திரு.வி.க. தமிழ்க்கொடை 5 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 5 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+352=368 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை திரு.வி.க. என்பதன் விரிவாக்கம் என்ன? திருவாரூர் விருத்தாசல முதலியார் கலியாண சுந்தரம் என்பதாம். அவர்தம் வரலாற்று நூல், வாழ்க்கைக் குறிப்புக்கள் எனப்பட்டது ஏன்? எனது வாழ்க்கை வரலாற்றை எழுதுதல் வேண்டும என்னும் எண்ணம் அணித்தே என்பால் எழுந்தது. அவ் வெண்ணம் முன்னரே எழுந்திருந்தால் நிகழ்ச்சிக் குறிப்புக்களை அவ்வப்போது திரட்டிச் சேமித்து வைத்திருப்பேன். யான் அவற்றைத் திரட்டினேன் இல்லை என்றும், எனது வாழ்க்கை வரலாற்றை முறைமுறையே கிளந்து கூறப்போகின்றேன் இல்லை. அதைக் கிளந்து கூற யான் எண்ணியதே இல்லை. எண்ணியிருப்பேனாயின் நாட்குறிப்பை நிரலே பொறித்துவைத்திருப்பேன். ஆதலின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இன்றியமையாத சிலவற்றை மட்டும் கூறு கூறாகக் குறித்துச் செல்ல முயல்கின்றேன். என்றும், நாட்குறிப்பும் பிறவும் ஒழுங்குமுறையில் அமையாத ஒன்றை வரலாறு அல்லது சரிதம் என்று எப்படிக் கூறுதல் கூடும்? அதனால் இந்நூல் வாழ்க்கைக் குறிப்புக்கள் என்னும் தலைப்பைத் தாங்கலாயிற்று என்றும் திருவி.க. அவர்களே நூல் முன்னுரை, தோற்றுவாய் ஆகியவற்றில் குறிப்பிடுவதால் நூற்பெயர்க்குறிப்பு கைவந்த கனியாகப் புலப்படும். அண்ணல் காந்தியார் தம் வாழ்வைச் சத்தியசோதனை யாக்கினார். அதன் விளக்கமாகவே அவர் வரலாறு அமைந்தது. திரு.வி.க.வும் தம் வாழ்வைச் சோதனை (ஆய்வு)க்கு உட்படுத்து கிறார். அவ்வாய்வின் வெற்றிப்பாட்டு விளக்கமே வாழ்க்கைக் குறிப்புக்கள் ஆதலையும் தெளிவிக்கிறார். எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து, எவ்வுயிரும் பொதுவெனும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிற உயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ, அவர்வாழ்க்கை வெற்றியுடைய தென்றும், மற்றவர் வாழ்க்கை தோல்வியுடைய தென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியன எனக்கு உணர்த்துகின்றன. எனது வாழ்க்கையில் அந்தண்மை இடம் பெற்றதா? இல்லையா? இதற்குச் சோதனை வேண்டும். என் வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவரின் சோதனைக்கு வழி ஏற்படும் v‹W njh‰WthÆny F¿¡F« âU.É.f., வாழ்க்கைக் குறிப்புக்களின் இறுவாயில், என் வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலவற்றைப் பொதுமக்கள் முன்னே கிடத்தியுள்ளேன். பலதிறத் தொல்லைகளிடை என் வாழ்க்கை வளர்ந்தது. அதனால் அது பொருட் பெருக்கில் புரளாதது ஆயிற்று. தொண்டின் பெருக்கில் புரள்வதாயிற்று. வாழ்க்கையின் அடைவு பொருட் பெருக்காயின் என்னுடையது தோல்வி எய்திய தாகும். தொண்டாயின் அது வெற்றி எய்தியதாகும். தொண்டின் சேய் எது? அந்தண்மை. தொண்டு அந்தண்மை ஊற்றைத் திறந்தது. அந்தண்மை அருவியாய் ஓடுகிறது. அதுவெள்ளமாதல் வேண்டும். எனது வாழ்க்கை ஒரோவழி அந்தணச் செல்வத்தைப் பெற்றது. அவ்வந்தணச் செல்வம் முழுநிலை எய்தும் முயற்சியில் எனது வாழ்க்கையில் எஞ்சிய பகுதியும் ஈடுபடுமாறு ஆண்டவன் அருள் சுரப்பானாக. என்கிறார். திரு.வி.க.வின் வாழ்க்கைப் பிழிவு என்ன? எந்தப் பிறவியும் பிறக்கும்போதே அந்தணப் பிறவி எனப் பிறப்பது இல்லை. பிறந்து வளரும் வகையாலும் தொண்டாற்றும் திறத்தாலும் ஆருயிர்க்கு இரங்கும் அருளறங்களாலுமே அந்தணச் செல்வத்தைப் படிப்படியே அடைந்து நிலைபேறுற முடியும் என்பதே திரு.வி.க. வின் வாழ்க்கைப் பிழிவு ஆகும். இதன் விரிவாக்கத்தை எம்மால் இயற்றப் பெற்ற திரு.வி.க. என்னும் தீந்தமிழ் அந்தணர் என்னும் நூலில் காண்க. வாழ்க்கைக் குறிப்புக்கள் உயர் பெருங்காவியச் சுவை நல்குவதை அணிந்துரை வழங்கிய திரு.ம.பாலசுப்பிரமணியனார், சிற்சில பகுதிகளில் காவியச் சுவை ஊற்றெடுத்தோடு வதையும், சில இடங்களில் வீரச்சுவை மதர்த்தெழுந்தாடு வதையும், வேறுசில இடங்களில் உள்ளம் கனிந்து உருகுவதை யும் பன்முறை படித்துப் படித்து அனுபவிக்கலாம். மனைவி யோடு தாம் இல்லறம் நடத்திய பகுதியை எவர் படித்தாலும் அவர் தங்கண்ணீர் பெருகுவது திண்ணம் என்பது உணர்ந்து படிக்கும் எவர்க்கும் உண்மைப் பொருள் என்பது உறுதி. பிறப்பு, சோதிடம், குழந்தைமை, பள்ளிப்படிப்பு, பிள்ளைமை என்பவற்றில் வளரும் ஆலமரமாகத் திரு.வி.க. வைக் காணும் நாம், கல்வி, ஊழியம், அரசியல், தொழிலாளர் இயக்கம், சமயமும் சன்மார்க்கமும், மாதர், சீர்திருத்தம், தொண்டு, உடல் என்னும் பகுதிகளில் கிளைகளும் வீழ்துகளும் பரப்பி, அண்ணல்யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படை யொடு மன்னர் இருக்கையாய் மன்னும் மாண்பைக் காண முடியும். திரு.வி.க. வரலாற்றின் தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அது, அவர் வரலாற்று நூல் என்று அளவிட்டு அமைய முடியாப் பெருமை சான்றாய், அவர் வாழ்ந்த காலத் தமிழகப் பெருமக்கள் வரலாற்றுக் குறிப்புப் பெட்டகம் எனல் சாலும்! அந்நாளில் அவரொடு தொடர்புடையவராய் எவரெவர் இருந்தாரோ, அவரவரனைவரும் தம் வரலாற்றைத் தாம் எழுதினார் அல்லர் ஆயினும் அவர் வரலாற்றை அழியாப்புகழ் ஆவணம் ஆக்கி வைத்தவர் திரு.வி.க. அவர்களே! மீண்டும் குறிப்பிட்டால் புகழ் ஆவணம் என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும். ஏன்? பிறர் பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து என்பது அவர்தம் கட்டளை நெறியாய் அமைந்தமையே யாம். கல்விப் பகுதியில் மட்டும் தனித்துக் குறிப்பிடப் பெறுவார் நான்பத் தொருவர். இவ்வாறே பிற பகுதிகளிலும் இடம் பெறுவர் சிறப்புப் பெயர் அகரவரிசையில் இடம் பெறுபவர் ஏறக்குறைய ஐந்நூற்றுவர்! இப்பேற்றைப் பிறர் வரலாறு வழியாகப் பெறுதல் அரிதே அல்லவோ! மனத்திற்கு அமைதி வேண்டுமா, துன்பத்திற்குத் துன்ப மாக்கும் துணிவு பெற வேண்டுமா, சால்பு என்பதற்கு எழுதி வைக்கப்பட்ட ஓவியம் ஒன்றை உயிர்ப்போடு கண்ணேரில் காணவேண்டுமா, யான் படிக்கும் போது என்னை நான் அறியேன் என்னும் வேட்கையில் ஒரு நூலைக் கற்க வேண்டுமா, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்களைக் கற்பாராக! என்றும் பார்வைப் பயன் நூலாக வைத்துக் காப்பாராக! திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் முதற்பதிப்பாக 1944இல் வெளிவந்தது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழியாக முப்பதிப்புகள் வெளிவந்தன. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். முன்னுரை யான் ஒரு சிறு குடிலில் பிறந்தவன்; எளிமையில் வளர்ந்த வன்; பலதிற இயக்கங்களில் ஈடுபட்டவன். இவ்வேழையின் வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலவற்றைக் கொண்டது இந்நூல். எனது வாழ்க்கை வரலாற்றை எழுதுதல்வேண்டுமென்னும் எண்ணம் அணித்தே என்பால் எழுந்தது. அவ்வெண்ணம் முன்னரே எழுந்திருந்தால் நிகழ்ச்சிக் குறிப்புக்களை அவ்வப் போது திரட்டிச்மித்து வைத்திருப்பேன். யான் அவைகளைத் திரட்டினேனில்லை. தோற்றுவாய் பார்க்க. நாட்குறிப்பும் பிறவும் ஒழுங்கு முறையில் அமையாத ஒன்றை வரலாறு அல்லது சரிதம் என்று எப்படிக் கூறுதல் கூடும்? அதனால் இந்நூல் வாழ்க்கைக் குறிப்புக்கள் என்னுந் தலைப்பைத் தாங்கலாயிற்று. இந்நூற்கண் என் வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலவே வெளி வந்துள்ளன; மற்றவை என் கருவிலே கிடக்கின்றன. வாய்ப்பு நேருங்கால் அவையும் வெளிவரும். முதலாவது காகித வாசி தீர்தல்வேண்டும். எனது பருவுடல் நலன் சிறிது குலைந்துள்ளது. ஆனால் நினைவுத் திறம் இன்னுங் கொழுமையதாகவே இருக்கிறது. குறிப்புக்கள் பெரிதும் எனது நினைவிலிருந்தே வெளிவந்தவை. ஆண்டுக் குறிப்புக்கும், வேறு சிலவற்றிற்கும் - யான் நடாத்திய தேசபக்தனும், நவசக்தியும், ஆங்காங்கே எனக்களிக்கப் பெற்ற வாழ்த்துரைகளும் ஓரளவில் துணை நின்றன. நினைவிலிருந்து வெளிவந்த குறிப்புக்கள் ஒழுங்குமுறை வைப்பில் அமையுமா? அமையா என்று சொல்லவேண்டுவ தில்லை. ஆகவே இந்நூலைக் கால ஒழுங்கு, நிகழ்ச்சி ஒழுங்கு, பொருள் ஒழுங்கு முதலியன அற்ற ஒன்று என்று யானே அறிக்கை செய்துகொள்கிறேன்; இந்நூற் குறிப்புக்களைக் கொண்டு வரும் பதிப்பில் சில ஒழுங்குமுறை செய்தல் கூடுமென்று கருதுகிறேன். இந்நூலை யான் யாக்கத் தொடங்கியதும் தொழிலாளர் சிலர் என்னைச் சூழ்ந்து, நூலைப் புலவர்க்கென்று எழுதா தேயுங்கள்; எங்கட்கென்றும் எழுதுங்கள் என்று விண்ணப்பஞ் செய்தனர். அவர்தம் விண்ணப்பத்தையும் உளங்கொண்டு எல்லார்க்கும் பயன்படுமுறையில் நூலை யாத்துள்ளேன். சில வழக்கச் சொற்களையும், மருவுச் சொற்களையும் திசைச் சொற் களையும், குறியீடுகளையும் அவ்வவ்வாறே பெய்துள்ளேன். எனது முதுமையை உணர்ந்து, அச்சுப்பிழை திருத்தத்தில் நாட்டஞ்செலுத்தத் தாமே வலிந்துவந்தவர் திரு. வே. தியாகராய முதலியார்; மற்றொருவர் சாது அச்சக மேற்பார்வையாளர் திரு. மு. நாராயணசாமி முதலியார். இவ்விருவர்க்கும் எவ்வகையில் யான் கைம்மாறு செலுத்த வல்லேன்? இவர்க்கு நீண்டநாள், நல்யாக்கை, தொண்டுச் செல்வம் முதலிய பேறுகளை வழங்கு மாறு எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகிறேன். இந்நூலுக்குச் சிறப்புப் பெயரகராதி, மேற்கோள் குறிப் பகராதி, உள்ளுறை, காலக் குறிப்பட்டவணை, பிழைதிருத்தம், வமிசாவளி ஆகியவை இன்றியமையாதன என்று விலைந்து, அத்தொண்டில் அன்பால் ஈடுபட்டுழைத்துத் துணை புரிந்த துடன் நில்லாதது, ஓர் ஆராய்ச்சி அணிந்துரையும் வரைந்து தந்தவர். சித்தாந்தம் ஆசிரியர் திரு. மயிலை. ghyR¥ãukÂa KjÈah®, ã.V., ã.vš., திரு. முதலியார் அன்புக்கு யான் என்ன செலுத்தல் கூடும்? அவர்க்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்தும் உரியனவாக. நூல் வெளியீட்டுக்கென்று ஐந்நூறு ரூபா முன்பணம் திரு.தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாயிலாகச் செலுத்தி ஊக்கமூட்டியவர் சென்னைத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கோவைச் செல்வருமாகிய திவான் பகதூர் - ஸி.எ. இரத்தின சபாபதி முதலியார். அவர்தம் நன்றி மறக்கற்பாலதன்று. அவர்க்குப் பலவகைச் செல்வப் பேறும், தமிழ்த்தொண்டும் மேன்மேலும் பெருகத் தமிழ்த் தெய்வம் அருள் செய்வதாக. யான் மனிதன்; குறையுடையவன். இந்நூல் என்னால் முதுமையில் யாக்கப்பட்டது; விரைந்து யாக்கப்பட்டது. குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு அன்பர்களை வேண்டு கிறேன். சாந்தி! சாந்தி! சாந்தி! சென்னை 12.2. 1944 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix முன்னுரை xiii நூல் 1. தோற்றுவாய் 3 2. பிறப்பு 9 3. சோதிடம் 18 4. குழந்தைமை 24 5. பள்ளிப் படிப்பு 34 6. பிள்ளைமை 50 7. கல்வி 75 8. ஊழியம் 169 9. அரசியல் 191 தொடர்புரை 342 சிறப்புப் பெயரகராதி 343 திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்-1 1. தோற்றுவாய் தோற்றமுண்டேல் மரணமுண்டு என்பது வன்றொண்டர் வாய்மை. இந்நில உலகில் எத்தனையோ உயிர்கள் பிறந்தன; எத்தனையோ உயிர்கள் இறந்தன. இவ்வேளையில் தோன்றும் உயிர்கள் எத்துணையோ? மறையும் உயிர்கள் எத்துணையோ? தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் இடைப்பட்டது வாழ்க்கை. வாழ்க்கை, வரலாறுடையது. ஒவ்வோர் உயிர்க்கும் வாழ்க்கை வரலாறு உண்டு. இதுகாறும் உலகங்கண்ட வாழ்க்கை வர லாறுகள் எவ்வளவு? அவை எண்ணில் அடங்குமோ? அவை களைக் கணக்கிட்டுக் கூற வல்லார் உளரோ? பொது - சிறப்பு வாழ்க்கை வரலாறு இருவிதம். ஒன்று பொது; மற்றொன்று சிறப்பு. பொது எல்லா உயிர்கட்கும் உரியது; சிறப்பு மக்கட்கு மட்டும் உரியது எப்படி? உயிர்களில் வேற்றுமை இல்லை. எல்லா உயிர்களும் ஒன்றே. பின்னை வேற்றுமை எங்கே எழுகிறது? உயிர்கள் தாங்கும் உடலை யொட்டியே வேற்றுமை எழுகிறது. உயிர்கள் ஒரேவித உடலைத் தாங்குவதில்லை; அவை பலதிற உடல்களைத் தாங்குகின்றன. புல் பூடு செடி கொடி மரம் முதலிய உடல்களை யும், புழு மீன் பாம்பு ஓணான் பல்லி முதலிய உடல்களையும், ஈ வண்டு பறவை முதலிய உடல்களையும், பன்றி ஆடு மாடு புலி யானை கரடி சிங்கம் முதலிய உடல்களையும், மக்கள் உடலையும் உயிர்கள் ஏற்கின்றன. இவ்வுடல்களின் உறுப்பு, கரணம் முதலியன ஒரு படித்தாய் அமைவதில்லை. அவை பல படித்தாய் அமைகின்றன. அவ்வவ்வமைப்புக்கேற்றவாறு அறிவு விளங்கு கிறது. உயிர்களின் அறிவுத்திறங்களை நன்கு தெளிந்த பண்டை மூதறிஞர், அவைகளை ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் என்று பாகுபாடு செய்தனர். ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுயிர் வரை ஓரினம்; ஆறறி வுயிர் வேறோரினம். முன்னையது பகுத்தறிவில்லாதது; பின்னையது பகுத்தறிவுடையது. அஃது அஃறிணை, இஃது உயர் திணை. அஃறிணை உயிர்கள் படிப்படியே பல திற உடல்களை எடுத்து எடுத்து, இறுதியில் உயர்திணைக்குரிய உடலை எடுக்கும். மனிதப் பிறவி உயர்திணையின் பாற்பட்டது. அது விடுதலைக் குரியதாதலின், அதற்குமேல் பிறவி அமைவதில்லை. இதுபற்றியே மக்கட் பிறவி விழுமியதென்று உலகம் ஒரு முகமாகக் கொண்டது. மனிதப் பிறவி எடுத்தவரெல்லாம் மக்களாகார். அவருள்ளுங் கல்லுண்டு; மரமுண்டு; பாம்புண்டு; பறவையுண்டு; விலங்குண்டு. அவர் மக்களாக முயலுதல் வேண்டும். முயற்சி ஒரே பிறவியில் வெற்றி அளிப்பினும் அளிக்கும்; வேறு சில பிறவிகளில் வெற்றி அளிப்பினும் அளிக்கும். உயிர் மக்களுலகுக்கே உண்டு என்றும், மற்ற உலகங் கட்கில்லை என்றுங் கூறுவோருளர். இக்கூற்று இனி ஏற்றமுறாது. அக்காலம் மலை ஏறியது. அஃறிணை உலகுக்கும் உயிருண்டு என்று விஞ்ஞான உலகம் உறுதி செய்துவிட்டது. உடல் ஒருவித விளக்கு. இதை மாயாதனு விளக்கு என்றனர் ஆன்றோர். உயிர் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது. படிப் படியே அதன் இருளைப் போக்கி அறிவை விளக்கஞ்செய் வது உடல். அதனால் உடல் விளக்கு என்று சொல்லப்பட்டது. உயிர், பலதிற உடல்களில் ஒன்ற ஒன்ற, அதனிடை அறிவு விளக்கம் பெருகிப் பெருகி வளர்கிறது. அவ்வளர்ச்சிக்குத் துணைபுரியும் பண்பு இயற்கையிலிருக்கிறது. இது நம் முன் னோரால் காணப்பட்டதே. இதன் உண்மையில் இக்கால அறிஞர்க்கு ஐயப்பாடு விளைந்து வந்தது. இனி அவ்வையப் பாட்டுக்கு இடமிராது. அறிஞர் ஹெக்கல், டார்வின் முதலி யோர் விஞ்ஞான வழியில் நிகழ்த்திய ஆராய்ச்சிகள் வெளி வந்துள்ளன. அவைகள் இக்கால அறிஞரின் ஐயப்பாடுகளைக் களையவல்லன. உடல் வாயிலாக உயிர் பெற்றுவரும் விளக்கம் (வளர்ச்சி) உள்ளது சிறத்தல் என்பது. உள்ளது சிறத்தலைக்1 கூர்தல் என்பர் தொல்காப்பியனார். கூர்தல் அறம் (Evolution) உலகை வளர்த்து வருகிறது. உலக வளர்ச்சிக்கென்று, கூர்தல் அறம் இயற்கையில் அமைந்துள்ளது. கூர்தல் அறத்தை டார்வின் ஆராய்ச்சி கொண்டு முதல் முதல் எனக்கு அறிவுறுத்தியவர் தோழர் எம். சிங்காரவேல் செட்டியார். பின்னே அவ்வறத்தைப் பற்றிய உணர்வு, தியோசாபிகல் சங்கப் பேரறிஞர் சிலர் கூட்டுறவால் ஒரு வழியில் பெருகியது. இயற்கையோடியைந்து வாழ வாழக் கூர்தல் நுட்பம் தானே விளங்கிச் செல்வதை அநுபவத்தில் நன்கு தெளிதல் கூடும். யான் இப்பொழுது மனிதப் பிறவி எய்தியுள்ளேன். முன்னே கீழ்ப்பட்ட பிறவிகள் பல எய்தியிருப்பேன். பழம் பிறப்பை உணரும் வாய்ப்பு மனிதப் பிறவியில் அமைந்திருக்கிறது. அவ் வுணர்வு விளங்குதற்குத் தக்க உழைப்பு வேண்டும். சத்திய ஞானப் பேற்றுக்கு அறிகுறி பழம் பிறப்புணர்தல் என்று புத்தர் பெருமான் அருளியுள்ளனர். புத்தர் பெருமான் அருள் மொழியில் எனக்கு உறுதியுண்டு. சீலம், வாழ்க்கையானால் பழம் பிறப்புணர்வு எளிதில் விளங்கும். வெறும் ஆராய்ச்சி அவ்வுணர்வை உண்டு பண்ணாது. பழம் பிறப்புணர்வை உண்டுபண்ண வல்லது சீலம்; சீலம். புல்லிலிருந்து மக்கள் வரை உயிர்கள் அடையும் உடம்பு கள் ஒரே விதமாயில்லை; மாறுபட்டனவா யிருக்கின்றன. ஒரு பிறவியிலேயே மாறுதல் நிகழ்வதையுங் காண்கிறோம். அந் நிகழ்ச்சியை என்னென்று கூறுவது? அதை வாழ்க்கை வரலாறு (life history) என்று உலகங் கூறுகிறது. ஒரு தவளையை எடுத்துக் கொள்வோம். அதன் வளர்ச்சி யில் எத்துணை மாறுதல்! சிங்கத்தின் உறுப்புக்கள் சில புலியின் கணில்லை; புலியின் உறுப்புக்கள் சில யானையினிடமில்லை; யானையின் உறுப்புக்கள் சில ஒட்டகத்தினிடமில்லை. மக்கட் பிறவியிலும் மாறுதல் உற்றே வருகிறது. மிகப் பழம் பெருங் காலத்தில் மக்கள் ஆண் பெண் பிரிவின்றி ஒன்றியே இருந் தார்கள். அவர்கள் முக்கண்ணர்களாய், கோரைப் பல்லர்களாய், மாட்டுக் குடலர்களாய் வாழ்ந்த காலமுண்டு. மக்களின் உள் ளுறுப்புக்களிலும் அவ்வப்போது சிற்சில மாறுதல்கள் உற்றே வருகின்றன. இவ்வாறு உயிர்களின் உடலுறுப்புக்களில் நேரும் மாறுதல்கள் பொதுப்பட்ட வாழ்க்கை வரலாறு என்னப்படும். சிறப்பு வாழ்க்கை வரலாறு என்பது, மக்கள் வாழ்விலே அன்றாடம் உற்றுவரும் நிகழ்ச்சிகளின் சேர்க்கை; ஈட்டம். இதை வாழ்க்கைக் கீழ்க்கணக்கு - பேரேடு - என்னலாம். இது மக்கட் பிறவியில் மட்டும் நிகழ்வது; மற்றப் பிறவிகளில் நிகழாதது. இப்பிறவிகள் பகுத்தறிவில்லாதனவாதலால், இவைகளின் அன் றாட வாழ்க்கை ஒரே விதமாக நடைபெற்று வருகிறது. ஒரேவித வாழ்க்கையில் வரலாறு எப்படி அமையும்? இங்கே குறிக் கொண்டது மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் வரலாறே யாகும். ஒரு சிலர் வாழ்க்கை வரலாறு ஒவ்வொருவரிடத்திலும் அமைவது. அவ்வரலாறு அமையாதவரே இரார் என்று கூறலாம். ஒவ் வொருவரும் தத்தம் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதப் புகுந்தால் அந் நூல்களை அடுக்க இவ்வுலகம் போதுமா? போதாது. அந்நிலையை, இயற்கை என்றும் உண்டு பண்ணாது. வாழ்க்கை வரலாற்றை எழுதும் பேறு ஒரு சிலர்க்கே வாய்க்குமாறு இயற்கை செய்யும். பலதிறப்பட்ட உலகை ஒழுங்கு முறையில் நடாத்தும் பொறுப்பு இயற்கை அன்னையினுடையது. வெற்றி தோல்வி வாழ்க்கையில் வெற்றியும் பேசப்படுகிறது; தோல்வியும் பேசப்படுகிறது. வெற்றி வாழ்க்கை எது? தோல்வி வாழ்க்கை எது? பதவி, பொருள் முதலியவற்றில் படிப்படியே இவர்ந்தோர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும், மற்றவர் வாழ்க்கை தோல்வி யுடையதென்றும் பொதுவாகக் கருதப்படுகின்றன. வாழ்க்கை யின் வெற்றி, பதவி பொருள் முதலியவற்றில் விளைவது உண்மை யாயின், என்னுடைய வாழ்க்கை முழுத்தோல்வி யுடையதென்று தயங்காது சொல்வேன். வாழ்க்கையில் வெற்றி என்பதும், தோல்வி என்பதும் எனக்கு வேறு விதமாகத் தோன்றுகின்றன. மக்கட் பிறவியில் பகுத்தறிவிருத்தலும், அது படிப்படியே விளக்கமுறும் பண்பு அதன்பாலிருத்தலும் நன்கு தெரிகின்றன. இவ்வளர்ச்சிக் கென்று வாழ்க்கை அமைகிறது. இத்தகைய வாழ்க்கையின் பேறு, பதவி பொருள் அளவில் நிற்பதாகுமா என்று ஐயுறு கிறேன். எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து, எவ்வுயிரும் பொதுவெனுந் தெளிவு தோன்றித் தம் உயிரே பிற உயிரும் என்னும் உணர்வுபொங்கித் தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ, அவர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும், மற்றவர் வாழ்க்கை தோல்வியுடைய தென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியன எனக்கு உணர்த்துகின்றன. எனது வாழ்க்கையில் அந்தண்மை இடம் பெற்றதா? இல்லையா? இதற்குச் சோதனை வேண்டும். என் வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவரின் சோதனைக்கு வழி ஏற்படும். பண்டை மூதறிஞர் பண்டை மூதறிஞர் தத்தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே எழுதும் முயற்சியில் தலைப்பட்டாரில்லை. அவருள் நூலெழுதும் வாய்ப்புப் பெற்றோர் நூலில் எங்கேயோ ஒரு மூலையில் தமது வரலாற்றைக் குறிக்கும் அவசியம் நேர்ந்தால் குறிப்பர். தமது வரலாற்றைத் தாமே எழுதப் புகுவதைச் சிறுமை யாகவோ செருக்காகவோ பிற என்னவாகவோ முன்னோர் கருதி இருப்பர். அவர் தமது வரலாற்றைப் பெரிதாகக் கருதவில்லை போலும். அக்கால தேவதைக்கும் அஃது அவசியமாகத் தோன்ற வில்லை போலும். முன்னோர் வரலாறுகள் பெரிதும் பின்னோரால் எழுதப் படுவது வழக்கம். அவைகளில் மெய்யுரையுமிருக்கும்; புனைந் துரையு மிருக்கும். புனைந்துரை நன்னோக்குடன் அன்பினின் றும் எழுந்ததென்றே தெரிகிறது. புனைந்துரையைச் சரித்திர உலகம் ஏலாது. முன்னாளில் சாம்ராஜ்ய அமைப்பு, அரசியல் கட்சி ஆவேசத் தேர்தல், வெறிப் பேச்சு, பத்திரிகை முதலியன இல்லை. இவைகள் பொய்ம்மைக்குத் தாயகங்கள். பொய்ம்மை வழி உலகம் இயங்கும் இந்நாளில், வாழ்க்கை வரலாறுகள் வெளிவராதிருத்தல் நல்லது. அவை வெளி வருமாயின், அவரவர் வரலாற்றை அவரவரே எழுதிவிடுவது அறம். அப்பொழுதே நண்பரின் உயர்வு நவிற்சியும், பகைவரின் இழிவு நவிற்சியும் இடம்பெறா தொழியும். மன மாற்றம் தன் வரலாற்றைத் தானே எழுதுவதைப் பல ஆண்டுகளாக யான் வெறுத்து வந்தேன். அதில் முன்னோர் வழியைக் கடைப் பிடித்தல் வேண்டும் என்ற எண்ணமுடையவனாகவே இருந் தேன். அணித்தே நேர்ந்த சில நிகழ்ச்சிகள் எனது மனோநிலையை மாற்றின. காலதேசவர்த்தமான வேகத்துக்கு இரையாகும் நிலைமை எப்படியோ நேர்ந்து விடுகிறது! என் செய்வது!! என் வாழ்க்கைக் குறிப்புக்கள் எற்றுக்கு எழுதப்படல் வேண்டும்? என்னைப்பற்றிய அளவில் அஃது எழுதப்பட வேண்டுவ தில்லையென்றே சொல்வேன். எனது வாழ்க்கை பல இயக்கங் களிலும் தொண்டுகளிலும் ஈடுபட்டது. அவைகளில் நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும்; தீய நிகழ்ச்சிகளும் இருக்கும். நல்லன கொண்டும் தீயன விலக்கியும் மற்றவர் வாழ்தற்கு என் வாழ்க்கைக் குறிப்புக்கள் ஓரளவிலாதல் துணைபுரியும் என்னும் நம்பிக்கை இதை எழுதுமாறு என்னை உந்தியது. மற்றவர் வாழ்க்கைக்குத் துணைபோகும் நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நல்ல வழியிலோ தீய வழியிலோ உறாதிருப்பின், இந்நூலை எழுதும் முயற்சியில் யான் தலைப்பட்டிரேன். எனது வாழ்க்கை வரலாற்றை முறைமுறையே கிளந்து கூறப்போகின்றேனில்லை. அதைக் கிளந்து கூற யான் எண்ணி யதே இல்லை; எண்ணியிருப்பேனாயின் நாட் குறிப்பை நிரலே பொறித்து வைத்திருப்பேன். (சிற்சில நாட்குறிப்புக்கட்குத் தேச பக்தன், நவசக்தி வேறு சில அறிக்கைகள் முதலியன துணைபுரி கின்றன). ஆதலின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இன்றியமையாத சிலவற்றை மட்டுங் கூறு கூறாகக் குறித்துச் செல்ல முயல்கிறேன். அக்குறிப்புக்கள் எனது வாழ்க்கை நிலையை உணர்த்தும் என்று நம்புகிறேன். 2. பிறப்பு உலகிலே பல நாடுகள் இருக்கின்றன. அவைகளுள் தமிழ் நாடு எது? வள்ளுவ வான்மணி எழுந்த நாடு; கரிகால் வீரம் செறிந்த நாடு; மணிமேகலை அறம் வளர்ந்த நாடு. இத்திருநாட் டின் பேர் உறுப்புக்கள் மூன்று, அவை; சேரநாடு, பாண்டிநாடு, சோழநாடு. நாடு சோழநாடு ஒரு பசும் பரவை. அதனின்றும் பிரிந்து தேங்கி யவை தொண்டை நாடு, நடு நாடு முதலியன. சோழ நாடு காவிரியை நுகர்வது. அதனால் அது புனல் நாடாயிற்று. புனல் நாட்டின் முடி நீலவான்; போர்வை பொழில்; அடி பைங்கூழ்; பண் மருதம்; உடைமை சோறு; ஓம்பல் விருந்து. நகரம் சோழ நாட்டுத் தலைநகரங்கள்1 ஐந்து. அவைகளின் உயிர் திருவாரூர். திருவாரூர் தொன்மைக்களன்; தெய்வக் கோயில்; கலை நிலையம்; அன்பு ஊற்று; அருள் ஆறு; அங்கே கிள்ளை தமிழ் பாடும்; அதைப் பூவை கேட்கும். முன்னோர் திருவாரூரிலே வாழையடி வாழையென வளர்ந்துவரும் மரபுகள் பல உண்டு. அவைகளுள் ஒன்று சோழிய வேளாண் மரபு. இம்மரபிலும் பல கிளைகளுண்டு. ஒரு கிளையின் வழிவழி வந்தவருள் இங்கே குறிக்கத்தக்கவர் திரு. கந்தசாமி முதலியார். அவர் மனைவியார் மீனாட்சி அம்மையார். அவர்வழித்தோன்றல் இராமசாமி முதலியார். திரு. கந்த. இராமசாமி முதலியார் இல்லம் தமிழகம். அவர் நெஞ்சில் சிவமணம். வாயில் கம்பர்; பள்ளியில் இசை நடம். அவர் தம் வாழ்க்கைத் துணை அலர்மேல் மங்கை; வழிச் செல்வம் வேங்கடாசலம். திரு. இராம. வேங்கடாசலமுதலியார் இளமையில் தந்தையாரிடம் பெற்றது தமிழ்ப் பயிற்சி; பிறரிடம் பெற்றது ஆங்கிலப்பயிற்சி. அவரது தேர்ச்சி ஆங்கிலத்திலே அதிகம். திரு. வேங்கடாசல முதலியாரின் ஆங்கிலப்பயிற்சியும் தேர்ச்சியும் உத்தியோகப் பித்தை அவர் பால் எழுப்பின. அப்பித்து அவரைச் சென்னைக்குத் துரத்தியது. அவர் சென்னையில் வேலைபார்த்த இடம் ஹிக்கின் அண்ட் கம்பெனி. திரு. வேங்கடாசல முதலியாருடனும், அவருக்கு முன்னும் பின்னும் அவர்தம் உறவினர் சிலரும், வேறு சிலரும் திருவாரூரை விடுத்துச் சென்னையின் பல பாகங்களில் குறியேறினர். வேங்கடாசல முதலியார் சில உறவினருடனும் சில நண்பருடனும் சென்னை இராயப்பேட்டையின் ஒரு பகுதியில் வதிந்தனர். அப்பகுதியின் பெயர் புதுப்பேட்டை. விருத்தாசலம் வேலப்ப முதலியார் புதல்வியார் வள்ளி யம்மையாரை வேங்கடாசல முதலியார்க்கு மணஞ் செய்விக்க இராமசாமி முதலியார் முயன்றனர். அம்முயற்சி பயனளித்தது. வேங்கடாசலனாரும் வள்ளியம்மையாரும் ஒன்றி நடாத்திய அற வாழ்க்கையின் அன்பிலே உதித்தவர் இருவர். மூத்தவர் நமசிவாய முதலியார்; இளையவர் விருத்தாசல முதலியார். திருவாரூர் - வே. நமச்சிவாய முதலியார் ஆங்கிலம் பயின்று தேர்ச்சியடைந்தனர். அவருடன் பயின்றவருள் சிறந்து விளங்கியவர் என். சுப்பிரமணிய ஐயர். ஐயரை இளமையிலேயே கிறிதுவங் கவர்ந்தது. அக்கவர்ச்சி அவரை இங்கிலாந்துக்குச் செலுத்தியது; பாரிடராக்கியது. பாரிடர் சுப்பிரமணிய ஐயர் சென்னை அட்மினிடிரேட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். சுப்பிர மணிய ஐயரிடம் பல நல்லியல்புகள் படிந்திருந்தன. அவைகளுள் சிறந்த ஒன்று தாயன்பு. சென்னையிலே தம் அருமை அன்னை கல்யாணி பெயரால் ஒரு மருத்துவசாலை ஐயரால் நிறுவப் பட்டது. அஃது அவர் தம் தாயன்புக்கோர் அறிகுறியாகவே திகழ்கிறது. சுப்பிரமணிய ஐயர் இளமையில் தம்முடன் பயின்ற நமசிவாயத்தை மறந்தாரில்லை. அவர் தமது தொழில் நிலையத் தில் நமசிவாய முதலியாரை ஒரு கணிதராக அமர்த்தினர். பின்னே முதலியார் தலைமைக் கணிதராக்கப்பட்டார். திருவாரூர் - வே. நமசிவாய முதலியார், கூடலூர் - தோப்பா முதலியார் மகளார் மயிலம்மையாரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டனர். அவர் வயிற்றிற் பிறந்தவர் மூவர். அவர் : குமர வேல், இராஜா, சோமசுந்தரம். விருத்தாசல முதலியார் திருவாரூர் - வே. விருத்தாசல முதலியார்க்கு ஆங்கிலம் சுவைக்கவில்லை. அவர்க்கு அந்தமிழே சுவைத்தது. அவரை இசையும் நாடகமும் தம் வயப்படுத்தின. அவர் இராம நாடகப் புலவராயினர். அப்புலமை, அவரைச் சில காலம் இராம நாடக ஆசிரியராகவும் விளங்கச் செய்தது, புதுப்பேட்டையிலே ஒரு சிறு தமிழ்ப் பள்ளிக்கூடம் விருத்தாசலனாரால் நடத்தப் பட்டது. அவரால் கீர்த்தனைகள் அடிக்கடி யாக்கப்படும். அவர் தம் பெரும்பொழுது வாணிபத்தில் கழிந்தது. அவர்க்குப் பலதிறத் தொழில்கள் தெரியும். திரு. வே. விருத்தாசல முதலியார் தம் தமையனார் மனைவியார் மயிலம்மையாருடன் பிறந்த பச்சையம்மாளை வேட்டு மூன்று ஆண் மக்களையும் ஒரு பெண்மணியையும் ஈன்றனர். அவர் சதாசிவம், துரைசாமி, விஜயரங்கம், அம்மணி யம்மாள் என்பவர். பச்சையம்மாள் நீண்ட காலம் உலகில் வாழ்ந்தாரில்லை. அவரைக் கொடிய வெஞ்சுரம் விழுங்கியது. பின்னே விருத்தாசல முதலியார் மரக்காணம் வேங்கடாசல முதலியாரின் அருமைப் புதல்வியார் சின்னம்மாளை மணந்தனர். அவர் தம் மணிவயிறு முருகேசன் என்ற ஓர் ஆண்மகனையும், அம்மணியம்மாள், தாயாரம்மாள், விருத்தாம்பாள் என்ற மூன்று பெண்மக்களையும் அளித்தது. முன்னைய ஆண் மகனை யும், பின்னைய பெண்மகளையும் குழந்தையிலேயே துறக்கம் அழைத்தது. திரு. விருத்தாசலனார் இராயப்பேட்டையிலே ஓர் அரிசி மண்டி வைத்து வாணிபஞ் செய்துவந்தனர். அவ்வேளையில் அவர்தங் கருத்து வேறு துறையில் சென்றது. சென்னைக்கு ஏறக்குறைய பதினைந்து கல் தூரத்தில் ஒரு பெரிய ஏரி யிருக்கிறது. அது செம்பரம்பாகத்து ஏரி. அவ்வேரி தெய்வச் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர்க்கு அணித்தேயுள்ளது. அதில் நீர் நிறைந்து வழியுங்கால், அது கடலெனக் காட்சியளிக்கும். அதைக் கண்டே, ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் என்று அப்பர் பாடினரோ என்னவோ தெரியவில்லை. அப் பெரிய ஏரிக் கரையை முற்றுஞ் செப்பஞ் செய்யும் வேலை துவங்கப்பட்டது. செப்பஞ் செய்யும் ஒப்பந்தப் பொறுப்புப் பலவாறு வழங்கப்பட்டது. அப்பொறுப்பேற்க முயன்றவர் பலர். அவருள் ஒருவர் விருத்தாசலனார். அவர் அரிசி மண்டியைத் தம் மூத்த புதல்வர் சதாசிவத்தினிடம் ஒப்புவித்து ஏரி வேலைக்குச் சென்றனர். இரண்டொரு திங்கள் கடந்ததும் நமசிவாயனாரிட மிருந்து விருத்தாசலனார்க்கு ஒரு முடங்கல் கிடைத்தது. அதில் பங்கு பாகப் பிரிவு குறிக்கப்பட்டிருந்தது. விருத்தாசலனார் தமையனார் விருப்பத்துக்கு இணங்கி நடப்பதாக விடையிறுத் தார். தமையனார் பத்திரம் எழுதித் தம்பியாரை அழைத்தார். தம்பியார் போந்து பத்திரத்தைப் படித்துப் பார்த்தார். தமக் குரிய பங்கு முழுவதையும் தம் முதல் மனைவியாரின் பிள்ளை களே அடைதல்வேண்டும் என்றொரு குறிப்புப் பத்திரத்தில் பிறங்கியது. அது விருத்தாசலனார் மனத்தைச் சிறிது கலக்கியது. காரணம் இரண்டாம் மனைவியார்க்கு ஆண்மக்களின்மை என்று சொல்லப்பட்டதாம். விருத்தாசலனார் தமது மனோ நிலையை வெளியிடாது, தமையனார் விருப்பத்துக்கு இணங்கியே நடந்து கொண்டார். ஆனாலும் எங்கேனும் ஒரு கிராமத்தில் தங்கி வாணிபஞ் செய்து காலங்கழித்தல் நல்லது என்ற எண் ணம் அவருள் உதித்தது. அவ்வெண்ணத்துடன் அவர் ஏரிக்குத் திரும்பினர். ஏரி வேலை முற்றுப் பெற்றது. அங்கே விருத்தாசல னார் நண்பருடன் பேசும்போதெல்லாம் தமது எண்ணத்தை வெளியிடுவர். ஒரு நண்பர் நாதமுனிநாயுடு என்பவர் தமது துள்ளங் கிராமம் வாணிபத்துக்கு உரியதென்றும், சுற்றுப் பக்கங்களில் பல கிராமங்கள் உண்டு என்றும், வாணிபம் வள மாக நடைபெறுமென்றும் அடிக்கடி முழங்குவர். அம்முழக்கம் விருத்தாசலனார்க்கு ஊக்க மூட்டும். துள்ளவாசம் துள்ளம் மிகச் சிறிய ஊர்; ஏழெட்டு வீடுகளைக் கொண்டது. ஆனால் வளமுடையது. அது செங்கற்பட்டு ஜில்லா சைதாப் பேட்டை தாலுக்காவிலே நூம்பலுக்கும் செட்டியாவரத்துக்கும் நடுவிலுள்ளது. அவ்வூரை விருத்தாசலனார் பார்வையிட்டுப் புதுப்பேட்டை போந்து, மனைவி மக்களை அழைத்தேகினார். துள்ளத்தில் கண்ணன் கோயிலுக்கு அருகே, அரங்கசாமி பிள்ளையின் நிலத்தில் பனை ஓலை வேய்ந்த ஒரு நிலையம் அமைக்கப்பட்டது. குளத்தருகேயுள்ள ஆல மரத்தடியில் மற்று மொரு குடில் அமைக்கப்பட்டது; முன்னையது தங்குதற்கும், பின்னையது வாணிபத்துக்கும் பயன்பட்டன. முனிசாமி பிள்ளையும் இராஜா முதலியாரும் நூம்பல், ஒரு ஜாகிர் கிராமம். அந்நாளில் அஃது ஓர் ஆங்கிலோ இந்தியர் வயத்திலிருந்தது. அக்கிராம அமீனா திரு. முனிசாமி பிள்ளை என்பவர். அவர் அதிகாரம் அமீனா அள வில் நின்றதில்லை; ஏறக்குறைய பத்துக் கிராமம் வரை பரவி நின்றது. அவ்வட்டங்கட்கு ஒரு முடி சூடா மன்னரென முனிசாமி பிள்ளை விளங்கினார் என்று சுருங்கச் சொல்கிறேன். அவர் நண்பருக்குத் தம் உயிரையுங் கொடுத்துக் காக்குந் தன்மையர்; பகைவரிடத்திலோ இரக்கமின்றி நடப்பவர்! புதுப் பேட்டை நமசிவாய முதலியாரின் இரண்டாவது குமாரர் இராஜா முதலியார் - அம்மைகுத்து இலாகா மேற்பார்வை யாளர் - தம் சிறிய தந்தையாரைப் பார்க்க ஓர் இரவில் நூம்பல் வழியே வந்தார். காரிருள் சூழ்ந்தது. இராஜா முதலியார் நூம்பலில் தங்க இடந் தேடினார். முனிசாமி பிள்ளையின் வீட்டுத் திண்ணைமீது முதலியாரது நெஞ்சஞ் சென்றது. அதில் அவர் படுத்தனர். முனிசாமி பிள்ளை வெளியே வந்தபோது, திண்ணையில் படுத்திருந்தவரைக் கண்டு, யார் என்று விசாரித் தனர். முதலியார் தாம் வந்த வரலாற்றைச் சொன்னார். முனிசாமி பிள்ளை, இராஜா முதலியாருக்கு முகமன் கூறி, உணவளித்து, உறங்க இடம் தந்து, அவருடன் நீண்ட நேரம் பேசி அயர்ந்தனர். பொழுது புலந்ததும் அமீனா தமது வண்டியில் முதலியாரை ஏற்றித் துள்ளத்துக் கனுப்பினார். அன்றுமுதல் அமீனா முனிசாமி பிள்ளை, துள்ளம் விருத்தாசல முதலியாரிடம் நெருங்கிப் பழகலானார். அப்பழக்கம் விருத்தாசலனார்க்குப் பல வழியிலும் ஆக்கமளித்தது. எரி விருத்தாசல முதலியாரது செல்வாக்குச் சிலர்க்குப் பொறாமையூட்டிற்று. அப்பொறாமை, தீயாய் முதலியார் கடையை எரித்தது. செட்டியாவரத்திலுள்ள ஒரு வாணிபர் ஏவுதலால் முதலியார் கடை கொளுத்தப்பட்டதென்பது முனிசாமி பிள்ளைக்குத் தெரிய வந்தது. அவரது சீற்றம் அவ்வாணிபர்மீது கனன்றெழுந்தது. அக்கனல் விருத்தாசல முதலியாரால் தணிக் கப்பட்டது. விருத்தாசல முதலியார் தமது இல்லத்தின் முற் பகுதியில் கடை வைத்தனர். ஊரவர் அனுதாபம் பெருகிற்று. சுற்றுப் பக்கங்களிலுள்ளவர் நாட்டம் முதலியார் கடைமீதே சென்றது. வாணிபம் வளர்ந்தது. பொருட்செல்வமும் சிறிது சேர்ந்தது. நிலபுலங்கள் வாங்கப்பட்டன. எனது தோற்றம் அச்சமயத்தில் விருத்தாசல முதலியார்க்கு விஷு ஆண்டு ஆவணித் திங்கள் இருபத்தொன்பதாம் நாள் (12-9-1881) பரணி யில் ஓர் ஆண் குழவி பிறந்தது. அக்குழவியே திரு. வி. உலகநாத முதலியார். அவருக்குப் பின்னே சுபானு ஆண்டு ஆவணித் திங்கள் பதினோராம் நாள் ஞாயிற்றுக் கிழமை (26-8-1883) மிருகசீரிடம் இரண்டில் மற்றுமோர் ஆண் குழவி பிறந்தது. அக்குழவி திரு. வி. கலியாண சுந்தரன் என்னும் எளியேன். எனக்குப் பின்னே பூஷணம் என்ற ஒரு பெண் குழவி செனித்தது. இறுதியில் ஓர் ஆண் குழவி தோன்றி மறைந்தது. விருத்தாசல முதலியார்க்கு முதல் மனைவியார் வழித் தோன்றியவர் நால்வர்; இரண்டாவது மனைவியார் வழி தோன்றி யவர் எண்மர். தமையனார்க்கும் எனக்கும் வீட்டுச் செல்வப் பெயர்கள் பெரியசாமி சின்னசாமி என்பன. இன்னும் நாங்கள் பெரியசாமி சின்னசாமி என்றே அழைத்துக் கொள்வோம். ஆறாம் பேறு யான் ஆறாவது பிள்ளை. எனது வலது காலடியின் இறுதி யில் ஆறாவது விரல் படைப்பில் அமைந்துள்ளது. நாலும் ஐந்தும் ஆறும் பிரிவின்றி ஒன்றை ஒன்று பற்றி ஒருமைப்பட்டிருக் கின்றன. ஆறாவது பிள்ளை என்றதும் நம் நாட்டவர்க்கு ஆர்வம் பொங்குவது இயல்பாய்விட்டது. ஆறாவது பிள்ளைப் பேற்றில் என்ன அதிசயம் நிலவுகிறதோ தெரியவில்லை. ஆறாவது பிள்ளை அதிர்ஷ்டசாலியாயிருப்பான் என்று பொதுவாகப் பேசப்படு கிறது. ஆறாவது பிள்ளை யானை கட்டி வாழ்வான் என்று சிறப்பாகச் சொல்லப்படுகிறது. இச்சொல் பழமொழியாகவும் நாட்டு வழக்கில் வந்துள்ளது. ஆறாவது பிள்ளையாகிய எனக்கு என்ன அதிர்ஷ்டமிருக்கிறது? யான் யானைகட்டி வாழ்ந்தேனா? வாழ்கிறேனா? யான் தலைமை பூண்ட மகாநாடுகளில் நடந் தேறிய ஊர்வலங்கள் சிலவற்றில் யானையும் அசைந்து அசைந்து நகர்ந்ததுண்டு. இது யானைகட்டி வாழ்ந்ததாகுமா? யானை ஊர்வலத்துக்கும், ஆறாம் பேற்றுக்கும் ஏதேனும் தொடர்பிருக் குமா? ஆறாவதல்லாதார் ஊர்வலங்களிலும் யானை அசை யாமலில்லை. ஆகவே தொடர்பு எனக்கு விளங்கவில்லை. என் வாழ்க்கை யானைச் செல்வம் பெற்றதா? பூனைச் செல்வமாதல் பெற்றதா? இந்நூலை முற்றும் படிப்போர்க்கு உண்மை விளங்கும். திரு. வி. என் பெயர் திரு. வி. கலியாண சுந்தரம். திரு. திருவாரூரைக் குறிப்பது; வி. விருத்தாசல முதலியாரை உணர்த்துவது. தமையனாரும் யானும் இளமையில் வி. உலகநாதன் - வி. கலியாண சுந்தரம் என்றே எங்கள் பெயரை எழுதி வந்தோம். பள்ளிகளி லும் எங்கள் பெயர்கள் அவ்வாறே பதிக்கப்பட்டன. எங்கள் பங்காளியில் ஒருவர் எங்கள் தந்தையாரிடம் போந்து, பிள்ளைகள் திருவாரூரை ஒதுக்குவதென்ன? நம் பிள்ளைகள் எங்கே பிறந்தாலும் வளர்ந்தாலும், எங்கே போனாலும் வந் தாலும் நம் முன்னோர் ஊராகிய திருவாரூரை மறத்தலாகாது. பிள்ளைகள் பெயர்களின் முன் வி யுடன் திருவையுஞ் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்தம் வலி யுறுத்தலுக்குப் பின்னரே திரு சேர்க்கப்பட்டது. அச்சேர்க்கை பின்னாளில் ஒருவிதத் தொல்லை விளைத்தது. சில காரணம் பற்றி வடமொழி ஸ்ரீ தமிழ்த் திருவாக மாற்றப்பட்டது. அம்மாற்றம் எங்கள் திருவுடன் முட்டலாயிற்று. எங்கள் திருவின் உண்மை தெரியாதார், நாங்கள் ஸ்ரீக்குப் பதிலாகத் திருவை உபயோகிக்கிறோம் என்று கருதி, ஸ்ரீ. வி. உலகநாத முதலியார் என்றும், ஸ்ரீ. வி. கலியாணசுந்தர முதலியார் என்றும் எழுதி விடுகிறார். இத்தொல்லை பெரிதும் பத்திரிகை உலகில் நிகழ்ந்து வருகிறது. இதை நீக்கும் பொருட்டு, என் நூல்களின் முகப்பில் திருவாளர் - திரு. வி. கலியாணசுந்தரனார் என்று என் பெயர் பொறிக்கப்படுகிறது. குறிப்பு பிறப்பு நல்லதா? கெட்டதா? அதை நல்லதென்று சொல் வோரும் உளர்; கெட்டதென்று சொல்வோரும் உளர். பிறப்பு நல்லதாவது எப்பொழுது? கெட்டதாவது எப்பொழுது? பிறப் புக்கு நோக்கு உண்டு. அது நிறைவேறப் பெற்றவர் பிறவியை நல்லதென்பர்; நிறைவேறப் பெறாதார் அதைக் கெட்டதென்பர். இவர் பிறவி தாங்கிப் பிறவியில் இருந்துகொண்டே பிறப்புக் கெட்டது என்பது நல்லதா? பிறவி எடாமல் - பிறவியில் இராமல் பிறப்புக் கெட்டது என்று சொல்லுதல் இயலுமோ? பிறப்பின் நோக்கு என்ன? விடுதலை என்று பொதுவாக உலகஞ் சொல்லும். விடுதலை பிறப்பில் இருத்தலால் அது வேண்டுவதாகிறது. இதுபற்றியே மாணிக்கவாசகர், யானேதும் பிறப்பஞ்சேன் என்றார். இதனால் பிறவி வேண்டற்பாலது என்று தெரிகிறது. அவரே தொடர்ந்து, இறப்பதனுக்கு என் கடவேன் என்கிறார். இதனால் இறத்தலாகா தென்பது விளங்கு கிறது. இறவாமையே விடுதலை என்பது. விடுதலையும் இறப்பும் விடுதலைக்கும் இறப்புக்கும் என்ன வேற்றுமை? மீண்டும் பிறக்கச் செய்யாதது விடுதலை; மீண்டும் பிறக்கச் செய்வது இறப்பு. மக்கள் எதற்கு முயலுதல் வேண்டும்? விடுதலைக்கா? இறப்புக்கா? மக்களுக்குக் கீழ்ப்பட்ட உயிர்களெல்லாம் பகுத்தறி வில்லாதன. அதனால் அவைகள் இயற்கையோடியைந்து வாழக் கடமைப்படுகின்றன. அவ்வுயிர்கள் இயற்கையோடியைந்து வாழ்ந்து வாழ்ந்து, படியேறியேறி, மக்கட்பிறவி எய்திப் பகுத் தறிவு பெறுகின்றன. பகுத்தறிவில் உரிமை விளங்குகிறது. உரிமை, உயிரை இயற்கை வழியில் ஒழுகச் செய்யவும் செய்யலாம்; அதைக் கடக்கத் தூண்டினுந் தூண்டலாம்; இயற்கை வழி, பிறவி நோக்கு நிறைவேறத் துணை செய்யும்; அதாவது விடுதலைக்குத் துணைசெய்யும். மற்றறையது பிறவி நோக்குக்கு ஊறு செய்யும்; வினைகளை ஈட்டும்; இறப்பைக் கூட்டும்; மீண்டும் பிறவி நல்கும். வினையும் உடலும் விடுதலை பலவிதம். உடலுடனும் விடுதலை பெற்றிருக்க லாம்; உடலைவிடுத்தும் விடுதலை பெற்றிருக்கலாம். வினையற்ற உடல் விடுதலை அடைவது; வினையுற்ற உடல் விடுதலை அடை யாதது. வினையற்றால் உடல் இராது என்று சிலர் கூறுப. அக் கூற்றுக்கு, வினையற்றால் மாயா உடல் இராது என்று பொருள் விளக்குக. வினையற்ற உடல் ஆண்டவன் கோயிலாகிறது. அதை மாயா உடல் என்று கொண்டு ஏன் இடர்ப்படல் வேண்டும்? வினையுற்ற மாயா உடலை வினையற்றதாக்கி, அதை ஆண்டவன் கோயிலாக்க ஏன் முயலல்வேண்டும்? விடுதலைக்கு என்க. விடுதலைக்கு வழி என்ன? உலகம் பல கூறும். கீதை வழிகாட்டியுள்ளது. கீதை நிஷ்காமிய கர்மத்தை - பயன் கருதாத் தொண்டை - அறிவுறுத்துகிறது. பயன் கருதாத் தொண்டு செய்யச் செய்ய மாயா வினை சேராது; உடல் ஆண்டவன் கோயிலாகும். இதுவே விடுதலை; பிறவி நோக்க நிறைவேற்றம். என் கருத்து யான் பிறப்பை வெறுக்கின்றேனில்லை; அதை விரும்பு கிறேன். தொண்டுக்குப் பிறவி பயன்படல் வேண்டுமென்பது எனது வேட்கை. எனது வேட்கை ஒருவாறு நிறைவேறியே வருகிறது. இளமையில் என் தொண்டு காமியத்தில் சென்றது; பின்னே அது நிஷ்காமியமாக மாறியது. அம்மாற்றம் எப் படியோ உற்றது! நல்ல நூல்களும், பெரியோர் சேர்க்கையும், இல்வாழ்க்கையும், இயற்கை இறையின் அருளும் மாற்றத்துக்குக் காரணம் என்று கூறுவேன். பெற்றோர் தொண்டுக்குரிய பிறப்பை யான் தாங்க அருள் புரிந்த என் தாய் தந்தையர்க்கு யான் என்ன கைம்மாறு செலுத்த வல்லேன்? அவர்களை மனமொழி மெய்களால் வணங்குகிறேன். இவ்வணக்கம் போதுமா? வேறு காண்கிலேன்! என் செய்வேன்! 1பெற்றோர் அன்புக்கு ஈடுசெய்யும் பொருள் எவ்வுலகில் உண்டு? இல்வாழ்க்கை வாழ்க; வெல்க இல்வாழ்க்கையை வாழ்த்த வாழ்த்த என் மனம் குளிர்கிறது. தொண்டு தொண்டினுஞ் சிறந்த ஒன்று இருக்கிறதா? எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. தொண்டே எனது வாழ்க்கை; எனது செல்வம்; எனது ஆருயிர்; எனது சமயம்; எல்லாம்; எல்லாம். விளைவு என்ன ஆயினும் ஆக. அதுபற்றிய கவலை எனக்கில்லை. என் கடன் பணிசெய்து கிடப்பதே. எனக்குப் பிறப்பு வேண்டும்; பிறப்புப் பயன்கருதாத் தொண்டுக்குப் பயன்படுதல் வேண்டும். சாதி மதம் மொழி நிறம் நாடு முதலியவற்றைக் கடந்து நிற்கும் பொதுமை அறத்துக்குரிய சன்மார்க்கத் தொண்டு செய்தல் வேண்டும். இதுவே எனது வேண்டுதல். அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் - இராமலிங்க சுவாமிகள் 3. சோதிடம் சோதிடம் ஒரு கலை; வேத அங்கங்களில் ஒன்று. சோதிடக் கலை தோன்றியதன் காரணம் என்னை? மக்கள் வருங் காலத்தை உணர்ந்து வாழ்க்கையை ஒழுங்கு செய்து கொள்வதற்குத் துணை புரியத் தோன்றியது அக்கலை. அது மக்களைக் கோள்களுக்கு அடிமைப்படுத்துவதன்று; கோள்களின் குறும்புகளை உணர்த்தி, அவைகளினின்றும் விடுதலையடைதற்குரிய வழிகளை மக்கள் காணத் தூண்டும் நோக்குடையது.. ஏடு புரட்டல் சோதிடக் கலையை யான் முறையாக ஆய்ந்ததில்லை. என் தமையனார் அக்கலையை ஆராய்ந்த வண்ணமிருப்பர். ஒவ் வொருபோது சோதிட நூல்களின் ஏடுகளைப் புரட்டிப் புரட்டி யான் பார்ப்பதுண்டு. என் ஜாதகக் குறிப்புக்கள் காணப்படும் இடங்களை மட்டும் ஊன்றிப் பார்த்துத் தெளிவு செய்துகொள் வேன். எனது இல்லத்துக்குச் சோதிடர் வாராமலிருப்பது அரிது; பலதிறக் குழுவுடன் சோதிடக் குழுவும் என் இல்லத்தில் கூடும். சோதிடப் புலவரும் என் தமையனாரும் உரையாடுவர். சிற்சில போது அவருடன் யானுங் கலந்து கொள்வேன். வல்லார் உரைக்குஞ் சில நுட்பங்கள் என் நெஞ்சில் ஒரு மூலையில் படியும். கருத்துக்கள் என் ஜாதகக் குறிப்பு முதல் முதல் திருவல்லிக்கேணியில் என் பாட்டியார் வீட்டில் ஒருவரால் கணிக்கப்பட்டது. பின்னே அது நூம்பல் இரத்தினவேல் நாயனரால் விரிவாக எழுதப் பட்டது. நூம்பல் சோதிடர் எழுதிய என் ஜாதகம் தேனாம்பேட்டை சோதிடரால் ஒரு முறை இராயப் பேட்டையிலே பரிசோதிக்கப் பட்டது. அப்பொழுது யானுந் தந்தையாருடனிருந்தேன். பரிசோதனை நீண்டநேரம் நிகழ்ந்தது. சோதிடர் விடைபெற்ற போது என் தாயார் வந்தனர். சோதிடர் அவரைப் பார்த்து, உங்கள் சின்ன பையன் வருங்காலத்தில் ஒரு . வாழ்வான் என்று சொன்னார். m‹idah®, k»œ¢á bgh§»a Kf¤Jl‹, ‘ MíŸ ghf« v¥go? என்று கேட்டார். தீர்க் காயுள் தீர்க்காயுள் என்றார் சோதிடர். சோதிடர் என் பெருமை பேசியதைக் கேட்கக் கேட்க எனது உள்ளமும் விம்மியது. உடலும் விம்மியது. பெரியமெட்டிலே ஒரு கணிதர் இருந்தார். அவர் அடிஷன் கம்பெனியில் வேலை பார்த்தவர். அவரை அடிஷன் கம்பெனி ஜோசியர் என்று இராயப்பேட்டை சொல்லும். அவர் ஞாயிறு தோறும் இராயப்பேட்டையிலே எங்கேனும் சோதிடக் கடை வைப்பர். ஒருநாள் அக்கடை எங்கள் வீட்டில் திறக்கப்பட்டது. கணிதர் என் ஜாதகத்தைப் பார்வையிட்டார். அவர் கூறிய குறிப்புக்களுள் ஒன்று, பிள்ளையாண்டான் பள்ளிப் படிப்பு இப்பொழுது விளக்கென எரிகிறது. அது திடீரென அணையும். பின்னே அவன் பெரிய வித்துவானாவான் என்பது. அக்கூற்று எனக்குச் சீற்றம் மூட்டியது. சீற்றம் மடை திறந்து ஓடவில்லை: உள்ளேயே சுழன்று சுழன்று நின்றது. யான் மெற்றிகுலேஷன் பரீட்சைக்குச் செல்ல ஒண்ணாத வாறு தடைநேர்ந்த சமயம், ஒரு நாள் என் புத்தகக் குப்பைகளைக் கிளறினேன். நூம்பல் சோதிடர் எழுதிய விரிந்த ஜாதகக் குறிப்பு என் கண்ணிற்பட்டது. அதைக் கண்டதும் எனக்குச் சினம் மூண்டது. மூண்ட சினம் அந்த ஜாதகக் குறிப்பைத் துகள் துக ளாகக் கிழித்தெறியச் செய்தது. திருவல்லிக்கேணியார் எழுதிய குறிப்பு எங்கேயோ கிடந்தது. அதுவே பின்னாளில் பயன் பட்டது. சோதிடக்கலை நிழல் என்மீது சிறிது படர்ந்த காலத்தில் யோகி சிவசங்கர முதலியார், பேர்பெற்ற காலக்கணிதர் T. பார்த்த சாரதி நாயகரை நவசக்தி நிலையத்துக்கு அழைத்து வந்தனர். நாயகரும் யானும் நீண்ட நேரம் உரையாடினோம். சனி தசையில் செவ்வாய் புத்தியில் எனக்கு மாரகம் நிகழும் என்று சிலர் சொல்கிறார். அதைச் சிலர் மறுக்கிறார். j§fŸ fU¤J v‹d? என்று கேட்டேன். நாயகர், ஜாகத்தைப் புடம் செய்யாமல் மாரகங் கூற என் மனம் இசையவில்லை என்று பகர்ந்தனர். அவர் பகர்ந்த அளவில் நின்றாரில்லை. என் ஜாதகத்தை முறையாகக் கணித்துத் தூய்மை செய்யவும் விரும்பினர். அவர் விருப்பம் வலி யுறுத்தலாக முடிந்தது. அவ்விருப்பமும் வலியுறுத்தலும் என்னை இணங்கச் செய்தன. பார்த்தசாரதி நாயகரால் ஜாதகம் கணிக்கப் பெற்றது. அவரது கணிதத்தினின்றும் பிறந்த சக்கரங்களே மேலே பொறிக்கப்பட்டவை. நாயகர் ஆராய்ச்சியில் சனி - செவ் வாயில் மாரகம் விளையாதென்பது விளங்கியது. சனி - செவ்வாய் என்னை ஒன்றுஞ்செய்யவில்லை. இப்பொழுது புதன் தசையில் கேது புத்தி நடக்கிறது. என் ஜாதகத்திலுள்ள இராசி சக்கரம் பெரும்பாடுபட வில்லை. ஒருவர் கணிதத்தில் இலக்கினம் மாறியது; இடபம் மிதுனமாயிற்று. மற்றொருவர் ஆராய்ச்சியில் சந்திரன் மிதுனத் துக்கு ஓடினான். அம்சா சக்கரம் பட்டபாட்டை என்னென்று சொல்வேன்! கடலங்குடி நடேச சாதிரியார், வடகுரங்காடு துறை சாமிநாத தேசிகர், சூளுர் அப்பாஜி சோதிடர், எட்டைய புரம் குரு, குகதாச பிள்ளை, ஆர்க்காடு இராமசாமி செட்டியார் முதலியோர் கணிப்பில் அம்சா சக்கரம் பல வழியில் திரி புண்டது. இலக்கின மாற்றமும், கோள் மாற்றமும் மலியலாயின. பண்டிதை அசலாம்பிகை அம்மையார் தமிழ்க்கலைஞர். அவர்க்குச் சோதிடக்கலையுந் தெரியும். அவர் சென்னையில் தங்கியபோது அவரைக் காண யான் சென்றேன். பண்டிதையார் என் ஜாதகக் குறிப்பை எழுதித் தருமாறு கேட்டனர். அதை எழுதித் தந்தேன். பக்கத்திருந்த ஒருவரைப் பார்த்து கிருஷ்ண சாமி, இதைப்பார் என்றார் அம்மையார். கிருஷ்ணசாமி ஐயர் என் குறிப்பை நோக்கினார். உற்று உற்று நோக்கினார்; பலன் சொன்னார். அவர் வெளியிட்ட கருத்து என் வாழ்க்கைப் படம் போலக் காணப்பட்டது. யான் வியப்புற்றேன். கிருஷ்ணசாமி ஐயர் என் கெழுதகை நண்பருள் ஒருவரானார். நண்பர் ஆனந்தம் என்பவராலும் என் ஜாதகம் பலமுறை ஆராயப்பட்டது. அவர்தங் கருத்துப் பெரிதும் கிருஷ்ணசாமி ஐயர் கருத்துக்கு அரண் செய்தது. என் ஜாதகத்தைப் பார்த்தவர் ஒருவரா? இருவரா? நூற்றுக் கணக்கானவர்!! அந்தோ! அவருள் எழுந்த கருத்து வேற்றுமையும் நூற்றுக்கணக்கு!! ஆனால் நிபுணரிடத்தில் பெரிதுங் கருத்து வேற்றுமை தோன்றுவதில்லை. குறைபாடு எங்கே? சோதிடக் கலையினிடத்திலா? சோதிடக் கலைஞரிடத்திலா? கலைஞரிடத்தில் என்று சொல்லவேண்டுவ தில்லை. பல நூல்களைப் பயின்று, பலர் ஜாதகங்களைப் பார்த்து, அநுபவம் பெற்றவர் சொல்லும் பலனே பொருந்தி வருகிறது. மற்றவர் சொல்வது பொருந்தி வருவதில்லை. நிபுணர் கருத்துக்களைத் திரட்டி, அவைகளின் சாரத்தை ஈண்டு வடித்துத் தருகிறேன். பலன் இலக்கினத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்திருக்கின்றனர். சனி ஒன்பது பத்துக்குடையவன்; தர்மகர்மாதிபதி. இவ் வமைப்பு நல்லதே. ஆனால் தர்மகர்மாதிபதி இலக்கினத்தில் அமர்தலாகாது; சனி அம்சத்தில் நீசம் பெற்றிருக்கிறான். சந்திரன் மூன்றுக்கு உடையவன்; இலக்கினத்தில் உச்சம் பெற் றிருக்கிறான்; சனி சேர்க்கை நல்லதன்று. சனி சந்திரர் சேர்க்கை சிறப்பைக் கெடுக்கும். செவ்வாய் ஏழு பன்னிரண்டுக்கு உடைய வன்; இரண்டில் அமர்ந்துள்ளான். குடும்பம் நாசமுறும். திரு மணமாகாது; ஆனாலும் மனைவி நீண்ட காலம் இருக்க மாட்டாள். செவ்வாய் புதனைப் பார்த்தலால் பிள்ளைப் பேறு அரிது. பிள்ளை பிறந்தாலும் இறந்துபடும். செவ்வாய் நின்ற வீடு புதனுடையது. புதன் ஐந்துக்குடையவனாய் ஐந்திலேயே நின்று உச்சம் பெற்றிருக்கிறான். அதனால் செவ்வாய் ஆட்சி முழுவதும் செல்லாதொழியும். குரு எட்டுக்கும் பதினொன்றுக் கும் உடையவர்; மூன்றில் உச்சம் அடைந்திருக்கிறார். மூன்றா மிடம் மறைவுடையது. சனி பார்வை விழுந்துள்ளது. எட்டுக் கெட்டில் மூன்றாமிடத்தில் உச்சமாகக் குரு வீற்றிருத்தலால், ஆயுள் பலமுண்டு. சுக்கிரன் இலக்கினாதிபதி; ஆறுக்கும் உடையவன். அவன் நாலில் அமர்ந்தது சிறப்பு. ஆனால் அவன் பகைவனாகிய சூரியன் வீட்டில் நின்று, இவன் சேர்க்கையும் பெற்றது பொருத்தமன்று. சூரியன் சேர்க்கையால் சுக்கிரன் மூடமாய்விட்டான். இலக்கினாதிபதி மூடமாதல் கூடாது. ஆறுக்குடைய சுக்கிரன் நோய் தருவன். அவன் மூடமானதால் நோயால் தீங்கு விளையாது. சூரியன் தன் வீட்டில் கேந்திரம் பெற்றிருத்தல் சிறப்பு. புதன் இரண்டுக்கும் ஐந்துக்கும் உடைய வன் ஐந்தில் தன்னந் தனியனாய், உச்சனாய், கோணாதிபதி யாய் வீறுடன் நிற்கிறான். புதன் பல வழியிலுஞ் சிறந்து விளங்குகிறான். புதன் மீது செவ்வாய் நோக்குப் படிந்திருக்கிறது. செவ்வாய், புதன் (இரண்டாம்) வீட்டிலிருந்தே புதன் (ஐந்தாம்) வீட்டைப் பார்த்தலால் தவறில்லை. இராகு ஆறிலிருத்தலால் காரணமின்றி நண்பரும் பகைவராவர். எவர் பகையாலும் தீமை விளையாது. சிறை வரும்போல் தோன்றும் ஆனால் வாராது. கேது ஞான மோட்சகாரகன்; பன்னிரண்டில் செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயைப் பார்க்கிறான். உலக இன்ப நுகர்ச்சி அரிது. கிரகமாலை அமைந்துள்ளது. அவ்வமைப்பு மாண்புடை யது. ஆனால் கிரகங்களெல்லாம் இராகு கேதுக்குள் அடங்கின மையால் அம்மாண்பு ஞானமார்க்கத்துக் குரிய தாகும். மூன்று கோள்கள் உச்சம் பெற்றுள்ளன. சேர்க்கை, பார்வை முதலியன உச்சங்களின் முழு வல்லமையைச் சிறிது குன்றச் செய்தன. எல்லாக் கோள்களும் இராகு கேதுக்களால் அடைபட்டுக்கிடக்கின்றன. இவ்வடைப்பு, உச்சங்களையும் கிரக மாலையையும் பிறவற்றையும் ஒடுக்கி இலௌகிகச் செல் வத்தைப் பெருக்க விடாது; இலௌகிகச் செல்வத்துக்குப் பதிலாக ஞானச் செல்வத்தைப் பெருக்கச் செய்யும்; ஜாதகர் உழைப்பைப் பிறர்க்கே பயன்படுத்தும். செவ்வாய் தசை தொடக்கம் (இருப்பு 4-2-7). மாரகம் சொல்வது அருமைப்பாடு. ஒவ்வொரு தசையிலும் மாரகம் சொல்லலாம் சனி தசை நான்காவதாக வருதலால் மாரகஞ் சொல்ல இடமுண்டு. ஆனால் சனி தர்மகர்மாதிபதியாய் விருஷப லக்கனத்தில் அமர்ந்தமையால் அவனுக்கு மாரகஞ் செய்யும் உரிமையில்லை. மாரகாதிபதி புதன். இவன் தசையில் மாரகம் நிகழ்தல் கூடும். தவறினால் கேது தசையில் மாரகம் நிச்சயம். குறிப்பு இளமையில் ஜாதகங் கேட்பதில் விருப்பம் அதிகமிருந்தது. நாளடைவில் அதில் எனக்கு விருப்பம் எழுவதில்லை. வெறுப்பும் எழுவதில்லை. கோள் நாள் முதலியவற்றை யெல்லாம் இயக்கும் ஒரு பெருஞ் சக்தியினிடத்தில் கருத்தை இருத்தினால் கோள் என் செய்யும்? நாள் என் செயும்? பிற என் செயும்? இக் கொள்கை யில் யான் உறைத்து நிற்பவனானேன். ஆண்டவன் அருளில் ஆழும் போதெல்லாம் கோள்களின் குறும்புகள் உறுத்தா தொழியும் என்பதும், அவன் அருளை மறக்கும்போதெல்லாம் அவைகளின் குறும்புகள் உறுத்தும் என்பதும் எனது உட்கிடக்கை. ஆண்டவன் அடியை உளங்கொண்டு, குறைகளை மெய் யாக முறையிட்டுக் கசிந்து கசிந்து உருகி உருகி அழுதால், ஊழ் ஒதுக்கி இரியும் என்ற முடிவுக்கு வந்தவன் யான். விரிவு யான் எழுதியுள்ள நூல்களிற் பார்க்க. சோதிடத்தைக் கலையாகப் படிக்கலாம்; ஆராயலாம் அது வருங்கால நிகழ்ச்சிகளை உணர்த்தி, வினைகளை வெல்லக் கடவுளை யடையுமாறு அறிவு கொளுத்துவது; கடவுளை மறந்த வனைக் கோள்கள் வினைகளில் வீழ்த்தும் என்பதை வலியுறுத்து வது. கோள்வழி உழலாதே. அதை ஆட்டும் ஒரு சக்தியின் வழி நில் என்பது குருமொழி. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே - சம்பந்தர் 4. குழந்தைமை என் அன்னையின் கருவில் யான் எப்படி இருந்தேனோ? அங்கே எங்ஙனம் வளர்ந்தேனோ? எவ்வாறு இயங்கினேனோ? எனக்கு என்ன தெரியும்? புவியில் உற்ற பின்னர் யான் அழு தேனோ? சிரித்தேனோ? மருளாய்க் கிடந்தேனோ? எனக்கு என்ன தெரியும்? யான் பாலுண்டதும், கை கால்களை அசைத்தசைத்து ஆட்டியதும், கொட்டியதும், கவிழ்ந்ததும், தவழ்ந்ததும் எனக்குத் தெரியுமோ? யான் பாற்சோ றுண்டதும், மழலை மொழிந்ததும், சிறுகை நீட்டிக் கூழை அளாவியதும் எனக்குத் தெரியுமோ? என் அருமைத் தாய் என்னை உறங்க வைக்கப் பாயில் கிடத்தியதை யும், ஏணையி லிட்டதையும், தொட்டிலி லிட்டதையும் யான் அறியேன்; என்னைத் தட்டியதையும், தாலாட்டியதையும், பாட்டுப் பாடியதையும் யான் அறியேன்; எவ்வண்ணமோ யான் வளர்ந்தேன்; ஓலை வேய்ந்த குடிசையில் - தேளும் பாம்பும் நட மாடிய இடத்தில் - யான் வளர்ந்தேன். என்னை ஈன்றவர் என் மீது எத்துணைக் கவலை செலுத்தியிருப்பர்! அவர்தம் அன்பை என்னென்று கூறுவது! அவ்வன்பு, சொல்லுக்கு அடங்காதது; எழுத்துக்கு அடங்காதது. எல்லாம் இயற்கை இறையின் அருள். உடலும் உணர்வும் என் உடல் வளரவளர என் கருவி கரணங்கள் வளர்ந்தன; மொட்டா யிருந்த உணர்வும் அரும்பியது; தாய் தந்தையர் முகங்கள் பழகின; மற்றவர் முகங்கள் பழகின; தட்டு முட்டுச் சாமான்கள் காணப்பட்டன. நாய், பூனை, கன்றுகாலிகள் காணப்பட்டன; வீடு வாசல் கொல்லை மரம் விளங்கின; வயல், குளம், ஏரி, ஓடை விளங்கின; திங்கள், உடுக்கள், வானம், ஞாயிறு புலனாயின; காலை மாலை புலனாயின; ஏற்றப் பாட்டும், ஏர்ப் பாட்டும் கேட்டன; கிள்ளைப் பேச்சும், குயில் குரலுங் கேட்டன. இயற்கைக் கோலங்கள் படிப்படியே காட்சியளித்தன. யான் நடப்பேன்; ஓடுவேன்; ஆடுவேன்; பாடுவேன்; விழு வேன்; புரள்வேன்; எழுவேன்; மண்ணைப் பூசிக் கொள்வேன்; நாயை அடிப்பேன்; பூனையை ஓட்டுவேன்; காக்கையைத் துரத்துவேன்; கன்றைத் தழுவுவேன்; துணிகளைக் கிழிப்பேன்; இன்ன பல செய்தேன். தாய்ப்பால் தாய்ப்பால் வேட்கை எனக்கு நீண்ட காலமிருந்தது. என் தாயின்பால் வற்றி விட்டது. அப்பால் வேட்கையை மறப்பிக்க என்னைப் பெற்றவர் என்னன்னவோ செய்தனர். வேட்கை தணியவில்லை. கடைக்கு வருவோருள் சிலர் என்னிலைமையை யுணர்ந்து எனக்குப் பாலூட்டுவர். எனக்குப் பாலூட்டுவோர் அன்னார் இன்னார் என்று தெரிந்து கொண்டேன். அவர் எனக்கு அமுதமாகத் தோன்றுவர். அவர் கடைக்கு வரும்போதெல் லாம் அவரை யான் தொந்தரை செய்வேன். என் தந்தையார் என்னைக் கடிவதுண்டு. தெருவில் போய் நிற்பேன். தாய்மார் எவரேனும் வந்தால் வேகமாக ஓடி அவரைப் பற்றிக் கொள்வேன். நடுத் தெருவில் பெண்ணைப் பற்றுவது தவறு என்று எனக்கு எப்படித் தெரியும்? யான் குழந்தை. பால் வெறி யொன்றே எனக்குத் தெரியும். அவ்வெறியால் யான் செய்த தொல்லைகளை இங்கே எழுத நாணம் அடைகிறேன். வழியே போவோர் வரு வோர், இந்தப் பையன் கிடாவாகியும் தாய்ப்பாலுக்கு அலை கிறானே என்று பேசுவதும் என் காதில் விழும். என் வெறி எனக்குத் தெரியும்! அது பிறர்க்கு எப்படித் தெரியும்? எத்தாயும் என்னை வெறுத்துத் தள்ளியதில்லை. சிலர் என்னைப் பார்த்த தும் ஒளித்துக் கொள்வர்; சிலர் என்னை அன்புடன் அணைத் தெடுத்துப் பால் கொடுப்பர்; சிலர் காலங்கழித்துக் கடைக்கு வருவர். முதலில் வருவோரை யான் பெரும் பாடுபடுத்துவேன். வழியில் அவர் மற்றவரைக் கண்டு, இன்று உங்கட்குப் பெருந் தொல்லை இராது என்று சொல்லிச் செல்வராம். தாய்ப்பால் தொல்லை என்னை நீண்ட காலம் துன்புறுத்தியது. எனக்கு அன்புடன் பாலூட்டிய தாய்மார் இப்பொழுது எங்கெங்கிருக்கி றாரோ? பாட்டியார் என் பாட்டியார் கனகம்மாள் (தாயை ஈன்றவர்) ஆண் பிள்ளை பெறாதவர். அவர் என் தமையனார் மீதும், என் மீதும் வைத்திருந்த அன்புக்கோர் அளவில்லை. அவர் அடிக்கடித் துள்ளம் போதருவர். அவர் சென்னையிலிருந்து பலதிறப் பொருள்கள் வாங்கி வருவர். அவைகளுள் யான் விரும்புவனவற்றை யானே எடுத்துக் கொள்வேன். அது காரணமாகத் தமையனார்க்கும் எனக்கும் போர் நிகழும். அப் போர் பாட்டியார்க்கு மகிழ்ச்சி யூட்டும். ஒரு முறை பித்தளைப் பூண்களிட்ட அழகிய மணை இரண்டு எங்களுக்கென்றே பாட்டியாரால் கொண்டு வரப் பட்டன. அவைகளுள் ஒன்றை முதல் முதல் யான் எடுத்துக் கொண்டேன். அதைத் தமையனார் பிடுங்கினர். அது காரண மாக எங்களுக்குள் பெரும் போர் மூண்டது. யானே வெற்றி யடைந்தேன். என் மணையில் பிறர் அமர்தல் கூடாது. அதில் பிறர் அமரப் பார்ப்பேனாயின் அழுவேன்; உணவு கொள்ளேன். பாட்டியார் கொண்டுவரும் பொருள்கள் பெரிதும் எங்களுக் குள் பிணக்கை மூட்டிவிடும். சண்டை நேரத்தில் என் தமையனார் தந்தையாரைக் கண்டால் அஞ்சுவார்; அடங்குவார்; யான் அஞ் சவும் மாட்டேன்; அடங்கவும் மாட்டேன். சின்னப் பிள்ளைக்கு உரிமை அதிகம் போலும்! பாட்டனார் என் பாட்டனார் (தாயைப் பெற்றவர்) வேங்கடாசல முதலியார் அழகாயிருப்பர். உயரமானவர். அவர் வெள்ளை யுடையும், தோளில் சிவப்புக்குட்டைத் தொங்கலும், சந்தனப் பொட்டும், வளைந்த கால் நடையும் எனக்கு விருந்தாகும். அவர் என்னுடன் விளையாடுவர். யான் அவர் தோளில் ஏறுவேன்; மடியில் இறங்குவேன்; முதுகைத் தழுவுவேன்; அவரை மிதிப் பேன்; அடிப்பேன்; கடிப்பேன்; சிவப்புக் குட்டையின் முனை களிலுள்ள முடிகளை அவிழ்ப்பேன்; துட்டை எடுப்பேன்; வீசி எறிவேன்; அவருடன் படுத்து உறங்குவேன்; விழித்தெழுந்து அவர் மீது மூத்திரம் பெய்வேன்; பாட்டனார் என்னிடம் வெறுப்புக் காட்டியதே இல்லை. சின்னவனைப் பாட்டனார் கெடுத்து விடுகிறார் என்று என் தந்தையார் முணுமுணுப்பர். ஆட்டங்கள் தெருவிலே இளைஞர் கோலி விளையாடுவர். காற்றாடி விடுவர்; பாரிகுந்தம் அடிப்பர்; பாணா சுழற்றுவர்; மற்றும் பல ஆடுவர். அவைகளை என் மனம் விரும்பும். இளைஞருடன் யான் எப்படிக் கலந்து விளையாடுவேன்! யான் குழந்தை! என் வயது ஒத்தவரைத் திரட்டிக்கொண்டு ஆடப் புகுவேன். சில ஆடல்கள் வரும்; சில ஆடல்கள் வருவதில்லை. மாலை வேளை யில் பெண் பிள்ளைகள் கண்மூடி ஆட்டம் முதலியன ஆடு வார்கள். அவைகளில் கலந்து கொள்வேன். வீடுகளில் மங்கை யர் ஏழாங்காய், சோழி, தாயம் முதலியன ஆடுவர். அவ்வாட் டங்களைப் பயில முயல்வேன். பாம்பு நாங்கள் பெரிதும் எங்கே விளையாடுவோம்? வீட்டுக் கொல்லையில் ஒரு கிச்சிலி மரத்தடியில் விளையாடுவோம். அக்கொல்லையில் செடி கொடிகள் செறிந்திருக்கும். அவை களிடைப் பெரும் பாம்புகளும் விளையாடும் போலும்? ஒரு நாள் அவ்வழியே சென்றவர், பாம்பு - பாம்பு என்று கூவினர்; கூவிக் கூவிக் கல்லையும் கட்டியையும் வாரி வாரி எறிந்தனர். பாம்புகள் கிச்சிலி மரத்தடியில் எங்கள் பக்கமாக விரைந்து ஓடின; வேலியை அடைந்து புற்றுக்குள் புகுந்தன. அக்காட்சி கண்ட பலர் புற்றுக்களின் அருகே சூழ்ந்து நின்றனர். பேச்சும் கூக்குரலும் ஊரையே கலக்கின. கூட்டம் பெருகியது. பாம் பென்றால் படையும் நடுங்குமன்றோ? என்னுடன் விளையாடின வருள் பலர் ஓடிவிட்டனர். யானும் ஒரு சிலரும் கூட்டத்திடைக் கலந்தோம். என் அன்னையார் எப்படியோ என்னைத் தேடிப் பிடித்து வீட்டிலே சேர்த்தனர். என் மனம் கூட்டத்திலேயே கிடந்தது. சமயம் பார்த்து ஓடிக் கூட்டத்தில் நுழைந்தேன். இருளர் சிலர் வரவழைக்கப்பட்டனர். அவர் என்னென் னவோ செய்து இரண்டு பாம்புகளைப் பிடித்தனர்; தரையில் புரளப்புரள அவைகளைத் தெருவழியே இழுத்து வீடுதோறுஞ் சென்றனர். ஒவ்வொரு வீட்டிலும் நெல் சொரியப் பட்டது. இருளரைச் சூழ்ந்து கூட்டம் நகர்ந்து நகர்ந்து போனது. என் தந்தையார் என்னைக் கூட்டத்தில் பார்த்துக் கையைப் பற்றி நடந்தனர். எங்ஙனமாவது பாம்பைத் தீண்டுதல் வேண்டுமென் பது எனது ஆவல். ஆவலைத் தீர்த்தல் முடியவில்லை. செட்டியா வரம் அப்பாய் நாயுடு வீட்டில் இருளர்க்குக் கூழ் வார்க்கப்பட்டது. என் தந்தையார் நாயுடு வீட்டில் அமர்ந்து மோர் அருந்தினர். அவ்வேளையில் யான் ஓடிப் பாம்பின் வாலை மிதித்தேன். தந்தையார் விரைந்து வந்து என்னைத் தூக்கினர். பாம்பின் வாலை மிதித்தது எனக்கு ஆறுதல் அளித்தது. துள்ளத்திலே நானாபக்கமும் வேலி சூழ்ந்த ஓலை வீட்டிலே எங்கள் வாழ்க்கை நடந்தது. அவ்வீட்டிலும் புறங்களிலும் பாம்பு கள் நடமாடும். என் தந்தையார் அவைகளை அடித்துப் போடுவர். ஒருபோது இரவு நேரத்திலே நாங்கள் படுத்திருந்தோம். பாட்டியார் ஏதோ பாட்டுப் பாடினர். தந்தையார் சாப்பிட வந்தனர். அப் பொழுது பரணில் ஒரு பாம்பு தலை காட்டிற்று. தந்தையார் பாய்ந்து பாம்பின் கழுத்தைப் பற்றி இறுக்கி ஈர்த்துப் புடைத்து அதைக் கொன்றார். அவர் பாம்பின் கழுத்தை இறுக்கியபோது எனக்குப் பதைபதைப்பு உண்டாயிற்று. எளிய அழகிய பாம்புக் குட்டிகள் கடைப்பக்கத்து உரலிலே மிடைந்திருந்தன. இரும்புப் பாறையால் அவைகளைத் தந்தையார் குத்திக் குத்தி நசுக்கினர். அச்செயலும் என் உள்ளத்தை உருக் கியது. பாம்புகளைக் கொல்ல வேண்டுமென்று என் மனம் நினைக்கும். ஆனால் அவைகளைப் பிறர் வதைக்கும்போது என் மனம் வருந்தும். ஒரு நாள் நல்லபாம்பொன்று படமெடுத்துக் கடைக்குள் நுழைந்தது. படம் அழகாயிருந்தது. என் தகப்பனார் அதை அடித்துச் சாய்த்தார். அவ்வடி என்மீது பட்டது போல் தோன் றிற்று. என் கண்களில் நீர் கசிந்தது. அடிபட்டு மாண்டது கோயில் பாம்பாம். அதை அடித்துக் கொன்றது தவறு - குடும்பத்துக்கு ஆகாது என்று ஊர் முழுவதும் பேசியது. குளத்தில் எங்கள் வீட்டில் அணித்தே ஓர் அழகிய குளம் உண்டு. தகப்பனார் அக்குளத்துக்குச் செல்வார்; துணி தோய்ப்பார்; குளிப்பார். ஒவ்வொருபோது அவருடன் யான் செல்வேன். என்னைக் கரையிலிருக்கச் செய்து அவர் குளத்திலிறங்குவர். அங்கே ஆடுமாடுகள் கூட்டங்கூட்டமாக ஆலமரத்தடியில் நிற்கும்; வண்டுகள் ஈண்டி ஈண்டிப் பறக்கும்; கிளிகள் இரையும்; ஏற்றப்பாட்டு முழங்கும். சிலர் குளத்தின் ஒரு கரையிலிறங்கிக் கையை நீட்டியும், வளைத்தும், காலால் உதைத்தும் தண்ணீரைக் கிழித்துக் கிழித்து இன்னொரு கரை சேர்வர்; மீண்டும் திரும் புவர். அக்காட்சியில் என் மனம் ஈடுபடும். அது நீஞ்சல் என்பது அப்பொழுது எனக்கு எப்படித் தெரியும்? ஒரு நாள் யான் கரையிலிருந்தேன். தந்தையார் குளத்தில் மூழ்கி மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஒருவர் குளத்திலிறங்கி நீந்தத்துவங்கினர். அவர் பின்னே யானும் நீரில் இறங்கினேன்; கழுத்தளவு சென்றேன். ஏற்றமிறைப்போர் பையன் பையன் என்று கூவினர். என் தந்தையார் ஓடி வந்து என்னை எடுத்து அப்புறப்படுத்தினர். வீடு சேர்ந்ததும் அவர் என்னைக் கடிந்ததும் தடிந்ததும் இன்னும் என் நினைவிலிருக் கின்றன. அன்று முதல் குளக்கரைப் பக்கம் யான் காலடி வைப்ப தில்லை. என் நண்பர்கள் போனாலும் யான் பின்தங்கி வீடு சேர்வேன். திண்ணையினின்றும் எங்கள் வீட்டுக்கு எதிரிலே ஒரு கல் வீடிருந்தது. அது பெரிய வீடு என்று வழங்கப்பட்டது. மழை பெய்தால் நாங்கள் அத்திண்ணையையே விளையாட்டு இடமாகக் கொள்வோம். ஒருபோது அத்திண்ணையில் கோலி விளையாடினோம். நண்பன் கோலி தவறித் தெருவில் வீழ்ந்தது. அதை அவன் எடுக்கத் திண்ணைப் படி வழியே ஓடினான். அதற்குள் யான் குதித்தேன். உதட்டிலும் நெற்றியிலும் காயமுற்றது. அழுது கொண்டே வீட் டுக்கு ஓடினேன். தாயார் மஞ்சள் பொடி அழுத்தினர். தந்தையார் கோபமாகப் பார்த்தார்; என்னை ஒன்றுஞ் செய்தாரில்லை. சிறிது நேரங் கழிந்தபின் அத்திண்ணையிலேயே நண்பருடன் விளையாடினேன். மரத்தினின்றும் ஒரு நாள் அறுந்த காற்றாடி ஒன்று காற்றிலே அசைந்து அசைந்து பறந்து வந்தது. இளைஞர் குழாம் அதைத் துரத்துவது போலத் தொடர்ந்தது. அக்காற்றாடி எங்கள் வீட்டுக் கொல்லை யிலேயுள்ள ஒரு கொன்றை மரத்தில் சிக்கியது. அதை எடுக்கச் சிலர் முயன்றனர். மரத்தின் மீது ஏறினர். கிளைகள் முறிந்தன. முறிவு கண்டதும் அவர் மேலே ஏறாது திரும்பினர். யான் அதைப் பார்த்த வண்ண மிருந்தேன். எல்லாரும் அவ்விடம் விடுத்து அகன்றனர். கீழே தாழப் படர்ந்த கிளைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு மரமேறப் பார்த்தேன். சிறு சிறு கிளைகள் எனக்குத் துணை புரிவதுபோல அடுக்கடுக்காக என் கைக்கு எட்டுவனவாக இருந்தன. ஒன்றும் முறியவில்லை. யான் குழந்தையா யிருந்தமையால் சிற்றிளங் கிளைகள் என்னை மகிழ்ச்சியோடு தாங்கின போலும்! யானும் மகிழ்வுடன் தாவித் தாவி ஏறினேன். அலைந்து கொண்டிருந்த காற்றாடி நூல், தானே வலிந்து வந்து என் கையில் தவழ்ந்தது. அதை யான் பற்றுந் தறுவாயில், அடா அடா என்ற குரல் கேட்டது. அஃது அன்னையாருடையது. அக்குரல் என்னை அறைந்தது. நூலை விடுத்தேன். கிளையை விடுத்தேன்; கீழே வீழ்ந்தேன்; அச்சத்தால் ஓடினேன்; ஒரு சிறு குழியில் பதுங்கினேன்; இரத்தப் பெருக்குக் கண்டேன்; ஒன்றுந் தெரியவில்லை. மக்கள் பேசுவது கேட்டது. என் தந்தையார் என்னை எடுத்துத் தோளில் அணைத்தனர். கண் விழித்துப் பார்த்தேன். இரத்த ஆறு ஒடுகிறது. முறிந்திருந்த கிளைக் குறை களில் ஏதோ கூரிய ஒன்று இடது விலாப் பக்க வழியே அக்குளி லிருந்து இடுப்பு வரை நீளமாகக் கீறிக் கிழித்துவிட்டது. பல விடங்களில் காயம். ஒருவர் தண்ணீர் கொடுத்தார். இளைப்புச் சிறிது நீங்கியது. தந்தையார் என்னைச் சுமந்து வீட்டுக்குச் சென்று ஒரு பாயில் கிடத்தினார். சூழ்ந்துள்ளவரைப் பார்த்துப் பார்த்து அழுகிறேன்; தாயார் அழுகிறார்; தந்தையார் அழு கிறார்; தமக்கையார் அழுகிறார்; தமையனார் அழுகிறார்; எல்லாரும் அழுகிறார்; திடீரென நாட்டு மருத்துவர் ஒருவர் வந்தார். தோளிலிருந்து இடுப்புவரைப் பக்கமெல்லாம் பச்சிலை பிழிந்தார். அவ்விலையை அறைத்துப் பூசினார்; அதையே காயங்களிலெல்லாம் அப்பினார். ஒரே எரிச்சல்; தாங்க முடியவில்லை. கதறினேன்; துடித்தேன். மருத்துவரும் எதிர்வீட் டாரும் என் கை கால்களைக் கெட்டியாகப் பிடித்தனர். என் அன்னையார் காய்ச்சிய பால் சிறிதளித்தார். எரி படிப்படியே குறைந்தது. யான் உறங்கினேன்; கண் விழித்தேன். கஞ்சி கொடுக்கப்பட்டது. மீண்டும் மாலையில் மருத்துவர் வந்து சிகிச்சை செய்தார். இரவு சிறுவலி தோன்றிற்று. உறங்குவேன்; விழிப்பேன்; அம்மா - அப்பாஎன்பேன்; உறங்குவேன். எப் படியோ இரவு கழிந்தது. செய்தி சென்னைக்கு எட்டியது. பாட்டியாரும் பாட்டனாரும் எப்படி ஓடி வந்தனரோ பாவம்! என்னைக் கண்டதும் அவர் பட்டபாட்டை எழுத்தால் எழுதல் இயலவில்லை. என் பெரிய தந்தையார் மைந்தர் இராஜா முதலியார் ஓய்வெடுத்துத் துள்ளத்தில் சிலநாள் தங்கினர்; அவர் செய்த பணி என்றும் மறக்கற்பாலதன்று. மருத்துவரால் பச்சிலை சிகிச்சையே செய்யப்பட்டது. ஏறக்குறையப் பத்து நாளில் குணம் உண்டாயிற்று. பாட்டியார் நாடோறும் திருஷ்டி கழிப்பர். சோதிடர் கண்டம் என்பராம். கண்டங் கடந்து எழுந் தேன். காயங்களின் வடுக்கள் படிப்படியே மறைந்தன. ஆனால் இடப்பக்கத்துக் கீறல் வடு மட்டும் மறையவில்லை. அஃது அப்படியே நிலைத்தது. பாட்டியார் மரணம் என்னைப் பார்க்கவந்த பாட்டியாரின் வலது காலடியில் வீக்கம் உண்டாயிற்று. அதில் கட்டி கிளம்பிற்று. கட்டிபெரி தாயிற்று. மருத்துவரால் சத்திரம் வைக்கப்பட்டது. சுரங் கண்டது. பாட்டியார் ஆவி நீங்கியது. உற்றார் ஊரார் அழுதனர். அவர் அழுகை எனக்கும் அழுகை மூட்டிற்று. மறுநாள் காலை யில் பாட்டியார் உடல் ஏரியில் தகனஞ் செய்யப்பட்டது. பாட்டியார் தங்கையார் என்னுடன் விளையாடுவார். Éis ah£L ntisÆš, ‘Mah v§nf? என்று அவர் கேட்பர். ஆயா தெய்வலோகம் போனார் என்பேன். ‘bjŒtnyhf« v¥go ïU¡F«? என்பர். தெய்வலோகம் பள பள என்றிருக்கும். அங்கே மாடிகள் வரிசை வரிசையா யிருக்கும். பாதைகளில் தார் பூசப்பட்டிருக்கும். தார்மீது மணல் தூவப்பட்டிருக்கும் என் பேன். இது சிந்தனைக்கு உரியது. அந்நாளில் யான் மாடி களையோ மணல் தூவிய தார் பாதைகளையோ பார்த்தது மில்லை; கேட்டதுமில்லை. பாராதனவும் கேளாதனவும் எப் படிச் சிறுவன் நினைவில் உற்றன? இதை அகத்திணையர் (மனோதத்துவர்) ஆராய்ச்சிக்கு விடுகிறேன். கொம்பா? ஒருபோது நூம்பல் முனிசாமி பிள்ளையின் வண்டி தெருக்கோடியில் தெரிந்தது. அதைக் கண்டதும் பெரியவர்கள் எழுந்து நின்றார்கள்; இளைஞர்கள் அப்படியும் இப்படியும் நடமாடுவதை நிறுத்தி ஒதுங்கினார்கள். பெண்கள் வீடுகளில் புகுந்தார்கள்; குழந்தைக் கூட்டம் அமீனா அமீனா என்று பறந்து ஓடிற்று. யான் ஓட வில்லை. ஏன் ஓடுகிறீர்கள்? அமீனாக்குக் கொம்பா முளைத்திருக்கிறது? என்று கூவினேன். அக் கூவல் முனிசாமி பிள்ளை காதிற் பட்டது. அவர் வண்டியை விடுத் திறங்கி, என்னருகே வந்து, என் கையைப் பிடித்து, இவன் யார் என்று அங்கு நின்றவரைக் கேட்டார். அவர், இந்தக் கடைக் காரர் மகன் என்றனர். அதற்குள் சிலர் ஓடி நிகழ்ந்ததைத் தந்தையார்க்கு அறிவித்தனர். தந்தையார் விரைந்து வெளியே வந்தார். அவரை முனிசாமி பிள்ளை நோக்கி, ஐயா! முதலியாரே, இவன் சமர்த்தன்; இவனிடம் நல்ல பொலிவிருக்கிறது; இவன் வயதில் பெரியவனாவன்; இவனை நன்றாக வளருங்கள்; இவ னுக்கு உயர்ந்த கல்வி கொடுங்கள் என்று சொல்லி விடை பெற்றனர். அங்கிருந்தவர்க்கு வியப்புண்டாயிற்று. தந்தையார்க்கு மகிழ்ச்சி பொங்கிற்று. அவர் என்னை அழைத்துப் போய்த் தாயாரிடம் விடுத்து நடந்ததை நவின்றனர். தாயார் என்னைக் கட்டி அணைத்துக் கண்ணேறு கழித்தார். அன்றுதொட்டு முனி சாமி பிள்ளை துள்ளம் வரும்போதெல்லாம் என்னைக் காணாமற் போகார். அப்பு அப்பு கிராமணி என்றொருவர் இருந்தார். அவர் கொல்லையிலுள்ள பனைமரங்களிலேறிக் குலைகளை வெட்டித் தள்ளுவர். ஓலைகளை வெட்டிக் கழிப்பர். அவைகளைப் பார்த்து யான் அச்சங் கொள்வதுண்டு. அது கண்ட பெற்றோரும் மற்ற வரும் யான் துடுக்குச் செய்யும்போதெல்லாம் அப்பு வருகிறான் என்பர். அப்பு என்ற சொல் கேட்டதும் யான் அடுப்பங்கரைக்கு ஓடி ஒளித்துக் கொள்வேன். அடிக்கடி அப்பு அப்பு என்று வீட்டார் சொல்லி வந்தமையால், அச்சம் படிப்படியே நீங்கிற்று. அப்பை நேரிற் கண்டாலும் யான் ஓடுவதில்லை. பொன்வண்டு பிள்ளைகள் பொன்வண்டுகளின் கழுத்தில் சுருக்கிட்டு அவைகளைப் பறக்க விடுவார்கள். யான் அவைகளைப் பிடுங்கி விடுவேன். அதனால் எங்களுக்குள் சண்டை உண்டாகும். என் எதிரிலே அவர்கள் பொன்வண்டுகளைப் பறக்க விடுவதில்லை. குறிப்பு பருவங்களில் குழந்தைமை முதன்மையுடையது. அது விழுமியதா? அன்றா? குழந்தைமையில் பெண் ஆண் வேற்றுமை தோன்றுகிறதா? ஓடும் பொன்னும் தமது வேற்றுமையை உணர்த்துகின்றனவா? தேள் பாம்பின் நஞ்சு தெரிகிறதா? யான் எத்தனைப் பெண் குழவிகளுடன் விளையாடினேன்? தந்தையார் வெண் பொற்காசுகளை எண்ணியபோது அவை களைப் பணம் என்று என் மனம் நினைந்ததா? பாம்பைக் கண்டு யான் ஓடவில்லையே. அதனை மிதிக்க அன்றோ என் நெஞ்சம் விரைந்தது? குழந்தைமை மாற மாற மனத்தில் மாசு படர்கிறது. மாசு அகத்திலிருந்து வெளிப்படுகிறதா? புறத்திலிருந்து புகுகிறதா? இவ்வாராய்ச்சி எல்லை கண்டுள்ளதா? குழந்தைமையைத் தெய்விகம் தெய்விகம் என்று பெரி யோர் பேசியுள்ளனர். அவர் மீண்டுங் குழந்தையாகி அவ்வாறு பேசுகின்றாரா? பழைய நினைவுகொண்டு பேசுகின்றாரா? பிறவியில் மீண்டும் குழந்தைமை எய்தும் வாய்ப்புண்டா? கட்டுடைய உயிரைத் தன்னைப்போல ஒளி செய்தற் பொருட்டு இயற்கை இறை அதற்குப் பிறவியைத் தருகிறது. அப்பிறவி பலவகை. அவைகளிற் சிறந்தது மனிதப் பிறவி. அப் பிறவியின் குழந்தைமைக்கும் முதுமைக்கும் இடைப்பட்டது சோதனைக்குரியது. சோதனையைக் கல்வி அறிவு ஒழுக்கங் களால் கடந்து தம்மைப் பண்படுத்திக் கொள்வோர் மீண்டுங் குழந்தைமை எய்தல் எளிது; தம்மைப் பண்படுத்திக் கொள்ளா தார் மீண்டுங் குழந்தைமை எய்தல் அரிது. அந்நிலைமைக்கும் இந்நிலைமைக்கும் வேற்றுமையுண்டு. அது மாசினைக் கடப் பது; இது மாசினுள் நுழைவது. அந்நிலை எய்தினவரே பெரியோர் எனப்படுவர். அவரே அறவோர்; அந்தணர். அவர் தாம் பெற்ற நிலைமை உலகுக்கு அறிவுறுத்துவர். தொடக்கக் குழந்தைமையை எல்லாரும் பெறுகிறார். பின்னைக் குழந்தைமையை எல்லாரும் பெறுகிறாரா? இல்லை. ஏன்? குழந்தைமையை மறந்து தம்மைப் பண்படுத்திக்கொள்ளாத அறியாமையே காரணம். பின்னைக் குழந்தைமையை அடைதல் வேண்டும் என்னும் உண்மையைத் தெளிந்து வாழ்க்கையை நல்வழியில் மக்கள் நடாத்துதற் பொருட்டே முன்னைக் குழந்தைமை இயற்கையில் அமைகிறது. முன்னையது வாழ்க்கைக்குக் குறிக் கோள். யான் குழந்தையா யிருந்தேன். வளர்ந்தேன். இப்பொழுது என்னை முதுமை அடர்கிறது. யான் பின்னைக் குழந்தைமை யென்னும் அந்தணச் செல்வத்தை அடைந்தேனா? இல்லையா? வாழ்க்கை எப்படி இயங்கியது? அதை வெளியிடுகிறேன். 5. பள்ளிப் படிப்பு துள்ளங் கிராமத்தில் பள்ளிக்கூடங் கிடையாது. பள்ளிக் கூடம் சத்திரத்திலுண்டு; பூவிருந்தவல்லியிலுண்டு. அஃது ஏறக் குறைய ஒரு கல் தூரமுடையது; இஃது ஏறக்குறைய மூன்று கல் தூரமுடையது எங்களைத் தொலைவில் அனுப்பப் பெற்றோர் மனங்கொண்டாரில்லை. தாழ்வாரப் பள்ளி கடையின் தாழ்வாரம் பள்ளியாயிற்று. தந்தையாரே ஆசிரியரானார். பள்ளிக்கூடத்தின் முன்னே காலையிலும் மாலையிலும் மரநிழல் வாசஞ்செய்யும். தமிழ் எழுத்துக்களை மணலில் எழுதி எழுதித் தந்தையார் தமையனார்க்குப் போதிப் பார். அதை யான் விளையாட்டாகப் பார்ப்பேன்; சில சமயம் யானும் அ - ஆ - என்று சொல்வேன். எழுத்துப் பயிற்சிக்குப் பின்னே அண்ணனார்க்கு அரிச்சுவடி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலகநீதி, வாக்குண்டாம் முதலியனவும், நல்லிலக்கம், பொன்னிலக்கம், எண்சுவடி, முதலியனவும் கற்பிக்கப்ட்டன. நாடோறும் மாலைவேளையில் பெரியசாமியால் பாடங்கள் ஒப்புவிக்கப்படும். சின்னசாமி சிலசமயம் பெரியசாமியுடன் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பன்; சில சமயம் இடையில் ஓடிவிடுவன்; சில சமயம் அவ்விடஞ் செல்லா மலே இருந்து விடுவன்; அவனைக் கேட்பாரில்லை. தமையனார் பாடங்களை ஒப்புவிக்குங்கால், அவைகள் பெரிதும் என் சிந்தையில் படியும். படிந்ததைப் பகலில் சொல்லிச் சொல்லித் திரிவேன். உரத்த குரலில் சொல்லிக் கொண்டே ஓடு வேன்; ஆடுவேன். சிலநாட் கடந்து எனக்கும் முறையான போதனை தொடங்கப்பட்டது. பாடங்கள் எனக்கு எளியனவாகவே தோன்றின; பெரிதும் பழம்பாடங்களாகவே தோன்றின; பல முன்னரே கேட்டவை யல்லவோ? அண்ணனார்க்குச் சட்டம் (ஓலையிலெழுதல்) பயிற்சி செய்விக்கப்பட்டது. அதில் எனக்கு விருப்பம் உண்டாவதில்லை. ஓலையைப் பார்க்கும்போதே யான் ஓட்டமெடுப்பேன்; கரும் பலகையில் எழுதவே விரும்புவேன். சட்டம் எழுதத் தந்தையார் என்னை வலியுறுத்துவதில்லை. தந்தையார்க்குச் சிறிது ஆங்கிலப் பயிற்சியுண்டு. அவரே எங்களுக்கு ஆங்கிலமும் போதிக்கத் தொடங்கினர். ஆங்கில எழுத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும் கற்பிக்கப் பட்டன. வேறு ஒருவரும் எங்களுக்குத் துணை செய்தனர். அவர் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தவர். குடியேறல் வீட்டின் எல்லையைப் பெருக்கக் கால்கொள்ளப்பட்டது. நானாபக்கமும் சுவர்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் என் தந்தையார்க்குப் பழைய இராயப்பேட்டை எண்ணந் தோன் றிற்று. அவர் இராயப்பேட்டைக்குக் குடியேற உறுதி கொண்ட னர். அதற்குரிய காரணம் இரண்டு சொல்லப்பட்டன. ஒன்று எங்களை உயர்பள்ளியில் சேர்த்தல் வேண்டுமென்பது; இன் னொன்று தமக்கைமார்க்குத் திருமணம் செய்வித்தல் வேண்டு மென்பது. துள்ளத்து வீடு வாசல்களையும் நிலபுலங்களையும் விடுத்து இராயப்பேட்டைக்குச் செல்ல என் தாயார் விரும்பினா ரில்லை. ஊரிலுள்ள அறிஞரும் என் தந்தையார் கருத்தை ஆத ரித்தாரில்லை. பிள்ளைகளையும் பெண்களையும் இராயப் பேட்டையிலே சதாசிவம் வீட்டுக்கு அனுப்பிவிடலாம். நாம் போகவரப் பார்த்துக் கொள்ளலாம்; செலவுக்கு நெல் அனுப்ப லாம் என்று தாயார் பலமுறை கூறினர். அக்கூற்றுக்குத் தந்தையார் செவிசாய்த்தாரில்லை. தந்தையார் வலியுறுத்தல் மிகுந்தது. அது தாயாரை இணங்கச் செய்தது. விருத்தாசல முதலியார்க்கு மகிழ்ச்சி ததும்பியது. மகிழ்ச்சி முதலியாரை இராயப்பேட்டைக்குக் கிளப்பிற்று. முத்து முதலி வீதியிலே தேப்பெருமாள் முதலியார் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு அமர்த்தச் செய்தது. 1890ஆம் ஆண்டில் ஒரு நாள் விடியற்காலையிலே நிலவு வெளிச்சத்திலே சில மாட்டு வண்டிகள் வந்து நின்றன. அவை களில் சாமான்கள் ஏற்றப்பட்டன. ஒரு கொல்லா வண்டியில் என் தாயாரும், தமக்கையாரும், தங்கையும் ஏறினர். தெருவில் கூட்டங் கூடியது. ஊர் கண்ணீர் உகுத்தது. எங்கள் அன்னையார் பொருமினர்; விம்மினர்; இக்காட்சியில் மூழ்கியுள்ள எங்களை வண்டியிலேறுமாறு தந்தையார் ஆணை முடுக்கியது. நாங்கள் மறுத்தோம். வண்டிகள் நகர்ந்தன. கூட்டமும் நகர்ந்தது. நாங்கள் தந்தையாருடன் நடந்தே சென்றோம். ஊரவரில் சிலர் கால் கல் தூரம் தொடர்ந்தனர்; சிலர் அரைக் கல் தொடர்ந்தனர்; சிலர் ஏறக்குறைய ஒரு கல் தொடர்ந்தனர். தொடர்ந்து தொடர்ந்து வந்தவர் ஆங்காங்கே தேங்கித் தேங்கி நின்று திரும்பினர். இவ்வாறு கூட்டம் படிப்படியே இரிந்து இரிந்து இறுகிற்று. எங்களை ஒருவர் மட்டுந் தொடர்ந்தே நடந்தனர். அவர் யார்? நாயார். நாய் ஒரு கரிய நாய் எப்படியோ எங்கள் வீட்டில் வந்து சேர்ந்தது. அதை நாங்கள் அன்புடன் வளர்த்தோம். அஃது எங்கள் வீட் டுக்குப் பெருங் காவலாளியாய் இருந்தது. அதை நாங்கள் கறுப்பன்; கறுப்பன் என்று கூப்பிடுவோம். அதை இராயப் பேட்டைக்குக் கொண்டு போகத் தந்தையார் விழைந்தாரில்லை. காரணம், நாயாடி அதைக் கொன்றுவிடுவான் என்ற கவலையே. வண்டிகள் கல்குளம் அடைந்தன. அங்கே ஒரு தோப்பில் சோறுண்டோம். என்ன சோறு? புளிச்சோறும் தயிர்ச் சோறும். நாயும் அச்சோறுண்டது. அவ்வேளையில் ஊர் வண்டிக்காரர் சிலர் அங்கே காணப்பட்டனர். ஒருவரிடத்தில் சென்னையில் நாயடிப்போர் தொல்லையை விளக்கி அவரிடம் தந்தையார் கறுப்பனை ஒப்புவித்தனர். அவர், கறுப்பனைக் கயிற்றில் கட்டிப் பிடித்தனர்; நாயை யானே வளர்த்துக் கொள்கிறேன் என்று எங்களை வழி கூட்டி அனுப்பினர். கறுப்பன் என் மனத்தை விட்டு அகலவில்லை. வண்டிகள் புறப்பட்டன. தமையனாரும் யானும் கொல்லா வண்டியில் ஏறினோம். தந்தையார் மட்டும் நடந்தே வந்தார். பிற்பகல் வீடு நண்ணினோம். எங்கட்கு எல்லாம் புதுமையாகவே தோன்றின. பெரிய தமையனார் சதாசிவ முதலியார் வயத்தில் ஒப்படைக்கப்பட்ட அரிசிமண்டி, பலசரக்குக் கடையாய் மாறி யது. அதனால் தந்தையாரால் புதிய மண்டியொன்று அமைக்கப் பட்டது. அதில் அரிசி, கொள்ளு, தவிடு, உளுந்து, பருப்பு முதலி யன விற்கப்பட்டன. ஆ.பி. பள்ளி முத்துமுதலி வீதி கோடியிலே ஒரு பள்ளி இருந்தது. அதன் பெயர் ஆரியன் பிரைமெரி பாடசாலை. அந்நாளில் ஆரியர் திராவிடர் பிணக்கில்லைபோலும். பள்ளியை நடாத்தி யவர் இராஜகோபால் நாயகர் என்பவர். அப்பள்ளியில் 1891இல் நாங்கள் சேர்க்கப்பட்டோம். அக்கால முறைப்படி தமையனார் நான்காம் வகுப்புக்கும், யான் இரண்டாம் வகுப்புக்கும் தகுதி யுடையவராயிருந்தோம். பின்னே அப்பள்ளி அம்மன்கோயில் தெரு (இப்பொழுது ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தெரு) ஆயர் பாடிக்கு எதிரில் ஜாலர்காரன் வீடு என்ற நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் யான் முதல் மாணாக்க னாகவே விளங்குவேன்; முதல் பரிசில் பெறுவேன்; என் தமைய னார் வெலி கலாசாலைக்கு அனுப்பப்பட்டார். வாழை ஆரியன் பிரைமெரி பாடசாலையில் மூன்றாம் வகுப்பில் யான் வாசித்தபோது பராங்குச நாயுடு என்பவர் அடிக்கடி பள்ளிக்குப் போதருவர்; வகுப்பு வாரியாகப் பரீட்சை செய்வர்; பரிசளிப்பர். ஒருமுறை மூன்றாம் வகுப்பையும் நான்காம் வகுப்பையும் ஒன்று சேர்த்து ஒரு கட்டுரைப் பரீட்சை வைத்தார். தென்னை, வாழை, பசு, நாய் இவைகளில் ஏதாவதொன்றைப் பற்றிக் கட்டுரை வரையுமாறு கேள்வி பிறந்தது. யான் வாழையை எடுத்துக் கொண்டேன். ஏன்? அந்நாளில் இராயப்பேட்டை, வாழைக்குப் பேர்பெற்று விளங்கியது. வாழைச் சூழல் எங்கும் எங்கும் உண்டு. வாழை பயிரிடல், வளர்த்தல், இலை கொய்தல், பட்டை யுரித்தல், தண்டெடுத்தல், குலை வெட்டல், தாறடுக்கல், பழுக்கவைத்தல், இலை காய் பழம் பட்டை நார் முதலியன பயன்படும் விதம் முதலியவற்றை யான் அடிக்கடி பார்ப்பவன்; தோட்டத்தாருடன் பழகுபவன்; ஆதலால் யான் வாழையை எடுத்துக் கொண்டேன்; அதைப்பற்றிக் கட்டுரை வரைந்தேன். சோதனையில் என் கட்டுரை முதன்மையாக நின்றது. பரிசில் எனக்கே கிடைத்தது. இராயப்பேட்டை முழுவதும் என் பெயர் பரவியது. என் தகப்பனார்க்கு வாழ்த்துக் கூறப்பட்டது. கையெழுத்து படிப்பைப் பார்க்கினுங் கையெழுத்தின்மீது அதிகங் கருத்துச் செலுத்துபவர் என் தந்தையார். என்கையெழுத்து நன்றாயிராது. என் கையெழுத்தினும் என் தமயனாருடையது நன்றாயிருக்கும். கையெழுத் தழகில்லாதவன் பரிசில் பெறுவ தால் என்ன பயன்? என்று தந்தையார் நண்பரிடஞ் சொல்வர். அச்சொல் என்னை வாட்டும். கையெழுத்தைப் பண்படுத்த எவ்வளவோ முயன்றேன்; பண்படவே இல்லை. அஃது என் தலை யெழுத்துப் போலும்! வெலி யான் நான்காம் வகுப்பில் வாசித்த வேளையில் ஆரியன் பள்ளியில் இரு பிளவு உண்டாயின; குழப்பம் தலைகாட்டிற்று. ஏறக்குறைய நான்கு மாதகாலங்கள் வீணே கழிந்தது. 