கிர.27), சதுக்கமுஞ் சந்தியும்" என்று செய்யுள் வழக்கிலும், ஊன்றியிருத்தல் காண்க. சந்திக் கோணம் என்பது ஒரு தேருறுப்பு (பெருங். உஞ்சைக். 58:51). அந்து, சந்து என்னும் வினைமுதனிலைகள் இகரவீறு பெற்று உண்ணி, கொல்லி என்பனபோலச் செய்வான் பெயர்களாகி (Noun of agency), பின்னர் அஞ்சிக்கை, இரட்டித்தல் என்பனபோல் மீண்டும் முதனிலைகளாய்ப் புடைபெயர்ந்தன என அறிக. அந்து - சந்து. அந்து - அந்தி. சந்து - சந்தி. அந்தி - அந்திப்பு. சந்தி - சந்திப்பு. ஆராய்ச்சியின்மையாலும் ஏமாளித்தன்மையாலுமே, பல தென்சொற்கள் வடசொல்லெனத் தமிழராலும் நம்பப்பட்டு வருகின்றன. தென்சொல்லை வடசொல்லென ஏமாற்றும் வடமொழியாளரைச் சந்திக்கிழுக்கும் சொற்களுள், சந்தி என்பதும் ஒன்றாம். அந்தோ - ஹந்த (nt) - இ.வே. அப்பம் - அபூப (இ.வே.) ம. அப்பம், தெ. m¥gK, f., து. அப்ப. உப்புதல் = ஊதுதல், எழும்புதல், பருத்தல். உப்பு (உப்பம்) - அப்பம். ஊது - ஊத்து = பருக்கை. ஊத்து + அப்பம் = ஊத்தப்பம். அப்பளம் - பர்ப்பட (t) தெ. அப்பளமு, க. அப்பள. ம. பப்படம். அப்பளித்தல் = சமமாகத் தேய்த்தல். அப்பளி - அப்பளம். அம்-அப் (இ.வே.) அம்முதல் = பொருத்துதல், ஒட்டுதல். அம் = நீர். அந்தாழ் சடையார்" (வெங்கைக். 35) அம்பரம் - அம்பர உம்பர் = உயர்ச்சி, மேலிடம், வானம், தேவருலகம். உம்பர்-உம்பரம் - அம்பரம். ``ஒருமருந்தாங் குருமருந்தை உம்பரத்திற் கண்டேனே" (வே. சா.). இதற்கு வடமொழியில் வேரில்லை. அம்பு - அம்பு அம் - அம்பு = நீர். அம்மை-அம்பா (இ. வே.) k.,bj., க. அம்மா. அம்ம - அம்மா - அம்பா (வ.). OG. amma, them ammon, ammun, Ger. amme (nurse), E. mamma. அம்பி, அம்பிஸ் (இ. nt.), அம்பீ (இ. nt.), அம்பிகா (VS & TS), அம்பாலீ (TS), அம்பாலிகா (VS). amma என்னும் வடிவம் செ. ப. க. க. த. அகரமுதலியில் வடசொற்போற் குறித்திருப்பது தவறாகும். அம்மம் (தாயின் முலை) என்ற சொல்லினின்றாவது ஆவின்கன்று கதறொலியி னின்றாவது அம்ம என்னும் சொற் பிறந்திருத்தல் வேண்டும். அம்ம முண்ணத் துயிலெழாயே'' (திவ். பெரியாழ் 2: 2: 1) க. அம்மி, ம. அம்மிஞ்ஞி. அமைச்சன் - அமாத்ய அமை - அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன். அமை + சு = அமைச்சு(தொ.பெ.). ஒ.நோ : விழை - விழைச்சு வடவர் காட்டும் வரலாறு : அம = இது(அ.வே.).mkh (அம என்பதன் கருவி வேற்.) = உடன் (இ. வே.) அமாத் (நீக்க வேற்.) = அண்மையிலிருந்து (இ. வே.) அமாத்ய = உடன் வதிவோன், உடன் குடும்பத்தான் (இ. வே.). 2. (அரசனின்) உடன் கூட்டாளி, அமைச்சன் (ம. பா.). உடன் கூட்டாளி vன்பதுcழையன்vன்பதற்குxத்திருப்ãனும்,mமvன்னும்mண்மைச்Rட்டுப்bபயரினின்றுmமாத்யvன்னுஞ்bசால்லைத்âரிப்பதுbபாருந்தாது.ghuj¡ காலத்தில் வடவருக்குத் தமிழரொடு மிகுந்த தொடர்பு ஏற்பட்டுவிட்டதனால், அமைச்சன் என்னும் தென்சொல் அக்கால வடநூல் வழக்கிற் புகுந்ததென்று கொள்ளுதற்கு எதுவுந் தடையில்லை. மேலும், அமை என்னுந் தமிழ்ச்சொல் அண்மைப் பொருளும் உணர்த்துவது கவனிக்கக் ததக்கது. அமைதல் = நெருங்குதல். "வழையமை சாரல்" (மலைபடு. 181). அயர் = ஹய் அயர்தல் = தளர்தல், கொண்டாடுதல். வடசொற் பொருளும் இவையே. அரக்கு - ராக்ஷா ம. mu¡F, f., து. அரகு. எல் = கதிரவன் எல் - எர் - எரி = நெருப்பு, சிவப்பு. எர் - எருவை = குருதி, செம்பு, செம்பருந்து. எர்- இர் - இரத்தி = செம்பழ இலந்தை. இர் - அர் - அரன், அரக்கு, அரத்தம், அருணம். அரக்கு = இங்குலிகம், சிவப்பு, அரக்கு - அரக்கம் = அவலரக்கு (பதிற். 30 : 27). அரக்காம்பல், அரக்குச் சாயம், அரக்கு மஞ்சள் என்பன செந்நிறப் பொருள்களைக் குறித்தல் காண்க. அரங்கம்-ரங்க அர் - அறு. அர் - அரங்கு = 1. அறை. 2. அறை வகுக்கப்பட்ட பாண்டி (சில்லாக்கு) விளையாட்டுக் கட்டம். ``கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் fšyh¢ áwhm® bešÈt£ lhL«." (நற்.3) 3. சூதாட்டுக் கட்டம். 4. நாடக மேடை. 5. முத்தமிழ்ப் புலவர் தத்தம் திறங்காட்டி ஒப்பம்பெறும் மேடை. அரங்கு-அரங்கம்-1. நாடக மேடை. 2. சூதாடுமிடம். 3. படைக்கலம் பயிலுமிடம். 4. போர்க்களம். 5. ஆற்றிடைக் குறை. 6. திருவரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட ஆற்றிடைக் குறை, திருமால் கோயிலையுடைமையால் திரு என்னும் பெயரைடை பெற்றது. வடமொழியில் இச் சொற்கு வேரில்லை. நிறத்தை அல்லது சாயத்தைக் குறிக்கும் ரஞ்ச் (ranj) என்னுஞ் சொல்லொடு தொடர்பு படுத்தி, தம் அறியாமையையோ அழுக்காற்றையோ காட்டுவர். தமிழிலுள்ள பொருள்களெல்லாம், அறுக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டவையே. அரசன் - ராஜன் ம. அரசன், க. அரச, து. அரசு. L. regis, rex, Kelt, rig, OG. rik, Goth, reiks, AS. rice, E. rich. அரவணைத்தல் என்பது தழுவுதலையன்றிச் தழுவிக் காத்தலையே குறித்தலால், அரவணை என்னும் கூட்டுச் சொல்லின் முதலுறுப்பு, பாம்பைக் குறியாது காக்கும் வலிமையுள்ள உயர்திணையான் ஒருவனையே குறித்தல் வேண்டும். அகரம் பல சொன்முதலில் உகரத்தின் திரிபாயிருத்தலால், அரவு என்பது உரவு என்பதன் திரிபென்று கொள்ளுதல் தக்கதாம். உரவு வலிமை. வலி என்பது பண்பாகுபெயராய் வலிமையுள்ளவனையுங் குறிக்கும். காய மனவசி வலிகள் (மேருமந். 1097) Authority என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. உலகில் வலிமை மிக்கவன் அரசனாதலின், உரவோன் என்னும் சொல் அரசனையே சிறப்பாகக் குறிக்கும். முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ யொருதா மாகிய வுரவோ ரும்பல் (புறம். 18) என்று பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது காண்க. வுகரவீறு சில சொற்களில் சுகர வீறாகத் திரிகின்றது. எ-டு : ஏவு - ஏசு, பரவு - பரசு, விரவு - விரசு, துளவு -துளசு -துளசி. இம் முறையில் அரவு என்பது அரசு என்றாயிற்று. அரசு - அரசன். இச் சொல் குமரிக்கண்டத்தில் தலைக்கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். அகப்பொருளிலக்கணத்திற் குறிக் கப்பெறும் நால்வகை வகுப்பாருள் இரண்டாமவர் அரசர். அரசன் என்பது கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் ஐவகைத் தலைவர்க்கும் பொதுப்பெயராம். ஐவகை மரபின் அரசர் பக்கமும் (தொல்.1021) என்னுமிடத்து , வேறு பெயர் பொருந்தாமை காண்க. அரசன் - அரைசன் - அரையன். அரசு - அரைசு. தெ. ராயலு, க.ராயரு, E. roy, மாவரையன் - மாராயன் - மாராயம். மாராயம் பெற்ற நெடுமொழி யானும் (தொல். பொருள்.63) இந்தியர்க்குள் வழங்கிவரும் ராய் என்னும் பட்டப் பெயர். அரையன் என்பதைத் தழுவியதாகும். ராவ் என்பது அரவன் (அரசன்) என்பதைத் தழுவியது போலும்! மாராயம் என்பது தொல்காப்பியர் காலத்தில் மாவரையம் என்றே வழங்கியிருத்தல் வேண்டும். பிற்காலத்தில் எழுதினவன் பழமொழிப்படி ஏட்டைக் கெடுத்ததாகத் தெரிகின்றது. அரையன் - வ. ராய. யகரம் பெற்ற இச் சொல்வடிவிற்குத் தமிழில் தவிர வேறெம்மொழியிலும் விளக்கமின்மை காண்க. ராஜ என்னும் சொல்லை ரஜ் என்று குறுக்கி ஆள் (to rule) என்றும், ஒளிர் (to shine) என்றும், செயற்கை முறையில் வடவர் பொருள் கற்பிப்பது எள்ளளவும் பொருந்தாது. இனி, அத்திரு, அத்து(க)மானி, இலணை, கணவம், சுவலை, திருமரம், பணை எனப் பல பெயர்கொண்ட அரசமரத்திற்கு, அப் பெயர் தொன்றுதொட்டு உலக வழக்கில் வழங்கி வருவதும், அச் சொல்லின் தமிழ்மைக்கு ஒரு சான்றாம். ம. அரசு, க. அரசெ, தெ. ராய். நாட்டு மரங்களுள் அரசமரம் மிக ஓங்கி வளர்வதால், மரவரசு என்னும் பொருளில் அது அப் பெயர் பெற்றது. அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, அரசுபோ லோங்கி, அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்" என்னும் மரபுத் தொடர்மொழியையும் நோக்குக. அரணம் - சரண (இ.வே.) உரத்தல் = வலிமையாதல். உரம் = வலிமை. உரம் - அரம் - அரண் = வலிய காப்பு, காப்பான கோட்டை, காப்பான காடு. ஒ. நோ: பரம் - பரண். அரண்மனை = காப்பான அரசன் மாளிகை. அரண் - அரணம் = காப்பு, அந்தளகம் (கவசம்), கோட்டை மதில், அடவி. சரண என்னும் வடசொற்குச் சார்தல் (to lean on, rest on) என்று பொருள்படும் சரி என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சார் என்னும் தென்சொல்லின் திரிபாயிருக்கலாம். அரணம் - அரண்ய (இ.வே.) அரண் = காவற்காடு. அரண் - அரணம் = காடு. காவல்வேல் காவற் காடிவை யரணே (பிங்.) காடும் எயிலுங் கவசமும் அரணம் (பிங்.) மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண் நவையறு சிறப்பின் நால்வகை யரணே (திவா.) மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண் வகையுறு சிறப்பின் நால்வகை யரணே (பிங்.) வடமொழியார் காட்டும் மூலம் : ரு (ச) = சொல். ரு - அரண = தொலைவான, அயலான. அரண - அரண்ய = தொலைவான அல்லது அயலான இடம், காடு, அடவி, பாலை. அரத்தகம் - அலக்தக, அலக்தகம் அர் - அரன் = சிவன். அர் - அரக்கு = செம்மெழுகு. அர் - அரத்தம் = செந்நீர் (குருதி). அரத்தம் - அரத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. எல் - எர் - இர் - அர். அரத்தம்1 - ரக்த அரத்தம் = செந்நீர். இதற்குத் தமிழ்வேர் மேற்காட்டப்பெற்றது. வடவர் நிறமூட்டப்பெறு (to be dyed or coloured) என்னும் பொருளுள்ள ரஞ்ச் (ranj) அல்லது ரஜ் என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அரத்தம்2 - அலக்த, அலக்தஸ் அரத்தம் = அரக்கு (திவா.) . அரத்தன் - ரக்த அரத்தன் = செவ்வாய் (பிங்.). அரத்தம் என்னும் சொற்குத் தமிழில் சிகப்பு, செந்நீர், பவழம், செம்பரத்தை, செங்கழுநீர், செங்கடம்பு, செம்பருத்தி, செவ்வாடை (துகில்) என்னும் பொருள்க ளிருப்பதையும், வடமொழியில் அ+ரக்த என்று பிரித்துப் பொருந்தா மூலங் காட்டுவதையும், நோக்குக. அரவம் - ரவ (இ.வே.) அர் - அரவு. அரவுதல் = ஒலித்தல், அரவஞ் செய்தல். வண்டரவு கொன்றை (தேவா. 89 : 3) அரவு - அரவம். படையியங் கரவம் (தொல். 1004) வடவர் ரு என்னும் மூலங்காட்டுவர். அது அர் அல்லது அரவு என்னும் தென்சொல்லின் சிதைவே. அரவம் - ஆரவம் - ஆரவ (வ.) = ஒலி. ஆரவ மிகுத்தது (பாரத. இரண்டா. 24) அரன் - ஹர அரம் - அரன் = சிவன் (சேயோன்). அர் - அரம் = சிவப்பு. பிற்கால முத்திருமேனி (திரிமூர்த்தி)க் கொள்கைக் கேற்ப, ஹ்ரு (அழி) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர் வடவர். அது அரி என்னும் தென்சொல்லின் திரிபாம். சிவன் ஆரியத் தெய்வமல்லன். அவன் முத்தொழிலையுஞ் செய்கின்றான் என்பதே தமிழர் கொள்கை. அரி - ஹ்ரு அரித்தல் = அழித்தல். அரி-ஹரி அரி = காட்டிலுள்ள உயிரிகளை யெல்லாம் அழிக்கும் விலங்கு (சிங்கம்) - (பிங்.) வடசொன்மூலம் ஹரி (பச்சை) எனக் காட்டுவர். அது பொருந்தாமை காண்க. அருக்கம் - அர்க்க அருகு - அருக்கு, அருக்குதல் = அழித்தல். அரிமுதலோ ருயிரருக்கி (உபதேசகா. சிவத்து. 422) அருக்கு = எருக்கு. அருக்கு - அருக்கம். எருக்குதல் = 1. அழித்தல் நாடுகெட வெருக்கி (பதிற். 83:7). 2. கொல்லுதல் (திவா.). அருக்கு - எருக்கு. எருக்கஞ்செடி நஞ்சாதலால் இப் பெயர் பெற்றது. அருணம் - அருண (இ. வே.) அர் - அருணம் = சிவப்பு, சிந்தூரம், செம்மறியாடு. அருணம் - அருணன் = எழும் செங்கதிரோன். அருணமணி = மாணிக்கம். அருணமலை = தீப்பிழம்பாய் நின்றதாகச் சொல்லப்பெறும் மலை. அருணமலை = அண்ணா மலை, அருணை. ஆதித்தரின் தாயாகச் சொல்லப்படும் அதிதியின் பெயரான ரு (r|) என்னும் சொல்லினின்று, அருண என்னும் பெயர் பிறந்துள்ளதாக வடவர் கூறுவர். இவ் ரு அர் என்னும் தமிழ் வேரின் திரிபாயிருக்கலாம். அருந்து - அத் (இ.வே.) L. ed, E. eat. ஒ.நோ : மருந்து - மந்து (தெ.). உந்து - உத்து. அலத்தகம் - அலத்தக அலத்தகம் - அரத்தகம். அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அலத்தம் - அலக்த அலத்தம் - அரத்தம். அலத்தம் = செம்பருத்தி. இவை முன்னர்க் காட்டப்பெற்றன. எல் (கதிரவன்) - இல் - அல். அலப்பு - லப் லப் - ரப் (இ.வே.) = அலப்பு. அவை - சபா (sabha$) - இ. வே. அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம். அமை = அவை. ஒ.நோ : அம்மை - அவ்வை, குமி - குவி. அவையடக்கியல், அவையல்கிளவி என்பன, தொல்காப்பி யர்க்கு முன்பே தொன்னூல்களில் வழங்கிவந்த இலக்கணக் குறியீடுகளாம். வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉவென அவையும் அன்ன (தொல். 1367) அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (தொல். 925) அவை - அவையம். தந்தை மகற்காற்று நன்றி யவையத்து முந்தி யிருப்பச் செயல் (குறள்.67) அவை - சவை. ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை. சவை - சபா (வ.) வடசொல் வடிவிற்குப் பின்வருமாறு மூவேறு வகையில் மூலங் காட்டுவர். (1). ஸ = ஸஹ (கூட). ஸ - சபா = கூட்டம். (2). பா (bha) = விளங்கு (to shine). ஸபா = விளக்கத்தோடு (பிரகாசத்தோடு) கூடியது, அறிஞரவை. இப் பொருளிற் பா என்னும் வடசொல் பால் என்னும் தென்சொல்லொடு தொடர்புடையதா யிருக்கலாம். பால் = வெண்மை. பாற்றிரு நீற்றெம் பரமனை(திருவாச.446) (3) ஸிப். இது உடன்பிறப்பைக் குறிக்கும் மேலையாரியத் தியூத்தானியச் சொல். ஆக்கசுப் போர்டு சிற்றகர முதலியில் (C.O.D.) பின்வருமாறு குறிக்கப்பெற்றுள்ளது : sib = a brother or sister. sibship = the group of children from the same two parents. OE. sib (b), MDu. sib (be), OHG. sippi, Goth. sibjis. இம் மூவகை மூலத்தினும் தமிழ்மூலமே பொருத்தமா யிருத்தல் காண்க. அளகம் - அலக அள் = செறிவு. அள்ளுதல் = செறிதல். அள்ளல் = நெருக்கம். அளம் = செறிவு. அளம் - அளகம் = 1. bg©kÆ® (ã§.), செறிந்த கூந்தல். 2. மயிர்க் = குழற்சி (பிங்.). அளி - அலி அள் = கூர்மை, நீர்முள்ளி. அள் - அளகம் = பன்றிமுள். அள் - அளி = கொட்டும் முள்ளுள்ளது, தேனீ. அள் - அல (முள்) ஒ.நோ: நுள் - நள் - நள்ளி = நண்டு. நள் - நளி = தேள். வடமொழியில் அலி என்னுஞ் சொல் தேளையுங் குறிக்கும். அனல் - அனல அன் - அன்று. அன்றுதல் = சினத்தல். அன்று - கன்று. கன்றுதல் = சினத்தல், வெயிலாற் கருகுதல். அன் - அனல் - கனல் = நெருப்பு. கனலி = கதிரவன். அனல் - தீ, வெப்பம், இடி. அனலுதல் = அழலுதல். அனலி = நெருப்பு, கதிரவன். அழல், அன்று, அனல் என்னும் சொற்களின் மூலம் அல் என்பது உய்த்துணரப்படும். அது வழக்கற்றது. அது எல் என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. எல் = கதிரவன், வெயில், ஒளி, பகல். வடமொழியில் அன் என்பதை மூலமாகக் காட்டுவர். அதற்கு உயிர்த்தல், இயங்குதல் என்னும் பொருளே உண்டு. ஆகவம் - ஆஹவ (இ. வே.) அகவுதல் = அழைத்தல், போருக்கழைத்தல், அறைகூவல். அகவு - அகவம் - ஆகவம் = போர். வடவர் ஆ - ஹ்வே என்று மூலங்காட்டுவர். ஹ்வே என்பது அகவு என்பதன் திரிபென்பது முன்னரே கூறப்பட்டது. ஆ என்பது பொருளற்ற முன்னொட்டு. ஆடு - (ஏடு) ஏட முழுத்தல் = திரளுதல். முழு - முழா = திரண்ட முரசு. முழா - முழவு - முழவம். முழா - மிழா = திரண்ட ஆண்மான். ஒ. நோ : முடுக்கு - மிடுக்கு, முண்டு - மிண்டு, முறை - மிறை = வளைவு. மிழா- மேழம் = திரண்ட செம்மறிக்கடா. மேழம் - மேழகம் = செம்மறிக்கடா. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 522) மேழம் - மேடம் = செம்மறிக்கடா, மேடவோரை (பிங்.). மேழகம் - மேடகம் = செம்மறிக்கடா, மேடவோரை. மேழகம் - ஏழகம் = செம்மறிக்கடா, ஆடு (சூடா.) ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு = ஆடு. யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும் (தொல். 1511) யாடு - ஆடு. ம. ஆடு, க. ஆடு, து. ஏடு. மேடம் - மேஷ மேடகம் - மேஷிகா ஏழகம் - ஏலக ஏடகம் - ஏடக ஏடு - ஏட ஆடாதோடை - ஆட்டாருஷ ஆடும் ஆவும் (மாடும்) தொடாத செடி என்று தமிழிற் சொற் பொருட் காரணம் காட்டுவர். ஆணவம் - ஆணவ ஆண் - ஆணவம் = ஆண்மை, செருக்கு. மானியர் வில்லியம்சு அகரமுதலி, ஆணவ என்னும் சொல்லை அணு என்பதினின்று திரித்து நுண்மை அல்லது மிகச் சிறுமை என்று மூலப்பொருள் கூறுகின்றது. ஆணி-ஆணி (இ. வே.) ஆழ்-ஆழி-ஆணி=ஆழ்ந்திறங்குவது, இருப்பாணி, மரவாணி, ஆணிபோல் கூரானது. ஆணிக்குருத்து = அடிக்குருத்து, ஆணிவேர் = அடிவேர். ஆணி = அடிப்படை, நிலைக்களம், தாங்கல். ஆணியா யுலகுக் கெல்லாம் (கம்பரா. கடறாவு. 27) ஆணிக்கொள்ளுதல் = ஊன்றிக் கொள்ளுதல். ழ-ண, போலி. ஒ.நோ: தழல்-தணல், நிழல்-நிணல். கால்டுவெலார் பொருந்துதல் என்னும் அடிப்படைப் பொருள் கொண்டு, அண் என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். வடமொழியார் ஊசிமுனை, கழுமுனை, அச்சாணி, முகக் கோற்குச்சு,வீட்டுமூலை, எல்லை என்று வடமொழி யகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ள அணி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்ட விரும்புவர். அது ஆணி என்பதன் குறுக்கமே. முனைப்பொருள் கொள்ளினும், அள் (கூர்மை) என்னும் தென்சொல்லே ஆணிவேராம். ஆம்1-ஆம் ஆ-ஆகு-ஆகும்-ஆம் (yes). ம. ஆம், தெ. அவுனு ஆம் வடமொழியில் மூலமில்லா உடன்பாட்டிடைச் சொல். ஆம்2-ஆப் அம்-ஆம்-நீர். ஆமிழி யணிமலை (கலித். 48). ஆமணக்கு-ஆமண்ட ஆமணக்கு நட்டால் ஆச்சா வாகுமா? என்பது பழமொழி. சிற்றாமணக்கு, காட்டாமணக்கு (ஆதளை) என்பன ஆமணக்கு வகைகள். வடசொல் அமண்ட, மண்ட என்னும் வடிவுங் கொள்ளும். ஆயம்-ஆய (இ. வே.) தாயம்-ஆயம் = உரிமை, கடமை, கடத்தக்கூலி, தாய ஆட்டக்காய் தாய எண் அல்லது பணையம். உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும் (குறள். 933) ஆயத்திற் கஞ்சி ஆற்றில் நீந்தினதுபோல் என்பது பழமொழி. இருக்கு வேதத்தில் ஆய என்னும் சொல் வந்துசேர்கை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது (II,38 : 20). பாணினீயம், மனுஸ்மிருதி, மகாபாரதம் முதலிய பின்னூல்கள் வருவாய், வரி, ஊதியம் முதலிய பொருள்களில் அதை ஆள்கின்றன. ஆய என்னும் சொற்கு ஆ-இ என்னும் மூலங் காட்டுவர். இ என்பது இய் என்னும் தென்சொல்லின் சிதைவாம். இய் - இயல், இயங்கு. இனி, ஆம் என்னும் சொற்கு வருவாய் என்று பொருள் கொள்ளினும், ஆ என்னும் அதன் முதனிலையை வா என்பதன் திரிபாகக் கொள்க. ஆயிரம் - ஸகஸ்ர (இ.வே.) அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமா யிருப்பதால், மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. வாழிய...e‹Ü®¥ பஃறுளி மணலினும் பலவே (புறம். 9) நீநீடுவாழிய...tLthœ எக்கர் மணலினும் பலவே(புறம். 55) ம. ஆயிரம், கு. ஆயிரெ, க. சாவிர, து. சாவிர, துட. சோவெர் (f), கோ. சாவ்ர்ம். இ. ஹசார் (haza$r), பெ. ஹசார் (haza$r), கி. khilloi for khesloi. வடமொழியில் மூலமில்லை. அகரமுதல் சகர முதலாய்த் திரிவதும் யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. ஒ.