திரு.வி.க. தமிழ்க்கொடை 8 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 8 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+264=272 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 135/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்) 2 12. அமர் நீதி நாயனார் கலித்துறை 502. சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டுக் காரின் மேவிய களி அளி மலர்ப்பொழில் சூழ்ந்து தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை. செம்பியர் - சோழ மன்னர்; சிபி மரபிற்றோன்றியவர். பொன்னி நன்னாட்டு - காவிரி நாட்டிலே. காரின் மேவிய - மேகமண்டலத்தை அளாவிய. களி அளி - தேனுண்டு களிக்கும் வண்டுகள் பொருந்திய. பாரில் - உலகில். 1. 503. மன்னும் அப்பதி வணிகர்தம் குலத்தினில் வந்தார்; பொன்னும் முத்தும் நன் மணிகளும் பூந்துகில் முதலா எந்நி லத்தினும் உள்ளன வருவளத்து இயல்பால் அந்நி லைக்கண்மிக் கவர்அமர் நீதியார் என்பார். பூந்துகில் - அழகிய பட்டுவர்க்கங்கள். அந்நிலைக்கண் - அவ் வாணிபத் தன்மையில்; அவ்விடத்தில் எனினுமாம். 2. 504. சிந்தை செய்வது சிவன் கழல் அல்லதுஒன்று இல்லார்; அந்தி வண்ணர்தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக் கந்தை, கீளுடை, கோவணம் கருத்துஅறிந்து உதவி வந்த, செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள்வார். அந்தி வண்ணர் தம் - அந்திவான் நிறமுடைய சிவபெருமானின். கிளை - அரைஞாணுக்குப் பதிலாக அணிவது. செல்வ வளத்தின் பயன் - அடியவர்க்கு அமுது செய்வித்தல் முதலியன. 3. 505. முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் மிக்க சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித் தக்க அன்பர்கள் அமுதுசெய் திருமடம் சமைத்தார்; தொக்க சுற்றமும் தாமும்வந்து அணைந்தனர் - தூயோர். நக்கராம் முதல்வனாரவர் - நிருவாணியாகிய சிவபெருமானது. சமைத்து. தொக்க - நெருங்கிய. தூயோர் - அமர்நீதி நாயனார். 4. 506. மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர்த் திருவிழா அணி சேவித்துத் திருமடத்து அடியார் பெருகும் இன்பமோடு அமுதுசெய் திடஅருள் பேணி உருகு சிந்தையின் மகிழ்ந்துஉறை நாளிடை ஒருநாள். மருவும் - கலந்த. மணிகண்டர் - நீலகண்டராகிய சிவ பெருமான். அணி - அழகை; சிறப்பை. வணங்கிய அடியவரின் அருளைப் பேணி. உறை நாளிடை - வாழும் நாளில். 5. 507. பிறைத் தளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க் கறைக் களத்து இறை கோவணப் பெருமைமுன் காட்டி, நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடுஅருள் கொடுப்பான் மறைக் குலத்துஒரு பிரமசா ரியின் வடிவு ஆகி. பெருந்திரு நல்லூர் பிறை. . . . . .இறை. தளிர்போன்ற சடை. கறைக்களத்திடை திருநீலகண்டத்தையுடைய சிவபெருமான். தன் கோவணப் பெருமையை முன் காட்டி; அமர்நீதி நாயனார் அடியவர் களுக்கு அளிக்கும் கோவணப் பெருமையை முன்காட்டி எனினு மாம். நிறைந்த அன்புடைய அமர்நீதி நாயனார்க்கு. 6. 508. செய்ய புன்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும் சைவ வெண்திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும் மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கு மான்தோலும் கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும். சிவந்த மிருதுவாகிய சடையை மறைத்த திருமுடி மீது குடுமியும். முண்டகம் - நெற்றியில். பிரமசாரிகள் பூணூலில் மான் தோலை ஓரங்குல அளவில் புனைந்து கொள்வது வழக்கம். பவித் திரத்தின் மரகத (பசுமையின்) ஒளியும். 7. 509. முஞ்சி நாண் உற முடிந்தது சாத்திய அரையில் தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் அசைவும் வஞ்ச வல்வினைக் கறுப்பு அறம் மனத்து அடியார்கள் நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள் நிலம் பொலிய. முஞ்சி என்னும் தருப்பைப் புல்லைக் கயிறாக முறுக்கி அதனை அணிந்த அரையிலே, எவர்க்கும் பற்றுக்கோடாகும் பெரிய வேதமாகிய கோவணத்தின் அசைவும். கறுப்பு - களங்கம். 8. 510. கண்ட வர்க்குஉறு காதலின் மனம் கரைந்து உருகத் தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளிப்படுப்பாராய்த் தண்டின் மீதுஇரு கோவணம் நீற்றுப்பை தருப்பை கொண்டு வந்துஅமர் நீதியார் திருமடம் குறுக. தம்மைக் கண்டவர்க்கு மிக்க காதலால். தொண்டர் - அமர்நீதி நாயனார். 9. 511. வடிவு காண்டலும் மனத்திலும் மிகமுகம் மலர்ந்து கடிது வந்துஎதிர் வணங்கி, இம் மடத்தினில் காணும் படி இலாதநீர் அணையமுன் பயில் தவம் என்னோ? அடியனேன் செய்தது? என்றனர் - அமர் நீதி அன்பர். காணும்படி இலாதநீர் - இதுகாறும் காணும்படி வாராத நீர். இது காறும் வந்த அடியவர் தோற்றத்தினும் இவ்வடியவர் தோற்றம் மனங் கவர்ந்தமையான் காணும்படி இலாத நீர் என்றார். பயில் - பயின்ற; செறிந்த; நிறைந்த. 10. 512. பேணும் அன்பரை நோக்கி, நீர் பெருகிய அடியார்க்கு ஊணும் மேன்மையில் ஊட்டி, நல் கந்தை, கீள் உடைகள், யாணர் வெண் கிழிக் கோவணம், ஈவது கேட்டுக் காண வந்தனம் என்றனர் - கண்நுதல் கரந்தோன். பேணும் - வழிபடும். அமரர்ப் பேணியும் பட்டினப்பாலை: 200. யாணர் - புதிய நெற்றிக்கண்ணை மறைத்து வந்த சிவபெருமான். 11. 513. என்று தம்பிரான் அருள் செய் இத் திரு மடத்தே நன்று நான் மறைப் பெருந்தவர் அமுது செய்தருளத் துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் இன்று நீரும் இங்கு அமுதுசெய் தருளும் என்று இறைஞ்ச. துன்று - நெருங்கிய. 12. 514. வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான்வர மழை வரினும் உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒருவெண் குணம்கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துஅது கொடுப்பார். அணங்கு - அழகிய; தெய்வத் தன்மையுடைய; பாவையாகிய. பொன்னி - காவிரி. உணங்கு கோவணம் - உலர்ந்த இக்கோவணத்தை. குணம் - நிறம். கோவணம் ஈண்டுத் திருவருளைக் குறிப்பது. அதற்கேற்ப வெண்குணம் என்றார். வெண்குணம் தூய்மையை உணர்த்துவது. 13. 515. ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே ஈங்கு நான்சொல வேண்டுவது இல்லை; நீர் இதனை வாங்கி நான் வரும் அளவும் உம் மிடத்து இகழாதே ஆங்கு வைத்துநீர் தாரும் என்று அவர்கையில் கொடுத்தார். கோவணந்தானே என்று இகழாது. 14. 516. கொடுத்த கோவணம் கைக்கொண்டு கோதுஇலா அன்பர் கடுப்பில் இங்கு எழுந் தருளும் நீர் குளித்து எனக் கங்கை மடுத்த தும்பிய வளர்சடை மறைத்தஅம் மறையோர், அடுத்த தெண் திரைப் பொன்னி நீர் ஆடஎன்று அகன்றார். கடுப்பில் - விரைவில்.கங்கையாகிய மடு - பழைய குறிப்புரை. மடுத்த (பாய்ந்து) என்னும் வினை எச்ச ஈறு விகாரத்தால் தொக்கது - ஆறுமுகத் தம்பிரானார். அடுத்த - அருகேயுள்ள. தெண்திரை - தெள்ளிய அலைகளையுடைய. 15. 517. தந்த கோவணம் வாங்கிய தனிப்பெரும் தொண்டர் முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்பு தாம் கொடுக்கும் கந்தை, கீளாடை, கோவணம் அன்றி, ஓர் காப்புச் சிந்தை செய்து, வேறு இடத்துஒரு சேமத்து வைத்தார். காப்பு - காவலான இடத்தை. சேமத்து - பாதுகாப்புள்ள ஓரிடத்தில். 16. 518. போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப் பானல் அம்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ? தூநறும் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ? வான நீர்மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார். பானல் அம் துறை - நீலோற்பலம் மலர்ந்திருந்த அழகிய கரை யையுடைய. வானம் - மேகம். 17. 519. கதிர் இளம்பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில், முதிரும் அன்புடைத் தொண்டர்தாம் முறைமையின் முன்னே, அதிக நன்மையின் அறுசுவைத் திருஅமுது ஆக்கி, எதிர் எழுந்துசென்று இறைஞ்சிட, நிறைந்த நூல் மார்பார். பிறைக் கண்ணியர் - பிறையைக் கொண்டை மாலையாக அணிந்த சிவபெருமான். 18. 520. தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி, மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத் தண்டின் மேலதும் ஈரம்; நான் தந்த கோவணத்தைக் கொண்டு வாரும் என்று உரைத்தனர்;- கோவணக் கள்வர். மண்டு தண்புனல் - மிகுந்த விரைந்து செல்லும் குளிர்ந்த நீரில். கோவணத்தை மறைத்த சிவபெருமான். 19. 521. ஐயர் கைதவம் அறிவுறா தவர்கடிது அணுகி, எய்தி, நோக்குறக் கோவணம் இருந்த வேறிடத்தில் மைஇல் சிந்தையர் கண்டிலர் வைத்தகோ வணம் முன் brŒjJ v‹? என்று திகைத்தனர்; தேடுவார் ஆனார். கைதவம் - வஞ்சனை. அவர் - அமர்நீதி நாயனார். வேறிடத்தில் 16-ம் பாட்டைப் பார்க்க. மையில் - களங்கமில்லாத. நாம் முன்னே வைத்த கோவணம் எவ்வாறு சென்றது? 20. 522. பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறிமேல் சங்கை இன்றியே தப்பினது என்று, தம் சரக்கில் எங்கு நாடியும் கண்டிலர்; என்செய்வார்; நின்றார்; அங்கண் வேதியர் பெருந்தொடக் கினில் அகப்பட்டார். பொங்கு - பொலிவினையுடைய. போனவழியை மேலே யோசிக்குமிடத்து. தொடக்கினில் - வாதத்தில்; சிக்கில். 21. 523. மனைவி யாரோடு மன்னிய கிளைஞரும் தாமும் இனையது ஒன்றுவந்து எய்தியது எனஇடர் கூர்ந்து, நினைவது ஒன்றிலர்; வருந்தினர்; நிற்கவும் மாட்டார்; புனைய வேறுஒரு கோவணம் கொடு புறப்பட்டார். கிளைஞரும் - சுற்றத்தாரும். 22. 524. அத்தர் முன்பு சென்று, அடிகள்! நீர் தந்த கோவணத்தை வைத்திடத்து நான் கண்டிலன்; மற்றும் ஓர் இடத்தில் உய்த்து ஒளித்தனர் இல்லை; அஃது ஒழிந்தவாறு அறியேன்; இத்த கைத்தவேறு அதிசயம் கண்டிலேன்; என்று. அடிகள் - அடிகளே. உய்த்து - எடுத்துச் சென்று. 23. 525. வேறு நல்லதோர் கோவணம் விரும்பிமுன் கொணர்ந்தேன் கீறு கோவணம் அன்று; நெய்து அமைத்தது; கிளர்கொள் நீறு சாத்திய நெற்றியீர்! மற்றது களைந்து, khW rh¤â, v‹ ãiH bghW¥Õ®! என வணங்க. கீறு - கிழித்த. கிளர்கொள் - விளக்கங்கொண்ட அது - ஈரமா யுள்ள கோவணத்தை. மாறு சாத்தி - அதற்கு மாற்றாக. இக்கோவ ணத்தை யணிந்த. 24. 526. நின்ற வேதியர் வெகுண்டு, அமர் நீதியார் நிலைமை நன்று; சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்; இன்று நான்வைத்த கோவணம் கொண்டுஅதற்கு எதிர் வேறு ஒன்று கொள்க என உரைப்பதே - நீர்என உரையா. நீண்ட காலமும் ஆகவில்லை. உரைப்பதே - உரைக்கலாமா. 25. 527. நல்ல கோவணம் கொடுப்பவன் என்று உலகின்மேல் நாளும் சொல்லு வித்தது, என் கோவணம் கொள்வது துணிந்தோ? xšiy <§FcW thÂg« mH»nj ck¡F?என்று எல்லை அல்லவன் எரிதுள்ளி னால் என வெகுண்டான். ஒல்லை - விரைவாக. ஈங்கு - இதைப்போன்ற என்பது பழைய குறிப்புரை. 26. 528. மறி கரந்துதண்டு ஏந்திய மறையவர் வெகுளப் பொறி கலங்கிய உணர்வின ராய்முகம் புலர்ந்தது, சிறிய என் பெரும் பிழைபொறுத்து அருள்செய்வீர்; அடியேன் அறிய வந்ததொன்று அன்றுஎன அடி பணிவார். மறி கரந்து - மானை மறைத்து. அயர்வார் - வருந்துவார். 27. 529. செயத் தகும் பணி செய்வன்; இக் கோவணம் அன்றி, நயத் தகுந்தன நல்லபட் டாடைகள், மணிகள், உயர்ந்த, கோடி கொண் டருளும் என்று உடம்பினில் அடங்காப் பயத்தொடும் குலைந்து அடிமிசைப் பலமுறை பணிந்தார். நயத்தகுந்தன - விரும்பத் தக்கனவாகிய. உயர்ந்த கோடி - உயர்ந்தனவாகிய பல. 28. 530. பணியும் அன்பரை நோக்கி அப் பரம்பொருள் ஆனார் தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று, நீர் தந்த மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என்செய்ய? அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றருள. நேர்தர - ஒத்திருக்க. 29. 531. மலர்ந்த சிந்தையார் ஆகிய வணிகர்ஏறு அனையார் அலர்ந்த வெண் நிறக் கோவணம் அதற்கு நேராக இலங்கு பூந்துகில் கொள்வதற்கு இசைந்தருள் செய்வீர் நலம்கொள் கோவணம் தரும்பரிசு யாது? என, நம்பர். ஏறு அனையார் - சிங்கம் போன்றவர். அலர்ந்த - விரிந்த; ஒளியுடைய. இலங்கு - விளங்கும். பரிசு - விதம். நம்பர் - சிவ பெருமான் 30. 532. உடுத்த கோவணம் ஒழிய, நாம் உம்கையில் தரநீர் கெடுத்த தாகமுன் சொல்லும் அக் கிழித்தகோ வணம்நேர் அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா எடுத்து மற்றுஇதன் எடை இடும் கோவணம் என்றார். இதன் எடை கோவணம் இடும் - இக்கோவணத்தின் நிறை யளவில் வேறு கோவணம் நிறுத்துக்கொடும். 31. 533. நன்று சால என்று அன்பரும் ஒருதுலை நாட்டக் குன்ற வில்லியார் கோவணம் ஒருதட்டில் இட்டார்; நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு ஒன்றிலே இட, நிறைநிலாது ஒழிந்தமை கண்டார். குன்றவில்லியார் - சிவபெருமான். 32. 534. நாடும் அன்போடு நாயன் மார்க்கு அளிக்கமுன் வைத்த நீடு கோவணம் அடையநேர் ஆக, ஒன்று ஒன்றாகக் கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி. நாயன்மார்க்கு - அடியவர்கட்கு. அடைய - முழுவதும். கோடு - மேலெழுந்த; வட்டமான என்போருமுளர். ஆடு சேவடிக்கு அடியரும் - கனக சபையின் நடம்புரியும் திருவடிக்கு அன்பு செய்யும் அமர்நீதி நாயனாரும். 33. 535. உலகில் இல்லதோர் மாயைஇக் கோவணம் ஒன்றுக்கு அலகில் கோவணம் ஒத்தில என்றுஅதி சயித்துப் பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர, இலகு பூந்துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார். அலகில் - அளவில்லாத. மென்துகில் - மெல்லிய பட்டுடன் பலவும். இலகும் - ஒளிவீசும். 34. 536. முட்டுஇல் அன்பர்தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் மட்டு நின்றதட்டு அருளொடும் தாழ்வுறும் வழக்கால் பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு. அன்பு இடும் முட்டு இல் அன்பர்தம் தட்டுக்கு - அன்பினை இடும் முட்டுப்பாடில்லாத அன்பர்கள் (நிலைமை என்னும்) தட்டுக்கு. முதல்வர்மட்டு நின்ற தட்டு - சிவபெருமானிடத்து நின்ற (அருட் குணம் என்னும்) தட்டானது. தடங்கருணைப் பெருங்கடலாகிய சிவபெருமான் அடியவர்க்கு எளியராதலின், ஈண்ட இறைவர் கோவணம் வைக்கப்பட்ட தட்டும் எளிய தன்மையுடையதுபோலத் தாழ்ந்து நின்றதென்று நயம்படிக் கூறினார் என்க. நாயனார் பட்டுப் பீதாம்பரங்களைத் தட்டிலிடுதல் சங்கரன் மாட்டுள்ள பேரன்பு என்றும், அச்சங்கரன் தன்கோவணத் தட்டைத் தாழ்த்தல் அடியவர் அன்பை வெளிப்படுத்தும் அருளுடைமை என்றுமுணர்க. அன்பர்க்குத் தாழுந் தன்மை ஆண்டவன் மாட்டுள்ள தென்பார், முதல்வர்மட்டில் நின்றதட்டு என்றார். தட்டு மேற்பட என்ப தற்குப் பரிபாகம் மேற்படத் திருவருள் பதிந்தென விளக்குதலும் ஒன்று. மட்டு - மாட்டென்பதன் குறுக்கம். 35. 537. ஆன தன்மைகண்டு அடியவர் அஞ்சி அந்தணர்முன் தூ நறுந்துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா மானம் இல்லன குவிக்கவும் தட்டின்மட்டு இதுவால் Vid v‹ jd« ïl¥bgw nt©L«? என்று இறைஞ்ச. மானமில்லன - அளவில்லாதன. மட்டு - அளவு. இது - முந்திய நிலை; அதாவது மேற்பட்டு நிற்பது. மற்றுமுள்ள என் தனங்களை யிட அவைகளை அடிகள் பெறுதல் வேண்டும். . . . . .இடுதற்கு அடிகள் கட்டளை வேண்டும் என்னலுமாம். 36. 538. மங்கை பாகர் ஆம் மறையவர் மற்றுஅதற்கு இசைந்தே, இங்கு நாம் இனி வேறுஒன்று சொல்லுவது என் கொல் அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர் எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார். 37. 539. நல்ல பொன்னோடும் வெள்ளியும் நவமணித் திரளும் பல்வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் எல்லை இல் பொருள் சுமந்து அவர் இடஇடக் கொண்டே மல்கு தட்டு மீது எழுந்தது; வியந்தனர் மண்ணோர். புணர்ச்சிகள் - பலவகை உலோகங்களைக் கலந்த வெண்கலம் முதலியன. மல்கு - பொருள்கள் நிறைந்த. 38. 540. தவம் நிறைந்த நான் மறைப்பொருள் நூல்களால் சமைத்த சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு அவனி மேல் அமர் நீதியார் தனம் எலாம் அன்றிப் புவனம் யாவையும் நேர் நிலா என்பதும் புகழோ! சிவபெருமான் கோவணம் நான்கு வேதப் பொருளாகிய நூல்களால் ஆகியதென்க. 39. 541. நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று உலைவு இல் பல் தனம் ஒன்று ஒழி யாமைஉய்த் தொழிந்தேன்; தலைவி யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் துலையில் ஏறிடப் பெறுவதுஉன் அருள்எனத் தொழுதார். ஒப்பில்லாத அமர்நீதி நாயனார் அடிகள் முன் நின்று. உலைவு இல் - கெடுதலில்லாத. பல்தனம். உய்த்து - கொண்டுவந்து வைத்து. ஒழிந்தேன் - எஞ்சி நிற்கிறேன். பெறுவது - எங்களைப் பெற்றுக் கொள்வது. 40. 542. பொச்சம் இல் அடிமைத் திறம் புரிந்தவர் எதிர் நின்று அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் நிச்ச யித்து அவர் நிலையினைத் துலைஎனும் சலத்தால் இச்ச ழக்கின் நின்று ஏற்றுவார்; ஏறுதற்கு இசைந்தார். பொச்சமில் - குற்றமில்லாத. புரிந்தவர் - அமர்நீதி நாயனார். அங்கணர் - திருநகரச் சிறப்பு: பாட்டு 46: குறிப்புப் பார்க்க. மறையவர்க்கு எதிரே நின்று. சலத்தால் - முகாந்தரத்தால்; வியாசத்தால் (எண்ணி யதை மறைத்து வேறொன்று செய்வது). இப்பொய்யுலகினின்றும் மெய்யுலகுக்கு ஏற்றுவாராய் நாயனார் மனைவி மைந்தருடன் தட்டில் ஏறுதற்கு. 41. 543. மனம் மகிழ்ந்துஅவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப் புனை மலர்க்குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் தனை, இடக்கொடு தனித்துலை வலம்கொண்டு தகவால் இனைய செய்கையில் ஏறுவார், கூறுவார் - எடுத்து. அவர் அடியவராக வந்த சிவபெருமான். தகுதியுடன் இவ்வித செய்கையினால் தட்டில் ஏறப்போகும் அமர்நீதி நாயனார். 42. 544. இழைத்த அன்பினில் இறைதிரு நீற்றுமெய் அடிமை பிழைத்திலோம் எனில், பெரும் துலை நேர் நிற்க என்று மழைத்தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித் தழைத்த அஞ்செழுத்து ஓதினார்; ஏறினார் - தட்டில். மழைத்தடம் பொழில் - மேகங்கள் தவழும் விசாலமான சோலை சூழ்ந்த. 43. 545. மண்டு காதலின் மற்றுஅவர் மகிழ்ந்துஉடன் ஏற, அண்டர் தம்பிரான் திருஅரைக் கோவணம் அதுவும் கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத் தொண்டும் ஒத்தலால் ஒத்துநேர் நின் றதுஅத் துலைதான். மண்டு - நிறைந்த. அண்டர் தம்பிரான் - சிவபெருமானது. 44. 546. மதி விளங்கிய தொண்டர்தம் பெருமையை மண்ணோர் துதி செய்து எங்கணும் அதிசயம் உறஎதிர் தொழுதார்; கதிர் விசும்பிடைக் கரந்திட நிரைந்த கற்பகத்தின் புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார். மதி - மெய்யறிவு. கதிர்விசும்பு இடை கரந்திட - ஒளி விளங்கும் ஆகாய வெளிமறைய. நிரைந்த - வரிசையாகவுற்ற. இமையவர் - தேவர்கள். 45. 547. அண்டர் பூ மழை பொழியமற்று அதனிடை ஒளித்த முண்ட வேதியர் ஒருவழியான் முதல் நல்லூர்ப் பண்டு தாம்பயில் கோலமே விசும்பினில் பாகம் கொண்ட பேதையும் தாமும் ஆய்க் காட்சிமுன் கொடுத்தார். அண்டர் - தேவர்கள். முண்டவேதியர். திரிபுண்டரமணிந்த மறையவர்; சிவபெருமான். முதன்மையுடைய திருநல்லூரில். பண்டு தாம் பயில் கோலம் - முன்னே தாங்கொண்டிருந்த கோலமாகிய. பேதையும்- உமா தேவியாரும். விசும்பினில் - ஆகாயத்தில். 46. 548. தொழுது போற்றி அத்துலைமிசை நின்றுநேர் துதிக்கும் வழுஇல் அன்பரும் மைந்துரும் மனைவியார் தாமும் முழுதும் இன் அருள் பெற்றுத்தம் முன் தொழுது இருக்கும் அழிவு இல் வான்பதம் கொடுத்துஎழுந்து அருளினார் ஐயர். வான்பதம் - உயர்ந்த சிவபதத்தை. 47. 549. நாதர் தம் திருவருளினால் நல் பெரும் துலையே மீது கொண்டுஎழு விமானமது ஆகிமேல் செல்லக் கோதுஇல் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த ஆதி மூர்த்தியா ருடன் சிவ புரியினை அணைந்தார். திருவருளைக் கொடுத்த. 48. நம்பியாரூரர் துதி அறுசீர் விருத்தம் 550. மலர்மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழமை காட்டி உலகுஉய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித் தலைமிசை வைத்து வாழும் தலைமைநம் தலைமை ஆகும். ஆவணம் - ஓலைச்சான்று. c‹Å - ÚL Ãid¤J., தில்லை வாழ் அந்தணர் சருக்கம் முற்றும். அமர் நீதி நாயனார் சோழ நாட்டிலே, பழையாறை என்னும் பழம் பதியிலே, வணிகர் குலத்திலே தோன்றிய நாயனார் ஒருவர் இருந்தார். அவர்தம் பெயர் அமர்நீதி நாயனார் என்பது. அவருக்கு அளவில்லாச் செல்வம் உண்டு. அவர், அச்செல்வத்தை அடியவர்கட்குத் திருவமுது செய் வித்தல், அவர்கள் கருத்தறிந்து அவர்கட்குக் கந்தை, கீள், உடை, கோவணம் அளித்தல் முதலிய திருத்தொண்டுகட்குப் பயன்படுத்தி வந்தார். திருநல்லூர் என்னுந் திருப்பதியிலே நடைபெறுந் திரு விழாவைக் கண்டு இன்புற அடியவர் பலர் அங்கே போவது வழக்கம். அவ்விடத்தில் அடியவர்களுக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டு நாயனார் ஒரு திருமடங் கட்டினார். நாயனார் சுற்றத் தவர்களுடன் அத்திருமடத்தில் தங்கித் தந்தொண்டுகளைக் குறைவற ஆற்றி வரலானார். அந்நாயனார்க்குத் திருவருள் சுரக்கவேண்டிச் சிவபெருமான் ஒரு நாள் ஒரு வேதியராய்ப் பிரமசாரி வடிவந்தாங்கி, இரண்டு கோவணமும், திருநீற்றுப்பையும், தருப்பையுங் கட்டப்பெற்ற ஒரு தண்டேந்தித் திருமடம் நோக்கி வந்தார். வந்ததும் அமர்நீதி நாயனார் அவரை முறைப்படி வழிபட்டனர். வேதியர் பெருமான் நாயனாரை நோக்கி, உமது திருத்தொண்டைக் கேள்வியுற்று உம்மைக் காண வந்தோம் என்றார். அது கேட்ட நாயனார், இங்கே அந்தணர்கள் அமுது செய்ய அந்தணர்களாற் சமைக்கப் பெற்ற அமுதும் உண்டு என்று வணங்கினார். பிரமசாரியார் காவேரியில் நீராடி வருவோம்; ஒருவேளை மழை வரினும் வரும். இவ்வுலர்ந்த கோவணத்தை வைத்திருந்து கொடும் என்று தண்டிலுள்ள ஒரு கோவணத்தை அவிழ்த்து, இதன் பெருமையை உமக்குச் சொல்ல வேண்டுவ தில்லை; இதனை இகழாமல் வைத்துக் கொடும் என்று அதனை நாயனாரிடம் அளித்துச் சென்றார். அடியவர் பெருமான், அக் கோவணத்தை ஒரு தனியிடத்திற் சேமித்து வைத்தார். திருவருளால் அக்கோவணம் மறையலாயிற்று. வேதியர் நீராடி மழையில் நனைந்து வந்தார். மடத்தில் திருவமுதுஞ் சித்தமா யிருந்தது. அந்தணர் பெருமான் தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி அன்பரைப் பார்த்து, ஈரத்தை மாற்றல் வேண்டும். தாண்டிலுள்ள கோவணமும் ஈரமாயிருக்கிறது. ஆதலால் உம்மிடம் அளித்த கோவணத்தைக் கொண்டுவாரும் என்றார். நாயனார், கோவணத்தைக் கொண்டு வரச் சென்றார். சென்ற நாயனார் கோவணத்தைக் கண்டாரில்லை. என் செய்வார் பாவம்! தேடுகிறார்; திகைக்கிறார்; அங்கு மிங்கும் ஓடுகிறார்; மலைகிறார்; இடர் வந்ததே என்று அலமருகிறார். இனி நிற்கமாட்டாதவராய் வேறொரு கோவணத்தைக் கொண்டுவந்து, அடிகள் அளித்த கோவணம் கெட்டுவிட்டது. அதனைத் தேடித் தேடிப் பார்த்தேன். அதை எங்குங் கண்டேனில்லை. வேறு இக்கோவணங் கொண்டு வந்திருக்கிறேன். இஃது ஒன்றினின்றுங் கிழிக்கப்பட்டதன்று; புதிதாக நெய்யப் பட்டது. இதனை ஏற்றருளும்; பிழை பொறுத் தருளும் என்று இறைஞ்சினார். மறையவர் வெகுண்டு, இன்று கொடுத்த கோவணம்! அஃது எப்படிக் கெட்டுவிடும்! அதனைக் கவர்ந்து வேறு கோவணங் கொடுக்கவா துணிந்தீர்! அடியார்களுக்கு நல்ல கோவணஞ் கொடுப்பதாகச் சொல்வித்தது, என் கோவணத்தைக் கவருதற்கே போலும்! உமது வாணிபம் நன்று; நன்று; மிக நன்று! என்று கூறினார். நாயனார் நடுநடுங்கி ஐயரைப் பணிந்து, இப்பிழையைத் தெரிந்து செய்தேனில்லை. இக்கோவணமன்றி நல்ல பட்டாடைகளையும் மணிகளையும் கொடுக்கிறேன். ஏற்றருளல் வேண்டும் என்று வேண்டினார். அடிகள் தணிவுற்று, எமக்கும் ஒன்றும் வேண்டாம். எமது கோவணத்துக்கு ஒத்த நிறையுள்ள கோவணம் ஒன்று கொடுத்தாற்போதும் என்றார். அதற்கு நாயனார் எதன் நிறைக்கு ஒத்திருத்தல் வேண்டும்? என்று கேட்டார் அந்தணர் பெருமான் இக்கோவண நிறைக்கு என்று தண்டில் கட்டியுள்ள கோவணத்தை அவிழ்த்துக் காட்டினார். அடியவர் விரைந்து ஒரு துலைநாட்டினார். அந்தணர் தமது கோவணத்தை ஒரு தட்டில் இட்டார். நாயனாருந் தாம் கொண்டுவந்த கோவணத்தை மற்றொரு தட்டில் இட்டார். நிறை ஒத்துவரவில்லை. நாயனார், அந்தணரின் ஆணைபெற்றுத் தம் பாலுள்ள கோவணங்களையும் பட்டாடைகளையும் ஒவ்வொன் றாகவும் பொதி பொதியாகவும் இட்டு இட்டுப் பார்த்தார். தட்டு ஒத்துவர வில்லை. நாயனார் வேதியரின் அனுமதிபெற்றுத் தம் மிடமுள்ள பொன்வெள்ளி முதலிய உலோகங்களையும் பிற பொருள்களையும் குவியல் குவியல்களாகக் கொண்டு வந்து கொண்டுவந்து முறைமுறையே தட்டில் சேர்த்தார். தட்டு நேர் நிற்கவில்லை. அக்காட்சி கண்ட நாயனார், அடிகளே! என்னிடத் துள்ள எல்லாவற்றையுங் கொண்டு வந்து வைத்துவிட்டேன். இனியானும் மனைவியும் புதல்வனும் எஞ்சி நிற்கிறோம். திருவுள மிருப்பின், நாங்களும் தட்டில் ஏறுகிறோம் என்றார். ஐயரும் அதற் கிசைந்தார். அமர்நீதி நாயனார் பெரிதும் மகிழ்ந்து. மனைவியுடனும் மைந்தருடனும் துலையை வலம்வந்து, இதுகாறும் நாங்கள் நிகழ்த்திவந்த தொண்டு தவறுதலில்லாத தாயின், நாங்கள் ஏறினதும் இத்துலை நேர்நிற்பதாக என்று மொழிந்து ஐந்தெழுத்தை ஓதித் தட்டிலேறினார். ஏறினதும், தட்டுகள் நேர் நின்றன. அதைக் கண்ட மண்ணவர் வாழ்த்தினர்; விண்ணவர் மலர் சொரிந்தனர். பிரமசாரியாக வந்த பெருமான் உமாதேவியாருடன் மழவிடைமேல் தோன்றினார். தட்டிலே நின்ற புதல்வரும் ஆண்டவன் திருக்கோலத்தைக் கண்டு போற்றுகிறார் சிவபெருமான், மூவர்க்கும் தம்மை என்றுந் தொழுழுதுகொண் டிருக்கும் வான்பத மருளி எழுந்தருளினார். திருவருளால் அத்துலையே விமானமாகி மேலே சென்றது. அமர்நீதி நாயனார் தம் மனைவியுடனும் மைந்தருடனுஞ் சிவலோகஞ் சேர்ந்தனர். இலைமலிந்த சருக்கம் - 3 13. எறிபத்த நாயனார் 551. மல்லல் நீர் ஞாலம் தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு ஒல்லைவந் துற்ற செய்கை உற்றிடத்து உதவும் நீரார்; எல்லைஇல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லல் ஆம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றேன். மல்லல் நீர் ஞாலம் தன்னுள் - வளப்பமுடைய கடல் சூழ்ந்த நிலவுலகில். மழவிடை உடையான் அன்பர்க்கு - இளமை வாய்ந்த இடப வாகனராகிய சிவபெருமானுடைய நேயர்கட்கு. உற்ற செய்கை உற்ற இடத்து - பொருந்திய தொண்டுக்கு ஆம்படித்து - தன்மை யுடையவர். படித்தன்றேனும் - தன்மையுடைய தன்றாயினும். 1. 552. பொன்மலைப் புலிவென்று ஓங்கப் புதுமலை இடித்துப் போற்றும் அந்நெறி வழியே ஆக அயல்வழி அடைத்த சோழன்; மன்னிய அநபாயன்; சீர் மரபின் மாநகரம் ஆகும் தொல்நெடும் கருவூர் என்னும் சுடர்மணி மாட மூதூர். பொன்மலை - இமயம்; திருமலைச் சிறப்பு முதற் பாட்டின் குறிப்பைப் பார்க்க. புலிக்கொடி - திருநாட்டுச் சிறப்பு முதற்பாட்டின் குறிப்பைப் பார்க்க. இமய மலையிலே புலிக்கொடி நின்று ஒங்க. மலைகளை இடித்துச் செய்த அவ்வழி புதுவழியாக. மற்றச் சுற்று வழிகளை அடைத்த. மலைகளை இடித்துப் புதிய நேர் வழி யுண்டாக்குதல் மன்னர்களின் வழக்கமென்க. சோழன் - சோழ வமிசத்தவனாகிய; ஒரு சோழன் செயலை மற்றச் சோழன் செயலாகக் கூறுவது மரபு. ஆகவே ஈண்டுச் சோழன் என்பதற்குச் சோழ வமிசத்தான் என்று பொருள் கொள்ளப்பட்டது. மன்னிய - நிலை பெற்ற. மரபினர்க்குரிய மாநகரம் பழமை மிகுந்த. கருவூர் - கொங்கு நாட்டிலுள்ளது; சோழ மன்னர்க்குரிய ஐந்து தலைநகரங்களுள் ஒன்று. தலை நகரங்கள் ஐந்து: காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச்சேய்ஞலூர், கருவூர். 2. 553. மாமதில் மஞ்சு சூழும், மாளிகை நிறைவிண் சூழும், தூ மணி வாயில் சூழும், சோலையில் வாசம் சூழும், தேமலர் அளகம் சூழும், சிலமதி, தெருவில் சூழும், தாம்மகிழ்ந்து அமரர் சூழும், சதமகன் நகரம் தாழ, மஞ்சு - மேகங்கள். நிரை - வரிசைகள், தூயமணி, தேன்மலர். அளகம் - கூந்தலில். சில - (மாதர்களின் முகமாகிய) சில சந்திரர்கள். அமரர் (தேவர்கள்) தாம் மகிழ்ந்து. சதமகன் - இந்திரன். ஒரு நூறு வேள்வி உரவோன் - மணிமேகலை: பதிகம். 33. 3. 554. கடகரி துறையில் ஆடும்; களி மயில் புறவில் ஆடும்; அடர்மணி அரங்கில் ஆடும் அரிவையார் குழல் வண்டு ஆடும்; படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும்; தடநெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால். கடகரி - மதயானைகள். துறையில் - நீர்த்துறையில். புறவில் - முல்லை நிலத்தில். அரங்கில் - சபையில். அரிவையார் குழல் - பெண் களின் கூந்தலில். (அரிவைப் பருவம் - பத்தொன்பது முதல் இருபத் தைந்து வயது வரை; அப்பருவம் இன்பத்துக்கு மிகவும் உரியது. அரிவையார் இன்புமுத்தி - சிவப்பிரகாசம் - 38. மறுகில் - வீதியில். பயில் - கட்டப்பட்ட. கதிர் - சூரிய மண்டலத்தின். தடம் - அகன்ற. 4. 555. மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் பொன் இயல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில். புரிசை சூழ்ந்து - மதிலைச் சுற்றி. சுரர்களும் - தேவர்களும். பொற் பால் - சிறப்பால். துன்னிய - உள் கலந்த. அந்நிலைமை வாய்ந்த. ஆனிலை - கருவூர்த் திருக்கோயிலின் பெயர். கோயில் மல்கும். 5. 556. பொருள் திரு மறைகள் தந்த புனிதரை, இனிது அக் கோயில் மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி, இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருள்பெரும் தொண்டு செய்வார் அவர், எறிபத்தர் ஆவார். எல்லாப் பொருளும் அடங்கியுள்ள மறை. மறைகள் தந்த எனினும் மறை கடந்த எனினுமாம். புனிதரை - சிவபெருமானை. கோயிலில். மருள் துறை - மயக்க வழியை. ஆற்றால் - வழியில். இருள் கடு - கரிய நஞ்சு. உரிமை பூண்டார்க்கு - சிவனடியார்களுக்கு. 6. 557. மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழை அரி என்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீர்க்கும் பழமறை பரவும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார். மழையினால் வளர்க்கப்பெறும் வானின் றுலகம் வழங்கி வருதலால் -திருக்குறள்: 11. சைவம் உலகிற்குரியது; பொதுச் சமயம்; ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றொடொன் றொவ்வாம லுள பலவும் இவற்றுள் யாது சமயம் பொருள் நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்கதின்றி - நீதியினால் இவை யெல்லாம் ஓரிடத்தே காண நிற்பது யாதொரு சமயம் பொருள் நூல் - சிவஞானசித்தியார்: சுபக்கம் - சூ. 8-13. முழை அரி என்ன - குகையிலிருந்து புறப்படுஞ் சிங்கம் போல. முரண்கெட - தீங்கிழைத்தவர்களின் வலிமைகெட. தீர்க்கும் - தீங்கைப் போக்கும். பரசும் - துதிக்கும். பரசு - (சிவபிரான்) மழுவை யொத்த மழுவை. மறை பரவும் பரசு இறைவனுடையது. 7. 558. அண்ணலார் நிகழும் நாளில், ஆனிலை அடிகளார்க்குத் திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி யாண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம், பூப்பரித்து அலங்கல் சாத்தி, உள் நிறை காதலோடும் ஒழுகுவார்; ஒருநாள் முன்போல். அண்ணலார் - எறிபத்த நாயனார். ஆனிலை ஆண்டவனுக்கு. திண்ணிய - உறுதியான. அலங்கல் - மாலை. 8. 559. வைகறை உணர்ந்து போந்து, புனல் மூழ்கி, வாயும் கட்டி, மொய்மலர் நெருங்கு வாச நந்தன வனத்து, முன்னிக் கையினில் தெரிந்து நல்ல கமழ்முகை அலரும் வேலைத் தெய்வ நாயகர்க்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம் கொய்து. வைகறை - விடியற் காலத்தில். முன்னி - கருதிப் போந்து. தெரிந்து - ஆராய்ந்து. கமழ்முகை - மணங்கமழும் அரும்புகள். வேலை - வேளை. திருப்பள்ளித்தாமம் - கோயிலுக்கு மலர்கள். தாமம் - மாலை; ஈண்டு மலரின் மேற்று; ஆகு பெயர்; பூவைத் திருப் பள்ளித் தாமமென்பது சைவ பரிபாஷை - பழைய குறிப்புரை. 9. 560. கோலப்பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு, நெஞ்சில் வாலிய நேசம் கொண்டு, மலர்க்கையில் தண்டும் கொண்டு, அங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர்க்கு அமைத்துச் சாத்தும் காலை, வந்து உதவ வேண்டிக் கடிதினில் வாரா நின்றார். கோலம் - அழகு வாய்ந்த. வாலிய - மாசற்ற; தூய. அங்கணர் - திருநகரச் சிறப்பு: பாட்டு 41 - குறிப்புப் பார்க்க. 10. 561. மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும் கொற்றவர்; வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார் தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு பெற்ற வெங்களிறு, கோலம் பெருகுமா நவமி முன்னாள். கொற்றவர் - மன்னர். வளவர் - சோழர். பற்றலர் - பகைவர் களுடைய. முனைகள் - சேனைகளை; பகைவர்களைப் போர் முனைகளில் என்னலுமாம். பட்டவர்தனமாம். பட்டத்து யானை யாகிய. பண்பு - மேன்மை. வெங்களிறு - கொடிய ஆண் யானை. கோலம்பெருகும் - விழாகொண்டாடுதற்குரிய. முதல்நாளில். 11. 562. மங்கல விழவு கொண்டு, வரு நதித் துறைநீர் ஆடிப் பொங்கிய களிப்பினோடும் பொழிமதம் சொரிய, நின்றார் எங்கணும் இரியல் போக, எதிர் பரிக்காரர் ஓட, துங்கமால் வரைபோல் தோன்றித் துண் என அணைந்தது அன்றே. விழவு - அலங்காரம். நின்றார் - எதிரில் வாராநின்றவர்கள். இரியல் போக - விரைந்து நீங்கிப் போக. எதிர் - (யானையின்) முன்னே. பரிக்காரர் குத்துக்கோல்காரர். யானையை நல்வழியில் செலுத்து தற்கும் அதனை அடக்குதற்கும் மேலே பாகரிருப்பது போலக் கீழும் பரிகோற்காரர் இருப்பது வழக்கம். இவர்கள் யானைக்கு முன்னே நடந்து அதன் வருகையை எதிரில் வருவோர்க்கு உணர்த்துவார்கள். யானை மாறுபடுங் காலத்து அதனை அடக்குதற்கு ஈட்டி தாங்க லால் இவர்கள் பரிகோற்காரர் என்றழைக்கப்படுகிறார்கள். பரித்தல் - தாங்குதல். உயர்ந்த பெருமை பொருந்திய மலைபோல். 12. 563. வென்றி மால் யானை, தன்னை மேல் கொண்ட பாகரோடும் சென்று, ஒரு தெருவில் முட்டிச் சிவகாமியார் முன் செல்ல, வன் தனித் தண்டில் தூங்கும் மலர் கொள் பூங் கூடை தன்னைப் பிடித்துஉடன் பறித்துச் சிந்த. பின் தொடர்ந்து ஓடிச் சென்று, யானை - யானையானது. தூங்கும் - தொங்கும். 13. 564. மேல் கொண்ட பாகர் கண்டு விசைகொண்ட களிறுசண்டக் கால் கொண்டு போவார் போலக் கடிதுகொண்டு அகலப் போக, நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்துப் பொங்கி, மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டுகொண்டு அடிக்க வந்தார். களிறு - யானையை. கால் - மாருதம்; காற்று. சண்டமாரு தத்தை வயப்படுத்திக் கொண்டு போவார் போல. சண்டமாருதத்தால் கொண்டுபோகப் பட்டவர்களைப் போலக் களிறு தங்களைக் கொண்டு அகலப்போக என்னலுமொன்று. தொண்டர் - சிவகாமி யாண்டார். பொங்கி - கோபித்து. மால் - மதம்; மயக்கம். 14. 565. அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக, மெய்ப்பெரும் தொண்டர் மூப்பால் விரைந்துபின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரைஅடித்து எழுந்து நின்று, செப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து, முன் சிவதா என்பார். அடல்களிறு - கொல்யானை; அடல் - வலிமையுமாம். தப்பினர் விழுந்து - தவறி வீழ்ந்து. செயிர்த்து - மிகக் கோபித்து. சிவதா - நன்மையைச் செய்கிறவனே. சிவகாமியாண்டார் நாடொறுஞ் சிவதா சிவதா என்று உச்சரிப்பது வழக்கம். அவ்வழக்கத்தால் இடுக்கண் நேர்ந்த இவ்வேளையிலும் முறைப்பாடாக அவர் சிவதா சிவதா என்கிறார். 15. கலி விருத்தம் 566. களியா னையின் ஈர் உரியாய் சிவதா! எளியார் வலியாம் இறைவா! சிவதா! அளியார் அடியார் அறிவே! சிவதா! தெளிவார் அமுதே! சிவதா! சிவதா!. மத மயக்கமுடைய யானையினின்றும் உரித்த தோலை யணிந்தவரே! இடையூறு செய்த களியானையை அடக்காயோ என்பது குறிப்பு. சிவதா - பூங்கூடையை வாங்கித்தா என்று கோடலு மொன்று - பழைய குறிப்புரை. அளி ஆர். அன்பு நிறைந்த. 16. 567. ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரி சிந்துவதே? வேறுஉள் நினைவார் புரம்வெந்து அவியச் சீறும் சிலையாய்! சிவதா! சிவதா! கரி - யானை. சிந்துவதோ. வேறு - மாறுபாட்டை. சீறும் - கோபித்தழிக்க வல்ல. 17. 568. தஞ்சே சரணம் புகுதும் தமியோர் நெஞ்சு ஏய் துயரம் கெடநேர் தொடரும் மஞ்சே எனவீழ் மறலிக்கு இறைநீள் செஞ் சேவடியாய்! சிவதா! சிவதா. தஞ்சமென்று திருவடியை அடைந்த மார்க்கண்டேயர். நெஞ்சு ஏய் துயரம் - நெஞ்சிலுற்ற துயரம். மஞ்சே என - மேகம் போல. மறலிக்கு - யமனுக்கு. இறை - சிறிதே. நேர்தொடரும் மறலி . . . . 18. 569. நெடியோன் அறியா, நெறியார் அறியும் படியால், அடிமைப் பணிசெய்து ஒழுகும் அடியார்களில், யான் ஆரா அணைவார்? Koah Kjyh®! எனவே மொழிய. திருமால் அறியாத நெறியை முற்றும் உணரும்படியாக. நெறியை ஈங்குத் திருவடி என்றலுமொன்று. நெறியார் எனக் கொண்டு சிவபெருமான் என்னலுமாம். யான் ஆராக - என்னை யாராக மதித்து; அடியவருள் யான் ஒருவனாக எண்ணப்படாதவன் என்றபடி. 19. அறுசீர் விருத்தம் 570. என்றுஅவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி, மன்றவர் அடியார்க்கு என்று வழிப்பகை களிறே அன்றோ? கொன்று அது வீழ்ப்பன்? என்று கொலைமழு எடுத்து வந்தார். மாற்றம் - மொழிகளை. எதிரே வாராநின்றவாகிய எறிபத்தர். நெருப்பெனப் பெருமூச்சுவிட்டு. மன்றவர் - நடராசருடைய. 20. 571. வந்தவர் அழைத்த தொண்டர் தமைக் கண்டு வணங்கி உம்மை இந்தவல் இடும்பை செய்த யானை எங்குஉற்றது என்ன, எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து. மண்மேல் சிந்தி, முன் பிழைத்துப் போகா நின் றதுஇத் தெருவே என் றார். வல் இடும்பை - கொடுந்துன்பத்தை. பிழைத்து - தப்பி. 21. 572. இங்கு அது பிழைப்பது எங்கே இனி, என எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையின் சென்று பொருகரி தொடர்ந்து பற்றும் செங்கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; - சீற்றம் மிக்கார். மழுவும் தாமும் முறையே அனலும் காற்றும் போல. பொருகரி - போர்யானையை. வாள் - கூரிய நகங்களுடைய. அரியில் - சிங்கம்போல. கிடைத்தனர் - கிட்டினர். சீற்றம் - மிகுசினம். 22 573. கண்டவர் இதுமுன்பு அண்ணல் உரித்தஅக் களிறே போலும்; அண்டரும் மண்ணு ளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசிக் கொண்டுஎழுந்து ஆர்த்துச் சென்று காலினால் குலுங்கப் பாய் ந்தார். அண்ணல் - சிவபெருமான். அடர்ந்து - நெருங்கி. வலத்தில் - வலக்கையால்; பலங்கொண்டு; வீரங்கொண்டு என்னலுமாம். யானை குலுங்க. 23. 574. பாய் தலும் விசைகொண்டு உய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய் தழல் உமி ழ்கண் வேழம் திரி ந்துமேல் கதுவ, அச்சம் தாய் தலை அன்பின் முன்பு நிற்குமே? தகைந்து பாய் ந்து தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர். உய்க்கும் - செலுத்தும். பாகரைத் தன்மீது தாங்கிக்கொண்டு. வேழம் திரிந்து - யானை மாறுபட்டு. மேல் கதுவ - எறிபத்த நாயனார் மேல் பாய்ந்து எதிர்க்க. அச்சம், தாயின் தலையன்புபோன்றதொரு அன்பின் முன்னர் நிற்குமோ. தகைந்து - தொண்டர் யானையை மறித்து. நிலத்திற்றோயும் தனித்த பருத்த துதிக்கை. 24. 575. கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து மைவரை அனைய வேழம் புரண்டிட, மருங்கு வந்த வெய்யகோல் பாகர் மூவர், மிசைகொண்டார் இருவர் ஆக ஐவரைக் கொன்று நின்றார்; அருவரை அனைய தோளார். மைவரை அனைய - கரியமலை போன்ற. 25. 576. வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய, மற்று உள்ளார் ஓடி மட்டுஅவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கிப் பட்டவர்த் தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்டநீர் கடிது புக்கு முதல் வனுக்கு உரையும் என்றார். மட்டு அவிழ் தொங்கல் - தேன்சிந்தும் மலர் மாலையணிந்து. பட்டு - இறந்து. முட்ட - சேர. 26. 577. மற்று, அவர் மொழிந்தமாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன் பால் எய்திக் குரைகழல் பணிந்து நின்று, பற்றலர் இலாதாய்! நின் பொன் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினர் பாகர் என் றார். குரைகழல் - ஒலிக்கும் வீரக்கழலையணிந்த பாதங்களை. பற்றலர் - பகைவர்கள். செற்றனர் - கொன்றனர். 27. 578. வளவனும் கேட்ட போதில் மாறுஇன்றி மண் காக்கின்ற கிளர்மணித் தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க அளவு இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என் றும் கேளான் இளஅரி ஏறு போல, எழில் மணி வாயில் நீங்க. வளவனும் - சோழமன்னனும். மாறு - பகை. கிளர் - போரைநாடி ஓங்கும். அலங்கல் - மாலையில். சுரும்பினம் - வண்டுக் கூட்டங்கள். கிளர்ந்து - எழுந்து. அரி ஏறு - சிங்க ஏறு. 28. 579. தந்திரத் தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு வந்து உறச் சேனை தன்னை வல்விரைந்து எழமுன் சாற்ற, அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்பு, எந்திரத் தேரும் மாவும் இடை இடை களிறும் ஆகி - தந்திரத் தலைவர் தாமும் - சேனைத் தலைவர்களும். பறைசாற்றுவிக்க. அந்தரத்து அகலம் எல்லாம் - ஆகாயப் பரப்பு முழுமையும். பதாகை - கொடிகள். எந்திரத்தையுடைய தேர்களும். மாவும் - குதிரைகளும். 29. 580. வில்லொடு வேல், வாள், தண்டு, பிண்டி பாலங்கள்; மிக்க வல், எழு, முசலம், நேமி, மழு, கழுக்கடை முன் ஆன பல் படைக் கலன்கள் என்றிப் பைங்கழல் வரிந்த வன் கண் எல்லைஇல் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும் எங்கும். பிண்டி பாலம் - தலையிலே பீலி கட்டப்பட்டு எறிவதோர் படை முசலம் - இருப்புலக்கைகளும். நேமி - சக்கரங்களும். கழுக்கடை - எறியீட்டிகளும்; சூலங்களும் எனினுமாம். வீரக்கழலை வரித்துக்கட்டிய. கொட்புற்று - சுழன்று பரந்து; இடசாரி வலசாரியாகச் சுழன்று என்னலுமாம். 30. 581. சங்கொடு தாரை, காளம், தழங்குஒலி முழங்கு பேரி, வெங்குதல் பம்பை, கண்டை, வியன் துடி, திமிலை, தட்டி, பொங்கு ஒலிச் சின்னம் எல்லாம் பொருபடை மிடைந்த பொற்பின் மங்குல்வான் கிளர்ச்சி நாண் மருங்குஎழுந்து இயம்பி மல்க. தழங்கு ஒலி - அதிக ஒலி. துடி - உடுக்கை. கண்டை - ஒருவகைப் பறை. திமிலை - சல்லரி; ஒருவிதப் பறை. தட்டி - கரடிப் பறை. போர் புரியும் சேனைகள் நெருங்கிய சிறப்பால். மேக ஒலிக்கிளர்ச்சி. மல்க - நிரம்ப. 31 582. தூரியத் துவைப்பும் முட்டும் சுடர்ப்படை ஒலியும் மாவின் தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர்ச் சீறும் வீரர் தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்குஎழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடை நாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே. தூரியத் துவைப்பும் - வாத்திய ஒலியும். மாவின் தார் மணி இசைப்பும் - குதிரைகளின் கழுத்திலணிந்த மாலை மணியின் ஒலியும். சீறும் - ஒலியும். ஆர்ப்பும் - ஒலியும். ஒன்றாம் எல்லை ஒன்றாகும் பொழுது. எல்லைக்காரெனக் கோடலுமாம். காருடன் - ஊழிக்கால முகிலுடன். 32. 583. பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் மண்ணிடை இறுகால் மேன்மேல் வந்துஎழுந்தது போல் தோன்றத் தண் அளிக் கவிகை மன்னன் தானை பின் தொடரத் தான் ஓர் அண்ணல் அம் புரவி மேல் கொண்டு அரசமா வீதி சென்றான். அலங்கரித்து ஒழுங்கு செய்யப்பட்ட ரதகஜதுரகபதாதி என்னும் உறுப்புகள் நான்காக. இறுகால் - ஊழிக்காற்று. குளிர்ந்த அருளமைந்த குடையையுடைய மன்னன். தானை பின் - சேனை பின்னே. பெருமையும் அழகும் வாய்ந்த புரவி. 33. 584. கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளம் குறுகச் சென்றான்; பகைப் புலத்தவரைக் காணான்; விடுசுடர் மழுஒன்று ஏந்தி, வேறுஇரு தடக்கைத்து ஆய அடுகளிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான். பகைப்புலத்தவரை - பகைவர்களை. அடுகளிறு - கொல்யானை. எறிபத்தர் அடுகளிறுபோல நின்றாராதலின். அவர்தங் கரங்கள் இரண்டும் துதிக்கைகளாக இங்கே சொல்லப்பட்டன. வேறு - துண்டிக்கப்பெற்ற யானைத் துதிக்கையை யல்லாத வேறு. எறிபத்தர் சிவநேயராதலால் அவர் பகைவர் என்ற எண்ணமே மன்னன்பால் தோன்றவில்லை. 34. 585. பொன் தவழ் அருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவர்என்று ஓரான் ‘bt‹wt® aht®? என்றான் - வெடி பட முழங்கும் சொல்லான். செம் பொற்படிகள் தவழும் அருவியையுடைய குன்றுபோல. அருவி இரத்தத்தைக் குறிப்பது. மன்றுள். . . குன்றவர் - சிவபெருமான். ஓரான் - நினையாதவனாய். யானையைக் கொன்றவர் யாவர். 35. 586. அரசன் ஆங்கு அருளிச் செய்ய, அருகு சென்றணைந்து பாகர், விரைசெய்தார் மாலை யோய்! நின் விறல் களிற்று எதிரே நிற்கும் திரைசெய் நீர் உலகின் மன்னன் யார் உளர்? தீங்கு செய்தார்;- பரசுமுன் கொண்டு நின்ற இவர் எனப் பணிந்து சொன்னார். விரை - வாசனை. தார் - பூமாலை. மாலை - மணிமாலை. விறல் - வெற்றியுடைய. திரை செய்நீர் - அலைகடல் சூழ்ந்த. 36. 587. குழைஅணி காதி னானுக்கு அன்பர் ஆம் குணத்தின் மிக்கார் பிழைபடின் அன்றிக் கொல்லார்; பிழைத்ததுஉண்டு என்றுஉட் கொண்டு. மழைமத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற உழைவயப் புரவி மேல் நின்று இழிந்தனன்;- உலக மன்னன். மழைபோல் மதத்தைச் சொரியும். மாற்றி - நிறுத்தி. வயஉழை புரவி - வலிமைக்கு அல்லது வெற்றிக்கு இடமாகவுள்ள குதிரை. நாயனாரைச் சிறப்பிக்க உலக மன்னன் என்றார். 37. 588. மைத்தடங் குன்றுபோலும் மதக்களிற்று எதிரே இந்த மெய்த் தவர் சென்ற போது வேறுஒன்றும் புகுதா விட்ட அத்தவம் உடையன் ஆனேன்; அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்; v‹ bfhnyh ãiH? என்று அஞ்சி. அபாயத்தை வேறொன்று என்றார். மெய்ப்பொருள் நாயனார் புராணம்: 15ம் பாட்டையும் குறிப்பையும் பார்க்க. அம்பலவாணர் அன்பர் - எறிபத்தநாயனார். இத்தனை முனிய -இவ்வளவு கோபிக்க. கெட்டேன் - அவலத்தை யுணர்ர்த்துவது; துயரின்போது வெளிவருவது; ஐயோ; இரக்கக் குறிப்பு. 38. 589. செறிந்தவர் தம்மை நீக்கி, அன்பர் முன் தொழுது சென்று ஈது அறிந்திலேன்; அடியேன், அங்குக் கேட்டதுஒன்று; அதுதான் நிற்க; மறிந்த இக்களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோ தான்? அருள்செயும் என்று நின் றார். செறிந்தவர் தம்மை - நெருங்கிச் சூழ்ந்து நின்றவர்களை. மறித்த - எதிர்த்த. குற்றம் - குற்றத்திற்காக. 39. 590. மன்னவன் தன்னை நோக்கி, வானவர் ஈசர் நேசர், சென்னி! இத் துங்க வேழம் சிவகாமி யாண்டார் கொய்து பன்ன காபரணர் சாத்தக் கொடு வரும் பள்ளித் தாமம் தன்னைமுன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து வீழ்த்தேன் வானவர் ஈசர் நேசர் - சிவநேசராகிய எறிபத்தர். சென்னி - சோழனே. துங்கவேழம் - உயர்ந்த யானை. பன்னகாபரணர் - பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ள சிவபெருமானுக்கு. 40. 591. மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும் மீதுஅங்குக் கடாவு வாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்; ஈதுஇங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர்; என்ன அஞ்சிப் பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரைத் தடந்தோள் மன்னன். மாதங்கம் -யானை. கடவுவாறும் - செலுத்தும் பாகர்களும். விலக்காமையால் அவர்களும் வெட்டுப்பட்டு உயிர் துறந்தார்கள். சொன்னவர் எறிபத்தர் என்று தெளிந்து. 41. 592. அங்கணர் அடியார் தம்மைச் செய்த இவ் அபராதத்துக்கு இங்குஇது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்; மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று; இதுஆம் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் - தீர்வு நேர்வார். அடியார் தமக்கு. இது ஆம் - இவ்வாள் தக்கது. தீர்வு நேர்வார் - கழிவு அல்லது பிராயச் சித்தம் விரும்புகிறவராகிய மன்னர். 42. 593. வெந்தழல் சுடர்வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக் கெட்டேன்; அந்தம் இல் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று, தந்தவாள் வாங்க மாட்டார்; தன்னைத்தான் துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார்; - தீங்கு தீர்ப்பார். கெட்டேன் - ஐயோ. தீங்கு - தன்னைத்தான் துறத்தலை; தன்னுயிரைத் தானே வாளால் போக்கிக்கொள்ளுதலை. 43. 594. வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே, ஈங்குஎனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்கவேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் - இவர் பால் என்றே ஆங்குஅவர் உவப்பக் கண்ட எறிபத்தர், ஆதனுக்கு அஞ்சி. 44 595. வன்பெருங் களிறு பாகர் மடியவும் உடைவா ளைத்தந்து என்பெரும் பிழையி னாலே என்னையும் கொல் லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைத்தனன் என்று கொண்டு, முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி. அன்பனார் - மன்னவர். உயிர்செகுத்து - உயிரைப்போக்கி. 45. 596. புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு இதுஎன்? bf£nl‹! என்று எதிர் கடிதின் சென்று பெருந்தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும். புரிந்து அவர் - விரும்பி மன்னர். அன்பர் - எறிபத்தர். 46. 597. வளவனார் விடாது பற்ற, மாதவர் வருந்துகின்ற அளவு இலாப் பரிவில் வந்த இடுக் கணை அகற்ற வேண்டிக் களம் அணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வாக்குக் கிளர் ஒளி விசும்பின் மேல் நின்று எழுந்தது பலரும் கேட்ப. வளவனார் - சோழர். பிரிவில் - அன்பால். நீலகண்டத்தையும் சிவந்த நெற்றிக் கண்ணையும் உடைய சிவபெருமான். வாக்கு - அசரீரி. 47. 598. தொழும் தகை அன்பின் மிக்கீர்! தொண்டினை மண்மேல் காட்டச் செழும் திருமலரை இன்று சினக்கரி சிந்தத் திங்கள் கொழுந்து அணிவேணிக் கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு எழுந்தது; பாக ரோடும் யானையும் எழுந்தது அன்றே. யாவரும் தொழுந்தகைமை வாய்தந்த. திங்கள் கொழுந்து - பிறை. எழுந்ததும். 48. 599. ஈரவே பூட்டும் வாள் விட்டு எறி பத்தர் தாமும் நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர்; நிருபர் கோனும் போர் வடிவாளைப் போக எறிந்துஅவர் கழல்கள் போற்றிப் பார்மிசைப் பணிந்தார்; விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார். ஈரவே - அறுக்கவே. நேரியர் - சோழர். நிருபர் கோனும் - புகழ்ச் சோழமன்னரும். அவர் - எறிபத்த நாயனார்தம். 49. 600. இருவரும் எழுந்து வானில் எழுந்தபேர் ஒலியைப் போற்ற, அருமறைப் பொருளாய் உள்ளார் அணிகொள் பூங் கூடை தன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட அருள, மற்றுஅத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமி யாரும் நின்றார். அருமறைப் பொருளாயுள்ளார் - சிவபெருமான். வாழ்ந்து - புத்துணர்வு பெற்று. 50 601. மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர், உள்தரு களிப்பி னோடும் உறங்கிமீது எழுந்தது ஒத்து, முட்டவெங் கடங்கள் பாய்ந்து, முகில் என முழங்கிப் பொங்கும், பட்டவர்த் தனத்தைக் கொண்டு, பாகரும் அணைய வந்தார். மட்டவிழ் அலங்கல் - தேனொழுகும் மலர்மாலை யணிந்த. முட்டவெம் கடங்கள் பாய்ந்து - நானாபக்கங்களிலும் வெப்பமாகிய மதங்கள் பாய்ந்து. 51 602. ஆன சீர்த்தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப, இந்த மான வெங்களிற்றில் ஏறி, மகிழ்ந்து எழுந்தருளும் என்ன மேன்மை அப்பணிமேல் கொண்டு வணங்கிவெண் குடையின் நீழல் யானை மேற்கொண்டு சென்றார்; இவுளி மேற்கொண்டு வந்தார். ஆனசீர் - பொருந்திய சிறப்பினையுடைய. மானம் - வலிமை யுடைய. இவுளிமேல் கொண்டுவந்தார் - குதிரை மீது வந்த புகழ்ச் சோழர். 52 603. அந்நிலை எழுந்த சேனை, ஆர்கரி ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப, மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்தப் பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொன்தாள் சென்னியில் கொண்டு, சென்னி திருவளர் கோயில் புக்கான். ஆர்கலி - சமுத்திரம். பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் - கனக சபையில் தாண்டவம் புரியும் நடராசர். 53 604. தம்பிரான் பணிமேல் கொண்டு சிவகாமி யாரும் சார எம்பிரான் அன்பர் ஆன எறிபத்தர் தாமும் என்னே! அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று செம்பியன் பெருமை உன்னித் திருப்பணி நோக்கிச் சென்றார். தம்பிரான் -சிவபெருமான். என்னே - என்ன ஆச்சர்யம்! சிதாகாசத்தில் நிறைந்துள்ள நடராசப் பெருமான். தொண்டர் (புகழ்ச்சோழநாயனார்). செம்பியன் - புகழ்ச்சோழநாயனார். நோக்கி - நினைந்து. 54 605. மற்று அவர் இனைய ஆன வன் பெருந்தொண்டு மண்மேல் உற்றிடத்து அடியார்முன் சென்று உதவியே, நாளும் நாளும் நல்தவக் கொள்கை தாங்கி, நலம்மிகு கயிலை வெற்பில் கொற்றவர் கணத்தின் முன் ஆல் கோமுதல் தலைமை பெற்றார். கொற்றவர் - சிவபெருமானது. முன்னிருக்கும் தலைமைக்குள் முதற்றலைமை பெற்றார். கோ - தலைமை. 55 606. ஆள் உடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தன்னைக் கொல்ல வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும் நாளும் மற்றுஅவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கில் அன்றி, நீளும் இத்தொண்டின் நீர்மை நினைப்பின் யார் அளக்க வல்லார். நகும் - அருள் புரியும். நம்பர் - சிவபெருமான். 56 607. தேன் ஆரும் தண்பூங் கொன்றைச் செஞ்சடை யவர்பொன் தாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி வான் ஆளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு போற்றும் ஏனாதி நாதர் செய்த திருப்பணி இயம்பல் உற்றேன். ஆனாத - குறையாத. 57 எறிபத்த நாயனார் கருவூர் சோழ மன்னர்களுக்குரிய தலைநகரங்கள் ஐந்தனுள் ஒன்று. அது கொங்கு நாட்டிலிருப்பது. அங்கு ஆனிலை என்னும் திருக்கோயில் ஒன்றிருக்கிறது. அவ்ஆனிலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் தீங்கிழைப் பவர்களை எறிந்து வீழ்த்த மழுப்படை தாங்கி நின்றவர் ஒருவர் இருந்தார். அவர், எறிபத்த நாயனார் என்னும் பெயருடையவர். அவர் காலத்தில் சிவகாமியாண்டார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார். ஆனிலையடிகளுக்குப் பூத் தொண்டு செய்பவர். ஒருநாள், அதாவது நவமி முன்னாளில், சிவகாமியாண்டார் வழக்கம்போல் பூக்களால் கூடையை நிரப்பி, அக்கூடையைத் தண்டில் தூங்கச் செய்து, திருக்கோயில் நோக்கிச் செல்லலானார். அவ்வேளையில் அவ்வழியே புகழ்ச்சோழ மன்னவரின் பட்ட வர்த்தன யானை காவிரியில் மூழ்கி, பாகர்கள் மேலேயிருப்ப, குத்துக் கோற்காரர்கள் முன்னே ஓட, விரைந்து நடந்துவந்தது. அந்த யானை சிவகாமியாண்டாரை நெருங்கித் தண்டிலிருந்த பூங்கூடையைப் பற்றி மலர்களைச் சிந்தியது. அதைக் கண்ட பாகர்கள், யானையை வாயுவேகமாக நடத்திச் சென்றார்கள். சிவகாமியாண்டார் சினந்து வேழத்தைத் தண்டினால் புடைக்க விரைந்து நடந்தார். யானையின் கதிநடை எங்கே! சிவகாமியாண்டார் மூப்புநடை எங்கே! மூப்பால் சிவகாமியாண்டார் கால் தவறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் தரையைக் கையால் மோதி எழுந்து நின்று, ஆனிலையப்பா! நின் முடிமீது ஏறும் மலரை ஒரு யானையா மண்ணிற் சிந்துவது? சிவதா சிவதா என்று ஓலமிடலானார். அவ்வோலங்கேட்டுக்கொண்டு அவ்வழியே வந்த எறிபத்த நாயனார், சிவகாமியாண்டாரை யடைந்து பணிந்து, அக்கொடிய யாணை எங்குற்றது? என்று கேட்டார். சிவகாமியாண்டார் அந்த யானை இவ்வீதி வழியே போயிருக்கிறது என்றார். என்றதும், எறிபத்த நாயனார் காற்றெனப் பறந்து, யானையைக் கிட்டி, அதன்மீது பாய்ந்தார். யானையும் எறிபத்தர்மீது பாய்ந்தது. நாயனார் சிறிதும் அஞ்சாது யானையை எதிர்த்துத் தமது மழுவினால் அதன் துதிக்கையைத் துணித்தார். யானை கதறிக் கொண்டு கருமலைபோல் கீழே விழுந்தது. பின்னே குத்துக்கோற் காரர் மூவரையும், பாகர் இருவரையும் நாயனார் வெட்டி வீழ்த்தினார். மற்றவர்கள் விரைந்து ஓடி, பட்டவர்த் தனத்தைச் சிலர் கொன்றனர் என்று புகழ்ச் சோழ மன்னர்க்கு அறிவித்தார்கள். சோழர் பெருமான், வடவைபோற் சீறி, ஒரு குதிரைமீ திவர்ந்து புறப்பட்டார். நால்வகைச் சேனைகளும், பிறவும் அவரைச் சூழ்ந்து சென்றன. மன்னர் பெருமான், யானை இறந்துபட்ட இடத்தைச் சேர்ந்தார் யானையைக் கொன்றவர் எறிபத்தர் என்று கொள்ளா தவராய் மழுவைத் தாங்கி நிற்கும் இவரே நமது யானையைக் கொன்றவர் என்றார்கள். புகழ்ச்சோழ நாயனார் திடுக்கிட்டு, இவர் சிவனடியார்; குணத்திற் சிறந்தவர்; யானை பிழைசெய்திருத்தல் வேண்டும். இல்லையேல் இவர் அதைக் கொன்றிரார் என்று எண்ணிச் சேனைகளையெல்லாம் நிறுத்திக் குதிரையினின்றும் இறங்கி, இப்பெரியவர் யானைக்கெதிரே சென்றபோது வேறொன்றும் நிகழாதிருக்க, யான் முன்னே என்ன தவஞ் செய்தனனோ! அடியவர் இவ்வளவு முனியக் கெட்டேன்! நேர்ந்த பிழை என்னோ? என்று அஞ்சி, நாயனார் முன்னே சென்று தொழுது, யானையைக் கொன்றவர் அடியவர் என்று யான் அறியேன்; யான் கேட்டதொன்று; இந்த யானை செய்த பிழைக்கு இதனைப் பாகரோடும் மாய்த்தது போதுமா? என்று கேட்டார். நாயனார், நிகழ்ந்ததைக் கூறினார். சோழர் பெருமான், எறிபத்த நாயனாரை வணங்கிச் சிவனடியாருக்கு விளைத்த தீங்குக்கு யானையையும் பாகர்களையுங் கொன்றது போதாது; என்னையுங் கொல்லுதல் வேண்டும்; அடிகளின் மங்கல மழுவால் என்னைக் கொல்லுதல் முறைமையன்று என்று மொழிந்து, தமது உடை வாளை எடுத்து, இதனால் என்னைக் கொன்றருள்க என்று நீட்டினார். எறிபத்தர் அந்தோ! இவர் அன்பர்; இவர்தம் அன்பிற்கோ ரளவில்லை. வாளை வாங்காவிடின் தற்கொலை செய்துகொள்வர் என்று கருதி வாளை வாங்கினார். புகழ்ச்சோழர், ஆ! இப்பெரியவர் அடியேனைக் கொன்று என் பிழைதீர்க்கும் பேறு பெற்றேன் என்று மனமகிழ்ந்தார். எறிபத்தர், இத்தகை அன்பருக்கோ தீங்கு நினைத்தேன்! யான் பாவி! பாவி! முதலிலே என்னுயிரை மாய்த்துக் கொள்வதே முறை என்று உறுதிகொண்டு, வாளைக் கழுத்திலிட்டு அரியப் புகுந்தார். அக்காட்சிகண்ட அரசர் பெருமான், கெட்டேன்! கெட்டேன்!! என்று வாளையுங் கையையும் பிடித்தார். அரசர் கையைப் பற்றினரே என்று அன்பர் வருந்தா நிற்கிறார். இஃது அன்பின் பெருக்கால் நேர்ந்த இடுக்கண். இவ்விடுக்கணை மாற்ற, உங்கள் திருத்தொண்டின் மாண்பை உலகத்தவர்க்குக் காட்டவேண்டிச் சிவபெருமான் திருவருளால் இவையாவும் நிகழ்ந்தன என்று ஓர் அசரீரி வானில் எழுந்தது. எழுந்ததும், யானை, பாகர்களோடு உயிர்பெற்றெழுந்தது. எறிபத்த நாயனார் வாளை விடுத்துப் புகழ்ச்சோழ நாயனாரை வணங்கினார். புகழ்ச் சோழர் வாளை எறிந்து எறிபத்தரைப் பணிந்தார். இவரும் திருவருளை வழுத்தினர். திருவருளால் கூடையில் பூக்கள் நிறைந்தன. சிவகாமி யாண்டார் ஆனந்தவாரிதியிற் றிளைத்தனர். பட்ட வர்த்தனத்தை அழைத்துக் கொண்டு பாகர்கள் அரசர் முன்னே வந்தார்கள். எறிபத்த நாயனார் வேண்டுகோளுக் கிணங்கிப் புகழ்ச் சோழ நாயனார் யானைமீ தெழுந்தருளிச் சேனைகள் புடை சூழ்ந்து செல்ல அரண்மனையை அடைந்தார். சிவகாமியாண்டார் பூக் கூடையைத் தண்டிற் றாங்கித் தந்தொண்டின் மேல் சென்றார். எறிபத்த நாயனார் தாம் ஏற்ற திருத்தொண்டைக் குறைவறச் செய்து வாழ்ந்து, திருக்கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவரானார். 14. ஏனாதிநாத நாயனார் கொச்சகக் கலி 608. புண்டரிகம் பொன் வரைமேல் ஏற்றிப் புவி அளிக்கும் தண் தரள வெண் கவிதைத் தார்வளவர் சோணாட்டில், வண்டுஅறை பூஞ்சோலை வயல் மருதத் தண்பணை சூழ்ந்து எண் திசையும் ஏறியசீர் எயில் முதூர் எயினனூர். புண்டகரிகம் - புலிக்கொடியை. பொன்வரை - இமயமலை; திருமலை; திருமலைச் சிறப்பு: பாட்டு-1 குறிப்புப் பார்க்க. குளிர்ந்த முத்து வெண்குடை. தார் - ஆத்திமாலை. வளவர் - சோழர். வயல்கள் நிறைந்த மருதமாகிய குளிர்ந்த இடஞ் சூழ்ந்து. எயில் - மதில்சூழ்ந்த. 58. 609. வேழக் கரும்பினோடு மென்கரும்பு தண் வயலில் தாழக் கதிர்ச் சாலிதான் ஓங்கும் தன்மையதாய், வாழக் குடிதழைத்து மன்னியஅப் பொன் பதியில் ஈழக் குலச் சான்றார்;- ஏனாதி நாதனார். வேழக் கரும்பினொடு - நாணற் கரும்பினொடு. இங்கே ஏனாதி என்னும் பெயர் இயற் பெயரோ பட்டப்பெயரோ என்பது ஐயம். ஏனாதி என்பது ஒரு பட்டப் பெயர்; வேந்தனால் கொடுக்கப் படும் பட்டப் பெயர்களுள் அஃதும் ஒன்று. அஃது அரச பதத்துக்கு அடுத்தாய், அமைச்ச பதத்துக்கு மேலதாயிருப்பது என்று சொல்லப் படுகிறது. ஏனாதியைத் தளவீரருக்கு மேலதிகாரி என்பர் நீலகேசி உரையாசிரியர். நெற்றிக்கு ஏனாதிப்பட்டமும், விரலுக்கு ஏனாதி மோதிரமும் அரசனால் பேரவையில் அணியப்படுவது மரபு. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக், கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம், தானாதியாகிய தார் வேந்தர் மோதிரஞ்சேர், ஏனாதிப் பட்டத் திவன் - மேற்கோள்: தொல். புறத். சூ. 8. சோழிய ஏனாதி - மணிமேகலை: 22 சிறைசெய். 205. ஏனாதிப் பட்டங் கட்டினான் ஒருவன் - கலித்தொகை: 21. உரை. ஏனாதி திருக்கிள்ளி, மலையமான் சோழிய ஏனாதி திருக் கண்ணன் - புற நானூறு; 167 -174 உரை. ஏனாதி மோதிரஞ்செறிந்த சேனாதிபதி . . . ஏனாதி மோதிரத்தையும் செம்பொனாற்செய்த பட்டத்தையும். . . அருளி - சிந்தாமணி; 2167, 2569 உரை. பெரியபுராணத்துக் கூறப்பட்டுள்ள திருத்தொண்டர்களுள் ஒருவர்க்கு ஏனாதி நாயனார் என்ற திருநாமம் இதுபற்றியே வந்த குடிப்பெயர் போலும் என்பர் டாக்டர் சாமிநாத ஐயர் (மணிமேகலை; 22. 205; குறிப்புரை). 2. 610. தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின் நன்மைக்கண் நின்ற நலம் என் றும் குன்றாதார்; மன்னர்க்கு வென்றி வடிவாள் படை பயிற்றும் தன்மைத் தொழில் விஞ்சை யில் தலைமை சார் ந்துள்ளார். விஞ்சையில் - வித்தையில். 3. 611. வாளின் படைபயிற்றி வந்தவளம் எல்லாம் நாளும் பெருவிருப்பால் நண் ணும் கடப் பாட்டில் தாளும் தடமுடியும் காணாதார் தம்மையும் தொண்டு ஆளும் பெருமை அடித்தொண்டர்க்கு ஆக்குவார். நண்ணும் கடப்பாட்டால் - உண்டாகும் கடமையால்; உதித்த கொடைக்குண மிகுதியால் என்பர் ஆறுமுகத் தம்பிரானார். தடம் - பெருமை வாய்ந்த. காணாதார் தம்மையும் - பிரம விஷ்ணுக்களை யும். பெருமான் - சிவபெருமானின். 4. 612. நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையின் கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகும் நாள், தள்ளாத தங்கள் தொழில் உரிமைத் தாயத்தின் உள்ளான் அதி சூரன் என்பான் உளன் ஆனான். நள்ளார்களும் - பகைவர்களும். எள்ளாத - இகழாத. தள்ளக் கூடாத. தாயத்தின் - பங்காளி மரபின். 5. 