1894இல் வெலி கல்லூரி என்னை அழைத்தது. யான் நான்காம் வகுப்பு ஏ பிரிவில் சேர்ந்தேன். ஒரு வாரத்துக்குள் முதல் பீடம் என்னுடைய தாயிற்று. ஆசிரியர் ஞானப்பிரகாசம் என்னிடத்தில் பேரன்பு பூண்டனர். முடவன் யான் பிறப்பிலேயே திண்மை வாய்ந்தவன். அவ்வாய்ப்பு மேலும் மேலும் எனது பருவுடலைப் பெருக்கியது. கழுத்தில் தசைகள் மடிப்பு விட்டன. யான் பொதுக்கன் என்றும் எள்ளப் பட்டேன். தசையை வற்றச் செய்யத் தந்தையார் ஒருவித மருந் தெண்ணெய் கொடுத்தார். அஃதொரு சாமியார் முறைகொண்டு செய்யப்பட்டது. பத்தியம் கடியது. ஒரு சனிக்கிழமை பிள்ளைகளுடன் விளையாடப் பள்ளிக்குச் சென்றேன். எண்ணெய் நினைவின்றியும் பத்திய நினைவின்றியும் வழக்கம்போல நண்பர்கள் வாங்கி வந்த உளுந்து வடையைத் தின்றேன். சிறிது நேரத்துக் கெல்லாம் எண்ணெய் நினைவும் பத்திய நினைவும் தோன்றின. ஏக்குற்றேன். அச்சத்தால் பெற் றோரிடம் உண்மை கூறினேனில்லை. ஞாயிற்றுக்கிழமை கழிந் தது. திங்கட்கிழமை பள்ளிக்குச்சென்று சாயங்காலம் வீடு நோக்கி வந்தேன். வழியிலே வண்டி மேட்டுக்கு அருகில் இடது கால் முடங்கியது. நடத்தல் முடியவில்லை. கீழே வீழ்ந்தேன். வண்டிக்காரர் ஒருவர் என்னை வண்டியிலேற்றி வீடு சேர்த்தார். வீடு சேர்ந்த சிலமணி நேரத்துக்குள் எனது வலது கை முடங் கியது. யான் முடவனானேன். சிகிச்சை இராயப்பேட்டை மருத்துவர் - பேர் பெற்ற அயோத்திதா பண்டிதர் வரவழைக்கப்பட்டனர். அவர் என்னைச் சோதனை செய்தனர். மருந்தெண்ணெய் கொடுத்தது பண்டிதர்க்குச் சொல்லப்பட்டது. பண்டிதர் எண்ணெய் முறைகளை ஆராய விரும்பினர். முறைகள் படித்துக் காட்டப்பட்டன. பத்தியத்தில் ஏதாவது தவறு நடந்திருக்குமா என்று பண்டிதர் கேட்டார். என் அன்னையார், மிக எச்சரிக்கையாகப் பையனுக்கென்று தனியே சமைக்கிறேன் என்றார். பண்டிதர் என்னைப் பார்த்து, நீ ஏதாவது கடையில் வாங்கித் தின்றாயா? என்று வினவினர். உண்மை உரைத்தேன். மருத்துவர், அபத்தியம், அபத்தியம் என்று வாயோடு சொல்லிச் சொல்லி, எண்ணெய்முறை எழுதிக் கொடுத்தவர் யார்? அவரை அழைத்து வரல் முடியுமா என்று என் தந்தையாரை நோக்கினர். அவர் ஒரு சாமியார். எப்படியாவது அவரைக் கொண்டு வருகிறேன் என்றார் தந்தையார். பண்டிதர் தேறுதல் கூறி விடைபெற்றனர். பொழுது விடிந்ததோ இல்லையோ என் அருமைத் தகப்பனார் ஓடினார் துள்ளத்துக்கு; சூழ்ந்த கிராமங்களெல்லாம் உழன்றார். சாமியாரைக் கண்டாரில்லை; வருத்தத்துடன் திரும்பினார்; பண்டிதரிடம் போய்ச்சாமியாரைக் கண்டுபிடிக்க இயலாமையைத் தெரிவித் தார். முரட்டு எண்ணெயைச் சின்ன பையனுக்குக் கொடுக்க லாமா என்று பலர் பேசினர். தவறு செய்தவன் யான், பழி பெற்றோருடையதாயிற்று! என்னே உலகம்! அயோத்திதா பண்டிதர் சிகிச்சையில் இறங்கினார். முதலில் தொடங்கப்பட்டது தைல முறை. தைலம் நாடோறும் வேளைக்குவேளை முட்டிகளில் பூசப்பட்டது. ஒரு வாரங் கடந்து முட்டிகளில் புண்கள் தோன்றின. அத்தோற்றங் கண்ட பண்டிதர்க்குத் தைரியம் பிறந்தது. அவர், முடக்கை நீக்கி விடலாம்; ஆனால் காலம் நீடிக்கும் என்றார். பெற்றோர் முகம் மலர்ந்தது. பண்டிதர் என்பொருட்டுப் பெருமுயற்சி எடுத்தார். அவர் ஒருவித மருந்தா கொடுத்தார்? விதம் விதமான மருந்து கொடுத்தார்; யான் மருந்தனானேன். பண்டிதர் மெழுகு கொடுப்பார்; இராசயனங் கொடுப்பார்; செந்தூரங் கொடுப் பார்; பமம் கொடுப்பார்; கிருதம் கொடுப்பார்; சூரணம் கொடுப்பார். யான் மருந்து தின்று தின்று அலுத்துவிட்டேன். எனக்குப் பணிசெய்யும் பொருட்டு என் தமக்கையார் அம்மணியம்மாளும், அவர்தங் கணவனாரும் வீட்டிலேயே தங்கினர். குழந்தையில் அன்னையார்க்கும் தமக்கையார்க்கும் சுமையானேன்; இப்பொழுதும் அவர்க்குச் சுமையானேன்; அப்பொழுது சுமையாதல் இயற்கை. இப்பொழுது சுமையாதல் இயற்கையா? உளுந்துவடை தின்றதின் அறியாமை! என்ன செய்வேன்? துன்பம் ஒரு நாளா? இரு நாளா? பன்னெடுநாள்! துன்பம் சகித்தல் என்னாலேயே இயலவில்லை. மற்றவர் எங் ஙனஞ் சகிப்பர்? ஈன்ற அன்னையார் - உடன் பிறந்த தமக்கையார் சகித்தனர். அன்பு எதையும் எதையும் சகிக்கச் செய்யுமன்றோ? எனக்கு வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றியது. உடல் மெலிந் தது; தோல் வற்றியது; என்புக் கூடானேன். பொதுக்கு வற்ற லாகியது. ஏறக்குறைய ஒன்பது திங்கள் கழிந்தன. முடங்கிய கையுங் காலுஞ் சூம்பின. சூம்புதல் நற்குறியன்று என்று வருவோர் போவோர் பேசுவர். அப்பேச்சு எனக்கு நாராசம் போலிருக்கும். அப்பேச்சைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு மரண நினைவுண்டாகும். நோயாளியின் முன்னே பலர் பல வாறு பேசுவது தவறு. அப்பேச்சால் விளையும் பயனை யான் சிறு வயதிலேயே அநுபவித்தேன். எனது மனோநிலையைக் குறிப்பால் உணரும் அன்னையார் வருந்துவார்; பல மொழியால் தேறுதல் கூறுவார்; திருப்போரூர் முருகனை நினைந்து நினைந்து வேண்டுதல் செய்வார். பண்டிதரால் எத்தனையோ முறை என்னுடல் சோதிக்கப் பட்டது. கையுங் காலுஞ் சூம்பிய பின்னர் ஒரு நாள் அவர் செய்த சோதனை வேறுவிதமாக இருந்தது. இதயம் நன்றாயிருக் கிறது; நாடிகள் செம்மையாக ஓடுகின்றன. புது மருந்தொன்று செய்யலாமென்று எண்ணுகிறேன். இடையில் மருந்து வேண்டாம். குடல் ஓய்வு பெறுவது நல்லது என்று பண்டிதர் என் தகப்ப னாரிடஞ் சொல்லிச் சென்றனர். ஒரு திங்கள் கடந்தது. புது மருந்து சித்தமாயிற்று. அம்மருந்து எனக்குக் கொடுக்கப்பட்டது. அஃது என் தாயார் உள்ளத்துள்ள முருகன் மருந்தோ என்னவோ தெரிய வில்லை. புது மருந்து அற்புதஞ் செய்ததென்றே சொல்வேன். இடை விட்டு விட்டு ஒரு மண்டலம் அம்மருந்துண்டேன். அடிக்கடி பண்டிதர் வந்து வந்து என்னைப் பார்ப்பர். ஒருநாள் அவர் என்னைச் சோதித்து, இனி என் மருந்து வேண்டாம்; இயற்கை மருந்தே போதும். முடக்குப் படிப்படியே நீங்கும் என்று கூறி, ஒரு தைலங் கொடுத்து முட்டிகளின் மேலே பூசிப் பூசி வெந்நீர் விடுமாறு சொற்றனர். அப்படியே செய்யப்பட்டது. நான்கு நாளில் கை மெல்ல மெல்ல நீண்டது; பின்னே கால் நீண்டது. முடவன் என்ற பெயர் நீங்கியது. எழுந்து எழுந்து நிற்பேன்; விழுவேன்; மறு படியும் எழுவேன்; விழுவேன்; எழுந்தும் விழுந்தும் தள்ளாடித் தள்ளாடி நடக்கத் தொடங்கினேன். சுவர் பிடித்து நடப்பேன்; கோலூன்றி நடப்பேன். இவ்வாறு நடக்க நடக்கச் சூம்புதல் ஒழிந்தது. ஏறக்குறைய ஓராண்டு கடந்தது. எனக்குப் பள்ளி நினைப் புண்டாயிற்று. தம்பி! இன்னும் ஓராண்டு பள்ளியை மறத்தல் வேண்டும் என்ற கட்டளை மருத்துவரிடமிருந்து பிறந்தது. மற்றுமோராண்டு சென்றது. நோய் ஓராண்டை விழுங்கியது; ஓய்வு மற்றுமோராண்டை விழுங்கியது. உடல் நலமுற்றது. நாங்கள் அடிக்கடி திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டுத் திரும்புவோம். மீண்டும் என்னைப் பள்ளிக்கனுப்ப முயற்சி செய்யப் பட்டது. அவ்வேளையில் தந்தையாரைத் திடீரென விக்குள் நோய் அடர்ந்தது. அந்நோய் நெடுநாள் அவரை விட்டகல வில்லை. அவர் குணமடைந்ததும் தாயார்க்கு வயிற்று நோய் தோன்றிக் குடைந்தது. அஃது அவரை எழும்பூர் மருத்துவச் சாலைக்கு ஓட்டியது; சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. அந் நிலையில் தாயாரைப் பெற்ற தந்தையார் காலமானார். பலவிதத் தொல்லைகள் எங்கள் குடும்பத்தை நெருக்கின. அரிசி மண்டி மூடப்பட்டது. ஊரிலிருந்து நெல் ஒழுங்காக வருவதில்லை. ஊர் நண்பரும் நேர்மையாக நடந்தாரில்லை. ஏமாற்றமும் மோசமும் குடும்ப நட்பையுங் கடக்கச் செய்தன. தமையனார் பள்ளியை விடுத்தார்; ஓர் அச்சுக்கூடம் சேர்ந்தார். இந்நெருக்கடியில் யான் எப்படிப் பள்ளிக்குப் போவேன்? என்னை ஓவியப் பள்ளிக்கு அனுப்பலாமா? வேறு தொழிற்சாலைக்கு அனுப்பலாமா? என்று விருத்தாசல முதலியார் எண்ணலானார்; அவ்வெண்ணத்தை என்னிடம் பக்குவமாக வெளியிடுவார். யான் முன்னையதற்கும் இணங்குவதில்லை; பின்னையதற்கும் உடன்படுவதில்லை. அரிய பொழுது வீணே கழிந்தது. எத்தனை நாள்? ஏறக்குறைய ஈராண்டு! தந்தையார் வீட்டிலேயே சுருங்கிய முறையில் வாணிபம் தொடங்கினார். ஊரிலிருந்து கொஞ்சம் நெல் வரும். செல்வ நிலை குலைந்ததென்றே சொல்லலாம். மீண்டும் பள்ளி 1898ஆம் ஆண்டு வெலி கலாசாலை என்னை மீண்டும் அழைத்தது. 1898ஆம் ஆண்டிலிருந்து 1904ஆம் ஆண்டு வரை ஒரே ஓட்டம் ஓடிற்று. திடீரென மாடு படுத்தது. நான்காம் வகுப்பு யான் விடுத்துவந்த நான்காம் வகுப்பே என்னை விழைந்தது. பிரிவு மட்டும் பி ஆகியது. பழைய ஆசிரியர் முதல் பாரத்துக்கு (ஐந்தாம் வகுப்புக்கு) உயர்த்தப்பட்டிருந்தார். அவரை யான் கண்டு அவர்தம் ஆசி பெற்றேன். பழைய தோழர் பலர் உச்சியிலிருத்தல் கண்டேன். பாழும் எண்ணெயையும் அபத்தியத்தையும் நினைந்து நினைந்து மனம் நொந்தேன். நான்காம் வகுப்பு பி பிரிவின் ஆசிரியர் தேவதா என்பவர். அவர் நல்லவர்; போதனா சக்தி வாய்ந்தவர். சில நாளிலேயே என் திறமை அவர்க்குப் புலனாயிற்று. அக்காலத்தில் முதல் மாணாக்கரே பெரிதும் சட்டாம் பிள்ளையாவது மரபு. அதன் படி யான் சட்டாம் பிள்ளையானேன். ஆசிரியர் அன்பு அவர் வீட்டை எனது வீடாக்கிற்று. அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். சந்தேகங் கேட்டுத் தெளிவேன். ஆசிரியர் மனைவி யாரால் போப் ஐயர் இலக்கணம் மிகத் தெளிவாகப் போதிக்கப் படும். தமிழ் இலக்கணத்தில் முதல் முதல் எனக்குச் சுவை ஊட்டியவர் அவ்வம்மையாரே யாவர். ஞாயிறு வகுப்பு அந்நாளில் ஞாயிறுதோறும் பள்ளிக்கூடத்திலேயே ஒரு வகுப்பு நடந்து வந்தது. அது பெரிதும் பிரின்ஸிபால், வை பிரின்ஸிபால் முதலிய ஐரோப்பியப் பாதிரிமாரால் நடத்தப் படும். ஐரோப்பியர் தமிழ் பேசுவது வியப்பூட்டும். அஞ்ஞாயிறு வகுப்புக்கு யான் செல்வேன். பல ஆண்டு அவ்வகுப்புக்குச் சென்று பரிசில் பெற்றேன். அதனால் ஐரோப்பியப் பாதிரிமார் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. முதல் பாரம் நான்காம் வகுப்புப் பரீட்சை முடிந்தது. முதல் பாரத்துக்கு அனுப்பப்பட்டேன். என் பழைய ஆசிரியர் வகுப்பில் அமரும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஏ பிரிவில் அமரும் வாய்ப்பே கிடைத்தது. அப்பிரிவின் ஆசிரியர் ஸ்ரீநிவாசாச்சாரியார். சம்பளத்தைப் பற்றிப் பிரின்ஸிபாலுக்கு யான் விண்ணப்பஞ் செய்தேன். அதன் பயனாக யான் சம்பளமில்லாத மாணாக்க னானேன். எனக்குப் புத்தகம் முதலியன பெரிய தந்தையார் குமாரர் இராஜா முதலியார் வாங்கிக் கொடுப்பார். எவ்வித இடுக்கணுமின்றி யான் படித்து வரலானேன். ஸ்ரீநிவாசாச்சாரியார் அன்புக்கு யான் உரியவனானேன். அவரும் தலைமை ஆசிரியர் வாசுதேவாச்சாரியாரும் ஒன்றாகவே கல்லூரிக்கு வருவது வழக்கம். அதனால் தலைமையாசிரியர் நோக்கு என்மீது படர்வ துண்டு. இரண்டாம் பாரம் இரண்டாம் பாரத்தில் பி பிரிவு கிடைத்தது. ஆசிரியர் வேணுகோபாலச்சாரியார். அவர் ஸர் பாஷியம் ஐயங்காரின் உறவினர். எக்காரணம் பற்றியோ அவர்க்குக் கிறிதுவம் இனித் தது. அவர் அம்மதம் தழுவினர். யான் இரண்டாவது பாரத்தில் படித்தபோதே சச்சிதானந்தம் பிள்ளையை முதல் பாரத்தில் காணலானேன். இருவேமும் நண்பரானோம். அப்பொழுது பிரின்ஸிபாலாயிருந்தவர் ஜே. கூலிங். அவர் இங்கிலாந்து நோக்கினமையால் வை பிரின்ஸிபால் ஸி. பாலர்ட் துரை பிரின்ஸிபாலானார். பாலர்ட் கணித நிபுணர்; கேம்பிரிட்ஜில் தேறினவர். அவர் பிரின்ஸிபாலாக வந்ததும் கீழ் வகுப்புக்களிலும் அடிக்கடி கணிதப் பரீட்சை வைப்பர். வெலியைக் கேம்பிரிட்ஜாக்க வேண்டுமென்பது அவரது நோக்கமாயிருக்கலாம். எங்கள் வகுப்பு முறை வந்தது. கேள்விகட் கெல்லாம் யான் விடை எழுதினேன். யான் நூற்றுக்கு நூறு எதிர்பார்த்தேன். திருத்தப்பட்ட விடைத் தாள்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. மார்க்கைப் பார்த்தவுடன் என் முகம் வாடிற்று. mij MáÇa® f©L, ‘v‹d? என்று கேட்டனர். ஐந்து மார்க்கு குறைபட்டுள்ளன. காரணந் தெரியவில்லை என்று சொன்னேன். அவர் விடைத்தாள்களை வாங்கிப் பார்த்தார். ஒன்றுஞ் சொல்லவில்லை. பிற்பகல் பிரின்ஸிபால் வகுப்புக்கு வந்து சில முறைகளை விளக்கினார். முடிவில் அவரை யான் அணுகி, ஐந்து குறைபட்டதற்குக் காரணந் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றேன். அவர் தாள்களை வாங்கிப் பார்த்தார். சில விடங்களில் நீலக் கோடுகள் இடப்பட்டிருந்தன. அவை களைக் காட்டிக் காரணந் தெரிகிறதா என்றார்; தெரியவில்லை என்றேன். உன்னுடைய எழுத்து வரிகளும் குறிகளும் சிலவிடங் களில் நேராக இல்லை; கோணல் கோணலாக இருக்கின்றன. நீலக் கோடுகள் அவைகளை உணர்த்துவன. அதனால் ஐந்து மார்க்கு குறைபட்டன. திருந்திக்கொள் என்று சொன்னார். என் முகம் மலரவில்லை. நீ எல்லார்க்கும் மேலாக மார்க் வாங்கி இருக்கிறாயே; அதில் உனக்குத் திருத்தி இல்லையா? என்று கேட்டார். அக்கேள்வி எனக்குச் சிரிப்பூட்டிற்று. அன்று தொட்டு, பாலர்ட் துரை குறித்த குறைபாடு நிகழாதவாறு காத்து வர லானேன். மூன்றாம் பாரம் மூன்றாம் பாரத்தில் ஏ பிரிவில் என்பெயர் எழுதப் பட்டிருந்தது. ஆனால் பி ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் பேசி என்னைத் தமது பிரிவுக்கு மாற்றிக்கொண்டனர். (அக்காலத்தில் ஏ-பி-பிரிவுகட்டுத் தனித் தனிப் பரிசில் வழங்கப்படும். எங்கள் அமைவில் இரு பிரிவிலும் முறையே முதல்வராக வருவோர் இருவர். ஒருவர் எ.பி. கணபதி; மற்றொருவன் எளியேன். அவர் ஏ-ல் இருந்தால், யான் பி-ல் இருப்பேன்; யான் ஏ ஆனால் அவர் பி ஆவர். இவ்வாறு நாங்கள் மாற்றப்படுவோம். இம் முறை எங்கட்கு மட்டுங் கையாளப்படுவதன்று, பள்ளி முழு வதுங் கையாளப்படுமொன்று. மூன்றாம் பார ஆசிரியர் பெயர் டேவிட் தேவதா என்பது. அவர் பாதிரியார்; இராயப் பேட்டை யில் வதிந்தவர். அவர் மனைவியார், எனக்கும் வேறு சிலர்க்கும் பூகோளம் போதிப்பார். அவர் என்பால் காட்டி வந்த அன்பு கிறிதுவமோ - தாய்மையோ - யான் அறியேன். டேவிட் திரு வெவ்வளூர் (திருவள்ளூர்) பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக அனுப்பப்பட்டார். பின்னே ஒருவர் வந்தார். அவர் போதகா சிரியராக வருதற்கு அருகரல்லாதவர். அவரைச் சந்தேகங் கேட்டல் கூடாது: கேட்டால் சீறி விழுவர். ஒரு முறை அவர் என்னைக் கடிந்த வேளையில், நீங்கள் போலி வேலைக்கு அருகர் என்று சொன்னேன். வகுப்பே நகைத்தது. ஆமாம்; யான் போலி வேலைக்கு முயற்சி செய்கிறேன் என்றார் ஆசிரியர். மீண்டும் நகைப்பு. அச்சமயம் பிரின்ஸிபாலாக இருந்தவர் ஜி. ஜி. காக். அவர் ஞாயிறு வகுப்பில் என்னுடன் பழகியவர். அவர்தம் உள்ளத்துலவிய மாணாக்கருள் யானும் ஒருவன். அவர் எனக்குப் பேனா பென்ஸில் முதலியன கொடுப்பர். அவர் காலத்தில் கல்லூரியின் பொன் விழா கொண்டாடப்பட்டது. வெலி யின் மிஷின் காலேஜ் என்பது வெலி காலேஜ் என்று மாற்றப்பட்டது. விழாவில் தலைமை வகித்தவர் டாக்டர் மில்லர். அன்று காக் துரை பேசிய பேச்சு டாக்டர் மில்லரையும் வியக்கச் செய்தது. முன்னே, மூன்றாம் பாரப் பிள்ளைகளில் விருப்பமுடை யவர் லோயர் செகண்டரி பரீட்சைக்கு அனுப்பப்படுவர். யான் அப்பரீட்சைக்குச் சென்றேன்; அதில் தேறினேன். நான்காம் பாரம் மூன்றாம் பாரத்தில் என்னால் வெறுக்கப்பெற்ற போலி ஆசிரியரே நான்காம் பாரத்துக்கு உயர்த்தப்பட்டார். அவரைக் கண்டதும் என் மனங் கொதித்தது. கொதிப்பு வீணாகவில்லை; பெரும் புரட்சியாயிற்று. புரட்சி, போலி ஆசிரியரை ஓட் டிற்று. பின்னே பலர் ஆசிரியராக வந்தனர். ஒருவரும் நிலைத்தா ரில்லை. வகுப்பே கெட்டுப் போயிற்று. நான்காம் பாரத்தைப் பற்றிய கவலை பிரின்ஸிபால் காக் துரைக்குப் பெரிதாயிற்று. காக் தக்க ஒருவரைப் பொறுக்கி எடுத்தார். அவர் நிலைத்தார். அவர் குணமலை. அவர் பெயர் மாணிக்கம். மாணிக்கம் வகுப்பை ஒளிபெறச் செய்தது. அத்தருணத்தில் எனது உயிரனைய தலைவர் காக் துரை இறந்துபட்டார். அவர்தம் இறப்பு என் வாழ்க்கைக்கே ஓர் இடியாயிற்று. அவர்தம் பொன்னுடல் புரசைக் கிறிதுவ இடு காட்டில் அடக்கஞ் செய்யப்பட்டது. அக் கல்லறைக்கு யான் அடிக் கடி சென்று எனது வணக்கஞ் செலுத்தி ஆறுதல் அடைவேன். யாக்கை நிலையாமை என் உள்ளத்தில் இடங்கொண்டது. பழையபடி கூலிங் துரை தலைவரானார். ஐந்தாம் பாரம் ஐந்தாம் பார நிகழ்ச்சிகள் பலப்பல. அவையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வருகின்றன. அவைகளில் எதைச் சொல்வேன்! எதைச் சொல்லாது விடுவேன்! அவ் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ண ராவ். அவர் உதவித் தலைமை ஆசிரியர்; பேர் பெற்றவர். கிருஷ்ண ராவ், பி. ஏ. அல்ல; எம். ஏ. அல்ல. ஆனால் பி.ஏ.வுக்கும், எம்.ஏ.வுக்கும் ஆங்கிலம் போதிக்கும் வல்லமை வாய்ந்தவர். அவர் ஆங்கிலம் நன்றாகப் பேசுவர். எழுதுவர். அவர்தம் ஆங்கிலப் பேச்சு ஆங்கிலரையும் வியக்கச் செய்யும். கிறிடியன் பேட்டிரியட் என்ற பத்திரிகை முதல் முதல் அவராலேயே நடத்தப்பட்டது. கிருஷ்ணராவ் தெலுங்கு பிராமணர்; கிறிதுவராயினர்; தமிழ் நன்றாகப் பேசுவர். பிரின்ஸிபால், வை பிரின்ஸிபால், தலைமை ஆசிரியர் முதலிய பலர்க்கும் அவரிடத்தில் நன் மதிப்புண்டு. கிருஷ்ண ராவுக்கும் எனக்கும் உற்ற அன்புப் பிணிப்பை இங்கே எப்படி வெளியிடுவேன்? கிருஷ்ணராவ் என் னுள் நிற்பார்; அவருள் யான் நிற்பேன் என்று கூறி மேற்செல் கிறேன். அவர் வீடு பீட்டர் ரோட்டில் இருந்தது. அவர் வீட்டார் முத்திரை அடித்த டாம்புகளை விரும்புவர். அவை களைத் திரட்டிக் கொடுப்பவருள் யானும் ஒருவன். கிருஷ்ணராவ் வெறும் பாடங்களை மட்டும் அறிவுறுத்து வோரல்லர்; வாழ்க்கையை அறிவுறுத்துவோர். அவரது வகுப்பு ஒரு பல்கலைக் கழகம்போல் விளங்கும். அவரும் யானும் பொது வாகப் பல துறைகளிலும் சிறப்பாக மதச் சார்பிலும் வாதம் புரிவோம். அவரது பொன் மொழிகள் எனது மனோநிலையைப் பலவாறாக்கின. வாழ்க்கையில் ஒருவித மாறுதல் ஏற்படுவது போல் தோன்றிற்று. அவ்வேளையில் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளை எங்கள் பள்ளியில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் வேறொருவர். அவர் சே. கிருஷ்ணமாச் சாரியார். எங்கள் வகுப்புக்குத் தமிழ் போதிப்பவர் இவரே. கதிரைவேற் பிள்ளை சிறந்த பேச்சாளர். அவர் பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் திரளும். அவர் சொற்பொழிவிலே மாணாக்கர் உலகமும் மயக்குறும். அவ்வீரப் பொழிவைப் பருகு வதில் எனக்குத் தணியா வேட்கை உண்டாயிற்று. கதிரைவேலர் நன்மொழியைக் கேட்க யான் எங்குஞ் செல்வேன். கதிரைவேல் எங்கள் பள்ளியில் முதல் முதல் அளித்த காட்சி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தமிழ்ச் செல்வம் நம் பள்ளிக்கும் வந்ததே என்று யான் ஆனந்தமெய்தி னேன். யானும், சிவசங்கரன் உள்ளிட்ட மாணாக்கர் சிலரும் பிள்ளையினிடம் நெருங்கி நெருங்கிப் பழகினோம். ஆறாம் பாரம் யான் மெற்றிகுலேஷன் வகுப்பை அடைந்தேன். பள்ளிப் படிப்புமீதிருந்த எனது வேட்கை முருகி எழவில்லை. சிறிது குன்றியதென்றே சொல்வேன். அதை உணர்ந்த என் உயிரனைய ஆசிரியன்மார் சிலர், கதிரைவேல் மதவாதப் பேய். அப்பேய் உன்னையும் பிடித்துக்கொள்ளும். படிப்புப் பாழாகும். நீ மாணக்கன் என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்தனர். அவ்வெச்சரிக்கை செவிடன் காதில் சங்கு ஊதுவது போலா யிற்று. அதை யான் பொருட்படுத்துவதே இல்லை. தமிழ்ப் பேராசிரியர் சிலநாள் ஓய்வெடுத்தனர். அந்நாட் களில் எங்கள் வகுப்பு, கதிரைவேற் பிள்ளையைக் கண்டது. அச்சில நாள் பிள்ளையவர்கள் பாக்களுக்கு விரித்த பொருளும் விளக்கமும் பிறவும் என்னுள் பசுமரத் தாணிபோல் படிந்தன. அவைகளை யான் ஒப்புவிப்பேன். வழக்கு கதிரைவேற் பிள்ளைமீது இராமலிங்க சுவாமிகள் சார்பில் ஜார்ஜ் டவுன் மாஜிடிரேட் மன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. விவரம் பின்னே கூறுவன். அவ்வழக்கு, கதிரைவேற் பிள்ளையின் நண்பரையும் பகைவரையும் மன்றத் துக்கு ஈர்க்கும்; என்னையும் ஈர்த்தது. யானும் சில மாணாக்க ருடன் அடிக்கடி செல்வேன். சில சமயம் யான் அரைநாள் பள்ளியில் கழிப்பேன்; மற்ற அரைநாள் மன்றத்தில் கழிப்பேன். வில்வபதி செட்டியார் என்பவர் தம்மைக் கதிரைவேற் பிள்ளை கொத்தைவால் சாவடியண்டைத் தாக்கிப் புடைத்தனர் என்று எழும்பூர் மாஜிடிரேட் மன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தனர். வழக்குகள் கதிரைவேலரை நெருக்கின. அதனால் அவர் பள்ளிவேலையை விடுத்தல் நேர்ந்தது. செட்டியார் குறிப் பிட்ட நாள், கதிரைவேற் பிள்ளை எங்கள் வகுப்பில் தமிழ் அறிவுறுத்திய நாட்களில் ஒன்று. தேர்தல் (Selection) சோதனை நெருங்கி வருவதையும் யான் கருதினேனில்லை. வழக்கு வேடிக்கையே எனக்குப் பெரிதா யிற்று. தந்தையார் என்னைக் கடிவதில்லை. அவர் கதிரைவேல் சார்பினராயினர். உறவினருள் என்னைக் கடிந்தவர் ஒருவரே. அவர் என் பெரிய தந்தையாரின் இளைய புதல்வர் சோமசுந்தர முதலியார். அவரைக் கண்டதும் யான் எப்படியாவது நழுவிப் பதுங்கி விடுவேன். என்சான்று எழும்பூர் வழக்குக்குச் சான்றுகள் திரட்டப்பட்டன. ஒருசாலை மாணாக்கர் சிவசங்கரனுக்கும், பள்ளிக் கணக்கருக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன. சிவசங்கரன் சான்று முடிந்தது. அது போதாதென்று என் சான்று விரும்பப்பட்டது. என் சான்றின் அவசியம் எனக்கு விளக்கப்பட்டது. விசாரணை நாள் தேர்தல் சோதனையின் முதல்நாள் ! என் செய்வேன்! என் சோதனை பெரிய தாயிற்று. சான்றுக்குச் செல்வதா? பரீட்சைக்குப் போவதா? இரண்டும் மாறிமாறி என்னை வாட்டின. ஒரு பக்கம் கதிரைவேல்; இன்னொரு பக்கம் வாழ்வு. கதிரைவேல் அன்பே விஞ்சியது. பெரிய தந்தையார் மைந்தரால் பலவிதத் தடைகள் கிளத்தப் பட்டன. தந்தையார் ஒன்றுஞ் சொல்லவில்லை. பள்ளி வாழ்வு வேறு வாழ்வாக மாறும் காலம் வந்தது. அதைத் தடுத்தல் எவ ரால் இயலும்? யான் சான்றுக்குச் செல்ல உறுதிகொண்டேன். பரீட்சைக்கு இடர்நேராதவாறு பகல் 12.30க்கு மேல் 1.30க்குள் என்னை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் சில நிமிடமே விசாரணை நடந்தது. தொடர்ச்சி மூன்றா நாள் வைக்கப்பட்டது. நாள் மாற்றத்துக்கென்று செய்யப்பெற்ற விண்ணப்பம் தள்ளப்பட்டது. தொடர்ச்சிக்கும் மேலே குறிப் பிட்ட வேளையில் சென்றேன். அரை மணி நேரத்தில் சான்று முற்றுப் பெற்றது. மாணாக்கன் என்ற முறையில் என்பால் மாஜிடிரேட் இராஜரத்தின முதலியார் அநுதாபங் காட்டியே நடந்தார். பயன் என்ன? கால தேவதையின் நோக்கம் வேறு விதமாயிருந்தது. வண்டிகளால் நேர்ந்த தொல்லைகள் காலத் தில் பரீட்சைக்குச் செல்ல என்னை விடவில்லை. இரண்டு அரை நாள் பரீட்சையில் அமர்ந்து எழுதும் பேற்றை இழந்தேன். சோதனையின் முடிவைச் சொல்லவும் வேண்டுமோ? பள்ளிப் படிப்பு முடிவு கிருஷ்ணராவ் உள்ளிட்ட ஆசிரியன்மார் சிலர் எப்படி யாவது என்னை மெற்றிகுலேஷன் பரீட்சைக்கு அனுப்ப வேண்டுமென்று முயன்றனர்; பிரின்ஸிபாலிடத்தில் பேசினர். முடிவு வேறுவிதமாயிற்று. அன்னார், கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவால் பள்ளிப்படிப்பில் எனக்கு அலட்சியம் தோன்றிய தென்றும், யான் பரீட்சைக்கு அனுப்பப்பட்டாலும் முதல் தரத் தேர்ச்சியடையமாட்டேனென்றும், யான் சென்னையை விடுத்து மன்னார்குடியிலாவது திருவள்ளூரிலாவது மற்றுமோராண்டு படித்தல் வேண்டுமென்றும், அதற்குரிய வசதிகளெல்லாம் மிஷி னாரால் செய்து கொடுக்கப்படுமென்றும் முடிவு செய்தனர். அதற்கு யான் இணங்க வில்லை. ஒரே வகுப்பில் மற்றுமோராண்டு படிப்பதைவிடத் தூக்கிட்டுக்கொள்வது மேன்மை என்று ஆசிரியர் கிருஷ்ணராவினிடம் அறைந்தேன். பள்ளிப் படிப்பு முற்றுப் பெற்றது! முதல் மாணாக்கன் ஆக எவ்வளவு உழைத்தேன்! முதல் பரிசில் பெற எவ்வளவு பாடுபட்டேன்! வக்கீலாதல் வேண்டும் அல்லது கணிதப் பேராசிரியனாதல் வேண்டும் என்று எத்தனை நாள் மனக்கோட்டை கட்டினேன்! முதல் மாணாக்கன் என்ற இறுமாப்பும், முதல் பரிசுச் செருக்கும், மனக் கோட்டையும் என்ன ஆயின? தேனென இனித்த பள்ளிப் படிப்பு வேம்பெனக் கைத்தது. பரிசிலாகப் பெற்ற நூல்கள் எங்கே போயின? நண்பர் வீடுகளுக்குப் போயின. அவைகளைப் பொன்னென மதித்த மனம் என்னவாயிற்று? அம்மனம் மாண்டது. யான் வேறு மனிதனானேன். கோயில் எனக்குப் பள்ளி ஆயிற்று. தேவார திருவாசகம் எனக்கு நூல்களாயின. யான் பள்ளி விடுத்த சில திங்களுக்குள் என் தந்தையார் விண்ணுல கெய்தினர்; அப்பொழுது இராஜா முதலியார் சில நாள் இராயப்பேட்டையில் தங்கினர், அவர் நாடோறும் எனக்கு நன்மொழி கூறிக்கூறி கமர்ஷியல் பள்ளிக்குப் போகுமாறு தூண்டினர். இன்னுமா பள்ளி! இன்னுமா படிப்பு! ï‹Dkh gߣir! என்று எண்ணினேன். ஆனால் இராஜா முதலியார் மனத்தைப் புண்படுத்த எனக்கு விருப்பமில்லை. அவர் கருத்துக்கு இணங்கி நடக்க இசைந்தேன்; இராயப்பேட்டை கமர்ஷியல் கூலில் சேர்ந்தேன்; புக்கீப்பிங் பயின்றேன்; பரீட்சையில் தேறி னேன். இராஜா முதலியார்க்கு ஆறுதலுண்டாயிற்று. குறிப்பு வாழ்க்கை எது? அது தானே அமைவதா? அமைக்கப்படு வதா? கருவிலே அமைந்து படிப்படியே பெருகுவதா? அவ்வப் போது உற்று உற்று வளர்ந்தும் அழிந்தும் போவதா? வாழ்க்கைக்கு முதலும் முடிவும் உண்டா? இல்லையா? வாழ்க்கையில் இன்ப துன்பம் உறுதற்குக் காரணமென்ன? இன்னோரன்ன கேள்விகள் எழுவது இயற்கை. இவைகளைச் சிந்திக்கச் சிந்திக்க அவரவர் கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவங்கட் கேற்றவாறு விடைகள் பிறக்கும். எனது வாழ்க்கைக் கூறுகள் பல இன்னுஞ் சொல்லப் படவில்லை. வாழ்க்கையில் சில கூறுகள் சொல்லப்பட்டன. எனது பள்ளி வாழ்க்கை எப்படித் தோன்றி நின்று ஒடுங்கிற்று? பள்ளிப் படிப்பில் வேட்கை எனக்கு எங்கிருந்தெழுந்தது? தொடக்கத்தில் அது நோயால் நொறுக்கப் படுவானேன்? மீண்டும் அது முகிழ்த்து மலர்ந்து கனியாது படுவானேன்? எங்கேயோ பிறந்த கதிரைவேற் பிள்ளைக்கும் எனக்கும் உறவு ஏற்படுவானேன்? அவரை எனது பள்ளிக்கூடத்தில் சேர்த்தது எது? வழக்கில் என் சான்றின் அவசியத்தை உண்டு பண்ணியது எது? இரண்டு நாளும் வண்டிகளால் தொல்லை விளைத்தது எது? எல்லாவற்றிற்குங் காரணம் என் அறியாமையா? ஊழா? கடவுள் அருளா? சிலவேளை அறியாமை என்று தோன்றும்; சிலசமயம் ஊழ் என்று தோன்றும்; சிலபோது கடவுள் அருள் என்று தோன்றும். பள்ளிப் படிப்பின் வீழ்ச்சியால் நல்லது விளைந்ததா? கெட்டது விளைந்ததா? என்ன விடை கூறுவது? இங்கே ஆராய்ச்சி வேண்டும். ஆராய்ச்சிக்குரிய பிற வாழ்க்கைக் கூறுகளை வெளி யிடுகிறேன். இப்பொழுது யான் மாணாக்க வாழ்க்கையிலில்லை. ஆனால் மாணாக்க வாழ்க்கையிலிருப்பவர் என்னைச் சூழாம லிருப்பதில்லை. அவருக்கு எனது பள்ளி வாழ்க்கை இலக்கிய மாகுமா? ஆயின் அவ்விலக்கியத்தின் முடிபு கொள்ளற்பாலதா? தள்ளற்பாலதா? பள்ளியில் படித்து வருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளுள் ஒன் றாகக் கொண்டுள்ளேன். 6. பிள்ளைமை குழந்தை விளையாடல்களில் சிலவற்றை முன்னே சொன்னேன். இங்கே பிள்ளை விளையாடல்களில் சிலவற்றைக் கூறப்புகுகிறேன். யான் ஆரியன் பிரைமெரி பள்ளியில் படித்து வந்த போது பிள்ளை விளையாடல்கள் ஆடுவேன். அவ்வாட்டங்களில் எனக்கு அளவு கடந்த வேட்கை. ஆட்டங்கள் இராயப்பேட்டை சுந்தரேசர் கோயில் எதிரிலுள்ள திடல் நாங்கள் விளையாடும் இடம். சிலவேளை பெரிய பாளையத் தம்மன் கோயிலின் பொட்டல், அட்லன் தோட்டம் முதலிய இடங்களிலுஞ் சென்று விளையாடுவோம். கோலி புள் சடுகுடு ஆகிய ஆட்டங்களில் நல்ல தேர்ச்சி பெற்றேன்; பாரிகுந்தம் கிளிகுந்தம் அடிப்பதுண்டு; காற்றாடியில் அதிக நாட்டஞ் செலுத்துவதில்லை. சிறுமியருடன் ஏழாங்காய் முதலியன விளையாடுவேன். இவ்வாட்டங்கள் எனக்கு உடற் பயிற்சியாகத் துணை புரிந்தன. சுண்டலும் தன்மதிப்பும் சுந்தரேசர் கோயிலில் திருவிழா நடக்கும். முடிவில் சுண்டல் கொடுக்கப்படும். வெளியில் விளையாடும் பிள்ளைகள் சுண்டல் வாங்க ஈக்களைப்போல மொய்ப்பார்கள். ஒருவர் சிக்கனமாகச் சுண்டல் பங்கிடுவர். வேறு ஒருவர் பிள்ளைகளை மருட்டுவர்; தள்ளுவர்; அடிப்பர்; இவர் நொண்டியார்! ஈக் களுடன் கலந்து சுண்டல் வாங்க என் மனம் ஒருப்படுவதில்லை. யான் ஒதுங்கியே நிற்பேன். எவரேனும் எனக்குச் சுண்டல் கொடுத்தால் வாங்கிக்கொள்வேன்; இல்லையேல் சுண்டல் வாங்காமலே திரும்புவேன். யான் இருக்கும் இடந்தேடி வந்து எனக்குச் சுண்டல் கொடுப்பவர் சிலர். அவருள் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர் மண்டி மன்னாத முதலியார். அவர், தமது சொத்து முழுவதையுஞ் சுந்தரேசர் கோயிலுக்குத் தானஞ் செய்த அறவோர். அவ்வறவோர் என்னைத் தேடி வருவது நொண்டியார்க்குப் பிடிப்பதில்லை. அவர், இவன் சீமானா? ïtD¡F v‹d jÅ¢ R©lš? என்று ஒருமுறை எரிந்தனர். அன்று முதல் திருவிழா முடிந்ததும் கோயிலை விடுத்து வெளிவரலானேன். சுண்டலுக்கென்று யான் நிற்கமாட்டேன். இதையுணர்ந்த நொண்டியார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இவன் தொட்டராயன் என்று சொல்வர். அவர், சகோதரர் களை மருட்டுவதும், தள்ளுவதும், அடிப்பதும் எனக்குப் பிடிப்ப தில்லை; மற்றவர்க்கும் பிடிப்பதில்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்க விளையாட்டுச் சோதரர் அனைவருங் கூடினர்; நொண்டியாரை மணலபிஷேகஞ் செய்ய உறுதி செய்தனர். ஒருநாள் நொண்டியார்க்கு அவ்வபிஷேகம் நடந்தது. அதில் என் கை கலக்கவில்லை; கருத்துக் கலந்தது. திருப்பணி கோயில் திருப்பணியாளருள் எவரேனும் வாராவிடின் அவர் பணி எங்களால் செய்யப்படும். ஆனால் அன்பர் மன்னாத முதலியார்மட்டும் எங்களூடே இருத்தல் வேண்டும். அவரைக் கண்டதும் எங்களுக்குள் எழுச்சி பிறக்கும். அவர்தம் அன்பு பிள்ளைகட்கு ஊக்க மூட்டும்; ஆட்டங்களையும் மறக்கச் செய்யும். ஒருபோது கோயில் முன்னே மணல் கொட்டப்பட் டிருந்தது. அதைவாரிக் கோயிலுட் சேர்ப்பதற்கென்று குறிக்கப் பெற்ற ஆட்கள் வரவில்லை. சாயங்காலம் மன்னாத முதலியார் வழக்கம்போலக் கோயிலுக்கு வந்தார்; மணலைக் கண்டார்; அவரே வாரிக் கொட்டத் தொடங்கினார். சிலர் அவருடன் கலந்தனர். அத்தொண்டு என் கண்ணிற்பட்டது. என் பட்டா ளத்தைத் திருப்பினேன். மணல் பறந்தது. எறும்பூரக் கல்லுந் தேயுமன்றோ? சில சமயம் பெருக்கல் நேரும்; சில சமயம் பழந் திருத்தல் நேரும்; சில சமயம் சாமான்களைத் துலக்கல் நேரும். சிறுவர்க்கு ஊக்கம் பிறந்தால் அஃது என்னவே செய்யாது! விளையாட்டில் ஒற்றுமை பெரியபாளையத் தம்மையார் கோயிலில் ஆண்டுக்கொரு முறை பல்லக்குச் சேவை மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று இராயப்பேட்டையே அங்கிருக்கும். சிறுவர் கூட்டங் கூட்டமாய் விளையாடுவர். அம்மையார் வீதி வலங் காரணமாகப் பெரிய வர்களுக்குள் ஒருமுறை வாக்குவாதம் மூண்டது. அது கைவாத மாக மூளும்போல் தோன்றியது. அதன் வேகம் விளையாட்டுப் பிள்ளைகளையும் தாக்கியது. ஆட்டங்கள் நிறுத்தப்பட்டன. பிள்ளைகட்குள்ளும் வாதம் மூண்டது. நாமெல்லாம் அண்ணன் தம்பிபோல் விளையாடிக் கொண்டிருந்தோம். பெரியவர்கள் மடமை நம் ஒற்றுமையைக் கெடுத்தது என்ற கருத்துப்படக் கூக்குரலிட்டேன். சிலர் என்னை உறுத்து நோக்கினர். அங்கு நின்றிருந்த திவான் கோபால கிருஷ்ண பிள்ளை, நீ எந்தத் தெருப் பையன் என்று கேட்டார். உங்கள் வீட்டுக்கு எதிரி லுள்ள ஆரியன் பிரைமெரி பள்ளியில் வாசிக்கும் மாணக்கன் என்றேன். அவர் புன்னகை புரிந்து யான் பள்ளிக்கூடங் கேட்க வில்லையே என்று சொன்னார். எனக்குச் சிரிப்பு வந்தது. கோபாலகிருஷ்ண பிள்ளை, பெரியவர்களின் மடமையைப் பற்றி நீங்கள் பேசல்வேண்டாம்; விளையாடத் தொடங்குங்கள் என்றார். விளையாடத் தொடங்கினோம். சிறுவர் பலரும் விளையாட்டில் கருத்திருத்தினர். ஆட்டம், வேற்றுமையை யொழித்து ஒற்றுமையை உண்டாக்கியது. அடுத்த நாள் கோபால கிருஷ்ண பிள்ளை பள்ளி போந்து, என்னைக் கண்டு பிடித்துக் கற்கண்டும் ஒரு பட்டுக் கை குட்டையுந் தந்து, மாணாக் கர்க்கு விளையாட்டால் ஒற்றுமை விளைதலைப் பல கதைகள் வாயிலாக விளக்கினர். அன்று முதல் விளையாட்டில் அதிக ஊக்கஞ் செலுத்தலானேன். நீர் சுமத்தல் அந்நாளில் எல்லா வீடுகளிலும் தண்ணீர்க் குழாய் கிடை யாது. இராயப்பேட்டை முழுவதும் இரண்டு வீடுகளிலேயே குழாய்களிருந்தன. தெருவுக்கொரு குழாயே இருக்கும். வீடு கட்கு தேவையான தண்ணீர் பெரிதும் சிறுவர்களாலேயே உதவப்படும். நீர் பிடிப்பதும் சுமப்பதும் எங்கட்கு விளை யாட்டே. நீர் சுமக்கும் பணி நீண்ட காலம் என்னால் செய்யப் பட்டது. மற்களம் யான் வெலி கல்லூரியில் நான்காம் வகுப்பில் பயின்று வந்த வேளையில் எனக்குக் கைகால் முடங்கின வல்லவோ? அப்பொழுது நான்கு ஆண்டுகள் கழிந்தன. முதலாண்டு நோயிலே போனது. இரண்டாம் ஆண்டு ஓய்விலே சென்றது. மற்ற ஈராண்டு பெற்றோரது நோய் காரணமாகவும், வேறு சில காரணமாகவும் என்னைப் பள்ளிக்குச் செல்ல விடவில்லை. பின்னைய இரண்டு எப்படிக் கழிந்தன? பெரிதும் ஆட்டங்களில் கழிந்தன. அவை களில் சிலவற்றைக் குறிக்கிறேன். இராயப்பேட்டையில் பலவிடங்களில் மற்களங்கள் (கோதாக்கள்) இருந்தன. அவைகளுள் குறிக்கத்தக்கன நான்கு. ஒன்று கன்னி தோட்டத்திலே இருந்தது; மற்றொன்று ஐயா முதலி தெருவிலே; இன்னொன்று அம்பட்டன் சந்தின் தென்னந் தோப்பிலே (இராயப்பேட்டை பஜார் ரோட் இடையிலே அம்பட்டன் சந்திருந்தது. இப்பொழுது அது மறைந்தது. அங்கே மாடி வீடுகள் எழும்பியுள்ளன); வேறொன்று கோலக்காரன் தோப்புக் கோடியிலே. நான்கும் முறையே தம்பி ஆச்சாரி, இராஜகோபால நாயகர், வடிவேல் முதலியார், முதபா ஆகியவர் தலைமையில் நடைபெற்று வந்தன. வடிவேல் முதலியார் முத்து முதலி வீதியில் வதிந்தவர்; ரேக்களா பந்தயத்துக்கென்று குதிரை களையும் மாடுகளையும் பண் படுத்துவதில் சமர்த்தர்; ரேக்ளா பந்தய உலகில் பேர்பெற்று விளங்கியவர். காலை நேரத்தில் வீட்டு வேலை ஏதேனும் செய்வேன்; மாலையில் சுந்தரேசர் கோயில் வெளியில் விளையாடுவேன்; மற்றப்பொழுது பெரிதும் வடிவேல் முதலியார் மற்களத்தில் கழியும். மற்களத்தில் சிலம்புப் பயிற்சி செய்யப்படும். அப்பயிற்சி எனக்கு இனிப்பூட்டும். சிறு கம்பு ஆட்டம், பாணா சுழற்றல் ஆகியவற்றை யான் வேடிக்கை பார்ப்பேன். அவைகளில் கலவேன்; தண்டால் பகி கர்லா ஜோடி போடல் ஆகியவற்றில் கலப்பேன். அங்கே ஓர் அரிய வித்தை போதிக்கப்படும். அது கத்தி சுழற்றல். ஒருவர் அண்ணாந்து படுப்பர். அவர் கைகளிலும் மார்பிலும் நெற்றியிலும் முறையே வாழைக்காய் சுரைக்காய் புடலங்காய் முதலிய காய்கள் வைக்கப்படும். ஒருவர் கூரிய பட்டாக்கத்தி சுழற்றி வருவர்; வருங்கால் ஒருமுறை (அண்ணாந்த வரின்) ஒரு கையிலுள்ள காயை வெட்டுவர்; இன்னொரு முறை பிறிதொரு கையிலுள்ள காயை வெட்டுவர்; வேறொரு முறை மார்பிலுள்ளதை வெட்டுவர். இவ்வாட்டத்தை என் மனம் நாடி யது. மரக்கத்தியில் முதல் முதல் பயிற்சி செய்தேன்; பின்னே கூரிய பட்டாக் கத்திப் பயிற்சியிலிறங்கினேன். காயை வெட்டுவதில் எனக்கு அச்சம் உண்டாயிற்று. அவ்வளவில் அவ்வித்தை நின்றது. ஆரிமுத்து முதலியார் என்பவர் மாங்காட்டினின்றும் இராயப்பேட்டை போந்து வெற்றிலைப் பயிரிட்டு வந்தார். அவர் நரம்பு வித்தையிலும் பாய்ச்சல் வித்தையிலும் வல்லவர். இரண்டிலும் அவர் பெற்றிருந்த திறத்தை யான் நேரே பார்த் தேன். ஒருநாள் அவர் மற்களத்தில் என் முழங்கை நரம்பைச் சிறிது அழுத்தினர். எனக்கு விதிர் விதிர்ப்பு உண்டாயிற்று. இன்னும் சிறிது அழுத்தி யிருப்பரேல் யான் சாய்ந்து விழுந்திருப் பேன். ஒருநாள் திருடனொருவன் ஒரு குழந்தையின் நகையைப் பிடுங்கி பஜார் ரோட் வழியே ஓடினான். அவனைத் தொடர்ந்து பெருங்கூட்டம் துரத்தியது. அவன் கையில் கத்தி - கத்தி என்ற முழக்கமும் எழுந்தது. அப்பொழுது மற்களத்திலிருந்த பலர் வெளியே விரைந்து வந்தனர். ஆரிமுத்து முதலியார் பாய்ந்தார்; திருடன் முன்னே தோன்றினார்; குனிந்தார்; அவ்வளவுதான் திருடன் விழுந்தான்; மூர்ச்சையானான். ஆரிமுத்து முதலியார் அவன் வாயில் தண்ணீர் வார்த்து அவனைத் தெளியவைத்தார். பின்னே போலி கூட்டம் வந்தது. முதலியார் பாய்ந்து திருடன் முன்னே தோன்றிக் குனிந்து அவன் கால் நரம்பை அழுத்தி னராம். இவ்வளவு எழுச்சியுடன் பாய்ந்தால் இவ்வளவு தூரம் போய் இறங்கலாம் என்ற அளவு நினைவு திடீரெனத் தோன்றல் அருமையன்றோ? பாயும் வேகம் - இறங்கும் வேகம் - எதிரிலே தோன்றும் வேகம் - குனியும் வேகம் - நரம்பை அழுத்தும் வேகம் - அவ்வப்போது அளவாகவும் முறையாகவும் விரைந்து தொடர்ந்து நிகழ்வது வியப்பே. விரைவு எல்லா வற்றினூடும் உருவித் தொடர்ந்து நிற்றலை என்னென்று கூறுவது! பாய்ந்து தென்னை பனை முதலியவற்றின் உச்சிகளைத் தடியால் சாய்த்துவிடலாம் என்று ஆரிமுத்து முதலியார் சொல்லிவந்தார்! ஒருசமயம் அதைச் செய்துங் காட்டினார். என்ன வித்தை! அரிய சிலம்ப வித்தைகளெல்லாம் எங்கே போயின? ஆரிமுத்து முதலியாரிடத்தில் இரண்டு வித்தையையும் பயிலவேண்டுமென்ற ஆசை எனக்கு எழுந்தது. ஆனால் அதற் குரிய அதிர்ஷ்டம் வாய்க்காமற் போயிற்று. புலி ஒவ்வொரு மற்களத்தின் சார்பிலும் மொஹரம் பண்டிகையின் போது புலிக்கோலம் நடைபெறும். அக்கோலத்தில் சிலம்பு வித்தையின் திறங்களெல்லாம் வெளியாகும். அவைகளைக் காண இரவென்றும் பகலென்றும் பாராமல் தெருத் தெருவாக- ஊர் ஊராகத் திரிவேன். வேடிக்கை சாப்பாட்டையும் மறக்கச் செய்யும். நீந்தல் மற்களத்தின் அருகே தென்னந் தோப்பின் நடுவண் ஒரு பெரிய கிணறு உண்டு. நண்பகலில் அக்கிணறு அதமாகும். மல்லர் பலர் அதில் குதிப்பர்; மூழ்குவர்; எழும்புவர்; நீந்துவர். தவளை நீந்தல், காக்கை நீந்தல் முதலிய பல வகை நிகழும். வடிவேல் முதலியார் தண்ணீரில் மிதப்பார். இதைக் காணப் பலர் சூழ்ந்து நிற்பர். எனக்கும் அதில் பித்தேறிற்று. வடிவேல் முதலியார் திடீரென என்னைப் பிடித்துக் கிணற்றில் தள்ளி விட்டார். யான் மூழ்கி எழும்பிய வேளையில் ஒருவர் என்னைப் பற்றினர். பின்னே முதலியார் தாம்புக்கயிற்றால் என் இடுப்பைக் கட்டி நீந்த விடுத்தார். திடீரெனப் பிடித்துத் தள்ளுவதும், கயிறு கட்டி நீந்த விடுவதும் அச்சத்தைத் தீர்க்குமாம்; இவ்வாறு செல்வது மரபாம். யான் நீந்தல் பயில்வதைக் கேள்வியுற்ற என் தந்தையார் என்னைப் பலவாறு ஏசிக் கடிந்தனர். அப் பயிற்சியில் மனஞ் செலுத்துவதை ஒழித்தேன். அதனால் நீச்சுப் பயிற்சி அரைகுறையாகப் போயிற்று. பந்தய மாடும் குதிரையும் பந்தய மாடுகளுடனும் குதிரைகளுடனும் யான் நெருங்கிப் பழகுவன். அவைகளும் என்னுடன் நன்றாகப் பழகும். அவை கட்கு யான் பணியுஞ் செய்வன். அவை குழந்தைகள் போல எனக்குத் தோன்றும். கோடம்பாக்கம் ரோட், கிண்டி ரோட், நல்லூர் மடக்கு, மூன்றாங்குழி முதலிய இடங்களில் பந்தயம் நடக்கும். பந்தயத்துக்கு யான் தவறாது செல்வேன். அவ்வேட்கை எனக்குப் பெரிதாயிற்று. சடுகுடு இளைய மல்லர் பலதிற ஆட்டங்கள் ஆடுவர். சிலவற்றில் யான் சேர்வேன்; சிலவற்றில் சேரமாட்டேன். அவர் ஆடும் ஆட்டங்களில் என் நெஞ்சைப் பற்றி ஈர்த்தது சடுகுடு என்னும் உப்புக்குந்தம். அவ்வாட்டம் ஆடி அதில் வல்லவனானேன். உக்கா மற்களத்துக்கு வருவோருட் சிலர் பீடி சுருட்டு சிகரெட் உக்கா முதலிய மயக்கப் புகைகளைக் குடிப்பர். அந்தப் புகை களின் நாற்றமே எனக்குப் பிடிப்பதில்லை. எனது நிலைமை உணராத ஒருவர் ஒருநாள் உக்கா உருண்டை வாங்கி வருமாறு என்னிடங் காசு கொடுத்தார். யான் மறுத்தேன். அவர் சினந்து கண்டவாறு பிதற்றினர்; அது வடிவேல் முதலியார்க்குத் தெரிய வந்தது. பீடி சுருட்டு சிகரெட் உக்கா உருண்டை முதலிய மயக்கப் பொருள்களை வாங்கி வருமாறு இங்கே வரும் பிள்ளை களை எவரும் ஏவுதலாகாது என்றொரு கட்டளை தலைவர் வடிவேல் முதலியாரால் பிறப்பிக்கப்பட்டது. அஃது எனக்கு அளவிலா மகிழ்ச்சியூட்டிற்று. கோழிச் சண்டை முதலியன மற்களம் ஞாயிறுதோறும் பறவைப் போர்க்களமாகும். அங்கே புறாப் பந்தயம் விடப்படும்; காடைச் சண்டை, கவுதாரிச் சண்டை, கோழிச் சண்டை முதலியனவும் நடைபெறும். வேடிக்கை பார்க்க மக்கள் ஈண்டுவார்கள். கோழிச் சண்டை கோரமாக யிருக்கும். ஏழை உயிர்கள் இரத்தப் பெருக்கில் வீழ்ந்து மூழ்கிப் புரண்டு எழுந்து சமர் செய்யும். புறாப் பந்தயம் தவிர மற்றப் பறவைச் சண்டைகட்கு இடந் தரலாகாது என்று யான் வடிவேல் முதலியாருக்கு ஒருநாள் சொன்னேன்; பறவைப் போர்கள் மக்களுக்கு வீரமூட்டுவன. அவை நீண்ட காலமாக நம்முடைய நாட்டில் நடைபெற்று வருவன. இன்னும் வயதேறி னால் உனக்கு உண்மை விளங்கும் என்று அவர் பதிலிறுத்தார். அவர் பதில் எனக்குப் பொருந்தியதாகத் தோன்றவில்லை. பறவைப் போர் நேரத்தில் யான் வீட்டிலேயே தங்கிவிடுவேன். மனிதரது குத்துச் சண்டை குதி முதலியவற்றில் எனக்கு வெறுப்புத் தோன்றுவதில்லை. சூறைத் தேங்காய் யான் மற்களத்துக்குப் போய் வருவதால் என்னை வதாத் என்று சிறுவர் சிறுமியர் அழைப்பதுண்டு. ஒருநாள் திருவாதிரைத் திருநாள். சுந்தரேசர் கோயிலில் திருவிழா. நடராஜப் பெருமான் வீதி உலா. அன்று முத்து முதலி தெருவில் சின்னையா முதலியார் வீட்டுக்கெதிரில் தேங்காய் சூறை விடுவது வழக்கம். ஓராண்டு அங்கே சிறுவர் சிறுமியர் கூட்டமும் பிற கூட்டமும் மிடைந்து நின்றன. அவ்வழியே யான் போனேன். கன்னியருள் ஒருவர், அடா வதாத்! தேங்காய்ச் சூறையைக் கவனியாது போகிறாயே. bgÇa kÅj‹ M» É£lhnah? என்றனர். சூறையில் யான் நுழைந்தால் உனக்கு ஒரு துண்டு கூடக் கிடைக்காதே என்றேன். கல்யாணம், நீ வதாதாய் இருந்தால் எனக்கு ஒரு துண்டுகூட அகப்படாமல் செய்; பார்ப்போம் என்று அவர் வஞ்சினம் கூறினர். எனக்கு வீறு எழுந்தது. துணியை வரிந்து கட்டினேன்; கூட்டத்தைப் பிளந்து உள் நுழைந்தேன்; கல்லருகே சென்றேன். தேங்காய் கூடை வந்தது. கந்தசாமி முதலியார் முதலில் ஒரு தேங்காய் எடுத்துச் சூறை விடுவது போல் நடித்தார். என் கைகள் விரைந்து நீண்டன. உடனே தேங்காய் விழுந்தது. எனது வலது கையின் சுட்டு விரல் நுனி நசுங்குண்டது. கூட்டங் குலைந்தது. யான் இராயப் பேட்டை மருத்துவச் சாலைக்கு ஓடினேன். (அச்சாலை அப்பொழுது சிறிய கட்டிடத்திலிருந்தது) ஒருவர் வந்தார்; என்விரலைப் பார்த்தார்: ஒரு திராவகம் தெளித்தார்; காயம்பட்ட பகுதியை வெட்டி விடுவது நல்லது. பெரிய டாக்டர் வருவர். இங்கே இரு என்று சொல்லி வேறோர் அறைக்குச் சென்றார். யான் அப்படியும் இப் படியும் பார்த்து மெல்ல எழுந்து வெளியே வந்து நல்லண்ண முதலி தெரு வழியே வேகமாக ஓடினேன்; அயோத்திதா பண்டிதரை அடைந்தேன்; நிகழ்ந்ததைக் கூறினேன்; அவர் அந்நேரத்தில் ஏதோ ஒரு மருந்தைப் பூசினார்; மறுநாள் முதல் பச்சிலை சிகிச்சை செய்தார்; இரண்டு வாரத்தில் புண் ஆறியது. இரண்டு வடு கீறல்போல நின்றன. அவை மறையவே இல்லை. அக்கீறல் இரண்டும் இயற்கைப் பிளவு போலாயின. அவை இரேகை சாதிரிகளை ஏமாற்றி வருகின்றன. வாணிபம் மற்களத்துக்கு யான் போவதும் வருவதும் தொடக்கத்தில் என் தந்தையார் கருத்தை உறுத்தவில்லை; பின்னே உறுத்தின. அவர் என்னைத் தம்மைப் போல வாணிபனாக்க எண்ணி இரண்டு கடைகட்கு அனுப்பினர். ஒன்று, என் பெரிய தமையனா ரின் அரிசி மண்டி; மற்றொன்று என் இரண்டாந் தமக்கையார் தாயாரம்மாள் கொழுநர் வீராசாமி முதலியாரின் பலசரக்குக் கடை. அங்குச் சில மணி நேரம் இருப்பேன்; இங்குச் சிலமணி நேரம் இருப்பேன்; ஓய்ந்த நேரத்தில் பந்தயக் குதிரைகளையும் மாடுகளையும் பார்த்து வருவேன். அவைகளைப் பாராவிட்டால் எனக்குத் தூக்கம் வாராது. பசு மாடு கிராமத்தினின்றும் பசுமாடொன்று அனுப்பப்பட்டது. அதைக் காலாற என் தந்தையார் சில சமயம் வெற்றிலைத் தோட்டத்தின் பக்கம் பிடித்துச் செல்வதுண்டு. அப்பணி எனக்குத் தரப்பட்டது. யான் பசுவை மற்களத்தின் எதிரிலேயுள்ள தென்னந் தோப்பில் காலாற விடுக்கலானேன். மூன்று எனக்கு மூன்று வேலைகள் கிடைத்தன. அவை வாணிபம், பசுப் பணி, பந்தய மாடு - குதிரைப் பார்வை. என் மனம் வாணிபத்தில் அழுந்துமென்று தந்தையார் கருதினார். அவர் கருதியவாறு என் மனம் அதில் அழுந்த வில்லை. ஓவியப் பள்ளிக்கோ வேறு ஒரு தொழிற்சாலைக்கோ என்னை அனுப்ப அவர் முயன்றார். அவர் முயற்சி பயனளிக்க வில்லை. யான் மீண்டும் பள்ளிக்கே அனுப்பப்பட்டேன். யான் மீண்டும் பள்ளி சேர்ந்த பின்னை அடிக்கடி மற்களஞ் செல்ல நேரங் கிடைப்பதில்லை. எனக்குப் படிப்புப் பித்துப் பிடித்தது. ஒவ்வொருபோது மற்களஞ் செல்வேன்; மாடு களையும் குதிரைகளையும் பார்ப்பேன். சிலகாரணம் பற்றி மற்களம் குலைக்கப்பட்டது; அருமை மாடுகளும் குதிரைகளும் விற்கப்பட்டன. நாய் என் தந்தையார் முதல் மனைவியார் புதல்வருள் ஒரு வராகிய துரைசாமி முதலியார் ஒரு நாய்க்குட்டியைக் கொணர்ந் தார். அதன் பெயர் ஜூலி. அதை யான் அன்புடன் வளர்த்தேன். அது காணாமற் போயிற்று. அதனால் என் மனம் நோயுற்றது. தமையனார் துரைசாமி முதலியார் வேறு ஒரு நாய்க்குட்டியை விலைக்கு வாங்கினார். அதற்குப் பாலி என்று பெயர் சூட்டி, அதை உயிராக வளர்த்தேன். அதைக் காலன் அழைத்துக் கொண்டான். பாலியின் பிரிவு என்னைத் துன்புறுத்தியது. ஒருசிறு பாடை கட்டி, எனது உயிரனைய பாலியை அதிற் கிடத்திச் சிறுவர் பலர் புடை சூழ, அதைத் தென்னந்தோப்பில் புதைத்தேன். பின்னே நாய் வளர்க்க என் மனம் எண்ணியதே இல்லை. ஆட்ட வகை பள்ளியில் புட்பால், கிரிக்கெட், பாட்மெண்டன், டென்னி முதலிய பந்தாட்டங்கள் ஆடப்படும். யான் புட்பாலருகே நண்ணுவதில்லை. அதிலே எனக்குத் துவர்ப்பு. மற்ற பந்தாட்டங் களில் சிறிதே கலப்பேன். கோலி - புள் - சில காலம் ஆடிவந்தேன். சடுகுடு அந்நாளில் நகர முழுவதும் பரவியிருந்த ஆட்டம் சடுகுடு. சென்னைப்பள்ளிகளிலெல்லாம் அஃது ஆடப்படும். பள்ளி தோறும் அவ்வாட்டத்துக்கென்று சங்கம் காணப்பட்டது. ஆனால் சங்கம், பள்ளியதிகாரிகள் பார்வையிலோ அங்கீகாரத் திலோ நடைபெறுவதில்லை; மாணாக்கராலேயே நடத்தப்படும். முதல் பாரத்தில் யான் பயின்று வந்தபோது சடுகுடு சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. அச்சங்கம் சில ஆண்டு நல்ல வேலை செய்தது. ஒரு பள்ளியின் சங்கத்துக்கும் மற்றொரு பள்ளியின் சங்கத்துக்கும் போட்டிகள் நிகழும். வெளிச் சங்கங்களும் போட்டிகளில் சேரும். போட்டிகளில் கட்டுப்பாடு கிடையாது. எங்கள் சங்கம் சென்னையிலே பேர் பெற்றவை களில் ஒன்றாயிற்று. என்னுடன் கலந்து சங்கத்தை வளர்த்த மதுரை செட்டி, ஆரோன் சண்முகம், சிவசங்கரன் முதலியோரை இங்கே நினையாமலிருத்தல் முடியவில்லை. மூட நம்பிக்கை போட்டிகளில் எங்கள் சங்கச் சார்பில் முதல் முதல் யானே ஆட்டம் தொடங்குவது ஒரு வழக்கமாகியது. அதனால் வெற்றி விளையும் என்ற நம்பிக்கை எங்கள் சங்கத்தில் ஊடுருவிப் பாய்ந்திருந்தது. அது மூட நம்பிக்கையே. சில சங்கத்தார், ஆட்டம் தம்மால் துவங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்துவர். அது பற்றி விவாதம் பெருமிதமாக நடக்கும். முடிவு திருவுளச் சீட்டால் காணப்படும். மற்றுமொரு நம்பிக்கை எங்கள் சங்கத்துள் புகுந்திருந்தது. அஃதும் என்னைப் பற்றியது. அஃது ஆட்டத்தினிடையில் யான் சாதல் கூடாதென்பது. யான் சாவேனாயின், என் சார்பினர்க் கெல்லாம் சோர்வு நேரும். காரணம், யான் வல்லவன் என்பதன்று; வெற்றி சாயுமென்பதே. யான் சாவேனாயின் என்னை உயிர்ப் பிக்கத் தோழர்களால் பெருமுயற்சி செய்யப்படும். கத்திரி போட்டிகள் பல கடற்கரையில் நடக்கும்; மிகச் சில கூவ ஆற்றங்கரையில் எங்கேனம் நடக்கும். ஞாயிறு பிற்பகலில் சென்னைக் கடற்கரை ஒரே உப்புக்குந்தக் காட்சியளிக்கும். ஆட்டங்களைப் பார்க்க மக்கள் திரள்வார்கள். ஆட்டங்கள் பல நினைவுக்கு வருகின்றன. அவைகளில் இரண்டொன்று வருமாறு; திருவல்லிக்கேணியில் பாலய்யா என்றொருவர் இருந்தார். அவர் உப்புக்குந்த உலகில் மணியென ஒளிர்ந்தவர். அவரிடத் தில் ஒரு வித்தை திகழ்ந்தது. அது கத்திரி என்பது. அதை நான் எவரிடத்திலுங் கண்டதில்லை. அதைப் பலமுறை உற்று நோக்கி நோக்கிப் பயில முயன்றேன். அஃது என்னில் படியவில்லை. போட்டியில் பாலய்யாவினிடம் யான் பெரிதும் சிக்கியதில்லை. அவர்தம் பாய்ச்சலுக்கு இரையாகாத முறையொன்று என்பால் விளங்கியது. அதைச் சோதித்துப் பார்க்க வாய்ப்பு நேராம லிருந்தது. ஒரு முறை வாய்ப்பு நேர்ந்தது. ஒரு போட்டியில் பாலய்யா தவிர அவர் பக்கத்தார் அனைவரும் வீழ்ந்துபட்டனர். பாலய்யா ஒருவரே நின்றார் எங்கள் பக்கம் அவர் நெடுக வருவதில்லை; சிறிது தூரம் வந்து ஓடிவிடுவார். எதிர்த்து வருவோரைக் கத்திரியால் வீழ்த்தலாம் என்பது அவர் தம் உறுதி. பலர் பாலய்யா பக்கம் சென்று சென்று திரும்புவர். கிட்டே போனால் கத்திரி விழும்! என் செய்வது! குறித்த காலம் நெருங்கியது. பாலய்யா வீழ்ந்தால் தான் எங்கள் பக்கம் வெற்றி விளையும். யான் சென்றேன்; அருகே நெருங்கினேன். என்மீது பாலய்யா பாய்ந்தார்; கத்திரி விழும் நிலையில் எனக்கு விளங்கிய நாடகம் நடித்தேன். கத்திரி தவறியது. அவர் வீழ்ந்தார். காண்டா மிருகம் ஒருமுறை மீர்சாயபு பேட்டைச் சங்கத்துக்கும் எங்கள் சங்கத்துக்கும் போட்டி நடந்தது. தொடக்கத்திலேயே எங்கள் பக்கத்தார் பலர் நாணற் புற்களைப்போலச் சாய்ந்தனர். எதிரிகள் நோக்கமெல்லாம் என்மீது விழுந்தன. அவர் மிக மூர்க்கமாக ஆடத் தொடங்கினர். அவருள் ஒருவர் என்மீது அடிக்கடி பாயந்தனர். அவர் தோற்றம் காண்டாமிருகம்; கை கால்களோ உருளைகள்; அவைகளின் வீச்சோ சண்டமாருதம். அவர் பாய்ச்சல் அச்சமே ஊட்டியது. பக்கத்துணைவர் சிலரும், மூர்க்கன் கை வீச்சும் காலுதையும் நம்மீது தாக்கினால் என்ன விளையும் என்று நடுக்குற்றனர். நிலைமை யுணர்ந்த எங்கள் கூட்டம், தோல்வி மேற்கொள்ளலாம் என்றும் எண்ணியது. ஒரு சிலரும் மாண்டனர். யான் தன்னந் தனியனாக நின்றேன். வலிந்து தோல்வி ஏற்க மானம் தடுத்தது. பார்த்தசாரதி பெருமானை நினைந்தேன்; அவர் துணை கிடைக்கும் என்று உறுதி கொண் டேன். அந்நிலையில் காண்டாமிருகம் பாய்ந்தது. யான் நீண்ட தூரம் ஓடினேன். என் கருத்து அவரைக் களைப்புறச் செய்து மூச்சைக் குலைத்தல் வேண்டுமென்பது. மூர்க்கம் என்னை விடாமல் துரத்தியே வந்தது. வேகத்தில் யான் வலது பக்கம் ஓடி நின்றேன். அவர் முற்பட்டார்; யான் பிற்பட்டேன். அவர் மூச்சுத் திணறுதலையுணர்ந்தேன்; இது தான் சமயம் என்று பாய்ந்தேன்; அவர்தம் இரண்டு காலையும் உடும்பெனப் பற்றினேன். அவர் என்னை இழுத்தார். எவ்வளவு தூரம் இழுத்தல் கூடும்? மூச்சு ஒடுங்கியது. அவர் விழுந்தார். ஒரே கூக்குரல்! கைத் தட்டல்! கூக்குரலும் கை தட்டலும் யாருக்கு? எனக்கோ? அவருக்கோ? எங்கள் சார்பில் ஒரு வீரர் உயிர்த் தெழுந்தார். எதிரிகளில் இன்னொருவர் வீழ்ந்தார். எங்களில் மற்றுமொரு வீரர் எழுந்தார். எங்களிடம் எழுச்சியும் மற்றவ ரிடம் வீழ்ச்சியும் படிப்படியே நிகழ்ந்தன. முடிவில் வெற்றி எங்களுடையதாயிற்று. எதிரியை வயப்படுத்தல் இன்னொரு போட்டி. அது மன்னார்சாமி கோயில் கூட்டத்துக்கும் எங்கட்கும் நடந்த ஒன்று. எல்லாம் பேசி முடிந்த பின்னர், மன்னார்சாமி கோயில் கூட்டத்தில் சேர்ந்துள்ளவ ரெல்லாம் வயதில் பெரியவரென்றும், தோல்வி கண்டால் மூர்க்கமே காட்டுவரென்றும் பலவாறு கேள்வியுற்றோம். எங்கள் சங்கத்தார் பலர் மருண்டு, போட்டியை உடைத்துவிட வேண்டுமென்றும், போட்டி நடப்பதாயின் இடம் மாற்றப்பட வேண்டுமென்றுங் கருதினர். யான் நிலைமையை நன்றாகச் சிந்தித்து, மன்னார்சாமி கோயில் கூட்டத் தலைவரைக் கண்டு பேசவேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன்; தலைவரிடஞ் சென் றேன்; எங்கள் சங்கத்தார் கேள்வியுற்றதையும், கருதியதையும் உண்மையாகக் கூறினேன். அவரும் அங்கிருந்த மற்றவரும், நாங்கள் மனிதர்களல்லவா? பள்ளிக்கூடப் பிள்ளைகளிடத் திலா எங்கள் கைவரிசைகளைக் காட்டுவோம்? இடம் மாற்றப் படல் வேண்டாம். எந்த ஏற்பாட்டையும் குலைக்க எண்ணாது, ஞாயிற்றுக்கிழமை ஆற்றங்கரைக்கு வாருங்கள் என்று கூறினர். அவர்தங் கூற்றில் கரவு இருந்ததென்று தோன்றவே இல்லை. சங்கத்தாரைக் கண்டு நிகழ்ந்ததை விளக்கினேன். ஐயப்பாடு பெரும்பான்மையோரை விடுத்து அகன்றது. ஞாயிற்றுக்கிழமை கூவ ஆற்றங் கரையில் ஆட்டம் ஆடப்பட்டது. தொடக்கத்தி லேயே எதிரிகள் நிலைமையை யான் அளந்து கொண்டேன். அவர் உருவத்தில் பருத்தவரென்பதும், திறமையில் பண்படாதவ ரென்பதும் செவ்வனே விளங்கின. எங்கள் சங்கத்தார் பண் பட்டவர். எங்கள் ஆட்டத்தின் ஒழுங்குமுறை மன்னார்சாமி கோயில் கூட்டத்தைப் பிரமிக்கச் செய்தது. நாங்கள் நிதான மாகவே விளையாடி வெற்றி பெற்றோம். எதிரிகள் சார்பில் கொண்டுவரப்பட்ட பூ மாலைகள் எங்களுக்குச் சூட்டப்பட்டன. எங்களிடத்தில் மன்னார்சாமி கோயில் கூட்டம் மிக மரியாதை யாக நடந்துகொண்டது. அவர்கள் அன்பும் மரியாதையும் எங்கள் வெற்றி ஆரவார முழக்கத்தை எழுப்பவில்லை. மாங்காய் திருடு எங்கள் கல்லூரிக்குப் பக்கத்திலுள்ள கோபி நிலையத் தில் (இப்பொழுது ஹாடல்) மாமரங்களுண்டு. அவைகள் தருங் காய்கனிகளை நாங்கள் வாங்கி உண்போம். விலை கொடுத்து வாங்கி உண்ணும் காய்கனிகள் பிள்ளைகட்கு அவ் வளவு இனிப்பதில்லை. பின்னை இனிப்பன யாவை? மதில் மீதிருந்து சுழன்று சுழன்று, அப்படியும் இப்படியும் பார்த்துப் பார்த்துத், திடீரென ஆங்கொருவர் ஈங்கொருவர் அணில் களென ஓடி, தோட்டக்காரர் முன்னும் பின்னும் துரத்த, மற்றப் பிள்ளைகள் ஆரவாரஞ் செய்யப், பறித்துவருங் காய் கனிகளே நன்றாக இனிக்கும். ஒரே மரம்! ஒரேவிதக் காய் கனிகள்! இனிப்பு வேறுவிதம்! இஃது அற்புதமன்றோ? அற்புதம் எங்கே? திருட்டில். திருட்டில் இனிப்பு அதிகம் போலும்! என்னே! பிள்ளை விளையாட்டு! இவ்விளையாட்டில் இவனுக்குப் பங்கு உண்டா? இல்லையா? பாருங்கள்! இவன் மதிலைத் தாண்டான்; மரத்தை அணுகான். பின்னை என்ன செய்வான்? பிள்ளைகட்குச் சூழ்ச்சி சொல் வான் சமயம் பார்த்துக் கல்லெறிவான்; விழுங் காய்கனிகளை ஓடி எடுத்து வருமாறு மற்றவரைத் தூண்டுவான். பங்கு உண்டா? இல்லையா? நேரே செய்தாலென்ன? துணைபோனாலென்ன? என் நா கனியினுஞ் செங்காயையே வேட்கும். செங்காய் என் பொருட்டு வாங்கப்படும்; பறிக்கப்படும். ஒருநாள் ஒரு சாலை மாணாக்கர் இருவர், பக்கத்துத் தோட்டத்திலுள்ள மாமரத்தினின்றும் உதிர்ந்த பழங்களைப் பொறுக்கினர். அவரைப் பிடிக்கக் காவலாளி ஒடிவந்தான். நண்பர் இருவரும் விரைந்து மதிலேறிப் பள்ளி மைதானத்தில் குதித்தனர். காவலாளியும் தொடர்ந்து அவரைப் பற்றுந் தறு வாயில் அவர் பழங்களை எறிந்தனர். அவைகளை யான் எடுத் தோடி (சட்டாம்பிள்ளை என்ற முறையில்) மேசையில் வைத்துப் பூட்டிவிட்டேன். காவலாளிக்கும் மாணாக்கர்க்கும் போர் நடந்தது. பிரின்ஸிபால் அவ்வழியே வந்தார். அவரைக் கண்ட தும் காவலாளி ஓடிவிட்டான். தலைவர் விசாரணை செய்தார்; பழங்களைக் காவலனிடஞ் சேர்க்கச் சொன்னார். அதனை யுணர்ந்த யான் பழங்களை எடுத்துப் பாழுங்குளத்தில் எறிந்து விட்டேன். அன்று யான் ஜெபக் கூட்டத்துக்குச் செல்லாது வகுப்பிலேயே அமர்ந்திருந்தேன். குரங்காட்டம் பள்ளி நிலையத்திலுள்ள மரங்களில் பிள்ளைகள் சிலர் ஏறுவர்; இறங்குவர். சிலர் சாய்ந்துள்ள கிளைகளைப் பற்றித் தாவித் தாவி ஏறுவர்; இறங்குவர். இது குரங்காட்டம். இவ்வாட் டத்தில் ஒவ்வொருபோது கலப்பேன். ஒருநாள் ஒரு கிளையை யான் தாவியபோது காற்று நன்றாக வீசத் தொடங்கிற்று. எனக்குப் பழைய நினைவு தோன்றிற்று. எது? கொன்றை மர நினைவு! நடுக்கமுண்டாயிற்று. மிக எச்சரிக்கையுடன் மெல்ல மெல்ல இறங்கினேன். ஒரு போது சந்திரசேகரன் என்ற தோழர் மரத்தினின்றும் வீழ்ந்தார். அவர்தங் கை முறிந்தது. அன்று முதல் குரங்காட்டம் ஒழிந்தது. சோதனைக் காலம் அந்நாளில் சோதனைக் காலம் வேறுவிதமாயிருந்தது. ஆண்டுச் சோதனை நவம்பர் - டிசம்பரில் நடைபெறும். அரசாங்கச் சோதனைகளும், பல்கலைக் கழகச் சோதனைகளும் அக்காலத்தி லேயே நடக்கும். அரை ஆண்டுச் சோதனை ஏப்ரலில் நிகழும். இராயப்பேட்டை குளிர்கால ஓய்வு, வேடிக்கைகளிலும், விழாக்களிலும், பண்டிகைகளிலும், இன்ன பிறவற்றிலும் செலவாகும். வேனில் ஓய்வில் வெளியூருக்குச் செல்லும்பேறு எனக்குக் கிடைப்ப தில்லை. என் நண்பர் பலர்க்கும் அப்பேறு வாய்ப்பதில்லை. ஒய்வு எங்களை இராயப்பேட்டையிலேயே இருத்தி வைக்கும். அக்கால இராயப்பேட்டை வேறு; இக்கால இராயப் பேட்டை வேறு. அதன் உடைமை இயற்கைப் பசுமை; இதன் உடைமை வெறுஞ் செயற்கைக் கல்லடுக்கு. அந்த இராயப் பேட்டையிலே மருத்துவச் சாலை மிகச் சுருங்கி யிருந்தது. இந்த இராயப்பேட்டையிலே அச்சாலை மிகவும் பருத்துப் பெருத்திருக் கிறது. மருத்துவச்சாலையின் சுருக்கமும் பெருக்கமும் முறையே பழைய புதிய இராயப்பேட்டைகளின் தன்மையை உணர்த்து வனவாம். அழகிய பசுமை பழைய இராயப்பேட்டையை இயற்கை வழியில் நடாத்தி வந்தது. இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார் பேட்டை, மயிலாப்பூர் முதலிய ஊர்கள் ஒரு சிறு கோட்டமெனத் திகழ்ந்தன. இவைகளின் பேரூர் மயிலாப்பூர். இவ்வூர்களின் ஒருமைப்பாட்டுக்கு உயிர்நாடியா யிருந்தது ஒரு சிற்றேரி. அதன் இடம் தேனாம்பேட்டை. ஆனால் அது மயிலாப்பூர் ஏரி என்றே வழங்கப்பட்டது. அவ்வேரி மயிலைக் கோட்டத்தை ஓம்பியது. பின்னே அது மறைந்தது. மயிலைக் கோட்டத்தின் கட்டுங் குலைந்தது. இயற்கை வரவேற்பு அந்நாளில் இராயப்பேட்டையினின்றும் மயிலாப்பூர் செல்வோர் வெயிலின் தாக்குதலின்றியே போய்ச் சேருதல் கூடும். செல்வோர்க்கு வழி நெடுக வரவேற்பு நிகழும். எத்தகைய வரவேற்பு? இயற்கை வரவேற்பு. இயற்கை அன்னை பலபட்ட பசுமைக்கோலம் பூண்டு வரவேற்பளித்த வண்ணமிருப்பள். வழிப்போக்கரைக் கொடிகளிற் குலவும் வெற்றிலைத் தால்கள் வாழ்த்தும்; வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை நீட்டி அழைக்கும்; மாமரங்கள் காய்கனிகளை ஏந்தி இறைஞ்சும்; தென்னைகள் காய்களைச் சுமந்து, இளநீர் பருக வாரும் வாரும் என்று தலையாட்டும். கரும்புகள் அருந்துக அருந்துக என்று சாறு பொழியும். ஆலும் அரசம் வேம்பும் ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள் சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு விருந்தாகும். ஏற்றமும் மூங்கி லும் வண்டும் பறவையும் செவிக்கமுத மூட்டும். இவ்வரவேற்பு கள் இப்பொழுதுண்டோ? இப்பொழுது கல் வேலியும் இரும்பு வேலியும் எவரையும் வரல் வேண்டா; வரல் வேண்டா; என்று காய்ந்து தகைகின்றன. ஏரிச் செல்வம் வற்றியது. பசுமை அன்பு அழிந்தது. இதயங்கள் கல்லும் இரும்பும் ஆயின. பழைய இராயப்பேட்டை ஒரு சிற்றூர்; இயற்கைப் பசுங் குடில்; விருந்தின் உறையுள். அதனுள் மலையில்லை; அருவி யில்லை; காடில்லை; கடலில்லை. ஆனால் மலையையும் அருவி யையும் காட்டையும் கடலையும் நினைவூட்டும் இயற்கைக் கூறுகள் இருந்தன. பட்டத்தினின்றும் வீறி எழுந்து, வெற்றிலைக் கொடிகளாம் மரகத ஆரங்களைப் புனைந்து, தலைகளைச் சாய்த்து, ஒன்றுடன் ஒன்று முட்டியும், அசைந்து வீழாதவாறு பிணிப்புண்டு தொடர்ந்த முகடுகள் கொண்ட வாரை நிரைகளின் ஈட்டங்கள் தொடர் குன்றுகளைக் கருத்திலிருத்தும். கிடங்கு களில் பாயும் நீரோட்டம் மலை முகடுகளினின்றும் இழிதரும் அருவிகள் போன்றிருக்கும். அட்லன் தோட்டம் என்ற சிறு வனம் காட்டைக் கடுக்கும். அவ்வனம் இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப் பயன்பட்டது. அதில் அத்தி விளா மா நெல்லி நாகை கிச்சிலி இலந்தை இலுப்பை புளியம் புரசை புன்கு முண் முருக்கு கொன்றை மகிழம் அசோகு புன்னை நுணா ஆல் அரசு வேம்பு பனை மூங்கில் முதலிய மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன் பொருதும்; பெருங்களா காரை நொச்சி ஆமணக்கு எருக்கு வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை நோக்கும்; சிறுகளா சங்கம் கள்ளி கண்ணி மருட்டி படர்காரை முதலிய தூறுகள் செடிகளைப் பார்த்து நகைக்கும்; தாளி கோவை பாலை புரண்டை முதலியன மரங்களையும் செடிகளையும் தூறுகளையும் பிணித்துப் பின்னிப் படர்ந்து இறுமாந்து கிடக்கும்; முண்டகம் கண்டகம் முள்ளி முளரி ஆடா தோடை ஆடுதின்னாப்பாளை செருப்படை தூது வளை தும்பை துழாய் சுண்டை நாயுருவி நாக்கடு ஊமத்தை கற்றாழை கொடிவேலி கண்டங்கத்திரி அவுரி முதலிய மூலிகை கள் மருத்துவஞ் செய்யும்; ஆங்காங்கே குளம் கேணி ஓடை முதலிய நீர் நிலைகள் தண்மை வழங்கும்; அவைகளின் உள் ளிலும் புறத்திலும் கொட்டி ஆம்பல் தாமரை நீலோற்பலம் முதலிய பூக்களும், அறுகு தருப்பை நாணல் முதலிய புல்லினங் களும், பொன்னாங்கண்ணி கையாந்தகரை வள்ளை வல்லாரை முதலிய கீரை வகைகளும் பொலிந்து இன்பமூட்டும்; அங்கும் இங்கும் பழங்கள் தாமே கனிந்து கனிந்து வீழும்; பாம்பு கீரி உடும்பு முயல் காட்டுப்பூனை காட்டுக்கோழி முதலியன இரிந் தோடும்; கொக்கு உள்ளான் நாரை கள்ளிக்காக்கை கிளி பூவை சிட்டுக்குருவி தவிட்டுக்குருவி வர்ணக்குருவி முதலிய பறவைகள் பறந்தும் இருந்தும் பாடியும் மகிழும்; கால் நடைகள் உலவும்; மேயும்; நீர் அருந்தும்; படுக்கும்; உறங்கும்; மக்கள் விளையாட லும் நிகழும் அட்லன் தோட்டம் ஊருக்கு விறகு பழம் கீரை எரு முட்டை முதலியன உதவும். அதை இராயப்பேட்டையின் வன தேவதை என்று கூறலாம். இராயப்பேட்டை தோட்டங்களுக்குப் பேர் பெற்றது. அம்மையப்ப முதலி வீதி முனையிலுள்ள ஒரு சிறு சந்தில் நுழைந்து சென்றால் வேல் முதலியார் தோட்டம், மாசிலா மணி முதலியார் தோட்டம், அப்பாசாமி முதலியார் தோட்டம், முனிசாமி முதலியார் தோட்டம், அய்யாசாமி முதலியார் தோட்டம், செருக்காத்தம்மாள் தோட்டம், அரங்கநாத முதலியார் தோட்டம், திவான் சாயப் தோட்டம், மன்னாத முதலியார் தோட்டம், பூங்காவன முதலியார் தோட்டம், திருமழிசை செட்டியார் தோட்டம், தேப் பெருமாள் முதலியார் தோட்டம், திருப்பளி முதலியார் தோட்டம், (திரும்பினால்) சலவன் தோட் டம், பச்சையப்ப முதலியார் தோட்டம், மாங்காட்டு முதலியார் தோட்டம், செந்தாமரை முதலியார் தோட்டம், மூலத்தோட் டம், கன்னித் தோட்டம் போய்த் திரும்பிக், கோலக்காரன் தோட்ட வழியே புகுந்து, மீண்டும் அம்மையப்ப முதலி தெருவை அடையலாம். இத்தோட்டப் பரப்பை என்னென்று சொல்வேன், பசுங்கடல் ஒன்று பொங்கிப் பரவிய ஒரு பெருந் தேக்கம் என்று சொல்லலாம். இராயப்பேட்டையின் மலையும் ஆறும் காடும் கடலும் எங்கே? அவை எங்கே போயின? அவை மறைந்தன. அவ்விடங்களில் பலவித புரங்கள் தோன்றியுள்ளன. மயிலாப்பூர் ஏரி, தியாகராய நகராக மாறினமையால், இராயப்பேட்டை தன் பழங்காலக் காட்சியை எப்படி வழங்குவதாகும்? பழைய இராயப்பேட்டை, வேனிலிலும் மக்களை வதைப்பதில்லை. ஓய்வு நல்வழியில் செலவாகும். யான் விடியற் காலத்தில் எழுவேன்; பழம் பாடங்களைப் படிப்பேன்; புதிய பாடங்களையும் நெட்டி நெட்டிப் பார்ப் பேன்; விளங்காத இடங்களை இராயப்பேட்டையில் வதியும் நல்லாசிரியரை அணுகித் தெளிவு செய்து கொள்வேன். அவைகள் பின்னே பள்ளிக்கூடத்தில் போதிக்கப்படுங்கால் பழமையாகவே தோன்றும். எக்கூத்தாடினாலும் யான் படிப்பில் கண்ணுங் கருத்துமாயிருப்பேன். காலையில் சில மாணாக்கர் என் வீட்டுக்கு வருவர். அவருடன் யான் தோட்டங்கட்குப் போவேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தோட்டம் எங்களை அழைக்கும். தோட்டத்தில் நாங்கள் பலவாறு பிரிந்து பிரிந்து ஆடுவோம். சிலர் ஏற்ற மிறைப்பதிலும் கவலையடிப்பதிலும் தலைப்படுவர். அவ் விரண்டிலும் என் மனஞ் செல்வதில்லை. யான் கிடங்குகளில் நீத்தியெடுத்து இறைத்துப் பார்ப்பேன்; வெற்றிலை கிள்வோ ருடன் சேர்ந்து கொள்வேன்; வாழை அறுப்பதில் கருத்துச் செலுத்துவேன். வாழைப் பூக் கொய்வதிலும் தண்டு உரித் தெடுப்பதிலும் எனக்கு வேட்கை அதிகம். அகத்திக் கிளைகளை வெட்டிச் சாய்த்துக் கீரைக் காம்புகளைச் சுமையாகக் கட்டு வதில் இறங்குவேன். நாங்கள் கூட்டங் கூட்டமாக இறைப்புத் தலைப்புக்களிலும், ஓடைகளிலும் துணி தோய்ப்போம்; குளிப் போம்; ஆடுவோம்; பாடுவோம். எங்கள் ஆடல்கள் தோட்டக் காரருக்கு மகிழ்ச்சி யூட்டும். சிற்சிலபோது அவர்கள் எங்கட்கு அகத்திக்கீரை வாழைப்பூ வெற்றிலை முதலியன தருவார்கள். அவைகளைப் பெரிதும் யான் நல்லாசிரியர் வீடுகளிற் சேர்ப் பேன். தேனாம்பேட்டையிலே ஒரு பெரிய தென்னந்தோப்பு உண்டு. அது சிவசங்கர முதலியாருடையது; அதில் சில மா மரங் களும் இருந்தன. அத்தோப்புக்குள் புக நேரும் போதெல்லாம் அங்கே நாங்கள் பல மணி நேரம் கழிப்போம். எங்கட்கு உச்சி வேளையும் தோன்றாது; பசியும் தோன்றாது. பிள்ளை விளை யாட்டு என்னவே செய்யாது! எங்களைக் கண்டதும் மாமரங்கள் அஞ்சும். அவைகள் கொள்ளையாகும். பூ, பிஞ்சுகளும் உதிர்க்கப் படும். மரமேறிகள் இளநீர் கொடுப்பார்கள். அவைகளில் எங்கள் நாட்டம் பெரிதுஞ் செல்வதில்லை. எங்களுள் ஒருவ ராகிய நடேசன் என்பார் மரமேறித் தள்ளும் இளநீரிலேயே எங்கள் நாட்டஞ் செல்லும். யானும் மர மேறுவேன்; பழைய நினைப்புத் தோன்றினால் உடனே இறங்கி விடுவேன். ஒவ்வொருபோது எங்கள் கூட்டம் அட்லன் தோட்டத் துள் புகும்; புகுந்ததும் நாங்கள் வானர சேனைகள் ஆவோம் என்று கூறும் அளவில் நின்று விடுகிறேன். அட்லன் தோட் டத்துப் பல பொருள்கள் இராயப்பேட்டைக்கு விருந்தாவன. அவைகளுள் ஒன்று சிறந்தது. அது பருங்களாக்காய். அக்களாச் செடி அட்லன் தோட்டம் முழுவதுஞ் செறிந்திருக்கும். அக்களா ஊறுகா யில்லாத வீட்டை இராயப்பேட்டையில் காண்டல் அரிது. ஒரு சமயம் பருங்களா பறிப்பதற்கென்று ஒரு சிறு தொகை யினருடன் அட்லன் தோட்டம் போந்தேன். நாங்கள் ஒரு பெருந் தூறுக்குள் நுழைந்து காய் பறித்துக் கொண்டிருந்தோம். அவ் வேளையில் ஒரு தடியன் அங்கே வந்தான்; எங்களை அதட்டி னான்; தூறுக்குள் புக முயன்றான். அது கண்ட நண்பரெல்லாங் கலங்கி ஒரு வழியே ஒட்டம் பிடித்தனர். தடியன் அவரைத் துரத்திச் சென்றான். யான் நண்பருடன் கூடி ஓடினேனில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். எனக்கு ஒரு வாயில் புலனாயிற்று. அதன் வழியே வெளிவந்து விரைந்து நடந்தேன்; பக்கத்திலுள்ள வெற்றிலைத் தோட்டத்தை அடைந்தேன். அத்தோட்டக்காரரிடம் நிகழ்ந்ததைச் சொன்னேன். அவர், எவனோ வழிப்போக்கன் உங்களை மருட்டினான் என்று சில ஆட்களை அட்லன் தோட் டத்துக்கு அனுப்பினர். அவர்கள் ஒருவரையுங் காணாது திரும்பி னார்கள். யான் உடைந்த மனத்துடன் வீடு சேர்ந்தேன். மனம் நிலைபெறவில்லை. கவலை பெருகிற்று. சில மணி நேரத்தில் நண்பரெல்லாம் ஒவ்வொருவராக வீடு சேர்ந்தனர். தடியன், தம்மை நீண்ட தூரம் துரத்தி வரவில்லையென்றும், தமது அச்சம் தம்மைச் சிதறடித்து ஓடச் செய்ததென்றும், எவரெவர் எவ்வெவ்விதம் எவ்வெத் தோட்ட வழியே ஓடினரென்றும் விளக்கிக் கூறினர். ஒவ்வொருவரும் யான் என்ன ஆனேனோ என்று கவலை கொண்டதைத் தெரிவித்தனர். எனது மனம் உற்ற கவலையை நண்பர்கட்கு அறிவித்தேன். மூன்றாம் நாள் நாங்கள் பெருங் கூட்டமாக அட்லன் தோட்டம் புகுந்து பருங்களாவைச் சூறையாடினோம். சிவலிங்கம் பிற்பகலில் எங்களைப் பல இடம் கூப்பிடும். சிலநாள் நடுப்பட்டணம் அழைக்கும். பெரிதும் எங்களை அழைப்பது கடற்கரை. கடற்கரையில் சடுகுடு ஆடிய நேரம் போக மிகுதி நேரம் கடலாடுவோம். யான் சிற்சிலபோது ஈர மணலால் சிவலிங்கம் எடுப்பேன். சோல்ஜர்களைப் பார்த்ததும் யான் இலிங்கத்தைச் சிதைத்து விடுவேன். சோல்ஜர்கள் பூட்ஸால் இலிங்கத்தை உதைப்பார்கள் என்பது எனது எண்ணம். வீட் டுக்குத் திரும்பும் போது யான் பார்த்தசாரதி பெருமாளைத் தொழுது செல்வேன். கடலாடல் ஒருநாள் நாங்கள் கடலாடிய காலத்தில் தோழர் இரத்தின சபாபதியைக் கடல் விழுங்குவதுபோல் தோன்றியது. யான் ஓரிடத்தில் நின்று கடலாடினேன். இன்னொருவர் வேறோரிடத் தில் நின்று ஆடினர். இரண்டிடத்துக்கும் இடையே ஒரு பள்ளம். அதில் தோழர் இரத்தினசபாபதி சிக்கிக் கொண்டார். அவர் தத்தளிப்பதைக் கண் காண்கிறது! என் செய்வது! மனம் பதைக் கிறது. அவ்வேளையில் ஒரு பெரிய அலை எழும்பி வந்ததைக் கண்டேன். அதன் மோதல் இரத்தினசபாபதியைப் புரட்டி விட்டது. மீண்டும் அது தோழரை ஈர்ப்பதற்குள் யான் பாய்ந்து அவர் சிகையைப் பற்றி நின்றேன்; அவரைக் கரை சேர்த்தேன். அவர் தெளிவடைய ஏறக்குறைய அரை மணி நேரமாயிற்று. அன்று முதல் கடலாடுதற்கு யான் செல்வதில்லை. கடலோரத் தில் நின்று நீலப் பரப்பில் மனத்தால் மூழ்கலானேன். திரிதல் நண்பருடன் யான் நடுப்பட்டணம் போவேன்; வேடிக்கை பார்ப்பேன்; எவ்வித நோக்கமுமின்றித் தெருத் தெருவாகத் திரிவேன்; அலைவேன். சதுரங்கம் இராயப்பேட்டை மருத்துவச்சாலைக்கு எதிரிலே ஓர் ஆங்கிலோ - இந்தியப் பெண் பாடசாலை இருந்தது. அது நீண்ட காலம் நடைபெற்று வந்தது. அக்கட்டடம் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. அது சில நாள் உணவுச் சாலையாகவும் பயன்பட்டது. அந்நிலையம் பள்ளியாயிருந்த ஞான்று, அதன் கீழே நடுவறையில் சாயங்கால வேளைகளில் சில ஆட்டங்கள் ஆடப்படும். ஆடுவோருள் பெரும்பான்மையோர் ஆங்கிலோ - இந்தியர். அவ்வாட்டங்களைக் காண ஒவ்வொருபோது யான் செல்வதுண்டு. நாளடைவில் யான் மூன்று ஆட்டங்களில் பயிற்சி பெற்றேன். அவை : ஆல்மா, டிராப்ட், சதுரங்கம் என்பன. பின்னிரண்டும் எனக்குத் தண்ணீரோட்டமாயின. ஒரு போது அப்பள்ளி ஆசிரியர் ஒருவரும் யானும் சதுரங்கத்தில் போட்டியிடல் நேர்ந்தது. ஆட்டம் ஒருநாள் இரண்டு நாளில் முற்றுப் பெறவில்லை. சில நாட்களாயின. முடிவு ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. வெற்றித் திரு என் பக்கம் நின்றாள். அம்மையார் முகம் வாடிற்று. அவ்வாட்டம் என் மனத்தை உறுத்திற்று. மனம் நெகிழ்ந்தது. மீண்டும் ஒரு முறை ஆட் டத்தைத் துவங்கித் தோல்வி மேற்கொண்டு அம்மையாரை மகிழ்விக்கலாமா என்று என் நெஞ்சம் கருதியது. அதை வெளி யிட நெஞ்சம் எழவில்லை. பெரிய அம்மையாரிடத்தில் சிறிய மாணாக்கன் எப்படிக் கருத்தை வெளியிடுவது என்ற அச்சம் மேலிட்டது. வேலுமயிலுந் துணை இராயப்பேட்டையிலே பச்சையப்ப நாயகர் என்ற ஒரு செல்வர் இருந்தார். அவர் புதல்வர் நடேசன் என்பவர். நடேசன் என்னுடன் பள்ளிக்குப் போந்தும் வந்தும் படித்தும் ஆடியும் பழகல் வேண்டுமென்று அவர்தம் பெற்றோர் விரும்பினர். எங்கட்கென்று அவரது வீட்டு நடைப் பக்கத்தில் ஒரு தனியறை விடப்பட்டது. நாளடைவில் அவ்வறையை யான் கோயிலாக்கி னேன். அவ்விடத்தில் மூங்கில் பத்தைகளால் ஒரு விமானம் நிறுவப்பட்டது. அதைப் பலவித வர்ணக் காகிதங்களாலும், இரச குண்டுகளாலும், சிறு சிறு குளோப்புகளாலும் அணி செய்ய யான் பட்டபாடு அதிகம். மூங்கில் விமானத்துள் தேக்கால் செய்யப்பெற்ற ஒர் அழகிய சிறு விமானம் வைக்கப் பட்டது. அதில் முருகப் பெருமான் திருவுருவத்தை அமர்த்தி னோம். சுந்தரேசர் வீதி விழாக்களின்போது நாங்களும் முருகப் பெருமானை அலங்கரித்து ஊர்வலம் வருவோம். வேலு மயிலுந்துணை - அரகர மகாதேவா என்ற முழக்கம் வானத் தையும் பிளக்கும். தர்மசோறு முடவர் குருடர் பிணியாளர் முதலியோரைக் கொண்ட கூட்டங்கள் பெரியபாளைத்தம்மையார் கோயில் அருகே ஒவ்வொரு சமயம் திரளும். இளம்பிள்ளைகள் ஒன்றுசேர்ந்து தர்மசோறெடுத்து அவ்வெளிய கூட்டங்கட்கு உதவுவார்கள். அவர்களுடன் சேர என் மனம் அவாவும். ஆனால் ஏதோ ஒரு வித மானம் என்னைத் தடுத்து ஒருநாள் ஒரு முடவரின் கோரக்காட்சி என் மானத்தைப் பிடுங்கி எறிந்தது. னும்பிள்ளைகளுடன்சேர்ந்து,தர்மசோறம்மாதர்மசோறு.’ என்ற பாட்டைப் பாடி வீடுதோறும் நுழையலானேன். மறைத்தல் யான் பெரிதும் கிரிக்கெட் ஆடுவதில்லை. மிகச் சில சமயங்களிலேயே அவ்வாட்டம் ஆடுவேன். ஆட்டத்தில் யான் இடதுகையன். (எழுதுவதுஞ் சாப்பிடுவதுந் தவிர மற்றச் செயல்களை யெல்லாம் எனது இடது கையே நிகழ்த்தும். சில வேளைகளில் அக்கை, எழுத்துத் தொண்டும் புரியும்.) ஒருநாள் கிரிக்கெட் குழுவில் ஓராள் வரவில்லை. பக்கத்தே சடுகுடு விளையாடிக்கொண்டிருந்த யான் அழைக்கப்பட்டேன். அங் கிருந்த ஒருவன், ஒரட்டுக் கையனையா கூப்பிடுகிறீர்? என்றான். அவனை யான் வைதேன். அவன் பந்தை என்மீது வீசினான். பந்து உதட்டில் பட்டது. சிறு காயம் உற்றது. அதைப் பெற்றோர் தெரிந்துகொள்வதை யான் விரும்பினேனில்லை; மறைக்கவே முயன்றேன்; நேரங் கடந்து வீடு நோக்கினேன்; கொல்லை வழியே வீட்டுக்குள் நுழைந்தேன்; புறக்கடை நடையிலுள்ள வாயற்கால் அள்ளில் இடித்துக்கொண்டதாக நடித்துக் கூக்குரலிட்டேன்; விரலால் உதட்டை அழுத்தி நின்றேன். அன் பார்ந்த அன்னையார் விளக்குடன் விரைந்து வந்தார். தந்தையார் கரியைத் துகள்செய்து அப்பினார். புள்ளாட்டம் கிருஷ்ணன் என்றொரு மாணாக்கன் இருந்தான். அவன் எவருக்கும் அடங்காதவன்; முரடன். எந்த ஆட்டத்திலும் அவ னிடம் மூர்க்கம் தாண்டவம் புரியும். ஒருநாள் அவனும் யானும் புள்ளாட்டத்தில் கலந்துகொண்டோம். யான் வேகமாக அடித்த புள் அவன் வலது பக்கத்தில் பட்டது. கிருஷ்ணன் துள்ளித் துள்ளி வீழ்ந்தான். வேறு ஆட்டங்களில் ஈடுபட்டிருந்த மாணாக்க ரெல்லாம் அவனை மொய்த்துக்கொண்டனர். பிரின்ஸிபாலும் மற்றவரும் மிஷின் நிலையத்தினின்றும் ஓடி வந்தனர்; துன்பக் காட்சி கண்டனர். என்ன விளையுமோ என்ற அச்சம் என்னைப் பீடித்தது. என்கை, பையன் முகத்தில் தண்ணீர் தெளித்தது. ஏறக்குறைய ஒரு மணிநேரங் கடந்து நண்பன் தெளிவடைந்தான். அவனுக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டது. புள்அடி ஈரலை உறுத்தியிருக்குமென்று பேசப்பட்டது. புள்ளாட்டம் அன்றே என்னை விட்டுப் பறந்தது. பின்னே என் கை கில்லியைத் தொட்டதே இல்லை. முனிவர் யான் மாணாக்கனா யிருந்தபோதே இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபை காணப்பட்டது. அந் நிலை யிலும் பிள்ளை விளையாட்டு என்னை விடுத்து முற்றும் அகன்றதில்லை. ஓய்வு நேரத்தில் என் ஒரு சாலை மாணாக்கர் சிலர் சபையில் காலங்கழிப்பர். மாணாக்கர் காலம் வெறுமை யாகக் கழியுமோ? ஆடல் பாடல் நிகழும்; சிற்றுண்டிகள் உருளும். அவைகள் இரண்டொரு கிழவர்க்குப் பிடிப்பதில்லை. அது காரணமாகப் பிற்பகலில் சபையைப் பூட்டிவிட ஏற்பாடு செய்யப் பட்டது. அதை என் மனம் விரும்பவில்லை. ஒருநாள் எதிர் வீட்டுத் திண்ணையில் ஏகாம்பரமும் சிவசங்கரனும் துரைசாமி யும் யானும் அமர்ந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருந் தோம். அச்சமயம் இரத்தினசபாபதி வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் எனது பிள்ளைமை எழுந்தது. இரத்தினசபாபதி! உன்னை முனிவனாக்கிச் சபையில் அமரச்செய்ய நினைக்கிறேன் என்றேன். நண்பரும், செய் அப்பா என்றார். வீட்டுக் கிழவர் இல்லாத சமயம், வீட்டுக் கொத்துச்சாவியைக் கொணர்ந்து, சபையின் பூட்டைத் திறந்தேன். இரத்தின சபாபதியைக் கோவணதாரியாக்கி, அவர் உடலெல்லாம் திருநீறு சண்ணித்துத் தலையிலும் கழுத்திலும் ருத்திராட்ச மாலைகள் அணிந்தேன்; அவரைப் பத்மாசனம் இடச்செய்தேன்; ஒருகையில் ஜெப மாலையையும் மற்றொரு கையில் சின்முத்திரையையும் தாங்கு வித்தேன். யான் உள்ளே நுழைந்து உனது பெருவிரலை என் பெருவிரலால் தீண்டும்வரை மௌனியாக இரு என்றுரைத்து அறையைப் பூட்டி வெளியே வந்தேன். மற்ற நண்பரும் என் னுடன் கலந்தே தொண்டு செய்தனர். நாங்கள் தெருவிலே அதை யும் இதையும் பேசி நின்றோம். மாலை வந்தது. பூசை - துரை சாமி முதலியார் வழக்கம்போலச் சபைக் கதவுகளைத் திறந்தார்; திகைத்தார்; வெளியிலே வந்து எங்களை அழைத்தார்; ஓடி னோம்; நாங்கள் உள்ளே நுழைய அஞ்சுவதுபோல் நடித்தோம். வீட்டிலுள்ளவ ரெல்லாம் தூரத்திருந்தே முனிவர் காட்சியைக் கண்டனர். செய்தி பரவியது. வாசல் முழுவதுங் கூட்டம். அவ் வீட்டில் யாரும் இனிக் குடியிருத்தல் கூடாது என்ற பேச்சே பேசப்பட்டது. அவ்வேளையில் பக்கத்துவீட்டு முத்துக்குமார சாமி முதலியார் தோட்டத்தினின்றும் வந்தார்; தெரு முனையிலேயே முனிவர் செய்தியைக் கேள்வியுற்றார். நேரே அவர் சபையின் நிலையம் போந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் கையில் கத்தி இருந்தது. அஃதெனக்கு ஐயமூட்டிற்று. யானும் அவருடன் உள்ளே நுழைந்து இரத்தினசபாபதியின் பெருவிரலைத் தீண்டினேன். அவர் சிரித்துவிட்டனர். தவங் குலைந்தது. பொதுவாகப் பையன்கள் குறும்பு என்று சொல்லப் பட்டது. மூலன் யான் என்று நண்பர் எவருங் கூற முந்தினா ரில்லை. பிள்ளை விளையாட்டுக் குறிப்புக்கள் இவ்வளவு போது மென்று எண்ணுகிறேன். இவ்வாட்டங்களெல்லாம் கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவு பெற்ற பின்னை என்னை விடுத்துப் படிப் படியே படிப்படியே அகன்றன; பறந்தன. அவைகளில் படிந்து கிடந்த மனம் எப்படியோ மாறியது! குறிப்பு பிள்ளை விளையாட்டுக் குறிப்புக்கள் வேண்டற்பாலனவா? பிள்ளைமைக்கும் பின்னை வாழ்வுக்கும் தொடர்புண்டா? இல்லையா? வாழ்க்கைக் கூறுகள் பல. ஆனால் அவை தனித்துத் தனித்து இடைவிட்டு விட்டு நின்று வளர்வன அல்ல. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புற்று வளர்வன. விதை பலதிறக் கூட்டுப்பெற்று முளையாகிச் செடியாகி வளர்ந்து மரமாவது போலக் கருவும் பலதிறக் கூட்டுடன் குழந்தையாகிப் பிள்ளையாகி வளர்ந்து மகனாகிறது. பிள்ளைமை, வாழ்க்கையின் வேர். அதினின்றும் வாழ்க்கை மரம் எழுகிறது. அத்தகைய பிள்ளைமையைப் பின் வாழ்க்கையினின்றும் எப்படிப் பிரித்தல் கூடும்? இரண்டும் தொடர்புடையன. ஆதலின் ஒருவனது வாழ்க்கை வரலாற்றுக்குப் பிள்ளை விளையாட்டுக் குறிப்புகள் வேண்டற்பாலனவே. ஒருவரது பிள்ளைமையிற் படியும் பண்புகள் அப்படியே வாழ்க்கை மரமாகப் பருக்கின்றனவா? இது பெரிய கேள்வி. இதற்குப் பதில் பலர் பலவிதமாக இறுப்பர். பிள்ளைமையில் படியும் பண்புகள் அப்படியே வாழ்க்கையாக வளர்தலுமுண்டு; மாறுபட்டு வளர்தலுமுண்டு. ஒருவர் பிள்ளைமையில் எப்படி இருந்தாரோ, அப்படியே உற்ற வயதிலும் இருக்கிறார். இன் னொருவர் பிள்ளைமையில் ஒருவிதத் தன்மையுடையவரா யிருந்து, உற்ற வயதில் வேறுவிதத் தன்மையுடையவராகிறார். ஒருவர் பிள்ளைமையில் நல்லனவேட்கிறார்; வயதில் அவரே தீயன வேட்பவராகிறார். மற்றொருவர் பிள்ளைமையில் தீயன வேட்கிறார்; அவரே பின்னை நல்லன வேட்பவராகிறார். கலைஞன் கொலைஞனாதலையும், கொலைஞன் கலைஞனா தலையும் பார்க்கிறோம். கற்பினன் கற்பில்லாதவனாதலையும், கற்பில்லாதவன் கற்பினனாதலையுங் காண்கிறோம். இவை கட்கு என்ன காரணம் கூறுவது? படைப்பின் கூறு என்னலாமா? பிறந்த நேரத்தின் பயன் என்னலாமா? ஊழ்வலி என்னலாமா? சேர்க்கையின் விளைவு என்னலாமா? ஆண்டவன் சித்தம் என்ன லாமா? மல்லருடன் யான் சேர்க்கை பெற்றிருந்தகாலை, சிகரெட் முதலிய மயக்கப் பொருள்களை வாங்கி வரவும் யான் மறுத் தேன். பல ஆட்டங்கள் ஆடிய யான் சீட்டாட்டத்தை வெறுத்தே வந்தேன். இவைகட்கு என்ன காரணம் இயம்புவது? ஒருவனது வாழ்க்கை மரம் இப்படித்தான் வளரும் என்று கருவிலேயே அதற்குரிய விதை விழுமோ என்னவோ தெரிய வில்லை. விதை நேரே வளர்தலுமுண்டு; தூறிடைப் பட்டு வளர்தலுமுண்டு. பின்னையதில் உலகுக்குப் புலனாவது எது? தூறு; இதனிடை விதை முளைவிட்டு வளர்ந்து வருதல் பெரிதும் புலனாவதில்லை. அதனால் உலகம் மயக்குறுகிறது; பல காரணங் கற்பிக்க முயல்கிறது. தூறைக் கடந்து செடி எழுந்து நிற்குங்கால், செடியின் தன்மை உலகுக்கு நன்கு புலனாகும். கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவால் பிள்ளை விளை யாட்டுகள் என்னை விடுத்து அகன்றன என்று மேலே குறித் துள்ளேன். அந்நிலையில் யான் தூறு கடந்த செடியானேன் போலும்! இனி, எனது பின் வாழ்க்கையைச் சுருங்கச் சொல்லப் போகிறேன். அதையும், இங்குள்ள பிள்ளை விளையாட்டுகளை யும் அறிஞர் ஆராய்ந்து பார்ப்பாராக. பார்த்தால் இரண்டுக்கும் தொடர்பு உண்டா இல்லையா என்பது விளங்கும். அவ்வாராய்ச் சிக்குப் பிள்ளை விளையாட்டுக் குறிப்புக்கள் வேண்டற்பாலனவே. எவர் என்ன சொல்லினுஞ் சொல்க; எந்நூல் என்ன கூறி னுங் கூறுக. பிள்ளைமையை நல்வழியில் பண்படுத்தப் பெற்றோ ரும் நல்லாசிரியன்மாரும் கடமைப்படுதல் வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். நல்வழியில் பண்படுத்தலென்று பிள்ளை களை விளையாடவிடாது அடைத்து வைத்தலாகாது. பிள்ளை களை ஆடவிடாது அடைத்துவைப்பது அவர்கள் அறிவைச் சிறைப்படுத்துவதாகும். விளையாடாத பிள்ளைகள் வெம்பிச் சாம்பி விழுவார்கள். பிள்ளைகளை விளையாட விடுத்துப் பண்படுத்துவதே அறிவுடைமை. எனது பிள்ளையாடல்கள் எனக்குப் பல வழியிலும் பயன் பட்டே வந்தன; வருகின்றன. அவ்வாடல்கள் உடற்பயிற்சியாய் ஈட்டிவைத்த ஜீவசக்தி இன்னும் என்னை ஓம்பி வருகிறது. பின்னாளில் யான் நடைப்பயிற்சி யொன்றே கொண்டேன்; இந்நாளில் அதையும் விடுத்தேன். இப்பொழுதும் எனக்கு நலம்புரிந்து வருவது பிள்ளை விளையாட்டின் பயனாக விளைந்த ஜீவசக்தியின் எச்சமென்றே யான் கருதுகிறேன். பிள்ளை விளையாட்டு உடல் நலத்துக்குத் துணைபுரிவதென்பது எனது அநுபவத்தில் கண்ட உண்மைகளுள் ஒன்று. ஆகவே, வாழ்க்கைக்குப் பிள்ளை விளையாட்டு இன்றியமையாதது என்று அதை கூவுகிறேன். 