நோ : ïளை- சிiள,உiத- சுiத,உtணம்- சுtணம்,ஏ©- rண்,நீÆர்- நீÉர்,raடி-nசtடி. கன்dl¢ சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், கன்னடத் திரிபான படகச் சொல்லை யொட்டியே துடவச் சொல்லும் கோத்தச் சொல்லும், இவற்றை யொட்டியே வடசொல்லும், சகர முதலாய்த் திரிந்துள்ளன. இதை அறியாது, பேரா. பரோ வடசொல்லையே தென்சொற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தவற்றுக் கருத்தினாலேயே. ஆர் - அர (இ. வே.) ஆர்தல் = பொருந்துதல். ஆர் = சக்கரக் குறட்டிலும் வட்டையிலும் பொருந்தும் சட்டம் (spoke, radius). ஆர்கெழு குறடுசூட் டாழி போன்று (சீவக. 828) வடமொழியிற் காட்டப்பெறும் வேர் ரு (r@i) என்பதே. அது இரி என்னும் தென்சொல்லின் திரிபாகும். ஆரம் - ஆர ஆர் - ஆரம். ஆரஞ் சூழ்ந்த அயில்வாய் நேமி (சிறுபாண்.252) ஆர்ப்பாட்டம் - ஆரபாட்ட (bh) ஆர்த்தல் = ஆரவாரித்தல். ஆர்ப்பு + ஆட்டம் - ஆர்ப்பாட்டம் = ஆரவாரம். தெ. ஆர்பாட்டமு (bh). ஆரம் - ஹார ஆர்தல் = பொருந்துதல். ஆர் - ஆரம் = பல மலர்கள் அல்லது மணிகள் பொருந்திய மாலை. ஒ.நோ : தொடு - தொடை. ஆலாத்தி - ஆரத்தி (ஆ + ரத்தி) ஆலுதல் = ஆடுதல், சுற்றுதல். ஆல் - ஆலா - ஆலாத்து. ஒ.நோ : உல் - உலா - உலாத்து. ஆலாத்து - ஆலாத்தி = சுற்றியெடுப்பது. ஆலாத்தி சுழற்ற லென்கோ (சௌந்தரி. 103) ஆலாத்தி -ஆலத்தி -ஆரத்தி. ஆ- ரத்தி என்னும் வடசொற்கு நீக்குதல், அமைதிப்படுத்தல் (ceased,quiet) என்னும் பொருள்களே மா.வி. அகரமுதலியிற் குறிக்கப் பட்டுள்ளன. ஆவணம்1 - ஆபண ஆவணம் = அங்காடித் தெரு. மல்லல் ஆவணம் மாலை யயர (நெடுநல். 44) காவணம் = சோலை, சோலைபோன்ற பந்தல், கொட்டகை. fhtz« - Mtz« = fil¤bjU (ã§.), தெரு (திவா.). ``அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும் (சிலப். 14 : 213) ஆலமரத்தடியிலும் தோப்பிலும் சந்தை கூடுவதும் அங்காடி வைப்பதும் பண்டை வழக்கம். அது இன்றும் சிலவிடத்துள்ளது. வடமொழியில் மூலம் இல்லை. ஆவணம்2 - ஆபண ஆவண்ணம் - ஆவணம் = ஆகும் எழுத்து. ஆ(ஆகு)தல் = உதவுதல், ஊழியஞ் செய்தல். வண்ணம் = எழுத்து. ஆவணம் = 1. ஊழிய ஒப்பந்தம், அடிமையோலை, ஊழியம், அடிமைத்தனம். இராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி ஆவணங் கொண்ட... அண்ணல் (தேவா.869 : 8) 2. உரிமை (பிங்.). 3. உரிமையோலை. ஓராவணத்தால்...vidahS§ கொண்ட நம்பிரானார் (தேவா. 977 : 5) ஆவணக்களம் (களரி) =ஆவண¥பதிவு¢சாலை. ஆவணவோலை = உரிமை முறி. அண்ணலோர் விருத்தன்போல் வந்தாவண வோலை காட்டி (கந்தபு.வழிநடை. 12) ஆவணமாக்கள் = உரிமை அல்லது கடமைச் சூள் வாங்குவோர். பொறிகண் டழிக்கும்ஆவணkக்களின்(அகம்.77) ஆளத்தி - ஆலப்தி (ஆ + லப்தி) ஆலத்தி - ஆளத்தி = ஒரு பண்ணை வலிவு மெலிவு சமன் என்னும் முந்நிலையுந் தழுவ மண்டலித்துப் பாடுதல் அல்லது இசைத்தல். ஆலத்தி சுற்றுதல் கட்புலனும், ஆளத்தி சுற்றுதல் செவிப் புலனும் ஆகும் . லப் என்னும் வடசொற்கு, அலப்புதல், பிதற்றுதல், புலம்பல், விளித்தல், சொல்லுதல் என்ற பொருள்களே உள. ஆளத்தி என்னும் தமிழ்ச்சொற் கொப்பாக, ஆ - லப் என்னும் புனைசொல்லினின்று ஆலாப, ஆலாபன முதலிய சொற்களைத் திரித்திருப்பதாகத் தெரிகின்றது. இகம் - இஹ (இ. வே.) இ - இகு - இகம் = இவ்வுலகம். இகு - இங்கு - இங்கண். முச்சுட்டும் முதலில் தமிழிலேயே தோன்றினவென்பது பின்னர் விளக்கப்பெறும். இசி - ஹஸ் இளித்தல் = பல்லைக் காட்டுதல், சிரித்தல். இளி = சிரிப்பு (பிங்.). இளி - இசி. இசித்தல் = சிரித்தல். ஹாஸ்ய ரஸ = நகைச்சுவை. இஞ்சிவேர் - ச்ருங்கவேர இஞ்சி என்பது தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைந்து வரும் மருந்துப் பூண்டு. செய்யாப் பாவை வளர்ந்து கவின்முற்றிக் காயங் கொண்டன இஞ்சி (மலைபடு. 125-6) இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டி (பதிற். 42 : 10) மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து (சிலப். 10:74) இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல். இஞ்சு - இஞ்சி. இஞ்சி காய்ந்தாற் சுக்கு. சுக்கு= நீர்வற்றியது. சுள் - சுட்கு - சுக்கு. இஞ்சி X சுக்கு. இஞ்சியை இஞ்சிவேர், இஞ்சிக் கிழங்கு, இஞ்சிப்பாவை என்று சொல்வது வழக்கம். இஞ்சி, கிறித்துவிற்கு முற்பட்ட பண்டைக் காலத்திலேயே, இங்கிருந்து மேனாடுகட்கு ஏற்றுமதியான பொருள்களுள் ஒன்றாம். ம. இஞ்சி, கு. இஞ்சி, கோ. இஞ்ச், பர். சிங்கிவேர. L. zingiber, Gk. zingiberis, LL. gingiber , OE. gingiber, E. ginger, Slet. srngavera. மேலையாரியச் சொற்களெல்லாம் இஞ்சிவேர் என்னும் தமிழ் வடிவைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. அவற்றை வழங்குவோரும் அவற்றைத் தமிழ்ச்சொல்லின் திரிபென ஒத்துக்கொள்வர். ஆயின் வேதமோதுவது தவிர வேறொன்றுந் தெரியாத வடமொழியாளரோ, இஞ்சிவேர் என்பதைச் ச்ருங்கவேர் எனத் திரித்து, மான்கொம்பு போன்ற வடிவினது என்று வலிந்தும் நலிந்தும் பொருள் கூறி, அதை வடசொல்லாகக் காட்ட முயல்வர். ச்ருங்க என்பது கொம்பு என்று மட்டும் பொருள்படும். இஞ்சிவேர் பொதுவாகக் கிளைகிளையா யிருப்பதுபற்றி. அதை மான்கொம்பொடு ஒப்பிட்டு மான் என்னுஞ் சொல்லையுஞ் சேர்த்துக்கொண்டது, வடமொழியாளர்க்குத் தென்மொழி மீதுள்ள அழுக்காற்றையும், பகுத்தறிவிற்குச் சற்றும் பொருந்தாவாறு துணிந்து கட்டிக் கூறித் தென்சொல்லை வடசொல்லாகக் காட்டும் இழிவழக்கத்தையும், காட்டச் சிறந்த தொரு சான்றாம். வேர என்பதும் உடம்பு என்று பொருள்படுவதே யன்றி, வேர் என்னும் பொருள் கொண்டதன்று. இத்தகைச் சொற்பொருட் காரணத்தை மேலையரும் ஏற்றுக்கொண்டது, அவரின் தமிழறியாமையையும் அதனால் விளையுந் தீமையையும் காட்டுவதாகும். இட்டி - யஷ்டி இட்டு - இட்டி = ஒடுங்கிய அலகுள்ள வாள்வகை. இட்டிவேல் குந்தங் கூர்வாள் (சீவக. 2764) இட்டி- ஈட்டி. f., ம. இட்டி. வடமொழியில் மூலம் இல்லை. இட்டிகை - இஷ்டகா இடு - இடுகு - இடுக்கு - இடுக்கம். இடு - இட்டு - இட்டிது = சிறிது. ஆகா றளவிட்டி தாயினும் (குறள். 478) ï£oik = áWik (âth.), ஒடுக்கம் (திருக்கோ. 149, உரை). இட்டிய = சிறிய (ஐங். 215). இட்டளம் = நெருக்கம். இட்டிடை = சிறுகிய இடை. இட்டிடையின் மின்னிப் பொலிந்து (திருவாச. 7 : 16) இட்டிகை = சிறுசெங்கல். கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் (பழ. 108) வடமொழியிற் செங்கல் என்றே பொதுவாகக் குறிக்கப்பட் டுளது. அதில் மூலமும் இல்லை. இடைகலை - இடாகலா (இடா+கலா) இடைகலை = இடப்பக்க மூக்குத் துளைவழி விடும் உயிர்ப்பு, பத்து நாடிகளுள் ஒன்று. இடை = இடம். இடைதல் = பின்வாங்குதல், தோற்றல், வலி குறைதல். இடை - இடம் = வலிகுறைந்த கைப்பக்கம். இடம் X வலம். இடைகலை இடைநாடி எனவும் படும். இடை - இடா (வ.). நாடி - நாடீ (வ.) இடைகழி - தேஹலி (லீ) இடை + கழி = இடைகழி = இடையிற் கழிந்து செல்லும் நடை, சந்து, வாயில். இடைகழி - டேகழி - டேழி - ரேழி (கொச்சைத் திரிபுகள்) டேகழி தேஹலி(வ.) இராகு - ராஹு இராகு கரும்பாம்பு (பிங்.) என்றும் கருங்கோள் என்றும் சொல்லப்படும். இர்- இரு - இருமை = கருமை. இர்- இரா- இரவு. இர் - இருள் - இருட்டு. இரா - இராகு. வடமொழியிற் பற்றுவது (to seize, take hold of ) என்று பொருள் படும் ரப் (rabh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவது, பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தியாம். இலக்கு - லக்ஷ் இலக்கு = இலை, எய்யுங் குறி. விற்பயிற்சியிலும் விற்போட்டியிலும், பெரும்பாலும் ஒரு மரத்துச்சியிலுள்ள இலையை இலக்காக வைத்தெய்வதே பண்டை வழக்கம். இலக்கு = ஒரு குறித்த இடம் (நெல்லை வழக்கு). வடமொழியாளர் லக்ஷ் என்பதை வினையாகவும் ஆள்வர். இலக்கம் - லக்ஷ இலக்கு - இலக்கம் = குறி. இலக்க முடம்பிடும் பைக்கு (குறள் . 627) இலக்கியம் - லக்ஷ்ய இலக்கு - இலக்கம் = சிறந்த வாழ்க்கை யிலக்கை விளக்கிக் கூறும் வனப்பு (காவியம்). வடமொழியில் லக்ஷ்ய என்ற சொற்கும் இலக்கான பொருள் என்றே பொருள் கூறுவர். இலக்கணம் - லக்ஷண இலக்கு - இலக்கணம் = சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காக, கூறப்பெறும் மொழி யமைதி (Grammar). வடமொழியில் குறி, குறிக்கோள், இயல், இயல்விளக்கம் (definition), விளக்கிக் காட்டு (illustration) என்னும் பொருள்களிலேயே லக்ஷ்ண என்னும் சொல்லை ஆள்வர். லக்ஷ் என்னும் சொற்கு லக் (lag = that which is attached or fixed) என்பதை மூலமாகக் காட்ட முயல்வது பொருந்தாது. ஈந்து - ஹிந்தால ஈர்தல் = அறுத்தல். உயிரீரும் வாளது (குறள்.334). ஈர் - நுண்மை. "ஈரயிர் மருங்கின்" (சிலப். 6 : 146). ஈர் - ஈர்ந்து - ஈந்து = கிளையில்லா மரங்கட்குள் மிகச் சிறிய ஓலையுள்ளது, அல்லது ஏறுவாரை அறுக்கும் அடியினது. ம. ஈத்த, தெ. ஈத்த. ஈயம் - ஸீஸ (வே.) இள் - இள - இளகு. இள் - இய் - ஈ - ஈயம் = எளிதில் இளகுவது. உகு - உக்ஷ் (இ. வே.) உகுத்தல் = சிந்துதல், சிதறுதல், தெளித்தல். உகை - அஜ் உ - உகை. உகைத்தல் = முன்தள்ளுதல், செலுத்துதல். உகை - அகை. அகைத்தல் = செலுத்துதல் (சூடா.) பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30:4) அகை - கை. கைத்தல் = செலுத்துதல். அகை - Gk. ago, L. ago, Skt. aj. உச்சம் - உச்ச உ - உச்சி = தலை, உச்சந்தலை, முகட்டு நுனி, வானமுகடு, நண்பகல். உச்சி - உச்சம். உச்சம்போது = உச்சிப்பொழுது. உச்சம் போதே ஊரூர் திரிய (தேவா. 289 : 9) உச்சந்தலை - உச்சித்தலை. உடுக்கு - ஹுடுக்க உடு = ஒடு. உடுக்கு = ஒடுக்கு. ஒடு - ஒடுகு - ஒடுங்கு - ஒடுக்கு - ஒடுக்கம். உடுகு, உடுங்கு, ஒடுகு என்பன இறந்துபட்டன. உடுக்கு = இடையொடுங்கிய சிறுபறை. உடுக்கு - உடுக்கை. வடமொழியில் மூலமில்லை. உண்ணம் - உஷ்ண (இ.வே.) உள் - உண் - உண்ணம் = வெப்பம். உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு (தேவா. 510 : 6) உண் = உண. உணத்தல் = காய்தல், உலர்தல். உண - உணத்து. உணத்துதல் = காயப்போடுதல், உலர்த்துதல். தலையை (முடியை) உணத்துதல் என்பது நெல்லைநாட்டு வழக்கு. மிளகாய் வற்றலை உணந்த மிளகாய் என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு. உண - உணங்கு. உணங்குதல் = உலர்தல். தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும் (தமிழ்நா. 154) உணங்கல் = உலர்ந்த கூலம், வற்றல். உணங்கு - உணக்கம். உள் - ஒள் - ஒளி - ஒளிர் - ஒளிறு. ஒள் - ஒண்மை = விளக்கம். உள் - உஷ் (இ. வே.) விளக்கம் மேற்காண்க. உஷ் - உஷ்ண. உள் - உர் - உரு - உரும் - உரும்பு - உருப்பு - உருப்பம் = வெப்பம். உரும் - உருமி. உரும் - உருமு - உருமம் = வெப்பம் மிக்க உச்சி வேளை. உத்தரம்1 - உத்தர (இ. வே.) உத்தரம் = 1. குமரிமலை முழுகியபின் உயர்ந்த வடக்குத்திசை (திவா.) “Uttara, “northern (because the northern part of India is high)” என்று மா.வி. அகரமுதலியும் கூறுதல் காண்க. 2. தலைக்கு மேலுள்ள முகட்டு விட்டம். உ = உயர்ந்த, தரம் = நிலைமை. வடமொழியாளர் உத்+தர என்று பகுத்து, தர என்பதை உறழ்தர (comp.degree) ஈறாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டினும், உத் என்பது உயர்வு குறித்த தமிழுகரச் சுட்டினின்று தோன்றியதே. மேலும், உத்தர தேசம், உத்தர மடங்கல், உத்தர மதுரை முதலிய சொற்களில், உறழ்தரக் கருத்தின்மையையும் நோக்குக. உத்தரம்2 - உத்தர c = ca®ªj., தரம் - நிலைமை உ = மேல், பின். தரம் = தருவது. உத்தரம் - உத்தரவு = மறுமொழி. உத்தரவு என்னும் வடிவம் தருகைப் பொருளைத் தெளிவாய்க் காட்டுதல் காண்க. ம. உத்தரவு, தெ. உத்தருவு. தமிழில் உகரச் சுட்டே உயரத்தைக் குறிக்கும். உப்பா லுயர்ந்த வுலகம் புகும் (நான்மணி. 27) உப்பக்கம் நோக்கி யுபகேசி தோண்மணந்தான் என்னும் திருவள்ளுவ வெண்பாமாலை யடியிலும், உப்பக்கம் என்பதற்கு (உயர்ந்த) வடதிசை என்று பொருளுரைப்பதே சாலச் சிறந்ததாம். உத்தி - யுக்தி உத்தல் = பொருந்துதல். உ - ஒ. ஒத்தல் = பொருந்துதல். உத்தி = புணர்ப்பு, பொருத்தம், பொருத்தமானதை அறியும் அகக்கரணம், நூற்கும் உரைக்கும் பொருந்தும் நெறிமுறை. உ - யு (இ. வே.) உத்தி என்பதில் உத் என்னும் செயற்கை யடியை வடமொழியார் யுஜ்: (இ. வே.) என்று திரிப்பர். விளையாட்டில் இவ்விருவராய்ச் சேர்ந்துவரும் சேர்க் கையைக் குறிக்கும். உத்தி என்னும் சொல்லும் இதுவே. தெ.உத்தி (uddi). கழித்தலை அல்லது தள்ளுதலைக் குறிக்கும் உத்து என்னும் சொல்லும் உகர அடியினதே. உ - உந்து. உந்துதல் = முன்தள்ளுதல், தள்ளுதல். ம. உந்து. உந்து - உத்து. பொன்னெல்லா முத்தி யெறிந்து (கலித். 64) உ - யு (இ.வே.) = to keep away, ward off. உதடு - ஒஷ்ட (இ. வே) - os|t|t@a. (உதழ்) - உதடு = வாயில் முன்னிருப்பது அல்லது பொருந்து வது. உதழ் - இதழ். வடவர் காட்டும் உஷ் (உள் - ஒள்) மூலமன்று. உந்து - உந்த் (und) - இ.வே. உந்துதல் - நீரெழுதல். உந்துநீர்க் கங்கை (கூர்மபு. இராமனவ. 39). உந்து - உந்தி = நீர் (பிங்.). L unda, Gk. hudor, Goth. vato, Lith. wandu, E. water, OHG. wazar உந்த் - உத் - உத - உதக (இ.வே.) = நீர். VL. ud or und = to flow or spring, as water. உம்பர் - உபரி (இ .வே.) உ - உம் - உம்பு - உம்பர் = மேல். ம. உம்பர். Z. upairi, Goth. ufa$r, OG. obar, MG. uber, E. over, L. super, Gk. huper. உரம் - உரஸ் (இ. வே.) உர் - உறு- மிக்க. உறு - உறுதி = வலிமை . உர் - உரம் = வலிமை நிலத்திற்கு அல்லது பயிருக்கு வலிமை தரும் எரு, உடம்பில் வலிய உறுப்பான மார்பு. இனி, உரம் = தழுவும் உறுப்பு என்றுமாம். உர் - உறு. உறுதல் = பொருந்துதல், தழுவுதல் ஒ.நோ: மரு (மருவு) - மார் - மார்பு - மார்பம். மருவுதல் = பொருந்துதல், தழுவுதல். வடவர் காட்டும் ரு (r|)v‹D« மூலம் பொருந்தாமை காண்க. உரு - ருஹ் (இ.வே.) cU¤jš = Kis¤jš (âth.), தோன்றுதல். உரு - அரு - அரும்பு. அரும்புதல் = தோன்றுதல். ருஹ் = முளை, தளிர் (இ.வே.) உரு - உருத்து - ருத் (rudh) = to sprout, shoot (இ.வே.). உருவம் - ரூப (இ.வே.) - ru$pa. உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம்,வடிவுடைப் பொருள், உடல். உரு - உருவு - உருவம். உருவு - உருபு - வேற்றுமை வடிவம், அதைக் குறிக்கும் எழுத்து அல்லது அசை அல்லது சொல். ஒ.நோ: அளவு - அளபு. உருப்படி = உருவின்படி, தனிப்பொருள். உருப்போடுதல் = அக்கு, மணி முதலிய உருக்களை எண்ணி மந்திரம் ஓதுதல், அதுபோற் பன்முறை நவின்று (சொல்லி) மனப்பாடஞ் செய்தல். வேற்றுமை யுருபு என்பது, ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்திய தலைக்கழகக் காலத்திலேயே தோன்றிய தமிழிலக்கணக் குறியீடென வறிக. ru$pa என்னுஞ் சொல்லை ru$p என்று குறுக்கி வினையாகவும் ஆள்வர் வடவர். உருத்திரம் - ருத்ர உருத்தல் = 1. அழலுதல். ஆக முருப்ப நூறி (புறம். 25 : 10). 2. சினத்தல். ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று (பு. வெ. 3 : 2). 3. பெருஞ்சினங் கொள்ளுதல். ஒருபக லெல்லா முருத்தெழுந்து (கலித். 39 : 23). உரு - உருத்திரம் = சினம். OS. wreth, OE. wrath, E. wrath, wroth, OHG. reid, ON. reithr உலகம் - லோக (loka) - வே. உல் - உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல். உலம்வா - உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல். உலக்கை = உருண்டு நீண்ட பெருந்தடி. உலண்டு = உருண்டு நீண்ட புழு. உலம் - உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல். உலா = சுற்றி வருதல், அரசன் வலமாக நகரைச் சுற்றிவருதல், அதைப் பாடிய பனுவல். உலாவுதல் = சுற்றி வருதல். உலாத்துதல் = சுற்றி வருதல். உலாஞ்சுதல்= தலை சுற்றுதல். உலம் - உலவு - உலகு. ஒ.நோ : புறம் - புறவு - புறகு. உலகு = உருண்டையானது அல்லது சுற்றி வருவது. ஒ.நோ : கொள் - கோள். கொட்டுதல் = சுற்றி வருதல். உலகு - உலகம். மூவுலகம், ஈரேழுலகம், உலகமெல்லாம் என்னும் வழக்குகள், உலகம் என்னும் சொல்லின் பொதுமையைக் குறிக்கும். கதிரவன், திங் கள் என்னும் இரு சுடரின் உருண்டை வடிவும் சூழ்வருகைத் தோற்றமும் உலகங்கள் பொதுவாய் உருண்டையானவை என்றும் பெருவெளியில் வட்டமாகச் சுற்றி வருகின்றனவென்றும், இரு கருத்துகளைத் தோற்றுவித்தன. வடமொழியில் லோக என்னுஞ் சொற்குப் பார்க்கப்பட்ட இடம் என்றே பொருள் கூறுவர். அங்ஙனமே பொருட்காரணமுங் காட்டுவர். லோக் = பார். E. look. இதனால் உலகத்தைக் குறிக்கும் லோக என்னும் வடசொல் தென்சொல்லின் திரிபென்பது தெள்ளத் தெளிவாம். உலகம் என்னும் சொல்வழக்குத் தொன்றுதொட்டது. கால முலகம் (தொல். 541) உவமை - உபமா உத்தல் - பொருந்துதல். உ - ஒ. ஒப்பு - ஒப்புமை. உ - உவ் - உவ. உவத்தல் = ஒத்தல், விரும்புதல், மகிழ்தல். உவ - உவமை. உவ - உவகை. உவமை = ஒப்பு (திவா.) மகிழ்ச்சிக்கு விருப்பமும் விருப்பத்திற்கு மனப்பொருத்தமுங் காரணமாம். நாட, விழைய, வீழ என்னும் உவமவுருபுகள் விருப்பக் கருத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. உவமை என்னுஞ் சொல் விருப்பப் பொருளை உணர்த்துவது மட்டுமன்றி, ஒப்புமைப் பொருளை இயல்பாகக் கொண்டும் உள்ளது. உவமை - உவமம் - உவமன் ஒ.நோ : பருமை - பருமம் - பருமன் முழுமை - முழுமம் - முழுமன் - முழுவன் உவமை - உவமி. ஒ.நோ : ஒருமை - ஒருமி. உவமித்தல் = ஒப்பாக்குதல், ஒப்பாகக் கொள்ளுதல், ஒப்பிடுதல். தொல்காப்பியத்தில் ஆளப்பெற்ற வடிவம் உவமம் என்பதே. உவமை என்னுஞ் சொல் வடமொழியில் உபமா என்று திரியும். அதை உப + மா என்று பிரித்து இருசொற் கூட்டாக்கி, ஒத்த அளவு என்று பொருள் கூறுவர். உப = உடன். மா = அளவு. தமிழில் உவமை என்பது, உவ என்னும் முதனிலையும் மை என்னும் ஈறுங்கொண்ட ஒரு சொல்லே. இருக்கு வேதத்தில், உபமா என்பது கூட்டுச்சொல்லா யிருந்து முன்சொல்லிற் பொருள் சிறந்து அளத்தல், பங்கிடுதல், அளித்தல் என்று பொருள்பட்டதாகத் தெரிகின்றது. சதபத பிராமணம், மகாபாரதம் முதலிய பின்னூல்களில், அது தமிழ்த்தொடர்பினால் ஒப்புமைப் பொருள் பெற்றுவிட்டது. ஒப்பு, ஒப்புப்பொருள் என இருகூறு கொண்டது உவமை என்னும் அணி. ஒப்பு உவமம் என்றும், ஒப்புப்பொருள் பொருள் என்றும் தமிழிற் சொல்லப்பெறும், வடமொழியார், பிற்காலத்தில் பிரமாண(ம் )-பிரமேய(ம்) என்னும் முறையில், உவமத்திற்கும் பொருளுக்கும் உபமான - உபமேய என்னும் சொல்லிணையை ஆக்கிக்கொண்டனர். இதிலும், மான என்பது அளவுகுறித்த மானம் என்னும் தென்சொல்லே. உற்கம் - உல்க (இ. வே.) உல் - உலர். உல் - சுல் - சுல்லி = அடுப்பு. உல் - உள் - உண் - உண. உள் - உர் - உரும் - உரும்பு = கொதிப்பு, உல் - உற்கு - உற்கம் = 1. அனற்றிரள், 2. கடைக்கொள்ளி, 3. விண்வீழ்கொள்ளி. உற்குதல் = எரிகொள்ளி வீழ்தல். திசையிரு நான்கும் உற்கம் உற்கவும் (புறம். 41 : 4) வடமொழியில் உஷ் என்பதையே மூலமாகக் காட்டுவர். ஊசி - சூசி (இ.வே.) - su$ci உள் - அள் = கூர்மை. உள் - உளி = கூரிய வெட்டுங் கருவி. உளி - உகிர் = கூரிய விரலுறுப்பு. உளி - உசி - ஊசி = கூர்மை (பதிற். 70 : 7), TÇa F¤J¡ fUÉ mšyJ ija‰fUÉ (ã§.), சிறுமை. ஒ.