பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 5 தமிழ் வரலாறு - 1 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 5 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1967 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 192 = 208 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 130/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். முகவுரை உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. அதற்குக் கரணியம், (காரணம்), பழம் பாண்டிநாடாகிய குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டதும், ஆரிய வருகைக்கு முற்பட்டதும் முதலிரு கழகக் காலத்ததுமான பல்துறைப் பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழிவுண்டதும், தமிழ வேந்தர் வேத ஆரியரை நிலத்தேவர் (பூசுரர்) என நம்பித் தம்மையும் தம் இனத்தாரையும் தாழ்த்திக் கொண்டதும், வேதஆரியமும் சமற்கிருதமுமாகிய வடமொழி தேவமொழி என நம்பப்பட்டதும், வாய்மைத் தமிழ்ப்புலவர் வாழ்ககையிழந்ததும், தமிழின் தூய்மை குலைவுண்டதும், தமிழ் வரலாறு மறைவுண்டதும், தமிழ் கோயில்வழிபாட்டிற்குத் தகாதமொழியென்று தள்ளப்பட்டதும், தமிழர தமிழை இகழ்ந்து புறக்கணித்ததும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால் தமிழர் சின்னபின்னமாகச் சிதைவுண்டு ஒற்றுமையற்றதும், பேதைமையூட்டும் புராண மென்னும் தொல்கதைகளையே நீளக் கற்றுங் கேட்டும் பகுத்தறி விழந்ததும், அவருள் நூற்றிற்குத் தொண்ணூற்றைவர் தற்குறி களானதும், பிறப்பிழந்த போலித்தமிழர் தொன்றுதொட்டுத் தமிழைக் காட்டிக்கொடுத்து வருவதும், பிற்காலத்தமிழகத்தை அடுத்தடுத்துப் பல்வேறு வேற்றரசர் ஆண்டதும், ஆகும். ஆங்கிலராட்சியாலும் ஆங்கிலக் கல்வியாலும், ஒரு சார்த்தமிழர்க்குக் கண்திறக்கப் பெற்றதின் பயனாக, மறைமலையடிகளின் தனித்தமிழியக்கந் தோன்றித் தமிழ் மீண்டுந் தளிர்த்துத தழைக்கத் தொடங்கிற்று. ஆயின், ஆங்கிலர் நீங்கியபின், ஆரியப்பகை புதிய இந்தித் துணையொடு வந்து அரசியல்வாயிலாகத் தமிழை அடர்த்துவருகின்றது. இதனால், அரசியல், பொதுவியல், பல்கலைக்கழகவியல் ஆகிய முத்துறை யிலும், தமிழுக்கும் உண்மைக்கும் மாறான சொற்பொழிவுகளும் வெளியீடுகளும் தொடர்ந்து நிகழ்கின்றன. தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பான பதவியிலுள்ள பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர், தமிழைக் காட்டிக்கொடுப்பதும் அதற்கு உடந்தையாயிருப்பதும் அதைப்பற்றிக் கவலாதிருப்பதுமாக முந்நிலைப் பட்டுள்ளனர். அவருள், காட்டிக்கொடுப்பவர் ஆரிய அடிப்படையில் தமிழைக் கற்றவர்; ஏனையர் ஆரியத்தை அடியோடறியாதவர். இவ்விரு சாரார்க்கும், நெல்லை வட்டார நாட்டுப்புறத் தமிழை அறியாமை, சொந்தமாய், மொழி யாராய்ச்சி செய்யாமை, தென்சொல்வளந் தெரியாமை, தமிழ்ப்பற்றின்மை, தன்னல முதன்மை, நெஞ்சுர மின்மை ஆகியவை பொதுவாம். இந்நிலையில், தமிழின் உண்மையான வரலாறு வெளி வருவது இன்றியமையாத தாகின்றது. தமிழ்வரலாறு என்னும் பெயரில் இதுவரை வெளிவந்தவை யெல்லாம், பெரும்பாலும் தமிழிலக்கிய வரலாறும் மொழிபற்றிய பொதுவான செய்தி களை எடுத்துக் கூறுவனவுமாகவே உள்ளன. வரலாற்றையும் மொரிநூலையும் தழுவி, முதன்முதலாக வெளிவரும் தமிழ் மொழி வரலாறு இதுவே. நான் சேலங்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியனா யிருந்தபோதே, தவத்திரு மறைமலையடிகள் இதை வெளியிடுமாறு என்னைப் பணித்தார்கள். ஆயினும், அது இதுவரை நிறைவேற வாய்ப்பில்லாது போயிற்று. ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் அமெரிக்கருமான மேலையர் இற்றை அறிவியல்களில் தலைசிறந்தவரும் வழிகாட்டி களுமாயிருப்பினும், தமிழர் நண்ணிலக் கடற்படையினின்று தென்னாடு வந்தவ ரென்றும், இந்திய நாகரிகம் வேத ஆரியர் கண்டதென்றும், இரு தவறான கருத்துக்கள் அவருள்ளத்தில் ஆழ வேரூன்றி யிருப்பதனால், பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், பிற்பட்ட சமற்கிருதத்தை முற்பட்ட தமிழுக் கடிப்படையாக வைத் தாய்ந்து, ஆரிய வெம்மணற் பாலைப்பரப்பில் அலைந்து வந்து வழிதெரியாது மயங்கி, எல்லாமொழிகளும் அறிகுறித் தொகுதிகளே என்றும், ஆயிரமாண்டிற் கொருமுறை மொழி களெல்லாம் அடியோடு மாறிவிடுகின்றன என்றும், அதனால் மொழித் தோற்றத்தைக் காணமுடியாதென்றும், முடிபு கொண்டு, மேற்கொண்டு உண்மைகாண முடியாவாறு, தம் கண்ணைத் தாமே இறுகக் கட்டிக்கொண்டவர். மொழிநூல் திறவுகோல் தமிழிலேயே உள்ள என்னும் உண்மையை அவர் உணர்வாராயின், வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். ஆதலால், அவர் இனிமேலாயினும் தக்கவாறு தமிழில் கவனத்தைச் செலுத்துவாராக. இற்றைத் தமிழருள்ளும் நூற்றிற் கெண்பதின்மர் அறிகுறி களும் தாய்மொழியுணர்ச்சி யில்லாதவருமாயிருப்பதனாலும், ஆங்கிலங் கற்றாருட் பெரும்பாலார் தமிழிலக்கியங் கல்லாமை யாலும், கல்லூரிகளில் தமிழாசிரியப் பணிசெயப் புகும் இளைஞரும் தமக்குள்ள தமிழ்ப்பற்றை விளக்குமாறு பல்கலைக்கழகச் சூழ்வெளி ஆரியவணுக்கள் நம்பியிருப்பதனாலும், அரசியற் கட்சிகளுள் தி. மு. க. தவிர ஏனைய வெல்லாம் இந்தியை யேற்றுத் தமிழைப புறக்கணிப்பதாலும், இன்று தமிழப் பண்பாட்டைப் பெரும் பாலும் தாங்கிநிற்கும் உயர்நிலைத் தமிழரான உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும், புதுத்தலை முறையாக முளைவிட்டுக் கவர்ந்தெழும் மாணவமணிகளும், புலவர்கல்லூரிகளிற் களிலும் மழபுலவரும், பட்டம்பெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி யிளைஞரும், இதைக் கருத்தூன்றிப் படித்து, செந்தமிழின் கூர்மதிநுட்பத்தையும் உணர்ந்து, தம்மை உணர்த்துவதுடன் தமிழையும் உலகமுழுதும் பரப்புவாராக. இந்நூலைச் செவ்வையாக அச்சிட்டுத்தந்த, அச்சக உரிமையாளர் திரு. மு. நாராயணன் செட்டியார் ஆகியகட்கு, தமிழுலகனைத்தும் கடப்பாடுடையதாகும். சீராய்ப் பிழையின்றிச் செந்தமிழ்நூ லச்சிட்டு நேராய்த் தருபவர் நீணிலத்தில் - ஆராய்ந்து பாராய் பெருவழிப் பாரிப்பேர் அச்சகத்தார் நாரா யணன்செட்டி யார். எத்தனை மெய்ப்பேனும் இந்நூற் கிடயின்றி உய்த்தவை தாமும் உடன்திருத்தி - அச்சும் அகனமர்ந் திட்டார் அவருக்குக் கைம்மா றெவன்புரி கிற்பார் எமர். காட்டுப்பாடி, ஞா. தேவநேயன் (24-2-1967) குறுக்க விளக்கம் (Abbreviations) 1. இலக்கணக் குறியீடுகளும் பொதுச்சொற்களும் ஆ. பா. - ஆண்பால் இ. கா. - இறந்த கால(ம்) உ. த. - உயர்தரம் எ. கா. - எதிர்கால(ம்) எ-டு. - எடுத்துக்காட்டு ஒ. நோ. - ஒப்பு நோக்க ஒ. பா. - ஒன்றன்பால் கி. பி. - கிறித்துவிற்குப்பின் கி. மு. - கிறித்துவிற்குமுன் செ. வ. - செய்யுள் வழக்கு தொ. பெ. - தொழிற்பெயர் தோரா. - தோராயம் (உத்தேசம்) நி. கா. - நிகழ்கால(ம்) நூற். - நூற்றாண்டு பக். - பக்கம் ப. பா. - பலவின்பால் பல. பா. - பலர்பால் பெ. - பெயர் பெ. எ. - பெயரெச்சம் பெ. பா. - பெண்பால் பேரா. - பேராசிரியர் வி. - வினையெச்சம் வி. மு. - வினைமுற்று வே. உ. - வேற்றுமையுருபு comp. - comparative dim. - diminutive pron. - pronoun suf. - suffix sup. - superlative 2. மேற்கோள் நூற்பெயர்கள் அகம். - அகநானூறு இரகு. - இரகுவமிசம் உரி. - உரியியல் கந்தபு. - கந்தபுராணம் கலித். - கலித்தொகை குறள். - திருக்குறள் குறுந். - குறுந்தொகை சிலப். - சிலப்பதிகாரம் சீவக. - சீவகசிந்தாமணி சூளா. - சூளாமணி சேனா. - சேனாவரையம் சொல். - சொல்லதிகாரம் திரி. - திரிகடுகம் திவ். - திவ்வியப் பிரபந்தம் திவா. - திவாகரம் தொல். - தொல்காப்பியம் நன். - நன்னூல் நாலடி. - நாலடியார் நெடுநல். - நெடுநல்வாடை ghuj.- வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பிங். - பிங்கலம் (பிங்கலந்தை) பிரபு. - பிரபுலிங்கலீலை பு. வெ. - புறப்பொருள் வெண்பா மாலை புறம். - புறநானூறு பெரியபு. - பெரியபுராணம் பெருங். - பெருங்கதை பெரும்பாண். - பெரும்பாணாற்றுப்படை பொ. - பொருளதிகாரம் மணி. - மணிமேகலை மலைபடு. - மலைபடுகடாம் 3. மொழிப் பெயர்கள் அ. - அரபி. அங். - அங்கேரியம் (Hungarian) அபி. - அபிசினியம் அர. - அரமேக்கு (Aramaic) M.- ஆங்கிலம் ஆசு. - ஆசுக்கன் (Oscan) இ. - இந்தி இசு. - இசுப்பானியம் (Spanish) இலத். - இலத்தீன் (இலத்தீனம்) ïyh¥.- இலாப்பியம் (Lappish) எ. - எபிரேயம் எசு. - எசுத்திரியன் (Estrian) ஐ. - ஐசிலாந்தியம் ஓ. - ஓசித்தியம் (Ostiak) க. - கன்னடம் கல. - கலதேயம் (Chaldean) கி. - கிரேக்கம் கு. - குடகு (குடகம்) குச. - குசராத்தி குரு. - குருக்கு கொண். - கொண்டா கோ. - கோத்தம் கோண். - கோண்டி கோதி. - கோதியம் (Gothic) கோல். - கோலாமி ச. - சமற்கிருதம் சமா. - சமாயிதம் (Samoiede) சி. - சிங்களம் சீ. - சீரியம் (Syriac) சிந். - சிந்தியம் செ. - செருமானியம் செர். - செர்மிசம் (Chermiss) சென. - செனசெய் (Jenesei) த. - தமிழ் தி. - திபேத்தம் து. - துளு (துளுவம்) துங். - துங்குசியம் துட. - துடவம் துரு. - துருக்கி தெ. - தெலுங்கு நா. - நாய்க்கீ ப. - பர்சி (பர்ஜி) ப. ஆ. - பழைய ஆங்கிலம் ப. சா. - பழஞ்சாகனீயம் ப.செ. - பழஞ்செருமானியம் ப. பிரெ. - பழம் பிரெஞ்சு பி. - பிராகுவீ பிரா. - பிராகிருதம் பிரெ. - பிரெஞ்சு பின். - பின்னியம் (Finnish) போ. - போர்த்துக்கீசியம் போதி. - போதியா (Bhotiya) ம. - மலையாளம் மங். - மங்கோலியம் மரா. - மராத்தி மா. - மார்துவின் மெ. - மெச்சு (Mech) வ. - வங்கம் (வங்காளம்)ங Ar - Arabic As - Anglo-Saxon Du - Dutch Goth - Gothic Gk - Greek L - Latin L G - Low German M E - Middle English M Du - Middle Dutch M L G - Middle Low German O S - Old Saxon O E - Old English O N - Old Norse O H G - Old High German O F - Old French Skt - Sanskrit Sw – Swedish குறி விளக்கம் (Symbols) - இடைக்கோடு (hyphen) - வலமுறைத் திரிவுக்குறி = சமக்குறி, பொருட்பாட்டுக்குறி + புணர்ச்சிக்குறி x எதிர்நிலைக்குறி (Opposite) , ” மேற்படிக் குறிகள் ...... விடுபாட்டுக் குறி உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளச்சுரப்பு .v சான்றிதழ் .vii முகவுரை .ix குறுக்க விளக்கம் .xii முன்னுரை 1. வரலாற்றின் பயன் .1 2. மொழிநூலின் முதன்மை .1 3. தமிழ் தோன்றிய இடம் .2 4. தமிழின் தொன்மை .13 5. தமிழ் வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல் 21 6. தலைகீழாராய்ச்சி 23 7. கால்டுவெல் கண்காணியாரின் காட்சி யுரைகள் .25 8. கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள் 27 9. திரவிட மொழிப் பகுப்பு .28 10. தமிழ் என்னும் பெயர் வரலாறு 30 11. மூவேந்தர் பெயர் .40 12. பழந்தமிழக இடப்பெயர்கள் .45 நூல் I இயனிலைப் படலம் (தோரா. கி. மு. 50,000-10,000) .51 1. முற்படை: .51 i. குமரிக் கண்டம் (கி. மு. (?)-5,500) .51 ii. குமரிநாட்டு மாந்தன் தோற்றம் (தோரா. கி. மு. 5,00,000) . 52 iii. குமரி மாந்தர் மொழியற்ற நிலை (தோரா. கி. மு. 5,00,000-1,00,000) .52 vi. இயற்கை மொழி (தோரா. கி. மு. 1,00,000,-50,000) .53 2. தமிழ்த் தோற்றம் (செயற்கை மொழி) தோரா. கி. மு. 50,000 58 3. தமிழ் வளர்ச்சி - சுட்டடிச் சொல்லாக்கம் 60 i. உரைநடை .70 (1) கிளவியாக்கம் .70 1. சொற்றிரிவு முறைகள் .70 (1) அறுவகைத் திரிபு 71 (2) முக்குறை .71 (3) மும்மிகை 72 (4) பல்வேறு உயிர்த்திரிபு .72 (5) பல்வேறு மெய்த்திரிபு .73 (6) பல்வகை யீறுகள் .76 (7) வலியிரட்டல் .84 (8) போலி 85 (9) மூவகைச் சொற்கிடக்கை .85 (10) பொருட்கேற்ற ஒலியமைப்பு .87 (11) மரூஉ .88 (12) முன்னொட்டுக்களும் அடைகளும் .88 (13) பின்னொட்டுக்களும் ஈறுகளும் .95 (14) புணர்ச்சி 95 (15) ஓரிய லமைப்பு .98 (16) ஒப்புமை யமைப்பு .99 (17) நானிலக் கருப்பொருட் சொற்கள் .99 2. பொருட்டிரிவு முறைகள் 101 (1) வமையாகுபெயர்...101 (2) மூவகைத் தகுதிவழக்கு 101 (3) ஓரினப்படுத்தலும் வேறினப்படுத்தலும் 102 (4) ஐவகைப் பொருள் திரிவு 103 (2) சொற்றொடராக்கம் .106 ii. செய்யுள் நடை (தோரா. கி. மு. 15,000) .106 4. நால்வகை எழுத்து (தோரா. கி. மு. 12,000) .107 5. எழுதப்பெற்ற இலக்கியம் (தோரா. கி. மு.11,000)... 107. கி. மு. 10,000) ... 108 i. எழுத்து - எழுத்தொலியம் (Phonemics) .109 (1) முதலெழுத்துகள் (Phonemes) .109 (2) சார்பெழுத்துகள் .114 2. பலுக்கொலியம் (Phonetics) 124 விழுத்தம் .130 அழுத்தம் .131 ii. சொல் .131 (1) பெயர்ச்சொல் 133 1. மூவிடப் பகரப்பெயர்கள் .133 2. வினாப்பெயர்கள் .137 3. படர்க்கைப்பெயர்ப் பாகுபாடுகள் 138 (1) அறுபொருட்பெயர் .138 (2) இடப்பெயர் .144 (3) காலப்பெயர் 146 (4) சினைப்பெயர் .146 (5) குணப்பெயர் 146 (6) தொழிற்பெயர் .155 (2) வினைச்சொல் .156 1. இறந்தகால வினை .160 2. நிகழ்கால வினை 163 3. எதிர்கால வினை .165 4. வினைவகைகள் 168 தமிழ் வரலாறு - 1 முன்னுரை 1. வரலாற்றின் பயன் கலைகளும் (Arts) அறிவியங்களும் (Sciences) (1) தற்சார் புள்ளது (Independent), (2) மற்சார்புள்ளது (Dependent) என இருதிறப்படும். தற்சார் பறிவியங்களுள் ஒன்றான வரலாறு, ஏனை யறிவியங்கட் கெல்லாம் அடிமணையாயும் முதுகந்தண் டாயும் இருப்பதாகும். ஒவ்வொரு துறையிலும், தொடக்கந் தொட்டுவரும் ஆசிரியரின் அல்லது அறிஞரின் வரலாற்று முறைப்பட்ட அறிவுத் தொகுதியே ஒரு கலை அல்லது அறிவியம். காட்சியும் கருத்துமாகிய ஒவ்வொரு பொருட்கும் வரலாறி ருப்பினும், ஒரு நாடு, அதன் மக்கள், அவர்கள் மொழி, அவர்கள் நாகரிகம் ஆகிய சிலவற்றின் வரலாறே சிறப்பாக வரலாறெனப்படும். ஒரு நாட்டு வரலாறு அந் நாட்டின் பழங்குடி மக்களை யும் வந்தேறிகளையும் (Immigrants) பிரித்துக் காட்டுவதால், ஒரு வீட்டுக் காரனுக்கு அவ் வீட்டு ஆவணம் ஏமக்காப்பாவது போல், ஒரு நாட்டுப் பழங்குடி மக்கட்கும் அந் நாட்டு வரலாறு சில வுரிமை வகையில் ஏமக்காப்பாம். இனி, வரலாறன்றி ஒரு மொழியின் உண்மையான இயல்பை அறிவதும் அரிதாம். 2. மொழிநூலின் முதன்மை ஒரு நாட்டு வரலாறு (1) எழுதப்பட்ட வரலாறு (Written History), (2) எழுதப்படா வரலாறு (Unwritten History) என இருதிறப்படும். கிறித்துவிற்குப் பிற்பட்ட நாடாயின், பெரும் பாலும் எழுதப்பட்டிருக்கும்; முற்பட்டதாயின், எழுதப் பட்டோ படாதோ இருக்கும். எழுதப்படா வரலாறு, (1)அறியப்பட்ட வரலாறு (Known History), (2) அறியப்படா வரலாறு (Unknown History) என இரு திறத்தது. வரலாற்றுக் குறிப்புகளும் கருவிகளும் சான்றுகளும் போதிய அளவு இருப்பின், அறியப்படும்; இன்றேல் இல்லை. இனி, எழுதப்பட்ட வரலாறும், (1) மெய் வரலாறு (True History), பொய் வரலாறு (False History) என இரு வகைத்து. ஒரு நாட்டு வரலாறு அந் நாட்டின்மேற் பற்றும் நடுநிலையும் உள்ளவரால் எழுதப்படின் பெரும்பாலும் மெய்யாயிருக்கும்; வேற்றினப் பகைவராலும் தன்னினக் கொண்டான்மாராலும் (Quislings) எழுதப்படின் பெரும் பாலும் பொய்யாயிருக்கும். தமிழ்நாட்டு வரலாற்றாசிரியருள் P.T. சீநிவாசையங்காரும், இராமச்சந்திர தீட்சிதரும், T.R. nrira§fhU« தவிரப் பிறரெல்லாரும் பெரும் பாலும் ஆரியச் சார்பானவரும் நடுநிலை திறம்பிய வருமாதலின், கிறித்துவிற்குப் பிற்பட்ட வரலாற்றைப் பெரும்பாலும் உள்ள படியும், முற்பட்ட வரலாற்றை முற்றும் திரித்தும் எழுதியிருக் கின்றனர். இதற்குக் கரணியம், கிறித்துவிற்கு முற்பட்டது பெரும் பாலும் ஆரியக் கலப்பு இல்லதாயும், தமிழர்க்குப் பெருமை தருவதாயும், பிற்பட்டது ஆரியக் கலப்பு உள்ளதாயும் ஆரியர்க்கே பெருமை தருவதாயும் இருப்பதே. எழுதப்படா வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படும் சான்றுகள் இலக்கியம், bt£blG¤J(Inscriptions) பழம் பொருள் üšfŸ(Arch-aeology) என மூவகைப்படும். இலக்கியத்துள் தொல்காப்பியமும் இரண்டொரு புறநானூற்றுச் செய்யுள் களும் திருக்குறளும் தவிர மற்றப் பண்டைத்தமிழ் நூல்களெல்லாம் அழியுண்டு போனமையால் கிறித்துவிற்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய இலக்கியச் சான்று இல்லாதே போயிற்று; இதுபோதுள்ள வெட்டெழுத்துகள் பெரும்பாலும் கி.பி.4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையாதலின் அவையும் பயன்படவில்லை. இனி, பழம்பொருட் கலையோவெனின் கற்காலத்து இரும்புக் காலத்துப் பருப்பொருட் செய்திகளைத் தவிர, ஒழுங்கான வரலாற்றிற்குரிய நுண்குறிப்புகளைத் தெரிவிக்காததா யிருப்பதாலும், அதையும் ஆராய்தற்குரிய முதற்காலத் தமிழகமாகிய பழம்பாண்டிய நாடு(குமரிக்கண்டம்) முழுதும் முழுகிப் போனமை யாலும், அதுவும் பயன்படாததே. ஆகவே, எஞ்சிநிற்கும் ஒரே சான்று மொழியே. தமிழ், ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரிக்கண்டத்தில் தானாகத் தோன்றி முழு வளர்ச்சி யடைந்திருந்த மொழியாதலின், மொழிகளின் தோற்றம் வளர்ச்சி திரிபு உறவு முதலியவற்றை விளக்கும் மொழிநூலின் துணைக் கொண்டே, தமிழின் இயல்பையும் பழந்தமிழ் நாட்டு வரலாற்றை யும் ஒருவாறு அறிய முடியும். 3. தமிழ் தோன்றிய இடம் தமிழன் பிறந்தகம் முழுகிப்போன குமரிக்கண்டம் என்பது, முக்கழக (முச்சங்க) வரலாற்றாலும். சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரையாலும், (P.T.) சீநிவாசையங்கார், சேசையங்கார், இராமச்சந்திர தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்க ளாலும், என் முதற்றாய் மொழி முன்னுரையாலும் தெள்ளத் தெளியத் தெரிந்திருந்தும், சில தமிழ்ப் பகைவரும் கொண்டான் மாரும், தமிழை வடமொழி வழிய தெனக் காட்டல் வேண்டித் தமிழர் வடக்கேயிருந்து வந்தனரென்று பிதற்றி வருகின்றனர். தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டமே என்பதற்குச் சான்றுகளாவன: (1) தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிட மொழி களும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென் மொழி வடக்கே செல்லச் செல்லத் திரிந்தும் ஒடுங்கியும் இலக்கிய மற்றும் இடையீடு பட்டும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும். (2) நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும், மேலைமொழிகளிலுள்ளதென் சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேரிருத்தலும். (3) முழுத்தூய்மையுள்ள தமிழ் தென்னாட்டில் தென் கோடியில் வழங்குதல். (4) தமிழ்நாட்டுள்ளும் தமிழ் தெற்கே செல்லச் செல்லத் திருந்தியும் சிறந்தும் இருத்தல். (திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்கும் இதை உணர்த்தும்.) (5) வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வல்லொலிகள் தமிழிலின்மையும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனையடுத்த தீவுகளிலும் வழங்குதலும். (6) தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழானபின் ஏற்பட்ட தலைக்கழகம், குமரிக்கண்டத்தின் தென் கோடிப் பஃறுளி யாற்றங்கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும். (7) தென்னமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென் கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும். (8) பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிம மும் (காரன்னம்) ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசு nkÅa¤(Tasmania) தீவில் இன்றுமிருத்தல். (9) வணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) உயிர்களுந் தவிர, மற்றல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகைகளு மாகிய முதற் பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல். (10) மக்களின் நாகரிகத் தொடக்கத்தையுணர்த்தும் ஐந்திணை மக்கட் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும், நாட்டாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்டிருத் தலும், ஐந்திணை நிலப் பாகுபாடு தமிழ் நாட்டிற்போல் வேறெங்கும் அடுத்தடுத்து அமைந் திராமையும். (11) தமிழ்மக்கள் பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டி லேயே தொடர்ந்து வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும். (12) தமிழர் பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியத்தில் ஒரு சான்று மின்மை. (13) தென்னாடு, தென்னர்(தென்னாட்டார்), தென் மொழி, தென்றமிழ். தென்னவன் (பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கி வந்துள்ளமை. (14) பண்டைத் தமிழர் தம் முன்னோரைத் தென் புலத்தார் என்றழைத்தமையும்; இறந்த முன்னோரிடம் தென் புலம், தென்னுலகு என்றும், கூற்றுவன் தென்றிசைக் கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் என்றும் பெயர் பெற்றிருத்தலும். (15) தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்வடல், தென்பல்லி, வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில், தென்றிசை முற்குறிக்கப் பெறுதல். இவற்றை இன்னும் விளக்கமாக அறிய விரும்புவார் Stone Age in India, Pre-Aryan Tamil Culture, History of theTamils, Dravidian India, Pre-Historic South India, Origin and Spread of the Tamils, Tamil India முதலிய ஆங்கில நூல்களைப் பார்க்க. பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்பு கடைக்கழகம் கலைந்து பல நூற்றண்டு கடந்த பின்பும், பாண்டியவரசின் தலைமைபோய்ப் பன்னூற்றாண்டு சென்ற பின்பும். பாண்டியனைத் தமிழ்நாடனென்று திவாகரம் சிறப்பித்த தற்கும், நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன்வாழ்(வு) இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப் பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ் என்னும் பழஞ் செய்யுட்கும் ஏற்ப, பாண்டிநாட்டுத் தமிழ் இன்னும் கீழ்க்காணும் பலவகையிலுஞ் சிறந்துள்ளது. 1. பாண்டிநாட்டுப் பழங்குடி மக்கள், சிறப்பாகநாட்டுப் புறத்திலுள்ளவர், தமிழ் வல்லின மெய்யொலிகளைத் திரவிட ஆரிய மொழிகளிற்போல் மிக வலித்தும் எடுத்தும் ஒலிக்காது, பழைய முறைப்படியே பலுக்கி(உச்சரித்து) வருகின்றனர். வடசொற்களி லுள்ள வல்லொலிகளும் பொலிவொலிகளும் அவர் வாயில் நுழைவதில்லை. எ-டு: சாக்ஷி - சாக்கி, ஜாதி - சாதி 2. சொற்றூய்மை பாண்டிநாட்டுத் தமிழ்ச் சிறப்புகளுள் ஒன்றாகும். எ-டு: சிகிச்சை (வ.) - பண்டுவம் (த.) சுத்தம் (வ.) - துப்புரவு (த.) பாண்டிநாட்டார் சைக்கிள் (cycle) என்பதை மிதிவண்டி என்றும், நாஞ்சில்நாட்டார்புனல் (funnel) என்பதை வைத்தூற்றி என்றும், தூய தமிழ்ச்சொல்லால் வழங்குகின்றனர். 3. நீ, நீர் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவான நீன், நீம் என்பவை, தென்பாண்டி நாட்டிலேயே வழங்கு கின்றன. நாமம் என்னும் திருமாலிய(வைணவ)க் குறிப்பெயரின் மூலமான இராமம் என்பதும், அங்குத்தான் வழங்குகின்றது. திருமண் காப்பு இராமவணக்கம் பற்றி இராமம் என்றும், கோபால வணக்கம்பற்றிக் கோபாலம் என்றும் பெயர் பெற்றுள்ளது. கோபாலம் என்பது கோப்பாளம் எனச் சிதைந்து வழங்குகின்றது. இதுவும் தென்பாண்டி வழக்கே. 4. தொல்காப்பியத்திற் குறிப்பிட்டுள்ளபடி, படியை நாழி என்பதும், அரைப்படியை உரி என்பதும், காளையையும் ஆவையும் விரவுப்பெயரால் சாத்தன் சாத்தி யென்றழைப்பதும், இன்றும் தென்பாண்டி வழக்காம். 5. பாண்டிநாட் டுலகவழக்கில் வேறெங்கும் வழங்காத தூய தென்சொற்களும், மரபுகளும் (Idioms), வழக்காறுகளும் (Usages), இணைமொழிகளும் (Words in Pairs), தொடர் மொழிகளும் (Phrases), பழமொழிகளும் (Proverbs) ஏராளமாய் வழங்குகின்றன. காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய தவசங்களும் கரம்பைப் பயறு, கற்பயறு முதலிய பயறுவகைகளும், அங்குத்தான் விளைக்கப் பெறுகின்றன. இளத்தல், உணத்துதல், இளவட்டம், ஏத்தாப்பு, கரட்டை, காணம், காயல், காம்புதல், கிண்ணுதல், கிளியஞ் சிட்டி, குடிமகன், குண்டடியன், குணட்டுதல், குதாவடை, குந்தக்கம், கெந்தளிப்பு, சவங்கல், சவுத்தல், சில்லான், சிலையோடுதல், சீயான், சேடா, தக்கனை, தடையம், தவ்வல், தவத்துதல், தாயமாட்டம், திகைதல், துப்புரவு, தேரி, நலவு சொல்லுதல், நோங்குதல், பண்ணையார், பத்தநடை, பதவல், பரிதல்(ஓடுதல்), பரும்பு பறம்புதல், பாடுபடுதல் (பயிரிடுதல்), புதுநிறம், புல்லை, பூட்டன், பொண்டான், மயிலை, மானை, மெத்துதல், வடலி, வதியழிதல், வள்ளிதாய்(முழுதும்), வாழ்க்கைப்படுதல், வாழ்வரசி என்பன போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் நெல்லை வழக்கிற்குச் சிறப்பாகும். ஆதலால், தமிழைச் செவ்வையாய் அறியவேண்டின் பாண்டி நாட்டுலகவழக்கை ஆராய்தல் வேண்டும். இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் சென்னைத் தமிழையும் சோழ கொங்கு நாட்டுத் தமிழையுமே அறிந்ததினால், செந் தமிழைப் பிறழவுணர்ந்துள்ளனர். தமிழர் குமரிக்கண்டப் பழங்குடி மக்கள் என்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியச் சான்றுகள்: (1) (தென்)மதுரை தலைக்கழகம் இருந்த இடம் தென்மதுரை யென்னும் தொன் மதுரையாகும். தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச் சங்க மிருந்தார்........jÄHhuhŒªjJகடšகொள்ளப்பட்lமதுuயென்ப”என்பJஇறையனாரக¥பொருளுu(ப.6). இதில் தமிழ்வளர்த்தது என்றிராது `தமிழாராய்ந்தது' என்றிருப்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இடைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப கடைச் சங்கமிருந்து தமிழா ராய்ந்தார்.... நாற்பத்தொன்பதின்மர் என்ப... அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப என்று, இடை கடைக் கழகங்கள் போன்றே தலைக்கழகமும் தமிழாராய்ந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதால், தலைக் கழகத்திற்கு முன்பே தமிழிலக்கிய விலக்கணங்கள் பேரளவு தோன்றி யிருந்தமை பெறப்படும். (2) பஃறுளியாறு பனிமலை (இமயம்) போலும் குமரி மாமலைத்தொடரில் தோன்றித் தலைக்கழகப் பாண்டியர் தலைநகராகிய (தென்) மதுரையைத் தன் கரையிற்கொண்டு, குமரிக்கண்டத் தென் கோடியடுத்த பழந்தென்பாண்டி நாட்டை வளம்படுத்திய, கங்கைபோலும் பேரியாறு பஃறுளியாம். செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம். 9) என்பது புறப்பாட்டு. (3) குமரிமலை “அடியில் jன்னளtரசர்க்Fணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) என்பது சிலப்பதிகாரம். அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி என்பதால், தலைக் கழகக் காலத்திலேயே ஒரு பாண்டியன் சாவம் (Java) என்னும் சாலித்தீவைத் தன்னடிப்படுத்தி, அவன் கடற்கரையில்கடலலைகழுவுமாறுதன்பாதத்தைப்பொறித்துவைத்தான்என்பதும்;பஃறுளியாற்றுடன்.....ïkaK§ கொண்டு என்பதால் குமரிமலை பனிமலையும் பஃறுளியாறு கங்கையாறும் போன்றன என்பதும்; "வடதிசைக் கங்கையும் ... தென்னவன் வாழி'' என்பதால் பிற்காலத் துப் பனிமலை கொண்ட கரிகாலச் சோழனும் கங்கைகொண்ட இராசேந்திரச் சோழனும் போன்று, முற்காலத்துப் பாண்டிய னொருவன் பனிமலையைக் குமரிமலைக் கீடாகக் கொண்டு நாவலந்தேய முழுதும் தன் ஆட்சியை நாட்டினான் என்பதும் அறியப்படும். கடைக்கழகக் காலத்தில், குமரியோடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதன்1 ஆட்சியும், ஆரிய நாட்டரசோட்டி அவர் முடித்தலை யணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்தகொள்கையிற் கங்கைப்பேர் யாற்றிருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி1 வந்த செங்குட்டுவன் செயலும், தலைக்கழக இடைக்கழகப் பாண்டியரின் பேரரைய வாற்றலைப் பெரிதும் வலியுறுத்தும். (4) குமரிக்கண்டத் தமிழ்நாடுகள் தொடியோள் பௌவம்2 என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்குநல்லார் உரைத்துள்ள விரிவுரை யாவது: தொடியொள் பெண்பாற்பெயராற் குமரியென்பதாயிற்று, ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம்.... முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து..நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன் பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து,நாலாயிரத்துநானூற்றுநாற்பதிற்றியாண்டுஇரீஇயினார்,காய்சினவழுதிமுதற்கடுங்கோன்ஈறாயுள்ளார்எண்பத்தொன்பதின்மர்....m¡fhy¤J, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்று ணர்க... என்பது. பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ள கடல் கோள்கள் மொத்தம் நான்கு. அவற்றுள், முதலது தலைக்கழக இருக்கையாகிய தென்மதுரையைக் கொண்டது; இரண்டாவது நாகநன்னாடு நானூறியோசனை கொண்டது(மணிமே. 9:21); மூன்றாவது இடைக்கழக இருக்கையாகிய கபாட புரத்தைக் கொண்டது; நான்காவது காவிரிப்பூம்பட்டினத்தையும் குமரியாற் றையுங் கொண்டது. குமரி என்பது, குமரிக் கண்டத்தின் தென் கோடியடுத்திருந்த ஒரு பெருமலைத் தொடர்க்கும், அதன் 1. சிலப்: வாழ்த்துக்காதை, உரைப்பாட்டுமடை 2. சிலப். 8: 1 வடகோடியடுத்துக் குமரிமுனைக்குச் சற்றுத்தெற்கிலிருந்த ஒரு காவிரிபோலும் பேராற்றிற்கும், பொதுப்பெயராம். காவிரிப் பூம்பட்டினம் முழுகியபின்பும் காவிரியாறிருப்பதுபோல், கபாட புரம் முழுகியபின்பும் குமரியாறிருந்தமை வடவேங்கடந் தென் குமரி என்னும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரஅடியாலும், தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி (புறம். 6 : 67) என்னும் புறப்பாட்டடிகளாலும் அறியப்படும். அடியார்க்கு நல்லார் உரையில் தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் என்பது, அகன்ற நீர்ப்பரப்பையுடைய குமரியாற்றின் வடபெருங் கரைவரை, என்று பொருள்படுவது. ஆகவே, முக்கடல் கோளா லும் முழுக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பை யெல்லாம் தொகுத்துக் கூறுவது அவருரையென்றறிக. இங்ஙனம், மறுக்கவொண்ணாத தெளிவான பண்டைத் தமிழிலக்கியச் சான்றுண்மையால், குமரிக்கண்டத்தில் தமிழ ரிருந்த தில்லையென்றும் அவர் வடக்கிருந்து வந்தவ ரென்றும், சில தமிழ்ப் பகைவரும் போலித்தமிழருங் கூறுவதைப் பொருட்படுத்தற்க. மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலித். 104) என்னும் கலித்தொகை அடிகளும் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழம் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டதையும்; இடைக் கழக விருக்கையாகிய அலைவாயையும்(கபாடபுரத்தையும்) கடல் கொண்ட பின், அதற்குத் தப்பிய பாண்டியன் நெல்லை மதுரை முகவை மாவட்டங்களாகிய பிற்காலப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டதையும் உணர்த்தும். மேற்காட்டிய இலக்கியச் சான்றுகளால், முதற்காலத்தில் நாவலந்தேயம் முழுவதையும் பாண்டியன் ஒருவனே ஆண்டான் என்பதும் குமரிக்கண்டம் முழுகாத பிற்காலத்தில், பாண்டியன் குமரிக் கண்டத் தமிழ் நிலத்தையும் சேர சோழர் அதற்கு வடக் கிலுள்ள நாவலந்தேயப் பகுதியின் மேல்பாகங்களையும் ஆண்டார் என்பதும் உணரப்படும். தமிழனின் பிறந்தகம் குமரிநாடென்பதை அறியாத மேலை யறிஞர், ஆரியத்தையும் அதன் முதிர்ச்சியான சமற்கிருதத்தையும் அடிப்படையாக வைத்தாராய்ந்து, தமிழர் நண்ணிலக் கடற்கரை யினின்று வந்தவர் என்னும் தவறான முடிவு கொண்டுள்ளமையால் இற்றை யிந்தியாவிலுள்ள மலைவாணரெல்லாம் திரவிடப் பழங்குடி மக்களென்று மயங்கிக் கூறுகின்றனர். திரவிடரைத் தோற்றுவித்த தமிழரின் முன்னோர் குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த நாகரிகத் தொடக்கநிலை முழுகிப் போன குமரிக்கண்டத்தின் தென் கோடியிலேயே கழிந்துவிட்டது. இன்று மலைவாணராயுள்ள தமிழரும் திரவிடரும் சிலபல நூற்றாண்டிற்குமுன் போர், கொள்ளை, கொள்ளைநோய், பஞ்சம், கொலைப்பழி மதத் துன்புறுத்தம் முதலியவற்றிற்குத் தப்பி மலையேறிப் பிழைத்த மக்களின் வழியினரே. தமிழ்நாட்டில் இன்றுள்ள மலைவாழ் குலத்தாருள் மிகப் பழமையானவர், நீலமலை உச்சியிலுள்ள துடவரே. அவரும், அவர்தம் முன்னோர் அங்கு முதன்முதற் குடியேறியவர் என்றே கூறுகின்றனர். அவர் மொழியும் செந்தமிழின் சிதைவான ஒருவகைக் கொடுந்தமிழே என்பது வெள்ளிடைமலை. அவர் எருமை மந்தையை வைத்துப் பிழைப்பதனால், அவரது ஒவ்வொரு குடியிருப் பும் மந்து எனப்படுகின்றது. அவர் குடும்பத்தை மன் (மனை) என்றும், தெய்வத்தைக் கடவுள் என்றும், வழிபாட்டு மனையைக் கோயில் என்றும், சொல்கின்றனர். அவர் மொழியின் கொடுந் ன்மையையும் கொச்சைத் தன்மையையும் கீழ்வரும் சொல் வரிசைகளாற் கண்டுகொள்க. சோழ பாண்டி நாட்டின் நிலமட்டம் நோக்கி, பள்ளமான திசை கிழக்கு(கீழ்-கீழ்க்கு-கிழக்கு) என்றும், மேடான திசை மேற்கு (மேல்-மேற்கு) என்றும் பெயர் பெற்றன. நீலமலை யுச்சியில் வாழும் துடவரும் மேற்றிசையை மேக்(மேற்கு) என்கின்றனர். இத்தகைய சொல் ஒன்றிரண்டே, அவரின் முன்னோர் கீழிருந்து சென்றனர் என்று காட்டவும் நாட்டவும் போதுமாயினும், எவரும் எளிதில் ஐயந்திரிபற அறிதற்பொருட்டுப் பல்வேறு சொல்வரிசை கள் கீழ்க் காட்டப் படுகின்றன. எட்கார் தரசத்தன், ஐயப்பன் முதலியோர் தென்னாட்டு மலைவாழ் வகுப்பாரைப் பற்றி எழுதியிருப்பதையும் காண்க. துடவச் சொற்கள் முறைப்பெயர் தமிழ் துடவம் தாய் தோய் அவ்வை(தாய்) அவ் தமிழ் துடவம் ஐயன்(தந்தை) இன், எயி மகன் மக், மொக்ஸ் அண்ணன் ஒண், ஒணொண் அக்கை, அக்கன் ஒக்ன் மாமன் முமுன், முன் மூவிடப் பெயர் தன்மை - ஒருமை : யான், நான் ஒன் பன்மை : யாம் எம் நாம் ஒம் முன்னிலை - ஒருமை : நீன், நீ நீ பன்மை : நீம் நிம் படர்க்கை - இவன், இது இத் அவன், அது அத் தான் தோன் தாம் தம் வினாப்பெயர் யார் ஓரி எவன், எது ஏது உயிரிகள் பெயர் தமிழ் துடவம் தமிழ் துடவம் யானை, ஆனை ஆனை புலி புசி எருமை இர் எருது எஸ்த் மான் மோவ் நாய் நோய் நரி நரி குரங்கு க்வரக் கழுதை கதி ஆடு ஓட் கன்று கொற் முயல் மூஸ் எலி இசி எறும்பு இர்ப் பல்லி பசி பாம்பு போப் புழு புவ் பேன் போன் ஈர் தீர் கூகை கீக்ஸ் தும்பி துபி ஈ இப்பி மீன் மீன் மரம் மேண் செடி கிட்வ் பாசி போதி சினைப்பெயர் தமிழ் துடவம் தமிழ் துடவம் உடல் விர்ள் இலை எஸ் மெய் மொய் பூ பூவ் உயிர் உசிர் காய் கோய் தலை தல் பழம் பன், பும் மண்டை மட் வேர் போர் உச்சி உஸ்கி மயிர் மீர் நெற்றி நித்தி கண் கொண் மூக்கு மூக் வாய் போய் பல் பஸ் எயிறு ஈர் நாக்கு நோவ் செவி கிவி மிடறு மீர் மார், மார்பு மோர் வயிறு பீர் அரை அர் தோள் த்வில் கை கொய் முட்டு முட் விரல் பேள் உகிர் ஊர் தொடை த்வட் கால் கோல் தோல் த்விஸ் எலும்பு எல்வ் நெய்த்தோர் நெத்ஸ் குடல் க்விர் (அரத்தம்) கொழுப்பு க்வள்ப், கொவ் நிறப்பெயர் வெள், வெள்ளை பொள் கருப்பு கக்ஸ் செம், செம்மை கெ, கொ பச்சை பொச் எண்ணுப்பெயர் ஒன்று ஒத் ஆறு ஓற், ஆர் இரண்டு எத் ஏழு ஏழ்ஜ் (zh) மூன்று மூத் எட்டு எட், ஒட் நான்கு நோங்க் ஒன்பது ஒன்பத் ஐந்து ஊத்ஷ், ஊஜ் பத்து பத்து,பொத் நூறு நூற் ஆயிரம் சோவெர் பதினாறு பாற் அறுபது அற்பத் அறுநூறு ஓற் நூற் சில வினைச்சொற்கள் தமிழ் துடவம் தமிழ் துடவம் அஞ்சு ஒஸ் அடு(சமை) ஒட் அழு ஒழ் இரு இர் இல், இல்லை இல் இழு இஸ்வ் ஈன் ஈன் உண் உண் உழு உஷ்வ் உறங்கு வற்க்ஸ் எண், எண்ணு ஒண் எழு ஒட் எறி எறி ஓடு வீட் கக்கு கக்ஸ் கா கோவ் காண் கோண் குடி குட்த் கும்பிடு குபிட் கூடு கூட் கூ, கூவு கூ கேள் கேள் கொடு க்விட் சா சொய் செய் கிய் தவழ் தொவ் தா தோ திற தெற் தின் தின் துப்பு துவ் தும்மு துப் தொடு த்வட் நட நட் நில் நில் நினை நென்வ் நீந்து நீத் பசி ஒஸ்வ் படு பொட் பிடி இடி பிற பேற்வ் போ பீ மற மற் முக, முகர் மூத் வரு, வா போர் வாழ் போத்க் விக்கு பிக்(துகத்து) விழு பிட் விளை பெள் வே, வேகு பொய் வேண்டு போட் வை பொய் சில தொடர்ச்சொற்கள் பாலாள் பாலாள் காப்பாள் கார்ப்பாள் காத்தமகன் கால்த்தமக் தேர்ந்த ஆள் தேர்த்தாள் தாழ்ந்த ஆள் தார்த்தாள் அமரநாடு ஆம்நாட் 4. தமிழின் தொன்மை கி.மு. 1000 ஆண்டுகட்குமுன் எபிரேயத்தில் எழுதப்பட்ட யூத அரசர் வரலாற்றிலும் நாட்பொத்தகத்திலும் (Chronicles) உள்ள துகி (தோகை) என்னுஞ் சொல்லை, தமிழின் தொன் மையைக் குறிக்கும் முதலிலக்கியச் சான்றாக எடுத்துக் காட்டினார் கால்டுவெலார். ஆயின், கி.மு. 1200 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட ஆரிய வேதத்தில் நூற்றுக்கணக்கான தென்சொற்கள் உள்ளமையே, தமிழின் தொன்மைக்கு அதனினும் சிறந்த இலக்கியச் சான்றாம். (1) சாயம் எடு : சாயம் (ஸாயம்) = சாயுங்காலம் சாய் - சாயும் (எதிர்காலப் பெயரெச்சம்) சாயுங்காலம் = பொழுது சாயும் வேளை. பொழுது சாய்கிறது, பொழுது சாய வந்தான், என்பது இன்றும் வழக்கம். சாயுங்காலம் என்பது, சாயங்காலம், சாய்ங்காலம் என உலக வழக்கில் திரியும். இங்ஙனமே, சாயுந்தரம் என்னும் சொல்லும் சாயந்தரம், சாய்ந்தரம் எனத் திரியும். சாய்தல் என்னும் சொல் தனித்தும் பொழுது சாய்தலைக் குறிக்கும். செய்கையிலே என்னும் 7ஆம் வேற்றுமை யுருபேற்று ஏகார வீறு பெற்ற தொழிற்பெயர் ஒரு நிகழ்கால வினையெச்சத்துடன் சேர்ந்து, அவ் வினைச்சொல்லாற் குறிக்கப்படும் செயல் நிகழும் நிலையை உணர்த்துவது மரபு. எ.டு : வரச்செய்கையிலே (வரும்போது), போகச்செய்கையிலே (போகும்போது) இச் செய்கையிலே என்னும் சொல் சிலே, சே என்று கொச்சை வடிவுங்கொள்ளும். எ.டு : வரச்சிலே, போகச்சிலே வரச்சே, போகச்சே இக் கொச்சை வடிவு கொண்ட சாயச்சே என்னும் சொல், சாய்கிற வேளை என்று பொருள்படுவது போல் சாய்கிறச்சே என்னும் தவறான வடிவு கொண்ட பின், சாயரட்சை என்று திரித்து வழங்கப்படுகிறது. சாயங்காலம் என்னும் வடிவிலுள்ள சாயம் என்னும் நிலை மொழியே, சாயுங்காலம் (எற்பாடு) என்னும் பொருளில் முன்பு வட திரவிடத்தில் வழங்கிப் பின்பு ஆரிய வேதத்திற் புகுந்து அதன்பின் சமற்கிருதத்தில் வழங்கிவருகின்றது. ஆயின், வட மொழியாளர் இவ் வுண்மையை மறுத்தும் மறைத்தும் தலைகீழாய் மாற்றியும் ஸாயம் என்னும் வடசொல்லினின்றே சாயங்காலம் என்னும் தென்சொல் வந்ததென்று துணிந்து ஏமாற்றுவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியிலும், இதை வடசொல்லென்று குறித்ததுடன் இவ் வேமாற்றுக் கொள்கையை வலியுறுத்தவே, சாயுங்காலம், சாயுந்தரம் என்னும் மொழிப் பொருட் காரணம் தோன்றும் வடிவுகளை வேண்டுமென்றே காட்டாது விட்டிருக்கின்றனர். ஸாயம் என்னும் சொல்லிற்கு வடவர் பொருந்தப் பொய்த் தலாகக் காட்டும் வேர் முடித்தற் பொருளையுணர்த்தும் ஸோ என்னும் சொல். அதுவும் சாய் என்பதனின்று திரிந்த சா என்னும் தென்சொல்லின் திரிபே. (2) தா இச் சொல் (இலவசமாகக்) கொடுத்தல் என்னும் பொருளில், வடமொழியில் jh(da) என்றும், இலத்தீனில் njh(do) என்றும் வழங்குகின்றது. இதன் தமிழ்ப் பொருள் ஒத்தோனுக்குக் கொடுத்தல் என்பது. ஈதா கொடுஎனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய. அவற்றுள், ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே. தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே. கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே (927- 30) என்பன தொல்காப்பியம். புதுப் பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் சொல் தன் சிறப்புப் பொருளையிழுந்து நீர் என்னும் பொதுப் பொருளில் மலையாளத்திலும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்பு என்னுஞ் சொல் தன் சிறப்புச் பொருளையிழந்து சொல்லுதல் என்னும் பொதுப் பொருளில் தெலுங்கிலும், வழங்குவது போன்றே; ஒத்தோனுக்குக் கொடுத்தலைக் குறிக்கும் தா என்னும் சொல்லுந் தன் சிறப்புப் பொருளையிழந்து கொடுத்தல் என்னும் பொதுப் பொருளில் ஆரிய மொழிகளில் வழங்குகின்ற தென்றறிக. தொன்று தொட்டு இருவகை வழக்கிலும் வழங்கி வருதலும், அடிப்படையைச் சேர்ந்த எளிய சொல்லாயிருத்தலும், சிறப்புப் பொருள் கொண்டு ஏனையிரு தூய தென்சொற்களுடன் தொடர்புடை மையும், தா என்பது தமிழ்ச்சொல்லே என்பதற்குத் தக்க சான்றுகளாம். தரவு, தருகை, தரகு, தத்தம், தானம் ஆகிய சொற்களெல்லாம் தா என்னும் முதனிலையினின்று திரிந்தவையே. இறுதி யிரண்டும் வட மொழியில் வழங்குவதனாலேயே வட சொற்போல் தோன்றுகின்றன. இனி, தா என்னும் வினைச்சொல் படர்க்கையிடத்தில் வரா தென்று விலக்கப்பட்டிருப்பதும், அது தமிழ்ச்சொல்லே யென்பதை உணர்த்தும். தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. (தொல். 512) (3) முத்து இச் சொல் உருண்டையானது என்னும் பொருளது. இதனொடு தொடர்புடைய சொற்கள் முத்தை, முண்டு, முண்டை, முட்டு, முட்டை, முட்டி, முட்டான் முதலியன. முண்டு = உருண்ட கட்டை. முண்டை - முட்டை. முண்டை விளைபழம் (பதிற். 60:6) முண்டம் = உருண்ட கட்டை, கை கால் தலையில்லா உடம்பு. முத்தை = சோற்றுருண்டை (மொத்தை). முட்டு = நடத்திற்குரிய உருண்ட பறை. முட்டி = கொம்மட்டி. முட்டான் = திருநீற்றிற்குரிய சாணவுருண்டை, மஞ்சட் கிழங்கு. மிதுக்கம் பழத்தைக் குறுமுத்தம்பழம் என்பது கரூர் வழக்கு. உருண்டு சிறுத்திருக்கும் விதைகளையெல்லாம் முத்தென்பது பொதுவான உலக வழக்கு. உலகில் முத்து விளையும் பலவிடங்களுட் சிறந்தது பாண்டி நாட்டு (மன்னார்குடா)க் கடல். வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து (ஔவையார்) என்பது பழஞ்செய்யுள். முத்து பெரிதாயிருப்பின் முத்தம் எனப்படும். அம் என்பது ஒரு பெருமைப்பொருள் ஈறு (Augmentative suffix). ஒ.நோ: மதி = நிலா. மதியம் = முழுநிலா நிலை = தேர்நிலைபோற் சிறிய இடம். நிலையம்= புகை வண்டி நிலையம்போற் பெரிய இடம் விளக்கு = வீட்டு விளக்குப்போற் சிறியது. விளக்கம் = கலங் கரை விளக்கம்போற் பெரியது. முத்தம் என்னும் தென்சொல்லை வடமொழியாளர் முக்த என்று திரித்து, சிப்பியினின்று விடுதலை(முக்த) பெற்றதென்று வேர்ப் பொருட் கரணியங் கூறி வடசொல்லாகக் காட்ட முயல் வது, குறும்புத் தனமான குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) ஆகும். முத்து என்பது, தமிழில் சிறிதாய் உருண்டு திரண்டிருக்கும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும். முத்து 1. கிளிஞ்சிலில் விளையும் மணிவகை. முறிமேனி முத்த முறுவல் (குறள். 1113) 2. உருண்டு திரண்ட விதை. எ-டு: ஆமணக்குவிதை முத்திருக்குங் கொம்பசைக்கும் (தனிப்பா. 1 : 3 : 2) 3. உருண்டு திரண்ட ஆட்டக்காய். 4. பெரியம்மைக் கொப்புளம். 5. கண்ணீர்த்துளி பருமுத் துறையும் (சீவக. 1318) 6. பனிநீர்த்துளி. முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய் (பரிபா. 10:13) உருண்டு திரண்டிருக்கும் எண்ணெயுள்ள விதைகள் முத்தென்றே பெயர்பெற்றுள்ளன. எ-டு : ஆமணக்குமுத்து (முத்துக்கொட்டை, கொட்டைமுத்து), குருக்குமுத்து, வேப்பமுத்து. முத்துச்சம்பா, முத்துச்சோளம் என்பன உருண்டு திரண்டு முத்துப் போலிருப்பன. உருண்டு திரண்டுள்ள கோரைக்கிழங்கு முத்தக்காசு எனப்படுகின்றது. முத்துக்குளிப்பு வரலாற்றிற்கெட்டாத தொன்று தொட்டுப் பாண்டி நாட்டு மன்னார்குடாக் கடலில் நடை பெற்று வருகின்றது. முத்தூர்க் கூற்றம் என்று ஓர் ஆள்நிலப் பிரிவும் பழம்பாண்டி நாட்டிலிருந்தது. கிறித்துவிற்குமுன் பாண்டி நாட்டு முத்து மேனாடுகட்கு ஏராளமாய் ஏற்றுமதியானதும், உரோம் நகரப் பெருமாட்டியர் அளவற்ற பொன்னை அதற்குச் செலவிட்டதும், வரலாறறிந்த உண்மையாகும். பாண்டிய கவாடம் என்னும் பருமுத்தவகை சாணக்கியரின் அர்த்த சாத்திரம் என்னும் பொருள்நூலிற் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தொண்(நவ) மணிகளுள் ஒன்றான முத்து வெண்ணிறமுள்ள தென்பது, சீர்கெழு வெண்முத்தம் (பாலைக்கலி. 