திரு.வி.க. தமிழ்க்கொடை 24 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 24 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32+312=344 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 170/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை கிறிது மொழிக்குறள் கிறிது பெருமான் மொழிந்த செய்திகளைக் குறள் யாப்பால் கூறும் சுவடி கிறிது மொழிக்குறள் என்பது பெயரா லேயே விளங்கும். கிறிது பெருமான் மொழிகளைத் தழுவியே பாடிச் சென்றேன் என்று தம் முன்னுரையில் குறிப்பிடுகிறார் திரு.வி.க. கிறிது பெருமான் நற்செய்திகளைத் தமிழில் வடிக்க நெடிய காலத்திற்கு முன்னரே வேட்கை உண்டாகியதையும் அதனை நிறைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுப் பயின்றதையும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தின்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் நூல் இயற்றியதையும் முன்னுரையில் சுட்டுகிறார். இந்நூற்கண் திரட்டப்பட்டுள்ள மணிமொழிகள் அப்படியே அடுக்கப்படவில்லை. அவை, கருத்துக்கு இயைந்த முறையில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஒல்லும் வகை ஒழுங்கு செய்யப் பெற்றன. இதனால் சில இடங்களில் தொடர்பின்மை காணப்படும் எனப் பொருள் வைப்பு முறை பற்றிக் கூறுகிறார். fhªâaofË‹ gUîlš 圢á üš btËp£il cªâaikia¢ R£L« âU.É.f., தோற்றுவாய்க்கு முன்னர்க் காந்தியடிகட்கு ஒன்பான் கண்ணிகளைப் பெய்துள்ளார். இறுதிக் கண்ணியில், ஏசுநாதன் இசைத்த மலைமொழி ஏனை வாய்மொழி ஏந்தி ஒழுகினை நேச அம்மொழி நேர்ந்தஇந் நூலினை நினைவுக் காக்கினன் நின்னடி வாழ்த்தியே என்கிறார். தோற்றுவாய், மலைமொழி, மணிமொழி, இறுவாய் என்னும் நாற்பகுப்பில் நூல் நடையிடுகின்றது. குறட்பா எண்ணிக்கை 541. அரசற்ற சமூகப் புதிய நல்ல அமைப்பே என்றும், அரசற்ற ஒன்றே மக்களாட்சி அல்லது முழுப் பொதுமை என்றும், மார்க்சினுடையது சடப்பொதுமை; கிறிதுவினுடை யது தெய்வப் பொதுமை இரண்டுக்கும் பொதுவில் பொலிவது பொதுமை என்றும், கிறித்து மொழி வழியாகத் தோற்றுவாயில் தம் உள்ளீடு களைப் பதிவு செய்கிறார். ஒல்லும் வகைதழுவி ஓதவும் வான்மலையை இல்லை தகுதி எனக்கு ஐயன் அருள்மொழியை அன்பால் உளறுகின்றேன் வையம் பொறுக்க மறு இன்னவை அவையடக்கம் என்ன அமைந்த நூனெறியாம். என்னுள்ளே நீ பிறந்தாய் ஏசு பெருமானே உன்னுள்ளே யானிறந்தேன் உற்று என்று கிறிதுவின் அருள் வேட்டலில் குறிப்பிடுவார் திரு.வி.க. என்னுள்ளே நீ பிறந்தது என்பது ஏசுபெருமான் வாழ்வாலும் வாக்காலுமேயாம் என்பதைத் தெளிவிப்பதே மலைமொழியும் மணிமொழியுமாம். பாடலின் இயல்பான ஓட்டம், எளிமை, இனிமை, பொருள் விளக்கம், பாவாக்கம் என்பவற்றுக்குக் காண்க. போக்க வரவில்லை போந்தேன் நிறைவேற்ற ஏக்கமுற வேண்டா இனி (18) காணிக்கை ஏந்திக் கடவுள் திருக்கோயில் பேணினுளச் செம்மை பெறு (29) நேயரையே நேசித்தால் நேர்பயன் என்னையோ ஆயரும் செய்வ தது (66) இங்கே வரும் ஆயர் மக்களைத் தொல்லைக்குட்படுத்தி நெருக்கிப் பறித்துண்ணும் ஒரு கூட்டத்தினர் என்பது திரு.வி.க. குறிப்புரை. தேவை இதுவென்று செம்மொழியால் வேண்டுமுனம் தேவன் உணர்ந்துள்ளான் தேர் (85) நாளைக் கெனக்கவலை நண்ணாதீர் நாளைக்கு நாளை கவலையுறும் நாள் (122) மற்றவர்க்கு நீரளத்தல் எவ்வளவோ அவ்வளவே உற்றிடும் நுந்தமக் கூர்ந்து இவை மலைமொழிகளுள் சில. ஆக்கையைக் கொல்வோருக் கஞ்சற்க; ஆன்மாவைப் போக்கஅவர்க் குண்டோ புலம் (8) அப்பன் மகனை அனுப்பினன் இவ்வுலகை ஒப்புர வாக்க உவந்து (28) குழந்தைகள் என்பால் குலவ விடுக விழுந்துதடை செய்யாதீர் வேர்த்து (141) எங்கிருவர் மூவரோ என்பெயரால் கூடினால் அங்கிருப்பேன் நடுவில் ஆர்ந்து (172) இவை மணிமொழிகளுள் சில. நூல் முன்னுரையில் குணம் கிறிதுவின்பாலது; குற்றம் என் பாலது என்று திரு.வி.க. கூறுவது அவர்தம் சான்றாண்மைச் சான்று. இருளில் ஒளி இருளில் ஒளி சுவடிப் பெயர். இருட்போதில் ஒளி வந்தால், இருள் நிற்குமா? ஒளி வரும்போதே இருள்தானே அகன்று விடல் கண்கூடு. உயிரியாம் மாந்தர்க்குப் புறவொளிக் கண்கள் உள; அவற்றொடு உள்ளொளி பெருக்கும் அகக்கண்ணும் உண்டு. அகங்கண் - அங்கண்; உள்ளொளியாம் அகம்கண். திரு.வி.க. வின் கண்கள் படலத்தால் ஒளி இழந்த போதில் உள்ளொளியால் பாடப்பட்ட நூல் இந்நூல். இந்நூலுக்கு எத்தலைப்பு வேயலாம் என்று சிந்தித்தேன். முதலில், முதுமை உளறல், காலக்குறள், கட்டில் காற்று முதலியன தோன்றின. அவற்றிடை இருளில் ஒளி என்று ஒலித்தது. அதையே தலைப்பாக வேய்ந்தேன். புற இருளில் அக ஒளியால் ஆக்கப்பெற்ற ஒரு நூலுக்கு இருளில் ஒளி என்னும் தலைப்புப் பொருந்தியதே; சாலப் பொருந்தியதே எனத் திரு.வி.க. தம் முன்னுரையில் குறிக்கிறார். முன்னுரைக்கு முற்பட பார்வை இழந்த மில்தனார், சுந்தரர் பாடல்களை வைக்கிறார். முன்னுரை நிறைவிலும் கசிந்துருகு பாடல்களை வைக்கிறார். தாம் பலதிறத் தொண்டுகளில் ஈடு பட்டமையால் நூல்தொண்டு இரவிலேயே செய்ய நேர்ந்ததை யும், உறக்கம் கெட்டதையும், உடல் கெட்டதையும், கண்ணொளி குன்றியதையும் கற்பார் உளம் கொள உரைத்து, அவர்க்கு உடலோம்பல் வழியைத் தெளிவிக்கிறார். உள்ளொளி, படுக்கையில் பிதற்றல், முதுமை உளறல் முதலிய சுவடிப் பெயரீடுகளையும் உணர உணர்த்து கிறார். படுக்கையில் கிடந்து சொல்லி எழுதிய வகையால் கிடைத்த நூல்களுள் ஒன்று இருளில் ஒளி. ஒரு நல்ல பிறவி இறுதிமூச்சு வரை தொண்டாற்றலைக் கைவிடாது என்பதற்குச் சீரிய எடுத்துக்காட்டு திரு.வி.க. வாழ்வும் இத்தகுநூல்களுமாம். பரம், படைப்பு, கல்வி, அரசு, உடல், எண்ணம், வாழ்க்கை, உலகம், அறம், சமயம், தீர்க்கர், வாழ்த்து என்னும் பன்னிரு குறுந்தலைப்புகளில் நூல் அமைந்துள்ளது. இதில் அமைந் துள்ள குறட்பாக்கள் 652 ஆகும். தலைப்புக்குப் பொருள் வரம்பை அன்றி, எண்வரம்பு கொள்ளப்படாமையால் 12 குறள் கொண்ட தலைப்பும் (12) 80 குறள் கொண்ட தலைப்புகளும் (3, 5) இடம் பெற்றன. வேண்டும் குறிப்புரையும் அடிக்குறிப்பாக உண்டு. எப்பொருளும் கோயிலே எவ்வுயிரும் கோயிலே ஒப்பில் பரத்துக் குணர் உள்ளம்உரைக் கெட்டா உயர்பரமென் றஞ்சற்க உள்ளுக சூழியற்கை உற்று பரத்திற்கு இலக்கணமும் பரத்தை அடையும் வகையும் கூறியவை இவை. உள்ளது சிறத்தலாம் கூர்தலறமே படைப்பு என்பதை, கூர்தலறத் தத்துவம் கூறும் படைப்புநுட்பம் தேர்தல் அடைதல் திறம் என்கிறார். உயிர்கள் என்னும் இறை உலகைப் பலவிதமாய் உண் டாக்குதலை நண்டு, வளைஎடுத்தல், சிதல் புற்றெடுத்தல், வண்டு ஈடுகட்டல், பறவை கூடு கட்டல், விலங்கு குகை தேடல், குரங்கு கிளையேறல் வழியாக, குடிசையும் மாடியும் கோபுரமும் மக்கள் படியில் எழுப்பினர் பார் எனப் படைப்புத் தூண்டலைக் குறிக்கிறார். கல்லூரிக்கல்வி கழகத்துக் கல்வியெலாம் மல்லூரும் கல்வி மயக்கு ஒருகுண்டால் பாரழிவை உன்னுவதோ கல்வி பெருகுபுயல் வேண்டாவே பேசு கல்வி கொளலயாகும் காலமும் வந்ததே அல்லல் அகல்வழியை ஆய் என நிகழும் கல்விமுறையைக் கடியும் திரு.வி.க, குருகுலக் கல்வியைக் கூர்ந்துகூர்ந் தாய்க பெருகும் அறிவொளிப் பேறு தாவரம் கற்பிக்கும் சார்புயிர் கற்பிக்கும் பாவுகதிர் கற்பிக்கும் பார் உள்ளத்தை உள்ளம் உணர்கல்வி மக்களிடைக் கள்ளம்பொய் நீக்கும் கடிது என வேண்டத்தக்க கல்வி மாண்பைத் தூண்டி எழுப்புகிறார். இற்றைக்கு ஐம்பத்து ஆறு ஆண்டுகளின் முன்னை இருந்த கல்வியே இக்குறைகளுக்கு இடமாயின், இற்றை நிலை இதன் நூறுமடங்கு இழிவுடையதாம் எனல் வெளிப்படை. வறுமை மடமை வளர்க்கும் அரசு சிறையைப் பெருக்கல் சிரிப்பு வறுமை பசிநோய் மடமை முதலாம் சிறுமை ஒழிஅரசைத் தேடு ஆண்பெண் உரிமையுடன் அன்பாய் உலவிவரப் பேண்பெரிய ஆட்சியே பேறு இன்ன அடிப்படை கொண்ட அரசை அவாவுகிறார் திரு.வி.க. காற்றின் மகவாகிக் காலம் கழிப்பவரைக் கூற்றம் அணுகாது கூர்ந்து கீரையும் மோரும் கிளர்குடல் மாசுகளின் வேரைக் களையும் விரைந்து உணவு செரியாமுன் உண்டுண் டடைத்தல் பிணவுடலம் ஆக்கும் பிணித்து உடம்பிறை கோயிலெனும் உண்மை உணர்ந்தோர் திடம்பட மெய்யென்றார் தேர்ந்து என்பவை உடல்நலக் குறிப்புகளுள் சில. எண்ணத்தால் சிறந்த மக்களையும் எண்ணத்தால் இழிந்த மக்களையும் இவர் இவர் என எடுத்துக் காட்டிய அருமையது எண்ணப்பகுதி. எண்ணம் உடலோம்பும்; எண்ணம் உயிரோம்பும்; எண்ணம் உலகோம்பும்; இன்பு என எண்ணநலம் கூறும் திரு.வி.