7. கல்வி பள்ளிப் படிப்பு வெம்பி வீழ்ந்தது. அதனால் யான் கல்வி பயிலத் தொடங்கினேன். முதல் முதல் எனக்குக் கல்விக் கண் திறந்தவர் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளை. அவர்தம் பெரும்பொழுது சமய வாதங்களிலும், கண்டனங்கள் வரைவதிலும் செலவாயிற்று. குறிப்பிட்ட நேரத்தில் மாணாக்கர் அவரிடத்தில் தமிழ் பயிலுதல் இயல்வதில்லை. ஓய்வு கிடைக்கும் எந்த நேரத்திலும் அவர் பாடஞ் சொல்வர்; எவ்விடத்திலுஞ் சொல்வர்; அவரது வாதப் பேச்சுக்களிலும் தமிழ் மணங் கமழும்; கலைமகள் நடம் புரிவள்; மாணாக்கர் ஐயப்பாடுகள் பல நீங்கும். தமிழ் கதிரைவேற் பிள்ளையினால் தமிழ்த் தொண்டு பொது வாகச் சென்னையில் பல இடங்களில் நடைபெறும். சிறப்பாகக் குறிக்கத் தக்க இடங்கள் இரண்டு. ஒன்று கந்தசாமி கோயில் வசந்த மண்டபம்; மற்றொன்று சிந்தாதிரிப்பேட்டை அங்காள பரமேசுரி கோயில் - நிலையம். அங்கே ஞாயிறுதோறும் தணிகைப் புராணம் சொல்லப்பட்டது; இங்கே செவ்வாய்தோறும் கந்தபுராணமும், வெள்ளிதோறும் திருவிளையாடற்புராணமுஞ் சொல்லப்பட்டன. யான் தவறாமல் இரண்டிடங்கட்குஞ் செல் வேன். இரண்டும் வெறும் புராண - பிரசங்க மேடைகளாயிரா. அவை, கலைக் கழகங்களாகத் திகழும். கதிரைவேலரின் சொன் மாரி வெள்ளத்தில் இலக்கியம், இலக்கணம், தர்க்கம், சாத்திரம் முதலியன தேங்கும். அத்தேக்கம் மாணாக்கர்க்குக் கலை விருந் தாகும். கதிரைவேலர் பலதிற வாதக் கடல்களைக் கடந்து மாணாக் கர்க்கு நன்முறையில் பாடஞ் சொல்ல உளங் கொண்ட வேளை யில், எங்கள் துரதிர்ஷ்டம் அவரை நீலகிரிக்கு ஏகச் செய்தது. யான் உற்ற துயரை ஈண்டு எழுத்தால் எழுதல் இயலவில்லை. அவர், வேனிற்கால விடுமுறையில் சென்னைக்கு வருவேன் என்று எனக்குக் கடிதம் எழுதுவர். அஃது எனக்கு ஆறுதலளிக்கும். வேனிற் காலத்தை விரைந்து விரைந்து எதிர்பார்த்தவருள் யான் முதல்வனாயிருப்பேன். வேனிற்காலம் வந்தது. கதிரைவேற் பிள்ளையுஞ் சென்னை சேர்ந்தனர்; இரண்டு திங்கள் சிந்தா திரிப்பேட்டையில் தங்கினர். யாப்பிலக்கணப் பாடம் தொடங்கப் பட்டது. யாப்பிலக்கணப் போதனையே பெரிதும் ஆசிரியர் விடுமுறையை விழுங்கியது. இடையிடையே பெரியபுராணங் கேட்பேன். தமிழாசிரியர் மீண்டும் நீலகிரிக் கேகினர். கதிரை வேற் பிள்ளைக்கு யான் பாட்டால் கடிதம் எழுதுவேன். அவர் மகிழ்ந்து மகிழ்ந்து பாட்டிலேயே பதில் விடுத்து ஊக்கமூட்டுவர். எனக்குக் கல்விக் கண் திறந்த ஆசிரியர் நீலகிரியில் வெஞ்சுரத் தால் பீடிக்கப்பட்டார் என்ற செய்தி சென்னைக்கு எட்டியது; தொடர்ந்து ஆண்டவன் திருவடி நிழலடைந்தார் என்ற செய்தி கிடைத்தது. யான் துன்பக் கடலில் வீழ்ந்தேன். அக்கடலினின் றும் ஏறப் பன்னெடு நாட்களாயின. பரீட்சையையும் பொருட் படுத்தாது ஆசிரியர் பொருட்டு யான் சான்று கூறியது அடிக்கடி நினைவிலுறும். அஃதொன்று மட்டும் அடிக்கடி நினைவில் உறுவானேன்? அவ்வேளையில் யான் குமரகுருபரர் சிதம்பரச் செய்யுட் கோவையிலும், பாம்பன் குமரகுருதாசர் திருவலங்கல் திரட்டிலும் உறவு கொண்டிருந்தேன். அவ்வுறவு இல்லையேல் எனது நிலை என்னவாகியிருக்குமோ? கதிரைவேற் பிள்ளையினிடம் தமிழ் பயின்று வந்த மாணாக்கர் பலர் பிறரிடத்தில் பாடங் கேட்பதில்லை என்று உறுதி கொண்டனர். அவருடன் சேர என் மனம் ஒருப்பட வில்லை. அந்நாளில் யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர் என்பவர் சென்னை போந்து தேவாரம், சிவஞானபாடியம் முதலிய நூல்களை அச்சிட்டு வந்தனர். அவரிடம் பாடங் கேட்கச் சென்றேன். அவர் என்னுடன் சிலநாள் பழகிய பின்னர், நீர் என் நண்பராக இரும்; மாணாக்கராக இராதேயும் என்றார். காரணம் எனது பொது நோக்கும், பாடஞ் சொல்வதில் பண்டி தரினும் வல்லார் கதிரைவேற் பிள்ளை என்று யான் பிறரிடங் கூறியதும், இன்ன பிறவுமாகும். அவரும் யானும் நண்பராகவே பழகினோம். பொழுது போகவில்லை. என் செய்வேன்! வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் இயற்றிய நூல் களைப் படித்தல் வேண்டும் என்ற வேட்கை எழுந்தது. அவை களைப் பயின்றேன். அவைகளில் பெரும்பான்மையன கண்டன நூல்கள். ஆனாலும், அவை சைவ சித்தாந்த நுட்பங்களை ஒரு வாறு விளங்கச் செய்தன. சபாபதி நாவலர் மாணாக்கருள் ஒருவராகிய மயிலை பாலசுந்தர முதலியார் நட்பு எனக்குக் கிடைத்தது. அவரும் யானும் அடிக்கடி சந்திப்போம்; பேசுவோம். அவர் சபாபதி நாவலர் நடாத்திய ஞானாமிர்தம் என்ற புதினத் தாள்களை யும், அந்நாவலர் இயற்றிய நூல்களையும் படிக்கக் கொடுப்பர். அவைகளால் யான் பெற்ற பயன் அதிகம். நாவலர் தாளும் நூலும் முறையாகத் தமிழ் பயிலவேண்டும் என்னுங் காதலை எழுப்பின. அதையுணர்ந்த மயிலை நண்பர் ஒருநாள் என்னை ஒரு சுவாமியாரிடத்தில் அழைத்துச்சென்றனர். அவர் சூரிய னார் கோயில் பண்டார சந்நிதியினிடம் சைவ சாத்திரங் கேட்ட வராம். m¢RthÄah® v‹id¥ gh®¤J, ‘ck¡F¤ Ô£ir ah»ÆU¡»wjh? என்று கேட்டார், இல்லை என்று சொன் னேன். மடத்தார் கட்டளைவேண்டும் என்றார் சுவாமியார். சுவாமிகட்குச் சிரமம் வேண்டாம் என்று விடைபெற்றேன். பாலசுந்தர முதலியார் முகஞ் சுருங்கியது. அன்று பிரதோடம். பாலசுந்தர முதலியாரும் யானும் கபாலீச்சுரம் போந்து ஆண்டவனைத் தொழுது ஒரு மண்டபத் தில் அமர்ந்தோம். அங்கே மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியார் வந்தார். mt® v‹id neh¡», ‘fâiunt‰ ãŸis fhykhd ã‹d® vtÇl¤âš ghl§ nf£O®? என்று வினவினர். அங்கிருந்த பாலசுந்தர முதலியார் அன்று நிகழ்ந்ததை விளக்கிக் கூறினர். மயிலை கிழவர் வெகுண்டு, சூரியனார் கோயில் சாமியார் எற்றுக்கு? இந்தப் பாவியினிடம் வரலாகாதா, என்று கூவினர். அக்கூவல் எய்ப்பினில் வைப் பாயிற்று. அதிர்ஷ்டம் பிறந்தது என்று எண்ணி, நாளை தங்கள் வீட்டுக்கு வருவேன் என்று பதிலிறுத்து வீடு சேர்ந்தேன். மகிழ்ச்சி பொங்கிய வண்ண மிருந்தது. அடுத்த நாள் தணிகாசல முதலியார் வீட்டுக்குப் போனேன்; அவரைக் கண்டேன்; வணக்கஞ் செய்தேன். என்னிடத்தில் படித்தலாகாது என்ற எண்ணமா என்று அவர் கேட்டார். கதிரைவேற் பிள்ளையின் பருவுடல் மறைந்த பின்னைத் தங்கள் நினைவே எனக்கு உற்றது. தங்களிடத் தில் அணுக முடியாதென்று கேள்விப்பட்டேன்; அதனால் தங் களை யான் நாடவில்லை என்றேன். கிழவர், அப்படியா! என்னைக் கோபி என்று சிலர் சொல்வதுண்டு. சிற்றிலக்கணமும் பயிலாது சித்தாந்த சாத்திரங் கேட்க வருவோரைக் கண்டதும் கோபம் பிறவாது என்ன பிறக்கும்? உம்மையுஞ் சோதனை செய்து, நிலைமை யுணர்ந்து, எங்கிருந்து பாடந் தொடங்க வேண்டுமோ அங்கிருந்தே தொடங்குவேன். எவரையும் திடீ ரென மேலே பறக்க யான் விடமாட்டேன் என்றார்; பின்னே தாம் ஆறுமுக நாவலர்பால் தமிழ் பயின்ற விதங்களை யெல்லாம் எடுத்துக்கூறி, நன்னூலில் சில கேள்விகள் கேட்கப் புகுந்தார். எனக்குத் தெரிந்த அளவில் பதில் விடுத்தேன். திருவிளையாடல் நாட்டுப் படலத்தில் சில பாக்கட்கு உரை கேட்டார். உரை சொன்னேன். இலக்கிய இலக்கணங்களை யான் முறையாகப் பயிலவேண்டுவதில்லை என்றும், அவ்வப்போது ஆங்காங்கே உறும் ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெளிந்து கொள்வது நலன் என்றும், சாத்திரம் முறையாகப் பயிலுதல் வேண்டும் என்றும், இப்பொழுது, திருவருட்பயன் தொடங்குதல் நலம் என்றும் வாய்மலர்ந்தார். தங்கள் விருப்பம் என்றேன். திருவருட் பயன் தொடங்கப்பட்டது. இது சென்னையில் பரவியது. கலியாண சுந்தரம் பெரிய கொம்பரைப் பற்றிக்கொண்டான் என்று சிலரும், கிழவர் எப்படிப் பையனுக்கு எளியரானார்! என்று சிலரும் பேசினர். பொறாமையுற்றோர் கதைகள் பல. ஒருநாள் சுவாமிநாத பண்டிதர், தணிகாசல முதலியாரைக் கண்டு, கலியாணசுந்தரத்துக்கு இலக்கிய இலக்கணம் போதிக்கலாம்; சாத்திரம் போதித்தலாகாது; அவன் பின்னே சாத்திரத்தை நாசஞ் செய்வான்; கண்ட சாதியார்க்குப் போதிப்பான்; அவன் சீர்திருத்த உள்ள முடையவன். அது வயதில் தாண்டவம் புரியும் என்று கோள்மூட்டினராம். இச்செய்தி அஷ்டாவதானம் - பூவை - கலியாணசுந்தர முதலியார் வாயிலாக வெளிவந்தது. தணிகாசல முதலியார் தம்மைப் பண்டிதர் கண்டதையும், பேசி யதையும் என்னிடஞ் சொல்லவே இல்லை. கிழவர் வழக்கம் போலப் பாடம் நடாத்தி வந்தார். ‘திருவருட் பயன் முற்றுப் பெற்றது. சிவப்பிரகாசம் தொடங்கப்பட்டது. சிவப்பிரகாசப் பாடத்தில் ïடையிடையேbபருங்கிழவர்,áவஞானáத்தியார்,áவஞானபோதம்Kதலியüல்களின்rரத்தைப்ãழிந்துãழிந்துjருவர். உபநிடதம், பிரம சூத்திரம், பாடியங்கள் அவர் வாயில் புரளும். மயிலைப் பெரியாரிடத்தில் சிவப்பிரகாசம் ஒன்று கேட்டால் போதும். மற்றப் பதின்மூன்றும் தாமே விளங்கிவிடும். சிவப்பிரகாசம் முடிந்தது. சித்தியார் பரபக்கம் போதிக்கப்பெற்றது. சுபக்கத்தை யானே பயின்று கொள்கிறேன்; இடையிடைத் தோன்றும் ஐயப்பாடுகளைத் தெளிவித்தல் போதும்; சிவஞானபோதத்துக்கு வழிகாட்டல் வேண்டும் என்று முறையிட்டேன். முதலியார் அதற்கு இசைந்து சிவஞான போதப் பாடந் துவங்கினர். மிக விரைவில் அப்பாடம் முடிந்தது. எனக்கு வடமொழி பயிற்றுவிக்கப் பெரியார் முயன்றார். அவர்தம் முயற்சி முற்றும் நிறைவேறவில்லை. ஒரோ வழியில் நிறைவேறியது. கிரந்தம் சிறிதே கற்றேன். கிழவர் குடும்பத்தில் ஒருவிதக் கலக்கம் நுழைந்தது. அஃது எனது வடமொழிப் பயிற்சிக்கு இடர் விளைத்தது. அக்கலக்கத்தை உணர்ந்து யானே ஒதுங்கிவிட்டேன்; இடையிடைப் போய் ஆசிரியப் பெருந் தகையாரைக் கண்டு வணக்கஞ் செலுத்துவேன். அவரும் என்னை வாழ்த்தி அனுப்புவர். மயிலை முதலியாரிடம் சாத்திரம் பயின்றபோது என் மனம் எவ்வெவ் விலக்கியங்களை நாடியது? சிந்தாமணியையும் பிரபுலிங்க லீலையையும் சிறப்பாக நாடியது. ஆங்காங்குற்ற ஐயங்களைக் கிழவர் முன்னிலையில் முறையிடுவேன்; முதலியார் விளக்கஞ் செய்வர். அவரது இலக்கிய போதனை இலக்கண மாகவே இருக்கும். இராயப்பேட்டையிலே சிதம்பர முதலியார் என்றொரு வர் இருந்தார். அவர் திருக்குறளில் வல்லவர். அதனால் அவரைத் திருக்குறள் சிதம்பர முதலியார் என்று இராயப்பேட்டை அழைத்தது. அவர்க்குப் பரிமேலழகரே தெய்வம். சிதம்பர முதலியார்க்குக் கதிரைவேற் பிள்ளையின் போக்குப் பிடிப்ப தில்லை. அதனால் அவரிடம் யான் அணுகாதிருந்தேன். பின்னே அவருடன் யான் நெருங்கிப் பழகினேன். ஒருநாள், திருக்குறள் முதலியாரைக் கண்டு, தங்களிடம் சங்க இலக்கியங் களைப் பயில விரும்புகிறேன் என்றேன். அவர், யானா சிரியன்? அப்பதவிக்கு யான் அருகனல்லன். nghjid¡F« vd¡F« v›tsî öu«? சேர்ந்து படிக்கலாம் என்றார். அப்படியே சேர்ந்து படித்தோம். முதலியார், சபாபதி நாவலர் இதற்கு இப்படிச் சொல்வர்; அதற்கு அப்படிச் சொல்வர் என்று இடை யிடையே நுட்பங்களை விளக்கிக் காட்டுவர். அவர் திரட்டி வைத்திருந்த குறிப்புக்கள் பல பேராசிரியர் போலத் துணை செய்யும். அந்நாளில் சுவாமி வேதாசலம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் குகானந்த நிலையத்துக்கு அடிக்கடி வருவர். அவரிடத்தில் ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெளிவடைவேன். சென்னைச் சென்ட் எப்பா உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் தேவப்பிரசாதம் பண்டிதர் எனக்குக் கெழுதகை நண்பராயினர். அவர் கிருஷ்ணபிள்ளையின் மாணாக்கருள் ஒருவர். அவரும் யானும் கம்ப ராமாயணம், வில்லிபாரதம் முதலிய நூல்களை ஆராய்ந்தோம். செங்கல்வராய நாயகர் தோட்டத்திலே சிவப்பிரகாச சுவாமி என்ற பெரியார் ஒருவர் எழுந்தருளியிருந்தார். ஒருமுறை அத்தோட்டத்திலே அவர் முன்னிலையில் ஜெ.எம். நல்லசாமி பிள்ளை தலைமையில் சைவசித்தாந்த சார்புப்படி அத்துவிதம் என்னும் பொருள்பற்றி யான் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வேற்பாட்டின்படி யான் எனது கடனாற்றினேன். முடிவில் நல்லசாமி பிள்ளை, சுவாமிகளை வணங்கி விடைபெற்றனர். யான் அவரை வணங்காமல் விடைபெற்றேன். வணங்காமை, வழியெல்லாம் என் மனத்தை வாட்டியது. வீடு சேர்ந்தேன். உணவு கொள்ள இயலவில்லை. சுற்றும் முற்றும் புலால் நாற்றம் வீசுவதுபோல் தோன்றியது. படுத்தேன். உறக்கம் வரவில்லை. பொழுது விடிந்தது. குளித்துக் கற்பூரம் சிறிது வாயிலடக்கிச் சுவாமிகளை அடைந்தேன்; வணங்கினேன். சுவாமிகள் புன்னகை யுடன், இது வருமென்று எனக்குத் தெரியும் என்று சொல்லிச் சிவஞான சித்தியாரை எடுத்து திறந்து, முதல் எட்டுச் சூத்திரங்கள் உம்மையும் எம்மையும் பிரிப்பன; இறுதிச் சூத்திரங்கள் நான்கும் இருவரையும் சேர்ப்பன. நேற்றுப் பிணக்கம்; இன்று இணக்கம் என்று அறிவு கொளுத்தினர். அத்துவிதத்தைப்பற்றி நீண்ட நேரம் உரையாடினோம். தமிழிலேயுள்ள வேதாந்த நூல்களை ஆராயுமாறு கட்டளை பிறந்தது. சுவாமிகளின் கட்டளைப் படி தமிழ் வேதாந்த நூல்களைப் பயின்றேன். சித்தாந்த ஆராய்ச்சி வேதாந்த ஆராய்ச்சிக்கும், இஃது அதற்கும் துணை செய்தலை அநுபவத்தில் கண்டேன். வடமொழி மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியார் எழுப்பிய வடமொழி வேட்கை தணியவில்லை; முற்றுந் தணிவித்துக் கொள்ளலும் இயலவில்லை. பொருள் முடை. ஏழை என் செய் வேன்! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை என்னும் பொய்யாமொழிப்படி கேட்டலிற் கருத்துச் செலுத்தினேன். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளைத் தமிழுலகம் நன்கறியும். அவர் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் ஒருங்குண்ட பெருமேகம். அவர் திருவல்லிக்கேணியில் வீற்றிருந்தஞான்று மாலையில் கடலோரஞ் செல்வர். அவருடன் யானுஞ் செல்வேன். உபநிடதக் கருத்துக்கள் சுவாமிகளால் விளக்கப்படும். அவ்விளக்கம் எனது வேட்கையை ஓரளவில் தணிவிப்பதாயிற்று. மருவூர் கணேச சாதிரியார் நடுப்பட்டணத்தில் சிவ கீதை சொல்வர்; சூளையில் நீலகண்ட பாடியஞ் சொல்வர்; வெவ்வேறிடங்களில் வெவ்வேறு நூல்கள் சொல்வர். அவ்வவ் விடத்துக்கு யான் செல்வேன். வான்மீகி இராமாயணம், வியாச பாரதம் தக்கவரால் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் என்னைக் காணலாம். பகவத்கீதை பலரிடங் கேட்டேன்; ஆங்கில மொழிபெயர்ப்புக்களை ஆர்வத்துடன் படித்துப் பார்ப்பேன். யான் வெலி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாயிருந்த போது கிருஷ்ணமாச்சாரியர் என்பவர் தெலுங்கு பண்டிதராக இருந்தார். அவர் வடமொழிப் பண்டிதரைப் பார்க்கினும் அம் மொழியில் வல்லவர். அவ்வறிஞர் ஓய்வு நேரங்களில் காளிதாசர் முதலியோர் கவிகளிலுள்ள நயங்களை எடுத்துக்காட்டி மகிழ்ச்சி யில் திளைப்பர். அதில் யானும் தோய்வேன். கடலங்குடி நடேச சாதிரியார் வடமொழி நூல் பல வற்றைத் தமிழில் தந்த பெரியார். அவர் மொழிபெயர்ப்பு நூல் களில் யான் படிவேன். சாதிரியார் தமிழுலகுய்யத் தந்த சங்கர பாடிய மொழிபெயர்ப்பு எனக்குப் புரிந்த துணையை யானே அறிவேன். எனது ஆர்வம் ஒரு மதிப்புரையாகப் பொங்கி வழிந்தது. வடமொழியிலுள்ள ஜைன சித்தாந்தங்களைக் கேட்க யான் நெடுந்தூரஞ் செல்வதில்லை. இராயப்பேட்டை - புதுப் பேட்டைத் தோட்டத் தெரு ஜைனர் உறைவிடங்களுள் ஒன்று. அஃது என் இருப்பிடத்துக்கு அருகே இருப்பது. அங்கே ஜைனக் கலைஞர் சிலருளர். அவருள் குறிக்கத் தக்கவர் பார்சுநாத நயினாரும், பேராசிரியர் சக்கர வர்த்தி நயினாருமாவர். அவரை யான் எப்பொழுது அணுகினும் அவர் தம் மத சித்தாந் தத்தை எடுத்துரைக்க விரைந்தே நிற்பர். பாலி தமிழிலே சில பௌத்த நூல்களுண்டு. அவைகளைப் படிக்கப் படிக்க மூல நூல்களை ஆராய்தல் வேண்டும் என்ற விருப்பம் எழாமற் போகாது. பௌத்த மூலங்கள் பாலி மொழி யில் படிந்துள்ளன; வடமொழியிலும் இறங்கியுள்ளன. பாலி மொழியின் வளம் நாட்டில் அருகியது. அம்மொழி சில பிக்ஷுக் களால் பயிலப்படுகிறது. பிக்ஷுக்களை எளிதில் பெறுதல் இய லுமோ? ஒரு பிக்ஷுவை இராயப்பேட்டை பெற்றது. அஃது என் பொருட்டே போலும்! இராயப்பேட்டையிலே சாக்கிய பௌத்த சங்கம் அயோத்திதா பண்டிதரால் நடத்தப்பட்டது. அச்சங்கத்தில் ஒரு பிக்ஷு வந்து சேர்ந்தார். அவர் இலங்கையர்; தமிழர். அவ ரால் திரிபிடகமும், வேறு நூல்களும் போதிக்கப்பட்டன. அவை களைக் கேட்கும் பேறு எனக்கு வாய்த்தது. அரபி திருக்குரான் பயில விருப்பம். அதை எப்படிப் பயில்வது? அரபி எங்கே? யான் எங்கே? என் விருப்பம் நிறைவேறாமற் போகவில்லை. என் விருப்பம் திருக்குரானை நேரே பயிலும் வழியில் நிறைவேறவில்லை. அது கேட்டல் வழியே ஒருவாறு நிறைவேறியது. யான் ஆயிரம் விளக்குப் பள்ளியில் ஆசிரியனா யிருந்தபோது இலாமானவர் ஒருவர் அப்துல்கரீம் என்பவர் அங்கே வருவர். அவர் பக்கத்தே போட் ஆபீஸில் தொழில் செய்பவர்; ஒரு மௌல்வியின் புதல்வர்; திருக்குரான் ஓதியவர். சாயங்காலத்தில் அவரும் யானும் ஒரு தோப்புக்குள் போவோம். அவர் திருக்குரானை வாசித்துத் தமிழில் பொருள் கூறுவர். யான் அதனைக் கேட்டு வருவேன். யான் வெலி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாயிருந்த ஞான்று, அரபி பண்டிதரிடத் திலும் திருக்குரானைப் பற்றிய ஆராய்ச்சி நிகழ்த்துவதுண்டு. பின்னே ஆங்கில மொழி பெயர்ப்பும், சில பகுதிகளின் தமிழ் மொழி பெயர்ப்பும் துணை செய்தன. ஆங்கிலம் ஆங்கில மொழியில் யான் புலமை பெறவில்லை. ஆங்கிலப் படிப்பு மெற்றிகுலேஷனிலேயே முட்டுப்பட்டது. எங்கள் கூட்டத்தில் சச்சிதானந்தம் பிள்ளை ஒருவரே கல்லூரி வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர். அவரும் யானும் ஸ்ரீபால சுப்பிரமணிய பக்தஜன சபையில் அடிக்கடி சந்திப்போம்; தத்துவ விசாரணை செய்வோம். அவர் தாம் பயின்ற மேல் நாட்டுத் தத்துவ நுட்பங்களைச் சொல்லி வருவர். அவ்வேளையில் எனக்குப் பள்ளி நினைப்புண்டாகும். பள்ளிக்குப் போகாமலும் பட்டம் பெறாமலும் மேல்நாட்டுக் கலைகளின் உள்ளக் கிடக்கைகளை ஏன் தெரிந்துகொள்ளலாகாது என்று எண்ணி எண்ணி ஆறுதல் அடைவேன். இலட்சுமி நரசு நாயுடுவும் சிங்காரவேல் செட்டியாரும் பௌத்த மதப் பிரசாரஞ் செய்வர். அதற்கு அரணாக அவரால் விஞ்ஞானக் கலைகள் போதிக்கப்படும். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கண்ட உண்மையையும், பிறர் கண்ட நுட்பங்களையும் அறிவுறுத்துந் தொண்டில் ஈடுபட்டார். அத் தொண்டு என்போன் றார்க்குப் பெரும் பயன் விளைத்தது. மற்ற விஞ்ஞானிகள் நிகழ்த்தும் சொற்பொழிவுகளைக் கேட்கவுஞ் செல்வேன். மதரா டைம் என்றோர் ஆங்கிலத் தினப் பதிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. அஃது இப்பொழுது மதரா மெயிலுடன் ஒன்றியுள்ளது. மதரா டைம் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் கிளின் பார்லோ என்பது. அவர் ஆங்கில இலக்கியப் பேரறிஞர். அவர் இலக்கிய வானில் ஒரு மதியெனத் திகழ்ந்தவர். அவ்வறிஞரால் ஷேக் பியர் கிளப் என்றொன்று காணப்பட்டது. அதில் ஆங்கில அறிஞரும் இந்திய அறிஞரும் ஷேக்பியர், மில்டன், வோர்ட் வொர்த், ஷெல்லி, கீட், பைரன், கூல்ரிட்ஜ், டென்னிஸன் முதலிய வான்முகில்கள் பொழிந்த பாக்கடல்களைக் கடைவர். அமிழ்தம் எழும். அதை யான் செரிக்கும் அளவில் பருகுவேன். அஃது ஊனுக்கு உரமூட்டும்; உயிருக்கு இன்பூட்டும். பச்சையப்பன் கல்லூரியில் முன் பின்னாக இருவர் பிரின்ஸிபாலராக வந்தனர். ஒருவர் ரோலோ என்பவர்; மற் றொருவர் ரென் என்பவர். இலக்கியக் கழகங்களில் ரோலோ கவிகளின் உள்ளத்தைக் காட்டுவர்; ரென் ஷெல்லியைப்பற்றி அடிக்கடி பேசுவர். இவர் ஷெல்லியாவர்; கேட்பவரும் ஷெல்லி யாவர். ரோலோவின் அன்புப் பேச்சும், ரென்னின் இன்பப் பேச்சும் கவியுலகில் எனக்கொரு புதுக்கண்ணைத் திறந்தன. கீதாஞ்சலியைப் படித்துப் படித்துப் பார்ப்பன்; அதில் வல்லவரிடம் நெருங்கி நெருங்கிப் பழகுவன். ஸர்.டி.சதாசிவ ஐயர் நட்புப்பெற்ற பின்னை தியோசாபிகல் சங்க அறிஞரின் அன்புக்கு உரியவனானேன். அச்சங்கத் தலைவராயிருந்த அன்னிபெஸண்ட் அம்மையார் பல கலை வல்லவர். அவரைக் கலைமகள் என்று டாக்டர் சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட பேரறிஞர் பலரும் போற்றுவர். அவ்வம்மையார் சொற்பெருக் கில் யான் ஒருமுறையா மூழ்கினேன்? பலமுறை மூழ்கினேன். அவர்தம் எழுத்து எனது வாழ்வுக்குப் புரிந்த நலத்தை என் உள்ளம் அறியும். ஆங்கில மொழியில் புலமையோ நாவன்மையோ பெறுதல் வேண்டுமென்று யான் திரிந்தேனில்லை; அலைந்தே னில்லை. வெறும் மொழிப் புலமை எனக்கு எற்றுக்கு? மேல் நாட்டுக் கலைகளின் நுண்மைகளை உணரல் வேண்டுமென்ற அவா என்னைத் திரியச் செய்தது; அலையச் செய்தது. எனது ஆங்கிலப் பயிற்சி மொழி பெயர்ப்புக்குப் பயன்படுவதாயிற்று. தமிழ் தெரியாதாரிடம் எளிய ஆங்கிலம் பேசுவேன்; சமயம் நேர்ந்துழி ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவேன்; அவ்வேளையில் ஆங்கிலம் வல்லார் எவரேனும்வரின், அவரிடம் கடிதத்தை ஒப்படைப்பேன். பள்ளி விடுத்த பின்னர் மொழி நோக்குடன் எந்த ஆங்கில நூலையும் யான் படித்ததில்லை; எனது நோக்கம் பொருண்மையிலேயே படியும். ஓவியம் காவியம் மட்டுங் கலையன்று; ஓவியமும் கலையே. இரண்டுங் கருத்தில் ஒன்றே; தோற்றத்தில் வேறுபோல் விளங்கும். இளமையில் முதல் முதல் என் உணர்வு ஒவியத்தில் படிந்த இடம் மல்லை (மகாபலிபுரம்). ஒருமுறை மேல்நாட்டுப் பாதிரிமாருடன் யான் மல்லைக்குச் சென்றேன். ஒரு காச் அம்மையார் ஓவிய யானையின் அருகே நின்றார். அவர் நெஞ்சம் ஓவியத்தில் ஒன்றியது. அம்மையார் அப்படி இப்படி அசைந்தாரில்லை. அக்காட்சி என்னையுங் கவர்ந்தது. என் கருத்தில் ஓவிய விதை விழுந்தது. திரும்பிய போது அவ்வம்மையார் ஒவிய மாண்புகளை ஓதிவந்தனர். அன்றுமுதல் யான் ஓவியப் பித்தனானேன். நமது நாட்டுக் கோயில்கள் பெரும்பெரும் ஓவியக் கூடங்கள். அக்கோயில்கட்கு ஏகும்போதெல்லாம் ஓவியங்களை நோக்கி - உற்றுநோக்கி நிற்பேன்; அமர்ந்து அவைகளை உன்னு வேன். ஓவியம் உள்ளத்தில் நின்று தன் கலையை விரித்து விளங்கச் செய்யும். ஓவியம் புரியும் நலம் பெரிது. யான் எந்நூல் எழுதினும் அதில் ஓவியக்கலையை எப்படியாவது நுழைப்பேன். சிறப்பாக முருகன் அல்லது அழகு, தமிழ்நாடும் நம்மாழ் வாரும், உள்ளொளி முதலிய நூல்களில் ஓவியத் திறங்களை ஒல்லும்வகை உலவ வைத்துள்ளேன். புலன்களை ஒன்றவைக்கும் பேராற்றல் ஓவியத்திலிருப்பதையான் அனுபவத்தில் உணர்ந் தேன். வீடுதோறும் தெருவு தோறும் - நாடு தோறும் - ஓவியக் கல்வி பெருகி நின்றால், உலகம் அமைதி இன்பத்தில் திளைத்தல் ஒரு தலை. யான் சில ஓவியப்புலவரைக் கண்டுள்ளேன். அவருள் இங்கே குறிக்கத் தக்கவர், தை.ஆ. கனகசபாபதி முதலியார். அவர்தம் ஒவிய நிலையத்துக்கு யான் முதல் முதல் சென்றபோது, ஆங்கு இரண்டு ஓவியம் பொலிதல் கண்டேன்; என் புலன்க ளெல்லாம் கண்ணிலேயே நிலவின. காரணம் என்ன? வெறும் புறத்தோற்றத்தை மட்டும் உணர்த்துவது ஓவிய மாகாது. ஓவியம் அகநிலையையும் உணர்த்துவதாயிருத்தல் வேண்டும். அறிஞர் கனகசபாபதியினின்றும் முகிழ்த்த இரண்டு ஓவியமும் காந்தி - சற்குணரை என் உள்ளத்தில் நிறுத்தின. காந்தி - சற்குணரின் புறமும் அகமும், அறிவும், கலையும் ஓவியங் களாய் மலர்ந்துள்ளதை உணர்ந்தேன். அவ்வுணர்வை நவசக்தியில் (5-6-1936) எழுத்தில் இறக்க முயன்றேன். அம்முயற்சி வருமாறு:- * * * திரு. தை. ஆ. கனகசபாபதி முதலியார் என்பவர் ஓர் ஓவியர். அவர் ஓவியத் துறையில் கைபோய திரு. தை. ஆறுமுக முதலியாரின் புதல்வர்; தமிழ்ப்பெரும் புலவர்; சென்னை ஹிந்து தியலாஜிகல் ஹைகூலில் தலைமைத் தமிழாசிரியராயிருந்தவர். வடமொழியிலும் ஆங்கிலத்திலும் அவர்க்குப் பயிற்சியுண்டு. காவியங்களின் உறவு திரு. முதலியார்க்கு அதிகம். திரு. கனகசபாபதி முதலியார் காவியப் பயிற்சியளவில் நின்றாரில்லை. அவர் ஓவியப் பயிற்சியிலுங் கருத்துச் செலுத்தினார். தந்தையாரிடம் அவர் ஓவியக்கலை பயின்றார். அத்துறையிலும் அவர் வல்லவரானார். இப்பொழுது திரு. முதலியார், சென்னை - பிரம்பூர் பாரக் - குயப்பேட்டை- வேங்கடாத்திரி நாயகர் தெரு 6வது எண்ணுள்ள இல்லத்தில் - ஓர் ஓவிய நிலையங் கண்டு, உருவச் சிலை அமைக்கும் முயற்சியில் தலைப் பட்டுள்ளார். இந்நிலையம் போதரும் பேறு ஒருபோது எனக்குக் கிடைத்தது. அங்கே திரு. கனகசபாபதி முதலியார் வடித்துள்ள உருவச்சிலைகள் காட்சி வழங்கின. முதலில் காந்தியடிகள் திருமுகம் என் நெஞ்சைக் கவர்ந்தது. புத்திரிபாய் ஈன்ற காந்தியடிகள், இச்சாலையில் மோனத்துடன் வீற்றிருக்கிறாரோ என்று கருதுமாறு அடிகளின் ஓவிய முகம் செய்துவிட்டது. ஓவியத்தின் பொலிவு வியக்கத்தக்க தாயிருக்கிறது. பின்னே, தமிழ் அறிஞரும், சென்னை - கிருதுவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரும், ஆரவாரமின்றிச் சங்க நூல்களைப் போதித்துப் போதித்து நன் மாணாக்கரைப் படைத்துப் பெருக்கி வருபவரும், ஓவியர்- கனகசபாபதி முதலியாரின் ஆசிரியரும், எனது கெழுதகை நண்பரும் ஆகிய திரு. எ.டி. சற்குணர், பி.ஏ. காட்சி தந்தார். அவர்தம் படிமத்தில் எனதுள்ளம் படிந்தது. ஓவியத்தில் வல்லுநர் பலருளர். அவருள் ஒருவர் கனகசபாபதி முதலியார் என்று கூறுமளவில் நிற்க என் மனம் எழவில்லை. அவரது காவிய ஞானம் நினைவிற்கு வருகிறது. திரு. முதலியாரது ஓவியம் அவரது காவிய நெஞ்சினின்றும் எழுவது. இந்நுட்பம் அவர் அமைத்துள்ள உருவங்களை நேரே பார்த்து, அவைகளில் ஒன்றுவோர்க்கு இனிது புலனாகும். காவியமற்ற ஓவியம் வெற்றுருவமேயாகும். காவியமும் ஓவியமும் வல்ல ஒருவரிடத்திருந்து பிறக்கும் உருவத்தில், உருவத்தோடு உயிர்ப் பண்புகளும் விராவி அமையும். திரு. முதலியார் ஓவியத்தில் வெற்றுருவம் மட்டும் நிற்கவில்லை. அதனுடன் பண்பாகிய உயிரும் பொலிகிறது. இச்சிறப்பு, திரு. முதலியார் ஓவியத்தில் அமைந் திருத்தல் ஈண்டுக் குறிக்கத்தக்கது. காந்தியடிகள் பன்னெடுங்காலம் பொறுமையில் உறைந்து உறைந்து நின்றமையால், அவர்தங் கருவிகரணங்களெல்லாம் சாந்த மயமாயின. அவர் சாந்தமே ஆயினர்; சாந்தம் அவராயிற்று. அச்சாந்தம் திரு. முதலியார் ஈன்ற காந்தியடிகளது ஓவியத் திருமுகத்தில் திகழ்கிறது. திரு. சற்குணர் நெஞ்சம் தமிழில் ஊறி ஊறி, அது தமிழ் வீரஞ் செறிந்ததாயிற்று. நெஞ்சம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வடிவமு மாதல் இயல்பு. திரு. சற்குணருடன் நெருங்கிப் பழகினால், தமிழ் வீரம் அவராக உருக்கொண்டது என்பது நனி விளங்கும். அத்தமிழ் வீரம் திரு. கனக சபாபதி முதலியார் அமைத்த திரு. சற்குணம் படிவத்தில் நடம்புரிகிறது. இயல்பும் வடிவும் ஒன்றி முகிழ்க்கும் முறையில் உருவச் சிலை அமைக்கும் திறமை வாய்ந்த இளைஞர் - கனகசபாபதி முதலியார்க்கு எனது வாழ்த்து உரியதாக. அவர்க்கு ஊக்கமூட்ட வேண்டுவது அறிஞர் கடமை. * * * மற்றுமொரு நாள் கோ. வடிவேல் செட்டியார் ஓவியத்தைக் கண்டேன். அதற்கும் நவசக்தியில் (17-7-36) மதிப்புரை வரைந்தேன். அது வருமாறு: * * * திரு. செட்டியார் ஒரு தமிழ் ஞாயிறு. இத்தமிழ் ஞாயிற்றி னின்றும் இலக்கியம், இலக்கணம், தர்க்கம், வேதாந்தம், பொதுமை ஒழுக்கம், ஒப்புரவு முதலிய கதிர்கள் கான்றவண்ணமிருக்கும். ஒருவிதக் கலையில் பலர் புலவராகலாம். பலவிதக் கலைகளில் பலர் புலவராதல் அருமை. மிகச் சிலரே பலகலைப் புலவராவர். இப்பேறு, அறிஞர் வடிவேல் செட்டியார்க்கு வாய்த்தது. செட்டியார் பலகலைப் புலவர். கலைகள் செட்டியார் உள்ளத்தில் ஒன்றி, அவை அவர்தம் உள்ளமாய், ஊனாய், உடலாய்ப் பரிணமித்திருக்கின்றன. கலைகளே செட்டியார்; செட்டியாரே கலைகள். அன்பர் செட்டியாரை ஒரு பல்கலைக் கழகம் என்று கூறல் மிகையாகாது. கலைகளின் ஞானஒளி செட்டியார் முகத்தில் நடம்புரிகிறது. அது கலைஞர்க்கு விருந்தாகும். * * * பண்டிதர் - கனகசபாபதி முதலியாரின் ஓவிய நிலையத்தில் ஆசிரியர் வடிவேல் செட்டியார் சிலையுருவம் ஒரு பாங்கர் ஒளி செய்கிறது * * * செட்டியார் முகத்தில் நடம் புரியும் ஞான, ஒளி அவர்தம் ஓவிய உருவிலும் நடம்புரிகிறது. இவ்வாறு ஓவியம் அமைத்த பெருமை நண்பர் கனகசபாபதி முதலியாருடையது. வெறும் புறக்கோல அமைவு மட்டும் ஓவியமாகாது. வாழ்வின் உயிர்நாடி உருவில் முகிழ்த்து நிலவுமாறு அமையும் ஒன்றே ஓவியமாகும். இம்முறையில் ஒவிய உருவம் வடிக்கவல்ல இளைஞர் கனகசபாபதி முதலியார்க்கு நீண்டநாளும், நோயற்றயாக்கையும், முயற்சியில் வெற்றியும் வழங்குமாறு எல்லாம்வல்ல இறைவனை வழுத்துகிறேன். இசை என் தந்தையார் இசைப்புலவர். அவர் காலத்தில் இசை பயிலும் வேட்கை எனக்கு எழவில்லை. அவர் மறைந்த பின்னரே அவ்வேட்கை எழுந்தது. இசை பயில ஒருவரிடஞ் சென்றேன். அவரது வழக்கவொழுக்கம் அவரை ஆசிரியராக ஏற்க என் மனத்தை இசைவிக்கவில்லை. வேறு ஒருவரை அடைந்தேன். அவரும் முன்னவர்க்கு அண்ணாராகவே விளங்கினார். இன் னொருவரை அணுகினேன். அவரும் முன்னவராகவே காணப் பட்டார். இசைப் பயிற்சியில் எழுந்த வேட்கை வீழ்ந்தது. ஆனால் இசையில் வெறுப்புத் தோன்றவில்லை. இயற்கையும் இறையும் இசை வண்ணமாயிருக்கும்போது, என் உள்ளம் எப்படி இசையை வெறுப்பதாகும்? இசைக்குச் செவிசாய்ப்பதில் எனக்குத் தணியா வேட்கையுண்டு. இயற்கை இசையில் என் மனம் மூழ்கும். அதில் யான் யோகியாவேன். இசையின் மாண்பைப்பற்றிக் கூட்டங்களில் பேசுவேன்; நூல்களில் எழுது வேன். என் நூல்கள் பலவற்றில் இசை மணங் கமழும்; முருகன் அல்லது அழகில் சிறந்து கமழும். என் வாழ்க்கை பற்பல இசைவாணரைக் கண்டது. அவருள் இங்கே எவரைக் குறிப்பேன்; எவரைக் குறியாது விடு வேன்! பிள்ளைமையில் சரப சாதிரியாரின் குழலோசையைக் கேட்கும்பேற்றை எனது காது பெற்றது. கண்ணன் குழலையும் ஆனாயர் குழலையும் காவியங்கள் வாயிலாக என் செவிமடுக்கிறது. குழலமுதை என் செவி பருகிற்று. சாதிரியார் குழல், அமுதம்- மனத்தமுதம். திருச்செந்தூர் சண்முகவடிவின் இசை அரங்கம் சென்னையில் எங்குக் கூடினாலும் அங்கே யான் செல்வேன். அவ்வம்மையார் பொருளுணர்ந்து பாடுவது எனக்கு இன்பூட்டும். காஞ்சிச் செல்வம் நைனாபிள்ளை என்னும் சுப்பிரமணியம் பிள்ளையின் இசை இன்பத்தை வருணித்துக்கூற யான் அருக னல்லன். அவர் தமிழ்நாட்டில் ஓர் இசை ஞாயிறெனத் திகழ்ந் தவர். காஞ்சி மகாநாடு முடிந்த இரண்டாம் நாள் சுப்பிரமணிய முகில் பொழிந்த இசைமழையில் யான் மூழ்கியதும், அவ் வின்பத்தைக் குறித்து யான் பேசியதும் நினைவுக்கு வருகின்றன. கீர்த்தனை இசையைக் கேட்பதினுந் தேவாரப்பண் கேட் பதில் எனக்கு வேட்கை அதிகம். காரணம் பலபடக் கூறுதல் கூடும். இந்நூலில் விரிவு எற்றுக்கு என்று என் மனம் எண்ணுகிறது. தேவாரப் பொருண்மை முற்காலக் கீர்த்தனைகளிலேயே அமைய வில்லை; இக்காலக் கீர்த்தனைகளில் எங்ஙனம் அமையும்? ஞானசம்பந்தரில் இயல் இசை நாடகம் உண்டு என்று வழிவழியே சொல்லப்பட்டு வருகிறது. அச்சொல் வாழ்க்கை யாகி வளர்கிறதா என்பது கேள்வி. குருட்டு மாடுகள் உழுத வழியே உழுது செல்வது இயல்பன்றோ? இசையும் நாடகமும் பெருகிவரும் இந்நாளில் அக்கண்களுடையார் ஞானசம்பந்தர் தமிழை நோக்கக் கடமைப்படல் வேண்டும். இதற்கு இயற்றமிழ்ப் புலவோர் துணையும் தேவை. ஞானசம்பந்தர் தமிழை யான் பல கண்கொண்டு ஆராய்ந்தேன். அத்தமிழில் பாடலும் ஆடலும் கெழுமியிருத்தல் வெள்ளிடை மலையென விளங்குகிறது. என் போன்றார்க்கு விளங்குவதால் என்ன பயன்? அவ்விளக்கம் இசைப் புலவோர்க்கும் நாடகப் புலவோர்க்கும் உண்டாதல் வேண்டும். யான் இளமையில் இசையையும் பயின்றேனில்லை; நாடகத்தையும் பயின்றேனில்லை. யான் முடவன்; எனக்குக் கொம்புத் தேன் புலனாகிறது. யான் என்ன செய்வேன்? ஞான சம்பந்தர் தமிழ், பாடல் - ஆடல் - அரங்கேறும் நாளே, தமிழ் நாட்டின் மறுபிறப்பு நாளாகும். அதுவே தமிழ் நாட்டின் புதுயுகமாகும். தேவாரப் பண் முழக்குவோர் பலரை யான் பார்த்திருக் கிறேன். அவருள் இப்பொழுது என் முன்னே நிற்பவர் திரு நெல்வேலி சுந்தர மூர்த்தி ஓதுவார். அவர் தேவாரத்தை இக் கால இசைகளில் அமைத்துப் பாடிவந்தனர். அவர் பாட்டை யான் பலமுறை கேட்டுள்ளேன். 1940-ம் ஆண்டில் மயிலத்தில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில் கூடிய சைவர் மகா நாட்டிலே சுந்தரமூர்த்தி ஓதுவார் தேவார விருந்தளித்தார். ஏழிசையாய் இசைப் பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான் செய்யுந் துரிசுகளுக்கு உடனாகி * * * என்ற சுந்தரர் தமிழை இசைத்தபோது, ஓதுவார் உள்ளம் அதில் ஒன்றியது. அப்பாட்டிலே கூட்டம் திளைத்தது; மலை மயங்கியது. மரஞ் செடி கொடிகளும் மயங்கின. ஓதுவாரை ஓர் ஆனாயராக் கியது சுந்தரர் பண் என்று சொல்கிறேன். தேவாரப் பண்ணின் திறத்தை யான் அன்று நன்கு உணர்ந் தேன். அப்பண் தமிழர் வாழ்க்கை யாகுங் காலம் மீண்டும் வருமா என்று யான் எண்ணலானேன். சேந்தமங்கலத்திலே ஞானியார் சுவாமிகள் தலைமை யிலே பார்க்கவ குல மகாநாடு 1925ஆம் ஆண்டிலே கூடியது. அங்கே பேரூர் ஞானப்பூங்கோதை அம்மையாரால் அவிநாசி புராணம் சொல்லப்பட்டது. இடையில், நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரை யெல்லாம்பிச்ச தேற்றும் பெருந்துறை அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே (யாய் தெரிய அரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே. என்ற மணிவாசகத்தைச் சகோதரியார் பாடினார். அவ் வாசகம் இக்கால இசை அணிபெற்று வெளிவந்தது. கரணங்க ளெல்லாம் ஓய்வு பெற்றன. அவிநாசியப்பா - அவிநாசியப்பா என்ற இசையொலி சபையிலே சிவம் பெருக்கியது. அந்தோ! இனிய திருவாசகம் பெற்ற தமிழ்நாட்டிலா கரடுமுரடுகள் புகுந்தன என்று என் மனம் சிந்தித்தது. என் தமையனாரின் மூத்த புதல்வி மங்கையர்க்கரசியின் திருமணத்திலே பாலசரவதியின் ஆடல் நடந்தது. அவ்வாட லில் ஞானசம்பந்தர் ஆடல் நெறி நுழைந்தால் பொன்மலர் நாற்ற முடைத்தாகுமே என்று என் நெஞ்சம் நினைந்தது. சங்கு சுப்பிரமணியமும் யானும் இப்பொழுது ஒரே தெருவில் வதிகிறோம்; அடிக்கடி சந்தித்துப் பேசுகிறோம். எங்கள் பேச்சுப் பல துறையில் இறங்கும்; ஏறும். இசையைப் பற்றி நாங்கள் உரையாடுங்கால் தேவாரப் பண் இடையிடை தலைகாட்டும். சங்கின் சிந்தனை தேவாரப் பண்ணிலே செல் லும்; ஆழ்ந்து செல்லும். அது தமிழ் இசை ஆக்கத்துக்கென்று பொருளற்ற புதுப் புதுக் கீர்த்தனைகளை யாக்க முயல்வதை விட அம்முயற்சியைத் தேவாரப் பண்களிடைச் செலுத்தி னால் நற்பயன் விளையும் என்று சுப்பிரமணியத்தைக் கருதச் செய்து வருகிறது. அவர் தேவாரப் பண்களைப் பாடிப் பார்த்தே ஒருவித முடிவுக்கு வந்துள்ளனர். இசைப் புலவோர் நெஞ்சம் தேவாரப் பண்கள்மீது படிந்தால் தமிழிசை நன்முறையில் ஆக்கம் பெறுமென்று சங்கு சுப்பிரமணியம் கருதுகிறார். சுப்பிரமணியம் பாடக்கேட்கும் எனக்கும் ஒருவித உணர்வு தோன்றுகிறது. தேவாரப் பண்ணைத் தற்கால இசையுலகில் ஏற்றத் தக்க இயக்கம் இப்பொழுது தேவை என்று சொல்லக் கடமைப்படுகிறேன். நாடகம் நாடகம் இன்றியமையாதது. அக்கல்வி விழுமியதே. ஆனால் நாடகமேடை நிறையுடையதாதல் வேண்டுமென்பது எனது உள்ளக்கிடக்கை. யான் மாணாக்கனாயிருந்த போது சில நாட கங்களை என் கண் கண்டதுண்டு. பின்னே அவ்வுலகில் என் நாட்டம் விழுந்ததே இல்லை. சென்னை நகரத்தில் வாழும் யான்- பத்திரிகாசிரியனாயிருந்த யான் - சினிமாவுக்குச் சென்றதே இல்லை என்றால் உலகம் வியப்பேயுறும். உயிரனைய நண்பர் சிலர் என்னை வலியுறுத்தியும் யான் அக்காட்சிக்குச் செல்ல ஒருப்பட்டதில்லை. எனக்குக் கிடைக்கும் இலவசச் சீட்டுகள் மற்றவர்க்கே பயன்படும். நாடகக் கலையிலே எனக்கு வெறுப்புத் தோன்றவில்லை. அக்கலை நன்முறையில் வளரல் வேண்டுமென் பது எனது விருப்பம். நாடகம் என்ற பெயரால் கலை கொலை யாதல் நன்றோ? நாகரிகம் நாசமாதல் நன்றோ? ஒழுக்கம் ஒடுக்கம் புகுதல் நன்றோ? வாழ்க்கை நாடகத்திலும், இயற்கை நாடகத்திலும், காவிய ஓவிய நாடகங்களிலும் யான் கருத்திருத்தி வருபவனானேன். மனமாற்றம் யான் கற்றன சில; கேட்டன சில. இரண்டும் எனக்குச் செல்வமாயின. பொருட்செல்வம் பெறாத எனக்குக் கல்விச் செல்வம் சிறிது வாய்த்தது. இச் செல்வத்தை யான் பெறா திருப்பனேல் என் வாழ்வு என்னவாகியிருக்கும்? கல்விச் செல்வம் என்னைத் தொண்டனாக்கிற்று; தமிழ்த் தொண்டனாக்கிற்று. யான் பெற்ற கல்விச்செல்வம் பல மொழிப்பொருள் களினின்றும் திரண்டது. பலமொழிக் கருத்துக்கள் என் உள்ளத் தில் ஊறாத முன்னர் எனக்குத் தமிழ்க் காவியங்கள் வழங்கிய காட்சி ஒருவிதம்; ஊறிய பின்னர் வழங்கிய காட்சி வேறுவிதம். இவ்வேற்றுமைக்கு ஈண்டொன்றை எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். பெரிய புராணத்துக்கு இளமையில் ஒரு குறிப்புரை கண்டேன்; அரசியல் உலகில் ஈடுபட்ட பின்னர் ஒரு குறிப்புரை கண்டேன். அதற்கும் இதற்கும் உற்றுள்ள வேற்றுமை வெள்ளிடை மலையென விளங்கா நிற்கிறது. ஆள் ஒருவன் வேற்றுமையுறு வானேன்? அக்கால மனோநிலை வேறு; இக்கால மனோநிலை வேறு. வேறுபட்ட மனோநிலை கருத்தில் வேற்றுமையுறுத்துவது இயல்பு. அருச்சுனன் ஒருவன். அவன் கீதை கேட்பதற்கு முன்னே எப்படியிருந்தான்? பின்னே எப்படியானான்? கல்வி கேள்வியாலும், சேர்க்கையாலும், இன்ன பிறவற்றாலும் மனோநிலை மாண்டு மாண்டு புத்துயிர் பெறும். ஒரே பிறவியில் மனிதன் எத்தனையோ முறை இறக்கிறான்; எத்தனையோ முறை பிறக்கிறான். இவ்விறப் பும் பிறப்பும் மனிதன் அறிவை விளக்கஞ் செய்தே செல்லும். இது வெறும் பேச்சன்று; கதையன்று; அநுபவம். ஆடல் நெறி - பாடல் நெறி முதலில் தேவாரமும் நாலாயிரமும் சைவ வைணவ நூல்க ளென்று எனக்குச் சொல்லப்பட்டன; எனக்கும் அவ்வாறே விளங்கின. பின்னே அவை நாளடைவில் கவிக்களஞ்சியங்களாகத் தோன்றின. நால்வர் - ஆழ்வார் அறிவுறுத்திய நெறி என்ன என்று இப்பொழுது எவரேனும் என்னை நோக்கிக் கேட்டால், அவர்க்கு யான் என்ன விடை பகர்வேன்? 1ஆடல் நெறி- பாடல் நெறி என்பேன். ஆடல் - பாடல் நெறியே தமிழ் நெறி; அதுவே இயற்கை நெறியுமாம். இயற்கைக் கல்வி காவியம் ஓவியம் முதலியவற்றில் உறவு கொண்டு, அவை களில் ஒன்றி ஒன்றி நிற்பவரை, அவைகள் தங்கட்கு முதலாக உள்ள ஒன்றனிடத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும். அம்முதல் எது? இயற்கை. இயற்கையை அறிவால் ஆராய்ந்து பார்த்தால் அதன் உள்ளுறையை உணர்தல் கூடும். உள்ளுறை எது? இறை. இறை உயிர். இயற்கை உடல். இறையற்ற இயற்கைக்கூறே கிடையாது. இறை, இயற்கையின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்து நிற்பது, அவ்வளவிலன்றி மேலுங் கடந்து தனித்து நிற்பது; எல்லாவற்றையுங் கடந்த இறையின் தனி நிலை வாக்கு மனத்துக்கு எட்டாதது. வாக்கு மனத்துக்கு எட்டாத ஒன்றை எப்படிப் பேசிக் காட்டுவது? எப்படி எழுதிக் காட்டுவது? இயற்கையை உடலாக்கொண்டு, தான் உயிராக நிற்கும் இறை நிலையை உன்ன உன்ன இறையின் கடந்த நிலையின் உண்மையை உணர்தல் கூடும். இயற்கையின் உயிராக உள்ள இறையை எவ் வாறு உன்னுவது? இயற்கை என்னும் உடல் வாயிலாகவே உன்னுதல் வேண்டும். வேறு வழியில்லை. உடலைக்கொண்டே உயிருண்மை நிறுவப்படுகிறது. உடலை விடுத்து உயிருண்மை நிறுவுதல் இயலாது. ஆதலின் இயற்கை வாயிலாக இறையை உணர முயல்வது அறிவுடைமையாகும். இறையை உணர்தற்கு இயற்கையை உன்னுதல் வேண்டும். உன்னுதலாவது தியானஞ்செய்வது. தியானக் கருவி இயற்கை. காவிய ஓவியங்களின் முதல் - மூலம் - இயற்கை. இயற்கையை அடைதற்கு அவைகள் ஏணிபோன்று துணைசெய்யும். காவிய ஓவியங்கள் இயற்கைப் படங்கள் - இயற்கைக் குழவிகள். இயற்கை யினின்றும் பிறந்த காவிய ஓவியங்களே இயற்கையை உணர்த்தும் கருவிகள் என்பது கருதற்பாலது. நாத மூலம் காலையிலே நீலக் கடலிலே இளஞ் செஞ்ஞாயிறு எழு கிறது. அது நீலத்தின்மீது தவழுங் காட்சியைத் தமிழன் தமிழில் இசைக்கிறான்; ஆரியன் ஆரியத்தில் ஓதுகிறான்; ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் பகர்கிறான்; மற்றவர் மற்ற மற்ற மொழிகளில் புகல்கிறார்; மூலம் ஒன்று; மொழி வேறு. வியாசர் கண்டதைச் சோக்ரதர் கண்டார்; வான்மீகி கண்டதை ஷேக்பியர் கண் டார்; காளிதாஸன் பார்த்ததைக் கம்பர் பார்த்தார்; சம்பந்தர் பார்த்ததை ஷெல்லி பார்த்தார்; சேக்கிழார் நோக்கியதை மில்டன் நோக்கினார்; சங்கரர் நோக்கியதைக் காண்ட் நோக்கி னார். என்ன வேற்றுமை ! எங்கே வேற்றுமை? எல்லார் மனமும் ஒன்றிலேயே தோய்ந்தது. மொழிகள் மட்டும் வேறு வேறாகத் தோன்றுகின்றன. ஆனால் அவைகளின் பிறப்பிடம் ஒன்றே. அது நாதம், நாதம். காரணம்; மொழி காரியம். காரியம் பலபடல் இயல்பு. தமிழே தெரியாத ஆங்கிலர் ஒருவர் யோகக் காட்சியால் திருமூலர் திருவாக்கின் பொருளை உணர்த்தியதை யான் பார்த்தேன்; அவர் கூறிய விளக்கத்தையுங் கேட்டேன். விரிவு எனது உள்ளொளி என்னும் நூலிற் காண்க. கழகம் காவிய ஒவியங்களோடு பழகினேன்; அவைகளில் படிந் தேன்; படிந்து படிந்து உழன்றேன்; பன்னெடுநாள் உழன்றேன்; உழல உழல அவைகள் என்ன செய்கின்றன? நன்றி செய்கின்றன. எவ்வழியில்? அவைகள் தங்கள் முதலாகிய இயற்கைக் கருவூலத் தில் எளியேனைப் பிடர் பிடித்துத் தள்ளுகின்றன. என்றுங் காணாத செல்வத்தை யான் காண்கிறேன். அங்கே கட்டில்லை; காவலில்லை. செல்வக்கட.ல்; கொள்ளக் கொள்ள வற்றாது; வரையாது. இயற்கை அன்னை தண்ணருள் பொழிகிறாள். அவள் கோலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவிய ஒவியமாகத் தோன்றுகிறது. ஞாயிறு, திங்கள், உடுக்கள், வானம், மலை, காடு, ஆறு, வயல், கடல், புழு, பூச்சி, பறவை, விலங்கு, மகள், மகன், குழந்தை முதலிய யாவும் காவிய ஓவியங்களெனப் பொலிகின் றன. இயற்கை யுலகே தொல்காப்பியமாய்த் தோன்றுகிறது. அகிலம் ஒரு பெருங் கழகமாகக் காணப்படுகிறது. அக்கழக மாணாக்கருள் யானும் ஒருவனானேன். அங்கே ஆசிரியன்மாரில்லை. இயற்கைக் கூறு ஒவ்வொன்றும் ஆசிரியத் தொண்டு செய்கிறது. இங்கே காவியமும் ஓவியமும் புறத்தே வேறுபாடு காட்டுகின்றன. அங்கே வேறுபட்ட காட்சியே கிடை யாது. எல்லாம் காவியம்; ஓவியம். இங்கே பள்ளியில் பலதிறப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அங்கும் பலதிறக் கலைகளிருக் கின்றன. யான் மாணாக்கன்; இயற்கைக் கழகத்தில் பயில்கிறேன். ஞாயிற்றை நோக்குகிறேன். ஐயங்கள் எழுகின்றன. அவைகளை எப்படிக் களைந்துகொள்வது? ஞாயிற்றையே நோக்கி, ஞாயிறே! நீ எழுவதும் மறைவதும் உண்மையா? காலையிலும் மாலையிலுஞ் சிவந்த கோலம் தாங்குவதென்னை? மற்ற வேளை களில் வேறு கோலம் தாங்குவதென்னை? உன்னிடத்தில் ஏழு நிறம் அமைவானேன்? எட்டு ஏன் அமையவில்லை? நீ எற்றுக்கு ஒளி கால்கிறாய்? ஒளி உன்னுடையதா? ãwUilajh? என்று கேட் பேன். எளிதில் விடைகள் கிடைப்பதில்லை. ஞாயிற்றை உன்னி உன்னி அதில் மூழ்கி ஒன்றுவேன். விடைகள் கிடைக்கும். வேனிற்காலம்; தென்றற்காற்று; கண் விழித்தேன். அண்ணாந்து பார்க்கிறேன்; நீலவானம்; முத்துக்கள் போன்று உடுக்கள்; வெண் திங்கள்; உழவு. ஆனந்தம். வானமே! நீல நிறத்தை எப்படிப் பெற்றாய்? அஃது உண்மையா? உருவெளியா? உன்னிடத்திலா உடுக்கள் உறைகின்றன? உடுக்களே! உங்கள் வரலாறென்ன? உங்களிடத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா? உங்களால் இம்மண்ணுலகுக்கு ஏதேனும் நலன் விளைகிறதா? எற்றுக்கு ஒளிர்கிறீர்கள்? உங்கள் ஒளி இயற்கையா? செயற் கையா? உங்கட்குப் பகல் பகைமையா ? வெண்திங்களே! நீ ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறாய்? ஏன் ஓரிடத்தில் நிற்பதில்லை? உன் நிலவு இன்பம் ஊட்டுவதென்னை? அதை நீ எப்படி அடைந்தாய்? பகலில் அந்நிலவை ஏன் பொழிவதில்லை? பகலில் நீ இருக்கிறாயா? இல்லையா? எங்கே மறைந்துகொள் கிறாய்? இவ்வினாக்கள் எழுகின்றன. அவைகளை எண்ணி எண்ணிப் பார்ப்பேன். எப்படியோ பதில்கள் வரும். கடற்கரை நண்ணுவேன். கடற்காவியத்தைக் காண்பேன். கடலே! நீ ஏன் பரந்து விரிந்து கிடக்கிறாய்? ஏன் ஆழியாய் இருக்கிறாய்? உன்னை அடைந்தால் ஏன் விழுங்குகிறாய்? உன் தரங்கம் ஏன் பாடுகிறது? நீ ஏன் உப்பை வைத்திருக்கிறாய்? கோடிக்கணக்கான உயிர்களை ஏன் அடக்கி நிற்கிறாய்? அவை கள் மூச்சு விடுகின்றனவா? அவைகள் ஒளி காற்றுப் பெறுகின்ற னவா? நீ பூமியினும் பெரிதா யிருப்பதென்னை, அதை விழுங்கவா? நீ நிலமாயிருந்தது உண்மையா? உண்மையானால் ஏன் நீரா னாய்? மீண்டும் நிலமாவையோ? உன்னருகே உலவினால் உட லில் உரம் ஏறுவதென்னை? உன்னிடத்தில் என்ன மருந்திருக் கிறது? இவைகளைக் கடல்கேட்டு முறை முறையே இறை இறுக்கும். வயல் வழியே செல்வேன். வெள்ளைக் கோவணம் அணிந்து வெள்ளைக் குட்டையைத் தலையில் சுற்றி உழவர்கள் பணிசெய் வது கருத்தை .ஈர்க்F«. அவர்களது விஞ்ஞானம் எனக்கு உதய மாகும். பலநிறப் பூக்கள் நகைபுரிந்து தங்கள் வரலாறுகளைச் சொல்லும்; பலதிறக் கொடிகள் தங்கள் நிலைகளைத் தெரி விக்கும். சோலையில் புகுவேன். மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும். ஆலமர நிழலில் அமர்வேன். ஆல், என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா என்னும். அரசு கண் ணிற்படும். யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன். என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள். காண் என்னும். வேம்பு என் நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன்; வா என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங் கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங் கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர் வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலுங் கீழும் பார்ப்பேன். சுற்று முற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். அமைதி பொருந்திய மனத்துடன் மலையை நோக்குவேன். என் அருமை மலையே! உன்னை அடைந்ததும் மனம் அமைதி யுறுவானேன்? உன் வரலாறென்னை? நீ எப்படி அமைந்தாய்? மக்கள் முதல் முதல் உன்னிடத்திலா தோன்றினார்கள்? உன்னிடத்தில் எப்படி அருவிகள் அணைந்தன? வண்டுகள் சூழ்ந்தன? மயில்கள் வந்தன? குயில்கள் கூடின? நீ இசை அரங்கா? மக்கள் உன்னை நாடி வரு வானேன்? உன்னிடம் வந்து உலவுங் காற்று ஏதேனும் தனி இயல்பு பெறுகிறதா? உன்மீது பொழியும் ஒளிக்கு ஏதேனும் தனிச் சிறப்புண்டா? என்று கேட்பேன். மலை எளிதில் வாய் திறக்குமோ? மலையை முன்னமுன்ன வாய்மை தவழும். பறவைகள் பாடுகின்றன; ஆடுகின்றன. பாம்புகள் நடமாடு கின்றன. விலங்குகள் உலவுகின்றன. வண்டுகாள்! உங்களில் பாட்டு எப்படி அமைந்தது, மயில்காள்! உங்களிடம் நடம் எங்ஙனம் புகுந்தது? குயில்காள்! நீங்கள் இனிய குரலை எங்கிருந்து பெற் றீர்கள்? பாம்பே! நல்ல பாம்பே! உன் படம் அழகாய் இருக் கிறதே? உன்னிடம் நஞ்சு இருப்பது உண்மையா? மானே! உன் விழியில் ஏன் மருட்சி திகழ்கிறது! புலியே! அருகே வா! உன்னைக் கண்டு உயிர்கள் ஏன் அஞ்சுகின்றன? இவைகளில் நெஞ்சம் ஒன்ற ஒன்ற பொருண்மை வெளியாகும். பருவநல்லாள் எதிர் தோன்றுகிறாள். நீ கார், கூதிர், முன் பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய அறுவகையாக ஏன் பிரிந்து நிற்கிறாய்? m§‡d« Ú ãÇahÉo‹ cyf« eil bgwhnjh? என்றதும், என்னை நினைப்பாயாக என்னும் ஒலி எழுகிறது. நினைக்க நினைக்க உண்மை உதிக்கும். மேகங்கள் உருண்டு திரண்டு ஓடி வருகின்றன. அவைகளைக் கண்டு, மேகங்களே! உங்கட்குச் சூல் எப்படி உண்டாகிறது? நீங்கள் ஏன் ஒன்றோடொன்று முட்டிக் கொள்கிறீர்கள்? மின்னு கிறீர்கள்? cUK»Ö®fŸ? என்று கேட்டதும், அவைகள் மழை பொழிகின்றன. மழை, நுட்பத்தை உணர்த்தும். பெண் உலகு காட்சி யளிக்கிறது. அளித்ததும், பெண் அணங்கே? இயற்கைக் கூறுகள் நீயாகி நிற்பதென்னை! அவைகள் எப்படி நீயாகப் பரிணமித்தன! இயற்கை அழகெல்லாம் உன் னிடத்தில் பொலிவதென்ன? நீ பெண்ணா? அழகா? c‹ghš jhŒik mikthnd‹? என்னும் ஐயப்பாடுகள் என்னுள் எழு கின்றன. பெண் தெய்வம் புன்னகை புரிகிறது. அந்நகை ஐயப் பாடுகளைக் களையும். பெண் தெய்வத்தின் அருகே அழகிய குழந்தை நிற்கிறது. அதை அணைந்து, கடவுள் நிலை உன்னிடத்தில் திகழ்கிற தென்று அறிஞர் கூறுவதன் நுட்பமென்னை என்று கேட்க வாயெடுத்ததும், அது சிறுகை நீட்டுகிறது. நீ என்னைப் போலாகிப் பார்; உண்மை விளங்கும் என்பது கை நீட்டியதன் பொருள் என்று கொள்வேன். தமிழ் நெறி இம்முறையில் இயற்கைக் கல்வி பெருகுகிறது. அக்கல்வி பெருகப் பெருக என்ன தெரிகிறது? இயற்கைக் கூறுகளெல்லாம் ஒன்றன் விரிவு என்பது தெரிகிறது. அதனால் யாதும் ஊரே யாவருங் கேளிர் என்னும் பொதுமை விளக்கமுறுகிறது. பொதுமை - அறம் - அந்தண்மை - எல்லாம் ஒன்றே. பொதுமை இயற்கை நெறி. இயற்கை நெறியே தமிழ் நெறி. இந்நெறியில் நின்றொழுகும் பேறு ஓரளவிலாதல் யான் அடைந்தமை குறித்து மகிழ்வெய்துகிறேன். அதைக் கூட்டியது எதுவோ அதை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன். தமிழ் நெறி என்பதைத் தமிழர்க்குரிய - தமிழ்நாட்டுக் குரிய நெறி என்று யான் கொள்கிறேனில்லை. அதை யான் பொது நெறியாக - அறமாக - அந்தண்மையாகவே கொள்கிறேன். தமிழ் நாகரிகம் மிகவுந் தொன்மை வாய்ந்தது; அந்நாக ரிகம் பண்பட்டது; தனது நிலைமையில் முழுமை எய்தியது. பண்பட்ட நாகரிகத்தின் அறிகுறி என்ன? அந்தண்மையே. அந் தண்மையற்ற நாகரிகம் நாகரிகமாகாது. திருவள்ளுவர் நாகரிகம் என்ற சொல்லைக் கண்ணோட்டத்தில் பெய்திருப்பது கருதற் பாலது. பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க - நாகரிகம் வேண்டுபவர் என வரூஉம் அவர்தம் வாய்மொழியை உற்று நோக்க நோக்க நாகரிகத்தின் இயல் இனிது விளங்கும். முதிர்ந்த பண்பட்ட நாகரிகத்தினின்றும் பொதுமை அறமே முகிழ்க்கும். பொதுமையே நாகரிகத்தின் அறிகுறி. நாகரிகத்திற் சிறந்த பழந்தமிழ் அறிஞர் தாங்கண்ட பொதுமையைத் தமது தாய் மொழியில் வெளியிட்டனர். பொதுமை அறமாகிய அந்தண்மை தமிழ்மொழி வாயிலாக வெளிவந்தமையால் அதைத் தமிழர்க்கே உரியதென்றும், தமிழ் நாட்டுக்கே உரியதென்றுங் கொள்வது அறமாகாது. இயற்கைத் தெய்வப் புலவர் யாண்டில்லை? எங்கும் இருக் கின்றனர். அவர்தம் உணர்வில் பொதுமை செறிவது இயல்பு. அவர் அவர் தாம் தாம் கண்ட பொதுமையைத் தம் தம் மொழி யிலே இறக்குகின்றனர். அதனால் அவரவர் கண்ட பொதுமை அவரவர் மொழி வழங்கும் நாடுகளுக்கே உரியதென்று கொள்வது பொதுமையைச் சிறைப்படுத்துவதாகும். திருவள்ளுவர் கொள்கை அவரது தாய்மொழி வாயிலாக வெளிவந்தது. அதனால் அவர் கொள்கை தமிழ்நாட்டவர்க்கே உரியது என்று சொல்வது நியாயமாகுமா? ஷெல்லியின் கருத்தை இங்கிலிஷ் நாட்டளவில் கட்டுதல் முறைமையாகுமா? அணித்தே ஒரு நூலுக்கு யான் அணிந்துரை புனைந்தேன். அந்நூல் யான் பெற்ற இன்பம் என்பது. அது தமிழறிஞர் மு. அருணாசலனாரால் யாக்கப்பட்டது. அவ்வணிந்துரையை, தமிழ் எது? மொழியா? அன்று; நாடா,? அன்று. பின்னை எது? வாழ்க்கை. தமிழ் வாழ்க்கை இயற்கையோடியைந்து ஒழுகுவது. இயற்கையோ டியைந்து ஒழுகுவோர் எவராயினுமாக. அவர் தமிழ் வாழ்க்கையினரே ஆவர். திருவள்ளுவர், ஷெல்லி, தாகூர் முதலியோர் தமிழ் வாழ்க்கையினர் என்று கூறல் மிகையாகாது என்று தோற்றுவாய் செய்துள்ளேன். ஆகவே, எனது தமிழ் நெறி, யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற கொள்கை யுடையது. அதுவே, பொதுமை - அறம் - அந்தண்மை - இயற்கை நெறி. இப்பொருளுக்கு எம்மொழிப் போர்வை யிட்டால் என்ன? வலிந்த முயற்சி இயற்கை நெறியில் நின்றொழுகல் வேண்டுமென்று யான் வலிந்து முயன்றதே இல்லை. அது தானே படிப்படியே கூடி வருகிறது. இயற்கை நெறி, ஒழுக்க வாழ்க்கையாகும். அவ் வாழ்க்கை அமைதிப் பெண்ணை மணஞ் செய்விக்கும். அம் மணம் குழந்தை மனத்தை ஈனும். குழந்தை மனத்தில் இயற்கை யின் உள்ளுறை புலனாகும். இயற்கையின் உள்ளுறையை விளக்கவல்லது இயற்கைக் கல்வி என்பது அநுபவத்தில் உணரத்தக்கது. அதற்குச் சொற் பெருக்கு வேண்டுவதில்லை. இயற்கைக் கல்வி உலகெங்கும் பெருகுதல் வேண்டுமென்பது எனது வேட்கை. 1ஏட்டுக் கல்வியை எத்துணைநாள் கட்டி அழுவது? ஏட்டுக் கல்வி என் செய்யும்? ஏட்டளவில் நின்று கொண்டிருக்கும். ஏட்டுக்கல்வி இயற்கைக் கல்வியாதல் வேண்டும். இதற்குரிய எண்ணம் தேவை. எண்ணம் என்ன செய்யாது? எல்லாஞ் செய்யும். இயற்கைக் கல்வி எவ் வுயிரும் பொது என்னும் உணர்வைப் பிறப்பிக்கும்; உணர்வு செயலாகும்; செயல் தொண்டாகும். இயற்கைக் கல்வி என்னைத் தொண்டனாக்கியது; தமிழ்த் தொண்டனாக்கியது. நூல்கள் யான் முதலில் பள்ளியில் படித்தேன்; பின்னே கல்வியில் புகுந்தேன்; அதற்குப் பின்னர் இயற்கைக் கல்வியில் படிந்தேன். இவைகட் கேற்றவண்ணம் அவ்வப்போது என்னால் இயற்றப் பெற்ற நூல்களின் நடையுங் கருத்தும் முறைமுறையே மருவ லாயின. யான் முதல் முதல் 1906இல் எழுதிய நூல் கதிரைவேற் பிள்ளை சரிதம். அஃது எழுதப்பட்டபோது யான் பெரிதும் சோமசுந்தர நாயகர் நூல்களையும் சபாபதி நாவலர் நூல்களை யும் பயின்று வந்தேன். முன்னவரின் வடமொழிப் பெய்வும், பின்னவரின் எதுகை மோனை இசைவும் என்னுள்ளத்தில் நின்று பரிணமித்தன. அப்பரிணாமத்தின் நடிப்பு, கதிரைவேற் பிள்ளை யின் சரிதத்தின் நடையாக அமைந்தது. கதிரைவேற் பிள்ளை சரிதம் எழுதுமாறு எனக்குக் கட்டளை யிட்டவர் சென்னைச் சிந்தாதிரிப்பேட்டை வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையார். யான் நூலை எழுதி அச்சபையாரிடம் ஒப்புவித்தேன். அவர் அதை அச்சுக் கூடத்துக்கு ஒப்புவித்தனர். அச்சுக்கூடம் அம்மை வார்த்தது. ஈழம் யீழமாயிற்று. சிரோமணி சிரோன்மணியாயிற்று. என் கோணற் கீற்றெழுத்துக்கள் விளங் காத இடங்களில் வெவ்வேறு சொற்கள் குடியேறின. அச்சுப் பிழை எவரும் பார்க்கவில்லை. பிழை திருத்தத்துக்கென்று அச்சுத் தாள்களை எனக்கு எவரும் அனுப்பவுமில்லை. பொறுப்புச் சபை யாருடையதென்று யான் கருதியிருந்தேன். நூல் மணற்சோறாயிற்று. அரங்கேற்ற நேரத்திலேயே யான் நூலைப் பார்த்தேன்; மகிழ்ச்சியுடன் திறந்தேன்; சிற்சில பகுதிகளைப் படித்தேன்; பிழை மலிவு என் நெஞ்சை எரித்தது. இளமை மனம் எப்படித் துடித்திருக்கும்? தலைமை வகித்த பாம்பன் சுவாமிகள் தேறு தலும் ஆறுதலுங் கூறினர். வெளியிடுவோர் கவலை ஈனம் என்றார் யாழ்ப்பாணம் வேற்பிள்ளை. இப்பொழுது எனக்கு அமைந்துள்ள நடையில் விரிந்த முறையில் வேறு ஒரு சரிதம் எழுதுமாறு சிலர் தூண்டுகிறார்; மற்றுஞ் சிலர் பழையதையே செப்பஞ் செய்து வெளியிடு மாறு சொல்கிறார். யான் இரண்டிலுந் தலைப்படாமல் காலங் கழித்து வருகிறேன். பின்னே (சஞ்சிகை சஞ்சிகையாக 1907 - 1910) பெரிய புராணத்துக்குக் குறிப்புரையும் வசனமும் வரைந்தேன். அப் பொழுது ஆறுமுக நாவலர் நூல்களுடன் பெரிதும் உறவாடிய காலம். அச்சமயத்திலும் எனக்குரிய நடையென்று ஒன்று பண்படவில்லை. பல்லாண்டு கடந்து மீண்டும் பெரியபுராணத் தொண்டில் 1934-ல் ஈடுபட்டேன். அப்பதிப்பு நடைக்கும் கருத்துக்கும், இப்பதிப்பு நடைக்கும் கருத்துக்கும் வேற்றுமை காணப்படும். இது குறித்து முன்னருங் கூறியுள்ளேன். பெரியபுராணம் முதற் பதிப்பு சஞ்சிகை சஞ்சிகையாக வெளிவந்தபோது என் பார்வைபெற்ற திருமந்திரப் பதிப் பொன்று வெளியாயிற்று. பட்டினத்துப் பிள்ளையார் பாடற்றிரட்டுக்குப் பொழிப் புரையும் விருத்தியும் வரைந்து தருமாறு சென்னைப் பூமகள் விலாச அச்சகத்தார் என்னைக் கேட்டனர். அவ்வாறே 1913இல் பொழிப்பும் விருத்தியும் வரைந்து தந்தேன். பல ஆண்டு கடந்து அப்பதிப்பு வெளிவந்தது. விவரம் அந்நூலின் முன்னுரையில் விளக்கியுள்ளேன். சங்கநூற் சொற்களும் சொற்றொடர்களும், பழைய உரையாசிரியர் சொற்களும் சொற்றொடர்களும் என்னிடத்தில் நடம் புரிந்த காலமுண்டு. அந்நாடகம் யான் நடித்த வேளையில் பெரு நூல் எழுதும் வாய்ப்பு எனக்கு நேரவில்லை. துண்டு வெளியீடுகளும், நன்றி அறிக்கைகளுமே பெரிதும் என்னால் எழுதப்பட்டன. 1917ஆம் ஆண்டில் பத்திரிகை உலகை யான் நண்ணிய போது அதற்கென்று ஒரு தனிநடை கொண்டேன். அதுவே எனக்குரிய நடையாய் என்னில் நிலைத்தது. அவ்வுலகில் புகுந்த பின்னரே பல உரைநடை நூல்கள் என்னால் இயற்றப்பட்டன; அவைகள் : தேசபக்தாமிர்தம் - 1919. மனித வாழ்க்கையும் காந்தியடி களும் - 1921, என் கடன் பணிசெய்த கிடப்பதே - 1921, நாயன்மார் திறம் - 1922, தமிழ் நாடும் நம்மாழ்வாரும் - 1923, முருகன் அல்லது அழகு - 1925, சைவத்தின் சமரசம் - 1925, பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை - 1927, தமிழ்த் தென்றல் - 1928, கடவுள் காட்சியும் தாயுமானாரும் - 1928, தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929, சைவத் திறவு - 1929, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து - 1929, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929, நினைப்பவர் மனம் - 1930, இமயமலை அல்லது தியானம் - 1931, காரைக்காலம்மையார் திருமுறை: குறிப்புரை - 1932, சமரச சன்மார்க்க போதம் - 1933, சமரச சன்மார்க்கத் திறவு - 1934, சமரச தீபம் - 1934, தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு - 1935, சித்தமார்க்கம் - 1935, சைவ சமய சாரம் - 1936, நாயன்மார் வரலாறு - 1937, முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938, திருக்குறள் விரிவுரை - 1939, இந்தியாவும் விடுதலையும் - 1940, உள்ளொளி - 1942. பாட்டு இளமையில் துண்டு துண்டாகச் சில பாடல்கள் எழுதி னேன். அவை, இயற்கைப் பாட்டு இன்னதென்று உணராத காலத்தில் இயற்றப்பட்டவை. அந்நாளில் சிலேடைகளிலும் சித்திரக் கவிகளிலும் என் நாட்டஞ் சென்றதுண்டு. அவை களெல்லாம் இப்பொழுது எங்குப் பறந்து போயினவோ தெரிய வில்லை. யானே வலிந்து பாட்டுத் தொண்டில் இறங்குவதில்லை. நிலைமை நேரும்போதே சில யாக்கப் புகுவது எனது வழக்கம். யாப்பு உலகில் யான் பழைய வழியிலேயே நடந்து வருகிறேன். மறுமலர்ச்சி உலகில் யான் இன்னும் இறங்கவில்லை; காலதேச வர்த்தமானம் என்ன செய்யுமோ அறிகிலேன். தமிழ்க்கண் திறக்கப் பெறாத சிலர் தமிழ்நெறியைக் கெடுத்து வருவதைக் காணும் போதெல்லாம் என் மனம் பதைக்கும். எனது பாட்டு நூல்களின் முன்னுரைகளில் எனது உள்ளக்கிடக்கையைக் காணலாம். முருகன் அல்லதுஅழகு என்ற நூலிலும், வேறு சில நூல்களி லும், பண்டிதை அசலாம்பிகை அம்மையார் பாடிய காந்தி புராணத்துக்கு யான் வரைந்த முன்னுரையிலும், தை. ஆ. கனக சபாபதி முதலியார் இயற்றிய திருமுருகாற்றுப்படை விரி வுரைக்கும், வேறு சிலவற்றிற்கும் யான் சூட்டிய அணிந்துரைகளி லும் பாட்டு இன்னது என்று என் கருத்தை வெளியிட்டுள்ளேன். யான் யாத்துள்ள பாக்களில் இதுகாலை வெளிவந்துள்ளவை; உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாட்டு - 1931. முருகன் அருள் வேட்டல் - 1932, திருமால் அருள் வேட்டல் - 1938, பொதுமை வேட்டல் 1942. இவை சமரச சன்மார்க்கத்துக்கென்று யாக்கப்பட்டவை. உமாபதி குருப்பிரகாச அச்சகம் தொடங்கப்பட்டபோது, ஓய்ந்த நேரத்தில் கடற்கரையில் திலகர் புராணம் பாடி வந்தேன். ஏறக்குறைய இருநூறு பாக்கள் முடிந்தன. பாக்களை அச்சுக்கூட மேசையில் சேமித்து வைத்தேன். ஒருநாள் மேசையைத் திறந்தபோது பாக்களைக் கண்டேனில்லை. அடக்குமுறை என்னை அணுகும் என்ற நோக்குடன் சம்பந்த முதலியாரால் பிரதிகள் கிழித்தெறியப்பட்டன என்று கேள்வியுற்றேன். விசா ரணையில் இன்னாரென்று ஏற்படவில்லை. கதை நீங்கள் ஏன் கதை நூல் எழுதல் கூடாது என்று என்னைச் சிலர் கேட்டு வந்தனர்; சில பத்திரிகைகளும் விண்ணப்பஞ் செய்துவந்தன. என் பிறப்பும் கதை; வளர்ப்புங் கதை; என் வாழ்க்கை ஒரு பெருங்கதை; யான் வாழும் உலகம் நீண்டகதை; எல்லாம் கதைகளே. இவைகளையொட்டி யான் எழுதும் நூல் களும் கதைகளே. யான் கதை நூல் எழுதாமலில்லையே என்று சொல்வேன். நாங்கள் சொல்வது இந்தக் கதையன்று: நாவல் என்று அன்பர்கள் கூறுவார்கள். உலகம், வாழ்க்கை முதலியவற்றைப் பண்டை மூதறிஞர் ஓவியமாகவுங் காவியமாகவுந் தந்தனர். நாளடைவில் ஓவியம் ஒதுங்கிற்று; அவ்விடத்தில் புகைப்படம் புகுந்தது. காவியம் அகன்றது; அங்கே நாவல் குடியேறிற்று. ஓவியமும் காவியமும் வாழ்க்கையினிடம் விடைபெற்றால் உலகம், என்ன ஆகும்? என்ன ஆகுமென்று கூறலாம்? சாக்கடை யாகுமென்று சுருங்கச் சொல்லலாம். இந்நாளில் மென்மை கல்வியில் நுழைந்துள்ளது. மென்மை ஓரளவில் துணை புரியும். அத்துணை, வாழ்க்கை நலத்துக்குப் போதாது. கல்வியாவது அறியாமையை நீக்கி அறிவைப் பண் படுத்துவது, மென்மைக் கல்வியால் அறியாமையைக் கல்லு தலும் இயலாது; அறிவைப் பண்படுத்தலும் இயலாது. மென்மைக் கல்வியே பெருகின் புறமன ஆசைப்பேய் குடும்பத்தையும் ஊரை யும் நாட்டையும் உலகையும் ஆட்சி புரிவதாகும். கல்வியில் வலிமை தேவை. வலிமைக் கல்வியே ஆழ்ந்த சிந்தனைக்கு இடந் தரும். கல்வி என்று நுனிப் புல் மேய்வதால் ஆழ்ந்த சிந்தனை எப்படி உண்டாகும்? ஆழ்ந்த சிந்தனை இல்லாத இடத்தில் மூர்க்கமே பெருகும். மூர்க்கத்தை ஒழிக்கவல்லது ஆழ்ந்த சிந்தனையே. ஆழ்ந்த சிந் தனைக்கு மெலிய கல்வி போதாது; வலிய கல்வி தேவை. சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவிலே ஒருமுறை தமிழ்ப் பண்டிதர் நமச்சிவாய முதலியார் தலைமையில் மணிமேகலை என்ற பொருள் பற்றிப் பேசி னேன். அப்பொழுது, ... சற்று முன்னே படமெடுத்தீர்கள்; அப்படக் குழுவில் யானும் இருக்கிறேன். யான் எவ்வண்ணம் இருக்கிறேன்? அப்படத்தில் எனது புறம் இருத்தல் உண்மை. ஆனால் அதில் எனது அகம் இறங்கி இருக்கிறதா? புகைப்படம் ஒரு நொடியில் எடுக்கப்படுகிறது. நொடிப்பொழுதில் அகம் இறங்குமோ? ஓவியன் ஓர் உருவம் எடுக்க எத்துணை நாள் முயல்கிறான்! எத்துணைநாள் அவ்வுருவுடன் ஒன்றுகிறான்! அவ்வொன்றல், உருவின் புறத்தையும் அகத்தையும் ஓவியத்தில் படியச் செய்கிறது, காவியமும் இங்ஙனே அமைகிறது. மணிமேகலைப் படம் இல்லையே என்று சிலர் வருந்து கிறார். ஏன் வருந்தல் வேண்டும்? மணிமேகலை, அவரது காவியத்தில் கோயில் கொண்டிருக்கிறார். அக் காவியத்தை மேற்போக்காகப் படித்தால் மணிமேகலை வடிவம் புலனாகாது. மணிமேகலையில் அழுந்தல்வேண்டும்; ஒன்றல் வேண்டும்; சமாதியாதல் வேண்டும். அப்பொழுதே மணிமேகலை வடிவம் பொருளாகும். மணிமேகலைப் புகைப்படம் இருந்தால் எளிதில் அவரைக் காணலாமே; எற்றுக்கு உழைப்பெடுத்துக் காவியத்தில் அழுந்தல் வேண்டும் என்று இக்காலம் நினைக்கும். புகைப்படம் புறக் கண்ணுக்குப் பொருளாகும் அளவில் பயன்படும்; புற மனம் ஒடுங்குதற்கும் அகமனம் எழுதற்கும் பயன்படாது. அகக்கண் மலர்தற்குக் காவியத்திலோ ஓவியத்திலோ ஆழ்தல் வேண்டும். ஆழ ஆழ அகமனம் ஆர்த்தெழும்; அகக்கண் விழிக்கும்; அகமனமே, சீலத்தின் உறையுளாகும். எளிய புகைப்படமும் நாவலும் புற மனத்தையும் ஒன்றச் செய்யா. அவை அக மனத்தை எவ்வாறு திறக்கும்? சீலத்தை எங்ஙனம் ஓம்பும்? அக மன மலர்ச்சிக்கும் சீலப்பேற்றிற்கும் ஆழ்ந்த சிந்தனை தேவை. சிறுமை நாவல் ஆழ்ந்த சிந்தனையை உண்டாக்குமோ? * * * என்ற கருத்துக்கள் மலியப் பேசினேன். நாவல் உலகில் நல்லன மிகச் சிலவே இருக்கும். அவை களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை. பொதுவாக நாவல் உலகம் வாழ்வைப் பண்படுத்தல் அரிது. நாவல் படியாதே என்று எனக்கு முதல் முதல் அறி வுறுத்தியவர் ரெவரண்ட் ஜி.ஜி. காக் என்பவர், பின்னர் அதன் மீது தனியே கருத்துச் செலுத்தும் வாய்ப்பை யான் பெற்ற தில்லை. மேல்நாட்டினின்றும் மணிகளும் வருகின்றன; குப்பை களும் வருகின்றன; நம் நாட்டில் மணிகள் பெரிதும் அணியாவ தில்லை; குப்பைகள் கோபுரமாகின்றன. நம் முன்னோர் கதை எழுதவில்லையோ? நிரம்ப எழுதி யிருக்கின்றனர். அவர் வெறுங் கதையை மட்டும் எழுதிச் சென்றா ரில்லை. அவர் கதையைக் காவியமாக்கினர்; ஓவியமாக்கினர். காவிய ஓவிய நுட்பம் விடுத்து வெறுங் கதையை மட்டும் படிப் போர் நாவல் படிப்பவரை ஒத்தவராவர். நமது நாட்டுப் புராணங்க ளெல்லாங் கதைகளே. அவைகள் காவிய ஓவியங்கொண்ட கதைகள். காவிய ஓவியக் கதைகளிலே என் கருத்துச் செல்லும். என் நூல்களில் யாண்டாயினும் காவிய ஓவியத் திறம் விளங்கியே தீரும். யானும் ஒரு கதை நூல் எழுதியுள்ளேன். அஃது எது? அது நாயன்மார் வரலாறு. பதிப்பும் முன்னுரையும் மேலே நூற்பெயர்களின் பின்னே குறிக்கப்பெற்ற ஆண்டு கள் முதற்பதிப்பை உணர்த்துவன. பின்னைப் பதிப்புக்களில் சில நூல்களைப் பெருக்கியுள்ளேன். நூல்களை யான் எழுதப் புகும்போதெல்லாம் ஏதேனும் தொல்லை விளையும். 1முன்னுரைகளில் விவரம் பார்க்கலாம். வேறு சில குறிப்புக்களையும் முன்னுரைகள் தெரிவிக்கும். எனது நூல்களின் முகவுரைகளையும், மற்றவர் நூற்களுக்கு யான் வரைந்துள்ள முகவுரைகளையும் ஒரு தனி நூலாக வெளி யிடுமாறு நண்பர் சிலர் எனக்கு முடங்கல் தீட்டினர்; சிலர் நேரிலுந் தமது விருப்பத்தை வெளியிட்டனர். நண்பர் விருப் பத்தை நிறைவு செய்யும் முயற்சியில் யான் இன்னும் தலைப் பட்டேனில்லை. நூற்றொண்டு யான் பலதிறத் தொண்டுகளில் ஈடுபட்டவன். அவசியம் நேரும்போது நூற்றொண்டிலும் இறங்குவன். பலவகைத் தொண்டுகளை விடுத்து நூற்றொண்டொன்றையே ஆற்று மாறு சிலர் சொல்வர். எனக்கும் அவ்வெண்ணம் சிற்சில சமயம் எழுவதுண்டு. மனம் என்னென்னவோ எண்ணும். அவ்வெண்ண மெல்லாம் எளிதில் செயலாகுமோ? காங்கிர பணி, தொழி லாளர் சேவை முதலிய தொண்டுகள் என் வாழ்க்கையில் புகுந்தன. இதற்கு யான் என் செய்தல் கூடும்! இன்னின்னார் வாழ்க்கையில் இன்னின்ன தொண்டுகள் இன்ன இன்ன வேளைகளில் நடை பெறுதல் வேண்டுமென்பது இயற்கை நியதியாயிருக்கும். அந் நுட்பம் மனிதருக்கு எப்படி விளங்கும்? என் வாழ்க்கையில் எவ் வளவு நூற்றொண்டு நிகழவேண்டுமோ அவ்வளவே நிகழும் போலும். நூலாசிரியர்க்கு முதலாவது அமைதி வேண்டும். அதற் குரிய வாய்ப்புகள் அமைதல் வேண்டும். எனக்கு அவ்வாய்ப்புகள் அமைந்தனவோ? இதற்கு எனது வாழ்க்கை நூல் பதிலிறுக்கும். யான் ஒரு தனி ஆள், என் தமையனார் குடும்பத்துக்கென்று சொந்த வீடு கிடையாது. நாங்கள் இராயப்பேட்டை நடுவண் வதிந்தபோது, குடும்பத்துக்கென்று ஒரு வீடும், அச்சுக்கூடத்துக் கென்று வேறொரு வீடும் வைத்திருந்தோம். பின்னே இராயப் பேட்டை - புதுப்பேட்டைக்குக் குடி புகுந்தபோது குடும்பத் துக்கும் அச்சுக்கூடத்துக்கும் ஒரே வீடு எடுக்கப்பட்டது. மேலே குடும்பம்; கீழே அச்சுக்கூடம். ஒரு சிற்றறையிலிருந்து யான் எழுத்துத் தொண்டாற்றும் பேறு பெற்றிருக்கிறேன். அவ்வறை யில் முருகப் பெருமான் விமானம் இருக்கிறது. காலைவேளை யில் பூசை நடைபெறும். சிற்றறையின் மற்ற மற்றப் பக்கங்களில் பெட்டி, பேழை, படுக்கை, மூட்டை முதலியன அடுக்கப்பட் டுள்ளன. அறையில் குழந்தைகளின் போக்குவரவு அதிகம். குழந்தைகளின் திருவிளையாடல்களை விளக்க வேண்டுவதில்லை. என்பால் பலதிறக் கூட்டம் பேசவரும். தொழிலாளர் வேலை நிறுத்தக் காலங்களில் வீட்டுப் பின்பக்கம் கடலாகும். அப்பகுதி யில் பசுமை வெளியும் வேப்ப மரமும் இல்லாவிடின் அல்லல் பெருகும். இன்னோரன்ன நெருக்குகளால் எனது நூற்றொண்டுக் குரிய காலம் பெரிதும் இரவாகியது. எனது நள்ளிருள் அலகை யாயிற்று. என் அறையில் ஒரு பெருந்திரு உலவும். அஃதென்ன? இடது பக்கத்திலே தென்னந் தோப்பும், மாவும், முருங்கையும், வானமும் முறையே பசுமையையும் நீலத்தையும் பலகணி வாயிலாகப் பொழியும். அப்பொழிவு என் கண்ணையுங் கருத்தையுங் கவரும். அக்காட்சி என் மனத்தில் அமைதிப் பெண்மையை அமர்த்தும். இரவில் உடுக்களின் மிளிர்வும் ஆறுதலளிக்கும். சில குறிப்பு என் நூல்களின் உள்ளுறை, பயன் முதலியவற்றைப் பற்றி இங்கே விரித்துக் கூறவேண்டுவதில்லை. அவைகளை ஒல்லும் வகை முன்னுரைகளில் சுருங்கச் சொல்லியுள்ளேன். சில நூல் களைப்பற்றி மட்டுஞ் சில குறிப்புக்கள் பொறிக்க விரும்புகிறேன். என்னுடைய நூல்களில் முதல் முதல் படிக்கத் தக்கது மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்பது. ஏன்? அதில் வாழ்க்கையுள்ள தாகலின் என்க. காந்தியம் மனித வாழ்க்கைக் கோர் இலக்கியமாக விளங்குவது. காந்தியத்தில் வாழ்க்கையின் நோக்கும் அடைவுமிருக்கின்றன. அவைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுவது மக்களின் முதற்கடமை. காந்தியத்தில் என் நெஞ்சம் ஈடுபட்டதுபோலத் தால் தாயியத்திலும் ஈடுபட்டது. காந்தியடிகளின் வாழ்க்கையின் வளத்துக்குத் தால்தாயின் வாழ்க்கையும் ஒளிகான்றது. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்பது போன்ற ஒரு நூல் தால்தாயியத்தைப்பற்றியும் எழுதல் வேண்டுமென்ற வேட்கை என்னுள்ளெழுந்தது. வேட்கையைத் தணித்துக்கொள்ளத் தால்தாயியத்தில் மூழ்கினேன். கருத்துக்கள் என்னுள் முகிழ்த் தன. அவை எழுத்தில் இன்னும் உருக்கொள்ளாமலே கிடக் கின்றன. இப்பொழுது பலதிறத் தொண்டுகள் என்னைப் பெரிதுஞ் சூழ்வதில்லை. தால்தாயியத்தைத் தமிழில் தர முயல்வேன். முயற்சி இப்பிறவியில் நிறைவேறாதொழியினும், மறு பிறவியிலாதல் நிறைவேறுமென்று நம்புகிறேன். பெண்ணின் பெருமை என்ற நூலை எந்நோக்குடன் இயற்றினேனோ அந்நோக்கு நிறைவேறியே வருகிறது. அந்நூல் ஒரு பெரும் அறப்புரட்சியை நுண்மையாகச் செய்து வருதல் கண்கூடு. அப்புரட்சியை இப்பிறவி காணும் பேறு பெற்றது. பெண்ணின் பெருமை என் வாழ்க்கையில் ஒருவித வெற்றியை விளைத்ததென்று நினைக்கிறேன். பெண்ணின் பெருமை பிறங்கப் பிறங்க நாடு விடுதலையடைதல் ஒரு தலை. பெண்ணின் பெருமையின் அடிப்படை என்ன? இயற்கை இன்பம். இயற்கை இன்பத்துக்கென்று ஒரு தனி நூல் என்னால் யாக்கப்பட்டது. அது முருகன் அல்லது அழகு என்பது. முருகன் அல்லது அழகு ஓர் இயற்கை நூல். அதில் காவியமும் ஓவியமும் இசையும் அழகும் நடம்புரிகின்றன. அந்நடம் நாட்டுக்கு நல்லுயிர்ப்பை வழங்கி வருகிறது என்று எண்ணு கிறேன். முருகன் அல்லது அழகுக்குத் துணைபோவது, நம் மாழ்வாரும் தமிழ்நாடும் என்ற நூல். இதில் இயற்கையைக் காணலாம். சைவத் திறவிலும் இயற்கைக் கோயிலுண்டு. முடியா? காதலா? சீர்திருத்தமா? என்ற நூல் எட்டாம் எர்வர்ட் ஒரு பெண்ணின்பொருட்டு அரியாசனத்தைத் துறந்ததை முன்னிலையாகக் கொண்டது; உரிமையின் மாண்பையும், தியாகத்தின் விழுப்பத்தையும் விளக்குவது; கிறிதுவின் சுவி சேஷச் சாரம் தேங்கப்பெறுவது. இதில் கிறிதுவத்தின் நுட் பம் புலனாகும். பாதிரி மதத்துக்கும் உண்மைக் கிறிதுவத் துக்கும் உள்ள வேற்றுமையை விளக்கும் ஒரு தனி நூல் இது. தமிழ்த் தென்றலும், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்தும் என்னுடைய எழுத்துப் பேச்சைக் கொண்ட நூல்கள். எனது எழுத்துப் பேச்சில் பீடும் மிடுக்கும் எழுச்சியும் கிளர்ச் சியும் வீறும் வீரமும் மதர்த்து ஏக்கழுத்தம் பெற்ற நடை சிற்சில இடங்களில் திகழும். அவைகள் அமையும் முறையிலே எனது எழுத்துப் பேச்சுக்கள் ஆக்கப்பட்டன. ஏன்? எனது வாழ்க்கை பலதிறக் கூட்டுறவுகளைப் பெற்றது. அவைகளுள் ஒன்று ஐரோப்பியக் கூட்டுறவு. இது பள்ளி வாழ்க்கையில் பெரிதுங் கிடைத்தது. தமிழ் பயின்ற சில ஐரோப்பியர், பீடும் மிடுக்கும் வீறுஞ் செறியத் தமிழில் எழுதல் கூடுமா? ngRjš TLkh? என்று என்னைக் கேட்பர். அவர் முன்னிலையில் அவை மலிய எழுதியும் காட்டுவேன்; கூட்டங் களில் பேசியுங் காட்டுவேன். அம்மலிவை நூலில் நிலைக்கச் செய்தல் வேண்டுமென்ற எண்ணம் அரும்பி நின்றது. அது மலர் தற்குரிய வாய்ப்பு எனது அரசியல் வாழ்க்கையில் கிட்டியது. தமிழ்த் தென்றலிலும், இளமை விருந்திலும் ஒல்லும் வகை தமிழ் வீரத்தைப் பிழிந்து வார்த்திருக்கிறேன். அந்நூல் களைப் படிப்போர்க்கு உரிமைக் குருதி பொங்குமென்பது எனது நம்பிக்கை. அந்நூல்களில் இயற்கை வருணனையுள்ள இடங்களைக் கண்டு, ஆங்கிலம் பயின்ற தமிழர் சிலர், எனது நடை பரி மேலழகர் நச்சினார்க்கினியர் நடையைக் கடுப்பதென்றும், ஜான்ஸனைச் சிவணுவதென்றுங் கூறலாயினர். அது தவறு. பரிமேலழகர் நச்சினார்க்கினியர் எங்கே? ஜான்ஸன் எங்கே? யான் எங்கே? இயற்கை வருணனையிலே நடைஎழுவது இயல்பு. காவியங்களில் கதை நடையினும் இயற்கை வருணனை பீடு கொள்ளுதல் கருதற்பாலது. அரசியல் வாழ்க்கையில் யான் பெற்ற அநுபவங்கள் பலப் பல. அவைகள் திரளப்பெற்ற நூல் இந்தியாவும் விடுதலையும் என்பது. இந்நூற்கண் நமது நாடு அடிமைக் குழியில் வீழ்ந் தமைக்குக் காரணங்கள் நிரலே கிளந்து கூறப்பட்டுள்ளன. அவைகளைக் களைந்தால் விடுதலை தானே உண்டாகும் என் பது நூலின் உள்ளக்கிடக்கை. நூலின் இறுதியில் விடுதலைக்குரிய வழிகள் கோலப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் மேடைகள் எனது இருபத்தைந்தாண்டுப் பேச்சுக்களைக் கேட்டிருக்கின்றன. அப்பேச்சுக்களை நூலாக்க யான் முயன்றதில்லை. அவை நூலுருவம் பெற்றால், அவை உயி ருடன் நாட்டில் உலவுமா என்று யான் ஐயுறுவதுண்டு. அப் பேச்சுக்களெல்லாங் காற்றில் கலந்து வானத்தை அடைந்தன. இந்தியாவும் விடுதலையும் என்ற நூலின் முடிவில் தொழிலாளர் இயக்கத்தைத் தேங்க வைத்துள்ளேன். அதிலே மார்க்ஸியத்தைப் பற்றி யான் கொண்டுள்ள கருத்து விளங்குகிறது. சமரச சன்மார்க்க போதம் வசன சூத்திரத்தால் ஆகியது. அதன் உள்ளுறை மன்பதைக்குப் பொதுவானது. அந்நூலின் கருத்துப்படி உலகம் இயங்கினால் உலகம் சாதி மதம் நிறம் மொழி நாடு முதலியவற்றால் பிரிந்து பிணக்குறுவது ஒழியும்; சகோதர நேயம் பெருகும். இதன் தொடர்ச்சி சமரச சன் மாக்கத் திறவு என்பது. இவ்விரண்டு நூற்கருத்துக்களையும் பொதுமை வேட்டல் பா வடிவில் தாங்கி நிற்கிறது. உள்ளொளி: இந்நூலில் எனது சமயஞான அநுபவங்கள் திரண்டுள்ளன. இந்நூற்கண் எனது வாழ்க்கைக் குறிப்புக்கள் சில உண்டு. இவைகளை இவ்வாழ்க்கைக் குறிப்புக்களிடை பெய்யாது விடுத்தேன். என் வாழ்க்கைக் குறிப்புக்களுடன் உள்ளொளி யிலுள்ள குறிப்புக்களையுஞ் சேர்த்து ஆராயுமாறு நேயர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியபுராண முதற் பதிப்புக் குறிப்புரை இளமையில் வரையப்பட்டது. அதுபோழ்து யான் சைவச் சிறையில் கிடந் தேன். இரண்டாம் பதிப்புக்கு உரை கண்டபோது என் இளமை மறைந்தது. பலவகை அநுபவங்கள் என்னுள் gl.ர்ªJ படிந்தன. யானும் சைவச் சிறையினின்றும் விடுதலையடைந்து, சைவ உரிமைக் கோட்டையில் நின்றேன். சிறைக்கும் உரிமைக்கும் வேற்றுமை உண்டன்றோ? பெரிய புராணம் இரண்டாம் பதிப்பில் புரட்சி நிகழ்ந் துள்ளது. உரிமை, புரட்சியை நிகழ்த்தி நிமையைச் சீர்செய்வது இயற்கையே, என்ன புரட்சி? ஜைனத்தைப் பற்றிச் சைவ உலகில் சில கறைகள் படிந்தன. அக்கறைகள் உரையால் களையப் பெற்றன. அக்களைவே புரட்சியாயிற்று. திருஞானசம்பந்தர் பெண்ணின் பெருமையும் இயற்கை இன்பமுஞ் செழிக்கச் சேவை செய்தவரென்பதும், அவர் சமண் உலகையே அழிக்கப் போந்தவரல்லரென்பதும், திகம்பர ஜைனத்துள் இடைநாளில் நுழைந்த சில மாசுகளைக் களையவே அவர் முயன்றாரென் பதும், அவர் அருளிய நெறி சுவே தாம்பர ஜைனக் கொள் கைக்குப் பெரிதும் அரண் செய்வதென்பதும், பழைய ஜைனமும் சைவமும் ஒன்றேயென்பதும், இன்ன பிறவும் எனது உரையில் விளக்கப்பட்டன. அவ்விளக்கம் சைவ உலகில் புரட்சி நிகழ்த்தி வருகிறது. திருக்குறள் முதல் நூறு பாட்டுக்கு யான் கண்ட விரிவுரை இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளது. நூல் முழுவதுக்கும் அம்முறையில் உரை காணுமாறு என்னை அறிஞர் சிலர் நெருக்கு கிறார். இம்முயற்சியில் யான் இளமையில் தலைப்பட்டிருத்தல் வேண்டும்; முதுமையில் தலைப்படல் நேர்ந்தது. இளமை முயற்சியில் இந்நாளில் அமைந்த முறையில் விரிவுரை அமையுமா என்று ஐயுறுகிறேன். முதுமை அநுபவம் வாய்ந்தது. முதுமையைப் பற்றிய கவலை இல்லை. எனக்கு நல்லுடலையும் நீண்ட நாளை யும் இயற்கை இறை அருளுமாயின், எஞ்சிய பெரும்பகுதிக்கு உரை காண முயன்றே தீர்வேன். திருக்குறள் விரிவுரை நவசக்தியில் கூறு கூறாக வெளி வந்தது. நவசக்தி சந்தா தாரருள் ஒருவராகிய டாக்டர் பெய் தானின் உள்ளம் அவ்வுரையில் சென்றதுபோலும். டாக்டர் பெய்தான் பிறவியில் ஜெர்மானியர்; தமிழ் நாட்டில் வதிந்தவர்; தமிழ் பயின்றவர். அவர் எனக்கொரு கடிதம் விடுத்தனர். அதில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் போதகாசிரியராக அமர்ந்து தொண்டாற்ற என்னை இசையுமாறும், ஆறு திங்களில் யான் ஜெர்மன் மொழியை எளிதில் பயிலுதல் கூடுமென்றுங் குறிக்கப்பட்டிருந்தன. யான் என்ன பதிலிறுத்தேன்? மறுபிறப் பில் என்று பதிலிறுத்தேன். கடிதப் போக்கு வரவுக்கிடையில் திடீரெனச் சண்டை மூண்டது. நூலுங் குணமும் இந்நூல் எனது வாழ்க்கைக் குறிப்புக்களைக் கொண்டது. இந்நூல் அளவில் என்னைக் காண்டல் இயலாது. என்னைக் காண்டற்கு என்னால் எழுதப்பெற்ற மற்ற நூல்களின் ஆராய்ச்சி யும் வேண்டற்பாலது. அஃது இன்றியமையாதது. அப்பொழுதே எனது குணம் நடக்கை மனோநிலை முதலியன நன்கு விளங்குதல் கூடும். ஒருவரது குணம் முதலியவற்றை அறிதற்குரிய கருவிகள் சில உண்டு. அவைகளுள் சிறந்தது அவரது நூல். நடை மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப்போராட்டம் பொருளற்றதென்பது எனது உள்ளக்கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவருக்கென்று ஒரு நடை இயற்கையாகும். இவர் அவரைக் குறை கூறுவதும், அவர் இவரைக் குறை கூறுவதும் தவறு. ஒரேவித நடை எல்லா ரிடத்திலும் அமைவது அரிது. உலகம் பலவிதம். ஒரேவித விதை கள் ஒரேவித நிலத்தில் விதைக்கப்படுகின்றன. அவை முளைத்து மரங்களாகுங்கால் எல்லாம் ஒரேவித வடிவங்களையா பெறு கின்றன? இல்லையே. மரங்கள் எத்துணையோ வடிவங்களைப் பெறுகின்றன. இஃது இயற்கை அன்னையின் திருவிளையாடல். மொழிநடையும் அவரவர் இயற்கைக்கேற்ற வண்ணம் அமையும். இயற்கை அமைவைக் குறித்துப் போராட்டம் எற்றுக்கு? என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உற்றது; இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு பெற்றபோது பொருந்தியது; மற்றொன்று 1பத்திரிகை யுலகை அடைந்த நாளில் அமைந்தது. இறுதியதே எனக்கு உரியதாய் - உடையதாய் - நிலைத்தது. இந்நடை எளியது; சிறு சிறு வாக்கியங்களாலாவது. இந்நடையிலும் நூலுக்கேற்ற - காலத்துக்கேற்ற - அமைவு தானே பெறும். எனது பேச்சு நடையும் எழுத்து நடையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். பெரும் பேச்சுக்குரிய குரலையும் நாவை யும் இயற்கை அன்னை எனக்கருளினள். பல தொண்டுகட்கு எனது பேச்சே பெருந்துணை செய்து வருகிறது. நூல் நிலையம் பண்டை நாளில் ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு நூல் நிலையமாக விளங்கினர்; யான் பழைய இனத்தில் சேர்ந்தவனு மல்லன்; புதிய இனத்தில் சேர்ந்தவனுமல்லன்; இரண்டுக்கும் இடையில் நிற்பவன். எனக்கென்று ஒரு நூல் நிலையம் தேவை யாயிற்று. என் தந்தையாரிடம் ஏதேனும் நூல் நிலையமிருந்ததா? அவர் ஒரு தகரப்பெட்டியில் சில புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தனர். அவைகளில் நாடக நூல்களும், இசை நூல் களும், வாகட நூல்களும் பெரும்பான்மையனவாயிருந்தன. யான் பள்ளி மாணாக்கனாயிருந்தபோது எனது பாடங் களும் வேறு சிலவும் எனது நூல் நிலையமாயின. பள்ளி நூல் நிலையம் ஓரளவில் துணைபுரியும். யான் தமிழ் பயின்ற பின்னர் எனது நிலையத்தில் தமிழ் நூல்கள் பெருகின. திருக்குறள் சிதம்பர முதலியார் நூல் நிலையம் எனக்குப் பெருந்துணை புரிந்து வந்தது. கனிமாரா நூல் நிலையமும், தியோசாபிகல் நூல் நிலையமும் எனது குறைபாடுகளைக் களைந்து வந்தன. யான் தேசபக்தன் ஆசிரியனாகிய வேளையில் அன்னி பெஸண்ட் அம்மையாரால் பலவகை நூல்களும் சஞ்சிகைகளும் ஏராளமாக எனக்கு வழங்கப்பட்டன. அவைகளால் எனது நூல் நிலையம் பெருகியது. தேசபக்தன் காரியாலயத்தில் சேவை செய்து வந்தவருள் வேங்கடராம ஐயர் என்பவர் ஒருவர். அவர் பின்னே வங்காளம் போந்து, பத்திரிகை யுலகில் நல்ல பணியாற்றித் திரும்பியபோது அவரை ஒரு பெரும் நூல் நிலையமும் தொடர்ந்தது. அதில் சமதர்ம நூல்கள் பலபடக் கிடந்தன. அவைகளுடன் யான் உறவு கொள்ளலானேன். அச்சுக்கூடமும் உறைவிடமும் வெவ்வேறா யிருந்த மட்டும் நூல் நிலையம் நன்முறையில் காக்கப்பட்டது. இரண்டும் ஒன் றாய நாள்தொட்டு நிலையத்தின் காப்புக்கு இடர் விளைய லாயிற்று. அதனால் தமிழ் நூல்கள் பல இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணி பக்தஜன சபையின் ஆறுமுக நாவலர் நூல் நிலையத்துக்கும், வேறு சபைகளின் நூல் நிலையங்கட்கும் வழங்கப்பட்டன. ஆங்கில நூல்கள் பல படிப்படியே மாணாக் கர்க்குக் கொடுக்கப்பட்டன. பழைய சஞ்சிகைகள் பல, சில தொழிலாளர் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டன. இப்பொழுது மிகச் சில நூல்களே எனது நிலையத்திலிருக்கின்றன. இந்நாளில் இயற்கை நூல் நிலையம் என்னுடையதாகி வருகிறது. சங்கம் தமிழ் நாட்டிலே தமிழ்ச் சங்கமென்றும், கலைமகள் கழக மென்றும், இளைஞர் மன்றமென்றும் பலவகை அமைப்புக்கள் பலபடத் தோன்றும். ஆனால் அவைகளிற் பெரும்பான்மையன நீண்ட ஆயுள் பெறுவதில்லை. சங்கங்கள் தொடக்கத்தில் ஆண்டு விழாக்களைச் சிறப்புற நடத்தும்; பின்னே கும்பகர்ணன் சேவைக்குச் செல்லும். நூற்றுக்குத் தொண்ணூறு சங்கங்களின் ஆண்டு விழாக்கள் என் தலைமையில் நடைபெற்றிருக்கும். அவ் விழாக்களில் யான் பொதுவாகப் பல பொருள்பற்றிப் பேசு வேன்; சிறப்பாகத் தமிழ் நாட்டில் சங்கங்கள் ஆக்கம் பெறா மைக்குக் காரணங்களை எடுத்துக் காட்டுவேன். அவை பல பட்டன. சாரத்தை இங்கே பிழிகிறேன். சாரமானவை: சங்கங் களை யெல்லாம் ஒருமைப்படுத்திக் காக்கவல்ல ஒரு தாய்ச் சங்கமின்மை, பல கலைகளை விடுத்து வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுதல், உள்ளாட்டம் - வெளி யாட்டம் - ஆடல் பாடல் - சிலம்பம் - சிற்றுண்டி முதலியன இன்மை, வகுப்புப் பிணக்கு, தமிழ் பயின்றவருள் பெரும் பான்மையோர் பிற்போக்கரா யிருத்தல், நாட்டுப் பற்றின்மை, கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியாமை, பொறாமை, பிடிவாதம், கால தேச வர்ததமானத்துக்கேற்ற முறைகளை மேற்கொள்ளத் தியங்கல், தன்னலம், பொறுமையின்மை, ஊக்கமின்மை முதலியன. 1918ஆம் ஆண்டிலே எழும்பூரில் நன்கு நடைபெற்று வந்த ஒரு பெண் பள்ளியின் ஆண்டு விழா என் தலைமையில் நடை பெற்றது. அவ்விழாவில் பேசியவருள் ஒரு சகோதரியார் வாய் மலர் ஆங்கிலத்தேன் பிலிற்றியது. அந்நாளில் பெண்பட்டதாரி களின் தொகை குறைவு; மிகக்குறைவு. அச்சமயத்தில் புதுப் பட்டம் பெற்ற சகோதரியார்க்கு நாடே தெரியவில்லை; நாட்டு நாகரிகம் மிலேச்சமாகத் தோன்றியது. நேரே ஆக்பர்டி லிருந்து பறந்து வந்ததாக அவர் பாவனை. அவர் தமது பேச் சிடை நாட்டுக் கல்வி, நாகரிகம் முதலியவற்றைக் குறைகூறி, தமிழ் பயின்றால் சோம்பல் உண்டாகும் என்று எள்ளினர். அஃது ஈட்டி போல் என்னைக் குத்தியது. கூட்டம் ஆவலுடன் என் முடி வுரையை எதிர்பார்த்தது. எனது முடிவுரையில் பள்ளியைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் சில கூறிச் சகோதரியாரின் சோம்பல் மீது கருத்துச் செலுத்தினேன். சகோதரியார் இளையர்; அவர் வடிவம் இந்தியம்; மனம் ஆங்கிலம். அவர்தம் மனக்கண்ணுக்குப் புலனாகியதைக் கரவாது அவர் வாய் வெளி யிட்டது. அக்கரவாமைக்கு யான் நன்றி கூறுகிறேன். யான் ஒரு கல்லூரியில் தமிழாசிரியனா யிருந்தவன்; ஆங்கில ஆசிரியனா யிருந்தவனல்லன். யான் தேசபக்தன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியனாயிருக்கிறேன்; காங்கிர தொண்டு செய்கிறேன்; தொழிலாளர் சேவை செய்கிறேன். எனது தமிழ்க் கல்வி எனக்குச் சோம்பலை யுண்டாக்கி யிருப்பதாகத் தெரியவில்லை. யான் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன். இங்கே எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. அது நக்கீரர் தமிழ்; புறநானூற்றி லிருப்பது. அதைச் சொல்கிறேன்: தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவு மெல்லா மோரொக் கும்மே செல்வத்துப் பயனே யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே. செல்வப் பெருக்கு ஒரு பக்கம்; ஏழ்மை இன்னொரு பக்கம். ஏழ்மை என்ன சொல்கிறது? ஏ! பெருக்கே! உனக்கும் எனக்கும் இயற்கைப் படைப்பில் வேற்றுமை இல்லை; இயற்கைத் தேவையும் ஒன்றே. நீ எனக்கு அற வழியில் பங்காதல் வேண்டும்; யானே கொள்ளப் புகுந்தால் நீ தப்ப மாட்டாய் என்பது பாட்டின் உட்பொருள். இதிலே ஏகாதிபத்தியம் இருக்கிறது; சமதர்மம் இருக்கிறது; அறப்புரட்சி இருக்கிறது. மறப் புரட்சி யும் இருக்கிறது. இது தமிழ் - தமிழ்ப்பாட்டு. சோம்பல் எங்கே இருக்கிறது? இப்பாட்டு இன்று பிறந்ததன்று; நேற்றுப் பிறந்ததன்று. இது ஷெல்லியின் நூறாம் பாட்டன் காலத்தில் பிறந்தது. சகோதரியார் மனம் ஏகாதிபத்தியத்தில் நின்று பேசியது; என் மனம் தமிழ்ப் பொதுமையில் நின்று பேசுகிறது என்ற உட்கிடக்கையை வெளியிட்டேன். கூட்டங் கலைந்த தும் சகோதரியார் என்னை அணுகி, உங்கட்குக் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும்; அதனால் உங்களிடம் சோம்பல் இல்லை. என் வீட்டருகே ஒரு பண்டிதர் இருக்கிறார். அவர் பொழுது சோம்பலிலே கழிகிறது. அதை உளங்கொண்டே யான் பேசி னேன். யான் இளங்கன்று தானே. புறநானூற்றைப் படிக்க விரும்புகிறேன் என்று கூறி விடைபெற்றார். இப்பொழுது அச்சகோதரியார் கன்றாயில்லை; பசுவா யிருக்கிறார்; ஓர் உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராயிருக்கிறார். அவரது தமிழ்ப் பித்தம் இப்பொழுது நக்கீரருக்கு மகிழ்ச்சியூட்டா நிற்கிறது. திவான்பகதூர் தெய்வசிகாமணி முதலியார் சென்னை அரசாங்கத்திலே கூட்டுறவுச் சங்கங்களின் ரிஜிதாரரா யிருந்தவர்; தொழின் முறையில் பேரும் புகழும் பெற்றவர். அவர் தொழிலை விடுத்த நாள்தொட்டு நாடோறும் சாயங்கால வேளையில் அவரது பொழுது என்னுடன் உரையாடுவதில் கழியும். எங்கள் உரையாடல் எதெதிலோ நுழையும்; நுழைந்து நுழைந்து தமிழ்ச் சங்கமொன்று காண்பதில் நிலைத்தது. தமிழ்ச் சங்கமென்றால் எனக்கு ஐயம்; அச்சம். காரணம் யான் பெற்ற அநுபவம். அவ்வநுபவம் என்னைத் தியங்கவுஞ் செய்யும். கடைசியில் எங்கள் உரையாடல் சென்னையில் ஒரு தமிழ்ச் சங்கம் காணும் முயற்சியாகப் பருத்தது. அம்முயற்சிக்குக் கலைக்கடல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் கூட்டுறவும், சண்முகானந்த அடிகள் ஊக்கமும் பெருந்துணை செய்தன. சென்னைத் தமிழ்ச் சங்கம் உருக்கொண்டது. முதல் கூட்டத் திலும், கலை வகுப்பைத் திறந்து வைத்தபோதும், என் காரணங் களை வெளியிட்டுக் காலத்துக்கேற்ற முறையில் சங்கத்தை வளர்த்தல் வேண்டுமென்று வலியுறுத்தினேன். திவான்பகதூர் தெய்வசிகாமணி முதலியார் தலைமை, சங்கத்தை நன்முறையில் வளர்க்குமென்றும், அஃது ஒரு காமோபாலிட்டன் கிளப் ஆகுமென்றுந் தமிழ் நாடு எதிர்பார்த்தது. விளைந்தது என்ன? தெய்வசிகாமணியின் மரணம் விளைந்தது. தமிழ் நாட்டின் தவக்குறை! தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்! இப்பொழுது சென்னைத் தமிழ்ச் சங்கம் கோவைச் செல்வம் ஸி. எ. இரத்தினசபாபதி முதலியாரைத் தலைவராக ஏற்றுக் கடனாற்றி வருகிறது. தெய்வசிகாமணி முதலியாரின் கனவுகளெல்லாம் நினைவுகளாய்ச் செயல்களானால் சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்கள் நிறைவேறும். வித்துவான் சங்கம் என்றோர் அமைப்புச் சென்னையில் விஷு ஆண்டுத் தைப்பொங்கல் திருநாளில் (1941) தொடங்கப் பட்டது. அதன் கன்னிக் கூட்டம் என் தலைமையில் நடைபெற் றது. முன்னுரையில் தமிழ்க் கலைகளின் நுட்பங்களை விளக்கி னேன்; முடிவுரையில், *** வித்துவான்களால் உலகை ஆக்குதல் கூடும்; அழித்தல் கூடும். அவர்தம் எழுதுகோல் நலஞ்செய்யப் புகுந்தால் மன்னனின் செங்ககோலினுஞ் செம்மையுடையதாகும். கொடுமை செய்யப் புகுந்தால் சிப்பாயின் துப்பாக்கியினுங் கொடுமை செய்யும். புலவன் கோலுக்கு மன்னன் கோலும் அஞ்சும்; சிப்பாயின் துப்பாக்கியும் அஞ்சும். புலவர் பெருமை பேசவொண்ணாதது. இக்காலத் தமிழ்நாட்டு வித்துவான்கள் நிலைமை எப்படி இருக்கிறது? அவர்தம் எழுதுகோலால் ஏதேனும் ஆகுமா? ஏதேனும் அழியுமா? இரண்டுமல்லாத நிலையை இக்கால வித்துவான்கள் அடைந்திருக்கிறார்கள். மீனாட்சிசுந்தரனாரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கம் வித்துவான் உலகின் கவலையைப் போக்கு மென்று கருதுகிறேன். பழையகாலச் சங்கப்புலவர் எப்படி வாழ்ந்தனர்? வித்துவான் களாகிய உங்களுக்கு விளக்கவுரை வேண்டுவதில்லை. மன்னனும் அவர்வழி நின்றான்; மகாதேவனும் அவர்வழி நின்றான். அத்திறம் இப்பொழுது எங்கே போயிற்று? அவ்வாண்டகைமை இப்பொழுது எங்கே ஓடிற்று? கேடு இடைக்காலத்தில் விளைந்தது. இடைக்காலப் புலவருலகை விடுத்து அஞ்சாமை என்ற தெய்வம் ஓடிற்று; அவ்வுலகில் கோழைமை என்ற சாத்தான் குடிபுகுந்தான். விறல் இல்லாதவனை வீமனே என்றும், வில்லறியாதவனை விசயனே என்றும், கொடை தெரியாதவனைப் பாரியே என்றும் புலவர் பாடப் புகுந்தனர். தமிழ் அன்னை அரியாசனம் இழந்தாள்; தமிழ் உலகம் வீழ்ந்தது; அடிமை இருள் சூழ்ந்தது. இடைக்காலத்தில் தமிழ்ப் புலவருலகில் நுழைந்த அடிமைச் சிறுமை வாழையடி வாழையென வளர்ந்து வருகிறது. அவ்வாழைக் காட்டை அழித்தல் வேண்டும். அவ்வேரையே கல்லி வெந்நீர் விடல்வேண்டும். எங்கேயோ ஓரிடத்தில் கல்வி அதிகாரி ஒருவர் தமிழ்ப் பண்டிதரை அதிகாரத் திமிரால் பெட்டி தூக்கச் சொன்னா ரென்று கேள்வியுற்றேன். இது பொய்யோ மெய்யோ அறி கிலேன். மெய்யாயிருந்தால் அதிகாரியைக் கன்னத்தில் அறைந் திருத்தல் வேண்டும். அன்புக்கு எளிமையாகலாம்; எப்பணியுஞ் செய்யலாம்; அதிகார மெழுந்தால் அதை அடக்க ஆண்மை எழுந்தே தீரல் வேண்டும். இக்காலத் தமிழ்ப் புலவருக்கு வீரம் தேவை. பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தால் அவைகளில் இரண்டு செம்பொருள் பொலிகின்றன. அவை இரண்டும் தமிழ்த் தாயின் நுரையீரல்கள். அவை என்ன? உங்களுக்கு யான் சொல்லவும் வேண்டுமோ? ஒன்று, புறம் முழங்கும் வீரம்; மற்றொன்று, அகம் ஒலிக்குங் காதல். தமிழ்க் காதல் வீரத்தை எழுப்பியே தீரும். இந்நாளில் தமிழ்க் காதல் ஏட்டில் உறங்கிக் கிடக்கிறது; ஏட்டில் உள்ளதைக் காதல் காதல் என்று நெட்டுருச் செய்தால் காதல் விளையுமோ? காதல் இரத்தத்தில் ஊறல் வேண்டும். அப் பொழுதே அதிலிருந்து வீரம் எழும். நாமார்க்குங் குடி யல்லோம் நமனை அஞ்சோம் எனவும், ஈனர்கட் கெளியேனலேன் திருவாலவாய் அரன் நிற்கவே எனவும் வரும் வீர மொழிகள் எங்கே இருந்து எழுந்தன? காதலிலிருந்தே எழுந்தன. அப்பரும் சம்பந்தரும் கடவுளிடத்தில் காதல் கொண்டவர். அக்காதலினின்றும் வீரம் கிளம்புதல் இயல்பே. பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடினார். இது நாட்டுக் காதலினின்றும் பிறந்த வீரம். தோழர்களே! நீங்கள் புற நூல் படித்தவர்கள்; அக நூல் படித்தவர்கள்; தமிழ்க் காதல் கொள்ளுங்கள்; தமிழ் வீரம் தானே வீறும். அன்பார்ந்த சகோதரர்களே! மற்றொன்று சொல்ல விரும்புகிறேன். தவறாக நினையாதேயுங்கள். தொழிலுக் கென்று நீங்கள் தமிழ் படித்தல் கூடாது; வித்துவான் பரீட்சையில் தேறியதும் பள்ளி வேலைமீதுஉங்கள் நாட்டஞ் செல்லுதல் கூடாது; பிழைக்க வழியில்லை என்ற நடுக்கம் உங்களுக்கு வேண்டாம். உங்களைக் காக்கக் கிராம தேவதை காத்துக் கொண்டிருக்கிறது. சகோதரிமார் பொற்கைகள் உங்களைத் தாங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வித்துவானும் ஒவ்வொரு கிராமம் போகலாம். கிராமங்களை அறப் பள்ளியாக்கலாம். நீங்கள் கிராம மன்னராக வாழலாம். கிராமம் உங்களுக்கு எல்லாம் நல்கும். உங்களிடத்தில் தொண்டு நிகழல் வேண்டும். தொண்டராக முயலுங்கள். கிராமம், தல தாபனத்தை உங்கள் வயப்படுத்தும்; சட்டசபையை உங்கள் வயப்படுத்தும்; உங்களை அமைச்சராக் கும்; எல்லாஞ் செய்யும். பொது அமைப்புக்களிலும், மற்ற மற்ற அற அமைப்புகளிலும், பதவிகளிலும் நீங்கள் நிரம்பும் நாளே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் நாள். தோழர்களே! உங்கள் அன்னையை அரியாசனத்தில் ஏற்றப் போகிறீர்களா? அவளைத் துச்சலில் கிடத்தித் துயருழக்கச் செய்யப் போகிறீர்களா? தாய்க்கு அரியாசனம் வேண்டு மானால் நீங்கள் கிராமத் தொண்டராக உறுதி கொள்ளுங்கள்; புரட்சி செய்யுங்கள்; அறிவுப் புரட்சி செய்யுங்கள்; அறப் புரட்சி செய்யுங்கள்; உங்கட்கு தமிழ்த் தெய்வத்தின் அருள் துணைபுரியும். என்ற கருத்துக்களை வெளியிட்டேன். தமிழறிஞர் யான் பலமொழிப் புலவரைக் கண்டிருக்கிறேன். அவருள் பெரும்பான்மையோர் தமிழறிஞர். அவ்வறிஞருள் என் வாழ்க்கை யில் தொடர்பு கொண்ட சிலரையாதல் இங்கே நினைவூட்டிக் கொள்வது எனது கடன் என்று உணர்கிறேன். 