9) என்னும் செய்யுள் வழக்காலும், `வாய்திறந்தால் முத்துதிர்ந்து விடுமா? என்னும் உலக வழக்காலும் அறியப் படும். இனி, வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியா விற்குள்) கால்வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழியிலும், ஆரியம் என்னும் பேரே தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிபது மொழியிலும், மறுக்கமுடியாத தமிழ்ச் சொற்கள் அடிப்படையாயுள்ளன. ஆகவே, மேலையுலகில் (தோரா. கி.மு. 5,000) முதன்முதலாக நாகரிகமடைந்த எகிபது நாட்டு மொழியில், ஒருசொல் இருசொல் அல்ல, பல சொற்கள், அவையும் அடிப் படைச்சொற்கள், தமிழாயிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைசிறந்த இலக்கியச் சான்றாகும். எகிபதியத் தொல்வரலாற் றாராய்ச்சியாளரான வில்லியர்சு öt®£L(Villiers Stuart) என்பவர், ஐரோப்பியரின் முன்னோருட் பெரும்பாலார் ஆசியாவினின்று பாபெல் kªnjò(Babel Mandeb) என் னும் ÚÇiz¥ò(Straits) வழியாக ஆப்பிரிக்கக் கரையேறி எத்தியோப்பியாவில் சிலகாலந் தங்கியபின் எகிபது நாட்டு நீலாற்று வெளிநிலத்திற்குப் பரவினரென்றும், பின்பு அங்கிருந்து நண்ணிலக் flš(Mediterranean Sea) கடந்து ஐரோப்பாவிற் குடியேறி ஆரியராய் மாறினாரென்றும், எகிபதியர் பனையோலை போல் எழுது கருவி யாகப் பயன்படுத்திய gh¥ãuR(papyrus) என்னும் தாள் அல்லது தோகையுள்ள நாணல் முதலில் அபிசினியாவிலேயே இயற்கையாய் விளைந்த தென்றும், எகிபதியரின் தேவியல் (Sacred) உயிரிகளும் 3ஆம் 4ஆம் 5ஆம் ஆள்குடி (Dynasty) அரசரின் கல்லறைச் சுவர் களில் வரையப் பெற்ற விலங்குகளும் அபிசினியாவிற்கும் தென் னாப்பிரிக்காவிற்குமே யுரியவையென்றும், எகிபதியக் குறுநில அரசுகளை யெல்லாம் முதன் முதலாக ஒன்றாக இணைத்து ஓரரசு ஆட்சி நிறுவிய bkbdR(Menes) வேந்தனும் தெற்கத்தியானே யென்றும், எகிபதிய மொழி ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் மூலமான mirÃiy(Monosyllabic) மொழி யென்றும், அது சமற்கிருதத்திற்கு 3,000 ஆண்டுகட்கு முற்பட்ட தென்றும், தம் ஓர் எகிபதிய அரசியின் பள்ளிபடைப் படமாடம் (The Funeral Tent of An Egyptian Queen) என்னும் தம் வரலாற்றாராய்ச்சி நூலின் இறுதியில், மொழிநூல் (Philology) என்னும் தலைப்பில், தக்க சான்று காட்டித் திட்ட வட்டமாய்க் கூறியுள்ளார். இதினின்று, கடல்கோளுக்குத் தப்பியும் வேற்று நாடு பரவியும் சென்ற முதுபண்டைக் குமரி மாந்தருள் வட மேற்காகச் சென்ற ஒரு பெரு வகுப்பார், nrhkhÈehL(Somaliland), mãáÅah(Abyssinia) என்னும் எத்தியோப்பியா, எகிபது ஆகிய நாடுகளில் முறையே பரவி, பின்பு ஐரோப்பாவிற்குச் சென்றதாகத் தெரிகின்றது. இதுவே, ஆத்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடைப்பட் டிருந்த குமரிக்கண்டத்தினின்று வட மேற்காய்ச் செல்வார்க்கு ஏற்ற இயற்கையான வழி என்பதை, ஞாலப்படம் (Atlas) நோக்கிக் கண்டு கொள்க. இனவொப்புச் சொற்கள் அரபிச்சொற்கள் தமிழ் அரபி தமிழ் அரபி அப்பன் ஆப் கூலி கூலி அம்மை உம் கொட்டை(பஞ்சு) குட்டுன் அரிசி U°(z) க.கொத்தி(பூனை) குட்டா அல்(எதிர்மறை) லா சருக்கரை சக்கர் யிடைச்சொல்) சேரி(தெரு) ஷாரி அல்,க. அல்லி அல் (அந்த) சுக்கல் சுக்கூனஹ் (அங்கு) (காய்தல்) (காய்ச்சல்) ஆவி ஹவா ஞாலம் ஆலம் (காற்று) துத்தம் தூத்திய கடி கட் நீலம் நீலா கதம்(சினம்) கடப் நெருப்பு நார் கருவா(ப்பட்டை) »®th(f) மறி(பெண் காழகம்(துணி) காம் குதிரை) பரஸ் குப்பா ஜுப்பா மை(நீர்) மா குயின் (முகில்) கைம் வாத்து பட்டா பாபிலோனியச் சொற்கள் தமிழ் பாபி. தமிழ் பாபி. அப்பன் m¥gh(b) ஊர் ஊர்(நகர்) அல் லா சமம் brth(sh) (பகை) சின செனே இலது லேத் பிரி பெராஸ் இரு அர் வா பா (b) எபிரேயச் சொற்கள் தமிழ் எபிரேயம் தமிழ் எபிரேயம் அப்பன் M¥(b) செவ்வை ஷாவாஹ் அம்மை ஏம் நட்டு-நாட்டு நாத்தா ஆறு nah®(river) நீட்டு நாத்தாஹ் இல் லோ நோக்கி நோக்கஹ் அவா அவ்வாஹ் பழம் பெரி ஆவு(அவாவு) Mghà(b) பழு பாராஹ் இரங்கு யாரத் (d) பால்(பிரிவு) பா, லல் உரு ஊர்(நெருப்பு) ghy¡(g) ஊர் ஆர், ஈர் பாலா, எறி யாராஹ் பாலாஹ் எருமை ரேம் பாரஷ், உயர்-ஊர் ரூம் பாரஸ் ஒள்-ஒளி ஓர் மாள்-மாய் மூத் சாய் ஷா மாறு மூர், மாஹர் சின சானே மிசுக்கன் மிஸ்கேன் சீறு ஷாரக் மெத்தை மித்தாஹ் சும சாமக் (படுக்கை) சுவர் ஷூர் வா ngh(b) எகிபதியச் சொற்கள் பழைய எகிபதிய மொழியிலுள்ள தமிழ்ச்சொற்கட்கு எடுத்துக்காட்டு வருமாறு: தமிழ் எகிபதியம் தமிழ் எகிபதியம் அது, அந்த தெ துமி தெம் இரு அர் (வெட்டுங்கருவி) இறைவன் எர்ப்ப நக்கு லெக்கு உமட்டு எமெத் நவ்வி(இளமை) beh›bt®(f) உந்தி, ஓதம் உவத்தூர்(நீர்) மடி-மரி மெர் சப்பு சௌ(குடி) மன்(நிலைபெறு) மென் (உறிஞ்சிக்குடி) மனை மென் சும்-சம் சம்(உடன்) மாத்திரை மெத்தெர் செம்மை br‹¥(b) மாது முத் (தாய்) தா து வாரி மெர் (கடல்) மகள், மடந்தை, மாது முதலிய சொற்கள், இடத்திற்கேற்பப், பெண், புதல்வி, மனைவி, தாய் என வெவ்வேறு பொருள்படும். எ-டு: மகள்=1. பெண். ஆயமகள் நீயாயின் (கலித். 107) மகளிர் மலைத்த லல்லது (புறம். 10) மகள்-மகடூஉ 2. புதல்வி.நல்கூர்ந்தார் செல்வமகள் (கலித். 56) 3. மனைவி.மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம் (மணிமே. 21 : 30) 4. தாய். நிலமகள். மலைமகள், கலைமகள், திருமகள், தமிழ்மகள் முதலிய வழக்குகளை நோக்குக. 5. தமிழ் வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல் இந்திய வரலாற்றுத் தந்தையும் இந்தியாவின் முந்து tuyhW' (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்செந்து áÄJ(Vincent Smith) என்பவர், அந் நூன் முகவுரையில் பின் வருமாறு வரைந்திருக்கின்றார்: சமற்கிருத நூல்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவிற்குமிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப் பட்டு வந்திருக்கின்றது. ஆரிய மல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப் பதற்குக் காலம் வந்துவிட்டது. இப் பொத்தகம் இந்திய அரசியல் வரலாற்றைச் சுருங்கக் கூறுவதற்கே எண்ணி வரையறுக்கப்பட்டுள்ளமையால், முன் சொல்லப்பட்ட ஆராய்ச்சி வழியைப் பின்பற்றக் கூடாத வனாயிருக் கின்றேன். ஆயினும், மூவாது முடிவடைந்த ஒரு பெயர்பெற்ற இந்தியக் கல்விமான் கவனித்தறிந்தவை சில, கருத்தாயெண் ணுதற்குரிய வாதலின், அவற்றை இங்குக் கூறாதிருக்க முடியவில்லை. அவை வருமாறு: இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது 3வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றை யும் படித்து, நாவல(இந்திய) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் òâÇia(Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் Ôt¡Fiwna(Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளை யும் மொழிகளையும் குமுகாய(சமுதாய) ஏற்பாடுகளையுமே, இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர். இங்குக் கூட வரலாற்றாசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாதவாறு, ஆரியம் மிக நன்றாய் வேரூன்றியுள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க முடியுமாயின், அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து(வசதி) மிகும். அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற் றாசிரியன், தனது படிப்பை, இதுவரை சிறந்ததென்று மிக நீடப் பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியினின்று தொடங் காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்று வெளிகளினின்று தொடங்குதல் வேண்டும். இங்ஙனம் சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதி அரை நூற்றாண்டிற்கு மேலாகியும், வின்செந்து சிமிது இதை வலியுறுத்தி அரை நூற்றாண்டடுத்தும், (P.T.) சீநிவாசையங் காரும், இராமச் சந்திர தீட்சிதரும் ஏற்கெனவே இம் முறையைக் கடைப்பிடித்துச் சிறந்த வகையில் தமிழர் வரலாறும் தென்னாட்டு வரலாறும் எழுதியும் இன்று சில தமிழ்ப் பகைவரும் கோணை யாராய்ச்சியரும் பழைய வழூஉ முறையில் ஆரிய வேதத்தை அடிப்படையாக வைத்து, தமிழக வரலாற்றை வடக்கினின்று 3. `தமிழியத் தொன்மையாராய்ச்சி' (Tamilian Antiquary) 2ஆம் இதழ் (1908) 4ஆம் பக்கத்தில் மேற்கோளாகக் காட்டப்பெற்ற P.Rªju«ãŸis (எம்.ஏ.) அவர்களின் கூற்று. தொடங்கு வது மிகமிகக் கண்டிக்கத்தக்க தொன்றாம். இந்தியாவின் வடபாகத்தில் ஆரியத்தினின்று தமிழை அல்லது திரவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென் பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது தமிழ்ப் பகைவர் அல்லது முறைகோடிய ஆராய்ச்சியாளர் கூற்றே. 6. தலைகீழாராய்ச்சி தமிழர் குமரிக்கண்டத்தில் தோன்றிக், கடல்கோள், இனப் பெருக்கம், நாடுகாண் விருப்பம் முதலிய பல்வேறு கரணியங் களால், வடக்கே சென்றனர். அவருட் பலர் பனிமலை (இமயம்) வரை சென்று திரவிடராயினர். வடநாட்டுத் திரவிடருள் ஒருசாரர், வடமேற்கே எத்தியோப் பியா, எகிபது, br¥giw¤(Cyprus) தீவு, »nu¤jh¤(Crete) தீவு, கிரேக்கம், இத்தாலி முதலிய நாடுகள் வழியாய்க் காண்டினேவியம் வரை சென்று ஆரியராக மாறினர். அவருள் ஒரு வகுப்பாரே, வேத ஆசிரியராகச் சின்ன ஆசியா, பாரசீகம் முதலிய நாடுகள் வழியாய் இந்தியாவிற்குள் (கி.மு. 2000-1500) புகுந்தனர். அந்நிலையில், பழைய வடதிரவிடம், பைசாசம், சூரசேனம், மாகதம் என்னும் மூவேறு பிராகிருதங்களாகத் திரித்திருந்தது. விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள மொழிகளெல்லாம் செந்தமிழும் கொடுந் தமிழுமாயிருந்ததினால், அவையாவும் திரவிடம் என்னும் ஒரு பிராகிருத மொழியாய்க் கொள்ளப்பட்டன. வேத ஆரியம் வழக்கற்றுப் போனபின், அதனொடு நாற்பிரா கிருதங்களையுஞ் சேர்த்தமைத்த அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழியே (Literary dialect) சமற்கிருதம். தமிழ் குமரிக்கண்டத்தில் தோன்றியதென்று, முக்கழக வரலாற்றினின்றும் புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய பனுவல் களினின்றும் தெளிவாய் அறியக்கிடந்தும், ஆரியச் சார்பான தமிழ்ப்பகைவரும், தமிழையறியாத அல்லது ஆங்கில வாயிலாய் அரைகுறையாய்க் கற்ற வடவரும் மேலையரும், மொழியாராய்ச்சி யில்லாத் தமிழன்பரும், ஆகிய முத் திறத்தினர், தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று வந்தவரென்றும், சீன நாட்டினின்று வந்தவ ரென்றும், மறைத்தும் மயங்கியும் கூறிவருகின்றனர். தமிழ் திரவிடமாகவும் திரவிடம் பிராகிருதமாகவும், ஆரியமும் பிராகிருதமும் தமிழும் கலந்து சமற்கிருதமாகவும், திரிந்திருக்க, சமற் கிருதத்தினின்று பிராகிருதமும் பிராகிருதத் தினின்று திரவிடம் அல்லது தமிழும் திரிந்ததாகத் தலைகீழாய் மாற்றிக் கூறுவதற்குக் கரணியம், சமற்கிருதம் தேவமொழியென உயர்த்தப்பட்டதும், அதிலுள்ள சொற்களெல்லாம் அதற்கே யுரியனவென்று நம்பப்பட்டதும், பெருவாரியான ஆரியச் சொற்கள் பிராகிருதங்களில் திரிந்து வழங்குவதும், பிராகிருதத் தென் சொற்கள் பல தமிழ் வடிவிற்கும் சமற்கிருத வடிவிற்கும் இடை நிலைப்பட்டிருத்தலுமே. ``இவ் வருஷம் ஈவரன் கிருபையால் கிராமத்தில் சகலரும் பூரண சௌக்யம்' என்று தமிழ்நாட்டிலேயே வடசொல் நிறைந்த நடை வழக்குமாயின், வடநாட்டுப் பிராகிருதத்தின் சமற்கிருத நடை வண்ணத்தைச் சொல்லவும் வேண்டுமோ? சோத்தம் (தோத்ர) திட்டாந்தம் (த்ருஷ்டாந்த) என்பன போன்ற ஆரியச்சொற் சிதைவுகள் வடநாட்டு மொழிகளில் ஏராளமாகவுள்ளன. கட்ட, வட்ட என்னும் பிராகிருதத் தென்சொற்கள், கட்டை, வட்டம் என்னும் தமிழ் வடிவிற்கும், காஷ்ட, வ்ருத்த என்னும் சமற்கிருத வடிவிற்கும் இடைநிலைப்பட்டுள்ளன. இங்ஙனமே ஏனைய பலவும். 1952ஆம் ஆண்டு வெளிவந்த நந்தமோரியர் காலம் (Age of the Nandas and Mauryas) என்ற வரலாற்றுப் பொத்தகத்தில் (பக்.321-2), தமிழர் நாட்டினின்றும் கிரேத்தாத் தீவினின்றும் சின்ன ஆசியா வழியாய் இந்தியாவிற்குட் புகுந்து தென்னாது வந்தவரென்றும், அவர் மொழியிலிருந்த g, j, d@, d, b என்னும் பொலிவுள்ள (Voiced) மெய்கள், k, c, t@, t, p என்னும் பொலிவிலா (Voiceless) மெய்களாக மாறிவிட்டனவென்றும், பண்டாரகர் (Dr.) சுநீதிகுமார் சட்டர்சி உண்மைக்கும் உத்திக்கும் மாறாக வரைந்துள்ளனர். காய்திரிந்து பிஞ்சானதென்றும், இளவட்டம் மாறிக் குழந்தையானான் என்றும் கூறுவது போன்றதே, பொலிவொலி திரிந்து பொலிவிலொலி யாயிற்றென்பது. தெர்மிலர் என்னும் ஓர் இனப்பெயர் கிரேத்தாத் தீவினின்றும், திரு.கனகசபைப்பிள்ளை கருத்துப்படி வங்காய வழியாச் சீனத்தினின்றும், அவர் இங்கு வந்தனர்4 என்பதை எங்ஙனம் உணர்த்தும்? ஒரு மரத்தினின்று பறிக்கப்பட்ட இலைகள் வேறொர் இடத்திற் கிடப்பின், அம்மரத்தினின்று அவ்விலைகள் வந்தன வென்று கொள்வதல்லது. அவ்விலைகளினின்று அம்மரம் வந்ததென்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்? ஒரு பெரு மரத்தின் வேருந்தூரும் அடியுங்கவையும் கொம்புங்கிளையும் போத்துங் குச்சும் குழையுங் கொழுந்தும்போல், ஏறத்தாழ ஐம்பதினாயிரம் 4. The Tamils Eighteen Hundred Years Ago, pp. 46-7 சொற்கள், எளிய வொலிப்பட்ட இயற்கையான தோற்றமும் பல்வேறு நிலைப்பட்ட வளர்ச்சியும் வேர்ப்பொருட் கரணியமுங் காட்டி, ஒரே தொடர்புகொண்டு வரலாற்றிற் கெட்டாத் தொன்று தொட்டு இத் தென்னாட்டிலேயே வழங்கி வரவும், அவற்றைச் சிறிதும் ஆராயாதும் நோக்காதும், வேற்று நாட்டிலிருந்து வந்தன வென்று கொள்வது, எத்துணைப் பொருந்தாக் கொள்கையாம்! 7. கால்டுவெல் கண்காணியாரின் காட்சியுரைகள் கால்டுவெல் கண்காணியார் தமிழரை அல்லது திரவிடரை வடக்கினின்று வந்தவராகக் கருதியிருந்தும், தம் நுண்மாண் நுழைபுலத் தினால் தென்மொழியின் தொன்முது முன்மையைக் கண்டு, பின்வருமாறு தம் திரவிட மொழிகளின் ஒப்பியல் இலக் கணத்திற் கூறியுள்ளார்: திரவிடமொழிக் குடும்பத்தை, இந்தோ - ஐரோப்பிய மொழித் தொகுதிக்கும் சித்திய மொழித் தொகுதிக்கும் இடைப் பட்ட இணைப்பு அண்டாக மட்டுமன்றி சில வகைளில், சிறப் பாகப் பகரப்(பதிற்) பெயர் பற்றிய வகையில், மாந்தன் மொழி வரலாற்றில் இந்தோ-ஐரோப்பிய நிலைக்கு முற்பட்டதும், சித்திய நிலைக்கு முற்பட்டதும், அவ் விரு குடும்பங்களும் ஒன்றினொன்று பிரிந்து போனதற்கு முற்பட்டதுமான, ஒரு காலத்தின் நிலைமை யைக் காட்டும் சான்றுகளுள் இறவாது எஞ்சி நிற்பவற்றுள் தலைசிறந்ததாகக் கருத இடமில்லையா? (சென்னைப் பதிப்பு, முகவுரை, ப. 10) (2) சில திரவிடச் சொல்வடிவங்களும் வேர்களும், மக்க ளினத்தின் முதற்பெற்றோர் மொழியினின்று வழிவழிவந்து இந்து-திரவிடருக்கு மொழியியலுரிமையாகச் சேர்ந்துள்ள வற்றுள் ஒரு பகுதியாய் இருக்கக் கூடாதாவென்பது, மற்றொரு வினா? (சென்னைப் பதிப்பு, முகவுரை, ப. 11) (3) பகரப்பெயர்கள், மொழிகளின் உறவையும் மொழிக் குடும்பங்களின் உறவையும் மிக விளக்கிக் காட்டுகின்றன. ஏனெனின், மூவிடப் பகரப்பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப் பெயர்கள், வேறெச் சொல் வகையினும் மிகுந்த நிலைப்புத் திறனைக் காட்டுவனவாகவும், பல்லூழிக் கடப்பிலும் மிகச்சிறிதே திரிவதாகக் காணப் படுவனவாகவும் உள்ளன. அவை எண்ணுப் பெயர்களையும் வேற்றுமை யுருபுகளையும் வினையீறு களையும்விட மிக நிலைப்புத்திறன் பெற்றுள்ளன. அவை, வேறெதையும் போல வேறுபாட்டிற் கிடமானவையே யாயினும், அவற்றின் தொடர்புகளையும் கிளைப்புகளையும் காலத்தாலும் இடத்தாலும் எத்துணைச் சேய்மைப்பட்டிருப்பினும், ஏறத்தாழ மாந்தர் மொழிகள் எல்லாவற்றிலும் துருவிக் காணலாம். முதற்கண் ஒரே குடும்பத் தைச் சேர்ந்திருந்து, பின்பு காலக்கடப்பினாலும் வேறுபாட்டு வளர்ச்சியினாலும் பிறப்புத் தொடர்பற்றுப்ப் போன, சில மொழிகளின் தொடர்புகுறியாக அல்லது உறவுக் கூறாக அறியக் கூடிய ஒரே சான்று மூவிடப்பகரப் பெயர்களே. இக் கருத்துக் குறிப்பு, எல்லாச்சொல் வகைகளுள்ளும் மிக நிலைப்புத் திறனுள்ளனவாகத் தோன்றும் தன்மைப் பகரப் பெயர்களையே, சிறப்பாகத் தழுவும். (சென்னைப் பதிப்பு, நூல், ப. 359) (இது திரவிட ஒப்பியல் இலக்கணத்தில் பகரப் பெயர்கள் (Pronouns) என்னும் பகுதியின் முகவுரையாக வுள்ளது. தமிழ் மூவிடப் பெயர்கள், திரிந்தும் திரியாமலும் ஏறத்தாழ உலக மொழிகள் எல்லாவற்றிலும் பரந்து கிடக்கின்றன என்பதை, இது குறிப்பாக வுணர்த்துகின்றது.) (4) திரவிட மொழிக்குடும்பம் சமற்கிருதத்திற்கு முற்பட்ட சில முதுபழங்கூறுகளைப் போற்றி வைத்திருக்கின்ற தென்றும், சிறப்பாக அதன் சுட்டுப்பெயர்கள், சமற்கிருதத் தினின்று கடன் கொள்ளப்படாமல் சமற்கிருதச் சுட்டுச் சொற்கட்கும் இந்தோ-ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்து வேறுபட்ட பிறமொழிச் சுட்டுச் சொற்கட்கும் மூலமான, அந்தப் பழைய யாப்பெத்தியச் சுட்டடி களை நிகர்த்து நிற்கின்றன வென்றும், யான் முன்னமே ஒரு கருதுகோளை வெளியிட்டிருக்கின்றேன். (சென்னைப் பதிப்பு, முகவுரை ப. 422) (5) பின் வருஞ் சொல்வரிசைகள், நாம் இலக்கண வொப்பீட் டினால் வந்த முடிபிற்கே, தனிப்பட்ட முறையில் தமக்குரிய அளவில் சான்று பகர்கின்றன. அம் முடிபாவது, திரவிட மொழிகள், சமற்கிருதத்திற்கு முற்பட்டதும் இந்தே-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்குத் தாயாகக் கருதப்படுவது மான அந்த இறந்துபட்ட மொழியோடு கொண்டுள்ள தொன்மையான மிக நெருங்கிய தொடர்புகுறிகளை காட்டுகின்றன என்பதே. (சென்னைப் பதிப்பு, முகவுரை ப. 565) 8. கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள் கால்டுவெல் கண்காணியார், தமிழை ஆழ்ந்து கற்றுத் தமிழுக்கு அரும் பெருந்தொண்டு செய்த மேலையருள் தலைசிறந்த வராயிருந்தும் அவர்தம் அயன்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழிலக்கிய மனைத்தும் அழிக்கப்பட்டுப் போனமை யாலும், இற்றைத் தமிழர் எல்லா வகையிலும் பிராமணருக்குக் கீழ்ப்பட்டிருப்பதனாலும், தொல்காப்பியப் பயிற்சியும் கழக (சங்க) நூற் கல்வியும் தனித் தமிழுணர்ச்சியும் குமரிக்கண்டக் கொள் கையும் அவர் காலத்தின் மையாலும், தமிழரே வடமொழியைத் தேவ மொழியென நம்பிப் பல தென்சொற்கு வடசொன்மூலம் காட்டி யமையாலும், தமிழையும் தமிழரையும்பற்றிய பல வுண்மைகளை அறியவியலாது போயினர். ஆதலால், தம் ஒப்பியலிலக்கணத்தில் பலவிடங்களில் மிகத் தவறான செய்திகளைக் கூறியுள்ளனர். அவையாவன: (1) சேரர், சோழர், பாண்டியர் என்னும் பெயர்கள் முத்தமிழ் நாட்டுக் குடிகளின் பெயர்கள் என்பது. (2) தமிழ் நாகரிகம் கொற்கையில் தொடங்கிற்று என்பது. (3) தமிழரை (அல்லது திரவிடரை) உயர்நாகரிகப் படுத்தியவர் ஆரியர். ஆரியர் வருகைக்கு முன், வீடு (மோட்சம்), அளறு (நரகம்), புலம்பன் (ஆன்மா), கரிசு (பாவம்) என்பவற்றைப்பற்றித் தமிழருக்கு ஏதேனுங் கருத்திருந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞரும் நடுவரும் அவர்கட்கில்லை. அறிவனும் (புதனும்) காரியும் (சனியும்) தவிர, மற்றப் பழங்காலத்தாருக்குப் பொதுவாகத் தெரிந்திருந்த கோள்களை யெல்லாம் அவர் அறிந்திருந்தனர் ஆயிரத்திற்குமேல் அவர் கட்கு எண்ணத்தெரியாது, மருத்துவ நூலும் மருத்துவரும் மாநகரும் வெளிநாட்டு வணிகமும் அவர்கட்கில்லை. இலங்கை யைத் தவிர, வேறெந்தக் கடற்கப்பாலை நாட்டோடும் அவர்கட்குப் பழக்கமில்லை. தீவு அல்லது கண்டம் என்னும் கருத்தைத் தெரி விக்கக் கூடிய சொல் அவர்கட்கில்லை. படிமைக்கலை, கட்டடக் கலை, வானநூல், கணியம், பட்டாங்கு நூல் துறைகள், இலக்கணம் ஆகியவற்றைப்பற்றி அவர் கட்குத் தெரியாது. அவர்கள் அகக்கரண வளர்ச்சியடையாதிருந்த தினால், மனம், நினைவு, மனச்சான்று, btŸî(will) ஆகியவற்றைக் குறிக்க அவர்கட்குச் சொல்லில்லை5 என்பது. (4) தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது. தமிழர் வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை 5. இப் பகுதியில் வந்துள்ள தனித்தமிழ்ச் சொற்கள் ஆசிரியன் குறித்தவை. ஆதன், உறவி என்பனவும் புலம்பனைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம். மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டாதவற்றை விட்டுவிட்டனர், என்பது. (5) தமிழ்ப்பெயர்ச்சொல்லின் வேற்றுமையமைப்பு முற்றும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றியது என்பது. (6) தமிழில் சரியானபடி, செயப்பாட்டு வினையே இல்லை என்பது. (7) அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், திரு, நாழி, பாண்டியன், மனம், மாதம் என்பன வடசொற்கள் என்பது. இனி, கால்டுவெலார் சில புலனங்களை (விஷயங்களை) முன்னுக்குப் பின் முரணாகவும் கூறியுள்ளார். எ-டு : மலையாளம் தமிழின் கிளைமொழி (oldest offshoot) என ஓரிடத்தும், உடன் பிறப்பு மொழி (sister dialect) என மற்றோரி டத்தும் கூறியிருத்தல். மேற்காட்டிய எழுவகைச் சறுக்கற்கூற்றுகளும் உண்மைக்கு மாறானவையென்பது, இந் நூலாலும் இதையடுத்து வரும் ஏனைய நூல்களாலும் தெற்றெனத் தெரிய வரும். தமிழைக் காய்தலின்றி முதன்முதல் மொழிநூன் முறையில் ஆராய்ந்து ஓரளவு பெருமைப் படுத்திய கால்டு வெலாரே இங்ஙனம் கூறியிருப்பதனாலும், இவர் கருத்தே உலக முழுவதும் பரவியுள்ள ஆங்கிலக் கலைக் களஞ் சியத்தில் இடம்பெற்றிருப்பதனாலும், அயலாரும் வெளிநாட் டாரும் தமிழின் பெருமையை அறியமுடியாது போயிற்று. இவர் நூல்முழுதும் நோக்கின், தமிழ் நாகரிகத்திற்கு ஆரியம் அடிப்படை என்னும் தவறான கருத்து, இவர் உள்ளத்தில் ஏற்கெனவே ஆழ வேரூன்றியிருந்ததைக் காணலாம், சமற்கிருதத்தில் திரவிடச் சொற்கள் உள என முதன்முதல் இவர்க்குக் கண்திறந்தவர், மலையாள மொழியாராய்ச் சியில் ஈடும் எடுப்புமற்ற குண்டர்ட்டு என்னும் செருமானியக் கிறித்தவக் குரவரே. ஆயினும் கால்டுவெலார் பகைமைக் கண் கொண்டு தமிழை நோக்கியவரல்லர் என்பது, அனைவர்க்கும் ஒப்பு முடிந்த உண்மையாம். எனினும், அவர் ஆராய்ச்சியின் குணமுங் குற்றமும் நாடின், குற்றமே மிகுந்த தென்பது தெளிவு. ஆதலால் அஃது எக்காலத்திற்கும் ஏற்குமென்பது அறியார் கூற்றே. அது இன்று பழமைப்பட்டும் பழுதுபட்டும் போயிற்றென்பது இந் நூலால் விளங்கும். 9. திரவிடமொழிப் பகுப்பு தென்னிந்திய மொழிக்குடும்பத்தைக் கால்டுவெல் கண்காணி யார் முதன் முதலாக ஆராய்ந்ததினால், தமிழையும் அதனொடு தொடர் புள்ள பிற மொழிகளையும் வேறு படுத்தாது, திரவிடம் என்னும் ஒரே பெயராற் குறித்தார். ஆயின், இன்று தெலுங்கு கன்னட மலையாள நாடுகள் வெவ்வேறு பிரிந்து போனமையாலும், தமிழ் ஒன்றே ஆரியத்தை எதிர்த்துத் தன் தூய்மையைப் போற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளமையாலும், வடசொற்கள் சேரச் சேரத் தெலுங்கு கன்னட மலையாளத்திற்கும், தீரத்தீரத் தமிழுக்கும் உயர்வு ஏற்படுவதனாலும், இந்தியும் வடமொழியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் அவர்தம் இனமொழியாளர்க்கும் நேர்மாறான கருத்துண்மையாலும், தெலுங்கு கன்னடம் முதலிய இனமொழிகளெல்லாம் மீளத் தமிழொடு சேர முடியா வளவு ஆரியவண்ணமாய் மாறிவிட்டமையாலும், அதனால் இனமொழி களையும் புறக் கணிக்கும் நிலை தமிழுக்கு ஏற்பட்டுவிட்டதனாலும், தமிழைத் தமிழ் என்றும், அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும், பிரித்துக் கூறல் வேண்டும். அவ்விரு கூறுகளையும் இணைத்துக் குறிப்பதற்குத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவேண்டும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் முறையே, Tamil, Dravidian, Tamilic or South Indian என்னும் சொற்களை ஆளலாம். தமிழ் என்னும் சொல் திரவிடம் என்று திரிந்தது போன்றே, தமிழம் என்னும் மொழியும் பல திரவிட மொழிகளாகத் திரிந் திருப்பதனால், திரவிடம் என்னும் சொல்லால் திரவிட மொழி களைக் குறிப்பது தக்கதே. வடமொழி என்னும் பெயர் பல வட நாட்டு மொழிகளையும் ஆரியத்துள் அடக்குவதுபோல், தென் மொழி என்னும் பெயரும் பல தென்னாட்டு மொழிகளையும் தமிழுள் அடக்கும். âô¤jhÅa«(Teutonic) என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த செருமானியம், j¢r«(Dutch), ஆங்கிலம் முதலிய மொழிகள் எங்ஙனம் திரும்ப ஒன்று சேராவோ, அங்ஙனமே தென் மொழியம் என்னும் வகுப்பைச் சேர்ந்த தமிழும் திரவிடமும் ஒன்றுசேரா. பால் திரைந்து தயிரானபின் மீளப் பாலாகாதது போல், தமிழ் திரிந்து திரவிடமான பின் மீளத் தமிழாகாது. இங்கு மொழிகட்குச் சொன்னது நாடுகட்கும் ஒக்கும். திரவிடம் என்னுஞ் சொல் முதலாவது தமிழையே குறித்த தென்றும், நாலாயிரத் தெய்வப் பனுவல் திரவிட வேதமென்றும் மெய்கண்டான் நூலுக்குச் சிவஞான முனிவர் வரைந்த அகலவுரை திராவிட மாபாடியம் என்றும் பெயர் பெற் றுள்ளன வென்றும், தனித் தமிழாராய்ச்சி யில்லாத பண்டை நிலைமையைக் கூறி, தமிழ்நாட்டையும் பிரிந்து போன திரவிட நாடுகளையும் ஒன்றாய் இணைக்க முயல்பவர், கறந்த பாலைக் காம்பிற் கேற்றுபவரேயாவர். ஆயின் அரசியற் கொள்கை யொப்புமைபற்றி, தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒரு கூட்டாட்சி அமைக்கலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே, குமரிலபட்டர் ஆந்திர - திராவிட பாஷா என்று தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறிவிட்டார். கன்னடமும் மலையாளமும் அதன்பின்பே தமிழி னின்று பிரிந்தன. தமிழ் நாடும் ஆந்திர மைசூர் கேரளமாகிய முத் திரவிட நாடுகளும் அண்மையில்தான் பிரிந்து போயின. அவை மீளவும் ஒன்றுசேரும் நிலைமையிருப்பின், முன்னர்ப் பிரிந்தே போயிரா. மேலும். கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் என்று பேரா. சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது, பழந்தமிழைப் பொறுத்தவரையில் உயர்வுநவிற்சியா யிராது உண்மை நவிற்சியா யிருப்பதால், தமிழையும் அதன் இன மொழிகளையும் வேறு பிரித்துக் கூறுதற்கு மற்றுமொரு கரணியமுள்ளது. பழந்தமிழுக்கும் இற்றைத் தமிழுக்குமுள்ள வேறுபாடு மிகச் சிறிதே. இலத்தீனுக்கும் இத்தாலியம், பிரெஞ்சியம், இசுபானியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே, தமிழுக்கும் தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட தாகும். தமிழல்லாத ஒரு மொழி திரவிடத்தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை. மொழித்துறைக்குச் சொன்னதே இனத்துறைக்கும். திரவிட முன்னையர் (Pre-Dravidians”) என்றோ, மூலத்திரவிடர் (Protp-Dravidians) என்றோ, திரவிடர் (Dravidians) என்றோ வேறுபாடிருந்ததாக நமக்குத் தோன்றவில்லை. இவர்க ளெல்லாம் புதுக்கற்காலத்தினின்றும் அதற்கு முன்பிருந்தும் வந்த மக்களின் நேர்வழித் தோன்றிய ஓரினத்தாரே. என்று இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருத்தலையும் காண்க. (Pre-Historic South India, p. 246) 10. தமிழ் என்னும் பெயர் வரலாறு தமிழ் குமரிக்கண்டத்தில்தானே தோன்றிய மொழியாத லானும், ஆரியர் வரும்வரை வேற்றுமொழி யொன்றும் தென்னாட் டில் எவ்வகையிலேனும் வழங்காமையானும், தமிழவணிகர் மொழிபெயர் நாடு செல்லும்வரை அல்லது அயலாரொடு அரசியல் அல்லது வணிகத் தொடர்பு கொள்ளும் வரை, மொழி அல்லது பேச்சு என்னும் பொதுப் பெயர் தவிர யாதொரு சிறப்புப்பெயரும் தமிழுக்கு வழங்கியிருக்க முடியாது. தமிழ்மொழியின் சிறப்புப் பெயர், தமிழ் (தமிழம்), திரவிடம் என்னும் இருவடிவில் காணப்படுகின்றது. இவ் விரண்டும் வெவ்வேறு சொற்போல் தோன்றினும் உண்மையில் ஒரே சொல்லின் இருவேறு வடிவங்களாகும். இவற்றுள் முன்னையது தமிழ் என்பதே. இதற்குச் சான்றுகளாவன: (1) திராவிடம் என்னும் சொல் முதலாவது தமிழ் என்னும் பொருளிலேயே வழங்கியமை வடநூலார் தமிழை ஒரு பிராகிருதமாகக் கொண்ட போது, அதைத் த்ராவிடீ என அழைத்தனர். பாகவத புராணத்தில், சத்தியவிரதன் என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன், திரவிடபதி எனப்படுகின்றான். கி.பி. 470ஆம் ஆண்டில் வச்சிரநந்தி என்னும் சமணர் மதுரையில் நிறுவிய தமிழ்க் கழகம்' திரவிட சங்கம் எனப்பட்டது. பிள்ளை லோகாசார்ய சீயர் (500 ஆண்டுகட்கு முன்) பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரவுரையில், தமிழிலக் கணத்தைத் திரவிட சாஸ்திரம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நாலாயிரத் தெய்வப் பனுவல் திரவிடவேதம் என்றும், சிவஞான முனிவரின் மெய்கண்டான் நூல் அகலவுரை திரவிட மாபாடியம் என்றும், சபாபதி நாவலரின் தமிழிலக்கிய வரலாறு திராவிடப் பிரகாசிகை என்றும் பெயர் பெற்றுள்ளன. தாயுமானவர் (18ஆம் நூற்.) கல்லாத பேர்களே நல்லவர்கள் என்னும் பாட்டில், தமிழைத் திராவிடம் எனக் குறிப்பிடுகின்றார். கிறித்துவிற்கு முன் தமிழிலன்றித் திரவிடமொழி யெதிலும் இலக்கியமின்மையால், திரவிடம் என்னும் பெயரால் தமிழையே தலைமையாகக் குறித்து வந்தனர், வடவர். கி.பி. 7ஆம் நூற்றாண் டில் தான், குமரிலபட்டர் ஆந்திர-திராவிட பாஷா என்னுந் தொடரால் தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறினர். திரவிடம் என்னும் திரிந்த வடிவைச் செம்மையான வடிவாகக் கொண்டு, ஆரியத்தால் தெற்கே துரத்தப்பட்டது என்று தமிழ்ப் பகைவரும், தீவினையைத் துரத்துவது என்று சிவஞான முனிவரும், திருவிடம் (திரு+இடம்) என்று பேரா. பூரணலிங்கம் பிள்ளையும் துரூவிதரோடு தொடர்பு படுத்தி ஞானப்பிரகாசக் குரவரும், வெவ்வேறு பொருட் கரணியங் காட்டுவாராயினர். (2) தமிழ் என்னும் சொல்லையொத்த பெயர்களே வெளி நாடுகளில் வழங்கியமை கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுந்த bgÇ¥òSR(Periplus) என்னும் கிரேக்க நூல் jÄuhŒ(Tamirai) என்று குறித்துள்ளது. பியூத்திங்கர் m£ltiz(Peutinger Tables) என்னும் உரோம Phy¥gl§fËš(Atlas) தமிழகம் jÄÇ¡nf(Damirice) எனக் குறிக்கப்பட்டுள்ளது. jhyÄ(Ptolemy) என்னும் எகிபதிய ஞால நூலார் (கி.பி. 139-61), பியூத்திங்கர் அட்டவணை யிடப்பெயர்களைப் பெயர்த்தெழுதும்போது, கிரேக்க டகரத்தை லகரமாகக் கொண்டு, âÄÇ¡nf(Dymirice) என்னும் பெயரைத் தவறுதலாக லுமிரிக்கி (Lumiriki) என்று எழுதிவிட்டார். ஆயினும் அவருக்குப் பின்னர் வந்த nut©zh(Ravenna) ஞாலநூலார் jÄÇ¡fh(Damirica) எனத் திருத்திக்கொண்டார். தமிழ் என்னுஞ்சொல், கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியா விற்கு வந்த ïbt‹ârh§(Hwen Thsang) என்னும் சீன வழிப் போக்கர் குறிப்பில், ábkhbyh(Tehi-mo-lo) என்னும் வடிவில் உள்ளது. இதைத் ‘âky’(Dimala) அல்லது ‘âku’(Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெலார். பாலிமொழியிலுள்ள மகா tÄr«(Mahavanso) என்னும் இலங்கை வரலாற்றில், தமிலோ (Damilo) என்னும் வடிவமே உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் ‘jKš’(Tamul) என்றனர். அவருள் தேனிய விடையூழியர் (Danish Missionaries) மட்டும் `தமுலிக்க bkhÊ'(Lingua Damulica) என இலத்தீன் வடிவில் குறித்தனர், ஆங்கிலத்தில் ‘jÄš’(Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. மாக்கசு முல்லர் தென்மொழிக் குடும்பத்திற்குத் ‘jKÈ¡F’(Tamulic) எனப் பெயரிட்டார். (3) திராவிடம் என்னும் சொல், தமிழ் என்னுஞ் சொல் லிற்கு நெருங்கிய திரமிலங் (அல்லது திரமிளம்) என்னும் வடிவில் வழங்கியமை கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வராகமிகிரர் நூலின் பழங் கையெழுத்துப் படிகளில் த்ரமிட என்னும் வடிவும் மங்கலேச அரசனின் பட்டங்களில் த்ரமில என்னும் வடிவும் காணப் பட்டன வென்றும், தாரநாதர் திபேத்தில் எழுதிய இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு (கி.பி. 1573) என்னும் நூலில், திராவிடர் ‘âuÄy®’(Dramilas) எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், புராணங்களின் பழைய மொழிபெயர்ப்புகளிலெல்லாம் இவ் வடிவே பெருவழக்கா யிருப்பதாகச் குண்டெர்ட்டுப் பண்டாரகர் கூறுகிறா ரென்றும், திரவிடம் என்பதன் மிகப் பழைய வடிவம் ‘¤uÄl’(Dramida) என்பது என்றும்; கால்டுவெல் கண்காணியார் வரைந்துள்ளார்6. நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பண்டைக் காலத்திற் பெரும்பாலும் அம் ஈறுபெற்றுத் தமிழில் வழங்கியதை 6. தி. ஒ. ï., ப.9 நோக்கும் போது, தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மை தமிழம் என்று வழங் கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம், த்ரமில(ம்) த்ரமிள( ம்), த்ரமிட(ம்), த்ரவிட(ம்) என்னும் வடிவுகளை முறையே நோக்கின், தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ் வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய் நோக்கி, திரவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார். ஆயின், கிரையர்சன் இத் தவற்றைத் திருத்திவிட்டனர். த்ரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலும் அது என்று பிரயோக விவேக நூலார் (ப.4) கூறியது, அவரது தமிழ் வெறுப்பைக் காட்டும் சான்றேயென அறிக. (4) திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலக வழக்கில் அருகியும் வழங்காமை (5) த்ரமிடம், த்ரவிடம் என்னும் ரகரமேற்றிய வடிவுகளே யன்றி, தபிள, தவிட என்னும் மிக நெருங்கிய வடிவு களும் வடமொழி நாடகங்களிலும் சமண நூல்களிலும் வழங்கியிருத்தல் இனி, தமிழ் என்னுஞ் சொல், கிரேக்க நாட்டில் வழங்கிய தெர்மிலே அல்லது தெர்மிலர் அல்லது `திரமிலர்' என்னும் இனப் பெயரினின்று திரிந்ததென்று ஞானப்பிரகாசக் குரவரும், வங்கநாட்டுத் தம்ரலித்தி என்னும் நகர்ப் பெயரினின்று தோன்றிய தென்று கனகசபைப் பிள்ளையும்; தாமம்(ஞாயிறு), எல்லாம் (இலங்கை) என்னும் இரு சொல், முறையே தாம் ஈழம் என மருவிப் புணர்ந்த வடிவென்று கந்தையாப் பிள்ளையும்; தமி என்னும் முதனிலையடியாய்ப் பிறந்து ஒப்பற்றதெனப் பொருள் படுவதென்று தாமோதரம் பிள்ளையும், தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி என்னும் பொருள் தருவதென்று ஒரு சாராரும், வலி மெலியிடையாகிய மூவின மெய்களைக் கொண்ட நிலைமையைக் குறிப்பதென்று மற்றொரு சாராரும், அதற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இனிமையானது என்று பொருட்கரணியங் காட்டு வாருள், (S) சீநிவாசையங்கார் ஒருவரே தம்+இழ் என்று பகுத்து இழ் என்னும் ஈறு இனிமைப் பொருள்படும் இழும் என்னும் சொல்லின் சிதைவெனக் காட்டுவர். பிறரெல்லாம், இனிமையு நீர்மையுந் தமிழென லாகும் என்னும் பிங்கலந்தை நூற்பாவைத் தழுவி, தமிழ் என்னும் சொற்கே இனிமைப் பொருளுண்டெனக் கொள்வர். கிரேக்க நாட்டில், என்றேனும் தமிழ் வழங்கிய தென் பதற்கோ தமிழர் வாழ்ந்திருந்தார் என்பதற்கோ ஒரு சான்று மின்மையானும்; தமிழ்ச்சொற்களும் தமிழர் பழக்க வழக்கங்களும், கிரேக்க நாட்டில் மட்டுமன்றி உலகத்திற் பல இனத்தாரிடையும் காணப்படுவதாலும், கிரேக்க நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு திரவிட மொழியும் வழங்காமையானும்; தெர்மில என்னும் சொல்லைத் திர-இல்-அர் என்று பிரித்து, கடற்கரையில் குடிகொண்டவர் என்று பொருள் கூறுவது, கேசவக்கிருட்டிணனே ஏசுக்கிறித்து என்று சொல்வதொக்கு மாதலானும்; ஒரே சொல்லின் ஒருபுடையொப் புமைபற்றி ஒரு நாட்டாரை ஐயாயிரம் கல் தொலைவிற்கப்பாற் பட்ட வேறொரு நாட்டினின்று வந்தவராகக் கொள்வது, மொழிநூன் முறைக்கு முற்றும் முரணானதாக லானும்; தோற்றம் முதல் இதுவரைப்பட்ட வளர்ச்சி நிலையெல்லாம் தொடர்பாகக் காட்டிக்கொண்டு தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே தமிழ் வழங்கி வந்திருத்த லானும்; கிரேக்க நாட்டு மூலக் கொள்கை மிகத் தவறான தென்று கூறி விடுக்க. வங்க நாட்டில் திரவிடரேயன்றித் தமிழர் ஒருகாலும் வாழ்ந் திராமையானும், இற்றை வங்கமொழி ஆரிய வண்ணமாய் மாறி யிருத்தலானும், தமிழ் என்னுஞ் சொற்குத் தம்ரலித்தி என்னுஞ் சொல்லோடுள்ள தொடர்பு, காசி என்னும் பெயர்க்குக் காஞ்சி யென்னும் பெயரோடுள்ள தொடர்பே யாதலானும்; தம்ரலித்தி (அல்லது தமிலப்தி அல்லது தமிலூக்) என்னுஞ் சொல்லினின்று தமிழ் என்னும் பெயர் வந்ததென்பது சிறிதும் பொருந்தாது. தமிழர் நாகரிகமடைந்த காலந்தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியராட்சிக் குட்பட்ட முத்தமிழ்நாடாயிருந்து வந்தமை யானும், கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியரும், வண்டமிழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை யகம் (தொல். 1336) என்று கூறுதலானும், வரலாற்றுக் காலம் நெடுகலும் இலங்கை அயலாராட்சிக்குட்பட்ட ஒரு குடியேற்ற நாடாகவே கருதப் பட்டு வருதலானும்; தமிழ் என்னும் பெயர் குமரிக் கண்டத்திலேயே தோன்றி விட்டமையானும்; தாமமெல்லாம் அல்லது தாமீழம் என்பது இலங்கையை நோக்கிப் புதுவதாகப் படைத்த பொருந்தாப் புணர்ப்பாதலாலும்; அப் புணர்ப்புச் சொல்லினின்று தமிழென்னும் பெயர் தோன்றிற்றென்பது, நாட்டுப்பற்றினா லெழுந்த விருப்பக் கருத்தேயன்றி வேறன்று. தமிழ் ஒப்புயர்வற்ற தென்னுங் கருத்து ஏனைய மொழிக ளெல்லாந் தோன்றியபின், அவற்றோடு தமிழை ஒப்புநோக்கி அதன் உயர்வு கண்டு அதற்குத் தமிழ் எனப் பெயரிட்டன ரென்று, அப் பெயரீட்டை மிகப் பிந்திய நிகழ்ச்சியாகக் காட்டுவதால், அதுவும் கொள்ளத் தக்கதன்று. மூவினமெய் எல்லா மொழிகட்கும் பொதுவாதலின், தமிழ் என்னும் பெயர் அது குறித்துத் தோன்றிற்றென்பதும் தவறானதே. எல்லா மொழியாளரும் தத்தம் மொழியே இனிய தென்று கொள்வது இயல்பாதலானும்; மாடு என்னும் சொற்குச் செல்வம் என்னும் பொருள் தோன்றியதுபோல், தமிழ் என்னும் சொற்கு இனிமை என்பது மதிப்பும் பற்றும் பற்றித் தோன்றிய வழிப் பொருளே யாதலானும்; தம்+இம்(இழும்) என்னும் சொற் பகுப்பில், தம் என்னும் முன்னொட்டு தொடர்பற்றும், இழும் என்னும் தலைமைச் சொல் ஈறாகக் குன்றியும், இருக்கவேண்டும் நிலைமை யேற்படுதலானும்; இனிமைப் பொருட் கரணியமும் ஏற்றதன்றாம். இழும் = இனிமை. இழுமெனல் = இனிதாயிருத்தல். இழுது = தேன், தித்திப்பு. தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னுங் கருத்துப் பொருத்தமுள்ளதாகத் தோன்றினும், அதுவும் ஏனை மொழி களுடன் ஒப்பு நோக்குதலை வேண்டுதலின் ஏற்கத்தக்க தன்று. கி.மு. 10,000 ஆண்டு கட்கு முன்னரே குமரிக்கண்டத்தில் தமிழ் என்னும் பெயர் ஏற்பட்டு விட்டது. தமிழ் என்னும் சொல்லில் ழ் இயல்பீறன்று. அமிழ், இமிழ், உமிழ், குமிழ், சிமிழ் என்பவற்றிற்போல், தமிழ் என்பதிலும் இழ் என்பதே ஈறாம். அது இல் என்பதன் திரிபு. தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னும் பொருளில், தமிழ் என்பது தமி+ழ் என்று பிரிதல் வேண்டும். தமி = தனிமை. ழகரம் இனிதாயொலிப்ப தால், தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னுங் கூற்றும், இனிமைக் கருத்தைத் தழுவியதே. இனி, இனிமையென்பது தமிழுக்கு ழகரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று. எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யு ளினிமை எனப் பிறவினிமைகளுமுண்டு. இவற்றின் விரிவையும் விளக்கத்தையும் என் செந்தமிழ்ச் சிறப்பு', முத்தமிழ் என்னும் நூல்களிற் கண்டு கொள்க. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென் கொலாம்புகுந் தெய்தியதே என்னும் திருக்கோவைச் செய்யுளில், `ஒண்டீந்தமிழின் துறை' என்று பிறமொழிகட்கில்லாத பொருளிலக்கணமும், ``ஏழிசைச் சூழல்'' என்று இசைத் தமிழும், இன்பத் துறைகளாக மாணிக்கவாசகராற் குறிக்கப்பட்டிருத்தலையும் நோக்கித் தெளிக. அண்மையில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் 7, தமிழ் என்னுஞ் சொல்லைத் த+மிழ் என்று பிரித்தும், தம்+மிழற்று என்று விரித்தும், நமது இனியமொழி என்று பொருள் குறித்தும், ஆங்கிலத் தில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். முறையே, ஏம் (யாம்), நாம், நூம், தாம் என்னும் மூவிடப் பெயர்களின் வேற்றுமையடிகளான எம், நம், நும், தம் என்னும் சொற்களுள், எம், நம் என்னும் தன்மைச் சொற்களே அருமைப் பாட்டை யுணர்த்தும். இது ஆர்வக் கோளி (Dative of Interest) என்னும் ஆங்கில விலக்கண அமைதியை ஒருபுடை யொத்தது. எ-டு: எம்பிள்ளை, எம்ஆள், எம்பெருமான்; நம்பிள்ளை, நம்ஆள், நம்பெருமான், நம்பெருமாள், நம்மாழ்வார். தம் என்பது தமது என்று படர்க்கையை யுணர்த்துமே யன்றி, நமது என்று உளப்பாட்டுத் தன்மையை உணர்த்தாது. ஒருவர் தமக்கு அருமையானவரைத் தம்மொடுபடுத்திக் கூறுவதன்றிப் பிறரொடு படுத்திக் கூறுவது, இயல்பன்றென்பதும் அறிக. மழவுங் குழவும் இளமைப் பொருள (உரி. 14) என்பது தொல்காப்பியம். இளமை மென்மையையும் உணர்த்தும் மழ - மழல் - மழலை, மழல் - மழறு - மழற்று - மிழற்று. மிழற்றுதல் = குழந்தைபோல் மென்மையாய் அல்லது இனிமையாய்ப் பேசுதல். மிழற்று என்னும் சொல் மிழ் எனக் குறுகி ஈறாயிற் றென்பது பொருந்தாது. ஆயினும், நம் பேராசிரியரின் நன்னோக்கம் மகிழ்ந்து பாராட்டற் பாலதே. இனி, வேறு எவ்வகையில் தமிழ் என்னும் பெயர் தோன்றி யிருக்கலாமெனின், கூறுவேன். மொழிகட்குப் பெயர் முதலாவது நாடுபற்றியும், பின்பு மக்கள் பற்றியும், அதன்பின் மொழியின் தன்மைபற்றியும் தோன்றியுள்ளன. 7. வே.வ. இராமசாமி பாராட்டு' மலர், பக்.93-5 கருநடம்(கன்னடம்), குடகு முதலியவை நாடுபற்றியும்; மலை யாளம், ஆங்கிலம் முதலியவை மக்கள் பற்றியும்; பிராகிருதம், சமற்கிருதம் முதலியவை தன்மை பற்றியும் பெயர்பெற்றுள்ளன. வடமொழி, தென்மொழி எனத் திசை பற்றியும்; உருது(பாளையம்) என இடம் பற்றியும், பெயர் பெறுவது நாட்டினாற் பெயர்பெறுவது போன்றதே. வழக்கற்ற மொழியாயின், வேதமொழி என்பதுபோல் நூலாலும் பெயர் பெறும். தேவமொழி என்பது ஏமாற்றுப் பற்றியதாம். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து என்று தொல்காப்பியம் கூறுவதினின்று, கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது தெரிகின்றது. கடைக்கழகக் காலத்தி லும் இந்நிலைமையே யிருந்தமை, கழகச் செய்யுள்களாலும் கழக மருவிய வனப்புகளாலும் அறியப்படும். திராவிடம் (தமிழ்), ஆந்திரம், கன்னடம், மகாராட்டி, கூர்ச்சரம் என்னும் ஐந்தையும் பஞ்ச திராவிடம் என்று பண்டைக்காலத்தில் வடவர் வழங்கிய தால் ஆரியர் வந்த பின்பும் விந்தியமலைவரையும் தமிழும் அதன் திரிபான திரவிடமுமே வழங்கியமை பெறப்படும். அவர் வருகைக் காலத் திலோ, வடஇந்தியாவிலும் திரவிடம் வழங்கியதை, பிராகுவீயும், இராசமகாலும் இன்றும் காட்டும். ஒரு நாட்டில் ஒரே மொழி வழங்குமாயின், அதற்குச் சிறப்புப் பெயர் தோன்றாது. பேச்சு அல்லது மொழி என்னும் பொதுப்பெயரே அதற்கு வழங்கும். ஓர் ஊரில் ஒரே ஓர் ஆறிருப்பின், அதை ஆறென்று பொதுப்பெயராலேயே குறிப்பர். இங்ஙனமே மலை, குளம், மரம் முதலிய பிறவும் ஒன்றேயொன்றா யிருப்பின் பொதுப்பெயராலேயே குறிக்கப் பெறும். ஒரு மொழி ஆயிரங்கல் தொலைவிற்கு அப்பாற் படரின், பல்வேறு கரணியம்பற்றித் திரிதல் இயல்பு. அத் திரிபு திடுதிப்பென்று தோன்றாது மெல்ல மெல்லப் படிப்படியாகத் தோன்றும். அது மொழி பெயர்தல் எனப்படும். தொன்று தொட்டுத் தமிழையடுத்து வடபால் வழங்கும் திரவிட மொழி தெலுங்கே. அதனால், அதைத் தமிழர் வடகு என்றனர். அது பின்பு உயிரிசைவு kh‰w¤jhš(Harmonic Sequence of Vowels) வடுகு எனத் திரிந்தது. நீலமலையில் வாழும் ஒருசார் கன்னடத் திரவிடரைக் குறிக்கும் படகர் என்னும் பெயர், வடகர் என்பதன் திரிபே. தெலுங்கை யடுத்துத் திரிந்த பெருந் திரவிடமொழி கன்னடமே. தமிழ வணிகர் வடக்கிலுள்ள மொழிபெயர் நாட்டிற்குச் சென்றிருந்த போது, அந் நாட்டார் அவ் வணிகர் பேச்சைத் தம்மில் (தம்+இல்) மொழி என்று குறித்திருக்கலாம். இல் என்பது வீட்டை யுங் குடியையும் ஊரையும் உணர்த்தும். இற்பிறந்தார் (குறள். 915) = குடிப்பிறந்தார். அன்பில், கிடங்கில், பொருந்தில் என்பன ஊர்ப் பெயர்கள். ஊர், நாடு என்பன ஒன்றையொன்றுணர்த்தலு முண்டு. நாட்டாண் மைக்காரன் என்பவன் ஊராண்மைக் காரன். ஆள்மறைநாடு, உரத்தநாடு, பைங்காநாடு என்பன ஊர்ப் பெயர்கள். தம் இல் மொழியாவது தம் வீட்டில் அல்லது நாட்டில் பேசும் மொழி. தம்மில் என்பது தமில் எனத் தொக்குத் தமிழ் எனத் திரிந்திருக்கலாம். வெய்யில் என்பது வெயில் எனத் தொக்கு வழங்குதலை நோக்குக. தமிழ் என்னும் வடிவு ஒருசொற்றன்மைப் பட்டு, தமிழ் என்னும் திரிபில் மொழிப் பெயர்த் தன்மை முற்றி விட்டது. குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே (குறுந். 11 : 5-8) மொழிபெயர் பன்மலை யிறப்பினும் ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே. (ஐங். 321 : 4-5) தமிழ்கெழு மூவர் காக்கும் மொரீபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே (அகம். 31 : 14-15) பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர் (அகம். 211 : 7-8) என்னும் கடைக்கழகச் செய்யுட் பகுதிகள். தமிழ வணிகரின் வடதிசை மொழிபெயர் தேயச் செலவைக் கூறுதல் காண்க. தெலுங்கென்னும் வடுகு முதற்காலத்தில் தமிழி னின்றும் மிக வேறுபட்டிருக்கமுடியாது. வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம் என்றது வடுகநாட்டையே என்பது தெளிவுறு தேற்றம். தாம் என்பது தாமு என்றும், தம் என்பது தம என்றும், தம்பின் என்பது தம்முடு என்றும், இல் என்பது இல்லு என்றும், இன்றும் தெலுங்கில் வழங்குவதால், தம்மில் அல்லது தமில் என்னும் கூட்டுச் சொல் அக்கால வடுகிற்கு முற்றும் இயல்பானதே. அலர்மேல்மங்கை என்னும் தொடர்ச்சொல் பின்னர் அலர்மேல் என்று குறுகி வழங்குவதுபோல், தமில்மொழி என்பதும் நாளடைவில் தமில் என்று குறுகி வழங்குதல் இயல்பே. லகரத்தி னின்றே ளகரமும் ளகரத்தினின்றே ழகரமும் தோன்றி யிருத்தலால், லகரம் நேரடியாகவோ ளகர வாயிலாகவோ ழகரமாய்த் திரிதலுண்டு. எ-டு: மால் - மழை, ஏலா - ஏழா (பழங்குடி மக்கள் மனைவியை விளிக்கும் சொல்), கல் - கள் - காள் - காழ் (கருப்பு) நாலிகை (மூங்கில்) - நாளம் (உட்டுளை) - நாழி (உட்டுளைப் படி) ழகரம் லகரத்தின் மிகப் பிந்தியதாதலின், தமில் என்னும் லகர வீற்று வடிவம் அப் பெயரின் தொன்மையையும் உணர்த்தும். இனி, தன்மானம் தமர் என்னும் சொற்களில், தன் தம் என்பன படர்க்கை சுட்டாது சொந்த என்று பொருள்படுதல் போல், தமில் என்னும் சொல்லிலும் தம் என்பது சொந்த என்று பொருள் படுமாறு, தமிழரே அப் பெயரைத் தம் மொழிக்கு இட்டுக்கொண் டனர் எனக் கொள்ளலும் ஒன்று. சாயுங்காலம் என்பது சாயங்காலம் என்று திரிந்தபின், சாயம் என்னும் பெயரெச்சமே வடமொழியில் சாயுங் காலத்தைக் குறித்தல் போல்; தமில் என்னும் பெயரடை பெயர்த் தன்மைப்பட்டு மொழியைக் குறித்ததென்க. t.ஸha«-ï.ஸh«. இதுகாறுங் கூறியவற்றால், தமிழ் என்னும் பெயருக்குக் கூறப்பட்ட பொருட்கரணியங்கள் எல்லாவற்றுள்ளும், தனியாக ழகரத்தையுடையது, தந்நாட்டு மொழி, என்னும் இரண்டே பொருத்தமானவை யென்றும், இவற்றினும், சிறந்தது தோன்றும் வரை இவையே கொள்ளத் தக்கன வென்றும் எண்ணிக் கொள்க. வடுகு கொடுந்தமிழ்நிலை கடந்து மொழிநிலை யடைந்த பின், வடுகர்(தெலுங்கர்) தமிழுக்கிட்ட பெயர் அருவம் என்பது. அது அரவம் எனத் திரிந்தது. செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டெனத் தொல்காப்பியர் காலத்திலேயே கணக்கிடப்பட்டிருந்தன. பிற்காலத்தில் செந்தமிழ் நிலப்பரப்பு மிகச் சுருங்கிவிட்ட தனால், அதற்கேற்பக் கொடுந்தமிழ் நிலங்களும் பண்டைச் செந்தமிழ் நிலத்திற் குள்ளேயே அடங்கிவிட்டன. அந் நிலைமையையே, தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண் என்னு மிடைக்கால வெண்பாக் காட்டும். `அருவா அதன் வடக்கு' என்றது, அருவா நாட்டையும் அருவா வடதலை நாட்டையும். இவை தமிழகத்தின் வட கோடியில் தெலுங்க நாட்டை அடுத்திருந்தன. அதனால் நாடுபற்றித் தமிழரை அருவர் என அழைத்தனர் தெலுங்கர். எல்லைப்புறப் பகுதிப் பெயரை நாடு முழுவதற்கும் இடுவது அயலார் இயல்பு. சிந்துவெளி பற்றி நாவலந் தேயத்தைப் பாரசீகர் ஹிந்து என்றும் கிரேக்கர் இந்தோஸ் என்றும் குறித்ததையும்; முகலாய அரசர் கன்னட நாட்டோடு தமிழ்நாட்டையுஞ் சேர்த்துக் கரு நாடகம் என அழைத்ததை யும், நோக்குக. அருவர் அருவர் எனாவி றைஞ்சினர் அபயம் அபயம் எனாந டுங்கியே என்பது கலிங்கத்துப் பரணி. ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர் அருவர் அருவர்என அஞ்சி - வெருவந்து தீத்தீத்தீ என்றயர்வர் சென்னி படைவீரர் போர்க்கலிங்க மீதெழுந்த போது என்பது பழைய வெண்பா. அருவர் மொழி அருவம். கருநடர் (கன்னடர்) தமிழர் என்னுஞ் சொல்லைத் திகுளர் எனத் திரித்து வழங்குவர். வடமொழி தென்னாடு வந்தபின், தமிழை அதனொடு ஒப்புநோக்கித் தென்மொழி என்றனர். திரவிடம், என்பது தமிழம் என்பதன் திரிபென்று முன்னரே விளக்கப்பெற்றது. திரவிடம், தென்மொழி என்னும் பெயர்கள், திரவிட மொழிக ளெல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண் டிருந்த தமிழின் பண்டைத் தலைமையை உணர்த்தும். 11. மூவேந்தர் பெயர் தலைக் கழகக் காலத்திற்கு முன்பே, சேர சோழ பாண்டியர் நாவலம் பொழில் என்னும் இந்து தேயத்தை ஆளத் தொடங்கி விட்டதனால், அம் மூவேந்தர் குடித் தோற்றமும் வரலாற்றிற் கெட்டாத தொன்மைத்தாகும். இதனாலேயே, திருக்குறளை வடநூல் வழியாகக் காட்டிய பரிமேலழகரும், `பழங்குடி' என்பதற்குத் தொன்றுதொட்டு வருகின்ற குடி என்று பொருள் கூறி, தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல் என்று எடுத்துக் காட்டினார். முதற்காலத்தில் நாவலம் பொழில் முழுதும் மூவேந்தர் ஆட்சிக் குட்பட்டிருந்தமை, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி! (சிலப். நாடுகாண் காதை, 19-22) இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலின் திருமா வளவன் ............................ புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோன் (சிலப். இந்திர விழவூரெடுத்த காதை, 88-97) குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் (சிலப். வாழ்த்துக் காதை, உரைப்பாட்டு மடை) என்னும் பகுதிகளால் உய்த்துணரப்படும். ஆரியர் வருமுன் வடநாடு முழுதும் திரவிடர் பரவியிருந்தமையும், சில வடநாட்டூர்ப் பெயர் தமிழாயிருத்தலும் இதை வலியுறுத்தம். தெற்கே முழுகிப்போன குமரிக்கண்டம் முழுதும் பழம் பாண்டி நாடே. அது ஏறத்தாழ ஈராயிரம் கல் தொலைவு நீண்டது. இதேயளவு வடக்கில் கீழ்ப்பகுதி சோழநாடாகவும் மேற்பகுதி சேரநாடாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. கண்ணன் அழித்த தாகச் சொல்லப்படும் சோணிதபுரம் பழஞ் சேரநாட்டைச் சேர்ந்ததே. அது மாவலி என்னும் சேர மாவேந்தனின் மகன் வாணனது தலைநகர். தமிழ வேந்தர் என்றும் மூவரேயாதலின், அவர் முச் சுடரையும் தம் குலமுதலாகக் கூறிக்கொண்டனர். பாண்டியன் திங்கட்குலமும், சோழன் கதிரவக் குலமும், சேரன் நெருப்புக் குலமும் ஆவர். பாரதத்திற் சொல்லப்படும், திங்கள் மரபாகிய பரத குலம் பழம் பாண்டியக் கிளையும், இராமாயணத்திற் சொல்லப்படும் கதிரவக் குலம்(சூரிய வமிசம்) பழஞ் சோழக் கிளையும் ஆகும். முசுகுந்தன், மாந்தாதா, சிபி முதலியோர் தென்னாட்டுச் சோழர் குடிக்கும் வடநாட்டுக் கதிரவக் குலத்திற்கும் பொது முன்னோராகச் சொல்லப் படுதல், இவ்விரு குடிகளும் ஒரே குலத்தைச் சேர்ந்தமையாலேயே. சிபியின் வழியினன் ஆதலாலேயே சோழன் செம்பியன் எனப் பட்டான். பிற்காலத்துத் தெலுங்கச் சோடர்(சோழர்) மொழிபற்றிப் பிரிந்து போனது போன்றே, முற்காலத்துக் கதிரவக்குல வடவரசரும் மொழியும் சேய்மையும்பற்றிப் பிரிந்து போயினர் என்க. நாரதனை மூவுலகு முலாவி(திரிலோக சஞ்சாரி) என்றது சேர சோழபாண்டிய நாடுகள்பற்றியே. உலகம் என்பது முதலாகு பெயராய் நாட்டையும் குறிக்கும். இத்துணைப் பழைமை வாய்ந்த சேர சோழ பாண்டியக் குடிப் பெயர்கள், தமிழாயன்றி வேறு மொழியாயிருத்தல் முடி யாது. ஆயினும், ஆரிய வெறியர் இந்திய நாகரிகத்தை ஆரியமாகக் காட்டல்வேண்டி, மூவேந்தர் குடிப்பெயரையும் வடநாட்டுத் தொடர்புகொண்ட வடசொல்லாகக் காட்டி வருகின்றனர். பாண்டியன் பாண்டியன் என்பது மூவேந்தருள்ளும் முந்தியவன் பெயர். பழம் பாண்டிய நாடே தமிழன் பிறந்தகம். குமரிக்கண்டம் தென் கோடியி லிருந்ததினாலேயே, அதை யாண்ட பாண்டியன் தென் னவன் எனப்பட்டான். பாண்டியன் என்பது பண்டு என்னும் சொல்லினின்று திரிந்த தென்றும், பழைமையானவன் என்னும் பொருள் கொண்ட தென்றும், சொல்வதுண்டு. பாண்டியன் மூவேந்தருள் மட்டு மன்றிப் பிறவரசரை நோக்கியும் பழைமையானவனே. மோகூர்த் தலைவனும் பாண்டியன் படைத்தலைவனுமாகிய ஒரு சிற்றரசனும் பழையன் என்று பெயர்பெற்றிருந்தான். ஆயினும், இப் பொருட்கரணியம் அத்துணைப் பொருத்த மாய்த் தோன்ற வில்லை. பாண்டி என்பது காளையைக் குறிக்குஞ் சொல். அது பாண்டில், பாண்டியம் என்னும் வடிவுங்கொள்ளும். ஒரு மறவனைக் காளை என்பது மரபு. அதனால். அது சிலர்க்கு இயற்பெயராகவும் இடப்படும். வலிமை, மறம், உழைப்பு, பொறுப்பு முதலிய அருந் திறங்கள் வாய்ந்த காளை போன்றவனைக் காளையென்றல் உவமையாகு பெயர். ஒரு நாட்டைக் காக்கும் அரசனுக்கு இக் குணங்கள் இன்றியமை யாதவை. ஆதலால், பொருட்பாலில் அரசியற் பகுதியில் இடுக்கணழியாமை என்னும் அதிகாரத்தில், மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (குறள். 624) என்றார் திருவள்ளுவர். காளை என்பது ஆண்மகன், கட்டிளமையோன், பாலை நிலத் தலைவன் ஆகிய மூவரையுங் குறிக்குமென்று திவாகரம் கூறும். ஆதலால், காளையைக் குறிக்கும் பாண்டி என்னும் சொல்லினின்றே, பாண்டியன் என்னும் பெயர் தோன்றி யிருத்தல் வேண்டும். அருச்சுனன் திருநீராட்டிற்குத் தென்னாடு வந்தபோது சித்திராங்கதன் என்னும் பாண்டியன் மகளை மணந்தா னென்னும் கதை பற்றி, பாண்டவன் என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் பெயர் திரிந்ததென்று, வரலாற்றிற் கெட்டாத தொன்மை வாய்ந்த பாண்டியன் குடிப்பெயரைக் கி.மு. 10ஆம் நூற்றாண்டி னனான பாண்டுவொடு தொடர்புபடுத்துவது, விண்ணக மீனையும், மண்ணக மானையும் ஒன்றா யிணைப்பது போன்றதே. அருச்சுனன் பாண்டியன் மகளை மணக்கு முன்பே, அவன் மாமன் பாண்டியன் எனப் பெயர் பெற்றிருந்தமையை, அக் கதையே கூறுகின்றதே! இனி, ஐஞ்சிற்றசரர் துணைக்கொண்டு பாண்டியன் ஆண்டதினாற் பெற்ற பஞ்சவன் என்னும் பெயரும், பாண்டவரைக் குறிக்கும் பஞ்சவர் என்பதனோடு தொடர்புடையதன்று. பாண்டவரைக் குறிக்கும் சொல் என்றும் பன்மை வடிவிலேயே நிற்கும். ஆகவே, அஞ்சவன் என்பதே பஞ்சவன் என்று ஆரியரால் திரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பஞ்சவர் என்றும் ஐவரே. பஞ்சவனே ஐவரோடு சேர்ந்த ஆறாமவன். பாண்டி என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருள் வட்டம் என்பதே. வட்டம் என்பது உருட்சியையும் திரட்சியையும் குறிக்கும். காளை உருண்டு திரண்டிருப்பது. அது குண்டா யிருப்பதால் குண்டை யென்றும், விடைத்திருப்பதால் விடை யென்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. விடைத்தல் - பருத்தல். சோழன் சோழநாடு நீர்வளத்திற்கும் நெல்வளத்திற்கும் அன்றும் இன்றும் பெயர் பெற்றது. புனல்நாடு, வளநாடு என்னும் நாட்டுப் பெயர்களும், வளவன் என்னும் சோழன் குடிப் பெயரும், வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து என்னும் ஔவையார் பாட்டும், தஞ்சை மாவட்டத்தைக் குறிக்கும் தமிழ்நாட்டுக் களஞ்சியம் என்னும் இற்றைச் சொல்லும், இதைத் தெளிவாய்க் காட்டும். சோறென்று சிறப்பாகச் சொல்வது அரிசிச் சோற்றையே. அரிசி நெல்லின் உள்ளீடாதலால், நெல் என்பதும் சிறுபான்மை அரிசியைக் குறிக்கும். நெற்சோறு, நெற்பருக்கை, நெற்கஞ்சி, நெற் பொரி முதலிய வழக்குகளைக் காண்க. நெல்லிற்குச் சொல் என்றொரு பெயருண்டு. அதனின்றே சோறு, சொன்றி என்னுஞ் சொற்கள் பிறக்கும். ஒ. நோ: நல்-நன்றி, பல்-பன்றி. (தெல் - தென் - தென்பு - தெம்பு - தெளிவு) தெல் - தெள் - தெறு - தேறு = தெளிவு. தெறு - தெற்று - தெற்றென = தெளிவாக சுல் - சுறு - சூறு. சுலவுதல் = சுற்றுதல், சுழலுதல். சூறுதல் = சூழ்தல். சுறு - சுற்று. சோழநாடு நெல்லிற்கு அல்லது சோற்றிற்குச் சிறந்த தினால், நெல்லைக் குறிக்கும் சொல் என்னும் சொல்லினின்று அப் பெயர் பெற்றிருக்கலாம். சொல் - (சோள்) - சோழம் - சோழன். ஒ.நோ: கல் - கள் - காள் - காழ் - காழகம் = கருமை. கில் - கீழ், கெல் - கேழல். சுல் (வளை) - சூழ். துல் (பொருந்து) - தோழம்-தோழன். புல் (துளை) - பூழை. பொல், பொள் - போழ். சோளப்பெயரினின்று பிரித்துக்காட்டவும் சோழம் என்னும் வடிவு வேண்டப் பெறும். சோழநாடு, முதற்காலத்தில் நெல் மிகுதியாய் விளைக்கப் பட்டது மட்டுமன்றித் தானாய் விளைந்த நிலமாகவும் இருந்திருக் கலாம். மாந்தரால் விளைக்கப்படும் பயிர்களெல்லாம், முன்பு தாமாய் விளைந்தவையே. நிலைத்திணையால் (தாவரத்தால்) ஒரு நாடு பெயர் பெறுவது இயல்பே. ஏழு தீவுகளுள், நாவலந்தீவு, இறலித்தீவு, இலவந்தீவு, குசைத்தீவு, தேக்கந்தீவு என்னும் ஐந்தும் நிலைத் திணையாற் பெயர் பெற்றவை. முழுகிப்போன குமரி கண்டத்திலும் ஏழ்தெங்க நாடும், ஏழ் குறும்பனை நாடும் இருந்தமை காண்க. சேரன் சேரநாடு மலையாற் சிறந்தது. அதனால் பொறையன், மலையன், மலையமான், மலைநாடன் என்பன சேரன் பெயர் களாகும். தமிழ் நாட்டிலுள்ள சிறந்த மலைத் தொடர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையுமே. இவற்றைக் கொண்டது சேரநாடு. அந் நாட்டு நிலமுழுதும் மலையின் இருபக்கமு முள்ள சாரலே. சாரலாவது மலைச்சரிவு நிலம். அதனால் சாரல் நாடன் என்பது மலைநாடன் என்னும் பொருளில் வழங்கும். வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி (குறுந். 18 : 1-2) என்னும் குறுந்தொகைச் செய்யுட் பகுதியில் இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் சாரல் நாட எனத் தோழியால் விளிக்கப் பட்டிருத்தல் காண்க. சாரல் என்பது அன்னீறு பெற்றுச் சாரலன் என்றாகும். அது பின்னர்ச் சேரலன் எனத் திரிந்து குடமலைநாட்டு வேந்தனைக் குறித்தது. சேரலன் என்பது ஈற்றயல் தொக்குச் சேரன் என்றாயது. சேரன் என்பதும், செய்வன் என்பது செய்வல் என்று திரிந்தாற்போல் ஈறு திரிந்து சேரல் என்றாயிற்று. மான் என்னும் ஈறு சேரின், சேரன் என்பது சேரமான் என்றாம். மான் என்பது மகன் என்பதன் மரூஉ. தமிழ்மக்கள் குமரிக்கண்ட அளவிலேயே வாழ்ந்தபோது பாண்டியன் ஒருவனே ஆண்டானென்றும் பின்பு மக்கள் பெருகி வடக்கிற் பரவியபின் ஒரு பாண்டியனின் இளவலார் இருவர் சோழனும் சேரனுமாகி வடநாவலை ஆண்டா ரென்றும், ஒரு செவிமரபுச் செய்தி வழங்கி வந்திருக்கின்றது. மூவேந்தருள் முந்திய பாண்டியனை ஆரியனாக்கிவிடின், ஏனையிருவரும் தாமாக ஆரியராய்விடுவர் என்பது தமிழ்ப் பகைவர் கருத்து. அவ் வேமாற்று ஆராய்ச்சியும் உரிமை யுணர்ச்சியும் மிக்க இக்காலத்துச் செல்லா தாகும். வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு, தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11 : 21-2) என்பது மூவேந்தருள்ளும் பாண்டியன் முந்தியவன் என்பதற்குச் சான்றாம். 12. பழந்தமிழக இடப்பெயர்கள் குமரி குமரி என்பது தமிழன் பிறந்தகமான பழம் பாண்டியின் தென் கோடியடுத்த ஒரு மாபெரு மலைத்தொடரின் பெயரும், அக் கண்டத்தின் வடகோடியடுத்த ஒரு பேராற்றின் பெயரு மாயிருந்தது. இப் பெயரையும், குமரியாற்றின் மறுபெயரான கன்னி என்பதையும், குமரிமலையிற் பிறந்தோடிய பஃறுளி யாற்றங் கரையிலிருந்த தலைக்கழக இருக்கையான பாண்டியர் முதல் தலைநகரின் மதுரை என்னும் பெயரையும், வட சொல்லாகக் காட்டிவிடின், தமிழ் வடமொழிக்குப் பிற்பட்ட தென்றும், இந்திய நாகரிகம் ஆரிய நாகரிகம் என்றும், ஆய்விடும் என்னும் கருத்துடன், தமிழ்ப் பகை வரான வடமொழியாளர் தொன்றுதொட்டு அக் குமரிக் கண்ட இடப்பெயர்கட்கு வட சொன்மூலங் கற்பித்து வரலாயினர். குமரி என்பது கும் என்னும் தூய தமிழ் முதனிலை யினின்று பிறந்த தமிழ்ச்சொல். கும்முதல் = குவிதல், கூடுதல், திரளுதல், பருத்தல். கும் - கும்மல் - கும்மலி = பருத்தவள். கும் - குமுக்கு = கூட்டம். கும் - குமர் = கூடற்கேற்ற இளமை அல்லது பருமை, அதையுடைய கன்னி, கன்னிமை, இளமை, அழியாத் தன்மை. குமர் - குமரன் = கூடற்கேற்ற இளைஞன், இளஞனான முருகன். ஒ. நோ: முருகு = இளமை, முருகன். முருகு - முருகன். குமர் - குமரி = இளைஞை, கன்னி, கன்னியாகக் கருதப்பெறும் காளி, ஓர் ஆறு, ஒரு மலை. கூடற்கேற்ற நிலையில் எல்லா வுயிரினங்களும் அததற் கேற்றவாறு பருத்திருத்தல் இயல்பு. இதனாலேயே, ஆடு மாடு முதலிய சில விலங்கினங்களும் கோழி மயில் முதலிய பறவை யினங்களும், பருத்த இளமைநிலையில் விடையெனப்படும். விடைத்தல் = பருத்தல். விடை - விடலை = இளைஞன், பாலைநிலத் தலைவன். virgin என்னும் ஆங்கிலச் சொற்கும், virgo, to swell என்று பொருட்கரணியங்காட்டுவர். ஒருவனைக் குமரன் என்றும் ஒருத்தியைக் குமரி என்றும் சொல்லும்போது, இளமைக் கருத்துடன் பருமை அல்லது வலிமைக் கருத்தும் கலந்திருத்தலை நோக்குக. வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையில் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும் (சிலப்.11: 62-6) குமரி என்னுங் காளி தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டுப் பாலை நிலத் தெய்வம். பாலை என்பது முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிலில் அடையும் வறண்ட நிலை. குமரிமலை குறிஞ்சிநிலத் தன்மையால் அப் பெயர் பெற உரிமையுள்ளது. காளி போரில் வெற்றி தரும் கொற்றவை யென்றும், குரு என்னும் கொப்புள நோய் வருவிக்கும் அம்மை யென்றும், கருதப் பட்டபின், அவள் வழிபாடு ஏனை நிலங்கட்கும் பொதுவாயிற்று. வடநாட்டிலும் தமிழர் வழியினரே பெரும்பாலரா யிருக்கின்றமையின், அங்கும் காளி வணக்கம் இருந்து வருகின்றது. வரலாறறியாதவர் வடக்கிலிருப்ப தெல்லாம் ஆரிய வழக்கமெனத் தவறாகக் கருதிக் கொண்டிருக் கின்றனர். குமரி தமிழர் பொதுத் தெய்வமான பின், அவள் பெயர் ஓர் ஆற்றிற்கும் இடப்பட்டது. குமரன், குமரி என்னும் தென்சொற்கள் வடமொழியில் குமார, குமாரி என நீண்டு, முறையே மகனையும் மகளையுங் குறிக்கும். வடவர் குமார என்னும் சொல்லைக் கு+மார என்று பிரித்து, சாவில்லாதவன். அதனால் இளமையானவன் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு. ஆதலால், அங்ஙனம் பொருள் கூறுவது பொருந்தாது. குமரி என்னும் சொற்கு உடல் திரண்ட இளைஞை என்பதே இயற்பொரு ளென்பது, கோடிச் சேலைக்கொரு வெள்ளை, குமரிப் பெண்ணுக் கொரு பிள்ளை என்னும் பழமொழியால் தெரியவரும். இளமை பற்றியே ஈனாவாழை குமரிவாழை எனப் படுதலும் என்க. கன்னி முழுகிப் போன குமரிக்கண்டத்தின் வடகோடியில் குமரி யென்றொரு பேரியாறிருந்தமை, முன்னரே கூறப்பட்டது. வடவேங்கடந் தென்குமரி என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்திலும், தெனாஅ துருகெழு குமரி (புறம். 6) என்று புறப்பாட்டிலும் குறிக்கப்பட்டது குமரியாறே. குமரி, கன்னி என்பன ஒருபொருட் சொற்களாதலால், குமரியாறு கன்னியாறு எனவும்படும். மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி என்னும் சிலப்பதிகாரக் கானல்வரிப் பாடல், குமரியாற்றைக் கன்னி யெனக் குறித்தல் காண்க. கன்னி என்பது காளியின் பெயரே. கன்னி என்னும் சொல், மக்களினத்துப் பெண்ணைக் குறிக்கும் போது, பூப்படைந்து மணமாகாத பெண்ணையே குறிக்கும். ஒரு பெண் வாழ்நாள் முழுதும் மணமாகாதிருக்கலா மாதலால், இளங்கன்னி கன்னிகை யெனப்படுவாள். கை என்பது ஒரு சிறுமைப் பொருள் பின்னொட்டு (Diminutive suffix). எ-டு: குடி (வீடு) - குடிகை (சிறுவீடு) - குடிசை. பூப்படையாத சிறுமியையும் மணமான பெண்ணையும் கன்னி யென்று சொல்லும் வழக்கமில்லை. கன்னிகழிதல் கன்னி யழிதல் என்னும் வழக்குகளை நோக்குக. கன்னி என்னும் சொல்லைக் கன்யா என்றும், கன்னிகை என்னும் சொல்லைக் கன்யகா என்றும், வடமொழியாளர் திரித்துச் சிறுமி, மகள் என்ற பொருள்களிலும் வழங்குவர். அதற்கேற்ப, கன் (திகழ்), கன (சிறு) என்பவற்றை வேராகக் காட்டுவர். திகழ்தலைக் குறிக்கும் கன் என்னுஞ் சொல் வலிந்து பொருத்துவதாகும். சிறுமையைக் குறிக்கும் கன என்னுஞ் சொல் பூப்படைந்த பெண்ணிற்குப் பொருந்தாது. இனி, வடமொழியாளர் வேராகக் காட்டும் கன், கன என்னும் இரு சொல்லும் தென்சொல் திரிபே. கல் - கன்று. கன்றுதல் = எரிதல், கருகுதல்,சினத்தல். கல் - கன் - கனல் = நெருப்பு. கனலுதல் = எரிதல், சினத்தல். கனலி = கதிரவன். கல் - கள் - காள் = காளம் (காளவாயில்) = சுண்ணாம்புக் கல் நீற்றும் சுள்ளை. காள்-காய். காய்தல் = எரிதல், சினத்தல், திகழ்தல் கள் - கண் - கண - கணப்பு=நெருப்பு. திகழ்தல் நெருப்பின் தொழில். கண் - கணை = சூடு. கன் - வ. கன். குல் - குன்- குன்னி = மிகச் சிறியது. குன்னுதல் = சிறுத்தல், ஒடுங்குதல். குல் - குன்று - குன்றி. குன்று - குன்றம். குல் - குள் - குள்ளம், குள்ளை. குள் - குட்டை. குள் - குறு- குற்றி -குச்சி. குறு - குறுகு. குறு - குறள் - குறளி. மிகச் சிறியவற்றை நன்னியுங் குன்னியும் என்பது நெல்லை வழக்கு. குன்-கன்-கன(வ.) கன்னுதல் என்பது பழுத்தலைக் குறிக்கும் ஓர் அருந்தமிழ்ச் சொல். வெப்பத்தினாலாவது அழுத்தத்தினாலாவது உள்ளங் கையிலும் உள்ளங்காலிலும் அரத்தங்கட்டிச் சிவந்துவிட்டால், அரத்தங் கன்னி விட்டது என்பர். கன்னுதல் வேறு; கன்றுதல் வேறு. முன்னது பழுத்தல்; பின்னது வலுத்தல். கனி (பழம்) என்னும் சொல் கன்னி (பழுத்தது) என்பதன் தொகுத்தலே. ஒ.நோ: கிள்ளி - கிளி, மண்ணி - மணி. கிள்ளுதலாவது காய்கனிகளைக் கொத்துதல். மண்ணு தலாவது கல்லை மாசறக் கழுவுதல். கிளப்பது கிளி என்பது ஆராய்ச்சியில்லார் கூற்றென அறிக. கள்ளுதல் என்னும் வினை வழக்கற்றபின், களி என்னும் வினைப் பெயர் அல்லது வினைமுதற்பெயர் முதனிலையாய் வழங்குவது போன்றே, கனி என்னும் வினைமுதற்பெயரும் வழங்குகின்றதென அறிக. பூப்பு என்னும் சொற் போன்றே கன்னுதல் என்னும் சொல்லும் நிலைத்திணைக் குரியதாயிருப்பதும், (mature) என்னும் ஆங்கிலச் சொல்லும் பழுத்தல் பூப்படைதல் என்னும் இருபொருளிலும் வழங்குவதும் இங்குக் கவனிக்கத்தக்கன. கனிந்த கனிபோன்ற பூப்படைந்த பெண்ணும் நுகர்ச்சிக் கேற்றவள் என்பதையே, கன்னி என்னும் சொல் உணர்த்தும் சமைந்தவள்(பக்குவ மானவள்) என்னுஞ் சொல்லையும் நோக்குக. மதுரை மதுரையென்று முதலாவது பெயர் பெற்றது பஃறுளி யாற்றங் கரைத் தலைக்கழக இருக்கையே. அதுவும் இடைக்கழக இருக்கை யாகிய கபாடபுரமும்(அலைவாய்?) முழுகிப் போன பின்பே, இற்றை வைகைக் கரை மதுரை அமைந்தது. அதுவும் மூன்றாம் மதுரையே. குமரிக்கண்டத்தினின்று வடக்கே சென்ற தமிழர் வழியினரே கண்ணன் மதுரையையும் அமைத்தனர். அதற்கு அப் பெயர் இட்டது தம் முன்னோரையும் அவர் நகரையும் நினைவுகூர்தற்கே. அப் பெயர் அந்நாட்டு மொழியியல்பிற்கேற்ப மதுரா எனத் திரிந்துள்ளது. கண்ணன் காலமாகிய பாரதக் காலத்தில் வைகை மதுரையின்மையால், நாவலந் தேயத்தில் இரண்டாவது ஏற்பட்ட மதுரை வடநாட்டு மதுரையே. ஆதலால், அதை அமைத்தவர் தலைக்கழக மிருந்த நிலப்பகுதியை முழுக்கிய முதற் கடல் கோளினின்று தப்பியவராயிருத்தல் வேண்டும். வைகை மதுரை பாரதக் காலத்திற்குப் பிற்பட்டதாகும். அதற்கும் பிந்தியவை மானவீரன் மதுரையும் தமிழ்நாட்டு வடமதுரையும் என்க. வடநாட்டு மதுரை நோக்கியே தலைக்கழக மதுரை தென்மதுரை யெனப் பட்டதென அறிக. மதுரை என்னும் இடப்பெயர், திங்களைக் குறிக்கும் மதி என்னும் சொல்லிலிருந்து தோன்றியிருத்தல் வேண்டும். தலைக்கழக மதுரை யமைத்த பாண்டியன், தன் குலமுதலாகக் கொண்ட சுடர்ப்பெயரை அடியாகக்கொண்டு, மதிரை என்று அந் நகர்க்குப் பெயரிட்டதாகத் தெரிகின்றது. குதி என்னும் சொல்லினின்று குதிரை என்னும் பெயர் தோன்றியிருத்தல் காண்க. மதிரை என்பது பின்பு ஒலிப்பெளிமைபற்றி மதுரை எனத் திரிந்துள்ளது. ஒ: நோ: எதிர்கை - எதுகை. குலசேகர பாண்டியன் வேண்டுகோட்கிணங்கி, சிவ பெரு மான் தன் சடைமுடியிலுள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை யெனப்பட்டதென்று, திருவிளையாடற் புராணத்திற் கூறப்பட்டிருப்பது தொல்கதை முறைப்பட்ட உன்னிப்புச் சொல்லியல் (Guessing Etymology) என்று கூறிவிடுக்க. திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை (கலித்.26) வைகைக் கரையைச் சார்ந்ததாதலின், மருத முன்றுறை என்பது பஃறுளியாற்றங்கரை மதுரைப் பெயருக்குக் கரணிய மாகாது. 1 ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ். (தண்டியலங்கார வுரைமேற்கோள்) இயனிலைப் படலம் (தோரா. கி. மு. 50,000-10,000) 1. முற்படை i குமரிக்கண்டம் (தோரா. ».K.?-5,500) இந்துமாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழைக்கரைமட்டும் பரவியிருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. கிளேற்றர் இப் பழம் பெருங் கண்டத்தை, அதில் வதிந்திருந்த குரங்கொத்த உயிரி(பிராணி)பற்றி இலெமுரியா (Lemuria) என்றழைக் கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருக்கக் கூடுமாத லின், மிக முதன்மையானது என்றார் பேரறிஞர் எக்கேல். ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவை யும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்தது என்றார் அறிஞர் ஓல்டுகாம். காட்டு எலியட்டு என்பவர் எழுதியுள்ள மறைந்த ïbyKÇah(Lost Lemuria) என்னும் நூலிலுள்ள நிலப்படத்தி லிருந்து, ஒரு பெரு மலைத்தொடர் மேலைக்கடலில் தொடங்கித் தென்வடலாகக் குமரி முனைக்குத் தென்பாலிருந்த நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்பா லிருந்த நிலப்பகுதியில் நெடுந்தொலைவு சென்று, பின்பு தென்மேற்காகத் திரும்பி, மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது என்றார் பேரா. கா.சுப்பிரமணியப் பிள்ளை. கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒரு காலத்தில், தென்அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவை யொட்டி யும் இந்தியாவை யொட்டியும் ஆத்திரேலியாவரை படர்ந்திருந்த தும், `காண்டுவானாக் கண்டம்' என்றறியப்பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, வியக்கத்தக்கவுண்மைகளை அண்மையிற் கண்டுபிடித்திருக்கின்றது என்பது 29-07-1934-ல் வெளிவந்த இந்தியப் படவிளக்கக் கிழமையிதழ்ச் செய்தியாகும். கோடியாண்டுகட்குமுன்-ஒருவேளை அதற்கு முந்தி-ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்தது என்றார் திருவாளர் யோவான் இங்கிலாந்து. ii குமரிநாட்டு மாந்தன் தோற்றம் (தோரா. கி.மு. 500,000) இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட பழைய மாந்தன் எலும்புக்கூடுகளுள், rhȤÔÉš(Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 500,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் இலீக்கி (Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய கொட்டையுடைப்பான் (Nut-cracker Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்ட வன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித் தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன் னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்து மாந்தன் தோற்றம் கி.மு. 500,000 ஆண்டுகட்கு முந்திய தென்று மறுப்பச்ச மின்றிக் கூறலாம். iii குமரி மாந்தர் மொழியற்ற நிலை (தோரா. கி.மு. 5,00,000 - 1,00,000) குமரிநாட்டு மாந்தன், முதற்காலத்தில் நிலையான மணவுற வின்றி விலங்குபோல் அவ்வப்போது தன் வேட்கை களைத் தணித்துக் கொண்டு, மொழியும் மொழியுணர்ச்சியுமின்றி இயற்கை யான உணர்ச்சி யொலிகளையும் விளியொலிகளையுமேயுடையவ னாய், பெரும்பாலும் சைகைகளாலேயே தன் கருத்தை வெளிப் படுத்தி வந்தான். ஆகையால், அவன் மொழி சைகை மொழியாகவே (Gesture language or Sign language) இருந்தது. உடற்சைகை, உறுப்புச் சைகை எனச் சைகை இரு திறப்படு மாதலால், முகச்சைகையாகிய வலிச்சமும் (grimace) சைகையுள் அடங்கும். மொழியற்ற நிலையில், மாந்தன் கருத்தும் எண்ணமும் உருவலிப்பாகவே (imagination) இருந்துவந்தன. உருவலிப்பாவது, ஓர் இடத்தையோ, பொருளையோ, நிகழ்ச்சியையோ உள்ளத்திற் படம் பிடித்தல். மொழித்துணையின்றிக் கருத்து நிகழாதென்பது ஆராய்ச்சி யில்லாதார் கூற்றே. உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, எண்ணம், தீர்மானம், அகக்காட்சி, இன்புறவு, பொந்திகை (திருப்தி), மகிழ்ச்சி, துன்புறவு, சினம் அல்லது வெறுப்பு ஆகிய பல்வேறு உளநிகழ்ச்சி களும், நமக்கிருப்பது போன்றே மொழியற்ற மாந்தனுக்கும் இருந்தன. இவ்வுண்மையை இன்றும் ஊமையரிடத்துக் காண்க. மொழியமைந்த பின்பும், மாந்தன் கருத்திற் பெரும்பகுதி உருவ லிப்பே யென்பதை ஓர்ந்துணர்க. iv இயற்கை மொழி (தோரா. கி.மு. 1,00,000-50,000) எழுத்துப் பலுக்கமும் (உச்சரிப்பும்) சொற்பொருத்தும் இன்றிப் பெரும்பாலும் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி, இயற்கை மொழியாம் (Natural Language). இது முழைத்தல்மொழி (Inarticulate Speech) எனப்படும், இதன் ஒலிகள் எழுவகைய: (1) உணர்ச்சி யொலிகள் (Emotional Sounds) இன்ப துன்ப உணர்ச்சியை வெளியிடும் ஒலிகள் உணர்ச்சி யொலிகள். எ-டு: ஆ, ஈ, ஊ, ஓ, ஐ (2) விளியொலிகள் (Vocative Sounds) பிறரை விளிக்கும் ஒலிகள் விளியொலிகள். விளித்தல் -கூப்பிடுதல். எ-டு: ஏ, ஏய், ஓ, ஏலா, எல்லா. (3) ஒப்பொலிகள் (Imitative Sounds) இருதிணைப் பொருள்களும் செய்யும் ஒலிகளை ஒத்தொலிப்பவை ஒப்பொலிகள். எ-டு: கூ (கூவு), கா கா-(காகம்), காக்கா (காக்கை), இம் (இமிழ்), உர் (உரறு), ஊள் (ஊளை), குர் (குரங்கு), மா (மாடு), சீத்து (சீறு), ஓ (ஓசை), கர் (கரை), சரசர (சாரை), சல்- (சலங்கை-சதங்கை), கீர்-கீரி. கலகல, கிண், கணீர், கிரிச்சு, சள், சளார், சலசல, திண், மடக்கு, விச்சு, வீர் என்பனவும், இவை போன்ற பிறவும், ஒப்பொலிகளே. இவை இன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் எனப்படும். ஓக்களி-ஓக்காளம், உமட்டு-உவட்டு, குறட்டை, சப்பு, துப்பு, தும்மு, விக்கு, முக்கு, இசி, சிரி முதலியன ஒப்பொலி யடிப்படையிற் பிற்காலத்துப் பிறந்த சொற்களாம். இனி, வாயொலியின்றி வாய்வழியும் மூக்குவழியும் செவிப்புல னாகும் காற்றுமட்டும் வெளிவரும் செயல்கட்கும், ஒப்பொலி முறையில் சொற்கள் தோன்றியுள்ளன. எ-டு: ஆ-ஆவி, ஊ-ஊது, மூசு-மூச்சு. கொட்டாவி விடும்போது ஆவென்றும், நெருப்பெரிக் கவும் விளக்கணைக்கவும் சூடான பொருளை ஆற்றவும் நோவு தீர்க்கவும் ஊதும்போது ஊவென்றும் ஒலித்தற்கேற்ப, வாயினின்று காற்று வெளி வருதலும்; உரக்க மூச்சு விடும்போதும் இளைக்கும் போதும், மூசு என்று கேட்குமாறு மூக்கினின்று காற்று வெளிவருதலும்; காண்க. ஆவித்தல் = கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், வாய் விடுதல். ஆவி = கொட்டாவி, உயிர்ப்பு, நெட்டுயிர்ப்பு,உயிர், ஆதன் (ஆன்மா), நீராவி, புகை, நறுமணம், உயிரெழுத்து. ஊதுதல் = ஊதுவது போல் துருத்தியால் காற்றெழுப் புதல், ஊதிய துருத்தியும் பையும் போல் வீங்குதல், பருத்தல், மிகுதல், வண்டு குழலூது வது போல் இசைத்துக்கொண்டு தேனை நுகர்தல், ஊதுகுழல்போல் வண்டு மரத்தைத் துளைத்தல். ஊது-ஊதி. ஊது-ஊதிலி = மகுடி, விளையாட்டூதி. ஊது-ஊதியம் (இலாபம்). செலவினும் மிகுந்தது ஊதியம். ஊது-ஊத்து-ஊத்தம், ஊது-ஊதாரி = துகளை ஊதித் துடைத்தல் போல் செல்வத்தை வீண் செலவிட்டுப் போக்குபவன். ஒ - நோ: blow the expense = to spend recklessly. blow = to squander, spend (sum) recklessly. ஊது-ஓது.ஓதுதல் = காதிற்குள் மெல்லச் சொல்லுதல். மூசுதல் = உரக்க மூச்சுவிடுதல், மூச்சுவிடுதல், மோப்பம் பிடித்தல், முகர்தல். மூசு மூசென்று இளைக்கிறான் என்னும் வழக்கை நோக்குக. முசு-மூச்சு. ஒ.நோ: பேசு-பேச்சு. மூசு-மூஞ்சு-மூஞ்சி=குரங்கு நாய் முதலியவற்றிற்குப் போல் மூக்கொடு முன் நீண்ட முகப்பகுதி (muzzle). மூஞ்சு-மூஞ்சுறு-மூஞ்சூறு = எதையும் மோந்து பார்க்கும் வீட்டெலிவகை. மூஞ்செலி என்பது நெல்லை வழக்கு. (4) குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி சில கருத்துகளைப் பிறர்க்குத் தெரியும் வகையில் குறிக்கும் ஒலிகள் குறிப்பொலிகளாம். எழுதமுடிவனவும் எழுதமுடியாதனவுமாக, குறிப்பொலி கள் இருவகைய. ஊம்(ஊங்கொட்டுதல்), சீ, பூ என்பன போன்றவை எழுதமுடிவன. மொச்சட்டமும் (மொச்சக் கொட்டுதல் - smacking), முற்கும் (clucking), வீளையும் (சீழ்க்கை- whistling) போன்றவை எழுத முடியாதன. தோ தோ (துவா துவா) என்று நாயையும், பேபே (போ போ) என்று கோழியையும், வேசு வேசு என்று பூனையையும், பாய் பாய் என்று ஆட்டையும் விளிக்கும் ஒலிகள் விளியொலி களாயினும் வழக்கம்பற்றிக் குறிப்பால் உணரப்படுவதாற் குறிப்பொலிகளாம். (5) வாய்ச்செய்கை யொலிகள் (Gesticulatory Sounds) மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற்கேற்ற வாய்வடிவை அமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அச் சொற்கட்கு மூலமான சொற் களைப் பிறப்பித் திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ் வொலிகள் வாய்ச் செய்கை யொலிகளாம். எ-டு: ஆ-அ-அங்கா. அங்காத்தல் = வாய்திறத்தல். அவ்-கவ்-வவ். அவ்-அவ்வு-கவ்வு-வவ்வு. ஒன்றைக் கவ்வுதலையொத்த வாய்ச்சைகை நிலை, அவ் என்னும் ஒலியைத் தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப் பல் கீழுதட்டொடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். இந் நிலை வகரமெய் யொலிப்பிற்கே ஏற்கும். பிற்காலத்தில் அவ்வுதல் என்னும் சொல் மனத்தினாற் பற்று தலுக்கும், கவ்வுதல் என்னும் சொல் வாயினாற் பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னும் சொல் கையினாற் பற்றுதலுக்கும் வரையறுக்கப் பெற்றன. ஆயினும், இன்றும், அவ்வுதல் உலக வழக்கில் வாயினாற் பற்றுதலை உணர்த்தும். எ-டு: கன்று புல்லை ஔவித் தின்கிறது. அவ்வு-ஔவு, கவ்வு-கௌவு, வவ்வு-வௌவு. அவ்-அவா-அவாவு-ஆவு-ஆவல். ஈ-இளி. இளித்தல் = பல்லைக் காட்டுதல்(அஃதாவது வாயைப் பின்னுக்கிழுத்து விரித்தல்), சிரித்தல். ஒப்பொலிகட்கும் வாய்ச்செய்கை யொலிகட்கும் வேற்றுமை யென்னெனின், முன்னவை ஒலியையும் காற்றையும் பின்னவை அமைந்த நிலையையும், அடிப்படையாகக் கொண்டவை என்க. இசித்தல் என்பது ஒலிபடச் சிரித்தலையும், இளித்தல் என்பது ஒலியின்றிச் சிரித்தலையும் குறிக்கும் என வேறு பாடறிக. கவ்வு என்னும் சொல், கவ்வை, கப்புதல், கப்பு, கப்பித்தல், கப்பை, கவட்டி, கவட்டை, கவடு, கவடி, கவண், கவணை, கவண்டு, கவண்டி, கவர், கவர்வு, கவல், கவலை, கவவு, கவளம், கவளி, கவளிகை, கவுள், கவறு, கவான், கவை, காவு, கா, காவடி, காவட்டு, காதல், காமம் முதலிய பல சொற்களைப் பிறப்பித்துள்ளது. (6) குழவிவளர்ப் பொலிகள் (Nursery Sounds) குழவிவளர்ப்பில் குழவிகள் இயல்பாக ஒலிக்கும் ஒலிகளி னின்று தாய்மார் சில சொற்களை அமைத்துக் கொள்வதுண்டு. அத்தகைய ஒலி கள் குழவிவளர்ப்பொலிகள். அவை மிகச் சிலவே. எ-டு: இங்கு - இங்கா = பால். குழவிப் பருவத்தினும் பெரியது குழந்தைப் பருவம். அப் பருவத்தில், சோறு என்பதைச் சோ, சோய், சோசி என்று குழந் தைகள் கொச்சையாய்ச் சொல்பவை குழவி வளர்ப் பொலிகளாகா. டும் டும் (tom tom), Õ¥Õ(pipe) என்பன போன்றவை குழந்தைகள் சொல்லும் ஒப்பொலிச் சொற்கள். குழவிகள் மம, பப என்று இயல்பாக அடுக்கி ஒலிப்பதினின்று ஆங்கில நற்றாயரும் செவிலித் தாயரும் மம்மா (mamma), பப்பா (papa) என்னும் முறைப்பெயர்களை அமைத்துக்கொண்டதாக மொழி நூலாசிரியர் சிலர் கூறுவர். ஆயின், ஆங்கிலம் தோன்று முன்பே, வடசேமியக் கிளையைச் சேர்ந்த அரமிய (Aramaic) மொழியில் அம்மா, அப்பா என்னும் சொற்கள் வழங்கியிருக் கின்றன. சுமேரிய நாகரிகம் தமிழ நாகரிகத்தின் திரிபாதலாலும், குமரிநாட்டு மக்களே ஆப்பிரிக்க வழியாக ஐரோப்பா சென்று பரவி யிருப்பதாகத் தெரிவதாலும், அம்மா அப்பா என்னுஞ் தமிழ்ச்சொற்களே ஆங்கிலத்தில் மம்மா பப்பா என்று திரிந்துள்ளன வென்று கொள்வதே பொருத்தமாம். அகரமுதல் பகரமுதலாகத் தமிழிலும் திரவிடத்திலும் கூடத் திரிதலுண்டு. எ-டு : அஞ்சவன்-பஞ்சவன் = ஐஞ்சிற்றரசரைக் கொண்டு ஆண்ட பாண்டியன், அப்பளம்-பப்படம் (ம.) தமிழ மாந்தர் குறிஞ்சி நாகரிக நிலையிலேயே மாட்டைப் பாலிற்காக வளர்க்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவதால், தாயை விட்டு நீங்கிய கன்றுக்குட்டியின் கதறலினின்று, அம்மா என்னுஞ் சொல்லைத் தமிழர் அன்னையைக் குறிக்க அமைத்துக்கொண்டனர் என்று கொள்வது மிகப் பொருத்த மாம். பின்பு, அது அப்பா என்று வலித்துத் தந்தையைக் குறித்திருக்கின்றது. மெல்லின மெய்ச்சொல் மென்மை மிக்க தாயையும், வல்லின மெய்ச்சொல் வன்மை மிக்க தந்தையையும், குறிப்பது இயற்கையே. (7) சுட்டொலிகள் (Deictic Sounds) சுட்டிக்காட்டும் ஒலிகள் சுட்டொலிகள். சேய்மையைச் சுட்டுதற்கேற்ப வாயை விரிவாய்த் திறந் தொலிக்கும் ஆகாரமும், சேய்மைக்குப் பிற்பட்ட அண்மையைச் சுட்டுதற்கேற்ப வாயைப் பின்னுக்கிழுத் தொலிக்கும் ஈகாரமும், சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப்பட்ட முன்மையைச் சுட்டுதற் கேற்ப இதழ்களை முற்படக் குவித்தொலிக்கும் ஊகாரமும், முறையே சேய்மையண்மை முன்மைச் சுட்டொலிகளாயின. இவையே முதன் முதல் தமிழில் தோன்றிய உயிர்கள். இவை உண்மை யில் வாய்ச்சைகை யொலிகளாகும். ஆயினும், சிறப்பு நோக்கி வேறு பிரிக்கப்பெற்றன. முதற்கண் மூவிடச்சுட்டு கைச்சைகையினால் மட்டும் நிகழ்ந்தது. பின்பு, கைச்சைகையோடு கூடிய வாய்ச்சைகையி னால் நிகழ்ந்தது, அதன்பின், வாய்ச்சைகையினால் மட்டும் நிகழ்ந்து வருகின்றது. ஆயின், அவ் வாய்ச்சைகைத் தன்மை இன்று மறைந் துள்ளது, முச்சுட்டொலிகளும் வாய்ச்சைகை யொலிகளாயிருப்ப தனாலேயே, அவை தமிழில் எக் கரணியத்தையிட்டும் பிறமொழி களிற்போல் இடமாறிச் சுட்டுவதில்லை. இதனால், தமிழொடு சிறிதும் பெரிதும் தொடர் புள்ள பிற மொழிச் சுட்டுச் சொற்கட் கெல்லாம், தமிழ்ச் சொற்களே மூலமென்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்ளலாம். எ-டு: இடம் மாறாதன: சமற்கிருதம் தமிழ் ஆங்கிலம் தமிழ் தத்ர = அங்கு that = அது இக = இங்கு this = இது இடம் மாறியன: அத்ர = இங்க it = அது அதுனா = இப்பொழுது thus = இப்படி 2. தமிழ்த் தோற்றம் (செயற்கை மொழி) (தோரா. கி.மு. 