நோ : இளி -இசி, வாளி - வாசி - வாசிகை. ஊசிக் கணவாய், ஊசிக்கழுத்தி, ஊசிக்களா, ஊசிக்காய், ஊசிக் கார், ஊசிச்சம்பா, ஊசித் தகரை, ஊசித்தூறல், ஊசித் தொண்டை, ஊசிப்பாலை, ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசி மிளகாய், ஊசிமுல்லை, ஊசிவேர் என்பன கூர்மை அல்லது சிறுமைபற்றித் தொன்றுதொட்டுப் பல்வேறு பொருள்கட்கு வழங்கிவருஞ் சொற்களாம். எழுத்தூசி, குத்தூசி, துன்னூசி, தையலூசி என்பனவும் அத்தகையனவே. எழுத்தூசி = எழுத்தாணி, மையெழுத் தூசியின்...... எழுத்திட்டாள் (சீவக. 1767). மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற். 42: 2-4) என்பதால், புண்தைக்கும் ஊசியும் பண்டைத் தமிழகத் திருந்தமை அறியப்படும். கொல்லத் தெருவில் ஊசி விற்பதா? என்பது பழமொழி. மதிற்றலையைக் கைப்பற்றும் பகைவர் கையைப் பொதுக்கும் ஊசிப் பொறிகளும், அக்காலத்துக் கோட்டை மதில்மேல் வைக்கப் பட்டிருந்தன. ஐயவித் துலாமுங் கைபெய ரூசியும் (சிலப். 15 : 213) வடமொழியில் சூசி என்னும் சொற்கு மூலமில்லை. தையலைக் குறிக்கும் சிவ் என்னும் சொல்லை மூலமாகக் காட்ட விரும்புவர். இங்ஙனமிருந்தும், சூசி என்பதினின்று ஊசி என்பது திரிந்துள்ளதாக, பிராமணத் தமிழ்ப்பண்டிதர் சென்னைப் ப. க. க. த, அகரமுதலியிற் காட்டியிருப்பது எத்துணை நெஞ்சழுத்தம்! ஊதை - வாதை (இ. வே.) ஊ - ஊது - ஊதை = 1. காற்று (திவா.) 2. வாடைக்காற்று, பனிப்புலர் பாடி...... ஊதை யூர்தர (பரிபா. 11: 84). 3. வளி(வாத) நோய். தலைவலி பன்னமைச்ச லூதை (தைலவ. தைல. 7). வடமொழியார் வா (blow) என்பதை மூலமாகக் கொள்வர். அது ஊ என்பதன் திரிபே. ஊர் - ரோஹ் (இ. வே.) உர் - உறு - உறி = உயரத் தொங்கவிடும் தூக்கு. உறு - உறை = உயரம் (பிங்.). உர் - ஊர். ஊர்தல் = 1. ஏறுதல். ``ஊர்பிழிபு.....tªj‹W" (ஐங். 101). 2. ஏறிச்செல்லுதல். சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான்(குறள். 37) வடமொழியார் காட்டும் ருஹ் (to ascend) என்னும் மூலம் ஊர்என்பதி‹முறைமாற்று¤திரிg (metathesis). ஊர் - ஊர்த்தம். ஒ.நோ : நேர் - நேர்த்தம். ஊர்த்தம் - ஊர்த்வ (urdhva) உயர்ந்த, தூக்கிய (இ. வே.). எருமை - ஹெரம்ப இர் - இரு - இருமை = கருமை. இருமை - எருமை = கரிய மாட்டினம். k.vUk, து. எர்மெ, தெ. எனுமு, க, எம்மெ. எல்லரி - ஜல்லரீ (jh) எல்லரி = பறைவகை. வல்வா யெல்லரி (மலைபடு. 10). ஏது - ஹேது ஏ - ஏவு - ஏசு - ஏது. ஏசுதல் - ஏவுதல், செலுத்துதல். கொல்லம் பேசி (தேவா. 380 : 6) ஏது = ஏவுகை. தூண்டுகை, காரணம். ஏது நிகழ்ச்சி = கருமங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோன்றுகை. ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள தாதலின் (மணிமே. 3 : 4) ஏது - ஏதன் = மூலக்காரணனான கடவுள். ஏதனை யேதமிலா விமையோர்தொழும் வேதனை (தேவா. 471: 3) வடவர் வடசொற்குக் கூறும் வேர்ப்பொருளும் தூண்டுதல் என்பதே. அதற்குக் காட்டும் வேர் ஏவுதற் பொருளுள்ள ஹி என்பதாகும். ஏ - ஹி கூறுத லுசாத லேதீடு தலைப்பாடு (தொல். பொருள்.207) ஏதீடு = காரணமிட்டுரைத்தல். ஏமம் - க்ஷேம (இ.வே.) உ - இ - எ - ஏ. ஏ = 1. உயர்ச்சி. ஏபெற் றாகும் (தொல். சொல். 305). 2. மேனோக்குகை. கார்நினைந் தேத்தரும் மயிற்குழாம் (சீவக. 87) ஏக்கழுத்தம் = தலையெடுப்பு. ஏண், ஏத்து, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு முதலிய சொற்களின் ஏகாரமுதல், எழுச்சி அல்லது உயர்ச்சிக் கருத்தைத் தாங்கி நிற்றலையும், எகர முதலும் இங்ஙனமே பல சொற்களில் உணர்த்தி நிற்றலையும் நோக்குக. இருதிணை யுயிரிகளும், நெருங்கிவந்த பகைக்கும் பகை வர்க்கும் தப்பியோடிப் பாதுகாப்பிற்குத் தேடுவது, பெரும்பாலும் மறைவிடம் அல்லது உயரிடமே. இவற்றுட் பின்னது மிகச் சிறப்பாம். அரிமாவிற்குத் தப்பி மரத்தின் மேலேறுவதும், அரசிற்குத் தப்பி மலையின்மேலேறுவதும் இன்றும் வழக்கம். சிற்றரசரும் கொள்ளைத் தலைவரும் பண்டைக்காலத்தில் மலைகளையே அரணாகக் கொண்டிருந்தனர். இதனால், உயர்ச்சியைக் குறிக்கும் ஏகாரத்தை அடியாகக் கொண்டு பாதுகாப்புக் கருத்துச் சொற்பிறந்தது. ஏ - ஏம் = 1. காப்பு. எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி (திருமுருகு.97) . 2. இன்பம். ஏமுற இனிதி னோம்பி (கம்பரா. விபீட. 114). ஏம் + உறு = ஏமுறு. ஏமுறுதல் = காப்படைதல். ஏம் - ஏமை - யாமை = பாதுகாப்பான ஓடுள்ள ஊருயிரி. யாமை யெடுத்து நிறுத்தற்றால் (கலித். 94) யாமை - ஆமை. ஒ.நோ: யானை - ஆனை. ஏம் + மரு = ஏமரு. ஏமருதல் = காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் (குறள். 448) ஏம் - ஏமா. ஏமாத்தல் = அரணாதல். இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே (பழ. 306) எழுமையு மேமாப் புடைத்து (குறள். 126) ஏம் = ஆர் = ஏமார். ஏமார்த்தல் = வலுப்படுத்தல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள். 660) ஏம் + மாறு = ஏமாறு. ஏமாறுதல் = காப்பழிதல், வஞ்சிக்கப்படுதல். ஏமாறு - ஏமாற்று (பி. வி.) ஏம் - ஏமம்: 1. காப்பு, பாதுகாப்பு. ஏமப் பேரூர் (தொல். 983). 2. காவல். எல்லா வுயிர்க்கும் ஏம மாகிய (புறம். 1: 11). ஏம முரசம் இழுமென முழங்க (புறம். 3: 3). 3. வைப்புச் சொத்து (திவா.). 4. பாதுகாப்பான இராக்காலம், நள்ளிரவு, இரா. புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965:7). 5. இன்பம் (திவா.). ஏமம் - சேமம். ஒ.நோ : ஏண் - சேண். சேமம் - பாதுகாப்பு, நலம், இன்பம், நல்வாழ்வு, அரண், சிறைச் சாலை, புதைபொருள், சுவடிக்கட்டு, கவசம், சவக்காப்பு. சேமம் - க்ஷேம (இ.வே.) தங்குதலை அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் க்ஷி என்னும் முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாமை காண்க. ஏலம் - ஏலா ஒட்டகம் - உஷ்ட்ரக ஒட்டுதல் = வயிறு உள்ளொடுங்குதல். ஒட்டப்போடுதல் பட்டினியிருக்கச் செய்தல். ஒட்டு - ஒட்டகம் - நீண்ட நாள் உண்ணாதிருக்கக் கூடிய விலங்கு. ஒட்டகம் குதிரை கழுதை மரைஇவை பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய (தொல். 1552) வடவர் வெப்பத்தைக் குறிக்கும் உஷ் என்னும் அடிச் சொல்லை மூலமாகக் காட்டுவர். ஒட்டகம் சுடுகின்ற பாலை நிலத்திற்குரிய தாயினும், அதன் வடசொற் பெயர் தென்சொல்லை ஒத்திருந்ததால், அதினின்றே திரிந்திருத்தல் வேண்டும். மேலும், உஷ் என்னும் வடசொல்லும் உள் என்னும் தென் சொல்லின் திரிபே. இது முன்னர் விளக்கப்பெற்றது. ஒட்டகம் - ஒட்டகை. ம. x£lf«, f., bj., து. ஒண்டெ. ஓடம் - ஹோட ஓடு - ஓடம். ம. Xl«, f., bj., து. ஓட. வடவர் காட்டும் ஹோட் (hod) ,ஹௌட் (haud|) என்னும் மூலங்கள் இயங்கு என்னும் பொருனவே. ஓடு - ஹோட் (hod|) k., f., bj., து. ஓடு. வடசொல் ஹூட், ஹ்ரூட், ஹூட், ஹோட், ஹௌட் எனப் பல வடிவங்கொள்ளும். ஓம்1 - ஓம் ஆம் - ஓம் (yes) துரத்தல், தூண்டுதல், விரும்புதல், பொந்திகைப்படுதல், காத்தல், ஆள்தல் முதலிய பல பொருள்களில் ஆளப்பெறும் அவ் என்னும் சொல்லை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது. ஓம்2 - ஓம் ஓ - ஓம். இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க. அ + உ + ம் என்று பிரித்து, இவற்றைத் திருமால் சிவன் பிரமன் என்னும் முத்திருமேனியரைக் குறிப்பதாகக் கூறும் வடநூல் வழக்கு, உண்மைக்கு முற்றும் மாறானதாம். கஃசு - கர்ஷ கால் - கஃசு = காற்பலம். கக்கட்டம் - கக்கட்ட (t) கக்கக் கக்க (ஒலிக்குறிப்படுக்கு) - கக்கட்டம் = உரத்த குரற் சிரிப்பு. kakk, kakh, kakkh, khakkh என வடசொன் முதனிலை நால் வடிவில் உளது. மா. வி. அகரமுதலியில் இச் சிறப்புப்பொருள் குறிக்கப்பெற வில்லை; சென்னைப் ப. க. க. த. அகரமுதலியில்தான் குறிக்கப் பட்டுள்ளது. கக்கரி - கர்க்கடீ (t|) கள் = முள். கள் = (கட்கரி) - கக்கரி = முள்வெள்ளரி. கச்சை - கக்ஷ்யா கட்டு - கச்சு - கச்சை = கட்ட வுதவும் நாடாப் பட்டை. கச்சு - கச்சம். கக்ஷ என்னும் அரையிற் கட்டுவது என்று பொருட் காரணங் கூறுவர் வடவர். கஞ்சி - காஞ்சீ, காஞ்சிக, காஞ்சீக கஞ்சி = நீர்ப்பதமான அல்லது குழைந்த சோற்றுணவு. ம. fŠÁ, f., bj., து. கஞ்சி (g). வடமொழியில் மூலமில்லை. புளித்த கஞ்சி என்பதும் பொருந் தாது. இளம்பதத்தைக் குறிக்கும் கஞ்சி என்னும் சொல் இளமையைக் குறிக்கும் குஞ்சு (குஞ்சி) என்னும் சொல்லொடு தொடர்புடையது. கட்கம் - கக்ஷ (வே.) கள் - கட்கு - கட்கம் = அக்குள் (மறைவான இடம்). கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங்.உஞ்சைக். 38:333) கட்கம் - கக்கம். கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் (பட்டினத். பொது,30) கஷ் (தேய்), கச் (ஒலி) என்பவற்றை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது. மறைவிடம் என்னும் பொருளில் இருக்குவேதத்திலும், அக்குள் என்னும் பொருளில் அதர்வ வேதத்திலும், கக்ஷ என்னும் சொல் ஆளப்பெற்றிருப்பதாக மா. வி. அ. கூறும். கட்சி - கக்ஷ கட்சி = காடு. கள் - கடு - காடு. கள் + சி = கட்சி. கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினும் (மலைபடு. 235) கட்டில் - கட்வா (kh) கட்டு - கட்டில். கட்டை - காஷ்ட கள் - கட்டு - கட்டை = திரண்ட மரத்துண்டு, திரண்ட விறகு. வடமொழியில் திரட்சி என்னும் சிறப்புப் பொருளில்லை. கடகம் - கடக (t|) குடா = வளைவு. குடங்குதல் = வளைதல். குடந்தம் = வணக்கம். குட - குடம் - (குடகம்) - கடகம் = வளையல், தோள்வளை, வட்டம், வட்டமான பெரு நார்ப்பெட்டி, நண்டு, நகர் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த ஒட்டரநாட்டுத் தலைநகர். கடகன் - கடக (gh, t|) கடத்தல் = மிஞ்சுதல், தேர்தல், வெல்லுதல். கட - கடகன் = கடந்தவன், தேர்ந்தவன். கடம்பு - கதம்ப கடம்பு - கடம்பம் - கதம்ப (வ.). அம்மீறு பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது. அதோடு, கடம்பம் என்னும் மரப்பெயரும் கதம்பம் என்னும் கலவைப் பெயரும் ஒன்றாக மயக்கப்பட்டுள்ளன. கடாகம் - கடாஹ கடகம் - கடாகம் = வட்டமான கொப்பரை, பெருவெளிக் கோளகை. கடி - காத் (kha$d) - இ.வே. கடித்தல் = பல்லால் வெட்டுதல், கடித்துத் தின்னுதல். கடிகை1 - கட, கடீ, கடிகா (gh, t|) குள் - குண்டு = குழி, ஆழம். குண்டு - குண்டான் = குழிந்த அல்லது குண்டான கலம். குண்டான் - குண்டா. குண்டு - குண்டிகை - குடிகை - குடுக்கை - குடுவை. குடிகை = நீர்க்கலம் (கமண்டலம்). அரும்புனற் குடிகை மீது (கந்தபு. காவிரி. 49) குடிகை - கடிகை = நீர்க்கலம், நாழிகை வட்டில், நாழிகை மங்கல நாழிகை குறிக்கும் கணியன், மங்கலப் பாடகன். கடிகை - கடிஞை. வடவர் காட்டும் கட (gh) என்னும் மூலம் குடம் என் னும் தென்சொல்லின் திரிபே. கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம். ஆரம் என்பது ஓர் ஈறு. ஒ.நோ: கூடாரம், கொட்டாரம், வட்டாரம். கடீயந்திர, கடிகா யந்திர என்னும் வடசொற் புணர்ப் பினின்று கடிகாரம் என்னும் தென்சொல் வந்ததன்று. கடிகை2 - கட, கடா (gh, t|) குடி = குலம், கூட்டம். குடி = குடிகை - கடிகை = சிறு கூட்டம், ஊரவை. இங்குக் கை என்பது சிறுமைப்பொருட் பின்னொட்டு (dim. suf.) வடவர் காட்டும் கட் (பா) என்னும் மூலம் தொடர்பற்ற பல்வேறு பொருள்கொண்ட சொல். கூடுதல் என்னும் பொருளில் அது குட என்னும் தென்சொற் றிரிபாகும். குல் - குள் - குழு - குழ - குட - குடம் = திரட்சி. குடத்தல் = கூடுதல், திரளுதல். கடு1 - கட் (d|d|) கடு = வன்மை (கடினம்), கடுமை. கட்டெனல் = வண்மையா யிருத்தல். கடுக்கெனல் = வன்மையாயிருத்தல். கடு2 - கடு (t|) கள் = முள். கள்ளி = முட்செடி. fŸ - fL = KŸ (âth.), கார்ப்பு, கைப்பு, மிகுதி, வெம்மை, கொடுமை. கடு - கடி = கூர்மை, மிகுதி, கார்ப்பு. வடமொழியில் மூலமில்லை. க்ருத் (வெட்டு) என்னும் வடசொல் கத்து (வெட்டு) என்னும் தென்சொற் றிரிபாதலின், மூலமாகாது. கடுகு - கடுக (t |) - இ.வே. கடு - கடுகு = காரமுள்ள பொருள். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி. கடுகு - கடுகம். அம்மீறு பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது. கடைகால் - கடீ, கடகா (gh, (t |) கடைகால் - கடகால் (கொச்சை) = நீரிறைக்கும் வாளி, நீர்ச்சால். கண் - f©(g) கள் - கண் = 1. கரிய பார்வையுறுப்பு. 2. அகக் கண்ணாகிய மனம். 3 . அறிவு, ஓதி (ஞானம்). கள்ளொற்றிக் கண்சாய் பவர் (குறள். 927) கண்ணுதல் அகக் கண்ணாற் காணுதல், கருதுதல், மதித்தல், அளவிடுதல். கண் - கண்ணியம் = மதிப்பு. கண்ணியம் - f©a(g) கண்டம் - கண்ட (n|t |) = முள். கள் - முள். கள் - கள்ளி. ஒ.நோ : முள் - முள்ளி. கள் -கண்டு = கண்டங்கத்தரி (முட்கத்தரி). கண்டு - கண்டம் = கள்ளி, கண்டங்கத்தரி, எழுத்தாணி, வாள். வடமொழியில் மூலமில்லை. கண்டகம் - கண்டக (n|t |) கள் - கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, உடைவாள், வாள், ஒ.நோ: முள் - முண்டு - முண்டகம் = முள், முள்ளி, முள்தூறு, தாழை, கருக்குவாய்ச்சி. கண்டகி - கண்டகி, f©l»‹(n|t |) கண்டகம் - கண்டகி = தாழை, மூங்கில், இலந்தை, முதுகெலும்பு. கண்டு - கண்டல் = தாழை, முள்ளி, நீர்முள்ளி. வடமொழியிலும் கண்டக, கண்டகி என்னும் சொற்கள் முள்ளையும் முட்செடிகளையும் முட்போன்ற பொருள்களையும் குறிக்கும். கண்டங்கத்தரி அதிற் கண்டகாரீ என வழங்கும். கண்டம் - f©l(kh) கண்டு = துண்டு, கட்டி, சருக்கரைக் கட்டி, நூற்பந்து. கண்டு - கண்டம் = துண்டு, மாநிலப்பிரிவு. ஒ.நோ : துண்டு - துண்டம். கண்டு - கண்டிகை = நிலப்பிரிவு. உப்புக்கண்டம், கண்டங்கண்டமாய் நறுக்குதல் என்பன உலக வழக்கு. அம் என்பது இங்குப் பெருமைப்பொருட் பின்னொட்டு. கண்டி - கண்ட் (kh) கண்டு - துண்டி. ஒ.நோ: துண்டு - துண்டி. கண்டித்தல் = துண்டுதுண்டாய் வெட்டுதல், வெட்டுவது போற் கடிந்து கூறுதல், முகத்தை முறித்தல் வெட்டிப்பேசுதல் என்னும் வழக்குகளை நோக்குக. கண்டி - கடி - கடிதல் = கழறுதல். கண்டி - கண்டிப்பு. கண்டிதம் - கண்டித (kh) கண்டி - கண்டிதம் = கண்டிப்பு. கண்டனம் - கண்டன (kh) கண்டி + அனம் = கண்டனம். ஒ.நோ : முண்டி - முண்டனம். கண்டை - கண்டா (gh, (n|t |) குண்டு - குண்டலம் = வட்டம், வளையம். குண்டு - குண்டை = உருண்டு திரண்ட காளை. குண்டை - கண்டை = வட்டமான அல்லது திரண்ட மணி. கணக்கன் - கணக்க (g). வே. கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். கள்ள = போல. கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ (தொல். 1232) கள் - கள - கண. கணத்தல் = கூடுதல், ஒத்தல். கள் - களம் = கூட்டம், அவை. களம் - கணம் = கூட்டம். கணவன் = மனைவியொடு கூடுபவன். கண - கணக்கு = கூட்டு, மொத்தஅளவு, அளவு. கணக்கு என்னுஞ் சொல் முதன்முதற் கூட்டற் கணக்கையே குறித்தது. அதற்குக் கணக்கில்லை, கணக்கு வழக்கில்லாமல், அது கணக்கன்று என்பவற்றில் கணக்கு என்பது அளவு அல்லது கூட்டு என்றே பொருள்படுதல் காண்க. கணக்க = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் உலக வழக்கை நோக்குக. அந்தக் கணக்கில் (கணக்காய்) = அதைப் போல. கணக்கு - கணக்கன் = கணக்குப் பார்ப்பவன், கணக்கத் தொழிற் குலத்தான். வடவர் காட்டும் கண் (g) என்னும் மூலம் இதற்குரியதன்று. கணம் - கண (g) இ.வே. இது மேல் விளக்கப்பெற்றது. கணி - கண் (g) கண் - கணி. கணித்தல் = புறக்கண்ணாற் காணுதல், அகக் கண்ணாற் காணுதல், மதித்தல், அளவிடுதல், கணக்கிட்டு வகுத்தல். கடைக்கணித்தல், சிறக்கணித்தல், புறக்கணித்தல் என்பன புறக்கண்ணாற் காண்டலைக் குறித்தல் காண்க. கணிதம் - கணித (g) கணி - கணிதம் = கணிப்பு, பல்வகைக் கணக்கு. கணிதம் - கணிசம் = மதிப்பு (உத்தேசம்). கணிசம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. குழம்பிற்குக் கணிசமாய் உப்புப் போடு என்னும் வழக்கை நோக்குக. கணிதம் - கணிதன் = கணியன், கணக்கறிஞன். கணி - கணி (g) கணி = கணிப்பவன், கணியன் (சோதிடன்). கணிகன், கணியன், கணிவன் என்னும் வடிவங்கள் வடமொழியில் இல்லை. கணிகை - கணிகா (g) கணி - கணிகை = தாளங்கணித் தாடுபவள். கத்தரி - கர்த்தரி கத்துதல் = வெட்டுதல். இவ் வினை பிற்காலத்து வழக்கற்றது. கத்து - கத்தி = அறுக்கும் அல்லது வெட்டுங்கருவி. ஒ.நோ : கொத்து - கொத்தி, வெட்டு - வெட்டி. கத்து + அரி = கத்தரி. கத்தரித்தல் = வெட்டி நறுக்குதல். அரிதல் = சிறிதாய் நறுக்குதல், அரித்தல் =அராவித்தேய்த்தல். கதக்குக் கதக்கென்று வெட்டுதல் என்பது உலகவழக்கு. கத்தரிகை - கர்த்தரிகா கதம்பம் - கதம்ப கல - கலம்பு - கலம்பம் - கதம்பம் = பல்வேறுவகை மலர்கள் கலந்த மாலை. ல - த, போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை - - சதங்கை. வடவர் காட்டும் கத் என்றும் மூலம் கல்லென்னும் தென் சொல் வேர்த்திரிபே. கதலி - கதலி, கதலீ கதலி = சிறுவாழைப்பழம். கதலி - கசலி = மீன்குஞ்சு. இச் சொல் குதலை என்பதனொடு தொடர்புடையது. மிக இனிக்கும் சிறுவாழைப் பழவகை தேங்கதலி எனப் பெறும். வடசொல் சிறுமை என்னும் சிறப்புப் பொருளிழந்து. பொதுவாய் எல்லா வாழைப்பழ வகைகளையும் குறிக்கும். கதை - கதா (th) கத்துதல் = உரக்கச் சொல்லுதல். கத்து - கதை. ஒ.நோ : நச்சு - நசை. நொடித்தல் = சொல்லுதல். நொடி = கதை. வடசொன் மூலம் கத் என்பதே. கத்து-கத். கந்தன் - ஸ்கந்த (dh) கந்து = தூண். பற்றுக்கோடு. கந்து - கந்தன் = தூணிற் பொறிக்கப்பட்டவன் அல்லது பற்றுக்கோடானவன், முருகன். கந்துகம் - கந்துக கள் - கண்டு = நூற்பந்து. கண்டு - கந்து - கந்துகம் = பந்து. இனி, கும் - கம் - கந்து - கந்துகம் என்றுமாம். கந்தை - கந்தா (nt) கத்து - கந்து - கந்தல், கந்தை. கொந்து - கொந்தல் - கந்தல் (?) கப்பரை - கர்ப்பர கொப்பரை - கப்பரை. கம் - க (நீர்) அம் - கம் = நீர். கம்பலம் - கம்பல கம்பலம் - கம்பளம் - கம்பளி. கமுகு - க்ரமுக கரு - கர்ப (g, bh) - இ.வே. குருத்தல் = தோன்றுதல். குரு - கரு - (கருப்பு) - கருப்பம். கரு = சூல், பீள், முட்டை, சேய், குட்டி. வடமொழியாளர் க்ரூ (விளி) என்றும் grabh = grah (பற்று) என்றும் மூலங் காட்டுவது பொருந்தாது. கருள் - க்ருஷ் fŸ - f® - fU - fUŸ = ïUŸ (ã§.), கருமை. கருடரு கண்டத்து......ifiyah®” (தேவா. 337 : 4) கருள் - க்ருஷ் - க்ருஷ்ண (இ.வே.) = கருமை. க்ருஷ்ணபக்ஷ = கரும்பக்கம், தேய்பிறை. க்ருஷ்ண ஸர்ப்ப = கரும்பாம்பு. கரை - க்ரு (g) கரைதல் = அழைத்தல், சொல்லுதல், விளம்புதல். கல்1 - கல் கல்லெனல் =ஆரவாரித்தல். கல் - கலி. கலித்தல் = xலித்தல். கலி = xலி(தொல்.832). கல்2 - கன் (kh) - இ.வே. கல்லுதல் = தோண்டுதல். கல் - கன் - கன்னம் = சுவரைத் துளைத்தல், சுவர்த்துளை, துளைக்குங்கோல். கன் (வ.) = தோண்டு. f‹d« (k.), f‹dK(bj.), கன்ன(க.) என்பன சுவர்த்துளை யைக் குறிக்கும். கலகம்-கலஹ கலத்தல் = பொருந்துதல், பொருந்திப் போர் செய்தல். ஒ.நோ : பொரு - போர். சமம் - சமர். கைகலத்தல் = சண்டையிடுதல். கல - கலாம் = போர், கலகம். கல - கலவு - கலகு - கலகம் = கூட்டச் சண்டை. கலகு - கலகி. கலகித்தல் = கலகஞ்செய்தல். வடமொழியில் மூலமில்லை. கலவம் - கலாப கல - கலவு. கலவுதல் = கலத்தல். கலவு - கலவம் = 1. கற்றையான மயில்தோகை. ``கலவம் விரித்த மஞ்ஞை'' (பொருந. 212). 