1. கிருஷ்ணமாச்சாரியார் சே. கிருஷ்ணமாச்சாரியார் வெலி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருந்தவர். அவரிடம் பயின்ற மாணாக்கருள் யானும் ஒருவன். கிருஷ்ணமாச்சாரியாரும் சடகோப இராமாநுஜாச்சாரி யாருஞ் சேர்ந்து எழுதிய உரைகள் தமிழுலகை வளர்த்து வருதல் கண்கூடு. கிருஷ்ணமாச்சாரியாரிடத்தில் ஓர் அரிய சக்தி அமைந் திருந்தது. அது போதனா சக்தி. அவர், பாடங்களை எளிய முறை யில் போதிப்பதில் வல்லவர். அவர் முறையையே யான் அவர் பதவியை ஏற்றபோது கடைப்பிடிக்கலானேன். 2. கதிரைவேற் பிள்ளை யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளை இந்நூற்கண் ஓரிடத்தில் மட்டும் விளங்குகிறாரில்லை; பல இடங்களில் விளங்குகிறார். கதிரைவேற் பிள்ளை ஆறுமுக நாவலர் மாணாக்கர் பலரிடத்தில் பாடங் கேட்டவர்; பேசுவதிலும் எழுது வதிலும் வல்லவர். அவர் கூர்ம புராணம், சிவராத்திரி புராணம் முதலியவற்றிற்கு வரைந்துள்ள விரிவுரைகள் அவரது புலமைத் திறத்தை விளக்குவனவாம். கதிரைவேற் பிள்ளையால் செப்பஞ் செய்யப்பெற்ற தமிழ்ப்பேரகராதி, பின்னே தோன்றிய பல அகராதிகட்குச் செவிலித் தாயாக நின்று வருதலை அறிஞர் இன்றும் போற்றா நிற்கின்றனர். பெரும் புலமை வாய்ந்த கதிரைவேலரின் பெரும் பொழுது சமய வாதங்களில் கழிந்தது. அவரை முப்பத்திரண்டாம் வயதிலேயே சிவம் தன்னடியில் சேர்த்தது. என் வாழ்க்கைச் சக்கரம் ஒரு வழியில் ஓடிக்கொண்டிருந் தது. கதிரைவேற் பிள்ளை கூட்டுறவால் அது வேறு வழியில் திரும்பியது. என் பொருட்டோ கதிரைவேற் பிள்ளை யாழ்ப் பாணம் விடுத்துச் சென்னை போந்தனர் என்று யான் ஒவ்வொரு போழ்து நினைப்பதுண்டு. கதிரைவேற் பிள்ளையை முதல் முதல் புரசையில் ஒரு கண்டனக் கூட்டத்தில் பார்த்தேன். அவர்தம் நாவன்மை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவர் வெலி கல்லூரி யில் ஒரு தமிழாசிரியராக வந்தபோது அவருடன் யான் நெருங்கிப் பழகினேன். அப்பழக்கம் என்னைக் கதிரைவேற் பித்தனாக் கிற்று. அப்பித்து, யான் மாணாக்கனாயிருந்தபோதே கதிரை வேற்பிள்ளை மீது தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் என்னைச் சான்று கூற உந்தியது; பள்ளிப் படிப்பில் கவலையீனத்தை உண்டாக்கியது; தமிழில் கருத்தைச் செலுத்தியது; சைவ சமயத் தில் நிறுத்தியது. கதிரைவேற் பிள்ளை வாழ்வு பெரிதுங் கண்டனங்களிலேயே கழிந்தது. அக்கண்டனங்களில் இளமையிலேயே என் மனம் தோய்ந்து தோய்ந்து நெளிந்தமையால், அது விரைவில் திரும்பிச் சமரச சன்மார்க்கத்தை வேட்டலாயிற்று. இராமலிங்க சுவாமிகள் சார்பில் கதிரைவேற் பிள்ளை மீது ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் சுவாமிகள் காலத்திருந்த பலர் சான்று கூறப் போந்தனர். அவரையெல்லாம் என் விழிகள் கண்டன. அவர்தஞ் சான்றுகளை என் செவிகள் கேட்டன. அவைகள் சுவாமிகளின் உண்மை நிலையை ஊகிப்ப தற்கு ஏதுக்களாயின. அவதான வித்தை பேசப்படும். அதை என் காதுகளுங் கேட்கும். கதிரைவேற் பிள்ளையால் அவ்வித்தையை நேரிற் காணும் பேறுபெற்றேன். என் வாழ்க்கையைத் திருப்பிய கதிரைவேற் பிள்ளையை யான் இளமையிலேயே இழந்தேன்; முன்னாளில் எக்குரவற் கென்னபவஞ் செய்தேனோ மூட நாயேன் - இந்நாளில் இளமை யிலே உனை இழந்து வாடுகின்றேன். எந்தாய் எந்தாய்... என்று புலம்பினேன். கதிரைவேற் பிள்ளை சரித்திரம் என்னால் எழுதப்பட்டது. அதுவே யான் முதல் முதல் எழுதிய கன்னி நூல். 3. தணிகாசல முதலியார் கதிரைவேற் பிள்ளை சிவமாகிய பின்னர் யான் மயிலை மகா வித்துவான் - தணிகாசல முதலியாரிடம் முறையாகத் தமிழ் பயிலச் சென்றேன். (விவரம் முன்னே விரித்துள்ளேள்.) தமது முதுமையையுங் கருதாது பொதுவாகச் சில தமிழ் நூல்களையும் சிறப்பாகச் சைவ சாத்திரங்களையும் எனக்கு நன்முறையில் அறிவுறுத்திய பெருந்தகையார் அவரே. அவர் ஆறுமுகநாவலர் மாணாக்கருள் ஒருவர்; சைவ சாத்திரங்களைப் பன்முறை பலர்க்குப் பாடஞ் சொன்னவர்; பதினெண் புராணங்களையும் பிரசங்கஞ் செய்தவர்; இக்கால ஆராய்ச்சி முறைகளை வெறுப்பவர். என் மண இதழைச் செலுத்தி வாழ்த்துப் பெற மயிலை மகா வித்துவான் முதலியாரிடஞ் சென்றபோது, அவர் எனக்கு அறிவுறுத்தியது. போகத்தில் அளவாயிரு என்பது. 4. பாம்பன் சுவாமிகள் பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமர குருதாச சுவாமிகள். சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென் மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம். அம் மேகம் 6666 பாச் செய்யுளையும் பல உரைச் செய்யுளையும் பொழிந்தது. அடிகள் கடைப்பிடித்தொழுகிய அறவொழுக்கங் களுள் தலையாயது பொய்யாமை. தம்மைச் சூழ்ந்தவரால் பொய் இடம் பெறுவதை உணர்ந்ததும், அவர் உண்ணா நோன்பிருந்து, கழுவாய் தேடுவதை யான் பல முறை பார்த்துள்ளேன். குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர் சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடு வர் தசகாரியம் முதலியனவும் அவரால் எனக்கு அறிவுறுத்தப் பட்டன. அந்நாளில் மறைமலை அடிகள் குகானந்த நிலையம் போதருவர். இரவில் நாங்கள் இருவேமும் ஆராய்ச்சி முறையில் ஏதேனும் பேசுவோம்; ஒருபோது முருகனைப் பற்றி உரையாடி னோம். ஏதோ ஒரு மதில் கோழியும், சில ருத்ராக்ஷ பூனைகளுஞ் சேர்ந்து எங்கள் உரையாடலைத் தவறான முறையில் பாம்பன் சுவாமிகளிடம் உளறின போலும்! ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையின் ஓராண்டு விழாவிலே தலைமை வகித்த பாம்பன் அடிகள் முடிவுரையில் என்னைச் சுட்டி நாத்திகன் என்றார். இந்நாளாயின் யான் அவ்வுரையைக் கருத்திலிருத்தாது நகைத்து விடுவேன். அந்நாளைய இளமைக் கொழுமை வாளா இருக்குமோ? அது சீற்றம் மூட்டியது. சுவாமிகளும் கூட்டமும் நிலையத்தை விடுத்து ஏகும்வரை பொறுமை காத்தேன். பின்னே யான் ஐயுற்ற ஆட்களைக் கண்டபடி வைதேன். அடுத்தநாள் சுவாமி களிடத்திருந்து பிழை திருத்தத்துக்கு என்று வழக்கப்படி அச்சுத் தாள்கள் வந்தன. அவைகளைக் கொண்டுவந்த ஆள்வயம் முடங்கலொன்று தீட்டி அனுப்பினேன். அதில், நாளை அடிகள் நிஷ்டையில் அமரும் வேளையில் முருகனை நோக்கி என் நிலையைக் கேளுங்கள். பின்னே என் நிலைகுறித்து முடிவுக்கு வாருங்கள் என்று குறித்திருந்தேன். முடங்கலைக் கண்டதும் சுவாமிகள் வண்டியேறி ஏழை வீட்டை அடைந்தார்கள். சுவாமி களைக் கண்டதும் அவரை ஒரு பீடத்தில் வீற்றிருக்கச் செய் தேன். குமரகுருதாசர் என்னை நோக்கி உன் முடங்கல் என் நெஞ்சை அரிக்கிறது. பயல்கள் என்னென்னவோ சொல்லி விட்டார்கள் என்று மொழிந்ததும், யான் சுவாமிகளின் நிலை கண்டு வருந்தி வணக்கஞ் செய்தேன். இன்னின்னவர் இப்படி இப்படிச் சொன்னார் என்று அடிகள் அருளிச் சிறிது நேரம் வெவ்வேறு பொருள்பற்றிப் பேசி விடை பெற்றார்கள். கோள் மூட்டிகளின் அட்டவணை கிடைத்தது. அவர்களிற் சிலர் படிப் பாளிகள். ஒருமுறை அடிகள் கால்மீது வண்டி ஏறியது. அது காரண மாக அவர் ஜெனரல் ஆபெட்டலுக்குச் சென்றார். அவரைப் பார்க்கப் பலர் போனார். யான் உட்செல்லுதற்குரிய சீட்டுப் பெறக் கடிதம் எழுதினேன். சீட்டுக் கிடைக்கவில்லை. அதனால் சுவாமிகளைப் பார்க்கச் சென்றேனில்லை. வேறு வழிபற்றிச் செல்ல என் மனம் ஒருப்படவில்லை. இதுபற்றிப் பலவிதக் கூக் குரல்கள் கிளப்பப்பட்டன. அடிகள் குணமடைந்து வெளியே வந்தார்கள். ஒருநாள் யான் சென்று அடிகளைக் கண்டேன். கூக்குரல்களைப் பற்றிச் சுவாமிகள் விசாரணை புரிந்தார்கள். நிகழ்ந்ததைக் கூறினேன். உரிமைச் சீட்டுப்பெற நீ முயன்றதை ஒருவரும் தெரிவிக்கவில்லை என்று சொல்லிச் சிவஞான முனிவரைப் பற்றிச் சுவாமிகள் நீண்ட நேரம் பேசினார்கள். பொய்க்கோள் மூட்டியவர் அனைவரும் சிவப்பழங்கள். ஞானப்பூங்கோதை என்பவரும், அவர்தம் பெரிய தாயாரும் சிகிச்சையின் பொருட்டுச் சிந்தாதிரிப்பேட்டையில் தங்கினர்; அடிக்கடி தமையனாரையும் என்னையும் பார்ப்பர். ஒருநாள் இங்குள்ள சுவாமிகள் சிலரைப் பார்த்தல் வேண்டும் என்றனர். யான் ஒரு சுவாமிகளிடம் செல்வதுண்டு. வேண்டுமானால் அவர் களிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றுரைத்தேன். அதற்கு அவர் இணங்கினர். யான் அவரை அழைத்துச் சென்று சுவாமிகளிடம் அறிமுகஞ் செய்து வைத்தேன். சுவாமிகள் அவர்தம் நிலைகண்டு கருடோகம்பாவனை பற்றி ஒரு மணி நேரம் பொழிந்தார்கள். அப்பொழிவு அவர்க்குக் கோடைக்கால மழையாயிற்று. பாம்பன் சுவாமிகள் மருத்துவச் சாலையில் தங்கியபோது தாங்கண்ட மயூரவாகனக் கோலத்தை ஆண்டுதோறுங் கொண் டாடினர்; அதற்கென்று ஒரு நிதி திரட்டிச் சாசனம் எழுதினர். மயூரவாகன சேவன விழா தம்மால் அமைக்கப்பெற்ற மகா தேஜோ மண்டலத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டு மென்பது சுவாமிகள் வேட்கை. அவ்வேட்கை ஒரு சாசனமாயிற்று. ஒருநாள் அச்சாசனத்தை என்னிடம் அடிகள் காட்டினார்கள். நிதியும் சாசனமும் அநாவசியம் என்று என் கருத்தை வெளி யிட்டேன். அக்கருத்து அடிகளின் முகத்தைச் சிவக்கச் செய்தது. நிதியும் சாசனமும் நீதிமன்றமேறுமென்பது எனது அநுபவம். சுவாமிகள் முருகன் திருவடி நீழலை அடைந்தபோது (30-5-1929) யான் பாட்டால் அவரைப் போற்றினேன். அப்பாடல்கள் வருமாறு :- பாம்பனெனும் பதிமுளைத்த பவளக் குன்றே பழம்பாண்டித் தமிழ்ப் பொழிலே பண்பா ரில்லத் தீம்பயிரே அன்புகொழி திரையே தெய்வத் திறங்கண்ட அறநிலையே செகத்தி லுற்ற கூம்பலற எழுகதிரே குழந்தை வேலன் குகனெறியே நெறியென்ற குருவே நீதி ஓம்புகவென் றுரைத்தொழுகி உலகில் வாழ்ந்த உயர்குமர குருதாச ஒளியே போற்றி. செந்நெறியீ தெனவறியாச் சிறிய னேற்குச் சேந்தனடி பிறழாத சிந்தை கூட்டிப் பன்னெறியும் பலகலையும் பகர்வ தந்தப் பரனடியைப் பற்றுவதே பற்றா யென்று சென்னைநகர்க் கடற்கரையிற் செப்பிப் போந்த தென்முகத்துப் பெருங்குருவே தேவே என்றும் அன்னவுரை யுயிர்க்கமுதாய் ஆக்கஞ் செய்ய அருள்குமர குருதாச அடிகள் போற்றி. கடலினிலே அலைபாடக் காணா வானில் காண்டிங்கள் நிலவாடக் கரைந்த வெள்ளித் திடலெனவே ஒளியோடத் திகழுஞ் சோதித் திருமுடியில் சடைதாழச் செங்கை நீட்டிக் கடவுளிலே உலகுயிர்கள் கலந்து நிற்குங் கருத்துரைத்தே எனையாண்ட கருணைக் கோலம் உடலுயிரே உயிர்க்குயிரே உள்ளம் நீங்கா ஓதரிய குமரகுரு உடையாய் போற்றி. கலக்கமளி அரசியலைக் கடையேன் கொண்ட கடந்தபதிற் றாண்டாகக் கருணை நோக்கில் துலக்கமிகு வாய்மொழியைத் தோய்ந்துண் ணாதே துயருற்றேன் பொறுத்தருள்க தூய்மைக் கோவே இலக்கியமும் இலக்கணமும் ஏந்தி ஏந்தி இறுமாப்பில் இறந்தொழிந்த இளமைக் காலை நலக்குரிய ஞானநெறி நன்று காட்டி நயந்தாண்ட குமரகுரு நாத போற்றி. வேறு பொய்யினில் முனிவு கொண்ட புண்ணியப் பயனே போற்றி மெய்யினில் கனிவு பூண்ட விழுத்தவ மணியே போற்றி செய்யவன் அருளைப் பேணிச் செந்தமிழ்க் கவிதை பெய்த ஐயனே குமர தாச அழகனே போற்றி போற்றி. 5. டாக்டர் சாமிநாத ஐயர் தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. என வரூஉம் பொய்யா மொழிக்கு டாக்டர் சாமிநாத ஐயர் வாழ்க்கை ஓர் இலக்கியம். சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புந் தமிழ்; வளர்ப்புத் தமிழ்; வாழ்வுந் தமிழ். அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர். ஐயரின் இளமைக் காலமும் இடைக் காலமுஞ் சோதனைக் குரியன. அவர் சோதனை வலையில் சிக்கினாரில்லை. அஃது அவரது தவப்பயன். அக்காலம் சண்டை மயமானது. ஐயர் புலமை அவரைச் சண்டையில் புகுத்தவில்லை; தமிழ்த் தொண்டில் புகுத்தியது. அத்தொண்டு அவரை மஹா மஹோபாத்தியாயர் ஆக்கிற்று; தாக்ஷிணாத்திய கலாநிதி ஆக்கிற்று; டாக்டர் ஆக் கிற்று; தமிழ் தாத்தா ஆக்கிற்று; தமிழ்க்கோயில் ஆக்கிற்று. பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர். ஐயரைப் பார்க்க அவர் வீட்டுக்கு யான் பன்முறை சென்ற தில்லை. காரணம் அவர்தந் தொண்டுக்கு இடர் செய்தலாகா தென்பதே. என் வாழ்வில் அவர் வீட்டுக்குச் சென்றது எத்தனை நாள் இருக்கும்? சொன்னால் வியப்பாயிருக்கும். மூன்றேநாள். ஒருமுறை கதிரேசஞ் செட்டியாருடனும், மற்றொரு முறை மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையுடனும், இன்னொரு முறை புலியூர் ஜானகிராம் பிள்ளையுடனுஞ் சென்றேன். தமிழ் ஐயரை வழிகளில் பார்ப்பேன்; கூட்டங்களில் காண்பேன்; கோயில் களில் நோக்குவேன். சிற்சில சமயம் சிறிது நேரம் பேசுவோம்; மிகச் சிலவேளைகளில் நீண்ட நேரம் பேசுவோம். திருவான்மியூர் கோயிலில் ஒருமுறை சில மணி நேரம் பேசினோம். அது பெரிதும் நூல்களின் பதிப்பைப் பற்றியது. ஐயரை முதல் முதல் வைஜயந்தி அச்சகத்தில் கண்டேன். அவ்வச்சகத்தில் ஐயர் நூல்கள் பதிக்கப்பட்டன. அங்கே என் தமையனார் அதுபோது மேற்பார்வையாளராயிருந்தார். இராமலிங்க சுவாமிகளின் தமையனார் சபாபதி பிள்ளை யின் புதல்வர் வடிவேற் பிள்ளை, கதிரைவேற் பிள்ளைமீது தொடுத்த வழக்கில் சாமிநாத ஐயர் சான்றை முன்னவர் விரும்பி னர். ஐயர் ஜார்ஜ் டவுன் மாஜிடிரேட் கோர்ட்டுக்கு வந்தனர்; ஓர் அறையில் அமர்ந்தனர். அங்கே ஒரு சிறு கூட்டம் நுழைந்தது. யானும் அதைத் தொடர்ந்தேன். இராமலிங்க சுவாமிகளைப் பற்றியும் ஆறுமுக நாவலரைப் பற்றியுஞ் சில நல்ல குறிப்புக்கள் ஐயர் வாயிலாக வெளி வந்தன. அவைகள் இதுகாறும் எந்நூலி லும் வெளிவரவில்லை. பின்னே ஐயர் சான்று கூறினர். அவர் சான்று கதிரைவேற் பிள்ளைக்கே சாதகமாயிற்று. ஐயர் சான் றுக்கு மாஜிடிரேட் பெருமதிப்பளிப்பதை யான் நேரே கண் டேன். வழக்கு முடிவில் கதிரைவேற் பிள்ளை வெற்றிக்கு ஐயர் சான்றும் துணையாக நின்றது என்று பேசப்பட்டது. சுவாமி வேதாசலத்தின்மீது மானநஷ்ட வழக்கொன்று கந்தசாமி கவிராயரால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது. அதன் சார்பாகச் சென்னையில் சான்றுகள் திரட்டப் பட்டன. சான்றுக் குழுவில் ஐயர் பெயருஞ் சிக்கிக் கொண்டது. ஐயருக்குச் சான்று கூற விருப்பமில்லை என்பது பல வழிகளில் விளங்கியது. ஒரு பக்கம் கந்தசாமி கவிராயர் நின்றார்; இடை யில் ஐயர் நின்றார். என் தமையனாரையும் என்னையும் ஐயர் அழைத்து, யான் சான்று கூறுதற்கு முன்னால் வேதாசலம் சமாதானமாகி விடுவது நல்லது. என் சான்று அவருக்குப் பாத கம் விளைக்கலாம். நிலைமை அப்படி இருக்கிறது. நீங்கள் சொன்னால் வேதாசலம் கேட்பாராமே என்று ஓதினார். ஐயர் விரும்பியவாறே வழக்குச் சமாதானத்தில் முடிந்தது. திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் ஆண்டு விழாக்கள் திருவேட்டீச்சுரத்தில் நடைபெறும். அவ்விழாக் களில் பல தேவார சபைகள் கலந்து கொள்ளும். ஐயர் சபை களுடன் வெயிலையும் பொருட்படுத்தாது வருவர். ஓராண்டு விழா அவர் தலைமையிலேயே நடந்தது. முடிவுரையில் அவர், சுருங்கிய முறையில் மாகேசுர பூசை செய்வது புண்ணியம். காலைவேளையில் நீங்கள் உப்புமாவுக்குச் செலவிடுந் தொகையைக் கேட்டுத் திடுக்கிட்டேன். அது மிகை. அத்தொகை கொண்டு ஏதேனும் சிவ நூல் ஒவ்வொன்று ஆண்டுதோறும் வெளியிட லாமே என்று அஞ்சாது அறிவுறுத்தினர். நன்றி கூறுகையில் அவ்வுறுத்தலைப் பாராட்டினேன். மறு ஆண்டு சந்தான குரவர் வரலாறு வெளிவந்தது. சாமிநாத ஐயர் தேசபக்தன் நிலையத்தில் ஒருநாள் காணப்பட்டனர். அவருடன் ஓர் இளைஞர் இருந்தார். ஐயர் காட்சி எனக்கு ஆனந்தம் அளித்தது. தேசபக்தன் நிலையத்தை முற்றும் ஐயருக்குக் காட்டி ஆசிபெற்றேன். இவன் தந்தை சாமிநாத ஐயர் என்பவர்; தமிழ்ப் புலவர்; காலமாயினர்; தேச பக்தனில் தொண்டுசெய்ய விரும்புகிறான்என்று ஐயர் கூறினர். ஒராளுந் தேவையில்லாத சந்தர்ப்பம். ஆயினும் தமிழ் ஐயர் விரும்பியவாறு நடந்தேன். அவ்வினைஞர் இப்பொழுது சுதே சமித்திரனில் உதவி ஆசிரியராக உள்ள நடேச ஐயர். ஒருநாள் திருவான்மியூரில் ஐயரும் யானும் நீண்ட நேரம் பலவற்றைப் பற்றிப் பேசினோம். அப்பேச்சிடை, நீங்கள் தமிழ்த் துறையிலேயே தொடர்ந்து உழைத்திருத்தல் வேண்டும். அதி லும் இதிலும் நுழைந்தது தவறு என்ற கருத்துப்படக் கழறினர். யான், அலைவது என் பிறவிக் கூறு என்றேன். ஐயருக்கு நகைப் புண்டாயிற்று. ஐயரிடம் அணுகிப் பேசுங்கால் அவர்முகத்தில் ஒருவித ஒளி கால்வது புலனாகும். காரணம் என்ன? ஐயர் ஓலை ஏடு களை ஒப்பிடும்போது அவர் மனம் ஆன்றோர் பாக்களில் ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும். மனம் ஆழ்ந்து செல்லச் செல்ல அது புலன்களின் கட்டிலிருந்து விடுதலையடையும். விடுதலை யடைந்த நன்மனத்தினின்றும் எழும் ஒளி புறத்திலுங் காலும். அவ்வொளியே ஒழுக்கங் காப்பது. ஒளியும் ஒழுக்கமும் ஐயரைத் தமிழ்க்கோயிலாக்கின. 6. மறைமலை அடிகள் மறைமலையடிகள் யார்? சுவாமி வேதாசலம். அடிகள் கிறிதுவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரா யிருந்தவர். அவரது பழைய பெயர் நாகை - வேதாசலம் பிள்ளை என்பது. அற்றை நக்கீரனாரும் பிள்ளைச் சிவஞான முனிவரனாரும் ஓருருக்கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைத் சொல்லாலும் எழுத் தாலும் போற்றுவதுண்டு. வேதாசலனார் தமிழ் - செந்தமிழ் - சங்கத்தமிழ் - என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவுஞ் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட் டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்குண்டு என்று அறுதி யிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; வடமொழியுந் தெரிந்தவர். ஈழக் கதிரைவேற் பிள்ளைக்கும் நாகை வேதாசலம் பிள்ளைக்கும் அடிக்கடி நிகழ்ந்த வாதப்போர், மிக இளமை யில் இவருடன் கலந்து உறவாட, என்னை விடாமல் தகைந்தது. பின்னே 1910ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட்டையில் வேதா சலனாரின் சொல்லமிழ்தைப் பருகுந் தவமுடையவனானேன். அவரது தமிழ் உடலும், தமிழ் உரையும், தமிழ்க் குரலும், தமிழ்ப் பொருளும் என்னை அவர்தம் தோழனாக்கின; தொண்டனாக்கின. வேதாசலம், அடிகளாகிப் பல்லாவரத்தை உறைவிடமாகக் கொண்டபோது, அடிகள் ஒருநாள் இராயப்பேட்டை நண்பர் சிலரை வரவழைத்தார்; பகலில் தமிழ் விருந்தளித்தார்; மாலை யில் திரிசூலத்தில் சிவ விருந்தளித்தார். தமிழும் சிவமும் ஒன்றிய மறைமலை அடிகள் விருந்து மறக்கற்பாலதன்று. முன்னாளில் மறைமலையடிகள் அடிக்கடி இராயப்பேட்டை போதருவர்; குகானந்த நிலையத்தில் தங்குவர். அடிகட்கு எல்லாப் பணிகளையும் யானே செய்ய முந்துவன். மற்றவரும் போட்டியிடுவர். இரவில் சங்க நூல்களில் எனக்குற்ற ஐயங்களை அடிகளிடம் வெளியிடுவன். அடிகள் படுக்கையில் கிடந்து கொண்டே ஐயங்களைக் களைவர். வேறு பல தமிழ்ப் பேச்சுக் களும் எங்களிடை நிகழும். மறைமலை அடிகளுடன் யான் தூத்துக்குடிச் சைவ சித் தாந்த சபைக்கு இரண்டுமுறை சென்றேன்; நாகை முதலிய சில இடங்கட்குஞ் சென்றேன்; சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அந்நாளில் தமிழ் வானத்தில் ஒரு தூய திங்களென அடிகள் திகழ்ந்ததை யான் கண்டேன். வெலி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு யான் முயன்ற வேளையில் 1தகுதித்தாள் ஒன்று மறைமலை அடிகளால் வழங்கப்பட்டது. அஃது இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. அடிகளால் டி.எம். அச்சகம் என்றொன்று அமைக்கப் பட்டது. அதைத் திறக்குந்தொண்டு எனக்குக் கிடைத்தது. அத்திறப்பு விழா சுருங்கிய முறையில் செவ்வனே நடைபெற்றது. செய்வன திருந்தச் செய் என்னும் முதுமொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓரிலக்கியம். யான் கல்லூரி விடுத்து அரசியலில் தலைப்பட்டதை மறைமலை அடிகள் ஆதரித்தாரில்லை; என்னைக் கடிந்தும் பேசினார். தமிழ்ப் புலவர்களில் என்னைக் கடிந்து பேசுவோர் உலகில் ஒருவர் இருக்கிறாரெனில் அவர் மறைமலை அடிகளே யாவர் 1929ஆம் ஆண்டில் திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் சுவாமிகள் முயற்சியால் சுவாமிகளின் பள்ளியில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடொன்று கூடியது. அது மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்றது. தென்னாட்டுச் சைவக் குழாங்கள் அம்மகாநாட்டில் மலிந்தன. மகாநாடு ஆறுநாள் சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சி முறைகள் பல தென்னாட்டுச் சரித்திரத்தில் குறிக்கத்தக்கன. இறுதிநாள் மாலையில் திருஞானசம்பந்தரைப் பற்றி யான் பேசப் புகுந்தேன். கூட்டம் பெருகியது. பள்ளியின் இடம் போதவில்லை. பெருங் கூட்டம் வெளியே திரண்டது. யான் நீல வானத்தின் கீழ்ப் பேசலானேன். என் வாழ் நாளில் யான் பேசிய பேச்சுகளில் நினைவூட்டிக் கொள்ளத்தக்கனவற்றுள் அன்றைய பாதிரிப் புலியூர் பேச்சும் ஒன்று. என் பேச்சின் மாண்பை இங்கே யான் எப்படிப் பேசுவேன்! தமிழ்க் குழவி - ஞானசம்பந்தம் - என் நாவில் நிலவியது; அமைதி கூட்டத்தில் பொலிந்தது; தலைமை வகித்த அடிகளிடம் தவழ்ந்தது. எல்லாம் ஞானசம்பந்தமாகவே திகழ்ந்தன. அடிகள் ஞானசம்பந்தரைத் தமது ஆருயிர்க் குரு வாகக் கொண்டவர்; அவர் தமிழில் மூழ்கியவர். அத்தகைய உள்ளம் என் பேச்சில் எளிதில் திளைத்தது. அடிகள் கண்ணீர் மல்க எழுந்தார்; முடிவுரை கூறினாரில்லை. மறைமலையின் மனம் என்மீது படிந்தது. என்னைப் புகழும் அளவில் முடிவுரை நின்றது. புகழ்ச்சி தெய்வீகம் வரை சென்றது. அப்புகழுரையின் ஆவி அணித்தே என் தலைமையில் காஞ்சியில் நடைபெற்ற ஞானியார் சங்க ஆண்டு விழாவில் சங்கத்தார் எனக்களித்த நன்மொழித் தாளில்1 எதிரொலி புரிந்தது. என் பேச்சைக் குறித்து அடிகளிடத்தினின்றும் அடிக்கடி எச்சரிக்கை எழும். இரைந்தும் விரைந்தும் பேசுவது உமக்கு இயற்கையில் அமைந்துள்ளது. அதை ஓரளவிலேயே பயன்படுத் தல் வேண்டும். இயற்கைச் சக்தியை அளவின்றிப் பயன்படுத்தி னால் அஃது உடலுக்கு ஊறு செய்வதாகும் என்று அடிகள் அறிவுறுத்துவர். எச்சரிக்கையும் அறிவுறுத்தலும் என் காதில் நுழையும்; ஆனால் என் மனத்தில் நுழைவதில்லை. அடிகளின் நன்மொழியை அலட்சியஞ் செய்யவேண்டுமென்பது எனது நோக்கமன்று. என் பிறவிக்கூறு நன்மொழிமீதுங் கவலை செலுத்த விடவில்லை. யான் பெற்ற இயற்கைச் சக்தியின் வரம்பு கடந்தே பேசினேன். விளைந்ததென்னை? எனது உடலின் வன்மையும் பேச்சின் வன்மையும் மென்மையாயின. மறைமலை அடிகள் உடல் ஓம்புவதில் கண்ணுங் கருத்து முடையவர்; தமது நிலையம் போதருவோரை உடலோம்பலில் மனஞ் செலுத்துமாறு வலியுறுத்துவர்; எனக்குஞ் சொல்வர். அடிகளின் உடலோம்பு முறைகளைக் கடைப்பிடிக்க யான் முயன்றேன். அம்முயற்சி சில மாத காலமாதல் இடையீடின்றி நிகழ்ந்ததா? இல்லை. சில வாரக் கணக்கிலேயே அது வீழ்ந்தது. என் வாழ்க்கை வானக்கப்பலில் பறப்பது. அப்பறவைக்கு நேரம் ஏது? ஓய்வு ஏது? ஒன்று மட்டும் நிலைத்தது. அஃது எது? அஃது எனிமாஅதுவுஞ் சென்னையிலேயே. வெளியூர் அதை நாடுவதில்லை. மறைமலை அடிகளின் கருத்துக்கும் என் கருத்துக்கும் வேற்றுமையுண்டா? இல்லையா? சிலவற்றில் உண்டு. அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு; அடியேன் போக்கு வேறு. இரண்டுக்குஞ் சந்திப்புண்டாதல் அரிது. அடிகள் எழுத்தில் ஆரியர் தமிழர் என்ற பிரிவை வளர்க்குங் கருவிகளிருக்கின்றன. அவை மக்களின் ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் கலைக்குமென்பது எனது உட்கிடக்கை. மறைமலை அடிகள் சமய நூல்களிலும் தத்துவ நூல்களிலும் புகுந்து ஆராய்ச்சி என்று வெளியிடுங் கருத்துக்களை என்மனம் ஏற்பதில்லை. சமயமும் தத்துவமும் ஆராய்ச்சிக்கு எட்டாதன என்பதும், இவ்வாராய்ச்சியால் மக்கள் வாழ்க்கை நலம்பெறாது முரட்டுக் கும் மூர்க்கத்துக்கும் இரையாகுமென்பதும் எனது எண்ணம். ஒருவர் பன் மனைவியரை மணக்கலாமென்று அடிகள் அறைவது எனது நோக்குக்கு முற்றும் முரண்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது எனது கொள்கை. மறைமலையடிகளிடத்தில் பலவித நல்லியல்புகளுண்டு. அவைகளுள் சிறந்த ஒன்று இரக்கம் - ஜீவகாருண்யம். அடிகளின் இரக்கப் பண்பை விளக்குதற்கு ஈண்டொரு நிகழ்ச்சி குறித்தல் சாலும். இராமலிங்க சுவாமிகளை யொட்டிக் கதிரைவேலருக்கும் வேதாசலனாருக்கும் பல திற வாதங்கள் நடந்தன. சிவனடியார் திருக்கூட்டங்கள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு கூட்டம் கதிரை வேற் பிள்ளையை ஆதரித்தது; மற்றொன்று வேதாசலத்தை ஆதரித்தது . பின்னைய கூட்டம் கதிரைவேற் பிள்ளைக்குப் பல வித தீங்கு செய்ய முயன்றது. கதிரைவேலர் மீது கல்லெறிந்தது; அவரை இழித்து இழித்துத் துண்டுகள் வெளியிட்டது; அவரைப் போன்ற உருவஞ்செய்து அதைப் பாடையிலிட்டுக் கொளுத்தியது; இவைகளெல்லாம் போக, மற்றொரு கொடுமை நிகழ்த்த உறுதி கொண்டது. அஃது இராமலிங்க சுவாமிகள் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டது. அஃதென்ன? கொலை! வழக்குக் காலத்தில் கதிரைவேற் பிள்ளை இரவு பத்து மணிவரை சிந்தாதிரிப்பேட்டையி லிருப்பர்; சிலசமயம் பன்னி ரண்டு மணி வரை இருப்பர்; அதற்குமேல் புரசை நோக்குவர். ஒருநாள் அவரை வழியிலே கொலைசெய்ய ஏற்பாடு செய்யப் பட்டதாம், அச்செய்தி வேதாசலனார்க்கு எப்படியோ எட்டி யது. வேதாசலனார் இரக்கம் உடையவர்; இராமலிங்க அடிகளின் அருள் நெறியில் நிற்பவர்; அவர் என் செய்தார்? யாழ்ப்பாணத்து மாணாக்கர் ஒருவர் வாயிலாகக் கொடுமையைக் கதிரைவேற் பிள்ளைக்கு அறிவித்தனர். அன்று கதிரைவேற் பிள்ளை தக்க காவலுடன் சென்றனர். கொலைஞர் கருத்து நிறைவேறவில்லை. இந்நிகழ்ச்சியை எனக்குச் சொன்னவர் மறைமலையடிகளே. மறைமலை அடிகட்கு மக்கட்பேறு உண்டு. அவர்தம் மக்களில் ஒருவர் - மறை. திருநாவுக்கரசு - இவர்க்குப் பொதுத் தொண்டில் ஊக்கம் அதிகம். இவர் நாட்டுப்பற்று மேலீட்டான் இருமுறை சிறைக்கோட்டம் நண்ணினர். இப்பொழுது திருநாவுக்கரசின் வாழ்க்கை தமிழ்த்தொண்டுக்கும் சிவத் தொண்டுக்கும் பயன்பட்டு வருகிறது. வித்துவான்கள் கிராமத் தொண்டு செய்தல் வேண்டுமென்பது எனது வேணவா. அது வித்துவான் திருநாவுக்கரசு வாயிலாக நிறைவேறி வருகிறது. ஒரு தொண்டரை - தமிழ்த்தொண்டரை - சிவத்தொண்டரை - மக னாகப் பெற்ற பெருமை வாய்ந்த மறைமலையடிகள் வாழ்க. 7. ஞானியார் சுவாமிகள் ஞானியார் சுவாமிகளின் முழுப்பெயர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்பது. சுவாமிகள் திருக் கோவலூர் ஆதீனம் ஞானியார் மடத்தின் தலைவராயிருந்தவர். அம்மடத்தின் கிளையுள்ள திருப்பாதிரிப்புலியூர் அறப்பள்ளியே சுவாமிகளின் உறைவிடமாயிருந்தது. தமிழ் நாட்டில் எத்துணையோ மடங்கள் உள்ளன. அவை கள் என்னை ஈர்த்தனவா? இல்லை. அம்மடங்களுள் ஒன்றாகிய ஞானியார் மடம் மட்டும் என்னை ஈர்க்குமோ? பின்னை என்னை ஈர்த்தது எது? ஞானியார் சுவாமிகளின் பரந்த கலை யொளி. ஞானியார் சுவாமிகள் தென்மொழியில் பெரும்புலமை வாய்ந்தவர்; வடமொழியில் புலமையுடையவர். சுவாமிகட்கு ஆங்கிலமுந் தெரியும். இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் சுவாமிகளிடத்தில் இயற்கைப் புலமை அமைந்திருந்தது. சுவாமிகளை யான் முதல் முதல் 1913ஆம் ஆண்டிலே வேலூரிலே சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழா மேடையிலே கண்டேன். அந்நாள் நன்னாள். ஆறுமுக நாவலரை யான் கண்டதில்லை. அவரது நாவன்மையைப் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இளமையில் யான் கண்ட நாவலர் கதிரைவேற் பிள்ளையே. ஞானியார் சுவாமிகள் பேச்சைக் கேட்ட பின்னைத் தமிழ் நாட்டில் மற்று மொரு நாவலர் இருத்தலைக் கண்டேன். தமிழ் நாட்டிலும் கிளாட்ஸன்கள் சுரேந்திரர்கள் இருக்கிறார்கள் என்று என் நெஞ்சம் எண்ணியது. ஞானியார் சுவாமிகள் அறப்பள்ளித் தலைமையேற்று அரை நூறாண்டு ஆயபோது, அப்பள்ளிச் சார்பில் பொன் விழா (1939) கொண்டாடப்பட்டது. அவ்விழா மலரில் என் சிறு மொழியும் இடம் பெற்றது. அம்மொழியில் இரண்டொரு பகுதியை அகழ்ந்து ஈண்டுத் தருகிறேன். அஃது ஈண்டைக்குப் பொருத்தமாகும். ... முருகன் சேவடி வருடி யுருகும் ஈரநெஞ்சும், அவன் புகழ் பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும் செவ்விய நோக்கும், வெண்ணீறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும், பொன்னொளிரும் மணி மார்பும், கருமைக் கதிர் விரிக்குந் திருமேனியும் சண்முகா - சண்முகா என்று நீறளிக்கும் நீண்ட கையுங் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு, என் னுள்ளத்தில் ஓவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையுங் கவரும்; எவர்க்கும் எளிதில் இன்பூட்டும் . . ... ஞானியார் சுவாமிகள் மாணாக்கருக்குப் பாடஞ் சொல்லும்போதும், சொற்பொழிவு நிகழ்த்தும்போதும் தொல் காப்பியனாராகவும், நக்கீரராகவும், திருவள்ளுவராகவும், சேக் கிழாராகவும், வியாசராகவும், நீலகண்டராகவும், சிவஞான முனிவராகவும், பிறராகவும் முறை முறையே விளங்கி விளங்கி இலக்கிய இலக்கணச் சாத்திர நுட்பங்களை வெளியிடுவதைக் கேட்டுக் கேட்டுப் புலவரானவர் பலர். பழம் புலவர் பலரும் ஞானியார் ஒருவரிடம் விளங்குதல் வியப்பன்றோ? ... சுவாமிகளின் பேச்சுத் திறனை எதற்கு ஒப்பிடுவது? கடல் மடைத் திறப்புக்கா - வெண்கலக் கோட்டையில் அரசுவா புகுதலுக்கா - பெரும்புயலுக்கா - ஓயா மழைக்கா? எதற்கு - எதற்கு ஒப்பிடுவது? பலர் பலவாறு கூறுப. திருப்பாதிரிப்புலியூரில் வீற்றிருந்த அடியவர்க்கருள் புரியும் கோவலடிகள் கருமை பூத்த ஒரு பொறுமை மலை. அம்மலையினுச்சியில் - மூளையில் - கலைமேகங்கள் பொழிந்த அறிவு மழைநீர், தேங்கித் தேங்கிப் புரண்டு திரண்டு பன்முகங் கொண்டெழுந்து முட்டி முடுகி, வாயின் வழியே முழங்கி விரைந்து இடையீடில்லாச் சொற்றொடர் அருவியாக இழிந்து, பலதிறச் சுவை நுட்பப் பொருட்கள் மிதந்து சுழல, அன்பு வெள்ளப் பெருக்காய்ப் பரவிப் பரந்து, அருள் அலை கொழித்துக் கொழித்து ஓடும். நீர் பருகப் போந்த புலி, கரடி, யானை, மான், பசு முதலியன அருவி முழக்கி லெழும் இன்னொலி கேட்டு அதில் ஈடுபட்டுத் தன் தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின் விசையால் பிணி நீங்கப் பெறுவர். ஞானியார் சுவாமிகள் பேச்சால் விளைந்த நலன் அளப்பரிது . . . சுவாமிகள் முதன் முறை தென்னாடு நோக்கியபோதும், சென்னை போந்தபோதும் என் பத்திரிகைகள் முன்னணி வேலைகள் செய்தன. அடிகள் தென்னாடு சென்றபோது தேச பக்தன் தொண்டாற்றினான்; சென்னை சேர்ந்த போது நவ சக்தி பணி செய்தாள். தமிழ் நாட்டிலே பலவிடங்களிலே பலதிற விழாக்கள் ஞானியார் தலைமையிலே நடைபெறும். அவ்விழாக்களில் என் ஒலி பெறாதன மிகச் சிலவாயிருக்கும். சுவாமிகள் தலைமையில் யான் பேசிய பொருள் வகைகள் பலதிறம். அவைகளை யெல்லாம் சுவாமிகளின் முடிவுரை அணி செய்யும். ஞானியார் இலௌகிகத்தில் வல்லவராம். ஆனால் சுவாமிகள் என்னிடம் இலௌகிகம் பேசியதே இல்லை. பெரி தும் பொதுக்காரியங்களைப் பற்றியே பேசுவர். சென்னை இராயப்பேட்டை ஸ்ரீபாலசுப்பிரமணி பக்த ஜன சபைக்கு இரண்டாம் முறை சுவாமிகள் எழுந்தருளியபோது சுவாமி களும் யானும் ஓய்வாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப் பொழுது சுவாமிகள், நீங்கள் ஏன் செல்வரை அருவருக்கிறீர் என்று கேட்டார். யான் செல்வரை அருவருப்பதில்லை; ஒரே யிடம் செல்வம் திரள்வதை அருவருக்கிறேன்; செல்வரிடம் பொருளுக்குச் செல்வதில் எனக்கு அருவருப்புண்டு என்றேன். யான் இளமை தொட்டு ஞானியார் சுவாமிகளை வணங்கி வந்தேன். ஒருவரை ஒருவர் வணங்குதல் கூடாதென்று சிலர் பேசுவர். அவருள் ஒருவர் நீங்கள் ஏன் ஞானியாரை மட்டும் வணங்குகிறீர் என்று கேட்டார். அதற்கு, ஞானியாரை வணங்கும் பழக்கம் எனக்கு இன்று ஏற்பட்டதன்று. அஃது ஏற்பட்டு நீண்ட காலமாயிற்று. அதை வலிந்து நிறுத்தப் புகுவது ஆணவமாகும் என்று பதிலிறுத்தேன். ஞானியார் சுவாமிகள் முதல் ஆண்டு விழா கடந்த (1942) தைப்பூசத்தில் இரண்டு நாள் நடைபெற்றது. முதல்நாள் சுவாமி களின் படத்திறப்பு என்னால் நிகழ்த்தப்பட்டது. இரண்டாம் நாளும் யான் பேசுதல் நேர்ந்தது. அப்பொழுது ஓரிடத்தில் யான் ஒருவரை வணங்கி வந்தேன். அவரும் மறைந்தார். . . என்று குறிப்பிட்டேன். ஞானியாரின் மடத் தலைமையும், சிவிகை ஊர்தலும், இன்ன பிறவும் சுவாமிகளை வெளியூர் செல்லாதவாறு தகைந்து வந்தன. அவைகள் சுவாமிகளைச் சிறைப்படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன். 1941ஆம் ஆண்டு அன்பர் இராமசாமி நாயுடு என்பவர் தென்னாப்பிரிக்காவினின்றுஞ் சென்னை போந்தனர். அவர் சுவாமிகளையும் என்னையும் தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். சுவாமிகளைக் காண நாயுடுவும் யானும் காஞ்சி சென்றோம்; சுவாமிகளைக் கண்டோம். நாயுடு சுவாமி களிடம் தமது கருத்தைத் தெரிவித்தனர். எனக்குள்ள தடைகளை முதலியார் சொல்வர் என்ற பதில் சுவாமிகளிடத்திருந்து நகைப் புடன் பிறந்தது. காஞ்சியில் கண்ட அந்நகைமுகக் காட்சியே இறுதியதாயிற்று. 8. விபுலானந்தர் சுவாமி விபுலானந்தர் யாழ்ப்பாணத் தோன்றல்; இலங்கைச் செல்வம். அவர் தமிழிலுங் கலைஞர்; ஆங்கிலத்திலுங் கலைஞர். அவர் தங் கலை மனம் அவரது பேச்சிலும் எழுத்திலுங் கமழ்கிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விபுலானந் தர் தமிழ்ப் பேராசிரியராக யிருந்தபோது அவர்தங் கலைத் திறங்களெல்லாம் வெளியாயின. சுவாமிகள் முயற்சியுடையவர். அவரது முயற்சி அவரைக் கயிலைக்குச் செலுத்தி மீட்டது; பண்டைத் தமிழர் கண்ட யாழை மீண்டும் உயிர்ப்பிக்க ஊக்கியது. சுவாமி விபுலானந்தரைச் சென்னையில் சிலமுறை கண்டிருக்கிறேன். ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்த ஜன சபை ஆண்டு விழாவிலும் வேறிடங்களிலும் அவர் பேச்சைக் கேட்டிருக் கிறேன். யான் இரண்டுமுறை இலங்கை நோக்கினேன். ஒருமுறை (1926) கொழும்பிலே தென்னிந்திய இளைஞர் சங்க ஆண்டு விழாவிலே தலைமை வகிக்கச் சென்றேன்; இன்னொருமுறை யாழ்ப்பாண மாணாக்கர் காங்கிரஸிலே (1929) தலைமை பூணச் சென்றேன். முன்முறை, யாழ்ப்பாணத்திலும், பின்முறைத் திருக்கோணமலையிலும் விபுலானந்தர் தலைமையில் பேசி னேன். திருவண்ணாமலையில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டுவிழா நடைபெற்றபோதும் அவர் தலைமையில் எனது சொற்பொழிவு நிகழ்ந்தது. மயில்வாகனார் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து விபுலானந்தராய்த் தொண்டு செய்து வருகிறார். அவர் மடத்தில் சேர்ந்து விபுலானந்தராகாமல் தொண்டாற்றியிருப்பரேல், அத்தொண்டு அவரது இயல்புக்கேற்ப இன்னும் விரிந்த முறை யில் கலையுலகுக்குப் பயன்பட்டிருக்குமென்று யான் கருது கின்றேன். விபுலானந்தர் போன்ற கலைஞர்கள் மடங்களில் சிக்குறலாகாதென்பது எனது கருத்து. மடக்கட்டுகள் கலைஞரின் சில உரிமைகளையாதல் சிறைப்படுத்தியே தீரும். 9. வடிவேல் செட்டியார் வேதாந்தம் பயில்வோர் இலக்கிய இலக்கண உலகை எட்டியும் பார்ப்பதில்லை என்பது பொதுப் பேச்சு. இரண்டு உலகிலும் இயங்குவோர் தொகை மிகச் சிறிய தாயிருக்கும். கோ. வடிவேல் செட்டியார் வாழ்க்கை - பொன்வாழ்க்கை - இரண்டு உலகையுங் கண்டது. வடிவேல் செட்டியார் தமிழ்க்கருவூலம்; வேதாந்தக் களஞ்சியம். அவர் வேதாந்தக் கடலில் அழுந்தினவர். அதனால் அவரது நெஞ்சம் தம்மைத் தொல்காப்பியப் புலவரென்றோ சங்க இலக்கிய வல்லவரென்றோ நினைக்கவும் அவரை விட்ட தில்லை. செட்டியாரின் திருக்குறள் குறிப்புரையும், கைவல்ய விளக்கவுரையும் அவரது கல்வித் திறத்தைப் புலப்படுத்தா நிற்கின்றன. செட்டியார் வேதாந்தம் பேசிப் பேசி, எழுதி எழுதி, பாடஞ் சொல்லிச் சொல்லி அதிலே ஒன்றி ஒன்றிக் கனிந்த அநுபவம் பெற்றவர். அவ்வநுபவம் அவரைக் கருவி கரணங்க ளோய்ந்த தொண்டராக்கிற்று; குழந்தையாக்கிற்று. வடிவேல் செட்டியாரை முதல் முதல் எம்முறையில் கண்டேன்? கதிரைவேற் பிள்ளையின் மாற்றாராகக் கண்டேன். அதனால் இராயப்பேட்டை சுந்தரேசர் கோயிலில் கூடுங் கண் டனக் கூட்டங்களில் அவரைத் தாக்கிப் பேசலானேன். கதிரைவேற் பிள்ளை இவ்வுலக வாழ்வை நீத்த வாரத்தில் ஒருநாள் கந்தசாமி கோயிலருகே செட்டியாரும் யானும் சந்தித்தல் நேர்ந்தது. அவர் என் கையைப் பற்றி, கதிரைவேல் போய்விட்டானே, வாத சபை களும் அவனுடன் போயினவே. வாதத்துக்கென்று எத்தனைபேர் தொல்காப்பியம் படித்தனர்; தர்க்கம் படித்தனர். வல்லாளன் மறைந்தான் என்று வருந்தினார். அவ்வருத்தத்தில் அவர் தம் உண்மை நிலைபுலனாயிற்று. அன்று தொட்டுச் செட்டியாரிடம் பழகலானேன். செங்கல்வராய நாயகர் தோட்டத்தில் முன்னை நாளில் ஆண்டுதோறும் வேதாந்த மகாநாடு கூடும். v‹ g bgÇJ« br£oah® jiyikÆnyna ÃfG«., செட்டியாரால் காணப் பெற்ற சென்னை வேதாந்த சங்கம் என்னை மறப்பதில்லை. ஆரணி திருநாவுக்கரசு சபையின் சில ஆண்டு விழாக் களில் யான் தலைமை வகித்துள்ளேன். முதல் முறை (1920) செட்டியாரும் போந்தனர். செட்டியார் வேதாந்தி; தலைவர் சித்தாந்தி எனறு கர்நாடகக் காஷாயதாரிகள் கலகமூட்டி னார்கள். செட்டியார், என் தலைமையிலேயே பேசிக் கலகக் காரருக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்தினர். சிலவேதாந்த சபைகளின் ஆண்டுவிழாக்கட்குச் செட்டியாரும் யானுஞ் செல்வோம். அவர் ஒன்றரை நாள் தலைமை வகிப்பார்; யான் ஒன்றரை நாள் தலைமை வகிப்பேன். அச்சபைகளில் ஒன்று இராணிப்பேட்டை அச்சுதாநந்தர் சன்மார்க்க சங்கம். அச்சங்க விழாவின்போது காலையிலும் இரவிலும் பாலாற்றங் கரைக்குச் செல்வோம்; என்னென்னவோ பேசுவோம். ஒரு போது முன்னாளில் நீங்கள் ஏன் வாதத்தில் புரண்டீர்கள் என்று செட்டியாரைக் கேட்டேன். அதற்கு அவர், காலநிலை, இளமை, பொறாமை, புகழ் விருப்பம் என்று சொல்லிக் கொண்டே வந்து, யானுங் கழுதையாயிருந்தேன்; குப்பையில் புரண்டேன் என்றார். ஒருமுறை அச்சுதாநந்தர் சன்மார்க்க சங்க ஆண்டுவிழா பெருமுச்சையில் நடைபெற்றது. வழக்கம்போலச் செட்டியாரும் யானும் போந்தோம். இரண்டாம் நாள் இரவு படுக்கை நேரத் தில் எம். எ. சுப்பிரமணிய ஐயர் பேச்சைப் பற்றி விவாதம் எழுந்தது. சிலர் அதைத் தாக்கினர்; யான் அதைத் தாங்கினேன். அவ்வாதத்திடைச் சிலர் நேரே என்மீது பாணம் விடுத்தனர். யான் வெகுளாது பொறுமையில் நின்று பதிலளித்துவந்தேன். என் பொறுமை செட்டியாரைக் கவர்ந்ததுபோலும். மறுநாள் கூட்டத்தில் நிகழ்ந்ததை வெளியிட்டுக் கலியாணசுந்தர முனிவர் என்று என்னை அழைத்தார். அதுவே பெயராகப் போய்விட்டால் என் செய்வது என்ற அச்சம் எனக்கு உண்டாயிற்று. யான் வழக்கமாக ஆண்டுதோறுஞ் செல்லுஞ் சபை மற் றொன்றுள்ளது. அது வெட்டுவாணம் சன்மார்க்க சபை. ஓராண்டு விழா வடிவேற் செட்டியாரையுங் கண்டது. இரண் டாம் நாள் பலி மறியல் வேளையில் செட்டியார் ஆடுவெட்டி கள் கத்தியின் கீழ் நின்று கழுத்தைச் சாய்க்கலாயினர். அவ் வாண்டு மறியல் வேடிக்கையா யிருந்தது. அவ்வளவு தூரம் யான் சென்றதில்லை. திராவிடன் பத்திரிகை முருகனையும் அரங்கநாதனையும் கண்டபடி வைது ஒரு காலத்தில் எழுதியது. அதற்கென்று மறுப்புக் கூட்டங்கள் கூடின. அக்கூட்டங்களில் செட்டியாரும் யானும் கலந்தே தொண்டாற்றினோம். சுயமரியாதை இயக்கம் வீறிட்டெழுந்தபோது அதன் பொருந்தாப் பகுதியை யான் எதிர்த்தேன்; உரமாக எதிர்த் தேன். மிக உரமாக எதிர்த்தேன். அவ்வேளையில் அவ்வியக் கத்தை ஒடுக்க வீராவேசத்துடன் கிளம்பியவர் கிருஷ்ணசாமி பாவலர். இவர் செட்டியார் மாணாக்கருள் ஒருவர். செட்டியார் துணையும் பாவலர்க்குக் கிடைத்தது. அச்சமயத்தில் செட்டியாரும் யானும் (சுக்கில ஆனி-4) புதுவை சென்றோம். நாங்கள் இரு வரும் முத்தியாலுப்பேட்டையில் தங்கினோம். பிற்பகல் முன்று மணிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் திரண்டு செறிந்து மிடைந்தது. ஊர்வலம் புறப்பட்டது. நாம் காலையில் இவ் வழியே போனோம். அப்போது ஒன்றுங் காணோம். இப்பொழுது என்ன இவ்வளவு கூட்டம்? என்று என்னைப் பார்த்துச் செட்டியார் கேட்டார். இப்பொழுது நாம் ஊர்வல மனிதர் என்று சொல்லி விடுத்தேன். ‘á¤j Éfhu« v›tsî ntiy brŒ»wJ? என்று தாமே பேசிக் கொண்டார் செட்டியார். மறுநாள் காலையில் எங்கள் பேச்சைக் கேட்டவருள் சிலர் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தனர். அவருள் சுய மரியாதையரும் இருந்தனர். ஒருவர், செட்டியாரைப் பார்த்து, நீங்கள் வேதாந்தி; பெண்டாட்டி வேண்டாம்; பிள்ளை வேண்டாம் என்று சொல்கிறவர். c§f£F ï« kfh eh£oš v‹d ntiy?என்று வினவினர். செட்டியார், உங்களுக்குப் பெண்டாட்டியை அநுபவிக்கவாதல் தெரியுமா? சோதனை செய்யலாமா? என்று கடாவினார். கேள்வி கேட்டவர் வாளா இருந்தனர். இன்னொருவர் என்னைப் பார்த்து, கல்லையுஞ் செம்பையும் ஏன் கும்பிடல் வேண்டும் என்று உறுத்தனர். யான், மரத்தை மறைத்தது மாமதயானை என்னுந் திரு மந்திரத்தை எடுத்து விளக்கப் புகுந்தேன். அப்பொழுது செட்டியார் என்னைப் பார்த்து, தம்பி! Ú® brhšy¥ òF« gâš ï¡T£l¤J¡F VwhJ’ v‹W m§nf xUt® mªâUªj xU jiyt® á‹d¤ij¥ ãL§»d®; ïij¤ Jil¥g¡ f£ilahš mo¡fyhkh? என்றார். அடித்தல் கூடாது என்றார் மற்றொருவர். ஏன், இது தகரந்தானே வர்ணந்தானே என்றார் செட்டியார். கூட்டம் நகைத்தது. வடிவேல் செட்டியாரை முதுமை மூடியது. அம்முதுமை அவர் நீண்ட காலமாகத் தமிழ்த்தொண்டு செய்து வந்த பள்ளியை விடுத்து ஆறுதல் அடையும் நிலைமையைக் கூட்டி யது. ஆசிரியன்மாரும் மாணாக்கரும் செட்டியார்க்குச் சிறப்புச் செய்ய முயன்றனர். சிறப்பு விழாத் தலைமைக்குப் பல பெயர்கள் ஆலோசனைக்கு வந்தன. தலைவர் எவராயினுமாக; அவர் உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோராயிருத்தல் கூடாது. உதட்டளவில் என்னைப் போற்றி, உள்ளத்தில் தூற்றுவோர் வேண்டாம். கலியாணசுந்தரம் தலைமையை யான் விரும்புறேன் என்று செட்டியார் சொற்றனராம். விழா என் தலைமையிலேயே இனிது நடைபெற்றது. வடிவேல் செட்டியாரின் பள்ளி மாணாக்கர் பலர். அவருள் ஒருவர் தை. ஆ. கனகசபாபதி முதலியார். இவரால் செட்டியார் முக உருவம் வடிக்கப்பட்டது. அதற்குத் திறப்பு விழா நடந்தது; பலர் பேசினர்; யானும் பேசினேன். என் பேச்சிடை செட்டியார் பெரிய வேதாந்தி; சந்நியாசக் குழுக்கள் இவரைச் சூழ்ந்து வட்ட மிட்ட வண்ண மிருக்கும். அச்சூழல் இவர்க்குக் காஷாயச் சோதனை மூட்டாதிருந்தமை வியப்பே. செட்டியாரின் காவி யணியாத கோலமே என் கண்ணுக்கு விருந்தாகிறது. செட்டியார் இல்லறத்தாரா துறவறத்தாரா என்னும் ஆராய்ச்சி எவருஞ் செய்ய வேண்டுவதில்லை. செட்டியாரை யான் அறவோர் - அந்தணர் - என்று கொண்டுள்ளேன். வடிவேலரின் அந்தண்மை எனக்கு நன்கு தெரியும் என்ற கருத்தை விளங்க வைத்தேன். 10. சண்முகம் பிள்ளை மயிலை சண்முகம் பிள்ளை தொல்காப்பியம் சண்முகம் பிள்ளை என்று போற்றப்பட்ட ஒரு பெருந் தமிழ்ப்புலவர். அவரிடத்தில் தமிழ் பயின்றவர் கா. ரா. நமசிவாய முதலியார் முதலியோர். கதிரைவேற் பிள்ளையின் கெழுதகை நண்பருள் சண்முகம் பிள்ளையும் ஒருவர். இருவரும் சென்னை கந்தசாமி கோயிலின் வசந்த மண்டபத்தில் உரையாடுங் காட்சி நன்றா யிருக்கும். அஃது என்னை வயப்படுத்தும். மணிமேகலை என்னுந் தமிழ்ப் பெருங்காவியத்தை முதல் முதல் பதிப்பித்த பெருமை சண்முகம் பிள்ளைக்கு உண்டு. கம்பராமாயணம் - அயோத்தியா காண்டத்துக்கு ஒரு நல்லுரை அவரால் காணப் பட்டது. அவர் யாத்த நூல்களிற் சிறந்தது திருமுல்லைவாயில் புராணம். திருமுல்லை வாயில் தென்றல் விழாவில் ஒருநாள் சண்முகம் பிள்ளையும் யானும் ஒரே வீட்டில் உணவுகொள்ளல் நேர்ந்தது. பின்னே பச்சையம்மன் பூங்குளக்கரைக்குச் சென் றோம். சிறிது நேரங் கழித்து மயிலை சண்முகம் பிள்ளை தமது புராணத்தைப் படித்துப் படித்து ஆங்காங்கே விளக்கங் கூறினர். அவரது தொல்காப்பியப் புலமை நன்கு புலனாயிற்று. 11. நமசிவாய முதலியார் திருமகள் உள்ள இடத்தில் கலைமகள் இராள். இவள் உள்ள இடத்தில் அவள் இராள் என்ற மொழி எப்படியோ பிறந்தது. அம்மொழியைப் பொய்ப்படுத்தியவர் கா. ரா. நம சிவாய முதலியார். முதலியார் நூலாசிரியர்; போதகாசிரியர். அவர் நூலும் போதனையும் பாலர் வகுப்பு முதல் பி. எ. வகுப்பு வரை படிப்படியே பயன்பட்டன. இக்காலத் தமிழ்நடைக்குத் தந்தையாராகிய ஆறுமுக நாவலர்க்குப் பின் அந்நடையை வளர்த்தவர் நமசிவாய முதலியார். முதலியார் ஐரோப்பியமுறையில் உடை அணிவார். காரணங் கேட்டால், அவர், இவ்வுடையில் பண்டிதர்க்கு மயக்கமுண்டு; மதிப்பும் உண்டு. அம்மயக்கையும் மதிப்பையும் போக்கவேண்டிப் பண்டிதரினத்தைச் சேர்ந்த யான் இவ்வுடை அணிகிறேன். உங்களைப்போன்ற பண்டிதர் ஒருவர் ஐரோப்பிய உடை அணி கிறாரெனில், அவ்வுடையிலுள்ள மயக்கமும் மதிப்பும் பண்டித உலகினின்றும் ஒழியுமல்லவோ? என்று வேடிக்கையாக விளம்புவர். வெலி கல்லூரித் தலைமையாசிரியர் பதவியை யான் பெற முயன்றவர் சிலர். அவருள் நமசிவாய முதலியாரும் ஒருவர். பாடபுத்தகங்கள் எழுதித் தம்மைப்போலப் பொருளீட்டுமாறு அடிக்கடி என்னை முதலியார் தூண்டுவார். அத்தூண்டுதலுக்கு யான் எளிமையாவதில்லை. பின்னே அவர் வலியுறுத்தத் தொடங் கினர். வலியுறுத்தல் எனது நிலையைச் சிறிது குலைத்தது. எளிமை வாழ்க்கைக்கென்று என்னைப் பிறப்பித்த இயற்கை அன்னை பொருள் முயற்சியில் என்னைத் தலைப்பட விடுவளோ? அவள் என்னைத் தடுத்தாட் கொண்டாள். எப்படி? சுய ஆட்சிக் கிளர்ச்சியிலே என்னைப் புகச் செய்தாள். யான் அரசியல் உல கில் புகுந்ததை நமசிவாய முதலியார் விரும்பவில்லை. பிரஸிடென்ஸி கல்லூரியினின்றுஞ் சாமிநாத ஐயர் விலகியபோது, யான் தேசபக்தன் ஆசிரியனாயிருந்தேன். அவ் விடத்தில் என்னைச் சேர்க்கச் சிலர் முயன்றனர். (விவரம் பின்னர்) அவர் தம் முயற்சியைக் கேள்வியுற்ற நமசிவாய முதலியார் என்னை நெருக்கினர். யான் ஒரு கல்லூரியில் போதகாசிரியனா யிருந்தே பத்திரிகாசிரியனாக வந்துள்ளேன் மீண்டும் யான் பழைய வேலைக்கு ஏன் போதல் வேண்டும்? பிரஸிடென்ஸி கல்லூரி என்ற பெயருக்கும், மகாலிங்க ஐயர், தொழுவூர் வேலாயுத முதலியார், சாமிநாத ஐயர் முதலியோர் வகித்த பதவி என்பதற்குமா யான் இப்பொழுது மேற்கொண்டுள்ள பீடத்தை விடுதல் வேண்டும்? தேசச் சேவையே எனக்குப் பெரிதாகத் தோன்றுகிறது என்று மறுத்தேன். இது பலதிறப் பணிகளில் மூழ்கிய என் மனத்துள் எங்கேயோ ஒரு மூலையிற் போய்ப் படிந்தது. பல ஆண்டு கடந்து பிரஸிடென்ஸி கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் , மணிமேகலைஎன்ற பொருள்பற்றி யான் பேசிய போது, தலைமை தாங்கிய நமசிவாய முதலியார், பழைய நிகழ்ச் சியை நினைவூட்டி வருந்தினார். அவர்க்குத் தமிழ்ப் போதகாசிரி யர் வேலையே சிறப்பாகத் தோன்றியது. ஆண்டுதோறும் தைத்திங்களிலே பொங்கல் விழாவிலே தமிழ்த் திருநாள் ஆங்காங்கே இந்நாளில் கொண்டாடப் படுகிறது. இக்கொண்டாட்டத்தை முதல் முதல் தொடங்கியவர் கா. ரா. நமசிவாய முதலியாரே யாவர். பின்னாளிலே அக்கொண்டாட்டம் என்னையும் வயப்படுத்தியது. தமிழ்த் திருநாள் கொண்டாட் டத்தைக் குறித்து நாங்கள் கட்டிய கோட்டை பெரிது. எல்லாம் மானதமாய்ப் போயின. வேலைக்கென்று தம்மிடம் எவர் வரினும் அவர்க்கு முகமலர்ச்சியுடன் நமசிவாய முதலியார் ஆதரவு நல்குவார்; அவர் பொருட்டுச் சென்னையை வலம் வந்தவண்ணமிருப்பார். பெட்ரோல் செலவு மீது முதலியார் கருத்துப் படிவதில்லை. ஒரு நாள் யானும் வேறு சிலரும் நமசிவாய முதலியாரின் கடலகத் தில் பேசிக்கொண்டிருந்தோம். அவ்வேளையில் தொல்லையில் புரண்டு புரண்டு மனமுடைந்த முதல் வகுப்பில் தேறிய ஒரு வித்துவானைக் கடலகங் கண்டது. வித்துவான் வாழ்வு இரங்கத்தக்கதா யிருந்தது. உமக்கு வேலை கிடைக்கும்வரை இவ்வகத்தில் நீர் இருக்கலாம் என்றார் முதலியார். ஊரில் தாய் தந்தையர் இருக்கின்றார் என்றார் வித்துவான். அவருக்கு மாதந் தோறும் எவ்வளவு தேவையாயிருக்கும் என்று முதலியார் இரக்கங் கேட்டது. பதினைந்து ரூபா செலவாகும் என்ற பதில் ஏழ்மை யிலிருந்து பிறந்தது. அத்தொகை திங்கள்தோறும் முதலியாரால் அனுப்பப்பட்டு வந்தது. நமசிவாய முதலியாரை ஒரு தமிழ்க் கற்பகம் என்று கூறுவது பொருந்தும். 12. மாணிக்க நாயக்கர் எஞ்சினியர் மாணிக்க நாயக்கர் கூர்த்த மதியினர். பேர் அறிஞர். அவர் ஒரு பெரிய ஊற்று. அதினின்றும் புதுமைகள் சுரந்த வண்ணமிருக்கும். நாயக்கர் ஆராய்ச்சிகள் தமிழின் தனிமையை நிலைபெறுத்துவன. அவ்வாராய்ச்சிகளில் மிக மிகச் சிலவே வெளி வந்தன. எல்லாம் வெளிவந்திருப்பின், சரித்திர உலகில் தமிழ் நாடு ஒரு தனி மதிப்புப் பெற்றிருக்கும். தமிழ் நாட்டின் தவக்குறை! நாயக்கர் தொல்காப்பியக் கடலை அடிக்கடி கடைவர்; கடைந்து கடைந்து அமிழ்தம் எடுப்பர்; அதை நீங்கள் ஏற்கிறீர் களா? என்று என்னைக் கேட்பர். இந்நாளில் என்னை அவ்வாறு கேட்போர் கோதண்டபாணி பிள்ளை ஒருவரே. மாணிக்க நாயக்கரின் ஆராய்ச்சி மிகுந்த சொற்பொழிவு கள் சில சென்னையில் நடைபெற்றன. அவைகளுள் ஒன்று பச்சையப்பன் மண்டபத்தில் நடந்தது. அச்சொற்பொழிவு சனி தோறும் தொடர்ந்து தொடர்ந்து சில வாரம் நிகழ்ந்தது. நாயக்கர், மக்கள் மூளை அறிவுக்களன் என்றும், மார்பு உரத்தின் இடம் என்றும், அறை நீருக்குரியது என்றும், கால் தரைக்கு இயைந்த தென்றும் விளக்கி, இம்முறைப்படி வருணாச்சிரமம் அமைந்தது! என்றார். என்றதும் கூட்டத்தில் மகிழ்ச்சியொடுங்கிற்று. சிலர் முகங்கள் வாடின. சிலர் உதடுகள் துடித்தன. சிலர் கண்கள் புகைந்தன. முடிவில் பேரறிஞர், பூச்சிகளின் நடமாட்டத்தை எடுத்துக்காட்டி வருணாச்சிரமம் பிறவியில் அமைவதில்லை என்று நிறுவினர். கூட்டம் மலர்ந்தது. தலைமை வகித்த ஜடி சதாசிவ ஐயரால் நாயக்கர் கருத்துக்கள் போற்றப்பட்டன. மாணிக்க நாயக்கர் எனக்கு நண்பராக மட்டும் தோன்றி னாரில்லை; நண்பு கடந்த ஒருவராகவுந் தோன்றினார். யோகி சிவசங்கர முதலியார் என் நண்பருள் ஒருவர் அவர் மாணிக்க நாயக்கரைப் பார்த்தல் வேண்டுமென்று விரும்பினர். ஒருநாள் அவரை நாயக்கர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். சிவசங்கர முதலியார் யோகிருந்தார். நாயக்கரும் அவர் எதிரிலே யோகிருந்தார். உங்கட்குத் தெரியாத கலை இல்லைபோலும் என்று நாயக்கரைப் பார்த்து என் நா நவின்றது. அஞ்ஞானம் என்றொரு நூல் மாணிக்க நாயக்கரால் யாக்கப்பட்டது. அந்நூல் பலருக்கு அனுப்பப்பட்டது. எனக்கும் வந்தது. யான் அதைப் படித்து வைத்து விட்டேன். கருத்தெழுதல் வேண்டுமென்ற எண்ணமே என்பால் எழவில்லை. பல ஆண்டுகள் கடந்தன. சென்னையில் ஞானியார் தலைமையில் (1927) நாயக்கரும் பேசினர்; யானும் பேசினேன். அக்கூட்டத்தில் என்னைப் பார்த்த நாயக்கர், அஞ்ஞானம் இரண்டாம் பதிப்பு அச்சாகிறது. அதில் சாதக பாதகக் கருத்துக்கள் வெளியாகும். கருத்தை வெளியிடா தவர்க்குச் சாட்டை கிடைக்கப் போகிறது என்றார். எனக்கு அஞ்ஞானம் நினைவுக்கு வந்தது; மறப்பு மக்கட்கு இயல்பு என்று சொல்லி, வீடு சேர்ந்ததும் எனது கருத்தை வரைந்தனுப்பி னேன். மதரா ஜு என்றொரு நூல் நாயக்கரால் எழுதப்பட்டது. அதிலே, அவர், இராமசாமி நாயக்கரையும், வரதராசலுவை யும், என்னையும் ஏமாந்த எலிகளாக்கினமை குறிக்கத்தக்கது. மாணிக்க நாயக்கர் இறந்துபட்ட பின்னர் அவர்தம் ஆண்டு விழா சிறப்பாக இடைவிடாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஓராண்டு விழாவில் ஸர், பி.டி. ராஜன் தலைமை பூண்டார். கூட்டம் ஒரே ஜடி மயமாயிருந்தது. யான் நாயக்கர் நண்பன் என்ற முறை யில் அழைக்கப்பட்டேன். உங்கள் கூட்டம் என்னைப் பிராமணச் சார்பினன் (Pro Brahmin) என்று கருதுகின்றது. இஃது உண்மை. யான் பிராமணரிடத்திலுள்ள நல்ல குணங்களைக் கண்டு அவை களின்படி பிராமணரல்லாதாரும் நடத்தல்வேண்டும் என்னுங் கருத்துடையவன். நீங்கள் வேறு குணங்களைக் கண்டு நிந்தித்தே காலங் கழிக்கிறீர்கள். பிராமணர் மாணிக்கங்கள் எங்கே இருக்கின்றன என்று தேடிக் காண முயல்கிறார். நீங்கள் மாணிக் கங்களைக் குழியில் தள்ளி மறைக்க முயல்கிறீர்கள். உங்கள் கண்ணுக்குச் சருகுகளே புலப்படுகின்றன. நமது மாணிக்கம் பிராமணரிடைத் தோன்றியிருந்தால் அதன் ஒளி வேறு விதமாகி யிருக்கும். மாணிக்க நாயக்கருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்தம் அரிய ஆராய்ச்சிகள் எங்கே கிடக்கின்றன? எப்படிக் கிடக்கின்றன? ஜடி மந்திரிமார் நினைவிலாதல் மாணிக்க நாயக்கர் ஆராய்ச்சித் திறம் நிலவுகிறதா? என்று தோற்றுவாய் செய்தேன். கூட்டம் இமையா நாட்டம் உடையதாயிற்று. 13. ஸ்ரீநிவாச பிள்ளை ஸ்ரீநிவாச பிள்ளை தஞ்சையின் கலங்கரை விளக்காய் ஒரு பெருங் கழகமாய், ஆராய்ச்சி வெள்ளமாய்த் திகழ்ந்தவர். அவர் நா, சட்டம் பேசும்; அரசியல் பேசும்; தொழில் பேசும்; வாணிபம் பேசும்; இலக்கணம் பேசும்; இலக்கியம் பேசும்; சமயம் பேசும்; பன்மொழி பேசும்; யான் தஞ்சை நோக்கும்போதெல்லாம் அவர் விருந்தினனாகவே இருப்பேன். 1918ஆம் ஆண்டிலே யான் ஸ்ரீநிவாச பிள்ளையின் நட்பைப் பெற்றேன். முதல்முறை அவரைக் கண்ட போது அவர் கையில் சிலப்பதிகார மிருந்தது. முகமனுக்கு முன்னர் வஞ்சிக் காண்டக் கேள்விகள் எழுந்தன. யானும் தலைப் பாகை சட்டை முதலியவற்றைக் களையாமல் எனக்குத் தெரிந்த விடைகளை இறுத்துக்கொண்டே வந்தேன். முதலில் தமிழ் விருந்து நடந்தது; பின்னை மற்ற விருந்துகள் நடந்தன. மாலையில் காங்கிர பிரசாரஞ் செய்தேன். தலைமை வகித்த ஸ்ரீநிவாசனார், முடிவில், நாளை இவ்வேளையில் சிலப்பதிகார ஆராய்ச்சி பேசப்படும். பேசுவோர் கலியாணசுந்தர முதலியாரே என்றார். அப்படியே சிலப்பதிகாரச் சொற்பொழிவு நடந்தது. மற்றொரு முறை யான் தஞ்சை நண்ணிய சமயத்தில் சிவஞானபோதம் பற்றிப் பேசுமாறு தஞ்சைச் செல்வம் பணித்தது. யான் தஞ்சை யில் கால் வைத்தால் காங்கிர அளவில் நிற்றல் இயலாது. வேறு சிலவற்றிலும் தலைப்படல் நேரும். தமிழ்க் கருவூல மாயிலங்கிய ஸ்ரீநிவாச பிள்ளை தமிழ் வரலாறு என்றொரு நற் சேயை ஈன்று மறைந்தனர். 14. உமாமகேசுரம் பிள்ளை கரந்தை உமாமகேசுரம் பிள்ளையை முதல்முதல் தஞ்சை பெஸண்ட் மண்டபத்தில் (1918) பார்த்தேன். அறிமுகஞ் செய்து வைத்தவர் ஸ்ரீநிவாச பிள்ளை. உமாமகேசுரம் பிள்ளைக்கும் எனக்கும் அரசியலில் அடிப்படையான வேற்றுமையுண்டு. அவரும் அவரைச் சேர்ந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் சிலரும் சுதேசமித்திரனைப் படித்தாலும் படிக்கலாம்; தேசபக்தனைப் படித்தலாகாது என்ற உறுதியில் நின்றனராம். கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னைக் கண்ணாலும் காணாதிருந்தது. பின்னே நிலைமை மாறியது. ஞானியார் சுவாமிகள் மடத்தில் உமாமகேசுரம்பிள்ளை யும் யானும் ஒருமுறை தங்கினோம்; ஞானியார் முன்னிலையில் பல பேசினோம். உமாமகேசுரம் வகுப்பு வாதத்தில் நின்றார்; யான் தேசியத்தில் நின்றேன்; ஞானியார் நடுவில் நின்றார். உமாமகேசுரம் பிள்ளையைத் தலைமையாக்கொண்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் எனக்கு அழைப்பு வரும். அதில் எடுக்கும் பொருள் அரசியல் அற்றதாயிருத்தல் வேண்டும் என்றொரு குறிப்பிருக்கும். அக்குறிப்பு எனக்குத் தீயெனத் தோன்றும். எப்படியோ ஒருமுறை ரா. இராகவ ஐயங்கார் தலைமை தாங்கியபோது கரந்தை வலையில் சிக்கிக்கொண்டேன்; என் பேச்சில் புறப்பொருள் அரசியல் என்பதைக் குறித்தே விட்டேன். அவ்வேளையில் திருவையாற்றுக் கல்லூரியில் சொற் பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று அழைப்பு வந்தது. யான் அதற்கு இணங்கினேன். உமாமகேசுரம் பிள்ளை, கல்லூரித் தலைவர் வகுப்புவாதி; அவரது வகுப்புவாதம் என்னை ஒருமுறை தாக்கியது; வேறு நண்பரையும் தாக்கியது; உம்மையும் தாக்கும் என்று வழி கூட்டினர். கல்லூரித் தலைவர் சுப்பிரமணிய சாதிரியார் சகோதரரைப்போல் நடந்தார். அவர் தலைமை யிலே கூட்டம் நடைபெற்றது. என் பேச்சில் ஒரு சொல்லையேனும் அவர் மறுத்தாரில்லை. முடிவுரை நன்முறையில் கூறப்பட்டது. பின்னே சென்னையில் உமாமகேசுரம் பிள்ளையைச் சந்தித்தல் கூடியது. அவர் திருவையாற்றில் உங்கட்குத் தூற்றல் கிடைக்கு மென்று எதிர்பார்த்தேன்; போற்றலே கிடைத்ததென்று கேள்வி யுற்றேன். பாப்பனரை ஏமாற்றும் வித்தை உங்களுக்குத் தெரியும். உங்களை ஏமாற்றும் வித்தை அவர்க்குத் தெரியும் என்று நகைத் தார். ஏமாற்றங் கிடையாது. எல்லாஞ் சகோதர நேயம் என் றேன். உமாமகேசுரம் பிள்ளை என்னைப்பற்றி என்ன நினைந் தாலும் என்ன சொன்னாலும் அவரது தமிழ்ப் பற்று என்னை அவரை நேசிக்கவே செய்தது. துறையூர் மகாநாட்டில் (1932) உமாமகேசுரம் பிள்ளையும் யானும் மூன்று நாள் ஒரே இடத்தில் தங்கி அளவளாவியது என்றும் மறக்கற்பாலதன்று. 15. வேங்கடசாமி நாட்டார் இந்நாளில் பழம் பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவோர் தொகை மிகச் சிறியதாயிருக்கிறது. அச் சிறிய தொகையினருள் ஒருவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார். நாட்டாரின் நுண்ணிய நோக்கில் அன்புப் புனலும் வீரக்கனலும் ஒருங்கே ஒழுகித் தழல் விடுதல் புலப்படும். இற்றைக்குச் சுமார் முப்பதாண்டுகட்கு முன்னர் அறிஞர் வேங்கடசாமி நாட்டாரின் பேச்சை முதல் முதல் யான் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழாவிலே கேட்டேன். அது புலமைப் பேச்சாகவே இயங்கிற்று. நாட்டார், வீட்டிலும் பள்ளியிலும் புலமைப் பேச்சே பேசுதல் பின்னே தெரியவந்தது. அவர் கூட்டங்களில் பேசுவதைச் சுருக்கெழுத்தில் இறக்கிப் பெயர்த்துப் பார்த்தால் அது புலமை வாய்ந்ததாகவே காணப் படும். திண்டுக்கல்லுக்கும் பழனிக்கும் இடையில் ஒட்டஞ் சத்திரம் இருக்கிறது. அங்கே நாவலூற்றுச் சன்மார்க்க சங்கத் தின் இரண்டாம் ஆண்டு விழா (1927) நடைபெற்றது. அதிலே நாட்டாரும் யானும் வாய்த்தொண்டாற்றிப் பழனி நோக்கி னோம். வழியில் நாட்டார் ஐயா, நீங்கள் சுயமரியாதை இயக் கத்தின் சில கொள்கைகளை மறுக்கப் புகுந்தது மகிழ்ச்சியூட்டு கிறது. அக்கொள்கைகட்கு விதை விதைத்தவர் நீங்களல்லவோ? சீர்திருத்தம் என்ற பெயரால் கோயில்களின் நடைமுறைகளில் சிலவற்றை வன்மையாக நீங்கள் மறுக்கப் புகுந்ததே விதையாயிற்று. நீங்கள் ஒருவிதக் கருத்துக்கொண்டு ஆபாசங்களை மறுக்கி றீர்கள். அம்மறுப்பை இராமசாமி நாயக்கர் கேட்டுக் கேட்டு அதைத் திரித்துத் திரித்து வேறுவிதமாகப் பயன்படுத்துகிறார். போனது போக, இனியாவது கோயிலைக் குறை கூறாதிருங்கள் என்று தண்மையும் வெம்மையும் கலந்த ஒலியில் உரைத்தது என் உள்ளத்தை உறுத்தியது. பழனியில் நாட்டார் திருமுருகாற்றுப் படை ஓதி ஆண்டவனை வழிபட்டது உள்ளத்தை உருக்கியது. துறையூர் பூவாளூர் முதலிய இடங்களில் நாத்திகத்தின் பெயரால் சில குறும்புச் செயல்கள் எழுந்தன. அவைகள் எனக்கு வேடிக்கையாகவே தோன்றின. நாட்டாருக்கு அவ்வாறு தோன்ற வில்லை. குறும்புகளைக் குறித்து நாங்கள் இருவரும் உரையாடி னோம். சமயக் காப்புக்கு எல்லாஞ் செய்யலாம் என்ற எண்ண முடையவர் நாட்டார் என்று உணரலானேன். 16. கதிரேசச் செட்டியார் பண்டித மணி - மஹா மஹோபாத்தியாயர் - கதிரேசச் செட்டியார் ஊராகிய மகிபாலன்பட்டிக்கு யான் இரண்டு முறை சென்றிருக்கிறேன். அவ்வூரின் அமைதி என்நெஞ்சைக் கொள்ளைகொண்டது. அஃது எவரையும் புலவராக்கும் - பாவலராக்கும் - பண்புடையது. அத்தகைய அமைதிப் பதியில் காவியங்களுடன் உறவாடி அவைகளில் ஒன்றிச் சமாதியோகஞ் செய்யும் வாய்ப்புப் பண்டிதமணிக்குக் கிட்டியது. செட்டியார் தலைமையில் யானும் என் தலைமையில் அவரும் பேசுவ துண்டு. பொதுக்கூட்டம் முடிந்ததும், செட்டியாரைச் சூழ்ந்து ஒரு தனிக்கூட்டம் சேரும். கதிரேசர் நிழலில் அக்கூட்டம் ஆறு தல் அடையும். அச்சமயம் கதிரேசர் ஒரு காவியக் கற்பகமெனப் பொலிவர். அப்பொலிவை யான் பன்முறை கண்டுள்ளேன். ஆனால் அக்கற்பகம் வேனிற்கும் புயலுக்குந் தாங்காது. 17. வேங்கடாசலம் பிள்ளை தமிழ்ப் பெரும்புலவர் கரந்தை வேங்கடாசலம் பிள்ளையை யான் 1935இல் திருவையாற்று அரசர் கல்லூரியில் கண்டேன்; பின்னே சிந்தாதிரிப்பேட்டையில் அகநானூற்று மகாநாட்டுத் தலைவராக அவரைப் பார்த்தேன். அவரது தலைமையுரை என்னை மயக்கியது. பெரும் புலமை வாய்ந்த ஒருவர் எங்கேயோ மூலையில் கிடக்கிறாரே என்று எண்ணினேன். வண்மைப் புலவர் பல்கலைக் கழகக் கண்களுக்குப் புலனாவதில்லை போலும்! வேங்கடாசலம் பிள்ளையின் புலமை சங்க இலக்கியங்கட்கு விரிவுரை காண்பதில் பயன்பட்டால், பிற்காலத் தமிழுலகம் நல்வழியில் ஆக்கமுறுமென்பது எனது கருத்து. 18. சுப்பிரமணிய பிள்ளை கா. சுப்பிரமணியம் கல்விக் கடல்; ஆங்கிலத்திலும் எம்.ஏ. தமிழிலும் எம்.ஏ. சட்டத்தில் எம்.எல். அவருக்கு எம்.எல் பிள்ளை யென்று ஒரு பெயரும் வழக்கிலிருக்கிறது. பழந்தமிழ் நூல்களின் உள்ளுரைகளை நோக்குதற்கென்று கா. சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது. போலும். அவரிடத்திலிருந்து பலதிறத் தமிழ்ப் புதுமைகள் பிறக்கும். அவைகளைப் பழைமையென்றே அவர் சொல்வர். அஃதெனக்கு வியப்பாகவே தோன்றும். கா. சுப்பிரமணிய பிள்ளை எம். எல் பரீட்சைக்குப் படித்து வந்த வேளையில் இராயப்பேட்டை குகானந்த நிலையத்திலே நூலாராய்ச்சி என்ற பொருள்பற்றி ஒருபோது பேசினார். தலைமை தாங்கியவர் ஜடி சதாசிவ ஐயர். நூலாராய்ச்சி தலைவரை மயக்கியது. Ia®, v‹id¡ fhQ«nghbjšyh« R¥ãukÂa ãŸisia¥g‰¿ ÉrhÇ¥gh®; “gߣirÆš nj¿dhuh? என்று கேட்பர்; ஜில்லா முன்ஸிப்புக்களைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு என்னிடத்தில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. சுப்பிரமணியம் இளமையிலேயே முன்ஸிப் ஆனால் பின்னே அவர் ஹைகோர்ட் வரை இவர்தற்கு வாய்ப் புண்டாகும் என்பர். பின்னே ஐயர் தாம் சொல்லியவாறே நடந்தார். சுப்பிரமணியம் இணங்க மனங்கொண்டாரில்லை. காரணம் ஜடி கட்சிப் பித்தே என்ற அளவில் கூறுவது போதும். என்ன! எம்.எல். பிள்ளை வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளுகிறாரே; இளமை தவறு செய்கிறது என்று யான் நினைந்தேன். சென்னைச் சட்டக் கல்லூரி, சுப்பிரமணிய பிள்ளையைச் சில ஆண்டு போதகாசிரியராகப் பெற்றது. அப்பதவியும் நிலைக்க வில்லை. ஸர். தியாகராய செட்டியார் இறவா திருப்பரேல் சுப்பிரமணியத்தின் நீதி வாழ்வு படிப்படியே உயர்ந்திருக்கும். ஓரிடத்துக்கு ஜில்லா ஜட்ஜ் தேவை என்று தெரிந்த ஈ.வே. இராமசாமி நாயக்கரும், யானும் சுப்பிரமணிய பிள்ளையின் பொருட்டு முயன்றோம். அது போழ்து சட்ட அங்கத்தவரா யிருந்த கிருஷ்ணன் நாயரிடம் நாயக்கர் பேசினர்; யான் பனக லிடம் பேசினேன். இருவரும் இணங்கினர். கைக்கெட்டியது வாய்க்கெட்டாமற் போயிற்று. அமிர்தம் திரண்டது. குடம் உடைக்கப்பட்டது. யாரால்? ஜடி கட்சியின் ஒரு பெருந் தூணால். சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கை தமிழ்த் தொண்டுக் கென்று அர்ப்பணமாக வேண்டுமென்பது ஆண்டவன் திரு வுள்ளம். அதனால் வேறு வேலைக்குத் தடைகள் நேர்கின்றன என்று சிலர் சொல்வர். அச்சொல் எனக்கு நஞ்சுபோல் தோன்றும். சுப்பிரமணிய பிள்ளையின் திறத்துக்கும் பண்புக்கும் உரித்தாய மன்றத்தில் அவர் அமர்ந்திருந்தால், அவர் வாயிலாகத் தமிழ்த் தொண்டு இடரின்றி நேரிய முறையில் பெருமிதமாக நடந் திருக்குமென்பது எனது கருத்து. எம். எல். பிள்ளையின் வாழ்க்கை நீதி யுலகுக்குப் பயன்படா தொழிந்தமை அவ்வுலகின் துர் அதிர்ஷ்ட மென்றே சொல்வேன். சட்ட ஞானியைத் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. பேராசிரியர் உடல் நலங் குன்றி யுள்ளது. அவர், எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங்கொண் டாலும், மன்னிய சீர் சங்கரன் றாளை மறவாத செல்வத்தைப் பெற்றுள்ளது ஒருவித ஆறுதலளிக்கிறது. அச்சங்கரன் தமிழ்த் தொண்டரைக் காப்பானாக. 19. அசலாம்பிகை அம்மையார் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இக்கால ஔவையார். அம்மையார் பழம்பெரும் புலவருள் வைத்துக் கணிக்கத் தக்கவர். பண்டிதையார்க்கு நாவன்மையும், எழுத்தினிமையும், பாட்டுத் திறனும் ஒருங்கே அமைந்துள்ளன. அவரால் யாக்கப்பட்ட நூல்கள் பல. சென்னையிலே பாண்டித்துரை, நல்லசாமிப் பிள்ளை, ஜடி சதாசிவ ஐயர் முதலியோர் தலைமையில் அசலாம்பிகை அம்மையாரின் சொற்பொழிவுகள் நிகழும். அவைகளைக் கேட்கப் பெருங்கூட்டங் கூடும்; முதியரும் மொய்ப்பர்; இளைஞரும் ஈண்டு வர். பின்னவருள் யானும் ஒருவன் பண்டிதையார் பேச்சிலே கம்பனும் சேக்கிழாரும் காட்சியளிப்பர். அம்மையாரின் சொல் திறம், யான் வீடு சேர்ந்ததும், அவர் எடுத்துக்காட்டிய பாட்டுக் களை ஒருமுறை ஊன்றி நோக்க என்னை ஏவும். 1921ஆம் ஆண்டிலே தென்னார்க்காடு ஜில்லா மகாநாடு. கூடலூரிலே என் தலைமையில் கூடியது. அம்மகா நாட்டில் பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும் கலந்து கொண்டார்,. அங்கேயே அம்மையாரின் தமிழ், அவரையும் என்னையுந் தாயுஞ் சேயும் ஆக்கிற்று. 1924ஆம் ஆண்டில் குளித்தலை யென்னுங் குளிர் தண்டலை யில் என் தலைமையில் நடைபெற்ற திரிச்சி ஜில்லா மகாநாடு முடிந்ததும் என்னை வெஞ்சுரம் அடர்ந்தது. அவ்வேளையில் அசலாம்பிகை அம்மையாரும், அவரை ஈன்ற முதியவரும் என்னைக் காத்தனர். எப்படி? அன்னையாரும் பாட்டியாரும் நேரே போந்து காத்தலென என்னைக் காத்தனர். அவ்வன்புச் செயல்கள் என்றும் மறக்கற்பாலனவல்ல. திருவாரூர் விஜயபுரத்திலே சமரச சன்மார்க்க சங்கத்தின் ஆண்டுவிழா (1929) நடைபெற்றது. அசலாம்பிகை அம்மையார் பேச்சைக் கேட்கப் பெண்மக்கள் கூட்டம் பெருகிறது. அவ் வேளையில் மணம்பூண்டி குமாரசாமி பிள்ளையின் விரிவுரை நீண்டது; காலத்தைக் கடந்து ஓடிற்று. இரவு அணைய அணையப் பெண்மணிகள் கூட்டம் இறுகியது. அவ் வேளையில் யான் அம்மையாரைப் பேச அழைத்தேன். பெண்ணின் பெருமை பேசுந் தலைவர் பெண் கூட்டத்தையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு என்னைப் பேசக் கூப்பிட்டார். யான் யாரிடம் பேசுவது! இத்தூண்களிடமா? என்று அறைந்தார். அச்சொல் அறை எனக்கும் விழுந்தது; மணம் பூண்டி பிள்ளைக்கும் விழுந் தது; சங்கத்தார்க்கும் விழுந்தது. யான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். ஆர்க்காட்டுத் தாலுக்கா மகாநாடு டாக்டர் வரதராஜுலு தலைமையில் (1924) நடந்தது. கொடியேற்றத்துக்கென்று பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும், கதர் திறப்புக்கென்று யானும் அழைக்கப்பட்டோம். முதல் நாள் மாலை பண்டிதையார் சொற்பெருக்கு நிகழ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கேட்கச் சென்ற என்னை டாக்டர் வரதராஜலு ஆற்றங் கரைக்குக் கூப்பிட்டார்; இரண்டொரு நொடியில் வந்துவிடலாம் என்றுஞ் சொன்னார். யான் டாக்டருடன் போனேன். கார் ஓடிற்று. எங்கே? கிளைவ் நிலையத்தருகே ஓடிற்று. என்ன! இவ்வளவு தூரம் வந்து விட்டோமே! என்று டாக்டரைக் கேட் டேன். அவர் சிரித்தார். எம் மனம் அம்மையார் பேச்சிலேயே விழுந்து கிடந்தது. பின்னே புறப்பட்டோம். அதற்குள் பண்டிதையார் பேச்சு முற்றுப்பெற்றது. அம்மையார், என்னைப் பார்த்து, என் பேச்சு டாக்டருக்குப் பிடியாது. உங்களுக்குமா பிடியாமற் போயிற்று என்று கடாவினர். யான் நிகழ்ந்ததை வெளியிட்டேன். அன்றிரவு, அசலாம்பிகை அம்மையார் உணவு கொண்டு, நாங்கள் தங்கிய இடம் அடைந்தார். அம்மையார் வண்டி யினின்றும் இறங்கியதைக் கண்டதும், படுக்கையில் கிடந்த எல்லோருடனும் உரையாடிய டாக்டர் வரதராஜலு, ஐயோ! ஒரு மணியாகும் என்று கண்ணை மூடிக் கொண்டார். அம்மையார் வந்தார்; என்ன? நீங்களெல்லாம் கண்விழித் திருக்கிறீர்கள் டாக்டர் மட்டும் உறங்குகிறார் என்று வினவினார். சிலர் நகைப்பு உண்மையை விளக்கியது. அம்மையாரும் யானும் பேசப் புகுந் தோம். சிறு கூட்டம் பெருஞ் சபையாகியது. நாங்கள் வள்ளுவ ரிடம் போனோம்; கம்பரிடம் சென்றோம்; சேக்கிழாரைச் சேர்ந்தோம்; பரஞ்சோதியை அடைந்தோம்; பாரதியாரைப் பார்த்தோம். திலகரைக் கண்டோம்; காந்தியடிகளை நோக்கி னோம். மணி இரண்டாயிற்று. அம்மையார் விடை பெற்றார். தண்டபாணி வரதராஜலுவை எழுப்பினார். அசலாம்பிகை போய் விட்டாரா என்று அவர் வாய் பிதற்றியது. விருதுபட்டி இரத்தினசாமி நாடார் வாசகசாலையின் ஆண்டு விழா (1929) மேடையிலே அசலாம்பிகை வந்து நின்றார். பார்ப்பனக் காழ்ப்பும், வேறு சிலவும் கூட்டத்தில் புயலை எழுப்பின. பெரும் புயல் வீசிற்று. அன்று விருதுபட்டி என் னாகுமோ என்றுங் கருதப்பட்டது. அவ்வேளையில் தாயின் முகம் சேயின்மீதே சென்றது. சேய் புயலைச் சேய்மையில் துரத் தினன். (விவரம் பின்னர்) பண்டிதை அசலாம்பிகை அம்மையார் தமிழ் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகள் பலதிறத்தன. அவைகளுள் ஒன்று காந்தி புராணம் பாடியது. அஃது என் முன்னுரையை அணிந்துள்ளது. எனது முன்னுரை கண்ட சில புலவர் பொறாமையால் புழுங்கி யதை யான் அறிவேன். பண்டிதையார் பாடிய திலகர் புராண மும் எனது அணிந்துரையைப் புனைந்தது. அசலாம்பிகை அம்மையார் வடலூரில் வாழ்ந்த வேளை யில் பத்திரிகை யுலகம் ஒரு செய்தியைப் பரப்பிற்று. யான் அதைக் கண்டதும் பொய் என்று என் தமையனாரிடஞ் சொன் னேன். சில இடங்களில் இரங்கற் கூட்டங்களும் நடந்தேறின. பத்திரிகைச் செய்தி பொய்யே ஆயிற்று. பணி கொழிக்கும் கையும், பா கொழிக்கும் நாவும் உடைய தமிழ் அன்னையார் வாழ்க; வாழ்க; நீடுவாழ்க. 20. கிருஷ்ணவேணி அம்மையார் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா (1913). மக்கள் ஈட்டம். சுவாமி வேதாசலம், கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதி, வேங்கடசாமி நாட்டார், முத்தையா பிள்ளை முதலிய புலவர் பெருமக்கள் வீற்றிருக்கை. யாழ்ப்பாணம் முதலியார் சபாரத்தினத்தின் தலைமை. சென்னை - கிருஷ்ணவேணி யம்மையார் பேசப் போகிறார் என்ற முழக்கம். ‘br‹idÆš »UZznt m«ikah® ah®? என்று நினைந்து யான் ஓரிடத்தில் அமர்ந்தேன். ஓர் அமைதிப் பெண் தெய்வம் வந்தது; மேடையில் நின்றது; வாய் திறந்தது; மேகந் திரண்டது; தேங் கியது; மின்னியது; உருமியது; மழை பொழிந்தது; மழையொலி சுவர்களை முட்டியது; மோதியது; துளைத்தது; பெருக்கம்; ஒரே கங்கை; பொன்னும் மணியும் முத்தும் அகிலும் தேக்கும் சந்தும் சுழன்ற மிதவைகளின் ஓட்டம். மழை நின்றது. கிருஷ்ண வேணி அம்மையார் தமது இருக்கை சேர்ந்தார். கிருஷ்ணவேணி அம்மையாரின் வீரத் தமிழ் தூத்துக்குடி யில் ஒருவிதக் கிளர்ச்சியை எழுப்பிற்று. சைவ சித்தாந்த சபை அம்மையாருக்குப் பண்டிதைப் பட்டமும் பொற் பதக்கமும் வழங்க உறுதி செய்தது; சென்னையிலே அவைகளை வழங்கும் பொறுப்பை எனக்கு அளித்தது. தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பெருங் கூட்டம் கூட்டப்பட்டது. தலைமை பூண்டவர் கிருஷ்ண வேணி அம்மையாருக்குத் தமிழ் அறிவுறுத்திய வல்லை சண்முக சுந்தர முதலியாரின் பேராசிரியர் அஷ்டாவதனாம் - பூவை. கலியாண சுந்தர முதலியார். தூத்துக்குடிச் சபையின் சார்பிலே தலைவர் வாயிலாகப் பட்டமும் பதக்கமும் கிருஷ்ணவேணி அம்மையாருக்குச் சூட்டப்பட்டன. கூட்டம் முற்றுப் பெற்றது. பண்டிதை கிருஷ்ணவேணி அம்மையாரிடம் விடைபெறச் சென் றேன். அம்மையாரின் தெய்வீகப் பொலிவு அவரைச் சகோ தரியாராக்கிற்று. என்னுடன் பிறந்து வளர்ந்த சகோதரிமார் மூவர்; அப்பொழுது நால்வராயினர். தொண்டை மண்டலக் கூட்டம் பெண்ணுலகுக்கு ஒருவிதப் புத்துணர்வளித்ததென்றே சொல்வேன். பண்டிதை கிருஷ்ணவேணி அம்மையாருடன் பிறந்தவர் பத்மாவதி அம்மையார். இவருங் கல்வி கேள்வியுடையவர். இவ் விரு பெண்மணிகளையும் கலைவாணிகளாக்கிய பெருமை இவரை ஈன்ற பெரியார் அப்பாய் நாயுடுவினுடையது. அவர் தவச் செல்வர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சகோதரியார் இல்லத்துக்கு யான் ஏகும்போதெல்லாம் அஃதொரு சாரதாபீடமாகவே எனக்குத் தோன்றும். எங்க ளிடைக் கலை வழிபாடு நிகழும். நாளடைவில் சாரதா பீடம் வைகுந்தமாகியது. கிருஷ்ணவேணி அம்மையார் ஆண்டா ளாகக் காணப்படுவர். முன்னாளில் சகோதரியாரும், சச்சிதானந்தம் பிள்ளையும், வேறு சிலரும், யானும் ஞானியார் சுவாமிகள் தலைமையிலோ, ஜடி சதாசிவ ஐயர் தலைமையிலோ, மற்றவர் தலைமை யிலோ உள்ளூரிலும் வெளியூரிலும் தமிழ்த் தொண்டோ சமயத் தொண்டோ செய்து வருவோம். அந்நாளில் தமிழ்ச் சங்கங் களின் சார்பிலோ சமயச் சபைகளின் சார்பிலோ வெளியாகும் அறிக்கைகள் பெரிதும் எங்கள் பெயர்களைத் தாங்கியே வரும். சகோதரியார் இயற்றும் நூல்களில் தமிழ் மணங் கமழும்; விழுமிய பொருள்கள் பொதுளும். இவ்விரண்டையும் சிறப் பித்து நவசக்தியில் மதிப்புரை வரைவதை யான் ஒருவிதத் தொண்டாகவே கொண்டேன். அணித்தே சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் எனது தலைமையில் பண்டிதையார் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். சகோதரியாரின் அக்காலப் பேச்சுக்கும் இக்காலப் பேச்சுக்கும் வேற்றுமை கண்டேன். அது நெடுநல்வாடையா யிருந்தது; இது பொதிகைத் தென்றலாயிருக்கிறது. எனது மணிவிழா இரண்டாம் நாள் கூட்டம் (26-8-1943) மாதர் வாழ்த்துக்கென்று கூடியது. தலைமை தாங்கியவர் கிருஷ்ணவேணியம்மையார். அன்று சகோதரியார் நிகழ்த்திய முன்னுரை - தேனினும் இனிய செந்தமிழ்ப் பொன்னுரையாகப் பொலிந்தது. சகோதரியாரைப் பெண் தெய்வம் என்று நினைந் திருந்தேன். அன்று அவர் தமிழ்த் தெய்வமாகவுந் தோன்றினர். 21. இராஜேசுவரி அம்மையார் இற்றைக்குச் சுமார் முப்பது ஆண்டுகட்கு முன்னர், திரு வல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்தினருடன் சச்சி தானந்தம் பிள்ளையும் யானும் பொன்னேரி சென்றோம்; அச்சமயத்தில் வக்கீல் தணிகாசல முதலியாரைக் கண்டோம். எங்கட்குத் தண்ணீர் கொடுக்கத் தணிகாசல முதலியார் சொக்கம்மா என்று தமது குழந்தையை அழைத்தார். அப் பொழுது சொக்கம்மாளுக்கு வயது ஏறக்குறைய ஆறு இருக்கும். சொக்கம்மாளுக்குப் பின் பிறந்தவர் இராஜேசுவரி அம்மையார். அந்நாளில் இராஜேசுவரி சிறு குழவியாய் மழலை மொழிந் திருக்கும். அம்மழலைக் குழவி இப்பொழுது குயின் மேரி கல்லூரியில் விஞ்ஞான மழை பொழியும் மேகமாகியிருக்கிறது. நண்பர் தணிகாசல முதலியார் தம் பெண் குழந்தைகள் நால்வருள் சொக்கம்மாள், இராஜேசுவரி, பத்மாவதி ஆகிய மூவரையும் பட்டதாரிகளாக்கிய பெருந்தகைமை போற்றற் குரியது. தம் மக்கட்கு அவர் தமிழ்க் கலையையும் சைவக் கலையையும் அறிவுறுத்தியதும் பாராட்டத்தக்கது. தணிகாசல முதலியார் தமிழ் நாட்டின் வாழ்த்துக்குரியவரானார். பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ச்சங்கம் ஒரு தடவை எனது தலைமையையும் இராஜேசுவரியம்மையார் பேச்சையும் விழைந்தது. r§f mik¢riu¥ gh®¤J, ‘m«ikah®¡F v‹d bghUŸ bfhL¤Ô®? என்று கேட்டேன். இன்ன பொருள் என்று இன்னும் குறிக்கவில்லை என்றார். விஞ்ஞான மும் தமிழும் என்ற பொருள்பற்றிப் பேசுமாறு கேளும் என்று சொல்லி அனுப்பினேன். அம்மையார் அப்பொருள் பற்றியே பேசினார்; இடையில் திருமந்திரத்தில் ஒரு பாட்டைக் காட்டி இதற்குத் தலைவரே பொருள் கூறவேண்டும் என்றுரைத்தார். யான் திடுக்கிட்டேன் விஞ்ஞானத்தில் பட்டம் பெறாத யான் சிக்கிக்கொண்டேன். முடிவுரையில் பாட்டில் போந்துள்ள ஆகாசத்துக்குச் சடாகாசம் என்று பொருள் கொள்ளாது. சிதாகாசம் என்று பொருள் கொண்டால் பாட்டின் நுட்பம் புலனாகுமென்று சொன்னேன். விஞ்ஞானப் புலமை பெறா தவன் எதுவுங் கூறலாமன்றோ? இராஜேசுவரி அம்மையார்க்குப் பேசும் பொருள் கொடுக்கப்படும் போதெல்லாம் விஞ்ஞான விளக்கம் பெறத் தக்க பொருளையே கொடுப்பதை ஒரு மரபாகக் கொண்டேன். சென்னைச் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் திவான்பகதூர் - தெய்வசிகாமணி முதலியார் தலைமையில் தொல்காப்பிய மகாநாடு கூடியது. அதில் இராஜேசுவரி அம்மையாரும் பேசினார். அப்பேச்சில் தொல்காப்பியர் விஞ்ஞானப் போர்வையணிந்து காட்சி தந்தனர். அக்காட்சி எனக்கு இனிமையூட்டியது. அப்பள்ளியிலேயே பத்துப்பாட்டு மகாநாடு என் தலைமை யில் நடந்தது. அம்மையார்க்குக் குறிஞ்சிப் பாட்டுக் கொடுக்கப் பட்டது. குறிஞ்சிப் பாட்டாசிரியரைச் சகோதரியார் ஒரு நாடகாசிரியராகக் காணச் செய்தார். ஷேக்பியரும் மேடை யில் பொலிந்தார். தெய்வசிகாமணி முதலியாரின் மணிவிழாச் சொற்பொழி வுக்குப் பொருள்கள் குறிக்கப்பட்டபோது தத்துவங்களைப் பற்றிப் பேசுமாறு என்னை மீனாட்சி சுந்தரனார் கேட்டார். தத்துவங்கள் விஞ்ஞான தீட்சை பெறுவது நல்லது. அப் பொருளை இராஜேசுவரி அம்மையாருக்குத் தருவது சிறப்பு என்று சொன்னேன். காணாத காட்சி கேளாத ஒலி என்ற இருபொருள் அம்மையாருக்கு அளிக்கப்பட்டன. இரண்டும் சிந்தாதிரிப்பேட்டைப் பள்ளியில் திரண்ட கூட்டங்கட்கு விஞ்ஞான விருந்தாயின. சென்னை வேதாந்த சங்கத்தின் ஓர் ஆண்டு விழாவில் கைவல்ய மகாநாடு சேர்ந்தது. தலைமை எனக்கு வழங்கப் பட்டது. பலவாண்டு வேதாந்தத் துறையில் உழைத்த பலர் கைவல்யம் பேசினர்; சகோதரியாரும் பேசினர். கைவல்யம் விஞ்ஞானமாகியது. பழைய வேதாந்தப் புலவர் பலரும் வியந்து வியந்து கூத்தாடினர். சென்னைத் தமிழ்ச்சங்கச் சார்பில் இராஜேசுவரி அம்மையார் பல பொருள்பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். அவை களுள் குறிக்கத்தக்கன இரண்டு. ஒன்று வானக்கப்பல்; மற் றொன்று வானொலி. இரண்டையும் விஞ்ஞான போதகாசிரி யர் கடல் மடை திறந்தாலெனத் தமிழில் பேசி விளக்கினர். விஞ்ஞானம் அம்மையாரிடம் தமிழில் எளிமையாய்ப் பணி யாளாகியதை யான் உணர்ந்தேன். 