50,000) மூவகைச் சுட்டொலிகளினின்றுஞ் சொற்கள் தோன்றியதே தமிழ்த் தோற்றமாம். இது செயற்கை மொழி (Artificial Language) அல்லது இழைத்தல் மொழி (Articulate Speech) எனப்படும். முந்தியல் மாந்தர்மொழி யெல்லாம் இசைப்பாட்டாகவே தோன்றின என்பது எசுப்பெர்சன் கருத்து. அது தவறாம். உணர்ச்சி விஞ்சிய காதல், இன்பம், வெற்றி, மகிழ்ச்சி, துன்பம் முதலிய மன நிலைகளிலேயே முந்தியல் மாந்தர்-அவருள்ளும் இசைவுணர்ச்சியும், மொழியாற்றலும் மிக்கவரே-இசைமொழி வாயிலாய்த் தம் கருத்தை வெளியிட்டனர். இக்காலத்தும், இன்ப துன்பவுணர்ச்சி விஞ்சிய போது, தத்தம் அறிவுநிலைக் கேற்ப இசைப்பாட்டாகவும் செய்யுளாகவும் தம் கருத்தைச் சிலர் வெளியிடுதல் காண்க. மேலும், பொருளும் ஒழுங்கு மற்ற ஒருசில இசையொலித் தொகுதி களினின்று வெவ்வேறு பொருளும் இலக்கண வொழுங்குமுள்ள பெயர் வினையிடைச் சொற்களும், மூவிடப் பெயர்களும் அவற்றின் திரிபான இருதிணை ஐம்பால் மூவிட ஈறுகளும், வேற்றுமை உருபுகளும் கால விடைநிலைகளும், பிறவும், அமைந்தன வென்றல், உத்திக்குப் பொருந்தாத கூற்றாம். உரை, செய்யுள் (அல்லது பாட்டு) என்னும் இருவகை மொழி நடையுள், முதலில் தோன்றியது முன்னதே. அதுவும் தனித்தனி சொல்லாகவே தோன்றிற்று. ஆகவே, சொல்லே மொழியலகாம் (Unit of speech). உள்ளத்தில் தோன்றும் கருத்து, அதைத் தெரிவிக்கும் சொற்றொடர்க்கு முற்றும் ஒத்ததன்று. அமைய வேறுபாட்டிற் கேற்ப, ஒரு சொல்லே பல சொற்றொடர்க்குரிய பல கருத்தைத் தெரிவிக்கலாம். ஒரு குழந்தை அல்லது நோயாளி தண்ணீர் என்றால், அது, (1) எனக்குத் தண்ணீர்வேண்டும்; (2) அதோ பார்! தண்ணீர்; (3) வெள்ளம் வீட்டிற்குள் வந்துவிட்டது; (4) தண்ணீர் கொண்டுவா; (5) இந்தப் பால் தண்ணீர் கலந்தது; (6) இச் சொல் தண்ணீர்; (7) இதன் பொருள் தண்ணீர்; (8) இவ் விடுகதை விடை தண்ணீர்; (9) இப் படத்திலுள்ளது தண்ணீர்; (10) (Cold) water என்னும் ஆங்கிலச் சொற்கு நேர் தென் சொல் `தண்ணீர் என்று பல கருத்தைத் தெரிவிப்பதுடன், நீ குடிப்பது என்ன? என்பதுபோன்ற வினாவிற்கு விடையாகவுமிருத்தல் காண்க. நன்றாய்ப் பேசத் தெரியாத குழந்தையும், பேச்சு வலிமையற்ற நோயாளியும், தாய்மொழியொன்றே தெரிந்த அயல் நாட்டானும், பெரும்பாலும் தனிச் சொற்களாலேயே தம் கருத்தைத் தெரிவித்தல் காண்க. இந் நிலையிலேயே மொழி வளர்ச்சியுறாத முந்தியல் மாந்தனும் இருந்தான். மொழி எளிய நிலையில் தோன்றிப் படிப்படியாக வளர்ந்த மாந்தன் அமைப்பேயன்றி, இறைவனாற் படைக்கப்பெற்று இயற்கையாக அறியப்பட்டதன்று. மொழி இயற்கையானதாயின் எல்லா மக்களும் கல்லாமலே ஒரே மொழி பேசுதல்வேண்டும். அங்ஙனமில்லை. மக்கட் கூட்டங்களின் நாகரிக நிலைக்குத் தக்கவாறு, மொழிகள் வெவ்வேறு வகைப்பட்டும் நிலைப்பட்டும் அமைப்புக் கொண்டும் உள்ளன. சில அநாகரிக மாந்தர் மொழிகள் பறவை விலங்கொலிகளினும் சற்றே உயர்ந்தவையாகும். எத்துணை உயர்தனிச் செம்மொழியாயினும், தலைசிறந்த அறிவியல் வளர்ச்சி பெற்ற மக்களாயினும், ஒவ்வொரு சொல்லாய் மெல்ல மெல்லக் கற்றாலன்றி ஒருவரும் தம் தாய்மொழியைப் பேசவியலாது. மொழித்துணையின்றியும் மாந்தர்க்குக் கருத்து நிகழும். ஊமையர் நிலை இதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாம். அஃறிணையுயிரிகளின் வாழ்க்கையும் இதற்கு ஒருவகைச் சான் றாகும். மொழியின்றிக் கருத்து நிகழாதென்பது, ஆராய்ச்சியில் லார் கூற்றே. வினைக்குத் துணைக்கொள்வது போன்றதே. உணர்ச்சி, வேட்கை, நினைப்பு, சூழ்வு, தீர்மானம், இன்பம் (உவகை), துன்பம் (அழுகை) முதலிய எண் அல்லது தொண் (ஒன்பான்) சுவைநிலை, ஐயம் (சந்தேகம்), தெளிவு ஆகியவையே மனத்தொழில்கள். இவற்றிற்கு மொழித்துணை தேவையில்லை. காட்சிப்பொருள்க ளெல்லாம் மனத்திலும் தோன்றுமாதலால், நினைப்பும் சூழ்வும் cUtÈ¥ghfnt(imagination) நிகழும். மொழி வளர்ச்சியடைந்த பிற்காலத்திலும், சொற்றொடர் களிலுள்ள எல்லா இலக்கணக் கூறுகட்கும் ஒத்த பகுதிகள் உள்ளக் கருத்திலில்லை. பாற்குடம் என்பதைப் பாலையுடைய குடம் என விரிப்பர் இலக்கணியர். அவ் விரிப்பிலுள்ள ஐகாரவேற்றுமை யுருபும் உடையவென்னும் குறிப்புப் பெயரெச்சமும், உள்ளக் கருத்திலில்லை. அதிலுள்ளவை யெல்லாம் பாலும் அதைக் கொண்ட குடமுமே. இங்ஙனமே, வினைமுற்றிலுள்ள அறுவகை யுறுப்புகளுள், முதனிலை யிடைநிலை யிறுதிநிலைக்குரிய கருத்து களே உள்ளத்திலுண்டு. அவையும் மொழியில் ஒருங்கே தோன்ற வில்லை. முதலில் முதனிலையே இருதிணை ஐம்பால் மூவிடங் கட்கும் உரிய எல்லா வினைவடிவிற்கும் பொதுவாயிருந்தது; பின்பு பாலீறும் கால விடை நிலையும் எச்சமுற்று வேறுபாடும் முறையே தோன்றின. இவ் வுண்மையெல்லாம் தமிழ்போன்ற இயன் மொழி வாயிலாகவே அறியமுடியும்; சமற்கிருதம் போன்ற திரிமொழியை யும் செயற்கைமொழியையும் அடிப்படையாய் வைத்தாராயின், ஐரோப்பியராயினும் அமெரிக்க ராயினும் காரிருளிற் காட்டுவழிச் செல்வார்போல் ஒன்றுங் கண்டறியார். சுட்டடிச்சொல்லாக்கம் முச்சுட்டுகளுள், சேய்மைச்சுட்டினின்று சேய்மைக் கருத்துத் தவிர வேறொன்றும் பிறத்தற் கிடமில்லை; அண்மைச்சுட்டினின்று, அண்மை, பின்மை, இழிகை முதலிய ஒருசில கருத்துகளே பிறக் கின்றன; ஆயின், முன்மைச் சுட்டினின்றே, தோன்றல் (முன்வருதல்), முன்மை, முற்செல்லல், நெருங்கல், பொருந்தல், வளைதல், துளைத்தல், துருவல் ஆகிய எண்பெருங் கருத்துகளும், இவற்றிற்கு இடைப்பட்டனவும் இவற்றிற் கிளைத்தனவுமான எத்துணையோ நுண்கருத்து களும் பிறக்கின்றன. இவற்றை யெல்லாம் என் `முதற்றாய் மொழி'யுட் கண்டுகொள்க. இங்கு எண்பெருங் கருத்துகளே இன்றியமையாத அளவு விளக்கப்பெறும். தோன்றல் என்பது, தாயினின்று குழவியும் மரத்தினின்று துளிரும் தோன்றுவதுபோன்ற இயற்கைத் தோன்றலும்; வீட்டி னின்று மாந்தனும் வளையினின்று எலியும் தோன்றுவது போன்ற செயற்கைத் தோன்றலும், ஆக இருவகைப்படும். தோன்றுதல் முன் வருதலாதலின், தோன்றற்கருத்திலேயே தற்கிழமை பிறிதின் கிழமை ஆகிய இருவகை முன்மைக் கருத்தும் அடங்கியுள்ளன. முன்கிளை யும் முன்கையும் போன்றவை தற்கிழமை முன்மை; முன் பொறையும் (முன்பாரமும்) முன்தூதனும் போன்றவை பிறிதின்கிழமை முன்மை. தோன்றியபின், உடனேயோ காலஞ்சென்றோ, ஓர் இடம் நோக்கிச் செலவு அல்லது பலதிசையும் படர்ச்சி ஏற்படுகின்றது. இயற்கையான செலவெல்லாம் முன்னோக்கியதே யாதலின், தோன் றலும் செலவும், முறையே, முன்வருகையும் முற்செலவு மேயாகும். இவ் விரு பொருட்கும் அடிப்படையான முன்மைக் கருத்தை ஊகாரச் சுட்டே உணர்த்துகின்றது. ஊகாரத்தை அல்லது உகரத்தை ஒலிக்கும்போது, இதழ் குவிந்து முன்னிடத்தைச் சுட்டுவதை அல்லது நோக்குவதைக் காண்க. சேம்பரார் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர KjÈÆš(Chamber’s Etymological Dictionary), move என்னும் சொற்கு மொழிப்பொருட்கரணியம் இதழ் முன்னோக்கிக் குவிந் தொலித்தல் என்று குறித்திருத்திலைக் கூர்ந்து நோக்குக. முற்செல்லச்செல்ல, சேரவேண்டிய இடத்திற்கு நெருக்கம் ஏற்படுகின்றது. சேர்ந்தபின் பொருந்தல் நேர்கின்றது. இடைவழியிற் சுவரும் கல்லும் மலையும்போலத் தடை ஏற்படின், வளைய அல்லது பக்கமாகத் திரும்ப நேர்கின்றது. தடுத்தபொருளையும் இடத்தையும் துளைக்க முடியுமாயின், எலி சுவரையும் மாந்தன் மலையையும் துளைத்தல் நேர்கின்றது.. துளைத்து மறுபுறங் காணின் அதுவே துருவல். அதன்பின் தோன்றல் முதலிய பழைய நிலைமைகளே மீண்டும் நிகழும். மண்ணில் வேர் இறங்குதலும், மரத்தில் ஆணி பதிதலும், பொத்தகத்திற் புழுவரித்தலும் போன்ற செயல்களாயின், வளைதலின்றியே துளைத் தலும் துருவலும் நிகழும். இருதிணை யுயிரிகளின் வாழ்க்கையையும் நோக்கினால், அவற்றின் செயல்களெல்லாம் இவ் வெண்வகைக் கருத்து வட்டத்திற்குள்ளேயே அமைகின்றன. இவற்றைக் கூர்ந்து கவனித்த பண்டைத் தமிழர், தம் நுண்மாண் நுழைபுலத்தினால், இதுபோ துள்ள தமிழ்ச் சொற்றொகுதியுள் ஏறத்தாழ முக்காற்பங்கை ஊகாரச் சுட்டடியாகவே தோற்றுவித்திருக் கின்றனர். உகரச்சுட்டு உங்கு, உதோள், உதோளி உவ உவ்விடம் = முன்னிடம் உந்த = முன்னிடத்திலுள்ள உவன் = முன்நிற்பவன் உது = முன்நிற்பது உகரச்சுட்டுச்சொற்களெல்லாம் படர்க்கைபோற் பயன் படுத்தப்படினும், பேசுவானுக்கு முன்னிடத்தையும் அதிலுள்ள பொருள்களையுமே சுட்டும். ஆதலால் உகரச்சுட்டு என்றும் முன்மைச் சுட்டேயன்றி, சேய்மைக்கும் அண்மைக்கும் இடைப் பட்ட இடைமைச் சுட்டன்று. இது நீண்டகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வழக்கற்றுப் போயிற்று. ஆயின், யாழ்ப்பாணத்தில் ஓரளவு வழக்கிலுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. உகரச் சுட்டடிச்சொற்கள் உகரச்சுட்டுவேர் தனித்தும் க, ச, த, ந, ப, ம என்னும் அறு மொழிமுத லெழுத்துகளோடு கூடியும் வரும். ஞவயமெய்கள் உகரத்தோடுகூடி மொழிமுதல் வராமையால், அவை பிறவுயிர் களோடு கூடி மொழிமுதல் வரும் சொற்களிற் பெரும்பாலான, உகரச் சுட்டடிச் சொற்களின் திரிபாகவே யிருக்கும். உயிருகரம் முதலாக வருவது முதலடி; உயிர்மெய் யுகரம் முதலாக வருவது வழியடி. சொல்லாக்கத்தில், பொருள்மயக்கத்தை நீக்குதற்கு, உயிரும் மெய்யும் பல்வே றெழுத்தாய்த் திரிகின்றன. அத் திரிபுகளெல்லாம் சற்றுப் பின்னர்க் கூறப்படும். இங்கு, உயிர்த்திரிபில் உ-இ, உ-ஒ என்பவற்றையும், மெய்த்திரிபில் ல்-ர், ல்-ள், ழ-க என்பவற்றையும் உள்ளத்தில் இருத்துதல்வேண்டும். 1. தோன்றுதல் (முன்வருதல்) உ-உல்-உர்-உரு. உரு: உருத்தல் = தோன்றுதல். உரு-(அரு)-அரும்பு, அரும்புதல் = தோன்றுதல். அருப்பம் = தோன்றும் மீசை. உரு = கரு. உரு = தோற்றம், வடிவம், நிறம். உரு - உருவு - உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவம். குரு: குருத்தல் = தோன்றுதல். குரு - குருத்து = தோன்றும் இளவோலை. குருத்து-குருந்து = வெண்குருத்து, குழந்தை. குருந்து-கருந்து = மரக்கன்று (கோடை.). குரு-குரும்பை = தென்னை பனையின் இளங்காய். குரு-குருகு = குருத்து, குட்டி, குரு-கரு=1. சூல். கருச்சிதைத் தோர்க்கும் (புறம். 34) 2. குழந்தை. சேரர்தங் கருவை (பாரத.நிரை.116) 3. குட்டி. காசறைக் கருவும் (சிலப். 25:52) 4. பிறப்பு. கருவைத் துடைப்ப (பிரபு. கொக்கி. 15) 5. முட்டைக்கரு. புறவுக்கரு வன்ன (புறம். 34) 6. நிலத்தில் தோன்றும் பொருள். கருவென மொழிப (தொல். 964) சுரு JU: துரு-துருத்து என்பது இன்று முன்தள்ளுதலைக் குறிக்கும். நுரு = பிஞ்சு. நுரு-நொரு = இளங்கதிர், பிஞ்சு. புரு: புரு = குழந்தை. புரு-(பிரு)-பிருகு = முற்றாப் பனங்கிழங்கு. பிருகு - பிருக்கு. சிறு பிஞ்சுகளைப் பிஞ்சும் பிருக்கும் என்பது உலக வழக்கு. முரு: முரு-முருகு = இளமை, இளமையான முருகன். முருகு - முருகன். முரு-முருந்து = குருத்து, தளிர். முரு-முறி=தளிர். முறிதல் = துளிர்த்தல். முறிந்த கோலமுகிழ் (சீவக. 2358) முரு - மரு - மருவு. மருவுதல் = தோன்றுதல். உரு என்னும் அடிக்கு முந்தியது உல் என்பதாகும். லகரம் ளகரமாகத் திரிவது போன்றே ளகரம் ழகரமாகத் திரியும். உல்-உல்லரி = தளிர், உலவை=தழை. ஈயுலவையினோப்பி (இரகு. தேனு. 35). குல் - குள் - குளகு = தளிர், தழை. குள் - குட்டி. குள் - குழ - குழை = தளிர். குழ - கொழுந்து. குழ - குழவு - குழகு - குழகன். குழ - குழந்தை. குழவு - குழவி. சுல்-சூல் = கரு, முட்டை. சுல்-சில்-சின்ன-சினை. சினைத்தல் = தோன்றுதல், அரும்புதல், கருக்கொள்ளு தல், தழைத்தல். சினை= மொட்டு, மரக்கிளை, சூல், முட்டை. துல்-துள்-துளிர்-தளிர். துள்-தள்-தழு-தழுக்கு, தழுக்குதல்= தழைத்தல். தழு-தழை = குழை. நுல் - (நுள்) - நுழு - நுழுவல் = இளம்பாக்கு. நுழு - நுழாய் = இளம் பாக்கு, நுல்-(நுன்)-நுனை-நனை = அரும்பு. நனைதல் = அரும்புதல், தோன்றுதல். புல்-(பல்)-பல்லவம் = (வ.) = தளிர், புல்-(புள்)-பிள்-பிள்ளை . பிள் = பிள்ளைமையழகு, பிள் - பீள் = இளங்கதிர், இளமை, கரு. புள்-பூள்-பூட்டை = இளங்கதிர். பூட்டை - பீட்டை. முல்-முள்-முளை. முளைத்தல் = தோன்றுதல். முளையன் = சிறுவன்-முள்-முட்டு-மொட்டு. முள்-மள்-மள்ளன் = இளைஞன். மள் - மழ - மழவு - மழவன் = இளைஞன். மழவும் குழவும் இளமைப் பொருள (தொல்.உரி.14) மழ - மழலை - மதலை = இளமை, பிள்ளை. ழகரம் சிலவிடத்துக் ககரமாகத் திரியும். எ-டு: தொழுதி - தொகுதி, முழை-முகை. இவ்வகையில் உழு என்னும் அடி உகு என்றாகும். உகு - (உகை) - அகை. அகைதல் = தளிர்த்தல். கொய்குழை அகைகாஞ்சி (கலித். 74) குகு - குகை - குகைச்சு (புற்று) சுகு - சுகை (கொத்தல், கிழித்தல்) - சுகம் (கிளி) துகு - (தெகு) - திகை - (முடிவு, எல்லை) நுகு - நுகும்பு = பனங்குருத்து. நுகு - நுங்கு = பனஞ்சுளை, இளம்பனங்கொட்டை. புகு - பொகில் = அரும்பு. பொகில் - போகில் = அரும்பு. போகு - போக்கு = மரக்கன்று (பிங்.) புகு - போ-போத்து = இளங்கிளை. போ - போந்து (பிங்.) = இளம்பனை. போந்து-போந்தை = (திவா.) இளம்பனை. முகு - முகிழ் அரும்பு. முகிழ்தல் = அரும்புதல். முகிழ்த்தல் = தோன்றுதல், அரும்புதல், ஈனுதல். முகு-முகை = அரும்பு. முகு- மொக்கு-மொக்குள் = அரும்பு. முகிழ் - முகிழம் = பேரரும்பு. முகிழ் - முகிழி. முகிழித்தல் = அரும்பு போற் குவிதல். முகிழம் என்னும் சொல், அரும்பு என்னும் பொருளில், mukula, mukura, makula, makura என்று வடமொழியில் திரியும். குமரிக்கண்ட முழுக்கினாலும், முதலிரு கழக விலக்கிய முழுதும் கடைக்கழக விலக்கியப் பெரும்பகுதியும் அழிந்து போனமையாலும் நீண்டகாலமாகத் தமிழர் தமிழைப் பேணாமை யாலும், ஆயிரக்கணக்கான தென்சொற்கள் இறந்துபட்டன. அதனாலேயே, பல முதலடிச் சொற்கட்கும் வழியடிச் சொற்கட்கும் எடுத்துக்காட்ட இயலவில்லை யென்றறிக. இறந்துபட்ட சொற்க ளெல்லாம் பிறைக்கோட்டுள் இடப்பட்டுள. ஒரு பொறியறிஞன் ஒரு பொறியிலில்லாத உறுப்பைக் கண்டுகொள்வது போன்றே, ஒரு மொழியறிஞனும் அம் மொழியில் இறந்துபட்ட சொற்களிற் சிலவற்றை அவற்றொடு தொடர்புள்ள பிறசொற்களின் துணை கொண்டு அறியவியலும் என்க. 2. முன்மை ஊங்கு = முன்பு உம்மை = முற்பிறப்பு. உம்மைவினை.... ஒழியாது (மணிமே. 26:32) குனை = கூரிய முன்பக்கம் அல்லது மேற்பக்கம். நுனி - முனை. நுனி - நுதி = முன். நடந்தாள் நுதி (சீவக. 1933, உரை) நுதி - துது = முன், நுனி. துதிக்கை = யானையின் முன்னுள்ள அல்லது கூரிய நுனியுள்ள கை. முன் -முனி. முன்-முனை=முன்பக்கம். முகு-முகம் = முன்பக்கம். முகம்-முகர்-முகரை. முகம்- முகன் = முகனை-மோனை. முகம் என்னும் சொல் முன்மைக்கருத்தையும் தோன்றற் கருத்தையும் இணைத்துக்காட்டுதல் காண்க. இச் சொல் வடமொழியில் அரமாய என்று திரியும். முகஞ்செய்தல் 1. முன்னாதல். தோற்றினான் முகஞ்செய் கோலம் (சீவக.675) 2. தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக்.35:49) 3. முன்செல்லுதல் (செல்லுதல்) உகைதல் = செல்லுதல், உகைத்தல் = செலுத்துதல். உகை-அகை. அகைத்தல் = செலுத்துதல். உதைத்தல் = செலுத்துதல். இச்சிலை யுதைத்தகோற் கிலக்கம் (கம்பரா. கார்முக.9) உந்துதல் = செலுத்துதல். உய்தல் = செல்லுதல், தப்பிச் செல்லுதல். உய்த்தல் = செலுத்துதல் உய்-ஒய். ஒய்தல்=செலுத்துதல், உய்-இய்-இயல். இயலுதல்=செல்லுதல், நடத்தல். இய் -இய. இயத்தல் = செல்லுதல், கடத்தல். இய - இயவு = செலவு. இய - இயங்கு. இயங்குதல் = அசைதல், செல்லுதல். இய-ஏ-ஏகு. ஒ.நோ: வியர்- வேர். (சுல்)-சல்-செல். ச-செ. ஒ.நோ: சத்தான்-செத்தான். குமரிக்கண்டத் தமிழில், சல் என்னும் அடியும் செல்லுதல் வினையைக் குறித்திருத்தல் வேண்டும். இன்று அது அப் பொருளில், வடதிரவிட வழிப்பட்ட இந்தியில் வழங்குகின்றது. துரத்தல் = செலுத்துதல். துரத்துதல் = விரைவாகச் செலுத்துதல். முன்மைக்கும் முற்செலவிற்கும் இடைப்பட்ட கருத்து முன் தள்ளுதல். முன்தள்ளுதல் உத்துதல் = முன் தள்ளுதல், கழித்தல். உந்துதல் = முன் தள்ளுதல். உந்தல் - உஞ்சல் - ஊஞ்சல்- ஊசல். உன்னுதல் = முன் தள்ளுதல். (துள்)-தள். ஒ.நோ: துளிர்-தளிர். துந்து - துந்தி = முன் தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி. துருத்துதல் = தொந்தி வயிறுபோல் முன் தள்ளுதல். துருத்தி = காற்றை முன் தள்ளும் கொல்லுலைத் தோற்கருவி அல்லது இசைக்கருவி. துருத்தி - துத்தி - தித்தி = இசைக்கருவி. தூண்டுதல் = விளக்குத் திரியை முன் தள்ளுதல். தூண்டு = தீண்டு நுந்துதல் = தூண்டுதல். நுந்தா விளக்கு=தூண்டா விளக்கு. நுந்து-நொந்து. நூக்குதல் = முன் தள்ளுதல், தள்ளுதல். உள்ளத்தை முன் தள்ளுதல் (ஊக்குதல்) உய்-உயல்-உயற்று-உஞற்று. உஞற்றுதல் = முயற்சிக்குத் தூண்டுதல், வருந்தி யுழைத்தல். உள்ளுதல் = உள்ளத்தை ஊக்குதல். உள்ளம்=ஊக்கம். ஊக்குதல் = உள்ளத்தை முற்செலுத்துதல். ஊங்கு-ஊக்கு. தூண்டுதல் = ஊக்குதல், ஏவுதல். நூக்குதல் = தூண்டுதல். முயலுதல் = தன் உள்ளத்தை ஊக்குதல். Push, shoot, usher, urge, duct, duke, thrust முதலிய ஆங்கிலச் சொற்களின் வேர்ப்பொருளையும் உகர வடிவையும், இவற்றுடன் ஒப்பு நோக்க. 4. நெருங்குதல், செறிதல், கூடுதல் பல பொருள் நெருங்குதல் செறிதலாம். (உள்)-அள். உள்ளுதல் = நெருங்குதல், செறிதல். அள்-அண். அண்ணுதல் = நெருங்குதல். (குள்)-(குட்டு)-கிட்டு. கிட்டுதல் = நெருங்குதல். (சுள்)-(செள்)-செறு. செறுத்தல் = செறிதல். செறு-செறி. துல்-துன். துன்னுதல் = நெருங்குதல். துன் - துன்று. துன்றுதல் = நெருங்குதல். (நுள்) - நள் - நண். நள்ளுதல் = நெருங்குதல், கூடுதல். நண்ணுதல் = நெருங்குதல். (நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு. முல் - முள் - முரு - மரு - மருவு. மருவுதல் = கிட்டுதல். முல்- மல் - மலி - மலிதல் = நெருங்குதல். நிறைதல். மிகுதல். (முள்) - (மள்) - மண்டு. மண்டுதல் = நெருங்குதல், கூடுதல். மண்டு - மண்டகம் = மக்கள் கூடும் காரைக்கூடம். மண்டகம் - மண்டபம்-(வ.) மண்டப. ஒ-நோ: வாணிகம்-வாணிபம். 5. பொருந்துதல், கூடுதல், ஒத்தல் உல்-உ உத்தல்=பொருந்துதல். உத்தி=விளையாட்டில் இருவர் சேர்ந்து வரும் சேர்க்கை, அறிவிற்குப் பொருத்தமான இலக்கண நெறிமுறை. உல்-ஒல். ஒல்லுதல்=பொருந்துதல். ஒல்-ஒன். ஒன்னுதல் = பொருந்துதல். ஒன்-ஒன்று. ஒன்றுதல் = பொருந்துதல். ஒல்-(ஒள்)-ஒண். ஒண்ணுதல் = பொருந்துதல். ஒள்-ஒட்டு. ஒல்-ஒ. ஒத்தல் = பொருந்துதல். குல்-குலவு. குலவுதல் = கூடுதல். குல்-(குள்)-கள். கள்ளுதல் = ஒத்தல், கூடுதல். கள்ள = போல. கள்-களம் = கூட்டம் கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம், அவைக்களம் என்பவற்றை நோக்குக. (குள்)-குழு - குழுவு. குழு - குழுமல் = கூட்டம். குழு-குழும்பு = திரள். குழு - குழாம் = கும்பல். (குள்) - (கூள்) - கூண்டு - கூடு - கூட்டம். (சுள்) - செள் - செரு - சேர். துல் - துல்லியம் = ஒப்பு. துல் - துலை = ஒப்பு. துல் - துன். துன்னுதல் = பொருந்துதல். துல் - துன்று. துன்றுதல் = பொருந்துதல். (நுள்) - நள் - நண் - நண்பு. நள் - நட்பு. புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல், தழுவுதல், கூடுதல். புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொட்டு. பொல் - போல். போலுதல் = ஒத்தல். பொரு - பொருவு = ஒப்பு. புல் - புள் - (புண்) - புணர். (புண்) - பூண் - பூட்டு. புல் - (புர்) - புரை. புரைதல் = ஒத்தல். முல் - முள் - முள்கு. முள்குதல் = தழுவுதல். முள் - முழு - முழுவு. முழுவுதல் = முத்துதல், தழுவுதல். முல் - மல்-மன். மன்னுதல் = பொருந்துதல். மன் - மன்று - மன்றம். மன் - மனை. 6. வளைதல் உல் - உலா - உலவு - உலாவு. உலவுதல் = சுற்றிவருதல். குல் - குலா - குலவு. குலவுதல் = வளைதல். குல் - குள் - கொள் - கோள் - கோண் - கோடு - கோட்டம். சுல் - சுலா - சுலவு. சுலவுதல் = வளைதல். துல் - (தில்) - திர் - திரும். திருமுதல் = வளைதல், சாய்தல், மீளுதல். திரும் - திரும்பு. (நுள்) - நெள் - நெளி - நெறி. நெளிதல் = உடல் வளைதல். நெறிதல் = மயிர் சுருள்தல். புல் - புரு - புரி. புரு - புருவம் = கண் மேல்மயிர் வளைவு. புரிதல் = வளைதல். வலம்புரி இடம்புரி என்னும் சங்குகளை நோக்குக. (முல்) - முரு - முருகு = வளைந்த காதணி. முரு - முறு - முற்று. முற்றுதல் = வளைதல், சூழ்தல், முற்றுகையிடுதல். முரு - முரி. முரிதல் = வளைதல். உல் - (உர்) - உருள், to roll. உருள் என்னும் அடியினின்று குருள் (to curl), சுருள் (to coil) முதலிய சொற்கள் பிறந்திருத் தலையும், அவ் வடியை whirl, swirl, twirl என்ற ஆங்கிலச் சொற்கள் ஒருவாறொத் திருத்தலையும் நோக்குக. புருள் என்பதினின்று புருடை (ãUil, turning key of a lute string) என்னும் சொல்லும், முருள் என்பதினின்று KUF(knot in wood) என்னும் சொல்லும், திரிந்துள்ளன. உழல் (to revolve) என்னும் அடியினின்று FHš(to curl), RHš(to rotate) என்னும் சொற்கள் தோன்றியிருத்தலும் நோக்கத் தக்கதாகும். 7. துளைத்தல் உள் - உளு = துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். உளு - உழு. உழுதல் = நிலத்தைக் கீறுதல். குள் - குழி - குழை - குடை. குடைதல் = துளைத்தல். குழி - கொழு - கொழுது - கோது. கோதுதல் = குடைதல். கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி. கொழு-கோழி = கிளைக்கும் பறவை. குள்- குளி. குளித்தல் = உட்புகுதல், முழுகுதல், நீராடல். சுள் - சுர - சுரை = உட்டுளை. சுர - சுரங்கம். சுரைக்காய் = காய்ந்தபின் உட்டுளையமையுங் காய். துல் - துன் = எலிவளை. துன்னல் = உழுதல். துல் - துள் - துளை. துள் - தொள் - தொள்ளை - தொளை. தொள் - தோள் - தோண்டு. தொள் - தொடு. தொடுதல் = தோண்டுதல். நுள் - நொள் - நொள்ளை = குழிவு, கட்குழிவு. நொள்-நொள்ளல்-ஞெள்ளல் = பள்ளம். நுல்-நுழை - நூழை = துளை, வாயில். புல் = உட்டுளை, உட்டுளையுள்ள பயிர்வகை அல்லது மூங்கில். புல்லாங்குழல் = மூங்கிற்குழல். புறக்கா ழனவே புல்லென மொழிப. (தொல். 1585) புல்-புள்-புழு = துளைக்கும் சிற்றுயிர். புழுத்தல் = புழுத்துளைத்தல். புள்-பொள்-பொளி-பொறி. பொள்ளல் = துளை, துளைத்தல். பொளித்தல் = துளைத்தல், வெட்டுதல், கிழித்தல். பொறித்தல் = குழித்தெழுதுதல். முள்-(முழு) = முழுகு - மூழ்கு. முழுகுதல் = உட்புகுதல், நீரிற் குளித்தல். (முழு)-முழை = குகை. முழைத்தல் = துளைத்தல். முழை-மூழை = அகப்பை. முழுகு-முழுங்கு-முங்கு. முழுங்கு - விழுங்கு. விழுங்குதல் = வாய்க்குள் முழுக்குதல். முள் - மொள் - மொண்டை-மொந்தை. மொண்டை - மண்டை. மொள்ளுதல் = நீர்ப்பொருளுக்குள் முழுக்கி யெடுத்தல். 8. துருவுதல் உள்-உரு - உருவு. உருவுதல் = கைக்குள் ஒன்று துருவுமாறு இழுத்தல். குள்-(குரு)-கோர்-கோ. கோர்வை-கோவை. கோர்த்தல் = நூல் ஊசிக் காதிலும் பாசித் துளையிலும் துருவச் செய்தல். சுள்-சுரு. சுருங்கை = நிலத்தின்கீழ்த் துருவிச் செல்லும் வழி. சுரு-சுருவு-சுருவம் = உணவுக் கலத்துள் துருவும் அகப்பை. துள்-துரு-துருவு. துரு-தூர் - தூர்தல் = ஊடு செல்லுதல், வாசலுட் புகுதல். வீட்டிற்குள் புகுதலைத் தூர்தல் என்பது வடார்க் காட்டு வழக்கு. தூர்-தூரி = நீர்துருவிச் செல்லும் மீன்பொறி. தூர்-தோர் - தோரணம் = தெருவூடு கட்டும் அழகுத் தொங்கல். தோர்-தோரணை=கோர்வை. புள்-புழு-புகு-புகுது-புகுரு-பூர். பூர்தல் = உட்புகுதல். பூர்-பூரான் = மண்ணிற்குள் புகும் நச்சுப்பூச்சி. பூர் - பூறு. பூறுதல் = உருவத்துளைத்தல். மூக்குப்பூறி-மூக்குப்பீறி. பூறு- பீறு. முல்-மூலம்=வாயில் (means). 3. தமிழ் வளர்ச்சி i உரைநடை கிளவியாக்கம் 1. சொற்றிரிவு முறைகள் கிளவி என்பது நால்வகை இலக்கணவியற் சொல்லிற்கும் பொதுவான சொல். கிளத்தல்-சொல்லுதல். கிளப்பது கிளவி. மாந்தன் நாகரிகம் வளர வளரக் கருத்துகள் பல்குகின்றன. அடிப்படைக் கருத்துகளினின்று வேறுபட்ட கருத்துகள் கிளைக்கும் போது, முன்னவற்றைக் குறிக்கும் சொற்கள் பல்வேறு வகையில் திரிபடைகின்றன. அல்லாக்கால் பலபொருளொரு brhšY«(polysemy) பலசொல் byhUtoî«(homonymy) மிக்குப் பொருள்மயக்கு ஏற்படும். அதைத் தடுக்கச் சொல்வடிவை மாற்ற வேண்டியுளது. சுள் என்னும் அடி பொருந்தற் பொருளிற் செள் என்று திரியாவிடின், சுடுதலையும் உறைத்தலையும் குறிக்குஞ் சொல்லொடு அதை மயக்க நேரும். செள் என்னும் வடிவினின்றே செண்டு, செண்டை, செடி, செண்ணு, செரு, செறு, செறி, செற்றை, செழி, சேர் முதலிய சொற்கள் பிறந்துள்ளன. நுள் என்பது நெருங் கற்பொருளில் நள் என்று திரியாவிடின், கிள்ளுதலைக் குறிக்கும் சொல்லொடு அதை மயக்க நேரும். மேலும், ஆயிரக்கணக்கான கருத்துகட்கு வெவ்வேறு சொல்லும் சொல்வடிவும் வேண்டியிருப்ப தால், வேர்ச்சொல்லும் அடிச்சொல்லும் பல்வேறு திரிபுகொண்டா லொழிய மொழி வளர்ச்சிக்கிடமில்லை. (1) அறுவகைத் திரிபு எ-டு: வலித்தல் : ஊங்கு-ஊக்கு, குண்டு-குண்டம்-குட்டம். நந்து-நத்தை, குறிஞ்சி-குறிச்சி. மெலித்தல் : ஒப்பு-ஒம்பு, குத்து-குந்து, போக்கு - போங்கு. நீட்டல் : உண்-ஊண், குட-குடா. நகரகம்-நாகரிகம். குறுக்கல் : ஆங்கு-அங்கு, தேவு-தெய்வம், வணங்கு-வாங்கு. வங்கு-வங்கி=வளைந்த கத்தி, நெளி வளையல். தொகுத்தல் : துருத்தி-துத்தி, பெட்டை-பெடை, வெய்ம்மை- வெம்மை, வேய்ந்தோன்-வேந்தன். விரித்தல் : பரவர்-பரதவர், மாடம்-மாடகம். (2) முக்குறை முதற்குறை : சிப்பி-இப்பி, நீரம்-ஈரம், உகை-கை. கைத்தல்=செலுத்துதல். இடைக்குறை : கூண்டு-கூடு, முழுங்கு-முங்கு. கடைக்குறை : சாய்-சா, நல்-ந. (3) மும்மிகை முதன்மிகை : ஏண்-சேண், இளை-சிளை. இடைமிகை : இலகு-இலங்கு, பிறகு-பிறக்கு, மூசு- மூஞ்சு, மெது-மெத்து கடைமிகை : திரும்-திரும்பு, கடை-கடைசி. தொகுத்தலும் விரித்தலும் பகுகிளவிக்கும், இடைக் குறையும் இடைமிகையும் பகாக்கிளவிக்கும் உரியவென வேறுபாடறிக. ஆயினும் இவ் வேறுபாடு முதற்காலச் சொன்னிலைக்கு ஏற்காது. (4) பல்வேறு உயிர்த்திரிபு அ அ-ஆ : நடத்து-நடாத்து, பண்-பாண், வரு-வார், மறு-மாறு. அ-இ : வளார்-விளார், வளாவு- விளாவு, பட்டனம்- பட்டினம். அ-எ : பரு-பெரு, கட்டி-கெட்டி. அ-ஐ : பசு-பை, இளமை-இளைமை, அம்ம-அம்மை. ஆ ஆ-அ : சாவு-(சாவம்)-சவம். ஆ-ஐ : துலா-துலை, நறா-நறை. ஆ-ஓ : ஆம்-ஓம், முன்னார்-முன்னோர். இ இ-ஈ : கில்-கீள். இ-அ : விளிம்பு-வடிம்பு. இ-உ : பிறகு-புறகு. இ-எ : பிணை-பெண். இருமை-எருமை. ஈ ஈ-இ : அறிதீ-அறிதி. ஈ-ஊ : பீட்டை-பூட்டை ஈ-எ : நீள்-நெடு. ஈ-ஏ : செய்யாதீ-செய்யாதே, மீ-மே. ஈ-ஆ : சாப்பீடு-சாப்பாடு, கூப்பீடு-கூப்பாடு. உ உ-ஊ : புழை-பூழை, குனி-கூன், சுள்ளை-சூளை. உ-அ : முடங்கு-மடங்கு, குட்டை-கட்டை. உ-இ : புரள்-பிறழ், பஞ்சு-பஞ்சி, கடு-கடி, உவர்- இவர். உ-எ : குழு-கெழு. உ-ஒ : துளை-தொளை, உடன்-ஒடு. ஊ ஊ-உ : கூவு-குயில். ஊ-ஈ : தூண்டு-தீண்டு, நூறு-நீறு. ஊ-ஓ : சூம்பல்-சோம்பல். ஊ-ஏ : ஊர்-ஏர் (எழு, உயர்). எ எ-ஏ : பெடை-பேடை, எல்லா-ஏலா. எ-அ : வெறுமை-வறுமை, நெடு-நட. எ-இ : செந்தூரம்-சிந்தூரம், செத்து- சித்து(கருத்து). எ-ஒ : செப்பட-சொப்பட. ஏ ஏ-எ : தேவு-தெய்வம் ஏ-இ : கேடகம்-கிடுகு. ஏ-ஈ : தேம்-தீம். ஏ-ஐ : செய்யாதே-செய்யாதை. ஏ-யா : ஏன்-யான், ஏது-யாது, ஏனை-யானை. ஐ ஐ-ஏ : செய்யாமை-செய்யாமே. ஐ-ஆய்: குழை-குழாய், கழை-கழாய், உரை-உராய். ஒ ஒ-ஓ : கொடு-கோடு, பொள்-போழ். ஒ-அ : கொம்பு-கம்பு, ஒட்டு-அட்டு, மொண்டை-மண்டை. ஒ-எ : சொருகு-செருகு. ஓ ஓ-ஒ : கோவை-கொவ்வை. ஓ-ஆ : ஓட்டம்-ஆட்டம் (உவமையுருபு),நோடு- நாடு,கோல்-கால். ஓ-ஏ : கோடகம்-கேடகம், நோம்பு-நேம்பு. மோனைத்திரிபு பசு-பச்சை, பாசி, பைது. கிள்-கிண்டு, கீள், கெண்டு, கேணி. உடு-உடன், ஒடு, ஓடு. உயிர்த்திரிபுக ளெல்லாவற்றுள்ளும் உ-ஒ, உ-அ, உ-இ என்னும் மூன்றும், பல தென்சொற்களின் மூலங்காணவும், தென்சொல்லா வடசொல்லா என்னும் ஐயத்திற்கிடமான சில சொற்களைத் தென் சொல் லென்று துணியவும், பெருந் துணையா யிருத்தலால், மிக முதன்மை வாய்ந்தனவாகும். இவற்றை முறையே, முன்னைத் திரிபு, அள்ளைத் திரிபு, பின்னைத்திரிபு என அழைக்கலாம். முன்னைத் திரிபும் மோனைத் திரிபும் ஒன்றே. (5) பல்வேறு மெய்த்திரிபு க க-ச : குடிகை-குடிசை, பொலிகை-பொலிசை, முழுகு- முழுசு. க-த : கொப்பூழ்-தொப்புள். க-வ : குழை-குகை-குவை. ச ச-க : செய்-(கெய்)-கை, செம்பு-கெம்பு. ச-ய : குசவன்-குயவன். ச-ன : பிசை-பினை, பூசை-பூனை. ட ட-ண : படம்-பணம். ட-ச : ஒடி-ஒசி, பிடி-புடி- பிசி, குடவன்-குசவன். ட-ர : படவர்-பரவர், விடிச்சி-விரிச்சி, குடம்பை- குரம்பை. ட-த : படாகை-பதாகை. ட-ள : வெடிச்சி-வெளிச்சி(காது நோய்வகை). ண ண-ட: கோணு-கோடு, சேண்-சேடு, ஆண்-ஆடூஉ- ஆடவன். ண-ன: நாத்தூணார்-நாத்தனார். த த-ச : ஓதை-ஓசை, அத்தன்-அச்சன், மதி-மசி. த-ட : மதம்-மடம், மத்து-மட்டு, துவர்த்து- துவட்டு. த-ர : விதை-விரை, மூதி-மூரி. த-ற : குத்து-குற்று, ஒத்து-ஒற்று. ந ந-ஞ : நாண்-ஞாண். ந-ன : வெரிந்-வென். ப ப-வ : பகு-வகு, பண்டி-வண்டி. ம ம-க : தமப்பன்-தகப்பன். ம-வ : மிஞ்சு-விஞ்சு, முழுங்கு-விழுங்கு, செம்மை- செவ்வை. ம-ர : முகம்-முகர். ம-ன : கடம்-கடன். ம-ல : பக்கம்-பக்கல். ய ய-ச : ஈயல்-ஈசல், நெயவு-நெசவு. ய-ஞ : வலையன்-வலைஞன், உயற்று-உஞற்று. ய-ந : யான்-நான். ர ர-த : பரண்-பதணம்,குரல்வளை-குதவளைகொச்சை). ர-ற : முரி-முறி, ஒளிர்-ஒளிறு. ர-ல : நீர்-நீல்-நீலம், வார்-வால்-வாலம், துருக்கன்- துலுக்கன். ல ல-த : சலங்கை-சதங்கை, மெல்-மெது. ல-ச : அலை-அசை. ல-ர : குதில்-குதிர், கூதல்-கூதர், அலத்தம்-அரத்தம். ல-ழ : மால்-மழை. ல-ள : செதில்-செதிள். ல-ற : மல்-மறு. ல-ன : மேல-மேன, வெல்-வென், புலம்-புனம். ல-ஃ : அல்கு-அஃகு. t t-f : Mth!-Mfh!, சிவப்பு-சிகப்பு, துவர்-துகிர். வ-ச : பரவு-பரசு, விரவு-விரசு. வ-ப : அளவு-அளபு, செய்வ-செய்ப. ழ ழ-க : தொழுதி-தொகுதி, நிழல்-நிகர் (ஒளி). ழ-ச : இழு-இசு, இசி-இசிவு. ழ-ட : குழல்-குடல், புழல்-புடல்-புடலை. ழ-ண : தழல்-தணல், நிழல்-நிணல். ழ-த : மழலை-மதலை. ழ-ய : பழம்-பயம்-பயன், காழ்-காய். ழ-ர : பழுவம்-பருவம். ழ-ள : கொப்பூழ்-கொப்புள். ழ-ற : தொழு-தொறு. ழ-ன : புழுகு-புனுகு. ள ள-ச : உளி-உசி-ஊசி. ள-ட : களவன்-கடப்பான்,மகள்-மகடூஉ,வெள்-வெளி- வெடி- விடி. ள-ண: வளரி-வணரி,களவாளி-களவாணி, பெள்-பெண். ள-ய : கொள்-கோள்-கோய், வெள்-வெய்- வெய்ம்மை- வெம்மை (விருப்பம்), மாள் - மாய். ள-ர : வள்-வார், நீள்-நீர். ள-ழ : உளி-உழி, காள்-காழ், துளசி-துழாய். ள-ற : வெள்-வெறு, வெள்ளிலை-வெற்றிலை. ள-ஃ : எள்கு-எஃகு, வெள்கு-வெஃகு. ள-ல : கொள்-கொல். ற ற-ச : முற்றில்-முச்சில், குற்றில்-குச்சில், பொற்றை- பொச்சை. ற-ட: முசிறு-முசிடு. ற-த: அங்குற்றை-அங்குத்தை, குறவாய்-கதுவாய். ன ன-ஞ : அன்னை-அஞ்ஞை, முன்னை-முஞ்ஞை. ன-ந : பொருகின்றார்-(பொருன்னார்)-பொருநர். ன-ல : செய்வென்-செய்வன்-செய்வல். ன-ற : மன்-மறு, தென்னு-தெற்று. ன-ண : பட்டனம்-பட்டணம். சில இணைமெய்களும் வேறிணையாகத் திரியும். எ-டு: ங்க-ஞ்ச: பொங்கு-பொஞ்சு. ண்ட-ந்த: மொண்டை-மொந்தை ன்ற-ந்த: மன்று-மந்து, பின்று-பிந்து. (6) பல்வகை ஈறுகள் பொருள் மாறும்போது சொல்லும் மாறவேண்டு மென்பது, சொல்லாக்க அடிப்படை நெறிமுறை. அல்லாக் கால், பொருள் அதுவோ இதுவோ என மயங்க நேரும். மண் என்னுஞ் சொல் மணலைக் குறித் தற்கு அல்லீறு பெற்று மணல் என்றானமையும், கம்பு என்னுஞ் சொல், மரக்கோலைக் குறியாது கனிய (உலோக)க் கோலைக் குறித்தற்கு இகர வீறு பெற்றுக் கம்பியென் றானமையும் காண்க. பக்கத்தையும் இடுப்பை யும் குறிக்கும் மருங்கு என்னும் சொல், மருங்குல் என உல்லீறு பெற்றே தனிப்பட இடுப்பைக் குறித்தது. முதன் முதலாகத் தோன்றிய ஈறுகள், சுட்டுகளும் சுட்டடிச் சொற்களுமாகவே யிருந்திருக்கின்றன. சுட்டெழுத்துகள், முதற் காலத்தில் பெயரெச்சமாக மட்டுமன்றிப் பெயராகவும் இருந் திருக்கின்றன. v-L: M=mJ(bg.), அந்த (பெ.எ.). இக்காலத்தும் அதுபோது என்று, சுட்டுப்பெயர் பெயரெச்சமாய் வழங்குதல் காண்க. உயிரொலிகளைத் தனித்தொலிக்கும்போது, குறிலினும் நெடிலே இளஞ்சிறார்க்கும் முந்தியல் மாந்தர்க்கும் எளிதாம். குறிலை விட்டொலிக்கும்போது மூச்சுப்பை முயற்சி மிக்கு வேண்டி யிருத்தலின், கீழ்வகுப்பு மாணவர் குறில் நெடில் வேறுபாடின்றியே உயிரெழுத்து களை ஒலித்துப் போதல் காண்க. இதனால் உயிரெழுத் துகள் முதலில் நெடிலாகவே தோன்றியிருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படும். அ இ உஅம் மூன்றுஞ் சுட்டு (31) என்று கூறிய தொல்காப்பியனார், சற்றுப் பின்பு, நெட்டெழுத் தேழே ஓரேழுத் தொருமொழி. (43) குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே (44) என்று அதை ஒருமருங்கு மறுத்திருப்பதும். வினா வெழுத்துகளைக் குறிக்குமிடத்து,' ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ (32) என எகரத்தை விட்டிருப்பதும், தொல்காப்பியம் நெடுகலும் ஆயிடை'' என்னும் தொடரே பயின்று வருவதும், ஆண்டு ஈண்டு என்னும் சொற்கட்குக் குறுகிய வடிவின்மையும், ஏகார ஓகாரங்கட்கு இனக்குறில் பிந்தித் தோன்றியுள்ளமையும், இதற்குச் சான்றுகளாகும். சுட்டீறுகள் ஆ-உணா, நிலா, இரா, விளா, களா, நுணா, கடா, மிழா. ஈ-குரீ (குரீஇ = குருவி). ஊ-கொள்-கொளும்-கொளுமூ-கொண்மூ(முகில்). சிறு பறவை (குருவி) என்று பொருள்படும் குரீ என்னும் சொல்லைப் பிற்காலத்தார் குரீஇ என அளபெடையாக்கி விட்டனர். கொண்மூ= கடல்நீரைக் கொள்ளும் முகில். கொள்ளுதல்= முகத்தல். கொளுமுதல் = முகத்தல். இதன் விளக்கத்தைச் சொற் படை வளர்ச்சி என்னும் தலைப்பின்கீழ்க் காண்க. ஆவீறு முறையே அ, எனத் திரியும். எ-டு: நிலா-நிலவு. இரா-இர-இரவு, களா-களவு. அவு ஈறு அவம் என்றும் திரியும். எ-டு: அரா-அர-அரவு-அரவம். களா-கள-களவு-களவம். முதற்காலத்தில் நெடிலாகவே யிருந்த முச்சுட்டுகளும் பிற்காலத் தில் குறிலாகவும் மாறின. எ-டு: ஆ-அ, ஆது-அது, ஆங்கு-அங்கு. ஈ-இ, ஈது-இது, ஈங்கு-இங்கு ஊ-உ, (ஊது)-உது, ஊங்கு-உங்கு. எழுத்துகள் தனிநிலையின்றிப் புணர்நிலைப்பட்டுச் சொற் களாகும்போது, நெடில் வடிவினுங் குறில்வடிவே பலுக்க (உச்சரிக்க) எளிதாம். ஈகார ஊகாரச் சுட்டீறுகள் இக்காலத்து இறந்துபட்டன. அவற்றின் குறில் வடிவுகளே இன்று வழங்குவன. எ-டு: அ-உண, நில, விள, இர, (செ.வ.). இ-கண்ணி, கிளி, நரி, புலி, உறுமி, கொடி, வெள்ளி. உ-கொழு (கலப்பைக் காறு), கரு (சூல்), உருமு, வரகு. சில அகரவீறு அவு என்று திரியும். எ-டு: குழ-குழவு, மழ-மழவு. சுட்டடியீறுகள் எல்லா மெய்களுள்ளும் இயல்பானதும் எளிதானதும் மகரமாதலின், முதலாவது தோன்றிய சுட்டடியீறு மகரமெய் யீற்றதே. அது பின்னர்ப் பிற மெய்யீற்றதாகத் திரிந்தும், இறுதியிலும் இடையிலும் வேறெழுத்துப் பெற்று விரிந்தும், ஏனை யீறுகளோடு கூடியும், பல்வேறு தனியீறுகளையும் கூட்டீறுகளையும் பிறப்பித் துள்ளது. அம் இக்காலத்தில் தனியீறு; முதற்காலத்தில் கூட்டீறு (அ+ம்). அம்-அன்-அல். எ-டு: திறம்-திறன்-திறல். உயிரும் உயிர்மெய்யுமாகிய ஈறுகளெல்லாம் சொற்களும் சொற் சிதைவுகளுமே யாதலின், அத்தகை ஈறு பெற்ற சொல் லெல் லாம் முதற் காலத்தில் இரு சொல்லாகவே கொள்ளப்பட்டன. எ-டு: உணா (உண்+ஆ) = உண்ணும் அது, உண்ணும் பொருள். மெய்யீற்று முச்சுட்டடி யீறுகள் எ-டு: ஆம் - குழாம் ஆன் - வயான் ஆல் - வரால் ஈம் - --------- ஈன் - ----------- ஈல் - ---------- ஊம் - ---------- ஊன் - ----------- ஊல் - --------- அம் - மரம் அன் - அழன் அல் - குழல் இம் - ----------- இன் - வெரிந் இல் - அணில் உம் - உரும் உன் - பொருந் உல் - ------------ எடுத்துக்காட்டில்லன இறந்துபட்டன. முதற்காலத்தில், தமிழில் றன்னகரம் தோன்றவில்லை; தந்நகரமே யிருந்தது. அக்காலத்துச் சொற்களே வெரிந், பொருந் என்பவை. இது பின்னர் நெடுங்கணக்கில் விளக்கப் பெறும். ல ள ழ மூன்றும் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ல முன்னும் ள இடையும், ழ பின்னும் தோன்றின. ஆதலால், அல்லீறு பின்னர் முறை யே அள். அழ் எனத் திரிந்தது. லகர மெய்யீறு ரகர மெய்யீறாகத் திரியும். எ-டு: குடல்-குடர். லகரம் தகரமாகவும் திரியும். ஆயின், வல்லின மெய் தமிழில் ஈறா காமையால் உகரம் ஏறப்பெறும். எ-டு: மெல்-மெது. அள்-குறள் அழ்-புகழ் அர்-வளர் இள்-செதிள் இழ்-குமிழ் இர்-குளிர் உள்-உருள் உழ்-கலுழ் உர்- - துளிரைத் துளுர் என்பது கல்லா மக்கள் உலக வழக்கு. ரறவும் தமிழில் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ர முன்னும் ற பின்னும் தோன்றின. ரகர மெய்யீறு சிலவிடத்து றகர மாகத் திரியும். றகரம் வல்லின மெய்யாதலின், உகரம் ஏறப்பெறும். எ-டு: ஒளிர்-ஒளிறு அர்-அறு எ-டு : சிதறு இர்-இறு எ-டு : குளிறு உர்-உறு எ-டு : குமுறு நால்வகை யீறுகள் தனியீறு, கூட்டீறு, திரியீறு, விரியீறு என ஈறுகள் நால்வகைப் படும். அம் போன்றது தனியீறு; அம்பு (அம்+பு), அம்பம் (அம்+பு+அம்) போன்றவை கூட்டீறு. அன், அல், அள், அழ், அர், அது, அறு என்பனவும் இவற்றிற்கொத்த இகர வுகர முதலீறுகளும் திரியீறு; அக்கு (அ கு-அக்கு), அத்து (அது-அத்து) போன்றன விரியீறு. இவற்றிற் கெடுத்துக்காட்டு வருமாறு: ஈறு எடுத்துக்காட்டு அம்-அம்பு புறம்-புறம்பு அம்-அம்பு-அம்பம் அரம்-அரம்பு-அரம்பம் அம்பு வில்-விளம்பு அம்பு-அம்பம் சிலம்பு-சிலம்பம் ஈறு எடுத்துக்காட்டு அம்பு-அம்பி சிலம்பி அம்பு-அம்பை கரம்பு-கரம்பை அம்பு-அப்பு வரம்பு-வரப்பு அப்பு கல் (கல)-கலப்பு அப்பு-அப்பம் வளப்பு-வளப்பம் அப்பு-அப்பை படப்பு-படப்பை, சணப்பு-சணப்பை அம்-அவ்-அவ-அவை (குறவ)-குறவை (அவை)-வை கலவை, பார்வை (அவ்)-அவு உறு-உறவு,செல்-செலவு,வள்-வளவு (அவு)-வு செல்-செலவு, வாழ்-வாழ்வு. வு+அம் செல்வு-செல்வம் அவு-அவி குளவி,வளவி அவி-வி கல்வி,கேள்வி அவு-அவம் சொலவு-சொலவம், கதவு-கதவம் அவம்-வம் வில்வம் அவு-அவல் கதவு-கதவல் அவம்-அபம் களவம்-களபம் அவு-அகு குழவு-குழகு, படவு-படகு,பழகு அகு-கு வெள்-வெள்கு, பல்-பல்கு அகு-அகம் உலகு-உலகம், குடகு-குடகம் அகம்-அகை கோளகம்-கோளகை அகம்-அபம் அகு-அகி மிளகு-மிளகி அகு-அகை பலகை, கொட்டகை, வட்டகை அகை-கை அகு-அக்கு பிறகு-பிறக்கு,இலகு- இலக்கு,பழகு-பழக்கு அக்கு அரக்கு, இலக்கு(குறி), கணக்கு அக்கு-அக்கம் இலக்கு-இலக்கம் (குறி) அக்கு-அக்கல் அக்கு-அக்கர் இடக்கு-இடக்கர் அக்கர் அளக்கர் அக்கு-அக்கை பரக்கை-மசக்கை அகு-அங்கு இலகு-இலங்கு, பழகு-பழங்கு அங்கு குரங்கு, விளங்கு, முழங்கு, கறங்கு அங்கு-அங்கம் அரங்கு-அரங்கம் அங்கு-அங்கை இலங்கை அங்கு-அக்கு-அக்கம் விளங்கு-விளக்கு-விளக்கம் ஈறு எடுத்துக்காட்டு அவு-அபு அளவு-அளபு அபு-பு போர்பு, சண்பு, வள்பு, வெற்பு, கற்பு அவு-அப்பு உழவு-உழப்பு அல்-அது அது-து கட்டு (கள்+து), வட்டு (வள்+து). அது-அதம் அது-அதி மறதி (அதி)-தி ஊர்தி, வட்டி (வள்+தி) அது-அதை சிவதை அதை-தை பெட்டை(பெள்+தை), வட்டை (வள்+தை) அது-அத்து வரத்து, கிளத்து அத்து-அத்தம் விளத்து-விளத்தம் அத்தம் அரத்தம் அத்து-அத்தி குடத்தி, இரத்தி, வளர்த்தி அத்து-அத்தை அரத்தை, குறத்தை (அதம்)-அரம் விளம்பரம், சப்பரம் (அரம்)-அரவு தேற்றரவு அது-அந்து (ஐது)-ஐந்து அந்து வளந்து அந்து-அந்தம் அந்தம் குடந்தம், வலந்தம் அந்து-அந்தி அந்தி சிலந்தி அந்து-அந்தை அந்தை இலந்தை, குழந்தை, கரந்தை, கடந்தை அது-அசு இளது-இளசு அசு-சு கஃசு அசு-அசி (துளவு-துளசு)-துளசி அசி-சி அரிசி, வல்சி, வெட்சி, கட்சி (அசு)-அசம் உப்பசம் அந்து-அஞ்சு அஞ்சு கழஞ்சு அஞ்சு-அஞ்சி அத்து-அச்சு அச்சு-அச்சம் ஈறு எடுத்துக்காட்டு அச்சு-அச்சல் அச்சு-அச்சி அச்சு-அச்சை (அத்து)-அற்று அரற்று (அல்)-அலம் பொட்டலம், உடல்-உடலம், படல்- படலம் அல்-அலை சிதல்-சிதலை அல்-அன்று வரன்று அலம்-அனம் நடலம்-நடனம், பதலம்-பதனம் அனம்-அனை குதனம்-குதனை அல்-அள்-அளம் தப்பளம் அளம்-அணம் சப்பளம்-சப்பணம் அள்-அளை திரள்-திரளை, கரள்-கரளை அளை-அணை திரளை-திரணை, கரளை-கரணை அள்-அண் முரள்-முரண் அண் அவண், நடுவண் அண்-அண்டு முரண்-முரண்டு அண்டு சுறண்டு, பறண்டு அள்-அடு கரள்-கரடு, திரள்-திரடு அடு-அட்டு-அட்டி துறடு-துறட்டி அட்டி குடட்டி அட்டு-அட்டை குறட்டு-குறட்டை அட்டை சிரட்டை, பறட்டை அண்-அணம் அரண்-அரணம் அனம்-அணம் பட்டனம்-பட்டணம் அணம் கட்டணம், பொட்டணம் அணம்-அடம் ஒத்தணம்-ஒத்தடம் அடம் கட்டடம் அம்-அன்-அனம் மதம்-மதன்-மதனம் இங்ஙனமே ஏனையிரு சுட்டடிகட்கும் ஒட்டிக்கொள்க. எடுத்துக் காட்டில்லன இறந்துபட்டன. இறந்துபட்டிருக்கும் அகரச்சுட்டடியீறுகட் கொத்த இகர அல்லது உகரச் சுட்டடியீறுகளுட் சிலபல, இறந்து படாதிருக்க லாம். எ-டு: இதம்-தப்பிதம் இச்சி-புளிச்சி இச்சு-வரிச்சு இச்சை-பனிச்சை இச்சல்-வரிச்சல் இஞ்சி-குறிஞ்சி இச்சம்-வெளிச்சம் அகு, அசு, அடு, அது, அபு, அவு, அறு; அக்கு, அச்சு, அட்டு, அத்து, அப்பு, அற்று ; அண், அம், அர், அல், அழ், அள், அன் என்னும் ஈறுகளும், இவற்றிற் கொத்த இகரவுகரமுதல் வடிவுகளுமே, இன்று முறையே கு, சு, டு, து, பு,வு, று; க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று; ண், ம், ர், ல், ழ், ள், ன் எனத் தோன்றுகின்றன. இவையெல்லாம் உண்மையிற் சுட்டடியினவாகும். இங்குக் காட்டப்பட்டுள்ள அன், அள், அர், அது, அவை, அ என்பன பாலீறுகளல்ல; அண், அழ் என்பன போன்று இயல்பான பொது வீறுகளே. சில இடப்பெயர்கள் சிலவிடத்துச் சுட்டடியீறுகள் போல் தோன்றும். அவற்றின் வேறுபாடறிதல் வேண்டும். எ-டு : சுட்டடியீறு : அகம்-கழகம் என்பதிற்போல் ஒரு பெயரீறு (அகு+அம்). இடப்பெயர் : அகம் = மனை, இடம். கல்லகம் = கல்விச் சாலை (கற்குமிடம்), கன்மலை, கல்லுள்ள இடம். சுட்டடியீறு : இடம்-ஓர் ஈறு, எ-டு: கட்டிடம் = மனை. இடப்பெயர் : இடம்-ஒரு பெயர்ச்சொல். எ-டு: இருப்பிடம் = இருக்குமிடம். கட்டிடம் = கட்டுகின்ற இடம். ஓர் ஈறு பல வகையில் தோன்றலாம். எ-டு : அவு : இரா-இர-இரவு, செல்-செலவு அன் : அம்-அன், அல்-அன். அந்து : அம்-அந்து, அது-அந்து,அத்து-அந்து. பல சொற்களில் லகரம் தகரமாகத் திரிவதாலும், மெல் என்னுஞ் சொல் மெது என்று திரிந்திருப்பதாலும், அது என்னும் சுட்டடியீறு அல் என்பதன் திரிபாகவே கொள்ளப் பட்டது. அஃது என்பது அது எனத் தொக்கதென்று கொள்வதற்கிடமுண்டேனும், அது என்பதன் வலி இரட்டிய வடிவமான அத்து என்பது, பஃது என்பதோடொப்ப ஆய்த மிடையிட்ட மறுவடிவு கொண்டதென் பதே பொருத்தமாம்.