இளங்குமரனார் தமிழ்வளம் 17 புறத்திரட்டு ஙரூபுஹது ஓஒ ஓகூக்ஷபீது இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 14. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 17 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 568 = 584 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 365/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் புறத்திரட்டு பதிப்பாசிரியர் முன்னுரை 3 புறத்திரட்டுத் தொகுப்புக்கு உதவிய மூலநூற் குறிப்புக்கள் 19 புறத்திரட்டுப் பதிப்புக்குப் பயன்படுத்தப்பெற்ற ஒப்பு நூல்கள் 64 1. அறத்துப்பால் 1. கடவுள் வாழ்த்து 67 2. அவையடக்கம் 70 3. நீத்தார் பெருமை 72 4. பெறுதற்கருமை 73 5. அறன் வலியுறுத்தல் 75 6. இல்வாழ்க்கை 81 7. கற்புடை மகளிர் 85 8. கற்பில் மகளிர் 88 9. புதல்வரைப் பெறுதல் 91 10. விருந்தோம்பல் 93 11. இனியவை கூறல் 94 12. செய்ந்நன்றி யறிதல் 95 13. நடுவு நிலைமை 97 14. அடக்கமுடைமை 98 15. ஒழுக்கமுடைமை 101 16. பிறர்மனை நயவாமை 104 17. பொறையுடைமை 106 18. வெஃகாமை 109 19. அவா 110 20. புறங்கூறாமை 112 21. இகழாமை 113 22. தீவினை யச்சம் 114 23. தானம் 118 24. ஈகை 120 25. ஈயாமை 123 26. புகழ் 126 27. அருளுடைமை 127 28. புலால் மறுத்தல் 130 29. தவம் 132 30. கூடாவொழுக்கம் 136 31. புணர்ச்சி விழையாமை 138 32. கள்ளாமை 141 33. பொய்யாமை 143 34. வெகுளாமை 145 35. இன்னா செய்யாமை 146 36. கொல்லாமை 148 37. செல்வ நிலையாமை 151 38. இளமை நிலையாமை 156 39. யாக்கை நிலையாமை 159 40. பல்வகை நிலையாமை 165 41. தூய்தன்மை 168 42. துறவு 171 43. மெய்யுணர்தல் 175 44. அவா வறுத்தல் 180 45. பழவினை 181 2. பொருட்பால் 46. இறை மாட்சி 187 47. கல்வி 193 48. கல்லாமை 197 49. கேள்வி 198 50. அறிவுடைமை 200 51. குற்றங் கடிதல் 203 52. பெரியாரைத் துணைக்கோடல் 205 53. நன்கறிவுறுத்தல் 207 54. சிற்றினஞ் சேராமை 211 55. தெரிந்து செயல்வகை 213 56. வலி யறிதல் 217 57. கால மறிதல் 219 58. இடனறிதல் 221 59. தெரிந்து தெளிதல் 222 60. தெரிந்து வினையாடல் 224 61. சுற்றந் தழால் 228 62. பொச்சாவாமை 230 63. செங்கோன்மை 233 64. கொடுங்கோன்மை 236 65. வெருவந்த செய்யாமை 238 66. கண்ணோட்டம் 240 67. ஒற்றாடல் 241 69. தாளாண்மை 244 71. அமைச்சு 251 72. சொல் வன்மை 256 73. வினைசெயல்வகை 258 74. தூது 260 75. மன்னரைச் சேர்ந்தொழுகல் 266 76. குறிப்பறிதல் 270 77. அவையறிதல் 272 78. நாடு 275 79. அரண் 280 80. நகர் 284 81. பொருள் செயல்வகை 288 82. படைமாட்சி 292 83. நட்பு 296 84. நட்பாராய்தல் 299 85. நட்பிற் பிழைபொறுத்தல் 301 86. தீநட்பு 304 87. கூடா நட்பு 306 88. பேதைமை 307 89. புல்லறிவாண்மை 311 90. பகைத்திறந் தெரிதல் 314 91. உட்பகை 317 92. பெரியாரைப் பிழையாமை 319 93. பொதுமகளிர் 324 94. கள்ளுண்ணாமை 329 95. சூது 331 96. குடிப்பிறப்பு 333 97. மானம் 336 98. பெருமை 338 99. சான்றாண்மை 341 100. பண்புடைமை 344 101. நன்றியில் செல்வம் 346 102. நாணுடைமை 349 103. குடிமரபு 350 105. இரவு 355 106. இரவச்சம் 357 107. கயமை 359 108. பல்பொருள் 363 109. நிரைகோடல் 368 110. நிரைமீட்சி 371 111. பகைவயிற் சேறல் 373 112. எதிரூன்றல் 376 113. பாசறை 378 114. பகைப்புலம் பழித்தல் 380 115. திறை 383 116. மகள் மறுத்தல் 386 117. வஞ்சினம் 388 118. படைச் செருக்கு 390 119. எயில் கோடல் 394 120. எயில் காத்தல் 397 121. அமர் 400 122. தானை மறம் 404 123. குதிரை மறம் 410 124. யானை மறம் 413 125. மூதில் மறம் 416 126. களம் 421 127. இரங்கல் 425 128. வென்றி 431 129. புகழ் 435 130. பரிசில் 444 131. வாழ்த்து 446 குறிப்புரை 451 பின்னிணைப்பு - 1 452 குறிப்புரை 489 செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 548 புறத்திரட்டு பதிப்பாசிரியர் முன்னுரை தமிழன்னை எத்துணை எத்துணையோ நறுமண மலர்களைப் பெற்றிருக்கிறாள்; அம்மலர்களைத் தனித்தனியே கண்டு கண்டு நுகர்ந்து நுகர்ந்து களிப்புற்றிருக்கிறாள்; தனித்தனி மலர்களை மாலையாக்கித் தொடுத்து அதன் மாண்பிலே மயங்கியிருக்கிறாள்; மாலைகளையும் பிணையலாக்கிச் சூடிச் சூடிப் பேருவகை யுற்றிருக் கிறாள்; அவ்வெழிற் காட்சியிற் றோய்ந்து மெய்ம்மயங்கித் தன் மக்கள் தம்மை மறந்து வாயார வாழ்த்திக் கொண்டிருந்த பொழுதி லேயே எத்துணையோ நறுமண மலர்களையும் மாலைகளையும் மறைந்துபோக விட்டுவிட்டாள்! சிதைந்துபோக விட்டுவிட்டாள்! உதிர்ந்துபோக விட்டுவிட்டாள்! அவளா மறையவும் சிதையவும் உதிரவும் விட்டுவிட்டாள்! மயங்கிய மடவராம் மக்கள் விட்டு விட்டனர். மயக்கத்தின் இடையே விழித்த ஓரிருவர் அன்னையின் அணிகலங்களையும் அழகு மாலைகளையும் நோக்கினர். அந்தோ! அவட்குப் பூட்டப்பெற்ற அணிகள் எத்துணை எத்துணை! மணிகள் எத்துணை எத்துணை! சூட்டப்பெற்ற மலர்கள் எத்துணை எத்துணை! மாலைகள் எத்துணை எத்துணை! திருவோலக்கம் தீருமுன்னரே திருடு போகி விட்டனவே! cyh¡fh£á XíK‹dnu Xo x˪J É£ldnt! என்று ஆடி ஓடித் தேட முனைந்தனர். ஒருவன் செய்த செயற்கருஞ் செயலால் சில மலர்களில் சில இதழ்கள் கிட்டின; சில மாலைகளில் சில மலர்கள் கிட்டின; ஏக்கம் பெரிதாயிற்று! என் செய்வது! மேலும் தேடினர், பயனில்லை. இழந்த மலர்களிலும் மாலைகளிலும் சில இதழ்களையும், மலர்களையுமாவது கண்டு களிக்கத் தேடித் தந்தானே ஒருவன் - அவன் வள்ளல்! அவன் அருளாளன்! அவன் அறிஞன்! தன்னிலை மறந்த தமிழர் இடையே தகவாளனாகத் தவழ்ந்த அவன் வாழ்க! என்று வாழ்த்தினர்! அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்! - இவ்வெண்ணமே புறத்திரட்டு என்னும் இந்நூலைக் காண்பார் உள்ளத்தெல்லாம் ஊற்றெடுத்துப் பெருகுதல் உண்மையாம். * * * புறப்பொருள் பற்றிய அரிய பாடல் மணிகளைத் திரட்டி வைத்த ஒரு பொற்பேழை புறத்திரட்டு. ஆம், இப்புறத்திரட்டு பொற்பேழை மட்டுமன்று! ஒரு பெரும் புதையல்; அருமணிப் புதையல்! இதனைத் தொகுத்து வைத்த தொண்டன் தமிழ் அன்னைக்கு வாய்த்த ஒப்பதோர் அன்பில்லாக் கண்ணப்பன்! சுவைத்துச் சுவைத்து இறைவன் உண்ணுதற்கு அதுக்கி அதுக்கிப் பார்த்து அரியவை தேர்ந்து படைத்த கண்ணப்பனுக்கு ஒப்பாகச் செந்தமிழ்ப் பாக்களின் சுவையிலும் அழகிலும் ஈடுபட்டு ஈடுபட்டுத் தான்பெற்ற இன்பம், தமிழ் கூறும் நல்லுலகும் எய்துமாறு படைத்து வைத்த பண்பாளி! திக்குத் தெரியாத காட்டில் திரட்டி வைக்கப் பெற்ற மணிகளை எவ்வாறு இனம் காண்பேம், எவ்வாறு இடம் காண்பேம் என்று தத்தளிக்கும்போது, சீருறக் காட்சிச் சாலையில் அடுக்கிக் காட்டி இப்பொருள் இங்குக் கிடைத்தது என்று குறிப்பும் எழுதி வைத்த ஏந்தல்! அவன் பெயர் என்ன? mt‹ tuyhW jh‹ v‹d? என்னும் ஆர்வத்தால் உந்தப்பட்டுப் புரட்டிப் பார்ப்பவர்க்கு ஏக்கம் உண்டாக - பிறர் பிறர் பெயரையெல்லாம் சுட்டிக் காட்டித் தன் பெயரை மட்டும் தன்பேரர்க்குக் காட்டாத புகழும் வேண்டாப் புகழாளி! அவன் தகவுக்கு அஃதேற்கலாம்; நமக்கு எத்துணைப் பேரிழப்பு! * * * சங்க நூல்கள் முதல் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்கள் வரை அமைந்த புறப்பொருட் செய்யுட்களைத் தொகுத்துக் காட்டிய ஓர் அரிய தொகை நூல் புறத்திரட்டு; சங்கத் தொகை நூல்கள், பல தனிப்பாடல்களைத் தொகுத்துத் தொகையாக்கப் பெற்றது. புறத்திரட்டு, பல நூல்களில் அமைந்த பாடல்களைப் பிரித்துத் தொகையாக்கப் பெற்றது. முன்னது மலர்களை மாலையாக்கிய பணி. பின்னது மாலையில் திகழ்ந்த அருமலர் களைத் தனியே எடுத்துத் தொடுத்து மாலையாக்கிய பணி! புறத்திரட்டு அறத்துப்பால் பொருட்பால் என்னும் இரண்டு பால்களைத் தன்னகத்துக் கொண்டது. அறத்துப் பால் 45 அதிகாரங் களையும் 473 செய்யுட்களையும் உடையது. பொருட்பால் 86 அதிகாரங்களையும் 1033 செய்யுட்களையும் உடையது. இப்புறத் திரட்டுக்குச் சுருக்க நூல் ஒன்று தோன்றியது. அஃது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்னும் முப்பால்களை யுடைய தாயிற்று. காமத்துப் பாலில் 65 செய்யுட்கள் உள. அவையனைத்தும் முத்தொள்ளாயிரச் செய்யுட்கள்; பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாகக் கொண்ட புறப்பொருட் கைக்கிளையைச் சார்ந்தவை. பால் பகுத்தலில் மட்டுமல்லாது அதிகாரம் பகுத்தலிலும் புறத்திரட்டு திருக்குறளையே நிலைக்களமாகக் கொண்டுள்ளது. திருக்குறளில் அறத்துப்பாலும் பொருட்பாலும் சேர்ந்து 108 அதிகாரங்கள் உள. புறத்திரட்டில் புறப்பொருள் பற்றிய வெட்சி முதல் வாழ்த்துப் பகுதி நீங்கிய அதிகாரங்கள் நூற்றெட்டே ஆகும். இந்நூற்றெட்டு அதிகாரங்களில் 14 அதிகாரப் பெயர்கள் மட்டுமே புறத்திரட்டில் இல்லை. எஞ்சிய அனைத்தும் குறளிலும் புறத் திரட்டிலும் ஒன்றாகவே அமைந்துள்ளன. ஆதலால் புறத்திரட்டுத் தொகை செய்த ஆசிரியர் குறள் அதிகாரங்களையும் பால்களையும் முன்னிறுத்தித் தம்பணி செய்தார் என்பது வெளிப்படை. புறப்பொருள் பற்றிய அதிகாரங்கள் பன்னிரு படலத்தை மையமாகக் கொண்டு செய்யப் பெற்றவை. வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா தெதிரூன்றல் காஞ்சி யெயில்காத்தல் நொச்சி அதுவளைத்த லாகும் உழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் செருவென் றதுவாகை யாம் என்பது ஒரு பழஞ்செய்யுள், இந்நெறியைப் போற்றி நிரைகவர்தல் முதலாக அதிகாரங்கள் அமைத்து வாழ்த்துடன் நூலை நிறைவு செய்துள்ளார். இவ்வகையால் புறத்தினை பற்றிய அதிகாரங் களாகப் பொருட்பாலில் அமைந்துள்ளவை இருபத்துமூன்றாம். * * * புறத்திரட்டில் தொகுக்கப்பெற்றுள்ள நூல்களை நான்கு வகையாகப் பகுக்கலாம். அவை: (1) முழுமையாக நமக்குக் கிடைத்துள்ள நூல்கள் (2) அரைகுறையாகக் கிடைத்துள்ள நூல்கள் (3) உரையாசிரியர்களால் பெயரறிந்த நூல்கள் (4) பெயரும் அறியப்பெறாத நூல்கள். அறநெறிச்சாரம், ஆசாரக்கோவை, இராமாயணம், இன்னா நாற்பது, இனியவைநாற்பது, ஏலாதி, களவழி நாற்பது, சீவக சிந்தாமணி, சூளாமணி, திரிகடுகம், நளவெண்பா, நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, புறநானூறு புறப்பொருள் வெண்பாமாலை, மேருமந்தர புராணம், யாப்பருங் கலம் என்னும் பதினெட்டு நூல்களும் முதல் வகையைச் சேர்ந்தவை. இந்நூல்களில் உள்ள பாடல்களில் பல, புறத்திரட்டால் திருத்தமும் தெளிவுமுள்ள நல்ல பாடங்களைப் பெற்றுள. அன்றியும் இராமா யணத்திற்கு இராமாவதாரம் என்னும் பெயருண்மை புறத் திரட்டால்தான் முதற்கண் அறிய வந்தது. நளவெண்பா நளன் கதை என்னும் பெயரால் வழங்கப் பெற்ற தென்பதையும் இப் புறத் திரட்டால் அறிகிறோம். சிறுபஞ்சமூலம், பதிற்றுப்பத்து, பரிபாடல், பாரத வெண்பா ஆகிய நான்கு நூல்களும் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. இவற்றுள் சிறுபஞ்சமூலத்திற்குரிய மூன்று செய்யுட்கள் புறத் திரட்டால் கிடைத்துள. (புறத். 206, 207, 311) பதிற்றுப்பத்தின் முதற் பத்தும், இறுதிப் பத்தும், கிடைத்தில, எஞ்சிய எட்டுப் பத்துக்களே கிட்டின. ஆனால், புறத்திரட்டால் பதிற்றுப்பத்தைச் சேர்ந்த ஒரு முழுச்செய்யுள் கிட்டியுளது (1275). இளம்பூரணரால் தொல்காப்பிய உரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாடலின் மூன்று அடிகளைக் காட்டிப் பதிற்றுப்பத்தைச் சேர்ந்ததாக ஆசிரியர் நச்சினார்க்கினியர் குறித்தார். அப்பாடலை முழுமையாகக் காட்டிப் பதிற்றுப்பத்து என்றும் கூறுகிறது புறத் திரட்டு (1260) எழுபது பரிபாடல்களில் 24 பாடல்களே கிடைத்துள. எஞ்சிய பாடல்களைச் சேர்ந்த ஆறு உறுப்புக்களைப் புறத்திரட்டு வழங்கு கின்றது. அவையனைத்தும் மதுரை மாநகரைப் பற்றியவை (புறத். 866, 874, 875, 876, 877, 878). பெருந்தேவனாரால் இயற்றப்பெற்ற பாரத வெண்பாவில் உத்தியோக பர்வத்திற்கும் யுத்த பர்வத்திற் பதின்மூன்று நாட் போர்களுக்குமுரிய பகுதிகளே கிடைத்துள்ளன. இப்பகுதியில் அமைந்த வெண்பாக்கள் 830ஆம். இப்புறத்திரட்டால் 32 வெண்பாக்கள் புதியனவாகக் கிடைத்துள. இரும்பல் காஞ்சி, குண்டலகேசி, தகடூர் யாத்திரை, பெரும் பொருள் விளக்கம், முத்தொள்ளாயிரம், வளையாபதி என்னும் ஆறு நூல்களும் மூன்றாம் வகையைச் சார்ந்தவை. இந்நூற்களின் பெயர் களை உரையாசிரியர்கள் எடுத்தாள்வதோடு சிற்சில பாக்களையும் மேற்கோள் காட்டியுளர். ஆனால் புறத்திரட்டே மிகுதியான பாக்களை நமக்கு வழங்கியுள்ளது. மொத்தம் நமக்குக் புறத்திரட்டால் கிடைத்துள்ள பாடல்கள் பெற்றுள்ள பாடல்கள் இரும்பல் காஞ்சி 5 3 குண்டலகேசி 19 19 தகடூர் யாத்திரை 48 44 முத்தொள்ளாயிரம் 110 புறத்திரட்டால் 44 புறத்திரட்டுச் சுருக்கத்தால் 65 ஆக - 109 வளையாபதி 72 66 பெரும்பொருள் விளக்கம் 41 41 நான்காவது வகையைச் சேர்ந்த நூல்கள் ஆசிரியமாலை, சாந்தி புராணம், நாரதசரிதை என்னும் மூன்றுமாம். இவற்றின் பாடல்கள் அனைத்தும் புறத்திரட்டால் கிடைத்தனவே. நூல் கிடைத்துள்ள பாடல்கள் ஆசிரியமாலை 16 சாந்திபுராணம் 9 நாரதசரிதை 8 * * * புறத்திரட்டு என்பது ஒரு தொகை நூல். அதனைப்பற்றி அறியும் நாம் தொகை நூல்கள் தோன்றிப் பெருகிய வரலாற்றைச் சுருங்கிய அளவிலேனும் அறிவது இன்றியமையாததாம். வழிநூல் வகையைக் கூறவந்த ஆசிரியர் தொல்காப்பியனார் தொகுத்தல் என்பதை முதற்கண் குறிப்பிட்டுள்ளார். முதனூலுள் விரிந்ததனைச் சில்வாழ் நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறல் என்று உரை கூறிய பேராசிரியர் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம் பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின் தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும உளதாயிற்றெனக் கொள்க என்று விளக்கம் எழுதியுள்ளார். இதனால் தொல்காப்பியம் ஒரு தொகை நூல் என்பது அவர் கருத்தாயிற்று. இனிப் பாயிரம் பாடிய பனம்பாரனார்க்கும் இதுவே கருத்தென்பது. வழக்கஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்பதனால் புலப்படும். தொல்காப்பிய நெறியில் தோன்றிய நூல்கள் பாட்டும் தொகையும் என்னும் பதினெட்டும் பிறவுமாம். பாட்டு என்பது பத்துப்பாட்டையும் தொகை என்பது எட்டுத்தொகையையும் குறிப்பது தமிழுலகு நன்கு அறிந்ததே. பாட்டு தொகை என்று சுட்டும் வழக்கு உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டே உண்டா யிருந்தது என்பது அவர்கள் உரையால் நன்கு புலப்படுகின்றது. மாயோன் மேய என்னும் நூற்பாவின்கண் தொகை களிலும் கீழ்க்கணக்குகளிலும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க என்றும் கொடுப்போரேத்தி என்னும் நூற்பாவின்கண் தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டுமென்றுணர்க என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவதாலும், ஐவகை அடியும் என்னும் நூற்பாவின்கண் ஆசிரிய அடி முந்நூற்றறுபத்து நான்கும் பாட்டினுந் தொகையினும் வருமாறு கண்டு கொள்க என்றும், மரபேதானும் என்னும் நூற்பாவின்கண், அதோளி இதோளி உதோளி எனவுங் குயின் எனவும் இவை ஒரு காலத்துள வாகி இக்காலத்திலவாயின. அவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுட் செய்யப்படா. அவை ஆசிரியர் நூல் செய்த காலத்துளவாயினும் கடைச்சங்கத்தார் காலத்து வழக்கு வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர். அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலினென்பது. இனி, பாட்டினுந் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக் குரித்தன்றிப் போயினவும் உள என்றும் பேராசிரியர் கூறுவதாலும் அவர்கள் காலத்திற்கு முன்னரே பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்னும் வழக்குண்மை அறியலாம். இனி உரையாசிரியர் இளம்பூரணர் காலத்திற்கு முன்னரே இவ் வழக்குண்மையை, ஆசிரியப் பாட்டின் என்னும் நூற்பாவின் கண் பெரிய பாட்டு பத்துப்பாட்டினுள்ளும், சிலப்பதிகாரத் துள்ளும், மணிமேகலையுள்ளும் கண்டு கொள்க என்று அவர் உரை விரிப்பதால் அறியலாம். இதே நூற்பாவில் கூத்தராற்றுப் படை தலையளவிற்கு எல்லை, மதுரைக் காஞ்சியும், பட்டினப் பாலையும் ஒழிந்தபாட்டு ஏழும், பரிபாடலும் கலியும் ஒழிந்த தொகை ஆறும் இடையளவிற்கு எல்லை என்று நச்சினார்க்கினியர் விளக்குதலால் பாட்டின் பெயர்களும், தொகையின் பெயர்களும் விளங்குதல் காண்க. முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து என்னும் வெண்பாவால் பத்துப்பாட்டு இவை என்பதும், நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை என்னும் வெண்பாவால் எட்டுத்தொகை இவை என்பதும் வெளிப்படும். பாட்டுந் தொகையும் பாடினோர் சங்க காலத்தவர். பாடப் பெற்றோரும் சங்க காலத்தவர். பெரும்பாலனவும் தனிப் பாடல்கள். தனி மலரினும் மாலையின் பயனும் எழிலும் மிகுதியல்லவா! அதனால் தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை யாக்கும் எண்ணம் புலவர்கள் உள்ளத்தில் எழுந்தது! ஊசி எவ்வளவு எளிதாகத் தொலைந்து போகிறது! ஆனால் நூலோடு இணைத்து வைத்தால் - அட்டையில் செறித்து வைத்தால் தொலையாதன்றே - இவ் வெண்ணத்தைப் பட்டறிவு தூண்டியது - பாராண்ட பைந்தமிழ் வேந்தர்கள் பாங்கறிந்து கடனாற்றினர். தமிழ்த்தாய் பெற்றிருந்த தனி மலர்கள், தொடையல்கள் ஆகி அவட்கு எழிலூட்டின. தனிப்பாடல்களைத் தொகைப்படுத்துவதும் எளிதோ? கை போனவாறு கட்டி வைப்பதோ? வரன்முறை - வைப்பு முறை - பொருத்தம் வேண்டாவோ? ஆம், பருப்பொருள்களை ஒரு நெறிப்படுத்தி வைப்பதே அரிதாயிருக்க, அரிதினும் அரிதாம் நுண்பொருளை ஒழுங்குபடுத்துவது எத்துணை அருஞ்செயல்? பாட்டு தொகைகளை நோக்க அவற்றுள் மூவகைப்பாடல்கள் அமைந்திருத்தல் கண்கூடு. அவை, அகவற்பா, கலிப்பா, பரிபாடல் என்பவை. பாவகைப்படி தொகுத்தால் தொகையை மூன்றாக்கி விடலாம். அதற்குத் துணை நின்றவை கலிப்பாவும் பரிபாடலுமே. கலிப்பாவாகத் தேர்ந்து தொகுத்தவை 150 பாடல்கள். பரி பாடலாகத் தொகுத்தவை 70 பாடல்கள். இவற்றைத் தனித்தனி நூலாக்குதல் எளிதாயிற்று! கலிப்பா ஐம்பெரும் புலவர்களால் ஐந்திணை குறித்துப் பாடப்பெற்றவை. ஆகவே திணை வரிசையில் வரன்முறை செய்து கலித்தொகை என்னும் பெயர் சூட்டப்பெற்றது. பரிபாடல்கள் எழுபதும் திருமால் செவ்வேள், வையை என்னும் முப்பொருள் பற்றியவையாக இருந்தன. இவற்றை அடைவு செய்தற்கு முன்னின்றது பண்! ஆகவே பாலை, நோதிறம், காந்தாரம் முதலியவாகப் பண்ணடைவில் அவற்றை ஒழுங்கு செய்து பரிபாடல் எனப் பெயர் சூட்டினர். எஞ்சிய அகவற் பாடல்களோ மிக்கிருந்தன. அவற்றை அகம், புறம் எனத் திணை குறித்து இருபாற் படுத்தலாம்! இவ் வெண்ணத் தால் பார்ப்பினும் அகப்பாடல்கள் எண்ணிக்கை ஒரு நூற்குட்படுவ தாக இல்லை. அப்பொழுது நல்லிசைப் புலவர் நெஞ்சத்தே அடியளவு என்னும் ஓர் அளவுகோல் கிடைத்தது. அன்றியும் ஒரு திணை பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தொகையாகப் பாடிய பாடல்களைத் தனியே நூறு பாட்டாய் ஐந்திணைக்கும் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட ஐங்குறு நூற்றை அடியளவைக் கோல் இன்றி ஒதுக்கவும், பத்துப் புலவர்கள் பத்துச் சேர வேந்தர்களைப் பப்பத்துப் பாடலாகப் பாடிய பதிற்றுப்பத்தை ஒதுக்கவும் அவற்றைத் தனித்தனி நூலாக்கவும் வாய்ப்பாயிற்று. இன்னும் எஞ்சி யிருப்பவற்றுள் புறப்பாடல்கள் நானூறு இருந்தன. அவற்றைப் புறநானூறு என்னும் பெயரால் தொகையாக்கினர். இன்னும் எஞ்சிய பாடல்கள் அடியளவு கருதித் தொகுக்கப் பெற்றன. நான்கு முதல் எட்டடியீறான பாடல்கள் நானூறும், ஒன்பதடி முதல் பன்னீரடியீறான பாடல்கள் நானூறும், பதின் மூன்றடி முதல் முப்பத்தோரடியீறான பாடல்கள் நானூறும் ஆக 1200 பாடல்கள் இருக்கக் கண்டு அவற்றை முறையே குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, நெடுந்தொகை அல்லது அகநானூறு எனப் பெயர் சூட்டினர். இவ்வளவுடன் சங்கப் பாடல்களின் தொகுப்பு முடிந்து விடவில்லை. பத்து நெடும்பாட்டுக்கள் எஞ்சி நின்றன. அவற்றை அகம் புறம் என்னும் பொருள் கருதாமல் பாடல் நெடுமை கருதி ஒரு தொகை யாக்கிப் பத்துப் பாட்டெனப் பெயர் சூட்டினர். நாலடி முதல் எட்டடியீறான பாடல்கள் நானூற்றைச் செங்கல் போல அடுக்கி விடக் கூடுமா? அதற்கும் அடங்கன் முறை வேண்டுமே! இந்நிலையில்தான் தனித் தனி தேர்ந்து பாடல்களை அடைவு செய்யும் திருப்பணியைத் தேர்ந்த புலவர்கள் சிலரிடத்தே புலவர்களும் புரவலர்களும் ஒப்படைத்தனர். திரட்டித் தொகுத்த பணி, புலவர் புரவலர் ஆகிய அனைவர் பொதுப்பணி. அதனை நூல் அடைவு செய்தது தனிப் புலவர் தனிப் புரவலர் பணி. 1இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர். இத்தொகை நாடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பெற்றது 2இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டடி காறும் உயரப்பெற்றது; இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி 3இத்தொகைப் பாட்டிற் கடியளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான் 4இத்தொகை தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையார் 5முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல். பொருள் 3). என்புழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்றலின் இத் தொகையைப் பாலை குறிஞ்சி முல்லை நெய்தலென இம்முறையே கோத்தார் நல்ந்துவனார் இக்குறிப்புக்களால் நாம் மேலே கண்ட செய்திகள் விளக்கமாம். நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு என்னும் வெண்பாவால் கீழ்க்கணக்கு நூல்கள் இவை என அறியலாம். கீழ்க் கணக்கின் தன்மை, அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடக்கி அவ்வத் திறப்பட உரைப்பது கீழ்க்கணக் காகும் என்னும் பன்னிரு பாட்டியல் நூற்பாவால் விளங்கும். கீழ்க்கணக்கில் முதலாவதாகச் சுட்டப் பெறுவது நாலடியார். சமண முனிவர் பலரால் பாடப்பெற்ற நாலடிப் பாடல்களில் சிறந்தனவாம் நானூற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்ததே நாலடி நானூறாம். இக் கருத்தைப் புலப்படுத்துவதே பாண்டியன் அவைக் கண் இருந்த எண்ணாயிரம் சமணப் புலவர்களும் தனித்தனி ஒரு வெண்பா இயற்றி வைத்துச் செல்லச், சினங்கொண்ட பாண்டியன் வையையில் அள்ளி எறியஏவ, நானூறு ஏடுகள் நீரை எதிர்த்து நாலடித் தொலைவு சென்றதாகவும் அவற்றை எடுத்துத் தொகுத்த தாகவும் கூறப்பெறும் கதை என்க. நாலடியாரைத் தொகுத்து அதிகார அடைவு செய்தவர் பதுமனார் என்பது, வளங்கெழு திருவொடு எனத் தொடங்கும் அகவற்பாவின், வெண்பா வியலெண் ணாயிர மிவற்றுட் பாரெதிர் கொண்டு பரவி யேத்த நீரெதிர் வந்து நிரையணி பெற்ற மேனூற் றகையின்விதிமுறை பிழையாஅ நானூற் றவற்றி னயந்தெரிந் தோதிய மதுமலர்த் தண்டார்ப் பதுமன் தெரிந்த ஐயமில் பொருண்மை யதிகா ரந்தாக மெய்யா நலத்த எண்ணைந் தென்னும் அடிகளால் தெளிவாகும். நாலடியை அடுத்து நிற்கும் நூல்களை யெல்லாம் தொகைப் படுத்துதற்கு முன்னோடி ஐங்குறுநூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து எனின் சாலும். ஏறத்தாழத் தனித் தனி நூல் போன்றவற்றைத் தொகுத்தனவே இத்தொகை நூல்கள். இவ்வாறே நான்மணிக் கடிகை முதலாய நூல்களைத் திரட்டிப் பதினெட்டாகத் தொகைப் படுத்தினர். அதன் பெயரே பதினெண்கீழ்க் கணக்காயிற்று. கணக்கு எனினும் நூலெனினும் ஒக்கும். முதற்கண் இலக்கண நூலையே குறித்த கணக்கு, நாளடைவில் இலக்கிய நூலையும் குறிப்பதாக விரிந்தது. இவை கீழ்க்கணக்கெனின் மேற்கண்ட - இவற்றின் முந்திய - பாட்டு தொகையாம் பதினெட்டு நூல்களை எப்பெயரிட்டு அழைப்பது? அவற்றை மேற்கணக்கு என்று வழங்கியது இலக்கிய உலகம்! வனப்பியல் தானே என்னும் நூற்பாவின்கண், தாய பவனுவலோ டென்றது அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கு இலக்கணஞ் சொல்லுப (போன்று) வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச் செல்வதென்றவாறு; அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க, என்னும் பேராசிரியர் உரையானும், தாயபனுவலின் என்பது அறம் பொருள் இன்பமென்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவன போன்றும் இடையிடையே அன்றாகியும் தாவிச்செல்வ தென்றவாறு. அங்ஙனம் வந்தது பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நச்சினார்க்கினியர் உரையானும் கீழ்க்கணக்கு என்னும் வழக்கின் பழைமை அறியலாம். இவ்விருசார் 36 நூல்களின் தொகுப்பையும் நோக்கப் பாடல் களைத் திரட்டித் தொகுக்கும் தொகையும் நூல்களைத் திரட்டித் தொகைப்படுத்தும் தொகையும் உளவாதல் தெளிவு. இம் முறையில் நூலால் தொகைப்படுத்தப் பெற்றனவே ஐம்பெருங் காப்பியங் களும், ஐஞ்சிறு காப்பியங்களுமாம். இனி, வேறொரு வகைத்தொகை நூல்கள் உருவாகின. ஒருவரே வெவ்வேறு இடங்களில் காலங்களில் பாடிய 1பதிகங்கள் நூல்கள் இவற்றின் தொகைகளாம். இவ்வகையில் எழுந்தவை தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலியவைகளாம். இவ்வகையைச் சார்ந்து பின்னாளில் உருவாயவையே திருப்புகழ், திருவருட்பா முதலானவை. மூவர் முதலிகள் திருத்தலங்கள் தோறும் சென்று பண்ணோடு இசைத்துப் பரமனை வாழ்த்திய பத்திப் பாடல்கள் பல்லாயிரம் தில்லை மூவாயிரர் மன்றுள் அடங்கிக் கிடந்தன. இராசராசன் வேண்டற்படி, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் தேடிக்கண்டு திருமுறைப் படுத்தினார். அத் திருமுறைகள் முதற்கண் ஏழாய் அமைந்தன. பின்னர், திருவாசகம் முதலாக வழி வழியே வளர்ந்து பன்னிரு திருமுறைகள் ஆயின. இவ்வாறே சித்தாந்த சாத்திரம் பதினான்கெனவும் அடைவு செய்யப்பெற்றன. பன்னீராழ்வார்களும் பாடிய பைந்தமிழ்ப் பத்திப் பாடல் களைத் திரட்டித் தொகுத்த பெருமான் நாதமுனிகள். அவை ஏறத்தாழ நாலாயிரந் திருப்பாடல்களாக இருத்தலின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என அழைக்கப் பெறுவதாயிற்று ஒரே புலவர் பாடிய பல நூல்களைத் தொகுத்துக் குமர குருபரர் நூற்றிரட்டு, சிவஞான முனிவர் பிரபந்தத் திரட்டு, சிவப்பிரகாசர் பனுவல் திரட்டு, மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடற்றிரட்டு, மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு, எனத் திரட்டு நூல்கள் உருவாயின. பல்வேறு புலவர்கள் பாடிய தனிப் பாடல்களைத் தொகுத்துத் தனிப்பாடல் திரட்டுத் தொகுதிகள் உண்டாயின. ஒருவரைப் பற்றியே பல புலவர்கள் பாடிய பாடலைத் திரட்டி ஊற்றுமலைத் தனிப்பாடற்றிரட்டு என்பது போன்று ஒருவகைத் தொகை நூல்களும் உண்டாயின. பட்டறிவும் பகுத்தறிவும் பெருகப் பெருகப் பல்வேறு திரட்டு நூல்கள் எழும்பின. அவ்வகையிற் சொற்களைத் திரட்டி ஒழுங்கு படுத்திக் காட்டிய நிகண்டு நூல்களை முதலாவதாகக் குறிக்கலாம். அடுத்துச் சொல் அகராதி. பொருளகராதி, தொகையகராதி, தொடை அகராதி, பழமொழி அகராதி, உவமையகராதி, கலைச் சொல் அகராதி, முதலியவற்றையும் விடுகதை, தாலாட்டுப் பாடல், நாட்டுப் பாடல் முதலிய திரட்டுக்களையும் குறிப்பிடலாம். ஒரு நூற்குப் பல்வேறுரைகள் உளவாயின் அவற்றை ஒருங்கு கண்டு ஆய்தற்கு வாய்ப்பாகச் செய்த உரைவளம், எல்லாப் பொருளும் இதன்பாலுள என்று கூறுதற்குத் தகச் செய்யப்பெற்ற கலைக்களஞ்சியம் பல்வேறு கட்டுரைத் தொகுதிகள் ஆகிய வெல்லாம் இத்திரட்டு வகையைச் சார்ந்தனவே. திரட்டு நூல் வரலாறு மிக விரிவுடையது. அதனைத் திரட்டின் ஒரு தனி நூலாம் என்பது ஒருதலை. ஆகவே இவ்வளவுடன் நிறுத்திப், புறத் திரட்டைப்பற்றிக் காண்போம். புறத்திரட்டு ஒரு புதுவகைத் திரட்டு என்பதை முன்னரே கண்டுள்ளோம். அவ்வகைத் திரட்டு நூல்கள் தமிழில் தோன்றுதற்கு அமைந்த முன்னோடி அது. ஆக, ஒரு வகைத்திரட்டு நூல்களின் தாய் இப்புறத்திரட்டு என்பது புனைந்துரையன்றாம். உடற் கூறும், உளக் கூறும் அறிந்து மருந்தூட்டும் மருத்துவன் போலவும், பால் நினைந்தூட்டும் தாய் போலவும் பரிவுடையவர் புறத்திரட்டின் தொகுப்பாசிரியர். கற்பவை கற்க என்னும் பெருங்கருத்தால் கடலன்ன பரப்புடைய நூல்களைக் கற்றுத் தக்கவற்றைத் திரட்டிப் பாகாக்கிப் படைப்பது போன்று படைத்துள்ளார். அப்பாகுண்டு திளைத்தவர்கள் ஒருபாலராக, ஒருபாலர் அத்தகு பாகுநூற் படைப்பிலும் தலைப்பட்டனர். அத்தலையீடே பன்னூற்றிரட்டு, பன்னூற் பாடற்றிரட்டு, சைவ மஞ்சரி முதலியனவும் அகத்தியர் தேவாரத்திரட்டு, திருவருட்பாப் பெருந்திரட்டு, பெருந்திரட்டு, குறுந்திரட்டு ஆகிய பல்வேறு தொகை நூல்களுமாம். புறத்திரட்டினால் விளைந்த நலங்களுள் இஃதொன்றாம்! * * * ஆராய்ச்சித்துறை அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் அருமுயற்சியால் உருவாகிச் சென்னைப் பல்கலைக்கழக வெளி யீடாக 1939இல் முதுற்கண் வந்தது புறத்திரட்டு. அப்பதிப்பின் அருமையும், அழகும் அப்பதிப்பை மேலோட்ட மாகப் பார்ப்ப வர்க்கும் புலப்படுதல் ஒருதலை. அப்பதிப்பே இப்பதிப்பிற்கு நிலைக்களம் என்பது வெளிப்படை. அப்பதிப்பு வெளிப்பட்ட காலத்தினும் இக்காலத்தில் எத்துணையோ நூல்கள் வெளியிடப் பெற்றள்ளன. அரிய திருத்தங்கள் பல்வேறு ஆசிரியர்களால் செய்யப்பெற்றுள்ளன. பல்வேறு ஆராய்ச்சிகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. பாடல்களின் அடைவு முறைகள் முதலியவற்றிலும் திருத்தங்கள் செய்யப் பெற்றுள்ளன. இவ்வனைத்தும் இப்பதிப்பில் பொன்னேபோற் போற்றிக் கொள்ளப் பெற்றுள்ளன. இப்பதிப்பில் ஒப்பு நோக்கு தற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ள நூற்பட்டி தனியே இணைக்கப் பெற்றுள்ள தறிக. முன்னைப் பதிப்பில் புறத்திரட்டில் இல்லாததும், புறத்திரட்டுச் சுருக்கத்தில் இடம் பெற்றிருந்ததுமாகிய காமத்துப்பால் என்னும் பகுதி இப்பதிப்பில் நீக்கப் பெற்றுள்ளது. பொருட்பால், வாழ்த்துடன் முடிவதால் அதன் முடிநிலை அஃதே என்பது வெளிப்படை. மேலும், அகத்திரட்டு என்னும் பெயரால் அடுத்து வெளி வரவிருக்கும் நூலில் அப்பாடற் பகுதி இடம் பெறும். ஆதலால் ஈண்டு ஒதுக்கி வைக்கப் பெற்றதாம். தனி நூலகத்து இடம் பெறாததும், உரையாசிரியர்களால் புறத்திணை முதலியவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்றதுமாகிய புறப்பொருட் பாடல்கள் 139 தேர்ந்தெடுத்து, இணைத்துக் காணத்தக்க அதிகாரத் தலைப்போடு பின்னிணைப் பாகச் சேர்க்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலையும் அச்சிட்ட பல்வேறு நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பெருக வழங்குவதும் தக்கதுமாகிய பாடத்தை மூலத்தில் ஏற்றியும், வேண்டத்தக்க இன்றியமையாத பொருட் பொருத்தமுடைய பாடங்களை மட்டுமே பாடவேறுபாட்டில் வைத்துக் கொண்டு பதிப்பிக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலின் உட்பொருளையும் உள்ளடக்கியதும், பொருட்டெளிவு ஊட்டுவதுமான ஓரகவல் அடி ஒவ்வொரு பாடற்றலைப்பிலும் படைத்து வைக்கப் பெற்றுள்ளது. ஒவ்வோர் அதிகாரத் தலைப்பும், பரிமேலழகர் முதலாய உரையாசிரியர்கள் உரையாலோ, பதிப்பாசிரியர் உரையாலோ விளக்கஞ் செய்யப் பெற்றுள்ளது. இத்தொகுப்போடு ஒப்பிட்டுப் பல்வேறு பாடல்களைப் பயில விரும்புவார்க்கும் ஆராய்ச்சியாளர்க்கும் துணையாமாறு இதே பெயருடைய அதிகாரங்கள் இன்ன இன்ன நூல்களில் இடம் பெற்றுள்ளன. இதன் சார்புடைய அதிகாரங்கள் இன்ன இன்ன நூல்களில் இடம் பெற்றுள என்னுங் குறிப்புக்கள் அதிகாரந் தோறும் இடம் பெற்றுள்ளன. புறத்திரட்டுத் தொகுப்பில் ஆளப்பெற்ற மூல நூல்களைப் பற்றிய விளக்கம் ஒரு தனிப்பகுதியாக எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளது. அதன்கண் நூற்பெயர்க்காரணம், பாடலளவு, ஆசிரியர் வரலாறு, காலம், நூற்சிறப்பு ஆகியவை வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு சான்றுகளுடன் ஆராய்ந்து சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது. ஆசிரியமாலை, இரும்பல் காஞ்சி முதலிய நூல்களைச் சேர்ந்து உரையுடன் வெளிப்படாத பாடல்களுக்குக் குறிப்புரை எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளது. இவற்றாலும் இன்னோரன்ன பிறவற்றாலும் இப்பதிப்பின் சீர்மை புலனாம். புறத்திரட்டு முதற் பதிப்பைத் தமிழுலகுக்கு வழங்கிய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கட்கும், தம் சீரிய பதிப்புக்களுள் ஒன்றாக வெளியிட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும், ஒப்புநோக்கி ஆராய்தற்குத் துணையாகப் பல்வேறு நூல்களைப் படைத்துதவிய நூலாசிரியர், பதிப்பாசிரியர், பதிப்பகத்தார் ஆகியவர்கட்கும், இன்றமிழ்த்தாய்க்கு எளியேனால் இயன்ற தொண்டுகளைச் செய்தற்குத் திருவருட்டுணையால் தூண்டுதலும் துணையுமாய் வாய்த்துள்ள தமிழ்ப் பெரியார், பதிப்புத்துறைப் பகலவன், தாமரைச் செல்வர் திருமிகு வ. சுப்பையாபிள்ளை அவர்கட்கும் பெரு நன்றியுடையேன்! வாழ்க தமிழ்! அருளகம், தமிழ்த்தொண்டன், 4-4-1972 இரா. இளங்குமரன். புறத்திரட்டுத் தொகுப்புக்கு உதவிய மூலநூற் குறிப்புக்கள் 1. அறநெறிச்சாரம் ஆசிரியர் முனைப்பாடியாரால் செய்யப்பெற்ற அரிய அறநூல் அறநெறிச்சாரம் ஆகம். அறநெறியின் சாரமாகக் கருதப்பெறும் 226 வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்ட நூல் இது. சான்றோர் பலரைத் தாங்கிய திருமுனைப்பாடி நாடு இவ்வாசிரியரையும் பெற்றுப் பெருமிதம் உற்றிருக்கலாம் என்னுங் கருத்து இவர் பெயரை நோக்கப் புலப்படுதல் ஒருதலை. இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பர். பூவின்மேல் சென்றான் புகழடியை வாழ்த்தி நூலைத் தொடங்குவதாலும், சமண்சமயக் கோட்பாடுகள் நூலிற் பயில அமைந்துகிடத்தலாலும் இவர் சமணராதல் வெளிப்படை. 1903ஆம் ஆண்டில் இந்நூல் மூலமட்டும் திரிசிரபுரம் திரு. தி.ச. ஆறுமுக நயினார் அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் பின், சென்னை பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் எம்.ஏ. அவர்கள், நூற்பாக்களைப் பாகுபடுத்தி, அருஞ்சொற் குறிப்பு, மேற்கோள் ஆகியவற்றுடன் 1905ஆம் ஆண்டில் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் இராசீபுரம் கழக உயர்நிலப் பள்ளித் தமிழாசிரியர் ஆ. பொன்னுசாமி பிள்ளை அவர்களைக் கொண்டு பதவுரை, குறிப்புரை, அருஞ்சொற்பொருள் ஆகியவற்றை எழுதச்செய்து 1936ஆம் ஆண்டு திருத்தப் பதிப்பாகக் கழகம் வெளியிட்டது. இதுகாறும் பதினொரு பதிப்புக்கள் கழக வழி வெளிவந்துள்ளமை இந்நூற் சிறப்பைப் புலப்படுத்தவல்லதாம். புறத்திரட்டில் அறநெறிச்சாரப் பாடல்கள் (34) முப்பத்துனான்கு இடம்பெற்றுள்ளன. அப்பாக்களின் எண்கள் 20, 39, 51, 52, 75, 85, 86, 116, 127, 128, 129, 168, 182, 189, 212, 213, 214, 251,258, 287, 320, 321, 375, 395, 433, 460, 525,526, 527, 622, 655, 1063, 1075, 1208. 2. ஆசாரக்கோவை அறங்கூறும் நூல்களுள் ஆசாரக்கோவையும் ஒன்று. ஆசாரமாவது உலகியல் அறிந்து நடக்கும் ஒழுகலாறு ஆம். ஆசாரங்களை எடுத்துரைப்பது குறித்தே இந்நூல் ஆசாரக்கோவை எனப் பெயர் பெற்றது. இந்நூலாசிரியர் பெருவாயின் முள்ளியார் என்பதும், வண்கயத்தூர் என்னும் ஊரினர் என்பதும், பெருவாயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர் என்பதும், சைவசமயஞ் சார்ந்தவர் என்பதும், ஆரிடம் என்னும் வடநூற் பொருளைத் தமிழில் ஆசாரக்கோவை யாகத் தந்தவர் என்பதும், ஆரெயில் மூன்று மழித்தான் அடியேத்தி ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான் ஆசாரம் யாரும் அறிய அறனாய மற்றவற்றை ஆசாரக் கோவை யெனத் தொகுத்தான் தீராத் திருவாயி லாய திறல்வண் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியென் பான் என்னும் சிறப்புப் பாயிரப் பாடலால் புலனாம். இவர் வாழ்ந்த பெருவாயில் புதுக்கோட்டை நாட்டில் குளத்தூர் வட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பர். (புதுக்கோட்டைச் சீமைக் கல்வெட்டுக்கள்: 442, 518, 525, 853). இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்பர். முந்தையோர் கண்ட முறை, யாவருங் கண்ட நெறி, பேரறிவாளர் துணிவு, நல்லறிவாளர் துணிவு என இவர் கூறுவதால் சான்றோர் மேலும் ஆசாரத்தின்மேலும் இவர் கொண்டிருந்த ஈடுபாடு தெள்ளிதிற் புலப்படும். குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டது இந்நூல். உண்ணல், உடுத்தல், உறங்கல், நீராடல் ஆகியவை அழகுற எடுத்தோதப்பட்டுள்ளன. செய்யத்தக்கவை இவை, செய்யத்த காதவை இவை, செய்யின் எய்தும் பயன் இது என்றெல்லாம் தெளிவாகவும் சுவையாகவும் இந்நூல் கூறிச் செல்கின்றது. ஆகவே, தொல்காப்பியனார் கூறிய அம்மை என்னும் நூல் வகையைச் சார்ந்ததென ஆராய்ந்தோர் கூறுவர். புறத்திரட்டில் இந்நூல் பாடல்களாக எடுத்தாளப் பெற்றவை (27) இருபத்தேழு. அவை வருமாறு: 101, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 656, 751, 799, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 808, 1076. 3. ஆசிரியமாலை புறத்திரட்டின் வழியாக அறியப்பெற்ற நூல் இவ்வாசிரிய மாலையாம். இதன் பாடல்கள் புறத்திரட்டில் 16 இடம் பெற்றுள. புறத்திரட்டில் 827ஆம் பாடலாக வரும் குடிப்பிறப்புடுத்துப் பனுவல் சூடி என்பது, எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்னும் (புறத். 21) புறத்துறைக்கு எடுத்துக் காட்டாக இளம் பூரணரால் தரப்பெறுகின்றது. எனினும் இன்ன நூலைச் சேர்ந்ததென அவர் குறித்தாரல்லர். நூற்பெயரைச் சுட்டியதோடு, மேலும் 15 பாடல்களை வழங்கியது புறத்திரட்டேயாம். ஆசிரியமாலையிலிருந்து கிடைத்துள்ள பாடல்களில் சில இராமாயணச் செய்திகளை விளக்குவனவாக அமைந்துள்ளன. நிரைகோடல், கொடுங்கோன்மை, நிலையாமை, தவம், அறன் வலியுறுத்தல் ஆகிய பல பொருள்களை விளக்கும் பாடல்களும் அமைந்துள்ளன. அனைத்தும் ஆசிரியப் பாவான் அமைந்துள்ளன. இவற்றை நோக்கப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறியவாறு, வெண்பா மாலையினைப் போலவே, ஆசிரியமாலையும் அகவற்பாக்களானியன்ற உதாரணச் செய்யுட்களையுடையதோர் புறப்பொருள் நூலாக இருத்தலுங் கூடும் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் மேற்கோள் ஒன்றனை எடுத்துக்காட்டி (8:25) ஆசிரியமாலை 1இசைநூல் என்பர். ஆசிரியமாலைச் செய்யுட்களின் நடையொழுக்கு புறநானூற்றை நினைவூட்டுவதாகவும், அதற்கு எவ்வகையானும் தாழாததாகவும் உள்ளமை கண்கூடு. மூவிலை நெடுவேல் ஆதிவானவன் இடமருங்கொளிக்கும் இமயக்கிழவி.... மூவா மெல்லடித் திருநிழல், வாழி காக்கவிம் மலர்தலையுலகே என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலால் (9) ஆசிரியமாலை ஆசிரியர் சிவநெறி சார்ந்தவர் என்பது விளங்கும். எளிதென இகழாமலும், அரிதென உரைக்காமலும், துறைதொறும் துறைதொறும் நோக்கி அறமே நிறுத்துமின் அறிந்திசி னோரே என்று கூறும் இவர் வாக்கால் (49) இவர்க்குள்ள அறநாட்டத்தின் அழுத்தம் நன்கு புலப்படும். தவத்தை அரசியலாக்கிக் கூறும் அழகும் (283) அரக்கியர் கண்ணும் இலங்கை அகழும் ஒப்பாம் நிலையை உரைக்கும் அணிநயமும் (1332) நெருநற் செல்வ வாழ்வையும் இன்றை வறுமை வாழ்வையும் (357) படம் பிடித்துக் காட்டும் பான்மையும், கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே (402) என்று கூறுந் திட்பமும், இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை அரக்கர் கோவையும், (1334) பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச் சால்புமேந் தோன்றிய தாழியையும் (1493) திறமுறப் பாடுஞ் சீர்மையும் பிறவும் அறிதோ றின்பம் பயப்பதாம். ஆசிரியமாலைச் செய்யுட்களைத் தொகுத்துச் செந்தமிழ் ஐந்தாந் தொகுதியில் முதற்கண் வெளியிட்டுள்ளார் அறிஞர் மு. இராகவ ஐயங்கார். பின்னர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மறைந்த தமிழ் நூல்கள் என்னும் அரிய நூலில் தொகுத்து வெளியிட்டுள்ளார். புறத்திரட்டிலுள்ள ஆசிரியமாலைப் பாடல்கள் (17) பதினேழு. அவை வருமாறு: 9, 49, 283, 357, 369, 392, 402, 679, 827, 846, 1242, 1332, 1333, 1334, 1344, 1369, 1493. 4. இராமாயணம் ஆதி காவியம் என்று சொல்லப்படும் இராமாயணம், வான்மீகி முனிவரால் வடமொழியிற் செய்யப்பெற்றது. அக்கதையைத் தழுவித் தமிழ் நெறிக்கு ஏற்பப் பெருங்காவியம் ஆக்கியவர் கம்பராவர். வாங்கரும் பாத நான்கும் என்னும் பாடலால் வான்மீகி முனிவர் செய்த வரலாற்றைத் தாம் தமிழில் செய்ததாகக் கம்பர் கூறியுள்ளார். இராமாயணத்திற்கு இராமகாதை என்னும் பெயரையே கம்பர் இட்டார் என்ப. ஆதவன் புதல்வன் என்னும் தனியனும் (5) எண்ணிய சகாத்தம் என்னும் தனியனும் (8) இராமகாதை என்றே குறிப்பிடுகின்றன. புறத்திரட்டுத் தொகுத்த ஆசிரியர் இராமாவதாரம் என்னும் பெயரைக் கையாண்டுள்ளார். இதற்கு இராமாவ தாரப்பேர்த் தொடை நிரம்பிய தோமறு மாக்கதை என்னும் கம்பர் வாக்கு தக்க சான்றாம். இனி, இராமன் கதை என்னும் பெயரும் இதற்கு உண்டென்பது காசில் கொற்றத்து இராமன் கதையரோ என்னும் அவையடக்கத்தால் (பாயிரம். 