22. பாண்டித்துரை பாண்டித்துரை தேவர் பாலவனத்தம் ஜமீன்தார்; மதுரைத் தமிழ்ச்சங்கங் கண்டவர்; தமிழ்ப் புலவர். பெரும் புலவர். அவர் தம் அரிய வாழ்க்கை தமிழுக்கே அர்ப்பணமாகியது. வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகரால் காணப்பட்ட வேதாகமோக்த சைவ சித்தாந்த சபை யின் ஆண்டு விழா ஒன்று புரசை கங்காதர ஈசுவரன் கோயிலில் பாண்டித்துரையின் தலைமையில் நடைபெற்றது. அவரைக் காப்பாளராகப் பெற்ற சூளை நடராஜ பக்த ஜன சபையின் ஆண்டு விழா ஒன்றும், அவர் தலைமையிலேயே நிகழ்ந்தது. அவ்விரண்டு விழாவிலும் பாண்டியர் பேச்சை யான் கேட்டேன். பாண்டித்துரை தேவர் தமிழ்ப் புலமையுடன் சைவப் பற்றும் உடையவர். இரண்டுக்கும் தொடர்புண்டு என்பது அவர்தங் கருத்து. அக்கருத்துப்பட அவரால் சில கட்டுரைகளும் செந் தமிழில் வரையப்பட்டன. தமிழுக்கென்று வாழ்ந்த பாண்டி மணியைத் தெய்வம் ஏன் அழைத்தது? 23. சூரியநாராயண சாதிரியார் வி.கோ. சூரியநாராயண சாதிரியார் கிறிதவக் கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராயிருந்தவர். அக்காலத்தில் யான் வெலி கல்லூரியில் மாணாக்கனாயிருந்தேன். அதனால் சாதிரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை யான் பெற்றே னில்லை. ஆனால் என் கண்கள் மட்டும் அவரைக் காணும் பேறு பெற்றன. சூரியநாராயண சாதிரியாரிடத்தில் சிறந்து விளங்கிய இயல்புகள் பல உண்டு. அவைகளுள் சிறந்தது எங்கும் எப் பொழுதும் எக்காரணம் பற்றியும் கொச்சைத் தமிழ் பேசாமை. சாதிரியாரால் இயற்றப்பட்ட நூல்கள் தமிழ் அன்னையின் அணிகள். அவைகளுள் ஒன்று தமிழ் மொழி வரலாறு தமிழ் நாட்டில் தமிழ் மொழி வரலாற்றுக்கு வழிகாட்டியவர் சூரிய நாராயண சாதிரியாரென்னும் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்டநாள் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் இவர்ந்திருப்பாள்; முத்தமிழும் ஆக்கம் பெற் றிருக்கும். 24. சற்குணர் இராயப்பேட்டை நீண்டகாலம் தர்மராஜ சற்குணரின் உறைவிடமாயிருந்தது. எனது இருப்பிடமும் அதுவே. தமிழ் எங்கள் இருவரையும் பழகச் செய்து நண்பராக்கியது. சற்குணர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர். அவர் காலத்துப் பட்டதாரி களின் மனம் விண்ணில் பறக்கும். சற்குணரின் மனம் மண்ணி லேயே நடக்கும். அவரது மனம் மண்ணில் நடந்தமையால் வீரம் - தமிழ் வீரம் - பழந்தமிழ் வீரம் - உடையதாயிற்று. பழந்தமிழ் வீரம் சற்குணர் முகத்தில் தவழ்ந்து நிற்றல் வெள்ளிடைமலை. இத்தகைய வீரரைக் கிறிதுவக் கல்லூரி தமிழ்ப் பேராசிரிய ராகப் பெற்றிருந்தது. யான் வெலி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஏற்றபோது சற்குணர் என்னை வழியில் கண்டு வாழ்த்திய தன்மை இன்னும் என் நினைவிலிருக்கிறது. அவர் வாயிலாக விளம்பர மற்ற தமிழ்த்தொண்டு நடந்து வந்ததை யான் அறிவேன். ஓய்ந்த நேரத்தில் எவ்விதக் கைம்மாறுமின்றிப் பழந்தமிழ் நூல்களை மாணாக்கர்க்குப் போதிப்பதில் சற்குணர்க்குள்ள ஊக்கங் கண்டு மகிழ்வேன். அவரிடத்துப் பயின்று வித்துவான்களாகியவர் ஓவியர் கனகசபாபதி முதலியார், பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நடேச நாயகர், சென்ட்பால் உயர்நிலைப்பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் பரந்தாமனார் முதலியோர். சற்குணர் ஐரோப்பிய முறையில் உடையணிந்ததை என் கண்கள் கண்டதே இல்லை. அவர்தம் எளிய நாட்டு முறை உடை இன்பூட்டும். சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் சோமசுந்தர பாரதியாரின் சிலப்பதிகாரச் சொற்பொழிவு நிகழ்ந்தது. தலைமை பூண்ட சற்குணரிடத்திருந்து முடிவுரையில் பாரதியார் ஐரோப்பிய முறையில் உடையணியாது மாணாக்க ருக்குத் தமிழ் போதிப்பாராக என்ற கருத்துப் பிறந்தது. அக் கருத்திற் செறிந்த அஞ்சாமை என் நெஞ்சைக் கவர்ந்தது. சற்குணர் எனது கல்லுடலையுங் கண்டவர்; இப்போதைய மெல்லுடலையுங் காண்பவர். என்னைத் தமிழ் வீரர் பார்க்கும் போதெல்லாம், எனது உடல்நிலை குறித்து வருந்துவர்; உடலைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்துவர். சற்குணர் மணிவிழா டாக்டர் சாமிநாத ஐயர் தலைமை யில் நடைபெற்றது. அதுபோழ்து யானும் தமிழ் மலர் சூட்டி னேன். அம்மலரை ஈண்டுக் காட்டுகிறேன். தென்னாட்டுச் சுனையுள் முகிழ்த்துள்ள தமிழ் மலர் சிலவே. அவைகளுள் ஒன்று சற்குண மலர். சற்குண மலர் - கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வாழ்க்கை, மகன்மை, வாய்மை, நேர்மை, அடக்கம், உரிமை, ஒப்புரவு, அஞ்சாமை முதலிய இதழ்களால் அமைந்தது. அம்மலரிடைப் பழந்தமிழ் வீர மணம் என்றுங் கமழ்ந்தவண்ண மிருக்கும். இந்நாளில் பழந்தமிழ் வீர மணம் சற்குண மலர் ஒன்றனிடத் தில் சிறந்து கமழ்தலைக் காணும்பேறு பெற்றவருள் யானும் ஒருவன். அந்நறுமலர் நீடு வாழ்க. அதன் மணம் வெல்க. (1937) 25. சேஷாசல ஐயர் சேஷாசல ஐயரைப் பிற்கால சூரியநாராயண சாதிரி யார் என்றே கூறுவேன். தமிழ் வளர்ச்சியில் சாதிரியார்க்கு எவ்வளவு ஆர்வமிருந்ததோ அவ்வளவு ஆர்வம் ஐயருக்கு மிருந்தது. சேஷாசல ஐயர் தமிழ் நலம் பேணிக் கலா நிலையம் என்ற ஒரு பத்திரிகை நடாத்தினர்; பள்ளிகள் பல நடாத்தினர்; தொழிலாளரிடைச் சொற்பொழிவு நிகழ்த்தினர். சேஷாசல ஐயரிடம் பயின்ற தொழிலாளர் சிலர் இந்நாளில் பெரும் பெரும் வித்துவான் களாயிருக்கிறார். ஐயரின் தமிழ்த் தொண்டு என்னே! என்னே! அத்தகையத் தொண்டர் என் நண்பருள் ஒருவராயினர். அவரது அகால மரணம் தொழிலாளரிடை வளர்ந்து வந்த தமிழ் ஆக்கத்தையும் ஆர்வத்தையும் குலைத்தது என்றே சொல்வேன். 26. குப்புசாமி முதலியார் சேஷாசல ஐயரிடம் தமிழ் பயின்றவர் பலர். அவருள் ஒருவர் மங்கலம் குப்புசாமி முதலியார். முதலியார்க்கு வித்தியா னந்தர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. சேஷாசல ஐயரின் நோக்கத்தைக் குப்புசாமி முதலியார் நிறைவேற்றி வருதல் கண்டு யான் வரம்பிலா இறும்பூ தெய்துகிறேன். வித்தியானந்தரின் தமிழ்த்தொண்டு வடஆர்க்காடு சித்தூர் ஜில்லாக்களிலுள்ள கிராமங்களில் செவ்வனே நடைபெற்று வருவது எனக்குத் தெரி யும். வித்துவான்களின் தமிழ்த்தொண்டு கிராமங்களில் நடை பெறுதல் வேண்டுமென்று அறைகூவுவோருள் யானும் ஒருவன். அதைச் செயலில் நிகழ்த்திக் காட்டுவோர் சிலர். அவருள் சிறந்து விளங்குவோர் அன்பர் வித்தியானந்தர். அப்பெரியார் தொண்டு நிகழும் எந்தக் கிராமத்தினின்றும் அழைப்பு வந்தால் யான் உடனே ஓடுவதை ஒரு தொண்டாகக் கொண்டுள்ளேன். வித்தியானந்தரின் நிஷ்காமியத் தொண்டு என்னை ஈர்க்கிறது. அத்தொண்டு மேலும் மேலும் வளர்வதாக. இன்னும் அவர் வழி வழியே பல வித்தியானந்தர் தோன்றுவாராக. 27. ரா. இராகவ ஐயங்கார் ரா. இராகவ ஐயங்கார் நாவலர்; பாவலர் அவர் செந் தமிழில் எழுதிய கட்டுரைகளை யான் ஆர்வமுடன் நோக்கிய காலமுண்டு. ஐயங்காரை யான் முதல்முதல் திரிச்சியிலே இராம நாதபுரம் ராஜாவின் தலைமையிலே (1919) கூடிய மாகாண மகாநாட்டில் பார்த்தேன். பின்னே யான் அரசியல் பிரசாரத் துக்கு (1926) எ. ஸ்ரீநிவாச ஐயங்காருடன் ஏகியபோது, திருநெல் வேலி இலக்கியச் சங்கத்தின் ஓராண்டு விழாவில் தலைமை வகிக்கச் சென்ற இராகவ ஐயங்காரை ஒரே வண்டியில் சந்தித்தல் கூடியது. 1935ஆம் ஆண்டிலே கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் இராகவ ஐயங்கார் தலைமையில் என்னால் சொற் பொழிவு ஆற்றப்பட்டது. 28. மு. இராகவ ஐயங்கார் ஜடி சேஷகிரி ஐயர் வீட்டிலே சென்னைத் தமிழ்க் கழகச் சார்பிலே (1916) மு. இராகவ ஐயங்கார் பேச்சு என்றோர் அறிக்கை கண்டேன். அக்காட்சி என்னை ஜடி சேஷகிரி ஐயர் வீட்டுக்குச் செலுத்தியது. ஐயங்கார் சங்க இலக்கியங்களி லுள்ள இயற்கைக் கூறுகளை விளக்கியதைக் கேட்டேன். மு. இராகவ ஐயங்காரைச் சிற்சில சமயம் கா. ரா. நவசிவாய முதலியார் வீட்டில் காண்பதுண்டு. ஹிந்தி போராட்ட வேளையிலே எழும்பூர் மன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. தமது தொல்காப்பியப் பொருளாராய்ச்சி நூலைப் பற்றிச் சான்று கூற ஐயங்காரும் வந்தார்; யானும் போந்தேன். இருவரும் நீண்ட நேரம் பேசிப் பேசி அளவளாவினோம். 29. சுந்தர முதலியார் காமக்கூர் சுந்தர முதலியாரை முதல் முதல் யான் ஆரணியிலே (1919) சன்மார்க்க சபையிலே கண்டேன். அவரால் யாக்கப்பெற்ற வாழ்த்துப்பாக்கள் கூட்டத்தில் படிக்கப்பட்டன. இரவு முதலியாரும் யானும் உரையாடத் தொடங்கினோம். அவர் தமிழில் ஆழி என்பதை உணர்ந்தேன். ஆரணியில் காமக்கூர் முதலியாருக்கும் எனக்கும் ஏற்பட்ட கேண்மை, நாளுக்கு நாள் வளர்ந்து வளர்ந்து அவரது அறுபதாம் ஆண்டு விழாவில் என்னைத் தலைமை வகிக்கச் செய்தது. சுந்தர முதலியார் ஏட்டு நூல்களை மட்டும் தமிழ் நாட்டுக்குத் தந்தாரில்லை. நூற்றுக் கணக்கான உயிர் நூல் களையுந் தந்துள்ளார். முதலியார் மாணாக்கர் பலர் பெரும் வித்துவான்களாய் நாட்டுக்குப் பயன்பட்டு வருதல் எனக்குத் தெரியும். காமக்கூர் முதலியாரின் புலமை மாணிக்கவாசகம் என்னும் ஒரு சேயாகப் பரிணமித்திருக்கிறது. 30. சந்தோஷம் வேலூர் வேலைப்பாடியிலே ஒரு சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. யான் தலைமை வகித்தேன்; நிகழ்ச்சி முறையில் குறிப்பிட்டிருந்தவாறு சந்தோஷம் பேசுவார் என்று கூட்டத்துக்கு அறிவித்து அமர்ந்தேன். சந்தோஷம் பேசினார். அப்பேச்சுப் பையப்பைய என் நெஞ்சைத் தன்னில் படிவித்தது. சந்தோஷத் தின் வடிவந் தோன்றவில்லை. சங்க இலக்கியந் தோன்றியது. அச் சந்தோஷ இலக்கியம் பின்னே பலவிடங்களில் தமிழ் விருந்தளித் தது. சந்தோஷம் எதையும் உரிமை யுணர்வுடன் நோக்கி நோக்கி ஆராய்ந்தமை அவரை இலக்கியமாக்கியது என்று தெளிந்தேன். அவரது தமிழ்நட்பையும் எனது வாழ்க்கை பெற்றது. 31. சோமசுந்தர பாரதியார் சோமசுந்தர பாரதியாரை யான் முதல் முதல் 1913-ம் ஆண்டு, தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையில் பார்த்தேன். அவர்க்கும் எனக்கும் சென்னை மாகாணச் சங்க வாயிலாக அரசியல் உறவு ஏற்பட்டது. பாரதியார் வக்கீல் தொழில் அளவில் நின்றாரில்லை. அவர் கம்பர் திருவள்ளுவர், தொல்காப்பியர் முதலியவர் மன்றங்களிலும் பழகி வந்தார். அப்பழக்கம் அவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்குத் தூக்கியது. பாரதியாரது தமிழ் மேடை வக்கீல் அரங் காகவே காணப்படும். சோமசுந்தர பாரதியார் வாழ்க்கையில் ஒருவிதப் புரட்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஆனால் அஃது இன்னும் நிகழவில்லை. இனி எப்படியோ? பாரதியார் மாரி வாயில் என்றொரு நூல் யாத்துள்ளனர். அதை யான் அணித்தே முற்றும் பார்த்தேன். அது தமிழ் மாரி யாகவே தமிழ் நிலத்தைக் குளிர்விப்பது. 32. சிதம்பரநாத முதலியார் பெற்றோரால் பிள்ளைகட்கு இடப்படும் பெயர்களிற் சில வாழ்க்கையில் பொருந்தி வரும்; சில பொருந்தி வருவதில்லை. தாண்டவராயர் கைவல்யம் பாடி முடித்ததும் அவர்பால் ஆனந்தத் தாண்டவம் எழுந்தது. அவ்விடத்தில் தமக்குத் தாண்டவராயன் என்ற பெயரை யணிந்த பெற்றோரது தீர்க்க தரிசனங் குறித்து அவர் வியப்படைந்தமை இங்கே நினைவுக்கு வருகிறது. சிதம்பர நாத முதலியாரை ஈன்றவரும் தீர்க்க தரிசனமுடையார் என்பது முதலியாரின் பின் வாழ்க்கையால் தெரிகிறது. சித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு :ஞானம். அம் பரம் - ஆகாசம்; வெளி. நாதம் - ஒலி; ஆகாசத்தினின்றும் பிறப் பது. முதலியார் - முதலையுடையவர். சிதம்பரநாத முதலியார் என்னும் பெயருக்கு ஞானாகாசத்தினின்றும் பிறக்கும் நாதத்தை முதலாக உடையவர் என்று பொருள் கூறலாம். உலகமெல்லாம், நாதம் முதல் பிருதிவி ஈறாக உள்ள மாயாகாரியத் தத்துவங்களிலே அடங்கும். இவைகளில் அடங் காத உலகமே இல்லை. இறை இவ்வுலகமெல்லாம் கலந்தும் நிற்கிறது; கடந்தும் நிற்கிறது. முன்னைய நிலையில் அசைவு உண்டு. பின்னையதில் அசைவே கிடையாது. அசைவு நாதத்தில் தொடங்குகிறது. அதனால் உலகெலாம் இயங்குகின்றன. நாதங் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே என்பது திரூமூலர் திருவாக்கு. ஞானாகாசத்தினின்றும் பிறக்கும் நாதத்தை முதலாக உடையவன் சிதம்பர நாதன்; நடராஜன். டி. கே. சிரம்பரநாத முதலியாரின் முதன்மை எது? நாதம்; நாதமயமான பாட்டு. சிதம்பரநாத முதலியார் நெஞ்சம் நாதத் திலே ஈடுபடும்; பாட்டாகும். பாட்டிலே ஈடுபடும் நெஞ்சம், இலக்கணம் தர்க்கம் முதலிய துறைகளில் உழலுமோ? ஒரு போதும் உழலாது. சிதம்பர நாத முதலியாரை யான் முதல் முதல் திருநெல் வேலியில் (1926) கண்டேன். அவர் தலையில் சரிகைக் கீற்றிட்ட தக்கைப் பாகை திகழ்ந்தது; உடல் ஒருவிதச் சாம்பல் நிறச் சட்டையை அணிந்திருந்தது; முகமோ ஒளியைக் கான்றது. எவ்வொளியை? பாட்டொளியை. சிதம்பரநாத முதலியார் பாட்டில் யான் ஒருமுறையா ஈடுபட்டேன்! பலமுறை ஈடுபட்டேன். முதலியார், பாட்டைத் தொடங்கும்போதே அவர் நெஞ்சம் நாதத்தில் ஒன்றும். கேட் போர் நெஞ்சமும் அதில் திளைக்கும். அவர் ஓவியமாவர். இத் திறம் சிதம்பரநாதரிடத்தில் சிறந்து விளங்குதலை ஈண்டுச் சிறப் பாகக் குறிக்கிறேன். பாட்டாவது சொல்லன்று; எழுத்தன்று; யாப்பன்று; அஃது அநுபவ நுகர்ச்சி. இது சிதம்பரநாதருடன் பழகப் பழக நன்கு விளங்கும். சிதம்பரநாதரின் பாட்டு எது? தமிழ். இக்கருத்தைத் தமிழிலேயே வெளியிடுதல் முடியும்; பிறமொழிகளால் வெளி யிடுதல் முடியுமோ?என்று முதலியார் சபைகளில் அடிக்கடி கேட்பர். அவர் தமிழைத் தாமுணர்ந்த முறையில் ஓம்பவேண்டித் தமிழுலகில் ஒருவித அறிவுப் புரட்சிநிகழ்த்தியுள்ளார் என்றே கூறுவேன். சிதம்பரநாத முதலியார் ஒவ்வொருபோது நவசக்தி நிலையம் நோக்குவர். அந்நோக்குப் பாட்டு வருகையை உணர்த் துவது போன்றிருக்கும். முதலியார் பீடத்தில் அமர்ந்தாரோ இல்லையோ அவர் வாய் மண்ணுந் தணலாற வானும் புகை யாற... என்ற பாட்டைப் பாடும்; வேறு பாட்டுக்களையும் பாடும். நிலையத்தில் சுழன்றிருந்த அரசியல் அலைகளெல்லாம் அடங் கும்; அமைதியுண்டாகும். எல்லோரும் ஓவியமாவர். இலக்கணப் புலவர் சிலர் சிதம்பரநாத முதலியார் மீது பாய்வதுண்டு. நீங்கள் ஏன் முதலியார்மீது பாய்கிறீர்கள்? உங்கள் பாய்ச்சலுக்கு இடம் ஏது? முதலியார் மனம் பாட்டில் ஈடுபடுவது; அநுபவ நுகர்ச்சியில் மூழ்குவது; அதை அவ ரிடத்தில் எதிர்பாருங்கள். பிறவற்றை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று சொல்லி அவரை யான் அடக்குவது வழக்கம். தாம் ஈடுபட்டும் பிறரையும் ஈடுபடுத்தியும் வரும் ஒரு தமிழ்ப் பாட்டோவியருடன் பழகும் வாய்ப்பையும் எனது எளிய வாழ்க்கை பெற்றது. 33. வையாபுரிப் பிள்ளை எ. வையாபுரிப் பிள்ளை சட்டத்திலே பட்டம் பெற்றவர். ஆனால் அவரைச் சட்டத்தொழில் வயப்படுத்தவில்லை. தமிழே அவரை வயப்படுத்தியது. அவரது தமிழ்க் காதல் திருநெல் வேலியிலே ஓரிலக்கியக் கழகமாகத் திரண்டது. அவரது காட்சியை எனக்கு முதன் முதல் வழங்கியது அக்கழகமே. சுறுசுறுப்பு அவராகவே எனக்குத் தோன்றியது. சென்னைப் பல்கலைக் கழகம் வையாபுரிப் பிள்ளையை அழைத்தது; தமிழ்ப் பேரகராதிப் பதிப்புக் குழுவின் தலைவ ராக்கியது. வையாபுரியின் தலைமையில் அகராதி பல வழி களிலும் தூய்மை யடைந்தது. இப்பொழுது வையாபுரிப் பிள்ளை தமிழ் நாட்டுப் பதிப்பாசிரியர் உலகிலே ஒரு வான்மணியெனத் திகழ்கிறார். ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, சாமிநாத ஐயர் ஆகியவர் இனத்தில் சேர்ந்தவரானார். சைவ சித்தாந்த மகா சாமஜப் பதிப்புக்களாகிய சங்க இலக்கியம், சிந்தாமணி, திரு மந்திரம் முதலிய நூல்கள் நன் முறையில் வெளிவர ஏட்டுப் பிரதி களை ஒப்பு நோக்கியும், பாட பேதங்களை ஒழுங்கு செய்தும், பிழை திருத்தியும் உதவி புரிந்தவர் வையாபுரிப் பிள்ளை என் பதை யான் நன்கறிவேன். யான் பெரிய புராணம் இரண்டாம் பதிப்பு முயற்சியில் தலைப்பட்டபோது, தமிழ் நாட்டிலுள்ள பல ஏட்டுப் பிரதிகளைத் திரட்டி என்னிடம் சேர்ப்பித்தது வையா புரியின் தமிழன்பே யாகும். கம்பரின் தமிழ் நிலையத்தைப் பலர் பலவாறு காத்து வரு கிறார். வையாபுரிப்பிள்ளை அதை எப்படிக் காத்து வருகிறார்? தூணாக நின்று காத்துவருகிறார் என்று என் உணர்ச்சியில் தோன்றுகிறது. 34. பி. ஸ்ரீ. தமிழ் நாட்டிலே தெற்குப் பகுதியிலே குற்றாலமலை நிற்கிறது. அதன்கண் பாட்டோலி முழங்கிய வண்ணமிருக்கும். அவ்வொலியைத் தெய்வப் புலவர்கள் மடுத்தே வந்தார்கள்; வருகிறார்கள். அதைத் திருஞானசம்பந்தர் நுகர்ந்து தாம் பெற்ற இன்பத்தை, வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக் கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம் என்றும், நீலம் நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக் கோல மஞ்ஞை பேடையொ டாடுங் குற்றாலம் என்றும் நற்றமிழாக நமக்கு உதவியிருப்பது கருதற்பாலது. அக்குற்றால மலை இயக்கமின்றி ஓரிடத்திற் கிடப்பது. தமிழ் நாட்டில் இயங்கும் குற்றாலம் ஒன்றிருக்கிறது. அஃது எது? அது பி. ஸ்ரீ. என்னுந் தமிழ்ப் பாட்டு நிலையம். பி. ஸ்ரீ. ஆச்சாரி யாரின் மனத்தில் பாட்டொலி எழுந்து கொண்டே யிருக்கும். அவ்வொலி, சொல்லருவியாய் - எழுத்தருவியாய்த் தமிழுலகில் தண்மை வழங்கி வருகிறது. யான் பல உலகில் சஞ்சரிப்பவன். பி. ஸ்ரீ. ஆச்சாரியார் ஒவ்வொருபோது எனது நிலையம் போதருவர். போந்ததும் எல்லா உலகமும் கவிதை யுலகமாகும். நாங்கள் பெருகு சோபானம் என்னும் தத்துவப்படிகள் ஏறுவோம்; கவிதை இன்பத்தில் திளைப்போம்; தண்டமிழ்க் கவிதை போல் சாந்த மிக்கது என்னும் இராமலிங்க அடிகளின் மொழிக்கு இலக்கிய மாவோம். 35. ஸ்ரீநிவாசலு நாயுடு சித்தூர் ஸ்ரீநிவாசலு நாயுடு அஷ்டாவதானம் சபாபதி முதலியார் மாணாக்கருள் ஒருவராகிய மகாவித்துவான் கமலநாத முதலியாரிடத்தில் தமிழ் பயின்றவர்; வடிவேற் செட்டியார் முதலியவர்பால் வேதாந்தங் கேட்டவர்; சித்தூர் அமெரிக்கன் மிஷின் பெண் பாடசாலையில் தமிழாசிரியராக இருப்பவர்; பரந்த நோக்குடையவர். சீர்திருத்த உள்ளமுடையவர். அப்பெரியார் ஆனந்தபோதினி முதலிய பத்திரிகைகளில் எழுதி விடுத்த பலதிற ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ் நாட்டைப் பலவழியிலும் ஓம்பி வருகின்றன. இராணிப்பேட்டை, வெட்டுவாணம், வங்கனூர், அம்மையார் குப்பம், வெள்ளைக் குட்டை முதலிய இடங்களில் உள்ள வேதாந்த சங்கங்களின் சார்பில் முதல் முதல் என்னை அழைத் தவர் சித்தூர் ஸ்ரீநிவாசனாரே. அச்சபைகள் அவரையும் என்னை யும் கெழுதகை நண்பராக்கின. வேதாந்தம் என்னும் பெயரால் மொட்டைத் தலைகளும் காவித் துணிகளும் புரிந்துவரும் அட்டூழியங்கள் நாயுடுவின் குடரை முடுக்கியே வந்தன. நாயுடு பல கூட்டங்களில் அவ் வட்டூழியங்களை மறுப்பதை ஒரு தொண்டாகக் கொண்டார். ஒருமுறை அவரும் யானும் பெங்களூர் ஒடுக்கத்தூர் மடத்துக்குச் சென்றிருந்தோம். எங்கள் முதல் நாள் பேச்சைக் கேட்ட ஓரன் பர் எங்களிருவரையும் விருந்துக் கழைத்தனர். விருந்து முடிந்ததும் பெங்களூரில் காஷாயங்கள் புரியும் திருவிளையாடல்களை அன்பர் விரித்துக் கூறினர். அன்று மாலை மடத்திற்கூடிய பெருங் கூட்டத்தில் ஸ்ரீநிவாசலு நாயுடு பெங்களூரில் வேதாந் தத்தின் பெயரால் நிகழ்ந்து வரும் கொடுமைகளை அஞ்சா நெஞ்சுடன் வெளியிட்டார். அன்று ஸ்ரீநிவாசலு நாயுடு நிகழ்த் திய வீரப் பேச்சை எவ்வெழுத்தால் வருணித்துக் கூறுவேன்! பொதுவாக எல்லார்க்கும் சிறப்பாகப் பெண்களுக்கும் புதுக் கண்கள் திறந்தன என்றே சொல்வேன். 36. இராஜா பிள்ளை சிதம்பரம் இராஜா பிள்ளை வேலூர் ஊரி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராயிருந்து தொண்டாற்றும் பேறு பெற்றவர். அவர் பார்வையில் கல்லூரித் தமிழ்ச் சங்கம் நன்கு நடைபெற்று வருகிறது. என் தலைமையில் சில ஆண்டு விழாக் கள் நடைபெற்றன. ஒருமுறை என் தலைமை உரையைச் சுருக் கெழுத்தில் இறக்க இராஜா பிள்ளை ஏற்பாடு செய்தனர். பின்னே அச்சுருக்கெழுத்துப் பெருக்கப் பெற்றது. அப்பெருக்கம் என் பார்வைக்கு வந்தது. அறிஞரின் சுருக்கெழுத்துத் திறம் போற்றற் குரியதாயிருந்தது. பெருக்கு, தூய்மைபெற என் உழைப்புத் தேவையாயிற்று. சுருக்கெழுத்தாளர் தமிழ்ப் புலவ ராகவும் இருத்தல் வேண்டுமென்பது என் கருத்தில் படிந்தது. இதை யான் பல முறை பல கழகங்களில் வெளியிட்டேன். இது வரை நற்பயன் விளையவில்லை. இனியாதல் விளையுமென்று நம்புகிறேன். 37. வேணுகோபால நாயகர் வேணுகோபால நாயகர் வேலூர் ஊரி கல்லூரியில் தொண்டு செய்யும் தமிழாசிரியருள் ஒருவர். அவர் காமக்கூர் சுந்தர முதலியாரிடத்தில் தமிழிலக்கிய இலக்கணம் பயின்றவர்; வடிவேல் செட்டியார் முதலியவரிடத்தில் வேதாந்தங் கேட்டுத் தெளிந்தவர். அப்பெரியாரைப் புலவரென்று சொல்வதா? வேதாந்தி யென்று சொல்வதா? தொண்டரென்று சொல்வதா? என்னென்று சொல்வது? தொண்டரென்று சொல்லவே என் மனம் ஒருப்படுகிறது. வேணுகோபால நாயகரின் புலமையும், வேதாந்த உணர்வும் அவரைத் தொண்டராக்கின. தொண்டு என்னும் புனிதத் தெய்விகம் வேணுகோபால் நாயகராகி நிற்கிறது என்று சொன்னால் என் உள்ளம் நிறைவெய்தும். நாயகரும் யானும் ஓராண்டில் பல இடங்களிற் சந்திப்போம். தொண்டரைக் கண்டு இன்புறும் பயனை யான் பெற்றவ னாவேன். பண்டைத் திருத்தொண்டர் நினைவு தோன்றும் போதெல்லாம் வேலூர் நாயகரின் நினைவும் உடன் தோன்றும். ஆண்டுதோறும் ஆடித்திங்கள் நாலாம் வாரத்தில் யான் வெட்டுவாணத்திற்குச் செல்வது வழக்கம். அங்கே கூட்டங் கூடும். சொற்பொழிவுகள் நிகழும். பலிநிறுத்தத்துக்கென்று மறியலும் நடக்கும். மறியற் றொண்டில் வேணுகோபால நாயகர் தலைசிறந்து விளங்குவார். ஒரு முறை ஓரம்மையார் ஆவேச முடையவராய்த் தாடகைபோல் வீறி எழுந்து, என்னுள்ளங் கொண்ட பெரியாரை, அன்பரை - மெய்த்தொண்டரை ஓங்கி அறைந்தார். அவ்வறையால் எழுந்த மின்னல் என் கண்ணில் பட்டது; இடி என் காதில் விழுந்தது; பொறிகள் கலங்கின. தொண்டர் நாயகர் பொறுமையானார்; அவர் கிறிதுவாகக் காணப்பட்டார். 38. சேது பிள்ளை கம்பர் தமிழை வளர்ப்பதற்கென்று தமிழ்நாட்டில் அவ் வப்போது சிலர் பிறப்பதுண்டு. அவருள் சேது பிள்ளை ஒருவர். இவ்வுலகம் கம்பர் கழகமானால் உள்ள நிறைவு கொள்வோருள் சேதுபிள்ளை முதல்வராக இருப்பர். எவ்விடத்திலும் எம்மேடை யிலும் எப்பேச்சிலும் அவர் கம்பரை மறப்பதில்லை. அவர் நா கம்பரின் உறையுளாகியது. சேது பிள்ளையின் பேச்சிலும் எழுத்திலும் எதுகை மோனைகள் அணிசெய்யும். அவ்வணி அவர்க்கு இயற்கையாயிற்று. என் தலைமையில் சேது பிள்ளை பலமுறை சொற் பொழிவாற்றி யுள்ளார். அப்பொழிவு பொழிலாகும். பொழில் மென் காற்றை வீசும். சேதுபிள்ளை இளமையில் என்னுடன் நெருங்கியதில்லை. காரணம் அந்நாளில் யான் புகுந்த அரசியல் உலகம் அவர்க்குப் பிடியாமை என்று சொல்லப்பட்டது. இராசவல்லிபுரம் சேது பிள்ளையின் சொந்த ஊர். அங்கே ஒரு சங்கம் உண்டு. ஓராண்டு விழாவுக்கு யான் (1924) அழைக்கப் பட்டேன். அங்கே யான் சில காட்சிகள் கண்டேன். அவை களுள் ஒன்று குறிக்கத்தக்கது. இராசவல்லிபுரத்துக்கு அணித்தே செப்பறை என்றொரு பதியிருக்கின்றது. அப்பதியை நடராஜப் பெருமான் திருக் கோயில் அழகு செய்கிறது. இராசவல்லிபுரத் தொண்டை நிகழ்த்தி மறுநாள் காலை செப்பறை நோக்கினேன். அன்று திருவாதிரைத் திருநாள். பல திருப்பணிகள் என் புலன்களில் படிந்தன. அவைகளுள் சிறந்த ஒன்று கைம்மையர் திருத்தொண்டு. பல திலகவதிகளை என் கண்கள் கண்டன. முன்னோர் பழைய உலகில் என் சிந்தை சென்றது. பெண்மணிகள் மனம் தொண்டிலே - சிவத்தொண்டிலே ஈடுபட்டுக் கிடந்தது. அத்தொண்டு புறத்தே பொலிந்தது. தொண்டு வண்ணமாகிய மனம் வேறெதில் செல் லும்? தொண்டற்ற இடம் வேறு வழியில் நுழைந்து அலைதல் இயற்கை. 39. கோதண்டபாணி பிள்ளை 1937ஆம் ஆண்டு; கார்த்திகைத் திருநாள். உண்ணா நோன்பு. அன்று தெரு வாயிலிலே மோட்டார் வண்டி யொன்று வந்து நின்றது. ஐரோப்பிய முறையில் உடையணிந்த ஓர் உருவம் - நீலக் கருந்தாமரை என்ன மலர்ந்த முகங்கொண்ட ஒரு வடிவம் - நடந்து வந்தது. அவ்வடிவினர், கலியாணசுந்தர முதலியாரைப் பார்க்க வந்தேன் என்றார். யான் அவரை அமரச் செய்து, யான் தான் கலியாணசுந்தரன் என்றேன். அவர், யான் உதவி லேபர் கமிஷனர். என் பெயர் கோதண்டபாணி. உதவி இந்தியா மந்திரி சென்னை போந்துள்ளார். தொழிலாளர் தலைவர்களைக் காண விரும்புகிறார். அறிக்கை அனுப்பப் போதிய பொழுதில்லை. யான் தங்களை நேரே அழைக்க வந்தேன் என்றார். இன்று கார்த்திகை; நோன்பு நாள்; சக்கரைச் செட்டியார் முதலியோர் வருவர் என்று மேலும் கீழும் பார்த்தேன் ஆமாம்; இன்று முருகப் பெருமான் திருநாள் என்று கோதண்டபாணி பிள்ளை யின் வாய் மலர்ந்தது. அது தமிழ்த்தேன் போன்றிருந்தது. அவர் என்னை வலியுறுத்தாது விடைபெற்றனர். பின்னே கோதண்ட பாணி பிள்ளையை மயிலாப்பூரிலே ஞானியார் சுவாமிகள் முன்னிலையில் கண்டேன். இருவரும் நீண்ட நேரம் அளவளாவி னோம். உத்தியோக முறையில் நேர்ந்த சந்திப்பு ஆருயிர்த் தமிழ்த் தோழமையாய்ப் பெருகியது. கோதண்டபாணி பிள்ளை தமிழர்; தூய தமிழர்; அவரது தூய தமிழுணர்ச்சி பழந்தமிழ் நூல்களுடன் அவரை உறவு கொள்ளச் செய்தது. அவ்வுறவு நூல்களின் திறங்களை ஆழ்ந்து ஆராயுந்துறையில் தோழரைச் செலுத்தியது. தமிழ்த் தோழர் நூல்களை எப்படி ஆய்கிறார்? முற்காலக் கருத்துக் கொண்டும் இக்காலக் கண் கொண்டும் நூல்களை ஆய்கிறார்; தமது ஆய் தலில் தாங்கண்ட முடிபுகளை என்னிடஞ் சொல்வர். அவர்க்கு ஊக்கமூட்டுவது எனது வழக்கம். கோதண்டபாணி பிள்ளை நெஞ்சம் பல புலவர் உலகைக் கண்டுகண்டு அவைகளைக் கடந்து கடந்து நக்கீரர் உலகில் நிலைத்தது. அவர் நெஞ்சம் நக்கீரர் ஆகியது; அவர் நக்கீர னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், நக்கீரர் வடிவம் இப்படித்தான் இருக்குமோ என்று யான் நினைப்பதுண்டு. கோதண்டபாணி பிள்ளை சென்னைச் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் (1941) நக்கீரர் பாக்களைப் பற்றிப் பல சொற்பொழிவு நிகழ்த்தினர்; தாங் கண்ட நக்கீரரைக் காட்டினர். அக்காட்சியில் ஷேக்பியர், ஷெல்லி படித்த தமிழறிஞர் திளைத்ததையும், பண்டிதர் பலர் மருண்டதையும் யான் உணர்ந்தேன். அப்பண்டிதருட் சிலர் கோதண்டபாணி பிள்ளையின் ஆராய்ச்சியைப்பற்றி என்னுடன் பேசினர். அச் சிலர் வெறும் இலக்கண உலகில் நின்று உழன்றமை எனக்குப் புலனாயிற்று. கோதண்டபாணியின் உள்ளம் இலக்கண வரம் பையுங் கடந்து நுட்பங்களை ஆராய்வது என்று பண்டிதர்க்குக் கூறினேன். அவர் என் கூற்றை ஏற்க ஒருப்பட்டாரில்லை. கோதண்டபாணி பிள்ளையின் தமிழ் மனம் நக்கீரர் அருளிய நெடுநல்வாடையில் ஈடுபட்டது. தோழர்க்கு அது கடலாயிற்று. அக்கடலில் அவர் மூழ்கினார்; மூழ்கி மூழ்கி நக்கீரர் எண்ணங்களாம் மணிகளைக் கொணர்ந்தார். அம் மணிகள் திறனாய்ந்து தெளிதல் என்னுங் குவியலாயிற்று. நெடுநல்வாடையின் உள்ளம் கோதண்டபாணி பிள்ளையின் வாயிலாக இக்கால உடல் தாங்கி வெளிவந்தது என்பது என் கருத்து. அவர் நடை எடுப்பும் மிடுக்கும் எளிமையுமுடையது. 40. வேங்கடராஜூலு ரெட்டியார் முன்னே ஒரு தொல்காப்பியப் புலவர் மயிலையில் வதிந் தார். இப்பொழுது ஒரு தொல்காப்பியப் புலவர் மயிலையில் வதிகிறார். அவர் யார்? அவர் வேங்கடராஜூலு ரெட்டியார். அவர் பழைய இலக்கணவரம்புகளைக் காத்தல்வேண்டுமென் னும் வேட்கையுடையவர். இதற்கு அவர்தம் கபிலரும் - பரண ரும் சான்று கூறும். ரெட்டியாரைக் கடலகத் தில் அடிக்கடி பார்ப்பேன். பலதுறைபற்றிப் பேசுவோம். ஒரு வேளை ஆடு - ஆட்டு - ஆட்டுவி - என்னுஞ் சொற்களை யொட்டித் தன்வினை பிறவினைப் பேச்சுப் பெருகியது. மற்றொரு நாள் செய்வினையும் செயப்பாட்டுவினையும் எங்கள் உரையாடலாயின. செயப் பாட்டுவினை தமிழ்ப் பண்புக்கு உரியதன்று. அஃது இடைக் காலத்தில் தமிழில் புகுந்தது என்றார் ரெட்டியார். அதனால் தமிழ் நலம் பெற்றது என்று யான் சொன்னேன். சிற்சிலபோது எங்கள் உரையாடல் சமயத்தில் திரும்பும். நாலாயிர வியாக் கியானங்களிலுள்ள சில மணிகளை ரெட்டியார் தூவுவர். அவை நிலவு பொழியும். 41. இராஜமாணிக்கம் ஆராய்ச்சி இன்றியமையாதது. ஆனால் அது நன்முறை யில் நடைபெறுதல் வேண்டும். தமிழ்ப் புலவர் சிலர் ஆராய்ச்சி யுலகில் நடம்புரிகின்றனர். நடம் மயிலுக்கு உரியது; அது வான் கோழிக்கு உரியதாகுமோ? ஆராய்ச்சிக்குப் பலதிறக் கண்கள் தேவை. இந்நூலில் வித்துவான் இராஜாமாணிக்கம், பி. ஓ. எல். ஆராய்ச்சியுலகில் இறங்கி இருள் போக்கி வருவது எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இராஜமாணிக்கத்தை யான் முதல் முதல் சீர்திருத்தவாதி யாகக் கண்டேன்; பின்னே அவர் ஆராய்ச்சியாளர் என்று உணர்ந்தேன். அவர்தஞ் சொற்பொழிவுகள் பல என் தலைமை யில் நடந்துள்ளன. அவைகளுள் சிறந்தது பெரிய புராண ஆராய்ச்சிச் சொற்பொழிவு. 1942ஆம் ஆண்டிலே சென்னை நக்கீரர் கழகச் சார்பிலே பிரமசமாஜமண்டபத்திலே வித்துவான் இராஜமாணிக்கம் பெரிய புராணத்தைப் பற்றி நான்கு நாள் பேசினர். பெரிய புராணம் ஒரு பெரிய சரித்திர நூல் என்பது அவரால் நன்கு நிறுவிக் காட்டப் பட்டது. சேக்கிழாரைச் சரித்திரக் கண்கொண்டு நோக்கச் செய்த இராஜமாணிக்கத்தை மனமார வாழ்த்தினேன். போலி ஆராய்ச்சி யால் தமிழுலகத்தில் இருள் சூழ்ந்துவரும் இந்நாளில் சரித்திரக் கண்கொண்டு சேக்கிழாரை நோக்கிய இராஜமாணிக்கம் வாழ்க. 42. அருணாசலம் மு. அருணாசலனாரின் நீண்ட வடிவும், மலர்ந்த முகமும், தண்மைநோக்கும் எனக்குப் புலனாகும்போதெல்லாம் என் உள்ளங் குளிரும். அவர் சாது அச்சகம் போதருவர்; தமையனாரிடம் பேசிச் செல்வர். ஒருநாள் என்னை அணுகி, நேற்றுமாலையில் சென்னைச் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நீங்கள் நிகழ்த்திய தொல்காப்பியச் சொற்பொழிவை எழுத்தில் இறக்கி னால் அது தமிழ் உலகுக்குப் பயன்படும் என்று கூறினர். தொழி லாளர், அரசியல் இவரனைய பிறர் என்னைச் சூழ்ந்துள்ளபோ தெல்லாம் அருணாசலனார் என்னைப் பாராமலே போவர். என்னைத் தனியே அவர் காணும்போதெல்லாம், இனி உங்க ளுக்குப் பல உலக சஞ்சாரம் எற்றுக்கு? நீங்கள் தமிழ்த் தொண் டில் மட்டும் கருத்துச் செலுத்துவது நல்லது என்பர். யான் புன்னகை புரிவேன். என் தமையனார் மணிவிழாவை முன்னிட்டு அருணாசல னார் உள்ளிட்ட சிலரும், யானும் திருப்போரூர் நோக்கினோம்; திரும்பினோம். படகு; கழிஉழவு; கடற் காற்று; வானின் நீலப் பரவை; மீன்களின் மிளிர்வு! மேல்தட்டு எங்களை ஈர்த்தது. எங்கள் உரையாடல் எங்கெங்கோ சென்றது. இடையிடை ஊர்வம்பும் சிறிது சிறிது தலைகாட்டியது. அருணாசலனார் பிறவி தீமையை வெறுப்பது என்பதை அவரது மெய்ப்பாடு உணர்த்தியது. அருணாசலனார் தமிழ்நடை காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த்தாள்களில் இடம் பெறப் பெறத் தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை. 43. ஜெகந்நாத ஐயர் வித்துவான் ஜெகந்நாத ஐயர் டாக்டர் சாமிநாத ஐயரின் மாணாக்கருள் ஒருவர். இவர் ஆவி அவருள் ஒன்றியதென்று என் உணர்வில் தோன்றுகிறது. ஜெகந்நாத ஐயரை இக்கால சாமிநாத ஐயர் என்று கூறுதல் மிகையாகாது. ஜெகந்நாத ஐயரின் பேச்சு விருந்து சில போழ்து என் தலைமையில் நடந்தது. அவர்தம் எழுத்து விருந்து ஒரு தமிழ்த் தாள் வாயிலாக நிகழ்ந்து வருகிறது. எனக்கு அவரது பேச்சும் இனிக்கும்; எழுத்தும் இனிக்கும். ஜெகந்நாத ஐயர் போதகாசிரிய ராகாமல் பத்திரிகாசிரியராகியது போற்றற்குரியது. வித்துவான்கள் பலர் தமிழ்ப் புதினத் தாள்களில் சேர்ந்து உழைத்தால் தமிழ் உலகம் தூய்மையுறுதல் உறுதி. 44. முருக இலக்குவனார் டாக்டர் சிற்சபையின் மருத்துவ நிலையத்திலே புலவர் களின் ஈட்டம் தேங்குவதுண்டு. ஒருநாள் அங்கே நான்கு ஐந்து இளம் புலவரைக் கண்டேன். ஒருவரது பரந்த நெற்றியும், ஒளி யுமிழும் பார்வையும் என் நெஞ்சில் படிந்தன. அவரது நெடுந் தொகை மகாநாட்டுப் பேச்சு என் உணர்வில் நிலவியது. சென்ற ஆண்டு (1942) ஏப்ரலில் அவரும் யானும் திருப்போரூருக்குப் படகில் சென்றோம். வழி நெடுகக் கம்பர் காட்சியளித்த வண்ண மிருந்தனர்; கம்பராமாயணத்தில் அப்பகுதியைச் சொல்லுங்கள் இப்பகுதியைச் சொல்லுங்கள் என்று நண்பரைக் கேட்டு வந்தேன். நண்பர் வாய் கம்பர் தமிழை அருவியெனப் பொழிய லாயிற்று. அவரது நினைவுத் திறம் எனக்கு வியப்பூட்டிற்று. அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இவ்விளைஞராய் மீண்டும் உருக்கொண்டனரோ என்றும் என் மனம் நினைந்தது. அவ்விளந் தமிழர் அவதானப் பயிற்சி செய்தால் அக்கலையில் அவர் வெற்றி பெறுவது திண்ணம். அவர் மிக எளிதில் முயற்சி யின்றிப் பாட்டெழுதும் வரம் பெற்றிருத்தல் சிறப்பாகக் குறிக்கத் தக்கது. எனது வரலாற்றைப் பாச்செய்யுளால் யாக்க அவர் முயன்று வருகிறார். அவர்க்கு அடிமையில் வெறுப்பும் உரிமையில் விருப்பும் இயல்பில் அமைந்திருத்தலை யான் பாராட்டுவ துண்டு. சென்னையில் வித்துவான் சங்கம் காண உழைத்தவருள் அவரும் ஒருவர். அச்சங்கத்தின் முதலமைச்சராயமர்ந்து தொண் டாற்றியவரும் அவரே. அவர் யார்? வித்துவான் முருக. இலக்குவனார். 45. அன்பு கணபதி 1939ஆம் ஆண்டிலே தென்னிந்தியக் கழகச் சார்பிலே சென்னைக் கோவிந்தப்ப நாயகர் பள்ளியிலே ஒரு பெரும் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை பூண்ட யான் பலர் பேச்சுகளைத் தழுவித் தமிழின் தொன்மையை விளக்கலானேன். அதில் கடல், மணல், மலை, செடி, கொடி, புள், விலங்கு, மன்பதை ஆகியவற்றின் தோற்றம் - காலம், மொழிகள் முகிழ்த்த முறை, அவைகள் அடைந்த நிலை முதலியவற்றை ஆராய்ச்சித் துறையில் ஆங்காங்கே குறித்தேன். அத்தகைய குறிப்புக்களைப் பெரிதும் பத்திரிகை நிருபர்கள் எடுப்பதில்லை. அக்குறிப்புக்கள் சிலவற்றை விடுதலை தாங்கி வந்தது. அது, விடுதலையின் சென்னை நிருபரைப் பார்க்க என்னைத் தூண்டியது. அந்நிருபரைப் பார்த்தேன். அவரே வித்துவான் அன்பு கணபதி. என் தலைமையில் கூடிய பத்துப்பாட்டு மகா நாட்டின் நடைமுறைகளை அன்பு கணபதி செவ்வனே திரட்டி நவசக்தி க்கு உதவியதும் அவர்தம் தமிழ் நட்பை என்பால் பெருக்கியது. அவர் சிந்தாதிரிப்பேட்டையில் கம்பர் நாடு, சேக்கிழார் நாடு என்ற பொருள்கள் பற்றி யான் நிகழ்த்திய சொற்பொழிவுகளை முறைமுறையே குறித்துத் தொகுத்துத் தம் மொழியில் பெருக்கித் தமிழுலகைஅணி செய்தது எனக்கு மகிழ்ச்சியூட்டிற்று. இவ்வமைப்பு வாய்ந்த ஒரு வித்துவான் சுருக்கெழுத்தைப் பயின்று பத்திரிகை யுலகில் நுழைவது சிறப்பு. நண்பர் அன்பு கணபதி போதகாசிரியராய்த் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். தமிழ் உலகு வெளியிட்ட எனது மணிவிழா மடலில் அன்பு கணபதி எனது நூல் ஒன்றைத் தழுவி வரைந்து விடுத்த கட்டுரை அவரது ஆராய்ச்சித் திறனைப் புலப்படுத்துகிறது. அன்பு கணபதியின் வடிவம் தமிழ்போல் எனக்குத் தோன்று கிறது. அவர்தம் அமைதியும், புன்முறுவலும், ஆழ்ந்த சிந் தனையும் எவரையும் வயப்படுத்தும். திருவள்ளுவர் அடக்கத் துக்கு அன்பு கணபதியின் வாழ்க்கை ஓரிலக்கியம் என்று கூறுவது மிகையாகாது. இன்னும் பல தமிழ் அறிஞர் என் முன்னே நிற்கின்றனர். அவர்க்கு வாழ்த்துக் கூறுகிறேன். குறிப்பு இங்கே பள்ளிப்படிப்பு, ஏட்டுக்கல்வி, இயற்கைக் கல்வி என்று மூன்று சொல்லப்பட்டன. பள்ளிப்படிப்பு, ஏட்டுக் கல்விக்கும், ஏட்டுக்கல்வி இயற்கைக் கல்விக்கும் ஆக்கந் தேடு வனவா யிருத்தல் வேண்டும். இல்லையேல் கல்வித் துறையில் குழப்பம் உண்டாகும். கல்வித்துறையின் குழப்பம் வாழ்க்கைக்கே தீமை செய்வதாகும். இக்காலப் பள்ளிப்படிப்பு எத்தகையதாயிருக்கிறது? அப்படிப்பு மக்களை நல்வழியில் வாழவிடுகிறதா? அது மக்களைச் செல்வக் கள்ளாட்டயரச் செய்கிறது; அல்லது வறுமைச் சிறுமைக் குழியில் தள்ளி இடர்ப்படுத்துகிறது. ஒழுக்கம் அதிலுங் கூடுவதில்லை; இதிலுங் கூடுவதில்லை. விதம்மட்டும் வெவ்வேறாயிருக்கும். இக்காலப் பள்ளிப் படிப்பு ஒழுக்கத் துக்குக் கேடு சூழ்ந்து வருதல் வெள்ளிடை மலை. ஏட்டுக் கல்வி இருவழியில் அமையும். ஒன்று நேரே இயற்கை யினின்றும் இறங்கி அமைவது; மற்றொன்று இன்னோர் ஏட்டி னின்றும் இறங்கி அமைவது. முன்னையது இயற்கைக் கல்வி பெறுதற்குத் துணைபோகும் வாய்ப்புடையது. அது நல்வழியிற் பயன்படுத்தினால் அது தன் கடமையைச் செய்தே தீரும். அக் கல்வியைப் பயன்படுத்தும் விதத்தில் மாறுதல் நேர்ந்தாலும் அதனால் பெருந்தீமை விளையாது. பின்னையதோ இயற்கைக் கல்வி பெறுதற்குத் துணைபோதல் அரிது; துணை போகா தொழியினும் தீமை விளைவியாமலிருந்தால் போதும். இக் கல்வி, பொறாமை பகை பிணக்கு சூழ்ச்சி முதலியவற்றைப் பெருக்கி வாழ்க்கையை அல்லற் படுத்தும். இந்நாளில் இயந் திரம் அதிகம். அதனால் போலி ஏட்டு நூல்கள் ஒன்றினின்றும் ஒன்றாகப் பல்கிப் பெருகுகின்றன. அப்பாழ்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத அமைதியைக் கெடுத்து உலகை எரித்து வரல் கண்கூடு. இயற்கைக் கல்வியே மக்களை நல்வழிப்படுத்தி அவர்கட்கு அந்தண்மை என்னும் பொதுமையுணர்வை எழுப்ப வல்லது. எனது பள்ளிப்படிப்பு, கனியாது வெம்பி வீழ்ந்தது. பின்னே ஏட்டுக்கல்வி பயின்றேன். அது முதலில் என்னைச் செயற்கைச் சேற்றில் சிறிது அழுத்தியது; பின்னே இயற்கைக் கல்வியைப் பெறுவித்தது. முதலில் கேடு விளைந்தமைக்குக் காரணம் பள்ளிப்படிப்புச் சிறிது பெற்றதன் பயனாயிருக்குமோ? எனக்குப் பள்ளிப்படிப்பு பெருகியிருக்குமேல் எனது நிலை என்னவாகியிருக்குமோ? பொருட்செல்வம் பெருகியிருக் குமோ? களியாட்டில் அயர்ந்திருப்பேனோ? என்னவோ தெரிய வில்லை. எவ்வழியிலோ என் பள்ளிப்படிப்புப் பட்டது. யான் பொருட் செல்வமும் பெற்றேனில்லை; களியாட்டிலும் அயர்ந் தேனில்லை. இயற்கைக் கல்வியால் யான் பொதுமை யுணர்வு பெறலானேன். எனக்கு யாதும் ஊராகியது; எவருங் கேளி ராயினர். எனது நிலை மற்றவர்க்கு எப்படிப் புலனாகிறதோ யான் அறியேன். எனது பள்ளிப் படிப்பைக் கெடுத்து, என்னை ஏட்டுக் கல்வியில் நிறுத்தி, எனக்கு இயற்கைக் கல்வியைப் பெறுவித்தது எது? 8. ஊழியம் யான் லோயர் செகண்டரி செர்டிபிகேட்உடையவன்; புக்கீப்பிங் செர்டிபிகேட் உடையவன். எனது கையெழுத்தோ தலை யெழுத்து! எனக்கு என்ன ஊழியங் கிடைக்கும்? ஊழியத் துக்குச் செல்ல மனமெழுவதில்லை. நூல்களை ஆராய்ந்து காலங்கழிக்கவே மனம் விரும்பியது. மன விருப்பம் நிறைவேறி யதா? இல்லை. ஏன்? குடும்பத் தொல்லை பெருகியது. நெருக்கடி கிராமத்திலிருந்து நெல் கொஞ்சம் வந்து கொண்டிருந்தது. தந்தையார் காலஞ் சென்ற பின்னர் அந்நெல்வரவு நின்றது. கிராமம் போவாரில்லை. அங்கே கேட்பாரில்லை. மண்டி மூடப் பட்டது. வீட்டிலேயே வாணிபம் சுருங்கிய முறையில் துவங்கப் பட்டது. என் அன்னையார் பார்வையில் தமையனார் விஜயரங்க முதலியார் (தந்தையாரின் முதல் மனைவியார் புதல்வருள் ஒருவர்) அரிசி கொள்ளு பருப்பு தவிடு பிண்ணாக்கு வியாபாரஞ் செய்வர். யானும் துணை செய்வேன். என் தமையனார் உலக நாத முதலியார் மவுண்ட்ரோட்டில் வைஜயந்தி அச்சுக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். வருவாய் போதாது. குடும்பத்தில் நெருக்கடி அதிகரித்தது. கிராமத்தை விடுத்துத் தந்தையார் ஏன் சென்னைக்கு வந்தார்? பாழும் படிப்பை எனக்கு ஏன் தந்தார்? உழவு கற்றுக் கொடுத்திருக்கலாமே. நிலங்கள் பாழாய்ப் போகின்றனவே. உரிமை போகிறதே. அடிமை நெருக்குகிறதே என்று நினைந்து நினைந்து உருகுவன்; கசிவன், வாணிபஞ் செய் தாதல் காலங் கழிக்கலாமே என்றும் எண்ணுவன். தாயார் விருப்பம் யான் எங்கேனும் வேலைக்குப் போதல் வேண்டு மென்பதே. வீட்டு வாணிபமுங் குலைந்தது. பல வழியிலும் தொல்லை பெருகலாயிற்று. Cuh®, ‘ït‹ ntiy¡F¥ nghj yhfhjh? என்று பேசவுந் தொடங்கினர். அப்பேச்சு என் காதைத் துளைக்கும். என் தமையனார் மட்டும் வேலைக்குப் போ என்று சொல்வதில்லை. குடும்பத்தொல்லை என்னைக் குடையும். பென்ஸர் இந்நிலையில் ஒருநாள் என் தமையனார் மாமனார் ஆலப்பாக்கம் சிதம்பர முதலியார் எங்கள் வீட்டுக்கு வந்தார்; என்னை அன்புடன் பார்த்தார். வேலைக்குப் பின்னி கம்பெனி யில் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் சௌக்கார்க்கும், பின்னி பெரிய துரைக்கும் நட்பு அதிகம். அவர் துரையுடன் பேசியுள்ளனர். வாரும் என்று அழைத்தார். மறுப்புக்கூற அஞ்சி அவருடன் போனேன். அவரால் இலௌகிக உபதேசம் பல எனக்குச் செய்யப்பட்டன. இருவரும் பின்னி சேர்ந்தோம். சௌக்கார் என்னை ஸிம்ஸன் துரையினிடம் அழைத்துச் சென் றார். ஸிம்ஸன் எனது புக்கீப்பிங் செர்டிபிகேட்டை மட்டும் பார்த்தார். அப்பொழுது, என் கையெழுத்து நன்றாயிராது என்று சொன்னேன். அவர் நகைத்து, கணக்கு வேலை கொடுக் கிறேன் என்று, ஒருவரைக் கூப்பிட்டார். ஒரு கிழவர் வந்தார். என்னை அவரிடம் துரை ஒப்புவித்தார். யான் பெரிய துரை மூலமாக வந்தது கிழவருக்குப் பிடித்தமில்லை என்பதை அவர் முகம் அறிவித்தது. எனக்கு ஒரு முரட்டு வேலை கொடுக்கப் பட்டது. அவ்வேலை வேண்டுமென்றே கொடுக்கப்பட்டது என்று தெரிந்துகொண்டேன். அடுத்த நாள் கம்பெனிக்குள் புகுந் தேன். காலையில் வேலை பார்த்தேன்; கிழவர் அன்பு சுர வாமையை உணர்ந்தேன்; துரையினிடம் கோள்மூட்டவோ வேறு குறும்பு செய்யவோ கருதினேனில்லை. பகல் வேலைக்குச் சென்றேனில்லை. தமையனார் மாமனார் வீடு போந்து கிழவர் மானோநிலையைக் கூறினேன். அவர் சிறிது நேரம் சும்மா இருந்து, நாளைப் பகல் வால்காட் பிரதர்ஸுக்குப் போகலாம் என்றார். அடுத்தநாள் அவரும் யானும் வால்காட் பிரதர்ஸுக்குப் போனோம், சிதம்பர முதலியார் மானேஜரைப் பார்த்து என்னைப்பற்றிச் சொன்னார். மானேஜர் தற்போது, கணக்கு வேலை ஒன்றுமில்லை. காப்பிட் வேலை இருக்கிறது என் றார். யான் உடனே அது வேண்டாம் என்று புகன்றேன். அவர், இவ்விளைஞன் ஒருவரிடத்தில் ஊழியஞ் செய்பவனாகக் காணப்படவில்லை என்று எனக்குச் சில நன்மொழி பகர்ந்து அனுப்பினர். பின்னே மவுண்ட்ரோட்டிலிருந்த மித் கம்பெனியில் முயற்சி செய்யப்பட்டது. அங்கே கதிரைவேற் பிள்ளைக்குப் பகைவர் ஒருவர் இருந்தார். அவரால் கத்தரி இடப்பட்டது. பென்ஸர் கம்பபெனியில் காட்லாக் டிபார்ட் மெண்டுக்கு ஒருவர் தேவை என்று இராயப்பேட்டை வடிவேல் முதலியார் வாயிலாகக் கேள்வியுற்றேன். அவர் பென்ஸரில் ஒர் இலாக்காவுக்குத் தலைவர். அவரே என்னை அழைத்துச் சென்றார். பார்க்கர் துரை என்பவர் என்னைச் சோதனை செய்தார்; புக்கீப்பிங் செர்பிடிகேட்டை நோக்கி மகிழ்ச்சியடைந் தார். எனது கையெழுத்தின் சிறுமையை வெளியிட்டேன். அவர், எல்லார்க்குங் கையெழுத்து நன்றாயமையுமா? என் கையெழுத்தைப் பாரும் என்றார். நல்லகாலம், என்று மகிழ்ச்சி யுற்றேன். மேலும் அவர் உலகிலுள்ள பெரிய பெரிய கம்பெனி களின் காட்லாக்குகள் இங்கே குவியும். அவைகளை ஒழுங்கு படுத்தப் புது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வேற்பாட்டுக் குரிய பொறுப்பு உமது வசம் விடப்படும். உமக்குக் கொடுக்கப் படுவது லைபிரேரியன் வேலை போன்றது. அகராதி முறையில் காட்லாக்கின் விலாசங்கள் இந்த இனக் கார்டுகளிலும் உள் ளுறைகள் இந்த இனக் கார்டுகளிலும் எழுதப்படல்வேண்டும். இதுதான் உமது வேலை. கார்டுகள் வரிசைப்படி காட்லாக்குகள் அடுக்கப்படலாம். மற்ற ஒழுங்கு முறைகளை அவ்வப்போது நாம் கலந்து நிகழ்த்திக்கொள்ளலாம் என்று கூறினார். அவர்தங் கூற்று எனக்கு ஒருவித விடுதலை யளித்தது. பழைய காட்லாக்கு களின் விலாசங்களையும் உள்ளுறைகளையும் முறைமுறையே எழுதி முடிக்க மூன்று திங்களாயின. புதிய காட்லாக்குகள் சிலச் சில வந்து கொண்டிருக்கும். என் வேலை மிகச் சுருங்கியது. காட் லாக்கின் பெயர், உள்ளுறை, இடம் முதலியன வேலைக்கார னுக்குப் பெரிதும் பாடமாகிவிட்டன. காட்லாக்குகள் கேட்கப் படுங்கால், யான் கார்டுகளைப் பாத்துச் சொல்வதற்குள், அவன் அவைகளை எடுத்து விடுவான். வாரத்துக்கு ஒருமுறை பார்க்கர் வருவார்; போவார். எனக்கு நிரம்ப ஓய்வு. புத்தகங்கள் படிப் பேன்; பாட்டுக்கள் எழுதுவேன்; கட்டுரை வரைவேன். யான் பென்ஸரில் இருந்தபோதே கதிரைவேற் பிள்ளையின் பரு வுடல் மறைந்தது. அவர் சரித்திரத்தை அவ்விடத்திலேயே எழுதி முடித்தேன். அவ்வாண்டில் வங்காளப் பிரிவினையை யொட்டி எழுந்த சுதேசிய இயக்கம் நாடு முழுவதும் வீறிட்டது. அச் சமயம் விபின சந்திரபாலர் சென்னை அடைந்து கடற்கரை யில் கர்ச்சித்தார். அக்கர்ச்சனை மாகாணத்தையே தட்டி எழுப் பியது; என்னை விழிக்கச் செய்தது. அவ்வேளையில் லஜபதி ராய் நாடு கடத்தப்பட்ட செய்தி காட்டுத் தீப்போல் பரவியது. இந்தியப் பத்திரிகை உலகம் ஆக்கம்பெற்றது. அரவிந்த கோஷால் நடத்தப்பெற்ற பந்தேமாதரம் வரவழைத்தேன். சென்னைப் பத்திரிகைகள் சிலவற்றையும் படிப்பேன். அக்காலத்தில் இந்தியாவின் நிலைமையை நேரே பார்க்கப் போந்தவருள் ஒருவராகிய கீர் ஹார்ட்டி சென்னையில் தங்கியபோது சில பொருள் வாங்க பென்ஸர் போந்தார். அவரது காட்சியும், பத்திரிகைகளில் வெளிவந்த அவரது வரலாறும் என் உள்ளத் தில் கிளர்ச்சி மூட்டின. யான் காலையில் முக்கால் மணி நேரத் துக்கு முன்னரே கம்பெனிக்குள் நுழைவேன்; சூழ்ந்துள்ள மக் கட்கு யான் பத்திரிகைச் செய்திகளை எடுத்துரைப்பேன். அது பல ஐரோப்பியரை மருளச் செய்தது. வந்தே மாதரம் என்பது தாயின் வந்தனையைக் குறிக்கும் ஒரு மகா மந்திரம். அது முதல் முதல் வங்காளத்தினின்றும் வெளிவந்தது. வந்தே என்பது பந்தே என்று வங்காளத்தில் உச்சரிக்கப்படும். எவனோ குறும்பன் ஒருவன், பந்தே மாதரம் என்பதற்கு வெள்ளையரைக் கட்டியடித்தல் என்று பொருள் திரித்துவிட்டான். அது பொய்ப் பொருள். உலகம் எதற்கும் மருளுமன்றோ? பொய்ம்மைக்கும் மருளும். குறும்பன் ஒருவன் திரித்து விடுத்த பொருள் ஐரோப்பியர் சிலரை மருட்டியது. பின்னே உண்மைப் பொருள் ஆக்கம் பெற்றது. ஐரோப்பியர் மருட்சியும் தீர்ந்தது. மருட்சிக் காலத்தில் யான் கம்பெனியில் ஊழியம் செய்தல் நேர்ந்தது. அக்காலத்தில் பந்தே மாதரம் முதலிய பத்திரிகை களைக் கம்பெனி ஊழியர்க்கு யான் படித்துக் காட்டுவதை ஐரோப்பியர் விரும்புவரோ? ‘kU©lt‹ f©Q¡F ïU© ld btšyh« ngašynth? என்னை வந்தேமாதரப் பிர சாரகன் என்று ஐரோப்பியர் எண்ணினர். சிலர் கூடிக் கூடிப் பேசுவர். அஃது எனக்குத் தெரியவந்தது. அதனால் எனது காலைக் கடமையினின்றுஞ் சிறிதும் வழுவினேனில்லை. என் தொண்டை யான் செய்தே வந்தேன். என் தொண்டு மெல்ல மெல்ல மானேஜிங் டைரக்டரக்கு எட்டியது. அவர் ஒருநாள் காலை என்னை அழைத்து எச்சரிக்கை செய்தார். அவ்வெச்சரிக்கை என் நெஞ்சைப் பிளந்தது. அன்று பகல் பென்ஸர் கம்பெனிக்குச் சிறிது தூரத்திலுள்ள வைஜயந்தி அச்சுக்கூடத்தை அடைந்து என் தமையனாரைக் கண்டு, நடந்ததைச் சொல்லி, கம்பெனி சேர்ந்ததும் என் வேலையை விடுத்து நீங்க எண்ணி யிருக்கிறேன் என்று அறி வித்துக் கம்பெனி அடைந்தேன். எண்ணியவாறே செய்தேன். மானேஜர் என்னைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டார். என் விருப்பம் என்று சொன்னேன். மானேஜிங் டைரைக்டர் வழங் கிய எச்சரிக்கை உம்மை வேலையினின்றும் விலகத் தூண்டியது. அந்த எச்சரிக்கை நல்லெண்ணத்தினின்றும் பிறந்ததென்று யான்நன்கு அறிவேன். இந்தக் கம்பெனியில் நல்ல பெயர் பெற்றவருள் நீரும் ஒருவர்; நீர் இளைஞர்; யான் வயதானவன்; யான் சொல்வதைக் கேளும்; ராஜிநாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்க என்று வலியுறுத்தினர். என் பிடியினின்றும் யான் இறங்கினேனில்லை. அவர் எனக்கு வாழ்த்துக்கூறி, நல்ல தகுதித்தாள் கொடுத்து அனுப்பினர்; கம்பெனி வாழ்வு 1908இல் முற்றுப்பெற்றது. உமாபதி குருப்பிரகாசம் பிர அன்றிரவே என் தமையனாரும், நண்பர் சிவசங்கர முதலியாரும், யானும் ஸ்ரீ பாலசுப்பிரமணி பக்தஜன சபையில் கூடினோம். நிலைமையை ஆழச்சிந்தித்தோம். என் தமையனாரும் சிவசங்கர முதலியாருஞ் சேர்ந்து ஓர் அச்சுக்கூடம் அமைத்து நூல்களை வெளியிடுதல் வேண்டுமென்று முடிவு செய்தனர். கதிரைவேற்பிள்ளைக்குப் பின்னர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜனசபையில் தலைமை தாங்கி அன்பு நெறிவளர்த்த பெரியார் இராசப்ப முதலியார் அச்சுக்கூடத்துக்கு உமாபதி குருப்பிர காசம் பிர என்ற பெயர் சூட்டும்படி அருள் புரிந்தார். அப் பெயரால் அச்சுக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. யான் எழுதிய விசேடக் குறிப்புரையுடன் பெரிய புராணம் சஞ்சிகை சஞ்சிகையாக வெளியிடப்பட்டது. என் பார்வை பெற்ற திரு மந்திரம் பதிக்கப்பெற்றது. வெளி வேலைகளுஞ் சில செய்யப் பட்டன. ஏறக்குறைய ஈராண்டில் பெருநஷ்டம் விளைந்தது. என் அன்னையார் நகையும் சிறு பொருளும் இழந்தமையே அடைந்த பலன். அச்சுக்கூடம் விற்கப்பட்டது. பெரிய புராண இறுதிச் சஞ்சிகை வேறு அச்சகத்தில் பதிக்கப்படும் நிலை கூடியது. அந்நாளில் எங்கள் குடும்பம் புயலிடைப்பட்டகல மாயிற்று. எனது பெரும்பொழுது கடலோரத்திற் கழியும். கடற் கரை எனக்கு ஆசிரமமாயிற்று. தனியே ஓரிடந்தேடி அமர்வேன்; நீலமேனியனை - கமலக்கண்ணணை - பவளவாயனை - என் னாருயிர் பார்த்தசாரதியை - நினைந்து நினைந்து உருகுவேன்; ஆறுதலுண்டாகும். ஆயிரம் விளக்குப் பள்ளி 1910ஆம் ஆண்டு தொடங்கியது. என் பழைய நண்பருள் ஒருவர் டானியல் சிங் என்பவர் என்னைக் கண்டு, ஆயிரம் விளக்கு வெலியன் மிஷன் பள்ளியில் முதல் பாரத்துக்கு ஓர் ஆசிரியரும், மூன்றாம் வகுப்புக்கு ஓர் ஆசிரியரும் தேவை என்று கேள்வியுற்றேன். eh« V‹ Ka‰á brŒayhfhJ? என்று என்னைக்கேட்டார். மீண்டுமா வேலைத் தொல்லை என்றேன். ஆசிரியத் தொழில் புண்ணியம் என்று நண்பர் என்னைத் தள்ளிக்கொண்டே போனார். இருவரும் தலைமை ஆசிரியர் ஜான் ரத்தினம் பிள்ளை யைப் பார்த்தோம்; பேசினோம். அவர் செர்டிபிகேட்டு கொண்டுவரும்படி சொன்னார். அடுத்த நாள் என்னுடைய இரண்டு செர்டிபிகேட்டுகளையும் எடுத்துச் சென்றேன். யான் முதல் பாரத்துக்கும் (அந்நாள் முறைப்படி ஐந்தாம் வகுப்பு; இந்நாள் முறைப்படி ஆறாம் வகுப்பு) என் நண்பர் மூன்றாம் வகுப்புக்கும் ஆசிரியராக அமர்த்தப்பட்டோம். அப்பள்ளியில் யான் ஆறாண்டு பணிசெய்தேன். சென்னை ஆயிரம் விளக்கு வெலியன் மிஷன் ஆதி திராவிடர்க்கென்று காணப்பட்டது. மற்றவரும் பள்ளியில் சேரலாம். ஆனால் இவர் தொகை நூற்றுக்கு நாற்பதாயிருத்தல் வேண்டும். பாலர் வகுப்பு முதல் மூன்றாம் பாரம் வரை வகுப்புக் களுண்டு. அந்நாளில் ஆதி திராவிடர்க்கென்று மாகாணத்தில் அமைந்த பள்ளிகளில் ஆயிரம் விளக்குப் பள்ளியே சிறந்ததாயும் பெரியதாயும் விளங்கியது. அரசாங்க உதவியும் அப்பள்ளிக்கு அதிகம். அதன் நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வருகின்றன. எல்லாவற்றையும் எழுதப் புகுந்தால், அவை மட்டும் ஒரு தனிநூலாகும். சில கூறலாம் என்று எண்ணுகிறேன். யான் தமிழ் பயின்றவன் என்று நண்பர் டானியல் சிங் எப்படியோ தலைமையாசிரியர்க்கு ஓதினர்போலும். யான் வேலையேற்ற முதல் வாரத்திலேயே ஒருநாள் தலைமையாசிரி யர் திடீரென என் வகுப்புக்கு வந்தார். அப்பொழுது யான் மகா லிங்க ஐயர் இலக்கணம் போதித்துக் கொண்டிருந்தேன். அவர் சிறிது நேரம் எனது போதனையைக் கவனித்துச் சென்றார். அன்று சாயங்காலம் என் வகுப்பை விடுத்து யான் வெளியே வந்ததும், தலைமையாசிரியர் ஜான் ரத்தினம் பிள்ளை என்னை அழைத்துத் தமது வீட்டுக்குள் நுழைந்தனர். அவர் வீடு பள்ளியின் ஒரு பாகத்திலேயே இருந்தது. அவர் சிறிது நேரம் அதையும் இதையும் பேசிப் பேசி மெல்ல மெல்ல தமிழகம் புகுந் தார்; தாம் தமிழ் பயின்ற வரலாற்றையும், தமிழில் திராவிட தூதன் என்ற வாரப் பத்திரிகை நடாத்திய விதத்தையும் ராவ்பகதூர் தாமோதரம் பிள்ளையின் பெருமையையும் விளக்கினர் பின்னே ஏதேனும் அகப்பாட்டொன்று சொல்லிப் பொருள் விரியுங்கள் என்றார். அவ்வேளையில்,ஆனந்தவெள்ளத்து... என்ற திருக்கோவைப் பாட்டு நினைவில் உற்றது. பொவிரித்துச் சென்றேன். ஜான் ரத்தினம் தமிழில் மூழ்குவதை யுணர்ந்தேன். மணி எட்டாகியது. பொருள் கூறுவதை நிறுத்தி னேன். ஜான் ஏன் என்றார். உங்கட்கு எவ்வளவோ வேலை யிருக்கும். யான் நீண்ட நேரம் போக்கினேன் என்றேன். தமி ழுக்கு மணிக் கணக்கு ஏது? என்று இன்சொல் பகர்ந்தார். தமிழறிந்த அன்பரிடத்தில் பணி செய்யும் பேறு கிடைத்தமைக்குத் திருவருளை வழுத்துகிறேன் என்று எழுந்தேன். தலைவர், யான் தமிழ்ப் புலவனல்லன். ஒரு தமிழ்ப் புலவரை இப்பள்ளிப் பெற்றமை குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்று விடை தந்தார். மறுநாள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் போனேன். இரண்டாம் பாரத்துக்கும் மூன்றாம் பாரத்துக்கும் யான் தமிழ்ப் பாடம் எடுத்துக் கொள்ளல் வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, தலைமையாசிரியன் அன்பு என்று எண்ணிச் சேவை செய்தேன். வெலியன் டெக்னிகல் இன்டிடியூட் என்றோர் அமைப்புப் பள்ளியிலேயே காணப்பட்டது. எனது வருவாயைச் சிறிது பெருக்கல் வேண்டுமென்ற எண்ணத்துடன் தலைமை ஆசிரியரால் அவ்வமைப்புத் தொடங்கப்பட்டது என்று ஆசிரியன்மாரும் மற்றவரும் பேசினர். யான் மாலை வேளையில் புக்கீப்பிங்போதிக்கும் ஆசிரியனானேன். புக்கீப்பிங் படித்தது வீணாகவில்லை. இராஜா முதலியார் முயற்சியின் பயன் ஆயிரம் விளக்குப் பள்ளியில் விளைந்தது. கண்டிப்பு, தண்டிப்பு, அதிகாரம் முதலிய உருமற் பேய்கள் ஆயிரம் விளக்குப் பள்ளியில் நடம்புரிதல் அருமை. அவை ஒரோ வழி நடம்புரிய எழினும், ஆங்கு வீற்றிருக்கும் அன்புத் தெய்வத்தின் முன்னர் ஒடுங்கி ஒதுங்கும். வேலையைத் திறம்பட நடாத்துவது அதிகாரமா அன்பா என்றொரு கேள்வி உலகில் உலவிவருகிறது. இதற்கு விடை இரு சார்பிலும் பிறக்கிறது. அதிகாரம் என்று சொல்வோரும் உளர்; அன்பு என்று சொல் வோரும் உளர். ஆயிரம் விளக்குப் பள்ளி அன்பு என்றே பதில் கூறும். கண்டிப்பும், தண்டிப்பும், அதிகாரமும் பள்ளியில் பங் கெடுத்திருப்பின், யான் அங்கே ஆறாண்டு கழித்திரேன்; அரை ஆண்டில் ஓடி வந்திருப்பேன். தலைமை ஆசிரியர் அன்பு, பள்ளியை நன்முறையில் வளர்த்தது. அவர் பார்வையில் ஏதே னுங் குறை காணப்பட்டால் உடனே ஆசிரியர் கூட்டங் கூட்டு வர்; ஜெபஞ் செய்வர். கடவுள் பணி உங்களிடத்தில் ஒப் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வர். அவரது ஜெபமும் அன்புரையும் குறைபாட்டை ஒழிக்கும். ஆசிரியன்மாரைச் சகோ தர நேயம் பிணித்தது. சகோதர நேயம் அற்றவர் அப்பள்ளியில் ஒரு நொடியும் தங்கல் முடியாது. பொறாமை கோள் முதலியன அங்கே இடம் பெற்றதில்லை. தலைமை ஆசிரியர் அன்பு எங் களைப் பொறுப்புணர்ந்து நடக்கச் செய்யும். சம்பளத்துக்கு வேலை என்ற உணர்ச்சியே எங்களுக்குள் எழுவதில்லை. ஆயிரம் விளக்குப் பள்ளி எங்களுடையது என்றே பணி ஆற்றுவோம். எங்கட்கு அப்பள்ளி கோயிலாகியது. சோர்வு எங்கட்கு உண்டாவதில்லை. இன்பெக்ஷன் நெருங்கி வருங் காலத்தில் நாங்கள் எல்லா வேலையுஞ் செய்வோம். பள்ளிக் கூடம் நல்லபெயர் தாங்கல் வேண்டுமென்ற எண்ணம் எங்களை இரவு பகல் வேலை வாங்கும். இவ்வளவுக்கும் அடிப்படை எது? அதிகாரமா? அன்பா? அன்பு. அன்பு என்ன செய்யாது? அன்பு எல்லாஞ் செய்யும். அன்பு உயர்வு தாழ்வைக் கடந்த பணிக்கு உரியது என்னும் நுட்பம் ஆயிரம்விளக்குப் பள்ளியில் நன்கு விளங்கியது. 1911ஆம் ஆண்டில் மன்னர் பிரான் முடிசூட்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. mவ்விழாவை முன்னிட்டுப் பல விதச் சிறப்புக்கள் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்பட்டன; சென்னையிலும் நிகழ்த்தப்பட்டன; பள்ளிப் பிள்ளைகளின் ஆடல் பாடல், அவர்கட்குத் தின்பண்டம் வழங்கல், பரிசில் அளித்தல் முதலியவற்றிற்கென்று சென்னை இருகூறாகப் பிரிக்கப்பட்டது. தன்சென்னை நிகழ்ச்சிகட்கு மவுண்ட் ரோட்டிலுள்ள மகமதியக் கல்லூரி மைதானம் களனாகக் குறிக்கப்பட்டது. பொறுப்பு முழுவதும் எங்கள் தலைமை ஆசிரியர் மீது சுமத்தப்பட்டது. அவர் வயதானவர். உழைப் பெடுத்தவர் யார்? இளைஞராகிய நாங்களே. எத்துணை நாள்? ஏறக்குறைய ஒரு திங்கள். எங்கள் உழைப்புக்கு ஊக்கமூட்டியது எது? எங்கள் இளமையின் வளமா? கொழுமையா? செழு மையா? தலைமையாசிரியர் அன்பா? இறுதியதே. அதிகாரம் அதைச் செய்க - இதைச் செய்க என்றால், யான் ஒரு துரும்பைக் கூட அசைக்க ஒருப்படேன். அதிகாரம், ஆணவம்; அன்பு பணி. விழா அன்று யான் காலையில் வீட்டை விடுத்தேன்; இரவு மீண் டேன். அன்பின் எழுச்சி உணவையும் மறக்கச் செய்தது. பள்ளிக்கு மவுண்ட் ரோட்டிலிருந்த நிலையம் போத வில்லை என்று, உட் ரோட்டில் ஷாண்டன் என்ற பெரு நிலையம் வாங்கப்பட்டது. நிலைய மாற்றத்தின்போது ஆசிரியன்மாராகிய நாங்கள் செய்த ஊழியம் ஆயிரம் விளக் கையே வியக்கச் செய்தது. ஜான் ரத்தினத்துக்கு நல்ல காளைகள் கிடைத்தன; என்று ஊரவரால் பேசப்பட்டது. அப்பேச்சு எங்களை நாணுறச் செய்யவில்லை. அன்பை அடைக்குந்தாழ் உண்டோ? அன்பு ஊற்றுத் திறந்து கொண்டால் அருள் நீர் நானாபக்கமும் தானே பாயுமன்றோ? எங்கள் தொண்டை நேரிற் கண்ட வெலியன் மிஷன் மேற்பார்வையாளர் ஜேம் கூலிங் துரையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. அவர் புது நிலையத்தைத் திறந்து வைத்தபோது, இப்பள்ளியை என்ன அமைப்பென்று சொல்வேன்,? அன்பின் அமைப்பென்றே சொல்கிறேன். தலைமை ஆசிரியர் அன்பு ஆசிரியன்மார் அன்பு; பள்ளியும் அன்பு. இது வெறும் பள்ளியன்று; கிறிதுவின் அன்பு நிலையம் என்று பேசி எங்கட்கு நன்றி செலுத்தினர். இன்பெக்ஷன் நெருங்குங் காலத்தில் நாங்கள் நீண்ட நேரம் உழைப்போம். எங்களுக்குரிய வேலைகளை மட்டும் செய்யும் அளவில் நில்லோம்; குறைபட்டுள்ள வேறு வேறு வேலைகளிலுந் தலைப்படுவோம். வேலையைக் குறித்தக் கவலையோ சோர்வோ சலிப்போ தோன்றுவதில்லை. பள்ளிக் கூடத்துக்குப் பெருமை தேட வேண்டுமென்ற கருத்துடன் நாங்கள் உழைப்போம். யான் பள்ளியில் சேர்ந்த முதல் மூன்றாண்டும் ஒரே ஸப் அஸிடெண்ட் இன்பெக்டர் வந்து கொண்டிருந்தனர். அவர் நல்லவர்; தமிழன்பர். முதல் முதல் அவர்க்கும் எனக்கும் மூன்றாம் பாரத்தில் சந்திப்பு ஏற்பட்டது. அப்பொழுது அவ் வகுப்பில் தமிழ்ப் பாடம் நடைபெற்றது. அவர் என் போதனையைச் சிறிது நேரங் கவனித்தார்; பின்னே அவரே சில கேள்விகள் கேட்டு மாணாக்கரைச் சோதித்தார்; அதன்பின் திரிகடுகத்தில் உண்பொழுது நீராடி உண்டலும்... என்னும் பாட்டுக்குப் பொருள் கூறி விளக்குக என்றார். அவர் விரும்பியவாறே எனது கடனை ஆற்றினேன். கால் மணி நேரமாயிற்று. அவர் வேறு வகுப்புச் சென்றார். மீண்டும் அவர் என் வகுப்பாகிய முதல் பாரத்தில் என்னைக் கண்டார். அவ்வேளையில் யான் பூகோளம் போதித் திருந்தேன். இன்பெக்டர் பூகோள சோதனை நிகழ்த்தவே இல்லை. அவர் தமிழ் இலக்கியங்களைப்பற்றிப் பேசத் தொடங் கினார். எங்கள் பேச்சு அன்றைய பொழுதைப் போக்கியது. அவர் தமிழ் அன்பர் என்று உணரலானேன். பன்னிரண்டாண்டு அவர் சோதனைக்கு வந்தபோது என்னைக் கண்டு பேசியே சென்றார்; சோதனையில் இறங்கவே இல்லை. அவ்வன்பர் வேறு ஜில்லாவுக்கு மாற்றப்பட்டார். அவரிடத்தில் வேறு ஒருவர் அமர்ந்தார். அவர் சென்னைப் பள்ளிகளைக் கலக்கி னார். ஆசிரியர் உள்ளங்களில் அச்சமே குடிகொண்டது. அவரைக் கண்டதும் ஆசிரியன்மார், புலி வருகிறது, புலி வருகிறதுஎன்பர். அப்புலி எங்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்தது. முதல் முதல் கிண்டர் கார்ட்டன் வகுப்பில் நுழைந்தது; அங்கிருந்த சகோதரியைக் கலங்கச் செய்தது. பின்னே புலி நான்காம் வகுப்பில் பாய்ந்தது. அதற்கு எதிரிலேயுள்ளது என் வகுப்பு. புலியார் என்னைக் கூப்பிட்டார். இவ்வகுப்புக்கு டிக்டேஷன் போடுக என்றார். யான் டிக்டேஷன் தொடங்கியதும் இன் பெக்டர் வேறொரு வகுப்புக்கு மீண்டார். அதற்குள் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடித்து என் வகுப்புக்குப் போய் விட்டேன். இன்பெக்டர் என்னைக் கைகாட்டி அழைத்து, ஏன் அவ்வகுப்புக்குப் போனீர் என்றார். அஃது என் வகுப்பு என் றேன். யான் உம்மை இங்கே அழைத்து ஒரு வேலை கொடுத் தேன். மீண்டும் என் கட்டளை பிறக்கும்வரை நீர் இவ்வகுப்பி லேயே இருத்தல் வேண்டும. நீர் உமது வகுப்புக்குச் சென்றது தவறு என்று கண்டிப்புரை வழங்கினார். பின்னே பலகைகளை எடுத்தார். அவைகள் திருத்தப்படாமலிருந்தன ஏன் திருத்த வில்லை என்று என்னைக் கேட்டார். திருத்தும்படி நீங்கள் சொல்லவில்லை என்றேன். டிக்டேஷன் என்றால் அதில் திருத் தலும் அடங்கும். இது தெரியாதா? என்று கடாவினார். யான் ஒன்றும் பேசவில்லை. அவரே ஆங்கொன்று ஈங்கொன்றாகப் பலகைகளை எடுத்தெடுத்துப் பார்த்தார். என்னை நோக்கிப் போம் என்றார். யான் என் வகுப்பை அடைந்தேன். புலி அவ்வகுப்புக்கும் இவ்வகுப்புக்கும் ஓடி ஓடி ஆசிரியன்மாரை நடுங்கச் செய்தது. முதல் நாள் போயிற்று. மறுநாள் புலியார் வந்தார். தலைமை ஆசிரியரிடத்தில் சிறிது நேரம் பேசிவிட்டு இரண்டாம் பாரம் புகுந்தார். யான் அங்கே தமிழ் போதித்துக் கொண்டிருந்தேன். அதைச் சிறிது நேரம் கவனித்த அவர் வேறிடம் அணைந்தார். யான் இரண்டாம் பாரத்தில் எனது பணியையாற்றி, எனக்குரிய முதல் பாரத்தை நண்ணினேன். அங்கே புலி யார் போந்தார். என்ன பாடம் என்றார். கணக்கு என்றேன். யான் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதியிருந் தேன். அதை அவர் அழித்து வேறு ஒரு கணக்கைப் பொறித் தார்; பிள்ளைகளைப் பார்த்தார். சீக்கிரம் - சீக்கிரம் என்று அவர்களை முடுக்கினார். விடையைச் சோதிக்குமாறு என்னை விடுத்தார் அவரும் தொடர்ந்தார். வேலை முடிந்தது. மனக் கணக்கொன்று போட்டார். Éilia mtnu gh®it Æ£lh®; xU khzh¡fid¤ j« mUnf miH¤jh®; v«KiwÆš Éil f©lhŒ? என்று வினவினார். அவன் முறையைச் சொன்னான்; மற்றொருவனை அழைத்துக் கேட்டார். அவனும் அதே முறையைச் சொன்னான். என்னைப் பார்த்து, இம்முறை உம்மால் போதிக்கப்பட்டதா? என்றார் ஆம் என்றேன். முறை தவறு என்றார். மனக்கணக்குக்குரிய முறைகள் பலவிதம். அவை வகுப்புக்கேற்றவாறு போதிக்கப்படும் என் றேன். கணக்கில் நீர் பட்டம் பெற்றவரா? gj¡f« bg‰wtuh? என்று சீறி யான் சொல்வதைக் கேளும் என்று தமது முறையை வெளியிட்டார். இம்முறை இவ்வகுப்புக்குப் பொருந்திய தன்று என்று நவின்றேன். அப்படியா என்று உருமி இன்பெக்டர் வகுப்பை விடுத்தகன்றார். புலி பூனையாகுமா - சிங்கமாகுமா? என்ற எண்ணந் தோன்றிற்று தொடர்ந்து கெடுதல் செய்வார் என்ற எண்ணமும் எழுந்தது. ஒரு கடித மெடுத்து, அதில், என்னைத் தாங்கள் பள்ளியை விடுத்து அகற்றலாம். அதைப் பற்றிய கவலை எனக்குக் கிடையாது. யான் அன்புக்கு எளியன். அநியாய அதிகாரத்துக்கு எளியனல்லன். அதிகாரத்துக்கு அஞ்சி மானம் விற்கும் நீர்மையை என் பிறவி பெறவில்லை. என் முறையை அதிகாரத் திமிரால் தாங்கள் அலட்சியஞ் செய்தல் கூடாது. எந்த மேடையிலும் என் முறை பொருந்திய தென்பதை வலியுறுத்தச் சித்தமாயிருக்கிறேன். என்ற கருத்துச் செறிய எழுதி, அதை இன்பெக்டரிடத்தில் சேர்க்குமாறு ஒரு பைய னிடங் கொடுத்தனுப்பினேன். பகல் மணியடித்தது. யான் உணவு கொண்டு தோட்டத்திலுள்ள குளத்தின் படியொன்றில் அமர்நது எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணலானேன். தலைமையாசிரியர் கூப்பிடுகிறாரென்று ஓர் ஆள் ஒடி வந்து சொன்னான். யான் தலைமை ஆசிரியரிடஞ் சென்றேன். அங்கே இன்பெக்டர் காணப்பட்டார். இருவரும் என்னென்ன பேசினரோ யான் அறியேன். தலைவர், இவர் இன்பெக்டர்; நாம் ஆசிரியர்; என்று தொடங்கினார். யான் குறுக்கிட்டு, அதனால் என்றதும், இன்பெக்டர், தலைமை ஆசிரியர் வார்த்தை முடியட்டும் என்றார். என் பேச்சை நிறுத்திக் கொண் டேன். தலைவர் யானைக்கும் அடிசறுக்கும். மறப்பு என்பது எல்லார்க்கும் உண்டு. இன்பெக்டர் நான்காம் வகுப்பென்ற நினைவுடன் உம்முடன் வாது புரிந்தனர். கடிதங் கிடைத்த பின்னரே வகுப்பு நினைவு உண்டாயிற்றென்று தெரிகிறது என்று கூறியதும், போதும் என்று இன்பெக்டரைப் பார்த்து, மன்னிக்க என்று சொன்னேன். அவர், யானல்லவோ மன் னிப்புக் கேட்டல் வேண்டும் என்று பகர்ந்து, யான் கடிதம் எழுதி யதைப் பாராட்டினார். யான் மன்னிப்பு வரை செல்பவனல்லன். இனித் தங்கள் அன்புக்கு எளியன் என்று புகன்றேன். தலைமை யாசிரியர், இவையெல்லாம் அந்தரங்கம் என்று கூறி என்னை அனுப்பினர். தலைமையாசிரியர் அன்பு, புலியையும் வென்றது. அன்புக்கு முன்னே அதிகாரம் வீழ்ந்ததைத் தெளிந்தேன். இன்பெக்டர் வாழ்வில் ஒரு பெரும் மாறுதல் விளைந்திருக்கலாம். புலிக்குப் பின்னே ஒருவர் வந்தார்; அவர் அன்பருமல்லர்; அறிஞருமல்லர்; செக்குமாடு; சட்ட திட்டம் என்று அழுவோர். அவர் காலத்தில், யான் டிரெயினிங்குக்குப் போதல் வேண்டு மென்று எழுதிச் சென்றனர். அதற்குரிய முயற்சி என்னால் செய்யப் படவில்லை. பள்ளிக்கூடத்தாரும் அதன்மீது கருத்துச் செலுத்த வில்லை. தலைமை ஆசிரியர் பொதுவாகப் பல ஓய்வு நாட்களில் சிறப்பாக வேனிற்கால ஒய்வு நாட்களில் - என்னை வரவழைப்பர்; தேம்பாவணிக்குப் பொருளுரைக்கச் சொல்வர். சைவ சாத் திரங்களை ஆராய்ச்சி செய்வர். கர்மத்தைப் பற்றி எங்களுக்குள் பெருத்த வாதப் போர் நிகழும். கர்ம வாதிகட்குக் கடவுள் வேண்டுவதில்லை என்று ஜான் ரத்தினம் வாதிப்பர். யான் செய்த பாவத்தை யானே அநுபவித்தல் வேண்டும். அதை மற்றவர் எப்படி ஏற்றல் கூடும்? மன்னித்தல் கூடும்? என்று பிரதி வாதஞ் செய்வேன். மனந் திரும்பல் பாவ அறிக்கை மன்னிப்பு ஆகியவற்றை யான் நம்புவதில்லை. இவைகளைப் பற்றி அடிக் கடி வாதம் புரிவோம். சில சமயம் எனக்கு மதவெறி எழும்பும். வெவ்வுரைகளை வழங்கிவிடுவன். அவைகளை ஜான் ரத்தினம் பாராட்டுவதில்லை. வேலைத் துறையில் எங்கள் வாதம் அவர் மனத்தில் உறுவதில்லை. இகல், பகை, வன்மம் முதலிய இழிவு களை அவர் நெஞ்சம் அறியாது. வாதத்திலும் மதவெறி எழும்பு வதும், வெவ்வுரை வழங்குவதும் படிப்படியே என்னை விட்டு அகன்றன. இதற்குக் காரணம் என்ன கூறுவேன்? ஜான் ரத்தினத் தின் சேர்க்கையும் பொறுமையும் என்று கூறுவேன். மனந்திரும் பல், முறையீடு முதலியவற்றின் நுட்பங்கள் என்னை யறியாமலே எனக்குள் திடீரென விளங்கின. பின்னே என்னால் எழுதப்பெற்ற நூல்கள் பலவற்றில் அவை மலியலாயின. அஷ்டாவதானம் பூவை கலியாண சுந்தர முதலியார் யான் மணம் செய்ய ஒருப்படாததை யுணர்ந்து என்னை ஒரு மடத்துக்கு அனுப்ப விரும்பி என்னைக் கேட்டனர். அதை ஜான் ரத்தினம் பிள்ளைக்கு அறிவித்தேன். அவர் தோட்டத்திலுள்ள மரமொன்றைக் காட்டி, அம்மரம் எவ்வெவ் வழியில் பயன் படுகிறதென்பதை உங்களுக்கு விரித்துச் சொல்ல வேண்டுவ தில்லை. எத்தனை பறவைகள் அதில் தங்குகின்றன. அதனடியில் எத்தனை மாடு கன்றுகள் படுத்திருக்கின்றன. பாருங்கள். நீங்கள் இப்பள்ளியில் நல்ல மரமாயிருக்கிறீர்கள். நாடோறும் எவ் வளவு பிள்ளைகள்உங்களிடத்தில் கூடுகிறார்கள்! அவர்கட் கெல்லாம் நீங்கள பயன்படுகிறீர்கள். மடத்தில் இவ்வளவு உயிர்கட்கு நீங்கள் பயன்படுவீர்களா? நீங்கள் மட்டும் ஒரு வேளை நலம் பெறலாம். இவைகளையெல்லாம் கூர்ந்து உன்னி உங்கள் விருப்பப்படி நடக்க என்றார். அவர் மொழி எனக்கு அறிவுறுத்தலாயிற்று. பள்ளிப்பற்று எனக்கு மேலும் மேலும் ஓங்கிற்று. என்னை மணஞ்செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியவர் பலர். அவருள் ஜான் ரத்தினம் பிள்ளையும் ஒருவர். தொண் டுக்கு தனி வாழ்க்கை கூடாது. மண வாழ்க்கை வேண்டும் என்று அவர் சொல்வர். யான் மணஞ்செய்ய இசைந்தமை அவர்க்கு அளவிலா மகிழ்ச்சி யூட்டிற்று. அவரையும் மற்ற ஆசிரியன்மாரையும் நேரில் அழைக்க என் தமையனார் பள்ளி போந்தனர். ஜான் ரத்தினம் பிள்ளை, அவர்க்கு முகமன் கூறித் தமது வீட்டு நகைகளை எடுத்துக் கொடுத்தார். தமையனார் வியப்புற்று என்ன என்றார். ஹிந்துக்கள் கல்யாணத்தில் நகைகள் வேண்டப்படும். இந்நகைகள் உங்கள் சிரமத்தைச் சிறிது குறைக்கும்! என்று பதில்கூறி விடையளித்தனர். என் தம்பி தொட்டால் சுருங்கி. அவனுக்கு நல்ல தலைமையாசிரியர் கிடைத்தார். அதனால் அவன் அங்கே காலந்தள்ளுகிறான் என்று தமையனார் நண்பரிடம் சொல்வது வழக்கம். திருமணப் பந்தலில் ஜான் ரத்தினம் ஜெபஞ்செய்து வாழ்த்துக் கூறியதைப் பின்னே விளக்குவேன். வேனிற்கால விடுமுறை தொடங்கும்போ தெல்லாம் ஒவ்வோராண்டு ஆசிரியன்மாரும் மாணாக்கருஞ் சேர்ந்து தலைமையாசிரியர்க்கு வாழ்த்துக்கூறுவது வழக்கம். வாழ்த்துப் பாடல் என்னால் யாக்கப்படும். மிறை கவி முதலியனவும் யான் யாப்பதுண்டு. மிறை கவியில் ஜான் ரத்தினத்துக்குக் காதல் அதிகம். ஆயிரம் விளக்குப் பள்ளியில் நாடோறும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுடன் பழகும்பேறு எனக்குக் கிடைத்ததன்றோ? அதனால் யான் அடைந்ததென்னை? யானும் ஆதிதிராவிட னாகிய பேற்றை அடைந்தேன்; அதாவது யான் சாதியற்றவ னானேன். பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் கூடாதென்று பேசி வந்தேன்; எழுதி வந்தேன்; அப்பேச்சையும் எழுத்தையுஞ் செய லாக்கியது ஆயிரம் விளக்குப் பள்ளி. மதவெறி என்னைப் பேயாக்கியது. அப்பேயையும் ஆயிரம் விளக்குப் பள்ளி ஓட்டி யது. ஜான் ரத்தினத்தின் கூட்டுறவு எனது மதவெறியின் வேரைக் கல்லியது. தொண்டின் திறத்தை ஜான் ரத்தினத்தின் வாழ்க்கை எனக்கு அறிவுறுத்தியது. யான் மாணாக்கனாயிருந்தபோது பைபில் படித்தேன் எதற்காகப் படித்தேன்? எப்படிப் படித் தேன்? பரிசிலுக்காகப் படித்தேன். எழுத்துக்களைப் படித்தேன். ஆயிரம் விளக்குப் பள்ளி பைபிலின் பொருளை என்னுள்ளத் தில் விதைத்தது. அவ்விதை யான் ஒரு பெருஞ் செல்வம் பெறத் துணை நின்றது. என்ன செல்வம்? கிறிதுவச் செல்வம். அதுவே அந்தணச் செல்வம். அப்பள்ளி என் வாழ்வுக்கென்றே தோன்றி யது போலும்; அத்தகைய பள்ளியை விடுத்துப் பிரியும் நிலை யும் நேர்ந்தது! ஆயிரம் விளக்குப் பள்ளி வெலியன் மிஷனுக்கு உரியது. ஆனால் தனிமை வாய்ந்தது. எப்பள்ளியின் தொடர்பும் அதற்குக் கிடையாது. சென்னை வட்டத்து வெலியன் மிஷன் தலைவர் எவரோ அவரது நேர் பார்வையில் அப்பள்ளி நடை பெறும் வாய்ப்புடையது. நெடுங்காலம் ஜேம் கூலிங் அதன் மேற்பார்வையாளராக அமர்ந்திருந்தனர். அவரையும் ஜான் ரத்தினத்தையும் பிணித்த சகோதர நேயம் அளப்பரிது, அவரே இவர் இவரே அவர் என்று உலகம் சொல்லும். அக்கூலிங் துரை திடீரென மரணமடைந்தனர். ஜான் ரத்தினம் பிள்ளை யின் மனம் உடைந்தது. பள்ளியைப்பற்றிய கவலை பெருகியது. ஆயிரம் விளக்குப் பள்ளியின் தனிமையைப், போக்கி, அதை வெலி கல்லூரியின் கிளையாக்கலாமென்றும், அப்பள்ளியை அறவே தொலைத்து அதன் நிலையத்தை வெலி கல்லூரியின் கீழ் வகுப்புக்களுக்குப் பயன்படுத்தலாமென்றும், அந்நிலை யத்தை விற்றுவிடலாமென்றும் பலவாறு மிஷின் வட்டங்களில் பேசப்பட்டன. அச்சமயத்தில் வேலி கல்லூரியில் நீண்ட காலம் தமிழ்த் தலைமையாசிரியராகச் சேவை செய்து வந்த சே. கிருஷ்ணமாச்சாரியார் விலகப் போகிறாரென்ற வதந்தி கிளம்பியது. பின்னே அவ்வதந்தி உறுதிப்பட்டது. அப்பதவிக்கு முயற்சி செய்யுமாறு ஜான் ரத்தினம் என்னைத் தூண்டினர். தங்களை யான் எப்படி பிரிதல் கூடும் என்று கவலையுற்றேன். அவர், நமது பள்ளிநிலை படிப்படியே குலைந்து வருகிறது. உண்மை எனக்குத் தெரியும். யானும் வெலி கல்லூரியில் சேரும் நிலை நேரலாம் என்று சொன்னார். அச்சொல் எனது கவலையை ஒருவாறு நீக்கியது. ஆயிரம் விளக்குப் பள்ளி என் றால் ஜான் ரத்தினம் பிள்ளைதானே என்று ஆறுதலடைந்தேன். வெலி கல்லூரி வெலி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கென்று விண்ணப்பங்கள் பறந்தன. யானும் விண்ணப்பம் விடுத்தேன். யான் வெலி கல்லூரியின் பழைய மாணாக்கனாதலாலும், வெலியன் மிஷன் சார்புடைய பள்ளியொன்றில் வேலை பாத்து வருவோனாதலாலும் தமிழ்ப் பேராசியர் பதவி எனக்குக் கொடுக்க உறுதி செய்யப்பெற்றது. இச்செய்தி சென்னையில் பரவியது. சே. கிருஷ்ணமாச்சாரியாரிடம் தமிழ் பயின்ற மாணாக்கருள் யானும் ஒருவன். அவர்க்கு நன்மொழி வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. யானும் அதில் கலந்து கொண்டேன். கூட்டத்தில் தலைமை வகித்தவர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க் குழுவின் தலைவர் தோட்டக்காடு இராமகிருஷ்ண பிள்ளை. அவர் என்னையும் பேசுமாறு பணித்தார். என் பேச்சு மாணாக் கரையும் ஆசிரியன்மாரையும் கவர்ந்ததை உணரலானேன். அக் கூட்டத்தில் பழைய ஆசிரியன்மார் சிலர் இருந்தனர். அவருள் சிலர், என்னைப் பார்த்து, நீ ஒரு கணிதப் பேராசிரியனாக வரத்தக்கவன். கதிரைவேற் பிள்ளையின் கூட்டுறவால் தமிழ்ப் பேராசிரியனாக வந்தனை. ஆனாலும் பழைய பள்ளியில் ஓர் ஆசிரியனாக நீ வர நேர்ந்தமை மகிழ்ச்சி யூட்டுகிறது, என்று வாழ்த்தினர். பிரின்ஸிபால் தாம் உறுதி செய்ததை எனக்கு அறிவித்தா ரில்லை. இடையில் குறும்புகள் எழுந்தன. சில மாதங்கட்கு முன்னர் வெலி கல்லூரி மாணாக்கர் சிலருக்குக் கசையடி கிடைத்தது. அது குறித்து அன்னிபெஸண்ட் அம்மையாரைத் தலைவராகக் கொண்ட நியூ இந்தியா பத்திரிகை கிளர்ச்சி செய்தது. அன்னிபெஸண்ட் அம்மையார் தொடர்பு கொண்ட இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் நிருவாகிகளில் யானும் ஒருவன். அந்நாளில் தியோசாபிகல் சங்கத்துக்கும் கிறிதுவச் சபைகட்கும் இணக்கமில்லை. பொறாமையாளர் சிலர், நிகழ்ச்சி களைப் பலவாறு திரித்துக் கயிறு கட்டினர். யான் தியோசாபி கல் சங்கத்தில் சேர்ந்தவனென்றும், அச்சங்கத் தொடர்பு கொண்ட இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் நிர்வாகிகளுள் ஒருவனென்றும், கசையடி கிளர்ச்சியில் சேர்ந்தவனென்றும், பிரின்பாலுக்குத் தெரிவிக்கப்பட்டன. அவ்வேளையில் இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் சார்பில் அன்னி பெஸண்ட் அம்மையாரால் பவானி பாலிகா பாடசாலை என்றொரு பெண் பாடசாலை திறக்கப்பட்டது. அதையும் பொறாமையாளர் தமதுகுறும்புக்குப் பயன்படுத்திக் கொண்ட னர். பவானி பாலிகா பாடசாலை இராயப்பேட்டை ஆண்டித் தெருவிலுள்ள வெலியன் பெண் பள்ளிக்கூடத்துக்குப் போட்டியாகக் காணப்பட்டதென்றும், அதிலும் எனக்குக் கலப்புண்டென்றும், பிரின்ஸிபாலுக்கு அறிவிக்கப்பட்டன. நிலைமை நெருப்பில் நெய் விட்டது போலாயிற்று. யான் ஜான் ரத்தினம் பிள்ளையைக் கண்டு, தாங்கள் என் பொருட்டு உழைப்பெடுத்தல் கூடாது. ஆண்டவனுக்குச் சித்தமானால் வெலி கல்லூரி வேலை எனக்குக் கிடைக்கும். இல்லையேல் அஃது எனக்குக் கிடைத்தல் அரிதாகும் என்று சொன்னேன். குறும்புகளைக் கேள்வியுற்ற இராமகிருஷ்ண பிள்ளை, நமசிவாய முதலியார், சச்சிதானந்தம் பிள்ளை முதலியோர் என்பொருட்டுப் பெருமுயற்சி செய்தனர். பிரின்ஸிபால் நீலகிரிக்குப் புறப்பட் டார். அவரை வழியனுப்பச் சென்ற ஜான் ரத்தினம் பிள்ளை, யான் நாற்பதாண்டாக மிஷினில் பணியாற்றி வருகிறேன். என்னிடத்தில் கலியாணசுந்தர முதலியார் ஆறாண்டு வேலை பார்த்து வருகிறார். என் உரைக்குத் தாங்கள் செவி சாய்க்க வில்லை. யான் வருந்தாது வேறு என் செய்தல் கூடும்? என்றா ராம். அக்கூற்று, பிரின்ஸிபால் மனோநிலையை மாற்றியது. அவர் நீலகிரி நண்ணியதும் எனக்குக் கட்டளை அனுப்பினர். அதைக் கேள்வியுற்ற நண்பர் பலர் இன்புற்றனர். 