மெது மெத்தென்றாயதுபோல் அது அத்தென் றாயது; பது பத்தென்றாயது. ஆய்தத்தை யடுத்த தகரம், அஃறிணை, கஃறீது, பஃறி, பஃறுளி என்பவற்றிற்போல் றகரமாகத் திரிவதே புணர்ச்சியிலக்கண மாதலால், அஃது பஃது என்பவற்றி லுள்ள ஆய்தம் இயல்பான இடையெழுத் தன்றென்றும், தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட இடைக்காலத் திரிப்பென்றும் அறிந்து கொள்க. சொல்லீறுகள் திரியும்போது, மெலி வலியாகலாம்; வலி மெலி யாகலாம். எ-டு: நீங்கு-நீக்கு, போக்கு-போங்கு. பல்வகைக் குறிப்புச் சொற்கள் அச்சம், விரைவு, ஓசை, ஒளி, வண்ணம், அசைவு, ஊறு முதலிய பல்வேறு பொருள்பற்றிய குறிப்புச் சொற்கள், ஓரொழுங்கு பட்ட ஈறுகளைக் கொண்டிராவிடினும், மக்கள் கருத்தைத் தெளிவாய்ப் புலப்படுத்தற்கு இன்றியமையாதனவாயிருக்கின்றன. எ-டு: அச்சக்குறிப்பு - கபீர், திடுக்கு, துணுக்கு, வெருக்கு. விரைவுக்குறிப்பு - அவக்கு, குபீல்-குபீர், சரேல்-சரேர், திடும், திடீர் , படக்கு, புசுக்கு, பொசுக்கு, விசுக்கு, விருட்டு, வெடுக்கு. ஓசைக்குறிப்பு - கணீர், கிறிச்சு, கீச்சு, சளார், தடால்-தடார், துருட்டு, புளிச்சு, படார், மொலோர். ஒளிக்குறிப்பு - பளிச்சு, பளீர், மினுக்கு. வண்ணக்குறிப்பு - சிவீர், செவேர், வெளேல்-வெளேர். அசைவுக்குறிப்பு - கிணுக்கு, கிணுக்கட்டி, சவக்கு, தொதுக்குப் புதுக்கு. ஊற்றுக்குறிப்பு - கடுக்கு, சுறுக்கு, சுளீர், பரபர, பொதுக்கு, நொளுக்கு, மெதுக்கு. (7) வலியிரட்டல் எ-டு: பகு-பக்கம், பேசு-பேச்சு, நெடு-நெட்டை, கருது-கருத்து, குறு-குற்றம், குற்றி. நெறு-நெற்றி. எழுத்திரட்டல் (Gemination or Doubling of Consonants) என்னும் சொல்லமைதி, ஆரிய மொழிக் குடும்பக் கிளைகளுள் ஐரோப் பாவின் வடமேலைக் கோடியிலுள்ளதும், ஆங்கிலத்தை உள்ளிட் டதுமான, தியூத்தானியத்திற்கே சிறப்பானதென்று (இ) ரிச்சார்டு மாரிசு கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. தனிக்குறிலையடுத்த மெய் உயிரோடு புணரும்போது இரட்டு வது, தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் பொதுவாம். எ-டு: தமிழ்-சொல்+அழகு=சொல்லழகு, இன்+இசை= இன்னிசை E. thin+er = thinner, sit+ing = sitting. (8) போலி (Interchange of Letters) ஒரு சொல்லில், ஓரிடத்தில், ஒரு தனியெழுத்திற்கு அல்லது இணையெழுத்திற்குப் பகரமாக(பதிலாக) முறையே மற்றொரு தனியெழுத்து அல்லது இணையெழுத்து வந்து, பொருள் மாறாதிருப்பது போலியாம். போலிருப்பது போலி. போலுதல்-ஒத்தல். இடம் நோக்கி முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி எனப் போலி மூவகைப்படும். எ-டு: முதற்போலி : நாயிறு-ஞாயிறு, மடலி-வடலி. இடைப்போலி : குடவன்-குசவன்-குயவன்,நெயவு- நெசவு,அரசு அரைசு, நீந்து-நீஞ்சு. கடைப்போலி : கடம்-கடன், கூதல்-கூதர். பொருள் மாறாதிருக்கும் போலியால், செய்யுளில் எதுகை யமைப்பிற்கன்றி மொழிவளர்ச்சிக்கிடமில்லை. ஆயின், போலி முறையைத் தழுவிப் பொருள் வேறுபடும் சொற்கள் மொழியை மிக வளம்படுத்தும். எ-டு: தருக்கு-செருக்கு, பகு-வகு, மீறு-வீறு, கதலி-கசளி,குழல்-குடல் , பழம்-பயம்-பயன், வாயில்-வாசல், மொத்தை- மொச்சை, இடம் -இடன், நாளி-நாழி, நாளி-நாடி. இலக்கணப்போலி (Metathesis) ஒரு தனிச்சொல்லின் எழுத்துகளும் ஒரு கூட்டுச் சொல்லின் உறுப்புகள் அல்லது உறுப்புச்சொற்களும், முன் பின்னாக முறைமாறி வரின் இலக்கணப்போலி எனப்படும். எ-டு: தனிச்சொல் : அலரி-அரளி, கொப்புளம்- பொக்குளம், சதை-தசை, ஞிமிறு- மிஞிறு, விசிறி- சிவிறி. கூட்டுச்சொல் : இல்வாய்-வாயில், இல்முன்று- முன்றில்- முற்றம், கதுவாலி- கவுதாரி, தானைமுன்-முன்றானை. (9) மூவகைச் சொற்கிடக்கை தனிச்சொல், கூட்டுச்சொல், தொடர்ச்சொல் எனச் சொற் கிடக்கை மூவகைப்படும். அவை முறையே ஒரு சொல்லும் இரு சொல்லும் இரண்டிற்கு மேற்பட்ட பல சொல்லுமாகும் . எ-டு: நிலம்; தண்ணீர்; செங்கால் நாரை, வடிம்பலம்ப நின்ற பாண்டியன். கூட்டுச்சொல் வகைகள் (1) இரட்டைக்கிளவி எ-டு: கலகல, விருவிரு (2) இரட்டித்த சொல் ,, செக்கச் செவேர்,சின்னஞ்சிறு (3) அடுக்குத் தொடர் ,, பலபல, திரும்பத்திரும்ப (4) மீமிசைச் சொல் ,, கன்றுக்குட்டி, ஓங்கியுயர்ந்த, (5) இருபெயரொட்டு ,, குமரிமலை, மக்கட்செல்வம் (6) மிகவுச்சொல் ,, ஆண்மகன்,பெண் பெண்டாட்டி (7) முரண்படுசொல் ,, பெண்மகன், பெட்டைப்பசன்கள் (8) இணைமொழி ,, காய்கறி, வாழ்வுதாழ்வு (9) அடைபெற்ற சொல் ,, நன்செய், தலைக்கழகம் (10) கிளவியம் ,, ஆட்சிமாறி, (எச்சத்தொடர்) இந்தியொழியின் (11) தொடரியம் ,, தமிழ் வாழும், தமிழன் (முற்றுத்தொடர்) உயர்வான் அடுக்குத்தொடர் ஒற்றிடை மிக்கும் திரிந்தும் தொக்கும் வரும். எ-டு: பலப்பல, பற்பல, மென்மேலும், நந்நான்கு, வெவ்வேறு. சில சொற்கள் தனிச்சொற்கும் கூட்டுச்சொற்கும் பொதுவாயிருக்கும். ஒரு பொருள் தந்து ஒரு சொல்லாயும் இருபொருள் தந்து இரு சொல்லாயும் இருப்பது பொதுச்சொல். அளித்தேன் = தந்தேன் (ஒருசொல்), வண்டுத்தேன் (இரு சொல்). செய்வான் = புரிவான் (ஒருசொல்), செயற்கை மழை (இரு சொல்). தொடர்ச்சொல் வகைகள் (1) அடுக்குக்கிளவி எ-டு: குடுகுடுகுடு. (2) மீமிசைச்சொல் ,, முதுபழந்தொன்(மொழி). (3) அடுக்குத்தொடர் ,, தீத்தீத்தீ. (4) மிகவுச்சொல் ,, அரைஞாண்கயிறு, பெண் பிள்ளைப் பிள்ளை. (5) அடைபெற்ற சொல் ,, தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன், மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர். (6) கிளவியம் ,, தமிழன் உரிமைபெறவேண்டின் (7) தொடரியம் ,, இந்திய அரசியற் சட்டத்தை மாற்றியமைத்தல் வேண்டும். (10) பொருட்கேற்ற ஒலியமைப்பு பொதுவாக, மெல்லோசைச் சொற்கள் செயலின் மென்மை யையும் வல்லோசைச் சொற்கள் செயலின் வன்மை யையும் உணர்த்தும். எ-டு: குத்துதல் = சதையுள்ள இடத்தில் முட்டியால் அல்லது கத்தியால் தாக்குதல். குட்டுதல் = வன்மையான மண்டையில் முட்டியால் தாக்குதல். முத்துதல் = முகத்தோடு அல்லது வேறுறுப்பொடு முகம் மெல்லப் பொருந்துதல். முட்டுதல் = மண்டை யொடு மண்டை இடித்தல். அரிதல் = சிறிதாய் நறுக்குதல். அறுத்தல் = பெரிதாய் நறுக்குதல். அரிவது அரிவாள்; அறுப்பது அறுவாள். கறித்தல் = கன்று இளம்புல்லை மெதுவாய்க் கடித்தல். கடித்தல் = பெரிதான விலங்கு முதிர்ந்த பயிரை வலிதாகக் கடித்தல். சன்னம் = மெல்லியது, திண்ணம் = திரண்டது. குஞ்சு = மெல்லிதான இளம்பறவை. குச்சு = வல்லிதான சிறுகோல். திண்டு = மெல்லிய பஞ்சணை, திட்டு =வன்னிலமான சிறுமேடு. கருப்பு = இயல்பான கருநிறம். கறுப்பு-சினத்தால் அல்லது முதிர்ச்சியால் நேரும் இருண்ட நிறம். (11) மரூஉ சில தனிச்சொற்களும் கூட்டுச்சொற்களும் தொடர்ச் சொற்களும், வழக்காற்றில் மருவி, அதாவது இலக்கணியரால் ஒப்புக்கொள்ளப் பெறும் வகையில் குறுகியும் திரிந்தும் வழங்கு கின்றன. எ-டு: தனிச்சொல் : எலும்பு-என்பு, தென்கு-தெங்கு, நடுவண்-நாப்பண், நெருநல்-நெருநற்று-நேற்று, பகுதி-பாதி, பெயர்-பேர், பெருமகன்- பெருமான்-பெம்மான், பிரான்; பொழுது-போழ்து-போது, யானை-ஆனை, வியர்-வேர். கூட்டுச்சொல் : அரையுழக்கு-ஆழாக்கு, சுமையடை-சுமடு-சும்மாடு, சோழ நாடு - சோணாடு, தெங்கங்காய்-தேங்காய், புகவிடு-புகட்டு-போட்டு, புழைக்கை-பூழ்க்கை-பூட்கை, போகவிடு-போகடு-போடு, வரை யாடு-வருடை, மார்யாப்பு-மாராப்பு, முகக்கூடு-முக்காடு. தொடர்ச்சொல் அருமருந்தன்ன-அருமாந்த-அருமந்த. கரிவலம் வந்த நல்லூர்-கருவை. பூட்கை, போடு என்பனபோன்ற சொற்கள், மூலநிலையில் கூட்டுச் சொல்லாயினும், மரூஉ நிலையில் ஒருசொற்போல் நின்று ஒரே பொருள் தருதலால், தனிச்சொல்லாகவே கொள்ளப்படும். (12) முன்னொட்டுகளும் அடைகளும் (Prefixes and Epithets) பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு காலமும் முன், பின், முன்னேறு, பின்வாங்கு, இடமும் உடன் உடன்படு மூவிடம் எம், உம், (நும்), தம்எம்பி,உம்பி,(நும்பி),தம்பி. சிறுமை அரி அரிநெல்லி, அரிக்குரல். அரிசி அரிசிப்பல்,அரிசிக்களா அரை அரைத்தவளை உமி அமித்தூறல் ஊசி ஊசிமிளகாய், ஊசித்தொண்டை, ஊசிவெடி எலி எலியாமணக்கு பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு கண் கண்விறகு கதலி கதலிவாழை கிளி கிளியஞ்சிட்டி, கிளிவாய்தல் குட்டி குட்டித்தக்காளி, குட்டிப்பல் குருவி குருவித்தலை, குருவித்தேங்காய் குள்ளம் குள்ளநரி குறு குறுநொய்,குற்றில்-குச்சில் கை கைக்குட்டை,கைந்நாழி சல்லி சல்லிவேர்,சல்லிக்காசு சிட்டு சிட்டுக்குருவி சில் சில்லுக் கருப்புக்கட்டி சிறியாள் சிறியாள்நங்கை சிறு சிறுமணி, சிற்றெறும்பு சின்ன சின்னம்மை,சின்னச்சம்பா சீனி சீனிமிளகாய்,சீனிவெடி, சீனியவரை சுண்டு சுண்டுவிரல்,சுண்டெலி திட்டி திட்டிவாசல் துண்டு துண்டுவெளியீடு நண்டு நண்டுவண்டி நரம்பு நரம்புச்சிலந்தி நரி நரிக்கெளிறு,நரிப்பயறு நாழி நாழிக்கிணறு பிட்டு பிட்டுக்கருப்புக்கட்டி பிழுக்கை பிழுக்கைமாணி பிள்ளை பிள்ளைக்கிணறு, பிள்ளைக்கோட்டை பூ பூஞ்சிட்டு,பூங்குறடு பூச்சி பூச்சிமுள் பூனை பூனைக்காஞ்சொறி பெட்டி பெட்டிக்கடை பொட்டு பொட்டுப்பூச்சி பொடி பொடியிழைப்புளி மணி மணிக்குடல், மணித்தக்காளி குறுமை கட்டை கட்டைவிரல், கட்டைமண் குட்டை குட்டைப்புடல் குள்ளம் குள்ளக்கத்தரி குறள் குறளடி, குறள்வெண்பா குறு குறுங்கணக்கு பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு கூழை கூழைவால் துட்டு துட்டுத்தடி தட்டு தட்டுக்கூடை பள்ளை பள்ளையாடு பருமை (பெருமை) ஆனை ஆனைநெருஞ்சில், ஆனைக்குவளை எருமை எருமைத்தக்காளி கட்டு கட்டெறும்பு கட்டை கட்டைவிறகு கண்டை கண்டைமணி கடா கடாநாரத்தை கழு கழுமுரடு கொட்டை கொட்டையெழுத்து கோ கோக்கதவு சட்டி சட்டித்தலை தடி தடிவழி தாழி தாழிப்பனை,தாழிவயிறு நல் நன்கொடை(பெருங்கொடை) பரவை பரவைச் சட்டி பரு பருநன்னாரி, பருமணல் பாம்பு பாம்புமுள் பூதம் பூதக்கால் பெரு பெரு நாரை, பேரகத்தி பெருத்த பெருத்தஎலி, பெருச்சாளி பேழ் பேழ்வாய் பொத்தை பொத்தைமிளகாய் போந்தான் போந்தான் கோழி போந்தி போந்திக் கால் மலை மலையிலக்கு, மலம்பூண்டு மாடு மாட்டுப்பல் மிடா மிடாத்தவளை முழு முழுமுதல் மொக்கை மொக்கைச்சோளம்- மக்காச் சோளம் மொங்கான் மொங்கான்தவளை மொந்தன் மொந்தன் வாழை மோடு மோட்டெருமை விழு விழுத்தண்டு பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு சிறுபருமை குதிரை குதிரைவெடி நெடுமை ஒட்டகம் ஒட்டகச்சிவிங்கி நாரை நாரைக்கொம்பன் நெட்டை நெட்டைநாரத்தை நெடு நெடுங்கணக்கு பனை பனங்கோரை இளமை இள இளநீர், இளவேனில் கன்னி கன்னிக்கோழி குமரி குமரிவாழை குஞ்சி குஞ்சியாச்சி குட்டி குட்டியப்பன் சிறிய சிறிய தாய் சிறு சிறுகாலை, சிறுபிள்ளை சின்ன சின்னப் பாட்டி நுழாய் நுழாய்ப்பாக்கு நொரு நொருப்பிஞ்சு பச்சை பச்சைப்பிள்ளை பசு பசுங்காய், பசுங்குழவி பிள்ளை பிள்ளையாண்டான், பிள்ளைப்பிறை பூ பூம்பிஞ்சு, பூங்குஞ்சு பை பைங்கூழ் முட்டு முட்டுக்குரும்பை அழியாமை கன்னி கன்னித்தமிழ் குமரி குமரிமதில் நொய் நொய்யம்மை பட்டு பட்டுப் பருத்தி புன் புன்சிரிப்பு பூ பூங்கோரை பூனை பூனைமயிர் வன்மை இரும்பு இருப்பு நெஞ்சு கட்டு கட்டுடம்பு கடு கடுக்காய் கல் கல்மூங்கில், கன்மனம் கள்ளம் கள்ளப்பயறு காடு காட்டுனம் வன்மை கெட்டி கெட்டிக்கம்பி முரடு முரட்டுக் கம்பளி, முரட்டுப் பெண் பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு நன்மை செம் செங்கோல் நல்ல நல்ல தண்ணீர் நல் நல்வினை, நன்பொருள், நற்செய்தி ந நக்கீரன், நப்பசலை, நச்செள்ளை நறு நறுமணம் இனிமை இன் இன்சொல் சருக்கரை சருக்கரைவள்ளி சீனி சீனிக்கிழங்கு தேன்-தேம் தேன்கதலி, தேங்குழல், தேமா தேம்-தீம் தீங்கனி, தீஞ்சுவை, தீந்தமிழ், தீம்புளி தீமை கடு கடும்புலி, கடுஞ்சொல் கொடு கொடுங்கோல், கொடும்பாடு தீ தீவினை, தீக்கனா நஞ்சு நச்சுக்காற்று, நச்சுக் காய்ச்சல் படு படுகொலை, படுகாலி- படுக்காளி (மாடு) பேய் பேய்நாய், பேய்வெள்ளரி அழகு அணி அணியொட்டிக்கால் அம் அங்கயற்கண்ணி அழகு அழகுதேமல் தங்கம் தங்கமேனி பூ பூஞ்செடி பொன் பொன்வண்டு மணி மணிமாடம், மணிவாசல் சிறப்பு அரசு அரசமருத்துவம் ஆணி ஆணிமுத்து குலம்(சாதி) குலமகள், குலக்கோழி செம் செந்தமிழ் தங்கம் தங்கக்குணம், தங்கத்துரை நல் நல்லம்மான், நற்றாய் நல்ல நல்லவேம்பு பொன் பொற்காலம் மணி மணிப்பயல் மாணிக்கம் மாணிக்கவாசகம் முத்து முத்துமழை, முத்துவிலை வீடு வீட்டுப்பெண்டாட்டி (மனைவி) பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு தலைமை அரசு அரசப்பிளவை கோ கோப்பெருந்தேவி, கோநாய்-ஓநாய் தலை தலைமகன் நாயகம் நாயகப்பத்தி, நாயகத் தொங்கல் பெரிய பெரியதனக்காரன் மேல்நிலை தலைமை தலைமையாசிரியர் பெரு பெருந்தரம், பெரும்பாணர் பெரிய பெரிய மூப்பன், பெரியபட்டம், பெரியதிருவடி முது முதுகண், முதுகண்ணன் Jizik, இள இளங்கண்ணன், கீழ்நிலை இளங்கேள்வி குட்டி குட்டிமணியம், குட்டித்தம்பிரான் சிறு சிறுபாணர், சிறுதரம் சிறிய சிறிய திருவடி சின்ன சின்ன மூப்பன், சின்னப்பட்டம் முன்மை அடி அடிநாள் கன்னி கன்னிவேட்டம் தலை தலைப்பிள்ளை, தலைக்கழகம் புது புதுப்பெயல் தாழ்வு கட்டை கட்டைப்பொன், கட்டைக்குரல் கழுதை கழுதைப் பொன்வண்டு, கழுதை மொச்சை காக்கை(கருமை) காக்கைச்சோளம், காக்கைப்பிசின் காடு காட்டுப்பெண்டாட்டி (வைப்பு), காட்டுமுருங்கை கொடு கொடுந்தமிழ் சின்ன சின்னப்பயல், சின்னக் குலம் நாடு நாட்டுத்தட்டு நாய் நாய்வேம்பு, நாய்வேளை பரு பருவேலை பன்றி பன்றிவாகை பீ பீக்கருவேல், பீக்காக்கை புல் புன்செய் போலி போலிப்பட்டு பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு போன்றான்- போஞ்சான்வேலை போஞ்சான் மட்டம் மட்டக்குதிரை, மட்டப்பொன் மட்டி மட்டித்தையல் மட்டை மட்டையரிசி மடையன் மடையன் சுராலை (சாம்பிராணி) மண் மண்பாக்கு இழிவு கொச்சை கொச்சைத்தமிழ் சிறு சிறுநீர், சிறுப்பெரியார் பட்டி பட்டிமகன் பச்சை பச்சைப்பொய் வண்டை வண்டைப்பேச்சு தூய்மை தனி தனித்தமிழ் தூ தூமலர் பச்சை பச்சைமலையாளம் வால் வாலறிவு வெள் வெண்பா வெள்ளை வெள்ளை மனம் தெய்வத்தன்மை திரு திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருநீறு, திருவரங்கம். தே தேவாரம் தமிழகத்தில் பிறப்போடு தொடர்புடைய ஆரியக் குலப் பிரிவினை ஏற்பட்டபின், பொன்னிற வுயிரிகள் பார்ப்பார என்றும் கருநிற வுயிரிகள் பறை என்றும் அடைபெற்றுள்ளன. எ-டு: பார்ப்பார நாகம், பறை நாகம். சில பொருள்களின் சிறப்பியல்பைக் காட்டும் அடைமொழி, அப் பொருள்களைச் சிறப்பாகக் கையாளும் வகுப்பாரின் பெயராகும். எ-டு: குறவன் போகணி = பெரிய போகணி. அரச மருத்துவம் = அரசருக்குச் செய்யும் விலக்கூணில்லா மருத்துவம். சில கருவிப்பெயர்களின் அடைமொழி, அக் கருவியாற் செய்யப் படும் அல்லது செப்பஞ் செய்யப்படும் பொருளின் பெயராகும். எ-டு: கோணியூசி = பெரியவூசி. (13) பின்னொட்டுகளும் ஈறுகளும் (Suffixes) பொருள் பின்னொட்டு எடுத்துக்காட்டு சிறுமை இல் குடி-குடில், தொட்டி-தொட்டில் முறம்- முற்றில்-முச்சில் கை கன்னி-கன்னிகை, குடி- குடிகை- குடிசை பெருமை அம் கம்பு-கம்பம், விளக்கு- விளக்கம், மதி மதியம் (முழுநிலா), நிலை-நிலையம் இடம் ஆரம் கொட்டாரம், பண்டாரம் (பண்டசாலை), வட்டாரம் இறையிலிநிலம் புறம் அடிசிற்புறம், அறப்புறம், புதுக்குப்புறம் (14) புணர்ச்சி இருசொற் புணர்வது புணர்ச்சி. மொழி பொதுமக்களால் ஆக்கம் பெற்றதாகலின், அதன் புணர்ச்சியும் அவரது அமைப்பே. கவனித்தறியப்பெறாது ஏற்கெனவே யிருந்த சொற்கூட்டு நெறிமுறை களையே, புணர்ச்சி நெறிமொழிகள் (விதிகள்) என எடுத்துக்கூறினர் இலக்கணியர். இயல்புபுணர்ச்சி, திரிபுபுணர்ச்சி எனப் புணர்ச்சி இருவகைப்படும். ஒருவகை வேறுபாடுமின்றி இயல்பாயிருப்பது இயல்பு புணர்ச்சி; ஏதேனுமொரு வகையில் திரிவது திரிபு புணர்ச்சி. திரிதல்- வேறுபடுதல். அது தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப் படும். முன்னில்லாத எழுத்தோ அசையோ தோன்றுவது தோன்றல்; ஓரெழுத்து மற்றோரெழுத்தாக மாறுவது திரிதல்; முன்னுள்ள எழுத்தோ அசையோ மறைவது கெடுதல். புணர்ச்சியிற் புதிதாய்த் தோன்றும் அசை, இருசொற் களை அல்லது ஒரு சொல்லையும் ஒரு சொல்லுறுப்பையும் சார்ந்து நின்று இயைப்பதால் (இசைப்பதால்), சாரியை எனப்படும். இயல்பு புணர்ச்சி சாத்தன்+வந்தான் = சாத்தன் வந்தான் நல்ல+பையன் = நல்ல பையன் பால்+இனிது = பாலினிது திரிபு புணர்ச்சி தோன்றல் (Insertion) வாழை+காய் = வாழைக்காய் அவரை+பந்தல் = அவரைப்பந்தல் களா+பழம் = களாப்பழம்,களாம்பழம் பூ+செடி = பூச்செடி (பூக்கும் செடி) பூ+செடி = பூஞ்செடி(அழகிய செடி) பணத்தை+கொடு = பணத்தைக் கொடு ஊருக்கு+போ = ஊருக்குப்போ வர+சொல் = வரச்சொல் இ+நாள் = இந்நாள் வெள்+ஆடு = வெள்ளாடு நாடு+ஆண்மை = நாட்டாண்மை இவை எழுத்துத் தோன்றல். செக்கார்+குடி = செக்காரக்குடி புளி+பழம் = புளியம்பழம் கண்+பொத்தி = கண்ணாம்பொத்தி இவை சாரியைத் தொன்றல். திரிதல் (Mutation) நல்+செய் = நன்செய் வெள்+கலம் = வெண்கலம் செம்+தாமரை = செந்தாமரை வெம்+நீர் = வெந்நீர் வேம்பு+இலை = வேப்பிலை தண்+நீர் = தண்ணீர் உள்+நாக்கு = உண்ணாக்கு கல்+தாழை = கற்றாழை நல்+நிலம் = நன்னிலம் உள்+து = உண்டு, ஈன்+து = ஈற்று இவை திரிதல். கெடுதல் (Omission) மரம்+வேர் = மரவேர் தொல்காப்பியம்+நூல் = தொல்காப்பிய நூல் இவை கெடுதல். அன்று+கூலி = அற்றைக்கூலி மண்+கட்டி = மண்ணாங்கட்டி இவை தோன்றலும் திரிதலும். பட்டினம் = பிள்ளையார் = பட்டினத்துப்பிள்ளையார் நகரம்+ஆன் = நகரத்தான் இவை தோன்றலும் கெடுதலும். வேம்பு+காய் = வேப்பங்காய் பனை+தோப்பு = பனந்தோப்பு இவை தோன்றலும் திரிதலும் கெடுதலும். மரூஉப் புணர்ச்சி சில சொற்கள் ஒலிநெறிப்படி ஒழுங்காய்ப் புணராது மருவிப் புணரும். அப் புணர்ச்சி மரூஉப் புணர்ச்சியாம். மருவுதல், நெறி திறம்புதல். எ-டு: ஆதன்+தா = (ஆந்தா)-ஆந்தை அகம்+கை = அங்கை. நாழி+உரி = நாழுரி-நாடுரி மக+கள் = மக்கள் உள்ளங்கை (உள்+அங்கை) என்பது அங்கையின் நடுப்பகுதி. இதில் அம் என்பது சாரியையன்று. எந்தை, தந்தை என்பன மரூஉப் புணர்ச்சியல்ல. இவை எம்+தா, தம்+தா எனப் பிரியும். தா என்பது தந்தையைக் குறிக்கும் பெயர்ச் சொல். தா+தா = தாதா-தாதை (தந்தையின் தந்தை)-இயல்புப்புணர்ச்சி தா+தா = தாத்தா (தந்தையின் தந்தை)-திரிபுப்புணர்ச்சி தாதை என்பதிற் போன்றே, எந்தை, தந்தை, ஆந்தை, பூந்தை என்பவற்றிலும் தை என்பது தா என்பதன் திரிபாகும். ஒ.நோ: எம்பி(ன்) எங்கை எவ்வை எம்முன் எந்தை நும்பி(ன்) நுங்கை நுவ்வை நும்முன் நுந்தை தம்பி(ன்) தங்கை தவ்வை தம்முன் தந்தை எம்பின் = எமக்குப் பின் பிறந்தான். கை = தங்கை (பிங்.). எங்கை = எமக்குச் சிறியவள். எம் + அவ்வை = எவ்வை. இதில் அவ்வை என்னும் அன்னையின் பெயர் அன்னை போலும் அக்கையைக் குறித்தது. இச் சொல் சில பழஞ்செய்யுள்களில் தங்கையைக் குறிப்பது, காதல் பற்றிய மரபு வழுவமைதியென அறிக. என் தந்தை, என் தம்பி, என் தங்கை என்பனவெல்லாம் வழக்குப் பற்றிய இடவழுவமைதியே. கார்காலம், வடகோடு, கோவூர்கிழார், நாடுகிழவோன் எனச் செய்யுள் வழக்கிலும், கேடுகாலம், பேறுகாலம், விறகுதலையன், விறகு காடு, வடகரை, மழைகாலம் என உலக வழக்கிலும், வலிமிகாது வழங்கு வதாலும்; நான்கு, வெட்கு என்னும் திரிபு வடிவுகளுடன் நால்கு, வெள்கு என்னும் இயல்பு வடிவுகளும் வழங்கி வருவதாலும்; பல்கு, பல்பொருள், சில்கால், வல்சி, வள்பு எனச் சில சொற்கள் என்றும் இயல்பாகவே யிருப்பதனாலும்; முதற்காலத்தில் தோன்றல் திரிதற் புணர்ச்சி அத்துணைக் கண்டிப்பா யிருந்ததில்லை யென உய்த்துணரலாம். மூவகைப் புணர்ச்சியும் ஒலியிசைவை மட்டுமன்றி, இரு பொருட் கிடைப்பட்ட நெருங்கிய தொடர்பையும் உணர்த்துதல் காண்க. (15) ஓரியலமைப்பு (Uniformity of Words) ஒருதுறைப்பட்ட சொற்களையெல்லாம், முதலோ ஈறோ எதுகையோபற்றி ஒத்தவடிவாக்குவது ஓரியலமைப்பாம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு (ஒன்பது), பத்து, நூறு என்னும் முதற்காலத்து எண்ணுப் பெயர்களெல்லாம் உகரத்தில் இறுதல் காண்க. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்னும் திசைப் பெயர்களும் அங்ஙனமே. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என்னும் பெண்பாற் பருவப் பெயர்கள் ஐகாரத்தில் இறுகின்றன. அதோ, அந்த, அவன், அவள், அவர், அது, அவை, அம்பர், அங்கு, அவண், அதோள்-அதோளி. இதோ,இந்த,இவன், இவள், இவர், இது, இவை, இம்பர், இங்கு, இவண், இதோள்-இதோளி. உதோ, உந்த, உவன், உவள், உவர், உது, உவை, உம்பர், உங்கு, உவண், உதோள்-உதோளி. எதோ, எந்த, எவன், எவள், எவர், எது, எவை, எம்பர், எங்கு, எவண், எதோள்-எதோளி. இத்தகைய ஓரியலொழுங்குபட்ட சுட்டு வினாச் சொற்கள் வேறெம் மொழியிலும் இல்லை. அதா, அந்தா, அன்னா, அன்ன முதலிய சொற்கட்கும் இங்ஙனமே ஒட்டிக்கொள்க. (16) ஒப்புமை யமைப்பு (Analogy) ஒரு சொல்லின் எதுகை வடிவில் இன்னொரு சொல்லை அமைப்பது ஒப்புமை யமைப்பாம். எதிர்மறைச் சொற்கள் இயற்கை என்னும் சொல்லமைப்பைப் பின்பற்றி, செயல் என்னும் தொழிற்பெயரோடு கை யீறு சேர்த்துச் செயற்கை என்றமைத்தது ஒப்புமை யமைப்பே. ஏனை யெடுத்துக்காட்டுகள் வருமாறு: அறம், மறம்; இறப்பு, பிறப்பு; இதை (புதுக்கொல்லை), முதை (பழங்கொல்லை); இணங்கு, பிணங்கு; இன்பு(இன்பம்), துன்பு (துன்பம்); குற்றம், நற்றம்; சிறு, பெரு; சிற்று, பெற்று (பெரியது); சின்னஞ்சிறிய, பென்னம்பெரிய; தாய், சேய்; தெருள், மருள்; நலம், பொலம்; நன்செய், புன்செய்; நாடு, காடு; பேரடி, சீறடி; நாட்டம், பாட்டம்; முந்து, பிந்து. இனப்பொருட் சொற்கள் நாற்றிசைக் காற்றுப்பெயர்களுள், வாடை கோடை என்பவும் கொண்டல் தென்றல் என்பவும் ஒப்புமை யமைப்பாம். ஒருபொருட் சொற்கள் கொற்றம், வெற்றம். தொடர்பற்ற சொற்கள் விடை-விடலை, கடை-கடலை, தொடை-தொடலை, முடை-முடலை; ஐ-(ஐந்து) அஞ்சு, பை-பஞ்சு, மை-மஞ்சு, நை-நஞ்சு. (17) நானிலக் கருப்பொருட் சொற்கள் நிலைத்திணை (தாவரம்), இயங்குதிணை (சங்கமம்) என்னும் இருவகுப்புயிரிகளுள், சில பல ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாக உரியனவாகும். முந்தியல் தமிழர் குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்திருந்த போதே, மூவிடச் சுட்டுப் பெயர், வினாப் பெயர், முறைப்பெயர், வண்ணமும் வடிவும் அளவும் சுவையும் ஊறும்பற்றிய குணப் பெயர், இன்றியமையாத வினைச் சொற்கள் முதலிய அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் அமைந்து விட்டன. பயிர் பச்சை, விலங்கு பறவை, உணவு வகை, தொழில்முறை, கருவிபடைக்கலம், பழக்க வழக்கம், கொள்கை கோட்பாடு, குடியிருப்பிடம் முதலிய பல்வேறு கருப் பொருள்கள்பற்றிய சொற்களும் தோன்றிவிட்டன, அதன்பின் குறிஞ்சியடுத்த முல்லை நிலத்திற்குப் பரவிய போது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள்பற்றிய சொற் கள் பிறந்தன. அதன்பின் முல்லையடுத்த மருதநிலத்திற்குப் பரவியபோது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப் பொருள்கள்பற்றிய சொற்கள் தோன்றின. அதன்பின், மருதத்தை யடுத்த நெய்தல்நிலத்திற்கு மருத நகர் மீன்பிடியாளர் குடியேறி வாழ்ந்த போது, அந் நிலத்திற்குச் சிறப்பாகவுரிய கருப்பொருள்கள்பற்றிய சொற்கள் எழுந்தன. குறிஞ்சியும் முல்லையும் முதுவேனிலில் வறண்ட நிலையே பாலையாதலின், அந் நிலத்துப் பிற்காலத் துண்டான சொற்க ளெல்லாம் தொழிலும் கருவியும் பழக்கவழக்கமும் கொள்கையும் பற்றியனவே. குறிஞ்சியடுத்தும் முல்லையடுத்தும் நெய்தலிருக்கவுங் கூடுமா யினும், குமரிக்கண்டத் தமிழர் குறிஞ்சியினின்று ஆற்றையொட் டியே படிப்படியாகப் பரவியதாகத் தெரிவதால், மருதநிலைக்குப் பின்பே நெய்தல் சென்றிருத்தல் வேண்டும். முதற்கால மாந்தர் செயற்கை நீர்நிலை அமைக்கத் தெரியாதிருந்த காலத்தில், இயற்கை நீர்நிலை யான ஆற்றையே நம்பியிருந்தனர். இற்றைத் தமிழகத்திற் போன்றே பழம்பாண்டி நாடான குமரிக்கண்டத்திலும், பெரு மலைத் தொடர்கள் மேல்கோடியிலே இருந்தன. அவற்றினின்று பஃறுளியும் குமரியும் போன்ற ஆற்றை யடுத்தே மக்கள் பரவின், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற முறையிலேயே நிலங்களை அடைந்திருக்க முடியும். இந் நிலைமை இற்றைத் தமிழகத் திற்கும் ஏற்றதாதல் காண்க. முந்தியல் மாந்தர் முந்நிலை நாகரிகத்தையும் முறையே அடைதற் கேற்றவாறு, குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய முந்நிலமும் அடுத்தடுத் திருத்தல் தமிழ் நாட்டிற்போல் வேறெங் கணுமில்லை. வெற்பன், குறும்பொறைநாடன், ஊரன், துறைவன், விடலை என்னும் ஐந்திணைத் தனியூர்த் தலைவராட்சிக்குப் பின், பலவூர்க் கிழமை பூண்ட வேளிரின் குறுநில ஆட்சி வந்து, அதன்பின் சேர சோழ பாண்டியரின் பெருநிலை ஆட்சி தோன்றியபோது, தமிழ் ஐந்திணைச் சொற்களும் சேர்ந்த பெருவள மொழியாயிற்று, மருதநிலத்தில் நகர்கள் தோன்றிய நாகரிகம் வளர்ந்து பல்வேறு தொழில்களும் கலைகளும் அறிவியல்களும் ஏற்பட்ட பின், தமிழ் மேன்மேலும் வளர்ந்தோங்கிற்று. தமிழ் ஐந்திணை மக்கட்கும் பொதுவாயிருக்கும் இஃ தொன்றே, தமிழரெல்லாம் ஓரினமென்றும், தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வாழ்ந்து வருபவரென்றும், தொழில் தழுவாது பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரி வினையால் தூய மாபெருந் தமிழினம் சின்ன பின்னமாகச் சிதைவுண்டதென்றும், தெரிவிக்கப் போதிய சான்றாம். 2. பொருட்டிரிவு முறைகள் (Semantic Changes) (1) உவமையாகு பெயர் சில பெயர்கள் உவமை யடிப்படையில் அமைந்துள்ளன. எ-டு: மாங்காய்-மாங்காய்போன்ற நெஞ்சாங்குலை தக்கட்டி-தக்கட்டிக்காய் அல்லது கனிபோன்ற பட்டைக் f£o(sty). எருமை நாக்கு-எருமைநாக்குப் போன்ற மீன். கிளிமூக்கு-கிளிமூக்கு வடிவான மாம்பழம். சில பொருள்களின் பெயர், பண்பியாகுபெயர் முறையில் அப் பொருள்களின் நிறத்தைக் குறிக்கின்றன. எ-டு: சாம்பல் வாழை, காக்கைப் பிசின், பவழச் சோளம், குருதிக்காந்தள், பொற்கொன்றை, மயிற்கழுத்துச் சேலை. சில பெயர்கள் உவமைத் தொகையாய் அமைந்துள்ளன. எ-டு: ஆரால்மீ னவரை. கோழிக்கால் தையல், பாம்புக் கற்றாழை, வௌவால் மீன். சில பெயர்கள் உவமை யடிப்படையில் அமைந்து, தெளிவுபற்றி ஈறு பெற்றும் திரிந்தும் உள்ளன. எ-டு: ஆனைக்கொம்பன்-ஒருவகைச் சம்பாநெல். காடைக்கண்ணி-காடைக்கண் போன்ற ஒருவகைச் சிறு தவசம் (தானியம்), அதன் பயிர். குதிரைவாலி-குதிரைவால்போற் கதிர்தள்ளும் ஒரு வகைச் சிறு தவசப் பயிரும் அத் தவசமும். நுணா-நுணல் (மணல் தவளை) போன்ற காய் காய்க்கும் மரவகை. (2) மூவகைத் தகுதி வழக்கு இடக்கரடக்கல் (Euphemism), மங்கலம் (Euphemism), குழூஉக் குறி (Conventional terms) என்னும் மூவகைத் தகுதி வழக்கு முறை யிலும், சில சொற்களும் வழக்காறுகளும் தோன்றியுள்ளன. எ-டு: இடக்கரடக்கல் : ஒன்றிற்கு இரண்டிற்குப்போதல், பவ்வீ. மங்கலம் : கொடித்தட்டுதல் = பாம்பு கடித்தல். பெரும்பிறிது = சாவு. குழூஉக்குறி : செந்தலை = அரைக்கால். கருந்தலை=கால். தங்கான் = அரை. அரும்பு = அரிசி. (3) ஓரினப்படுத்தலும் (Generalisation) வேறினப்படுத்தலும் (Discrimination). ஓரினப்படுத்தல் பல்வேறுவகைப் பொருள்களை, ஒரு பொதுத்தன்மைபற்றி ஒரு சொல்லாற் குறித்தல் ஓரினப்படுத்தலாம். எ-டு: மாடு-பெற்றமும் (காளையும் ஆவும்) எருமையும். மான்-உழை, புல்வாய், நவ்வி, புகர் (புள்ளிமான்), மரை, வருடை, கடமை, மிழா, காசறை, கவரி, குதிரை, முதலியன. தும்பி-முன்தூம்பு (proboscis) உடைய யானையும் குளவியும். விலங்கு, பறவை, மரம், மீன் என்பன மிக விரிவாக ஓரினப் படுத்தும் சொற்கள். பெருநெல்லி, அரிநெல்லி, கீழ்வாய்நெல்லி என்பவற்றை நெல்லி யினப்படுத்தியதும் ஓரினப்படுத்தலே. வேறினப்படுத்தல் ஒரே இனமான அல்லது ஒத்த தோற்றமுள்ள பொருள்களை, நுண்ணிய வேறுபாடுபற்றி வெவ்வேறு சொல்லாற் குறித்தல் வேறினப் படுத்தலாம். எ-டு: இலை-இலை, தாள், தோகை, ஓலை. நிலைத்திணை-பூஞ்சணம், பாசம், பாசி, காளான், புல், பூண்டு, கோரை, பயிர், தட்டை, கொடி, தூறு, செடி, மரம். நுளம்பு-நுள்ளான், உலங்கு. சமைத்த தவசவுணவு-சோறு, கஞ்சி, கூழ், களி. இனி, சிறப்புச்சொற்களன்றிப் பொதுச்சொற்களே வெவ் வேறடை பெற்றுப் பொருள்களை வேறினப்படுத்தலு முண்டு. எ-டு: சிற்றெறும்பு, பொடியெறும்பு, ஆயெறும்பு, செவ் வெறும்பு, மழை யெறும்பு, மண்டை யெறும்பு, பிள்ளையார் எறும்பு, கட்டெறும்பு. (4) ஐவகைப் பொருள்திரிபு (1) வேறுபாடு (Variation) சொற்கள் குறித்தற்குரிய பொருளை விட்டுவிட்டு வேறொன் றைக் குறிப்பது வேறுபாடாம். அது உயர்பு, இழிபு, தொல்லியல்பு என முத்திறப்படும். உயர்பு (Elevation) சொல் இயற்பொருள் உயர்புபொருள் களிப்பு கட்குடிப்பு, குடிவெறி மகிழ்ச்சி குட்டி அஃறிணையிளமை ருதிணையிளமை கடைக்குட்டி, குட்டியப்பன், பிள்ளைகுட்டி முதலிய வழக்குகளை நோக்குக. இழிபு (Degradation) சொல் இயற்பொருள் இழிபுபொருள் சூழ்ச்சி நற்சூழ்ச்சி தீய சூழ்ச்சி தேவடியாள் தேவபத்தினி விலைமகள் கூத்தி கணிகை, நடிகை வைப்பாட்டி சேரி முல்லைநிலத்தூர் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு சிறுக்கி சிறுமி கீழ்மகள் பறை தோற்கருவி பிணப்பறை காமம் திருமணக்காதல் இணைவிழைச்சு ஆசை அந்தணன் அருளாளும் துறவி பிராமணன் தொல்லியல்பு சொல் முற்பொருள் பிற்பொருள் கோயில் அரண்மனை தெய்வப்படிமை இருக்கும் இடம் பண்டாரம் களஞ்சியம், சிவமடத்தம்பிரான், ஆண்டி பொக்கசச்சாலை தோள் nk‰if(arm) சுவல் (தோட்பட்டை) கோயில் என்னும் சொல் உயர்படைந்ததாகவும், பண்டாரம் என்னும் சொல் ஆண்டி என்னும் பொருளின் இழிபடைந்ததாகவும், கொள்ளலாம். (2) விரிபு (Extension) ஒரு சொல் தன் பொருட்கு இனமானவற்றையும் குறிக்குமாறு ஆளப்பெறுவது விரிபாம். சொல் இயற்பொருள் புதிதாய் விரிவடைந்தபொருள் கொல்லன் தச்சன் ஐங்கொல்லருள் ஒருவன் தோடு காதோலை காதிலணியும் பொன்னோலை, பொற்கம்மல், கற்கம்மல் பொன் தங்கம் கனியம் (metal) ஊறுகாய் ஊறும்காய் ஊறும் காய்கனி கிழங்கு மலர் (3) வரையறை (Restriction) ஒரு சொல், தான் குறிக்கக்கூடிய பலபொருள்களுள் ஒன்றற்கே அல்லது அதன் ஒரு கூற்றிற்கே, சிறப்பாக ஆளப்பெறுதல் வரையறையாம். சொல் குறிக்கும்பொருள்கள் வரையறைப்பொருள் மனை வீடு, மனைவி, வீட்டுநிலம் யாம் இருவகைத் தனித்தன்மைப்பன்மை தன்மைப் பன்மை நாம் இருவகைத் உளப்பாட்டுத் தன்மைப் தன்மைப் பன்மை பன்மை பிள்ளை ஆண், பெண் ஆண் (கொங்குநாடு) பெண் (பாண்டிநாடு) மணம், குணம், ஒழுக்கம் என்னும் பொதுச்சொற்களை நல் வகைக்கும், நாற்றம், வீச்சம், வினை என்னும் பொதுச் சொற்களைத் தீய வகைக்கும், வழங்குவதும் வரையறையே. (4) சிறப்பிக்கை (Specialisation) பல பொருள்கட்குப் பொதுவான சொல்லை அவற்றுள் தலை சிறந்ததற்கு ஆள்வது சிறப்பிக்கையாம். சொல் பொதுப்பொருள் சிறப்புப்பொருள் அடியார் பல்வேறு அடியார் இறைவனடியார் பேறு(காலம்) பல்வகைப்பேறு மக்கட்பேறு நெய் பல்வகை நெய் ஆவின் நெய் மலர்(அடி) பல்வேறு மலர் தாமரைமலர் மக்கட்பேறு இல்லற வாழ்க்கையிற் சிறந்த பேறாகக் கருதப் பட்டமை, பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (குறள். 61) என்னுந் திருக்குறளா லறிக. பெற்றோர் = சிறந்த பேறுபெற்ற தாய் தந்தையர். புலாலுண்பார் கறி என்னும் சொல்லாற் புலாலைக் குறித்தலும் சிறப்பிக்கையே. (5) பொதுப்பிக்கை (Generalisation) சிறப்புப் பொருட்சொல்லைப் பொதுப்பொருளில் ஆள்வது பொதுப்பிக்கையாம். இது சிறப்பிக்கையின் மறுதலை. சொல் சிறப்புப்பெயர் பொதுப்பொருள் எலி வெள்ளெலி எலி தாமரை செந்தாமரை தாமரை தூங்குதல் தொங்குகட்டிலில் உறங்குதல் அல்லது தொட்டிலில் உறங்குதல் பொருட்பெருக்கமும் பொருளிழப்பும் ஒரு கருத்தினின்று வேறொரு கருத்துத் தோன்றுவதால், பொது வாகச் சொற்களின் பொருள்கள் இரண்டும் பலவுமாகப் பெருகுவ துண்டு. ஏதேனுமொரு சிறப்புப்பொருள் குறித்த அடைபெற்ற சொல்லைப் பொதுப்பொருளில் வழங்கின், அச் சிறப்புப் பொருளடை தன் பொருளை இழந்துவிடும். எ-டு: பொருட்பெருக்கம்: காளை = எருது, மறவோன். திரு = செல்வம், அழகு, தெய்வத்தன்மை. பள்ளி = படுக்கை, படுக்கையறை, வீடு, கோயில், கல்விச்சாலை. பொருளிழப்பு: அடைபெற்றசொல் சிறப்புப்பொருள் பொதுப்பொருள் எண்ணெய் எள்ளின்நெய் நெய்ப்பொருள் தமப்பன்(தகப்பன்) தம் அப்பன் அப்பன் தண்ணீர் குளிர்ந்த நீர் நீர் (2) சொற்றொடராக்கம் (தோரா. கி.மு. 25,000) தொடரியம் என்னும் முற்றுச் சொற்றொடர், இக்காலத்திற் போன்றே முதற்காலத்திலும் (எழுவாய் பயனிலையென்னும்) ஈருறுப்பு களையோ, (அவற்றொடு செயப்படுபொருளும் சேர்ந்த) மூவுறுப்பு களையோ கொண்டிருத்தல் வேண்டும். ஆயின், அவை ஈறும் இடை நிலையுமற்ற பகாச்சொற்களாகவே யிருந்திருக்கும். அறி என்பது அறிவு என்றும், கெடு என்பது கேடு என்றும், செய் என்பது செய்கை யென்றும், இன்றும் பொருள்படுதல் காண்க. அறிகொன் றறியா னெனினும் (குறள். 638) கெடுவின்று மறங்கெழு சோழர் (புறம். 39:7) களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடு. 171) அடி, விழி, தள், சொல் முதலிய எத்துணையோ வினை யடிகள், இன்றும் உலக வழக்கிற் பெயராகவும் வழங்குகின்றன. சில மலையாளப் பழமொழிகளில் நல் (நல்லு) என்னும் பண்படி நன்று என்று பொருள் படுகின்றது. உண்டு இல்லை என்பனவும், இவை போன்ற பிறவும், இன்றும் முக்காலத் திற்கும் பொதுவாம். குறிப்பு வினைகள் முன்பின் வரும் சொற்றுணைகொண்டு இக்காலத்தில் ஒரு காலத்தை உணர்த்துதல் போன்றே, தெரிநிலை வினையடிகளும் முதற்காலத்தில் உணர்த்தியிருத்தல் வேண்டும். பண்டைத் தமிழிலக்கியமெல்லாம் செய்யுள் வடிவாகவே யிருப்பினும், பொதுமக்கள் பேச்சு என்றும் உரைநடையே யென்பதை மறந்து விடல் கூடாது. ii செய்யுள் நடை (தோரா. கி.மு. 15,000) தமிழ மாந்தர் நீண்ட காலமாக உரைநடையிலேயே பேசிவந்த பின், மதி விளக்கத்தாலும் உணர்வெழுச்சியாலும் தூண்டப்பட்டு தெய்வப்பற்று, காதல், போர், வாழ்த்து, கதை, வரலாறு முதலிய பல பொருள்கள்பற்றி, எளியநடையில் தென்பாங்கும் சிந்தும் போன்ற இசைப்பாட்டுகளும், அகவலும் வெண்கலிப்பாவும் இராமப்பய்யன் அம்மானையும் போன்ற செய்யுள்களும், இயற்றத் தொடங்கினர். மோனையெதுகை யமைப்பும் சொற்சுருக்கமும் பொருட்செறிவும் அவர் உள்ளத்தைக் கவர்ந்ததினால், பல்வேறு பொருள்பற்றிய பழமொழிகளும் ஒவ்வொன்றா யெழுந்தன. (4) நால்வகை எழுத்து (தோரா. கி.மு. 12,000) அன்றாட வாழ்க்கைப் பேச்சும் பண்டமாற்றுரையாட்டும் காதலறிவிப்பும், வாய்மொழியாக நிகழ்த்துவது நேரிலன்றித் தொலைவிற் கூடாமையின், நாளடைவில் நால்வகையெழுத்து முறைகள் ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றின. அவை, (1) படவெழுத்து (Pictograph), (2) கருத்தெழுத்து (Ideograph), (3) அசையெழுத்து (Syllabary), (4) ஒலியெழுத்து (Phonetic Characters) என்பன. எழுத்து என்பதன் முதற்பொருள் படம் அல்லது ஓவியம் என்பதே. எழுதுதல்-வரைதல். இன்றும் படமெழுதுதல் என்னும் வழக்கிருத்தல் காண்க. (5) எழுதப்பெற்ற இலக்கியம் (தோரா. கி.மு. 11,000) ஒலியெழுத்துத் தோன்றியபின் கதை, வரலாறு, கணக்கு, அறம், அரசியல், மணவின்பம், போர், மருத்துவம், கணியம், இசை,நாடகம், சமயம், புகழ்ச்சி, வழுத்து முதலிய பலதுறைகள் பற்றிப் பனுவல்களும் எழுந்தன. இலக்கு என்பது குறி அல்லது குறிக்கோள். மக்கள் வாழ்க்கை யின் சிறந்த குறிக்கோளை எடுத்துக்கூறி, அவரைத் திருத்துவதும் உயர்த்து வதுமே பனுவலின் அல்லது நூலின் நோக்கமாதலின், அவையிரண்டும் இலக்கியம் எனப் பெயர் பெற்றன. இலக்கு+இயம் = இலக்கியம். பண்டை விற்பயிற்சியாளர், முறையே பருப்பொருள், நுண் பொருள், சுழலாப் பொருள், சுழல்பொருள் ஆகிய நால்வகை இலக்கினூடு எய்து பயின்றனர். இவற்றையே, பெருவண்மை சிறுநுண்மை சலம் நிச்சலம் (வாரணா. 56) என்று பாரதம் கூறும். பெருவண்மை என்பது மரத்தின் அடி போல்வது; சிறு நுண்மை என்பது மரத்தின் மேலுள்ள சிற்றிலை போல்வது; சலம் நிச்சலம் என்பன மரத் துச்சியில் அமைக்கப் பெறும் திரிபன்றியும் சுழலாச் சக்கரமும் போல்வன. இலையை இலக்கென்பது இன்றும் தென்பாண்டி நாட்டு வழக்காகும். சிறுநுண்மைக்குப் பெரும்பாலும் இலையையே குறியாகக் கொண்டமையால், இலக்கு என்னும் சொற்குக் குறி என்னும் பொருள் தோன்றிற்று. (6) இலக்கணம் (தோரா. கி.மு. 10,000) இலக்கணமும், மொழியின் அல்லது இலக்கியத்தின் சிறந்த அமைப்பையும் நடையையும் எடுத்துக்கூறுவதையே குறிக்கோ ளாகக் கொண்டமையின், அப் பெயர் பெற்றது. இலக்கு+அணம் = இலக்கணம். உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலனெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே (தொல். 993) என்னும் தொல்காப்பிய நூற்பாவில், குறி என்னுஞ் சொல் இலக்கணத்தைக் குறித்தல் காண்க. இலக்கியம் இலக்கணம் என்னும் இருசொல்லும் ஒரே முதனிலையே. பொருள் வேறுபாடுபற்றி ஈறு வேறுபட்டன. இவையிரண்டும் முதனிலை யினாலும் ஈற்றினாலும் தூய தென்சொல்லே யென்று தெளிக. இவை வடமொழியில் முறையே லஷ்ய லக்ஷ்ண என்று திரியும். ஆயின், அங்கு இலக்கண விலக்கியங்களைக் குறிப்பவை வ்யாகரண, ஸாஹித்ய என்னுஞ் சொற்களே. லக்ஷ்ய லக்ஷண என்னும் சொற்கட்கு மூலமாக வட மொழியில் காட்டப் பெறும் லக்ஷ் என்னும் சொற்கு, இலக்கு(குறி) என்பதே பொருள். ஆகவே, இவ்விரு வடசொல்லும் தென்சொல் லின் திரிபென்பது தெரிதரு தேற்றமாம். மேலும், தமிழிலக்கண முதனூல் ஆரிய வருகைக்கு 8000 ஆண்டு முற்பட்ட தென்னும் உண்மையும், இதை வலியுறுத்துவது காண்க.. இலக்கணத்திற்கு அணங்கம் என்றொரு பெயர் குறிக் கின்றது சிந்தாமணி நிகண்டு(103). கதிரைவேற்பிள்ளை அவர்கள் தொகுத்த தமிழ்மொழி யகராதியில், அஞ்சணங்கம்-பஞ்ச விலக்கணம். அஞ்சணங்கியம்-பஞ்சவிலக்கியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அணங்கம் அணங்கியம் என்னும் இருசொற்கும், அணங்கு என்பது முதனிலையா யிருத்தல் வேண்டும். அணங்குதல்-ஒலித்தல். மிகையணங்கு மெய்ந்நிறீஇ மீளி மறவர் புகையணங்கப் பூமாரி சிந்தி (பொதுவியற்படலம், 8) என்பது புறப்பொருள் வெண்பாமாலை . அணங்கு என்பது எழுத்தையுங் குறிக்குமாயின், அணங்கம் அணங்கியம் என்னும் சொற்கள், முறையே, இலக்கணத்தையும் இலக்கியத்தையுங் குறிப்பது பொருத்தமே. ஆயின், இச் சொற்கள் தமிழகத்தில் என்றும் வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை. இலக்கியம் இலக்கணம் என்பனவே தொன்றுதொட்டு வழங்கி வருவன. எழுத்து-எழுத்தொலியம் (Phonemics) தமிழெழுத்துகள், (1) முதல், (2) சார்பு என இருவகைப்படும். முதலாவது இயல்பாகத் தோன்றிய எழுத்துகள் முதலெழுத்துகள்; பின்பு அவற்றுட் சிலவற்றின் சார்பாகத் திரிந்த எழுத்துகள் சார்பெழுத்துகள். உயிரெ ழுத்துப் பன்னிரண்டும் மெய்யெழுத்துப் பதினெட்டுமாக, முதலெழுத்துகள் முப்பதாம். சார்பெழுத்துகள் மூன்றாம். ஆகவே, தமிழெழுத்துகள் அல்லது ஒலிகள் மொத்தம் முப்பத்து மூன்றாம். உயிரெழுத்துகள், குறிலைந்தும் நெடிலேழுமாக இருவகைப் படும். மெய்யெழுத்துகளும், வல்லினம் ஆறும் மெல்லினம் ஆறும் இடையினம் ஆறுமாக மூவகைப்படும். (1) முதலெழுத்துகள் (Phonemes) மாந்தன் தன் வாயைத் திறந்தவுடன் இயல்பாக ஒலிக்கும் ஒலி அகரம் அல்லது ஆகாரம். குழந்தை பிறந்தவுடன் அழும் ஒலியும் முழைத்தல் முறைப்பட்ட அகர ஆகாரமே. ஆகவே, முதலாவது மாந்தன் வாயில் தோன்றிய உயிரொலியே; அது அகரமே. வாய் திறவாத நிலையில், மூக்குவளியால் ஒலிக்கும் ஒலி மகரம். ஆகவே, மெய்யொலிகளுள் முதலாவது தோன்றியது, இதழ் மட்டும் பொருத்தி எளிதாக வொலிக்கும் மகரமாகும். இங்ஙனம் முதன்முதலாகத் தோன்றிய அகரமும் மகரமுஞ் சேரின், அம் என்னும் அசை பிறக்கும். ஒருகால் இதினின்று, அம்ம என்னும் முறைப்பெயர் குழவிவளர்ப் பொலியாய்த் தோன்றி யிருக்கலாம். பாலுறுப்பைக் குறிக்கும் அம்மம் என்னும் சொல் மருமம் என்பதன் திரிபாகும். மருமம்-மம்மம்-அம்மம். மாந்தன் வாயில் தோன்றிய மொழியொலிகளுள், உயிரெல் லாம் முன்பும் மெய்யெல்லாம் பின்புமாகத் தோன்றவில்லை, உயிரும் மெய்யும் ஒழுங்கின்றி மாறிமாறியே தோன்றின. அம் முறையை இன்று காண்பது அரிது. ஆயினும், உயிரினத்தையும் மெய்யினத்தை யும் வேறு பிரித்து ஒவ்வோரி னத்தையுஞ் சேர்ந்த ஒலிகள் தோன்றிய முறையை ஒருவாறு அறியலாம். உயிர் தோன்றிய முறை முதல் தோன்றியவை : நெடில்-ஆ, ஈ, ஊ இடைத்தொன்றியவை : நெடில்-ஏ, ஓ குறில்-அ, இ, உ கடைத்தோன்றியவை : நெடில்-ஐ, ஔ குறில்-எ, ஒ உயிர்களுள், நெடில் முன்பும் குறில் பின்பும் தோன்றின. இங்ஙனங் கொள்வதற்கு ஏதுக்கள் முன்னர்க் கூறப்பட்டன. முதலில் தோன்றிய மூவுயிரும், முறையே, சேய்மை யண்மை முன்மைச் சுட்டுகளாகவே தோன்றின. அண்மைச் சுட்டினும் முன்மைச் சுட்டு பிந்தியதாதலாலும், சற்று மிகுந்த முயற்சி வேண்டுதலானும், ஈகாரம் ஊகாரத்திற்கு முந்தியதாதல் வேண்டும். இகர ஈகாரத்தின் மோனையாக எகர ஏகாரமும், உகர ஊகாரத்தின் மோனையாக ஒகர ஓகாரமும் தோன்றுதலானும்; கொச்சை வழக்கில் இடம் என்பது எடம் என்றும், உனக்கு என்பது ஒனக்கு என்றும், இகரம் எகரமாகவும் உகரம் ஒகரமாகவும் ஒலிப்பதாலும், அண்மைச் சுட்டி லிருந்தே எகர ஏகாரமும், முன்மைச் சுட்டிலிருந்தே ஒகர ஓகாரமும் தோன்றியிருத்தல் வேண்டும். அளபு வகையில், ஆஈ ஊஏ ஐஓ ஔஎ(ன்)னும் அப்பால் ஏழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப என்றும், அமைப்பு வகையில், அகர இகரம் ஐகார மாகும். (54) அகர உகரம் ஔகார மாகும் (55) என்றும், தொல்காப்பியங் கூறுவதால், அகர இகரம் சேர்ந்து ஐகாரமும் அகரவுகரம் சேர்ந்து ஔகாரமும் புணரொலிகளாய்த் (diphthongs) தோன்றினவென அறியலாம். இகரம் உகரத்தினும் முந்திய தாதலின், இகரக் கூறுள்ள ஐகாரம் உகரக் கூறுள்ள ஔகாரத்தினும் முந்தித் தோன்றியிருத்தல் வேண்டும், வடநூலார் புணர்ச்சித் திரிபைப் பற்றுக்கோடாகக் கொண்டு, ஏகார ஓகாரங்களையும் புணரொலிகளாகக் கொள்வர். அக் கொள்கை தமிழுக்கு ஏற்காது. முற்கூறியவாறு, அவை மோனைத் திரிபாய் எழுந்தவையே. ஓரிரு சொன்முதலில் வரும் அகர இகரம் ஐகாரமாகவும் எழுதப் பெறும். எ-டு: வள்-வய்-வயிர்-வயிரம்-வைரம். ஓரிரு சொன்முதலில் வரும் அகர உகரம் ஔகாரமாகவும் எழுதப்பெறும். எ-டு: கதுவாலி (= குறுகிய வாலையுடைய பறவையினம்)-கவுதாரி (இலக்கணப்போலி)-கௌதாரி. இனி, அகரத்தையடுத்த யகரமெய்யும் எல்லாவிடத்தும் ஐகார மாகவே எழுதப்பெறும். அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். 56) எ-டு: வள் (=கூர்மை)-(வய்)-வை = கூர்மை. ளகர மெய் யகர மெய்யாகத் திரிவது பெருவழக்கு. எ-டு: கொள்-கோள்-கோய், தொள்-தொய், நொள்-நொய், பிள்-பிய், மாள்-மாய், வெள்-வெய்- வெய்யோன் = விரும்புகின்றோன். வெய்- வெய்ம்மை-வெம்மை=விருப்பம். வெம்மை வேண்டல். (தொல். உரி. 36) யகர மெய்யீற்று ஒகர முதற்சொல் ஈரெழுத்துச் சொல்லா யிருந்து அகர முதலாய் மாறின், ஐகார வடிவு பெறும். எ-டு: பொள்-பொய் (உட்டுளை)-(பய்)-பை, அகரத்தை யடுத்த வகரமெய், ஒரு சில சொற்களில் ஔகார மாகவும் எழுதப்பெறும். எ-டு: அவ்வியம்-ஔவியம், கவ்வு-கௌவு, வவ்வால் - வௌவால் ஔவை என்னும் சொல் அவ்வை என்பதன் திரிபேயா யினும், ஒரு புலத்தியாரின் இயற்பெயராதலின், ஔகார முதலதாகவே எழுதப்படல் வேண்டும். அம்மை-அவ்வை-ஔவை. அவ், அவ்வாறு, சவ்வு, தவ்வு முதலிய சில சொற்களில், அகர மடுத்த வகரமெய் ஔகாரவீறாக எழுதப்படுவதே யில்லை. ஆயின், அய் என்னும் வடிவம் அய் என்னும் அசையைக் குறித்தாலன்றி, எழுத்துத்தமிழில் நிகழ்தற்கு இடமேயில்லை. இதை நோக்கிப் போலும், `அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஔஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்' என்று தொல்காப்பியர் கூறாதுவிட்டது! உயிரெழுத்துகளுள் ஐ, ஔ இரண்டும் புணரொலியன்கள் (diphthongs or compound phonemes); ஏனைய தனியொலியன்கள் (monoph - thongs or simple phonemes). உயிர் தோன்றிய வகைகள் (1) அங்காத்தல் (வாய்திறத்தல்) - அ, ஆ (2) சுட்டல் - ஆ, ஈ, ஊ (3) மோனைத்திரிபு - இ-எ, உ-ஒ (4) உணர்ச்சியொலி - ஐ! (5) வாய்ச்செய்கை - அவ்-ஔ (6) குறுக்கம் - ஆ-அ, ஏ-எ (7) ஒப்பொலி - ஊ (கூ) அங்காத்தல் என்பது மற்றெல்லா வகைகட்கும் அடிப் படைத் துணையேயன்றி, தனிவகையன்று. மெய் தோன்றிய முறை ம ப, க, ங ல, ர, த, ந ச, ஞ, ய, வ ட, ண, ள, ழ ற, ன குறிப்பு: (1) உயிரும் மெய்யும் தோன்றிய முறையாக இங்குக் காட்டப் பட்டுள்ள ஈரொழுங்கும், தோராய (உத்தேச) முறையே யன்றி, இம்மியும் வழுவாத அறிவியலின் பாற்பட்ட துல்லிய முறையல்ல. (2) உயிரும் மெய்யும் வெவ்வேறாகக் காட்டப்பட்டிருப் பினும், உயிரெல்லாந் தோன்றியபின் மெய் தோன்றின வென்றாகாது. இருவகையும் ஒவ்வொன்றாய் அல்லது ஒன்றும் பலவுமாய் மாறிமாறியே தோன்றின. முதலில் ஆகாரவுயிரும் அதையடுத்து மகரமெய்யும் தோன்றியிருத்தல் வேண்டும். யகரம் தோன்றுமுன் ஈகார இகரமும், வகரம் தோன்று முன் ஊகார உகரமும், தோன்றியிருத்தல் வேண்டும். ள, ழ, ற, ன தோன்றுமுன் எல்லா வுயிர்களும் தோன்றி யிருக்கலாம். (3) மெல்லின மெய்களுள், மகரம் ஒன்றே தனியே தோன்றி யிருத்தல் வேண்டும். ஏனையவெல்லாம் ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ன்ற எனத் தன்தன் வல்லினமெய்யுடன் இணைந்தே தோன்றியிருத்தல் கூடும். குழவிகளின் தொண்டையில் ங்க என்னும் ஒலி பிறத்தல் காண்க. வல்லினமெய்கள் தனித்தனி தோன்றியிருத்தல் கூடும். (4) மாந்தன் அல்லது முந்தியல் தமிழன் பேசிய இயற்கை மொழி, உயிர், மெய் என்னும் பகுப்புணர்ச்சியின்றி, ஓரசையும் பலவசை யுமாகிய ஒலிகளையும் ஓசைகளை யுமே கொண்டிருந்தது. மெய்தோன்றிய வகைகள் (1) ஒப்பொலி - க் (காக்கா), ண்(கிண்). (2) வாய்ச்செய்கை - வ் (அவ்), ம் (அம்). (3) இனத்தோன்றல் - ங் (ங்க), ன்(ன்ற). (4) புணர்ச்சி - ஞ் (பூ+சோலை=பூஞ்சோலை) (5) திரிபு - ந் (பொரும்-பொருந்), ர்(ல்-ர்) (6) முதிர்ச்சி - ழ் (ள-ழ), ற் (ர-ற). (7) இயற்கை - த், ப். அளவு (மாத்திரை) எழுத்துகளின் ஒலியளவு அளபு அல்லது மாத்திரை யெனப்படும். மாத்தல் - அளத்தல். இது ஒரு வழக்கற்ற வினை. மாத்திரம் என்னும் சொல்லும் இதனடிப் பிறந்ததே. மா என்னும் அளவுப்பெயர் முதனிலைத் தொழிற்பெயராம். ஓர் இமை அல்லது நொடியளவு ஒரு மாத்திரை. உயிராயினும் உயிர்மெய்யாயினும், குறிலுக்கு ஒன்றும் நெடிலுக்கு இரண்டும் மாத்திரையாம். உயிர்மெய்யில் உயிரும் மெய்யும் ஆகிய ஈரெழுத் திருப்பினும், அம் மெய்க்கு மாத்திரையில்லை. தனிமெய்க்கு மாத்திரை அரை. ஐ, ஔ என்னும் இருநெடிலும் தனித்து நில்லாதும் அளபெடுக்காதும் சொல்லுறுப்பாய் வரின், ஒன்றரை மாத்திரை யாய்க் குறுகி யொலிக்கும். ஐகாரம் சொல்லிடையில் ஒரு மாத்திரை யாகவுங் குறுகும். (2) சார்பெழுத்துகள் உயிரும் மெய்யும் ஆகிய முதலெழுத்துகளுட் சிலவற்றின் சார்பினால் தோன்றுவன சார்பெழுத்துகள். சார்தல் - ஒன்றை யொன்று அடுத்தல். உயிரினத்தைச் சேர்ந்தவை இரண்டும் மெய் யினத்தைச் சேர்ந்தது ஒன்றும் ஆக, சார்பெழுத்துகள் மொத்தம் மூன்றாம். அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன வாகும். தொல்காப்பியர் கூறியவாறு இம் மூன்றே சார்பெழுத்துகள். நன்னூலார் உயிர்மெய்யையும் வேறு சில எழுத்துக் குறுக்கங் களையும் அளபெடையையும் சேர்த்துத் தவறாகப் பத்தென விரித்துவிட்டார். உயிர்மெய் உயிரும் மெய்யும் சேர்ந்த கூட்டெழுத் தேயன்றி வேறெழுத் தாகாது. எழுத்துக் குறுக்கங்களை யெல்லாம் சார்பெழுத்தென்று கொள்ளின், ஆய்தக்குறுக்கத்தைச் சார்பிற் சார்பென்று கொள்ளல் வேண்டும். அளபெடை என்பது எழுத் தொலி நீட்டமேயன்றித் தனியெழுத்தாகாது. இவ்வுண்மை களை யெல்லாம் நோக்காது, சார் பெழுத்துத் தொகையைப் பெருக்கி யதற்கு, மாணவரை மயக்குதலன்றி வேறொரு பயனுமின்றாம். குற்றியலிகரம் அரையளபாய்க் குறுகியொலிக்கும் இகரம் குற்றியலிகரம். அது மூவகையில் தோன்றும். (i) யகரத்தோடு புணர்ந்த குற்றியலுகரத் திரிபு. எ-டு: வரகு + யாது = வரகியாது. (ii) புணர்ச்சியால் அமைந்த மியா என்னும் முன்னிலையசைச் சொல். கேளும் + ஐயா = கேளுமையா-கேளுமியா- கேண்மியா. ஒ.