613. மற்று அவனும் கொற்ற வடிவாள் படைத் தொழில்கள் கற்றவர்கள் தன்னில் கடந்துஉள்ளார் இல்லைஎனும் பெற்றிமையான் மாநிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்று, உலகில் தன்னையே சால மதித்து உள்ளான். கொற்ற - வெற்றியுடைய. தன்னினும் மேம்பட்டவர்க ளில்லை என்னுந் தன்மையால். பெருமிதம் - இறுமாப்பு. சால - அதிகமாக. 6. 614. தான் ஆள் விருத்தி கெடத் தங்கள்குலத் தாயத்தின் ஆனாத செய்தொழிலாம் ஆசிரியத் தன்மைவளம் மேல் நாளும் தான் குறைத்து மற்றவர்க்கே மேம்படலால், ஏனாதி நாதர் திறத்து, ஏலா இகல் புரிந்தான். தான்ஆள் விருத்தி கெட - தனது சீவனோபாயங் கெட. ஆனாத - குன்றாத. மேல் நாளும் - நாளுக்கு நாள். அவர்க்கே - ஏனாதி நாயனார்க்கே. நாயனாரிடத்துப் பொருந்தாத (நீதி யில்லாத) பகைமை கொண்டான். 7. 615. கதிரோன் எழமழுங்கிக் கால் சாயும் காலை மதிபோல் அழிந்துபொறா மற்றவனும் சுற்றுப் பதியோர் உடன்கூடப் பண்ணி அமர்மேல் சென்று எதிர் போர்விளைப்பதற்கே எண்ணி அது துணிந்தான். மழுங்கி - ஒளி மழுங்கி. கால்சாயும் - தோற்றங்கெடும். காலை மதி - காலைச் சந்திரன். பதியோர் - ஊரார். தன்னுடன் கூட. பண்ணி யலார் - நற்குணமுடைய ஏனாதி நாயனார். 8 616. தோள் கொண்ட வல் ஆண்மைச் சுற்றுத்தொடும் துணை ஆம் கோள் கொண்ட போர் மன்னர் கூட்டத்தொடும் சென்று, வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன் கடையின் நின்றுஅழைத் தான். கோள்கொண்ட - கொலைதொழில் கொண்ட. கோளினைக் குறித்து வந்தான் - சிந்தாமணி 264. போர்மள்ளர் - யுத்தவீரர்கள். தாயம் - உரிமை. செற்றத்தால் - நிண்டகாலப் பகைமையால். முன் கடையில் - தலைவாயிலில். 9 617. வெங்கண் புலிகிடந்த வெம்முழையின் சென்றுஅழைக்கும் பைங்கண் குறுநரியே போல் வான் படைகொண்டு, பொங்கிப் புறம்சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கண் கடைநின்று அழைத்தான்; ஒலிகேளா. வெங்கண் - தீக்கண். வெம்முழையில் - கடிய குகையில். பைங் கண் - குறுகிய பார்வையுடைய; திருட்டுப் பார்வைஎன்பர் மகாலிங்க ஐயர். அங்கண் அழகிய இடத்தையுடைய. 10 618. ஆர்கொல் பொரஅழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து சேர்வுபெறக் கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி, வார் கழலும் கட்டி, வடிவாள் பலகைகொடு, போர்முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார். பொர - போர் செய்ய. அரிஏற்றில் கிளர்ந்து - சிங்கத்தைப் போல் கர்ச்சித்து எழுந்து. உறுதியாகப் பொருந்தக் கச்சால் சேர்ந்த உடையை மேல்கட்டி. வாரினால் வீரக்கழலையும் காலில் கட்டி. பலகை - கேடகம். 11 619. புறப்பட்ட போதின் கண் போர்த்தொழில் வாள்கற்கும் விறல்பெருஞ் சீர்க் காளையர்கள் வேறுஇடத்து நின்றார், மறப்படை வான் சுற்றத்தார் கேட்டு ஓடிவந்து செறற்கு அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள். விறல் - வலிமையுடைய. முன்னர்ப் பயிற்சி பெற்று வெவ் வேறிடத்திலிருந்தவர்கள். மறம் - வீரம். செறற்கு அரும் - அடக்கி வெல்லுதற்கு அரிய. வீரர்க்கு - ஏனாதிநாத நாயனாரின். 12 620. வந்துஅழைத்த மாற்றான் வயப்புலிப் போத்து அன்னார்முன் நம் தமது வாள் பயிற்றும் நல் தாயம் கொள்ளுங்கால், இந்தவெளி மேல் கைவகுத்து இருவேம் பொருபடையும் சந்தித்து அமர்விளைத்தால் சாயாதார் கொள்வதுஎன. மாற்றான் - பகைவனாகிய அதிசூரன். வலிமையுடைய ஆண் புலி போன்ற ஏனாதி நாயனார். வெளியிடத்தில். சாயாதார் - தோல்வி யுறாதவர்கள். 13 621. என்று பகைத் தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது நன்று; உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்று, அவன் முன் சொன்ன செருக்களத்துப் போர் குறிப்பக் கன்றி இரு படையும் கைவகுத்து நேர் மலைவார். நீ கூறியது நன்று. நீ விரும்பினால் யானும் போர்புரிய நண் ணுவன். செரு - போர். கன்றி - கோபித்து. 14 அறுசீர் விருத்தம் 622. மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடை யேகொடு, மாக மருங்கினும் மண்ணினும் வல்உரு மேறுஎதிர் செல்வன ஆக, நெடும் பலகைக் குலம் ஆள்வினை வாள்உடை ஆடவர் காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர். வல் உரும் ஏறு - வலிய இடியேறுகள். மேகக் கூட்டங்களைத் தங்கள் முன்னே கொண்டு, மின்னல் வரிசைகளைத் தங்கள் நடுவே கொண்டு. மாக மருங்கினும் - விண்ணிலும். எதிராகச் செல்வன போலாக. நெடும் . . . . ஆடவர் - நெடிய கேடகக் கூட்டங்களையும் முயற்சி வாய்ந்த வாள்களையும் உடைய வீரர்கள். காகமிடைந்த - காகங்கள் நிறைந்த. இரு கைகளில் - இரண்டு பக்கங்களிலும். வீரர்கள் - இடியேறுகள்; கேடகங்கள் - மேகக்கூட்டங்கள்; வாளாயுதங்கள் - மின்னல்கள். 15 623. கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாள் ஒளி வட்டம் முனைந்திட வந்து இரு கைகளின் முந்தினர்: வேலொடு வேல் எதிர் நீள்வன: மேவிய பாதலம் விட்டு உயர் ஞாலம் உறும் பணி வீரர்கள் நாநிமிர் கின்றன ஒத்தன. மள்ளர்கள் - வீரர்கள். மெய்கள் அடக்கிய - உடம்புகளை மறைத்துள்ள. வாள் ஒளி வட்டம் முனைந்திட - மிகுந்த ஒளியுடைய கேடகங்கள் முற்பட. பணி வீரர்கள் - நாக வீரர்கள். நா நிமிர்கின்றன ஒத்தன - நாவைச் சுழற்றலை யொத்தன. 16 624. வெங்கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையினும் நேர்பவர் தங்கள் சிலைக் குலம் உந்தின தாஇல் சரங்கள் நெருங்குவ, பொங்கு சினத்துஎரி யின்புகை போகுகொடிகள் வளைத்து எதிர் செங்கண் விழிக்கனல் சிந்திய சீறு பொறிச் செலவு ஒத்தன. வேறிரு கையிலும் நேர்பவர் - வேறாகிய இரண்டு அணி வகுப்பிலும் எதிர் நின்று போர் புரிபவர்களாகிய. வெங்கண் விறல் சிலை வீரர்கள் தங்கள். சிலைக்குலம் உந்தின - வில் கூட்டங்கள் சொரிந்த. தாவில் சரங்கள் நெருங்குவ - குற்றமில்லாத அம்புகள் செல்வன. பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் - கிளர்ந்தெழுங் கோபாக்கினியினின்றும் கிளம்பும் புகைக் கொடிகளை. செங்கண் விழிக்கனல் - சிவந்த கண்களினின்றும் எழும்பிய நெருப் பானது. வளைத்து எதிர் சிந்திய - வளைத்துக் கொண்டு எதிரெதிர் சிந்திய. சீறு பொறி - கொடிய பொறிகளின்; சிறு பொறிகளின் எனினுமாம். செலவு - செல்வதை; விழுதலை. 17 625. வாளொடு நீள் கை துடித்தன: மார்பொடு வேல்கள் குளித்தன: தோளொடு வாளி நிலத்தன: தோலொடு தோல்கள் தகைத்தன: தாளொடு வார் கழல் இற்றன: தாரொடு சூழ்சிரம் அற்றன: நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில். கைகள் அற்று விழுந்து துடித்தன. குளித்தன - முழுகின; பாய்ந்து மறைந்தன. தோளொடு வாளி நிலத்தன - (அறுபட்ட) தோள்களோடு அம்புகள் தரையில் விழுந்து கிடந்தன. தோலொடு தோல்கள் தகைத்தன. கேடகங்களோடு கேடகங்கள் நெருக்கின. தாரொடு - மாலையுடன். நாளொடு சீறி மலைப்பவர் - தங்கள் வாழ்நாளுடன் கோபித்துப் போரிடுவோர். 18 626. குருதியின் நதிகள் பரந்தன குறைஉடல் ஓடி அலைந்தன; பொருபடை அறிதுணி சிந்தின; புடை சொரி குடர் உடல் பம்பின; வெருவர எருவை நெருங்கின; விசி அறு துடிகள் புரண்டன; இருபடை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை. இரத்தப் பெருக்கலாகிய ஆறுகள் ஓடின. பொருபடை அறுதுணி - போர் புரியுஞ் சேனைகளின் உடலினின்றும் அற்ற துண்டுகள், குடல்கள் பக்கத்திற் சரிந்த உடல்கள் நிரம்பிக்கிடந்தன. வெருவர எருவை - அச்சம் உண்டாகக் கழுகுகள் . விசி அறுதுடிகள் - வார் அறுந்த உடுக்கைகள். பறந்தலை - போர்களத்தில். 19 627. நீள் இடை முடுகி நடந்து, எதிர் நேர் இருவரில் ஒருவன் தொடர் தாள் இரு தொடைஅற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பு இடை அறமுன் எறிந்திட ஆளியின் அவனும் இறந்தனன்; ஆயினர் பலர் உளர் எங்கணும். நீளிடை முடுகி நடந்து - நெடுந் தூரத்தினின்றும் விரைந்து நடந்து. தொடர்ந்த இரண்டு கால்களும் தொடைகளும் அற்றுவிழ. சாரிகை முறைப்படி. தடிந்தனன் - வெட்டினான். தன்னை -வென்றவனுடைய. சிங்கத்தைப் போன்ற அவனும் இறந்து பட்டனன். ஆயினர் - இவ்வாறாக இறந்தவர். 20 628. கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேர் உரம் உருவ, நிரப்புடன் நேர்பட எதிர் எதிர் குத்தினர்: ஆர் உயிர் கழியவும் நிற்பவர், ஆண்மையின் இருவரும் ஒத்தமை போர் அடுபடை கொடு அளப்பவர் போல் பவர் - அளவிலர் பட்டனர். அயில் - வேலாயுதம். கூடி - நெருங்கி. தட்டுடன் - கேடகத் தோடு. நேர் உரம் உருவ உரப்புடன் - நேரே மார்பில் உருவும்படி பலத்துடன். உரப்புடன் - அதட்டலுடனுமாம். ஒத்திருத்தலை. போரடு . . . . .பட்டனர் - போரில் கொல்லும் படைக்கலங்களைக் கொண்டு அளந்து காண்பவரைப் போன்றவர். அளவில்லாதவர் இறந்தனர். 21 629. பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்றுஅரவு அனைய சரம்பட, வில் படை துணியவும் நின்றிலர், வெற்றிகொள் சுரிகை வழங்கினர், முற்றிய பெருவளன் இன்றியும் முன்படு கொடை நிலை நின்றிட, உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டர்கள். புற்றிலுள்ள பாம்புகளைப் போன்ற அம்புகள் பட. வில் படை துணியவும் - தங்கள் கையிலுள்ள விற்படைகள் வெட்டுப்படவும். சுரிகை வழங்கினர் - உடைவாளை (பாணங்களுக்கு எதிராக) வீசி னார்கள். முற்றிய - நிரம்பிய. இன்றியும் - இல்லாது ஒழிந்த காலத்தும். முற்படு - முதன்மை பொருந்திய; முன் செய்து வந்த எனினுமாம். நிலைநின்றிட - நிலைநிற்க. உற்றன உதவிய பண்பினர். தங்களுக்குக் கிடைத்த பொருளை (இரப்பவர்க்குக்) கொடுக்குங் குணமுடை யவர்களை. கண்டர்கள் - படைவீரர்கள். 22 630. அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள என்றுஉறு படர் சிறை சுலவு கருங்கொடி: படர்வன, சுழல்வனதுன்றலில்: விடுசுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையில் முகம் பொதி புடை மிடை கரியிடை பொங்கிய புகைவிடு தழலை நிகர்த்தன. அடல்முனை - போர்முகத்தில். மறவர் - வீரர்கள். மலர்முக நோக்கி. உறுபடர் சிறை சுலவு கருங்கொடி - வரும் படர்ந்த சிறகினை யுடையனவாய்ச் சூழுங் காகங்கள். படர்கின்றன; சுழல்கின்றன. துன்றலில் - ஆனால் நெருங்குவதில்லை. இரும்புசெய் வினைஞர்தம் - கொல்லர்களது. உலை முகத்தில் பொதிந்து பக்கத்திலே நெருங்கி யுள்ள கரியிலே பொங்கிய புகைவிடும் நெருப்பை. (வீரர்களின்) விடுசுடர் விழிகள் நிகர்த்தன. காகங்கள் துன்றலின்றிப் படர்வன வாயும் சுழல்வனவாயு மிருந்தன என்றலுமொன்று. துன்றலில் (நெருங்கக்கூடாதவாறு) விடுசுடர் விழிகள் என்று இயைத்துக் கொள்ளினுமாம். காகங்கள் துன்றலின் (நெருங்கியிருத்தலான்) என்போரு முளர். 23 631. திண்படை வயவர் பிணம் படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழிசொரியும் குடர், பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டுஎழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர்தலை நின்றனர்: விண்டுஅலர் கொடிவிடு பண்பயில் விஞ்சையர் குமரரை வென்றனர். வயவர் - வீரர்கள். புண்பட்டவழியே சொரியுங் குடர்களை. பொங்கிய - மிகுந்து நெருங்கிய. அவர்கள் முன்செயல் (தைரியம் முதலிய செயல்களினின்றும்) குன்றுதலிலராய், அம்முயற்சியில் தலைப் பட்டு நின்றார்கள். (அவர்கள்) கொடி - காற்றாடி: பட்டம். பண் பயில் - குணம் பொருந்திய. விஞ்சையர் குமரரை - விளையாட்டுப் பயிற்சியுடையவர்களாகிய சிறுவர்களை. பண்பயில் விஞ்சையர் குமரர் - இசையைப் பழகிய வித்தியாதரர்களுடைய சிறுவர்களை - ஆறுமுகத் தம்பிரானார். 24 கொச்சகக் கலி 632. இம் முனைய வெம் போரில் இருபடையின் வாள் வீரர் வெம் முனையில் வீடியபின் வீடாது மிக் குஒழிந்த தம் முடைய பல் படைஞர் பின் ஆகத் தாம் முன்பு தெம் முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார். இம்முனைய - இப்பகைமையுடைய. முனையில் - போரில். வீடிய பின் - இறந்த பின்னர். தெம்முனையில் - பகைப்புலத்தில். செயிர்த்து - கோபித்து. 25 633. வெஞ் சினவாள் தீ உமிழ, வீரக் கழல் கலிப்ப, நஞ்சுஅணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்கண் எஞ்சி எதிர்நின்ற இகல் முனையின் வேல் உழவர் தம் சிரமும் தோள் உரமும் தாளும் விழத் துணித்தார். ஞாட்பின்கண் - போரினிடத்து. இகல் - பகை. வேல் உழவர்தம் வேல்வீரர்களின். உரமும் - மார்பும். 26 634. தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப்பட்டார்: முட்டாதார் கொல் களத்தை விட்டு நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம்போல் ஆயினார். முட்டாதார் - எதிர்த்து வாராதவர்கள். ஆர்வம் முதல்குற்றம் - காமம் வெகுளி மயக்கம் முதலியன. மெய்யுணர்வுக்கு அலைப்படுத லின்மையான் நிலைப்பட்ட என்றார். காமம் வெகுளி முதலியன அலைப்படுவன என்பது வெள்ளிடைமலை. நூலுக்கேற்ற வருணனை. மெய்யுணர்வு விளங்கியதும் காமம் வெகுளி மயக்கங்கள் இரிந் தோடுத்தல் இயல்பு. மெய்யுணர்வு - ஏனாதி நாயனார். காமம் வெகுளி முதலியன - அவரை முட்டாதவர்கள். 27 635. இந்நிலைய வெங்களத்தில் ஏற்ற அழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமைக் கொண்டு, மின் ஒனிவாள் வீசி, விறல் வீரர் வெம் புலியேறு அன்னவர்தம் முன்சென்று, அதிசூரன் நேர் அடர்ந்தான். ஏற்று - எதிர்த்து. நேர் அடர்ந்தான் - நேரே எதிர்த்துப் போர் புரிந்தான். 28 636. மற்று அவர்தம் செய்கை வடிவாள் ஒளி காணச் சுற்றிவரும் வட்டணையில் தோன்றா வகைகலந்து. பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படைபிழைத்துப் பொன் தடந்தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான். செய்கையால். இடசாரி வலசாரியாக வரும் வட்டணையிலே. ஒருவருக்குந் தாம் தோன்றாதவாறு கலந்து. வாள்ஒளியும் வட்டணை யிடும் விரைவும் நாயனாரைத் தோன்றாவகை செய்தன. அடர்க்கும் பொழுது - தாக்கும்போது. தானும் படை பிழைத்து - அதிசூரனும் படையுடன் தப்பி. 29 637. போன அதிசூரன் போரில் அவர்க்கு அழிந்த மானம் மிக மீதூர மண்படுவான், கண்படான்; ஆனசெயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே, ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான். மண்படுவான் - மண்விழுவான். அதிசூரனை. இங்ஙன மாசிரியர் கூறியது இவனது வஞ்சகக் கொடுமைபற்றியென அறிக. பாயலின்றிப் பூமியிற்படுப்பவனெனக் கோடலுமாம். பூமியிலி றப்பவனெனக் கோடல் சிறப்பின்று. பழைய குறிப்புரை. கண்படான் - தூங்காதவனாய். ஏனாதி நாயனாரை வெல்வதற்கான. அலமந்து - நெஞ்சுழன்று. 30 638. சேட்டாரும் கங்குல் புலர் காலைத் தீயோனும் நாட்டாரைக் கொல்லாதே நாம் இருவேம் வேறிடத்து, வாள் தாயம் கொள்போர் மலைக்க வருக எனத் தோட்டுஆர் பூந்தாரர்க்குச் சொல்லிச்செல விட்டான். சேட்டாருங் கங்குல் - நீண்ட இராக்காலம்; சேடு ஆரும் - நீடித்தல் நிறைந்த. துக்கமுடையோர்க்கு இரவு நீடித்தல் இயல்பு. வாள்தாயம் - வாள்தொழில் உரிமை. தோடு ஆர் பூந்தாரார்க்கு - இதழ் களுடைய பூமாலை யணிந்த ஏனாதி நாயனார்க்கு. 31 639. இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார் அவ்வாறு செய்தல் அழகிது என அமைந்து, கைவாள் அமர்விளைக்கத்தான் கருதும் அக்களத்தே, வெவ்வாள் உரவோன் வருக என மேற்கொள்வார். தான் - (அதிசூரன்.) கொடிய வாளேந்திய வலிமையுடைய அதிசூரன். மேற்கொள்வார். அவன் சொல்லை ஏற்று ஒப்புக் கொண்டார். 32 640. சுற்றத்தார் யாரும் அறியா வகை, சுடர் வாள் பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து, மற்றவன் முன்சொல்லி வரக் குறித்த அக்களத்தே, பற்றலனை முன் வரவு பார்த்துத் தனி நின் றார். பொற்பலகையும் - அழகிய கேடகத்தையும். பற்றலனை முன் வரவு - பகைவனாகிய அதிசூரன் வரவை. 33 641. தீங்கு குறித் துஅழைத்த தீயோன் திருநீரு தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் ஆங்குஅவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப் பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான். பாங்குடன் திருநீற்றை முன்னே அணிந்தறியாதவன். 34 642. வெண்ணீறு நெற்றி விரவப் புறம் பூசி, உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன்கொண்டு, வண்ணச் சுடர் வாள் மணிப்பலகை கைக்கொண்டு, புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம்புகுந்தான். மெய்ப்பொருள் நாயனார் புராணம் 7ம் பாட்டைப் பார்க்க. 35 643. வென்றி மடங்கல் விடக்குவர முன் பார்த்து நின்றாற்போல் நின்றார் நிலைகண்டு தன் நெற்றி சென்று கிடைப்பு அளவும் திண் பலகையில் மறைத்தே முன் தனிவீரர்க்கு எதிரே மூண்டான்; - மறம் பூண்டான். மடங்கல் - சிங்க ஏறு. விடக்குவர - பிராணி வருதலை; விடக்கு - மாமிசம்: ஆகுபெயர். சென்று அவரைக் கிட்டும் வரைக்கும். மூண்டான் - முடுகி நடந்தான். மறம் - பலத்தை. 36 644. அடல் விடைஏறு என்ன அடர்த்தவனைக் கொல்லும் இடைதெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர் புடைபெயர்ந்த மாற்றான், பலகை புறம்போக்கக் கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார். பாய்ந்து கொல்லும் இடப ஏற்றைப்போல. அடர்த்து - நெருக்கித் தாக்கி. புடைபெயர்த்த மாற்றான் - தம் அருகே வந்த பகைவன். 37 645. கண்ட பொழுதே; கெட்டேன்; முன்பு இவர் மேல் காணாத வெண் திருநீற்றின்பொலிவு மேல் கண்டேன்: வேறுஇனி என்? அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன் என்று. கெட்டேன் - ஐயோ. மேற்கண்டேன் - இப்பொழுதே பார்த்தேன். 38 646. கைவாளுடன் பலகை நீக்கக் கருதி, அது செய்யார், நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்குஎன்று, இரும்பலகை நெய்வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார். இரும் - பெரிய. எண்ணெய் பூசியுள்ள வாளுடன். 39 647. அந் நின்ற தொண்டர் திருவுள்ளம் ஆர் அறிவார்? முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான் இந் நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள, மின் நின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார். அங்கு அவ்வாறு நின்ற. மெய்ப் பொருள் நாயனார் புராணம் 15ம் பாட்டையும் குறிப்பையும் பார்க்க. அறிவாராய் நாயனார்க் கருள்புரியச் சிவபெருமான் தாமே காட்சி வழங்கினார். 40 648. மற்று, இனி நாம் போற்றுவதுஎன்? வானோர் பிரான் அருளைப் பற்றலர் தம் கைவாளால் பாசம் அறுத்தருளி, உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப் பொன் தொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார். பற்றலர் - பகைவர். உற்றவரை - திருவருளை அடைந்த ஏனாதி நாயனர்ரை. உடன் - தம்முடன். 41 649. தம் பெருமான் சாத்தும் திரு சீற்றுச் சார்பு உடைய எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி, உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண் அப்பும் நம் பெருமன் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம். இறைஞ்சி - வழிபட்டு. உம்பர்பிரான் - தேவர் தலைவன். சிவ பெருமான். 42 ஏனாதிநாத நாயனார் ஏனாதிநாத நாயனார் சோழநாட்டிலுள்ள எயினனூரில் தோன்றிய ஈழ குலச் சான்றோராவர். அவர், திருநீற்றினிடத்துப் பேரன்பு வாய்ந்தவர். அரசர்களுக்கு வாள்வித்தை பயிற்றுவிப்பது அவர்தந் தொழிலாகும். அதனால் கிடைக்கும் பொருளைச் சிவனடி யார்களுக்குக் கொடுத்து வருவது அவர்தந் திருத்தொண்டாகும். அவர் காலத்திலே அதிசூரன் என்னும் மற்றுமொரு வாள்வீரன் இருந்தான். அவனது தொழிலும் வாள்வித்தை பயிற்றுவிப்பதாகும். ஏனாதி நாயனார் தொழில் முறையில், தன்னினும் நலம் பெற்று வருதல் கண்டு, அவன் அழுக்காற்றால் புழுங்கலானான். அவன் ஒரு நாள், தன் மாணாக்கர்களும் மற்றவர்களுந் தன்னைச் சூழ்ந்துவர, ஏனாதி நாயனார் இல்லம் போந்து, தலைவாயிலில் நின்று அவரைப் போருக்கழைத்தான். அவன் அழைத்தலைக் கேட்ட நாயனார், போர்க்கோலம் தாங்கிப் புறப்பட்டார். அவர்தம் மாணாக்கர்களும், ஊரவர்களும், மற்றவர்களும் படை தாங்கி அவரைச் சூழ்ந்து தொடர்ந்தார்கள். அதிசூரன், நாயனாரைப் பார்த்து இவ்வெளியிலே அமர் செய்வோம். வெற்றியடைவோரே வாள்வித்தை கற்பிக்கும் உரிமை ஏற்றல் வேண்டும் என்று கூறினார். அதற்கு நாயனாரும் உடன் பட்டனர். உடனே இருவருந் தத்தம் படைகளுடன் அவ்வெளி நோக்கி நடந்து போர் புரியலானார். இறுதியில் அதிசூரன் புறமுது கிட்டு ஓடினான். ஓடிய அவன், அன்றிரவு முழுவதும் உறக்கமின்றித் துயர்க்கடலில் அழுந்தி, ஏனாதி நாயனாரை எப்படிக் கொல்வது என்று எண்ணி எண்ணி, முடிவில் வஞ்சனை வழியில் கொல்லுதல் வேண்டும் என்று உறுதி கொண்டான். பொழுது புலர்ந்ததும், போருக்கு வேறு எவரையும் அழைத்துச்செல்லாமல், ஏனாதி நாயனாரும் தானும் மட்டும் தன்னந் தனியராய்ப் போர் புரிதல் வேண்டும் என்று ஓர் ஒற்றன் வாயிலாக ஏனாதி நாயனார்க்குத் தெரிவித்தான். நாயனார் அதற்கும் உடன்பட்டு, ஒருவருக்குந் தெரியாமல் அதிசூரன் குறிப்பிட்ட போர்க்களம் போந்தார். என்றும் வெண்ணீறணியாத அதிசூரன், அன்று புண்ணிய நீற்றை நெற்றியிலணிந்து, போர்க்களம் நோக்கினான். அங்கே, சிங்க ஏறுபோல் உலவும் நாயனாரை நெருங்குமட்டும் அதிசூரன் கேடகத்தால் தன் நெற்றியை மறைத்துச் சென்றான். ஏனாதி நாயனார் அதிசூரன் மேல் பாய அடிபெயர்த்தார். அவ்வேளையில், அதிசூரன், முகமூடி போன்ற கேடகத்தை விலக்கினான். அவன் நெற்றியில் புண்ணிய நீறு பொலிகிறது! அப்பொலிவு கண்ட நாயனார். கெட்டேன்! இவர் நெற்றியிலே நீற்றினை இன்று கண்டேன். இவர் சிவபிரான் தொண்டராயினார் என்று நினைத்து வாளையுங் கேடகத்தையும் விட்டெறியக் கருதினார். பின்னே நிராயுதனைக் கொன்றார் என்னும் பழி இவரை அடர்க்கும் என்றஞ்சி, வாளையுங் கேடகத்தையும் நீக்காது, போரிடுவார் போல நடித்தனர். அப் பொழுது அவர் முன்னின்று பாதகன், தன் கருத்தை முற்றுவித்தான். சிவபெருமான் ஏனாதிநாத நாயனார்முன் எழுந்தருளித் தம்மை என்றும் பிரியாப் பெருவாழ்வை, அவருக்கு அளித்து மறைந் தருளினார். 15. கண்ணப்ப நாயனார் அறுசீர் விருத்தம் 650. மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்; நாவலர் புகழ்ந்து போற்ற நல்வளம் பெருகி நின்ற பூஅலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு. பகைவர்களது முப்புரங்களை யழித்த. வேதநெறி சத்தியநெறி. அந்நெறி ஆண்டவனால் உயிர்களின் பொருட்டுக் காக்கப்படுவது. இதனை வேத வாய்மைக் காவலர் என்றார். விடையவரும் காவலரு மாகிய சிவபெருமான் எந்தருளியுள்ள திருக்காளத்தி. முப்புரங்கள் மும்மலங்களைக் குறிப்பன. தடுத்தாட்கொண்ட புராணம். 44ம் பாட்டின் குறிப்பைப் பார்க்க. மும்மலங்கள் நீங்கப் பெற்றதும் அறம் நிலைபெறும். அவ்வற நிலையை ஈண்டு விடையர் என்றார். விடை, அறத்துக்கு அறிகுறி. அறநிலையில் மெய்யறிவு விளங்குதல் இயல்பு. ஈண்டு வேதம் என்பது மெய்யறிவை உணர்த்துவது. வேதம் வித் என்னும் தாதுவினடியாகப் பிறந்தது. வித் - அறிவு. மும்மலம் அழியவும் அறம் நிலைக்கவும் மெய்யறிவு விளங்கவும் உண்மை கடைப்பிடித்தல் வேண்டற்பாலது. அவ்வுண்மை கடைப்பிடித்தல் ஈண்டு வாய்மை எனப்பட்டது. ஆகவே, உயிர்களின் நலத்துக்கு வாழ்வில் அடிப்படையாக வேண்டற்பாலது சத்தியமாதலின், அஃது ஆண்டவனால் சிறப்பாகக் காக்கப்படுகிறதென்க. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற - செய்யாமை செய்யாமை நன்று - திருக்குறள்: 293. காளமும் (சிலந்தியும் பாம்பும்) அத்தியும் (யானை யும்) ஆண்டவனைப் பூசித்துப் பேறுபெற்ற இடம் திருக்காளத்தி. உயர்திணை உயிர்கட்கல்லாது அஃறிணை உயிகட்கும் ஆண்டவன் அருள்சுரப்பவன் என்பதைத் திருக்காளத்தி நினைவூட்டா நிற்கிறது. கண்ணப்பர் அத்திருக்காளத்தியில் கண்ணையப்பிப் பேறு பெற்றமையான், திருக்காளத்திக் கண்ணப்பர் என்னப் பெற்றார். நாவலர் - நாவில்வல்ல புலவர்கள். வாவிகளும் (தடாகங்களும்) சோலைகளும். பொத்தப்பி நாடு கண்ணப்பர் திருநாடென்க. 1 651. இத்திரு நாடு தன்னில் இவர் திருப்பதி யாது? என்னில், நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர், மத்தவெங் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்தபேர் அரணம் சூழ்ந்த முதுபதி உடுப்பூர் ஆகும். நிலத்தில அருவிச் சாரல் நீள்வரை சூழ்ந்த பாங்கர் - முத்துக் களைக் கொழித்து இழிதரும் அருவிகள் பொருந்திய சாரல்களை யுடைய மலைப்பக்கங்களில். மத்தவெங் களிற்றுக் கோட்டு - மதத்தையுடைய கொடிய யானைக் கொம்புகளால். பேர் அரணம் ஒத்த - பெரிய மதிலையொத்த. வன் தொடர் வேலி கோலி - மிகப் பிணிப்புடைய தொடர்வேலி வளைந்து. முதுபதி - பழம்பதி. வேலி கோலி ஒத்த (பொருந்திய) பேரரணஞ் சூழ்ந்த என்னலு மொன்று. 2 652. குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த வன்திரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எங்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும். குன்றவர் - வேடுவர்கள். கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த - வளைந்த காதுளையுடைய நாய்களைக் கட்டிய. வன்திரள் விளவின் கோட்டு - வன்மை வாய்ந்த திரண்ட விளாமரக் கொம்புகளின். வார் - நீண்ட; பெரிய. மருங்கு - பக்கங்களில். தூங்க - தொங்க. எண்கும் - கரடியும். கடமையும் - காட்டுப் பசுவும். மானின் - மானுமாகிய இவைகளின். பார்வை - பார்வை மிருகங்கள்; மிருகங்களைப்போலச் செயற்கையால் செய்யப்படுவன: அவைகளைக் காட்டி மிருகங்களை வயப்படுத்துவது வழக்கம். முன்றில் - முற்றத்தில். ஐவனம் - மலை நெல். இதற்கு ஐவனவெண்ணெல் என்னும் பெயருமுண்டு. ஐவனமும் வெண்ணெல்லும் வெவ்வேறென்று கூறுதலும் ஒன்று. தேனுகு மடையை மாற்றிச் செந்தினைக் குறவர் முந்தி, வானநீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ - கம்ப இராமாயணம்: வரைக்காட்சி உணங்கும் - உலர்ந்துகொண்டிருக்கும். 3 653. வன் புலிக் குருளையோடும் வயக்கரிக் கன்றி னோடும் புன் தலைச் சிறு மகார்கள் புரி ந்துஉடன் ஆடல் அன்றி, அன்பு உறு காதல் கூர அணையும் மான் பிணைகளோடும் இன்புஉற மருவி ஆடும் எயிற் றியர் மகளிர் எங்கும். புலிக்குருளை - புலிக்குட்டி. வயக்கரி - வெற்றியானை. புன்தலை சிறு மகார்கள் - புல்லிய தலையுடைய (எண்ணெய் தோயாமையால் வெப்பத்தால் உலர்ந்து சுண்டிய மயிர்களை யுடைய; நன்றாக முளையாத மயிர்களையுடைய) வேடப்பிள்ளைகள். புரிந்து - விரும்பி. மான் பிணைகளோடும் - பெண்மான்களோடும். மருவி - தழுவி. எயிற்றியர்மகளிர் - வேடப் பெண்கள். வேடச் சிறுமிகள் தினை முதலிய உணவுகளை மான்களுக்குக் கொடுப்பது வழக்கம். அவ்வழக்கால் அப்பெண்களைக் கண்டதும் மான்கள் தாமே அணையும் என்க. மான்களின் கண்களைப்போல வேடப் பெண்களின் கண்களும் தோற்றலால் அவைகள். அவர்களைத் தங்களினமெனக் கருதித் தாமே அணையும் என்றும் கூறலாம். 4 654. வெல் படைத் தறுகண் வெஞ் சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறிகுத்து என்று ஆர் த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில் அரித் துடியும் கொம்பும் சிறுகண் ஆகுளியும் கூடிக் கல் எனும் ஒலியின் மேலும் கறங்குஇசை அருவி எங்கும். பகைவர்களை வெல்லும் ஆயுதங்களையும் வன்கண்மை யையும் வெஞ்சொல்லையுமுடைய. ஆர்த்துக் குழுமிய - முழங்க அதனால் நிறைந்த. சில்லரி துடியும் - சில பரல்களையுடைய உடுக் கையும். (அரி - வெண்கல முதலியவற்றால் சிறிய மணிகள் போல் செய்யப்பட்டுச் சிலம்பு முதலியவற்றுள் இடப்படுவது). கொம்பு - ஊது கொம்புவாத்தியமும். சிறுகணாகுளியும் - சிறிய கண்களை யுடைய பறையும். கறங்கு - ஒலிக்கும். அருவியோட்டத்தில் இசை முழங்கல் இயல்பு. கால்பொர நூடங்கல் கறங்கிசை அருவி - நின்மால் வரை மலிசுனை - கலித்தொகை. 45 - 8. 5 655. ஆறுஅலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட வேறுபல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அள்றி, ஏறுடை வானம் தன்னில் இடிக்குரல் எழிலி யோடு மாறுகொள் முழக்கம் காட்டும் மதக்கைமா நிரைகள் எங்கும். ஆறு அலைத்து உண்ணும் - வழிபறித்துச் சீவிக்கும். அயல்நாடு போந்து கொள்ளையுட்டுக் கொண்டுவந்த வேறுபட்ட பல நிறங்க ளோடு கூடிய விலங்குகளே யல்லாமல். ஆன் நிரைகள் எனக் கொண்டு பசுக்கூட்டங்கள் என்று பொருள் கூறினும் பொருந்தும். ஏறு உடை - உயர்ச்சியுடைய. எழிலியோடு - மேகங்களோடு. மதக் கைம்மா நிரைகள் - மதம் பொழியும் துதிக்கையுடைய யானைக் கூட்டங்கள். 6 656. மைச்செறிந்து அனைய மேனி வன்தொழில் மறவர்; தம்பால் அச்சமும் அன்பும் என்றும் அடைவு இலார்; உடையவன் தோலார்; பொச்சையின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் நச்சுஅழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான். மைசெறிந்து அனைய - மைக்குழம்பு பூசினாற் போன்ற; குழம்பு திரண்டாற் போன்ற. தம்மிடத்தில் அச்சமும் பிறவுயிர்மேல் அருளும். பொச்சையின் நறவும் - மலைத்தேனையும். பொச்சை - காடுமாம். ஊனின் புழுகேலும் - ஊன்சோற்றையும். நச்சு அழல் பகழி - நஞ்சனைய நெருப்பை உமிழும் அம்புகளையுடைய. மறவராகிய வேடர்க்கு. 7 657. பெற்றியால் தவம்முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான்; கொடுமையே தலைநின்று உள்ளான் வில்தொழில் விறலின் மிக்கான்: வெஞ்சின மடங்கல் போல்வான்; மற்று அவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள். பெற்றியால் - இயல்பால்; தன்மையால்; பெருமையால். (கண்ணப்பரைப் புதல்வராகப் பெறுந்தன்மையால்). மடங்கல் - ஆண் சிங்கம். குறிச்சி - குறிஞ்சி நிலத்து ஊர். இங்கே இல்லம்: ஆகுபெயர். 8 658. அரும் பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல்குடியில் வந்தாள்; இரும் புலி எயிற்றுத் தாலி இடைஇடை மனவு கோத்துப் பெரும்புறம் அலையப் பூண்டாள்; பீலியும் குழையும் தட்டச் சுரும்பு உறுபடலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள். அரும்பெறல் - பெறுதற்கரிய. மறவர் தாயத்து - வேடர் மரபிலே, ஆன்றதொல் குடியில் - பழமை நிறைச்த குடியில். பெரிய புலிப்பல் தாலியின். புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி - அகநானூறு 8. மனவு - சங்குமணிகளை; பல கறைகளை. புறம் - முதுகின் பக்கத்து; பிடரியில். பீலியும் குழையும் தட்ட - மயிற் பீலிகளும் தழைகளும் நெருங்க. சுரும்பு உறுபடலை முச்சி - வண்டுகள் மொய்க்கும் மாலையை யணிந்த மயிர் முடியையுடைய. படலை - மாலை; இலைமாலை. பைந்தளிர்ப் படலை சிலப்பதி காரம்: 4 அந்தி. 41. முறிமிடைபடலைமாலை - சிந்தாமணி: 483 சூர் அரிப்பிணவு - அச்சமூட்டும் பெண் சிங்கத்தை. 9. 659. பொரு அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு, இனிப் புதல்வர்ப் பேறே அரியது என்று எவரும் கூற, அதன் படு காத லாலே, முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று, பரவுதல் செய்து, நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார். பொருவரும் - ஒப்பற்ற. இவர்க்கு - நாகனுக்கும் தத்தைக்கும். அதற்படும் காதலாலே - அப்புத்திரப் பேற்றின் மீதுள்ள விருப் பத்தால். முருகு அலர் அலங்கல் செவ்வேள் - மணங்கமழும் கடப்ப மாலையை யணிந்து செவ்வேலை ஏந்திய. முருகவேளைப் பற்றி முருகன் அல்லது அழகு என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன்; விளக்கம் அதன்கண் காண்க. முன்றில் - சந்நிதியில்; திருமுன் - பராய்க்கடன் - பரவுக்கடன். 10 660. வாரணச் சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பு அணி கதம்பம் நாற்றிப் போர் அணி நெடுவே லோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் பேர் அணங்கு ஆடல் செய்து, பெருவிழா எடுத்த பின்றை. வாரணச் சேவல் - சேவற்கோழி. வரி - புள்ளி; சித்திரமுமாம். சேவல் - முருகன் கொடி. மயில் - முருகன் வாகனம். தோரணங்களாக மணிகளை. சுரும்பு அணி கதம்பம் நாற்றி - வண்டுகள் வரிசையாக மொய்த்துள்ள கடப்ப மாலைகளைத் தொங்கவிட்டு. குரவை தூங்க - குரவைக்கூத்து நிகழ்ந்துவர. குரவை - கைகோத்தாடுங் கூத்து. குரவை என்பது எழுவர் மங்கையர், செந்நிலைமண்டலக் கடகக் கைகோத்து, அந்நிலைக் கொப்பநின்றாடலாகும் - சிலப்பதிபகாரம்: பதிகம் 77. மேற்கோள், குரவை என்றது, காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள்பாட்டாக எழுவரேனும் எண்ம ரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைத்தாடுவது - சிலப். 3. அரங் 12. உரை. பேர் அணங்கு ஆடல் செய்து - பெரிய தேவராட்டியை வெறியாட்டயர்வித்து; பேரழகுவாய்ந்த வெறியாட்டைச் செய்து என்னலுமாம். 11. 661. பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர் தம் பதியாம் நாகற்கு எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன மயிலுடைக் கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை அயில் உடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே நெருங்கிய தழும்புகள் விளங்கிய உடலையுடைய வேடர் களுக்குத் தலைவனாகிய. எயில்மதில்கள். எந்தையார் - சிவ பெருமானின். கொற்ற ஊர்தி - வெற்றி பொருந்திய வாகனமாகிய மயிலையுடைவராய். வரைஉரம் - கிரவுஞ்ச மலையின் மார்பைப் பிளந்த; வலிமையை யழித்த எனினுமாம். அயில் - வேல். வென்றி அண்ணலார் - முருகப்பெருமான். 12 662. கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட ஊனம் இல் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட் டோடும் ஆன அத் திங்கள் செல்ல, அளவு இல்செய் தவத்தி னாலே பால் மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது. கானவர் - வேடர். வெறியாட்டோடு ஊனமில் பலிகள் முதலிய செய்யத்தக்க கடன்களைச் செய்து. வெறியாடல் - தெய்வமேறியாடல்; சிலப்பதிகாரம் குன்றக் குரவைப் பார்க்க. ஆன... செல்ல - ஆகிய. அவ்வம் மாதங் கழிய. பான்மதி - வெள்ளி சந்திரனை. உவரி - கடல். 13 663. கரிப்பரு மருப்பின் முத்தும் கழைவிளை செழுநீர் முத்தும் பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே அன்றி, வரிச்சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்; அரிக் குறுந்துடியே அன்றி, அமரர் துந்துபியும் ஆர்த்த. கரிபரு மருப்பின் - யானைகளின் பருந்த கொம்பின். கழை விளை - மூங்கிலில் உண்டாகும். நீர் - ஒளியுடைய. நெடு நீர்வார் குழை (நெடுநெல்வாடை 139) - இதற்குப் பெரிய ஒளி யொழுகின மகரக்குழையை என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை கண்டி ருத்தல் காண்க. பொருப்பினின் - மலையில் உண்டாகும். மணியுமாக. முத்துடை மருப்பின் மழகளிறு - பதிற்றுப்பத்து: 23. 3. தக்க முத் திரண்டு வேறு தலசமே சரச மென்ன - இக்கதிர் முத்தந் தோன்றும் இடன்பதின் மூன்று சங்கம் - மைக்கரு முகில்வேய் பாம்பின் மத்தகம் பன்றிக் கோடு - மிக்கவெண் சாலி இப்பி மீன்தலை வேழக் கன்னல். கரிமருப்பு ஐவாய் மான் கைகற்புடை மடவார் கண்டம் இரு சிறைக் கொக்கின் கண்டம் எனக் கடை கிடந்த மூன்றும் அரியன ஆதிப் பத்து நிறங்களும் தங்கட்கு உரியன நிறுத்தவாளே ஏனவும் உரைப்பக் கேண்மின் - திருவிளையாடல் புராணம்: மாணிக்கம் விற்றபடலம் 53 - 55. வரிச் சுரும்பு - வரிவண்டு. அரிக் குறுந்தடி - துன்பம் செய்யும் வளை தடி. 14 664. அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம் பெருவிழா எடுத்து மிக்க பெருங் களி கூருங் காலைக் கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை பொருவரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான். வரை - மலை. ஆயம் - திரள்; சனக்கூட்டம். கரிய மலை. கரிய மேகத்தைத் தாங்கியதுபோல. 15. 665. கருங்கதிர் விரிக்கும் மேனிக் காமரு குழவி தானும் இரும்புலிப் பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி, அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பு அரும் பெருமை காட்டித் தரும்குறி பலவும் சாற்றும் தன்மையின் பொலிந்து தோன்ற. காமரு - விருப்பம் மருவிய. காமர் - அழகுமாம். காமம் வரு மென்பது விகாரத்தால் காமருவென நின்று. கண்டார்க்கு விருப்பம் வரும் என்பதாயிற்று. காமம் காமரென விகாரம் - அடியார்க்கு நல்லார் உரை. சிலப்பதிகாரம்: 4. அந்தி. 40: கடலாடு: 86. இரும்புலிப் பறழின் ஓங்கி - பெருமை பொருந்திய புலிக்குட்டியைப்போல வளர்ந்து. இறவுளர் அளவேயன்றி - வேடர்கள் மட்டில்லாமல். நற் குறிகள் பலவும் பலரறிய அமையுந் தன்மையில் தோன்ற. 16 666. அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும் திண்ணன் என்று இயம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்; புண்ணியப் பொருளாய் உள்ள பொருஇல் சீர் உருவினானைக் கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே. அண்ணலை - பெருமையிற் சிறந்த குழவியை. அருமையால் - கூடாமையால். திண்சிலை - வலிய வில்லினையுடைய. ஆர்த்தார் - ஆரவாரித்தார்கள். பொருவில் - ஒப்பில்லாத. அணியாம்படி. தங்கள் மரபிற்குரிய அணிகள் பல. 17. 667. வரைஉறை கடவுள் காப்பு மறக்குடி மரபில் தங்கள் புரைஇல் தொல்முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து, விரை இளந்தளிரும் சூட்டி, வேம்பு இழைத்து இடையே கோத்த அரைமணிக் கவடி கட்டி, அழகுஉற வளர்க்கும் நாளில். வரையுறை கடவுள் காப்பு - முருகன் காவலாக. மறக்குடி - வேட்டுவக்குடி. புரையில் - குற்றமில்லாத. தொன்மை - பழமை. விரை - வாசனையுடைய. வேம்பு இழைத்து - மலைவேப்பங் கொட்டை களை அலங்கரித்து; வேப்பங்கோலை (துண்டு துண்டாகத் தறித்து) இழைத்து என்போருமுளர். கவடி - பலகறை. அரைமணியுடன் கவடி கட்டி. மணிக்கவடி அரையில் கட்டி என்றலுமொன்று. 18 668. வருமுறைப் பருவம் தோறும் வளம்மிகு சிறப்பில் தெய்வப் பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கு எல்லாம் திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழுச்சி செய்தே, அருமையின் புதல்வர்ப் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார். சப்பாணி முதலிய பருவங்கள்தோறும். தெய்வத்துக்குப் பெருமை பொருந்திய பொங்கல் சோறு முதலியன. தொக்க - நெருங்கிய. திருமலி துழனி - மங்கல ஒலிகள். களி - களிப்பு; கள் ளாட்டு. உய்த்தார் - நடாத்தினர். 19 669. ஆண்டுஎதிர் அணைந்து செல்ல, விடும் அடித் தளர்வு நீங்கிப் பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப் புலிஉகிர்ச் சுட்டி சாத்தி மூண்டு எழு சினத்துச் செங்கண் முளவுமுள் அரிந்து கோத்த நாண் தரும் எயிற்றுத் தாலி நலம் கிளர் மார்பில் தூங்க. ஒரு வருஷம் ஆகத் தளர்நடை நீங்கி. பூண் - ஆபரணம். குஞ்சி - தலைமயிரிலே. புலிஉகிர் - புலிநகத்தால் செய்யப்பட்ட; புலி நகம் பதித்த. முளவு - முள்ளம் பன்றியின். நாண்தரு எயிற்றுத் தாலி - கயிற் றில் கட்டப்பட்ட புலிப்பல் மாலை. கிளர் - விளங்கும். தூங்க - அசைய. 20 670. பாசு ஒளி மணியொடு ஆர்த்த பல்மணிச் சதங்கை ஏங்கக் காசொடு தொடுத்த காப்புக் கலன்புனை அரைஞாண் சேர்த்தித் தேசுடை மருப்பின் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன, மாசுஅறு கோலம் காட்டி, மறுகிடை ஆடும் நாளில். பாசொளி மணியோ டார்த்த - பசுமை ஒளிவீசும் நீலமணி யோடு கோத்த. ஏங்க - ஒலிக்க. காசொடு . . .புனை - செப்புக் காசுடன் சேர்த்த காவற்கலன் (தாயித்துக் கூடு) புனைந்த. ஒளியுடைய யானைக் கொம்பால் செய்யப்பெற்ற தண்டையும். செறிமணி குதம்பை - மணி யிழைத்த காதணியும். குதம்பை - காதில் தொங்க அணியும் ஓர் ஆபரணம். கடிப்பிணை. மறுகிடை - தெருவில். 21 671. தண்மலர் அலங்கல் தாதை தாய்மனம் களிப்ப வந்து புண்ணியக் கங்கை நீரில் புனிதம் ஆம் திருவாய் நீரில் உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ்சொல் வண்ண மென்பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார். அலங்கல் - மாலை. கங்கை நீரில் - கங்கை நீரைப் பார்க்கிலும். (பின் நிகழ்ச்சிக் குறிப்பு) தீம் - இனிய. 22 672. பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழைஎனப் பொன்கை நீட்டப் பரிவுடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக்கொண்டு ஓச்ச, இருசுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில்வளர் கண் நீர் மல்கி, வருதுளி முத்தம், அத்தாய். வாய்முத்தம் கொள்ள மாற்றி. பார்வை மிருகமாகிய புலியின். பேழ் - பிளந்த. முழை - சிறு குகை; பொந்து. ஓச்ச - ஒட்ட. இருசுடர்க்கு உறுகண் தீர்க்கும் - சிவ பிரானுடைய சோம சூரியர்களென்னும் இரண்டு கண்களின் துன்பத்தைத் தீர்க்கப்போகும். எழில் - அழகு. மல்கி - பெருகி. 23 673. துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப் பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல் அடிச் சிறு தளிரால் சிந்தி, அருகுஉறு சிறுவ ரோடும் குடிச்செறி குரம்பை எங்கும் குறு நடைக் குறும்பு செய்து. துடிக்குறடு - உடுக்கை வடிவாய்ச் செய்த மரக் கட்டையை; தோலில்லா உடுக்கையை. கட்டப்பட்ட நாயின் கயிற்றைச் சுற்றி. எயினப் பிள்ளைப் பேதையர் - வேடச் சிறுமிகள். இழைத்த வண்டல் - கட்டிய சிறுவீடுகளை. குடிச்செறி குரம்பை - குடி நெருங்கிய குடிசைகள். 24 674. அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் வனைதரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்தரோடும் சினை மலர்க் காவுள் ஆடிச் செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த புனை மருப்பு உழலை வேலிப் புறச் சிறு கானில் போகி. வனைதரு - செய்யப்பெற்ற. வடிவு ஆர் கண்ணி - அழகு நிறைந்த கொண்டை மதலை யணிந்த. வார்கண்ணி எனக் கொண்டு வாரையும் (வலையையும்) கண்ணியையும் எடுத்துக் கொண்டு எனினும் பொருந்தும். சினை மலர் காவுள் - கிளைகளில் மலர் களையுடைய சோலைகளில். செறி குடி - நெருங்கிய குடிகளை ளுடைய. புனை மருப்பு உழலை வேலிப்புறம் - யானைக் கொம் பினால் கோலப்பெற்ற உழலை வழியையுடைய வேலிப்புறத்தே யுள்ள. (உழலை - போவோர் வருவோர்க்கு இடந் தந்து பின் உழன்று தன் நிலையில் நிற்கும் மரம்). 25 675. கடுமுயல் பறழி னோடும் கான ஏனத்தின் குட்டி கொடிவரிக் குருளை, செந்நாய், கொடுஞ் செவிச் சாபம் ஆன முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத் திடுமரத் தாளில் கட்டி வளர்ப்பன எண் இலாத. கடுமுயல் பறழினோடும் - அதிவினையினையுடைய முயற் குட்டியுடனும். கான ஏனத்தின் - காட்டுப் பன்றியின். கொடுவரிக் குருளை - வளைந்தவரியினையுடைய புலிக்குட்டியும். செந்நாய் கொடுஞ் செவிச் சாபமான - செந்நாயின் கொடிய செவிகளை யுடைய குட்டியும் ஆகியவற்றை. சாபம் - சிங்கக் குட்டி என்பது பழைய குறிப்புரை. சரபமான என்னும் பாடங்கொண்டு, கடுமுயல் . . . . செந்நாய் ஆகியவற்றைச் சரபத்தைப் போல ஓடிப் பற்றி என்று பொருள் என்றலுமொன்று. இட்டு வளர்க்கும் மரத்தடியில். 26 676. அலர்பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக் குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு, கண் துயிற்றிக் கங்குல் புலரஊன் உணவு நல்கிப் புரி வினையாட்டின் விட்டுச் சிலமுறை ஆண்டு செல்லச் சிலை பயில் பருவம் சேர்ந்தார். அலர் பகல் - உதயமாகிய பகல். அந்தி ஐயவி புகையும் ஆட்டி - அந்தி வேளையில். கடுகின் புகையால் திருஷ்டி சுற்றி. ஊட்டி - உணவு ஊட்டி. கங்குல் புலர - பொழுது விடிய. 27 677. தந்தையும் மைந் தனாரை நோக்கித் தன் தடித்த தோளால் சிந்தை உள்மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி முந்தை அத்துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான் புல்லி - தழுவி. வந்த நாள் குறித்ததெல்லாம் - விற்பயிற்சிக்குரித் தாக உற்ற நாள் முதலியன குறிக்கப்பெற்ற எல்லாம். 28 678. வேடர் தம் கோமான் நாகன் வென்றி வேள் அருளால் பெற்ற சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு, மாடு உயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம். வேள் - முருகக் கடவுள். சேடரின் - அறிவுடையோரினும்; ஆதி சேடரினும். ஆடு இயல் துடியும் - வெற்றிப் பறையும். மாடு - பக்கங்களில். 29 679. மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவு இல் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச் சிலைபயில் வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார். தரளமும் - முத்தும். வரியின் - புலியின். களிற்றுக் கோடும் - யானைக் கொம்பும். குவையும் - கூட்டமும். நறவும் - கள்ளும். பலங்களும் - பழங்களும். துன்ற - நெருங்க; ஒன்றார். யானைவெண் கோடு மகலின் குப்பையும் - மான்மயிர்க் கவரியு மதுவின் குடங் களுஞ் - சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியு - மஞ்சனத் திரளு மணியரி தாரமு - மேல வல்லிய மிருங்கறி வல்லியுங் - கூவை நீறுங் கொழுங் கொடிக் கவலையுந் - தெங்கின் பழனுந் தேமாங் கனியும் - பைங் கொடிப் படலையும் பலவின் பழங்களுங் - காயமுங் கரும்பும் பூமலி கொடியுங் - கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் - பெருங்குலை வாழையி னிருங் கனித் தாறு. மாளியி னணங்கு மரியின் குருளையும் - வாள்வரிப் பறழு மதகரிக் களபமுங் குரங்கின் குட்டியுங் குடாவடி யுளியமும் வரையாடு வருடையு மடமான் மறியுங் - கசாறைக் கருவு மாசறி நகுலமும் - பீலி மஞ்ஞையு நாவியின் - கானக் கோழியுந் தேமொழிக் கிள்ளையு - மலை மிசை மாக்க கடலைமிசைக் கொண்டு - சிலப்பதிகாரம்: 25 காட்சி. 37 - 55. 30 680. மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட, மாறு இல் சீறூர் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்; பல் பெரும் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து வில் விழா எடுக்க என்று விளம்பினான் - வேடர் கோமான். ஈண்டினர் - நெருங்கினராய். பராய்க்கடன் பலவும் - பரவுக் கடன் பலவும்; வனதெய்வ வழிபாடு பலியீடு முதலியன. எடுக்க - செய்க. 31 681. பான்மையில் சமைத்துக் கொண்டு, படைக் கலம் வினைஞர் ஏந்தத் தேன் அலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு வானது கடலின் நஞ்சம் ஆக்கிட, அவர்க்கே பின்னும் கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் சேர்த்தார். பான்மையில் சமைத்துக்கொண்டு - முறைமையோடு (வில் விழாவிற்குரிய பொருள்களை எல்லாம்) முடித்துக்கொண்டு. வினைஞர் - அத்தொழிலில் வல்லவர்கள். தேனலர் கொன்றையார் தம் - சிவபிரானுடைய. அவர்க்கே - அச்சிவபெருமானுக்கே. தேவர்கள் சிவபிரானது வில்லாகிய மலையை மத்தாக நாட்டிப் பாற்கடல் கடைந்தபோது. அதனால் நஞ்சமெழுந்ததென்பதும், அதனைச் சிவபிரான் உண்டார் என்பதும் புராண கதை. முன்னே மேரு என்னும் ஒரு வில் நஞ்சை ஆக்கிட அதனை உண்ட சிவ பெருமானுக்கே, பின்னும் ஊனமுதம் ஆக்கி மற்றுமொரு வில்லுக்குக் காப்புக் கட்டினரென்க. சிலை - (கண்ணப்பர்) வில். 32 682. சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த நலம்மிகு காப்பு நல்நாண் நாகனார் பயந்த நாகக் குலம் விளங்கு அரிய குன்றின் கோலமுன் கையில் சேர்த்தி, மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள். நாகர் குலம் - வேடர் குலம். குன்றின் - குன்றனைய திண்ணனாரின் 33 683. ஐவன அடிசில், வெவ்வேறு அமைத்தன புல்பால் கொன்றி, மொய் வரைத் தினைமென் சோறு, மூங்கில் வன்பதங்கள், மற்றும், கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச் செய்வரை உயர்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர். ஐவன அடிசில் - மலைநெற்சோறு. புல்பால் சொன்றி - புல் லரிசிச் சோறு. மூங்கில்வன் பதங்கள் - மூங்கிலரிசிச் சோறுகள். கை வினை எயினர் - சமயற்றொழிவில் வல்ல வேடர்கள். செய்வரை உயர்ப்ப - செய்குன்றைப்போலக் குவிக்க. 34 684. செந்தினை இடியும் தேனும் அருந்துவார்; தேனில் தோய்த்து வந்தஊன் அயில்வார்; வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்; நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார்; வெவ்வேறு அந்தம்இல் உணவின் மேலோர் ஆயினர் - அளவிலார்கள். இடியும் - மாவும். வேரி விளங்கனிக் கவளம் - தேனொடு கலந்த விளாம்பழக் கவளம். நந்திய ஈயல் - மிகுந்த ஈசல். நசையொடு மிசைவார் - விருப்பொடு உண்பார். உணவின் மேற்பட்டவராயினர் என்னலுமாம். 35 685. அயல்வரைப் புலத்தின் வந்தார், அரும்குடி இருப்பில் உள்ளார், இயல்வகை உணவின் ஆர்ந்த எயிற்றியர், எயினர் எல்லாம் உயர்கதிர் உச்சி நீங்க, ஒழிவுஇல் பல் நறவு மாந்தி, மயல்உறு களிப்பின் நீடி, வரிசிலை விழவு கொள்வார். வந்தாரும் உள்ளாரும். உணவில் ஆர்ந்த - உணவினால் மகிழ்ச்சி நிறைந்த. எயிற்றியர் எயினர் - வேடிச்சிகளும் வேடர்களும். களிப்பு - கள்ளின் களிப்பு. வரிசிலை விழவு - வரிந்த வில் விழா. 36 686 பாசிலைப் படலை சுற்றிப் பல்மலர்த் தொடையல் சூடிக் காசுடை வடத் தோல் கட்டிக் கவடி மெய்க்கலன் கள் பூண்டு, மாசுஇல் சீர் வெட்சி முன்னா வரும் துறைக் கண்ணி சூடி, ஆசுஇல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார். பாசிலை படலை - பச்சிலை மாலை. தொடையல் - மாலை. காசுடை வடத்தோல் கட்டி - மாணிக்கங்கள் கோக்கப் பெற்ற தோல் வடைத்தை அரையில் கட்டி. கவடிமெய்க்கலன்கள் - பலகறை களாலாகிய உடற்பூண்களை. வெட்சிமுதலாகச் சொல்லப்பட்ட மாலைகள்; போர்த் துறைக்கரிய மாலைகள். ஆசு இல் குற்றமில்லாத. அடல் - வலிமையுடைய. 37 687. தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள்வேயும் எண்திசை நிறைந்து விம்ம எழுத பேர் ஒலியி னோடும் திண் திறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக் கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள். தொண்டக முரசும் - குறிஞ்சிப் பறையும். தொண்டகமும் முரசும் எனக் கொள்வோருமுளர். வேயும் - புல்லாங் குழலும். சேண் விசும்பு - தூரத்துள்ள ஆகாயத்தை. 38 688. குன்றவர் வரி கொண் டாடக் கொடிச்சியர் துணங்கை ஆடத் துன்றிய மகிழ்ச்சி யோடும் சூர் அர மகளிர் ஆட, வென்றிவில் விழவி னோடும் விருப்புடை ஏழாம் நாளாம் அன்று இருமடங்கு செய்கை அழகுஉற அமைத்த பின்றை. வரி - பாட்டு; வரிப்பண்; இங்கே குறிஞ்சிப் பண்; வரிக் கூத்துமாம். (சிலப்பதிகாரம்: 7 கானல் வரி: 3. அரங்கே. 24 - உரை பார்க்க.) குறிஞ்சிப் பண்ணைப்பாடி ஆட. கொடிச்சியர் - வேடிச்சிகள். துணங்கை - துணங்கைக் கூத்து; சிங்கிக் கூத்து; பழுப்புடை இரு கை முடக்கி அடிக்கத் - துடக்கிய நடையது துணங்கை யாகும். துன்றி - மிக்க; நிறைந்த. சூர் அர மகளிர் - (இவ்வாடல்களைப் பார்த்து மலையிலுள்ள) கொடுமையுடைய தெய்வ மகளிர். ஏழாம் நாளன்று. 39 689. வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில், எங்கும் மங்கல வாழ்த்து மல்க, மருங்குபல் இயங்கள் ஆர்ப்பத் தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால், பொங்குஒளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித் தார்கள். உச்சிப்பொழுதில். மல்க - நிரம்ப. மருங்கு - அருகே. பல்லி யங்கள் - பல வாத்தியங்கள். தங்கள் பழைய மரபிற்குரிய வித்தை யாகிய வில் தொழில் வல்லவர்களிடத்தில். ஏற்றை - ஆண் சிங்கம் போன்ற திண்ணனாரை; இடபம் போன்ற எனினுமாம். பொருசிலை - போர் வில். 40 690. பொன் தட வரையின் பாங்கர்ப் புரிவு உறு கடன் முன் செய்த வில் தொழில் களத்தில் நண்ணி, விதி முறை வணங்கி, மேவும் அற்றை நாள் தொடங்கி, நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக் கற்றனர் - என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம். அழகு பொருந்திய அகன்ற மலைப்பக்கத்தில். புரிவுறு கடன் - செய்யத்தக்க கடன்களை; புரி - விருப்பமுமாம். ஆண்மை - வல்லமை; ஆளுந்தன்மை. 41 691. வண்ண வெஞ்சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்றுக் கண் அகல் சாயல் பொங்கக் கலைவளர் திங்களே போல் எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார்; எல்லை இல்லாப் புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார். வண்ணம் - அழகிய மலர - நன்றாக; விரிவாக. கண்ணகல் சாயல் - கண்ணுக் கடங்காத அழகு. செவ்வி - வயது. 42 எண்சீர் விருத்தம் 692. இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பும் நாளில், இருங்குறவர் பெருங்குறிச் சிக்கு இறைவன் ஆய மைவண்ண வரை நெடுந்தோள் நாகன்தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு இல் காலம் கைவண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கணம் நிரைகள் பல கவர்ந்து, கானம் காத்து, மெய்வண்ணம் தளர் மூப்பின் பருவம் எய்தி, வில்உழவின் பெரு முயற்சி மெலிவான் ஆனான். நிரம்பு நாளில் - பதினாறு வயதுடன் புண்ணியப் பொலிவு நிரம்பு நாளில். மைவண்ண வரை - கரிய மலைபோன்ற. கை வண்ணச் சிலை - கையிற்பிடித்த அழகிய வில்லினால். தெவ்வர் கணநிரைகள் - பகைவர்களின் பசுக் கூட்டங்களை. மெய் வண்ணம் - உடலியல்; தேக நிலை. வில்லுழவின் - வில் தொழிலின். 43 693. அங்கண் மலைத் தடஞ் சாரற் புனங்கள் எங்கும் அடல் ஏனம், புலி, கரடி, கடமை, ஆமா, வெங்கண் மரை, கலையொடு மான், முதலாய் உள்ள மிருகங்கள் மிக நருங்கி மீதூ ர் காலைத் திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று, சின வேடர்தாம் எல்லாம் திரண்டு சென்று, தங்கள் குலமுதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார். அங்கண் - அழகிய இடத்தையுடைய. தடம் - விசாலமான. அடல் - போர்; வலிமையுடைய. ஏனம் - பன்றி. கடமை ஆமா - கடமையென்னும் காட்டுப் பசு. மரை - ஒரு வகை மான். கலை - கலைமான். திங்கள் முறை - மாதந்தோறும் முறையாகச் செய்யும். தண் தெரியல் - குளிர்ந்த மாலையை அணிந்த. 44 694. சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்துவரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி, முன்அவர்கட்கு வரைசெய்வான், மூப்பினாலே; முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன்; என்மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்மின் என்ற போதின் அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இம் மாற்றம் அறைகின் றார்கள். தொடர்வு - தொடர்ச்சி. மாற்றம் - மறுமொழி. 45 695. இத்தனை காலமும் நினது சிலைக் கீழ்த் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம், இன்னும் அத்து நினது அருள் வழியே நிற் பது அல்லால், அடுத்த நெறி வேறுஉளதோ? அதுவே அன்றி. மெய்த் தவிறல் திண்ணனையும் மரபில் கால மேம்படவே பெற்றளித்தாய் விளங்கும் மேன்மை வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என் றார் - மகிழ்ந்த வேடர். உடம்பில் வலிமையுடைய திண்ணனை. சாலி - மிகுதியும். வரை யாட்சி - மலையினதும் மலை சார்ந்த ஊர்களினதும் ஆட்சி. 46 696. சிலை மறவர் உரைசெய்ய நாகன் தானும் திண்ணனை முன்கொண்டு வரச் செப்பி விட்டு, மலை மருவு நெடுங் கானில் கன்னி வேட்டை மகன் போகக் காடு பலி மகிழ ஊட்டத் தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின்என, அங்குச் சார்ந்தோர் சென்று, நிலைமை அவள் தனக்கு உரைப்ப, நரை மூதாட்டி நெடிது உவந்து விருப்பினொடும் கடிது வந்தாள். சிலை மறவர் - வில் வேடர். மலைகள் விளங்கும். கன்னி வேட்டை - (நல்ல நாள் குறித்து ஆடும்) முதல் வேட்டை. காட்டில் பலியை (வன தேவதை) மகிழ ஊட்ட. தேவராட்டி - தெய்வமேறப் பெற்றவள். வழங்கு விற்றடக்கை மறக்குடி தாயத்துப், பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி, தெய்வமுற்று - சிலப்பதிகாரம்: 12 வேட்டு. 5-8. 47 697. கானில் விரித் தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு, மயிற்கழுத்து மனவுமணி வடமும் பூண்டு, தான் இழிந்து திரங்கி முலை சரிந்து தாழத் தழைப் பீலி மரவுரி மேல் சார எய்திப் பூநெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர் கோமானைப் போற்றி நின்றாள். கானில் வரி தளிர் துதைந்த கண்ணி - காட்டிலிருக்கிற வரி யுடைய தளிர் நிறைந்த கொண்டை மாலையை. கலை மருப்பின் - கலைமான் கொம்பிலே. குழை - குண்டலத்தை. அரிதாரத் திலகம் - கதூரிப் பொட்டு. பலவகைப்பட்ட அரிதாரங்களுள் மானின் வயிற்றிற் பிறக்கும் அரிதாரம் சிறந்த தென்க. மயிற் கழுத்து மனவுமணி - மயிற் கழுத்து நிறம்போன்ற (சாயமேறிய) அக்கு மணி; தட்டையாக அரியப் பெற்று உலர்ந்த மயிற் கழுத்து இடை இடையே கோக்கப் பெற்ற சங்கு மணி என்போருமுளர். முலை தானிழிந்து திரங்கி - முலை யானது சரிந்து சுருங்கி; கொங்கை திரங்கி - காரைக்காலம்மையார்: மூத்த. 1. தழையும் மயிற்பீலியும் என்றும். தழையாகிய மயிற் பீலி என்றுங் கொள்ளலாம். எய்தி - தேவராட்டி அடைந்து. தோரை - ஒரு வகை நெல்; மூங்கிலரிசியுமாம். சேடை - அட்சதை. பூக்கள் நெருங்கிய அரிசி அட்சதையைத் தூவி என்றபடி போற்றி - வாழ்த்தி. 48 698. நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை நேர்நோக்கி, அன்னை! நீநிரப்பு நீங்கி, e‹WïÅâ‹ ïUªjidnah? என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி, நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம் அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன்; அழைத்த பணி என்? என்றாள் - அணங்கு சார்ந்தாள். படிமத்தாளை - தேவராட்டியை. படிமம் - தெய்வ வடிவம். நிரப்பு - வறுமை. மிருதுவான மாமிசமும் ஈசலும் கள்ளும் (தேனும்). வெற்பில் - மலையில். அணங்கு சார்ந்தாள் - தெய்வமேறப் பெற்றவள்; தேவராட்டி. 49 699. கோட்டம் இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குலத் தலைமை யான் கொடுப்பக் கொண்டு, பூண்டு, பூட்டுஉறு வெஞ்சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான்; அவனுக்கு என்றும் வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து, வேறுபுலம் கவர்வென்றி மேவுமாறு, காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடுபலி ஊட்டு என்றான் - கவலை இல்லான். கோட்டம் இல் - நடு நிலை பிறழாத. பொருப்புரிமை புகு கின்றான் - மலையாட்சியில் தலைப்படப் போகிறான். வேறு புலம் - வேறு நாடுகளை. 50 700. மற்று, அவன் தன் மொழிகேட்ட வரைச் சூராட்டி, மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின் றேனுக்கு, எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன; இதனாலே உன் மைந்தன் திண்ணன் ஆன வெற்றி வரிச்சிலையோன் நின் அளவில் அன்றி, மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்திக் கொற்றவனத் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றிக் கொண்டு போனான். வரைச் சூராட்டி - மலையில் வாழும் தேவராட்டி வருகின்ற வளாகிய எனக்கு. எற்றையினும் - எந்நாட்களினும் நிகழாத. கொற்ற - வெற்றியினையிடைய. 51 701. தெய்வம் நிகழ் குறமுதியாள் சென்ற பின்பு, திண்ணனார் சிலைத் தாதை அழைப்பச் சீர்கொள் மைவிரவு நறுங்குஞ்சி வாசக் கண்ணி, மணி நீல மலைஒன்று வந்தது என்னக் கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து, காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில், செவ்வரைபோல் புயம் இரண்டும் செறியப் புல்லிச் செழும் புலித்தோல் இருக்கையினில் சேர வைத்தான். கரிய மை அனைய நல்ல தலைமயிரில் மணங்கமழும் மாலை யையணிந்த நீலமணி மலையொன்று. விரவு - உவம உருபு. மணிநிற மால்வரை ஐங்குறுநூறு: 209. கைவிரவு - கையிற்றங்கிய. செவ்வரை - செப்பமான மலை. செறியப் புல்லி - நெருங்கத் தழுவி. 52 702. முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி, நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல, என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி எனக்குக் கருத்து இல்லை; எனக்கு மேலாய் மன்னுசிலை மலையர் குலக் காவல் பூண்டு, மாறுஎறிந்து, மாவேட்டை ஆடி, என்றும் உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கைக் கொடுத்தான் அன்றே. மாறு எறிந்து - பகைவர்களை வீழ்த்தி. மா - விலங்கு. உடை தோலும் சுரிகையும் - தன்னுடைய கேடகத்தையும் உடைவாளை யும். உடைதோல் - தோலுடைய கேடகத்தை என்னலுமாம்; தோலுடைய என் போருமுளர். 53 703. தந்தை நிலை உட்கொண்டு, தளர்வு கொண்டு, தங்கள் குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு, முந்தையவன் கழல் வணங்கி, முறைமை தந்த முதல் சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு, சிந்தைபரம் கொளநின்ற திண்ணனார்க்குத் திருத்தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான். சார்வு - சார்பு; துணை. சுரிகையை முதலில் ஏற்றது வீரக் குறிப்பு. சிந்தையைச் சிவங் கொள்ள நின்றது என்பது. திண்ணனார் முன்னைப் பிறவியிலுஞ் சிவ சிந்தையை யுடையவராயிருந்தார் என்பதை அறிவிப்பது. திண்ணனார் சிந்தை பண்பட்டதாதலின் அதனைச் சிவம் தானே கொண்டதென்க. பூவினிற் கந்தம் பொருந்தியவாறு போல் - சீவனுக்குள்ளே சிவ மணம் பூத்தது -திரு மந்திரம்: யோகம் 3. ஈன்ற தந்தையளித்த சுரிகையையும் கேடகத்தை யும் திண்ணனார் புறத்தே ஏற்றாரேனும், அவர் தம் அகத்தே சிவ தந்தை நின்று அவரைத் தம் வழியில் செலுத்தப் போகிறார் என்பது குறிப்பு. 54 704. நம்முடைய குலமறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்ததன் மேல் நலமே செய்து, தெம்முனையில் அயல்புலங்கள் கவர்ந்துகொண்ட திண்சிலையின் வளம் ஒழியாச் சிறப்பின் வாழ்வாய்; வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட, இம்முரண் வெஞ்சிலை வேடர் தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் - இயல்பில் நின்றான். பரித்ததன்மேல் - காத்ததற்கு மேலாக. தெம்முனையில் அயற் புலங்கள் - பகைமுனையில் அயல் ஊர்களை. தெவ்வர் முனை கவர்ந்து - முல்லைப்பாட்டு: 18 -19. வெம்முனையில். கொடிய வேட்டைப் போரில்; கொடிய துணிவையுடைய என்பது பழைய குறிப்புரை; கொடியனவாகக் கோபித்து வரும் மிருகங்களை வேட்டையாடுதலும் - மகாலிங்க ஐயர். இம் முரண் - இவ்வலிமை யுடைய. வேடரியல்பில். 55 705. செங்கண் வயக்கோள் அரியேறு அன்ன திண்மைத் திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற வெங்கண் விறல் தாதைகழல் வணங்கி நின்று, விடைகொண்டு புறம்போந்து, வேடரோடும் மங்கல நீர்ச்சுனை படிந்து, மனையின் வைகி, வைகு இருளின் புலர்காலை வரிவில் சாலைப் பொங்குசிலை அடல் வேட்டைக் கோலம் கொள்ளப் புனைதொழில் கைவினைஞரோடும் பொலிந்து புக்கார். சிவந்த கண்ணையும் வலிமையையும் எதிர்த்தவர்களைக் கொல்வதையுமுடைய சிங்க ஏறுபோல். விறல் - வெற்றியுடைய. வைகிருளின் புலர் காலை - தங்கிய இருள் விடியுங் காலையில். அடல் - போர். புனை தொழில். கைவினைஞர் - கைத்தொழிலாளர். 56 கலித்துறை 706. நெறிகொண்ட குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க முறிகொண்ட கண்ணிக்கு இடைமொய் ஒளிப் பீலி சேர்த்தி, வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி செறிகொண்ட வண்டின் குலம் சீர்கொளப் பின்பு செய்து. நெறிகொண்ட - நெறித்தலைக் கொண்ட; நெறித்த. குஞ்சிச் சுருள் துஞ்சி நிமிர்ந்து - தலைமயிர்ச் சுருள் சாய்ந்தும் நிமிர்ந்தும். பொங்க - பொலிய. முறி - தளிரை. கண்ணிக்கு இடை - கொண்டை மாலைக்கு நடுவே. வெறி - வாசனை. முல்லைப்பிணை - முல்லை மாலை. குறிஞ்சி வெட்சி - குறிஞ்சி மலரையும். வெட்சி மலரையும் செறிகொண்ட - நெருங்கிய. சீர்கொள - மொய்த்துக்கொள்ள. பின்புசெய்து - பின்னாற் செருகி. 