2. மயில் (சினையாகு பெயர்) . கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532: 4) கலவு - கலாவு. கலாவுதல் = கலத்தல். கலவம் - கலாவம் = மயில் தோகை. கலிமயிற் கலாவம் (புறம். 146: 8) மயில் தென்னாட்டுக் குறிஞ்சிநிலத்திற்குரிய பறவை; குறிஞ்சித் தெய்வமாகிய முருகன் ஊர்தி. வடமொழியிற் கலா (சிறுபகுதி) + ஆப் (கொள், to obtain) என்று பிரித்து, பல பகுதிகளை ஒன்றுசேர்ப்பது கற்றை (“that which holds single parts together, a bundle”) என்று காரணம் கூறுவது, வட்டஞ்சுற்றி வலிந்தும் நலிந்தும் பொருள்கொள்ளுவதா யிருத்தல் காண்க. கலுழன் - கருட (ப) - இ. வே. கல் - கலுழ். கலுழ்தல் = கலத்தல். கலுழ் - கலுழன் = வெண்மையும் செம்மையும் கலந்த பருந்தினம். கலுழன்மேல் வந்து தோன்றினான் (கம்பரா. திருவவ. 13) வடமொழியார் க்ரு (g) என்பதை மூலமாகக் காட்டி, எல்லா வற்றையும் விழுங்குவது என்று பொருட்காரணங் கூறுவர். கலுழம் - கலுஷ கலுழ்தல் = கலங்குதல். கலுழ் = நீர்க்கலக்கம். கலுழ் தேறி (கலித். 31.) கலுழ் - கலுழி = கலங்கல் நீர் (திவா.). கலுழ் - கலுழம் - கலுடம் = கலங்கல் நீர். வடவர் காட்டும் கல் (துண்டு) என்னும் மூலம் பொருந்தாது. கல்லை - கல்ல (kh) கல் - கல்லை = தொன்னை (தொளையுள்ளது, குழிவுள்ளது). சருகிலை யிணைத்த கல்லை (பெரியபு. கண்ணப்ப. 118) கலுவம் - கல்வ, (kh) கல்ல (kh) கல் - கலுவம் - கல்வம் = மருந்தரைக்கும் சிற்றுரல். கல்லுதல் = தோண்டுதல், குழித்தல். கலை - கலா கல் - கலை. வடமொழியில் மூலம் இல்லை. கவளம் - கவல கவ்வு - கவள் - கவளம் = கவ்வும் அளவான உணவு. வடமொழியில் மூலமில்லை. கவுள் - கபோல கவ்வு - கவுள் = குறடுபோற் கவ்வும் அலகு, கன்னம். வடவர் காட்டும் க்ரப் - கப் (இரங்கு) என்னும் மூலம் இம்மியும் பொருந்தாது. கவான் - கவீனீ, fåÅfh(g) - அ. வே. கவை - கவான் = கவைத்த தொடைச்சந்து, அதுபோன்ற மலைச்சந்து. வடமொழியில் மூலமில்லை. கழஞ்சு - கலஞ்ச கழங்கு - கழஞ்சு = ஒரு நிறை. கழங்கு = கழற்சிக்காய். வடமொழியில் மூலம் இல்லை. கள்வன் - கலம கள்ளுதல் = திருடுதல். கள் - களவு - கள்வு - கள்வன். களங்கம் - கலங்கம் கல் - கள் = கருமை. கள் - களம் = கருமை. களம் - களங்கு = கருமை, குற்றம். களங்கு - களங்கம் = கருமை, கறை, மறு, குற்றம். களங்கன் = மறுவுள்ள மதி. மா. வி. அ. மூலம் ஐயுறவிற்கிடமானது (“etym. doubtful”) என்று. குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. களம்1-கல (kh) - இ.வே. கள்ளுதல் = கூடுதல். கள் - களம் = உழவர் கூடி வேலை செய்யுமிடம். களம் - களமர் = உழவர். ஏர்க்களம், போர்க்களம் (போரடிக்கு மிடம்) என்னும் வழக்குகளை நோக்குக. களம்-களன்-கழனி = வயல். களம்2 - கள (g) கள்ளுதல் = கலத்தல், பொருந்துதல். கள் - களம் = தலையை உடலுடன் பொருத்தும் கழுத்து, தொண்டை. பாடுகள மகளிரும் (சிலப். 6 : 157) களம் - (களத்து) - கழுத்து. வடவர் கல் என்னும் செயற்கையடியை க்ரூ (விழுங்கு) என்னும் சொல்லின் திரிபாகக் கொண்டு, கல என்பதற்கு விழுங்கும் உறுப்பு என்று பொருட்காரணங் காட்டுவர். களி (ம.) - கேல் = விளையாடு. களித்தல் = விளையாடுதல். களி = விளையாட்டு. களி - கீல் (பிரா.) - கேல். களை - க்லம் = களை களைத்தல் =அலுத்தல், அயர்தல், இளைத்தல். க்லம் = ச்ரம் என்று பொருந்தாவாறு பொருத்திக் காட்டுவர் வடமொழியாளர். கன்னம் - கர்ண கல் - கன் = துளை. கன் - கன்னம் = 1. துளையுள்ள காது. 2. யானைச் செவி (திவா.). 3. காதையடுத்த அலகு பக்கம். ம. கன்னம், க. கன்ன. வடவர் காட்டும் க்ருத், க்ரு என்னும் மூலங்கள் பொருந்தா. க்ருத் = 1. செய்துகொண்டு, 2. சிதைவு, 3. திருகு, சுற்று. க்ரு = 1. கொட்டு, எறி, சிதறு. 2. சிதை, 3. அறி, அறிவி. கன்னி - கன்யா (இ. வே.) கன்னுதல் = பழுத்தல். கன் - கன்னி - கனி = பழுத்தது, பழம். கன்னி = பழுத்தவள், பூப்படைந்தவள். Mature என்னும் ஆங்கிலச் சொல்லை நோக்குக. கன்னி - கன்னிகை = பூப்படைந்த இளைஞை. கை என்பது இங்குச் சிறுமைப்பொருட் பின்னொட்டு. கன்னிகை-கன்யகா வடவர் காட்டும் கன் என்னும் மூலம் பலபொரு ளொருசொல்லும் பொருந்தாப் பொருட்சொல்லும் ஆகும். கனம் - கன (gh) கல் - கன் = 1. கல்(சூடா.). 2. உறுதிப்பாடு (ஈடு, 5 : 8 : 3). கன் -கன. கனத்தல் = பளுவாதல், மிகுதியாதல், பருத்தல், குரல் தடித்தல், பெருமையுறுதல். கன - கனம் = பளு, பருமன், பெருமை, செறிவு, திரட்சி உறுதி, மிகுதி, கூட்டம், மும்மான வடிவு. பொதுவாகக் கனத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வது கல்லே. கல்லைப்போற் கனக்கிறது என்பது உலக வழக்கு. பண்டை நாளிற் கனத்த எடைக்கெல்லாம் கல்லையே பயன்படுத்தியதால், படிக்கல் என்னும் வழக்கெழுந்தது. இங்கிலாந்திலும் அவ் வழக்கமிருந்ததை stone (14 பவுண்டு) என்னும் சொல் உணர்த்தும். வடமொழியில் கனத்தல் என்னும் வினையில்லை. மா. வி. அகர முதலி காட்டியிருக்கும் ஹன் (கொல்) என்னும் மூலம், வடமொழியிற் கன என்னும் சொற்குள்ள பல்வேறு பொருள்களுள் ஒன்றற்குத்தான் ஏற்கும். கா - கா (இ. வே.) கவ - கவர்தல் = விரும்புதல். கவர்வுவிருப் பாகும் (தொல்.845) கவ - கா- காதல் = விருப்பம், அன்பு. கா (வ.) = விரும்பு, அவாவு, அன்புகூர். வடமொழியார் கன் என்பதை மூலமாகக் காட்டுவர். காம் - கம் - கன் என்று திரிந்திருக்கலாம். காக்கை - காக்க காகா - காக்கா - காக்கை. காகா - காகம். ஆரியம் தோன்றுமுன்பே காக்கை என்னும் சொல் குமரிக் கண்டத்தில் தோன்றிவிட்டது. காஞ்சி - காஞ்சீ காஞ்சி = ஆற்றுப் பூவரசு, அம் மரம் சிறந்த பழந்தொண்டை நாட்டுத் தலைநகர். காஞ்சி - கஞ்சி - கச்சி. காஞ்சிபுரம் = கோபுரமுள்ள காஞ்சிநகர். புரம் என்பது பண்டைத் தமிழகத்திற் கோபுரமுள்ள நகர்ப் பெயரீறு. காஞ்சி2 - காஞ்சீ காஞ்சி = எழுகோவையுள்ள மாதர் அரைப்பட்டிகை. எண்கோவை மேகலை காஞ்சி யெழுகோவை பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள் பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு விரிசிகை யென்றுணரற் பாற்று என்பது பழைய மேற்கோள் வெண்பா. ஐவகை அரைப்பட்டிப் பெயர்களுள் காஞ்சி, மேகலை, கலாபம் என்னும் மூன்றும் வடநூலுட் புகுந்துள்ளன. அதனால் அவை வடசொல்லென்று காட்டப்படுகின்றன. ஆயின், அங்குச் சிறப்புப் பொருளை யிழந்து அரைப்பட்டிகை என்னும் பொதுப் பொருளே தருகின்றன. காண் - ஜ்ஞா (இ. வே.) தமிழ் பழைய ஆங்கிலம் இலத்தீனம் கிரேக்கம் வேத ஆரியம் கண் கான், கன், கென் ¡ndh(g) ¡ndh(g) ஜ்ஞா கொன், க்னோ இவ் வொரு சொல்லே, தமிழ் எங்ஙனம் ஆரியத்திற்கு மூல மென்றும், வேத ஆரியம் எவ்வளவு திரிந்துள்ளதென்றும், காட்டப் போதியதாம். காண்டம் - காண்ட (வே.) கண்டு - கண்டம் = பெருந்துண்டு, பெருநிலப் பிரிவு. கண்டம் - காண்டம் = நூற்பெரும் பிரிவு. கண்டம் என்னும் சொல்லை hkan|d|a என்றும், காண்டம் என்னும் சொல்லை ka$n|d|a என்றும், முதலெழுத்தை வேறுபடுத்தி வடமொழியாளர் மயக்கியிருக்கின்றனர். காந்தி - காந்தி (nt) காள் - காய் - (காய்ந்து) - காந்து. காந்துதல் = எரிதல், எரிதல்போல் நோதல், ஒளிவிடுதல், மிகச் சுடுதல், சோறு முதலியன பற்றிக் கருகிப்போதல், எரிதல்போல் உறைத்தல், மிளகாய் போன்ற காரமான பொருள் உடம்பிற்பட்டு எரிச்சலெடுத்தல். காந்து -காந்தி = கடுவெப்பம், ஒளி. காமம் - காம (இ. வே.) கவ - கவர்வு = விருப்பு. கவ - கா - காதல். கா + அம் = காம் = விருப்பம், காமம். காம் + உறு = காமுறு. காமுறுதல் = 1. விரும்புதல். காமுறுவர் கற்றறிந்தார் (குறள்.399). 2. வேண்டிக்கொள்ளுதல். கனைகதிர்க் கனலியைக் காமுறுத லியைவதோ (கலித்.16) ஒ.நோ: வேள்-வேண்டு. 3. புணர்ச்சி விரும்புதல். காமுற்றா ரேறு மடல் (குறள். 1133) காம் + மரு (மருவு) = காமரு = விருப்பம் பொருந்துகின்ற, விரும்பத் தக்க. காமரு குவளைக் கழுநீர் மாமலர் (சிலப். 4 : 40) காமரு - காமர் = 1. விரும்பத்தக்க. காமர் கடும்புனல் (கலித்.39), அழகிய. காமர் வண்ண மார்பில் (புறம். 1 : 1) காமரு என்பதைக் காம்வரு என்று பிரிப்பதினும், காம் மரு என்று பிரிப்பதே சிறந்ததாகும். காம் - காமி = காமமுள் ளவன் - ள். காமித்தல் = விரும்புதல், காமங்கொள்ளுதல். காம் + அம் = காமம் = 1. விருப்பம். காமம் வெகுளி மயக்கம் (குறள்.360) 2.ஓரம் (பக்கபாதகம்) காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறுந்.2). 3.கணவன் மனைவியர் காதல், காமத்துப்பால். 4.புணர்ச்சி விருப்பம். ``காமஞ் சாலா இளமையோள்"(தொல்.996). 5.புணர்ச்சியின்பம். காமத்திற் செம்பாக மன்று (குறள். 1092). வடவர் காட்டும் கம் என்னும் மூலம் காம் என்பதன் குறுக்கமே. காய் - காச் காள் - காளம் = சுடுகை, காளவனம் = சுடுகாடு. காளவாய் = சுண்ணாம்புச் சுள்ளை. காள் - காய். காய்தல் = எரிதல், சுடுதல், ஒளிவீசுதல், உலை காய்தல், நிலாக்காய்தல் என்னும் வழக்குகளை நோக்குக. காய் - காய்ச்சு. காய்ச்சுதல் = சுடவைத்தல், சமைத்தல். காய் - காச் (வ.). வடசொல் ப்ர என்னும் முன்னொட்டொடு கூடிப் ப்ரகாச் என்று வழங்குவதே பெரும்பான்மை. ய - ச, போலி. காயம்-ஆகாச (வே.) கள் - களம் - கயம் = கருமை, கரிக்குருவி. கயம் - கசம் = கருமை. இருட்டுக் கசமா யிருக்கிறது என்பது உலக வழக்கு. கயவாய் = கரிக்குருவி, எருமை. கயம் - காயம் = 1. கரிய காயா மலர். காயா மலர்நிறவா (திவ். பெரியாழ். 1 : 5 : 6) காயம் - காயா. காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே (கூர்மபு. இராமனவதா.) 2. கரிய வானம். விண்ணென வரூஉங் காயப்பெயர் (தொல். எழுத்து. 305) காயம் - காசம் = கரிய வானம். காசமா யினவெல்லாங் கரந்து (கம்பரா. மருத்து. 40). காயா - காசா = 1. காயா மலர். காசா கடன்மழை யனையானை (கம்பரா. கங்கை. 53). 2. எருமை (பிங்.). காசா - காசை = காயா மலர். காசைக் கருங்குழலார் (பதினொ. ஆளு. திருவுலா, 180). காசா - காசர காசா = எருமை. மேற்காண்க. காய் (ஒளிவீசு) என்னும் தென்சொல்லின் திரிபான காச் என்னும் வடசொல்லொடு ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆ-காச என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிட மாயிருப்பது என்று பொருட் காரணங் கூறி, வானத்தைக் குறிப்பர் வடவர். முன்னொட்டிற்குப் பொருளேயில்லை. காரம் - க்ஷார கடு - கடி - கரி - கார். கார்த்தல் = உறைத்தல் (பிங்.). கார்ப்பு = உறைப்பு (சூடா.). கார் - காரம் = உறைப்பு (சூடா.). கார்-காரம் = உறைப்பு, எரிச்சல், பிள்ளை பெற்ற பெண்டிர்க்குக் கொடுக்குங் காரமருந்து, கடுஞ்சுவை, எரிக்கும் பொருள், காரவுப்பு, சாம்பலுப்பு, சலவைக்காரம், சாயக்காரம், வெண்காரம், சீனிக்காரம், அக்கரகாரம், கோளக நஞ்சு, அழிவு, சினம். காரிகை - காரிகா கரு - கார் = 1. கருமை. 2. கரியமுகில். 3. மழை. கார்பெற்ற புலமேபோல் (கலித். 38). 4. நீர் (பிங்.). 5. .அழகு (பிங்.). நீர்வளத்தினாலேயே கண்ணிற்கினிய இயற்கைக் காட்சிகள் தோன்றுவதால், நீரைக் குறிக்கும் சொற்கட்கு அழகுபொருள் தோன்றிற்று. ஒ.நோ : அம் = நீர், அழகு. கார் - காரிகை = 1. அழகு. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு (குறள். 1272). 2.அணி. கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள். 777). 3. பெண். காலை யெய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப். 11:67). வடவர் காட்டும் பொருந்தாப் பொருட்காரணம் வருமாறு: க்ரு = செய். காரக (ஆ.பா.) = செய்பவன். காரிகா (பெ.பா.) செய்பவள், நடிப்பவள். மக்களினத்தில் அழகிற்குச் சிறந்தது பெண்பாலாதலின், அழகின் பெயர் பெண்ணிற் காயிற்று. காலம் - கால கோல் - கால் = கம்பு, தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு, கால்போன்ற வண்டிச் சக்கரம், கால்போல் நீண்டு செல்லும் நீர்ப்போக்கு, நீண்டியங்கும் காற்று, நீண்டு தொடரும் காலம். கால் - காலம். கால் - காலை. அம்மீறு பெற்ற பின்னை வடிவினின்றே வடசொல் திரிந் துள்ளது. கால் என்னும் முன்னை வடிவம் வடமொழியிலில்லை. கல் என்னும் செயற்கை முதனிலைக்குக் கணி (calculate) அல்லது எண் (count or enumerate) என்று பொருளூட்டி, அதை மூலமாக வடவர் காட்டுவது பொருந்தாமை காண்க. பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் (தொல். 108) எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலை (தொல். 83) காலந் தாமே மூன்றென மொழிப (தொல். 684) என்று இலக்கிய வழக்கிலும், வந்தக்கால், விடிகாலை, மழைக்காலம் என்று உலக வழக்கிலும், மூலவடிவுச் சொல்லும் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கி வருதல் காண்க. தொல்காப்பியம் வழிநூலாதலின், அதிலுள்ள தென்சொற்க ளெல்லாம் தலைக்கழக முதனூலைச் சேர்ந்தவை என அறிக. வந்தால் என்னும் நிலைப்பாட்டு அல்லது ஐயுறவு வினை யெச்சத்தை வந்தக்கால் என்பது மேலைவடார்க்காட்டு வழக்கு. இது ஏனை வினைகட்கும் ஒக்கும். மா. வி. அகரமுதலி, கல் என்னும் வடமொழிச் செயற்கை மூலத்தோடு calculate என்னும் ஆங்கிலச் சொல்லை ஒப்புநோக்கும். இவ் வாங்கிலச் சொல் கல் என்னும் தமிழ்ப் பெயர்ச்சொல்லினின்று திரிந்ததாகும். E “calculate...f. LL calculare (calcullus)” E “calculus....l, = small stone (-ULE) used in reckoning on abacus” என்று ஆக்கசுப் போர்டு சிற்றகர முதலி கூறுதல் காண்க. cal = கல். culus = குழவு (இளையது, சிறியது). குட்டி என்னும் இளமைப் பெயர் சிறு பொருளையுங் குறித்தல் காண்க. காலன் - கால காலன் = காலத்தை முடிவு செய்யும் அல்லது காலமுடிவில் வருங் கூற்றுவன், கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப (புறம். 240: 5). காவிரி (காவேரி) - காவேரி காவிரி - காவேரி. இவ் விருவடிவுள் எது முந்தியதேனும், இரண்டும் தமிழக ஆற்றுப் பெயராதலானும் இருவகை வழக்கிலும் தொன்றுதொட்டு வழங்கி வருதலானும், தமிழ்ப் பெயராகவே யிருத்தல் வேண்டும். காளம் - கால கல் - கஃறு = கறுமை, கருமைக் குறிப்பு. ``கஃறென்னுங் கல்லத ரத்தம்'' (தொல். எழுத்து. 40, உரை) கல் - கால் = கருமை. ``கால்தோய் மேனிக் கண்டகர் (கம்பரா. வானர. 21) கல் - கள் - களம். கால் - காள் - காளம் = கருமை. காள் - காழ் - காழகம் = கருமை. கள் -காள் - காளம் = கருமை. காளம்2 - காஹல எக்களித்தல் = கெந்தளித்தல், பெருமகிழ்ச்சி கொள்ளுதல். எக்களி - எக்காளம் = கெந்தளிப்பு. கெந்தளிப்பாய் ஊதும் கொம்பு அல்லது குழற்கருவி. எக்காளம் - காளம் - காளகம். காளகம் - காலக காளம் - காளகம் = கருமை. காளக வுடையினன்" (சீவக. 320) காளகம் - காழகம் = கருமை. காழக மூட்டப் பட்ட (சீவக. 1230) காளி-காலீ கள் - காள் - காளி = கரியவள், பேய்த்தலைவி, பாலைநிலத் தெய்வம். கருப்பி, கருப்பாய், மாரி என்னும் உலக வழக்கையும் மாயோள் என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக. மால் - (மார்) - மாரி = கருமுகில், மழை, கரியவள் (காளி). மரணத்தை உண்டாக்குபவள் என்று பொருள் கூறி மாரி என்பதை வடசொல்லாகக் காட்டுவது பொருந்தாது. மா = கருமை. மா-மாயோள் = கரியவள் (காளி). பண்டைத் தமிழகத்திற் போர் பெரும்பாலும் பாலைநிலத்தில் நிகழ்ந்தமையால், காளி போர்த் தெய்வமும் வெற்றித் தெய்வமும் (கொற்றவை) ஆனாள். பின்பு தாயாகக் கருதப் பெற்றதனால் அம்மையெனப் பெயர் பெற்றாள். வேனிற்காலத்திற்குரிய கொப்புளநோய் காளியால் வருவதாகக் கருதப்பட்டதினால். அது அம்மை யெனப்பட்டது. போர் வெற்றி நோக்கியும் அம்மைநோய்பற்றியுங் காளி நாள டைவில் ஐந்திணைக்கும் பொதுத் தெய்வமானாள். ஆரியர் வருமுன்பு தமிழர் பனிமலைவரை சென்று பரவியிருந்ததினால், வங்கத்திற் காளிக்கோட்டம் ஏற்பட்டது. காளி ஆரியத் தெய்வ மன்மையின் வேதத்தில் இடம்பெற வில்லை. ஆரியர் சிந்துவெளியினின்று கிழக்கு நோக்கிச் சென்று வங்கத்தையடைந்த பின்னரே, காளிவணக்கத்தை மேற்கொண்டனர். குமரிக்கண்டத்தில் தோன்றிய, குமரி, கன்னி என்னும் மலைப் பெயரும் ஆற்றுப் பெயரும் காளியின் பெயர்களே. கயற்கண்ணியை அங்கயற்கண்ணி என்றதுபோல், காளியை யும் பிற்காலத்தில் அங்காளி, அங்காளம்மை என்றழைத்தனர். அங்கம்மா என்பது அங்காளம்மை என்பதன் சிதைவாகும். கானம்-கானன கடு - காடு - கா - கான் - கானம், கானகம். கான் - காடு (திவா.) கானம் = காடு. கானக் கோழியும் (சிலப். 10: 116). கானகம் = 1. காடு. கானகத்தே நடக்குந் திருவடி (திருவாச.40:8) 2. மலங்காடு. கானக நாடன் (ஐங். 217). வடவர் கன் என்னும் பொருந்தாச் சொல்லை மூலமாகக் காட்டுவதை மா. வி. அகரமுதலி ஒப்புக்கொள்ளவில்லை. கிண்கிணி - கிங்கிணி கிண்கிண் - கிண்கிணி. தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந். 148) கிண்கிணி - கிங்கிணி = 1. பாத சதங்கை (பிங்.). 2. சதங்கை யரைக்கோவை. மாணிக்கக் கிங்கிணி தன்னரை யாட (திவ். பெரியாழ்.1:8:2) கிட்டம் - கிட்ட கிட்டு - கிட்டி - கிட்டம். கிட்டித்தல் = இறுக்குதல். கிட்டம் = இறுகிய கட்டி, இறுகிய வண்டல், அதுபோன்ற இருப்புத்துரு. கிழம் - ஜரஸ் (இ. வே.) தமிழ் கிரேக்கம் வேதமொழி கிழம் கெரோன் (g) ஜரஸ் வடவர் மூலமாகக் காட்டும் ஜீர், ஜீரு என்பவையெல்லாம் கிழ என்பதன் திரிபே. குக்கல் - குக்குர குள் - (குட்கு) - குக்கு. குக்குதல் = குறுகுதல், ஒடுங்குதல், சிறுத்தல். குக்கு - குக்கல் = சிறுத்த நாய், குள்ளநாய். வடமொழியில் மூலமில்லாதிருப்பதுடன், குள்ளநாய் என்னும் சிறப்புப் பொருளிழந்து நாயென்னும் பொதுப் பொருளே வடசொல் தருகின்றது. குகை - குஹா (g,h) குழை - குகை. ஒ. நோ: முழை-முகை. வ. மூலம் குஹ் (மறைத்தல்). குத்து - குச்ச (g) குத்து - கொத்து. குத்து - குச்சு - குச்சம். குத்ஸ = குச்ச (g) = குத்துச்செடி, கொத்து. வடவர் காட்டும் குத் (gudh) என்னும் மூலம் சுற்றுதல், மூடுதல் என்றே பொருள் தருதலாற் பொருந்தாது. குச்சு - கூர்ச்ச குச்சு = வண்ண ஓவியன் தூரிகை (painter’s brush), பாவாற்றி. குட்டம் - குஷ்ட குள் - குட்டு - குட்டம் = குட்டை, குட்டி. குட்டம் = 1. சீர் குறைந்து குறுகிய அடி. குட்டமும் நேரடிக் கொட்டின என்ப (தொல். 1372) 2. விரல்களும் மூக்கும் அழுகிக் குட்டையாகும் நோய். குட்டநோய் (சீவக. 253) வடவர் கு + ஸ்த என்று பிரித்து, குறைந்து நிற்பது என்று பொருட் காரணங் கூறுவர். அதிலும் கு என்பது தென்சொல்லே. குள்-கு. ஒ.நோ: நல் - ந, அல் - அ. குட்டை = வெண்குட்டநோய். குட - குட் = வளை (to bend) குட = வளைந்த. குடம் = வளைவு. குடங்கர் - குடங்கக (t|) = குடிசை. குடம் - குடங்கு - குடங்கர் = 1. குடம். 2. வளைந்த அல்லது வட்டமான குடிசை. குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று (குறள். 890) குடங்குதல் = வளைதல். குடம்1 - குட (t|) குடம் = நீர்க்குடம். வ. குட = நீர்க்குடம். குடம் - வ. fl(gh, t |). குடம்2 - குட (g) குளம் - குடம் = வெல்ல வுருண்டை. வ. குட (g) = வெல்லம். குடல் - குத (g) - வே. குழல் - குடல் = குழல்போன்ற உறுப்பு. வ. குத - குடல். குடி1 - Fo(t) = வளைவு. குட - குடி = வளைவு. வ. குடி - குடீ = வளைவு. குடி2 - குடி (t|). குடி = இல், குடியிருப்பு. குடியிருத்தல் = இல்லிருத்தல், நிலை யாகத் தங்குதல். குடிக்கூலி = வீட்டுவாடகை. குடியானவன் = இல்வாழ்வான், உழவன். குடிகள் = நாட்டிற் குடியிருக்கும் மக்கள். வ. குடி = குடிசை, கொட்டகை, கூடம், கடை. குடீ = குடிசை. கொட்டகை, வீடு, கூடம், கடை. முதற்காலத்தில் வீடுகளெல்லாம் வட்டமாய்க் கட்டப் பட்டிருந்ததால், வீடு குடியெனப்பட்டது. ஒ.