நோ: மருளும்-மருண்ம். (iii) மெல்லின இடையின மெய்யீறு யகரத்தோடு புணர்ந்த புணர்ச்சி விளைவு. மண்+யானை = மண்ணியானை வேள்+யாவன் = வேளியாவன் இவ்வகைப் புணர்ச்சி எல்லார்க்கும் உடன்பாடன்று. குற்றியலுகரம் தனிநெடிற்கும் இரு அல்லது பலவெழுத்திற்கும் பின், வல்லின மெய்யோடு கூடிச் சொல்லீறாய் வரும் உகரம், இதழ் குவியாது, இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டு, அரை மாத்திரையாய்க் குறுகியொலிக்கும் அது குற்றியலுகரம். எ-டு: மாடு, செக்கு, பருப்பு, பிண்ணாக்கு, வந்ததற்கு. ஆய்தம் தனிச்சொல்லிலும் புணர்ச்சொல்லிலும், குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் இடையில், நுண்ணிய ககரமாக ஒலித்து நிற்கும் எழுத்து ஆய்தமாம். ஆய்தல்-நுணுகுதல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்தல் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல். 813) என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. ஆய்தம் பின்வருமாறு நால்வகையில் தோன்றும். (i) புணர்ச்சித் திரிபு சொல்லுறுப்புப் புணர்ச்சி: எ-டு : அல்+கு = அல்கு-அஃகு வெள்+கு = வெஃகு அல்குதல் = சுருங்குதல். வெள்குதல் = விரும்புதல். வெள்-வெண்டு(ஆசைப்படு). வெள்-வெய்-வெய்யோன் = விரும்பி யோன். சொற்புணர்ச்சி: எ-டு : பல்+துளி = பஃறுளி கல்+தீது = கற்றீது, கஃறீது முள்+தீது = முட்டீது, முஃடீது அவ்+கடிய = அஃகடிய (ii) தனிச்சொல் திரிப்பு எ-டு : அத்து-அஃது, பத்து-பஃது பகுதி-பஃதி (iii) சாரியைப் புணர்ப்பு எ-டு : அஃகான், மஃகான் (iv) இடைச்செருகல் (ஒற்றில்வழி யொற்று) எ-டு : இலகு-இலஃகு, விலகு-விலஃகு இவ்வகை செய்யுட்கே யுரியதாம். ஆய்தம் ஓருயிரோடுங் கூடாது தனித்து நிற்பதால் தனிநிலை என்றும், புள்ளிவடிவாயிருப்பதால் புள்ளி என்றும், முப்புள்ளி என்றும், தனக்குப்பின் வரும் வல்லின மெய்யை மெலிவிப்பதால் நலிபு என்றும் பெயர்பெறும். பத்து, பஃது; கற்றீது, கஃறீது என்னும் சொல்லிணைகளை ஒலித்துக் காண்க. இயன்மொழியாகிய தமிழுக்குரிய ஆய்தம், திரிமொழிகட் குரிய பொலிவொலிகளைப் (Voiced Sounds) பிறப்பிக்கும் என்னும் கூற்று, திரிபுணர்ச்சியின் விளைவென அறிக. ஆய்தவொலியின் ககரவினத் தன்மையை அஃகேனம், மஃகான் என்னும் சாரியைப் புணர்ப்பாலும் கண்டுகொள்க. சார்பெழுத்து மூன்றனுள் குற்றியலிகரமும் குற்றியலு கரமும் தாம் நிற்குமிடத்து வேறொன்றற்கும் இடந்தராமையால், அவ் விரண்டையும் மறுவொலியன்கள் (Allophones) என்னலாம். ஆய்தம் அத்துணை ஒழுங்கும் யாப்புறவும் பெறாமையின் மறுவொலிய னாகாது. எண் உண்மையில், தமிழெழுத்துகள் முதலெனப்படும் முப்பதே. அதனாலேயே, எழுத்தெனப் படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே (தொல். 1) எனத் தொல்காப்பியர், நூன்மரபு என்னும் முதல் இயலில், முந்து நூலார் மொழிந்தவாறு முதலெழுத்திற்கே சிறப்புக் கொடுத்துக் கூறினார். மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய் உனக்கினிதாய்த் தோன்றிடும்அத் தமிழ் (காஞ்சி. தழுவ. 244) என்று சிவஞான முனிவர் கூறியதுங் காண்க. உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முப்பதெழுத்து களை மட்டும் கொண்ட தொகுதிக்குக் குறுங்கணக்கு என்றும், அதனொடு 216 உயிர்மெய்யெழுத்துங்கொண்ட தொகுதிக்கு நெடுங் கணக்கு என்றும் பெயர். பன்னீருயிரும் பதினெண் மெய்யொடுங் கூட, உயிர்மெய் மொத்தம் இருநூற்றுப் பதினாறாம். எல்லா மொழிகளிலும் உயிர்மெய்கள் கலந்துதான் ஒலிக் கின்றன. ஆயின், அவற்றிற்குக் கூட்டு வடிவம் முதன்முதல் அமைத் தவர் தமிழரே. தமிழைப் பின்பற்றியே வடமொழி யிலும் பிற இந்திய மொழிகளிலும் உயிர்மெய் வடிவுகள் அமைந்தன. இன்னும் மேலை ஆரியத்திலும் சேமியத்திலும் உயிரும் மெய்யும் தனித்தனி நிறுத்தப் படுகின்றன. அமெரிக்கு, சப்பான் முதலிய ஒருசில மொழிகளில் மட்டும், தனி வரிக்கும் கூட்டு வரிக்கும் இடைப்பட்ட அசைவரிகள் (Syllabaries) ஏற்பட்டுள்ளன. அவையும் காலத்தாற் பிற்பட்டவையே. ஆய்தம் உயிரேறப்பெறாத மெய்யாயினும், அதற்குத் தனி வடிவ முண்மைபற்றி அதையும் ஓர் எழுத்தாகக் கொள்ளின், தமிழெழுத்துகள் மொத்தம் இருநூற்று நாற்பத்தேழாம். பெயர் செவிப்புலனான மொழியொலிகள் கட்புலனான வரி வடிவில் எழுதப் பெற்றதனால், எழுத்தெனப் பெயர்பெற்றன. எழுத்து என்பது வரிவடிவைக் குறிப்பின் தொழிலாகுபெயர்; ஒலிவடிவைக் குறிப்பின் குறியாகுபெயர். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும் (தொல். 1594) என்று தொல்காப்பியர் கூறியுள்ளபடி, தமிழில் முதலிலக்கண நூலியற்றியவன், முற்றத் துறந்தவனும் மெய்ப்பொருளறிவு நிரம்பிய வனுமான முனிவனாவான். முனிதல் = (உலக வாழ்வை) வெறுத்தல், வெறுத்துத் துறத்தல். முனி, முனை என்னும் இரண்டும் ஒரே சொல்லின் வேறுபட்ட வடிவமாம். முனிந்தவன் முனிவன்; முனைந்தவன் முனைவன். முனைவுமுனி வாகும். (தொல். சொல். 386) இன்றீம் பாலை முனையின் (பெரும்பாண். 180) உலகிலுள்ள பொருள்கள் எல்லாம், உயிர், மெய், உயிர்மெய் என மூவகை. உயிர் தானே இயங்கும் காற்று வடிவினது; மெய் உயிரின் உதவியின்றி இயங்காத உடம்பு அல்லது கனப்பொருள்; உயிர்மெய் உயிரொடு கூடிய உடம்பு. பிராணி (பிராணனை யுடையது) என்ற வடசொல் தமிழில் வழக்கூன்றியபின், அதற்கு நேரான உயிர்மெய் என்னும் தமிழ்ச்சொல் வழக்கற்றுப்போனது டன், தன் பொருளையும் இழந்தது. தமிழில் முதனூல் கண்ட முனைவன், மூவகை யெழுத்துகளும் ஒலியியக்கத்தில் மூவகைப் பொருள்களை ஒத்திருப்பது கண்டு, அப் பொருள்களின் பெயர் களையே அவ் வெழுத்துகட்கும் உவமையாகு பெயராக இட்டான். தானே ஒலிக்கும் எழுத்து உயிரெழுத்து; உயிரொடு கூடியல்லது ஒலிக்காத எழுத்து மெய்யெழுத்து; உயிர்மெய்யைப் போன்ற எழுத்து உயிர்மெய்யெழுத்து. இத்தகைய அமைப்பு வேறெம் மொழியிலும் காண்பதற்கரிதாம். குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன வெளிப்படை. உயிர், ஆவி என்பனவும்; மெய், உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி என்பனவும் ஒருபொருட் சொற்கள். முறையும் பிறப்பும் தமிழ் எழுத்திலக்கணம் பன்னிரண்டுள், முறையும் ஒன்றாம். இது மேலை மொழிகட்கில்லை. வடமொழியுட்பட ஏனை யிந்திய மொழிகளெல்லாம் நெடுங்கணக்கு முறையில் தமிழைப் பின்பற்றி யனவே. உயிர், முந்தித் தோன்றியதுபற்றியும், தானாய் ஒலிப்பது பற்றியும், நெடுங்கணக்கில் முன் வைக்கப்பெற்றது. குறுமை பற்றிக் குறில் முன்னும், நெடுமைபற்றி நெடில் பின்னும் வைக்கப்பட்டன. ஆ, ஈ, ஊ மூன்றும், முறையே சேய்மைச் சுட்டாகவும் அண்மைச் சுட்டாகவும் முன்மைச் சுட்டாகவும் இயல்பாகத் தோன்றினமையால், பிற வுயிர்களுக்கு முன் வைக்கப்பட்டன. அவற்றுள், ஆகாரம் வாய் திறந்த மட்டில் ஒலிப்பதால் முதலிலும், ஈகாரம் வாயின் பின்பக்கத்தில் அடிநா விளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தியொலிப்பதால் இடையிலும், ஊகாரம் வாயின் முன் பக்கத்தில் இதழ்(உதடு) குவிந்தொலிப்பதால் கடையிலும் வைக்கப்பட்டன. இதினின்று, வாயின் பின்புறத்திலிருந்து முன்புறம் நோக்கிய வரிசையில் தமிழ் எழுத்துகள் அமைக்கப்பட்டதை அறியலாம். ஏகார ஓகாரங்கள் முறையே ஈகார ஊகாரங்களின் மோனைத் திரிபாதலால், இயல்பாகத் தோன்றி முதல் மூன்றுயிர்கட்கும் பின் வைக்கப்பட்டன. அவற்றுள், ஏகாரம் அடிநாவிளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தியொலிப்பதால் முன்னும், ஓகாரம் இதழ் குவிந்தொலிப்பதால் பின்னும், வைக்கப்பட்டன. ஐ, ஔ இரண்டும் முறையே அஇ, அஉ என்னும் புணரொலி களாதலால், அடிநா விளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தி யொலிக்கும் ஐகாரம் ஏகாரத்தின் பின்னும், இதழ் குவிந்தொலிக்கும் ஔகாரம் ஓகாரத்தின் பின்னும் வைக்கப் பட்டன. ஆய்தம் நுண்ணிய ககரமாதலால், ககரத்தின் முன் வைக்கப் பட்டது. மெய்களுள் வல்லினமும் மெல்லினமும் எதிரினங்களாதலால், முதற்கண் தோன்றியவையெல்லாம் வலியும் மெலியுமாக இவ் விரண்டாய் முன் அமைக்கப்பெற்றன. இடையினம் அவற்றின் பின் வைக்கப்பட்டது. ள, ழ, ற, ன நான்கும் பிற மெய்கள் ஒழுங்கு படுத்தப் பட்டதற்குப் பிந்தித் தோன்றியமையால், இறுதியில் வைக்கப்பட்டன. வல்லினமெல்லின மெய்களுள், க ங அடியண்ணப் பிறப் பினவும், ச ஞ இடையண்ணப் பிறப்பினவும், ட ண முன்னண்ணப் பிறப்பினவும் த ந பல்லண்ணப் பிறப்பினவும், ப ம இதழகப் பிறப்பினவும் ஆதலால், அம் முறையே வைக்கப்பட்டன. மகரமொழிந்த மெல்லின மெய்களெல்லாம் தன்தன் வல்லின மெய்க்குப்பின் தோன்றியமையாலும், வலியொலித்த பின் மெலி யொலிப்பதே முயற்சிக் கெளிமையாதலாலும், வலியும் மெலியும் அடுத்தடுத்து நிற்பது ஒலிவேற்றுமையைத் தெளிவாய்க் காட்டு வதாலும், வலிமுன்னும் மெலி பின்னுமாக இணையிணையாய் நிறுத்தப்பெற்றன வென அறிக. இடையின வொலியின் இடைத்தன்மை வல்லொலியும் மெல்லொலியும் அறிந்த பின்னரே அறியக் கிடத்தலின், வலிமெலி களின் பின் இடையினம் வைக்கப்பட்டது. இடையின மெய்களுள், யகரம் இடையண்ணத்திலும், ரகரம் முன்னண்ணத்திலும், லகரம் பல்லண்ணத்திலும், வகரம் பல்லிதழிலும் பிறப்பதால், அவை அம் முறையே வைக்கப்பட்டன. குமரிக்கண்டத்தில் நெடுங்கணக்குத் தொடங்கியபோது, அதில் அமைந்திருந்த எழுத்துகள் இத்தனையே. பின்னர், நாளடை வில் ள, ழ, ற, ன என்னும் நான்கும் தோன்றின. அதனாலேயே அவை இறுதியில் வைக்கப்பட்டன. அந் நான்கனுள், ள ழ முன்தோன்றியமையால் முன்னும்; ற ன பின்தோன்றியமையாற் பின்னும் வைக்கப்பட்டன. ள, ழ இரண்டும் முன்னண்ண வருடொலிகளாயினும் (Linguals or Cerebrals), ழகரம் ளகரத்தினும் சற்றுப் பின்னிருந்து வருடப் பெறுவதால், முன்வைக்கப்பெற்றது. இறுதிமெய் நான்கும் பிந்தித் தோன்றின வென்பதற்கு ஏதுக்களாவன: (1) ள, ழ இரண்டும் இடையினத்துள்ளும் லகரத்திற்கு முன்னும் வைக்கப் பெறாமை. (2) ற, ன இரண்டும் வலிமெலி யிணைகளுள் த ந இணைக்கு முன் வைக்கப் பெறாமை. (3) லகரம் திரண்டு ளகரமும் ளகரம் திரண்டு ழகரமும் ஆதல். எ-டு: கல்-கருமை. கல்+து = கஃறு. கஃறெனல்= கருமைக் குறிப்பு. கல்-கால்=கருமை. கால் காள்=கருமை. காள்- காழ் = கருமை. (4) ரகரம் திரண்டு றகரம் ஆதல். எ-டு: அர்-அறு, ஒளிர்-ஒளிறு, முரி-முறி. (5) னகரந் தோன்றுமுன் நகரமே சொல்லிறுதியிலும் வழங்கியமை. எ-டு: வெரிந், பழுநு (6) தமிழின் தொன்மையும் ஏனையொலிகளின் மென்மையும். றகரம் தோன்றியபோது அதற்கினமாகவே னகரமும் உடன் தோன்றிற்று. தந்நகரம் றகரத்திற்கு இனமாகாமை காண்க. தமிழின் தொன்மை, தென்மை, முன்மை, மென்மை முதலிய தன்மைகளை அறியாமையால், கால்டுவெல் உள்ளிட்ட மேலை யாராய்ச்சியாளர் ஆரிய ஏமாற்றை நம்பித் தமிழைச் சமற்கிருத அடிப்படையிலாய்ந்து, பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்று முடிவு கொண்டுவிட்டனர். இதனால் சில கொண்டான் மாரும் தமிழ்ப் பற்றற்ற திரவிடத் தமிழ்ப் புலவரும் ழ, ள, ற, ன நான்கும் வடமொழியி லில்லாமையால் நெடுங்கணக்கிறுதியில் வைக்கப்பட்டனவென்று, பிதற்றலாயினர். வடமொழியிலின் மையே இறுதிவைப்பிற்குக் கரணியமாயின், வடமொழி யிலில்லாத எகர ஒகரமும் இறுதியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டுமே! அங்ஙன மின்மையின், அது போலி யுரையென மறுக்க. உருவம் எழுத்து என்னும் பெயரே, தமிழுக்கு இலக்கணந் தோன்று முன்னரே எழுத்திருந்தமையை உணர்த்தும். எழுதுவது எழுத்து. எழுதுதல்-வரைதல். எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோல் (குறள். 1285) இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் (பரிபா. 1953) எழுவுதல் என்பது இசைக்கருவியினின்று ஒலியெழுப் புதலைக் குறிக்குமே யன்றி, எழுதுதலைக் குறிக்காது. பண்டைத் தமிழெழுத்துகளெல்லாம் பிராமியின் திரிபான வட்டெழுத்துகளென்றும், கிரந்த வெழுத்துத் தென்னாட்டில் பிற் காலத்தில் வடமொழிக்கென் றேற்படுத்தப் பட்டதென்றும், பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆயின், எழுத்துவடிவம்பற்றிய சில தொல்காப்பிய நூற்பாக்களையும் நன்னூல் நூற்பாக்களையும், பண்டை யேட்டுச் சுவடிகளையும் நோக்குமிடத்து, இக் கருத்துப் பொருத்தமுடையதாய்த் தோன்றவில்லை. இற்றை வழக்கிலுள்ள தமிழ் எழுத்துமுறையே பண்டைவழக்கிலும் இருந்ததென்றும், பட்டயங்களிற் பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்து வெட் டெழுத்து எனப் பெயர்பெற்றிருக்கலா மென்றும், கிரந்தவெழுத்து பண்டைத் தமிழெழுத்தின் திரிபே யென்றும், அது ஏட்டிற்குரிய ஆணி யெழுத்தென்றும், கொள்வதே பொருத்தமாகத் தோன்று கின்றது. இதற்குச் சான்றுகளும் ஏதுக்களுமாவன: (1) மிகப் பழைமையான தமிழேட்டிலும் இற்றை யெழுத்து வடிவேயிருத்தல். (2) இலக்கண நூல்கள் இற்றையெழுத்து வடிவைத் தொன்று தொட்டதெனக் கூறல். தொல்லை வடிவின எல்லா வெழுத்தும்ஆண்(டு) எய்தும் எகர ஒகரமெய் புள்ளி (நன். 98) என்று 13ஆம் நூற்றாண்டிலிருந்த பவணந்தி முனிவர் கூறினார். கி.மு.7ஆம் நூற்றாண்டினதான தொல்காப்பியத்தின் நூன்மரபு என்னும் முதலியலில், குற்றிய லிகரம் குற்றிய லுகரம் (2) ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்'' உட்பெறு புள்ளி உருவா கும்மே, (14) மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல், (15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே, (16) புள்ளியில்லா........cÆ®¤j லாறே, (17) எனக் கூறப்பட்டுள்ளது. இவ் வியல்புகளிற் சில பட்டயவெழுத் திற்குப் பொருந்தவில்லை. (3) பட்டயவெழுத்து வட்டமாயிராமை. வட்டெழுத்து என்பது வடிவுபற்றியதாயின், அது ஏட்டெழுத்திற்கே (கிரந்த வடிவெழுத்திற்கே) பொருந்துவதாகும். (4) ஏட்டிற்கு வளைகோட்டெழுத்தும் பட்டயத்திற்கு நேர் கோட்டெழுத்துமே இசைவாயிருத்தல். (5) தமிழெழுத்து அசோகக் கல்வெட்டிற்கும் வடமொழி வரவிற்கும் முந்திய தாதல். (6) வடமொழி நெடுங்கணக்கு தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றியே அமைத்திருத்தல். (7) மேனாடுகளிலும் கருவிக்கேற்ப எழுத்துவடிவு வேறுபட் டிருந்தமை. இந்திய நாகரிகம் ஆரியரதென்றும், தமிழ் எல்லா வகையிலும் வடமொழியைப் பின்பற்றியதென்றும், மேலை யறிஞர் குருட்டுத் தனமாகக் கொண்டிருந்த அடிப்படைத் தவறுகளே, தமிழெழுத்துப் பிராமியினின்று திரிந்ததென்று கொள்ளற் கிடந்தந்தன. பண்டையெழுத்து வடிவங்களிற் சில இன்று மாறி யுள்ளன. அவை வருமாறு: எழுத்தின் பெயர் பண்டைவடிவம் இற்றை வடிவம் ஈகாரம் இ ஈ குற்றியலிகரம் åo)ah§F வீடியாங்கு குற்றியலுகரம் வீடு வீடு எகரம் எ, க் எ, கெ ஏகாரம் எ, கெ ஏ, கே ஒகரம் x),b¡h ஒ. கொ ஓகாரம் ஒ, கொ ஓ, கோ மகரம் ப ம எகர ஒகரக் குறில்கள் அவற்றின் நெடில்கட்குப் பிந்தித் தோன்றி யமையால், அவற்றை வேறுபடுத்திக்காட்ட அவற்றின் மேற் புள்ளியிடப்பட்டது. வட இந்திய மொழிகளைப் பேசுவோரின் முன்னோர், எகர ஒகரக் குறில்கள் தமிழில் தோன்றுமுன் குமரிக்கண்டத்தினின்று வடக்கே சென்ற தினாலேயே, அம் மொழிகளில் இன்றும் அக் குறில்கள் இல்லை. அம் மொழிகளின் மூலமாகிய பிராகிருதங்களை வேத ஆரியர் பேசினதினாலேயே, அவர் வேதத்திலும் அவை இல்லை. தொல்லை வடிவின எல்லா வெழுத்தும்ஆண்(டு) எய்தும் எகர ஒகரமெய் புள்ளி (நன். 98) என்று 13ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தினதான நன்னூல் கூறுவதால், தமிழ் ஏட்டெழுத்து தொன்றுதொட்டு வழங்கி வருவ தெனத் துணியலாம். `ஆண்டு' என்பது அக்காலத்து (முற்காலத்தில்) என்று பொருள்படுவதாகும். எகர ஒகர உயிரும் உயிர்மெய்யும் புள்ளிபெற்ற ஒன்றே, பண்டையெழுத்தின் வேற்றுமை யெனக் குறிப்பிடுகின்றார் பவணந்தி முனிவர். அவர் காலத்திலும் அவை புள்ளிபெற்றனவெனின், அதை ஏன் விதந்து கூறல் வேண்டும்? தொல்லை வடிவின எல்லா எழுத்தும் என்பதிலேயே அது அடங்கிவிடுமே! ஆதலால், அது உரையன்றென்க. `எய்தும்' என்பது வழக்கம் பற்றிய காலவழுவமைதி. பிற்காலத்தில் வேற்றரசு வந்துவிட்டதனாலும், தமிழைக் காக்கும் பொறுப்புச் செந்தமிழ்ப்புலவர் கையிலின்மையாலும், இலக்கணமறியா மாந்தர் ஏட்டிலும் கல்லிலும் தப்புந்தவறு மாய் எழுதி வந்ததையே, வீரமா முனிவர் முன்னை முறைப்படி திருத் தினார் என அறிக. மாத்திரை எழுத்துகட்கு மாத்திரை இன்னின்ன அளவென்று குறிக்கப் பட்டிருப்பினும், கூப்பீடு (விளி), ஒப்பாரி (புலம்பல்), இசைப்பாட்டு, தெருவிற்பனை (பண்டமாற்று) முதலிய உலகியற் செய்திகளில், அவை செவிப்பாடு, துயரம், இனிமை முதலியனபற்றி, வேண்டுமளவு அல்லது இயன்ற அளவு நீண்டொலிக்கும். அது அளபெடை எனப்படும். அளபெடுத்தல் - மாத்திரை கடந்தொலித்தல். உயிரள பெடை, ஒற்றள பெடை என அளபெடை இருவகை. ஒற்று - மெய். உயிரளபெடையை வரிவடிவிற் குறிக்கும்போது நெடிலின் பின்னும் குறிலின் பின்னும், இயல்பாக வுரிய அளவிற்கு மேற்பட்ட ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒவ்வொரு முறையாக, அவ்வக் குறில் அல்லது இனக்குறில்கள் வடிவு சேர்த்தெழுதப்படும். இசையில் அளபெடைக் குறில்கள் தொடர்ந்தும் விட்டும் ஒலிக்கும்; பிற வற்றில் தொடர்ந்தே ஒலிக்கும். ஒற்றளபெடையாயின், எல்லாவிடத்தும், கூடிய ஒவ்வோர் அரைமாத்திரைக்கும் ஒரு முறையாக அவ்வம் மெய்வடிவே சேர்த் தெழுதப்படும். மெய்யெழுத்துகளுள் வல்லினம் அளபெடுக்கா. இசை குறைந்தவிடத்து அதை நிறைக்கச் செய்யுளிலும் அளபெடை நிகழும். உலகவழக் களபெடையும் செய்யுள்வழக் களபெடையும் பின்வருமாறு பெயர் பெறும்: உலக வழக்கு செய்யுள் வழக்கு இயற்கை யளபெடை செயற்கை யளபெடை உலகிய லளபெடை செய்யுளிய லளபெடை செய்யளிற் குறில் அளபெடுப்பினும், நெடில்வடிவின் பின்னரே குறில் வடிவு குறிக்கப்படும். வல்லினத்துடன் ளகர ழகரமும் செய்யுளில் அளபெடுக்கா. குற்றியலுகர மேறிய ககரம் ககரத்தோடு புணரின், அக் குற்றிய லுகரம் கால்மாத்திரையாய்க் குறுகும். எ-டு: கொக்குக்கால். நொடித்தல் வினையில் நொடிக்கக் கருதுதல் கால்மாத் திரைக்கும், விரல்பொருத்துதல் அரை மாத்திரைக்கும், விரல் திரித்தல் முக்கால் மாத்திரைக்கும், வெடித்தல் ஒரு மாத்திரைக் கும், அளவு நிகழ்ச்சியாம். உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே. பலுக்கொலியம் (Phonetics) உயிரெழுத்துகளுள், மூக்கொலியுயிர் அல்லது மெல்லின வுயிர் (Nasal vowel) என ஒன்று தமிழில் இல்லவே யில்லை. அவன், வந்தேன், மரம், போனோம் முதலிய சொற்களின் ஈற்றிலுள்ள மெல்லின மெய்களே, சோம்பலாற் செவ்வையாய்ப் பலுக்கப் பெறாமல் மூக்கொலியளவாய் ஒலிக்கின்றன. இவ் வொலியை ஈற்றயலுயிர் மேலேற்றி, அதனை மூக்கொலியுயிர் என்பது திரிபுணர்ச்சியே. அவர், தாய், மகள், வந்தால் முதலிய சொற்களின் இறுதியிலுள்ள இடையின மெய், ஓரிடத்தும் மூக்கொலியாய் ஒலியாமையை ஒலித்துக் காண்க. மொழிமுதல் உகரம் இதழ்குவித்தே ஒலிக்கப்பெறுவதால், குற்றியலுகரம் சொன்முதற்கண் வரவே வராது. திரவிடப்புலவர் சிலர் கருதுகிறபடி குற்றியலுகரம் மெய்யீறுமன்று. ஒலிக்குறுக்கத்தை அல்லது திரிபைக் காட்டுதற்கே, அதன்மீது புள்ளி யிடப்பெற்றது. இதனையே, மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல். (104) குற்றிய லுகரமும் அற்றென மொழிப (105) என மாட்டெறிந்து கூறினார் தொல்காப்பியர். ஆயின், இதை யுணராது குற்றியலுகரமும் மெய்யீறெனப் பிறழக் கொண்டனர் ஆரியவழித் தமிழாசிரியர் சிலர். ஐ, ஔ இரண்டும் தமித்து நிற்கும்போது, அஇ, அஉ என இருமாத்திரையே ஒலிக்கும்; சொல்லுறுப்பாய் வரும்போதே அய், அவ் என ஒன்றரை மாத்திரையாய்க் குறுகும். ஆய்தம் ககரவொலியைச் சார்ந்த தென்பதை, அது தொன்று தொட்டு ஒலிக்கப்பட்டுவரும் முறைமையினாலும், ஏனச்சாரியை ஏற்கும்போது அஃகேனம் எனக் ககரத்தைப் பற்றுக்கோடாகக் கொள்வதாலும், குறுங்கணக்கிலும் நெடுங்கணக்கிலும் ககர மெய்க்கு முன் வைக்கப்பட்டிருப்பதாலும், பண்டை நெடுங் கணக் கேட்டுச் சுவடியில் க-ஃ என வரையப்பெற்றமையாலும் அறியலாம். ஆய்தம் வரும் சொற்களையெல்லாம் ஆய்ந்து பார்ப்பின், அது பெரும்பாலும் லகர ளகரத் திரிபாகவே காணப்படுகின் றது. இதை நோக்குமிடத்து, குமரிக்கண்டத்தில் ஓரிடத்து ஒலித்திரி பாகவோ புணர்ச்சித் திரிபாகவோ ஆய்தம் தோன்றியிருத்தல் வேண்டுமென்று தெரிகின்றது. சிலர் ஆய்தத்தை வடமொழி விசர்க்கமெனக் காட்டல் வேண்டி, அது அகரமேறியும் ஒலிக்குமெனக் கூறி, அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு (குறள். 943) என்னும் குறளையும் எடுத்துக்காட்டுவர். அளவறிந் துண்ணுக என்னும் பாடத்தில் தளை சரியா யிருத்தலின், அங்ஙனங் கொள்ள வேண்டிய தின்றாம். நயனில சொல்லி னுஞ் சொல்லுக என்னும் குறளில் (197) சொல்க என்பது தளைக்கேற்பச் சொல்லுக என வந்திருத்தல் காண்க. இனி, லகர ளகர வகரம் எங்ஙனம் ஆய்தமாகத் திரிய முடியு மென்று பலர் மயங்கலாம். பல ஒலித்திரிபுகள் எல்லார் வாய்க்கும் ஏற்றனவாகவும், சில ஒலித்திரிபுகள் ஓரிடத்து ஒருசிலர் வாய்க்கே இசைந்தனவாகவும், அமைந்துள்ளன. இதனாற் பின்னவை பிறர் மயங்குதற்கு இடமாகின்றன. ழகரம் பல சொற்களில் ககரமாகத் திரிகின்றது. எ-டு: குழை-குகை, முழை-முகை, சுழியம்-சுகியன்,தொழுதி-தொகுதி, நிழல்-நிகர் = ஒளி, மழவு- மகவு. ஒ.நோ: ÉÊ-L. vigil, E. wake. லகர ளகரம் ழகரத்தின் இனமாகவும் அதனினும் மெலிந்தும் இருப்பதனால், ககரத்தின் மெலியாகிய ஆய்தமாகத் திரிந்தன. வகரம் ககரமாவது பெருவழக்காதல் தெள்ளிது. எ-டு: ஆவா-ஆகா, சிவப்பு-சிகப்பு, செவிள்-செகிள், துவர்- துகிர். ஆய்தம் ககர மெலியாதலின், வகரம் ஆய்தமாகத் திரிதலும் இயல்பே. இதற்கு வருமொழி முதற் ககரமும் துணைசெய்யும். அவ்+கடிய = அஃகடிய இனி, இக்காலத்துச் சிலர் ஆய்தவெழுத்தைப் பிற தமிழெழுத்துகளின் முன்னும் பின்னும் இட்டு ஜ, ஷ, F, Z முதலிய பிற மொழி யெழுத்துகளைக் குறிப்பது, தமிழியல் பிற்கும் மரபிற்கும் முற்றும் மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதும் ஆகு மென்றும், தமிழைப் பிற மொழிகட்குப் பிந்தியதாகக் காட்டுமென்றும், பிறமொழிச் சொற்களை யெல்லாம் தமிழெழுத்திலேயே திரித்தெழுதுதல் வேண்டுமென்றும், அல்லாக் கால் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிதல் வேண்டும். ஆய்த வொலிக்குத் தமிழொலிகளை அயலொலி களாக மாற்றும் மந்திர வாற்றல் இல்லை. ஒலியைப் பொறுத்த மட்டில், ஆய்த வரிவடி வெழுதுவதும் அயன்மொழி வரிவடி வெழுதுவதும் ஒன்றே. எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரிவடிவன்று. தமிழ் மிகத் தொன்மையும் முன்மையும் மென்மையும் வாய்ந்த மொழியாதலின், அதன் வல்லினமெய்களும் பிறமொழி வல்லின மெய்களை நோக்க மெல்வல்லினமே. இதைக் கால்டுவெலாரும் நோக்காது, தமிழ் வல்லினத்தை வடமொழி ஐவகுப்பின் முதல் வரிசைக் கொப்பாகக் கொண்டுவிட்டனர். தமிழ் வல்லின மெய்கள் இரட்டித்தா லன்றி ஆரிய வல்லினமெய்க்கு ஈடாகா. எ-டு: ஆங்கிலம் தமிழ் வடமொழி தமிழ் booking புக்கிங் kaka காக்கா மேலும், தமிழ் வல்லின மெய்கள் பொலிவொலிகளும் (Voiced) ஆகா. பிற மொழிகளின் பொலிவொலிக்கும் பொலியாவொலிக்கும் (Voiceless) இடைப்பட்டதே தமிழ் வல்லினவொலி. அது இரட்டித்த விடத்தே நன்றாய் வலித்தும், தனித்துவரின், சொன்முதலில் ஒலி ÉG¤j¤âdhš(accent) சற்றே வலித்தும், சொல்லிடையிலுங் கடையிலும் மெல்லின மெய்யை அடுப்பினும் அடுக்காவிடினும் பொலிந்தும் ஒலிக்கும். இவ்வியல்பை நெல்லை மாவட்டத்து நாட்டுப் புற மக்கள் பேச்சில்தான் நன்றாய்க் காண முடியும். ற்ற, ன்ற என்னும் இணைமெய்யொலிகளை, முறையே, tt, nd என்னும் ஆங்கில மெய்யிணை போலப் பிளவின்றி யொலிப்பதே தமிழ்மரபாம். அங்ஙன மன்றிப் பிராமணரைப் பின்பற்றி, ttr, ntr என விதிரொலியுடன் (trill) பிளவுபடப் பலுக்குவது வழுவாம். பிரான்மேயர் (Frohnmeyer) எழுதிய படிமுறை மலையாள இலக்கணம் (A Progressive Grammar of the Malayalam Language) என்னும் நூலின் 9ஆம் பக்கத்தில் கூறியிருப்பதைக் கவனிக்க. பண்டைச் சேரநாட்டுத் தமிழே ஆரியத்தொடு சேர்ந்து மலையாள மாகத் திரிந்திருப்பதால், மலையாள றகரத்திற்குச் சொன்னது தமிழ் றகரத் திற்கும் ஒக்கும். றகரம் தனித்தும் இரட்டியும் னகரமெய்யடுத்தும் வரும் மூவேறு நிலைமைபற்றி, மூவேறு ஒலிகளை அடையும். (1) ற இது வலிய அல்லது முரட்டு ரகரம். இதற்கொப்பானது ஆங்கிலத்தி லில்லை. (2) ற்ற இது sit என்பதிலுமுள்ள t போல், அல்லது sitting என்பதிலுள்ள tt போல் ஒலிப்பது. (3) ன்ற இது send என்பதிலுள்ள nd போல் ஒலிப்பது. ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் மெலிவலி யிணைகளே தமிழிலுண்டு; ங்க்க (nk), ஞ்ச்ச (nc), ண்ட்ட (nt), ந்த்த (nth), ம்ப்ப (mp), ன்ற்ற (nt), என்னும் வன்மெலிவலி யிணைகள் தமிழில் நிகழ இம்மியும் இடமில்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, தமிழி யல்பை அறியாது, ஆங்கில வரிபெயர்ப்பில் (transliteration) கொடு என்பதைக் கொட்டு என்றும், பாம்பு என்பதைப் பாம்ப்பு என்றும் ஒலிக்குமாறு தவறாகக் குறித்திருப்பதினால், அதைப் பின்பற்றிய பரோ-எமெனோ திரவிட ஒப்பியல் அகரமுதலியும் அங்ஙனம் வழுப்படக் குறித்துள்ளது. முந்துநிலை யெழுத்துகள் தமிழ் உலகப் பெருமொழிகட்குள் மிக முந்தித் தோன்றிய இயன்மொழியாதலால், அதிற் பிற மொழிகளிற்போல் எல்லா எழுத் துகளும் சொன் முதலிடைகடையாகிய மூவிடத்தும் வருவதில்லை. முதனிலை யெழுத்துகள் சொன்முதலில் உயிரும் உயிர்மெய்யுந்தான் வரும்; ஆய்தமும் மெய்யும் வரவே வரா. ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பதுமெய்யும் உயிரோடுகூடி உயிர்மெய்யாகவும் சொன்முதல் வரா. உயிரோடு கூடிச் சொன்முதல் வரும் மெய்களுள்ளும், கசதநபம என்னும் ஆறே பன்னீருயிரொடுங் கூடிவரும். ஏனையவற்றுள், ஞகரம் நாலுயி ரொடும், யகரம் ஈருயிரொடும், வகரம் எட்டுயிரொடும் கூடிவரும். அவையாவன: ஞ, ஞா, ஞெ, ஞொ; ய (யவனர்), யா; வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ. இடைநிலை யெழுத்துகள் சொல்லிடையில் ஆய்தமும் மெய்யும் உயிர்மெய்யுமே வரும்; தனியுயிர் வராது. உயிருள், குறில்மட்டும் அளபெடைக் குறியாக வரும். க், ச், த், ப் ஆகிய நால் வல்லின மெய்கட்குப்பின், தன்னுயிர் மெய்யேயன்றி வேற்றுயிர்மெய் வராது. இது உடனிலை மெய்ம் மயக்கம் எனப்படும். பிற மெய்கட்குப்பின் பிற வுயிர்மெய்கள் சிலவும் பலவும் வரும். இது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப் படும். மயக்கம்-கூட்டம். ர், ழ் ஆகிய இருமெய்யும் இரட்டா; ஏனைய இரட்டும். ய், ர், ழ் ஆகிய மும்மெய்க்குப்பின் தனிமெய் வரலாம்; பிறவற்றின் பின் வரா. எ-டு: வாய்ப்பு, தேர்ச்சி, சீழ்க்கை. ம்ர, ம்ல; வ்ர, வ்ல என்னும் கூட்டுகள் தமிழில் எவ்வகையிலும் நிகழா. ண்ஞ், ன்ஞ; ஞ்ய, ண்ய, ந்ய, ம்ய, வ்ய, ன்ய; ம்வ என்னுங் கூட்டுகள் கூட்டுச்சொல் லிடையிலன்றி வரா. இறுதிநிலை யெழுத்துகள் ஆய்தமும் வல்லினமெய்யும் சொல்லிறுதியில் வரவே வரா; பிற மெய்களும் உயிர்மெய்யும்தான் வரும். நாஇ (நாய்) என்று எழுதப்பெற்ற பண்டைவழக்கு இன் றில்லை. உயிர்க்குறில் சொல்லிடையிற்போன்றே சொல்லிறுதி யிலும் அளபெடைக் குறியாய் வரும். ர், ழ் என்பன தனிக்குறிலுக்குப்பின் சொல்லீறாய் வருவ தில்லை. தமிழில் எச்சொல்லிலும் எவ்விடத்திலும் பிறமொழி யெழுத்தும் எழுத்துமுறையும் வருதல் கூடாது. பிறமொழிச் சொல் இன்றியமையாததும் மொழிபெயர்க்க முடியாதது மாயின், தமிழ் முறைக்கேற்பத் திரித்தெழுதப்பெறும். இங்ஙனம் வரம்பீடு செய்யாக்கால், தமிழ் நாளடைவில் வேறு மொழியாய் மாறிவிடும். இதனாலேயே, வட சொல்லைச் செய்யுட் சொல்வகை நான்கனுள் ஒன்றாகக் குறித்த தொல்காப்பியரும், முன்னோரிட்ட வரம்பை மீறாது, வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. (884) என நெறிவகுத்தார். சொன்முதல் வராவெழுத்தை முதலிற்கொண்ட பிற மொழிச் சொற்கள் தமிழில் எழுதப்பெறின், அவற்றின் முதலெழுத்து நீக்கப் பெறும்; அல்லது மாற்றப்பெறும்; அல்லது அதை மாற்றியோ மாற்றாதோ, அதன்முன் ஓர் உயிர்க்குறில் சேர்க்கப்பெறும். எ-டு. பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல் ஸ்காட்லாந்த் காட்டிலாந்து,காத்திலாந்து யூரோப்பியன் ஐரோப்பியன் ஸ்பெயின் இசுப்பெயின் ரஷியா இரசியா தமிழுக்கொவ்வாத மெய்ம்மயக்கத்தை இடையிற் கொண்ட சொல்லாயின், அது தமிழுக்கேற்றவாறு மாற்றப்பெறும். எ-டு: ஷேக்ஸ்பியர்-சேக்கசுப்பியர் வல்லினமெய்யும் அயலெழுத்தும் இறுதியிற்கொண்ட சொல் லாயின், அதன்பின் ஓர் உயிர் அல்லது உயிர்மெய் சேர்க்கப்பெறும்; அல்லது அதன் இறுதி மாற்றப்பெறும். எ-டு: பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல் நியூயார்க் நியூயார்க்கு யூரொப் ஐரோப்பா டேனிஷ் தேனியம் தனிச்சொல்லின் முதலில் மெய்யும், இடையிற் சில மெய்ம் மயக்கமும், இறுதியில் வல்லின மெய்யும், வரக்கூடாதென்று விலக்கியது, பண்டைத்தமிழரின் மெல்லொலி வாயியல்பு பற்றியது மட்டுமன்று; எதிர்காலத் தமிழரின் வாழ்நாள் நீடிக்குமாறு, இயன்றவரை மொழியொலிப்பு முயற்சியைக் குறைக்கவேண்டு மென்னுங் குறிக்கோளுங் கொண்டதாகும். விழுத்தம் (Accent) ஒரு சொல்லின் ஓர் அசையில் விழும் ஒலியுறைப்பு விழுத்தம் எனப்படும். தமிழில் விழுத்தம் (1) இயல்பு விழுத்தம், (2) சொற் பிரிவிழுத்தம், (3) சொல்வகை விழுத்தம் என மூவகைப்படும். (1) இயல்பு விழுத்தம் இயல்பு விழுத்தம் இயல்பாக நிகழ்வது. அது என்றும் சொல்லின் முதலில் விழும். எ-டு: கொற்றன், வந்தான். ஒலியுறைப்பு வரவரக் குறையுமாதலால், சொன்முதலில் எடுத்தலும் (Acute), இடையில் நலிதலும் (Circumflex) இறுதியிற் படுத்தலும் (Grave), நிகழும். ஈருயிர்ச் சொல்லாயின், எடுத்தலும் படுத்தலும் மட்டும் நிகழும். எ-டு: வந்தான், மகன் (2) சொற்பிரி விழுத்தம் இது ஒரு கவர்படு பொருண்மொழியில் (பல்பொருட் சொற் றொடரில்), சொல்வான் கருத்திற்கேற்ப ஏதேனும் ஒரு சொன் முதலில் நிகழும். எ-டு: செம்பொன்பதின்பலம் = செம்பு ஒன்பது பலம் செம்பொன்பதின் பலம் = செம்பொன் பதின்பலம் குன்றேறாமா = குன்றேறு ஆமா குன்றேறாமா = குன்றேறா மா (3) சொல்வகை விழுத்தம் இது சொல்வகைக்கேற்பச் சொன் முதலிலாவது இறுதி யிலாவது நிகழும். எ-டு: கட்டு - ஏவலொருமை வினை கட்டு - முதனிலைத் தொழிற்பெயர், முதனிலைத் தொழிலாகு பெயர். தபு = (நீ)சா - தன்வினை தபு = சாவி (கொல்)- பிறவினை சிலர் விழுத்தத்தைக் குற்றியலுகர வொலியொடு மயக்கி, கட்டு என்னும் ஏவல் வினையீறு முற்றியலுகரமென்றும், கட்டு என்னும் முதனிலைத் தொழிற்பெயரீறு குற்றியலுகரமென்றும், உரைப்பர். விழுத்தம் வேறு; முற்றியலுகரம் வேறு. குற்றியலுகரம் ஒருபோதும் இதழ்குவிந்து முற்றியலுகரமாகாது. அழுத்தம் (Stress or Emphasis) பொருளை வலியுறுத்தற் பொருட்டு, ஒரு சொல்லை யேனும் சொல்லுறுப்பையேனும் அழுத்தியொலிப்பது அழுத்தமாம். எ-டு: மறைமலையடிகள் தமிழில் மாபெரு மலை - பெயர்ச்சொல் மறைமலை ஆங்கிலத்திலும் வடமொழியிலும் வல்லுநர்- (குறிப்பு) வினைச்சொல் மறைமலையடிகள் இந்தியும் கற்றார்கள் - இடைச்சொல். ii சொல் மூவகைச்சொல் முதற்காலத்தில் இலக்கணவகைச்சொல் பெயர், வினை, இடை என மூன்றாகவே யிருந்தன. இதுவே எல்லா மொழிகட்கும் பொதுவான அறிவியன்முறைப் பாகுபாடாம். இலக்கணவகைச்சொல் மூன்றும் இயல்பாகத் தோன்றிய முறை, பொதுவாக நோக்கின், இடை, வினை, பெயர் என்பதாகும். உணர்ச்சியொலிகளும் விளியொலிகளும் குறிப்பொலி களும், மாந்தன் வாயில் முந்தித் தோன்றியவை யாகும். இவை இடைச்சொல் என்பது தெளிவு. சப்பு, துப்பு, விக்கு, முக்கு, விம்மு, தும்மு, இசி, சிரி முதலிய முந்தியற் சொற்கள், வினையாகத் தோன்றிப் பின்பு பெயரு மாயின. சில இடைச்சொற்கள் வினையாகிப் பின்பு பெயராகின்றன. எ-டு: ஒல் (இடை)-ஒலி (பெயரும் வினையும்). முதற்காலத்தில் ஒல் என்பதே வினையாகவுமிருந்தது. இடை வினை பெயர் என்னும் இம் முறை எல்லாச் சொற்கும் தனிப்பட்ட நிலையில் ஒத்ததன்று. சில இடைச்சொற்கள் நேரடியாய்ப் பெயராகி விடுகின்றன. எ-டு: எல்ல (எல்லா)-எலுவ-எலுவன் (தோழன்), எலுவை (தோழி). எல்லா என்னும் விளியொலி இன்று ஏல, ஏலா என்று வடிவிலும் பொருளிலும் திரிந்து வழங்குகின்றது. சில சொற்கள் முதலடியிலேயே பெயராகவோ வினையாக வோ தோன்றிவிடுகின்றன. எ-டு: காகா-காகம், காக்கா-காக்கை (பெயர்). கர-கரை (வினை). இவ் விருசொல்லும் ஆங்கிலத்தில் நேர்மாறாய் ஆளப்பெறு கின்றன. நாம் காகம் கரைகிறது என்கிறோம்; ஆங்கிலரோ `The crow caws' என்கின்றனர். சில வினைச்சொற்கள் பெயரினின்றே பிறக்கின்றன. எ-டு: உள்-உண் கள்-களி, காதல்-காதலி, தேன்-தேனி உள் = உள்ளிடம், உண்ணுதல் = உள்ளிடுதல். களித்தல் = கட்குடித்தல். தேனித்தல்-இனித்தல். நால்வகைச்சொல் ஆரியர் தென்னாடுவந்து தமிழ் கற்றுத் தமிழாசிரி யரானபின், இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்னும் மொழியியல்வகைச் சொற்களொடு வடசொல்லையும் சேர்த்துக்கொண்டது போன்றே, பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல் என்னும் இலக்கண வகைச் சொற்களொடும் உரிச்சொல் என்பதைச் சேர்த்து, இருவகை யிலும் சொற்களை நந்நான் காக்கினர். உரிச்சொல் என்பது செய்யுட்கேயுரிய சொல். சொல் என்பது சொல் வடிவையுங் குறிக்கும். ஆரியர் அயலாரான தினால், தமக்குத் தெரியாத அருஞ்சொற்களைத் தொகுத்துப் பொருள் உரைத்துக் கொண்டனர். இதன் விளக்கம் பின்னர்க் காண்க. (1) பெயர்ச்சொல் ஒரு பொருளின் பெயரே பெயர்ச்சொல். பெய்வது பெயர்; பெய்தல் - இடுதல். பெயரிடுதல் என்னும் வழக்கை நோக்குக. பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுபொருள்பற்றி, அறுவகைப்படும்; இருதிணைபற்றி, உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை என மூவகைப்படும்; மூவிடம் பற்றி, தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும். சினை = உறுப்பு. இருதிணைக்கும் பொதுவான பெயர் விரவுத்திணைப் பெயர் அல்லது விரவுப்பெயர் எனப்படும். எ-டு: ஆண், பெண், தாய், பிள்ளை. தன்மை முன்னிலைப்பெயர்கள், எண்பற்றி ஒருமை பன்மை என இருவகைப்படும். படர்க்கைப் பெயர்கள், பால்பற்றி ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐவகைப்படும். 1. மூவிடப் பகரப்பெயர் (Personal Pronouns) தன்மைப்பெயர்: ஒருமை பன்மை இரட்டைப்பன்மை முதல்நிலை ஏன் ஏம் ஏங்கள் 2ஆம் நிலை யான் யாம் யாங்கள் 3ஆம் நிலை நான் நாம் நாங்கள் தன்மைப் பெயரின் வேற்றுமை யடிகள் ஏன் ஏம் ஏங்கள் யான் - என் யாம் -எம் யாங்கள்-எங்கள் நான்-நன் நாம்-நம் நாங்கள்-நங்கள் யாங்கள் என்னும் தனித்தன்மைப் பன்மைப் பெயர் வழக்கற்றுப் போனதினால், இன்று அதன் இடத்தில் நாங்கள் என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப்பெயர் தன் உளப்பாட்டுப் பொருளையிழந்து வழங்குகின்றது. ஏ என்பது உயர்ச்சி குறித்தலால், இயல்பாக மாந்தனுக் குள்ள நான் என்னும் செருக்கு அல்லது தன்னலம்பற்றி, அதை அடியாகக் கொண்டு தன்மைப் பெயர்கள் தோன்றியிருக்கலாம். வடமொழி யிலக்கணியர் தன்மையிடத்தை உத்தம புருடன் என்றும், ஆங்கிலர் அதனை First- Person என்றும் குறித்ததையும் நோக்குக. ஏபெற் றாகும். (தொல். உரி. 7) எக்கு, எட்டு, எண், எம்பு, எவ்வு, எழு, ஏண், ஏந்து, ஏர், ஏறு முதலிய சொற்களில் எகர ஏகாரம் உயர்ச்சி குறித்தல் காண்க. இன்று வழக்கிலில்லாத வடிவங்களெல்லாம் பண்டைத் தமிழில் வழங்கினவென அறிக. முன்னிலைப் பெயர்: ஒருமை பன்மை இரட்டைப்பன்மை முதல்நிலை ஊன்) (ஊம்) (ஊங்கள்) 2ஆம் நிலை (நூன்) (நூம்) (நூங்கள்) 3ஆம் நிலை நீன் நீம் நீங்கள் 4ஆம் நிலை நீ நீயிர்(நீ + இர்) நீங்கள் பிறைக்கோட்டிலுள்ளவை வழக்கு வீழ்ந்தன. நீ என்பது நீன் என்பதன் கடைக்குறை. அது இர் ஈறுபெற்று நீயிர் என்றாகிப் பின்பு நீவிர் எனத் திரிந்து, நீர் எனத் தொக்கது. நீன், நீம் என்னும் வடிவங்கள் இன்றும் நெல்லை வட்டா ரத்தில் வழங்குகின்றன. முன்னிலைப் பெயரின் வேற்றுமை யடிகள் (ஊன்)-உன் ஊம்)-உம் (ஊங்கள்)-உங்கள் (நூன்)-(நுன்) (நூம்)-நும் (நூங்கள்)-நுங்கள் நீன்-நின் நீம்-(நிம்) நீங்கள்-(நிங்கள்) இன்று 4ஆம் நிலை எழுவாய் வடிவங்கட்கும் முதல்நிலை வேற்றுமை யடிகளே வழங்குகின்றன. முன்னிலைப் பெயர்கள் ஊ என்னும் முன்மைச் சுட்டடியாய்த் தோன்றியுள்ளன. முதற்காலப் படர்க்கைச் சுட்டுப்பெயர் ஒருமை பன்மை இரட்டைப்பன்மை முதல்நிலை (ஆன்) (ஆம்) (ஆங்கள்) 2ஆம் நிலை தான் தாம் தாங்கள் படர்க்கைப் பெயரின் வேற்றுமையடிகள் தான்-தன் தாம்-தம் தாங்கள்-தங்கள் ஆ என்னும் சேய்மைச் சுட்டடியினின்று பிறந்துள்ள தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள், அவன், அவள் முதலிய ஐம்பாற் சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், தற்சுட்டுப் பெயர்களாய் (Reflexive Pronouns) மாறிவிட்டன. `Auto' என்னும் கிரேக்கச் சொல்லும், முதலிற் சுட்டுப் பெயராயிருந்து பின்பு தற்சுட்டுப் பெயராய் மாறியுள்ளமை இங்குக் கவனிக்கத் தக்கது. இக்காலப் படர்க்கைச் சுட்டுப்பெயர்கள் (Demonstrative Pronouns) சேய்மைச் சுட்டுப்பெயர் : அவன், அவள், அவர், அது, அவை அண்மைச் சுட்டுப்பெயர் : இவன், இவள், இவர், இது, இவை முன்மைச் சுட்டுப்பெயர் : உவன், உவள், உவர், உது, உவை இவை முன்னர்க் காட்டிய அவ், இவ், உவ், அல், இல், உல் என்னும் சுட்டடிகளினின்று தோன்றியவையாகும். அல்-அது, இல்-இது, உல்-உது. உகரச் சுட்டடிப் பெயர்கள் இற்றைத் தமிழ்நாட்டில் வழக்கற்றன; ஆயின், யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது. அவர்கள், இவர்கள், உவர்கள் என்பன இரட்டைப் பன்மை வடி வங்களாகும். மக்கள் நாகரிகமடைந்தபின், அகவை அறிவு அதிகாரம் முதலியவற்றில் இழிந்தோனைக் குறிக்க ஒருமைப் பெயரையும், ஒத்தோனைக் குறிக்கப் பன்மைப் பெயரையும், உயர்ந்தோனைக் குறிக்க இரட்டைப் பன்மைப்பெயரையும், முன்னிலையிலும் படர்க்கையிலும் பயன்படுத்தினர். இது உலகவழக்கேயன்றிச் செய்யுள் வழக்கன்று. தன்மையிடத்திற்கு இரட்டைப்பன்மை வேண்டா விடினும், ஒப்புமைபற்றி அதிலும் அமைந்துள்ளது. மேற்காட்டிய மூவிடப்பெயர்களுள், ஐம்பாற் சுட்டுப் பெயர் தவிர ஏனைய வெல்லாம், னகர மெய்யீற்றால் ஒருமை யையும் மகர மெய் யீற்றாற் பன்மையையும், ஒழுங்காய் உணர்த்துகின்றன. இவ்வீறுகள் தோன்றிய வகை வருமாறு: ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்றாதல். ஒல்-ஒன் = ஒன்று. ஒன்-அன். ஒ.நோ: E one-an. ஒன் என்னுஞ் சொல்லே அன் என்று திரிந்து யான் (நான்), நீன், தான், என்னும் பெயர்களில் னகர மெய்யளவாக நின்று ஒருமையுணர்த்துகின்றது. அன்னீறு உயிரொடு புணரின் முதல் கெடும். ஏ+அன் = ஏன், ஊ-அன் = ஊன், ஆ+அன் = ஆன் ஒ-நோ: மக+அன் = மகன். கோ+அன் = கோன் (கோவன்) உம்முதல்-கூடுதல். உம் என்னும் வினை இன்று வழக்கற்று, அதன் அள்ளைத் திரிபான அம் என்னும் சொல்லும், அதன் வழியடியான கும் என்னுஞ் சொல்லுமே வழக்கிலுள்ளன. அம்-அமல்-அமலை = திரளை. அமல்-அமர். அமர்தல் = பொருந்துதல். அம்-அமை. அமைதல் = நெருங்குதல், கூடுதல். அம்-அம்பு-அம்பல்=குவிதல், குவியும் முகிழ். அம்பல்-அம்பலம் = அவை, கூட்டம், மன்றம். ம.அம்பலம், க. அம்பல, து. அம்பில. அம்பலம்-வ. அம்பர. சிற்றம்பலம்-வ. சிதம்பர (Cidambara). உம்-கும். கும்முதல் = கூடுதல். கும்-கும்மல். கும்-கும்பு-கும்பல். உம் என்னும் சொல் கூடுதலைக் குறித்ததனாலேயே, அது எண்ணுப்பொருள் அல்லது கூட்டுப்பொருளிடைச் சொல் லாகச் கொள்ளப்பட்டது. எ-டு: எழுத்தும் சொல்லும் பொருளும். நானும் வருவேன் = நான்கூட வருவேன், இதை ஒரு சிறு பிள்ளையும் செய்துவிடும் = இதை ஒரு சிறுபிள்ளைகூடச் செய்து விடும். இவ் வழக்குகளில், உம்மைச் சொல்லும் கூடற்சொல்லும் முற்றும் பொருளொத்திருத்தல் காண்க. இவ் வும்மைச் சொல்லே யாம், நீம், தாம் என்னும் பெயர்களில் மகரமெய்யளவாக நின்று பன்மையுணர்த்து கின்றது. கால்டுவெலார் கருத்தும் இதுவே. அம்மீறு போன்றே உம்மீறும், உயிரொடு புணரின் முதல் கெடும். ஏ+அம் = ஏம், ஊ+அம் = ஊம், ஆ+அம் = ஆம் ஒ-நோ: மண+அம் = மணம், கா+அம் = காம் (ஆசை) ஐம்பாலீறுகளின் வரலாற்றைப் பின்னர்க் காண்க. மூவகைச் சுட்டுப்பெயர் முறையிலேயே எ, ஏ, யா, என்னும் வினா வடிகளினின்று ஐம்பால் வினாப்பெயர்கள் தோன்றியுள்ளன. 2. வினாப்பெயர்கள் (Interrogative Pronouns) எ: எவன், எவள், எவர் (எவர்கள்), எது, எவை ஏ: ஏவன், ஏவள், ஏவர் (ஏவர்கள்), ஏது, ஏவை யா: யாவன், யாவள், யாவர் (யாவர்கள்), யாது, யாவை V-v., ஏ-யா, எ-எவ்,. எ-எல்-எது-எத்து-. எந்து. ஏ-ஏல்-ஏது. உயர்திணை ஆண்பாலைக் குறிக்கும் எவன் என்னும் வினாப் பெயரும், அஃறிணை யிருபாலையும் உணர்த்தும் எவன் என்னும் வினாப்பெயரும், வெவ்வேறாம். VJ v‹D« brhš, ‘v¥go¡ »il¤jJ? என்னும் பொருளில் குறிப்பு வினைமுற்றாகவும் வரும். எ-டு: உனக்கு இது ஏது? எது என்னும் சொல் சிறிது அறியப்பட்ட பொருள் பற்றியும், யாது என்னும் சொல் சிறிதும் அறியப்படாத பொருள்பற்றியும், வினாவாக வரும். v-L: FâiuthÈ ahJ?-á¿J« அறியப்படாதது. tuF ï¡ Ty§fSŸ vJ?-á¿J அறியப்பட்டது. யாவர் என்னுஞ் சொல் யார் எனத் தொக்கு உயர்திணை முப்பாலையுங் குறிப்பதுடன், உலக வழக்கில் ஆர் என்றும் மருவும். யா என்னும் வினாவடி, செய்யுள் வழக்கிற் பலவின்பால் வினாப் பெயராகவும் வழங்கும். எல்-என்-என்னது (ஒருமை), என்ன (பன்மை). ஏல்-ஏன். ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ (தொல். 32) என்று தொல்காப்பியம் கூறுவதால், வினாவெழுத்து முதற் காலத் தில் நெடிலாகவே யிருந்ததென்பதும், அது ஏகாரமே யென்பதும், உய்த்துணரப்படும். ஏ-யா-ஆ-ஓ யா சொல்லின் முதலிலும், ஆ ஓ சொல்லின் ஈற்றிலும், ஏ அவ்வீரிடத்தும், வினாவாக வரும். ஒரு பொருளைப்பற்றி எது என்று வினவுவது, ஓரிடத் திலுள்ள பல பொருள்களுள் ஒன்றை எடுத்துக்காட்டச் சொல்வது போலிருத்தலால், எழுச்சியை அல்லது உயர்ச்சியை உணர்த்தும் ஏகாரம் வினாவெழுத்தாகக் கொள்ளப்பட்டது என்று கருத இடமுண்டு. 