7) அறியப்பெறும். ஆனால் பெருக வழங்கும் வழக்கம் கொண்டு இப்பதிப்பில் இராமாயணம் என்றே குறிக்கப் பெற்றுள்ளது. எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின் மேல் பங்குனி அத்தத்தில் திருவரங்கர் முன்னிலையில் இராமாயணம் அரங்கேறியதை எண்ணிய சகாத்தம் என்னும் தனியன் (8) கூறுகிறது. மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவர் கம்பர் என்றும், அக்காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்றும் திரு.மு. இராகவையங்கார் தம் சாசனத்தமிழ்க்கவி சரிதத்தில் கூறுகிறார். இதே கருத்து திரு இரா. இராகவையங்காராலும் வலியுறுத்தப் பெற்றுள்ளது. (செந்தமிழ் - தொகுதி 2). வரலாற்றுப் பேரறிஞர் சதாசிவ பண்டாரத்தார், உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் கம்பர் என்பார். உத்தம சோழன் காலம் கி.பி. 970 - 985 என்பது அறியத்தக்கது. கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்பர் என்பதும் ஆயிரத்திற்கு ஒரு பாடலில் அவரைப் புகழ்ந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. கம்பர் தந்தையார் ஆதித்தர் என்றும், திருவழுந்தூரினர் என்றும், கம்பர் பகலெல்லாம் பல புலவர்களோடு ஆராய்ந்து இரவெல்லாம் இராமாயணம் பாடினார் என்றும், அப்படிப் பாடியது ஒரு நாளுக்கு எழுநூறு பாடல்கள் என்றும், நாட்டரசன் கோட்டையில் அவர் சமாதி உண்டென்றும் பல்வேறு செய்திகள் பாடல்களாலும் வழக்காலும் அறியப் பெறுகின்றன. கல்வியிற் பெரியவர் கம்பர், கம்ப நாடன் கவிதையிற் போற் கற்றோர்க்கிதயம் களியாதே, கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்னும் மொழிகள், கம்பர் சிறப்பை உணர்த்தும். கம்பராமாயணம் ஆறு காண்டமாகும். ஆனால் ஒட்டக் கூத்தர் பாடிய உத்தர காண்டத்தையும் சேர்த்து, கரைசெறி காண்ட மேழு கதைகளா யிரத்தெண் ணூறு பரவுறு சமரம் பத்து படலநூற் றிருபத் தெட்டே உரைசெயும் விருத்தம் பன்னீ ராயிரத் தொருபத் தாறு வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற் றாறே என்றொரு பாடல் கூறும் செய்தி கருதத்தக்கது. புறத்திரட்டில் சேர்க்கப்பெற்றுள்ள இராமாயணப் பாடல்கள் (27) இருபத்தேழு. அவை வருமாறு: 14, 16, 17, 18, 27, 97, 229, 332, 610, 678, 725, 743, 744, 745, 839, 840, 841, 842, 843, 857, 858, 859, 860, 1066, 1067, 1068, 1442. 5. இரும்பல் காஞ்சி காஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்று. உட்கார் எதிரூன்றல் காஞ்சி என்பது அதன் இலக்கணம். அவ்விலக்கணம் பற்றி மிகுந்த பல செய்திகளைக் கொண்ட நூல் இரும்பல் காஞ்சி என்னும் பெயர் பெற்றிருத்தல் வேண்டும். புறத்திரட்டினால் அறியப்பெறும் நூல்களுள் இஃதொன்று. தக்கயாகப் பரணி யுரையில் இந்நூற்பாடல்கள் இரண்டு மேற்கோளாக எடுத்தாளப் பெற்றுள. எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை மையறு கேள்வி கேளா தோர்க்கே (கோயிலைப்பாடினது. 53) பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும் பெருங்குறை வாங்கி வலங்கையிற் பூமுத லிருந்த நான்முகத் தனிச்சுடர் வேதம் பாடிய மேதகப் படைத்தன எண்பெரு வேழம் (காளிக்குக் கூளி கூறியது. 32) இரும்பல் காஞ்சிப் பாடல்கள் புறத்திரட்டில் இடம் பெற்றிருத்தலால் அதன் காலம் 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்னது என்பது உறுதி. அன்றியும் 15ஆம் நூற்றாண்டினதான தக்கயாகப் பரணியில் இரும்பல் காஞ்சிப் பாடல்கள் மேற்கோளாக ஆளப் பெற்றிருப்பதும் இதனை வலியுறுத்தும். புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள இரும்பல் காஞ்சிப் பாடல்கள் (3) மூன்று. அவை வருமாறு: 5, 601, 1476. 6. இன்னா நாற்பது இன்னது இன்னது துன்பம் பயக்கும் என எடுத்தோதிச் செல்லும் நாற்பது இன்னிசை வெண்பாக்களைக் கொண்ட நூல் இன்னா நாற்பதாம். இதன் பெயரை அறியவே நூல் நுவல் பொருளும், பாடல்களின் தொகையும் புலனாம். இன்னா நாற்பதின் ஆசிரியர் கபிலர் என்பார். இவர் சமயம் சைவம் என்பது, முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னா என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலால் தெளிவாம். இவர் சைவஞ் சார்ந்தவர் எனினும் பிற சமயங்களையும் மதித்துப் போற்றினார் என்பது, பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா சத்தியான் தாள்தொழா தார்க்கு எனப் பலராமனையும், மாயோனையும், முருகனையும் தொடுத்துப் பாடுவது கொண்டு அறியலாம். துன்ப நீக்கமே இன்ப ஆக்கம் ஆகலின் உயிர்கள் இன்ப மெய்துதல் வேண்டும் என்னும் பேரருட் பெருக்கத்தால் தாம் ஆய்ந்து ஆய்ந்து கண்ட இன்னாதவைகளை எடுத்துரைத்துச் செல்கிறார். கருதிய கருத்தை அப்படியே கூற வேண்டும் என்னும் ஆசிரியர் ஆர்வநிலையினால் இந்நூற்பாடல்களில் நெறியமைந்த வைப்பு முறை அமையவில்லை எனலாம். எனினும் செவ்விய கருத்துச் செறிவுடன் இலங்குகின்றது இந்நூல். சங்கச் சான்றோராகிய கபிலரும் இவரும் ஒருவர் அல்லர். அவர் பாடலில், 1ஊனுண்டு வியர்த்தலும் 2மட்டுண்டு மகிழ்தலும் உண்டு. இப்புலவர் 3ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா எனவும் 4கள்ளுண்பான் கூறும் கருமப் பொருளின்னா எனவும் கூறுவது கொண்டு அவரின் வேறானவர் இவர் எனத் தெளியலாம். இனிப், பதினோராந் திருமுறையிலுள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணி மாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகியவற்றைப் பாடிய கபிலதேவ நாயனாரின் இவர் வேறானவர் ஆவர். ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது விநாயகர் வழிபாடு, விநாயகர் மேல் இவர் இரட்டை மணிமாலை இயற்றியிருப்பதால் சங்கஞ் சார்ந்த காலத்தில் இருந்த கபிலரும் இவரும் வேறானவர் என்பது தெளிவு. அன்றியும் இவரால் மகேந்திரவர்மப்பல்லவன் காலத்தில் அமைக்கப் பெற்ற திருச்சிராப்பள்ளிச் சிவாலயம் குறிக்கப் பெறுவதும் கபிலதேவ நாயனார் காலத்தாற் பிற்பட்டவர் எனப் போதரும். புறத்திரட்டில் வந்துள்ள இன்னா நாற்பதுச் செய்யுட்கள் (5) ஐந்து. அவை வருமாறு: 518, 588, 764, 957, 1070. 7. இனியவை நாற்பது இனிய பொருள்களை யுரைக்கும் நாற்பது இன்னிசை வெண் பாக்களைக் கொண்ட நூல் இனியவை நாற்பதாம். இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர் களாலும் இந்நூல் வழங்கப்பெறும். இனியவை நாற்பதின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்பர். இப்பெயரால் ஆசிரியர் பெயர் சேந்தனார் என்பதும், அவர் தந்தையார் பெயர் பூதன் என்பதும், அப்பூதனார் மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடையவர் என்பதும் தெளிவாம். பூதன் மகன் சேந்தன் என்பது பூதஞ்சேந்தன் என்று புணரும் என்பதைத் தொல்காப்பியத்தால்1 அறியலாம். ஆர் விகுதி சிறப்புப்பற்றி வருவதாம். கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே என்னும் கடவுள் வாழ்த்துத் தொடக்கம் கொண்டு இவரைச் சைவ சமயத்தவர் என்று உறுதி செய்யலாம். பிற சமயங்களையும் மதித்துப் போற்றும் பெருந்தகைமை உடையவர் இவர் என்பதைத், தொன்மாண்டுழாய் மாலை யானைத் தொழல் இனிதே எனவும், முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்தல் இனிது எனவும் திருமாலையும் நான்முகனையும் அடுத்து வாழ்த்துவது கொண்டு அறியலாம். இன்னா நாற்பது பாடிய கபிலரின் கடவுள் வாழ்த்தையும், இவர் பாடிய கடவுள் வாழ்த்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவர் காலம் கபிலர் காலத்திற்குப் பிந்தியது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்திருத்தல் வேண்டுமென்றும் ஆராய்ச்சிப் பேரறிஞர் 1சதாசிவ பண்டாரத்தார் கூறுவார். புறத்திரட்டில் சேர்க்கப்பெற்றுள்ள இனியவை நாற்பது செய்யுட்கள் (2) இரண்டு. அவை வருமாறு: 4, 693. 8. ஏலாதி ஏலமாவது ஒரு மருந்துப் பொருள். அதனுடன் இலவங்கம், நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஐந்து பொருள்களையும் சேர்த்துச் சூர்ணமாக்கி உடற்பிணி நீக்குதற்குப் பயன்படுத்துவர். அவ்வாறே, அறியாமைப் பிணியை அகற்றுதற்கு உரிய அரிய கருத்துக்கள் ஆறு ஆறு அடக்கிப் பாடப்பெற்ற பாடல்களால் ஆகிய நூல் ஏலாதி எனப்பட்டது. ஏலம் + ஆதி = ஏலாதி. ஏலத்தை முதலாக உடைய மருந்து போன்ற நூல் என்பதாம். இந்நூல் கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம் நீங்கலாக எண்பது வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்டது. ஏலாதியின் ஆசிரியர் கணிமேதையார் எனப்படுவார். இவர்க்குக் கணிமேதை என்னும் பெயரும் உண்டு என்பது அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங், கணிமேதை செய்தான் கலந்து என்னும் பாயிரத்தால் அறியலாம். கணி மேதையாவார் சோதிடம் வல்லாராம். கணி என்னும் சிறப்புப்பெயர், நாட் கணிப்பில் வல்ல சோதிடர்க்குத் தொல்பழநாள் தொட்டே வழங்கப் பெற்றதாம். கணியன் பூங்குன்றனார் என்னும் புலமைச் செல்வரைத் தமிழுலகம் நன்கறியும். அறநூல் பாடிய இக் கணிமேதை அகப் பொருள் பாடுதலிலும் தேர்ந்தவர் என்பது அவரால் பாடப்பெற்ற திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலால் தெளிவாம். தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணி மேதையார் செய்த ஏலாதி முற்றிற்று என்னும் நூலிறுதிக் குறிப்புக்கொண்டு இவர்தம் ஆசிரியர் மாக்காயனார் என்பது விளங்கும். சிறுபஞ்சமூலம் இயற்றிய ஆசிரியர் காரியாசானின் ஆசிரியரும் இம் மாக்காயனாரே என்பது அந்நூற் சிறப்புப் பாயிரத்தால் புலனாம். ஆகக் கணி மேதையாரும், காரியாசானும் ஒருசாலை மாணாக்கர் என்பது போதரும். சமண் சமய நீதிகள் பலவற்றை இவர் வலியுறுத்திக் கூறுவதால் இவர் சமண் சமயத்தவர் என்பது வெளிப்படை. இவர் வடமொழிப் புலமை பெற்றிருந்தார் என்பதும் வட மொழி வழக்குகள் சிலவற்றை ஏற்றிருந்தார் என்பதும் இவர் நூலால் அறியக்கிடக்கின்றன. கல்விக் கடப்பாடு அனைத்தும் அரசைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்னும் இந்நாட் கருத்து, கணிமேதைக்கு அன்றே தோன்றியுள்ளமை வியப்பானதாம். மாணவர்க்கு ஊண், உடை, எழுத்தாணி, புத்தகம், பேணுதல், கல்வி அனைத்தும் வழங்கவேண்டுகிறார். (ஏலாதி. 63) புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள ஏலாதிப் பாடல்கள் (21) இருபத்தொன்று. அவை வருமாறு: 60, 61, 100, 107, 192, 193, 194, 274, 275, 420, 429, 430, 445, 511, 543, 544, 727, 753, 767, 1078, 1130. 9. களவழிநாற்பது ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் என்னுந் தொல்காப்பிய நெறியில் தோன்றிய நூல் களவழி நாற்பது. களப்போர் குறித்துப் பாடுவது என்பதும், நாற்பது பாடல்களைக் கொண்டது என்பதும் நூற் பெயரால் நன்கு புலப்படும். சோழன் செங்கணானும், சேரமான் கணைக்காலிரும் பொறையும் போர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று. என்னும் பழைய உரையா சிரியர் குறிப்பால் இந்நூலாசிரியர் பொய்கையார் என்பதும், சோழன் செங்கணான் மேல் பாடப்பெற்ற தென்பதும், சிறைப்பட்ட சேரமான் கணைக் காலிரும்பொறைக்கு வீடுபேறு அருள வேண்டிப் பாடப் பெற்ற தென்பதும் தெள்ளிதிற் புலப்படும். இச்செய்தியைக் கலிங்கத்துப் பரணி, மூவருலா முதலிய பல நூல்கள் குறித்துச் செல்வதும் கருதத்தக்கதாம். இங்குக் குறிக்கப்பெறும் இரும்பொறை பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. குழவியிறப்பினும் எனத் தொடங்கும் அப்பாடற் குறிப்பில், சேரமான் கணைக்காலிரும் பொறை சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற்கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு எனக் குறிக்கப்பெற்றுள்ளமை ஆராயத்தக்கது. பொய்கையார் சங்கச் சான்றோர் என்பது ஒருதலை. அவர் அன்புக்கு ஆட்பட்ட இரும்பொறை பாட்டும், பொய்கையார் பாட்டுப் போலவே சங்கநூலில் இடம் பெற்றுள்ளமை இதை வலியுறுத்தும். அன்றியும் சோழன் செங்கணானும் சங்க காலத்தவனே. அவன் மைந்தன் நல்லடி என்பான். அவன் பரணர் பெருந்தகையால் 1பாராட்டுஞ் சீர்மை பெற்றுள்ளான். ஆகப் பொய்கையார் சங்கச் சான்றோர் என்பதில் ஐயமின்று. பிற்காலப் பொய்கையாழ்வார் இவரின் வேறானவர் என்பது அறியத்தக்கது. 2கானலந்தொண்டி அஃதெம்மூர் என்பது இவர் வாக்காத லால் அவ்வூரில் வாழ்ந்தவர் ஆகலாம். இவர்தம் முன்னோர் பொய்கை என்னும் ஊரினர் ஆகலாம். பொய்கை நாடு என்பாரும் உளர். புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள பாடல்கள் (10) பத்து. அவை வருமாறு: 1419, 1420, 1421, 1422, 1423, 1424, 1425, 1426, 1427, 1428. 10. குண்டலகேசி கேசி என்பது கூந்தல் என்னும் பொருளது. இவ்வாறே நீலகேசி, அஞ்சனகேசி முதலிய பெயர்களும் உள. குண்டலம் என்பது சுருள் என்னும் பெயருடையதாய்ச் சுருண்ட கூந்தலை யுடையாளைக் குறித்து அவளது காப்பியத்தைக் குறிப்பதாயிற்று. நீலகேசி முதலியனவும் இவ்வாறு வந்தனவேயாம். நீலமாவது கருமை; அஞ்சனமும் அது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாய இந்நூல் தமிழர் தவக்குறையால் கிட்டாது ஒழிந்தது. ஆனால் புறத்திரட்டுத் தொகுத்த நாளிலே பொலிவோடு திகழ்ந்தமையால் அத் திரட்டு நூலாசிரியரால் 19 பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள. இன்று முழுமையாகக் குண்டல கேசியில் இருந்து நமக்குக் கிட்டியுள்ள பாடல்கள் இப்பத்தொன்பதே என எண்ணும்போது புறத்திரட்டின் அருமை புலனாதல் ஒருதலை. குண்டலகேசி பௌத்த சமயச் சார்புடைய நூல். சமண் சமயக் கோட்பாடுகளைக் கண்டித்துப் பௌத்த சமயமே உயர்ந்ததென நிலைநாட்டுதற்குத் தோன்றிய நூல். அவ்வாறே ஆவணம் என்னும் நகரத்திலே நாதகுத்தனார் என்பவரை வாதிட்டுக் குண்டலகேசி வென்றனள் என்றும், பிறசமயக் கணக்கர்களையும் வாதிட்டு வென்றனள் என்றும் நீலகேசியால் அறிகிறோம். குண்டலகேசியின் செல்வாக்கை ஒழித்தற்கும், அச்சமயக் கோட்பாடுகளைத் தகர்த்து ஆருகத சமயச் செல்வாக்கை உண்டாக்குதற்கும் எழுந்தது நீலகேசியாகலின் அதன்கண் குண்டல கேசியின் வரலாறும் வாதமும் பிறவும் இடம் பெற்றுள்ளன. குண்டலகேசி வாதச் சருக்கம் என ஒரு சருக்கமே நீலகேசியில் அமைந்துள்ளமை குறிக்கத்தக்கது. குண்டலகேசி என்பாள் ஒரு வணிகப்பெண். கள்வனாகச் சிறைப்பட்டுச் செல்லும் காளன் என்பானைக் கண்டு காதலுற்றாள். பின், தந்தை துணையால் அரசனைக் கண்டு விடுதலை பெற்றுத் திருமணம் செய்து கொண்டாள். ஒருநாள் ஊடல் மிகுதியால் நீ கள்வனல்லனோ என்று குண்டலகேசி கூற அவன் தன்னுள்ளத்தே சினங்கொண்டு வேறு காரணங்காட்டி ஒரு மலைக்கு அழைத்துச் சென்று, யான் உன்னைக் கொல்வேன் என்றான். தற்கொல்லியை முற்கொல்லிய என்பவாகலின் இவனை நான் கொல்வேன் என எண்ணி, அவனை மும்முறை வலம்வர இசைவு பெற்று, மூன்றா முறையில் கீழே வீழத் தள்ளினாள். அவன் இறந்த பின் கவலை மிக்கவளாய்ப் பல சமயங்களையும் நாவல் நட்டு வாதிட்டு வெற்றி கொண்டாள் என்பது நீலகேசியால் அறியப்பெறும் செய்தியாம். குண்டலகேசியின் யாப்பு வகை சிந்தாமணி, சூளாமணி போன்றதே என்பது சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிருதபதி என்பவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவன என்னும் யாப்பருங்கல விருத்தியால் அறியப்பெறும். குண்டலகேசியை அகலக்கவி என்பார் வீர சோழிய உரைகாரர். (அலங். 4, 13) இதற்குக் குண்டலகேசி விருத்தம் என்னும் பெயருண்டென்பதும் வீரசோழிய உரையால் புலப்படும் (யாப்பு - 21) தேரிகாதை என்னும் பௌத்த நூலைத் தழுவி இந்நூல் ஆக்கப்பெற்றதென்பர். புறத்திரட்டில் எடுத்தாளப் பெற்றுள்ள குண்டலகேசிச் செய்யுளின் எண்கள் (19) பத்தொன்பது. அவை வருமாறு: 7, 13, 205, 288, 302, 303, 388, 389, 390, 391, 410, 411, 412, 413, 494, 495, 551, 723, 724. 11. சாந்தி புராணம் சாந்தி நாதர் என்பவரது வரலாற்றைக் கூறும் நூல் சாந்தி புராணமாம். சாந்தி நாதராவார் சமண தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் பதினாறாம் தீர்த்தங்கரர் ஆவார். இவர் வரலாற்றைக் கூறும் தமிழ்ச் சமண நூலாகவே சாந்தி புராணம் இருந்திருத்தல் வேண்டும். குருபரம்பரையில் அரசனாகப் பிறந்து பேரரசனாக விளங்கித் துறவு பூண்டு பெருநிலை பெற்றுத் தீர்த்தங்கரராய் வாழ்ந்து சமண சமயத்தை நாடெங்கும் பரவச் செய்து பிறவாப் பெருநிலை யுற்றவர் சாந்திநாதர். அவருடைய முன்னைப் பிறப்புக்கள் பதினொன்றையும் பற்றி விரித்து ஸ்ரீ புராணமும், திரி சஷ்டி சலாக புருஷ சரித்திரம் என்னும் நூலும் கூறுகின்றன. இவ்வரலாறே சாந்தி புராணத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ளலாம். புறத்திரட்டின் வழியாகவே இந்நூல் இருந்ததை அறிவதால் புறத்திரட்டின் பெருமையை மிகுக்கும் நூல்களுள் இஃதொன்றாம். புறத்திரட்டு வழியாக நமக்குக் கிட்டியுள்ள இந்நூற் பாடல்கள் (8) எட்டு மட்டுமே. அவை வருமாறு: 173, 292, 306, 307, 442, 742, 1057, 1058. 12. சிறுபஞ்சமூலம் மூலமாவது வேர். ஐந்து சிறிய வேர்கள் என்னும் பொருள் தருவது இச் சொற்றொடர். மருத்துவ நூல்களில் கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர், பெருமல்லி வேர் என்பவை பஞ்சமூலம் எனப் பெறும். அவை, உடற்பிணியைப் போக்குவது போலக் கற்பாரின் அறியாமைப் பிணியைப் போக்கவல்ல ஐந்தைந்து கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் அமைந்ததாகலின் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது. பாயிரச் செய்யுளுடன் சேர்த்து 104 வெண்பாக் களைக் கொண்டுள்ளது. சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான் எனப்படுவார். இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணவர் என்பதை, மல்லிவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய்நீக்கும் பாங்கினாற் - கல்லா மறுபஞ்சந் தீர்மழைக்கை மாக்காரி யாசான் சிறுபஞ்ச மூலஞ்செய் தான் என்னும் பாயிரச் செய்யுளால் அறியலாம். இவரின் ஒரு சாலை மாணவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களை யாத்த கணிமேதையார் ஆவர். இவர் வளமையான வாழ்வும், வள்ளன்மையும் உடையவர் என்பது மேற்காட்டிய பாடலில் இவர்க்கமைந்துள்ள சிறப்பு அடைகளை நோக்கப்புலனாம். இவர் சமயம் சமணம் என்பது, முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து நூலுரைக்கப் புகுதலால் தெளிவாகும். வச்சிரநந்தி என்னும் சமண முனிவரால் தோற்றுவிக்கப்பெற்ற தமிழ்ச் சங்கத்தில் தமிழாய்ந்த மாக்காயனார் மாணவர் இவராதலால் இவர் காலம் 1ஐந்தாம் நூற்றாண்டாகலாம் என்பர். காரியாசான் கொல்லாமை, பொய்யாமை முதலாய அறங்களை நன்கு வலியுறுத்துகின்றார்; புகழ்பெறும் வழிகள் இவையெனப் புகல்கின்றார்; செந்தமிழ்க் கவியியற்றுவார் சீர்மையைச் செப்பு கின்றார். நன்னெறியில் ஒழுகுவோர் தோற்கன்றைக் காட்டிக் கறந்த பசுவின்பாலை உண்ணமாட்டார் என்னும் இவருரையால் இவர்தம் அருட் பெருக்கமும் அற நெஞ்சமும் தெள்ளிதிற் புலனாம். புறத்திரட்டில் இடம்பெற்றுள்ள சிறுபஞ்ச மூலச் செய்யுட்கள் (37) முப்பத்தேழு. அவை வருமாறு: 37, 55, 56, 57, 58, 59, 76, 81, 144, 145, 190, 195, 206, 207, 248, 270, 286, 311, 327, 328, 434, 477, 478, 508, 509, 510, 608, 620, 641, 642, 728, 752, 847, 908, 1100, 1157, 1158. 13. சீவக சிந்தாமணி சிந்தாமணி என்பது தன்மையால் வந்த பெயரென்பர் இலக்கண நூலோர்.நெஞ்சின்கண் பொதிந்து வைத்தற்குரிய சிறப்புடைய மணிபோல்வது சிந்தாமணியாம். பாட்டுடைத் தலைவனாகிய சீவகனுக்கு அவன் நற்றாய் ஆகிய விசயை முதற்கண் இட்டு அழைத்த பெயர் சிந்தாமணி என்பதாகலின் ஆசிரியர் சிந்தாமணி என்னும் பெயரைத் தம் நூற்குச் சூட்டினார் என்பதும் தகும். சமண்சமயச் சான்றோரான திருத்தக்க தேவரால் இந்நூல் சுவை சொட்டச் சொட்ட இயற்றப் பெற்றது. நாமகள் முதலிய மகளிரை மணந்து கொண்டதாகவே நூன் முற்றும் அமைந்திருப்ப தால் இதனை மணநூல் என்றும் வழங்குவர், நாமகள் இலம்பகம் முதல் முத்தியிலம்பகம் ஈறாகப் பதின்மூன்று இலம்பகங்களையும், 3,145 பாக்களையும் தன்னகத்துக் கொண்டது இந்நூல். ஐம்பெருங் காவியங்களுள் முதற்கண் வைத்து எண்ணப் பெறும் சிறப்பே இந்நூன் மாண்பை நன்கு புலப்படுத்த வல்லதாம். 1சோழ குலமாகிய கடலிலே பிறந்த வலம்புரி எனவும் 2வண்பெரு வஞ்சிப் பொய்யா மொழிபுகழ் மையறு சீர்த்தித் திருத்தகு முனிவன் எனவும் நச்சினார்க்கினியர் கூறுவது கொண்டு திருத்தக்கதேவர் சோழர் குடிவழியில் தோன்றியவர் என்பதும், வஞ்சிமாநகர்க்கண் வாழ்ந்த பொய்யாமொழி என்பாரின் பாராட்டுக்கு உரியவராக விளங்கியவர் என்பதும், திருத்தகு முனிவர் என்னும் பெயர்க்கும் உரிமையுடையவர் என்பதும் அறியலாம். திருத்தக்கதேவர் 3நரிவிருத்தம் என்னும் நூலொன்றும் செய்துள்ளார். அஃது ஐம்பது விருத்தப்பாக்களைக் கொண்ட நூல். இவர்தம் ஆசிரியர் ஒரு நரியைச் சுட்டிக் காட்டி இதனைப் பாடுக என இவர் பாடினார் என்பர். அதன் பின்னரே ஆசிரியர் இசைவுடன் சிந்தாமணி இயற்றியதாகக் கூறுவர். சிந்தாமணி மதுரையில் திகழ்ந்த ஒரு சங்கத்தின்கண் அரங்கேற்றப் பெற்றதென வரலாறுண்டு. இவர் காலம் கி.பி. 900 ஆகலாம் என்றும் அல்லது அதற்குப்பின் ஆகலாம் என்றும் 4அறிஞர் கோபிநாதராவ் கூறுவர். உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை இந்நூற்குண்டு. அவர்க்கு முன்னரும் ஓருரை யுண்டென்பது அவருரையால் புலப்படும். நாமகள் இலம்பகம் மூலம் மட்டும் 1868இல் ரெவரெண்ட் எச். பவர் என்பவராலும், பின்னர் நாமகள், கோவிந்தையார், காந்தருவ தத்தையார் இலம்பகங்கள் நச்சினார்க்கினியருரை பதவுரைகளுடன் சோடசாவதானம் தி.க. சுப்பராயசெட்டியார் அவர்களாலும், இவற்றுடன் குணமாலை, பதுமையார் இலம்பகங் களையும் சேர்த்து மூலம் மட்டும் ப. அரங்க சாமிப்பிள்ளை அவர்களாலும் (1883) நூன் முழுமையும் நச்சினார்க்கினியர் உரையுடன் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களாலும் (1887) வெளியிடப் பெற்றுள்ளது. பின், சைவசித்தாந்த சமாசம் மூலம் மட்டும் வெளியிட்டது (1941). பதவுரை விளக்கவுரைகளுடன் நூல் முழுமையும் இரண்டு தொகுதிகளாகக் கழகம் வெளியிட்டுள்ளது (1959). புறத்திரட்டில் எடுத்தாளப்பட்டுள்ள பாடல்கள் (142) நூற்று நாற்பத்திரண்டு. அவை வருமாறு: 6, 11, 12, 21, 22, 23, 24, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 79, 87, 118, 153, 154, 200, 201, 202, 203, 204, 241, 253, 254, 267, 268, 279, 280, 298, 299, 300, 301, 305, 314, 315, 333, 334, 335, 336, 348, 349, 350, 361, 362, 363, 364, 365, 366, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 384, 385, 386, 387, 398, 406, 407, 408, 409, 439, 440, 441, 466, 467, 468, 470, 471, 472, 492, 493, 513, 566, 567, 597, 603, 609, 615, 657, 658, 659, 668, 677, 694, 710, 712, 713, 714, 715, 716, 717, 718, 719, 720, 721, 741, 766, 832, 833, 849, 850, 851, 852, 853, 854, 855, 871, 872, 873, 894, 895, 896, 909, 910, 911, 912, 1014, 1015, 1016, 1035, 1036, 1037, 1038, 1039, 1059, 1064, 1065, 1077, 1115, 1231, 1303, 1351, 1352. 14. சூளாமணி சூளாமணி என்பது முடிமணி.அது முடிமணிபோல் அமைந்த நூலுக்கு ஆயிற்று. நன்னூற்கண் வரும், முதனூல் என்னும் நூற்பாவில் (48) தன்மையாற் பெயர் பெற்றன சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் முதலாயின என்பார் மயிலைநாதர். சூளாமணி என்னுஞ் சொல் 284, 329, 1519, 2127 ஆகிய நான்கு பாடல்களிலும் வருகின்றது. அன்றியும், காப்பியத் தலைவனான திவிட்டனது தந்தை பயாபதியை, உலகின் முடிக்கோர் சூளாமணி ஆயினான் (2127) எனக் கூறுகின்றது. இச்சிறப்பாலும் தன்மை யாலும் இந்நூற்பெயர் வந்த தெனலாம். சூளாமணியின் ஆசிரியர் தோலா மொழித்தேவர் என்பதும், அவர் சமண சமயஞ் சார்ந்தவர் என்பதும்,1 கார் வெட்டி அரசன் விசயன் என்பான் காலத்தவர் என்பதும், தரும தீர்த்தங்கரர் என்பாரிடம் இணையற்ற ஈடுபாடு உடையவர் என்பதும், திக்கெட்டும் புகழ்படைத்த திறல்விசயன் புயலனைய கையன் தெவ்வைக் கைக்கொட்டி நகைக்குமிகற் கார்வெட்டி யரையன்வள நாடற் கேற்பப் பொக்கெட்டும் பத்துமிலான் புகழ்த்தரும தீர்த்தன்மலர்ப் பதம்பூ சிப்போன் சொற்கெட்டா வரன்தோலா மொழிசூளா மணியுணர்வோர் துறைகண் டாரே என்னும் பாடலால் அறியலாம். இந்நூல் சேந்தன் என்னும் அரசன் அவையில் அரங்கேற்றப் பெற்றதாகப் பாயிரத்து வரும் நான்காம் பாடலால் அறியலாம். இச்சேந்தன் அவனி சூளாமணி மாறவர் மனாக இருக்கவேண்டும் என்றும் அவன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஆகலாம் என்றும் சோழர் என்னும் நூலில் நீலகண்ட சாத்திரியார் குறிப்பார். தோலாமொழித்தேவர் குணபத்திரர் என்னும் சைன ஆசிரியர் காலத்தவர் என்றும் அவர்காலம் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் என்றும் ந. சி. கந்தையா அவர்கள் குறிப்பார். தோலாமொழி, தோல்வி காணாத மொழியாம். ஆர்க்குந் தோலாதாய் என்றும் தோலா நாவிற் சுச்சுதன் என்றும் இரண்டு இடங்களில் (1473, 308) இவ்வருஞ் சொல்லை இவர் பயன் படுத்துவது கொண்டு இவரை இப்பெயரால் அழைத்தனர் என்பர். 2131 செய்யுட்களையுடைய இந்நூல் 1889ஆம் ஆண்டில் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. பின்னர்க் குறிப்புரை, மேற்கோள் ஆகியவற்றுடன் 1954ஆம் ஆண்டு டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக வந்தது. அரிய விரிவுரையுடன் இருபகுதிகளாகக் கழக வழி வெளிவந்துள்ளது. புறத்திரட்டில் எடுத்தாளப் பெற்ற சூளாமணிப் பாடல்கள் (79) எழுபத்தொன்பது. அவை வருமாறு: 66,95, 96, 119, 216, 245, 255, 308, 338, 339, 344, 345, 346, 347, 399, 400, 469, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 491, 589, 590, 591, 592, 593, 594, 595, 596, 623, 660, 669, 670, 671, 681, 682, 683, 722, 731, 732, 733, 734, 735, 736, 737, 738, 739, 740, 777, 778, 779, 834, 835, 836, 856, 867, 868, 869, 870, 1008, 1009, 1178, 1291, 1292, 1302, 1353, 1354, 1383, 1402, 1435, 1440, 1441. 15. தகடூர் யாத்திரை யாத்திரை என்பது 1செலவு என்னும் பொருட்டது. அதியமானுக்குரிய2 தகடூர்மேல் சேரமான் படைகொண்டு. சென்ற வரலாற்றைக் கூறுவது தகடூர் யாத்திரையாம். இதற்குத் தகடூர் மாலை என்னும் பெயரும் உண்டென்பது புறத்திரட்டால் புலப்படுகின்றது. வரலாற்றைத் தழுவிச் செய்யப் பெற்றது தகடூர் யாத்திரை என்றும், வரலாறு நிகழ்ந்த காலத்திலேயே செய்யப் பெற்றது அன்று என்றும் கூறுவார் பேராசிரியர். தொன்மை என்பது உரை விரா அய்ப் பழமையவாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை பெருந் தேவனாற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன என்பது அவர் வாக்கு (தொல். பொருள். 549). இவ்வுரையானும் தொல். பொருள். 485இல் பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒரு பாட்டினை இடையிட்டுக் கொண்டு நிற்குங் குறிப்பினான் வருவன உரையெனப்படும். என்னை? பாட்டு வருவது சிறுபான்மையாகலின். அவை: தகடூர் யாத்திரை போல்வன என்று கூறுவதானும் தகடூர் யாத்திரை உரையும் பாடலும் விரவிச் செல்லும் நடையது என்பதை உணரலாம். தகடூர் யாத்திரை போரின் நேர்முகக் காட்சியே என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. போரின் நேர்முகக் காட்சியாக நமக்குக் கிட்டியுள்ள தமிழ்ப்பாடல் தகடூர் யாத்திரை ஒன்றே எனலாம் என்று1 பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் குறிக்கிறார். 2தகடூர் யாத்திரைச் சரித்திரம் பாரதம் போன்று தாயத்தாரிடை நிகழ்ந்த போரின் வரலாற்றினை விளங்கக் கூறுவதாம். உற்று நோக்குவோர்க்குப் பாரத சரித்திரத்திற்கும் இந்நூற் சரித்திரக் குறிப்புக்களுக்கும் ஒற்றுமை பல காணப்படும் என்பது அறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி முடிவாம். மெய்ம்மலி மனத்தின் எனத் தொடங்கும் பாடலை எடுத்துக் காட்டி, இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும் பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது என்றும், கார்த்தரும் புல்லணல் என்னும் பாடலை எடுத்துக் காட்டி, இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது என்றும்3 நச்சினார்க்கினியர் கூறுவதால் புலவர் பலர் பாடிய பாடற்றொகுப்பாக இருத்தல் கூடும் எனக் கருத இடமுளது. கலையெனப் பாய்ந்த என்னும் பாடலைக் காட்டி இது சேரமான் பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோர்க்கு அவர் கூறியது என்று நச். (தொல். பொருள். 67) கூறுவதை நோக்கி நேர்முகக் காட்சியாகவே புலப்படுகின்றது. தமிழர் வரலாற்றுச் செல்வமாகிய தகடூர் யாத்திரையை முழுமையாகக் காணமுடியாத தீயூழின் இடையே 44 பாடல்களையேனும் அறிதற்குப் பேறு தந்தது4 புறத்திரட்டேயாம். இதன்கண் வருவன: 10, 19, 227, 666, 667, 756, 776, 785, 786, 844, 995, 1241, 1251, 1257, 1258, 1274, 1301, 1304, 1314, 1315, 1316, 1317, 1318, 1319, 1320, 1321, 1342, 1343, 1370, 1371, 1372, 1373, 1374, 1375, 1376, 1377, 1378, 1382, 1404, 1405, 1406, 1407, 1438, 1454. 16. திரிகடுகம் 1திரிகடு கஞ்சுக் கோடு திப்பிலி மிளகு செப்பும் 2திரிகடு கஞ்சுக்கு மிளகு திப்பிலி என்பவற்றால் திரிகடுகமாவது யாது என்பது புலப்படும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் முப்பொருள்களும் உடல் நோயை நீக்கி நலம் பயப்பதுபோல் அறியாமை நோயை அகற்றி மனநலத்தை ஆக்கும் மும்மூன்று கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் ஆகிய நூலுக்குப் பெயராயிற்று. திரிகடுகம் போலும் என இதன் தொடக்கப் பாடல் இயம்புவதும் இந்நூற் பெயர்க்குரிய சான்றாகும். திரிகடுகம், கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண் பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் மும் மூன்று கருத்துக்களைக் கூறுவது; ஒவ்வொரு பாடலின் மூன்றாமடி இறுதிச் சீரிலும் இம்மூன்றும் என்றாவது இம்மூவர் என்றாவது தொகை குறிப்பிட்டுச் செல்வது; எளிமையும் நயமும் வாய்ந்த அருமை யுடைய பாக்களால் அமைந்தது. இந்நூலை இயற்றிய ஆசிரியர் நல்லாதனார் ஆவர். ஆதன் என்னும் பெயர் மிகத் தொன்மையானது என்பதை ஆதனும் பூதனும் என்னும் 3தொல்காப்பிய நூற்பாவான் அறியலாம். செல்வத் திருத்துளார் செம்மல் செருவடுதோள் நல்லாத னென்னும் பெயரானே-பல்லார் பரிவொடு நோய்வீயப் பன்னியா ராய்ந்து திரிகடுகஞ் செய்த மகன் என்னும் வெண்பாவால் இவர் திருத்து என்னும் ஊரினர் என்பதும், பேராற்றல் மிக்கவர் என்பதும் புலப்படும். இத்திருத்து தென் பாண்டி நாட்டது என்பர். இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்பது ஆய்ந்தோர் துணிபு, நல்லாதனார் வைணவ சமயஞ் சார்ந்தவர் என்பது, கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்-நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி என்னும் கடவுள் வாழ்த்துச் செய்யுளாற் போதரும். தாம் எடுத்துக் கொண்ட நூற் போக்குக் கியையத் திருமாலின் திருவடிகளின் முச்செய்கைகளைக் கூறி இணைத்த நயம் பாராட்டுக்குரியது. புறத்திரட்டில் அமைந்துள்ள திரிகடுகப் பாடல்கள் (53) ஐம்பத்து மூன்று. அவை வருமாறு: 3, 64, 65, 74, 126, 180, 181, 243, 271, 436, 437, 474, 475, 535, 545, 546, 547, 575, 654, 687, 691, 692, 726, 754, 935, 969, 970, 971, 972, 973, 974, 994, 1062, 1071, 1081, 1082, 1083, 1110, 1111, 1123, 1124, 1125, 1163, 1177, 1205, 1206, 1222, 1223, 1224, 1225, 1226, 1227, 1228. 17. நளவெண்பா நிடத நாட்டு வேந்தன் நளனது வரலாற்றை வெண்பா யாப்பினால் கூறும் நூல் நளவெண்பா ஆகும். வெண்பாவிற் புகழேந்தி என்று பாராட்டப்பெறும் புகழேந்தியாரால் செய்யப் பெற்றது இந்நூல். இதன்கண் 424 பாக்கள் உள. பாரதத்தில் கிளைக்கதையாய் அமைந்துள்ளது நளன் கதை. அதனைத் தமிழாக்கியவர் இருவர்; ஒருவர் புகழேந்தியார்; மற்றொருவர் அதிவீரராம பாண்டியர். முன்னவர் வெண் பாவையும், பின்னவர் விருத்தப்பாவையும் கொண்டனர். இரண்டும் நளன் வரலாற்றைக் கூறுவனவேயாயினும் நளவெண்பா நைடதத்தினும் பெருக விளங்குகின்றது என்பது உண்மை. கலியால் விளைந்த கதை-(11) யாம் நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் தன்னகத்துக் கொண்டது. அதன் காண்டப் பெயர்களே உள்ளுறையைத் தெள்ளிதில் விளக்கவல்லன வாய் உள்ளமை அறிக. நளவெண்பாவின் ஆசிரியர் இயற்பெயர் தெரிந்திலது. அவர் புகழ்ப்பெயரே நிலவுவதாயிற்று. புகழேந்தி என்பதே அப்பெயர். அவர் புகழ்க்கு வேறுஞ் சான்று வேண்டுமோ? புகழேந்தியார் தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரிற் பிறந்தார். மள்ளுவ நாட்டு முரணைநகர் வேந்தன் சந்திரன் சுவர்க்கி என்பவனால் ஆதரிக்கப்பெற்றார் என்பது, தக்க இடங்களில் அவர் அவனைப் பாராட்டிப் பாடியுள்ள பாடல்களால் புலனாகின்றது. முரணை நகர், உறையூர்க்கு அணித்தாயுள்ளதாம். புகழேந்தியார் செஞ்சியர் வேந்தன் கொற்றந்தைமீது ஒரு கலம்பகம் இயற்றியுள்ளார். அன்றியும் அல்லி அரசாணிமாலை, பவழக்கொடி மாலை, புலந்திரன் களவுமாலை முதலாக 15க்கு மேற்பட்ட நூல்கள் புகழேந்தியார் பெயரால் வழங்கி வருகின்றன. புகழேந்தியார், ஒட்டக் கூத்தர், ஔவையார் ஆகியோர் ஒருகாலத்தே இருந்தவர் என்னும் கதைகள் உண்டு. புகழேந்திப் புலவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்கால மாகிய கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்1 என்பர். இலங்கைவேந்தன் ஆரியசேகரனைப் புகழேந்தியார் பாடிய தாகப் பாடலொன்று இருத்தலால் அவனது காலமாகிய பதின் மூன்றாம் நூற்றாண்டே புழேந்தியார் காலமாதல் வேண்டும் என்று தமிழ்ப்புலவர் அகராதி கூறுவதும் இவண் நோக்கத்தகும். புகழேந்தியார் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பாக்களால் வைணவர் என்பது விளங்கக்கிடப்பினும், மூத்தபிள்ளையார் சிவபெருமான் வாழ்த்துக்களால் அவர்தம் சமயப்பொறை தெளிவாம். புறத்திரட்டில் இடம்பெற்றுள்ள நளவெண்பாய் பாடல் ஒன்றே (550). அப்பாடற் குறிப்பு அது நளன் கதை என்று கூறுகிறது. பெருக வழங்கும் வழக்குப்படி இப்பதிப்பில் நளவெண்பா எனக் குறிக்கப் பெற்றுள்ளது. 18. நாரத சரிதை நாரதன் என்பானது வரலாறு கூறும் நூல் இஃதென்பது பெயரளவான் விளங்குகின்றது. இந்நாரதன் யாவன்? இவன் வரலாறென்ன என்பவை அறிதற் கியலா நிலையில் உள்ளன. ஸ்ரீபுராணம் என்னும் நூலில் வரும் நாரதன், பர்வதன் என்னும் இருவருள் நாரதன் சரிதம் கூறுவதாக இந் நாரத சரிதம் இருக்கலாம் என அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கருதுகிறார்கள். (மறைந்து போன தமிழ் நூல்கள். பக். 170). நாரத சரிதம் அரசன் ஒருவனது சரித்திரம் கூறுவதற்கு அமைந்தது என்பது புறத்திரட்டு 496ஆம் பாடலால் புலப்படும். அவன் அரண்மனைச் சிறப்பு 861ஆம் பாடலால் விளங்கும். புறத்திரட்டிலுள்ள நாரத சரிதைச் செய்யுட்களை நோக்கும்போது கதைத் தலைவனாகிய அரசன் உலக இன்பங்களை வெறுத்துத் துறவு பூண்டான் என்று தெளியலாம். சமண வரலாறுகள் பலவும் கதைத் தலைவன் துறவு பூண்டு முத்தி எய்துதலோடு முடிகின்றன. அவ் வழியில் செல்லும் இந்நூலும் சமணம் சார்ந்தது ஆகலாம். யாப்பருங்கல விருத்தியில் இந் நூற்பாடலொன்று மேற்கோளாகக் காட்டப்பெற்று இருத்தலால் இதன் காலம் பதினொராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது உறுதி என்னுங் கருத்துக் களைப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் வழங்கி யுள்ளார்கள். புறத்திரட்டில், இடம் பெற்றுள்ள நாரத சரிதைப் பாடல்கள் (8) எட்டு. அவை வருமாறு. 304,356,414,425,426,496,861,1060. 19. நாலடியார் நாலடியார், நாலடி, நாலடிநானூறு என்னும் பெயர்களாலும் வழங்கப்பெறும். அளவினாற் பெயர் பெற்றன பன்னிருபடலம், நாலடிநானூறு முதலாயின என்னும் மயிலை நாதருரையால் (நன். 48) நாலடி என்பது அளவினாற் பெற்ற பெயர் என்பது தெளிவாம். குறள் வெண்பாவால் அமைந்த நூல் குறள் ஆயினாற்போல, நாலடி வெண்பாவால் அமைந்த நானூறு பாக்களையுடைய நூல் நாலடி நானூறு ஆயிற்றாம். உலகப் பொது நூலாம் திருக்குறளை அடுத்து எண்ணத்தக்க அருமையமைந்த நூல் நாலடி. இஃதொரு தொகை நூல் என்பதும், இதனைப் பாடினோர் சமண் சான்றோர் என்பதும் இந்நூலை நோக்குவார்க்கு எளிதில் புலப்படும் செய்திகளாம். நாலடியார் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பால்களையும், 40 அதிகாரங்களையும் தன்னகத்துக் கொண்டது. பாலும், இயலும், அதிகார அடைவும் செய்தவர் பதுமனார் என்பது வளங்கெழு என்னும் பாயிரத்தாற் புலப்படும். அவரே ஓர் உரையும் கண்டார். அதன் பின்னர்த் தருமர் என்பாரும், பெயரறியப் பெறாத பிறிதொரு வரும் உரை கண்டனர். பின்னை உரை விளக்கவுரை எனக் குறிக்கப் பெறுகிறது. நாலடி திருக்குறளோடு வைத்து எண்ணப்படும் சீர்மை, நாலடி வள்ளுவராமே என்னும் அரங்கக் கோவையாலும், பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் பாலு நெய்யும் உடலுக் குறுதி வேலு வாளும் அடலுக் குறுதி ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி நாலடி இரண்டடி கற்றவனிடத்தே வாயடி கையடி அடிக்காதே என்னும் பழமொழிகளாலும் நன்குணரலாம். பதினெண் கீழ்க்கணக்கில் முற்கண் கூறப்பெறும் இந்நூற்கண் முத்தரையர் என்பாரின் கொடைச் சிறப்பு இரண்டு பாடல்களில் (200, 296) கூறப் பெற்றுள்ளது. இம் முத்தரையரைப் பற்றிச் செந்தலைக் கல்வெட்டுக் குறிக்கும் செய்திகொண்டு நாலடியாரின் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டாகலாம் என்பர். நானூறு பாடல்களில் 212 பாடல்களைப் புறத்திரட்டு ஆசிரியர் தம் தொகுப்பில் சேர்த்துள்ளார் என்பது இந்நூற் சிறப்பைப் புலப்படுத்துதல் ஒரு தலை. அதில் குறிக்கப்பெற்ற பாடலெண்கள் (212) இருநூற்றுப் பன்னிரண்டு அவை வருமாறு: 33, 34, 35, 36, 62, 63, 69, 70,71, 82, 83, 92, 114, 124, 125, 148, 149, 150, 151, 152, 162, 163, 164, 165, 166, 167, 177, 178, 209, 210, 211, 222, 223, 224, 225, 226, 237, 238, 239, 240, 244, 249, 261, 262, 272, 273, 290, 291, 310, 317, 318, 319, 340, 341, 342, 343, 358, 359, 360, 370, 371, 372, 373, 403, 404, 405, 418, 419, 435, 447, 461, 462, 463, 464, 465, 512, 519, 520, 523, 536, 537, 538, 539, 540, 557, 558, 559, 560, 561, 576, 577, 578, 579, 580, 581, 582, 606, 650, 651, 652, 653, 695, 704, 705, 706, 707, 708, 755, 798, 823, 824, 825, 826, 879, 913, 914, 915, 916, 917, 927, 928, 929, 930, 931, 932, 933, 941, 942, 943, 944, 945, 946, 955, 956, 959, 960, 961, 975, 976, 977, 978, 979, 988, 989, 990, 991, 992, 993, 1030, 1031, 1032, 1033, 1034, 1040, 1041, 1042, 1043, 1084, 1085, 1086, 1087, 1088, 1089, 1090, 1091, 1092, 1093, 1094, 1095, 1096, 1097, 1113, 1114, 1120, 1121, 1122, 1131, 1132, 1133, 1141, 1142, 1143, 1144, 1145, 1146, 1147, 1150, 1164, 1165, 1166, 1167, 1168, 1169, 1174, 1181, 1182, 1183, 1184, 1185, 1186, 1187, 1188, 1189, 1198, 1199, 1200, 1201, 1202, 1203, 1204, 1229, 1230. 20. நான்மணிக் கடிகை கடிகை என்பது பல பொருள் ஒரு சொல். அரையாப்பு, தோள்வளை முதலிய அணிகலன்களையும், துண்டம் உண்கலம் நாழிகை முதலிய பொருள்களையும் குறிக்கும். நான்மணிக்கடிகை என்பது நான்கு மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலம் என்றாவது துண்டம் என்றாவது கொள்ளவேண்டும். 1பவளக்கடிகை என்னும் திணைமாலைச் சொற்குப் பவளத் துண்டம் எனப் பொருள் கூறுவார் பழைய உரையாசிரியர். 2காலெறி கடிகை என்பது குறுந்தொகைச் சொல். அதற்குக் (கரும்பின்) அடிப்பகுதியில் வெட்டப்பட்ட துண்டு என்பது பொருளாம். அணிகலங்களில் மணி பதித்தல் உண்டென்பது, 1 பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந் தருவிலை நன்கலம் அமைக்குங் காலை என்னும் புறப்பாட்டால் புலப்படும். ஆக நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற அணிகலம் போல நான்கு நற்கருத்துக்களைக் கொண்ட பாடல்களால் அமைந்த நூல் நான்மணிக் கடிகையாயிற்று என்பதாம். நூற்று நான்கு வெண்பாக்களால் ஆகிய இந்நூலை இயற்றிய புலவர் பெருந்தகை விளம்பி நாகனார் என்பவர் ஆவர். இவர் விளம்பி என்னும் ஊரினர் என்பதும், நாகன் என்னும் இயற் பெயருடையவர் என்பதும் இவர் பெயரால் விளங்கும். இவர் வைணவ சமயத்தவர் என்பது, மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமலர் ஒக்கும் நிறம் என்னும் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் நன்கறியப் பெறும். பாடற்கு நான்கு கருத்துக்கள் பொதிந்த இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் தன்கண் நான்கு கருத்துககளை அடக்கிக் கொண்டிருக்கும் அருமை நோக்கத்தக்கது. ஈன்றாளோ, டெண்ணக் கடவுளு மில் (55) என்பதால் இவர்தம் தாயன்பும், தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க (15) என்பதால் அறப்பற்றும், தனக்குப்பாழ் கற்றறிவில்லா வுடம்பு (20) என்பதால் கல்விப்பற்றும், வெல்வது, வேண்டின் வெகுளி விடல் (15) என்பதால் சான்றாண்மைச் செறிவும் புலப்படும். இவர் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு என்பர். புறத்திரட்டில் வந்துள்ள செய்யுட்கள் (45) நாற்பத்தைந்து. அவை வருமாறு: 2, 50, 103, 106, 179, 188, 250, 260, 322, 331, 393, 504, 505, 506, 507, 524, 556, 573, 621, 709, 813, 814, 815, 816, 880. 