நோ : வளவு = வீடு. வளவிற் கமைந்த வாயிற் றாகி (பெருங்.இலாவாண. 3 : 77) குடி3 - குட் (d|) = உண். குடிசை - குடீகா (t|) = சிறுவீடு. குடி - குடிகை = சிறுவீடு, சிறுகோயில், இலைக்குடில். கை என்பது ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ : கன்னி - கன்னிகை. குடிகை - குடிசை - குடிஞை. தூசக் குடிஞையும்" (பெருங், இலாவாண. 12 : 43) வடவர் கை என்பதைக் கா என்று திரித்திருக்கின்றனர். கைக்குள் அடக்கமானது அல்லது கையிலிருப்பது சிறிதா யிருக்கு மாதலால், கை என்னும் சினைப்பெயர் சிறுமைப்பொருட் பின்னொட் டாயிற்று. ஒ.நோ : கைக்குட்டை, கைக்குடை, கைத்தடி, கைப்பிள்ளை, கைவாள். குடில் - குடீர (t|) = குடிசை குடி + இல் = குடில் = குடிசையினுஞ் சிறிய இல், குற்றில் (குச்சில்). ஆட்டுக்குடில் என்னும் வழக்கை நோக்குக. இங்கு இல் என்பது ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ : தொட்டி - தொட்டில், புட்டி - புட்டில். குடிலம் - குடில (t|) = வளைவு. குடி - குடில் - குடிலம் = வளைவு. கூசும் நுதலும் புருவமுமே குடில மாகி யிருப்பாரை (தனிப் பாடல்). குடிலை - குடிலா (t) குடி - குடில் - குடிலை = 1 .ஓங்காரம். 2. தூய மாயை. இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க. குடும்பம் - குடும்ப (t) குடி = வீடு. வீட்டிலிருக்கும் மனைவி, மனைவியும் மக்களும் சேர்ந்த கூட்டம், கூட்டுக் குடும்பம், குலம், குலத்தார் குடியிருப்பு, ஊர், கொடிவழி. ஒ.நோ : மனை = வீடு, மனைவி. இல் = வீடு, மனைவி, குடும்பம், சரவடி, ஊர். மனைவியைக் குடி என்பது உலக வழக்கு. எ. டு : இருகுடி = இருமனைவியர். குடி = (குடிம்பு) - குடும்பு. ஒ.நோ : குழி - (குழிம்பு) - குழும்பு = குழி. ஆழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர (மதுரைக். 273) இகரம் உகரமாயது உயிரிசைவு மாற்றம் (Harmonic sequenec of vowels). குடும்பு = குடும்பம், உறவினர் கூட்டம், ஊர்ப்பிரிவு (ward). குடும்பன் = குடும்பத்தலைவன், ஊர்த்தலைவன், பள்ளர் தலைவன். குடும்பு - குடும்பம் = 1. மனைவி. பாகத்தார் குடும்ப நீக்கி (சீவக. 1437) 2. கணவன் மனைவி மக்கள் கூட்டம். குடும்பத்தைக் குற்ற மறைப்பான் (குறள். 1029) 3. உறவினர் கூட்டம். குடும்பந் தாங்குங் குடிப்பிறந் தாரினே (கம்பரா. சேதுப. 53) காய்க் குலையைக் குறிக்கும் குடும்பு என்னுஞ் சொல் குழும்பு என்பதன் திரிபாகும். குடும்பு என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. குடும்பி - குடும்பின் (t) குடும்பம் - குடும்பி = பெருங் குடும்பத்தலைவன். குண்டம் - குண்ட = குழி குள் - குண்டு = குழி, சிறுகுட்டை. குண்டுங் குழியும் என்பது உலக வழக்கு. குண்டு - குண்டம் = குழி, குட்டை, பானை, குடுவை. வடமொழியிற் குண்டு என்னும் வடிவமும் இல்லை; குள் என்னும் மூலமும் இல்லை. குண்டலம் - குண்டல குள் - குண்டு = உருண்டை. குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம், வானவட்டம், ஆடவர் காது வளையம். குண்டல மொருபுடை குலாவி வில்லிட (சீவக. 1009) குண்டலி - குண்டலின் குண்டலம் - குண்டலி = மூல நிலைக்கள வட்டம், தூய மாயை. இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க. குண்டிகை - குண்டிகா = துறவியின் Ú®¡fy«. குண்டு-குண்டிகை = 1. குண்டான நீர்க்கலம். நான்முகன் குண்டிகை நீர்பெய்து (திவ். இயற். நான். 9). 2. குடுக்கை. பருத்திக் குண்டிகை (நன். 31). குண்டிகை - குடிகை = நீர்க்கலம். அரும்புனற் குடிகை மீது (கந்தபு. காவிரி. 49) குடிகை - குடுக்கை - குடுவை. குணம் - குண (g) கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல். கொள் - கொள்கை = இயல்பு. கொம்பினின்று நுடங்குறு கொள்கையார் (கம்பரா. கிளை. 10) கொள் - கோள் = தன்மை. யாக்கைக்கோ ளெண்ணார் (நாலடி.18) கொள் - (கொண்) - (கொணம்) - குணம் = கொண்ட தன்மை, தன்மை. வடமொழியிற் கிரஹ் (பற்று) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். கிரஹ் என்னும் சொல்லினும் கொள் என்னும் சொல்லே வடிவிலும் பொருளிலும் பொருத்தமா யிருத்தலையும், கொள் என்பதும் பற்று என்று பொருள்படுதலையும் நோக்குக. குத்து - குட் (t|t|) - வே. குட் = குத்து, to pound. குத்து - சத் (ஸ) - உட்கார். குத்தவை = புட்டத்தை நிலத்திற் குத்தும்படி வை, குந்தியிரு (நெல்லை வழக்கு). குண்டிகுத்து = குந்து (நாகை வழக்கு). குத்து - குந்து, to squat. குதி - கூர்த் = குதி. குந்தம் - குந்த (nt) = வேல், ஈட்டி. குந்து - குந்து - குந்தம் = 1.குத்துக்கோல். பூந்தலைக் குந்தங் குத்தி (முல்லைப். 41). 2. வேல் குந்த மலியும் புரவியான் (பு. வெ. 4 : 7). 3. எறிவேல் (javelin) வைவா ளிருஞ்சிலை குந்தம் (சீவக. 1678). குந்தாலம் - குத்தால (dd) குந்தாலம் = குத்தித் தோண்டுங் கருவிவகை. குந்தாலம் - குந்தாலி. குந்தாலிக்கும் பாரை வலிது (திருமந். 2909). ம. குந்தாலி. குந்தாலம் - கூந்தாலம். குந்தாலி - கூந்தாலி. குப்பாயம் - கூர்ப்பாஸ = கவசம், சட்டை. குப்பி = குடுவை, மாட்டுக்கொம்புப் பூண். குப்பா = தூரிவலையிற் சேர்த்துள்ள பை. குப்பாயம் = சட்டை. வெங்க ணோக்கிற் குப்பாய மிலேச்சனை (சீவக. 431). குப்பாயம் - குப்பாசம் = 1. மெய்ச்சட்டை. குப்பாச மிட்டுக் குறுக்கே கவசமிட்டு (தமிழ்நா. 192). 2. பாம்புச் சட்டை (சி. சி. பாயி. ப.42). கும்பம் - கும்ப (bh) - இ.வே. கும்முதல் = குவிதல். கும் - குமி - குமிழ் - குமிழி. கும் - கும்பு - கூம்பு. கூம்புதல் - குவிதல். கும்புதல் = குவிதல். கும்பு - கும்பம் = குடம், தேர் முடி, யானைத் தலைக் குவவு, கட்டடக் குவிமுகடு (dome). கும்பச்சுரை = குவிந்த சுரைக்காய். கும்பம் - கும்பா = கீழ்நோக்கிக் குவிந்த உண்கலம். கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்தல். வடவர் காட்டும் கும்ப் (b, bh) என்னும் மூலம் கும்பு என்பதன் சிதைவே. ஆயின், அவர் கொள்ளும் பொருள் கவிதல்; தென்னவர் கொள்ளும் பொருள் குவிதல். முன்னது கீழ்நோக்கியதென்றும், பின்னது மேல்நோக்கியதென்றும் வேறுபாடறிக. குமரன் - குமார (இ.வே.) கும் - கும்மல் = கும்பல், கூடுதல். கும்மலி = பருத்தவள். கும் - கொம் - கொம்மை = 1.பருமை. (பெருங். உஞ்சைக்.40:210). 2. திரட்சி (சூடா.). 3. இளமை (திவா.). கும் - குமர் = 1. திரண்ட இளைஞை, கன்னி. 2. கன்னிமை. குமரிருக்குஞ் சசிபோல்வாள் (குற்றா. தல. தருமசாமி. 47). 3. .அழியாமை. குமருறப் பிணித்த (பாரத. இந்திரப்.32). மணப்பருவத்தில் ஆணும் பெண்ணும் திரள்வது இயல்பு. ஒ.நோ : விடை - விடலை = இளைஞன். விடலி = இளைஞை. விடை = இள ஆண்விலங்கு, பறவையின் திரண்ட இளமை. விடைத்தல் = பருத்தல். குமர் - குமரன் = இளைஞன், முருகன். குமர் - குமரி = இளைஞை. கன்னியாகக் கருதப்பெறும் காளி. ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, குமரிக் கண்டமாகிய பழம்பாண்டி நாட்டில் குமரி (காளி) பாலைநிலத் தெய்வமும் வெற்றித் தெய்வமும் குரு (அம்மை) நோய்த் தெய்வமுமா யிருந்தாள். அவள் பெயரால் ஒரு மலைத்தொடரும் ஒரு பேராறு மிருந்தன. வடவர் குமர என்னும் வடிவைக் குமார என்று நீட்டி அதற்கு மகன்மைப் பொருள் சேர்த்ததுடன், கு+மார என்று சொற்சிதைத்து, எளிதாயிறப்பவன் (easily dying) என்று பொருந்தாப் பொருட் காரணமுங் காட்டுவாராயினர். இனி, உணாதி சூத்திரம் கம் (விரும்பு, காமி) என்பதை மூலமாகக் காட்டும். குமரன், குமரி என்னும் இரண்டும் தூய தென்சொற் களாதலின், மணமாகாத இளைஞன் பெயர்க்குமுன் குமரன் (Master) என்றும், மணமாகாத பெண்ணின் பெயர்க்குமுன் குமரி (Miss) என்றுமே, அடை கொடுத்தல் வேண்டும். செல்வன், செல்வி என்பன மணமக்கள் பெயர்க்கே பொருத்தமானவை. மகன், மகள் என்று முறையே பொருள்தரும் குமார(ன்), குமாரீ என்னும் வடிவுகளே வடசொற்கள். எளிதாயிறப்பது குழவிப்பருவத்திலும் கிழப்பருவத்திலு மாதலின். கட்டிளங்காளைப் பருவத்தைக் குறிக்குஞ் சொற்கு அப் பொருட் காரணம் பொருந்தாது. காமுறுவதும் காளைப்பருவமே. ஆயின், கும் என்னும் சொற்கும் கம் என்னுஞ் சொற்கும் தொடர்பில்லை. கம் என்பது காம் என்பதன் குறுக்கம். கு + மார என்னும் தவற்றுப் பிரிப்புச் சொற்களும் தென்சொற் றிரிபே. குள் - கு. மடி - மரி - ம்ரு - மார. குமுதம் - குமுத (அ.வே.) கும்முதல் = குவிதல். கும் - குமுதம் = கதிரவனைக் கண்டு குவிவதாகச் சொல்லப்படும் நீர்ப்பூ. கு + முத என்று பகுத்து, என்ன மகிழ்ச்சியுறுத்துவது (exciting what joy') என்று வடவர் பொருட் காரணங் காட்டுவது, எத்துணை வியப்பானது! கு என்பது குதஸ் (எங்கிருந்து), குத்ர (எங்கு), குவித், குஹ என்னும் வடமொழி வினாச் சொற்களின் அடியாகக் கொள்ளப் பட்டுள்ளது. முத் (வ.) = மகிழ்ச்சி. குயில் - கோகில கூ (கூவு) - (கூயில்) - குயில். ம. குயில், க. குகில், தெ. குக்கில், மரா. கோயீல, வ. கோகில. குரு1 -குருத் (dh) - இ.வே. உருத்தல் = பெருஞ்சினங் கொள்ளுதல். உரு - குரு. குருத்தல் = சினத்தல். குரு = வெப்பக் கொப்புளம். குரு2 - க்ரு (gh) = எரி, ஒளிர். குரு = ஒளி. குருமணித் தாலி (தொல். 303, உரை). குருவுங் கெழுவும் நிறனா கும்மே (தொல். 303) குரு3 - குரு (g) குரு = 1. பருமன். 2. பெருமை. குருமை யெய்திய குணநிலை (சீவக.2748). 3. கனம். பசுமட் குரூஉத்திரள் போல (புறம். 32). 4. தந்தை. 5. ஆசிரியன். 6. குரவன், அரசன். குருக்கள் = பிராமணரல்லாத மரவூண் வேளாளக் குரவர். குரு = குருசில் = தலைவன். போர்மிகு குருசில் (பதிற். 31 : 36). குருசில் - குரிசில் = தலைவன். (திருமுருகு. 276). குரு - குரவன். இருமுது குரவர் = பெற்றோர். ஐங்குரவர் = தந்தை, தாய், தமையன், ஆசிரியன், அரசன் ஆகியோர். குரவன் - Futà(g) குரு - குரை = பெருமை. பருமையும் கனமுமே வேதத்திற் கொள்ளப்பட்ட பொருள்கள். பிறவெல்லாம் பிந்தினவே. குருந்தம் - குருவிந்த = மாணிக்க வகை குரு = சிந்துரம். குருவெறும்பு = செவ்வெறும்பு. குரு - குருதி = அரத்தம், சிவப்பு, செவ்வாய். குருதிக் காந்தள் = செங்காந்தள் (சீவக. 1651). குரு - குருந்து = மாணிக்கவகை. குருந்து - குருந்தம். குருள் - குருல = மயிர்ச்சுருள் குள் - - குர் - குரு - குருள். குருளுதல் = சுருளுதல். ``குருண்ட வார்குழல்'' (திருவிசை. திருவாலி. 1:3). குருள் = மயிர்ச்சுருள், பெண்டிர் தலைமயிர். குரை - குர் = ஒலி குரைத்தல் = ஒலித்தல், ஆரவாரித்தல். குலம் - குல குல் - குல - குலவு. குலவுதல் = கூடுதல். குல் - குலம் = கூட்டம், குடும்பம், வகுப்பு, குலப்பிரிவு, இனம். வடமொழி மூலமும் குல் என்பதே. குவம் - குவ = ஆம்பல் குவி - குவம். ஒ.நோ : அம் - அம்பு - அம்பல் - ஆம்பல். கும் - குமுதம். குவளை - குவல குவளை = 1. கருங்குவளை. குவளை...bfho¢á கண்போல்மலர்தலும்”(ஐங். 399) 2. செங்குவளை. விளக்கிட்டன்dகடிகமœகுவளை”(சீவக. 256) 3. ஒரு பேரெண். நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும் (பரிபா.2:13) குள்ளம் - குல்லை (kh) குளம்1 - கூல = சிறுகுளம். குளம்2 - குல (g) = வெல்லம் குளம் = வெல்லவுருண்டை. குளிகை - குலிகா (g) = cருண்டை,kத்திரை.Fs« - குளிகை = cருண்டைkத்திரை.FËa« = உருண்டை, உருண்டை மாத்திரை. குளிர் - Fளீர= eண்டு.FŸSjš = கிள்ளுதல், கிண்டுதல், கீறுதல். குள் - குளிர் = கூரிய கவைக்காலாற் கடிக்கும் அல்லது கூரிய கால்களால் நிலத்தைக் கீறும் நண்டு. கூ - கு, கூ கூ - கூவு கூகை - கூக (gh) கூடம் - கூட (t|) கூடு - கூடம் = பலர் கூடும் இடம், சாலை, பட்டறை. கூடாரம் - குடரு ( t| ) கூந்தல் - குந்தல (nt) குத்து = கொத்து. குத்து - குந்து - கூந்து = மயிர்க்கொத்து. கூந்திளம் பிடி (சூளா. நாட்டு. 19) TªJ - Tªjš = bfh¤jhd bg©o® jiykÆ®, kƉnwhif, Fâiuthš (?), கூந்தற்பனை, கமுகம்பாளை, குதிரைவாலிக் கதிர், ஒ. நோ: கொத்து-கொந்து. ம. கூந்தல். க. கூதல். கூம்பு - கூப = பாய்மரம். கூலம் - குல கூழ் - கூர குழை - கூழ் = குழைந்த வுணவு. கூழை - கூல = படையின் பின்னணி. கூழை = 1. வால். புன் கூழையங் குறுநரி (கல்லா. 89:18) 2. வால்போன்ற பின்னணி. கேது - கேது செல் - செள் - செய் - சேய் - சே - சேது = சிகப்பு. சேதா = சிவந்த ஆ. சேதாம்பல் = செவ்வாம்பல். சேது - கேது = செம்பாம்பு வடிவினதாகச் சொல்லப்படும் ஒன்பதாங் கோள். கைதை - கைதக கள் = முள். கள் - கய் - கை - (கைது) - கைதை = முள்ளுள்ள தாழை. கைதையம் படப்பை (அகம். 100 : 18) ம. கைதா. வடசொல் கேதக என்னும் வடிவுங் bfhŸS«. கொக்கு - கோக்க = ஓநாய். கொக்கு = செந்நாய் (பிங்.). கொங்கணம் - கோங்காண கொங்கு - கொங்கணம். கொஞ்சம் - கிஞ்சித் குஞ்சு = சிறியது, பறவைக் குஞ்சு. குஞ்சு - குஞ்சி = சிறியது, பறவைக்குஞ்சு . குஞ்சிப்பெட்டி = சிறுபெட்டி. குஞ்சியப்பன் = சிற்றப்பன். குஞ்சு - குஞ்சன் = சிறியவன், குறளன். குஞ்சு - கொஞ்சு - கொஞ்சம் - கிஞ்சம் = சிறிது. கிஞ்சம் - கிஞ்சித் (வ.). கொத்தமல்லி - குஸ்தும்பரு கொத்துமல்லி - கொத்தமல்லி. கொதி - க்வத் (th) கொப்பரை - கர்ப்பர கொப்பரை - கப்பரை - கர்ப்பர (வ.). கோ - கோ (g), கௌஸ் (g) - ï.nt. கோ = ஆ. கோவன் = 1. மாட்டிடையன், இடையன் (ஆயன்). கோவன்நிரை மீட்டனன் (சீவக. 455) 2. அரசன். கோவனு மக்களும் (சீவக. 1843) குடிகள் ஆடுகளும் அரசன் மேய்ப்பனும்போலக் கருதப் பெற்றதினால், அரசன் கோவன் எனப் பெற்றான். அரசன் செங்கோல் ஆயன் கைக்கோலுக் கொப்பாம். கோவன்-கோன் = 1. இடையன். 2. அரசன். கோன்-கோனார் = இடையர். கோன் - கோ = அரசன். கோவன் என்பதைக் கோப என்று திரித்தும் பின்பு அதைக் கோ+ப என்று பிரித்தும், கோவைப் பாதுகாப்பவன் என்று வடவர் பொருள் கூறுவது பொருந்தாது. கோவன் என்பது ஆயன் (ஆ+அன்) என்பதை யொத்ததே. ஆங்கிலத்தில் (தியூத்தானியத்தில்) கோ (OS), கூ (OE), கௌ (E) என்று எடுப்பொலியின்றியே வழங்கி வருகின்றது. வேத ஆரியத்தில்தான் go என்று எடுத்தும் gous என்று திரிந்தும் ஒலித்திருக் கின்றது. கோசம் - கோச = உருண்டை. கோளம் - கோசம் = முட்டை (பிங்.). ள - ச, போலி. ஒ.நோ : உளு - உசு, இளி - இசி. கோட்டம் - கோஷ்ட கோடுதல் = வளைதல். கோடு - கோட்டம் = 1.வளைவு. 2.நிலா வைத் சூழ்ந்த வட்டக்கோடு. 3.மதிலாற் சூழப்பெற்ற கோயில். கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப். 14: 10). 4.மதிலாற் சூழப்பெற்ற சிறைச்சாலை. சிறைக்கோட்டம் விருப்பொடும் புகுந்து (மணிமே. 19: 43) கோட்டி - கோஷ்டீ (g) குலவுதல் = கூடுதல். குள் - கள் - களம். குழம்புதல் = கலத்தல், திரளுதல். குல் - குள் - கொள். கொள்ளுதல் = 1. பொருந்துதல், கூடுதல், மனத்திற்குப் பொருந்துதல். கொள்ளாத கொள்ளா துலகு (குறள். 470). 2.ஒத்தல். வண்டினம் யாழ்கொண்ட கொளை (பரிபா. 11: 125). கொள் - கோள் = குலை. செழுங்கோள் வாழை (புறம்.168). கொள் - கொள்ளை = 1. மிகுதி. கொள்ளை மதத்த நால்வாய் (பாகவ. 1: 5: 14). 2. கூட்டம். கொள்ளை யிற்பலர் கூறலும் (கந்தபு. விண்குடி. 14) கொள் - கொட்டி = கூட்டம் (அக. நி.). கொட்டி - கோட்டி = 1. ஒருவர் இன்னொருவரொடு கூடியிருக்கை. தன்றுணைவி கோட்டியி னீங்கி (சீவக. 2035). 2. கூட்டம்(பிங்.).3. அறிஞர் அவை. தோமறு கோட்டியும் (மணிமே. 1: 43). 4. அவைப்பேச்சு. வீரக் கோட்டி பேசுவார் (கம்பரா. மாயாசனகப். 13). கோட்டிகொளல் - அவையிற் பேசுதல். நூலின்றிக் கோட்டி கொளல் (குறள். 401). வடவர் கோஷ்டீ என்னும் தென்சொற்றிரிபைக் கோ என்னும் ஆவின் பெயரொடு தொடர்புபடுத்தி, மாட்டுக்கொட்டில், விலங்குக் கூட்டம், மக்கட் கூட்டம் என்று பொருத்திக்காட்டுவர். இதன் பொருத்தமின்மையைப் பகுத்தறிவுள்ளார் கண்டுகொள்க. கோட்டை - கோட்ட கோடுதல் = வளைதல். கோடு - nகாட்டை= 1.Ãyhit¢ Nழ்ந்தtட்டக்கோடு.rªâundh® nகாட்டைfட்டி(கொண்டல்விடு.72). 2. வட்டமான நெற்கூடு. உலவாக் கோட்டை (திருவாலவா. 50:13). 3. நெற்குதிர். 4. ஒரு முகத்தலளவை. இது முதலில் ஒரு நெற்குதிரளவாயிருந்து, இன்று 21 மரக் கால் கொண்ட அளவைக் குறிக்கின்றது. 5. அரண்மனையை அல்லது நகரைச் சூழ்ந்த மதிலரண். k., f., தெ. கோட்ட. மா.வி. அகரமுதலி கோட்ட என்னுஞ் சொற்கு விளைவு, குடிசை, மதிலரண் என்று பொருள்கூறி, குட் (வளை) என்பதை மூலமாகக் காட்டும். கோடு என்னுஞ் சொல் வடமொழியி லின்மையால் இங்ஙனங் காட்ட நேர்ந்தது. குட் என்பது குட என்னும் தென்சொற் றிரிபென்பது முன்னமே கூறப்பட்டது. கோடரி - குட்டார (t|h) கோடு = மரக்கிளை. அரிதல் = அறுத்தல், வெட்டுதல். கோடரி = மரக்கிளையை வெட்டும் அல்லது பிளக்குங் கருவி. கோடரி - கோடாரி - கோடாலி. க கோடாலி, bj. கொட்டலி (g), k. கோடாலி. கோடி1 - கோடி (t|) கோடி = எல்லை, கடைசி, நுனி, நிலமுனை, முடிமாலை, உச்சியெண்ணாகிய நூறிலக்கம். அடுக்கிய கோடி பெறினும் (குறள். 954) தெ. nfho., மரா. கோடீ, இ. குடோட், ஆ. க்ரோர் (crore) முதற்காலத்திற் கோடியே கடைசியெண்ணாக விருந்தது. பின்பு குவளை, தாமரை, குமுதம், வெள்ளம், ஆம்பல், நெய்தல் முதலிய அடுக்கிய கோடா கோடிப் பேரெண்கள் எழுந்தன. ஐஅம் பல்என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும். (தொல். 392) கோடு = 1. வளைந்த கொம்பு. 2. விலங்கின் உச்சந்தலையிலுள்ள கொம்புபோன்ற மலை யுச்சிக் குவடு. பொற்கோட் டிமயமும் (புறம். 2:24) 3. கொம்புங் குவடும் போன்ற உச்சி மயிர்முடி. குரற்கூந்தற் கோடு (கலித். 72: 20) கோடு - கோடரம் = தேரின் மொட்டு (பிங்.). கோடு - கோடகம் = முடி (மகுடம்). கோடு - கோடி = உச்ச எண். கோடி என்னும் சொற்கு எல்லைப்பொருள், கோடு என்னும் சொல்லின் நீர்க்கரைப் பொருளினின்று வந்திருத்தல் வேண்டும். கோடி2 - கோடி (t|) கோடி = கடை, நுனி, வடவர் வில்லைநோக்கி வளைந்த கடை என்பர். கோடகம் - கோட்டக (gh) கோடுதல் = வளைதல், திரும்புதல். கோடு - கோடகம் = வட்டமாயோடுங் குதிரை. ஒ.நோ : மண்டிலம் = குதிரை (பிங்.). கோடகம் - கோடம் -கோணம் = குதிரை. பச்சைக் கோடகக் காற்றை (கல்லா. 17:48) கோடு - கோடரம் = குதிரை (பிங்.) கோடரம் - கோரம் = குதிரை, சோழன் குதிரை. கோரத்திற் கொப்போ கனவட்டம் (தனிப்பாடல்) வடவர் எதிர்ப்பு, காப்பு, திரும்பல் ஆகிய பொருள்களைக் குறிக்கும் குட் (gh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். கோணம் - கோண கோண் - கோணம் = வளைவு, மூலை. கோபுரம் - கோபுர (g) புரையுயர் பாகும் (தொல். 785) புரம் = உயரமான கட்டடம், மேன்மாடம். கோ=அரசன், தலைமை. கோபுரம் = அரசனிருக்கும் மேன்மாடம், தலைமை யான காவற் கொத்தளம், அதுபோன்ற கோயிற் கோபுரம். மா. வி. அகரமுதலி, கோபுர என்னும் சொல்லை ஆவைக் குறிக்கும் கோ என்னும் சொல்லின்கீழ்க் குறிக்கின்றது. முதன்முதற் கோபுரம் கட்டப்பெற்றது தென்னாட்டிலேயே. கோளகம் - கோலக = fUÄsF. கோலகம் = நீண்டுருண்ட திப்பிலி. கோலம் - கோல (g) = cU©il. கோள் - கோள் - கோளம் = உருண்டை, கோளக்கட்டி (gland). கோள் - கோளா = உருண்டைக் கறி. கோலம் - கோலக (g) = cU©il. கோளகம் = உருண்ட மிளகு, மண்டல விரியன். கோளகை = 1. வட்ட வடிவம். அண்டகோளகைப் புறத்ததாய் (கம்பரா. அகலிகைப். 