3. படர்க்கைப்பெயர்ப் பாகுபாடுகள் தன்மையும் முன்னிலையுமன்றிப் படர்வது படர்க்கை. படர்தல் = பரந்து செல்லுதல். (1) அறுபொருட்பெயர் எல்லாப் பொருள்களும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என அறுவகைப்படும். ஆதலால் அவற்றின் பெயரும் அறுவகையாம். பொருள் என்றது. காட்சிப்பொருளாகவோ கருத்துப் பொருளாகவோ உள்ள ஒரு தனிப்பொருளை. ஏதேனும் ஒரு பொருளிருப்பின், அது இருக்க இடமும் காலமும் வேண்டும். பொருள்கள் இயற்கையாயினும் செயற் கையா யினும், பெரும்பாலும் பல வுறுப்புகளையுடையன. ஒவ்வொரு பொருட்கும் சில தன்மைகளுண்டு. அத் தன்மை களே உறுப்பையும் உடலையும் துணைக்கொண்டு தொழிலாக வெளிப்படும். இங்ஙனம் ஆய்ந்து பொருள்களை ஆறாக வகுத்ததும் அவற்றை முறைப் படுத்தியதும், வினையின் நீங்கி விளங்கிய அறிவன் முனைவனான முதனூலாசிரியனின், மெய்ப்பொரு ளறிவையும் தருக்கத் திறனையும் தெள்ளிதிற் காட்டும். குறியீட்டைப் பொறுத்தமட்டில், குணம் எனினும் பண்பு எனினும் ஒக்கும். முத்திணைப்பெயர் உயர்திணை, அஃறிணை, அவ் விரண்டிற்கும் பொதுவான விரவுத்திணை எனத் திணை மூவகைப்படும். எ-டு: உயர்திணைப்பெயர்-அவன், மாந்தன், முருகன் அஃறிணைப்பெயர் -அது, மரம், கல் விரவுத்திணைப்பெயர்-தாய், பிள்ளை, ஆண், பெண் திண்-திணை = திரட்சி, தொகுதி, வகுப்பு. ஐம்பாற்பெயர் ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணைப்பால் மூன்றும், ஒன்றன்பால், பலவின்பால் என அஃறிணைப்பால் இரண்டும் ஆகப் பால் ஐந்தாம். பகு-பகல்-பால் = பிரிவு. ஆண்பால், பெண்பால் என்னும் இரண்டும் ஒருமைப் பால்கள். ஆண்பெண் வேறுபாடு அஃறிணை யுயிரிகளுள்ளும் இருப்பினும், முதனூலாசிரியன் அதற்கு இலக்கணத்தில் இடந் தரவில்லை. ஏனெனின், மொழியை அமைத்த பொது மக்களே அங்ஙனம் அமைத்துவிட்டனர். இலக்கியங் கண்டதற் இலக் கணம் இயம்புதலே நூலாசிரியன் செயல். குமரிக்கண்டப் பொதுமக்கள் கூர்மதியும் உயரிய ஒழுக்கமும் உடையராதலின், நல்லதைக் கடைப்பிடித்துத் தீயதை நீக்கும் நாகரிகப் பண்பாட்டிற்கு இன்றியமையாத பகுத்தறிவை அளவையாகக் கொண்டு, அதையுடைய மக்களை உயர்திணை யென்றும், அஃதில் லாதவற்றை யெல்லாம் உயிரிருப்பினும் இல்லாவிடினும் அஃறிணை யென்றும் வகுத்து, அதற்கேற்ப, மகன் வருகிறான், மகள் வருகிறாள் என்று உயர்திணையிற் பால் பிரித்தும், காளை வருகிறது, ஆவு வருகிறது என்று அஃறிணையிற்பால் பிரிக்காதும், எல்லாப் பெயர்ச் சொற்களையும் வினைச்சொற் களையும் அமைத்து விட்டமை, என்றும் தமிழன் எண்ணி மகிழ்தற்கும் தன் முன்னோரைப்பற்றிப் பெருமை பாராட்டுதற்கும் உரிய தொன்றாம். இங்ஙனம் வேறெம் மொழியிலு மில்லாத சிறந்த இலக்கணவமைப்பு, இற்றைப் புல மக்களினும் அற்றைப் பொது மக்கள் அறிவாற்றலிலும் நாகரிகப் பண்பாட்டிலும் சாலச் சிறந்தவரென்பதற்கு தக்க மொழிச் சான்றாம். ஆண்பால் பெண்பாற்பெயர் (Masculine and Feminine Nouns) ஆண்பால்: உயர்திணை அஃறிணை ஆண், ஆடவன், ஆடூஉ ஆண், அப்பர், இரலை, ஆண்பிள்ளை, ஆண்மகன், உதள், ஏறு-ஏற்றை, மகன், மாந்தன் ஒருத்தல், கடா, கடுவன், கண்டி, கலை, களிறு, காளை, சலகன், சே, சேவல், தகர்,புகல்வி, போத்து, மோத்தை,விடை. பெண்பால்: பெண், பெண்டு, அளகு, ஆன், ஆ, ஆவு), பெண்டாட்டி, பெண் கடமை, கடாரி (கிடேரி), பிள்ளை, மகள்,மகடூஉ, நாகு, பாட்டி, பிடி, பிணா- மாந்தை பிணவு பிணவல், பிணை, பெண் பெட்டை,பெடை, பேடை, மந்தி, மறி, மூடு. திரிபால்: ஆண்டன்மை மிக்க பெண் - பேடன் பெண்டன்மை மிக்க ஆண் - பேடி இரண்டிற்கும் பொதுப்பெயர் - பேடு ஆணும் பெண்ணும் அல்லாதது - அலி, அழிதூஉ ஆண் தோற்றமுள்ள அலி - ஆணலி பெண் தோற்றமுள்ள அலி - பெண்ணலி இளமைப்பெயர், முதுமைப்பெயர் இளமைப்பெயர்: உயர்திணை அஃறிணை மக-மகவு, குழவி, கசளி, கயந்தலை, கரு, குழகு, குழந்தை, கருந்து, களவு-களவம், சேய், மழ-மழவு, கன்று, குஞ்சு, குட்டி, மதலை, புதல்வு, குருமன், குருளை, குழவி, பிள்ளை, (குட்டி) செள்,சேய், நவ்வி, நாகு, நாற்று, பறழ், பார்ப்பு, பிள்ளை,பொடி,போக்கு, போந்து- போந்தை,மடலி- வடலி, முனி முதுமைப்பெயர்: கிழவன் - கிழவி கிழம். கிழடு, கெட்டை, மூரி முதியன் - முதியள் முதுமகன்-முதுமகள் முறைப்பெயர் (Names of Relationship) தந்தை-அப்பன் (தமப்பன்-தகப்பன்), அத்தன்-அச்சன், ஆஞான்-ஆஞி, ஐயன், தா, நாயன். தாய்-அம்மை-அவ்வை, அன்னை-அஞ்ஞை, அத்தி-ஆத்தி- ஆத்தை, அச்சி-ஆச்சி, ஐயை, ஆய், தள்ளை. மகன்-புதல்வன். மகள்-புதல்வி. மக (பொது)-மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை (ஒருமை); மக்கள் (பன்மை). அண்ணன்-ஐயன் (தமையன்), ஆயான், அண்ணாட்சி (அண்ணாத்தை), அண்ணாள்வி, தம்முன், மூத்தோன், முன்னோன். தம்பி-தம்பின்-தம்பி, இளவல், இளையான், பின்னோன். அக்கை-அக்கைச்சி (அக்கையச்சி), (தமக்கை), தவ்வை (தம் அவ்வை), மூத்தாள், முன்னை, அத்தி-அச்சி. தங்கை-கை, தங்கைச்சி (தங்கையச்சி), செள்ளை, இளையாள், பின்னை, பின்னி. அண்ணன் தம்பி (பொது)-உடன்பிறந்தான்-உடப்பிறந்தான். அக்கை தங்கை (பொது)-உடன்பிறந்தாள்-உடப்பிறந்தாள். அண்ணன் மனைவி-அண்ணி, ஆயந்தி (ஐயன்தேவி), நங்கை, அத்தாச்சி. அக்கை கணவன்-அத்தான், மாமன். மருமகன்-மருமான், மருகன், மணவாளப்பிள்ளை மருமகள்-மருமாள், மருகி, மணாட்டுப்பெண். பெண்கொடுத்தோன்-மாமன். மாமன்மனைவி-மாமி. கணவன்-ஆண்மகன், அகமுடையான். கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன்-மணாளன், வீட்டுக்காரன். மனைவி-அகமுடையாள், இல்லாள், நாயகி, பெண்- பெண்டு-பெண்டாட்டி, கண்ணாட்டி, மணவாட்டி, வீட்டுக்காரி. கணவன் தம்பி-கொழுந்தன். தங்கை-கொழுந்தி. அண்ணன்-அத்தான், மூத்தார். அக்கை-நாத்தூண், நாத்தூணாள். மனைவி அண்ணன்-மூத்த அளியன், அத்தான் தம்பி -இளைய அளியன். அக்கை-மூத்த அளியாள், அண்ணி தங்கை-இளைய அளியாள், கொழுந்தி. ஓரகத்தான்-ஓர்குடி மணாளன், ஓர்குடியிற்கொண்டோன் (சகலன்). ஓரகத்தி-ஓரகத்தாள், ஓர்ப்படி, ஓர்ப்படியாள், ஓர்ப்படைச்சி. தந்தையண்ணன்-பெரியப்பன், மூத்தப்பன், பெரியையா. தந்தை தம்பி-சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டியப்பன் சின்னையா. தந்தையுடன்பிறந்தாள்-அத்தை (சின்னத்தை, பெரியத்தை). தாயின் அண்ணன்-பெரியம்மான், மூத்தம்மான். தாயின் தம்பி-சின்னம்மான், இளையம்மான் அம்மாண்டார். தாயின் அக்கை-பெரியம்மை, பெரிய தாய். தாயின் தங்கை-சின்னம்மை, சிறிய தாய், தொத்தா, சித்தி (சிற்றாய்), பின்னி. தந்தையின் தந்தை-அப்பச்சன், தாதா, தாதை, தாத்தா. தந்தையின் தாய்-அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய். தாயின் தந்தை -அம்மாச்சன். தாயின் தாய்-அம்மாச்சி, அம்மாய், அமிஞை. பெற்றோர் தந்தை (பொது) - பாட்டன், போற்றி - போத்தி. பெற்றோர் தாய் (பொது)-பாட்டி. பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப் பாட்டன். பாட்டன் தாய்-பூட்டி, கொள்ளுப்பாட்டி. பூட்டன் தந்தை-ஓட்டன், சீயான்(சேயான்). பூட்டன் தாய்-ஓட்டி, சீயாள் (சேயாள்). மகன் மகன், மகள் மகன் - பெயரன்-பேரன். மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி-பேர்த்தி. பேரன் மகன் - கொள்ளுப்பேரன், கொட்பேரன். பேரன் மகள் - கொள்ளுப்பேர்த்தி, கொட்பேர்த்தி. சக்களத்தி(சகக்களத்தி) என்னும் இருபிறப்பிச் சொல்லை (Hybrid) ஒக்களத்தி என்றும், சம்பந்தி என்னும் வட சொல்லை உறவாடி என்றும், மொழிபெயர்த்துச் சொல்லல் வேண்டும். இயற்பெயர் (பெற்றோர் இட்டபெயர்) எ-டு : அருண்மொழித்தேவன், திருவரங்கம், பரிமேலழகன் சிறப்புப்பெயர் எ-டு : காக்கைபாடினி, மகனை முறைசெய்தான். பட்டப்பெயர் எ-டு : தொண்டர்சீர்பரவுவார், தலைக்கோல் (கணிகையர் பட்டம்), கலையிளைஞன் (B.A.), புலவன். விருதுப் பெயர் எ-டு : மும்முடிச்சோழன், கங்கைகொண்டான். புலமைப் பெயர் எ-டு : அறிஞன், பண்டிதன், புலவன், நாவலன், பாவலன். பகடிப் பெயர் (Nickname) எ-டு: ஊன்பொதிபசுங்குடையன், நரிகுளிப்பாட்டி (வலக்காரம் மிக்கவன்.) குலப்பெயர் எ-டு: வேளாளன், பாணன். குலப்பட்டப்பெயர் எ-டு: செட்டி, நாடான், பிள்ளை, முதலி. இது இக்காலவழக்கு குடிப் பெயர் எ-டு: குறுக்கையன், சேக்கிழான். இட(நில)வியற்பெயர் எ-டு: திணைநிலை-குன்றவன், ஆயன்,வேட்டுவன். நாட்டுநிலை-சோழியன்,கொங்கன்,மாறோக்கத்தான். ஊர்நிலை-உறந்தையான், கூடலான், நகரமாந்தர். காலவியற் பெயர் எ-டு: ஆதிரையான், வேனிலான் தலைமைப் பெயர் எ-டு: திணை நிலை-வெற்பன், குறும்பொறைநாடன், ஊரன். குலநிலை-அம்பலகாரன்,நாட்டாண்மைக்காரன், பட்டக்காரன். வாழ்நிலைப்பெயர் எ-டு: இல்லறத்தான்,இல்வாழ்வான். துறவி, அடிகள், முனிவன் சினைமுதற்பெயர் எ-டு: கரிகாலன்,பெருந்தலையன் உடைமையியற்பெயர் எ-டு: செல்வன், நாடுகிழவோன் பண்பியற்பெயர் எ-டு: அன்பன், நல்லோர் தொழிலியற் பெயர் எ-டு: எழுத்தாளன், தச்சன், பொருநன், கடுநடையன் மதவியற் பெயர் எ-டு: சிவநெறியன், திருமால்நெறியன், சமணன். (2) இடப்பெயர் (Place-Names) எ-டு: குறிஞ்சி : சிறுகுடி, குறிச்சி, மலை, கோடு, குன்று-குன்றம், கா, சோலை, புழை, கடவு, கணவாய். முல்லை : பாடி, சேரி, பட்டி, வாடை, ஆநந்தல். மருதம் : முற்காலம்-ஊர், பேரூர், மூதூர், புத்தூர், நல்லூர், ஆற்றூர், குளத்தூர், சேற்றூர், ஆமூர், இல், குடி, இருப்பு, வாழ்வு, வயல், பண்ணை, நாடு, மங்கலம், குளம், இலஞ்சி,ஏரி, ஆறு-ஆறை, கிணறு, ஊருணி, நெல்லூர், நெல்வேலி, நென்மேனி, நெற்கோட்டை. பிற்காலம்-நகர்-நகரம், எயில், கோட்டை, புரி, புரம், கோவில் - கோயில். நெய்தல் : முற்காலம்-குப்பம், கழி, காயல், கானல், கரை, துறை, கொண்கு, சேர்ப்பு, பிற்காலம்-பட்டினம், பாக்கம், (அலைவாய், புகார், கூடல்). பாலை : கடம்காடு, கானம், குடிக்காடு, முதுகுடி, பறந்தலை, நத்தம், வலசை. முதற்காலத்தில், ஒவ்வொரு திணைநிலத்திலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருந்தனர். மருதநிலத்தில், நாளடைவில் ஊர் விரிவும் தொழிற்பெருக்கமும் கல்வியறிவும் நாகரிக வளர்ச்சியும் வணிக முன்னேற்றமும் பேரரசாட்சியும் மதில் சூழ்ந்த மாநகரமைப் பும் ஏற்பட்டபின், நீர் வாணிகத்தின் பொருட்டு, பேரியாறுகள் கடலோடு கலக்கும் கயவாயில் பட்டினம் என்னும் துறைநகர்கள் கட்டப்பெற்றன. சில சிறப்புவகை யிடப்பெயர்கள் உரிமை நிலங்கள் காணி அல்லது g‰W-bghJñÊa« செய்தவர் குடும்பத் திற்கும், போரில் இறந்த மறவர் குடும்பத்திற்கும் நன்கொடையாகக் கொடுக்கப்பெற்ற முழுவுரிமை நிலம். K‰ù£L-òyt® முதலியோர்க்குக் கொடுக்கப்பெற்ற முழுவுரிமை நிலம். ïiwÆÈ-tÇÚ¡f¥ பெற்ற மானிய நிலம். mw¥òw«-fšÉ¢rhiyf£F« மடங்கட்கும் விடப்பெற்ற இறையிலி. moá‰òw«-nrh‰W¢r¤âu¤â‰F விடப்பெற்ற இறையிலி. nfhƉòw«-nfhÆš வழிபாட்டிற்கு விடப்பெற்ற இறையிலி. g©lhuthil-FofS¡F உரிமையான வூர். சில வூர்ப்பெயர்கள் நத்தம் - போரினாற் பாழான வூர். குடியேற்றம்-மக்கள் புதியதாய்க் குடியேறிய வூர். தங்குமிடங்கள் பாசறை அல்லது கட்டூர்-போர்க்களத்தருகிற் படைமறவர்க்க மைத்த இலைக்குடில் தொகுதி (War-camp). பாளையம்-படைகளுடன் பொதுமக்கள் தங்கியிருப்பதும் கடைத்தெருவுடன் கூடியதுமான இடம் (Military Encampment). படைவீடு-படைமறவர் நிலையாக வதியும் இடம் (Cantonment) தாவளம்-அயலூரில் தங்கியிருக்குமிடம் (Lodging). நிலப்பாங்குகள் கரிசல்-களிமண் நிலம். சிவல்-செம்மண்நிலம். தேரி-பரந்த கடற்கரை மணல் நிலம். கல்லாங்குத்து-வன்னிலம். முரம்பு-கன்னில மேடு (தென்பாண்டி வழக்கு). நாட்டுப்பிரிவுகள்: பெரும்பிரிவு-மண்டலம். சிறுபெரும்பிரிவு-கோட்டம், வளநாடு. சிறுபிரிவு-கூற்றம், நாடு. கீழ்ச்சிறுபிரிவு-தனியூர், பற்று (பல சிற்றூர்த் தொகுதி) சிற்றூர்-உட்கிடை. (3) காலப் பெயர் விடியலிலிருந்து ஒரு நாள் பப்பத்து நாழிகை கொண்ட ஆறு சிறுபொழுதாகவும், மேழ (சித்திரை) மாதத்திலிருந்து ஓர் ஆண்டு இவ்விரு மாதங்கொண்ட ஆறு பெரும் பொழுதாகவும், வகுக்கப் பட்டுள்ளன. சிறுபொழுது காலை, நண்பகல், எற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை. நண்பகல் நடுவிற்கு உச்சிவேளை, உருமம் என்பன தூய உலக வழக்குத் தமிழ்ச்சொற்கள். உச்சிவேளைக்கு முந்திய பகல் முற்பகல்; பிந்திய பகல் பிற்பகல். பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், கார் (மழை), கூதர் (குளிர்), முன்பனி, பின்பனி. வேனில் என்பது கோடை. (4) சினைப்பெயர் (Names of organs) நிலத்திணை: வேர், அடி, கிளை, இலை, பூ, காய், கனி முதலியன. இயங்குதிணை: பாதம், கால், அரை, வயிறு, மார்பு, கழுத்து, தலை முதலியன. (5) குணப்பெயர் (Abstract Noun) வண்ணம், வடிவு, அளவு, சுவை, ஊறு, நாற்றம், இயல், செயல் எனக் குணம் எண்வகைப்படும். வண்ணம் வெள்ளை, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு, கத்தரி (violet) என வண்ணம் எழுவகை. நீர்-நீல்-நீலம் = கடல்நீரின் நிறம். நீர் = கடல். தலைசிறந்த நீர் நிலையும் பிற நீர்நிலைகட்கு மூல மாயிருப்பது கடலே. நீரொலித் தன்ன (மதுரைக். 369) கானக் கோழியு நீர்நிறக் காக்கையும் (சிலப். 10:116) கடல்வண்ணன் = திருமால். நீள்-நீர். நிலம் நிற்பது; நீர் நீள்வது. கத்தரி (ப்பூ) என்பது உலக வழக்கு. சிலர் அதை ஈரல் நிறம் என்பர். காளைவகையில் புகர் (கபிலம்), புல்லை, மயிலை, கருமயிலை முதலிய நிறப்பெயர்களும்; கோழிவகையில் சாம்பல், கம்பரிசி முதலிய நிறப்பெயர்களும்; ஆடைவகையில் கெம்பு, காவி, நீர்க்காவி, பழுக்காவி, (orange), துவர், களிப் பாக்கு, வெங்காயம், மாந்துளிர், கிளிப்பச்சை, பாசிப்பயறு, ஈயம், இளநீலம், மயிற்கழுத்து, வானவில், முகில்வண்ணம் (மேகவர்ணம்) முதலிய நிறப்பெயர்களும்; மக்கள் மேனி வகையில் தங்கம், பசலை, புதுநிறம், மா முதலிய நிறப் பெயர் களும் வழங்கி வருகின்றன. குமரிக்கண்டத் தமிழர் எஃகுச்செவியும் கூர்ங்கண்ணும் நுண்மதியும் உடையராதலின், வண்ணங்களையெல்லாம் நுட்ப மாய் வகுத்து அவற்றிற்கு வெவ்வேறு பெயரிட்டிருந்தனர். பண்டை யிலக்கிய மெல்லாம் செய்யுள்வடிவிலேயே இருந்ததி னாலும், அவையும் அடியோடு இறந்துபட்டமையாலும், பல வண்ணப் பெயர்களும் இறந்தொழிந்தன. இன்றும் மீன்பெயர்களில் வெண் ணிறவகைகளைக் குறிக்க வெள்ளி, வெள்ளை, வெண்ணெய், வெளுவை முதலிய சொற்கள் ஆளப்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. வடிவு வட்டம், சதரம், முக்கோணம் முதலிய பரப்பு வடிவங்களும், உருண்டை, உருளை, கூம்பு முதலிய கனவடிவு களும், பல்வகைய வட்டம், சதுரம் என்பவையும் தென் சொற்களே என்பது என் வடமொழி வரலாறு' என்னும் நூலில் விளக்கப்பெறும். அளவு எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல், என அளவை நால்வகை. எண்ணல் எண்ணுப்பெயர்கள் சிற்றிலக்கம் (கீழ்வாயிலக்கம்), பேரி லக்கம் (மேல்வாயிலக்கம்) என இருவகைப்படும். சிற்றிலக்கமும் கீழ்வாய், மேல்வாய் என இரு திறத்தது. தேர்த்துகள் 1/2,3238245,3022720,0000000, இம்மி 1/2150400, கீழ் முந்திரி 1/102400, கீழ்க்காணி 1/25600, கீழ்மா 1/6400, கீழ்வீசம் அல்லது கீழ்மாகாணி 1/5120, கீழரைக்கால் 1/2560, கீழ்க்கால் 1/1280, கீழரை 1/ 640 என்பன கீழ்வாய்ச் சிற்றிலக்கம். முந்திரி 1/320, காணி 1/80, ஒருமா 1/20, வீசம் அல்லது மாகாணி 1/16, அரைக்கால் 1/8, கால் 1/4, அரை 1/2 என்பன மேல்வாய்ச் சிற்றிலக்கம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், இலக்கம், கோடி, தாமரை, பரதம், நெய்தல், ஆம்பல் முதலியன பேரிலக்கம். இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை யுணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம். முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங் குறிக்கும். முந்திரிப்பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன் துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப் பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும் கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே. பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை. காணி காணிக்கப்பட்ட நிலஅளவு. காணித்தல்- மேற்பார்த்தல். பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி = சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி. கோல்-கால்=மரத்தூண். தூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு, (முட்டியின் கீழ்) உடம்பின் நாலிலொரு பகுதி, நாலிலொரு பகுதி. அரு-அரை = அருகிய (ஒடுங்கிய)இடை, உடம்பின் பாதியள வான இடம், பாதி. ஒ.நோ: இடு (இடுகு)-இடை. இடு - இடுப்பு. இடை = உடம்பின் நடு, நடு. இடுத்தல் - சிறுத்தல். இடு-இடுகு. ஒன்று : ஒல்-ஒன்-ஒன்று. ஒல்லுதல் = பொருந்துதல், ஒன்று சேர்தல். xš-x®-xU(bg.v.)-x® (பெ.எ.) இரண்டு : ஈர்-இர்-(இரது)-(இரடு)-இரண்டு. ஈர்தல்=ஒன்றை இரண்டாக அறுத்தல். ஈர்-இர்-இரு ( பெ.எ.). மூன்று : இது முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம். _ (bg.v.)-K(bg.v.). நான்கு : இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகைப்பட்ட நிலத்தின் பெயரினின்று தோன்றிய தாகும். ஞாலத்திற்கு நானிலம் என்னும் பெயருண்மை காண்க. நல்-நன்று. நன்றுபெரி தாகும். (தொல். உரி. 45) நனி+மிக. நனந்தலை = அகன்ற இடம். நனவே களனும் அகலமுஞ் செய்யும். (தொல். 859) நல்-நால்-(நாலம்)- ஞாலம் = பரந்த உலகம். ஒ.நோ: பர-பார் = ஞாலம், உலகம். நால்-நால்கு-நான்கு. நால் = நான்கு. பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (பெருந்தொகை) வாலுளைப் புரவி நால்குடன் பூட்டி (பெரும்பாண். 480) நால் (பெ. எ.). நிலப்பகுதியும் உலகம் எனப்படும். எ-டு: மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். பொருள்.5) ஐந்து : கை-ஐ-(ஐது)-ஐந்து-அஞ்சு. கை = ஐந்து. ஒரு கையில் ஐந்து விரலிருப்பதால் கை என்னும் சொல் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. இன்றும் வறட்டி விற்கும் பெண்டிர், ஒவ் வோர் ஐந்தையும் ஒவ்வொரு கை என்று சொல்லு தல் காண்க. கை என்னும் சொல்லின் மெய்ந் நீக்கமே ஐ என்பதும். கை-ஐ (பெ.எ.). ஆறு : ஆறு = வழி. நெறி, மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறுதெய்வ வணக்கமும் கடவுள் வழி பாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் (மதமாய்) இருந்ததினால், ஆறென்னும் மதப்பெயர் ஆறென் னும் எண்ணைக் குறிக்கலாயிற்று. இன்றும் மதம் என்னும் பெயர் ஆறென்னும் எண்ணுப் பொரு ளில் வழங்குதல் காண்க. ஆறு என்னுஞ் சொல், நல்லா றெனினும் கொளல்தீது (குறள். 222) என்னுங் குறளடியில் ஒழுக்க நெறியையும், சைவ நல்லா றோங்க (பெரியபு. சண்டேசு. 57) என்னுந் தொடரில் சமய நெறியையுங் குறித்தல் காண்க. ஆறு-அறு (பெ. எ.). ஏழு : எழு-எழுவு. எழுவுதல்=இசைக்கருவியினின்று ஒலியெழச் செய்தல். சாத்தி யாழெழூஉம் (சேனா. உரை) எழுவும் முரசு (சூளா. கலியாண. 248) இன்னிசை யேழாதலால், அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப்பெயர் தோன்றிற்று. எழு-எழால் = யாழிசை. எழாலை யன்னசொலந்திழை மாதரார் (கந்தபு.) திருக்கல்.15. எழு-ஏழ்-ஏழு. எழு(பெ. எ.) - ஏழ் (பெ.எ.). எட்டு : தமிழில் எல்லை என்னும் சொல் இடவரம் பையும், திசையையும் குறிக்கும். ஐந்தா வதனுரு பில்லும் இன்னும் நீங்கல்ஒப் பெல்லை ஏதுப் பாருளே. (நன்.299) என்னும் நன்னூல் நூற்பாவும் மதுரையின் வடக்கு சிதம்பரம் என்னும் உரையாசிரியன்மார் எடுத்துக்காட்டும், எல்லை என்னும் சொல்லைத் திசையென்னும் பொருளில் ஆண்டி ருத்தல் காண்க. எல்லை என்பதற்கு ஒருபொருள் மறுசொல் எண் என்பதாம். எண் = வரையறை (தொல். எழுத்து. 308, உரை). எண் = ஏண் = எல்லை (திவ். திருவாய். 2:8:8, பன்னீ.) ஏண்-ஏணி=எல்லை. நளியிரு முந்நீர் ஏணியாக (புறம். 35: 1) நேர்த்திசை நான்கும் கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின், திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டென்னும் எண்ணுப்பெயரைத் தோற்றுவித்தது. எண்-எட்டு. எண் (பெ.எ.). தொண்டு: தொள்-தொண்டு=தொளை. மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருத்தலால், தொளைப்பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. ஒன்பதிற்கு முதலாவது வழங்கிய பெயர் தொண்டு என்பதே. தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்று (தொல். 1358) ``தொடித்திரிவன்ன தொண்டுபடு திவவின் (மலைபடு. 21) தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ் (சிலப். ப. 221. குறிப்புரை) தொண்டு என்னுஞ்சொல் வழக்கற்றுப் போகவே, அஃதிருந்த ஒன்றாம் இடத்திற்குத் தொண்பது (ஒன்பது) என்னும் இரண்டாம் இடப்பெயரும், இரண்டாம் இடத்திற்குத் தொண்ணூறு என்னும் மூன்றாம் இடப்பெயரும், மூன்றாம் இடத்திற்குத் தொள்ளாயிரம் என்னும் நாலாம் இடப்பெயரும் வந்து வழங்குகின்றன. நாலாம் இடப்பெயருக்கு மேலிடச்சொல் இன்மையால், தொண்பது என்பதன் திரிபான ஒன்பது என்னுஞ் சொல்லொடு ஆயிரம் என்பதைச் சேர்த்து, ஒன்பதாயிரம் அல்லது ஒன்பதினாயிரம் என்று சொல்லவேண்டி யதாயிற்று. ஒன்று முதல் பத்துவரையுள்ள பெயர்களெல்லாம் தனிச் சொல்லாயிருப்பதையும், ஒன்பது என்பது கூட்டுச்சொல்லாயும் பது (பத்து) என்று முடிவதாயும் இருப்பதையும், நோக்குக. பத்து : பல் = பல. பல்-பது-பத்து-பஃது. ஒ.நோ : அல்-அது-அத்து-அஃது. மெல்-மெது-மெத்து. பல்-பன். எ-டு: பன்னொன்று, பன்னிரண்டு. பன்-பான். எ-டு: ஒருபான் (ஒருபது), இருபான்(இருபது). நூறு : நுறு-நூறு=பொடி. நுறு-நுறுங்கு-நொறுங்கு. நூறு (பொடி)எண்ண முடியாததாயிருப்பதால், அதன் பெயர் முதற்பெருந்தொகையைக் குறித்தது. ஆயிரம் : அயிர் = நுண்மணல். அயிர்-அயிரம்-ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப் பதால், மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று. வாழிய.......e‹Ü®¥ பஃறுளி மணலினும் பலவே (புறம்.9) வானத்து வெள்ளிகளையும் கடற்கரை மணலையும் போல் உ‹மரபை¥பெருக¥பண்ணுவேன்.''(விவிலிaமொÊ பெயர்ப்ò ) நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில். .............................................. வடுவாழ் எக்கர் மணலினும் பலவே. (புறம். 55:17-21) இலக்கம் : இலக்கு=குறி. இலக்கு-இலக்கம் = குறி, எண்குறி, எண், பேரெண். கோடி : குடு-குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி. குடு-கொடு. கொடுமுடி = மலை யுச்சி. கொடு- கோடி = நுனி, முனை, கடைசி, எல்லை. கடைகோடி என்னும் வழக்கை நோக்குக. தெருக்கோடி விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க. கோடி கடைசி யெண்ணாத லால் அப்பெயர் கொண்டது. தாமரை, குவளை, நெய்தல், ஆம்பல் முதலிய மலர்ப் பெயர்கள் ஒவ்வோர் இதழுக்கும்; சங்கம் (சங்கு) என்பது ஒவ்வொரு புரிக்கும் (வளைவிற்கும்); ஒரு பெருந்தொகையாக உறையிடல் முறையிலும்; நாடு, வாரணம், வெள்ளம் என்பன பேரளவுபற்றியும்; கணிகம்(நூறுகோடி) என்பது கணிப்புப்பற்றியும்; பல்வேறு அடுக்கிய கோடிப் பெயராயின. எட்டுத் தாமரை கொண்டது ஒரு நாடு. பரதம் = இலக்கம் கோடிக் கோடாகோடி. இது 1-ன் பின் 24 சுன்னங்கொண்டது. பரதம் என்பது கடல் வணிகத்தின் பெயர். படவன்-பரவன்-பரதவன்-பரதவம்-பரதம். இனி, பரத கண்டம் எனினுமாம். பரதன் திங்கட்குலத்தைச் சேர்ந்த ஒரு பழம் பாண்டியனே. எடுத்தல் 4 கஃசு = 1 தொடி அல்லது பலம் 8 பலம் = 1 சேர் 5 சேர் = 1 வீசை 5 வீசை = 1 துலாம் 8 வீசை = 1 மணங்கு 20 மணங்கு = 1 கண்டி பொன்னளவை 5 கடுகு = 1 சீரகம் 5 சீரகம் = 1 நெல் 4 நெல் = 1 குன்றிமணி 2 குன்றிமணி = 1 மஞ்சாடி 2 மஞ்சாடி = 1 பணவெடை 10 பணவெடை = 1 கழஞ்சு முகத்தல் 360 நெல் = 1 செவிடு அல்லது சுண்டு 2 செவிடு = 1 ஆழாக்கு 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 2 உரி = 1 நாழி அல்லது படி 8 நாழி = 1 குறுணி அல்லது மரக்கால் 2 குறுணி = 1 பதக்கு (பாண்டிநாட்டில் 10 படி) 2 பதக்கு = 1 தூணி 3 தூணி = 1 கலம் (தஞ்சை வட்டார வழக்கு) 21 மரக்கால் = 1 கோட்டை (பாண்டிநாட்டு வழக்கு) 18 மரக்கால் = 1 புட்டி (மேலை வடார்க்காட்டு வழக்கு) 4 (சிறு) படி = 1 வள்ளம் 40 வள்ளம் = 1 கண்டகம் (சேலம் வட்டார வழக்கு) 6 மரக்கால் = 1 மூட்டை 64 மூட்டை = 1 கரிசை 5 மரக்கால் = 1 பறை 80 பறை = 1 கரிசை படியை இடங்கழி என்பது சேரநாட்டு வழக்கு. சிறுபடியை மானம் என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு. நீட்டல் நீட்டளவு 8 அணு = 1 தேர்த்துகள் 8 தேர்த்துகள் = 1 பஞ்சிழை 8 பஞ்சிழை = 1 மயிர் 8 மயிர் = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 கடுகு 8 கடுகு = 1நெல் 8 நெல் = 1 பெருவிரல் 12 பெருவிரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 கோல் அல்லது பாகம் 500 கோல் = 1 கூப்பீடு 4 கூப்பீடு = 1 காதம் பரப்பளவு 144 சதுர அடி = 1 குழி 100 குழி = 1மா 20 மா = 1 வேலி சுவைப்பெயர் கைப்பு (கசப்பு), கார்ப்பு (உறைப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு , துவர்ப்பு எனச் சுவை ஆறாம். ஊற்றுப் பெயர் வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை (பளுவின்மை), சீர்மை (பளுவு), இழுமெனல் (வழுவழுப்பு), சருச்சரை (சுரசுரப்பு) என ஊறு எட்டாம். நாற்றப் பெயர் நறு நாற்றம், தீ நாற்றம் என நாற்றம் இரண்டாம். இயற்பண்புப் பெயர் எ-டு: நன்மை, தீமை, மதிமை, மடமை. செயற்பண்புப்பெயர் எ-டு: அன்பு, பகை, அடக்கம், சினம், பொறுமை, பொறாமை. வினையாக வெளிப்படுவதும், வினைப்பெயராற் குறிக்கப்படுவதும் செயற்பண்பாம். (6) தொழிற்பெயர் (Verbal Noun) தொழிற்பெயர் எனினும் வினைப்பெயர் எனினும் ஒக்கும். சிறுவினை பெருவினை என வினை (தொழில்) இருவகைப் படும். வருதல், போதல், உண்டல், உடுத்தல், போன்றவை சிறுவினை; உழவு, நெசவு, தச்சு, கல்வி, ஆட்சி போன்றவை பெருவினை. எல்லாப் பெயர்களும் பின்வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு பாற்படும். (1) பொதுப் பெயர் x சிறப்புப் பெயர் பல பொருட்குப் பொதுவான பெயர் பொதுப்பெயர்; ஒன்றற்கே சிறப்பாக வுரியது சிறப்புப் பெயர். எ-டு: ஆறு, நகர், புலவன்-பொதுப்பெயர் (Common Noun) காவிரி, மதுரை, நக்கீரன்- சிறப்புப் பெயர் (Proper Noun) அரசன் அல்லது வேந்தன் என்னும் பெயரை நோக்க. பாண்டியன் என்பது பொதுவிற் சிறப்பும், நெடுஞ்செழியன் என்னும் பெயரைநோக்க, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்பது சிறப்பிற் சிறப்பும் ஆகும். (2) இயற்பெயர் x ஆகுபெயர் இயல்பாக ஒரு பொருட்கு உண்டான பெயர் இயற்பெயர்; ஒரு பொருளின் பெயர் இன்னொன்றற்கு ஏதேனுமொரு தொடர் பில் ஆகி வருவது ஆகுபெயர். எ-டு: காளை (மாடு), பொன் (கனியம்), வற்றல்(வினை)- இயற்பெய ர். காளை (மறவன்),பொன்(பொற்காசு), வற்றல் (வற்றிய காய்கனி)-ஆகுபெயர் (Metonymy, Syn ecdoche) (3) தனிநிலைப்பெயர் x குழூஉப் பெயர் ஒரு தனிப்பட்ட பொருளின் பெயர் தனிநிலைப்பெயர்; பல பொருள் சேர்ந்த கூட்டத்தின் பெயர் குழூஉப்பெயர். எ-டு: காய், ஆடு, தமிழன் -தனிநிலைப்பெயர் குலை, மந்தை, கழகம் -குழூஉப் பெயர் (Collective Noun) இடுகுறிப்பெயர் என்பதே தமிழில் இல்லை. எல்லாப் பெயரும் கரணியப் பெயரே. இதன் விளக்கத்தை என் பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலிற் காண்க. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (640) என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் நோக்குக. தமிழ் இயன்மொழியாதலாலும் பொதுமக்கள் அமைத்த வழக்கு மொழி யாதலாலும், அதன் எல்லாச் சொற்களும் கரணியக் குறிகளாகவே அமைந்துள்ளன. வடமொழி திரிமொழியாதலாலும் புலமக்கள் அமைத்த செயற்கை நூன்மொழி யாதலாலும், அதில் இடுகுறிப் பெயர்கள் பல அமைந்துள்ளன. ஒருவர் தம் மக்களுக்கிடும் ஆட்பெயர் தெய்வப்பெயர்களும், தமக்குச் சிறந்தாரையும் தம் வழிபடு தெய்வத்தையும் நினைவுகூர்தற் பொருட்டேயென அறிக. (2) வினைச்சொல் விளை - வினை. ஒ.நோ : வளை - வனை, முளை - முனை (கலித். 4) விளைவது அல்லது விளைந்து பயன் (நன்று அல்லது தீது) தருவது வினை. முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும். (கொ.வே. 74) வினைவிளை கால மாதலின் (சிலப். 16:148) நல்வினை தீவினையைக் குறித்த சிறப்புச்சொல், இலக்கணத் தில், நல்லதும் தீயதும் இரண்டுமல்லதும் சிறியதும் பெரியதுமான எல்லாச் செயல்கட்கும் பொதுப்பெயராயிற்று. முதற்காலத்தில், வினைமுதனிலையே இருதிணை ஐம்பால் மூவிட முக்காலப் பொதுவினையாகவும் தொழிற்பெயராகவும், இருந்ததாகத் தெரிகின்றது. அக்காலத்து, முற்று எச்சம் என்னும் வேறுபாடிருந்திருக்க முடியாது. எ-டு : செய் = செய்கை. பெருஞ்செய் யாடவர் (நெடுநல். 171) இல் = இல்லை. பித்தரிற் பேதையார் இல் (நாலடி. 52) கரயுன்ன குட்டிக்கே பால் உள்ளு, வம்பனோடு வழுது நல்லு என்னும் மலையாளப் பழமொழிகளில் உள், நல் என்னும் குறிப்பு வினைமுற்றடிகளே, உண்டு, நன்று என்று பொருள்படுதல் காண்க. இன்றும் அடி, குதி, கொல், சிரி, தாங்கு, நடி, பறி, மிதி, விழி முதலிய எண்ணிறந்த வினை முதனிலைகள் முக்காலத்திற்கும் பொதுவான தொழிற் பெயராக வழங்கி வருகின்றன. குறிப்புவினை போன்றே, முதனிலை யளவாயுள்ள முதற்கால வினையும் முன்பின் வரும் சொற்றுணைக்கொண்டு முக்காலமும் குறித்திருத்தல் வேண்டும். வினையின் நால்நிலைகள் இ.கா. நி.கா. எ.கா. முதல்நிலை : செய் செய் செய் 2ஆம் நிலை : செய்து செய்யும் செய்யும் 3ஆம்நிலை : செய்து செய்கின்ற செய்யும் 4ஆம்நிலை : 1. செய்தான் செய்கின்றான் செய்வான் 2. செய்தனன் செய்கின்றனன் செய்வனன் இரண்டாம் நிலையில், இறந்தகாலத்திற்குத் தனிவடிவம் ஏற்பட்ட தேனும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரே வடிவேயிருந்தது. இப் பொதுவடிவம் நீண்டகாலம் வழக்கூன்றி யிருந்ததால், நாலாம் நிலை தோன்றிய பின்பும் செய்யுள் வழக்கில் அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருந்தது. இதை, நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யும் செய்த வென்னுஞ் சொல்லே (தொல். 719) என்னும் தொல்காப்பியப் பெயரெச்ச வாய்பாட்டு நூற்பாவும், பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா (தொல். 712) என்னும் செய்யும் என்னும் முற்று நூற்பாவும், கடைக்கழக நுல்களும் செய்யுளும் உணர்த்தும். காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். (1227) பொருண்மாலை யாளரை யுள்ள மருண்மாலை மாயுமென் மாயா வுயிர் (1230) என்னுங் குறள்களில், `மலரும்', `மாயும்' என்பன மலர்கின்றது, மாய் கின்றது என்று பொருள்படுதல் காண்க. ஆயினும், தொல்காப்பியர் காலத்தில் முக்கால வினையும் நிகழ்கால வினைத் தனி வடிவும் இல்லை போலும் என மயங்கற்க. காலந் தாமே மூன்றென மொழிப. 89 இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (685) என்று அவரே கூறியிருத்த லானும், கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் (483) புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் ....................................................... தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும் (735) அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும் (1177) என்று செய்கின்றன என்னும் பலவின்பாற் படர்க்கை. நிகழ்கால வினைமுற்றின் மரூஉ வடிவாகிய செய்குந என்னும் வாய்பாட்டுச் சொற்களை அவரே ஆளுதலானும், அவர் காலத்தும் அவை உண்டெனத் தெளிக. 3 ஆம் நிலைப்பட்ட செய்கின்று என்னும் நிகழ்கால வினைமுற்று, முறையே செய்குன்னு, செய்யுன்னு எனத் திரியும். அங்ஙனமே, 4 ஆம் நிலைப்பட்ட செய்கின்றான் என்னும் நிகழ்கால வினைமுற்றும், முறையே செய்குன்னான், செய்யுன் னான், செய்யுனன் எனத் திரியும். ஆயின், இறுதிவடிவில் ஈற்றயலெழுத்துத் தந்நகரமாக எழுதப்பெறும். அதனால் செய்யுநன் என்றாகும். அது நிகழ்கால வினையாலணையும் பெயர். பாலறி மரபிற் பொருநர் கண்ணும் (102) என்னும் தொல்காப்பிய அடியிலுள்ள பொருநர் என்பது இங்ஙனம் அமைந்த வினையாலணையும் பெயரே. மகிழ்நன், வாழ்நன் (வாணன்) என்பனவும் இத்தகையவே. வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னுஞ் செருக்கு (குறள். 1193) என்னுங் குறளில், வீழுநர் என்பது நிகழ்கால வினையா லணையும் பெயர்; வாழுநம் என்பது தன்மைப் பன்மை நிகழ்கால வினைமுற்று. வாழ்கின்றாம் - வாழுன்னாம் - வாழுன்னம் - வாழுநம். செய்யுன்னு என்னும் நிகழ்கால வினைமுற்று வடிவம், இன்றும் பழஞ்சேரநாட்டுத் தமிழ்த் திரிபாகிய மலையாளத்தில் வழங்குகின்றது. 3ஆம் நிலைப்பட்ட செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்று, மலையாளத்திற்போன்றே தமிழிலும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினையாயிருந்து, பின்பு தன்மை முன்னிலையிடங்கட்கும் பலர்பாற் படர்க்கைக்கும் விலக்கப்பட்டது. 3ஆம் நிலையிற் பாலீறு பெறாதிருந்த முக்கால வினை முற்றுகள் 4 ஆம் நிலையில் அவற்றைப் பெற்றன. எ-டு : இ.கா. நி.கா. எ.கா. செய்தான் செய்கின்றான் செய்வான் செய்தாள் செய்கின்றாள் செய்வாள் செய்தார் செய்கின்றார் செய்வார் செய்தது செய்கின்றது செய்வது செய்த செய்கின்ற செய்வ செய்தான் என்பது செய்தனன் என்னும் வடிவுங் கொள்ளும். செய்தனன் என்பதிலுள்ள அனன் என்னும் ஈற்றை அன் + அன் என்று பிரித்து, முன்னதைச் சாரியையாகவும், பின்னதைப் பாலீறாகவுங் கொள்வர். இங்ஙனம் கொள்ளாது அனன் என்பதே ஓர் ஈறென்று கொள்ளினும் பொருந்தும். அன்னன், அன்னவன், அன்னான் என்னும் சொற்கள் அத்தகையன் என்று மட்டுமன்றி அவன் என்றும் பொருள் படும். ஆதலால், அனன் என்பதே ஈறாகவு மிருக்கலாம். எ-டு : இ.கா. நி.கா. எ.கா. செய்தனன் செய்கின்றனன் செய்வனன் செய்தனள் செய்கின்றனள் செய்வனள் செய்தனர் செய்கின்றனர் செய்வனர் செய்தன்று ................... செய்தன செய்கின்றன செய்வன `நினைவனள்' என்னும் கலித்தொகைச் சொல்லையும் (44), `பார்ப்பனப்பக்கம்' என்னும் தொல்காப்பியத் தொடரையும் (1021) நோக்குக. செய்தனது என்றிருக்கவேண்டிய ஒன்றன்பால் இறந்தகால வினைமு ற்று, இன்னோசைபற்றிச் செய்தன்று எனத் தொக்கது. னகரம் தகரத்தோடு புணரின் றகரமாம். அனது என்பது ஓர் ஈறாயினும், அன் + அது என்று பிரியும். அன்' சுட்டடியும் அது' ஒன்றன்பாலீறும் ஆகும். அன் + து - அன்று. இம் முறையிலேயே, அணிந்தன்று (1), இழிந்தன்று (77), இறந்தன்று (217), கண்டன்று (61), களைந்தன்று (77), சிறந்தன்று (75), செயிர்த்தன்று (226), செற்றன்று (226), தீர்ந்தன்று (42), மகிழ்ந்தன்று (192), மலிந்தன்று (77), வியந்தன்று (77) என்னும் புறநானூற்றுச் சொற்களெல்லாம் தோன்றியுள்ளன. இவ் வீறுபெற்ற நிகழ்கால எதிர்கால ஒன்றன்பால் வினைமுற்றுகள் வழக்கிறந்தன. 1. இறந்தகால வினை இறந்தகால வினைமுற்று இற்றை வினையெச்ச வடிவில் நின்றே பாலீறு பெற்றதினால், அதைப் பகுக்கும்போதும் வினையெச்ச வடிவும் பாலீறுமாகவே பகுத்தல் வேண்டும். எ-டு : செய்தான் = செய்து + ஆன் கண்டான் = கண்டு + ஆன் சென்றான் = சென்று + ஆன் தூங்கினான், ஓடினான் என்பவை, முறையே, தூங்கியான் (தூங்கி + ஆன்), ஓடியான் (ஓடி + ஆன்) என்பவற்றின் திரிபாகும். யகரம் நகர (னகர) மாகத் திரிதல் இயல்பே. ஒ.நோ : யான்-நான், ஓடிய-ஓடின தூங்கினன், ஓடினன் என்பன, தூங்கினான், ஓடினான் என்பவற்றின் குறுக்கலாகும். செய்தன்று என்னும் வாய்பாட்டுச் சொல்லான ஆகின்று என்னும் புறப்பாட்டுச் சொல் (148) இகரம் தொக்கது. ஆனான், போனான் என்பவை ஆயான் (ஆய் + ஆன்), போயான் (போய் + ஆன்) என்பவற்றின் திரிபாகும். செய்தான் என்னும் வினை முற்று வாய்பாட்டை ஆயான் என்பது ஒத்திருப்பது போன்றே, செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டையும் ஆய (ஆய் + அ) என்பது ஒத்திருத்தல் காண்க. இனி ஆயினான், போயினான் என்பவையும் ஆயியான், போயி யான் என்பவற்றின் திரிபே. ஆய், போய் என்னும் இறந்தகால வினையெச்சங்கள் முதலில் ஆயி, போயி என இகரவீற்றனவா யிருந்து, பின்பு யகரமெய் யீற்றனவாக மருவியதாகத் தெரிகின்றது. ஒ.நோ : நா + இ = நாஇ - நாயி - நாய் = நீண்டு தொங்கும் நாவையுடையது. இகர யகரம் இறுதி விரவும் என்னும் தொல் காப்பிய நூற்பாவிற்கு, இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் `நாய், நாஇ' என எடுத்துக்காட்டியிருத்தல் காண்க. இவ்வகையிலேயே, பா + இ = பாஇ -பாயி - பாய் (பரந்தது) என வரும். இவை பெயராயினும், இ - ய் எனத் திரிந்த முறை ஒன்றே. ஆயின், ஆ, போ என்னும் வினைமுதனிலைகள் இகரத்தோடு வரின் வகர வுடம்படுமெய்யன்றோ வருமெனின், ஆயிடை, மாயிரு, பாயிருள், கோயில் என வருபவற்றை நோக்கித் தெளிக. வகர வுடம்படுமெய் வடிவினும் யகர வுடம்படுமெய் வடிவே பலுக்கற் கெளிதாயிருத்தல் காண்க. போயியது என்பது, போயினது - போயின்று - போயிற்று எனத் திரியும். அது என்னும் ஈறு து' எனக் குறுகும்போது, புணர்ச்சியால் று, டு எனத் திரியும். எ-டு : நல் + து = நன்று, பால் + து = பாற்று உள் + து = உண்டு, தாள் + து = தாட்டு மன் + து = மன்று, அன் + து = அற்று விண் + து = விண்டு, கண் + து = கட்டு மன்னுதல் = கூடுதல், பொருந்துதல். சொல்லியான், சொல்லியது என்பன, சொல்லினான், சொல்லினது என்று திரிந்து, பின்பு சொன்னான், சொன்னது என மருவும். சொல் லினது என்பது, சொல்லின்று-சொல்லிற்று எனத் திரியும். போய-போன, எண்ணிய-எண்ணின, போயது-போனது, ஏவியோன்-ஏவினோன் எனப் பல வினைச்சொற்கள் இருவடிவுங் காட்டி நிற்பினும், போயியான், தூங்கியான் முதலிய வழக்கற்ற ஆனீற்று வினைமுற்று வடிவங்கள் இயற்கைக்கு மாறாகத் தோன்றலாம். இதற்கு அவற்றின் வழக்கற்ற தன்மையே கரணியம். முங்கினால் என்பதுபோல் தமிழில் னகரவடிவில் வரும் வினையெச் சங்களெல்லாம், சேரநாட்டு அல்லது மலையாளப் பழமொழிகளில் யகர வடிவிலேயே இன்றும் வழங்குதல் காண்க. எ-டு: ஆணாயால் ஒரு பெண்ணு வேண்டே! ஆழம் முங்ஙியால் குளிரில்ல. எல்லாரும் தண்டில் கயறியால் எடுப்பான் ஆள்வேண்டே! ஏறக் கிழக்கோட்டுப் போயால் படிஞ்ஞாட்டு. கக்குவான் துடங்ஙியால் நில்க்குவான் பரிக்கோணம். கொஞ்சன் துள்ளியால் முட்டோளம், ஏற துள்ளியால் சட்டியில். சக்கர கூட்டியால் கம்பிளியும் தின்னாம். சாண் வெட்டியால் முழம் நீளாம். செறுவிரல் வீங்ஙியால் பெருவரலோளம். தலயண மாறியால் தலக்கேடு பொறுக்குமோ? தூபம் காட்டியாலும் பாபம் போகா. பாற்றி துப்பியால் பள்ளியாயிலும் துப்பாம். பொன் சூசி குத்தியாலும் கண்ணுபோம். மூவர் கூடியால் முற்றம் அடிக்கா. வளர்ச்சுக் கெட்டியால் எத்தி நோக்கும். இனி, தமிழிலும் தூங்கியான், தாவியான் எனவரும் ஆனீற்று வினைமுற்றுகள், தூங்கியோன், தாவியோன் என ஓவீற்று வினையாலணையும் பெயர்களாயின் இயல்பா யிருத்தலையும், எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் (குறள். 494) என்னுங் குறளில் வினைமுற்றாக ஆளப்படக்கூடிய எண்ணியார், துன்னியார் என்னும் வினையாலணையும் பெயர்கள் யகரங் கொண்ட வடிவில் வந்திருந்தலையும், கண்டு தெளிக. இனி, செய்து என்னும் வாய்பாட்டு உகரவீற்று இறந்தகால வினையெச்சத்தின் அமைப்பை நோக்கின், அது துவ்வீற்றொடு கூடிய வினைமுதனிலை யென்றே தெரிகின்றது. எ-டு : செய்+து=செய்து, படி+து=படித்து கொள்+து=கொண்டு, உண்+து=உண்டு கேள்+து=கேட்டு நில்+து=நின்று, என்+து=என்று கல்+து=கற்று. இத் துவ்வீறு, அது என்னும் ஈற்றின் முதற்குறையே. அகரம் சேய்மைச் சுட்டாதலால், அது இறந்தகாலத்தை உணர்த்திற்று. சில தனிக்குறி லடுத்த கு, டு, று ஈற்று வினைமுதனிலைகள், இறுதிவலி யிரட்டித்து இறந்தகாலங் காட்டுகின்றன. எ-டு: புகு-புக்கு, புக்க, புக்கான் சுடு-சுட்டு, சுட்ட, சுட்டான் அறு-அற்று, அற்ற, அற்றான் இங்ஙனம் வினைமுதனிலைகள் து, இ, ய் ஈறுபெற்றும், இறுதி வலியிரட்டித்தும், இருவகையாக இறந்தகாலங் காட்டும். ஆகவே, தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை (நன்.142) என்று பவணந்தியார் கூறியது, மொழியாராய்ச்சி மிக்க இக்காலத்திற் கேற்காதென அறிக. இரண்டாம் மூன்றாம் நிலைகட்குரிய செய்து என்னும் வாய் பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்று, பிற்காலத்தில் சோழபாண்டி நாடுகளில் உலகவழக்கற்றுப்போய், செய்யுள் வழக்கில் தன்மை யிடத்திற்கே வரையறுக்கப்பட்டு, பன்மைக்கு உம்மீறு பெற்றது. எ-டு : வந்து = வந்தேன், வந்தும் = வந்தோம் கண்டு = கண்டேன், கண்டும் = கண்டோம் சென்று = சென்றேன், சென்றும் = சென்றோம் இடு என்னும் வினைபோன்றே, ஈ என்னும் வினையும் இறந்தகால வினையெச்சத்தோடு கூடித் துணைவினையாய் வரும். எ-டு: வந்திடு, வந்திடார். அறிந்தீயார்=அறியார் (புறம். 136). ஈந்தார் என்னும் இறந்தகால வினைமுற்று ஈயினார் என்றும் வரும். ஒ. நோ: போந்தார், போயினார். அறிந்தீயினார்-அறிந்தீயினோர் (வினையாலணையும் பெயர்) -அறிந்தீசினோர்-அறிந்திசினோர். என்றீயினார்-என்றீயினோர்-என்றீசினோர்-என்றிசினோர். யகரம் சகரமாகத் திரிவது இயல்பே. எ-டு: ஈ+அல்=ஈயல்-ஈசல். இள்-(இய்)-ஈ-ஈயம்=எளிதாய் இளகும் கனியம் (உலோகம்). ஈயம்-ஸீஸம் (வ.). நெயவு-நெசவு. நேயம்-நேசம். பையன்-பயன்-பசன். வாயில்-வாயல்-வாசல். மயங்கு-மசங்கு. பிற்காலத்தார், சொல்வரலா றறியாது அறிந்திசினோர், என்றி சினோர் என்பவற்றின் இசின் என்னும் இடைப்பகுதியைப் பிரித் தெடுத்து, அதை இறந்தகால இடைநிலை என்றனர். (2) நிகழ்கால வினை இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இருப்பதுபோல் திட்டமான எல்லைவரம்பு நிகழ்காலத்திற்கு இன்மையானும், மிகக் குறுகிய கால அளவில் நிகழ்காலத்திற்கே இடமின்மை யானும், எதிர்காலத்தோடு அதற்கு நெருங்கிய தொடர்புள்ள மையானும், செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றே நிகழ் காலத்தையும் முதலில் உணர்த்தி வந்தது. பின்பு, கில் என்னும் ஆற்றல் வினையின் இறந்தகால வினை யெச்சமாகிய கின்று என்பது, வினைமுதனிலையொடு கூடி ஐம்பால் மூவிடப் பொதுவான நிகழ்கால வினைமுற்றா யமைந்தது. எ-டு: ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. (குறுந். 166) கிற்றல்=ஆற்றுதல், செய்யமாட்டுதல். செய்யகிற்பேன்= செய்யமாட்டுவேன், என்னால் செய்யமுடியும். முதலாம் புறப்பாட் டில் வரும் ஆகின்று என்பது, கின்று என்னும் ஈறு கொண்டதன்று, ஆயிற்று என்று இறந்தகாலப் பொருள் தரும் ஆயின்று என்னும் வாய்பாட்டது. ஆயினது-ஆயின்று-ஆயிற்று. ஆகியது-ஆகினது-ஆகின்று. செய்கின்று என்னும் இடைக்கால நிகழ்கால வினை முற்று, பின்பு, பாலீறுபெற்றுச் செய்கின்றான் என்றாயிற்று. செய்கின்று என்னும் நிகழ்கால வினைமுற்று செய்யுன்னு என மருவிற்று. செய்கின்றான் என்னும் வினையாலணையும் பெயரும், செய்யுன்னான்-செய்யுனன்-செய்நன் என்றும், செய்குன்னான்-செய்குனன்-செய்குநன் என்றும் மருவும். அறிநன்-(அறிஞன்) என்பதும் இத் திரிபே. செய்கின்றான் என்பது செய்கிறான் எனத் தொக்கபின், கிறு என்னும் வடிவும் நிகழ்கால இடைநிலையாகக் கொள்ளப் பட்டது. 