57 707. முன் நெற்றியின் மீது முருந்து இடை வைத்த குன்றி தன்னில் புரிகொண்ட மயிர்க் கயிறு ஆரச் சாத்தி, மின்னில் திகழ் சங்கு விளங்கு வெண்தோடு காதின் மன்னிப் புடை நின்றன மாமதி போல வைக. முருந்து இடை - மயிலிறகின் அடியின் இடையிடையே. குன்றி தன்னில் - குன்றி மணிகளுடன். முறுக்கப்பட்ட மயிர்க் கயிற்றைப் பொருந்தும்படி. மின்னில் - மின்னலைப்போல். புடை - இரண்டு பக்கங்களிலும். மாமதி - பூரண சந்திரன். 58 708. கண்டத்து இடை வெண்கவடிக் கதிர் மாலை சேரக் கொண்டு அக்கொடு பல்மணி கோத்து இடை ஏனக் கோடு துண்டப் பிறை போல் வன தூங்கிட, வேங்கை வன்தோல் தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க. கண்டத்திடை - கழுத்திலே. கவடி - பலகறை. அக்கொடு - சங்கு மணியோடு. ஏனக்கோடு - பன்றிக் கொம்பு. தூங்கிட - தொங்க; ஆட; விளங்க. வேங்கை வன்தோல் தண்டை செயல் பொங்கிய - புலியின் வலிய தோலாலாகிய தட்டை வடிவுத் தொழில் பொலிந்த தட்டை - தண்டை; மெலித்தல். தண்டை என்று கொள்வோருமுளர். சன்ன வீரம் தயங்க - வெற்றி மாலை விளங்க. சன்னவீரம் - முத்தி னால் மாலையாகச் செய்து அரசர் முதலியோர் அணிந்துகொள்வது; அம்மாலையை வேங்கைத் தோலால் வேடர்கள் செய்து திண்ண னார்க்கு அணிந்தனரென்க. 59. 709. மார்பில் சிறு தந்த மணித் திரள் மாலை தாழத் தாரின் பொலி தோள்வ லயங்கள் தழைத்து மின்னச் சேர்வில் பொலி கங்கணம் மீது திகழந்த முன்கைக் கார்வின் செறி நாண் எறி கைச்செறி கட்டி கட்டி. தந்தத்தாலாகிய மணித்திரள். தாரில் - மாலைபோல. வலயங்கள் - வாகுவலயங்கள். சேர்வில் பொலி - பொருந்தி ஒளி பொலிந்த. முன் கை கார்வில் செறிகாண் எறியைச் செறிகட்டி - முன் கையில், கரிய வில்லிற் கட்டிய நாணை ஏற்றி அம்பை எய்வதற்குச் சாதனமாகிய கைக்கோதையை (விரலுறையை). காழகம் வீங்கக் கட்டி - கலித்தொகை. 7:9. விரற்றலைப் புட்டில் வீக்கி வெஞ்சிலை கணையோடேந்தி - சிந்தாமணி: 2202. 60 710. அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத் திரையில் படுவெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி, நிரையின் பொலி நீள் உடை தோல் சுரி கைப்புறம் சூழ் விரையில் துவர்வார் விசி போக்கி அமைத்து, வீக்கி. சரணத்து உரி ஆடையின்மீது - மயிற்பீலியோடு சேர்ந்த புலித் தோல் ஆடையின்மேல். பௌவம் திரையில்படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி - கடல் அலைகளில் பொருந்தும் வெள் ளிய பல கறைகளைக் கோத்து ஓரத்திற்கட்டி. நிரையில் - வரிசையான. தோலையும் சுரிகைப் (உடைவாளின்) புறத்தையும். விரையில். . . . வீக்கி - வாசனையுள்ள ஒருவகைத் துவர்ப்பட்டையால் பதஞ் செய்யப்பெற்ற வாரால் இறுக வலித்து அமைத்து முறுக்கி. துவர்வார் - பவளநிறம்போலச் சாயமூட்டிய வார் என்னலு மொன்று. நிரையில். . . . . வீக்கி. வரிசையாகப் பொலிகின்ற உடையாகிய தோலின் மீதேவாளின் புறத்தைச் சூழ்ந்த வாசனை பொருந்திய துவராற் பதப்படுத்தப்பட்ட வார்க்கட்டைச் சூழ்ந்து அமைத்துக் கட்டி - பழைய குறிப்புரை. வரிசையாக அழகு கொடுக்கின்ற தோலினாலாகிய நீண்ட தட்டிக்குப் புறத்தில் உடைவாளை ஒருவித மணமுள்ள துவர்ப்பட்டையினாற் பதப்படுத்திய வாரினாற் கட்டி அமையச் சேர்த்து -மகாலிங்க ஐயர். 61 711. வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப் பாரப்பெரு வில்வலம் கொண்டு பணிந்து, திண்ணன் சாரத் திருத்தாள் மடித்து ஏற்றி, வியந்து தாங்கி. தொடு நீடு செருப்பு பாதஞ் சேர எனக் கொண்டும், பாதஞ் சேரத் தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப எனக் கொண்டும் பொருள் கூறலாம். ஏற்றி - நாணேற்றி. 62. 712. அங்கு அப்பொழுதில் புவனத்துஇடர் வாங்க ஓங்கித் துங்கப்பெரு மாமழை போன்றுதுண் என்று ஒலிப்ப, வெங்கண் சினம் நீடு விலங்கு விலங்கி நீங்கச் செங்கைத் தலத்தால் தடவிச்ச் சிறு நாண் எறிந்தார். புவனத்திடர் வாங்க - உலகத் துன்பம் நீங்க. அச்சிற்றூரிற் பொருந்திய இடர்நீங்க - பழைய குறிப்புரை. பிறவித் துன்பமானது நீங்கும்படி. ஆறுமுகத் தம்பிரானார். உயர்ச்சி வாய்ந்த பெரிய மேகம்போல நாணொலி செய்தார். 63 713. பல்வேறு வாளி புதைபார்த்து உடன் போத ஏவி வில்வேடர் ஆயத் துடிமேவி ஒலிக்கும் முன்றில் சொல்வேறு வாழ்த்துத் திசைதோறும் துதைந்து விம்ம வல்ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார். வாளி - அம்புகளை. புதை பார்த்து - அம்புக்கட்டுகளி னின்றும் பார்த்து எடுத்து. உடன்போத ஏவி - தம்முடன் வருமாறு (மற்றவர்க்குக்) கட்டளையிட்டு. ஆயம் - கூட்டத்தின். முன்றில் - முற் றத்தில். சொல்லப்படும் வெவ்வேறு வாழ்த்துக்கள் நெருங்கி ஒலிக்க. வல்ஏறு போல்வார் - திண்ணனார். தெரிந்து - ஆராய்ந்து. 64. 714. மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில், பானல் குல மாமலரின் படர் சோதியார் முன் தேன் நல் தசைதேறல் சருப்பொரி மற்றும் உள்ள கானப்பலி நேர்கடவுள் பொறையாட்டி வந்தாள். மானம் - வலிமை பொருந்திய. பானற்குல. . . . . முன் - பெருங் கூட்டமாகிய நீலோற்பல மலரின் படர்ந்த ஒளிபோன்ற கரிய திருமேனியுடைய திண்ணனாரின். தேனும் நல்ல மாமிசமும். தேறல் - கள்ளும். சரு - தேவரூணும் (அவிசும்). காட்டிற் பலியிடும் தேவ ராட்டி. 65. 715. நின்று எங்கும் மொய்க்கும் சினவேடர்கள் நீங்கப் புக்குச் சென்று அங்கு வள்ளல் திருநெற்றியில் சேடை சாத்தி, உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ளவல்ல; நன்றும் பெரிது உன்விறல்; நம் அளவு அன்றுஇது; என்றாள். வள்ளல் - திண்ணனாரின். சேடை - அட்சதை. இந் நன்மைகள் உள்ள அல்ல - இந்நல்ல சகுனங்கள் உண்டாகவில்லை. நன்றும் பெரிது - மிகவும் பெரிது. தந்தை தந்தை என்பது தேவ ராட்டியின் முதுமையைக் குறிப்பது. 66. 716. அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை யாட்டி தன்னைச் செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கிக் கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேகம் என்ன மெய்ப்பொற்பு உடை வேட்டையின் மேற்கொண்டு எழுந்து போந்தார். அத்தன்மையால் வாழ்த்திய தேவராட்டிக்கு. போக்கி - அவளை அனுப்பிவிட்டு. மெய்ப் பொற்புடை - உண்மையாகப் பொலிவுடைய; உடற்பொலிவுடையராய் என்னலுமொன்று. 67 கலி விருத்தம் 717. தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்; வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன்கணார்; ஆளி ஏறுபோல ஏகும் அண்ணலார்முன் எண் இலார் மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே. தோல் தழைத்த நீடு தானையார் - தோலினால் விரித்துச் செய்யப் பெற்ற நீண்ட உடையுடையராய். வாளியோடு - அம்போடு. சாபம் - வில். மீளி - வலிமையுள்ள; யமனைப் போன்ற எனினுமாம். 68 718. வன்தொடர்ப் பிணித் தபாசம் வன்கை மள்ளர் கொள்ளவே வென்றிமங்கை வேடர் வில்லின்மீது மேவு பாதம்முன் சென்று மீளுமாறுபோல்வ செய்ய நாவின் வாயவாய், ஒன்றொடு ஒன்று நேர்படாமல் ஓடும் - நாய்கள் மாடுஎலாம். வலிய சங்கிலியால் கட்டப்பெற்ற கயிற்றை. மள்ளர் - வீரர்கள். வென்றி. . . .பாதம் - விஜயலட்சுமி வேடர்கள் வில்லின்மீது பொருந்து கின்ற பாதங்கள். போல்வனவாகிய சிவந்த. மாடெலாம் - பக்கங்களி லெல்லாம். மதந்தபு ஞமலி நாவினன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி -மலைபடுகடாம்: 42-3. முயல் வேட் டெழுந்த முடுகு விசைக் கதநாய், நன்னார்ப்புரை புஞ் சீறடி -நற்றிணை: 252. 69. 719. போர்வலைச் சிலைத்தொழில் புறத்திலே விளைப்ப, அச் சார்வலைத் தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம்முளே, கார்வலைப் படுத்த குன்று கானமா வளைக்க நீள் வார்வலைத் திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார். வலைத் தொழிலும் சிலைத் தொழிலும் புறத்தே நடைபெற, அகத்தே பந்தித்துள்ள அப்பாசவலையை யறுக்கப் போகும் திண்ணனார் என்றபடி. கார். . . . வளைக்க - மேகங்கள் வலை யிட்டுள்ள (மூடிக் கொண்டுள்ள) மலைகளிலும் காடுகளிலு முள்ள மிருகங்களைவளைக்க. திறம் - வகைகளை. வெற்பர் - வேடர்கள். 70 720. நண்ணி மா மறைக் குலங்கள் நாட என்றும் நீடும் அத தண் நிலா அரும்பு கொன்றை தங்கு வேணியார்தமைக் கண்ணில் நீடுபார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர்முன், எண் இல் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார். மறைக்குலங்கள் - வேதக்கூட்டங்கள். நாட - தேட. என்றும் நீடும் - எப்பொழுதும் அறியமுடியாதவாறு நீளும். வேணியார்தமை - சடையையுடைய சிவபெருமானை. காணப்போகும் திண்ணனார். பார்வை மிருகங்களைக்கொண்டு. 71 721. கோடுமுன்பு ஒலிக்கவும் குறுங்கண் ஆகுளிக் குலம் மாடுசென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் சேடுகொண்டு கைவிளிச் சிறந்த ஓசை செல்லவும் காடுகொண்டு எழுந்த வேடு, கைவளைத்து சென்றதே. கோடு - தமது கொம்புகள். ஆகுளிக்குலம் - சிறு பறைக் கூட்டங்கள். மாடு - பக்கங்களில். மருங்கு - அவைகளினருகே. சேடு கொண்ட கைவிளி - பெருமைகொண்ட கைத்தட்டுதலின். சேடு - திரட்சியுமாம்; ஜனத்திரட்சி கொண்ட. வேடு - வேடர்கள்; ஆகு பெயர். கை வளைந்து - இரண்டு பக்கங்களிலும் வளைந்து. 72 722. நெருங்குபைந் தருக்குலங்கள் நீடுகாடு கூட, நேர் வரும் கருஞ்சிலைத் தடக்கை மானவேடர் சேனைதான்; பொரும் தடந்திரைக்கடல் பரப்பிடைப் புகும்பெருங் கருந்தரங்க நீள்புனல் களிந்தி கன்னி ஒத்ததே. பைந்தருக் குலுங்கள் - பசிய மரக் கூட்டங்கள். கூட - அடைய மான - வலிமையுடைய. பொருந்தடந்திரை - மோதுகின்ற பெரிய அலைகளையுடைய. தரங்கம் - அலை. களிந்தி கன்னி - காளிந்தி நதி; யமுனா நதி; கருநிறமுடையது. காடு - பசுங்கடல்; காளிந்தி - வேடர் சேனை. 73 723. தென்திசைப் பொருப்புடன் செறிந்த கானின் மானினம், பன்றி, வெம்மரைக் கணங்கள், ஆதியான பல்குலம் துன்றி நின்ற என்று அடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே வன்தடக்கை வார்கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார். பொருப்புடன் - மலையுடன். துன்றி (நெருங்கி) நின்றன என்று. அடிச்சுவட்டின் - காலடியின் அடையாளங்களால். ஒற்றர் - வேவு காரர்கள். வன்தடக்கை - வலிய பெரிய கைளில். வார்கொடு - வார் வலைகளைக் கொண்டு. 74 724. ஓடிஎறிந்து, வார்ஒழுக்கி, யோசனைப் பரப்பு எலாம் நெடியதிண் வலைத்தொடக்கு நீளிடைப் பிணித்து, நேர் கடிகொளப் பரந்த காடு காவல் செய்து அமைத்தபின், செடிதலைச் சிலைச்கை வேடர் திண்ணார்முன் நண்ணினார். ஓடி எறிந்து - ஓடிய எறிந்து; மரங்களை வெட்டிச் சாய்த்து. வார் ஒழுக்கி - வார்வலைகளைக் கட்டி. வலைத் தொடக்கு - வலைக் கயிறுகளை. நேர் கடிகொள - நேராகக் (கண்டவர்கள்) அச்சங் கொள்ள. செடிதலை - சிறு புதர் போன்ற தலையையுடைய. 75 725. வெஞ்சிலைக் கை வீரனாரும் வேடரோடு கூடி, முன் மஞ்சு அலைக்கும் மாமலைச் சரிப்புறத்து வந்தமா அஞ்சு வித்து அடர்க்கும் நாய்கள் அட்டம் ஆக விட்டு நீள் செஞ்சரத்தி னோடு சூழல் செய்தகானுள் எய்தினார். மஞ்சு அலைக்கும் - மேகங்கள் அலைவு செய்யும். சரி - வழி. மா - மிருகங்களை. அடர்க்கும் - வருத்துகின்ற. அட்டமாக - குறுக் காக; அருகாக எனினுமாம். எட்டுத் திக்கினும் என்பது பழைய குறிப்புரை. சரத்தினோடு - பாணத்தினோடு. சூழல்செய்த வேடர் களால் வளைத்துக் காவல் செய்யப்பெற்ற. 76 726. வெய்யமா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடிநேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டுசெல்ல, எங்கணும் மொய்குரல் துடிக்குலங்கள் பம்பைமுன் சிலைத்து எழக் கைவிளித்து, அதிர்த்து, மா எழுப்பினார்கள் - கான் எலாம். வெற்பர் ஆயம் - வேடக் கூட்டம். வெய்யமா எழுப்ப ஏவி - கொடிய விலங்குகளை அவைகள் வசிக்கும் இடங்களினின்றும் எழும்பும்படி ஒற்றர்களை ஏவி. நேர். . . . கொண்டு - எதிரே விடுதற் குரிய பாணங்களை முன்னே தெரிந்து கொண்டு. மொய்குரல் துடிக் குலங்கள் - மொய்த்த ஓசையையுடைய உடுக்கைக் கூட்டங்கள். சிலைத்து - ஒலித்து. கைவிளித்து - கையால் தட்டி. அதிர்த்து - வாயால் உரப்பி (அதட்டிக் கூவி). 77 727. ஏனமோடு மான் இனங்கள், எண்கு, திண்கலைக் குலம், கானமேதி, யானை, வெம்புலிக் கணங்கள், கான்மரை, ஆனமா அநேகமாக வெருண்டு எழுந்து பாயமுன் சேனை வேடர்மேல் அடர்ந்து சீறி, அம்பில் நூறினார். ஏனமோடு - காட்டுப் பன்றிகளோடு. எண்கு - கரடிகளும். திண் கலைக் குலம் - வலிய கலைமான் கூட்டங்களும். கானமேதி - காட் டெருமைகளும். ஆன மா - ஆகிய விலங்குகள். நூறினார் - அழித்தார்கள். 78 வேறு 728. தாள் அறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமான்; வாளிகளொடு குடல் சொரிதர மறிவன - சில மரைமா; நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன - மிடை கடமா; மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன - பல உழையே. துமிவன - வெட்டுண்டன. மறிவன - இறப்பன. நிமிர்வன - செயலற்று நிமிர்ந்தே நின்றன. மிடைகட மா - நெருங்கியுள்ள மதயானைகள். மீளி - வலிமை. உடலெழ - உடல் துள்ள. உழை - மான்கள். 79 729. வெங்கணைபடு பிடர் கிழிபட விசைஉருவிய - கயவாய்; செங்கனல்விட அதனொடுகணை செறிய முன்இரு கருமா அங்கு எழுசிரம் உருவியபொழுது, அடல் எயிறுஉற, அதனைப் பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள். முன்இருகருமா, வெங்கணை. . . . விட, செறியு, அங்கெழு. . . பொழுது, அதனொடு கணை ஆடல் எயிலுற, அதனைச் சில புலிகள் பொங்கிய. . . புரைவன. இரு கருமா - பெரிய பன்றி. கயவாய் - பொரிய வாய். செறிய - நெருங்க. அடல் எயிறு - வலியபல். புரைவன - போன்றன. முன்னே பன்றிகள்: பாணங்கள் பட்ட அவைகளின் பிடரி கிழிபட, அப்பாணங்கள் விசையோடு உருவிய அவைகளின் வாய் நெருப்பு உமிழ, நெருக்க, அவைகளின் தலையில் பாய்ந்த பொழுது, அவைகளை இழுத்துச் சென்று புலிகளின் பற்களி னூடுருவ, அவைகளை (பன்றிகளை)ப் புலிகள் பொங்கிய சினத்தொடு கவர்வன போன்றிருந்தன என்க. 80 730. பின் மறவர்கள் விடு பகழிகள் பிறகு உற வயிறிடை போய், முன் நடுமுக மிசை உருவிட, முடுகிய விசையுடன் அக் கொல் முனைஅடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத் தன் எதிர்எதிர் பொருவன நிகர்தலையன - பல கலைகள். மறவர்கள் மான்களின் பின்பக்கங்களில் விட்ட பாணங்கள். பிறகு உற - அப்பின் பக்கமாகவே பாய்ந்து. முன்னரே நடுமுகத்தில் விசையோடு உருவ. அக்கொன்முனை அடுசரம். அவ்வேட்டை முகத்தில் கொல்லுகின்ற பாணங்கள். இனம் எதிர் குறுகிய முகம் - இனமாக எதிரே வந்த கலை மான்களின் முகங்கள். பொருவன - போர் புரிவன. கலைமான் - கலைமான்கள். வேட்டையில் சில மான்கள் பின்காட்டி ஓடுகின்றன; சில மான்கள் முன்காட்டி ஓடி வருகின்றன. பின்காட்டி ஓடும் மான்களின் பின்பக்கம் வேடர்கள் பாணம் எய்கிறார்கள். அப்பாணம் மான்களின் பின்பக்கம் பாய்ந்து நெற்றி வழி உருவி வரும்போது, முன்காட்டி எதிரே வரும் மான் களின் நெற்றியிலும் பாய்கிறதாம். அக்காட்சி மான்கள் ஒன்றோ டொன்று எதிர்த்துப் போர் புரிவது போன்றிருக்கிறதாம். 81 731. கருவரை ஒரு தனுவொடு மிசை கடுகியது என முனைநேர் குரிசில் முன் விடும் அடுசரம் எதிர்கொலை பயில் பொழுது, அவையே பொருகரியோடு சின அரியிடை புரைஅற உடல் புகலால், வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ் வனமே. கரிய மலையொன்று ஒரு வில்லை ஏந்தி விசையாக வந்தது போல வேட்டை முனைக்கு வந்த திண்ணனார். முன் - விலங்குகளின் முன். எதிர் கொலை பயில்பொழுது - (விலங்குகளின்) எதிர்சென்று (அவைகளைக்) கொல்லும் போது. அவையே - அவ்வம்புகளே. பொருகரியோடு - போர் யானையுடன். சின அரியிடை - கோபச் சிங்கத்தினிடத்திலும். புரையற - உட்டுளையற்ற; இடையீடு நீங்க எனினுமாம். யானைமீது எய்யப்படும் அம்புகள் விரைந்து ஊடுருவி ஒரு பாதி சிங்கத்தின் மீதும் பாய்ந்து நிற்கின்றன என்க. அம்பின் ஒரு பகுதி யானையினிடமும் மற்றொரு பகுதி சிங்கத்தினிடமும் பாய்ந்து நிற்குங் காட்சி இரவும் பகலும் ஒன்றி அணைந்தது போன்றிருந்தது என்க. 82 732. நீள் இடைவிசை மிசை குதிகொள நெடுமுகில் தொட எழுமான் தாள் உறுகழல் மறவர்கள் விடுசரம் நிரை தொடர்வன தாம், வாள் விடுகதிர் மதிபிரிவுற வரும் என விழும் உழையைக் கோளொடு பயில் பணிதொடர் நிலை கொள உள எதிர் பலவே. நீளிடை விசைமிசை குதிகொள - நீண்ட வெளியில் அல்லது தூரத்தில் விசையோடு மேலே குதிக்க. சர நிரை - அம்பு வரிசைகள். வாள் விடு கதிர்மதி - ஓளி வீசும் கிரணங்களுடைய சந்திரன். உழையன - மானை. கோளொடு பயில் பணி - கிரகங்களுடன் பொருந்திய. பாம்பாகிய இராகு. தொடர். . . . . பல - தொடரும் நிலைமை பொருந்த எதிரே பல மான்களிருக்கின்றன. சந்திரனிடத் துள்ள களங்கத்தை மான் என்று சொல்வது மரபு. சந்திரனைப் பாம்பு பற்றும்போது தன்னையும் பற்றும் எனக் கருதிக் கீழே விழும் மானை அப்பாம்பே பற்றும் ஒரு நிலை என்க. மான்கள், வேடர்களுக்கு அஞ்சி எப்பக்கமும் ஓட இயலாது ஆகாயத்திலே பாய்கின்றன. பாய்ந்து கீழே விழும் அம்மான்களை வேடர்களுடைய பாணங்கள் தொடர்ந்து பற்றுகின்றன. அக்காட்சி சந்திரனிடத்திருந்து கீழே விழும் மானை இராகு பற்றுவதுபோன்றிருக்கிற தென்க. 83 733. கடல் விரிபுனல் கொளவிழுவன கருமுகில் என, நிரையே படர்வொடு செறிதழை பொதுளிய பயில் புதல்வனம் அதன்மேல், அடல் உறுசரம் உடல் உறவரை அடியிடம் அலமரலால், மிடைகருமரை கரடிகளோடு விழுவன - வன மேதி. நிரையே - வரிசையாக செறிதழை பொதுளிய பயில் - நெருங்கிய தழை நிறைந்து பொருந்திய. புதல் - சிறு தூறுகளையுடைய. வரை அடி இடம். அலமரலால் - மலையினடியில் சுழலுதலால். வனமேதி- காட்டெருமைகள். 84. 734. பலதுறைகளின் வெருவரலொடு பயில்வலை அற நுழைமா உலமொடு படர்வன தகைஉற, உறுசினமொடு கவர்நாய்; நிலவிய இரு வினை வலியிடை நிலைசுழல்பவர் நெறிசேர் புலன் உறுமனன் இடைதடை செய்த பொறிகளின் அளவு உளவே. பல துறைகளின் - பல வழிகளினின்றும். வெருவரலொடு - அச்சத்துடன். பயில்வலை - கட்டப்பட்டுள்ள வலைகள். உலமொடு படர்வன தகையுற - சுழற்சியோடு வருவனவற்றைத் தடுக்க. இருவினை யாகிய வலையிடை நிலையாக. புலனுறு - மெய்யறிவு பொருந்தும். ஐம்பொறிகளின் நிலையை ஒத்திருந்தன. 85 735. துடிஅடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்; வெடிபடவிரி சிறுகுருளைகள் மிசைபடுகொலை விரவார்; அடிதளர்வுறு கரு உடையன அணைவு றுபிணை அலையார்;- கொடியனஎதிர் முடுகியும் உறு கொலைபுரி சிலை மறவோர். துடி. . . தொடரார் - உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த காதுகளையுமுடையவனாய் நெருங்கிவரும் யானைக் கன்றுகளைத் தொடர்ந்து வேட்டையாடார். வெடிபட விரவார் - ஒலியுண்டாக ஓடும் சிறிய குட்டிகளின் மீது கொலை நிகழ்த்த மனங்கொள்ளார். பிணை அலையார் - பெண் விலங்குகளைத் துன்புறுத்தமாட்டார். கொடியன - கொடிய விலங்குகளின். இங்கே வேட்டை அறம் சொல்லப்பட்ட. 86 736. இவ்வகைவரு கொலைமறவினை எதிர்நிகழ்வுழி, அதிரக் கைவரைகளும் வெருவு றமிடை கான் எழுவதொர் ஏனம், பெய் கருமுகில் என, இடியொடு பிதிர்கனல் விழி சிதறி, மொய்வலைகளை அற, நிமிர்வுற முடுகியகடு விசையில். கைவரைகளும் - யானைகளும். வெருவுற - அஞ்ச. மிடைகான் - நெருங்கிய காட்டில். ஏனம் காட்டுப் பன்றி. நிமிர்புற - கிளம்பி. 87 737. போம் அதுதனை அடுதிறலொடு பொருமறவர்கள் அரியே தாம் அவர்தொடர் வுறும்விசையுடன் அடிவழிசெலும் அளவில், தாம் ஒருவரும் அறிகிலர்; அவர் தனிதொடர்வழி அதன்மேல் ஏமுனை அடுசிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார். அடுதிறலொடு - கொல்லத்தக்க வலிமையோடு. பொரு. . . அவர் - திண்ணனார். மற்ற வேடரெவரும் அறிந்தாரில்லை. ஏமுனை. . . இருவர்கள் - அம்பினால் பகைவர்களைக் கொல்லும் வில்லை ஏந்திய காளைகள் இருவர்கள். 88 738. நாடியகழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில் காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் கூடினர் விடுபகழிகளொடு கொலைஞமலிகள் வழுவி, நீடியசரி படர்வது; தரு நீழலின் விரை கேழல். வயவர்கள் - வீரர்கள். மலைகாவலரொடு - திண்ணனாருடன். ஞமலிகள் வழுவி - நாய்கட்கும் தப்பி. விரைகேழல் - விரைந்து செல்லும் பன்றி. ஒரு நீழலின் - மரநீழலில். நீடிய சரிபடர்வது - நீண்ட மலைச்சாரல் வழியே போகலாயிற்று. 89 739. குன்றியை நிகர் முன் செறஎரி கொடுவிழி, இடி குரல், நீள் பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடித் துன்றியதுஒரு குன்று அடிவரை சுலவியநெறி சூழல் சென்று அதனிடை நின்றது; வழி தெரு மர மரம் நிரையில். முன்னே எதிர்ப்பவரைக் கொல்லக் குன்றிமணியை ஒப்ப எரியும். பொருந்திய ஒரு மலையடியில். சுலவிய நெறி சூழல் சென்று - வளைந்த வழியுடைய ஒரு சோலையை அடைந்து. வழிதெரு மர - வழி சுழல. மரநிரையில் - மரச்செறிவில். 90 740. அத்தருவளர் சுழலிடைஅடை அதன்நிலை அறிபவர்முன் கைத்தெரி கணையினில் அடுவது கருதலர், விசை கடுகி, மொய்த்து எழுசுடர் விடுசுரிகையை முனைபெறஎதிர் உருவிக் குத்தினர் - உடல் முறிபட; எறிகுல மறவர்கள் தலைவர். அம்மரங்கள் வளருமிடத்தில். அதன் நிலை. . . . . கருதலர் - அப்பன்றியின் இருப்பை உணர்ந்தவராய், கையில் ஆராய்ந்தெடுக்கப் படும் அம்புகளால் அதனைக் கொல்ல நினையாதவராய். சுரிகையை - உடைவாளை. விசையிற் கிட்டி முனைபெற - முனை அழுந்த; வெற்றி பெற எனினுமாம். 91. அறுசீர் விருத்தம் 741. வேடர் தம் கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த மாடு இருதுணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு, நாணன் காடனே! இதன்பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் Mlt‹ bfh‹wh‹; m¢nrh! என்றுஅவர் அடியில் தாழ்ந்தார். வில்லியார் - திண்ணனார். மாடு - பக்கம். நாம் வேட்டையிற் பன்னெடு நாள் பயிற்சியுடையோம். திண்ணனார் கன்னி வேட்டை யாட வந்தவர். பன்றியைக் கொல்லுதல் நம்மால் இயலாமற் போயிற்று. திண்ணனாரே அதைக் கொன்றார். அவர்தம் ஆண் டகைமை வியக்கற்பாலதுஎன்றபடி. எய்த்தோம் - இளைத்தோம். ஆடவன் - ஆண் தகைமையுடைய திண்ணனார். 92 742. மற்றவர் திண்ண னார்க்கு மொழிகின்றார், வழிவந்து ஆற்ற உற்றது பசிவந்து; எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச் சற்றுநீ அருந்தி, யாமும் தின்று, தண்ணீர் குடித்து, வெற்றிகொள் வேட்டைக் காடு குறுகுவோம்; மெல்ல என்றார். 93 743. என்றுஅவர் கூற நோக்கித் திண்ணனார் தண்ணீர் எங்கே நன்றும்இவ் வனத்தில் உள்ளது என்றுஉரை செய்ய நாணன், நின்ற இப்பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான். நன்றும் - அப்படிச் செய்வோம் என்பது பழைய குறிப்புரை. உம்மைச் சாரியாகக் கொண்டு நன்று தண்ணீர் என்று சேர்த்து நல்ல தண்ணீர் எனக் கொள்ளலுமொன்று. நன்று பெரிதெனினுமாம். 94 744. பொங்கிய சினவில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே; இங்குஇது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும் அங்கு அது நோக்கிச் சென்றார்; காவதம் அரையில் கண்டார்; செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை. வேடன் - நாணன். இது தன்னை - இப்பன்றியை. அது - பொன் முகலியை. காவதம் அரையில் - அரைக்காத தூரத்தில். செங்கண் ஏறுடையார் - சிவபெருமான். 95 745. நாணனே! தோன்றும் குன்றில் நண்ணுவேம் என்ன, நாணன் காண நீ போதின், நல்ல காட்சியே காணும் இந்தச் சேண் உயர் திருக் காளத்தி மலைமிசை எழுந்து செவ்வே கோணம் இல் குடுமித்தேவர் இருப்பர்; கும்பிடலாம் என்றான். காணும் என்பதை முற்றாக்கோடல் ஒன்று; மலையுடன் சேர்த்து எச்சமாகக்கோடல் மற்றொன்று. சேணுயர் - அகாயத்தை அளாவிய. குடுமித் தேவர் - மலையுச்சியிலுள்ள கடவுள். 96 746. ஆவதுஎன்? இதனைக் கண்டு இங்கு அணைதொறும் என்மேல் பாரம் போவதொன் றுளது போலும் ஆசையும் பொங்கி மேன்மேல் மேவிய நெஞ்சும் வேறுஓர் விருப்பு உற விரையா நிற்கும் தேவர் அங்கு இருப்பது எங்கே? போகு என்றார் - திண்ணனார்தாம். இனி ஆவது என்ன? தத்துவப் பாரம் குறையத் தொடங்கு கிறது. சீவகரணங்கள் சிவகரணங்களாக மாறப் பெறுகின்றன. என்றும் எழாததொரு விருப்பம். 97 747. உரைசெய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து, கரைவளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும் திரைகள் முன் திரட்டி வைத்த திருமுக லியினைச் சார்ந்தார். கழையின் - மூங்கிலின். அகிற்குறடும் - அகிற்றுண்டங்களும். சந்தும் - சந்தனக் கட்டைகளும். புளினம் தோறும் - மணற்குன்று தோறும். திருஞான சம்பந்தர்; திருக்காளத்தி. சந்தமார் என்னும் பதிகம் பார்க்க. 98 748. ஆங்குஅதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு, வாங்குவில் காடன் தன்னை மரக் கடை தீக்கோல் பண்ணி, ஈங்கு நீ நெருப்புக் காண்பாய்; இம்மலை ஏறிக் கண்டு நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் கேழல் - பன்றியை. மரத்தால் தீக்கடைக் கோல் செய்து. காண்பாய் - உண்டாக்குவாய். 99 749. அளிமிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் தெளிபுனல் இழிந்து சிந்தை தெளிவு உறும் திண்ணனார் தாம், களிவரு மகிழ்ச்சி பொங்கக் காளத்தி கண்டு கொண்டு, குளிர்வரு நதியூடு ஏகிக் குலவரைச் சாரல் சேர்ந்தார். அளிமிடை - வண்டுகள் மொய்க்கும். குலவரை - தெய்வமுள்ள மலையின்; திருக்காளத்தி மலையின். 100 750. கதிரவன் உச்சி நண்ணக் கடவுள் மால் வரையின் உச்சி அதிர்தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட, இது என்கொல் நாணா? என்றார்க்கு, இம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து, மதுமலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலிகொல் என்றான். கடவுள் மால் - காண்போரைத் தெய்வமயக்கில் சேர்க்கும்; தெய்வத் தன்மை வாய்ந்த பெரிய எனினுமாம். ஐந்தும் - தேவதுந்துபி ஐந்தும். ஆர்கலி - கடல். தேன் - தேன்கூடு. மருங்கு - மலைப்பக்கத்தில். தேவதுந்துபி முழக்கம் திண்ணனார்க்குக் கேட்கிறது. அது நாண னுக்குக் கேட்கவில்லை. அவன் காதுக்குக் கேட்கும் தேனீக்களின் ஒலியை அவன் கூறுகிறான். தத்துவச் சேட்டை ஒடுங்கும் வேளையில் தெய்வ ஒலி கேட்கும். 101 751. முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு இலா இன்பம் ஆன அன்பினை எடுத்துக் காட்ட, அளவு இலா ஆர்வம் பொங்கி, மன்பெருங் காதல் கூர, வள்ளலார் மலையை நோக்கி, என்பு நெக்கு உருகி உள்ளத்து எழுபெரு வேட்கை யோடும். ஈட்டம் - சேர்க்கை; கூட்டம். திண்ணனார் வேடர் குலத்தில் பிறந்து வேட்டுவத் தொழிலின் முறைகளைப் பயின்றவர். இப் பிறவியில் அவர் எவ்விதத் தவமுஞ் செய்தாரில்லை. அவர் திருக் காளத்தி மலையைக் கண்டதும் அவர்க்கு ஒருவித உணர்ச்சி தோன்றியது மேலே சொல்லப்பட்டது. அவ்வுணர்ச்சியினின்றும் அன்பு எழுந்து கரை கடந்து ஓடுகிறது. இதற்குக் காரணம் என்னை? முன்பு செய் தவத்தின் ஈட்டம் என்று ஆசிரியர் கூறுகிறார். திண்ணனார் முற்பிறப்பில் கடவுளன்புக்குரிய தவநெறியில் நின் றொழுகித் தம்மைப் பண்படுத்திக் கொண்டவர். இந்நுட்பம் கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் என வருந் திருத் தொண்டத் தொகையானும் விளங்குகிறது. கலைபயின் றறியாத கண்ணப்பரைக் கலைமலிந்த சீர்நம்பி என்று வன்றொடர் போற்றியது உன்னற்பாலது. கண்ணப்பர் முற்பிறப்பில் தவக் கலைகளைப் பயின்று அவை வழிநின்றொழிகினமையால். அவர் இப்பிறப்பில் அத்தவக் கலைகளின் பயன் மலிந்தவராயினாரென்க. தவத்தின் பயன் அன்பை உணர்த்தி அதைக் கூட்டுவதாகும். அன்பு என்பது தத்துவங் கடந்த சிவம். தத்துவச் சேட்டையில் உண்மை அன்பு விளையாது. அவ்வன்பு இன்பமுடையதுமாகாது. அன்புள்ள விடத்தில் இன்பமும் இன்பமுள்ள விடத்தில் அன்புமிருத்தல் இயல்பு. இன்பமும் அன்பும் வேறுபட்டு நிற்பனவல்ல. இது பற்றியே ஆசிரியர் இன்பமான அன்பினை என்றார்; இறவாத இன்ப அன்பு என்றார் காரைக்காலம்மையார் புராணத்திலும். ஈரிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே என்றார் மாணிக்கவாசகனாரும். இங்கே இன்பமான அன்புக் கூறுகளைத் திண்ணனாரின் உள்ளத்திற் கலந்து நின்று அநுபவித்த ஆசிரியர், அக்கூறுகளை முறையே ஆர்வம் என்றும், காதல் என்றும், வேட்கை என்றும் பாகுபடுத்தியருளியிருத்தல் காண்க. ஆர்வம் பெறக் கடவதாகிய ஒன்றன்மேலது. அதனைப் பொங்கி என்கிறார். காதல் - தனக்கு ஒப்பு உயர்வின்றி நெஞ்சில் நிலவும் ஒன்றை நுகர்தற்கு எழும் இடையறா விருப்பம். அதனை இங்கே கூர என்கிறார். கூர்தல் - உள்ளது சிறத்தல். வேட்கை தடுத்தாட்கொண்ட புராணம் 143 - ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. வேட்கையை என்பு நெக்குருகி உள்ளத் தெழுபெரு வேட்கையோடும் என்கிறார். 102 752. நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத் தாமும் பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர் நீள்நிலை மலையை ஏறி, நேர்படச் செல்லும் போதில். நாணன் வழி காட்டி போல் முன்னே செல்கிறான். திண்ண னாரை உண்மையாக வழிகாட்டிச் செல்வது அவர்தம் அகவொளி யாகிய அன்பென்க. அவ்வன்பு ஈண்டோர் உருவம்போல் சொல்லப் பட்டது. நளிர்வரை - குளிர் மலை. சோபானம் - படிகள். ஆணை சக கக்தி. திண்ணனார் புறத்தே மலைப்படி ஏறுகிறார்; அகத்தே தத்துவப்படி ஏறுகிறார். மலைப்படி கடந்தால் குடுமித்தேவர் காட்சியளிப்பர். தத்துவப்படி கடந்தால் சிவம் காட்சியளிக்கும். ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் - கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் - திருமந்திரம்: ஞானகுரு தரிசனம் - 1. தத்துவங்களால் தநுகரண புவன போகங்கள் பெறுதலானும், அவைகளால் இருள் நீக்கத்துக்குத் துணை பெறுதலானும் பேணு தத்துவங்கள் என்றார். தத்துவங் கடந்ததுங் காணப்பெறுவது ஆணையாகிய சக்தி என்க. அச்சக்தி கொண்டே சிவம் எல்லாஞ் செய்தலால், அஃது ஆணை எனப்பட்டது. அவையே தானேயா யிருவினையிற் போக்குவரவு புரிய ஆணையின் - நீக்கமின்றி நிற்குமன்றே - சிவஞானபோதம் சூ. 2. சிவமுஞ் சக்தியும் ஒன்றேயாதலின் ஆணையாஞ் சிவத்தை என்றார். விரிவு மெய்கண்ட நூல்களிற் பார்க்க. 103 753. திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்று அவர்காணா முன்னே, அங்கணர் கருணை கூர்ந்த அருள் திருநோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல, நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருஇல்அன்பு உருவம் ஆனார். அவர் - திண்ணனார். பவத்தின் - பிறவியின். முன்னைச் சார்பு - பழைய தொடர்புகள்; மலமாயா கர்மங்களின் தொடர்புகள். ஒளி - சிவ - ஒளி. பொருவில் - ஒப்பற்ற. திங்கள் ஞானக்குறி என்பதும், கடை அமிர்ததாரை என்பதும் பாயிர முதற்பாட்டில் விளக்கப்பட்டன. திண்ணனார் ஞானம், அமிர்த ஒழுக்குப் பெறும் நேரமிது. தத்து வங்களினின்றும் விடுதலையடைந்த உயிர்களை ஆண்டவன் திருக் கண் நோக்கஞ் செய்து ஞான தீக்கை வலிந்து செய்வது வழக்கம். முக்கண் நுட்பம் திருநகரச் சிறப்பு 46 -ம் பாட்டுக் குறிப்பில் விளக்கப் பட்டது. திண்ணனார் முக்கண் பெறப்போகும் நேரமிது. திண்ண னார் முற்பிறவியில் செய்யத்தக்க தவங்களை யெல்லாஞ் செய்தவ ராதலின், அவர்க்கு இப் பிறவியில் ஆண்டவன் திருவருள் தானே படிகிறது. 102 -ம் பாட்டைப் பார்க்க. 104 754. மாகம்ஆர் திருக்காளத்தி மலைஎழு கொழுந்தாய் உள்ள ஏகநாயகரைக் கண்டார்; எழுந்த பேர் உவகை அன்பின் வேகமானது மேற்செல்ல மிக்கதோர் விரைவி னோடு, மோகமாய் ஓடிச் சென்றார்; தழுவினார்; மோந்து நின்றார். மாகம் - ஆகாயம். ஆர் - நிறைந்த. 105 755. நெடிதுபோது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும் வடிவு எலாம்புளகம் பொங்க, மலர்க்கண் நீர் அருவி பாய, அடியனேற்கு இவர்தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று, படிஇலாப் பரிவுதான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற. நெடிதுபோது - நீண்ட நேரம். உயிர்த்து - (மோந்து) பெருமூச்சு விட்டு. படியிலா. . . . . . தோன்ற - உவமையில்லா அன்பே தானொரு வடிவங்கொண்ட தன்மை தோன்ற. 106 756. வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல் கைம்மலை, கரடி, வேங்கை, அரிதிரி கானம் தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்! இம்மலைத் தனியே நீர் இங்கு ïU¥gnj? என்று நைந்தார். கைம்மலை - யானை. அரி - சிங்கம். நைந்தார் - இரங்கி வருந்தினார். 107 757. கைச் சிலை விழுந்தது ஓரார் - காளையார்; மீள, இந்தப் பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து, k¢áJ brŒjh® ahnuh? என்றலும், மருங்கு நின்ற அச்சிலை நாணன் தானும் நான்இது அறிந்தேன்என்பான். ஓரார் - உணராதவராய். மச்சு - அநுசிதம் (பழைய குறிப்புரை). மஞ்சு - அழகு; மஞ்சு என்றது மச்சென விகாரமாயிற்று என்பர் ஆறுமுகத் தம்பிரானார். 108 758. வன் திறல் உந்தையோடு மாவேட்டை ஆடிப் பண்டு இக் குன்றிடை வந்தோ மாகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி, ஒன்றிய இலைப்பூச் சூட்டி, ஊட்டி, முன்பு அறைந்து, ஓர் பார்ப்பான் அன்றுஇது செய்தான்; இன்றும் அவன்செய்தது ஆகும் என்றான். உந்தையோடு - உம் தந்தையுடன். மா - விலங்கு. பண்டு - முன்னே. ஒன்றிய - கலந்த. பார்ப்பான் - சொல்லும் மந்திரம் நாணனுக்கு விளங்கியதில்லை யாதலின், ஏதோ ஒன்றைப் பார்ப்பான் சொன்னான் என்பான் முன் பறைந்து என்றான். 794. 109 759. உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு இன்றி ஆரா அன்பில் திண்ணனார் திருக் காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை எண்ணிய இவை கொலாம் என்று இது கடைப்பிடித்துக் கொண்டு அவ் அண்ணலைப் பிரிய மாட்டா அளவுஇல் ஆதரவு நீட. இது கடைப்பிடித்துக் கொண்டு - நாணன் சொற்றதை உறுதியாகக் கொண்டு. நீராட்டல், மலர் சூட்டல், உணவூட்டல், ஏதோ மொழிதல் இவைகள் இறைவருக்கு இனியன என்று திண் ணனார் அவைகளை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டார். mitfis......ப் பற்றிய ஆராய்ச்சியே அவரிடம் எழவில்லை. அவைகளைச் செய்யவே அவர் தொடங்கினார். ஒருவித பயனையுங் கருதாது அச் செயலில் அவர் தலைப்பட்டது கருதத்தக்கது. ஆதரவு - அன்பு. 110 760. இவர்தமைக் கண்டே னுக்குத் தனியராய் இருந்தார் என்னே! இவர்தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை; இவர்தமைப் பிரிய ஒண்ணாது; என் செய்கேன்? இனியான்; சால இவர்தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று. சால - போதிய. திண்ணனார் இறைவருக்கு இறைச்சிகொண்டு வர முயல்கிறார். உணவு என்பதற்குக் திண்ணனார் இறைச்சி என்று கொண்டனர். திண்ணனார் வேடர்; வேட்டுவத் தொழிலில் ஈடு பட்டவர். அத்தொழில் பாவமென்றோ புண்ணியமென்றோ அவர்க்குத் தெரியாது. அவர் இப்பொழுது சிவத்திலீடுபட்டு அன்பராயினார். அன்பர் தமது உணவை ஆண்டவனுக்கு ஊட்டுவர். அன்பு, பாவ புண்ணிய நிலையைக் கடந்தது. பாவ புண்ணிய நிலையில் கட்டுப்பட்டுழல்வோர். அந்நிலை கடந்து அன்பு நிலை யிலிருப்போருடைய செயல்களைத் தம் மதியால் ஆராய்ந்து முடிவு காணப்புகுவது அறியாமை. திண்ணனார் இறைச்சியை வாயால் அதுக்கிச் சுவை பார்த்து இறைவர்க்கு இட்டது, கண்ணிடந்து அப்பியது போன்ற செயல்களை இரு வினைக்குட் பட்டோர் செய்ய ஒருப்படுவரோ? இவை அன்பு வழி நிகழ்வன அல்லவோ? அன்பு நிகழ்ச்சிகளைக் கட்டுப்பாடுகளில் நுழைத்துப் பார்ப்பதே தவறு. இறைவன் விரும்புவது அன்பு; கட்டுப்பாடன்று. 111 761. போதுவர்; மீண்டு செல்வார்; புல்லுவர்; மீளப் போவர்; காதலின் நோக்கி நிற்பர்; கன்றுஅகல் புனிற்று ஆப் போல்வர்; நாதனே! அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே கோதுஅறத் தெரிந்து வேறு கொண்டுஇங்கு வருவேன் என்பார். புல்லுவர் - தழுவுவர். புனிற்றா - ஈன்றணிமைப் பசு; இளங்கன்றுப் பசு. 112 762. ஆர் தமராக நீர் இங்கு இருப்பது? என்று அகல மாட்டேன்; நீர் பசித்திருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று, சோர்தரு கண்ணீர் வாரப் போய்வரத் துணிந்தார் ஆகி, வார்சிலை எடுத்துக் கொண்டு மலர்க்கையால் தொழுது போந்தார். ஆர் தமராக -யாரைச் சுற்றமாகக் கொண்டு. வார்சிலை - நீண்டவில்லை. 113 763. முன்பு நின்று அரிதில் நீங்கி, மொய்வரை இழிந்து, நாணன் பின்பு வந்து அணைய, முன்னைப் பிறதுறை வேட்கை நீங்கி, அன்பு கொண்டுய்ப்பச் செல்லும் அவர் திருமுகலி ஆற்றின் பொன்புனை கரையில் ஏறிப் புதுமலர்க் காவில் புக்கார். முன்னைப் பிற துறைவேட்கை நீங்கி - பழைய பிற வழிகளில் செல்லும் ஆசை நீங்கி. அன்பானது தன்னைச் செலுத்த அதன்வழிச் செல்லுந் திண்ணனார். பொன் புனை - பொன் ஒதுங்கி அணி செய்யும். காவில் - சோலையில். 114 764. காடனும் எதிரே சென்று தொழுது தீக்கடைந்து வைத்தேன்; கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் மாடுற நோக்கிக் கொள்ளும்; மறித்துநாம் போகைக்கு இன்று ÚlÚ® jhœ¤jJ v‹ndh? என்றலும் நின்ற நாணன். கோடுடை ஏனம் - கொம்புடைய பன்றியின். உங்கள் குறிப்புப் படி. மாடுற - இவ்விடத்திலிருக்க. மறித்து - மீண்டும். 115 765. அங்கு இவன் மலையில் தேவர் தம்மைக்கண்டு அணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போதா வல்உடும்பு என்ன நீங்கான்; இங்கும் அத்தேவர் தின்ன இறைச்சி கொண்டேகப் போந்தான்; நம்குலத் தலைமை விட்டான்; நலப்பட்டான் தேவர்க்கு என்றான். வங்கினை - மரப்பொந்தினை. தணக்கிறப் பறித்தபோதும் தானளை விடுத்தல் செல்லா - நிணப்புடை உடும்பனாரை - சிந்தாமணி: 2887. 116 766. என்செய்தாய்? திண்ண! நீதான் என்ன மால் கொண்டாய்? எங்கள் முன்பெரு முதலி அல்லை யோ என முகத்தை நோக்கார் வன்பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி, மிக்க இன்புஉறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு. மால் - மயக்கம். முதலி - முதல்வன்; தலைவன், தலைமைப் பதவி நினைவூட்டினால் மனோநிலை மாறுமென்று காடன் கருதினான் போலும். 117 767. கோலினில் கோத்துக் காய்ச்சிக் கொழும்தசை பதத்தில் வேவ, வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கிப் பார்த்துச் சாலவும் இனிய எல்லாம் சருகுஇலை இணைத்த கல்லை ஏலவே கோலிக் கூட அதன்மிசை இடுவ ரானார். வாலிய - இனிய. கல்லை - இலைக்கலத்தை; (சருகிலையால் செய்யப்பட்டது). ஏலவே கோலி - பொருந்துமாறு நன்றாகத் தைத்து. கூட - இறைச்சிகளை எல்லாம் ஒருங்கு. 118 768. மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல்மிக முதிர்ந்தான் என்னே! அரும்பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கிவேறு உமிழா நின்றான்; பெரும்பசி உடையனேனும் பேச்சுஇலன்; எமக்கும் பேறு தரும் பரிசு உணரான், மற்றைத் தசை புறத்து எறியா நின்றான். மயல் - பித்து; மயக்கம். நமக்கும் நமக்குரிய பகுதியைக் கொடுக்குந் தன்மையையுணராதவனாய். 119 769. தேவமால் கொண்டான் - இந்தத் திண்ணன்; மற்றுஇதனைத் தீர்க்கல் ஆவது ஒன்று அறியோம்; தேவராட்டியை நாகனோடு மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும்; அவ் வேட்டைக் கானில் ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணிப் போனார். தேவி - தெய்வம்; மால் - பயித்தியம். 120 770. கானவர் போனது ஓரார்; கடிதினில் கல்லையின்கண் ஊன்அமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னி மாநதி நன்னீர் தூய வாயினில் கொண்டு, கொய்த தூநறும் பள்ளித் தாமம் குஞ்சிமேல் துதையக் கொண்டார். கானவர் - நாணனும் காடனும். பள்ளித்தாமம் - எறிபத்த நாயனார் புராணம் 9 -ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. குஞ்சி மேல் துதைய - தலைமயிரில் நெருங்க. 121 771. தனுஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கிக் கல்லைப் புனிதமெல் இறைச்சி நல்ல போனகம் ஒருகை ஏந்தி, இனியஎம் பிரானார் சாலப் பசிப்பர் என்று இரங்கி ஏங்கி, நனிவிரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ண னார்தாம். தனு - வில். சரத்துடன் - அம்புடன். போனகம் - திருவமுது. சால - மிகவும். நனி - அதிக. இறைவர் வெற்பை - திருக்காளத்தியப்பர் மலையை. 122 772. இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி, வெற்பின் முளைத்து எழுமுதலைக் கண்டு, முடிமிசை மலரைக் காலில் வளைத்த பொன் செருப்பால் மாற்றி, வாயின் மஞ்சன நீர் தன்னை விளைத்த அன்பு உமிழ்வார் போல, விமலனார் முடிமேல் விட்டார். நாயனார் - சிவபெருமான். ஈண்ட - விரைவாக. பொன் - ஆற்றங் கரையிலுள்ள பொற்பொடிகள் ஒட்டிய; அழகிய எனினுமாம். 123 773. தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி மலைமிசைத் தம்பிரானார் முடிமிசை வணங்கிச் சாத்திச் சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை இலைமிசைப் படைத்த ஊனின் திருஅமுது எதிரே வைத்து. தாமம் - மாலை. கல்லை - தேக்கிலை. 124 774. கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்துகோத்து அங்கு அழல்உறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில் பழகிய இனிமை பார்த்துப் படைத்த இவ் இறைச்சி சால அழகிது; நாயனீரே! அமுது செய்தருளும் என்றார். கொழுவிய - கொழுமையான. 125 775. அன்னஇம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் மன்னனார், திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல்ஊன் இன்னமும் வேண்டும் என்னும் எழுபெருங் காதல் கண்டு, பல்நெடுங் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான். பகலவன் - சூரியன். 126 776. அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் வெவ்விலங்கு உள என்று அஞ்சி, மெய்ம்மையின் வேறு கொள்ளாச் செவ்விய அன்பு தாங்கித் திருக்கையில் சிலையும் தாங்கி, மைவரை என்ன ஐயர் மருங்குநின்று அகலா நின்றார். உண்மையினின்றும் வேறுபடாத. 127 777. சார்வுஅருந் தவங்கள் செய்து முனிவரும் அமரர்தாமும் கார்வரைஅடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை ஆர்வம்முன் பெருக, ஆரா அன்பினில் கண்டு கொண்டே நேர்பெற நோக்கி நின்றார் - நீள் இருள் நீங்க நின்றார். கார் வரை அடவி - மேகம் தவழும் மலையிலும், அதைச் சார்ந்த காட்டிலும். அரியார் தம்மை - சிவபெருமானை. புற்று மாய் மர மாய்ப்புனல் காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் - வற்றி யாரும்நின் மலரடி காணாமன்ன என்னையோர் வார்த்தை யுட்படுத்துப் - பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் - செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருவாசகம்: செத்திலாப்பத்து -2 நீள் இருள் என்றது ஆணவமலத்தை; அஞ் ஞானத்தை; அக இருளை. 128 778. கழைசொரி தரளக் குன்றின் கதிர்நிலவு ஒருபால் பொங்க, முழைஅரவு உமிழ்ந்த செய்ய மணிவெயில் ஒருபால் மொய்ப்பத் தழைகதிர்ப் பரிதி யோடும் சந்திரன் தலை உவாவில் குழைஅணி காதர் வெற்பைக் கும்பிடச் சென்றால் ஒக்கும். கழை சொரி தரளக் குன்றின் - மூங்கில்கள் சொரியும் முத்துக் குவையினின்றும். முழை - குகைகளிலுள்ள. அரவு - பாம்பு. முத்தின் கதிர் தண்மையதாகலின், அது நிலவென்றும், மணியின் கதிர் வெம்மை யதாகலின், அது வெயில் என்றும் சொல்லப்பட்டன. சந்திரன் கதிர் - நிலவு. சூரியன்கதிர் - வெயில். பரிதி - சூரியன். தலை உவாவில் - அமா வாசியில். (உவா இரண்டு; பௌர்ணமியும் அமாவாசியும். தலை உவா - அமாவாசி). குழையணி காதர் வெற்பை - குண்டலமணிந்த காதினையுடைய காளத்தியப்பர் மலையை. 129 779. விரவுபல் மணிகள் கான்ற விரிகதிர்ப் படலை பொங்க, மரகதம் ஒளிகொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி - பொர இரு சுடருக்கு அஞ்சிப் போயின புடைகள் தோறும் இரவு இருள் ஒதுங்கினாலே போன்றுஉளது, எங்கும் எங்கும். விரவு - கலந்து நெருங்கிய. கான்ற - உமிழ்ந்த. படலை - பரப்புத் திரள்; கூட்டம், மரகதமும். இமைக்குஞ் சோதியானது பொர - தன் னுடன் பொருகின்ற; வலியைக் கெடுக்க. இருசுடருக்கு - சூரிய சந்திரர்கட்கு. அஞ்சிப் போயின - பயந்து விலகிய. இரவிருள் புழைகள் தோறும் - இரவின் இருளானது பக்கங்கள் தோறும்; ஆழமாகவுள்ள சிறு சிறு குகைகள் தோறும். 130 780. செந்தழல் ஒளியின் பொங்கும் தீபமா மரங்களாலும் மந்திகள் முழையில் வைத்த மணிவிளக்கு ஒளிகளாலும் ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெருஞ் சோதி யாலும் எந்தையார் திருக் காளத்தி மலையினில் இரவொன் றில்லை. ஒளியில் - ஒளிபோல. தீபமா மரங்களாலும் - சோதி விருட்சங் களாலும். சோதி விருட்சம்: - தெய்வீக மலைகளிலும் தபோ வனங்களிலுமிருப்பது; பகலில் புலனாகாதது; இரவில் சோதி மயமாய்த் தோன்றுவது; காயசித்திக்குப் பயன்படுவது. மந்திகள் முழையில் வைத்த - குரங்குகள் (தாங்கள் வசிக்கும்) குகைகளில் ஏற்றிய. ஐந்தும் ஆறும் அடக்கியுள்ளார் - ஐம்புலச் சேட்டை களையும் அறுவகைப் பகைகளையும் அடக்கியுள்ள முனிவரர் களின், ஐந்து - சப்த பரிஸ ரூபரச கந்தம்; ஆறு - காமக் குரோத லோப மோக மத மாற்சரியம். திண்ணனார் அக இருள் நீங்க நின்றார் என்று மேலே சொல்லப்பட்டது. புற இருள் அகவொளி வீசுமிடத்தில் இருத்தலரிது. காளத்தி மலையில் இரவுக் காலத்தில் புற இருள் என்னும் பூதஇருளும் இல்லை என்று ஆசிரியர் தொடர்ந்து கூறியுள்ள மூன்று பாக்களையும் நோக்குக. திருக்காளத்தி மலையில் பலதிற மணி ஒளி, சோதி விருட்ச ஒளி, பெரியோர்க ளொளி, சிவஒளி, திண்ணனாரொளி முதலிய ஒளிகளிருத்தலான், அம் மலையில் இருள் இல்லை யென்க. தத்துவங் கடந்து ஞான தீக்கை பெற்றவர்க்குச் சோதி தரிசனமாதல் இயல்பு.131 781. வரும்கறைப் பொழுது நீங்கி, மல்கிய யாமம் சென்று சுருங்கிட, அறிந்த புள்ளின் சூழ்சிலம்பு ஓசை கேட்டுக் கருங்கடல் என்ன நின்று கய்துயிலாத வீரர் அரும்பெறல் தம்பிரானார்க்கு அமுது கொண்டு அணையவேண்டி. கறைப்பொழுது - மாலைக் காலம். மல்கிய யாமம் - இருள் நிறைந்த நடுயாமம். புள்ளின் - பறவைககளின். சிலம்பு ஓசை - ஒலிக்கின்ற ஓசை; பேரோசை என்றபடி பெறுதற்குரிய தம்பிரான் முன்னர், திண்ணனார் நின்ற காட்சியை முன்னே மலை என்றதும், இங்கே கடலென்றதுங் கருதற்பாலன. ஆசிரியர்க்கு அன்பு மலை யாகத் தோன்றியவர் இப்பொழுது அன்புக் கடலாகத் தோன்றுகிறார். இஃது அன்பு உருக்கத்தைக் குறிப்பது. திண்ணனார், இருள் மலம் நீங்கப் பெற்று ஒளி மயமாய் விளங்குவோராதலின், அவர்க்குப் பூத இரவுத் துயில் இல்லை யென்க. அஞ்சானத் துயிலை வெல்வதே சிறந்த வீரமாதலின் கண் துயிலாத வீரர் என்றார். 132 782. ஏறுகால் பன்றி யோடும் இருங்கலை, புனமான், மற்றும், வேறுவேறு இனங்கள் வேட்டை வினைத்தொழில் விரகி னாலே ஊறுசெய் காலம் சிந்தித்து, உருமிகத் தெரியாப் போதில் மாறுஅடு சிலையும் கொண்டு, வள்ளலைத் தொழுது போந்தார். விரகினாலே - சாமர்த்தியத்தினாலே. ஊறு செய்காலம் - கொல்லுங் காலம். உருமிகத் தெரியாத விடியற்காலத்தில். மாறு அடு - பகைவர்களைக் கொல்லும். வள்ளலை - காளத்தியப்பரை. 133 கொச்சக் கலி 783. மொய்காட்டும் இருள்வாங்கி முகம்காட்டும் தேர்இரவி, மெய்காட்டும் அன்புஉடைய வில்லியார் தனிவேட்டை எய்காட்டின் மாவளைக்க இட்டகருந் திரைஎடுத்துக் கைகாட்டுவான் போலக் கதிர்காட்டி எழும்போதில். மொய் காட்டும் - மொய்த்துக் காட்டும்; கூட்டமாய்த் தோன் றுகிற. இரவி - சூரியன். எய்காட்டில் - செல்லுங் காட்டில். எய்காடு - வினைத்தொகை. எய் - முட்பன்றியையும், காட்டின்மா - மற்றக் காட்டு மிருகங்களையும் என்று கொள்ளினுமாம். 134 784. எய்தியசீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக் கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்; மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடு செய்துவரும் தவம்உடைய முனிவர்சிவ கோசரியார். புனல் - நீர். மை - கருமை (நஞ்சு). மலைமருந்து - காளத்தி அப்பன். 135 785. வந்துதிரு மலையின்கண் வானவர் நாயகர் மருங்கு சிந்தை நியமத்தோடும் செல்கின்றார்; திருமுன்பு வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்துஓடி, இந்த அனுசிதம் கெட்டேன்! ah®brŒjh®? என்று அழிவார். செல்கின்றவராகிய சிவகோசரியார். 136 786. மேவநேர் வர அஞ்சா வேடுவரே இதுசெய்தார் தேவதே வேசனே! திருமுன்பே இதுசெய்து போவதே? இவ்வண்ணம் புகுநீர் திருஉள்ளம் Mtnj? எனப் பதறி அழுதுவிழுந்து அலமந்தார். மேவநோவா அஞ்சா - சந்நிதி முன் வருதற்கு மனம் நோவாத; அஞ்சாத. மேவநோவா - மிக வருந்தி என்பது பழைய குறிப்புரை. புகுத - நிகழ. அலமந்தார் - நெஞ்சஞ் சுழன்றார். 137 787. பொருப்பில் எழும் சுடர்க்கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் இருப்பது இனி என்? என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும் செருப்புஅடியும் நாய்அடியும் திருஅலகால் மாற்றியபின், விருப்பினொடும் திருமுகலிப் புனல்மூழ்கி விரைந்து அணைந்தார். பொருப்பில் - திருமலையில். திருவலகு - கோயில் விளக்கு மாறு. நாயொடும் புகுந்து. தொடர்ந்த நாயொடு தோன்றினன் - திருக் கண்ணப்ப தேவர் திருமறம். 138 788. பழுதுபுகுந்தது தீரப்பவித்திரம் ஆம்செயல் புரிந்து, தொழுது பெறுவனகொண்டு தூய பூசனை தொடங்கி, வழுஇல் திருமஞ்சனமே முதலாக வரும் பூசை முழுதும் முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார். பவித்திரமாம் செயல் - சுத்தமாகும் பிராயச்சித்தம். பெறுவன - காட்டிற் கிடைக்கும் உபகரணங்கள். 139 789. பணிந்துஎழுந்து தனிமுதல் ஆம் பரன் என்று பல்முறையால் துணிந்த மறைமொழியாலே துதிசெய்து, சுடர்த் திங்கள் அணிந்தசடை முடிக்கற்றை அங்கணரை விடைகொண்டு, தணிந்த மனத்திரு முனிவர் தபோவனத்தினிடைச் சார்ந்தார். அங்கணரை - சிவபெருமானிடம். 140 790. இவ்வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால் மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார் கைவண்ணச் சிலைவளைத்துக் கான்வேட்டை தனி ஆடிச் செய்வண்ணத் திறம்மொழிவேன் - தீ வினையின் திறம்ஒழிவேன். வண்ணம் - நிறம். குஞ்சி -தலைமயிர். வண்ணச்சிலை - அழகிய வில். 141 791. திருமலையின் புறம்போன திண்ணனார் செறிதுறுகல் பெருமலைகள் இடைச்சரிவில் பெரும்பன்றி புனம்மேய்ந்து வருவனவும் துணிபடுத்து, மான்இனங்கள் கானிடைநின்று ஒருவழிச் சென்று ஏறுதுறை ஒளிநின்று கொன்றருளி. சரிவில் - சாரலில். ஒளிநின்று - மறைந்திருந்து. 142 792. பயில்விளியால் கலைஅழைத்துப் பாடுபெற ஊடுஉருவும் அயில்முக வெங்கணை போக்கி, அடிஒற்றி மரைஇனங்கள் துயிலிடையின் இடைஎய்து, தொடர்ந்து கடமைகள்எய்து, வெயில்படு வெங்கதிர் முதிரத் தனிவேட்டை வினைமுடித்தார். பயில் விளியால் - மிருகங்களைப்போலக் கூப்பிடும் ஓசை அழைப்பால். கலை - கலைமானை. பாடுபெற - வருந்தும்படி. அயில் - கூரிய. அடி ஒற்றி - அடிவழிச் சென்று. கிடை எய்து -கூட்டத்தை அம்பால் எய்து. 143 793. பட்டவன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் இட்டு, அருகு தீக்கடை கோல் இருஞ்சுரிகைதனை உருவி வெட்டி, நறுங்கோல் தேனும் மிக முறித்துத் தேக்கு இலையால் வட்டம்உறு பெருங்கல்லை மருங்குபுடைபட அமைத்தார். பட்ட - இறந்த. ஒரு சூழல் - ஒரு சோலையில். தீக்ககடைக் கோலைப் பெரிய உடை வாளை யுருவி வெட்டி. இலைக் கலத்தில் நிறைய வார்த்தார். 144 794. இந்தனத்தை முறித்து அடுக்கி, எரிகடையும் அரணியினில் வெந்தழலைப் பிறப்பித்து மிகவளர்ந்து, மிருகங்கள் கொந்தி, அயில் அலகு அம்பால் குட்டம்இட்டுக் கொழும்புஅரிந்து, வந்தனகொண்டு, எழும்தழலில் வக்குவன வக்குவித்து. இந்தனத்தை - விறகை. எரிகடையும் அரணியினில் - தீக்கடைக் கோலால். அயில் அலகு - கூரிய நுனியுடைய. குட்டமிட்டு - வளை வாக அகழ்ந்து எடுத்து; ஆழமாக வெட்டி எடுத்து எனினுமாம். வக்கு - வதக்கு; இடைக்குறை; வேடர்கள் மொழியும் முறையில் சொல்லப் பட்டது. 145. 795. வாய்அம்பால் அழிப்பதுவும் செய்து வகுப்பதும் செய்து அவற்றின் ஆயஉறுப்பு இறைச்சி எல்லாம்அரிந்து ஒருகல்லையில் இட்டுக் காயநெடுங் கோல்கோத்துக் கனலின்கண் உறக்காய்ச்சித் தூயதிரு அமுதுஅமைக்கச் சுவை காணலுறுகின்றார். வாய் -கூர்மை பொருந்திய. அழிப்பதுவும் - துண்டு ஆக்கு வதையும்; அரிந்து ஒதுக்குவதையுமாம். வகுப்பதுவும் - கீறுவதையும். 146. 796. எண்இறந்த கடவுளருக்கு இடும்உணவு கொண்டு ஊட்டும் வண்ண எரிவாயின்கண் வைத்தது எனக் காளத்தி அண்ணலார்க்கு ஆம்பரிசுதாம் சோதித்து அமைப்பார்போல், திண்ணனார் திருவாயில் அமைந்தார் - ஊன் திருஅமுது. உணவு கொண்டு ஊட்டும் - அவி உணவை (முன்பு தான்) உண்டு (பின்பு தேவர்களை) உண்பிக்கும். எரி - அக்கினி தேவன். 147 797. நல்ல பதம் உறவெந்து, நாவின்கண் இடும் இறைச்சி கல்லையினில் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அதுகொண்டு வல்விரைந்து திருப்பள்ளித் தாமமும் தூய் மஞ்சனமும் ஒல்லையினில் முன்புபோல் உடன்கொண்டு வந்து அணைந்தார். ஒல்லையினில் - நொடிப்பொழுதில். 148 798. வந்து திருக் காளத்தி மலைஏறி, வன சரர்கள் தம்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி, அந்தணனார் பூசையினை முன்புபோல் அகற்றியபின் முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார். வனசரர்கள் தம் தலைவனார் - வேடர்களுடைய தலைவ னாராகிய திண்ணனார். இமையோர் தலைவனார்தமை - தேவர்கள் தலைவராகிய சிவபெருமானை. முந்தைமுறை - முன்போல. 149 799. ஊன்அமுது கல்லையுடன் வைத்து இதுமுன்னையின் நன்றால்; ஏனமொடு மான், கலைகள், மரை, கடமை இவை யிற்றில் ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்; தேனும் உடன் கலந்தது இது, தித்திக்கும் என மொழிந்தார். முன்னையதைப் பார்க்கிலும் நல்லது. 150 800. இப்பரிசு திருஅமுது செய்வித்துத் தம்முடைய ஒப்புஅரிய பூசனைசெய்து அந்நெறியில் ஒழுகுவார்; எப்பொழுதும் மேல்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி அப்பர் எதிர்அல் உறங்கார்; பகல்வேட்டை ஆடுவார். இப்பரிசு - இவ்விதம். அல் - இரவில். பகல் - பகலில். 151 801. மாமுனிவர் நாள்தோறும் வந்துஅணைந்து, வனவேந்தர் தாம்முயலும் பூசனைக்குச் சாலமிகத் தளர்வு எய்தித் தீமை என அது நீக்கிச் செப்பிய ஆகம விதியால் ஆமுறையில் அர்ச்சனைசெய்து அந்நெறியில் ஒழுகுவரால். வனம் - காடு. செப்பிய - கூவப்பெற்ற. ஆ - ஆகும். 152 802. நாணனொடு காடனும்போய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணும் உறக்கமும் இன்றி, அணங்குஉறை வாளையும்கொண்டு, பேணும் மகனார் தம்பால் வந்து எல்லாம் பேதித்துக் காணும் நெறி தங்கள்குறி வாராமல் கைவிட்டார். அணங்குறை வாளையும் - தேவராட்டியையும். பேணும் - தம்மால் விரும்பப்படும். எல்லாம் பேதித்துக் காணும் நெறி - எல்லா வகையாலும் பேதித்துக் காணும் வழி. 153 803. முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் இன்பு உறுவே தகத்து இரும்பு பொன் ஆனாற்போல் யாக்கைத் தன்பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும்அற அன்புபிழம்பு ஆய்த்திரிவார் அவர் கருத்தின் அளவினரோ! வேதகத்து - தரிசன வேதியால்; இரச குளிகையால். யாக்கைத் தன் பரிசும் - உடற்றன்மையும். இருவினை - புண்ணிய பாவம். மும் மலம் - ஆணவம் கர்மம் மாயை. இந்நிலையினரா யிருக்கிறாரென்று அவ்வேடர்களால் கருதி அளவிடத் தக்க அளவிலிருக்கிறாரோ என்றபடி. 154 804. அந்நிலையில் அன்பனார் அறிந்தநெறி பூசிப்ப மன்னிய ஆகமப்படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு என் உடைய நாயகனே! இதுசெய்தார் தமைக்காணேன்; உன்னுடைய திருஅருளால் ஒழித்தருள வேண்டும் என. அன்பனார் - திண்ணனார். 155 805. அன்றிரவு கனவின்கண் அருள்முனிவர் தம்பாலே மின்திகழும் சடைமவுலி வேதியர்தாம் எழுந்தருளி, வன்திறல் வேடுவன் என்று மற்றவனை நீநினையேல்; நன்று அவன்தன் செயல்தன்னை நாம் உரைப்பக் கேள் என்று. மவுலி - முடியுடைய. வேதியர் - காளத்தியப்பர். 156 806. அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்பு, என்றும் அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவு, என்றும் அவனுடைய செயல்எல்லாம் நமக்கு இனியவாம், என்றும் அவனுடைய நிலைஇவ்வாறு; அறி நீ என்று அருள்செய்தார். வடிவு - அறிவு செயல் நிலை எல்லாம் என்பாலதே கண்டறிக என்றவாறு. 157 807. பொருப்பினில் வந்து, அவன்செய்யும் பூசனைக்கு முன்பு, என் மேல் அருப்புஉறும் மென்மலர்முன்னை அவைநீக்கும் ஆதரவால், விருப்புஉறும் அன்பு எனும் வெள்ளக் கால்பெருகிற்று எனவீழ்ந்த, செருப்புஅடி, அவ் இளம்பருவச் சேய்அடியின் சிறப்புஉடைத்தால். உன்னால் சாத்தப்பெற்ற அரும்பு உறுமென்மலர். ஆதரவால் - விருப்பால். இளம் பருவச் சேயடியில் - முருகனடியினும். அரும்பும் மென்மலரும் எனினுமாம். 158 808. உருகியஅன்பு ஒழிவுஇன்றி நிறைந்தஅவன் உருஎன்னும் பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கி, இனிது ஒழுகுதலால் ஒருமுனிவன் செவி,உமிழும் உயர்கங்கை முதல் தீர்த்தப் பொருபுனலின், எனக்கு அவன்தன் வாய்உமிழும் புனல்புனிதம்! அவன் வடிவமென்னும் பாத்திரத்தினிடத்து விளங்கி. ஒரு முனிவன் - சந்நு முனிவன். பகீரதனால் கொண்டுவரப் பெற்ற கங்கை சென்ற வழியில் தவஞ்செய்துகொண்டிருந்த சந்நு முனிவர் அக் கங்கையைக் குடித்து விட்டாரென்பதும். பின்னே பகீரதன் வேண்டுகோட் கிணங்கி அவர் அந்நதியைக் காதின்வழி விட்டா ரென்பதும் புராணக் கதை. பொருபுனலின் - மோதுகின்ற நீரைப் பார்க்கிலும். 159. 809. இம் மலைவந்து எனைஅடைந்த கானவன், தன் இயல்பாலே மெய்ம்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால், செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்குஒவ்வா மெய்ம்மலரும் - உண்மை மலருகின்ற. 160 810. வெய்யகனல் பதம்கொள்ள, வெந்துளதோ எனும் அன்பால் நையும் மனத்து இனிமையினில் நையமிக மென்றிடலால், செய்யும்மறை வேள்வியோர் முன்புதரும் திருந்து அவியில் எய்யும்வரிச் சிலையவன்தான் இட்டஊன் எனக்கு இனிய திருந்தவியில் - நல்ல அவிர்ப்பாகமாகிய ஊனைப் பார்க்கிலும். 161 811. மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்து உரைக்கும் இன்ப மொழித் தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும், முன்பு இருந்து மற்று அவன் தன் முகம் மலர அகம் நெகிழ, அன்பில் நினைத்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல. பிறரை அறிவுறாத. 162 812. உனக்கு அவன்தன் செயல்காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால், எனக்கு அவன்தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்; மனக்கவலை ஒழிக என்று, மறைமுனிவர்க்கு அருள்செய்து, புனல் சடிலத் திருமுடியார் எழுந்தருளிப் போயினார். பரிவிருக்கும் பரிசெல்லாம் - அன்பிருக்கும் தன்மைகளை யெல்லாம். புனற்சடிலம் - கங்கை யணிந்த சடையையுடைய. 163 813. கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடைப் புனைதவத்து மாமுனிவர் புலர்வு அளவும் கண்துயிலார்; மனம்உறும் அற்புதம் ஆகி, வரும்பயமும் உடன் ஆகித் துனைபுரவித் தனித்தேர்மேல் தோன்றுவான் கதிர் தோன்ற. புனைதவத்து - செய்யப்பட்ட தவத்தையுடைய; தவத்தையே ஆபரணமாக உடைய எனினுமாம். துனை - வேகமான. தோன்று வான் கதிர் - சூரியனது கிரணம். 164 814. முன்னை நாள்போல் வந்து திருமுகலிப் புனல்மூழ்கிப் பல்முறையும் தம்பிரான் அருள்செய்த படிநினைந்து, மன்னு திருக்காளத்தி மலைஏறி, முன்புபோல் பிஞ்ஞகனைப் பூசித்தப் பின்பாக ஒளித்திருந்தார். பிஞ்ஞகனை - தலைக்கோல முடைய சிவபெருமானை. 165 அறுசீர் விருத்தம் 815. கருமுகில் என்ன நின்ற கண்படா வில்லி யார்தாம் வருமுறை ஆறாம் நாளில் வரும்இரவு ஒழிந்த காலை, அருமறை முனிவனார் வந்து அணைவதன் முன்பு போகித் தருமுறை முன்பு போலத் தனிப்பெரு வேட்டை ஆடி. 166 816. மாறுஇல் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி ஏறு நாள் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு, தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்கா ளத்தி ஆறுசேர் சடையார் தம்மை அணுகவந்து அணையா நின்றார். மாறில் - குற்றமில்லாத. நாண்மலரும் - அன்றலர்ந்த மலரும். தேறுவார்க்கு - அன்பினில் தெளிந்தவர்க்கு. செல்வனார் - செல்வனா ராகிய. 167 817. இத்தனை பொழுது தாழ்ந்தேன் எனவிரைந்து ஏகு வார்முன், மொய்த்தபல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய, இத்தகு தீய புட்கள் ஈண்டமுன் உதிரம் காட்டும்; அத்தனுக்கு என்கொல்? கெட்டேன்! அடுத்தடுத்து என்று அணையும் போதில். இத்தகு தீய புட்கள் ஈண்ட - இப்படிப்பட்ட துர்ச் சகுனங் களைக் காட்டும் கொடிய பறவைகள் நெருங்கலால். இச் சகுனங்கள் இரத்தங் காட்டும் என்று திண்ணனார் அநுபவம் உணர்த்திய வாறாம். அடுத்தது - நேர்ந்தது. 168 818. அண்ணலார் திருக்க காளத்தி அடிகளார் முனிவ னார்க்குத் திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று துண்ணென உதிரம் பாய இருந்தனர்; தூரத்தே அவ் வண்ண வெஞ்சிலையார் கண்டு, வல்விரைந்து ஓடி வந்தார். நயனம் - கண். உதிரம் - குருதி. சிலை - வில். 169 819. வந்தவர் குருதி கண்டார்; மயங்கினார்; வாயில் நல் நீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் கொந்துஅலர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் பைந்தமிழ் அலங்கல் மார்பர் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார். கொந்தலர் - கொத்தாக அலர்ந்த. அலங்கல் மார்பர் - அசையும் மாலையணிந்த மார்பையுடைய திண்ணனார். 170 820. விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர்; குருதி வீழ்வது ஒழிந்திடக் காணார்; செய்வது அறிந்திலர்; உயிர்த்து மீள அழிந்துபோய் வீழ்ந்தார்; தேறி, யார் இது செய்தார் என்னா எழுந்தனர்; திசைகள் எங்கும் பார்த்தனர்; எடுத்தார் - வில்லும். உயிர்த்து - பெருமூச்சு விட்டு. அழிந்து - அறிவழிந்து; மயங்கி. 171 821. வாளியும் தெரிந்து கொண்டு, இம் மலையிடை எனக்கு மாறா மீளவெம் மறவர் செய்தார் உளர்கொலோ? விலங்கின் சாதி ஆளி முன்னாகி உள்ள விளைந்தவோ? அறியேன் என்று, நீள்இருங் குன்றைச் சாரல் நெடிதுஇடை நேடிச் சென்றார். அம்புகளைத் தெரிந்தெடுத்துக்கொண்டு. மீளிவெம் மறவர் - வன் மையும் கொடுமையுடைய வேடர்கள். ஆளி - (சிங்கம்) முதலாகச் சொல்லப்பட்ட விலங்குகள். 