க. செல்வத்துட் செல்வமெது? தீயெண்ணர் ஆகாமை; கல்வியில் கல்வியது கல் என்று நல்லெண்ணக் கல்விச் செல்வத்தைக் கற்கத் தூண்டு கிறார். தேவைக்கு மேலெண்ணாச் சீரிய வாழ்க்கையை விரித் துரைக்கிறார்; ஏழ்மைக்கு உதவுதல் ஏழ்மையை வளர்ப்பது; ஏழ்மை பெருகா வளவாழ்வு வேண்டும் எனத் தேர்ந்துரைக் கிறார். பொதுமை உலகையும் புதுமை உலகையும் எதிர்நோக்கிப் பாடுவது உலகம். ஈருலகப் பெருமக்களையும் கொள்கை களை யும் விரித்துரைக்கிறார். உலகமே ஓருடலாய் ஒத்துயிரோர் அன்புக் குலமுகிழ்த்தால் என்னகுறை? கூறு என வினாவுகிறார். வள்ளுவ அறம், விவிலிய அறம், காந்திய அறம் ஆயவற்றை நறுக்குத் தெறித்தாற் போல் கூறுகிறது அறம். சமயங்களில் சார்ந்துள்ள அழுக்குகளை விரித்துரைக்கும் திரு.வி.க. சமயச் சால்புகள் எவையெனவும் காட்டுகிறார். சன் மார்க்கச் சிறப்பை, பன்மார்க்கத் தீங்குகளைப் பாரில் ஒழிக்க எழு சன்மார்க்கம் எனப்பாராட்டுகிறார். தீர்க்கர் என்பார் குருமார். தீர்க்கச் சிறப்பை, மக்களின் துன்பமும் மற்ற உயிர்த் துன்பமும் ஒக்கநினை தீர்க்கம் உயர்வு என்று கூறி, வாழ்த்துடன் நூலை நிறைவு செய்கிறார். இருமையும் ஒருமையும் இருமை என்பது இரண்டு. இது பன்மையின் அடையாளம்; பன்மை என்பதன் இலக்கணம், ஒன்றல்ல பல என்பதாம். வடமொழியர் ஒருமை, இருமை, பன்மை என மும்மைப் படுத்துவர். தமிழரோ ஒன்றல்லது பல (பன்மை) எனக் கண்டனர். உலகம் இருமைப்பட்டது; ஒவ்வொன்றும் இருமைப் பட்டவை. இருவேறு உலகத்து இயற்கை என்பது வள்ளுவம். ஆக்கமும் கேடும் என்பவை அவை. கொடுப்பதும் மழை; கெடுப்பதும் மழை; சோறாக்கும் தீயே, சுட்டெரிக்கவும் செய்யும். மூச்சுக் காற்று, தென்றல் நிலையும் ஆகும். மலையைச் சாய்க்கும் நிலையும் ஆகும். ஒழுக்கம் இழுக்கம்; அவா, துன்பம்; நோய், நலம்; தண்மை, வெம்மை; எல்லாமும் இருமையாய் நிற்றல் வெளிப்படை. கடிகையாரம் பன்மை;அப்பன்மை உறுப்புகளின் இயக்கம் ஒருமை. உடல் பன்மை; அப்பன்மை உறுப்புகளின் இயக்கம் ஒருமை; இருமை ஒருமையாதல் - ஏன்? பன்மை ஒருமையாதல் வேண்டும்! பன்மையுள் ஒருமை காணும் பான்மையே ஆக்கம். ஒருமையைப் பன்மையாக்கல் அழிப்பு, சிதைப்பு. உடற்கூறு - உடலியக்கம் - உள இயக்கம் - அறிவியக்கம் என்னும் இயக்கம் அனைத்தும் இருமையில் ஒருமையாய் இயல்பவை. மாந்தன் இரண்டுகாலால் ஒருமுக நடையிட்டால், விலங்கு நான்கு காலால் நடையிடுகிறது; அறுகால் பூச்சி, எண்கால் பூச்சி என்பவை ஒரு முக இயக்கம் கொள்கின்றன; ஆயிரம் கால் பூச்சியும் அப்படியே ஒருமுக இயக்கம் கொள்கின்றது. ஆயிரம் ஆறுகள் ஒரு கடலாய் ஒருமா கடலாய்ப் பெருக்கம் காட்டு கின்றன. ஆயிரம் தெய்வம், ஆயிரம் சமயம் எனினும் அவை ஒருமையானவையே தெய்வம் பலப்பல சொல்லிப் பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் என்பது பாரதி பாடல். ஓருருவம் ஒரு நாமம் ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் நாமம் சொல்லல் என்பது மணிவாசகர் மொழி. இருமையில் ஒருமை காணும் உலகம் உய்யும்! ஒருமையைப் பன்மையாக்கும் பார்வை, கெடுத்தொழிக்கும் உலகை. இருமையில் ஒருமை கண்ட திரு.வி.க. தம் காட்சியை உலகுணர வைக்கிறார். இருமையும் ஒருமையும் என்பது நூலின் பெயராயிற்று. இச்சிறு நூலில் பல பொருள்கள் செறிந்து கிடக்கின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று இருமை; மற்றொன்று ஒருமை என்கிறார் திரு.வி.க. இச்சுவடி 1930 இல் வெளிவந்தது. அகவல் நடையது. அடியால் 405 கொண்டது. கண்ணொளி இழந்து படுக்கையில் இருந்த நிலையில் நினைவில் இருத்தித் தக்கார் ஒருவர் எழுதச் சொல்லியது ஆகும். எதுகை மோனை எங்கெங்கும் விஞ்சி நிற்கின்றன. தொடர் தொடராகப் பொருள் விரிகின்றது. கடவுளே! கடவுளே! கண்ணளி கடவுளே எனத் தொடங்கி, அதே தொடராலேயே நிறைவு கொள்கின்றது. கண்ணொளி குன்றுங்கால் உள்ளொளி விஞ்சும் என்பதை, முதுமையில் எனது கண்களைப் படலத்தால் மறைப்பித்துச் சிந்தனா சக்தியைப் பெருக்கி, என் மனத்தில் எழும் கருத்துக்களை உளறுமாறு செய்துள்ளதை என்னும் முன்னுரையால் சுட்டுகிறார். இதன் விளக்கம் உள்ளொளி யில் காணவும் ஏவுகிறார். கடவுள் நிலை இரண்டு, என்பதை இயற்கையைக் கடந்தும் கலந்தும் நிற்றல் என்கிறார். கடந்த நிலையினும் கலந்த நிலையே அருள்நிலை எனத் தெளிகிறார். உலகம் இருமையாய் இயக்கமுறுதலை நூற்றுக் கணக்கான சான்றுகள் காட்டி வளர்ச்சி பெருகப் பெருக அழிவு பெருகுதலும், ஆசைப் பேய் ஆட்டிப் படைத்தலும் ஆசையை ஒழித்து, இருமை மடிய ஒருமை படிய (200) நேர்தலைக் காட்டுகிறார். ஒருமைத் திருவை அடையாமையே அலைக்கழிவு என விளக்குகிறார். ஐந்து பூதம் உந்தியது ஆவி (236) எனும் கொள்கை அறிவியலால் விளக்கம் பெறும். ஆவியின் உண்மை அறிந்தவன் வீரன் (252) அவனே நற்றவன்; மற்றவன் பாவி தன் குறை மறைக்கப் பிறர்குறை பேசுவன்; தன் புகழ் நாடிப் பிறர்தமை இகழ்வன்; தன்னலம் கருதிப் பிறரை வதைப்பன்; பருத்த உடலைத் திருத்தவே முயல்வன்; உள்ளம் திருத்த உள்ளவே மாட்டான்-258-262 உள்ளம் திருந்தின் கள்ளம் போமே 306 ஒழுக்கத் தொண்டுகள் பழுக்க ஆற்றுவர்; அவரே அந்தணர் அவரே முனிவர் அவரே சித்தர் அவரே புத்தர் அவரே பெரியர் அவரே தொண்டர் அவரே இனியர் அவரே மனிதர் - 370-374 ஒருமை, பன்மையில் மருவித் திகழும் - 290 மக்கள் எல்லாம் ஒக்கல் ஆவர். மற்ற உயிர்களும் சுற்றம் ஆகும் உலகம் ஒருமைக் குலமாய் இலங்கும் 394 - 396 என இறையருள் வேண்டி நூலை நிறைக்கிறார். திரு.வி.க. நூல்களின் ஊடகம் பொதுமை! பொதுமை நலம்! பொதுமை நலப் பேறே! என்பது இச் சுவடியாலும் விளங்கும். அருகன் அருகே அல்லது விடுதலை வழி திரு.வி.க. நூல்கள் பெரிதும் அவர் முன்னுரை கொண்டே அமையும். அரிதாகப் பிறர் முன்னுரை பெற்ற நூல்களுள் ஒன்று இந்நூல். அருக சமயத்தரும் அச்சமயத்தில் ஆழங்கால் பட்ட குடிவழியும் ஆய்வுவழியும் கொண்டவருமாகிய சக்கரவர்த்தி நயினார் முன்னுரை அதுவாம். யான் எம்மதச் சார்புடையவனும் அல்லன்; மதவெறிய னும் அல்லன். எவ்வித வெறியும் என்னை அலைப்பதில்லை. சமயங்களிலுள்ள ஒருமையை வலியுறுத்துவது எனது வழக்கம். அவ்வொருமை சன்மார்க்கம் என்று விளக்கப்படுகிறது என்று நூல் முகவுரையில் தந்நிலை விளக்கம் செய்கிறார் திரு.வி.க. அவர் வரலாற்றையும் அவர் நூல்களையும் கற்றார் எவர்க்கும் பளிச்சிட்டுத் தோன்றும் ஒளி ஈதாம். முதல் தீர்த்தங்கரர் விருசபதேவர்; இன்னா செய்யாமைக் கொள்கையை உலகுக்கு அருளியவர். அக்கொள்கையே உலகை உய்விக்கும் எனத் தேர்ந்து தெளிந்தவர். அக்கொள்கையில் அழுந்தி நின்ற சன்மார்க்கர் திரு.வி.க. ஆதலால் போருலகம் ஒழிந்து அமைதிப் பேருலகம் தோன்ற வேண்டும் என்னும் அவாவில் இந்நூலை இயற்றுகிறார். சொல்லி எழுதிய நூல் இது. ஓடும் ஓட்டத்தில் தட்டுத் தடையின்றி எடுத்த கருத்துகளை இயம்ப ஏற்ற நடை அகவல்நடை. அவ்வகவல்பா ஒன்றே நூலாகின்றது. அதன் அடி 425. பெருமன் என்பான் ஒருவன்; தவனன் என்பான் ஒருவன்; இருவரும் உடன் பயின்றவர். நெடுநாள் கழித்து இருவரும் கடற்கரை மணற்பரப்பில் சந்திக்கின்றனர். அமைந்து பேசுதற் காக அலைவாய்க் கரையை அணுகி அமர்ந்தனர். இயற்கை எழிலும் இயக்கமும் அமைந்த அவ்விடத்துக் காட்சிகளில் ஆர்வம் இல்லாமல் பெருமன் இருத்தலைக் கண்ட தவனன் என்ன நண்ப! உன்றன் கவலை இன்னல் என்றான். என்னிலையை எப்படி உணர்ந்தாய்? எங்கே உளநூல் கற்றாய்? என்றான் பெருமன். உன்னைத் தழுவிய போது நழுவியது உன்கை; நடந்து வந்த போது உன் கால்கள் பின்னிட்டன; இயற்கையைக் கேட்க இசைந்தில காதுகள்; இவை உன்னிலை உணர்த்தின என்றான் தவனன். பெருமன் கண்ணீர் வடித்து மண்ணில் சாய்ந்தான். தவனன் தன் மடியில் கிடத்தித் தேறுதல் கூறினன். கவலையுறாதே; கவலை சவலை ஆக்கும்; நரம்புக் கட்டை அழிக்கும்; அல்லல் ஆக்கும்; தவநெறி நின்றால் கவலை ஒழியும் என்றான். விழுந்த பெருமன் எழுந்தான், என்னிலை கேட்க என்று சொல்லலானான். படிப்பு விடுத்தேன்; பணம் பெற்றேன்; கள்ள வணிகம் புரிந்தேன்; குடித்தேன்; களித்தேன்; கயமையன் ஆனேன்; ஒதுங்க ஓரிடமில்லை. அரசியலில் புகுந்தேன்; சட்டமன்றும் சென்றேன்; பொய்க்கலை கற்றேன்; வறுமையும் நோயும் கவலையும் வாட்டலாயின; உலகம் வெறுத்தது; முடிவு காணக் கடலை அடுத்தேன்; கண்டேன் உன்னை என்றான் பெருமன். உயிரின் விடுதலைக்காகவே உடலைத் தாங்கினோம்; தவத்தை அழிப்பது கவலை; அதனை விடுக. கவலையை ஒழிக்க வழிகள் சில உள. ஒன்று: வள்ளுவர் கூறியது. தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லை என்பது; அவனைப் பற்றுக என்று தவனன் சொல்லவும், அவன் யார், அருள்க என்றான் பெருமன். கோசலநாட்டு அயோத்தியில் கதிரொளி தோற்றிய தோற்றம்போலத் தோன்றி இல்லறம் ஏற்று பல்வகை அறங்களும் பாலித்து வளர்த்தவன். அகிம்சை மேலாம் அறமென முதல் முதல் அருளியவன்; மன்னுயிர் ஓம்பி எல்லா உயிரிலும் இருக்கை பெற்றவன்; ஆட்சி துறந்து ஐம்புலம் வென்று அசோகின் நிழலமர்ந்து அறமுரைத்தவன்; உயிரிகள் அனைத்தும் ஒன்றாய்ப் பரிவு கூரத் தவத்தில் ஓங்கிப் பரகதி அடைந்தவன்; அவனே அருகன்; அவனை அடைந்தால் விடுதலை வழியைக் கடிதில் பெறலாம் என்றான். அறக்கூறுகள் அனைத்தும் அருகம்; அகிம்சை அறமே அருகம்; அருக அருளறம் உலகச் சமயங்களாய் விரிந்தது; கலக உலகம் உய்ய அருக அறப்பணி வேண்டும்; மிகுபொருள் விரும்பாச் சீலம் தோன்றின் போர்கள் ஒழியும் என்று கூறினான். என்னவோ நினைந்து இங்கே வந்தேன் என்னை ஆள இங்கே குருவாய் எழுந்தனை என்ற பெருமனைத் தவனன், உன்னுவம் பணியென உரைத்து அருட் பணியாற்றக் கிளர்ந் தனர்; பிறர்க்கென வாழும் வாழ்வில் பிறங்கினர். கூறவிரும்பும் கருத்தை கதை வடிவாலும், உரையாடல் வகையாலும்வெளிப் படுத்துதல் திரு.