36ஆம் புறப்பாட்டில், அடுநை, விடுநை என்பவை நிகழ்காலச் சொல்லேயாயினும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத் திற்குமுள்ள தொடர்புபற்றியும், எதிர்கால வினையை நிகழ்காலச் சொல்லாற் குறிக்கும் வழக்குப் பற்றியும், அவற்றிற்கு எதிர்காலப் பொருள் கூறப் பட்டது. நாளை வருகிறேன், அடுத்த ஆண்டு தருகிறேன் என்னும் வழக்கை நோக்குக. அடுகின்றை-அடுகுன்னை-(அடுன்னை)-அடுநை. ஆநின்று என்பது உண்மையான நிகழ்கால இடைநிலை யன்று. அது செய்துநின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் வினையெச்சத் தொடருக்கு நிகழ்கால வினை முற்றுப் பொருள் கற்பித்து, அதன் இடைப்பகுதியைப் பிரித்துக் கொண்ட உரையாசிரியர் படைப்பே. அதைத் தழுவியே, நன்னூ லாரும் நிகழ்கால விடை நிலைகளுள் ஒன்றாக அதனைச் சேர்த்துக் கொண்டார். (3) எதிர்கால வினை செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றின் ஈறான உம் என்பது முன்மைச் சுட்டான உகர வடியிற் பிறந்து, கால முன்னான முற்காலத்தையும் இடமுன்னான எதிர்காலத்தையும் உணர்த்தும் சொல்லுறுப்பாகும். உம்மை வினைவந் துருத்த லொழியாது (மணிமே. 26: 32) என்பதில் முற்பிறப்பையும். உம்மை-எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் (நாலடி. 58) என்பதில் மறுமையையும், உம்மைச்சொல் உணர்த்துதல் காண்க. செய்யும் என்பது பின்பு பாலீறு பெற்று, செய்யுமான்-செய்யு வான்-செய்வான் எனத் திரிந்தது. இம் முறையில் அமைந்த மூவிட ஐம்பால் வினைமுற்றுகளாவன: தன்மை ஒருமை: (செய்யுமேன்)-செய்யுவேன்-செய்வேன்-செய்வென் -செய்வன்-செய்வல். பன்மை:(செய்யுமேம்)-செய்யுவேம்-செய்வேம்-செய்வெம். (செய்யுமாம்)-செய்யுவாம்-செய்வாம்-செய்வம். (செய்யுமோம்)-செய்யுவோம்-செய்வோம். முன்னிலை ஒருமை: செய்யுமீ-செய்யுமே (செய்மே)-செய்மை-செய்வை-செய்வாய் பன்மை: (செய்யுமீர்)-செய்மீர்-செய்வீர் படர்க்கை-ஆ-பா: (செய்யுமான்)-செய்மான்-செய்வான் -செய்வன்-செய்மான்-செய்மன் பெ.பா: (செய்யுமாள்)-செய்மாள்-செய்வாள்-செய்வள்-செய்மாள்-செய்மள் ப.பா: (செய்யுமார்)-செய்மார்-செய்வார்-செய்வர்-செய்மார்- செய்மர் ஒ.பா: (செய்யுமது)-செய்மது-செய்வது பல.பா: (செய்யும)-செய்ம-செய்வ (உண்ணும)-உண்ணுவ (நடக்கும)-நடக்குவ-நடப்ப செய்மார் என்னும் பலர்பால் எதிர்கால வினைமுற்று, பிற்காலத்தில் முற்றெச்சமாகவே ஆளப்பெற்றது. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. (தொல். 692) எ-டு: உண்மார் வந்தார். என்மரும் உளரே என்னும் நன்னூல் தொடரில் (421) உள்ள என்மர் என்னும் சொல், செய்மர் என்னும் வாய்பாட்ட தாகும். என்மனார் புலவர் என்னும் தொல்காப்பியத் தொடரில் (6) உள்ள என்மனார் என்னும் சொல், மகனார் என்னும் உயர்வுப் பன்மைப் பெயர்போல் ஆரீறேற்ற செய்மன் என்னும் வாய்பாட்டுச் சொல்லாய், என்ப என்னும் பொருளில் வழக்கம்பற்றி வந்த காலவழுவமைதி. செய்ப என்னும் பலர்பால் எதிர்கால வினைமுற்று, செய்வ என்னும் பலவின்பாற் சொல்லினின்று திரிக்கப்பெற்றதாகும். வகரத்திற்கு இனமான பகரம், சிறுபான்மை வகரம்போற் ககரத்திற்குப் போலியாக வரும். எ-டு: இறக்க-இறப்ப. விழிக்க-விழிப்ப செய்யுமார் என்னும் பலர்பால் வினைமுற்று வினையால ணையும் பெயராகும்போது செய்யுமோர் என்றுந் திரியும். எ-டு: வேற்றுமை தெரிப உணரு மோரே. (தொல். 580) மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே (புறம். 297) செய்வேன் என்னும் தன்மையொருமை எதிர்கால வினை முற்று, போலிவகையில் செய்கேன் என்று திரியும். வ-க, போலி.ஒ.நோ: சிவப்பு-சிகப்பு, துவர்-துகிர், ஆவா-ஆகா (இடைச்சொல்). செய்கேன் என்னும் வடிவில் ஈறு நீங்கியபின் எஞ்சி நிற்கும் செய்கு என்பதும், தன்மையொருமை வினைமுற்றாய் ஆளப் பெற்றது. அது செய்கும் என உம்மீறு பெற்றுப் பன்மை யாயிற்று. இவை யிரண்டும் முற்றாயும் முற்றெச்சமாயும் வரும். முற்று: செய்கு = செய்வேன், செய்கும்=செய்வோம். முற்றெச்சம்: செய்குவந்தேன், செய்கும் வந்தோம். அவற்றுள், ``செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர் (689) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. இனி, உகரச்சுட்டடிப் பிறந்து காலத்தை யுணர்த்தும் உது என்னும் ஈறுபெற்றும், வினைமுதனிலைகள் தன்மையொருமை யெதிர்கால வினைமுற்றாம். அதனொடு உம்மீறு சேரின் பன்மை யாம். உகரம் முன்மைச்சுட்டாதலால், உது எதிர் காலத்தை உணர்த்தும். எ-டு: கூறுது = கூறுவேன்; கூறுதும்=கூறுவோம். அது என்னும் ஈறுபோன்றே உது என்னும் ஈறும், துவ்வென முதற்குறையாய் நின்று அல்லது தொக்கு, புணர்ச்சியில் று, டு எனத் திரியும். எ-டு: செல்-செல்+து = சேறு (செல்வேன்) சேறு+உம் = சேறும் (செல்வோம்) கொள்-கோள்+து = கோடு (கொள்வேன்) கோடு+உம் = கோடும் (கொள்வோம்) லகர ளகரம் சேறல், கோடல் என்னும் தொழிற்பெயரிற் போன்றே, ஈண்டும் திரிந்தனவென அறிக. செய்தி என்னும் முன்னிலை யொருமை எதிர்கால வினை முற்று, உது என்னும் இடைநிலை பெற்றதாகும். செய்+உது+ஈ = செய்யுதீ-செய்யுதி-செய்தி = செய்வாய். ``வழிபடு வோரை வல்லறி தீயே'' (புறம்.10) செய்+உது+இர் = செய்யுதிர்-செய்திர் = செய்வீர். இ ஒருமையீறு; இர் பன்மையீறு. நீ-ஈ-இ. நீயிர்-நீர்-ஈர்-இர். செய்தி, செய்திர் என்னும் எதிர்கால முற்றுகள், பின்பு ஏவலாகவும் ஆளப்பட்டன. செய்தி என்பதில் த் எழுத்துப்பேறு என்பது மொழி யாராய்ச்சி யில்லார் கூற்றாம். அம்மை, அக்காலம் என்னும் சேய்மைச்சுட்டுகள் பண்டைக் காலத்தையும், உம்மை என்னும் முன்மைச்சுட்டு எதிர்காலத்தை யும், உணர்த்துவதால், அது என்பது இறந்தகால ஈறாகவும், உது என்பது எதிர்கால ஈறாகவும் பயன்படுத்தப் பட்டன. செய்+அது=செய்யது-செய்து (இ.கா. முற்றும் எச்சமும்) செய்+உது=செய்யுது (எ.கா. முற்று) செய்து, செய்யுது என்னும் இருவகை முற்றுகளும் பிற் காலத்தில் தன்மைக்கே வரையறுக்கப்பட்டன. காலவகைப் பிரிவுகள் வினைச்சொல் காட்டும் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றும் தனித்தனி தனிப்பு, தொடர்ச்சி, நிறைவு, நிறைவுத் தொடர்ச்சி என நால்வகைப்படும். இறந்தகாலப் பிரிவுகள் எ-டு: வந்தான்-இறந்தகாலத் தனிப்பு (Past Indefinite) வந்துகொண்டிருந்தான்-இறந்தகாலத்தொடர்ச்சி (Past Continuous) வந்திருந்தான்-இறந்தகால நிறைவு (Past perfect) வந்துகொண்டிருந்திருந்தான்-இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி (Past perfect continuous) நிகழ்காலப் பிரிவுகள் வருகிறான்-நிகழ்காலத் தனிப்பு (Present Indefinite) வந்துகொண்டிருக்கிறான்-நிகழ்காலத்தொடர்ச்சி (Present Continuous) வந்திருக்கிறான்-நிகழ்கால நிறைவு (Present Perfect) வந்துகொண்டிருந்திருக்கிறான் -நிகழ்கால நிறைவுத் தொடர்ச்சி (Present Perfect Continuous) எதிர்காலப் பிரிவுகள் வருவான்-எதிர்காலத் தனிப்பு (Future Indefinite) வந்துகொண்டிருப்பான்-எதிர்காலத்தொடர்ச்சி (Future Continuous) வந்திருப்பான்-எதிர்கால நிறைவு (Future Perfect) வந்துகொண்டிருந்திருப்பான்-எதிர்கால நிறைவுத் தொடர்ச்சி (Future Perfect Continuous) 4. வினைவகைகள் வினைகள், வெவ்வேறுவகையில், ஒவ்வொன்றாகவும் இவ்விரண்டாகவும் பற்பலவாகவும் வகுக்கப்பெறும். (1) தெரிநிலைவினை X குறிப்புவினை செயலுங்காலமும் வெளிப்படையாய்த் தெரிய நிற்பது தெரிநிலை வினை; அவற்றைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்புவினை. எ-டு: வந்தான், போய், இருந்த - தெரிநிலைவினை. உண்டு, இல்லை, வேறு - குறிப்புவினை. குறிப்புவினை குறிப்புவினை, பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறுவகைப் பொருட்பெயரை அடியாகக் கொண்டு தோன்றி உடைமை, உரிமை, செய்கை என்னும் மூவகைப் பொருள் நிலைக்களத்தில் நின்று, இருத்தல் அல்லது ஆதல் வினையைக் குறிப்பாக உணர்த்தும். இருத்தல்வினை முக்காலத்திற்கும் பொதுவாகவோ, ஒரு காலத்திற்கே சிறப்பாக வுரியதாகவோ, இருக்கும். ஆதல் வினை என்றும் ஒரு காலத்திற்குச் சிறப்பாக வுரியதாகவே யிருக்கும். எ-டு: பொருள்நிலைக்களம் அடிப்பெயர் குறிப்புவினை உடைமை குழை (பொருள்) குழையன் உரிமை மதுரை (இடம்) மதுரையான் '' மூதிரை (காலம்) மூதிரையான் உடைமை கை (சினை) கையன் பெரு (மை) பெரியன் ஒப்புமை (குணம்) அன்னன் செய்கை நடை (தொழில்) நடையன் நேற்றுவரை பொன்னன் (பொன்னனாயிருந்தான்)-இ.கா. இன்று பொன்னன் (பொன்னனாயிருக்கின்றான்-நி. கா. இனிமேற் பொன்னன் (பொன்னனாயிருப்பான்)- எ.கா. கடவுள் ஒப்புயர் வில்லாப் பெரியன்-முக்காலம் மழைபெய்து பயிர் நல்ல (நல்லவாயின)-இ.கா. இவன் பொன்னன் என்பதில், பொன்னன் என்பது ஆளைக் குறிப்பின், பெயர்ப்பயனிலையாம். மூதிரை = ஆதிரை (வ.) கடவுள்........bgÇa‹’ என்பதில் பெரியன் என்பது முக்காலத்திற்கும் பொதுவாயினும், பெரியனா யிருக்கின்றான் என்று நிகழ்கால வடிவிலேயே கூறப்பெறும். முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச் செப்புவர் நிகழுங் காலத்தானே (நன். 389) (2) முற்றுவினை x எச்சவினை முற்றிய வினைச்சொல் வடிவில் எழுவாய்க்கு முற்றுப் பயனி லையாக வருவது முற்றுவினை; முற்றாத வினைச்சொல் வடிவிற் பெயரையாவது வினையையாவது தழுவி எச்சப் பயனிலையாய் வருவது எச்சவினை. எ-டு: வந்தான், இல்லை-முற்றுவினை (Finite verb) வந்து, போன, உள்ள, இன்றி-எச்சவினை (Relative or verbal participle) எச்சவினை பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப் படும். எ-டு: வந்த, நல்ல-பெயரெச்சம் (Relative Participle) வந்து, இன்றி-வினையெச்சம் (Verbal Participle) (3) மூவிட வினை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்கட்குரிய வினைகள் மூவிடவினையாம். v-டு: வந்தேன், வந்தோம்-தன்மைவினை வந்தாய், வா, வராதே-முன்னிலைவினை வந்தான், வருவான்-படர்க்கைவினை நிகழ்ச்சிவினை, ஏவல்வினை என முன்னிலைவினை இருவகைப்படும். எ-டு: வந்தாய், வருவாய்-நிகழ்ச்சிவினை வா, வருக - ஏவல்வினை (Imperative Mood) ஏவல்வினையும், கட்டளை, வியங்கோள் என இருதிறப்படும். கட்டளை அதிகார ஏவல்; வியங்கோள் வேண்டுகோள் அல்லது மதிப்பான ஏவல். எ-டு: வா, வாருங்கள் - கட்டளைவினை வருக - வியங்கோள்வினை ஏவல்வினை மீண்டும் தூண்டல், விலக்கல் என இருவகைப் படும். எ-டு: வா, வருக-தூண்டுவினை வராதே, வரற்க-விலக்குவினை (Prohibitive Mood) ஏவல் பலமடியாகவும் வரும். எ-டு: வருவி, போக்கு-இருமடி யேவல் வருவிப்பி, போக்குவி-மும்மடி யேவல் வருவிப்பிப்பி, போக்குவிப்பி-நான்மடி யேவல் தனியேவல் போன்றே பன்மடி யேவல்களும் வினைமுதனிலை யாக அமையும். எ-டு: வருவித்தான், போக்குவிப்பித்தான் (4) உடன்பாட்டுவினை x எதிர்மறைவினை வினை நிகழ்ச்சியை உள்ளதாகக் குறிக்கும் வினை உடன் பாட்டு வினை; இல்லதாக மறுக்கும் வினை எதிர்மறை வினை. எ-டு: வா, வந்தான், உண்டு-உடன்பாடு (Affirmative or Positive verb) வராதே, வந்திலன், இல்லை-எதிர்மறை (Negative verb) (5) செயப்படுபொருள் குன்றிய வினை x செயப்படுபொருள் குன்றாவினை இவை முறையே செயப்படுபொருள் கொள்வதும் கொள்ளா ததுமாம். எ-டு: நடக்கிறான், வருகிறான்-செ. பொ. குன்றியவினை (Intransitive verb) செய்கிறான், உண்பான்-செ. பொ. குன்றாவினை (Transitive verb) (6) தன்வினை x பிறவினை ஒருவன் தானே செய்வது தன்வினை; பிறனைக் கொண்டு செய்விக்கும் வினை பிறவினை. எ-டு: வந்தான், கற்றான்-தன்வினை வருவித்தான், கற்பித்தான்-பிறவினை (Causal or Causative Verb) வருவித்தான், கற்பிப்பித்தான்-பன்மடிப் பிறவினை (7) செய்வினை x செயப்பாட்டுவினை வினைமுதலே எழுவாயாய் நின்று ஒன்றைச் செய்தலைக் குறிக்கும் வினை செய்வினை; செயப்படுபொருள் எழுவாயாகி வினைமுதலால் தான் ஏதேனும் செய்யப்படுதலைக் குறிக்கும் வினை செயப்பாட்டுவினை. எ-டு: நாய் சோற்றைத் தின்கிறது-செய்வினை (Active Voice) சோறு நாயால் தின்னப்படுகிறது செயப்பாட்டு வினை (Passive Voice) மறைமலையடிகள் இற்றைத் தமிழைத் தூய்மைப்படுத்தினார்கள் - செய்வினை இற்றைத் தமிழ் மறைமலையடிகளால் தூய்மைப் படுத்தப் பெற்றது - செயப்பாட்டுவினை அகத்தியர் தொல்காப்பியருக்குத் தமிழ் கற்பிக்க வில்லை - செய்வினை அகத்தியரால் தொல்காப்பியருக்குத் தமிழ் கற்பிக்கப் படவில்லை - செயப்பாட்டுவினை (8) தலைமைவினை x துணைவினை கீழே இருக்கிறான், கூட்டம் முடிகிறது-இவற்றில் இரு, முடி என்னும் இரண்டும் தலைமை வினை (Main verb). அவன் வந்திருக்கிறான், எனக்கு நடக்கமுடிகிறது-இவற்றில் இரு, முடி என்னும் இரண்டும் துணைவினை (Auxilliary verb). (9) நிறைவினை x குறைவினை ஈரெண் மூவிடத்தும் முக்காலத்திலும் புடைபெயரும் வினை நிறைவினை; அங்ஙனம் புடைபெயராவினை குறைவினை. எ-டு: வா, போ-நிறைவினை (Perfect verb) மாட்டு, வேண்டும்-குறைவினை (Defective verb) (செய்ய) மாட்டுவேன், (எனக்கு) வேண்டும் என்பன வா, போ என்பனபோல், இறந்தகாலத்திலும் வராமை காண்க. (10) தொடங்கல்வினை x முடித்தல்வினை தொடங்கல்வினை தொழிற்பெயருடன் உறு என்னும் துணைவினை கொள்ளும்; முடித்தல் வினை இறந்தகால வினையெச்சத் துடன் விடு என்னும் துணைவினை கொள்ளும். விடு-இடு. எ-டு: சொல்லலுற்றான் - தொடங்கல்வினை (Inceptive or Inchoative verb) எழுதிவிட்டான், வந்திட்டான்-முடித்தல் வினை. (11) தற்பொருட்டு வினை x மற்பொருட்டு வினை ஒருவன் தானே தனக்குச் செய்துகொள்ளும் வினை தற் பொருட்டு வினையாம் (Reflexive verb or Middle voice). இது இறந்தகால வினையெச்சத்துடன் கொள் என்னும் துணை வினை சேர்ந்துவரும். ஒருவன் பிறனுக்குச் செய்து கொடுக்கும் வினை மற்பொருட்டு வினையாம். இது இறந்தகால வினையெச்சத்துடன் கொடு என்னும் துணைவினை சேர்ந்துவரும். எ-டு: எழுதிக்கொள்,முகம்வழித்துக்கொண்டான் தற்பொருட் வினை. எழுதிக்கொடு, கற்றுக்கொடுத்தான்-மற்பொருட்டுவினை. இனி, ஒன்றிற்கொன்று எதிரான இணையன்றித் தனித்தனி வெவ்வேறு பொருள்பற்றி வரும் பல வினைகளுமுள. அவையாவன: (1) வாழ்த்துவினை (Optative Mood) ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஓர் அமைப்பை, நீடுநிற்குமாறு அல்லது தழைத்தோங்குமாறு வாழ்த்துவது வாழ்த்து வினையாம். இது தன்மையிடத்தில் வராது. எ-டு: வரையாதுகொடுத்தோய்......eL¡»‹¿ நிலியர்! (புறம். 2) தென்னவன் வாழி! (சிலப். 11 : 22) வரப்புயர! (ஔவையார்) தமிழ் வாழ்க! தமிழ் வெல்க! (2) கட்டாயவினை நிகழ்கால வினையெச்சம் என்னும் அகரவீற்று வினை யெச்சத்தோடு, வேண்டும் என்னும்துணைவிdசேரி‹கட்டாaவினையாம். எ-டு: தேர்விற்குப் பணங் கட்டவேண்டும். (3) தேவைவினை இது இருவகையில் அமையும். 1. அகரவீற்று வினையெச்சத்துடன் அல்லது அல்லீற்று (அல்லது தல்லீற்று)த் தொழிற்பெயருடன் வேண்டும் என்னும் துணைவினை சேர்தல். எ-டு: கூழானாலுங் குளித்துக் குடிக்கவேண்டும். நுண்ணிய கருமமும் எண்ணிச்செய்தல்வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளையாகிலும் உண்ணல் வேண்டும். 2. அகரவீற்று வினையெச்சத்துடன்படும் என்னும் துணை வினை சேர்தல். எ-டு: நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும். (குறள். 335) (4) கடமைவினை எ-டு: பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கவும், பிள்ளை கள் பெரியோரானபின் பெற்றோரைப் பேணவுங் கடவர். (5) கற்பனைவினை இறைவன் மக்களுக்கு இட்ட கட்டளையை அல்லது கட்டளையாகக் கூறுவது கற்பனை வினை. இது முன்னிலை எதிர்கால வினைமுற்றொடு ஆக என்னும் துணைவினை சேர்ந்துவரும். v-டு:c‹id¥ngh‰ பிறனை நேசிப்பாயாக. களவு செய்யா திருப்பாயாக. (6) சூளுறவுவினை இது இருவகையில் வரும். 1. தன்மை யெதிர்கால வினைமுற்றொடு (வியங்கோள் வடிவி லுள்ள) ஆக என்னும் துணைவினை சேர்தல். எ-டு: நான் இவளைக் கைவிடின், அன்னையைக் கொன்றான் அடையும் உலகை அடைவேனாக. 2. வியங்கோள் வினை. எ-டு: அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த பேரம ருண்க ணிவளினும் பிரிக. (புறம். 71) (7) செயவிடல் வினை படர்க்கையானை ஒன்று செய்யவிடுமாறு முன்னிலை யானை ஏவுவது செயவிடல் வினையாம். இதை இசைவிப்பு வினை என்றும் சொல்லலாம். இது அகரவீற்று வினை யெச்சத்துடன் அட்டு என்னும் துணைவினை சேர்ந்தது. இது எதிர்மறையில் வராது. எ-டு: ஒருமை: அவன் வரட்டு = நீ அவனை வரவிடு. பன்மை: அவன் வரட்டும் = நீர் அவனை வரவிடும். வரட்டும் என்பது வரவொட்டு என்பதன் தொகுத்தல். ஒட்டுதல் இசைதல். ஒட்டு-அட்டு. வர+அட்டு = வரட்டு. வர+அட்டும் = வரட்டும், செய்யவொட்டு என்னும் திரியா வடிவம் வினையாயின் மூவிடத்தும் வரும். அது பெரும்பாலும் எதிர்மறையிலேயே வரும். எ-டு: தூங்கவொட்டேன், தூங்கவொட்டாய், தூங்கவொட்டார். (8) தடை நீக்கவினை பிறர் விரும்பின் ஒன்றைச் செய்வதற்குத் தடையின்மையைக் குறிக்கும் வினை தடை நீக்க வினையாம். எ-டு: நீங்கள் போகலாம். (9) ஆற்றல்வினை (Potential Mood) ஒன்றைச் செய்ய முடிதலைக் குறிக்கும் வினை ஆற்றல் வினையாம். இது மூவகையில் அமையும். 1. அகரவீற்று வினையெச்சத்தோடு இயல் (ஏல்), ஒண்ணு, ஒல்லு, மாள், முடி, கூடு, முதலிய துணைவினைகளுள் ஒன்றுசேர்தல். கூடு என்னும் துணைவினை உடன்பாட்டில் மட்டும் வரும், ஏனைய உடன்பாடு எதிர்மறை ஆகிய இருவடிவிலும் வரும். இவையெல்லாம் தமித்துத் தலைமை வினையாகவும் வரும். எ-டு: வரவியலும், தரவொண்ணும், செய்யவொல்லும், செய்யமாளும், எழுதமுடியும், தேறக்கூடும். அது என்னால் இயலும், ஒண்ணும், ஒல்லும், மாளும், முடியும்; கூடும். வரவியலாது, தரவொண்ணாது, செய்யவொல்லாது, முடியாது. செய்ய மாளாது. எழுத முடியாது. அது என்னால் இயலாது, ஒண்ணாது, மாளாது, முடியாது. 2. அகரவீற்று வினையெச்சத்தோடு கில் அல்லது மாட்டு என்னும் துணைவினையின் முற்றுச்சேர்தல். கில் என்பது முக்காலத்திலும் வரும்; மாட்டு என்பது எதிர்காலத்தில் மட்டும் வரும். மாட்டு என்பது மாள் என்பதன் பிறவினை. மாளுதல் முடிதல்; மாட்டுதல் முடியச்செய்தல். எ-டு: செய்யகின்றேன், செய்யகிற்கின்றேன், செய்யகிற்பேன். செய்யமாட்டுவேன் = முடியச்செய்வேன், என்னாற் செய்ய முடியும். 3. அகரவீற்று வினையெச்சத்தோடு படவில்லை என்னும் கூட்டு வினைச்சொல் சேர்தல். இது உடன்பாட்டில் வராது. எ-டு: (என்னால்) எழுந்திருக்கப்படவில்லை = எழுந்திருக்கமுடிய வில்லை. கூடு, படு என்னும் துணைவினைகள் எதிர்மறை வடிவில் விலக்கு வினையாம். எ-டு: நீ போகக்கூடாது, நீ போகப்படாது. மாட்டு, முடி என்னும் துணைவினைகள் தன்மை எதிர்மறை வடிவில் மறுப்பு வினையாம். எ-டு: நான் வரமாட்டேன், நான் வரமுடியாது. (10) கேள்விப்பாட்டு வினை பிறர் வாயிலாய்க் கேள்விப்பட்டதைக் குறிக்கும் வினை கேள்விப்பாட்டு வினையாம். இது வினைமுற்றோடும் பெய ரோடும் ஆம் என்னும் துணைவினை சேர்ந்துவரும். எ-டு: நேற்றுவந்தானாம், நாளைக்கு விடுமுறையாம். (11) உய்த்துணர்வினை இது மூவகையில் வரும். 1. வினைமுற்றுடன் போலும் அல்லது போலிருக்கிறது என்னும் சொற்சேர்தல். எ-டு: அவன் தேறிவிட்டான்போலும்! இன்று மழைவரும் போலிருக்கிறது. 2. வினைமுற்றுடன் ஆம் காட்டியும் என்னும் ஈரிடைச் சொற் சேர்தல். எ-டு: நேற்றுவந்தானாங் காட்டியும். 3. வினைமுற்றுடன் ஆக்கும் என்னும் சொற்சேர்தல். ஆகும்-ஆக்கும். எ-டு: அவன் வீட்டிலில்லையாக்கும். (12) உயர்வு குறித்தல் வினை பெயரொடு ஆக்கும் என்னும் துணைவினை சேர்ந்து ஒருவரின் உயர்வு குறிப்பது உயர்வுகுறிப்பு வினையாம். எ-டு: அவர் யார் தெரியுமா? அமெரிக்கச் செல்வருள் தலைமையான வராக்கும்! (13) தேற்றவினை ஒரு வினைநிகழ்ச்சியை உறுதிப்படுத்துவது தேற்ற வினையாம். தேறுதல் தெளிதல். தேற்றுதல் தெளிவித்தல். தேற்று வது தேற்றம். இது அறுவகையில் அமையும். 1. ஏகாரவிடைச் சொல்லொடு புணர்ந்த அகரவீற்று வினையெச்சத்தின்பின் முற்றுவினை. எ-டு: வரவே வருவான். 2. தான் என்னும் இடைச்சொல்லொடு புணர்ந்த அகரவீற்றுவினையெச்சத்தின்பின் முற்றுவினை. எ-டு: வரத்தான் செய்வான். 3. ஏகார விடைச்சொல்லொடு புணர்ந்த இறந்தகால வினையெச்சத் தின்பின் வினைமுற்று. எ-டு: வந்தே தீர்வான். 4. ஏகார விடைச்சொல்லொடு புணர்ந்த வினைமுற்று. எ-டு: வந்தானே! 5. வினைமுற்றின்பின் தான் என்னும் இடைச்சொல். எ-டு: வருவான்தான். இது சென்னைவழக்கு; அத்துணைச் சிறந்ததன்று. 6. வினைமுற்றின்பின் மன்ற என்னும் இடைச்சொல். எ-டு: மடவை மன்ற (நற். 94) இது செய்யுள் வழக்கு. (14) அருள்வினை இறைவனும் முற்றத் துறந்த முழுமுனிவரும் செய்யும் செயலைக் குறிக்கும் வினை அருள்வினை. இது இறந்த கால வினையெச்சத்துடன் அருள் என்னும் துணைவினை சேர்ந்து வரும். எ-டு: எழுந்தருளினார், சொல்லியருளினார் திருவாய்மலர்ந்தார், திருவுருக்கரந்தார் என்பவற்றைத் திருவினை என்னலாம். (15) உதவிவினை இறந்தகால வினையெச்சத்துடன் ஈ, தா, கொடு என்னும் வினைகளுள் ஒன்றுசேர்ந்து, இலவசச் செயலைக் குறிப்பது உதவி வினையாம். எ-டு: சென்றீ, வந்தீ, சொல்லித்தா, எழுதிக்கொடு. எழுதிக்கொடுத்தல் கைம்மாறு கருதின் மற்பொருட்டு வினையாம். (16) ஆர்வவினை (Desiderative Verb) வினைநிகழ்ச்சியின்மீது ஆர்வங்காட்டும் வினை ஆர்வ வினையாம். இது அறுவகையில் அமையும். 1. ஏன் என்னும் இடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல் வினை. எ-டு: வாருங்களேன். 2. வேண்டும் என்னும் துணைவினையொடு கூடிய தொழிற் பெயர் அல்லது அகரவீற்று வினையெச்சம். எ-டு: தாங்கள் எங்கள் இல்லத்திற்குத் தப்பாது வரல் வேண்டும். இறைவ, நீ எங்ஙனமும் எனக்கு அருளவேண்டும். 3. தன்மை வாழ்த்து. எ-டு: யான் வாழ்க! 4. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல்வினை. எ-டு: நில்லுமே-நின்மே, வரட்டுமே. 5. ஓவிடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல்வினை. எ-டு: மொழியுமோ-மொழிமோ. 6. தில்லிடைச்சொல்லோடு கூடிய வியங்கோள்வினை. எ-டு: வருகதில். இவற்றுட் பின் மூன்றுஞ் செய்யுள் வழக்கென அறிக. (17) அணியவினை ஒன்றைச் செய்வதற்கு அணியமாய் (ஆயத்தமாய்) இருக்கும் நிலையைக் குறிக்கும் வினை அணிய வினையாம். இது இருவகையில் அமையும். 1. அகரவீற்று வினையெச்சத்தின் போ என்னும் துணைவினை. எ-டு: சொல்லப் போனான். 2. நாலாம் வேற்றுமைத் தொழிற்பெயர் அல்லது அகர வீற்று வினையெச்சத்தின் பின் இரு என்னும் துணை வினை. எ-டு: எழுதுவதற்கிருந்தான், எழுதவிருந்தான். (18) தொடர்ச்சிவினை வினைத்தொடர்ச்சியைக் குறிக்கும் வினை தொடர்ச்சி வினையாம். இது இருவகையில் அமையும். 1. இறந்தகால வினையெச்சத்தின் பின் அல்லது நிகழ்கால வினையெச்சத்தின் (Present participle) பின் வா என்னும் துணைவினை. எ-டு: எழுதிவருகிறான், எழுதிக்கொண்டு வருகிறான். 2. ஏயிடைச்சொல்லொடு புணர்ந்த நிகழ்கால வினையெச் சத்தின் பின் போ என்னும் துணைவினை. எ-டு: படித்துக்கொண்டே போகிறான். (19) ஆதல்வினை ஒன்றைச் செய்வதற்கு ஆன நிலைமையை உணர்த்தும் வினை ஆதல் வினையாம். எ-டு: வரலானான், எழுதலானேன். (20) இரட்டைக்கிளவிவினை (Frequentative Verb) என்றும் அடுக்குத்தொடரான இருகுறிலிணையாகவே வரும் வினை இரட்டைக்கிளவி வினையாம். எ-டு: குறுகுறுக்கும், சலசலக்கிறது. (21) மிகுப்புவினை (Intensive Verb) ஒரு செயலை அல்லது நிகழ்ச்சியை மிகுத்துக் காட்டும் வினை மிகுப்பு வினையாம். எ-டு : பொதுவினை மிகுப்புவினை ஆரிக்கிறது ஆரவாரிக்கிறது ஆய்ந்தான் ஆராய்ந்தான் காப்பான் பாதுகாப்பான் ஆரித்தல் ஒலித்தல். ஆர்தல் நிறைதல். ஆர = நிரம்ப, மிக. ஆர-ஆர். பாது = ஓம்பும் வெட்சி ஆநிரைப் பகுதி. (22) வழுவமைதி வினை (Anomalous Verb) வழுவாயினும் வழுவற்றதுபோல் இலக்கணியரால் அமைக்கப் பெற்றவினை வழுவமைதி வினையாம். உண்டு (உள்+து) என்னும் குறிப்புவினைமுற்று, முதற்கண் படர்க்கை ஒன்றன்பால் வினையாயிருந்து, பின்பு ஐம்பால் மூவிட ஈரெண் பொதுவினையாய் வழங்குகின்றது. உண்டு என்பதற்கு எதிர்வினை இன்று என்பது. அது இன்றும் ஒன்றன்பால் வினையாகவே வழங்குதல் காண்க. உண்டு = உள்ளது (குறிப்புவினையாலணையும் பெயர்). உண்டு பண்ணுதல் உள்ளதாய்ச் செய்தல். உண்டாக்குதல் உள்ளதாக்குதல். வேண்டும், வேண்டாம், வேண்டா வேண்டும் என்னும் துணைவினை, வேண்டும் என்னும் வினையின் (செய்யும் என்னும் வாய்பாட்டு) எதிர்கால முற்றாம். இவ் வாய்பாட்டு வினைமுற்று, இற்றை மலையாளத்திற்போல் தமிழிலும் முதற் காலத்தில் ஐம்பால் மூவிட ஈரெண் பொது வினையாயிருந்தது. அது பின்னர்ச் செய்யுள் வழக்கில், பலர் பாலொழிந்த நாற்பாற் படர்க்கைக்கே வரையறுக்கப்பட்டது. இது பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா. (தொல். வினை. 30) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறியப்படும். செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் பொதுவென்று தொல்காப்பியர் காலத்திற் கருதப்பட்டதினால், அவர் அதை நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவி என்றார். இவ் வாய்பாட்டு வினைமுற்று, உலகவழக்கிற் பலர்பாற்கு மட்டுமன்றி ஆண்பால் பெண்பாற்கும் விலக்கப்பட்டுவிட்டது. அதனால், அது இன்று அஃறிணை யிருபாலிலேயே வழங்கி வருகின்றது. எ-டு: மாடு வரும், மாடுகள் வரும். அவள் வருவாள் என்னும் பெண்பாலீற்றுக் கூற்று இழிவாகக் கருதப்படுவதால், மதிப்புவாய்ந்த பெண்டிரைப் பற்றிக் கூறு மிடத்து `அந்த அம்மா வரும்' என்று செய்யும் என்னும் வாய் பாட்டு வினை கொடுத்துக் கூறுவது, இழிவு நீக்கப்பொருட் டேயன்றி இயல்பான வழக்குப் பற்றிய தன்று. வேண்டு என்னும் வினைச்சொல்லின் இயற்பொருள் விரும்பு என்பதே. வேள்-வேண்டு. வேட்டல் விரும்புதல். வேட்கை விருப்பம். வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை யில (குறள். 4) என்னுங் குறளில், வேண்டுதல் வேண்டாமை என்னுந் தொடர் விருப்பு வெறுப்பைக் குறித்தல் காண்க. ஒருவரின் உதவியை மிக விரும்பினால், அவரைக் கெஞ்சிக் கேட்கநேரும். அதனால், வேண்டற் சொல்லுக்கு மன்றாடற் பொருள் தோன்றிற்று. வேண்டுகோள், வேண்டிக்கொள், இறை வேண்டல் முதலிய சொற்களும் சொற்றொடர்களும் இப் பொருள னவே. பொதுவாக, தேவையான பொருளே விரும்பப்படும். ஒரு பொருள் ஒருவரால் விரும்பப்படின், பெரும்பாலும் அது அவர்க்குத் தேவை என்பதையே உணர்த்தும். இதனால், விரும்பற் கருத்தினின்று தேவைக் கருத்துப் பிறந்தது. ஆங்கிலத் திலும் want என்னும் சொல் விருப்பத்தையும் தேவையையும் உணர்த்துதல் காண்க. வேண்டி = விரும்பி, தேவைப்பட்டு. வேண்டாது = விரும் பாமல், தேவையின்றி. வேண்டியதைக் கேள், வேண்டியமட்டும் எடுத்துக்கொள், என்னும் தொடர்களும் இவ்விரு கருத்தையும் உணர்த்துதல் காண்க. ஆயின், இப் பொருளிலும் இதன் வழிப்பொருள்களிலும், வேண்டற்சொல் வரும் சொற்றொடரமைப்பு மாறிவிட்டது. நான் குடிக்கத் தண்ணீர் வேண்டும். (தண்ணீரை வேண்டு கிறேன்) என்று இருக்கவேண்டிய உயர்திணைப் பயனிலை முடிபு, எனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று, அஃறிணைப் பயனிலை முடிபாய் மாறிற்று. ‘Ú v‹d nt©L »whŒ?’ v‹gJ, ‘cd¡F v‹d nt©L«? என்று மாறிற்று. நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும், நான் தண்ணீர் குடிக்க விரும்புகிறேன் என்னும் பொருளதே. மிகத் தேவையான செயலைக் கட்டாயமாய்ச் செய்து முடிக்க வேண்டியிருத்தலின், தேவைக்கருத்தினின்று கட்டாயக் கருத்துப் பிறந்தது. எ-டு: கடல் வணிகர் கப்பலிற் கொண்டுவரும் சரக்குகட்கு ஆயம் (வரி) செலுத்தவேண்டும். கட்டும் ஆயம் கட்டாயம். கட்டாயவினை அதிகாரத்தை யன்றி அன்பைப் பொறுத்ததாயின் ஆர்வவினையாம். எ-டு: என் மகன் திருமணத்திற்குத் தாங்கள் கட்டாயம் வரல்வேண்டும். கட்டாய வினை பெரும்பாலும் தவறாது செய்யப்படு தலின், வேண்டற்சொல் தவறில்லா உண்மையையும் உணர்த்த லாயிற்று. எ-டு: ஐயன் என்னும் பெற்றோன் பெயர், தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையும் தொன்றுதொட்டு வழங்கி வருவதால், அது தூய தமிழ்ச் சொல்லாயிருத்தல் வேண்டும். இவ் வுண்மை யுணர்த்தற் கருத்தினின்றே உறவுமுறை யுணர்த்தற் கருத்தும் கிளைத்தது. எ-டு: அவன் உனக்கு என்ன வேண்டும்? ïJ, ‘mt‹ cd¡F v‹d cwîKiwahjš nt©L«? என்பதன் தொகுத்தலாம். இனி, வேண்டும் என்னும் சொல் கட்டாய வினையாய் அல்லது விருப்ப வினையாய் வரும் தொடரியம், ஒருவர் வினையையேயன்றி இருவர் வினையைக் கொண்டதாகவும் இருக்கும். இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும் (தொல். வினை.46) என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் அதற்கு, இது செயல் வேண்டுமென்பதுபட வருஞ்சொல் தன்பாலானும் பிறன்பாலானும் என ஈரிடத்தும் நிலைபெறும் பொருண் மையை யுடைத்தாம் என்றவாறு. தானென்றது செயலது வினைமுதலை. ஓதல் வேண்டும் என்றவழி, வேண்டுமென்பது ஓதற்கு வினை முதலாயினாற்கும் அவனோதலை விரும்பும் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டுகொள்க என்று சேனாவரையர் உரைத்த உரையையும் நோக்குக. ஆகவே, நீங்கள் தமிழிற் பெயர் தாங்கல் வேண்டும் என்பது நீங்கள் தமிழிற் பெயர் தாங்குவதை நான் விரும்பு கின்றேன் என்றும் பொருள்படுவது காண்க. இதனால் வேண்டற் சொல்லின் அடிப்படைப் பொருள் வெளிப்படு வதையும் நோக்குக. சொற்கள் தம் இயற்பொரு ளடிப்படையில் பல்வேறு புதுப் பொருள்களைப் பெறுகின்றன. பெயர்களுள் ஆகுபெய ரிருப்பது போன்றே, வினைகளுள்ளும் ஆகுவினைகள் உளவென அறிக. வேண்டும் என்பதன் எதிர்மறை வேண்டாம் என்பது. இது செய்யாம் என்னும் வாய்பாட்டுத் தன்மைப்பன்மை எதிர்கால எதிர்மறை வினைமுற்று. வேண்டாம் = வேண்டோம். காணேன் என்னும் ஒருமைப்பொருளில் காணோம் என்னும் பன்மைச் சொல் வழங்கிவருவது போன்றே, வேண்டேன் என்னும் ஒருமைப் பொருளிலும் வேண்டாம் என்னும் பன்மைச்சொல் வழங்கி வருகின்றதென அறிக. வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே என்னும் தனிப்பாடலடியை நோக்குக. வேண்டா என்பது, வேண்டாம் என்பதன் ஈறுகெட்ட வடிவும் வேண்டாத என்னும் எதிர்மறை வினையாலணையும் பெயரின், ஈறுகெட்ட வடிவும், ஆக இருவகையில் நிற்கும். (முற்றும்) அருஞ்சொல் அகரமுதல் வரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அகரமுதலி 61 அசைவரிகள் 117 அழுத்தம் 131 ஆர்வக்கோளி 36 ஆள்குடி 18 இடக்கரடக்கல் 101 இடங்கழி 154 இணைமொழிகள் 6 இயங்குதிணை 99 இயற்சொல் 132 இராமம் 5 இழிபு 103 இழைத்தல் மொழி 58 இறையிலி 145 உட்கிடை 146 உயர்பு 103 உயிரிசைவு மாற்றம் 37 உருவலிப்பு 53 உன்னிப்புச் சொல்லியல் 50 எஃகுச்செவி 147 எழுத்தொலியம் 109 ஒருபொருள் மறுசொல் 151 ஒற்றில்வழி யொற்று 116 கடல்நூல் 52 கருப்பொருள் 99 கல்லாங்குத்து 145 காடைக்கண்ணி 6 காரோதிமம் 4 கீழ்வாயிலக்கம் 147 குதிரைவாலி 6 குழூஉக்குறி 101 குறுங்கணக்கு 117 கொட்டையுடைப்பான் 52 கொண்டான்மார் 2 கோபாலம் 5 சாரியைப் புணர்ப்பு 116 சாலித்தீவு 7 சிறப்பிக்கை 104 சிறுபொழுது 146 ஞாலப்படலம் 19 தம்ரலித்தி 33 தமிலப்தி 34 தமிலூக் 34 தனியொலியன் 112 தாவளம் 145 திசைச்சொல் 132 திரவிடமுன்னையர் 30 திராவிடவேதம் 31 திரிசொல் 132 திரிபால் 140 திருத்தக்கல் 3 தீவக்குறை 22 தெர்மிலர் 33 தெர்மிலே 33 தென்புலத்தார் 4 தேரி 145 தொடரியம் 86,87 நடைமொழி 23 நத்தம் 144-145 நலிதல் 130 நாவலந்தேயம் 40 நிமிர்ந்த குரக்குமாந்தன் 52 நிலைத்திணை 99 நீரிணைப்பு 18 நெடுங்கணக்கு 117 பகடிப்பெயர் 143 பகரப்பெயர் 26,133 பஞ்சதிராவிடம் 37 பட்டாங்குநூல் 27 படிமைக்கலை 27 பண்டாரவாடை 145 பண்டுவம் 5 பலசொல் லொருவடிவு 71 பலபொரு ளொருசொல் 71 பலுக்கொலியம் 124 பழம்பொருள்நூல் 2 பிராகிருதம் 23,24 பிராமி 122 புணரொலியன் 112 பெரும்பொழுது 146 பொதுப்பிக்கை 105 பொலிவொலி 24 பொலிவிலொலி 24 மங்கலம் 101 மறுவொலியன் 116 மாந்தனூல் 52 மிகுப்புவினை 180 மானம் 154 முதற்றாய் மொழி 3 முழைத்தல்மொழி 53 முற்கு 55 முற்றூட்டு 145 மூலத்திரவிடர் 30 மேல்வாயிலக்கம் 147 மொழிச்சட்டம் 55 மொழிப்பொருட்கரணியம் 61 மொழிபெயர் தேயம் 38 மொழியலகு 58 வட்டெழுத்து 122 வந்தேறிகள் 1 வரிபெயர்ப்பு 120 வருடொலி 119 வலிச்சம் 53 விடையூழியர் 32 விதிரொலி 127 விரவுத்திணை 138 விரவுப்பெயர் 6 விரிபு 104 விருதுப்பெயர் 142 விழுத்தம் 130 வெட்டெழுத்து 2,121 வைத்தூற்றி 5 பாவாணர் பொன்மொழிகள் மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே! பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! தொன்மையொடு முன்மை; தொன்மையொடு நன்மை; தாய்மையொடு தூய்மை; தழுவிளமை வளமை. பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே! பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே! பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே! பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே! இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே! ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே! கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே! கலப்படையால் குணத்தீவைக் காத்தவனும் தமிழனே! பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்? தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான். தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே. பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறிவுப் பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறழ்ந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம். அன்பென்பது ஏசுவும் புத்தரும்போல் எல்லாரிடத்தும் காட்டும் நேயம். ஆட்சி ஒப்புமை நட்புறவிற்கே அன்றி அடிமைத்தனத்திற்கு ஏதுவாகாது. ஓய்வகவையைத் தீர்மானிக்கும் அளவையாய் இருக்க வேண்டியது பணித் திறமையேயன்றி அகவை வரம்பன்று. துறவு தம்மாலியன்றவரை பொதுமக்கட்குத் தொண்டு செய்வது சிறந்த துறவாகக் கருதப்படுகின்றது. இந்தியாவில் விலங்கினம் இருக்கும் நிலைமையை உணர்த்த அவற்றின் கழுத்துப்புண்ணும் விலாவெலும்புத் தோற்றமும் போதும். கட்டுப்பாட்டில்லாவிடின் காவலனுங் காவானாதலாலும் செங்கோலாட்சியொடு கூடிய இருகட்சியரசே குடியரசிற் கேற்றதாம். பிறமொழி பேசும் சிறுபான்மையர் பிள்ளைகளும் அவ்வந் நாட்டுப் பெரும்பான்மை மொழியையே கற்றல் வேண்டும்.... கால் மொழிவாரி மாநிலப் பிரிவு என்பது பொருளற்றதும் பயனற்றதுமாம். மாந்தன் வாழ்க்கை, இல்லறம் துறவறம் என இருவகைத்து. மனைவியோடு கூடி இல்லத்திலிருந்து அதற்குரிய அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறம்; உலகப் பற்றைத் துறந்து அதற்குரிய அறத்தோடு கூடிக் காட்டில் தவஞ் செய்து வாழும் வாழ்க்கை துறவறம். ஒருவன் இல்லத்தில் இருந்து மனையாளோடு கூடிவாழினும் அறஞ் செய்யாது இருப்பின் அவன் வாழ்க்கை இல்லறமாகாது வெறுமனான இல்வாழ்க்கையாம். இலங்கையில் இடர்ப்படும் மக்கள் பெரும்பாலும் தமிழராயிருத்தலின் அவர்களின் உரிமையைப் பேணிக்காத்தற்கு அங்குள்ள இந்தியத் தூதாண்மைக் குழுத்தலைவர் தமிழராகவே இருத்தல் வேண்டும். கருத்துவேறுபாட்டிற் கிடந்தந்து ஒரு சாராரை ஒருசாரார் பழிக்காதும் பகைக்காதும் இருப்பதே உண்மையான பகுத்தறிவாம். இவ் வுலகில் தமிழனைப் போல் முன்பு உயர்ந்தவனு மில்லை; பின்பு தாழ்ந்தவனும் இல்லை. இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழவைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப்பதிலும், தம்மருமைத் தாய்மொழியைப் புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்றுவதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். தந்தையும் அரசும் ஒரு குடும்பத்திற் பிறந்த பிள்ளைகட்கெல்லாம் ஊணுடை யுறையுள் அளிக்கத் தந்தை கடமைப்பட்டிருப்பது போன்றே, ஒரு நாட்டிற் பிறந்த குடிகட்கெல்லாம் வேலையும் பாதுகாப்பும் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. கோவில் வழிபாடும் இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ் விடுதலையடைந்து தன் பழம்பெருமையை மீளப் பெற முடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான். அந்தணன் ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழப் பூசாரியையே குறித்தது. தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால். தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப் போன குமரிநாடே. 2ஆம் நூற்றாண்டில் வெளிநாட்டினின்று வந்த முகமதியர் சிறுபான்மையரேனும் ஆங்கிலர் நீங்கியவுடன் தமக்கெனக் கோன்மை (Soveriegnity) கொண்ட தனிநாடு பெற்றுவிட்டனரே. நூறாயிரம் ஆண்டிற்கு முன்னமே தோன்றி ஒருகால் நாவலந்தேயம் முழுதும் ஆண்ட பழங்குடி மக்களான தமிழர் ஏன் தம் நாட்டையும் பெறவில்லை?..... இதற்குக் கரணியம், முகமதியர்க்குள்ள ஓரின வுணர்ச்சியும் ஒற்றுமையும் மறமும் மானமும் இற்றைத் தமிழருட் பெரும்பாலார்க்கு எள்ளளவும் இன்மையேயாம். எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டு மென்னும் இன்னருள் நோக்கம் கொண்டே தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். பணநாட்டமின்றி, எல்லாரும் தத்தமக்கியன்ற பணியைச் செய்து, எல்லாப் பொருள்களையும் ஒத்த உரிமையோடு பயன்படுத்தி ஒற்றுமையாக ஒருங்கே வாழும் குடும்ப அல்லது கூட்டுக் குடும்ப வாழ்க்கையே பொதுவுடைமையாகும். ஒரு குடும்பத்திற் பிறந்த எல்லார்க்கும் எங்ஙனம் திறமைக்குத் தக்க பணியும் தேவைக்குத் தக்க நுகர்ச்சியும் உண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்த எல்லார்க்கும் இருத்தல் வேண்டும். இதுவே பாத்துண்டல் என்னும் வள்ளுவர் கூட்டுடைமை. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. ஐந்து ஐரோப்பிய மொழிகளின் அடிப்படை தமிழே. அவற்றின் கொடுமுடியே சமற்கிருதம். ஆகவே ஐரோப்பிய மொழியமைப்பின் அல்லது வரலாற்றின் திறவுகோல் தமிழிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. இதைக் கண்டுபிடிக்கும்வரை மேலையர் மொழியாராய்ச்சி யெல்லாம் விழலுக்கு நீரிறைத்தலும் வானத்து மீனுக்கு வன்தூண்டில் இடுதலுமே யாகும். தமிழின் தூய்மையைக் குலைப்பவர் எல்லாம் வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவருமே. எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோல் அகன்றும், அமைதிவாரியின் (Pacific Ocean) தென்னகழிபோ லாழ்ந்தும் பிறங்கித் தோன்றிய பெரும்புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே என்பது மிகையன்று. பனிமலைபோலப் பரந்தும் நீண்டும் உயர்ந்தும் தலைசிறந்து விளங்கிய தமிழ்ப் புலவர் மறைமலையடிகள் ஒருவரே. இனம் மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்விவிட்டது. அஃறிணை போலிருந்த தமிழனைப் படிக்க வைத்துத் தன்மானமூட்டி மீண்டும் உயர்திணைப்படுத்தியவன் ஆங்கிலேயனே. ïªâahš jÄœ bfL« v‹w¿ªnj ‘ïªâ bghJbkhÊah? என்னும் சுவடியை வெளியிட்டார் தவத்திரு மறைமலையடிகள். பெற்றவருக்குத்தான் தெரியும் பிள்ளையின் அருமை; கற்றவருக்குத்தான் தெரியும் தமிழின் அருமை. பற்றும் புலமையும் அற்ற மற்றவர்க்குத் தெரியுமா நற்றமிழ்ப் பெருமை. பொருளாட்சித் துறையில் எத்துணை முன்னேற்ற மாயினும் இந்தியொடு கலந்தது, நஞ்சொடு கலந்த பாலே. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப் போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை, அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். கருவி நூற்பட்டி (Bibliography) தமிழ் : தொல்காப்பியம் புறநானூறு கலித்தொகை இறையனார் அகப்பொருளுரை சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை மணிமேகலை கருணாமிர்த சாகரம் மலையாளம் : A. Progressive Grammar of the Malayalam Language, by Frohnmeyer. A Malayalam and English Dictionary, by Dr. Gundert. கன்னடம் : Kanarese Grammarï by Harold Spencer. A kanarese - English Dictionary, by Rev. F. Kittel. துளு : A Grammar of the tulu Language, by Brigenl. தெலுங்கு : A Progressive Grammar of the Telugu Language, by the Rev. A.H. Arden. A Telugu-English Dictionary, by C.P. Brown. கோண்டி : A. Grammar of the Gondi Language, by P. Setumadhave Rao. பர்சி: The Parji Language, by T. Burrow and S. Bhattacharya. ஒல்லாரி : Ollari, by Sudhibhushan Bhattacharya. குயி : A Grammar of the Kui Language, by Rev. W.W. Winfidel. A vocabulary of the Kui Language, by Do. திரவிடம் : A. Comparative Grammar of the Dravidian or South Indian Family of Language, by Dr. Caldwell. A Dravidian Etymological Dictionary, by Barrow and Emeneau. இந்தி : Hindi Grammarï by S. R. Sastri and Balachandra Apte. Standard Illustrated Dictionary of the Hindi Language (Hindi-English), by Bhargava. வேதமொழி : Sama Veda-text and Translation, by Sivananda Yathindira. Krishna Yajur Veda-Text and Translation, by --Do-- A Vedic Grammar for Students, by A.A. Macdonell. A Vedic reader for Students, by --Do-- சமற்கிருதம் : Laghu Kaumudi with English Commentary,by Ballantyne. The sanskrit Language, by Burrow. A Sanskrit-English Dictionary, by Monier Williams. ஆங்கிலம் : English Grammar Past and Present, by J.C. Nesfield. Historical Outlines of English Accidence, by Richard Morris. Etymological Dictionary of the English Language, by Skeat. Etymological Dictionary of the English Language, by Chambers. The Imperial Dictionary of the English Language, by John Ogilvie. The Concise Oxford Dictionary of Current English. இலத்தீன் : The Student's Latin Grammar,by W.M. Smith. Cassell's Latin Dictionary. கிரேக்கம் : Elementary Greek Grammar, by John Thompson. A Complete Greek and English Lexicon for the Poems of Homer. மொழிநூல் : Tamil Studies, by M. Srinivasa Aiyengar. Linguistic Survey of India (Vol. IV), by Grierson. Lectures on the Science of Language (2 Vols), by Max Muller. Three Lectures on the Science of Language, by Do. Dravidian Origins and the West, by Lahovary. The story of Language, by Charles Barber. வரலாறு : Stone Age in India, by P. T. Srinivasa Aiyengar. Pre-Aryan Tamil Culture, by Do. History of the Tamils, by Do. Pre-Historic South India, by V. R. Ramachandra Dikshitar. Origin and Spread of the Tamils, by Do. Tamil India, by Puranalingam Pillai. The History of Babylonia, by George Smith. பழம்பொருள் நூல் (Archaeology): The Funeral Tent of an Egyptian Queen, by Villiers Staurt. மாந்தனூல் (Anthropology): Anthropology, by Tylor. Anthropology, by P. Topinard. History of Creation (Vol. II), by Haeckel. Out of the Valley of the Forgotten (2 Vols), by Bawman. வரணவியல் (Ethnology) Castes and Tribes of Southern India (7 Vols), by Edgar Thurston. Report on the Socio-Economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras, by A. Aiyappan. சமயநூல் The Holy Bible (Old Testament). An Account of the Vedas-C. L. S., Madras. The Brahmanas of the Vedas- Do.