898. 924, 934, 947, 1098, 1112, 1207, 1209, 1210, 1211, 1212, 1213, 1214, 1215, 1216, 1217, 1218, 1219, 1220, 1221. 21. பதிற்றுப்பத்து நற்றிணை முதலாய எட்டுத்தொகை நூல்களுள் நான்காவது பதிற்றுப்பத்தாகும். பதிற்றுப்பத்தாவது நூறு. இப்பெயர் நூறு பாடல்களைத் தன்னகத்துக்கொண்ட நூலுக்கு ஆயிற்று. சேரமன்னர் பதின்மரைப் புலவர்கள் பதின்மர் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடிய நூல் இது. தாய்மொழி பேணாத் தமிழர் மடமையால் முதற்பத்தும் பத்தாம்பத்தும் ஒழிய எட்டுப் பத்துக்களே இன்று காணக்கிடைத்துள்ளன. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் உண்டு, அப் பதிகத்தில் பாட்டுடைத் தலைவன் பெயர், அவன் செய்த செயல்கள், பாடினோர் பெயர், பாடல்களின் பெயர், பாடிய புலவர் பெற்ற பரிசில் பாட்டுடைத் தலைவன் ஆட்சிக்காலம் ஆகியவை இடம் பெற்றுள. தமிழக வரலாற்றுக்குப் புற நானூற்றை அடுத்து உதவும் நூல் பதிற்றுப்பத்தே என்பது மிகையன்று. இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்துமுடியக் குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைபாடினியார் நச்செள்ளையார், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக்கடுங் கோவாழியாதன், தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறை, குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை ஆகியோர் இந்நூற்கண் பாடப்பெற்றோர் ஆவர். பதிற்றுப்பத்துக்குப் பழையவுரை ஒன்றுண்டு. அதனை இயற்றியவர் பெயரோ, காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. அவர், சின்மையைச் சின்னூலென்றது போல ஈண்டுச் சிறுமை யாகக் கொள்க என்று 76ஆம் பாட்டின் உரையிற் கூறுவது கொண்டு சின்னூல் ஆசிரியரான குணவீர பண்டிதர் காலத்திற்குப் பிற்பட்டவர் இவ்வுரையாசிரியர் என்பதை அறியலாம். குறிப்புரை பழையவுரை இவற்றுடன் இந்நூலை முதற்கண் 1904ஆம் ஆண்டில் டாக்டர் ஐயர் வெளியிட்டார். கழக வழியாகச் சிறந்த விளக்கவுரை ஆராய்ச்சிக் குறிப்புக்கள் ஆகியவற்றுடன் 1950ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இழந்துபோன இருபது பாடல்களில் இரண்டு பாடல்களைத் தந்த பெருமை புறத்திரட்டுக்கு உண்டு. புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள இந்நூற் பாடல்கள் (6). அவை வருமாறு: 845, 1260, 1267, 1275, 1283, 1506. 22. பரிபாடல் பரிபாடல் என்பது ஒருவகைப்பா. அப்பாவால் அமைந்த நூல் பரிபாடல் ஆயிற்று. பரிபாடல் வெண்பா யாப்பின தென்றும், கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புக்களை யுடையதென்றும், காமமுங் கடவுளும் பொருளாக வருவதென்றும், சொற்சீர் அடி முடுகியல் அடி ஆகிய அடி வகைகளை யுடைய தென்றும், ஐம்பதடிச் சிறுமையாய் நானூறடிப் பெருமையாய் வருவதென்றும் தொல்காப்பியத்தாலும் அதன் உரைகளாலும் அறியலாம். (செய். 117, 119 - 122, 160) பரிபாடல் 70 பாடல்களைக் கொண்டிருந்ததென்றும், அவற்றுள் திருமாலுக்கு எட்டும், செவ்வேட்கு முப்பத்தொன்றும், காடுகிழாட்கு ஒன்றும், வையைக்கு இருபத்தாறும், மதுரைக்கு நான்கும் உரியன என்றும், திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம் என்னும் வெண்பாவான் அறியலாம். ஆனால் திருமாலுக்குரியவை ஏழும், செவ்வேட்குரியவை எட்டும், வையைக் குரியவை ஒன்பதும் ஆக 24 பாடல்களும் சில உறுப்புக்களுமே கிடைத்துள. தந்நிலை யறியாத தமிழர்களால் தமிழ்த்தாய் உற்ற இழப்புக்கள் தாம் எத்துணை! எத்துணை!! ஓங்கு பரிபாடல் எனச் சிறப்பிக்கப்பெறும் இஃது எட்டுத் தொகையுள் ஐந்தாவதாம். இசைப்பாவால் இயன்ற இந்நூலின் ஒவ்வொரு பாடலின் பின்னேயும் துறையும், இயற்றிய ஆசிரியர் பெயரும், இசை வகுத்தோர் பெயரும், பண்ணின் பெயரும் குறிக்கப்பெற்றுள. முதற் பதினொரு பாடல்கள் பாலையாழ் என்னும் பண்ணையும், அடுத்த ஐந்து பாடல்கள் நோதிறம் என்னும் பண்ணையும், அடுத்த நான்கு பாடல்கள் காந்தாரம் என்னும் பண்ணையும் சேர்ந்தவை என்பதை அறியும்போது பண்முறையில் தொகுக்கப்பெற்றது இந்நூல் என்பது போதரும். அன்றியும் தேவாரப் பண்ணுக்கு முன்னோடியாக இப் பரிபாடல் திகழ்ந்த மையும் அறியக் கூடியதே. தெய்வமாண்பும் இன்பச்சுவையும் திகழும் இந்நூலை இருக்கும் அளவிலேனும் எட்டச் செய்தவர் டாக்டர் ஐயரே ஆவர். 1918ஆம் ஆண்டில் பரிமேலழகர் உரை, குறிப்புரை ஆகியவற்றுடன் முதற்கண் வெளியிட்டார். பின்னர் அரிய விளக்கவுரை பெற்று அழகு தவழக் கழகவழியாக வெளிவந்துள்ளது. பரிபாடல் ஏட்டுச்சுவடியிற் கிட்டாமல் புறத்திரட்டினால் பெற்றுள்ள உறுப்புக்கள் ஆறாகும். மதுரையைப் பற்றிய அப்பாடல் உறுப்புக்களின் அருமை சொல்லுக்கடங்காது என்பதைக் கற்பவர் உணராமலிரார். புறத்திரட்டில் அவை வரும் பாடல்கள் (6) ஆறு. அவ வருமாறு: 866, 874, 875, 876, 877, 878. 23. பழமொழி பழைமை + மொழி = பழமொழி. ஒவ்வொரு பாடல் இறுதிக் கண்ணும் பழமொழி அமைக்கப்பெற்றுள்ளமையால் இந்நூல் பழமொழி எனப் பெயர்பெற்றது. நானூறு வெண் பாக்களைக் கொண்டது இந்நூல். தொல் பழைமை வாய்ந்தது தமிழகம். அதன் பழைமைக் கேற்ப வாழையடி வாழையென வழங்கிவரும் பழமொழிகள் எண்ணற்றவை. அவற்றுள் ஆராய்ந்தெடுத்த மணிகளைப் பதித்து அறநெறி புகட்டிய அருமைப் பாடுடையது பழமொழி நானூறு. திருக்குறள் நாலடி என்னும் அறநூல்களை அடுத்து வைத்துப் பாராட்டும் சிறப்புடையது இப்பழமொழி. அவற்றில் கூறப்படாத சில அரிய கருத்துக்களும் இந்நூற்கண் உளவென்பது ஆராய் வார்க்குப் புலனாதல் ஒருதலை. அன்றியும் வரலாற்றுத் துறைக்கு இந்நூல் அருந்துணை செய்வதும் கண்கூடு. இந்நூலாசிரியர் முன்றுறையரையனார் என்பதும், அவர் பண்டைப் பழமொழிகளை ஆராய்ந்து நாலடி வெண்பாப் பாடல் நானூறு செய்தார் என்பதும், அவர் சமண் சமயஞ் சார்ந்தவர் என்பதும், பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான் இன்றுறை வெண்பா இவை என்னும் தற்சிறப்புப் பாயிரப் பாடலால் புலப்படும். இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டென்பர். கொற்கை முன்றுறை, காவிரி முன்றுறை, திருமருது முன்றுறை எனப் பல முன்றுறைகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. எனினும் தமிழ்ப் பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார் இம் முன்றுறையைப் பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊராகக் கூறுவர். கொற்கை முன்றுறையாக இருக்கக்கூடும் என்பதற்கு நூற்கண் வழங்கும் பழமொழிகளும்; சொற்களும் சான்றாக உள்ளன. பழமொழியைச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் அவர்கள் 1874இல் வெளியிட்டனர். பின்னர் 1904இல் தி.ச. ஆறுமுக நயினார் அவர்களாலும் 1914இல் திருமணம் செல்வக் கேசவராய முதலியாராலும் வெளியிடப் பெற்றன. மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் வழியாக 1918இல் முதல் நூறும், 1922இல் இரண்டாம் நூறும் உரை விளக்கத்துடன் வெளியிடப்பெற்றன. விளக்கவுரையுடன் கழகம் 1948இல் வெளியிட்டுள்ளது. புறத்திரட்டில் மிகுதியாகச் சேர்த்து வைக்கப்பெற்ற பாடல் களைக் கொண்ட நூல் பழமொழியே. நானூறு பாடல்களில் 319 பாடல்கள் அதன்கண் எடுத்தாளப்படுகின்றன. அவை வருமாறு: 15, 28, 29, 30, 31, 32, 53, 54, 68, 80, 94, 105, 109, 110, 111, 112, 113, 117, 120, 121, 122, 123, 146,147, 157, 158, 159, 160, 161, 170, 171, 172, 174, 175, 176, 183, 184, 185, 186, 187, 191, 208, 217, 218, 219, 220, 221, 231, 232, 233, 234, 235, 236, 242, 246, 247, 259, 269, 284, 285, 289, 316, 323, 324, 325, 415, 416, 417, 428, 446, 449, 450, 451, 452, 453, 454, 455, 456, 457, 458, 459, 476, 500, 501, 502, 503, 515, 516, 517, 521, 522, 528, 529, 530, 531, 532, 533, 534, 548, 549, 552, 553, 554, 555, 565, 574, 583, 584, 585, 586, 587, 598, 599, 600, 604, 605, 611, 612, 616, 617, 618, 619, 624, 625, 626, 627, 628, 629, 630, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 643, 644, 645, 646, 647, 648, 649, 661, 662, 663, 664, 665, 673, 674, 675, 676, 680, 685, 686, 696, 697, 698, 701, 702, 703, 711, 729, 730, 746, 747, 748, 749, 750, 757, 758, 759, 760, 761, 762, 763, 769, 787, 788, 789, 790, 791, 792, 793, 794, 795, 796, 797, 809, 810, 811, 812, 817, 818, 819, 820, 821, 822, 848, 881, 882, 883, 884, 885, 886, 887, 888, 889, 890, 891, 892, 893, 902, 903, 904, 905, 906, 907, 918, 919, 920, 921, 922, 923, 936, 937, 938, 939, 940, 948, 949, 950, 951, 952, 953, 954, 958, 962, 963, 964, 965, 966, 967, 968, 982, 983, 984, 985, 986, 987, 997, 998, 999, 1000, 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1010, 1011, 1012, 1013, 1017, 1018, 1019, 1020, 1021, 1022, 1023, 1024, 1025, 1026, 1027, 1028, 1029, 1061, 1069, 1079, 1080, 1099, 1101, 1102, 1103, 1104, 1105, 1106, 1107, 1108, 1109, 1117, 1118, 1119, 1128, 1129, 1136, 1137, 1138, 1139, 1140, 1149, 1162, 1175, 1176, 1190, 1191, 1192, 1193, 1194, 1195, 1196, 1197, 1312, 1313. 24. பாரதம் பாண்டவர் துரியோதனர் வரலாறு கூறும் இந்நூல் வியாசரால் வடமொழியில் இயற்றப் பெற்றது. பரதன் வழி வந்த மக்கள் வரலாற்றைக் கூறும் நூல் ஆதலின் இப்பெயர் பெற்ற தென்பர். வில்லிபுத்தூராழ்வார், நல்லாப்பிள்ளை ஆகியோர் இயற்றிய பாரதங்கள் தமிழில் உள. இவற்றுக்கு முன்னரும் தமிழில் பாரத நூல்கள் பல இருந்தன. பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் ஒருவர் மிகப் பழைமையானவர். எட்டுத்தொகை நூல்களுள் பலவற்றின் கடவுள் வாழ்த்துக்கள் அவருடையனவே. அவர் பாரதம் பாடிய காரணத் தால் இப்பெயர் பெற்றார் என்பதும் வெளிப்படை. மகாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும் உதவினான் பாண்டியன் ஒருவன் எனச் சின்ன மனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியரால் தொல்காப்பிய உரைக்கண் மேற்கோளாகப் பாரதச் செய்திகளை உள்ளடக்கிய சில பாடல்கள் காட்டப்பெறுகின்றன. அவை நடைப்போக்கால் சங்கச் செய்யுட்களை நினைவூட்டுகின்றன. சங்க நூல்கட்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனாரே இப்பாரதச் செய்யுட்களை இயற்றியிருக்கக் கூடும் எனக் கொள்ளலாம். இனி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தி வர்மப் பல்லவன் காலத்தேயும் ஒரு பெருந்தேவனார் இருந்துள்ளார். அவரும் பாரதம் பாடியமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றே அழைக்கப் பெற்றார். ஆனால் இவர் பாடிய நூல் பாரத வெண்பா என அழைக்கப்படுகிறது. சங்க காலப் பெருந்தேவனார் பாரதம் ஆசிரியப் பாவான் இயன்றது என்பது கிட்டியுள்ள பாடல்களால் புலனாகின்றது. புறத்திரட்டில் சேர்க்கப் பெற்றுள்ள பாரதப் பாடல்கள் பாரத வெண்பாவைச் சேர்ந்தனவாம். இந்நூலிற் கிடைத்துள்ள 830 பாடல்களையும் அ. கோபாலையர் வெளி யிட்டுள்ளார். இனிப், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த 1அருணிலை விசாகன் என்பான், பாரதத்தை இனிய செந்தமிழ்ப் படுத்தியவன் என்று திருவாலங்காட்டுச் சாசனத்தால் புகழப்படு கின்றான். ஆக, வேறொரு பாரத நூல் இஃதென அறியலாம். பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியைச் சேர்ந்தவர் என 2முடிவு கட்டுகிறார் அறிஞர் து.அ. கோபிநாதராவ். புறத்திரட்டில் ஆளப் பெற்றுள்ள பாரதப் பாடல்கள் (33) முப்பத்து மூன்று அவை வருமாறு: 38, 77, 84, 104, 108, 169, 196, 197, 252, 263, 326, 329, 330, 394, 613, 614, 688, 689, 690, 765, 770, 771, 772, 773, 774, 775, 1072, 1073, 1074, 1148, 1311, 1347, 1429. 25. புறநானூறு அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கம் புறம் எனப்படும். அப்புறப் பொருள் பற்றிய நானூறு பாக்களால் அமைந்த சங்க நூல் புறநானூறு ஆகும். இது புறப்பாட்டு, புறம், புறம்பு நானூறு என்னும் பெயர்களாலும் வழங்கப்பெறும். எட்டுத்தொகை நூல்களுள் இஃது எட்டாவதாம். முழுமுதல் இலக்கண நூலான தொல்காப்யித்திற்கு முற்பட்ட பாடல்களும் இந்நூற்கண் உள. சங்கத் திறுதிக் காலச் செய்யுட்களும் இடம் பெற்றுள. பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல் கோவூர் கிழார் ஈறாகப் பல புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற பாக்களை யுடையது. 159 புலவர்களால் பாடப்பெற்றது என்பார் 3ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். ஆனால் அவ்வாறு வரையறுத்துக் கூறுதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகள் உண்மை எவரும் அறிந்ததே. முடிவேந்தர் மூவர், குறுநில மன்னர், வள்ளல்கள், தானைத் தலைவர்கள், புலவர் பெருமக்கள் ஆகியோரை அறிந்து கொள்ளுதற்கு வாய்த்த வரலாற்றுப் பொற்பேழை புறநானூறு என்பது மிகையன்று. இப்பாக்களைப் பாடியவர்கள் பாடப்பட்டவர்கள் அனை வரும் ஒரு காலத்தார் அல்லர்; ஓரிடத்தார் அல்லர்; ஓரினத்தார் அல்லர்; ஒரு தொழிலார் அல்லர்; தமிழ் மன்பதை பாடியது! தமிழ் மன்பதை பாடப்பெற்றது! 1800 யாண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தைக் காட்டும் அழியாக் காட்சிக் கூடம் புறநானூறு என்பது தகும். புறத்துறை இலக்கண நெறிக்கு ஏற்ப ஒவ்வொரு பாடற்கும் திணையும் துறையும் வகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலும், பாடினோர் பாடப் பெற்றோரைக் குறித்துச் செல்லுகிறது. இயன்ற இடங்களிலெல்லாம் பாடல் தோன்றிய சூழலைச் சுட்டிச் செல்லு கிறது. அரிய உரை கொண்டு திகழ்கிறது. அதற்கு முன்னேயும் ஓருரை இருந்திருக்கக் கூடும் என்பது அவ்வுரையால் புலப்படுகிறது. தமிழர் தலைமேல் வைத்துப் போற்றத்தக்க இப்பெரு நூலை 1894ஆம் ஆண்டு முதற்கண் வெளியிட்ட பெருமை டாக்டர் ஐயருக்குண்டு. 269ஆம் பாடலுக்கு மேல் உரையில்லா திருந்த குறையை நிறை செய்த பெருமை கழகத்திற்குண்டு. இந்நூலின் 267, 268ஆம் பாடல்களை இழந்து விட்ட குறை தமிழுலகத்திற்கு உண்டு! புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள இந்நூற் பாடல்கள் (104) நூற்று நான்கு. அவை வருமாறு: 8, 48, 67, 99, 115, 230, 281, 282, 368, 401, 427, 443, 444, 497, 498, 499, 514, 568, 569, 570, 571, 572, 672, 684, 700, 780, 781, 782, 783, 784, 926, 1126, 1127, 1135, 1179, 1180, 1259, 1284, 1293, 1294, 1297, 1298, 1299, 1305, 1306, 1359, 1364, 1365, 1366, 1367, 1368, 1384, 1385, 1386, 1411, 1412, 1413, 1414, 1415, 1416, 1417, 1418, 1443, 1444, 1445, 1446, 1447, 1448, 1449, 1450, 1451, 1452, 1453, 1459, 1460, 1461, 1462, 1463, 1464, 1477, 1478, 1479, 1480, 1481, 1482, 1483, 1484, 1485, 1486, 1487, 1488, 1489, 1490, 1491, 1494, 1495, 1496, 1497, 1498, 1499, 1502, 1503, 1504, 1505. 26. புறப்பொருள் வெண்பாமாலை தமிழ் இலக்கணம் ஐந்தினுள் பொருள் இலக்கணத்தின் பகுதியாகிய அகம், புறம் என்னும் இரண்டில் புறப்பொருளுக்கு இலக்கியமான வெண்பாக்களின் வரிசையை யுடைய தாகலின் புறப்பொருள் வெண்பாமாலை எனப் பெயர் பெற்றது. புறத்தின் இலக்கணமான 342 நூற்பாக்களையும் அவற்றுக்கு இலக்கியமான 361, வெண்பாக்களையும் தன்னகத்துக் கொண்டு பல்வகை நயங்களும் பல்க அமைந்த நூல் புறப்பொருள் வெண்பா மாலை (ஒழிபியலில் உள்ள 19 வெண்பாக்களுக்கு முன் மட்டும் நூற்பாக்கள் இல்லை). புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றிய ஆசிரியர் ஐயனாரிதனார் என்னும் பெயருடைய சேர அரசர் என்பதும், அவர் பன்னிருபடலம் என்னும் நூலை முதனூலாகக் கொண்டு வழிநூலாக இதனைச் செய்தார் என்பதும் மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமான் ஐய னாரித னகலிடத் தவர்க்கு மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பமாலை யெனப்பெயர் நிறீஇப் பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே என்னும் பாயிரச் செய்யுளால் நன்கு விளங்கும். இவர் காலம் எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பார் தமிழ் வரலாற்றின் ஆசிரியர் தஞ்சை சீனிவாச பிள்ளை. இவர் சைவ சமயஞ் சார்ந்தவர் என்பது ஆனைமுகத்தானையும், நீலமிடற்றானையும் நினைந்து கைகூப்புவதாகக் கடவுள் வாழ்த்துப் பாடுதலால் வெளிப்படும். கொற்றவை, மாயோன், சேயோன் ஆகியோரையும் இடை இடையே புறப்பொருள் அமைதிக் கேற்பக் கூறிச் செல்லும் பாடல்களால் இவர் தம் சமயச் சால்பு நன்கு வெளிப்படுகின்றது. வெட்சி முதலாகப் பெருந்திணை ஈறாகப் பன்னிரு படலங் களையும் ஒழிபு என்னும் ஒரு பகுதியையும் கொண்டது புறப் பொருள் வெண்பாமாலை. இதனைப் பண்டையுரை யாசிரியர்கள் வெண்பாமாலை என்று வழங்கினர். புறத்திரட்டு ஆசிரியரும் வெண்பாமாலை என்றே குறித்தார். இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அவ்வுரை சயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர் என்பவரால் இயற்றப் பெற்றது. இதனை 1895இல் முதற்கண் வெளியிட்ட பெருமை டாக்டர் ஐயரவர்கட்கு உண்டு. பின்னர்ச் சிறந்த உரை விளக்கத்துடன் கழக வழி வெளிவந்துள்ளது. ஒரு விளக்கம் : கான்படு தீயில் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று (55) தொகுப்பாசிரியரால் படைச்செருக்கிலும் (1310) தானைமறத்திலும் (1362) சேர்க்கப்பெற்றுளது. இவ்வாறு இரண்டு அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள பாடல் இஃதொன்றே யாம். இப்பாடல் படைச்செருக்கு, தானைமறம் ஆகிய ஈரதிகாரங் கட்கும் ஏற்ற எடுத்துக் காட்டாக இலங்குதலால் அவ்வாறு இணைக்கப்பெற்றது போலும்! காட்டில் தோன்றிய தீப்போல் தன்மேல் பகைவர் மீதூர்ந்து வந்த விடத்தும் அப்பகைவர் தன்னோடே போர் செய்து தன்னைக் கோறல் அல்லது வானுலகஞ் சேறல் என்னும் ஒன்றைத் துணிந்த பின் அன்றித் தன்படை தீண்டாத் தறுகண்மையுடையான் என்று வருவது குறித்துப் படைச்செருக்கில் வைத்தார் என்றும், அத்தகைய வீரன், தன் பகைவர் முதுகிட்டோட எண்ணிய பின்பு தன் வாளினை அவர் மேல் ஓங்குவனோ என்று வருவது குறித்துத் தானை மறத்தில் வைத்தார் என்றும் கருதலாம். இவ்வாறே வேறு சில பாடல்களும் ஒன்றற்கு மேற்பட்ட அதிகாரங்களில் சேர்த்தற்கு ஏற்ற பொருளமைதி யுடையனவாயினும், தொகுப்பாசிரியர் இப் பாடலொன்றனையே அவ்வாறு பயன்படுத்தி யுள்ளமையால் இதனைக் கருதவேண்டியதாயிற்று என்க. புறத்திரட்டில் ஆளப்பெற்றுள்ள இந் நூற் பாடல்கள் (75) எழுபத்தைந்து அவை வருமாறு: 72, 73, 93, 102, 276, 374, 421, 431, 432, 479, 480, 541, 562, 563, 564, 607, 699, 768, 828, 899, 900, 901, 1116, 1151, 1152, 1153, 1154, 1155, 1156, 1232, 1233, 1234, 1235, 1243, 1244, 1252, 1253, 1254, 1261, 1262, 1263, 1264, 1265, 1266, 1268, 1269, 1270, 1276, 1277, 1289, 1290, 1295, 1296, 1300, 1307, 1308, 1309, 1310, 1322, 1323, 1324, 1335, 1336, 1345, 1346, 1360, 1361, 1362, 1379, 1380, 1388, 1436, 1437, 1456, 1500. 27. பெரும்பொருள் விளக்கம் பெரும் பொருள், பொருளிலக்கணம் கூறும் ஒரு நூலென நச்சினார்க்கினியர் வாக்கால் அறியக் கிடக்கிறது. பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்பதனால், ஒப்பும் பெருந்திணைப் பாற்படுங் கந்தர்வமாமாறு பெரும் பொருளான் உணர்க (சிந்தாமணி 187) என்பார். இதனால் பெரும்பொருள் என்பது ஒரு பொருள் இலக்கண நூல் என்று உணர்கின்றோம். அதற்கு விளக்கமாய் அமைந்த நூலே பெரும்பொருள் விளக்க மாகக் கூடும் என்று உய்த்துணரத் தக்கதாக உள்ளது. இந்நூலில் இருந்து புறத்திரட்டில் காட்டப்பெற்றுள்ள பாடல்கள் நாற்பத் தொன்று. அத்துணையும் புறப்பொருள் பற்றியனவாகவே உள. அதனைக் கருத்திற்கொண்டு புறப்பொருள் பற்றிய நூலாக இருத்தல் வேண்டுமெனப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருதுவார்கள். ஆனால் புறத்திரட்டு நூல் அறம், பொருள் என்னும் இரண்டு பால்களுடன் நிறைவடைவதாலும், காமத்துப்பால் என்ற பகுதி புறத்திரட்டுச் சுருக்கத்திலேயே இடம் பெற்றிருத்தலாலும் பெரும் பொருள் விளக்கத்தில் அமைந்து கிடந்த அகப்பொருட் பாடல்கள் இடம் பெறாமல் போயின வாகலாம் எனக் கருது மாறுளது. ஆகத் தகவுடைய சான்று கிட்டும் வரை அகப்பொருள் புறப்பொருளாகிய இரண்டுங் கூடிய பொருளிலக்கண நூலே பெரும் பொருள் என்பது தகும். அகப்பொருள், புறப்பொருள்களில் ஒரு பொருள் பற்றிக் கூறி யிருக்குமாயின் நம்பி யகப்பொருள், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை என்பன போலப் பொருளுக்கு முன்னடை பெற்றிருக்கக் கூடும் என்பது ஒரு தலை. புறத்திரட்டிலுள்ள பெரும்பொருள் விளக்கப் பாடல் எண்கள் (41) நாற்பத்தொன்று. அவை வருமாறு: 228, 542, 1159, 1160, 1161, 1236, 1237, 1238, 1239, 1240, 1245, 1246, 1247, 1248, 1249, 1250, 1255, 1256, 1271, 1272, 1273, 1325, 1326, 1327, 1328, 1329, 1330, 1337, 1338, 1340, 1341, 1348, 1349, 1350, 1363, 1399, 1400, 1401, 1430, 1501. 28. முத்தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரமாவது மூன்று தொள்ளாயிரமாகிய ஈராயிரத் தெழுநூறு என்னும் எண்ணைக் குறித்து, அவ் எண்ணிக்கை அமைந்த பாடல்களைக் கொண்ட நூலுக்குப் பெயராயிற்றாம். சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் வெண்பாப் பாடல்களால் பாடப் பெற்ற நூல் இஃதாம். 1நெடுவெண் பாட்டே என்னும் நூற்பாவின் உரையில் பதினெண் கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற சான்றோரும் என்று பேராசிரியர் கூறியுள்ளமையால் சங்கச் சான்றோர்க்குப் பின்னர் இருந்தவர் முத்தொள்ளாயிர ஆசிரியர் என்பதும், அவர் பாடிய வெண்பாக்கள் ஆறடியின் ஏறாதவை என்பதும் புலப்படும். இந் நூற்பாவின் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர், முத்தொள்ளாயிரத்து நான் கடியே மிக வந்தவாறும் காண்க என்பது முத்தொள்ளாயிரத்தின் அடியளவை வலியுறுத்தும் மற்றொரு சான்றாம். புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேற்றாகிய 2விருந்து என்பதற்கு இம் முத்தொள்ளாயிரத்தைப் பேராசிரியர் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவதால் பழையதும் புதியதும் ஆகிய கதைமேலன்றிப் புதிதாக ஒருவர் தாம் விரும்பியவாறு படைத்துக்கொண்ட நூல்வகையைச் சார்ந்தது இஃது என்பது தெளிவாம். நாடு, நகர், பகைப்புலம் பழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானைமறம், களம், வென்றி, புகழ் முதலாய பல்வேறு தலைப்புக்களில் பாடல்கள் பாடப்பெற்று இருப்பினும் கைக்கிளைப் பாடல்களே மிகுதி என்பது, அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும் என்னும் நூற்பாவிற் பேராசிரியர் கைக்கிளைச் செய்யுள் முதத் தொள்ளாயிரத்தில் பலவாயினும் என்று குறிப்பதால் புலப்படும். மன்னிய நாண்மீன் எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தானும், மடங்கா மயிலூர்தி செங்கண் நெடியான் என்னும் பாக்களாலும் முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தவர் என்பது வெளிப்படும். நம்மாழ்வார், பெரியாழ்வார் வாக்குகளில் முத்தொள்ளாயிரச் சொற்றொடர்கள் இடம் பெற்றிருத்தலாலும், முன்றுறையரை யனார் பழமொழி யொன்றை, இது கையாண்டிருத்தலாலும், இவர்கட்கு இடைப்பட்ட காலத்ததாக - அஃதாவது ஐந்தாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்த தாக - முத்தொள்ளாயிரத்தின் காலத்தை 1ஆராய்வாளர் கருதுவர். முத்தொள்ளாயிரம் என்னும் தெள்ளு தமிழ்ப் பாடல்கள் 108 வழங்கிய பெருமை புறத்திரட்டையே சாரும். ஒரே ஒரு பாடல் இளம்பூரணர் உரையால் கொள்ளப் பெற்றது. முத்தொள்ளாயிரப் பாடல்களைத் திரட்டிச் செந்தமிழ் வாயிலாக வழங்கியவர் அறிஞர் மு. இராகவ ஐயங்காராவர். புறத்திரட்டில் அறத்துப்பால் பொருட்பால் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றுள்ள 2முத்தொள்ளாயிரப் பாடல்கள் (44) நாற்பத்து நான்கு. அவை வருமாறு: 1, 829, 830, 831, 862, 863, 864, 1278, 1279, 1280, 1281, 1282, 1285, 1286, 1287, 1288, 1331, 1381, 1389, 1390, 1391, 1392, 1393, 1394, 1395, 1396, 1397, 1398, 1431, 1432, 1433, 1434, 1457, 1458, 1465, 1466, 1467, 1468, 1469, 1470, 1471, 1472, 1473, 1474. 29. மேருமந்தர புராணம் வாமன முனிவர் என்பவரால் இயற்றப்பெற்ற ஒரு நூல் மேருமந்தர புராணம் ஆகும். புராணமாவது பழங்கதை. சமண் சமயச் சான்றோர் செய்து புராணப் பெயரால் நிலவுவனவற்றுள் முதலாவது இதுவே என்பர். இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுள் பதின்மூன்றாமவரான விமல தீர்த்தங்கரருடைய கணங்களுள் மேரு, மந்தரர் என்னும் இருவரின் வரலாறுகளை விரித்துரைப்பதாகலின் இப் பெயர் பெற்றது என்பர். வாமன முனிவர் காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக் குன்றம் என்னும் ஊரினர். வடமொழி, பாகதமொழி ஆயவற்றிலும் தேர்ந்தவர். மல்லிசேனர் என்னும் பெயரும் இவருக்குண்டு. இவ்வாமன முனிவரே நீலகேசிக்கு உரை கண்டவராவர். சிம்ம சந்திரன், பூரண சந்திரன் என்னும் உடன்பிறந்தாரிருவர், கெட்ட அமைச்சன் ஒருவன் வயப்பட்டுத் தீங்கிழைக்கப் பெற்றுப் பலபிறப்புக்கள் எடுத்துத் தவங்கிடந்து முத்தி பெற்றதும், அமைச்சன் நரகுற்றதும் ஆகிய வரலாறு இதன்கண் கூறப்பெற்றுள்ளது. இதன்கண் 12 சருக்கங்களும் 1406 பாடல்களும் உள. ஆயிரத்து நானூற்றின் மேலும் இருமூன்றாம் பாயபுகழ் மேருக்கள் மந்தரர்பால் - தூய தவராச ராசன் குறுமுனிவன் தந்த பவரோக மந்திரமாம் பாட்டு என்னும் வெண்பாவால் இந்நூற் பாடல்களின் அளவை அறியலாம். படைத்தலைவன் இருசப்பன் என்பான் தன் குருவான புட்ப சேனர் கட்டளைப்படி காஞ்சிச் சினாலயத்தில் சில திருப்பணிகள் செய்தமையைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். புட்பசேனர் என்பார் வாமனர் மாணவர். ஆகவே வாமனர், இருசப்பன் காலத்தை ஒட்டியே இருந்திருத்தல் வேண்டும். கல்வெட்டின் காலம் கி.பி. 1382 ஆதலால் வாமனர் 14ஆம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம். மேருமந்தர புராணம் வீடூர் அப்பாசாமி சாத்திரியார் இயற்றிய உரையுடன் அ. சக்கரவர்த்திநயினார் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள மேருமந்தர புராணப் பாடல் 1: 397. 30. யாப்பருங்கலம் யாப்பிலக்கணம் கற்க விழைவார் இன்று பெரிதும் பயில்வன யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையுமாம். இவ்விரண்டையும் இயற்றிய ஆசிரியர் அமிதசாகரரே ஆவர். முதற்கண் யாப்பருங்கலத்தை இயற்றி அதன் சுருக்கமாக 1யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார் என்பர். சமணர் வழிமுறையில் அருங்கலம் என்பது ஒன்று எனவும், அவ்வழிமுறையினர் தீபங் குடியில் வாழ்ந்தனர் எனவும், அவ்வழி முறையில் வந்தவர் அமித சாகரர் எனவும், தம் குடிப்பெயரை நூற்கு இட்டனர் எனவும் கல்வெட்டறிஞர் கோபிநாதராவ் கூறுவார். நூலாசிரியர் பெயர் அமுதசாகரர் என்றும் பதிப்பாசிரியர் சிலரால் குறிக்கப் பெற்றார். ஆனால் அளப்பருங் கடற் பெயர் அருந்தவத்தோனே என்னும் யாப்பருங்கலப் பாயிரச் செய்யுளால், அமிதசாகரர் என்பது உறுதியாம். (அளப்பருங் கடல் - அமித சாகரம்; அதன் பெயருடையவர் அமித சாகரர்) யாப்பருங்கல உரையே முன்னையது என்பது வெண்பாவி னோடும் ஆசிரியத்தினோடு வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா யாப்பருங்கல விருத்தியுரையுள் காமர் கடும் புனல் என்னும் பழம்பாட்டில் கண்டு கொள்க என்று காரிகையுரை குறித்துச் செல்வதால் புலப்படும். யாப்பருங்கலம், காரிகை இரண்டிற்குமே உரை செய்தவர் குணசாகரர் என்பர். இக் குணசாகரர் அமிதசாகரரின் ஆசிரியர் என்றுங் 1கூறுவர். காரிகைக்கு உரை செய்தவரே குணசாகரர். யாப்பருங்கலத்திற்கு விருத்தியுரையை எழுதியவர் பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என அவர் சிறப்பிக்கும் மயேச்சுர ருடைய மாணவரோ, அவ் பரம்பரையினரோ ஆதல் வேண்டும். என்றுங் 2கூறுவர். யாப்பருங்கல விருத்தியில் குறிக்கப் பெறும் பல்லவ மன்னன்; கலிமல்லன் என்பவன், நரசிம்ம பல்லவனாகிய மாமல்லனே என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. ஆதலால் அவன் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவரே இவ்வுரை யாசிரியர் எனலாம். சொல்லாற் சுருங்கிப் பொருள்பெருகி தொன் - ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப் பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி ஒருங்கறிய வல்லார் உணர்ந்து என்னும் வெண்பாவால் யாப்பருங்கலச் சீர்மை விளங்கும். புறத்திரட்டில் கொள்ளப்பெற்ற யாப்பருங்கல மேற்கோட் பாடல்கள் (2) இரண்டு. அவை வருமாறு: 602, 865. 31. வளையாபதி ஐம்பெருங் காவியங்களுள் நான்காவது இடம் பெறுவது வளையாபதியாம். வளைந்து கொடுக்காது நிமிர்ந்த தலைவன் ஒருவனைப் பற்றிய வரலாற்றைக் கூறும் நூல் இஃதென்பர். இந்நூல் சமண சமயஞ் சார்ந்தது என்பதை இதன் கடவுள் வாழ்த்துப் பாக்களால் எளிதில் உணரலாம். வளையாபதிச் செய்யுள் ஆற்றொழுக்கான ஓட்டமும் அழகும் அமைந்தது; சந்த வின்பம் மல்கியது. கிடைத்துள்ள பாடல்களால் இதனை நாம் அறிவதுடன், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பெற்ற தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இவர் (ஒட்டக்கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி (425) என்று குறிப்பிடுவதாலும் நன்கு அறியலாம். சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், யாப்பருங்கல விருத்தி யுரை யாசிரியர், பரிமேலழகர் ஆகிய பண்டை யுரையாசிரியர் பலரால் எடுத்தாளப்பட்ட அருமை வாய்ந்தது வளையாபதி. புறத்திரட்டைத் தொகுத்த ஆசிரியர் காலம்வரை தமிழகத்தில் இந்நூல் உலாவந்த நீர்மையால் அதிலிருந்து 66 செய்யுட்களை எடுத்துச் செறித்து வைத்து அழகுசெய்ய அவரால் இயன்றது. மற்றை உரையாசிரியர்கள் வழியாகப் பெற்ற செய்யுட்கள் ஆறேயாம். ஆக இந்நாளில் வளையாபதிச் செய்யுட்களாக நாம் அறியக் கிடப்பன 72; கிடைக்கும் அளவிலேனும் போற்றிக் காத்தல் வேண்டும். என்னுங் கருத்தால் செந்தமிழ் இதழில் மூலத்தை மட்டும் வெளி யிட்டுள்ளார் மு. இராகவ ஐயங்கார். வளையாபதி, குண்டலகேசி என்னும் இரண்டு காவியங்களையும் இணைத்துப் பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரைக் கொண்டு விளக்கவுரை எழுதுவித்து அரிய பதிப்பாகக் கழகம் வெளியிட்டுள்ளது. புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள வளையாபதிச் செய்யுட்கள் (66) அறுபத்தாறு. அவை வருமாறு. 25, 26, 78, 88, 89, 90, 91, 98, 130, 155, 156, 198, 199, 215, 256, 257, 264, 265, 266, 277, 278, 293, 294, 295, 296, 297, 309, 312, 313, 337, 351, 352, 353, 354, 355, 367, 396, 422, 423, 424, 438, 473, 837, 897, 925, 980, 981, 996, 1044, 1045, 1046, 1047, 1048, 1049, 1050, 1051, 1052, 1053, 1054, 1055, 1056, 1134, 1170, 1171, 1172, 1173. மூலநூல் எதுவெனப் பெயர் விளங்காத பாடல்கள் இப் புறத்திரட்டுத் தொகுப்பினுள் இடம் பெற்றள்ள பாடல்களில் (13) பதின்மூன்று பாடல்கள் எந்நூலைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. அவை வருமாறு: 838, 1355, 1356, 1357, 1358, 1387, 1408, 1409, 1410, 1439, 1455, 1475, 1495. புறத்திரட்டுப் பதிப்புக்குப் பயன்படுத்தப்பெற்ற ஒப்பு நூல்கள் அறநெறிச்சாரம் - ஆ. பொன்னுசாமிப்பிள்ளை உரையுடன் (கழகப் பதிப்பு) ஆசாரக்கோவை - பு.சி. புன்னைவன நாத முதலியார் உரையுடன். (கழகப்பதிப்பு) ஆசிரியமாலை - மு. இராகவ அய்யங்கார் (பெருந்தொகை; செந்தமிழ் - 5) - மயிலை சீனி வேங்கடசாமி (மறைந்து போன தமிழ் நூல்கள்) இராமாயணம் - அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு. - வை.மு.கோ. பதிப்பு - டாக்டர் சாமிநாதையர் நூலகப் பதிப்பு. இன்னா நாற்பது - நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருரை யுடன். (கழகப் பதிப்பு) இனியவை நாற்பது - வா. மகாதேவ முதலியாருரையுடன் (கழகப் பதிப்பு) ஏலாதி - இளவழகனார் உரையுடன். (கழகப்பதிப்பு) களவழி நாற்பது - நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருரை யுடன். (கழகப்பதிப்பு) குண்டலகேசி - பெருமழைப் புலவர் உரையுடன். (கழகப்பதிப்பு) - பெருந்தொகை. - மறைந்துபோன தமிழ் நூல்கள் சாந்தி புராணம் - மறைந்துபோன தமிழ் நூல்கள் சிறுபஞ்சமூலம் - பு.சி. புன்னைவன நாத முதலியார் உரையுடன். (கழகப்பதிப்பு) சீவகசிந்தாமணி - டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. - புலவர் அரசு, பெருமழைப் புலவர் உரை. (கழகப் பதிப்பு) சூளாமணி - மேற்படி இருபதிப்புக்களும் தகடூர் யாத்திரை - பெருந்தொகை. - நச்சினார்க்கினியருரை - மறைந்துபோன தமிழ் நூல்கள் திரிகடுகம் - பு.சி. புன்னைவன நாத முதலியார் உரையுடன். (கழகப் பதிப்பு) நளவெண்பா - மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு. - செ. இராமசாமிப்பிள்ளை உரை (கழகப்பதிப்பு) நாலடியார் - இளவழகனாருரை. (கழகப் பதிப்பு) - சரசுவதி மகால் பதிப்பு. (உரைவளம்) நான்மணிக்கடிகை - இளவழகனார் உரையுடன். (கழகப்பதிப்பு) பதிற்றுப்பத்து - டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. - கழகப்பதிப்பு பரிபாடல் - மேற்படி இருபதிப்புக்களும். பழமொழி நானூறு - ம. இராசமாணிக்கம் பிள்ளை உரையுடன். (கழகப் பதிப்பு) பாரதம் - சரசுவதி மகால் வெளியீடு. புறநானூறு - டாக்டர் உ.வே.சா. பதிப்பு. - கழகப்பதிப்பு. புறப்பொருள் - மேற்படி இருபதிப்புக்களும் வெண்பாமாலை பெரும்பொருள் - நச்சினார்க்கினியருரை (தொல்காப்பியம்). விளக்கம் (கழகப் பதிப்பு) முத்தொள்ளாயிரம் - மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு. - கழகப் பதிப்பு. யாப்பருங்கலம் - கையெழுத்துச் சுவடி நூல்நிலைய வெளியீடு. வளையாபதி - பெருமழைப் புலவருரையுடன். (கழகப் பதிப்பு) - பெருந்தொகை; செந்தமிழ்.) உ புறத்திரட்டு கடவுள் வாழ்த்து தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே. வேகமாநெறி சேரும் வினைகளும் தாக போகம் விடாத தளர்ச்சியும் சோக வாரியி னால்வருந் துன்பமும் போக யானை முகத்தனைப் போற்றுவாம். 1. அறத்துப்பால் 1. கடவுள் வாழ்த்து (தான் வழிபடுங் கடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல் - பரிமேலழகர். இதே பெயருடைய அதிகாரங்கள்: திருக்குறள் - 1. பன்னூல் பாடற்றிரட்டு - 1. பெருந்தொகை - 1.) ஆதிரை யானால் அமைந்த துலகே 1. மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையா னாதிரையா 1னென்றே யறையுமால் ஊர்திரைநீர் 2வேலி யுலகு. - முத்தொள்ளாயிரம் 1 தாமரைக் கண்ணன் தகையடி வாழ்க 2. மதிமன்னு மாயவன் வாண்முக மொக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கர மொக்கும் முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளி னெதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப் புதுமல 3ரொக்கும் நிறம். - நான்மணிக்கடிகை 1 பூவை வண்ணன் புகழடி வாழ்க 3. கண்ணகன் ஞால மளந்ததூஉங் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம் - நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி. - திரிகடுகம் 1 இறைவன் திருவடி ஏத்துதல் இனிதே 4. கண்மூன் றுடையான்றாள் சேர்தல் கடிதினிதே தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்த லினிது. - இனியவை நாற்பது 1 செங்கதிர்ச் செவ்வேள் சீரடி போற்றி 5. நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக் காலை யிருள்சீக்குங் காய்கதிர்போற் - 1கோல மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன் அணிச்சே வடியெம் மரண். - இரும்பல்காஞ்சி 1 மூவா முதலின் சேவடி போற்றி 6. மூவா முதலாவுலகம்பெமாருமூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே - சீவகசிந்தாமணி 1 பிறர்நலம் பேணும் பெரியோன் வாழ்க 7. முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறு நன்றே நினைந்தான் குணமேமொழிந் தான்ற னக்கென் றொன்றானு 1முள்ளான் பிறர்க்கேயுறு திக்கு 2ழந்தா னன்றே யிறைவ னவன்றாள்சர ணாங்க ளன்றே. -குண்டலகேசி 1 2. அவையடக்கம் தாழ்சடைப் பொலியுந் தவத்தோன் வாழ்க 8. கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியு மவ்வே றென்ப கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை 3மறைநவி லந்தணர் நுவலவும் படுமே பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத் தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும் பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை பதினெண் 4கணனு மேத்தவும் படுமே எல்லா வுயிர்க்கு மேம மாகிய நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. -புறநானூறு 1 உமையவள் அருளால் உலகம் உய்க 9. மூவிலை நெடுவே லாதி வானவன் இடமருங் கொளிக்கு மிமயக் கிழவி தனிக்கண் விளங்கு நுதற்பிறை மேலோர் மிகைப்பிறை கதுப்பிற் சூடி வளைக்கையின் வாள்பிடித் தாளி யேறித் தானவன் மாளக் கடும்போர் கடந்த குமரி மூவா மெல்லடித் திருநிழல் வாழி காக்கவிம் மலர்தலை யுலகே. -ஆசிரியமாலை 2. அவையடக்கம் (xUt® தாம் செய்த நூலிலே குற்றம் ஏற்றாதபடி கற்றோரை வழிபட்டு அடக்குதல். வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந்தன்று என்பது தொல்காப்பியம். (பொருள். செய். 112) வியத்தக கண்டால் வியப்பவர் அறிஞர் 10. வியத்தக்க காணுங்கால் வெண்மையிற் றீர்ந்தார் வியத்தக்க தாக 1வியப்ப - வியத்தக்க அல்ல வெனினும் அறியாதார் தாம்போல எல்லாம் வியப்ப ரினிது. - தகடூர் யாத்திரை உவர்க்கடல் எண்ணி ஒதுக்கார் முத்தை 11. முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்கு முத்தும் அந்நீ ருவர்க்கு மெனின்யாரவை 2நீக்கு கிற்பார் இந்நீர வென்சொற் பழுதாயினுங் கொள்ப வன்றே பொய்ந்நீர வல்லாப் பொருளால்விண் புகுது மென்பார் வழுக்களைக் களைவர் வளப்பே ரறிஞர் 12. கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாதுவிட்டால் நற்பா லழியுந் நகைவெண்மதி போனி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யாற்க ழூஉவிப் பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார். -சீவகசிந்தாமணி 5,4 பொருட்பே றறிவார் சொற்குறை நோக்கார் 13. நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்ககில்லார் தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார் போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே. - குண்டலகேசி 2 சிறியோர் செய்பிழை பெரியோர் உரையார் 14. அறையு மாடரங் 1கும்மடப் பிள்ளைகள் தறையிற் 2கீறிடிற் றச்சருங் காய்வரோ 3பொறையிற் கேள்வியில் லாதவென் புன்கவி முறையி னூலுணர்ந் 4தோரு முனிவரோ. - இராமாயணம் - தற்சிறப்பு 9 3. நீத்தார் பெருமை (முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல் - பரிமேலழகர். இ.பெ.அ: திருக். 3. ப.பா.தி.3) ஆன்றோர் அருளால் ஆருயிர் வாழும் 15. மனத்தினும் வாயினு மெய்யினுஞ் செய்கை யனைத்தினு மான்றவிந்தா ராகி - 5நினைத்திருந் தொன்றும் பரியலரா யோம்புவா ரில்லெனிற் சென்று படுமா முயிர். -பழமொழி 262 அந்தணர் ஆவோர் ஆண்டவன் அனையர் 16. கரிய மாலினுங் கண்ணுத லானினும் உரிய தாமரை மேலுறை வானினும் விரியும் பூதமோ ரைந்தினு மெய்யினும் பெரிய ரந்தணர் 2பேணுதி யுள்ளத்தால். வானவர் வாழ்வும் அந்தணர் வழித்தே 17. அந்த ணாளர் முனியவு மாங்கவர் சிந்தை யாலருள் செய்யவுந் 2தேவருள் நொந்து ளாரையு 3நோவகன் றாரையும் மைந்த வெண்ண வரம்புமுண் டாகுமோ. விதிக்கும் விதியாம் விறலினர் அந்தணர் 18. ஆவ தற்கு மரிவதற் கும்மவர் 4மேவ நிற்கும் விதியுமென் றாலினி யாவ தெப்பொரு ளிம்மையு 5மும்மையுந் தேவ ரைப்பர வுந்துணை சீர்த்ததே. -இராம. அயோ. 