172 822. வேடரைக் காணார்; தீய விலங்குகள் மருங்கும் எங்கும் நாடியும் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து, நீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றி, மாடு உறக் கட்டிக் கொண்டு கதறினர் - கண்ணீர் வார. நாயனார் தம்பால் - சிவபிரானிடத்தில். தமதுள்ளத்தில் நிறைந்த மலர்ப்பாதம். மாடுஉற - திருமேனியின் புறமெல்லாம் பொருந்த. 173 823. பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ? ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ? ஆவது ஒன்று அறிகிலேன்; யான் v‹brŒnf‹? என்று பின்னும் உயிரைப் பார்க்கிலும் இனிய. என்னில் யாரும் எனக்கினி யாரில்லை - என்னிலும் இனி யான்ஒரு வனுளன் அப்பர்; திருவின்னம்பர் திருக்குறுந்தொகை - 1. கலந்தபின் பிரிவதில்லை அப்பர்; திருவவையாறு - திருநேரிசை. 4. 174 824. என்செய்தால் தீரு மோதான்; எம்பிரான் திறத்துத் தீங்கு முன்செய்தார் தம்மைக் காணேன்; மொய்கழல் வேடர் என்றும் மின்செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய்மருந்து தேடிப் பொன்செய் தாழ்வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார். எம்பிரான் திறத்து - காளத்தியப்பரிடத்து. வேடர்கள் எப் பொழுதும் ஒளிவீசும் நீண்ட அம்புகளால் உண்டான புண்களைத் தீர்க்கவல்ல மருந்தை (பச்சிலைகளை) நாடி. பொன் - பொற் கொடிகள்; பொற்பொடிகளுமாம்; அழகுமாம். 175 825. நினைத்தனர் வேறு வேறு நெருங்கிய வனங்கள் எங்கும் இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறு எனவெருக் கொண்டுஎய்திப் புனத்திடைப் பறித்துக் கொண்டு பூத நாய கன்பால் வைத்த மனத்தினும் கடிது வந்துஅம் மருந்துகள் பிசைந்து வார்த்தார். நினைத்தனர் - மருந்திலைகளை நினைக்கும் நெஞ்சுடை யவராய். வெருக்கொண்டு - காளத்தியப்பரைத் தனியேவிட்டு வந்தோமே; இன்னும் என்ன நேருமோ என்ற அச்சங்கொண்டு புனங்களில். பூதநாயகன்பால் - சிவபிரானிடத்தில். 176 826. மற்றவர் பிசைந்து வார்த்த மருந்தினால் திருக்கா ளத்திக் கொற்றவர் கண்ணில் புண்நீர் குறைபடாது இழியக் கண்டும் இற்றையின் நிலைமைக்கு என்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்; உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார். இற்றையின் நிலைமைக்கு - இத்தன்மைத்தாகிய நிலைமைக்கு; இப்படி ஒழுகும் நிலைமைக்கு. உரைமுன் கண்டார் - பழமொழி தோன்றப் பெற்றார்; நினைவுக்கு வந்தது என்றபடி. 177 827. இதற்கு இனி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார்கண் அதற்குஇது மருந்தாய்ப் புண்நீர் நிற்கவும் அடுக்கும் என்று, மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன்இருந்து. தம்கண் முதல்சரம் அடுத்து வாங்கி, முதல்வர்தம் கண்ணில் அப்ப. இடந்து - தோண்டி. அடுக்கும் - கூடும். மதர்த்து - பூரித்து; மகிழ்ச்சியாற் செருக்கி. தங் கண் முதல் - தமது கண்களில் முதன்மையான வலது கண்ணை. சரம் அடுத்து வாங்கி - அம்பால் தோண்டி எடுத்து. தங்கண் . . . . . . . . . . . வாங்கி என்பதற்குத் தம்மிடமுள்ள முதன்மைத் தன்மை வாய்ந்த அம்பால் தங் கண்ணைத் தோண்டி எடுத்து என்போருமுளர். 178 828. நின்றசெங் குருதி கண்டார்; நிலத்தில் நின்று ஏறப் பாய்ந்தார்; குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினர்; கூத்தும் ஆடி நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற, ஒன்றிய களிப்பி னாலே உன்மத்தர் போல மிக்கார். மதி - அறிவான செயல். ஒன்றிய - கூடிய; பொருந்திய. உன்மத்தார் - பித்துக் கொண்டவர். 179 829. வலத்திருக் கண்ணில் தம்கண் அப்பிய வள்ள லார்தம் நலத்தினைப் பின்னும் காட்ட, நாயனார் மற்றைக் கண்ணில் உலப்புஇல் செங்குருதி பாயக் கண்டனர் உலகில் வேடர் குலப்பெருந் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார். அன்பு நலத்தினை. நாயனார் - சிவபெருமான். உலப்பில் வற்றாத. உம்பர் - தேவரினும். 180 830. கண்டபின் கெட்டேன்! எங்கள் காளத்தி யார்கண் ஒன்று புண்தரு குருதி நிற்க, மற்றைக் கண் குருதி பொங்கி மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன்; மருந்துகை கண்டேன்; இன்னும் உண்டு ஒருகண் அக் கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று. மண்டும் - விரைந்து ஒழுகும். 181 831. கண்ணுதல் கண்ணில் தம்கண் இடந்துஅப்பின் காணும் நேர்பாடு எண்ணுவார்; தம்பி ரான்தன் திருக்கண்ணில் இடக்கால் ஊன்றி, உள்நிறை விருப்பி னோடும் ஒருதனிப் பகழி கொண்டு, திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர். காணும் நேர்ப்பாடு எண்ணுவார் - தங்கண்களிரண்டும் இல்லாத வேளையில் இறைவன்றன் கண்ணுள்ள இடத்தை உணருங் குறிப்பை எண்ணுவாராய். 182. 832. செங்கண் வெள்விடையின் பாகர்; திண்ணனார் தம்மை ஆண்ட அங்கணர் திருக்கா ளத்தி அற்புதர் திருக்கை அன்பர் தம்கண்முன் இடக்கும் கையைத் தடுக்க, மூன்று அடுக்கு நாக உங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க என்ற. செங்கண். . . . . அற்புதர் - சிவபெருமான். கையை திண்ணனார் கையை. தடுத்தற் பொருட்டுப் பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ள சிவபெருமானது அமுத வாக்கு மூன்று முறை கண்ணப்ப நிற்க, கண்ணப்ப நிற்க, கண்ணப்ப நிற்க என்றது. நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப. . . . . . - திருக்கண்ணப்ப தேவர் திருமறம். மறைமொழி பிறந்த தம்வாய் மலர்திறத் தருட்பேராழி - இறைவர்கண்ணப்ப நிற்க என முக்கால் மொழிந்து கொண்டே - சீகாளத்திப் புராணம். 183 833. கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் ஊன் அமுது உகந்த ஐயர் உற்றுமுன் பிடிக்கும் போதும் ஞானமா முனிவர் கண்டார்; நான்முகன் முதலாய் உள்ள வானவர் வளர் பூமாரி பொழிந்தனர்; மறைகள் ஆர்ப்ப. ஊன் அமுது உகந்த ஐயர் - சிவபிரான். ஞானமாமுனிவர் - சிவ கோசரியார். வளர் - கற்பகத் தருவின். 184 834. பேறுஇனி இதன்மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த ஊறுகண்டு அஞ்சித் தம்கண் இடந்து அப்ப உதவும் கையை ஏறுஉயர்த் தவர்தம் கையால் பிடித்துக் கொண்டு என்வலத்தில் மாறுஇலாய்! நிற்க என்று, மன்னுபேர் அருள் புரிந்தார். ஏறு உயர்ந்தவர் - இடபக் கொடியையுடைய சிவபெருமான். வலத்தில் - வலப் பக்கத்தில். 185 835. மங்குல்வாழ் திருக்கா ளத்தி மன்னனார் கண்ணில் புண்நீர் தம்கணால் மாற்றப் பெற்ற தலைவர்தாள் தலைமேல் கொண்டே, கங்கைவாழ் சடையார் வாழும் கடவூரில் கலய னாராம் பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல் உற்றேன். மங்குல் வாழ் - மேகங்கள் தவழும். தலைவர் - அன்பிற்றலை வராகிய கண்ணப்பர். அன்பிற்றலைவராகிய கண்ணப்பரை, அவர்பின் வந்த பெரியார் பலர் போற்றியிருக்கிறார். நால்வர், சங்கராச்சாரியார், பட்டினத்தார் முதலிய பெரியோர்களெல்லாரும் கண்ணப்பரை அன்புத் தலைவராகப் போற்றியிருத்தல் கருதத் தக்கது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் - என் னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் - சுண்ணப்பொன்னீற் றற்கே சென்றூதாய் கோத்தும்பீ - திருவாசகம்; திருக்கோதும்பி-4. 186 கண்ணப்ப நாயனார் பொத்தப்பி நாடு, வேடர்கள் நிறைந்த ஒரு மலை நாடு. அதன் பேரூர் உடுப்பூர் என்பது. அவ்வூரில் வேடர் மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் நாகன். நாகன் தத்தை என்பவளை மணந்து இல்லறம் நடாத்தி வந்தான். வந்த நாளில் அவன், தனக்குப் புத்திரப் பேறின்மை கருதி வருந்தி முருகப் பெருமானை வழிபடலானான். முருகப்பெருமான் திருவருளால் அவனுக்கு ஓர் ஆண் குழவி பிறந்தது. அக்குழவியை நாகன் ஏந்தியபோது, அது திண்மையாகத் தோன்றினமையால் அதற்குத் திண்ணன் என்னுந் திருப்பெயரைச் சூட்டினான். திண்ணனார், வேடர்கள் போற்ற வளர்ந்து விற்பயிற்சிக்குரிய பருவத்தை அடைந்தார். அவர் நல்லாசிரியர்பால் வில்வித்தை பயின்று தேர்ச்சி பெற்றார். திண்ணனார்க்கு வயது பதினாறு ஆயிற்று. அவர் தந்தை நாகன், முதுமையால் மெலிவுற்றான். அதனால் அவன் காடு போந்து வேட்டையாட இயலாதவனானான். ஒருநாள், வேடர்கள், நாகனிடம் போந்து, அரசே! மாதந் தோறும் வேட்டையாடுதல் தவறியபடியால் கொடிய விலங்குகள் பெருகிப் புனங்களை அழிக்கின்றன என்று முறையிட்டார்கள். அதற்கு நாகன், நான் மூப்பால் மெலிந்துவிட்டேன். இனி வேட்டை யாடுதல் என்னால் இயலாது. என்மகன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாக்குகிறேன் என்று சொல்லித் தேவராட்டியை அழைப் பித்துத் திண்ணனார்க்கு அரசுரிமை வழங்கினான். தேவராட்டியுந் திண்ணனாரை வாழ்த்திச் சென்றாள். வேடர் மன்னராகிய திண்ணனார், வேட்டைக்குரிய கோல் தாங்கிக் காடு நோக்கினார். வேடவீரர்களும் அவருடன் புறப் பட்டார்கள். நாய்களுஞ் சூழ்ந்து ஓடின. வேடர்கள் காட்டில் நுழைந்து ஆங்காங்கே முறைப்படி வலைகளை வளைத்துக் கட்டி னார்கள். திண்ணனார் காட்டிலே சுழன்று சுழன்று வேட்டையாடிக் கொடிய விலங்குகளை வீழ்த்தினார். அப்பொழுது கொழுத்த பன்றியொன்று எழும்பி வலைகள் அறும்படியாகக் கடுவிசையில் ஓடிற்று. அப்பன்றியைத் தொடர்ந்து திண்ணனாரும் அவ்விசையில் ஓடினார். திண்ணனார் பன்றியைத் தொடர்ந்து ஓடியது மற்ற வேடர் களுக்குத் தெரியாது. நாணன், காடன் என்ற இருவர் மட்டுந் திண்ணனாரைத் தொடர்ந்தே ஓடினர். அப்பன்றி, நாய்களுக்குந் தப்பி நெடுந்தூரம் ஓடி, இளைத்து, மேலும் ஓட இயலாததாய், ஒரு மலையடியிலே உள்ள சோலையை அடைந்து அங்கே மரச்செறிவில் நின்றது. திண்ணனார் அப்பன்றியைக் கண்டு அதன்மீது அம்புகளை எய்யாது, அதனிடம் நெருங்கி, உடை வாளை உருவி அதைக் குத்தினார். அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்த நாணன், காடனைப் பார்த்து, காடனே! பல காதங்கள் ஓடிவந்து இளைத்தோம். முடிவில் இப்பன்றியை நமது வேடர் பெருமானே கொன்றார் என்று திண்ணனாரை வியந்து இருவரும் அவரடியில் விழுந்து வணங்கினர். அதற்குமேல் இருவரும் திண்ணனாரை நோக்கி நாம் நெடுந் தூரம் வந்து விட்டோம். பசி நம்மை அரிக்கிறது. இப்பன்றியைக் காய்ச்சித் தின்று தண்ணீர் அருந்திப் பசி தணித்துக் கொள்வோம். பின்னே, வேட்டைக் காட்டுக்குப் போவோம் என்றனர். திண்ணனார் நல்லது, இக்காட்டில் தண்ணீர் எங்கேயிருக்கிறது? என்று கேட்டார். நாணன், அதோ பெரிய தேக்கு மரம் தெரிகிறதல்லவா? அதற்கு அப்பால் நீண்ட குன்று ஒன்று இருக்கிறது. அதற்கு அயலில் பொன்முகலி ஆறு ஓடுகிறது என்றான். திண்ணனார், நாம் அங்கே போவோம். இப்பன்றியை எடுத்து வாருங்கள், என்று சொல்லி அக்குன்று நோக்கிப் போனார். போம்போது அரைக் காதத்துக்கப்பாலுள்ள திருக்காளத்தி மலைச்சாரலிலுள்ள சோலை அவருக்குக் காட்சியளித்தது. அக்காட்சி கண்ட திண்ணனார், நாணனே! நமக்கு முன்னே தோன்றும் இக்குன்றினுக்குப் போவோம், என்றார். அதற்கு அவன் இக்குன்றில் நல்ல காட்சி காண்போம்; அங்கே குடுமித்தேவர் வீற்றிருக்கிறார்; கும்பிடலாம் என்றான். என்ன நாணா! மலையை நெருங்க நெருங்க என் மேலுள்ள சுமை குறைகிறதுபோல் தோன்றுகிறது. ஒருவிதப் புதுவிருப்பம் பொங்கி எழுகிறது. அது விரைந்து என்னுள் பாயாநிற்கிறது. தேவர் இருக்கும் இடம் எங்கே? கடிது செல்க என்று திண்ணனார் விரைந்து நடந்தார். மூவரும் பொன் முகலியை அடைந்தனர். அவ்வாற்றங் கரை யிலுள்ள ஒரு மரநிழலிலே பன்றி வைக்கப்பட்டது. தீக்கடைக் கோலால் நெருப்பை உண்டுபண்ணி வைக்குமாறு காடனுக்குக் கட்டளையிட்டுத் திண்ணனார் நாணனோடு மலை நோக்கிச் சென்றார். முன்னைத் தவம் திண்ணனாரை வேற்றுருவாக்குகிறது; அன்பு பெருக்கெடுக்கிறது; அளவிலா ஆர்வம் பொங்குகிறது; காதல் கூர்ந்து, கூர்ந்தெழுகிறது; என்பு நெக்கு நெக்குருகுகிறது. இவ்வாறு உள்ளத்தெழும் வேட்கையோடு திண்ணனார் மலையேறுகிறார். நாணன் முன்னே செல்கிறான். அவனுக்குப் பின்னே அன்பு செல்கிறது. அதற்குப் பின்னே திண்ணனார் மலைப்படிகளென்னும் தத்துவப் படிகளை ஏறிச் செல்கிறார். திண்ணனார் சிவபெருமானைக் காண்பதற்கு முன்னே, சிவ பெருமான் அவரைத் திருக்கண் நோக்கஞ் செய்தார். செய்ததும், வேடர் கோமான், ஒளி மயமாய் அன்புருவம் பெற்றார். அவர் மலைக்கொழுந்தென விளங்கும் மகாதேவரைக் கண்டார்; கண்டதும் கட்டித் தழுவுகிறார்; மோந்து மோந்து நிற்கிறார்; பெரு மூச்சு விடுகிறார்; மெய்ம்மயிர் சிலிர்க்கிறது; புளகம் போர்க்கிறது; கண் களினின்றும் அருவி பெருகுகிறது. அச்சோ! இவர் அடியேனுக்கு அகப்பட்டார் என்று திண்ணனார் கூறுகிறார்; ஆனந்தக் கூத்தாடுகிறார். இது கொடிய விலங்குகள் திரியும் கானம்! இங்கே வேடரைப்போல ஐயன் தனித்திருப்பதென்னோ! துணைவர் ஒருவருமிங்கில்லையே! அந்தோ! கெட்டேன்; கெட்டேன் என்று அவர் நைந்து நைந்துருகுகிறார். கைச் சிலை நழுவி விழுந்தது; அஃதும் அவருக்குத் தெரியவில்லை. பின்னர்ச் சிறிது தெளிவுற்று, இவர் முடிமீது நீரை வார்த்துப் பச்சிலையும் பூவுமிட்டுச் சென்றவர் யாரோ? என்கிறார். அருகிருந்த நாணன், இஃதெனக்குத் தெரியும். முன்னர் நாள் உம் தந்தையாருடன் வேட்டையாடி இங்கே வந்தோம். அப்பொழுது ஒரு பார்ப்பான் இவர்மீது நீரை வார்த்துப் பச்சிலை களையும் மலர்களையுஞ் சூட்டி உணவை ஊட்டி முன்னின்று சில மொழிகளைச் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவனே இதைச் செய்திருத்தல் வேண்டும் என்றான். அதைக் கேட்ட அன்பர், இவைகள் இறைவனார்க்கு இனியவை போலும் என்று அவைகளைக் கடைப்பிடித்துக் கொண்டு ஆண்டவனைப் பிரிந்து செல்ல மனமில்லாதவராய், இவர் இங்கே தனியராய் இருக்கிறார். இவர் அமுதுசெய்ய இறைச்சியும் அளிப்பாரில்லை. இவரைப் பிரிதலும் ஒண்ணாது. என் செய்வேன்! இவருக்கு இறைச்சி கொண்டுவந்தே தீர்தல் வேண்டும் என்று நினைந்து சிறிது தூரம் போவார்; மீண்டும் திரும்புவார்; தழுவிக் கொள்வார்; திரும்பவும் போவார்; காதலால் நோக்கி நோக்கி நிற்பார்; கன்றை விட்டகலும் பசுப்போலாவார். ஐயனே! திருவமுது செய்ய நல்ல இறைச்சியை நானே கொண்டு வருவேன். இங்கு உனக்குச் சுற்றத்தார் ஒருவருமில்லை! உன்னைப் பிரிந்து செல்லவும் மனம் எழவில்லை பசியோடிருத்தலையும் மனம் விரும்பவில்லை. ஆதலால் போய் வருகிறேன் என்று கூறிக் கண்களில் அருவிபாய, வில்லை எடுத்துக்கொண்டு மலையினின்றும் இழிந்து சோலை சேர்ந்தார். நாணனும் பின்னே தொடர்ந்து வந்தான். அங்கிருந்த காடன், எதிரே சென்று பணிந்து தீக்கடைந்து வைத்துளேன். பன்றியின் உறுப்புகளையெல்லாம் உமது குறிப்புப் படி பார்த்துக் கொள்க. இவ்வளவு நேரந் தாழ்த்தது என்னை? என்றான். அதற்கு நாணன், நிகழ்ந்தவைகளைக் கூறி, குடுமித் தேவர்க்கு இறைச்சி கொண்டு போகும் பொருட்டு இவர் இங்கே வந்திருக்கிறார்; நமது குலத்தலைமையை விட்டு விட்டார்; அத்தேவர் வழிப்பட்டு விட்டார் என்று சொன்னான். அதைக் கேட்ட காடன், திண்ணனாரே! என் செய்தீர்! நீங்கள் எங்கள் குலத் தலைவரல்லரோ! என்ன பித்துக் கொண்டீர்! என்று கூறினான். கானவர் பெருமான் அவனை நோக்காது பன்றியை நெருப்பிலே வதக்குகிறார். வதக்கி அதன் இறைச்சியைப் பதஞ் செய்கிறார்; வெந்த இறைச்சிகளை வாயிலிட்டு அதுக்குகிறார் அதுக்கி, இனிய வைகளைக் கல்லையிலே வைக்கிறார்; மற்றவைகளைப் புறத்திலே துப்புகிறார். இச்செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த நாணனுங் காடனும் இவர்க்குப் பித்தம் தலைக்கேறிவிட்டது; இவர் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்; இருந்தும், இறைச்சிகளை உண்கிறா ரில்லை; இவர் தெய்வப்பித்துக் கொண்டிருக்கிறார்; நாம் என் செய்வது? தேவராட்டியையும் நாகனையும் அழைத்து வருதல் வேண்டும்; நாம் காடுபோந்து நம்முடன் போந்த மற்றவர்களையும் அழைத்துப் போவோம் என்று எண்ணிச் சென்றனர். இருவரும் சென்றது சிவத்தில் ஈடுபட்டுள்ள திண்ணனார்க்குத் தெரியாது. அவர் ஊனமுதைக் கல்லையிலே வைத்துக் கொண்டார்; திருமஞ்சனத்துக்குப் பொன் முகலியாற்று நீரை வாயிலே முகந்து கொண்டார்; பச்சிலைகளையும் மலர்களையும் குடுமியிலே செருகிக் கொண்டார்; ஒரு கையில் வில்லையும் அம்பையும் தாங்கிக் கொண்டார்; மற்றொரு கையில் ஊனமுதமுள்ள இலைக்கலத்தை ஏந்திக்கொண்டார்; எனக்கினிய பெருமான் சாலப்பசித்திருப்பார் என்று இரங்கி ஏங்கி விரைந்து நடந்து மலையை அடைந்தார்; அங்கே சிவனார் திருமுடி மீதிருந்த மலர்களைக் கால் செருப்பால் மாற்றினார். வாய் நீரைத் திருமுடிமீது அன்புபோல் உமிழ்ந்தார்; குடுமியில் செருகிவந்த பூக்களை ஆண்டவனுக்குச் சாத்தினார். ஊனமுதைத் திரு முன்னே வைத்து, ஆண்டவனே! இவ்விறைச்சிகள் நல்லன. யானே சுவை பார்த்துத் திரு முன்னர்ப் படைத்துள்ளேன். அமுது செய்தருள்க என்று இன்சொற் கூறி அமுதுசெய்வித்தார். அப்பொழுது சூரியன் மறைந்தான். இரவில் கொடிய விலங்குகள் ஐயனுக்குத் தீங்கு செய்யும் என்று திண்ணனார் கருதி அஞ்சித் திருக்கையில் சிலை தாங்கிச் சிவபிரானை நோக்கி நின்றார். காடுகளில் நுழைந்தும் மலைகளிற் புகுந்தும் பன்னெடு நாள் அருந் தவங்கிடந்த தேவர்களும் முனிவர்களும் காண்டற்கரிய பெருமானைத் திண்ணனார் அன்பினில்கண்டு கொண்டார். பொழுது புலர்ந்தது பறவைகள் ஒலி செய்தன. இரவு முழுவதும் கண் துயிலாத வீரர், ஆண்டவனுக்கு ஊனமுது கொண்டுவர வேட்டைக்குப் புறப் பட்டார். திண்ணனார் சென்ற பின்பு, சிவகோசரியார் அங்கே வந்தார். சிவகோசரியார் என்பவர், திருக்காளத்தியப்பரை நாள்தோறும் ஆகமவிதிப் படி அருச்சிப்பவர். அவர் வழக்கம்போலத் தொண் டாற்றத் திருமுன்னர்ச் சென்றபோது, அங்கே வெந்த இறைச்சியையும் எலும்பையும் பார்த்து, அகலமிதித்து ஓடி இவ் வநுசிதத்தைச் செய்தவர் யாவர்? வேடப் புலையர்களே இதைச் செய்திருத்தல் வேண்டும். இக்கொடுமைக்குத் தேவ தேவன் திருவுள்ளமும் இசைந்ததே என்று கலங்கித் தெளிந்து, இறைச்சி, இலை, செருப்படி, நாயடி முதலியவற்றைத் திருவலகால் மாற்றிப் பொன்முகலி போந்து மூழ்கி விரைந்து சந்நிதி சேர்ந்து பிராயச் சித்தஞ் செய்து, முறைப்படி அருச்சித்துத் தமது தபோவனம் போனார். ஆண்டவனுக்கு ஊனமுதங் கொண்டுவரச் சென்ற திண்ணனார், கான் புகுந்தார்; வேட்டையாடிப் பன்றி மான் முதலிய விலங்குகளைக் கொன்றார்; அவைகளின் ஊனெடுத்துப் பதஞ் செய்து தேன் கலந்து கல்லையிலே வைத்துக் கொண்டார்; முன்போலவே மஞ்சனமும் மலருங்கொண்டார்; இவைகளைக் கொண்டு மலையேறி முன்போலவே பார்ப்பனர் பூசையை அகற்றித் தமது பூசையைச் செய்து முடித்து. இறைச்சிகளைத் திரு முன்னே வைத்து, ஐயனே! இவ்விறைச்சிகள் முன்னவைகளைவிடச் சிறந்தன; இவை பன்றி, மான், கலை, மரை, கடமை இவைகளின் இறைச்சிகள்; யானுஞ் சுவை பார்த்தேன்; தேனுங் கலந்துள்ளேன்; தித்திக்கும்! அமுது செய்தருள்க என்று இன்சொல் கூறி அமுது செய்வித்தார். இவ்வாறு திண்ணனார் பகலில் வேட்டையாடி ஆண்டவனுக்கு ஊனமுதம் படைத்தும், இரவிலே உறங்காமல் ஆண்டவன் முன்னின்றும் திருத்தொண்டு நிகழ்த்தி வந்தார். சிவகோசரியாரும் சிவ சந்நிதி போந்து வனவேந்தர் பூசனையை மாற்றி ஆகமமுறைப்படி அருச்சித்து வந்தார். நாணனுங் காடனும் ஊருக்குச் சென்று, திண்ணனார் செயல்களை நாகனுக்கு அறிவித்தனர். நாகன் ஊணுறக்கமின்றித் தேவராட்டியையும் அழைத்துக் கொண்டு மைந்தரிடம் போந்து அவரைத் தன் வழிப்படுத்தப் பற்பல வழியில் முயன்றான். முயன்றும் பயன் விளையாமை கண்டு, மனம் நொந்து அவன் வீட்டுக்குத் திரும்பினான். சிவகோசரியார் நாடோறும் அநுசிதத்தை விலக்கி விலக்கிச் சலிப்புற்று ஒருநாள் ஆண்டவன் எதிரே நின்று என்னுடைய நாயகனே! இவ்வநுசிதஞ் செய்தாரைக் காண்டல் கூடவில்லை. இதனை உன்னருளாலேயே ஒழித்தல் வேண்டும் என்று வேண்டிச் சென்றார். அன்றிரவு சிவபெருமான் சிவகோசரியார் கனவிலே தோன்றி, அநுசிதஞ் செய்யும் ஒருவனை வேடுவன் என்று நீ நினைக்க வேண்டா. அவன் அன்பன். அவனுடைய அறிவெல்லாம் நம்மை அறியும் அறிவேயாகும். அவனுடைய செயல்களெல்லாம் நமக்கு இனிய செயல்களாகும். அவன் நிலை இத்தகையது. நீ நாளை நமக்குப் பின் ஒளித்திரு. அவன் தன் அன்புச் செயல்களைக் காண்பாய். கவலை யொழிக என்றருளி மறைந்தார். சிவகோசரியார் கண் விழித்துக் கொண்டார். பொழுது விடியும் வரை அவருக்கு உறக்கம் வரவில்லை. பொழுது விடிந்தது. சிவகோசரியார் எழுந்து பொன்முகலியில் நீராடி மலையேறி வழக்கம்போல் ஆண்டவனை வழிபட்டுப் பின் பக்கம் ஒளித்திருந்தார். நாள்கள் ஆறாயின. திண்ணனார், வழக்கம்போல இறைச்சி முதலியவற்றைத் தாங்கிக் கொண்டு விரைந்து வருகிறார். அவர் அன்று வழியில் சகுனங்களைக் காண்கிறார். இவைகள் உதிரங் காட்டுங்குறிகள். என் ஐயனுக்கு என்ன நேர்ந்ததோ! என்று அவர் கலங்கி ஓடி வருகிறார். திருக்காளத்திப் பெருமான், திண்ணனார்தம் அன்பின் பெருமையைக் காட்டத் தமது வலக் கண்ணினின்றும் உதிரம் பெருகச் செய்தார். அக் காட்சியைத் தூரத்தே கண்ட திண்ணனார், ஓடோடி வந்தார்; இரத்தங் கண்டார்; மயங்கினார்; அவர்தம் வாயிலுள்ள நீர் சிந்திற்று; கையிலுள்ள ஊன் சிதறிற்று; வில்லும் விழுந்தது; தலைமயிரினின்றும் மலர்கள் விழுந்து அலைந்தன. திண்ணனார் பதைபதைத்து வீழ்கிறார்; எழுகிறார்; எழுந்துபோய் இரத்தத்தைத் துடைக்கிறார். துடைத்தும் இரத்தம் நிற்கவில்லை. அவர் பெருமூச்சுவிட்டு விழுகிறார்; பின் ஒருவாறு தேறி, யார் இது செய்தார்? என்று எழுந்து திசை திசை ஓடிப் பார்க்கிறார்; வில்லை எடுக்கிறார்; அம்பைத் தொடுக்கிறார். எனக்கு மாறாக இத்தீங்கை வேடர்கள் செய்தார்களோ? கொடிய விலங்குகள் செய்தனவோ? என்று கூறிக் கொண்டே மலைப் பக்கங்களில் அவர் நெடுந்தூரம் ஓடிப் பார்க்கிறார். திண்ணனார் வேடர்களையுங் கண்டாரில்லை; விலங்குகளையுங் கண்டாரில்லை. அன்பர் திரும்பி வந்து ஆண்டவனைக் கட்டிக் கொண்டு, ஐயனே! உனக்கு அடுத்ததென்னோ? என்னோ? என்று கதறிக் கதறி அழுகிறார். இஃது என் செய்தால் தீரும்? பச்சிலை மருந்துகளைக் கொண்டு வருவேன் என்று காடெலாஞ் சுற்றிப் பச்சிலைகளைப் பறித்துவந்து பிசைந்து பிசைந்து ஐயன் கண்ணில் வார்க்கிறார்; இரத்தம் நிற்கவில்லை. இனி என் செய்வது? என்று அண்ணல் சிந்தித்துநின்றார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்னும் பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. வந்ததும், திண்ணனார் அம்பால் தமது வலக்கண்ணை அகழ்ந் தெடுத்து ஐயன் திருக்கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றுவிட்டது. அன்பர் பெருமான் குதிக்கிறார்; தோள் கொட்டுகிறார்; கூத்தாடு கிறார்; நான் செய்தது நன்று! நன்று! என்று கூறிக் கூறி மகிழ்ச்சியடைகிறார். மகிழ்ச்சிப் பெருக்கால் அன்பர் உன்மத்தர் போலானார். இன்னும் திண்ணனார் அன்பின் உண்மையைக் காட்டச் சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், இதற்கு யான் அஞ்சேன்; மருந்து கைக் கண்டிருக்கிறேன்; இன்னும் எனக்கொரு கண்ணுண்டு. அதை அகழ்ந்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன் என்று அடையாளத்தின் பொருட்டுக் காளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டு, உள் நிறைந்த விருப்பத்தோடும் தமது இடக் கண்ணைத் தோண்ட அம்பை ஊன்றலானார். ஊன்றிய பொழுது, தடங்கருணைப் பெருங்கடலாகிய தேவதேவர் மனந் தாளாதவராய், கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க! என்றருளிக் கொண்டே திண்ணனார் கையைத் தமது திருக்கையால் பிடித்துத் தடுத்தார். அவ்வரும் பெருங்காட்சி கண்ட சிவகோசரியார் ஆனந்த வாரிதியில் மூழ்கினார். கண்ணப்பர் திருக்கையைப் பற்றிய முக்கணப்பர், கண்ணப்பரைப் பார்த்து, மாறிலா அன்பனே! என் வலப் பக்கத்தில் இருக்கக் கடவாய் என்று அவருக்குப் பேரருள் புரிந்தார். 16. குங்குலியக் கலய நாயனார் 836. வாய்ந்தநீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் ஏய்ந்தசீர் மறையோர் வாழும் எயில்பதி - எறிநீர்க் கங்கை தோய்ந்த நீள்சடையார் பண்டு தொண்டர்மேல் வந்த கூற்றைக் காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும். பொன்னி நாட்டின் - காவிரி நாடாகிய சோழநாட்டில். ஏய்ந்த - பொருந்திய. எயில் - மதில் சூழ்ந்த. பண்டு - முன்னாளில். தொண்டர் மேல் மார்க்கண்டேயர் மீது. கூற்றைக் காய்ந்த யமனை உதைத்துக் கொன்ற மார்க்கண்டேயர் பொருட்டுச் சிவபெருமான் யமனைக் கொன்ற இடம் காசி என்று கந்தபுராணம் முதலியன கூறுகின்றன. அவ்விடம் திருக்கடவூரென்று தமிழ் வேதம் முதலியன சொல்லு கின்றன. ஓர் அன்பர் பொருட்டுக் காசியில் நடந்ததைக் கடவூரில் கடவுள் காட்டினார் என்றுஞ் சொல்லப்படுகிறது. 1 837. வயல்எலாம் விளைசெஞ் சாலி; வரம்புஎலாம் வளையின் முத்தம்; அயல்எலாம் வேள்விச் சாலை; அணைஎலாம் கழுநீர்க் கற்றை; புயல்எலாம் கமுகின் காடு; அப் புறம்எலாம் அதன்சீர் போற்றல்; செயல்எலாம் தொழில்கள் ஆறே; செழுந்திருக் கடவூர் என்றும். வளையின் - சங்குகளின். கழுநீர்க்கற்றை - செங்கழுநீர்க் கூட்டங்கள்; கமுகஞ் சோலைகளிலெல்லாம் மேகங்கள். அப்புற மெலாம் - அவ்வயல் பக்கமெல்லாம்; அவ்வூரின் பக்கமெல்லாம் எனினுமாம். சீர் போற்றல் - சிறப்பைப் போற்றல்; சீர்ப்படுத்தல் எனினுமாம். ஆறு - நன்னெறி. செயலெலாம் சன்மார்க்கத்திற்குரிய செயல்களென்க. அறுதொழில் எனக்கோடலு மொன்று; அவை; ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல். 2 838. குடங்கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்; வடம்புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச் சடங்குஉடை இடங்கள் தோறும் எழுவன - சாமம் பாடல். குடங்கையின் - உள்ளங் கையைப் பார்க்கிலும். உண்கண் - மையுண்ட (தீட்டிய) கண்களையுடைய. கடைசியர் குழுமி - பள்ளப் பெண்கள் கூடி. இடம்படு - விசாலமாகிய. மருதப் பண் பாடல் - சாம வேதப் பாடல். 3 839. துங்கநீள் மருப்பின் மேதி படிந்து பால்சொரிந்த வாவிச் செங்கயல் பாய்ந்து, வாசக் கமலமும் தீம்பால் நாறும்; மங்குல்தோய் மாடச் சாலை மருங்குஇறை ஒதுங்கும் மஞ்சும் அங்குஅவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பால் நாறும். உயர்ந்த நீண்ட கொம்புகளையுடைய எருமைகள் நீரிற் படிந்து. வாவி - குளத்தில். கயல் - மீன்கள். பாய்ந்து - பாய்தலால். தீம்பால் நாறும் - இனிய பால் மணங்கமழும். மங்குல். . . . . . மஞ்சும் - ஆகாயம் அளவு உயர்ந்த மாடங்களின் சாலைகளின் பக்கங்களில் சிறிது நேரம் ஒதுங்கும் மேகங்களும். புகைப்பால் - புகையினிடத்து. 4 840. மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார் அருமறை முந்நூல் மார்பின் அந்தணர்; கலயர் என்பார்; பெருநதி அணியும் வேணிப் பிரான் கழல் பேணி நாளும் உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார்; ஒழுக்கம் மிக்கார். வேணிப்பிரான் - சடையணிந்த சிவபெருமான். கூர்ந்த - உள்ளது சிறந்த; மிகுந்த. 5 841. பாலனாம் மறையோன் பற்றப் பயம்கெடுத்து அருளும் ஆற்றால் மாலும் நான்முகனும் காணா வடிவு கொண்டு எதிரேவந்து, காலனார் உயிர்செற் றார்க்குக் கமழ்ந்த குங்குலியத் தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலைநின் றுள்ளார். பாலனாம் மறையோன் - மார்க்கண்டேயர். செற்றாற்கு - யமனுடைய உயிரைப் போக்கிய சிவபெருமானுக்கு. மணங்கமழ்ந்த. விம்ம - பரவ. 6 842. கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பி ராற்குப் பொங்கு குங்குலியத் தூபம் பொலிவு உறப் போற்றிச் செல்ல, அங்குஅவர் அருளி னாலே வறுமை வந்து அடைந்த பின்னும் தங்கள் நாயகருக்குத் தாம் முன் செய்பணி தவாமை உய்த்தார். போற்றிச் செல்ல - பேணி நடாத்த. தவாமை உய்த்தார் - கெடாமல் (தவறாமல்) நடாத்தி வந்தார். 7 843. இந்நெறி ஒழுகும் நாளில் இலம்பாடு நீடு செல்ல, நல்நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் பல்நெடுந் தனங்கள் மாளப் பயில்மனை வாழ்க்கை தன்னில், மன்னிய சுற்றத் தோடு மக்களும் வருந்தினார்கள். இலம்பாடு நீடுசெல்ல - வறுமை அதிகரிக்க. பயில் - நெருங்கிய. 8 844. யாதுஒன்றும் இல்லை ஆகி, இருபகல் உணவு மாறிப் பேதுஉறு மைந்த ரோடும் பெருகு சுற்றத்தை நோக்கிக் காதல்செய் மனைவி யார்தம் கணவனார் கலய னார்கைக் கோதுஇல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார். உணவுமாறி - உணவில்லாமல். பேதுறும் - வருந்தும். 9 845. அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போக, ஒப்புஇல் குங்குலியம் கொண்டுஓர் வணிகனும் எதிர்வந் துற்றான்; இப்பொதி என்கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்பக் கேட்டு, முப்புரி வெண்ணூல் மார்பர் முகம் மலர்ந்து இதனைச் சொன்னார். மார்பர் - குங்குலியக் கலயர். 10 846. ஆறுசெஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கு ஆன நாறு குங்குலியம் ஈதேல் நான் இன்று பெற்றேன்; நல்ல பேறுமற்று இதன்மேல் உண்டோ; பெறாப்பேறு பெற்று வைத்து வேறு இனிக் கொள்வது என் என்று உரைத்துஎழும் விருப்பின் மிக்கர். 11 847. பொன் தரத் தாரும் என்று புகன்றிட, வணிகன் தானும் என்தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்; அன்றுஅவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டு, நின்றிலர் விரைந்து சென்றார்; நிறைந்துஎழு களிப்பி னோடும். 12 848. விடையவர் வீரட் டானம் விரைந்துசென்று எய்தி என்னை உடையவர் நம்மை ஆளும் ஒருவர்தம் பண்டா ரத்தில் அடைவுஉற ஒடுக்கி, எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்கச் சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர்; தமக்கு ஒப்பு இல்லார். வீராட்டனம் - வீரஞ் செலுத்திய இடம் (யமனைக் கொன்ற இடம் - கடவூர்). என்னை அடிமையாக உடையவரும் நம்மெல் லாரையும் ஆளாக உடையவருமாகிய சிவபிரானது. பண்டாரத்தில் - பண்டக சாலையில் எல்லாம். அயர்த்து - (நேர்ந்துள்ள துன்பம், வறுமை, பசி, மனைவி மக்கள் நிலை முதலிய) எல்லாவற்றையும் மறந்து. 13 849. அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் தன்பெரு நிதியம் தூர்த்துத் தரணிமேல் நெருங்க எங்கும் பொன் பயில் குவையும் நெல்லும் பொருஇல் பல் வளனும் பொங்க மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட. நம்பர் - சிவபெருமான். அளகைவேந்தன் - குபேரன். தூர்த்து - நிறைத்து. பொருவில் - ஒப்பில்லாத. 14 850. மற்று, அவர் மனைவி யாரும் மக்களும் பசியால் வாடி, அற்றை நாள் இரவு தன்னில், அயர்வு உறத் துயிலும் போதில், நல்தவக் கொடிய னார்க்குக் கனவிடை நாதன் நல்கத் தெற்றென உணர்ந்து, செல்வம் கண்டபின் சிந்தை செய்வார். நற்றவக் கொடியனார்க்கு - நாயனார் மனைவியார்க்கு. நல்க - திருவருள் செய்ய. தெற்றென உணர்ந்து - விரைவாகத் துயிலெழுந்து. 15 851. கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் அம்பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள, எம்பிரான் அருளாம் என்றே இருகரம் குவித்துப் போற்றித் தம்பெருங் கணவ னார்க்குத் திருஅமுது அமைக்கச் சார்ந்தார். கொம்பனார் - நாயனார் மனைவியார். உள்ள - உள்ளன. 16 852. காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலய னாராம் ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால், சால நீ பசித்தாய் உன்தன் தடநெடு மனையில் நண்ணிப் பாலின் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார். காலனைக் காய்ந்த காலனார் - சிவபெருமான். ஆலும் அன்பு - நெகிழ்ந்த அன்பு. பாலோடு கூடிய இனிய சோறு உண்டு. பருவரல் - பசித்துன்பத்தை. 17 853. கலயனார் அதனைக் கேளாக் கைதொழுது இறைஞ்சிக் கங்கை அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித் தலைமிசைப் பணிமேல் கொண்டு, சங்கரன் கோயில் நின்று மலைநிகர் மாட வீதி மருங்குதம் மனையைச் சார்ந்தார். 18 854. இல்லத்தில் சென்று புக்கர் இருநிதிக் குவைகள் ஆர்ந்த செல்வத்தைக் கண்டு நின்று, திருமனை யாரை நோக்கி, வில் ஒத்த நுதலாய்! இந்த Éisî vyh« v‹bfhš? என்ன, அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார். ஆர்த்த - நிறைந்த. நுதலாய் - நெற்றியையுடைய பெண்ணே! அல்லொத்த கண்டன் எம்மான் - இருளொத்த நீலகண்டத்தை யுடைய சிவபெருமான். 19 855. மின்இடை மடவார் கூற, மிக்க சீர்க் கலயனார் தாம் மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி, என்னையும் ஆளும் தன்மைத்து; எந்தை, எம் பெருமான், ஈசன், தன்அருள் இருந்த வண்ணம் என்றுகை தலைமேல் கொண்டார். தன்மைத்தாய் இருந்த வண்ணம் என்னையோ. 20 856. பதுமநல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்திக் கொண்டு, கதும் எனக் கணவனாரைக் கண்ணுதற்கு அன்ப ரோடும் விதிமுறை தீபம் ஏந்தி, மேவும் இன் அடிசில் ஊட்ட, அதுநுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் - அருமறைக் கலயனார் தாம். பதும நற்றிருவின் மிக்கார் - தாமரை மலரிலுள்ள இலட் சுமியைப் பார்க்கிலும் மிக்கவராகிய அம்மையார். பரிகலம் - உண் கலத்தை. கதுமென - விரைவாக. கண்ணுதற்கு அன்பரோடும் - சிவன டியார்களோடும். மேவும் இன் அடிசில் - விரும்பத்தக்க இன் னுணவை. 21 857. ஊர்தொறும் பலிகொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே, பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச் சீர்உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால் ஆர்தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில். பலி - பிச்சை. ஒருவனது - சிவபெருமானது. பாரினில் ஆர்ந்த - உலகில் நிறைந்த. பண்பில் நீடி - குணத்தில் மேம்பட்டு. ஆர்தரு - உண்பிக்கும். 22 858. செங்கண் வெள்ஏற்றின் பாகன்; திருப்பனந் தாளில் மேவும் அங்கணன் செம்மை கண்டு கும்பிட, அரசன் ஆர்வம் பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில் லாமைக் கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல. திருப்பனந்தாளில் விற்றிருக்குஞ் சிவலிங்கப் பெருமான். தம்மைப் பூசித்த ஒரு பார்ப்பனியின் பொருட்டுத் தமது திரு மேனியைச் சாய்த்தமையால். அச்சாய்வினைப் போக்க மன்னன் முயன்றது இங்கே சொல்லப்படுகிறது. செம்மை - நேர்மை. வேழ மெல்லாம் - யானைகளையெல்லாம் பூட்டவும் பூட்டி இழுப்ப திலும். அழுங்கி - வருந்தி. 23 859. மன்னவன் வருத்தம் கேட்டு மாசு அறு புகழின் மிக்க நல்நெறிக் கலயனார் தாம் நாதனை நேரே காணும் அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும் மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார். மின்னல்போல் ஒளிரும் சடையையுடைய சிவபெருமானை. 24 860. மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று, தொழுது போந்து, அன்பினோடும் தொல்மறை நெறி வழாமை முழுது உலகினையும் போற்ற மூன்று எரி புரப்போர் வாழும் செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந் தாளில் சேர்ந்தார். போற்ற - காக்க. மூன்றெரி புரப்போர் - பிராமணர். (மூன்றெரி: ஆகவனியம், காருகபத்தியம், தக்ஷணாக்கினியம்). 25 861. காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றி னோடும் தீது இலாச் சேனை செய்யும் திருப்பணி நேர் படாமை மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி, மாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி. நேர்படாமையால். எய்த்து - தளர்ந்து; சோர்ந்து. 26 862. சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி யானும்இவ் இளைப்புற்று எய்க்கும் இதுபெற வேண்டும் என்று, தேன் அலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச்சு ஏய்ந்த மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார். எய்த்து - இழுத்தும். எய்க்கும் - மெலியும். திருமேனியில் பூங்கச்சிற் பொருந்திய (முடியப்பட்ட) பெரிய வலிய கயிற்றைப் பூண்டு, கழுத்தினால் இழுக்கலுற்றார். 27 863. நண்ணிய ஒருமை அன்பின் நார்உறு பாசத் தாலே, திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்தபின், திறம்பி நிற்க ஒண்ணுமோ, கலய னார்தம் ஒருப்பாடு கண்ட போதே அண்ணாலார் நேரே நின்றார்; அமரரும் விசும்பில் ஆர்த்தார். பொருந்திய ஒருமை அன்பாகிய நாரால் ஆக்கப் பெற்ற கயிற் றால் திண்ணிய - அன்பு வலிமையுடைய. திறம்பி நிற்க ஒண்ணுமோ - நாயனார் அன்புக்கு மாறுபட்டு நிற்கச் சிவனார்க்குக் கூடுமோ. ஒருப்பாடு - அன்பின் ஒருமைப்பாடு; ஒப்பில்லாத முயற்சி என்பர் மகாலிங்க ஐயர். 28 864. பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூமாரி; தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் கார்பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பி வார்கழல் வேந்தன் தொண்டர் மலர்அடி தலைமேல் வைத்து. தேர்மலிதானை - தேர்கள் நிறைந்த படையையுடைய. கார்பெறு கானம் போல - மழை பொழியப்பெற்ற காடுபோல. தொண்டர் - குங்குலியக் கலயரது. 29 865. விண்பயில் புரங்கள் வேவ, வைதிகத் தேரில் மேருத் திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காணச் செய்தீர்! மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே பண்பு உடை அடியர் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்- விண்பயில் - ஆகாயத்தில் சஞ்சரித்த. வைதிகத் தேரில் - வேத மாகிய தேரில். முப்புரஞ் செற்றதன் நுட்பத்தைத் தடுத்தாட்கொண்ட புராணம் 44-ம் பாட்டுக் குறிப்பில் பார்க்க. செந்நிலைகாணச் செய்தீர் - நேர்மையாக நிற்கச் செய்தீர். மண்பகிர்ந்தவனும் - திருமாலும். 30 866. என்று மெய்த் தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து, நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர் மன்றிடை ஆடல் செய்யும் மலர்க்கழல் வாழ்த்தி வைகி. ஒன்றிய - பொருந்திய. வெண்கவிகை - வெண்கொற்றக் குடையையுடைய. 31 867. சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி, நிலவுதம் பணியில் தங்கி, நிகழும் நாள் - நிகர்இல் காழித் தலைவராம் பிள்ளை யாரும் தாண்டகச் சதுரர் ஆகும் அலர் புகழ் அரசும் கூட அங்கு எழுந்தருளக் கேட்டு. காழி. . . . . . . அரசும் - திருஞான சம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும். 32 868. மாறுஇலா மகிழ்ச்சி பொங்க, எதிர்கொண்டு, மனையில் எய்தி, ஈறுஇலா அன்பின் மிக்கார்க்கு இன்அமுது ஏற்கு மாற்றால், ஆறுநல் சுவைகள் ஓங்க சமைத்து அவர் அருளே அன்றி, நாறுபூங் கொன்றை வேணி நம்பர்தம் அருளும் பெற்றார். 33 869. கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி, விருப்பு உறும் அன்பு மேல்மேல் மிக்கு எழும் வேட்கை கூர, ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த திருப்பணி பலவும் செய்து, சிவபத நிழலில் சேர்ந்தார். கரும்பு வில்லையுடைய மன்மதனையும் யமனையும் வேட்கை கூர - விருப்பம் அதிகப்பட. உண்மையால் - உளதாந் தன்மையால். 34 870. தேன் நக்க கோததை மாதர் திரு நெடுந் தாலி மாறிக் கூனல் தண் பிறையி னார்க்குக் குங்குலியம் கொண்டு, உய்த்த பான்மைத் திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலே, மானக் கஞ்சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன். தேனக்க - தேன் விளங்கும். கூனல் தண்பிறையினார்க்கு - வளைந்த குளிர்ந்த பிறையை யணிந்த சிவபெருமானுக்கு. 35 குங்குலியக் கலய நாயனார் சோழ நாட்டிலுள்ள திருக்கடவூரிலே ஒரு நாயனார் இருந்தார். அவர் மறையவர்; கலயனார் என்னும் பெயருடையவர்; சிவபத்தியிலும் ஒழுக்கத்திலும் மிகச் சிறந்தவர். திருக்கோயிலில் குங்குலியத் தூபமிடுவது அவர்தந் திருத்தொண்டு. இத்திருத்தொண்டைக் கலயனார் குறைவற நிகழ்த்தி வரு நாளில், ஆண்டவன் அருளால் அவருக்கு வறுமை நேர்ந்தது. நேர்ந்தும் அவர் திருத்தொண்டைத் தவறாது செய்துவந்தார். கலயனார் தமக்குள்ள நிலபுலங்களையும் பிறவற்றையும் விற்கலானார். அவர்தஞ் செல்வங்களெல்லாம் ஒழிந்தன. அவருக்கு நேர்ந்த வறுமையின் கொடுமைக்கு ஓர் அளவில்லை. அக்கொடுமை அவரையும், அவர்தம் மனைவி மக்களையும், மற்றவர்களையும் இரண்டு நாள் பட்டினி கிடக்கவுஞ் செய்தது. அந்நிலை கண்டு மனஞ் சகியாத நாயனாரின் அருமை மனைவியார், தாலியை நாயனாரிடந் தந்து, நெல் வாங்கிவாரும் என்றார். கலயானர் தாலியைக் கொண்டு கடைவீதி வழியே சென்றார். அவ்வேளையில் ஒரு வணிகன் குங்குலியப் பொதிகொண்டு அவ்வழியே வந்தான். அடியார் அவனைப் பார்த்து, இஃதென்ன? என்று வினவினார். அவன் குங்குலியப் பொதி என்றான். அன்பர் இன்று யான் பெரும்பேறு பெற்றேன் என்று அளவிலா மகிழ்வெய்திப் பொன் தருகிறேன்; இதைக் கொடும் என்றார். வணிகன் எவ்வளவு பொன்? என்று கேட்டான். நாயனார் தாலியை நீட்டினார். வணிகன் தாலியை வாங்கிப் பொதியைக் கொடுத்தான். கலயனார் அப்பொதியை ஏற்று விரைந்து ஓடித் திருக்கோயில் பண்டாரத்தில் அதைச் சேர்த்துச் சிவபெருமான் திருவடியைப் போற்றிக்கொண்டிருந்தார். இல்லத்தில் நாயனாரின் மனைவி மக்கள் முதலியோர் பசியால் வருந்தி வருந்தி உறங்கிவிட்டனர். அந்நிலையில் அடியவர்க் கெளியவ ராகிய சிவபெருமான், நாயனார் வீடு முழுவதும் பொற்குவியலும், நெற்குவியலும், பிறவும் நிரம்புமாறு திருவருள் செய்து, அதை அம்மையார்க்குக் கனவில் உணர்த்தினார். அம்மையார் விழித் தெழுந்து, செல்வக் குவியல்களைக் கண்டு, ஆண்டவன் அருளை வியந்து போற்றிக் கணவனார்க்கு அமுது சமைக்கச் சென்றார். திருக்கோயிலிலுள்ள நாயனார் கனவிலுஞ் சிவபெருமான் தோன்றி நீ பசியால் வருந்துகிறாய்; வீடுபோந்து உணவு கொள்வா யாக என்று கட்டளையிட்டருளினார். நாயனார் திருவருள் ஆணையை மறுத்தற் கஞ்சி, வீடுநோக்கிச் சென்றார். சென்ற அவர், வீட்டில் நிரம்பியுள்ள செல்வக் காட்சியைக் கண்டு மனைவியாரைப் பார்த்து, இதென்ன? என்று கேட்டார். அம்மையார் எல்லாம் ஆண்டவன் அருள் என்று சொன்னார். நாயனார் ஆண்டவன் அருளைப் போற்றிப் புகழ்ந்து, அடியவர்களுடன் அமுதுண்டு இன்புற்றார். கலயனார் வழக்கம் போலத் தமது திருத்தொண்டைக் குறைவற நிகழ்த்தி அறுவகைச் சுவையுடன் அடியவர்க்கு அமுதூட்டி வந்தார். திருப்பனந்தாளிலே சிவலிங்கத் திருவுவிற்குச் சாய்வு நேர்ந்தது. அச்சாய்வைப் போக்கிப் பெருமானை வழிபட மன்னன் விரும் பினான். அவன் தன் சேனை யானைகளையெல்லாம் பூட்டித் திரு வுருவை இழுப்பித்தான். இழுப்பித்தும் அவன் விருப்பம் நிறைவேற வில்லை. அவன் துயரக்கடலில் அழுந்தினான். மன்னன் படுந்துயரைக் குங்குலியக் கலய நாயனார் கேள்வி யுற்றுத் திருப்பனந்தாள் சேர்ந்தார். அங்கே மன்னவன் துயரையும் சேனை யானைகளின் இளைப்பையும் கண்டு, யானும் இத் தொண்டில் ஈடுபடுகிறேன் என்று, சிவலிங்கத்திற் பூட்டியுள்ள கயிற்றைத் தங் கழுத்திற் பூட்டி இழுத்தார். அன்புக் கயிற்றின் இழுப்புக்குச் சிவலிங்கம் நிமிராதிருக்குமோ? சிவலிங்கம் நிமிர்ந்து விட்டது. மன்னன் நாயனாரை வணங்கி வாழ்த்தித் திருக்கோயிலில் திருப்பணி செய்து தனது பதியைச் சேர்ந்தான். நாயனார் திருப்பனந்தாளில் சிலநாள் தங்கிப், பின்னே தமது திருக்கடவூருக்குத் திரும்பினார். திருக்கடவூருக்குத் திருஞான சம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் எழுந்தருளி னார்கள். குங்குலியக்கலயர் அப்பெருமக்களை எதிர்கொண்ட ழைத்து. அவர்கட்குத் திருவமுது செய்வித்து, அவர்கள் அருளையும் ஆண்டவன் அருளையும் பெற்றார். நாயனார் தமது திருப்பணியை முறையாகச் செய்து வாழ்ந்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். 17. மானக் கஞ்சாற நாயனார் கொச்சக்கலி 871. மேல் ஆறு செஞ் சடைமேல் வைத்தவர் தாம் விரும்பியது; நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது; கோல் ஆறு தேன் பொழியக் கொழுங்கனியின் சாறு ஒழுகும் கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறு ஊர் கஞ்சாரூர். மேல் ஆறு - ஆகாய கங்கையை. நூல் ஆறு - நூல் நெறியை. நோன்மையது - பெருமையுடையது; வலிமையுடையது; பொறுமை யுடையது என்றுங் கூறலாம். தேன் கோல் ஆறு பொழிய - தேன், கொம்புகளின் வழிச் சொரிய. கொழுங். . . . . .கமழ் சாறூர் - கொழுமை பொருந்திய பழங்களின் சாறு ஒழுகி வாய்க்கால் வழியே சென்று வயல்களிலுள்ள கருப்பஞ்சாற்றோடு கலந்து மணம் வீசுகின்ற ஊராகிய; பழங்களின் சாறு ஒழுகுதலால் ஆறாகி வயல்களிற் பாய்ந்து ஆங்குள்ள கருப்பஞ் சாற்றுடன் கலந்து மணங் கமழும் ஊராகிய என்னலுமாம்; பழங்களின் சாறு ஒழுகுகின்ற வாய்க் கால்கள் பாயும் வயல்களிலுள்ள கரும்பின் வாசனை கமழுஞ் சாறு பாய்கின்ற என்னலுமொன்று. 1 872. கண் நீலக் கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி, உள் நீர்மைப் புணர்ச்சிக் கண் உறைத்து மலர்க் கண் சிவக்கும் தண் நீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும் மண் நீர்மை நலம் சிறந்த வளவயல்கள் உளஅயல்கள். கண் நீலக் கடைசியர்கள் - கண்ணெனும் நீலோற்பலத்தை யுடைய பள்ளப் பெண்கள். கடுங்களையில் பிழைத்து ஒதுங்கி - பிடுங்குகின்ற களைகளில் தப்பி ஒதுங்கி . உள் நீர்மைப் புணர்ச்சிக்கண் - உள்ளே பொருந்திய நீர்மைச் சேர்க்கையில் (நீர்மை - நீரின் தன்மை). உறைத்து - அதிகப்பட்டு; மிக்கு. மலர்க்கண் சிவக்கும் - மலரிடத்துச் சிவக்கின்ற. தண்நீர்மென் கழுநீர்க்கு - குளிர்ந்த தன்மை வாய்ந்த மெல்லிய செங்கழுநீர்ப் பூவின்மேல். தடஞ்சாலி - பெரிய நெற் பயிர்கள். தலை வணங்கும் - தலை சாய்க்கும். மண்நீர்மை நலம் சிறந்த வளவயல்கள் - மண் தன்மையின் நலம் சிறந்த வளப்பத்தையுடைய வயல்கள். அயல்கள் உள - பக்கங்களிலிருக்கின்றன. கடைசியர்கள் பிடுங்கிய களைகளினின்றும் தப்பிய செங்கழு நீர் மலர்மேல். நெற் கதிர்கள் சாய்ந்துள்ளன வயல்கள் என்றபடி. உள். . . . . . வணங்கும் - மனநேயம் வாய்ந்த புணர்ச்சியில் வேட்கை மிகுந்து மலர்க்கண்கள் சிவக்கும். குளிர்ந்த தன்மையும் மென்மையுமுடைய செங்கழு நீரென்னும் நாயகிக்கு, பெரிய நெற் பயிரென்னும் நாயகன் தலை வணங்கும். . . . . .வயல்கள் எனக் கொள்க. நீர்மைப் புணர்ச்சி என்ப தற்கு நீரின் சம்பந்தம் என்றும் கூறலாம். 2 873. புயல் காட்டும் கூந்தல் சிறு புறம் காட்டப் புன மயிலின் இயல் காட்டி இடை ஒதுங்க, இனம் காட்டும் உழத்தியர் கண் முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண் மூரிக் கயல் காட்டும் தடங்கள் பல; கதிர் காட்டும் தடம் பணைகள். புயல் காட்டுங் கூந்தல் - மேகத்தைக் காட்டும் கூந்தலை; மேகம்போலக் கரு நிறத்தைக் காட்டும் கூந்தலை. சிறுபுறம் காட்ட - பிடர் (பின்புறம்) காட்டலால். புன. . . . . . ஒதுங்க - புனத்திலுள்ள மயிலின் சாயலைக் காட்டி இடை தளர. இனம். . .கண் தங்கள் கூட்டத்தைக் காட்டும் பள்ளப் பெண்களின் கண்களை. முயல். . . . காட்ட - முயற் களங்கத்தை யுடைய சந்திரனையுந் தோல்வியுறச் செய்யும் (அவர்களின்) முகம் காட்ட. கண். . . . . .தடங்கள் - அக் கண்களை வலிய கெண்டை மீன்கள் காட்டும் தடாகங்கள். கதிர் காட்டும் தடம் பணைகளில் (விசாலித்த வயல்களில்) தடங்கள் பல எனக் கூட்டிக்கொள்க. 3 874. சேறுஅணிதண் பழனவயல் செழுநெல்லின் கொழுங் கதிர்போய் வேறுஅருகு மிடை வேலிப் பைங் கமுகின் மிடறு உரிஞ்சி, மாறுஎழு திண்குலை வளைப்ப, வண்டு அலைதண் தலைஉழவர் தாறுஅரியும் நெடுங்கொடுவாள் அனையஉள - தனி இடங்கள். சேறு அணி தண் பழன வயல் - சேற்றாலாகிய அழகினை யுடைய. குளிர்ந்த மருத நிலத்து வயல்களிலுள்ள. பழனமாகிய வயல் என்னலுமாம். வேறு. . . . . உரிஞ்சி - வேறாக அருகே நெருங்கிய வேலி யாகிய பசிய கமுக மரத்தின் கழுத்தை உராய்ந்து. மாறு எழு திண் குலை வளைப்ப - மாறாக எழும்பிய வலிய குலைகளை வளைத்த லால். தண்டலை - சோலைகளிலிருக்கின்ற. தாறு. . . . . உள குலைகளை அரிகின்ற - நீண்டு வளைந்த அரிவாளை ஒத்தனவா யிருக்கின்றன. தனி இடங்களில் கதிர்கள் உள என்க. 4 875. பாங்குமணிப் பலவெயிலும் சுலவு எயிலும் உளமாடம்; ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உளஅரங்கம் ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால் பூங்கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சிலமறுகு. மாடம் - மாடங்களில். பாங்கு மணி. . . . . . .உள - பக்க மணிகளின் பலதிற ஒளிகளும் சூழ்ந்த மதில்களும் இருக்கின்றன. அரங்கம் - சபைகளில். ஞாங்கர். . . . . . . . உள - முன்பக்கத்தில் கட்டிய துணிக் கொடிகளும் முலைகளையுடைய பெண் கொடிகளும் இருக்கின்றன. பூங்கணை. . . . . . மறுகு - தம்மிடத்து அணைவோர். (மன்மதனால்) ஒழுங்காக எய்யப்படும் புஷ்ப பாணங்களால் புலன்கள் சுழலப் பெறும் சில வீதிகளில் சில மறுகில் தோரணமும் பூரண கும்பமும் உள எனக் கூட்டுக. 5 876. மனைசாலும் நிலைஅறத்தின் வழிவந்து வளம் பெருகும் வினைசாலும் உழவு தொழில் மிக்கபெருங் குடி துவன்றிப் புனைசாயல் மயில் அனையார் நடம் புரியப் புகழ்முழவம் கனை, சாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால். சாலும் நிலை மனையறத்தின் - பெருமை மிகுந்த இல்லறத்தின். வினை சாலும் - தொழில்களுள் சிறந்த. குடி துவன்றி - குடிகள் நெருங்கி. புனை - அலங்கரிக்கும். புகல் முழவம் கனை சாறு மிடை வீதி - விரும்பத்தக்க முழவு ஒலிக்கின்ற திருவிழா நெருங்கிய வீதிகளை யுடைய. முழவி மிழு மகலாங்கண் விழவு நின்ற வியன் மறுகில் - மதுரைக் காஞ்சி: 327 - 8. முழவைப் பற்றிய விளக்கம் சிலப்பதிகார அரங்கேற்று காதை உரைக் குறிப்புகளிற் காண்க. 6 877. அப்பதியில் குலப்பதியாய் அரசர் சேனாதிபதியாம் செப்பவரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்; மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை வைப்பு அனைய மேன்மையினார்; மானக் கஞ் சாறனார். விழுமிய - சிறந்த. வைப்பு அனைய - சேமநிதி போன்ற. 7 878. பணிவு உடைய வடிவு உடையார்; பணியினொடும் பனிமதியின் அணிவு உடைய சடைமுடியார்க்கு ஆள் ஆகும் பதம்பெற்ற தணிவு இல் பெரும் பேறுஉடையார்; தம்பெருமான் கழல் சார்ந்த துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார். வடிவில் பணிவு உடையார் என்பது மற்ற மன மொழிகளிலும் அவர் பணிவு உடையார் என்பதைக் குறிப்பது. மனப் பணிவும் மொழிப் பணிவும் பரிணமித்த வடிவுடையா ரென்க. சைவம் என்பது பணிவிலிருப்பது. வாழ்வெனும் மையல்விட்டு வறுமை யாஞ் சிறுமை தப்பித் - தாழ்வெனுந் தன்மையோடுஞ் சைவமாஞ் சமயஞ்சாரும் - ஊழ் பெறல் அரிது - சிவஞான சித்தியார்: சூத். 2. 11. பணி யினொடும் - பாம்போடும். அணிவு - அணிதல். பதம் - பக்குவம். துணிவுடைய - தெளிவுடைய. 8 879. மாறுஇல் பெருஞ் செல்வத்தின் வளம் பெருக மற்றதுஎலாம் ஆறுஉலவும் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம் ஈறுஇல் பெருந் திருஉடையார் உடையார் என்று யாவையும் நேர் கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத் துள்ளார். அந்தணர்தம். . . . . . .உடையார் - சிவபிரானுடைய அடியவ ராகிய முடிவில்லாத செல்வத்தை யுடையவர்களே சிவபெருமான்; திருவுடையாரே எல்லாம் உடையார் என்றும், தம்மை யுடையார் என்றும் கூறலாம். சிவனடியாரைச் சிவமாகக் கருதல் மரபு. சிவஞான போதம் 12-ம் சூத்திரம் பார்க்க. நேர்கூறுவதன் முன் - நேரே அவர்கள் இது வேண்டுமென்று சொல்வதற்கு முன். 9 880. விரிகடல் சூழ் மண் உலகை விளக்கியஇத் தன்மையராம் பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப்பேறு இன்மையினால், அரி அறியா மலர்க் கழல்கள் அறியாமை அறியாதார், வருமகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார். பெரியவர்க்கு - மானக்கஞ்சாற நாயனார்க்கு. அறியாமை அறியாதார் அறிதலை அறிந்தவர். 10 881. குழைக்கு அலையும் வடிகாதில் கூத்தனார் அருளாலே மழைக்கு உதவும் பெருங்கற்பின் மனைக் கிழத்தியார் தம்பால் இழைக்கும் வினைப்பயன் சூழ்ந்த இப்பிறவிக் கொடுஞ் சூழல் பிழைக்கும் நெறி தமக்கு உதவப் பெண் கொடியைப் பெற்றெடுத்தார். குண்டலத்தால் அசையும் வடித்த காதினையுடைய நடராஜப் பெருமான்றன். மழைக்கு உதவும் - மழை வேண்டும்போது பெய்விக்கும் வான்தருங் கற்பினான் அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே - கலித்தொகை 16: 20; 39: 6. வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது - நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது - பத்தினிப் பெண்டிர் இருந்த நாடென்னும் - அத்தகு நல்லுரை அறியா யோநீ - சிலப்பதிகாரம்: 15. அடைக்கல. 145 - 148. கற்பின் நின்றன கால மாரியே - கம்ப இராமாயணம்: நாட்டு 59. இழைக்கும் - செய்யும். அவரவர் செய்யும் வினையின் பயனே பிறவியாகச் சூழ்கிறதென்க. சூழல் - காட்டினின்றும். பெண்பிறவி இழிந்ததெனக் கருதும் பிற்காலப் புலவர்கள், ஈண்டுப் பெண் பிறவியின் விழுப்பங் கூறப்பட்டிருத்தலைக் கண்டு உண்மையுணர் வார்களாக. 11 882. பிறந்தபெரு மகிழ்ச்சியினால் பெருமூதூர் களிசிறப்பச் சிறந்தநிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான் அறம் தலை நின்றவர்க்கு எல்லாம் அளவு இல் வளத்துஅருள் பெருக்கிப் புறந்தருவார் போற்றி சைப்பப் பொன் கொடியை வளர்க்கின்றார். தூரியம் - வாத்தியங்கள். அறம் தலை - அறவழியே. அளவில் வளத்த அருள் பெருக்கி - அளவில்லாத பொருள்களைக் கொடுத்து; அளவில்லாத வளத்தில் அருள் பெருக்கலாவது, கொடையால் உயிர்கட்கு நலஞ் செய்வது. புறந்தருவார் - பாதுகாப்போர்; தாதிகள். ஐவகைத் தாயார் என்பர் பழைய குறிப்புரையாசிரியர். 12 883. காப்பு அணியும் இளங்குழவிப் பதம் நீங்கிக் கமழ்சுரும்பின் பூப்பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ, யாப்பு உறுமென் சிறுமணி மேகலை அணி சிற்றாடையுடன், கோப்புஅமை கிண்கிணி அசையக் குறுந்தளிர் மெல் அடி ஒதுங்கி. காப்பு - திலதம். பதம் - பருவம். கமழ். . . . . .குழலும் - மணத்தையும் வண்டுகளையுமுடைய சுருண்ட கூந்தலும், பொலங் குழையும் - பொற் குண்டலமும். மெல்லிய சிறு மணிகளால் ஆக்கப்பட்ட மணி மேகலை கட்டப்பட்ட மெல்லிய சிறிய அழகிய மணிமேகலை என்னலுமாம். கோப்பு அமை - கோக்கப்பட்ட. 13 884. புனைமலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் மனை அகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து, மணிக் கனைகுரல் நூபுரம் அலையக் கழல் முதலாப் பயின்று, முலை நனைமுகம் செய் முதல் பருவம் நண்ணினள் - அப்பெண் அமுதம். வீட்டினிடத்துள்ள அழகிய முற்றத்தில். மணி கனைகுரல் நூபுரம் - மணிகள் நெருங்கி ஒலிக்கின்ற சிலம்புகள். கழன் முதலா - கழங்காடல் முதலியவற்றை. முலை நனை முகஞ்செய் முதற் பருவம் - கொங்கை அரும்புகின்ற முதற்பருவம்; பேதைப் பருவத்தை என்பது பழைய குறிப்புரை; ஒப்பற்ற பருவத்தை என்பர் மகாலிங்க ஐயர்; முதற் பருவ மென்பதற்குப் பேதைப் பருவம் என்பாரு முளர். ஏழு வயதில் அப்பருவம் வருதலால் அக்காலத்தில் பெண்களுக்கு தனம் அரும்புபோல் பருக்கிறது கூடாமையென்று மறுக்க - மகாலிங்க ஐயர். 14 885. உறுகவின் மெய்ப் புறம் பொலிய, ஒளி நுசுப்பை முலைவருத்த, முறுவல் புறம் அலராத முகிழ் முத்த நகை என்னும், நறுமுகை மென்கொடி மருங்குல், நளிர்ச் சுருள் அம்தளிர்ச் செங்கை, மறுஇல் குலக் கொழுந் தினுக்கு மணப்பருவம் வந்து அணைய. உறுகவின் மெய்ப்புறம் - மிகுந்த அழகு உடலினிடத்தே. நுசுப்பை - இடையை. முறுவல் புறம் மலராத - சிரிப்புப் புறத்தே மலராத. முகிழ் முத்த நகை என்னும் நறுமுகை - அரும்புகின்ற முத்தனைய பற்கள் என்னும் நறிய அரும்பினையும். புறமலராத அரும்பினையும் - அரும்பும் முத்தினையும் போன்ற பற்கள் என்றலு மொன்று. மென்கொடி போன்ற மருங்குல் (இடையினையும்). நளிர் . . . . . .கை - குளிர்ச்சி பொருந்திய கூந்தலையும் அழகிய தளிர் போன்ற சிவந்த கையினையுமுடைய. 15 886. திருமகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் ஒருமகளை, மன் உலகில் ஓங்குகுல மரபினராய்க் கருமிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் பெருமகற்கு மகட் பேச வந்து அணைந்தார் பெரு முதியோர். கரு - தமராய - திருநீல கண்டத்தினையுடைய சிவ பெருமானின் அடியவராகிய. கழல் ஏயர் பெருமகற்கு - கழலை அணிந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார்க்கு - பழைய குறிப்புரை. வீர கண்டையைத் தரித்த காலினை உடைய ஏயரது பெருமை பொருந் திய குமாரராகிய கலிக்காம நாயனார்க்கு மகாலிங்க ஐயர்; கழ லேயர் என்னும் வேளாளரது புதல்வராகிய ஏயர்கோன் கலிக்காம நாயனார்க்கு - ஆறுமுகத் தம்பிரானார். 16 887. வந்த மூது அறிவோரை மானக் கஞ்சாறனார் முந்தை முறைமையின் விரும்பி, மொழிந்த மணத் திறம் கேட்டே, எம் தமது மரபினுக்குத் தரும் பரிசால் ஏயும் எனச் சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார். முந்தை முறைமையின் விரும்பி - பழைய சம்பிரதாயப்படி அன்புடன் உபசரித்து. மொழிந்த மணத்திறம் - அவர் மொழிந்த மண முறையை. பரிசால் ஏயும் - தன்மையால் பொருந்தும். மணம் நேர்ந்து செல விட்டார் - திருமணத்துக்கு உடன்பட்டு (அவர்களை) அனுப்பினார். 17 888. சென்ற வரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக் குன்று அனைய புயத்து ஏயர் கோனாரும் மிக விரும்பி, நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய மன்றல் வினை மங்கல நாள் மதி நூல் வல்லவர் வகுத்தார். நேர்வாய் - உடன்பாடாகிய. மன்றல் வினை - திருமண வினைக்கு. மதி நூல் வல்லவர் - சோதிட சாத்திரிகள்; அறிவால் ஊகிக்கும் சோதிட நூல் வல்லவர்கள். 18 889. மங்கலம் ஆம் செயல் விரும்பி, மகள் பயந்த வள்ளலார் தம்குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங் களி சிறப்பப் பொங்கிய வெண் முளைப் பெய்து, பொலம் கலங்கள் இடைநெருங்கக் கொங்கு அலர் தண்பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார். பொலம் கலங்கள் - பொற் கலங்கள். கொங்கலர். . . . கோடித் தார். வாசனை வீசும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த பழைய ஊராகிய கஞ்சாறூரில் திருமணஞ் செய்யுமிடத்தை அலங்கரித்தார். 19 890. கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும் தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய, முரசு இயம்ப, மஞ்சு ஆலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கு அணைய. எஞ்சாத - குறையாத. சால்பு நிறை - அமைதி நிறைந்த. தலை நிறைய - கூட்டமாய் வர. முரசியம்ப - மங்கல முரசு முழங்க. ஆலும் - மேகங்கள் தவழும். 20. 891. வள்ளலார் மணம் அவ் ஊர் மருங்கு அணையாமுன் மலர்க் கண் ஒள்ளிழையைப் பயந்தார் தம் திருமனையில் ஒரு வழியே, தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு, மற்று அவர்தம் உள்ள நிலைப் பொருள் ஆய உம்பர் பிரான்தாம் அணைவார். வள்ளலார் - ஏயர்கோன் கலிக்காம நாயனார். மணம் - திரு மணத்தின் எழுகை (வரவு). மலர்க் கண்ணையும் ஒளி வீசும் ஆபரணங்களையுமுடைய பெண்ணைப் பெற்ற மானக்கஞ்சாற நாயனாரின். தெள்ளு திரைநீர் - தெளிந்த அலைகடல் சூழ்ந்த. அவர்தம் - அந்நாயனாருடைய. உம்பர்பிரான் - தேவர்கள் நாயகராகிய சிவபெருமான். 21 892. முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திரு முடியில் கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்தரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும். முண்டம் - திரிபுண்டரம். முண்டித்த - க்ஷௌரஞ் செய்த; மழித்த. சிகைமுச்சியின்கண் - குடுமி மயிர் நுனியில். என்பு மணியும். பண்டு. . . . . .நாள் - முன்னே திருமாலின் உடல் எலும்புகளை அணிந்த நாளில். அது. . . . . . .அசையும் - அதனால் கடைந்த வெள்ளிய முத்துப்போலக் காதினிடத்து அசையும். 22 893. அவ் என்பின் ஒளிமணி கோத்து அணிந்த திருத்தாழ் வடமும் பைவன் பேர் அரவு ஒழியத் தோளில் இடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணும் நூலும் மனச் செவ் அன்பர் பவம் மாற்றும் திரு நீற்றுப் பொக்கணமும். பைவன்பேர் அரவு ஒழிய - படத்தையுடைய வலிய பெரிய பாம்பு ஒழிய. பட்டிகையும் - யோகப்பட்டையும்; உத்தரீயமுமாம். மை. . . . . . நூலும் - கரிய மயிரால் வடமாகச் செய்யப்பட்ட பூணூலும். மனச் செவ்வன்பர் - மனத்தைச் செம்மை நெறியிற் செலுத்தும் அன்பர்களின். பவம் - பிறவி நோயை. பொக்கணமும் - பையும். 23 894. ஒருமுன் கைத்தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் அருமறைநூல் கோவணத்தின் மிசைஅசையும் திரு உடையும் இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுது அரிய திருவடியும் திருவடியில் திருப்பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க. தனிமணி - ஒருமணி. சூத்திரமும் - கயிறும். அத்திருவடியில் - பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் இவை கொண்ட பஞ்ச முத்திரை, யோகிகளின் பாதத்திலுண்டு. 24 895. பொடிமூடு தழல் என்னத் திருமேனி தனில் பொலிந்த படிநீடு திரு நீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய்க் கொடி நீடு மறுகு அணைந்து, தம்முடைய குளிர் கமலத்து அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார். பொடி மூடு தழல் என்ன - சாம்பல் மூடிய நெருப்புப்போல; நீறு பூத்த நெருப்புப் போல. படிநீடு - தன்மை ஓங்கும்; உலகை ஓங்கு விக்கும் என்னலுமாம். பரப்பு - உத்தூளனத்தை. மறுகு - வீதியில். அடி நீடும் - திருவடிகள் பொலியும். அன்பர் - மானக்கஞ்சாற நாயனார். 25 896. வந்து அணைந்த மாவிரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்து சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெருந் தொண்டனார், எந்தைபிரான் புரிதவத்தோர் இவ்விடத்தே எழுந்தருள, cŒªbjhʪnj‹ mona‹! என்று உருகிய அன்பொடு பணிந்தார். மாவிரதம் - அகச் சமயம் ஆறனுள் ஒன்று; இச்சமயிகள் தங்கள் நூல் முறைப்படி தீக்கை பெற்று, என் பணிதல் முதலிய கிரியைகளைக் கடைப் பிடித்துச் சிவபெருமானை என்பு மாலை பூண்ட மூர்த்தியாக வழிபடுவார்கள். புரி - விரும்பும். உய்ந் தொழிந்தேன் - உய்ந்துவிட்டேன். 26 897. நல் தவராம் பெருமானார் நலம்மிகும் அன்பரை நோக்கி, உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என, அடியேன் பெற்றதொரு பெண் கொடிதன் வதுவை எனப் பெருந் தவரும் மற்று உமக்குச் சோபனம் ஆகுவது என்று வாய்மொழிந்தார். மங்கலம் உற்ற செயல் இங்கு ஒழுகுவது - மங்கலம் பொருந்திய செயல் இங்கு நடப்பது. வதுவை - கலியாணம். சோபனம் ஆகுவது - சுபம் உண்டாகக் கடவது. 27 898. ஞானச் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி, மானக் கஞ்சாறனார் மணக் கோலம் புனைந்திருந்த தேன் நக்க மலர்க் கூந்தல் திருமகளைக் கொண்டு அணைந்து, பானல் கந்தரம் மறைத்து வரும்வரைப் பணிவித்தார். மானக்கஞ்சாற நாயனார் ஞானம் நிறைந்த தவத்தினராகிய மாவிரதியாரின் திருவடிமீது விழுந்து வணங்கி விட்டுக்குள் நுழைந்து. தேனக்க - தேன் விளங்கும். பானல் கந்தரம் - நிலோற்பல மலரை யொத்த கரிய கண்டத்தை. 