இளங்குமரனார் தமிழ்வளம் 32 1. அன்பும் அறிவும் 2. பழனி பாலநீதி 3. நீதிபோதவெண்பா 4. நீதி சாரம் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 32 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2014 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 152 = 168 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் அன்பும் அறிவும் 1. அன்பும் அறிவும் 3 2. அரும்பதவுரை 8 பழனிபாலநீதி 1. சாற்று கவிகள் 20 2. பழனி நீதிவாக்கியம் 24 3. பழனி நீதிமொழி 37 4. பழனி நீதிநூல் 52 நீதிபோதம் 1. நீதிபோத வெண்பா 77 2. கடவுள் வணக்கம் 79 3. நூல் 82 4. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 110 நீதிசாரம் 1. நீதிசாரம் 115 2. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 147 அன்பும் அறிவும் அன்பும் அறிவும் உடையீர்! அன்பு அறிவு முதலான இந்நூற்கொள்கை தமிழகத்திற்குப் புதியது இல்லை. அனைவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் படியாக அவ்வையார் ஆக்கி அளித்த கொன்றை வேந்தன் என்ற நூல் போன்று, பழைமையானவற்றையும் காலத்துக் கேற்றனவற்றையும் இணைத்து இயற்றப்பட்ட இச்சிறு புத்தகம் வெளிவருகிறது. புதிய கொன்றை வேந்தன் என்ற பெயரிடலா மாயினும் ஆத்திசூடி கொன்றைவேந்தன் வெற்றிவேற்கை வாக்குண்டாம் என்ற நூல்கள் அந்நூலில் வரும் முதலிரு சீர்களாலோ முதற் சீராலோ பெயர்பெற்றது போலவே இந்நூலும் முதலிரு சீரான அன்பும் அறிவும் என்ற பெயரால் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஊக்குவிப் பார்கள் என்னும் கருத்துடையேன். இரா.இளங்குமரன் அன்பும் அறிவும் அன்பும் அறிவும் ஆவன செய்யும் ஆசை ஒழிந்தால் அடையா துன்பம் இளமைக் கல்வி எளிதில் நீங்கா ஈகை வேண்டும் மேகம் போல உரைப்பதில் நவல்லான் உயர்ந்தோன் ஆவன் ஊருக் குழைப்போன் உத்தமன் என்பான் எண்ணித் துணியான் புண்ணியம் அடையான் ஏதும் அறியான் நானென தென்பான் ஐயப் படுவோன் அழிவது திண்ணம் ஒன்றாய்க் கூடில் நன்றாய் முடியும் ஓதி மறப்போன் ஓட்டைக் குடமே ஔவை போல எளிமை வேண்டும் அஃதிவண் ஆக்கும் அளவில் புகழே  கற்றவர் கடமை ஒற்றுமை ஆக்கல் காலம் அறிந்தால் காரியம் சிதையா கிட்டிய தொழிலில் கீர்த்தி தேடு கீழ்மேல் உரைப்பார் பொதுவறி வில்லார் குணத்தில் பெரியோர் இணக்கம் தேடு கூடிப் பிரிதல் குறைந்தோர் தொழிலே கெடுவது வேண்டின் அடுத்தவர்ப் பழிக்காய் கேட்டில் விலகுதல் கெடுதற் குறியே கையற நிற்பதே கலங்கா நட்பு கொடுத்தாற் குவத்தல் குணத்தோர் குணமே கோளுரை வாயான் பாழுறப் பதைப்பான் கெளவை விடுவோன் செவ்வியர் பண்பே கக் கக் கென்றே கெடுப்பார் உண்டே !  சதமென இருந்தால் சத்தியம் ஒன்றே ! சாவதும் மேலாம் சான்றோர் புகழ சினமெனும் பொருளே சிற்றினப் பொருளே சீமை ஆளினும் சிந்தை வேண்டும் சுத்தம் இல்லார் சுகமும் இல்லார் சூதுச் செல்வம் கனவுச் செல்வம் செய்கையில் அடங்கார் சிந்தையில் அடங்கார் சேரல் வேண்டும் சிந்தையும் வாக்கும் சையெனத் திரிவர் பொய்யறி வுடையோர் சொத்திடும் பானை இடத்தை அடைக்கும் ! சோம்பர் வாழ்வும் அன்னது போலாம் செளவென வளைதல் சிறந்தோர் சிறப்பே ! அச்சம் அடைந்தால் மிச்சமும் அதுவே !  தறுகண் வீரனும் அஞ்சுவது அஞ்சுக தாள்வலி யுடையோர் பாழ்பட லின்றே திங்களை வைதால் தீயைக் கக்கா தீர அறிந்தோர் செய்கையு மஃதே துன்பம் பொறுத்தால் இன்பம் வருமே தூற்றிப் பரத்துதல் பதரின் தொழிலே தெளிவுறு தீர்த்தம் ஒழுகிய வியர்வை தெற்றென விளக்கும் அவரவர் செயலே தேசப் பணியே தெய்வப் பணியாம் தைப்பனி போல நடுக்குவர் பெரியர்; பின்புறு நன்மை பேசுதற் அரிதே ! தொழுது கெடுப்பவர் தொகையோ மிகுதி அழுது முடிக்கும் ஆண்மையும் உண்டே ! தோற்றம் கண்டு தேர்ந்திட வேண்டாம் தெளவைத் தொழிலோர் தவிர்த்திட வேண்டும் அத்தகை யாளர் அழிவது திண்ணம்  நன்மை வேண்டின் நன்மை செய்வாய் நட்டது விளைதல் கண்டனம் அன்றே நாட்டுக் குரியது நமக்கும் உரியது ஆயினும் திருத்துதல் ஆன்றோர் கடனே நித்தம் கொள்வது நேர்மை நெறியே நிலைபெறா உலகில் நிலைப்பது புகழே நீதிப் பகைவர் ஆதிப்பகைவர் நுண்ணிய அறிவே திண்ணிய படையாம் நூலறி வுடையோர் சாலவும் முயன்று காலம் மாற்றியும் கருமம் முடிப்பர் நெல்மணி முதிர்ந்தால் நேராய் நில்லா ! நேரிய அறிவும் திருவும் பெற்றோர் நெல்மணி யொப்பர் தன்பணி வாலே நையப் புடைக்க நற்குணம் பெறுவது நற்குண மன்றே நற்குண மன்றே நொடிப்பொழு துணர்வில் திருந்துவோன் திருந்துவான் நோன்புள நோன்பு நோய் செயா நோன்பே  நோயிற் கொடிது மனத்துள நோயே மற்றதன் கெடுதி அளவில் வாகும் படித்தது போதா பண்பும் வேண்டும் பாதை தவறில் பற்பல வேதை பிழை வழி நடப்போர் பாடும் அஃதே பீடுற நினைத்தால் உழைப்பவர்க் குழைப்பாய் புத்தி சிறந்தவன் புத்தன் ஆனான் பூமிக் குழைத்தான் தன்னாள் முழுதும் பெரியோர் வழியும் பேசிய வழியே பேதமை யுடையோர் பேச்சில் நிற்பர் பைந்தமிழ் வழக்கில் கண்டில மன்றே பொருட்பே றுற்றது போற்றிடும் பணிக்கே போனதற் கிரங்கல் புன்மை யாகும் பௌர்ணமி யன்றே கடலும் பொங்கும் அப்படிப் பொங்குகல் இன்சொல் அதற்கே  மனத்தால் நினைகினும் கெடுதல் கெடுதலே மாடெதை நோக்கி மனத்தொடு உழைக்கும்? மற்றதை ஒத்தல் மனிதர்க் குயர்வே மிருகம் ஆகும் மனிதரும் உண்டே மீண்டும் எண்ணில் உருவே வேறாம் முதிர்ந்தோ ரெல்லாம் முதிர்ந்ததோ ரல்லர் மூதறி வாளரை முகமே காட்டும் மெச்சப் படுவாய் பொச்சாப் பொழித்தால் மேலோர் உரையில் ஏலா பொய்மை மைமனக் கள்வர் துள்ளித் துடிப்பார் மொழியார் துயரம் தன்மனம் கொள்ளல் ஒழிந்தான் ஒழிந்தான் துன்பக் கடலே மோன உருவால் மருட்டும் புல்லர் `மோதிரம் காட்டித் திருடும் கள்வர் மோடி செய்திடும் மூடச் செயலோர் சாதிப் பிரிவால் பேதைமை ஆக்கும் நீதி யறியா நெடும்போர் நீச்சர் ஆதி மதமும் எந்தம் மதமே பேதைமை பேசேல் என்றுரை மதத்தர் உலகெலாம் இறைவன் உருவென எண்ணிச் சிறப்புற ஓங்குக சீரெல்லாம் பெற்றே ! சிறப்புற ஓங்குக சீரெலாம் பெற்றே ஏய்த்துப் பிழைத்தல் தீதே என்றும் எண்ணம் கொள்வார் எழுக எழுக.  வள்ளுவர் உரைத்த வாய்மை மொழியை வாரிக் கொள்ளல் வையகக் கடனே விடுதல் வேண்டும் வேற்றுமைக் கதையும் வீண்புரட் டுரையும் வெஃகும் செயலும் வீரன் நிலையை அமைதியும் காட்டும் வீணாய் ஆர்த்தால் வீரம் இல்லை வெட்டையில் பெய்தால் குட்டையும் நிரம்பும் வேற்றுமை காணார் செல்வமும் அஃதே வையம் சிறக்க வாழ்வது பொங்க அறிவுரை நீதி சிலவே யாகும் அந்நிலை நடத்தல் அறிவோர் கடனே விழுப்பொடு நிதியம் வியக்கொடு நூலிது வீரருள் வீரன் தன்னை கொள்வேன் வெளிப்பகைக் கேட்டில் உட்பகை பெரிதே வளர்ந்தது. அரும்பதவுரை அ. ஆவன = ஆகவேண்டிய நன்மைகளை உ. பிசகான் = தவறாதவன் எ. புண்ணியம் = நற்பயன் ஏ. ஏதும் = ஒன்றையும் நானெனது = நான் சிறந்தவன், என்னுடையது சிறந்தது. ஐ. ஐயம் = சந்தேகம் திண்ணம் = உறுதி ஒ. கூடில் = சேர்ந்தால் ஓ. ஓதி = படித்து அஃ அளவில் = அளவில்லாத  கா. சிதையா = கெடாது கி. கிட்டிய = கிடைத்த கீர்த்தி = புகழ் கீ கீழ்மேல் = (தொழிலில்) தாழ்வு உயர்வு கு. இணக்கம் = நட்பு கே. கேட்டில் = வறுமைக்காலத்தில் கை. கையற நிற்பது = ஒன்றும் இல்லாதபோதும் நட்பாயிருப்பது. கலங்கா = நிலையான கோ. கோள் = புறங்குறுதல். பாழ் = துன்பம். கௌ கெளவை = பழிச்சொல். செவ்வை = செம்மை கக். கக்கக்கென்று = சிரித்து  ச. சதம் = நிலையானது சி. சினம் = கோபம். சிற்றினம் = தாழ்ந்த அறிவினர். சீ. சீமை = நாடு சிந்தை = மனம். சை. சையென = அடுத்தவர் பழித்துக்கூறும்படியாக பொய்யறிவுடையோர் = அறிவற்றவர். சௌ. செளவென வளைதல் = மிகவும் வளைதல் அச். அச்சம் = பயம். மிச்சம் = மீதம்  த. தறுகண் = பயப்படாத. அஞ்சுவ தஞ்சுக = பயப்பட வேண்டியதற்குப் பயப்படுக. தா. தாள்வலி = முயற்சி. பாழ்படல் = கெட்டுப்போதல் தி. திங்கள் = சந்திரன் தீ. தீர = நன்றாக து தூற்றிப்பரத்தல் = பழித்துக்கூறி மிகுதிப்படுத்தல் பதர் = அற்பர் தெ. தெற்றென = தெளிவாக தொ. ஆண்டை = வீரம் தோ. தோற்றம் = வடிவம். தேர்ந்திட = தெளிய தௌ தெளவைத் தொழிலோர் = தூங்குவோர். தவிர்த்திட = வேலையிலிருந்து நீக்க.  ந. கண்டனம் அன்றே = பார்த்தோ மல்லவா! ஆன்றோர் = சிறந்தோர் நீ ஆதி = முதன்மையான நூ சாலவும் = மிகவும், கருமம் = காரியம் நெ. பொன்னங்கதிர் = பொன்போன்ற நிறத்தையுடைய கதிர். நே. திரு = செல்வம் நை. நையப்புடைக்க = மெலியும்படியாக அடிக்க நொ. நோவு = வலி நாட்கொடை = நித்தியக்கொடை அந் அந்நிலை = தண்டனைக்காகத் திருந்தும் நிலைமை.  ப. பண்பு = குணம் பா. தவறில் = தப்பினால். வேதை = வேதனை பீ. பீடுறவேண்டில் = பெருமையடைய நினைத்தால். பெ. பேசிய = சொல்லிய, பே. பேதைமையுடையோர் = அறிவற்றவர் பேச்சில் = வார்த்தை மட்டில் பை. பைந்தமிழ் = பசுமையான தமிழ் (வளப்பமிக்க) போ. இரங்கல் = வருந்துதல். புன்மை = கேவலம்  மா. மற்றதை = பயன்நோக்கியுழைக்காத மாட்டை மி. உரு = வடிவம் மூ மூதறிவு = முதிர்ந்த அறிவு மெ. மெச்ச = புகழ் பொச்சாப்பு = மறதி மே. ஏலா = ஏற்கா (வராது) மன்னுயிர் = நிலைபெற்ற உயிர் மை. மைமனம் = இருண்டமனம் மோ. மோனம் = மௌனம் (அமைதி) மோடி = பிணக்கு (சண்டை) பேதைமை = வேறுபாடு. ஆதி = முதன்மையான. பேசேல் = பேசவேண்டாம் வ. வாய்மை = உண்மை வா. வாரி = அள்ளி. வையகம் = உலகம் வி. வெக்கும் = வெட்கப்படக்கூடிய, வீ. ஆர்த்தால் = ஆரவாரித்தால் வெ வெட்டை = மேடு குட்டை = பள்ளம் வ. வையம் = வையகம். பழனி பாலநீதி முன்னுரை பழனி பாலநீதி என்னும் இந்நூலின் முதற் பகுதியில் மூன்று நூல்கள் இடம்பெற்றுள. அவை: பழனி நீதிவாக்கியம், பழனி நீதிமொழி. பழனி நீதிநூல் என்பன. இதன் இரண்டாம் பகுதியில் இரண்டு நூல்கள் இடம்பெற்றுள. அவை அடுத்து வெளிவரும். பழனி பாலநீதி ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள் என்பனபோல இருசீரடி, நாற்சீரடி, குறள்யாப்பு என்பனவற்றால் முறையே அமைந்துள்ளன. இரண்டாம் பகுதியில் வரும் இரு நூல்களும் சிந்தியல் வெண்பா, அளவடி வெண்பா என்பவற்றால் அமைந்துள்ளன. ஆசிரியர், தாம் உரைக்க விரும்பும் நீதிகளை அரையடிச் சிறுமை தொடங்கி, நாலடிப்பெருமை வரை ஓர் ஒழுங்குற அமைத்துச் சென்றுளார். இவற்றுக்கு முன்னோடியாய் இருப்பவை பழைய அறநூல்களே என்பது வெளிப்படை. இப்பகுதியிலுள்ள மூன்று நூல்களும் தனித்தனி 150 பாடல்களைக் கொண்டுள்ளன. இருசீராயினும் வரிசையில் ஒன்றுதானே; இவ்வரிசை உயிர்வரிசை , ஆய்தம், உயிர்மெய் வரிசை, மெய்வரிசை என்னும் ஒழுங்கில் செல்கின்றன. மொழிக்கு முதலாகாத எழுத்துகளை இரண்டாம் எழுத்தாக்கிக் கொள்கிறார். ஞ கர நகரங்களைத் தக்கபடி போலியாக்கி இணைத்துக் கொள்கிறார். மரபுநிலை மாறாமல் நூலியற்றல் வேண்டும் என்னும் கொள்கையினராகிய இவர் அதனை நூற்பது நூன்முறை என்கிறார். நூலினை மரபு மாறாமல் செய்யினும், காலச் சூழலை அறிந்து மாந்தர் வாழவேண்டும் என்னும் பெருநோக்கு இவர்க்கு உளதாதல் வெளிப்படுகின்றது. உலகை, அறிவியல் மிகச்சுருக்கிவிட்டது அன்றோ! இந்நிலையில் உலகத்து நாடுகளிலெல்லாம் காணக்கிடக்கும் நல்லவற்றை யெல்லாம் நாமும் கொள்ள வேண்டுமே! அதற்காக ஆசிரியர் சீமை திரிந்தறி என்கிறார். யவனம் கடலோடி இங்கங்(கு) உறையறிஞர் கவனித் (து)அவர் செய்கை காண் என்றும் விளக்குகிறார் புத்தம் புதுத் தொழில்கள் எத்தனை எத்தனையோ உருவாகின்றனவே! இவற்றையெல்லாம் கற்றுக்கொண்டால் அன்றோ உலகத்தாருடன் நாமும் ஒப்பாக விளங்கமுடியும்; நம் காலிலேயே நாமும் ஊன்றி நிற்க முடியும்; அதனால், தொழில் பல கல் என்கிறார் யந்திரம் இயக்கு என்றும் கூறுகிறார் அறிவியல் உலகம் நமக்குத் தந்த நன்கொடை அம்மை குத்துதலாகும். அம்மை குத்துதற்கு அலுவலர் வருகின்றார் என்று கேள்விப்பட்டாலே போதும்! இளையரும் முதியரும் ஓடி ஓடி ஒளிந்த காலமும் உண்டு. இந்நாளிலும் சிற்றூர்களில் அந்நிலை மாறிவிடவில்லை. பயன்மிக்க அப்பணிக்கு அறிவுடையவர்கள் முழு ஒத்துழைப்புத் தருதல் நாட்டுக்கு நலம் பயக்கும் என்றும் தெளிவுடையவராய், அம்மை குத்துவி என்கிறார். சில குடி வழிகளிலே மகளிர் மறுமணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை. மறுமண ஆர்வம் மகளிர்க்கு இருப்பினும், பெற்றோர்க்கு இருப்பினும்-பிறர் பழிப்பரே என்னும் அச்சமும் துணிவின்மையும் தடுக்கக் கைம்மை மணத்தை ஏற்கத் தயங்குகின்றனர். சீர்திருத்தம் சீர்திருத்தம் என்று பேசும் இந்நாள் நிலைமையே இத்தகையத்து எனின், இந்நூற்றாண்டின் தொடக்க நாள் நிலையைச் சொல்லவே வேண்டியது இல்லை! கைம்மையர் மணத்தைக் காரணத்துடன் கூறுகிறார் ஆசிரியர்: விதவையர்க் கீர்மணம் வேண்டிடிற் செய்தல் மறைவிற் புணர்தலின் மாண்பு மறுமணம் வேண்டாமலே, கைம்மை நோன்பு கொள்ளலே கடமை எனக் கொண்டாரும் உளரன்றோ! அவரைக் கட்டாயப்படுத்திக் கடிமணம் புரிவித்தலும் ஆசிரியர்க்கு உடன்பாடில்லை. அதனை, கைம்பெண் கடமை கணவனையே சிந்தனை செய்து(து) ஐம்பொறியை என்றுமடக் கல் என்கிறார். இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்வு என்றும், வறுமையும் வளமையும் மாறி மாறி வருதல் கூடும் என்றும் தெளிவுடைய ஆசிரியர் ஞிமிறெனப் பாடு (8) என்று இசைத்து மகிழ வழிகாட்டுகிறார். இசைத்து மகிழ என்னதான் வழி காட்டினாலும் வறுமையை இவர் மிக மிகக் கடுமையாகவே வெறுக்கிறார் என்பதும் நன்கு புலப்படுகின்றது. தரித்திரம் அடைதலின் மரித்திடல் மாண்பு திரணமும் வாரா மரணம் வருவாய் என்று இவர் கூறுவனவற்றால் இது தெளிவாகும். வறுமையைத் தொலைத்தற்கும் வழிகாட்டக் கருதுகிறார் ஆசிரியர். செலவினைச் சுருக்குதல், வேண்டாச் செலவுகளை விடுத்தல் என்பவற்றை உட்கொண்டு கூறுகிறார் போலும்! தேடலின் நன்றே ஓடலைக் காத்தல் என்கிறார். நீதிகளைப்பற்றிக் கூற விரும்பிய ஆசிரியர்க்குத் திருக்குறள் நினைவில் எழும்பாமல் இருக்குமா? கூடா ஒழுக்கத்தைக் கூறவரும் குறளாசிரியர், மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் என்பதை இவரும் நினைவு கூர்ந்து, பழித்தலை ஒழித்தல் மழித்தலின் நன்று என்று மொழிகிறார். இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் என்னும் குறளில் அமைந்துள்ள நிலம் நகுதலை வேறு வகையால் பயன்படுத்திக் கொள்கிறார், இந்நூலாசிரியர். பிறர்க்கு உதவாமல் தமக்கென்றே பொருளைத் தேடி வைப்பாரை நிலம் நகும் என்கிறார். சேமித் திருக்கின் பூமி சிரிக்கும் என்பது அது. நாட்டிடை வழங்கும் பழமொழிகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார். முன்கை நீண்டால் முழங்கை நீளும் என்னும் பழமொழியை, முன்கை நீளிற் பின்கை நீளும் என அமைக்கிறார். இவ்வாறே பிறவும் உள. உவமை முதலிய அணிநலங்களால் தாம் கூறக் கருதிய கருத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார். அடித்தளம் போடாமல் எழுப்பிய சுவர் நிற்குமா? அது போல் அழுந்தப் படியாத படிப்பும் மனத்து நிற்குமா? பீடம் அழுந்தா(து) எழுசுவர் வீழும் போல் பாடம் அழுந்தாப் படிப்பு. இவ்வுவமையணிப் பாடலில், வீழும் என்பது சுவர் வீழு படிப்புவீழும் என ஈரிடத்தும் பொருந்தி நிற்க அமைதலால் இது தாப்பிசைப் பொருள் கோள் என்னும் பொருள்கோள் வகையையும் சாரும். பாவம் என்பது ஒரு கடல்; அதனைக் கடக்க தவம் என்னும் கலத்தில் ஏறிச்செல்லுதல் வேண்டும் என உருவகித்துக் கூறுகிறார்: பவக்கடல் கடக்கத் தவக்கலம் ஏறு ஒருவர் பட்ட கடனுக்காக ஏற்றுக் கொள்வதும், பின்னர் அக்கடனைத் தீர்ப்பதும் கணையையும், அக்கணையால் பட்ட புண்ணையும் ஒக்கும் என நிரல்நிறையணியால் கூறுகிறார். பிணையும் கடனும் கணையும் புண்ணும் எடுத்துக்கொண்ட செய்தியை எதுகை மோனை முதலிய சொல்லழகு பெறச் சொல்ல விழைந்துள்ளார் ஆசிரியர். இல்லதும் அல்லதும் சொல்லுவ தல்லல் ஏக்கமும் தூக்கமும் ஆக்கம் போக்கும் கெட்டும் பட்டும் தொட்டதை விடேல் மெல்லெனச் சொல்வது கல்லினும் உருவும் மொழியும் மொழிகளை வழுவற மொழி யுத்தியும் சத்தியும் ஒத்திடில் சித்தி என்பவற்றைக் கருதுக. முன்வந்த சொல்லையே பின்னும் உரைத்துச்சுவை யூட்டுதலும் தேர்ந்தவர் இவர். அணங்கினை ஒத்த அழகுடை யாளாய் அணங்குதல் இல்லாள் அணங்கு தூக்கத்துள் தூக்கமது தூங்காத தூக்கமே ஆக்கத்துள் ஆக்கம் அது (54) கல்வியின் பயனைச் சிறப்புறக் கூறுவதும் மாந்தரைக் களிறு, பாம்பு, சாவி, பதர் ஈ புல் புழு எனக் கூறுவதும் கருதி மகிழத் தக்கன. நௌ, என்னும் ஓரெழுத்து ஒருமொழியை ஆடு, கப்பல் என்னும் இருபொருளில் வழங்கியுள்ளார். போலிமையை விண்ணானம் என்கிறார். இழிவை ஏஞ்சை என்கின்றார் நான்கு மாதக் குழந்தைக்குச் சாண் என்னும் பெயருண்மையைக் காட்டுகிறார் தோழனை ஞெலுவன் என்றும் தவத்தினரை ஔர்வர் என்றும் ஒற்றுமையை ஒன்று என்றும் சுயநலத்தைச் சுவநயம் என்றும் நானம் என்பதை நானம் என்றும் சிறுவரைப் பையர் என்றும் நகைப்பை நங்கு என்றும் குறிப்பிடுகிறார். அறைக் கீரை என்னும் பெயர்ப்பொருள் விளங்க அறுகீரை எனத் தெளிவாக்குகிறார் இன்னவாறு இவர் ஆளும் சொல்லாட்சிகள் பலதிறத்தனவாம். ஒவ்வொரு நூலின் இறுதியிலும் நூற்சுருக்கம் எனத் தலைப்பிட்டு நூலின் தொடக்கமும் முடிவும் இணைந்தியலச் செய்துள்ளார். அகமகிழ்ந் தன்னமிட்டுண் என்பது பழனி நீதி மொழிச் சுருக்கம். அறம்புரி வாழ்க்கை திறம்புதல் அரிதே அன்னமிட்ட டாரைக் கன்னமிட் டழியேல் என்பது பழனி நீதி மொழிச் சுருக்கம். அந்தணர்ஒத் தோதி அதிகாலை உச்சியந்தி வந்தனம் செய்ய வளமுள்ள - மந்திரரும் அன்னமிடப் போதுமென்பர் ஆற்றாத ஆசையால் சொன்னமிடச் சொல்வார்அச் சொல் என்பது பழனி நீதி நூல் சுருக்கம். இனி, இந்நூலாசிரியர் பழனி செட்டியார் என்பார். அவர் கருப்பத்தூர் பொழுது கவிராயனென அமைந்து எனப்பாராட்டப் பெறுவதால், இளமையிலேயே புலமை வாய்ந்து விளங்கினார் என்பது புலப்படும். இளைஞர் இளைஞையாக்க இந்நூல்களை எழுதினார் என்பது, பாலநீதி தற்சிறப்புப் பாயிரத்தில் திறமுள சிறுவர் சிந்தையிற் பதிய... மொழிந்திடு வேனே என்று இவர் கூறுவதால் தெளிவாகும். தாம் இயற்றிய நூலுடன் தம் பெயரும் இணைந்து விளங்குமாறு பழனி பாலநீதி எனப் பொதுப்பெயர் சூட்டினார். பழனி நீதிவாக்கியம் முதலான பெயரும் சூட்டினார். அன்றியும், தம்பெயர்க்கு முன்னோனாம் பழனி முதல்வனை நினைந்தும் சூட்டினார் என்பதுமாம். இவர் சேலம் சார்ந்த திருப்பத்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். சென்னையிலும் சேலத்திலும் வாழ்ந்ததும் உண்டு. இவர்க்குத் தமிழகம் அல்லாமல் இரங்கோன் ஈழத்துப் புலவர்களும் நண்பர்களாக இருந்தனர். இவையெல்லாம் சாற்று கவிகளால் விளங்குகின்றன. நாகூர் செவத்த மரைக்காயர், ஆரணி அண்ணாமலை முதலியார், இரங்கோன் மதுரைப்பிள்ளை, திருமழிசை வடிவேலுமுதலியார். முகவூர் அருணாசலக் கவிராயர், சுன்னாகம் முருகேசபண்டிதர், நெடுங்குளம் பாலசுப்பிர மணிய முதலியார், காஞ்சிமாநகர் அரங்கநாத தாதரசாரி யார் என்பார் இயற்றிய சாற்றுகவிகள் இந்நூலுக்கு வாய்த்திருப் பதால் இவர்களுக்கும் இந்நூலாசிரியர்க்கும் உரிய தொடர்பு வெளிப்படும். இவருள் முருகேசபண்டிதருடன் கூடியாய்ந்து பழனி நீதிவாக்கியம், பழனி நீதிமொழி என்னும் இரண்டு நூல்களையும் இயற்றினார் என்பது, சொற்றமிழ் வல்லோன் சுன்னையாழ்ப் பாணர் கொற்றவனாமுரு கேசபண் டிதனுடன் ஆய்ந்துசொல் நீதி வாக்கியம், நீதி மொழியென இரண்டும் முற்றின; முற்றும் எனப் பழனிநீதி மொழி முடிநிலை நூற்பா கூறுதலால் வெளிப்படுகிறது. வடிவேலுமுதலியார் இயற்றிய சாற்றுகவியில், மதுரைப் பிள்ளையச்சிட்டுப் படைத்தான் பேர் என்று வருவதால் இந்நூலின் முதற்பதிப்புச் செலவை இரங்கோன் மதுரைப் பிள்ளை ஏற்றுக்கொண்டார் என்பது விளங்குகின்றது. பழனி செட்டியார் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்பதும், சைவசமயம் சார்ந்தவர் என்பதும் எனினும் சமயப் பொதுமையாளர் என்பதும், காலத்துக் கேற்பவும் உலகியற் கேற்பவும் மாந்தர்தம் வாழ்வை அமைத்துக்கொண்டு அறம் பொருள் இன்பத் துறைகளில் நலம் பெறவேண்டும் என்னும் பெருநோக்குடையவர் என்பதும் இந்நூல்களால் அறியவருகின்றன. வள்ளுவர் தந்த திருமறை வழங்கும் இத் தமிழ் மண்ணிலே எழுந்த அறநூல்கள் பலப்பலவாம். அவற்றை யெல்லாம் ஒன்றுவிடாமல் வெளிப்படுத்த வேண்டும் என்னும் பேரார்வத் திட்டத்தால் முறையே வெளிப்படுத்தி வருபவர்கள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ.சுப்பையாபிள்ளை அவர்கள் ஆவர். அவர்கள் ஆர்வந் தூண்டுதலால் மறுபதிப்பின்றி மறைந்து கிடந்த பழனி பாலநீதி என்னும் இந்நூல் அருஞ்சொற் பொருள் எழுதப்பெற்றுத் தமிழுலாக் கொள்கின்றது. இதன் இரண்டாம் பகுதியும் அடுத்து வெளிவரும். இவ்வாறு தமிழ்வளத்தைப் பல்லாற்றானும் பெருக்குதலே வாழ்வுப் பேறு எனக் கொண்டு பணியாற்றிவரும் கழக ஆட்சியாளர்க்கு நன்றி பெரிதுடையேன். கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்றார் வள்ளுவர். கற்றும்; வாலறிவன் நற்றாள் வழிபட்டும், பெயர் பழனி என வாய்த்த இப்பெருமகனார், தம் பெயர் விளங்கவும் பெரும் பெயர்ப் பழனிச் செவ்வேளை நினைவு கூரவும் இந்நீதி நூல் வரிசைக்குப் பழனி பாலநீதி எனப் பெயரிட்டார். அவலெண்ணம் வாழ்வதாக! இளைஞர் இலக்கியமாக எழுந்த இவ்வினிய நூல் வாழ்வதாக. செல்வம், திருநகர், தமிழ்த் தொண்டன், மதுரை - 6. இரா. இளங்குமரன் 16-5-82. சாற்று கவிகள் நாகூர் மு. செவத்த மரைக்காயர் அவர்கள் இயற்றிய, கழிநெடில் ஆசிரிய விருத்தங்கள் கருப்பத்தூர் பொழுதுகவி ராயனென அமைந்துலகம் காண வந்து விருப்பத்தூர் வான்பழனி பாலநீதித் தொடர்பை விளக்கி னானால் பருப்பத்தூர் வளர்கன்னல் கமுகினெழில் காட்டுவயல் பழுத்த சேலம் திருப்பத்தூர் வாழ்பழனிச் செட்டியெனப் பெயர் புனைந்த திறலன் அன்றே. மூதறிஞர் இனிதுரைத்த நீதிநெறி களைத்திரட்டி முதுநீர் வைப்பில் ஆதவனிற் செழும்பழனி நீதிநெறி யெனத்திகழ அருளி னானால் ஓதருமெண் ணெழுத்திரண்டும் கற்றுணர்ந் தமைக்கேற்ப ஒழுக்கம் கல்வி போதரசி வளர்நாவன் திருப்பத்தூர் வாழ்பழனிப் புலமை யோனே. ஆரணி, இயற்றமிழ் வித்துவான் அண்ணாமலை முதலியார் அவர்கள் இயற்றிய, நேரிசை வெண்பா சென்னைநகர் சேலம் திருப்பத்தூ ரம்பதியாம் தன்னில்வள ரும் பழனிச் சற்குணவான் - நன்னயமாய் நீதிநூல் தன்னையிந்த நீணிலமும் தான்மதிக்க ஓதினான் மூதுரைக்கொப் பே. இரங்கோன் சிறந்த வணிகரும், கப்பல் முகவரும், நகரவை ஆணையரும் பெருமைதரு நடுவருமாகிய திரு மிகு பே. மா. மதுரைப் பிள்ளை அவர்கள் இயற்றிய, நேரிசை வெண்பா சிந்திக்கச் சிந்திக்கத் தேன்பொழியும் உன்வாய்ச்சொல் வந்திக்க வந்திக்க வண்மைதரும் - எந்திக்கும் ஐபழனி மையகற்ற அம்புவியின் மக்களுளம் செய்பழனி பாலநீ தி. திருமழிசை கந்தசாமி முதலியார் மகனாரும், சொர்க்கபுரம் இராமலிங்கத் தம்பிரானவர்கள் மாணாக்கரும், சென்னை, வீரசைவ சமய வளர்ச்சிக் கழகப் பொழிவாளருமாகிய வடிவேலு முதலியார் அவர்கள் இயற்றிய, நேரிசை வெண்பா மூதுணர்வோர் ஓதியுள மூதுரைகட் கேயிணங்க ஓதுவோர் புந்திக் குவகைதர - நீதிநூல் எள்ளலற வேபழனிச் செட்டியிசைத் தான்மதுரைப் பிள்ளையச்சிட் டுப்படைத்தான் பேர். திருக்கயிலாய வழிமுறைத் திருவாவடுதுறை தவப் பெருந்திரு நமசிவாய தேசிகர் மாணவருள் ஒருவரும், சேற்றூர் அரசவைப் புலவருள் ஒருவருமாகிய சிவகாசி அருணாசலக்கவிராயர் பாடிய, விருத்தப்பா தேக்கியநற் புகழ்பெருகும் திருப்பத்தூர் வைசியகுல திலக னான பாக்கியசம் பன்னனெனும் பழனிசெட்டி நிலவுலகம் பயில நீதி வாக்கியமெல் லாந்துருவித் திரட்டியொரு நூலாக வகுத்தான் ஞான யோக்கியமுள் ளோர்பலர்க்கும் வள்ளுவர்நூல் போலி துவும் ஒன்று மன்றோ! யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் பூ. முருகேச பண்டிதர் அவர்கள் இயற்றிய, நேரிசை வெண்பா நாமான் மகிழ்ந்தருள நன்னீதி வாக்கியம்செய் சீமான் உயர்பழனிச் செட்டியன்றோ - பூமானந் தேமா னெனவாழ் திருப்பத்தூர் தன்னிலிளங் கோமா னவனருள் நூல் கோல். நெடுங்குளம் திரு.என். பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் (B.T., F.T.T.S.,) இயற்றிய, விருத்தப்பா இலங்கொளிர் உண்மை யாகி இருந்திடும் பொருளை ஓர்ந்து நலங்கிளர் பழனிச் செல்வன் நவமணித் துறைகள் என்னத் துலங்குநன் நீதி மாலைத் தூயதோர் நூலைத் தந்தான் புலங்கணம் வழித்தாய்ப் பெற்றுப் புனிதர்கள் ஆக வென்றே. (இவற்றொடு காஞ்சிமாநகர் வித்துவசிகாமணி சதாவதானி அரங்கநாத தாதாசாரியார் அவர்கள் தெலுங்கில் இயற்றிய சாற்றுக் கவி ஒன்றும் உண்டு (ப - ர்). தற்சிறப்புப் பாயிரம் மலர்மனங் குவித்து மாணடி இறைஞ்சி அறம்பொருள் இன்பம் மூன்றுஞ் சுருக்கித் திறமுள சிறுவர் சிந்தையிற் பதியப் பழனி நீதி வாக்கிய மொன்றும் பழனி நீதி மொழியென வொன்றும் பழனி நீதி நூலென வொன்றும் மூன்றிடைக் கலந்து மொழிந்திடு வேனே. அவையடக்கம் நேரிசை வெண்பா தன்பிழையே என்றிகழார் தக்கார்; தகவில்லார் v‹ãiHia¡ f©L« ïfœtnuh?-ã‹gʤJ¤ தன்பிழையைத் தானறியான், தானறிந்தும் தள்ளாதான் என்பிழையைச் சொல்லினும் என்? இல்லம் எடுக்க இருப்பாணி யும்பயனாம் சொல்லரிய எப்போருளும் சூழ்ந்திருந்தும்-வெல்லரிய வேந்தர் முடிசூட்ட வெட்டியனும் வேண்டுமே மாந்தர்தா மன்னுபல ரோடு. பழனி பாலநீதி க. பழனி நீதிவாக்கியம் காப்பு மதியணி சடையோன் மாமகன் அடிதொழ மதிதரு நீதி வாக்கியம் வருமே. (அருஞ்சொற் பொருள்) மதியணி சடையோன் - பிறைமதியணிந்த சடையினனாகிய சிவபெருமான். மாமகன் - மூத்த மைந்தனாகிய பிள்ளையார். மதி தரும் - நன்மதிப்பைத்தரும். மதி - அறிவுமாம். அகரவரிசை - நூற்பா 1. அகமது மகிழ். அகமது - அகம் (மனம்). 2. ஆதரவு செய். ஆதரவு - உதவி. 3. இடுக்கண் களை. இடுக்கண் - பிறர் அடைந்த துன்பத்தை; களை - நீக்கு. 4. ஈகை மறவேல். மறவேல் - மறவாதே. 5. உற்றது உரை. உற்றது - நடந்தது. 6. ஊதியம் தேடு. ஊதியம் - இப்பிறப்புக்கும் வரும்பிறப்புக்கும் நன்மையானதை. 7. எவரையும் இகழேல். யாரையும் இகழக்கூடாது. 8. ஏங்கித் திரியேல். ஏங்கி - இல்லையே என்று ஏக்கம் கொண்டு; திரியேல் - அலையாதே. 9. ஐயம் அறக் கல். ஐயம் அற - ஐயப்பாடு நீங்க. 10. ஒற்றுமையுடன் வாழ். ஒன்றி இணைந்து வாழ்க 11. ஓதுவது உண்மை. ஓதுவது - கூறுவது. உண்மையே கூறுக என்பது. 12. ஔவை சொற்கேள். ஔவை - ஔவையார்; பாட்டி அன்னை முதலாகிய மூத்தோருமாம். 13. அஃகல் இழிவு. அஃகல் - சிறுமையான செயல் செய்தல். உயிர்மெய் வரிசை 14. கடன்பட்டு உழலேல். உழலேல் - அலைக்கழியாதே. 15. ஙப்போல் இரு. ஙப்போல் - ங் என்னும் எழுத்தைப்போல் தன் இனத்தை எல்லாம் தகுவி ங் என்னும் எழுத்தொன்றே சொல்லில் இடம் பெறினும், அவ்வரிசை முழுதும் அடங்கல் முறையில் இடம் பெற்றுள்ளமை அறிக. ஙப்போல் வளை என்றார் ஔவையார். 16. சண்டை விரும்பேல். சண்டை - பகையை விரும்பாதே 17. ஞமலியின் நன்குணர். ஞமலியின் - நாயைப்போல்; நன்கு - நல்லவற்றை (நன்றியை). 18. அடல்வினை செய்யேல். அடல் வினை - அழிவுதரும் செயலை. 19. அணங்கினை அஞ்சேல். அணங்கினை - துன்புறுத்துவதைக் கண்டு; அஞ்சேல் - அஞ்சாதே. 20. தனத்தைத் தேடு. தனத்தை - செல்வத்தை. 21. நடுவு தவறேல். நடுவு - நடுவு நிலைமை. 22. பரனை நினை. பரனை - பரம்பொருளாம் இறைவனை. 23. மக்களைப் பயிற்று. பயிற்று - கல்வி அறிவு ஒழுக்கங்களில் பயிலச் செய். 24. அயல்மனைக்கு ஏகேல். அயல்மனைக்கு - அயலார் வீட்டுக்குக் காரணம் இல்லாமல்; ஏகேல் - செல்லாதே. 25. இரவல் இடேல். இரவல் - மீண்டும் கொடுக்குமாறு ஒரு பொருளை; இடேல் - தாராதே. ஒன்றை வேண்டினார்க்குக் கொடுத்துவிடு; மீண்டும் கொடுக்குமாறு இரவலாகத் தாராதே என்பதாம். 26. இலக்கணம் அறி. இலக்கணம் அறி. இலக்கணம் - ஒழுங்கு; நல்லியல்பு; இலக்கண நூலுமாம். 27. வம்புக்கு ஏகேல். வம்புக்கு - வஞ்சமான செயலுக்கு; ஏகேல் - செல்லாதே. 28. அழல்விளை யாடேல். அழல் - தீயுடன். 29. அளகம் திருத்து. அளகம் - கூந்தல். திருத்து - தூய்மையாக வைத்திரு. 30. அறநெறி பிறழேல். பிறழேல் - தவறாதே. 31. அனந்தம் எண்ணேல். அனந்தம் - கணக்கற்ற எண்ணங்களை; எண்ணேல் - எண்ணாதே. ககர வரிசை 32. கல்வி பலகல். கல்வி பலவாறு கற்க. 33. காண்பது அறிவு. காண்பது - தெளிவாகக் காண்பது. 34. கிளையைத் தழுவு. கிளையை - சுற்றத்தாரை. தழுவு - சார்ந்திருந்து நன்மைசெய். 35. கீர்த்தி பெறநில். புகழ் பெறுமாறு விளங்குக. 36. குடும்பம் பேஎண். பேஎண் - பேணிக் காப்பாற்று. 37. கூடல் இன்பம். கூடல் - கூட்டுறவாக வாழ்தல். 38. கெடுவு தவறேல். கெடுவு - குறித்த தவணை. 39. கேண்மை நலம். கேண்மை - நல்லோர் நட்பு. நலம் - நன்மை தரும். 40. கைத்தொழில் பழகு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள். 41. கொழுநனைப் பேஎண். கொழுநனை - கொழு கொம்புபோல் அமைந்த கணவனை. 42. கோள்எடுத் துரையேல். கோள் - பழி 43. கௌரவப் படுத்து கௌரவம் - பெருமை. மற்றவர்களைப் பெருமையாக நடத்து என்பது. சகர வரிசை 44. சந்தி அறி. சந்தி - (வேறுபட்டவரை) உடன்படுத்தும் வகையை. 45. சாதனை செய். சாதனை - (நல்லனவற்றைப்) பயிற்சி. 46. சிக்கெனத் தேடு. சிக்கென - உறுதியாக. 47. சீமை திரிந்தறி. சீமைதிரிந்து - பல நாடுகளுக்கும் சென்று. 48. சுவநயம் விரும்பேல். சுவநயம் - சுயநலம்; தன்னலம். 49. சூத்திரம் அறி. சூத்திரம் - பொறிகளை இயக்கும் திறம். 50. செற்றம் அகற்று. செற்றம் - சினம். 51. சேதித்து உண்ணேல். சேதித்து - கொன்று; பிறரைக் கெடுத்துமாம். 52. சைகை செய்யேல். சைகை - பெரியவர்கள்முன் கைக்குறி காட்டல், கண்குறி காட்டல் முதலிய சைகைகளை. 53. சொத்தினைக் காஅ. காஅ - காப்பாற்று. 54. சோதித்து அறி. சோதித்து - ஆராய்ந்து. 55. சௌசம் செய். சௌசம் - சுத்தம்; தூய்மை. ஞகர வரிசை 56. ஞமனுக்கு அஞ்சு. ஞமன் - இயமன். 57. ஞாபகம் திருத்து. ஞாபகம் - நினைவை; திருத்து - செம்மைப் படுத்து. 58. ஞிமிறெனப் பாடு. ஞிமிறு என - தேனீயைப் போல. 59. நீட்டி உரையேல். நீட்டி - பயனற்ற சொற்களைப் பெருக்கி. 60. நுதல்விழி நோக்கு. நுதல்விழி - நெற்றிக்கண். அகக்கண் கொண்டு பார் என்பது. 61. நூற்பது நூன்முறை. நூன்முறை - நூலின் மரபுப்படி; நூற்பது - நூல் செய்க. 62. ஞெகிழச் செய்யேல். ஞெகிழ - பிறர் வருந்துமாறு. 63. ஞேயர் உரைகேள். ஞேயர் - (நேயர்) அன்பர். 64. ஞைபவர் முகமறி. ஞைபவர் - (நைபவர்) துன்புறுபவர். 65. ஞொள்கல் அடையேல். ஞொள்கல் - (நொள்கல்) அச்சம். 66. ஞோற்பது நோன்பு. ஞோற்பது - (நோற்பது) வன்மையாகக் கடைப்பிடிப்பது. நோன்பு - விரதம் (தவம்) தகர வரிசை 67. தன்னைத் தானறி தான்அறி - தானே அறிக. 68. தாரம் இரண்டொழி. தாரம் - மனையாள். இரண்டு ஒழி - இருவரைக் கொள்ளாதே. ஒருவரையே கொள்க என்பது. 69. திறன்அறிந்து செய். திறன் அறிந்து - உன் திறனையும், எடுத்துக் கொள்ளும் செயல் திறனையும் அறிந்து. 70. தீபம் ஏற்று. விளக்கு ஏற்றிடு. 71. துதிக்கை மறவேல். துதிக்கை - வழிபாடு செய்வதை. 72. தூதரைக் கொல்லேல். தூதாக வந்தவரைக் கொல்லாதே. 73. தெள்ளியனாய் இரு. தெள்ளியனாய் - தெளிவுடையவனாய். 74. தேடிக் கொள்ளேல். தேடி - (பேராசையால் தீமையைத்) தேடி. 75. தைரியமது விடேல். தைரியம் அது - ஊக்கம் என்பதை. 76. தொழில்பல கல். பலவகையான தொழில்கள் கற்க. 77. தோழரைப் பிரியேல். பழகிய நண்பரைப் பிரியாதே. 78. தெளவை மகட்கொளேல். தெளவை மகள் - சோம்பேறிப் பெண்ணை; கொளேல் - மனைவியாகக் கொள்ளாதே. நகர வரிசை 79. நம்பியிருந்து அடை. நம்பியிருந்து - நம்பிக்கையுடன் இருந்து, அடை - அதனைப் பெறு. 80. நானெனத் திரியேல். நான்என - நான் என்னும் செருக்குடன். 81. நித்தியம் விரும்பு. நித்தியம் - அழியாமை. 82. நீதிநெறி நில். ஒழுக்க நெறி நிற்க. 83. நுட்பம் அறி. நுண்ணியவை அறிக. 84. நூதனம் புகேல். நூதனம் - (தீமை தரும்) புது வழிகளில்; புகேல் - போகாதே. 85. நெடுக விடேல். நெடுக - (எடுத்த செயலை விரைந்து முடியாமல்) நீண்டு செல்ல. 86. நேமம் நிகழ்த்து. நேமம் - (நியமம்) நேர்ந்து கொண்டது; எட்டுத் தவநிலைகளில் (அட்டாங்க யோகம்) ஒன்றுமாம். 87. நைஇந்து உருகேல். நைஇந்து - நைந்து. 88. நொடிப்பது ஒழி. நொடிப்பது - புனைந்துரைப்பது. 89. நோக்கம் அறி. நோக்கம் - குறிப்பு. 90. நெளவென அலையேல். நௌ என - ஆடு போல. (90) பகர வரிசை 91. பளகறப் பகர். பளகு அற - குற்றம் நீங்க. பகர் - உரை. 92. பாதகம் செய்யேல். தீமைகளைச் செய்யாதே 93. பித்தரைச் சேரேல். பித்தர் - மதிமயக்கம் உடையவர்; வெறியர். 94. பீடை அகற்று. பீடை - துன்பம்; நோய். 95. புனலிடைப் புகேல். புனல் - (ஆழமறியா) நீர். 96. பூரணம் செய். பூரணம் - மனநிறைவான செயல்களை. 97. பெற்றோர் உரைகொள். உன்னைப் பெற்ற தாய் தந்தையினது சொல்லைக் கேட்டு அதன்படி நட. 98. பேதித்து அறி. பேதித்து - (உள்படியே அல்லாமல்) வேறுபடுத்தியும். 99. பையப் பகர். மெதுவாகச் சொல் 100. பொய்ம்மை புகலேல். பொய் சொல்லாதே. 101. போதித்து உணர்த்திநில். போதித்து - கற்பித்து; உணர்த்தி - நடையாலும் உணரச் செய்து. 102. பௌரணை மதிநிகர். பௌரணை மதி - முழுமதி. நிகர் - ஒப்பாக இரு. மகர வரிசை 103. மதம்பல கொள்ளேல். பலவித மதங்கள் ஏற்காதே. 104. மாதரை மற. மாதரை - மயக்குபவரை. 105. மிக்கன செய். மிக்கன - உயர்ந்தன. 106. மீட்பது மகிழ்ச்சி. மீட்பது - இழந்த ஒன்றை மீண்டும் பெறுவது. 107. முகநலம் பேசேல். முகநலம் - ஒருவர் முகத்துக்கு எதிரே நின்று அவர் மகிழ்வதற்காக. 108. மூன்றை விட்டிரு. மூன்றை - காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றை. 109. மெய்ம்மை நிலைகொள். உண்மை நிலை ஏற்றுக் கொள்க. 110. மேகத்தை நிகர். மேகம் - மழையை. நிகர் - ஒப்பாக இரு. மழைபோன்ற கொடையாளனாக இரு என்பது. 111. மையல் அகற்று. மையல் - மோகம்; தீரா ஆசை. 112. மொய்குழல் உரைகொளேல் மொய்குழல் - மினுக்கித் திரிபவர். 113. மோட்சம் புகநில். சொர்க்கம் சேர தகுதியாய் இரு. 114. மௌனம் உத்தமம். மௌனம் - அடக்கம், பேசாமை; உத்தமம் - உயர்வு. யகர வரிசை 115. யந்திரம் இயக்கு. யந்திரம் இயக்கிடத் தெரிந்து கொள். 116. யாதும் உய்த்துணர். உய்த்து உணர் - ஆராய்ந்து அறி. 117. இதமாய்ப் பேசு. இதமாய் - அன்பாய்; இனிமையாய். 118. ஈட்டல் இரண்டுள. ஈட்டல் - தேடுதல்; இரண்டு - பொருளும் அருளும்; இவ்வுலக வாழ்வுக்குப் பொருளும் மறுவுலக வாழ்வுக்கு அருளும். 119. யுத்த முறைகல். போர் முறைகளைக் கற்க. 120. யூகம் அறிந்துநில். யூகம் - சூழ்ச்சி. 121. எட்டி அடிவை. எட்டி - அகலமாய். 122. ஏவாது உணர். ஏவாது - கட்டளை இடாமலே (செய்யத்தக்க செயலை.) 123. ஐயம் புகேல். ஐயம் - பிச்சைக்கு. 124. ஒழுங்கு படவை. ஒழுங்குபட - வைக்கும் பொருளை ஒழுங்காய் அமைய. 125. யோகமுறை பயில். யோக முறை - தவநெறி. 126. யௌவனம் மகிழேல். யௌவனம் - இளமையில் உள்ள அழகுக்காக. வகர வரிசை 127. வழித்துணை கொள். செல்லும் பாதையில் துணை ஏற்க. 128. வாக்களித்து அழியேல். வாக்களித்து - வாக்குத் தந்து. அழியேல் - அதனை மாற்றாதே. 129. விதிவிலக்கு அறிந்துநில். விதிவிலக்கு - விதியை அறிவதுடன் விதிக்கு விலக்கானதையும். 130. வீணரைச் சேரேல். தேவையில்லாத வீணானவர்களுடன் கூட்டுச் சேராதே! 131. உற்றுப் பார்த்துணர். கவனமாகப் பார்த்து உணர்ந்து கொள். 132. ஊணுறக்க மிகேல். ஊண் உறக்கம் - உணவும் உறக்கமும்; மிகேல் - மிகக் கொள்ளாதே. 133. வெல்வது அரிது. வெல்வது - நல்ல பயிற்சி இருந்தால் அல்லாமல் ஒருவரை வெற்றி கொள்வது. 134. வேதனை செய்யேல். வேதனை - துன்பம். 135. வைரம் வையேல். வைரம் - மனக்கரு. 136. ஒழுக்கம் அகலேல். ஒழுக்க நெறிமுறையை விட்டு தவறாதே. 137. ஓலம் கேட்டணை. ஓலம் - முறையீடு; அணை - சேர். 138. வௌவுதல் விரும்பேல். வௌவுதல் - அயலார் பொருளைக் கவர்வதை. மெய்வரிசை 139. *அக்கறைப் படு. அக்கறைப்படு - ஒன்றைச் செய்யும் போது கருத்தோடு செய். 140. அங்கம் அலம்பு. அலம்பு - குளி. 141. அச்சம் அகற்று. பயம் நீக்கிடு. 142. அஞ்சி அடங்கு. அஞ்சுவதற்கு அஞ்சி அடங்கிடு. 143. அட்டலை அறி. அட்டல் - சமைத்தல். 144. அண்ணலை அணுகு. அண்ணல் - பெரியோரை. 145. அத்தம் உடற்கு அணி. அத்தம் - பொன்; செல்வமுமாம். 146. அந்தகர்க்கு உதவு. அந்தகர் - ஒளி இழந்தவர். 147. அப்பன் அருள்பெறு. அப்பன் - இறைவன். 148. அம்மை குத்துவி. அம்மை - அம்மைப்பால்; குத்துவி - குத்தச் செய். 149. ஆய்ந்தோர் இடைப்புகு. ஆய்ந்தோர் - கற்றறிந்தோர். 150. ஆர்ந்தமர்ந்து இரு. ஆர்ந்து - அடங்கி; அமர்ந்து- உட்கார்ந்து. 151. அல்லல் அகற்று. துன்பத்தை நீக்கிடு. 152. அவ்வித்து உரையேல். அவ்வித்து - பொறாமை கொண்டு. 153. ஆழ்ந்தது உரை. நுண்ணிய ஆழமான கருத்துக்கலைச் சொல். 154. அள்ளிக் கொள்ளேல். ஆசையால் அனைத்தும் எடுத்துக் கொள்ளாதே. 155. அற்பம் அகற்று. அற்பம் - சிறுதன்மை; சிறுசெயல். 156. அன்னம் இட்டுண். உணவு அடுத்தவர்க்கு வழங்கிபின் நீ உண்க! நூற் சுருக்கம் அகமது மகிழ்ந்து, அன்னமிட்டு உண். பழனிச் செட்டியார் இயற்றிய பழனி நீதி வாக்கியம் அருஞ் சொற்பொருளுடன் முற்றிற்று. * அக்கரை (முதற்பதிப்பு) உ. பழனி நீதிமொழி காப்பு குஞ்சர ஆனனன் சூரைகழல் பரசுதும் நெஞ்சம் நினைந்து நீதி மொழிக்கே. குஞ்சுர ஆனனன் - யானைமுகன் (பிள்ளையார்); குரை கழல் - ஒலிக்கும் திருவடிகளை; பரசுதும் - வணங்குவேம். அகர வரிசை - நூற்பா அறம்புரி வாழ்க்கை திறம்புதல் அரிது. திறம்புதல் - தவறுதல்; மாறுபடுதல். ஆர்ந்தமர்ந் திருத்தல் தேர்ந்தோர் ஒழுக்கம். ஆர்ந்து அமர்ந்து - உள்ளத்தை அடக்கி அமைந்து. தேர்ந்தோர் - தெளிவுடையோர். இல்லதும் அல்லதும் சொல்லுவது அல்லல். இல்லது - நடவாதது. அல்லது - நடந்தது அல்லாத ஒன்று, இல்லதைச் சொல்வதும், அல்லதைச் சொல்வதும் அல்லல் என்க. ஈனரைச் சேர்ந்து மானம் அழியேல். ஈனர் - இழிந்தோர். மானம் - பெருமை. உற்றது உரைக்கின் ஒற்றுமை வளரும். உற்றது - உண்மையாக நிகழ்ந்ததை. ஊதியம் அன்றி யாதையும் தேடேல். எட்டுணை ஆயினும் இட்டுண் டிரு. எட்டுணை = (எள் + துணை) எள் அளவு ஏக்கமும் தூக்கமும் ஆக்கம் போக்கும். ஆக்கம் - செல்வம், நன்மை. ஐந்தும் ஒடுங்கில் அறிவகத் தகலும். ஐந்தும் ஒடுங்கில் - ஐம்பொறிகளும் ஒடுங்கினால். அகத்து அகலும் - உள்ளே விரியும்; உள்ளொளியுண்டாம். ஒற்றுமைப் படுதல் உற்றிடத் துதவி. உற்ற + இடம் - உற்றிடம் - உதவிவேண்டும் இடம். ஓர்ந்துணர்ந் தாரைச் சார்ந்துணர்ந் திரு. ஓர்ந்து உணர்ந்தார் - ஆராய்ந்து அறிந்தார். சார்ந்து - சேர்ந்து. ஔவையைப் போற்றித் தெய்வமெனக் கொள். ஔவை - தாய். அஃறிணை இயக்கும் பஃறியென் றிகழேல். அஃறிணை - உயர்மகன் அல்லாத ஒருவன். பஃறி - ஓடம். (13) உயிர்மெய் வரிசை கண்களுக் கழகு கண்ணோட்டம் உடைமை. கண்ணோட்டம் - இரக்கம். ஙப்போல் அன்றி நானெனச் செப்பேல். ஙப்போல் அன்றி - ங என்னும் எழுத்துத் தன்பணிவால் இனத் தலைமை பெறுவதைப்போல் அல்லாமல். செப்பேல் - சொல்லாதே. சமையம் அறிந்ததில் அமைதல் அறிவு. சமையம் - காலம்; அமைதல் - அமைந்திருத்தல். ஞமலிக்கு இல்லை புவன ஒழுக்கம். ஞமலி - நாய்; புவனம் - உலகம். அடுத்த பேரைக் கெடுத்தல் ஒழி. அடுத்த - நெருங்கிய. இணக்கம் அறிந்து வணக்கம் கொள். இணக்கம் - இசைவு வணக்கம் - பணிவு. தன்னுயிர் போல மன்னுயிர் ஓம்பு. மன்னுயிர் - பிறவுயிர்; ஓம்பு - காப்பாற்று. நங்கு கொழித்தல் வம்புக்கு இடனாம். நங்கு கொழித்தல் - நகைத்து மகிழ்தல். வம்புக்கு - சண்டைக்கு. பவக்கடல் கடக்கத் தவக்கலம் ஏறு. பவம் (பாவம்) கடல் - பாவமாகிய கடல். தவக்கலம் தவமாகிய கப்பல். மனமுண் டாகில் இனமுண் டாகும். மனம் உண்டாகில் - நல்ல மனம் உண்டானால். இனம் - சுற்றம். இயற்கை யன்றிச் செயற்கை நிலையா. இயற்கை - இயல்பான தன்மை. செயற்கை - நிலைமைக்குத் தக்கவாறு ஏற்றுக்கொண்ட தன்மை. இரவோர்க்கு ஈயக் கரவாது இரு. இரவோர்க்கு - இரப்பவர்க்கு. கரவாது - மறையாது. இலக்கம் இடுதல் கலக்கம் இல்லை. இலக்கம் இடுதல் - கணக்குப் பார்த்துச் செலவிடுதல். வட்டிக் கடுமை செட்டியை நசிக்கும். கடுமை - மிகுதி; செட்டியை - வட்டித் தொழிலாளரை. நசிக்கும் - அழிக்கும். அழல்வினை செய்து கழலினை ஒருவேல். அழல்வினை - தீவினை. கழல் - இறைவன் அடி. ஒருவேல் - நீங்காதே. அளகையன் ஆயினும் பளகறத் தேடு. அளகையன் - குபேரன் (பெருஞ்செல்வன்). பளகு அற - குற்றமற. தேடு - செல்வம் தேடு. அறநெறி பிறழ்ந்து புறநரகு ஏகேல். பிறழ்ந்து - தவறி. புற நரகு - இன்ப உலகுக்குப் புறம்பான நரகத்திற்கு. ஏகேல் - செல்லாதே. அனந்தம் எண்ணி மனம்புண் செய்யேல். அனந்தம் - பலவற்றை. புண் செய்யேல் - துன்புறுத்திக் கொள்ளாதே. ககர வரிசை கற்பதின் மிக்கது சொல்தளம் பாமை. தளம்பாமை - மிகாமை. சொல்லடக்கம் கல்வியிற் சிறந்தது என்பது. காரியம் இன்றி வீரியம் பேசேல். காரியம் - பயன். வீரியம் - வலிமை. கிளையைத் தறிக்கின் வினைபயன் இல்லை. தறிக்கின் - துண்டித்தால், ஒதுக்கினால். கீழ்ப்படிந் திருத்தல் வாழ்க்கைக்(கு) உறுநலம். உறு நலம் - மிகுந்த நன்மை. குலத்தின் மிக்கது நலத்தினன் ஆதல். நலத்தினன் - நல்ல தன்மையினன். கூடலின் நன்று கோடல் இலாமை. கூடலின் - நட்புச் செய்தலின். கோடல் இலாமை - மனங்குன்றுதல் இல்லாமை. கெட்டும் பட்டும் தொட்டதை விடேல். கெட்டும் - வறுமையால் கெட்டாலும்; பட்டும் - துன்பத்தால் பட்டாலும்; தொட்டதை - எடுத்த நல்ல செயலை. கேண்மை யுறப்பெறார்க்கு ஆண்மை நிலைபெறா. கேண்மை - நட்பு. கையைக் கொண்டு செய்யைத் திருத்து. கையைக் கொண்டு - தன் கைப்பொருள் கொண்டு; தன் முயற்சி கொண்டு; செய் - நிலம். கொண்டவன் அன்றிப் பெண்டிர்க் கில்லை. கொண்டவன் - கணவன். கோதை முடிப்பது மாதர்க் கழகு. கோதை - கூந்தல். கௌரவர் போலத் தவறிழைத்(து) உழலேல். கௌரவர் - துரியோதனன் முதலானவர். உழலேல் - துன்பப்படாதே. (43) சகர வரிசை சற்குரு வடிவை நித்தலும் நினை. சற்குரு - நல்லாசிரியர்; நித்தலும் - நாள்தோறும். சாட்சியம் என்பது காட்சி மறாமை. காட்சி - கண்டது. சினத்தை வளர்த்துத் தனத்தை அனுக்கேல். அனுக்கேல் - ஓடச் செய்யாதே. சீலத்(து) ஒழுகின் ஞாலம் வழுத்தும். சீலம் - நற்பண்பு; ஞாலம் - உலகோர்; வழுத்தும் - வாழ்த்துவர். சுகத்தைத் தேடில் இகத்தை உணர். இகத்தை - இவ்வுலகியல்பை. சூட்சம் அறிந்து மோட்சம் புகு. சூட்சம் - நல்வழி; நுட்பம். செறுநர்ச் சேர்க்கை உறுநயச் சிதைவு. செறுநர்ச் சேர்க்கை - பகைவரின் கூட்டுறவு; உறுநயச் சிதைவு - மிகுந்த நன்மைக்கெல்லாம் அழிவு. சேமித் திருக்கின் பூமி சிரிக்கும். சேமித்து இருக்கின் - பொருளைப் பிறர்க்குப் பயன்படுத்தாது, தனக்கெனச் சேமித்து வைத்தால். சையம் திரியின் வையமென் செய்யும்? சையம் - செல்வம்; திரியின் - (தன் தீச்செயலால்) அழிந்து போனால்; வையம் - உலகம். சொல்குறை யிடத்துப் பல்குறை அடையும். சொல் குறை யிடத்து - வாக்குத் தவறுபவன் இடத்து; பல் குறை - பலகுற்றங்கள். சோதனை செய்து கோதினை நீக்கு. கோதினை - குற்றத்தை. சௌரியம் என்பது எவரையும் செயித்தல். சௌரியம் - வீரம். ஞகர வரிசை ஞயம்பட உரைத்தல் பயன்மிகப் படைக்கும். ஞயம்பட - எவரும் விரும்புமாறு. ஞானமும் கல்வியும் ஈனருக்கு உரையேல். ஞானமும் - மெய்யறிவையும்; கல்வியும் - நூலறிவையும்; ஈனருக்கு - இழிந்த தன்மையாளருக்கு. ஞிமிர்ந்து நடந்து கவிழ்ந்து விழேஎல். ஞிமிர்ந்து நடந்து (நிமிர்ந்து நடந்து) - செருக்காக நடந்து; கவிழ்ந்து விழேஎல் - தாழ்வுக்கு ஆளாகாதே. நீத்த பொருளைக் கோத்தல் இழிவு. நீத்த பொருளை - வேண்டா என்று விலக்கிய பொருளை; கோத்தல் - மீண்டும் சேர்த்துக் கொள்ளுதல். நுதல்விழி நோக்கின் அழல்வினை அகலும். நுதல்விழி - நெற்றிக் கண், அகக் கண்; அழல் வினை - தீவினை; அகலும் - ஒழியும். ஞூற்றின் மிக்கது ஆர்த்த ஒருசொல். நூற்றின் மிக்கது - நூறு பொன்னினும் சிறந்தது; ஆர்த்த - அன்பான. ஞெலுவன் வரினும் அலுவலை விடேல். ஞேலுவன் - தோழன்; அலுவல் - வேலை. ஞேயரைக் கூடி ஆயம் அறி. ஞேயர் - அன்பரை; ஆயம் - வழக்கம். ஞையும் வினையைக் கையகன் றிரு. ஞையும் வினை (நையும் வினை) - கெடுக்கும் தீவினையை; கையகன்று - விட்டு. ஞொள்கல் அடைந்து என்கப் படேல். ஞொள்கல் - அச்சம்; எள்க - இகழ. நோக்கந் தனையறிந் தாக்கம் விளை. நோக்கம் - (பிறர்) எண்ணம்; ஆக்கம் - நன்மை; விளை - உண்டாக்கு. தகர வரிசை தரித்திரம் அடைதலின் மரித்திடல் மாண்பு. மரித்திடல் - இறத்தல். தானம் ஏற்று மானம் குறையேல். தானம் - பிச்சை; மானம் - பெருமை. திரணமும் வாரா மரணம் வருவாய். திரணமும் வாரா - துரும்பளவு பயனும் வாராத (வாழ்வினும்). தீயினும் கொடிது வாயின் சுடுமொழி. துன்பமும் இன்பமும் மன்பதைக் கியல்பு. மன்பதை - மக்கள். தூய்மை வேண்டில் வாய்மை வழுவேல். வழுவேல் - தவறாதே. தெள்ளியர் என்போர் உள்ளிய நலத்தோர். தெள்ளியர் - தெளிந்த அறிவினர்; உள்ளிய - பலரும் நினைக்கத்தக்க; நலத்தோர் - நல்லியல்பு உடையோர். தேடலின் நன்றே ஓடலைக் காத்தல். தேடலின் - பொருள் தேடுதலினும்; ஓடலை - பொருள் போவதை. தையலுக்(கு) அழகு வையகம் வழுத்தல். தையல் - பெண்; வையகம் - உலகத்தார்; வழுத்தல் - வாழ்த்துமாறு வாழ்தல். தொழில்முறை கற்றல் அழல்பசிக்(கு) அமுதம். அழல் பசி - சுடு பசி (கடுமையான பசி). தோற்றலின் நன்றே ஆற்றல் உடைமை. தோற்றலின் - தோல்விகாணலினும். தெளவை மக்களைக் கையகன்(று) இரு. தெளவை மக்களை - சோம்பேறிகளை; கையகன்று - விலகி. நகர வரிசை நம்பக் கெடுத்தல் கும்பிக்(கு) இடனாம். கும்பிக்கு - நரகுக்கு. நானம் செய்து போனகம் செய். நானம் செய்து - குளித்து; போனகம் செய் - உண். நிணம்தின் வயிறு பிணஞ்சுடு காடு. நிணம் - புலால். நுழையா தில்லை பிழையா துழைக்கின். EiHahJ ïšiy - thuhj e‹ik x‹W« ïšiy; ãiHahJ - jtW ïšyhkš. நூல்வழி ஒழுகல் சாலவும் நன்று. ஒழுகல் - நடத்தல்; சாலவும் - மிகவும். நெல்லுக்(கு) அன்றிப் புல்லுக்(கு) இறையேல். நேரம் போக்கி ஈரம் போக்கேல். நேரம் போக்கி - உழுதற்குப் பருவமான நேரத்தை வீணே போக்கி; ஈரம் - நிலத்திலுள்ள ஈரப்பதத்தை. நைவது செய்யும் வையக விகற்பம். நைவது செய்யும் - துன்பம் செய்யும்; வையக விகற்பம் - உலக நடைமுறை வேறுபாடுகள். நொடிப்பொழு தேனும் அடித்துணை மறவேல். அடித்துணை - அடியொற்றிவரும் துணை; இறைவன் அடியாகிய துணையை. நோக்கு நோக்கிப் பார்க்கின் முத்தி. நோக்கு - உள்நோக்கு; முத்தி - இன்பம், வீடு பேறு. நெளவோ டன்றிப் பௌவம் செல்லேல். நௌ - நாவாய், கப்பல்; பௌவம் - கடல். பகர வரிசை பழித்தலை ஒழித்தல் மழித்தலின் நன்று. மழித்தல் - தலையை மழித்துக்கொள்ளுதல். பாவலர்க்(கு) அழகு நாவலம் பொருந்தல். நாவலம் - நாவன்மை. பிணையும் கடனும் கணையும் புண்ணும். பிணை - ஒருவர் வாக்குறுதிக்குப் பொறுப்பாளியாக இருத்தல். கடன் - கடன்படுதல். கணை - அம்பு. பிணை கணை போன்றது. கடன் புண் போன்றது; இவ்விரண்டும் தவிர்க என்பது. பீழை பெருகினும் ஏழைமை பேசேல். பீழை - துன்பம்; ஏழைமை - வறுமை. புள்ளொளி கேட்டு வள்ளலை வழுத்து. புள் - பறவை; புள் ஒலி கேட்கும் பொழுது வைகறை; வள்ளல் - இறைவன். பூசித்தல் அன்றி ஏசித் தூற்றேல். பூசித்தல் - வழிபடுதல். பெருமை