106, 107, 109 நீத்தார்க் கென்றும் தீத்திறம் தவிர்க 19. கிழிந்த சிதாஅ ருடுத்து 6மிழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன் னசிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர் தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடி னருமறையர் நீடின் உருவந் தமக்குத்தா மாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே. -தகடூர் யாத்திரை 4. பெறுதற்கருமை (பிறப்புக்களிலெல்லாம் பெறுதற்கு அரியது மக்கட் பிறப்பே என அதன் அருமை கூறிச் செய்தற்கு அரிய செய்ய ஏவுதல். எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செயல். திருக். 489.) அறிவறி மானிடர் அறத்தின் வழுவார் 20. மக்க ளுடம்பு பெறற்கரிது பெற்றபின் மக்க 1ளறியு மறிவரிது - மக்கள் அறிவறிந்தா ரென்பா ரறத்தின் 2வழுவார் நெறிதலை நின்றொழுகு வார். - அறநெறிச்சாரம். 69 மக்களாய்ப் பிறக்கும் மாண்புறல் அரிது 21. பரவை வெண்டிரை வடகடற் படுநுகத் துளையுள் திரைபசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி அரச வத்துளை யகவயிற் செறிந்தென வரிதாற் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே. வளங்கெழு நாடோவாய்ப்பதும் அரிது 22. விண்டு வேய்நர 3லூன்விளை கானவ 4ரிடமுங் கொண்டு கூர்ம்பனி குலைத்திடு நிலைக்களக் குறும்பும் உண்டு நீரென வுரையினு மரியன வொருவி மண்டு தீம்புனல் வளங்கெழு நாடெய்த லரிதே. நற்குடிப் பிறக்கும் பொற்புறல் அரிது 23. வில்லின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம் படுத்த பல்லி னார்களும் படுகடற் பரதவர் முதலா எல்லை நீங்கிய விழிதொழி லிழிகுல மொருவி நல்ல தொல்குலம் பெறுதலு நரபதி யரிதே. உருவின் மிகுவுடல் உறுதலும் அரிது 24. கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாள் அருவி போற்றொடர்ந் தறாதன வரும்பிணி யழலுட் கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் 1பிழையா உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலு மரிதே. -சீவகசிந்தாமணி 2749, 2750, 2751, 2752 வேண்டிய வளமெலாம் ஈண்டலும் அரிது 25. வினைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ 2நல்லு யிர்க்கு மனிதரி னரிய தாகுந் தோன்றுதல் தோன்றினாலும் இனியவை நுகர வெய்துஞ் செல்வமு மன்ன தேயாம். அரியவை உறுதல் அரிதினும் அரிது 26. உயர்குடி 3நனியுட் டோன்ற லூனமில் யாக்கை யாதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல் பெரிதுண ரறிவே யாதல் பேரறங் 4கோட லென்றாங் கரிதியை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பார். - வளையாபதி 5, 9 மக்கள் என்பவர் தக்கவை அறிவோர் 27. தக்க வின்ன தகாதன வின்னவென் றொக்க வுன்னல ராகி யுயர்ந்துள மக்க ளும்விலங் கேமனு வின்னெறி புக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே. -இராமா. கிட். 357 5. அறன் வலியுறுத்தல் (அறத்தின் ஆற்றலை அறிவுறுத்தல்; அறத்தை வற்புறுத்திக் கூறுதல் எனினும் அமையும். முன்னதற்கு அறன், வலி, உறுத்தல் எனவும், பின்னதற்கு அறன் வலியுறுத்தல் எனவும் முறையே மும்மொழித் தொடராகவும் இருமொழித் தொடராகவும் கொள்க. நாகை, சொ. தாண்ட. இ.பெ.அ; திருக். 4. நாலடியார். 4. நீதிக்களஞ்சியம். 36. இதன் சார்புடைய அதிகாரங்கள்; பழமொழி. 32 (அறஞ்செய்தல்) ப.பா.தி. 5 (அறச்சிறப்பு) பெருந். 2. (mwÉaš)) இம்மையும் மறுமையும் இயைப்பது அறமே 28. ஈனுலகத் தாயி னிசைபெறூஉம் அஃதிறந் தேனுலகத் தாயி னினிததூஉந் - தானொருவன் நாள்வாயு நல்லறஞ் செய்வாற் கிரண்டுலகும் வேள்வாய் கவட்டை நெறி. சின்னா ளேனும் சீரறம் செய்க 29. பலநாளு மாற்றா ரெனினு மறத்தைச் சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - 1கலைதாங்கி நைவது போலு நுசுப்பினாய் நல்லறஞ் செய்வது செய்யாது கேள். முன்னை நல்வினை பின்னைச் செல்வம் 30. முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார் பிற்பெரிய செல்வம் 2பெறுபவோ - வைப்போ டிகலிப் பொருள்செய்ய வெண்ணியக்கா லென்னாம் முதலிலார்க் கூதிய மில். தக்கவை ஆய்ந்து தகவே செய்க 31. தக்கமில் செய்கைப் பொருள்பெற்றா லப்பொருள் தொக்க வகையு முதலும் அதுவானால் மிக்க வகையா லறஞ்செய் 3கெனவெகுடல் அக்காரம் பால்செருக்கு மாறு. ஒன்றிய வகையால் உயரறம் செய்க 32. இன்றி யமையா விருமுது 4மக்களும் பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ ஒன்றும் வகையா லறஞ்செய்க வூர்ந்துருளிற் குன்று 5வழியடுப்ப தில். -பழமொழி 360, 367, 332, 362, 369 அரும்பெறல் யாக்கையால் பெரும்பயன் புரிக 33. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் பெரும்பயனு மாற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு. உடற்பயன் கொண்டார் உலையார் கூற்றுக்கு 34. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார் வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ திலர். உடற்பய னோடே உயிர்ப்பயன் புரிக 35. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே யொப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். சேர்ந்து வருவது செய்வினை ஒன்றே 36. தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற் றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை - 1யீங்குத்தாம் போற்றிப் புனைந்த வுடம்பும் 2பயமின்றே கூற்றங்கொண் டோடும் பொழுது -நாலடியார் 34, 35, 37, 120 ஒல்லும் வகையெலாம் உயரறம் செய்க 37. நீரறம் நன்று நிழனன்று 3தன்னிலுட் பாரறம் நன்றுபாத் துண்பானேற் - பேரறம் நன்று தளிசாலை 4நாட்டற் பெரும்போகம் ஒன்றுமாஞ் சால வுடன். -சிறுபஞ்சமூலம் 63 வாழ்வும் வறுமையும் வருவழி ஆய்க 38. உலகெலாங் காக்கு மொருவ னொருவன் உலகெலாங் காலா 1லுழன்றும் - 2விலையுண்டங் காராது நல்கூரு மென்றா லறம்பாவம் பாராத தென்னோவிப் பார். -பாரதவெண்பா நல்லறங் கேட்டலால் மல்கிடும் பயன்கள் 39. காட்சி யொழுக்கொடு3 கல்வி தலைநின்று மாட்சி மனைவாழ்த லன்றியு - மீட்சியில் வீட்டுலக மெய்த லெனவிரண்டே நல்லறங் கேட்டதனா லாய பயன். - அறநெறிச்சாரம் 11 மேற்கதிக் குய்ப்பவன் மேதகு மைந்தன் 40. நற்றானஞ் சீல நடுங்காத் தவமறிவர் சிறப்பிந் நான்கும் மற்றாங்குச் சொன்ன மனைவியரிந் நால்வரவர் வயிற்றுட் டோன்றி யுற்றானொரு மகனேமேற் கதிக்குக் கொண்டுபோ முரவோன் றன்னைப் பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார் பிறர்மக்கள் பிறரே கண்டீர். கூற்றுவன் வருமுனர் ஆற்றுணாக் கொள்க 41. வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல ஆற்றுணாக் கொள்ளா தடிபுறத்து வைப்பீரே யல்லீர் போலுங் கூற்றங்கொண் டோடத் தனியே கொடுநெறிக்கட் செல்லும் 1போழ்தி னாற்றுணாக் கொள்ளீ ரழகலா லறிவொன்று மிலிரே போலும். விடுதலைப் பேறே வீவிலா இன்பம் 42. புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலால் உள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரறம் உள்குமேல் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய் வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே. வையக வாழ்வு வன்றுயர்க் கிருப்பாம் 43. பாற்றுளி பவளநீர் 2பெருகி யூன்றிரண் டூற்றுநீர்க் குறும்புழை யுய்ந்து போந்தபின் சேற்றுநீர்க் குழியுளே யழுந்திச் செல்கதிக் காற்றுணாப் பெறாதழு தலறி வீழுமே. பிறப்போ டிறப்பைப் பிறைவழி அறிக 44. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால் வாய்புகப் பெய்யினும் வழுக்கி நல்லறங் காய்வது கலதிமைப் பால தாகுமே. அல்லற் படினும் அறத்தினை மறவேல் 45. திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம் பொருந்திய பொருளொடு போகம் பூத்தலான் வருந்தினும் 3அறத்திற மறத்த லோம்புமின் கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணீர். ஆசை நீக்கமே அரிய துறவு 46. பிறந்தவர்க ளெல்லா மவாப்பெரிய ராகித் துறந்துபுகழ் வேண்டாரோர் துற்றவிழு மீயார் அறங்கரிது செய்யதென யாதுமறி யாரேல் வெறும்பொருள தம்மா விடுத்திடுமி னென்றாள். யார்யார் கூறினும் நீருணர்ந் தறிக 47. புள்ளுவர் 1கையினு முய்யும் புள்ளுள கள்ளவிழ் கோதையீர் காண்மி னல்வினை ஒள்ளியா னொருமக னுரைத்த 2தென்னன்மின் தெள்ளியீ ரறத்திறந் தெரிந்து 3கொண்மினே. - சீவகசிந்தாமணி 1545, 1550, 2933, 2934, 2932, 2935, 2622, 2931. செய்வினை மருங்கில் எய்திடும் பயனே 48. செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே யைய மறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் 4வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோரே செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற் 5றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் 6கூடுந் 7தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினு மிமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே. -புறநானூறு 214 துறைதொறும் துறைதொறும் அறமே நிறுவுக 49. எளிதென விகழா தரிதென 8வுரையாது நுமக்குநீர் நல்குதி ராயின் மனத்திடை நினைப்பினும் பிறக்கும் மொழியினும் வளருந் தொழிற்படிற் சினைவிடூஉப் பயக்கு முணர்த்தின் இவணு மும்பருந் துணையே யதனால் துறைதொறுந் துறைதொறு நோக்கி அறமே நிறுத்துமி னறிந்திசி னோரே. -ஆசிரியமாலை 6. இல்வாழ்க்கை (இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழுந்திறன் -மணக்குடவர். இல்வாழ்க்கையாவது இல்லறவாழ்க்கை நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 5. பழமொழி. 30. நீதிக். 37. இ.சா.அ: ப.பா.தி. 8. (இல்லறம்) இல்லறம் இல்வழி எல்லாம் இல்லை 50. மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையுந் தவமிலா ரில்வழி யில்லை தவமும் 1அரச னிலாவழி யில்லை யரசனும் இல்வாழ்வா னில்வழி யில். -நான்மணிக்கடிகை 47 செழுங்கிளை பேணல் செல்வர் கடனே 51. செல்வத்தைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்ப் பல்கிளையும் வாடாமற் பாத்துண்டு நல்லவாம் தான மறவாத தன்மையரேல் அஃதென்பார் 2வானகத்து வைப்பதோர் வைப்பு. இல்வாழ்வுச் சகடம் இருவரால் இயலும் 52. மருவிய காதல் மனையாளுந் தானும் இருவரும் பூண்டுய்ப்பி னல்லால் - ஒருவரால் இல்வாழ்க்கை யென்னு மியல்புடைய வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று. - அறநெறிச்சாரம் 179, 89 துய்த்தலும் வழங்கலும் எய்ப்பினில் வைப்பாம் 53. வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத் துய்த்து வழங்கி யிருபாலும் - அத்தகத் தக்குழி நோக்கி 1யறஞ்செய்க அஃதன்றோ எய்ப்பினில் வைப்பென் பது. பெருந்தகை பெறுபொருள் பெறற்கரும் பேறாம் 54. மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியற் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு மென்றிருந்து 2பாகு செயல். -பழமொழி 358, 359 வையகம் வாழ்த்த வாழ்தலே வாழ்வு 55. தான்பிறந்த இன்னினைந்து தன்னைக் கடைப்பிடித்துத் தான்பிற ராற்கருதற் பாடுணர்ந்து - தான்பிறராற் 3சாவ வெனவாழான் சான்றோராற் 4பல்யாண்டும் வாழ்க வெனவாழ்த னன்று. வேறுநோய் வேண்டா வெங்கொடு நோயிவை 56. அரம்போற் கிளையடங்காப் 5பெண்ணவியாத் தொண்டு மரம்போல் மகன்மாறாய் நின்று - கரம்போலக் கள்ளநோய் காணும் அயலைந்து மாகுமேல் உள்ளநோய் வேண்டா வுயிர்க்கு. விண்ணவர் விரும்பும் விழுத்தகை யாளன் 57. கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சான் இழிந்தவை யின்புறான் இல்லார் - மொழிந்தவை மென்மொழியா லுண்ணெகிழ்ந் தீவானேல் விண்ணோரால் இன்மொழியா லேத்தப் படும். முற்ற வாழ்ந்திடு முழுமகிழ் வாளர் 58. புண்பட்டார் போற்றுவா ரில்லாதார் 1போகுயிர்கள் கண்கெட்டார் காலிரண்டு மில்லாதார் - கண்கட்பட் டாழ்ந்து நெகிழ்ந்தவர்க் கீந்தார் கடைபோக வாழ்ந்து கழிவார் மகிழ்ந்து. மன்னிய செல்வராய்த் துன்னிடும் மாண்பினர் 59. சிறைக்கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பலநாள் உறைக்கிடந்தா ரொன்றிடையிட்டுண்பார் - பிறைக்கிடந்து முற்றனைத்து 2முண்ணாத் தவர்க்கீந்தார் 3மன்னராய்க் கற்றனைத்தும் வாழ்வார் கலந்து. -சிறுபஞ்சமூலம் 68, 62, 82, 78, 71 மேலோர்க் கூண்தரல் சாலவும் நலமாம் 60. துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றா திறந்தாரீ டற்றா 4ரிளையார் - சிறந்தவர்க்குப் பண்ணாளுஞ் சொல்லாய் பழிப்பிலூண் பாற்படுத்தான் மண்ணாளு மன்னனா மற்று. ஊண்தரு மாண்பால் ஓங்குவ தில்லறம் 61. நடப்பார்க்கூ ணல்ல பொறைதாங்கி 5னார்க்கூண் கிடப்பார்க்கூண் கேளிர்க்கூண் கேடின் - 6றுடற்சார்ந்த வானகத்தார்க் கூணே மறுதலையார்க் கூணமைத்தான் 7தானகத்தால் வாழ்வான் றக. - ஏலாதி 35, 71 துன்புற வாழாத் தூநெறி யாளர் 62. அறிவ தறிந்தடங்கி யஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழு 1மியல்புடையா ரெஞ்ஞான்றுந் துன்புற்று வாழ்த லரிது. முட்டிலா வுரவோன் மட்டிலாச் செல்வன் 63. கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமே லஃதென்ப பட்டினம் பெற்ற கலம். -நாலடியார் 74, 250 உரனுடை யாரை உருத்தும் நோய்கள் 64. விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. தீராத் தீமையைத் தேடித் தருபவை 65. 2நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலுஞ் - சீர்பயவாத் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. -திரிகடுகம் 44, 63 பிறர்துயர் களைதலே பேருடற் பயனாம் 66. கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லார் அற்றவ ரந்த ணாள ரன்றியு 3மனைய நீரார்க் குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயிற் பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறும்பய னில்லை மன்னோ. -சூளாமணி 774 ஆன்ற சான்றோர்க் கணுகாது முதுமை 67. யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவு திராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே. -புறநானூறு 191 7. கற்புடை மகளிர் (கற்பாவது மன உறுதியே -திருக். 54. நாகை. சொ. தண்ட. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை அஃதுடைய மகளிர், கற்புடை மகளிராம். இ.பெ.அ: நாலடி. 39. இ.சா.அ: ப.பா.தி.11. (கற்பு)) வற்றா வளமை நற்றிற மனையாள் 68. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத் திடரின்றி யேமார்ந் திருந்தாரே 1யென்றுங் கடலுட் டுலாம்பண்ணி னார். -பழமொழி 330 பேணுந்தகைமை பெற்றவள் பெண்ணே 69. கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையா 2ளூர்நா ணியல்பினாள் - உட்கி இடனறிந் தூடி யினிதி னுணரு மடமொழி மாதராள் பெண். கற்புடை இல்லாள் கனிந்ததே இல்லம் 70. நாலாறு மாறாய் நனிசிறிதா யெப்புறனு மேலாறு மேலுறை சோரினு - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பின் இல்லா 1ளமைந்ததே யில். மாண்பிலாள் வீடு வீண்புதர்க் காடு 71. மழைதிளைக்கு மாடமாய் 2மாண்பமைந்த காப்பாய் இழைவிளக்கு நின்றிமைப்பி னென்னாம் - விழைதக்க மாண்ட மனையாளை யில்லாதா னில்லகங் காண்டற் கரியதோர் காடு. -நாலடியார் 384, 383, 361. ஈயாச் செல்வம் பூவாப் புகழே 72. கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி ஒல்லும் வகையால் விருந்தோம்பிச் - செல்லுந்தம் இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப் புற்செல்வம் பூவாப் புகழ். நாணே நற்றுணை நங்கையர் தமக்கு 73. கொய்தார மார்பிற் கொழுநன் தணந்தபின் பெய்வளை யாட்குப் பிறிதில்லை - வெய்ய வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணை நாண். -பு.வெ. 279, 278 கற்புடை மனைவியே நட்பொடு நற்றாய் 74. நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றுங் கற்புடையாள் பூண்ட கடன். -திரிகடுகம் 64 ஆண்மகன் போற்றும் அரும்பெறல் இல்லாள் 75. வழிபா டுடையளாய் வாழ்க்கை நடாஅய் 1முளியாது சொல்லிற்றுச் செய்தாங் கெதிருரையா தேத்திப் பணியுமே லில்லாளை யாண்மகனும் போற்றிப் புனையும் புரிந்து. -அறநெறிச்சாரம் 161 தலைவனைக் காக்கும் தகைமையள் இல்லாள் 76. மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை ஒக்க வுடனுறைத லூணமைவு - தொக்க அலவலை 2யல்லாதாட் கைந்திவை கண்டீர் தலைமகனைத் தாழ்க்கு மருந்து. - சிறுபஞ்சமூலம் 52 குறிப்பறிந் தொழுகுதல் கொண்டவள் கடனே 77. எப்பணியா லின்புறுவர் காதலரக் காதலரை அப்பணியா லப்பொழுதே 3யன்புறுத்தி - ஒப்ப மனங்குழையும் வண்ண மகிழ்விப்ப தன்றே கனங்குழையார் தங்கள் கடன். -பாரதம் பலர்புகழ் பெருமை பத்தினிக் குரித்தே 78. நாடு மூரும் நனிபுகழ்ந் தேத்தலும் 4பீடு றுபமழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லது கூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே. -வளையாபதி 7 தலைவனே உயிராய்த் தரிப்பவர் பெண்டிர் 79. சாமெனிற் சாதனோதல் தன்னவன் தணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் 1பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார். -சீவகசிந்தாமணி 1593 8. கற்பில் மகளிர் முற்கூறப் பெற்ற கற்புடை மகளிர்க்கு எதிரிடையானவர். இ.சா.அ: திருக். 92 (வரைவின் மகளிர்) நாலடி. 38. (பொது மகளிர்) ப.பா.தி. 60. (வரைவின் மகளிர்) சிறைகாப் பெவையும் நிறைகாப் பாகா 80. நிறையான் 2மிகுகலா 3நேரிழை யாரைச் சிறையா லகப்படுத்த லாகா - அறையோ வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் திருந்துத லென்றுமோ வில். -பழமொழி 336 செந்திரு வெனினும் செருக்குதல் ஒழிக 81. 4பேணடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை நாணொடுக்கமென்றைந்து 5நண்ணின்றாப் - பூணொடுக்கும் 6பொன்வரைக் கோங்கழலைப் பூந்திருவே யாயினுந் தன்வரைத் தாழ்த்த லரிது. -சிறுபஞ்சமூலம் 45 குணமிலாப் பெண்டிர் கொல்லும் படையாம் 82. எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை அட்டில் புகாதா ளரும்பிணி - அட்டதனை உண்டி 1யுதவாதா ளில்வாழ்பே யிம்மூன்றுங் கொண்டானைக் கொல்லும் படை. காவலை மீறுவாள் ஆவலோ அடங்கா 83. வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ 2ராயின் - இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதேயச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது. -நாலடியார் 363, 362. பேணா தெதிர்ப்போள் நாணாப் பேயே 84. உற்ற நலத்தா 3னொழுகாது நாணாளும் பெற்றவ னேவியசொற் பேணாது - மற்றவன்முன் திண்ணுருவங் கொண்டு சிலைக்கு மவளன்றே பெண்ணுருவங் கொண்டதோர் பேய். -பாரதம் கடைப்பிடி கருதார் கயமையில் வீழ்ந்தார் 85. தலைமகனிற் றீர்ந்துறைதல் தான்பிறரிற் 4சேறல் நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலனணிந்து வேற்றூர்ப் புகுதல் விழாக்காண்டல் 5நோன்பெடுத்தல் கோற்றொடியாள் கோளழியு மாறு. கற்பிலா மகளிர் கணவர்க்குக் கூற்றுவர் 86. அயலூ 6ரவன்செல்ல அம்மஞ்ச ளாடிக் கயலேர்கண் ணாரவெழுதிப் - 7புயலைம்பால் வண்டோச்சி நின்றுலாம் 8வாளார் தடங்கண்ணாள் 9தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று. -அறநெறிச்சாரம் 162, 163 உறுதிப்பாடிலார் தகுதிப்பா டுரையார் 87. பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்க உண்ணிறை யுடைய வல்ல வொராயிர மனத்த வாகும் எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளு மாங்கே வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போல் மெலிந்துபின் னிற்கு மன்றே -சீவகசிந்தாமணி 1597 அசைந்திடும் உள்ளம் இசைந்திடும் பன்னெறி 88. பள்ள முதுநீர்ப பழகினு மீனினம் வெள்ளம் புதியது காணின் 1விருப்புறூஉம் கள்ளவிழ் கோதையர் காமனொ டாயினும் உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ. -வளையாபதி 1 தாவும் உளத்தரை யாவரே காப்பார் 89. உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே. அலைந்திடு முளத்தை யளப்பவர் எவரே 90. எத்துணை யாற்று ளிடுமணல் நீர்த்துளி புற்பனி யுக்க மரத்திலை நுண்மயிர் அத்துணை யும்பிற ரஞ்சொலி னார்மனம் புக்கன மென்று பொதியறைப் பட்டார். ஓடும் உள்ளம் தாமரை இலைநீர் 91. தளிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேல் வளிப்பெறு மாத்திரை நின்றற் றொருவன் அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால் துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார். -வளையாபதி 9, 10, 11 9. புதல்வரைப் பெறுதல் (மங்கலமாகத் திகழும் மனையறம் சிறத்தற்கு நன்கலமாகத் திகழும் மக்களைப் பெறுதல். மக்கட்பேறு என்பதும் இது. இ.பெ.அ: திருக். 7 (பரிமே.) மணக். (மக்கட்பேறு) ப.பா.தி. 12. நீதிக். 39.) தந்தை தளர்ந்திடின் மைந்தன் போக்குக 92. சிதலை தினப்பட்ட வால மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக் குதலைமை தந்தைக்கட் டோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். -நாலடியார் 197 நன்மகப் பேறே பன்னரு மின்பம் 93. கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப் பெருங்கட் புதல்வன் பிறப்பப் - பெரும்பெயர் 1விண்ணோர் மகிழ்ந்தார் வியலிடத்தா ரேத்தினார் எண்ணா ரவிந்தா ரிகல். -புறப்பொருள் வெண்பாமாலை 211 தக்க மைந்தனேல் தந்தையும் வணங்குவான் 94. எந்நெறி யாலு மிறைவன்றன் மக்களைச் செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி மான்சேர்ந்த நோக்கினா யாங்க வணங்காகுந் தான்செய்த பாவை தனக்கு. -பழமொழி 331 புதல்வரைப் பெற்றதே பொலிந்திடு மில்லம் 95. தொக்கிள மலர்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை 2நகாத பொய்கையும் மிக்கிளம் 3பிறைவிரி விலாத வந்தியும் மக்களை 4யிலாததோர் மனையு மொக்குமே. மகவிலாச் செல்வம் மாண்புறல் அரிது 96. சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால் வாழுநீர் மக்களைப் பெறுதல் மாதரார்க் 1காழிசூழ் வையகத் தரிய தாவதே. -சூளாமணி 413, 415 சொன்மறா மகவால் துன்பெலாந் தொலையும் 97. மன்ன ரானவ 2ரல்லர்மேல் வானவர்க் கரசாம் பொன்னின் வார்கழற் புரந்தரன் 3போலிய ரல்லர் 4பின்னை மாதவந் தொடங்கிநோய் பிழைத்தவ ரல்லாற் சொன்ம 5றாமகப் பெற்றவ ரருந்துயர் துறந்தார். -இராமாயணம். அயோ. 68 மகவிலாச் செல்வம் மணமிலா மாலை 98. பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத் துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலுஞ் சேயிலாச் செல்வ மன்றே -வளையாபதி 12 மயக்குறு மக்களால் பயக்குறை வாழ்வாம் 99. படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே. -புறநானூறு 188 10. விருந்தோம்பல் (விருந்து - புதுமை. புதியராக வந்தாரைப் பேணுதல். விருந்து - புதுமை; அஃது ஈண்டுப் புதியராய் வந்தார்மேல் நிற்றலால் பண்பாகு பெயர் - திருக். 43. நாகை. சொ. தாண்ட. இ.பெ.அ: திருக். 9. ப.பா.தி. 9. நீதிக். 44.) வன்சொற் களைந்து வருவிருந் தோம்புக 100. இன்சொ லளாவ லிடமினி தூண் 1யார்யார்க்கும் வன்சொற் களைந்து வகுப்பானேல் - மென்சொல் முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் நாளும் விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து. -ஏலாதி 7 விருந்தில் முதன்மை விழுமிய முறுவல் 101. முறுவ லினிதுரை கானீர் மணைபாய் கிடக்கையொ டிவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க் கூணொடு செய்யுஞ் சிறப்பு. -ஆசாரக்கோவை 54 விருந்தெனும் வேள்வி வென்றியோ டிலங்குக 102. நின்ற புகழொடு நீடுவாழ் கிவ்வுலகில் ஒன்ற வுயிதளிர்ப்ப வோம்பலால் - வென்றமருள் வாள்வினை நீக்கி வருக விருந்தென்னும் ஆள்வினை வேள்வி யவன். -புறப்பொருள் வெண்பாமாலை: 215 விருந்துளே அடக்கமாம் வேள்வியுங் கூட 103. யாறு ளடங்குங் குளமுள வீறுசால் மன்னர் விழையுங் குடியுள தொல்மரபின் வேத முறுவன பாட்டுள வேளாண்மை வேள்வியோ டொப்பவுள. -நான்மணிக்கடிகை 52 விருந்தினால் விளையும் விழுமிய இன்பம் 104. வருந்தி யொருவன்பால் மற்றொருவன் வந்தாற் பொருந்தி 1முகமலர்ந்து போற்றி - விருந்தேற்றுத் தன்னா லியன்றளவுந் தானுதவா னாகினவற் கின்னா நரகே யிடம். -பாரதம் 11. இனியவை கூறல் (கேட்டார்க்கு மனமகிழும் சொற்களைக் கூறுதல் - மணக். மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற் களைச் சொல்லுதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 10. இ.சா.அ: ப.பா.தி. 28 நீதிக். 46 (இன்சொல்)) இன்சொல் இடர்செயல் என்றும் இல்லை 105. புன்சொல்லு நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியராய் வாழ்தலு முண்டாமோ புன்சொல் லிடர்ப்படுப்ப தல்லா லொருவனை இன்சொல் லிடர்ப்படுப்ப தில். -பழமொழி 91 இன்சொலால் எய்தும் இனிய கிளைமை 106. இன்சொலா னாகுங் 2கிளைமை யியல்பிலா வன்சொலா னாகும் 3பகைமைமன் - மென்சொலின் நாவினா னாகு மருண்மன மம்மனத்தான் வீவிலா வீடாய் விடும். -நான்மணிக்கடிகை 104 சீறா உரையான் மாறாப் புகழாள் 107. சிதைவுரையான் செற்ற முரையான்சீ 1றில்லான் இயல்புரையா னீன முரையான் - 2நசையார்க்குங் கூடுவ தீவானைக் கொவ்வைபோற் செவ்வாயாய் நாடுவர் விண்ணோர் நயந்து. -ஏலாதி 34 இன்னா முகத்தன் துன்னான் நலமே 108. மலர்ந்தமுகத் தானு 3மதுரவுரை யானும் நலந்தந் திடுவர்கள் நல்லோர் - புலந்திருந்த இன்னா முகத்தா னருளா திடும்பொருள் தன்னாற் பயணுண்டோ தான். -பாரதம் 12. செய்ந்நன்றி யறிதல் (பிறர்செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை - மணக். தனக்குப்பிறர் செய்த நன்மையை மறவாமை - பரிமே. இ.பெ.அ: திருக். 11. ப.பா.தி. 18. இ.சா.அ: நீதிக். 47 (நன்றியறிதல்)) நன்றி யறிதல் ஒன்றிரண் டாக்கம் 109. நன்கொன் றறிபவர் நாழி கொடுப்பவர்க் கென்று முறுதியே சூழ்க வெறிதிரை சென்றுலாஞ் சேர்ப்ப வதுபோல நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிக மில். செய்தற்கு குவவார் எய்திய திழவு 110. தமராலுந் தம்மாலு முற்றாலொன் றாற்றி நிகராகச் சென்றாரு மல்லர் - இவர்திரை நீத்தநீர்த் தண்சேர்ப்ப செய்த துவவாதார்க் கீத்ததை யெல்லா மிழவு. -பழமொழி 344, 226 தாமுண் கலத்தைத் தகர்க்கும் கேடர் 111. 1தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத் தீமாற்றத் தாலே பகைப்படுத்திட் - டேமாப்ப முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே உண்ணோட் டகலுடைப் பார். இருக்கும் கிளையை எறிந்திடு பேதை 112. நாடி நமரென்று 2நன்கு புரந்தாரைக் கேடு பிறரொடு சூழ்தல் கிளர்மணி 3நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல். உதவினோன் ஒருகால் காயினும் காயேல் 113. தமனென் றிருநாழி யீத்தவ னல்லால் நமனென்று காயினுந் தான்காயான் மன்னே அவனிவ னென்றுரைத் தெள்ளிமற் றியாரே நமநெய்யை நக்கு பவர். -பழமொழி 163, 340, 345 தினையும் பனையாம் நினைபவர் உளத்தே 114. தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் 4றுண்டாப் பனையனைத்தா 5வுள்ளுவர் சான்றோர் - பனையனைத் தென்றுஞ் செயினு மிலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு. -நாலடியார் 344 செய்தி கொன்றார்க் குய்தியொன் றில்லை 115. ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் 6குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு 7முளவே நிலம்புட பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றார்க் குய்தி யில்லென அறம்பா 1டிற்றே யாயிழை கணவ காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக்கரு வன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக் கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் படுபறி யானே பல்கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பஃ றுளியினும் வாழிய பலவே. -புறநானூறு 34 13. நடுவு நிலைமை (தமர் என்றும் பிறர் என்றும் பக்கம் பாராது. யாரிடத்தும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 12.ப.பா.தி. 29. நீதிக். 9.) காய்வுவப் பின்றி யாய்தலே அறிவு 116. காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண் ஆய்த லறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகு முவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும். -அறநெறிச்சாரம் 42 சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும் 117. ஒக்கும் வகையா லுடன்பொருஞ் சூதின்கண் பக்கத் தொருவ னொருவன்பாற் பட்டிருக்கும் மிக்க சிறப்பின ராயினுந் தாயர்க்கு மக்களுட் பக்கமோ வேறு. -பழமொழி 332 நல்லவுந் தீயவாம் நஞ்செனப் பார்த்தால் 118. வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம் ஓரும் வையத் தியற்கையன் 1றோவென வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். -சீவகசிந்தாமணி 888 உறவும் சுற்றமும் உளத்தை ஒப்பதே 119. கோதி 2லார்குல மக்கள் மக்கள்மற் றேதி லாரென வியைந்த 3தீமையார் ஆத லாற்றமர் பிறர்க ளாவதங் கோதி னாரவர்க் குள்ள தில்லையே. -சூளாமணி 597 14. அடக்கமுடைமை (மனமொழி மெய்கள் வரம்பு கடவாது அடங்குதல் உடையனாதல் - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 13. ப.பா.தி. 23. நீதிக். 5.) ஐந்துங் காத்தால் அழியாப் பேறாம் 120. அடங்கி யகப்பட 1வைந்திணையுங் காத்துத் தொடங்கிய மூன்றினான் மாண்டீண் - டுடம்பொழியச் செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே கொல்லிமேற் கொட்டுவைத் தார். கற்றுத் தெளியின் கைவரும் அடக்கம் 121. கற்றறிந்தார் கண்ட வடக்கம் 2அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற அறைக லருவி யணிமலை நாட நிறைகுடம் 3நீர்தளும்ப லில். -பழமொழி 388, 9 தம்மைப் புகழ்வரோ தகுதியின் மிக்கோர் 122. செம்மாந்து செல்லுஞ் செறுநரை யட்டவர் தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம் வீரஞ்சொல் லாமையே 4வீழ்க களிப்பினுஞ் சோரப் பொதியாத வாறு. பேதைதன் சொல்லே பேராக்கேடு 123. பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலுந்தன் வாயாற் கெடும். -பழமொழி 315, 114 வறியர்க் கணிகலம் வாய்த்த அடக்கம் 124. 5நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட் கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரங் கூறப் படும். அறிந்தோர் நாவில் அடக்கம் மல்கும் 125. கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும். பச்சோலைக் கில்லை யொலி. -நாலடியார் 242, 256 மூவகை அடக்கமே மேவருந் துறக்கம் 126. வாயி னடங்குதல் துப்புரவா மாசற்ற செய்கை யடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். -திரிகடுகம் 43 நெஞ்சம் அடங்குதல் விஞ்சிய பேறு 127. தன்னைத்தன் னெஞ்சங் கரியாகத் தானடங்கிற் பின்னைத்தா 1னெய்தாப் பயனில்லை - தன்னைக் 2குடிகெடுக்கு நெஞ்சிற்குக் குற்றேவல் 3செய்தல் பிடிபடுக்கப் பட்ட களிறு. அற்றது நெஞ்செனில் உற்றது வீடு 128. நின்னை யறப்பெறு கிற்கிலெ னன்நெஞ்சே பின்னையான் யாரைப் பெறுகிற்பென் - நின்னை அறப்பெறு கிற்பெனேற் பெற்றேன்மற் றீண்டே துறக்கந் திறப்பதோர் தாழ். அறிவுக் கயிற்றால் ஐம்புலன் தளைக 129. இந்திரியக் குஞ்சரத்தை ஞான விருங்கயிற்றாற் 4சிந்தனைத்தூண் பூட்டித் திதிபெறப் - பந்திப்பார் இம்மைப் 5புகழு மினிச்செல் கதிப்பயனுந் தம்மைத் தலைப்படுத்து வார். -அறநெறிச்சாரம் 141, 143, 190 காப்பதில் தலைமை நாக்கல தில்லை 130. ஆக்கப் படுக்கு மருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும் காக்கப் படுவன விந்திரிய 1மைந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே. -வளையாபதி 18 15. ஒழுக்கமுடைமை (உலகம் ஒப்பிய நெறியில் தவறாமை - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 14. நீதிக். 2. இ.சா.அ: பழமொழி 5 ப.பா.தி. 19 (ஒழுக்கம்)) கட்டமை ஒழுக்கம் எட்டெனக் காண்க 131. நன்றி யறிதல் பொறையுடைமை யின்சொல்லோ டின்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ டொப்புர வாற்ற வறித 2லருளுடைமை நல்லினத் தாரோடு நட்ட லிவையெட்டும் சொல்லிய வாசார வித்து. பிறப்பு முதலாம் பெருநலம் எட்டு 132. பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றங் கல்விநோ யின்மை இலக்கணத்தா லிவ்வெட்டு மெய்துப வென்றும் ஒழுக்கம் பிழையா தவர். தந்தைதாய்த் தொழுதெழல் முந்தையோர் காண்முறை 133. வைகறை யாமந் துயிலெழுந்து 3தாஞ்செய்யும் நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதிற் றந்தையுந் தாயுந் தொழுதெழுக வென்பதே முந்தையோர் கண்ட நெறி. எச்சிலார் தீண்டா ஏற்ற மிக்கவை 134. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோ 1டிவையென்ப யாவருந் திட்பத்தாற் றீண்டாப் பொருள். தட்டின்றி நீராடச் சுட்டிய போழ்துகள் 135. தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை உண்டது கான்றல் மயிர்களைத லூண்பொழுது வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள் மெய்யுற லேனை மயலுற லீரைந்தும் ஐயுறா தாடுக நீர். ஐம்பெருங் குரவரை அடிதொழு தெழுக 136. அரச னுவாத்தியான் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவரிவ் வைவ ரிவரிவரைத் தேவரைப் போலத்தொழுதெழுக வென்பதே யாவருங் கண்ட நெறி. பெரியவர் முன்னர்ப் பேணத் தகுமிவை 137. முன்றுவ்வார் முன்னெழார் மீக்கூறா ரூணின்கண் என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற் பெரியார்தம் பாலிருந்தக் கால். -ஆசாரக்கோவை 1, 2, 3, 4, 5, 10, 16, 24 உடனுறை வொழித்தற் குரிய காலம் 138. உச்சியம் போழ்தோ டிடையாம மீரந்தி மிக்க விருதேவர் நாளோ டுவாத்திதிநாள் 2அட்டமி யேனைப் பிறந்தநா 3ளிவ்வெட்டும் ஒட்டா ருடனுறைவின் கண். தத்தம் தகுதியைத் தாமே சொல்பவை 139. உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கு நிலைமைக்கு மாண்மைக்குங் கல்விக்குந் தத்தங் குடிமைக்குந் தக்க செயல். தனியே செல்லத் தகாத இடங்கள் 140. பாழ்மனையுந் தேவ குலமுஞ் சுடுகாடும் ஊரில் வழியெழுந்த வொற்றை முதுமரனுந் தாமே தமியர் புகாஅர் பகல்வளரார் நோயின்மை வேண்டு பவர். ஒதுங்கிப் போதற் குரைத்த இடங்கள் 141. பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தா ரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட் காற்ற வழிவிலங்கி னாரே 1பிறப்பினுட் போற்றி யெனப்படு வார். அறிவினை அழிக்கும் ஐம்புலக் குறும்பு 142. ஈன்றாள் மகடன் னுடன்பிறந்தா ளாயினுஞ் சான்றோர் தமித்தா வுறையற்க வைம்புலனும் தாங்கற் கரிதாக லான். விதிமுறை விலக்குக் குரிமை யுடையோர் 143. அறியாத தேயத்தா னாதுலன் மூத்தான் இளையா னுயிரிழந்தா னஞ்சினா 2னுண்டான் அரசர் தொழிறலை வைத்தான் மணாளனென் றொன்பதின்மர் கண்டீ ருரைக்குங்கா லாற்றவும் ஆசாரம் வீடுபெற் றார். - ஆசாரக்கோவை 43, 49, 57, 64, 65, 100 மூத்தவர் முன்னர் முறைகெட வேண்டா 144. நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம் பகையொடு பாட்டுரையென் றைந்துந் - தொகையொடு மூத்தா ரிருந்துழி வேண்டார் முதுநூலுள் 1யாத்தா ரறிவின ராய்ந்து. செம்மை போற்றுவார் செய்யத் தகாதவை 145. தொழீஇ யடவுண்ணார் தோழரிற் றுஞ்சார் வழிஇப் பிறர்பொருள் வௌவார் - கெழீஇக் கலந்தபிற் கீழ்காணார் காணாய் மடவாய் புலந்தபிற் போற்றார் புலை. -சிறுபஞ்சமூலம் 85, 38 குறையிலா உள்ளம் நிறைபெருந் தீர்த்தம் 146. அருளுடைமை கொல்லாமை யைந்தடக்கல் வாய்மை இருளடையாக் கல்வியோ டீகை - புரையில்லா உள்ளத்திற் றீர்த்த மிவையுளவா கப்பெற்றால் வெள்ளத்திற் றீர்த்த மிகை -பழமொழி நீர்மிகிற் சிறையிலை ஊர்மிகிற் கரியிலை 147. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்துந் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையால் ஊர்மிகி னில்லை 2கரியே ஒலித்துடன் நீர்மிகி னில்லை சிறை. -பழமொழி 335 16. பிறர்மனை நயவாமை (வேட்கை மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: நாலடி. 9. இ.சா.அ: திருக். 15. ப.பா.தி. 25. நீதிக். 35. (பிறனில் விழையாமை.)) அயல்மனை நாட்டம் அலியென மாட்டும் 148. செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே யிம்மை அலியாகி யாடியுண் பார். சேரா நான்கும், சேரும் நான்கும் 149. அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் பிறன்றாரம் நச்சுவர்ச் சேரா - பிறன்றாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவமென் றச்சத்தோ டிந்நாற் பொருள். அடிமுதல் முடிவரை அகலா அச்சம் 150. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்சம் எக்காலு மச்சந் தருமா லெவன்கொலோ உட்கான் பிறனில் புகல். அச்சநீ ளின்பம் நச்சென லாகும் 151. அம்ப லயலெடுப்ப வஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீ இமைந்துற்று - நம்பு நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு பாம்பின் தலைநக்கி யன்ன துடைத்து. துன்பெனுந் தீயிடை இன்பெனும் வெதுப்போ? 152. காணிற் குடிப்பரியாங் கையுறிற் கால்குறையு மாணின்மை செய்யுங்கா லச்சமாம் - நீணிரையத் துன்பம் பயக்குமாற் றுச்சாரி 1நீகண்ட இன்ப மெனக்கெனைத்தாற் கூறு. -நாலடியார் 85, 82, 83, 87, 84 ஆண்பிறப் படைந்த அழகுதான் ஈதோ! 153. பெரியவாட்டடங்கட் செவ்வாய்ப் பிறர்மனை 1நயக்கு மாந்தர் மரியவாய்ப் புறஞ்சொற் 2கூர்முள் மத்திகைப் 3புடையுமன்றி ஒருவர்வா யுமிழப் பட்ட தம்பல மொருவர் வாய்க்கொண் 4டரியன செய்ப வையத் தாண்பிறந் தார்க ளன்றே. எளிதென நயப்பின் விளியாப் பழிகாண் 154. காதலாள் 5கரிந்து நையக் கடியவே கனைந்து கன்றி ஏதிலான் தாரம் நம்பி யெளிதென விறந்த பாவத் தூதுலை யுருக வெந்த வொள்ளழற் செப்புப் பாவை ஆதகா தென்னப் புல்லி யல,றுமா 6லானை வேந்தே - சீவகசிந்தாமணி 2821, 2769 ஊரும் நாடும் உவக்க ஓருரை 155. தாரம் 7நல்வதந் தாங்கித் தலை நின்மின் ஊரும் நாடு முவத்த லொருதலை வீர வென்றி விறல்மிகு விண்ணவர் சீரி னேத்திச் சிறப்பெதிர் கொள்பவே. எண்ண மிக்கவர் எண்ணினு மெண்ணிலர் 156. பெண்ணி னாகிய பேரஞர்ப் பூமியுள் எண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார் பின்னி நின்ற பெருவினை மேல்வரும் என்ன தாயினு மேதில்பெண் ணீக்குமின் -வளையாபதி 14,15 17. பொறையுடைமை (காரணம் பற்றியாதல் மடமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தலை யுடையராதல்-பரிமே. ï.bg.m.: திருக். 16 நாலடி. 8. ப. பா. தி. 26. நீதிக். 6.)) பொறுத்தலின் பெருமை ஒருத்தலுக் கின்றே 157. கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப் பொறுத்ததாற்றிச் சேறல் புகழால்-ஒறுத்தாற்றின் 1வானோங் குயர்வரை வெற்ப பயமின்றே தானோன் றிடவருஞ் சால்பு. புல்லியர் வாயைப் பூட்டுவார் யாரே? 158. தெரியா தவர் தந் திறனில்சொற் கேட்டாற் பரியாதார் போல விருக்க-பரிவில்லா வம்பலர் வாயை யவிப்பான் புகுவாரே அம்பலந் 2தாழ்க்கூட்டு வார். தீயைத் தீயால் தீர்த்திட லாமோ? 159. நோவ வுரைத்தாரைத் தாம்பொறுக்க 3லாற்றாதார் நாவி னொருவரை வைதால் வயவுரை பூவிற் பொலிந்தகன்ற கண்ணா யதுவன்றோ தீயில்லை யூட்டுந் திறம். சொற்சோ ராரே நற்பா லறிவோர் 160. நற்பால கற்றாரும் நாடாது 4சொல்லுவரால் இற்பால ரல்லா ரியல்பின்மை நோவதென் கற்பா லிலங்கருவி நாடமற் றியாரானுஞ் 5சொற்சோரா தாரோ இலர். பொய்ப்பழி கேட்டுப் புகைந்திட வேண்டா 161. கையார வுண்டமையாற் காய்வார் பொருட்டாகப் பொய்யாகத் தம்மைப் 6பொருளல்ல கூறுபவேல் மையார வுண்டகண் மாணிழா 7யென்பரிய செய்யாத வெய்தா வெனின். -பழமொழி 59,55,58,184,500 கூர்த்தின்னா செய்யினும் பேர்த்தின்னா செய்யேல் 162. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்றாமை யென்னா ரறிவுடையார்-ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்காற் றாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று. ஒறுக்க வல்லவன் பொறுப்பதே பொறுமை 163. இளையா னடக்க மடக்கங் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்-எல்லாம் ஒறுக்கு மதுகை யுரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. தைக்கச் சொல்லினும் தயையால் பொறுக்க 164. கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச் சொல் எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர்-ஒல்லை இடுநீற்றாற் பையவிந்த நாகம்போற் றத்தங் குடிமையான் வாதிக்கப் பட்டு. ஆய்ந்தமை கேள்வியர் காய்ந்துரை செய்யார் 165. காவா தொருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி யறிவுடையா ரெஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. சான்றோர் வெகுளி சடுதியிற் றணியும் 166. நெடுங்கால மோடினும் நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெம்மைபோற் றானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். ஓங்கிய குடியினர் தீங்கினை ஊக்கார் 167. உபகாரஞ் செய்ததனை யோராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரந் தாஞ்செய்வ தல்லாற் 1றவற்றினாற் றீங்கூக்கல் வான்றோய் குடிப்பிறந்தார்க்கில். -நாலடியார் 67, 65, 66, 63, 68, 69 அறிவுநீர் தெளித்தால் அணைந்திடும் சொற்றீ 168. எள்ளிப் பிறருரைக்கு மின்னாச்சொல் தன்னெஞ்சிற் கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும் - மெள்ள அறிவென்னு நீரா 2லவித்தடக்க லாற்றிற் பிறிதொன்று வேண்டா தவம். -அறநெறிச்சாரம் 81 புன்மை யனைத்தும் பொறுமையால் மறைந்திடும் 169. அற்றவுறுப் பெல்லா மறுவையி னான்மறைப்ப மற்றொருவர் காணா மறையுமால் - வெற்றி அறையார் கழலா யவமாய வெல்லாம் பொறையான் மறைக்குமேற் போம். -பாரதம் 18. வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை - மணக். பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை - பரிமே. இ.