28 899. தம் சரணத்து இடைப்பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடிதன் மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி, அஞ்சலி மெய்த்தொண்டரைப் பார்த்து, அணங்கு இவள்தன் மயிர் நமக்குப் பஞ்சவடிக்கு ஆம் என்றார்; பரவ அடித்தலம் கொடுப்பார். சரணத்திடை - பாதங்களில். மடக் கொடிதன் - அழகுக் கொடி யினுடைய. மஞ்சு தழைத்தென - மேகம் தழைத்தாற்போல. தம்மை அஞ்சலி செய்து நிற்கும். அணங்கு - பெண். பஞ்சவடிக்கு - மயிர்ப் பூணூலுக்கு. பஞ்சவடி; மயிராற் செய்யப்பெற்று மார்பிலே பூணூ லாக அணியப்படும் வடம்; 23-ஆம் பாட்டைப் பார்க்க. பரவ - வாழ்த்தி வணங்க. 29 900. அருள் செய்த மொழிகேளா, அடல் சுரிகைதனை உருவிப் பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக் கொண்டு, பூங்கொடிதன் இருள் செய்த கருங் கூந்தல் அடியில் அரிந்து, எதிர்நின்ற மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தின் இடை நீட்ட. அடற்சுரிகை - வலிமையுடைய உடைவாளை; போர்வாளை எனினுமாம். பொருள் செய்து ஆம் எனப் பெற்றேன் எனக் கொண்டு - பொருள் படுத்தி நமக்கு ஆகும் என்று சொல்லப்பெற்றேன் என்று மனத்திற்கொண்டு. மருள் - மயக்கத்தை. 30 901. வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைத்து, பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை ஏறி, ஓங்கிய விண் மிசை வந்தார்; ஒளி விசும்பின் நிலம் நெருங்கத் தூங்கிய பொன் மலர் மாரி; தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார். பாங்கில் - பக்கத்தில். மலைவல்லியுடன் - பார்வதியுடன். மழ விடை - இளவேறு. விசும்பின் நிலம் - ஆகாயத்தினின்றும் நில உலகில். பொன் (கற்பக) மலர்மாரி தூங்கிய (சொரியப்பட்டன). தொழும்பர் - அடியவராகிய மானக்கஞ்சாற நாயனார். 31 902. விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய்யன்பர் தமக்கு, மதிக் கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடைக் கூத்தனார் எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்தச் செழும் புவனங்கள் ஏறச் செய்தோம் என்றருள் செய்தார். பரிசு - தன்மையை. 32 903. மருங்கு பெருங் கண நாதர் போற்று அசைப்ப, வானவர்கள் நெருங்க, விடைமேற் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம் ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து, ஐயர் பெருங் கருணைத் திறம் போற்றும் பெரும்பேறு நேர் பெற்றார். ஒருங்கிய - ஒருமைப்பட்ட. நேர்பெற்றார் - அடையப் பெற்றார்; நேராகப் பெற்றார் எனினுமாம். 33 904. தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்துஇமையோர் துதிசெய்ய, இண்டைவார் சடைமுடியார் எழுந்தருளிப் போயினார்; வண்டு வார்குழல் கொடியைக் கைப்பிடிக்க, மணக்கோலம் கண்டவர்கள் கண்களிப்பக் கலிக் காமனார் புகுத்தார். இமையோர் - தேவர்கள். இண்டை - இண்டை மாலையை யணிந்த; இண்டைப் பத்திரத்தை என்போருமளர். வார் - நீண்ட. 34 905. வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்தச் சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப் புந்தியினில் மிக உவந்து, புனிதனார் அருள் போற்றிச் சிந்தை தளர்ந்து அருள் செய்த திரு வாக்கின் திறம் கேட்டு. நினைத்தற்கரிய. செறிந்தவர்பால் - அங்கே திரண்டிருந்தவர் களிடத்தில். புந்தியினில் மிக உவந்து - மனத்தில் மிக மகிழ்ந்து. புனிதனார் - சிவபெருமானின். சிந்தை தளர்ந்து - இந்நிகழ்ச்சி நாம் வந்த பின்னை நிகழாமற் போயிற்றே; அப்பேற்றை நாம் பெற வில்லையே என்று மனந் தளர்ந்து; மனைவியின் மயிர் அரியுண்ட மைக்கு மனந் தளர்ந்து என்று கூறுவோருமுளர். உனக்குந் திருவருள் செய்வோம் வருந்தற்க என்றருள் செய்த திருவாக்கு. 35 906. மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால் புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து, தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார். பழையபடி கூந்தல் பெற்ற. இனம் பெருக - சுற்றத்தார் மகிழ்ச்சி யடைய. எயில் - மதில் சூழ்ந்த. 36 அறுசீர் விருத்தம் 907. ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைநாள் ஒருவர்க்கு ஈந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமைஎன் அளவிற்றாமே? மருவிய கமரில் புக்க மாவடு விடேல் என் ஓசை உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன். மருவிய கமரில் - பொருந்திய நிலப் பிளப்பில். 37 மானக் கஞ்சாற நாயனார் மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறூரிலே தோன்றியவர். அவர் வேளாண் குலத்தலைவர்; சேனாதிபதி; சிவடியார்களைச் சிவனே என்று கருதுவோர்; தமது உடைமையெல்லாம் சிவனடியார் உடைமை என்று கருதும் பெருநிலையில் நின்றவர்; எதையுங் குறிப்பறிந்து கொடுப்பவர். இப்பெரியார்க்கு நீண்ட காலமாக மகப்பேறில்லாமலிருந்தது. அது குறித்து அவர் திருவருளை வழுத்துவார். திருவருளால் அவருக் கொரு பெண்மகவு பிறந்து. அதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர் வளர்த்து வந்தார். அப்பெண்மகள் உற்ற வயதடைந்தாள். அப்பெண்மணியை ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு மணம் பேசச் சில முதியோர்கள், மானக்கஞ்சாற நாயனாரிடம் வந்தார்கள். நாயனார் அவர்களை முறைப்படி உபசரித்தார். அவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். அதற்கு மானக்கஞ் சாறர் உடன்பட்டார். இருசார்பிலும் திருமண முயற்சி நிகழ்ந்து வரலாயிற்று. ஏயர்கோன் கலிக்காம நாயனார் மணக்கோலங் கொண்டு உறவினருடனும் மற்றவர்களுடனும் கஞ்சாறூருக்குப் புறப்பட்டார். அவர் கஞ்சாறூரை அடைவதற்குள், சிவபெருமான் மாவிரத கோலந்தாங்கி, மானக்கஞ்சாற நாயனார் வீட்டுள் நுழைந்தார். நாயனார் அவரை எதிர்கொண்டு வணங்கி உய்ந்தேன் உய்ந்தேன் என்று குழைந்து குழைந்து உருகலானார். உருகும் அடியவரை மா விரதியார் பார்த்து இங்கென்ன மங்கல காரியம் நடக்கப்போ கிறது? என்று கேட்டார். மானக்கஞ்சாறர் அடியேனது ஒரு புதல்விக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்று பணிவுடன் கூறினார். மாவிரத முனிவர் உமக்குச் சோபனம் உண்டாகுக என்று வாழ்த்தினார். உடனே நாயனார் உள் புகுந்து தமது புதல்வியாரை அழைத்து வந்து முனிவரைத் தொழச் செய்தார். தொழுதெழுந்த மணப் பெண்ணின் மேகம் போன்று தழைத்துப் பொலிவும் அழகிய கூந்தல் மீது முனிவரனார் மனஞ் செலுத்தினார்; செலுத்தி நாயனாரைப் பார்த்து, இவ்வணங்கின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவக் கூடும் என்றார். என்றதும் நாயனார் தமது உடைவாளை உருவிப் புதல்வியின் கூந்தலை அறுத்து மாவிரதியாரிடம் நீட்டினார். அதை வாங்குவார்போல் நின்ற பெருமான், தாம் ஏற்ற கோலத்தை மறைத்து, உமையம்மையாருடன் மழவிடைமேல் காட்சி தந்தார். நாயனார் விழுந்து எழுந்து மெய்ம்மறந்தார். சிவபெருமான் அன்பரை நோக்கி நம்மாட்டு உனக்குள்ள அன்பின் திறத்தை உலகறியச் செய்தோம். இனி நம்மை அடைவாயாக என்று திருவருள் செய்து திருவுருக் கரந்தார். நாயனார் ஆண்டவன் அருட்பெருந்திறத்தைப் போற்றும் அரும்பேற்றைப் பெற்றார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் கஞ்சாறூரை அடைந்து, நிகழ்ந்ததைக் கேட்டுத் திருவருளைப் போற்றி மகிழ்ந்து, அந் நிகழ்ச்சியைக் காணும் பேற்றையான் பெறவில்லையே என்று மனந் தளர்ந்தார். அங்கே அருளால் எழுந்த திருவாக்கைக் கேட்டு அவர் துன்பம் நீத்தார். திருவருளால் மணப் பெண்ணின் கூந்தல் முன்போல வளரப் பெற்றது. ஏயர்கோன் கலிக்காம நாயனார் அப்பெண் மணியை மணந்து தம் ஊர் நோக்கினார். 18. அரிவாட்டாய நாயனார் கலி விருத்தம் 908. வரும்புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி; சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன் றிட, விரும்பு மென் கண் உடைவாய் விட்டு நீள் கரும்பு தேன் பொழியும் கண மங்கலம். வரும். . .பதி - இடையறாது வரும் நீரினையுடைய காவிரி நாட்டிலே (சோழநாட்டிலே) ஒப்பற்ற குடிகள் வாழ்தற்கு இடமாகிய ஊராவது. சுரும்பு வண்டொடு - ஆண் வண்டுகள் பெண் வண்டுகளுடன். முரன்றிட - ஒலிக்க. நரம்பிசைப்போல் வண்டொடு சுரும்பார்ப்ப - கலித்தொகை: 36: 3. வண்டுஞ் சுரும்பு மூசுந் - தேனார்பூங்கோதாய் - சிந்தாமணி: 2065. விரும்பு. . .விட்டு - விரும்பப்படுகின்ற மெல்லிய கணுக்களையுடைய வாய் பிளந்து. 1 909. செந்நெல் ஆர்வயல் கட்ட செந்தாமரை முன்னர் நந்துஉமிழ் முத்தம் சொரிந்திடத் துன்னு மள்ளர் கைம்மேற் கொண்டு தோன்றுவார் மன்னு பங்கய மாநிதி போன்று உளார். செந்நெல் ஆர வயல் கட்ட - செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களில் களை கட்ட. செந்தாமரை மலர்களில். நந்து உமிழ் - சங்குகள் ஈன்ற. நெருங்கிய பள்ளர்கள் அத்தாமரை மலர்களைக் கையிற் கொண்டு. பங்கயமாநிதி - பதுமநிதி உடையவர்கள். 2 910. வளத்தில் நீடும் பதிஅதன் கண்வரி உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் களத்தின் மீதும் கயல்பாய் வயல்அயல் குளத்தும் நீடும் குழையுடை நீலங்கள். வரி உளர்த்தும் ஐம்பாலுடையோர் - வண்டுகள் குடைகின்ற கூந்தலையுடைய பெண்மக்களின்; ஐம்பால்; தடுத்தாட்கொண்ட புராணம் 178 -ஆம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. களத்தின் மீதும் - கழுத்திலும்; நெற்களத்தின்மீதும் என்னலுமாம். குழையுடை நீலங்கள். . . . . முகத்தில். குழையுடை நீலங்கள் களத்தின் மீது - குழை வாகச் செய்யப்பெற்ற நீலமணிகள் கழுத்தின்மீது. கயல் பாய்வயல் அயலிலுள்ள குளங்களில் குழைதலையுடைய நீலோற்பலங்கள். 3 911. அக்குலப் பதிதன்னில், அறநெறித் தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்; தொக்க மாநிதித் தொன்மையின் ஓங்கிய மிக்க செல்வத்து வேளாண் தலைமையார். 4 912. தாயனார் எனும் நாமம் தரித்துளார்; சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா மாயனார் மண் கிளைத்து அறியாத அத் தூய நாள் மலர்ப் பாதம் தொடர்ந்துள்ளார். சேய காலம் - நெடுங்காலம். மண்கிளைத்து - பூமியைத் தோண்டியும். நாண்மலர்ப் பாதம் - அன்றலர்ந்த தாமரைப் பூப்போன்ற சிவபெருமான் திருவடியை. 5 913. மின்னு செஞ்சடை வேதியர்க்கு ஆம் என்று, செந்நெல் இன் அமுதோடு செங்கீரையும் மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து, அன்ன என்றும் அமுது செய்விப்பாரால். வேதியர்க்கு ஆம் - சிவபிரானுக்கு ஆகும். பைந்துணர் மாவடும் - பசிய கொத்தாயுள்ள மாம்பிஞ்சும். அன்ன - அவைகளை. 6 914. இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும் சிந்தை நீங்காச் செயலின் உவந்திட, முந்தை வேத முதல்வர் அவர்வழி வந்த செல்வம் அறியாமை மாற்றினார். நன்னிலை - நல்ல திருத்தொண்டை. இன்னல் - துன்பம். சிந்தையில் நீங்காத செயலாக மகிழ்வுடன் செய்துவர. உவந்திட - உலகம் கண்டு மகிழ எனக் கொள்ளலு மொன்று. முதல்வர் - சிவ பெருமான். அவர் - தாயனார். அறியாமை - இப்படிப் போயிற்று என்று எவரும் அறியக்கூடாதவாறு. 7 915. மேவு செல்வம் களிறு உண் விளங்கனி ஆவது ஆகி அழியவும், அன்பினால் பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அத் தாஇல் செய்கை தவிர்த்திலர் - தாயனார். களிறுஉண் விளங்கனி ஆவது ஆகி அழியும் - யானை உண்ட விளாம் பழத்தைப்போல உள்ளதுபோலத் தோன்றி உள்ளே ஒன்றுமில்லாததாகி அழியவும். களிறுஉண் விளங்கனி - வேழ முண்ட. விளங்கனி. வேழம் - வெள்ளிலுக்கு (விளங்கனிக்கு) வருவ தோர் நோய் தேரை போயிற் றென்றாற் போல்வதோர் நோயென்க; இனி யானையுண்டது வேறுவிதமென் றுரைப்ப- நச்சினார்க் கினியம். (சிந்தாமணி 232 : 1024 உரைக்குறிப்பு.) பாவை பங்கர்க்கு - சிவபிரானுக்கு. தாவில் - கெடுதலில்லாத. 8 916. அல்லல் நல் குரவு ஆயிடக் கூலிக்கு நெல் அறுத்து மெய்ந் நீடிய அன்பினால், நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு ஒல்லை இன் அமுதாக் கொண்டு ஒழுகுவார். அல்லல் நல்குரகு - துன்பத்தைக் கொடுக்கும் தரித்திரம். நாய னார்க்கு - சிவபெருமானுக்கு. ஒல்லை - விரைவில். 9 917. சாலி தேடி அறுத்து அவை தாம்பெறும் கூலி எல்லாம் திருஅமுதாக் கொண்டு நீல நெல் அரி கூலிகொண்டு உண்ணும் நாள் மால் அயற்கு அரியார் அது மாற்றுவார். சாலி - செந்நெல் (சம்பா நெல்). நீல். . . . . நாள் - கார்நெல்லறுத்து அதனாற் பெறுங் கூலியைக் கொண்டு தாம் உண்ணுநாளில். 10 அறுசீர் விருத்தம் 918. நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்தொறும் முன்னம் காண, வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி ஆக்கிட, மகிழ்ந்து சிந்தை அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த பு;ணணியம் என்று போத அமுது செய்விப்பா ரானார். முன்னங் காண - நாயனார் கண்முன்னே தோன்றும்படி. வண் ணவார் - அழகிய நீண்ட. போத - முன்னையைவிட அதிகமாக. 11. 919. வைகலும் உணவு இலாமை மனைப் படப்பையினில் புக்கு, நைகரம் இல்லா அன்பின் நங்கைகை அடகு கொய்து, பெய்கலத்து அமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித் தங்கள் செய்கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில். வைகலும் - நாடோறும். மனைப்படப்பையினிற் புக்கு - வீட்டின் கொல்லை (புழைக்கடை)யிற் போய். நைகரம் - வருத்தம். நங்கை கை அடகு கொய்து - மனைவியார் கையால் இலைக்கறி களைப் பறித்து. அமைத்துப் பெய் கலத்து - சமைத்து உண்கலத்தில். தங்கள் என்பது நாயனாரையும் அவர்தம் அருமை மனைவி யாரையுங் குறிப்பது. 12 920. மனைமருங்கு அடகு மாள, வடநெடு வான மீனே அனையவர் தண்ணீர் வார்க்க, அமுது செய்து அன்பனாரும் வினைசெயல் முடித்துச் செல்ல, மேவு நாள் ஒருநாள் மிக்க முனைவனார் தொண்டர்க்கு,அங்கு நிகழ்ந்தது மொழியப் பெற்றேன். மனை. . . . . .அனையவர் - மனைப் புறத்துள்ள இலைக்கறிகள் (கீரைகள்) அற்றுப்போகக் கற்பில் அருந்ததி போன்ற மனைவியார். முனைவனார் - சிவபிரானுடைய; சிவபிரானால் என்னலுமாம். 13 921. முன்புபோல் முதல்வ னாரை அமுதுசெய் விக்க மூளும் அன்புபோல் தூய செந்நெல் அரிசிமா வடுமென் கீரை துன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையில் சுமந்து போதப் பின்புபோம் மனைவியார் ஆன் பெற்றஅஞ்சு ஏந்திச் சென்றார். ஆன்பெற்ற அஞ்சு - பஞ்சகவ்வியத்தை (பால், தயிர், நெய், கோசலம், கோமயம்). 14 922. போதரா நின்ற போது புலர்ந்துகால் தளர்ந்து தப்பி, மாதரார் வருந்தி வீழ்வார் மட்கலம் மூடு கையால் காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடைச் சிந்தக் கண்டு பூதநாயகர் தம் தொண்டர் ‘nghtJ m§F ïÅ V‹? என்று போகின்றபோது. புலர்ந்து - பட்டினியால் உடல் உலர்ந்து (வாடி). தப்பி வருந்தி வீழ்வாரை மாதரார் (பஞ்சகவ்வியமுள்ள) மட்கல மூடுகையால் காதலால் அணைத்தும் எல்லாம் - செங்கீரை மாவடு அரிசி ஆகியஇவை. கமரிடை - நிலப்பபிளப்பில்; வெடிப்பில். பூதநாயகர்தந் தொண்டர் - தாயனார். 15. 923. நல்லசெங் கீரை தூய மாவடு அரிசி சிந்த அல்லல் தீர்த் துஆள வல்லார் அமுது செய்தருளும் அப்பேறு எல்லைஇல் தீமை யேன் இங்கு எய்திடப் பெற்றி லேன் என்று ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார். ஒல்லையில் - விரைவில்; உடனே. ஊட்டியை - மிடற்றினை; கழுத்தின் முற்பக்கத்தை. 16. 924. ஆட்கொள் ளும்ஐயர் தாம் இங்கு அமுதுசெய் திலர்கொல் என்னாப் பூட்டிய அரிவாள் பற்றிப் புரைஅற விரவும் அன்பு காட்டிய நெறியின் உள்ளந் தண்டுஅறக் கழுத்தி னோடே ஊட்டியும் அரியா நின்றார்; உறுபிறப் புஅரிவார் ஒத்தார். ஆட்கொள்ளும் ஐயைர்தாம் - சிவபெருமான். புரையற விரவும் - குற்றமறக் கலந்த. நெறியின் - நல்லவழியில்; முறைமையில். உள்ளம் தண்டு அற - (அன்பினின்றும்) நெஞ்சம் விலகுதல்கெட; மனமொத்து; நெஞ்சாங்குழல் அற என்னலுமொன்று. 17 925. மாசுஅறு சிந்தை அன்பர் கழுத்துஅரி அரிவாள் பற்றும் ஆசுஇல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்று ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்தது அன்றே. ஆசில்வண் கையை மாற்ற - குற்றமற்ற வண்மையுடைய தாயனாரின் கையை விலக்க. மாவடு முதலியன சிவபெருமானுக்குப் பயன்பட வில்லையே என்ற வருத்த மேலீட்டான், தாயனார் அரிவாள்கொண்டு ஊட்டியை அரிந்த போது, நடராசப்பெருமான் தமது வீசிய செங்கையால் நாயனாரின் அரிவாளைப் பற்றியும், அவர் வருத்தம் நீங்க மாவடுவைக் கடித்து விடேல் விடேல் என்னும் ஓசையைக் கமரினின்றும் எழுப்பியும் அருள்செய்தார் என்க. ஆண்டவன் கோயிலில் மட்டும் வீற்றிருக்கின்றா னில்லை என்பதும், அன்பர்கட்கு அவன் எங்கிருந்தும் அருள் செய்வான் என்பதும், அவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒருவன் என்பதும் விளங்குதல் காண்க. விடேல் - மாம்பிஞ்சைக் கடிப்பதனால் உண்டாகும் ஒலி. ஒக்கவே - ஒரு சேர. கையும் ஓசையும் எழுந்தன. 18 926. திருக்கைசென் றுஅரிவாள் பற்றும் திண்கையைப் பிடித்த போது வெருக்கொடு அங்குஊறு நீங்க, வெவ்வினை விட்டு நீங்கிப் பெருக்கவே மகிழ்ச்சி நீடத் தம்பிரான் பேணித் தந்த அருள்பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று. வெருக்கொடு - தடுத்தாட்கொண்ட புராணம் 114 -ஆவது பாட்டுக் குறிப்பைப் பார்க்க. ஊறு - அரிவாள் அரிந்த ஊறு. வெவ் வினை - ஊட்டியை அறுத்தலாகிய கொடுஞ் செயலை. பேணி - துன்பத்தினின்றுங் காத்து; விரும்பி எனினுமாம். 19 927. அடியனேன் அறிவி லாமை கண்டும் என் அடிமை வேண்டிப் படிமிசைக் கமரில் வந்து இங்கு அமுதுசெய் பரனே! போற்றி! துடியிடை பாகம் ஆன தூய நல்சோதி போற்றி பொடிஅணி பவள மேனிப் òÇril¥ òuhz ngh‰¿! படிமிசை - பூமிமீது. துடிஇடை பாகமான - உடுக்கை போன்ற இடையையுடைய உமாதேவியாரைப் பாகத்திற் கொண்ட; ஈண்டு உமைக் குறிப்பு அருளைக் காட்டுவது; அருளைப் பெண்ணாகக் கூறுவது மரபு. அருளது சத்தியாகும். அரன்றனக்கருளையின்றித் - தெருள்சிவமில்லை அந்தச் சிவமின்றிச் சத்தியில்லை. - சிவஞான சித்தியார். சூத். 5. 9. பொடி - திருநீறு. புராண - பழையவனே. 20 928. என்று அவர் போற்றி செய்ய, இடப வாகனராய்த் தோன்றி நன்று நீபுரிந்த செய்கை; நன்னுத லுடனே கூட என்றும் நம் உலகில் வாழ்வாய் என்றுஅவர் உடனே நண்ண, மன்றுளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார். நன்னுதல் உடனே - நல்ல நெற்றியை யுடைய மனைவியுடன். அவர் உடனே நண்ண - நாயனாரும் அவர்தம் மனைவியாரும் உடன் செல்ல. உகைத்து - நடாத்தி. 21 929. பரிவுஉறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின் வரி வடு விடேல் எனாமுன் வன்கழுத்து அரிவாள் பூட்டி அரிதலால் அரிவாட் டாயர் ஆயினர் தூய நாமம். வரி - நிறம் வாய்ந்த. அரிவாள் தாயனார். அரிவாட்டாயனார். 22 930. முன்இலை கமரே ஆக, முதல்வனார் அமுது செய்யச் செந்நெலின் அரிசி சிந்தச் செவிஉற வடுவின் ஓசை அந்நிலை கேட்ட தொண்டர் அடிஇணை தொழுது வாழ்த்தி மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன். கமரே - முன்னிலையாக. 23 அரிவாட்டாய நாயனார் சோழ நாட்டில் கணமங்கலம் என்றொரு பதியுண்டு. அப் பதியில் தாயனார் என்ற பெயருடையவர் ஒருவர் இருந்தார். அவர் செல்வத்திற் சிறந்தவர்; வேளாண் குலத் தலைவர். செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் சிவபெருமானுக்குத் திருவமுது செய்விப்பது அவர்தந் திருத்தொண்டு. தாயனாரின் செல்வ வளங்களையெல்லாம் மாற்றச் சிவ பெருமான் திருவுளங்கொண்டார். அவ்வன்பருடைய செல்வங்க ளெல்லாம் யானையுண்ட விளங்கனி போல் ஒழிந்தன. ஒழிந்தும் நாயனார் தமது திருத்தொண்டினின்றும் வழுவினாரில்லை. தாயனார் கூலிக்கு நெல்லறுக்கப் புகுந்தார். அவர், செந்நெல் லறுத்துக் கூலியாகப் பெறுஞ் செந்நெல்லை ஆண்டவனுக்கு அமு தாக்குவார்; கார்நெல்லறுத்துக் கூலியாகப் பெறுங் கார்நெல்லைத் தாம் உண்பார். நாயனார் இந்நெறிபற்றி ஒழுகுநாளில், அவர் செல்லும் வயல்களெல்லாம் செந்நெல்லாகவே காணப்பட்டன. அன்பிற் சிறந்த தாயனார் இது யான் செய்த புண்ணியம் என்று மகிழ்ந்து பெறுஞ்செந்நெல்லை எல்லாம் ஆண்டவனுக்கே உதவித் தாம் பட்டினி கிடக்கலானார். தாயனாரின் அருமை மனைவியார், வீட்டுக்கொல்லையி லுள்ள இலைக்கறிகளைக் கொய்து அவருக்குப் படைக்கத் தொடங்கினார். அன்பர் அதை உண்டு கழிப்பார். கொல்லையில் இலைக்கறிகளும் அற்றுப்போயின. அம்மையார் நீர் வார்ப்பார். நாயனார் அதையும் அருந்தித் தமது தொண்டைச் செய்து வந்தார். ஒரு நாள் தாயனார் வழக்கப்படி ஆண்டவனுக்கு அமு தூட்டச் செந்நெல் அரிசியையும், செங்கீரையையும், மாவடுவையும் கூடையில் வைத்துச் சுமந்து செல்கிறார். அவர் பின்னே, மனைவியார் பஞ்சகவ்யத்தை ஏந்திச் செல்கிறார். உணவின்றி மெலிவுற்றிருந்த தாயனார், கால் தளர்ந்து தவறி வீழலானார். அப்போது அம்மையார் பஞ்சகவ்யக் கலத்தை மூடியிருந்த கையால் நாயகரை அணைக்க முயன்றார். முயன்றும் பயன் விளைய வில்லை. செந்நெல் முதலிய யாவும் நிலவெடிப்பில் சிந்திவிட்டன. தாயனார் இனி ஏன் திருக் கோயிலுக்குப் போதல் வேண்டும்? செந்நெல் முதலியவற்றை ஆண்டவன் அமுது செய்யும் பேற்றைப் பெற்றேனில்லை என்று அரிவாளை எடுத்துத் தமது ஊட்டியை அறுக்கலுற்றார். அச் சமயத்தில் அன்பனார் கையைத் தடுக்க, எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நீக்கமற வீற்றிருந்தருளும் இறைவனாரது வீசிய கையும், (அவர் மாவடுவைக் கடிப்பதினின்றும் எழும்) விடேல் விடேல் என்னும் ஓசையும் வெடிப்பினின்றும் எழுந்தன. ஆண்டவன் திருக்கை அடியவரின் கையைப் பற்றியது. தாயனார் வெருக்கொண்டார். ஊறு நீங்கியது. தாயனார் ஆண்டவன் அருளைப் போற்றி நிற்கிறார். சிவபெருமான் விடைமேல் தோன்றி, நீ புரிந்த செய்கை நன்று. உன் மனைவியுடன் என்றும் நமது உலகில் வாழ்வா யாக என்று அருள் செய்து எழுந்தருளினார். அவருடன் நாயனாரும் அவர்தம் மனைவியாருஞ் சென்று பெறுதற்கரிய பேற்றைப் பெற்றனர். தாயனார் தமது ஊட்டியை அறுக்க அரிவாள் பூட்டின மையால், அவர் அரிவாட்டாயர் என்றும் தூய நாமம் பெறலானார். 19. ஆனாய நாயனார் கலித்துறை 931. மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்துஏறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்புஏற, ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்துஏற, நீடு வளத்தது மேல்மழ நாடுஎனும் நீர் நாடு. விரைப்பொலி - வாசனை பொருந்திய. சோலையின் மாடு - சோலையிடத்து; பக்கங்களில் வாசனை பொருந்திய. சோலையில் என்று கொள்ளினுமாம். வான்மதி - வானச்சந்திரன். சூடு - நெல்லரிகள். பண்ணை வரம்பு - வயல் வரம்புகளில். சுரும்பு - வண்டுகள். ஈடுபெருக்கிய - ஒன்றுக் கொன்று சமமாக உயர்ந்துள்ள; பெருமை மிகச் செய்த எனினுமாம். போர்களில் - நெற் போர்களில். மேன்மையுடைய மழநாடு. நீர்நாடு - நீர் வளமுடைய நாடு. 1 932. நீவி நிதம்ப உழத்தியர் நெய்க்குழல் மைச் சூழல் மேவி, உறங்குவ - மென் சிறை வண்டு; விரைக்கஞ்சப் பூவில் உறங்குவ - நீள்கயல்; பூமலி தேமாவின் காவின் நறுங்குளிர் நீழல் உறங்குவ - கார்மேதி. நீவி. . . . . .சூழல் - ஆடையைக் கொய்சகம் வைத்து அணிந்த அல்குலையுடைய பள்ளப் பெண்கள் புழுகு பூசப்பெற்ற கூந்தலாகிய கருமைச் சூழலில். சிறை - சிறகினையுடைய. வண்டுகள் மேவி உறங்குவ. விரை கஞ்சப் பூவில் - மணங்கமழும் தாமரைப்பூவில். கயல் - கயல் மீன்கள். தேமாவின் காவின் - தேமாமரச் சோலையின். (தித்திப்புமா தேமா; புளிப்புமா புளிமா). கார்மேதி - கரிய எருமைகள். 2 933. வல் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவைப் பல் முறை வந்துஎழும் ஓசை பயின்ற முழக்கத்தால், அன்னம் மருங்குஉறை தண் துறை வாவி அதன்பாலைக் கன்னல் அடும்புகையால் முகில்செய்வ - கருப்பாலை. வன்னிலை மள்ளர் - வலிய நிலைமை வாய்ந்த பள்ளர்கள். உகைப்ப எழுந்த - அழுத்தலால் எழுந்த; மாடுகளைப் பூட்டி ஓட்டு தலால் சுற்றுகின்ற என்னலுமாம். மரக்கோவை - இணை மரங் களினின்றும். ஓசை பொருந்திய முழக்கத்தாலும். அன்னம். . . பால் - அன்னங்கள் அருகில் வசிக்கும் குளிர்ந்த துறைகளையுடைய தடாகங் களில் பக்கத்தில். ஐ - சாரியை; அசை; அழகுமாம். கன்னல் அடும் புகையால் - கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுதலால் எழும் புகையாலும். கரும்பாலைகள் முகில்களைச் செய்கின்றன (காட்டுகின்றன). 3 934. பொங்கிய மாநதி நீடுஅலை உந்து புனல்சங்கம் துங்க இலைக் கதலிப்புதல் மீது தொடக்கிப்போய்த் தங்கிய பாசடை சூழ்கொடி ஊடு தவழ்ந்துஏறிப் பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ; - பாளை என. நீடு அலை உந்து புனல் சங்கம் - நீண்ட அலைகளால் ஒதுக்கப் பட்ட நீரிலுள்ள சங்குகள். துங்க. . .கொடியூடு - உயர்ந்த இலைகளை யுடைய வாழைப் புதலின் மீது தொடர்ந்துபோய், அவ்வாழை இலைகளைச் சுற்றித் தங்கிய பச்சிலைகள் சூழ்ந்த கொடியின் வழி யாக. பாளையைப்போலப் பசிய கமுகின் உச்சியில் முத்துக்களைச் சொரிகின்றன. 4 935. அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் ஒல்லை முழுப்பை உகப்பின் உழக்கு குழக்கன்று, கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்துஓடும் மல்கு வளத்தது; - முல்லை உடுத்த மருங்கு ஓர்பால். அல்லி மலர் -அல்லிப் பூக்களையுடைய; அக இதழ்களை யுடைய மலர்கள் நிறைந்த எனினுமாம். பழனத்து அயல் - வயல் களின் அருகில். நாகு இள ஆன் ஈனும் - மிகவும் இளமை பொருந்திய பசு ஈன்ற. ஒல்லை. . . மறியோடு - வேகமாகக் கருவின் முழுப்பையை உதைத்துக் கலக்கிய இளங்கன்று, கொல்லையிலுள்ள அழகிய கூட்டமான மான் கன்றுகளுடன். மல்குவளத்தது - நிறைந்த வளத்தையுடையது. முல்லை நிலத்தைச் சூழ்ந்த பகுதிகளின் ஒரு பக்கம். ஓர்பால் வளத்தது என்று கூட்டுக. 5 936. கண் மலர் காவிகள் பாய இருப்பன - கார்முல்லைத் தண் நகை வெண்முகை மேவு சுரும்பு; தடஞ் சாலிப் பண்ணை எழும்கயல் பாய இருப்பன - காயாவின் வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம். கார்முல்லை. . .சுரும்பு - கார்காலத்தில் மலரும் முல்லைகளின் குளிர்ச்சியும் ஒளியும் வெண்மையுமுடைய அரும்புகளிலுள்ள வண்டுகள். கள்மலர் . . . இருப்பன - தேன் நிறைந்த நிலோற்பல மலர்களில் பாயும்படி இருக்கின்றன. கண்மலர் எனக்கொண்டு கண்களைப்போல் மலர்ந்த எனக் கூறினும் பொருந்தும். காயாவின் . . .வண்டானம் - காயா மரத்தின் அழகிய வாசனை பொருந்திய கிளைகளிலுள்ள வலிய சிறகினையுடைய நாரைகள். தடம். . . இருப்பன - விசாலமான நெற்பயிர்களையுடைய வயல்களில் எழு கின்ற மீன்களின் மீது பாயும்படி இருக்கின்றன. 6 937. பொங்கரில் வண்டு புறம்புஅலை சோலைகள் மேல்ஓடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேல்மழ நல் நாடாம் அங்கது மண்ணின் அருங்கலம் ஆக, அதற்கேஓர் மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ்மூதூர். பொங்கரில் - மரக் கொம்புகளில். புறம்பு அலை - புறத்தில் அலைகின்ற. வெங்கதிர் - சூரியன். மண்ணின் அருங்கலமாக - பூமிக்கு ஓர் ஆபரணமாக. அதற்கே - அந்நாட்டினுக்கே. மங்கலமாகிய வாழ்மூதூர் - திருமங்கல மென்னும் பெயராலாகிய வாழ் வினை யுடைய பழைய ஊர். 7 938. ஒப்புஇல் பெரும்குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும் செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது; சீர்மேவும் அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர். ஓவாமே - குறையாமல். சால்போடும் - குணத்தோடும். 8 939. ஆயர் குலத்தை விளக்கிட வந்துஉதயம் செய்தார்; தூய சுடர்த் திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்; வாயினின் மெய்யின் வழுத்தம் மனத்தின் வினைப்பாலின் பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார். தொழும்பு - தொண்டு; அன்பு. வினைப்பாலின் - வாயால் வாழ்த்தல், மெய்யால் வணங்குதல், மனதால் நினைத்தலாகிய செய்கையுடன். பேயுடனாடும் பிரான் - சிவபிரான். பேணாதார் - மற்றொன்றை விரும்பாதவர். 9. 940. ஆன் நிரை கூட அகன் புற வில்கொடு சென்று ஏறிக் கான் உறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து, எங்கும் தூ நறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு ஊனம்இல் ஆயம் உலப்பு இல பல்க, அளித்துள்ளார். ஆன் நிரை கூட - பசுக் கூட்டங்களை ஒருங்கே. அகன் புறவில் - அகன்ற காட்டில். கான் உறை - காட்டில் வசிக்கும். நோய்கள் கடிந்து - துன்பங்களை நீக்கி. ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார் - பசுக் கூட்டங்கள் அளவில்லாதன விருத்தியடையக் காப்பாற்றுகின்றவர். 10. 941. கன்றொடு பால் மறை நாகு, கறப்பன பால் ஆவும் புன் தலை மென் சினை ஆனொடு நீடு புனிற்றுஆவும் வென்றி விடைக்குல மோடும் இனம்தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்துள சூழ லுடன் பல தோழங்கள். பால்மறை நாகு -பால் மறுத்த கிடாரிகளும். புன்தலை மென்சினை ஆனொடு - சிறுமயிருள்ள தலையினையுடைய மெல்லிய சினைப் பசுக்களோடு. புனிற்றாவும் - ஈன்றணிமைத்தான பசுக்களும்: புதிதாகக் கன்றை ஈன்ற பசுக்களும். விடைக்குலமோடும் - எருதுக் கூட்டங்களோடும். துன்றி - நெருங்கி. சூழலுடன் - இடங்களுடன். 11. 942. ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்துஎன்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும் காவலர் - தம்பெரு மான்அடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல்கொண்டார். பல்க - விருத்தியாக. அளித்து - காப்பாற்றி. பேணும் காவலர் - காக்கும் ஆனாயர். தம் பெருமான் அடி அன்புறும் - சிவபெருமான் திருவடியில் அன்பு பெருகுவிக்கும். கானத்தின் மேவு துளைக் கருவி குழல் வாசனை -இசை பொருந்திய துளைகளையுடைய கருவியாகிய புல்லாங்குழல் வாசித்தலை. 12 கொச்சகக் கலி 943. முந்தைமறை நூல் மரபின் மொழிந்தமுறை எழுந்தவேய் அந்தம்முதல் நால் இரண்டில் அரிந்து, நரம்புஉறு தானம் வந்ததுளை நிரைஆக்கி, வாயுமுதல் வழங்குதுளை அந்தம்இல் சீர் இடையீட்டின் அங்குலி எண்களின் அமைத்து. முந்தை மறை - பழைய காந்தருவேதம். முறை - முறைப்படி. எழுந்த. . . . . .அரிந்து - வளர்ந்த மூங்கில் நுனியில் நான்கு பங்கும் அடியில் இரண்டு பங்கும் அறுத்து எறிந்து (நடுவிலுள்ள பாகத்தை எடுத்து). நரம்பு. . . . . .ஆக்கி - மெட்டுகளிருக்க வேண்டிய இடங்களில் துளைகளை வரிசையாகச்செய்து. முதல் வாயு வழங்கு துளை (அமைத்து) முதல் காற்றுண்டாக்குந் துளையையும் செய்து. அந்தம் . . . .அமைத்து - கேடில்லாத சிறப்பொடு இடைவெளி (ஒரு துளைக்கும் மற்றொரு துளைக்கும் நடுவில்) ஒவ்வோர் அங்குல அளவாக உண்டாக்கி, குழல் - வங்கியம்; அதற்கு மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலியென ஐந்துமாம். இவற்றுள் மூங்கிலிற்செய்வது உத்தமம்; வெண்கலம் மத்திமம்; ஏனைய அதமமாம். மூங்கில் பொழுதுசெய்யும்; வெண்கலம் வலிது, மரம் எப்பொழுதும் ஒத்துநிற்கும். இக்காலத்துக் கருங்காலி செங்காலி சந்தனம் இவற்றாற் கொள்ளப்படும். கருங்காலி வேண்டு மென்பது பெரு வழக்கு. இவை கொள்ளுங்கால் உயர்ந்த ஒத்த நிலத்திற் பெருக வளர்ந்து நாலு காற்றுமயங்கின் நாதமில்லையாமாதலான் மயங்கா நிலத்தின்கண் இளமையும் நெடும்பிராயமுமின்றி ஒரு புருடாயுப் புக்க பெரிய மரத்தை வெட்டி ஒரு புருடாகாரமாகச் செய்து அதனை நிழலிலே ஆற இட்டுவைத்துத் திருகுதல் பிளத்தல் போழ்ந்து படுதல் செய்கையறிந்து ஓர் யாண்டு சென்றபின் இலக்கண வகையான் வங்கியஞ் செய்யப்படும். நீளம் இருபது விரல்; சுற்றளவு நாலவரை விரல்; இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஒரு பாதி மர நிறுத்திக் கடைந்து வெண்கலத்தாலே அணைசு பண்ணி இட முகத்தை அடைத்து வலமுகம் வெளியாக விடப்படும். - அடி யார்க்கு நல்லார் (சிலப்பதிகாரம்: 3. அரங்கே. 26 - உரைக் குறிப்பு). 13 944. எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுந்து அஞ்சும் தொடுத்தமுறை ஏழ் இசையின் சுருதிபெற வாசித்துத் தடுத்த சராசரங்கள் எலாம் தங்கவரும் தம்கருணை அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார்; அங்கு ஒருநாள். வலிவும் மெலிவும் சமனும் என்னும் மூவகைப்பட்ட சுருதி - அடியார்க்கு நல்லார். தடுத்த - இசைந்த. உருகி நிற்குமாறு வரும் தங் கருணை - பொருந்திய இசையாகிய அமுது. பிணை - மாலை. நுழுதி - கோதி. மருங்கு. . . . . .செருகி - வலப்புறம் உயர முடித்த ஒளியுடைய மயில் முடியில் நெருங்கிய கொண்டை மாலையைச் செருகி. பாசிலை. . . . .புனைந்து - பச்சை இலைகளையுடைய மெல்லிய கொடியாகிய வடத்தில் பொருந்த நறுவிலியை அணிந்து. நறுவிலி இலை என்றும் காய் என்றும் கூறுவ. காசுடை நாண் - பொற்காசு கோத்த மயிர்க் கயிற்றை; கருமை பொருந்திய கயற்றினால் என்பர் பழைய குறிப்புரை ஆசிரியர். கருஞ் சுருளின் - கரிய சுருண்ட பச்சிலையின்; கரிய மயிர் முடியின் என்னலுமாம். 14. 945. வாசமலர்ப் பிணைபொங்க மயிர்நுழுதி, மருங்குஉயர்ந்த தேசுஉடைய சிகழிகையின் செறிகண்ணித் தொடைசெருகிப் பாசிலைமென் கொடியின் வடம் பயிலநறு விலிபுனைந்து, காசுஉடைநாண் அதற்குஅயலே கரும்சுருளின் புறம்கட்டி. 15. 946. வெண்கோடல் இலைச்சுருளில் பைந்தோட்டு விரைத்தோன்றித் தண்கோல மலர்புனைந்த வடிகாதின் ஒளிதயங்கத் திண்கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளிகண்டோர் கண்கோடல் நிறைந்து ஆராக் கவின்விளங்க மிசைஅணிந்து. வெண். . . . . .புனைந்த - வெண் காந்தளின் இலைச்சுருளில் பசிய இதழ்களையுடைய மணமுள்ள செங்காந்தளின் குளிர்ந்த அழகிய மலரணிந்த; இலைச் சுருளாகிய பைந்தோட்டில் எனக் கூட்டி உரைத்தலுமொன்று. தயங்க - ஒளிர. திண்கோலம் - மிக்க அழகு ஒழுகும். கோடல் - கொள்ளுதல். ஆராக்கவின் விளங்க - அடங்காத அழகு பொலிய. மிசை அணிந்து - உடலின்மீதும் திருநீற்றை அணிந்து. 16 947. நிறைந்த நீறு அணி மார்பின் நிரைமுல்லை முகைசுருக்கிச் செறிந்தபுனை வடம் தாழத் திரள்தோளின் புடைஅலங்கல் அறைந்தசுரும்பு இசைஅரும்ப, அரைஉடுத்த மரவுரியின் புறம்தழையின் மலிதானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய. நிரை. . . . தாழ - வரிசையாக முல்லை அரும்புகளைச் சுருக்கி நெருங்கக் கட்டப்பட்ட மாலை தாழ. திரள். . . . அரும்ப - திரண்ட தோள்களினிடத்துத் தாழ்ந்து அலையும் மாலைகளில் மோதி வீழ்ந்த வண்டுகள் இசைபாட. மரவுரியின். . . . அசைய - மரவுரியின் புறத்தே தழையால் செய்யப்பட்ட தானையாகிய பூம்பட்டுப் பொலிந்தசைய. பூம்பட்டுப் போன்ற தானை என்பர் மகாலிங்க ஐயர். தானை - ஆடை. முன்தானை என்பர் ஆறுமுகத் தம்பிரானார். 17 948. சேவடியில் தொடுதோலும் செங்கையினில் வெண்கோலும் மேவும்இசை வேய்ங்குழலும் மிகவிளங்க, வினைசெய்யும் காவல்புரி வல்ஆயர் கன்றுடைஆன் நிரைசூழப் பூ அலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப் புறம்போந்தார். தொடுதோலும் - செருப்பும். வேய்ங்குழலும் - புல்லாங் குழலும். வினை செய்யும் காவல்புரி வல்லாயர் - (ஆனாயர் வழி நின்று) தொழில் புரிந்து (பசுக்களைக்) காக்கின்ற வலிய இடையர் களும். ஆன் நிரை சூழ - பசுக் கூட்டங்களும் சூழ்ந்து வர. தார் - மாலையைத் தரித்த. கோவலனார் - ஆனாய நாயனார். நிரை - அப்பசுக் கூட்டங்களை. 18 அறுசீர் விருத்தம் 949. நீலமா மஞ்ஞை ஏங்க, நிரைக்கொடிப் புறவம் பாடக் கோலவெண் முகைஏர் முல்லை கோபம்வாய் முறுவல் காட்ட, ஆலும்மின் இடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலநீடு அரங்கில் ஆடக் கார்எனும் பருவ நல்லாள். மஞ்ஞை ஏங்க - மயில் ஒலிக்க; (ஏங்கல் - மயில் குரல்). மயில் குறிஞ்சிக்குரியது; இங்கே முல்லைக்கண் வந்தது மயக்கம். மேகத்தைக் கண்டு மயில் ஏங்கி ஆடுதல் இயல்பு. நிரை . . . பாட - வரிசையாக வுள்ள கொடியையுடைய முல்லை பாட; வண்டுகள் பாட என்றபடி. பாடு வண்டூதும் பருவம் - கார்நாற்பது: 4. கோல. . . காட்ட - அழகும் வெண்மையும் தோன்றும் முல்லையரும்பு களாகிய பற்களையும். இந்திர கோபமாகிய வாயையும் காட்ட. கார்க் கொடி முல்லை எயிறீன - ஐந்திணை எழுபது: 21. கோபம் - இந்திர கோபம்; தம்பலப் பூச்சி; செந்நிறம் பொருந்தியது; கார்கலத்தில் தோன்றுவது. கோபங்கள் பயிர்மிசை பரவ - சிந்தாமணி 1564. ஏர் என்பதை உவம உருபாக் கொண்டு அரும்பு போன்ற என்றும் கோபம் போன்ற என்றும் கூறலுமாம். ஆலும் . . .வந்தாள் - அசையும் மின்னலாகிய இடையும், சூழ்ந்த மாலைக் கால மேகமாகிய முலையும் அலைய வந்தாள். மாலையணிந்த முலை, மாலைக் கால மேகத்தைக் குறிப்பதென்க. மின்னலும் மேகமும் கார்காலத்துக்குரியன என்பது வெளிப்படை. ஞால நீடு அரங்கில் ஆட - பூமியாகிய பெரிய சபையில் ஆடும்படி. கார் - பெரும்பொழுது ஆறனுள் ஒன்று; பெரும்பொழுது ஆறு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். சிறுபொழுது ஆறு: மாலை, யாமம், வைகுறு, காலை, நண்பகல், ஏற்பாடு. கார் - ஆவணியும் புரட்டாதியும். மாலை - எற்பாட்டுக்கும் யாமத்துக்கும் இடைப் பட்ட பத்து நாழிகை. எற்பாடு - சூரியன் மறையும் நேரம்; மாந்தளிர் போலும் நிற முடையது. காரும் மாலையும் முல்லை - தொல்காப்பியம். அகம் - 6. 19 கொச்சகக் கலி 950. எம் மருங்கும் நிரைபரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர் தம் மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வரும் தலைவர், அம் மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு செம் மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார். எம்மருங்கும் நிரை பரப்ப - நானா பக்கங்களிலும் பசுக் கூட்டங்களைப் பரவச்செய்ய. பொதுவர் - இடையர்கள். புறவில் வருந்தலைவர் - முல்லை நிலத்தில்வரும் ஆனாய நாயனார். அம் மருங்கு - அவ்விடத்தில். சினைஅலர் - கிளைகளிலுள்ள மலர்களில். செம்மரும் - மிகக் களிப்புறும் சுரும்பு - வண்டுகள். கொன்றை - முல்லை நில மரங்களுள் ஒன்று; கார்காலத்தில் மலர்வது. கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர் - அகம்: காப்பு. 20 951. சென்று அணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என மன்றல் மலர்த்துணர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல் நின்ற நறுங் கொன்றையினை நேர்நோக்கி நின்று உருகி ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்பால் மடை திறந்தார். விரைத்தாமம் என - மணங் கமழும் பூமாலையைப் போல. மன்றல் மலர்த்துணர் தூக்கி - வாசனை வீசும் பூங்கொத்துக்களைத் தாங்கி. மருங்குதாழ் சடையார்போல் - புறத்தே தாழ்ந்த சடையை யுடைய சிவபெருமானைப் போல. ஒன்றிய - ஒருமைப்பட்ட. உடையவர்பால் - சிவபிரானிடம். மடைதிறந்தார் - மடைதிறந்து பாயச்செய்தார். கார்காலக் கொன்றையின் மலர்ந்தகாட்சி பொது வாக எல்லார் நெஞ்சையுங் கவரும் ஆற்றல் வாய்ந்தது. அவ்வருங் காட்சி, கொன்றையணிந்த தலைவராகிய சிவபெருமானிடம் ஈடு பட்ட நெஞ்சினையுடைய ஆனாய நாயனாரை எப்படி வயப்படுத்தி யிருக்குமென்பதை விளக்கவேண்டுவதில்லை. ஆனாய நாயனார். சீவகரணங்கள், சிவரணங்களாக மாறப் பெற்றவர்; எல்லாவற்றையும் சிவமாகப் பார்க்கும் நிலை யெய்தியவர். அவர்தம் ஆன்மா பக்குவ நிலையிலிருந்தது என்று சுருங்கச் சொல்லலாம். அவருக்குக் கொன்றை, சிவமாகவே தோன்றலாயிற்று. பக்குவப்பட்ட உயிர்களுக்கு இயற்கை சிவமாகத் தோன்றுதல் இயல்பு. மரத்தை மறைத்தது மாமத யானை - மரத்தில் மறைந்தது மாமத யானை - பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் - பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே - திருமந்திரம்: எட்டு - பராவத்தை. 21 952. அன்புஊறி மிசைப்பொங்கும் அமுதஇசைக் குழல்ஒலியால் வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித்தாம் முன்புஊதி வரும் அளவின் முறைமையே எவ்உயிரும் என்புஊடு கரைந்து உருக்கும் இன்னிசைவேய்ங் கருவிகளில். வன்பூதப் படையாளி - சிவபிரான். எவ்வுயிரையும் உருக்கும் ஆற்றல் வாய்ந்தது இசை. அதற்கு உருகாத ஒருவன் கொலைஞ னாவன் என்று ஷேக்பியர் கூறியுள்ளார். வேய்கருவிகளில் - பல வகைப் புல்லாங் குழல்களில். 22 953. ஏழுவிரல் இடையிட்ட இன்இசைவங் கியம்எடுத்துத் தாழும் அலர்வரி வண்டு தாதுபிடிப் பனபோலச் சூழும் முரன்று எழ நின்று தூயபெருந் தனித் துளையில் வாழிய! நம் தோன் றலார் மணி அதரம் வைத்துஊத. ஏழு விரல் இடையிட்ட - (ஒவ்வொரு துளைக்கும் ஒவ்வொரு விரலளவு இடம் விட்டுள்ள) ஏழு துவாரங்களையுடைய. வங்கியம் - ஒருவகைப் புல்லாங்குழல். வங்கியத்தின் துளை அளவு; நீளம் இருபது விரல்; இதிலே தூம்பு முகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல்வாய் விட்டு அம்முதல் வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளை வாயினும் இரண்டு விரல் நீக்கி நடுவில் நின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள் ஒன்று முத்திரை என்று கழித்து நீக்கி நின்ற ஏழினும் ஏழு விரல் வைத்து ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும். ஏழு விரலாவன இடக்கையிற் பெரு விரலும் சிறு விரலும் நீக்கி மற்றை மூன்று விரலும். வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலும் ஆக ஏழு விரலுமென்க. - அடியார்க்கு நல்லார் (சிலப்பதிகாரம் 3 அரங்கே: 17 ஆய்ச்சியர் குரவை கன்று குணிலா. . . . . - உரைக்குறிப்பு). தாழு. . . . போல - மலரில் விழுகின்ற வரிவண்டுகள் அம்மலர்த் தாதுகளைப் பற்றி ஊதுவது போல. சூழுமுரன்றெழ நின்று. நாற் புறமுஞ் சூழ்ந்து இசையொலித்து எழும்படி நின்று. வாழிள. . . . தடுத்தாட்கொண்ட புராணம் 127 ஆம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. தோன்றலார் - தலைவராகிய ஆனாய நாயனார். அதரம் - உதடு. 23 954. முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து, வைத்ததுளை ஆராய்ச்சி வக்கனை வழிபோக்கி, ஒத்தநிலை உணர்ந்ததன் பின், ஒன்றுமுதல் படிமுறையாம் அத்தகைமை, ஆரோசை அமரோசைகளின் அமைத்தார். முத்திரை - வளைவாய்க்கடுத்த எட்டாவது துளை; நீக்கப் படுவது; வங்கியம் ஊதுமிடத்து வளைவாய் சேர்ந்த துளையை முத்திரை என்று நீக்கி முன்னின்ற ஏழினையும் ஏழு விரல்பற்றி வாசிக்க - அடியார்க்கு நல்லார். தானம். . . . போக்கி - தானங்களைச் சோதித்து அமைக்கப்பட்ட துளைகளை ஆராய்ந்து அவைகளின் வழி இராக சோதனை அறிய விரல்களை முறையே செலுத்தி. ஒன்று முதல் படிமுறையாம் - சட்சம் முதல் நிடாதம்வரை; ஏழு துளை களிலும் இசை பிறக்குமாறு; அஃது எழுத்தாற் பிறக்கும். எழுத்து ச ரி க ம ப த நி என்பன. இவ்வேழு எழுத்தினையும் மாத்திரைப் படுத்தித் தொழில் செய்ய இவற்றுள்ளே ஏழிசையும் பிறக்கும். ஏழிசையாவன: சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பன. இவை பிறந்து இவற்றுள்ளே பண் பிறக்கும் - அடியார்க்குநல்லார். ஆரோசை - ஆரோகணம். அமரோசை - அவரோகணம். 24 955. மாறுமுதல் பண்ணின் பின் வளர்முல்லைப் பண் ஆக்கி ஏறியதா ரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் ஆறுஉலவும் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசைபெருகக் கூறியபட் டடைக் குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி. மாறு - மாறுபடுஞ் சுரங்களையுடைய. முதற் பண்ணின் - குறிஞ்சிப் பண்ணின். தாரம் - உச்ச இசை. உழை - மத்திம இசை. தாரத்து உழை தோன்றப் பாலை - சிலப்பதிகாரம்: 17. ஆய்ச்சி - மேற்கோள். கிழமை கொள இடும் தானம் - பொருந்துமாறு இட்ட தானங்களில். கூறிய - சொல்லப்பட்ட. பட்டடை - அழுத்தம்; இளி. இளி குரலாயது கோடிப்பாலை. கொடிப்பாலை -கோடிப்பாலை.25 956. ஆயஇசைப் புகல் நான்கின் அமைந்தபுகல் வகைஎடுத்து மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரல்நிரையின் சேயஒளி இடைஅலையத் திருவாளன் எழுத்துஅஞ்சும் தூயஇசைக் கிளை கொள்ளும் துறைஅஞ்சின் முறை விளைத்தார். ஆய - இசைக்குரிய. இசைப்புகல் நான்கு - பண் பண்ணியல் திறம் திறத்திறம். அமைந்த புகல்வகை எடுத்து - தாங்கொண்ட கோடிப் பாலைக்கு அமைந்த பண்ணின் திறத்தை எடுத்து. விரல். . . அலைய - விரல் வரிசையினின்றும் உதிக்கும் செவ்விய ஒளியானது வங்கியத்தினிடத்து அலைய. திருவாளன் - சிவபெருமான். இசைக் கிளை ஐந்து; ஆயத்தம், எடுப்பு, உற்கிரகம், சஞ்சாரம், இடாயம். முறை விளைத்தார் - முறையே பாடினார். 26 957. மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன்முறையால், தந்திரிகள் மெலிவித்தும் சமம்கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல்தொழில்கள் அளவுபெற அசைத்துஇயக்கிச் சுந்தரச்செங் கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண. மந்தரம் - படுத்தலோசை; மத்திமம் - நலிந்த ஓசை; தாரம் - எடுத்தலோசை. தந்தரிகள் - துளைகளை. அந்தரத்து - இடையிட்ட துளைகளில். துளைவாயும் - குழலின் துளைவாயும். 27 958. எண்ணியநூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் வண்ண இசைவகை எல்லாம், மாதுரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கும், நடைமுதல் கதியில் பண்அமைய, எழும்ஓசை எம்மருங்கும் பரப்பினார். வண்ண வகை: பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ணம். வனப்பென்னும் வண்ணம் - வனப்பு வண்ணம். மாதுரிய - மதுரமான. நண்ணிய - அமைந்த. பாணியும் - இராகமும். இயலும் மூர்ச்சனையும். தூக்கும் - ஏற்றமும். நடைமுதற் கதியில் - நடை முதலிய கதிகளுடன். பாணியும் இயலும் என்பதற்குத் தாளமும் இராகமும் என்போருமுளர். 28 959. வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின் உள்ளுறை அஞ்செழுத்து ஆக,ஒழுகிஎழும் மதுரஒலி வெள்ளம் நிறைந்தெவ் உயிர்க்கும் மேல்அமரர் தருவிளைதேன் தெள்அமுதின் உடன்கலந்து செவிவார்ப்பது எனத்தேக்க. உள்உறை - உள் அடக்கம்; உட்பொருள். ஒலியாகிய வெள்ளம். மேல் அமரர் தருவிளைதேன் - விண்ணில் கற்பபத் தரு ஒழுக்குந் தேனை. 29 960. ஆன்நிரைகள் அறுகு அருந்தி அசைவிடாது அணைந்து அயரப் பால்நுரைவாய்த் தாய்முலையில் பற்றும்இளங் கன்றினமும் தான்உணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும் மான்முதலாம் கான்விலங்கும் மயிர்முகிழ்த்து வந்துஅணைய. அறுகு அருந்தி - அறுகம் புல்லை மேய்ந்து. அசை விடாது - இரை எடாது. அயர - (பசுக்கள்) தம்மை மறக்க; (இசையில் உருகி அதை) விரும்ப எனினுமாம். தடமருப்பின் விடைக் குலமும் - பெரிய கொம்பு களையுடைய எருதுக் கூட்டங்களும். கான் விலங்கும் - காட்டு மிருகங்களும். முகிழ்த்து - சிலிர்த்து. 30 961. ஆடுமயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக ஊடுசெவி இசை நிறைந்த உள்ளமொடு புள்இனமும் மாடுபடிந்து உணர்வொழிய மருங்குதொழில் புரிந்து ஒழுகும் கூடியவன் கோவலரும் குறைவினையின் துறைநின்றார். அசைவு அயர்ந்து - ஆடுதலை மறந்து. செவி ஊடு - செவி வழியே. புள்ளினமும் - பறவைக் கூட்டங்களும். மாடு படிந்து - அருகே அடைந்து. மருங்கு தொழில் - அருகில் மேய்த்தற்றொழிலை. கூடிய - திரண்ட, குறைவினையின் துறை நின்றார். மேய்த்தற் றொழிலில் கருத்திருத்தாது இசையில் ஈடுபட்டனர். 31 962. பணி புவனங்களில் உள்ளார் பயில்பிலங்கள் வழிஅணைந்தார்; மணி வரைவாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்; தணிவு இல்ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர், அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார். பணிபுவனங்களில் - நாகலோகங்களில். பயில் பிலங்கள் - தாம் முன்னே பழகிய பாதலங்கள். மணிவரைவாழ் அரமகளிர் - அழகிய மலையில்வாழும் தெய்வ மகளிர். மயங்கினராய் மலிந்தார். அடங் காத ஒளியையுடைய வித்தியாதரர்கள். சாரணர் - சஞ்சரிப்பவர்கள்; சித்தி பெற்றவர்கள். கின்னரர் - வீணையர்கள். அமரர் - தேவர்கள். விசும்பில் அயர்வு எய்தி - (குழலிசை கேட்டு) விண்ணில் வெறுப் படைந்து. 32 963. சுரமகளிர் கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கு இருந்து, கரமலரின் அமுது ஊட்டும் கனிவாய் மென்கிள்ளையுடன், விரவு நறுங்குழல் அலைய, விமானங்கள் விரைந்து ஏறிப் பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்துப் பருகினார். சுரமகளிர் - (விண்ணிலுள்ள) தெய்வப் பெண்கள். கனி - கொவ்வைக் கனி போன்ற. 33 964. நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் மலிவாய் வெள்எயிற்று அரவம் மயில்மீது மருண்டுவிழும்; சலியாத நிலைஅரியும் தடங்கரியும் உடன்சாரும்; புலிவாயின் மருங்குஅணையும்: புல்வாய புல்வாயும். நலிவாரும் மெலிவாரும் - வருத்துவோரும் வருந்துவோரும். வருத்தல் வருந்தல் என்பன தத்துவக் காரியங்களில் பற்றுள்ளவரை நிகழ்வன. ஆனாயர் குழலோசை உயிர்களைத் தத்துவங்கடந்த ஒருமை யுணர்வில் நிறுத்தினமையால், அவைகளிடைச் சகோதர நேயம் விளைந்த தென்க. நயத்தலினால் - விரும்புவதால். வாய்மலி வெள்எயிற்று அரவம் - வாயில் நிறைந்த வெள்ளிய பற்களையுடைய பாம்பு. அரியும் - சிங்கமும். தடங்கரியும் - பெரிய யானையும். புல் வாய புல்வாயும் - சிறிய வாயினையுடைய மானும். 34 965. மருவியகால் விசைத்து அசையா; மரங்கள் மலர்ச்சினை சலியா; கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா: பெருமுகிலின் குலங்கள் புடைபெயர் வொழியப் புனல் சோரா: இருவிசும்பின் இடைமுழங்கா: எழுகடலும் இடைதுளும்பா மருவியகால் - உலவுகின்ற காற்று. சினை - கிளைகள். கரிய மலையினின்றும் இழிதரும். கலித்து - ஒலித்து. மேகக்கூட்டங்கள் புடைபெயரவுமில்லை; ஆகாயத்தில் முழங்கவு மில்லை. எழு கடல்களும் அலைத்து எழவில்லை. 35 966. இவ்வாறு நிற்பனவும் சரிப்பனவும் இசைமயமாய், மெய்வாழும் புலன்கரணம் மேவிய ஒன்றாயினவால், மொய்வாச நறுங் கொன்றை முடிச்சடையார் அடித்தொண்டர் செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல் வாசனை உருக்க. சரிப்பனவும் - அசைவனவும். சராசரங்கள் என்றபடி. மெய் வாழும் - உடலிலுள்ள. கொன்றை மரத்தடியில் நிற்குந் தொண்டர் என்பது குறிப்பு. 36. 967. மெய் அன்பர் மனத்து அன்பின் விளைத்த இசைக் குழல் ஓசை வையம் தன்னையும் நிறைத்து வானம் தன்மயம் ஆக்கிப் பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம்புரியும் ஐயன் தன்திருச் செவியின் அருகு அணையப் பெருகியதால். பொற்பொதுவில் - பொன்னம்பலத்தில். 37 968. ஆனாயர் குழல் ஓசை கேட்டருளி அருள்கருணை தான்ஆய திரு உள்ளம் உடையதவ வல்லியுடன், கானாதி காரணர் ஆம் கண்ணுதலார் விடைஉகைத்து, வான்ஆறு வந்து அணைந்தார் மதிநாறும் சடை தாழ. தவவல்லியுடன் - தவக்கொடியுடன்; உமையம்மையாருடன்; சிவத்தின் அருளே உமை என்பது; அரிவாட்டாய நாயனார் புராணம்; 20 குறிப்புப் பார்க்க. கான் ஆதிகாரணராம் - இசைக்கு மூலகாரணராய. ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே - அப்பர்; திருவை யாறு - திருத்தாண்டகம். 1. ஏழிசையாய் இசைப்பயனாய் - சுந்தரர்; திருவாரூர். 10. கண்ணுதலார் - திருநகரச் சிறப்பு 46 - ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. விடை உகைத்து - இடபத்தைச் செலுத்தி. வானாறு - விண்வழியே. மதிநாறும் - பிறைதொங்கும்; தங்கும். 38 969. திசைமுழுதும் கணநாதர் தேவர்கட்கு முன்நெருங்கி மிசைமிடைந்து வரும்பொழுது, வேற்று ஒலிகள் விரவாமே அசையஎழும் குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப்பரவும் இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார். மிசை மிடைந்து - ஒருவர் மீது ஒருவர் விழுந்து. விரவாமே - கலவாமே. கூத்தனார் - நடராஜர். 37 970. முன்நின்ற மழவிடைமேல் முதல்வனார் எப்பொழுதும் செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல் வாசனை கேட்க, இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய், என, அவரும் அந்நின்ற நிலை பெயர்ப்பார், ஐயர்திருமருங்கு அணைந்தார். மழவிடை - இளவேறு. செந்நின்ற - செம்மைக் குணம் நிலவிய. பெரியார் - ஆனாய நாயனார். பெரியோர்கள் ஆனாய நாயனாரின் திருக்குழல் வாசனை கேட்க என்று கூறுவோருமுளர். வாசனை - வாசிப்பை. இந்நின்ற நிலையே - இவ்வாறு குழல் வாசித்து நின்ற படியே. அந்நின்ற நிலை பெயர்ப்பார் - அங்கே நின்ற நிலையி னின்றும் பெயர்வாராய்; பிறவித் துயரை வீழ்த்துவோராய் என்க. ஐயர் - சிவபெருமான். 40 971. விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகம்மிசை விளங்க, எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்குமொழி எடுத்துஏத்த, அண்ணலார் குழல்கருவி அருகுஇசைத்து அங்கு உடன்செல்லப் புண்ணியனார் எழுந்தருளிப் பொன்பொதுவினிடைப் புக்கார். இருக்கு மொழி - மறைமொழிகளை. புண்ணியனார் - சிவ பெருமான். 41 நம்பியாரூரர் துதி அறுசீர் விருத்தம் 972. தீதுகொள் வினைக்கு வாரோம்; செஞ்சடைக் கூத்தர் தம்மைக் காதுகொள் குழைகள் வீசும் கதிர்நிலவு இருள்கால் சீப்ப, மாதுகொள் புலவி நீக்கி மனையிடை இருகால் செல்லத் தூதுகொள் பவராம் நம்மைத் தொழும்பு கொண்டுஉரிமை கொள்வார். இருள் கால் சீப்ப - இருளை யொழிக்க. மாது - பரவை. தொழும்பு - அடிமை. உரிமை கொள்வாராதலின் இனியாம் தீமையை ஏற்கும் வினைவழிப் பிறவி தாங்கமாட்டோம் என்றபடி. 42 ஆனாய நாயனார் மழ நாட்டில் திருமங்கலம் என்னும் பகுதியில் ஆயர் குலத்தில் தோன்றியவர் ஆனாய நாயனார். அவர் திருநீற்றினிடத்திற் பேரன்பு வாய்ந்தவர்; மன மொழிமெய்களில் சிவபெருமான் திருவடியையே போற்றுபவர். அப்பெரியார், இடையர்களுக்குத் தலைமை பூண்டு, பசுக் கூட்டங்களைக் காத்துவந்தார். அவர்தம் முயற்சியால் பசுக் கூட்டங்கள் காட்டுக்குப் போய் எவ்வித இடையூறுமின்றி நறும்புல் மேய்ந்து, தூநீர் அருந்தி, நல்வழியில் பெருகலாயின; பசுக் கூட்டங் களை மேய்த்துக் காப்பதுடன், வேய்ங்குழல் வாசிப்பதும் ஆனாயரின் வழக்கமாயிருந்து வந்தது. ஒருநாள், ஆனாயர் வழக்கம் போலக் கார்காலத்திற் காடு நோக்கிச் சென்ற போது, பூத்துத் தளிர்த்து நின்ற ஒரு கொன்றைமரம் அவரது கண்ணையுங் கருத்தையுங் கவர்ந்தது. அவ் வருங்கொன்றை, தாழ்சடையில் கொன்றையணிந்த சிவபெருமானைப் போலவே ஆனாயருக்குத் தோன்றலாயிற்று. தோன்றவே, அவர்தம் மனம் சிவத்தில் ஒன்றிவிட்டது; கருவிகரணங்களெல்லாம் குழைந்து குழைந்து உருகின; அவர்பால் அன்பு மடை திறந்து கொண்டது. அன்பில் மூழ்கிய ஆயர் பெருமான், வேய்ங்குழலை மணிவாயில் வைத்து அஞ்செழுத்தை இசையில் அமைத்து வாசிக்கத் தொடங் கினார். அவ்விசையின் திறத்தை என்னென்று கூறுவது! அவ்விசை அமுதம் எல்லா உயிர்களிலும் பாய்கிறது. அறுகம் புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஆனிரைகள் அசைவிடாமல் அவரைச் சூழ்ந்தன; நுரைவாயுடன் பாலூட்டிக்கொண்டிருந்த இளங் கன்றுகள் தங்களை மறந்தன; எருதுகளும், மான் முதலிய காட்டு விலங்குகளும் மயிர் முகிழ்த்து அங்கே வந்து சேர்ந்தன; ஆடும் மயில்கள் அசையாது அணுகின; மற்றப் பறவை இனங்களெல்லாம் மயங்கி மயங்கி நெருங்கின; மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோவலர்கள் அவ்வப்படியே நின்றார்கள்; நாகலோக வாசிகள் பிலங்கள் வழியாக வந்தார்கள்; மலையில் வாழும் தெய்வப் பெண்டிர் இசையிற்றேங்கி நின்றார்கள்; விஞ்சையர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள் முதலியோர் விமானங்களில் போந்தார்கள்; கற்பகத் தருவின் மருங் கிருந்து கிளிகளுக்கு அமுதூட்டிக்கொண்டிருந்த தேவ மகளிர்கள், அக்கிள்ளைகளுடன் தங்கள் குழல் அலைய விமானங்களில் விரைந் தேறி வந்து இசை அமுதைப் பருகினார்கள்; வலியார் மெலியா ரெல்லாரும் இசையால் ஒன்று பட்டமையான், பாம்புகள், மயில்மீது விழுகின்றன. சிங்கமும் யானையும் ஒருங்குசேர்ந்து வருகின்றன; மான்கள் புலியின் பக்கத்தில் செல்கின்றன; காற்று விசைத் தசைய வில்லை; மரக்கிளைகள் சலிக்க வில்லை; மலைவீழ் அருவிகளும் காட்டாறுகளும் கலித்து ஓடவில்லை; முகில்கள் புடை பெயரவு மில்லை; மழை பொழியவு மில்லை; முழங்கவுமில்லை. இவ்வாறு சராசரங்களெல்லாம் இசைவாய்ப்பட்டுப் பொறி புலன்கள் ஒன்றப்பெற்றன. ஆனாயர் குழலோசை, வையத்தை நிறைத்து வானையும் வசப்படுத்திவிட்டது. எஞ்சி நிற்பது என்ன? சிவம் ஒன்றே. அச்சிவத்தின் செவியிலும் குழலோசை நுழைந்தது. பொய்யன்புக் கெட்டாத பெருமான் ஆனாயர் முன்னே தோன்றி இப்படியே நம்பால் அணைவாய் என்றருளினார். ஆனாய நாயனாரும் அப்படியே ஆண்டவனை அடைந்து பேரின்பம் பெற்றார். மும்மையால் உலகாண்ட சருக்கம் - 4 20. மூர்த்தி நாயனார் கலித்துறை 973. சீர்மன்னு செல்வக் குடிமல்கு சிறப்பின் ஓங்கும் கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு நார்மன்னு சிந்தைப் பல நல் துறை மாந்தர் போற்றும் பார்மன்னு தொன்மைப் புகழ்பூ ண்டது பாண்டி நாடு. மல்கு - நிறைந்திருத்தலாம். கார் . . . வைப்பு - மேகந் தங்கும் சிகரங்களையுடைய ஒளி காலும் அழகிய மணிகள் பதித்த மாடங் களாகிய இடங்களிலுள்ள. நார் - அன்பு. நற்றுறை மாந்தர் - சன் மார்க்கர்கள். பார். . . புகழ் - உலகில் நிலையான பழம் புகழ். 1 974. சாயும் தளிர் வல்லி மருங்குல், நெடுந்த டங்கண் வேயும் படுதோளியர் பண்படும் இன்சொல் செய்ய வாயும் படும்; நீள்கரை மண் பொரும் தண் பொருந்தம் பாயும் கடலும் படும்; நீர்மை பணித்த முத்தம். நீர்மை பணித்த முத்தம் - நீருள்ள முத்துக்கள். சாயும். . . . மருங்குல் - தளிரால் சாயும் கொடி போன்ற இடையினையும். வேயும்படு - மூங்கிலையும் வென்ற. பண்படும் - பண்ணொலிக்கும். வாயும் படும் - வாயிலும் உண்டாகும். பொரும் - அரித்துச் செல்லும். பொருந்தம் - தாம்பிரபன்னி; தாமிரவருணி. கடலும் படும் - கட லிலும் உண்டாகும். வாயிற்படு முத்தம் - பல். முத்தம் மகளிர் வாயிலும் படும்; கடலிலும் படும் என்க. 2 975. மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்திரன் மைவைத்த சோலை மலயம் தர வந்த மந்த மெய்வைத்த காலும் தரும்; ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும்; செவ்வி மணம் செய் ஈரம். செவ்வி மணஞ் செய் ஈரம் - நறு மணத்தைக் கமழச் செய்யும் ஈரத்தை. மொய். . . . தரும் - மொய்த்துள்ள வண்டின் நெருங்கிய கூட்டங்கள் ஒலிக்கின்ற மேகந் தவழும் சந்தனச் சோலையையுடைய பொதிய மலை அளிக்க வந்துலவும் சிறு தென்றற் காற்றும் தரும். ஈரத்தைத் தென்றலும் தமிழும் தருமென்க. 3 976. சூழும் இதழ்ப் பங்கயம் ஆக, அத் தோட்டின் மேலாள் தாழ்வு இன்றி என்றும் தனிவாழ்வது அத்தையல் ஒப்பார் யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும். பங்கயமாக - தாமரை மலராக. அத்தோட்டின் மேலாள் - அம் மலரிதழில் வாழும் இலக்குமியானவள். அத்தையல் ஒப்பார் . . . வாழும் - அவ்விலக்குமியைப் போன்ற பெண் மக்களின் யாழ் போன்ற மொழியிலும், கூந்தலிலும் முறையே இன்னிசையும், வண்டும் வாழ் கின்ற. திருநாட்டுச் சிறப்பு 10-ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. மதுரை என்னும் பெயர்க்குக் காரணத்தைத் திருவிளையாடற் புராணம் (புலியூர் நம்பி) - மதுரையான திருவிளையாடலில் பார்க்க. 4 977. சால்பு ஆய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் நூல் பாய் இடத்தும் உள; நோன் தலை மேதி பாயப் பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும் சேல்பாய் தடத்தும் உள;- செய்யுள் மிக்கு ஏறு சங்கம். செய்யுள் மிக்கேறு சங்கங்கள்: சால்பாய - அமைதியுடைய. மும்மைத் தமிழ் - இயல் இசை நாடகத் தமிழ். அங்கண் - அழகிய இடத்தையுடைய. நூல் பாய் இடத்தும் உள - நூல்கள் பயிலும் இடத்திலும் இருக்கின்றன. நோன் தலை மேதி பாய - பெரிய தலை யையுடைய எருமைகள் பாய்தலால். பால். . . . பாய - பால் சொரியும் முலையானது தோய்தலால் தேனானது தாமரை மலரில் ஒழுக; பரந்த முலையினிடத்தே தோய்ந்து பாலானது தேன் பொருந்திய தாமரை யினிடத்துப் பாய என்னலுமொன்று. சேல் - சேல் மீன்கள். தடத்தும் உள - தடாகங்களிலும் இருக்கின்றன. செய்யுள் மிக்கேறு சங்கம் - (1) பாச் செய்யுள் மிக்கு உயரும் கல்விச் சங்கங்கள் (புலவர் கூட்டம்). (2) வயல்களில் மிகுந்து ஏறுகின்ற சங்குகள். 5 978. மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாட முன்றில் பந்து ஆடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்து ஆர்முலை மேலன; தாழ் குழைவாள் முகப்பொன் செந்தாமரை மேலன; நித்திலம் சேர்ந்த கோவை. நித்திலம்(முத்துச் சேர்ந்த கோவைகள்; மந்த ஆநிலம் - தென்றற் காற்று. மூன்றில் - முற்றத்தில். மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்தனம் நிறைந்த முலைகள் மேலிருக்கின்றன. தாழ்ந்த குண்டலங் களையுடைய ஒளி வீசும் பொன் முகமாகிய செந்தாமரை மேலிருக் கின்றன. முகத்தில் நித்திலஞ் சேர்ந்த கோவையாவது வேர்வை. 6 979. மும்மைப் புவனங்களின் மிக்கதன்றே; அம் மூதூர் - மெய்ம்மைப் பொருளாம் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளும் தருவார் திருவால வாயில் எம்மைப் பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால். மெய்ம்மைப் பொருள் என்றும், வாய்மைச் செம்மைப் பொரு ளென்றும் கூறியது தமிழின் உண்மை மாண்பைக் குறிப்ப தென்க. பழந்தமிழ் நூல்களில் பெரிதும் உண்மையும் வாய்மையும் மெய்ம்மை யும் செறிந்து கிடப்பது கருதற்பாலது. பிற்காலத் தமிழ் நூல்களில் அவைகட்கு மாறுபட்டன காணப்படுவதும் வெள்ளிடைமலை. பவம் - பிறவித் துன்பம் தீர்ப்பவராகிய சிவபெருமானின் சங்கம். சிவபெருமான். சங்கப் புலவர்கள்வழித் தமிழ் வாயிலாக உண்மையை உணர்த்தினமை ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளது. மூவர்கட்கரியான் நிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப் - பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி - திருவிளையாடல்: வாழ்த்து 8. தண்டமிழ் நூல் புலவாணர்க் கோரம்மானே - தேவாரம். தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை - திருவாசகம். சங்கப் புலவரை வாய்மை யுரியவர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியார் (திருவிளையாடல்: கிழியறுத்த - 11) கூறியிருத்தல் காண்க. பொருளுந் தருவார் என்பதற்கு, அகப்பொருளிலக்கணந் தந்த இறையனார் என்று கூறுவது பிற்கால வழக்கு. இறையனார் என்பவர் ஒரு புலவர்; கடவுளல்லர். இறையனார் என்னும் பெயரைக்கொண்டு எழுந்த புராணக் கதைகள் சரித்திரத்துக்குத் துணைசெய்யா. 7 980. அப்பொன் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச் செப்பத் தகுசீர்க் குடிசெய் தவம் செய்ய வந்தார்; எப்பற்றினையும் அறுத்து, ஏறு உகைத்து ஏறுவார் தாள் மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார். ஆன்ற தொன்மை - அமைந்த பழைமை. ஏறு உகைத்து ஏறுவார் - சிவபெருமான். 