வி.க. கொண்ட உத்திவகைகளுள் ஒன்று என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் பொருள் மார்க்ஸியம்; அருள் காந்தியம் என நிரல் நிறை அணிநயம் பெறும் தலைப்பு இது. மார்க்ஸியத்தின் உயிர்நாடி பொருள்; காந்தியத்தின் உயிர்நாடி அருள் என்பது திரு.வி.க. முன்னுரை. அருளிலாப் பொருள் வளம் ஆக்கம் ஆகாது; அவ்வாறே பொருளிலா அருளும் பொருந்திய நலம் ஆக்காது. இரண்டன் ஈட்டமும் கூடின் வீட்டு நலமும் நாட்டு நலமும் உலகிலும் ஓங்கும். அருள் என்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு என்னும் பொய்யா மொழி மெய்யாம் நெறி விளக்கம் இந்நூல் எனலாம். திரு.வி.க. தொண்டில் பெரிதும் கவர்ந்து கொண்டது தொழிலாளர் தொண்டு. அத்தொண்டு பொருளியல் வழிப் பட்டது என்பது வெளிப்படை. பொருளியல் ஆய்வு விளக்கம் மார்க்சியம். அதில் மட்டும் தோய்ந்தார் அல்லர் திரு.வி.க. காந்தியத் தொண்டையும் உயிர்ப்பாகக் கொண்டவர். இரண்டன் இணைவே உலகநலமாக்கும் என்பதைத் தம் ஆய்வு வழியாலும் இயக்க வழியாலும் தேர்ந்து தெளிந்த பட்டறிவே அவர் யாத்த எந்நூற்கண்ணும் பொதுளி நிற்கக் காணலாம். அதன் சிறப்புத் தனிவெளிப்பாடு இஃதாம். இந்நூல் அகவல் நடையது; ஒன்பான் பகுப்புடையது. புனைவுக் காட்சியும் பொருந்திய விளக்கமும் பொலிவது; இயற்கைக் கொழுமைச் செறிவு மிக்கது; வரலாற்று வளமும் தேக்கியது. 1284 அடிகளால் நடைநயம் புரிவது. இரண்டாவதாம் குருகுலக் காட்சியில் வடலை என்றொரு நாடும் திடலை என்றொரு நாடும் விரித்தோதப்படு கின்றன. வடலை வளமும் திடலை வளமும் தனித்தனி ஓதப்படுகின்றன. இரண்டற்கும் இடையே இயற்கைக் குருகுல ஆட்சியும் மாட்சியும் உரைத்து அமைதி உலகம் அரும்ப ஆற்ற வேண்டும் தொண்டை உரைக்கிறார். ஆதிமனிதன் நீதியில் வாழ்ந்ததும் வர்க்கப் பிரிவு இல்லாமையும் இயற்கை இன்பம் எய்தியதும் பேசி, ஆசைப் பேய் அரசுக்கேடு அணுஆய்வு அறிவியல் வெறி இன்னவை பேசி, ஆதி நீதி இயற்கைச் சுழலால் எய்தும் என்கிறார். வளர்ச்சி வகை, கருத்து வேற்றுமைக்கு இடம் தரல், திருந்திய உணவு, அறிவியல் ஆக்கம், பொருளும் அருளும் என்பவை வளர்ச்சியும் விஞ்ஞானமும் என்னும் பகுதியில் ஓதப் படுகின்றன. ஐந்தாம்பகுதி பொருள் என்பதாம். பொருள்நூல், காவியம், பொருளும், சீலமும், அருளாளர் உரைகள் அதில் இடம்பெறுகின்றன. அடுத்தபகுதி அறப்புரட்சி என்பதாம். நரம்பிநாடு, விரும்பிநகர் கொள்ளி என்பான் ஆட்சியன் எனப் புனைந்து அவன் கொடுங்கோன்மை, மரணநாளில் புங்கவன் ஒருவன் உரையால் இரத்தம் சிந்தாப் புரட்சி நிகழ்ந்தது அறத்துப் புரட்சியைக் கருத்தில் கொள்க என்கிறார். அடுத்த பகுதி அறம் (8) பொன்னன் வள்ளல் என்பார் அன்புப் பதியில் இரட்டையராய்ப் பிறந்தனர். அவர்தம் ஆட்சி அறப்பணி என்பவற்றைக் கூறி அருளறம் வேண்டுமென நூலை நிறைக்கிறார். இந்நூல் மணிமொழிகள் சில: உழவும் தொழிலும் விழவா நடக்கும் இல்லார் இல்லை; கல்லார் இல்லை மாந்தர் கைகள் ஏந்தி நில்லா கூட்டறம் தன்னலம் ஓட்டல் இயற்கை கலகம் எழுப்பாக் கருணை விடுதலை ஈர நெஞ்சில் வீரமும் தியாகமும் கருத்து வேற்றுமை பொருத்தும் வளர்ச்சியை மிகுபொருள் விரும்பா மேன்மை ஒழுக்கம் சீலம் அழிக்கும் ஆலம் தன்னலம் மாசில் மனத்தில் நேசம் நிலைக்கும் இந்நூற்கண் மார்க்ஸியச் சாரம் பிழியப்பட்டிருக்கிறது. அதனுடன் காந்தியத்தேனும் கலந்துள்ளது என்னும் திரு.வி.க. முன்னுரை, இக்காலப் பொருளியல் நோய்க்கு மருந்து இதுவே என்பதை உட்கொண்டு உரைக்கும் தொடராகும். சித்தம் திருந்தல் அல்லது செத்துப்பிறத்தல் தமிழுக்கு வாய்த்த பாவகையுள் இயல்பும் எளிமையும் ஓடும் ஓட்டமும் அமைந்த பா அகவற்பா. அதன் ஒலியை மயிலின் அகவல் ஒலியாகக் கூறுவர். ஆசிரியர் தம் கருத்துகளை மாணவர்க்குத் தந்து மனத்தில் பதித்து எளிதில் வரப்படுத்த வாய்த்த பா அகவல் ஆயிற்று. அதனால் அதற்கு ஆசிரியப்பா என்றொரு பெயரும் வாய்த்தது. அகவலாம் ஆசிரியப்பாவின் இலக்கணம் மிகச் சுருங்கியது. ஈரசை நாற்சீர் அகவற் குரிய என்பது அதன் இலக்கணம். தேமா, புளிமா, கருவினம், கூவிளம் என்பவை ஈரசைச் சீர்கள். இச்சீர்கள் நான்கு கொண்டது ஓரடி. மூன்றடிச் சுருக்க மாகவும், பாடுவோர் எண்ணம் போல் பெருகுவதாகவும் அகவல் அமையும். மூன்றடிச் சுருக்கத்தையும் நாற்சீர் அளவையும் வாய்ப்புப் போல் குறைத்து அதே அகவல் பா வகையில் நூல்கள் இயற்றல் மேலும் எளிமையும் இயல்பும் சுருக்கமும் ஆதலைக் கருதி, ஒருவகைப் பா இயற்றினர். அது நூல் இயற்றுதற்கெனச் செய்யப் பட்டது. ஆதலால், நூற்பா என்றும், சுருங்கிய சொற்களால் விரிந்த பொருள் தர நுட்பமாக அமைக்கப்பட்டது கொண்டு சூழ்த்திரம் என்றும் கூறினர். அதுவே சூத்திரம் எனலாயிற்று. மடக்கு, திரிபு, ஓரடி (ஏகபாதம்) எனக் கடும்பா இயற்று தலே புலமைத் தலைக்கோல் என வாழ்ந்தவர் படைப்புகளை ஒதுக்கித்தள்ளும் வகையில், வள்ளலார், பாரதியார், பாவேந்தர் முகிழ்த்தனர். அதில் திரு.வி.கவும் பங்களிப்புச் செய்தார். தென்றல் நடை கண்ட திரு.வி.க. மேடைத் தமிழும் இதழ்த் தமிழும் ஒடுங்கிக் குன்றிப் படுக்கைக் கிடப்பும் ஒளி இழப்பும் ஆகிய நிலையில், உள்ளொளி கொண்டும் நினைவுத் திறம் கொண்டும் இம் மண்ணுக்குத் காலமெல்லாம் வள்ளியராகத் திகழ வாய்த்த பா, அகவற்பாவாம். படுக்கையில் இருந்து எண்ணி, நினைவேட்டில் எழுதி வைத்து, தக்கார் ஒருவர் வாய்க்கும் போது எழுத்துருவாக்கி அச்சிட்ட அருமையும் பெருமையும் வாய்ந்தன சில நூல்கள். அவற்றுக்கெல்லாம் இச்செய்தி பொதுமைப் பட்டதாம். படுக்கையில் கிடந்து கொண்டு சிற்சில வேளைகளில் சிறு சிறு நூல்களைப் பாக்களால் - பெரிதும் அகவற்பாவால் - சொல்லி வருகிறேன். அந்நூல்களுள் இந்நூலும் ஒன்று என்று சித்தம் திருந்தல் அல்லது செத்துப்பிறத்தல் என்னும் நூல் முன்னுரையில் வரைகிறார். இதனை இயற்றுங்கால் அவர்தம் அகவை அறுபத்தாறு (1951) இந்நூல் 369 அடிகளைக் கொண்ட ஓர் அகவலால் அமைந்த நூல். திரு.வி.க. தம் நூல்களில் பெரும்பாலான வற்றுக்கு இருபெயரிடல் வழக்கு. அவ்வழக்குக் கொண்டது இந்நூலும். இந்நூற்பெயர், இந்நூலின் ஓரடியில் அமைந்து சிறக்கிறது. அது, சித்தம் திருந்தினன் செத்துப் பிறந்தனன் என்பது (188) சித்தம் திரும்பல் செத்துப் பிறத்தலே என்பது மேல் தெளிவு (197). சுருங்கிய எளிய இந்நூல் கருத்தோ அருமையுடையது. பற்பல சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவது. பல்வேறு வாழ்வியல் அறமணிகளை ஆங்காங்கே பதித்துச் செல்லும் அருமையது. எடுத்துக் கொண்ட கருத்தை விளக்க ஒரு கதையைப் புனைந்து கதைபொதி பாநூல் ஆக்கிவிடுகிறார். காதை என்பது அதுவே என்பது சிலப்பதிகாரத்தால் விளங்கும். மனையறம் படுத்த காதை, அரங்கேற்று காதை முதலிய காதைப் பெயர் களையும் காதை என்பது கதைபொதி பாட்டு என்பதையும் சிலம்பில் அறியலாம். வெள்ளி என்பான் ஒரு மன்னன். அவன் ஆட்சி புரிந்த ஊர் சித்தம்; அவன் செய் தீமைகளால் தொழுநோய் உண்டாயது. அவன் வாழ்ந்த உருக்குச் சித்தன் ஒருவன் வந்து அவனுக்கு மருந்து தந்தான். மன்னன் நோய் அகன்றது. சித்தன் தன் கடமை முடிந்ததால் அயலூர் செல்ல விரும்பினான். வெள்ளி மன்னன் தன் குறைகளைச் சித்தனிடம் கூறி அழுதான். உன் அழுகை பாவத்தை ஒழித்தது; அழுகை பாவம் கழிக்கும் மருந்து; நாளும் நொடியும் பிறப்பும் இறப்பும் நிகழும். கேள்: கொந்தி என்பான் கொலைஞன்; கொள்ளையன்; அவன், ஒரு புலவன் கூறிய மலைப்பொழிவுச் செய்தியை ஒரு நாள் கேட்டான். கூட்டம் முடிந்து புலவனைக் கண்டான்; அன்பன் ஆனான். பழங்கொந்தி இறந்தான்; புதுக்கொந்தி பிறந்தான். இன்னும் கேள்: ஒரு மன்னன் குடும்பத்தில் மகன் ஒருவன் பிறந்தான். அவனால் இன்னல் பெருகியது; ஆட்சி, அமைச்சு குடி, நாடு ஆயவற்றால் கவலை இல்லை; மகனால் கவலை பெருகியது; சிறந்த ஆசான் ஒருவன் வழியாய் மகனைத் திருத்த முயன்றான் மன்னன். மகன் ஆசானை அறைந்தான்; அவன் வருதல் ஒழிந்தான்; மகன் செய்யாதனவெல்லாம் செய்து வந்தான். ஒருநாள் அவ்வூர்க்கு நந்தி என்னும் முனிவன் ஒருவன் நண்ணி னான். அவனுரை கேட்டான் ஒருநாள்; மேலும் கேட்டான்; மனமாற்றம் உற்றான்; பொல்லான் ஒருவன் நல்லான் ஆகும் வழியும் உண்டோ? என வினாவினான் முனிவனிடம். முனிவன், நல்லான் பிறர்குறை சொல்லான்; நல்லார் இணக்கம் வல்லமை தரும் என்றான். பிறர்குறை பேசா அறம் பேணினான்; தன்குறை உணர்ந்தான்; சித்தம் திருந்தினான்; செத்துப் பிறந்தான். பெற்றவர் மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சிகளை எண்ணுக! அழுகின்ற நீ இறந்து பிறந்தாய்! புதியனாய் வாழ்க! வன்மை பிறர்க்கு நன்மை செய்வதே. ஜெப தப தியானம் செய்தல் நன்று; செய்யும் தொண்டால் வையம் வளரும் என்று கூறிப் புறப்படலானான் சித்தன். வெள்ளி மன்னன், வீடும் வேண்டேன்; பீடும் வேண்டேன் எனச் சித்தனைத் தொடர்ந்தான். சித்தன், வீர வழிபா டென்னும் பேரால் தனித்தனி மனிதனைத் தலையில் தூக்கி வெறிகொண் டாடல் அறிவா காது; கொள்கை வளர்க்கக் கொள்க அன்பை என்று கூறி மேலும் பேசினார். புது வெள்ளிப் புலமையரே, கேளும்: சிலுவையில் அறைந்த கொலைஞரிடத்தும், அருளைப் பொழிந்த பொறுமை வள்ளல், போதனை வாழ்வில் சாதனை செய்க; என்று கூறிப் பலப்பல நல்லறங்களை நவின்று சித்தன் புறப்பட்டான். வெள்ளி கதறினான். நலமார்குருவின் சொல்வழி நில்லெனச் சித்தன் கூற வெள்ளி அமைந்தான். சித்தன் சொல்வழி நின்றான்! இதுவே கதைச்சுருக்கம். இதில் அமைந்துள்ள அருமணிகள் சிலவற்றை எண்ணுக: உயிரின் அழுகை ஒழிக்கும் பாவம் - 34 முறையிட் டழுதால் கரையும் பாவம் - 45 இன்ப துன்ப இருப்பிடம் பிள்ளை - 111 வன்மை பிறர்க்கு நன்மை செய்வதே - 208 தொண்டால் மூர்க்கம் அண்டா தொழியும் - 288 மூத்த அநுபவம் மாக்கலை நிதியே - 306 விளம்பர நோன்பு களங்கம் ஆகும் - 330 எவை எவை பொல்லானை நல்லான் ஆக்கும் என்ற திரு.வி.க. எவை எவை பொல்லானை நல்லான் ஆக்கா என்பதை விரித்துரைத்தல் தனிப் பெருஞ் சிறப்பினதாம். (162-173) மீள் பிறப்பு உண்டு என்பார். இல்லை என்பார். மீள்பிறப்பு ஏழு என்பார்; ஏழேழு என்பார்; எண்ணற்ற தென்பார்; ஒரு பிறப்புள்ளே எழுபிறப்பென்பார்; நாளும் நாளும் இறப்பும் பிறப்பும் என்பார் திருந்திய வாழ்வு புதுவாழ்வு: புதுப்பிறவி கொண்ட வாழ்வு என்பது இந்நூல். இதன் சிறப்பை எண்ணுக. பெயரீடு: நாட்டின் பெயர் சித்தம் மன்னன் பெயர் வெள்ளி குருவன் பெயர் சித்தன் கொலைஞன் பெயர் கொந்தி முனிவன் பெயர் நந்தி பிள்ளைத் தீயனுக்குப் பெயரீடு இல்லை. இப்பெயரீடுகள் உள்ளீடு உடையவை அல்லவோ! நூற்பெயரே. நூற்பொருள் திரட்டுத்தானே! முதுமை உளறல் உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டா அங்கு என்னும் திருமுருகாற்றுப்படை இரண்டடிகளுக்கு கருமுகில் சூழல்; பெரும்புயல் தாக்கல்; கருமுகில் இரிவு; பரிதித் தோற்றம்; உலக உவப்பு எனப் பொருள் கொள்ள வாய்க்கும். கருமுகில் - ஏகாதிபத்தியம் ; பெரும்புயல் - புரட்சி; கருமுகில் இரிவு - ஏகாதிபத்திய முறிவு; பரிதித் தோற்றம் - சுதந்திர உதயம் ; உலக உவப்பு - பொதுமை இன்பம் என உவம உருவகக் காட்சியாக்கல் முதுமை உளறலா? மூதறிவுப் பேறா? வறட்டு முதுமை, செருக்கு முதுமை, தந்நல முதுமை, ஒத்ததறியா முதுமை, உளறும்; உதறும்; உதைக்கும்; உருக் குலைக்கும். ஆனால் பண்பட்ட முதுமை, விரிய விரிய விரியும் பொது நலச் சுரப்பாகி உலகுக்கு வழிகாட்டும். அது வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வப் பேறுறும் திருநெறிச் செல்வம் கொண்டது. அதற்கொரு சான்று இந்நூல். எனக்கொரு பயிற்சி இளமை தொட்டே உண்டு. பாடலை இரவுப் பொழுதில் விளக்குப் போடாமலே எழுதும் பயிற்சி. பின்னே விடியல் வெளிச்சத்தில் படியெடுத்துக் கொள்ளல். இதிலும் இடர் உண்டு. எழுத்துப் படிந்திராது: எழுத்தின்மேல் எழுத்து, வரிமேல் வரி இருக்கும். ஆனால் திரு.வி.க. தாம் இயற்றும் பாடல் அடிகள் எத்தனை எனினும் நெஞ்சக் களனில் சிதையாது நிறுத்தி, எழுதத் தக்கார் கிட்டியபோது சொல்லி எழுதுவித்தல் எத்தகு அருமை மிக்கது! இத்தகு முதுமைத் தொண்டு உலகுக்குப் புதுமைத் தொண்டே! இப்படிக் கிளர்ந்த நூல்களைத் தோற்றுவாயில் காட்டுகிறார் திரு.வி.க. கடவுள் பற்றிய பகுதியில், கடவுள் ஆய்வில் மேய்தல் வேண்டா கடவுள் நிலையை அடைதல் நன்றே என்கிறார். என்னைக் கிள்ளின் எனக்குத் துன்பம் உம்மைக் கிள்ளின் உமக்குத் துன்பம் துன்பம் விழையும் அன்பரும் உளரோ? துன்பம் நீங்க வாழ்தல் இன்பம் குழந்தையும் உணரக் கூறும் முதுமை நயம் இது. அம்மா அப்பாவின் பிழிவு என்ன? கைம்மா றெண்ணா அம்மா! அப்பா! வையம் எப்படி? முதுமை அறியாப் புதுமை உடையவள் பிள்ளைப் பேற்றின் பேறென்ன? இருவரை ஒருவர் ஆக்கிய காதல் பிள்ளை ஆகும் கள்ளம் காண்க மனிதன் நிலை என்ன? விலங்கி னின்றும் வெளியே வந்தும் விலங்கை மனிதன் விலக்க வில்லை மலைநலம் என்ன? கொலைவதை நீங்க மலைமருந் தாகும் தூக்குத் தண்டனை ஆமா? தூக்குத் தண்டனைப் போக்குக் கெட்டது காட்டு மிராண்டி நாட்களில் தோன்றிய தண்டனை இந்நாள் கொள்வது தவறே கண்ணகியார்க்கு ஒரு பாராட்டு மாதவி மீதும் தீதெணாக் கண்ணகி எந்த வாழ்க்கை வேண்டும்? வறுமை செல்வம் இரண்டும் அற்ற வாழ்க்கை தேவை; வாழ்த்துக அதனை ஒழுக்கம் நிலைப்பது எப்படி? ஒழுக்கம் பொதுமை ஒழுங்கில் நிலைக்கும் நட்பு என்பது என்ன? உள்ளம் உள்ளம் நள்ளல் நட்பே குற்றம் குறைக்கும் வழியாது? முறையிடும் பயிற்சி குறைக்கும் குற்றம் எதுவீரம்? குறைகள் குற்றம் முறையிடல் வீரம் சாதி மத வெறி: சாதி அன்பு நீதி அன்று மதப்பிடி வாதம் அதட்டும் அறிவை நிறைவு முன்னோர் மொழியைப் பொன்போல் போற்றுக என்றும் போற்றுக; என்றும் போற்றுக என நூல் நிறைகிறது. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் நூலுக்கு இடப்பட்டுள்ள இரண்டாம் பெயரே, நூல் எழுதப்பட்ட வகையைத் தெரிவிக்கும். சொல்லி எழுதப்பட்ட நூல் இது. அகவல் நடையது. 16 தலைப்புகளைக் கொண்டது. நூலின் முதற்பெயர் அதன் உள்ளுறையைச் சுட்டும் வகையால் அமைந்தது. இந்நூல் ஒருவிதத் தத்துவத்தை அடிப்படையாக் கொண்டது. அது வளர்ச்சித் தத்துவம், வளர்ச்சித் தத்துவக் கூறுகள் பலவிதத் தலைப்பில்- பலவகையில் - சுருங்கிய முறையில் -இந்நூற்கண் ஓதப்பட்டுள்ளன. அக்கூறுகளை ஒன்றுபடுத்திப் பார்த்தால் தத்துவ ஒருமைப்பாடு நன்கு புலனாகும். இந்நுட்பம் தொகுப்பில் இனிது விளங்கும் என முன்னுரையில் இந்நூல் பொருளமைவு குறித்துக் கூறுதல் எண்ணிப் பயிலத் தக்கதாம். வளர்ச்சி இல்லாமல் வாழ்வு இல்லை. அவ்வளர்ச்சியைத் தாம் நோக்கிய வகையால் பதினாறாக்கிச் சொல்கிறார் திரு.வி.க. உலகை நோக்கினால் வளர்ச்சி இயல்கள் கடவுள் உண்மையில் நிலைக்கும் என்பது கடவுள் பற்றியது. (1) “MŒªJ MŒªJ f©lhš vªj¥ bghUS« mÊjš ïšiy; khWtJ ïa‰if òy¥gL«” v‹gJ ts®¢á.