1916ஆம் ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் வெலி கல்லூரியின் தலைமைத் தமிழாசிரியர் பதவியை ஏற்றேன். ஆங்கே ஒன்றரை ஆண்டு தமிழ்த் தொண்டாற்றினேன். சில நிகழ்ச்சிகளைக் குறிக்க விரும்புகிறேன். யான் வேலை ஏற்ற ஞான்றே தலைவரைக் கண்டு, யான் தியோசாபிகல் சங்கத்தில் சேர்ந்தவனல்லன். அச்சங்கத்துக்கு யான்போவேன்; வருவேன். சகோதர சங்கத்தில் யான் நிருவாகி யாக இருத்தல் உண்மையே. பவானி பாலிகா பாடசாலை போட்டிக்கென்று காணப்பட்டதன்று. கோள் சொன்னவரைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று வெளிப்படையாகப் பேசினேன். நீங்கள் இவைகளையெல்லாம் எப்படிக் கேள்வி பட்டீர்கள்? எதில் அங்கம் பெற்றிருந்தால் என்ன? கிறிதுவ மார்க்கம் பரந்த நோக்கமுடையது. கோள் சொன்னவர் பெயரைத் தெரிந்து கொள்ள விரும்புவது நல்லதன்று. ஆயிரம் விளக்குப் பள்ளியில் எப்படித் தொண்டு செய்தீரோ அப்படியே இக் கல்லூரியிலும் தொண்டு செய்து வாரும். நீங்கள் செய்யப் போவது ஆண்டவன்பணி என்று அன்புரை பகர்ந்து வாழ்த்துங் கூறினர். யான் எனது நன்றியைத் தெரிவித்தேன். சே. கிருஷ்ணமாச்சாரியார் தம் வேலையளவில் நின்றவர்; தம் சம்பளத்தின் மீதோ பிற பண்டிதர் சம்பளத்தின் மீதோ பண்டிதர்க்குரிய வேறு வசதிகள் மீதோ கருத்துச் செலுத்திய தில்லை. அவர் பெரிதும் பாடங்கட்கு உரை வரைந்துவெளியிடு வதில் காலங்கழித்தவர். யான் பண்டிதர்களின் குறைபாடுகள் பல கண்டேன். முதல் முதல் சம்பளத்தைப்பற்றி தலைவரிடம் பேசினேன்; பின்னே வேறு பல உரிமைகளைப் பற்றியும் வசதி களைப் பற்றியும் பேசினேன். அவர், பண்டிதர்களைப்பற்றி ஒன்றும் என் காதுக்கு எட்டியதே கிடையாது. குறைபாடுகளை என் கவனத்துக்கு எவரும் கொண்டு வந்ததில்லை. குறைகளைப் படிப்படியே களைகிறேன் என்றார். முதல் முதல் சம்பளம் உயர்த்தப்பட்டது. பின்னே வசதிகள் பலவுஞ் செய்யப் பட்டன. நீண்ட நாளாகச் சம்பள உயர்வு பெறாதிருந்த பண்டிதர்கட்கு மகிழ்ச்சி பொங்கியது. அவர்கள் வாய்கள் என்னை வாழ்த்தின. வெலி கல்லூரி செகண்டரி காலேஜ். அதனால் தமிழ்ப் பேராசிரியர் ஹைகூல் வேலையும் செய்தல் வேண்டும். நான்காவது பாரத்திலிருந்து ஸீனியர் இண்டர்மீடியேட் வரை தலைமைத் தமிழாசிரியர் பாடம் எடுப்பது வழக்கத்திலிருந்தது. அதை மாற்ற யான் முயன்றேன். அதனால் புதுப் பண்டிதர் ஒருவர் நியமிக்கப்பட்டனர். அவர் என் நண்பர் சிவசங்கர முதலியார். அன்பர் ஜான் ரத்தினம் பிள்ளை வெலி கல்லூரியில் கணக்கு வழக்குகளை மேற்பார்வை யிடுவோரானார். அஃதெனக்கு இன்பூட்டிற்று. அவரை நாடோறும் பார்க்கும் வேறு பெற்றேன். ஒருநாள் ஜான் ரத்தினம் பிள்ளை என்னைக் கண்டபோது, நமது ஆயிரம் விளக்குப் பள்ளி விரைவில் மூடப்படும் என்றார். இடி விழுந்ததுபோன்றுதோற்றம் உண் டாயிற்று. யான் வெலி கல்லூரியில் படித்து வந்தபோது தமிழ்ச் சங்கமொன்று காணப் பகீரத முயற்சி செய்தேன். கிருஷ்ண மாச்சாரியர் இடந்தரவே யில்லை. பின்னே என் நண்பர் சச்சி தானந்தம் பிள்ளை கல்லூரியில் தருக்க போதகாசிரியராக அமர்ந்த காலத்தில் தசரத இராமசாமி என்ற மாணாக்கர் முயற்சியால் தமிழ்ச் சங்கமொன்று காணப்பட்டது. அச்சங்கத் துக்கு யான் புதியவனல்லன். யான் அதில் சில சொற்பொழிவு கள் நிகழ்த்தியுள்ளேன்; இப்பொழுது அச்சங்கத்தில் தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு வாய்த்தமையால் அதையோம்ப யான் பலவழியிலும் முயன்றேன்; சென்னைக்கணுள்ள பெரும் பெரும் புலவர்களைக்கொண்டு பேசுவிப்பேன்; தமிழ்ச் சங்கக் கூட்டங்கட்கெல்லாம் பிரினிபாலை அழைப்பேன். அவர் வரத் தயங்குவதில்லை. தமிழ்ப்பேச்சை அவர் உணர்ந்து கொள்வர். ஒருமுறை வில்லிபுத்தூரரைப்பற்றிப் பேச வசிஷ்ட பாரதியார் வரவழைக்கப்பட்டார். தலைமை வகிக்க இராம கிருஷ்ணபிள்ளை இசைந்தனர். பாரதியார் வைதீகக் கோலத் துடன் காட்சியளித்தார். அவரைப் பார்த்த ஒரு மாணாக்கன், தாங்கள் சட்டை அணிவதில்லையோஎன்று கேட்டான்; வேட்டியை விரித்து உடலை மூடிக்கொள்ளுங்கள் என்றான் வேறு ஒரு மாணாக்கன். பாரதியார் எதற்கும் அசையவில்லை. கூட்டங் கூடியது. பாரதியார் வாய் திறந்தார்; அமைதி நிலவியது. சர்க்கரைப் பந்தரில் தேன் மாரி பெய்வதென்று சொல்வதுண்டு. அன்று அம்மாரியை நாங்கள் கண்டோம்; இனிமை நுகர்ந்தோம். தமிழ்ச்சங்க ஆண்டு விழா உற்றது. அவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணாக்கர் ஊக்கம் அளவில் அடங்காததாயிற்று. அத்தகைய விழாவை வெலி கல்லூரி என்றுங் கண்டதில்லை என்று பழைய பழைய ஆசிரியன்மாரால் பேசப்பட்டது. தலைவர் ஜடி சேஷகிரி ஐயர். சொற்பொழிவாளர் மாணிக்க நாயக்கர். இரண்டு மேகங்களும் தமிழ் மழை பொழிந்தன. கல்லூரியின் உள்ளங் குளிர்ந்தது. சரித்திரப்பேராசிரியர் பார்த்தசாரதி ஐயங்கார் முயற்சி யால் கோபால கிருஷ்ணகோகுலர் உருவப் படம் கல்லூரி மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரின்ஸிபால் நீல் துரையே தலைமை வகித்தார். பார்த்தசாரதி ஜயங்கார் ஆங்கிலத்தில் பேசினர்; யான் தமிழில் பேசினேன். தலைவர் முடிவுரையில், நம் தமிழ்ப் பேராசிரியர் அரசியலாசிரியராகவும் இன்று விளங்கினர் என்று குறித்தனர். அப்படியேயாக என்றொரு கூக்குரல் ஒரு மூலையில் எழுந்தது. ஹைகூல் வகுப்பில் பெரிதும் பாடத்தளவில் நின்று விடுவேன்; காலேஜ் வகுப்புக்களில் அவ்வளவில் நிற்க மாட்டேன்; பாடத்துடன் பல துறைகளைக் கலந்து போதிப்பன். பிள்ளைகள் மில்டன், ஷெல்லி, கீட் முதலியவருடன் உறவாடி வருவார்கள். அவர்கட்கு வள்ளுவர், இளங்கோ, ஜெயங்கொண்டான், வில்லி முதலியோரைக் காட்டுவன். மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் மாணாக்கரிடை எழுப்புவன். பிள்ளைகளும் யானும் உடலுயிர் போலானோம். முதலாண்டு கடந்தது. இரண்டாம் ஆண்டு துவங்கியது. சுய ஆட்சிக் கிளர்ச்சி சண்ட தாண்டவம் புரிந்தது. அத் தாண்டவம் நாளுக்குநாள் எழுச்சி யூட்டிக்கொண்டே வந்தது. இராயப்பேட்டை சகோதர சங்கத்தின் அகம் ஒரு பெரும் அரசியற் கழகமாகியது. சுய ஆட்சிக் கிளர்ச்சியை ஒடுக்க ஜடி கட்சி தோன்றியது. அன்னிபெஸண்ட் அம்மையார் (16-6-1917) காப்பில் வைக்கப்பட்டனர். டாக்டர் சுப்பிரமணிய ஐயர் ருத்ர மூர்த்தியானார். என் நெஞ்சம் அரசியலில் தோய்ந்தது. சில கூட்டங்களில் யான் பேசுதலும் நேர்ந்தது (விளக்கம் பின்னர்). ஜடி கட்சியை மாய்க்கச் சென்னை மாகாணச் சங்கம் எழுந்தது. கல்லூரி விடுத்து நாட்டுக்குச் சேவை செய்தல் வேண்டுமென்ற வேட்கை என்னுள் முருகிக் கிளர்ந்தது. அதைக் கல்லூரித் தலைவர்க்குத் தெரிவித்தேன். எதையும் எண்ணித் துணிக என்று சொல்லி, யூனிவர்ஸிடி கமிஷன் நவம்பரில் வரும். அதற்குமேல் கல்லூரி விடுவதைபற்றிச் சிந்திப்பது நல்லது என்றார். பிடிவாதப் பேய் என்னை அலைக்கவில்லை. நவம்பரை எதிர்ப்பார்த்திருந்தேன். நவம்பர் உற்றது; கமிஷன் வந்தது; போனது. எனது உறுதியைத் தலைவர் நன்கு உணர்ந்து, அவரே நேரில் நல்லுரை புகன்றார்; பிறரை விடுத்தும் புகல்வித்தார். என் கருத்தை யான் மாற்ற உடன்படவில்லை தலைவர் வருத்தத் துடன் (5-12-1917) என்னை விடுவித்தார். முன்னரே செய்யப் பெற்ற ஏற்பாட்டின்படி யான் (7-12-1917) தேசபக்தன் ஆசிரிய னானேன். யான் கல்லூரியை விடுத்து விலகப்போவது ஆசிரியன் மார்க்கும் மாணாக்கர்க்கும் தெரியும். ஆனால் எவர்க்குங் காலம் தெரியாது. யான் திடீரென விலகினேன். தேசபக்தன் ஆசிரிய னாகிய பின்னரே ஆசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் எனது விலகல் தெரியவந்தது. எனக்கு நன்மொழி வழங்க அவர் முயன்றனர். முயற்சி உருக்கொள்ளச் சில நாட்களாயின. எனக்கு (20-12-1917) அழைப்பு வந்தது. கல்லூரிக்குள் நுழைந்தேன். எனது உள்ளங் கசிந்தது. கூட்டத்தில் தலைமை வகிக்க ஒருப் பட்ட நீல் துரைக்கு அந்நேரத்தில் மாண்டேகுவினிடம் பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உதவித் தலைவர் கிங்லி வில்லியம் தலைமை தாங்கினர். நீல் துரை எனக்கொரு கடிதம் எழுதி அனுப்பினர். அதைக் கூட்டத்தில் யான் படித்துக் காட்டவில்லை. அவ்வன்புரிமைக் கடிதத்தின் ஒரு பகுதியில், உங்களை யான் ஒரு தமிழாசிரியராக மட்டுங் கொண்டே னில்லை; ஒரு தோழ ராகவுங் கொண்டேன். வீட்டு விவகாரங்களையும் உங்களிடத் தில் யான் பேசியிருக்கிறேன் என்று பொலிந்த பொன்மொழி என் நெஞ்சை உருக்கியது. மற்றோரிடத்தில் மாணாக்கர் என் னிடத்தில் பூண்ட அன்புத்திறம் விளக்கப்பட்டிருந்தது. அதில், நீங்கள் மேசைமீது கைவைத்து உறங்கிய வேளையிலும் மாணாக்கர் சந்தடி செய்யாமல் அமைதி காத்ததை யான் பார்த்து மகிழ்ச்சியுற்றிருக்கிறேன்என்றொரு குறிப்புத் திகழ்ந்தது. இஃது எப்பொழுது நிகழ்ந்தது? இதை யான் அறியேனே. இதைக் குறித்துத் தலைவர் என்னை யொன்றுங் கேட்டதில்லையே. அவர் அன்பு என்னே என்று எண்ணினேன். நீல் துரை கூட்டத்துக்கு வாராது வேறோரிடம் செல்ல நேர்ந்தது நல்லதாயிற்று. இல்லையேல் அவரும் யானுங் கண்ணீரில் மூழ்கியிருப்போம். எனக்கு நன்மொழி வழங்கப்பட்டது; பொற் பதக்கம் அளிக்கப்பட்டது. யான் பதில் கூற எழுந்தேன். பிள்ளை களின் அழகிய முகங்கள் என் கண்ணிற் படிந்து கருத்தில் ஊன்றி ஆவியில் ஒன்றின. சிறிது நேரம் பேச்சுத் தடைபட்டது. பின்னே வழக்கம்போலப் பேசினேன். என் நன்றியறிதலைத் தலைவருள் ளிட்ட எல்லார்க்குஞ் செலுத்தி முடிவில், யான் வெலியன் மிஷனை மறவேன்; என்றும் மறவேன். யான் இக்கல்லூரியில் ஏழாண்டு படித்தேன்; ஆயிரம் விளக்குப் பள்ளியில் ஆறாண்டு பணி செய்தேன். இக்கல்லூரியில் ஒன்றைரை ஆண்டு தொண் டாற்றினேன். எனக்கு இப்பொழுது முப்பத்து நான்கு ஆண்டு நடைபெறுகிறது. ஏறக்குறைய என் வயதில் ஒரு பகுதி வெலியன் மிஷனில் கழிந்தது. வெலியன் மிஷனால் நான் பெற்ற நலங்கள் பல. அவைகளுள் சிறந்த ஒன்று கிறிதுவச் செல்வமென்னும் அந்தணச் செல்வம். அச்செல்வ விதை முதல் முதல் என் உள்ளத் தில் விழுமாறு துணைசெய்தது ஒருவரது நேசம். அவர் யார்? அவர் இங்கே வீற்றிருக்கும் ஜான் ரத்தினம் பிள்ளை. அவர்க்கு யான் என்றுங் கடமைப்பட்டவன். எனது வணக்கம் அவர்க்கு உரியதாக. இப்பொழுது என்னை நாட்டுச் சேவைக்கு ஈர்த்தது எது? வெலியன் மிஷன் எனக்களித்த கிறிதுவம்; அந்தண்மை. பணிக்கு என்னுள் கால்கோலிய அன்பார்த்த வெலியன் மிஷனை யான் எப்படி மறத்தல் கூடும்? அதன் வேலையை இக் கல்லூரியில் செய்துவந்தேன். அதைத் தொடர்ந்தே இனி நாட்டுக் கல்லூரியில் செய்யப் புகுந்தேன். விடைகொடுங்கள். போய் வரு கிறேன்என்று மொழிந்தேன். தலைமை வகித்தவர் முடிவுரை கூறியதும் கமலங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன. யான் பொய்கை நடுவண் நின்றேன். மெல்ல மெல்ல நீந்தியே வெளி வந்தேன். மாணாக்கர் கூட்டம் வீட்டுவரை தொடர்ந்தது. சமயம் நேரும்போதெல்லாம் யான் நீல் துரையைக் காண் பேன்; அவரிடம் பேசுவேன்; மற்றவரையும் பார்ப்பேன்; தமிழ்ச் சங்கத்துக்கு அழைக்கப்படுவேன். என் வரலாறு சுருங்கிய முறை யில் காலேஜ் சஞ்சிகைகளிலும் வெளிவந்தது. நாளேற நாளேறப் பழைய மாணாக்கர் காட்சியும், ஆசிரியன்மார் காட்சியும் மறைந்துபோயின. நீல் துரையும் தாய்நாடு நோக்கினர். வெலி காலேஜ் வெலி ஹைகூலாயிற்று. காலேஜ் மெடன் டிரெய்னிங் காலேஜாக மாறிற்று. கட்டடம் ஒன்றே இப்பொழுது எனக்குப் பழையதாகக் காணப்படுகிறது. பிறவெல்லாம் புதுமை. தேசபக்தன் - நவசக்தி தேசபக்தனை இரண்டரை ஆண்டு வளர்த்து விடுத்தேன்; பின்னே நவசக்தியை ஈன்றேன். இவள் இருபதாண்டு என்னால் வளர்க்கப்பெற்றாள். இப்பொழுது என்ன செய்கிறேன்? என்ன சொல்வேன்? நூற்றொண்டு செய்கிறேனென்று சொல்வேனா? சன்மார்க்க சமாஜ தொண்டு செய்கிறேன் என்று சொல்வேனா? மானதத் தொண்டு செய்கிறேன் என்று சொல்வேனா? குறிப்பு பென்ர் கம்பெனியுள்ளே கூட்டஞ் சேர்த்துப் பத்திரிகை படிக்கும் நிலை எற்றுக்கு ஏற்பட்டது? மானேஜிங் டைரெக்டரின் எச்சரிக்கையை யான் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? மானே ஜரது நன்மொழிக்கு நான் ஏன் செவிசாய்க்கவில்லை? உமாபதி குருப்பிரகாஸம் பிரஸால் நஷ்டம் விளைந்ததேன்? என்ன கார ணம் கூற வல்லேன்? இவையெல்லாம் என்னை ஆயிரம் விளக்குப் பள்ளியிலே உருட்டித் தள்ளுதற்கு நிகழ்ந்தன என்று யான் கருதுகிறேன். அப்பள்ளி என் வாழ்க்கையில் ஒரு நல்விதை விதைத்ததன்றோ? வெலி காலேஜை விடுத்தது அறமா? அதை விடுக்கத் தூண்டியது எது? இவைகட்குக் காலதேவதை விடை யிறுத்தல் வேண்டும் காலவேகம் என்னென்னவோ செய்தது என்று கூறு தல் சாலுமோ? ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வோர் உள்ளுறை உண்டு. உள்ளுறை சில சமயம் வெளிப்படையாக விளங்கித் தோன் றும்; சில சமயம் விளங்கித் தோன்றாமலே கிடக்கும். இங்கே ஏதேனும் உள்ளுறை உண்டா? உண்டு என்று உறுதிப்படுத்தல் இயலாது. உள்ளுறை இருக்கலாமென்று ஊகிக்கிறேன். யான் வெலி கல்லூரியை விடாதிருந்தால் பள்ளிப் பாட நூல்கள் பல என்னால் எழுதப்பட்டிருக்கும்; பல்கலைக் கழகச் சோதனையாளனாகி யிருப்பேன்; பொருட் செல்வம் பெறு தற்குப் பலவித வாய்ப்புகள் கிட்டியிருக்கும்; யான் வீடுவாசல் உடையவனா யிருக்கலாம். பொருட்செல்வப் பேறு எனக்குக் கிடைக்குமோ? அதற்கும் எனக்கும் எவ்வளவு தூரம்? அத்திரு கருவில் அமையவில்லை. ஆதலின் யான் வெலி கல்லூரியை விடுத்து விலகல் நேர்ந்திருக்கலாம். இன்னொன்று என் ஊகத்தில் படுகிறது. அதையும் இங்கே இரண்டொரு சொல்லால் சொல்கிறேன். முப்பத்து நான்கு வயது வரை எனது வாழ்க்கை ஒருவிதமாக இயங்கி வந்தது. அதுமட்டும் வாழ்க்கைக்குத் தகுதியாகுமா? பலவித அநுபவம் பெறுவதன்றோ வாழ்க்கை? ஆபாசங்களில் வாழ்க்கை படியும் வாய்ப்பையும் பெறுதல் வேண்டும். அஃதொருவிதச் சோதனை. அச்சோதனைக் கென்று கல்லூரியை விடுத்தகலல் நேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை. அரசியல் உலகம் ஆபாசம் உடையதா? அச் சோதனைக்குரிய குறிப்புக்களையும் பொறிக்க முயல்கிறேன். 9. அரசியல் 1902ஆம் ஆண்டில் யான் நான்காம் பாரத்தில் வாசித்த போது சுரேந்திரநாத் பானர்ஜீ என்ற பெயர் காதில் விழும். அனந்தாச்சார்லு, ஜி. சுப்பிரமணிய ஐயர். டாக்டர் நாயர், வி. கிருஷ்ண சாமி ஐயர் முதலியோர் ஒவ்வொருபோது காங் கிரஸைப்பற்றிப் பேசுவர். சிற்சில சமயம் நண்பருடன் அக் கூட்டங்கட்கு யான் போவேன்; ஆங்கிலப் பேச்சை அமிழ்தென நுகர்ந்து எவர் ஆங்கிலம் நன்றாயிருந்தது என்று பேசித் திரும்பு வேன். கால் கோள் 1906ஆம் ஆண்டிலே காங்கிர பேச்சு வண்டியிலும் உலவும்; வழியிலும் உலவும். அப்பேச்சுக்களில் என் நெஞ்சம் ஈடுபடும். அவ்வாண்டு முடிவில் தாதாபாய் தலைமையில் காங் கிர கல்கத்தாவில் கூடிற்று. ஆங்கே காங்கிரக்குள் கனன் றிருந்த மிதவாத அமிதவாதங்கள் வெளிப்படையாக மூண் டெழுந்து நாவிட்டு எரிந்தன. இளைஞர் நெஞ்சம்எதிலே செல்லும்? அமிதத்தில் என்று சொல்லவும் வேண்டுமோ? அப்படிச் செல்வது இயற்கை. அவ்வியற்கை வழி எனது நெஞ்ச மும் உழன்றது. 1907ஆம் ஆண்டில் திலகர் பெருமான் தலைமை யில் அமிதவாதப் பிரசாரம் நாடு முழுவதும் நடைபெற்றது. பிரசாரத்துக்கென்று தென்னாட்டிலும் ஒரு கூட்டம் திரண்டது. அக்கூட்டத்தவருள் குறிக்கத்தக்கவர் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணி சிவா, சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீநிவாசாச்சாரியர், சுரேந்திரநாத் ஆர்யா, சக்கரைச் செட்டியார், எ துரைசாமி ஐயர், ஹரி சர்வோத்தம ராவ் முதலியோர், கால வேகம் என்னைப் பத்திரிகை படிக்கச் செய்தது. அரவிந்த கோஷால் நடத்தப் பெற்ற, பந்தேமாதரம் என்ற வீரஞ் செறிந்த பத்திரிகையைப் படிக்கப் படிக்க ஊக்கம் பிறக்கும்; நாட்டு விடுதலையில் வேட்கை எழும். அந்நாளில் தமிழில் இந்தியா என்றொரு பத்திரிகை ஸ்ரீநிவாசாச்சாரியார், சுப்பிரமணிய பாரதியார் முதலியோரால் நடத்தப் பெற்றது. தென்னாட்டைத் தட்டியெழுப்பிய பெருமை அப்பத்திரிகைக்கு உண்டு. பாலர் விபினசந்திர பாலரைச் சென்னைக்கு அழைக்கவேண்டு மென்ற முயற்சி ஜி. சுப்பிரமணிய ஐயர், டாக்டர் நாயர் முதலி யோரிடம் எழுந்தது. அம்முயற்சி விபினசந்திர பாலரைச் சென்னைக்கு வரவழைத்தது. கூட்டங்கள் கடற்கரையில் திரண் டன; துதைந்தன; மிடைந்தன. அரிய சொற்பொழிவுகள் பல ரால் நிகழ்த்தப்பட்டன. நீர்க்கடல் ஒரு பக்கம்; ஜனக்கடல் இன்னொரு பக்கம். நடுவண் சிறு தீவென விளங்கியது மேடை. அதிலே பாலர் பொழிந்தார் அமிழ்தம்; சொல்லமிழ்தம்; வீரச் சுவை அமிழ்தம். அதைக் கடல் பருகியது; காற்று அருந்தியது. உடுக்கள் உண்டன; திங்கள் நுகர்ந்தது. மனிதக் கடலில் அமைதி. புலன்களெல்லாம் செவியைச் சேர்ந்தன. ஏழு மேகங்கள் ஒன்றுபட்டு முடுகி எழுந்து பாலராகி அமுதமழை பொழிந்தன என்றே கூறல்வேண்டும். அந்நாளில் நாவன்மையில் சுரேந்திர நாதருக்கு அடுத்தபடியில் நின்றவர் பாலரே. அக்காலத்தில் ஒலி பெருக்கியில்லை. பாலருக்கு ஒலிபெருக்கி எற்றுக்கு? ஒலிபெருக்கி பெருகப் பெருகப் பாலர் போன்ற நாவலர் தோன்றுதலும் அரிதாயிற்று. அப்பொழுது ஒலி பெருக்கி பாலரைக் கண்டிருப் பின், அஃது ஒலி சுருக்கியாய் ஒடுங்கும். பாலர் சொற்பொழிவு எனக்கு விற்பொழிவாகவும் தோன்றியது. காண்டீபன் விற் பொழிவைச் சொற்பொழிவாக நிகழ்த்தப் பாலராக வந்தான் என்று கூறினால் என் உள்ளம் நிறைவடையும். பாலர் பேச்சை நேரில் கேட்ட காது இவ்வாறு உரைக்க உந்துகிறது. மெஸொரி - மெஸபி எத்தகைக் காட்சியளிக்கும்? பேரொலி! பெரு வெள்ளம்! பாலர் சொற்பெருக்குகள் கடலாயின; ஆவியாயின; மேகமாயின; மழையாயின; வறண்ட தென்னாடு பசுமையுற்றது. திலகர் அவ்வேளையில் ஐந்து நதி பாயும் அழகிய நாடளித்த வீரச் செல்வம் - தேசபக்த சிங்கம் - லாலா லஜபதிராய் நாடு கடத்தப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவிற்று; காட்டுத்தீப்போல் பரவிற்று. திலகர் பெருமான் கொள்கை நாட்டில் வேரூன்றியது. இளைஞர் உள்ளம் திலகர் அரியாசன மாயிற்று. 1907ஆம் ஆண்டின் இறுதியில் சூரத்தில் காங்கிர ஈண் டியது. அங்கே மிதவாதிகள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் காங்கிர கோட்டையைச் சுற்றி அகழியிட்டன. திலகர் பெருமானின் இளஞ்சேனைகள் அகழியை நீந்திக் கடந்து கோட்டையைத் தகர்த்துச் சூறையாடின. விவரம் இந்தியாவும் விடுதலையும் என் னும் நூலில் கூறியுள்ளேன். விளக்கம் விரும்புவோர் அந்நூலைப் பார்க்க. 1908ஆம் ஆண்டு பிறந்தது. அடக்குமுறையும் உடன் பிறந் தது. அடக்குமுறை, புயலிலுங் கடுமையாக வீசிற்று; நானாபக்க மும் வீசிற்று. புயல் திலகரையும் அவரைச் சேர்ந்த பலரையும் சிறைக்கூடத்துக்குத் தள்ளியது. மாணிக் தோலா வழக்கில் சிக் குண்டு விடுதலையடைந்த அரவிந்தரைப் புதுவை அழைத்துக் கொண்டது. அடக்கு முறை நாட்டில் எழுந்த கிளர்ச்சியை ஒடுக் கிற்று. இந்திய அரசியல் வானம் சில ஆண்டு இருண்டே கிடந்தது. பந்தேமாதரப் பத்திரிகையும், பாலர் பேச்சும், திலகர் சிறை யும், இன்ன பிறவும் எனக்கு அரசியல் பித்தை உண்டாக்கின; பென்ஸர் வேலையை விடச் செய்தன. விவரம் ஊழியம் என்ற தலைப்பில் பார்க்க. அன்னிபெஸண்ட் 1914ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் போர் மூண்டது. இந் தியாவில் சுய ஆட்சிப்போர் மூண்டது. இப்போரில் தலைமை வகித்து இதை நடத்தியவர் அன்னிபெஸண்ட் அம்மையார். அம்மையார் நியூ இந்தியா என்ற பத்திரிகை வாயிலாகவும், ஆங்காங்கே நேரே சென்றும் சுய ஆட்சிக் கிளர்ச்சி செய்வர். சிறையினின்றும் விடுதலையடைந்து வெளிவந்த திலகர் பெரு மானும், அன்னிபெஸண்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு அறப் போர் நடாத்தியதை நாடு வர வேற்றது. அரசியல் பித்து மீண்டும் என்னுள் எழுந்தது. ஜடி சதாசிவ ஐயர்க்கும் எனக்கும் உற்ற நட்பு தியோசாபிகல் சங்க அறிஞர் பலரை எனக்கு நண்பராக் கிற்று. சங்கத் தலைவர் பேச்சும் எழுத்தும் என் அறிவு விளக்கத் துக்குப் பெருந்துணை செய்ததை ஈண்டு விரிக்கின் அது பெருகும். அதனால் அம்மையாரிடம் எனக்குத் தாய்மை நேயம் பிறந்தது. இவ்வம்மையார் தொடங்கிய கிளர்ச்சியில் எனக்குப் பற்றுண் டாதல் இயற்கையன்றோ? சுப்பராய காமத் ஒருநாள் யான் வீட்டு வாயிலில் உலவிக்கொண்டிருந்தேன். அதுபோழ்து இளமைவளங் கொழித்த மதர்த்த ஓர் அழகிய வடிவம் என் முன்னே வந்து நின்றது. அவ்வடிவின் கருங் குஞ்சியும் புருவமும் மீசையும் புன்முறுவலும் பவள வாயும் முத்துப் பல்லும் மலர் முகமும் என் கட்புலனுக்கு விருந்தாயின. அவரைப் பார்த்து, என்ன செய்தி என்றேன். அவர் யான் தமிழ் தெரியாத மங்க ளூரான்; ஆங்கிலத்தில் பேசுவேன்; மன்னித்தல் வேண்டும் என் றார். தமிழ் தெரியாதாரிடத்தில் யான் ஆங்கிலத்தில் பேசுவது எனது வழக்கம் என்று, எனது எளிய ஆங்கிலத்தில் சொன்னேன். எங்கள் சம்பாஷணை ஆங்கிலத்தில் நடந்தது.அவ்விளைஞர் என் பெயர் சுப்பராய காமத்; நியூ இந்தியாவின் உதவி ஆசிரியன்மாருள் ஒருவன்; இப்பொழுது நல்லண்ண முதலி தெருவில் வதிகிறேன்; சமுதாயத் தொண்டாற்ற விருப்பங் கொண்டு உங்களைக் காண வந்தேன் என்றார். நல்லது; இவ்வூரில் கேசவராவ் நாயுடுவும், சண்முக முதலியாரும் சில தொண்டுசெய்து வருகின்றனர். அவரையும் பாருங்கள் என்றேன். அவ்விருவரையும் பார்க்க மங்களூர் காமத் என்னையும் அழைத்தார். அவருடன் யானும் சென்றேன். இருவரையுங் கண் டோம்; அவரிடம் பேசினோம்; அப்பேச்சின் பயனாக இராயப் பேட்டை சகோதர சங்கம் என்றொன்று காணப்பட்டது. அச்சங்க போஷகர் அன்னி பெஸண்ட் அம்மையார்; தலைவர் ஜடி சதாசிவ ஐயர்; அமைச்சர் சுப்பராய காமத். யான் ஒரு நிருவாகன். சகோதர சங்கத்தின் சார்பில் தோன்றிய பள்ளிகள் பல; அமைப்புகள் பல. அவைகளை இங்கு விரித்துக் கூறவேண்டுவ தில்லை. சுப்பராய காமத்தும் யானும் சகோதரரானோம். ஜடி கட்சி 1916ஆம் ஆண்டு கிறிம ஓய்வில் சென்னை ஆமில்டன் வாராவதிக்கருகே இராஜு கிராமணியார் தோட்டத்தில் யாழ்ப் பாணம் முதலியார் சபாரத்தினம் தலைமையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சார்பில் சைவர் மகாநாடு கூடியது. மகாநாடு மூன்றுநாள் நடைபெற்றது. மூன்றாம் நாள் பகல் ஒர் அறிக்கை வழங்கப்பட்டது. அதில் அம்மகாநாட்டுக் கொட்டகையிலேயே அன்று மாலை பிராமணரல்லாதார் முன்னேற்றம் என்ற பொருள் பற்றி, பி. தியாகராய செட்டியார் பேசுவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறே கூட்டம் சேர்ந்தது. தியாக ராய செட்டியார் பேசினார். அவர் பிராமணர் செல்வாக்கைப் பற்றியும் அதனால் பிராமணரல்லாதார் நசுக்குண்டு நாசமடை வதைப் பற்றியும், பிராமணரல்லாதார் முன்னேற்றத்தை நாடும் ஒரு கட்சியின் அவசியத்தைப் பற்றியும் பேசி காங்கிரஸை நம்ப வேண்டாம். சுய ஆட்சி சங்கத்தை நம்ப வேண்டாம். அவைகளால் பிராமணரல்லாதார் மயக்குறல் வேண்டாம் என்று வலியுறுத் தினர். அவர் கருத்தை மறுக்க என் மனம் எண்ணியது. மேடை யருகிலும் சென்றேன். அங்கே பொறுமை பூத்தது. பேசாம லிருந்துவிட்டேன். 1917ஆம் ஆண்டை யான் என்றும் மறவேன். அவ்வாண்டின் பிற்பகுதி என் வாழ்க்கையில் ஒரு பெரும் மாறுதலை நிகழ்த் தியது. பிராமணரல்லாதார் நலவுரிமைச் சங்கத்தின் சார்பாக மூன்று தினப்பதிப்புகள் ஆங்கிலம் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாயின. ஆங்கில ஜடிஸையும், தமிழ் திராவிடனையும் யான் படிப்பதுண்டு. அவைகள் அதிகார வர்க்கத்தை ஆதரித்து வகுப்பு வாதத்தைப் பெருக்கித் தென்னாட்டில் காங்கிரஸை வீழ்த்துவதில் முனைந்து நிற்பவை என்பது நன்கு விளங்கியது. திராவிடன் சமயத்தையும், கோயிலையும் பழிக்குந் துறை யிலும் இறங்கினான். அதுபற்றிச் சென்னையில் பலவிடங்களில் சமயச் சார்பில் மறுப்புக் கூட்டங்கள் கூடின. அவைகளில் யானுங் கலந்து, ஜடி கட்சியைத் தாக்கினேன். ஜடி கட்சியை வீழ்த்தும் முயற்சி எனக்கு ஒரு தொண்டாகவும் தோன்றியது. ஒரு நாள் சென்னை டவுன் ஹாலில் ஜடி கட்சிச் சார்பில் ஒரு பொதுக்கூட்டங் கூடியது. அதில் டாக்டர் நாயர் பேசினர். அவர்க்குச் சில கேள்விகள் விடுத்தேன். கேள்வி பதில் களின் கருத்தை நினைவிலுள்ளபடி இங்கே திரட்டித் தருகிறேன். கேள்வி :- நீங்கள் ஏன் காங்கிரஸைவிடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள்? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்யம் பெறுமா? அப்படி யாண்டாயினும் நிகழ்ந்திருக்கிறதா? சரித்திரச் சான்று உண்டா? பதில் :- யான் காங்கிரஸில் தொண்டு செய்தவனே. அது பார்ப்பனர் உடைமையாகியதை யான் உணர்ந்தேன். காங்கிரஸால் தென்னாட்டுப் பெருமக்களுக்குத் தீமை விளைதல் கண்டு, அதை விடுத்து, நண்பர் தியாகராயருடன் கலந்து, ஜடி கட்சியை அமைக்கலானேன். வகுப்பு வாதத்தால் சுயராஜ்யம் வரும் என்று எவருங் கூறார். வகுப்பு வேற்றுமை உணர்வு தடித்து நிற்கும் போது சுயராஜ்யம் என்பது வெறுங் கனவேயாகும். வகுப்பு வேற்றுமையுணர்வின் தடிப்பை வகுப்புவாதத்தால் போக்கிய பின்னரே சுயராஜ்யத் தொண்டில் இறங்கவேண்டுமென்பது எனது கருத்து. காலத்துக்கேற்ற தொண்டு செய்வது நல்லது. வகுப்பு வேற்றுமையில்லாத நாடுகளைப் பற்றிய சரித்திரங்களை இங்கே ஏன் வலித்தல் வேண்டும்? இந்தியா ஒரு விபரீத நாடு; பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் நாடு. இப்பதிலைக் கேட்டதும் யான் வகுப்புவாதக் கட்சி வகுப்பு களின் நினைவையன்றோ உண்டுபண்ணும்? அதனால் வகுப்பு வேற்றுமை வளருமா? தேயுமா? உங்கள் கட்சி பிராமணர்க்குள் ஒற்றுமையையும் பிராமணரல்லாதார்க்குள் வேற்றுமையையும் வளர்ப்பதாகும் என்று மொழிந்து கொண்டிருந்தபோது, நானா பக்கமும் கூக்குரல் கிளம்பியது. கூட்டங் கலைந்தது. டாக்டர் நாயர் நாளை ஜடி ஸில் விளக்கமான பதில் வரும் என்று சொல்லிச் சென்றார். அடுத்தநாள் திராவிடன் என்னை வசை யால் வாழ்த்தினன். ஜடிஸில் டாக்டர் நாயர் கூட்டத்தில் கூறிய பதிலே விரிந்த முறையில் வந்தது. ஜடி கூட்டங்கட்கு நேரே போய்க் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டேன்; துண்டு அறிக்கைகளை எழுதி விடுக்கலானேன். ஜடி கட்சி தொடக்கத்தில் சென்னையில் பல இடங் களில் கூட்டங்கள் கூட்டியது. அவைகளுள் சிறந்தது பர்டாங்க் (எழும்பூர் ஏரி) கூட்டம். அக்கூட்டம் சிறப்பாக ஆதிதிராவிடர்க் கென்று ஈட்டப்பட்டது. தலைமை பூண்டவர் டாக்டர் நாயர். யான் ஒரு துண்டு அறிக்கை வரைந்து விடுத்தேன். அதனால் கலகம் விளைந்தது. ஜடிஸார்க்கும் சுய ஆட்சியார்க்கும் கை கலந்து சண்டை மூண்டது. அங்கே எழுந்த மூர்க்க சக்திக்கு டாக்டர் நாயர் தமது பேச்சில் வரவேற்புக் கூறினார். அது பர்டாங்க் கூட்டத்துக்கு இன்பமூட்டியது; அவ்வின்பம் சென்னையை விழிக்கச் செய்தது. விழிப்பு, சுய ஆட்சி இயக்கத் துக்கு ஆக்கந் தேடியது. என் துண்டு வெளியீடு நல்ல வேலையே செ.ய்தது. லார்ட் பென்ட்லண்ட் அரசாங்கம் விழித்துப் பார்த்தது, ஜடிகட்சியால் சுய ஆட்சிக் கிளர்ச்சி ஒடுங்கவில்லை என்று உணர்ந்தது; தலைவர்மீது அடக்குமுறை அம்பை எய்யத் துணிந்தது. அன்னிபெஸண்ட் அம்மையாரையும், அவர்தம் இரண்டு கைகளாகிய அருண்டேலையும் வாடியாவையும் (16-6-1917) காவலில் வைத்தது. அதனால் சுய ஆட்சிக் கிளர்ச்சி வளர்ச்சியே அடைந்தது. என்னைப் பொறுத்த அளவில் கல்லூரியை விடுத்து நாட்டுச் சேவையில் ஈடுபட உறுதி கொண் டேன்; உறுதி அப்பொழுது நிறைவேற்றம் பெறவில்லை. விவரம் ஊழியம் என்ற தலைப்பில் உள்ளது. அதைப்பார்க்க. சென்னை மாகாணச் சங்கம் பெஸண்ட் அம்மையார் காப்பிலிருந்தபோது, ஜடி கட்சியின் ஆரவாரம் பெருகியது. அதை அடக்கச் சென்னையில் பல கூட்டங்கள் கூடின. அவைகளுள் ஒன்று கோகலே மண்ட பத்தில் (1917-செப்டம்பர்) கூடியது. அக்கூட்டத்தில் திவான் பகதூர் கேசவப் பிள்ளை தலைமை வகித்தார். யான், திராவிட ரும் காங்கிரஸும் என்ற பொருள்பற்றிப் பேசினேன். வெளிப்படையாக மேடையில் முதல் முதல் யான் பேசிய அரசியல் கன்னிப்பேச்சு அதுவே. அப்பேச்சில் திராவிடர் வர லாற்றையும், ஆரியர் வரலாற்றையும், அவ்வரலாறுகளிலுள்ள முரண்பாடுகளையும் சுருங்கிய முறையில் எடுத்துக்காட்டினேன்; இரண்டினமுங் கலப்புற்று நீண்ட நாளாகியதையும், இரண்டு நாகரிகமும் கங்கையும் யமுனையும்போல ஒன்றுபட்டுவிட்டமையை யும், இந்நாளில் இன்னார் திராவிடர் இன்னார் ஆரியர் என்று பிரித்தல் இயலாமையையும் விளக்கினேன்; எல்லா வகுப்பாரும் ஒருமைப்பட்டு அடிமைத் தளையை நொறுக்கி உரிமை இன் பத்தை நுகர முயற்சி செய்யும் இக்காலத்தில் வகுப்புவாதத்தைக் கிளப்புவது நாட்டைப் பாழ்படுத்துவதென்றும், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர் என்னும் உணர்வை நாட்டிடை உண்டாக்கிச் சுயராஜ்யப் போர் தொடுத்தற்பொருட்டுக் காங்கிர மகாசபை காணப்பட்டதென்றும், காங்கிர சாதி மதங்கடந்த நாட்டமைப்பென்றும், அதைக் கொல்ல முயல்வது தாயைக் கொல்ல முயல்வதாகுமென்றும் விரித்துக் கூறினேன்; ஜடி கட்சி தென்னாட்டுப் பிராமணரல்லாதாரெல் லார்க்கும் உரிய தாகாதென்றும், அவருள் பெரும்பான்மையோர் காங்கிர மனப்பான்மையுடையவரென்றும் தெளிவு செய் தேன்; காங்கிர மனப்பான்மையுடைய பிராமணரல்லாதார் ஆங்காங்கே கூட்டங் கூட்டிஜடி கட்சி தமக்குரியதன் றென்று உலகுக்குப் புலப்படுத்த விரைதல் வேண்டுமென்று வலியுறுத்தினேன். அப்பேச்சு பத்திரிகைகளில் வெளியாயிற்று. என் பேச்சு, காங்கிர பிராமணரல்லாதாரை ஊக்கமுறச் செய்தது. தமக்கென ஒரு தனிச் சங்கங் காணத் தூண்டியது. அவ்வேளையில், நியூ இந்தியா வில் வேலை பார்த்து வந்த சபாபதிப் பிள்ளை, ஏ. எ ராமுலு முதலியோர் தனிச் சங்கத் தின் அவசியத்தை வலியுறுத்திப் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் எழுதினர். அவைகட்கு ஆதரவு சீகாழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை ஸ்ரீநிவாச பிள்ளை முதலியோரிடமிருந்து கிடைத்தது. தனிச் சங்கங் காணும் முயற்சி தி. வி. கோபாலசாமி முதலியாரால் துவங்கப்பட்டது. அம்முயற்சியின் பயனாகச் சென்னை கோகலே மண்டபத்தில் ஒரு கூட்டம் கூடியது. ஓ. கந்தசாமி செட்டியார் தலைமையில் ஜடி சிறுபடை யொன்று திரண்டு கோகலே மண்டபத்தில் பேராரவாரஞ் செய்தது. அதனால் கூட்டம் நடைபெறாமற் போயிற்று. அவ் வாரவாரத்திடைச் செருப்புகள் பறந்த காட்சியில் என் கருத்துச் சென்றது. அக்காட்சி அங்கேயே முதல் முதல் என் விழிக்கு விருந்தாயிற்று. அடுத்த வாரம் கட்டுப்பாட்டுடன் அதே மண்டபத்தில் அருணகிரி செட்டியார் தலைமையில் ஒரு கூட்டம் ஈட்டப் பட்டது. அதையுங் குலைக்க ஜடி சிறுபடை குறும்பு செய்தது. ஆனால் பயன் விளையவில்லை. கூட்டம் இனிது நடைபெற்றது. சங்கத்துக்குச் சென்னை மாகாணச் சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது. கொள்கை காங்கிர நோக்கத்துக்கு முரண்படாத வகையில் தென்னாட்டுப் பிராமணரல்லாதவர் நலனை நாடுவதென்று உறுதி செய்யப்பட்டது. திவான்பகதூர் - கேவசப்பிள்ளை தலைவராகவும், லாட் கோவிந்த தா, சல்லா குருசாமி செட்டியார், ஈ.வே. இராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமி பிள்ளை, சீகாழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை ஸ்ரீநிவாச பிள்ளை, ஜார்ஜ் ஜோஸப் முதலியோர் உதவித் தலைவராகவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். அமைச்ச ராகத் தி. வி. கோபாலசாமி முதலியாரும், குருசாமி நாயுடுவும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் சக்கரைச் செட்டியாரும், யானும் தெரிந்தெடுக்கப்பட்டோம். காரியங்கள் பெரிதும் தி. வி. கோபால சாமி முதலியாரால் கவனிக்கப்பட்டுவந்தன. சென்னை மாகாணச் சங்கக் கொள்கை தென்னாடு முழுவதும் பரவ டாக்டர் வரதராஜலுவால் பிரசாரஞ் செய்யப்பட்டது. சென்னை மாகாணச் சங்கத் தோற்றம் ஜடி கட்சிக்கு இடியாயிற்று. அக்கட்சி கொதித்தது; எரிந்தது. அக்கட்சிப் பத்திரிகைகள் சென்னை மாகாணச் சங்கத்தைக் கண்டபடி தூற்றத் தொடங்கின. ஜடி கட்சியார், சென்னை மாகாணச் சங்கம் பிராமணர் ஏவுதலால் அவர்தம் அடிமைகளால் காணப் பட்டதென்று முழங்கினர். அதை மறுக்கத் தக்க தினப்பதிப்பு அப்பொழுதில்லை. அது தேசபக்தன் உருக்கொள்ளாத காலம். சென்னை மாகாணச் சங்கம் தோன்றிய சில நாட்களுக்குள் அன்னிபெஸண்ட் அம்மையாரும் மற்றவரும் விடுதலையடைந் தனர். அதுபோழ்து இந்தியா மந்திரியாயிருந்த மாண்டேகு இந்தியா போந்தார்; டிஸம்பர் நடுவில் சென்னை நோக்கினார். சான்றுகூறுங் குழுவில் சென்னை மாகாணச் சங்கம் சேர்க்கப் படவில்லை. அதைப்பற்றிப் பெருங் கிளர்ச்சி யெழுந்தது. கடற்கரையிலும் கோகலே மண்டபத்திலும் பெருங் கூட்டங்கள் கூடின. அக்கூட்டங்களில் பேசியவருள் யானும் ஒருவன். தேச பக்தன் வாயிலாக யான் செய்த கிளர்ச்சிபெரிது. சென்னை மாகாணச் சங்கம் சான்றுக் குழுவில் சேர்க்கப்பட்டது. சென்னை மாகாணச் சங்கச் சார்பில் சென்னையில் லாட் கோவிந்ததா நிலையத்தில் சீகாழி சிதம்பரநாத முதலியார் தலைமையில் (22-12-1917) ஒரு தனி மகாநாடு சேர்ந்தது. அம்மகா நாட்டிலேயே முதல் முதல் டாக்டர் வரதராஜலு நாயுடுவை யான் கண்டேன். சென்னை மாகாணச் சங்கச் சார்பில் தஞ்சை - திருச்சி மகாநாடு (20,21-4-1918) தஞ்சையில் கூடியது. தலைமை பூண்டவர் இந்தியன் பேற்றிரியட் ஆசிரியர் திவான்பகதூர் கருணாகர மேனன். அம்மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறை வேறின. அவைகளுள் ஒன்று தமிழைப் பற்றியது. அதை யான் வழிமொழிந்து பேசுகையில், இனிப் பொதுக்கூட்டங்களில் தமிழர்கள் தாய் மொழியிலேயே பேசுதல் வேண்டுமென்றும், அயல் மொழியில் பேசுதல் கூடாதென்றும், எவரேனும் அயல் மொழியில் பேசப் புகுந்தால் அவரைத் திருத்தும் பொறுப்பைப் பொதுமக்கள் ஏற்றல் வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அதுபற்றித் தேசபக்தன் வாயலாகவும் கிளர்ச்சி செய்தேன். என் பேச்சும் எழுத்தும் தக்க பயனை விளைத்தன. தமிழில் பேச லாகாது என்று ஆங்கிலத்தில் நாவண்மை காட்டி வந்த பெரும் பெருந் தலைவர்களெல்லாரும் தமிழில் பேசப் புகுந்தனர். பொதுமக்கள் கிளர்ச்சியின் முன்னர் எந்தத் தலைவர் என்ன செய்தல் கூடும்? என் வாழ்வில் நிகழ்ந்த முதல் புரட்சி இஃது ஆகும். தமிழ்நாட்டுக் காங்கிரகாரியக்கூட்டமும் தன் கடன் களையெல்லாம் தமிழிலேயே ஆற்றலாயிற்று. சென்னை மாகாணச் சங்க முதல் ஆண்டு மகாநாடு சென்னை யில் வேங்கடபதிராஜு தலைமையில் கூடியது. அதில் குறிக்கத் தக்க சிறப்பொன்றுமில்லை. ஈரோட்டில் சென்னை மாகாணச் சங்க இரண்டாம் ஆண்டு மகாநாடு (11,12 -10-1919) குழுமியது. அதன் தலைவர் லாட் கோவிந்த தா; வரவேற்புத் தலைவர் ஈ. வே. இராமசாமி நாயக்கர். நாயக்கர் நட்பை அம்மகாநாட்டிலேயே யான் பெற்றேன். அம்மகாநாட்டில் இராஜப்பிரதிநிதி லார்ட் செம்பர்ட் திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் என்னால் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானம் அநாவசியம் என்று முதிய தலைவர் பலர் கருதினர். சிலர், கலியாண சுந்தர முதலியாரின் ஆவேசப் பேச்சுக்கு இரையாதல் கூடாது என்று சொல்லித் தீர்மானத்தை எதிர்த்தும் பார்த்தனர். தீர்மானம் நிறைவேறியது. மாலையில் அரசமரத்தடியில் கூடிய பொதுக்கூட்டத்தில் தீர்மானத்தின் அவசியத்தைப் பற்றி விளக்கி லார்ட் செம்பபர்ட் ஆட்சியில் நிகழ்ந்த அடாத செயல்களை நிரலே எடுத்துக்காட்டி னேன். அன்றைய பேச்சு எனக்குத் தொல்லை விளைக்கும் முறை யில் அமைந்ததென்று வி. ஓ. சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டவர் சொன்னார். ஈரோட்டில் தேசபக்த சமாஜம் என்னால் நிறுவப் பட்டது. மூன்றாம் ஆண்டு மகாநாடு திருப்பூரில் கூடுமென்று அறிவிக்கப்பட்டது. அதற்குள் சங்கமே ஒடுங்கி ஒழிந்தது. கார ணம் பலப்பல சொல்லப்பட்டன. சிலர் சூழ்ச்சியால் அச்சங்கம் கலைவுற்றதென்று பின்னே கேள்வியுற்றேன். தேசபக்தன் ஜடி கட்சி சமூக சீர்திருத்தத் துறையில் இறங்கி உழைத்திருந்தால் நாட்டுக்கு நலனே விளைந்திருக்கும். அக்கட்சி அரசியலில் தலைப்பட்டுச் சுய ஆட்சிக்கு இடர் விளைத்தது. வகுப்புவாத நஞ்சை உமிழ்ந்தது. வகுப்புவாதக் கட்சியால் தீமையே பெருகும் என்று யான் உண்மையாக நம்பினேன்; தீமையை மறிக்க வேண்டுவது எனது கடன் என்று உணர்ந்தேன். அதற்குப் பத்திரிகை அவசியம் தேவை என்ற எண்ணம் என் உள்ளத்தை உறுத்திக் கொண்டே வந்தது. பத்திரிகையைப் பற்றிச் சுப்பராய காமத்தும் யானும் பன்முறை சிந்திப்போம். நீர் வேலையை விடுத்து ஆசிரியப்பதவி ஏற்க உடன்படுவீராயின், ஒரு தினப் பதிப்பை நடாத்த முயற்சி செய்யலாம் என்று காமத் நாடோறுஞ் சொல்லிய வண்ணமிருப்பர்; வேறு பல சகோதர சங்க அங்கத்தவரும் சொல்வர்; பார்க்கலாம் - பார்க்கலாம் என்று யான் பகர்ந்து வந்தேன். ஒருநாள் நண்பர் பலரும் ஒருங்கு சேர்ந்து உறுதிமொழி கேட்டனர்; யான் உறுதிமொழி தந்தேன்; வேலையைவிட முயன்றேன். எனது அன்புக்குரிய வெலி கல்லூரித் தலைவர் உடனே என்னை விடுவிக்க விரும்பினா ரில்லை. அவர் விரும்பியவாறு நவம்பர் இறுதிவரை பொறுத் திருந்தேன். இடையில் பத்திரிகை வெளியீட்டுக்குரிய முயற்சிகள் முறையாகச் செய்யப்பட்டன. சுப்பராய காமத் ஊக்கமுடையவர்; கர்ம வீரர், அவர் வாளாகிடப்பரோ? அவரும் குமாரசாமி செட்டியாருஞ் சேர்ந்து ஓர் அச்சுக்கூடத்தை வாங்கினர். அதற்குப் பிரிட்டிஷ் இந்தியா பிர என்ற பெயர் சூட்டினோம். அதைப் பதிவு செய்யும் உரிமை எனக்கு நல்கப்பட்டது. முறைப்படி யான் பிரஸிடென்ஸி மாஜிடிரேட்டுக்கு விண்ணப்பஞ் செய்தேன். அவர் ஆயிரம் ரூபா ஈடுகாணம் கேட்டனர். அக்காணம் செலுத்தப்பட்டது. அநுபவத்திற்சிறந்த ஒருவரை அச்சுக் கூடத்துக்கு மேற்பார்வை யாளராக அமர்த்த முயன்றோம். தக்கவர் கிடைக்கவில்லை. அச்சுக்கூட அநுபவத்திற் பண்பட்ட என் தமையனாரையே மேற் பார்வையாளராக இருக்கக் கேட்டுக்கொண்டோம். அவரும் உடன்பட்டனர். தொடர்ந்து பத்திரிகைக்குரிய முயற்சி துவங்கப்பட்டது. பல பெயர்கள் எங்கள் நினைவிலுற்றன. இறுதியில் சில பெயர் களைச் சீட்டுகளில் தீட்டிக் குலுக்கித் தரையில் இரைத்தோம். ஏதாவதொன்றை எடுக்குமாறு ஒரு சிறுவனைக் கேட்டோம். அவன் கையில் கிடைத்த பெயர் தேசபக்தன் என்பது. தேச பக்தனைப் பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடத்தில் பதித்து வெளி யிடும் உரிமையை மாஜிடிரேட் முன்னிலையில் யான் சென்று பதிவு செய்து கொண்டேன். தேசபக்தன் ஆசிரியர் கல்லூரித் தலைவர் (5-12-1917) என்னை விடுவித்தார். யான் (7-12-1917) தேசபக்தன் ஆசிரியப் பதவி ஏற்றேன்; இரண்டரை ஆண்டு அப்பதவியிலிருந்து தொண்டாற்றினேன். இரண்டரை ஆண்டு நிகழ்ச்சிகளிற் பல நினைவிலுறுகின்றன. அவற்றை யெல்லாம் ஈண்டு விரித்தால் நூல் பெருகும். சிலவற்றைச் சுருங்கச் சொல்லி மேற் செல்கிறேன். நடையும் எழுச்சியும் யான் கல்லூரி விடுத்த செய்தியைக் கேட்டவருட் சிலரும் நேரே போந்தும் கடித வாயிலாகவும் எனது செயலை மறுத்து மீண்டுங் கல்லூரிக்கே செல்லுமாறு அறிவுறுத்தினர். அவருள் குறிக்கத்தக்கவர் இருவர். ஒருவர் ச. சச்சிதானந்தம் பிள்ளை; மற்றொருவர் பெ. இரத்தினவேல் முதலியார்.சச்சிதானந்தம் பிள்ளையின் கடிதத்தைப் படிக்கப் படிக்க ஊக்கங் குன்றியது; சோர்வு பெருகிற்று. யான் கவலையுடன் சகோதர சங்கத்தின் திண்ணையில் அமர்ந்து என்னென்னவோ நினைந்தேன். அவ் வேளையில் வந்தது நியூ இந்தியா, அதைப் புரட்டிப் பார்த்தேன். பெரிய கொட்டை எழுத்தில், தேசபக்தன் (7-12-1917) வெளி வருவன்; ஆசிரியர் திரு. வி கலியாணசுந்தர முதலியார் எனற விளம்பரம் என் கண்ணிற் பட்டது. யான் தேச பக்தன் ஆசிரிய னாதலைப் பற்றிய சிறப்புரை கொண்ட ஆசிரியக் குறிப்பொன்றை யும் பார்த்தேன். இரண்டும் எனக்குற்ற சோர்வைத் தூக்கி எறிந் தன. என்னுள் அளவில்லாத எழுச்சி பொங்கியது. வீழ்ந்த மனம் எழுந்தது. என்னே மனத்தின் இயல்! உருத்திரனும் பாசுபதமும் யான் உருத்திரனானேன்; என் எழுதுகோல் பாசுபதமாயிற்று. எனக்குத் துணைபுரிந்த கணத்தவர்கள் எப்படியானார்கள்? அவர்கள் வேலாயுதர்களாகவும், கோதண்ட பாணிகளாகவும், காண்டீபர்களாகவும் ஆனார்கள். தேசபக்தன்ஆசிரியக் கூடம் இதுபோழ்து புலனாகிறது. உதவி யாசிரியரெல்லாம் இளைஞர். அவர் ஊதியத்துக்குக்கென்று உழைக்க வந்தவரல்லர்; தேசபக்தி மேலீட்டான் சேவை செய்ய வந்தவர். அவர்தம் முகங்கள் என் முன்னே மலர்ந்து நிற்கின்றன. என் அறையின் எதிரிலே அவர் வரிசையாக அமர்ந்து தொண்டு செய்யுங் காட்சியை என் கண்கள் காண்கின்றன. அத்திருக்கூட்டத்தை - தொண்டர் குழாத்தை - இளைய உருவங்களை - என் நெஞ்சம் மறக்குமோ? உதவி ஆசிரியன்மார் தொடக்கத்தில் தேசபக்தனில் சேர்ந்தவர்; வெ. சாமி நாத சர்மா, சேஷாத்திரி சர்மா, வேங்கடாச்சாரியார், பழனிவேல், சம்பத். பின்னிருவரும் நீண்டநாள் தேசபக்தனில் சேவை செய்தாரில்லை. அவர் மீண்டும் பள்ளிக்குச் சென்றனர். குலாமே ஹமீத், பரலி. நெல்லையப்பர், இராஜ கோபால், நடேசன் ஆகியவர் தேசபக்தனில் பின்னே சேர்ந்தவர். முன்னவருள்ளும் பின்னவருள்ளும் இரண்டொருவர் தவிர மற்றவரெல்லாரும் தனித் தனிப் பத்திரிகை நடாத்துவோராயினர். பத்திரிகாசிரியத் தொழிலே அவரது வாழ்க்கையாகியது. அவர் வாழ்க. காரியக்கூடம் தேசபக்தன் காரியக்கூடமும் இளைஞராலே அணி செய்யப் பட்டது. மானேஜராக அமைந்தவர் பி. என். திருநாவுக்கரசு முதலியார். அவரும் ஓர் இளைஞரே. கணக்கு வழக்கில் யான் தலை யிடேன். அதற்கும் எனக்கும் சேய்மை. பொறுப்பு உம்முடையது. நம்பிக்கை என்னுடையது. ஏதேனுஞ் சிக்கலோ வழுக்கலோ நிகழ்ந்தால் உடனே அதைத் தெரிவித்திடுக என்று தொடக்கத்தி லேயே யான் திருநாவுக்கரசு முதலியாரிடம் சொல்லிவிட்டேன். காரியம் அவரால் நன்கு கவனிக்கப்பட்டு வந்தது. லிமிடெட் இடைக்காலத்தில் தேசபக்தனுக்கு லிமிடெட் போர்வை கிடைத்தது. சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர் வரதராஜலு, ஈ. வே. இராமசாமி நாயக்கர், ஆதிநாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோஸப், லாட் கோவிந்த தா முதலியோர் டைரெக்டராயினர். அமைச்சர் சுப்பராய காமத். லிமிடெட் கம்பெனி பெரிதும் இவர் வழியே உழன்றது. லிமிடெட் கம்பெனி அமைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. ஆனா லும் டைரெக்டர்கள் தேசபக்தர்களாக அமைந்தமை எனக்கு ஆறுதலளித்தது. பிரிட்டிஷ் இந்தியா பிரஸை லிமிடெட் ஆக்கச் சுப்பராய காமத்தும் குமாரசாமி செட்டியாரும் விரும்பினாரில்லை. நடை யான் தமிழ்ப் போதகாசிரியனா யிருந்தவன்; இப்பொழுது தமிழ்ப் பத்திரிகாசிரியனானேன். தேசபக்த னுக்கு கென்று ஒரு தனிநடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துக்கள் விளங்கும் முறையைப் பற்றினேன். அந் நடையை நாடோறும் எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்குரிய இயற்கையாகியது. பழைய தொடர் மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின. சமயம் நேர்ந் துழிச் சில வேளைகளில் அவை தலைகாட்டும். இலக்கணம் தமிழ்ப் போதகாசிரியனிடம் கொஞ்சிக் குலாவும். தினப்பதிப்புப் பத்திரிகாசிரியனிடம் அது கொஞ்சிக் குலாவுதற்கு இடம்பெறுமோ? இவன் விமானத்தில் பறப்பவ னல்லவோ? இலக்கண நூல் என்னில் ஒன்றி அத்துவிதமாயிற்று. யான் இலக்கணமானேன். என் நடை எங்கெங்கேயோ ஓடும்; திரி யும்; அலையும்; பொருளுக்கேற்ற கோலந்தாங்கும். இடத்துக் கேற்ற நடம் புரியும். புரட்சி அந்நாளில் நாட்டுமொழிப் பத்திரிகைகளில் அயல் மொழி நாற்றம் வீசும். அரசியல் குறியீடுகள் அந்நியத்தில் அப் படியே பொறிக்கப்படும். தேசபக்தன் பத்திரிகை யுலகில் புரட்சி செய்தான். எப்படிச் செய்தான்? படிப்படியே செய்தான். புரட்சி நிகழ்ந்ததென்று பத்திரிகை உலகுக்கே தெரியாது. புரட்சிகளைத் தேசபக்தனில் காணலாம். தேசபக்தன், தமிழாக்கிய அரசியல் சொற்களும், சொற்றொடர்களும், குறியீடுகளும் இப்பொழுது பத்திரிகைகளிலும், மேடைகளிலும், பிறவிடங்களிலும் ஏற்ற முற்று அரசு புரிதல் வெள்ளிடைமலை. தமிழ்நாட்டில் பல குறைபாடுகள் உண்டு. அவைகளில் ஒன்று பெருந் தலைவர்கள் தமிழ் தெரியாதென்று ஆங்கிலத் தில் நாவன்மை காட்டி வந்தமை. அதுபற்றித் தேசபக்தன் எழுப்பிய கிளர்ச்சி தலைவர்களைத் தமிழ் பேசச் செய்தது. இந்நாளில் தென்னாட்டு மகாநாடுகளின் நிகழ்ச்சி முறைகளும், காரியக் கூட்டங்களின் நிகழ்ச்சி முறைகளும் தாய்மொழியில் நடைபெற்று வருவது கண்கூடு. மேடைகளிற் பேசுதற் பொருட்டுத் தலைவர்கள் தேசபக்தனைப் படித்ததும், தமிழாய்ந்த ஐரோப் பியப் பாதிரிமார் பலர் தேசபக்தன் சந்தா தாரராயதும் ஈண்டுக் குறிக்கத்தக்கன. தேசபக்தன் தமிழரை அந்நிய மோகத்தினின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகையாகாது. சட்ட சபையில் தமிழ் அக்காலத்தில் சட்ட சபையில் ஆங்கிலமே பேசப்படும். தமிழர்க்கும் தமிழ் நினைப்பு வருதல் அருமை. அப்பஞ்ச நாளில் சேலம் பி. வி. நரசிம்ம ஐயர் சட்ட சபையில் ஒரு முறை தமிழில் பேசினர். அதுபற்றி எப்பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை. தேசபக்தன் மட்டும் ஒரு குறிப்பு பொறித்தான். அது கண்ட நரசிம்ம ஐயர் தேசபக்த னுக்கு வாழ்த்துக் கூறினர். வாதப் போர் தேசபக்தன் வகுப்பு வாதக் கொள்கையைத் தேய்த்தல் வேண்டுமென்ற நோக்குடன் தோன்றினவன்; திராவிடன் அவ் வாதத்தை வளர்த்தல் வேண்டுமென்ற நோக்குடன் தோன்றின வன். இரண்டுக்கும் வாதப் போர் நிகழ்தல் இயல்பன்றோ? பெரும்போர் நிகழும். வகுப்பு வாதத்தால் விளையுந் தீமைகளைத் தேசபக்தன் எடுத்துக் காட்டுவன்; நலங்களைத் திராவிடன் எடுத்துக் காட்டுவன். வகுப்பு வாதப் புன்மை நாட்டுக்கு நன்கு விளங்கியது. தேசபக்தன் தோன்றியிரா விட்டால் வகுப்பு வாதம் கிளைத்து ஓங்கியிருக்கும். வகுப்பு வாதக் கட்சியின் நச்சுப் பல் தேசபக்த னால் பிடுங்கப்பட்டது. அக்கட்சியின் வேகம் ஒடுங்கியது. அது வறுத்த நெல்லாயிற்று; பல்லிழந்த பாம்பாயிற்று. சில வாரத்தில் மாண்டேகு முன்னிலையில் சான்று கூறுதற்கென்று ஒழுங்கு செய்யப்பெற்ற பட்டியில் சென்னை மாகாணச் சங்கத் தின் பெயர் காணப்படவில்லை. அச்சங்கம் பிராமணரல்லாதார் பெயரால் பிராமணரால் நடத்தப்படுவதென்று சென்னை அரசாங்கங் கருதி அதை விலக்கியது என்று சென்னையில் பேசப்பட்டது. ஜடி கட்சியின் சூழ்ச்சி என்றுஞ் சொல்லப் பட்டது. தேசபக்தன் கிளர்ச்சியில் தலைப்பட்டான். அக் கிளர்ச்சி தென்னாட்டைத் தட்டி எழுப்பியது. நூற்றுக் கணக் கான கூட்டங்கள் கூடின; சென்னை மாகாணச் சங்கமும் சான்றுக் குழுவில் சேர்க்கப்பட வேண்டுமென்று தீர்மானங்கள் செய்தன. சென்னை மாகாணச்சங்கம் சான்றுக் குழுவில் (17-12-1917) இடம் பெற்றது. தேசபக்தன் தோன்றிய சில நாட்களிலேயே பெருஞ் செல்வாக்குப் பெற்றனன் என்பது பென்ட்லண்ட் அரசாங்கத்துக்குப் புலனாயிற்று. அதன் நோக்குத் தேசபக்தன் மீது விழுந்திருக்குமென்று சொல்லவேண்டுவதில்லை. திரிபுப் போர் மெடன் அறிக்கையையொட்டித் தென்னிந்திய நல வுரிமைச் சங்கமும், சென்னை மாகாணச் சங்கமும் ஒன்றுபட்டு லாட் கோவிந்ததா தலைமையில் (3-4-1920)கூடிய போது யானும் பேசினேன். அப்பேச்சு, சுதேசிமித்திரனில் திரிபாக வெளிவந்தது. அது காரணமாக, சுதேசமித்திரனுக்கும் தேச பக்தனுக்கும் சில நாள் தொடர்ந்து போர் மூண்டது. அப்போர் தென்னாட்டையே கலக்கியது. இரண்டு பத்திரிகைகளும் ஒரே கொள்கையுடன் தொண்டு செய்வன. ஆனால் வியாபாரப் போட்டி இடையிடைத் தலைகாட்டித் தொல்லை விளைக்கும். தேசபக்தன் வாணிபப் போட்டியில் தலையிடுபவன் அல்லன் என்பதை வெளிப்படையாக மித்திரனுக்கு உணர்த்த, தேச பக்தன் வாணிப நோக்குடன் நடத்தப்படும் பத்திரிகை அன்று என்றும் , அப்பத்திரிகை கிளர்ச்சியின் பொருட்டுத் தோன்றியது என்றும், அஃது என்றைக்காவது அதிகாரவர்க்கத்துக்கு இரை யாகும் நிலை நேரலாம் என்றும், அப்பொழுது அதன் செல் வாக்கை மித்திரனே அடைவான் என்றும் தலையங்கத்தில் விளக்கப்பட்டன. அன்றிரவு சுதேசமித்திரன் ஆசிரியர் அரங்க சாமி ஐயங்காரும் யானும் ஹிந்து ஆசிரியர் கதூரிரங்க ஐயங்கார் வீட்டில் சந்திக்கலானோம். மித்திரன் ஆசிரியர் இன்றைய தேசபக்தன் தலையங்கம் என் நெஞ்சைக் குழைத்து விட்டது என்று சொன்னார். அச்சொல் போரை நிறுத்தியது. அதிகார உலகம் அதிகார உலகின்மீதும் தேசபக்தன் கருத்துச் செலுத்தி வந்தான். தேசபக்தன் அதிகாரிகளின் நற்செயல்களைப் போற்ற விரைவன்; மற்றச் செயல்களை மறுக்க முனைவன்; அஞ்சா நெஞ்சுடன் முனைவன். அதனால் அதிகாரிகளின் தவறுதல்கள் தேசபக்தனில் வெளிவரலாயின. அக்கடிதங்கள் பக்தனில் நிரம்பிவரும். யாண்டாயினும் தவறுதல் நடந்தால் தேசபக்த னுக்கு எழுதுவோம் என்று சொல்வது பொதுவர் வாக்காயிற்று. அத்துறையில் தேசபக்தன் நிகழ்த்திய கிளர்ச்சி அதிகார உலகுக்கு இடியாயிற்று. தேசபக்தனில் என்ன வந்திருக்கிறது; என்ன வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ள அதிகாரிகள் அலைவார்கள். வீரர் வழிபாடு தேசபக்தன் தேசபக்தியைப் பலவாறு வளர்த்து வந்தான். அவைகளுள் ஒன்று தலைவர்களிடத்துப் பக்தியை வளர்த்தமை. தலைவர்களிடத்துப் பக்தியை வளர்ப்பது தேசத்தினிடத்துப் பக்தியை வளர்ப்பதாகும். தலைமை யேற்று ஒரு தேசத்தை நடத்துவோர், அந்நிலையில் அவர் தேசமே யாவர்; தேசம் அவரேயாகும். தலைமையாவது தேசத்தின் உணர்வும் சக்தியும் திரண்டு தேங்குமிடம். அத்தலைமையிடத்தில் பக்தி பூண்பது தேசத்தினிடத்துப் பக்தி பூண்பதாகும். தலைவரிடத்துச் செலுத் தும் பக்தி வீரர் வழிபாட்டின்பாலதாகும். வீரர் வழிபாடு நிகழாத இடமே இல்லை. அது வாழ்க்கை யின் ஒரு கூறாக இருந்தே தீரல்வேண்டும். ஜனநாயகமோ சம தர்மமோ நடைபெறும் இடங்களிலும் எவ்வழியிலோ அறிந்தோ அறியாமலோ வீரர் வழிபாடு நிகழ்ந்தே வரும். அஃது இயற்கை; மன்பதையில் மாறாத ஒன்று. வீரர் வழிபாடு எழுதப்படுவதன் நோக்கமென்ன? வீரர் வழிபாடு உலகில் நடத்தல் வேண்டுமென் பதே. வீரரை நினைத்தல் அவர்தம் புகழ் பேசல் முதலியனவெல் லாம் வீரர் வழிபாடாகும். எம்முறையிலாதல் வீரர் வழிபாடு நடைபெறுதல்வேண்டும். வீரர் பலதிறத்தினர். விளக்கம் இங்கே வேண்டுவதில்லை. போர் புரிவோர்மட்டும் வீரரல்லர். போர்க்கலையும் கலை களுள் ஒன்று. மற்றக் கலைஞரும் வீரரேயாவர். இற்றை ஞான்று பலவிடங்களில் தெய்வங்களாக வழிபடப் படுவோரெல்லாம் ஒவ்வொருபோது ஒவ்வொரு துறையில் ஒவ்வொரு வீரராக விளங்கியவரேயாவர். வீரத்தைத் தெய்வமாகப் போற்றுவதும் பாடுவதும் தொன்றுதொட்ட வழக்கு. தேசபக்தன் லோகமான்ய பாலகங்காதர திலகர், காந்தி யடிகள், பெஸண்ட் அம்மையார் முதலியோர் புகழ்களை ஓதி ஓதி வழிபாடு நிகழ்த்தியே வந்தான். அதனால் தேசபக்தன் தேச பக்தியை வளர்ப்பவனானான். என் மேசைமீது திலகர் பெரு மான் திருமுக உருவம் பொலியும். அஃது என் கருத்தில் நின்று ருத்திர கலை எழுப்பும்; எழுதுகோலைப் பாசுபதமாக்கும். எந்தத் தலைவரையேனும் அதிகாரவர்க்கம் உறுத்தால் அதைத் தேசபக்தன் உறுத்தியே விடுவன். அவ்வுறுத்தலைக் கொண்ட தேசபக்தன் ஆசிரியக் கட்டுரைகள் வாசகர் மனத்தில் வீர உணர்ச்சியைப் பொங்குவிக்கும். அவர் தேசபக்தராவர். இம்முறையிலும் தேசபக்தன் தேசபக்தியை வளர்த்து வந்தான். அன்னிபெஸண்ட் அம்மையார் காப்பில் வைக்கப்பட்ட போது, டாக்டர் சுப்பிரமணிய ஐயர் வீராவேசங்கொண்டு அமெரிக்கத் தலைவர் வில்ஸனுக்கு (24-6-1917) ஒரு முடங்கல் தீட்டினர். சில மாதங்கடந்து அம்முடங்கல் எப்படியோ பிரிட்டிஷ் பத்திரிகை யுலகேறியது. அதையொட்டிப் பார்லி மெண்டிலும் வாதம் நடந்தது. அவ்வேளையில் டாக்டர் சுப்பிர மணிய ஐயரை அதிகாரவர்க்கம் ஒறுக்கப்போகிறது என்ற செய்தி எங்கணும் உலவியது. ஐயர் தமது ஸர் பட்டத்தைத் துறந்தார். அதை முன்னிறுத்தி, (21-6-1918) மயிலை முனீந்திரர் என்ற தலைப்பிட்டு, ஓர் ஆசிரியக் கட்டுரை எழுதினேன். டாக்டர் சுப்பிரமணிய ஐயர் மீதிருந்த பக்தியே அக்கட்டுரையாகப் பரி ணமித்தது. டாக்டர் சுப்பிரமணிய ஐயர் என்னைக் கண்டு தேச பக்தன் தலையங்கத்தில் ஒளிர்வோன் யானா? அல்லது உமது எழுத்தில் பிறந்த ஒருவனா? தமிழ் மொழியின் சக்தியைக் கண் டேன்; கண்டேன்; என்றுஆசி கூறினர். யான், தங்களைப்பற்றிய தலையங்கத்தை நானா எழுதினேன்? தங்கள் வீரத்தில் தோய்ந்த என் பக்தி அதை எழுதியது. தாங்கள் மூலம் ; யான் கருவி என்று வணக்கஞ் செலுத்தினேன். டாக்டர் வரதராஜலு நாயுடு மதுரை யில் சிறைப்பட்ட போதும் தேசபக்தன் வீரமுழக்கஞ் செய் தான்; பாலகங்காதர திலகரின் வாயை அடக்குமுறை ஒடுக்கிய வேளையிலும், ஹார்னிமென் நாடு கடத்தப்பட்ட காலத்திலும் பக்தன் பக்திக் கனலை உமிழ்ந்தான். திலகர் பெருமான், காந்தியடிகள் முதலியோர் சென்னை நோக்கிய போதெல்லாம் தேசபக்தன் ஆசிரியக் கட்டுரைகளில் தேசபக்தி பொங்கி வழியும். கிலாபத் கிளர்ச்சி, சத்தியாக்கிரக இயக்கம், பஞ்சாப் படு கொலை முதலியன நிகழ்ந்த வேளைகளில் தேசபக்தன் நிலையம் காளி கட்டமாயிற்று. அங்கே காளி வீர நடம் புரிந்த வண்ண மிருப்பாள். அந்நடனம் உமிழும் சுவாலை எரிமலை போன் றிருக்கும். வீரர் வழிபாட்டைப் பெருக்கத் தேசபக்த சமாஜம் ஆங்காங்கே அமைக்குமாறு தேசபக்தன் நாட்டைத் தூண்டிய வண்ணமிருந்தான். நூல் தேசபக்தனில் என்னால் எழுதப்பெற்ற ஆசிரியக் கட்டுரைகள் சில ஒரு நூல் வடிவில் வெளிவந்துள்ளன. அதன் பெயர், தேசபக்தாமிர்தம் என்பது. அதன் இரண்டாம் பதிப் பில் வீரர் வழிபாட்டைத் தூண்டும் கட்டுரைகள் சேர்க்கப்படும். தொழிலாளர் சென்னையில் தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவிக்க முயன்ற பத்திரிகைகள் இரண்டு. ஒன்று, நியூ இந்தியா; மற் றொன்று, தேசபக்தன். தேசபக்தன் தொழிலாளர் இயக்கத்துக் கென்று தனித் தொண்டு செய்தான். அடக்குமுறை அடக்குமுறைமீது சிறிது கருத்திருத்தித் தேசபக்தன் கடையைக் கட்டி விடுகிறேன். தேசபக்தன் அச்சகத்தின் ஈடு காணம் பறி முதலாகுமென்றும், ஆசிரியர் பிடிபடுவாரென்றும், பக்தன் நிலையமே பறிமுதலாகுமென்றும் எங்கணும் பேசப் படும். அப்பேச்சு என் காதுக்கும் எட்டும். அஃதெனக்குப் பழம் பாடமாகியது. தொடக்கத்திலேயே போலீ கமிஷனர் என்னை அழைத்து அழைத்து வழங்கிய வாய்மொழி எச்சரிக்கைகள் பல. அவை களை விரித்துரைத்தல் அவசியமென்று தோன்றவில்லை. தேசபக்தன் நிலையத்தில் ஒருநாள் சுப்பராய காமத்தும் யானும் பேசிக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் விரைந்து வந்தார்; அவர் அரசாங்க ஊழியர்; என்னுடைய மாணாக்கருள் ஒருவர். அவர் என்னைத் தனியே அழைத்து, இன்று மாலை தங்கட்குப் பறிமுதல் கட்டளை கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார். அதை யான் காமத்துக்கு அறிவித்தேன். அவர், அப் படியானால் இரண்டாவது ஈடுகாணம் செலுத்தல் வேண்டு மன்றோ? அதற்குரிய முயற்சியைக் கட்டளை பெறுதற்கு முன்னரே துவங்குதல் நல்லது. நீங்கள் எங்கேனும் போய் இரண்டு நாள் தங்கிவிடுங்கள். கட்டளை வழங்குதல் தடைபடும். இரண்டு நாளில் யான் மண்ணையும் விண்ணையும் சுழற்றி விடுவேன். இரண்டாம் முறை ஈடுகாணம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பத்தாயிரம் ரூபாய்வரை கேட்கப்படலாம். அதற்குரிய முயற்சி இன்னே தொடங்குதல்வேண்டும். தயை செய்து போங்கள் என்றார். காமத் வேண்டுதலுக்கு யான் முதலில் இணங்கவில்லை. பின்னே அவர், பழைய நிலையை மறந்துவிடுங்கள். இப்பொழுது நீங்கள் அரசியல் உலகில் வாழ் கிறீர்கள். தந்திரம் வேண்டும். தியங்காதேயுங்கள். யான் பலதிற அமைப்புகளில் கைவைத்திருப்பது உங்களுக்குத் தெரியும். அவைகளின் உயிர்நாடி தேசபக்தன் பத்திரிகை. உங்கள் தியக்கத்தால் தேசபக்தனுக்குக் கேடு விளைந்தாலும் விளையும். அக்கேடு என் அமைப்புகளையெல்லாம் தாக்குவதாகும். உங் களை நினையாதேயுங்கள்; தேசபக்தனை நினையுங்கள்; என் தொடர்பு கொண்டுள்ள மற்ற அமைப்புக்களை உளங்கொள் ளுங்கள் என்று வருந்தினர். எனக்கு இரக்கம் உண்டாயிற்று. ஆண்டவன் திருவுள்ளம் என்று புறப்பட இசைந்தேன். எனக்குத் துணையாக இராயப்பேட்டை பாலசுந்தர முதலியார் அனுப்பப்பட்டார். எம்முடன் சாமிநாத சர்மா தொடர்ந்தார். நாங்கள் மூவரும் மயிலாப்பூர் குளக்கரையில் அமர்ந்தோம்; பலப்பல பேசினோம். இரவு எட்டு மணியாகியது. சாமிநாத சர்மா வீட்டுக்குப் போய் அப்பமும் பாலுங் கொணர்ந்தனர். அப்பத்தை உண்டு, பாலை அருந்தினோம். சர்மாவினிடம் விடைபெற்றுப் பலகைவாராவதி சேர்ந்தோம்; படகேறினோம்; திருப்போரூர் அணைந்தோம்; அங்கே ஒருநாள் தங்கினோம்; அங்கிருந்து திருக்கழுக்குன்றம் நண்ணினோம்; அங்கே இரண்டு நாள் கழித்தோம். எப்பத்திரிகையிலும் தேசபக்தன் பறிமுதல் செய்தி காணப்படவில்லை. திருக்கழுக்குன்றம் விடுத்துச் சென்னை அடைந்தோம். போலீ இன்பெக்டர் ஒருவர் போந்து என்னைத் தேடினரென்று மானேஜர் அறிவித்தார். உடனே டெலிபோன் எடுத்தேன்; போலீ கமிஷனரைக் கூப்பிட் டேன்; இன்பெக்டர் ஒருவர் வந்து என்னைத் தேடினரென்று கேள்வியுற்றேன். யான் வெளியூர் சென்றிருந்தேன். v‹d brŒâ? என்று கேட்டேன். இன்பெக்டரை இப்பொழுது அனுப்புகிறேன் என்று கமிஷனர் பதில் கூறினர். முக்கால்மணி நேரத்துக்குள் இன்பெக்டர் கோதண்டராம் முதலியார் என்னைக் கண்டு பறிமுதல் கட்டளையை (28-2-1919) வழங்கிச் சென்றார். சிறிது நேரத்தில் காமத் வந்தார். கட்டளையைக் காட்டினேன். அவர் போதிய முயற்சி செய்துள்ளேன். பெஸண்ட் அம்மையார் உதவி புரிய உறுதி கூறினர் என்றார். அடுத்தநாள் (1-3-1919) பென்ட்லண்ட் பிரபு தேசபக்தன் மீது பாணஞ் செலுத்தியிருக்கிறார்; தேசபக்தன் இரத்தஞ் சொரிகிறான்; தேசபக்தர்களே! பணத்தைச் சொரியுங்கள்! என்று தேசபக்தன் முதற்பக்கத்தில் பெரிய பெரிய எழுத்துக் களால் பொறிக்கப்பட்டது. அன்றுமுதல் நாடோறும் பென்ட்லண்ட் அரசாங்க அழுகலை எடுத்தெடுத்துக் காட்டலானேன். இடை யில் நிகழ்ந்தனவற்றை ஈண்டுச் சுருங்கச் சொல்கிறேன். இடை வேலைகள் யான் தேசபக்தன் ஆசிரியன். காமத் தேசபக்தன் லிமிடெட் காரியதரிசி. என் மூளை பென்ட்லண்ட் அரசாங் கத்தை எவ்வெவ்வழியில் தாக்கலாம் என்பதில் உழன்றது. அவர் மூளை காரியத்தில் உழன்றது. இரண்டாவது ஈடுகாணம் செலுத்தாமலே காரியம் நிகழ்த்தக் காமத் எண்ணினர். காமத் தமது எண்ணத்தை எனக்குத் தெரிவித்தனர். பதிவுப்பொறுப்பை ஏற்றுள்ளவன் யான். சிக்கலுறாதமுறையில் ஏதேனுஞ் செய் யுங்கள் என்றேன். என். தண்டபாணி பிள்ளைக்குப் பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடத்தையும், தேசபக்தனையும் விற்றுவிட ஒப்பந்தஞ் செய்யப்பட்டது. தண்டபாணி பிள்ளை பாரிடர் இ. எல். ஐயருடன் பிரஸிடென்ஸி மாஜிடிரேட் ஜான் ஆடம் முன்னிலையில் சென்று, பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடத்தை யும், தேசபக்தனையும் யான் ஒப்பந்தஞ் செய்துள்ளேன். முதல் ஈடுகாணம் முழுத்தொகை இரண்டாயிரஞ் செலுத்தச் சித்த மாயிருக்கிறேன். பதிவு உடனே தேவை என்று அறிக்கை செய்தனர். மாஜிடிரேட் கட்டளை பிறப்பித்தார். விண் ணப்பத் தாள்களை மரபுப்படி நிரப்பத் தண்டபாணி பிள்ளை அச்சுக் கணக்கரிடம் போந்தார். அவ்வேளையில், உண்மையாக விற்பனை நடக்கவே இல்லை என்றும், ஒப்பந்தமென்பது வெறும் நடிப்பென்றும் அஃது இரண்டாவது ஈடுகாணம் செலுத்தாதிருக்கச் செய்யப்பெற்ற சூழ்ச்சி என்றும் சில நிமிடங்களுக்குள் மாஜிடிரேட்டுக்குக் கோள்மூட்டப்பட்டது. தண்டபாணி பிள்ளைக்கு உடனே அழைப்பு வந்தது. விசாரணை நடந்தது. கேள்விகளில் ஒன்று ஆசிரியர் எவர் என்பது. அதற்குப் பதில் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் என்று பிறந்தது. மாஜிரேட் தாம் பிறப்பித்த கட்டளையை அழித்து விட்டார். அது காமத்துக்கும் எனக்கும் தெரியவந்தது. சிக்கல் விளைந்தது. பதிவுப் பொறுப்பு என்மீது இருத்தல் கூடாது என்றேன். காமத் கலங்கினர். ஒருநாள் இரவு பத்து மணிக்குமேல் பெரிய வக்கீலைக் கண்டு அவர் நீண்ட நேரம் பேசினர். பெரிய வக்கீல், நிலைமை ஈடுகாணப் பறிமுதல் அளவில் நில்லாது; இது முதல் பாணம். இன்னுஞ் சில பாணங்கள் ஏவப்படும். ஆசிரியர்க்கும், தேசபக்தனுக்கும், அச்சுக்கூடத்துக்கும் தொல்லை விளையும். எல்லாவற்றிற்கும் காரணம் ஆசிரியரின் எழுத்தே; கருத்தன்று. அவர்தம் எழுத்துத் தொனி பாமரமக்களை ஆவேசத்துக்குட் படுத்துவது. அதனால் ஆங்கிலேயர்மீது காழ்ப்பும் இராஜத் துரோகமும் நிகழ்தற்கு ஏது உண்டாகிறது. இவ்வாறு காழ்ப்பை எழுப்பத்தக்க கட்டுரைகள் சில திரட்டப்பட்டுள்ளன. நட வடிக்கை இனி எடுக்கப்படலாம். தேசபக்தன் பத்திரிகை நல்ல சேவை செய்கிறது. அஃது ஏன் அழிதல் வேண்டும்? யானும் அரசியலில் தலையிடப் போகிறேன். அப்பொழுது தேசபக்தன் சேவை தேவையாகும். இரண்டாவது ஈடுகாணம் செலுத்தப்படும் போது, விண்ணப்பத்தில், தொனி வேகம் குறைக்கப்படும் என்னுங் குறிப்பைப் பொறித்து விடுங்கள் என்று அந்தரங்கம் வெளியிட்டனர்; அதைச் சுப்பராய காமத் அப்படியே திரட்டி வந்து என்னிடங் கொட்டினார். என்ன! கிணறு வெட்டப் போய்ப் பூதம் புறப்பட்டதே என்று, பெரிய வக்கீலை யானும் நேரே பார்க்க எண்ணினேன்; எண்ணியபடியே செய்தேன். பெரிய வக்கீல் காமத்தினிடம் என்னென்ன சொன்னாரோ அவைகளை மீண்டும் என்னிடஞ் சொல்லி, அந்தரங்கம் என் றார். தொனியை இறக்குதல் என்பது மன்னிப்பின் பாற்படாதா என்று கேட்டேன். ஒருகாலும் படாது. மன்னிப்புக் கேட்டால் இரண்டாம் ஈடுகாணம் கேட்கப்படமாட்டாது. இரண்டாவது ஈடுகாணம் கட்டி, பின்னே வருந்தொல்லையை நீக்கிக் கொள்ளத் தொனியை இறக்குங் குறிப்பை விண்ணப்பத்தில் பொறிக்கச் சொல்கிறேன். யான் சொல்வது மன்னிப்பாகாது. மருளல் வேண்டா என்று கூறினர். தொனி இறக்கம் என்று சொல்ல வும் எனக்கு மனம் எழவில்லை. காமத் அதில் முனைந்து நின் றார். இருவர்க்கும் பெரும் விவாதம் நடந்தது. விவாதத்தினிடை அவர் பதிவு என் மீதிருந்தால் யான் தியங்கேன். விண்ணப்பத் தில் நீங்கள் தனிப் பொறுப்பில் கைச்சாத்திடப் போவதில்லை. ஓர் அமைப்பின் சார்பிலேயே கைச்சாத்திட யான் சொல்கிறேன். நாள் நெருங்குகிறது. உங்கள் தியாகம் பின்னே தேசபக்தனுக்குப் பொருந்தொல்லை விளைக்கும். இப்பொழுதே தேசபக்தனை நிறுத்தி விடுவது நல்லது என்று பலபடப் பேசினர். தேச பக்தன் லிமிடெட் கட்டில் அகப்பட்டது தவறு. பதிவு மாற்றும் முயற்சியும் வெற்றி பெறவில்லை என்று என்னென்னவோ எண்ணி, நாய் வேடம் பூண்டால் குலைத்துத்தான் தீர்தல் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பெரிய வக்கீல் சொல்லிய முறையில் விணணப்பஞ் செப்பஞ் செய்யப்பட்டது. மாஜி டிரேட் இரண்டாவது ஈடுகாணம் ஐயாயிரம் செலுத்தக் கட்டளை யிட்டார். ஒன்பதாம் நாள் காலையில் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியாரும், அனந்தாச்சாரியாரும் சேலத்தினின்றும் சென்னை சேர்ந்து தேசபக்தன் காலத்தில் வெளிவரத் தக்க முயற்சி யில் தலைப்பட்டனர். இராஜகோபாலாச்சாரியார் திரட்டிவந்த தொகையும், பெஸண்ட் அம்மையார் அளித்த தொகையும், சில்லரையாக வந்த தொகையும் இரண்டாம் ஈடுகாணமாயின. மறு பிறப்பு பத்தாம் நாள் காலையில் யான் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியாருடன் சென்று மாஜிடிரேட்டிடம் ஐயா யிரம் ரூபா செலுத்தினேன். தேசபக்தன் பத்தாம் நாளே வெளி வரலானான். நாமார்க்குங் குடியல்லோம் என்னுந் திருவாக்கின் கருத்துப் பொதுள ஆசிரியக்கட்டுரை வரைந்தேன். அது காரிய தரிசி காமத்துக்குப் பிடிக்கவில்லை. அவர் வருத்தங் காட்டினர். தமிழ் தெரியாத உங்களுக்கு எழுத்துத் தொனி எப்படித் தெரி யும்? என்று பதிலிறுத்துச் சமாதானம் செய்தேன். தேசபக்தன் தொனி ஏறியதோ இறங்கியதோ யான் அறியேன். யான் வழக்கம் போலவே தொண்டு செய்யலானேன். தொனி இறக்கங்கொண்ட விண்ணப்பத்தின் உள்ளுறை எப்படியோ மாற்றார்க்குத் தெரியவந்தது. அவர் அதை மன்னிப் பென்று எதிர்பார்த்தனர்; வேறுவிதமாயிருந்தமை கண்டு ஏமாற்றமடைந்தனர். தண்டபாணி வழக்கு சில மாதங்கள் கடந்தன. தண்டபாணி பிள்ளைமீது திடீ ரென (13-8-1919) ஒரு வழக்குக் கிளம்பியது. அவ்வழக்கைத் தொடுத்தவர் போலீஸார். வழக்கின் சாரம், தண்டபாணி பிள்ளை தேசபக்தன் பதிவுக்குப் போனபோது அரசாங்க ஊழியர் முன்னர் பொருந்திய சான்று புகன்றாரில்லை என்பது. போலீஸார் சார்பில் பிரஸிடென்ஸி மாஜிடிரேட் ஜான் ஆடம், சுப்பராய காமத், குமாரசாமி செட்டியார் முதலியோர் சான்று கூற அழைக்கப்பட்டனர். அவ்வழைப்பு எனக்குக் கிடைத்தது. வழக்கின் போக்கும் நோக்கும் என் சான்றுக்குப் பின்னே எனக்குத் தொல்லை விளைக்குமென்று வக்கீல் உலகம் கருதியது. அத்தொல்லை விளையாதவாறு காக்க முன் வந்தவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார். அவ்வேளையில் தேசபக்தன் நிலையத்தில் ஒன்று நிகழ்ந் தது. அதைச் சுருங்கிய முறையில் சொல்கிறேன். ஒரு நாள் யான் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம் போலீ இன்பெக்டர் இருவர்தேசபக்தன் நிலையத்துள் நுழைந்து, ஒப்பந்தத்தின் உண்மை காணக் கணக்கு ஏடுகளை ஆராயப் புகுந்தனர். அச் செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. யான் உடனே ஓடிவந் தேன். ஆராய்வுக் காட்சிகண்டேன். யார் ஆணைமீது இங்கே வந்தீர் என்று இன்பெக்டர் இருவரையும் கேட்டேன். அவர், ஆணை வேண்டுவதில்லை என்றனர். தயை செய்து வெளியே போங்கள் என்றேன். எங்களுக்கு உரிமை யுண்டு என்று அவர் கூறியதும், உரிமையா என்று அவர் அருகே சென்றேன். இரு வரும், மரியாதை மரியாதை என்று முழங்கிக்கொண்டே போனார். இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை என்னை நோக்கி, நீங்கள் போலீஸாரைப் பிடித்துத் தள்ளப் பாய்ந்தது தவறு. உங்கள் ஆணையை அவர்கள் ஏன் பெறல் வேண்டும்? நீங்கள் தமிழ்ப் பண்டிதர். யான் வக்கீல்; சொல்கிறேன்; கேளுங்கள் என்று கூக்குரலிட்டார். எனக்குச் சிறிது ஐயம் உண்டாயிற்று. இராஜகோபாலாச்சாரியார்க்கு ஓர் அவசரக் கடிதம் எழுதி அனுப்பினேன். அவரும் ஆதிநாராயண செட்டியாரும் போந்தனர். நடந்ததைச் சொன்னேன். என் செய லில் எவ்விதத் தவறும் உறவில்லை என்ற கருத்தை வெளியிட்டு இருவரும் போயினர். அதைப் பற்றி எவ்வித நடவடிக்கையுந் தலை காட்டவில்லை. இன்பெக்டர் இருவரும் பின்னே என்னைச் சந்திக்கும் போதெல்லாம் உங்கள் நல்ல குணம் எங் களை நடவடிக்கை எடுக்கத் தூண்டவில்லை என்பர். தண்டபாணி பிள்ளை வழக்கைச் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் திறம்பட நடாத்தினர். சான்று கூறுகை யில் ஜான் ஆடம் பட்டபாட்டை இங்கே விரித்தல் வேண்டுவ தில்லை. இராஜகோபாலச்சாரியார் புன்முறுவலும் கேள்வி களும் ஆடம் துரையின் முகத்தைச் சிவக்கச் செய்யும். அக்காட்சி இன்னும் ஒவ்வொருபோது நினைவிலுறும். யான் விசாரிக்கப் பட்டேன். தண்டபாணி பிள்ளைக்கும் எனக்கும் ஒப்பந்தம் நடந்தது உண்மை என்றும், முன்பணம் வாங்கப்பட்டிருந்தால் அது கணக்கில் ஏறியிருக்கும் என்றும், முன் பணம் வாங்கப்பட வில்லையாதலின் கணக்கில் பதிவு இல்லை என்றும் பன்னிப் பன்னிச் சொல்லி வந்தேன். ஒப்பந்தம் என்னுஞ் சொல்லைப் பற்றி உரமான போர் நடந்தது. முடிவில் வழக்கில் வெற்றி விளையவில்லை. தண்டபாணிக்கு நூறு ரூபா அபராதம் விதிக்கப் பட்டது. அப்பீலிலும் வெற்றி உண்டாக வில்லை. இராஜ கோபாலாச்சாரியார் வக்கீலாக வழக்கை நடத்தினமையால், பின் தொல்லை எனக்கோ தேசபக்தன் அமைச்சருக்கோ விளைய வில்லை. தண்டபாணியின் தியாகம் தேசபக்தனைக் காத்தது. லார்ட் வில்லிங்டன் லார்ட் பென்ட்லண்ட் போனார்; லார்ட் வில்லிங்டன் வந்தார். லார்ட் வில்லிங்டன் (12-6-1919) தேசிய பத்திரிகாசிரியரை வரவழைத்தார். அத்தருணம் ஹிந்து ஆசிரியர் கதூரிரங்க ஐயங்கார் சென்னையில் இல்லை. நியூ இந்தியா ஆசிரியர் அருண்டேலும், சுதேசமித்திரன் ஆசிரியர் அரங்கசாமி ஐயங் காரும், யானும் சென்றோம். லார்ட் வில்லிங்டன் தேனொழுகப் பேசினார்; இடையிடை வாழைப்பழத்தில் ஊசி நுழைத்தா லென்ன அச்சமொழியும் ஒழுக்கினார். என்னைப் பார்த்து உங்களுடைய எழுத்தில் கொதிப்பு அதிகம். இராஜப்பிரதிநிதி லார்ட் செம்பர்டை அளவு கடந்து தாக்குவது நல்லதன்று என்றார். அங்கே ஒரு திருவிளையாடல் நடந்தது. அஃதென்ன? தேசபக்தன் தலையங்கம் ஒன்று, சுதேச மித்திரன் தலையங்க மாகியது! தலைப்பு எப்படியோ மாற்ற மடைந்தது. அதை எடுத்துக் காட்டி, அரங்கசாமி ஐயங்காரை நோக்கி, இப்படி எழுதலாமா? என்று வில்லிங்டன் கேட்டார். m~J v‹Dila bj‹W ah‹ cz®ªnj‹.; அது சுதேசமித்திரனுடையதன்று என்று அரங்கசாமி ஐயங்காரும் உணர்ந்தார். ஆனாலும் தலைப் பில் உள்ள மாறுதலை அவர் வெளிப்படையாகச் சொல்ல மனங்கொண்டாரில்லை. அவர், யான் வக்கீல்; சட்டமுணர்ந் தவன்; நியாய வரம்பு தெரிந்தவன்; என்று திரும்பத் திரும்பச் செப்புகிறார். லார்ட் வில்லிங்டன் அப்படிப்பட்ட ஒருவரா இப்படி எழுதுவது? என்று கடாவுகிறார். அரங்கசாமி ஐயங்கார் என்னைப் பார்க்கிறார்; வில்லிங்டனைப் பார்க்கிறார். எனக்குச் சொல்ல முடியாத சிரிப்பு. சிரிப்பை அடக்கும் பயிற்சி அன்று பயன் பட்டது. இல்லையேல் திருவிளையாடல் நுட்பம் வெளி வந்திருக்கும். பின்னே விடைபெற்று வெளியே வந்தோம். எங்கள் உரையாடல் சிரிப்பாகவே சிறந்தது. ச. இராஜகோபாலாச்சாரியார் கவர்னரும் நாங்களும் சந்தித்துப் பேசிய செய்தி மாலை பத்திரிகைகளில் வெளிவந்தது. மறுநாள் சுமார் பன்னிரண்டு மணியிருக்கும். சக்கரவர்த்தி இராஜகோபாலச்சாரியார் என்னைப் பார்க்க வந்தார். வந்ததும், இன்று என்ன ஆசிரியக் கட்டுரை என்று கேட்டார். விதவைகள் நிலை என்றேன். ஆச்சாரியார், நீங்களுமா கவர்னரை மகிழ்விக்கப் புறப்பட்டீர் என்று நகைத்து, நேற்றைய தேன்மொழி உங்களையும் இப்படிச் செய் ததே என்றனர். நேற்றைய செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்து, யான் ஒவ்வொரு பத்திரிகை நிலையமும் போந்தே வந்தேன். ஒரு பத்திரிகை ஐதராபாத் நிர்வாகத்தை எழுதுகிறது; இன்னொரு பத்திரிகைஇனாம் வாங்குதல் மீது கருத்துச் செலுத்துகிறது; மற்றொரு பத்திரிகை சமயத்தில் அரசியலைச் சாற்றப் புகுந்திருக்கிறது. நீங்கள் விதவைகள் நிலையைப் பற்றிக் கொண்டீர்கள். லார்ட் வில்லிங்டன் எவ்வளவு கெட்டிக்காரர்; பார்த்தீர்களா? என்று குலுங்கச் குலுங்கச் சிரித்துப்போனார். இராஜகோபாச்சாரியாரைப் பெரிய அகத்திணையர் என்று கருதினேன். அடுத்த நாள் தேசபக்தன் அம்பறாத் தூணியி னின்றும் வழக்கம்போலப் புறப்பட்டது பாணம். தலையங்கமின்றி பஞ்சாப் படுகொலை நிகழ்ந்த காலையில் மனம் தாங்க முடியாத செய்திகள் வரும். அச்செய்திகளைக் கண்ட போது சிற்சில சமயம் தலையங்கம் எழுதவும் மனமெழாது தலையங்க மின்றியுந் தேசபக்தன், வெளிவந்த நாள் உண்டு. (7-7-1919). விளம்பரம் சில விளம்பரங்களை வெளியிடுதல் கூடாதென்று காங்கிர கட்டளை பிறப்பித்தது. சென்னைப் பத்திரிகைகள் பல அக் கட்டளையை மீறியே நடந்தன. தேசபக்தன் லிமிடெட் காரிய தரிசியும் அக்கட்டளையை மீறுதல்வேண்டுமென்றே விரும்பி னர். அவர் விருப்பத்துக்கு யான் இணங்கவில்லை. அதனால் தேசபக்தனுக்குச் சிறிது நஷ்டம் விளைந்தது. ஆனால் தேச பக்தன் செல்வாக்குப் பெருகியது. இருவர் அந்நாளில் தேசபக்தர் சிலர் புதுவையைப் புகலிடமாகக் கொண்டனர். அவருள் இங்கே குறிக்கத்தக்கவர் இருவர். ஒரு வர் வ.வே.சு. ஐயர். மற்றொருவர் சுப்பிரமணிய பாரதியார். இரு வரும் பிரிட்டிஷ் எல்லையில் உலவும் உரிமையுடையவரா யிருத்தல் வேண்டும் என்ற கிளர்ச்சியைத் தேசபக்தன் தொடங்கினான். கிளர்ச்சி வெற்றியடைந்தது. புதுவையினின்றும் வ.வே.சு. ஐயர் எனக்கொரு கடிதம் எழுதினர். அது வருமாறு: புதுவை பங்குனி 8 . . . தாங்கள் பக்தனில் அடிக்கடி எழுதியதன் பயனாக நான் ஆங்கில இலாகாவுக்கு யாதொரு நிபந்தனைகளும் தடையுமின்றி வரலாம் என்று, அரசாங்கத்தார், என் சகோதரன் எழுதிய கடிதத்திற்குப் பதில் இறுத்திருக்கிறார். என் நன்றியை எதிர்பார்த்துத் தாங்கள் கிளர்ச்சி செய்யவில்லையாகிலும் என் மனமார்ந்த நன்றியைத் தங்களுக்கு நான் தெரிவியாமலிருத்தல் எங்ஙனம் சாத்தியம்? கட்டுகள் நீங்கி விட்டமையால் தாங்களும் இதர தலைவர்களும் குறிப்பிடுகிறபடி தேசத்தொண்டைச் செய்யக் காத்துக்கொண்டிருக்கிறேன். பங்குனி 26, 27ஆம் நாள் வாக்கில் திரிச்சி செல்லலாம் என்றிருக்கிறேன். நண்பர்களுக்கு இச்செய்தியைச் சொல்ல வேண்டுகிறேன். சுப்பிரமணிய பாரதியாருக்குச் சில தடைகள் கூடலூரில் கிடத்தப்பட்டன என்று ஓர் அரசியல் கிள்ளை தேசபக்தனுக்கு அறிவித்தது. தேசபக்தன்பாசுபதம் எழுந்தது. தடைகள் உருவெளி யாயின. கவிஞர் சென்னை சேர்ந்தனர். யான் பாரதியாரை டிராம்வே தொழிலாளர் சங்கத்தில் கண்டேன். பாரதியார் நாவினின்றும் சக்திப் பாட்டு வீறிட்டது. விலகல் தேசபக்தன் இரண்டரை ஆண்டு குழந்தை. அவன் தமி ழுலகுக்கே ஒரு குழந்தையானவன். அவன் விளையாடாத இட மில்லை. அவனை வளர்க்க எவ்வளவு பாடு! எவ்வளவு உழைப்பு! இரவு பகல் உழைப்பு? கண் விழிப்பு! அத்தகைய அருமைத் தேச பக்தனை விடுத்து விலகத் திடீரென உளங்கொண்டேன். தேசபக்தன் செல்வாக்கில் குறைவடையவில்லை. தமிழ் உலகின் ஆதரவிலும் குறை நிகழவில்லை. பக்தன் ஆசிரியக்கூடம் எனக்கு இன்பூட்டியே வந்தது; காரியக்கூடம் கவலை விளைக்க லாயிற்று. நண்பர் திருநாவுக்கரசு முதலியார் வேறோர் அமைப் புக்கு மாற்றப்பட்டார். வேறொருவர் தேசபக்தன் மானேஜராக அமர்ந்தார். ஒரு நாள் பழைய மானேஜர் என்னைக் கண்டு, நீங்கள் விலகி விடுவது நல்லது என்று சொன்னார். காரணம் காண முயன்றேன். பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடம் ஒத்தி வைக்கப்பட்டது என்று திருநாவுக்கரசு கூறினார். பின்னே விசா ரணையில் அஃது உறுதிப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியா அச்சுக் கூடம் தேசபக்தன்லிமிடெட்டில் சேர்ந்ததன்று. அதன் பதிவுப் பொறுப்பு என்னுடையது. இப்பொறுப்புடைய என்னைக் கலவாமல் காரியம் நிகழ்த்தப்பட்டது. அஃது எனது மனோ நிலையை மாற்றியது. என்ன! நமது இயல்புக்கு மாறுபட்ட செயல்கள் நடக்கின்றன! பறிமுதல் கட்டளையை உடனே வாங்காது இரண்டொருநாள் வெளியே செல்ல இணங்கி னோம். தொனி இறக்க அறிக்கையில் கைச் சாத்திட்டோம். வீண் ஒப்பந்தத்துக்கு ஒருப்பட்டோம். பள்ளி ஆசிரியர் வேலைக்கும் பத்திரிகாசிரியர் வேலைக்கும் எவ்வளவு வேற்றுமை; பொதுமையை முன்னிட்டுச் சிற்சில தவறுதலுக்கு இணங்கலாம். நம் பெயர்மீது பதிவு பெற்றுள்ள அச்சகத்தை நமக்குத் தெரியாமலே ஒத்தி வைப்பது அடாத செயல் என்றெல்லாம் எண்ணி எண்ணி, தேச பக்தனை விடுத்து விலகுவதே நல்லது என்று உறுதி கொண்டேன். எனது விலகுதலைத் தேசபக்தன்தலையங்கத்தில் (22-7-1920) குறிப்பிட்டு, எனது நிலையைத் தமிழுலகுக்கு விளக்கினேன். சுப்பராய காமத் மனங் கலங்கியது. காமத்! நீர் நல்லவர். உம் மீது யான் கொண்ட சகோதர நேயம் மாறவில்லை. உமது நற் குணம் பல அமைப்புகளைப் படைக்கச் செய்தது. அவ்வமைப்பு களின் தொல்லை பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடத்தைத் தாக் கியது. என்னுடன் கலந்து காரியஞ் செய்திருக்கலாம். போனது போக. அமைப்புக்களைக் குறைத்துவிடுதல் நல்லது என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். இராஜகோபாலாச்சாரியார் உள்ளிட்ட சிலர் சமாதானஞ் செய்து பார்த்தனர். யான் கொண்ட உறுதியினின்றும் பிறழ்ந்தேனில்லை. ஈடுகாணம் ஐயாயிரங்கொண்ட அச்சுக்கூடப் பதிவுப் பொறுப்பையும், தேசபக்தன் பதிவுப் பொறுப்பையும் குமார சாமி செட்டியார் ஏற்பதென்று தீர்மானஞ் செய்யப்பட்டது. பொறுப்பை எளிதில் மாற்றல் கூடாதென்று சிலர் எனக்கு அறிவுறுத்தினர். அவர் காமத்தின் பகைவர் அவர் கூற்றுக்கு யான் செவிசாய்த்தேனில்லை. பதிவுப் பொறுப்பை எளிதில் மாற்றி விட்டேன். வ. வே. சு. ஐயர் பின்னே வ. வே. சு. ஐயர் வரவழைக்கப்பட்டார். 1அவர் தேசபக்தன் ஆசிரியப் பதவியை ஏற்றுக்கொண்டார். இரண் டொரு வாரத்தில் பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடமும், தேச பக்தன் பத்திரிகையும் வேறொருவரிடத்தில் சேர்ந்தன. முக் காலாண்டுகள் ஐயர் சிறை புகுந்தனர். தேசபக்தன் படிப்படியே மறையலானான். தேசபக்தன் மறைந்தாலும் அவன் பெயர் மறையுமோ? அப்பெயரை இலங்கை நடேச ஐயர் வேட்டனர். மீண்டும் தேசபக்தன் பத்திரிகை வாரப் பதிப்பாகச் சிலகாலம் தேசபக்தனின் பழைய நேயர் தண்டபாணி பிள்ளையால் நடத்தப்பட்டது. நவசக்தி தேசபக்தனை யான் விடுத்து அகன்றது தென்னாடு முழுவதும் பரவியது. புதிய தினப்பதிப்பொன்று தொடங்குதல் வேண்டுமென்று தந்திகளுங் கடிதங்களும் வந்து குவிந்தன. நேரிலும் சிலர் போந்து ஊக்கமூட்டினர். தேவகோட்டை நண்பர் சிலர் ஒரு தினப் பதிப்புக்கென்று லிமிடெட் கம்பெனி காணலாமா என்று கேட்டனர். நாகை நண்பர் பக்கிரிசாமி பிள்ளை பிராமணரல்லாதார் நலனுக்கெனில் ஒரு தினப் பதிப்புத் தம் பொறுப்பில் துவங்கச் சித்தமாயிருப்பதை ஒருவர் வாயிலாகத் தெரிவித்தனர். காரைக்குடித் தோழர் சிலர் ஒரு பெண் கல்லூரி கண்டு அதை என் பார்வையில்விட விரும்பினர். காரைக்குடியார்க்கு மட்டும் யான் மறுப்புரை கூறினேனில்லை. மற்றவர்க்கெல்லாம் மறுப்புரை வழங்கினேன். உதவி காரைக்குடிக்கு யான் ஏகிவிடுவேனோ என்று ஐயுற்று, இராமாஞ்சுலு நாயுடு, வேதம், வரதராஜ நாயகர், நடேச நாயகர், நடேச முதலியார் உள்ளிட்ட தோழர் சிலர் ஒரு ஞாயிற்றுக் கிழமை என்னைக் கண்டு, யான் எக்காரணம் பற்றியுஞ் சென்னையை விடுத்து நகர்தல் கூடாதென்றும், நகர்ந்தால் முளை விட்டுள்ள தொழிலாளர் இயக்கம் பட்டுப் போகு மென்றும், ஒரு மாதம் ஓய்வு பெற்றிருத்தல் நலமென்றும் சொல்லிச் சென்றனர். சென்ற அவர் சென்னைத் தொழிலாளர் சங்கச் சார்பில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் எனது நிலை மையை விளக்கி வயதடைந்த தொழிலாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரூபா கொடுத்தல் சிறப்பு என்றும், கட்டாயமில்லை என்றும், விரும்புவோரே உதவிசெய்ய முன் வரலாம் என்றும் விண்ணப்பஞ் செய்தனர். அவர் விண்ணப்பம் ஐயாயிரம் ரூபா திரட்டியது. அது முடிப்பாக எனக்குக் கொடுக்கப்பட்டது. வேறு சில நண்பர் சுமார் இரண்டாயிரந் திரட்டி அனுப்பினர். அத்தொகையையும் இத்தொகையையும் கொண்டு ஓர் அச்சுக்கூடம் வாங்கப்பட்டது; ஒரு வாரப் பதிப்புத் துவங்கப் பட்டது. அச்சுக்கூடத்துக்குச் சாது அச்சுக்கூடம் என்று பெயர் சூட்டினேன்; வாரப் பதிப்புக்கு நவசக்தி என்ற பெயர் அணிந் தேன். அப்பொழுது அச்சுச் சட்டம் ஒரு சிறு சீர்திருத்தம் பெற் றது. அதனால் ஈடுகாணம் கேட்கப்படவில்லை. அச்சுக்கூடப் பெயர் சிலர்க்கு மருட்சியூட்டியது. முதலியார் இனிச் சாது ஆவர் போலும்என்று அவர் எண்ணினர். சிலர் என்னைச் சாது முதலியார் என்றும் அழைத்தனர்; பத்திரிகைகளிலும் எழுதினர். நவசக்தி முதல் சிலம்பு- முதல் பரல் - (22-10-1920) வெளி வந்தது. அன்று முதல் ஏறக்குறைய இருபதாண்டு நவசக்தி என்னால் வளர்க்கப்பட்டாள். இருபதாண்டு நிகழ்ச்சிகளை விரித்தல் அநாவசியம். தாலிபுலாக நியாயத்தைக் கடைப்பிடிக் கிறேன். தொடக்கத்தில் நவசக்திக்குத் துணைவராக அமைந்தவர் வேங்கடகிருஷ்ண முதலியார்; பின்னே, தேசபக்தனினின்றும் சாமிநாத சர்மா நவசக்தியை நண்ணினர். பக்தன் - சக்தி யான் தேசபக்தன் ஆசிரியனா யிருந்தபோதும், நவசக்தி ஆசிரியனா யிருந்தபோதும் ஒருவித நோக்கத்தைக் குறிக் கொண்டே தொண்டாற்றினேன். வேறுபாடு நோக்கத்தில் விளையவே இல்லை; வளர்ப்பு முறையில் விளைந்தது. ஏன்? தேசபக்தன் தினப்பதிப்பு; நவசக்தி வாரப் பதிப்பு. ஆதலின் வளர்ப்பு முறையை வேறுபடுத்தும் நிலை நேர்ந்தது. தேசபக்தன் மகன்; நவசக்தி மகள். தேசபக்தன் லிமி டெட்டுள் புகுந்தவன்; நவசக்தி அதில் புகாதவள். தேசபக்தனில் பெரிதும் அழிவு வேலை நடந்தது. நவசக்தியில் பெரிதும் ஆக்க வேலை MntrK பரபரப்பும் தேசபக்தனில் அலைந்தனஅன்பும் அமைதியும் நவசக்தியில் தவழ்ந்தன. தேசபக்தன் அதிதேவதை ருத்ரன் - எழுதுகோல் பாசுபதம்; நவசக்தியின் அதிதேவதை சிவம் - எழுதுகோல் குழல். தேச பக்தன் நடையில் காளி; நவசக்தி நடையில் உமை. நவசக்தி என்னிடம் வளர்ந்த கால முழுவதும் நவசக்தி யில் அரசியல் பூத்த வண்ணமிருக்கும். அவ்வப்போது அக் கொடியினிடம் சமூக சீர்திருத்தம், பெண்நலன், மொழிச் சிறப்பு, கலையாக்கம் முதலியனவும் முகிழ்க்கும். இறுதியில் நவசக்தி மலர்களில் பெரிதும் சமதர்ம சன்மார்க்கமே கமழ்ந்தது. தேசபக்தனைப் போலவே நவசக்தியும் தமிழுலகில் செல்வாக்குப் பெற்றாள். நவசக்திஅரசியலுடன் வேறு பல துறைகளிலும் இறங்கிப் பணிசெய்தமையால், அரசியலில் மாறுபட்ட கருத்துடையாரையும் அவள் வயப்படுத்தினள். நவசக்தியின் தமிழ் நடம் வெளிநாடுகளிலும் புகுந்தது. இலங்கை, பர்மா, சையாம், மலேயா, மொரிஷிய, நெட்டால், இங்கிலாந்து, பிரான், ஜெர்மெனி முதலிய நாடுகளிலும் நவசக்தியின் கலை வீசியது. தமிழ் நாட்டினின்றும் தத்தம் தாய்நாடு நோக்கும் ஐரோப்பியப் பாதிரிமார் பலர் நவசக்தியை மறப்பதில்லை. மும்முறைப் பதிப்பு கயையில் 1922ஆம் ஆண்டில் கூடிய காங்கிர நாளடை வில் தனக்குள்ளே ஓர் எரிமலையை உண்டு பண்ணிற்று. அது சுயராஜ்யக் கட்சி. அது காங்கிர மூலத்தையே எரித்துவிடு மென்று சிலர் ஐயுற்றனர். அவ்வையக் கூட்டம் தென்னாட்டி லுந் திரண்டது. அது தனக்கென்று ஒரு தமிழ்த் தினப்பதிப்புத் தேவை என்று கருதியது. அவ்வேளையில் தமிழ்நாட்டுக் காங்கிர கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அக்கூட்டம் காங் கிர சார்பில் ஒரு தமிழ்த் தினப் பதிப்பு வெளியிடுவதென்றும், அதற்கென்று பதினாயிரம் ரூபா அளிப்பதென்றும் ஒரு தீர் மானத்தை நிறைவேற்றியது. அத்தொகையைக் கொண்டு, நவ சக்தியைத் தினப் பதிப்பாக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட் டது. வலியுறுத்தலுக்கு யான் இணங்கினேனில்லை. அவ்விடத்தி லேயே அன்னே மறுப்புரை உரமாக வழங்கினேன். அம்மறுப்புப் பொதுவாகப் பலரையும், சிறப்பாகச் சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியாரையும், ஈ.வே. இராமசாமி நாயக்கரையும் சீற்ற மூட்டியது என்பதைக் குறிப்பால் உணர்ந்தேன். பின்னே அத்தொகை சுயராஜ்யா கம்பெனித் தலைவர் தி. பிரகாசம் அவர்களிடஞ் சேர்க்கப்பட்டது. அத்துணையால் சுயராஜ்யா தமிழ்த் தினப் பதிப்பு வெளி வந்தது. அது நிறுத்தப்பெற்றதும் தமிழ் நாட்டுக் காங்கிர கூட்டத்துக்கும் சுயராஜ்யா கம்பெனிக்கும் சட்டப் போர் நிகழ்ந்ததை வெட்கத்துடன் இங்கே குறிக்கிறேன். மதுரையினின்றும் ஈரோடு நோக்கிய இராமசாமி நாயக்கர் சென்னை போந்தனர். அவர் தினப் பதிப்பைப் பற்றி என்னிடம் பேசிப் பேசித் தாம் ஆயிரத்தைந்நூறு ரூபா தருவதாகவும் உறுதி கூறினர். அத்தொகை தினப் பதிப்புக்குப் போதாதென்றும், தற்போது மும்முறை தொடங்கலாகுமென்றும், பின்னே தினப் பதிப்பின்மீது சிந்தை செலுத்தலாமென்றும் என் கருத்தை வெளியிட்டேன். இராமசாமி நாயக்கர் ஈரோடு சேர்ந்ததும் குறிப்பிட்ட தொகையை அனுப்பினர். நவசக்தியில் நாயக்கரும் யானும் கலந்து பேசிக் கண்ட முடிவை விளக்கி, அவர் அனுப்பிய தொகையைக் குறிப்பிட்டேன். அதைப் பார்த்த நாயக்கர் தம் முடைய தொகை என்பதைத் தம் வாயிலாக வந்த தொகையென்று திருத்துமாறு கடிதம் விடுத்தனர். அவ்வாறே திருத்தஞ் செய்யப் பட்டது. நவசக்தி வாரப் பதிப்புடன் மும்முறைப் (20-10-1923) பதிப்பாகவும் வெளி வந்தனள். அச்சமயத்தில் ரா. கிருஷ்ணமூர்த்தி யும், கே. சுப்பிர மணியமும் நவசக்தியின் ஆசிரியக்கூடத்தில் சேர்ந்தனர். மும்முறையைத் தினமாக்க எண்ணிவந்த நாயக்கர் வைக்கம் அடைந்து தீண்டாமையை முன்னிட்டுச் சத்தியாக்கிரகஞ் செய்து சிறைக்கோட்டம் நண்ணினர். நவசக்தி மும்முறை புயலிடைப்பட்ட கலனாயிற்று. மும்முறை வாரத்தை விழுங்கும் நிலைமை அணைந்தது. வாரப் பதிப்பைப் பாழாக்க எனது மனம் எழவில்லை. வாரத்தைக் காக்க வேண்டி மும்முறை (31-5-1924) நிறுத்தப்பட்டது. தேர்தல் 1924, 1925, 1926இல் நடைபெற்ற தலதாபனத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், முதலியவற்றில் காங்கிர வெற்றி பெறும் பொருட்டு நவசக்தி செய்த தொண்டு அளப்பரிது. நவசக்தி யின் கருத்தைத் தமிழ்நாடு எதிர்பார்க்கும். நவசக்தியின் தலை யங்கங்கள் துண்டு வெளியீடாகவும் பிரசுரிக்கப்படும். அந் நாளில் நவசக்தியின் தாண்டவம் தமிழ்நாட்டையே கவர்ந்தது. ஈடுகாணம் 1930ஆம் ஆண்டில் காங்கிர சார்பில் உப்புச் சத்தியாக் கிரகம் துவங்கப்பட்டது. அப்பொழுது யான் காங்கிர அங்கத் தவனாகவும் இல்லை. சக்கரவர்த்தி இராஜகோபாலச்சாரியா ரும், கே. பாஷ்யமும் என்னைக் கண்டு சத்தியாக்கிரக அறிக்கை யில் கைச்சாத்திடக் கேட்டனர். யான் கைச் சாத்திட்டேன் (விவரம் பின்னர்) எனது கைச்சாத்து சாது அச்சுக்கூடத்துக்கு ஈடுகாணம் கேட்பிக்கும் என்றுதக்கவர் வாயிலாகக் கேள்வி யுற்றேன். அவ்வச்சுக்கூடத் தொடர்பை அறுத்துக்கொள்ளல் நல்லது என்று தோன்றியது. சாது அச்சுக்கூட உரிமையைத் தமையனார்க்கு மாற்றி விட்டேன். அவசரச் சட்டமும் உடன் பிறந்தது. வேறு ஒரு சிறிய அச்சுக்கூடம் அமைக்க மாஜி டிரேட்டுக்கு விண்ணப்பஞ் செய்தேன். ஈடுகாணங் கேட்கப்பட் டது. ஈடுகாணஞ் செலுத்தி, நவசக்தியை நடாத்திப் பின்னே அவளுக்கு நிரந்தரக்கேடு விளைக்க யான் விரும்பினேனில்லை. காலநிலையும் சட்ட வேகமும் நவசக்தியை நிறுத்தவே தூண் டின. பத்தாண்டு இடையீடின்றி ஒலித்துவந்த நவசக்தி யின் சிலம்பு ஒய்வு பெற்றது. அவசரச் சட்டத்தின் ஆறுமாத காலம் முற்றுப்பெற்றதும் நவசக்தியின் சிலம்பு மீண்டும் பழையபடி ஒலித்தது. சமதர்மம் பொதுவாகச் சமதர்மத்தில் எனக்குப் பற்றுண்டு. காரல் மார்க் கூறிய சமதர்மம் நிறையுடையதாகாதென்பதும், அதில் சன்மார்க்கங் கலந்தாலன்றி அது நிறைவுபெறாதென்பதும், இந்தியாவுக்குச் சன்மார்க்கமற்ற சமதர்மம் ஏற்றதாகாதென்ப தும் என்னுடைய கருத்து. அக்கருத்தையும் கால சேத வர்த்த மானத்துக்குத் தகுந்த முறையில் யான் வெளியிட்டு வருவது வழக்கம். சமதர்ம சன்மார்க்க ஆசிரியக் கட்டுரைகள் என்னால் எழுதப்பட்டன. சமதர்மக் கட்டுரைகள் வேறு சிலராலும் நவ சக்தி க்கென்று வரையப்பட்டன. அவைகளைப் பற்றிச் சில, அந்தரங்கச் செய்திகள் எனக்கெட்டின. அவைகளை யான் எவரிடமும் வெளியிட்டதில்லை. நாம் விரும்பும் முறையில் பத்திரிகை வெளிவரும் உரிமை இல்லையே என்று நினைந்து நினைந்து எனது உள்ளம் வருந்தும்; கட்டுப்பாட்டுக்குட்பட்டு, பத்திரிகையை நடாத்தி வருவதைப் பார்க்கிலும் வாளாகிடத்தல் நல்ல தன்றோ? என்றும் எனது நெஞ்சம் நினைக்கும். இன்னோ ரன்ன எண்ணங்கள் வளர்ந்து வளர்ந்து சந்தாதாரர் பொருட்டு வார வெளியீட்டைத் திங்கள் வெளியிடாக்கினேன். அதில் சமயக் கட்டுரைகளே பெரிதும் மலிந்து வந்தன. இம்முறையிலும் நவசக்தி வெளிவரலானாள். இதுபற்றிப் பத்திரிகை உலகமும் பிறவும் பலவாறு பேசின. உண்மை எவர்க்குத் தெரியும்? பொழுது போகவில்லை. என் செய்வது? பெரியபுராணத் துக்கு ஆராய்ச்சி விசேடக் குறிப்புரை வரையுந்தொண்டில் ஈடு பட்டேன். அவ்வுரையுடன் கூடிய பெரிய புராணப் பதிப்புச் சஞ்சிகை சஞ்சிகையாக வெளியாயிற்று. ஒரு சிற்றூரில் தங்கிச் சன்மார்க்க சங்கத் தொண்டு எளிய முறையில் செய்யலாமென்ற எண்ணம் அடிக்கடி உதிக்கும். நவசக்தியை எவரிடம் ஒப்படைப் பது என்று நினைந்து நினைந்து பார்ப்பேன்; எல்லாம் ஆண்ட வன் திருவுள்ளப்படி நடக்கும் என்ற முடிவுக்கு வருவேன். திடீரென ஒரு கிளர்ச்சி (1934) எழுந்தது. இஃது எதிர் பாராதபடி எழுந்தது. இஃது எந்தச் சக்தியின் ஏவலோ தெரிய வில்லை. வடஆர்க்காடு ஜில்லாவில் காவேரிப்பாக்க வட்டத்தில் ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸுக்குள்ளாகவே ஓர் அநி யாயம் நடந்தது. அஃது எப்படியோ என்னை ஈர்த்துத் தேர்தலில் புகுத்தியது. அவ்வேளையில் சிறுமைப் பத்திரிகையுலகம் புரிந்த திருவிளையாடல் நவசக்தி வார வெளியீட்டின் இன்றியமை யாமையை உணர்த்தியது. நவசக்தியை மீண்டும் வாரப் பதிப் பாகவே தாண்டவம் புரியச் செய்தேன். அப்பொழுது நவசக்தி ஆசிரியக் கூடத்தில் சக்திதா சுப்பிரமணியமும், நேமம் - கிருஷ்ணசாமி முதலியாரும் சேர்ந்தனர். கிருஷ்ணசாமி மீண்டும் பள்ளிக்குச் செல்ல நவசக்தியினின்றும் விலகினர். இராமநாத னும் அரங்கசாமியும் வந்தனர். நவசக்தி சமதர்ம சன்மார்க்க மயமானாள். எனது நீண்டகால விருப்பம் ஒருவாறு நிறைவேறி யது. காங்கிர மந்திரிசபை அமைந்த சமயத்தில் நவசக்திநல்ல தொண்டு செய்தாள். இளைஞரின் தொண்டும் போக்கும் எனக்கு உள்ள நிறைவு ஊட்டும். அவரிடத்தில் நவசக்தியை ஒப்படைத்துக் கிராமம் போந்து சன்மார்க்க சங்கத் தொண்டு செய்யலாமென்றும் என்மனம் விரைந்தது. சிற்சில தடைகள் குறுக்கிட்டன. இராம நாதன் சமதர்மத் தொண்டுக் கென்று இலங்கை நோக்கினர். 