60). 2. யானைக்கிம்புரி. 3. மண்டலிப்பாம்பு. சக்கரம் - சக்ர (c) - இ.வே. சுழிதல் = வளைதல், திருகுதல். சுழி - சழி. சழிதல் = ஒரு பக்கஞ் சரிதல். சழி - சரி - சருவு. சருவுதல் = சாய்தல். சரி = வளையல் வகை. சருவு - சருகு. சருகுதல் = சாய்தல். சருகு - சருக்கு. சருக்குதல் = சாய்தல், வளைதல், சறுக்குதல். சருக்கு - சருக்கம் = வட்டம், நூற்பிரிவு. L. circum = வட்டம். சருக்கு - சருக்கரம் - சக்கரம் = வட்டம், உருளி, குயவன் சக்கரம், சக்கரப்படை, வட்டக்காசு, சக்கரப்புள், மாநிலம், செக்கு. சக்கரப் பாடித் தெருவு (பெரியபு. கலியனா. 5) Gk. kuklos, E. cycle = சக்கரம். சருக்கரம் - சருக்கரை - சர்க்கரை - சக்கரை = வட்டமாக வார்க்கப் பெற்ற வெல்லக்கட்டி. ஒ.நோ : வட்டு - வட்டமான கருப்புக்கட்டி. சருக்கரம் - (சருக்காரம்) - சக்காரம் (மூ.அ.) = இனிய தேமா. இன்றும் சக்கரைக்குட்டி என்று ஒரு மாம்பழப் பெயர் வழங்குதல் காண்க. சக்காரம் - அக்காரம் = சருக்கரை. அக்கார மன்னார் (நாலடி. 374). அக்காரடலை, அக்காரவடிசில் என்பன சருக்கரைப் பொங்கல் வகைகள். பதநீரை (தெளிவை) அக்காரநீர் என்பது நாஞ்சில்நாட்டு வழக்கு. அக்காரம் என்று மாங்கனிக்கும் பெயர். அக்காரக்கனி நச்சுமனார் என்னும் புலவர்பெயர் அக் கனியால் வந்ததுபோலும்! சக்கரம் - (சக்கு) - செக்கு = எண்ணெயாட்டும் வட்டமான உரல். ஒ.நோ : பரு - பெரு, சத்தான் - செத்தான். சக்கு - சக்கடம் - சக்கடா = கட்டை வண்டி. தெ. செக்கடா பண்டி. சக்கடம் - சகடம் = சக்கரம், வண்டி, தேர், வட்டில், முரசு. சகடம் - சகடி = வண்டி. சகடிகை = கைவண்டி. சகடு = வண்டி. சகடு - சாகாடு = வண்டி. பீலிபெய் சாகாடும் (குறள் .476) சகடு - சாடு = வண்டி. குறுஞ்சாட் டுருளை (பெரும்பாண். 188) சாடு - சாடுகம் = வண்டி. சகடு - சகடை = வண்டி, முரசு, அமங்கலச் சிறுபறை. சகடை - சகண்டை = முரசு, பறைப்பொது. சகடம் - சகோடம் = சக்கரப்புள், அதன் வடிவான யாழ். சகோடம் = சகோரம் = சக்கரப்புள். சக்கு - சங்கு = உள் வளைந்துள்ள நந்துக்கூடு, வலம்புரி, இடம்புரி. புரிதல் = வளைதல். ஒ.நோ : கோடு = சங்கு. சுரிமுகம் = சங்கு. வளை = சங்கு. வாரணம் = சங்கு. சங்கு - சங்கம் = 1. சங்கு. அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701). 2. கைவளை. சங்கங் கழல (இறை. 39, உரை). சக்கரம் முதல் சங்கு வரை பல சொற்கள் வளைவுக் கருத்தடிப்படையில் ஒரே தொடர்புடையனவாதலின், ஒருங்கு கூறப்பட்டன. சக்ர என்னும் வடசொல் வடிவிற்கு வடமொழியாளரால் குறிக்கப்பட்டுள்ள மூலம் க்ரு(செய்) என்பதே. மா. வி. அகரமுதலி சர் (car) என்னும் சொல்லை வினாக்குறியுடன் குறித்துள்ளது. சர் = இயங்கு. இவ் விரண்டுள், முன்னதின் பொருந்தாமையையும் பின்னதின் வன்புணர்ப்புத் தன்மையையும், அறிஞர் கண்டு கொள்க. சகடம் - சகட (s, t|) மா. வி. அ. “of doubtful derivation” என்று குறித்திருத்தல் காண்க. சகடி - சகடீ (s), t|) சகடிகை - சகடிகா (s, t|) சகோரம் - சகோர (c) வடவர் காட்டும் மூலம் சக் (c) என்பதாகும். இது குறிக்கும் பொருள்கள் பொந்திகை (திருப்தி), எதிர்ப்பு, ஒளிர்வு என்பனவே. சங்கம் - சங்க (s, kh) - அ.வே. வடமொழியில் இச் சொற்கு மூலமுமில்லை; சங்கு என்னும் மூலவடிவு மில்லை. சச்சரி - ஜர்ஜரா (jh) இது தென்னாட்டுப் பறைகளுள் ஒன்று. கொக்கரையின் சச்சரியின் பாணி யானை (தேவா. 722: 1) இப் பெயர் ஒலிக்குறிப் படிப்படையில் தோன்றியது. சடம் - ஜட வடவர் குளிர்மை என்பதை மூலக்கருத்தாக வைத்து, குளிர், சில்லெனல், விறைப்பு, மரப்பு, அசைவின்மை, உணர்வின்மை, உணர்ச்சியின்மை, மயக்கம், திமிர், மடமை, மந்தம், உயிரின்மை, அறிவின்மை என்று முறையே பொருள் வளர்ப்பர். அறிஞர் இதன் பொருந்தாமையை அறிந்துகொள்க. குளிர்மைப் பொருளில் ஜட என்பது சளி என்னும் தென்சொல் திரிபாக இருக்கலாம். சடம் = சடலம் = உடம்பு. இது உலக வழக்கு. ஒ.நோ : படம் - படலம். சடலம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. சடலம் - சதரம் = உடம்பு (நெல்லை வழக்கு). சதரம் - சதிரம் (கொச்சைத் திரிபு). சடை - ஜடா (t |) சள்ளுதல் - சிக்குதல். சழிதல் = நெருங்குதல், அடர்தல், நெருங்கிக் கிடத்தல். திங்கட் டொல்லரா சழிந்த சென்னி (தேவா. 980 : 6) சடாய்த்தல் = செழித்தல், அடர்ந்து வளர்தல். சடைத்தல் = அடர்ந்து கிளைத்தல். சடாய் - சடை = கற்றை, இயற்கையான மயிர்க்கற்றை, கற்றையான. சடைப்பின்னல். சடை = சடாய். சடைச்சம்பா, சடைச்சாமை, சடைப்பயறு, சடைப்பருத்தி, சடையவரை என்பன, கற்றையான அல்லது கொத்தான பொருள்களை உணர்த்தும். சடைமுடி, சடை விழுதல், சடையாண்டி, சடையன் என்னும் சொற்களில், சடை என்பது இயற்கையாகவோ எண்ணெய் தேய்க்காமையாலோ ஏற்படும் மயிர்க்கற்றையைக் குறிக்கும். வடவர் ஜட் (j, jh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சிக்கற் பொருளை யுணர்த்துதலால் சடாய் என்பதன் திரிபே. சடாய் - ஜட் சண்டம் - சண்ட (c) சள்ளெனல் = சினந்து விழுதல். சள் = தொந்தரவு. சள்ளை = தொந்தரவு. சள் - சண்டு - சண்டை = சச்சரவு. சளம் = கடுஞ்சினம். சண்டு - சண்டம் = 1. சினம் 2. கொடுமை. சண்ட மன்னனைத் தாடொழுது (சீவக. 430). சண்டன் = கடுஞ்சினத்தன், கூற்றுவன், கதிரவன், கொடியவன். சண்டி = கொடியவள், காளி, இடக்குப்பண்ணும் விலங்கு. சண்டாளன் = கொடியவன். சண்டாளி = கொடியவள். சண்டாளம் = கொடுந்தன்மை. ஆளன், ஆளி என்னும் தமிழ்ப் பாலீறுகளை நோக்குக. சண்டன் - சண்ட (c) சண்டாளம் - சண்டால (c) சண்டாளன் - சண்டால (c) சண்டாளி - சண்டாலீ (c) சண்டி + சண்டீ (c) வடவர் காட்டும் சண்ட் (c) என்னும் மூலத்தை derived fr. can|d|a என்று மா.வி. அ. கூறுதல் காண்க. சண்ணம் - சிச்ன (sisna) இ.வே. சுண் - சண். சண்ணுதல் = புணர்தல். சண் - சண்ணம். சண்ணக்கடா = பொலிகடா. துளைத்தற் பொருளுள்ள ச்னத் (snath) என்னும் சொல்லை வடவர் மூலமாகக் காட்டுவர். சண்பகம் - சம்பக (c) மல்லிகை மௌவல் மணங்கழ் சண்பகம் (பரிபா. 12:77) சணல் - சண (s) - அ.வே. சள்ளுதல் = சிக்குதல். சடாய்த்தல் = அடர்ந்து வளர்தல். சடை = நார். சடைத்தேங்காய் = நார்த்தேங்காய். சடை - சடம் - சடம்பு = நாருள்ள சணற்செடி. சடம் - சணம் = சணல். சணம் - சணம்பு = சணல். சணம்பு - சணப்பு = சணல். சணப்பு - சணப்பை = சணல். சணப்பு - சணப்பன் = சணலிலிருந்து நாருரிக்கும் குலத்தான். சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது என்பது பழமொழி. சணம் - சணல். சதங்கை - ச்ருங்கலா (s, kh) சல் - சல - சலங்கை - சதங்கை. ஒ.நோ : கல் - கல - கலம்பு - கலம்பம் - கதம்பம். பரியகம் நூபுரம் பாடகஞ் சதங்கை (சிலப். 6 : 84, உரை) சதரம் - சதுரச்ர (c,s) சட்டுதல் = தட்டுதல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயினும் சட்டுச்சட்டென்று தட்டுதல் என்னும் வழக்குள்ளது. சட்டென்று = சட்டென்று தட்டுமளவில், சட்டென்னும் ஓசை கேட்குமளவில், விரைந்து. சட்டு - சட்டம் = தட்டையான பலகை. ஒரு பொருளைத் தட்டத் தட்ட மேன்மேலுந் தட்டையாதல் காண்க. இதனால் தட்டற் கருத்தினின்று தட்டைக் கருத்துத் தோன்றிற்று. ஒ.நோ : தட்டு - தட்டம், தட்டை ; பட்டு - பட்டம், பட்டை; மொட்டு - மட்டு - மட்டை. சட்டம் = 1. பலகை ஓலை முதலிய தட்டையான பொருள். 2. கொத்தன் சட்டப் பலகை. 3. சட்டப் பலகை போன்ற நேர்மை. 4. வரியிழுக்குஞ் சட்டம் (flat ruler). 5. நேர்வரி. 6. நேர்வரி போன்ற ஒழுக்கநெறி, சட்ட திட்டம். 7. நாற்புறமுந் தைத்த சட்டம் (frame), நாற்புறச் சட்டமான சதுரம். 8. உயிருக்கு அல்லது ஆதனுக்கு (ஆன்மாவிற்கு)ச் சட்டம் போன்றிருக்கும் உடம்பு. (ஆங்கிலத்திலும் சட்டத்தைக் குறிக்கும் `frame' என்னுஞ் சொல் உடம்பைக் குறித்தல் காண்க.). 9. கட்டில் முதலியன பின்னுதற்கும் வீடு கட்டுதற்கும் படம் வரைதற்கும் அமைத்துக்கொள்ளும் சட்ட அமைப்பு. 10. முன்னேற்பாடான திட்டம் (plan). 11. அணியம் (ஆயத்தம்). 12. கட்டுரை முதலியன வரைதற்குக் குறித்துக்கொள்ளும் குறிப்பு. 13. பார்த்தெழுதுதற்கு வைத்துக்கொள்ளும் மேல்வரி யெழுத்து. 14 . எதற்கும் அளவையான மேல்வரிச் சட்டம். 15. செப்பம் அல்லது சீர்மை. சட்டம் - சட்டகம் = 1. சட்டம் (frame). சட்டகம் பொன்னிற் செய்து (சீவக. 2523). 2. கட்டில், படுக்கை (திவா.). 3. வடிவு (பிங்.). 4. உடல். உயிர்புகுஞ் சட்டகம் (கல்லா. 8:1.). சட்டம் `சட்டகம்' என்னும் இரு சொற்களும் வடமொழியில் இல்லை. சட்டம் - சடம் = 1. உடம்பு. ஒ.நோ : பட்டம் - படம் = துணி. சடங்கொள் சீவரப் போர்வையர் (தேவா. 805: 10). 2. உடம்புபோல் அறிவில்லாப் பொருள் (பிங்.). சதரம் - சரீர (இ.வே.). த - ர, போலி. ஒ. நோ: விதை - விரை. வடவருள் ஒருசாரார் ச்ரி என்னும் சொல்லைக் காட்டித் தாங்குவது என்றும், மற்றொரு சாரார் ச்ரூ என்னுஞ் சொல்லைக் காட்டி எளிதாய் அழிக்கப்படுவது என்றும், பொருட்காரணங் கூறுவர். சதரம் - சதுரம் = நான்மூலைச் சட்டம்போன்ற நாற்கோணம். வட்டமுஞ் சதுரமும் (பெருங். உஞ்சைக். 42 : 29) சதுரக்கல், சதுரக்கள்ளி, சதுரத் தூண், சதுரப்பலகை, சதுரப் பாலை, சதுர மாடம், சதுரமுகம், சதுரவரம், சதுரவோடு என்பன தொன்றுதொட்ட வழக்கு. வட்டம் என்பது போன்றே சதுரம் என்பதும் தூய தென்சொல். ஆயின், வடநூல்களில் ஆளப்பெற்றிருப்பதுபற்றி, சதுரம் என்பதைப் போன்றே வட்டம் என்பதையும் வடசொல்லென வலிப்பர் வடவர். வட்டம் (த.) - வட்ட (பிரா.) - வ்ருத்த (வ.) என்னும் உண்மையான முறையைத் தலைகீழாய்க் காட்டுவர் அவர். சதுரம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. சதுரம் - சதுர் அச்ர = நாற்கோணம். மேலையாரியத்தில் நான்கு என்னும் எண்ணுப்பெயர் முன்னொட்டுப் பெற்றே சதுரத்தைக் குறிக்கின்றது. L. quatuor = four; exquadra - OF. esquarre, E. square. வடமொழியில் அது பின்னொட்டுப் பெற்றுக் குறிக்கின்றது. சதுர் என்னும் பெயர் இயல்பாக நின்று நான்கு என்னும் எண்ணுப்பெயரையே உணர்த்துகின்றது. சதுரிகா, சதுஷ்க, சதுஷ்டய என்னும் வடிவங்களும் பிற்காலத்திலேயே சதுர வடிவையும் உணர்த்தினதாகத் தெரிகின்றது. அச்ர = கோணம், மூலை. சதுரம் என்னும் வடிவக் கருத்து நான்மூலைச் சட்டத்தொடு மட்டுமன்றி, கட்டுடம்பொடும் தொடர்புடையதாகத் தெரிகின்றது. கட்டுடம்பின் அமைப்பைச் சதுர்க்கட்டு என்பது உலக வழக்கு. ஆங்கிலத்திலும் square - built, a man of square frame என்று வழங்குதல் காண்க. சடலம், சதரம் என்னும் சொல் வடிவங்கள் குமரிக் கண்டத்தில் சட்டக் கருத்தும் உணர்த்தியிருத்தல் வேண்டும். சதுர என்னும் பெயரினின்று தோன்றிய சதுரி என்னும் வினை வடமொழியிலில்லை. சதுரித்தல் = நாற்கோணமாக்குதல். குழித்தல் (வருக்கமாக்குதல்). சரியான சதுரத்தைக் குறிக்கும் சச்சதுரம் என்னும் இரட்டித்த வடிவம் வடமொழியிலில்லை. சந்து - ஸந்தி (இ.வே.). இது முன்னரே விளக்கப்பெற்றது. உம் - அம் - அந்து - சந்து = பொருத்து, கூட்டு. வடமொழியில் ஸம் + தா (dha$) என்று பிரித்து, உடன்வை, பொருத்து என்று பொருளுரைப்பர். ஸம் = கூட. தா = வை, இடு. சப்பட்டை - சர்ப்பட்ட (c) சப்பை - சப்பட்டை. சப்பாணி - சப்பேட்ட (c) சப்பு - சப்பாணி = விரித்த கைகளைச் சேர்த்துத் தட்டுதல். சப்பாணி கொட்டியருளே (மீனாட். பிள்ளைத். சப்பாணி, 1) தெ. சப்பட்லு. சவை - சபா (s, bh) இது முன்னர்க் கூறப்பட்டது. சமம் - ஸம = ஒப்பு. உம் - அம் - சம் - சமம் = ஒப்பு. சமம் - சமன் = ஒப்பு, நடுநிலை. சமரம் - ஸமர = போர். இருவர் அல்லது இரு படைகள் போர் செய்யும்போது ஒன்று கலத்தலால், கலத்தல் அல்லது ஒன்றாதற் கருத்தினின்று போர்க் கருத்துப் பிறந்தது. எ-டு : கல - கலாம், கலகம். கைகலத்தல் = சண்டையிடுதல். பொருதல் = ஒத்தல், போர் செய்தல். பொரு - போர் = பொருத்து, சமர். இங்ஙனமே ஒப்பைக் குறிக்கும் சமம் என்னும் சொல்லி னின்றும் போரைக் குறிக்குஞ் சொற்கள் பிறந்துள்ளன. சமம் = போர். ஒளிறுவா ளருஞ்சம முருக்கி (புறம்.382) சமம் - சமர் = போர் (திவா.) ஒ. நோ: களம்-களர். சமர்த்தல் = பொருதல். சமர்க்க வல்லாயேல் (விநாயகபு. 74:249) போருக்கு வலிமை வேண்டுமாதலின், போரென்னும் சொல் வலிமை அல்லது திறமையையும் உணர்த்தும். போர் = வலிமை. சமர்த்து = திறமை. சமர் - சமரம் = போர். இலங்கையி லெழுந்த சமரமும் (சிலப். 26: 238) சமர் - அமர் = போர். ஆரமர் ஓட்டலும் (தொல். 1006). சமரம் - அமரம் = போர். தெ. அமரமு. அமர்த்தல் = மாறுபடுதல். பேதைக் கமர்த்தன கண் (குறள். 1084) வடமொழியில் சமர என்னும் வடிவே உள்ளது. சமம், சமர், அமர், அமரம் என்னும் வடிவுகள் இல்லை. வடவர் ஸமர என்னும் சொல்லை ஸம் +ரு என்று பிரித்து, ஒன்றுகூடு, மாறுபடு, போர்செய் என்று பொருள் காட்டுவர். ஸம் = கூட. ரூ = சேர். சமர்த்து - ஸமத்த (th) வடவர் ஸம் + அர்த்த என்று பகுத்து, ஒத்த அல்லது தகுந்த நோக்கங் கொள்ளுதல், தகுந்த நிலைமை பெறுதல், வலிமை யடைதல் என்று பொருள் பொருத்துவர். ஸம் - ஸம. அர்த் = அடை, பெறு. சமையம் - ஸமய (அ.வே.). அம் - அமை. அமைதல் = பொருந்துதல், நேர்தல், ஏற்படுதல். அமை - அமையம் = நேரும் வேளை, நேரம், வேளை. ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72) அமை - சமை. சமைதல் = 1. அமைதல். 2. பொருந்துதல். என்றிவை சமையச் சொன்னான் (கம்பரா. அங்கத. 8) 3. அணியம் (ஆயத்தம்) ஆதல். வனஞ்செல் வதற்கே சமைந்தார்கள் (கம்பரா. நகர்நீ. 143) 4. தகுதியாதல். 5. மணவாழ்க்கைக்குத் தகுதியாகப் பூப்படைதல். 6. உண்ணத் தகுதியாக வேதல். சமையல் = உணவு வேவித்தல். சமைந்தவள் = பூப்படைந்தவள். சமையம் = நேரம். சமையம் - சமயம் = 1. ஆதன் (ஆன்மா) அல்லது மாந்தன் இறைவன் திருவடிகளை அல்லது வீட்டின்பத்தை அடையச் சமைவாகும் (தகுதியாகும்) நிலைமை. 2. அந் நிலைமைக்குரிய ஒழுக்க நெறி. நேரத்தைக் குறிக்குஞ் சொல்வடிவுகளில் மகர ஐகாரமும், மதத்தைக் குறிக்குஞ் சொல்வடிவில் மகரமும், வரல்வேண்டு மென வேறுபாடறிக. வடமொழியில் மகரமுள்ள வடிவேயுண்டு. அமையம் என்னும் மூலச் சொல்லும் அங்கில்லை. வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன் வருதல், கூடுதல், இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு, ஒழுங்கு, மரபு, சட்டம், நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர். ஸம் = கூட. அய = இயக்கம், செலவு, வருகை. இது இய என்னும் தென்சொற் றிரிபாகும். சருக்கம் - ஸர்க (g) சருக்கம் = நூற்பிரிவு. வடவர் ஸ்ருஜ் என்னும் சொல்லொடு பொருத்திக் காட்டுவர். அதற்கு விடு, எறி, வீசு, வெளிவிடு என்ற பொருள்களே உண்டு. சருக்கரை - சர்க்கரா இது முன்னர் விளக்கப்பெற்றது. வடமொழியில் சரள், சிறுகல், கூழாங்கல், கற்கண்டு என்று பொருள் தொடர்பு காட்டுவர். சரம் - ஸர நீர்ப்பொருள் ஒரு துளையினின்று நேராக விரைந்து ஒழுகுதலை, சர் என்று பாய்கிறது என்று கூறுவது வழக்கம். ஒழுகல் நீட்சிக் கருத்தை யுணர்த்தும். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். 800) சர் - சரம் = நீண்ட அல்லது நேரான மணிக்கோவை அல்லது மலர்த்தொடை. சரஞ்சரமாய்த் தொங்குகிறது என்னும் வழக்கை நோக்குக. சரக்கொன்றை = நேர் மலர்த்தொடையாகப் பூக்கும் கொன்றை. வடவர் காட்டும் ஸ்ரு என்னும் சொற்கும் ஒழுகு, ஓடு என்பனவே பொருள். சல்லகம் - ஜல்லக (jh) = தாளக்கருவி. சல் - சல்லகம் = சல்லென வொலிக்கும் தாளக்கருவி. சல்லரி - ஜல்லரீ (jh) சல்லரி = 1. திமிலைப்பறை. சல்லரி யாழ்முழவம் (தேவா.89:2). 2. கைத்தாளம். சலசல - ஜலஜ்ஜல (jh) = நீர்த்துளிகள் விழும் ஒலிக்குறிப்பு. சலசல மும்மதஞ் சொரிய (சீவக. 82) சலவை - க்ஷால சல் - சலவை = துணிவெளுக்கை. தெ. சலவ (c), க. சலவெ. வ. க்ஷல் = அலசு, சலவை செய். சலி - சல் (c) சல் - சலி. சலித்தல் = அசைதல், மனங்கலங்குதல், சோர் வடைதல், அருவருப்புக் கொள்ளுதல், சல்லடையாற் சலித்தல் அல்லது சுளகால் (முறத்தால்) தெள்ளியெடுத்தல். சலியடை - சல்லடை. க. ஜல்லிசு, தெ. ஜல்லிஞ்சு = சல்லடையாற் சலி. அசைதல், நடுங்குதல், கலங்குதல், நெறிதிறம்புதல் என்னும் பொருள்களே வடசொற்குள. சவ்வு - சவி (ch) = தோல், மீந்தோல். சவ் - சவ்வு = மெல்லிய தோல், மூடுதோல். சவம் - சவ = பிணம். சா - சாவு - சாவம் - சவம் = பிணம். வடவர் சூ அல்லது ச்வி என்னும் சொல்லைக் காட்டி,ஊதிப் போனது என்று பொருட்காரணங் கூறுவர். ச்வி = ஊது, வீங்கு. சவலை - சபல (c) சவளுதல் = வளைதல், துவளுதல். சவள் - சவல் - சவலை = 1. மெலிவு, தாய்ப்பாலில்லாக் குழந்தையின் மெலிவு. ம. சவல, தெ. த்சவிலெ. சவலை மகவோ சிறிதும் அறிந்திடாதே (தண்டலை. சத. 97) 2. தாய்ப்பாலின்றி மெலிந்த குழந்தை. சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ (திருவாச. 50 : 5) சவலைப்பிள்ளை என்பது உலவழக்கு. 3. உறுதியின்மை. சவலை நெஞ்சமே (வைராக். சத. 3) 4. இரண்டாம் அடி குறைந்த அளவியல் வெண்பா. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெம்மை தரும் (முதுரை, 4) வடவர் கம்ப் என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது குறிக்கும் பொருள் நடுக்கம். தமிழ்ச்சொற் கில்லாத பல பொருள்களை வடசொல் குறிக் கின்றது. அவை மீன், காற்று, இதள் (பாதரசம்), கருங்கடுகு, ஒருவகை விரை, ஒருவகைக் கல், ஒருபேய், திப்பிலி, நாவு, கற்பிலா மனைவி, சாறாயம், திருமகள் என்பன. சவை - சர்வ் (c) சப்பு - சவை. சவை - சபா (bh) இது முன்னர்க் காட்டப் பெற்றது. சளப்பு - ஜ்ல்ப் சளப்புதல் = அலப்புதல். சன்னம் - தனு f., தெ. சன்ன. L. tenuis. சாணம் - சகண (ch, g) சண்ணுதல் = நீக்குதல். கீழாநெல்லி......fhkhiyfis¢ சண்ணும்" (பதார்த்த.300). சண் - (சாண்) - சாணம், சாணி = மாட்டுப் பவ்வீ. வடவர் பல்வேறு மலத்தையும் சாணியையும் குறிக்கும் சக்ருத்என்னு«சொல்லினின்Wசக்‹என்றொUமூலத்jவலிந்J திரிப்பர். சாணை -சாண,சாdசவŸ -சாள். சாளுதல் = வளைதல். சாள் - சாய். சாய்தல் = வளைதல். சாள் - சாளை = வட்டமான குடிசை. சாளை - சாணை = 1. வட்டமான சாணைக்கல். k. rhz¡fšY, f., து. சாணெக் கல்லு. 2. வட்டமான புளியடை. 3. வட்டமான பணியாரவகை. 4. வட்டமான கதிர்ச் சூடு. வடவர் சோ (தீட்டு) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சாணைக்கல் ஒன்றற்குத்தான் சிறிது பொருந்தும். சாத்து - ஸார்த்த சார்-சார்த்து - சாத்து = 1. கூட்டம். சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும் (கல்லா. 63 : 32) 2. tணிகர்கூட்டம். சாத்தொடு nபாந்துjÅத்துயருHªதேன் (áy¥.11:190) சாத்தன்-சாஸ்தா சாத்து - சாத்தன் = வணிகச் சாத்தினர் வணங்குந் தெய்வம். பெருஞ்சாலை வழிகளிற் சாத்தன் (ஐயனார்) கோவி லிருப்பதையும், அங்குப் பொதிசுமத்தற்கேற்ற குதிரைகள் போன்ற உருவங்கள் செய்து வைத்திருப்பதையும் நோக்குக. பண்டைக்காலத்திற் பெரும்பாலும் tணிகரேrhத்தன்எ‹Dம்பெaர்தா§»யிருந்தனர். எ-டு : கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். சாந்து - சந்தன (c) சார் - சார்த்து - rத்து.rh¤Jjš = 1. பூசுதல் (பிங்.). 