(2) வளர்ச்சிக் கல்வி பயில, உள்ளம் உருகும்; பாவம் அருகும்; இருள் இரியும்; அருள் விரியும்; இது உருகல். (3) நூல் நுண்ணியது; மன்பதைப் பொதுவை உணர்த்துவது நூல்; அன்பும் தெய்வமும் நூலே; நூலைப் பயில்க; நூலைப் பாடுக என்பது நூல். (4) மரத்தடியாவது பரத்தடி; மாசு நீக்கி அற ஒளி பரப்பும் மரத்தடி என்பது மரத்தடி. (5) வேட்டை தவிர்க; நாட்டு வளம் மல்கும்; வேட்டை நாட்டம் வேண்டா; உள்ளத்துள்ளே உள்ளது காடு; ஆங்குள விலங்கை ஓட்டுக என்பது வேட்டை. (6) பற்பல கலைகள்; பற்பல மதங்கள்; போரை ஒழிக்கப் போர்; குண்டைத் தொலைக்கக் குண்டு; மூர்க்கம் வீறி மூண்டது கண்டோம்; பொதுமை அறத்தைப் போற்றுக;ஒருமை நாட்டம் பெருமை கொள்ளும் என்பது தவநெறி. (7) இயற்கை, சமயம்; அது பொதுமை வாய்ந்தது; சமயம் இன்றி அமையாதுலகம்; வள்ளுவம் சொல்லும் வழிபாடுள்ளது; கடமை புரிதல் திடவழிபாடு; முறையிட்டழுதலும் நிறை வழிபாடு; உயிரிக்கிதம் செய்தல் உயர்வழிபாடு; வெறியைக் கடந்தது அறிவுச்சமயம்; உலகமெல்லாம் ஒரு குலம் ஆக்கச் சமயம் வேண்டும்; இது சமயம். (8) தொண்டால் மலரும் பண்டை வாழ்வு; இளமை தொட்டே வளமைத் தொண்டைப் பயிற்சி செய்க; நல்ல தொண்ட்டைத் தந்தை ஆற்றின் மைந்தன் ஆற்றுவன்; சுற்றம், உலகம் ஏற்கும்; கலகம் விலகும்; தொண்டு செய்க என்பது தொண்டு. (9) அன்பே தெய்வம்; அன்பே வையம்; இன்பக் காதல் அன்பின் திறவு; காதல் நெறியே இருமை கெடுத்து ஒருமை கூட்டும்; அன்பு வாழ்க என்பது அன்பு. (10) நல்லுடல் உள்ளம் பல்கலை உலகம்; நல்லன படைக்க நல்ல எண்ண ஊற்றெழல் வேண்டும்; இயற்கை நாட்டமும் இறைமை உறவும் இடையீடின்றி நடையில் கொண்டால் நல்ல எண்ணச் செல்வம் சுரக்கும் என்பது எண்ணம். (11) வாழ்வு வளர்வது; தேய்வது அன்று; கல்வி பயிலாச் செல்வம் மாந்தன் பெற்றான்; சுரண்டல் வாழ்வில் புரண்டான் இல்லை; பின்னே கெட்டான்; அச்சோ! மனிதன் செத்தே போனான்; கட்டிடப் படிப்பு பட்டப்படிப்பு; கூடை கூடையாய் மேடைப் பொழிவு; போதனை என் செயும்? ntjid Ú¡Fnkh?குறையை முறையிட் டிறையை வேண்டின் இனிது வளரலாம்; இனிது வாழலாம் என்பது வாழ்வு. (12) அறவோர் தொண்டின் உறவோர்; நன்னயர் அறவர்; அவருயிர் தொண்டே; அறவர் வழிஞர் பழிகள் நிகழ்த்தினர்; கலகமூட்டி உலகைக் கெடுத்தனர்; குருகுலக் கல்வி தருமே அறவரை; பகைமை அறியாத் தகைமையர் அறவர்; என்பது அறவோர். (13) மன்னவர் ஆட்சி மன்பதை ஆட்சியாய் விளங்கும்; சிற்சில இடங்களில் கொடுங்கோல் நடுங்க வைத்தது; மன்னர் ஆட்சி பின்னம் உற்றது; கெட்டவரிடத்தும் கிட்டிய தரசே; மேடைகள் நஞ்சின் ஓடைகள் ஆயின; மாற்றம் செய்ய ஆற்றுககடனே; மன்னர் ஆட்சி துன்ன வேண்டும்; அறவோர் மன்றம் உறவால் அமைக்கலாம்; நல்ல ஆட்சியே அல்லல் களையும்; மன்னருள் பொதுமையை இந்நிலம் ஏற்றல் உறுதி; அருளின் ஆட்சி அதுவாம் என்பது பொதுமை. (14) உள்ளத்துள்ளே வள்ளல் உள்ளான்; அவனை நினைத்தே முறையிட்டழுதால், உருகும் பாறை; ஈரநெஞ்சில் கோரம் படியாது; பாவம் பறக்கும்; ஆவி நலமுறும் என்பது முறையீடு. (15) இம்மண் என்றோ செம்மையுற்றிருக்கும்; வளர்ச்சிக் கிடையிடை தளர்ச்சி நேர்ந்தது; வளர்ச்சிக்கு ஒழுக்க வளப்பம் தேவை; வளர்ச்சித் தத்துவம் வாளாகிடவா; தீய குணமெலாம் நல்லன ஆகும்; விளைவு பெருகும் வளமை கொழிக்கும்; ஒன்றே குலமும் ஒன்றே உலகமும் ஒன்றே தெய்வமும் என்றே வாழ்வர்; என்பினுள்ளும் அன்பு நிலவும்; இதுவே பொதுமைப் புதுமை மலர்ச்சி என்பது தொகுப்பு. (16) தலைப்பு ஒழுங்கில் வளர்ச்சியும் வாழ்வும் விளங்குதல் அறிக. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! அன்புடன் இரா. இளங்குமரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் கிறிது மொழிக்குறள் முன்னுரை 2 காந்தியடிகட்கு 5 தோற்றுவாய் 7 1. மலைமொழி 13 2. மணிமொழி 28 இறுவாய் 53 இருளில் ஒளி முன்னுரை 59 1. பரம் 65 2. படைப்பு 68 3. கல்வி 72 4. அரசு 79 5. உடல் 82 6. எண்ணம் 89 7. வாழ்க்கை 94 8. உலகம் 98 9. அறம் 105 10. சமயம் 111 11. தீர்க்கர் 117 12. வாழ்த்து 120 இருமையும் ஒருமையும்? முன்னுரை 125 இருமையும் ஒருமையும்? 127 அருகன் அருகே அல்லது விடுதலை வழி முகவுரை 147 அருகன் அருகே அல்லது விடுதலை வழி 149 பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் முன்னுரை 168 1. வாழ்த்து 169 2. குருகுலம் 171 3. மனிதன் 181 4. வளர்ச்சியும் விஞ்ஞானமும் 191 5. பொருள் 199 6. உரிமை 204 7. அறப் புரட்சி 206 8. அறம் 214 9. வேண்டுதல் 221 சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் முன்னுரை 224 சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 225 முதுமை உளறல் முகவுரை 240 1. தோற்றுவாய் 241 2. கடவுள் 244 3. அம்மா! அப்பா! 246 4. வையம் 247 5. ஞாயிறு 249 6. பிள்ளைப் பேறு 251 7. மனிதன் 253 8. மலை 256 9. மனம் 259 10. வாழ்க்கை 264 11. ஒழுக்கம் 267 12. நட்பு 269 13. நோன்பி 271 14. தவம் 272 15. சீர்திருத்தம் 275 16. முன்னோர் மொழி 279 வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் முன்னுரை 282 1. கடவுள் 283 2. வளர்ச்சி 284 3. உருகல் 285 4. நூல் 286 5. மரத்தடி 287 6. வேட்டை 288 7. தவநெறி 289 8. சமயம் 291 9. தொண்டு 294 10. அன்பு 296 11. எண்ணம் 298 12. வாழ்வு 299 13. அறவோர் 303 14. பொதுமை? 305 15. முறையீடு 309 16. தொகுப்பு 311 (1948) கிறிது மொழிக் குறள் முன்னுரை ஏசு மொழியும் இனியதிரு வாசகமும் நேசஅருட் பாவுமென் நெஞ்சு. கிறிது பெருமான் திருவாய் மலர்ந்தருளிய நற்செய்தியை- சுவிசேஷத்தை - எளிய தமிழில் வடித்தல் வேண்டுமென்ற வேட்கை பல ஆண்டுகட்கு முன்னர் என்னுள் எழுந்தது. அவ்வேட்கை தணிதற்குரிய வாய்ப்பு அந்நாளில் எனக்குக் கிட்டவே இல்லை. பின்னையாதல் - அக்கால அணிமையில் - அவ்வாய்ப்புக் கிட்டியதோ? இல்லை. ஏன்? பலதிறத் தொண்டுச் சூழலும், நெருக்கும், பிறவும் எனக்கு ஓய்வளிக்கவில்லை. ஆனால், எழுந்த வேட்கைமட்டும் என்னுள் எங்கேயோ ஒன்றியது. 1947ஆம் ஆண்டு, சென்னையில் பஞ்சாலைத் தொழி லாளர் வேலைநிறுத்தம் நிகழ்ந்தது. அத்தொழிலாளர் சங்கத்1 தலைவர் தோழர் - எ.ஸி.ஸி. அந்தோணி பிள்ளை அவர்களை அரசாங்கம் விசாரணையின்றிச் சிறைப்படுத்தியது. பழந் தலைவன் என்ற முறையில் வேலைநிறுத்தத்தை நடாத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. ஏறக்குறைய நூறுநாள், வழக்கம்போல, முறைப்படி, வேலைநிறுத்தம் நடைபெற்றது. அவ்வேளையில் யான் வீட்டை விடுத்து (9-6-1947 - 10-7-1947) வெளியேகலாகாது என்று அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது. ஆனால், அக்கட்டளை, மக்கள் வரவு செலவைத் தகையவில்லை. அதனால், வீட்டுக் காப்பிலும் யான் போதிய ஓய்வு பெற்றே னில்லை; சிறிதே பெற்றேன். அவ்வோய்வில் என்னுள்ளத்தில் எங்கேயோ ஒன்றிக் கிடந்த பழைய வேட்கை விரைந்து வீறியது. அதன் பயனாகக் கிறிது பெரு மான் மலைமொழியையும், மற்ற மணிமொழி களில் சிலவற்றையும் தழுவி, அவற்றைக் குறள்வெண்பாவால் யாக்கலா னேன். நூலுக்குக் கிறிது மொழிக் குறள் என்னும் முடி வேயப் பெற்றது. சாது அச்சகத்தின் வேலைத்துதைவும், பிறவும்நூலை அப்பொழுதே வெளியிட இடந்தரவில்லை; நாளை நாளை என்று காலம் நடந்தது; கடந்தது. இந்நிலையில் (30-1-1948) காந்தியடிகள் பருவுடல் வீழ்ந்தது. அவ்வீழ்ச்சி கிறிதுவின் மலைப்பொழிவு மீது என் கருத்தை உந்தியது. காரணம், காந்தியத்துக்கும் மலைப் பொழிவுக்குமுள்ள தொடர்பேயாகும். காந்தியம், மலைப் பொழிவின் பரிணாமம் என்பது உலகறிந்த தொன்று. அடிகளின் வீழ்ச்சி, கிறிது மொழிக் குறளை வெளியிட என்னை முடுக்கியது. அம் முடுக்கலையும் சில தடைகள் மறித்தன. பருவத்தா லன்றிப் பழா என்னும் மூதுரை பொய்ப்படாது போலும்! இந்நாளில் நூலை வெளியிடல் நேர்ந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள பலதிறப் பைபில் பதிப்புக்கள் என் முயற்சிக்குத் துணைநின்றன. அவற்றில் பெரிதும் கருத்து வேற்றுமைகள் காணப்படவில்லை; சிலசொல் - சொற் றொடர் - வேற்றுமைகள் காணப்பட்டன. அக்காட்சியில் என் நெஞ்சம் சுழலும். அந்நெஞ்சம் கிறிது பெருமான் திருவடியில் படியும்; சுழல் நீங்கும்; பாடல் ஓடும். குணம் கிறிதுவின்பாலது; குற்றம் என்பாலது. கிறிது பெருமான் மொழிகளைத் தழுவியே பாடிச் சென்றேன். (தோற்றுவாய் பார்க்க). மணிமொழியில் சந்தர்ப் பங்களை ஆங்காங்கே குறித்தேனில்லை. சிற்சில இடங்களில் பெருமான் மொழிகளிலேயே சந்தர்ப்பங்கள் விரவுமாறு செய்துள் ளேன். சந்தர்ப்பங்களைக் கருதாது பொருள்மீது கருத்துச் செலுத்தும் படி நேயர்களை வேண்டுகிறேன். நூலிற் சில இடங் களில் ஒருமை பன்மை மயக்கம் உற்றுள்ளது. அது மூலத்தைத் தழுவியதென்க. இந்நூற்கண் திரட்டப்பட்டுள்ள மணிமொழிகள் அப்படியே அடுக்கப்படவில்லை. அவை, கருத்துக்கு இயைந்த முறையில் ஒவ்வொரு தலைப்பின்கீழ் ஒல்லும்வகை ஒழுங்கு செய்யப்பெற்றன. இதனால் சில இடங்களில் தொடர்பின்மை காணப்படும். கிறிதுவைப் பற்றிச் சில கட்டுரைகள் முன்னே வரைந்தேன். அவை, தமிழ்ச் சோலையில் சேர்க்கப்பட்டன. கிறிதுவின் அருள் வேட்டல் என்றொரு நூல் அணித்தே என்னால் யாக்கப் பெற்றது. இப்பொழுது இந்நூற்றொண் டாற்றினேன். மூர்க்கம் பெருகிவரும் இந்நாளில் கிறிதுவின் அருளறம் யாண்டும் பரவுதல் வேண்டு மென்பது எனது உட்கிடக்கை. வேட்கை எழுந்தபோது இந்நூற்றொண்டில் யான் இறங்கி