பெ.அ: திருக். 18.) அடைக்கலப் பொருளைத் தடையிலா தளிக்க 170. உள்ள தொருவ ரொருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கதாங் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி. நல்லதை நயவார் அல்லது செய்வார் 171. அல்லது செய்வா ரரும்பொரு ளாக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ - ஒல்லொலிநீர் பாய்வதே போலுந் துறைவகேள் தீயன ஆவதே போன்று கெடும். அறவோர் கருதார் பிறர்பொருள் கவர 172. 1மடங்கிப் பசிப்பினு மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை மடலொடு புட்கலா மால்கடற் சேர்ப்ப கடலொடு 2காட்டொட்ட லில். -பழமொழி 340, 213, 78 பிறர்பொருள் உவத்தல் பேசருந் தீதே 173. தானத்துக் குரித்து மன்று 3தன்கிளைக் கீயிற் சால ஈனத்தி லுய்க்கு நிற்கு மெச்சத்தை யிழக்கப் பண்ணும் மானத்தை யழிக்குந் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும் ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொரு ளுவக்கில் வேந்தே. -சாந்திபுராணம் 19. அவா (வாயினால் பற்றுதல்போல் மனத்தினால் பற்றும் ஆசை - முதல் தாய்மொழி. 12. இ.சா.அ: திருக். 37. ப.பா.தி. 41. (அவாவறுத்தல்)) முகத்திலும் மகிழார் அகத்தில் மகிழ்வரோ? 174. முகம்புறத்துக் கண்டாற் பொறுக்கலா தாரை அகம்புகுந்து 4மென்றிரக்கு மாசை - இருங்கடத்துத் தக்க நெறியிடைப் பின்னுஞ் செலப்பெறார் ஒக்கலை வேண்டி யழல். இழந்தவன் குற்றம் எவரையும் சொல்வான் 175. யாவரே யானு மிழந்த பொருளுடையார் தேவரே யாயினுந் தீங்கோர்ப்பர் - பாவை 1படத்தோன்று நல்லாய் நெடுவேல் கெடுத்தான் 2குடத்துள்ளும் 3நாடி விடும். ஆசைப் பெருக்கம் மாசைப் பெருக்கும் 176. 4உரிதினிற் றம்மோ டுழந்தமை கண்டு பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித் தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற் பாம்புகாண் பாரு முடைத்து. -பழமொழி 290, 193, 328 நெய்க்குடத் தெறும்பு மொய்ப்பது போன்றோர் 177. ஆகா தெனினு மகத்துநெய் 5யுண்டாகின் போகா தெறும்பு 6புறஞ்சுற்றும் - யாதும் கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி விடாஅ ருலகத் தவர். ஆயிரம் எண்ணி அழிந்தவர் கோடி 178. இன்றாது மிந்நிலையே யாது மினிச்சிறிது நின்றாது மென்று நினைத்திருந் - தொன்றி உரையின் மகிழ்ந்துதம் முள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர். -நாலடியார் 337, 359 உறக்க மில்லா உறுதுய ராளர் 179. கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட் டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை யொண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை யப்பொருள் காப்பார்க்கு மில்லைத் துயில். -நான்மணிக்கடிகை 7 ஆசைக்கடலுள் ஆழும் மூவர் 180. தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். அரியவை எண்ணி அமைந்தவர் மூவர் 181. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய 1துணிந்தொழுகு வார். -திரிகடுகம் 81, 73 20. புறங்கூறாமை (காணாதவழிப் பிறரை இகழ்ந்துரையாமை. முகத்தெதிரே பிறரை இகழ்ந்து கூறுதல் செய்யாது அவர் புறத்தே கூறுதலாயிற்று. அது செய்யாமை புறங்கூறாமை - நாகை சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 19. ப.பா.தி. 24.) முகத்திற் புகர்ந்து முதுகிற் பழிப்போர் 182. முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும் கன்னின் றுருகக் கலந்துரைத்துப் - பின்னின் 2றழித்துரைக்குஞ் சான்றோரை யஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை. - அறநெறிச்சாரம் 84 183. தாக்குற்ற போழ்திற் றமரேபோல் நன்குரைத்துப் போக்குற்ற போழ்திற் புறனழீஇ 3மேன்மைக்கண் நோக்கற் றவரைப் பழித்தலென் னென்னானும் மூக்கற்ற தற்கில் பழி. கொண்டவர்ப் பழித்தல் உண்டவில் தீயிடல் 184. 1பண்டின்ன ரென்று தமரையுந் தம்மையுங் கொண்ட வகையாற் குறைதீர நோக்கியக்கால் விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பி 2னஃதன்றோ உண்டவிற் றீயிடு மாறு. -பழமொழி, 115, 347 21. இகழாமை (காரணம் இருப்பினும், இல்லையாயினும் இழிந்தசொற் கூறி இகழா திருத்தல்.) புறஞ்சொலும் வாய்க்கு வறுமையும் உண்டோ? 185. ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையுங் கோவிற்குக் கோவல னென்றுலகங் கூறுமால் தேவர்க்கு மக்கட் 3கெனவேண்டா தீங்குரைக்கும் நாவிற்கு நல்குர வில். பல்லோர் நடுவே பழியார் நல்லோர் 186. பல்லா ரவைநடுவட் பாற்பட்ட சான்றவர் சொல்லா 4ரொருவரையு முள்ளூன்றப் - பல்லர் நிரைப்புறங் காத்த நெடியோனே யானும் உரைத்தா லுரைபெறுத லுண்டு. கடைத்தெரு மேய்ந்ததும் காளையாம் ஒரு நாள் 187. உள்ளூ ரவரா 5லுணர்ந்தார் முதலெனினும் எள்ளாமை வேண்டு மிலங்கிழாய் - தள்ளா தழுங்கல் முதுபதி யங்காடி மேயும் பழங்கன்றே றாதலு முண்டு. -பழமொழி 42, 75, 202 தாழ்ந்த குடியிலும் தக்கோர் பிறக்கலாம் 188. கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுட் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி. - நான்மணிக்கடிகை 4 அறிந்தோர் எல்லாம் அறிந்தோர் அல்லர் 189. 1பலகற்றேம் யாமென்று தற்புகழ வேண்டா அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் 2காக்கும் சிலகற்றார் கண்ணு 3முளவாம் பலகற்றார்க் கச்சாணி யன்னதோர் சொல். -அறநெறிச்சாரம் 79 நாவிற் கழிவு நயனிலாச் சொல்லே 190. சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை. -சிறுபஞ்சமூலம் 11 22. தீவினை யச்சம் (தீய செய்தற்கு அஞ்சுவது - நாகை சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 21. நாலடி. 13. நீதிக். 8.) காணார் எனச் செயேல் மாணா வினைகள் 191. எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனுங் காணா ரெனச் செய்யார் மாணா வினை. -பழமொழி 102 உள்ளத்த வாக உணர்பவை மூன்று 192. 1அஃகுநீ செய்ய லெனவறிந் 2தாராய்ந்த வெஃகல் வெகுடலே தீக்காட்சி - 3வெஃகிய கள்ளத்த வல்ல கருதி னிவைமூன்றும் உள்ளத்த வாக 4வுணர். மெய்யள வாக மிகுபவை மூன்று 193. நிலையளவி னின்ற நெடியவர்தாம் நேராக் கொலைகளவு காமத்தீ வாழ்க்கை அலையளவி 5மையென நீண்ட மலர்க்கண்ணாய் இம்மூன்றும் 6மெய்யன வாக 7மிகும். பொய்முதல் உரையார் மெய்யுணர் வாளர் 194. மையேர் தடங்கண் மயிலன்ன சாயலாய் மெய்யே 8யுணர்ந்தவர் தாமுரையார் - பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்சொல் நான்கும் மறலையின் வாயினவா மற்று. -ஏலாதி 27, 29, 28 எஞ்சா நஞ்சுகள் இன்னவை காண்க 195. 9கோறலு நஞ்சூனைத் துய்த்தல் வேறலு நஞ்சுமா றல்லானைத் - தேறினான் நீடாங்குச் செய்தலும் நஞ்சாம் இளங்கிளையை நாடாதே 10தீதுரையும் நஞ்சு. -சிறுபஞ்சமூலம் 13 அல்லலில் அழுந்தி அகலாக் கொடியர் 196. தன்னைச் செறாதானைக் காய்வான் தகாக்கொலையன் பின்னைக் குரவரைப் பேணாதான் - முன்னொருவன் இல்லாளைக் காதலித்தான் இந்நால்வர் வெந்நரகத் 1தல்லா லழுந்தா தவர். அறக்கொலை ஆவது அறவோர் கொலையே 197. 2அற்றங்கள் பார்த்தங் கடைத்திருந்து 3சொல்வரனுங் குற்றம்போய்க் கோவுக் குரைப்பானுஞ் - செற்றத்தே நின்றானுஞ் செய்ந்நன்றி நீத்தானும் அந்தணரைக் கொன்றாரோ டொப்பர் குறித்து. -பாரதம் சிற்றினம் சேர்தல் முற்றிய கேடே 198. பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும் வையன் மின்வடி வல்லன சொல்லிநீர் உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட் செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின். கொலையும் கொள்ளையும் கூடா தொழிக. 199. கள்ளன் மின்கள வாயின் யாவையும் கொள்ளன் மின்கொலை கூடி வருமறம் எள்ளன் மின்னில ரென்றெண்ணி யாரையும் நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின். -வளையாபதி 16, 17 இடும்பை நோய்கட் கிரையாய் அமைவோர் 200. குழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர் நிழற்றிகழ் வேலி னானை நேடிய நெடுங்க ணாளும் 4பிழைப்பிலாட் புறந்தந்தானுங் கரவரைப் பேணல் செய்யா திழுக்கினா ரிவர்கள் கண்டாயிடும்பைநோய்க் கிரைக ளாவார். குட்ட நோயிற் குளிப்பதற் காவோர் 201. நட்பிடைக் குய்யம் வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டழற் காமத் தீயிற் கன்னியைக் கலக்கி னானும் அட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான் குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய். தீவினைத் தேரில் போவதற் குரியோர் 202. கொல்வதே கன்றி நின்றார் 1கொடியவர் கடிய 2நீரார் இல்லையே யிம்மை யல்லா லும்மையு 3முயிரு மென்பார் அல்லதுந் தவமு மில்லைத் தானமு மிழவென் பாருஞ் செல்பவர் நரகந் தன்னுட் டீவினைத் தேர்க ளூர்ந்தே. விலங்காய்ப் பிறந்திட விழைவன புரிவோர் 203. மல்லல் மலையனைய மாதவரை வைதுரைக்கும் பல்லவரே யன்றிப் பகுத்துண்ணாப் பாவிகளும் அல்குல் விலைபகரு மாய்தொடிய 4ராதியார் வில்பொருதோள் மன்னா விலங்காய்ப் 5பிறப்பாரே. பழிப்பன ஒழிக்கும் பாலரே சீலர் 204. ஒழுக்கமே யன்றித் தங்க ளுள்ளுணர் வழிக்கு மட்டும் புழுப்பயில் தேனு மன்றிப் பிறவற்றின் புண்ணு மாந்தி விழுப்பய னிழக்கு மாந்தர் வெறுவிலங் 6கென்ப மிக்கார் பழித்தன வொழித்தல் சீலம் பார்மிசை யவர்கட் கென்றான். -சீவகசிந்தாமணி 252, 253, 2776, 2789, 2822 தூயனை நோக்கும் துப்புர வெல்லாம் 205. வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத் தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம். -குண்டலகேசி 3 23. தானம் (அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல் - பரிமே. திருக். 19.) ஈகை வகையின் இயல்பு கூறுதல் 206. அச்சமே யாயுங்கால் நன்மை யறத்தொடு கச்சமில் கைம்மா 1றருளைந்தால் - மெச்சிய தோகை மயிலன்ன சாயலாய் தூற்றுங்கால் ஈகை வகையி னியல்பு. ஈந்தால் ஐந்தை எய்தும் கோடி 207. கைம்மாறு மச்சமுங் காணிற் பயமின்மை பொய்ம்மாறு நன்மை சிறுபய - மெய்ம்மா றருள்கூடி யாரறத்தொ டைந்தியைந் தீயிற் பொருள்கோடி பெய்தல் புகன்று. -சிறுபஞ்சமூலம் இசைநோக் கீகை கூலிக் குழைப்பு 208. பயனோக்கா தாற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி யீகின்றா ரீகை - வயமாப்போல் ஆலித்துப் பாயு மலைகடற் றண்சேர்ப்ப கூலிக்கு2ச் செய்துண்ணு மாறு. -பழமொழி 383 நாடொறும் ஈந்தால் கோடென ஓங்கும் 209. இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோற் பைய நிறைத்து விடும். மூட்டா அடுப்பினர் கேட்டை ஒழிக்க 210. இம்மி யரிசித் துணையானும் வைகலும் நம்மி லியைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத் தடாஅ வடுப்பி னவர். தக்கார் கைப்படின் மிக்கதாம் சீறறம் 211. உறக்குந் துணையதோர லம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் - 1கறப்பயனும் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். -நாலடியார் 99, 94, 28 அறக்கதிர் ஈனும் அரும்பயிர் செய்க 212. இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி 2அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்பதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். ஈவார்க் கிணையாம் கருமிகள் இல்லை 213. ஈவாரி னில்லை யுலோப ருலகத்தில் யாவருங் கொள்ளாத வாறெண்ணி - 3மேவரிய மற்றுடம்பு கொள்ளும் 4பொழுதோர்ந்து தம்முடைமை பற்று விடுத லிலர். இரப்பார்க் கிணையாம் வண்மையர் இல்லை 214. பரப்புநீர் 5வையத்துப் பல்லுயிர்கட் கெல்லாம் இரப்பவரின் வள்ளல்க ளில்லை - இரப்பவர் இம்மைப் 6பயனு மினிச்செல் கதிப்பயனும் 7கொண்மி னெனக் கொடுத்த லால். -அறநெறிச்சாரம் 16, 182, 178 சோற்றுக் கொடையே ஆற்றவும் பெரிதாம் 215. துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்த தெற்றுக்கஃ தென்னி னிதுவதன் காரணம் அற்றமில் தான மெனைப்பல வாயினுந் துற்றவி ழொவ்வாத் துணிவென்னு மாறே. -வளையாபதி 18 பதித்துயர் களைவோர் பாராள் செல்வர் 216. கடைநின் 1றவருறு கண்கண் டிரங்கி உடையதம் மாற்றலி னுண்டி 2கொடுத்தோர் படைகெழு தானையர் பல்களி யானைக் குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே. -சூளாமணி 1998 24. ஈகை (வறியராய்த் தன்மாட்டு வந்து இல்லை என்று இரந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்துப் பொதுவின் அவர் வறுமைப் பிணி தீர்த்தலையும், சிறப்பின் அவர் பசிப்பிணி தீர்த்தலையும் கருதிற்று - நாகை. சொ.தண்ட. இ.பெ.அ: திருச். 23. நாலடி. 10. பழமொழி. 33 ப.பா.தி. 7. நீதிக். 48.) இறைத்திடு போழ்தெலாம் நிறைத்திடும் ஊற்று 217. இரப்பவர்க் கீயக் குறைபடுமென் றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற் றுறைத்தோணி நின்றுலாந் தூங்குநீர்ச் சேர்ப்ப இறைத்தோறு மூறுங் கிணறு. வறுமை தொலைக்க வழிவகை காண்க 218. கரப்புடையார் வைத்த கடையு முதவா துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல் 1சுரத்திடைப் பெய்த பெயல். கொடுப்பதால் ஏழ்மை கொண்டவர் இல்லை 219. அடுத்தொன் 2றிரந்தாற்கொன் றீந்தானைக் கொண்டான் படுத்தேழை யாமென்று போகினும் போக 3அடுத்தேற லைம்பாலா யாவர்க்கே யானுங் கொடுத்தேழை யாயினா ரில். அறிமடம் கூடச் சான்றோர்க் கணியாம் 220. முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையுந் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின் நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப அறிமடமுஞ் சான்றோர்க் கணி. நீர்வரை நீர்மலர்; சீர்வரை செய்கை 221. இரவலர் தம்வரிசை யென்பார் மடவார் கரவலராய்க் கைவண்மை பூண்ட - புரவலர் சீர்வரைய வாகுமாஞ் செய்கை 4சிறந்தனைத்தும் நீர்வரைய வாநீர் மலர். -பழமொழி 378, 373, 377, 74, 379 செய்வன தவிர்த் திடின் உய்திடா துலகு 222. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணு முலகஞ் செயற்பால செய்யா விடினும் - 5கயற்புலால் புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப என்னை யுலகுய்யு மாறு. ஆற்றார்க் கீயும் அருமையே ஆண்கடன் 223. ஏற்றகை மாற்றாமை யென்னானுந் 1தாம்வரையா தாற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின் மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகட னென்னும் பெயர்த்து. கொடையுடை யாளருக் கடைபடா வீடு 224. இல்லா விடத்து மியைந்த வளவீனால் உள்ள விடம்போற் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட 2குணனுடைய மாந்தர்க் கடையாவா மாண்டைக் கதவு. சேரும் வினையால் சேர்ந்திடும் செல்வம் 225. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் 3கொடுத்துத்தற் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால். நல்லோர் செல்வம் நடுவூர் நற்பனை 226. நடுவூருள் 4வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார் குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டு 5ளேற்றைப் பனை. -நாலடியார் 97, 98, 91, 93, 96 இரப்போரை இகழார் எங்கணும் இல்லை 227. நூற்றுவரிற் றோன்றுந் தறுகண்ண ராயிரவ ராற்றுளித் தொக்க வவையகத்து மாற்றமொன் றாற்றக் கொடுக்கு மகன்றோன்றுந் தேற்றப் பரப்புநீர் வையகந் தேரினு மில்லை இரப்பாரை யெள்ளா மகன். -தகடூர் யாத்திரை ஒளிப்பதும் அளிப்பதும் ஒப்புடைச் செய்கையோ? 228. மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மோரினமாப் 1பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரு மக்களா 2மொல்லுவ தாங்கே அளிப்பாரு மக்களா மாறு. -பெரும்பொருள் விளக்கம் ஈந்தவர் என்றும் இருந்தவர் ஆவார் 229. மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் மாயா தேந்திய கைக்கொ டிரந்தவ ரெந்தாய் வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேனும் ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே. -இராமா. பால. 447 துய்ப்பே மெனினே தப்புந பலவே 230. தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் 3உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவு மெல்லா மோரொக் கும்மே அதனால், செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே. -புறநானூறு 189 25. ஈயாமை (தானும் உண்ணாது பிறர்க்கும் கொடாது இருத்தல் - பதுமனார். இ.பெ.அ: நாலடி. 28. நீதிக். 49.) ஏற்பார்க் கீயார் எதற்கும் உதவார் 231. நாவி னிரந்தார் குறையறிந்துந் தாமுடைய மாவினை 1மாணப் பொதிகிற்பார் - தீவினை அஞ்சிலெ னஞ்சா விடிலென் குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென். மாய்வதன் முன்னே ஆய்ந்தறம் செய்க 232. மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதி னறஞ்செய்வார்க் காணாமை நாய்காணிற் கற்காணா வாறு. தாமே செய்திடார் தண்டிடச் செய்வரோ? 233. தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் 2செய்கலார் பின்னை 3யொருவராற் செய்வித்து மென்றிருத்தல் சென்னீ ரருவி மலைநாட பாய்பவோ வெந்நீரு மாடாதார் தீ. இல்லதை இல்லெனல் இணையிலா நன்மை 234. அடையப் பயின்றார்சொல் 4லாற்றுவராக் கேட்டால் உடையதொன் றில்லாமை யொட்டிற் - 5படைவென் றடைய வமர்த்தகண் 6ணாயிழா யஃதால் இடைய னெறிந்த மரம். ஈயார் துவ்வார் எதற்கோ செல்வம்? 235. பெற்றாலுஞ் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி யிறுகுபவால் - கற்றா வரம்பிடைப் பூமேயும் வண்புன லூர மரங்குறைப்ப மண்ணா மயிர். நசைக்கொலை புரிவோர் இசையுல கெய்தார் 236. இசைவ கொடுப்பதூஉ மில்லென் பதூஉம் வசையன்று வையத் தியற்கையஃ தன்றிப் பசைகொண் டவனிற்பப் பாத்துண்ணா னாயின் நசைகொன்றான் செல்லுலக மில். -பழமொழி 218, 361, 159, 223, 215, 225 அருள்பொருள் நகைக்க அமைந்தவன் கருமி 237. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன் றீகலான் வைத்துக் கழியு மடவோனை - வைத்த பொருளு மவனை நகுமே யுலகத் தருளு மவனை நகும். கருமியும் வறியனும் கருதினால் ஒப்பர் 238. எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனதென தென்றிருப்பென் யானுந் - 1தனதாகத் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது. ஈயாக் கருமியின் இரவலர் உயர்ந்தோர் 239. வழங்காத செல்வரி னல்கூர்ந்தா ருய்ந்தார் இழந்தா ரெனப்படுத லுய்ந்தார் - உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலு முய்ந்தார்தங் கைந்நோவ யாப்புய்ந்தா 2ருய்ந்தார் பல. இல்லதை இல்லெனல் எனைத்தும் வசையிலை 240. இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும் வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி கொன்றாரிற் குற்ற முடைத்து. -நாலடியார் 273, 276, 277, 111 இரந்தவர்க் கீயார் இரவலர் ஆவார் 241. மாசித்திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின் ஊசித் துன்ன மூசிய வாடை யுடையாகப் பேசிப் பாவாய் பிச்சை யெனக்கை யகலேந்திக் கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார். -சீவகசிந்தாமணி 2929 26. புகழ் (இம்மைப் பயனாகி இவ்வுலகின்கண் நிகழ்ந்து அவரிறந்தும் தான் இறவாது நிற்கும் நல்லுரை - நாகை. சொ.தண்ட. இ.பெ.அ: திருக். 24. பழமொழி. 9. ப.பா.தி. 16. நீதிக். 60.) ஏற்றார்க் கீதல் இசைமை ஆகும் 242. ஏற்றார்கட கெல்லா மிசைநிற்பத் தாமுடைய மாற்றார் 1கொடுத்திருக்கும் வள்ளன்மை - மாற்றாரை 2மண்பற்றிக் கொள்கிறகும் ஆற்றலார்க் கென்னரிதாம் பெண்பெற்றா னஞ்சா னிழவு. -பழமொழி 382 சாவா உடம்பினை எய்திய மூவர் 243. மண்ணின்மேல் 3வான்புகழ் நட்டானும் 4மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் 5குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னார். -திரிகடுகம் 16 கொடைச்சொல் கேட்கும் குறைவிலா துலகெலாம் 244. 6கடிப்பிடு கண்முரசங் காதத்தர் கேட்பர் இடித்து முழங்கியதோ ரோசனையார் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் 1கேட்குமே சான்றோர் கொடுத்தா ரெனப்படுஞ் சொல். -நாலடியார் 100 இருவே றியாக்கை இயைந்ததை யுணர்மின் 245. ஒருவன திரண்டி யாக்கை யூன்பெய்து நரம்பு போர்த்த உருவமும் புகழு மென்றாங் கவற்றினு ளூழின் வந்து மருவிய 2யாக்கை யீங்கே மாய்ந்துபோ மற்றை யாக்கை திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபி னிற்கு மன்றே. -சூளாமணி 776 27. அருளுடைமை (யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறுபோல வருந்தும் ஈரமுடைமை - மணக். தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை - பரிமே. இ.பெ.அ: திருக். 25. இ.சா.அ: ப.பா.தி. 30 (அருள்)) அறத்தின் முதலாய் அமைந்த தருளே 246. அற்றாக நோக்கி யறத்திற் கருளுடைமை முற்ற 3வறிந்தார் முதலறிந்தார் - தெற்ற முதல்விட் டஃதொழிந்தா ரோம்பா வொழுக்கம் முயல்விட்டுக் காக்கை தினல். அருளறம் பெற்றார் சுமைவைப் புற்றார் 247. சிறந்த நுகர்ந்தொழுகுஞ் செல்வ முடையார் அறஞ்செய் தருளுடைய ராதல் - பிறங்கல் அமையொடு வேய்கலாம் வெற்ப வதுவே சுமையொடு மேல்வைப்பா மாறு. -பழமொழி 370, 357 பழிவழிப் பக்கமும் பாரான் அருளோன் 248. பொருளுடையான் கண்ணதே போகம் அறனும் அருளுடையான் கண்ணதே யாகும் - அருளுடையான் செய்யான் பழிபாவஞ் சேரான் புறமொழியும் உய்யான் பிறர்செவிக் குய்த்து. -சிறுபஞ்சமூலம் 3 பொறுத்தலும் பரிதலும் போற்றுவர் அருளோர் 249. தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் 1நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன். -நாலடியார் 58 விதைத்தது தானே விளைந்திடக் காண்போம் 250. வைததனா லாகும் 2வசைவணக்கம் நன்றாகச் செய்ததனா லாகுஞ் 3செழுங்குலமுற் - செய்த பொருளினா லாகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினா லாகும் அறம். -நான்மணிக்கடிகை 101 அருட்கண் நிற்ப தறிவென ஓர்க 251. தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப் பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை 4இருட்கண்ணே நோக்கா திருமையும் 5பெற்றாங் கருட்கண்ணே நிற்ப தறிவு. -அறநெறிச்சாரம் 145 அருள்விளக் கேற்றின் அம்மைக் கிருளிலை 252. மெய்தகளி யாகப் பொறையாந் திரிக்கொளீஇ நெய்தவ மாக நிறைதரப் - பெய்தாங் கருளாம் விளக்கேற்றி யம்மைப்பாற் செல்ல இருள்போய் வெளியாய் விடும். -பாரதம் கறவைபோற் கறக்கக் கதுவிய தருளே 253. அறவிய மனத்த ராகி யாருயிர்க் கருளைச் செய்யிற் பறவையும் நிழலும் போலப் பழவினை யுயிரோ டொட்டா. மறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கு 1நல்லான் கறவையிற் கறக்குந் 2தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம். தன்னுயிர் என்ன மன்னுயிர் ஓம்புக 254. தன்னுயிர் தான்பரிந் தோம்பு மாறுபோல் மன்னுயிர் வைகலு மோம்பி வாழுமேல் இன்னுயிர்க் கிறைவனா யின்ப மூர்த்தியாய்ப் பொன்னுயி ராய்ப்பிறந் 3துய்ந்து போகுமே. - சீவகசிந்தாமணி 2877, 3107 ஆருயிர்க் கெல்லாம் ஓருயிர் ஆகுக 255. ஆருயிர் 4யாதொன் றிடருறு மாங்கதற் கோருயிர் போல வுருகி 5யுயக்கொண்மின் நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத் தீர முடைமை யருளி னியல்வே. -சூளாமணி 2010 ஆருயிர் கட்கெலாம் பேரருள் புரிக 256. ஆற்று மின்னரு ளாருயிர் மாட்டெலாந் தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின் மாற்று மின்கழி மாயமு மானமும் போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர். அருள்பொருள் ஆயின் இருளியல் பின்றே 257. பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும் அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண் இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள். -வளையாபதி 19, 20 28. புலால் மறுத்தல் (ஊன் உண்டலை ஒழிதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 26. ப.பா.தி. 33.) கொல்லா இல்லறம் நல்லியற் றவமாம் 258. கென்றூ னுகருங் கொடுமையை புண்ணினைந் தன்றே யொழிய விடுவானேல் - என்றும் இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கை யுள்ளே 1படுத்தானாந் தன்னைத் தவம். -அறநெறிச்சாரம் 101 ஊனுண வுவப்பார்க் கேனைய வுதவா 259. விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்க ணின்றார் - இடருடைத்தாப் பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக் கற்றடியு ளாழ்ந்து விடல். -பழமொழி 342 ஊனுணாச் சார்பே உம்பருள் உய்க்கும் 260. கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார்வொன் றீவோர் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை யூனுண்டல் செய்யாமை செல்சார் வுயிர்க்கு. -நான்மணிக்கடிகை 38 உடற்புதை கூடாம் ஊனுண் வயிறு 261. துக்கத்துட் டூங்கித் துறவின்கட் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்குங் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு. கால்முரித் துண்டதால் மேல்வரு பழவினை 262. அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநோ யெழுபவே அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால். -நாலடியார் 121, 123 ஊன்சுவை விழைந்தார்க் குது வது என்னே! 263. வாயிற் சுவைவெஃகி மான்கொன்று மீன்கொன்று நாயொத் துழல்வார்க்கு நாவளவே - போயிழிந்தால் இன்னா தினிதென் றறியா ரிதற்காக மன்னாவூன் தின்றல் விடு. -பாரதம் கோறலும் விற்றலும் கொடுமையில் ஒப்பதே 264. தகாதுயிர்கொல் வானின் மிகாமையிலை பாவம் அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும் புகாவலைவி லங்காய்ப் பொறாதுபிற வூன்கொன் றவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும். சுற்றந் தின்பவர் மற்றூன் உண்பவர் 265. பிறவிக் கடலகத் தாராய்ந் துணரின் தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை அறவகை யோரா விடக்கு மிசைவோர் குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவர். ஊன்விழைந் துண்ணா தோம்புக உயிரை 266. உயிர்க ளோம்புமி னூன்விழைந் துண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்ற மிகந்தொரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு மதிகள் போல 1மறுவிலிர் தோன்றுவீர். -வளையாபதி 21, 22, 23 ஊனுண வொழித்தவர் வானவர் ஆவார் 267. ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைதல் நன்றோ ஊன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுறைதல் நன்றோ ஊன்றியிவ் விரண்டி னுள்ளு முறுதீநீ யுரைத்தி டென்ன ஊன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான். புலவுணக் கொடுநோய் பூத்தெழும் பந்துபோல் 268. வெந்தடி தின்ற வெந்நோய் வேகத்தான் மீட்டு மாலைப் பைந்தொடி மகளி ராடும் பந்தென வெழுந்து பொங்கி வந்துடைந் துருகி வீழ்ந்து மாழ்குபு 2கிடப்பர் கண்டாய் கந்தடு வெகுளி வேகக் கடாமுகக் களிற்று வேந்தே. -சீவகசிந்தாமணி 1235, 2765 29. தவம் (உள்ளம் புலன்வழி செல்லாமல் அடங்கித் தன் வயப்பட்டு நிற்றற் பொருட்டு உண்டி சுருக்கலும், கடுவெயிலில் நிற்றலும், கடும்பனியில் நிற்றலும், கடுமழையில் நிற்றலும் முதலிய செயல் களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களுக்குத் துன்பம் நேரிடாது அவற்றைப் பாதுகாத்தல் - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 27. ப.பா.தி. 35.) சமனிலை பேணும் சால்பே தவமாம் 269. தத்தமக்குக் கொண்ட 1குறியே தவமல்ல செத்துக சாந்து படுக்கமன - மொத்துச் 2சகத்தனாய் நின்றொழுகுஞ் சால்பு தவமே நுகத்துப் பகலாணி போன்று. -பழமொழி 339 இன்னா செயாமை இனிய தவமாம் 270. உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கட்செய் யாமை - 3செயிர்நோய் விழைவு வெகுளி யிவைவிடுவ னாயின் 4இழவன் றினிது தவம். -சிறுபஞ்சமூலம் 31 தூய்மையும் வாய்மையும் தோய்வது தவமாம் 271. தூய்மை யுடைமை துணிவாந் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றுந் தவத்திற் றருக்கினார் கோள். -திரிகடுகம் 78 தாக்கும் துயரை நீக்குதல் தவமாம் 272. ஊக்கித்தாங் கொண்ட விரதங்க ளுள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால் நீக்கி நிறூஉ முரவோரே நல்லொழுக்கங் காக்குந் திருவத் தவர். தவநெறி முன்னர்த் தங்கா தவநெறி 273. விளக்குப் புகவிருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின்முன் னில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாந் தீது. -நாலடியார் 57, 51 பாற்படு சான்றோர் பண்புகள் ஆறு 274. 1விளையாமை யுண்ணாமை யாடாமை ஆற்ற உளையாமை யுட்குடைத்தா 2வேறல் - களையாமை நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கி னிவையாறும் பாற்பட்டார் கொண்டொழுகும் பண்பு. காலனைக் கடக்கக் கடைப்பிடி கருமம் 275. அழப்போகான் அஞ்சான் அலறினாற் 3கேளான் எழப்போகான் ஈடற்றா 4ரென்னான் - தொழப்போகான் என்னேயிக் 5காலனொ டேற்பார் தவமுயலார் கொன்னே யிருத்தல் குறை. -ஏலாதி 13, 37 வானகத் துய்க்க வகுத்த உயர்வழி 276. நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் 6தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் 7கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி. -புறப்பொருள் வெண்பாமாலை 168 பிறவாப் பெருநிலை பெறவழி தவமே 277. பொருளொடு போகம் புணர்த லுறினும் அருளுதல் சான்ற அருந்தவஞ் செய்ம்மின் இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர் தெருள லுறினுந் தெருண்மி 8னிதுவே. தவத்தின் மிக்கதோர் தவநெறி இல்லை 278. தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற் செறிதல் உவத்தல் காய்தலொ 1டிலாதுபல் வகையுயிர்க் கருளை நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ. -வளையாபதி 24, 25 சீலவேலி செறித்திடக் காண்க 279. பவளவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதி ரீன்று 2பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா உழவிர்காள் 3மேயுஞ் சீல வேலியுய்த் திடுமி னென்றான். விரதச் செந்நெல் வித்தி விளைக்க 280. ஒன்றாய வூக்கவேர் பூட்டி யாக்கைச் செறுவுழுது நன்றாய்ந்த நல்விரதச் செந்நெல் வித்தி யொழுக்கநீர் குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின் வேலிகாத்தோம்பின் வென்றார்தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோ ருலகீன்றே. -சீவகசிந்தாமணி 379, 962 வையமும் சிறிதே வளர்தவம் நோக்க 281. பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்திற் 4கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை 5விடாது திருவே விடாஅ தோரிவண் விடப்பட் டோரே. மடமயில் பிணித்தோன் சடையினன் இந்நாள் 282. கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து தில்லை யன்ன புல்லென் சடையோ டள்ளிலைத் தாளி கொய்யு மோனே 1இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே. -புறநானூறு 358, 252 எண்வகை மரபின் இசைந்த வாழ்க்கை 283. வரிக்கடை நெடுங்கண் விளங்க 2மேதக மணித்தோடு பெய்து வாண்முகந் திருத்தி நானிலம் வளர்த்த பாவையொடு கெழீஇய கான்யாற்று வருபுன லாடலுந் தேமலர் வல்லிப் பந்தர் வண்டுவா ழொருசிறை நிலமகட் புணருஞ் சேக்கையு மரமுதல் மெல்லுரி வெண்டுகி லுடையுந் தொல்வகைப் படையுழா விளையுளி னுணவு மந்திரத்துச் சுடர்முதற் குலமுறை வளர்த்தலும் வரையாது வருவிருந் தோம்புஞ் செல்வமும் வரைமுதற் காடுகைக் கொள்ளு முறையுளு மென்றிவ் வெண்வகை மரபி னிசைந்த வாழ்க்கை ஐம்பொறிச் சேனை 3 காக்கு மாற்றலொடு வென்றுவிளங்கு 4தவத்தி னரசியற் பெருமை மாக்கட லுடுத்த வரைப்பின் யார்க்கினி தன்றஃ தறியுநர்ப் பெறினே. -ஆசிரியமாலை 30. கூடாவொழுக்கம் (தாம் விட்ட காம இன்பத்தை உரனின்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாதாய தீய ஒழுக்கம் - பரிமே. கூடா ஒழுக்கம் என்பது கொல்லா நலம் பொய்யா ஒழுக்கம் என்பன போல கூடாமை யாகிய ஒழுக்கம் என்னும் பொருள்பட நின்றது. கூடுதலாவது சிற்றின்பச் சேர்க்கை. கூடாமையாவது அச்சேர்க்கை ஒழிதல் - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 28.) தவமறை வொழுக்கம் தமைப்பிணி கயிறே 284. இம்மைத் தவமும் அறமு மெனவிரண்டுந் தம்மை யுடையா ரவற்றைச் சலமொழுகல் இம்மைப் பழியேயு மன்றி மறுமையுந் தம்மைத்தா மார்க்குங் கயிறு. வெயில்விரி போழ்தில் வெளிப்படு விரகர் 285. துயிலும் 1பொழுதே 2தொடுவூண்மேற் கொண்டு வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி அயில்போலுங் கண்ணா யடைந்தார்போற் காட்டி மயில்போலுங் கள்வ ருடைத்து. -பழமொழி 371, 194 சொற்பொறுக் கல்லான் நற்றுற வாளனோ? 286. போர்த்து முரிந்திட்டும் பூசியும் நீட்டியும் ஓர்த்தொரு பான்மறைத் துண்பான்மேய் - ஓர்த்த 3அறமாமேற் சொற்பொறுக்க வன்றேற் கலிக்கண் துறவறம்பொய் யில்லறமே வாய் -சிறுபஞ்சமூலம் 67 கொள்பவை கொடுப்பவை உள்ளகங் காட்டும் 287. துறந்தார் 4துறவா ரெனவறிய லாகுந் துறந்தவர் கொண்டொழுகும் வேடந் - துறந்தவர் கொள்ப கொடுப்பவற்றாற் காணலா மற்றவர் உள்ளங் கிடந்த வகை. -அறநெறிச்சாரம் 43 வேடமென் செய்யும் வேடநெறி யின்றேல் 288. போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகண்மெய் பூசல் கூர்த்தபனி யாற்றுதல்குளித்தழலு ணிற்றல் சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலைய 1ராதல் வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான். -குண்டலகேசி 31. புணர்ச்சி விழையாமை (சிற்றின்பச் சேர்க்கையை விரும்பா திருத்தல். அதனைத் துறந்த பின்னரே துறவுநெறி மேற்கொண்டாராகலின் மீண்டும் கோடல் பிழையாம்.) நாணை மறைத்திடும் நல்லார் நோக்கம் 289. விழுமிழை நல்லார் 2வெருள்பிணை நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும் - தொழுனையுள் மாலையு 3மாலை மயக்குறுத்தா ளஃதாலச் சால்பினைச் சால்பறுக்கு மாறு. -பழமொழி 334 உரையா ஒருநோய் உட்படத் தாக்கும் 290. பரவா வெளிப்படா பல்லார்கட் டங்கா உரவோர்கட் காமநோ யோஒ கொடிதே விரவாருள் நாணுப் படலஞ்சி யாதும் உரையாதுள் ளாறி விடும். அகஞ்சுடு காமம் அழலினும் கொடிது 291. அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம அவற்றினு மஞ்சப் படும். -நாலடியார், 88, 89 வரையாது வைக்கும் வகைதான் என்னே! 292. ஆனை யூற்றின் மீன்சுவையி னசுண மிசையி 4னளிநாற்றத் தேனைப் பதங்க முருவங்கண் டிடுக்க ணெய்து மிவையெல்லாம் கான மயிலின் சாயலார் காட்டிக் கெளவை 1விளைத்தாலும் மான மாந்த ரெவன்கொலோ வரையா தவரை வைப்பதே. -சாந்திபுராணம் உண்ணின் றுருக்கும் கண்ணிலாக் காமம் 293. எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும் உண்ணின் றுருக்கு முரவோருரை கோட லின்றாம் நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங் கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும். காம மிக்குழிக் கருதார் நல்லவை 294. சான்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார் ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார் வான்றாங்கி நின்ற புகழ்மாசு 2படுப்பர் காமன் தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால். பெருங்கா முற்றார் பேயெனத் திரிவார் 295. மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும் பூவென் றெருக்கி னிணர்சூடுப புன்மை 3கொண்டே பேயென் றெழுந்து பிறரார்ப்பவு 4நிற்ப காம நோய்நன் கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயி னக்கால். ஒருநிலை கொள்ளார் பெருநிலைக் காமுகர் 296. நக்கே விலாவி றுவர்நாணுவர் நாணும் வேண்டார் புக்கே கிடப்பர் கனவுந்நினை கையு மேற்பர் துற்றூண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச லில்லார் நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும். விரகில ரென்று விடுத்த பேர்கள் 297. அரசொடு நட்டவ ராள்ப விருத்தி அரவொடு நட்டவ ராட்டியு முண்பர் புரிவளை முன்கைப் புனையிழை நல்லார் விரகில ரென்று விடுத்தனர் முன்னே. -வளையாபதி 26, 27, 28, 29, 30 நடிப்பதை நம்பினார் நாடகம் ஆடுவார் 298. பனிமதி 1பொழிகதிர் பருகு மாம்பல்போல் முனிமதி முகத்தியர் முறுவல் நம்பினார் துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங் கனியநின் றாடுவர் கடையில் காலமே. கோல மஞ்சினார் கொள்வர் துறக்கமே 299. நிழனிமிர் நெடுமதி நிகரில் தீங்கதிர்ப் 2பழனவண் டாமரை 3பனிக்கு மாறுபோற் குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார் தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே. காதல் மிகுங்கால் கற்றது கைகொடா 300. காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால் தாது துற்றுபு 4தங்கிய வண்டனார்க் கேத மிற்றென வெண்ணுமென் னெஞ்சரோ. இருதலைப் பயனும் உய்தா நிலையர் 301. எரிதலைக் கொண்ட காமத் தின்பநீர்ப் புள்ளி யற்றால் 5பிரிவினிற் பிறந்த துன்பம் பெருங்கட லனைய தொன்றால் உருகிநைந் துடம்பு நீங்கி னிம்மையோ டும்மை யின்றி இருதலைப் பயனு மெய்தா ரென்றியாங் கேட்டு மன்றே. -சீவகசிந்தாமணி 1554, 1555, 1632, 1536 நெருப்பை அழிக்க நெருப்பால் ஆகுமோ? 302. வகையெழிற் றோள்க ளென்று மணிநிறக் குஞ்சி யென்றும் புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர் தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயாந் துடைத்து மென்பார் அகையழ லழுவந் தன்னை நெய்யினா லவிக்க லாமோ. புனலைக் காக்கப் புனலால் ஆகுமோ? 303. அனலென நினைப்பிற் 1பொத்தி யகந்தலைக் கொண்ட காமக் கனவினை 2யுவர்ப்பு நீராற் கடையற வவித்து மென்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார் புனலினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார். -குண்டலகேசி 5, 6 விடமே அமுதென விழைவார்க் கென்னுரை? 304. வெவ்விட மமுதென விளங்குங் கண்ணினார்க் கெவ்விட முடம்பினி லிழிக்கத் தக்கன அவ்விட மாடவர்க் கமிர்த மாதலால் உய்விடம் யாதினி யுரைக்கற் 3பாலையே. -நாரதசரிதை 32. கள்ளாமை (பிறர் உடைமையாய் இருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதுதலும் செய்தலோடு ஒத்தலின் கள்ளாமை என்றார் - பரிமே. யாதொரு பொருளையும் களவிற் கொள்ளாராதல் மணக். இ.பெ.அ: திருக். 29. நீதிக். 17. இ.சா.அ: ப.பா.தி. 22. (களவு)) களவைக் கடிக, கடனாக் கொண்டே 305. முளரிமுக நாகமுளை யெயிறுழுது 1கீற அளவிறுயர் செய்வரிவண் 2மன்னவர்க ணாளும் விளைவரிய மாதுயரம் வீழ்கதியு ளுய்க்கும் களவுகட னாகக் கடிந்திடுதல் சூதே. -சீவகசிந்தாமணி 2870 களவு விழைவார் கடுநர குறுவார் 306. கிளருமெரி விடமெழுதல் விழுதல்முத லாய அளவிலரு 3நரகில்வரு நவைபலவு 4மஞ்சின் உளமொழிமெய் நெறியொழுகி யுறுபொருள் சிதைக்குங் களவுவிழை வொழிதல்கட னாக்கனனி நன்றே. கிளையும் புகழும் கெடுக்கும் களவே 307. பிளவுகெழு வெழுநரக மெரிகொளுவ 5லீர்தல் இளையவுடல் தடிவொடுறு துயரம்விளை விக்கும் 6கிளையறவு தருமரிய புகழினை யழிக்குங் களவுநனி விடுதலற மென்றுகரு தென்றான். -சாந்தி புராணம் களவு கருதின் வளைய வருத்தும் 308. களவி னாகிய காரறி வுள்ளன்மின் விளைவில் வெவ்வினை 7வீவில் கதிகளுள் உளைய வுள்ளழித் தொன்றல வேதனை வளைய வாங்கி வருத்த முறுக்குமே. -சூளாமணி ஓட விடாமல் உலைக்கும் களவே 309. பீடில் செய்திக ளாற்கள விற்பிறர் வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக் கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத் தோட லின்றி 1யுலையக் குறைக்குமே. -வளையாபதி 31 33. பொய்யாமை (பொய் சொல்லாதிருத்தல். பொய்யாவது உள்ளிடு இன்மை. அஃதாவது யானை உண்ட விளங்கனி போல்வது. அஃது இல்லாமை யோடு ஒக்கும் - திருக். 183 நாகை. சொ. தண்ட. பொய் என்பது பொந்து எனப் பொருள்படும். அஃதாவது வெளியே ஒரு பொருள்போல் தோன்றி உள்ளே வெறும் புரையாய் இருப்பது; இங்ஙனமே ஒருவர் நினைவுஞ் சொல்லும் செயலும் ஆராய்ந்து காண்பார்க்கு உள்ளீடு இல்லாதனவாய்ப் புலப்படு மாயின் அவை பொய்யென்று சொல்லப்படும். உள்ளீடு இல்லாப் புரை பயன்படாமை போலப் பொய்யான நினைவு சொற் செயல் களும் பயன்படாமையே அன்றித் தீவினையையும் பயப்பனவாம் திருவாசக விரிவுரை. மறைமலை. 65-6 இ.பெ.