என்பது வறுமையிற் செம்மை. ஏழ்மையான நிலையிலும் பெருந்தன்மையாக நடப்பதே பெருமை. பேயினும் கொடியர் ஓயாப் பெண்டிர். ஓயா - ஓயாமல் வசை கூறும். பையரும் விருத்தரும் பசிக்கப் புசியேல். பையர் - சிறுவர்; விருத்தர் - முதியர். பொய்முதல் நான்கும் ஒய்யென விடு. பொய் முதல் நான்கு - பொய், கொலை, களவு, காமம், ஒய் என - விரைந்து. போர்முகத்(து) அஞ்சல் வீரர்க்(கு) இழுக்கு. யுத்த களத்தில் பயப்படுவது வீரருக்கு இகழ்ச்சி ஆகும். பௌவச் செல்வமும் எவ்வம் படும். பௌவச் செல்வமும் எவ்வம் படும். பௌவச் செல்வமும் - கடல் போன்ற பெரிய செல்வமும். எவ்வம்படும் - (பிறர்க்குப் பயன் படாமையால்) இழிவுபடும். (102) மகர வரிசை மதிவசம் இன்றி விதிவசம் இல்லை. மதிவசம் இன்றி - (வாழ்வு) மதிவழியால் இல்லாமல். விதிவசம் - விதிவழி. மாறுதல் இன்றித் தேறுதல் இல்லை. மாறுதல் - மனம் நல் வழியில் மாறுதல்; தேறுதல் - துன்பம் தீர்தல். மிக்கன செய்யின் தக்கன விளையும். மிக்கன - செயற்கு அரியன; தக்கன - தகுதியான நன்மைகள். மீறிச் செய்வது காரியம் அல்ல. மீறி - தன் தகுதிக்கு மீறி; காரியம் - தகுதியான நன்மைகள். முன்கை நீளிற் பின்கை நீளும். நாம் பிறருக்கு உதவினால்தான் பிறரும் நமக்கு உதவுவர் என்பது. மூத்தாள் வாழ்க்கை கூற்றெனப் படுமே. மூத்தாள் - மூதேவி; சோம்பல். கூற்று - இயமன். மெல்லெனச் செல்வது கல்லினும் உருவும். மென்மையான சொல்லாலும் செயலாலும் வன்மையான சொல்லையும் செயலையும் வென்று விடலாம் என்பது. மேதைக்கு அழகு கோது படாமை. மேதை - அறிவாளி; கோது - (சொற்) குற்றம். மைந்தரைப் பெறுதலின் முந்திய பொருளிலை. முந்திய - முதன்மையான. மொழியும் மொழிகளை வழுவற மொழி. வழு அற - குற்றம் அகல. மோசம் செய்து நாசம் அடையேல். மற்றவர்க்குத் தீமை செய்து நீ அழிவு பெறாதே. மௌனிக்(கு) இல்லை புவன விகற்பம். மௌனிக்கு - பேசா நோன்புடைய தவத்தோனுக்கு; புவன விகற்பம் - உலகியல் வேறுபாடுகள். யகர வரிசை யமனுக்(கு) அஞ்சிச் சமனாய் இரு. சமனாய் - நடுவுநிலையாளனாய். யாக்கையை நம்பிப் போக்கினை மறவேல். யாக்கையை நம்பி - உடல் நலத்தைக் கருதி; போக்கினை - செய்யும் கடமைகளை. இகத்தை நாடி அகத்துயர் அடையேல். இகத்தை நாடி - இவ்வுலகவாழ்வை விரும்பி. ஈட்டலுக்(கு) அழகு வாட்டம் இலாமை. ஈட்டல் - பொருள் தேடுதல்; வாட்டம் - பொருள் குறைதல். யுத்தியும் சத்தியும் *ஒத்திடில் சித்தி. யுத்தியும் சத்தியும் - அறிவும் ஆற்றலும்; ஒத்திடில் - ஒன்றுபட்டால்; சித்தி - வெற்றி. யூகம் அறிந்து வேகமாய் வெல்லு. யூகம் - நுட்பம், தந்திரம். எஃகு விலங்கணிந்(து) இருமையும் அஃகேல். எஃகு விலங்கு - இரும்பால் ஆகிய விலங்கு; இருமை - இம்மை, மறுமை; அஃகேல் - இழந்து போகாதே. குற்றம் செய்து விலங்கிடப் படுதலால் இம்மை மறுமை களை இழந்து போகாதே என்பது. ஏட்டின் கல்வி ஈட்டத்(து) இசையா. ஏட்டின் கல்ணவி - ஏட்டுப் படிப்பு; ஈட்டத்து - கூட்டத்தில்; இசையா - பயன்படாது. ஐயம் இடுதல் ஆக்கம் வளர்க்கும். ஐயம் - பிச்சை; ஆக்கம் - செல்வம். ஒழுக்கம் உடைமை விழுப்பம் உடைத்து. விழுப்பம் - மேன்மை. யோக்கியம் உடையோன் பாக்கியன் ஆவான். பாக்கியன் - நற்பேறுடையவன். யௌவனத்(து) ஓதல் கவனத்(து) அமையும். யௌவனம் - (இளமை; கவனம் - நினைவில் நிலைத்து. வகர வரிசை வருமுன் உணர்ந்து கருமங் கழி. கருமம் கழி - கடமையைச் செய். வாதம் செய்து சேதம் செய்யேல். வாதம் - தருக்கம்; சேதம்- கேடு. விண்ணாணக் *கள்வரை அண்ணாந்து பாரேல். விண்ணானக் கள்வர் - நாகரிகக் கள்வர்; அண்ணாந்து - ஏறிட்டு. வீண்வழக் காடி மாண்நிதி போக்கேல். தேவையற்ற வழக்கு உரைத்து மாண்பான பணத்தை வீணாக்காதே. உள்ளம் உருகின் கல்லும் கரையும். மனமது உருகிட கல்லானதும் கரைந்து விடும். ஊழ்வினை அகலும் தான்முயன்(று) உழைக்கின். நீ மயற்சித்து உழைத்தால் விதியென்னும் ஊழ்வினை தீரும். வெஃகுவார்க்(கு) இல்லை அஃகாச் செல்வம். வெஃகுவார்க்கு - பிறர் பொருள் மேல் ஆசைப்படுவார்க்கு; அஃகா - குறையா. வேந்தர்க்(கு) அணிகலம் சாந்தமும் கொடையும். மன்னனுக்கு அழகு என்பது அமைதியும், நன்கொடையும் ஆகும். வைத்திழந் தாரை உய்த்துணர்ந் திடு. வைத்து இழந்தாரை - (பொருளைத் தேடிப் பிறர்க்கு உதவாமல்) வைத்து இழந்தவரை. உய்த்து உணர்ந்து - ஆராய்ந்து அறிந்து; இடு - பிறர்க்கு உதவு. ஒன்றின் மிக்கது ஒன்றும் இல்லை. ஒன்றின் - ஒற்றுமையின். ஓதி உணர்வீர் உணர்வுள் ளோரே. வௌவும் பொருளோ(டு) அஃகும் முன் பொருளும். வௌவும் பொருள் - திருடிக் கொண்ட பொருள்; அஃகும் - கெடும்; முன் பொருளும் - முன்னே வைத்திருந்த பொருளும். உயிரடுத்த மெய் வரிசை *அக்கறைப் படப் பக்குவம் அறி. அக்கறைப் பட - அக்கறை உண்டாக. ஆங்காங்(கு) அலையினும் ஏங்கா(து) இரு. எங்கு எங்கு நீ அலைந்தாலும் நீ ஏங்காமல் இரு. இச்சை சொல்லிப் பிச்சை புகேல். உனது ஆசையைச் சொல்லி பிச்சை கேட்காதே. ஈஞ்சைத் தொழிலில் வாஞ்சை வையேல். ஈஞ்சைத் தொழிலில் - இழிதொழிலில்; வாஞ்சை - விருப்பு. உட்பகை அறிந்து வெட்டென விடு. வெட்டென - உடனே. ஊண்அள வின்றிச் சாணை நிரப்பேல். சாணை - நான்கு மாத வயதுக்கு உட்பட்ட குழந்தையை; வயிற்றை என்பதுமாம். எத்துக் *கள்வரை வைத்தல் அழிவு. ஏமாற்றும் திருடனை பொறுப்பாய் வைத்தால் நமக்குத் தீமை. ஏந்திய கையை மாய்ந்திடச் செய்யேல். மாய்ந்திட - அழிந்துபட. ஐப்பசி விதைநெல் அவலுக்கும் ஆகா. ஐப்பசித் திங்களில் விளைகின்ற நெல் அவல் செய்யக் கூட ஆகாது. ஒம்போம் எனும் சங்கொலி உணர். ஒம்போம் - ஊர் அழப்போகும்; சங்கொலி - இறந்தாரை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லுங் கால் ஒலிக்கும் சங்கு; நிலையாமையை நினை என்பது கருத்து. ஓய்ந்தோய்ந் தாய்ந்து தோய்ந்திடச் செய். ஓய்ந்து ஓய்ந்து ஆய்ந்து - ஆர அமர ஆராய்ந்து; தோய்ந்திட - முழுமனத்துடன். ஔர்வர் போலத் தவம்புரிந் தொழுகு. ஔர்வர் போல - நீரையே பருகித் தவம் செய்வார் போல. அஃறொழில் செய்து பகடூண் இழவேல். அஃறொழில் (அல்தொழில்) - கீழான செயல்; பகடு ஊண் - வேளாண்மையால் வந்த உணவை. ஒவ்வா(து) உரைக்கின் துவ்வாது ஆகும். ஒவ்வாது - அறத்திற்குப் பொருந்தாது; துவ்வாது - உண்பதற்கும் வழியற்ற வறுமை. ஏழ்மெய்யும் உடைக்கும் ஆழ்மெய் யுணர்ச்சி. ஏழ்மெய் - ஏழுகடல்; (புல் பூடு முதலாக வரும் ஏழுபிறப்பின் உடல்கள்) ஆழ் - ஆழ்ந்த; நிரம்பிய. எள்ளினும் எள்ளார் கள்ளம் உடையார். எள்ளினும் எள்ளார் - எள்ளைக் காட்டிலும் சிறிய என்போன்ற சிறியவர்; கள்ளம் - வஞ்சம். ஆற்றடி சுடினும் ஊற்றுல கூட்டும். ஊற்று உலகு ஊட்டும் - ஊற்று தன் நீரால் உலகோரை உண்ணச் செய்யும். அன்னமிட் டாரைக் கன்னமிட் டழியேல். கன்னம் - களவு. (156) நூற்சுருக்க நூற்பா அறம்புரி வாழ்க்கை திறம்புதல் அரிதே. அன்னமிட் டாரைக் கன்னமிட் …lÊnaš. முடிநிலை நூற்பா சொற்றமிழ் வல்லோன் சுன்னை யாழ்ப் பாணக் கொற்றவ னாமுரு கேசபண் டிதனுடன் ஆய்ந்து சொல்நீதி வாக்கியம், நீதி மொழியென இரண்டும் முற்றின; முற்றும். சுன்னை - சுன்னாகம்; முருகேச பண்டிதர் என்பவருடன் ஆராய்ந்து பழனிச் செட்டியார் இயற்றியவை பழனி நீதிவாக்கியம், பழனி நீதிமொழி என்னும் இரண்டு நூலும் என்க. * ஒற்றிடில் * கள்ளரை அண்ணார்ந்து * அக்கரைப். +கள்ளரை. இழக்கேல். + டழிக்கேல். ங. பழனி நீதிநூல் காப்பு மதிமுக மைந்தர் மக்கட் கெல்லாம் துதிமுகன் தொழுதியான் தூக்கினன் குறளே. மதிமுக மைந்தர் - கறையிலா நிறைமதி போன்ற முகத்தையுடைய பாலர்; மக்கள் - பெண் மக்கள்; துதிமுகன் - துதிக்கையுடைய முகத்தவனாகிய மூத்த பிள்ளையார்; தூக்கினன் குறளே - குறள்யாப்பில் நீதிநூல் சொல்லத் தொடங்கினேன். நூல் - அகரவரிசை அந்தணர்ஓத் தோதி அதிகாலை உச்சியந்தி வந்தனம் செய்தல் வளம். ஒத்து - வேதம்; வளம் - வளம் சேர்க்கும். (1) ஆதி மனுவின் அரசுரிமை கைக்கொண்டு நீதி வழுவாமை நெறி. நெறி - அரசரின் செங்கோல் முறை (2) இம்மை விரும்பி இறுக்காய் மறுமைக்கு வித்தாம் நிதியை விதை. இறுக்காய் - கடைப் பிடியாய். (3) ஈட்டுக்(கு) இடராய் இடுக்கண் விளைப்பவனே காட்டுக்குள் வாழும் களிறு. ஈட்டுக்கு - பெருமைக்கு. (4) உள்ளத்துள் கள்ளம் ஒளித்து மொழிபவனே பள்ளத்துள் தான்மறையும் பாம்பு. கள்ளம் ஒளித்து - வஞ்சத்தை மறைத்து. (5) ஊரூர்கள் தோறும் உறைந்தே அலைந்தாலும் வேரூன்றி ஓரூர் விழை. விழை - விரும்பு. (6) எடுத்துப் புறங்கூறும் ஈனரின் நன்காம் கடுத்தகம் ஏறும் கடு. ஈனரின் - இழிந்தவரின்; நன்காம் - நன்மையான தாம்; கடுத்து அகம் ஏறும் கடு - கடுமையாய் உள்ளே ஏறும் நஞ்சு. (7) ஏவியும் செய்யாத ஏழை மதிமக்கள் சாவி பதரோடு சமன். ஏழை மதி - குறைந்த அறிவு; சாவிபதர் - சாவியாகிய பதர்; பதர் - நெல்மணி இல்லாத பொக்கு. (8) ஐம்பொறியின் ஆட்டம் அடங்க நுதல்வழியின் வெம்பொறியின் மேவினரே வேந்து. ஆட்டம் - அலைக்கழிவு; வெம்பொறியின் - விரும்பத்தக்க சூழ்ச்சியத்தின்; மேவினரே - அடைந்தவரே; வேந்து - உயர்ந்தோர். (9) ஒருகாலில் ஒவ்வொன்றாய் ஊதியங்கள் நட்டம் வருமுன்றன் செய்கை வழி. ஒருகாலில் - ஒருபோதில். உன்றன் செய்கை வழி ஊதியங்கள் நட்டம் வரும் என்பது. (10) ஓரமென்(று) உன்னா(து) உளமறியச் செப்புமவன் வேரறுந்து வீழ்வான் விரைந்து. ஓரம் என்று உன்னாது உளம் அறியச் செப்பும் அவன் - ஒரு பக்கம் சார்ந்து கூறுதல் என்பதை நினையாது, மனமாரச் சொல்லும் நீதிபதி; வேர் அறுந்து வீழ்வான் - சுற்றம் துணை முதலிய சார்புகள் எல்லாமும் அற்று வேரற்ற மரம் போல் அழிவான். (11) ஔவியம் பேசும் அகங்கார சிந்தையுளான் செவ்வியன் ஆகான் செழித்து. ஔவியம் - பொறாமை; செவ்வியன் - நல்லோன்; நடுவுநிலையாளன். (12) அஃகும் அருநிதியம் ஆற்றாத ஆசையதால் வெஃகும் மனத்தார்க்கு மிக்கு. அஃகும் - குறையும்; ஆற்றாத - அளவில்லாத; வெஃகும் - பிறர் பொருளை விரும்பும். (13) உயிர்மெய் வரிசை கற்றலிற் கேட்டல் கடைகாணாச் சிந்தையுள் உற்றதாய் ஊறும் உணர்வி. கடைகாணாச் சிந்தை - முற்றும்முடியச் கண்ட மனம்; உற்றதாய் - பொருந்தியதாய். (14) ஙப்போல் ஓர்உயிரை நாயகமாய் முன்னிறுத்தி வைப்பிலையேல் என்றும் வழு. ஙப்போல - ஙகரம் என்னும் எழுத்துப்போல; நாயகமாய் - தலைமையாய்; வைப்பு இலையேல் - வைத்தல் இல்லையானால். (15) சத்தியமே தாயென்னச் சாந்தமே தந்தையென முத்திநெறி கொண்ட முறை. (16) ஞமன்என்பான் என்றுமுனை நண்ணா திருக்கச் சமன்என்னும் நீள்கதவைச் சாத்து. ஙமன் - இயமன்; நண்ணாது இருக்க - நெருங்காது இருக்க; சமன் - நடுவுநிலைமை. (17) இடமகல ஊர்தலினும் ஏர்ஆழ ஊர்தல் மடல்விரிய நன்னெல்விளை வாம். ஏர் இடம் அகல் ஊர்தல் (உழுதல்) ஏர் ஆழ ஊர்தல் எனக் கொள்க; மடல்விரிய - பக்கம் விரிய, பண்ணை பெருக. (18) அணங்கினை ஒத்த அழகுடை யாளாய் அணங்குதல் இல்லாள் அணங்கு. அணங்கினை ஒத்த - தெய்வப் பெண்ணை ஒத்த; அணங்குதல் - துன்புறுத்தல்; அணங்கு - நன்மனைவி. (19) தன்வினையைத் தான் நோகான் சார்ந்த தமரவரை என்மதியான் நோவான் இயம்பு. தமரவரை - தம்மைச் சார்ந்தவரை; என் மதியான் - என்ன அறிவால். (20) நன்றிதரும் செல்வமொரு நாளும் குறைவுறா(து) அன்றிமிகும் செல்வமே(து) ஆங்கு. நன்றிதரும் - நல்வழியால் கொண்டு. நன்மைக்குத் தரும்; அன்றி - அல்லாமல்; அச்செல்வம் அல்லாமல் மிகும் செல்வம் ஆங்கு ஏது என்க. (21) பழந்தரவே வித்திடுவர் பால்இலைபூ காயும் நிழல்தருபோல் கல்வி நினக்கு. வித்து இடுவர்பால் - விதைபோடுபவர்க்கு; பழத்திற்காகப் போடப்படும் விதை இலை, பூ, காய், நிழல் ஆயவெல்லாம் தரும்; அதுபோல் கல்வியும் அறம் பொருள் இன்பம் வீடு எல்லாம் தரும் என்பது. (23) மண்கிளறி உண்பவரே மாண்புடையர், மற்றவரோ புண்கிளறி உண்குவரைப் போன்ம். மண்கிளறி உண்பவர் - உழவர் முதலாகிய உழைப்பாளர்; மற்றவர் - உழையாமல் உடல் வளர்ப்பவர்; போன்ம் - போல்வர். (24) யவனங் கடலோடி இங்கங்(கு) உறையறிஞர் கவனித்(து) அவர்செய்கை காண். யவனம் - கிரேக்கம் முதலிய வெளி நாடுகள்; அறிஞர் கவனித்து - நாடுகண்ட அறிஞர் நல்வாழ்வைப் பார்த்து; அவர் செய்கை காண் - அவர்கள் செயலறிந்து செய். (25) அரன்அயன்மால் என்போர் அனைவரும்ஓர் தேவே திரன் அறியா மாந்தர்தெளி மின். அரன் - சிவன்; அயன் -நான்முகன்; மால் - திருமால்; தேவே - தெய்வமே; திரன் (திரம்) - உறுதி. (26) வள்ளன்மை இல்லாதான் செல்வம் வளர்வனபோல் உள்ளது மற்றுமொரூ உம். வள்ளன்மை - கொடை; ஒரூஉம் - நீங்கும். (27) அழகில் அழகாம் அருங்கல்வி மற்றோஓ பழகினும் பண்பில் பழுது. மற்றோஒ - (கல்வி யல்லாத)மற்றை அழகோ; பழகினும் - எவ்வளவு பழகிப் போனாலும்; பழுது - குற்றம். (28) அளகத்தால் ஆவதென் அன்னாள்தன் கற்பைப் பளகறக் காக்கப் படின். அளகத்தால் - கூந்தலால்; பளகு அற - குற்றமற. (29) அறக்கோனும் என்றும்உள ஆயுளை எண்ணிப் புறங்காத் திருப்பான் புலர்ந்து. அறக்கோன் - கூற்றுவன்; புலர்ந்து - விழித்து. (30) ஆனந்தம் பேர் மண்ணினுள் ஆழ்ந்தனரே அன்றித் தனங்சாத்து நின்றவரைச் சாற்று. அனந்தம் பேர் - எண்ணற்றோர்; தனம் - செல்வம்; சாற்று - கூறு. (31) ககர வரிசை கறக்கினும் ஆவேரிற் கட்டலால், செல்வம் சிறக்கினும் ஆளடிமை தீது. கறக்கினும் - பால்கறந்தாலும்; ஆவேரில் கட்டலால் - பசு, எருமை முதலியவற்றை ஏர் முதலியவற்றில் கட்டலால்; ஆள் அடிமை - கட்டுப்பட்ட அடிமை. (32) காணற்(கு) இனிப்பும் கணவனது கட்டளையும் பேணற்(கு) உரியாளே பெண். இனிப்பும் - இன்பமும். (33) கிள்ளிக் கொடுத்தாலும் இன்ப முகம்காட்டித் தள்ளி விடாததைத் தாங்கு. கிள்ளிக் கொடுத்தாலும் - (உதவி வேண்டுவோய், உதவியாளன் நகத்தால்) கிள்ளித் தந்தால் போலச் சிறிதே தந்தாலும்; தாங்கு - பெறு. (34) கீழ்மகனுக்கு ஓர்காலில் கிள்ளுப்பொன் னேமிகினும் வாழ்மனைக்(கு) ஏவல்செய்யான் வந்து. ஓர்கால் - ஒருபொழுதில்; கிள்ளுப்பொன் - சிறிதளவு பொன்; கீழ்மகனுக்குச் சிறுவருமானமும் பெருஞ் செருக்கை ஆக்கும் என்பது. (35) குலமகளும் ஓர்காலிற் குற்றேவல் செய்யின் விலைமகளங்(கு) ஆவளோ விள். ஓர்க்லில் - வறுமையான பொழுதில்; குற்றேவல் - சிறுவேலைகள்; விள் - கூறு. (36) கூன்செவிடு நொண்டி குரு(டு) ஊமை சப்பாணி யான்மகவுக்(கு) அன்னம் அளி. (37) கெட்டும் பலபட்டும் கீழ்வரைக் கிட்டிலும் கட்டை விடாமலே கா. கெட்டும் - வறுமையால் கெட்டாலும்; பலபட்டும் - பல துயர் பட்டாலும்; கீழ்வரைக் கிட்டினும் - கீழ் நிலையைச் சேர்ந்தாலும்; கட்டை விடாமல் - ஒழுக்கத்தை விடாமல்; கா - காப்பாற்று. (38) கேட்பவவை கேட்டுப்பின் சிந்திக்கின் மூவாமை ஊட்டிடும் உள்ளத்(து) உவந்து. மூவாமை ஊட்டிடும் - முதிரா இளமையைத் தரும். (39) கைம்பெண் கடமை கணவனையே சிந்தனைசெய்(து) ஐம்பொறியை என்றும்அடக் கல். (40) கொடையினு மிக்குக் கொடுப்பதையும் ஏற்போர் நடைகொண்(டு) ஒழுகாமை நன்று. கொடையினும் - கொடுக்க வேண்டிய அளவினும்; ஏற்போர் - இரப்போர்; நடைகொண்டு - நடத்தையைப் பின்பற்றி ஒழுகாமை - நடவாமை. (41) கோதில் குணத்தோடும் கூடி இருப்பதல்லால் பேதித்தோர் தம்மைப் பிரி. கோது இல் - குற்றம் இல்லாத; பேதித்தோர் - மாறுபட்டோர். (42) கௌவும் சுணங்கன்போல் காமுகனே எஞ்ஞான்றும் வௌவும் பிறன்கிழத்தி வீடு. கௌவும் சுணங்கன்போல் - கடிக்கும் நாய் போல்; எஞ்ஞான்றும் - எப்பொழுதும்; பிறன் கிழத்தி வீடு வௌவும் - அயலான் மனைவி இருக்கும் வீட்டைப் பற்றிக் கொள்வான். (43) சகர வரிசை சனனம் எடுத்ததனால் சாதகமரம் பின்னும் சனனம் எடுக்காத சார்பு. சனனம் - பிறவி; சாதகம் - நன்மை; சார்பு - துணை; பெற்ற பிறவி, மற்றொரு பிறவி எடுக்காமைக்குத் துணை என்பது. (44) சாதி மதக்கொள்கை சாதம் சமைத்தலிவை பேதத்தால் கிட்டுமோ பீடு? பேதத்தால் - வேற்றுமையால்; பீடு - பெருமை. (45) சிக்கனம் செய்தொருவன் சிற்சிலவாய்ச் சேர்ப்பனவும் விக்கினமங்(கு) இன்மையேல் மேரு. விக்கினம் அங்கு இன்மையேல் - தடையின்றிச் சேர்த்துக் கொண்டே வந்தால். (46) சீலத்துள் சீலம் சிறந்ததாம் தேற்றத்தைக் காலந் தவிராமை காப்பு. சீலத்துள் சீலம் - பண்புகளிலெல்லாம் சிறந்த பண்பு; சிறந்ததாம் தேற்றத்தை - சிறப்பாகத் தெளிந்த செயலை; காலம் தவிராமை - காலம் தவறாமல்; காப்பு - பேணிச் செய்தல். (47) சுகத்தொடு துக்கமதம் சூழ்ந்தொன்றாய்க் காணும் அகத்தாரை எற்றும் பொருட்டு. சுகத்தொடு துக்கம் மதம் - இன்பம் துன்பம் வெறி; அகத்தாரை - உள்ளன்பரை; எற்றும் - அகற்றும். (48) சூதினையும் பல்லுயிர்தன் வாதனையும் செய்யாமல் சாதனையால் வெல்லுமாம் சாது. வாதனை - துனபம்; சாதனை - உள்ள உறுதி; சாது - துறவி. (49) செல்வச் செருக்கால் செயித்தோம் எனப்பின்பும் வெல்ல நினைத்தலும் வீண். (50) சேர்த்தலே செல்வம் செவிலித்தாய் போன்றதனைக் காத்தல் அதனிற் கடிது. செவிலித்தாய் - வளர்ப்புத்தாய்; கடிது - கடுமையானது, அரிதானது. (51) சையொத்(து) இருப்பதே இல்வாழ்க்கை; அஃதின்மை கைவிட்(டு) அகற்றல் களிப்பு. சை - கைப்பொருள்; அஃது இன்மை - கைப்பொருளுக்குத்தக வாழும் தன்மை இல்லாதவளை; களிப்பு - மகிழ்ச்சி. (52) சொப்பனத்தில் தோன்றும் சொரூபம்போல் இவ்வுலகில் உற்பனங்கள் என்றே உணர். சொப்பனம் - கனவு; சொரூபம் - வடிவு; உற்பனம் - தோற்றம். (53) சோதிக்கச் சோதிப்பில் தூய்மை தனித்தோன்றும் வாதிக்க வீணில்வரும் வம்பு. சோதிக்கச் சோதிப்பில் - உண்மையை உணருமாறு ஆராய்ந்தால்; தனித்தோன்றும் - சிறந்து தோன்றும்; வாதிக்க - வாதம் இட்டுக் கொண்டிருக்க; வீணில் வம்பு வரும் என்க. (54) சௌரியன் கைவாளைச் சாவாமல் தாரான் சவுரிமயிர் ஈமாப்போல் செத்து. சௌரியன் - வீரன்; சவுரிமயிர் - கவரிமயிர் (சடைமயிர்); ஈ மா - தரும் கவரிமான். (55) ஞகர வரிசை ஞமலி ஞமன்நாகன்; நாகனுக்(கு) ஓந்தி; நமனுக்கும் உண்டோர் நமன். ஞமலிஞமன் - நாய்க்கு எமன் பாம்பு; நாகனுக்கு ஓந்தி - பாம்புக்கு எமன் ஓணான்; நமன் - எமன். (56) ஞானமொடு கல்விகலை நாகரிகம் பல்பேசி ஈனவழி செல்வாரேல் என்? என் - ஞானம் முதலியவற்றால் என்ன பயன்? (57) ஞிமிறனைய பாடலொடு நீறகலப் பூசல் தமர்அறியச் செய்யும் தவம். ஞிமிறு அனைய - வண்டு அன்ன; நீறு - திருநீறு; தமர் - தம் உறவினர். (58) நீரன்றி யாவும் நிலையா உலகமொடு தாரிரவி சந்திரனும் தான். தார்இரவி - சுழன்று வரும் கதிரோனும்; ஊழியில் நீரே இருக்கப் பிறவெல்லாம் அழிந்துபடும் என்பது. (59) நுரைகடலில் ஓடும் நுகத்துளையில் ஆமை சிரம்நீட்டி யாங்குச் சிவம். நுகத்துளை - நுகக்கோலின் துளை; சிரம் - தலை; நீட்டி யாங்கு - நீட்டியது போல; சிவம் தலைப்படும் அருமை கூறியது. (60) நூதனத் தேட்டரின்பால் யாதேனும் பற்றிலவர் வாதனை பண்ணுவார் வந்து. நூதனத் தேட்டர் - புதுச்செல்வர்; பற்றிலவர் - துறந்தோர்; வாதனை - துன்பம். (61) ஞெலுவனுக்(கு) ஈயினும் நிற்காது நிற்கின் வலிய வரினஃதை வாங்கு. ஞெலுவனுக்கு - தோழனுக்கு; நிற்காது - கொடையாய் நிலைக்காது; நிற்கின் - நிலைக்க விரும்பினால்; வலியவரின் அஃதை வாங்கு - வன்கண்மையுடையோரால் ஆதரவு அற்றவரைப் பெற்று உதவு. (62) ஞேயமுள நித்தியரை நின்மனத்தில் உன்னுவதே காயம் எடுத்த கடன். ஞேயம் (நேயம்) - அன்பு, நித்தியர் - அழிவிலார்; உன்னுவது - நினைப்பது. காயம் - உடல் (பிறவி). (63) ஞையென்று சொல்லத்தான் ஞாலம் திரிவதுவே; மெய்யென்றுட கொள்ளும் மடம். ஞைஎன்று - நிலையாது என்று; ஞாலம் திரிவதுவே - உலகம் சுழன்று வருகிறது. மெய் என்று - நிலைத்தது என்று; மடம் - அறிவிலி. (64) ஞொள்கல் அடையினும் நோகாதே; நொந்தக்கால் எள்ளினும் எள்ளாக்கி விடும். ஞொள்கல் - தாழ்வு; நோகாதே - வருந்தாதே. எள்ளினும் எள் - எள்ளினும் சிறிது. (65) நோக்கம் அறிந்தபின் வாய்க்கும் பலன்களைச் சீக்கிரம் செய்யின் திரம். நோக்கம் - குறிப்பு; திரம் - நன்மை. (66) தகர வரிசை தவத்தினால் ஆய(து) எனினும்அருள் செல்வம் *முயற்சிசெய முன்வந் துறும். அருள்செல்வம் - அருளாகிய செல்வம். வந்துறும் - வந்துசேரும். (67) தாங்கற்கு அரிய தரித்திரம் உற்றுழியும் நீங்கற்க ஊக்கத்தின் நின்று. உற்றுழியும் - உற்ற பொழுதும். (68) திரணம் திருட்டும் திருட்டே தெரிந்தால் மரணபரி யந்தம் மறம். திரணம் - துரும்புபோன்ற சிறிய; மறம் - கேடு. (69) தீயோரும் நல்லோரே யாவர் அவர்செய்யும் தீமைக்கு நன்மை செயின். (70) துன்பத்துள் துன்பமே தோன்றில் அஃதென்னாம் இன்பத்தின் கூறென்(று) இரு. கூறு - பகுதி. (71) தூக்கத்துள் தூக்கமது தூங்காத தூக்கமே ஆக்கத்துள் ஆக்கம் அது. தூங்காத தூக்கம் - அறிதுயில். ஆக்கம் - நன்மை. (72) தெவ்வர் வளைந்து வணங்குதல் தேளின்வால் வெவ்விய நஞ்சீதல் அற்று. தெவ்வர் - பகைவர். வெவ்விய - கொடிய. நஞ்சு ஈதல் அற்று - நஞ்சைத் தருவது போன்றது. (73) தேன்மொழி யாடும் திருக்கர் *இயல்பது வான்மதி பின்ஈயும் வள். தேன்மொழி யாடும் திருக்கர் - இனிக்கப் பேசும் வஞ்சர்; இயல்பது - இயல்பு; பின் ஈயும்வள் - தேய்ந்து பின்னே தரும் கப்பிய காரிருள் போன்றது. (74) தைலம்இல் தீபம்போல் தாசியும் பேசாளே கையில்அம் பொன்னற்றக் கடை. தைலம்- எண்ணெய்; அற்றக் கடை - அற்றபோது. (75) தொழும்பனே ஆயின் தொழில்முடிந் தாங்கு வரம்பின் மிகுந்தவகை செய். தொழும்பன் - தொழில் செய்பவன், அடிமையாளன். தொழில்முடிந்தாங்கு - தொழில் முடிந்த பொழுதில்; வரம்பின் மிகுந்தவகை - அளவில் மிகுந்த வகையில். செய் - பரிவுடன் உதவி செய். (76) தோழரைக் காட்டிலும் ஆழ்ந்தவர் இன்மையால் ஏழைமைக் கால்அவர்க்(கு) ஈ. ஆழ்ந்தவர் - ஆழ்ந்த அன்பினர்; ஏழைமைக்கால் - வறுமைப் போதில். (77) தெளவையின் கையுள் தனத்தினூஉம் தன்கைத் தவிடெனினும் சால உயர்வு. தெளவையின் கையுள் தனத்தினூஉம் - அக்காள் கையில் உள்ள செல்வத்தினும்; சால - மிக. (78) நகர வரிசை நன்நா திறம்பாத நாணத்தி னால்திறக்கும் பொன்னார்ந்த பெட்டியின் பூட்டு. திறம்பாத - மாறாத, தவறுபடாத. பொன்னார்ந்த - பொன்நிறைந்த; பொன்னால் அமைந்த. (79) நாணயமும் கற்பும் நடுநிலையும் கட்டுரையும் வேணபொருள் சேர்க்குமங் கம். கற்பும் - கல்வியும்; கட்டுரையும் - வாக்கு வன்மையும்; வேணபொருள் - வேண்டியபொருள்; அங்கம் - உறுப்பு. (80) நிதியின் மிகுவளவன் ஆயினும் இன்னா விதியின் வழிச்செய் வினை. மிகுவளவன் - மிகுந்த வளமையாளன், பெருஞ்செல்வன்; இன்னாவிதி - தீவினை; வழிச்செய்வினை - வழிப்பட்டது செய்யும் செயல். (81) நீதி அதிபதிகள் நீட்டலை வாங்கஅழும் வாதிப் பிரதி வழக்கு. நீட்டலை வாங்க - நீட்டிய தொகையை வாங்க. வாதிவழக்கும் பிரதிவாதி வழக்கும் அழும் என்க. (82) நுணக்கம் உடையார் எனைத்துணைய ரேனும் வணக்கம்கொண் டன்னாரை வாழ்த்து. நுணக்கம் - நுண்ணறிவு; எனைத்துணையர் - எவ்வளவினர். அன்னாரை - அவரை. (83) நூன்முறையால் தேமாலை சூடினும் பேசற்க கான்முளை போன்ற கடுஞ்சொல். நூன்முறை - நூற்கல்வி முறையால்; தேமாலை - இனிய வெற்றிமாலை; கான்முளை - காலில் தைத்த முளையாணி. (84) நெஞ்சார்ந்(து) இருப்பரேல் கெஞ்சற்க; துஞ்சியபொன் மிஞ்சியது தானே வரும். நெஞ்சு ஆர்ந்து - மனத்தொடு பொருந்திய வராய்; துஞ்சிய - இழந்த; விஞ்சியது - மிகுந்தது. (85) நேரத் தெழுந்திருந்து நீள்நிலத்தில் தான்உலவி ஈரத்(து) அலம்பல் இதம். நேரத்து - வைகறையில்; ஈரத்து அலம்பல் இதம் - தண்ணீரில் குளித்தல் நலம். (86) நைபவர் ஆயினும் நேராய் ஒழுகவரும் வைபவத் தோடவர்க்கு வாழ்வு. நைபவர் - நலிபவர்; வைபவம் - சிறந்த விழாவோடு. (87) நொய்யள(வு) ஆயினும் நோய்செய்யும் மற்றெல்லாம் நெய்தொழில் செய்யும் நலம். நொய்யளவு - சிறிதளவு; நோய் - துன்பம்; மற்று எல்லாம் - பிற