யிருந்தால், நூலின் போக்கும் நடையும் பிறவும் வேறுபட் டிருக்கும். இந் நூற்கண் வழக்கச் சொற்களையும், சம்பிரதாயக் குறியீடுகளையும் அவ்வவ்வாறே பெய்துள்ளேன். எவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் முறையில் நூல் அமைந்துள்ளது. வயது ஏற ஏற நூல் இயற்றுவதில் எளிமையே தோன்று கிறது. ஆனால் அச்சுப்பிழை திருத்துவதில் நிலைமை மாறு கிறது. இதில் இளமையிலெழும் ஊக்கம் முதுமையில் எழுவ தில்லை. மேல்நாடுகளில் அச்சுப்பிழை களைவதில் ஆக்கியோர் பெரிதும் தலைப்படுவதில்லை. அதற்கெனத் தேர்ச்சிபெற்ற தனிக்குழு உண்டு. அவ்வமைப்பு நமது நாட்டிலும் விரைவில் ஏற்படுதல் வேண்டும். எனது உடல்நலன் குலைந்துள்ள இந்நாளில் யான் நூற்றொண்டையும் பகற்காலத்திலேயே செய்து வருகிறேன். பகலில் என்னைக் காணவருஞ் சூழல் அதிகம். இந்நூல் அச்சாகியபோது, என்னைக் காணவந்தவருள் சிலர் அவ்வப் போது அன்புகூர்ந்து அச்சுப்பிழை திருத்துவதில் துணை புரிந்தனர். அவர் அனைவர்க்கும் எனது நன்றி உரியதாக. புறத்தே தடியும் ஈட்டியும் துப்பாக்கியும் ஏந்திய போலி படை சூழ்ந்து நிற்ப, அகத்தே கிறிது பெருமான் மலைக்காட்சி அமுதம் பொங்க, முதுமையில், உடல் மெலிந்து நலிந்துள்ள வேளையில் இந்நூல் என்னால் இயற்றப்பெற்றது. புலவோர் உலகம் பிழை பொறுப்பதாக. சென்னை, 9.6.48 திருவாரூர். வி. கலியாணசுந்தரன் காந்தியடிகட்கு அறத்து நன்மரம் அன்பு நறுமலர் அருளின் செங்கனி ஆகிய காந்தியே பொறுத்து நீழல் புரிந்து பொலிந்தனை புயலுந் தென்றலாப் போந்துமுன் வீசுமே. 1 வழக்கம் போலிறை வாழ்த்துங் குழுவிடை வணங்கு கைம்மலர் வார விழிமலர் செழிக்கும் புன்னகைச் செம்மலர் வாசமே சிந்தி மக்களின் சிந்தை நடந்தனை 2 சாதிப் பேயோர் சமய வெறியனாய்ச் சாய்ந்து கும்பிடு வான்போல் தடுத்துனைப் போதில் சுட்டனன் பொங்கு குருதியில் பூத்த தன்னே புதிய உலகமே. 3 அருமை மெய்யெரிந் தற்றது தீயினால் அசையா மாமலை ஆடித் துடித்தது கருமைக் காடசை வின்றிக் கசிந்தது கனையும் ஆழி கவிதை இழந்தது. 4 கானப் புட்கள் ககனம் எழவிலை கால்வி லங்கு தரைவிட் டெழவில்லை வானப் பேரொளி மங்கி வதைந்தது மக்கள் கூட்டம் மகிழ்விழந் தோய்ந்தது. 5 வீழா நல்லுடல் வீழ்ந்தது மெய்ய! நின் வீர ஆவி விடுதலை பெற்றது தாழா தெங்குத் தழைத்துப் படர்ந்தது சாந்தம் சாந்தம் தனிமை அடைந்தது 6 கொல்லாப் பேரறங் கூறி வளர்ந்தனை குண்டின் ஆட்சி குலைக்க முயன்றனை நல்லார் பொல்லார் நடுநின் றொழுகினை நரனும்! தோன்றினன் நல்லுடல் சாய்க்கவோ 7 உன்னைக் காணவும் உன்பணி செய்யவும் உன்னை நூலில் உணர்ந்தே எழுதவும் சின்ன வன்பெறத் தேவன் அருளினன் செய்யு நன்றி செகத்தினில் உண்டுகொல்! 8 ஏசு நாதன் இசைத்த மலைமொழி ஏனை வாய்மொழி ஏந்தி ஒழுகினை நேச அம்மொழி நேர்ந்தஇந் நூலினை நினைவுக் காக்கினன் நின்னடி வாழ்த்தியே. 9 தோற்றுவாய் அன்பு அன்பே இறைவனும் அன்பேநல் லாவியும் அன்பே மகனுமொன் றன்பு. 1 அன்பே குமரனும் அன்பே அவன்மொழியும் அன்பே அவன்வழியும் ஆறு. 2 அன்பரசு கண்டருள அவ்வுலகம் விட்டிங்கே அன்பு மகன்வந்தான் அன்று. 3 கொலைஅரசு வீழ்க குமரனரு ளன்புக் கலைஅரசு வாழ்க கதி. 4 அரசு ஆதியில் மக்கள் அரசற்ற வாழ்க்கையாம் நீதியில் நின்றார் நிறைந்து. 5 அந்நாளில் மக்கள் அமைதி இயற்கையில் எந்நாளும் நின்றார் இயைந்து 6 பின்னர் அரசாட்சிப் பேய்புகப் பல்பெயரால் இன்னல் விளைந்ததே இங்கு. 7 கோனாட்சி என்றும் குடியாட்சி என்றுங்கொல் ஊனாட்சி ஓங்கியதே ஊறு. 8 கொடுமை எங்கணும் சேவகர் எங்கணும் சேனைகள் எங்கணும் போர்கள் எரி. 9 கொள்ளை கொலைகளெங்கும் கோரங்கள் எங்கெங்கும் கள்ளவினை எங்குங் கரவு. 10 சட்டங்கள் செய்யும் சபைகளே எங்கெங்கும் கட்டுச் சிறைகளெங்குங் காட்டு. 11 பட்டம் பதவிகள் பாவிகட் கெங்கெங்கும் வட்டமிடும் ஆணவ வாழ்வு. 12 வாழ்வுப் பொருள்பெருக வாய்த்ததொழிற் கூடம்,போர்ப் பாழ்கருவி செய்வதென்ன பாடு! 13 சேவகர் இன்றியும் சேனைகள் இன்றியும் ஏவரும் வாழவிலை இன்று. 14 தொல்லை அரசாட்சி தூய இயற்கையைப் புல்ல விடாது புக. 15 தெய்வப் பொதுமை பழைய அரசற்ற பண்புலகம் மீள உழைத்தல் அறிவுடைமை ஒத்து. 16 வழிகண்டார் மார்க்முனிவர் மாண்பொதுமைக் கிந்நாள் பழுதுண் டொருகூற்றில் பார். 17 நல்லதே மார்க்பொதுமை, ஞானப் பரனெறி இல்லை அதன்கண் இலை. 18 ஏசு மொழியில் இறையும் பொதுஅறமும் நேசத்தில் உண்டு நினை. 19 அன்புப் பொதுமை அருளாட்சி ஆகுமே துன்பஅர செற்றுக்குச் சொல். 20 மக்களுள் ஈசன் மருவல் உணர்தலன்பு தொக்க பொதுமைத் தொடர்பு. 21 அன்பால் உயிர்கள் அணைந்திருத்தல் கண்டாலே இன்பாம் பொதுமை எழும். 22. ஏசுதிரு வாய்மொழியில் எல்லாம் பொதுஅன்பு நீச மெலாநீக்கு நீர். 23 தெய்வப் பொதுமை செறியுங் கிறிதுமொழி செய்யும்அர சற்ற செகம். 24 கிறிது மொழியினைக் கிண்டியிரு கூறாப் பொறித்தலிந் நூலின் பொருள். 25 ஒன்று மலைமொழிமற் றொன்று மணிமொழி என்று பிரியுமிந் நூல். 26 அறத்து மொழிகள் அடங்கும்இந் நூற்பேர் கிறிது மொழிக்குறள் கேள். 27 வாழ்த்து மாணாக்கர் சூழ மலையில் இருக்கின்றார் காணாக் கிறிதுபிரான் காண். 28 மலைஆற வைத்த மலரடிகள் நெஞ்சில் சிலைஆக; என்னுள் சிறந்து. 29 கருணையே பேச்சாய்க் கனமழையாய் வெள்ளம் பெருகி வழிகிறது பேறு. 30 ஏசுபிரான் சேவடிகள் என்னெஞ்சில் நிற்க,அவர் வாசகமும் அவ்வாறே வந்து. 31 போற்றி விழிமலர் போற்றிதிரு வாய்மலர் போற்றி அடிமலர்ப் போது. 32 வாழி மலைவாழி வாய்மை மணிவாழி வாழி உலகு மலர்ந்து. 33 வாழி மலைவாய்மை வாழச்செய் மத்தேயு வாழி வழிவழி வாய்ப்பு. 34 வாய்மை எழுதிய மத்தேயு மார்க்குலுக் காய்வில்யோ வான்வாழி கால். 35 மாண்பு மாட்சி மணிவிளக்காய் மாமலையில் ஏசுதரும் காட்சியினைக் காண்பதுவே கண். 36 மலையில் குமரன் மலர்ந்தபெரு வாய்மைக் கலையினைக் கேட்பதுவே காது. 37 வரையேறி ஏசு மழைபொழிந்த வெள்ளம் நிரையேற மூழ்குவதே நெஞ்சு. 38 அண்ணல் குமரன் அழகு மலைப்பொழிவே உண்மை மறையென் றுணர். 39 பாவம் கரைக்கும் பரமன் மலைஅமிழ்தை ஆவிக் குணவென் றறி. 40 மன்னுயிர்கள் மாசழிக்கும் வன்மூர்க்க வேரறுக்கும் பொன்மொழியின் பேச்சே பொருள். 41 தோழர்க்குத் தொண்டுசெயத் தூண்டுமே உள்ளத்தை ஆழி அருட்சொல் அரண். 42 அடக்கம் அப்பன் அருள்மலையை அப்படியே பேர்த்தெடுத்தல் எப்படிஎன் னாலியலும் ஈங்கு. 43 தழுவியே னும்மலையைத் தண்டமிழால் பேர்த்தே உழமுயன்றேன் கிட்டவிலை ஓய்வு. 44 கண்ணனைய நாட்டாட்சி கண்ணற்ற தானமையால் நண்ணியதே ஓய்வு நயந்து. 45 துப்பாக்கிச் சூழலிடைத் தூய மலைக்காட்சி இப்பாவி பெற்றேன் இனிது. 46 குண்டாட்சி போக்கக் குமரன் அருண்மொழித் தொண்டாற்றல் வேண்டுந் தொடர்ந்து. 47 கலகம் குழப்பமின்றிக் காட்டும்அன் பாட்சி இலகு கிறிதுமொழி இங்கு. 48 ஒல்லும் வகைதழுவி ஓதவும் வான்மலையை இல்லை தகுதி எனக்கு. 49 வன்மமுறு நெஞ்சை வழங்கா மலைப்பொருளென் புன்மை கழிக்கும் புகல். 50 மலையில் முகிழ்த்த மலரைப் புனைய அலைநாரைக் கொண்டதென் அன்பு. 51 மலைஅருவி மூழ்க மணிகள் கொழிக்க அலையில் சிலஎடுத்தேன் அங்கு. 52 எடுக்கும் வகைஅறியேன் எப்படியோ சேர்த்தேன் தொடுக்கும் வகையுமிலை தொட்டு. 53 ஐயன் அருள்மொழியை அன்பால் உளறுகின்றேன் வையம் பொறுக்க மறு. 54 அளவில் பொருள்மொழியை அன்பால் குழப்பும் உளறல் பொறுக்க உலகு. 55  1. மலைமொழி (1) மத்தேயு : 5 பேறு ஆவி எளிமை அடைந்தவர் வாழிபரம் மேவரசன் னாருடைமை மேல். 1 துயரால் அழுது துடிப்பவர் வாழி அயராத ஆறுதல் ஆம். 2 பொறுமை உறைவோர் புகழ்வாழி அன்னார் பெறுவர் புவிஉரிமைப் பேறு. 3 தூய்மைக்குச் சூழ்பசி வேட்கையர் வாழிஅவர் வாய்த்தவர் உள்ளநிறை மாண்பு. 4 இரக்க முடையவர் இன்புற வாழி இரக்கம் அடைவர் இனிது. 5 அகத்திலழுக் கில்லா அறவோர்கள் வாழி இகத்திலுங் காண்பர் இறை. 6 நிறைசமா தானம் நிகழ்த்துவோர் வாழி இறைமக்கள் ஆவர் இனிது. 7 நீதிக்குத் துன்பில் நெருக்குண்போர் வாழிபரஞ் சோதி அரசவர் சொத்து. 8 என்பொருட்டுப் பொய்நிந்தை ஏசல் பழிசுமத்தித் துன்புறுத்த, வாழ்வடைந்தீர் சூழ்ந்து. 9 அப்போ தகமகிழ்ந்தே ஆர்ப்பரிமின் ஏராள வைப்பேறி மல்கிடும் வான். 10 போதகர் உங்கட்கு முன்னர் உதித்த குருமாரைப் பங்கப் படுத்தியதிப் பார். 11 உலகினுக் குப்பாய் ஒளிர்கின் றீர்உப்பின் இலகுசுவை ஓடின் இழிவு. 12 கெட்ட சுவைமீண்டுங் கிட்டுமோ? வீதியில் கொட்ட, மிதியுண்ணுங் கோது. 13 உலகுக் கொளியாய் ஒளிர்கின்றீர்; ஓரூர் மலைஇலங்கின் ஏது மறைவு? 14 மரக்காலால் மூடார் மணிவிளக்கைத் தண்டில் இருத்த ஒளிபொங்கும் இல். 