8 981. நாளும் பெருங் காதல் நயப்பு உறும் வேட்கையாலே, கேளும் துணையும் முதல் கேடுஇல் பதங்கள் எல்லாம் ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்; மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; - மூர்த்தியார்தாம். காதல், வேட்கை - கண்ணப்ப நாயனார் புராணம் 102-ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. நயப்புறும் - விருப்புறும். கேளும் - உற வினரும். பதங்கள் - பேறுகள். அன்பெனும் மூர்த்தியார் - அன்பையே உடலாகக் கொண்டவராகிய மூர்த்தி நாயனார். 9 982. அந்திப் பிறைசெஞ் சடைமேல் அணி ஆலவாயில் எந்தைக்கு அணி சந்தனக் காப்பு இடை என்றும் முட்டா அந்தச் செயலின் நிலைநின்று, அடியார் உவப்பச் சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில். ஆலவாயில் எந்தைக்கு - திருவாலவாயில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானுக்கு. ஆலவாய் - திருவிளையாடற் புராணம் பார்க்க.10 983. கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல் மானப் படை மன்னவன் வலிந்து நிலம் கொள்வானாய் யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திரண்ட சேனைக் கடலும் கொடு தென்திசை நோக்கி வந்தான். கானக்கடி - காட்டரண். மான - வலிய. கருவி - ஆயுதம் தாங்கிய. மதுரை வவ்விய கருநட வேந்தன் - கல்லாடம். 11 984. வந்து உற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம் சிந்தச் செரு வென்றுதன் ஆணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான். சந்தப் பொதியில் - சந்தன மரங்களையுடைய பொதிகை மலையிற் பிறந்த. செரு - போர். கந்தம் - மணங் கமழும். 12 985. வல்லாண்மையின் வண்தமிழ் நாடு வளம்படுத்து நில்லாநிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமைத்திறம் மேவிய திருநீற்றின் சார்பு சொல்லாது, அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான். வளம்படுத்தும் - வளங்களைத் தன் வயப்படுத்தியும். ஒன்றிய - பொருந்திய. இம்மையின் - (அறிவுவிளக்க) வறுமையால். மேரு வில்லான் - சிவபெருமானது. அருகந்தர் திறத்தினில் - சமணர் கொள்கையில். 13 986. தாழும் சமண்கையர் தவத்தைமெய் என்று சார்ந்து வீழும் கொடியோன், அதுவன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால், அரவம் சுடர்த் திங்களோடும் வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான். கையர் - வஞ்சர்கள். வெய்ய - கொடிய. வன்மை செய்வான் - கொடுமை செய்வானானான். 14 987. செக்கர்ச் சடையார் விடையார் திருவாலவாயுள் முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை, மைக்கல் புரை நெஞ்சு உடைவஞ்சகன் வெஞ்சமண்பேர் எக்கர்க்கு உடனாக, இகழ்ந்தன செய்ய எண்ணி. செக்கர் - செந்நிறமுடைய. மை கல் புரை - கருங்கல்லை யொத்த. எக்கர்க்கு - இடக்கர்களுக்கு. எக்கராம் அமண்கை யருக்கு - திருஞான சம்பந்தர்: திருவாலவாய் - மானி. 11. 15 988. அந்தம் இலவாம் மிறை செய்யும் அன்பனார் தாம் முந்தைம்முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்; தம்தம் பெருமைக்கு அளவு ஆகிய சார்பில் நிற்கும் எம்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்? அந்தம் இலவாம் மிறை - அளவில்லாத நடுக்கங்கள். மிறை கள் செய்யவும் - திருவிளையாடல் (நம்பி): 51 மூர்த்தி 4. 16 989. எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் தள்ளும் செயல் இல்லவர் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளும் துறையும் அடைத்தான்; கொடுங்கோன்மை செய்வான் - தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து. எள்ளும் - இகழும். தள்ளும் - தமது திருப்பணியைத் தள்ளும். அடைத்தான் - தடுத்துக் கெடுத்தான். 17 990. புன்மைச் செயல்வல் அமண் குண்டரின் போது போக்கும் வன்மைக் கொடும் பாதகன் மாய்ந்திட, வாய்மை வேத நன்மைத் திருநீற்று உயர் நல்நெறி தாங்கும் மேன்மைத் j‹ik¥ òÉ k‹diu¢ rh®tJv‹W? என்று சார்வார். சார்வார் - மனத்தில் கொள்வாராயினார். 18 991. காய்வு உற்ற செற்றம்கொடு கண்டகன் காப்பவும், சென்று ஆய்வு உற்ற கொட்பின் பகல் எல்லை அடங்க நாடி, ஏய்வுற்ற நல்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை சாய்வுற்றிட வந்தனர்; தம்பிரான் கோயில் தன்னில். காய் . . .காப்பவும் - கோபம் நிறைந்த பகைமை கொண்டு அக்கொடிய மன்னன் (நாயனாருக்குச் சந்தன கட்டையை எவரும் உதவா வண்ணம்) தடுக்கவும். (கண்டகம் - முள்; கண்டகன் - முள் போன்றவன்). சென்று. . . . நாடி - நாயனார் பல விடங்களில் ஆராய்ந்து திரிந்து பகல் முழுவதும் (சந்தனக் கட்டையைத்) தேடி. ஏய்வுற்ற - தகுந்த. 19 992. நட்டம் புரிவார் அணிநல் திரு மெய்ப்பூச்சு இன்று முட்டம் பரிசு ஆயினும், தேய்க்கும்கை முட்டாது என்று வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்; கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய. நட்டம் புரிவார் - சிவபெருமான். மெய்பூச்சி - சந்தனக் காப்பு. வட்டந் திகழ் பாறையில் - சந்தனக் கல்லில். 20 993. கல்லின் புறம்தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து, மூளை புல்லும்படி கண்டு, பொறுத்திலர் தம் பிரானார்; அல்லின்கண் எழுந்தது வந்தருள் செய்த வாக்கு. சோரி கலுழ்ந்து - இரத்தம் சொரிந்து. பரப்பு - இடம். புல்லும் படி கண்டு - வெளிவருவதலைப் பார்த்து. தம்பிரானார் - சிவ பெருமான். அல்லின் கண் - இரவில். 21 994. அன்பின் துணிவால் இது செய்திடல்; ஐய! உன்பால் வன்புன்கண் எல்லாம் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு, முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் பின்பு உன்பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன. ஐய - ஐயனே. செய்திடல் - செய்யாதே. வன் புன்கண் - கொடுந் துன்பம். நீ கொண்டு. முன்பு இன்னல் புகுந்தன - முன்னே அவன் கொடுங்கோன்மையால் நேர்ந்த துன்பங்களை. 22 995. இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்தது அஞ்சி, முன்பு செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து, கைவண்ணம் நிரம்பின; வாசம் எல்லாம் கலந்து மொய்வண்ண விளங்கு ஒளி எய்தினர் - மூர்த்தியார் தாம். செய் வண்ணம் ஒழிந்திட - மையைத் தேய்த்தலை நிறுத்த. கை வண்ணம் - கை வடிவு (புலால் நாற்றம் நீங்கி). வாசம் எல்லாம் கலந்து . . . . . . .மொய் வண்ணம் - திரண்ட அழகு. 23 996. அந்நாள் இரவின் கண் அமண்புகல் சார்ந்து வாழும் மன்ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன் தன்நாளும் முடிந்தது; சங்கரன் சார்பு இலோர்க்கு மின்ஆம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல. அமண் புகல் - சமணரிடம்; சமணக் கொள்கை. நீடிய - மெய் நீடித்த ஆயுளையுடைய தேகம். வெல்ல - மிக. மின்னாம் என நிலை யாமை வெல்ல முடிந்தது என்று கூட்டுக. 24 997. இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் மெய்வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல், அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரையத்திடை வீழ விரைந்து வீந்தான். மெய் வாழுலகத்து - சிவலோகத்தில். நிரயத்திடை - நரகத்தில். வீந்தான் - இறந்தான். 25 998. முழுதும் பழுதேபுரி மூர்க்கன் உலந்த போதில் எழுதும்கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் அழுதும் புலர்வுற்றது; மற்றவன் அன்ன மாலைப் பொழுதும் புலர் வுற்றது; செங்கதிர் மீதுபோத. உலந்த - இறந்த. எழுதுங் கொடி போல்பவர் - அவன் மனைவி மார்கள். புலர்வுற்றது - வாட்டமுற்றது. அவன் அன்ன மாலைப் பொழுதும் - அவனைப் போன்ற இராக் காலமும். புலர் வுற்றது - விடிந்தது. 26 999. அவ்வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் கைவேறு கொள் ஈம அருங் கடன் காலை முற்றி, வைவேலவன் தன்குல மைந்தரும் இன்மை யாலே, செய்வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார். அவ் வேலையில் - அப்போது. கை வேறு கொள் - ஒழுக்கத் துக்கு வேறுபட்ட. ஈமவருங்கடன் - மயானக் கிரியைகள். காலைமுற்றி - காலையில் செய்துமுடித்து. வை வேலவன் - கூரிய வேலேந்திய அம் மன்னன் தன். செய்வேறு வினைத்திறம் - செய்யத்தக்க வேறுவித செயலினிடத்து. தேர்வார் - தெளிவார். 27 1000. தாழும் செயல், இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் கூழும் குடியும் முதலாயின கொள்கைத் தேனும் சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி வாழும் தகைத்தன்று; இந்த வையகம் என்று சொன்னார். தாழும் செயல் இன்று - தாமதித்தலின்றி. தாங்க - உலகைத் தாங்க. கூழும் - உணவும், பொருளும்; படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு - திருக்குறள் 381. குடியும் கூழின் பெருக்கமும் சிலப்பதிகாரம்: 10. நாடு காண் - கட்டுரை 7 கொள்கைத் தேனும் - நலத்தை உடைத்தா யிருப்பினும். 28. அறுசீர் விருத்தம் 1001. பல்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன்நெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை இன்றி வைகும் மண் ணுலகு எண்ணுங் காலை இன் உயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார். பாலித்து - காத்து. சரித்து - ஒழுகி. திருநகரச் சிறப்பு; பாட்டு குறிப்புப் பார்க்க. 29 1002. இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை, செய்வகை இதுவே என்று தெளிபவர், சிறப்பின் மிக்க மைவரை அனைய வேழம் கண்கட்டி விட்டால் மற்றுஅக் கைவரை கைக்கொண் டார்மண் காவல்கைக் கொள்வார் என்று. மைவரை அனைய வேழம் - கரிய மலை போன்ற யானையை. அக்கைவரை - அந்த யானை. 30 கொச்சகக் கலி 1003. செம்மாண் வினை அர்ச்சனை நூன்முறை செய்து, தோளால் இம்மாநிலம் ஏந்தும் ஓர் ஏந்தலை ஏந்து என்று பெய்ம்மாமுகில் போல்மதம் பாய்பெரு கோடை நெற்றிக் கைம்மாவை, நறுந்துகில் கொண்டு கண்கட்டி விட்டார். செம்மாண் வினை - செவ்விய பெருமையுடைய கிரியைகளால். ஓர் ஏந்தலை - அரசனை (உயர்ந்தவனை). ஓடை - பட்ட மணிந்து. 31 1004 கண் கட்டி விடும் களியானை அக் காவல் மூதூர், மண் கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித் திண்பொன் தடமா மதில் சூழ் திருவால வாயில் விண் பின்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி. கொட்புற - நடுங்க. மிலைந்தவர் - சூடிய சிவபெருமானது. 32 1005. நீங்கும் இரவின்கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர், ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில், இந்த வையம் தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப் பூங் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப. 33 1006. வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று, வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின், வள்ளலாரைச் சூழ்பொன் சுடர் மாமணி மாநிலம் தோய, முன்பு தாழ்வுற்று எடுத்துப் பிடர்மீது தரித்த தன்றே. வேழத்தரசு - பட்டத்து யானை; அரசுவா. வள்ளலாரை - மூர்த்தியாரை. 34 1007. மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா, ஏதம்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது ஓதம் கிளர் வேலையை ஒத்துஒலி மிக்கது - அவ்ஊர். மாதங்கம் - யானை; அரசுவா. எருத்தினில் - பிடரியில். காணா - கண்டு. ஏதங்கெட - உலகத் துன்பங்கெட. ஓதங் கிளர் வேலையை - வெள்ளம் எழும் கடலை. 35 1008. சங்கங்கள் முரன்றன; தாரைகள் பேரி யோடும் எங்கெங்கும் இயம்பின - பல்இயம் எல்லை இல்ல அங்கங்கு மலிந்தன வாழ்த்து ஒலி;- அம்பொன் கொம்பின் பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும். முரன்றன - ஒலித்தன. பேரி - பேரிகை. இயம்பின - முழங்கின. பல்லியம் - பலவகை வாத்தியங்கள். அம்பொற் கொம்பின் பங்கன் - சிவபெருமான். 1009. வெங்கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி, வேரித் தொங்கல் சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலை அங்கண் கொடுபுக்கு, அரியாசனத்து ஏற்றி, ஒற்றைத் திங்கள் குடைக்கீழ், உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார். இழிச்சி - இறக்கி. வேரித் தொங்கல் - தேனொழுகும் மலர் மாலைகளும். சுடர்மாலைகள் - மணிமாலைகளும். அரியாசனத்து - சிங்காசனத்தில். உரிமைச் செயல் - மகுடாபிஷேகச் செயல். 37 1010. மன்னும் திசை வேதியில், மங்கல ஆகு திக்கண் துன்னும் சுடர்வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூநீர், உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தி னார்கள். மன்னும் திசை வேதியில் - மூர்த்தி நாயனார் வீற்றிருக்கும் திசையில் இடப்பட்ட ஓம குண்டலத்தில். வன்னி - நெருப்பு. துதைந்த - நெருங்கிய. பூரித்த - நிரப்பிய. உன்னும் - தியானிக்கும். 38 1011. வந்துற்று எழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தி யார்தாம் முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் இந்தப் புவி தாங்கி இவ்இன் அரசு ஆள்வன் என்றார். வந்து. . . . தம்மை - வந்து தொழுது எழும் மங்கல காரியத்தில் ஈடுபட்டுள்ள மந்திரிகள் முதலியவர்களை. 39 1012. அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்ச ரோடு மெய் வாழ்தரு நூல் அறிவின்மிகு மாந்தர் தாமும் எவ்வாறு அருள் செய்தனை? மற்று, அவை அன்றி யாவர் brŒth® bgÇnahŒ! எனச் சேவடி தாழ்ந்து செப்ப. 50 1013. வையம் முறை செய்குவன் ஆகில் வயங்கு நீறே செய்யும் அபிடேகமும் ஆக, செழுங் கலன்கள் ஐயன் அடையாளமும் ஆக அணிந்து, தாங்கும் மொய்புன் சடைமா முடியே, முடி யாவது; என்றார். வயங்கும் - பொலிவும். கலன்கள் - ஆபரணங்கள். ஐயன் அடை யாளமும் - சிவபெருமான் அடையாளமாகிய உருத்திராக்கும் திரு நீறு, உருத்திராக்கம், சடைமுடி ஆக மூன்று. 41 1014. என்று இவ்வுரை கேட்டலும், எல்லைஇல் கல்வி யோடும் வன் திண்மதி நூல்வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்று இங்கு அருள்தான் என நல்தவ வேந்தர் சிந்தை ஓன்றும் அரசு ஆள் உரிமைச் செயல் ஆன உய்த்தார். ஒன்றும் - பொருந்தும். உய்த்தார் - கொடுத்தார். 42 1015. மாடுஎங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் தேடும் கழலார் திருவாலவாய் சென்று தாழ்ந்து, நீடும் களிற்றின்மிசை நீள் மறு கூடு போந்தார். மாடெங்கும் - பக்கமெங்கும். மௌலி அணிந்தவர் - முடி யணிந்த மூர்த்தி நாயனார். தொல். . . .கழலார் - பழைய பன்றியாகிய திருமால் தேடுந் திருவடியையுடைய சிவபெருமான் எழுந்தருளி யுள்ள. மறுகூடு - வீதி வழியே. 43 1016. மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது தன்னின்றும் இழிந்து, தயங்கு ஒளி மண்டபத்தில், பொன்னின் அரிமெல் அணைச் சாமரைக் காமர்பூங்கால் மன்னும் குடை நீழல் இருந்தனர்; வையம் தாங்கி. பொன்னாற் செய்யப்பட்ட சிங்காசனத்தில். சாமரையின் விரும்பத்தக்க மெல்லிய காற்று. 44 1017. குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக் கலகம் செய் அமண் செயலாயின கட்டு நீங்கி, நிலவும் திருநீற்று நெறித் துறை நீடு வாழ உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன. குலவும் துறை - விளங்கும் பல துறைகளில் வல்ல. எறிபத்த: 7 குறிப்புப் பார்க்க. 45 1018. நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற, உதவும் திருநீறு உயர்கண்டிகை கொண்ட வேணி முதல் மும்மையினால் உலகு ஆண்டனர் - மூர்த்தியார்தாம். நுதலின் . . . பதம் - நெற்றியிற் கண்ணுடைய சிவபிரானது சத்தியம் விளங்கும் அருள் நூல்களின் வழி. பவங்கள் - பாவங்கள்; பிறவிகள் . வேணி சடை. மும்மையினால் - மூன்றால் (விபூதி, உருத்திராக்கம், சடை). மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் -திருத்தொண்டத்தொகை: 3. 46 1019. ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் சீலம்கொடு, வெம் புலன் தெவ் வுடன் வென்று நீக்கி, ஞாலம் தனி நேமி நடாத்தி, நலம் கொள் ஊழிக் காலம் உயிர்கட்கு இடரான கடிந்து, காத்து. ஏலம் கமழ்கோதையர் - மயிர்ச்சாந்து கமழ்கின்ற கூந்தலை யுடைய பெண்கள். தெவ்வுடன் - பகைவர்களுடன். வெம்புலன் களைத் தெவ்வுடன் என்றும், வெம்புலன்களாகிய தெவ்வுடன் என்றும் கொள்ளலாம். நேமி - ஆஞ்ஞா சக்கரத்தை. விபூதி, உருத்தி ராக்கம், சடைமுடி இம் மூன்றும் ஜீவகாருண்யத்துக்கு அறிகுறி களாதலான், உயிர்கட்கு இடரான கடிந்துகாத்து என்றார். விபூதி மனத் தூய்மைக்கும். உருத்திராக்கம் கண்ணோட்டத்துக்கும், சடை முடி அபதே மென்னும் ஞானத்துக்கும் அறிகுறிகள். இவ்வியல் களின்றி வெறும் வேடத்திற்காக விபூதி உருத்திராக்கம் சடை முதலிய வற்றைத் தரிப்பதால் பயனில்லை. மூர்த்தி நாயனார் புற வேடத்தின் வழி அகத்திலும் நின்றார் என்பது உயிர்கட்கு இடரான கடிந்து காத்து என்பதால் விளங்குகிறது. வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன் - வேடநெறி நிற்பார் வேடம் மெய்வேடம் திருமந்திரம்; இராசதோடம். 47 1020. பாதம்பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற ஏதம்பிணி யாவகை இவ்உலகு ஆண்டு, தொண்டின் பேதம்புரி யாஅருள் பேர் அரசு ஆளப் பெற்று, நாதன் கழல் சேவடி நண்ணினர் - அண்ண லாரே. பரமன்னவர் - வேற்றரசர்கள். ஏதம் பிணியாவகை - துன்பம் பீடிய வண்ணம். தொண்டு பேதியாத. இன் - சாரியை. 48 1021. அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த இகல் ஆர் களிற்று அன்பரை ஏத்தி, முருகனாராம் முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப் புகலூர் வரும் அந்தணர்தம் திறம் போற்றலுற்றாம். இகல்ஆர் களிற்று அன்பரை - போர்க்குணம் நிறைந்த யானை மீது சென்ற மூர்த்தியாரை. 49 மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டிலே மதுரை மாநகரிலே வணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியிற் சிறந்தவர்; அன்பையே திருவுருவாக்கொண்டவர். அப்பெரியார், சொக்கலிங்கப் பெருமானுக்குச் சந்தனக் காப்பணிவதைத் தமக்குரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வருநாளில், வடுகக் கருநாடக மன்னன் ஒருவன், தென்னாடு போந்து, பாண்டியனை வென்று, மதுரைக்கு அதிபதியானான். அவன், சமண சமயத்தைத் தழுவித் திருநீறணியுஞ் சிவனடி யார்களுக்குத் தீங்கிழைத்து வந்தான். அவன் தீங்கிடை, மூர்த்தி நாயனாரது திருத்தொண்டும் நிகழ்ந்து வந்தது. கருநாடக மன்னன், மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். பார்த்தும், மூர்த்தியார் தந்திருத் தொண்டி னின்றும் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன், நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு எவ்வத் தடைகளைச் செய்ய வேண்டுமோ, அவ்வத் தடைகளைச் செய்தான். நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டான் நாயனார் இக்கொடுங் கோலன் என்றே மாய்வான்? இந்நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்? என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதுந்திரிந்தார். சந்தனக் கட்டை எங்குங் கிடைக்கவில்லை. மூர்த்தியார் என் செய்வார்! அவர் திருக் கோயிலுட்புகுந்து இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை என்று கருதி ஒரு சந்தனக் கல்லின் மீது தமது முழங் கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் வெள்ளம் போல் பெருகிப் பாய்ந்தது; எலும்பு வெளிப்பட்டது; என்புத் துவாரங்கள் திறந்தன; மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே. இராச்சிய மெல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்து உன் திருப்பணியைச் செய்து நமது சிவ லோகத்தை அடைவாயாக என்று ஒரு வானொலி எழுந்தது. எழுந்ததும், நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடியாயிற்று. மூர்த்தியார் இறைவன் திருவருள் சுரப்பின், இவ்வையத்தை நான் தாங்குவேன் என்று நினைந்து, திருக்கோயிற் புறத்தில் நின்றார். அன்றிரவே அக்கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாட் காலையில் அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குப் புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தாரெவரு மின்மையால் எவரை அரசராக்குவது? என்று அமைச்சர்கள் ஆலோசித்து முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும், அஃது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோ, அவரே அரசராதல் வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத், துகிலால் அதன் கண்ணைக் கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி நாயனார் முன்னேபோய்த் தாழ்ந்து, அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது. அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக்கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கி அவரை முடிசூட்டி மண்டபத் திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள். முடிசூட்டற்குரிய மங்கலக் கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போது நாயனார், மந்திரிகளை நோக்கி, சமணம் அழிந்து சைவம் ஓங்கினால் யான் அரசாட்சியை ஏற்றல் கூடும் என்றார். அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும், கண்டிகை கலன்களாகவும், சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும் என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலாயினோர் உடன்பட்டனர். அம் முறையில் முடிசூட்டுவிழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக் கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார். மூர்த்தி நாயனார். பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு, கண்டிகை, சடைமுடி, ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடுநாள் ஆட்சி புரிந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். 21. முருக நாயனார் அறுசீர் விருத்தம் 1022. தாது சூழும்குழல் மலையாள் தளிர்க்கை சூழும் திருமேனி மீது சூழும் புனல்கற்றை வேணி நம்பர் விரும்பு பதி சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னித் திருநாட்டு போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம்புகலூர். தாது - பூந்தாதுகள். குழல். . . . நம்பர் கூந்தலையுடைய பார்வதி தேவியார் தளிர்போன்ற கையால் தழுவும் திருமேனியையும், திரு முடிமீது சூழும் கங்கை தங்கிய கற்றைச் சடையையும் உடைய சிவ பெருமான். மௌலி - முடி. பொன்னி - காவிரி. போது - மலர்கள். பூம்புகலூர் மேவிய புண்ணியனே - அப்பர். 1 1023. நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம்போல் அவர் அணிந்த சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மைத் திருந்து ஒளியால், யாம இருளும் வெளியாக்கும்; இரவே அல்ல, விரைமலர்மேல் காமர் மதுஉண் சிறைவண்டும் களங்கம் இன்றி விளங்குமால். நாமம் - புகழையுடைய. அவர் - அந்நல்லோர். சேமம் நிலவும் - நலம் விளங்கும். திருக் கூட்டச்சிறப்பு: 6 பார்க்க. காமர் - கண்ணப்ப நாயனார் புராணம்: 16 குறிப்பு பார்க்க. 2 1024. நண்ணும் இசைதேர் மதுகரங்கள் நனைமென் சினையின் மருங்கு அலைய வண்ண மதுரத் தேன் பொழிவ - வாச மலர்வாயே அல்ல; தண் என் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின் பண்ணின் கிளவி மணி வாயும் பதிகச் செழுந்தேன் பொழியுமால். தேர் மதுகரங்கள் - பாடும் வண்டுகள். நனைமென் சினையின் மருங்கு - அரும்பு பொருந்திய மெல்லிய கிளைகளின் பக்கங்களில். வண்ணம் - நிறம்; அழகு. மடமென் சாரிகையின - அழகிய மெல்லிய நாகணவாய்ப் பறவைகளின். பண்ணின் கிளவி - பண் அனைய சொல்லையுடைய. பதிகம் - தேவாரப் பதிகமாகிய. 3 1025. வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன - கொண்ட வாசமுகை அவிழ்ந்த குளிர் பங்கயங்க ளேஅல்ல; அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும் தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால். தடத்து - தடாகங்களில். கண்ணீர் - கள் நீர்; தேனாகிய நீர். முகை - அரும்பு. பங்கயங்களே - தாமரை மலர்களே. செவிமடுக்கும். செவி யால் பருகும்; கேட்கும் வதனம் - முகமாகிய. கண்ணீர் - கண்நீர். 4 1026. ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது தன்னில், மான மறையோர் குலமரபின் வந்தார்; முந்தை மறை முதல்வர் ஞான வரம்பின் தலை நின்றார்; நாகம் புனைவார் சேவடிக் கீழ் ஊனம் இன்றி நிறை அன்பால் உருகும் மனத்தார் - முருகனார். மானம் - மேன்மையுடைய. நாகம் புனைவார் - பாம்பை யணிந்த சிவபெருமான். 5 1027. அடைமேல் அலவன் துயில் உணர அலர்செங் கமல வயல் கயல்கள் மடைமேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழும் தன்மையராய், விடைமேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச் சடைமேல் அணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார். அடைமேல் - தாமரை இலைமீது. அலவன் - நண்டுகள். துயில் உணர - உறக்கத்தினின்றும் எழ. கயல்மீன்கள். உகளும் - பாயும். திருப் பள்ளித் தாமம் - எறிபத்தநாயனார் புராணம்: 9 குறிப்புப் பார்க்க. 6 1028. புலவரும் பொழுதின் முன் எழுந்து, புனித நீரில் மூழ்கிப் போய், மலரும் செவ்வித் தம்பெருமான் முடி மேல் வான்நீர் ஆறுமதி உலவு மருங்கு முருகுஉயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன்பறித்த அலகுஇல் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை களில்அமைப்பார். மலரும் செவ்வி - மலர்ந்த அழகிய வான்நீர். ஆறு மதி - ஆகாய கங்கையும் சந்திரனும். முருகு உயிர்க்க - வாசனை வீச. நகைக்கும் பதத்தினுடன் - மலரும் பருவத்துடன். அலகில் - அளவில்லாத. 7 1029. கோட்டு மலரும் நிலமலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் தோட்டு மலரும் மாமலரும் சுருதி மலரும் திருவாயில் காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையின் பன்னகநாண் பூட்டும் ஒருவர் திருமுடிமேல் புனையல் ஆகும் மலர்தெரிந்து. தோட்டு - இதழுடைய. மாமலரும் - பெருமை பொருந்திய மலர்களுள்ளும். கோட்டுப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ ஆகிய இவைகளுள். சுருதி - வேதம். புன்முறுவல் நிலவு. கனகவரையில் பன்னக நாண் - மேருமலையாகிய வில்லில் பாம்பாகிய (ஆதிசேட னாகிய) நாணை. ஒருவர் - சிவபெருமான். 8 1030. கொண்டு வந்து தனிஇடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் இண்டைச் சுருக்கும் தாமமுடன் இணைக்கும் வாச மாலைகளும் தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து, நுடங்கு நூல் மார்பர். தாமம் - மலர்; மாலையுமாம். தண்டில் - தண்டைப்போல்; வாழை நார்த்தண்டில் எனினுமாம். தாளில் - காம்புகளில். நுண்தாது - நுண்ணிய மகரந்தங்கள். கோவை - மலர்களால் கோக்கப்படும் மாலை. இண்டை - சுருக்கிக் கோக்கப்படும் மாலை; சுருக்கு மாலை. தாமம், கண்ணி, பிணையல் - தடுத்தாட்கொண்ட புராணம்: 18. குறிப்புப் பார்க்க. தொடையல்களும் - முதலிய மாலைகளும்; கோக்கப் பட்ட மாலைகளும் என்னலுமாம் நுடங்கும் - அசையும். 9 1031. ஆங்கு அப்பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத் தாங்கிக் கொடுசென்று, அன்பினொடும் சாத்தி, வாய்ந்த அர்ச்சனைகள் பாங்கின் புரிந்து பரிந்துள்ளார்: பரமர் பதிகப் பற்றான ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார். பாங்கில் - உரிமையுடன்; முறைமையுடன் எனினுமாம். சிவ பிரானுக்கினிய தேவாரப் பதிகங்களின் பற்றான. ஓவா - நீங்காமல். நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே - சுந்தரர்: கொடுமுடி. 1. 10 1032. தள்ளும் முறைமை ஒழிந்திடஇத் தகுதி ஒழுகும் மறையவர்தாம் தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் அள்ளி அகிலம் ஈன்றுஅளித்த அம்மை முலைப்பா லுடன்உண்ட பிள்ளை யார்க்கு நண்பரும்ஆம் பெருமை உடையார் ஆயினார். விதிமுறை விலக்குமுறை என்னும் இரண்டில் விலக்கு முறை கள் போக. மறையவர் தாம் - முருக நாயனார். தெள்ளும் - தெளிந்த. ஞானம் - ஞானத்தை. வள்ளத்தில் - கிண்ணத்தில். பிள்ளையார்க்கு - ஞானசம்பந்தப் பெருமானுக்கு. 11 1033. அன்ன வடிவும் ஏனமும்ஆய் அறிவான் இருவர் அறியாமல் மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான ஈச்சுரத்து, நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார். ஏனமுமாய் - பன்றியுமாய். அறிவான் இருவர் - அறியும் பொருட்டு முயன்ற பிரமவிட்டுணுக்களாகிய இருவர். உறைவாரை - எழுந்தருளி யுள்ள சிவபெருமானை. வர்த்தமான ஈச்சுரம் - திருப்புகலூர்த் திருக்கோயிலின் பெயர். நன்னர் - நல்ல. பன்னும் - செபித்தற்கரிய. பயின்றே - ஓதி ஓதி. 12 1034. அங்கண் அமரும் திருமுருகர் அழகு ஆர் புகலிப் பிள்ளையார் பொங்கு மணத்தின், முன்செய்த பூசை அதனால் புக்கருளிச் செங்கண் அடல் ஏறுடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத் தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வுற்றார். புகலிப்பிள்ளையார் - சீகாழித் திருஞானசம்பந்த சுவாமிகளின் ..... செங்கண் அடல் ஏறு உடையவர் - சிவபெருமான். அருளாகிய இனிய பொருள். 13. 1035. அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து, அவர்தம் கழல்கீழ் விரவு புகலூர் முருகனார் மெய்மைத் தொண்டின் திறம் போற்றிக் கரவு இலவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு பரவும் அன்பர் பசு - பதியார் பணிந்த பெருமை பகர்வுற்றேன். அரவம் அணிந்த அரையாரை - சிவபெருமானை. விரவு - கலந்த கரவிலவர்பால் வருவாரை - வஞ்சனையில்லாதவரிடம் காட்சி யளிக்குஞ் சிவபரம் பொருளை. கரவாடும் வன்னெஞ்சர்க்கரி யானை - அப்பர். 14 முருக நாயனார் முருக நாயனார் சோழ நாட்டிலே திருப்புகலூரிலே வேதியர் குலத்திலே தோன்றியவர். அவர் சிவபத்தியிலும் அடியார் பத்தியிலுஞ் சிறந்தவர். அவர் நாள்தோறும் வைகறையில் எழுவார்; காலைக் கடன்களை முடித்துக் கொள்வார்; நீராடுவார்; திரு நந்தனவனம் புகுவார்; கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நால்வகைப் பூக்களைக் கொய்வார்; அப்பூக்களால் இண்டை, தாமம், கண்ணி, பிணையல் முதலிய மாலைகள் கட்டுவார்; அம்மாலைகளைச் சிவபிரானுக்குச் சூட்டுவார்; நெஞ்சங்குழைந்து குழைந்து உருகுவார்; அஞ்செழுத்து ஓதுவார். இம்முறையில் திருத் தொண்டு செய்து வந்த முருக நாயனார், திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு நண்பராகி, அச்சுவாமிகளின் திருமணச் சிறப்பிற் கலந்து சிவபிரான்திருவடி நீழலை அடைந்தார். 22. உருத்திர பசுபதி நாயனார் கலித்துறை 1036. நிலத்தின் ஓங்கிய நிவந்துஎழும் பெரும் புனல் நீத்தம் மலர்த் தடம் பணை வயல்புகு பொன்னி நல்நாட்டுக் குலத்தின் ஓங்கிய குறைவுஇலா நிறைகுடி குழுமித் தலத்தின் மேம்படு நலத்தது - பெருந்திருத் தலையூர். நிவந்து - பரந்து. புனல் நீத்தம் - நீர்வெள்ளம். தம்பணை வயல் - மிகவும் அகன்ற வயல்களில். பொன்னி - காவேரி; (சோழ நாட் டிலே). குழுமி - நெருங்கி. 1 1037. வான் அளிப்பன - மறையவர் வேள்வியின் வளர் தீ; தேன் அளிப்பன - நறுமலர் செறி செழுஞ் சோலை; ஆன் அளிப்பன - அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அவ்வூர் தான் அளிப்பன - தருமமும் நீதியும் சால்பும். வளர்தீவான் (மழையை) அளிப்பன. அஞ்சு உகந்து ஆடு வார்க்கு - பஞ்ச கவ்வியத்தை விரும்பி ஆடுஞ் சிவபிரானுக்கு. (அவ்வைந்தையும் ஆன் அளிப்பன. சால்பும் - அமைதியும். 2 1038. அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத் துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்; செங்கண் மால்விடையார் செழும் பொன்மலை வல்லி பங்கரனார் அடிமைத் திறம்புரி பசுபதியார். அம்கண் - அழகிய இடத்தையுடைய. வாய்மையால் உயர்ந்த வேதியர் இமயக்கொடியாகிய பார்வதி பாகர். புரி - விரும்பும். 3 1039. ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு, மாயனார் அறி யாமலர்ச் சேவடி வழுத்தும் தூய அன்பொடு, தொடர்பினில் இடை அறாச் சுருதி நேய நெஞ்சினர் ஆகி, அத்தொழில் தலைநின்றார். 4 1040. கரைஇல் கம்பலை புள் ஒலி கறங்கிட, மருங்கு பிரசமென் சுரும்பு அறைந்திடக் கருவரால் பிறழும் நிரைநெ டுங்கயல் நீர்இடை, நெருப்பு எழுந்தனைய விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுள் மேவி. கம்பு அலைகரையில் புள் ஒலி கறங்கிட - சங்குகள் அலையும் கரையிலே பறவை யொலிகள் முழங்க. மருங்க பிரசமென் சுரும்பு அறைந்திட - பக்கத்தே மெல்லிய தேன் வண்டுகள் ஒலிக்க. வரால் மீன்கள் பிறழும். நிரை - வரிசையாக. கயல் மீன்கள் பாயும் நீரிடை. விரை - வாசனை. 5 1041. தெள்ளு தண்புனல் கழுத்து அளவாய் இடைச் செறிய, உள்ளுறப் புக்கு நின்று, கை உச்சி மேல் குவித்துத் தள்ளு வெண் திரைக் கங்கை நீர் ததும்பிய சடையார் கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார். 6 1042. அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை, வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே, திரு மலர்ப் பொகுட்டு இருந்தவன் அனையவர் சிலநாள். ஒருமை உய்த்திட, உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார். எல்லியும் - இரவும். திருமலர்ப் பொகுட்டு இருந்தவன் - பிரமன். ஒருமை உய்த்திட - ஒருமைப்பாட்டிற் பொருந்த. இடம் - இடப் பக்கம்.7 1043. காதல் அன்பர் தம் அருந்தவப் பெருமையும் கலந்த வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி, ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய,மற் றவர்தாம் தீது இலா நிலைச் சிவபுரி எல்லையின் சேர்ந்தார் அமர்ந்து - உள்ளத்திருந்து. பாடு - பெருமை. 8 1044. நீடும் அன்பினில் உருத்திரம் - ஓதிய நிலையால் ஆடு சேவடி அருகுற அணைந்தனர்; அவர்க்குப் பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராம் கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற. 9 1045. அயில் கொள் முக்குடு மிப்படை யார்மருங்கு, அருளால் பயில் உருத்திர பசுபதியார் திறம்பரசி, எயிலுடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம் செயலு டைப்புறத் திருத் தொண்டர் திறத்தினை மொழிவாம். கூர்மை பொருந்திய முத்தலைச் சூலத்தையுடைய சிவபிரான். பரசி - போற்றி. எயில் - மதில். 10 உருத்திர பசுபதி நாயனார் சோழ நாட்டுப் பதிகளில் திருத்தலை என்னும் பதியும் ஒன்று. அப்பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் பசுபதி என்பவர். அப்பெரியார் தாமரைத் தடாகத்துட் சென்று கழுத்தளவு நீரிலே நின்று ஸ்ரீருத்திரத்தை ஓதுவார். இஃது அவர்தந் திருத்தொண்டு. அவர் இத்திருத்தொண்டில் ஈடுபட்டுச் சின்னாள் வாழ்ந்து சிவபதஞ் சேர்ந்தார். உருத்திர மந்திரத்தை ஓதியபடியால், அவர் உருத்திர பசுபதி நாயனார் என்னுந் திருநாமத்தைப் பெற்றார். 23. திருநாளைப் போவார் நாயனார் கொச்சகக் கலி 1046. பகர்ந்து உலகு சீர் போற்றும் பழையவளம் பதி யாகும் - திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரைக் கரத்தால் முகந்துதர, இரு மருங்கும் முளரி மலர்க் கை ஏற்கும் அகன் பணைநீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர். புனல் கொள்ளிடம் - நீர் கொள் இடம்; காவிரியினின்றும் நீரைக் கொண்டு பிரிந்தமையான் புனல் கொள்ளிடம் என்றார். திரைக்கரத்தால் - அலையாகிய கைகளால். முகந்து - அள்ளி; வாரி. இரு மருங்கும் - இருபுறமும். முளரி மலர்க்கை - தாமரைகள் தங்கள் மலர்களாகிய கைகளால். அகன்பணை நீர் நன்னாட்டு - அகன்ற வயல்கள் நிறைந்த சோழவள நாட்டில். 1 1047. நீற்று அலர்பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின் சாற்று அலைவன் குலைவயலில் தகட்டு வரால் எழப்பகட்டுஏர் ஆற்று அலவன் கொழுக் கிழித்த சால் வழிபோய் அசைந்து ஏறிச் சேற்று அலவன் கரு உயிர்க்க, முருகு உயிர்க்கும் செழுங் கமலம். அலர் - விபூதியின் பரந்த. சாறு அலைவன் குலை - சாற்றால் அலைகின்ற வலிய கதிர்க்குலைகளை யுடைய; குலை - வரம்புமாம். பகடு ஏர் ஆறு அலம் - எருமைகள் பூட்டிய ஏர்போகும் வழியில் கலப்பையின். வன்கொழு - வலிய காறு. சால் - படைச்சாலின். சேறு அலவன் - சேற்றிலே நண்டுகள். கருவுயிர்க்க - கரு ஈன. முருகுயிர்க்கும் - தேனைச் சொரியும். 2 1048. நனைமருவும் சினைபொதுளி நறுவிரைசூழ் செறி தளிரில் தினகர மண்டலம் வருடும் செழுந்தருவின் குலம் பெருகிக் கனம்மருவி அசைந்து அலையக் களிவண்டு புடைசூழப் புனல் மழையோ? மது மழையோ? பொழிவு ஒழியா பூஞ்சோலை. நனை. . . தளிரில் - அரும்புகள் விளங்கும் கிளைகள் தழைத்து நறுமணங் கமழும் நெருங்கிய தளிரால். தினகர. . . பெருகி - சூரிய மண்டலத்தைத் தடவும் செழிய மரக் கூட்டங்கள் பெருகி. கனம் மருவி - மேகங்கள் அணைந்து. புடை - பக்கம். அலைதலாலும் - சூழ்தலாலும் பூஞ்சோலை பொழிவொழியா. 3 1049. பாளைவிரி மணம் கமழும் பைங்காய்வன் குலைத்தெங்கில் தாள்அதிர மிசைமுட்டித் தடங்கிடங்கின் எழப்பாய்ந்த வாளை புதையச் சொரிந்த பழம் மிதிப்ப வண்பலவின் நீள முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும். பைங்காய் வன் குலை - பசிய காய்களையுடைய வலிய குலைகள். பொருந்திய மிசை - அத்தெங்கின் மீது. தடங்கிடங்கின். விசாலமாகிய குளத்தினின்றும். வாளை புதைய - வாளை மீன்கள் புதையும்படி. பழம் - தென்னம் பழங்கள். வண் . . . . நீத்தத்தில் - வளமையுடைய பலாமரத்தின் நீண்டு முதிர்ந்த பழங்கள் வெடித்துச் சொரியும் தேன் பெருக்கில். எழுந்து உகளும் - பாய்ந்து குதிக்கும். முட்டிப் பாய்ந்த வாளை எழுந்து உகளும் என்று இயையும். நீத் தத்தில் மிதப்ப எழுந்து உகளும் எனக் கூட்டிக் கொள்ளலுமாம். 4 1050. வயல் வளமும் செயல் படுபைந் துடைவையிடை வரு வளமும் வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினவாம் புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் அயல் இடை வேறு அடி நெருங்கக் குடிநெருங்கி உளது அவ்வூர். துடைவையிடை - தோட்டங்களிலிருந்து. வியல் - விசாலமான. அயலிடை. வேறு அடி - பக்கங்களில் ஓரடி இடைவிட்டு. 5 1051. மற்று, அவ்வூர்ப் புறம் பணையின் வயல் மருங்கு பெருங்குலையில் சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளைதுவன்றிப் பற்றிய பைங்கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடைப் புல் குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி. அவ்வூர். . . குலையில் - அவ்வாதனூரில் மருத நிலத்தைச் சேர்ந்த வயற் பக்கங்களிலுள்ள பெரிய கரைகளில். பெருங் குலையில் சுற்றம் - பெருங் கூட்டமாகிய சுற்றத்தார் எனினுமாம். கிழமை - உரிமை. கிளை - துவன்றி - கூட்டம் நிரம்பி. புற்குரம்பை - புற் குடிசைகளாகிய. 6 1052. கூர்உகிர்மெல் அடிஅளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில் முன்றிலில் நின்றவள் உகிர் நாய்த் துள்ளுபறழ் கார் இரும்பின் சுரிசெறி கைக்கருஞ் சிறார் கவர்ந்துஓட, ஆர்சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி. கூர் உகிர் மெல்லடி அளகின் - கூரிய நகங்கள் பொருந்திய மெல்லிய அடியையுடைய கோழிப் பெடையின். குறும் பார்ப்பு குழு சுழலும் - சிறிய குஞ்சுகளின் கூட்டங்கள் சுழுலும். வார் பயில் முன்றிலில் நின்ற - வார்கள் நெருங்கியுள்ள முற்றத்தில் நின்ற. வள் உகிர் நாய் துள்ளு பறழ் - நெருங்கிய நகங்களையுடைய நாய்களின் துள்ளு குட்டிகளை. (வள் என்பதற்குக் கூரிய, பெரிய என்றுங் கூறலாம்). கார் இரும்பின் சரி செறி கை - கரிய இருப்புக் காப்புகள் நெருங்கிய கையையுடைய. ஆர் சிறு மென் குரைப்பு - அந்நாய்க் குட்டிகளின் நுண்ணிய சிறிய மெல்லிய குரப்பை. சிறுவர்களின் அரையிற் கட்டிய இருப்பு மணிச் சதங்கை குரப்பை அடக்கும். 7 1053. வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடங்குழிசிப் புதைநீழல் மென் சினைய வஞ்சிகளும் விசிப்பறை தூங்கு இனமாவும் புன்தலை நாய்ப் புனிற்று முழைப் புடைத் தெங்கும் உடைத்து எங்கும். உழத்தி - உழவுப் பெண்கள்; பள்ளப் பெண்கள். மருதும் - மருத மரங்களும். தன். . .வஞ்சிகளும் - தன்னுடைய முட்டைகளுடன் மென்மையான கோழிப் பெடைகள் அடைகாக்கும் பெரிய பானைகள் புதைக்கப்பட்டிருக்கும் நிழலையுடை மெல்லிய கிளை களைத் தாங்கிய வஞ்சி மரங்களும். விசி. . . மாவும் - வார்க்கட்டினை யுடைய பறைகளைத் தூக்கியுள்ள மாமரங்களும். புன் . . . தொங்கும் - சிறிய தலையையுடைய நாய்க் குட்டிகளுள்ள பள்ளங்களைப் பக்கங்களிலே கொண்டிருக்கிற தென்ன மரங்களும். நாய்ப் புனிறு என்பதற்கு நாய்கள் குட்டிபோட்டிருக்கும் என்னலுமொன்று. 8 1054. செறி வலித்திண் கடைஞர் வினைச் செயல் புரிவை கறையாமக் குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை வெறி மலர்த்திண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் நெறி குழல் புன் புலைமகளிர் நெல் குறுபாட்டு ஒலி பரக்கும். செறி. . . .உளைக்கும் - திரண்ட வலிமையுடைய திண்ணிய உழவர்கள் தங்கள் தொழிலில் தலைப்படும் விடியற்காலக் குறிப்பை அளக்கக் கூவுகின்ற, (அளத்தல் - வரையறுத்தல்). செங். . . காஞ்சி - சிவந்த கொண்டை பொருந்திய சேவலின் இருப்பிடமுள்ள வாசனை மலர்களைக் கொண்ட திண்ணிய கிளைகளையுடைய காஞ்சி மரத்தின். நெறிகுழல் - நெறித்த கூந்தலையுடைய. நெற்குறு பாட்டு - நெற்குற்றுப்பாட்டு. 9 1055. புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய் கைஉடைப் புடைஎங்கும் தள்ளும் தாள் நடைஅசையத் தளை அவிழ் பூங் குவளைமது விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச் சியபுன் புலைச்சியர்கள் கள் உண்டு களிதூங்கக் கறங் குபறையும் கலிக்கும். பொய்கையின் பக்கங்களெல்லாம். புள்ளும். . . .கலிக்கும் - பறவைகளும் தண்ணீரில் ஒலிக்கும். தளை - கட்டு. பைங்குழல் - பசிய கூந்தலிலே. மிலைச்சிய - சூடிய. களிதூங்க - களிப்பால் கூத்தாட; கள்ளாட்டயர. கறங்கு - (அதற்கிசைய) அடிக்கப்படும். 10. 1056. இப்படித்து ஆகியகடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்; மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்; அப்பதியில் ஊர்ப்பு லைமை ஆன்ற தொழில் தாயத்தார் ஒப்பு இலவர்; நந்தனார் என ஒருவர் உளரானார். கடைஞர் இருப்பின் வரைப்பு - புலைப்பாடி. பரிவு - அன்பு. ஆன்ற தொழில் தாயத்தார் - அமைந்த தொழிலுரிமை யுடையவர். 11 1057. பிறந்து உணர்வு தொடங்கியபின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால் சிறந்த பெருங் காதலினால் செம்மைபுரி சிந்தையராய், மறந்தும் அயல் நினைவு இன்றி, வருபிறப்பின் வழிவந்த அறம்புரி கொள்கைய ராயே அடித் தொண்டின் நெறி நின்றார். பிறைக்கண்ணிப் பெருந்தகைபால் - சிவபிரானிடத்து. 12 1058. ஊரில் விடும் பறைத் துடவை உணவுஉரிமையாக் கொண்டு, சார்பில்வரும் தொழில் செய்வார் தலைநின்றார்; தொண்டினால், கூர்இலைய முக்குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும், பேரிகையே முதலாய முகக் கருவி பிறவினுக்கும். ஊரில் விடும் பறைத்துடவை - ஊரிலே பறை யடித்தற்கென விடப் பட்ட தோட்டம் முதலிய மானிய வருவாயை. தமது சார்பில். தமக்குரிய உலகியற் தொழிலை மற்றவர்போலத் திருநாளைப் போவார் செய்துவரினும் அவர் திருத்தொண்டில் மட்டும் எல்லா ரினுந் தலைநின்றார் என்று ஆசிரியர் கூறியுள்ளது கூர்ந்து நோக்கத் தக்கது. கூரிலைய. . . அண்ணல் - கூரிய தகட்டு வடிவமான முத் தலைச் சூலத்தை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியுள்ள. முகக் கருவி - தோல் கட்டும் வாயெனும் முகமுடைய கருவிகள். பிற என்றது மத்தளம் முதலியவற்றை. 1059. போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தினுடன் கோரோ சனையும்இவை அளித்துள்ளார். விசிவார் - இறுகக் கட்டும் வார்கள். புகலும் - விரும்பும். வீணைக்கும் யாழுக்கும் வேற்றுமை யுண்டு; இது வேறு, அது வேறு; குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய - கம்ப இரா மாயணம்: ஊர்தேடு. 6. நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் - சுர தானங்களுக் கேற்றவகையில் பொருந்திய நரம்புகளும். 14 1060. இவ் வகையால் தம்தொழிலின் இயன்ற எலாம் எவ் இடத்தும் செய்வனவும் கோயில்களில் திருவாயில் புறம்நின்று, மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ் இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந் நாளில். செய்வனவும் - செய்தலும். மெய்விரவு - உயிர் வழி உடலிற் கலந்த. அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக - திருவாசகம்: கோயில் அனுபோக. 2. பாட வேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக் - காடவேண்டும் நான் - திருவாசகம்: திருச்சதகம்: 100. ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னைத் - தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே - தாயுமானார்: பாரபர. 141. 15 1061. திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து, விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டு, அங்கு ஆதனூர்தனில் நின்றும் வருத்தம் உறும் காதலினால் வந்து, அவ்வூர் மருங்கு அணைந்தார். அருத்தியினால் ஒருப்பட்டு - விருப்பத்தால் ஒருமைப்பட்ட மனமுடையவராய். திருப்புன் கூர்ச் சிவலோகநாதனை எப்பொழுது காணப் போகிறோம் என்று எழும் வருத்தமுறுங் காதலினால் என்க. வருத்தம் - ஆற்றாமை. திருப்புன்கூர் மேவிய சிவலோகனை - அப்பர்: திருப்புன்கூர்த் திருத்தாண்டகம். 16 1062. சீர் ஏறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில் நேரேகும் பிடவேண்டும் என நினைந்தார்க்கு, அது நேர்வார் கார் ஏறும் எயில் புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்தருளிப் புலப்படுத்தார். அது நேர்வார் - அதைக் திருவருள் செய்வாராய். வேண்டு வார்க்கு வேண்டுவதே ஈவான் கண்டாய் - அப்பர். காரேறும் எயில் - மேகந் தவழும் மதிலையுடைய. கண்ணுதலார் - திருநகரச் சிறப்பு: 46. குறிப்புப் பார்க்க. திருமுன்பு போரேற்றை விலங்க - சந்நிதியி லுள்ள பொருகின்ற இடப தேவரை விலகும்படி. புலப்படுத்தார் - தரிசனம் வழங்கினார். 17 1063. சிவலோகம் உடையவர் தம்திருவாயில் முன் நின்று, பவலோகம் கடப்பவர் தம்பணி விட்டுப் பணிந்து எழுந்து, சுவலோடுவார் அலையப் போவார் பின்பு ஒரு சூழல் அவலோடும் அடுத்ததுகண்டு ஆதரித்துக் குளம் தொட்டார். பவலோகங் கடப்பவர்தம் - பிறவி உலகத்தைக் கடப்பவராகிய நந்தனார் தமது. பணிவிட்டு - தோற் கருவியைக் கீழே வைத்து; தெண் டனிட்டு எனினுமாம். கூத்தாடுதலாகிய தொழிலைவிட்டு என்பர் பழைய குறிப்புரையாசிரியர். சுதந்திரமிழந்து என்பர் ஆறுமுகத் தம்பிரானார். சுவலோடுவார் அலைய - முதுகோடு வார்கள் அலைய. ஒரு சூழல் அவலோடும் அடுத்தது கண்டு - ஓரிடம் பள்ளத்தோடு அமைந்து இருந்ததைக் கண்டு; ஒரு சோலையை ஆவலோடும் அடைந்து அதைப் பார்த்து என்னலும் ஒன்று. ஆதரித்து - விருப்பங் கொண்டு. 18 1064. வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் தடங் கொண்ட குளத்து அளவு சமைத்ததன் பின்தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார். பொன்னிதழி - பொன்னிறமுள்ள கொன்றை. தடம். . . பின் விசாலமான குளத்துக்குரிய அளவாக வெட்டிச் சமைத்த பின்பு நடங்கொண்டு கூத்தாடி நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக் கரையன் நாளைப் போவானுங் - கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்ல னென்றிவர்கள் - குற்றஞ் செய்யினுங் குண மெனக் கருதுங் கொள்கை கண்டு நின் குரைகழலடைந்தேன் - பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப்புன் கூருளானே. - சுந்தரர்: இத்திருப்பாட்டில் திருநாளைப் போவார் திருப்பெயரும் அவர் எடுத்த பொய்கையும் குறிப்பாக உணர்த்தப் பட்டிருத்தல் காண்க. 19 1065. இத்தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி, மெய்த்த திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த சித்தமொடும் திருத் தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப. விரவுவார் - அன்போடு தாமும் இரண்டறக் கலந்திருப்பார். உய்த்த - செலுத்திய. 21 ஏவல் - திருவருள். நன்றும் - பெரிதும். 20 1066. அன்று இரவு கண் துயிலார் புலர்ந்ததன் பின் அங்கு எய்த ஒன்றி அணைதிரு தன்மை உறுகுலத்தோடு இசைவு இல்லை. என்று இதுவும் எம் பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார் நன்றும் எழும் காதல் மிக நாளைப் போவேன் என்பார். 21 1067. நாளைப் போவேன் என்று நாள் கள்செலத் தரியாது, பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்ப் பாளைப் பூங்கமுகு உடுத்த பழம் பதியின் நின்றும் போய், வாளைப் போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார். பூளைப் பூவைப்போல் நிலையின்றிச் சுழலும் பிறவியின் தொடர்பு. பழம் பதியினின்றும் - ஆதனூரினின்றும். வாளைப் போத்து - வாளை ஆண். பழனம் - வயல்கள். 22 1068. செல்கின்ற போழ்து அந்தத் திருஎல்லை பணிந்து எழுந்து, பல்கும் செந் தீவளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் மல்குபெருங் கிடைஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு, அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி, அணைந் திலர்; நின்றார். பல்கும் -பெருகும். பயில் - நெருங்கிய. மல்கு - நிறைந்த. கிடை வேதம் பயிலிடங்கள். ஒதுகிடை என்றுங் கொள்ளலாம். அல்கும் - குறைந்த. 23 1069. நின்றவர் அங்கு எய்தரிய பெருமையினை நினைப்பார் முன் சென்று இவையும் கடந்தூர் சூழ்எயில் திருவாயிலைப் புக்கார் குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள் ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள். இவையும் - வேள்வி, கிடை மடம் முதலியவற்றையும்; திரு வெல்லை முதலியவற்றைக் கடந்து என்றபடி. எயில் - மதிலின். குலவும் - விளங்கும். ஆகுதிகள் ஒன்றிய (பொருந்திய) வேதிகைகள் மூவாயிரம் அங்கு உள என்பார். 24 1070. இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல் ஒப்பு அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கைதொழுதே செப்பு அரிய திரு எல்லை வலம் கொண்டு செல்கின்றார். இப்பரிசாயிருக்க - இத்தன்மையாயிருக்க. எய்தல் - போதல். ஆராத - அடங்காத. 25 1071. இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்தரிய அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி, மைவண்ணம் திருமிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார். அங்கு. . . எய்தி அங்கே போதற்கு இயலாத அந்நிலையை நினைந்து வருந்திய திருவடித் தொண்டராகிய நந்தனார் சோர் வடைந்து. மைவண்ண. . . துயில்வார் - திருநீலகண்டத்தை யுடைய ஆண்டவன், சபையில் ஆடுந் திருக்கூத்தைக் கும்பிடுவது எப்படி என்று நினைந்தே துக்கத்தோடும் உறங்குவாரானார். 26 1072. இன்னல் தரும் இழிபிறவி இது தடை என்றே துயில்வார் அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்தருளி, மன்னு திருத் தொண்டரவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு முன் அணைந்து கனவின் கண் முறுவலொடும் அருள் செய்வார். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதி வருந்துவோரைப் பார்ப்பவர்க்குப் புன்முறுவல் தோன்றுதல் இயல்பு. நடராசப் பெரு மான் சாதி குலங்களெல்லாங் கடந்தவர். அவரைத் தரிசிக்க நந்தனார் தம் பிறவியை இழிவாகக் கருதி வருந்தினமையால் ஆண்டவன் புன் முறுவல் கொண்டான் என்க. அடியவர் எதுபற்றி வருந்துகிறாரோ அதைத் தீர்க்க வேண்டுவது ஆண்டவன் கடமை. 27 1073. இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீமூழ்கி, முப்புரி நூல் மார்பருடன் முன் அணைவாய் என மொழிந்து, அப்பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க மெய்ப் பொருள் ஆனார் அருளி, அம்பலத்தே மேவினார். முப்புரிநூல் மார்பருடன் - வேதியருடன். அப்பரிசே - அப்படியே. நந்தனார், வேதியர்களின் இருக்கை வேள்வி மடம் ஆகுதி முதலியவற்றைக் கண்டு அஞ்சி உறங்கினமையால் - அவரை அவ் வேதியராக்கி அழைத்தால் அவர் தம் அச்சம் ஒழியும் என்பது ஆண்டவன் திருவுள்ளம் போலும். வேதியர் சாதிபேதம் பாராட்டுவோர் ஆதலின், அவ்வேதியர்களுக்கு, அன்பராகிய நந்தனார் திருமேனி நெருப்பிலும் வேகாத தொன்று என்று காட்டும் வழி, அன்பின் உயர்வையும் சாதி யின் இழிவையும் புலப்படுத்தவும் ஆண்டவன் திருவுளம் பற்றினான் என்க. 28 1074. தம்பெருமான் பணிகேட்ட தவம றயோர் எல்லாரும் அம்பலவர் திருவாயில் முன்பு அச்சமுடன் ஈண்டி, எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித் தம்பரிவு பெருகவரும் திருத்தொண்டர்பால் சார்ந்தார். அம்பலவர் - நடராசர். ஈண்டி - கூடி. பரிவு - அன்பு. 29 1075. ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந் தோம் வெய்ய அழல் அமைத் துஉமக்குத் தரவேண்டி என விளம்ப, நையு ம்மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்; தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார். வேதியர்கள், தொண்டரைத் தீயில் மூழ்குவிக்க வேண்டுவ தில்லை என்று ஆண்டவனை வேண்டியிருப்பார்களாயின். அவர்கள் வேண்டுதலுக்கு ஆண்டவன் இரங்கியிருப்பன். அவர்கள் அவ்வழி புகாது ஆண்டவன் கட்டளையை நிறைவேற்றும் வழியிலேயே புகுந்தார்கள். 30 1076. மறையவர்கள் மொழிந்த தன் பின் தென்திசையின் மதில் புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயில் முன்னாகப் பிஞ்ஞகர் தம் நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி, இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார். பிறையுரிஞ்சும் - சந்திரன் தவழும். பிஞ்ஞகர் தம் - சிவபெரு மானின். சூழ - சூழ்ந்து. 31 1077. கைதொழுது நடம் ஆடும் கழல்உன்னி அழல்புக்கார்; எய்திய அப்பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப் பொய்தகையும் உருஒழித்துப் புண்ணியமா முனிவடிவாய் மெய்திகழ் வெண் நூல் விளங்க வேணி முடிகொண்டு எழுந்தார். பொய் தகையும் - பொய் உள்ளடங்கும்; பொய்யால் கட்டப் பட்டுள்ள. இங்கே சாதித் தீட்டு என்று ஆசிரியர் கூறாது இம்மாயப் பொய் தகையும் உரு ஒழித்து என்றது கருதற்பாலது. மாயா காரியமாகிய பொய் உடல் ஒழிந்ததென்க. ஒவ்வோருயிரும் இந்நிலை ஒருபோது எய்தியே தீர்தல்வேண்டும். அந்நிலையை நந்தனார் எய்தினார் என்பது புண்ணியமா முனிவடிவாய் மெய்திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டெழுந்தார் என்பதனால் வலி யுறுத்தப்படுதல் காண்க. புலையர் பிறவிபோய், மறையவர் பிறவி வந்ததென்று கொள்ளற்க. அஞ்ஞான உடல் போய் ஞான உடல் வந்த தெனக் கொள்க. நந்தனார் சிவமானார் என்பது நுட்பம். வெண் நூல் - குண்டலினி; வேணி (சடை) முடி - ஞானாமிர்தத் தேக்கம். முனி - காமக் குரோத முதலிய தத்துவக் காரியங்களை முனிந்த நிலை. 32 1078. செந்தீமேல் எழும்பொழுதுசெம்மலர் மேல் வந்துஎழுந்த அந்தணன் போல் தோன்றினார்; அந்தர துந்துபி நாதம் வந்து எழுந்தது இரு விசும்பில்; வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப் பைந்துணர் மந்தாரத்தின் பனிமலர் மாரிகள் பொழிந்தார். அந்தணன் போல் - பிரமதேவனைப்போல். அந்தர துந்துபி நாதம் - தேவ துந்துபியின் ஒலி. இருவிசும்பில் - பெரிய விண்ணில். ஆர்த்து - ஆரவாரித்து. பசிய பூங்கொத்துகளையுடைய கற்பகத் தருவின் குளிர்ந்த மலர் மாரிகளை. 33 1079. திருஉடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார்; பரவுஅரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்; அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல் வணங்க. வருகின்றார் திருநாளைப் போவாராம் மறைமுனிவர். 34 1080. தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக் கொல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி ஒல்லைபோய் உள்புகுந்தார்; உலகு உய்ய நடம் ஆடும் எல்லையினைத் தலைப்பட்டார்; யாவர்களும் கண்டிலரால். மான் மறிக் கரத்தார் - மான் கன்றைத் திருக்கையில் ஏந்திய சிவ பெருமானின். ஒல்லை - விரைந்து. தலைப்பட்டார் - அடைந்தார். 35 1081. அந்தணர்கள் அதிசயித்தார்; அரு முனிவர் துதிசெய்தார். வந்து அணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்துச் சுந்தரத் தாமரைபுரையும் துணைஅடிகள் தொழுதிருக்க அந்தம் இலா ஆனந்தப் பெருங் கூத்தர் அருள் புரிந்தார். புலையர் பிறவியை அறுத்து என்று கூறாது வினைமாசு அறுத்து என்றதை உன்னுக. புரையும் - ஒக்கும். துணையடிகள் - இரண்டு திருவடிகளை. 36 1082. மாசு உடம்பு விடத்தீயின் மஞ்சனம் செய் தருளி, எழுந்து ஆசு இல் மறை முனியாகி, அம்பலர் தாள் அடைந்தார் தேசு உடைய கழல் வாழ்த்தித் திருக்குறிப்புத் தொண்டர் வினைப் பாசம் அற முயன் றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம். மாசுடம்பு - மாயா உடம்பு. இஃது எல்லார்க்கும் இருப்பது. மஞ்சனஞ் செய்தருளி - மூழ்கி. ஆசில் - குற்றமில்லாத. தேசு - ஒளி. 