தொழில்கள் எல்லாம். (88) நோய்செய்யா(து) இன்னுயிரைக் காத்தலே நோன்பாகும் மாதவத்தோர் ஆயினும் மற்று. (89) நௌவிதனில் ஏறிஅயல் நாடெங்கும் சுற்றுதல் எவ்வமில்பொன் தேடும் இயல்பு. நௌவி - கப்பல்; எவ்வம்இல் - குற்றம் இல்லாத. (90) பலபார்க்கப் பண்டிதன்; பாரா(து) உலகின் முலைபார்த்(து) உழலுமவன் முண்டு. பலபார்க்க - பலவற்றை ஆராய்ந்து பார்க்க; உழலுமவன் - திரிபவன்; முண்டு - மூடன். (91) பார்த்தொருவன் செய்யப் பழுத்துவரும்; பாராமல் வேறொருவன் செய்ய விழும். பழுத்துவரும் - தேர்ச்சி முதிர்ந்து வரும்; விழும்-கெடும். (92) பிறருனக்குச் செய்ய விரும்பாஅச் செய்கை பிறருக்குச் செய்யிற் பிழை (93) பீடம் அழுந்தா(து) எழுசுவர் வீழும்போல் பாடம் அழுந்தாப் படிப்பு. பீடம் - அடித்தளம்; எழுசுவர் - எழுப்பப்பட்ட சுவர்; அடிப்படை இல்லாப் படிப்பு வீழும் என்க. (94) புதுமை உதிக்கும் பழமைஇறக் கப்பாராப் பழமையும் அற்று விடும். உதிக்கும் - தோன்றும்; பழமை இறக்கப் புதுமை தோன்றும்; அதுபோல் பாராத பழமைத் தொடர்பும் அற்றுப் போகும் என்பது. (95). பூட்டும் பெரும்பொருளும் புண்ணியம் அற்றுவிட ஓட்டம் பிடிக்கும் ஒளித்து. புண்ணியம் - நல்வினை. (96) பெற்றோர் பெறுநலம் பிள்ளையும் பேரவையில் கற்றோரால் மொய்க்கும் கனம். பேரவை - கற்றோர் கூடிய பெருங்கூட்டம்; மொய்க்கும் கனம் - சூழும் பெருமை. (97) பேசிறுக ஓர்வாயும் பேசுருவ ஈர்செவியும் ஈசன் அருள்குறியை எண்ணு. பேசிறுக - தன் பேச்சைச் சுருங்க உரைக்க; பேசுருவ - பிறர் பேச்சை உள்வாங்க. (98) பையனும் ஐயமறக் கற்கில்அவன் ஐயனே; மையறக் கல்லாதான் மாடு. ஐயன் - ஆசிரியன்; மையற - குற்றம் அகல. (99) பொறுப்பவர்தம் கண்ணே பொருள் நிற்கும்; வீணிற் பொறுப்பிலார் கண்ணிருந்தும் போம். (100) போட்ட இடத்தில் பொருள்தன்னை ஓர்ந்தெடுத்தல் கூட்டும் உடைமைக் குறி. ஓர்ந்தெடுத்தல் - தேடி எடுத்தல். கூட்டும் உடைமைக் குறி - செல்வம் சேர்க்கும் நல்வினையின் அடையாளம். (101) பௌவம்போல் சூழஇரு பௌஞ்சம் இருக்கினும்மேல் வௌவ விரும்புவராம் வேந்து. பௌவம் - கடல்; பௌஞ்சம் - படை; வௌவ - கவர்ந்துகொள்ள. (102) மகர வரிசை மடிமறதி மாய்கை மயக்கம்இந் நான்கும் வழிமறிக்கும் வாழாப்பெண் டீர். மடி - சோம்பல்; மாய்கை - மாயம்; வழிமறிக்கும் - சகுனத் தடையாகும்; வாழாப் பெண்டீர் - கைம்பெண்டிர். (103) மாட்சிமை இல்லா மனைவியைக் கொண்டொழுகும் காட்சியனுக்(கு) உண்டோ கனம். மாட்சிமை - பெருமை; காட்சியன் - அறிஞன்; கனம் - பெருமை. (104) மிக்கோங்கு மாறு விரும்புகின்ற மாக்களும் தக்கோர் இனமிருக்கச் சார்ந்து. மாக்களும் - அறிவில் குறைந்தாரும்; தக்கோர்; இனம் - அறிவினர் கூட்டம். (105) மீகாப்(பு) அகன்றபெரும் ஏகாதி பத்தியம் வாய்காப்(பு) அகன்றபரி மா. மீ காப்பு - மேலாண்மைக் காவல்; ஏகாதிபத்தியம் - பேரரசு. வாய்காப்பு - கடிவாளம்; பரிமா - குதிரை. (106) முயல முயன்று முதிஞர் முதுமார்க்கம் பயிலாமை அன்றோ பசி. முதிஞர் - முதியர்; முதுமார்க்கம் - தேர்ந்த வழி; பசி - எரிக்கும் பசி போன்ற துயராம். (107) மூடன்அடன் மூதேவி முன்கோபி இந்நான்கும் ஆடிறகு கள்ளா யவை. அடன் - பிடிவாதக்காரன்; ஆடு இறகுகள் ஆயவை - அசைந்து உதிரும் நிலையில் உள்ள இறகுகள் போன்றவை. (108) மெய்ம்மையே மேற்கொள்ள நிற்கும் உளத்தார்க்குப் பொய்ம்மையோ போகும் புலர்ந்து. புலர்ந்து - காய்ந்து, உலர்ந்து. (109) மேனி மினுக்குமவன் தோளை விரும்புபவன் தேனில் தியங்கிவிழும் ஈ. தியங்கி - மயங்கி. (110) மைந்தர் கடனென்ப மாதாப் பிதாக்களையும் அந்தரத்தில் ஆழ்த்தா(து) அணைப்பு. அந்தரத்தில் - துன்பத்தில்; அணைப்பு - அணைத்துக் காத்தல். (111) மொழியும் மொழியை முனைதிரி பின்றிக் கழியும் வரையினும் கா. முனை திரிபுஇன்றி - சிறிதும் மாறுதல் இன்றி; கழியும் வரையும் - சாவும் அளவு; கா - காப்பாற்று. (112) மோகத்தைக் கொண்டொழுகும் மூர்க்கர்க்(கு) அறிவுறூஉம் ஆகம் கடந்த கடை. மோகம் - பேராசை; அறிவு உறூஉம் - அறிவு உண்டாகும்; ஆகம் கடந்த கடை - உள்ள செல்வமெல்லாம் போன போது. (113) மௌனத்(து) இருக்கின் மதிப்பர்; இவரின் கவனத்தின் மிக்க உள. இவரின் கவனத்தின் - இவரைப்பற்றிய அக்கறையில். (114) யகர வரிசை யமனோ(டு) அணைந்து கவளி கரிப்பன் சமனோர்ந்து வீடாளா தான். அணைந்து - சேர்ந்து; கவளி கரிப்பன் - விழுங்குவள்; சமன் ஓர்ந்து - ஒப்பாம் நிலைமை உணர்ந்து; வீடு ஆளாதாள் - இல்லறத்தைப் பேணாத மனையாள். (115) யாதொன்றும் பின்முன்னும் ஓர்ந்துபார்; பாராமல் கோதாய் முடித்தல் குறை. பின்முன்னும் - (பின்னும் முன்னும்) பின் விளைவும், முன்விளைவும்; ஓர்ந்து - ஆராய்ந்து; கோது. குற்றம். (116) இதம்செய்வ தெல்லாம் அறமாம்; உயிர்கட்(கு) அதம்செய்வ தெல்லாம் அறு. இதம் - இன்பம்; அதம் - அழிவு; அறு - விலக்கு. (117) ஈசன் நியமநிதி ஈயினும் மீண்டவன்பால் வாசமது பண்ண வரும். நியமநிதி - முறைமையான செல்வம்; வாசமது பண்ண - சேர்ந்திருக்க. (118) யுத்தத்திற்(கு) அஞ்சற்க; அஞ்சில் அதுகொல்லும் கத்திமுனை யாகிக் கவிழ்ந்து. கவிழ்ந்து - வீழ்ந்து. (119) யூகத் தலைவனையே ஒன்றிச் செயித்துவிடல் போகத் *தொலையுமப் போர். யூகம் - அணிவகுப்பு; மதிவலி வாய்ந்த. போக - ஒன்றுபட்டுப் போர்க்குப் போக; அப்போர் தொலையும் - அப்போர் இல்லாமல் ஒழியும். (120) எக்களத்துப் போரும் இணங்கும்; இணங்காது சக்களத்தி செய்யும் சழக்கு. இணங்கும் - அமைதிப்படும்; சக்களத்தி - மூத்த மனைவி, இளைய மனைவியர்; சழக்கு - சண்டை, தகராறு. (121) ஏமாந் திருப்பரோ இவ்வுலகின் மாந்தர்கள் பூமாது பொன்னினையும் போர்த்து. பூமாது - நிலமகள்; நிலமகள் பொன்னைத் தன்னகத்து வைத்து இருக்கவும் முயன்று உழைத்து அதனைப் பெறாமல் மாந்தர்கள் ஏமாந்து இருப்பரோ என்க. (122) ஐயங் கொடுக்க அறுகீரை போல்துளிர்க்கும் மெய்யன்(பு) உடையார்க்கு மற்று. ஐயம் - பிச்சை; அறுகீரை - அறுக்க அறுக்கத் தளிர்க்கும் அறைக்கீரை. (123) ஒவ்வொன்றாய் ஒன்றில் ஒருதூணி; ஒன்றில்லா(து) ஒவ்வொன்றாய் நீங்கில்ஒரு தூசு. தூணி - ஓர் அளவு; நான்கு மரக்கால் அளவு; தூசு - துகள். (124) யோசனையால் ஒவ்வொன்றும் ஊகித்(து) உணராமுன் வாசனையில் செய்ய *வழு. வாசனையில் - அறிவில்லாமல்; வழு - குற்றம். (125) யௌவனத்தின் மூழ்கி இறுமாப் படைந்தோர் புவனத்தின் கண்வளரும் புல். யௌவனம் - இளமை; இறுமாப்பு - செருக்கு; புவனம் - நிலம். (126) வகர வரிசை வட்டி பெருக்கியதைச் செட்டி கறப்பதின்மேல் துட்ட மிருகத் *துறிஞ்சு. மேல் - மேலானது, நன்மையானது. துட்ட மிருகத்து - தீயவிலங்கு. உறிஞ்சு - உறிஞ்சுதல் (இரத்தத்தைக் குடித்தல்), உரிஞ்சு எனின் உராய்தல் என்பது பொருள். (127) வாதி எனச்சொல்லிப் பேதித்(து) அறுப்பவன்தன் சேதிப்பால் உண்டாகும் தீங்கு. பேதித்து - வேறுபடுத்தி. சேதிப்பால் - அழிசெயலால். (128) விதவையர்க் கீர்மணம் வேண்டிடிற் செய்தல் மறைவிற் புணர்தலின் மாண்பு. ஈர்மணம் - இரண்டாம் மணம்; செய்தல்- செய்து விடுக. மறைவிற் புணர்தலின் - பிறர் அறியாமல் கூடுதலின். (129) வீதிகளில் அந்தி விளக்கேற்றி அன்னமிடும் மாதர்களே மாமகளாம் மற்று. மாமகள் - திருமகள். (130) உழைப்பொடு கல்வி உலகிலுள் ளோர்க்குப் பிழைக்க உணவோ(டு) உடுப்பு. உலகில் உள்ளோர்க்கு உழைப்போடு கல்வி தர வேண்டும்; அவர்கள் பிழைக்க உணவோடு உடுப்புக் கிடைத்தல் வேண்டும் என்பது. (131) ஊமை குருட்டுக்(கு) உணர்வு மிகுதியால் தாமதியார் கற்பிலவர் தாம். கற்பில் அவர் - கற்பதில் அவர்; தாமதியார் - பிறர்க்குத் தாழ்வடையார். (132) வெங்கோலன் ஆயினும் தன்பதி சுற்றவரும் செங்கோலன் ஆக்கும் திரு. வெங்கோலன் - கொடிய ஆட்சியாளன்; தன்பதி - தன் ஊரும், நாடும்; திரு - செல்வச் செழுமை. (133) வேரின்கண் வீழ்புழுவும் புல்லரும்; அல்லாதார் பூவின்கண் +வீழ்ந்துறிஞ்சும் புள். வேரின்கண் வீழ்புழு - வேர்ப்புழு; புல்லர் வேர்ப் புழுவைப்போல் முழுமையாகக் கெடுப்பர்; அல்லாதார் - நல்லோர்; புள் - தேனீ. தேனை மெல்லென எடுத்துக்கொண்டு, அதன் இன வளர்ச்சிக்கும் உதவும். தேனீயைப் போல் நல்லோர் உதவுவர் என்பது. (134) வையகத்து மாந்தருக்கு வைப்பாக வைக்கிலது கையகன்ற போதிலென்னாம் காண்? வைக்கிலது - வைக்காத செல்வம்; கையகன்ற போதில் - தன்னை விட்டுப்போன பொழுதில்; காண் - ஆராய்ந்துபார். (135) ஒருவயிற்றுக்கு, ஓர்கரமும், மற்றோர் பொருட்டே மறுகரமும் ஈந்தார் மதித்து. ஈந்தார் - இறைவர் அருளினார். (136) ஓரினமே பூட்டில் உழவறும்; அல்லால் மற்(று) ஈரினம் பூட்டில் இழுக்கு. ஓரினம் - ஒத்த காளை; ஈரினம் - மாறுபட்ட காளை; உழவு அறும் - உழவு முடியும்; ஒத்தவர் நட்பும், இல்வாழ்வும் சிறக்கும் என்பது கருத்து. வௌவால் அனைய பகல்ஒளித்(து) இராவெழுந்து வெளவேல் பிறன்பொருளை ஓர்ந்து. வெளவேல் - கவர்ந்துகொள்ளாதே; ஓர்ந்து - தேடி. (138) மெய்வரிசை கக்கிக் கொடுத்தாலும் காக்கான் மகனைப்போல் +சக்கி பெறுமகனும் தான். கக்கிக் கொடுத்தாலும் - வருந்திக் கற்றுக் கொடுத்தாலும்; காக்கான்- தீநெறியாளன்; சக்கி - நண்பன். (139) இங்கங்குண் டங்குண் டிறைதுறவி கள்வன்சூட் கிங்கங்கில் லிங்குண் டினிது இறை - தங்குதல்; துறவிக்கு இங்கு உண்டு; அங்கு உண்டு தங்குதல்; அவ்வாறே அங்கு உண்டு (வீடு உண்டு); சூட்கு - சூழ்ச்சிக்கு; பொய் யுறுதிக்கு. இங்கு அங்கு இல் - இங்கே அங்கே என்பது இல்லை; (எங்கும் உண்டு) இன்பம் இங்கு உண்டு - அவனுக்கு இங்குள்ள அற்ப இன்பமே உண்டு; அங்கு இல்லை என்பது. கள்வன் - பொய்த்துறவி. (140) சச்சிதா நந்தன் தகையடித் தாமரை உச்சியிற் சூட்ட உரம். சச்சிதாநந்தன் - சத் சித் ஆனந்தன்; சத்து சித்து ஆனந்தன் = உண்மை அறிவு இன்ப வடிவினன் ஆகிய இறைவன் (சிவன்); தகை - சிறந்த; அடித் தாமரை - திருவடியாகிய தாமரை. (141) ஆஞ்ஞன(து) அஞ்ஞை அனுதினமும் போற்றுதலே வாஞ்சையுள மக்கள் வரம்பு. ஆஞ்ஞன் - தந்தை; ஆஞ்ஞை - ஆணை; வாஞ்சை - பற்று. வரம்பு - அன்பின் எல்லை, கடமை. (142) அட்டுண்ணாக் காலும் அதிதிக்கிட்(டு) உண்பதே கட்டுண்ட மாந்தர் களிப்பு. அட்டு உண்ணாக் காலும் - சமைத்து உண்ண முடியா வறுமைப் பொழுதிலும்; அதிதி - விருந்தினர்; கட்டுண்ட - இல் வாழ்வில் பிணைந்துள்ள; களிப்பு - மகிழ்வான செயல். (143) அண்ணாந்து பார்க்கில் அறியா அரும்பொருளும் விண்ணாணம் விள்ளும் விரைந்து. அண்ணாந்து பார்க்கில் - மேலே ஏறிட்டு ஆராய்ந்து பார்த்தால்; விண்ணாணம் விள்ளும் - தன் போலித் தன்மையை வெளிப்படுத்தும். (144) தத்தமக்கு வேண்டுவதைத் தாமே செயஈசன் ஒத்துறுப்போ(டு) <ªjh‹ உணர்வு. உறுப்போடு உணர்வு ஒத்து ஈந்தான் என்க. (145) நந்தவனம் சத்திரமும் நற்பொய்கை சாலைவழி வந்தவழிப் போக்கர்க்கு வை. (146) அப்பன் மகனுக்கென்(று) ஆய்ந்தநிதி வைப்பதினும் துப்புள்ள கல்வி துணை. துப்பு - வலிமை. (147) அம்மி மிதப்ப(து) அதிசயமோ கொண்கனடி கும்பிட்(டு) எழுஉம் கொடிக்கு? கொண்கன் அடி - கணவன் அடி; எழுஉம் - எழும்பும்; கொடிக்கு - கொடிபோன்ற மனைவிக்கு. (148) கொய்ய விரும்புவோன் கோதாய்க் குறிகொண்டால் எய்யுங்கோல் செய்வ(து) எவன்? கொய்ய - பறிக்க; கோதாய்க் குறிகொண்டால் - தவறாகக் குறிவைத்தால்; எய்யுங்கோல் - எய்யும் அம்பு; ஏவும்தடி. எவன் - என்ன? (149) போர்முகத்(து) அஞ்சிப் புறங்காட்டான் நெஞ்சமே கூர்முகத்(து) அம்பின் குறி. புறங்காட்டான் - புறமுதுகு காட்டாத வீரன்; கூர்முகம் - கூர்மையான முனை; குறி - இலக்கு. (150) கொல்லாமை காதல் குடி களவு bghŒNJ« அல்லாமை மாந்தர்க்(கு) அறம். (151) ஒவ்வொரு காலம்இடம் ஒவ்வொன்றுக்(கு) உண்டதனை அவ்வருங் காலம்இடத்(து) ஆக்கு. அவ்அருங் காலம் இடத்து - அவ் அரிய காலத்திலும் இடத்திலும். ஆழ்ந்தாலும் ஆழ்வ(து) அறம்என்ப தம்மிலித்தோள் மூழ்காதே மற்றோள் முலை. தம்இலி - தம் இல்லாள்; ஆழ்தல் - தாழ்தல். (153) நள்ளிருளில் நம்மிலத்து நாளும் விளக்கிருந்தால் கள்ளிருளன் நாடான் களவு. நம் இலம் - நம்வீடு; கள் இருளன் - களவாளன்; நாடான் - விரும்பான். (154) அற்ற இடத்தும் அருளுடையோர் ஆதரிப்பர் வற்றுமிடத்(து) ஊறாறு போல். ஊறாது (ஊறு ஆறு) ஊற்றுநீர் தரும் ஆறு. அன்னமிடப் போதுமென்பர்; ஆற்றாத ஆசையால் சொன்னமிடச் சொல்லார்அச் சொல். ஆற்றாத ஆசை - அளவிலா ஆசை. சொன்னம் - பொன்; அச்சொல் - போதும் என்ற சொல். (156) நூற்சுருக்க வெண்பா அந்தணர்ஓத் தோதி அதிகாலை உச்சியந்தி வந்தனம் செய்ய வளமுள்ள - மந்திரரும் அன்னமிடப் போதுமென்பர் ஆற்றாத ஆசையால் சொன்னமிடச் சொல்லார்அச் சொல். பழனி நீதிநூல் அருஞ்சொற் பொருளுடன் முற்றிற்று. * முயல்க. * இயல்வது. * துலையும். * வழும் + வீழ்ந்துரிஞ்சும். + சக்கிப். நந்தார் பொய்ச் சூதும் நீதிபோதம் நீதிபோத வெண்பா சிறப்புப் பாயிரம் இராமநாதபுரம் மன்னர் அவைக்களப் புலவர் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் இயற்றிய அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மூதறிஞர் இயற்றுபன்னூற் கடல்மதியால் மதித்தெடுத்து முதிரு நீதி போதமெனும் பேரமுதைப் புலவர்செவிப் புலன்மடுப்பப் புகட்டி னான்பூங் கோதைமன்னர் குவிந்துதிறை குவித்திருகை குவித்துமுடிக் குலங்கள் சாய்ப்பப் பாதமலர் சிவந்தமுத்து ராமலிங்கத் துரைசேது பதிக்கோ மானே. (1) இராமநாதபுரம் மன்னர் அவைக்களப் புலவர் முத்துவீரப்ப பிள்ளை இயற்றிய பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தரக்கதள் உடுத்த கறைக்களத் திறைவன் தருமிளங் குமரனை இதயத் தலத்திடை இருத்தித் திருத்தகு முகவைத் தனிவள நகரர சளிக்கும் திரக்கதிர் வடிவேல் முத்துராம லிங்க சேதுகா வலனுல குவப்பச் செயப்படு நீதி போதமாம் தமிழைச் செவிப்புலன் நிரப்பியாங் கதனுள் சுரக்குறு மதுரச் சுவைப்பயன் நுகர்பூ சுரர்சமக் கிருதமென் மொழியிற் சொலப்படு நீதி சாரநூல் இதுபோல் சுவையுடைத் தன்மையான் நலத்த சரக்கதன் றெனத்தோன் றவப்பெயர் முதற்கண் சார்ந்ததவ் வீயைநவ் வேயாச் சமைத்தனர் அமைத்தோள் கருநெடுந் தடங்கண் சரிவளைக் கரநறு நுதலே! (2) இராமநாதபுரம் மன்னர் அவைக்களப் புலவர் அட்டாவதானம் வேலாயுதக் கவிராயர் இயற்றிய அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் முலைப்பால்தந் தீன்றதாய் புதல்வரைக்காப் பாற்றிவரு முறைபோல் நீதிக் கலைப்பாலஞ் செவிப்பாலூட் டிப்புரந்து மாந்தர்பாற் கருணை பூத்தான் தலைப்பாரந் தவிர்ந்தோமென் றனந்தன்மன மகிழ்ச்சிபெறத் தரணி தாங்கு மலைப்பாரப் புயத்தன்முத்து ராமலிங்கச் சேதுபதி மன்னர் ஏறே. (3) வேலும் மயிலும் துணை கடவுள் வணக்கம் மூத்த பிள்ளையார் தேன்ஈதி என்றளிசூழ் செங்கடம்பன் தாள்பரவி மால்நீதி போதம் வழுத்துவான் - ஞானக் கொழுந்துதிக்கை அன்பர்தம்பாற் கூட்டாப் பொருள்விண் தொழுந்துதிக்கை வேழம் துணை. (அருஞ்சொற் பொருள்) தேன் ஈதி என்று - தேன் அளிப்பாயாக என்று; அளிசூழ் - வண்டுகள் சூழும்; செங்கடம்பன் தாள் பரவி - சிவந்த கடம்பு மாலையணிந்த முருகன் திருவடிகளை வணங்கி; மால் - உயர்ந்த; வழுத்துவான் - சொல்லுமாறு; ஞானக் கொழும் - (கொழும் ஞானம்) செழுமையான ஞானம்; துதிக்கை - வழிபாடு; கூட்டாப் பொருள் - கூட்டும் பொருளாக இருப்பவரும்; விண் - தேவர்கள்; வேழம் - மூத்த பிள்ளையார்: துணை - காப்பு. (1) பரசிவம் கன்னூல் வலவரிரு கையேந்த மெய்யேந்தும் இந்நூல் தழைப்பஉளத் தேத்துவாம் - பன்னுதெருள் ஆன மறைமுடிவாழ் அண்ணல்தனை மண்கிளறும் ஏனமெகி னங்காணான் என்று. (அ - ள்.) கன்னூல் வலவர் (கல் நூல் வலவர்) கற்கும் நூல்வல்லார்; இருகை ஏந்த - இரு கைகளிலும் ஏந்துமாறு; மெய் ஏந்தும் இந் நூல் - அழியாத மெய்மையாகிய நீதிகளைத் தாங்கிய இந்த நூல்; ஏந்துவாம் - வாழ்த்துவோம்; தெருள் - தெளிவு; அண்ணல் - சிவபெருமான்; மண்கிளறும் ஏனம், எகினம் காணான் - மண்ணைத் தோண்டிச் செல்லும் பன்றியாம் திருமாலும் பறக்கும் அன்னமாம் நான்முகனும் காணாதவன். ஏனம் எகினம் - ஏனமும் எகினமும் (திருமாலும் நான்முகனும்) சிவபெருமான் அடிமுடி தேடிய கதையை உட்கொண்டது இது. (2) உமாதேவி உண்ணப்பா என்றன்(று) ஒருமதலைக் கூட்டுமுலைக் கிண்ணப்பால் எற்கும் கிடைக்குமால் - வண்ணப்பார் தோன்றவனை வேணியன்பாற் றோய்ந்தவுமை எவ்வுயிரும் ஈன்றவளை ஆதலா லே. (அ - ள்) ஒருமதலை - திருஞானசம்பந்தர்; திருஞான சம்பந்தர்க்கு உமையம்மை பொற்கிண்ணத்தில்பாலூட்டியதைஉட்கொண்டதுஉண்ணப்பா.....ghš” என்பது; வண்ணப்பார் தோன்ற வனை வேணியன் - அழகிய உலகம் தோன்றுமாறு அருளிய சடைமுடிப் பெருமான் (சிவன்); தோய்ந்த - கூடிய; உமை - உமையம்மை; ஈன்றவனை - ஈன்ற அன்னை; ஈன்றஅனை ஆதலால் எற்கும் கிடைக்குமால் என்று கூட்டுக. (3) முருகக் கடவுள் மணிவிளக்கஞ், சங்கம்பால் வைப்பு, மரைவீத் தணிவிலிருப் புத், தருவி தானம், - அணிமதிநோக் காடியாக், கொண்டுமுனம் ஆவிவந்த வாறுமுகற் பாடி யகத்திலடைப் பாம். (அ - ள்). மணி விளக்கம் - மாணிக்கம் விளக்கு; சங்கம் பால்வைப்பு - சங்கு பால் வைக்கும் பாற்குவளை; மரைவீ தணிவில் இருப்பு - தாமரை மலர் உயர்ந்த இருப்பிடம்; தருவி தானம் - மரம் மேற்கட்டு; அணிமதி நோக்கு ஆடி - அழகிய மதியம் முகம் பார்க்கும் கண்ணாடி; ஆவி வந்த - சரவணப் பொய்கையில் தோன்றிய; அகத்தில் அடைப்பாம் - உள்ளத்தில் வைப்பாம். (4) சமய ஆசாரியர் கற்றூணும் ஆவணமும் காமருமை யாள்முலைப்பால் சிற்றூணும் ஓர்குருந்தும் தெப்பமா - வற்றாத நீளப் பவக்கடலை நீந்துமொரு நால்வரெமை ஆளக் கட்வரா வார். (அ - ள்). தெப்பம் - மிதப்பு; உய்யும் வழி; கற்றூணை மிதப்பாகக் கொண்டு கரையேறியவர் திருநாவுக்கரசர்; ஆவணம் (அடிமை ஓலை) உய்வாகக் கொண்டு அருள் பெற்றவர் சுந்தரர்; உமையாள் அளித்த பாலருந்தி நலமுற்றவர் திருஞானசம்பந்தர்; குருந்த மரத்தின்கீழ், குருவாக இறைவனைக் கண்டு பேறு பெற்றவர் மாணிக்கவாசகர்; காமர் - அழகிய, விரும்பத்தக்க; சிற்றூண் - சிறிய உணவு; நீளப்பவக் கடல் - பாவம் ஆகிய நெடுங்கடல். (5) நூல் நேரிசை வெண்பா மறையோர் இயல்பு 1. மறையோதல் ஓதுவித்தல் வாங்கல் கொடுத்தல் முறைவேட்டல் வேட்பித்தல் முன்னோர் - நெறியாகும்; உன்இருதாள் அர்ச்சித்(து) உனையே தியானித்தல் என்நெறியாம் வேல்இறைவ னே! (அ - ள்) முறைவேட்டல் - வேத விதிப்படி வேள்வி செய்தல்; வேட்பித்தல் - வேள்வி செய்வித்தல்; வேல் இறைவனே - வேற்படை கொண்ட கடவுளே. பொருள் முடிவுடைய ஒவ்வொரு வெண்பாவும் இவ்வாறே முருகனை விளியாகக் கொண்டு வருவது காண்க. (1) அரசர் இயல்பு 2. வென்னிடாத் தானை, மிகுநற் குடி, விளையுள், மன்அமைச்சு, நட்பு, வலி, அரண்சீர், - துன்னுகொடை, வாய்மை, பொறுமை, மனுநீதி, ஊக்கம், மனத் தூய்மை, உயி ருக்குத் துணை. (அ - ள்) வென் இடாத் தானை - பகைவர்க்குப் புறங்காட்டாத படை; மன் - நிலைபெற்ற; துன்னு கொடை - பொருந்திய கொடை. (2) 3. ஆர்க்கும்காட் சிக்கெளிமை, ஆய்கல்வி, கேள்வி, வயம் தீர்க்க விசாரிப்புத், தெய்வபத்தி, - போர்க்குரியார், காலம், இடம், வலிமை, கண்டறிதல் சிட்டபரி பாலனம், துட் டர்க்குப் பகை. (அ - ள்.) ஆர்க்கும் - எவருக்கும்; வயம் - வெற்றி; சிட்ட பரிபாலனம் - நல்லோர்களைக் காத்தல். குட்டர்க்குப் பகை - தீயவர்களை அழித்தல். (3) 4. குற்றம் எவையும் பொறுத்தல், குறிப்பறிதல், நற்றரும சிந்தனை, இந் நால்ஏழும் - பற்றா உடையான் அரசுக்(கு) உடையானாம் வெள்ளை விடையான் விழிச்செல்வ மே! (அ - ள்) பற்றா - (பற்றாக) பற்றும் பொருளாக; விடையான் - காளை ஊர்தியுடையான் ஆகிய சிவபெருமான்; விழிச் செல்வமே - திருவிழிகளுக்குச் செல்வமாக அமைந்த குமரனே; நெற்றிக்கண் பொறியில் தோன்றிய குமரனே என்பதுமாம். அரசர் இயல்பு மூன்று வெண்பாக்களில் தொடர்ந்து கூறினார். ஆதலின், இறுதிப் பாடலில் விளி அமைத்தார். மேல் வருவன வற்றுக்கும் இவ்வாறே கொள்க. (4) அரசர்க்குத் துணைவர் 5. ஆயமைச்சர், நற்கா ரியத்தலைவர், சுற்றத்தார், வாயில்காப் போர், நகர மாக்கள், கரி - பாயுமா வீரர், படைத்தலைவர், வேந்தர்துணை; எற்குனது சார்பு துணையாம்கந் தா! (அ - ள்) எற்குனது - எனக்கு உனது; ஆய் அமைச்சர் - பின்வருபவதை முன்னுணரும் அமைச்சர்; கரி பாயுமா வீரர் - கரிவீரர், பாயுமாவீரர் (யானைவீரர், குதிரைவீரர்). (5) அரசர்க்கு உறுதிச் சுற்றம் 6. பாகசர், நட்பாளர், பண்டிதர் நி மித்திகர், பண் பாகு முனிவர், அர சுக்குயிர்போல் - ஆகியநற் சுற்றத்தார் ஆகும்; எற்குன் தொண்டர்குழாம் சுற்றமன்றோ கொற்றத்தார் வேலா குகா. (அ - ள்) பாகசர் - உணவு பக்குவம் செய்து தருவோர்; நிமித்திகர் - கணியர் (சோதிடர்) கொற்றத்தார் - வெற்றி மாலை (6) அரசர்க்குரிய சின்னங்கள் 7. முடி, கவரி, தோட்டி, முரசு, குடை, யானை, கொடி, திகிரி, தோரணம், நீர்க் கும்பம், - கடல்வாய், மருமலர்ப்பூ மாலை, ஆ மைம், மகரம், சங்கம், பரி, யிரதம், சிங்க, மிட பம். (அ - ள்) கவரி - வெண்சாமரை; திகிரி - வட்டம் (சக்கரம்). நீர்க்கும்பம் - நீர்க்குடம்; கடல்வாய் - கடலிடம்; மரு - மணம்; மகரம் - மகரமீன்; இடபம் - காளை. (7) 8.காலாள் இணைக்கயல்சிங் காதனம்நற் றீபம்இஞ்சி நாலாறும் மன்னர்சின் னங்களாம் - வேலா வலயம் சுவற வடிவேல்கைக் கொண்டோய்! தலையஞ் சுடையவன்மைந் தா! (அ - ள்) இணைக்கயல் - இரட்டைக் கெண்டை மீன்; இஞ்சி - மதில். வேலாவலயம் - கடல்; சுவற - வற்ற; வடிவேல் - கூர்மையான வேல்; தலை அஞ்சு உடையவன் - சிவபெருமான். (8) இராசதந்திரம் 9.ஒற்றைஒற்றால் ஆய்தலும், கற் றோரைக்கண் ணாக்கொளலும், சுற்றத்தா ராற்சூழும் சூழ்ச்சியுமே, - கொற்றத்தார் ஏந்தற்(கு) உபாயம்; நின்தாள் ஏந்தல்குக! சன்மமுந்நீர் நீந்தற்(கு) உபாயம் நிலத்து. (அ - ள்) ஒற்றை ஒற்றால் - ஒற்றரை ஒற்றரால்; சூழ்ச்சி - தந்திரம்; கொற்றத்தார் - வெற்றிமாலை; சன்ம முந்நீர் - பிறப்பாகிய கடல். (9) வசியர் இயல்பு 10. வேத முறையோதல், வேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்காத்தல், ஏருழுதல் - நீதிநடுத் தூய்மைபொருள் போற்றல், பிறர் சொம்தம போல்பேணல் வாய்மைகணக் கில்தவறா மை (அ - ள்) வசியர் -வைசியர் (வாணிகர்) பிறர்சொம் - பிறர் செல்வம்; தமபோல் - தம்முடைய செல்வம்போல். (10) 11. இல்லவைவி னாவில் இனத்தால் விலக்கியுண்மை சொல்லும் வசியர் தொழிலாமால் - மெல்லக் குருந்தேறி யாலறியான் கோமணியே! ஞானக் குருந்தே! பெருந்தேவர் கோ! (அ - ள்) இல்லவை வினாவில் - இல்லாத பொருளை ஒருவர் கேட்டால்; இனத்தால் விலக்கி உண்மை சொல்லும் - இல்லாத பொருளின் இனப்பொருள் ஒன்றை உள்ளதாகக்கூறி, கேட்டது இல்லைஎனக் குறிப்பால் அறியச்செய்தல், காப்புக் கட்டி உண்டோ? என வினவில் அப்பொருள் இல்லாக்கால். வெல்லம் உண்டு என இனப்பொருள் கூறுதல்; குருந்தோம்பால் - குருந்த மரத்தில் ஏறிய கண்ணனால்; கோமணியே - இந்த செம்மணி போன்றவனே; ஞானக்குருந்தே - ஞானக்குழந்தையே; பெருந் தேவர் - சிவபெருமான்; கோ - தலைவன். (11) சூத்திரர் இயல்பு 12. முன்னையமூ வர்க்கும் முறையே பணியாற்றல், மன்னர்அமைச் சாதல், புகழ் வாய்மை, கொடை - சொன்னமுதல் ஈட்டல், உழல், பின்னோர் இயல்பாம்; குறமகளை வேட்ட கருணைவெள்ள மே! (அ - ள்) முன்னையமூவர் - மேலே கூறப்பெற்ற அந்தணர், அரசர், வணிகர்; சொன்னமுதல் - பொன்முதல்; உழல் - உழுதொழில் செய்தல்; குறமகளைவேட்ட - வள்ளியாரைத் திருமணம் கொண்ட. (12) வான் சிறப்பு 13. தானம் தவம்பூ சனையறம்ச ராசரங்கள் ஆனவையெ லாம்விருத்தி யாவதெலாம் - வானம் bghʪj‹¿ í©nlh?