அ: நீதிக். 10 இ.சா.அ: திருக். 30. ப.பா.தி. 36. (வாய்மை) நாலடி. 12 (மெய்ம்மை)) வையகம் பெறினும் பொய்யுரை யாடேல் 310. தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க 2தன்னுடம்பின் ஊன்கெடினு முண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த வையக மெல்லாம் பெறினு முரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல். -நாலடியார் 80 பொய்யுரை வாயால் மெய்யறம் தொலையும் 311. இம்மை நலனழிக்கு மெச்சங் குறைபடுக்கும் அம்மை யருநரகத் தாழ்விக்கும் - மெய்ம்மை அறந்தேயும் பின்னு மலர்மகளை நீக்கும் மறந்தேயும் 1பொய்யுரைக்கும் வாய். -சிறுபஞ்சமூலம் புண்பா டகலப் பொய்யை நீக்குக 312. பொய்யி னீங்குமின் 2பொய்யின்மை பூண்டுகொண் டைய மின்றி யறநெறி யாற்றுமின் வைகல் வேகனை வந்துற 3லொன்றின்றிக் கெளவை யில்லுல கெய்துதல் கண்டதே. பொய்யாற் கெடுதல் பொய்யிலை கடிக 313. கல்வி யின்மையும் கைப்பொருள் போகலும் நல்லில் செல்லல்க ளானலி வுண்மையும் பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுதல் ஐய மில்லை யதுகடிந் தோம்புமின். -வளையாபதி 32, 33 பொய்யுரை வேண்டா; புறத்திடுக இன்னே 314. மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்கள் ஐயமிலை நின்றபுகழ் வையகத்து மன்னு மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர் பொய்யுரையும் வேண்டா புறத்திடுமி னென்றான். -சீவகசிந்தாமணி 2863 கடுந்துயர் விலக்கக் களைந்திடுக பொய்ம்மை 315. மலங்கிமதி யின்றியயர் வெய்திமயல் கூர நலங்கியறி யாதுதுய ரெய்திநனி வாடும் விலங்குறு கடுந்துயர் விலங்குதல் விரும்பிற் புலன்கொள்வழி பொய்யுரை புறத்திடுமி னென்றான். -சீவகசிந்தாமணி 34. வெகுளாமை (சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட்டு. உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை - பரிமே. இ.பெ.அ: திருக். 31. பழமொழி. 7. இ.சா.அ: நாலடி. 7. (சினமின்மை) ப.பா.தி. 27 (சினம்)) முட்டிய பசுவை முட்டுவார் உளரோ? 316. ஆய்ந்த வறிவின ரல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்தெதிர் 1சொல்லுபவோ கற்றறிந்தார் - தீந்தேன் முசுக்குத்தி நக்கு மலைநாட தம்மைப் பசுக்குத்திற் குத்துவா ரில். -பழமொழி 57 ஈமிதித் தேறக் காய்வார் எவரே? 317. மதித்திறப் பாரு மிறக்க மதியா மிதித்திறப் பாரு மிறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் காயுங் கதமின்மை நன்று. கௌவிய நாயைக் கௌவினார் யாரே? 318. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயான் மீட்டு. வேர்த்து வெகுளார் விழுமிய சான்றோர் 319. சேர்த்து 1நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - 2ஓர்த்ததனை உள்ளத்தா னுள்ளி யுரைத்துரா யூர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாங் கீழ். -நாலடியார் 61, 70, 64 அனைத்தும் சுற்றமாய் அறிந்தால் வெகுள்வரோ? 320. உழந்துழந்து கொண்ட வுடம்பினைக்கூற் றுண்ண இழந்திழந் தெங்கணுந் 3தோன்றிச் - சுழன்றுழன்ற சுற்றத்தா ரல்லாதா ரில்லையா னன்னெஞ்சே செற்றத்தாற் செய்வ 4தெவன். நினைவால் விளைவவே நெஞ்சில் நோய்கள் 321. தன்னை யொருவ னிகழ்ந்துரைப்பிற் றானவனைப் பின்னை யுரையாப் 5பெருமையான் - முன்னை வினைப்பயனு மாயிற்றா 6லென்றதன்கண் மெய்ம்மை நினைத்தொழிய 7நெஞ்சினோ யில். -அறநெறிச்சாரம் 66, 86 வெகுள்வார்க் கெதுவும் விளங்கத் தோன்றா 322. கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன் றுற்றார்முன் தோன்றா 8வுசாவுதல் - தெற்றென அல்ல புரிந்தார்க் கறந்தோன்றா வெல்லாம் வெகுண்டார்முன் தோன்றா கெடும். -நான்மணிக்கடிகை 8 35. இன்னா செய்யாமை (தனக்கு இன்னாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமை - மணக். தனக்கு ஒரு பயன் நோக்கியாதல். செற்றம்பற்றியாதல், சோர் வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை - பரிமே. இ.பெ.அ: திருக். 32. நீதிக். 14. இ.சா.அ: ப.பா. தி. 31. (பிறர்க்குத் துன்பம் செய்யாமை) நீதிக். 12. (இன்னா சொல்லாமை)) தனக்கின்னா என்பவை இன்னா பிறர்க்கும் 323. வினைப்பய னொன்றின்றி வேற்றுமை கொண்டு நினைத்துப் 1பிறர்பனிப்ப செய்யாமை வேண்டும் புனப்பொன் னவிர்சுணங்கிற் பூங்கொம்ப ரன்னாய் தனக்கின்னா வின்னா பிறர்க்கு. அடைத்துப் புடைத்தால் கடியா தோநாய்? 324. ஆற்றா ரிவரென் றடைந்த தமரையுந் தோற்றத்தா 2மெள்ளி நலியற்க - போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் 3கௌவி விடும். பொறுப்பரென் றெவர்க்கும் புரியேல் இன்னா 325. பூவுட்குங் கண்ணாய் பொறுப்ப ரெனக்கருதி யாவர்க்கே யாயினு மின்னா செயல்வேண்டா தேவர்க்குங் கைகூடாத் திண்ணன்பி னார்க்கேயும் 4நோவச் செயினோன்மை யில். -பழமொழி 44, 45, 43 தம்மைப் போலப் பிறரையும் நினைக 326. இறப்ப நுமக்கடுத்த வெவ்வநோ யாவும் பிறர்க்குமஃ தாமென்று கொண்மின் - உறக்கருதி எவ்வா 5றுமக்குறுதி யெண்ணுதிர்நீ ரெல்லார்க்கும் அவ்வாறே யெண்ணல் அறம். -பாரதம் 36. கொல்லாமை (யாதோர் உயிரையும் கொல்லாமை - மணக். உயிரை வருத்துதல் கொல்லாமல் கொல்லுதல் எனப்படும் ஆகலின் அதனை முன் விலக்கிப் பின் கொல்லுதலை விலக்கினார் - நாகை. சொ.தண்ட. இ.பெ.அ: திருக். 33. ப.பா.தி. 32.) கைவருங் கொலையர் ஐவரும் ஆவர் 327. கொன்றான் கொலையை யுடம்பட்டான் கோடாது கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்காற் - கொன்றதனை அட்டா னிடவுண்டா னைவரினு 1மாகுமெனக் 2கட்டெறிந்த பாவங் கருது. எல்லாங் கிடைப்பினும் கொல்லார் நல்லோர் 328. நசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர் மிசைகொல்லார் வேளாண்மை கொல்லார் - இசைகொல்லார் பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார் என்பெறினுங் கொல்லா ரியைந்து. -சிறுபஞ்சமூலம் 70, 48 கொல்வார்க் கில்லையோ கொல்லப் படுதல்? 329. 3இந்நோ யெமக்குமுண் டென்னலா ரெவ்வுயிரும் முன்னோவக் கொல்லு முழுமக்கள் - எந்நோயும் பண்ணப் படுநரகிற் 4பாவியரிற் பாவியரென் றெண்ணப் படுவ ரிகழ்ந்து. கொல்லா அறத்துள் எல்லாம் அடங்கும் 330. ஆனை யடியு 5ளடங்காத வில்லையால் ஏனைய வற்றடிகள் யாவையும் - 6ஊனுயிரைக் கொல்லா வறத்தின் கொழுநிழலுட் பட்டடங்கும் எல்லா வறனு மியைந்து. -பாரதம் கொலையோ டொன்றிய குற்றம் நான்கு 331. அலைப்பான் 1பிறிதுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம். -நான்மணிக்கடிகை 26 அருநர கெய்த அவாவும் அறுவர் 332. கொன்றவன் குறைத்தவன் கொணர்ந்து விற்றவன் ஒன்றிய பொருள்கொடுத் துவந்து கொண்டவன் 2நன்றிது வென்றவன் நாவிற் பெய்தவன் என்றிவ ரறுவரு நரக மெய்துவார். -இராமாயணம் உறுபெருந் துன்ப உயிர்க்கொலை வேண்டா 333. அறம்பெரிய கூறின் னலங்கலணி வேலோய் 3மறம்புரிய நெஞ்சம்வழி யாப்புகுதந் தீண்டிச் செறும்பெரிய தீவினைகள் 4சென்றுகடி தோடி உறும்பெரிய துன்ப முயிர்க்கொலையும் வேண்டா. கொல்லுயிர் அழுகை சொல்லுவ தாரிடம்? 334. மங்கை மனாவனைய மென்சூல் மடவுடும்பு செங்கண் வரிவரால் செந்நீ ரிளவாளை வெங்கருனை புல்லுதற்கு வேறுவே றாக்குறைப்ப 5அங்காந்து நோக்குநோக் கார்கண்ணே 6நோக்குமே. செய்வினை எவரை உய்ந்திட விடுமே? 335. வயிரமுள் நிரைத்து நீண்ட வார்சினை யிலவ மேற்றிச் செயிரிற்றீ மடுப்பர் கீழாற் 1சென்னுனைக் கழுவி லேற்றி மயிருக்கொன் றாக வாங்கி யகைத்தகைத் திடுவர் மன்னா உயிரைப்பே துறுக்கு மாந்த ருயிரைப்பே துறுக்கு மாறே. கொலைஞர் கும்பியுள் கொந்தழல் புகுமாம் 336. சிலையினால் மாக்கள் கொன்று செழுங்கடல் வேட்ட மாடி வலையினான் மீன்கள் வாரி வாழுயிர்க் கூற்ற 2மாய கொலைஞரைக் கும்பி தன்னுட் 3கொந்தழ 4லழுத்தி யிட்டு 5நலிகுவர் நாளு நாளு நரகரை நாம வேலோய். -சீவகசிந்தாமணி 2868, 2781, 2766, 2770 அலமரல் ஒழிய அகல்க கொலையை 337. உலகுடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும் அலகிறுய ரஞ்சினுயி ரஞ்சவரும் வஞ்சக் கொலையொழிமி னென்றுநனி கூறின ரறிந்தார். -வளையாபதி 34 கொலையில் நீங்குக; கொள்க தவநெறி 338. கொன்றுயிர் நடுங்கச் சென்று கொலைத்தொழிற் கருவி யேந்தி நின்றெரி நுடங்கு கண்ணாற் பாவமே நினைந்து செத்தார் சென்றெரி நரகில் வீழ்வர் செவ்வனே துன்ப மஞ்சி நன்றியில் கொலையி னீங்கி நற்றவம் புரிமி னென்றான். கொலையை நீக்கலே கூறிய அறமாம் 339. கொலையி னீங்குமின் கொண்மி னுலகினுள் தலைவ னல்லறந் தக்க தெனவுவந் தலையி னீங்கிய வவ்வுல கெய்துதல் 1முனைவர் சொன்ன 2முடிவிது வாகுமே. -சூளாமணி 37. செல்வ நிலையாமை (செல்வம், இன்ப நுகர்ச்சிகளுக்குக் காரணமாகிய பொருள் களினுடைய ஈட்டம். இது யாவர்மாட்டும் ஒரு படிப்பட நில்லா தாகிய நிலையாமை கூறப்பட்டது. செல்வங்கொண்டு அறஞ் செய்ய வேண்டுதலின் எல்லாரிடத்தும் உளதாகிய செல்வங்கள் எவ்வாற்றானும் நில்லாமை காட்டி அறஞ்செய்வித்தல் கருத்தாதலின் என்றவாறு -பதுமனார். இ.பெ.அ: நாலடி. 1. ப.பா.தி. 39. இ.சா.அ; திருக். 34. ப.பா.தி. 37. நீதிக். 71. (நிலையாமை)) உயர்வும் தாழ்வும் உந்துதல் வினையால் 240. யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினையுவப்ப வேறாகி வீழ்வர்தாங் கொண்ட மனையாளை 3மாற்றார் கொள. வழங்காப் பொருளோ வறிதே ஒழியும் 341. உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும். ஈட்டிய தேட்டை ஈப்போல் இழப்பார் 342. உடாஅது முண்ணாதுந் தம்முடம்பு செற்றுங் 1கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர் வான்றோய் மலைநாட உய்த்தீட்டுந் தேனீக் கரி. மின்னல் போல மேவிய பொருள்போம் 343. செல்வர்யா மென்றுதாஞ் செல்வுழி யெண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - 2எல்லிக் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி மருங்கறக் கெட்டு விடும். -நாலடியார் 3, 9, 10, 8 நல்வினை போயின் நடந்திடும் திருவே 344. புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக் கண்ணிலர் துறந்திடுங் கணிகை 3மார்கள்போல் எண்ணில 4ளிகழ்ந்திடும் யாவர் தம்மொடும் நண்ணிய நண்பிலள் நங்கை வண்ணமே. அடிதொழ வாழ்ந்தோன் பொடிமிசைப் புரள்வான் 345. அடிமிசை யரசர்கள் 5வணங்க வாண்டவன் பொடிமிசை யப்புறம் புரள விப்புறம் இடிமுர சதிரவொ ரிளவல் தன்னொடுங் 6கடிபுகு மவளது கற்பின் வண்ணமே. நாலு மொருவன் நக்குதேன் வாழ்வு 346. யானை துறப்ப வரவுறை யாழ்குழி 7நானவிர்ப் பற்றுபு நாலு மொருவனோர் 8தேனெ யிழிதுளி 9நக்குந் திறத்தது 10மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ. ஆரொடும் உரிமை அமையாச் செல்வம் 347 வெற்றிவேல் மணிமுடி வேந்தர் தம்மொடும் உற்றதோ ருரிமைய ளல்லள் யாரொடும் 1பற்றிலள் பற்றினர் 2பால ளன்னதால் முற்றுநீர்த் 3துகிலிடை முதுபெண் ணீர்மையே. -சூளாமணி 2084, 2091, 1989, 2090 நிலையாச் செல்வ நிலையை நினைமின் 348. முல்லை முகைசொரிந்தாற் போன்றினிய பாலடிசில் 4மகளி ரேந்த நல்ல கருனையால் நாள்வாயும் பொற்கலத்து நயத்துண் டார்கள் அல்ல லடைய வடகிடுமி னோட்டகத்தென் 5றயில்வார்க் கண்டுஞ் செல்வம் நமரங்காள் நினையன்மின் செய்தவமே நினைமின் கண்டீர். நமரங்காள் நாளும் நல்லறம் நினைமின் 349. வண்ணத் துகிலுடுப்பின் வாய்விட் டழுவதுபோல் வருந்துமல்குல் 6நண்ணாச் சிறுகூறை பாகமோர் கைபாக முடுத்து நாளும் அண்ணாந் தடகுரீஇ யந்தோ வினையேயென் 7றயர்வார்க் கண்டும் நண்ணன்மின் செல்வம் நமரங்காள் நல்லறமே நினைமின் கண்டீர். பிறவி ஒழிக்கப் பேசிய வழிகாண் 350. நல்வினை யென்னும் நன்பொற் கற்பக மகளி ரென்னும் பல்பழ பிணிக்கொம் பீன்று பரிசில்வண் டுண்ணப் பூத்துச் செல்வப்பொற் சிறுவ ரென்னுந் தாமங்கள் 1தாழ்ந்து நின்ற தொல்கிப்போம் பாவக் காற்றி னொழிகவிப் 2பிறவி யென்றான். -சீவகசிந்தாமணி 2623, 2625, 2726 துறவு பெற்றார்பிறவி அற்றார் 351. வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங் கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவர் எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவோ செய்குவம் எனிற்பொருள் ஓய்யென ஒழியும் 252. ஒழிந்த பிறவற னுண்டென்பா ருட்க வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தார் அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் 3பவரே. இன்மையும் இழிவாம் உடைமையும் அச்சமாம் 353. இன்மை 4யிளிவாம் உடைமை யுயிர்க்கச்சம் மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மை யுறுக்கும் புரையி லரும்பொருளைத் துன்னா தொழிந்தார் துறவோ விழுமிதே. ஈண்டுதல் அரிதாம் இழப்போ எளிதாம் 354. ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே. இல்லதும் உள்ளதும் இசைப்பது கேடே 355. இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற் கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர் இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும் புல்லென்று காட்டும் புணர்வது மன்றே. -வளையாபதி 35, 33 எண்ணிக் கழிக்கும் இடர்மிகு நாட்கள் 356. பெற்றவை பெற்றுழி யருந்திப் பின்னரும் மற்றுமோ ரிடவயின் வயிறு தானிறைத் திற்றைநாள் 1கழித்தன மென்று கண்படூஉம் ஒற்றைமா மதிக்குடை யரசு முண்டரோ. -நாரதசரிதை நேற்றும் இன்றும் நிலையிலா மாற்றம் 357. அரையது துகிலே மார்பின தாரம் முடியது முருகுநாறுந் தொடையல் புடையன பால்வெண் கவரியின் கற்றை மேலது மாலை தாழ்ந்த மணிக்காற் றனிக்குடை முன்னது முரசுமுழங்கு தானை யிந்நிலை இனைய செல்வத் தீங்கிவர் யாரே தேவ ரல்ல ரிமைப்பதுஞ் செய்தனர் மாந்த ரேயென மயக்கம் நீங்கக் களிற்றுமிசை வந்தனர் நெருந லின்றிவர் பசிப்பிணி காய்தலி னுணங்கித் துணியுடுத்து மாசுமீப் போர்த்த யாக்கையொடு தாமே 2யொருசிறை யிருந்தனர் மன்னே. -ஆசிரியமாலை 38. இளமை நிலையாமை (இளமை என்பது குழந்தைப் பருவம். இப் பருவத்தின் நிலையாமை கூறியது இந்தப் பருவத்திலே துறத்தல் பயனுண்டென்பது தோன்று தற்காம் - தருமர். இ.பெ.அ: நாலடி. 2.) இளமையில் துறந்தார் இயல்பை அறிந்தார் 358. நரைவரு மென்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் - 1புரைதீர்ந்த மன்னா விளமை மகிழ்ந்தாரே கோலூன்றி இன்னாங் கெழுந்திருப் பார். மன்னா மகிழ்ச்சி துன்னார் அறிவர் 359. வெறியார் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் தறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்க ணில். அம்மனைக் கோலளாம், அழகியாய் அணங்கினோள் 360. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா விறக்கு மிவள்மாட்டுங் - காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று. -நாலடியார் 11, 16, 14 தொடக்க இன்பமும் முடிவுத் துன்பமும் 361. கடிமாலை சூடிக் கருப்பூர முக்கித் தொடைமாலை 2மென்முலையார் தோள்தோய்ந்த மைந்தர் கடைமாலை மற்றவரே 3கண் புதைப்பச் செல்லும் நடைமாலைத் திவ்வுலகம் நன்றரோ நெஞ்சே. தானமும் தவமும் தாழா தாற்றுக 362. முருந்தனைய தூமுறுவல் முற்றிழையார் சேரி இருந்திளமைக் கள்ளுண் டிடைதெரித லின்றிக் கருந்தலைகள் வெண்டலைக ளாய்க்கழியு முன்னே அருந்தவமுந் தானமும் 1ஆற்றுமின்கள் கண்டீர். அழகு மாட்சியும் அழிவு வீழ்ச்சியும் 363. மைதிரண்ட வார்குழல்மேல் வண்டார்ப்ப 2மல்லிகைநன் மாலை சூடிக் கைதிரண்ட வேலேந்திக் காமன்போற் காரிகையார் மருளச் 3சென்றார் ஐதிரண்டு கண்டங் குரைப்பவோர் தண்டூன்றி 4யறிவிற் றள்ளி நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு மிளமையோ நிலையா தேகாண் -சீவகசிந்தாமணி 1574, 2619, 2626 அணுகி நின்றவர் அகல்வதும் என்னே! 364. இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமேல் அன்புருகு நல்லா ரவர்தோள்மேற் றுஞ்சினார் தம்புலன்கள் குன்றித் தளரத்தங் 5காதலார் அன்புருகு கண்புதைத் தாங்ககல்வர் நெஞ்சே. நீனிறம் ஏனோ பானிறம் ஆயது? 365. நீனிறங் கொண்ட வைம்பால் நிழல்மணி யுருவம் நீங்கிப் பானிறங் 6கொண்டு வெய்ய படாமுலை பையிற் 7றூங்கி வேனிற மழைக்கண் தாமு மிமைகுறைந் 8தழுகி மேனி தானிறங் கரக்குங் காலந் தையலீர் மெய்ய தன்றே. ஊன்மரச் சோலைக் குறுபிணி செந்தீ 366. ஊன்சே ருடம்பென்னு மோங்கல் மரச்சோலை தான்சேர் பிணியென்னுஞ் செந்தீக் கொடிதங்கிக் கான்சேர் கவினென்னுங் காமர் மலர்வாடத் தேன்சேர் 1வரைமார்ப தீத்திட் டிறக்குமே. -சீவகசிந்தாமணி 1576, 2940, 2797 நாற்ப திகக்க நரைத்தூ தெய்தும் 367. வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா நாற்ப திகந்தாம் நரைத்தூதும் வந்ததினி நீத்தல் துணிவாம் நிலையா திளமையே. -வளையாபதி 40 நினைக்க இரக்கம் நேரும் இளமை 368. இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்வுறு பாலைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு 2மகளிரொடு 3கைபிணைத்துத் தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையென லறியா மாயமி லாயமோ டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் 4படிகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே. -புறநானூறு 243 இன்ப இளமை இரிந்ததும் யாண்டோ? 369. யாணர் வரவின் மேனா ளீங்கிவன் இளமைச் செவ்வி நயந்த பேதையர் காத லுண்கண் வருபனி நீங்கி இன்னுந் துயில்கொண் டிலவே யின்றிவன் போர்வை பசையற வுணங்கிப் பாணர் பழந்தலைச் சீர்யாழ் போலக் குரலழிந்து 1நரம்புமடித் தியாத்த யாக்கை மூப்புறப் பதிகெழு மூதூர் மன்றத்துப் பொதியிற் புறஞ்சிறைச் சார்ந்தனன் மன்னே. -ஆசிரியமாலை 39. யாக்கை நிலையாமை (யாக்கை என்பது உடல். அவ் யாக்கை நிலையாமை அறிந்து அறத்தின் முயலும்படிக்கு அறிவுறுத்தியது - தருமர். இ.பெ.அ: நாலடி. 3. ப.பா.தி. 38.) துஞ்சின ரல்லால் எஞ்சினார் எவரே? 370. மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினா ரிவ்வுலகத் தில். அன்றோ மணப்பறை இன்றோ பிணப்பறை! 371. மன்றங் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் கங்கே பிணப்பறையாப் - பின்றை ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமா மாண்டார் மனம். நின்றவன் சென்றான் நிலைமை இன்னதே 372. புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றா னெனப்படுத 1லான். வருவார் போவார் வளர்மரப் புட்போல் 373. கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. -நாலடியார் 21, 23, 29, 30 இன்று வருமோ? நாளை வருமோ? 374. ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து மாயா நிதிய மனைச்செறீஇ - யீயா திறுகப் பொதியன்மி னின்றோடு நாளைக் 2குறுகப் படுமரோ கூற்று. -புறப்பொருள் வெண்பாமாலை 270 சென்ற நாள் எண்ணலாம்; நின்றநாள் எத்துணை? 375. சென்றநா ளெல்லாஞ் சிறுவிரல்வைத் தெண்ணலாம் நின்றநாள் யார்க்கு முணர்வரிது - 3என்றொருவன் நன்மை புரியாது 4நாளுலப்ப விட்டிருக்கும் 5புன்மை பெரிது புறம். -அறநெறிச்சாரம் 18 ஊரொடு பேரை உரைக்க ஒண்ணுமோ? 376. தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித் 6திலகவெண் குடையோய் ஈங்கி தன்றியு மிமையவ ரமையலர்க் கடந்த தாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும் யாங்க ணாரவ ரூரொடு பேரெமக் குரையாய். வயிற்றிலும் அழியும்; வந்தும் அழியும் 377. இன்ன தன்மையி னருமையி னெய்திய பொழுதே பொன்னும் வெள்ளியும் 1புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி மின்னு மொக்குளு மெனநனி வீயினும் வீயும் பின்னை வெண்ணெயிற் 2றிரண்டபின் பிழைக்கவும் பெறுமே. ஊனொடும் அழியும்; உருவொடும் அழியும் 378. வெண்ணெ யாயது வீங்குபு கூன்புற யாமை வண்ண மெய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்கா தொண்மை வாண்மதி யுருவொடு திருவெனத் தோன்றிக் கண்ண 3னாரழக் கவிழினுங் கவிழுமற் றறிநீ. வளர்ந்தும் அழியும்; வாழ்ந்தும் அழியும் 379. அழித லின்றியங் கருநிதி யிரவலர்க் கார்த்தி 4முழுதும் பேர்பெறு மெல்லையுள் முரியினு முரியும் வழுவில் பொய்கையுள் மலரென வளர்ந்துமை யாடிக் கெழீஇயி னாரொடுங் கிளையழக் கெடுதலுங் கெடுமே. அறிவிற் றுறைபோய் அழியினும் அழியும் 380. கெடுத லவ்வழி யில்லெனிற் கேள்விகள் துறைபோய் வடிகொள் கண்ணியர் மனங்குழைந் தனங்கனென் றிரங்கக் கொடையுங் கோலமுங் 1குழகுந்தம் மழகுங்கண் 2டேத்த விடையிற் செல்வுழி விளியினும் விளியுமற் றறிநீ. இன்புறு காலையில் இறப்பதும் கூடும் 381. எரிபொன் மேகலை யிலங்கரிச் சிலம்பொடு சிலம்பும் அரிபொற் கிண்கிணி யணியிழை 3மடந்தையர்ப் புணர்ந்து தெரிவில் போகத்துக் கூற்றுவன் செகுத்திடச் சிதைந்து முரியும் பல்சன முகம்புடைத் தகங்குழைந் தழவே. பிணிப்புலி பாயுமுன் பெறுக துறவே 382. கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குறித்துக் காதல் மக்களைக் கண்டுவந் தினிதினிற் 4கழிப்பப் பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் 5பிணமாம் ஓத மாக்கட லுடைகலத் தவருற்ற துறவே. மூப்பு வருமுன் முனைக துறவில் 383. காமம் பைபயக் 6கழியத்தங் கடைப்பிடி சுருங்கி ஊமர் போலத்தம் முரையவிந் துறுப்பினி லுரையாத் தூய்மை 7யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி ஈம மேறுத லொருதலை யிகலமர் கடந்தோய் - சீவகசிந்தாமணி 2761, 2754, 2755, 2756, 2757, 2758, 2759, 2760 மரணமே கனியும் மாதுயர் வாழ்வு 384. பேதைமை யென்னும் வித்திற் பிறந்துபின் வினைக ளென்னும் வேதனை மரங்கள் நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட் டவலம் பூத்து மாதுய ரிடும்பை காய்த்து மரணமே 1கனியு மன்றே. இறந்த நாளை எவரே மீட்பார் 385. பிறந்துநாம் பெற்ற வாழ்நா ளித்துணை யென்ப தொன்றும் அறிந்திலம் வாழ்து மென்னு மவாவினு ளழுந்து கின்றாம் கறந்துகூற் றுண்ணு ஞான்று 2கண்புடைத் திரங்கி னல்லால் இறந்தநாள் யாவர் மீட்பா ரிற்றெனப் பெயர்க்க லாமோ. குடிசை பிரியுமுன் கொடுத்துண நினைமின்! 386. உடற்றும் பிணித்தீ யுடம்பினுயிர் பெய்திட் டடுத்துணர்வு நெய்யாக வாற்றறுவை யாகக் குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர். அச்சிறும் முன்னர் அறிவோ டூர்மின் 387. உழந்தாலும் புத்தச்சொன் றிட்டூர்தல் தேற்றா 3திழந்தார் பலரா 4லிடும்பைநீர் யாற்றுள் அழுந்துமா லப்பண்டி யச்சிறா முன்னே 5கொளுஞ்சீலங் கூலியாக் கொண்டூர்மின் பாகீர். -சீவகசிந்தாமணி 1389, 2616, 2620, 2621 அழியும் பொருள்கட் கழிதல் வேண்டா 388. போதர வுயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனும் ஊதிய மென்று கொள்வ ருணர்வினான் மிக்க நீரார் ஆதலா னழிதன் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா காதலா லழுது மென்பார் கண்ணனி களைய லுற்றார். கூற்றுவன் இரக்கம் கொள்வதோ இல்லை 389. அரவின மரக்க ராளி யவைகளுஞ் சிறிது தம்மை மருவினாற் றீய வாகா வரம்பில்கா லத்து ளென்றும் பிரிவில மாகித் தன்சொற் பேணியே யொழுகு நங்கட் கொருபொழு திரங்க மாட்டாக் 1கூற்றின்யா ருய்து மென்பார். நாளும் நாளும் நாமே சாகிறோம் 390. பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங் காளையாந் தன்மை செத்துங் காமுறு மிளமை செத்தும் மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி நாளுநாட் சாகின் 2றாமால் நமக்குநா மழாத தென்னோ. குறுகிய நாளெலாம், கூற்றுவன் வாளே 391. கோள்வலைப் 3பட்டுச் சாவாங் கொலைக்களங் குறித்துச் சென்றே மீளினு மீளக் கண்டு மீட்சியொன் றானு மில்லா நாளடி யிடுதல் தோன்று நம்முயிர் பருகுங் கூற்றின் வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின் றோமோ. -குண்டலகேசி 7-10 தோற்றம் பின்னே காத்தல் முன்னே 392. உள்ளது கரக்குமிக் கள்ள யாக்கை 1மேம்படு குற்ற மூன்றொடு வழங்கலின் உண்டிநல் லரசு தண்டத்தின் வகுத்த நோன்பிணி யகப்பட் டிருப்பினுந் தோன்றுவது பின்னர்க் காப்பது முன்னே. -ஆசிரியமாலை 40. பல்வகை நிலையாமை (செல்வம், இளமை, யாக்கை என்பன அன்றிப் பல்வேறு நிலையாப் பொருள்களும் உள. அவற்றை யெல்லாம் ஒருங்கறிந்து, நிலைபேறு அடையத் தக்க வழியை நாடுதற்காகப் பல்வகை நிலையாமை கூறப்பெற்றது. இ.சா.அ: திருக். 34. ப.பா.தி. 37. நீதிக். 71 (நிலையாமை)) நில்லா உலகம் புல்லிய நெறித்தே 393. சாவாத வில்லைப் பிறந்த வுயிரெல்லாந் தாவாத வில்லை வலிகளும் - மூவா 2இளமை யியைந்தாரு மில்லை வளமையிற் கேடின்றிச் சென்றாரு மில். -நான்மணிக்கடிகை 77 நிலையா தவற்றை நினைப்பிற் களிப்பரோ? 394. பலதிரண்ட செல்வத்தைப் பார்க்கிற் கனாவாம் மலர்திரண்டாற் போலிளமை வாடுஞ் - சிலநிகழ்ந்த மின்னொக்கும் வாழ்நா ளிவையிற்றை மெய்யென்றிட் டுன்னிக் களிப்பா ருளர். -பாரதம் கூற்றடி வாழ்வாம்; போற்றுக அறநெறி! 395. இன்றுளா ரின்றேயு மாய்வ 1ருடையதூஉம் 2அன்றே 3பிறருடைய தாயிருக்கும் - நின்ற கருமத்த தல்லாத கூற்றின்கீழ் வாழ்வார் தருமந் தலைநிற்றல் நன்று. -அறநெறிச்சாரம் 20 விளைநிலம் யாக்கை; வித்துக நன்னெறி! 396. இளமையும் நிலையாவா லின்பமும் நின்றவல்ல வளமையு மஃதேயால் வைகலுந் துன்பவெள்ளம் 4உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். -வளையாபதி 41 உளநாள் சிறக்க ஊக்கம் செலுத்துக! 396. இளமையும் மெழிலும் வானத் திடுவிலி 5னீண்ட மாயும் வளமையுங் கிளையும் வாரிப் புதியதன் வரவு போலும் வெளியிடை விளக்கின் வீயு மாயுவு மென்று வீட்டுக் குளபகல் ஊக்கஞ் செய்வ ருணர்வினாற் பெரிய நீரார். -மேருமந்தரபுராணம் 109 துன்பம் என்பது தொடருஞ் சாவே 398. பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய் கண்ணார் கடல்மண்டிக் காற்றிற் கவிழுங்கால் மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்பம் 6நண்ணா நரகத்தி னான்கா மடியன்றே. -சீவகசிந்தாமணி 2793 நிலையாத் தன்மை நிலைபெறு விந்தை 399. கொலையானை மேலோர் குளிர்வெண் குடைக்கீழ்ப் பலயானை மன்னர் பலர்போற்ற வந்தான் மலையாகம் போழாக மற்றிவனோ சாய்ந்தான் நிலையாமை சால நிலைபெற்ற தன்றே. இருநாள் இலைவாழ் வெண்ணுக வின்னே! 400. எரிபுரை யெழில தாய விளந்தளி ரிரண்டு 1நாளின் மரகத வுருவ மெய்தி மற்றது பசலை கொண்டு 2கருகிலை 3யாகி வீழ்ந்து 4கரிந்துமண் ணாதல் கண்டும் வெருவிலர் வாழ்து மென்பார் வெளிற்றினை விலக்க லாமோ. -சூளாமணி 1464, 1847 நிலையார்க் கிரங்கி நிலமே அழுமாம்! 401. மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா 5வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப் பொருநர்க் 6கானாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் 7விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற உள்ளேன் வாழி யானெனப் பன்மாண் நிலமக ளழுத காஞ்சியும் உண்டென வுரைப்ப ருணர்ந்திசி னோரே. -புறநானூறு 365 நல்லது நாடுமின்! உள்ளது கொடுமின்! 402. நெருந லென்பது சென்றது நின்ற இன்றுஞ் செல்லா நின்றது முன்சென்று வருநாள் கண்டார் யாரே யதனால் ஒருநாள் 8கைப்படுத் துடையோ ரின்மையின் நல்லது நாடுமி னுள்ளது கொடுமின் 9வழாஅ வின்பமு புணர்மி னதாஅன்று கீழது நீரகம் புகினு மேலது விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது நேமி மால்வரைக் கப்புறம் புகினுங் கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே. -ஆசிரியமாலை 41. தூய்தன்மை (தூயது அன்மை, தூய்தன்மை யாம். குடரும், மலமும், புழுக்களும். (கிருமிகளும்) முடை நாற்றங்களும் (துர்க்கந்தங் களும்) தோன்றாமல் மூடியிருந்த தோலின் புறத்தைக் கண்டு நன்றென்றும், தூயதென்றும் மயங்குவார்க்கு இது தூயது அல்லாமை அறியும்படி கூறுகின்றது. - பதுமனார். இ.பெ.அ: நாலடி. 5 (பாடவேறுபாடு) தூயதல்லாமை.) நொய்ய புக்கிலை நோக்கித் தெளிக 403. மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர் 1ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். புறங்கா டெவர்க்கும் புகட்டும் நீதி 404. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றுங் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ எல்லாருங் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன். இவற்றுள் எவளோ ஈர்ங்கோ தையாள்? 405. குடருங் கொழுவுங் குருதியு மென்புந் தொடரு நரம்பொடு தோலும் - இடையிடையே வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் எத்திறத்தா ளீர்ங்கோதை யாள். -நாலடியார் 41, 45, 46 படைத்தவன் ஆற்றல் பகர்தற் கரிது 406. என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட் டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான் மன்பெருந் 1தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான். மைந்தரும் மகளிரும் மருவுதல் மாலையால் 407. மந்திர மருந்திவை யில்லை யாய்விடின் ஐந்தலை யரவினை யாவர் தீண்டுவார் சுந்தரச் சுரும்புசூழ் மாலை யில்லையேல் மைந்தரு 2மகளிர்த 3மருங்கு 4சார்கிலார் காப்பியக் கவிகள் காட்டிய திறமை 408. உருவமென் றுரைத்தி யாயி 5னிறைந்ததோற் றுருத்தி தன்னைப் புருவமுங் கண்ணு மூக்கும் புலப்பட வெழுதி வைத்தாற் கருதுவ தங்கொன் றுண்டோ காப்பியக் கவிகள் காம எரியெழ விகற்பித் திட்டா 6ரிறைச்சிப்போ ரிதனை யென்றான். பூச்செனக் கூறல் பொய்யென லாமோ? 409. மெய்ப்படு சாத்தும் பூவு மிகநனி கமழு மேனுங் கைப்படு சாந்தும் பூவுங் கொண்டலாற் கலக்க லாகா 1தைப்படு பித்து நெய்த்தோ ரசும்புசோ ரழுகற் புன்றோல் பொய்ப்பட வுரைத்த துண்டோ பொன்னனீர் நம்மு ணாமால். -சீவகசிந்தாமணி 1577, 2936, 1585, 2938 என்றும் நறுமணம் இயைந்ததோ இவ்வுடல்? 410. நன்கன நாறுமி தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயின் ஒன்பது வாயில்க டோறு முண்ணின் றழுக்குச் சொரியத் தின்பதொர் நாயுமி ழுப்பத் திசைதொறுஞ் 2சீப்பில்கு போழ்தின் இன்பநன் னாற்றமி தன்க ணெவ்வகை யாற்கொள்ள லாமே. இத்தசை மாண்புதான் எத்துணை நாட்கு? 411. மாறுகொள் மந்தர மென்று மரகத வீங்கெழு வென்றுந் தேறிடத் தோள்க டிறத்தே திறத்துளிக் காமுற்ற தாயிற் பாறொடு நாய்க 3ளிசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின் ஏறிய வித்தசை தன்மாட் டின்புற லாவதிங் கென்னோ. வெறுப்பிற் கிடப்பின் வேண்டப் படுமோ? 412. உறுப்புக்கள் தாமுடன் கூடி யொன்றா 1யிருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேலிவ் வுறுப்புக் குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவது முண்டோ. புழுக்குலக் குறையுளாய்ப் புகலும் யாக்கை 413. எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுனைய 2புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்ட இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு 3மாமோ. - குண்டலகேசி 11-14 குருடு தீர்ந்தார் கொள்ளா வின்பம் 414. புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமழ் வாயிற் றேய்த்து விழுமவை குழவி யென்றும் விளங்கிய காளை யென்றும் பழுநிய பிறவு மாகிப் பல்பெயர் தரித்த பொல்லாக் குழுவினை யின்ப மாகக் கொள்வரோ குருடு தீர்ந்தார். -நாரதசரிதை 42. துறவு (புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கை யின்கண்ணும் உளதாம் பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி விடுதல் - பரிமே. பிறர் நலம் பேணுதற்காகத் தன்னலத்தை விடுதல்திருக் 42. சி.இலக். இ.பெ.அ: திருக். 35. நாலடி. 6. ப.பா.தி. 40.) பள்ளிப்பால் வாழார் முள்ளித்தேன் உண்பார் 415. செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம் தெள்ளி யுணரார் சிறிதினாற் செம்மாந்து பள்ளிப்பால் வாழார் 1பதிமகிழ்ந்து வாழ்வாரே முள்ளித்தே னுண்ணு மவர். நெஞ்சம் அறிய நினைந்ததை உரைத்தது 416. வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து 2செல்குவையால் என்நெஞ்சே 3யின்றழிவா யாயினாய் - சென்னெஞ்சே இல்சுட்டி நீயு மினிதுரைத்துச் சாவாதே பல்கட்டப் பெண்டீர் மகார். தம்மைத் துறவார் என்னைத் துறந்தார்? 417 4சிறந்ததஞ் சுற்றமுஞ் செய்பொருளும் நீக்கித் துறந்தார் 5தொடர்ப்பாடு கோடல் - கறங்கருவி ஏனல்வாய் வீழு மலைநாட 6அஃதன்றோ யானைபோய் வால்போகா வாறு. -பழமொழி 393, 394, 395 நிலையாமை கண்டு நெடியார் துறத்தல் 418. இல்ல மிளமை யெழில்வனப்பு மீக்கூற்றஞ் செல்வம் வலியென் றிவையெல்லா மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாமுய்யக் கொண்டு. கொன்னே கழியா தின்னே துறக்க 419. கொன்னே கழிந்தன் றிளமையு மின்னே பிணியொடு மூப்பு வருமால் - துணிவொன்றி என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ நன்னெறி சேர நமக்கு. -நாலடியார் 53, 55 காலன் ஒழியக் காணின் வீடு 420. வாளஞ்சான் வன்கண்மை யஞ்சான் வனப்பஞ்சான் 1ஆளஞ்சா னாய்பொருள் தானஞ்சான் - நாளெஞ்சாக் காலன் வரவொழிதல் காணின்வீ 2டெய்தியுறற் 3பாலநூ லெய்தப் படும். -ஏலாதி 22 நிலையாத் தன்மை நெறிப்பட உரைத்தது 421. இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி உளமை யுணரா தொடுங்கி - வளமை 4வியப்போவ லில்லா வியலிடத்து 5வெஃகா துயப்போக லெண்ணி னுறும். -புறப்பொருள் வெண்பாமாலை 273 தொடர்ப்பா டென்னே; உடம்பும் மிகையே! 422. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகையவை யுள்வழிப் பற்றா வினையாய்ப் பலபல யோனிகள் அற்றா 6யுழலு மறுத்தற் கரிதே. உதிரம் கழுவ உதிரம் ஆமோ? 423. உற்ற வுதிர மொழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுத லென்னொக்கும் பற்றினா னாகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறு மாறே. தானம் செய்க தவமும் புரிக 424. தானஞ் செய்திலந் தவமு மன்னதே கானந் தோய்நில விற்கழி வெய்தினம் 1நானந் தோய்குழல் நமக்குய்த லுண்டோ 2மானந்தீர் கொள்கையார் மாற்றம்பொய் யல்லவால். -வளையாபதி 42, 44 இன்னாத் துன்பம் எவரே இல்லார்? 425. அருந்திய குறையிற் றுன்ப மாங்கவை நிறையிற் றுன்பம் பொருந்துநோய் பொறுத்தல் துன்பம் 3பொருந்திய போகத் துன்பம் மருந்தினுக் குஞற்றல் துன்ப மற்றவை யருந்தல் துன்பம் இருந்தவா றிருத்தல் துன்பம் யார்கொலோ துன்ப மில்லார். வாழ்கின்றார் என்கிறார் வீழ்கின்றார் மெய்யதாம்! 426. வாழ்கின்றார் மக்களுநம் வழிநின்றா ரெனவுள்ளந் தாழ்கின்றா தாழ்கில்லார் தமநில்லா வானக்கால் ஆழ்கின்ற குழிநோக்கி யாதார மொன்றின்றி வீழ்கின்றார் மெய்யதா மெய்தாங்க வல்லரோ. -நாரத சரிதை சுற்றமு உறவும் சூழ்ந்து தடுக்கும் 427. அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவ 4னாட்டும் புல்வாய் போல ஓடி யுய்தலும் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. -புறநானூறு 193. 43. மெய்யுணர்தல் (உண்மை அறிதல். ஈண்டு அறிதல் மனத்தான் அறிதல்; பொறியான் அறிதலன்று. பொறியுணர்வால் உணரப்பட்ட உலகமும், பொறியுணர்வால் உணரப்படாது மனவுணர்வால் உணரப்படும் இறைவனும், பொறியுணர்வும் மனவுணர்வுங் கொண்டு உலகையும் இறைவனையும் உணரும் உயிருமாய இம்மூன்றை யன்றி அறியலான பொருள் வேறில்லை. அன்றே? இம் முப்பொருள் உண்மையினை மனவுணர்வான் உணர்தலே ஈண்டு மெய்யுணர்தல் எனப்பட்டது - நாகை. சொ.தண்ட. இ.பெ.அ: திருக். 36. ப.பா.தி. 70.) சார்வறுங் காலைச் சார்பிறப் பறுமால் 428. திரியு மிடிஞ்சிலும் நெய்யுஞ்சார் வாக எரியுஞ் 1சுடரோ ரனைத்தால் - தெரியுங்காற் சார்வற 2வோடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல் நீரற நீர்ச்சார் வறும். -பழமொழி 397 பாடே புரியாது வீடே புரிக 429. இளமை கழியும் பிணிமூப் பியையும் வளமை 3வனப்பிவை வாடும் - உளநாளாற் பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய் வீடே புரிதல் விதி. அரங்குமேல் ஆடும் ஆட்டம் தவிர்க 430. பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பந் 4தணிவி னிரப்பிவை 5தாழா - அணியின் அரங்கின்மே 6லாடுநர்போ லாகாதே என்றும் 7நிரம்புமே வீட்டு நெறி. -ஏலாதி 21, 24. பற்பல வில்லாப் பான்மைத் துறக்கம் 431. பொய்யில் புலவர் புரிந்துறை மேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின் றிகலின் றிளிவரவு மின்று. ஐயைந் தாயும் அறிவே அறிவு 432. ஆமினி மூப்பு மகன்ற திளமையுந் தாமினி நோயுந் 1தலைப்படும் - யாமினி மெய்யைந்து மீதூர 2வைகாது மேல்வந்த ஐயைந்து 3மாயவ தறிவு. -புறப்பொருள் வெண்பாமாலை 272, 187 பால்போ லமைந்தார் மேலுல கெய்துவார் 433. இருளே யுலகத் தியற்கை 4யிருளறுக்குங் கைவிளக்கே கற்ற வறிவுடைமை கைவிளக்கின் நெய்யேதன் னெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த பால்போ லொழுக்கத் தவரே பரிவிலா 5மேலுலக மெய்து பவர். -அறநெறிச்சாரம் 194 ஞான நன்னெறி நல்குதல் வீடு 434. இல்லியார் நல்லறமு மேனைத் துறவறமும் 6நல்லியலா னாடி யுரைக்குங்கால் - நல்லியற் றானத்தாற் போகந் தவத்தாற் சுவர்க்கமாம் ஞானத்தால் வீடாக நாட்டு. -சிறுபஞ்சமூலம் 36 பலவாய்ப் பகரினும் அறநெறி ஒன்றே 435. ஆவே றுருவின வாயினு மாபயந்த பால்வே ருருவின வல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல் உருவு பலகொள லீங்கு. -நாலடியார் 118 பிறப்பின் வித்தாய்ப் பேசிடும் மூன்று 436. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடு மவாத்தேருந் - தெற்றெனப் பொய்த்துரை யென்னும் 1புகையிருளு மிம்மூன்றும் வித்தற 2வீழும் பிறப்பு. மேனின் றமைந்த மேதையர் மூவர் 437. முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை 3யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனின் றவர். -திரிகடுகம் 22, 35 வெருவரு துன்பம் விடுக்குந் திறலோன் 438. பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி ஒருவந்த முள்ளத் 4துவத்த லொழிமின் வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோன் ஒருவ னுலகிற் குளனென்னு மாறே. -வளையாபதி 45 அரிதும் எளிதும் பெரியோர் கருதார் 439. பெரிய வின்பத் திந்திரனும் பெட்ட செய்கைச் சிறுகுரங்கும் உரிய செய்கை வினைப்பயனை யுண்ணு மெனவே 1யுணர்ந்தவனை அரிய னென்ன மகிழாது மெளிய னென்ன விகழாதும் இருசார் வினையுந் தெளிந்தாரே யிறைவ னூலுந் தெளிந்தாரே. இருவினை கழிக்க ஏற்றவை மூன்று 440. மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சியைம் பொறியும் வாட்டி உய்வகை யுயிரைத் தேயா தொழுகுத லொழுக்க மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே யிருவினை கழியு 2மன்றே. துன்பத் துயரில் துவள்வதே வாழ்வு 441. வேட்டன பெறாமை துன்பம் 3வீழ்நரைப் பிரிதல் துன்பம் மோட்டெழி லிளமை 4நீங்க மூப்புவந் தடைதல் துன்பம் ஏட்டெழுத் தறித லின்றி யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாம் சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றான். -சீவகசிந்தாமணி 2815, 1436, 2799 மாயா இன்பம் மலர்ந்ததும் உண்டோ? 442. விண்ணி லின்பமும் வீதல் கேட்டுமால் மண்ணி லின்பமும் மாய்தல் காண்டுமால் எண்ணி லின்பமா மீறி லாததே நண்ணி நாமினி நயக்கற் பாலதே. -சாந்திபுராணம் இருவே றியல்பை இயற்றிய தென்னே! 443. ஓரில் நெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் பைத லுண்கண் பனிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பி லாளன் இன்னா தம்மவிவ் வுலகம் இனிய காண்கித னியல்புணர்ந் தோரே. வியத்தலும் இலமே! இகழ்தலும் இலமே! 444. யாது மூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் 1புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉ 2மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை 3வியத்தலு மிலமே சிறியோரை 4யிகழ்த லதனினு மிலமே. -புறநானூறு 194, 192. 44. அவா வறுத்தல் (பொய்ப் பொருள்கள்மேற் செல்லும் ஆசையைத் தவிர்த்தல் - மணக். புலன்வழி ஓடும் உள்ளத்தை ஓடாது நிறுத்தல் - நாகை. சொ.தண்ட. இ.பெ.அ: திருக். 37. ப.பா.தி. 4.1) அவாவை அறுத்தல் ஐங்களி றடக்கல் 445. அவாவறுக்க லுற்றான் தளரானவ் வைந்தின் அவாவறுப்பி னாற்ற வமையும் - அவாவறான் ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு போகும் புழையுட் புலந்து. -ஏலாதி 11 தம்மை உடைமையே எம்மைக் குந்தலை 446. எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் 1மன்ன ருடைய வுடைமையும் - மன்னரால் இன்ன 2ரெனவேண்டா இம்மைக்கும் உம்மைக்குந் தம்மை யுடைமை தலை. -பழமொழி 387 வேட்கை அறுத்தான் வீடு பெற்றான் 447. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவினைக் - கைவாய்க் கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான் 3விலங்காது வீடு பெறும். -நாலடியார் 59 முத்தி விளக்கும் பற்றுச் சுழலும் 448. கனிந்தநெய்க் கவளங் கையில் வைத்துடன் கழறு வாரை முனிந்திடு களிறு போல்வார் முத்தியை விளக்கு நீரார் மனங்கொளத் துறந்தி டாதே வால்குழைத் தெச்சிற் கோடுஞ் சுணங்கனைப் போலு நீரார் பற்றிடைச் சுழலு நீரார். -மேருமந்தரபுராணம் 136 45. பழவினை (முற்பிறப்பிற் செய்தவினை இப்பிறப்பில் நுகரவும் இப்பிறப்பில் செய்தவினை பிற்பிறப்பிலே நுகரவுமாக இப்படி மாறி வருவது - பதுமனார். இ.பெ.