37 திருநாளைப் போவார் நாயனார் குறிப்பு: நாயன்மார்கள் காலத்திலும் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவது நாட்டில் நிலை பெற்றிருந்தது. நாயன்மார்கள் பற்பல குலத்தில் தோன்றி அன்பர்களாகி, அன்புக்கு முன்னே சாதி வேற்றுமை இல்லை என்பதை நிறுவிச் சென்றார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், அப்பூதியடிகள், திருநீலநக்க நாயனார், நமிநந்தி அடிகள், திருஞானசம்பந்த சுவாமிகள், கழறிற்ற றிவார் நாயனார் ஆகிய இவர்கள் வரலாறுகளை நோக்குக. பல குலத்தில் தோன்றிய நாயன்மார்களெல்லாரையும் மறையவர் குலத்தில் தோன்றிய வன்றொண்டப் பெருந்தகையார் அடி யார்க்கும் அடியேன் என்று போற்றியதும், அந்நாயன்மார்கள் அனைவரையும் சிவாலயத்தில் சூழ எழுந்தருளுவித்து மக்கள் வழிபாடு செய்வது ஈண்டுக் கருதற்பாலன. சேக்கிழார் காலத்தும் சாதி நெறி ஆக்கம் பெற்றிருந்தமையான், அதன் புன்மையை உலகுக்கு உணர்த்தச் சாதி வேற்றுமை முதலியவற்றைக் கடந்த சிவநெறி நின்றொழுகிய நாயன்மார்கள் வரலாறுகளை அவர் அருளப் புகுந்தார். அந்நாயன்மார்களுள் திருநாளைப் போவாரும் ஒருவர். திரு நாளைப் போவார் நாளில் சாதி வேற்றுமை இருந்தமையான், அவரும் அவ்வேற்றுமையில் நம்பிக்கைகொண்டு தம்மைப் புலைய ரெனக் கருதியே தொண்டாற்றி வந்தார். அவர் பிறந்த புலைப் பாடியை உள்ளவாறே கவிமுறையில் சேக்கிழார் வருணித்துள்ளதை நோக்குக. உள்ளதை உள்ளவாறு கூறுவது கவி மரபு. திருநாளைப் போவார் வரலாற்றைப் பற்றிப் பலதிற ஆராய்ச்சிகள் வெளிவந் திருக்கின்றன. அவைகளும், சேக்கிழார் பெருமான் திருவாக்கைத் தழுவிச் சித்தாந்தம் ஆசிரியர். ம. பாலசுப்பிரமணிய முதலியார், சித்தாந்தம் ஐந்தாம் மலரில் ஒன்பதாம் இதழில் வரைந்துள்ள ஆராய்ச்சி உரை எனது கருத்தை ஈர்த்தது. அவ்வாராய்ச்சியிற் போந்துள்ள குறிப்புகள் சில வருமாறு: (. . . . . . . மேற்கூறிய விவரங்கள் மட்டும் அடங்கிய வரலாறு பக்திரசம் ததும்பும் ஒரு தீங்கனியாகச் சேக்கிழார்பெருமானால் நமக்களிக்கப்பட்டுள்ளது. இந்த ரசம் ஒன்று போதாதென்று கருதிச் சிருங்கார ரசம், சோக ரசம், ஹாயரசம் முதலியவைகளைப் புகுத்தி, இவ்வுண்மை வரலாற்றைத் திரித்துப் பல புதிய விஷயங்களைச் சேர்த்து. நந்தனார் நாடகமாகவும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை காலக்ஷேபங்களாகவும் இவ்வரலாறு உலவி வருவதைக் காண்கின் றோம். நந்தனார் ஓரந்தணரிடம் அடிமையாதல், நந்தனாருக்குப் பைத்தியம் பிடித்தல், சேரியில் பூசைபோடுதல், பெரிய கிழவன் வருதல், நந்தனார் எஜமானனை வேண்டுதல், நந்தனாருக்காகச் சிவ பூதங்கள் ஒரே இரவில் உழுது விதைப்பது முதல் கதிரறுத்தல்வரை எல்லாம் செய்தல், நந்தனார் வேதியருக்கு உபதேசித்தல் முதலிய பல விஷயங்கள் கர்ண பரம்பரையாகவோ தல புரணாங்கள் மூல மாகவோ கலந்துள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் வையாமல் சேக்கிழார் பெருமான் அருளிய உண்மை வரலாற்றின் உள்ளக் கிடக்கையை ஆராய்வோம். . . . . . . . நந்தனாருடைய சிவபக்தி மனதளவில், பேச்சளவில் நிற்கவில்லை; செயலிலும் விளங்கிற்று. தமது குலத்துக்கேற்ற தொண்டுபுரிவதே தகுதியென்று கருதி, கோயில்களில் பேரிகை முதலிய தோற்கருவிகட்குத் தோலும், யாழ், வீணை முதலிய நரம்புக் கருவிகட்கு நரம்பும், ஈசனார் பூசனைக்குக் கோரோசனையும் தந்து நந்தனார் தமது பக்தியைச் செயலில் நிறுத்தினார். வருபிறப்பின் வழி வந்த அறம்புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறிநின்றார் என்பதில் சேக்கிழார் கொடுத்துள்ள ஏகாரம் அவர் கருத்தை வலியுறுத்தும் ஏனைய வழிகளில் தொண்டு செய்யக் கருதினால் வசதிக் குறைவினால் தடைகள் நேரும். . . . . . இனி நந்தனாரது அன்பின் தன்மையை நோக்குவோம். . . . . . நந்தனாரது கரை கடந்த பேரன்பு அவரைத் தில்லை யெல்லைக்குச் செலுத்திற்று. அதை வலம் வந்து வேள்விப் புகை கண்டு மறை யோசை கேட்டுத் தமது குலம் நினைந்து உட்செல்ல அஞ்சினார். . . . தாம் உள்ளே நுழையக் கூடவில்லையே என்ற உணர்ச்சியினால் அவரது பக்தியும் மெய்யன்பும் எள்ளளவும் குறையவில்லை யென்பது பெரிதும் நோக்கத்தக்கது. தாங்கள் நினைத்த காரியங்கட் காகக் கோயில் சென்று பிறகு காரியங் கைகூடாவிடில் இந்தச் சுவாமிக்குக் கண்ணில்லையா, இந்தப் பாழுங் கோயிலில் இடி விழாதா என்றெல்லாம் தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டி யளக்கும் உயர்குலத்து மெய்யடியார்கள் எத்தனை பேரை நாம் காண்கிறோம். நந்தனார் தமக்கென ஒன்றும் வேண்டவில்லை; இறைவனைத் தரிசிக்கும் ஆசையைத் தவிர வேறெவ்வித ஆசையும் அவருக்கில்லை; தமது குலத்தினால் உண்டான தடையினால் அவரது மெய்யன்பு ஒரு சிறிதும் குன்றவேயில்லை; நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேபோயிற்று. . . . . . இங்கே ஒரு நவீன ஆராய்ச்சி உண்டு இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி. . . . . மேவினார் என்று இறைவன் கூறியதாகச் சேக்கிழார் சொல்வது சேக்கிழார் வாக்கல்ல என்றும், பிற்காலத்து இடைச் செருகல் என்றும், பாட்டின் போக்கும் பிறவும் இதை வலியுறுத்தும் என்றும் சில பேரறிஞர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இறைவனுக்குச் சாதிவேற்றுமை தீண்டாமை முதலிய கொள்கைகள் உண்டென்று ஏற்பட்டு விடுமாம். அதற்காக இப்பாட்டில் இறைவன் வாக்காகச் சேக்கிழார் கூறுவது தவறென் றெண்ணி சேக்கிழார் வாக்கேயல்ல வென்பது பொருத்தமாம். இவ்வாறு பொருள் கூறுவதைவிட வேறொரு வழியில் பொருள் கொண்டு இறைவன் திருவாக்கின் மேன்மையையும் சேக்கிழார் வாக்கே யென்பதையும் வலியுறுத்துவதே விசேஷமென அப்பேரறி ஞர்கட்கு விண்ணப்பித்துக் கொள்கிறேன். அது பின் வருமாறு: ஏ! தில்லை வாழந்தணர்களே! நீங்கள் நாடோறும் என்னைத் தொழுகின்றீர்கள்; என் உருவமாகிய தீயை வளர்க் கின்றீர்கள்; என்றாலும் இப்புறப் பூசைகளினால் உங்கள் அன்பு இன்னம் முதிர்ச்சியடையவில்லை. இப்பூசை வசதிகளெல்லாம் இல்லாத ஒருவன் எல்லைப்புறத்தில் உள்ளான். என்னைக் கண்டு தொழும் வசதியை நீங்கள் அவனுக்குத் தரவில்லையாயினும் உங்களைவிட அவனே என்மீதுள்ள அன்பிற் சிறந்தவன். அவனது பக்திக்கு ஓரளவும் எல்லையுமில்லை. பூதமைந்து நிலையிற் கலங்கினும் அவன் என்னை மறவான். . . . . . . அவனது பெருமையை உங்களுக்குக் கண்கூடாகக் காட்ட விரும்புகிறேன். நீங்கள் சுடுமென்று அஞ்சுகிற என் உருவ மாகிய தீயை எழுப்புங்கள். அவன் அதனுட் புகுந்து புண்ணிய மாமுனி வடிவாய், மெய்திகழும் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டெழுவான்; என் மீது யார் உண்மையான அன்பு செலுத்து கிறார்களோ அவர்களுக்குள்ள இடையூறுகளை விலக்கி அவர்களை என் திருவடியில் அணைவிப்பதே எனது தொழில் என்பதைப் பிரத்தியக்ஷமாக அறியுங்கள் என்று தில்லை வாழ்ந்தண ராகிய தலைக் குலத்தவர்க்கும் ஏனைய உயர் குலத்தவர்க்கும் அறிவுறுத்தவே கடைஞனெனப்படும் ஒருவனுக்கு அருள் புரிந்தார் அருட்பெருஞ் சோதியார் எனக் கொள்வதே சிறப்பு . . . . கனவில் நந்தனார்க்கும் தில்லைவாழந்தணர்க்கும் திருக்கூத்தன் அருள் செய்தான். தில்லை வாழந்தணர்கள் நல்லொழுக்கமும் நற்சார்பும் உடையவர்களாய் நந்தனார் காலத்திருந்தமையால் இறைவன் திருவுளக் குறிப்பை நன்றாய் அறிந்து கொண்டார்கள்; உடனே நந்தனாரிடம் சென்றார்கள். இத் தவமறையோரெல்லாரும் ஆங்கு அவரிடம் கூறும் வாக்கின் நுட்பம் நோக்கத்தக்கது. அடே, நந்தன் பயலே! உன்னைத் தீயிலிட்டு பொசுக்கி மந்திர ஸம்காரம் செய்து உள்ளே சேர்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சொல்லவேயில்லை. ஆனால் ஐயரே அம்பலவர் அருளால் இப்பொழுதணைந்தோம் வெய்ய அழலமைத்துமக்குத் தரவேண்டி என்றார்கள். கல்நாருரித்தன்ன ஈரமிலா நெஞ்சுடை தில்லைவாழ் ஐயர்கள், ஆராத காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க உள்ளுருகும் நந்தனாரைத் தங்களுக்கு அன்புப்பாடம் கற்பிக்கும் ஐயரே என்றழைத்ததை நோக்குக. தங்கள் குலச் செருக்காலும் புறப்பூசைச் செருக்காலும் உண்மையன்பின் உறைவிடத்தையறியாத அந்தணர்கள் கண்ணுதல் அருளால் காட்டக் கண்டார்களாதலின் அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம் என்றார்கள். அன்பிற்கு முன் மந்திர ஸம்காரங்கள் நில்லாவென்பதை நன்குணர்ந்த அந்தணர்கள் அழல் அமைத்து உமக்குத் தரவேண்டி என்று தாங்கள் சொல்லியபடி செய்யும் ஏவலாளர்களென்பதையும் விளக்கினார்கள். தீ வளர்க்கப் பட்டது. நந்தனார் இறைவனை நினைந்து தீயை வலம் வந்தார்; கைதொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்; புண்ணியமா முனிவடிவாய் நிகழ்ச்சி நூல் விளங்க எழுந்தார். நந்தனாருக்கு நாக்கை மூக்கை மட்டும் சுடும் நிகழவில்லை. உடல் முழுமையும் தீ குளிக்கும் அரிய ஸமகாரம் நிகழ்ச்சி நிகழ்ந்தது. ஓரந்தணன் மற்றொரு சிறுவனுக்கு நூலணி விக்கும் உபநயனம் நடைபெறவில்லை. இறைவனே தீயில் உருமாற்றி நூலணிவித்தான். தில்லை வாழந்தணர்க்கும் ஏனைய குலங்கட்கும் முதலென்று புராணாதிகள் விதந்தோதும் பிரமன்போல் நந்த மகாமுனிவர் விளங்கினார். செந்தீமேல் எழும்போது செம்மலர்மேல் வந்தெழுந்த அந்தணன் போல் தோன்றினார், என்பது சேக்கிழார் பெருமான் திருவாக்கு, எனவே கடைஞன் எனப்படும் ஒருவன் இறைவன் திருவடி யன்பினால் குலங்களைத் தோற்றுவித்த பிரம வடிவம் திகழ விளங்கினமை பெற்றாம். இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அமரர் பூமாரி பொழிந்தனர். தேவதுந்துபி முழங்கியது. திருவுடை தில்லை வாழந்தணர்கள் கைதொழுதார். இனி நந்தனார் அம்பலக் கூத்தனை யணுகி அடிப் பேறெய்தியதை ஆராய்வோம். திருநாளைப் போவாராம் மறை முனிவர் தில்லை வாழந்தணரும் உடன் செல்லச் சென்றெய்தி உள் புகுந்தார். ஈண்டு உம்மை இழிவு சிறப்பின்கண் வந்ததை நோக்குக. (திருத்தொண்டத் தொகையில் முதலில் வைத்து ஓதப்படும் தில்லைவாழந்தணரை வேண்டுமென்றே குறை கூறுவதாக ஒருவரும் எண்ணுதல் கூடாது) உள் புகுந்தார் உலகுய்ய நடமாடும், எல்லை யினைத் தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால். இவ்வாறு அனைவரும் கண்கொட்டாது விழிப்ப, அவரெதிர் மறைதல் நந்தனாரும் மாணிக்கவாசகரும் செய்த அருந்தொழிலே, ஐந்து பூதங் களாலாகிய பருவுடலை இறைவன் திருவருள், அவ்வப் பூதங் களோடு இமைப்பொழுதில் சேர்ப்பித்தது; ஆன்மா திருவடியில் நின்றது. இதுவே, மிகச் சிறந்த விதேக முத்தியாகும். . . . . . . மேற்கூறியவைகளிலிருந்து சிவபெருமானாவது சேக்கிழார் பெருமானாவது சாதிவேற்றுமை உயர்வு தாழ்வுகள் நமது நாட்டில் வேண்டுமென்று எண்ணுவதாகக் கொள்வதற்கிட மில்லை. மெய்யன்பின் முன் சாதி நில்லாதென்பதையே இச்சரிதை வலியுறுத்தும், இவ்வோர் உண்மையை வலியுறுத்தவே இக்கட்டுரை எழுந்தது. இதை விட்டு விட்டு நந்தனார் கோயிலுக்குள்ளே செல்லும் உரிமை பாராட்டாததனால் இப்போதை ஆதிதிராவிடர்களும் அவ்வாறு செய்தல் கூடாது; நந்தனார் தீப்புகுந்த பிறகே உட் சென்றதனால் அவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும். கடவுளே தீக்குளி என்று கட்டளையிட்டதால் சைவ சமயத்துக்குச் சாதி இன்றியமையாத அடிப்படை என்பன போன்ற பலவகையான விபரீதப் பொருள்கள் காண்பதற்கு இக்கட்டுரையில் இடமில்லை யென்பதையும், இவ்வரலாற்றைக் கிழித்துச் சின்னபின்னமாக்கி மனம் போனவாறெல்லாம் குறைகூறுதல் தவறென்பதையும் போலி ஆராய்ச்சிப் புலிகளின் கூரிய நகங்கட்குத் தெரிவிக்கின்றோம். 27, 28, 30, 32, 36, 37 - பாக்களின் குறிப்புகளை ஊன்றி நோக்குக. சோழநாட்டின் ஒரு பாங்கரிலுள்ளது மேற்காநாடு. அந் நாட்டில் ஆதனூர் என்னும் ஒரு திருப்தி உண்டு. அத்திருப்பதியில் ஆதிதிராவிடர் மரபில் தோன்றியவர் நந்தனார் என்பவர். நந்த னார்க்கு மானிய நிலங்களிருந்தன. அவைகளின் விளைவு அவர்தம் வாழ்விற்குப் பயன்பட்டுவந்தது. சிவாலயங்களிலுள்ள பேரிகைக்குத் தோலும் வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்பும், சிவார்ச் சனைக்குக் கோரோசனையும் அவரால் கொடுக்கப்பட்டு வந்தன. அவரது சிந்தை சிவன் கழலிலேயே சேர்ந்து நிற்கும். திருக் கோயில்களின் வாயிற் புறத்தே நின்று ஆண்டவனைத் தொழுவது அப்பெரியாரது வழக்கம். தொழுகையில் அவருடைய நெஞ்சங் கசிந்து கசிந்து உருகும்; கண்கள் நீர் சொரியும் அன்பால் அவர் மெய்ம்மறந்து ஆடுவார்; பாடுவார். திருப்புன்கூர்ச் சிவலோகநாதனைக் கண்டு பணிசெய்தல் வேண்டும் என்னும் வேட்கை நந்தனார்பால் எழுந்தது. அவ் வேட்கையைத் தணிக்கை செய்ய அவர் திருப்புன்கூர் சென்றார்; சென்று திருக்கோயில் வாயிலிலே நின்று, சிவலிங்கப் பெருமானை நேரே கண்டு தொழ விரும்பினார். அன்பர்கள் விரும்புமாறு அருள் புரியும் சிவபெருமான், தம்முன்னுள்ள இடபதேவரை விலகும்படி செய்து, நந்தனாருக்குக் காட்சி தந்தருளினார். அடியவர் பெருமான் அன்புடன் பணிந்து ஆனந்த முற்றார்; பின்னை அவ்விடத்தில் ஒரு பள்ளத்தைக் கண்டு, அதைப் பெரிய திருக்குளமாக வெட்டித் திருப்பணி செய்து தமதூருக்குத் திரும்பினார். அவர் வேறு பல திருப்பதிகட்கும் போந்து போந்து தமது வழித் தொண்டு செய்வார். ஒருநாள் நந்தனாரது சிந்தை சிதம்பர தரிசனத்தின் மீது சென்றது. சென்ற அன்றிரவு முழுவதும் அவர் உறங்கினாரில்லை. பொழுது புலர்ந்தது. சிதம்பரப் பித்து அவரை விட்டகலவில்லை. அவர் தில்லையை நினைந்து நினைந்து, அந்தோ! தில்லை நண்ணினும் திருக்கோயிலுட் புகுந்து திருக்கூத்தைக் காணும் பேறு இக்குலத்துக்கு இல்லையே என்று வருந்துவார்; இஃதும் எம்பெருமான் திருவருள் என்று போக்கொழிவார்; மேலும் மேலும் எழுங் காதலால் நாளைப் போவேன்; நாளைப்போவேன் என்று சொல்வார். இவ்வாறு பல நாள்கள் கழிந்தன. ஒரு நாள் திருநாளைப் போவார் உறுதிகொண்டு தில்லை நோக்கிச் சென்று திருவெல்லையை அடைந்தார். அங்கே அவர், அந்தணர்கள் யாகசாலைகளையும், வேதம் ஓதும் இடங்களையும், மடங்களையும், பிறவற்றையுங் கண்டார்; அஞ்சினார்; அஞ்சித் திருவெல்லையை மட்டும் இரவு பகல் வலஞ் செய்வாராயினார்; செய்து செய்து ஒரு நாள், உள் நுழைவிற்கு இப்பிறவி தடையாக நிற்கிறதே; எவ்வழியில் திருக்கூத்தைக் கண்டு தொழுவது? என்று நினைந்து நினைந்து, மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டார். அன்பருளங் கோயில் கொண்ட தில்லைக்கூத்தன், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல் செய்து இப்பிறவி ஒழிய நீ நெருப்பில் மூழ்கி வேதியர்களுடன் நம்முன் அணைவாய் என்று திருவாய் மலர்ந்தருளினான்; மேலுந் தொடர்ந்து தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்கட்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்தருளினான். அந்தணர் பெருமக்கள் விழித்தெழுந்து, அச்சத்துடன் ஆலயத்திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறை வேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடஞ் சென்றார்கள்; சென்று, ஐயரே! ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம்; உம் பொருட்டு எரி அமைக்கப்போகிறோம் என்றார்கள். திருநாளைப் போவார் உய்ந்தேன்; உய்ந்தேன் என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார். அந்தணர்கள் தென்மதிற் புறத்துத் திருவாயிலின் முன் தீ வளர்த்து, அதைத் திருநாளைப் போவார்க்குத் தெரிவித்தார்கள். திருநாளைப் போவார் தீக்குழியை அடைந்து, இறைவன் திருவடியை மனங்கொண்டு, அதை வலம் வந்து, நெருப்பில் மூழ்கினார். முழுகியதும் அவர்தம் மாயப் பொய்யுடலம் ஒழிந்தது. அவர் புண்ணியப் பொன்மேனி திகழும் முனிவராய்ப் பூணூலுஞ் சடை முடியும் பொலிய எழுந்தார். அது கண்டு அமரர்கள் மலர் மாரி சொரிந்தார்கள்; அந்தணர்கள் கைகூப்பித் தொழுதார்கள்; அடிய வர்கள் மகிழ் வெய்தினார்கள். திருநாளைப் போவார், தில்லைவாழ் அந்தணர் முதலிய வருடன் சென்று திருக்கோபுரத்தைக் கண்டு தொழுது பொன் னம்பலம் புகுந்தார். புகுந்ததும் அவர்தம் திருவுருவம் மறையவர் கட்கும் மற்றவர்கட்கும் புலப்படவில்லை. அவர்களெல்லாரும் அதிசயித்தனர். நடராஜப் பெருமான் திருநாளைப் போவார்க்குத் தமது திருவடிப் பேற்றை நல்கினார். 24. திருக்குறிப்புத்தொண்ட நாயனார் 1083. ஏயு மாறுபல் உயிர்களுக்கு எல்லைஇல் கருணைத் தாய்அனான் தனி ஆயின தலைவரைத் தழுவ, ஆயும் நான்மறை போற்ற நின்று அருந்தவம் புரியத் தூய மாதவம் செய்தது - தொண்டை நன்னாடு. ஏயுமாறு - இயையும் படி. தாயனாள் - உமாதேவியார். தனியா யின தலைவரை - ஏகராகிய சிவபெருமானை. ஆயும் - ஆராயும். 1 1084. நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப வன்மை ஓங்கு எயில் வளம்பதி பயின்றது - வரம்பின் தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டை நன்னாடு. நயந்த - விரும்பிய. சால் - அமைந்த; மிக்க. எயில் - மதில். பயின்றது - பொருந்தியது. 2 1085. நல்திறம் புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்து உற்ற போதுதம் உயிரையும் வணிகனுக்கு ஒருகால் சொற்ற மெய்ம்மையும் தூக்கி, அச் சொல்லை யேகாக்கப் பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந் தொண்டை நாடு. நற்றிறம் - நற்செயல்களை. சிறுத்தொண்டர் - வேளாளர்கள். நவை - குற்றம். சீர் தூக்கி. இப்பாட்டிற் போந்துள்ள கதையின் சாரம் வருமாறு: ஒருவன் பரத்தையர் வயப்பட்டான். அவனை நல்வழிப் படுத்த அவன் மனைவி முயன்றாள். அவன் ஒரு சிறப்புக்குச் சென்ற வழியில் தன்னுடன் போந்த மனைவியைக் கொன்றான். அவள் நீலி என்னும் பேயானாள். கொலைஞன் பின்னே இறந்து ஒரு வணிக னாகப் பிறந்தான். அவனுக்கு ஒருவித பழியுள தென்று ஒரு பெரியார் கூறி, ஒரு வாளைத் தந்து, அவ் வாள் கையிலுள்ளவரை அப் பழியால் தீங்கு நேராதென்று சொற்றுச் சென்றனர். ஒரு நாள் வணிகன் வாணிபத்தின் மேற்சென்றபோது, நீலி ஒரு மாயக் குழவியுடன் அவனைத் தொடர்ந்து பழையனூர் எழுபதின்மர் பாலடைந்து. இவன் என் கணவன் என்னை வெறுத்துப் பரத்தையர் வயப்பட்டி ருக்கிறான் என்றாள். வணிகன் இவள் பேய் என்றான் அவள், குல முறைகளை ஒழுங்காகக் கூறி மாயக் குழவியைக் கீழே விட்டாள். அக் குழவி செட்டிமீது விழுந்து விளையாடிற்று. அதைக் கண்ட வேளாளார்கள் இருவரையும் கலந்து பேசுமாறு ஆங்குள்ள ஒரு மண்டபத்துட் போகும்படி கட்டளையிட்டார்கள். அவ் வேளையில் நீலி, இவன் கையில் வாளிருக்கிறது. அவ் வாளால் என்னைக் கொன்று விடுவான் என்று நடுக்குற்றுக் கூறினாள். அதற்கு அவன் இவள் பேய்; என் கையில் வாளிருத்தல் வேண்டும் என்றான். அப் பொழுது வேளாளர்கள், உன் உயிருக்கு எங்கள் உயிரைக் கொடுப்போம் வாளை எறிந்து அஞ்சாது செல்வாயாக என்று உறுதி கூறினார்கள். வணிகன் நீலியுடன் மண்டபத்துள் நுழைந்தான். நீலி அவனைக் கிழித்துக் கொன்றாள். மீண்டும் நீலி, செட்டியின் தாய் போல வடிவங்கொண்டு வேளாளரை யடைந்து,என் மகனைக் காணோம். அவன் இங்கே வந்தான் என்று கேள்வியுற்றேன் என்று முறையிட்டாள். வேளாளர்கள் மண்டபத்தின் கதவைத் திறந்தார்கள். வணிகன் அங்கே மாண்டு கிடப்பதை அவர்கள் கண்டார்கள். பின்னே, அவர்கள் தாங்கள் கூறிய உறுதிமொழியைக் காக்க வேண்டித் தீ வளர்த்து அதில் இறங்கி உயிர் துறந்தார்கள். 3 1086. ஆணை ஆம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை பேண நீடிய முறையது - பெருந்தொண்டை நாடு. ஆணை என்றது சக்தியை; திருநீறு பராசக்தியின் கூறு. பராவணமாவது நீறு - ஞானசம்பந்தர். அடிச்சேரன் - கழறிற்றறிவார் புராணம் பார்க்க. சேண் உலாவு - நெடுந்தூரம் பரவிய; வான் வரை பரவிய என்னலுமாம். வாள். . . பேண - ஒளி வீசும் அணிகளைப் பூண்ட. வீரர்கள் மைத்துன உரிமை கொள்ள. இங்கே உள்ள சரித்திரக் குறிப்பு வருமாறு; சேரநாட்டில் ஒருபோது கலகம் நடந்தது. அவ் வேளையில் சிலர் நானா பக்கங்களிலும் ஓடினர். அவருள் ஒரு பெண், தொண்டை நாட்டு வேளாளரிடத்தில் வளர்ந்து வந்தாள். கலகம் அடங்கிய பின்னை எல்லாரும் தத்தம் ஊர்போய்ச் சேர்ந்தனர். ஓரூரில் ஒரு பெண் மட்டும் எண்ணிக்கையில் குறைபட்டிருந்தாள். அவள் சுற்றத்தார் அவளைத் தேடித் தேடித் தொண்டை மண்டலத்தில் கண்டனர். அவளை வளர்த்த வேளாண் மக்கள் இவளை நாங்கள் புதல்வியாகவே வளர்த்தோம் என்று வரிசை முதலியன தந்தார்களாம். இதனால் சேர நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் மைத்துனக் கேண்மை ஏற்பட்டதாம். 4 1087. கறை விளங்கிய கண்டர்பால் காதல் செய் முறைமை நிறை புரிந்திட நேரிழை அறம் புரிந்ததனால், பிறை உரிஞ்சு எயில் பதிபயில் பெருந்தொண்டை நாடு முறைமை யாம் என உலகினில் மிகுமொழி உடைத்தால். கறை. . . . பால் - சிவபிரானிடம். நிறை புரிந்திட - முற்றும்படி; முறைமையாகிய சால்பை (சிவபிரான்) விரும்ப எனக் கொள்ளலு மொன்று. நேரிழை - உமையம்மையார். அறம் - முப்பத்திரண்டு அறம். பிறைதவழும் மதில்களையுடைய நகரங்கள் நெருங்கிய. அறமுறைமை. 5 1088. தாஇல் செம் மணி அருவியாறு இழிவன - சாரல்; பூவில் வண்டினம் புதுநறவு அருந்துவ - புறவம்; வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன - மருதம்; நீவி நித்திலம் பரத்தையர் உணக்குவ - நெய்தல். மலைச்சாரல்களினின்றும் குற்ற மற்ற அழகிய மணிகளுடன் அருவி ஆறுகள் இறங்குகின்றன. புறவல் - முல்லை நிலங்களில். புது நறவு - புதிய தேனை. வாவி. . . .உகைப்பன - தடாகங்களிலுள்ள நீண்ட கயல் மீன்கள் வரம்புகள் இற்று விழப்பாய்கின்றன. பரத்தையர் - நெய்தல் நிலப் பெண்களால். நித்திலம் - முத்துக்கள். நீவி - துடைத்து; கழுவி. உணக்குவ - உலர்த்தப்படுகின்றன. 6 1089. குறவர் பல்மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி; கறவை ஆன்நிரை மான்உடன் பயில்வன கானம்; பறவை தாமரை இருந்துஇறவு அருந்துவ பழனம்; சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச்சூழல். குறிஞ்சி - குறிஞ்சி நிலங்களில் குறவர். . .. விதைப்பன - குறவர் களால் பல மணிகளைக் களைந்து பண்படுத்தப் பெற்ற நிலத்தில் தினைகள் விதைக்கப்படும். கானம் - முல்லை நிலங்களில், கறவைப் பசுக் கூட்டங்கள் மான்களுடன் நெருங்கியிருக்கும். பழனம் - மருத நிலங்களில். இறவு அருந்துவ - இறால் மீன்களை யுண்ணும். கழிச் சூழல் - நெய்தல் நிலங்களில். சுறவ . . . அயர்வன - சுறா மீன் முள் தெய்வத்துக்கு அறிகுறியாக வைத்துத் திருவிழாக்கள் செய்யப்படும். . . . . சினைச் சுறவின் கோடு நட்டு - மனைச் சேர்த்திய வல்ல ணங்கினான். . .. . - பட்டினப்பாலை: 86 - 87. 7 1090. கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால்; தண் துணர்க் கொன்றை பொன் சொரிவன தளவு அயற்பால்; வண்டல் முத்தம் நீர் மண்டுகால் சொரிவன வயற்பால்; கண்டல் முன்துறைக் கரிசொரிவன கலம் கடற்பால் குலவரைப் பால் - கூட்டமாகிய மலையினிடத்து. மணி - மழைத் துளிகளை. தளவு அயற்பால் - முல்லை நிலப் பக்கங்களில். தண் துணர் - குளிர்ந்த பூங்கொத்துகளையுடைய. பொன் - பொன் போன்ற மலர்களை. நீர் மண்டுகால் - நீர் நிறைந்து விரைந்து செல்லும் வாய்க் கால்கள். வண்டல் முத்தம். சிறுபெண்கள் விளையாட்டிற் சிந்திய முத்துகளை. கலம் - கப்பல்கள். கண்டல் முன்துறை - தாழைகளை முன் னாகவுடைய துறைகளில். கரி - யானைகளை. 8 1091. தேன் நிறைந்த செந்தினை இடி தரும் மலைச் சீறூர்; பால் நிறைந்த புல் பதத்தன முல்லைநீள் பாடி; தூநெல் அன்னம் நெய் கன் னலின் கனியதண் துறை ஊர்; மீன்நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள். பாடி - முல்லை நிலத்தூருக்குப் பெயர். புற்பதத்தன - புல்லரிசிச் சோற்றையுடையன. தண் துறை ஊர் - குளிர்ந்த நீர்த் துறைகளை யுடைய மருது நிலத்தூர்கள். அன்னம், நெய், கன்னல் (கரும்பு). இனிய கனி ஆகிய இவைகளையுடையன. வேலை வைப்பிடங்கள் - நெய்தல் நிலத்தூர்கள். 9 1092. குழல்செய் வண்டினம் குறிஞ்சியாழ் முரல்வன - குறிஞ்சி; முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன - முல்லை; மழலை மென்கிளி மருதுஅமர் சேக்கைய - மருதம்; நிழல்செய் கைதைசூழ் நெய்தல்அம் கழியன - நெய்தல்; குறிஞ்சி நிலத்தில். குழல் - கூந்தல்; புல்லாங் குழலுமாம். முரல் வன - ஒலிக்கின்றன. முழவு - தயிர்த்தாழி; முழவுப்பறையுமாம். கார் கொள - மேகம் போல் முழங்க. முல்லைகள் முகைப்பன - முல்லைகள் அரும்புகின்றன. மருது அமர் சேக்கைய - மருத மரங்களில் அமருங் கூடுகளை யுடையன; கிளி வளர்பூ மருதணிந்து சிந்தாமணி: 64. கைதை - தாழை. நெய்தலங் கழியன - நெய்தற் பூக்கள் பொருந்திய கழி நிலத்தையுடையன. 10 1093. மல்கும் அப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி எல்லை எங்கணும் இறவுளர் ஏனல்முன் விளைக்கும் பல்பெரும் புனம் பயில்வன - படர் சிறைத்தோகை சொல்லும் அப்புனம் காப்பவும் - சுரி குழல் தோகை. மல்கும் - நிறைந்த. வரைபுணர் - மலைசார்ந்த. இறவுளர் - வேடர்கள். ஏனல் - தினையை. புனங்களில் மயில்கள் இருக்கின்றன. சுரிகுழல் தோகை - சுருண்ட கூந்தலையிடைய பெண்கள். 11 1094. அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழல் சுரும்பு பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச் செங்கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும். அங்கண் - அழகிய இடமகன்ற. சுரும்பு - வண்டுகள். கொடிச் சியர் - வேட்டுவப் பெண்களின். தெய்வப் பெண்கள் கூந்தலிலுள்ள வண்டுகள் வேடப் பெண்களின் கூந்தலில் வீழ்ந்து மூழ்கி மண மிகுதி யால் போகாத. மங்குல் - மேகம். 12 1095. பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து, மாறுஇல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும், ஆறு சூழ்சடை அண்ணலார் திருஇடைச் சுரமும் கூறு மேன்மையின் மிக்கது - அந்நாட்டு வண்குறிஞ்சி. அடையும் பேற்றை வேறு வழியில் விரும்பும் இமையவர் (தேவர்கள்) அரம்பையர் முறையே வேடர்களாகவும் வேடப் பெண்களாகவும் பிறந்து. 13 1096. அம்பொன் வார்குழல் கொடிச்சியருடன் அரமகளிர் வம்பு உலாமலர்ச் சுனைபடிந்து ஆடும் நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால்; கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சி செய்தவம் குறை உளதோ. அம்பொன்வார் - அழகிய பொன் நிறம் ஒழுகும். அரமகளிர் - தெய்வப் பெண்கள். வம்பு உலா - மணங் கமழும். வரைப்பின் - இடங்களையுடைய. கொம்பர் - பூங்கொம்புகளிடத்து. 14 1097. கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்தசில் இடங்கள் நீல வாள் படை நீலி கோட்டங்களும் நிரந்து, கால வேனிலில் கடும்பகல் பொழுதினைப் பற்றிப் பாலையும் சொலல் ஆவன உளபரல் முரம்பு. நீலி கோட்டங்களும் - துர்க்கைக் கோயில்களும். நிரந்து - பரவி. பரல் முரம்பு - பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலங்கள். பாலைக்கு நிலமின்மை தோன்றப் பாலையுஞ் சொலலாவன உள என்றார். 15 1098. சொல்லும் எல்லையின் புறத்தன - துணர்ச்சுரும்பு அலைக்கும் பல்பெரும் புனல் கானயாறு இடைஇடை பரந்து, கொல்லை மெல்இணர்க் குருந்தின்மேல் படர்ந்தபூம் பந்தர் முல்லை மென்புதல் முயல்உகைத்து அடங்கு நீள் முல்லை. துணர்ச்சுரும்பு - பூங் கொத்துக்களிலுள்ள வண்டுகளை. கான் யாறு - காட்டாறுகள். தளிர்களையுடைய குருந்த மரங்களின் மீது. புதல் - சிறு தூறுகளிலுள்ள. கான்யாறுகள் பரந்து முயல்களை உகைத்து (தாமும் பெருக்கினின்றும்) அடங்கும். கான்யாறுகள் பரத் தலால் முயல்கள் உகைத்துத் தங்களைக் காத்தற்குரிய இடங்களில் அடங்கும் என்னலும் ஒன்று. உகைத்து - ஓடி; எழுந்து. 1099. பிளவு கொண்டதன் மதிநுதல் பேதையர் எயிற்றைக் களவு கொண்டது தளவுஎனக் களவுஅலர் தூற்றும்; அளவு கண்டுஅவர் குழல்நிறம் கனியும் அக்களவைத் தளவு கண்டுஎதிர் சிரிப்பன; தமக்கும் உண்டு என்று. பிளவு . . . . . . . .எயிற்றை - பிறைபோன்ற நெற்றியையுடைய இடைச்சியர்களின் களவு கொண்டன என்று களாச் செடிகள் அலர் தூற்றும். அவர் குழல்நிறம் கனியும் - அப்பெண்களின் கூந்தல் நிறம்போலப் பழுத்துள்ள. (அக்களவு) தமக்கும் (களாச்செடிகட்கும்). அலர் தூற்றல் - பழித்தல், மலர் சொரிதல். சிரித்தல் - நகைத்தல், பூத்தல். தளவு - முல்லை அரும்பு. களவு - களாப்பழம். 17 1100. மங்யைர்க்கு வாள் விழிஇணை தோற்ற மான் குலங்கள் எங்கும்; மற்று, அவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும்; அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்தொழும் சிவன் மகிழ் திருமுல்லை வாயில். மாயோன் மேய காடுறை உலகமும் - தொல்காப்பியம் : அகம் 5. இடைக்கு இடை இடைகளுக்குத் தோற்ற. திருமுல்லை வாயில் என்னுந் திருப்பதி. 18 1101. நீறுசேர் திருமேனியர் நிலாத்திகழ் முடிமேல் மாறுஇல் கங்கைதான் அவர்க்கு மஞ்சனம்தர அணைந்தே ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை வேறு தன்பெரு வைப்புஎன விளங்கும்மா முல்லை. முல்லைநிலம். திருமஞ்சனம். கலிகைமாநகர் - திருவூறல்; இது தக்கோலம் என்று வழங்கப்படுகிறது; இங்கே இடபதேவர் வாயில் நீர் ஒழுகிய வண்ணமிருக்கும். 19 1102. வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம் வீசு தெண்திரை நதிபல மிக்கு உயர்ந்து ஓடிப் பாசடைத் தடம் தாமரைப் பழனங்கள் மருங்கும் பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ. பாசடை . . . . . . மருங்கும் - பசிய இலைகள் பொருந்திய பெரிய தாமரை மலர்களையுடைய வயல்களின் பக்கங்களிலும். பூசல் - அலைகள் மோதும். 20 1103. துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால், பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் பொலிந்தே, அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள் பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது - பாலி. துங்க மாதவன் சுரபியின் - வசிட்ட முனிவரது காமதேனுவின். அங்கண் நித்திலம் - அவ்விடத்துள்ள முத்துக்களையும். பங்கயத் தடம் - தாமரைத் தடாகங்கள். பாலி - பாலாறு. 21 1104. பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல் மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட வெள்ள நீர்இரு மருங்குகால் வழிமிதந்துஏறிப் பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது - பாலி. தைவர - தடவ. மள்ளர் - உழவர்கள். மணல் திடர் - மணல் திட்டைகளை. கைவருட - கையால் தடவ. சரவெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்குரைபுனற் கன்னி - சிந்தாமணி: 39. சரயு வென்பது தாய் முலை யன்னது. . . . . . . - கம்ப இராமாயணம்: பாடல். ஆற்று. 12. 22 1105. அனையஆகிய நதிபரந்து, அகன்பணை மருங்கில் கனைநெடும் புனல்நிறைந்து, திண்கரைப் பெருங்குளங்கள் புனைஇருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய், வினைஞர் ஆர்ப்புஒலி எடுப்பநீர் வழங்குவ - வியன் கால். பணை - வயல்களின். கனை - ஒலிக்கின்ற. புனை இருங்கடி - கட்டப்பட்ட பெரிய காவலையுடைய. வினைஞர் - உழவர்கள். வியன் - அகன்ற. 23 1106. மாறுஇல் வண்பகட்டு ஏர்பல நெருங்கிட வயல்கள் சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளைசிதறி நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன வேறு பல் வினையுடைப் பெருங் கம்பலை மிகுமால். பகட்டு - எருமைகள் பூட்டிய. கம்பலை - ஆரவாரம்; பேரொலி. 24 1107. வரும் புனல் பெருங் கால் களை மறித்திட வாளை பெருங் குலைப்பட விலங்குவ; பிறங்கு நீர்ப் பழனம் நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்து; சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பருவரால் தொகுதி. வாளை மீன்கள் மறித்திட (குறுக்கிட்டுத் தடுக்க). பெருங் குலைப்பட விலங்குவ - பெரிய கரைகள் உடைந்து விலங்குவன. பிறங்கும் - ஒளிரும். பழனம் - வயல்களில் - சேல்மீன்கள் (ஒன்றன் மேல் ஒன்றாகப்) படுத்து நீண்ட கரைகளை உயர்த்துவன. பருவரால் மீன்களின் கூட்டம். சுருங்கைநீர் வழக்கு அறுப்பன - மதகுகளி னின்றும் நீர் வருதலை அடைப்பன. 25 1108. தளைத் தடம்பணை எழுந்தசெந் தாமரைத் தவிசின் கிளைத்த சூல்வளை கண்படுப்பன; இடை எங்கும் விளைத்த பாசொளி விளங்கும் நீள் விசும்பிடை ஊர்கோள் வளைத்த மாமதி போன்று உள மருதநீர் வைப்பு. தளை தடம்பணை - வரம்புகளையுடைய அகன்ற வயல்களில். தவிசின் - பீடத்தில்; படுக்கையில். சூல் இளைத்த வளை - கருப்பத் தால் இளைத்த சங்குகள். விளைத்த பாசொளி - முற்றிய பச்சையொளி. வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் - புறம்: 120 விளைவமை தயிரொடு - சிந்தாமணி: 122. ஊர்கோள் - பரிவேடம்; சுற்றியது; கட்டழற் கதிரை ஊர்கோள் வளைத்தவர் வளைத்துக் கொண்டார் சிந்தாமணி: 1136; ஊர்கோள் மதியை உடுச் சூழ்ந்தாங்கு - உதயணன் கதை. மாமதி - பூரணச்சந்திரன். தாமரை இலை - விசும்பு; தாமரைப் பூ - ஊர்கோள்; வளை - மாமதி. 26 1109. ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு; பூங்கரும்பு அயல் மிடைவன பூகம்; அப்பூகப் பாங்கு நீள் குலைத் தெங்கு; பைங் கதலி, வண் பலவு, தூங்கு தீங்கனிச் சூதம் நீள் வேலிய சோலை, புடையன - பக்கத்தன. அப் பூங்கரும்பு அயல் மிடைவன - நெருங்கியிருப்பன. பூகம் - கமுக மரங்கள். பாங்கு - பக்கம். பைங்கதலி - பசிய வாழை மரங்களும். தூங்கு - தொங்கும். தீம் - இனிய. சூதம் - மா மரங்களும். 27 1110. நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின, நெல்லின் கூடு துன்றிய இருக்கைய, விருந்து எதிர் கொள்ளும் பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும் மாடம் ஓங்கிய மறுகன மல்லல் மூதூர்கள். வயல்கள் சூழ்ந்த பக்கங்களையுடையன. நெற்குதிர்கள் நெருங்கிய இருப்பிடங்களை யுடையன. பீடு - பெருமை. மறுகன - தெருக்களை உடையன. மல்லல் - வளப்பமுடைய. 28 1111. தொல்லை நான்மறை முதல் பெருங் கலைஒலி துவன்றி, இல்லறம் புரிந்து, ஆகுதி வேள்வியில் எழுந்த மல்கு தண்புகை மழைதரு முகில் குலம் பரப்பும் செல்வம் ஓங்கிய - திரு மறையவர் செழும் பதிகள். 29 1112. தீது நீங்கிடத் தீக்கலி யாம் அவுணற்கு நாதர் தாம்அருள் புரிந்தது; நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம் பூதிசாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும். தீக்கலியாம் அவுணற்கு - தீக்காலி என்றும் ஓர் அசுரனுக்கு. புத்திரப் பேறு கருதித் தவங் கிடந்த ஒரு மறையவனுக்குச் சிவ பெருமான் புத்திரப் பேறுஅருள் செய்தமை இங்கே குறிக்கப் பட்டிருக்கிறது. 30 1113. அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் பலரும் பருமி ஓடைகள் நிறைந்துஇழி பாலியின் கரையில் மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறாம் பொருஇல் கோயிலும் சூழ்ந்தது - அப்பூம் பணை மருதம். அருவி - மலை அருவி. புறவில் - முல்லை நிலத்து. ஆய் - மெல்லிய; அழகிய. பருமி - பலவாறு அணிந்து. மணிகளையும் மலர்களையும் அணிந்து என்க. பொருவில் - ஒப்பற்ற. பணை - வயல்களையுடைய. 31 1114. விரும்பு மேன்மைஎன் பகர்வது? விரிதிரை நதிகள் அருங் கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து பருங்கை யானையை உரித்தவர் இருந்தஅப் பாசூர் மருங்கு சூழ்தவம் புரிந்தது அன்றோ! மற்று அமருதம். பிற தலங்களின் சிவகலைகள் ஒடுங்கும் பதிகள் இரண்டு. ஒன்று தில்லை; மற்றொன்று திருப்பாசூர். இரவில் தில்லையிலும் பகலில் திருப்பாசூரிலும் அக் கலைகள் ஒடுங்கி பின்னே பரவும். பக லெலாம் பாசூர்மேய . . . . .முதலிய திருவாக்குகளை நோக்குக. 32 1115. பூமரும்புனல் வயல்களம் பாடிய பொருநர் தாம் அருங் கிளையுடன் தட மென்மலர் மிலைந்து, மாமருங்குதண் நீழலின் மருதயாழ் முரலும், காமர் தண்பணைப் புறத்தது - கருங் கழி நெய்தல். பூக்கள் மருவும் களம் - நெற் போர்க்களம். பொருநர் - உழவோர். மிலைந்து - சூடி. மா - மாமரத்தின். காமர் - விரும்பத்தக்க; பணை - மருத நிலத்தின். 33 1116. தூய வெண்துறைப் பரதவர் தொடுப்பன - வலைகள்; சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன - செருந்தி; ஆய பேர்அளத்து அளவர்கள் அளப்பன - உப்பு; சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன - தரளம். தூய வெண்மணற் றுறைகளில். பரதவர் - பட்டினவர். சேய - சிவந்த செருந்திப் பூக்கள். அப் பெரு நிலத்துள்ள அளங்களில். தரளம் - முத்துகள். 34 1117. கொடுவினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன் படுமணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்; தொடுகடல் சங்கு துறையவர் குளிப்பன; அவர்தம் வடு வகிர்க் கண் மங்கையர் குளிப்பன மணற் கேணி. படு - மிக்க; படுத்த, படிந்த எனினுமாம். துறையவர் - கரையார் களால். சங்குகள் குளிக்கப்படுவன. வடுவகிர் - மாவடுவின் பிளவினை யொத்த. 35 1118. சுழிப் புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய வழிக் கரைப் பொதிப் பொன் அவிழ்ப்பன - மலர்ப் புன்னை; விழிக்கும் நெய்தலின் விரை மலர்க்கண் சுரும்பு உண்ணக் கழிக் கரை பொதி சோறு அவிழ்ப்பன - மடல் கைதை. சுழிப்புனல் - சுழி நீரையுடைய. கடல் ஓதம் - கடலின் வாய் வெள்ளம். கரை வழியிலுள்ள புன்னை மரங்கள், பொன்போன்ற மலர் களை அவிழ்ப்பன. விழிக்கும் - மலரும். நெய்தலின் வாசனை மலர்க் கள்ளை (தேனை) சுரும்பு (வண்டுகள்) உண்ண. மடற் கைதை - மடல்களையுடைய தாழைகள். 36 1119. காயல் வண் கரைப் புரைநெறி அடைப்பன - கனி முள் சேய தண் நறுஞ் செழுமுகை செறியும் முண்டகங்கள்; ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன - அன்னம் தாய முன் துறைச் சூழல்சூல் ஞாழலின் தாது. காயல் - கழி: உப்பளமுமாம். புரைநெறி - துவாரவழி. முண்ட கங்கள் - தாழைகள்; வெள்ளத்தில் வந்து கரையை யடைக்கும் தாமரைகள் என்னலுமாம். ஆய - அக் கடற்கரைக்கணுள்ள; அழகிய எனினுமாம். அன்னங்கள் தாவிய துறைகளின் முன்னுள்ள இடங் களைச் சூழ்ந்த ஞாழற் பூக்களின் தாதுக்கள். 37 1120. வாம் பெருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பில் தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக் காம்பின் நேர் வரும் தோளியர் விழிக் கயல் விலைசெய் தேம் பொதிந்தசின் மழலைமென் மொழிய - செவ்வழி யாழ். வாம் . . . வரைப்பில் - தாவுகின்ற பெரிய அலைகலையுடைய கரை யிடத்தின் முன்னே குடிகளுள்ள எல்லையில். கயல்மீன்களிலே விழிக் கயல் - விழிகளாகிய கயல் மீன்கள். காம்பினேர் வரும் - மூங்கில் போன்ற. கழிக்கயல் - கழிக்கணுள்ள கயல்மீன்களை. தேம் - தேன். சிலவான மழலை. . . . . செவ்வழி யாழ் - செவ்வழி யாழ்ப்பண்; இப்பண் நெய்தலுக்குரியது. 38 1121. மருள் கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் ஒருத்தர்தம் பெருங் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த திருப் பரப்பையும் உடையது - அத்திரைக் கடல் வரைப்பு. இறக்கிய - சுமத்திய. திருப்பரப்பையும் - திருஎல்லையையும். கடல் வரைப்பு - நெய்தல் நிலம். 39 1122. மெய் தரும் புகழ்த் திரு மயிலாபுரி, விரைசூழ் மொய் தயங்கு தண் பொழில் திரு வான் மியூர் முதலாப் பை தரும் பணி அணிந்தவர் பதிஎனைப் பலவால் நெய்தல் எய்தமுன் செய்த அந் நிறை தவம் சிறிதோ? விரை. . . . .பொழில் - மணங்கமழ நெருங்குதலைக் கொண்ட சோலைகளை யுடைய. பைதரும்பணி அணிந்தவர் - படத்தை யுடைய பாம்பை யணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள. ஏனைய பலவால். 40 1123. கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்து மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும் நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால்; ஆடு நீள் கொடி மாடமா மல்லையே அனைய. கோடு - சங்கு: எறிதலுமாம்; பவளத்துடன் சேர்த்துக் கொம் பெனக் கோடலுமொன்று. மாடுமொய்வரை - பக்கத்தே நெருங்கிய மலைகளிலுள்ள. சினை - கிளை. மல்லை - மாவலிபுரம். 41 1124. மலை விழிப்பன என வயல் சேல், வரைப் பாறைத் தலை உகைப்பவும் தளைச் செறுவிடை நெடுங்கருமான் கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவும் ஆய் அலை புனல் பணை குறிஞ்சியோடு அணைவன அநேகம். சேல் மீன்கள் மலையின் பாறைகளிடத்தில் எழும்பிப் பாயவும். அம்மலைகளிலுள்ள கருமான்கள். தளைச்செறுவிடை - வரம்பு களை யுடைய வயல்களில். எருமை பூட்டிய ஏரை. பணை - மருதம். 42 1125. புணர்ந்த ஆன் நிரைப் புறவிடைக் குறு முயல், பொருப்பின் அணைந்த வான் மதி முயலினை இனம்என அணைந்து, மணம் கொள் கொல்லையில் வரகு போர், மஞ்சன வரைக் கார் இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும். பசுக் கூட்டங்கள் சேர்ந்த முல்லை நிலத்துள்ள குறுமுய லானது, மலையில் சேர்ந்த வான்மதிக்கணுள்ள முயலினை. போரில் வரைமஞ்சனக்கார் - மலையிலுள்ள நீர் கொண்ட மேகங்கள். அணைந்தும் இணைந்தும் கலப்பன. 43 1126. கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்துச் சிவலும் சேவலும் மாறியும், சிறு கழிச்சியர்கள் அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவளம் முத்து அளந்தும், உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம். கழியவர் - பரதவர். சிவலும் - கவுதாரியையும். ஏனலுக்கு - தினைக்கும். எயிற்றியர் - கானப் பெண்கள். உவரி - கடற்கரையி லுள்ள. ஒழுக்கம் - இடம்; ஆகுபெயர் - பழைய குறிப்புரை. 44 1127. அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி, இயலும் அன்னமும் தோகையும் எதிர் எதிர் பயில. வயலும் முல்லையும் இயைவன பலஉள மருங்கு. பக்கத்திலுள்ள நல்ல முல்லைநில இடைச்சியர்களின். அகன்று நீண்ட மருதநில உழத்தியர்களின். இயலும் - இசையும். பயில - நெருங்க. வயலும் - மருதமும். 45 1128. மீளும் ஓதம்முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் பாளை உக்கவும் விரவலின், பரத்தியர் பணைமென் தோள் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள். மீளும். . . . .தரளமும் - கரையிற் சென்று திரும்பும் வாய் வெள்ளம் விடுத்த வெண் முத்துக்களும். கமுகின் பாளை சிந்திய பூவும். விரவலின் - கலத்தலால் பணை - மூங்கிலை யொத்த. மாறாய்ச் சேர்த்து விளையாடி. 46 1129. ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித் தீய என்பன கனவிலும் நினைவுஇலாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல்வரைத்தோ. திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்து ஐந்திணை வளமுந் தெரித்துக் காட்ட மருத்தொண்டை வாய்ச்சியர்சூழ் குன்றைநகர்க் குலக்கவியே வல்லா னல்லால் - கருத்தொண்ட ரெம்போல்வா ரெவ் வாறு தெரிந்துரைப்பார் கலந்தார்க்கின்ப - மருத்தொண்ட ரணி யிலவை யொன்றோடொன்றியைந்தனவு மாங்காங் குண்டால். - காஞ்சிப் புராணம்: திருநாட்டு. 128. 47 1130. இவ் வளந்தரு பெருந் திரு நாட்டிடை என்றும் மெய் வளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப எவ் உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் கைவிளங்கிய நிலையது காஞ்சி மா நகரம். எந்த யுகங்களிலும். கை - ஒழுக்கம். 48 1131. ஆன தொல்நகர் அம்பிகை, தம் பெருமானை மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு ஊனம் இல்அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில். மான - பெருமை பொருந்திய. 49 1132. வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந்தருளித் துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது, தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரிய உள்ளவாறு கேட்டருளினாள் உலகை ஆளுடையாள். துள்ளும் வார்புனல் - ததும்பும் மிக்க நீரையுடைய. தெள்ளும் வாய்மையின் - தெளிந்த சத்தியத்தைக் கொண்ட. 50 1133. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்தருள, அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் - பெண்ணின் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து. ஆதரித்தாள் - விரும்பினாள். 51 எண்சீர் விருத்தம் 1134. நங்கை உள்நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே, அங்கண் எய்திய முறுவலும் தோன்ற, ‘mL¤jJ v‹bfhš Ëghš?என வினவ, இங்கு, நாத! நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரியப் பொங்கு கின்றதுஎன் ஆசைஎன்று இறைஞ்சிப் போகம் ஆர்த்தபூண் முலையினாள் போற்ற. போகமார்த்தபூண் முலையாள் தன்னொடும் - ஞானசம் பந்தர்: திருநள்ளாறு. 52 113. தேவ தேவனும் அதுதிரு வுள்ளம் செய்து, தென்திசை மிக்கசெய் தவத்தால், யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி; மற்று அதனுள் மாஅ மர்ந்தநம் இருக்கையில் அணைந்து, மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று ஏவ, எம்பெரு மாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள். மா மரத்தடியில். பிரியா விடை கொண்டு. 53 1136. ஏதம் இல்பல யோனி எண்பத்து நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த பேத மும்புரந் தருளும்அக் கருணைப் பிரான் மொழிந்த ஆகமவழி பேணிப் போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந்து எய்தி, மாத வம் புரிந்தருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்னளை விடுத்தான். ஏதமில் - குற்றமற்ற உரைச்சேரும் எண்பத்து நான்கு நூறா யிரமாம் யோனிபேத - நிரைச்சேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் கோயில் - ஞானசம்பந்தர்: திருவீழிமிழலை. புரந்தருளும் - காத்தருளும். போது. . . . போத - போகுங் குணத்தொடு தொழுது புறப்பட. உமையம்மையார் மா தவம் புரிந்நதருளுதற்கு. பொருப்பில் வேந்தனும் - மலையரையனும். பரிசனங்களை - ஏவல் செய்வோர்களை. 54 1137. துன்னு பல்உயிர் வானவர் முதலாச் சூழ்ந்து உடன்செலக் காஞ்சியில் அணையத் தன்னை நேர்வுஅரும் பதுமமா நாகம் தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே, அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய்! அடிய னேன்உறை பிலம்அத னிடையே மன்னுகோயில் கொண்டு அருளுவாய் என்ன மலைம டந்தைமற்று, அதற்குஅருள் புரிந்து. தன்னை நேர்வரும் - தனக்குத்தானே ஒப்பாகிய. உறை - வசிக்கும் மலைமடந்தை - பார்வதி தேவியார். 55 1138. அங்கு மண்ணுல கத்துஉயிர் தழைப்ப, அளவுஇல் இன்பத்தின் அருள்கரு இருத்தித் திங்கள் தங்கிய புரி சடையார்க் குத் திருந்து பூசனை விரும்பினள் செய்ய, எங்கும் நாடவும் திரு விளையாட்டால் ஏக மாமுதல் எதிர்ப்படாது ஒழியப் பொங்கு மாதவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் - பொன் மலை வல்லி. அளவில்லாத இன்பத்தையுடைய அருளைக் கருவாக் கொண்ட சிவலிங்கத்தை இருத்தி; அருளை உளங்கொண்டு என்னலுமொன்று. ஏகமா முதல் - சிவம். புரிவு செய்தனள் - விருப்பங் கொண்டாள். பொன் மலைவல்லி - பார்வதி தேவியார். 56 1139. நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது அஞ்செழுத்துமே ஆக, ஆளுடைய அம்மை செம்மலர்க் கைகுவித் தருளித் தஞ்சம் ஆகிய அருந்தவம் புரியத் தரிப்பரே? அவள் தனிப்பெருங் கணவர் வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் - மலைமகள் காண. நிரந்தரம் - எப்பொதும். தஞ்சமாகிய - தமக்குப் புகலாகிய. தரிப்பரோ. மாவின் மூலம் - மாமரத்தடியில். மலைமகள் - பார்வதி தேவியார். 57 1140. கண்ட போதில் அப் பெருதவப் பயன் ஆம் கம்பம் மேவிய தம் பெருமானை, வண்டு உலாம் குழல் கற்றைமுன் தாழ, வணங்கி, வந்துஎழும் ஆசைமுன் பொங்கக் கொண்ட காதலின் விருப்பு அளவு இன்றிக் குறித்த பூசனை, கொள்கைமேல் கொண்டு, தொண்டை அம்கனி வாய்உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள். கம்பம் - திருவேகம்பத்தில்; காஞ்சியில். கூந்தல் கற்றை. தொண்டையங் கனி - கொவ்வைக் கனிபோன்ற. 58 1141. உம்பர் நாயகர் பூ சனைக்கு, அவர்தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலைநின்று, எம்பிராட்டி அர்ச் சனைபுரி வதனுக்கு, இயல்பில் வாழ்திருச் சேடியர் ஆன கொம்பு அனார்கள் பூம்பிடகை கொண்டு அணையக் குலவு மென்தளிர் அடிஇணை ஒதுங்கி, அம்பி காவனம் ஆம்திரு வனத்தில் ஆன தூநறும் புதுமலர் கொய்தாள். அவர்தாம் - அவரே. இயல்பில் - நற்குணத்துடன். பூம்பிடகை - பூங்கூடை. குலவு - விளங்கும். ஆன - சிவ பூசைக்கு ஆன. 59 1142. கொய்தபல் மலர், கம்பைமா நதியில் குலவு மஞ்சனம், நிலவுமெய்ப் பூச்சு, நெய்த ரும்கொழும் தூபதீ பங்கள், நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் மெய்த ரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி. குலவு மஞ்சனம் - விளக்கமான திருமஞ்சனமும். நிலவு மெய்ப் பூச்சு - விளங்கும் சந்தனக் காப்பும். மெய் தரும்படி - உண்மையாக. சேடி மார்கள் உதவ. ஆகம விதியெலாம் எய்த. 60 1143. கரம் தரும்பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர் பால் நிரந்த காதல்செய் உள்ளத்தள் ஆகி, நீடு நன்மைகள் யாவையும் பெருக வரம் தரும் பொரு ளாம்மலை வல்லி மாறு இலாவகை மலர்ந்த பேர் அன்பால் சிரம் பணிந்துஎழு பூசை, நாள் தோறும் திருவுளம் கொளப் பெருகியது அன்றே. கைதரும்பயன். இது - இப் பூசை நிரந்த - பரந்த 61 1144. நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சணை செய்யும் அப்பொழுதில், காதல் மிக்கஓர் திரு விளையாட்டில் கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி, ஓதம் ஆர்கடல் ஏழும் ஒன்றாகி, ஓங்கி வானமும் உட்படப் பரந்து மீது செல்வது போல்வரக் கம்பை வெள்ளமாம் திருவுள்ளமும் செய்தார். ஓதம் ஆர் - வெள்ளம் நிறைந்த; அலை பொருந்திய எனி னுமாம். 62 1145. அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம்கயல் கண்ணி, தம் பெருமான் மேல் விண்எலாம் கொளவரும் பெருவெள்ளம் மீது வந்துறும் எனவெருக் கொண்டே, உள்நிலாவிய பதைப்பு உறுகாதல் உடன்தி ருக்கையால் தடுத்தும், நில்லாமை தண் நிலாமலர் வேணியி னாரைத் தழுவிக் கொண்டனள் - தன்னையே ஒப்பாள். வெருக்கொண்டு - தடுத்தாட் கொண்ட புராணம்: 114. குறிப்புப் பார்க்க. குளிர்ந்த நிலாமலருஞ் சடையுடைய சிவபிரானை எள் கலின்றி. . . வெள்ளங்கங் காட்டி வெருட்டிட.. சுந்தரர்: திருவேகம்பம்: 10. 63 1146. மலைக் குலக்கொடி பரிவு உறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை முவைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி, முறுகு காதலால் இறுகிடத் தழுவச் சிலைத் தனித்திரு நுதல் திருமுலைக்கும் செந்தளிர்க் கரங்களுக்கும் மெத்தெனவே, கொலைக் களிற்றுஉரி புனைந்ததம் மேனி குழைந்து காட்டினார் - விழைந்த கொள்கையினார். பிரிவுறும் - துன்புறும். குன்றின் உச்சி போன்ற முலையுடன். சிலைத் தனித்திரு நுதல் - வில்லைப் போன்ற ஒப்பற்ற அழகிய நெற்றியை யுடைய உமையம்மையார். கொலைக் களிற்றுரி தம் மேனி என்பது வலிய மேனி என்பதைக் குறிப்பால் உணர்த்துவது. அம் மேனியும் அம்மையார் காதலன் புக்குக் குழைந்தது என்றபடி. விழைந்த - பூசையை விரும்பிய. 64 1147. கம்பர் காதலி தழுவமெய் குழையக் கண்டு, நிற்பவும் சரிப்பவும் ஆன உம்பரே முதல் யோனிகள் எல்லாம், உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி, எம்பி ராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்றுஎடுத்து ஏத்த வம்பு உலா மலர் நிறையவிண் பொழியக் கம்பை யாறுமுன் வணங்கியது அன்றே. கம்பர். . . .குழைய - ஏகாம்பர நாதர் தங் காதலி (உமை யம்மையார்) தழுவத் திருமேனி குழைந்ததைக் கண்டு. நிற்பவும் சரிப்பவுமான - அசரம் சரமாகிய. உம்பரே - தேவர்களே. உயிரும் உடலும். வம்பு உலா - மணங் கமழும். கம்பா நதி உடனே பெருகுத லொழிந்து தாழ்ந்து (அடங்கிற்று). கம்பா நதி பெண்ணுருக் கொண்டு உமையம்மையாரை வணங்கினாள் என்று கூறிவோருமுளர். 65 1148. பூதி ஆகிய புனிதநீறு ஆடிப் பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து காதில் வெண்குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால், ஆதி தேவனார் ஆயும் மாதவம்செய் அவ்வரம் கொலோ! அகிலம்ஈன்று அளித்த மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு, வளைத்தழும்புடன் முலைச்சுவடு அணிந்தார். அருட் செல்வமாகிய தூய திருநீற்றைப் பூசி. கருத்தால் - கருத்தொடு. ஆதி. . . . .கொலோ - சிவபெருமான் தாமும் நுணுகிய மாதவஞ் செய்த அம் மேன்மையோ. அளித்த - காத்த. மாது - உமாதேவியார். மெய்ப்பயன் - தம் திருமேனியால். தழவுதலை. சுவடு - தழும்பு. உமாதேவியார் தவக் கோலத்துடன் சிவலிங்கப் பெருமானை இறுகத் தழுவியபோது அத் தேவியாருடைய கை வளையற் றழும்பும் முலைத் தழும்பும் பெருமான் திருமேனியில் படிந்தன. அத் தழும்புகளைப் பெறுதற்குச் சிவபெருமானும் தவஞ்செய்தனரோ என்றபடி. இது ஆதி . . . கொலலோ என்று குறிக்கப்பட்டது காண்க. 66 1149. கோதுஇலா அமுதுஅனையவள் முலைக்குக் குழைந்ததம் மணவாளநல் கோலம் மாதுவாழவே காட்டிமுன் நின்று, வரங்கள் வேண்டுவ கொள்கஎன்று அருள வேத காரணர் ஆய ஏகம்பர் விரைம லர்ச்செய்ய தாமரைக் கழல்கீழ் ஏதம் நீங்கியபூ சனை முடிந்தது இன்மைதான் அறிவிப்பதற்கு இறைஞ்சி. விரை. . . . கீழ் - மணங் கமழும் மலர்ந்த சிவந்த தாமரை போன்ற திருவடிக்கீழ். ஏதம் - குற்றம். முடிந்த தின்மை - முடியாமையை. 67 1150. அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சிஅஞ்சலி கூப்பிக் கொண்ட இற்றைஎன் பூசனை இன்னும் குறை நிரம்பிடக் கொள்கஎன்று அருள, வண்டுவார் குழல் மலைமகள் கமல வதனம் நோக்கி, அம் மலர்க்கண்நெற் றியின் மேல் முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை; நம்பால் என மொழிய. இற்றை - இன்று. கமல வதனம் - தாமரை முகம். முண்ட நீற்றர் - திரிபுண்டரமாகத் திருநீறணிந்த சிவபெருமான். 68 1151. மாறுஇ லாதஇப் பூசனை என்றும் மன்ன, எம்பிரான் மகிழ்ந்து கொண்டருளி, ஈறு இலாதஇப் பதியினுள் எல்லா அறமும் யான்செய அருள்செய வேண்டும்; வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய, இங்குஉளார் வேண்டின செயினும் பேறு மாதவப் பயன்கொடுத் தருளப் பெறவும் வேண்டும் என்றனள் - பிறப்பு ஒழிப்பாள். மன்ன - நிலைபெற. எம்பிரானே!. ஈறுசேர் பொழுதினும் இறுதி இன்றியே - மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியில் - கந்தபுராணம்; கடவுள் வாழ்த்து. 18. எல்லா அறமும் - முப்பத்திரண் டறங்களையும். உலகெலாம் ஈன்று காக்குந் தாயார் உமையம்மை யாராகலான், பிள்ளைகளாகிய உயிர்கள் பொருட்டுத் தாம் வேண்டுதல் செய்கிறார். திருவடிப் பிழைத்தல் பெரும்பிழை யாதலின் அஃது ஒழிந்த மற்றப் பிழைகளைப் பொறுத்துப் பேறு அளித்தருளல் வேண்டும் என்றபடி. பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன் - சுந்தரர்: திருவொற்றியூர். பிறப்பு - உயிர்களின் பிறவித் துன்பத்தை. 69 1152. விடையின் மேலவர் மலைமகள் வேண்ட, விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே, இடை அறா அறம் வளர்க்கும் வித்து ஆக இக பரத்துஇரு நாழிநெல் அளித்துக் கடையர் ஆகியும் உயர்ந்தவ ராயும் காஞ்சி வாழ்பவர் தாம்செய் தீவினையும் தடை படாது மெய்ந் நெறிஅடை வதற்குஆம் தவங்கள் ஆகவும் உவந்து அருள் செய்தார். அம்மையார் விரும்பிசெய்த பூசனையை ஏற்று அங்கு வீற்றி ருந்து இடையறாமல் (நீங்காமல்) முப்பத்திரண்டறங்களையும் வளர்க்கும் வித்தாகும் படி. இகத்துக்கும் பரத்துக்கும். 70 1153. எண்ணரும் பெரு வரங்கள் முன் பெற்று அங்கு எம்பிராட்டி தம்பிரான் மகிழ்ந் தருள மண்ணின் மேல் வழிபாடு செய்தருளி மனை அறம்பெருக் கும்கரு ணையினால், நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப் புண்ணியத் திருக் காமக் கோட்டத்துப் பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும். பல்க - பெருக. புரக்கும் - வளர்ப்பாள். 71 1154. அலகில் நீள் தவத்து அறப்பெருஞ் செல்வி அண்ட மாம் திருமனைக்கு இடும் தீபம் உலகில் வந்துறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள்மலர் மூன்றுடன் ஒன்று நிலவ ஆண்டினுக்கு ஒருமுறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்தபேர் உலகம் மலர் பெருந்திருக் காமக் கோட்டத்து வைத்த நல்லறம் மன்னவே மன்னும். அலகில் நீள் தவத்து - அளவில்லாத பெருந்தவத்தையுடைய. அண்டமாகிய வீட்டுக்கு. தீபம் - சோமன் சூரியன் அக்கினி. மூன்று மலர்கள் ஒருதாளில் விளங்குமாறு ஆண்டினுக்கு ஒருமுறை மலரும் பேருலகத்தில். இவ்வற்புத மலர்கள் மலரும் காமக்கோட்ட மென்க. 72 1155. தீங்குதீர்க்கும் நல்தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திருக்காமக் கோட்டத்தின் பாங்குமூன்று உலகத்தின் உள்ளோரும் பரவுதீர்த்தமாம் பைம்புனல் கேணி வாங்குதெண் திரைவேலைமே கலைசூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் ஓங்குக தன்வடி வாய்நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால். பாங்கில் - அருகில். வளைந்த தெள்ளிய அலைகளையுடைய கட லாகிய மேகலை சூழ்ந்த. படியாய் - ஏணியாய். 73 1156. அந்தம் இன்றிநல்லறம் புரிந்து அளிக்கும் அன்னை தன்திருக் காமக்கோட் டத்தில் வந்து, சந்திர சூரியன் மீது வழிக் கொளாது, அதன் மருங்கு போதலினால் சந்த மாதிரம் மயங்கிஎம் மருங்கும் சாயை மாறிய தன்திசை மயக்கம் இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளதுஒன்று இன்றும்அங்கு உளதால். மீது - கோட்டத்தின்மீது. மருங்கு - பக்கத்தில். சந்தமாதிரம் - நல்ல திசைகள். எம் மருங்கும் - எவ்விடத்தும். 74 1157. கன்னி நல்நெடுங் காப்புடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதிக்கரை மருங்கு, சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திருப் பெரும்பெயர் இருக்கையில் திகழ்ந்து, மன்னு வெங்கதிர் மீதுஎழும் போதும் மறித்து மேல்கடல் தலைவிழும் போதும் தன் நிழல் பிரியாதவண் காஞ்சித் தானம் மேவிய மேன்மையும் உடைத்தால். கன்னி - உமையம்மையார்; துர்க்கை என்போருமளர். காப் புடை வரைப்பில் - காவலுடைய காஞ்சிபுரத்தில். கன்னி - அழியாத என்றும், காப்பு - மதிலையுடைய என்றுங் கூறலுமாம். காஞ்சி நதி. இருக்கையில் - கோயிலுடன். கதிர் - சூரியன். மறித்து - மீண்டும். காஞ்சித் தானம் - மா மரமுள்ள இடம். 75 1158. மறைகளால் துதித்து அருந்தவம் புரிந்து, மாறு இலாநிய மம்தலை நின்று, முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல்உயிர் எல்லாம், நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு காமங்கள் அவர் அவர்க்கு அருளி, இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண் இறந்த - அத் திருநகர் எல்லை. நீடு காமங்கள் - விரும்பும் வரங்களை. 76 1159. மன்னுகின்ற அத் திருநகர் வரைப்பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன் துரக்க எய்திய தொலைவுஇல் ஊக்கத்தால், தன் நிலத்தில்நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனுஎழும் தரணி எந்நி லத்தினும் காண்புஅரும் இறவாத் - தானம் என்றுஇவை இயல்பினில் உடைத்தால். வரைப்பின் - இன் சாரியை. துன்னும் - வரும். தூற்றில் - புதரில். துரக்க - துரத்த. தொலைவு இல் - கேடில்லாத. யானையை முயல் துரத்தி அகற்றும் இடமன்றியும். தனு எழுந்தரணி - உயிர் நீங்கிய உடல் மீண்டும் உயிர்பெற்றெழும் இடமும். காண்பவரும் - காண்டற் கரிய. 77 1160. ஈண்டு தீவினை யாவையும் நீக்கி, இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம், வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம், நன் மங்கல தீர்த்தம், நீண்ட காப்புடைத் தீர்த்தம், மூன்று உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமர நாட்டவர் ஆடுதல் ஒழியார். ஈண்டு - சேரும். ஆண்டு - அக் காஞ்சி நகரில். அமர நாட்டவர் - தேவலோகத்தார். 78 1161. தாளது ஒன்றினில் மூன்றுபூ மலரும் தமனியச் செழுந் தாமரைத் தடமும் நீளவார்புனல் குடதிசை ஓடி, நீர்கரக்கு மாநதியுடன் நீடு நாள் அலர்ந்த செங்குவளை, பைங் கமலம், நண்பகல் தரு பாடலம், அன்றிக் காள மேகம் ஒப்பாள் உறைவரைப்பில் கண் படாத காயாப் புளி உளதால். தமனியம். . . . . தடம் - பொற்றாமரைக் குளமும். நீள வார் புனல் - மிகப்பெருகும் நீர். குடதிசை - மேற்குத்திசை. நீர் சுரக்கும் - அந்நீர் மறையும். நீடுநாள் - நெடுநாள். நண்பகல் தரும்பாடலம் - நடுப் பகலில் மலரும் பாதிரி. உறை - வீற்றிருக்கும். . . . .ஒப்பான் - காமாட்சி அம்மையார். கண்படாத - உறங்காத. 79 1162. சாயை முன்பிணிக் கும்கிணறு ஒன்று, தஞ்சம் உண்ணின்நஞ் சாம்தடம் ஒன்று, மாயை இன்றிவந்து உள்அடைந் தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று, மேய அவ்உரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்று, விண்ணவரோடு ஆய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால். தன்னைப் பார்த்தோர் சாயையை அவருக்குப் புலப்படாமல் அடக்கிக்கொள்ளும். தஞ்சம் உண்ணின் - சிறிது உண்டாலும். மாயைஇன்றி - ஒரு மாயமுமில்லாமல். பிலம் - பிலத்துவாரம். விண் ணவரோடு கலந்ததாலாகிய இன்பம் சேர்க்கும். 80 1163. அஞ்சுவன் கரத்து ஆறுஇழி மதத்துஓர் ஆனை நிற்கவும் அரைஇருள் திரியும் மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப, நஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்று அரையின் நாம மூன்று இலைப் படை உடைப் பிள்ளை எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும். அஞ்சு. . .நிற்கவும் - ஐந்து வலிய கைகளையும் ஆறுபோல் ஓடும் மூன்று மதத்தையுமுடைய கணபதி நிற்கவும். பாயிரம்: 3. குறிப்புப் பார்க்க. அரை. . .திரியவும் - நள்ளிருளைத் திரிக்கும் கருமேகம் நீள்வது போன்ற திருமேனியுடன் தாமரை மலர்போன்ற திரு வடிகளில் வளப்பமுடைய சிலம்பு ஒலிக்க நஞ்சு உமிழும் பற்களைக் கொண்ட பாம்பணிந்த வெற்றரையை யடைய அச்சுமூட்டும் முத் தலைச் சூலத்தை ஏந்திய வைரவர் ஒழிவின்றி முன் திரியவும். 81 1164. சத்தி தற்பர சித்த யோகிகளும் சாதகத் தனித் தலைவரும் முதலா நித்தம் எய்திய ஆயுள்மெய்த் தவர்கள் நீடு வாழ்திருப் பாடியும் அநேகம்; சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி, வித்தகக் கரி மேல்கொளும் காரி மேவு செண்டு அணை வெளியும் ஒன்று உளதால். சத்தியை யுடைய தற்பர சிவத்தினிடம் வைத்த சித்தங் கொண்ட யோகிகளும். யோகசாதகத் தனித் தலைவரும். நித்தம் எய்திய - அழியா நிலை அடைந்த. திருப்பாடியும் - பன்ன சாலைகளும். வித்தகக் கரி - நல்ல யானை. காரி - சாத்தா; ஐயனார். செண்டணை வெளி - வையாளி வீதி. 82 1165. வந்து அடைந்தவர் தம்உரு மாய மற்றுளாரைத் தாம் காண்பிடம் உளது; சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோகபீ டமும்உளது; என்றும் அந்தம் இல்அறம் புரப்பவள் கோயில் ஆன போகபீடமும் உளதாகும்; எந்தை யார்மகிழ் காஞ்சி நீடு எல்லை, எல்லை இல்லன உள்ள; ஆர் அறிவார்? மாய - (பிறர் காணாதவாறு) மறைய. மற்றுளாரை - அங்கே வாராத வரை. புரப்பவள் - காமாட்சி வீற்றிருந்தருளும். எந்தையார் - ஏகாம்பரநாதர். உள்ளன யார் அறிவார். 83 1166. தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை; வேண்டி னார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய்ந் நெறிக்கண் நின்றார்கள்தாம் விரும்பித் தீண்டில் யாவையும் செம் பொன் ஆக்குவதுஓர் சிலையும் உண்டு; உரை செய்வதற்கு அரிதால் - ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அந் நகரம். துரக்கும் - ஓட்டும். சுரர்கள் - தேவர்கள். ஒழிக்கும் சிலையும். ஆறினையும். யோனிகளையும். அளிக்கும் - காக்கும். 84 1167. என்றும் உள்ளஇந் நகர்கலி யுகத்தில் இலங்கு வேல்கரி காற்பெரு வளத்தோன் வன்தி றல்புரி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் தனக்குஇதன் வளமை சென்று வேடன்முன் கண்டுஉரை செய்யத் திருந்து காதம் நான்கு உட்பட வகுத்துக் குன்று போலும் மா மதில் புடை போக்கிக் குடி இருத்தின கொள்கையின் விளங்கும். கரிகாற் பெருவளத்தோன் - கரிகாற் சோழன். இவன் நெருப்பால் கரிந்த காலையுடையவன்; காவிரிப்பூம் பட்டினத்தை ஆண்டவன்; இமயம்வரை சென்றவன்; இமயத்திற் புலிக்கொடி பொறிந்தவருள் ஒருவன்; இமயத்தைச் செண்டால் அடித்தவன்; காஞ்சியில் சாத்தன் அருளால் செண்டு பெற்றவன். செண்டு கொண்டு கரிகாலனொரு காலிலிமயச் சிமய மால்வரை திரித்தருளி மீள்வதனைப், பண்டு நின்ற படி நிற்க விதுவென்று முதுகிற் பாய் புலிப் பொறி குறித்தது மறித்த பொழுதே கலிங்கத்துப் பரணி; இராச. 1. கச்சி வளைக் கைச்சி காமக் கோட்டங்காவல், மெச்சி யினித்திருக்கு மெய்ச்சாத்தன் - கைச் செண்டு, கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான், செம்பொற் கிரி திரித்த செண்டு - சிலப்பதிகாரம். 5 - இந்திர. 95 - 8. உரை, மேற்கோள். 85 வேறு 1168. தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்பர் ஆடல் சார்ந்துஅசைய, அதன் மருங்கு சுரும்புதாழ்ந்து பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப் பணைமருதம் புடைஉடைத்தாய்ப் பாரில் நீடும் திண்காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழுங்கிடங்கு திருமறைகள் ஒலிக்கும்தெய்வ வண்காஞ்சி அல்குல் மலைவல்லி காக்க வளர்கருணைக் கடல்உலகம் சூழ்ந்தால் மானும். காஞ்சி - மா மரத்தின். சினை - கிளைகளிலுள்ள; கிளைக ளாகிய எனினுமாம். சுரும்பு தாழ்ந்து - வண்டுகள் தங்கி. காஞ்சிப் பண். சோலையை வேலியாகவுடைய வயல்கள் நிறைந்த மருத நிலத்தைப் பக்கத்திற் கொண்டதாய். நொச்சி இஞ்சி - நொச்சியாகிய மதில்; காவல் வேண்டாத அரண் என்றபடி நொச்சி வேலித் தித்தனுறந்தை -அகம்: 122. கிடங்கு - அகழி. காஞ்சி - மேகலை யணிந்த. மானும் - போலும். காஞ்சி - உலகம்; அகழி - கருணைக் கடல். 86 1169. கொந்துஅலர்பூங் குழல்இமயக் கொம்பு கம்பர் கொள்ளும்பூ சனைகுறித்த தானம் காக்க மந்திரமா மதில்அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்; அந்தம் இல்சீர்க் காஞ்சியைவந்து அடைந்தார்க்கு அன்றி அடைக்களங்கம் அறுப்புஅரிது என்று அறிந்து சூழ வந்து அணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மாகடலும் போலும் மலர்க் கிடங்குமாதோ. கொந்து - கொத்து. இமயக் கொம்பு - உமையம்மையார். பூசைத் தானம். அவர் - சிவபெருமான். வகுப்பு - நிருமாணம். அடைக் களங்கம் - தம்மை யடைந்த குற்றத்தை. கறுப்பு - கருநிறத்தையும் (களங்கத்தையும்). வகுப்பைப் போலும் மலர்க் கிடங்கு, கடலைப் போலும். 87 1170. ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும் வாயில் அப் பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல, ஓங்கு நிலத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள்செய்த ஒழுக்கம்; அல்லால் தீங்குநெறி அடையாத தடையும் ஆகிச் செந் நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம் தாம்குலவ நிலவிவளர் ஒளியால் என்றும் தடநெடுவான் அளப்பனவாம் தகைய ஆகும். மதிலுடன் விளங்கும் வாயிலானது. விளங்கி நின்று வளரும் ஒளியால். 88 1171. மாறுபெறல் அருங்கனக மாடம்நீடு மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த ஆறுபயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்தநகர், அணிவரைகள் நடுவு போக்கிக் கூறு படு நவ கண்டம் அன்றி, மல்கக் கொண்ட அநேகம் கண்டம் ஆகி அன்ன வேறொரு மண்ணுலகதனில் உளதால் என்ன விளங்கிய மா லோக நிலை மேவிற்று அன்றே. ஒப்பிடுதற்கரிய பொன்மயமான மாடங்கள் மிகுதியாயுள்ள. மணிமறுகும் - அழகிய வீதிகளும். வளத்தால் வந்த வகைகளை யுடைய கடைத் தெருக்களும். நகர் - காஞ்சி நகரானது. மலைகளை இடையிட்டு நவ கண்டங்களின் எல்லை பிரித்தமையான, அணி. . . . . கண்டம் என்றார். மல்க - நெருங்க. அன்ன - அத்தன்மையான. தன்னில் உளதால். 89 1172. பாகமருங்கு இருபுடையும் உயர்ந்து நீண்ட படர்ஒளிமா ளிகைநிரைகள் பயில்மென் கூந்தல் தோகையர்தம் குழாம்அலையத் தூக்கு முத்தின் சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி மாகம்இடை ஒளிதழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பில் வண்ண மேகம்இடை கிழித்துஒழுகும் தெய்வக்கங்கை மேல் நதிகள் பல மண்மேல் விளங்கி ஒக்கும். பகுக்கப்பட்ட இடங்களாய் இரு பக்கமும். மாளிகை வரிசை கள் நெருங்கியும். பெண்கள் கூட்டம். தூக்கப்பட்ட முத்து மாலை களின் குளிர்ந்த ஒளி நிறைந்ததுமாகிய வீதி. பயில் துதைந்த வீதி. மாக மிடை - விண்ணிடை மருங்கில் விண்மீன்கள் அலைய. வண்ணம் - கருநிறம் பொருந்திய. கங்கை என்னும் பெயருடைய மேன்மை நதி கள். பல கங்கா நதிகள் என்றபடி. முத்துகள் - தாரகைகள். அவை களின் ஒளிதுதைந்த வீதிகள் - நதிகள். 