த போதனர்க்குன் சீர்த்தி மொழிந்தன்றி முத்தியெய்து மோ. (அ - ள்) தானம் - கொடை; சராசரங்கள் - (சரம் அசரங்கள் அசையும் பொருள், அசையாப் பொருள்; தபோதனர்க்கு - தவத்தோர்க்கு. சீர்த்தி - மிகுபுகழ். உள் - (முருகா) உன்; தோன்றாவிளி. (13) இளமை நிலையாமை 14. ஆக்கை நியைன்று யாம்இளையம் என்னாது தூக்கியறம் செய்கை துணிவன்றோ - கோக்குமரா! தாவுகால் மோதில் தருக்கனியன் றிக்காயும் பூவும்விழல் போல்நமனால் போம். (அ - ள்) கோக்குமரா - தெய்வக் குமரனே; ஆக்கை - உடல்; இணையம் என்னாது -இளம் பருவம் உடையேம் எனக் கருதாது; தூக்கி - ஆராய்ந்து; துணிவு - நன்முடிவு; தாவுகால் - தாக்கும் காற்று; தரு - மரம்; நமன் - இயமன். (14) விருந்தோம்பல் 15. வந்தவிருந் திற்கிடான் வாயிலடைத் துண்பானுக்(கு) அந்தவுல கத்துமடைப் பார்வாயில் - இந்தமுறை தேர்ந்துவிருந் திற்களிப்பான் தேவருக்கு நல்விருந்தாச் சார்ந்தவனன் றோகுகநா தா! (அ - ள்) குகநாதா - குகன் ஆகிய தலைவனே; அந்த உலகம் - மறுமை உலகம்; சார்ந்தவன் - சேர்ந்தவன்; விருந்து - விருந்தாளி. (15) கற்பின் மனை 16. அன்பிற்றாய்; ஏவற் கடிமை; பொறை யிற்பூ;மா மின்பொற்பிற்; கின்பத்தில் வேசை; மதிக் - கன்பமைச்சன்; அன்னாள் பதிபின் அயின்றுதுயில் வாள்கற்பின் மின்னாளாம் வேற்றெய்வ மே! (அ - ள்) அன்பில் தாய்; பொறை - பொறுமை; பூ - நிலம்; பொற்பு - அழகு; பூமாமின் என்பதைப் பூமின், மாமின் எனக் கூட்டி, பூமகள், மாமகள் (திருமகள்) எனக்கொள்க; மதிக்கு அன்பு அமைச்சன்; பதிபின் - கணவனுக்குப்பின்; அயின்று - உண்டு. கற்பின்மனை - கற்புடைய மனைவி. (16) இதனால் பயன் படாமை 17. ஊமைக்குச் சொல்மதி, உலோபிக் குரைத்தகவி, காமிக்குச் சொல்ஞானம், கல்லார்க்குத் - தாமுரைத்த சீலம்துட் டர்க்குநன்றி செய்தல், கம ரிற்கவிழ்த்த பாலன்றி இன்றுகடம் பா! (அ - ள்) உலோபி - கருமி; காமி - காமுகன்; சீலம் - ஒழுக்கம். கமர் - நிலவெடிப்பு; கடம்பா - முருகா. (17) இதனால் இஃது இன்றெனல் 18. துட்டர்நே யத்தால் சுகம்பெற்றா ருந், தினமும் கொட்டைநூற் றுச்செல்வங் கூடுநரும், - கிட்டித் தரைக்குள் இயமனுக்குத் தப்புநரும், அன்ன வரைப்பகைத்து வாழ்ந்த வரும். (அ - ள்) கொட்டை - பருத்தி, பஞ்சு; கிட்டி - நெருங்கி; அன்னவரை - இயமன் அன்னவரை. (18) 19. வஞ்சனையி னாற்கூடி வந்தவரும், பொய்யால் உஞ்ச வருங், களவால் ஓங்குநரும் - கெஞ்சிஅர(சு) ஆன்அரசும் இல்லை; உன தன்பைமறந் துய்வதொரு நாளுமில்லை கங்கைநந்த னா! (அ - ள்) உஞ்ச - உய்ந்த; கெஞ்சி - பகைவரிடம் மன்றாடிக்கேட்டு; கங்கை நந்தனா - கங்கையின் மைந்தனாம் முருகனே. (19) காலத்தால் சிறந்தவை இவை எனல் 20. கூழுமழு தாம்பசிக்குக், குச்சுமச்சா கும்குளிர்க்குச், சூழிருட்குக் கொள்ளி சுடர்விளக்காம், - பூழ்தியிம்பூ மெத்தையாம் நித்திரைக்கு, வெப்பத்திற் கற்பகத்தை ஒத்ததாம் கள்ளிநிழ லும். (அ - ள்) குச்சு - குடிசை; மச்சு - கெட்டிவீடு; கொள்ளி - தீக்கட்டை; பூழ்தி - புழுதி; கற்பகம் - நினைத்ததைத் தருவது என்னும் தேவருலகமரம். (20) 21. கலையிலாக் காலத்தில் கந்தையா னாலும் விலையுயர்பட் டாம்என்பர், விண்யோர் - உலகுகுடி யேற்றுகந்தா! நின்அடியார் எக்குலத்தா ரேனுநின்சீர் சாற்றுமெனக் குற்றவர்கள் தாம். (அ - ள்) கலைஇலாக் காலம் - உடைப் பஞ்சமான பொழுது; விண்ணோர் உலகு குடியேற்று - முத்தியருளும்; சீர் - புகழ்; சாற்றும் - கூறும்; உற்றவர்கள் - அன்பர்கள். (21) இலக்குமி இருப்பிடம் 22. வேந்தர் புயம்துளசி வில்வமரை நீபமலர் வாய்ந்தகடல் கங்கைகரி மாக்கழுத்து - வாய்ந்த பசுக் கொட்டில் இரதம் கொடிசா மரம்சங்கம் மட்டில்பரி சுத்த மனை. (அ - ள்) புயம் - தோள்; மரைமலர் - தாமரைமலர்; நீபமலர் - கடம்புமலர். மலர் என்பதை மரை, நீபம்என்னும் இரண்டற்கும் கூட்டுக. கொட்டில் - தொழுவம்; சாமரம்- கவரி; மட்டில் - அளவில்லாத. (22) 23. வாய்மையறம் ஈகையுள்ளார் மால்மார்பு வீரர்நன்மை ஆய்குணப் பெண்உருத்தி ராக்கம்இவை - தூய இலக்குமிக்கு நல்இருப்பாம்; என்றுமன்பர் உள்ளத்(து) இலக்காம் குகாநிற் கிருப்பு. (அ - ள்) மால்மார்பு - திருமால் மார்பு; ஆய்குணம் - ஆராய்ந்தெடுத்த சிறந்த குணம்; இலக்கு - இடம். (23) மூதேவி இருப்பிடம் 24. நிட்டையிலார், நீசர் நிழல், விதவை கள்ளிநிழல், கொட்டைநூற் போர், பேடி, கோபி, உமி, - சுட்டகரி, சூழை, மயா னப்புகைய சுத்தமனை, சூதகப்பெண் நீழல், விளா, வேலா நிழல். (அ - ள்) நிட்டையிலார் - யோகப் பயிற்சியில்லாதவர்; பேடி - பெண் இயல்பு மிக்க ஆண்; கோபி - கோபமுடையான்; சூழை - செங்கற்சூழை; அசுத்த மனை; நீழல் - நிழல்; வேலா நிழல் - வேலமர நிழல். (24) 25. மேதிக் கடாப், பல் விளக்கார், மிக் குண்பார், கைமை மாதைத்தோய் வோர் கழுதை வால், விடியற் - போதுதுயில் kh¡fS§, fª jh!நின் மலரடி உன் னார்மனமும் காக்கைக் கொடியாள்வாழ்க் கை. (அ - ள்) மேதி - எருமை; கைமை மாது - விதவைப் பெண்; தோய்வோர் - கூடுவோர்; உன்னார் - நினையார்; காக்கைக் கொடியாள் - காக்கைக் கொடியுடைய மூதேவி; வாழ்க்கை - வாழ்விடம். (25) ஒழுக்கம் இன்மை 26. வன்பகலில் தோய்வாரும், வாமக்கைத் தாம்பூலம் தின்பவரும், நீற்றிலையைத் தின்பவரும், - அன்பாத் தலைத்துகிலோ டுண்பவரும், சண்முகா! கஞ்சத்(து) இலக்குமிக்கு வேறாவ ரே. (அ - ள்) வன்பகல் - கடுவெயில்; வாமக்கை - இடக்கை; நீற்றிலை - சுண்ணாம்பு வைத்த வெற்றிலை; தலைத்துகில் - தலைப்பாகை, முக்காடு: கஞ்சத்து இலக்குமி - தாமரையில் உறையும் திருமகள். (26) இழிந்தோரால் இடர் எய்தும் எனல் 27. வன்னெருஞ்சி முட்கயரும் வாரணமும், பாம்பினிடர் துன்னு கதிர்களும், பஞ் சுப்பொதிக்குப் - பின்னிடுங்கூர்ங் கத்தியும், போல் மிக்கோர் கயவரால் தீங்கடைவர் சத்திதரு சண்முகநா தா. (அ - ள்) வன்நெருஞ்சிமுட்கு - யானை நெருஞ்சி முள்ளுக்கு; அயரும் - தளரும்; வாரணம் - யானை; கதிர்கள் - கதிரோனும் திங்களும்; பாம்பின் இடர் - இராகு கேது கௌவுதல் என்னும் வழக்கு; சத்தி - பார்வதி. (27) இவரால் தீங்குறும் எனல் 28. தந்தைதாய் சொற்கேளா தானும், கொடுப்பார்முன் வந்துகெடுப் பானும், வெகு வாக்கடன்கொள் - தந்தையும், எங்கும்அறம் செய்தற் கிடர்செய்வோ ருங், கடுஞ்சொல் மங்கையும், கோட் சொல்ப வரும். (அ - ள்) கொடுப்பார்முன் வந்து கெடுப்பான் - கொடை புரிபவர்முன்னே வந்து கொடாமல் இருக்கத் தடுப்பவன்; வெகுவா - மிகுதியாக. (28) 29. தமையனைமன் றிற்கேற்றும் தம்பியும், அத் தம்பிக் கமையவஞ்சம் செய்யும் அவனும், - கமையரசு மெச்சொருவ னைக்குற்றம் விண்டுகெடுப் பானும், அட்ட மச்சனியன் றோவேல வா! (அ - ள்) மன்று - ஊர்க் கூட்டம், நீதி மன்றம்; அமைய - பொருந்த; அவன் - தமையன்; கமை - பொறுமை; விண்டு - கூறி; அட்டமச் சனி - எட்டாம் இடத்துச் ச்னி (29) பின்னுறும் ஆற்றல் 30. வலிமை யுடையார்பின் வாங்கினுநம் பொண்ணா புலிபதுங்க லுந், தகர்ப்பின் போக்கும் - சிலைவளையும் நாகம்சாய்ந் தாடலுங், கை நாகம் துயிலலும்பின் ஆகும்வினைக் கன்றோவே லா! (அ - ள்) நம்பொண்ணா - நம்புவதற்கு ஆகாது; தகர் - செம்மறிக்கடா; சிலைவளைவும் - வில்வளைதலும்; கைநாகம் - யானை; பின் ஆகும் வினை - பின்னே தான் செய்யவிருக்கும் தாக்குதலுக்கு முன்னேற்பாடு. (30) மானம் 31. தன்னுயிர்போங் காறுமற்றோர் தன்தனந்தீண் டக்கொடாள் மின்னாள், நகங்கொடா வெல்வேங்கை, - துன்னுமயிர் ஈயாது மான், மற் றெவர்க்கும்வென்கொ டான்வீரன் காயாமே னிக்குமரு கா! (அ - ள்) போங்காறும் - போகும்வரை; மின்னாள் - மின் போன்ற கற்புடைய மகள்; துன்னுமயிர் - செறிந்த மயிர்; வென்கொடான் - புறமுதுகுதாரான்; காயாமேனிக்கு - காயா மேனிவண்ணன் ஆகிய திருமாலுக்கு. (31) 32. மானமுள்ளா னுங்கவரி மானும் குறைவுவரில் தானே உயிர்விடுவர் தாரணியில் - ஈனமுற்ற ஆடு செவிமயிர றுத்துடலைச் சுட்டவன்பின் ஓடிவரும் வேலா! உவந்து. (அ - ள்) தாரணியில் - உலகில்; ஈனமுற்ற - இழிவு கொண்ட; மயிரறுத்துச் சுடுதல் - ஆட்டின் மயிரை வெட்டுதலும், சூடுபோடுதலும் ஆகியன ஆயர் செய்யும் செயல்கள் (32) கொடுங்கோன்மை 33. சொற்குற்றம் பாராட்டு மன்னர்துணை யாவாழ்தல், மற்புலிவா யைச்சுவைக்கும் மான்கன்றும், - புற்றரவின் பைவாழ் எலியையும்ஒப் பாமன்றோ, வான்பிடிகூர் மைவாய்கண் வள்ளிகண வா! (அ - ள்) மற்புலி - போராடும் புலி; பை வாழ் - படத்தில் பொருந்திய; வான்பிடிகூர் - தேயானையொடு பொருந்திய; மை வாய் கண் - கருமை வாய்ந்த கண். (33) ஆன்றோர் இயல்பு 34. சந்தனஞ்சார் தாருவுக்குத் தன்மணமும், மேருவின்பால் வந்தகொடிக் கந்நிறமும் வாய்த்தாங்கு - முந்துபெரி யோருடனே சேர்ந்தசிறி யோர்க்குமவர் நற்குணமே சேருமென்பர் தோகையர சே! (அ - ள்) சந்தனஞ்சார் தாருவுக்கு - சந்தனமரத்தைத் தழுவிய மரத்திற்கு; கொடி - காகம்; அந்நிறம் - பொன் நிறம்; வாய்த்தாங்கு - வாய்த்தது போல; தோகை - மயில். (34) 35. சீதமதி யுட்களங்கம் தீர்க்கஅறி யாதுலகின் மோதிருளை நீக்க முயல்வதுபோல் - கோதகன்ற நெஞ்சினர்தம் துன்பம் நினையார், பிறர்துன்பாம் பஞ்சழல்ஒப் பார், குகஅப் பா! (அ - ள்) சீதமதி - குளிர்ந்த நிலவு; உட்களங்கம் - தன்னிடத்துள்ள கறை; மோது இருள் - கப்பிய இருள்; கோதுஅகன்ற - குற்றமற்ற; துன்பாம் பஞ்சு அழல் ஒப்பார் - துன்பமாகிய பஞ்சுக்குத் தீயை ஒப்பாவார். (35) 36. ஏற்றஅடி மேனிபடா தேந்துங்கை போற்பெரியோர் ஆற்றப் பிறர்துன் பகற்றுவார்; - நாற்றிகையிற் சேர்ந்து முனம்பிறந்த சிற்றூரும் எத்தொகைத்தோ? சார்ந்தேன் அருள்குகநா தா! (அ - ள்) மேனி - உடல்; ஆற்ற - மிக; நாற்றிகை - நாற்றிசை; முனம் - முன்னே; எத்தொகைத்தோ - எவ்வளவினதோ; நான் பிறந்த சிற்றூர்எத்தொகைத்தோ என்றது முன்னே எத்தனை பிறவி எடுத்தேனோ என்பது குறித்தது; பிறவித் துன்பத்தை அகற்றுவாயாக என்பது கருத்து. (36) 37. வேரறத்துண் டித்துநிலம் வீட்டும்வரை நீழல்தரும் தாருவைப்போல் சான்றோர் தமக்கொருவன் - நேரியற்றும் தீங்கெனினும் தாம்நலமே செய்வர்கந்தா! நின்னன்பு நீங்குநர்க்கும் சார்பன்றோ நீ. (அ - ள்) நிலம் வீட்டும் வரை - நிலத்துப்பட வெட்டும் வரை; தாரு - மரம்; நேர் இயற்றும் தீங்கு - நேரே நின்று செய்யும் தீமை; சார்பு - துணை. (37) தருணத்திற்கு உதவாமை 38. அன்பின்மனை வேசையுற(வு) அன்னியர்பால் வைத்தபொருள் தன்பிறவி யில்லாச் சகோதரமுன் - பின்பறியார் தன்னைப் பெறாத்தந்தை தாய்தான் பெறாப்பிள்ளை கன்மனத்து வஞ்சர்சிநே கம். (அ - ள்)அன்பின் மனை - அன்பு இல்லாத மனைவி; தன் பிறவி - தன் உடன்பிறப்பு; தன்னைப் பெறாத் தந்தை - சிறிய தந்தை; பெரிய தந்தை; வளர்ப்புத் தந்தை முதலியோர்; தான் பெறாப் பிள்ளை- அயலாட்டி பெற்ற பிள்ளை. (38) 39. கல்லாமல் ஏட்டில் எழுதிவைத்த கல்வியிவை எல்லாம் தருணத்திற்(கு) ஏலாவே - வில்லாரும் வேலா! நினைக் கருதா வீணாள்நிற் போற்றியநாள் போலாமோ காலன்வரும் போது? (அ - ள்) தருணத்திற்கு ஏலாவே - காலத்திற்கு உதவா; வில் ஆரும் வேலா - ஒளிபொருந்திய வேற்படையுடைய முருகனே; காலன் - கூற்றுவன். (39) பயனின்மை 40. நாணற்பூ, நாயின்பால், நற்குணமில் லாள்வடிவு, வீணர்க்குச் செய்தநன்றி, வேசையர்க்குப் - பேணிக் கொடுத்த பொருள்,அவைக்குக் *கோழைகற்ற கல்வி, மடுத்துக்கான் பெய்த மழை. (அ - ள்) வடிவு - அழகு; அவைக்குக் கோழை - கற்றோர் கூடிய அவைக்கு அஞ்சுவோன்; மடுத்து - நிறைய; கான் - காடு (40) 41. காட்டார் நிலாப்பேடி கைவாள்மின் சித்திரத்தில் தீட்டாடை, பேய்காத்த செம்பொனற்பர் - மாட்டிலதி காரமிவை ஈயாக் கயவர்பெரு வாழ்க்கைக்கு நேரலவோ வேலிறைவ னே (அ - ள்) காட்டார் நிலா - காட்டில் பொழிந்த நிலவொளி; மின் - ஒளியுடைய; நேர் - ஒப்பானவை. (41) பொதுமை 42. வாவிநீர், தென்றல், மதியிரவி, பெய்யுமழை, மேவுநீர்ச் சாலை, விவேகிநிதி, - யாவருஞ்செல் சந்தி, பழுத்த மரம், தரம்பொதுவாம் கந்த! நின்தாள் சிந்திப் பவர்க்குரிய தே. (அ - ள்) வாவிநீர் - குளத்து நீர்; மதிஇரவி - திங்களும் ஞாயிறும்; மேவும் - பொருந்திய; நீர்ச்சாலை - தண்ணிர்ப்பந்தல்; சந்தி - முச்சந்தி, நாற்சந்தி; சிந்திப்பவர்க்கு - நினைந்து வழிபடுபவர்க்கு. (42) இதனால் இவர் பயனடையார் எனல் 43. பேடியர்மேல் ஆசைகொள்ளும் பேதையரும் கானலைக்கண்(டு) ஒடியமா னுந்தாழை ஓண்மலரை - நாடுசுரும் புங், கொம்புத் தேனைவிரும் பும்பங்கும், வஞ்சர்சொல்லை அங்குநம்பும் பேதை யரும். (அ - ள்) கானல்- கானல் நீர்; ஓண்மலர் - ஒளியுடைய மலர்; சுரும்பு - வண்டு; பங்கும் - முடமும். (43) 44. ஓர்ந்துபுல்லர்ப் பாடுபுல வோரும், இலவமரம் சார்ந்தகிளி யும், பயனைச் சார்வதுண்டேல் - தேர்ந்தவருக்(கு) உன்னையன்றி வேறுதெய்வம் உண்டென்று நம்புவரும் பன்னுகதி சேர்வர்கடம் பா! (அ - ள்) ஓர்ந்து - ஆராய்ந்து; புல்லர் - கீழ்மக்கள்; பன்னுகதி - சொல்லும் நிலையை; கடம்பா - முருகா. (44) வருத்தீனும் குணம் குன்றாமை 45. கன்னலும் பாலும் கனகமும் சந்தனமும் என்னகண்டித் தாலும் இயல்பகலா - அன்னவைபோல் வேலவ! சான் றோரை மிகவருத்தி னும்தமது சீலநலங் குன்றிவிடா தே. (அ - ள்) கன்னல் - கரும்பு; கனகம்- பொன்; கண்டித்தாலும்-துன்புறுத்தினாலும்; சீல நலம் - பண்புநலம். (45) தருணத்திற்கு உதவுவன 46. மன்னர்பழக் கம், பக்கு வத்திற் படித்தவித்தை, பின்னும்பருவத்திற் பெற்றபிள்ளை, - துன்படையும் நாளொருவற்(கு) ஆற்றுதவி நான்கும் குகா! தருண வேளைக் குதவுமென்ப வே. (அ - ள்) பழக்கம் - நட்பு; பக்குவத்தில் - காலத்தில்; பின்னும் - மேலும்; தருணவேளை - உரியவேளை. (46) மீளாமை 47. வெவ்வரவின் வாய்த்தேரை, வேந்தர் கவர்ந்த பொருள், கௌவுகரி வாய்க்கரும்பு, காலனார் - வௌவுமுயிர், மேவி யணைகடந்த வெள்ளமல்குல் விற்கும்வஞ்சப் பூவையருக் கீந்த பொருள். (அ - ள்) வெவ்வரவு - கொடிய பாம்பு; தேரை - தவளை; கரி - யானை; வௌவும் - கவரும்; அல்குல் விற்கும் வஞ்சப் பூவையர் - பொதுமகளிர். (47) 48. ஒருங்கழலின் வாய்க்கவிழ்த்த நெய்யும், உலைவாய் நெருங்கும் இரும்புண்ட நீரும், - திரும்பிலும்உன் செந்தாளில் வைத்திடும்என் சிந்தை திரும்பாதே கந்தா! கடம்பா! கு கா! (அ - ள்) அழலின் வாய் (தீயில்) ஒருங்கு கவிழ்த்த நெய் எனக் கூட்டுக; உலைவாய் - கொல்லர் உலைக்களத்தில்; திரும்பிலும் - திரும்பினாலும்; செந்தான் - செவ்விய திருவடி; சிந்தை - மனம். (48) குணத்தால் உயர்வு 49. உன்னடியார் தாழ்குலத்தா ரேனுமுயர்ந் தோராவர், மின்னுமுத் துக்கவரி, வெண்பட்டுத், - துன்னுமலர்ப் பங்கயம், கோ ரோசனை, ச பாது, புழுகிவைகள் எங்குப் பிறந்தாலும் என்? (அ - ள்) துன்னும் - மணமும் அழகும் பொருந்திய; பங்கயம் - தாமரை; சபாது - சவ்வாது; புழுகு - புனுகு. (49) 50. உருவாலொன் றாயினும்நல் லோர்நமக்குப் பொல்லோர் சரியாவ ரோகடப்பந் தாரா! - ஒருபெயர்கொள் எப்பெரிய தேவருநிற்(கு) எத்திறத்தும் ஒப்பாரோ? உப்புக்கற் பூரமொக்கு மோ? (அ-ள்) கடப்பந்தாரா - கடம்பு மாலையணிந்த முருகனே; தேவரும் - கடவுளும்; எத்திறத்தும் ஒப்பாரோ-எவ்வகையாலும் ஒப்பாவாரோ? கற்பூரம் - சூடன். (50) நோயின்மை 51. பசியின்றி யுண்ணார், பழங்கறியோர் நாளும் பொசியார், தன்மூத்தாள் புணர்தற்(கு) - இசையார், உருக்காநெய் காச்சாப்பால் உண்ணார், பெருக்கா சுருக்காமோர் நீர்பருகா தோர். (அ - ள்) பொசியார் - உண்ணார்; பெருக்காச் சுருக்கா மோர்நீர் என்பதை பெருக்கா மோர், சுருக்காநீர் எனக் கூட்டுக. நீர்விட்டுப் பெருக்காத மோர், காய்ச்சி வற்ற வைக்காத நீர் என்பது பொருள். (51) 52. உண்டபின் நீருண்பார், உலாவி மலசலத்தைக் கொண்டடக்கார், தம்பெயரைக் கூறிடினும் - பண்டுதொடர் எவ்விதநோ யும்புறம்போம் என்பார், எந் தாய்வள்ளி செவ்விதழ்த்தேன் உண்டஅர சே! (அ - ள்) தம்பெயரைக் கூறிடினும் - மேற்கண்டவாறு நடப்பவர்கள் பெயரைக் கூறினாலும்; பண்டுதொடர் - பழமையாகத் தொடர்ந்து; எந்தாய் - எம் தாய் ஆகிய. (52) வியாதிக்கு ஏது 53. தூங்காமை, நாடோறும் தோய்தலுண்ட பின்மூழ்கல், நீங்கா விசாரம், நெடுங்காற்றோ(டு) - ஓங்கும் இள வெய்யில் பனிவிரும்பல், மென்கனிமிக் குண்ணல், முரு கையவியா திக்குவழி யாம். (அ - ள்) நாடோறும் - நாள்தோறும்; தோய்தல் - கூடுதல்; நீங்காவிசாரம் - தீராக்கவலை; மென்கனி - மிகக் கனிந்த கனி (53) இறந்தும் இறவார் 54. ஓயாமல் ஈவோர், உயர்கவிஞர், நீதிமன்னர், மாயாத வீரர், கவி மாலைபெற்றோர், - தூயமகப் பெற்றோர் நல் வாய்மை பிறழார், உயிர்க்குறுகண் உற்றோர்க் குதவிபுரி வோர். (அ - ள்) மாயாத வீரர் - அழியாத வீரர்; உயிர்க்கு உறுகண் உற்றோர்க்கு - உயிர்க்குத் துன்பம் அடைந்தோர்க்கு (54) 55. சோலை, அன்ன சாலை, மடம், தூயநதி, வாவி, பிர மாலயம், தே வாலயம், உண் டாக்குமிவர் - ஞாலத்(து) இறந்தும்இற வாரே குகேசநின்தாட் கன்பர் மறந்தும் பிறவா தவர். (அ - ள்) வாவி - குளம்; பிரமாலயம் - ஓதும் சாலைகள்; தேவாலயம் - திருக்கோயில்கள்; ஞாலத்து - உலகில்; குகேச - குக + ஈச; குகனாம் இறைவனே. தாட்கு - திருவடிகளுக்கு; மறந்தும் பிறவாதவர் - மறந்தும் கூட பிறவித் துன்பத்திற்கு ஆட்படாதவர். (55) இருந்தும் இறந்தவர் 56. வித்தை நயமறியார்; வேட்டகத்துண் பார்; என்றும் சத்துருவைச் சேவிப்பார்; தன்மனைக்கு - மெத்தமனம் அஞ்சிவிருந் துக்கொளிப்பார்; அன்னவளை முன்னிட்டுத் தஞ்சம் எனவாழ்ந் தவர். (அ - ள்) வேட்டகத்து உண்பார் - திருமணம் செய்த இல்லில் உண்பவர்; சத்துருவைச் சேவிப்பார் - பகைவரைப் பணிந்து கடமை செய்பவர்; மெத்த - மிக; விருந்துக்கு ஒளிப்பார் - விருந்தினரைக் கண்டு மறைவார்; அன்னவள் - அஞ்சத்தக்கமனையாள்; தஞ்சம் - அடைக்கலம். (56) 57. தீரா வறுமைபிணி தீராக் கவலையுடை யாரார் அவருமுரு கையநின்சீர் - ஓரா(து) இருந்தவரும் மெய்யில் இலங்கும் உயிரோ(டு) இருந்தும் இறந்தார்க ளே. (அ - ள்) தீராவறுமை பிணி - தீரா என்பதை வறுமைக்கும் பிணிக்கும் கூட்டுக. கவலையுடையார் ஆர் அவரும் எனப்பிரிக்க. நின் சீர் ஓராது - நின்சிறப்பு உணராது. மெய்யில் - உடலில்; இலங்கும் - விளங்கும். (57) ஒன்றோடு ஒன்று கூடாமை 58. ஆடவரும் தாசியரும், ஆரணரும், வாரணமும், மேடமும், நாயும், ஆயுள் வேதியரும் - கூடி யிருத்தல் அரிதாகும்; என்மனத்தில் உன்தாள் பொருத்திஅருள் செய்குக! இப் போது. (அ - ள்) ஆடவரும் தாசியர் - நடனத்திற்கு வரும் தாசிப் பெண்கள்; ஆரணர் - வேதியர் (வேதம் ஓதுபவர்;) வாரணம் - யானை; மேடம் - ஆடு; ஆயுள் வேதியர் - மருத்துவர். தாசியர் முதலியோர் தங்களுக்குள் ஒன்றுகூடி இரார். (58) இவர்க்கு இவர் துரும்பு எனல் 59. ஈவார்க்குப் பொன்; துறவிக் கேந்தல்; பெரி யோர்க் கற்பர்; ஆவார் துணைவீரர்க்(கு) ஆஞ்சேனை; - பாவாய் கவிக்குக் கவிதுரும்புன் கண்ணருள்பெற் றோர்க்குற் பவிக்கும்வினை போக்கல்துரும் பாம். (அ - ள்) ஏந்தல் - அரசன்; பெரியோர்க்கு அற்பர்; ஆம் சேனை - எதிர்த்துவரும் படை; பாவாய்கவிக்கு - பாடும் திறம் வாய்ந்த கவிஞனுக்கு; கவி - கவி இயற்றுதல்; உன் கண்ணருள் - முருகா உன் திருவருள்; உற்பவிக்கும் வினை - பிறக்கும் விதி. (59) 60. அரசன், ஆ சான், தமையன், அம்மான் இவரை மருவுமின்னார் தாயாவர் அன்றோ - மருவுலவு மாமரைமின் னார்மருமம் மால்மருக! காமருவு காமரைவென் றான்அருள்கு கா! (அ - ள்) மருவு மின்னார் - மணங்கொண்ட பெண்டிர்; மருவு உலவு - மணம் கமழும்; மாமரை மின்னார் மரும்அம்மால் - சிறந்த தாமரையில் உறையும் திருமகளாரைத்தழுவும் அழகிய திருமால்; மருக - மருமகனே; காமருவு - சோலையில் உறையும். காமரை வென்றான் - காமன் ஆகிய மன்மதனை வென்ற சிவபெருமான். (60) வலிதிற் சேறல் 61. தந்தைதாய் முன்னோன் தரைவேந்தர் மாபெரியோர் சிந்தைக் கிசைந்த சிநேகிதரும் - வந்தழைக்க வில்லையெனி னும்விரை வில்வலு விற்செல்லல் நல்லவையா குங்குக! இந் நாள். (அ - ள்) முன்னோன் - மூத்தோன், தமையன்; மாபெரியோர் - மிகப் பெரியோர்; சிந்தைக்கு இசைந்த சிநேகிதர் - மனம் பொருந்திய நண்பர்; விரைவில் வலுவில் செல்லல் - விரைவில் செல்லுதலும், வலுவில் (தாமாகச்) செல்லுதலும்; இந் நாள் - இக் கால நிலையில். (61) பிதா ஆவர் 62. மன்னவன், தன்தமையன், மாமன், குரு, வளர்த்தோன், பன்னுகலி தீர்த்தோன், பயம் தீர்த்தோன், - துன்னுகலை தந்தான், இவ் வெண்மரும்பி தாவாகும் எற்கினிய கந்தா! நீ யேதந்தை காண். (அ - ள்) பன்னுகலி - சொல்லாதன வெல்லாம் சொல்ல வைக்கும் வறுமை; துன்னு கலை தந்தான் - சிறந்த கலைகளைக் கற்பித்தவன்; எற்கு - எனக்கு கந்தா நீயே எற்கு இனிய தந்தை காண் என இயைக்க. (62) இதனை இதனால் அறிதல் 63. வீரன் சமரத்தில்; வித்துவான் நற்சபையில்; தாரம் வறுமையில்; நோய் தாதுவில், நல் - லோரல்லோர் தந்தமக வாலறிவார்; தம்பத்தி யால்அடியார் கந்த! உனைஅறிவார் காண். (அ - ள்) சமரம் - போர்; தாரம் - மனையாள்; தாதுவில் - நாடியில்; தந்தம் மகவால் - தம்தம் மக்களால்; தம் பத்தியால் - தம்முடைய பத்தியினால். (63) கண் இயல்பு 64. ஆர்க்கும் இரண்டுகண்; கற் றாய்வோர்க்கு மூன்றுகண்; திண் பார்க்குள்ஈ வோர்க்கெழுகண்; பற்றறுமே - லோர்க்கொருகண் தந்தாய் என அடியார்த் தாங்கிமலர் ஆறிருகண் கந்தா! எற் குன்னருளிற் கண். (அ - ள்) ஆர்க்கும் - யார்க்கும்; கற்று ஆய்வோர்க்கு- அறிஞருக்கு; திண்பார்க்குள் - வலிய உலகினுள்; எழுகண் - ஏழுகண்; தந்தாய் (தம்தாய்) என - தம் தாய் போல; ஆறிருகண் - பன்னிருகண். மூன்றுகண் - இரண்டு கண்களுடன் ஞானக்கண் ஒன்று; ஏழுகண் - இரண்டு கண்களுடன் ஈயும் கையின் நகக் கண்கள் ஐந்து; ஒருகண் - மேலே பார்க்கும் கண். உன் அருளிற் கண் - உன் அருள்பெறுதலே நோக்கு. (64) இதன்முன் இஃது இன்றெனல் 65. தீமுன் குளிர்; கதிர்முன் சேரும் இருள்பனி;நல் வாய்மைமுன்னல் லாமை; தரு மத்தின்முனே - தீமைதரு பாவம்; பொறுமைமுன்கோ பந்தரிக்கு மேனுநின்முன் ஆவர்வினை நிற்ப(து) அரிது. (அ - ள்) கதிர் முன்னே இருளும் பனியும் எனக்கொள்க, வாய்மை முன் அல்லாமை அல்லாமை - வாய்மை அல்லாமை; பொய்மை; முனே - முன்னே; தரிக்குமேனும் - தங்குமேனும்; நின்முன் ஆவர் வினை- நின் முன்னிலையை அடைந்தோர் வினை நின் என்பது முருகா என்னும் தோன்றா விளியைத் தழுவி நின்றது. (65) இவர்க்கு இவர் தெய்வம் எனல் 66. மேதினிக்கு மன்னவர்;கா மிக்குமின்னார்; தங்கணவர் மாதருக்கு; நீங்கா வறுமையர்க்குத்- தாதாதன் மானிக் கது; வேசை மாதர்க்குப் பொய்;நீதி மானுக் கழியாவாய் மை. (அ - ள்) மேதினிக்கு - உலகுக்கு; காமிக்கு - காமுகனுக்கு; மின்னார் - பெண்டிர்; தாதா - வள்ளல்; தன்மானிக்கு அது - தன்மானம் உடையானுக்குத் தன்மானமே; நீதிமானுக்கு அழியா வாய்மை. (66) 67. சீடருக்கா சான்; உதவாச் சிந்தையுலோ பிக்குநிதி நாடுதெய்வம் என்பர்; குக நாத; என்றும் - பீடுபெறும் எத்தேவ ருக்குநீயே தெய்வம்என் பர்பத்தி வித்தே கருணைவிளை வே. (அ - ள்) உலோபிக்கு - கருமிக்கு; நிதிநாடு தெய்வம் - செல்வமே விரும்பும் தெய்வம்; பீடு - பெருமை; பத்தி வித்தே - பத்திக்கு வித்து ஆனவனே; கருணை விளைவே - அருளின் விளைவானவனே. (67) இவர் பதல் எனல் 68. தாசி சதமென்பான், தற்புகழ்வான், தன்மனைவி மாசுரைப் பான், பயனில் வார்த்தையவை - பேசுவான், பொய்க்கரி சொல்வான், பெண் புத்திகேட் பான், முருகா! மக்கட் பதரிவரா மால். (அ - ள்) சதம் - நிலைபேறு; மனைவி மாசு - மனையாளின் குற்றத்தை; பொய்க்கரி - பொய்ச்சாட்சி; மக்கட்பதர் - மக்களுள் பதர். ஆல் - அசைநிலை (68) இவர்க்கு இஃது இன்றெனல் 69. ஆசைக்கு வெட்கம்; வீ ரற்குப் பயம்; வஞ்ச வேசைக்குச் சற்றும் விசுவாசம்; - வாசிக்கும் நற்குணம்இல் லாற்கழகு; ஞானிக்குச் சாதி; பொய் யற்குக் கரி; மூர்க்கற் கன்பு. (அ - ள்) சற்றும் - சிறிதும்; விசுவாசம் - பற்று, அன்பு; வாசிக்கும் நற்குணம் இல்லாற்கு - நாள்தோறும் கற்கும் நல்லியல்பு இல்லாதவனுக்கு; கரி - உண்மைச் சான்று; மூர்க்கன் - முரடன். (69) 70. திருடருக்குற் றார்;விரோ திக்குச் சிநேகர்; வருகா மிகட்கு வரம்பு; - பெருங்கவிக்கூர் வேற்றுமைசற் றேனுமில்லை வேலா! நின் தாள்மலரைப் போற்றுமவர்க் கில்லையொப் பு (அ - ள்) உற்றார் - உறவினர்; வரு காமிகட்கு - பெருகி வரும் காமுகர்க்கு; வரம்பு - அவரிவர் என்னும் எல்லை; பெருங் கவிக்கு ஊர் - பெருமைமிக்க கவிஞர்க்கு உரிய ஊர், தாள் மலர் - அடிகளாகிய தாமரைமலர். (70) இதனில் இது நன்று எனல் 71. செல்வமிருந் தும்பிணியால் தேங்கியுயிர் வாழ்வதிலும் நல்லதுநோய் இன்றிஐயம் நாடியுணல் - பல்காற் புனைநினது வேடம்பொய் பூண்டவரின் வேலா! நினைநினைப்போர் மேலென்ப னே. (அ - ள்) நோய் இன்றி ஐயம் நாடி உணல் - நோய் இல்லாதவராய்ப் பிச்சை தேடிப் பெற்று உண்பது; நினது வேடம் - நின் அடியார் எனத் தோற்றும் வண்ணம் உடுக்கும் உடை, பூசும்பூச்சு, செய்யும் கோலம் முதலிய வேடங்கள். வேடம் பொய் என்பதைப் பொய்வேடம் என மாறிக் கூட்டுக. (71) 72. மூடர்நே யத்திற் பகைநன்று; மொய்நோயால் வாடுவதில் சாதல் நன்று; வாய்த்திட்டால் - சாடுவதில் கொல்லல்நன்று; நின்புகழைக் கூறார்வாய் பேசாமை நல்லதுவாம்; பன்னிருகண் ணா! (அ - ள்) நேயத்தில் - நட்பில்; மொய்நோய் - பெருகிய பல நோய்களால்; வாய்த் திட்டால் சாடுவதில் - வாயாற் கூறும் வசையால் துன்புறுத்தலினும்; பன்னிரு கண்ணா - முருகா. (72) இதனால் இதற்குப் பயனின்று எனல் 73. பொருளைப் பொசியாது போந்தொருவற் கீயா(து) இருளறையில் வைப்போர்க் கிணையா; - ஒருகுயிலின் m©l¤jhš, njdhš., சோ ரத்தின்மக வாற்பயன்சற் றுண்டுகொடி ஈமாந் தருக்கு. (அ - ள்) பொசியாது - உண்ணாது; போந்து ஒருவற்கு - போய் ஒருவற்கு; இணையா - இணையாகமாட்டா; குயிலின் அண்டம் - குயில் முட்டை; சோரத்தின் மகவு - திருட்டுத் தனத்தால் பிறந்த பிள்ளை; கொடி ஈ மாந்தர் என்பவற்றை முறையே குயிலின் அண்டம், தேன், சோரத்தின் மகவு என்பவற்றோடும் இணைக்க. கொடி - காகம். குயிலின் முட்டையால் காகத்திற்கும், தேனால் ஈக்கும், சோரமகவால் மாந்தருக்கும் சற்று பயன் உண்டு. பொருளை இருளறையில் வைப்போர்க்குச் சிறிதும் பயன் இல்லை என்பது. இப் பாடலில் விளி இல்லை. (73) இயற்கைத் தன்மை 74. புல்லறிவா ளர்க்குநல்ல புத்திசொல்லிற் கேட்பாரோ? கல்லைவிடு மோநாய்பால் காட்டிடினும்? - வல்லமையொன்(று) இல்லாத வீணர்வாய் எந்தாய்! குமர நின்சீர் சொல்ல அறியுமோ சொல்? (அ - ள்) எந்தாய் - எம் தந்தையே; கல்லை - (நாய்க்கு விருப்பமான) எச்சில் இலை; பால் காட்டிடினும் - பாலையோ பாற் சோற்றையோ கண்முன் காட்டி வைத்தால்கூட, வீணர் வாய் - வீணரிடத்து; நின்சீர் - நின் சிறப்பியல்பு தெய்வத்தன்மை. (74) செய்கையால் வரும் இழிவு 75. பாவத்திற் கஞ்சான் பசாசு; பிடி வாதிமந்தி; மாவவையிற் றூங்கிஎரு மைக்கடா; - மேவும்எளி யோரையெதிர்ப் பான்கடிநாய்; ஓவியமன் றோகதிர்வேல் வீர! நினைப்பணியான் மெய். (அ - ள்) பிடிவாதி - பிடிவாதம் கொண்டவன்; மா அவையில் - பேரவையில்; மேவும் - (தன்னை) அடைந்த; நினைப்பணியான் மெய் (உடல்) ஓவியம் அன்றோ என இணைக்க; உயிருடைய உடலன்று என்பது. (75) பதார்த்த இயல்பு 76. அத்திக்காய் கோவைக்காய் ஐவிரலிக் காய்வெள்ளைக் கத்தரிக் காய்தேற்றாங் காய்சோற்றின் - மொய்த்தபற்றும் என்றுமுண்பார்க் கின்றுதெய்வ பத்தியெந்தாய்! நின்னையன்றி இன்றுமற்றோர் தெய்வபத்தி எற்கு. (அ - ள்) ஐவிரலிக்காய் - கோவைக்காயில் ஒருவகை; தேற்றாங்காய் - கலங்கல் நீரைத் தெளிய வைப்பதொரு கொட்டையுடைய காய்; மொய்த்த பற்று - மிகுந்த பற்று; எற்கு - எனக்கு; இன்று - இல்லை; பதார்த்த இயல்பு - பொருள்களின் தன்மை. (76) சூழ்ச்சிக்கு அமையார் 77. துறந்தோர், பிணியாளர், தோகையர், வன்னெஞ்சர், புறங்கூறு வோர், சிறியோர், புன்மை - சிறந்தகல்லார், வஞ்சரடங் காரி வரைச்சபை வைத் துப்பேசார் கஞ்சனகங் காய்ந்தசண்மு கா. (அ - ள்) தோகையர் - அறிவறியாப் பெண்டிர்; புன்மை சிறந்த - புல்லிய தன்மையால் உயர்ந்த; வஞ்சர் அடங்கார் இவரை; கஞ்சனகம் காய்ந்த - தாமரையில் இருக்கும் நான்முகன் அகந்தையை ஒழித்த. (கஞ்சன் + அகம் = கஞ்சனகம்); சூழ்ச்சி - கூடி ஆராய்தல்; அமையார் - பொருந்தாதவர். (77) கடன்கொடாமை 78. குருவிற்கும் துட்டர்க்கும் கோபிக்கும் பூவாள் அரசர்க்கும் பொய்கூறு வார்க்கும் - பெரியோர்க்கும் என்றும் கடன்கொடுத்து வாங்கல் இயல்பன்றே, மன்றற் கடப்பமரு மா! (அ - ள்) கோபி - கோபம் மிக்கவன்; பூவாள் அரசர் - புவியை ஆளும் வேந்தர்; இயல்பு - முறைமை; மன்றல் - மணம்; கடப்ப மருமா - கடம்பு மாலையணிந்த மார்பையுடைய முருகா; மருமம் - மார்பு. (78) அசுத்தம் இன்மை 79. வில்வம், துளசி, மலர், வெண்பட்டுக், கோடிமடி, நல்ல கனி, காய், நவபாண்டம், - செல்பாதக் காப்பு, நவ தானியம், பொன், கல், மணிகீ ழோர்தரினும் ஏற்பதியல் பாமுருக னே! (அ - ள்) கோடிமடி - புத்துடை; நவபாண்டம் - புதிய கலங்கள்; பாதக் காப்பு - குறடு, கட்டை, காலணி; ஏற்பது - ஏற்றுக்கொள்வது; இயல்பாம் - தக்கதாம். (79) 80. தோயும் மடவார் துவரதர பானமும் வாயும், பெரும்புனலும், பல்பறவை - வாய்பொருந்தும் தீங்கனியும் கன்றின்வாய் சேர்ந்தநறும் பாலுமக வோங்குமின்னார் கொங்கைப்பா லும். (அ - ள்) தோயும் மடவார் - தழுவும் மகளிர்; துவர் அதர பானம் - பவழம் போன்ற இதழைப் பருகுதல்; வாய் - வாய்நீர்; பெரும்புனல் - ஆற்றுநீர், குளத்துநீர் போன்ற பெரியநீர்; வாய் பொருந்தும் - கடித்த; தீங்கனி - இனியகனி; மின்னார் - மகளிர்; கொங்கை - மார்பு. (80) 81. தேனீவாய்ப் பட்ட நறுந் தேனும்எச்சில் இல்லையென்ப; ஆனதனால், உன்இருதாள் அம்புயக்கண் - கான்இசையும் வண்டுவாய்ப் பட்ட மலருமருச் சிக்குமியல் கொண்டுயர்ந்த(து) எந்தாய் குகா! (அ - ள்) தாள் அம்புயக்கண் - திருவடிகளாகிய தாமரையில், கான் இசையும் - இசைபாடும்; எந்தாய் - எம்தந்தையாகிய. (81) காட்சித் தன்மை 82. வான்காணாப் பைங்கூழ்; மதிகாணாச் செங்குமுதம்; ஆன்காணாக் கன்று; கலை யைக்காணா - மான்; கனிவு கொண்டதாய் காணாக் குழவி; பொழில்நறவு மண்டுமலர் காணாத வண்டு. (அ - ள்) வான் - மழை; பைங்கூழ் - பசுமையான பயிர்; மதி - நிலவொளி; செங்குமுதம் - செவ்வல்லி; ஆன் - பசு; கலை - ஆண்மான்; கனிவு - அன்பு; பொழில் நறவு மண்டுமலர் சோலையின்கண் தேன் நிறைந்த மலர். (82) 83. தோழரைக்கா ணாநேயர்; சோடுகா ணாப்பேடு; வாழரசு காணா மணிநகரம்; - கேள்வர்புயம் காணாமின்: ஈவோரைக் காணா மிடியன்; நின்தாள் காணார்ஒப் பாம்சண்மு கா! (அ - ள்) நேயர் - நண்பர்; சோடு - துணை; பேடு - பெண் பறவை; மணிநகர் - அழகிய நகர்; கேள்வர் புயம் - கணவர் தோள்; மின் - பெண்; மிடியன் - வறியன் (83) விலக்கத் தக்கவை 84. நாட்டுக்கா காதவனை, நாளும்அடங் காமனையை ஆட்டங்கொள் பல்லை, அரசரைச்செய் - கேட்டின்மனம் k‹Dkik¢ ir¤, J£l® thíwit., நீக்கல்நன்று மின்னும்வடி வேலா! விரைந்து. (அ - ள்) மனையை - மனைவியை; மனம் மன்னும் - மனம் பொருந்தும்; துட்டர் வாய் உறவை - தீயவருடன் பேசும் பேச்சை; வடிவேலா - கூர்மையான வேல் உடையவனே. (84) இன்றியமையாதவை 85. மாவுக்கு மாவுத்தன்; வாளுக்கு வீரன்; பல் பாவுக்கு வாணன்; பரத்தையர்க்குத் - தாவியெதிர் ஆட்டுவிப்போன்; பண்ணுக்(கு) ஆராய்வோன் வேண்டு மெற்குன் தாட்டுணைவேண் டுங்குகநா தா! (அ - ள்) மாவுக்கு - யானைக்கு; மாவுத்தன் - பாகன்; பல்பாவுக்கு - பலவகைப் பாடலும் இயற்றுதற்கு; வாணன் - பாவாணன்; ஆட்டுவிப்போன் - கூத்தன்; தாட்டுணை (தாள் + துணை) திருவடித் துணை. (85) இதற்கு இஃது இயல்பு எனல் 86. மேலோர்கைக் கொள்வர்குணம், வீணர்குற்ற மேயுரைப்பர் போலச் சுகங்கதலி போந்துண்ணும்; - சாலக் கருங்காக்கை வேம்பைக் கருதும்; அன்பர் நின்னைப் பெரும்பாலும் பேசுவர்கந் தா! (அ - ள்) போல - அதுபோல; சுகம் கதலிபோந்து உண்ணும் - கிளி வாழைப்பழம் தேடிப்போய்த் தின்னும்; சால - மிக; வேம்பு - வேப்பம்பழம். (86) கல்லார் இயல்பு 87. கற்றவர் முன் கல்லா தவர்இருந்து வாய்திறத்தல், வற்றல்நாய் வாய்திறத்தல் மானுமே - அற்றரோ மின்னஞ்சு வேல! நின்தாள் மெய்த்தொண்டர் ஊடறியா வன்னெஞ்சர் நோய்நாயா வார். (அ - ள்) வாய்திறத்தல் - பேசத் தொடங்குதல்; நாய் வாய் திறத்தல் மானும் - நாய் குரைத்தல் போலும்; அற்று அரோ - அத்தகையதே; மின் அஞ்சுவேல - மின்னலும் நாணத் தக்க ஒளியுடைய வேலனே; மெய்த்தொண்டர் - மெய்யடியார்; ஊடு - இடையே; அறியா வன்நெஞ்சர் - நின் பத்திமை அறியாத வலிய மனத்தர். (87) இன்னது இஃது எனல் 88. முன்வருந்துங் கல்வி முயன்றபின்இன் பந்தருமால்; முன்சுகமீ யுங்காமம் முற்றியபின் - துன்பாமால் வேல! நின்தாள் காண்பான், வியந்தலைந்தேன் காணிலினி மேலலைதல் நீங்கும் என. (அ - ள்) முற்றியபின் - நுகர்ந்தபின்; துன்பு - துன்பம்; காண்பான் - காண்பதற்காக; வியந்து அலைந்தேன் - விரும்பி அலைந்தேன் காணில் இனிமேல் அலைதல் நீங்கும் - நின்னைக் கண்டால் இனிமேல் வரும் பிறவித் துயர் நீங்கும்; என - என்று. (88) ஒன்றற்கு ஒன்று பகைமை 89. கல்லா தவர்க்குவரக் கற்றவர்சொல்; நற்றருமம் இல்லா தவர்க்கதுவே; இல்லத்திற் - சொல்லடங்காக் கன்னி; கதலிக்குக் காய்நமனாம்; கந்த! அன்பர் இன்னலுக்கு நீயே யமன். (அ - ள்) வரக்கற்றவர் - நெஞ்சில் பதியுமாறு கற்றவர்; அதுவே - தருமமே; கன்னி - பெண்; கதலி - வாழை; நமன் - இயமன்; அன்பர்இன்னலுக்கு - அடியார் துயர்க்கு; யமன் - அழிப்பவன். (89) இவர்க்கு இது நிலையாது எனல் 90. தயைபொறை இல்லான் தனம்நிலை யாது; நியமமில்லான் மேன்மை நிலையா(து) - ஐய! நின்தாள் பாடும் சரணர் பவம்நிலையா; சூல்முகில்கண் டாடுமயில் ஏறுமழ கா! (அ - ள்) தயை, பொறை - அருளும் பொறுமையும்; தனம் - செல்வம்; நியமம் - ஒழுக்கம்; ஐய - ஐயனே; சரணர் - அடியார்; பவம் - பாவம்; சூல்முகில் - கருக்கொண்ட மேகம்; மயில் ஏறும் அழகா - முருகா. (90) அஞ்சாமை 91. அச்சந்த தருபவைகண்டஞ்சல், ஒளிக் கட்கன்றி நைச்சகுருட் டுக்குளதோ; நண்ணுபழிக் - குச்சவறி வாளரஞ்ச லன்றி, யில்லார் அஞ்சுவரோ! விண்புரந்த காளகண்டர் தந்தசண்மு கா! (அ - ள்) ஒளிக்கட்கு அன்றி - ஒளியுடைய கண்ணுக்கு அல்லாமல்; நைச்ச - நைந்து (மழுங்கிப்) போன; நண்ணுபழி - சேரும்பழி; உச்ச அறிவாளர் - பேரறிவாளர்; விண்புரந்த விண்ணவரைக் காத்த; காளகண்டர் - நஞ்சமுண்ட நீலகண்டராகிய சிவபெருமான். (91) ஒப்பின்மை 92. எவ்வணியும் பூண்டவுறுப் பியாவுமஃ தில்லாக்கட்(கு) ஒவ்வுமோ? கல்வி உணர்வுடையோர்க் - கவ்வறிவில் லாரணிசீர் வாய்ந்தமன்னர் ஆயினும்நே ரோ? வுனடி யாரிணைமற் றார்முருகை யா? (அ - ள்) அஃது இல்லா - அவ்வணிகலம் அணிதல் இல்லாத; கட்கு ஒவ்வுமோ - கண்ணுக்கு ஒப்பாகுமோ? அவ்வறிவு - கல்வியறிவு; உனடியார் - உன் அடியார்; இணை - ஒப்பு. (92) தோன்றாமை 93. சீற்றஅமை யத்தொருவன் தீதில் குணமனைத்தும் தோற்றாமை போல், ஒருவன் தோம்அனைத்தும் - ஆற்றக் கெடுமால் பெருமகிழ்ச்சி கிட்டின்; நின்தாள் கிட்டில் அடுமால் அனைத்துமுத்தை யா! (அ - ள்) சீற்ற அமையத்து - கோபமுற்ற பொழுதில்; தீதில்குணம் - தீதற்ற குணம் (நற்குணம்) தோம் - குற்றம்; ஆற்ற - முழுமையாக, அறவே; கெடுமால் - கெடும்; ஆல் - அசைநிலை; அனைத்தும் அடுமால் - அனைத்து வினைகளையும் அழிக்கும்; முத்தையா - முருகா. (93) தற்கேடு 94. மண்புதைமண் டூகம்தன் வாயால்தற் கேடியற்றும் பண்பினறி வில்லான் பகர்மொழியால் - புண்படுத்தும் தன்மனத்தைக் கந்த! நின்பொற் றாளிறைஞ்சாப் பொய்வேடர் கன்மமற்றுச் சேரார் கதி (அ - ள்) மண்டூகம் - தவளை; தற்கேடு - தனக்குக்கேடு; வாயால் - வாய் ஒலியால்; பகர்மொழி - சொல்லும் சொல்; கன்மம் - வினை; கதி - நற்பேறு. (94) தத்தம் தன்மை 95. நஞ்சுடையேம் என்றொளிக்கும் நாகமதில் நீர்ப்பாம்பு சஞ்சரிக்கும் எங்கணும்அத் தன்மையில்மா - வஞ்சர்தமைத் தாமறைப்பர் தூயர் தமைமறையார் கந்த! தொண்டர் பால்மறையும் கூற்றையுமொப் பா. (அ - ள்) ஒளிக்கும் - மறைந்து வாழும்; நாகம் - நல்ல பாம்பு; அதில் - பாம்பினத்தில் ஒன்றான; எங்கணும் சஞ்சரிக்கும் - எங்கும் திரியும்; மாவஞ்சர் - பெருங்கொடியர்; தமைத்தாம் மறைப்பர் - தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; தொண்டர்பால் மறையும் - நின் அடியாரைக் கண்டு மறையும்; கூற்றையும் ஒப்பா - கூற்றுவனையும் ஒப்பாகா. (95) 96. மண்புலிகண் டம்புலிவாய் மானஞ்சு மேல்நின்தாள் கண்புலிய தூய கருத்தினரும் - எண்பெரிய வெம்பிறவிக் கஞ்சுவரால் வேலவ! மெய்த் தொண்டரையின் னம்பிறவா தாண்டசர ணா. (அ - ள்) மண்புலி - காட்டிலுள்ள புலி; அம்புலிவாய்மான் - திங்களில் அமைந்துள்ள மான்; தாள்கண் பு (ல்) லிய - திருவடியைப் பொருந்திய; தூய கருத்தினரும் - திருத்தொண்டர் களும்; எண் பெரிய - எண்ணுதற்கு மிக்க; இன்னம் பிறவாது ஆண்ட சரணா; திருவடி உடையவனே. (96) இனிதின் மகிழ்ச்சி 97. வெங்கதிரால் பொங்காது வேலை குளிர்மதியால் பொங்குதல்போல்; இன்சொல்லால் பூவினுள்ளோர்-- எங்குமகிழ் வெய்தலன்றி வெஞ்சொற்கண் டெய்தார் முருக! நின்றான் உய்தலன்றி வேறுதரு மோ? (அ - ள்) வெங்கதிர் - வெப்பமிக்க கதிரோன்; வேலை - கடல்; பூவிலுள்ளோர் - புவியில் உள்ளோர்; வெஞ்சொல் - கொடுஞ்சொல்; உய்தல் அன்றி வேறு தருமோ - கடைத்தேறுதல் அல்லாமல் வேறொன்றைத் தருமோ? தாராது. (97) பயனின்மை 98. துதியாத நாவும், தொழாமுடியும், கையும், பதியாத நெஞ்சு, முன்னைப் பாராக் - கதிர்விழியும், நின்புகழ்கே ளாச்செவியும் நின்வலம்செய் யாப்பதமும் என்பயனாம் வேலிறைவ னே. (அ - ள்) தொழாமுடி - வணங்காத் தலை; தொழாக்கை - வணங்காக்கை; தொழா என்பதை முடிக்கும் கைக்கும் கூட்டுக; கதிர்விழி - ஒளியுடைய கண்; நின்வலம் - நின்கோயிலை வலம் வருதல்; பதம் - கால்கள். (98) 99. விண்பயிர்க்குப் பெய்யாது வேலையிற்பெய் தாங்கேழை கண்பிசைந்தும் ஈயார் கயவரால் - பண்பனைத்தும் கற்றவரா னாலும்நின்பொற் கால்துதித்தல் வேண்டுமஃ(து) அற்றவர்நா வற்றவரே யாம். (அ - ள்) விண் - மழை; வேலை - கடல்; பெய்தாங்கு - பெய்தாற்போல; கண்பிசைந்தும் கண்ணைக் - கசக்கிக் கொண்டு இரந்து நின்றும்; அஃது அற்றவர் - துதித்தல் இல்லாதவர். (99) இதனால் இது பயன் எனல் 100. பெற்றாலுன் தாள்பரவும் பேறும் பெருங்கல்வி கற்றாலுன் சீர்பாடக் கற்பதுவும் - உற்றாலுன் மெய்யடியார் கூட்டத்துள் மேவலும்அன் றோமுருகா! துய்யருளங் கொண்ட துணிவு. (அ - ள்) தான் பரவும் - திருவடிகளை வணங்கும்; சீர் - சிறப்பியல்புகள்; உற்றால் - அடைந்தால்; மேவல் - அடைதல்; துய்யர் -தூய அடியார். (100) வாழி மகர வாரிநிலை சுவற வாருமயில் வலவன் வாழிசிவ ஞானமா நகரம் வாழிபணி யடியர் வாழிபத நளினம் வாழியுயர் தேவர்கோ மகளும் வேடர்குல மயிலும் வாழி பசுமயிலும் வாழிமனு நீதிநூல் பகரு நாவினரு மதுவும் வாழிபெறு பயனும் வாழியருள் வாழியே. இராமநாதபுர அரசர் பெருமைமிகு முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் இயற்றிய நீதிபோதம் அருஞ்சொற்பொருளுடன் முற்றிற்று. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் : செய்யுளெண்) அச்சந் தருபவைகண் 91 அத்திக்காய் கோவைக் 76 அரசன், ஆசான், தமையன் 60 அன்பிற்றாய் ஏவற் 16 அன்பின்மனை வேசை 38 ஆக்கை நிலையன்று 14 ஆசைக்கு வெட்கம் 69 ஆடவரும் தாசியரும் 58 ஆயமைச்சர் நற்கா 5 ஆர்க்கும் இரண்டுகண் 64 ஆர்க்கும்காட் சிக்கெளிமை 3 இல்லவைவி னாவில் 11 ஈவார்க்குப் பொன் 59 உண்டபின் நீருண்பார் 52 உண்ணப்பா (காப்) உருவாலொன் றாயினும் 50 உண்ணடியார் தாழ்குல 49 ஊமைக்குச் சொல்மதி 17 எவ்வணியும் பூண்ட 92 ஏற்றஅடி மேனிபடா 36 ஒருங்கழலீன் வாய்க்க 48 ஒற்றைஒற்றால் ஆய்தலும் 9 ஓயாமல் ஈவோர் 54 ஓர்ந்துபுல்லர்ப் பாடுபுல 44 கலையிலாக் காலத்தில் 21 கல்லா தவர்க்குவரக் 89 கல்லாமல் ஏட்டில் 39 கற்றவர்முன் கல்லா 87 கற்றூணும் ஆவண (காப்) கன்னலும் பாலும் 45 கன்னூல் வலவரிரு (காப்) காட்டார் நிலாப்பேடி 41 காலாள் இணைக்கயல் 8 குருவிற்கும் துட்டர்க்கும் 78 குற்றம் எவையும் 4 கூழுமமு தாம்பசிக்கு 20 சந்தனஞ்சார் தாருவுக்கு 34 சீடருக்கா சான் உதவா 67 சீதமதி யுட்களங்கம் 35 சீற்றஅமையத்தொருவ 93 செல்வமிருந் தும்பிணியால் 71 சொற்குற்றம் பாராட்டு 33 சோலை, அன்ன சாலை 55 தந்தைதாய் சொற் கேளா 28 தந்தைதாய் முன்னோன் 61 தமையனை மன் நிற்கேற் 29 தயைபொறை இல்லான் 90 தரக்கதள் உடுத்த (சிறப்) தன்னுயிர்போங் காறுமற் 31 தாசி சதமென்பான் 68 தானம் தவம்பூ 13 திருடருக்குற் றார்விரோ 70 தீமுன் குளிர் 65 தீரா வறுமைபீணி 57 துட்டர்நே யத்தால் 18 துதியாத நாவும் 98 துறந்தோர் பிணியாளர் 77 தூங்காமை நாடோறும் 53 தேனீவாய்ப் பட்ட 81 தேன்ஈதி என்றளி (காப்) தோயும் மடவார் 80 தோழரைக்கா ணாநேயர் 83 நஞ்சுடையேம் என்றொளி 95 நாட்டுக்கா காதவனை 84 நாணற்பூ நாயின்பால் 40 நிட்டையிலார் நீசர் 24 பசியின்றி யுண்ணார் 51 பாகசர் நட்பாளர் 6 பாவத்திற் கஞ்சான் 75 புல்லறிவா ளர்க்குநல்ல 74 பெற்றாலுன் தான்பரவும் 100 பேடியர்மேல் ஆசை 43 பொருளைப் பொசியாது 73 மகர வாரிநிலை (வாழ்த்து) மணிவிளக்கஞ் சங்கம் (காப்) மண்புதை மண்டூகம்தன் 94 மண்புலிகண் டம்புலிவாய் 96 மறையோதல் ஓதுவித்தல் 1 மன்னர்பழக் கம்பக்கு 46 மன்னவன் தன்தமையன் 62 மாவிக்கு மாவுத்தன் 85 மானமுள்ளா னுங்கவரி 32 மூடி, கவரி தோட்டி 7 முலைப்பால்தந் தீன்ற (சிறப்) முன்வருந்துங் கல்வி 88 முன்னையமூ வர்க்கும் 12 மூடர்நே யத்திற் 72 மூதறிஞர் இயற்று (சிறப்) மேதிக் கடாப், பல் 25 மேதினிக்கு மன்னவர் 66 மேலோர்கைக் கொள்வர் 86 வஞ்சனையி னாற்கூடி 19 வந்தவிருந் திற்கிடான் 15 வலிமை யுடையார்பின் 30 வன்பகலில் தோய்வாரும் 26 வன்னெருஞ்சி முட்கயரும் 27 வாய்மையறம் ஈகை 23 வாவிநீர் தென்றல் 42 வான்காணாப் பைங்கூழ் 82 விண்பயிர்க்குப் பெய்யாது 99 வித்தை நயமறியார் 56 வில்வம், துளசி, மலர் 79 வீரன் சமரத்தில் 63 வெங்கதிரால் பொங்காது 97 வெவ்வரவின் வாய்த் 47 வென்னிடாத் தானை 2 வேத முறையோதல் 10 வேந்தர் புயம்துளசி 22 வேரறத்துண் டித்துநிலம் 37 நீதி சாரம் நீதி சாரம் காப்பு பருதி மதியுலவு பார்மிசையோர்க் கெல்லாம் தருமநெறி நீதிதனைச் சாற்றக் - கருதியிடு தூங்கவெழுத் தைந்துபொருள் *சுந்தரவில் செஞ்சடையில் கங்கைசுதன் தந்திமுகன் காப்பு. (அருஞ்சொற்பொருள்) பருதி - கதிரோன்; மதி - திங்கள்; உலாவும் - விளங்கும்; பார்மிசையோர் - உலகில் உள்ளோர்; சாற்ற - கூற; துங்க எழுத்து ஐந்து - நவசிவய என்னும் சிறந்த ஐந்தெழுத்து; பொருள் - சிவபெருமான்; சுந்தர வில் செஞ்சடை- அழகிய ஒளியமைந்த சிவந்தசடை; கங்கை - கங்கையையுடைய சிவன்; சுதன் - மைந்தன்; தந்திமுகன் - யானை முகத்தைக் கொண்ட மூத்த பிள்ளையார். நூல் நூல் கூறும் பொருள் 1. அனைத்துல கெங்கும் தானாய் அமரர்கோன் ஆதி ஆகி நினைத்தவர் உளத்தில் நித்தம் நேயமார் நெடுமால் பாதம் மனத்தினில் இருத்தி முன்னம் மறைவலோர் உரைத்த நீதி இனத்தினைத் திரட்டி உள்ள சாரம்நான் இயம்ப லுற்றேன். (அ - ள்) அனைத்துலகு - எல்லா உலகும்; தானாய் - தானே ஆகி; அமரர்கோன் - இந்திரன்; ஆதி ஆகி - முதல் ஆகி; நேயமார் - அன்பால் நிறைந்த; மறைவலோர் - மறைநூல் வல்ல முனிவரர்; நீதிஇனம் - நீதிவகை; இயம்பலுற்றேன் - கூறத் தொடங்கினேன். (1) 2. நன்றுடன் தீதா னாலும் அவரவர் நயத்து தம்மால் பண்ணிய பாவம் நன்மை பலித்தவர் அனுப விப்பார்; சென்றிடு நூறு கற்பம் செல்லினும் தவிர்ந்தி டாமல் அன்றுசெய் அனுப வங்கள் அனுபவித் திடவே வேண்டும். (அ - ள்) நயந்து - விரும்பி; பண்ணிய - செய்த; கற்பம் - ஒரு பெரிய கால அளவு, அஃது ஆயிரங்கோடி; அன்றுசெய் அனுபவங்கள் - முற்பிறவியில் செய்த வினையின் பயனை. (2) 3. சீர்பெறு தன்மச் செய்கை தெரிந்ததன் வழியே சென்று பார்பெறப் புத்தி பண்ணித் தமக்கெது பலித்தி டாதவ் ஏர்பெறு கருமம் எல்லாம் யாவர்க்கும் ஆகா என்று தேர்வுற விடுத்த றத்தை ஒல்லையில் செய்வர் தாமே. (அ - ள்) சீர்பெறு தன்மச்செய்கை - சிறப்புப் பெற்ற அறச்செயல்; பார்பெறப் புத்திபண்ணி - உலகோர் கொள்ளுமாறு ஆராய்ந்து; ஏர்பெறு கருமம் - அழகுபெற்ற செயல்; தேர்வுற - தெளிவுற; ஒல்லையில் - விரைவில். (3) 4. சீருடன் வருந்தித் தேடும் திரவியம் *பிறவும் செல்லா; ஊருடன் பிறரும் காடு மட்டினில் உடன்போய் மீள்வார்; பாரினில் வாழும் நாளில் பண்ணிய பாவம் நன்மை கூருடன் போந்த ராம கணையெனக் கூடப் போமே. (அ - ள்) திரவியம் - பொருள்; செல்லா - உடன்போகா; ஊருடன் - ஊராருடன்; காடு மட்டினில் - சுடுகாடு வரையில்; கூருடன் போந்த - கூர்மையுடன் போன; கணை - அம்பு; கூடப் போமே - (பண்ணிய பாவம் நன்மை) உடன்போகும். (4) உயிர்காத்தற் பயன் 5. அந்தண ருடனே ஆவுக் காபத்து வருங்கா லத்தில் தந்தம்நல் உயிரை விட்டும் தாம்இரட் சித்தார் ஆனால் இந்தநற் சனனம் போய்ஈர் ஐம்பது பிரம யோனி வந்தைசு வரியம் பெற்று வாழ்ந்துபின் தேவர் ஆவார். (அ -ள்) அந்தணர் - அருளாளர்; ஆ - பசு; இரட்சித்தார் - காத்தார்; சனனம் - பிறவி; பிரமயோனி வந்து - பிராமணப் பிறப்பு உண்டாகி; ஐசுவரியம் - செல்வம். (5) சோறளித்தற் சிறப்பு 6. கரிபரி ஆயி ரங்கள் கனத்தகோ தானம் பூமி பரிவொடு ரசிதம் சொன்ன பாத்திரம் பண்பாம் என்றும் இருகுலம் ஒத்த கன்னி கோடிதான் ஈந்திட் டாலும் அரியவன் றவைதாம் அன்ன தானமே அதிகம் ஆகும். (அ - ள்) கரி - யானை; பரி - குதிரை; கோதானம் - பசுக்கொடை; பரிவொடு - அன்பொடு; ரசிதம் - வெள்ளி; சொன்னம் - பொன்; இருகுலம் ஒத்த - இருகுடி வழியும் பொருந்திய; அதிகம் - உயர்வு. (6) கூற்றை வெல்லும் வழி 7. செல்வமும் சடமும் தானும் திடமன்று மறலி என்றும் அல்லவே செய்வான் *என்றும் அறிந்தவர் அறிகை யாலே சொல்லலாம் சொல்கை யாலே தொடங்கிய மறலி தன்னை வெல்லவே அறங்கள் செய்து விடுவர்கள் அறிவுள் ளோரே. (அ - ள்) சடம் - உடல்; திடமன்று - உறுதியன்று; மறலி - இயமன்; அறிந்தவர் - கண்கூடாக அறிந்தவர்; விடுவார்கள் - விடுவார் (7) 8. சுயமாச்செய் தருமம் தன்னில் தோன்றிடும் இரும டங்குக்(கு) அயலார்செய் தருமம் காத்தால்; அன்றியே அவ்வ றத்தை நயமாச்சென் றபக ரித்து நத்தியே தானும் ஒன்றை வியனாச்செய் தருமம் எல்லாம் வியர்த்தமாய்ப் போகும் அன்றே. (அ - ள்) சுயமாச்செய் - தானாகச் செய்யும்; அவ்அறத்தை - அயலார் செய்யும் அறத்தை; நயமாச் சென்று - தந்திரமாகச் சென்று; அபகரித்து - கவர்ந்து; நத்தி - விரும்பி; வியனா - மிகுதியாக; வியர்த்தம் - வீண். (8) நன்மகனால் குடிவிளங்கும் 9. கங்குலும் மதியி னாலே; கடும்பகற் காலம் தானும் செங்கதிர் தன்னால், இங்குச் சிறந்திடும் உலகம் மூன்றும் பொங்கிய தன்மத் தாலே பொலிவுற விளங்கும் என்றும் வங்கிசம் விளங்கும் நல்ல மகவினால் தானும் அன்றே. (அ - ள்) கங்குல் - இரவு; வங்கிசம் - வமிசம்; தன்மம் - தருமம், அறம். (9) மரம் வளர்த்தல் 10. ஓரர(சு) ஓரால் வேம்பொன் றொருபத்துப் புளியும் மூன்று சீர்பெறு விளவும் வில்வம் மூன்றுடன் மூன்று நெல்லி பேர்பெறும் ஐந்து தெங்கு பெருகுமா ஐந்து பேணி ஆர்பயி ராகச் செய்தார் அவர்க்கிலை நரகம் தானே. (அ - ள்) மரங்கள் பயிரிடுதலின் நன்மை கூறியது; தெங்கு - தென்னை; ஆர் - யார்; இலை - இல்லை. (10) குலம் விளக்கும் குணவான் 11. குலுத்தையீங்(கு) ஆத ரிக்கக் குணமக(வு) ஒன்றே போதும் நலத்தையிங் கிதத்தைச் சற்றும் நண்ணிடாச் சேய்கள் நூறு பெலத்துடன் இருக்கின் என்னாம் பெருக்கிடும் *அநேக மீன்விண் தலத்திடை இருக்கின் என்னாம் விளங்குதல் மதிதான் ஒன்றே. (அ - ள்) குணமகவு - நற்குணம் அமைந்த மகவு; நலத்தை இங்கிதத்தை - நன்னடத்தையையும், இனிய செயலையும்; நண்ணிடா - அடையாத; சேய்கள் - மக்கள்; பெலம் - பலம், வலு; விண்தலம் - வானம்; மீன் - வெள்ளி; மதி - திங்கள். (11) எவை எவற்றால் விளங்கும் எனல். 