அ: நாலடி. 11. இ.சா.அ: திருக். 38. பழமொழி. 24. ப.பா.தி. 43 (ஊழ்)) வித்திய விதையே விளைந்ததென் றுணர்க. 449. 1பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை இன்றொறுக் கின்ற 2தெனநினையார் - துன்புறுக்கும் மேவலரை நோவதென் மின்னேர் மருங்குலாய் ஏவலா ளூருஞ் சுடும். நல்லார் ஒடுக்கமும் அல்லார் எடுப்பும் 450. உரைசான்ற சான்றோ ரொடுங்கி யுறைய நிரையுள ரல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதா ழிலங்கருவி வெற்ப அதுவே 3சுரையாழ அம்மி மிதப்பு. உறுவதை எவரும் ஒழித்தற் கியலுமோ? 451. அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுந் தீங்குறுதல் காண்டுமாற் - பொங்கி அறைப்பா யருவி யணிமலை நாட உறற்பால யார்க்கு முறும். ஆகூழ் அமையின் அனைத்தும் நன்றாம் 452. இதுமன்னுந் தீதென் 1றியைந்ததூஉம் ஆவார்க் கதுமன்னு நல்லதே யாகு - 2மதுநெய்தல் வீநாறு கானல் 3விரிதிரைத் தண்சேர்ப்ப தீநாள் திருவுடையார்க் கில். அடுத்து முயலினும் ஆம்போ தாகும் 453. பன்னாளு நின்ற விடத்துங் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர் உவப்ப வழிபட் டொழுகினுஞ் செல்வந் தொகற்பால போழ்தே தொகும். -பழமொழி 238, 122, 229, 235, 233. ஆள்வினை இன்றியும் ஆம்பொழு தாகும் 454. ஆகுஞ் சமயத்தார்க் காள்வினையும் வேண்டாவாம் போகும் பொறியார் புரிவும் பயமின்றே ஏகல் மலைநாட என்செய்தாங் கென்பெறினும் ஆகாதார்க் காகுவ தில். முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் 455. நெடியது காண்கலாய் 4நீயளியை நெஞ்சே கொடியது கூறினாய் மன்ற - அடியுளே முற்பகற் கண்டான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் கண்டு விடும். ஊழ்வலி உரவோர் தம்மையும் ஆட்டும் 456. சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும் பட்ட 5இழுக்கம் பலவானாற் - பட்ட பொறியின் வகைய கருமம் அதனால் அறிவினை யூழே யடும். தெய்வம் முடிப்பின் செய்யும் தடையெது? 457. எவ்வந் துணையாப் பொருள்முடிக்குந் தாளாண்மை தெய்வ முடிப்புழி யென்செய்யும் - மொய்கொண்டு பூப்புக்கு வண்டார்க்கு மூர குறும்பியங்குங் கோப்புக் குழிச்செய்வ தில். உறுவதை விலக்கல் ஒருவர்க்கும் அரிதே 458. 1கழுமலத் தியாத்த களிறுங் கருவூர் விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய வேண்டினும் வேண்டா விடினு முறற்பால தீண்டா விடுத லரிது. முன்னை வினையால் இன்னவர் செல்வம் 459. வழங்கார் வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார் உழந்தொருவற் குற்றா லுதவலு மில்லார் இழந்ததில் செல்வம் 2பெறுதல் அதுவே பழஞ்செய்போர் பின்று விடல். -பழமொழி 237, 46, 228, 227, 230, 221 இப்பிறப் பாலே முற்பிறப் பறிக 460. இறந்த பிறப்பிற்றான் செய்த வினையைப் பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து செய்யும் வினையா லறிக இனிப்பிறந் தெய்தும் வினையின் பயன். -அறநெறிச்சாரம் 156 பழவினை கிழவனைக் கன்றுபோல் நாடும் 461. பல்லாவு ளுய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையு மன்ன 1தகைத்தேதான் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. அவரவ ராற்றான் அளந்தன போகம் 462. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை அளந்தன போக மவரவ ராற்றான் விளங்காய் திரட்டினா ரில்லை - களங்கனியைக் காரெனச் செய்தாரு மில். ஆங்கால் ஆகும் போங்கால் போகும் 463. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா உறுகாலத் தூற்றாகா வாமிடத்தே யாகுஞ் சிறுகாலைப் பட்ட பொறியு மதனால் இறுகாலத் தென்னை பரிவு. வேண்டுதற் காக விடுமோ பழவினை? 464. ஈண்டுநீர் வையத்து ளெல்லாரு 2மெத்துணையும் வேண்டார்மற் றீய விழைபய னல்லவை வேண்டினும் வேண்டா விடினு முறற்பால தீண்டா விடுத லரிது. வினைப்பயன் அன்றி நினைப்பவை வாரா 465. நல்லார் நயவ ரிருப்ப 3நயமில்லாக் கல்லார்க்கொன் றாகிய காரணந் - தொல்லை வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய் நினைப்ப வருவதொன் றில். -நாலடியார் 101, 103, 110, 109, 265 பாடகம் போலச் சூழ்ந்தது பழவினை 466. ஆடகச் செம்பொற் கிண்ணத் தேந்திய வலங்கற் றெண்ணீர் கூடகங் கொண்ட வாழ்நா ளுலந்ததேற் கொல்லும் பவ்வத் தூடகம் புக்கு முந்நீ ரழுந்தினு முய்வர் நல்லார் பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தி னென்றான். ஆறு வேண்டியோ அருமழை பொழியும்? 467. ஆம்பொருள்க ளாகுமவை 1யார்க்குமழிக் கொண்ணாப் போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந் தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி 2யாதே. அல்லி நூல்போல் அடர்க்கும் பழவினை 468. 3அல்லித்தா ளற்ற 4போழ்து மறாதநூ லதனைப் போலத் தொல்லைத்தம் முடம்பு நீங்கத் 5தீவினை தொடர்ந்து நீங்காப் புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின் றெல்லையில் துன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்க ளன்றே. -சீவகசிந்தாமணி 510, 848, 2876 ஒருவருக் கொருவர் உதவி வாழ்க 469. கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்முட் பொருத்தினாற் பொருத்த லாகா புலமைமிக் குடைய ரேனும் ஒருத்தனுக் கொருத்தன் கூக்கேட் டுற்றது செய்து வாழத் திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான். -சூளாமணி 667 வருவழி வினாவி வருங்கால் வரும்பொருள் 470. பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப்பிணி யுறினுந் திருமுயங்க லில்லையெனி னில்லைபொரு ளீட்டம் ஒருமுழமுஞ் சேறலில 1ரெனினும்பொரு ளூர்க்கே வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ. நகைக்கதிர் சுடுமோ? பகைக்கதிர் குளிருமோ? 471. அகப்படு பொறியி னாரை யாக்குவா ரியாவ ரம்மா மிகப்படு பொறியி னாரை வெறியராச் செய்ய லாமோ நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுத லுண்டே பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்த லுண்டே. எண்ணெய் குறையின் எரியும் மழுங்கும் 472. புரிமுத்த 2மாலை போல விளக்கினுட் பெய்த நெய்யுந் திரியுஞ்சென் றற்ற 3போழ்தில் திருச்சுடர் தேம்பி னல்லால் எரிமொய்த்துப் 4பெருக லுண்டே யிருவினை சென்று தேய்ந்தாற் பரிவுற்றுக் 5கொடாமற் செல்வம் பற்றியா ரதனை வைப்பார். -சீவகசிந்தாமணி 2556, 2315, 2316 மெய்த்தவம் இல்லான் மேவான் துய்ப்பு 473. உய்த்தொன்றி யேர்தந் துழவுழு தாற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குற லென்னொக்கும் மெய்த்தவ மில்லான் பொருளொடு போகங்கட் கெய்த்துழந் தேதா னிடர்ப்படு மாறே. -வளையாபதி 46 அறத்துப்பால் முற்றும் 2. பொருட்பால் 46. இறை மாட்சி (அரசனது பெருந்தகைமை - கா.சு. இ.பெ.அ: திருக். 39. இ.சா.அ: பழமொழி. 25 (அரசியல்). ப.பா.தி. 44 (அரசு) நீதிக். 68 (அரசியல்)) அரண்படை நிதியம் அரசர்க் குறுப்பு 474. பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் 1எத்துணையு மஞ்சா எயிலரணும் - வைத்தமைந்த எண்ணி 2னுலவா 3விருநிதியு மிம்மூன்றும் மண்ணாளும் 4வேந்தர்க் குறுப்பு. காவலன் பேணிக் காக்கத் தக்கவை 475. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். -திரிகடுகம் 100, 33 செங்கோல் தவறின் சேர்ந்தவரும் பழிப்பர் 476. அங்கோ லவிர்தொடி யாழியா னாயினும் செங்கோல னல்லாக்காற் சேர்ந்தாரு 5மெள்ளுவர் வெங்கோன்மை 1வேந்தர்கண் வேண்டுஞ் சிறிதெனினுந் தண்கோ 2லெடுக்குமா 3மெய். -பழமொழி 250 குடிகள் உயர்ந்தால் கோலும் உயரும் 477. வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும் நீர்சான் றுயரவே நெல்லுயரும் - சீர்சான்ற தாவாக் குடியுயரத் தாங்கருஞ்சீர்க் 4கோவுயர்தல் ஓவா துரைக்கு முலகு. குடிநடுக் காமை கொற்றவற் கழகு 478. கண்வனப்புக் கண்ணோட்டங் கால்வனப்புச் செல்லாமை எண்வனப் பித்துணையா 5மென்றுரைத்தல் - பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு வாட்டானன் றென்றல் வனப்பு. -சிறுபஞ்சமூலம் 46, 9 ஆள்வோன் மடியின் அறமும் அழியும் 479. பெரும்பூட் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல் - 6விரும்பான் ஒருநாள் மடியி னுலகின்மே னில்லா திருநால் வகையா ரியல்பு. தன்னை ஓம்பான்; மன்னுயிர் ஓம்புவான் 480. ஒள்வா ளமரு ளுயிரோம்பான் தானீயக் கொள்வார் நடுவட் கொடையோம்பான் - வெள்வாள் கழியாமே மன்னர் கதங்காற்றும் வேலான் ஒழியாமே யோம்பு முலகு. -புறப்பொருள் வெண்பாமாலை 178, 195 காவலன் உலகின் கண்ணெனத் தக்கான் 481. கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர் விண்ணினைச் 1சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார் எண்ணினுள் தலைக்கண் வைத்த கண்ணது வில்லை யாயின் மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னோ. அறிவறிந் தாளின் அரியதொன் றில்லை 482. ஆற்றல்மூன் றோதப் பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி யென்ப வாதலா லதனை யாயும் ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும் ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே. தண்மையும் வெம்மையும் தழைத்தவன் வேந்தன் 483. எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான் 2அண்ணின ரகன்றவர் திறத்து மாணையான் நண்ணினர் பகைவரென் றிவர்க்கு நாளினுந் 3தண்ணியன் 4வெய்யனந் தானை 5வேந்தனே. மன்னுயிர் இன்பே தன்னுயிர் இன்பாம் 484. வைய மின்புறிற் றானு மின்புறும் வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறும் செய்ய கோலினாய் செப்ப லாவதன் றைய தாரினா னருளின் வண்ணமே. அரசரே உலகுக் காவி யன்னவர் 485. வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க் காவி யாபவ ரரச ராதலால் காவ லோவுங்கொ லென்று கண்படான் மாவல் தானையம் மன்னர் மன்னனே. வேந்தர் ஒளியே விளங்கும் ஒளியாம் 486. தண்சுடர்க் கடவுள் போலத் தாரகைக் குழாங்கள் தாமே விண்சுடர் விளக்க மாக 1விளங்கல வேந்தர் போல மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய் கண்சுடர் கனலச் சீறுங் கடாமுகக் களிற்று வேந்தே. ஆளும் அரசனே வாழுந் தெய்வம் 487. ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை 2யொருமை யாலே திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு 3கிளைப்ப நோக்கி இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப் பெருமையு முடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே. குடைநிழல் உலகெலாங் குளிர நிற்கும் 488. அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர் முடிநிழல் முனிவரர் சரண 4மூழ்குமே வடிநுனை வண்கதி ரெஃகின் மற்றவன் குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே. -சூளாமணி 268, 250, 52, 598, 599, 270, 267, 55 ஆளுதல் என்பது அரிது தவத்தினும் 489. மரந்தலை பிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம் உரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும் அருந்தவ மரசர் பார மவைபொறை யரிது கண்டாய் இரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ 1வென்றான் எரியும் குளிரும் இணைந்து நிற்றல் 490. எரியு மணையாற் குளிரு மீகையாற் பெரியன் மாண்பினாற் சிறிய 2னன்பினால் அரியன் வேந்தர்கட் கெளியன் மாந்தர்கட் குரிய னோங்குதற் கோடை யானையான். தனைவெல் வேந்தனைப் பினையெவர் வெல்வார் 491. தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப் பின்னை வென்றி பெறற்கரி தாகலான் மன்னி மற்றிவ னாண்டிடும் 3வையகம் பொன்னின் மாரி 4பொழிந்திடு கின்றதே. -சூளாமணி 273, 594, 624 தண்ணளி ஈகை தாங்கிய ஒருவன் 492. தருமன் தண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே அருமை யாலழ கிற்கணை யைந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே உலகின் தந்தை ஒள்ளிய வேந்தன் 493. கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடை ஓத நீருல கொப்ப நிழற்றலால் தாதை யேயவன் தாணிழற் றங்கிய காத லாற்களிக் கின்றதிவ் வையமே. - சீவகசிந்தாமணி 160, 159 அறங்கொள் வேந்தன் பிறந்த மூர்த்தியாம் 494. இறந்த நற்குண மெய்தற கரியவாய் உறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான் பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை அறங்கொள் கோலண்ணல் மும்மத யானையான். கூற்றங் காயும் கோலவன் கொற்றவன் 495. சீற்றஞ் செற்றுப்போய் 1நீக்கிச்செங் கோலினாற் கூற்றங் காய்ந்து கொடுக்க 2வெணுந்துணை மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத் தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான். -குண்டலகேசி 15, 16 வல்லென இல்லெனச் சொல்லா வலியன் 496. வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழீஇய சொல்லும் இல்லென்ற சொல்லு மிலனாகலின் யாவர் மாட்டுஞ் சொல்லுங் குறையின் மையிற் சோரரு மின்மையாலே கொல்லென்ற சொல்லு முரைகற்றிலன் கொற்ற வேலான். -நாரதசரிதை மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் 497. நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், 3யானுயி 4ரென்பதை யறிதல் வேன்மிகு தானை 5வேந்தற்குக் கடனே. ஊறின் றாகி உய்க்கும் தேர்ச்சி 498. கால்பார் கோத்து ஞாலத் 1தியங்குங் காவற் சாகா டுகைப்போன் மாணின் ஊறின் றாகி யாறினிது படுமே உய்த்தல் தேற்றா னாயின் வைகலும் பகைக்கூ ழள்ளற் பட்டு மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே. வலியர்க் கெளிதும்: எளியர்க்கு வலிதும் 499. மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பால்தர வந்த பழவிறற் றாயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று 2மன்னே மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ 3னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்று நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை முரசுகெழு வேந்த ராசுகெழு திருவே. -புறநானூறு 186, 185, 75 47. கல்வி (கற்றற் குரிய நூல்களைக் கற்றல் - பரிமே. இ.பெ.அ: திருக். 40. நாலடி. 14. பழமொழி - 1. ப.பா.தி. 51. நீதிக். 1.) அறிவோர்க் கனைத்தும் தம்முடை நாடே 500. ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாயினால் ஆற்றுணா வேண்டுவ தில். கற்கும் போதுதான் கல்லாமை தோன்றும் 501. சொற்றொறுஞ் சோர்வு படுதலாற் சோர்வின்றிக் கற்றொறுங் கல்லாதே. 1னென்று வழியிரங்கி உற்றொன்று சிந்தித் துழந்தொன் றறியுமேற் கற்றொறுந்தான் கல்லாத வாறு. காலம் அறிந்து கடமை புரிக 502. ஆற்று மிளமைக்கண் 2கல்லாதான் மூப்பின்கண் போற்று மெனவும் 3புணருமோ - ஆற்றச் சுரம்போக்கி யுல்குகொண்டா 4ரில்லைமற் றில்லை மரம்போக்கிக் கூலிகொண் டார். பொருள் கொடுத் தெவரும் இருளைக் கொள்ளார் 503. விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கமின் றென்னைத்துந் துக்கி - விளக்கு மருள்படுதாயின் மலைநாட என்னை பொருள் கொடுத்துக் கொள்ளாரிருள் - பழமொழி 4, 2, 1, 3. கற்றுத் தெளிந்தவர் கைதொழற் குரியார் 504. திரியழற் காணின் தொழுப விறகின் எரியழற் காணின் இகழ்ப - ஒருகுடியிற் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபா ராட்டு முலகு. உயர்ந்த உலகத் துய்ப்பது கல்வி 505. கற்பக் கழிமட மஃகு மடமஃகப் 5புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணருங் 6கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரு மந்நெறி இப்பா 7லுலகத் திசைநிறீஇ யுப்பால் உயர்ந்த வுலகம் புகும். கற்றோர்க் கவையைக் கடத்தல் எளிது 506. கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்குந் தோமில் தவக்குட்டந் தன்னுடையா னீந்து மவைக்குட்ட கற்றான் கடந்து விடும். கற்றார் அவையிற் கல்லான் பாடிலன் 507. வாலிழையார் முன்னர் வனப்பிலான் பாடிலன் சாலு மவைப்படிற் கல்லாதான் பாடிலன் கற்றா னொருவனும் பாடிலனே கல்லாத பேதையார் முன்னர்ப் படின். -நான்மணிக்கடிகை 64, 28, 16, 97 கல்லார் பெறுவார் நல்லார் இனநகை 508. பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி என்பெறும் வாதி யிசைபெறும் - 1முன்புறக் கல்லார்கற் றாரினத்த ரல்லார் பெறுபவே நல்லா ரினத்து நகை. இடையாம் மாணவன் இன்னன் என்பது 509. கண்ணுங்காற் கண்ணுங் 2கணித மெழுத்தியாழோ டெண்ணுங்காற் சாந்தே யிலைநறுக்கிட் - டெண்ணுங்கால் 3இட்டவிவை யைந்து மறிவா னிடையாய சிட்டனென் றெண்ணப்படும். தலையாம் மாணவன் தன்மை இன்னது 510. 4சத்தமே ஞானந் தருக்கஞ் சமயமே வித்தகர் கண்டவீ டுள்ளிட்டாங் - கத்தகத் 5தந்தவிவை யைந்து மறிவான் றலையாய சிந்திப்பிற் சிட்டன் சிறந்து -சிறுபஞ்சமூலம் 56, 87, 86 ஆசான் அமைவை அறிய உரைத்தது 511. அறுவர்தந் நூலு மறிந்துணர்வு பற்றி மறுவரவு மாறாய நீக்கி மறுவரவில் மாசா ரியனா மறுதலைச் சொல் மாற்றுதலே 1ஆசா ரியன தமைவு. -ஏலாதி 75 கற்பவை தேர்ந்து கசடறக் கற்க 512. கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல 2நினைப்பிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலூண் குருகிற் றெரிந்து. -நாலடியார் 135 கைப்பொருள் என்பது கல்வி ஒன்றே 513. கைப்பொருள் கொடுத்துங் 3கற்க கற்றபின் கண்ணு மாகும் மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும் பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாந் துணைவி 4யாக்கும் இப்பொரு ளெய்தி நின்றீ ரிரங்குவ தென்னை யென்றான். -சீவகசிந்தாமணி 1595 கீழோன் கற்பின் மேலோன் ஆவான் 514. உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ 5ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் 6பாலாற் றாயுமனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் 1மூத்தோன் வருக வென்னா 2தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே. -புறநானூறு 183 48. கல்லாமை (கல்வி இல்லாமையால் உளதாகும் குற்றம் கூறுதல் - மணக். இ.பெ.அ: திருக். 41. நீதிக். 30. இ.சா.அ: பழமொழி. 2. (கல்லாதார்)) கல்வியும் கேள்வியும் இல்லான் கடையே 515. கற்றானுங் கற்றார்வாய்க் கேட்டானு மல்லாதான் தெற்ற வுணரான் பொருள்களை - 3எற்றே அறிவிலான் மெய்த்தலைப் பாடு பிறிதில்லை நாவற்கீழ்ப் பெற்ற கனி. கல்லான் உரைமொழி கற்றார் முற்செலா 516. கல்லாதான் கண்ட கழிநுட்பங் கற்றார்முற் சொல்லுங்காற் சோர்வு படுதலால் - நல்லாய் வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக். கனாமுந் துறாத வினை. கல்லான் காணும் நுட்பம் அரிது 517. கல்லாதான் கண்ட கழிநுட்பங் 4காட்டரிதால் நல்லேம்யா 5மென்றொருவன் நன்கு மதித்தலென் சொல்லால் வணக்கி வெகுண்டடு கிற்பார்க்குஞ் சொல்லாக்காற் 6செல்லுவ தில். - பழமொழி 11, 12, 13 கல்லான் அவையைக் கருதுதல் இன்னா 518. கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா அல்லதான் சொல்லு முரையின் பயனின்னா 1இல்லாதா னல்ல விழைவின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல். -இன்னா நாற்பது 29 இருப்பினும் குற்றம்; உரைப்பினும் குற்றம் 519. கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிராஅ துரைப்பினும் நாய்குரைத் தற்று. கூற்றுங் கொள்ளாக் கொடிய பிறவி 520. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவு கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார் சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற் கோதென்று கொள்ளாதாங் கூற்று. -நாலடியார், 254, 100 49. கேள்வி (கேட்டு அறிய வேண்டியவைகளைக் கற்றவர்பால் கேட்டல் - கா.சு. இ.பெ.அ: திருக். 42.) கற்றலிற் கேட்டல் கழிபெரு நன்று 521. உணற்கினிய இன்னீர் பிறிதுழியில் லென்னுங் கிணற்றகத்துத் தேரைபோ லாகார் - கணக்கினை முற்றப் பகலு முனியா தினிதோதிக் கற்றலிற் 2கேட்டலே நன்று. எவர்வாய்ச் சொல்லும் எள்ளா தாய்க 522. கள்ளி யகிலுங் கருங்காக்கைச் சொல்லும்போல் எள்ளற்க 1யார்வாயும் நல்லுரை - தெள்ளிதின் ஆர்க்கு மருவி மலைநாட 2நாய்கொண்டாற் பார்ப்பாருந் தின்ப ருடும்பு -பழமொழி 5, 35 கற்றார் வயப்படின் கல்லாரும் கற்றாராம் 523. கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் 3தான்பயந் தாங்கு. -நாலடியார் 139 கற்றவர் விரும்புங் காதலர் கற்றார் 524. தேவ ரனையர் புலவருந் தேவர் தமரனைய ரோரூ ருறைவார் தமருள்ளும் பெற்றன்னர் பேணி 4வழிபடுவார் கற்றன்னர் கற்றாரைக் காத லவர். -நான்மணிக்கடிகை 74 வெட்டெனல் நீக்கிக் கட்டுரை கேட்க 525. 5தண்ணுமை யாழ்குழல் கீதமென் றின்னன நண்ணி நயப்ப செவியல்ல - திண்ணிதின் வெட்டென்ற சொன்னீக்கி விண்ணொடு வீட்டின்பக் கட்டுரை கேட்ப செவி. அறவுரை துறவுரை ஆய்ந்துணர் வதேசெவி 526. புண்ணாகப் போழ்ந்து 6புலால்குளிப்பத் தாழ்வளர்த்து வண்ணப்பொன் செய்வ செவியல்ல - நுண்ணூல் அறவுரை கேட்டுணர்ந் தஞ்ஞானம் 1நீக்கித் துறவுரை கேட்ப செவி. பிறவி மீட்கும் பெருந்திரு வாளர் 527. மறவுரையுங் காமத் துரையு மயங்கிப் பிறவுரையு மல்கிய ஞாலத் - தறவுரையைக் கேட்குந் திருவுடை யாரே பிறவியை மீட்குந் திருவுடை யார். -அறநெறிச்சாரம் 167, 168, 2 50. அறிவுடைமை (கல்வி கேள்விகளினால் ஆய அறிவோடு உண்மை அறிவுடையனாதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 43. நாலடி. 25. பழமொழி. 4. நீதிக். 21. இ.சா.அ: நாலடி. 26 (அறிவின்மை)) அறிவு மாட்சியே அனைத்து மாட்சியும் 528. அறிவினான் மாட்சியொன் றில்லா வொருவன் பிறிதினான் மாண்ட தெவனாம் - பொறியின் மணிபொன்னுஞ் சாந்தமு 2மாலையுமற் றின்ன அணியெல்லாம் 3ஆடையின் பின். புலமிக் கவர்க்கே புலமை புலனாம் 529. புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே 4பாம்பறியும் பாம்பின கால். பல்கால் ஆய்க பயின்ற நுண்மையை 530. செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது நில்லற்க நீத்தார் நெறியொரீஇப் - பல்காலும் நாடுக 1தான்செய்த நுட்பத்தைக் கேளாதே யோடுக வூரோடும் ஆறு. வாய்த்தவர் கண்டது வானகம் ஆகும் 531. ஓதநீர் வேலி யுலகத்தா 2ரிந்நெறி காதல ரென்ப தறிந்தல்லால் - யாதொன்றுங் கானக நாட பயிலார் 3பயின்றதூஉம் வானக மாகி விடும். இனங்கழு வேற்றிய இழிசெய லில்லை 532. மனங்கொண்டக் கண்ணு மருவில செய்யார் கனங்கொண் டுரைத்தவை காக்கவே வேண்டும் சனங்க ளுவப்பன செய்யாவுஞ் செய்க இனங்கழு வேற்றினா ரில். அளறு படியினும் அருமணி மணியே 533. இணரோங்கி வந்தாரை யென்னுற்றக் கண்ணும் உணர்பவ ரஃதே யுணர்ப - உணர்வார்க் கணிமலை நாட அளறாடிக் கண்ணு மணிமணி யாகி விடும். எடுத்த செயலைத் தொடுத்து முடிக்க 534. கற்றதொன் றின்றி விடினுங் கருமத்தை அற்ற முடிப்பா னறிவுடையான் - உற்றியம்பும் நீத்தநீர்ச் சேர்ப்ப இளையானே யாயினும் மூத்தானே யாடு மகன். -பழமொழி 26, 7, 195, 398, 188, 72, 150 நுண்ணிய விழையும் நூலவர் நோக்கு 535. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாள் மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. -திரிகடுகம் 29 தன்னைத் தலையாய்ச் செய்வான் தானே 536. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானுந் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மே 1லுயர்த்து நிறுப்பானுந் தன்னைத் தலையாகச் செய்வானுந் தான். சிறியோர் பின்னர்ப் பெரியோர் சேறலேன்? 537. கரும வரிசையாற் கல்லாதார் பின்னு பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின் ஓத மரற்று மொவிகடற் றண்சேர்ப்ப பேதைமை யன்ற தறிவு இனந்தீ தாயினும் மனந்தீ தில்லார் 538. வேம்பி னிலையுட் 2கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதுந் திரியாதாம் - ஆங்கே இனந்தீ தெனினு மியல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்க மரிது. இனம்போன் றாகார்; மனம்போன் றாவார் 539. கடல்சார்ந்து மின்னீர் பிறக்கு மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம் இனத்தனைய ரல்ல ரெறிகடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார். சலவருட் சலவர்; நலவருள் நலவர் 540. மெல்லிய நல்லாருள் மென்மை யதுவிறந் தொன்னாருட் கூற்றுட்கு முட்குடைமை யெல்லாஞ் சலவருட் சாலச் சலமே நலவருள் நன்மை வரம்பாய் விடல். -நாலடியார் 248, 249, 244, 245, 188 பிறழா தென்றும் பெரியோர் வாய்ச்சொல் 541. இம்மூ வுலகி லிருள்கடியு மாய்கதிர்போல் அம்மூன்று முற்ற 1வுணர்தலால் - 2தம்முள் உறழா மயங்கி யுறழினு மென்றும் பிறழா பெரியார்வாய்ச் சொல். -புறப்பொருள் வெண்பாமாலை 167 அறிவுக் கில்லை இளமையும் முதுமையும் 542. இயைர் முதிய 3ரெனவிருபால் பற்றி விளையு மறிவென்ன வேண்டா - இளையனாய்த் தன்றாதை காமம் நுகர்தற்குத் தான்காமம் ஒன்றாது நீத்தா னுளன். -பெரும்பொருள் விளக்கம். 51. குற்றங் கடிதல் (ஐம்பெருங் குற்ற மென்றும் அறுவகை உட்பகை என்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம் அரசனும் பிறரும் தங்கண் நிகழாதவாறு விலக்குதல் - பாவாணர். இ.பெ.அ: திருக். 44.) அழியா அரசின் அமைதி இவைகாண் 543. போகம் 4பொருள்வேட்கை மான்வேட்டம் பொல்லாக்கள் சோகம் படுசூதே சொல்வன்மை - சோகக் கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின் அடுங்கதமி லேனை யரசு. ஊனம் தீர்ந்தவர் ஓதிய உரைகள் 544. ஆர்வமே செற்றங் கதமே யறையுங்கால் ஓர்வமே செய்யு முலோபமே - சீர்சாலா மானமே மாய 1வுயிர்க்கூன மென்னுமே ஊனமே தீர்ந்தவ ரோத்து. -ஏலாதி 18, 61 தனது நெய்யில் தானே பொரிதல் 545. அச்ச மலைகடலிற் றோன்றலு மார்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையுங் - கட்டிய மெய்ந்நிலை காணா வெகுளியு மிம்மூன்றுந் தந்நெய்யிற் றாம்பொரியு மாறு. செல்வம் உடைக்கச் சேர்ந்திணை படைகள் 546. தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை. குற்றந் தரூஉம் கொடும்பகை மூன்று 547. அற்புப் பெருந்தளை யாப்பு 1நெகிழ்ந்தொழுகல் கற்புப் பெரும்புணை 3காதலிற் கைவிடுதல் நட்பு நயநீர்மை நீங்க லிவைமூன்றுங் குற்றந் தரூஉம் பகை. -திரிகடுகம் 65, 38, 86 கற்றேய்ந் திடினும் சொற்றேய்ந் திடாது 548. கெடுவ லெனப்பட்டக் கண்ணுந் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய கற்றேயுந் தேயாது சொல். பொருந்தாப் பழியோர் பொல்லாப் பிணியாம் 549. பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்திற் றணியாது விட்டக்கால் தண்கடற் சேர்ப்ப 1பிணியீ டழித்து விடும். -பழமொழி 39, 40 செம்மை நினையார் சேறும் நெறிகள் 550. காதல் கவறாடல் கள்ளுண்டல் பொய்ம்மொழிதல் ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதிற் சினையாமை வைகுந் திருநாட செம்மை நினையாமை பூண்டார் நெறி. -நளவெண்பா. 208 கோவே செய்யினும் குற்றம் குற்றமே 551. மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே யன்று வாய்மை நண்ணினார் திறத்துங் குற்றங் குற்றமே நல்ல வாகா விண்ணுளார் புகழ்தற் கொத்த விழுமியோ னெற்றி போழ்ந்த கண்ணுளான் கண்டந் தன்மேற் கறையையார் கறையன் றென்பார். -குண்டலகேசி 17 52. பெரியாரைத் துணைக்கோடல் (தம்மின் முதிர்ந்த அறிவுடையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல் - மணக்; பரிப். இ.பெ.அ: திருக். 45. ப.பா.தி. 52 இ.சா.அ: நாலடி. 18. நீதிக். 56. (நல்லினஞ் சேர்தல்) மூத்தோர் சொன்மொழி முற்பொழு தின்னா 552. செயல்வேண்டா 1நல்லவை செய்விக்குந் தீய செயல்வேண்டி நிற்பின் விலக்கும் - இகல்வேந்தன் தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால் முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல். கற்றார் பலரைக் கண்ணாக் கொள்க 553. கற்றார் 2பலரைத்தங் கண்ணாக வில்லாதார் உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரு மாமலை நாட சுரையாழ் நரம்பறுத் தற்று. வல்லவன் ஆயினும் வன்றுணை வேண்டும் 554. சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்காற் செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை உயிருடையா ரெய்தா வினை. நற்றுணை வாய்க்கின் நலமெலாம் எய்தும் 555. பொலந்தா ரிராமன் துணையாகப் 3போந்த இலங்கைக் கிழவற் கிளையான் - இலங்கைக்கே பேர்ந்திறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச் சார்ந்து கெழீஇயலா ரில். -பழமொழி 263, 260, 239, 257 பெரியர் துணையைப் பெரியரால் பெறுக 556. இரும்பி னிரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின் 4நீருண்டா னீரான்வாய் பூசுப - தேரின் அரிய அரியவற்றாற் கொள்ப பெரிய பெரியரா னெய்தப் படும். -நான்மணிக்கடிகை 34 பெரியாரைச் சேரின் சிறியரும் பெரியராம் 557. ஊரங் கணநீ ருரவுநீர்ச் சேர்ந்தக்காற் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓருங் குலமாட்சி யில்லாருங் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. பெரியவர் கேண்மை பெரும்புகழ் சேர்க்கும் 558. ஒண்கதிர் 1வாண்மதியஞ் சேர்தலா லோங்கிய அங்கண் விசும்பின் முயலுந் 2தொழப்படூஉம் குன்றிய சீர்மைய ராயினுஞ் சீர்பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின். நீரும் பாலாம் பாலொடு கலந்தால் 559. பாலோ டளாயநீர் பாலாயி 3னல்லது நீராய் 4நிறந்திரிந்து தோன்றாதாம் - தேரிற் சிறியார் சிறுமையுந் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. நற்சார் வுற்றார் தற்காப் புற்றார் 560. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல் ஒல்காவே யாகு முழவ ருழுபடைக்கு மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற் செல்லாவாஞ் செற்றார் சினம். -நாலடியார் 175, 176, 177, 178 53. நன்கறிவுறுத்தல் (நன்கு என்பது நலம் பயப்பது. நலம் பயப்பவற்றை அறிவுறுத்திக் கூறுதல்.) பெரியார் வாய்ச்சொல் பெற்றுப் போற்றுக 561. அறிமி னறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமீன் பெரியார்வாய்ச் சொல். -நாலடியார் 172 பண்பட் டோரிடம் பயின்று கேட்க 562. அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டல் முறை. ஏழ்கடிந் திட்டால் எய்தும் இன்பம் 563. ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களங்கொண்ட வேல்வேந்தே - சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையகத் தைந்துவென் 1றாறகற்றி ஏழ்கடிந் தின்புற் றிரு. கரவா தீதல் கடமையாக் கொள்க 564. முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும் எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை இரவாம லீந்த இறைவர்போல் நீயும் கரவாம லீகை கடன். -புறப்பொருள் வெண்பாமாலை 221, 225, 194 நின்னை அறிவோன் நீயே ஆவாய் 565. தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார் செந்நடை சேராச் சிறியார்போ லாகாது நின்னடை யானே நடவத்தா நின்னடை நின்னின் றறிகிற்பா ரில். -பழமொழி 36 தெளிந்த அறங்கள் தேர்ந்து புகன்றது 566. உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை யுலையா வின்பந் தலைநிற்றல் அறிவர் சிறப்பிற்கெதிர் விரும்பல் அழிந்தோர் நிறுத்தலறம் பகர்தல் சிறியா ரினத்திற் சேர்வின்மை சினங்கை விடுதல் செருக்கவித்தல் இறைவ னறத்து ளார்க்கெல்லா மினிய ராத லிதுதெளிவே. புலவர் வாயுரை பொருந்தி வாழ்க 567. பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாக மெல்லாம் கோல்வளை யாமற் 1காத்துன் குடைநிழற் றுஞ்சல் நோக்கி நூல்விளைந் தனைய நுண்சொற் புலவரோ டறத்தை யோம்பின் மேல்விளை யாத வின்பம் வேந்தமற் றில்லை கண்டாய். -சீவகசிந்தாமணி 2816, 2906 நல்லவை செய்க; அல்லவை தவிர்க 568. பல்சான் றீரே பல்சான் றீரே கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனில் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ 2நல்லவை செய்த லாற்றீ ராயினும் 3அல்லவை செய்த லோம்புமின் அதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ 4நெறியுமா ரதுவே. நன்மக வென்ன நாடு காக்க 569. எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயோராகலி னின்னொன்று மொழிவல் அருளு மன்பு நீக்கி நீங்கா நிரயங் கொள்வரோ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. புலவர் பாடும் புகழே வீடு 570. சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரி நிரைகண் டன்ன வேற்றுமை யில்லா 1விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை உரையும் பாட்டு முடையோர் சிலரே மரயிலை போல மாய்ந்திசினோர் பலரே புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி தேய்த லுண்மையும் பெருக லுண்மையும் மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும் அறியா தோரையு மறியக் காட்டித் திங்கட் புத்தேள் திரிதரு முலகத்து வல்லா ராயினும் வல்லுந ராயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி யருளிலர் கொடாஅமை வல்ல ராகுக 2கெடாஅத் துப்பினின் பகையெதிர்ந் தோரே. பொதுநோக் கொழிக புலவர் மாட்டே 571. ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் 3வருவர் பரிசில் மாக்கள் வரிசை யறிதலோ அரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் 1அதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. காட்சிக் கெளிமை கடனாக் கொள்க 572. நீயே, 2பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடியொலியக் கழல்தைஇய வல்லாளனை வயவேந்தே யாமேநின், இகழ்பாடுவோ 3ரெருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற இன்றுகண் டாங்குக் காண்குவ மென்றும் இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே. -புறநானூறு 195, 5, 27, 121, 40 54. சிற்றினஞ் சேராமை (சிறியோர் கூட்டத்தோடு கூடாமை. சிறியோராவார் கயவரும் ஐங்குற்றவாளியரும் தன்னலக்காரரும் கல்வி நிரம் பாதவரும் உயர்ந்தோர் உண்டு என்பதை இல்லையென மறுப் போருமாவர் - பாவாணர். இ.பெ.அ: திருக். 46. ப.பா.தி. 57. நீதிக். 29.) கூடார்கட் கூடல் குலச்சிதை வாக்கும் 573. மொய்சிதைக்கும் ஒற்றுமை யின்மை யொருவனைப் பொய்சிதைக்கும் பொன்போலு மேனியைப் பெய்த கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்கும் கூடார்கட் கூடி விடின். -நான்மணிக்கடிகை 21 இனத்தான் அறிக இன்னார் என்பதை 474. 1முயறலே வேண்டா 2முனிவரை யானும் இயல்பின்ன ரென்ப தினத்தான் அறிக 3கயலியலுண் கண்ணாய் 4கரியவரோ வேண்டா அயலறியா அட்டூணோ வில். -பழமொழி 148 மூதறி வாளர் குறுகா மூன்று 575. இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும் செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றும் குறுகாரறிவுடை யார். -திரிகடுகம் 14 நெருப்புறு நெய்யும் நெருப்பாய் வெதுப்பும் 576. நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோ யாக்கும் - பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. பகையும் கூடப் பாடு நல்கும் 577. இசைந்த சிறுமை 5யியல்பிலா தார்கட் பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கட் பகையேயும் பாடு பெறும். ஆன்நெய் அகற்றி வேம்புநெய் விடுதல் 578. ஆன்படு நெய்பெய் கலனு ளதுகளைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு நல்வரை நாட நயனுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி னாரொடு நட்பு. இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இனத்தல் எய்தும் 579. மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தான் இகழப் 1படுவர் - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால். நற்சார் வுற்றால் தீச்சார் பறுமே 580. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்து நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு. பிறப்பும் விருப்பாம் பண்புறு நண்பால் 581. இறப்ப நினையுங்கா லின்னா தெனினும் பிறப்பினை யாரு முனியார் - பிறப்பினுள் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின். புணர்தல் இன்பமும் பிரிதல் இன்பமும் 582. உணர வுணரு முணர்வுடை யாரைப் புணரப் புணருமா மின்பம் - புணரின் தெரியத் தெரியுந் 2தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். -நாலடியார் 124, 187, 239, 180, 171, 174, 247 55. தெரிந்து செயல்வகை (தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம் - பரிமே. இ.பெ.அ: திருக். 47 இ.சா.அ: பழமொழி. 18 (கருமம் முடித்தல்)) தன்னுந் துணையும் தக்கவா றாய்க 583. தற்றூக்கித் தன்றுணையுந் தூக்கிப் பயன்தூக்கி மற்றது 1கொள்க மதிவல்லார் - அற்றன்றி யாதானு மொன்றுகொண் டியாதானுஞ் செய்தக்கால் யாதானு மாகி விடும். தாமே தமக்குத் தனிநோய் செய்வார் 584. ஆஅ மெனக்கெளிதென் றன்றுலக மாண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான் தோஒ முடைய தொடங்குவார் கில்லையே தாஅந் தரவாரா நோய். கயவர்க் குரையார் கருத்துடைச் சான்றோர் 585. நயவா நட்டொழுகு வாருந்தாங் கேட்ட துயவா தொழிவா ரொருவரு மில்லைப் புயலமை கூந்தற் 2பொலந்தொடீஇ சான்றோர் கயவர்க் குரையார் மறை. உண்மை உணரா துரையேல் மறையை 586. அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்குந் தம்மறையை முன்பிறர்க் கோடி மொழியற்க - தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபி னல்ல துயக்கொண்டு புல்வாய் வழிப்படுவா ரில். ஏவினோன் மேலாம் இயற்றுவோன் செய்கை 587. உவப்ப 3வுடன்படுத்தற் கேய கருமம் அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தான் வினைமுதிரிற் செய்தான்மே லேறும் பனைமுதிரின் 4தாய்தாண்மேல் வீழ்ந்து விடும். -பழமொழி 154, 183; 180, 179, 270 இன்னா வென்று பன்னிய மூன்று 588. 1பந்த மிலாத மனையின் வனப்பின்னா 2தந்தை யிலாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா மந்திரம் வாயா விடின். -இன்னா நாற்பது 2 மறையிலா துரைப்பின் மலரா மாண்பு 589. அந்தண ரொழுக்கமு மரசர் வாழ்க்கையும் மந்திர மில்லையேல் 3மலரு மாண்பில இந்திர னிறைமையு மீரைஞ் ஞூற்றுவர் தந்திரக் கிழவர்கள் தாங்கச் செல்லுமே. தோள்வலி சூழ்ச்சி தொகையாய்க் கொள்க 590. வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும் ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனுங் கோள்வலிச் சீய மொய்ம்பிற் சூழ்ச்சியே குணம தென்றான். சூழா வொருவன் சூழான் இன்பம் 591. உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர் கருதிய கருமச் 4சூழச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம் எரிதிகழ்ந் திலங்கு வேலோ யெண்ணுவ 1தெண்ண மென்றான். நுண்ணிய ரோடு நூலறி வுறுக 592. ஒன்றுநன் றெனவுணர் வொருவன் கொள்ளுமேல் அன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமால் நின்றதொன் றுண்டுகேள் நீதி நூலினோ டொன்றிநின் 2றவரொடு முணர்க வொட்டியே. நூலறி வின்றேல் நுழைபொருள் இல்லை 593. 3மண்ணியல் வளாகங் காக்கு மன்னரால் வணக்க லாகாப் புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட நுண்ணிய நூலி னன்றி நுழைபொரு ளுணர்தல் செல்லா தெண்ணிய துணர்ந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே. பகையும் நகையும் பார்த்துத் தெளிக 594. பகைய லாதவ ரைப்பகை யாக்கலும் நகையில் தீமனத் தாரைநண் பென்னலும் முகையின் வேய்ந்ததொர் மொய்ம்மலர்க் கண்ணியாய் மிகையின் மற்றவை பின்னை 4வெதுப்புமே. பறவைக் கெனினும் பகரேல் மறைவுரை 595. உள்ளுநின் றொலிபுறப் படாத தொண்சிறைப் புள்ளுமல் லாதவும் புகாத நீரது வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கும் வேதிகை வள்ளல்தன் மந்திரச் சாலை வண்ணமே. உள்ளத் துணர்வை உரையால் தெளிக 596. பஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து மஞ்சினின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால் வெஞ்சொலொன் நுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய். -சூளாமணி 237, 248, 274, 236, 242, 647, 240, 275 விழைப வெல்லாம் வெளிப்படா தமைக்க 597. காய்ந்தெறி கடுங்கற் றன்னைக் கவுட்கொண்ட களிறுபோல் ஆய்ந்தறி வுடைய ராகி யருளொடு வெகுளி மாற்றி வேந்தர்தாம் விழைப வெல்லாம் வெளிப்படா மறைத்தல் கண்டாய் நாந்தக வுழவ ரேறே நன்பொரு ளாவ தென்றான். -சீவகசிந்தாமணி 2910 56. வலி யறிதல் (தனக்குள்ள வலியும் பிறர்க்குள்ள வலியும் அறிதல் - மணக். பரிப். இ.பெ.அ: திருக். 