15 மன்பதைமுன் கால்கஒளி; மற்றுங்கள் நற்செயல்கண் டன்பப்பன் மாண்புணர ஆங்கு. 16 விதியும் நீதியும் முன்னை மொழிவிதிகள் மோதயான் வந்தேனென் றுன்னற்க உன்னற்க உற்று. 17 போக்க வரவில்லை போந்தேன் நிறைவேற்ற ஏக்கமுற வேண்டா இனி. 18 அறுதி யிடுகின்றேன் அன்றை விதிகள் உறுதிநிறை வேறும் உயர்ந்து. 19 நிறைவேறும் எல்லாம் நிலன்வான் படுமுன் உறையாவே புள்ளிஎழுத் தொன்று. 20 தெய்வவிதி யொன்றைச் சிறிதொன்றில் ஆனாலும் வையத்தில் மீறல் வதை. 21 ஏவனே மீறின் இயம்பின் இறையரசில் ஆவன் சிறியனாய் ஆழ்ந்து. 22 விதியினில் நிற்போன் விளம்புவோன் விண்ணில் அதிக பெரியன் அவன். 23 பகர்கின்றேன் கேளும் பரிசேயர் வேதர் செகநீதி மோலொழுகல் சீர். 24 அன்னவர் நீதி அளவின் மேல் நும்நீதி சென்றிலதேல் தேவரசு சேய்த்து. 25 கொல்லாமை கொல்லாதீர் ஒன்றனைக் கொல்லின் செலுந்தீர்ப்புத் தொல்லோர்சொல் கேட்டிருப்பீர் சூழ்ந்து. 26 சொல்கின்றேன் உங்கட்குச் சூழ்வன, சோதரனை அல்லற் படுத்தின் அடைந்து. 27 சீர்த்துறுத்தல் வீணனெனல் பேதையெனல் சோதரனைத் தீர்ப்பு,மன்றம், தீநரகுச்சேர்வு. 28 காணிக்கை ஏந்திக் கடவுள் திருக்கோயில் பேணினுளச் செம்மை பெறு. 29 உடன்பிறந்தான் வேற்றுமை உள்ளத் தெழுந்தால் உடன்பலி பீடம் ஒதுங்கு. 30 காணிக்கை அங்கருகே காண்பீடம் வைத்தகன்று நாணமறச் சோதரனை நண்ணு. 31 ஒப்புரவில் உள்ளளவி ஓங்குபெருங் காணிக்கை அப்பனிடம் போந்தே அளி. 32 எதிரி வழியில் எதிரி வயப்படச்செய் நல்ல மொழியில் மனம்பொருந்து முன்பு. 33 இலையேல் ஒருவேளை ஈர்த்துன்னை நீதிக் கலைஞன்முன் சேர்ப்பன் கடிந்து. 34 நீதியனென் செய்வன் நிறுத்திடுவன் சேவகன்முன் பேதி சிறையடைவாய் பின். 35 கடைசியாங் காசு கழலுமட்டும் வாராய் நடைவெளியே என்கின்றேன் நாடு. 36 கற்பு அயலவனைச் சேராதே என்பதந்நாள் ஆணை செயலெது செப்புகின்றேன் தேறு. 37 ஒருத்தியை இச்சையுற ஊன்றியே பார்த்தால் கருத்தினில் கற்பழிவு காண். 38 வலதுகண் பாவம் வழங்க முயன்றால் கலதி பிடுங்கிஎறி காப்பு. 39 வலதுகை பாவம் வளர்க்க எழுந்தால் புலையென வெட்டிஅதைப் போடு. 40 முழுஉடலம் வெந்நரகில் மூழ்குவதைப் பார்க்கின் பழுதுபடல் ஓருறுப்புப் பாங்கு. 41 தள்ளுதற் சீட்டின்றித் தள்ளல் மனைவியைக் கொள்வதன் றென்னுமுது கோள். 42 சொல்கின்றேன் கேளுங்கள் சூதற்ற இல்லாளைத் தொல்லையெனத் தள்ளிவிடல் சூள். 43 காதலியைத் தள்ளுதல் கற்பழிக்க விற்றலே ஆதலன்றி வேறென்ன ஆம். 44 விலக்கிய மாதரை வேறொருவன் கொண்டால் கலக்கினவன் ஆவனே கற்பு. 45 ஆணை பொய்யாணை நீக்கிப் புகலுங்கள் ஆணையை மெய்யீசன் முன்னென்றார் முன்பு. 46 எண்ணி உரைக்கின்றேன் எப்படியுஞ் சத்தியத்தைப் பண்ணற்க பண்ணற்க பாழ். 47 விண்ணின் பெயரால் விளம்பற்க ஆணையை அண்ணலரி யாசனமாம் அஃது. 48 மண்ணின் பெயரால் வழங்கற்க ஆணையை அண்ணலின் பாதபடி அஃது. 49 கன்னல் எருசலமேல் கட்டற்க ஆணையை மன்னன் நகரமது மாண்பு. 50 தலைமீதும் வேண்டா; தனிமயிரைக் கார்மை அலதுவெண்மை ஆக்கலெளி தன்று. 51 உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் விள்க,விஞ்சின் தீமை விளைவு. 52 பொறுமை பல்லுக்குப் பல்லென்றும் கண்ணுக்குக் கண்ணென்றும் சொல்வதைக் கேட்டிருப்பீர் தும்பு. 53 தீமைக் கெதிர்ப்பளித்தல் தீயதே என்பன்யான் தீமைக்குத் தீமையே தீது. 54 ஒருவனொரு கன்னத்தில் ஓங்கி அறைந்தால் மறுகன்னங் காட்டி மகிழ். 55 ஒருவனொரு போர்வைக் குழன்று வழக்கிட்டால் தருகஅதை அங்கியுடன் தாழ்ந்து. 56 ஒருவனொரு கல்தொடர உன்னையே உந்தின் இருகல் அவனுடன் ஏகு. 57 கேட்போர்க்குத் தந்துதவு, கிட்டின் கடனுக்கு வாட்பார்வை யின்றி வழங்கு. 58 அன்பு நேசி அயலவனை நேர்ந்த பகைவனைக் கூசிவெறு என்பதுமுன் கூற்று. 59 என்மொழியைக் கேளுங்கள் எங்கு முளஇறைவன் அன்பென் றறிகவே ஆய்ந்து. 60 மாற்றாரை நேசியுங்கள் வாழ்த்துங்கள் சூளரைப் போற்றார்க்கும் ஆற்றுங்கள் போற்று. 61 மிக்க அபாண்டம் விளம்பி வதைப்போர்க்கும் தக்கசெபஞ் செய்யுங்கள் சார்ந்து. 62 அப்பொழுதே மேலுலக அப்பனுக் குண்மைச்சேய் இப்புவியில் ஆவிர் இயைந்து. 63 நல்லார்க்கும் பொல்லார்க்கும் ஞாயி றெழஇறைவன் எல்லார்க்குஞ் செய்கின்றான் இன்பு. 64 நடுநிலையர் மற்றவர் நன்றுபெற மாரி விடுகின்றான் தேவன் விழைந்து. 65 நேயரையே நேசித்தால் நேர்பயன் என்னையோ ஆயரும் செய்வ தது. 66 உடன்பிறப்பை மட்டும் உளம்வழுத்தின் என்னாம் அடல்பெருக்கும் ஆயர்கோள் அஃது. 67 அப்பன் முழுஅன்பே அவ்வன்பே போலுமதும் ஒப்பில தாதல் ஒழுங்கு 68 (2) மத்தேயு : 6 ஈகை மக்கள்கண் காண வழிபாட்டைப் பேர்நாடி மிக்கசெயல் தீததுவே வீண். 69 மக்கள் விழிகாண வண்மையைப் பேர்நாடி மிக்கசெயல் தீததுவே வீண். 70 தீதென்னை? வானப்பன் செய்பரிசில் சேராமல் சேதித் திழக்குஞ் செயல். 71 கோயில் தெருவில் கொடையைப் பிறர்மதிக்க மாயர்முன் தாரை மயக்கு. 72 அன்னவகை ஈகையை ஆற்றற்க, அவ்வீகை சின்னஞ் சிறுமாயர் சிம்பு. 73 அன்னவர் எப்பரிசில் அம்மம்ம பெற்றனரே என்றுண்மை சொல்கின்றேன் இன்று. 74 வலக்கை வழங்கல், வயங்குமிடக் கைக்குப் புலப்படா வாறு புரி. 75 புறமறியா ஈகைப் புனிதமுணர் அப்பன் உறவுப் பரிசளிப்பன் உற்று. 76 ஜெபம் மாயர் செபத்தை மனங்கொள்ளல் வேண்டாவே தீய நடிப்பேன் திருட்டு. 77 கோயில் தெருச்சந்தி கூடுநர் காணவே மாயர் செபநிகழும் மாசு. 78 அன்னார் செபப்பரிசில் அந்தோ அடைந்துவிட்டார் என்றே உரைக்கின்றேன் இங்கு. 79 தனித்த அறைபுகுந்து தாளிட் டமர்ந்து கனிந்து செபஞ்செய் கசிந்து. 80 அப்பனை எண்ணி அகத்தில் செபஞ்செய்யின் ஒப்பிலருள் கூர்வன் உவந்து. 81 உள்ளே நிகழ்செபத்தின் உண்மையை வானப்பன் தெள்ளத் தெளிந்தருள்வன் தேர்ந்து. 82 உரத்தகுரல் சொல்லடுக்கல் ஊன்றுசெப மாகா பரத்தினுளங் காணார் பகட்டு. 83 உரத்தகுரல் சொல்லடுக்கல் ஓங்கிவான் தாளைத் திறக்கு மெனநினைத்தல் தீது. 84 தேவை இதுவென்று செம்மொழியால் வேண்டுமுனம் தேவன் உணர்ந்துள்ளான் தேர். 85 பகைஇகலை மாற்றும் பரமன் செபத்தை அகமடங்கச் செய்கஇவ் வாறு. 86 மேலுலகில் வீற்றருளும் மெய்யப்பா உன்நாமம் சாலவே சார்க ஒளி. 87 வருக உனதாட்சி வானிலுன் உள்ளம் அருளல்போ லிங்கும் அருள். 88 எங்கட்குத் தேவையாம் இன்றை உணவினை இங்கே அளிக்க இனிது. 89 மற்றவர் மீச்செயல்யாம் மன்னிப் பதுபோல உற்றதெம்பால் மன்னிக்க ஓர்ந்து. 90 சோதனைக்குட் பண்ணாமல் சூழ்தீமை வாயினின்றும் பாதுகாப் பீக, பரிந்து. 91 மன்னரசு ஆற்றல் மகிமை இவையெலாம் என்றும் உனதேஆ மென். 92 மன்னிப்பு மன்னித்தால் நீவிர் பிறர்குற்றம், வானப்பன் மன்னிப்பன் நுங்குற்றம் மாய்த்து. 93 மன்னிப்பு நும்பால் மருவாதேல் வானப்பன் மன்னியான் நுங்குற்ற மாசு. 94 நோன்பு வாடுமுகங் காட்டுகின்றார் மாயர் வலிந்துமிகப் பீடுநோன் பென்னப் பிறர். 95 அன்னவர் நாடகம் அப்பன் உணரானோ முன்னரே மூண்டது மொய். 96 நெய்யைத் தலைக்கிடுக நீரால் முகம்நனைக்க வையம்நோன் பென்றுணரா வாறு. 97 உள்ளில் உணர்ந்துநின்றே உள்ளமுணர் உன்னப்பன் வள்ளல் பரிசளிப்பன் வான். 98 வைப்பு இங்கு நிதிவைப்பை ஈட்டற்க பூச்சிதுரு சுங்கத் திருடுசெயும் துன்பு. 99 வானத்தில் வைப்பை வளர்க்கஅவண் பூச்சிதுரு ஈனத் திருடும் இரா. 100 எவ்விடத்தில் வைப்புண்டோ அவ்விடத்தில் சித்தமெலாம் வவ்வல் இயற்கை வழக்கு. 101 ஒளி உடல்விளக்குக் கண்ணே உயர்கண் தெளிவால் உடல்முழுதும் காலும் ஒளி. 102 ஊறுகண் ணாயின் உடலிருளே, உள்ளொளி பாறின் இருள்பெருகும் பாய்ந்து. 103 பணி ஒருவன் இருவர்க் கொருபொழுதே ஏவல் மருவிப் புரிதல் மருள். 104 அன்பொருபால் காய்வொருபால் அல்லதொரு பால்சேவை துன்னு மொருபால் துவள். 105 பரத்துக்கோ பேய்க்கோ பணிசெய் இரண்டைப் பொருத்திப் பணிசெய்தல் போர். 106 உறுதி என்னத்தை உண்பேம் எதனைக் குடிப்பமே என்றுயிருக் கேன்கவலை ஏற்பு. 107 என்ன உடுப்பேம் எனஉடலை எண்ணியே துன்னலென் ஏக்கம் தொடர்ந்து. 108 உணவின் உயிரும் உடையின் உடலும் மணமுடைய அல்லவோ மற்று? 109 வானத்தை நோக்கி வளர்சிறகை ஆர்த்தெழும்பும் கானப்புள் காண்மின் கரி. 110 அவைகள் விதைத்தல் அறுத்தல் நிரப்பல் எவைகளையுஞ் செய்வதிலை ஏன்? 111 m›îÆU« c©z mUŸ»‹wh‹ thd¥g‹ m›îÆÇš Ú® ïÊnth?அன்று. 112 அயர்கவலை ஏனோதன் ஆயுள் அளவில் உயர்வுமுழங் கூட்டுவோன்எங் குண்டு. 113 உடைக்கேன் கவல்கின்றீர் உற்றுழைப்போ நூற்போ எடுப்பதிலை காட்டுமலர் ஏன்? 114 ஒப்பிலாச் சாலமனும் ஒள்ளாடை பூண்டதிலை இப்புவிப்பூ ஒன்றனைப்போல் ஈண்டு. 