12. மதகரி மதத்தி னாலும், வாசிவே கத்தி னாலும், பதிமனை வதுவை யாலும், பாவைதன் குணத்தி னாலும், *அதிபகல் பருதி யாலும், அரசன்தன் நீதி யாலும், விதரணன் கீர்த்தி யாலும், விளங்குவ இவைகள் ஆமே. (அ - ள்) மதகரி - மதயானை; வாசி - குதிரை; பதிமனை - ஊரில் உள்ள வீடு; வதுவை - மங்கலநிகழ்ச்சி; பாவை - பெண்; அதிபகல் - கடும்பகல்; பருதி - கதிரோன்; விதரணம் - கொடையாளன். (12) பொருளினால் ஆகும் துக்கம் 13. தனத்தினைத் தேடத் துக்கம், தானதைச் செம்மை பண்ணி மனத்துடன் காக்கத் துக்கம், வழங்கிடு போதும் துக்கம், இனத்துடன் புசிக்கத் துக்கம், எண்ணிய பொருளி னாலே அனைத்தினும் துக்கம் துக்கத் திருப்பிடம் ஆகை யாலே. (அ - ள்) தனம் - செல்வம்; இனத்துடன் - சுற்றத்தாருடன்; புசிக்க - அனுபவிக்க; அனைத்தினும் - எல்லா வகைகளிலும். (13) தீயவை விலக்கல் 14. சீலித்துத் தமது பாவச் செய்கையும் அறிந்து கொண்டே ஆலிக்கும் பெரியோ ராகாத் தொழிலுக்கிங் கமரார் என்போல் கூலிக்குக் கழுவில் ஏறிக் கொள்வரோ என்றும் அந்தச் சோலிக்குக் கைவை யார்கள் அறிவினால் துலங்கு வோரே. (அ - ள்) சீலித்து - பரிசீலித்து (ஆராய்ந்து); ஆலிக்கும் - வறிதே மகிழ்வு அடைகின்ற; தொழிலுக்கு இங்கு அமரார் - தொழில் செய்தற்கு இங்கே விரும்பார்; என்போல் - எதுபோல் என்றால்; சோலிக்கு - வேலைக்கு. (14) தீயோனுக்கு வாய்த்த பதவிக்கேடு 15. துற்சனன் தனக்கு நல்ல துரைத்தனம் கொடுத்தால் என்றும் சற்பனை துரோகம் கேடு தானினைத் திடுவன் என்போல் மற்கடம் தானு மாகி *வாயினில் தேளும் கொட்டி உற்றிடும் கொள்ளி ஈந்தால் ஊரெலாம் சுடும்போ லாமே. (அ - ள்) துற்சனன் - தீயன்; துரைத்தனம் - ஆளும் பதவி; சற்பனை - வஞ்சம்; மற்கடம் தானுமாகி - பிறப்பிலே தானும் குரங்காகி; உற்றிடும் கொள்ளி - தீயெரியும் கொள்ளிக் கட்டை; துர்ச்சனன், சர்ப்பனை, மர்க்கடம் என்பன றகரம் பெற்று நின்றன. (15) உறுதியால் கவலையை வெல்லுதல் 16. வைத்திடும் தனத்தாற் சேதம் வளர்ந்திடும் உயிர்க்குச் சேதம் உற்றிடும் வியாகு லங்கள் யாவர்க்கும் உளவே என்று புத்திமான் தனக்குத் தானே மனத்திலே தேறிக் கொண்டு சுத்தனாய் நகைத்தா னாகில் துயரது தோற்கும் அன்றே. (அ - ள்) வைத்திடும் - புதைத்து வைத்துள்ள; தனம் - செல்வம்; வியாகுலம் - கவலை; தேறிக்கொண்டு - தெளிவு செய்து கொண்டு; சுத்தனாய் - குறையில்லாதவனாய்; நகைத்தான் ஆகில் - சிரித்தான் என்றால்; துயரதுதோற்கும் - அவன் சிரிப்புக்கு முன்னே அவனை வருத்தவந்த துன்பம் தோற்றுப்போகும். (16) ஒன்றினால் ஒன்று உண்டாதல் 17. நிதிதெரி சித்தால் போகம் நேரிடும்; மலர்கள் தம்மை அதிதெரி சித்தால் வாசம் அணுகிடும்; அன்றி நல்லோர் பதிதெரி சித்தால் முத்திப் பலன்தரும்; தீக்கு ணத்தால் சதிசெய்துர்ச் சனரைக் கண்டால், பாவங்கள் சம்ப விக்கும். (அ - ள்) நிதி - பொருள்; தெரிசித்தால் - கண்டால்; போகம் - இன்பம்; அதி - மிக; பதி - இடம்; சம்பவிக்கும் - உண்டாகும். (17) தீயோருக்கு உதவி விலக்கல் 18. இடங்கருக் கிடுக்கண் வந்தால் அகற்றுதல் என்றும் ஆகா விடங்கொள்தேள் நெருப்பில் வீழ்ந்தால் எடுத்துவிட்டவனைக் கொட்டும் அடங்கிடாத் துர்ச்ச னர்க்கும் அருள்செய்தால் மதித்துப் பாரார், திடங்களால் அபகா ரங்கள் செய்குவர் திண்ணந் தானே. (அ - ள்) இடங்கர் - முதலை; ஆகா - கூடாது; திடங்களால் - மனவன்மையால்; அபகாரங்கள் - கேடுகள்; திண்ணம்- உறுதி. (18) தீயோர் அறிவுக்கீழ்மை 19. துற்சனர் முன்னே நல்ல துலங்கிய மதுர மான விற்பனக் கவிதை தன்னை விளம்பிடில் அவர்கள் தங்கள் அற்பமாங் குணத்தி னாலே அவகடஞ் செய்வர் என்போல் மற்கடம் தன்கை மாலை தான்படும் வண்ணம் போலும். (அ - ள்) துலங்கிய மதுரமான - விளங்கிய இனிமையான; விற்பனம் - சிறந்த; விளம்பிடில் - கூறினால்; அவகடம் - அலட்சியம்; மற்கடம் - குரங்கு; வண்ணம் - வகை. (19) புலமையாளனும் தீயோன் எனின் போற்றப்பெறான் 20. செகந்தனில் புலவ ராகிச் சேர்ந்ததுர்ச் சனர்கள் தாமே அகந்தனில் இருப்பா ராகில் அவரைக்கை விடுவர் என்போல் இகந்தநன் மணியி னாலே இலங்கிய பாம்பைக் கண்டால் சுகந்தனை விடுத்த ருண்டு தூரத்தே செல்வர் போலாம். (அ - ள்) செகம் - உலகம்; அகந்தனில் - ஆணவத்துடன்; இகந்த - மதிப்பில் அடங்காத; இலங்கிய - விளங்கிய; சுகம் - (மாணிக்கம் ஆகிய) நன்மை; அருண்டு - அரண்டு (அஞ்சி) (20) அறிஞனை அறிஞனே அறிவான் 21. விஞ்சையர் அருமை தன்னை விஞ்சையர் அறிய வேண்டும் புன்செயல் அறிவில் ஈனர் புகழ்ந்ததை அறியார் என்போல் விஞ்சிய மகப்பே றான வேதனை மலடி தானும் கிஞ்சிதம் அறியாள் போல இருந்திடுங் கேள்விதானே. (அ - ள்) விஞ்சையர் - வித்தை (கல்வி)யில் வல்லார்; புன்செயல் - இழிசெயல்; அறிவு இல் ஈனர் - அறிவு இல்லாத இழிந்தோர்; கிஞ்சிதம் - சிறிதும்; கேள்விதானே - கேள்வியால் அவள் அறிந்த அவ்வளவுதானே; பட்டறிந்தது அன்றே. (21) காலத்துக்கு உதவாதவை 22. புத்தகத் தெழுதி வைத்துப் பொருந்திய வித்தை தானும், அத்தமா பத்துக் கா மென் றயலவர் தமது கையில் சித்தமாய்க் கொடுத்த பொன்னும் தேசசஞ் சாரச் சேயும் உற்றவிப் பொருள்கள் மூன்றும் உண்டென்ப உதவா அன்றே. (அ - ள்) வித்தை - கல்வியறிவு; அத்தம் - பொருள்; சித்தமாய் - ஆயத்தமாய்; தேசசஞ்சாரச் சேயும் - நாடோடியாகத் திரியும் பிள்ளையும்; என்ப - உலகோர் கூறுவர். உதவா அன்றே - (ஆனால் காலத்தால்) உதவாதனவாம். (22) தீயோர்க்குச் செய்நன்மையும் தீதேயாம் 23. பாத்திரா பாத்தி ரங்கள் பார்க்குங்கால் பசுவுக் கெந்த மாத்திரம் திரணம் ஈந்தால் பால்தரும் அந்தப் பாலை வார்த்திடிற் பாம்பி னுக்கு விடமதே வளரும் அன்றே ஏற்றபாத் திரம றிந்திங் கீவதே கடமை யாகும். (அ - ள்) பாத்திரா பாத்திரம் (பாத்திரம் அபாத்திரம்) - உதவி செய்யத்தக்க இடமும், உதவி செய்யத் தகாத இடமும்; மாத்திரம்- அளவு; திரணம் - வைக்கோல், புல். (23) ஏற்போர் வகை 24. தானமாம் பாத்தி ரத்தில் விதமது தான்மூன் றாகும் ஆனவுத்த மமத்தி மத்தோ டதமமே அவைகள் என்பார் வானநீர் காய்ந்த யத்தில் வற்றிடும் *வாரி சத்தில் போனநீர் உள்ள மட்டும் பொருந்துஞ்சிப் பியில்முத் தாமே. (அ - ள்) தானவகை மூன்று, உத்தமம்,. மத்திமம், அதமம் என்பன. காய்ந்தயம் - (காய்ந்த அயம்) சூடுண்ட இரும்பு; வாரிசம் - தாமரை; உத்தமம்சிப்பி; மத்திமம் தாமரை; அதமம் இரும்பு. (24) தகுதியில்லாக் கொடை 25. நிறைபெறு சமுத்தி ரத்தில் பெய்தநீர் மழையும், நெய்பால் குறைவற உண்போர்க் கன்னங் கொடுத்தலும், குபேர னான பிரபலர்க் கீந்த சொன்ன தானமும், பேசும் இந்த விறல்பெறு தான மூன்றும் வீணென விளம்ப லாமே. (அ - ள்) சொன்னதானம்- பொற்கொடை; விறல்பெறு - மேன்மை பெற்ற; விளம்பல் - சொல்லல். (25) தகுதிவாய்ந்த துணைகள் 26. அகத்துணை மனைவி; யாக்கைத் துணைசகோ தரனே ஆகும்; செகத்தினில் செல்லும் தேசாந் திரிக்கவன் கற்ற வித்தை; சுகத்தொடு பரலோ கத்தில் துலங்கிய அருளோ டென்றும் இகத்தினில் செய்த தன்மம் துணையதாம் +எண்ணும் காலே. (அ - ள்) அகத்துணை மனைவி - இல்லறத் துணையாகிய மனைவி; ஆக்கை - உடல்; தேசாந்திரி - நாடு சுற்றுவோன்; செகம் - உலகம்; இகம் - இவ்வுலகம். (26) இறுதிவரை கடைப்பிடியாளர்கள் 27. புலியுயிர் போகு மட்டும் பொருந்திய ++தோலை ஈயா வலியுறு வீரன் தானும் மரித்தன்றிப் புறம்வ ழங்கான்; பொலிவுறு கற்பள் ஆவி பொன்றிடாத் தனங்கள் ஈயாள்; நலிவுறு லோபன் சீவன் ஒழிவின்றி ஒன்றும் நல்கான். (அ - ள்) மரித்தன்றி - இறந்தால் அல்லாமல்; புறம் வழங்கான் - புறங்காட்ட மாட்டான்; கற்பள் - கற்புடையாள்; ஆவி பொன்றிடா - உயிர்போகாமல்; லோபன் - கருமி; சீவன் - உயிர்; நல்கான் - தாரான். (27) இதனால் இது இழப்பு 28. அன்னையே மரித்தால் வாய்க்கு ருசிநட்டம்; ஐயன் தானும் பின்னையே மரித்தால் வித்தை பேணுதல் நட்டம்; அன்றிப் பன்னிடு துணைவன் அற்றால் சரீரத்தில் பாதி நட்டம்; தன்னுடையப் பாரி அற்றால் சகலமும் நட்டந் தானே. (அ - ள்) மரித்தால் - இறந்தால்; ஐயன் - தந்தை; பன்னிடு - சிறப்பாகக் கூறப்படும்; துணைவன் - உடன்பிறந்தான்; பாரி - மனையாள். (28) பெருங்கேடு 29. எண்புத்தி தனது புத்தி இயல்பதாம் *மனதே ஆகில்; நண்புற்ற மூத்தோர் புத்தி நண்ணிட நலமுண் டாகும்; பண்பற்ற பலபேர் புத்தி நாசமாம்; அதிலும் பார்க்கில் பெண்புத்தி அதனைக் கேட்டால் பிரளய நாசம் ஆமே. (அ - ள்) இயல்பதாம் மனதே ஆகில் தனது புத்தி எண்புத்தி; எண்புத்தி - மதிக்கத்தக்க அறிவு; நண்ணிட - பொருந்த; அதிலும் பார்க்கில் - அதைப் பார்க்கிலும்; பிரளய நாசம் - பெருங்கேடு. (29) நிலத்திற்குச் சுமை 30. உற்றபூ மிக்குப் பார உவரியும் மலைகள் எட்டும் மெத்தவும் பாரம் அன்று; மிகுந்தபா ரங்கள் சொல்லில், கத்தனுக் +கடுந்து ரோகம் கனக்கவே விசுவ சித்து வைத்தவர்க் +கடுந்து ரோகம் மகாபாரம் ஆகும் அன்றே. (அ - ள்) பார - பெரிய; உவரி - கடல்; கத்தன் - கர்த்தன் (கடவுள்) கத்தனுக்கு அடும் துரோகம்; அடும் - செய்யும்; விசுவசித்து வைத்தவர் - பற்றுடையவர். (30) பகைவர் 31. கடன்படு பிதாவும், எங்கும் கண்டவர் தங்கட் கெல்லாம் உடன்படும் அன்னை தானும், ஓங்குபே ரழகி யாகித் திடம்பெறு மனையும், கல்வித் தேர்ச்சியில் மகனும் மையார் தடங்கணாய்! இவர்கள் நால்வர் சத்துரு ஆவர் அன்றே. (அ - ள்) மையார் தடங்கணாய் - மைதடவப்பெற்ற நெடுங் கண்ணை யுடையாய்; திடம்பெறுமனை - வன்கொடுமையான மனைவியும்; தேர்ச்சியில் - தேர்ச்சி இல்லாத; சத்துரு - பகைவர். (31) கல்வியில்லான் முருக்கம்பூ 32. தேசிகம் இளமை முற்றச் சிறந்தநற் கலங்கள் ஆளும் காசினி ரசிதம் சொன்னம் கரிபரி படைத்தா னேனும் நேசமாம் வித்தை யற்றால் நிறைந்திடு முருக்கம் பூவின் *வாசனை இல்லா தோங்கும் வனப்பென வயங்கு வானே. (அ - ள்) தேசிகம் - அழகிய தோற்றம்; கலங்கள் - அணி கலங்கள்; காசினி - உலகம்; ரசிதம் - வெள்ளி; சொன்னம் - பொன்; கரிபரி - யானை குதிரை; நேசம்- விருப்பம்; வனப்பென - அழகென; வயங்குவான் - விளங்குவான். (32) கற்றவன் பேறு 33. வித்தையுண் டானால் மாதா பிதாவொடு பாரி தம்மால் உற்றிடும் சுகத்தைக் காட்டும் உயர்திசை எங்குற் றாலும் மெத்தவும் புகழுண் டாக்கும் விரைமலர் மகள்க டாட்சம் நித்தியம் உண்டாம் கற்ப விருட்சமாய் நிறைந்த வித்தை. (அ - ள்) பாரி - மனைவி; தம்பால் - தம்மிடத்து; மெத்தவும் - மிகவும்; விரைமலர்மகள் கடாட்சம் - மணமிக்க தாமரை மலரில் உறையும் திருமகளின் அருள்; நித்தியம் - என்றும்; விருட்சம் - மரம். (33) முத்திக்கு உரியவர் 34. ஏர்பெறும் அர்ச்சு னர்க்கிங் கியம்புவான் ஐவர் தூதன் ஆரெனும் வாவி கூபம் தடாகமுண் டாக்கி ஓர்நாள் நீர்பெறச் செய்தாரேனும் நிச்சயம் இவர்கள் தாமும் பேர்பெறு குலமூ வேழும் பெறுகுவர் முத்தி தானே. (அ - ள்) ஏர் - அழகு; ஐவர் தூதன் - பாண்டவர் தூதனாகிய கண்ணன்; ஆரெனும் (ஆரேனும்) எவரேயாயினும்; வாவி - குளம்; கூபம் - கிணறு; தடாகம் - பூம்பொய்கை; குலம் மூவேழும் - இருபத்தொரு தலைமுறையினரும். (34) சேரிடம் அறிந்து சேர்க 35 உத்தமன் இரவில் வேசி *அமர்தெரு அருகில் உற்றால் மெத்தவும் சமுச யங்கள் விளம்புவர் உலகர் என்போல், புற்றுமாய் இரவு மாகிப் பொருந்திய பழுதை மேலே சுற்றியே கிடக்கில் ஐயம் தோன்றிடும் தன்மை போலாம். (அ - ள்) வேசி அமர்தெரு - பரத்தை வாழும்தெரு; உற்றால் - சென்றால்; சமுசயங்கள் விளம்புவர் - ஐயப்பாடான சொற்களைச் சொல்வர்; பழுதை - வைக்கோற்புரி. (35) இம்மையிலே நரகு அடைந்தவர் 36. சிறியவூர் இருந்தோன் தானும், அற்பனைச் சேவிப் போனும், பிரியமாய்ப் புலாலுண் போனும், பெருஞ்சின மனைவியோனும் வறிஞனாய்த் திரிவோனும்பெண், +மக்களைத் திரள்பெற் றோனும் அறுவகைப் பெயரும் பூமி தனில்நர கழுந்து வாரே. (அ - ள்) சேவிப்போன் - வழிபட்டு வாழ்பவன்; மனைவியோன் - மனையாளை உடையவன்; திரள் - மிகுதியாக; அறுவகைப் பெயரும்- மேலே கூறிய ஆறுவகையினரும்; பூமிதனில் நரகு அழுந்துவர் - இவ்வுலகிலேயே நரகத் துன்பத்தில் மூழ்கியவர் ஆவர். (36) மணமகளுக்கு விருப்பு மணவாளன் அழகே 37. கன்னிகை ஈயத் தந்தை கல்விமான் தனையே வேண்டும்; தன்னியம் ஈந்த அன்னை தனபதி தனையே வேண்டும்; உன்னிய சுற்றத் தார்கள் உறவினை வேண்டு வார்கள்; மன்னிய கன்னி ரூப வானையே வேண்டி நிற்கும். (அ - ள்) கன்னிகை ஈய - பெண்ணை ஒரு மாப்பிள்ளைக்குத்தர; தன்னியம் ஈந்த - மார்பம் தந்த; தனபதி - செல்வன்; உன்னிய - எண்ணிய; மன்னிய - விளங்கிய; ரூபவான் - அழகன். (37) மகளிர்க்குக் காவல் 38. மங்கையை வாலி பத்தில் வளமொடு பிதாவே காப்பான்; பொங்கிய யௌவ னத்தில் பொருந்துபத் தாவே காப்பான்; தங்கிய மூப்பில் அன்னாள் தனயரே காப்பார் அன்றி இங்கவட் கொருகா லத்தும் சுதந்திரம் இல்லை தானே. (அ - ள்) பிதா - தந்தை; யௌவனத்தில் - மங்கைப் பருவத்தில்; பத்தா - (பர்த்தா) கணவன்; தனயர் - மைந்தர்; சுதந்திரம் - உரிமை. (38) கையுறையுடன் செல்லுமிடங்கள் 39. தேவதை சபைபு ராணம் செப்பிடு சபைகள் பூமி காவலன் சபைகள் ஆசான் வயித்தியன் கணிதன் தம்பால் போவது கரும மாகில் எதுவெனும் பொருந்தக் கொண்டங்(கு) ஈவது கருமம் என்றார் வெறுங்கரத் தெய்தல் ஆகா. (அ - ள்) தேவதை சபை - தெய்வசபை; புராணம் செப்பிடு சபை - புராணம் உரைக்கும் கூட்டம்; பூமிகாவலன் - அரசன்; கணிதன் - சோதிடன்; வெறுங்கரம் - வெறுங்கை; எய்தல் ஆகா - போதல் கூடாது; என்றார் - முன்னோர் கூறினார். (39) வளரும் சேடங்கள் 40. அங்கியை அவித்துப் பின்னும் அவியாத சேடம் தானும், தங்கிய கடன்கள் ஈந்து தங்கிய சேடம் தானும், பொங்கிய நேரார் தம்மைப் போரினிற் செயித்த பின்பும் மங்கலில் சேடம் தானும், *வளர்ந்திடும் அறிந்து கொள்ளே. (அ - ள்) அங்கியை அவித்து - நெருப்பை அணைத்து; அவியாத சேடம் - அணையாத மீதம்; நேரார் - பகைவர்; மங்கலில் - அழிதல் இல்லாத. (40) பகைவரை அடுத்துக் கடமை புரிதல் 41. ஆதிநாட் பகைவர் தம்பால் அருங்கரு மங்கள் வேண்டில் நீதியாய் நிதான மாக நேயமாய்ச் சென்றால் ஆகும் சோதியாங் கரும மானால் +தோய்ந்தமுற் பகையைத் தானே ஏதினால் தொடங்க லாமோ அப்படி இசைந்து கொள்க. (அ - ள்) ஆதிநாள் பகைவர் - பழமையான பகைவர்; அருங்கருமங்கள் - ஆகவேண்டிய அரிய காரியங்கள். வேண்டில் - (ஆக) வேண்டுமானால். நேயம் - அன்பு; சோதியாம் கருமம் - விளக்கமான ஒரு காரியம்; தோய்ந்த - ஏற்பட்ட; ஏதினால் - எவ்வகையால் (41) தீயர் குணம் மாறாது 42. இணங்கிடா மூர்க்க ருக்கிங் கெத்தனை விதஞ்சொன் னாலும் வணங்கித்துர்க் குணம்வி டார்கள் வளர்த்திடும் சுணங்க னுக்கு நிணங்கொள்பால் அன்னம் இட்டு நிறைந்தபொற் றொடரும்பூட்டி மணங்கொள்தண் டிகையில் வைத்துக் குலைத்தது கடிக்கும் போலாம். (அ - ள்) வணங்கி - பணிந்து; துர்க்குணம் - கெட்டகுணம்; சுணங்கன் - நாய்; நிணம் - ஊன்; தொடர் - சங்கிலி; தண்டிகை - பல்லக்கு, சிவிகை; குலைத்து - குரைத்து; அது கடிக்கும் போலாம் - அந்நாய் கடிப்பது போன்றதாம். (42) எவ்வெவற்றால் எவ்வெவை குறையும் எனல் 43. இகலிரு வருக்குண் டாகில் இருவரில் ஒருவர் அற்றால் பகையறும்; கோப மூண்டால் பணிந்திடில் அற்றுப் போகும்; மகவினைப் பெற்ற அன்றே மடமினார்க் கிளமை குன்றும்; புகன்றொரு வன்பாற் சென்றே யாசிக்கிற் பெருமை போகும். (அ - ள்) இகல் - பகை; அற்றால் - இறந்தால்; மடமினார் (மடமின்னார்) - மெல்லியல் வாய்ந்த பெண்டிர்க்கு; குன்றும் - குறையும்; இளமை - இளமைத் தன்மை புகன்று - கெஞ்சி; யாசிக்கில் - இரந்தால். (43) தலையெழுத்து 44. அவரவர் தமக்கிங் குள்ள ஆயுளும் தொழிலும் பொன்னும் *அவரவர் வித்தை இன்பம் அழகழி விவைகள் ஏழும் தவமுடைப் பிரம தேவன் தான்விதித் தெழுதி என்றும் சிவனுடை அருளி னாலே கர்ப்பத்தில் தீர்ப்பான் அன்றே. (அ - ள்) அழகழிவிவை - அழகு அழிவு (இறப்பு) ஆகிய இவை; விதித்து - விதியாய் அமைத்து; கர்ப்பத்தில் தீர்ப்பான் - கர்ப்பத்தில் உள்ள பொழுதிலேயே முடிப்பான் (44) இயல்பு வேறுபடல் 45. உற்றிடுங் குளத்தில் கொட்டி ஆம்பல்பங் கயங்க ளோடு மற்றமச் சமுஞ்ச னித்து வெவ்வேறு வகையாம் போல உற்பனத் தொருத்தி கெர்ப்பத் துடன்பிறந்த தார்க ளேனும் விற்பனக் குணதி றங்கள் வேறுபட் டிருக்கும் அன்றே. (அ - ள்) உற்றிடும் குளத்தில் - (குளத்தில் உற்றிடும்) குளத்தில் பொருந்திய; கொட்டி - கொட்டிக் கொடி; ஆம்பல் - அல்லி; பங்கயம் - தாமரை; மச்சம் - மீன்; சனித்து - தோன்றி; உற்பனம் - பிறப்பு; விற்பனம் - அறிவு. (45) இவற்றை இவை அனுசரிக்கும் 46. வண்டனு சரிக்கும் பூவை மலர்த்திரு நயமுள் ளானைக் கண்டனு சரிக்கும் நீர்தான் கனத்தபள் ளத்தைத் தேடிக் கொண்டனு சரிக்கும் என்றும் குலவிய விதியைப் புத்தி பண்டனு சரிக்கும் என்பர் பாரினில் அறிவுள் ளோரே. (அ - ள்) அனுசரிக்கும் - தேடிச் செல்லும்; மலர்த்திரு - திருமகள்; நயம் உள்ளான் - நீதியமைந்தவன்; கனத்த பள்ளம் - மிகப் பள்ளம்; குலவிய - பொருந்திய; பண்டு - முன்னமே; பார் - உலகு. (46) இவர்க்கு இவை இல்லை 47. சீர்வளர் பயிர்செய் வோர்க்குத் தரித்திரம் இலை;செ பங்கள் ஏர்பெறச் செய்கு வோர்க்குப் பாதகம் இல்லை; இன்பாய்த் தேர்வுறு மௌனர்க் கில்லை கலகமும்; தெளிந்தி ருட்டிற் பார்பெற விழித்துள் ளார்க்குப் பயங்களும் இல்லைத் தானே. (அ - ள்) பயிர் செய்வோர் - உழவர்; செபம் - வழிபாடு; ஏர்பெற - அழகுற; மௌனர் - அமைதியாளர், அடக்கமுடைய துறவோர்; பார்பெற - உலகைக் கைப்பற்ற. (47) இனத்துடன் போர் செய்வார் இவர் 48. மறையவன் வேசி கோழி வயித்தியன் சுணங்கன் ஐவர் முறையுடன் தங்கள் சாதி கண்டிடின் முனிந்து சீறி நிறைபெறு கருமம் இன்றி நேயமோர் சிறிதும் இன்றிக் குறைவறச் சண்டை செய்வர் அவரவர் குணங்க ளாமே. (அ - ள்) மறையவன் - வேதியன்; சுணங்கன் - நாய்; முனிந்து சீறி - பகைத்துச் சினங்கொண்டு; கருமம் - காரியம்; நேயம் - அன்பு. (48) நிலைதவறின் பெருமை கெடும் 49. கேசமும் உகிரும் பல்லும் கிளத்திய வேந்தும் தத்தம் வாசமே இகந்து பின்பு மறுத்துமோர் இடத்துச் செல்லில் நேசமே இன்றி யாரும் நிந்தைசொல் லிடுவார் போலப் பேசிய மாந்தர் தங்கள் நிலைவிடின் பெருமை போகும். (அ - ள்) கேசம் - மயிர்; உகிர் - நகம் கிளத்திய வேந்தும் - புகழ்வாய்ந்த அரசரும்; வாசமே இகந்து - இருப்பிடம் நீங்கி; மறுத்துமோர் இடம் - மற்றோர் இடத்தில்; நேசம் - அன்பு; நிந்தை - பழி; நிலை - இருப்பிடம். (49) அறஞ்செய்யார் பொருள் அழிவகை 50. ஊனமே எவருக் குஞ்செய் துறுபொருள் தேடி நல்ல தானமும் தவமும் இன்றித் தான்புசிப் பதுவும் இன்றி ஈனமாய்ப் புதைத்து வைத்தால் எரிமன்னன் சோரன் தண்ணீர் ஆனநால் வகையி னாலும் அழிந்திடும் என்பர் மேலோர். (அ - ள்) ஊனம் - தீமை; உறுபொருள் - மிகுபொருள்; புசிப்பது - உண்பது. ஈனமாய் - இழிவாய்; எரி - தீ; சோரன் - திருடன். (50) கற்புடையவன் ஒழுக்கமுறை 51. தாசிபோல் பணியில், புத்தி தன்னிலை அமைச்சுப் போலும், தேசினில் திருவும், ஊட்டும் சிநேகத்தில் அன்னை போலும், மாசிலாப் பொறைக்குப் பூமா தென்னவும் மருவு நாளில் வேசிபோல் குணமி தாறும் மிகுந்தகற் பினுக்கு நன்றாம். (அ - ள்) தாசி - அடியவள்; பணியில் - வேலையில்; தேசு - அழகு; திரு - திருமகள்; ஊட்டும் சிநேகத்தில் - உண்பிக்கும் அன்பில்; மாசிலாப் பொறைக்கு - குற்றமில்லாத பொறுமைக்கு; பூமாது என்னவும் - நிலமகள்போலும்; மருவும் நாளில் - கூடும் போதில்; கற்பினுக்கு - கற்புடைய பெண்ணுக்கு. (51) கூடாமகள் குணம் 52. தலைவனோ டெதிர்த்து ரைத்துச் சிறுதனம் தேடித் தானும் பலரனு கூலி யாகிப் பத்தாமுன் அசனம் செய்து கலகமே மூட்டிச் சண்டை காண்பவன் கற்பி லாதாள் நலமிகு சேய்கள் பெற்றுப் பெருகினும் நாடார் நல்லோர். (அ - ள்) சிறுதனம் - சிறுபொருள்; (கணவன் அறியாமல் தேடிமறைத்து வைக்கும் சிறுமைப் பொருள்) பலர் அனுகூலியாகி - பலருக்கு அனுகூலமானவளாக இருந்து; பத்தாமுன் அசனம் செய்து - கணவன் உண்ணுமுன் உண்டு; சேய் - பிள்ளைகள்; நாடார் - விரும்பார். (52) கைத்தொண்டு செய்தலின் பயன் 53. உற்றிடும் எண்ணெய் தேய்த்து மறையவர் உடலை அன்பாய்ப் பற்றியே பிடிக்கப், பின்னும் பரிந்தவர் உண்ட எச்சில் நத்தியே எடுக்கக், கோவை *நகத்தினால் நயந்து கீற நித்தியங் கோடி எக்ய பலன்தரும் நிகழ்த்தும் காலே. (அ - ள்) மறையவர் - வேதியர்; பிரிந்து - அன்பாக; நத்தி - விருப்புடன்; எச்சில் - எச்சில்இலை; கோவை - பசுவை; கீற - சொறிய; எக்ய பலன் - வேள்விப்பயன்; நிகழ்த்தும் காலே - செய்யும் பொழுதே. (53) இவர் செய்த பாவம் இவரைச் சேரும் எனல் 54. பூவினிற் சனஞ்செய் பாவம் பொருந்திய வேந்தற் காகும் கோவினால் உற்ற பாவம் புரோகிதற் கென்று கூறும் பாவக இல்லாள் பாவம் பத்தாவுக் காகும் என்றும் ஏவல்செய் சீடன் பாவம் குருவினுக் காகும் அன்றே. (அ - ள்) பூவினில் - உலகில்; சனம் - மக்கள்; கோவினால் - அரசனால்; உற்ற - உண்டாகிய; பாவக இல்லாள் - அன்பான மனைவி; சீடன் - மாணவன். (54) காவலன் கடன் 55. வேந்தொரு தருவாம்; சாகை மிகுந்தமந் திரியாம்; பூமி போந்திடும் இலையாம்; மூலம் பூசுரர்; ஆகையாலே வாய்ந்திடு மறையோர் தம்மை மன்னவன் காக்க இன்றேல் *தேய்ந்திடு மூலத் தோடு நாசமாம் திண்ணம் தானே. (அ - ள்) தரு - மரம்; சாகை - கிளை; பூமி - மக்கள்; போந்திடும் - தோன்றிய; மூலம் - வேர்; பூசுரர் - மறையோர்; மூலத்தோடு - அடியோடு; நாசம் - அழிவு. (55) மறையோர் தெய்வம் எனல் 56. செகமெலாம் தெய்வா தீனம்; தெய்வமந் திரத்தா தீனம்; மகம்பெறு மந்தி ரந்தான் மறையவர் தம்மா தீனம்; இகபரம் இரண்டி னுக்கும் இயைந்திடு மறையோர் தம்மை அகம்பெறும்; இந்தப் பூவில் அவர்களே தெய்வம் ஆவார். (அ - ள்) செகம் - உலகம்; தெய்வ ஆதீனம் - கடவுளுக்கு உட்பட்டது; மகம் - யாகம்; இகபரம் -இம்மை மறுமை; இயைந்திடு - பொருந்திய; அகம்பெறும் - தன்னுள் பெறும்; அவர்கள் - மறையோர். (56) தீயோர் ஊரையும் சேராதே 57. வண்டிக்கு முழமைந் தாகும்; வாசிக்கும் அதுவே பத்தாம்; கண்டுற்ற கரிக்குத் தானும் ஆயிர முழங்கள் என்ப; வண்டுற்ற குழலாய்! இந்த வையகம் தன்னில் என்றும் மிண்டுற்ற துர்ச்ச னன்தான் இருக்குமூர் விட்டுப் போவாய். (அ - ள்) வண்டிக்கு - வண்டிமாட்டுக்கு; வாசிக்கு - குதிரைக்கும்; அதுவே - அம் முழமே; கரிக்கு - யானைக்கு; வையகம் - உலகம்; மிண்டுற்ற துர்ச்சனன் - மாறுபட்ட தீயன். (57) கொடுப்பது தடுப்பார் எய்தும் கேடு 58. தீர்க்கமாய் ஒருவர் தன்மம் செய்யவே எண்ணி வந்து சேர்க்குநாள் அதற்கி டுக்கண் செய்யவே துணிந்து தங்கள் வாக்கினால் சடத்தால் அன்றி மனத்தினால் வடுக்கள் ஆற்றி ஆக்கிடா வகைசெய் தோர்கள் அகோரமா நரகில் வீழ்வார். (அ - ள்) தீர்க்கமாய் - முழுமையாய்; தன்மம் - தருமம்; இடுக்கண் - தடை; வாக்கினால் - சொல்லால்; சடத்தால் - உடலால்; வடுக்கள் - தீமைகள்; அகோரமா - கொடுமையாக. (58) ஈகையின் பெரும்பயன் 59. மாயிரு ஞாலந் தன்னில் தன்மத்தின் கருமம் வந்தால் நேயமாய்ச் சடத்தால் வாக்கால் நிதியினால் எதுவே யேனும் ஈயலாற் சகாயம் செய்தார் எண்ணிடு நீச ரேனும் ஆயிரங் கோடி காலம் அமரராய் ஆள்வர் அன்றே. (அ - ள்) மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்; தன்மத்தின் கருமம் - அறச்செயல்; நேயமாய் - அன்பாய்; ஈயலால் - கொடுத்தலால்; சகாயம் - உதவி; நீசர் - இழிந்தவர்; அமரர் - தேவர். (59) இன்னதால் இன்னது