2. திருமண் காப்பிடுதல். தன்றிரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே (கம்பரா. கடிமண. 49). 3. சந்தனம் பூசுதல். `சாத்தியருளச் சந்தன முக்கசும்' (S. I. I. III. 187). சாத்து - சாந்து = 1. சுண்ணாம்புச் சேறு. 2. அரைத்த சந்தனம். புலர்சாந்தின் வியன்மார்ப (புறம்.) 3. சந்தனமரம். ம. சாந்து. சாந்துசாய் தடங்கள் (கம்பரா. வரைக்காட்சி. 44). 4. நெற்றிப் பொட்டுப் பசை. க. சாது. 5. எட்பசை. வெள்ளெட் சாந்து (புறம். 246). சாந்து - சாந்தம் = சந்தனம். சாந்த நறும்புகை (ஐங். 258). சாந்து - சந்து = சந்தன மரம். வேரியுஞ் சந்தும் (திருக்கோ. 301). சந்து - சந்தனம். சாமை - ச்யாமா சமை - சாமை. சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும் என்பது பழமொழி. வடவர் கரியது என்று பொருட்காரணம் கூறுவர். சாமை கரிதாயின்மை காண்க. சாய் - சி (இ.வே.) சாய்தல் = படுத்தல். திருக்கையிலே சாயு மித்தனை (ஈடு, 2 : 7 : 5). சாய்கை = படுக்கை. வ. சய = படுக்கை, தூக்கம். சயன = படுக்கை, தூக்கம். சாயுங்காலம் - சாயம் (ஸ) - இ.வே. கதிரவன் சாயுங்காலத்தைப் பொழுது சாய்கிற வேளை என்பது இன்றும் பெருவழக்கான உலக வழக்கு. ஆங்கிலரும் decline என்று கூறுதல் காண்க. சாயுங்காலம் - சாயங்காலம் - சாய்ங்காலம். இது வெளிப் படை. வடவர் ஸோ என்பதை மூலமாகக் காட்டுவர். ஸோ=அழி, கொல், முடி. சாயம் - நாள்முடிவு. இங்ஙனம் வடசொல்லாகக் காட்டுவதற்கே, சாயுங்காலம் என்னும் வடிவைச் சென்னைப் ப. க. க. அகரமுதலியிற் காட்டாது விட்டிருக்கின்றனர். சாயை - சாயா (ch) - இ.வே. சாய் - சாயை = நிழல். நிழல் சாய்கிறது என்பதே வழக்கு. ».ஸ்கிa = நிழல். சாலை - சாலா (அ.வே.) சாலுதல் = நிறைதல், கூடுதல். சால் - சாலை = கூடம், பட்டறை, தொழிலகம், அலுவலகம், அகன்ற பாதை. சாவி - சப் சா - சாவி (பி. வி.). சாவித்தல் = அங்கதம் பாடி அல்லது சினந்துரைத்துச் சாகப் பண்ணுதல், சாவு குறித்த சொற்களைச் சொல்லித் திட்டுதல். வாழ்த்து (வாழவை) என்னும் பிறவினைக்கு எதிராகச் சாவி என்னும் சொல்லே பொருத்தமாயிருத்தல் காண்க. இனி ஒருவன் கடுமையாகத் திட்டும்போது, சாவிக்கிறான் என்று கூறும் உலக வழக்கையும் நோக்குக. சாவி - சாவம் - சாப (வ.). சாறு - ஸார (இ.வே.) தெள் - தெறு - தெற்று = தெளிவு. தெற்றென = தெளிவாக. தெறு - தேறு. தேறுதல் = தெளிதல், துணிதல். தெ. தேரு. தேறு - தேறல் = தெளிவு, தெளிந்த கள், தேன். தெளிந்த சாறு (சாரம்). கரும்பினின் றேறலை (திருவாச.5 : 38). தேறு - சேறு = 1. கள். சேறுபட்ட தசும்பும் (புறம். 379 : 18). 2. தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக. 426). 3. பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற். 75 : 6). 4. இனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல். 26). 5. மணிநீரோட்டம். 6. சாறு (சாரம்). சேறு சேர்கனி(சூளா. சுயம். 66). ஒ.நோ : தாறு - சாறு = காய்கனிக் குலை (பிங்.). சேறு - சாறு = 1. கள் (பிங்.). 2. நறுமணப் பண்டங்கள் ஊறின நீர். சாறுஞ் சேறு நெய்யும் மலரும் (பரிபா. 6 : 41). 3.மிளகுநீர். சாற்றிலே கலந்த சோறு (அருட்பா. 4, அவாவறு. 2). க. rhW, bj., து. சாரு. 4. இலை கனி முதலியவற்றின் நீர் (சாரம்). கரும்பூர்ந்த சாறு (நாலடி. 34). k., து. சாரு. சிச்சிலி - தித்திரி (வே.) சிச்சிலி = 1. மீன்கொத்தி (சீவக. 2199, உரை). 2. கதுவாலி வகை. அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும் (திருமுறை கண்.17). சித்து - சித் (c) - இ.வே. செத்தல் = 1. கருதுதல். அரவுநீ ருணல்செத்து (கலித். 45). 2. அறிதல். துதிக்கா லன்னந் துணைசெத்து (ஐங்.106). செ - செத்து = கருத்து, அறிவு. செத்து - சித்து = கருத்து, அறிவு. ஒ.நோ : செந்துரம் - சிந்துரம். சித்து - சித்தன் = அறிவன், முக்கால அறிவுள்ள முனிவன். மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் (தொல். 1021) சித்து - சித்தம் = கருத்து, மனம், அறிவு, ஓதி (ஞானம்). சித்தம் - சிதம் = மனம், அறிவு, ஓதி. வடவர் சி (`ci) என்றொரு செயற்கை மூலங்காட்டுவர். அது செ என்பதன் திரிபே. சித் = கருது, அறி, காண், கவனி. சித்தம் - சித்த (c) வடவர் சித்தன் என்னும் சொல்லை, ஸாத் (dh) என்பதன் திரிபான ஸித் (dh) என்பதனொடு தொடர்புபடுத்தி, ஸித்த (siddha) என்றும், சித்தியை ஸித்தி (siddhi) என்றும், காட்டுவர். ஸித் = முடி, கைகூடு. ஸித்தி = முடிவு, முடிபு, கைகூடல், பேறு. ஸித்த = அரும்பேறு பெற்றவன். சித்தன் ஆற்றலைத் தமிழிற் சித்து என்பதே மரபு. சித்து விளையாடல் என்பது உலக வழக்கு. கலம்பக வுறுப்பும் சித்து என்றே பெயர் பெற்றிருத்தல் காண்க. சித்திரம் - சித்ர (c) - இ.வே. செத்தல் = ஒத்தல். செத்து = ஒத்து, போல (தொல். பொருள். 286, உரை). செ + திரம் = செத்திரம் - சித்திரம் = ஒப்பு, ஓவியம், பலவண்ணம், திறமை, புதுமை. திரம் ஒரு தொழிற்பெய ரீறு. எ-டு : மாத்திரம், மோட்டிரம் - மோத்திரம் = மூத்திரம். சித்திரக் கம்மம் = ஓவிய வேலைப்பாடு. செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து (பெருங். உஞ்சைக். 35 : 98). சித்திரக்கம்மி = ஓவியத் தொழிலமைந்த ஆடைவகை (சிலப்.74 : 108,உரை) சித்திரச் சோறு = பலநிறச் சோறு. சித்திரச் சோற்றிற் செருக்கினேன் (அருட்பா. 6, அவாவறுப்பு. 7) சித்திரப் படம் = பல வண்ண அல்லது பூத்தொழிலமைந்த உறை. சித்திரப் படத்துட் புக்கு (சிலப்.7 : 1). சித்திரப் பாலடை, சித்திரப் பாலை என்பன பூண்டு வகைகள். சித்திரப் புணர்ப்பு = வல்லெழுத்தை மெல்லெழுத்தாகக் கொள்ளும் பண்ணீர்மை (சிலப்.3 : 56, உரை). சித்திரமாடம் = ஓவியம் வரைந்த மாளிகை. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் (புறம். 59). சித்திரவண்ணம் = நெடிலுங் குறிலும் விரவிய ஓசை. சித்திர வண்ணம் நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே (தொல்.1478) செய்தல் = ஒத்தல். வேனிரை செய்த கண்ணி (சீவக. 2490) செள் - செறு - செறி. செள் - செண்டு - செண்டை = இரட்டை. செள் - செய் - செ. ஒ.நோ: பொய் - பொ. பொத்தல் = துளைத்தல். சித்திரம் - சித்திரி. சித்திரித்தல் = சித்திரம் வரைதல், சுவடித்தல், வண்ணித்துப் பேசுதல். வடவர் சித்ர என்பதைச் சித் என்பதன் திரிபாகக் கொண்டு, தெளிவாய்த் தெரிதல், விளக்கமான நிறம், வண்ண வேறுபாடு, வண்ணப்படம் என்று வலிந்து பொருத்திக் காட்டுவர். சித்திரித்தல் என்னும் வினை வடமொழியிலில்லை. சிதம்பரம் - சிதம்பர (c) சிற்றம்பலம் - (சித்தம்பலம்) - (சித்தம்பரம்) - சிதம்பரம். தில்லையிற் சிற்றம்பலம் பேரம்பலம் என ஈரம்பலங்க ளுண்டு. அவற்றுள் சிற்றம்பலமே இறைவன் திருக்கோயில். சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் (திருக்கோ.) வடவர் திரிபு வடிவை இயல்பு வடிவாகக் கொண்டு அறிவுவெளி (ஞானாகாசம்) என்று பொருள் புணர்க்க முயல்வர். அம்பலம் (மன்றம்) வேறு; அம்பரம் (வானம்) வேறு. மேலும் சித், அம்ர என்னும் இரு வடசொற்களும் தென்சொற்றிரிபே என்பதை அறிக. இவை முன்னரே காட்டப்பெற்றன. சிதை - சித் (chid) - இ.வே. சிதைத்தல் = பிரித்தல், குலைத்தல், பிய்த்தல், கெடுத்தல், வெட்டுதல், அழித்தல். சிதர்த்தல் = பிரித்தல், குலைத்தல், வெட்டுதல். சிந்து - ஸிந்து (dh) - இ.வே. சிந்துதல் = துளி சிதறுதல், நீர் தெளித்தல், நீர் ஒழுகுதல். சிந்து =1. நீர். (பிங்.). 2. ஆறு (பிங்.). 3. கடல். தேர்மிசைச் சென்றதோர் சிந்து (கம்பரா. ஆற்றுப். 32) ஆரியர் வருமுன்பே தமிழரும் திரவிடரும் பனிமலைவரை பரவியிருந்ததால், சிந்தாற்றைத் தமிழர் முன்னரே அறிந்திருத்தல் வேண்டும். வடவர் ஸித் (dh) என்னுஞ் சொல்லை மூலமாக ஐயுற்றுக் கூறுவர். ஸித் = செல். சிந்தூரம் - ஸிந்தூர செந்தூள் = செம்பொடி, செந்நீறு. செந்தூள் - செந்தூளம் - செந்தூரம் - சிந்தூரம் = 1. செந்நீறு. செந்தூரத் தாது கொடுத்திலரேல் (உபதேசகா. உருத்திரா. 67). 2. செம்பொடி. மதகரியைச் சிந்தூர மப்பியபோல் (கம்பரா. மிதிலைக்.151). 3. சிவப்பு (பிங்.). 4. செங்குடை (பிங்.). 5. செம்புள்ளியுள்ள யானைமுகம். 6. யானை (பிங்.). 7. செம்மலர் பூக்கும் வெட்சி மரம். 8. சேங்கொட்டை. 9. செவ்வீயம். சிந்தூரம் - சிந்துரம் = 1. சிவப்பு. சிந்துரச் சேவடியான் (திருவாச. 18:5). 2. செம்பொடி. சிந்துர மிலங்கத்தன் திருநெற்றிமேல் (திவ்.பெரியாழ். 3 : 4 : 6). 3. நெற்றிச் செம்பொட்டு. சிந்துர வாதித்த வித்தார முடையார் (கந்தரந். 5). 4. புகர்முக யானை. 5. புளியமரம். புகர்முகம் (செம்புள்ளியுள்ள முகம்) என்பது சினையாகு பெயராய் யானையைக் குறிப்பது போன்றே, சிந்தூரம், சிந்துரம் என்னும் சொற்களும் யானையைக் குறிக்கும். சிந்தூரப்பொட்டு = குங்குமப்பொட்டு. சிந்தம், சிந்தகம், சிந்துரம், சிந்தூரம் என்பன புளியின் செந்நிறம் பற்றிப் புளியமரத்தையுங் குறிக்கும். சிந்துரம் - சிந்திடீ (c), திந்திட = புளியமரம் சிந்தூரித்தல் = தாதுக்களை (உலோகங்களை)ச் சிந்தூரமாக்கு தல். சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்து (பணவிடு.230). சிந்தூரி - சிந்துரி. இவ் வினை வடிவங்கள் வடமொழியி லில்லை. வடவர் காட்டும் மூலம் ஸ்யந்த் (அல்லது ஸ்யத்)=இயங்கு, ஒழுகு, பாய், ஓடு. சென்னைப் ப. க. க. த. அ. சிந்தம் என்னும் தென்சொற்குச் சிஞ்ச்சா (cinca$ = புளியமரம்) என்பதை மூலமாகக் காட்டும். சில்லி - ஜில்லி (jh) = சிள்வண்டு சில்லிடுதல் = ஒலித்தல். சில்லெனல் = உச்சமாகக் கூர்ந் தொலித்தல். சில்லி சில்லென் றொல்லறாத (திவ். பெரியதி. 1:7:9). சில் = சிள். சில் - சில்லி - சில்லிகை. சில் - சில்லை (பிங்.). சில்லுறு - சில்லூறு = சிள்வண்டு. சில்லிகை - ஜில்லிகா (jh) = சிள்வண்டு. சிவன் - சிவ சிவத்தல் = செந்நிறமாயிருத்தல். சிவ-சிவம் - சிவன் = சிவந்தவன். சிவன் குறிஞ்சிநிலத் தெய்வமான சேயோன் கூறாதலால், சிவன் எனப் பெற்றான். அந்திவண்ணன், அழல்வண்ணன், செந்தீ வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய பெயர்களை நோக்குக. வடவர் சிவன் அழிப்புத் தொழில் திருமேனி என்று கொண்டு, சிவன் என்னும் சொற்குச் சீ (படு) என்பதை மூலமாகக் காட்டி, எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் இடமானவன் என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருள் கூறுவர். சிலர், மங்கலமானவன், நன்மை செய்பவன் என்று பொருள் கூறுவர். சிவன் தமிழ்த் தெய்வமாதலானும், நெருப்பின் கூறாகக் கொள்ளப்படுதலானும்,முத்தொழில் முதல்வன் என்பதே தமிழ்க்கொள்கை யாதலானும், குமரிக்கண்டத்திலேயே சிவ வணக்கம் தொடங்கி விட்டமையானும், ஆரியவழிப் பொருட் காரணம் ஒருசிறிதும் பொருந்தா. சிவன் - சிவை (மலைமகள்). சிவை - சிவா சிவிகை - சிவிகா, சிபிகா சிவிதல் = சுருங்குதல். சிவிந்தபழம் = முற்றாது சுருங்கிப்போன பழம். சிவிங்கி = சிறுத்தைப்புலி. சிவிகை = இருவர் தூக்கும் சிறிய மூடுபல்லக்கு. சிற்பம் - ஸ்வல்ப சிற் - சிற்பு - சிற்பம் = மிகக் கொஞ்சம். சிற்பங்கொள் பகலென (கம்பரா. சடாயுகாண். 8). சீகாழி - ஸ்ரீகாலீ திரு - ஸ்ரீ. காளி - காலீ. திருக்காளி - திருக்காழி - ஸ்ரீகாழி - சீகாழி. சிலர் சீர்காழி - சீகாழி என்பர். சீம (தெ.) - ஸீமிக = எறும்பு. சீர்த்தி - கீர்த்தி (அ.வே.) சீர் = 1. பெருமை. சீர்கெழு கொடியும் (புறம். 1). 2. மதிப்பு.வணக்கருஞ்சீர்...k‹d‹” (பு.வெ. 9 : 22). 3. புகழ். ஆனாச்சீர்க் கூடலுள் (கலித். 30). சீர்த்தல் = சிறத்தல். பொருடன்னிற் சீர்க்கத் தருமேல் (திவ்.திருவாய். 8 : 7 : 6). சீர் - சீர்த்தி = மிகுபுகழ். சீர்த்தி மிகுபுகழ். (தொல். சொல்.313). சீர்த்தி - கீர்த்தி = புகழ். விண்சுமந்த கீர்த்தி (திருவாச.8:8). கீர்த்திமான் = புகழ்பெற்றவன். கீர்த்தி - கீர்த்திமை. அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி (திவ்.திருப்பா.13) கீர்த்தித்தல் = புகழ்தல். தான்றன்னைக் கீர்த்தித்த மாயன் (திவ். திருவாய். 7 : 9 : 2). வ. கீர்த் = புகழ் (A.V.-m. வே. கீர்த்-கீர்த்தி-இ.வே. இதற்குக் க்ரு (2) என்னும் சொல்லை மூலமாகக் கூறி, காரு= புகழ்வோன், பாவலன் (இ.வே.) என்று எடுத்துக் காட்டுவர். சீரகம் - ஜீரக சீர் - சீரம் = சீரகம் (மூ.அ.). சீரம் - சீரகம். உலகில் முதன்முதற் சிறந்த முறையிற் சமையல் தொழில் தொடங்கியதும் அதற்குச் சீரகத்தைப் பயன்படுத்தியதும் தமிழகமே. சிறுபிள்ளை யில்லாத வீடும் சீரகமில்லாத கறியும் செவ்வையா யிரா என்பது தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி. சீரகக்கோரை, சீரகச்சம்பா, சீரக வள்ளி என்பன ஒப்புமைபற்றிப் பெயர் பெற்ற நிலைத்திணை (தாவர) வகைகள். பொன்னளவையிற் சீரகம் என்பது ஓர் அளவு. 5 கடுகு = 1 சீரகம், 5 சீரகம் - 1 நெல். அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி யுளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப வென்றா நமவ வென்றா அகர உகரமோ டவையென மொழிப (தொல்.170) என்னுந் தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பா வுரையில், கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை என்று இளம் பூரணரும்; கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை இவை நிறை என்று நச்சினார்க்கினியரும் கூறியிருத்தலையும், நோக்குக. செரி - (செரியகம்) -சீரகம். வடவர் மூலங்காட்டும் வகை: ஜீரக = ஜீரண. ஜ்ரூ - ஜீரண. ஜ்ரூ - கிழமாக்கு, கட்டுக்குலை, கரை, செரிக்கச் செய். ஜ்ரூ என்பது கிழ என்னும் தென்சொற்றிரிபே. கிழம் என்னும் சொல்லைப் பார்க்க. சீரை - சீர் (c) சிரைத்தல் = 1. மயிர் கழித்தல். ம. சிரெ. க கெரெ. 2. செதுக்குதல். புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ (ஈடு, 3: 9: 6). சிரை - சீரை = 1. செதுக்கப்பட்ட மரப்பட்டை, மரவுரி. சீரை தைஇய வுடுக்கையர் (திருமுருகு. 126). 2. சீலை (பிங்.). சீரை - சீலை - சேலை. வடவர் காட்டும் மூலம் சி (ci). சி = அடுக்கு, அடுக்கிக் கட்டு. சுக்கு - சுஷ்க உள் - சுள். சுள்ளெனல் = சுடுதல். சுள் - சுள்ளை = பானை சட்டியும் செங்கலும் சுடுமிடம். சுள்ளை - சூளை. சுள் - சுடு - சுடல் - சுடலை = சுடுகாடு. சுள் - சுட்கு. சுட்குதல் = காய்தல். வறளுதல். சுட்கம் - சுட்கு - சுக்கு - சுக்குதல் = உலர்தல். சுக்கு = காய்ந்த இஞ்சி (திவா.). சுட்கம் - சுஷ்க சுள் என்று வடமொழியில் சுஷ் என்று திரியும். ஒ.நோ : உள் - உஷ். சுஷ்க = உலர்ந்த பொருள். சுக்குச் சுக்காய்க் காய்ந்து போய்விட்டது என்னும் வழக்குத் தமிழில் இருந்தாலும், சுக்கு என்பது தமிழிற் சிறப்பாய் உலர்ந்த இஞ்சியைத்தான் குறிக்கும். வடமொழியிலோ அது உலர்ந்த பொருள்கட் கெல்லாம் பொதுவாகும். சுண்டம் - சுண்டா = கள் சுள் - சுண்டு - சுண்டம் = கள். சுண்டு - சுண்டை = கள். சுண்டுதல் = சுண்டக்காய்ச்சுதல், சுடுவதுபோற் கடுமையா யிருத்தல். சுண்டி - சுண்டி ( t|h|) சுள் - சுண்டு. சுண்டுதல் = காய்தல், நீர்வற்றுதல். சுண்டு - சுண்டி = சுக்கு. சுண்டு - சுண்ட் ( t|h|) இதுவே மேலதன் மூலம். இவற்றிற்கு வடமொழியில் மூலம் இல்லை. சுண்ணம் - சூர்ண் (c) சுள் - சுள்ளை - சூளை. சுள் - சுண் - சுண்ணம் = நீற்றுதல், நீறு, சுண்ணாம்பு, பொடி, பூந்தாது. தாழைக் கொழுமட லவிழ்ந்த சுண்ணம் (மணிமே. 4: 18) சுண்ணம் - சுண்ணம்பு - சுண்ணாம்பு. சுண்ணித்தல் = நீற்றுதல் (சங். அ.). சுண்ணகம் - சூர்ணக (c) சுண்ணம் - சுண்ணகம் = நீறு, பொடி. வடவர் காட்டும் மூலம் சர்வ் (c) என்பதே. சர்வ் = பல்லினால் அரை, மெல், சவை, சுவை. இது சவை என்னும் தென்சொற் றிரிபே. சுதை - ஸுதா (dh) = சுண்ணாம்புச் சாந்து. சுல் - சுல்லு = வெள்ளி (சூடா. வெண்பொன்). சுல் - (சுலை) - சுதை = 1. வெண்மை (சூடா.) 2. வானவெள்ளி (அக. நி.) 3. மின்னல் (சங். அக.). 4. சிப்பிச் சுண்ணாம்பு. வெள்ளி வெண்சுதை யிழுகிய மாடத்து (மணிமே. 6: 43). 5. பால். சுதைக்க ணுரையைப் பொருவு தூசு (கம்பரா.வரைக். 16). 6. அமிழ்து சுதையனைய வெண்சோறு (கம்பரா.குலமுறை.18). இங்குக் குறிக்கப்பட்டுள்ள பொருள்களெல்லாம், வெண்மை யாய் இருத்தலை நோக்குக. ல - த, போலி. ஒ.நோ: சலங்கை-சதங்கை, மெல்-மெது. மா. வி. அ. காட்டியுள்ள மூலமும் பொருள் வரிசையும் வருமாறு: ஸு - தா (dh) = ஸு + தே (dhe) = நற்குடிப்பு, தேவர் குடிப்பு, அமிழ்து, தேன், சாறு, நீர், பால், வெள்ளை யடிப்பு, பூச்சு, சாந்து, சுதை. ஸு = நல்ல. தே = உறிஞ்சு, குடி. சும - க்ஷம் = பொறு. பொறுத்தல் = சுமத்தல், தாங்குதல், தாளுதல், மன்னித்தல், இடந்தருதல். இளக்காரங் கொடுத்தல், துன்பந் தாங்குதல் (பொறை), அமைதியாய்க் காத்திருத்தல் (பொறுமை). சும, பொறு என்பவை ஒருபொருட் சொற்கள். பொறு என்னும் சொல்லின் பொருள்களே க்ஷம் என்னும் சொற்கும் உரியன. உம் - உம்பு - உம்பர் - மேல், மேலிடம், உச்சி. உம் - சும் - (சுமை) - சிமை = உச்சி, குடுமி. சும் - சும. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல். சும் - சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை, முதுகு, பிடரி, குதிரையின் பிடரிமயிர், உயர்ந்த மேடு. வேங்கைச் செஞ்சுவல் (புறம். 120). வடமொழியிற் க்ஷம் என்னுஞ் சொற்கு மூலமில்லை. சுர - ஸ்ரு (இ.வே.) சுரத்தல் = ஊறுதல், ஒழுகுதல், சொரிதல். சுள் - சுர் - சுரி. சுரித்தல் = துளைத்தல். சுரி = துளை. சுரை = உட்டுளை. சுர் + சுர: சுரத்தல் = உள்ளிருந்தொழுகுதல். சுள் - சுன் - சுனை = ஊற்று, ஊற்று நீர்நிலை. சுரப்பு - ஊற்று. சுரங்கம் - ஸுரங்கா சுர் - (சுரங்கு) - சுரங்கம். ஒ.நோ : அர் - அரங்கு - அரங்கம். சுரங்கம் = பாறையுடைக்க வெடிமருந்து வைக்கும் குழி, கள்வரிடுங் கன்னம், கீழ்நிலவழி, குடைவரைப் பாதை (tunnel). சுரப்பி - ஸுரபி (bh) சுர - சுரப்பு - சுரப்பி = பால் மிகுதியாய்ச் சுரக்கும் ஆவு குடஞ்சுட்டு. சுரப்பு = பால் சுரத்தல். சுரப்பி - சுரபி. வடவர் ஸு + ரப் (bh) எனப் பகுத்து, இனிதாய்த் தாக்குதல் (“affecting pleasantly”) என்று வேர்ப்பொரு ளுரைப்பர். இருக்கு வேதத்தில், நறுமணங் கமழ்தல், வசியஞ் செய்தல், இன்புறுத்தல், அழகாயிருத்தல் என்னும் பொருள்களிலேயே சுரபி என்னும் சொல் ஆளப் பெற்றிருப்பதாகவும், பிற்கால வடநூல்களிலேயே அது காமதேனு என்னும் ஒரு கற்பனை ஆவைக் குறித்தாகவும், மா.வி. அகரமுதலியினின்று அறியக் கிடக்கின்றது. ஸு = நன்றாய். ர = பற்று, தழுவு. சுரம் - ஜ்வர கள் - சுர் - சுரம் = காய்ச்சல், சுடும் பாலைநிலம். "சுரமென மொழியினும் (தொல். பொருள்.216) பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானல் (தனிப்பாடல்) அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாய் காடென்றார் (கலித்.10) என்பவை பாலைநில வெம்மையை யுணர்த்தும். சுரம் என்னும் சொல் முதுவேனிற் காலத்திற் கடுமையாய்ச் சுடும் பாலைநிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டமையால், சுரநோயைக் காய்ச்சல் என்றே சொல்ல வேண்டும். ஜ்வர என்னும் சொல் காய்ச்சலை மட்டுங் குறிக்கும்; பாலை நிலத்தைக் குறிக்காது. சுரிகை - சுரிகா (ch) சுர் - சுருக்கு. சுறுக்கெனல் = குத்துதற்குறிப்பு. சுர் - சுரி.