115 இன்றிருந்து நாளை அடுப்பில் எறிபட்டுப் பொன்றும்புற் கீசனுடைப் போர்ப்பு! 116 புல்லுக் கருளும் புனிதன் உமக்கருள வல்லன்; உறுதிபெறல் மாண்பு. 117 அற்றவரே! நம்பிக்கை ஆழ்வீர் கவலையில் நிற்க உறுதி நெறி. 118 என்உண்பேம் என்குடிப்பேம் என்உடுப்பேம் என்றென்று கன்றிக் கவலல் கரிசு. 119 ஐயத்தால் அல்லலுறும் அஞ்ஞானப் பிண்டங்கள் ஐயனுளன் தேவைக்கேன் அச்சு. 120 அப்பன் அரசறத்தில் ஆர்வ முறும்முதலில் இப்புவியில் எல்லாமாம் இன்பு. 121 நாளைக் கெனக்கவலை நண்ணாதீர் நாளைக்கு நாளை கவலையுறும் நாள். 122 இன்றைக்கோ இன்றைக் கெழும்பாடு போதுமே என்றைக்கும் அப்பனுளன் ஏத்து. 123 (3) மத்தேயு : 7 தீர்ப்பு குற்றநும் மீது குறுக்கிடு மாறுநீர் மற்றவர்க்குத் தீர்ப்பளித்தல் மாறு. 124 மற்றவர்க்கு நீர்வழங்கும் தீர்ப்பின் வழிப்படியே பெற்றிடுவீர் தீர்ப்பினைப் பின்பு. 125 மற்றவர்க்கு நீரளத்தல் எவ்வளவோ அவ்வளவே உற்றிடும் நுந்தமக் கூர்ந்து. 126 பிறர் குற்றம் கண்தூல உத்திரம் காணாதுன் சோதரன்கண் நுண்தூசு காண்பதென்ன நோன்பு? 127 கண்ணிருப்ப உத்திரம், சோதரஉன் கண்தூசை மண்ணவிடு என்னலென் மாண்பு? 128 மாயனே! முன்புன்கண் உத்திரத்தை மாற்றமுயல் தூயஒளி கூடுந் துணை. 129 அவ்வொளியுன் சோதரன்கண் ஆர்த்தசிறு தூசகற்றச் செவ்வையில் காட்டுந் தெளிவு. 130 தகுதி சொரியாதே நாய்கள்முன் தூயதை, முத்தை எறியாதே பன்றிகள்முன் ஏன்று. 131 கல்லா விலங்குகள் கால்களால் தேய்த்தவற்றை நில்லா துமைப்பீறும் நீண்டு. 132 அப்பன் அருள் கேளும் கொடைவரும் தேடுமே கண்டடைவீர் தாளகலும் தட்டுமே சார்ந்து. 133 கேட்பவர் பெற்றிடுவர் தேடுவோர் கண்டடைவர் பூட்டகலும் தட்டும் புலர்ந்து. 134 அப்பங்கேள் சேய்க்குக்கல் மீனுக் கரவளிக்க ஒப்புவரோ நும்மிலொரு வர். 135 நஞ்சனும் பிள்ளைக்கு நல்லன நல்கவே நெஞ்சில் நினைப்பன் நெறி. 136 அப்பனோ அன்பு,நலம் ஆக்கவே ஆர்த்தருள்வன் இப்புவியில் வேண்டுநருக் கென்று. 137 தன்னுயிர்போல் பிறருமக் கென்செய்யப் பேணுகின் றீரோ உறஅவர் செய்கஅதை உற்று. 138 இதுவே விதிஆணை ஈதேமுன் வந்தோர் சிதைவில் மொழியாந் திறம். 139 வழி வழிதெளிமின் செல்லுதற்கு வாயில் இடுக்கம் வழிஅந்த வாயில் வழி. 140 உண்டகல வாயிலும் உண்டு வழிவிரிவு உண்டழிவு பல்லோர்போக் குண்டு. 141 சீவனுக்கு வாயில் சிறிதுவழி யேஇடுக்கம் சீவருள் காண்பர் சிலர். 142 கள்ள குரு கள்ளகுரு மார்வேடம் கண்டு மயங்காதீர் கள்ளத்துக் கெச்சரிக்கை! காப்பு. 143 ஆட்டுத்தோல் போர்த்தணைவர் அந்தோ அவர்நெஞ்சம் வாட்டியுணும் ஓநாய்கள் வாய். 144 அன்னார் அளிகனியால் அன்னார் நிலைமையை நன்றறிய லாகும் நயந்து. 145 முட்செடியில் தீராட்சை முள்ளியில் அத்திகொய்ய உட்கொள்ளல் கூடுமோ ஊர்ந்து. 146 நல்லமரம் கெட்டமரம் நல்லகனி கெட்டகனி நல்கல் இயற்கை நடை. 147 நல்லமரம் கெட்டகனி, நல்லகனி கெட்டமரம் நல்கல் அருமை நடப்பு. 148 நல்லகனி ஈனா நலிந்தமரம் வெட்டுண்டும் ஒல்கிஎரி யுண்டும் உகும். 149 அவ்வவர் ஈன்கனியால் அவ்வவர் பண்புகளைச் செவ்வன் உணரலாம் தேர்ந்து. 150 ஆண்டவன் சித்தம் ஆண்டவ ஆண்டவஎன் றென்னை அடைவதால் வேண்டி வளையுமோ விண். 151 வானப்பன் சித்த வழிப்படியே வாழ்வோனை வானம் அடையும் வலிந்து. 152 அந்நாளில் ஆண்டவ ஆண்டவ என்றென்னைச் செந்நா முழங்கினுமென் சீர். 153 உன்பெயரால் முன்மொழிந்தோம் ஒட்டினோம் பேய்களை அற்புதஞ்செய் தோமென்பர் ஆர்த்து. 154 அறிவேனே உம்மை அகலுங்கள் மாறு பொறியீரே என்பேன்அப் போது. 155 இம்மொழியை யான்மொழிந்தேன் எண்ணிவழிநடப்போன் செம்மையைச் சொல்கின்றேன் தேர்ந்து. 156 இன்னவன் பாறைமேல் இல்லம் எழுப்பிய மின்னறிஞன் போன்றானே வெற்பு. 157 விண்மழை பெய்தது வெள்ளம் புரண்டது மண்புயல் வீசிற்று வாய்ந்து. 158 இல்லம் விழவில்லை ஏனதன் காலின்கோள் வல்லது பாறை யடி. 159 என்மொழியைச் செய்கையில் ஏலாதான் இல்லமணல் மின்னெடுத்தான் போன்றான் மெலிந்து. 160 மாமழையும் வெள்ளமும் மாருதமும் வீழ்த்தின நாமஇலம், ஏன்? மணற்கால் நாற்று. 161 2. மணிமொழி கடவுள் கடவுள் அறிவு கருதித் தொழுக இடமில் ஒருபொருள் என்று. 1 கடவுள் அரசுலகம் கண்காண வாரா இடமங்கிங் கென்னலும் இல். 2 கடவுள் அரசுலகம் கால்கொண் டிருக்கும் இடம்உம துள்ளம் இனிது. 3 கடவுள்மெய் அன்பு, கசிவால் - உயிரில் திடமன்பு கூர்வால் - தெளி. 4 உலகிலோர் அப்பன் உமக்கில்லை இல்லை அலகில்வான் அப்பனேஅப் பன். 5 சோதனை செய்யாதே தூயனை அப்பனையென் றாதி யெழுத்துண் டறி. 6 அப்பாற்போ சாத்தானே! அப்பன் ஒருவனையே தப்பாமற் போற்றுமுன் சாற்று. 7 ஆக்கையைக் கொல்வோருக் கஞ்சற்க; ஆன்மாவைப் போக்கஅவர்க் குண்டோ புலம். 8 ஆக்கையை ஆன்மாவை ஆழ்நரகில் வீழாமே காக்கவல் லாற்கஞ்சும் காப்பு. 9 காசொன் றிருகுருவி கையேறும் ஒன்றாதல் ஈசனருள் இன்றிவிழல் இல். 10 உங்கள் தலைமயிர் ஒவ்வொன்றும் எண்ணிக்கை தங்கி யுளது தக. 11 பற்பல் குருவியினும் பன்மடங்கு மேற்பட்டீர் எற்றுக்கோ அஞ்சுகின்றீர் ஈண்டு. 12 மக்களால் ஆகாத மாண்பெல்லாம் அப்பனால் சிக்கின்றி ஆகும் சிறந்து. 13 கடவுள் மரித்தோர் கடவுளல சீவன் உடையோர் கடவுளென் றோர். 14 மன்ன னுடையதை மன்னற்கும் மற்றப்பன் தன்னதை அன்னவற்குந் தா. 15 தவஞ்செய், மனந்திரும்பு, தற்பரன் ஆட்சி அவனி அணித்தே அறி. 16 உன்னுடைமை எல்லாம், ஒருவனே! என்னுடைமை, என்னுடைமை உன்னுடைமை ஆம். 17 என்னைச் சிலுவையில் ஏற்றி அறைகின்றார் வன்மைக் கொலையாணி வைத்து. 18 என்னநாம் செய்கின்றோம் என்ப தறியாரே மன்னிக்க அப்பனே மாசு. 19 என்னப்பா என்னப்பா என்னைஏன் கைவிட்டாய் உன்கையில் வைத்தேன் உயிர் 20 குமரன் அப்பனும் யானுமொன்றே அத்துவித மாயுள்ளேம் எப்பொழுதும் வேறா யிலை. 21 அப்பனுள் யானுளேன் அப்படியே என்னுளப்பன் ஒப்பஎனை நம்புங்கள் ஓர்ந்து. 22 அப்பன்எனக் கென்றே அகிலமும் ஒப்புவித்தான் அப்பனும் யானும்அறி வம். 23 வானில் நிலனில் வளரதி காரமெலாம் தானம்எனக் கப்பன் தயை. 24 அய்யன் அனுப்பினன் யானே வரவில்லை மெய்யிது மெய்யிது மெய். 25 அப்பன் அனுப்பினன் அன்பால் ஒருமகனை இப்புவி உய்ந்திடற் கென்று. 26 அப்பன் தனதன்பை அம்புவிக்குக் காட்டினான் எப்படி? மைந்தனை ஈந்து. 27 அப்பன் மகனை அனுப்பினன் இவ்வுலகை ஒப்புர வாக்க உவந்து. 28 வந்த தொளியே வழிநின் றொழுகுங்கள் பந்தஇருள் நீங்கிப் படும். 29 என்னை அனுப்பினவன் என்னோ டிருக்கின்றான் என்னைத் தனிவிடுத்தல் என்று? 30 அப்பனை அன்றி அறிவார் உளரேயோ ஒப்புடைய தன்குமரன் உள். 31 அப்பனைச் சேயன், அவற்கொண்டோர் அல்லாமல் எப்புடையுங் காண்போர் எவர்? 32 அகநடுக்கங் கொள்ளாதீர் ஆண்டவனை நம்பும் தகஎனையும் நம்புமே சார்ந்து. 33 உயிர்த்தெழலும் சீவனும் உற்றவன் யானே அயர்ச்சிஏன் வேண்டா அறி. 34 ஆண்டவன் என்றே அழைக்கின்றீர் என்னையான் வேண்டுவ செய்கநீர் வேட்டு. 35 என்னில் உறுதிவைத்தல் என்னை அனுப்பிய என்னப்பன் பால்வைத்த லாம். 36 குமரன்பால் அன்பு குலவுவோர் என்றும் அமர நிலைபெறுவர் அங்கு. 37 ஈசன்சேய் நீயானால் இக்கல்செய் அப்பமென நீசப்பேய் சொற்றனை நீ. 38 அப்பத்தால் மட்டும் அவனி பிழைப்பதிலை செப்புகின்றேன் மேலுளதைத் தேர். 39 அப்பனுரை ஒவ்வொன்றும் அப்பத்தின் மேம்பட்ட தொப்பில தென்றார்முன் னோர். 40 மக்கள்முன் என்னை மகிழ்ந்தறிக்கை செய்வோனை மிக்க னெனவிள்வேன் விண். 41 மக்கள்முன் என்னை மகிழ்ந்தறிக்கை செய்யானை மிக்க னெனவிள்ளேன் விண். 42 மக்கள்முன் என்னை மறுப்போர்க் கெதிர்ப்புக்கள் மிக்கதிரும் தூதர்முன் மேல். 43 நரிபறவை நண்ணும் வளைகூட்டில், சாய்க்கச் சிரமனிதச் சேய்க்கில்லை சேர்ப்பு. 44 கள்ளக் கிறிதுக்கள் காட்சி அளிப்பார்கள் எள்ளளவும் நம்பற்க இங்கு. 45 எருசலேம் போகின்றோம் எங்கும் குழப்பம் குரவரால் வந்திடுங் கூர்த்து. 46 குமரனை ஒப்புவிப்பர் கொல்வோ ரிடத்தில் சமரென் றலைப்பர் சரிந்து. 47 ஏசுவர் துப்புவர் எள்ளுவர் வாரினால் வீசுவர் கொல்வர் வெகுண்டு. 48 மூன்றுநாள் செல்லும் முழங்கி உயிர்த்தெழுவேன் சான்று நிறைவேறும் சார்ந்து 49 எருசலெம் பெண்மணிகாள்! என்பொருட்டு நீங்கள் உருகிஅழல் வேண்டா உறைந்து. 50 உங்களைப் பற்றியும் உம்மக்கள் பற்றியும் பொங்கி அழுங்கள் புலர்ந்து. 51 என்னர சிவ்வுலகிற் கேற்றதன் றேற்றதேல் சின்னவர்பாற் சிக்கேன் சிறை. 52 என்னாட்கள் போர்புரிந் தென்னையும் மீட்டிருப்பர் என்னாட்சி இங்கேற்ப தேல். 53 அப்பாலே எல்லாமும் ஆகுமுன் உன்னருளால் இப்பாத் திரமெடுக்க இன்று. 54 v‹á¤j« x‹WÄiy