அழியும் எனல் 60. மின்னன்மை விபசா ரத்தும், மிகுந்திடு தவத்தின் நன்மை மன்னிய கோபத் தாலும், வயங்குநீர் உவட்டி னாலும் பன்னிடு மறையோர் நன்மை பரமின்னாட் சேர்த லானும் மன்னவன் அநீதத் தாலும் *மடிந்திடும் நன்மை தானே. (அ - ள்) மின் நன்மை - பெண்ணின் நன்மை; மன்னிய - விலைத்த; வயங்கு - விளங்கு; உவடு - உவர்ப்பு; பன்னிடும் - புகழ்ந்து கூறும்; பர மின்னாள் - அயல்மாதர்; அநீதம் - நீதியன்மை; மடிந்திடும் - அழியும். (60) இதற்கு இது நலம் எனல் 61. தூசறு நீர்க்குச் சீதம், துலங்கிய தோழ னுக்கு நேசம்; வஞ் சனையி லாமை குணமென்ப நேரி ழைக்குப், பேசிடும் பேச்சி னுக்குப் பெருகுமா தரவு தானே, போசனம் தனக்கீ தெல்லாம், பொருந்துநல் விளக்க மாமே. (அ - ள்) தூசுஅறு - குற்றமற்ற; சீதம் - தண்மை; துலங்கிய - விளங்கிய; நேசம் - நட்பு; நேரிழைக்கு - பெண்ணுக்கு; ஆதரவு - அன்பு; போசனம் - உணவு; ஈது எல்லாம் - சொல்லப்பட்ட இவையெல்லாம்; அவை, சீதம், நேசமுடைமை, வஞ்சனை இல்லாமை, நற்குணம், ஆதரவு என்பன; விளக்கம் - சிறப்பான குணங்கள். (61) இன்னதால் இன்னது அழியும் எனல் 62. ஆசனம் எண்ணெ யோடே போசனம் இவைகள் மூன்றும் மாசுறத் தன்கை யாலே வழங்கியே கொண்டா னாகில் பேசிடும் ஆயுள் நாசம், பெருத்திடு மைந்தர் நாசம், தேசுறு மலராள் தானும் இருந்திடாள் செப்புங் காலே (அ - ள்) ஆசனம் - இருக்கை; வழங்கி - பயன்படுத்தி; ஆயுள் நாசம் - வாணாள் அழிவு; தேசுறு மலராள் - அழகு பொருந்திய திருமகள்; செப்புங்கால் - சொல்லும் பொழுது மூன்று நாசத்தையும் முறையே அறிக. (62) விதியை வெல்லல் அருமை 63. மதகரி பாம்பு புள்ளை மனிதர்கள் கட்ட லாலும் இதமதி பானு தம்மை ஈரராப் பற்ற லாலும் சிதமுள புத்தி மானைத் தரித்திரம் சேர்த லாலும் விதிவசம் ஒருவராலும் வெல்லுவ தரிதாம் அன்றே. (அ - ள்) மதகரி - மதயானை; புள்ளை - பறவையை; இதமதி - குளிர்ந்த நிலவு; பானு - கதிர்; ஈர் அரா - இராகு கேது; சிதமுள - தூய்மையமைந்த; அரிது - அருமையானது. (63) அறிவாளனை அணுகும் மூன்று கேடுகள் 64. புத்திதான் அதிக ரித்துப் பொருந்தவே இருந்தான் ஆகில், மெத்தவு மலடன் ஆதல் அல்லது மிடியன் ஆதல் பெற்றிடும் ஆயுள் தானும் பிசகிடா தற்ப மாதல் உற்றிடும் கரும மூன்றும் உள்ளதாம் உரைக்கும் காலே. (அ - ள்) மலடன் - மகப்பேறிலான்; மிடியன் - வறியன்; பிசகிடாது - தவறாது; அற்பமாதல் - குறைவாதல்; கருமம் மூன்றும் - மேற்சொன்னவை மூன்றும். (64) சிறு செயல்கள் 65. வாலையோ டிணக்கங் கொள்ளல், மதிப்பின்றிச் சிரித்தல், மின்பால் சாலவே சண்டை செய்தல், தறுகணா ளரைச்சே வித்தல், கோலியே கழுதை ஏறல் கூத்தியா ரிடத்தில் வார்த்தை சீலமாய் உரைத்த லாலே லௌத்துவம் சேரு மன்றே. (அ - ள்) வாலையோடு - இளையரோடு; இணக்கம் - நட்பு; மின் - மனையாள்; சாலவே - மிகவே; தறுகணாளர் - கொடியர்; கோலி - வளைத்துப்பற்றி; கூத்தியார் - பொதுமகளிர்; லௌத்துவம் - இழிவு. (65) பொருந்தாருடன் பொருந்திய வாழ்வு 66. அடுத்தங்கே தமைச்சே விப்போர் அவர்கன்மேல் குறைகள் நித்தம் தொடுத்தங்கே மிகப்பாராட்டித் தொல்வழக்கிடுவோர் தங்கள் இடத்தங்கே சேவித் துண்டி இயற்றுத லெல்லாம் பாம்பின் படத்தங்கே எலிதான் வாழ்க்கை பண்ணுதல் போலாம் அன்றே. (அ - ள்) தமைச் சேவிப்போர் - தம்மிடம் பணிசெய்வோர்; நித்தம் - நாள்தோறும்; தொல்வழக்கு - பழ வழக்கு; உண்டி இயற்றுதல் - உணவு ஆக்குதல்; பாம்பின் படத்தங்கே - பாம்பின் படத்தின் கீழே. (66) இவரிவர்க்கு இதில் இதில் சிந்தை எனல் 67. வேந்தருக் கரசில் சிந்தை; மிகுந்தகா முகருக் கெல்லாம் *போந்தகா மத்திற் சிந்தை; பொருந்துயோ கர்க்கு முத்தி வாய்ந்திடு வழிமேற் சிந்தை; வறிஞருக் களவி லாத நீந்தொணாச் சிந்தை என்றும் நிதியத்தி லாகும் தானே. (அ - ள்) சிந்தை - எண்ணம்; போந்த - உண்டாய; யோகர் - தவத்தோர்; வறிஞர் - வறுமையாளர்; நீந்தொணா - கடக்க முடியாத; நிதியம் - செல்வம். (67) நன்மை செய்பவை 68. கூபநீர் ஆல நீழல் குலவிய வடக்கு வீடு சாபமாம் புருவமாதர் தனங்களாம் இவைகள் நான்கும் கோபநாள் குளிர்ச்சி யாயும் குளிர்ச்சி நாள் வெம்மை +யாயும் சோபமே தீர்த்து நல்ல சுகத்தினை அளிக்கும் அன்றே. (அ - ள்) கூபநீர் - கிணற்றுநீர்; நீழல் - நிழல்; குலவிய - விளங்கிய; வடக்குவீடு - வடக்குப் பார்த்த வீடு; சாபமாம் புருவம் - விற்போன்ற புருவம்; கோபநாள் - கோடைநாள்; சோபம் - சோர்வு. (68) தங்கள் காரியத்திலேயே கருத்து 69. சிறுவரும் நெருப்புத் தானும் தெரிவைகோ மாதா தாமும் பொருளது வேண்டி அண்டிப் போந்துதாம் கேட்கும் நாளில் ஒருபொருள் இல்லை உண்டென் றுணரவே மாட்டார் **தங்கள் கருமமே பெருமை யாகக் கழறுவர் விடாமல் தானே. (அ - ள்) நெருப்புத்தானும் - பொல்லாதவனும்; தெரிவை - பெண்; கோ - அரசன்; மாதா - தாய்; அண்டிப்போந்து - நெருங்கிவந்து; தங்கள் கருமமே பெருமையாக - தங்கள் காரியமே பெரிதாக; கழறுவர் - கூறுவர். (69) உறவினர் அயலார் இவர் எனல் 70. அன்னிய னேனும் தன்னால் ஆனதோர் உதவி செய்யின் உன்னிய பந்து ஆகும்; உயர்ந்திடு பந்து வேனும் பன்னிய கெடுதி பண்ணின் பகைவனாம்; பகைத்து மெய்யில் மன்னிய பிணிதான் காட்டின் மருந்தினால் தீரு மாறே. (அ - ள்) பந்து - உறவினன்; பன்னிய - வருந்திச் சொல்லத்தக்க; பகைத்து - மாறாகி; மெய்யில் - உடலில்; மன்னிய - நிலைத்த; பிணி - நோய். (70) நல்லவர் நலனும் தீயவர் தீதும் 71. சற்சனர்க் கிதங்கள் செய்யின் தாமும்அங் ஙனமே செய்வார், துற்சனன் தன்னைக் கண்டால் துரந்தவர் முனிவர் என்போல் நற்குணக் கல்லை ஊதில் நீர்தரும் நலமெண் ணாமல் மற்றொரு கல்லால் மோதின் கனற்பொறி வழங்கு மாபோல். (அ - ள்) சற்சனர் - நல்லவர்; இதங்கள் - நன்மைகள்; அங்ஙனமே - அந் நன்மையே; துற்சனன் - தீயன்; துரந்தவர் முனிவர் - வெருட்டிச் சினங்காட்டுவர்; கல் - சந்திரகாந்தக் கல்; நிலவொளி அதன்மேல் பட்டால் தண்ணிய நீர் சுரக்கும் கல் என்பர்; ஊதில் நீர்தரும்; ஊதில் - குளிர் காற்றுப்படின்; கல்லால் மோதில் - ஒருகல்லை மற்றொரு கல்லால் தாக்கினால். (71) கற்றோர்க்குச் சிறப்பு 72. மூர்க்கற்கில் அளவின் மட்டும், முயன்றிடும் கிராம ணிக்கும் ஏற்கின்ற ஊரில்மட்டும், இலங்கிய வேந்தி னுக்குக் காக்கின்ற புவியில் மட்டும், கற்றவர் தங்க ளுக்குத் தேக்கருங் கீர்த்தி எந்தத் தேயத்தும் ஆகும் அன்றே. (அ - ள்) மூர்க்கற்கு இல் அளவின்மட்டும் - பிடிவாதக் காரனுக்கு வீட்டு அளவுமட்டுமே; கிராமணி - கிராம அதிகாரி; ஏற்கின்ற - பதவி ஏற்றிருக்கின்ற; இலங்கிய - விளங்கிய; புவியில் - நாட்டில்; தேக்க அரும் கீர்த்தி - அடக்கி வைக்க அரிய புகழ்; தேயம் - நாடு. (72) கீழோர் தன்மை 73. துற்சனன் முகந்தான் எல்லில் துலங்கிய கமலம் போலும், சற்சனன் என்னும் வார்த்தை சந்தனக் குளுமை போலும், உற்றிடும் இதயந் தானும் உரத்திடு வயிரம் போலும் முற்பெற இருக்கும் இந்த மூர்க்கனின் குணம்பொல் லாதே. (அ - ள்) எல்லில் துலங்கிய கமலம் - பகலில் விளங்கும் தாமரை; சற்சனன் - நல்லோன்; இதயம் - மனம்; உரத்திடு வயிரம் - வலியவயிரக்கல்; முற்பெற - இழிவில் முதன்மை பெற; துற்சனன் முகம், சொல், உள்ளம் ஆகியவற்றை உரைத்தார். (73) அறத்தின் பெருக்குநிலை 74. எடுத்திடில் விசயன் வாளி ஏகமாம்; எடுத்தே ஒன்றைத் தொடுத்திடில் பத்து மாகும்; விடுத்திடில் தொண்ணூ றாகும்; அடுத்ததை விட்ட போதே, ஆயிர மாமி லக்கில் மடுத்திடில் கோடி யாம்போல் மறையவர்க் கீயும் தானம். (அ - ள்) விசயன் - அருச்சுனன்; வாளி - அம்பு; ஏகமாம் - ஒன்றே ஆகும்; அடுத்ததை விட்டபோது - மீண்டு அதனை விடுத்தபோது; ஆயிரம் ஆம்; இலக்கில் மடுத்திடில் கோடியாம் - குறியில் படுமாயின் கோடி ஆகும். (74) கொடையாளி 75. ஆடவர் தம்மில் தியாகி யாரெனில், தனத்தைத் தேடி மாடுறப் புதைத்துண் ணாமல் வழங்குதல் இன்றி வைத்து வீடியே போவான் அல்லன்; விளங்கிய உயிர்க்கு முத்தி தேடியே ஈந்தும் உண்டும் செல்பவன் தியாகி ஆவான். (அ - ள்) தியாகி - கொடையாளன்; தனம் - செல்வம்; மாடுஉற - தன் இடத்தில் பொருந்த; வீடுவான் - இறப்பான்; செல்பவன் - வாழ்பவன். (75) தாயர் ஐவர் 76. தன்னனை, குருவின் தேவி, தனக்குமூத் தவன்தன் தேவி, மன்னவன் மனைவி, தேவி மாதாவாம் இவர்கள் ஐவர் பன்னிடும் நூலில் ஆய்ந்து பாங்குடன் தெளிந்த வர்க்கு மன்னிய தாயர் ஐவர் ஆகுவர் மகித லத்தில், (அ - ள்) தன் அனை - தன் அன்னை; தேவி - மனைவி; தேவிமாதா - மனைவியைப் பெற்றதாய் (மாமி); பன்னிடும் - சிறப்பாகக் கூறப்படும்; பாங்குடன் - நன்றாக; மன்னிய - நிலைத்த. (76) தந்தையர் ஐவர் 77. தன்னையே ஈன்றோன், வித்தை சாற்றினோன், உபதே சங்கள் பன்னினோன், பயந்த போது பயந்தவிர்த் திட்டோன், பஞ்சம் முன்னியே வந்த காலத் துகந்தனங் கொடுத்தோன் ஐவர் நன்மையாம் பிதாக்கள் ஆவர் நல்லறி வோர்க்குத் தானே. (அ - ள்) சாற்றினோன் - கற்பித்தோன்; பன்னினோன் - கூறினோன்; உன்னியே - நினைத்து; உகந்து அனம் கொடுத்தோன் - விரும்பி அன்னம் (உணவு) கொடுத்தவன்; பிதாக்கள் - தந்தைமார். (77) கொடையாளன் அருமை 78. சகத்திலே ஒருவன் சூரன், சாற்றிடும் ஆயி ரத்தில் இகத்தினில் வித்து வானாம் எண்பதி னாயிரத்தில் *சுகத்துடன் சபையில் வார்த்தை + சொல்லுவான் லட்சத்தொன்றில் மிகத்தருந் தாதா உண்டோ இல்லையோ விளம்புங் காலே. (அ - ள்) சகத்திலே - நூற்றிலே; சூரன் - வீரன்; சாற்றிடும் - கூறப்படும்; இகத்தினில் - இவ்வுலகில்; சுகத்துடன் - நயமாக; தாதா - கொடையாளி; லட்சத்தொன்றில் உண்டோ இல்லையோ என இயைக. (78) திருமகள் அருளும் திருவிளக்கும் 79. தளிகையில் நெய்யை வார்த்துச் சமைத்திடும் தீபம் தன்னில் எளிதென அநேக தீபம் ஏற்றினாற் குறைவ தில்லை; நளினமின் உள்ள மட்டும் செலவினால் *நட்டமாமோ? தெளிதிரு அற்றால் எண்ணெய் எய்திடாத் தீபம்ஆமே. (அ - ள்) தளிகை - அகல்; சமைத்திடும் - உண்டாக்கும்; குறைவதில்லை - ஒளி குறைந்து போவதுஇல்லை; நளினமின் - திருமகள்; நளினம் - தாமரை; மின் - மின்போன்ற பெண்; திருஅற்றால் - திருமகள் அருள் அற்றுப்போனால்; ஆமே - ஆகுமே. (79) இதற்கு இது பலம் எனல் 80. புள்ளுக்குப் பலமா காயம், பொருந்துமீன் தனக்கு நீராம், கள்ளுற்ற பூங்கோ தைக்குக் கணவனே பலம தாகும், தெள்ளற்ற சிறியோர்க் கென்றும் சிணுங்கலே பலம தாகும் விள்ளுற்ற சொல்லுக் கென்றும் விவேகமே பலம தாமே. (அ - ள்) புள் - பறவை; பலம் - ஆகாயம்; கள்ளுற்ற பூங்கோதைக்கு - தேன் பொருந்திய பூவணிந்த கூந்தலையுடைய பெண்ணுக்கு; தெள்அற்ற - தெளிவு இல்லாத; சிணுங்கல் - அழுதல்; விள்ளுற்ற - சொல்லுதல் அமைந்த; விவேகம் - அறிவு. (80) பிறவித் தன்மை 81. நற்குணம் துர்க்கு ணங்கள் மனிதர்க்கு நடுவில் அன்றாம் சற்குணம் துர்க்கு ணங்கள் சடமெடுப் பளவே யுண்பாம் +சொற்கசப் பதுவேம் புக்கும் தூய்மணம் மருவினுக்கும் உற்பன காலந் தன்னில் உதித்திடும் தன்மை போலாம். (அ - ள்) நடுவில் அன்றாம் - இடைக்காலத்தே வந்தன அல்ல; சற்குணம் - நற்குணம்; சடம் எடுப்பளவே - உடல் தோன்றியபோதே; தூய்மணம் - நறுமணம்; உற்பனகாலம் - பிறந்தபோது. (81) திருமகள் உறையும் இடம் 82. அழுக்குப்பல் அழுக்குத் தூசோ டதிகபோ சனத்தை யுண்ணல் ஒழுக்கறு நிட்டூ ரங்கள் உரைக்குதல் உதய காலம் இழுக்கறு சாயங் காலம் துயிலுதல் என்னும் இந்த இழுக்குடை யவர்பால் என்றும் திருமகள் இருந்தி டாளே. (அ - ள்) அழுக்குத் தூசு - அழுக்குடை; போசனம் - உணவு; நிட்டூரங்கள் - கடுஞ்சொற்கள்; சாயங் காலம் (சாயுங்காலம்) - மாலை; இழுக்கு - இழிவு வழக்கங்கள். (82) பத்தியிலார் 83. அத்திக்காய் கோவை தேத்தான் ஐவிர லிக்காய் வெள்ளைக் கத்தரி சோற்றுக் காந்தல் கண்டிகை யாவ ரேனும் நத்தியே உண்பா ரானால் நாரணன் தாளின் மீது பத்திலே வாரா தென்று *பண்ணவர் அருளி னாரே. (அ - ள்) தேத்தான் - தேற்றான்கொட்டை; ஐவிரலிக்காய் - கோவையில் ஒருவகை; ஐவேலி என்பது அது; சோற்றுக் காந்தல் - பற்றுப்பிடித்த சோறு; நத்தி - விரும்பி; நாரணன் - திருமால்; பண்ணவர் - பெரியோர். (83) தீட்டு ஆகாதவை 84. மதலை, நீர் இடுமி டஞ் செம் பொன்னினாம் வட்டில் மின்னார் அதரமார் முத்தம், வேட்டை ஆடிய நாய்கள் கவ்வி உதவிய மிருகம், பச்சை உயர்வனக் கிளிகள் கோதும் இதமுள கனியி வைகட் கில்லையுச் சிட்டந் தானே. (அ - ள்) மதலை - குழந்தை; நீரிடுமிடம் - சாணக நீர் தெளித்த இடம்; மின்னார் அதரமார் முத்தம் - மகளிர் இதழொடு பொருந்திய முத்தம்; கோதும் - கொத்தும்; இதமுள - சுவையான; உச்சிட்டம் - எச்சில், தீட்டு. (84) இதுவும் அது 85. உற்றபாக் கிலையிங் கென்றும் இடைவிடா தோடும் தண்ணீர் பற்றிய கருப்புக் கட்டி பால்நறுஞ் செந்தேன் அன்பாய்ச் சொற்பயில் தோகை மார்கள் சுராவொடு பிசிதம் என்னும் மற்றிவை தமக்குச் சிட்டம் மன்னுவ தில்லை தானே. (அ - ள்) உற்ற பாக்கு இலை - பாக்குடன் பொருந்திய வெற்றிலை; பற்றிய - திரட்டிய; தோகைமார் - மகளிர்; சுரா - மது; பிசிதம் - புலால்; உச்சிட்டம் மன்னுவதில்லை - தீட்டு உண்டாவது இல்லை. (85) ஒரு கையால் ஏற்பதன் தவறு 86. பாக்குவெற் றிலைசு கந்தம் பரிமள மலர்நற் றூசு சேர்க்குமா பரணம் எல்லாம் சிறந்தொரு கரத்தால் வாங்கின், தூக்கியே தருவார்க் கென்றும் துலங்குமே சீர்க ளெல்லாம் தேக்கிடும் ஆயுள் உண்டாம் சேமமாம் வாழ்வுண் டாமே. (அ - ள்) சுகந்தம் - நறுமணக் கலவை; பரிமளமலர் - நறுமணமலர்; தூசு - ஆடை; ஆபரணம் - அணிகலம்; கரம் - கை; துலங்கும்- விளங்கும்; சீ;ர - சிறப்பு; தேக்கிடும் - நிரம்பிய; ஆயுள் - வாழ்நாள்; சேமம் - இன்பம், நன்மை. (86) இதுவந்தால் இதனை விடுவர் எனல் 87. வாசிவந் துற்றால் கோவை மறந்துகை விடுவர், நல்ல வேசிவந் துற்றால் பாரி தன்னையே வேண்டா மென்பர் மாசிலாக் கலைகள் வந்தால் மறைதனை மறப்பார் என்றும் தேசிக மருகன் வந்தால் சேயினை மறப்பர் அன்றே. (அ - ள்) வாசி - குதிரை; வந்துற்றால் - வந்துசேர்ந்தால்; கோவை - பசுவை; பாரி - மனையாள்; மறை - வேதம்; தேசிகம் - அழகு; சேய் - மகன். (87) திருமணம் செய்த இடத்தின் சிறப்பு 88. சீர்பெறு மவர்க்கும் மற்றச் சிறுமையோர் தமக்கும் வேட்ட ஏரகம் இனிதாம் என்போல், இந்திரை இடமாங் கீரப் பேர்பெறு கடலில் மாலும் பிரியமாய்ப் படுத்தான், ஈசன் ஏர்பெறு வெள்ளி வெற்பில் ஏறிவீற் றிருந்தான் அன்றே. (அ - ள்) வேட்ட - திருமணம் செய்த; ஏரகம் - அழகிய வீடு இந்திரை - திருமகள்; கீரப்பேர் பெறுகடல் - பாற்கடல்; மால் - திருமால்; ஈசன் - சிவபெருமான்; வெள்ளிவெற்பு - கயிலை மலை; வீற்றிருந்தான் - அமர்ந்திருந்தான். திருமகள் பாற்கடலிலும், உமை கயிலைமலையிலும் பிறந்தனர் என்னும் கதையை உட்கொண்டது இச்செய்தி. (88) கூற்றம் 89. முந்தின யுகத்தில் ரேணு, முதிர்திரே தாயு கத்தில் வந்திடும் சீதை, பின்னும் வளர்துவா பரயு கத்தில் சுந்தரஞ் சேரும் அந்தத் துரோபதி கூற்ற மானார் அந்தமில் கலியு கத்தில் அகந்தொறும் பெண்கள் கூற்றாம். (அ - ள்) முந்தினயுகம் - கிரேதாயுகம்; ரேணு - இரேணுகாதேவி; சுந்தரம் சேரும் - அழகமைந்த; அந்தமில் - முடிவில்லாத; அகந்தொறும் - வீடுதோறும். இம் மகளிரால் பலர் இறக்க நேர்ந்தமையால் கூற்றம் என்றார். (89) கைம்மாறு கருதாதவர் 90. நதிமரம் வானம் மூன்றும் நலந்தரும் உபகா ரங்கள் இதமுடன் செய்வ தல்லால் எதிருப காரம் ஏற்கா மதிபெறு நல்லோர் தாமும் வழங்கிடும் உபகா ரத்துக் கெதிருப காரங் கொள்ளார் இதுநிச மாகுந் தானே. (அ - ள்) வானம் - மழை; இதமுடன் - விருப்புடன்; எதிர் உபகாரம் - பதில் நன்மை; ஏற்கா - பெறமாட்டா; நிசமாகும் - உண்மையாகும் (90) வறுமையாளன் நிலை 91. நீர்புகா இடத்தில் நெய்தான் நேர்புகும்; நெய்பு காதேல் மோர்புகும்; மோர்பு காதேல் பால்புகும்; பால்பு காதேல் ஏர்புகை புகும்;பு காதேல் இலங்கிய தரித்தி ரந்தான் நேர்பெறப் புகுமி தென்றும் நிச்சயம் ஆகும் அன்றே. (அ - ள்) புகாதேல் - போகமுடியாது ஆனால்; ஏர்புகை - எழுந்துசெல்லும் புகை; இலங்கிய - விளங்கிய; நிச்சயம் - உறுதி. தரித்திரர் நுழையா இடத்தும் நுழைந்து போய்விடுவர் என்பது கூறியது. (91) இழப்புக்கு ஆளாகுவர் 92. பெற்றதில் நிறைவு கொள்ளாப் பிராமணன், எதுபெற் றாலும் மற்றதில் நிறைவு கொள்ளும் மன்னவன், மயங்கி லச்சை உற்றிடும் வேசி, நாணம் உறாக்குல மாது நால்வர் பற்றிடும் நட்ட முற்றுப் பரதவித் திடுவர் தாமே. (அ - ள்) மயங்கி - மையல் மிக்கு; லச்சை உற்றிடும் - நாணங் கொள்ளும்; நாணம் உறா - நாணுதல் இல்லாத; குலமாது - கற்புடைய மகள். பற்றிடும் - சேரும்; பரதவித் திடுவர் - துன்புறுவர். (92) இவர்க்கு இதனால் இன்னது இல்லை எனல் 93. நெற்பயிர் செய்வோர்க் கில்லை நேரிடும் தாழ்வு, நாவில் பற்றிய செபத்தோர்க் கில்லை பாதக இயமன் பாசம் சொற்பெறும் மவுனிக் கில்லை தொடங்கிய கலாமி ராவில் உற்றிடு விழிப்போர்க் கில்லை ஓங்கிய பயங்கள் தாமே. (அ - ள்) செபத்தோர் - மறைமொழி கூறுவோர்; இயமன் பாசம் - இயமன் வீசும் கயிற்றுள் மாட்டிக்கொள்ளல்; சொற் பெறும் - புகழப்பெறும்; மவுனி - பேசாநோன்புடையவன்; கலாம் - சண்டை; விழிப்போர் - உறங்காமல் இருப்பவர். (93) நஞ்செனத் தோன்றுவன 94. பருவங்கள் அற்று நூல்கள் பயிலலும், பசியில் லாத தருணங்கள் தம்மில் அன்னம் புசித்தலும், தரித்தி ரற்குக் கிரணங்கள் ஒத்த மின்னார் கோட்டியும், கிழவ னுக்குப் பொருமந்த வேற்க ணாளின் போகமும் விடமாய்த் தோன்றும். (அ - ள்) பருவங்கள் அற்று - இளமைப் பருவம் கடந்து; தருணம் - பொழுது; கிரணம் - ஒளிக்கற்றை; மின்னார் - மகளிர்; கோட்டி - கூட்டம்; பொரும்- தாக்கும்; போகம் - இன்பம்; விடம் - நஞ்சு. (94) தீயவன் இயற்கை 95. அரவுதுர்ச் சனரில் தீயோர் ஆரெனில் அரவு தன்னில் பரவு துர்ச் சனனே தீயோன்; பாம்புமந் திரத்தில் நிற்கும்; திரள்மணி *மருந்து தம்மால் தீர்ந்திடும்; சேர்ந்த துட்டன் ஒருவர்யோ சனையும் கேளான் அவன்கொடி யோனென் றோர்வாய். (அ - ள்) அரவு துர்ச்சனரில் - பாம்பு தீயோர் என்னும் இருவருள்; தீயோர் - மிகத்தீ தானவர்; ஆர்எனில் -யார்என்று வினவினால்; பரவு - பரவிய; திரள்மணி மருந்து - திரண்ட மணியாலும், மருந்தாலும்; யோசனை - நல்லுரை; ஓர்வாய் - அறிவாய். (95) கீழோன் தன்மை மாறாமை 96. கண்ணுறு கற்பூ ரத்தால், புனுகுகத் தூரி யாலே பண்ணிடு சேறு செய்தே, உள்ளியைப் பதித்துப், பன்னீர்த் தண்ணீராற் பயிர்செய் தாலும்தன்நாற்றம் நீங்கா தேபோல் நண்ணிஎத் தனைசொன் னாலும் துர்ச்சனன் *நல்லன் ஆகான் (அ - ள்) கண்உறு - சிறப்பமைந்த; உள்ளி - ஈரவெண்காயம்; பதித்து - ஊன்றி; நாற்றம் - தனக்கு இயல்பாய தீநாற்றம்; நீங்காதேபோல் - நீங்காமை போல; பன்னீர் - பனிநீர். (96) இவரை இவ்விடத்துத் துதிக்க எனல் 97. குருவினைத் துதிக்க முன்னே; கூடிய சபையில் நன்றி அருளினோன் தோழன் தம்மைத் துதித்திட; அடியார் தம்மைப் பரடிவய கருமம் வேண்டும் போதினில் துதிக்க; பாரி +உருமடிந் திடில்து திக்க; மகவினைத் துதிக்கொ ணாதே. (அ - ள்) முன்னே - நேரில்; கருமம் வேண்டும் போதில் - கடமை புரியவேண்டிய பொழுதில்; அடியார் - வேலையாளர்; பாரி உரு மடிந்திடில் - மனையாள் உடல் அழிந்தால் (இறந்தால்); மகவினைத் துதிக்க ஒணாதே - மக்களைத் துதித்தல் ஆகாது. (97) காணற்குக் கூடாதவை 98. தாவுபக் கியிற்சண் டாளி **தந்திரக் காக்கை; நாற்கால் மேவிய மிருகந் தம்மில் கழுதைசண் டாளி; என்றும் ஆவது கரும யோகத் தவரிற்சண் டாளன் கோபி; பூவில்வாழ் மாந்தர் தம்மில் பொருந்துதூ சணன்சண்டாளன். (அ - ள்) தாவு பக்கி - பறக்கும் பறவை; சண்டாளி - தாழ்ந்தது; மேவிய - அடைந்த; கரும யோகத்தவர் - கடமையே கண்ணான தவத்தவர்; பூவில் வாழ் - உலகில் வாழும்; தூசணன் - பிறரை வசைமொழி கூறுபவன். (98) நற்குடிக்கு அமையும் ஒழுக்கம் 99. கார்தனைக் கண்ட மஞ்ஞை கதித்தெழுந் தாடல் போலும் சீர்பெறு மதியைக் கண்டால் செவ்வல்லி மலர்தல் போலும் சார்வுறு வசந்த காலம் தழைத்திடு மரங்கள் போலும் பேர்பெறு குலத்தில் வாழும் பிள்ளைகட் கொழுக்கம் சேரும். (அ - ள்) கார் - மேகம்; மஞ்ஞை - மயில்; கதித்து - விரைந்து; மதி - திங்கள்; வசந்தகாலம் - இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி); பேர்பெறு குலம் - புகழ்வாய்ந்த நற்குடி. (99) கொலைக் குற்றத்திற்கு ஒப்பானவை 100. சோதிடம் சொல்லு வோனும், தொல்வழக் குரைப்போன் தானும் பேதமாய் எவற்றிற் கேனும் +பிராச்சித்தம் விதிக்கின் றோனும் நீதமாய் வயித்தி யங்கள் நிகழ்த்திடு வோனும், நூலின் சோதனை தப்பிச் செய்தால் பிரமத்தி தோசம் சேரும். (அ - ள்) தொல்வழக்கு - பழமையான வழக்குகள்; பேதமாய் - மாறுபாடாய்; பிராச்சிதம் - (பிராயச்சித்தம்) விலக்காகும் வகை; நீதமாய் - முறையாய்; நூலின் சோதனை தப்பி - நூலை ஆராய்ந்த முறைமை தவறி; பிரமகத்தி தோசம் - பிராமணனைக் கொன்ற பாவம்; சேரும் - வந்துசேரும். (100) நீதிசாரம் அருஞ்சொற் பொருளுடன் முற்றிற்று. * பாடவேறுபாடு சுந்தரப்பொற். * பதியும் * என்ன * மீன்கள் வானத் * அதிகாரத் திங்களாலும் * வாலினில் * வனச மீதில். + இயற்றும். ++ அதளை. * அலதே. + கருந்துரோகம். * வாசனையிலாமல் நின்று வயங்குமவ் வாற தன்றோ. + அமர்மறு கருகே சென்றால். + மகவியை. * வர்த்திக்கும். + சேர்ந்தமுற். * இவர்களின் வித்தைசெல்வம் எழில்மரணங்கள் * நயந்துதன் உகிராற். * சேர்ந்திடு. * அழிந்திடும் * போந்திடு காமச். + பானு. ** தங்கண், பெறுவது கருமமாகப் பேசுவார் விடாமல் தானே. 72.பா.வே. மூற்கனி லளவு மட்டும் முயன்றிடுங் கிராமணிக்கு மேற்கின்றன் பதிக்கு மற்ற இறைவனும் இயங்கும் என்றும் காக்கின்றபுவிக்கு மேரைக் கற்றவர் தேசமெங்கும் ஆக்குநல் இடங்கள் எல்லாம் பூச்சியன் ஆவன் அன்றே. * விதத்துடன். + விளம்புவான். * சேதமாமோ? 80.பா-வே. புள்ளுக்குப் பலமா காயம் பொருந்துமீன் தனக்கு நீராம் எள்ளுற்ற பேதைக்குத்தன் இறைவனே பலம தாகும் தெள்ளுற்ற சிறியோர்க்கென்றும் அரற்றுகை பலமதாகும் கள்ளுற்ற குழலாய் நாளும் பலமெனக் கண்டுகொள்ளே. + பற்கசப் புறுவேம் புக்கும் பகர்மண மருவி னுக்கும். 82.பா.வே. அழுக்குப் பல் அழுக்குத் தூசும் அதிகபோ சனத்தான் என்றும் ஒழுக்கத்து நிட்டூரங்கள் உரைப்பவன் உதய காலம் பழுதற்ற சாயங்காலத் துயில்பவன் தன்னைப் பார்த்து இழுக்குற்று மலராள் மாலோ டாகிலும் இராள்நான் என்றே. * பரமனார். 84. பா-வே. மதலைநீர் இடுமிடங்கண் மகிழ்ச்சியாய் இரவில்மின்னார் அதரபாத னங்கள் வேட்டை ஆடிய நாய்கள் கவ்வி உதவிய மிருகந்தானும் உணர்ந்ததோர் கிளிகள் கோதும் இதமுள கனிக்கு மென்றும் உச்சிட்டம் இல்லைதானே. 88.பா - வே. சீர்பெறு மவர்க்கு மற்றச் சிறுமையோர் தமக்கும் வேட்ட ஏரகம் இனிதாம் என்போல் பொருந்திடும் பிறந்த இல்லம் பார்பெறக் கடலில் மாலும் பள்ளிகொண்டிருந்தான் ஈசன் ஏர்பெறும் உமையாள் இல்லம் கிரியின்மேல் இருந்தான் அன்றே. 91.பா - வே. நீர்நுழையா இடத்தில் நெய்புகும் நெய்போல் என்றும் மோர் நுழையா இடத்தில் பால்புகும் பால்போல் என்றும் பேர்நுழையா இடத்தில் புகைபுகும் புகைபோல் என்றும் சீர் நுழையா இடத்தில் தரித்திரன் நுழைவான் என்றே. * யதனால் நிற்கும் சேர்ந்ததுர்ச் சனன்தான் என்றும். * நலத்தன் + மருவிடுங் கால்து திக்க. ** சாற்றிய. + பெருங்கழு வாய்சொல் வோனும். பா - வே - 99 கார்தனைக் கண்ட மஞ்ஞை கதித்தெழுந் தாடல் போலும் ஏர்பெறு மதியைக் கண்டால் ஆம்பலும் மலர்தல் போலும் சார்வுறு வசந்த காலம் தழைத்திடும் அடவி போலும் சீர்பெறு குலத்தில் வாழும் செல்வர்க்கா சாரம் சேரும்.