சுரித்தல் = துளைத்தல். சுரி - சுரிகை = 1. உடைவாள். ``சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை'' (பெரும்பாண். 73) 2. கத்தி. வடமொழியில் சுரிகா என்பதன் அடி சுர். ஆயின், மா.வி. அ. க்ஷுர் என்பதை மூலமாகக் காட்டும். இவை யிரண்டும் சுரி என்பதன் திரிபே. சுரி - சூரி = ஓலையில் துளையிடுங் கருவி, சுரிகை. k., f., து. சூரி, தெ. த்சூரி. சூரிக்கத்தி = சூரியுள்ள கத்தி. க. சூரிக்கத்தி, தெ. த்சூரிக்கத்தி. சூரி என்பது உலக வழக்கு; சுரிகை என்பது செய்யுள் வழக்கு. ஏட்டில் துளையிடுங் கருவியைச் சுரியூசி என்பது யாழ்ப்பாண வழக்கு. சுருங்கை - ஸுருங்கா சுருங்குதல் = ஒடுங்குதல். சுருங்கு = (ஒடுங்கிய) சாய்கடை(பிங்.). இனி, உட்டுளையான வழி என்றுமாம். சுருங்கு - சுருங்கை = 1.நுழைவாயில் (பிங்.). 2. சிறுசாளரம். மாடமேற் சுருங்கையி லிருந்து (சீகாளத்.பு. நக்கீர. 30). 3. நீர் செல்லுங் கரந்துபடை. பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி (மணிமே.12:79) 4. கோட்டையிற் கள்ளவழி (சூடா.). 5. தப்பியோடும் கீழ்நில நெடுவழி. கீழ்நில வழியைக் குறிக்கும்போது, சுரங்கம் என்பது உலக வழக்கு. சுல்லி - சுல்ல (c) = அடுப்பு. சுல் = சுள். சுல் - சுல்லி = 1. அடுப்பு (திவா.). 2. மடைப்பள்ளி (இலக். அக.). சுவணம் - ஸுபர்ண உ - உவண் = மேலிடம்(சீவக.2853). உவணை = தேவருலகம். "ஆகநீத் துவணைமே லுறைந்தான்" (சேதுபு. விதூம.54). உவண் - உவணம் = 1. உயர்ச்சி (திவா.). 2. கலுழன் (கருடன்). சிறையுவண மூர்ந்தாய் (திவ்.இயற்: 1: 22). 3. கழுகு (திவா.). கலுழனுங் கழுகும் உயரப் பறக்கும் பருந்தினத்தைச் சேர்ந்தன வாதலின், அப் பெயர் பெற்றன. “cauîau¥ gwªjhY« C®¡FUÉ gUªjhFkh?என்னும் பழமொழியை நோக்குக. உவணமுயர்த்தோன் = கலுழக் கொடியனாகிய திருமால். உவணர் = கலுழர். உவணரோ டியக்கர் (கந்தபு. அயனைச் சிறை நீ. 2). உவணவூர்தி = கலுழனை ஊர்தியாகக் கொண்ட திருமால் (தணிகைப்பு. அகத். 370). உவணன் = கலுழன் (திவா.). உவணம் - சுவணம் = கலுழன் (சங். அக.). ஒ.நோ : உதை - சுதை, உருள் - சுருள், உழல் - சுழல். வடவர் சுவணம் என்பதை ஸுபர்ண என்று திரித்தும், ஸு+பர்ண என்று பிரித்தும், அழகிய இலை, அழகிய இலை யுடையது, இலை போன்ற அழகிய சிறகுகளையுடையது, பெரும் பறவை, கலுழன் என்று பொருள் விரித்தும், தம் ஏமாற்றுத் திறத்தின் பேரெல்லையைக் காட்டியுள்ளனர். ஸு = நல்ல. பர்ண = இலை. சுவண்டை - ஸ்வத் (இ.வே.) சுவை - சுவடு = சுவை, இனிமை அடிமையிற் சுவடறிந்த (ஈடு, 2: 6: 5) சுவடு - சுவண்டு - சுவண்டை = சுவை, இன்சுவை. சுவண்டையாய்த் தின்னத் திரிகிறான் என்னும் உலக வழக்கைக் காண்க. மா.வி.அ.பொருந்தப் பொய்த்தல் முறையில் ஸு + அத் என்பது மூலமாயிருக்கலாம் என்னும். ஸு = நன்றாய். அத் = உண். சுழிமுனை - ஸுஷும்னா சுழிமுனை (திருப்பு. 732) = பதினாடியுள் இடைக்கும் பின் கலைக்கும் இடையிலுள்ளது. சுள் - க்ஷுல்ல = சிறு. சுள் - சிறுமை (இலக். அக.). சுள்ளாணி = சிறிய ஆணி. (மலைபடு. 27, உரை). சுள்ளல் = மென்மை, மெலிவு. சுள் - சுள்ளி = சிறுமை. சுள்ளி வெள்ளிப் பற்கொண்டும் (கம்பரா. முதற்போ. 139) சுள் - சுஷ் = உலர். இது முன்னரே விளக்கப்பெற்றது. சுறுக்கு - ஸ்ராக் சுறுக்கு = விரைவு. சுறுக்காய் = விரைவாய். சூடம் - சூட (c) சூடுதல் = 1. தலையிலணிதல். கோட்டுப்பூச் சூடினுங் காயும் (குறள். 1313) 2. முடியணிதல். முடிசூடு முடியொன்றே (கலிங்.525) 3. மேற்கவிதல். வானஞ் சூடிய மலர்தலை யுலகத்து (பெரும்பாண். 409) சூடு - சூட்டு = 1. நெற்றிப்பட்டம். செம்பொற் சூட்டொடு கண்ணி (சீவக.2569) 2. பறவையின் உச்சிக்கொண்டை. காட்டுக் கோழிச் சூட்டுத்தலைச் சேவல் (பெருங். உஞ்சைக். 52:62) 3. மதில்மேல் ஏவறை. இடுசூட் டிஞ்சியின்" (பு.வெ.6 : 18, கொளு). சூடு - சூடம் = தலையின் உச்சி. புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன். 7). சூடு = 1. குடுமி. கானிறை குஞ்சிச் சூட்டில் (திருவிளை. யானையெய். 25). 2. உச்சிக் கொண்டை. சூடு - சூடை = 1. தலை. சூடையின் மணி (கம்பரா.சூளா. 88). 2. குடுமி. சூடைவிளங்கு மாமணி (சேதுபு.சேதுவந்த.15). சூடு - சூடிகை = 1. மணிமுடி(பிங்.).2. கோபுரக் கும்பம். சூடிகை - சூடிகா (c) சூடை - சூடா (c) சூடிகை - சுடிகை = 1. தலையுச்சி (திவா.). 2. மகுடம் (திவா.). 3. நெற்றிச்சுட்டி (திவா.) 4.மயிர்முடி (திவா.). 5.சூட்டு. பஃறலைச் சுடிகை மாசுணம் (கந்தபு. திருநாட்டுப் .19). சூர் - சூர் சுள் - சுர் - சூர் சூர் = 1. மிளகு. 2. கடுப்பு. சூர்நறா வேந்தினாள் (பரிபா. 7: 62).. 3. கொடுமை.Nuu மகளி ராடுஞ் சோலை (திருமுருகு. 41). 4. அச்சம்.NUW மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலார் (பெருங்.cŠir¡. 44). 5. அஞ்சத்தக்க பேய்த்தெய்வம். உருமுஞ் சூரும் (குறிஞ்சிப். 355). 6. மறம் (வீரம்). 7. வயவன் (வீரன்).N®òf லரியது (கம்பரா. கவந்த. 21). சூர்த்தல் = 1. அச்சுறுத்தல். சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்கு (சிலப்.5: 84) 2. கொடுமை செய்தல் (திருமுருகு. 48, உரை). சூரன் - சூர (இ.வே.) சூர் - சூரன் = வயவன் (பிங்.). ``துறப்பில ரறமெனல் சூர ராவதே (கம்பரா. தைலமாட்டு. 30) சூரன் - ஸூர (இ.வே.) சுள் - சுர் - சுரம் - சுரன் - சூரன். சூரன் = 1. நெருப்பு (பிங்.). 2.கதிரவன். காதற் சூரனை யனைய (பாரத.பதினேழாம்.49) சூர்ப்பம் - சூர்ப்ப சூர்த்தல் = சுழலுதல். சூர்த்த நோக்கு (அக. நி.). சூர்ப்பு = 1. சுழற்சி (சங். அக.). 2. கைக்கடகம். பசும்பூட் சூர்ப்பமை முன்கை (புறம். 153: 3). சூர்ப்பு - சூர்ப்பம் = வளைந்த முறம் (பிங்.). சூலம் - சூல (இ.வே.) உல் = தேங்காயுரிக்கும் கூரிரும்பு. உல் - சுல் - சுள். சுள்சுள்ளெனல் = முட்போற் குத்துதல். சுள் - சுர் - சுரி - சுரிகை = உடைவாள். சுல் - சூல் = சூலப்படை. ``குலிசங் கதைசூல்'' (சேதுபு. தேவிபுர.27). சூல் - சூலம். ``ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச. 9: 17). சூலி - சூலின் சூல் (சூலம்) - சூலி = சூலமேந்தி, சிவன், காளி. சூலை - சூலா சூலுதல் = 1. குத்தல். 2. தோண்டுதல், குடைதல். நுங்குசூன் றிட்டன்ன (நாலடி. 44). 3. வளைதல். சூல் - சூலை = குத்தல் குடைச்சலெடுக்கும் அல்லது கைகாலை மடக்கும் நோய். செடி - ஜடி (gh, t|) = செடி. செள் - செழி - செடி.செடித்தல் = அடர்தல். செடி = அடர்த்தி. செடிகொள் வான்பொழில் சூழ்" (திருவாச. 29: 5). செடி = இலைகிளை யடர்ந்த சிறு நிலைத்திணை வகை. k. செடி, தெ. செட்டு, f. »l(g), bj. செட்டு, இ. ஜாட் (d) = மரம். செட்டி - ச்ரேஷ்டின் எழுதல் = உயர்தல். எண்ணுதல் = மேன்மேல் அளவிடுதல். எட்டுதல் = உயர்தல், உயர்ந்து தொடுதல், தொடுமளவு நெருங்குதல். எட்டிநோக்குதல் = அண்ணாந்து பார்த்தல் (பெருங். நரவாண. 8. 82 ). எட்டம் = உயரம், தொலைவு. எடுத்தல் = உயர்த்துதல், தூக்குதல். எட்டு - எட்டி = 1. உயர்ந்தவன், மேலோன். 2. பண்டையரசர் வணிக மேலோனுக்கு அளித்த பட்டம். எட்டி குமர னிருந்தோன் றன்னை (மணிமே. 4: 58). 3. வணிகன் (திவா.). எட்டிப்பூ = எட்டிப்பட்டம் பெற்றவனுக்கு அரசர் கொடுக்கும் பொற் பூ. எட்டிப்பூப் பெற்று (மணிமே. 22: 113). எட்டிப்புரவு = எட்டிப்பட்டம் பெற்றவனுக்கு அரசன் கொடுத்த நிலம் (நன். 158, மயிலை. உரை). எட்டி - செட்டி. ஒ.நோ : இளை - சிளை, உதை - சுதை, ஏண் -சேண். செட்டிமை = வணிகம், செட்டு. செட்டி - செட்டு = செட்டித்தனம், சிக்கனம். செட்டி - சேட்டி - சேட்டு = வடநாட்டு வணிகன். வடமொழியார் காட்டும் மூவேறு மூலம் வருமாறு: (1) ச்ரீமத் (திருமான்) என்பதன் உச்சத்தரம் (sup. deg.) (2) ப்ரசஸ்ய (புகழப்படத்தக்கவன்) என்பதன் உச்சத்தரம். (3) ச்ரீ (திரு) என்பதன் உச்சத்தரம். தென்சொற்களை வடசொல்லாக்கும் வழிகளுள் ஒன்று முத லெழுத்தின்பின் ரகரம் இடைச்செருகல். எ-டு : தமிழம் - த்ரமிள, கமுகம் - க்ரமுக, திடம் - த்ருட, நட்டம் -ந்ருத்த, படி - ப்ரதி, மெது - ம்ருது, விடை - வ்ருஷ. இம் முறையில் செட்டி என்பதை (வடமொழியில் எகரம் இன்மையால்) ச்ரேட்டி எனத் திரித்து. அதற்கேற்பப் பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்திபற்றி வெவ்வேறு மூலங் காட்டு வாராயினர். செட்டி என்பது, தமிழில் வணிகனைமட்டுங் குறிக்கும் என்றும், ச்ரேஷ்டின் என்பது வடமொழியிற் சிறந்தோன் எவனையுங் குறிக்கும் என்றும் வேறுபாடறிக. செம்பியன் - சைப்ய (b) ஆரியர் வருமுன் ஒருகாலத்தில் இந்தியா முழுதும் பாண்டியர் ஆட்சியிலிருந்தது. பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11 : 19 - 22) என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. அக்காலத்தில் பாண்டியக் குடியினர் சிலர் வடநாடு சென்று வாழ்ந்திருந்தனர். அவரே பாண்டவரின் முன்னோரான வடநாட்டுத் திங்கள் மரபினர். அதன்பின், சோழக் குடியினர் சிலரும் வடநாடு சென்று ஆண்டனர். அவரே இராமனின் முன்னோரான வடநாட்டுக் கதிரவன் மரபினர். இதனாலேயே, மனு, மாந்தாதா, முசுகுந்தன், செம்பி முதலியோர், சோழருக்கும் வடநாட்டுக் கதிரவக் குலத்தினருக்கும் பொது முன்னோராகச் சொல்லப்படுவாராயினர். செம்பி வழிவந்தவன் செம்பியன். செம்பி என்னும் பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது. செம்பியன் = சோழன். "செம்பியர் மருகன்" (புறம். 228 : 9). சோழன் செம்பியன் எனப் பெற்றமையாலும், செம்பியன் தமிழப் பேரரையன்,செம்பியன் தமிழவேள் என்பன சோழராற் கொடுக்கப் பெற்று வந்த பட்டங்களா யிருந்தமையாலும், செம்பி என்னும் பெயர் தூய தமிழ்ச் சொல்லாகவே யிருத்தல் வேண்டும். மனு, மாந்தாதா முதலியோரின் தமிழ்ப் பெயர் மறையுண்டு போயின. தலையெழு வள்ளல்களுள் ஒருவன் செம்பியன் எனப் பெற் றிருந்தமையால், சோழர்குடித் தொன்முது பழைமையும் செம்பியன் முதுபழைமையும் உணரப்பெறும். ஆரியர் வருமுன் வடநாட்டில் தமிழர் குடியேறியிருந்தது போன்றே, தமிழ அரசரும் குடியேறியிருந்தனர் என அறிக. அகத்தியர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கண் இருந்தார் என்று நச்சினார்க்கினியர் கூறுவதையும் நோக்குக. செவ்வந்தி - சேவதீ செவ்வந்தி = செவ்வந்திநேரத்திற் பூக்கும் பூ. செவ்வந்தி- செவந்தி. செவியுறு - ச்ரு. (இ.வே.) = கேள், செவிக்கொள். ச்ரு என்னும் சிதைசொல்லினின்றே ச்ருதி (கேள்வி, மறை), ச்ரோத்ரிய, ச்ரவண, ச்ராவண முதலிய சொற்கள் பிறக்கும். சே - க்ஷி2 (ï.nt) = தங்கு, வதி. சேத்தல் = தங்குதல் பைத லொருதலை சேக்கு நாடன் (குறுந். 13) கான மஞ்ஞை கணனொடு சேப்ப (புறம். 127) க்ஷி என்னும் சொல்லினின்றே க்ஷேத்ர என்னும் சொல் திரியும். க்ஷேத்ர = தங்குமிடம், மனை, நகர், இடம், திருவிடம். சேக்கை = 1. கூடு. சேக்கை மரனொழியச் சேணீங்கு புள் (நாலடி. 30). 2. கட்டில். சேத்தல் = தங்கியுறங்குதல். ``கயலார் நாரை போர்விற் சேக்கும் (புறம்.24:20) சேம்பு - கேமுக சேம்பு = ஒருவகைக் கிழங்கு. சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை (குறுந். 76) சேமம் - க்ஷேம இது முன்னரே விளக்கப் பெற்றது. சேரலம் - கேரல சேரல் = சேரன். சேரல் - சேரலம் - வ. கேரல - கேரள. சேலை - சேல (c) சீரை - சீலை - சேலை (பிங்.). வடவர் சில் (c) என்றொரு செயற்கை மூலத்தை அமைத்துக் கொண்டு ஆடையணிதல் என்று பொருள் கூறுவர். சொம்1 - ஸ்வ (இ.வே.) சும்மை = தொகுதி, கூட்டம். சும் - சொம் - (சொந்து) - சொந்தம் = தன்னொடு கூடியது. சொம்2 - ஸ்வ - ஸ்வாம் (இ.வே.) சும் - சும்மை = தொகுதி, செல்வத்தொகுதி. சும் - சொம் = சொத்து. முதுசொம் = முன்னோர் தேட்டு. சொம் - சொத்து. ஒ.நோ : தொகை = தொகுதி, செல்வம். ஸ்வாம் = சொத்து. தேவஸ்வாம் = தெய்வச் சொத்து, கோயிற் சொத்து. ஸ்வாம் - ஸ்வாமி - ஸ்வாமின் = சொத்துக்காரன், ஆண்டை, ஆண்டவன், தெய்வம். வடவர் ஸ்வாமின் என்னுஞ் சொல்லை ஸ்வ+மின் என்று பகுத்து, சொந்தக்காரன், உடையவன், உரிமையாளன், தலைவன், கணவன், அரசன், குரு, தெய்வப் படிமை என்று பொருள் தொடுப்பர். சொலவம் - ச்லோக சொல் - சொலவு = மரபுக் கூற்று, பழமொழி, பழமொழி போன்ற செய்யுள் தொடர். சொலவு - சொலவம். சொலவு - சொலவடை. வடமொழியில் முதல் வனப்பு (ஆதிகாவியம்) வான்மீகி இராமாயணம் என்பர். வான்மீகி முனிவர் காட்டில் ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு வருந்தியபோது தம் முதற் செய்யுளைப் பாடியதால், வருத்தத்தைக் குறிக்கும் சோக(ம்) என்னும் சொல்லினின்று தனிச் செய்யுட்குச் ச்லோக என்று பெயருண் டாயிற்றென்று வடவர் கூறுவது மரபு. மா. வி. அ. இதை மறுத்துச் ச்ரு (கேள்) என்னும் சொல்லொடு தொடர்புகொண்டதா யிருக்கலாமென்று கருதுகின்றது. சொலி - ஜ்வல் (வே.) சுல் - சுல்லி = அடுப்பு. சுள்ளெனல் = வெயில் சுடுதல். சுள் - சுள்ளை = மட்கலஞ் சுடுமிடம், காளவாய். சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், ஒளிர்தல். சொல் - சொன் - சொன்னம் = தங்கம். சொல் = பொன்னிறமான நெல். சடைச்செந்நெல் பொன்விளைக்கும் (நள. சுயம்வர. 68) ஒ.நோ : நில் - நிலா, நிலவு. நிற்றல் = விளங்குதல். நில் - நெல் = விளங்கும் பொன்போன்ற கூலம். சொன்னம் – சுவர்ண சொல் -சொன் -சொன்னம் =பொன்(திவா.).brh‹dfhu‹ = தட்டான் (பிங்.). சொன்னதானப் பயனெனச்சொல்லுவர்” (கம்பரா. சிறப்பு) வடவர் சு + வர்ண என்று பகுத்து நன்னிற முள்ளது என்று பொருட் காரணங் காட்டுவர். இரட்டித்த னகரத்தை ர்ண என்று திரிப்பது வடவர் மரபு. எ-டு : கன்னம் - கர்ண = காது. சோடை - சோஷ சுடு - சூடு - nசாடு- nசாடி.nrho¤jš = காய்தல், வற்றுதல் (r§. அக.). சோடு - சோடை = வறட்சி. வடவர் சுஷ் என்பதை மூலமாகக் காட்டுவர். அது சுள் என்பதன் திரிபென்பது முன்னரே கூறப்பட்டது. சோம்பு - ஸ்வப் (இ.வே.) சும் = அமைதி, ஒன்றுஞ்செய்யாமை, சோம்பல். சும்மாயிருத்தல் = அமைதியாயிருத்தல், வினைசெய்யா திருத்தல். சிந்தையை யடக்கியே சும்மா யிருக்கின்ற திறமரிது (தாயு. தேசோ.) சும் - சும்பு. சூம்பு = சோம்பல். சூம்பு - சோம்பு. சோம்புதல் = வினைசெய்யாதிருத்தல், சுறுசுறுப்பின்மை, கால நீட்டித்தல், தூங்க விரும்புதல். ஒ.நோ : தூங்குதல் - உறங்குதல், காலந்தாழ்த்து வினைசெய்தல் மந்தமாதல். ஸ்வப் = தூங்கு, கனவுகாண். L. somnus, Slav. supati, Lith. sapnus, AS. swef, Gk. hupnos = sleep. ******* அருஞ்சொல் அகர முதல் வரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அகத்தியர், 38 அஸ்வினிகள், 33 ஆதன், 14 ஆதித்தியர், 34 ஆரியானா, 20 ஈயோஸ், 33 உயிரிசைவு மாற்றம், 26 உஷாஸ், 33 ஏழ்தெங்க நாடு, 2 ஔரோரா, 33 காரக்கோரம், 25 காரோதிமம், 2 குமரிக்கண்டம், 1 குயக்கோடன், 51 கெந்தும் மொழி, 19 கெர்பெரோசு, 33 கோகித்தானம், 25 சதம்மொழி, 19 சாயனர், 34 சாலி, 4 சாவித்திரி, 34 சிவஞான முனிவர், 51 சுந்தரம் பிள்ளை, 51 சுவாமிநாத தேசிகன், 51 தியூத்தானியம், 36 தியௌஸ் (த்யௌஸ்), 33 தித்திருக்கு, திருத்தக்கல், 2 தென்பல்லி, 3 தென்புலக்கோன், 3 தென்புலத்தார், 3 நக்கீரர், 51 நயன்மைக் கட்சி, 31 நாரதர், 37 நாவலந்தேயம், 1 நிலைத்திணை, 2 பஃறுளியாறு, 2 பஞ்சதிராவிடம், 28 பர்ஜன்யா, 32 பரஞ்சோதி முனிவர், 52 பிரஜாபதி, 33 பிராகிருதம், 60 பிராதிசாக்கியம், 42 புலனெறி வழக்கம், 3 புளூட்டோ, 33 பூஷன், 33 மறைமலையடிகள், 53 மனோன்மணீயம், 52 மாக்கசு முல்லர், 20 மித்திரா (மித்ரா), 33 ரிபுக்கள், 33 ருத்ர, 33 வடபல்லி, 3 வருணா, 33 வழியடி, 4 வாரணன், 33 வில்லியம் சோன்சு, 20 வேதத் தெய்வங்கள், 33 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை'' என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென்மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட் டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். பாவாணர் பொன்மொழிகள் மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே! பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! தொன்மையொடு முன்மை; தொன்மையொடு நன்மை; தாய்மையொடு தூய்மை; தழுவிளமை வளமை. பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே! பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே! பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே! பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே! இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே! ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே! கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே! கலப்படையால் குணத்தீவைக் காத்தவனும் தமிழனே! பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்? தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான். தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே. பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறிவுப் பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறழ்ந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம். அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும் அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும்.... கால் மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும். கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தனிமொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். கருவிநூற்பட்டி (Bibliography) சமற்கிருதம்: வடமொழி வரலாறு - சுப்பிரமணிய சாத்திரியார் (P.S.) எழுதியது வடமொழி நூல் வரலாறு - First Book of Sanskrit - By Ramakrishna Gopal Bhandarkar. Second Book of Sanskrit - By --Do.-- Sanskrit Grammar. Laghu Kaumudi with English Commentary - By Ballantyne. Astadhyayi Sutrapatha: - By Bhattacarya. The Sanskrit Language - By Burrow. An Enquiry into the Relationship of Sanskrit and Tamil - By P. S. Subrahmanya Sastri. A Sanskrit - English Dictionary - By Monier Williams. Panini: His Place in Sanskrit Literature - By Theodor Goldstucker. India as known to Panini - By V. S. Agrawala வேதமொழி: Sama Veda (Text and Tamil Translation) - By Sivananda Yatindira. Krishna Yajur Veda (Text and Tamil Translation) - By --Do.-- A Vedic Grammar for Students - By A. A. Macdonell. A Vedic Reader for Students - By --Do.-- An Account of the Vedas - C. L. S., Madras. The Atharva Veda - --Do.-- The Brahmanas of the Vedas - --Do.-- மொழிநூல்: Lectures on the Science of Language (2 Vols.) - By Max Muller. Three Lectures on the Science of Language - By --Do.-- Historical Outlines of English Accidence - By Rev. Richard Morris.