1939ஆம் ஆண்டு ஐரோப்பாவில் குமுறி எழுந்த யுத்த மேகம் முழங்கியது; உலகெங்கும் முழங்கும் குறி தோன்றியது. பிர அட்வைஸர் நியமனமும், பத்திரிகாசிரியன்மாரைப் பார்க்க மாட்சிமை தங்கிய கவர்னர் விரும்புகிறார் என்ற அழைப்புக் களும், விதவிதமான சட்டங்களும், காகித நெருக்கும், இன்ன பிறவும் பத்திரிகை உலகைப் பலவழியிலும் அலைக்கும் என்பது நன்கு விளங்கியது. தினப்பதிப்பு இரண்டொன்று தவிர மற்றப் பத்திரிகைகளை நிறுத்தி விடுவது நல்லதென்றே தோன்றியது. நவசக்தியை வளர்ப்பதற்கென்று வளர்ந்துவந்த தமைய னாரின் அருமை மகன் பாலசுப்பிரமணியனை ஆண்டவன் அழைத்த நுட்பம் என்ன? ஆண்டவன் அவனைக் கொடுத்ததன் நோக்கம் என்ன? அவனை இளமையிலேயே எடுத்த தன் உள்ளுறை என்ன? இவைகளை நினைக்க நினைக்கத் துயரம் மிகும். ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பு என்னையோ என்று அவனிடமே நெஞ்சஞ் செல்லும். நவசக்தி யைப் பற்றி யான் பலப்பல எண்ணுவேன். ஒருநாள் சுப்பிரமணியம் நவசக்தியில் இசைக்கட்டுரை எழுதிவந்த இராதாமணி என்பவர் உங்களைக் காண விரும்புகிறார். எப்பொழுது வரலாமென்று கேட்டுவரச் சொன்னார் என்று அறிவித்தார். அவர் வீடு எங்கே என்று கேட்டுத் தெரிந்து, யான் அவ்வழியாகவே கடற்கரைக்குச் செல் வது வழக்கம். இன்று பிற்பகல் அவரைக் காண்பன் என்றேன். அப்படியே அவரை அவர்தம் அன்னையாருடனும் தங்கை யாருடனுங் கண்டேன். நீண்ட நேரம் அவருடன் இசை, சோதி டம் முதலிய கலைகளைப்பற்றிப் பேசித் திரும்பினேன்; அடுத் தடுத்துச் சென்று பேசி வந்தேன். ஒருநாள் நவசக்தி யைக் குறித்து உரையாடினோம். அன்று எங்கள் குடும்பத்தைப்பற்றி யும் தமையனார் மகனைப்பற்றியும் பேசலானோம். அப்பேச் சிடை இராதாமணி அம்மையார் நவசக்தியை வளர்க்கத் தக்க வரைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். என்னிடம் நவ சக்தியை ஒப்புவித்துப் பாருங்கள். உங்கள் கவலை நீங்கும். நீங்கள் விரும்புமாறே யான் நவசக்தி யை வளர்ப்பேன் என்று மொழிந்தார். அம்மொழி, காலஞ்சென்ற நம் குழந்தை திலகவதி மீண்டும் வரதையரிடத்தில் பிறந்து இவ்வாறு பேசுகிறதோ என்று கருதச் செய்தது. நவசக்தியை அவரிடம் ஒப்புவிக்க உறுதி கொண்டேன். இராதாமணி அம்மையாரும் சுப்பிர மணியமும் ஒருமித்து நடத்தும் முறையில் (1941 ஜனவரி) ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் அன்புடன் நவசக்தியை வளர்த்து வருகின்றனர். கே. இராமநாதனும் நவசக்தியை நண்ணியுள்ளனர். நவசக்தி வாழ்க. காங்கிர காங்கிர விதை என்னுள் இளமையிலேயே விழுந்தது. விதை விழுந்ததில் வியப்பில்லை. அது பட்டுப் போகாமல் எத் தனையோ தூறுகளைக் கடந்து வளர்ந்ததே வியப்பு. மாகாணப் பிரிவு 1917ஆம் ஆண்டின் இறுதியில் காங்கிர சேவையை வெளிப்படையாகச் செய்ய முற்பட்டேன். அந்நாளில் ஆந்திரம் தமிழ்நாடு கேரளம் என்று தென்னாட்டுக் காங்கிர பிரிந்து நிற்கவில்லை. அது சென்னை மாகாணக் காங்கிர என்றே வழங்கப்பட்டது. பின்னரே (25-8-1921) சென்னை மாகாணக் காங்கிர மொழி வாரியாக ஆந்திரம் தமிழ்நாடு கேரளம் என்று பிரிக்கப்பட்டது. அக்காலத்தில் ஒழுங்கு முறைகளும் நன் றாக அமையவில்லை. அவைகள் அன்னிபெஸண்ட் அம்மையார் காலத்தில் ஓரளவில் சீர்பெற்றன; காந்தியடிகள் காலத்தில் செவ்வனே செப்பமாயின. வகுப்பு வாதம் தொடக்கத்தில் காங்கிர சார்பில் கூடுங் கூட்டங்களில் ஜடி கட்சியின் கொள்கையை மறுப்பதை யான் ஒரு பெருந் தொண்டாகக் கொண்டேன். அத்தொண்டு காலத்துக்கு உரிய தாகியது. அதைக் காலதேவதையும் நாடியது. வகுப்பு வாதத் தால் நாட்டின் ஒருமைப்பாடு குலையும் என்று யான் நம்பினேன்; உறுதியாக நம்பினேன். அந்நம்பிக்கையினின்றும் யான் இன்னும் மாறுதலடையவில்லை. வகுப்பு வாதத்தைக் காங்கிர ஏற்கும் நிலை நேர்ந்தாலும் யான் காங்கிரஸுடன் பிணங்கியே நிற்பன். ஜடி கட்சியைக் குலைக்குந் தொண்டு சென்னையில் நானாபக்கமும் நிகழ்ந்தது; வெளியூர்களிலும் நிகழ்ந்தது. செல் வாக்குடைய தேசபக்தனும், தமிழ் நாட்டிலுள்ள பலப்பல தொழிற் சங்கங்களும் என் வயப்பட்டிருந்தமையால், ஜடி கட்சியின் ஆக்கத்தைச் சிதைப்பது எனக்கு அருமையாகத் தோன்றியதில்லை. கூட்டங்களில் யான் ஜடி கொள் கையைத் தாக்குவேன்; அக்கட்சியாரை யான் தாக்குவதில்லை. ஜடிகட்சித் தலைவருள் ஸர். பி. தியாகராய செட்டியார், பனகல் ராஜா, டாக்டர் நடேச முதலியார் முதலியோர் என் கெழுதகை நண்பர் குழாத்தைச் சேர்ந்தவர். தியாகராய செட்டியாரிடத்தில் எனக்கு நிரம்பிய அன்பு உண்டு. ஜடி கட்சி நண்பர் சிலர் என்னைப் பார்க்கும் போதெல்லாம், உமது அரும்பொழுது பார்ப்பனக் கட்சிக்கு உழைப்பதில் செலவாகிறது. எங்கள் கட்சி பார்ப்பனரல்லாதார் நலத்தை நாடுவதன்றோ? நீர் ஏன் எங்கள் கட்சியில் சேர்ந்து உழைத்தலாகாது? என்று கேட்பர். யான் அவர்க்கு என்ன பதி லிறுப்பேன்? காங்கிர சாதி மதங் கடந்தது; இந்தியாவின் விடுதலையை நாடுவது. அத்தகைய ஒன்றை ஒரு கூட்டத்தார் அமைப்பாகக் கருதுவது தவறு. உங்கள் கட்சியைச் சமூக சீர்த் திருத்தத்தில் நாட்டஞ் செலுத்தும் ஒன்றாக இன்றைக்குச் செய் யுங்கள். நாளை யான் அதில் சேர்ந்து உழைக்கச் சித்தமாயிருக் கிறேன். உங்கள் கட்சி அரசியல் துறையில் இறங்கி வகுப்பு வாதத்தை வளர்த்து வரும்வரை அதை எதிர்க்க வேண்டுவது என் கடமைகளுள் ஒன்றெனக் கருதுகிறேன் என்று சொல்வேன். பெஸண்ட் அம்மையார் 1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை ஐரோப்பா வில் பெரும் போர் நடந்தது. அதே காலத்தில் இந்தியாவிலும் அரசியல் உரிமைப் போர் மூண்டது. இப்போரை மூட்டியவர் யாவர்? அன்னிபெஸண்ட் அம்மையார். திலகர் பெருமான் உள்ளிட்ட தேசபக்தர் பலர் சிறைக் கோட்டம் நண்ணிய பின்னர் (1908) காங்கிர மிதவாதத்தில் அழுந்தி உறங்கியது. அதன் உறக்கத்தைப் போக்கி அதை எழச் செய்தல் வேண்டும் என்ற வேட்கை அன்னிபெஸண்ட் அம்மை யாரிடை உதித்தது. அவ்வேட்கை பெருஞ் சுய ஆட்சிக் கிளர்ச்சி யாகப் பருத்தது. அதன் அடியில் இரண்டு கொள்கைகள் சிறப் பாக நிலவின. ஒன்று பிரிட்டிஷ் தொடர்புடன் சுய ஆட்சி பெறல் வேண்டுமென்பது; மற்றொன்று கிளர்ச்சி நியாய வரம்புக்கு உட் பட்டதாயிருத்தல் வேண்டுமென்பது. இவ்விரண்டு கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்தையும் சென்னை அர சாங்கம் ஐயுற்றது. இயக்கத் தலைவரை 1917ஆம் ஆண்டில் காவலில் வைத்தது. அவர் காவலில் வைக்கப்பட்ட நாள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமுங் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் கூடும்; கூட்டங்கள் அமைதியாக - மிக அமைதியாக - நடைபெறும். ஒரு மூலையிலாதல் சிறு குழப் பமோ துளி இரத்தஞ் சிந்தலோ நிகழவில்லை. சென்னையில் பல வட்டங்களில் விழாக்கள் நடைபெறும். சிலவற்றில் சிறி யேன் சேவையும் சேரும். திலகர் - காந்தி - ஜின்னா பெஸண்ட் அம்மையாரின் பேச்சும், எழுத்தும், மூன்று மாதக் காவலும் இந்தியாவை ஒருமைப்படுத்தின; இங்கிலாந்தில் பார்லிமெண்டில் இந்தியாவுக்கு ஜனப் பொறுப்பாட்சி நல்கப் படும் என்ற அறிக்கையை (1917-ஆகடில்) பிறப்பிக்கச் செய்தன. சிறையினின்றும் வெளி வந்த திலகர் பெருமானது துணை அம்மையார் இயக்கத்துக்குக் கிடைத்தது. காந்தியடிகளும் பிணங்கி நின்றாரில்லை. ஜின்னாவின் இணக்கம் இயக்கத் துக்குப் பேராக்கம் தந்தது. 1917ஆம் ஆண்டின் இறுதியில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸுக்குத் தலைவராக நாடு பெஸண்ட் அம்மையாரைத் தெரிந்தெடுத்தது. காங்கிரஸில் புதுமுறை மற்ற ஆண்டுகளில் காங்கிர கூடிய இடத்தில் மட்டும் தலைவர் முன்னுரை படிக்கப்படும். தலைவர், தனிச் செய்தி யொன்றும் நாட்டுக்கு அனுப்புவதில்லை. முன்னுரையே செய்தி யாகும். 1917ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் பழைய அளவில் நின்ற தில்லை. முதல் நாள் நிகழ்ச்சி சிறிது விரிந்து பரந்தது. தலைவர் முன்னுரையுடன் ஒரு தனிச் செய்தியும் சேர்ந்தது. இரண்டும் முன்னரே நாட்டு மொழிகளில் பெயர்க்கப்பட்டன. காங்கிர மேடையில் முதல் நாள் முன்னுரையும் செய்தியும் படிக்கப்படுங் காலத்தில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே காங்கிர சார்பில் கூட்டங்கள் கூட்டுதல் வேண்டுமென்றும், அக்கூட்டங்களில் முன்னுரையையும் செய்தியையும் அவ்வம்மொழியில் படித்துக் காட்டல் வேண்டுமென்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வேற்பாட்டின்படி வினைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தியா முழுவதும் காங்கிர மேடையாயிற்று. இப்புதுமையைச் சென்னை பெறாமலிருக்குமோ? பெருந் தலைவர் பலர் கல்கத்தா நோக்கினர். அன்று சென்னையில் பெஸண்ட் அம்மையாராக நின்று கடனாற்றும் பணி என்னுடையதாயிற்று. திலகர் முதலியோர் திலகர், பாலர், கெல்கார், கபர்தே, தேஷ்பாண்டே ஆகிய ஐவரைக்கொண்ட ஒரு குழு கொழும்பு வழியாக இங்கிலாந்து செல்லப் புறப்பட்டது. அக்குழு (30-3-1918) சென்னை சேர்ந்தது. தேச பக்தருக்குச் சென்னை நகரம் வரவேற்பளித்தது. ஊர்வலம் அடையாற்றை நோக்கி இராயப்பேட்டை தேசபக்தன் லிமிடெட் காரியதரிசி சுப்பராய காமத் வீட்டு வழியாகச் சென்றது. தேசபக்தன் நிலையத்தார் தேச பக்தர் ஐவர்க்கும் பூமாலை சூட்டி மரியாதை செய்தனர். யான் திலகருக்குப் பாமாலை சூட்டினேன். அன்று இரவு அடையாற்றிலே ஆல மரத்தடியிலே அன்னிபெஸண்ட் அம்மையார் திலகருக்கும் மற்றவர்க்கும் விருந்தளித்தனர். அவ்விருந்தில் கலந்த என் கண் ணுக்கும் காதுக்கும் திலகர் பெருமான் மேனியும் மொழியும் நல் விருந்தாயின. தேசபக்தர் குழு கொழும்பில் தடுக்கப்பட்டமை யால் பூனாவுக்குத் திரும்பியது. பலநாட் கடந்து திலகர் பெரு மான் ஸர் - வாலண்டியன் சிரால் மீது தொடுத்த வழக்கை நடாத்த இங்கிலாந்துக்கேக அனுமதிக்கப்பட்டார். திலகர் இங்கிலாந்து நண்ணிய செய்தி கேட்டதும் யான் இங்கிலாந்தை மனத்தால் நோக்கி, இங்கிலாந்தேஇந்தியத் தலைவர் திலகரை ஏற்றுக்கொள்; அவர் மொழிக்குச் செவி கொடு என்ற கருத்துப்பட சில பாக்கள் எழுதித் தேசபக்தனில் (20-10-1919) வெளியிட்டேன். அப்பாட ல்கள் உரிமைவேட்கை அல்லது நாட்டுப் பாடல் என்ற நூலில் வெளியாகி யிருக்கின்றன. சத்தியாக்கிரகம் திலகர் பெருமான் இந்தியாவில் இல்லாத காலத்தில் இந்தியச் சட்ட சபையில் ரௌலட் மசோதா உருவாயிற்று. அது சட்டமாகுங் குறி தோன்றியது. எழுந்தார் காந்தியடிகள்; பொங் கியது ஆத்ம சக்தி. மசோதா சட்டமாதல் கூடாது என்று அப் பொழுது இராஜப் பிரதிநிதியாயிருந்த லார்ட் செம்பர்டுக்கு மகாத்மா காந்தி விண்ணப்பஞ் செய்தார்; எச்சரிக்கையும் வழங்கினார். லார்ட் செம்பர்ட் காதுகள் மரமாயின. காந்தி யடிகள் சத்தியாக்கிரகத்தைக் கருத்திலிருத்தித் திக்விஜயஞ் செய்தனர்; அராஜகக் கூட்டம் பெரிய இந்தியாவில் எம்முடுக்கி லாதல் இருக்கும். அச்சிறு கூட்டத்தின் பொருட்டு மனித உரிமையையே கல்லத்தக்க ஒரு கொடுஞ் சட்டத்தை நிறுவ அரசாங்கம் முயல்வது தவறு. விசாரணையின்றி மக்களைத் தண்டனை புரிவது நாகரிகமாகாது. மசோதா சட்டமாயின் சத்தியாக்கிரகம் துவங்கப்படும்; சித்தமாயிருங்கள் என்ற கருத்தை வெளியிட்டு வந்தனர். சத்தியாக்கிரகத்துக்கு நாட்டைப் பண்படுத்த வேண்டுமென்பது காந்தியடிகளின் உட்கிடக்கை. அடிகள் சென்னை நோக்கினர். காந்தி யடிகள் சந்திப்பு தேசத் தொண்டுக்கென்று யான் சேலம் சென்றிருந்தேன்; அரக்கோணத்தில் காந்தியடிகளைச் சந்திப்பேன் என்று நண்ப ரிடஞ் சொன்னேன். தலைவர் விஜயராகவாச்சாரியார் ஒரு முடங்கல் தீட்டிக் கொடுத்தனர். அதைத் தாங்கி யான் (18-3-1919) அரக்கோணம் அடைந்தேன். காந்தியடிகளை எதிர்நோக்கி நின் றேன். பம்பாய்மெயில் ஓடி வந்தது. அஃது என் வேட்கையைத் தீர்ப்பதுபோல் வந்தது. ஆருயிர்க் காந்தியடிகளைத் தேடிக் கண்டேன்; வணக்கஞ் செய்தேன்; முடங்கலை நீட்டினேன். அடிகளை அரிச்சந்திரனோ புத்தரோ திருவள்ளுவரோ என்று மனம் நினைத்தது. மகாத்மா முடங்கலைப் படித்து தேசபக்தன், எம்மொழிப் பத்திரிகை என்று வினவினர். தமிழ்ப் பத்திரிகை என்றேன். நீங்கள் பட்டதாரியா என்று இரண்டாவது கேள்வி பிறந்தது. அதற்கு, யான் பட்டதாரியல்லன்; மெற்றிகுலேஷன் வரை ஆங்கிலம் பயின்றவன். தமிழாசிரியனா யிருந்தவன். எனது ஆங்கில அறிவு மொழி பெயர்ப்பளவில் பயன்பட்டு வருகிறது. பெரிதும் தொழிலாளர் கூட்டங்களிலும் பெஸண்ட் அம்மையார், வாடியா முதலியோர் பேச்சுக்கள் என்னால் மொழி பெயர்க்கப் படும் என்று பதிலிறுத்தேன். என் பேச்சை மொழிபெயர்ப் பீரா? என்று கேட்டார். தொழிலாளர் சார்பில் கூடுங் கூட்டத்தில் யானே மொழிபெயர்ப்பாளனாக இருப்பேன். மற்றக் கூட்டங்களில் எப்படியோ என்று கூறினேன். நீங்கள் (Translater) மொழி பெயர்ப்பாளர், என்று அடிகள் அருளினர். என்னைக் காண நேரும் போதெல்லாம் அடிகள், மொழி பெயர்ப்பாளரே என்று அழைப்பது வழக்கமாகியது. (சில ஆண்டு கடந்து சென்னையில் அடிகளை யான் ஒரு முறை கண்டேன். அப்பொழுதும் அவர், நீங்கள் மொழிபெயர்ப் பாளர் அல்லவா என்று கடாவி நகைத்தனர். அந்நினைவுத் திறம் ரா. கிருஷ்ணமூர்த்தியால் 7-9-1927 1நவசக்தியில் வியக்கப் பட்டது.) எங்கள் பேச்சு வெவ்வேறு துறைகளில் சென்றது. வண்டி சென்னை சேர்ந்தது. அடிகளைக் காணப் பெருங் கூட்டம் காத்திருந்தது. யான் அக்கூட்டக் கடலை அரிதில் நீந்தித் தேச பக்தன் நிலையம் நண்ணினேன்; காந்தியடிகள் அன்பில் ஆடிய மனங்கொண்டு ஆசிரியக் கட்டுரை வரைந்தேன். திலகர் பவனம் அந்நாளில் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் திலகர் பவனத்தில் வதிந்தனர். காந்தியடிகள் அங்கேயே தங்கி னர். திலகர் பவனம் தேசபக்தன் நிலையத்துக்கு அணித்தே யுள்ளது. அதனால் அடிகளை அடிக்கடி கண்டு உறவாடும் பேறு எனக்கு வாய்த்தது. திலகர் பவனத்தில் தமிழ் நாட்டுத் தேச பக்தர் குழாமே திரண்டிருந்தது. காந்தி அடிகள் திலகர் பவனத்தில் திரண்டிருந்த தேசபக்த கூட்டத்தில் பேசினர்; கடற்கரையில் பேசினர்; பிரம்பூரிலும் பட்டாளத்திலும் தொழிலாளர் கூட்டங்களில் பேசினர். பின்னைய கூட்டங்களிலும் மொழிபெயர்ப்புத் தொண்டு என்னால் செய்யப்பட்டது. சத்தியாக்கிரக சபை அடிகளால் சத்தியாக்கிரக சபை ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டது. சத்தியாக்கிரக உடன்படிக்கை அவரால் நன்கு விளக்கப்பட்டது. விரும்புவோர் உடன்படிக்கையில் கையெழுத்திடலாம் என்றனர். பலர் கையெழுத்திட்டனர் யானும் இட்டேன். அடிகள் எங்களை நோக்கி, சட்டம் மீறல் பலவழிகளில் நிகழும். அவைகளில் ஒன்று அரசாங்கத்தார் கட்டளையின்றி அதாவது பதிவின்றிப் பத்திரிகை வெளி யிடுவது. சமயம்நேரும்போது சத்தியாக்கிரகி என்றொரு பத்திரிகை என்னால் வெளியிடப்படும். அதே சமயத்தில் அப் பெயர்கொண்ட ஒரு பத்திரிகை ஈங்கும் வெளிவருதல் வேண்டும். அப்பணிக்கும் ஒரு கூட்டம் தேவை என்று அடிகள் வாய் மலர்ந்தார். கதூரிரங்க ஐயங்கார் உள்ளிட்ட சிலர் அக் கூட்டத்தில் சேர்ந்தனர்; யானும் சேர்ந்தேன். ஏப்ரல் ஆறு மகாத்மா காந்தி தமிழ்நாட்டின் பல இடங்களினின்றும் திரும்பி (31-3-1919) பம்பாய் சேர்ந்தார். அடிகள் தமிழ் நாட்டைச் சுற்றி வந்தபோது (23-3-1919) ஓர் அறிக்கை விடுத்தனர். அதில் ரௌலட் மசோதா சட்ட சபையில் நிறைவேறிவிட்டதென்றும், அஃது இராஜப் பிரதிநிதி சம்மதம் பெற்று வெளியான பின்னர் உறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையைச் சத்தியாக்கிரக நோன்பு நாளாக நாட்டார் கொள்ளல்வேண்டுமென்றும் இன் னின்ன முறையில் நோன்பை ஏற்று நடத்தல் வேண்டுமென்றுங் குறிக்கப்பட்டிருந்தன. ரௌலட் சட்டம் இராஜப்பிரதிநிதியின் சம்மதம் பெற்றதைக் காந்தியடிகள் கேள்வியுற்று, நோன்பு நாள் - ஏப்ரல் ஆறாம் நாள் ஞாயிற்றுக் கிழமை என்று நாளை உறுதி செய்தனர். அத்திருநாளைச் செம்மையாகக் கொண்டாடச் சென்னையில் தக்க முயற்சிகள் உடனே தொடங்கப்பட்டன; ஊக்கத்துடன் தொடங்கப்பட்டன. சென்னையில் எழுச்சி வேலைகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு வட்டத்தின் பொறுப்பு ஒவ்வொரு தனிக் கூட்டத்தினிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று வட்டங்கள் ஒன்று சேர்ந்து சேர்ந்து கடனாற்றவும், எல்லாம் கடற்கரையில் ஒருங்கு திரளவும் முன்னணி வேலைகள் செய்யப்பட்டன. கடற்கரையில் காந்தியடிகள் கோலிய ஒழுங்குப் முறைகளைப் படித்துக் காட்டல், அவைகளை விளக்கஞ் செய்தல், சாந்தம் பொறுமை அஹிம்ஸை ஆகியவற்றை அறிவுறுத்தல் முதலியன நிகழுமென்பதும் தெரிவிக்கப்பட்டது. சுப்பராய காமத்துக்கும் எனக்கும் இராயப்பேட்டை வட்டப் பொறுப்பு அளிக்கப்பட்டது. தொழிலாளர் கூட்டம் தண்டபாணி பிள்ளையினிடத்திலும் என்னிடத்திலும் விடப் பட்டது. அந்நாளில் இரவு பகல் ஓயாது பணி செய்வேன். சலிப்போ சோர்வோ தோன்றுவதில்லை. மேலும் மேலும் ஊக்கமே எழும். அவ்வுள்ளமும் உடலும் மீண்டும் வருமா என்று இன்று எண்ணி எண்ணிப் பார்க்கிறேன். தேசபக்தர் உழைப் பால் சென்னை நன்முறையில் பண்பட்டது. தொழிலாளர் ஒருமைப்பாடும் உறுதியும் பலர்க்கு எழுச்சியூட்டின; சிலர்க்கு எரியூட்டின. எரி துண்டு வெளியீடு களாகவும் சுழன்றது. துண்டு வெளியீடுகள் தொழிலாளர்க்குச் சீற்றமூட்டுமென்றும், அதனால் குழப்பம் உண்டாகுமென்றும் எதிர்பார்த்தவர் ஏமாற்றமே அடைந்தனர். குறும்பர் தலையீடு ஏப்ரல் ஐந்தாம் நாள் மாலையில் ஆங்காங்கே கூட்டங்கள் கூடி நிகழ்ச்சிகளைச் சோதித்துப் பார்க்குமாறு ஏற்பாடு செய்யப் பட்டது. இராஜகோபாலாச்சாரியாரும், ஆதிநாராயண செட்டி யாரும், அரங்கசாமி ஐயங்காரும், சத்தியமூர்த்தியும், யானும் சென்னையைச் சுற்றிவந்தோம். பிரம்பூரில் ஒரு பரந்த வெளியில் தொழிலாளர் கூட்டம் ஈண்டித் துதைந்து நின்றதையும், சிதம்பரம் பிள்ளையும் தண்டபாணி பிள்ளையும் கூட்டத்தில் பேசி அமைதிகாத்ததையும், மாஜிடிரேட்டும் போலீஸாரும் நிலைமையை நோக்கிய வண்ணம் இருந்ததையுங் கண்டோம்; சிலர் தொழிலாளரிடைக் கோபக் கனல் மூட்டிக் குழப்பம் விளைவிக்க முயன்றதையும் உணர்ந்தோம்; ஆதிநாராயண செட்டியாரும் யானும் கூட்டத்துள் நுழைந்தோம். மற்றவர் வேறிடங்களுக்கேகினர். தோழர்களே! உங்கள் கூட்டம் அலை யற்ற கடலாயிருக்கிறது. இக்காட்சி கண்டு யான் மகிழ்வெய்து கிறேன். நீங்கள் சத்தியாக்கிரகிகளாக இருக்கிறீர்கள். இனியும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்களே காந்தியடிகளின் சேனைகள்; சத்தியாக்கிரக வீரர்கள். கலாம் விளைக்கும் நோக் குடன் சிலர் குறும்பு செய்தல் கண்டே செட்டியாரும் யானும் உங்களிடை நுழைந்து வந்தோம். எவர் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் பொறுமையுடன் கேட்டுக் கொள்ளுங்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். சகிப்பு உங்களிடத்தில் நிலைத்து நிற்றல் வேண்டும். அஹிம்ஸா தர்மத்தினின்றும் நீங்கள் வழுவுதல் கூடாது என்று பேசி, வசிஷ்டர், பிரகலாதன், கிறிது, அப்பர் முதலியோர் வரலாறுகளைக் சுருங்கச் சொல்லி, நாளை ஞாயிற்றுக் கிழமை - ஏப்ரல் ஆறாம் நாள் - நோன்புநாள் -என்பது உங்கட்குத் தெரியும். நீங்கள் அமைதியாக நடப்பீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இப்பொழுது சந்தடி இல்லாமல் கலைந்து போங்கள் என்று கூறினேன். கூட்டம் கலைந்தது. நாங்கள் ஏறக்குறைய அரைமணி நேரம் மேடையில் தங்கினோம்; தொழி லாளரிடைப் பொலிந்த அமைதியை நுகர்ந்தோம். பாரதியார் பாட்டு ஏப்ரல் ஆறாம் நாள் மலர்ந்தது. அடிகளின் ஆத்ம சக்தி மணங் கமழ்ந்தது. முன் ஏற்பாட்டின்படி காலையில் இராயப் பேட்டையிலுள்ள பஜனை கோஷ்டிகளும், மற்றவர்களும் தேச பக்தன் நிலையம் போந்தார்கள். அவர்களுடன் சுப்பராய காமத் தும் யானும் ஊர்வலம் வந்தோம்; பிற்பகல் ஸ்ரீபால சுப்பிரமணிய பக்தஜனசபையின் குகானந்த நிலையத்தை அடைந்தோம். சுப்பிரமணியபாரதியார் பஜனை கோஷ்டியில் எங்கேயோ எப்படியோ கலந்து வந்தார். அவரைக் கண்டதும் செவி அவரது பாட்டை விரும்பியது. பாரதியாரைப் பாடுமாறு கேட்டேன். தமிழ்ப் பெருமான் முருகா முருகா... என்று பாடத் தொடங்கி னார். பாட்டு - தமிழ்ப் பாட்டு, - தேனினும் இனிய முருகன் பாட்டு - படத்திலுள்ள ஓவிய முருகனை நகரச் செய்தது. ஓவிய உருவம் வீறுடன் வெளி வருவது போன்ற தோற்றம் உண்டா யிற்று. அன்பர் மெய்கள் அரும்பின; விதிர் விதிர்த்தன; சிலர் மயங்கினர் சிலர் விழுந்தனர்; சிலர் கண்ணீர் உகுத்துத் தம்மை மறந்தனர்; எல்லாரும் ஆனந்தப் பரவசராயினர்; பாரதியார் சித்திரப் பதுமை ஆனார். பாட்டுக்கும் ஓவியத்துக்கும் உள்ள ஒருமைப்பாட்டை யான் கண்ணாரக் கருத்தாரக் கண்டேன். சிறிதுநேரங் கழித்துப் பாரதியார் விடைபெற்றுச் சென்றார். சேனை அச்சமயத்தில் ஒரு பெருஞ் சேனா சமுத்திரம் பொங்கி எழுந்து வந்தது. எந்தச் சேனை? காந்தியடிகள் சேனை-சத்தியாக் கிரகச் சேனை - தொழிலாளர் படை. அப்படையைப் பார்த்ததும் இராயப்பேட்டை வாணிபர் கடைகளைத் திறந்தனர்; வெல் லத்தையுஞ் சக்கரையையும் குவித்தனர்; அவைகளை முறை முறையே தண்ணீரில் கரைத்துப் பானகமாக்கினர்; அப் பானகத்தை மிகச் சிலரே அருந்தினர். பின்னே சைந்யம் இராயப் பேட்டையினின்றும் புறப்பட்டது. யானும் அதைத் தொடர்ந்து சென்றேன். எல்லாரும் கடற்கரையை அடைந்தோம். அங்கே பெருங்கூட்டங் கூடியிருந்தது அதனுள் நுழைதல் இயலவில்லை. தொழிலாளர்க்கென்று ஒரு தனி மேடை அமைக்கப்பட்டது. சிதம்பரம்பிள்ளையும், தண்டபாணி பிள்ளையும், யானும் பேசினோம். ஆண்டவன் எனக்கு அளித்த பெருங் குரல் அன்று நன்முறையில் பயன்பட்டது. அன்று அக்குரல் தன் எல்லையைக் கண்டது என்று இசைப்பேன். சத்தியாக்கிரகி ஏப்ரல் ஏழாம்நாள் சத்தியாக்கிரகிஅரசாங்கப் பதிவு பெறாமல் மகாத்மா காந்தியை ஆசிரியராக் கொண்டு பம்பா யில் வெளிவந்தது. சென்னைச் சத்தியாக்கிரகி ஏப்ரல் பதி னான்காம் நாள் வெளியாயிற்று. (ஆசிரியன்மார்; டி.வி. வேங்கடராம ஐயர், ஜார்ஜ் ஜோஸப், கொண்டா வேங்கடப் பய்யா. வெளியிடுவோர் : எ. கதூரி ரங்க ஐயங்கார்) சத்தியாக்கிரகிகையாலும் சைக்லோடையிலிலும் எழுதப் பட்டமையால், அஃது அச்சுச் சட்டத்தின்கீழ் வாராதென்று அரசாங்கச் சார்பில் பேசப்பட்டதென்று தெரியவந்தது. சத்தியாக்கிரகி யின் ஆசிரியன்மாரும் வெளியிட்டவரும் கைது செய்யப்பட்டாரில்லை. பின்னணிக் கூட்டத்தில் நின்ற எனக்குச் சிறை வாழ்வு கிட்டுமென்று எதிர்பார்த்தேன். அவ்வாழ்வு எனக்குக் கிட்டவில்லை. பஞ்சாப் படுகொலை சென்னைச் சத்தியாக்கிரகி வெளிவருவதற்குள் காந்தி யடிகள் பஞ்சாப்பிலும், டெல்லியிலும் நுழைதல் கூடாதென் றும், அவர் பம்பாயை விடுத்து வெளியேகுதல் கூடாதென்றும் கட்டளைகள் பிறந்தன. டெல்லி, அமிர்தசர, வீரமகம், ஆமதாபாத், கல்கத்தா முதலிய இடங்களில் குழப்பங்கள் நிகழ்ந்தன. பஞ்சாப்பில் இராணுவச் சட்டப்பூதம் எழுந்த தென்றும், பாஞ்சாலத் தலைவர் பலர் நாடு கடத்தப்பட்டா ரென்றும், தேசபக்தர்கள் தரையில் ஊர்ந்து செல்லுமாறு வலி யுறுத்தப்பட்டார்களென்றும், சகோதரிகள் மானபங்கஞ் செய்யப்பட்டார்களென்றும், ஜெனரல் டையர் ஜாலியன் வாலாபாக்கில் பாரத மக்களைச் சுட்டுச் சுட்டுக் கொன்று கொன்று குவித்தானென்றும் பல விதச் செய்திகள் பரவின. எல்லாம் சேர்ந்து நாட்டில் அதிர்ச்சியை உண்டாக்கின. சட்டமீறல் நிறுத்தம் சத்தியாக்கிரகத்தில் துராக்கிரகத்தை நுழைத்தது வட நாடு; தென்னாடன்று. காந்தியடிகள் நிலைமையை நன்கு ஆய்ந்து சிந்தித்துத் தெளிந்து சட்டமீறுதல் நிறுத்தப்பட வேண்டுமென்றும், அஹிம்சை பொறுமை முதலியன போதிக்கப் படல் வேண்டு மென்றும் அறிக்கை (18-4-1919) விடுத்தனர். சட்டமீறல் நின்றது. என்னுள் எழுச்சி பஞ்சநதம் இரத்தநதமாகியதை நாடு மறக்கவில்லை. நாடு அதை நினைந்து நினைந்து உருகிற்று; கனன்றது. தொழி லாளர் உலகில் பரபரப்புப் பெருகிற்று. காந்தியம், கனலையும் பரபரப்பையும் எழுநாவிட்டு எரியச் செய்யவில்லை. காந்தி யடிகளின் சத்தியாக்கிரக அறிவுறுத்தல் அமைதியை வளர்த்தது. பஞ்சாப் படுகொலையைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் எனக்குரிய தொண்டாயின. அத்தொண்டுக்கென்று யான் பிறந்தேனோ பள்ளியை விடுத்தேனோ பத்திரிகாசிரியனா னேனோ காங்கிரஸில் சேர்ந்தேனோ என்றெல்லாம் யான் எண்ணுவேன். பஞ்சாப் படுகொலை சுயராஜ்யத்தை முகிழ் விக்கும் என்று யான் மனமார நம்பினேன்; சுயராஜ்ய வேட்கையில் மூழ்கித் தொண்டாற்றினேன். அத்தொண்டு எனக்குத் தொல்லை விளைக்கும் என்று பலவிடங்களில் பேசப்பட்டது. எனக்கு எவ்விதத் தொல்லையும் விளையவில்லை. பஞ்சாப் படுகொலையைப் பற்றிப் பல அறிக்கைகளும் நூல்களும் வெளிவந்தன. காங்கிர அறிக்கை சம்பத் என்பவ ரால் மொழிபெயர்க்கப்பட்டது. ஏப்ரல் 1919 என்றொரு தனி நூல் சாமிநாத சர்மாவால் இயற்றப்பட்டது. அதற்கும் இதற்கும் யான் முன்னுரை வரைந்தேன். அம்முன்னுரைகளில் எனது அக்கால உணர்ச்சி வெளிவந்துள்ளது. பஞ்சாப் படுகொலையை மறுக்கக் கடற்கரையில் கூட்டங்கள் கூடிய வண்ணமிருக்கும். அக்கூட்டங்கள் பெரிதும் சுப்பிரமணிய சிவாவால் கூட்டப்படும். ஒவ்வொரு கூட்டத் துக்கும் யான் செல்வேன்; டையரின் அரக்கச் செயலையும் ஒட்வியரின் மற ஆட்சியையும் மறுப்பேன். எல்லாவற்றிற்கும் இடந்தந்த லார்ட் செம்பர்டைத் திரும்ப அழைக்குமாறு வலியுறுத்துவேன். அந்நாளில் தமிழ் நாட்டில் கூடிய மகா நாடுகளிலெல்லாம் யான் செம்பர்டை மறப்பதில்லை. அவர் அழைக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றியே வருவேன். திரிச்சியில் (22,23,24-8-1919) இராமநாதபுர ராஜாவின் தலைமையில் கூடிய தமிழ்நாட்டுக் காங்கிரஸிலும், ஈரோட்டில் (11,12-10-1919) லாட் கோவிந்ததா தலைமையில் கூடிய சென்னை மாகாணச் சங்க மகாநாட்டிலும் எதிர்ப்புக்கள் எழுந்தன. அவைகளை வீழ்த்தும் முயற்சியில் பெரும் பங்கு எனக்குக் கிடைத்தது. திலகர் சந்திப்பு லோகமான்ய பாலகங்காதர திலகர் ஸர் வாலண்டை யன்சிரால் மீது தொடுத்த வழக்கை நடாத்திக் கூட்டுக் குழுவின் முன்னர்ச் சான்று பகர்ந்து தாய்நாடு திரும்பினர். அன்னி பெஸண்ட் உள்ளிட்ட தலைவர் பலரும் தத்தம் சான்றைக் கூறி இந்தியாவுக்குப் புறப்பட்டனர். நண்பர் வாடியாவை அமெரிக்கா அழைத்தது. திலகர் அமிர்தசர காங்கிர போவதற்கு முன் னர் அவரது வருகையைச் சென்னை நாடியது. அவர் நாட்டமும் சென்னையை நோக்கியது. திலகரைப் பிரம்பூரில் (17-12-1919) பார்க்கத் தேசபக்தர் சிதம்பரம் பிள்ளையும், சுப்பராய காமத்தும், யானும், வேறு சிலரும் சென்றோம். அக்காலத்தில் பம்பாய் மெயில் பிரம்பூரில் நிற்கும். சிதம்பரம் பிள்ளையும் நாங்களும் லோக மான்யரைக் கண்டோம். அளவளாவினோம். சிதம்பரம் பிள்ளை இது தொழிலாளர் காலம். தாங்கள் செல்வர் மாடியில் தங்கினால் ஏழை மக்கள் தங்களைக் காண இயலாது வருந்துவார்கள். ஆத லால் தாங்கள் எங்களில் ஒருவர் குடிலில் தங்குதற்கு உளங் கொள்ளல் வேண்டும் என்று பெருந்தலைவரிடம் விண்ணப்பஞ் செய்தார். சிதம்பரம்! எனக்கா விண்ணப்பம்? எனக்கு எந்தக் குடிசையாயிருந்தா லென்ன? என்று பதில் பிறந்தது. எங்கட்கு ஆனந்தம் பொங்கியது. வண்டி சென்ட்ரல் டேஷனை அடைந்தது. சென்னை மாகாணமே செறிந்து இந்திய முடிசூடா மன்னருக்கு வரவேற்பளித்தது. தேசபக்தன் லிமிடெட்டின் காரியதரிசி சுப்பராய காமத் வீட்டில் இந்தியச் செல்வம் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அச்செல்வத்துடன் மூன்று நாள் தங்கிப் பணிபுரியுஞ் செல்வத்தை யான் பெற்றேன். பசுவும் கன்றும் முதல் நாள் பகல் இந்தியப் பெருந் தலைவருடன் சிதம் பரம் பிள்ளையும் காமத்தும் யானுமே தனித்திருந்தோம். தேச பக்தன் பத்திரிகை, தொழிலாளர் சங்கங்கள் முதலியவற்றைப் பற்றி நாங்கள் பேசத் தொடங்கினோம். அப்பேச்சைத் தொடர்ந்து பாலகங்காதரர் பல நுண்ணிய கேள்விகள் கேட்டனர். அக் கேள்விகள் வாயிலாக அவர் தென்னாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ள விரும்பியது எங்கட்குச் செவ்வனே விளங்கியது. ஆழமான நுண்மைகளை எளிய முறையில் கேட்டுக் கேட்டு விடைபெறுவதில் லோகமான்யரைப் போன்ற ஒருவரை யான் கண்டதில்லை. அவர்தங் கேள்விகள் அவருடன் நெருங்கிப் பழகுதல் வேண்டுமென்ற வேட்கை எழுப்புவதை யான் அநுப வத்தில் உணரலானேன். சில மணிநேரப் பேச்சில் திலகர் பசு வானார்; யான் கன்றானேன். கூட்டம் பிற்பகல் தென்னாட்டுத் தலைவர்கள் அடங்கிய கூட்ட மொன்று கூடியது. அதிலே திலகர் பெருமான் சிறிது நேரம் பேசினர். தாமும் மற்றவரும் இங்கிலாந்தில் செய்த சேவை, இங்கிலாந்தில் தாம் பெற்ற அநுபவம், வரப்போகுஞ் சீர்திருத்த நிலைமை முதலியன அவரால் சுருங்கிய முறையில் விளக்கப் பட்டன. சில கேள்விகள் பிறந்தன. அவைகட்குத் திலகர் பெரு மானால் அவ்வப்போது செவ்வனிறைகள் இறுக்கப்பட்டன. அவர் இறை இறுக்கும் விரைவு எங்களைப் பிரமிக்கச் செய்தது. தென்னாட்டுத் தலைவர் ஒருவர் திலகர் பெருமானை நோக்கி, நான் தங்களைத் தலைவராகக் கொண்டவன்; தங்கள் அடிச்சுவட்டைப்பற்றி நடந்தவன்; இப்பொழுது ஒதுங்கி வாளாகிடக்கிறேன். காரணம் தாங்கள் பெஸண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் தலைப்பட்டதேயாகும். அவ்வம்மை யாரிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. யுத்த காலத்தில் நாட்டில் பெருங் கிளர்ச்சி எழுமென்று ஊகித்து, அதையொடுக்க வேண்டி, பெஸண்ட் அம்மையார் சுய ஆட்சிக் கிளர்ச்சியில் தாமே வலிந்து புகுந்தார். நாடு ஏமாந்தது. மூன்று மாதக் காவல் என்பது வெறும் நடிப்பு. பெஸண்ட் அம்மையார் அரசாங்கச் சார்புடையவர். தாங்கள் அவ்வம்மையாருடன் கலந்ததைக் குறித்து யான் வருந்தியே நிற்கிறேன் என்று முறையிட்டார். அவர்தம் முறையீடு வேறு சிலர் ஆதரவையும் பெற்றது. பால கங்காதரர் புன்னகை புரிந்து, யான் தனி மனிதர்மீது கருத்துச் செலுத்துவதில்லை. என் தேச விடுதலைக்கு எவர் முயன்றாலும் அவர்தம் முயற்சிக்குத் துணை நிற்பது எனது கடனென உணர் கிறேன். மனிதர் எவராயினுமாக. அவர்தஞ் செயலால் நாட்டில் விடுதலை வேட்கை வளர்கிறதா தேய்கிறதா என்பதைக் கூர்ந்து நோக்குவேன்! வளர்வதாயின் துணை போவேன். தேய்வதாயின் துணை போகேன். அன்னிபெஸண்ட் அம்மையார் உள்ளம் எத்தகையதோ அதை ஆண்டவன் அறிவன். அவ்வம்மையார் நிகழ்த்திவருங் கிளர்ச்சியால் நாட்டில் சுயராஜ்ய வேட்கை வளர்ந்திருப்பது கண்கூடு. யான் விரும்புவது அதுவே. அம்மையார் கிளர்ச்சியைப் போலி என்றும், காவல் வெறும் நடிப்பு என்றுங் கருதுகிறீர்கள். போலியும் வெறும் நடிப்பும் நாட்டில் இவ்வளவு எழுச்சியை யுண்டுபண்ணின எனில் நீங்கள் உண்மையில் நின்று கிளர்ச்சி செய்தால் - சிறையில் புகுந்தால் - அவை எவ்வளவு எழுச்சியை உண்டுபண்ணுவனவாகும்? ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள்? உண்மையை உளங்கொண்டு வாருங்கள்; வெளியே வாருங்கள். கிளர்ச்சி செய்யுங்கள்; சிறை புகுங்கள். வீண் பேச்சு எற்றுக்கு, பெஸண்ட் அம்மையார் கிளர்ச்சியால் நலம் விளைகிறதா? தீமை விளைகிறதா? என்று பார்த்தேன்; நலம் விளைதல் கண் டேன். துணை போகிறேன். நாளைத் தீமை விளைவதைக் கண் டால் அவர்தங் கிளர்ச்சிக்குத் துணை போகேன்; அதை ஒரு நொடியில் சாய்க்க முயல்வேன் என்று முழங்கினர். இன்னோர் இளைஞர் எழுந்து, தாங்கள் பழைய கொள் கையை விடுத்து ஏன் சட்டவரம்புக் கிளர்ச்சியில் சேர்ந்தீர்கள்? என்று வினவினர். பழைய கொள்கை எது? என்று திலகர் கடா வினர். அதைச் சொல்ல இளைஞர்க்கு நா எழவில்லை. அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். போலீஸார் இருந்தால் என்ன? அஞ்சாதேயும்; சொல்லும் என்று மஹாராஷ்டிர சிங்கம் கர்ச் சித்தது. இளைஞர் மௌனியானார். கூட்டம் நகைத்தது. இளைஞரே! இப்பொழுது எழுகிறேன். என் பின்னே வர எத்துணை இளைஞர் சித்தமாயிருக்கிறார்? நாட்டின் தற்கால நிலைமை சட்ட வரம்புக் கிளர்ச்சிக்கு இடந் தந்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி மேலேபோக முயல்வதே அறிவுடைமை என்று அறிவுறுத்தினர். மாலை கடற்கரையில் கூட்டம்; பெருங் கூட்டம். சென்னை மாகாணமே லோகமான்யரை வாழ்த்தியது. திலகர் பெருமான் அரியதொரு சொற்பொழிவு நிகழ்த்தினர். அதில் அக்கால அரசியல் உலகமே திரண்டு நின்றது. சமயப் பேச்சு இரவு திலகர் ஒரு நாற்காலியில் சாய்ந்தார். சுப்பராய காமத்தும் யானும் அடியில் அமர்ந்தோம். காமத் வாய் என் னென்னவோ பேசியது. என் மனம் அப்பேச்சில் படியவில்லை. அதைக் குறிப்பால் உணர்ந்த பாரதத் திலகம், என்ன! உமது மனம் எங்கள் பேச்சில் ஈடுபடவில்லை. போலும் என்றது. தங்க ளுடன் கலந்து பேசும் வாய்ப்பு என்றே கிடைக்கப் போகிறது! யான் சமய சம்பந்தமாகச் சிறிது நேரம் பேசலாம் என்று வந்தேன். இவ்வேளையில் காமத் நா என்னென்னவோ நவில்கிறது என்றேன். பூனா நகரளித்த புண்ணியம், எனக்கு எல்லாஞ் சமயமே; காமத் பேசுவதும் சமயமே என்று வாய் மலர்ந்தது. காமத் என்னைக் சுட்டி இவர் சமயப் பித்தர் என்று சொன்னார். இந்திய ஞானச் செல்வம், சமயப்பித்து இல்லாத இடத்தில் தேசப்பித்து எப்படி எழும்? தேசபக்திக்குச் சமயப்பித்துத் தேவை. இவரது சமய பக்தியே இவரைத் தேசபக்தன் ஆசிரியனாக்கி யிருக்கும் என்று நினைக்கிறேன் என்று அருளியது. பேச்சு, சமயத்துறையில் திரும்பியது. சிவசீவர் ஒன்றா வேறா கலப்பா என்பதைப்பற்றிப் பலதிறக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. தங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று உரைத்தேன். கலைக் கடல் நகைத்தது. கேள்வி பெரியது; நம் முன்னோர், இவ் வாராய்ச்சியில் பெரும்பொழுது போக்கினர் என்று கலைஞர் கழறியதும், அவர்தம் வாய் சமயஞான மழை பொழியத் துவங்கியது. அரிய அரிய கருத்துக்கள் எளிய ஆங்கிலத்தில் வெளிவந்தன. மணியைப் பார்த்தேன். இன்னும் பேசலாம் என்றார். மேலும் அவர், நம் பழைய சமய நூல்களை அறிவு விருந்துக்கென்று மட்டுங் கற்றலுங் கேட்டலும் போதா வென்றும், அவைகளைப் பயின்ற பின்னர் உலக வாழ்வு வேண்டாமென்று ஒதுங்குதல் கூடாதென்றும், கீதை முதலிய நூல்கள் உரிமையை உணர்த்துவதைக் தெளிந்து அதற்குரிய முயற்சியில் தலைபடுதல் வேண்டுமென்றும், அம்முயற்சி நிஷ்காமிய கர்மமமாக வாழ்வில் மலர்தல் வேண்டுமென் றும், இப்பொழுது தேச விடுதலைக்குத் தொண்டு செய்வது நிஷ்காமிய கர்மயோக மாகுமென்றும், சமயத்தொண்டு வேறு தேசத் தொண்டு வேறுஎன்று கொள்ளலாகாதென்றும், நிஷ் காமிய கர்மமெல்லாம் சமயப் பணிகளாகுமென்றும் அறிவுறுத் தினர். நமது நாட்டுப் பெருவாழ்வை - நிஷ்காமிய கர்ம யோகியை - உறங்குமாறு வேண்டி விடைபெற்றேன். வெலி மாணாக்கர் இரண்டாம் நாள் காலையில் லோகமான்ய திலகர் மஹ ராஷ்டிர சபைக்கும் குஜராத் சபைக்குஞ் சென்று திரும்பினர். அன்று பகல் வெலி கல்லூரி மாணாக்கர் கூட்டம் வாசு தேவாச்சாரியார் தலைமையில் திலகரைக் காண வந்தது. யான் இளமையில் படித்துப் பின்னே தமிழ்ப்பேராசிரியனாய்ப் பணி செய்த வெலி கல்லூரி மாணாக்கர் இவர். இப்பெரியார் வாசுதேவாச்சாரியார்; என் தலைமை ஆசிரியர்; விஞ்ஞானப் பேராசிரியர் என்று அவர்களை அறிமுகஞ் செய்வித்தேன். கல்லூரியின் சார்பில் வாசுதேவாச்சாரியார் நன்மொழி வழங்கி னார்! அதற்குத் திலகர் பெருமான் பொன்மொழி புகன்றார். தொழிலாளர் கூட்டம் சாயங்காலம் திலகரையும் பிறரையும் பிரம்பூர் பட்டாளம் அன்பால் அழைத்தது. நாங்கள் போனோம். சென்னைத் தொழி லாளர் சங்கத்தின் பழைய நிலையத்தில் சென்னைத் தொழி லாளர் உலகமே திரண்டிருந்தது. லோகமான்யரை யான் அழைத்துச் சென்று மேடை மீதுள்ள ஆனந்த பீடத்தில் இருக்கச் செய்தேன். அப்பொழுது திலகரின் பொழிவு எப்படித் திகழ்ந் தது? பாரதத்தாயெனத் திகழ்ந்தது. தொழிலாளர் நாட்டமெல் லாம் திலகரிடமே படிந்தன. தொழிலாளர் உள்ளமெல்லாம் திலகர் கோயிலாயின. யான் என் பெருந் தலைவரை அறிமுகஞ் செய்விக்கும் முகத்தான் என் உள்ளமும் உடலும் உருக முன் னுரை பகர்ந்தேன். நன்மொழிகளும் வாழ்த்துக்களும் சொரிந்தன. பாலகங்காதர மேகம் சொன் மொழி பொழிந்தது. வானமோ நீர் மழை பொழிந்தது. தொழிலாளர் கூட்டம் திலகர் மழையில் மூழ்கியது. விண்மழை நாணுற்று மறைந்தது. திலகர் மீதுள்ள எனது ஆர்வம் முடிவுரையாக வழிந்தது. வழியிலே திலகர் பெரு மான் என் முன்பின் உரைகளின் சாரத்தைத் திரட்டிக் கூறினர். பக்கத்திருந்தவர் தங்கட்குத் தமிழ் தெரியுமா? என்று கேட்டனர். கலியாண சுந்தரம் பேச்சில் உருண்ட சமகிருதச் சொற்களைக் கொண்டு அவர் கருத்துக்கள் இன்ன இன்ன என்று ஊகஞ் செய் தேன் என்றார். திலகர் பொருட்டே அன்று என் நாவில் சம கிருதச் சொற்களும் சொற்றொடர்களும் ஏராளமாக உருண்டன. திலகர்க்கென்று இளமையில் யான் சமகிருதத் சொற்களையும் சொற்றொடர்களையும் சிறிது பயின்றனன் போலும். அரசியல் பேச்சு இரவு திலகர் பெருமானைச் சிறு கூட்டம் சூழ்ந்து நின்றது. யானும் அவரை அணுகினேன். அவ்வேளையில் அரசியல் சம்பாஷணை உச்சநிலை யடைந்திருந்தது. அதைக் குலைக்க என் உள்ளம் எழவில்லை. அவ்வரிய சம்பாஷணை என்னையுந் தன்வயப்படுத்தியது. மாண்டேகு - செம்பர்ட் சீர்திருத் தத்தைப்பற்றிப் பல கேள்விகள் கேட்டேன். அவைகட்குப் பொருந்திய விடைகள் பிறந்தன. ஒத்துழையாமை விவாதம் பெரும்பொழுதைப் போக்கியது. யான் மெல்ல மெல்ல மார்க்கிஸத்தைத் தொட்டேன். லோகமான்யர் மார்க்கிஸத் தின் மீது இந்தியா நாட்டஞ் செலுத்துங் காலம் வரலாம். அதற்குள் மார்க்கிஸம் பலவித மாறுதலடையும். இந்தியா எதையும் தனது இயற்கையாக்கியே ஏற்கும் பண்புடையது. இப்பொழுதே விடுதலை பெறவேண்டும். அதைக் குறிக் கொண்டு உழைப்பதே நல்லது. என்றார். ஒருவர், ஹிந்து - முலிம் ஒற்றுமை நிலைக்குமா என்று வினவினர். அதற்குப் பெருந்தலைவர், ஹிந்து என்றும், முலிம் என்றும் ஏன் பிரித்துப் பேசுகின்றீர்? நம் நாட்டார் அனைவரும் ஹிந்துக்களே. அவருள் பல மதத்தவர் இருக்கின்றனர். அவரெல்லாம் ஓர் இனம் (Nation) இடையில் எப்படியோ பன்மை உணர்வு நுழைந்தது. அதைப் போக்கி ஒருமை உணர்வை உண்டுபண்ணவே முயலல் வேண்டும் என்று பதிலிறுத்தார். நடுநிசி அடர்ந்தது. கூட்டங் கலைந்தது. மன்னிப்பு? மூன்றாம் நாள் பாலகங்காதரரைப் பார்க்கப் பலர் வந்தனர். அவரும் பலரைப் பார்க்க அங்கும் இங்கும் போனார். காலையிலும் பகலிலும் அவருடன் கலந்து பேசுதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. மாலையில் சிறிது ஓய்வு கிடைத்தது. பெரு மான், காமத்தையும் என்னையும் அழைத்தார். யான் புறப்படப் போகிறேன். மூன்று நாள் உங்கள் விருந்தினனா யிருந்தேன். உங்கள் அன்புக்கு எளியனானேன். நீங்கள் இருவரும் பூனாவுக்கு வாருங்கள்; யானும் உங்களுடன் மீண்டும் சென்னைக்குத் தொடர்ந்து வர எண்ணுகிறேன் என்றார். யான், நாங்கள் மன மொழி மெய்களால் தங்கட்குப் பணியாற்றும் பேறு பெற்றோம். ஏதேனும் தவறுதல் உற்றிருந்தால் மன்னிக்க வேண்டும் என் றேன். அன்பிலே தவறுதல் ஏது? மன்னிப்பு ஏது? என்று திலகர் என் முதுகை வருடினர். நாங்களெல்லாம் சென்ட்ரல் டேஷனைச் சேர்ந்தோம். மேடையில் தேசபக்தர் ஈட்டம் குழுமியிருந்தது. மகரிஷி திலகர் புன்முறுவலுடன் பேசிக் கொண்டிருந்தனர். முதல் மணியடித்தது போய் வருகிறேன் என்றனர். எங்கள் முகங்கள் வாடின. வாட்டமுறாதேயுங்கள், பூனாவை மறவாதேயுங்கள்! அவசியம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டே வண்டியில் புகுந்தார். நாங்கள்கை கூப்பிய வண்ணமிருந்தோம். போய் வரு கிறேன் என்று கை கூப்பினர். திலகருக்கு ஜே என்ற முழக்கம்; வானைப் பிளந்தது. வண்டி புறப்பட்டது. அமிர்தசரஸில் திலகர் 1919ஆம் ஆண்டின் இறுதியில் பாரத மக்களின் இரத்த சரஸைக் கண்ட அமிர்த சரஸிலே காங்கிர கூடியது. அதிலே திலகர் வீரம் வீறிட்டது. செறிந்தது. பஞ்சாப் படுகொலையால் நாட்டில் எழுந்த உணர்ச்சி திலகர் வாயிலாகவே காங்கிரஸில் வெளியாயிற்று. திலகர் காங்கிரஸானார்; காங்கிர திலகரா யிற்று. திலகர் என் செய்வரோ என்று உலகம் உற்றுநோக்கியது. அவர்தம் வருகையைச் சென்னை சிந்தித்த வண்ணமிருந்தது. இந்திய முடிசூடா வேந்து - லோகமான்யம் - பாலகங்காதரம் - வீரத்திலகம் - சென்னையை நோக்கவில்லை. (1-8-1920) விண்ணை நோக்கியது; உறங்கியது; துஞ்சியது. அச்சமயம் யான் தேசபக் தன் ஆசிரிய பீடத்திலில்லை; நவசக்தியைத் தோற்றுவிக்க முயன்று வந்தேன். என் உணர்ச்சி என்னிலே சுழன்றது; கழன்று சுழன்று என்னைப் படுக்கையில் தள்ளியது. அன்னிபெஸண்டுக்கு வரவேற்பு அன்னிபெஸண்ட் அம்மையார் அமிர்தசரஸினின்றும் சென்னை நோக்கி வந்தார். அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்ல முயன்றேன். அம்முயற்சிக்குக் கேடுசூழ ஒரு கூட்டம் புறப்பட்டது. அதற்குத் தலைவர் தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை. அம்மையாரைக் காங்கிர சார்பில் வரவேற்க முயன்றேனில்லை; தொழிலாளர் சார்பாகவே வரவேற்க முயல் கிறேன் என்று அவர்க்கு விளக்கங் கூறினேன். அவர் எனது கூற்றுக்குச் செவி சாய்க்கவே இல்லை. மறுப்புக் கூட்டங்களும் துண்டு வெளியீடுகளும் சென்னையில் மலிந்தன. அம்மையார் (11-1-1920) சென்னை சேர்ந்தனர். சென்ட்ரல் டேஷன் தொழி லாளர் மயமாகியது. ஒரே வெள்ளக் காடு. ஊர்வலம் லாட் கோவிந்ததா அரண்மனை வரை வந்தது. அங்கே கேசவப் பிள்ளை தலைமையில் அம்மையார்க்கு வரவேற்பு மொழிகளும் வாழ்த்து மொழிகளும் வழங்கப்பட்டன. அம்மையார் அளித்த பதிலில், இத்தகைய அன்பலர்ந்த ஊர்வலத்தையும் வரவேற்பை யும் யான் வாழ்க்கையில் கண்டதே இல்லை என்று குறிப்பிட்ட னர். அம்மையாரும் வாடியாவும் இங்கிலாந்தில் இந்தியத் தொழிலாளர் பொருட்டு நிகழ்த்திய தொண்டையும், வாடியா அமெரிக்கா சென்றிருத்தலையும் விளக்கி நன்றி கூறினேன். சிதம்பரம் பிள்ளை வாழ்த்து அன்று மாலை கடற்கரையில் ஒரு கூட்டங் கூடியது. அதில் நண்பர் சிதம்பரம் பிள்ளை பேசினர். அவர் வாய் பெஸண்ட் அம்மையாரையும் என்னையும் வாழ்த்தியது. எப்படி வாழ்த்தியது? வசைமலர்களால் வாழ்த்தியது. அம்மலர்கள் பத்திரிகை நிருபநேயர்களால் திரட்டப்பட்டன. அம்மையார்க் கும் எனக்கும் அனுப்பப்பட்டன. அடுத்தநாள், அந்தி வேளை யில் அன்னிபெஸண்ட் அம்மையார் வண்டி தேசபக்தன் நிலையத்தின் முன்னே காணப்பட்டது. யான் ஓடி வந்தேன். அம்மையார் என்னை வண்டியில் ஏறுமாறு கூறினர். ஏறினேன். நேற்றைய கடற்கரை நிகழ்ச்சி உமது செவிக்கு எட்டியதா? என்று கேட்டார். எட்டியது என்றேன். யான் பிராட்லாவினிடம் பயின்றவள். எத்தகைய வசைகளையும் யான் தாங்குவேன். நீர் தமிழ்ப் போதாகாசிரியராயிருந்தவர்; புண்ணியத் தொழில் செய்தவர். நேற்றைய வசை மொழிகள் உமது மனத்தைப் புண்படுத்தியிருக்குமே. என் பொருட்டன்றோ புண்படும் நிலை நேர்ந்தது? என்று பரிவுடன் சொன்னார். அக்காட்சி தாய் தன் நோயைக் கருதாது, சேயின் நோயைக் கருதி உருகுவது போலத் தோன்றியது. சிதம்பரம் பிள்ளை என் சகோதரர். அவர் தம் வசைமொழிகளை யான் வாழ்த்து மொழிகளாகவே கொண் டேன். என் மனம் புண்படவில்லை. உலகுக்கும் நாட்டுக்கும் பல வழியிலும் நலம் புரிந்துவரும் ஒருவர் பொருட்டு என் போன்ற சிறுவர் வசை மொழிகளைத் தாங்குதல் பெரியதன்று என்று யான் அம்மையார்க்கு ஆறுதல் கூறினேன். அப்பொழுது யான் சத்தியாக்கிரக அறிக்கையிலும், சத்தியாக் கிரகி கூட்டத்திலும் முறையே கையெழுத்திட்டதனாலும் சேர்ந்ததனாலும் தங்கள் தலைமையை யான் ஏலா தொழிந்தேன் என்று நினையாதிருக்கு மாறு வேண்டுகிறேன். அரசியல் துறையில் மட்டும் யான் தங் களைத் தலைவராகக் கொண்டவனல்லன். யான் பல துறை களில் தங்கள் அடிச் சுவட்டைப்பற்றி நடப்பவன் என்று முறை யிட்டேன். நீர் என் கட்டுக்கு அடங்கு தல் வேண்டுமென்ற நியதி இல்லை. உமக்கு உரிமை உண்டு என்று அம்மையார் சொல்லி, என்னைப் பொறுத்த வரையில் சட்டமீறலை நாகரிகமாக யான் கொள்ளமாட்டேன். அது நாளடைவில் கொள்ளை கொலை புரட்சி முதலிய தீமைகளை நாட்டிடைப் புகுத்துவதாகும் என்று தங்கருத்தை வெளியிட்டனர். யான் விடைபெற்றேன். ஒத்துழையாப் போர் பாஞ்சாலத்தில் எழுந்த துராக்கிரகம் காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போரை நிறுத்தச் செய்தது. பின்னே பஞ்சாப் படுகொலைக்கும் கிலாபத்துக்கும் நியாயம் பிறவாமை காந்தி யடிகளின் கருத்தை அப்போர் மீது செலுத்துமாறு அவரைத் தூண்டியது. சத்தியா கிரகம் ஒத்துழையாமைப் போராக உருக் கொண்டது. காங்கிர அப்போரை நடத்த உடன்பட்டது. போர் துவங்கியது. தென்னாட்டில் அப்போரில் எவ்வளவு ஈடுபட வேண்டுமோ அவ்வளவும் யான் ஈடுபட்டேன். சிறை வாழ்வு பல்லாயிரம் மக்கட்குக் கிடைத்தது; காந்தியடி கட்குங் கிடைத் தது. அவ்வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை. விவரம் தொழிலாள ரியக்கக் குறிப்புக்களில் பொறித்துள்ளேன். சுயராஜ்யக் கட்சி காந்தியடிகள் சிறைக்கோட்டத்தில் வதிந்தபோது, விடு தலையடைந்து வெளிவந்த தேசபக்தருக்குள் பலதிறக் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. அவ்வேளையில் 1922இல் கயையில் தேசபந்து சித்தரஞ்சனதா தலைமையில் காங்கிர கூடியது. தேசபந்து தா மோதிலால் நேரு உள்ளிட்டவர், நாட்டில் தோன்றியுள்ள சோர்வை முன்னிட்டு ஒத்துழையாத் திட்டத்தில் சில மாறுதல் நிகழ்த்த முயன்றனர். இராஜ கோபாலாச்சாரியார் உள்ளிட்டவர் காந்தியடிகள் சிறையிலுள்ளபோது எவ்வித மாறுதலும் நிகழ்த்தல் கூடாதென்று வாதம் புரிந்தனர். காங் கிர மாறுதலை ஏற்கவில்லை. தேசபந்துவின் முடிவுரையில், வரும் ஆண்டுக்குள் மாறுதல் நிகழ்த்த முயன்றே தீர்வேன் என்ற சூளுரை பிறந்தது. சித்தரஞ்சனதாஸால் சுயராஜ்யக் கட்சி என்றொரு விதை காங்கிரஸில் விதைக்கப்பட்டது. சட்ட சபையை விலக்குதல் கூடாதென்பதும், அதைப்பற்றி, அதிலே முட்டுக்கட்டையிட்டு, இரட்டை ஆட்சி இயக்கத்தை ஒடுக்குதல் வேண்டுமென்பதும், அதற்குக் காங்கிர இடந்தரல் வேண்டு மென்பதும், சுயராஜ்யக் கட்சியின் உள்ளக்கிடக்கை. அக்கட்சியை எதிர்க்க ஒரு கூட்டம் நாட்டில் திரண்டது. அதன் உயிர்நாடி தமிழ் நாட்டில் நிலவியது. என் கருத்து யான் மாறுதல் வேண்டாத கூட்டத்தையே ஆதரித்தேன். ஏன்? காங்கிரஸில் பிளவு கூடாதென்பது என் கருத்து. இன்று காங்கிரஸில் சுயராஜ்யக் கட்சிக்கு இடந்தந்தால் நாளை வேறு வேறு கட்சிகள் அதில் இடம்பெறும் நிலைமை நேருமென்றும், அதனால் பலவிதக் களைகள் முளைத்து முதலையே அழிக்கு மென்றும், சுயராஜ்யக் கட்சிக் கொள்கையைக் காங்கிரஸே ஏற்கலாமென்றும், அல்லது சுயராஜ்யக் கட்சி காங்கிரஸுக்குப் புறத்தேநின்று தன் கடனை ஆற்றலாமென்றும், அதைக் காங் கிரஸுக்குள் வளர விடுதலாகாதென்றும், காங்கிரஸார் எண்ணம் ஆக்க வேலைமீது செல்லாது சுயராஜ்யக் கட்சிமீதே சென்று கொண்டிருக்குமென்றும் யான் பிரசாரஞ் செய்யலானேன். தியாகத்தின் மாண்பு தென்னாட்டில் மாறுதல் வேண்டாமைக்குப் போதிய பிரசாரஞ் செய்யப்படவில்லை. அப்பிரசாரத்தில் முனைந்து நின்றவர் இராமசாமி நாயக்கர் உள்ளிட்ட சிலரே. அதனால் தேசபந்துவின் கிளர்ச்சி வடநாட்டிலும் தென்னாட்டிலும் ஆக்கம் பெற்றது. சுயராஜ்யக் கட்சிக்கு ஆக்கந் தேடியது அக் கட்சியின் கொள்கைமட்டுமன்று. பின்னை எது? தேச பந்துவின் தியாகமும் உடன்சேர்ந்து சுயராஜ்யக் கட்சிக்கு ஆக்கந்தேடியது. தியாகத்தின் பெருமை தேசபந்து வாயிலாக நன்கு விளங்கியது. தொழிலாளர் தேசபந்து (30-5-1923) சென்னை போந்தபோது பல இடங் களில் அவர்தம் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. சென்னைத் தொழிலாளர் சங்கத்திலும் அவர் பேச ஒருப்பட்டனர். ஆனால் அவர் தொழிலாளர் கூட்டத்துக்கு வந்தாரில்லை. காரணமென்ன? சென்னைச் சுயராஜ்யக் கட்சியார் சிலர். சென்னைத் தொழி லாளர் சங்கம் மாறுதல் வேண்டாமைப் பிரசாரங் கேட்டுக் கேட்டு அம்மயமாகியது. அக்கூட்டத்துக்குத் தாங்கள் போனால் தங்கள் முன்னிலையிலேயே தங்கள் கொள்கைக்கு மாறுபட்ட தீர்மானம் நிறைவேறும். அஃது எங்கள் பின்னைய முயற்சிக்கு இடர் விளைக்கும் என்று சொன்னமை தேசபந்துவின் வரு கையைத் தகைந்தது என்று கேள்விப்பட்டேன். வேறு பல காரணங்களும் வெளிவந்தன. தொழிலாளர் சங்கம் தேசப்பந்து வின் பேச்சைக் கேட்கவே விரும்பியது. சுயராஜ்யக் கட்சிக்கு மாறுபட்ட தீர்மானமொன்றை நிறைவேற்றத் தொழிலாளர் கனவிலுங் கருதியதில்லை. வீண் ஐயம். தா வெற்றி சித்தரஞ்சனதாஸர் முயற்சி, காங்கிர கூடுவதற்குள் டெல்லியில் செப்டம்பரில் மௌலானா அபுல்கலாம் அஜாத் தலைமையில் ஒரு தனிக் காங்கிரஸைக் கூட்டுவித்தது. விரை வுக்குக் காரணம் சட்டசபைத் தேர்தல் நெருக்கேயாகும். தனிக் காங்கிர சுயராஜ்யக் கட்சியுடன் ஒன்றவில்லை. ஆனால் அக்கட்சி தன்னுள் நிலவுவதற்குத் தனிக் காங்கிர இடந் தந்தது. சுயராஜ்யக் கட்சி தனித்து நிற்றல் கூடாதென்பதும், எவ்வழியிலாதல் அது காங்கிர சார்பைப் பெறுதல் வேண்டு மென்பதும் தேசபந்துவின் விருப்பம். அவ்விருப்பம் நிறை வேறிற்று. எப்படியோ அவர்தம் சூளுரை ஓராண்டுக்குள் வெற்றிபெற்றது. டெல்லி தனிக் காங்கிர பெரும்பிழை செய்த தென்று யான் தமிழ்நாட்டில் முழக்கஞ் செய்தேன். நவம்பரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. சுயராஜ்யக் கட்சிக்குச் சிலவிடங்களில் நல்ல வெற்றி விளைந்தது. சென்னை மாகாணத் தில் சுயராஜ்யக் கட்சிச் சார்பில் பெரும்பான்மையோர் தேர் தலில் ஈடுபட்டாரில்லை. ஈடுபட்ட அளவில் வெற்றியே விளைந்தது. 1923ஆம் ஆண்டு இறுதியில் காக்கிநாடாவில் மௌலானா மகமத் அலி தலைமையில் காங்கிர கூடியது. அது டெல்லியுடன் சமாதானஞ் செய்துகொண்டது. கயையில் வீறி எழுந்த எதிர்ப்பு காக்கிநாடாவில் எழவில்லை. காங்கிர தான் தனித்து நின்று சுயராஜ்யக் கட்சி தனக் குள் நிலவுதற்குமட்டும் இடந்தந்தது தவறு என்றும், சுயராஜ்யக் கட்சியின் கொள்கையைக் காங்கிரஸே ஏற்று நடக்க உளங் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் யான் எழுதியும் பேசியும் வந்தேன். அதனால் பழைய ஒத்துழையாமை மீண்டும் உயிர்த் தெழுதற்கு வழியுண்டாகுமென்பது என் உட்கிடக்கை. எனது எழுத்துக்கும் பேச்சுக்கும் தமிழ்நாடு செவி சாய்த்தது. மாறுதல் வேண்டாதார் திக்கற்றவராயினர். அவர் நெஞ் சங்கள் சுழன்றன. அவர்தம் எண்ணமெல்லாம் காந்தியடி களிடஞ் சென்றன. எண்ண அலைகள் (5-2-1924) காந்தியடிகளை விடுவித்தன. நாடு கடத்தல் காந்தியடிகள் நாட்டை நோக்கினார்; தாம் எழுப்பிய நிலையம் குலைந்ததைக் கண்டார். அக்காட்சி அவர்தங் கொள் கையையோ உறுதியையோ மாற்றவில்லை; சுயராஜ்யக் கட்சியை வீழ்த்தும் முயற்சியிலும் அவரைத் தலைப்படுத்த வில்லை. காந்தியடிகள் மீண்டும் நாட்டைப் பழைய நிலைக்குக் கொணர் தற்கு ஆக்கத் தொண்டில் கருத்திருத்தினார். அந் நிலையில் வங்க அரசாங்கம் சுபாஷ் சந்திரபோ உள்ளிட்ட தேசபக்தர் பலரைத் திடீரென நாடு கடத்தியது. அச்செயல் காங்கிரஸுக்குள் ஒருமைப் பாட்டை விழைத்தது. அதனால் காந்தி - தா - நேரு - உடன் படிக்கை முகிழ்த்தது. அவ்வுடன் படிக்கையால் சுயராஜ்யக் கட்சி மறையவில்லை. ஆனால் காங்கிரஸுக்குள் கனன்றிருந்த எதிர்ப்பு ஒழிந்தது. காங்கிர கதர்த் தொண்டில் பெருங் கவலை செலுத்தியது. நூல் சந்தா விதித்தது. அஃது எனக்குத் தலைநோயாகியது. விளைவு சுயராஜ்யக் கட்சி சட்டசபைகளில் என்ன வேலை செய் தது? அக்கட்சி மத்திய மாகாணத்திலும் வங்காளத்திலும் சட்ட சபையில் முட்டுக்கட்டையிட்டு இரட்டை ஆட்சியைக் கொன் றது; இந்தியச் சட்டசபையில் செல்வாக்குடையதாயிற்று. ஸ்ரீநிவாச ஐயங்கார் தலையீடு சுயராஜ்யக் கட்சியின் சிறிய, வெற்றி எ. ஸ்ரீநிவாச ஐயங்காருக்குப் பெரிய ஊக்கமூட்டிற்று. அவ்வூக்கம் முதலில் நகரசபையைப் பற்றிக் காங்கிர மயமாக்க வேண்டுமென்ற வெறியாகியது. ஸ்ரீநிவாச ஐயங்கார் வெறிகொண்டு உழைத்தார் என்று கூறல் மிகையாகாது. அவர்தம் முயற்சிக்கு யானும் துணை நின்றேன். வெற்றிமேல் வெற்றி விளைந்தது. அவ்வெற்றி பிற்போக்குக் கட்சியினரை விழி புரளச் செய்தது; அதிகார வர்க்கத்தை நடுக்குறுத்தியது; மாகாணத்தைத் தட்டி எழுப்பி யது. மாகாண முழுவதும் ஆங்காங்கே தல தாபனங்க ளெல்லாம் காங்கிர மயமாகத் தலைப்பட்டன. சட்டசபை ஏன் இவ்வண்ணமாதல் கூடாது என்ற உணர்வு மக்களிடை எழுந்தது. அவ்வெழுச்சியைப் பயன்படுத்தும் முறையில் எங்களால் பிரசாரஞ் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மகாநாடு அவ்வேளையில் (15,16-11-1924) திருவண்ணாமலையில் இராமசாமி நாயக்கர் தலைமையில் தமிழ் நாட்டுக் காங்கிர கூடியது. அம்மகாநாட்டுத் தீர்மானங்களில் முடியாயிலங்கியது சட்டசபை நுழைவைப்பற்றியது. அத் தீர்மானத்தை எதிர்த்து வீழ்த்தச் சிறைசென்ற செல்வங்களெல்லாம் முனைந்து நின்றன. தீர்மானத்தைக் கொண்டு வரும் பொறுப்பை எவர்மீது சுமத்து வது என்ற சிந்தனை பெரியதாகியது. முடிவில் அப்பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டது. யான் சுமையை ஏற்றுக்கொண்டேன். ஏன்? காலத்துக்கேற்ற தொண்டு செய்வதில் பின்னிடுதல் கூடா தென்பது எனது எண்ணம். சட்டசபை நுழைவும் முட்டுக் கட்டையும் பழைய ஒத்துழையாமையை உயிர்ப்பிக்குமென்ற உறுதி என்னுள் ஊறிக்கொண்டே இருந்தது. அவ்வெண்ணமும், இவ்வுறுதியும் என்னைச் சுமையைத் தாங்கச் செய்தன. காக்கி னாடா - தீர்மானமும், காந்தி - தா - நேரு - உடன்படிக்கையும் என் மனச் சான்றுக்குப் பக்கத் துணையாக நின்றன. தீர்மானத்தை மகாநாட்டின் முன்னே கொண்டு வந்தேன். கால நிலை, நாட்டு நிலை, அரசியலில் பிடிவாதங் கூடாதென்பது, ஆட்சிமுறையை இயங்கவிடாமை யும் ஒத்துழையாமையின் கூறுஎன்பது, சட்டசபையைப் பற்றிக் காட்டினால் நாட்டின் வாக்காளரில் பெரும்பான்மையோர் காங்கிர சார்பினரா யிருத்தல் அரசாங்கத்துக்கு நன்கு புலனாகுமென்பது முதலிய வற்றை விளக்கி, இப்போதைய நிலைமையில் ஆக்க வேலை யுடன் சட்டசபையைப்பற்றி முட்டுக்கட்டையிட்ட பின்னரே பழைய ஒத்துழையாமை எழுதற்கு இடமுண்டாகும். ஆதலின் ஒத்துழையாமை உள்ள முடையோர் - அதில் உறுதியுடையோர் - அதை விரைவில் உயிர்ப்பிக்க வேண்டுமென்ற வேட்கையுடை யோர் - இத் தீர்மானத்தை ஆதரிக்க முன்வருதல் வேண்டும். இல்லையேல் காங்கிரஸின் ஆக்கம் நாளுக்குநாள் குறைந்து போகும். காங்கிர பெரியது; நாடு பெரியது; சுயராஜ்யம் பெரியது; பிடிவாதம் பெரியதன்று என்று பேசித் தீர்மானத் துக்கு ஆதரவு நல்குமாறு பிரதிநிதிகளை வணக்கமாகக் கேட்டுக் கொண்டேன். அத்தீர்மானத்தை யொட்டிய நடைமுறையை ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை. அது (21-11-1924) நவ சக்தியில் சுருங்கிய முறையில் வெளி வந்தது. அதை ஈங்கே தருதல் சாலும். இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் தமிழர் மகாநாடு சிறப்பாக நடந்தேறியது. முதல் நாள் சனிக் கிழமையன்று காலை மகாநாட்டின் அக்கிராசனர் ஈ.வே. இராம சாமி நாயக்கர் வந்து சேர்ந்தார். நாயக்கர் புகைவண்டி நிலையத்தி லிருந்து நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த தெருக்களின் வழியாக மிகுந்த ஜனக்கூட்டத்துக்கிடையே ஊர்வலமாகத் தமது விடு திக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிற்பகல் சுமார் 2 மணிக்கு, தோரணங்களாலும் பல வர்ணக் கொடிகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்த தகரக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சுமார் 200 பிரதிநிதிகள் விஜயம் செய்திருந்ததுடன் ஆயிரம் பேருக்குமேல் நடவடிக்கைகளைக் கவனிக்க வந்திருந்தனர். இவர் களில் பெண்மணிகள் சுமார் 100 பேர் இருப்பார்கள். மேடையில் வீற்றிருந்தவர்களில் முக்கியமானவர் கீழ்க்கண்டவர்களாவர் :- யாகூப் ஹாஸன், சி, இராஜகோபாலாச்சாரியார், எ. ஸ்ரீநிவாச ஐயங்கார், டாக்டர் பி, வரதராஜலு நாயுடு, திரு, வி, கலியாண சுந்தர முதலியார், டாக்டர் ராஜன், வி, சக்கரைச் செட்டியார், தங்கப்பெருமாள் பிள்ளை, எ. ராமநாதன், கே. சந்தானம், கே.எ. சுப்பிரமணியம், ஹாலாயம், வ.வே.சு. அய்யர், கிருஷ்ணசாமி சர்மா, ராய. சொக்கலிங்கஞ் செட்டியார், இரத் தினசபாபதி கவுண்டர், சுவாமி சகஜானந்தர், அசலாம்பிகை யம்மாள், நாகம்மாள் (நாயக்கரின் மனைவியார்) இராமாமிருதம் அம்மாள் முதலியோர். ஆரம்பத்தில் தேசீய கீதங்களும், தோத்திரப்பாடல்களும் பாடப்பட்ட பின்னர் உபசரணைக் கமிட்டித் தலைவர் காவ்ய கண்ட கணபதி சாதிரிகள் பிரதிநிதிகளை வரவேற்றுப் புலமை நிறைந்ததோர் அரிய பிரசங்கம் செய்தார். கடைசியாக அவர் ஈ.வே. இராமசாமி நாயக்கரை அக்கிராசன பதவிக்குப் பிர ரேபித்துத் தமது உரையை முடித்தார். இப்பிரரேபணையை யாகூப் ஹாஸன், சக்கரைச் செட்டியார், எ. ஸ்ரீநிவாசய்யங் கார், டாக்டர் வரதராஜலு நாயுடு, அசலாம்பிகையம்மாள் முதலியோர் ஆதரித்த பின்னர் விசேஷ கரகோஷத்துக்கிடையே நாயக்கர் அக்கிராசன பீடத்தி லமர்ந்து தமது அக்கிராசனப் பிரசங்கத்தைப் படித்தார். இரண்டாம் நாள் மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீண்டும் மகாநாடு கூடிற்று. முதல்நாள் விஜயம் செய்திருந்தவர்களைத் தவிர கே.வி. அரங்கசாமி அய்யங்கார், எ, சத்தியமூர்த்தி, டி. ஆதி நாராயண செட்டியார், கே. பாஷ்யம், எம்.கே. ஆச்சாரியார் முதலியோரும் இரண்டாம் நாள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். * * * ராஜி ஒப்பந்தத்துக்கு ஆதரவு பின்னர் விஷயாலோசனைக் கமிட்டியில் பெரும் பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானம் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களால் பிரரேபிக்கப் பட்டது :- அரசாங்கத்தாரின் அடக்குமுறையைக் காங்கிரஸில் ஒற்றுமையால் எதிர்க்கவும், பல திறப்பட்ட ராஜீயக் கட்சி யாரைக் காங்கிரஸில் சேர்த்து நிர்மாண வேலைகளைப் பூர்த்தி செய்யவும், சுயராஜ்யம் பெறுவதற்கு இந்தியாவைக் கதர் மயமாக்குவதைத் தவிர வேறு திறமையான ராஜீய சாதனம் இல்லையென்பதை வற்புறுத்தவும், மகாத்மா காந்தி தேசபந்து தா, பண்டித மோதிலால் நேரு ஆகிய மூவரும் கல்கத்தாவில் ஏகோபித்து ஒப்புக்கொண்ட ராஜி திட்டத்தை இம்மகாநாடு பொதுவாய் ஆதரிப்பதுடன் அடியில் கண்ட திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது. 1. காங்கிர கூட்டங்களிலும், காங்கிர வேலை செய்யும் போதும் கதர் தரிக்க வேண்டு மென்பதற்குப் பதிலாக எப் பொழுதும் கதர் தரிக்கவேண்டும். 2. நான்கணா சந்தாவிற்குப் பதில் மாதம் 2000 கஜம் நூல் என்பதற்குப் பதிலாக சாதாரண அங்கத்தினர்களுக்கு வருஷத்திற்கு 2000 கஜம் குடிநூல் என்றும் திருத்தி அமைக்க வேண்டும். மேற்படி தீர்மானத்தைத் தாம் ஆதரிக்க முன்வந்ததின் காரணங்களை விளக்கி முதலியார் விரிவாகப் பேசிய பின்னர் ஆதிநாராயண செட்டியார் தீர்மானத்தை ஆமோதித்தார். திருத்தப் பிரரேபணை ஹாலாயமய்யர் கீழ்க்கண்ட திருத்தப் பிரரேபணையைக் கொண்டுவந்தார் :- காங்கிரஸில் ஒற்றுமையைநாடி ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறுத்திவைக்கும் யோசனையை இம்மகாநாடு ஆதரிக்கிறது. தற்பொழுது நிர்மாணதிட்டம் ஒன்றே காங்கிர திட்டமாக இருக்கவேண்டுமென்றும், மிதவாதிகள், பிராமண இதரர்கள், சுயராஜ்யக் கட்சியார், மாறுதல் வேண்டாதார் முதலிய எல்லாக் கட்சியார்களும், தங்களுடைய இதர வேலைத் திட்டங்களைக் காங்கிரஸுக்கு வெளியில் நடத்திக்கொள்ள அவர்கள் எல்லோருக்கும் பூரண உரிமையை அளிக்க வேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப்படுகிறது. சுயராஜ்யக் கட்சியாரின் வேலைத் திட்டத்தை மாத்திரம் காங்கிர சார்பாக நடத்த அனுமதி கொடுப்பின் மற்றக் கட்சியாருக்குக் காங்கிரஸில் இடங்கொடாமல் தடுத்துவிடு மாதலால் இந்த யோசனையை இம்மகாநாடு பலமாக ஆட்சேபிக்கிறது. கிருஷ்ணசாமி சர்மா மேற்படி திருத்தப் பிரரேபணையை ஆமோதித்தார். அசல் தீர்மானத்தில், ராஜி ஒப்பந்தத்தைப் பொதுவாக அங்கீகரிக்கிறது என்பதை முழுவதும் அங்கீகரிக்கிறது என்று மாற்றவேண்டுமென்று ஏ. அரங்கசாமி அய்யங்கார் கொண்டுவந்த திருத்தப் பிரரேபணையை எம். கே. ஆச்சாரியார் ஆமோதித்தார். ஆனால் பின்னர் அய்யங்கார் திருத்தப் பிரரேபணையை வாப வாங்கிக்கொண்டார். யாகூப் ஹாஸன் நீண்டதொரு பிரசங்கம் செய்துவிட்டுத் தீர்மானம் ,திருத்தப் பிரரேபணை எதையும் தாம் ஆதரிக்க முடியவில்லையென்று கூறி உட்கார்ந்தார். இந்த மகாநாடு கல்கத்தா, ஆமதாபாத், நாகபுரி ஆகிய மகாசபைகளில் ஒப்புக்கொண்ட பூரா ஒத்துழையாமைத் திட்டத்தில் நம்பிக்கை கொள்வதுமன்றி அதை மறுபடியும் தீவிரமாக நடத்தும்படியும், வங்காள அடக்கு முறைக்கு அதுதான் சரியானபதிலாகுமென்றும் தீர்மானிக்கிறது என்று நாமக்கல் உமான் சாகிபு கொண்டு வந்த திருத்தப் பிரரே பணையை அய்யாமுத்துக் கவுண்டர் ஆமோதித்தார். வாக்குகளின் விபரம் எ. சத்தியமூர்த்தி, வி. சக்கரைச் செட்டியார், ஷாபி முகம்மது, ஹமீத்கான், எ. ஸ்ரீ நிவாச அய்யங்கார், டாக்டர் வரதராஜலு நாயுடு, அண்ணாமலைப்பிள்ளை முதலியோர் அசல் தீர்மானத்தை ஆதரித்தும், எ. ராமநாதன், சி. இராஜகோபாலாச் சாரியார், தங்கப்பெருமாள் பிள்ளை, சுப்பையா முதலியார் முதலியோர் ஹாலாயத்தின் திருத்தப் பிரரேபணையை ஆதரித்தும் பேசினார்கள். கலியாணசுந்தர முதலியார் ஆட்சேபங்களுக்குப் பதிலளித்த பின்னர் உமான் சாயபுவின் பூரண ஒத்துழையாமைத் திருத்தப் பிரரேபணையின் மீது முதலில் வாக்கெடுக்கப்பட்டது. பிரரேபணைக்குச் சாதகமாக 20 பேரே வாக்களித்தபடியால் அது தோற்றுப் போயிற்று. இராஜகோபாலச்சாரியார் முதலியவர்களால் ஆதரிக்கப்பட்ட ஹாலாயத்தின் திருத்தப் பிரரேபணையின் மீது பின்னர் வாக்கெடுக்கப்பட்டது. சாதகமாக 62 வாக்குகளும் விரோதமாக 105 வாக்குகளும் கிடைத்தபடியால் திருத்தப் பிரரேபணை தோற்றுப்போயிற்று. பின்னர் கலியாணசுந்தர முதலியார் அவர்களின் அசல் தீர்மானத்தின்மீது வாக்கெடுக்கப் பட்டபோது சாதகமாக 130 வாக்குகளும், பாதகமாக 34 வாக்குகளும் கிடைத்தபடியால் தீர்மானம் நிறைவேறியது. கிருஷ்ணசாமி சர்மாவின் அழைப்புக்கிணங்கி அடுத்த ஆண்டு மகாநாட்டைக் காஞ்சிபுரத்தில் நடத்தத் தீர்மானிக்கப் பட்டது. பின்னர், உபசரணைக் கமிட்டித் தலைவர் மகாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த அனைவருக்கும் வந்தனோபசாரம் கூறினார். அக்கிராசனர் முடிவுரை கூறியதும் இரவு 12-மணிக்கு வந்தேமாதர கோஷத்துக்கிடையே மகாநாடு கலைந்தது. (ந. நிருபர்) திருவண்ணாமலை மகாநாட்டின் நடைமுறையைப்பற்றி அகதியர் என்பவர் (ரா. கிருஷ்ணமூர்த்தி - இப்பொழுது கல்கி) சில குறிப்புக்கள் நவசக்தியில் (21-11-1924) வரைந்தனர். அக்குறிப்புக்களில் ஒருவித விளக்கம் உண்டு. அவைகளில் சட்டசபைத் தீர்மானத்தைப்பற்றிய பகுதி வருமாறு :- சென்ற சிலவாண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசியலைக் கவனித்து வந்திருப்போர் திருவண்ணாமலையில் ஒரு விசேஷத்தைக் கண்டிருப்பர். 1920ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த மாகாண மகாநாட்டிலிருந்து சென்ற மாதம் வரையில் தமிழ் நாட்டில் நடந்துள்ள காங்கிர கூட்டங்களில் இராஜகோபாலாச்சாரியாரால் ஆதரிக்கப்பட்ட எந்த முக்கியத் தீர்மானமும் தோற்றுப்போன தில்லை. திருவண்ணாமலையில் தான் முதன் முதலாக அவருக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. ஒத்துழையாமைத் தொடக்கத்திலிருந்து திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும், ஆச்சாரியரும் எதிர்க் கட்சிகளிலிருந்து போராடியதும் இம்மகாநாட்டில்தான். தமிழ்நாட்டு ஒத்துழையாமைக் கட்சியின் கட்டு திருவண்ணாமலையில் குலைந்து விட்டதென்று கூறலாம். நாயக்கர் தமது முடிவுரையில் குறிப்பிட்டது போல் ஒத்துழையா இயக்கம் இந்நாட்டில் தோன்றிய காலத்தில் இராஜகோபாலாச்சாரியார், டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு. வி. க. முதலியார், இராமசாமி நாயக்கர், டாக்டர் ராஜன் ஆகிய ஐவரும் ஒரே இலட்சியத்தைக் கொண்டு கட்டுப்பாடாகத் தாய் நாட்டுத் தொண்டிலிறங்கினார்கள். டாக்டர் நாயுடு சென்ற வருஷமே இந்த கோஷ்டியிலிருந்து பிரிந்து விட்டார். முதலியார் திருவண்ணாமலை யில் பிரிந்தார். இவ்வைவரும் இன்னமும் இணைபிரியா நண்பர்களே யாயினும், மனச்சான்று வழி நடப்பதற்கு நட்பு குறுக்கே வராமல், அரசியலில் மாறுபட்ட அபிப்பிராயங்களை வற்புறுத்தி வருவது போற்றற்குரியதன்றோ? * * * ஆச்சாரியாரின் தோல்விக்குக் காரணங்கள் யாவை? மகாத்மா காந்தியினிடம் தமிழ் நாட்டார் வைத்திருக்கும் அளவற்ற அன்பும் அழியா நம்பிக்கையும் முக்கிய காரணங்களாகும். பொது ஜனங்களின் மதிப்புக்கு எவ்வளவு பாத்திரமானவர்களாயினும், மகாத்மாவுடன் மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் வெற்றி யடைய முடியாதென்பது திருவண்ணாமலையில் நன்கு விளங்கி விட்டது. முதலியாரின் பிரிவு, உபசரணைக் கமிட்டித் தலைவர் கணபதி சாதிரிகளின் செல்வாக்கு, அடக்குமுறை வாய்ப்பட்டுத் துன்புறும் சுயராஜ்யக் கட்சியினரிடம் தேசத்தாருக்கு ஏற்பட்டுள்ள அநுதாபம் ஆகிய இவை மற்ற காரணங்கள். மேலும் ராஜித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியவர்களில் பலர் சிறந்த வாக்கு வன்மை பெற்றவர்கள். திருத்தப் பிரரேபணையை ஆதரித்தவர்களில் இரண்டொருவரைத் தவிர மற்றவர்கள் பிரசங்கத் திறமையற்றவர்கள் அல்லது பிரசங்கத்திறமை வாய்ந்திருந்தும் அன்று எக்காரணத்தாலோ அத்திறமை வெளியாக வில்லை. காந்தியடிகளால் ஒரு தந்திச் செய்தி அனுப்பப்பட்டது. அதையும் நோக்குக. சி. இராஜகோபாலச்சாரியாருக்கு மகாத்மா காந்தி அனுப்பிய கீழ்க்கண்ட தந்திச் செய்தி விஷயாலோசனைக் கமிட்டியிலும் மகாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டத்திலும் படிக்கப்பட்டது:- எனது சொந்த ஹோதாவில் நான் சுயராஜ்யக் கட்சியாருடன் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் கருத்தை மகாநாடு உணர்ந்து அதை ஆதரவுடன் கவனிக்குமென நம்புகிறேன். அஹிம்சா தர்மத்தின் தத்துவத்தை உள்ளபடி அறிந்திருப்போர் அவ்வொப்பந்தத்தின் கருத்தையும் உணர்ந்து கொள்வார்கள். ஒத்துழையாமையைத் தர்மமாகக்கொண்டு நடத்திவரும் தனிப்பட்ட நபர்கள் ஒத்துழை யாமையை அனுஷ்டித்து வருவதை இவ்வொப்பந்தம் எவ்விதத்திலும் தடைசெய்யாது. இவ்விஷயம் எங்ஙனமாயினும் மகாநாட்டின் பயனாகக் கதர் அணிதல் பெருகுமென்று நம்புகிறேன் ஈ. வே. ரா கயை காங்கிரஸிலிருந்து - சுயராஜ்யக் கட்சி தோன்றிய நாள் தொட்டு - இராமசாமி நாயக்கருக்கு அரசியல் உலகில் ஒரு வித மருட்சி உண்டாயிற்று. மாறுதல் அவர் நெஞ்சில் படிப்படியே அரும்பியது; வளர்ந்தது. அவருடன் நெருங்கிப் பழகிய நண் பருள் யான் ஒருவனாதலால், மாறுதல் வளர்ச்சி எனக்கு நன்கு விளங்கியே வந்தது. காரணம் என்னை? இராமசாமி நாயக்கர் ஒத்துழையா இயக்கத்தில் உள்ளும் புறமும் ஒன்றுபட உழைத்தவர். தமிழ் நாட்டில் கதரைப் பரப்பிய பெருமை அவருக்கே உண்டு. தீண்டாமைப் பேயையோட்ட அவர் பட்டபாட்டை ஆண்டவனே அறிவன். அவர் வைக்கம் வீரராய் இலங்கியதை நாடறியும். நாட்டு விடுதலையைக் குறிக் கொண்டு அவர் பலமுறை சிறை நண்ணியவர். அவர் பணியின் நேர்மையே அவர் நெஞ்சில் மாறுதல் நிகழ்த்தியது என்று கருத லானேன். உண்மை உழைப்புக்கு ஊறு நிகழுங்கால் சிலர் பொறுமை வகிப்பர்; சிலர் துறவு மேற்கொள்வர்; சிலர் பிற் போக்காளராவர். இவை ஜீவ இயல்புகள். நாயக்கர், சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர் வையே போக்கிப் பட்டம் பதவிக் கட்சியாகும் என்பர். தற் போது காங்கிரஸில் உற்றுள்ள சோர்வை நீக்கிப் பழைய ஒத்துழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல்வேண்டும் என்று யான் சொல்வேன். மீண்டும் ஒத்துழையாமை எழுமா என்று அவர் கேட்பர். அஃது எழுந்தே தீரும்; வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும், மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராமசாமியார் கூறுவர். யான் அதை மறுப்பேன். அவர் உள்ளம் ஜடி கட்சியை வருடு வதை யான் குறிப்பால் உணர்வேன். ஜடி கட்சியில் கருத்தை இருத்தாதேயுங்கள்; வேண்டுமானால் சமூகச் சீர்திருத்தத்தில் நாட்டஞ் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை செய்வேன். இவ் வாறெல்லாம் அவரும் யானும் நட்புமுறையில் வாதம் புரிவோம்; நடக்கும்போதும் இருக்கும்போதும் சாப்பிடும் போதும் பேசு வோம். குடியரசு என்றொரு பத்திரிகை அவரால் தோற்று விக்கப்பட்டது. அதன் வாயிலாக அவர் தம் மனத் திலுற்ற மாறுதல்கள் சிறிது சிறிதாக வெளிவரலாயின. எங்கள் பிரசாரம் எ. ஸ்ரீநிவாச ஐயங்காரும் யானும் அடிக்கடி சந்திப் போம்; முன்னணி வேலைகளை முன்னுவோம்; சட்டசபையைப் பற்றி மந்திரி சபை அமையாதவாறு தடுத்து, அரசாங்க இயக் கத்தை மறித்தல்வேண்டுமென்றும், அத்தொண்டைக் காங்கிரஸே ஏற்றல்வேண்டுமென்றும், அதைச் சுயராஜ்யக் கட்சியினிடம் ஒப்புவித்துக் காங்கிர வாளாகிடத்தல் தவறு என்றும், நாட்டில் காங்கிர என்றும் சுயராஜ்யக்கட்சி என்றும் எழுந் துள்ள நினைப்பைப் போக்கல் வேண்டுமென்றும், சுயராஜ்யக் கட்சியை விரும்பாதார் அதன் கொள்கையைக் காங்கிரஸில் ஒன்றச்செய்து அதை வீழ்த்தல் வேண்டுமென்றும் அப் பொழுதே ஒத்துழையாமை மீண்டும் உயிர்த்தெழுமென்றும் கூட்டங்களில் பேசுவோம். எங்கள் பேச்சு நற்பயனை விளைத்தே வந்தது. தமிழ்நாட்டில் ஒருவிதப் புத்துணர்ச்சி உண்டாயிற்று. மாறுதல் வேண்டுவோரும், வேண்டாதாரும் ஒருமைப்படுதற்கு வழி காணப்பட்டது என்ற மகிழ்ச்சி மக்களுக்கு உண்டாயிற்று. காஞ்சி மகாநாடு 1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22இல் காஞ்சியில் தமிழ் நாட்டுக் காங்கிர கூடியது. அதில் தலைமை வகிக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு எனக்கு வழங்கியது. அம்மகாநாடு சரித்திர சம்பந்த முடையதாயிற்று. விவரம் பின்னே கூறுவன். இடையில் என் தலைமையில் நடந்தேறிய அரசியல் மகா நாடுகளைப் பற்றிச் சில கூறலாமென்று எண்ணுகிறேன். மகாநாட்டு முன்னுரைகள் எழுத்துப் பேச்சிலும் அமைந்தன; வாய்மொழியிலும் பிறந்தன. முன்னவை தமிழ்த் தென்றல் என்னும் நூலில் சேர்க்கப்பெற்றன. வாய்மொழிகளிற் சில பத்திரிகை நிருபர்களால் திரட்டப்பட்டன. அவை பல பத்திரிகைகளில் பலவிதமாய்க் கிடக்கும். திரட்டப்படாதவை வானிற் கலந்தன. தாலுக்கா ஊத்தங்கரைத் தாலுக்கா மகாநாடு ஊத்தங்கரையிலேயே (14, 15-4-1919)கூடியது. அம்மகாநாட்டில் குறிக்கற்பாலது ஊர் வலம். அதில் என்ன சிறப்பு? பழைய சிலம்பு வித்தைகள், வாத்தி யங்கள், ஆட்டங்கள் முதலியவற்றைக் கண்டேன். வாழ்க்கையில் கண்டறியாதன பல கண்டேன். ஒருபக்கம் குண்டாந்தடிச் சுழற்சி; இன்னொரு பக்கம் நீண்ட தடிச் சுழற்சி; வேறொரு பக்கம் சிறு குச்சிச் சுழற்சி - சிலம்புகள் பலவிதம்; உடுக்கைகள் பலவிதம்; பறைகள் பலவிதம் - தாரைகள் எத்தனை; குழல்கள் எத்தனை; தாளங்கள் எத்தனை - தனித்தனிக் கூத்துக்கள்; கைகோத்த கூத்துக்கள்; வட்டணைக் கூத்துக்கள் - கால் தூக்கு நடங்கள்; கைதூக்கு நடங்கள்; குனிந்த நடங்கள் - இன்னோரன்ன புதுமைகளில் என் மனம் தோய்ந்தது. அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய இடங்களில் அவ்வத் தாலுக்கா மகாநாடுகள் முறை முறையே 1923ஆம் ஆண்டில் அக்டோபர் ஒன்பதிலும், பன்னிரண்டிலும், பதினைந்திலும் முறையே தொடர்ச்சியாகக் கூடின. தேசபக்தர் சாத்தூர் சுப்பிரமணிய நாயனாரின் முன்னேற்பாட்டின் படி அம்மகாநாடுகள் சேர்ந்தன. அருப்புக்கோட்டையில் நாடார் சமூகம் தனிமுறையில் எனக்கு நன்மொழி வழங்கியது. அதையொட்டி ஜடி கட்சி யின் குறும்பு எழுந்தது. ஆனால் அது தலைவிரித்தாடவில்லை; சிறிது நேரத்தில் ஒடுங்கியது. அடுத்தநாள் சேலம் வேங்கடப்ப செட்டியார் தலைமையில் ஒரு கூட்டம் ஈண்டியது. அதில் சக்தி சிவம் என்ற பொருளைப் பீடிகையாகக் கொண்டு யான் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினேன். சாத்தூரில் சுப்பிரமணிய நாயனாரும் அவர்தம் அருமைப் புதல்வருஞ் சிறை புகுந்த தியாகம் மோதிலால் நேருவையும் அவர்தம் அருமைக் குமாரர் ஜவஹர்லால் நேருவையும் நினைக்கச் செய்தது. வ.வே.