90 1173. கிளர்ஒளிச்செங் கனகமயம் தானாய் மாடு கீழ்நிலைஓர் நீலச் சோபானம் பூணக் கொள அமைத்துமீது ஒருபால் கன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே, அளவு இல் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி அகழ்ந்து, ஏனம் ஆனானும் அன்னம் ஆகி வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உளமற்று மறுகு தோறும். கனகமயந் தானாய் நீடும் மாளிகைகள் உள. மாடு - அருகே. நீலமணிப்படிகள்பூண. . . . . . பிழம்பானார் தம்மை - சிவபெருமானை. அகழ்ந்து ஏனம் ஆனானும் - மண்ணைத் தோண்டும் பன்றியா னவனும். கனகமாளிகை - சுடர்ப்பிழம்பான சிவபெருமான். மாளிகை அடியிலுள்ள நீலச் சோபானம் - பன்றி. குலவயிரச்சாலை - அன்னம். 91 1174. மின்பொலிபல் மணிமிடைந்த தவள மாடம் மிசைப் பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது பொன்புரையும் செக்கர்நிறப் பொழுது தோன்றும் புனிற்று மதி கண்டுஉருகிப் பொழிந்த நீரால் வன்புலியின் உரிஆடைத் திருஏ கம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு அன்புஉருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள - அலகு இலாத. தவளம் - வெண்மை. மாடமிசைப் பதிக்கப்பெற்ற சந்திர காந்தக் கற்கள். பொன்போலும். பொழுது - அந்தி வேளையில். புனிற்றுமதி - இளம் பிறையை. மாடம், அடியவரும் அனையனவாக அலகில்லாதன (அளவில்லாதன) அந்நகரிலிருக்கின்றன என்க. அந்தி - செஞ்சடை; புனிற்றுமதி - இளம் பிறை; சந்திர காந்தக்கல். நீர் - அடியவர் கண்ணீர். 92 1175. முகில் உரிஞ்சும்கொடி தொடுத்த முடிய ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைகைள் முற்றும் சுற்றும் நிகர் இல் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலினால் நிறைதவம்செய் இமயப் பாவை நகில்உழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும் அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும். முடிய - சிகரங்களையுடைய. நிழலினாலே நிறைதலினால் - பிரதி பிம்பத்தால் அதனுள் நிறைதலால். இமயப்பாவை - பார்வதி தேவி யார். நகில் உழுத - முலைகள் அழுந்திய. பண்டாரம் - கருவூலம். 93 1176. பொன்களப மாளிகை மேல் முன்றில் நின்று பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றிஆடும் விலபுருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவும் மாதர் அன்புமுதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணிமணிச்சே டியர்தொகுக்கு மவையும் ஆகி, நல்கனக மழைஅன்றிக் காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும் நாளும். பொற்களபம் - பொன்னால் செய்யப்பெற்ற யானைக் கன்றுகள் அமைக்கப்பட்டுள்ள; பொன் சாந்துமாம். முன்றில் - முற்றத்தில். கழங்கு - கழற்சிச் காயையும். கலன்கள் - அணிகளி னின்றும். விழுகின்ற பொன்களும். கெழுவு துணை - பொருந்தும் நாயகர்களுடன். அன்புமுதிர். அணி. . . . . ஆகி - ஆபரணங்களிலுள்ள மணிகளைச் சேடியர்கள் தொகுக்கும் அவைகளுமாய் (மணிகளு மாய்). விழுவனவும் அவையுமாகி. கனமழை - பொன்மழை. 94 1177. பூமகளுக்கு உறையுள் எனும் தகைய வான பொன் மாடத்து அரமியங்கள் பொலிய நின்று, மாமகரக் குழைமகளிர் மைந்தர்அங்கண் வந்துஏறு முன் நறுநீர் வண்டல் ஆடத் தூமணிப்பொன் புனைநாளத் துருத்தி வீசும் சுடர்விடுசெங் குங்குமநீர்த் துவலை தோய்ந்த காமர்மணி நாசிகையின் மருங்கு தங்கும் கருமுகில்கள் செம்முகில்கள் ஆகிக் காட்டும் பூமகளுக்கு உறையுள் - இலக்குமி தேவிக்கு வாசதலம். அரமி யங்கள் - நிலா முற்றங்களில். மகரகுண்டலமணிந்த. அங்கண் - அந்நிலா முற்றங்களில். நறு நீரால். வண்டல் - மகளிர் ஆடல்களுள் ஒன்று. நாளத்துருத்தி - துளைகளையுடைய நீர்த்துருத்தி. துவலை - துளிகள். அழகிய மணிகள் பதித்த கோபுர நாசிகளின். 95 1178. இமம்மலிய எடுத்தநெடு வரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச் சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து தமர்களுடன் இழிந்து ஏறு மைந்தர் மாதர் தங்களையும், விசும்பிடை நின்று இழியா நிற்கும் அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு அறிவு அரிதாம் தகைமமையன அநேகம் அங்கண். இமம் மலிய - பனி நிரம்ப. விளங்குகின்ற சுண்ணச்சாந்து பூசிய வெண்மையான. கோட்டுச்சிமை - சிகரத்தின் உச்சியை. சோபான நிரை யும் விண்ணும் - படிகளின் வரிசையையும் விண்ணையும் (வெவ்வேறு பிரித்து). அவற்றுள் - அப்படிகளில். தமர்களுடன் - உறவினர்களுடன். இழிந்து - இறங்கி. தேவர்களையும் தேவப் பெண்களையும். 96 1179. அரவ நெடுந்தேர் வீதி அருகு மாடத்து அணி மணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட விரவு மரகதச் சோதி வேதித் திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும் குரவு அலரும் குழல்மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம் பரவை நெடுந் தரங்க மிசை விளங்கித் தோன்றும் பவள நறுந் தளிர்அனைய பலவும் பாங்கர். அரவம் - ஒலியையுடைய. வியல் - அகன்ற. விரவும் - கலந்த. வேதி - ஓமகுண்டங்களுள்ள. விளிம்பின் - ஓரத்தின்; கரையின். துளும் பும் - அலையும். குரவலருங்குழல் - குராமலர்கள் ஒளிரும் கூந்தலை யுடைய. அடியில் - பாதங்களில். சுவட்டுக்கோலம் - அடையாளக் குறி. பரவை நெடும் தரங்க மிசை - கடலின் நீண்ட அலைமீது. 97 1180. வெம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடுந் தேர்க் கால் இசைப்பும் விழவு அறாத அம் பொன் மணி விதிகளில் அரங்கில் ஆடும் அரிவையார் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்; உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர் பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வப் பாவையர் நூபுர அரவத் துடனே பல்கும். வெம்புசினக் களிற்று - கொதித்தெழுங் கோபத்தையுடைய ஆண் யானைகளின். மாவின் - குதிரைகளின். விழவு அறாத - திரு விழா நீங்காத. அரங்கில். . . . .ஒலியோடு - சபையில் நடம்புரியும் பெண் மணிகளின் சிலம்பொலியோடு. இம்பர் அமையும் - இங்கே அமையும். உம்பரின் - மேலே (விண்ணில்). இரவி மா - சூரியன் குதிரைகளின். பிரமதேவன் தேர் எழுப்பும். நூபுர அரவத்துடன் - சிலம்பொலியுடன். பல்கும் - கலந்து பெருகும். 98 1181. அரு மறை அந்தணர் மன்னும் இருக்கை ஆன ஆகுதியின் புகைஅடுத்த அம்பொன் மாடப் பெருமறுகு தொறும்வேள்விச் சாலை எங்கும் பெறும்அவிப்பா கம்கொடுக்கும் பெற்றி மேலோர் வருமுறைமை அழைக்கவிடு மந்திரம் எம் மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லாத் தேவரையும் அணித்து ஆகக் கொண்டு செல்லும். பெற்றி - குணம் வாய்ந்த. தேவர்களை வருமாறு அழைக்க விடும் மந்திரங்கள். 99 1182. அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் விரை செய் நறுந் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்பு உறுசெய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும் நில மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார். தெற்றி முற்றத்து - சித்திர கூடங்களின் முற்றத்திலே. புரசை மதக்கரிகளொடு - கழுத்திற் கயிற்றையுடைய மதயானைகளோடு; (புரசை - யானைக் கழுத்திற்கட்டுங் கயிறு; யானையைக் கட்டுங் கயிறு; புரோசை). மணங் கமழும் மலர்களால் தொடுக்கப் பெற்ற மாலையணிந்த. விஞ்சை - வித்தையுடைய. விண்ணோர் கூட்டம் நெருங்கும். நிரந்து - பரந்து நின்று. 100 1183. வெயில் உமிழும் பல் மணிப் பூண் வணிக மாக்கள் விரவு நிதிவளம் பெருக்கும் வெறுக்கை மிக்க வயின் நிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே, கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்றப் பயிலும் உருப் பல கொண்டு நிதிக் கோன் தங்கக் பயில் அளகா புரி வகுத்த பரிசு காட்டும். வெறுக்கை - செல்வம். வயின்நிலவும் - இடத்தால் விளங்கும். மணிக்கடைகளையுடைய. காஞ்சியிலுள்ள பல ஆலயங்களிலும் திரு வேகம்பத்திலும். பயிலும் - (பலவுருவங்கொள்ளத்தான்) கற்றுப் பழகிய. நிதிக்கோன் - குபேரன். பயில் - சொல்லப்படும். பரிசு - தன்மை. 101 1184. விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக் குடிமைப் பெருஞ் செல்வர் விளங்கும் வேணி மழஇளவெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் தொழ உலகு பெறும் அவள் தான் அருளப் பெற்றுத் தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும். விழுக்குடிமை - சீரியகுடிமை. ஒளிருஞ் சடையில் மிகவும் இளமை வாய்ந்த வெள்ளிய சந்திரனை அணிந்த ஏகாம்பரதநாதர். உணவின் மூலம் - இருநாழி நெல்லை. (வேளாளர்கள்) பெற்று. தரும வினைக்கு - வேளாண்மைக்கு. 102 1185. ஓங்கிய நாற்குலத்து ஒவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி தாம் குழுமிப் பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினைத் தொழில் முறைமை வழாமை நீடு பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமைப் பால அன்றே. புணர்வில் - சேர்க்கையால். குழுமி - கூடி. ஆங்காங்கே நிறை யுறுமாறு சந்ததிகளை விருத்திசெய்து; உறவினருடன் கலந்து என் போருமுளர். தம் மரபில் செய்தற்குரிய. நீடு பாங்கு - மிக்க நலத்துடன். இவ்வாசிரியர் காலத்தில் காஞ்சி மாநகரில் சாதிகள் இருக்கை பெற்றி ருந்தமை இங்கே குறிக்கப்பட்டது. 103 கலி விருத்தம் 1186. ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய சோதி நீள்மணித் தூபமும் தீபமும் கோது இல் பல் இயமும் கொடியும் பயில் வீதி, நாளும் ஒழியா விழா அணி. ஆதிமூதெயில் - முதன்மையான பழைய மதில்களால் சூழப் பெற்ற. பல்லியமும் - பலவகை வாத்தியங்களும். பயில் - நெருங்கிய. 104 1187. வாயில் எங்கணும் தோரணம்; மா மதில் ஞாயில் எங்கணும் சூழ் முகில்; நாள் மதி தோய் இல் எங்கணும் மங்கலம்; தொண்டர் சூழ் கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம். மதில் ஞாயில் - மதிலுறுப்புகள். நாள் மதி தோய் இல் - நட்சத் திரங்கள் சூழ்ந்த சந்திரன் தவழும் இல்லங்கள். உம்பர் குலக்குழாம் - தேவ இனத்தாரின் கூட்டம். 105 1188. வேத வேதியர் வேள்வியே தீயன; மாதர் ஓதி மலரே பிணியன; காதல் வீதி விலக்கே கவலைய; சூத மாதவியே புறம் சூழ்வன. தீயன - தீயை (நெருப்பை) உடையன; (வேறு தீயன - தீமையன - இல்லை என்றபடி). ஓதி - கூந்தலிலுள்ள. பிணியன - கட்டப் பட்டன; (வேறு பிணியன - நோயுடையன - இல்லை). காதல் வீதி களில். விலக்கே - கூட்ட மிகுதியால் ஒருவரை ஒருவர் விலக்கல்களே. கவலைய - சந்திப்பன; (வேறு கவலைய - துன்பமுடையன - இல்லை). சூதமாதவி - மாமரங்களும் குருக்கத்தி மரங்களுமே. புறஞ் சூழ்வன - பக்கங்களில் சூழ்ந்திருப்பன; (வேறு சூழ்வன - தாழ்ந்து இரப்பன - இல்லை). 106 1189. சாய லார்கள் நுசுப்பே தளர்வன; ஆய மாடக் கொடியே அசைவன; சேய ஓடைக் களிறே திகைப்பன; பாய சோலைத் தருவே பயத்தன. மயில் போலுஞ் சாயலுடைய பெண் மக்களின் இடைகளே தளர்வன; (வேறு தளர்வன இல்லை). ஆய மாடம் - அப் பெண் களின் திரளையுடைய மாடங்களில். சேய ஓடைக் களிறே - செம் பொன் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளே. பாய - பரந்த. தருவே - மரங்களே. பயத்தன - பழங்களையுடையன; (வேறு பயத்தன - அச்சமுடையன - இல்லை). 107 1190. அண் ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன; தண் நறுஞ் செழுந் தாதே துகள்வன; வண் ணநீள் மணி மாலையே தாழ்வன; எண் ணில் குங்குமச் சேறே இழுக்கின. அண்ணலார் - சிவபெருமான். ஆர்த்தன - பிணிப்பன; நிறை விப்பன, நுகர்விப்பன என்னலுமாம்; (வேறு ஆர்த்தன - அலர் தூற்றுங்கொடுமையன - இல்லை). பூந் தாதுகளே. துகள்வன - புழுதி யாவன; (வேறு துகள்வன - குற்றமுடையன - இல்லை). வண்ணம் அழகிய; பன்னிறம் வாய்ந்த. தாழ்வன - தொங்குவன; (வேறு தாழ்வு டையன இல்லை). இழுக்கின - வழுக்குவன; (வேறு இழிவுடையன இல்லை). 108 1191. வென்றி வானவர் தாம் விளையாடலும் என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது. என்றும் உள்ளவர் - சித்தர்கள்; மூன்று மடக்குடைப் பாம் பிரண்டெட்டுள ஏன்ற இயந்திரம் பன்னிரண்டங்குலம் - நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட் - டூன்றி இருக்க உடல் அழி யாதே - திருமந்திரம்: 3. சரீர சித்த. 180. நன்றும் - நல்லனவற்றையும். உய்ப்பது - கொண்டு கொடுப்பது (காஞ்சி). 109 1192. புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ் பரம்பு நீள் புவனம் பதினான்கினும் வரம்பு இல் போக வனப்பின் வளம் எலாம் நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால். புரங்கடந்தவர் - முப்புர மெரித்த சிவபிரான் எழுந்தருளி யுள்ள. பரம்பு - பெருகும். கொள்கலம் - பாத்திரம். காஞ்சியின் மற்றும் பல சிறப்புக்களை மணிமேகலை, கந்தபுராணம், காஞ்சிபுராணம் முதலிய நூல்களிற் காண்க. 110 கொச்சகக் கலி 1193. அவ்வகைய திரு நகரம் அதன்கண் ஒரு மருங்கு உறைவார்; இவ் உலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்து உள்ளார்; செவ்விய அன்புடை மனத்தார்; சீலத்தின் நெறி நின்றார்; மைவிரவு கண்டர்அடி வழித்தொண்டர் உளரானார். 111 1194. மண்ணின் மிசை வந்ததன் பின் மனம் முதலாயின மூன்றும் அண்ணலார் சேவடியின் சார்வு ஆக அணைவிப்பார்; புண்ணியமெய்த் தொண்டர் திருக்குறிப்பு அறிந்து போற்றும் நிலைத் திண்மையினால் திருக்குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார். மனம் வாக்கு காயம் என்னும் மூன்றும். திண்மையினால் - உறுதியினால். 112 1195. தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார்; நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திரு முடியார் பேர் ஒலிக்க உருகுமவர்க்கு ஒலிப்பர் - பெரு விருப்பினொடும். மா - குதிரைகள் காஞ்சியூரில் ஆடைகளை ஒலிக்கும். நீர் - கங்கை. அரா இரைக்க - பாம்பு சீற. முகிழ்க்கும் - மலரும்; தோன்ற. வைத்த எனினுமாம். பேர் ஒலிக்க - திருநாமத்தை உச்சரிக்க. அவர்க்கு - அடியவர்களுக்கு. ஒலிப்பார் - ஆடையை ஒலித்து (வெளுத்து)க் கொடுப்பர். 113 1196. தேசுஉடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார் தம் தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல், தொல்லை வினை ஆசு உடைய மலம் மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி மாசுதனை விடக் கழித்துவரும் நாளில், அங்கு ஒரு நாள். தேசு - ஒளி. . . . .சேவடியார். அடியார் தம் - சிவனடியார் களுடைய. தூசுடைய - ஆடைகளிலுள்ள. பழைய வினையென்னும் குற்றமுடைய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள். அக மாசினையுங் கழுவுவார் என்றபடி. 114 1197. பொன் இமயப் பொருப்பு அரையன் பயந்தருளும் பூங்கொடிதன் நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான், தன்னுடைய அடியவர் தம் தனித்தொண்டர் தம்முடைய அந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவான். மலையரையன் பெற்ற உமையம்மையாரின். அன்று - அந் நாளில். அடியவர்க்கு அடியவராகிய திருக்குறிப்புத் தொண்ட ருடைய. அன்பருக்கு - அத் திருக்குறிப்புத் தொண்டருக்கு. அணை யும் பொருட்டு. 115 1198. சீதம் மலிகாலத்துத் திருக் குறிப்புத் தொண்டர் பால் ஆதுலராய் மெலிந்துமிக அழுக்கு அடைந்த கந்தையுடன் மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் கோது அடையா மனத்தவர் முன் குறுநடைகள் கொளக் குறுகி. ஆதுலராய் - ஏழையாய். கோது - குற்றம். 116 1199. திரு மேனி வெண்ணீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக் கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்தருளி, வரும்மேனி அருந்தவரைக் கண்டுமனம் மகிழ்ந்து எதிர் கொண்டு உரு மேவும் மயிர்ப் புளகம் உள ஆகப் பணிந்து எழுந்தார். உருமேவும் - தமது உடலிற் பொருந்தும். 117 1200. எய்தும் அவர் குறிப்பு அறிந்தே, இன் மொழிகள் பல மொழிந்து செய் தவத்தீர்! திருமேனி ïis¤J ïUªjJ V‹? என்று கை தொழுது, கந்தையினைத் தந்தருளும் கழுவ என, மைதிகழ்கண் டம்கரந்த மாதவத்தோர் அருள் செய்வார். எய்துமவர் - எழுந்தருளிய சிவபிரானாகிய அடியவரது. திருநீல கண்டத்தை மறைத்த. 118 1201. இக்கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும், யான் மெய்க்கொண்ட குளிர்க்கு உடைந்து விடமாட்டேன்; மேல்கடற் பால் அக்குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் கைக்கொண்டு போய் ஒலித்துக் கொடு வாரும் - கடிது என்றார். உடலிலுற்ற குளிரால் நடுங்கிக் கந்தையைக் கைவிட மாட்டேன். மேற்றிசைக் கடல்பாலுள்ள அத்தகிரியை; சூரியன் மறைவதற்குள். 119 1202. தந்தருளும் இக் கந்தை; தாழாதே ஒலித்து உமக்கு இன்று அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும், கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல் இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார். அந்திப்பொழுதுக்கு முன். உணக்கி - உலர்த்தி. 120 1203. குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடுபோந்து வெறித்தட நீர்த் துறையின் கண் மாசு எறிந்து மிகப் புழுக்கிப் பிறித்துஒலிக்கப் புகும் அளவில், பெரும்பகல் போய்ப்பின் பகல் ஆய் மறிக்கரத்தார் திருவருளால் மழைஎழுந்து பொழிந்திடுமால். மணங்கமழும் அகன்ற நீர்த்துறையில். உவர்மண் முதலியன ஊட்டி வெள்ளாவி வைத்து. மறி - மான். 121 1204. திசைமயங்க வெளி அடைத்த செறிமுகிலின் குழாம் மிடைந்து, மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய அசைவு உடைய மனத்துஅன்பர் அறிவு மறந்து அருந்தவர்பால் இசைவு நினைந்து அழிந்து இனி யான் என்செய்கேன் எனநின்றார். நெருங்கிய மேகக் கூட்டங்கள் நிறைந்து வானத்தினின்றும். இசைவு - (பொழுது போவதற்குள் ஆடையை ஒலித்துத் தருகிறேன் என்று செய்துகொண்ட) உடன்பாட்டை. 122 1205. ஓவாதே பொழியும் மழை ஒருகால்விட்டு ஒழியும் எனக் காவாலி திருத்தொண்டர் தனி நின்றார்; விடக் காணார்; மேவார்போல் கங்குல் வர மெய் குளிரும் விழுத்தவர் பால் ஆ! ஆ! என் குற்றேவல் mʪjth! என விழுந்தார். ஓவாதே - நீங்காமல். காவாலி - சிவபிரானுடைய. பகைவரைப் போல் இரவு வர. விழுத்தவர்பால் - சீரிய தவத்தையுடையவரிடம். 123 1206. விழுந்தமழை ஒழியாது மெய்த் தவர் சொல்லிய எல்லை கழிந்தது; முன்பு ஒலித்து மனைக் காற்றுஏற்க அறிந்திலேன்; செழும் தவர்தன் திரு மேனி குளிர்காணும் தீங்கு இழைத்த தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார். மனையில். தொழும்பேனற்கு - அடியேனுக்கு. 124 1207. கந்தை புடைத்திட எற்றும், கற்பாறை மிசைத் தலையைச் சிந்த எடுத்து எற்றுவன் என்று அணைந்து, செழும் பாறைமிசைத் தம்தலையைப் புடைத்து எற்ற, அப்பாறை தன் மருங்கு வந்துஎழுந்து பிடித்தது - அணி வளைத்தழும்பர் மலர்ச் செங்கை. புடைத்திட எற்றும் - ஒலிக்க அடிக்கும். சிந்த எடுத்த எற்றுவன் - சிதறும்படி எடுத்து மோதுவன். புடைத்து எற்ற - மோதியுடைக்க. அப்பாறையினிடத்து. அணிவளைத் தழும்பர் - காமாட்சியம்மை யாரின் அழகிய வளைச் சுவட்டை அணிந்த ஏகாம்பரநாதரின். 125 1208. வான் நிறைந்த புனல் மழை போய் மலர்மழை ஆயிட மருங்கு தேன்நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொரு விடையின் மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார்; மெய்த் தொண்டர்தான் நிறைந்த அன்புஉருகக் கைதொழுது தனி நின்றார். இதழி - கொன்றை. போர்விடையின். துணைவி - உமை யம்மையார். 126 1209. முன்னவரை நேர்நோக்கி, முக் கண்ணர் மூ உலகும் நின் நிலைமை அறிவித் தோம்; நீயும் இனி நீடிய நம் மன்உலகு பிரியாது வைகுவாய் என அருளி, அந்நிலையே எழுந்தருளி, அணி ஏகாம்பரம் அணைந்தார். 127 1210. சீர் நிலவு திருக்குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப் பார்குலவத் தந்தைதாள் அற எறிந்தார் பரிசுஉரைக்கேன்; பேர் அருளின் மெய்த்தொண்டர் பித்தன்எனப் பிதற்றுதலால் ஆர் உலகில் இதன் உண்மை அறிந்துஉரைக்க இசைந்துஎழுவார். மெய்த்தொண்டர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள். 128 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் தொண்டை நாட்டிலே உமையம்மையார் அறம்வளர்த்த திருப்பதி காஞ்சிமா நகரம் அத்திருப்பதியிலே வண்ணார் குலத்திலே தோன்றிய ஒரு நாயனார் இருந்தார். அவர், அடியவர்களின் திருக் குறிப்பை அறிந்து திருத்தொண்டு செய்தமையால், அவருக்குத் திருக் குறிப்புத் தொண்டர் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அடியவர் களுக்கு வதிரம் வெளுத்துக் கொடுப்பது அவர்தம் தொண்டு. குளிர் காலத்தில், ஒரு நாள் சிவபெருமான் திருநீறு பூசி, அழுக் கேறிய கந்தையுடுத்தி, மெலிந்த மேனியராய், வறியராய், நாயனார் பால் அணைந்தார். நாயனார் அவரைக் கண்டு, எதிர்கொண்டு பணிந்து, அவர்தந் திருக்குறிப்பை அறிந்து, தவத்தீர்! திருமேனி இளைத்திருப்பதென்ன? அணிந்துள்ள கந்தையை அளித்தருளும்; வெளுத்துத் தருகிறேன் என்று வேண்டி நின்றார். தவவேடர், நாயனாரை நோக்கி, இக்கந்தை அழுக்கேறியதே குளிரின் கொடுமையால் இதை விடவும் மனமெழவில்லை. பொழுது போவதற்குள் இதை ஒலித்துக் கொடுக்க முடியுமாயின், இதைக் கொண்டுபோம் எனறருளினார். நாயனார் அதற்கு இசைந்தார். இறைவர் பொழுது போவதற்குள் இதை வெளுத்து உலர்த்திக் கொடுத்தல் வேண்டும். இல்லையேல், நீர் இவ்வுடலுக்கு இடர் செய்த வராவீர் எனக் கூறிக் கந்தையைக் கொடுத்தார். நாயனார் அதை வாங்கி வெளுக்கப் புகுந்தார் அப்பொழுது சிவனருளால் மேகங்கள் திரண்டு எழுந்து மழை பொழிந்தன. திருக்குறிப்புத் தொண்டர் என்செய்வார்! அவர், சிவனடியார்க் களித்த உறுதிமொழியை நினைக்கிறார்; வருந்துகிறார்; மழை விடவுங்கூடும் என்று நின்று பார்க்கிறார். மழை விடவில்லை. பொழுதும் போயிற்று, அடியேன் குற்றேவல் தவறிற்றே என்று நாயனார் விழுந்தார்; விழுந்து, மழையொழியாது; அடியவர் குறிப்பிட்ட காலவரையுங் கழிந்தது. முன்னரே இதை ஒலித்து வீட்டில் காற்றேறக் கட்டிவிட்டேனில்லை; அடியவர் திரு மேனியைக் குளிரினால் வருந்தச் செய்தேன்; பாவியானேன்; என்று எழுந்து, கற்பாறையில் தலையை மோதினார். அங்கே சிவபெருமான் திருக்கை தோன்றி நாயனாரைப் பற்றிக் கொண்டது. புனல் மழை யொழிந்தது; பூமழை சொரிந்தது. சிவபெருமான் உமையம்மையாருடன் மழ விடைமேல் தோன்றினார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் மெய்ம் மறந்து பணிந்து எழுந்து கை தொழுது நின்றார். சிவபெருமான் நாயனாரைப் பார்த்து, உனது நிலையை மூவுலகும் அறியும்படி செய்தோம் நீ நமது உலகை அடைவாயாக, என்று அருள்சுரந்து மறைந்தருளினார். 25. சண்டேசுர நாயனார் அறுசீர் விருத்தம் 1211. பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு வாய்ந்த மண்ணித் தென்கரையில் மன்ன முன்னாள் வரை கிழிய ஏந்தும்அயில்வேல் நிலைகாட்டி, இமையோர் இகல்வெம் பகை கடக்கும் சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் - செல்வச் சேய்ஞலூர். பூந்தண் பொன்னி - பொலிவும் தண்மையுமுடைய காவிரி. வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி -பட்டினப்பாலை: 5 - 6. புனல் நாட்டு - சோழநாட்டில். வாய்ந்த - உள்ள; சிறப்பு வாய்ந்த என்னலுமாம். மண்ணியாற்றின். மன்ன - நிலைபெற. வரை - கிரவுஞ்சகிரி. அயில் - கூர்மையான. தன்னிலை காட்டி. இமை. . .கடக்கும் - தேவர்களுடன் மாறுபட்ட கொடிய பகைவர்களாகிய தாருகன் முதலியவர்களை வென்ற. சேந்தன் - முருகன். சேய்நல்லூர்; சேய்ஞலூர்; போலி. சேய் - முருகன். முருகப்பெருமானால் விரும்பப்பட்ட நல்ல ஊர். 1 1212. செம்மை வெண்ணீற்று ஒருமையினார், இரண்டு பிறப்பின் சிறப்பினார், மும்மைத் தழல் ஓம்பிய நெறியார், நான்கு வேதம் முறை பயின்றார், தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார், அறு தொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழ்உலகும் போற்றும் மறையோர் விளங்குவது. ஒருமை நேயமுடையவர். மும்மைத் தழல் ஓம்பி - மூன்று தீ வளர்த்து; தில்லைவாழ் அந்தணர் புராணம் பார்க்க. ஐம்புலச் சேட்டைகளைப் பின் செலுத்தும். 2 1213. கோதுஇல் மான்தோல் புரிமுந்நூல் குலவு மார்பின் குழைக் குடுமி ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர்மடங்கள் மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன. குலவும் - விளங்கும். குழை - மெல்கிய. மார்பினையும் குடுமியை யுமுடைய. ஓதுகிடை - வேதம் பயிலும் இடத்தில். போதின் - இரவில். தாரகையும் - நட்சத்திரங்களும். 3 1214. யாகம் நிலவும் சாலைதொறும் மறையோர் ஈந்த அவி உணவின் பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர்சிறைப்புள் மாகம் இகந்து வந்துஇருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் நாகம் அணையும் கந்துஎனவும் நாட்டும் யூப ஈட்டம் உள. அவிர்ப்பாகத்தை உண்ண. படர்ந்த சிறகுடைய பறவை களாகிய கருடனும் அன்னமும். மாகம் இகந்து - ஆகாயத்தினின்றும் நீங்கி. சேக்கை - இருப்பிடம்; குடம்பை. வானவர். . . . .கந்தெனவும் - இந்திரனது ஐராவதத்தைக் கட்டும் தறிபோலவும். நாட்டப்பட்ட யூப தம்ப (யாக தம்ப - ஓமத் தறி)க் கூட்டங்கள் உள்ளன. யூப தம்பத்தின் நுனி சேக்கைபோலிருக்கும். எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் - புறநானூறு: 224. 4 1215. தீம்பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும் தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடக் கொண்டு அணைவனவும் பூம் பாசடை நீர்த் தடம்மூழ்கி, மறையோர் மகளிர் புகுவனவும் ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள. தீம் - இனிய. ஓமதேனு - யாகச் சடங்குக்குப் பால் உதவும் பசுக்கள்; 21, 42 - ம் பாக்களைப் பார்க்க. தாம் ஓதிய சாம வேதத்தைச் சிந்திப்போர். பூவும் பசிய இலைகளும் உள்ள தடாகங்களில். ஆம் பான்மையில் - (செல்லுதலும், அணைதலும், புகுதலும்) ஆகிய பாகுபாட்டில். மறுகு - தெருக்கள். 5 1216. வாழ்பொன் பதி மற்றதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின் தாழ்வு இல் தரளம் சொரிகுலைப்பால் சமைத்த யாகத் தடஞ் சாலை சூழ்வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் வேள்வித் தலைவர் பெருந்தேர்கள், விண்ணோர் ஏறும் விமானங்கள். மண்ணியாற்றின் அலைகள். தாழ்வில் - சார்பில்; பள்ளத்தில். தரளம் - முத்துக்களை. குலைப்பால் - கரையினிடத்து. தடம் - பெரிய. தேர்களும் விமானங்களும் நெருங்கியுள. 6 1217. மடையில் கழுநீர்; செழுநீர்சூழ் வயலில் சாவிக் கதிர்க் கற்றை; புடையில் சுரும்பு மிடைகமுகு; புனலில் பரம்பு பூம்பாளை அடையில் பயிலும் தாமரைநீள் அலரில் துயிலும் கயல்கள்; வழி நடையில் படர்மென் கொடிமௌவல் நனையில் திகழும் சினைக்காஞ்சி. கழுநீர் செழுநீர் - கருங் குவளையும் செங்குவளையும். கழுநீர் - ஆம்பல் என்றும், செழுநீர் - செழிய நீரென்றும் கூறுவாருமுளர். செஞ்சாலிக் கதிர்க் கற்றையின் பக்கங்களில் வண்டுகள் நெருங்கிய கமுக மரங்கள். சாலிக் கதிர்க் கற்றைகள் எனத் தனியாகக் கோடலு மாம். நீரில் பெருகியுள்ள கமுகம் பாளைகள். அடையில் பயிலும் - இலைகளுடன் கூடிய. நடக்கும் வழியில் படர்ந்துள்ள மெல்லிய கொடிகளையுடைய முல்லைகள், அரும்புகளால் விளங்குங் கிளைகளையுடைய காஞ்சி மரங்கள் - (இவைகள் உள்ளன). 7 1218. சென்னி அபயன், குலோத்துங்கச் சோழன், தில்லைத் திரு எல்லை பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர்ஏறு, என்றும் புவி காக்கும் மன்னர் பெருமான், அநபாயன் வரும்தொல் மரபின் முடிசூட்டும் தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்து அவ்வூர். பரிதி குலந் தனிலுதித்துப் பரசமய இருளகற்றிப் பரமனாடும் - பொருவருபே ரம்பலமும் கோபுரமும் ஆலயமும் பொன்வேய்ந் துண்மைச் - சுருதியுடன் சைவநெறி தழைத்தோங்கத் திருநீற்றுச் சோழன் என்று - குரு மணிமா முடிபுனைந்த குலோத்துங்க வளவ னருள் குறித்து வாழ்வாம் - சிதம்பர புராணம்; பாயிரம். 11. பதி ஐந்து: காவிரிப்பூம் பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர். 8 1219. பண்ணின் பயனாம் நல்இசையும் பாலின் பயனாம் இன்சுவையும் கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்துஅஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப் பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ. 9 1220. பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனைவாழ் தருமம் நிலவு காசிப கோத் திரத்துத் தலைமை சால் மரபில் அருமை மணியும் அளித்து அதுவே நஞ்சும் அளிக்கும் அரவுபோல் இருமை வினைக்கும் ஒரு வடிவாம் எச்சதத்தன் உளன் ஆனான். மனைவாழ் தருமம் - இல்லறம். பாம்பினிடத்தில் மணியும் நஞ்சும் இருப்பதுபோல எச்சதத்தனிடத்தில் முறையே நல்வினையும் தீவினையும் உண்டு என்றபடி. நல்வினை, சண்டேசுரரை ஈன்றது; தீ வினை, சிவபூசையைக் குலைத்தது. 10 1221. மற்றை மறையோன் திருமனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்; சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாளர்; உலகில் துணைப் புதல்வர் பெற்று விளங்கும் தவம் செய்தாள்; பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள்; பற்றை எறியும் பற்று வரச் சார்பாய் உள்ள பவித்திரையாம். துணையாகிய புதல்வரை. பெறும் பேற்றின் முடிவான பயனை. பற்றை - பாசத்தை. பற்று - சிவநேசம். 11 1222. நன்றி புரியும் அவர்தம்பால் - நன்மை மறையின் துறைவிளங்க, என்றும் மறையோர் குலம் பெருக, ஏழு புவனங்களும் உய்ய, மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர, மாதவத்தோர் வென்றி விளங்க வந்துஉதயம் செய்தார் - விசார சருமனார். 13 1223. ஐந்து வருடம் அவர்க்கு அணைய, அங்கம் ஆறும் உடன் நிறைந்த சந்த மறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சினால், முகைக்கு மலரின் வாசம்போல் சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால். ஆறு அங்கம்: சிக்ஷை, வியாகரணம், சந்தோ விசிதி, நிருத்தம், சோதிடம், கற்பம். முகை கொண்டு மலரும். செவ்வி உணர்வு - சிவ ஞானம். பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் - சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது - திருமந்திரம்: யோகம். 4. 13 1224. நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப் புகழும் பெருமை உபநயனப் பொருஇல் சடங்கு முடித்து, அறிவின் இகழும் நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை, பயந்தார் செய்வித்தார் அறிவால் இகழப்படும் நெறியையுடையன அல்லாத நெறிக ளெல்லாம் இவரிடம் பொருந்தி இருந்தனவாயினும். பயந்தார் - பெற்றோர். 14 1225. குலவு மறையும் பலகலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்து நிலவும் உணர்வின் திறம்கண்டு, நிறுவும் மறையோர் அதிசயித்தார்; அலகுஇல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனக் கொண்ட செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார். குலவும் - விளங்கும். கொளுத்துவதன் முன் - போதிப்பதற்கு முன்னரே. அவைகளைத் தாமே விளங்கிக்கொண்டு. நிறுவும் - போதிக்கும். அளவில்லாத கலைகளின் முடிந்த முடிவு மன்றுள் ஆடும் ஆண்டவன் திருவடியே. செலவு - ஞானச்செலவு (செல்லுதல்). 15 1226. நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் எனும் மெய்ம்மை உடனே தோன்றும் உணர்வின்கண் ஒழியாது ஊறும் வழியன்பின் கடனே இயல்பாய் முயற்றிவரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் திடம்நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில், ஆங்கு ஒருநாள். முயற்றி - ஊக்கி; முதிர்ந்து. செம்மலர் - விசார சருமர். 16 1227. ஓது கிடையினுடன் போவார் ஊர் ஆன் நிரையினுடன் புக்க போது, மற்று அங்கு ஒரு புனிற்று ஆ, போற்றும் அவன்மேல் மருப்பு ஓச்ச, யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல்கொண்டு அவன் புடைப்ப, மீது சென்று மிகும்பரிவால் வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து. ஓது கிடையினுடன் போவார் - ஒருசாலை மாணாக்கருடன் போகும் விசார சருமர். ஊரிலுள்ள பசுக்கூட்டங்களுடன் போதல் நேர்ந்தபோது. ஒரு. . .ஓச்ச - ஈன்றணிமைத்தான ஒரு பசு தன்னை மேய்ப்பவனைக் கொம்பால் முட்ட. புடைப்ப - (அப் பசுவை) அடிக்க. மீது - அம் மேய்ப்பவனிடம். 17 1228. பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால், மேவும் பெருமை அருமறைகள் மூலம் ஆக விளங்கு உலகில், யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார்; ஆயற்கு அருள்செய்வார். பாவும் - பரந்த கலைகளும். ஆகமநூற் பரப்பின் தொகுதியும் ஆகிய பகுதிகளாற் பொருந்தும். சிவமே எய்த (பொருந்த). ஆயற்கு - இடையனுக்கு. 18 1229. தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன; பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன; துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத அங்கம் அனைத்தும் தாம்உடைய அல்லவோ? நல் ஆன் இனங்கள். துங்க அமரர் - உயர்ந்த தேவர்கள். விரிவு சிவதருமோத்திரம் முதலிய நூல்களிற் காண்க. 19 1230. ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும் நாயனார்க்கு வளமதியும் நதியும் நகுவெண் தலைத்தொடையும் மேய வேணித் திருமுடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத் தூய திரு மஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள் தாம். நாயனார்க்கு - நடராசப் பெருமானுக்கு. சிரிக்கும் வெள்ளிய தலைமாலையும். அபிடேகத்துக்கு. ஐந்து: பால், தயிர், நெய், கோசலம், கோமயம். சுரபிகள் - பசுக்கள் ஆய சிறப்பினால் பெற்றன அல்லவோ? 20 1231. சீலம் உடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன் காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும் நீல கண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும் மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ? திருநீற்றுக்கு மூலமாகவுற்ற சாணம் தோன்றும். 21 1232. உள்ளும் தகைமை இனிப் பிறவேறு உளவே? உழைமான் மறிக்கன்று துள்ளும் கரத்தார்; அணிபணியின் சுடர்சூழ் மணிகள், சுரநதி, நீர் தெள்ளும் சடையார் தேவர்கள் தம் பிராட்டி யுடனே சேரமிசைக் கொள்ளும் சினமால் விடைத்தேவர் குலம் அன்றோ? இச்சுரபிகுலம். உழைமான் மறிக்கன்று - சிறந்த மான் கன்று. பணியின் - பாம்பின். சுரநிதி - கங்கை. தெள்ளும் - கொழிக்கும். பிராட்டி - பார்வதி. உள்ளும் - சிந்திக்கும். வேறுளவோ. 22 1233. என்று இன்னனவே பலவும் நினைந்து, இதத்தின் வழியே மேய்த்து, இந்தக் கன்று பயில் ஆன் நிரைகாக்கும் இதன்மேல் இல்லை கடன்; இதுவே மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்தும் நெறி ஆவதும் என்று நின்ற ஆயன் தனை நோக்கி, நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார். இதத்தின் வழியே - பசுக்களின் பிரியப்படி கன்றொடு கூடிய பசுக் காத்தல் சிவ வழிபாடு செய்வதாகும் என்றபடி. 23 1234. நானே இனிஇந் நிரைமேய்ப்பன் என்றார்; அஞ்சி, இடை மகனும் தான்நேர் இறைஞ்சி விட்டகன்றான்; தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்கு வானே என்ன நிரைகாக்க வந்தார் - தெய்வ மறைச் சிறுவர். பேர் ஆயம் - பெரிய கூட்டத்தை. அளிப்பாராகி - காப்பாராகி. பயிர்களுக்கு மழைபோல. விசும்பிற் றுளிவீழி னல்லான் மற்றாங்கே - பசும்புற் றலைகாண் பரிது - திருக்குறள்: 19 காத்தற்கு வந்தார். 24 1235. கோலும் கயிறும் கொண்டு, குழைக் குடுமி அலையக் குலவு மான் தோலும் நூலும் சிறு மார்பில் துவள, அரைக்கோவணம் சுடரப் பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால், சாலும் புல்லின் அவை வேண்டுந் தனையும் மிசையும் தலைச் சென்று. துவள - அசைய. சுடர - ஒளிர. பயனும் - கன்றும். மிகுந்த புற்களிலே அவை விரும்புமளவும் மேயும் இடங்களில் அவைகளை ஒட்டிக் கொண்டுபோய். 25 1236. பதவு காலங்களில் மேய்த்தும், பறித்தும் அளித்தும், பரிவு அகற்றி, இதம்உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி, அச்சம் எதிர் நீக்கி, அதர் நல்லன முன் செலநீழல் அமர்வித்து, அமுத மதுரப் பால் உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்தொறும் உய்த்தார். பதவு - புல் நிறைந்துள்ள இடத்தில் (பதவு - புல்; ஆகுபெயர்). பதவு காலம்- பக்குவ காலம் என்பர் பழைய குறிப்புரைக்காரர். மேயக்கூடாத விடங்களிலுள்ள புற்களைப் பறித்து உண்பித்தும். பரிவு - துன்பம். இதம் உண்துறையுள் - இதமாக நீர் அருந்தத்தக்க துறைகளில். பிற உயிர்களால் விளையும் அச்சத்தைத் தாமே எதிர் நின்று நீக்கி. அதர் - வழி. நல்லனவாகிய வழிகளில் முன் செல்லும் படிச் செய்து. உய்த்தார் - செலுத்தினார். 26 1237. மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் தண் நித்தில நீர் மருதத் தண் - டலை சூழ் குலையின் சார்பினிலும் எண்ணில் பெருக நிரை மேய்த்துச் சமிதையுடன் மேல் எரி கொண்டு நண்ணிக் கங்குல் முன் புகுதும் நல் நாள் பலவாம் அந் நாளில். புறவின் மாடும் - முல்லை நிலங்களிலும். படுகர் மருங்கினிலும் - பள்ளங்களிலும். குளிர்ந்த முத்து நீர் பாயும் மருதநிலத்திலே. தண்டலை - சோலை. குலையின் - கரைகளின். எரி - தீக்கடைக்கோல். கங்குல் முன் - இரவுமுன். 27 1238. ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி, மிகப் பல்கி, மேய இனிய புல்உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால், ஏய மனம்கொள் பெருமகிழ்ச்சி எய்தி, இரவும் நன் பகலும் தூய தீம் பால் மடி பெருகிச் சொரிய, முலைகள் சுரந்தனவால். பல்கி - பெருகி. ஆர்தலினால் - அருந்துதலால். ஏய - பொருந்து மாறு. நன்பகலும் - உச்சிப்பொழுதும்; முன்பக்கம் தலைக்கூடி நன்பகல் அவள் நீத்து - கலித்தொகை: 74 -10. 28 1239. பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள் காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய்ப் பேணும் தகுதி அன்பால் இப் பிரமசாரி மேய்த்ததன் பின் மாணும் திறந்த ஆன என, மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார். மாணுந் திறத்தவான - மாட்சியடையும் தன்மையவாயின; செழித் திருக்கின்றன. யாகத்துக்குப் பால் கறத்தல் 42 -ஆம் பாட்டிலுஞ் சொல்லப்பட்டிருக்கிறது. 29 1240. அனைத்துத் திறத்தும் ஆன்இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி மனைக்கண் கன்று பிரிந்தாலும், மருவும் சிறிய மறைக்கன்று தனைக்கண்டு அருகில் சார்ந்து உருகித் தாயாம் தன்மை நிலைமையவாய்க் கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால். அனைத்துத் திறத்தும் - எல்லா வகையாலும். அணைந்த - அடைந்த. மறைக்கன்றுதனை - விசார சருமரை. 30 1241. தம்மை அணைந்த ஆன்முலைப்பால் தாமே பொழியக் கண்டு உவந்து, செம்மை நெறியே உறுமனத்தில் திருமஞ்சனம் ஆம் குறிப்பு உணர்ந்தே, எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்ததனில், மெய்ம்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை, விரைந்து எழலும். ஆன்கள். சிவபிரான் திருவடிக்குத் திருமஞ்சனமாகும். வள் ளலார் - விசார சருமர். எய்த - பொருந்த. அதனில் - அந்நினைவில் (நெஞ்சில்). 31 1242. அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப் பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச் செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவாலயமும் துங்கம் நீடு கோபுரம் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார். அங்கண் - அவ்விடத்தில். முன்னை - முற்பிறப்பின். மண்ணி மணற் புளினக்குறையில் - மண்ணியாற்றின் மணற்றிட்டையில். 32 1243. ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகுவளர் புறவில் பூத்த மலர்கள் தாம் தெரிந்து, புனிதர் சடிலத் திரு முடி மேல் சாத்தலாகும் திருப்பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்து, கோத்த இலைப்பூங் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார். அருகில் வளரும் முல்லைநிலத்துப் பூத்த மலர்களை. புனிதர் - சிவபெருமானது. சடிலம் - சடை. திருப்பள்ளித் தாமம் - எறிபத்த நாயனார் புராணம்: 9 குறிப்புப் பார்க்க. இலையால் தைக்கப்பெற்ற பூங்கூடையில். 33 1244. நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங் கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட ஒல்லை அணைந்து பால்ஆக்கள் ஒன்றுக்கு ஒருகாலாக எதிர் செல்ல, அவையும் கனைத்துமுலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால். நவ கும்பங்கள் - புதிய குடங்கள். நாணல்கள் நெருங்கிய பொலிவினையுடைய கொல்லை என்பர் ஆறுமுகத் தம்பிரானார்; நாள் நற் பூங்கொல்லை என்பர் பழைய குறிப்புரை ஆசிரியர். குறை மறைவும் - ஆற்றிடைக் குறைமறையிலும். ஒல்லை - விரைவாக. ஒரு கால் - ஒருதரம். 34 1245. கொண்டு மடுத்த குடம் நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவைமுன் தாபித்து, வண்டு மருவும் திருப்பள்ளித் தாமம் கொண்டு, வரன்முறையே பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திருமஞ்சனம் ஆட்டி. கொண்டு மடுத்த - கொண்டு வைத்த; கறந்த. பண்டைப் பரிவால் - முற்குறிப்பு உணர்வால்; விட்ட குறையால். 35 1246. மீளமீள இவ்வண்ணம் வெண்பால் சொரி மஞ்சனம் ஆட்ட, ஆள உடையார் தம்முடைய அன்பர் அன்பின் பால்உளதாய் மூள அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ் கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார். மூளப் பொருந்திய விருப்பு. சூழ்கோளமதனில் உள் நிறைந்து - (அன்பரால்) வகுக்கப்பெற்ற சிவலிங்கத்தில் கலந்து நின்று. 36 1247. பெருமை பிறங்கும் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளை யார்தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான திருமஞ் சனமே முதலவற்றில் தேடாதன அன்பினில் நிரப்பி, வரும்அந் நெறியே அர்ச்சனை செய் தருளி வணங்கி மகிழ்கின்றார். பிறங்கும் - விளங்கும். பிள்ளையார் - விசாரசருமர். உம்பர் பிரான் - சிவபிரான். உறுப்பான - அங்கங்களான. தேடாதன - தேடிக் காண இயலாதவற்றை (தூப தீபம் முதலியவற்றை). அன்பினில் நிரப்பி - மனோபாவனையால் முற்றுவித்து. 37 1248. இறையோன் அடிக்கீழ் மறையவ னார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும் நிறைபூ சனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள் குறைபாடு இன்றி மடிபெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றி, மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால். குவிந்த முலைகளில். 38 1249. செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு, முயல்வுற்று அதுவேதிரு விளையாட்டு ஆகுமுந்நூல் அணிமார்பர் இயல்பில் புரியும் மற்றிதனைக் கண்டுஇத் திறத்தை அறியாத அயல் மற்றொருவன் அப்பதியில் அந்தணளார்க்கு அறிவித்தான் தமது இயல்பால். கண்டு இத் திறத்தை. 39 1250. அச்சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்றுஅவற்றின் இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்றுஎம் பசுக்கள் தமைக்கறந்து, பொச்சம் ஒழுகும் மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன்தாதை எச்ச தத்தன் தனைஅழைமின் என்றார் - அவையில் இருந்தார்கள். ஆயன் அறியான் - இடையன் (பசுக்களை மேய்க்க) அறியான். பொச்சம் ஒழுகும் மாணவகன் - வஞ்சக ஒழுக்குடைய பிரமசாரி யாகிய விசாரசருமரது. 40 1251. ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ்அந் தணன்தன் திருமனையின் பாங்கு சென்று, மற்றவனை அழைத்துக் கொண்டுவரப் பரந்த ஓங்கு சபையோர் அவனைப்பார்த்து ஊர்ஆன் நிரைமேய்த்து உன்மகன்செய் தீங்கு தன்னைக் கேள் என்று புகுந்த பரிசு செப்புவார். ஆங்கே சபையார் அருகே நின்றிருந்தவர்கள். புகுந்த பரிசு - நிகழ்ந்த செயலை. 41 1252. அம்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்கள் ஆனஎலாம் சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல் கந்தம் மலிபூம் புனல்மண்ணி மணலில் கறந்து பால்உகுத்து வந்த பரிசே செய்கின்றான்; என்றான் என்று வாய்மொழிந்தார். உகுத்து - சொரிந்து. வந்த பரிசே - மனஞ் சென்றபடியே. என்றான் - ஒருவன்வந்து சொன்னான். 42 1253. மறையோர் மொழியக் கேட்டுஅஞ்சித் சிறு மாணவகன் செய்தஇது இறையும் நான் முன்பு அறிந்திலேன்; இதற்கு முன்பு புகுந்ததனை, நிறையும் பெருமை அந்தணர்காள்! பொறுக்க வேண்டும் நீங்கள் எனக் குறைகொண்டு இறைஞ்சி, இனிப்புகுதின் குற்றம் எனதே ஆம் என்றான் இறையும் - சிறிதும். குறை இரந்து வணங்கி. புகுதின் - அவ்வாறு நிகழுமாயின். 43 1254. அந்த ணாளர் தமைவிடைகொண்டு, அந்தி தொழுது, மனைபுகுந்து, வந்த பழிஒன்று எனநினைந்தே, மகனார் தமக்கு வாய்நேரான்; இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து, நிரைமேய்க்க மைந்த னார்தாம் போயினபின், மறைந்து சென்றான் மறைமுதியோன். அந்தி தொழுது - சந்தி வந்தனஞ் செய்து. வாய்நேரான் - சொல் லாதவனாய். 44 1255. சென்ற மறையோன், திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடுபோய் மன்றல் மருவும் புறவின்கண் மேய்ப்பார் மண்ணி மணல்குறையில், அன்று திரளக் கொடுசென்ற அதனை அறிந்து, மறைந்து, அப்பால் நின்ற குரவின் மிசைஏறி, நிகழ்வது அறிய ஒளித்திருந்தான். ஊரிலுள்ள பசுக் கூட்டங்களை. மன்றல் மருவும் - மணங் கமழும். அப்பால் - அவ்விடத்தில். 45 1256. அன்பு புரியும் பிரமசா ரிகளும் மூழ்கி, அரனார்க்கு முன்பு போல மணல் கோயில் ஆக்கி, முகைமென் மலர்கொய்து பின்பு வரும் ஆன் முலைபொழிபால் பெருகும்குடங்கள் பேணும் இடம் தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார். பிரமசாரிகள் - விசார சருமர். பெருகு. . . . .கொணர்ந்து - நிறைந்த குடங்களைக் காப்புள்ள இடத்தில் கொண்டுவந்து. 46 1257. நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும்பூசனை தொடங்கி, ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திருமுடிமேல் மன்றல் விரவும் திருப்பள்ளித் தாமம் சாத்தி, மஞ்சனமா நன்று நிறைதீம் பால்குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும். நிலைபெற்ற ஆகம விதிகளின். ஒன்றும் - ஒருமைப்பட்ட. நயப்புற்று - விருப்புற்று. ஆட்டுதலும் - அபிடேகஞ் செய்யவும். 47 1258. பரவ மேல்மேல் எழும்பரிவும் பழையபான்மை மிகும்பண்பும் விரவும் மேதக்கவர் தம்பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான், அரவம்மேவும் சடைமுடியார் அருளாம்என்ன அறிவு அழிந்து, குரவம்மேவும் முதுமறையோன் கோபம் மேவும்படி கண்டான். பரவ - தோத்திரஞ் செய்யச் செய்ய. பரிவும் - அன்பும். பழைய பான்மை - முன்னைப் பிறவி வாசனையால். பண்பும் - குணமும். விரவு - பொருந்தும். 48 1259. கண்டபோதே விரைந்துஇழிந்து, கடிதுசென்று கைத்தண்டு கொண்டு, மகனார் திருமுதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத் தொண்டுபுரியும் சிறியபெருந் தோன்றலார்தம் பெருமான் மேல் மண்டு காதல் அருச்சனையின் வைத்தார்; மற்றொன்று அறிந்திலரால். மண்டுகாதல் - மிக்கெழுந்த அன்பால். 49 1260. மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க, வேறுஉணரார் பால்ஆர் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு, மால்ஆ மறையோன் மிகச்செயிர்த்து, வைத்த திருமஞ்சனக் குடப்பால் காலால் இடறிச் சிந்தினான்; கையால் கடைமைத் தலைநின்றான். மாலாம் - மதி மயங்கிய. செயிர்த்து - கோபித்து. கையால் கடைமைத் தலை நின்றான் - தீயொழுக்கத்தால் பாவத்தின் முடிவில் நின்றவன். 50 1261. சிந்தும் பொழுதில் அதுநோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத் தந்தை எனவே அறிந்து, அவன்தன் தாள்கள் சிந்தும் தகுதியினால், முந்தை மருங்கு கிடந்தகோல் எடுத்தார்க்கு, அதுவே முறைமையினால் வந்து மழுஆயிட எறிந்தார்; மண்மேல் வீழ்ந்தான் மறையோனும். சிந்தும் - பால் சிந்தும். இறையில் - அந்நொடியிலே. சிந்தும் - துணிக்கும். முந்தை மருங்கு - தமக்குமுன் அருகே. 51 1262. எறிந்த அதுவே அர்ச்சனையின் இடையூறு அகற்றும் படைஆக, மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில் அறிந்த இடையூறு அகற்றினராய், முன்போல் அருச்சித்திடப் புகலும் செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடைஏறி. அதுவே - கோலாகிய மழுவே. மறிந்த - தடைசெய்த. செறிந்த - நெருங்கிய. செய்யத் தகாததைத் தந்தை செய்யினும் அவனை ஒறுக்க வேண்டுவது மைந்தர்தங் கடமையாகும். அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும் - அரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவமாகும் - வரமுடைத்தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி - நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. இறைவனுலகி லிதமகிதஞ் செய்தவெல்லா மிதமகித மிவனுக்குச் செய்தார்பா லிசையும் - அவனிவனாய் நின்றமுறை ஏகனாகி அரன்பணியி னின்றிடவு மகலுங்குற்றம் - சிவனுமிவன் செய்தியெல்லாமென்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் - பவமகல வுடனாகி நின்றுகொள்வான் பரிவால் பாகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே. -சிவஞானசித்தியார். 52 1263. பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர் வேதமொழிகள் எடுத்து ஏத்த, விமல மூர்த்தி திருவுள்ளம் காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது, மனம் களித்துப் பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார். புராண - பழமையாகிய. புத்தேளிர் - தேவர்கள். விமலமூர்த்தி - சிவபிரான். 53 1264. தொடுத்த இதழி சூழ்சடையார் துணைத்தாள் நிழல்கீழ் விழுந்தவரை எடுத்து நோக்கி, நம்பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி, மடுத்த கருணையால் தடவி, உச்சி மோந்து மகிழ்ந்தருள. இதழி - கொன்றை. 54 1265. செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார் அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவ மயமாய்ப் பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கிப் பூமேல் அயன் முதலாம் துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார். 55 1266. அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி, அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்கு ஆகச் சண்டீசனும் ஆம்பதம் தந்தோம் என்றுஅங்கு அவர் பொன் தடமுடிக்குத் துண்டமதி சேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார். உண்ட கலமும் - பரிகல சேஷமும்; அமுதும் அனைத்தும் உனக்காக. தடம் - பெருமையுடைய. 56 1267. எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப, எங்கும் மலர்மாரிகள் பொழியப் பல் ஆயிரவர் கணநாதர் பாடி ஆடி களிபயிலச் சொல் ஆர்மறைகள் துதிசெய்யச் சூழ்பல் இயங்கள் எழச் சைவ நல் ஆறு ஓங்க, நாயகம் ஆம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார். களி பயில - ஆனந்தக் களிப்டைய. பல்லியங்கள் - பலவகை வாத்தியங்கள். நல்லாறு - நல்ல வழி. கணங்கள் நாயகமாகிய. அணைந்தார். சண்டீச பதத்தை அடைந்தார். 57 1268. ஞாலம் அறியப் பிழைபுரிந்து, அம்பர் அருளால் நான்மறையின் சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில் கோல மழுவால் ஏறுண்டு, குற்றம் நீங்கிச் சுற்றமுடன் மூல முதல்வர் சிவலோகம் எய்தல் பெற்றான் முதுமறையோன். ஏறுண்டு - வெட்டுண்டு. மூல முதல்வர் - எல்லாவற்றிற்கும் மூல மாகவுள்ள இறைவனது. முது மறையோன். எச்சதத்தன். 58 1269. வந்து மிகைசெய் தாதைதாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்; இந்த நிலைமை அறிந்தார் ஆர்? ஈறு இலாதார் தமக்குஅன்பு தந்த அடியார் செய்தனவே தவம் ஆம் அன்றோ? சாற்றுங்கால். மிகை - குற்றம்; துன்பம். இலாதார் - அழிவில்லாத சிவ பெருமான். ஈறி லாதநல் லீசன் ஒருவனே - அப்பர். ஈறிலான் கயிலை - கம்பர். 59 நம்பியாரூரர் துதி 1270. நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை எல்லாஉயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர் மென்கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம். திருவாளன் - சுந்தரமூர்த்தி சுவாமிகள். 60 சண்டேசுர நாயனார் சோழ நாட்டுத் தலைநகரங்களுள் ஒன்றாயிருப்பது திருச் சேய்ஞலூர். அவ்வூரில் வேதியர் குலத்தில் காசிபர் கோத்திரத்தில் உதித்தவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் எச்சதத்தன் என்பது. அவன், பவித்திரை என்பவளை மணந்து இல்லறம் நடாத்தி வந்தான். அவனுக்கு விசார சருமர் என்பவர் தவப்புதல்வராகப் பிறந்தார். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடை பெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே அவைகளின் பொருள்களை விசார சருமர் உணர்ந்திருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் எனத் துணிந்து அவ்வன்பில் விசாரசருமர் நிற்பாராயினார். ஒரு நாள் விசார சருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ்வேளையில் அவருடன் அவ்வூர் ஆனிரைகளும் போந்தன. அந்நிரைகளிலுள்ள ஓரிளங்கன்று பசு மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன் அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதை பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். ஆங்கே பசுக்களின் மாண்பை நினைந்தார். என்னே! பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக் கிறார்கள்! புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன! சிவபிரான் அபி டேகத்துக்குப் பஞ்சகவ்விய மளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன! அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம்! ஆண்டவன் ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்களினத்தைச் சேர்ந்தது! என்று எண்ணி எண்ணி நின்றார்; மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி இப்பசுக்களை மேய்த்துக் காப்பதைவிட வேறு சிறந்த தொண்டு ஒன்றுண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழி பாடாகும் என்று உறுதிகொண்டார். கொண்டு, ஆயனைப் பார்த்து இவ்வானிரையை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அத்தொண்டை யானே செய்யப்போகிறேன். என்றார். ஆயன் நடுநடுங்கிக் கைகூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசார சருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்குந் திருத்தொண்டை ஏற்றார். விசார சருமர் பசுக்களை மண்ணியாற்றங் கரையிலும் வேறி டங்களிலும் மேய்ப்பார்: பசும் புற்களைப் பறித்துப் பசுக்களுக்கு ஊட்டுவார்; நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த அவைகளை விடுவார்; அச்சத்தைத் தாமே முன்னின்று நீக்குவார்; காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகொழுகச் செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பசுக்கள் தங்கள் கன்றுகளைப் பார்க்கினும் மறைக் கன்றாகிய விசார சருமரை அதிகம் நேசித்து வந்தான். கன்றுகள் தங்களைப் பிரியினும் அவைகள் தளரமாட்டா; விசார சருமர் பிரியின் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும்; தாமே பால் சொரியும். பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணுந்தொறுங் காணுந்தொறும் விசார சருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது. விசார சருமர் மண்ணியாற்றங் கரையில், ஒரு மணல் திட்டையில், ஓர் ஆத்தி மரத்தடியில், மணலினால் ஒரு சிவலிங்கம் அமைப்பார்; திருமதில்கள் எழுப்புவார்; கோபுரங்கள் வகுப்பார்; சுற்றாலயங்கள் எடுப்பார்; வழிபாட்டுக்கு அவர் ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வருவார்; புதிய குடங்களை வாங்கிவருவார்; கறவைப் பசுக்களிடஞ் சென்று மடியைத் தீண்டுவார்; பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொணர்வார்; சிவலிங்கத்தை அருச்சிப்பார்; திருமஞ்சனம் ஆட்டுவார்; பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்புவார். இவ் வன்புப் பூசையைச் சிவபெருமான் இன்புடன் ஏற்பார். திரு மஞ்சனத்துக்குப் பால் உதவியும் பசுக்கள் உரியவர்களுக்குப் பால் குறையாதபடி வழங்கி வந்தன. இவ்வாறு நிகழ்ந்துவரு நாளில், ஒருநாள் ஒருவன் சேய்ஞலூர்ப் பிள்ளையார் செய்கையைக் கண்டான். அவன் உண்மையுணராத வனாய் அவ்வூர் அந்தணர்களுக்கு அதை அறிவித்தான். அவர்கள் உடனே எச்சதத்தனை அழைப்பித்து அவ்வொருவன் சொன்னதை அவனுக்குச் சொன்னார்கள். எச்சதத்தன் இஃதெனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி அப்பிழை நிகழுமாயின் அஃது என்னுடையதாகும் என்று வணங்கி விடை பெற்றுச் சென்றான். அடுத்த நாள் காலையில் விசார சருமர் வழக்கம்போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன் அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே சென்றான். சென்று மணற் றிட்டையின் அருகேயுள்ள ஒரு குராமரத்தில் ஏறி ஒளித்திருந்தான். விசார சருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பாற் குடங்களை ஏந்தி அபிடேகஞ் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும் அவன் மரத்தினின்றும் விரைந்திறங்கி ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார் முதுகில் அடித்தான்; வெம்மொழிகளால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப் புடைக்கிறான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல் பாவி பாற்குடங்களை உதைத்தான். அவ்வடாத செயலைச் செய்தவன், தந்தை என்று விசார சருமர் நன்கு உணர்ந்தார்; உணர்ந்து, அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்த ஒரு கோலை எடுத்தார். அக்கோல் மழுவாயிற்று. அம் மழுவால் தந்தையின் கால்களை வெட்டி, அவர் முன்போலச் சிவபூசையில் அமர்ந்தார். சிவபெருமான் தேவியுடன் விடை மேல் தோன்றினார். விசார சருமர், ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் எய்தினார்; விழுந்து வணங்கினார். சிவபெருமான், விசார சருமரைத் திருக்கையால் எடுத்து, நம் பொருட்டு நீ உன் தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை என்று திருவாய்மலர்ந்து அவரை அணைத்தார்; அவருடலைத் தடவினார்; உச்சி மோந்தார்; மகிழ்ந்தருளினார். விசார சருமரது திருமேனி சிவமயமாயிற்று. அவர் பேரொளியாய் விளங்கினார். சிவபெருமான் சேய்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கித் திருத் தொண்டர்களுக்கு உன்னைத் தலைவனாக்கினோம். நாம் உண்பன உடுப்பன அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுரபதத்தைத் தந்தோம் என்று அருளித் தமது திருச்சடையிலுள்ள கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருள் செய்த சண்டேசுரபதத்தை அடைந்தார். எச்சதத்தன் சண்டீசுரப் பெருமானால் வெட்டுண்டமையால் அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.  திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 1883 பிறப்பு (ஆகடு 26) 1891 சென்னை இராயப்பேட்டையில் தொடக்கப் பள்ளியில் சேர்தல் 1894 வெலி பள்ளியில் சேர்தல். நோயால் கல்வி தடைப்படுதல். நான்கு ஆண்டுகள் பள்ளிக் கல்வி இல்லை. 1898 - 1904 மீண்டும் வெலி பள்ளியில் சேர்தல். ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால் இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தார். 1901-1906 யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயிலுதல் 1907 கதிரைவேலர் மறைவு. 1907-1908 பென்சர் கம்பெனியில் பணி 1908 கதிரைவேலர் வரலாறு (முதல் நூல்) எழுதுதல். 1908-1910 மயிலைப் பெரும்புலவர் தணிகாசல முதலியா ரிடம் தமிழும் சைவ சாத்திரங்களும் பயிலுதல். பெரியபுராணத்தைக் குறிப்புரையுடன் சிற்றிதழ் களாக வெளியிடத் தொடங்குதல். 1908 நீதிபதி சதாசிவ ஐயர் தொடர்பு 1910 அன்னி பெசண்ட் அம்மையாரைச் சந்தித்தல். (அம்மா என்றே திரு.வி.க. இவரைக் குறிப்பது வழக்கம்) 1910 - 1916 வெலி பள்ளியில் ஆசிரியப் பணி 1912(செப் 13) திருமணம் - மனைவியார்: கமலாம்பிகை 1914 சுப்பராய காமத், எ.சீனிவாச ஐயங்கார் தொடர்பு 1915 பாலசுப்பிரமணிய பக்தஜன சபைத் தோற்றம். 1916 - 1917 வெலி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர். 1917 தொ.ச. தலைவர் பி.பி.வாடியா தொடர்பு: இத் தொடர்பே திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடக் காரணமாயிற்று. 1917 கல்லூரிப் பணியை விடுத்தல், திசம்பர் 7-ல் தேசபக்தன் ஆசிரியர் ஆதல். 1918 (ஏப்ரல் 27) இந்தியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் (சென்னைத் தொழிலாளர் சங்கம்) தோன்று தல். திரு.வி.க. துணைத் தலைவர். செப்டெம்பர் முதல் நாள் மனைவியார் கமலாம்பிகை மறைவு 1919 (மார்ச் 18) காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தல். (அக் 11) பெரியார் ஈ.வே.ரா.வின் நட்பைப் பெறுதல். (டிச. 17) லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ. சிதம்பர னாருடன் சென்று காணுதல். 1920 மத்தியத் தொழிலாளர் சங்கத் தோற்றம். சூலை இறுதியில் தேசபக்தன் நிலையத்தை விடுத்து நீங்குதல். அக்டோபர் 22இல் நவசக்தி தொடங் குதல். 1921 சூலை மாதம் ஆளுநர் வில்லிங்டன் அழைத்துக் கடுமையாக எச்சரித்தல். நாடு கடத்தப்படுவார் என்ற நிலையில் சர்.தியாகராய செட்டியார் தலையிட்டால் அத்தண்டனை நிறுத்தப்படுதல். 1925 (நவம்பர் 21, 22) தமிழ்நாடு காங்கிர வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சீபுரத்தில். தலைவர் திரு.வி.க. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டிலிருந்து வெளியேறுதல். இதன் விளைவாகத் தமிழக அரசியலில் பெருமாறுதலுக் கான திருப்பம் ஏற்பட்டது. 1939 காங்கிர ஆட்சியிலும் பக்கிங்ஹாம் ஆலை வேலைநிறுத்தம். 1943 அறுபதாண்டு நிறைவு மணிவிழா 1944 திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவருதல் 1947 சூன் 9 முதல் திசம்பர் 7 வரை காங்கிர ஆட்சி யில் திரு.வி.க.வுக்கு வீட்டுச் சிறைவாசம். 1949-50 ஒரு கண் பார்வை முதலில் மறைந்து, பின் இரு கண்களுமே பார்வை இழத்தல். 1953 செப்டெம்பர் 17-ல் மறைவு. நன்றி : சாகித்திய அக்காதெமி