சு. ஐயரின் வருகை இன்பமளித்தது. மறுநாள் ஒருகழகம் கூடியது. அதில் சாத்தூர் கந்தசாமி முதலியார் நிகழ்த் திய பெரியபுராண ஆராய்ச்சிச் சொற்பொரிவு வியக்கத் தக்க தாயிருந்தது. எனது உவப்பு முடிவுரையில் பொங்கித் ததும்பியது. சாத்தூர் ஆற்றங்கரையிலே இளந் தொண்டர்கள் சாதிமத வேற்றுமைகளின்றிப் புரிந்த பணிகள் ஒவ்வொன்றாக நினை வுக்கு வருகின்றன. விருதுபட்டி சுப்பராய பந்துலுவின் சேவையை என் நெஞ்சம் மறவாது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளைக் கண்டேன். அவர் அருந்தமிழ் ஓதித் திருக்கோயிலை வலம் வந்தேன். முன்னுரை வாய்மொழியாக நிகழ்த்தவே எண்ணினேன். அன்பர்கள் எழுத்துப் பேச்சையே விரும்பினார்கள். போதிய நேரமின்மை யால் அச்சகத்தில் அமர்ந்தே தலைமையுரையை எழுதித் தந்தேன். அவ்வுரையின் முகப்பில் ஆண்டாள் திருவுருவம் பொலிந்தது. ஹிந்துக்களல்லாத காங்கிரகாரரும் அதைத் தடை செய்ய வில்லை. அடுத்தநாள் காலையில் ஊரைச் சுற்றிப் பார்த்தேன். ஊர்ப்புறங்களில் ஆண் மக்கள் கூட்டங் கூட்டமாக ஒருவரோ டொருவர் என்னென்னவோ பேசிக்கொண்டு மலங் கழித்தது என் மனத்தைப் பிளந்தது. குளக்கரையில் ஒரு பக்கத்தில் இந்தியச் சிறுமியர்கள் ஒழுங்காகக் குளித்துக் களித்துக் கரையேறிய காட்சி என் நெஞ்சிற் படிந்தது. ஓர் ஐரோப்பியப் பெண்மணி இந்தியச் சிறுமிகளை ஒழுங்குபட நடாத்திச் சென்றது எனது சிந்தையில் செறிந்தது. எங்கே பிறந்தவர்! எங்கே வந்து அன்புத் தொண்டாற்றுகிறார்! ஆண்டாள் பெயரால் ஒரு பள்ளியோ ஒரு விடுதியோ இங்கே உண்டா? இந்த ஐரோப்பியப் பெண் மணியைப்போல் ஓர் இந்தியப் பெண்மணி நஞ்சிறுமியர்க்குப் பணி செய்வதை இப்பாழுங் கண்நோக்குங் காலம் வருமோ? என்றெல்லாம் எண்ணினேன். ஐரோப்பியப் பெண்மணியை என் மனம் வாழ்த்தியது. உடுமலைப்பேட்டை மகாநாடும், தாராபுர மகாநாடும் 1925ஆம் ஆண்டு மே பதினேழாம் நாளிலும் இருபதாம் நாளி லும் முறையே அம்மாபட்டிப்புதூரிலும் தாராபுரத்திலும் நடை பெற்றன. இராமசாமி நாயக்கரும் மணம் பூண்டி குமார சாமி பிள்ளையும் என்னுடன் போந்து மகாநாடுகளைச் சிறப் பித்தனர். அம்மாபட்டி புதூர் ஒரு குக்கிராமம், சிக்கலான கவட்டை களையுடையது. அவ்வூரில் மகாநாட்டை மாண்புற நடாத்திய வேங்கடசாமி நாயுடுவின் அன்பு பல வழியிலும் போற்றப்பட்டது. மணம்பூண்டி குமாரசாமி பிள்ளையைத் திருப்பூரில் தேடித் தேடிப் பார்த்தோம். காலங் கழித்த மணம்பூண்டியார் திருப்பூர் சேர்ந்து, அம்மாபட்டி நண்ணுதற்கு அவர் பட்ட பாட்டைச் சொல்லுதல் முடியாது. பெரும்பாதையினின்றும் எந்தக் கவட்டையில் புகுவது என்று குமாரசாமியார்க்கு விளங்க வில்லை. அவர் விழித்து விழித்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். நண்பகல் உற்றது. அவரது கண்டிகைக் கோலமும் பாட்டும் எங்கேயோ போக வேண்டிய ஒரு வண்டிக்காரன் மனத்தைக் குழைய செய்தன. அவன் துணை குமாரசாமியாரை அம்மா பட்டிக்கு அணைவித்தது. வண்டிக்காரன் காசு வாங்க விரும்பினா னில்லை. காசு வாங்கினால் சிவனடியார்க்குப் பணிசெய்த புண்ணியங் கிடைக்குமோ? என்று கேட்டான். போலீ சுருக்கெழுத்தாளர் தங்குதற்குத் தனியிடங் கிடைக்கவில்லை. அவர் தவிப்பையுணர்ந்த யான், தாங்கள் எங் கள் விருந்தினராக இருக்கலாமே என்றேன். எனது விருப்பம் அவரை இணங்கச் செய்தது. உடுமலைப்பேட்டை தாலுக்காவிலும் அதைச் சூழ்ந்துள்ள மற்றவிடங்களிலுமுள்ள தமிழ் புலவர் பலரைப் புதூர் கண்டது, தாலுகா வாசிகள் கூட்டமும் அங்கே திரண்டது. அடுத்த நாள் என் தலைமையிலேயே ஒரு பொதுக் கூட்டம் கூடியது. அதில் புலவர்கள் பொழிந்த தீந்தமிழ்த்தேன் குமாரசாமியாரது பேச்சு வெள்ளத்தில் மிதந்துங்கலந்தும் தேங்கியது. அஃது எனக்கு இன்பூட்டியது. அம்மாபட்டியினின்றும் உடுமலைப்பேட்டை நோக்கி னோம். பழைய காலத்து மாட்டு வண்டிகளில் ஏறிச்சென்றோம். வழிநெடுக ஆனந்தக் காட்சி. உடுமலைப்பேட்டையில் நாங்கள் தங்கிய இடத்தில் ஒரு செல்வர் முன்னே ஓர் ஏழை மகன் எதையோ முறையிட்டான். செல்வர் அவன் கன்னத்தில் பளீர் பளீர் என்று அறைந்தார். அவ்வறை என்னை நாயக்கரை உற்று நோக்கச் செய்தது. ஊர்வழக்கம்; பொறுமையாயிருங்கள் என்றார் நாயக்கர். அப்பேட்டையில் காங்கிர தொண்டாற்றி வைகறை எழுந்தோம். நீலவானமும் உடுக்களும் வெண்திங்களும் எங்களுக்கு வழங்கிய காட்சியில் மூழ்கினோம். அன்பர் குமாரசாமி பிள்ளை, போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில் நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாயெனை யுடையாய் எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே. அருணன்இந் திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் `கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி எழுந்தருளாயே. கூவின் பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளியொளி யுதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய் எமக் கெளியாய் எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே என்ற திருவாசகத் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடி னார். உடலுங் குளிர்ந்தது; உள்ளமுங் குளிர்ந்தது. வழியெல்ம் இயற்கை விருந்து. தாராபுரம் சேர்ந்தோம்; ஆற்றில் விழுந்தோம்; நீராடினோம்; ஆடினோம்; நீண்ட நேரம் ஆடினோம். பிற்பகல் மகாநாடு ஈண்டியது. இவர் கள்ளுக்கடையை மூடியவர். இவர் கள்ளிறக் கலை நிறுத்தியவர் என்று நாயக்கர் சொல்லிவந்தனர். குடி யானவர்கள் கதரணிந்து காங்கிர தொண்டு புரிந்தது நாட்டின் விழிப்பை உணர்த்தியது. நாங்கள் திரும்பி வந்தபோது காங்கேயத்தில் பஞ்சக் காட்சி கண்டோம். வழியில் கட்டித் தயிர் விற்கப்பட்டது. அது தயிரா வெண்ணெயா என்று யான் ஐயுற்றேன். நண்பர் குமாரசாமியார் கட்டித் தயிரைப் பிட்டுப் பிட்டு உண்டார்; அவரை யான் எள்ளிக் கொண்டே வந்தேன். ஈரோடு தாலுக்கா மகாநாடு (27-11-1923) பெருந்துறையில் நடந்தது. அதில் தொண்டர்கள் ஊக்கம் புலப்பட்டது. நாட்டு நலனுக்கு எது செய்யவும் தொண்டர்கள் சித்தமாயிருந்தமை நன்கு விளங்கியது. இராமசாமி நாயக்கர் நன்றி கூறியபோது அதில் நட்புரிமை நடம் புரிந்தது. அறந்தாங்கி தாலுக்கா முதல் மகாநாடு அறந்தாங்கியில் (8,9-6-1929) கூடியது. அம்மகாநாட்டில் பட்டுக்கோட்டைச் சுய மரியாதைக் கூட்டம் போந்து கலாம் விளைக்கப் போவதாகச் சென்னைக்குச் செய்தி எட்டியது. அந்நாளில் பட்டுக்கோட்டை, சுயமரியாதை இயக்கத் துக்கு ஒரு சிறு கோட்டையாயிருந்தது உண்மை. பட்டுக் கோட்டைச் சுயமரியாதை நேயர் - பண்டிதர் - திருஞானசம்பந்த முதலியார் என் கெழுதகை நண்பர்; பட்டுக்கோட்டை வள்ளுவர் கழகத்தின் ஓர் ஆண்டு விழாவை (12-3-1927) என் தலைமையில் நடாத்தி மகிழ்வெய்தினவர். என்னை மகாநாட்டுக்கு அழைத்துச் செல்லச் சென்னை நோக்கிய சோமசுந்தரம் பிள்ளையுடன் யான் புறப்பட்டேன். வண்டி திருத்துறைப்பூண்டியை அடைந்தது. அடைந்ததும் சுய மரியாதையர் என்னைச் சூழ்ந்தனர்; மூன்றாம் வகுப்பிலிருந்த சோமசுந்தரம் பிள்ளை எனக்கு உணவு ஏற்பாடு செய்ய வந்தார். வந்தவர் என்ன கண்டார்? சுயமரியாதையார் எனக்குச் சோறிடு வதையும், காய்கறி பரிமாறுவதையும், இளநீர் தாங்கி நிற்பதை யுங் கண்டார். நீங்கள் போய்ச் சாப்பிட்டு வாரும் என்று அவரை அனுப்பினேன். உண்ணல் முடிந்தது. சோமசுந்தரம் பிள்ளையைப் பார்த்து, இவர் என் நண்பர் பண்டிதர் திரு ஞானசம்பந்த முதலியார் தம்பி குஞ்சிதபாதம். இவரெல்லாம் இவரைச் சேர்ந்தவர். பட்டுக்கோட்டையில் யான் இறங்க மாட்டேனென்று எனக்கு விருந்தளிக்க இங்கே போந்தனர். இவர்க்கும் எனக்கும் கருத்து வேற்றுமையுண்டு. கருத்து வேற்றுமையைக் கடந்து நட்பு நிற்றலைக் காணுங்கள் என்றேன். வண்டி புறப்பட்டது; பட்டுக்கோட்டை அணைந்தது. ஜடி கட்சி வாழ்க எனக் கூக்குரல் கேட்டது. வண்டியிலிருந்த சுய மரியாதையரும் அதை எதிரொலி செய்துகொண்டே இறங்கினர். வரவேற்புத் தலைவர் பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளையின் பார்வையில் மகாநாடு மிகச் சிறப்பாக நடை பெற்றது. மகாநாட்டின் காட்சி, எனது தலைமையுரையை, அறங்தாங்கி தாலுக்கா முதல் மகாநாட்டுக்கு என்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்த வரவேற்புக் கூட்டத்தார்க்கும், மற்றவர்க்கும் எனது நன்றி யறிதலான வணக்கம். முதன் முறை கூடி யுள்ள இம்மகாநாட்டை, இத்துணைபேர் போந்து சிறப்பித்ததைக் கண்டு கழிபேருவகை எய்துகிறேன். நேற்று, நண்பர் பஷீர் அகம்மதும், யானும் ஈண்டுப் போந்து, இம்மகாநாட்டின் பந்தரைப் பார்த்தபோது, ஒருதாலுக்கா மகாநாட்டிற்கு இத்தகைப் பெரும்பந்தர் எற்றுக்கு! என்று பேசிக்கொண்டோம். இப்பொழுது இப்பந்தர், மக்கள் கூட்டத்தால் நிரம்பி யிருப்பதைக் காண்கிறேன். இத்தாலுக்காவின் காங்கிர பக்தியை யான் வியந்து பாராட்டுகிறேன். காங்கிர மீது உங்களுக்குள்ள அன்பு மேன்மேலும் ஓங்கி வளருமாறு ஆண்டவனை வழுத்துகிறேன். என்று தோற்றுவாய் செய்விக்க உந்தியது. அம்மகா நாட்டில் ஹிந்து முலிம் ஒற்றுமை ஆனந்தத் தாண்டவம் புரிந்தது. கொடியேற்று விழா நிகழ்த்திய பஷீர் அகம்மதும் யானும் ஒரே இடத்தில் தங்கியதும், உணவு கொண்டதும் ஹிந்து முலிம்களிடைச் சகோதர உணர்வை யூட்டின. மகாநாடு முற்றுப்பெற்ற பின்னை நாடிமுத்துப் பிள்ளை பண்டிதை அசலாம்பிகை அம்மையாரையும், பஷீரையும் என்னையும் பட்டுக்கோட்டைக்கு அழைத்தனர்; நாங்கள் ஒரு நாள் அவர் விருந்தினராயிருந்தோம்; மாலையில் சமயப் பிர சாரம் செய்து திரும்பினோம். தொண்டர் மகாநாடு இராமநாதபுரம் - திருப்பத்தூரிலே (19,20-1-1924) மூன்று மகாநாடுகள் திரண்டன. ஒன்று அரசியல் மகாநாடு; மற்றொன்று கிலாபத் மகாநாடு; இன்னொன்று தொண்டர் மகாநாடு; இம் மூன்றிலும் ஸ்ரீநிவாச ஐயங்காரும், யாகூப் ஹாஸனும், யானும் முறையே தலைமை வகித்தோம். மூவரும் சென்னையினின்றும் புறப்பட்டோம்; மதுரை சேர்ந்தோம். எங்களுக்கென்று காத்திருந்த மோட்டார் வண்டி கள் எங்களை ஏற்றிப் பறந்தன. என் வண்டி சிறிது பின் தங்கிச் சென்றது. அஃது இடையில் போலீஸாரால் மறிக்கப்பட்டது. அவ்வண்டி இராமநாதபுரத்துள் நுழைய அனுமதி பெறவில்லை யாம். போலீஸார் வண்டி எண்ணையும் ஓட்டியின் பெயரையும் பதிவு செய்து, சான்றுக்கு என் பெயரைக் கேட்டனர். யான் பேசாமலிருந்தேன். ஒருவர், இன்னும் சுயராஜ்யம் வரவில்லையே. இதற்குள்ளவா இப்படி என்றார். இவர் போலீஸாரா? என்று கேட்டேன். வழிப்போக்கர் என்று அங்குக் கூடியிருந்தவர் கூறி னர். மற்றொருவர், இவர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் என்றார். வண்டி விடப்பட்டது. எங்கள் வரவு நோக்கி முன் ஓடிய வண்டிகள் நின்றன. எல்லாரும் சந்தித்துப் பேசினோம். திருப்பத்தூரை நண்ணிணோம். மகாநாடுகள் செவ்வனே நடை பெற்றன. நிகழ்ச்சிகளில் குறிக்கத்தக்கது ஒன்று. கிலாபத் மகாநாடு நடைபெற்ற வேளையில் ஒரு கிழவி வைதிகக் கோலத்துடன் பழம் தேங்காய் முதலியன கொணர்ந்து கூட்டத்தினிடைப் புகுந்து வணக்கஞ் செய்தனர். இஃதென்ன? என்று யாகூப் ஹாஸன் என்னைக் கேட்டனர். இவ்வம்மையார் நகரத்தார். நகரத்துப் பெண்மணிகள் சிவபக்தி சிவனடியார் பக்தியிற் சிறந்தவர். இஃது அடியவர் கூட்டமாக அவர்க்குத் தோன்றியது. முறைப்படி வழிபாடு செய்கிறார் என்று உரைத் தேன். யாகூப் ஹாஸன் இன்னும் இப்படிப்பட்டவர் இருக்கின் றாரே என்று வியந்தார். ஜில்லா வட ஆர்க்காடு ஜில்லா பதினான்காம் மகாநாடு, இடம்; வேலூர்; (2,3-5-1920). டாக்டர் வரதராஜலு நாயுடுவைக் காட்டுப்பாடியில் கண்டேன். இருவேமும் வேலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்; தோப்பாசாமி மடத்தில் தங்கினோம். வேலூர் மகாநாடு என்ன காட்சியளித்தது? ஒற்றுமைக் காட்சியை அளித்தது. பிராமணர் பிராமணரல்லாதார் என்ற உணர்வோ ஹிந்து முலிம் என்ற உணர்வோ மகா நாட்டில் தலைகாட்டவில்லை. எல்லாரும் காங்கிரகாரராக தேசபக்த ராக இந்தியராகக் காணப்பட்டனர். மௌலானா ஷர்புதீன் மகா நாட்டில் புரிந்த தொண்டுகள் என் எதிரிலே உலவுகின்றன. இப் பொழுது அவர் எப்படி இருக்கிறார்? மாற்றத்துக்குக் காரணம் என்னை? தலைவர்களின் தன்னலமும் செருக்கும் மக்களை வகுப்பு வாதிகளாக்குகின்றன. வட ஆர்க்காடும் பிராமணர் பிராமணரல்லாதவர் பிணக்குக்கும், ஹிந்து முலிம் பூசலுக்கும் இரையாகிறதே என்ற நினைவு தோன்றும்போதெல்லாம் கண் ணீர் பெருகுகிறது. மடத்துச் சுவாமிகள் விரும்பியவாறு அன்பு என்ற பொருள் பற்றி மடத்தில் ஒரு சொற்பொழிவு என்னால் நிகழ்த்தப்பட்டது. சொற்பொழிவு முடிந்த பின்னை இராமலிங்க முதலியார் என்ப வர் என்னைத் தனியே கண்டார். கண்டு என்ன சொன்னார்? அப்பா! தம்பி! உம்முடைய பேச்செல்லாம் பிராமணருக்குப் பயன்படுகின்றனவேயன்றி மற்றவர்க்குப் பயன்படவில்லையே என்று சொன்னார். அவர் சொல்லில் பரிவுமிருந்தது; கடிதலு மிருந்தது; பிராமணரென்றும் மற்றவரென்றும் யான் கருதுவ தில்லை. எனக்கு எல்லாரும் மனிதராகவே தோன்றுகிறார். வகுப்புணர்வை வீழ்த்தவே யான் பிறந்திருக்கிறேன் என்றேன். வேலூர் உம்மால் கெட்டே போகிறது; அடிக்கடி வேலூருக்கு வருகிறீர்; கோட்டை மைதானத்தில் பேசுகிறீர்; மகாநாட்டுத் தலைமையுரையும், மற்றைய நடைமுறையும், இன்றைய அன்புப் பேச்சும் பிராமணரல்லாதார் இயக்கத்தைக் கொலை செய்தன என்று கூறிச் சென்றார். அக்கிழவர் தாசில்தாரா யிருந்தவரென் றும், அசல் ஜடி கட்சியரென்றும் பின்னே கேள்வியுற்றேன். தென்னார்க்காடு ஜில்லா மூன்றாவது மகாநாடு; இடம்; திருப்பாதிரிப்புலியூர்; (15,16-10-1921) இம் மகாநாடு மிக நெருக்கடி யான காலத்தில் கூடியது. மலையாளத்தில் குழப்பம்; சென்னை யில் ஒரு பெருந் தொழிலாளர் வேலைநிறுத்தம்; நாட்டில் ஒத்துழையாமைப் போர்; எங்கணும் அடக்குமுறை. திருப்பாதிரிப்புலியூர்க்கு யான் எப்பொழுது சென்றாலும் ஞானியார் சுவாமிகளைக் கண்டே வருவேன். ஆனால் இம் முறை அடிகளைப் புறக்கண்களால் கண்டேனில்லை. என்னை அழைத்து வருமாறு சுவாமிகள் ஒருவரை அனுப்பினர். இம் முறை மன்னிக்குமாறு அடிகட்குத் தெரிவிக்க என்று சொல்லி அவரை அனுப்பினேன். பண்டிதை அசலாம்பிகை அம்மையார் தமிழ் அமிழ்தை யான் இளைஞனாயிருந்தபோது பன்முறை பருகினேன். திருப் பாதிரிப்புலியூரில் அத்தமிழ்த் தாயை நேரிற் கண்டு உறவாடுஞ் சேயானேன். பண்டிதையார் தமது முதுமையைக் கருதாமலும், கால நெருக்கடியைப் பொருட்படுத்தாமலும் மகாநாட்டில் கலந்து கொண்டது அவர்தம் அஞ்சாமையைப் புலப்படுத்தியது. மற்றுமோர் அம்மையாரை மகாநாட்டில் கண்டேன். அவர் இந்திய முறையில் கதராடை அணிந்து நின்றார். அவர் யார்? தேசபக்தன் நேயர் ... நவசக்தி நேயர்... ஸ்ரீமதி பீட்டர் ஸன் அம்மையார். எனக்கென்று ஞானியார் சுவாமிகளின் நண்பர் ஒருவரால் அழகிய இரட்டைக்குதிரைவண்டியொன்று அனுப்பப்பட்டது. அதை யான் பெரிதும் பயன்படுத்தவில்லை. அதைப் பெண்மணி கட்குப் பயன்படுமாறு விடுத்தேன். கராச்சியில் (10-7-1921) மௌலானா மகமத் அலியின் தலைமையில் கூடிய அகில இந்திய எட்டாவது கிலாபத் மகா நாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேறின. அவைகளுள் ஒன்று படையில் முலிம்கள் சேர்தல் கூடாதென்பது. தலைவர் மௌலானா பிடிப்பட்ட காரணத்தால் மகாநாட்டில் அத் தீர்மானத்தையொட்டி ஒருவித முழக்கம் எழுந்தது. அவ்வேளை யில் மகாநாட்டில் ஒரு பக்கம் அச்சம் அசைந்தது; இன்னொரு பக்கம் அஞ்சாமை வீறிட்டது. திருநெல்வேலி ஜில்லா நான்காவது மகாநாடு; இடம் ; தென்காசி; (5,6-7-1922) இம்மகாநாடு வேனிற்காலத்தில் கூடியது. நானாபக்கங்களினின்றும் குற்றாலத்தில் குழுமியிருந்த அறிஞர் பலர் போதற்குரிய வாய்ப்பையும் மகாநாடு பெற்றது. தென்காசியில் கூடிய மகாநாடு ஒரு ஜில்லாவினதாகக் காணப்படவில்லை; ஒரு மாகாண மகாநாடாகவே காணப் பட்டது. மகாநாட்டில் இளந்தொண்டர் ஈட்டம் பெருகியிருந்தது. அவருள் ஒருவரை வரவேற்புத் தலைவர் அறிமுகஞ் செய் வித்தார். அவரது கருங் குழலும், வீர நோக்கும், புன்னகையும், முக ஒளியும், இளமையும், பணிவும், அடக்கமும் என் உள்ளத் தில் ஓவியமெனப் படிந்தன. அவரைப் பார்த்து, தம்பி! உமது தொண்டால் தமிழ்நாடு பயன்பெறுங் காலம் வரும். நல்ல வயதில் ஒரு தலைவராகுந் திருவுடையவராவீர் என்று வாழ்த்தி னேன். அவ்விளைஞர் தேசபக்தன் கட்டுரையாளருள் ஒருவரா யிருந்தவர். தேசபக்தன் ஈடுகாணம் பறிமுதலானதற்கு மூலமாக நின்ற கட்டுரைகளுள் இளைய நண்பருடையதும் ஒன்று. அவரைத் தென்காசியில் நேரிற் கண்டேன். அவர் யார்? தின மணி ஆசிரியர் டி. எ. சொக்கலிங்கம். தூத்துக்குடி மாசிலாமணிப் பிள்ளை ஒரு தீர்மானத்தை எடுத்துப் பேசியபோது, இடையில், பிராமணக் குறும்பு என் றொரு சிறு பாணம் பெய்தார். அஃது இராமசாமி நாயக்கரைப் புண்படுத்தியது. அந்நாளில் நாயக்கருக்கு வகுப்புவாதம் நெருப்பாயிருந்தது. இப்பொழுதோ? மகாநாடு முடிந்ததும் வரவேற்புத் தலைவரால் அன் பார்ந்த விருந்தளிக்கப்பட்டது. அவர் ஒரு முலிம் சகோதரர். நான்காம் நாள் யான் நண்பருடன் குற்றாலஞ் சென்றேன். யான் நீராடியபோது, அருவி அருகே நின்றவருள் ஒருவர், மீண்டும் நாம் வருவோம் என்றார். வேறு ஒருவர் எற்றுக்கு? என்று கேட்டனர். அதற்கு அவர், முதலியார் முடிவுரை அவரை மீண்டும் தென்காசிக்கு அழைக்கும்; அரசாங்க விருந்துக்கு அனுப்பும் என்று சொன்னார். இன்னொருவர், நீங்கள் வீண் பேச்சு பேசுகிறீர். முதலியார் முடிவுரை கடுமையாக இருந்தது உண்மை. அது சட்ட வரம்பு கடந்ததன்று என்று கூறினார். அப்பேச்சுக்கள் என் காதில் ஒன்றன்பின் ஒன்றாய் நுழைந்து கொண்டே இருந்தன. ஆதிநாராயண செட்டியார் மகாதேவ ஐயர் முதலிய பலர் தென்காசியினின்றுந் திருநெல்வேலிக்கு ஏகினார். டாக்டர் சங்கர ஐயரும், நாயக்கரும், யானும் கல்லிடைக்குறிச்சி பாபநாசம் போந்து, திருநெல்வேலியை அணைந்து நண்பருடன் கலந்தோம். திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் எங்களால் காங்கிர பிரசாரஞ் செய்யப்பட்டது. ஸ்ரீவைகுந்தம், கிருஷ்ணா புரம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், தென்திருப்பேரை முதலிய பதிகளினின்றும் அழைப்புக்கள் வந்தன. ஆதிநாராயண செட்டியார், மகாதேவ ஐயர், இராமசாமி நாயக்கர், யான் ஆகிய நால்வரும் அப்பதிகட்குப் போய் ஒவ்வொருவிதத் தொண் டாற்றினோம். நாயக்கரும் யானும் கோயில்பட்டியைக் குறிக் கொண்டோம். பின்னே விருதுபட்டியில் தங்கினோம். அங்கே மட்டுங் கூட்டத்தில் பேசுதல் கூடாது என்ற கட்டளை பிறந்தது. நாயக்கர் கட்டளையை மீறப் பதைத்தனர். சத்தியாக்கிரகப் போர் நிறுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பொறுப்புடைய எவரும் சட்ட மீறல் முறையாகாது என்று அவரைத் தடுத்தேன். விருதுபட்டியை விடுத்து ஈரோடு சேர்ந்தோம். யான் சென்னை நோக்கினேன். திரிசிராப்பள்ளி ஜில்லா ஆறாவது மகாநாடு; இடம்; குளித்தலையென வழங்குங் குளிர்தண்டலை; (5,6-4-1924) இம் மகாநாட்டில் தலைவர்கள் அணியும், தொண்டர்கள் அணியும், மற்ற அணிகளும் பொலிந்தன; வாழ்த்துப் பாக்கள் மலிந்தன. இரண்டாம் நாள் பகல் என் உடலில் வெம்மை செறிந்தது. அதை டாக்டர் ராஜனிடம் வெளியிடலாமா என்று நினைந் தேன்; அவர் ஆங்கில மருத்துவர்; அம்மருத்துவம் என்னைப் படுக்கையில் கிடத்தினும் கிடத்துமே என்று எண்ணினேன். இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - கடனறி காட்சி யவர் என்னுங் குறள் நினைவுக்கு வந்தது. அது வெம்மையைப் பொருட்படுத்தி என்னைக் கூம்பவிடவில்லை; கடமைமீதே என்னைச் செலுத்தியது. தீர்மானங்களெல்லாம் நிறைவேறின. முடிவுரை நிகழ்த்தி னேன். அது சிறிது நீண்டுவிட்டது. விரைந்தும் இரைந்தும் பேசி னேன். பஞ்சாப் படுகொலையைப் பரப்பரப்புடன் விண்ணப்பஞ் செய்தேன். அவ்விண்ணப்பம் மகாநாட்டில் எழுச்சி உண்டு பண்ணிற்று. பெண்மக்கள் உள்ளத்தில் கிளர்ச்சி பொங்கியது. அவர் கைகள் பொன்னையும் மணியையும் பொருளையும் பொழிந்தன. மகாநாடு கலைந்தது. சந்தடியில் சிக்கிக்கொள்ள என் உடல்நிலை இடந்தரவில்லை. யான் நேரே காவிரிக்குச் சென் றேன். சிறிது நேரங் கழித்து உறைவிடம் வந்தேன். வெஞ்சுரம் என்னை எரித்தது. படுக்கையில் சாய்ந்தேன். இராஜ கோபாலாச் சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர் வரதராஜலு நாயுடு, இராம சாமி நாயக்கர் முதலிய நண்பர் பலரைக் காணோம். அவரெல் லாம் போய்விட்டனர் என்று கேள்வியுற்றேன். எனது நிலையைக் கண்டு வரவேற்புத் தலைவர் ஏக்குற்றார். அவருக்கு யான் தேறுதல் கூறினேன். ரா. கிருஷ்ணமூர்த்தி, வ.வே.சு. ஐயர், பண்டிதை அசலாம்பிகை அம்மையார், இவர்தம் அன்னையார் என்னைச் சூழ்ந்தனர். என் பக்கத்தில் உறவினரில்லை என்ற துன்பம் எனக்குத் தோன்றவில்லை. ரா. கிருஷ்ணமூர்த்தி தம்பியாக விளங்கினார்; வ.வே.சு. ஐயர் தமையனாராக இலங்கினார்; பண்டிதை அசலாம்பிகை அம்மையார் அன்னையாராகப் பொலிந்தார். அவர் அருமைத் தாயார் பாட்டியாராகத் திகழ்ந் தார். இளம் மாணாக்கர் பலர் நன்னான்கு பேராக முறையிட்டு இட்டு விசிறியதை என்னென்று சொல்வேன்! பண்டிதர் சவுரிராய பிள்ளையின்தம்பியார் டாக்டர் மாசிலாமணி பிள்ளை என் உடல் நிலையைச் சோதித்து, வெயிலில் ஊர் வலஞ் செல்கிறதே என்று ஐயுற்றேன் என்ற உரையுடன் அவர் மாட்டுப் பிறந்த அன்பு எனக்குரிய மருந்தாயிற்று. அன்பர்களின் அந்தண்மையில் யான் கிடந்தேன். வெம்மை தணிந்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. - அப்பர் மாகாணம் வருகிறேன்; எங்கே? நாயக்கரையும் என்னையும் பிரித்த இடத்துக்கு வருகிறேன். இனிய காஞ்சி வருகிறேன். காஞ்சி மகா நாட்டை யான் மறவேன்; நாயக்கரும் மறவார்; தமிழ்நாடும் மறவாது. அம்மகாநாடு பலவழியிலுஞ் சிறப்பாக நடைபெற்றது. பலதிறக் கட்சியார் மகாநாட்டை அணிசெய்ய ஒருப்பட்டது ஒருவிதச் சிறப்பே. மகாநாட்டுத் தலைமையுரைகளை யான் பத்திரிகை முறை யிலோ நடையிலோ எழுதுவதில்லை. அவைகளை யான் வேறு விதமாக அமைப்பது வழக்கம். தலைமையுரைகள் ஒரு திரண்ட நூலாகிப் பயன்படல் வேண்டுமென்பது எனது உள்ளக்கிடக்கை. வழக்கப்படியே காஞ்சி மகாநாட்டுத் தலைமையுரையையும் அமைத்தேன். அதில் தமிழ்நாட்டைச் சுருங்கிய முறையில் இறக்கியுள்ளேன். காஞ்சியில் கூடிய தமிழ்நாட்டுக் காங்கிரஸின் (மாகாண மகாநாட்டின்) நடைமுறையைத் தினப்பதிப்புக்கள் விரிவாக வெளியிட்டன. அதை நவசக்தி நிருபர் வாரப்பதிப்புக்கு ஏற்ற வாறு சுருங்கிய முறையில் வடித்தனர். அச்சுருக்கம் மகாநாட் டின் நிலைமையை நன்கு விளக்குவதாகும் என்று கருதுகிறேன். அது வருமாறு :- 31-வது தமிழர் மகாநாடு இம்மாதம் 21,22ஆந் தேதிகளில் காஞ்சிபுரத்தில் இனிது நடைபெற்று முடிந்தது. அக்கிராசனர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் 20ஆம் தேதி மாலை காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். வரவேற்புக்கூட்ட அங்கத்தினர் புகை வண்டி நிலையத்துக்கு வந்திருந்து அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். இந்த வைபவத்தை முன்னிட்டு நகர் முழுதும் சிறப் பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேசபக்தி புகட்டும் தொடர் மொழிகள் எழுதப்பட்ட வளைவுகள் பல இடங்களில் நாட்டப் பட்டிருந்தன. அக்கிராசனருக்குக் காமாட்சி வாசகசாலையில் தங்குதவற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. அன்று மாலை மேற்படி வாசகசாலையார் முதலியாருக்கு ஓர் உபசாரப்பத்திரம் படித்துக் கொடுத்தார்கள். முதலியார் பதிலளிக்கும் வாயிலாக வாசக சாலைகளின் அவசியதைப் பற்றிச் சில மொழிகள் கூறினார்,. நகர சபையின் வரவேற்பு மறுதினம் 21ஆம் நாளன்று பகல் 12 மணிக்கு மகாநாட்டுத் தலைவர் மேளவாத்தியம் முதலியவைகளுடன் ஊர்வலமாகக் காமாட்சி நாடகசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழி யெங்கும் ஜனங்கள் கூடியிருந்து வந்தே மாதர கோஷம் செய்த னர். வழியில் நகரசபை மண்டபத்துக் கெதிரில் ஊர்வலம் வந்த தும் அக்கிராசனர் அம்மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லப் பட்டார். அங்கு நகரசபையின் சார்பாகச் சிறந்த தமிழ் நடையில் ஓர் உபசாரப்பத்திரம் படித்துக் கொடுத்தனர். அதில் முதலியார் அவர்களின் பாரதசேவையும், தண் தமிழ் நாட்டுத் தொண்டும், செந்தமிழ் நல்வளர்ப்பும், பொதுநல ஊழியமும், அறம்பகர் தலும், போற்றப்பட்டிருந்தன. நகரசபைக்குட்பட்ட பள்ளிக் கூடங்களில்இந்நகர் சிறார்களும், சிறுமிகளும் காந்தியடிகள் நிர்மாண திட்டத்து உயிராய் மிளிர்ந்து ஒளி வீசும் இராட்டின நூல் பயிற்சியைப் பெற்று வருவது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். முன்னம் தேசபக்தன் மூலமும், தற் போது நவசக்தி வாயிலாகவும் நாட்டின் நன்மையை நாடி நிகழ்த்தி வரும் நல்லுரையால் நாடு நவசக்தி பெற்றிருக்கிறதென் றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்; முதலியார் பதில் அளிக் கையில் நகரசபைகளும், தல தாபனங்களும் நகர அபி விருத்திக்காகப் பாடுபடுவதுடன் தேச நன்மையையும் கவனிக்க வேண்டுமென்றும், கதர்த் திட்டத்தைக் காந்தியடிகள் அரசியல் கலப்பற்றதாகச் செய்திருப்பதால் அதில் முக்கியமாக ஈடுபட வேண்டுமென்றும், சுகாதார விஷயத்தில் பெரிதும் கவனம் செலுத்துவதுடன் பள்ளிக்கூடங்களில் சிறுவர் சிறுமிகளுக்குச் சுகாதார விதிகளைப் போதிக்க வேண்டுமென்றும் கூறினார். பின்னர் ஊர்வலம் மகாநாடு நடப்பதற்காக ஏற்படுத்தப்பட் டிருந்த காமாட்சி நாடகக் கொட்டகையை அடைந்தது. மகா நாட்டை முன்னிட்டு நாடகசாலை மிகவும் சிறப்பாக அலங் கரிக்கப்பட்டிருந்தது. பந்தலுக்குள் புகுந்ததும் எம் சிங்காரவேலு செட்டியார் அவர்களால் தேசீயக்கொடி நாட்டும் வைபவம் நடத்தப் பெற்றது. முதல் நாள் மகாநாடு பிற்பகல் 1-30 மணிக்கு ஆரம்பமாயிற்று. மகா நாட்டிற்குச் சுமார் 400 பிரதிநிதிகள் பற்பல ஜில்லாக்களி லிருந்தும் வந்திருந்தார்கள். இவர்களையன்றி நடவடிக்கை களைக் கவனிக்க ஏராளமான ஜனங்கள் வந்து கூடியிருந்தார்கள். எனவே, ஜனத்திரள் பந்தல் முழுவதும் நிரம்பியிருந்தது. பல பெண்மணிகளும் பிரதிநிதிகளாகவும் நடவடிக்கைகளைக் கவனிப்போராகவும் வந்திருந்தார்கள். மேடையில் இருந்த பிரமுகர் களில் கீழ்க்கண்டவர் இருந்தனர். எ. ஸ்ரீநிவாச ஐயங்கார், ஏ. அரங்கசாமி ஐயங்கார், டாக்டர் வரதராஜலு நாயுடு, ஈ.வே. இராம சாமி நாயக்கர், எ சத்தியமூர்த்தி, டி.வி. வேங்கடராமையர், சி.ஆர். ரெட்டியார், ஓ. கந்தசாமி செட்டியார், ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், டி.ஏ. இராமலிங்கஞ் செட்டியார், ஸி.வி. வேங்கட ரமண ஐயங்கார், எம். சிங்காரவேலு செட்டியார், வி. சக்கரைச் செட்டியார், கே. பாஷ்யம், பக்தவத்ஸலம் நாயுடு, எம். கே. ஆச்சாரியார், எ. முத்தையா முதலியார், ஹமீதுகான், ஷாபி முகமது, எ. இராமநாதன், கே. சந்தானம், ஜடி கட்சியைச் சார்ந்த ஏ. இராமசாமி முதலியார், குருசாமி நாயுடு, கண்ணப்பர் முதலி யோர் விஜயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பத்தில் தெய்வப் பிரார்த்தனைகளும், தேசீய கீதங் களும் பாடப்பட்டன. பின்னர் உபசரணைக் கூட்டத் தலைவர் சி. என். முத்துரங்க முதலியார் தமது வரவேற்பு உபந்நியாசத்தைப் படித்தார். அவருடைய உபந்நியாசத்தில் ஜடி கட்சியைப் பலமாகக் கண்டிக்கும் பாகம் வந்தபோது பிரதிநிதிகளில் சிலர் அதிருப்தி காட்சி ஆட்சேபித்தனர். அக்கிராசனர் தெரிந்தெடுப்பு வரவேற்பு உபந்நியாசம் முடிந்ததும் சி.வி. நாயுடு அக்கி ராசன பதவிக்குத் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரைப் பிரரேபித்தார். சி. வரதாச்சாரியார் இதை ஆமோதித்த பின்னர், எ. ஸ்ரீநிவாச ஐயங்காரும், டாக்டர் வரதராஜலு நாயுடுவும் பிரரேபணையை ஆதரித்துப் பேசினார்கள். தமிழ் மொழியை வளர்ப்பதனால்தான் தமிழர் ஒற்றுமைப்படக் கூடுமென்றும், இவ்வழியிலே முதலியார் சிறந்த ஊழியம் செய்து வந்திருக்கிறா ரென்றும், தமிழ்நாட்டுக்கு வெளியே நடக்கும் காங்கிர கூட்டங்களுக்கு முதலியார் சென்றதில்லை யாயினும், அவரது அரசியல் அறிவுக் கூர்மையைக் கண்டு தாம் அதிசயப்பட்டிருப்ப தாகவும், மனதாபங்கள் ஏற்படுங் காலத்தில் அவர் நடுநிலைமை யிலிருந்து அரிய ஊழியம் செய்திருப்பதாகவும் ஸ்ரீநிவாச ஐயங்கார் குறிப்பிட்டார். பின்னர் முதலியார் அக்கிராசனபீடத் தமர்ந்து தமது உபந்நியாசத்தைப் படித்தார். பிரதிநிதிகளும் மற்றவர்களும் உற்சாகத்துடன் பிரசங்கத்தை முழுவதும் கேட்டுக் கொண்டிருந்ததுடன் இடையிடையே கரகோஷமுஞ்செய்து ஆரவாரித்தார்கள். அநுதாபத் தீர்மானம் அக்கிராசன உபந்நியாசம் முடிந்ததும், தேசபக்த சிகா மணிகளான தேசபந்து தாஸர், வ. வே. சுப்பிரமண்ய ஐயர், கிருஷ்ணசாமி சர்மா, சுப்பிரமணிய சிவம், தியாகராஜ செட்டி யார், பக்கிரிசாமிப் பிள்ளை, டாக்டர் சுப்பிரமணிய ஐயர் முத லானோர் இவ்வாண்டு உயிர் நீத்தலால் நமக்கு ஏற்பட்ட ஆறாத் துயரத்தையும், நம் தேசத்திற்கேற்பட்ட பெருத்த நஷ்டத்தையும், இம்மகாநாடு தெரிவித்துக் கொள்கிறது என்ற அநுதாபத் தீர்மானம் தலைவரால் பிரரேபிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை எல்லோரும் எழுந்து நின்று ஏக மனதாக நிறைவேற்றி வைத் தனர். இத்துடன் முதல் நாள் கூட்டம் முடிவடைந்தது. அன்று மாலை சபர்மதியிலிருந்து வந்து சேர்ந்த சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியாரால் கதர் கண்காட்சிச்சாலை திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் நாள் 22ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் மகாநாடு கூடிற்று. யாழ்ப்பாணம் மாசிலாமணிப் பிள்ளையின் புதல்வியர் ஆரம்பத்தில் வீணை வாசித்துக் கொண்டு அதன் இசைக்கிணங்கச் சில தேசீய கீதங்களும் பாடினர். முதல்நாள் வந்தவர்களைத் தவிர ச. இராஜகோபாலாச் சாரியார், சாமி வேங்கடாசலம் செட்டியார், பி.டி. ஆஷா முதலியோரும் இன்று வந்திருந்தனர். அக்கிராசனர் தொடக் கத்தில் அபிப்பிராய பேதங்கள் பல இருந்தபோதிலும் எல்லா ரும் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும், மகா நாட்டைத் தெய்வ சபையாகப் பாவித்துச் சந்தடி செய் யாமல் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறிய அடியிற்கண்ட தீர்மானத்தை எ. ஸ்ரீநிவாச ஐயங்கார் பிரரேபித்தார்:- பாட்னா முடிவு (a) பாட்னாவில் கூடிய அகில இந்திய காங்கிர கமிட்டி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை, கதராடை எப் போதும் கட்டாயமாய் உடுத்தவேண்டும் என்ற மாறுதலுடன், காங்கிர தீர்மானிக்க வேண்டுமாய் இம்மகாநாடு சிபார்சு செய்கிறது. (b) இப்போது சுயராஜ்யக் கட்சியார் நடத்திவரும் ராஜீயத் திட்டத்தில் குறைவுபடாமல், இன்னும் தீவிரமாக, காங்கிர ராஜீய வேலைத் திட்டத்தை நடத்திச் சட்டசபைத் தேர்தல் களையும் நடத்த வேண்டுமென்றும், இனி, தனிப்பட்ட சுய ராஜ்யக் கட்சி வேண்டாமென்றும், இம்மகாநாடு கான்பூர் காங்கிரஸுக்குச் சிபார்சு செய்கிறது. மேற்கண்ட தீர்மானத்தின் மீது ஐயங்கார் பேசுகையில் இத்தீர்மானம் தமிழ் நாட்டிற்குப் புத்துயிரையும், ஒற்றுமையை யும் அளிக்குமென்ற நம்பிக்கையினாலேயே இதைத் தாம் பிரரேபிக்க ஒப்புக்கொண்டதாகவும், தேசீய இயக்கத்துக்கு விரோதிகள் பலர் இருக்கையில், காங்கிரஸும் சுயராஜ்யக் கட்சி யும் ஒன்றுபட வேண்டுவது அவசியமென்றும், காங்கிரஸைப் பழைய மிதவாத சபையாக்க வேண்டுமென்று சிலரும், பரபர ஒத்துழைப்பைக் கைக்கொள்ள வேண்டுமென்று மற்றும் சிலரும் முயற்சி செய்கிறார்களாதலால் அவர்களுக்கு நாம் இடங்கொடுக்கக் கூடாதென்றும், இத்தீர்மானம் அவர்களுக்குத் தக்க பதில் ஆகு மென்றும், சுயராஜ்யக் கட்சி யார் சுயராஜ்யம் கிடைக்கும்வரை தடைமுறையையே கைக்கொண்டு வருவார்களென்றும், அர சாங்கத்தாரோடு ஒருகாலும் ஒத்துழைக்க மாட்டார்களென்றும் கூறினர். டாக்டர் வரதராஜலு நாயுடு மேற்கண்ட தீர்மானத்தை ஆதரித்துப் பேசுகையில், தேசத்தார் ஒருமுகமாக அரசாங் கத்தைத் தாக்குவதற்குப் பதிலாக ஒருவரோடொருவர் சண்டை யிடும் நிலைமை ஏற்பட்டுவிட்டதென்றும், இந்நிலைமைக்கு இனியும் இடங்கொடாமல் காங்கிரஸைச் சுயராஜ்யக் கட்சியா ரிடம் ஒப்புவித்துவிட வேண்டுமென்றும், அக்கட்சியார்தான் அரசாங்கத்தைக் கண்களில் விரல்விட்டு ஆட்டிவருகிறார்க ளென்றும், சட்டசபைகளில் பிராமணர்கள் அதிகமாகப் புகுந்து விட்டால் என்ன செய்கிறதென்று சிலர் கேட்கிறார்களென்றும், பிராமணர்களுடன் போராடுவதற்குப் பயந்து அதிகாரவர்க்கத் துடன் போராட்டத்தை நிறுத்தக்கூடாதென்றும், பிராமணர்கள் எவ்வளவு முயன்றாலும் சில தாபனங்களுக்குமேல் கைப்பற்ற முடியாதென்றும், அப்படிச் சந்தேகமிருந்தாலும் ஒரு சமரசக் கமிட்டி அமைத்து அதன் மூலம் வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இத்தீர்மானத்திற்கு எம். சிங்கார வேலு செட்டியார் அடியிற்கண்ட திருத்தப் பிரரேபணை கொண்டுவந்தார்;- இப்பொழுது சுயராஜ்யக் கட்சியார் நடத்திவரும் ராஜீயத் திட்டத்தில் குறைவுபடாமல் இன்னும் தீவிரமாகக் காங்கிர ராஜீய வேலைத் திட்டத்தை நடத்திச் சட்ட சபைத் தேர்தல்களையும் நடத்தவேண்டுமென்றும், இனித் தனிப்பட்ட சுயராஜ்யக் கட்சி வேண்டாமென்றும், சட்ட சபைகளில் அதிகார விஷயங்களில் ஒத்துழையாமையை அநுஷ்டித்துக் கவர்ன்மெண்டின் நட வடிக்கைகளை தம்பிக்கச் செய்யவேண்டிய முறைகளைக் காங்கிர ஏற்கவேண்டு மென்றும், காங்கிர இதை யேற்காவிட்டால் சுயராஜ்யக் கட்சியினர் கமிட்டியிலாவது, வேறு உத்தியோகங் களிலாவது பதவியேற்காமல் அரசியலை தம்பிக்கச் செய்ய வேண்டுமென்றும், அதுவும் பயன்படாவிட்டால் முழு ஒத்துழை யாமையை அநுஷ்டித்துச் சுயராஜ்யம் பெறவேண்டு மென்றும் இம் மகாநாடு கான்பூர் காங்கிரஸுக்குச் சிபார்சு செய்கிறது. இராமபத்திர உடையார் திருத்தப் பிரரேபணையை ஆதரித்தார். எதிர்ப்பு ஈ.வே. இராமசாமி நாயக்கர், தீர்மானம் திருத்தப் பிரரேபணை இரண்டையும் எதிர்த்துப் பேசுகையில் கூறிய தாவது :- பாட்னா தீர்மானத்தை ஆதரிப்பதாக இத்தீர்மானம் கூறுகிறது. ஆனால் பாட்னா தீர்மானம் என்னவென்பதே அநே கருக்குத் தெரிந்திராது. மகாத்மா காந்தி சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை அங்கீகரிக்க வில்லையென்பது வெளிப்படை. சுய ராஜ்யக் கட்சியார் காங்கிர நிர்மாணத் திட்டம் நடைபெற வொட்டாமல் தடைசெய்து கொண்டிருந்தபடியால், அவர்கள் தனியாகத் தொலைந்து போகட்டுமென்று விடப்பட்டார்கள். அவர்களுடைய திட்டத்தை மகாத்மாவும் மற்றவர்களும் அங்கீ கரித்திருந்தால் சுயராஜ்யக் கட்சியென்ற தனிக் கட்சியே இருந் திராது. அப்படியிருக்க இப்போது அவர்களுடைய திட்டத்தைக் காங்கிர முழுதும் ஏற்றுக்கொள்வதென்றால் இதைவிட அவமானம் வேறில்லை. பின்னர் காங்கிரஸில் ஒத்துழையாமைக்கே இடமிராது. சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை ஒப்புக்கொள்வ தற்கு அவர்கள் சாதித்திருப்பது என்ன? வரவு செலவுத் திட்டத்தை அவர்கள் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஒரு பைசா வேனும் வரி குறைந்ததா? மந்திரியின் சம்பளத்தை மறுத்தார்கள். ஆனால் அப்பணத்தை ஒரு வெள்ளைக்காரன் கொண்டு போனான். இரட்டை ஆட்சியைக் குலைத்தார்களென்றால் ஒற்றை ஆட்சி ஏற்பட்டுவிட்டது. இத்துடனில்லாமல் பண்டித நேரு, படேல் முதலியோர் கமிட்டி அங்கத்தினர் பதவிகளையும் அக்கிராசன பதவிகளையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட் டார்கள். தாம்பேயை எல்லாரும் திட்டினது உண்மைதான். ஆனால் துட்டுவந்து அவர் பெட்டி நிரம்புகிறதே யன்றித் திட்டு அவரை ஒன்றும் செய்யவில்லை. எனவே காங்கிர சுயராஜ்யக் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொள்வது முற்றிலும் தவறாகும். பின்னர், எ. இராமநாதன் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார். இத்தீர்மானம் நிறைவேறிவிட்டால், சுய மரியாதை யுள்ள ஜடி கட்சியினரோ, மிதவாதியோ காங்கிரஸில் வந்து சேரமாட்டாரென்றும், 1920ஆம் வருஷத்தில் காங்கிர ஒத் துழையாமையை ஏற்றுக் கொண்டதும், சட்டசபை பகிஷ்காரப் பிரசாரத்திற்குப் பணம் கொடுக்க அரங்கசாமி ஐயங்கார் முதலி யோர் மறுத்துவிட்டாரென்றும், இப்போது மட்டும் ஒத்துழை யாமைத் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட பணத்தை அவர்கள் எவ்வாறு கேட்கலாமென்றும் கூறினார். இப்போது எ. ஸ்ரீநிவாச ஐயங்கார் எழுந்திருந்து, ஒற்றுமையை முன்னிட்டு அத்தீர்மானத்தின் இரண்டாம் பகுதி கொண்டுவரப்பட்டதென்றும், காங்கிரஸில் சுயராஜ்யக் கட்சி யாருக்கே சட்டசபை வேலை ஒப்படைத்திருப்பதால் மாற்சல்யம் ஏற்படாமலிருக்கும் பொருட்டு எல்லாரும் கலந்து வேலை செய்வதே அதன் நோக்கமென்றும், பெல்காம் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட சுயராஜ்யக் கட்சியினராகிய தாம் அதை வற்புறுத்த விரும்பவில்லை யென்றும், சுயராஜ்யக் கட்சி தனிக் கட்சியாக இருந்து சட்டசபை வேலையை நடத்த வேண்டு மென்று சபையோர் அபிபிராயப்பட்டால் அவ்வாறு செய்யச் சித்தமாயிருப்பதாகவும் கூறினார். வேங்கடகிருஷ்ண பிள்ளை தீர்மானத்தின் இரண்டாவது பகுதியை எடுத்துவிட வேண்டுமென்று ஒரு திருத்தத்தைப் பிரரேபித்தார். பின்னர், எ சத்தியமூர்த்தி ஐயர் அசல் தீர்மானத்தை ஆதரித்துப் பேச எழுந்து நாயக்கர், இராமநாதன் இவர் களுடைய ஆட்சேபங்களுக்கு விதாரமாகப் பதில் கூறினார். சுயராஜ்யக் கட்சியார் செய்திருக்கும் வேலைகளைப்பற்றி மகாத்மா காந்தி சிலாகித்துக் கூறியிருப்பதை அவர் எடுத்துக் காட்டினார். சுயராஜ்யக் கட்சியார் செய்து முடித்திருக்கும் வேலைகளைப் பற்றியும் அவர் விரிவாகச் சொன்னார். காங்கிர பணத்தைச் சட்டசபை வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற ஆட்சேபத்துக்கு அவசியமே யில்லையென்றும், தமிழ்நாட்டுக் காங்கிர கமிட்டிக்கு ரூபா 2000 கடன் இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார். சுயராஜ்யக் கட்சியின் மூன்று வருஷ வேலைக்குப் பிறகு தாம்பே ஒருவர் தான் தவறிப்போயிருக்கிறாரென்றும், அவரையும் தாங்கள் கண்டித்து ஒதுக்கிவிட்டதாகவும் மற்றக் கட்சியினரோ உத்தியோக வேட்டையையே முக்கியமாகக் கொண்டிருக்கிறாரென்றும் குறிப்பிட்டார். ஜடி கட்சியாரும், மித வாதிகளும் வர மாட்டார்களென்று இராமநாதன் சொன்னாரென்றும், எல்லாரும் வரவேண்டுமென்பதற்கு இங்கே என்ன சமாராத னையா, ஊர்வலமாவென்று அவர் வினவினார். இராஜகோபாலாச்சாரியார் இச்சமயத்தில் இராஜகோபாலாச்சாரியாரின் அபிப் பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சிலர் கேட்டுக் கொண்டனர். ஆச்சாரியார் கூறியதின் சாரமாவது:- தீர்மானத் தின் முதல்பாகம் நிறைவேறினால் நான் சந்தோஷமே யடைவேன். மகாத்மா காந்தி கதர் உடுத்துவதைக் கட்டாயமாகச் செய்ய வேண்டியதில்லை யென்று கருதினார். இந்த ஏழை தேசத்தில் ஒருவர் பல உடைகள் வைத்திருக்க முடியாதென்றும், ஆகையால் காங்கிர வைபவங்களுக்குக் கதர் கட்டுவதென்றால் எப்போ தும் கதர் கட்டவேண்டியிருக்குமென்றும் அவர் நினைத்து இவ்வாறு செய்தார். ஆயினும் தமிழ்நாடு கதரைக் கட்டாய மாகச் செய்தால் அவருக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படும், ஆனால் வெறும் தீர்மானத்தோடு மகாத்மா சந்தோஷமடைய மாட்டார். காரியத்தில் நமது அபிமானத்தைக் காட்டவேண்டும். கதரைக் கட்டாயமாகச் செய்யாவிட்டாலும் மோசம் எதுவு மில்லை. ஆகவே முதல் பகுதி நிறைவேறினும், நிறைவேறாவிடி னும் எனக்கு ஆட்சேபமில்லை. இரண்டாவது பகுதியைமட்டும் நான் ஆதரிக்கமுடியாது. இன்றளவும் சட்டசபை விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப்போல் நம்பிக்கையில்லா தவர்கள் பெரும்பான்மை யோராய் இல்லாவிடினும் பலர் இருக்கிறாரென்பது வெளிப்படை. நமக்கு நம்பிக்கையில்லாத ஒரு வேலையைப்பற்றிய வரையில், இப்படிச்செய், அப்படிச் செய் என்று நாம் ஏன் சொல்லவேண்டும்? அவ்வப்போது சம யோசிதமாகக் காரியங்கள் செய்யும்படி சுயராஜ்யக் கட்சியாரை விட்டுவிட வேண்டும். அரசாங்கத்தை தம்பிக்கச் செய்ய வேண்டுமென்றும், இன்னும் தீவிரமாக நடத்த வேண்டுமென்றும் அவர் சொல்கிறார். பண்டித நேருவுக்கு இந்த ஆசை கிடையாதா? இல்லாவிடில் கெல்கார் முதலியவர்களை அவர் எதிர்த்து ஏன் இத்துணை தூரம் போராடவேண்டும்? எவ்வளவோ இடை யூறுகளுக்கிடையில் பண்டிதநேரு எல்லாரும் கண்டு அதிசயப் படும்படி காரியம் நடத்தி வருகிறார். நாம் காகித மூலமாகச் சில யோசனைகளைச் சொல்லி அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. சுயராஜ்யக் கட்சியார் முடிவில் சட்டசபைகளை விட்டு வந்து தம்முடன் சேர்ந்து வேலை செய்வார்களென்ற நம்பிக்கை யாலேயே மகாத்மா காந்தி அவர்களை ஆதரித்து வருகிறார். மற் றொரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சுயராஜ்யக் கட்சித் தலைவரான எ.ஸ்ரீநிவாச ஐயங்கார் ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கையில் அக்கட்சியைச் சேர்ந்த எம். சிங்காரவேலு செட்டியார் திருத்தப் பிரரேபணை கொண்டு வருவது உசித மன்று. எனவே, தீர்மானத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஆதரிப்பதற்கில்லை. ஸ்ரீநிவாச ஐயங்கார் ஒற்றுமைக்காகக் கொண்டு வந்த இத்தீர்மானத்தினால் பிளவு ஏற்படும் போலிருப்பதால் தீர்மானத் தின் இரண்டாவது பகுதியை வாப வாங்கிக் கொள்வதாகக் கூறினார். எனவே, தீர்மானத்தின் முதல் பகுதியை மட்டும் அக்கி ராசனர் ஓட்டுக்கு விட்டார். அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. * * * (பலவகைத் தீர்மானங்கள் நிறைவேறின.) * * * நிராகரிக்கப்பட்ட தீர்மானங்கள் அடியிற்கண்ட இரண்டு தீர்மானங்கள் பாக்கியிருந்தன;- தேசீய முன்னேற்றத்திற்கு இந்து சமூகத்தாருக்குள்ளும் பற்பல ஜாதியாருக்குள்ளும் பரபர நம்பிக்கையும், துவேஷ மின்மையும், ஏற்படவேண்டுமாகையால் ராஜீய சபைகளிலும், பொது தாபனங்களிலும், பிராமணர் பிராமணரல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என்ற இம்மூன்று பிரிவினருக்கும் தனித் தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்தவேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. தேசீய ஒற்றுமையையும் பற்பல சமூகத்தாரின் நன்மை களையும் உத்தேசித்துக் கான்பூர் காங்கிரஸில் சட்டசபைத் தேர்தல் களைக் காங்கிர நடத்தும்படி தீர்மானித்த பிறகு நமது மாகாணத்தில் அத்தேர்தல்களை நடத்தும் பொருட்டு ஒரு தேர்ந்தெடுக்கும் கமிட்டியை நியமித்து நடத்தி வைப்பது அவசியமாகும் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது. மேற்கண்டவற்றில் முதல் தீர்மானத்தை ஈ.வே.இராமசாமி நாயக்கரும், எ. இராமநாதனும் கொண்டு வருவதாக இருந் தனர். மற்றது விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்களால் பிரரேபிக்கப் பட விருந்தது. முதல் தீர்மானம் விஷயாலோசனைக் கமிட்டியில் அடிபட்டுப்போனது. இவ்விரண்டு தீர்மானங்களும் ஒழுங்குக்கு மாறானவை யாதலால் அவற்றைப் பிரரேபிக்க அநுமதிக்க முடியாதென்று அக்கிராசனர் தெரிவித்தார். ஈ. வே. இராமசாமி நாயக்கர் இத்தீர்ப்பை ஆட்சேபித்தார். தீர்ப்புக்குக் காரணம் உண்டா, அக்கிராசனரின் யதேச்சாதிகாரந்தான் காரணமா வென்று அவர் வினவினார். சபையோர் தலைவர் தீர்ப்புக்கு உட் படவேண்டுமென்று கூக்குரலிட்டனர். நாயக்கர் நான் தலைவ ரிடம் பேசுகிறேன். அவர் என்னை வெளிப்படுத்தவும் அடக்கவும் உரிமையுடையவர். அவர் உத்தரவின்றி மற்றவர் கலவரம் செய் தால் தாம் சும்மாயிருக்க முடியாதென எச்சரிக்கை செய்தார். அப்போது அக்கிராசனர் எழுந்து தாம் எவ்வித அடக்குமுறையை யும் கையாளவில்லையென்றும், நாயக்கர் தமது பிரிய நண்பரா யினும் அக்கிராசனர் என்ற முறையில் தமது கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும், சட்டசபை வேலையைக் காங்கிரஸே மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறாதபடி யாலும் அவ்வேலையை நடத்தச் சுயராஜ்யக் கட்சிக்கே அதிகாரங் கொடுத்திருப்பதாலும், சட்டசபை வேலைக்கே உரிய வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி மகாநாடு யோசிக்க உரிமை யில்லையென்றும், சுயராஜ்யக் கட்சிக் கூட்டத்திலேயே இதைப் பற்றி ஆலோசித்தல்வேண்டுமென்றும், ஆதலால்தான் தாம் தீர்மானங்களை நிராகரித்து விட்டதாகவும் கூறினார். உடனே ஈ.வே. இராமசாமி நாயக்கர், எ. இராமநாதன், சுரேந்திரநாத் ஆரியா, சக்கரைச் செட்டியார் இந்நால்வரும் சபையைவிட்டு வெளியேறிச் சென்றனர். பின்னர், எம். கே. ஆச்சாரியார் வரவேற்புக் கூட்டத்தின் சார்பாக அக்கிராசனர்க்கும், பிரதிநிதிகளுக்கும் வந்தனங் கூறி னார். ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியார் பிரதிநிதிகளின் சார்பாக வரவேற்புக் கூட்டத் தலைவர், காரியதரிசிகள் முதலியோர்க்குச் சிறந்த ஏற்பாடுகள் செய்து உபசரித்தற்கான நன்றி கூறினார். எ. ஸ்ரீநிவாச ஐயங்கார் அடுத்த மகாநாட்டைச் சென்னைக்கு அழைத்தது கரகோஷத்துடன் சபையோரால் அங்கீகரிக்கப் பட்டது. முத்துரங்க முதலியார் மகாநாடு ஒற்றுமையுடன் நடந்து முடிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், முதலியார் தமது இனிய மொழிகளாலும், அரிய உபதேசங்களாலும் நல் வழி காட்டியதற்காக வந்தனங் கூறி, பிரதிநிதிகளுக்கு வசதிகளில் குறைவிருந்தால் மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். தலைவரின் முடிவுரை ã‹dர்,அ¡கிராசனர்,கÈயாணசுந்தuமுதலியார் முடி வுரை கூறும்tயிலாக¥gசியதின்rரம்tருமாறு:-bதாடக் கத்âல்மகிழ்ச்áயுடன்இங்கு¡கூடிïறுதியிYம்மகிழ்ச்சியுட nனயேeம் கலைகிwம். ஆனாšஎன்மனத்j மட்Lம்ஒ‹றுவருத்து»றது. என்அÇயந©பர்கள் என்மீதுபழிகூறி Éட்டுtளிச்செ‹றார்கள். அப்பழிvன்னைச்சhராது.அவர்கள்கருJமாறுஎவர்öண்டுதலhலாதல்mதிகாரத்தாyதல் வகுப்புத்தீர்மhdத்தை யான்åழ்த்jவில்லை.kனச் சான்Wவழிநின்Wநியாaவuம்புக்குஉட்ப£nடஎdதுகட னாற்றிnனன். எவர்விருப்gத்துக்கும் aன்fட்டுப்gட்டவ னšலன்.யான்கூ¿aகாரணம்Ãயாயமானnத. வெளியேறியஅன்ப®fள்உடல் ஈண்டிšலையேDம். அவர்கள்ஆ‹kநேயம் ஈண்டுநிலவுகிwது.அtர்கள்nநயமன்றோஉ§களை<ண்டுக்கyaதவhறுகாத்துநிற்கிwது?பழம்bபருமைtய்ந்தஇக்காŠசிமாநகuம்மகாeட்டைச்áறப்பாகநடா¤âநற்பெயர் பெற்றுவிட்lது.எவ்Éதமாdகேடுமின்றிkகாநாLஇனிJநிறைவேறியதுFறித்துநா« மகிழ்ச்சியடைதல்வேண்Lம். காங்கிரகாரரல்yதபyர்இ«மகhநாட்டுக்குவிஜயம்செŒ ததுகு¿ப்பிடத்தக்fதாகும்.அடுத்jமகாeடுகூLவதற்குள்ளhகஜoகட்சி,fங்கிர க£சி,சுயராஜ்ய¡கட்சியெ‹றவேற்றுiமயின்றிvல்லாரும்ஒ‹றுபட்டுஅâகாரtர்க்கத்தைஎâர்க்கும்கால« வந்துவிடுkனeம்புகிnறன்.மfநாடுஇவ்tளவுசிறப்பாகeடந்ததற்குக் காரணர்களான,வரவேற்òக்கூட்டத்தiலவர்முத்துuங்கமுதலியhர்,காரியjரிசிநரசிம்kச் சாரியார்,கண்zப்பர்,இUஇராஜர¤னங்கள் முதலியவர் களு¡கும்,ம‰றும்அரும்gடுபட்டு உழை¤ததொ©டர் களுக்கும்நாம்பெரிJம்fடமை¥பட்டிருக்கிறேhம். இÅநாம்நிறைtற்றிய முக்»யதீர்மாdத்தைப்gற்றிஒருவார்¤iதசொல்yவிரும்புகிwன். என்னுடையவிருப்பத்தின் படிfங்கிரஸே சுயராஜ்யக்க£சிவேலைiயஏற்Wக்கொண்டுதீÉரமாfநடத்தவேண்டுk‹றgகுதிநிறைவேறவிšலை.பலfரணங்fளினால்இத்தீர்மாdம்வாபீ வா§கிக்கொள்ளப் பட்டதாயிDம்,இ§குள்sர்பலருடையfருத்துஅதை ஆதரிப்பதாகntஇருக்குbமனநம்òகிறேன்.ஆகவே,eமெல் லாரு«ஒற்றுமைíடன்வேலைbசய்யïயலுமாறுசுaராஜ்யக் கட்áத்திட்டத்iதத்Ôவிரப்படு¤தமுயலும்படி எ.ஸ்ரீநிவாசஐயங்கhiரக்கே£டுக்கொள்கிnறன். கான்பூர்காங்»ரஸின்முடிவு எவ்வாறாயிDம்,சுயரhஜ்யக் கட்சியhரின்வேyக்குயா‹எவ்விதஇடைôWம்செŒயப்போtதில்லை.Mனால்jனிப்பட்டசுaராஜ்aக்கட்சி¤தலைtர்கள்தவறு செய்யும் போது அவர்களைக்f©டிக்fநமக்குcரிமைíண்டு. இவ் வுரிமைiயநான்என்று«நெகிHவிடப்பேhtâšiy. tF¥òவேற்Wik ï«kfநாட்டிšவகுப்பு வேற்றுமைஉணர்¢áபெÇதும்தலைகா£டிற்று. இந்தnவற்றுமைaஒழித்து விடும்படிஉங்களைப்gÇதும்வே©டிக்கொள்கிnறன். என்னைக் கேட்டால்,நான்பிராமணன்vன்றாவதுãராமணரல்லாதவன்v‹றாவJrல்லமா£டேன்; நhன்ஓர் ïந்திய‹என்றேகூறுnவன். நான் கலாசாiலயைவிட்Lநீங்கித்nதசீயத்தொ©டில்தீÉரமாக இறங்கியjற்குஇu©டுமுக்கிய காரzம்உண்டு.முதலhவதுaன்பெÇதும்போற்¿வந்தbபஸண்ட்அம்மையார்fhப்பில்வைக்fப்பட்டதhகும்.இர©டாவதுகhரணம்mப் போJதோன்றிaஜடிfட்சியைvதிர்த்துத்தேசத்தில் ஒற்றுமைநாட்lnவண்டுமென்றÉருப்பமாகு«.இப்nபாதோமுன்னைவிட பிராமணãராமzரல்லாதார்t‰றுமைஅதிக மாÆருக்கிறJ.இவ்வேற்Wமைaஇன்னும்வsரவிட்டால்நாம்சுயuhஜ்யம் பெறப்பேhவதில்y.சhதிவே‰றுமைஉணர்¢சியைக்fடலில்அழு¤திவிட்டு எல்லாரு«இந்eட்டுமக்கŸஇந்தியர்என்றczர்ச்சியைவளர்¥பேhமாக.ஒருவருக்bகாரு வர் விட்டுக்bகாடுக்கும்Kறைaக்கற்றுக்fண்டால்நாம்இம்Kaற்சியில்வெற்¿யடைவோம்.மகhத்மாÉன்வாழ்க்கைÆலிருந்துநா«இப்பாடத்தை முக்கியமாŒ¡கற்றுக்கொள்sவேண்Lம்.கhந்தியடிகளின்சிwந்தகுணங்கள் எல்yவற்¿லும்தலைáறந்ததுஎJஎன்று கேட்டால்mவருடைaவிட்Lக் கொடுக்கு§ குணமேvன்றுrல்tன். பலவீனங்காரண மாகஅவ® விட்டுக்bகாடுக்கிறhரில்y.அதற்Fமாறாfத்தமதுஆ‹மசக்âமிகுதியின்காரzமாய்அவர் Éட்டுக்கெhடுத்து வருகிறார். எனவே,இந்தஅருங்Fணத்தைநாமும்kற்கொண்டுஒருவUக்கொருவர் விட்டுக்bகாடுத்துஒ‰Wமையைநாட்டு வோமhக. தீண்டாkயைப்பற்றிíம்ஒருதீ®kனம்செய்âருக்»றோம்.ïதைப்பற்றி எனதுமு‹னுரையில்விÇவாகச்rல்லிÆருக்கிwன்தீண்டாமை என்னும்சாப«உள்ளவரைÆல்பாரjமாதாசிறையிÅன்றுÉடுதலைgறமாட்டாள் என்Wமறுபடியும்வÈíறுத்திக் கூற விரும்புகிறே‹.ஆனாšதீண் டாமையும்,ãராமணர்பிரhமணரல்yதார் வேற்றுkயும்முழுதும்ஒழிந்த பின்னரே சுயரா{யத்திற்fகஉழைக்fவே©டுkன்றுசொ‹னால்யான்அiதஒருகாலு« ஒப்òக்கொள்ள மாட்டேன்.ஒருgக்கத்தில் வேற்றுமையொழிªதுஒ‰றுமைநிyப்பதற்காf நாம்பாடுபடல்nவண்டும்; மற்றொருòறத்தில்அâகாரவர்¡கத்தைஎதிர்த்Jம்போராoவuல்வே©L«. x‰Wik¡F tÊ jÄழ்நாட்டின்ஒற்றுkக்குxரேசhதனமhயிருப்பதுதமிழ்bமாழிஎன்று Ûண்டுமொUமுறை கூறுகிறேன்.நhமனை வUம்தமிழர்கள்எ‹wஉணர்ச்சி பெருகnவண்டும்.பிuமண®தமிழர்அல்ல® என்று சிலர் சொல்»றார்.ïதைநான் xப்புக்bகாள்ளல் முடியாJ.ஆந்âரநாட்டிšபிறந்துஆªதிரம்பேசுtரெšலாரு«ஆந்திரuவதுnபால் தமிழ்நாட்டில்பிறந்Jதமிழ்nபசுவோbuல்லாUம்தமிழnரயhவர்.நkதுஅருமை¤தமிழ்kழியைமகாத்மாகhªதியும்பேhற்றியிருக்கிறா®.தென்dப் பிரிக்காவிலே தமிழர்கŸகாªதியடிகளுக்Fப்பெÇதும்துணைòÇந்தjநீங்கள்mறிவீர்கள்.ïதன்பயனாய்¤தமிழ®களிட«அன்புகெhண்டஅடிகள் தமதுநன்றிiயத்bதரிவிக்கும்பொருட்டு¤தாம்áறையிலிUக்கும்nபாதுஒருமhjகாலம்தமிழ் பயின்றார்.காந்âயடிகËன்tழ்¡கைaப்பற்றிநா‹ ஒரு நூல்எழுâவருகிறேன்.அதுவிரைவில்வெளியாகும்.காந்தியடிகள் கூர்ஜரத்திšபிறªதவuயினு«உண்kயில்mவர்ஒருதமிழ ரென்W அதில் குறிப்ãட்டிருக்கிறேன். அவர்முfத்தோற்றத்தைக்fவனி¤துப்பhர்த்தீர்களானாšஅதுதமிHர்முகம்போலt தோன்Wம்(கரகோõம்).மீண்Lம்பிறப்òண்டேல்தீ©டாதவர்வFப்பில்தேhன்றப்போவதாகமfhத்மாjரிவித்திருக்»றார்.அ›வாறுபிறந்jல்அவர்தÄழ்நா£டிலே,திருbநல்வேலி யிலே,jமிரபரÂகரையேhuத்திலே பிறத்தல்வேண்டு«.நhனும்அவ்tகுப்பானாfஅங்கே தோ‹றிஅவர்க்குத்bjண்டு புÇயவிரும்பு»றேன். ஆகவே,kகாத்kவிரும்பி¥போற்Wம்தமிழ்bமாழியைÚங்களு«வளர்த்தšவே©டும். இந்jமகாநாLஇங்Fஇத்துணை¢சிறப்பhய்நிறைnவறியதன்Pபfச்சின்னமாகïந்நகரில்xருகதர்fடையும்,நூற்gர்சங்கKம்ஏற்பLத்தும்படிஉங்கisக்கே£டுக் கொŸகிறேன். பொது உடைமை¡fள்கைஎன்gதுமேனாட் oல்பே¢சளவில்இருக்கிwது. ஆனால்fந்தியoகளின்கத®இயக்கம்gதுஉடைமைக் கொள்fயைஅனுஷ்டhdத்தில்கெhண்டுவந்துவிடு«.முதலாளி,தொழிலாË,உaர்ந்தவன்,தாழ்ªதவன்என்wவேற்றுமைfளின்றி இவ்வுலக«சீர்படுவjற் கானcயர்ந்தtதாந்தஉண்iமயைமகா¤kஉபnதசித்Jவருகிறா®.எனவே இந்தïராட்டினïயக்கத்jநீங்கள் அனைவரும் பெரிதும்nபாற்றிஅj‰காகஉiழத்தல்வேண்டு«.ïங்குள்ளதhய்மார்களைநhன்சிற¥gகவேண்டி¡கொள் வேன்.தேசத்âலேஅவ®களாyயே தேசீய cணர்ச்சிbபருகு தல்Tடும்.அtர்கள்கதர்cடைஅணிந்தாšஅவர்களுடைaகுழªதைகளும்நிச்raமாகக்fதர்அÂவார்fள்.நா£டுத்தொண் டிலேஈடுபட்டுத் தேசத்திலேஒற்றுiமaயும்,தேசாãமானத்தை யும்வsர்க்கும்படிஅவ®fளைtண்டிக்கொள்»றேன். இங்குஅக்»ராசனம்tகித்துநடத்திaதில்bதரிªதும்தெÇயாமலும்நா‹பலjtறுகள்செய்âருத்jல்கூடு«.கšவியிலும்,அறி விலும், மற்றும்vல்லாத் JறைகளிYம்எளியவன் யான்.Mகவேãழைகளைப்பொWத்துvன்னைஆáர்வதிக்கு«படிஅனை வuíம்வேண்டிக்fhள்கிறேன்.(fரnகாஷம்)இத்துட‹இரî8மணிக்குமfநாடுஇனிது முடிவடைந்jJ. jiலவர்கËன்அலுtšfŸதிங்கட்கிழமைமாலைதிரு.வி.fலியாணசுªதரமுதலிaர்,ச.இராஜகோபhலாச்சாÇயர்,எ.ஸ்ரீÃவாசஐaங்கார்இவ®கள்வாலhஜாபாத்இªதுமjபாடrலையில் டாக்ட®வரதuஜலுநாயுடுÉ‹தலைiமÆன்கீœநடந்jவைgவத்திற்Fச்சென்Wவந்jர்கள். மாலை61/2மÂக்கு மகா நாட்டுப்gந்தலில்எÞ.ஸ்ரீநிவாrஐயங்கhர்அவ®களி‹அக் கிuசன¤தின்Ñழ்முதலியார்‘அஹிம்ஸாதர்ம«’என்னும் விஷ யத்தை¥பற்றி ஒருr‰பொழிîநிகழ்த்தினhர். மறுதினம்bசவ்வாய்¡கிழkமாலை5மணி¡Fவரவே‰புச்சiப யாUக்குச்சி‰றுண்டிவிருந்Jஅளிக்கப்ப£டது. நைனாப் பிள்sயென்று வழங்கும்காஞ்áபுரம்சுப்பிரkÂயபிள்sஅவ®கள் அரியசங்கீதக் கச்சேரிஒ‹றுநடத்தினா®.இதற்கு¤திரு.É.கலியாணசுªதரமுதலிaர்,ïராமபத்திரஉlaர்,tங்கடகிருZணபிள்ளைமுjலியா®விஜயம்செய்திUந்தdர்.க¢சேரிமுடிªjதும்முதலியோர்இiசமாண்பைப்gற்றிச்சிyஉரைகள்கூறினா®.(27-11-1925) டைனkh’ v‹id¤தலைமை¥பீடத்தில் mமர்வி¡கப்பேáயவருள் டா¡டர்வரjuஜலு நாயுடுவும் ஒருவர்.அtர்என்னை¥பற்றிச் சிலகூறினர். அவைஒவ்bவாருபத்திரிfயில்xவ்வொUவிதமhகவெளிவந்தd.‘மாறுதல்வேண்lதான் என்றஒருtர்fஞ்சிமhநாட்டைப்பற்¿ நவrக்தி’யில்(27-11-1925)தங் கரு¤தைவெளியி£டனர்.அதிšஒருமூலைÆல்“ஸ்ரீமான்கலியாணசுªதரமுதÈயாரைmக்கிரhசனர் பீடத்துக்கு¥பிர ரேபிக்கும்போது,lக்ட®நாயுடு,அtர்சாதுமுதÈயார்vன்றுஅழைக்fப்பட்lலும்அவர்இUjயத்திnலlனமோtலைrய்கிறதுvன்றுகுறி¥பிட்டார். அவர் எந்தப்பொUளிலேïiதக்Tறினரோvனக்குத்தெரிaது என்றுgறித்திருªதார்.இஃதுஇன்னெhருபத்திரிiகயில்tறுவிதkகத் திரிக்fப் பட்டது.iடனமோ’பத்திரிiகஉyகுக்கு வரும்என்றுயh‹நினைக்கÉல்y. என்னைச்‘சாது’என்றுசிலர்செhல்வதுண்L.எப்bgரு ளில்அ¢சொல்லை அவர்வHங்குகின்wனரோதெரிaவில்y.நவசக்தி’ அச்சாகிaஅச்rகம்சhதுஅச்Rக்கூடம்’என்னு«பெயருlயது.அjனால்தான் ‘சாதுvன்னும்பெய®சூ£டப்gட்டதேhஎன்னtஅறிகிyன்.டாக்lர்வரதuhஜலுmர சியல்உல»ல்எ‹னுடன்நெருங்கி¥பழ»யவருள்ஒருவர்.அவர்ldமோ வைத்தொ£டபோJயான்vன்னென்dவோÃனைந்தே‹.டைனkவு¡குப்பின்னர்டாக்l®நாíடுஎந்தக்கு©டைச்bசாரிtரோஎ‹றுஎதிர்பா®¤தே‹.அtர்டைனnமா அளவில்நின்றுவேறிட« புகுªதார். என்உள்ளக் fமல¤தில்டைனnமா இரு¡கிறதா?mதுவேiலசெய்»றதா?என் வாழ்க்கைக் குறிப்பைப்gதுவாfமுற்றும்நேhக்கு வோர்க்கும்,áறப்பாfத்தொழிyளர்இயக்கநிகழ்¢சிகளைnநாக்Fவோர்க்கு«உண்மைவிsங்கும்.‘ஜடி’நேa®fŸ _‹றாம் நாள் காலையில் காஞ்சியிலேபலதிwக்Tட்டங்fள்என்d¡கண்Lகண்டு சென்wன.ஜoÞசார்பில் ஒருகூ£டம்வந்jது.அ~துஎன்னைஏáச்சென்றது.ம‰றொருகூட்டம்vன்னைப்பhர்த்துஇராkசாமிeயக்கரும் மற்ற வரும்,ஸ்ரீநிவாச Iயங்கhர்தீர்மாdத்தைKற்றும்நிறைtற வி£டிருத்தல் வேண்Lம்.அதைமfhநாடுVற்கச்சித்தமhயிருந் ததைநhங்கள்நன்குஉணர்ªதோம்.பி‹னைவFப்புரிkத்தீர்மானத்iதப்பொருsற்றதாக்க வேண்டுbமன்றுதாமேவȪதுதீர்மானத்தி‹பிற்பகுதியை ஐய§கார்âரும்ப வாங்கியிருப்ப®.Mச்சாரியhரும்ஐயங்காரு¡FஒருவழிÆல்துணைÃன்றிருப்பா® என்றுநா§fள்கருJகிறோம்.நhய்க்க®ஏமாற்w¥ப£டார்.mவர்க்குச்Nழ்ச்சிவிளங்fவில்லைvன்றுகூறியது. நீர்‘ஜடிÞகண்கெhண்டுநிலைkiயஆராய்ந்து சொல்கிறீ®.ஐaம்எiதvதையோ கற்பி¡Fம்.பக்க¤தார்யாiரயும்ஐயுwல்கெடு வதுகாட்Lங்குறி.tகுப்புரிமைத்Ô®மானம்வா¡குக்கு விட¥பட் டிருªதால்தோல்விaஉற்றிருக்Fம். அதைப்பற்¿யா‹முடி வுuயில் குறிப்பிட்டபேhதுமfநாடுஎனதுதீர்¥புக்Fஆதர tளித்ததைநீர்கண்டிUப்பீர் என்Wஅக்கூட்ட¤தவரிடங் கூறி னேன்.அவர்களைbயல்லா«காங்கிரÌல்சேUமாறுகேட்Lக் கொண்nl‹. g¤âÇifஉyf« g¤âÇகைஉல»ன்பரபரப்பைஎன்dன்று சொல்வே‹!என்raலைத்nதசீயப்பத்திரிகைகsல்லாம்xUமுகமாக¥போ‰றின!kற்றப் பத்திரிகைfள்பலவாறுதூ‰றின.ஜடிÞஎன்dஜா®என்று எழுதியது.ãற்போக்குப்g¤திரிகைக£குவிளக்fந்தேtஎன்பதைநவசக்âஉணர்ªதனள்;czர்ந்துசுருங்கிய முறைÆல்(27-11-1925)Éளக்கªதந்தனள். அவ்விளக்கத்தைஈ©டுஎடுத்துக்fட்L»nw‹. *** kfhநாட்டில்நிiறவேறப்பெ‰றதீ®மான§கள்gலபோற்wற்குரியன.fங்கிரஸில்சுaராஜ்யக்கட்சி ஒன்றிஒuகட்சியாய்தொண்lற்wவேண்டுbமனக்கொணuப்ப£டதீர்மானம்நிறைnவறியிருந்தால்mJநாட்டில்தோன்¿யுள்ள பலகட்áப்பிணக்குகiளத்தÂப்பதாகும்.இ›வொற்றுமைக்கு எ.ஸ்ரீநிவாசIaங்கார்இணங்கிmக்கUத்தட§கியதீர்மாdத்தைக்கொzர்ந்தhர்.அத்தீர்மாdத்தை ஈ.t.இராமசாÄ நாயக்கரும், எ.இuமநாjனும்,வேறு சிலரும்எதிர்த்தdர்.அவ்bவதிர்ப்பு வேங்கடகிUஷ்ணபிள்iளயைத்தீ®மானத்திலுŸsஒற்றுkப்பகுதிaவிலக்குமாறுதிUத்தங்fணரச்செŒjது.ஸ்ரீநிtசஐயங்கார்mத்திருத்தத்Jக்குஇzங்கல்நேர்ந்தது.நாaக்கர்அத்தீர்மான¤iதஎதிர்த்ததுvதைப்புலப்படுத்Jகிறதுஎன்பJகவனிக்க‰பாற்று.காங்கிரஸோடுசுaராஜ்யக்கட்சிஒன்wலாகா தென்பjஉள்ளங்கை நெல்லிக்கÅபோல்òலப்படுத்துகிறJ. பின்னை ஈ.வே.இராமசாமி eயக்கர்rர்பில்வFப்புரிமைத் தீர்மானங்கொண்டுவuப்பட்டது.மகாeடுகாங்»ர சhர்பிலேகூட்l¥பட்டதேaன்றிச்சுaராஜ்யக்கட்சிச்rர்பிலேTட்டப்படவில்y. இரண்டும்ஒ‹றுபடஉளங்bகாள்ளாதmன்ப®கள்சட்lசபையிலும் ãறஇடங்கËலும்வகுப்புரிiமஇ‹பத்துக்குஎ‹விழைதல்வே©டும்?ச£டசgநுழைÉற்குரிய கட்சிசுயராஜ்ய¡ கட்சியேய‹றிக்கா§கிரmன்றுஎன்gதுஎவரும்அறிªததொன்று. சட்டசgநுழைதல் முதலியஅரசியல்கlன்களாற்றச் Rயராஜ்யக்கட்சி¡குக்fங்கிரÞஉரிமையËத்திருப்gதுஉண்மையே.இ›வுரிkயளிக்கஅ»லஇந்தியfங்கிர கூட்டம் ஒருப்பட்டkயான், இனிக்fங்கிர வேறாகîம்சுயuஜ்யக்கட்சிnவறாகவும் பிரிந்துநி‰றல்அநாவசியமெ‹nறகாஞ்சிமகாநhட்டில்xற்றுமைத்தீ®மானம்கெhணரப்பட்டJ.அவ்வொற்றுkக்குஅன்ப®இராkசாமிநாaக்கரும்மற்றவரும் ïணங்காமையான், பாடலிபுர முடிவின் தீர்மானம்Ãறைவேறிவி£டது. இத்தீர்மானப்படிr£டசபைநுழைîசுயராஜ்aக்கட்சியhர்வயkபட்டுக்கிlக்கிறது.இ›வாறhகக்காங்கிர சார்பிyகூடியுள்ளkfநாடுவகுப்òவாரிப்பிரதிÃதித்துவ¤துக்குஎவ்வhறுஇlந்தரும்?வகுப்òவாரிப்பிரதிநிதித்துtப்போர் சுயராஜ்யக்க£சிமகாநாட்டுக்குŸ நுழையலாமேயன்¿க்காங்கிர மகாநாLகளில்நுழை¤தலாகாது. இக்காரணம்gற்றிமகாநாட்Lத்தலைtர்சட்டசiபக்குறிப்போLவகுப்புவாரிப் ãரதிநிதி¤துவங்fண்lதீர்மான«ஒழுங்கீdமெனத்தŸளிவிட்டனர்.இj¡குறித்துச்சில இடங்களில்Ãயாய«அநியாயம்பேச¥படுகின்wன.கா§கிரஸோடுசுaராஜ்யக்fட்சிஒன்றhலாகாதெனvழுந்தஎதிர்ப்òக்காரணkகப்பhடலிபுரமுடிவுப்gடிதீர்மhனத்தைநிறைntற்றியமfநாடுவகுப்òத்தீர்மhனத்துக்குvவ்வாறு இடமளிக்கும்?ஆjலால்மfநாட்டுத் தலைவர்நியாயவழி Ãன்றேகடனாற்றியுள்ளா®என்பதைnநயர்கள் கவனிப்பார்களhக.(சட்டசgயுளமுடைய) சுயராஜ்யக்க£சியுங்கhங்கிரஸோடு ஒன்றாலாகாJ,(rட்டசபைநுழைவு¡குரிய) வகுப்புத்Ôர்மாdமும்மகாeட்டிšஇடம் பெறல்வே©டும் என்பதுTழுக்கும்ஆசைÛசைக்கும்ஆiசஎ‹னும்பழமொழிnபான்றதாகும்.காங்கிuஸோடுசுயரா{யக்கட்சிxன்றவே©டுமெனkகாநாட்Lத்தலைவ®விரும்பியத‰குச்Rயராஜ்யக்fட்சித்தலைவர்ஸ்ரீநிtசஐயங்கhர்இண§கியும்,அ~துஇராமசhமிநாயக்கருள்Ëட்டார் எதிர்ப்பhல்வீழ்ªதுபட்டbjனமகhநாட்டுநiடமுறையை¡கூர்ந்Jகவனித்தஎtருங்Tறுவர். ஆகவேgடலிபுரமுடிவிற்குக்fஞ்சிமகாeட்டில்துணைÃன்றவர் மாறுjல்வேண்lhதவரேயன்றிச்Rயராஜ்ய¡கட்சியாரšலர்என்பதுஎமது கருத்து. மகாநhடுகளில்தலைiமவகிப்gர்எக்கட்சியரிடத்Jம்காய்தல்உவ¤தல்fள்ளாது,நியாயtழிfடைப்பிடி¤தொழுகவே©Lமேயன்¿,கட்சிப்பி¤தால்அÃயாயவÊநுழைjல்அறமாகாது. காஞ்சி மகாநாட்டுத்தiலtர் நLநிலைநின்wதங்கடனாற்றினார்என்gJவெள்ளிlமலை.*** eயக்கÇன்குடியரசுbகாதி¤தது; கொâப்புஅâகமா யிற்று.அதைத்தÂக்கவேண்டி,எனJநிiல,என்wதலைப் பிட்L (18-12-1925)நவசக்தியிy ஒருகட்டுரைவரைªnதன். அது வருமாறு:- rnfhதரிகளே!சகேhதரர்கnள!! இன்றுïவண்வேறெhருகட்டுiரவuயப்புகhது,எdதுநிலை என்Dªதலைப்Õந்துவரைய¥புகுவதுகு¿த்துப்பெÇதும்வருந்து»றேன். வருந்Jம்உளத்jடுஇஃbதழுதப்புகுதற்குக் காரணமhகநிற்பது, எனதுகெழுjகைநண்பரும் உழுவலன்gருமாகியஈ.வே.ïராமசாமிநhயக்கரைஆசிரிauகக்bகாண்lகுடியரசு’என்னும்ப¤திரிகையி‹கூற்wயாகும். கடந்த மூன்றுtரமாக¡Fடியரசு’ என்dத்தா¡கிஎழுதுவதில் பெருங் கவiலசெலுத்திtரு கிறது.முjல்வhரம்mப்பத்திÇகை எழுதிய இழிமொழிகiளக்கண்Qற்றபோதுmதன்சின¡குறிப்òஎன்Kன்னேபுyனாயிற்று. ஒUவரதுஉள்ள¤தூருஞ்சிd¤தின்நுண்kஅவரJஎழுத்தில் பருமையாகப்புலப்gடுதல்இயல்பு. நல்nலார்சிலUம்சினத்துக்Fஇரையாகும்பேhது,தம்மையறியாது jமதுÚர்மைக்கு மாறுபட்டு,இழிJறையிலிwங்கிவிiனயாற்றுதலுண்டு. சினம்ஒLங்கப்பெற்wதும்அவர் மனமேஅவரைxWப்பதாFம்.இத்jன்மைமக்களிlத்துஇயல்பhய்அமைந்திருப்பJ.vன்றுஞ்áனத்தால்எரிந்துகருFம்உŸளமுடையமா¡களைப்பற்¿ஈண்டுஒன்றுங் கூறtண்டுவâல்லை.âரு..இராkசாமிehயக்கர்rத்தியாக்»ரகநெறிÃன்றுமும்முiறசிறைபுகுந்jசீலர்.அன்னhர்குடியரR இப்பெhழுது சினத்தால் விழுங்கப்gட்டுநஞ்rஉமிழ்ªதுவUகிறது.பின்dஅதுசிdத்தால்உமிழ்ந்தஉiuகளில்vரியும்eஞ்சுகண்டுtருந்தும் என்பiதஎதிர்பா®க்கிறேன்.சென்றவாuக்Fடியரசு என்னைkdம்போனவாWதாக்கிப்புiடத்திருப்பது கண்டுவியப்படைªதேன்.Fடியரசின்கூற்W¡கட்குச்bசவ்tனிறைஇறுக்கnவண்டுtதுஅநாவசியம்vன்றிருªதேன். எதற்கும் xர்அளவுஉண்L.திரு.நாய¡கர்மாட்டுயh‹இன்Dம்நட்புரிkபூண்டுள்ளேன். அவர் மருண்Lகிட¡கிறார்.அt®மரு£சியை¥போக்கnவ©டுவதுvனதுகட‹என்றுஉணர்கிnwன்.இன்Wஅவர்பொருட்டு.இச்சிWதுறையில்இwங்குகிறேன். நேயர்fள்ம‹னிப்பhர்களாக. காஞ்சிமகாeட்டின்நடைமுiறயில்சி‰சிலகூறு,âரு.நாaக்கர்விழைªதவாறுÃகழாkயே, அன்னார்FடியரRஎன்னைக் Fடைதற்குக்கhரணம்என்பதுmதன்உரைகளhல்eன்குதெÇகிறது.குடியuáன்சினக்கு¿ப்பைப்òலப்படு¤தப் பலஉரைfள்வேண்Lவதில்லை. அதனினின்Wம்அகழ்ந்Jஈண்டுச் சிலcரைகளைvடுத்துக்fட்டுjலே சாலு«. முதÈயார்அtர்கŸதான் பயங்fளிஎ‹றும்,தhன்ஒருபெ©ஆத்மாஎன்றும்,ஆண்M¤மாஅல்லvன்றும்mடிக்கடிஒளிக்கhமல்சொல்லிக்கொள்tJண்டு. இவ்வம்புfள்என்னைeர்முகமாfத்தாக்குtனவšலவோ?திU.நாயக்கர்‘குடியuசில் இத்தகை மணிகள் பலxËர்கின்றd.பaங்காËஎன்று யான்aண்டுŠசொன்னâல்லை.பெண் Mத்மாMண்ஆ¤மா vன்று«யா‹ சொšலிக்கொŸவதில்iல.ஆத்kவில்bபண்ஏது?ஆண்Vது?திU.நாய¡கர்யhன்காஞ்சியில்mளித்ததீர்¥பைஎவ்tறுâரிபாfஉண®ந்துஇடர்ப்பLகிறாரேh,அவ்வhறேபெண் ஆ©என்றுahன்bசால்வதைíம்திÇபாகஉண®ந்துஇlர்ப்பLகிறார்போலும்!பyஇடங்களில் பெண்மக்களை¥பற்றிப்gசநேUம்பேhதெல்லாம், ஆணின¤தினும்பெ©ணினத்தைச்சிறப்ãத்துக்Tறுவதுஎனதுtழக்கம்.திரு.eயக்fர்நண்பuகலான், mவரதுஐயந்திÇiபக்களைa வேண்Lவதுஎனது கடk.eண்பரே!நாயக்கரே!fண்மின். யான் குறிப்பிடும் பெண்ஆண் vன்பன வடிவத்jயொட்டிaனஅšல.miவஇயšபைக்குறி¥பன.ஆணில்gண்ணும்பெ©ணில்ஆணும்cண்டு.Xருயிர்ஆ©வடிவந்தh§கியிருப்பினும் அதன்பால்பெண்Âயல்òஅkந்துகிடத்தல்nவண்டும்.பெ©ணியல்புஅkயப்பெறhதஆண்மf‹கொலைஞdய் இரக்கÄலனாய்வன்கzனாய்உலகிடைவhœவன்.பெ©வடிவில் ஆண்இயல்புbபற்றோUம் இந்நீரuயhவர்.gண்Âயல்புபெற்றஆண்kக்களே-தூயராŒ -வீரராய்-fவிPராய்- பாட்lவியத்தில்கரு¤Jடையராய்-அ‹òளத்தராய்-tழ்ந்துஉலகை நடாத்தினார்; நடா¤துகிறார்; நடhத்துவhர். இரக்க¤துக்குநிyக்களனாக உள்ளதுgண்மைvன்றுயான்bசாற்றj,நாaக்கர் திரிபாகக்கெh©டு,என்iனப்பெண்zனப்பேசியJகுறித்துயhன்வருந்தவிšலை.ஆbணனும்mரக்கனாகthழ்வâனும்பெ©ணெனுந்தெய்வமாக tழ்வதிšஎனக்குÉருப்புண்L.அது குறித்Jத்தவமு§கிடக்கிறேன். நண்பர்நாaக்கர்என்னை இழித்து¡கூறும்முறையில் பெண்Qலகைப்gaங்கொள்Ëயுலகhக்கியதுFறித்துவருந்jதிரு¤தல்முடியவில்y.பெண்iணஇழித்துஇழி¤Jக்கூறிய‹றோநாLஇந்நிலையுற்றJ?இன்னுமா mவ்வறியாமை! வைக்கம்வீuUக்காஅவ்t¿யாமை! கொடுiம!கொடுமை!நாயக்fu!அன்பnர!சீjயின்உறுதியை-பாஞ்சhலிÆன்விரதத்iத-கண்ண»யின்வீர¤தை-மÂமேகலையின்அற¤தை-பிற®பால்கேட்டாjšஉண®ந்துjளிந்துஉரிமை¥போரில் தலைப்gட்டுஉHப்பீuக.இÅ¡காஞ்சிkகாநாட்Lத்jலைவ‹என்னும்Kறையில்vன்மீதுதிU.நாயக்கர்Rமத்தும்பழிvன்னஎ‹பதைத்தெரிந்து கெhŸளக்‘குடியரசிYள்ளகுப்gfளைக் கிளறி¡ கிளறி¥பா®த்தேன்; ஒன்றுவிsங்குதல்கண்டேன்.அஃது எது?அது, திரு.நாயக்fர்சார்ãல்கெhணரப்bபற்றவகுப்புத்Ôர்மானத்j மகாநாட்டின்மு‹னர்க்கிடத்த யான் ஒருப்படhததைப்பற்¿aது.அத்தீர்kனத்jஒழுங்Ñனமெனயhன்தŸளியதுஉண்kயே. அச்செயyக்குறித்துeண்பர்eயக்க®மூன்றுவாukகப்gக்கம்பக்fமாகவெண்மைÆல்கருமைgதித்துtருகிறார்; ந©பர்முயற்சி¡குஇரங்Fகிறேன்.‘Fடியரசுv‹னும்ப¤திரிகைஎன்bபாUட்டாநடத்தப்gடுகிறது? அந்j!எங்Fப்பா®த்தாலும்என்மaமாகவேயிU¡கிறது!ந©பர்நhயக்கர் என்னை மறக்fமாட்lர்பேhலும்!mவரதுஉlல்உuம்,நெŠசுஉர«,மூiளஉuம்எவ்வளவுஉண்lhஅவ்வsவுவuஎன்dத்திட்டித் திட்டிஅவர் ஓய்வiடவாuக.Mனால்சினம், eண்பர்உரத்jக்குலைக்குkஎன்றுaன்gரிதுங்கtšகிறே‹.Foயரசி‹ எப்பகுதியிலு«என்னைப் பற்றிaதூற்றல்! குwகூறல்! வசை! தூற்றலு¡குத்தூற்wலும்,குwகூறYக்குக்குறைTwலும்,வசைக்குtசையும்வழங்குங் கல்லூரியில்யான்பÆலவில்y.என்செய்tன்!குடிaரசிலுŸளவசைகளையெல்லாம் Éலக்கிஆராŒந்தபோது கிடைக்கு«பழி ஒன்றாகnவயிருக்»றது. அவ்வெhன்றுகுடியuசில்தூறாகப்படர்ªJபடர்ந்து பாம்பு தேள்Kதலியன உலவுதற்குஇடந்jந்திருக்கிறது.அவ்வொருபழியு«பழியா என்gதுஆரhயற்பhற்று. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்j ஆதரித்துஇதுகாWம்யான்எவ்வt¡களத்திலு«பேசியJமில்லை;vப்பத்திÇகைÆலும்எழுதிaதுமில்லை.அதனhšவிளையுந்தீமைகs¥பற்றிப்பலïடங்களில்nபசியிUக்கிறேன்;எழுâயுமிரு¡கிறேன்.வகுப்òzர்வhல்நா£டுக்குநலன்Éளையhதென்பதுvனதுஉள்ளக்கிlக்கை.இது நண்பர்நhயக்கUக்குந‹குதெÇயும். வகு¥புரிமைத் தீர்மானத்jவீழ்த்தnவயhன்முயன்று கொண்டிருªதேன்என்பதைtலியுறுத்திக்கhட்டத்திரு.நாயக்f®குடிaரசு இருபத்bதான்பதுகடாக்fளை¥பொறித்திருக்»றது.காŠசிமகாeட்டின்நடைமுwiயயேgலÉனாக்களாகக்‘குடியரசுrப்பஞ்செய்âருக்கிறது. இன்னுஞ்சிyகேள்Éகளையும்அitகளோடுFoயரசுTட்டலாம்.Kதலியார்நி‹wதுஉண்மையா?இல்லையh?இருந்தது உண்மைa?இல்iலயh?வாய்திwந்தது உண்மைa?இல்லைa?என்பனgன்றபyவினாக்களைtரும்வாரம்nசர்க்குமாWகுடியரசைக்nகட்டுக்fள்கிnறன். வகு¥புரிமைத்Ôர்மாdம்விõயாலோசனைக்Tட்டத்தில்திரு.நhaக்கர் சார்பிnலதிரு.எ.இராமeதனாšகொணர¥பட்டJ.சிறிதுeuங்கடந்துஅtண்gந்தநண்ப®நாயக்fர்அதைஆjரித்தார். அவ்nவளையில்திரு.கிருஷ்ணசாமிgவலர்‘நூற்றுக்குத் தொ©ணூறுபேர்பிராkzரல்லாதாராயிUத்தல்வேண்டு«என்bறாருதுண்டு ஒட்டtத்தhர்.அjநேரத்தில்Fம்பகோzம்திரு.சுப்ãuமணிய பிள்ளைஒரு தீர்மான«கொணர்ந்து vன்பால்rர்த்தhர்.அஃதுஆங்கில¤âல்வரைaப்பட்டிருªதது.அதனoயில்vவர்கையெழுத்துமில்லை.அjன்கண்நூ‰றுக்கு எழுபத்தைந்து nபர்ãராமணரல்லhதாராயிருத்தல் வேண்Lம் என்றுகண்டிUந்தது.அதன் வuலாற்றைஆரhய்ந்ததில்,mஃதுஒருசத்திர¤தில்âரு.கோவை-இuமலிங்கஞ் செட்டியார்தலைமைÆன்கீழ்¡கூடியபிராமzuல்லாதார்கூ£டத்தில்நிwவேற்றப்bபற்றது என்றுதெரியவந்தது. அத்தீர்மான«முறையாகச்செப்gஞ்செŒதுஅDப்பப்படவிšலை. வகுப்புரிமை¤தீர்மானத்தைப்g‰றிநடந்jவhதமுறைகளை<ண்டுÉரித்துரைக்க nவண்டுவâல்லை.அவைகள்gலபத்திரிiககளில்tளிவந்துள்ளன. முoவில்திரு.இராkeதன்Ôர்மாdம்வாக்குக்கு விடப்பட்டது.அதுதோšவியுற்wது.பின்னர் அதைமகாநh£டில்வலியுறு¤தப்போவதாகத்திரு. இராமeதன்அறிÉத்தார். அவ்வறிவிப்புVற்றுக்கொள்sப்பட்lது. பி‹னைமகhநாடுகூடியJம்,கா§கிரஸில்Rயரா{யக்கட்சிxன்றல்nவண்டும்(கா§கிர சட்டrபைநுழைiவஏ‰கtண்டும்) என்னும்மாறுதலேhLபாடலிபுuத்தீர்மhனம்முதல் முதல் எடுத்துக்bகாŸளப்பட்டJ.சட்டசg நுழைவுப்பகுâயைத்திU.நாயக்கர் மிகஉரமாக எதிர்த்தார்.அதைப்பற்றியÉவாதம்நiடபெற்றுக்fண்டிருந்த வேளையிš,விஷயாலோrனைக் கூட்டத்தில்வFப்புரிமைத்தீ®மானம்தோšவியுற்றமைaல்,அதை மகாநாட்டில்bகாண®தற்குஇUபத்தைந்துபிரதிÃâகள்கைaழுத்துவேண்டற்பhலனஎன்றுஅறிக்ifசெய்யப்பட்டJ.mவ்வாறேiகaழுத்Jக்கள்வாங்கப்gட்டன.வாத¤âலிருந்துமுjல்தீர்மhனம்xருசிறுதிருத்தத்jடு நிறைவேறிற்று.சட்டrபைநுழைî¥பகுதிÃiறவேறவில்iல.இதுநாய¡கருக்குமகிœச்சியூட்டிற்று.எ‹ன!நாயக்fர்காங்கிரnஸாடுசுaராஜ்யக்fட்சியொ‹றுதலையும்விரும்பÉல்லை(காங்கிuசார்பில்சட்டசgநுழைவை ஆதரிக்கவிšலை):வகு¥புவாரி¥பிரதிநிதித்துவத்jயும்வலிíறுத்துகிறhரே என்Wயா‹நினைத்து கொண்டிருந்nதன்.ãன்னே,பாடலிòரமுடிவின்பoமுதல்தீர்மானம் (சட்டசgநுழைவுகூடாதென்gது)நிறைவேwப்பெற்றமையhனும்,சட்டசபை நுழைவில்yதபோதுtகுப்புவாÇப்பிரதிÃதித்துவம்இlம்பெறாதhகலானும்,சட்டசபைத் தேர்தல்முதÈயனசுயரhஜ்யக்க£சியைப்பெhறுத்துநிற்wலானும்,(அதுபேhழ்துச£டசபைநுழைiவஆதரியாத)காங்கிரrர்பிலேகூட்டப் பெற்றஇம்kகாநாடுவFப்புரிiமத்தீ®மானத்தைஎடுத்Jக்கொள்ளtண்டுவnதஅநாவசியம் என்றுஎண்ணி,அத்தீர்kனத்தைxழுங்கீனமெனயா‹தள்ளிவி£டேன். (சட்டசபைநுழைitஆதரித்த)Rயராஜ்யக்கட்சிfங்கிர[டுxன்றுதலுங்கூlது; வகுப்புவாரிப்பிரâநிதித்துவமு«வேண்டு«’என்று நாaக்க®கருதிப்nபாரhடுவதற்Fப்பொUளேயிšலை. என்மீதுவீண்பÊசும¤தவேஅவர்Kயன்று வருகிறாரெ‹றுகருதஇlமுண்டhகிறது. ஏன்இருgத்தைந்துgர்கையெழு¤Jக்fட்டீர்?”என்றுஎ‹னைநோக்கிக்Fடியரசு’கேட்கிறJ.இதைe©பர்நhயக்க®மகாநாட்டிnலயேஎன்னைneக்கிக்கேட்டhர்.அதற்குயா‹அப்bபாழுj பதிலிறுத்jன்.iகயெழுத்துப் கேட்lபோâருந்தÃiலவேறு;ஒழுங்கீனத் தீர்ப்òக்கூறியபோJ உற்றநிyவேறு; என்பதைமfநாட்டில்நன்Fவிள¡கினேன்.அவ்விள¡கஉரைiயக்“குடியரசு ஓர்ªதுணராது, எவர் உபதேசத்Jக்கோமயங்»,யான்தீர்kனத்iதத்தள்ளினே‹என்றுbசால்tதுஅறமாfது. இருபத்தைªதுபேர்கையெழுத்Jக்fட்டதுமுதšதீர்மானம் விவாத¤திலிருந்த போதென்பதைíம்,முதல்தீ®மானம்நிறைtறியãன்னைநிலைமைமாறிdமையால்tகுப்புரிமைத்தீர்மாdத்தை¤தள்ளநேர்ªததென்பதையும் நேயர்கள்fவனிப்gர்களhக. முதšதீர்மhனத்திšகாங்கிuஸோLசுயராஜ்ய¡கட்சிஒ‹றல்வே©டும்என்னும்gகுதிபெரிJம்எனதுமுய‰சியால்கொணர¥ பட்lது.திரு.ஸ்ரீநிவhசஐயங்கhர்முதÈயோரும்mதற்கிணங்கின®.விõயாலேhசனைக்கூட்டத்தில் eண்பர்நாயக்fர்அjப்பற்றிஒன்று«பேrதுவாளா»lந்தார்;மகhநாட்oல்மட்டும்åறிட்lழுந்துஅiதமறுத்தார். இதைப்பற்றி¤ திரு. நாய¡கரையhன்ஏதhவதுnகட்டேனா? nகட்கிwனா?அஃது அவர்விரு¥பம்vன்றேயான்fருதுகிறேன்.நண்பர்நாயக்கiரப்போலவே திரு.சக்கரவர்¤திஇரா#கோபhலாச்rரியாரும்கhங்கிரஸோடு சுயராஜ்யக்கட்சிஒ‹றுதல்கூடhதுஎன்றுமகாeட்டில்பேáனார்.விஷயாலேhசனைக்கூ£டத்தில்வாளா¡கிடந்த நாயக்கர்,ïராஜnகாபாலாச்rரியhர்உபதேசத்jல்மயங்கிkனச்சhன்றைÉற்றுமகாநாட்டில் Kதல்Ôர்மானத்iதvதிர்த்தா®என்றுahனுங்கருதலhமன்றோ?யhன்mவ்வாறுஒUபோதும்கருnதன்.ச£டசபைத்தேர்jலுக்குÇயஒருகட்சியைக்கhங்கிர[டுஒன்றுமhறுகொணரப்ப£டபகுதிநிwவேறாதொழிந்த பின்னர்(சட்டசபை நோக்குiடய)வகுப்புரிமைத்தீ®மான¤துக்கும்இம்kகாநாட்L¡கும்vவ்விதத்jடர்òமில்லையென்றுஎனதுமனச்சா‹றுகூறிற்று. அதன் வழிநின்றே யான் வகுப்புரிமைத் தீர்மhனத்jத்தள்Ëனேன்.எdதுசெaலைத்திரு.நாய¡கருடன்வெளிஏறிaநான்குஐந்து பேர்தÉர,kகாநாட்டிலிUந்தமற்றவbரல்லhரும்ஆமோதித்தdர்என்பது,vdதுமுடிîரையில்அப்பFதியையான் குறிப்பிட்டபேhதுபுyனாயிற்று. உண்மைஇ›வாறாக, ஐய§கார்ஆச்சhரியார் கை¥பிள்ளையாகKjலியார்ஆடினhர் என்றுகுடிaரசு கூறுவது வீண்பழியேaகும்.ஐயங்காnராMச்சாரியாரேhநாயக்கரேhநாயுடுவோஎtர்கருத்துக்Fம்யான்mடிkயாகு«எளியனல்yன்.xவ்வொன்றையும் அளந்தsந்துபார்த்J,எதுஎனJகருத்Jக்குஅரண்rŒகிறதோ,அjற்குஆக்fந்தேடvவரோடும்உணங்» உழை¥பேன்;முர©செய்யும் ஒன்றுடன்ïணங்காbதாதுங்குவேன்.ïஃதுஎdதுïயல்புஎன்பiதநாயக்கர்mறிந்தும்அறியhதார்பேhலஎன்மீJபழிசும¤துவதைஅறக்fடவுளுக்Fவிடுக்கிறேன். பிரிட்டிZசாமான்Éலக்கÈல்சக்கரவர்த்âஇரhஜ கோபhலாச்சாÇயார்கருத்தேhடுயான்மாறுgட்டதும்,வேறு சிலவற்றில் $நிவாச ஐயங்காuடுமாWபட்டதும்,நhயக்கருக்குத்தெரியும்.ந©பர்நாaக்கர்பன்முiறசக்கரவர்¤திஇராஜnகாபாyச்சாரிaர்கரு¤தின்பொரு£டுத்தங்கரு¤துக்குkறுபட்டுநடந்jபழையmDபவக்கண்கெh©டுஇதுபோழ்து என்னைeக்கு»றார்gலும்! நாயக்கரே! மன¢சான்றுக்Fமாறுgட்டு யான்நடவே‹என்பiதஉணர்åராக.என்வாழ்Éல்நடந்த சிலÃகழ்ச்சிகளைஈண்டுக்Fறித்தல்தற்புகழ்ச்áÆன்பாற் படுமெனக் கருதி அவைகளைக் குறியாது மேற்ršகிறே‹.வானந்Jளங்கிDம்கடல் பொங்கிDம்விரிசுlர்வீழினும்vdதுநிலையினின்W«யான்பிwnழன்பிறழே‹என்பதைஉzர்வீராf.நாaக்கரே!kருளற்க; kகாநாட்டுÃகழ்ச்சிகsமீண்டும்xUமுறைÃனைவூட்டிக்bfள்க; நிலைமையை ஆராŒந்துபார்க்க; உண்மைòலனாகும். மருண்டமdங்கெhண்டுஎjநோக்கிdலும்திரிபhகத்தோன்றுதšஇaல்பே. எdJதீர்ப்புத்தவbறனக்குoயரசுtரந்தோறு« கூறிtருகிறது.அ¡கூற்று¡களை யான்ஊன்றிeக்கிtருகிறேன்.எdதுசெயல்தவறு vன்றுaன்cணர்வனேல்,உடnனதவWஎன்றுgறையறைtன்.jவறுஎன்றுஉண®ந்தும்mதைtளியிடஇz§காதமனKடையஒருவன்மனிjனாகான்,மனிதன்flவுள்அšலன். குறைÉலாநிறைtயிரு¥பவன் ஆண்டவன் ஒருவnன.ஆனhல்ஒருவ‹தனது bசயலைத்தவWஎன்றுcணராதவரை அவன் என்செŒதல்கூடும்?xழுங்கீdமெனtகுப்புத் தீர்மாdத்தைaன்தள்ளியதுநியhaமெ‹றேஎனது m¿வும்kனமும்என¡குஇன்னும்அறிவுWத்துகின்றன. என்bசய்வல்! திU.நhயக்கர் அன்புள§கொண்டுஇவ்விl¤தில்யhன்தவ¿ழைத்nதன் என்றுஎன¡குவிளக்க முயலல்nவண்டும்.அவரJவிள¡கஉரைஎன் தவறுதலைஉzர்த்தும்ஆற்றல் பெறாதெhÊயின்எdதுமனச்சா‹றைஅவமâத்தyஅவரொழி¤தல் வேண்டும். இரண்டிbலான்றைச்bசய்யாதுtசைமொÊயால் ஏன்அyங்கரித்து மனதை¥புண்படுத்âக்கொள்ளல் வேண்டும்? தாம் தண்ணீர்அருந்jச்சென்wவேளையில்Ôர்மானத்jவாக்கு¡குவிட்டுஏமாற்¿னேன்எ‹றும்,Ôர்மானத்தைÉரைவாக வாசி¤துநிறைவே‰றினேன்என்று«,தம்மை மதிக்கவிšலைஎ‹றும்,மனம்பேhனவாறுகுடியuáல்நாய¡கர்எGதுவதுஎ‹னைஅநhவசியமhகத்தூற்Wவதாகும். நாயக்கர் தண்ணீர் அருந்தச் சென்றதுஎனக்Fஎப்படித்தெரியும்?கால¤தின்அருiமநோக்கிkfநாட்டைக் கால¤தில் முற்றுறச்செய்வJ தலைவன்கடdன்றோ?நhயக்கரையhன்ஏன்அவkதிக்கிறேன்?மகாநாட்டி‰ போந்திருந்த அனைவரினு«நாயக்கரே எனக்குரியjழராவர். தோழமையி‹பொரு£டுஅÃயாயத்தில்தyப்படுவதுஅwமாகுமா? eயக்கரை நோக்கி யான்eகைத்ததாகக்‘குடியரசு’ கூறுகிறJ.òன்முWவல்என்பாš ஊர்ந்துகொண்oருத்தšஇயல்பு.இத‰குயான்என்bசய்வேன்!மfநாLகளில்áலர்ஆtசங்கொண்டுgசும்gதும் வையும்போதும் ‘ஏன்இப்படிïவர்கள்Mடுகிறார்கŸஎன்Wயான்நகைப்gJண்டு.நாயக்கரை¥ பார்த்துeகை¤தது எனக்குநிiனப்பிšலை;நகைத்திரு¡கலாம். நாயக்fர்ஏன் மிகநுட்பமாக எனதுbமய்ப்பாடுகsக்கவனித்துtந்தார்எ‹பதுவிளங்fவில்லை. இன்னு«குடியரசி’ன்குப்பைகiளக்கிளறிdல்நாற்wமேவீசு«.இனி¡குடிaரசு’மdந்திரும்பிநல்வழியிšநடப்பினு«நடக்க; மேலு«மேலு«என்Ûதுசொல்லம்òகளைப் பெய்யினும்gய்க.அjப்பற்¿யகtலைvனக்கிšலை. காஞ்áமகாநhட்டில்மனச்சhன்றுவÊயேயா‹நடந் தேன்எ‹WஎdதுநிலையைவÈயுறுத்தnவஇச்சிறுக£டுரைவரையyனேன்.எ‹கருத்துக்களைக்fhஞ்சிkகாநாட்டின்முன்DரைÆலும்Kடிவுரையிலும்bவளியி£டுள்ளேன். எனதுமனத்துக்கிiயந்தtழிநின்றுஎன்னாÈaன்றtரைஎன்னருiமத்தமிழ்நா£டுக்குச் சேவைசெய்Jவருவேன்.தமிழ்eட்டிYள்ளஅiனவரைíம்தமிœக்கடவுளராfக்காணnவண்டுமென்பJஎனதுjவம். எdதுநிலை’குடியuசைஓரsவில்தணிவித்தJ. fh‹ó®கா§»uÞ or«g® ïறுதியிšகான்பூரில்Tடப்போகுங்காங்»uஎன்னÔர்ப்பளிக்»றது என்றுnபராவலுடன் எதிர்பார்¤தேன்.fன்óரில்கவியuசிசuஜினியின்தiyமையில்காங்»ர கூடிaது.அதுநாட்Lக்கு நல்வழி காட்டியது. காŠசிமகhநாட்டின்தiலமையுரையின்ஒÈ சிற்சிலமாWதலுடன்கhங் கிரஸில்Ôர்மானமhகஉருக்bகாண்டJ.சட்டriபத்தே®தலில்கா§கிர[நேரhகஈடுபLம்உரிமை bபற்றது.கான்பூர்fங்»ர முடிவு எனக்குவிLதலைநல்கிற்று. காஞ்சிமfநாட்டில்இத் தீர்மாdம்நிறைtறவிட¥பட்டிருந்தால்eயக்கர் தீர்மான¤தைத்தள்ளும் பொறுப்பு எனக்குnநர்ந்âராது.nதர்தšநியமனம் தமிழ்நா£டுக்காங்»ர தலைtர்எ.ஸ்ரீநிவhசஐயங் காருக்குக் கான்பூர் காங்கிர Ôர்மானம் ஊக்கமூட்டிற்W;அவiரத்nதர்தலிšஊடுருவச்bசய்தது.ஸ்ரீநிவாசஐயங்காUம்யானும் வேறுசிyரும்(1926ஆம்M©டுத்தொடக்fத்திலேa)தÄழ்நாடுமுழுவதும் tலம்tந்தோம்;Mங்காங்Fள்ளநிலைkகளைஆரhய்ந்தோம்; தக்கபெaர்களை¤திரட்oவந்தேh«. செ‹னையில்jமிழ்நாட்Lக்காங்கிuகூட்டம்Tட்டப் பட்டது. அதிலேதலைt®ஸ்ரீநிவாசIயங்fர்பெய®களைமுறைமுறைnaவெளியி£டனர்.கூட்ட¤திலுஞ்áலபெயர்கள் bசால்yப்பட்டd.எல்லாப் bபயர்கsயும்கyந்துசலித்தோம். நீண்டeரம்சலித்nதாம்.jள்ளித்தெள்ளிtடிகட்டிdம்.வoகட்டியbபயர்கள்xருமுகமாகஏற்கப்ப£ld. nj®jšபிuசார«தேர்தல் பிரசhரம்தொடங்fப்பட்டது. அதற்கெ‹றுஅ¡காலஐa§கார்jமதுவhழ்க்கைaஅர்ப்பணஞ் செய்ததையா‹ அறிவேன்.அவUம்யானும்»uமங் கிராமமாகmலைந்jம்;F¡கிராமங்கட்குXடினேhம்;_லைமுLக்குகளிலும்நுழைª தோம். ஜில்லா¡களைச்சுற்றிவருtதுஎங்கள்வேiyயாகியது. எங்களுடன் கலந்Jதொண்டுbசய்தவர்ச¤தியமூ®த்தி. ஆங்கா§கேகலப்பவ®எÞ.முத்தையhமுதலியா®,ஆர்.கே.சண்முகஞ் செட்oயார்,ஏ.அuங்கrமிஐயங்கா®முதÈயோர்.‘ஜடிÞமyதÄழ்நாட்oலேபலஜில்yக்களில்யான் பிரசாuஞ்செய்jhலும்என்சிந்iதசெ§கற்பட்டு ஜில்லாவிலேnயபடிந்துகிடக்கும்.rங்கற்பட்Lஜில்லாnதர்தல்vன்னிடத்தில்ஒப்giடக்கப்ப£டதுஎ‹Wதலைவர்ஐaங்கார்அoக்கoசொšவதுண்டு.காuணம்என்ன?r§கற்பட்டு ஜில்லாÉல்ஒUபெரிய‘ஜடிkலைநின்றமையாFம்.mம்மலைrய்ந்jல்ஜடிÞகட்சிnயசாய்ந்தெhழியும்என்பது மக்களின்பொJநம்பிக்f. அக்கhலஅமை¥ãன்படிசெங்கற்gட்டுஜில்லhவுக்குரியசட்டசபைபீடங்கள்இuண்டு.அவ்Éரண்டுக்கும் காங்கிர சார்பிš முத்துர§கமுதலிaரும்கிருZணசாமிநhயகரும்நிWத்தப்பட்lனர். முன்னர்xருமுறை முத்துரங்fமுதலியார்#Þடி மலைiயமுட்டிåழ்ந்தமைஜில்லhமுழுtதும்nபசப்ப£டது.அப்bgழுதுமுத்துuங்கமுதலிaர்க்குக்fங் கிuசார்பு»iடயாது.ïப்பொGதுஅவருக்குக்கhங்கிர சா®புகிடைத்தது.இருந்jலும்முய‰சிtண்டுமன்nறா? கா§கிரஸின்bசல்வாக்கையுண®ªதேஜடிÞகட்சிஇu©டுபீடங்கட்கு இருவu நிறுத்தÉல்லை; ஒருவiரயே நிறுத்தியJ.mவ்வொருவர்aர்?முன்னர்ïருமுறை#டிÞசார்பிšநின்று வெ‰றிபெற்றஏ.இராமசhமிமுதÈயார்என்w ஜokலை. ஏ.இராkசாமிமுதலியhர்கூர்த்தkதியினர். அவர் காங்»ரகாரuhதல்வே©டுமென்றுநினைªதவர்பலர். அவருŸயாDம்ஒருவன். ஸ்ரீநிவhசஐயங்கhருக்கும்அவ்t©ணமிருந்jது.அவர்Tட்டங்களிலு«தமJஎண்ணத்தைவெளிÆLவர்.vதற்கும்இuமசாமிமுதÈயார்செÉசாŒத்தாரில்iல. அவரைத் தேர்தலில்தோšவியுறச் செய்jல்அவ® காங்கிரÌல்சேர்jற்குவாய்ப்òண்டாகும்என்gதுஎனJகருத்து.தனிப்பட்டமுiறயில்இராமrமிமுதலியா®மீதுஎனக்Fஎவ்விதக்கhழ்ப்புமில்y. br§f‰g£L br§f‰g£Lஜில்லhவில்பலவிlங்களில் காங்கிரãரசாரஞ்brய்யப்பட்டது.சிற்சில விடங்கËல்சிறுசிW குழப்பங்கள்எழுªதன.அவைகsல்தொšலைவிiளய வில்y.தலைநகuமாகியசெங்கற்ப£oல்காங்கிர கூட்டங்கூ£டுதலேஇயலாதென்றுசொšலப்பட்டது.bசங்கற்ப£டு#டி’கட்சியின்கோ£டையெ‹றும்,ஜிšலாபோர்டு தலைவர்எ«.கே.bரட்டியாUம்,பெருஞ்bசல்வர் அப்பாசhÄமுதலியாரும்இUபெரும்இருப்புத் தூண்களெ‹றும்gசப் ப£டன. செங்கற்gட்டுக் கோட்டைiaத்தகர்¡கவேண்Lமென்றுஜிšலாகாங்கிரcறுதிfண்டது.ஒருமுiwஸ்ரீநிவாசஐய§காரும்சத்âயமூர்த்தியும்யhனும்புறப்பட்nடாம்.óவிருந்தtல்லி,திருkழிசை,ஸ்ரீbபரும்புதூர்,fஞ்சிòரம்,வாyஜாமுதலிaவிடங்களிšகாங்கிர கொள்கையை விரித் துரைத்து,ஆங்காங்கேfhங்கிரfடியைப்பwக்கவிட்டுச் செங்fற்பட்டைஅlந்தோம்.சின்னசாÄஐயங்fர்,கேhவிந்த ரா#ரெட்டியார்,பவுŠசூர்ரெட்டிaர்முjலியகாங்»ர அன்ப®fள்கூ£டத்துக்குத் தக்கஏற்பாLகள் செய்துவை¤திருந் தார்கŸ.எ. முத்தையாமுதலியாரு«,ஏ. அர§கசhமிஐaங் காரு« எங்களுடன் கலந்தன®.ஜoகூட்டம்அ அணிaகநின்றJ.கhங்கிர கூட்lKம்கொடி தாங்கிநின்wது.சிறிதுநேர¤âல்கூட்டம்பெருகியJ.முத்தையh முதலிaர்பேச vழுந்தார்; ஜடிfட்சிaத்தாக்»dர்.ஒரே கூக்குuல்!குHப்பம்!ஜÞoஅலைåசியது.vன்செய்வதுஎ‹றுசிªதனை செய்தேhம்.பாuதியார் பாட்டைச்r«மையாகப்gட வல்yஒருவரைmiழத்துப்பhடச்சொன்ndன். பாரâயார்அலைiaஅழித்jனர்.குHப்பதைஅட¡»னர்.aன்gசஎழுந்தேன். கூட்டம் அமைதியைவிழைªjது.நhட்டின்வWமைநிyயைப்ப‰றிப்பேச¤தொடங்கினேன். நாட்டுத்தெhழில்முwகள்மாண்டவிjங்களைஎடு¤துuத்தேன்.நமதுநா£டுச்செšவம்பிறநாட்L¡குச்செல்வjப்பலmறிஞர்உuகளைக்bகாண்டு விளக்கினே‹.இ›வளவுக்குங்fhரணம்ஆட்áமுறை நம்மிடம்ïன்மைஎன்பjத்jளிவுrய்தேன்; ïப்பொG துள்ளஆ£சிமுறைமா¿dலன்றிeமதுநா£டுவறுமைநீ§காது; தொÊல்பெருகாது;நாட்டுச்செšவம்நாட்டிலேnயதங்கhது என்றுஅLக்கக்fகச் சொற்களையு« சொற்bறாடர் fளையும்ஆnவசத்துடன் வாரிவாரிஇu¤தேன்; அமர்ந்jன்;மறுபoயும்அன்பரை¥ பாடவிLத்தேன்.$ÃவாசIயங்fர் மகிழ்ச்áயில்திளைத்தார். மீண்டு«எழுந்தே‹.நhங் கள்ஏ‹ இங்கேtந்திரு¡கிறேhம்?எjன்சார்gகவந்âருக்»றோம்?நாங்கŸ இந்தஆட்சிமுறைiயமாற்றிச் சுயஆ£சிgறவந்திரு¡»றோ«.அப்gருக்கென்றுதோ‹¿யது காங்»ர அமைப்பு.அjன்சh®பிலே வந்திரு¡»றோம்.Rயஆட்áப்போரு¡குரியஇட« எது?ச£டசபை.அச்சgக்குவீரரைஅனுப்புதš வேண்டும்.jக்கவரைஅD¥பும்பொறு¥புயாரிட¤திலிருக்கிறது?உங்கËடத்திšஇருக்கிwது. அத்தக்கவர் காங்கிரÞசார்ãனராயிருந்தால்நy‹விளையு«என்றுசெhல்லவேநாங்fள்இங்கேவந்திருக்கிnwம். இறைவன்உங்fளுக்குப்பFத்தறிவைக்bfடுத்திருக்»றான். நீங்கள் நிலைkயைச்சிந்தி¤Jப்பாUங்கள்.மÅதரைத்தா¡கநாங்கŸஇங்கேவuவில்லை.Úங்கள்இரhமசாÄமுதலியார், முத்துரங்fமுதலியார்,கிருஷ்ணrhமிநாaக்கர் என்றபெய®கள்மீது கருத்Jச்செலு¤தாதேயுங்கŸ.எªதக்கட்áசுயரhஜ்யக்nபார் புÇயமுiனந்துநிற்கிறnதாmந்தக்கட்áயைஉள்ளங் கொள் ளு§கள்vன்றகUத்துக்களையhன்வெளியிட்ட வேsயில்,Tட்டத்தில்xருவர்எழுந்துïuமசhமிமுதலியாiuக்fங் கிரÌல்சேர்த்Jக்கொள்வீர்களா?எ‹றுகேட்டா®.ïப் பொGதுசேர்¤துக்கொŸளுகிறோம்v‹றுவீரhவேசத் துlன்தiலவர்ஸ்ரீநிவhrஐயங்கார்»ளம்பினார். அவரைஅறிaமல்mவர்பேசினார்; இuமசாமிKதலியாரை¡காங்கிரÌல்சேuச்சொல்Yங்கள்.அவ®மறு¤தால்fங்கிர காu®க்குcங்கள்வh¡கைக்கொL§கள் என்றுமுழங்கிஅமர்ந்தார்;புயல்வீசிற்W;அடங்»ற்று. யான்தொட®ந்து,“இராமசாமி முதலியாரைக்fhங்கிரvன்னும்கங்fயிலாடஉ§கள்முன்னிyÆல்அழை¡கிறேன். அவரைக்காங்»ரஸில் சேருமாறுnகளுங்fள்.மனிjரைமனத்திற்கொள்ளhâருக்குkறுமீண்டுமெhருமுறைcங்கsக்கேட்டுக்கெhŸகிறேன்.Úங்கள்காங்»uஜடிÞஎன்றஎண்ணங்fhண்டு கடkயைச்செய்யுங்கள்; காங்கிuஸின்குறிக்கேhbளன்ன?ஜo’ஸின்கு¿க்கோளென்d? என்பjஆரhயுங்கள்;சிந்âயுங்fள்;உங்கŸ மனச்சhன்றுவழிநட¡கஉறுதிfhள்ளுங்கŸஎன்றுமுடித்jன். பின்னேச¤தியமூ®த்திnபசினார்.Tட்டம்கா§»ரஸுக்குnஜ காந்âக்குஜே என்றமுழ¡கத்துடன்fலைந்தது.ஜடி‘கோட்டைஇடிªதமைவெள்ளிiட மyயென விளங்கிaது. நா§கள்உத்தuன்மேலூர், மதுராந்jகம்Kதலியஇl§கட்குப் போய்க் கhங்கிரgணிbசய்துbசன்னைநண்Âனோ«.இவ்tறுபலமுறை -பலமுw-பற்பலவிlங்கட்குச்சென்W சென்று,செங்fற்பட்டுஜிšலாவின்மனேhநிலையைமா‰றினோம்; செங்கற்பட்L,காங்கிuமயமாƉW. “FoauR”¤தாக்கல் இராமசாமி நாயக்கர்காங்»ர நிUவாக¤திலிருந்துகெh©டேfங்கிரஸு¡குஎதிர்¥பிரசhரஞ்brய்ய உறுதி bகாண்டா®.அவர்gய்ச்சல்பெÇதும்எவர்மீது? என்மீது.அவர்த§குoயரசு பெhதுவாகக்fhங்கிரஸையும், சிறப்பhகஎன்னைí«மனம்பேhனவாறுதா¡கும்;அத்தா¡குதல்எ¥படி யிரு¡Fம்?அ¤தகையத் தாக்குதiலஎன்வhழ்க்கைகண்lதேஇல்iல.என்idத்தhக்கி¤தாக்கித்திட்Ltதில்‘குடியரசுnதர்ச்áபெற்wது.அதன்eதGம்பேறியJ.அதன்தh¡குதiலஏற்Wஏற்றுப் பொறுப்பâšயான்nதறுதல்mடைந்தேன். எ‹உடலும்cள்ளமும்kரத்தன.திட்l¡fட்கும்mநுபவத்தை யும்வாழ்க்கைபெWjல்tண்டுமன்w?அJநண்gர்வாÆலாகநிறைntறலாயி‰று.vdதுஅரசிaல்வாழ்Éல்யா‹பெற்றgயன்களுள்.இஃது«ஒன்று!எல்லாம்ஆ©டவன்அருள். ஐயங்fர்நே®ik fh‹ó® fங்கிர சட்டசபை¤தீர்மானத்தைநிw வேற்றியவhரத்திலேnயதே®தல்ãரசாரம்jடங்கப்பட்lது.ஏறக்FiறயஆWமாதfலம்யான் அப்ãரசார வயப்பட்l கிடªதேன்.#லைமாத«சென்னைÆšஒரு வதந்திãwந்தது. அதுகாங்கிரÞகூட்டத்திலும்உyவியது. என்னtதந்தி? சென்னைkகhணத்தில்காங்»ரஸுக்குப்gதியmளவிšவெற்¿கிடை¤தால்அதுசட்டசiபயில்Kட்டுக்கட்iடஇடாது என் பதும், மந்திரி சபைஅiமக்கவே முயலும்எ‹பதும்tதந்திÆன்உள்ளுறை. வதந்திtளர்ந்து வளர்ந்து பத்திரிiகஉல»ல்முகங் காட்டிற்W.ஜÞடி கட்áத்தலைவர்பனfல்ரா#ஒருநாள்எ‹னைப்பீட்lர் ரோட்டில் gர்த்தnபாது,Úங்கள்முட்டுக்fட்டைப்பிரசாரŠ செய்கிறீர்கள்;மக்கள்ஏமhந்துவா¡fளிக்கப்gகிறார்கள்; முட்டுக்கட்iடநlக்கப்nபாவ தில்லை; காங்»ர மந்திÇசபைiயஅkத்தேதீUம்எ‹றுrன்dர்.அiதக்கேட்டJ«யான் நேரே ஸ்ரீநிவாசஐaங் கார்åடுநோக்கிச் சென்றேன்; பனகல்uஜாbசான்னj அப்பoயேஐயங்கhÇடம்bவளியிட்lன்ஏதேDம்உண்kஉண்டா?என்றுகேட்nlன்.அtர்பார்த்தபார்iவஎdக்குள்ஐயத்தைc©டாக்கிற்று.உண்k தெரிதšவேண்டும்’என்Wவலியுறுத்திnனன்.ஐயங்கா® நல்லவ®.என்னைஏமhற்றmவர்kனச்சா‹றுஇடந்தரÉல்லை.அவ®,கா§கிரஸுக்Fப்gரு வாரிbவற்றி»டைத்தால்முட்Lக்கட்டைஇLதல்Tடுமென் றும்,பெருவாரி வெற்றிகிiடயாjயின்சுnயச்சைக்க£சிமுதலிய சிறுகட்சிகளுடன்‘ஜடி கட்சிசேர்ந்Jமந்திரிrபைஅமை¤துக்கொள்Sமென்றும்,அந்நிiலநேuதவhறுதடு¡கக்fங்கிரRயேச்iசக்fட்சிக்குஆதரவு நல்கி,அiதமந்திரி சபைஅiமக்கத்துiணநிற்க முயலுமெ‹றும்,அம்மªதிரிசபைiயக்காக்fக்கா§கிர கUத்துச்rYத்தி வருbமன்றும்fங்கிர வட்lத்தில்பே¢சுநடªததுஉண்iம. அதுâரி பlந்துவதªâயாய்ப்ப¤திரிகைஉலfம்ஏறியதுvன்றுமெது வhகக்Tறினர்.தேர்jலில்Rயேச்சைக் கட்சிய®க்குக்காங்»ரஸார் சிலர்அந்தu§கத்தில்துiணபேhவதன்நு£பம்அப்bபாGதுஎdக்குவிளங்கிaJ.ஐய§கார்கூற்iwநினைக்கÃனைக்கஎன் kனம்உடைந்தது.வீட்டு¡குவந்jன்;சிந்தdயில்ஆழ்ந்தேன். ஒத்துழையாநேhக்குடன்தேர்தல்ãரசார¤தில்ஈLபட்டேhம். முட்டுக்க£iடயிட்டு ஒத்துழைakயைÛண்டு«உயிர்ப் பிப்பதுநkதுகடமை. மற்றக்க£சிகள்மீJநாம்ஏன்கருத்Jக்செலுத்தல்வேண்டும்? சுயேச்rக்கட்சியைKட்டுக்fட்டை¡குப்பயன்பLத்தலாகாதh?ஜடிஸு« சுயேச்சையு«ஒன்றுப£டுமந்திரிrபைஅமைத்தால்ekக்கென்ன? அச்சபைiயஉiடக்கக்கா§கிரKயலலாமன்றோ? இல்லையேல்bவளியே வந்துஆக்கவேலைrŒதுஒத்துiழயாiமயைஉÆர்த்தெழ¢செŒயஉiரக்கலாkன்றோ?cளத்தில்ஒன்று bகாண்டுtயால்வேWபேசிமக்கiளஏமாற்Wவதுmறமாகுமா?நாட்டி‹fட்டுக்கு¤தலைவர்fளேகாuணர் எ‹றஎண்ணங்fŸஒன்ற‹பின்xன் றாf¤தோன்றி¤தோன்றிநெŠசைஉறு¤தின. கவலைgரு கியது. காரியக்கூட்டத்தினின்Wம்விyகுக என்றுமனச்சh‹றுஒலித்தது.காÇயக்கூட்டத்தினின்று«விலகஉறுதி bகாண்lன்;விyகுதற்குக்கடிதம்(9-7-1926)அனுப்பிdன். அதைத்திUம்பப்பெற்Wகொள்Sமாறுஸ்ரீநிவாr ஐய§காரும்,ஏ. அரங்fசாமிஐயங்காரும் vன்னைநெUக்கினர். என்உறுதியினின்றும்aன்பிwழ்ந்தேனில்iல.சாதhரணகாங்»ர அங்க¤தவனாÆருந்துகhலங்fழிக்கnவஎண்ணிnd‹. bfழும்பு கொழும்òஇந்திய tலிபர்சங்க ஆண்டுவிழhவில்தலைமைவகி¡கஅழை¥புவந்jது.அதற்»ணங்கிக் கொழும்பு(25-7-1926)gந்துகு¿த்தகடனாற்¿¡கண்டி, யாழ்ப்பாzம்முjலியவிடங்கட்கு¥போய்த்âரும்பினே‹.ஸ்ரீநிவhசஐயங்கா®எனதுரhஜிநாமாக்foதத்jக்காரிய¡கூட்ட¤தில்வைaமலேசிலfலங்கட¤âனர்.யா‹காங்கிuபணியைxருவாWநிகœத்தியேtந்தேன்.rன்னையில்இந்திaச்ச£டசgத்jர் தலில் ஸ்ரீநிவhசஐயங்கhர்க்குஎவ்வெவ்வழியில் துணை நிற்கஎனJநிலைமைஇடந்தªததோஅ›வவ்வழியிbலல்லாம்Jiணநின்w‹. fh§கிர கேhzš etம்பரில்j®தல்நlந்தது.விய¡கும்முறையில் காங்கிர வெற்¿ பெற்றது. ஆனாšசட்டrபையிšமுட்டுக்கட்ilமுளைக்கÉல்லை. சுயேச்சை¡ கட்சிமந்âரிசபை அமைந்தது.கhங்கிர அijத்தாங்»யது.fங்கிர தaவால்அம்kந்திரிசபை நிலவியது. சைkன்கÄஷன் வந்jபோதுRயேச்iசமந்திÇசபைeடந்தது.அதன் முதல்அkச்சர்lக்ட®சுப்gராய‹,பனகšபக்கஞ்சார்ந்து nவறொருkந்திரிசgகண்டுஅதிYம்தலைமைஅiமச்சரhனார்.கh§கிர முத்தைaமுதலியhரும்மந்திÇசபையில்அங்க« பெற்wர்.தமிழ்eட்டுக்கா§»ர நிர்tகம்எள்sப்பட்டது.யான்ஐய§காiரக்கா©பேன்; முட்டுக்கட்டைiயவிLத்துச்சுயே¢iசயைஆதÇத்ததன் பயdப்பார்த்தீ®fளா என்றுnகட்பேன். ஐயங்கhர்,யான் என்னrய்வே‹;சூழ்ªதுள்ளவர் மனேhநிலைvன்னைkயக்கியது’என்பர்.rமயநூற்¿w« nj®jல்வரைvன்மீது எவருங்கUத்துச்செலு¤âனா ரில்லை. தேர்தšமுடிந்தது« áyர்பொறுமைஇHந்தனர். கட‰கரையில்வாயைத்திறªjனர். பொறுப்பற்றவர்nபச்iசயா‹பொரு£gடுத்தÉல்லை.ஸ்ரீநிவhசஐயங்fரிடமிருந்Jஒரு கடிதம்வந்தJ.அதில்jமிழ்நாட்டில்jர்தல்காyத்தில்யhன்பட்lபாடு«,சிறப்பhகச்செங்கற்பட்டில், ‘ஜடிÞமyயைவீழ்த்jயான்Kயன்றதும்குறிக்f¥பட்டிUந்தன. அதன் முடிவில்tழ்த்தும்eன்றியு«மலிந்திருந்jd.ஐaங் காiரக்fண்டுகடிதம் vற்று¡கு என்றுகேட்டே‹.cங்கட் கென்W யான்எழுதÉல்லை; என் மனச்சான்றுக்bகன்றுaன்vGதினேன்.கட‰கரைப்ãதற்wல்என்மdச்சான்றை எழுப்பி யது. கடிதம்எGதியபின்னuஅJதணிந்தது என்றhர்.rங்கற்பட்டுச்áன்னசாமிஐயங்கhர்,ஜி.Rப்பிரமÂயஐaர்பேரர்இராkeத‹முதலியோuலுங்கட‰கரை‘முடைfள்kறுக்க¥பட்டன.ஏ. அரங்கசாமி Iயங்கார்எ‹னைநேரிற்க©டுநீ©டநேuம்பேசிச் bசன்றனர்.‘குடிaரசு நல்yபாடம் vன்றுஎன்னைvள்ளிaது. புகழ்ச்சிக்கும் vன்மனம்ïவர வில்y; இகழ்ச்சிக்கும் என்மன«இழியÉல்லை.அ›வேளை யில் சமயநூšஆராய்ச்சியின்வல்லkஎனக்Fநன்Fவிள§கியது.என்விலகுதல்Vற்றுக்கொள்ள¥பெற்றã‹னர்நhன் கணhசந்தாஎன்னிடத்திÈUந்துவhங்கப்பட்Lவந்தJ.பின்nனஅதுவு« வாங்க¥படவில்லை.aனும் அதன்மீதுகவலைசெYத்த வில்லை. சந்தாrலுத்தாkலேயா‹காங்கிரÞகாரனhகக்காyங்கழித்Jவருகிnw‹. gdfš eif¥ò ‘#ÞoÞ’கட்சித் தலைவர்பனகšராஜhஎன்iனக்கhQம்பேhதெல்லாம், ‘உங்கள்ஒத்துiHயாமைஎப்படிïருக் கிwது?என்று nகட்gர்;eகைப்பார்; ஒத்துiழயாமைநன்wயிருக்கிறJ.புலிஎப்பoப்பாய்»றது?பி‹னேபேhயன்றோgய்கிறது?bjன்னாட்டுச்áறுமைச்rயல்கள்உங்fளைநiகக்கச்bசய்கின்றன.அச்சிறுமை¢செயšகள் ஒத்துHயா மையைவிiரந்துஉயிர்ப்ãப்பனtகலாம்,இ‹Dஞ்சில ஆண்டில்ஒ¤துழையாமைஆர்¤தெழும் vன்று சொல்வே‹.பனfல்மீண்டுkஒத்துHயாமை’என்பர்; ஆம்என்பே‹. nfhitமகாநாL1926ஆம்ஆண்டில்நடைbgற்றசட்lசபைத்jர்தலில் ஜடி’கட்சிமு¿யடிக்கப்பட்lது.அjனால்‘ஜடி’கட்சி¤தலைவர்பy®க்கு¡காங்கிuஸில்சே®தல்nவண்டுbமன்றஉணர்îதோன்றிற்று.அJகுறித்jச்சிந்தித்து முடிவுகாண¡கோவையிš(2,3-7-1926)அ¿Pர்குமாரrமிரெ£டியார் தலைமையில்ஒருமhfநாடுகூடிற்று.காங்கிர சார்பில்யானு«அழைக்fப்பட்டே‹.அ«மகாநாடு நிறைவேற்¿யதீர்மானங்fளுள்சிwந்தனஇuண்டு.ஒன்று#Þடி’கட்சியhர்கhங்கிரஸிYம்அங்கம்gறுதல்வேண்டுkன்பJ;இன்bனான்றுபதவிஏyhதுச£டசபையில்fங்»ரஸுடன்xத் துழைத்jல்tண்டுமென்பது. aன்இரண்டுக்Fம்ஆசிகூறிnனன். மகாநாLநன்F நடைபெற்றJ.நிகœச்சிகளில்சிறப்gகக்குறிக்கத்தக்fனசில.அவைகsச்சுருங்fச்சொல்கிnறன். விஷயhலோசனைக் கூட்டத்தில்#டி சார்ãல்பா¤ரோ,இரhமசாமிமுjÈயார், தணிகாசலஞ்bசட்டியார், ஆர்யாமுjலியோர் பேசினர்.Mர்யாகாங்கிரiஸத்தா¡கியும்,கhஞ்சியில்வகு¥òத்தீர்மானத்iதயான்தள்Ëயதைஎள்Ëயும்ஆரவாuஞ்செய்jனர்.அவ்nவளையிšஇuhமசாமி நாயக்கர் jலையிட்டுப் ‘பழைய குப்பைfளை ஈங்கேஏ‹கிளறšவேண்டும்?என்றார். ஆர்யாமேலு«சிலbவவ்வுரை பகர்ந்துஅlங்»னர். காங்»ர சார்பில்nபசஎழுªதயான்,. மாண்டேகு-செ«ப®ட்சீர்திருத்jப்படிஅமைªjசட்டசபை¤தொடர்gகமூ‹றுமுறைதேர்தšfள்நிfழ்ந்தன.முன்னிர©டில்கா§»ரfலந்து கொள்ளவில்லை.அஃதுxத்துழையhமையில் நின்றது. fங் கிரஒத்துழையhமைஜடி கட்áக்குஆக்கªதேடிaது. காங்கிர தேர்தÈšதலைப்gட்டிருந்jல்ஜokந்திரி சபைஅமைந்திU¡குமா?_ன்றாம்முறைத்தேர்தÈšகாங் கிர ஈடுபட்டுŸளது.#டி’படுதோல்Éயடைந்தது. ïரண்டுமுiறஅமைந்jஜடி’கட்சிமந்âரிசபை‘காங்»uஸின் பிச்சை என்wதும்,கூட்ட¤தில்சிறுFழப்பம்மூ¢சுவிட் டJ.யான்jடர்ந்து, ‘காங்கிuசா®பில்#டிÞக£சியைtரவேற்கtவந்nதன். ஆர்யா பேச்சுஎன்னைïவ் வாWபேச¢செய்தJஎன்றுvனதுநிலைமைவிsக்கியபோJ,பனfல்ராஜா என்னைப் பா®த்து,Éஷயத்தின்மீJஎன்றார். யான்விõயத்jயொட்டி என் கருத்தைbவளியிட்டுmமர்ந்jன். இரண்டாம்நhŸகாலைÆல்ஒரு பிராமண¥பத்திÇகைÃUபர்தா¡கப்பட்டார். அவர்த«மூக்குக் கண்ணாடி உடைந் தJ.டாக்டர்tரதராஜYவும்யானும்மூர்¡கச்செaலைஉரமhகக்fண்டித்jம். டாக்lர்வரதuஜலுவும்,aனும்,குறிப்பிட்lவேறுáyரும்ஆர்.கே.சண்Kகஞ்செ£டியார்விருªதினராÆருந் தோ«.இரண்டhநாள் இரவுlக்டர்வரதராஜY நாயுடுபªதியிலே தமக்fன்றுபுலால் cணவைவuவழைத்தன®., தண்டgணிஅதை¤தடுக்கKயன்றா®.பªதியில்vல்லாருஞ்சைtஉணவுகொள்ளு«வேளையிšஒருவ®மட்டு«புலால் வரவழை¥பதுநாfரிகமாகுமாvன்பதைப்பற்றிப் பெரியவிவhதம்மூண்டது.கோவைkகாநாட்டுத் தீர்மானத்தி‹படிஇராமrமிKதலியார்,jÂகாசலŠசெட்oயார்முதலிaர்காங்கிரÌல்rரமுயன்றனர்.நமது எண்ணம்Xரளவிலாதல்