48.) வலியரை எள்ளல் வளருந் துயராம் 598. இகலின் வலியாரை யெள்ளி யெளியார் இகலி னெதிர்நிற்ற லேதம் - அகலப்போய் என்செய்தே யாயினு முய்ந்தீக சாவாதான் முன்கை வளையுந் தொடும். பெரியார் துணையுடன் பேணிச் செய்க 599. ஆமாலோ வென்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல் போமா றறியா புலன்மயங்கி யூர்புக்குச் சாமாகண் காணாத வாறு. வீரரின் ஆற்றல் வெஞ்சமர் உணர்த்தும் 600. நூக்கி யவர்வெலினுந் தாம்வெலினும் 1வெஞ்சமத்துத் தாக்கி யெதிர்ப்படுவர் தக்கவ ரஃதன்றிக் காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல் யாப்பினு ளட்டிய நீர். -பழமொழி 293, 61, 311 அருளின் மிக்கார்க் கரியதொன் றில்லை 601. ஆர்கலி ஞாலத் தறங்காவ லாற்சிறந்த பேரருளி னாற்குப் பெறலருமை யாதரோ வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும் போர்மலைந்து வெல்லும் புகழ். -இரும்பல்காஞ்சி பெரியாரை மோதல் வரையினை மோதல் 602. அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரங் கொண்டு - தெரியிற் கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரங் கொண்டு. -யாப்பருங்கலம் 60, மேற்கோள் ஊக்க முடையான் உலைப்பான் பகையெலாம் 603. உறுபடை மன்னர் தம்மை யுடற்றியொன் றானு மின்றிச் சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ வென்ன வேண்டா செறியெயிற் றாளி வேழப் பேரினஞ் செகுத்த தன்றே உறுபுலி யொன்று தானே 1கலையின முடற்றிற் றன்றே. -சீவகசிந்தாமணி 814 57. கால மறிதல் (வினை செய்தற்காம் காலம் அறிதல் - மணக். பரிப். இ.பெ.அ: திருக். 49. இ.சா.அ: ப.பா.தி. 42 (காலத்தின் அருமை)) காலம் அறிந்து கடமை புரிக 604. அன்பி னெகிழ வழிபட்டுக் கொள்ளாது நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே கன்றுவிட் டாக்கறக்கும் போழ்திற் கறவானாய் அம்புவிட் டாக்கறக்கு மாறு. விரைந்து செய்தலும் விளைக்கும் கேடு 605. புரையக் கலந்தவர்க் கண்ணுங் கருமம் உரையின் வழுவா துவப்பவே கொள்க வரைய நாட விரையிற் கருமம் சிதையும் இடராய் விடும். -பழமொழி 166, 164 அடக்க மாக ஆள்வினை புரிக 606. ஆற்றுந் துணையும் அறிவினை யுள்ளடக்கி ஊற்ற முரையா ருணர்வுடையார் - ஊற்றம் உறுப்பினா லாராயு மொண்மை யுடையார் குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு. -நாலடியார் 196 பகைவரை எள்ளிப் படுதுயர் எய்தேல் 607. வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை எள்ளி 1யுணர்த லியல்பன்று - தெள்ளியார் ஆறுமே லாறியபி னன்றித்தங் கைக்கொள்ளார் நீறுமேற் 2பூத்த நெருப்பு. -புறப்பொருள் வெண்பாமாலை 166 நாளும் கோளும் நல்லவை கூட்டும் 608. நாள்கூட்ட 3மூழ்த்த மிவற்றொடு நன்றாய கோள்கூட்டம் யோகங் குணனுணர்ந்து - தோள்கூட்ட லுற்றானு மல்லானு மைந்து முணர்வானாற் பெற்றானாட் கொள்க பெரிது. -சிறுபஞ்சமூலம் 44 இடம்பொழு தெண்ணி இயற்றுதல் ஏற்றம் 609. இடத்தொடு பொழுது நாடி யெவ்வினைக் கண்ணு மஞ்சார் மடப்பட லின்றிச் சூழு மதிவலார்க் கரிய துண்டோ கடத்திடைக் காக்கை யொன்றே யாயிரங் கோடி கூகை இடத்திடை யிரங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே. -சீவகசிந்தாமணி 1927 ஞாலமாள் வோர்க்குக் காலமே கண்கள் 610. சீல மல்லன நீக்கிச்செம் பொற்றுலைத் தால மன்ன தனிநிலை தாங்கிய ஞால மன்னர்க்கு நல்லவர் நோக்கிய கால மல்லது கண்ணுமுண் டாகுமோ. -இராமா. அயோ. 118 58. இடனறிதல் (வினை செய்யும் இடனறிதல் - மணக். பரிப். வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற் கேற்ற நிலத்தினை அறிதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 50.) பெரியர் துணைப்படின் சிறியார் செய்வதென்? 611. பெரியாரைச் சார்ந்தார்மேற் பேதைமை கந்தாச் சிறியார் முரண்கொண் 1டொழுகல் - வெறியொலி 2ஓநா யினம்வெரூஉம் வெற்ப புலம்புகில் தீநா 3யெழுப்புமா மெண்கு. சிறியார் இனத்தைச் சேர்வரோ பெரியர்? 612. இறப்ப வெமக்கீ 4திளிவர வென்னார் பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினாற் சாலவு மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே தால அடைக்கலமே போன்று. -பழமொழி 292, 87 சேர்ந்த இடத்தால் சேரா தச்சம் 613. வான்சேரிற் புள்ளஞ்சா வல்லரில சுற்றிய கான்சேரின் மானின் கணமஞ்சா - வான்சேர் சிகர வரைசேரிற் றேனஞ்சா அஞ்சா மிகுநீர்க் கயஞ்சேரின் மீன். அளைநீங் குழுவையும் ஆருயிர் இழக்கும் 614. உளையச் சிலைக்கு 5முழுவையுந் தான்றன் அளையிற்றீர்ந் தூரடைந்த தாக - இளிவந் துயிரிழப்ப தென்றா லுறுமிடநீத் தென்கொல் செயிருழக்குந் தீங்கு செயல். -பாரதம் நரிவலைக் கண்ணே அரிபடல் உண்டே 615. 1இழைபொறை யாற்ற கில்லா திட்டிடை தளர நின்ற குழைநிற முகத்தி னார்போற் குறித்ததே துணிந்து செய்யார் முழையுறை சிங்கம் பொங்கி முழங்கிமேற் பாய்ந்து மைதோய் வழையுறை வனத்து வன்க ணரிவலைப் பட்ட தன்றே. -சீவகசிந்தாமணி 1928 59. தெரிந்து தெளிதல் (அரசன், அமைச்சர் முதலியோர்களை அவரவர் வேலைக்குத் தகுதியாய் இருப்பதைத் தெரிந்து அவர்களிடம் நம்பிக்கை வைத்தல் - கா.சு. இ.பெ.அ: திருக். 51.) அற்றத்தால் தேரார் அறிவுடை யாளர் 616. சுற்றத்தார் நட்டா ரெனச்சென் றொருவரை அற்றத்தாற் றேறா ரறிவுடையார் - கொற்றப்புள் ஊர்ந்துலகந் தாவிய வண்ணலே யாயினுஞ் சீர்ந்தது செய்யாதா ரில். தம்பே ருடைமை தாமே போற்றுக 617. மறந்தானுந் 2தாமுடைய தாம்போற்றி னல்லால் சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார் கறங்குநீர்க் 1கல்லலைக்குங் கானலஞ் சேர்ப்ப இறந்தது 2பேர்த்தறிவா ரில். விரும்பினார் தின்றால் வேம்பும் இனிக்குமோ? 618. தெற்ற வொருவரைத் தீதுரை கண்டக்கால் இற்றே யவரைத் தெளியற்க - மற்றவர் யாவரே 3வேண்டினும் நன்கொழுகார் கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு. ஆராய்ந் துணரான் அழிவான் விரைவில் 619. விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைக் தஞ்ச மொழியலோ வேண்டா அளிந்தார்க ணாயினு மாராயா னாகித் தெளிந்தான் 4விரைந்து கெடும். -பழமொழி 177, 206, 95, 192 கூறப்படுவன தேறித் துணிக 620. பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போந்த அருள்போக வாரறமென் றைந்தும் - 5இருள்போகக் கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால் தேறப் படுங்குணத்தி னான். -சிறுபஞ்சமூலம் 59 எல்லாம் அறிந்தவன் எவனும் இல்லை 621. ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்றும் ஒருவ னறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்ற 6முளானு மொருவன் கணனடங்கக் கற்றானு மில். -நான்மணிக்கடிகை 102 அளக்குங் கருவி துளக்கிலா உள்ளம் 622. மக்களு மக்களல் லாரு மெனவிரண்டு குப்பைத்தே குண்டுநீர் வையகம் - மக்கள் அளக்குங் கருவிமற் றொண்பொரு ளொன்றோ துளக்குறு வெள்வளையார் தோள். -அறநெறிச்சாரம் 92 எவர்க்கும் இனியர் எவரும் இல்லை 623. அங்கொளி விசும்பிற் றோன்று மந்திவா னகட்டுக் கொண்ட திங்களங் குழவிப் பால்வாய்த் 1தீங்கதி ரமுத மாந்தித் தங்கொளி விரிந்த வாம்பல் தாமரை குவிந்த வாங்கே 2எங்குளா ருலகில் யார்க்கு மொருவரா வினிய நீரார். -சூளாமணி 1031 60. தெரிந்து வினையாடல் (வினைசெய்வாரும் அவரால் செய்யப்படும் வினையும் பலவாதலின் அவ்வவரால் செய்யப்படும் வினைகளை அறிந்து அவரை இட்டுச் செய்வித்தல் - பரிப். இ.பெ.அ: திருக். 52. இ.சா.அ: பழமொழி. 20 (தெரிந்து செய்தல்) நீதிக். 65 (வினைத்திறம்)) கற்றவன் சார்பில் கடமை விடுக 624. உற்றா னுறாஅ னெனவேண்டா வொண்பொருளைக் கற்றானை நோக்கியே 3கைவிடுக்க - கற்றான் கிழவ னுரைகேட்குங் கேளா னெனினும் இழவன் றெருதுண்ட வுப்பு. முட்டா தேவி முடிக்க கடமை 625. விட்டுக் கருமஞ் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொள வேண்டுமால் தொட்டக்கால் மாழ்குந் தளிர்மேலே நிற்பினும் 1கொட்டாமற் செல்லா துளி. மடிபால் விடுத்த கடமையும் மடியும் 626. மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம் முடியாத வாறே முயலும் - கொடியன்னாய் பாரித் தவனை 2நலிந்து தொழில்கோடல் மூரி 3யெருத்தா னுழவு. குரங்கின் கையில் கொள்ளி கொடேஎல் 627. உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமி லுள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். -பழமொழி 172, 169, 167, 255 புன்மீன் காக்கப் பூசை ஆகுமோ? 628. காட்டிக் கருமங் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவ 4ராற்ற வெமக்கென றமர்ந்திருத்தல் மாப்புரை நோக்கின் மயிலன்னாய் பூசையைக் காப்பிடுதல் புன்மீன் றலை. தமராய் அமையார் அமரார் என்றும் 629. தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பவர்க் காகாதே தோன்றும் சுவர்நிலஞ் செய்தமைத்துக் கூட்டியக் கண்ணும் உவர்நில முட்கொதிக்கு மாறு. தீயரைத் திருத்தத் தேர்ந்தவர் அரியர் 630. நாட்டிக் கொளப்பட்டார் நன்மை யிலராயிற் காட்டிக் களைது மெனவேண்டா - ஓட்டி 1இடம்படுத்த கண்ணா யிறக்குமை யாட்டை உடம்படுத்து 2வௌவுண்டா ரில். நுண்ணுணர் வாளன் எண்ணுவ முடிப்பான் 631. உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம் புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல் நிரையிருந்து மாண்ட வரங்கினுள் வாட்டுக் கரையிருந் தார்க்கெளிய போர். பயன்விழை வாரைப் பணியில் நிறுத்தேல் 632. கட்டுடைத் தாகக் கருமஞ் செயவைப்பிற் பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க தொட்டாரை யொட்டாப் பொருளில்லை யில்லையேல் அட்டாரை யொட்டாக் கலம். தூய்மை இலாரைத் தொண்டிற் செலுத்தேல் 633. அகந்தூய்மை யில்லாரை யாற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பி னஃதால் - இகந்து நினைந்து தெரியானாய் நீள்கயத்து ளாமை நனைந்துவா வென்று விடல். தக்க துதவித் தகுவினை முடிக்க 634. ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ப வியங்கொள்ளிற் - காணி பயவாமைச் செய்வார்யார் தஞ்சாகா டேனும் 3உயவாமைச் சேறலோ வில். -பழமொழி 170, 289, 174, 176, 173, 175, 168 சிறியரைக் கொண்டு செயற்படல் வீணே 635. உறுமக்க ளாகவொருவரை நாட்டிப் பெறுமாற்ற மின்றிப் பெயர்த்தே யொழிதல் சிறுமைக் கமைந்ததோர் செய்கை யதுவே குறுமக்கள் காவு நடல். நிகழ்ந்ததை அறிந்து நேர்வது செய்க. 636. உழந்ததூஉம் பேணா 1ரொறுத்தமை கண்டும் விழைந்தார்போல் தீயவை பின்னருஞ் செய்தல் கழங்கண் முழவியம்புந் தண்கடற் சேர்ப்ப 2முழங்குறைப்பச் சாணீளு மாறு. ஆற்றுவார் ஆற்றல் அறிவரோ பிறரே? 637. தந்தொழி லாற்றுந் தகைமையார் செய்வன வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ மைந்திறை கொண்ட மலைமார்ப ஆகுமோ நந்துழுத வெல்லாங் கணக்கு. ஆக்கவும் அழிக்கவும் வல்ல தரசு 638. வழிப்பட் டவரை வலியராச் செய்தார் அழிப்பினு மாக்கினு மாகும் - விழுத்தக்க பையமர் மாலைப் பணைத்தோளாய் பாத்தறிவென் மெல்லக் கவுட்கொண்ட நீர். கனிப்பலா வெட்டிக் காஞ்சிரை நடுவரோ? 639. ஊழாயி னாரைக் களைந்திட் டுதவாத கீழாயி னாரைப் பெருக்குதல் - யாழ்போலுந் தீஞ்சொல் மழலையாய் தேனார் பலாக்குறைத்துக் 3காஞ்சிரை நட்டு விடல். அறிஞரைத் தேடி ஆள்வினைக் கமைக்க 640. தெற்ற அறிவுடையார்க் கல்லாற் றிறனிலா முற்றலை நாடிக் கருமஞ் செயவையார் கற்றொன் றறிந்து கசடற்ற காலையும் அற்றதன் பாற்றேம்பல் நன்ற. -பழமொழி 121, 100, 92, 252, 104, 171 காக்கையைச் சோறு காக்கச் செய்திடல் 641. பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார் உண்டா ரடிசிலே தோழரிற் - கண்டாரா யாக்கைக்குத் தக்க வறிவில்லாக் காப்படுப்பிற் 1காக்கையைக் காப்படுத்த சோறு. ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொன் றெளிது 642. வான்குரீஇக் கூடரக்கு வாலுலண்டு 2கோற்புழுத் 3தேன்புரிந்த தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ வல்லவர் வாய்ப்பன வென்னா ரொரோவொருவர்க் கொல்காதோ ரொன்று படும். -சிறுபஞ்சமூலம் 40,27 61. சுற்றந் தழால் (தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல் - பரிமே. சுற்றியிருப்பது சுற்றம். தழுவல் - தழால் - பாவாணர். இ.பெ.அ: திருக். 53. நாலடி. 21 இ.சா.அ: நீதிக். 50. (சுற்றந் தழுவல்)) செய்யாப் பணியும் செய்வர் தம்மவர் 643. மெய்யா வுணரிற் பிறர்பிறர்க்குச் செய்வதென் மையா ரிருங்கூந்தற் பைந்தொடி யெக்காலுஞ் செய்யா ரெனினுந் தமர்செய்வர் பெய்யுமாம் பெய்யா தெனினு மழை. உளைய உரைப்பினும் உற்றார்வாய்க் கேட்க 644. உளைய வுரைத்து விடினு முறுதி கிளைகள்வாய்க் கேட்பது நன்றே - விளைவயலுட் பூமிதித்துப் 1புட்கலாம் பொய்கைப் புனலூர தாய்மிதித்த வாகா முடம். அல்லல் அடையின் அகற்றுவர் கிளைஞர் 645. அல்ல லொருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைக ளெனப்படுவார் - நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கு மதுவே மனைமர மாய மருந்து. இன்னாக் கிளைஞரும் இடரிற் பிரியார் 646. முன்னின்னா ராயினு மூடு மிடர்வந்தாற் பின்னின்னா ராகிப் பிரியா ரொருகுடியார் பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர துன்னினா ரல்லார் பிறர். உணவின் முதற்றே உயரிய அறங்கள் 647. சேர்ந்தா ரொருவரைச் சேர்ந்தொழுகப் பட்டவர் தீர்ந்தாராக் கொண்டு தெளியினுந் - தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்காற் செல்லும்வா யென்னுண்டாம் எல்லாம்பொய் யட்டூணே வாய். உற்றார்க் குதவுநர் உறுகண் துடைப்பார் 648. கூஉய்க் கொடுப்பதொன் றில்லெனினுஞ் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார் வாய்ப்பத்தான் 2மாழ்கியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள்வே றாகி விடும். அவையகத் திழித்தல் அழகிய தன்று 649. பல்கிளையுட் பார்த்துறா னாகி யொருவனை நல்குரவால் வேறாக நன்குணரான் - சொல்லின் உரையுள் வளவியசொற் சொல்லா ததுபோல் நிரையுள்ளே யின்னா வரைவு. -பழமொழி 351, 353, 350, 352, 349, 376, 68 உறுதுயர் அனைத்தும் உறவுமுன் கெடுமால் 650. வயாவும் வருத்தமு மீன்றக்கால் நோவுங் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங் கசாஅத்தா னுற்ற வருத்த முசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். நல்லாண் மகனின் நற்கடன்ஈது 651. அழல்மண்டு போழ்தி னடைந்தவர்கட் கெல்லாம் நிழல்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்பொற் பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். உப்பிலாக் கூழும் ஒப்பிலா அமுதாம் 652. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை யுயிர்போற் கிளைஞர்மாட் டெக்கலத் தானும் இனிது. கிளைகளைத் தாங்கிக் கெட்டவர் இல்லை 653. அடுக்கல் மலைநாட தற்சேர்ந் தவரை எடுக்கல மென்னார் பெரியோர் - அடுத்தடுத்து வன்காய் 1பலாப்பல காய்ப்பினு மில்லையே தன்காப் பொறுக்கலாக் கொம்பு. -நாலடியார் 201, 202, 206, 203 62. பொச்சாவாமை (மறவி இன்றி ஒழுகுதல். அது தனது சோர்வு பார்த்துப் பிறர் வஞ்சகஞ் செய்யும் இடங்களினும் அறம் பொருள் இன்பங்கள் செய்ய வேண்டும் இடங்களினும் மறத்தலின்மை. பொச்சாப்பு எனினும் மறவி எனினும் இகழ்ச்சி எனினும் ஒக்கும் - மணக். இ.பெ.அ: திருக். 54.) இகழத் தகாத இனிய பொருள்கள் 654. சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந் தாளினாற் றந்த விழுநிதியும் நாடொறும் நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் 1காப்பிகழ்த லாகாப் பொருள். -திரிகடுகம் 47 மனத்துற வாளர் மயக்கில் அகப்படார் 655. அலைபுனலுள் நிற்பினுந் தாமரை யீன்ற இலையின்கண் நீர்நிலா தாகும் - நிலையில் புலங்களில் நிற்பினும் பொச்சாவா ராயின் மலங்கடி வாளா தவர்க்கு. -அறநெறிச்சாரம் 148 பொன்போற் போற்றிக் காக்கத் தக்கவை 656. தன்னுடம்பு தாரம் அடைக்கலந் தன்னுயிர்க்கென் றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும் பொன்னினைப் போற்போற்றிக் காத்துய்க்க 1காவாக்கால் 3அன்றே விழுமந் தரும். -ஆசாரக்கோவை 95 ஆய்ந்து தெளிக அரும்பொரு ளாயினும 657. வண்ணப்பூ மாலை சாந்தம் வாலணி கலன்க ளாடை கண்முகத் துறுத்தித் தூய்மை கண்டலாற் கொள்ள வேண்டா அண்ணலம் புள்ளோ டல்லா லாயிரம் பேடைச் சேவல் உண்ணுநீ ரமுதங் காக்க வூகமோ டாய்க வென்றான். -சீவகசிந்தாமணி 1898 பகைசிறி தென்று பார்ப்பது கேடு 658. அஞ்சனக் கோலி னாற்றா நாகமோ ரருவிக் குன்றிற் குஞ்சரம் புலம்பி வீழக் 1கூர்நுனை யெயிற்றிற் கொல்லும் 2பஞ்சினு மெல்லி தேனும் பகைசிறி தென்ன வேண்டா அஞ்சித்தற் காக்க வேண்டு மரும்பொரு ளாக வென்றான். மக்களைப் பேண மனங்கொளும் வழிகள் 659. பொருந்தலாற் பல்லி போன்றும் போற்றலாற் றாய ரொத்தும் அருந்தவர் போன்று காத்து மடங்கலா லாமை போன்றும் திருந்துவேற் றெவ்வர் போலத் தீதற வெறிந்து மின்ப மருந்தினால் மனைவி யொத்து மதலையைக் காமி னென்றான். -சீவகசிந்தாமணி 1894, 1095 புகழ்ச்சி நூலுட் புகன்ற செய்தி 660. இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக மகிழ்ச்சி யின்மன மைந்துறும் போழ்தெனப் புகர்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுள் திகழ்ச்சி சென்றசெம் பொன்முடி மன்னனே -சூளாமணி 628 63. செங்கோன்மை (அரசனால் செயப்படும் முறையினது தன்மை. அம் முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது - பரிமே. செவ்விதாகிய முறைசெய்தலுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று - மணக். இ.பெ.அ: திருக். 55 இ.சா.அ: பழமொழி. 25. (அரசியல்பு) ப.பா.தி. 44 (அரசு) நீதிக். 68 (அரசியல்)) உறவினர் ஆயினும் உண்மையால் ஆய்க 661. எங்கண் ணினைய ரெனக்கருதி னேதமால் தங்கண்ண ரானுந் தகவில கண்டக்கால் வன்கண்ண னாகி யொறுக்க வொறுக்கல்லா மென்கண்ண னாளா னரசு. முறைமைக்கு மூப்போ இளமையோ வில்லை 662. சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் 1பின்றையும் - மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை யில். நீரும் பாலும் நேரொப் பாமோ? 663. முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும் இறைதிரியா 2னேரொத்தல் வேண்டும் - முறைதிரிந்து நேரொழுகா னாயி னதுவா மொருபக்கம் நீரொழுகப் பாலொழுகு மாறு. கடைப்பிடி குலத்தொழில் கல்லா தமையும் 664. உரைமுடிவு காணா னிளமையோ னென்ற 1நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் 2பாகம் படும். செய்தவன் உள்ளம் செய்பொருள் மேலாம் 665. செயிரறு செங்கோற் சினவேந்தன் 3செய்கை பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையுஞ் செவ்வாய் மணி முறுவற் சின்மொழி செய்தானை ஒவ்வாத பாவையோ வில். -பழமொழி 241, 242, 243, 6, 259 இறப்பப் பெருகி இசைபடு செல்வம் 666. இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற் சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால் ஆர்வமுஞ் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா விகல்வேல் மறமன்னர் ஒன்னார்க் குயர்த்த படை. அரசிற் பிறத்தல் அறம்புரிந் தன்று 667. அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு. -தகடூர் யாத்திரை மன்னவன் தன்னொளி மாநிலங் காக்கும் 668. உறங்கு மாயினு மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால் இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந் தறங்கள் வௌவ அதன்புறங் காக்கலார். -சீவகசிந்தாமணி 248 பகைவரை வணக்கும் பான்மை உவப்பாம் 669. ஆறிலொன் றறமென வருளி னல்லதொன் றூறுசெய் துலகினு ளுவப்ப தில்லையால் மாறிநின் றவரையும் வணக்கி னல்லது சீறிநின் 1றவருயிர் செகுப்ப தில்லையே. செருபடைக் கொடுமை செங்கோற் கில்லை 670. நாமவேல் நரபதி யுலகங் காக்குநாள் காமவேள் கவர்கணை 2கலத்த லல்லது தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை ஏமநீர் வரைப்பகத் தியைந்த தில்லையே. வாட்டுந் துயரறின் வானுல காகும் 671. குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியும் நீர்சூழ் படிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார் முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி அடிமிசை யறையுஞ் செம்பொ னலர்கழ லரச ரேறே. -சூளாமணி 54, 53, 209 உழுபடை யன்றி எழுபடை இல்லை 672. இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும், என்றாங் கவையளந் தறியினு மளத்தற் கரியை அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவி லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் 1வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே. -புறநானூறு 20 64. கொடுங்கோன்மை (கொடுங்கோன்மையால் வருங் குற்றம் கூறுதல். அது முறைமை செய்யாமையும் அருள் செய்யாமையும் பிறர் நலியாமற் காவாமையும் முறைகெடச் செய்தலும் குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும் அல்லவை செய்தலும் குடிகளை இரத்தலும் எனப் பலவகைப்படும். - மணக். இ.பெ.அ: திருக். 56.) காவலன் கள்வனேல் யாவரே உய்வார்? 673. வெண்குடைக்கீழ் வாழுங் குடிகட்கு வேந்தனுஞ் செங்கோல 2னல்லனேற் செய்வதென் - பொங்கு படுதிரைநீர்ச் சேர்ப்பமற் றில்லையே யானை தொடுவுண்ணின் மூடுங் கலம். உச்சியை அறுத்தே ஊட்டுவ துணவோ? 674. அடைய அடைந்தாரை யல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் - குடிகள்மேற் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பி 1னஃதன்றோ சூட்டறுத்து வாயி விடல். கொடுஞ்செயல் வேந்தும் கூற்றும் ஒப்பே 675. கூற்ற முயிர்கொள்ளும் 2போழ்து குறிப்பறிந்து மாற்ற முடையாரை யாராயா - தாற்றவும் முல்லை புரையு முறுவலாய் செய்வதென் வல்லை யரசாட் கொளின். அழுத கண்ணீர் அழிக்கும் கூற்று 676. தோற்றத்தாற் பொல்லார் துணையிலார் நல்கூர்ந்தார் மாற்றத்தாற் செற்றா ரெனவலியா ராட்டியக்கால் ஆற்றா தவரழுத கண்ணீ 3ரவையவர்க்குக். கூற்றமாய் வீழ்ந்து விடும். -பழமொழி 250, 246, 254, 47 அரசு கோடின் அழியும் ஒழுக்கம் 677. கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் 4மிஞ்சி நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடிப் பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான். -சீவகசிந்தாமணி 255 முறையிலா அரசில் முந்து நிற்பவை 678. நிறையி னீங்கிய மகளிர் நீர்மையும் பொறையி னீங்கிய தவமும் பொங்கருட் டுறையி னீங்கிய அறமுந் தொல்லையோர் முறையி னீங்கிய வரசின் முந்துமே. -இராமா. அயோத் 1183 மாண்பிலா அரசில் மாரியும் பொய்க்கும் 679. தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்சூற் கொள்ளாது மாறிக் கால்பொரச் சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ மழைகா லூன்றா வளவயல் விளையா வாய்மையுஞ் சேட்சென்று கரக்குந் தீதுதரப் பிறவு மெல்லா நெறிமாறு படுமே கடுஞ்சினங் கவைஇய காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே. -ஆசிரியமாலை 65. வெருவந்த செய்யாமை (பிறர்க்கு அச்சம் வருவன செய்யாமையும் தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல் - மணக். (வெரு - அச்சம். வெருவருதல் - அஞ்சுதல்) இ.பெ.அ: திருக். 57.) வலியவன் வாட்டின் எளியவன் என்செயும்? 680. 1காப்பிறந் தோடிக் கழிபெருஞ் செல்வத்தைக் 2கோப்பரியான் கொள்ளிற் கொடுத்திரா தென்செய்வர் நீத்த பெரியார்க்கே யாயினு 3மிக்கவை மேவிற் பரிகார மில். -பழமொழி 386 கனிவிலா அரசிற் காடே நன்று 681. தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயின் போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரு மன்றே. வெய்ய ஆட்சியில் வையகம் வெதும்பும் 682. நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டே மறந்தலை மயங்கு செவ்வேல் மன்னவன் வெய்ய னாயின் அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே. -சூளாமணி 265, 263 வெண்குடை வெதுப்பின் தண்குடை யுண்டோ? 683. மண்குளிர கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள் விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயின் கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும் தண்குளிர் கொள்ளு மேனுந் தான்மிக வெதும்பு மன்றே. -சூளாமணி 264 முறையோ டணுகின் நிறையும் வளமே 684. காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு 1வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு 2பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்கபுலம் போலத் தானு முண்ணா னுலகமுங் கெடுமே. -புறநானூறு 184 66. கண்ணோட்டம் (தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும் தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவினவரும் எளிய வரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு - பாவாணர். இ.பெ.அ: திருக். 58. நீதிக். 51.) அழிபகை ஆயினும் அருள்வர் பெரியர் 685. தெற்றப் பகைவ ரிடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படுந்தன்மைத் தாயினுஞ் சான்றோர் அவைப்படிற் சாவாது பாம்பு. உருத்து வெகுளார் உயர்பெரு மக்கள் 686. 1எல்லை யெனவின்றி 2இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளா ருலகாண்டு மென்பவர் சொல்லின் வளாஅய்த்தந் தாணிழற்கீழ்க் கொள்பவே கொல்லையிற் கூழ்மரமே போன்று. -பழமொழி 86. 256 அருளே கண்ணுக் கணிகலம் ஆகும் 687. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள. -திரிகடுகம் 52 கண்ணென லாமோ கண்ணோ டாததை? 688. ஒன்று நரம்பென்கோ வொன்றாத வென்பென்கோ இன்றசை தானென்கோ யாதென்கோ - மென்றொடையாழ் பண்ணோட்டு மின்சொற் பணைத்தோளாய் சேர்ந்தவர்பாற் கண்ணோட்ட மில்லாத கண். பாவையும் பாழே கண்ணோட்டம் இலையேல் 689. யாவர் வரினு மெதிரேற்குந் தெய்வமடப் பாவை யகத்திருத்தும் பாழன்றே - மேவினரைத் தண்ணார் கரதலத்தாற் றள்ளாவாய்த் தாமுமொரு கண்ணாகி நிற்கின்ற கண். கடவுள் படைத்தது கண்மைக் காகவே 690. வெண்மை கருமை விரிசெம்மை நீண்மைவனப் பொண்மை 1யிவற்றொன் றொழித்தேனுங் - கண்மையினை வையாது மாந்தர் மயில்போ லெனத்தனது கையா லிறைவகுத்தான் கண். -பாரதம் 67. ஒற்றாடல் (பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார் மாட்டும் நிகழ்ந்தன அறிதற்கு ஒற்றரையாளுதல், பரிமே. ஒற்றனை ஒற்று என்றார் வேந்தனை வேந்து என்றாற் போல (நொதுமல் - அயல்) திருக். 581. பரிமே. இ.பெ.அ: திருக். 59.) உருவறி வுரைத்திறம் ஒற்றாட் கொளியாம் 691. எள்ளப் படுமரபிற் றாகலு முன்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும் 2உள்ளதே ஒற்றாட் குணம். இவரும் ஒற்றரே எண்ணிப் பார்த்தால் 692. அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானுஞ் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர் ஒற்றா ளெனப்படு வார். -திரிகடுகம் 85, 55 ஒற்றினை ஒற்றி உண்மை அறிக 693. ஒற்றினா னொற்றிப் பொருள்தெரிதல் முன்னினிதே முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன்னினிதே பற்றிலனாப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல் வெற்றிவேல் வேந்தர்க் கினிது. -இனியவை நாற்பது 35 ஒற்றரை ஒற்றால் ஒற்றுதல் கொற்றமாம் 694. ஒற்றர் தங்களை யொற்றரி னாய்தலும் கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ் சுற்றஞ் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே. -சீவகசிந்தாமணி 1921 68. ஊக்கமுடைமை (மனம் மெலிதலின்றி வினைசெய்தற்கண் கிளர்ச்சி யுடையராதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 60.) எண்ணிச் செய்தலே பெரியார்க் கியற்கை 695. இசையு மெனினு மிசையா தெனினும் வசைதீர வெண்ணுவர் சான்றோர் - விசையின் நரிமா வுளங்கிழித்த வம்பினிற் றீதோ அரிமாப் பிழைப்பெய்த கோல். -நாலடியார் 152 தமக்குத் தாமே தக்க துணையாம் 696. எமக்குத் துணையாவார் 1யாவரென் றெண்ணித் தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோமற் றில்லைத் தமக்கு மருத்துவர் தாம். அச்சம் உடையார்க் கரணம் இல்லை 697. வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ மஞ்சுசூழ் சோலை மலைநாட 2யார்கண்ணும் அஞ்சுவார்க் கில்லை யரண். திருவினும் நன்று திட்பமே யாகும் 698. அருவிலை மாண்கலனு மான்ற பொருளுந் திருவுடைய ராயின் திரிந்தும் வருமால் பெருவரை நாட பிரிவின் றதனால் திருவினுந் 3திட்பமே நன்று. -பழமொழி 149, 285, 33 ஆற்றலுடையார்க் கனைத்தும் அரணே 699. ஊக்க முரண்மிகுதி யொன்றிய நற்சூழ்ச்சி ஆக்க மிவன்க ணகலாவால் - வீக்கம் நகப்படா வென்றி நலமிகு தாராற் ககப்படா வில்லை யரண். -புறப்பொருள் வெண்பாமாலை 100 உரனுடை யாளரை ஒன்றுக வென்றும் 700. விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி யுள்ளதம் வளன்வலி யுறுக்கு முளமி லாவரொ டியைந்த கேண்மை யில்லா கியரோ கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென அன்றவ னுண்ணா தாகி வழிநாட் பெருமலை விடரகம் 1புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத் துரனுடை யாளர் கேண்மையொ டியைந்த வைக லுளவா கியரோ. -புறநானூறு 190 69. தாளாண்மை (அறம் பொருள் இன்ப வீடு என்னும் நான்கினையும் பெறுதற்கும், முன்பு செய்த வினைகள் கடுகப் பலிப்பதற்கும் ஏதுவாகிய முயற்சிகளை யுடையராதல். தாள் - முயற்சி. ஆண்மை - அதனை உடைமை - பதுமனார். இ.பெ.அ: நாலடி. 20 இ.சா.அ: திருக். 62. ஆள்வினையுடைமை பழமொழி. 17. ப.பா.தி. 49. (முயற்சி) நீதிக். 41. முயற்சியுடைமை.) முன்னிய வனைத்தும் முயற்சியால் முடியும் 701. இனியாரு மில்லாதா ரெம்மிற் பிறர்யார் தமியெம்யபா மென்றொருவர் தாமடியல் வேண்டா முனிவில ராகி முயல்க 2முனியாதார் முன்னிய 3தெய்தாத தில். வருந்தார் வாழ்க்கை திருந்தா தென்றும் 702. வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மை யானும் வலியராய்த் - தாளாண்மை தாழ்கு மடிகோ ளிலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று. முடியுந் திறத்தால் முயற்சி செய்க 703. வீங்குதோட் செம்பியன் சீற்றம் விறல்விசும்பிற் றூங்கு மெயிலுந் தொலைத்தலான் - ஆங்கு முடியுந் திறத்தான் முயல்கதாங் கூரம் படியிழுப்பி னில்லை யரண். -பழமொழி 153, 151, 155 தாழ்விலா முயற்சி வாழ்வினை ஊக்கும் 704. ஆடுகோ டாகி யதரிடை நின்றதூஉம் காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும் வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் தாழ்வின்றித் தன்னைச் செயின். காற்றொழில் என்று கைவிடிற் கேடே 705. உறுபுலி யூனிரை யின்றி யொருநாட் சிறுதேரை பற்றியுந் தின்னும் - அறிவினாற் காற்றொழி லென்று கருதற்க கையினான் மேற்றொழிலு மாங்கே மிகும். ஆள்வினைப் பேற்றான் அமையும் குலச்சீர் 706. நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றா னாகுங் குலம். ஆள்வினை யாளியால் அருங்கிளை வாழும் 707. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போற் கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுக வாளாடு கூத்தியர் கண்போற் றடுமாறுந் தாளாளர்க் குண்டோ தவறு. இசையா தெனினும் அசையா தாற்றுக 708. இசையா தெனினு மியற்றியோ ராற்றான் அசையாது நிற்பதா மாண்மை - இசையுங்காற் கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப பெண்டிரும் வாழாரோ மற்று. -நாலடியார் 192, 193, 195, 191, 194. முன்னிய வெல்லாம் முடிப்பது முயற்சி 709. கண்டதே 1செய்பவாங் கம்மிய ருண்டெனக் கேட்டதே 2செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார் முன்னிய செய்யுந்திரு. -நான்மணிக்கடிகை 39 உள்ளம் உடைமையே வெள்ள நிதியம் 710. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லைத் தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பின் எள்ளுநர்கட் கேக்கழுத்தம் போலவினி தன்றே. -சீவகசிந்தாமணி 496 70. இடுக்கணழியாமை யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை - மணக். (அழியாமை - மனங்கலங்காமை) இ.பெ.அ: திருக். 63. நீதிக். 42. அஞ்சிச் சோர்தல் ஆள்வினை அன்று 711. நனியஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண் துனியஞ்சார் செய்வ துணர்வார் - பனியஞ்சி வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட ஊழம்பு வீழா நிலத்து. -பழமொழி 240 உலைவும் உவகையும் ஊழின் வண்ணமே 712. விலங்கிவில் லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்ட போழ்தும் அலங்கலந் தாரி னான்வந் தருஞ்சிறை விடுத்த போழ்தும் புலம்பலு மகிழ்வும் நெஞ்சிற் பொலிதலு மின்றிப் பொன்னார்ந் துலங்கலந் துயர்ந்த தோளா னூழ்வினை யென்று விட்டான். நடுக்கிலா நகையே இடுக்கணை வெல்லும் 713. இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல நடுக்கமொன் றானு மின்றி நகுகதான் நக்க போழ்தவ் விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழு தியாவ ருய்ந்தார் வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே. நோதலும் தணிதலும் நுண்ணுணர் வின்மை 714. சாதலும் பிறத்தல் தானுந் தம்வினைப் பயத்தி னாகும் ஆதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய் நோதலுந் 1தணிவு மெல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான். அழுவது மேலும் அழுகையை ஆக்கும் 715. பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற் றழுதநங் கண்ணி னீர்கள் சொரிந்தவை தொகுத்து நோக்கிற் றொடுகடல் வெள்ள மாற்றா முரிந்தநம் பிறவி மேனாள் முற்றிழை யின்னும் நோக்காய் பரிந்தழு வதற்குப் பாவா யடியிட்ட வாறு காண்டாய். இயற்கைச் சாவுக் கிடிந்தழு தென்பயன்? 716. மயற்கையிம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்தீங் கியற்கையே பிரிவு சாத லிமைப்பிடைப் படாத தொன்றாற் கயற்கணி னளவுங் கொள்ளார் கவற்சியுட் கவற்சி கொண்டார் செயற்கையம் பிறவி நச்சுக் கடலகத் தழுந்து கின்றார். -சீவகசிந்தாமணி 1167, 509, 269, 1391, 1393 பிறந்தவர் இறப்பர் இறந்தவர் பிறப்பர் 717. பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின் இறங்குபு வீழு மேலா லோங்கின வெண்ணில் யோனி பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே யென்ன நோக்கிக் கறங்கிசை வண்டு பாடுங் கோதைநீ கவல லென்றாள். பிறவியை எண்ணிற் பெருங்கடல் மணலே 718. தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடல் மணலு மாற்றா எல்லைய வவற்று ளெல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் செல்லுமக் கதிகள் தம்முட் சேரலஞ் சேர்ந்து நின்ற இல்லினு ளிரண்டு நாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா. துன்பினை இன்பாய்த் துணிவதே அரிது 719. அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள் என்பினி னாவி சோர விறுவது மெளிது சேர்ந்த துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி னென்றாள். நீர்க்குமிழ் போலும் நிலையிலா வாழ்வு 720. மன்னுநீர் மொக்கு ளொக்கு மன்னுயி ரிளமை யின்பம் மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கும் இன்னிசை யிரங்கு நல்யா ழிசையினு மினிய சொல்லாய் அன்னதான் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள். உற்று நோக்கினும் உயிர்ப்போக் குணரார் 721. தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச் 1சிறுதிரைப் போர்வை போர்த்து மீன்சென்ற நெறியும் போல விழித்திமைப் பவர்க்குந் தோன்றா மான்சென்ற நோக்கின் மாதே மாய்ந்துபோ மக்கள் யாக்கை ஊன்சென்று தேயச் சிந்தித் துகுவதோ தகுவ தென்றாள். -சீவகசிந்தாமணி 1535, 270, 1392, 1537, 1390 விதியினை விலக்கார் வெளிய நீரார் 722. மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட நிதியினை நுகர்வ லென்று நினைந்தினி திருந்த போழ்தில் பதியினைக் கலக்கிச் சென்று பறித்துயிர் பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்க மாட்டார் மெலிபவே வெளிய நீரார். -சூளாமணி 668 அறிவ தறிவார் அழுங்கார் உவவார் 723. மறிப மறியு மலிர்ப மலிரும் பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும் அறிவ தறிவா ரழுங்கா ருவவார் உறுவ துறுமென் றுரைப்பது நன்று. பாரிப்ப வெல்லாம் வினையின் பயனே 724. வேரிக் கமழ்தா ரரசன்விடு கென்ற போழ்துந் 1தாரித்த லாகா வகையாற்கொலை சூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுதலென் றிவற்றாற்பொலி வின்றி நின்றான் பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான். -குண்டலகேசி 18, 19 இன்னல் எய்தினால் எவையும் செய்வர் 725. எய்த வின்னல் வந்த போழ்தில் யாவ ரேனும் யாவையுஞ் செய்ய வல்ல ரென்று கொள்க சேணெ றிக்க ணேகிட மைய கண்ணி செய்ய பாதம் வல்ல வாய மற்றிவன் கைக ளின்று பன்ன சாலை கட்ட வல்ல வாயவே. - இராமாயணம் 71. அமைச்சு (அமைச்சனது தன்மை; என்றது அவன்றன் குணங்களையும், செயல்களையும் - பரிமே. அமை - அமைச்சு - அமைச்சன் = அரசியல் வினைகளைச் சூழ்ந்து அமைப்பவன் - பாவாணர் வடமொழி வரலாறு 75 இ.பெ.அ: திருக். 64. ப.பா.தி. 45. இ.சா.அ: பழமொ. 25 (அமைச்சர்)) அமைச்சர்க் குரிய அருங்கோள் மூன்று 726. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கு மன்னர் 1நிலையுணர்த லிம்மூன்றும் 2வீறுசால் பேரமைச்சர் கோள். -திரிகடுகம் 61 தெளிந்த அமைச்சன் தேர்ச்சிக் குரியவை 727. குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம் மடியோம்பு மாற்ற லுடைமை - முடியோம்பு நாற்றஞ் 3சுவைவெஃகி நல்லா ரினஞ்சேர்தல் தேற்றானேற் றேறு மமைச்சு. -ஏலாதி 17 அளந்தும் பிளந்தும் அறிவான் அமைச்சன் 728. 4தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தார் இன்னிலையு மீடி னியனிலையுந் - துன்னி அளந்தறிந்து செய்வா னமைச்சனாம் யாதும் பிளந்தறியும் பேராற்ற லான். -சிறுபஞ்சமூலம் 58 பெற்றவள் ஒப்பர் பெருந்திறல் அமைச்சர் 729. செறிவுடைத் தார்வேந்தன் 1செவ்விமா றாமல் அறிவுடையா ரவ்வியமுஞ் செய்ய - வறிதுரைத்துப் பிள்ளை களைமருட்டுந் தாயர்போ லம்புவிமேல் ஒள்ளியகாட் டாளர்க் கரிது. உண்ணாக் குழவியை ஓம்புமா றோம்புக 730. உலப்பி லுலகத் 2துறுதியே நோக்கிக் குலைத்தடக்கி நல்லறங் கொள்ளார்க் 3குறுத்தல் மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப்பால் பெய்து விடல். -பழமொழி 264, 363 மதர்த்தவன் அறியான் மாண்புறும் அறிஞரை 731. 4வடந்தவழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க் கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரச வாழ்க்கை கடந்தவழ் கடாத்து வேழங் களித்தபின் கல்வி மாணா மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே. இன்னது செய்கென ஏவுவர் அறிஞர் 732. தன்னுணர் 5பொறிப்புலன் பிறர்கண் கூடென இன்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கைதான் தன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி தின்னண மியற்றுகென் றமைச்ச ரேவுவார். அறிவர் துணையால் ஆட்சியைத் தாங்குக 733. வீங்குநீ ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே தாங்கலாந் தகைமைத் தன்று தளையவிழ்த தயங்கு தார்ச்சீர்ப் பாங்கலார் பணியச் சூழும் நூல்வலார் பாக மாகப் பூங்குலா மலங்கல் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே. ஆட்சிச் சிறப்பை அமைச்சால் அறிக 734. எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனும் அடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல வடுத்தவ மலர்ந்து நுண்ணூல் மதியவர் வினையின் மாட்சி கொடுத்தவா நிலைமை மன்னர் குணங்களாக் கொள்ப வன்றே. அறிவரை நாடி அரசு செலுத்துக 735. தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும் புண்ணியப் பொதும்பரே 1பொருந்தி வைகினுங் கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே. அனைத்துச் சிறப்பும் அமைச்சர் மேலதே 736. சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் 2சூடி வெற்றவெண் குடையி னீழல் வேந்தன்வீற் றிருக்கு மேனும் மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பும் அற்றமில் புகழுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே. கற்றவர் வழியில் கடமை ஆற்றுக 737. அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றால் கற்றவர் பொழிந்த வாறு கழிப்பது கடன தாகும் மற்றவர்க் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச் செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் 1கடவ தன்றே. சிறந்தன தேர்ந்து செய்பவன் அமைச்சன் 738. செறிந்தவர் தெளிந்த நூலாற் சிறந்த னதெளிந்து சொன்னால் அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான் செறிந்தவர் தெளிந்த நூலாற் சிறந்தன தெரிந்து கூறி அறிந்தவை யாற்ற கிற்கு மமைதியா னமைச்ச னாவான். சூழ்வான் சூழ்ச்சியாற் சுடரும் அரசு 739. சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை தந்திர மறிந்து சூழ்வான் 2சூழ்ச்சிய தமையல் வேண்டும் மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே. நூலமர் நுழைவொடு நுழைந்து செல்லுக 740. மாலமர் நெடுங்கடல் மதலை பற்றிலாக் காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே நூலமர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே. -சூளாமணி 251, 233, 245, 253, 234, 244, 246, 247, 252, 235 முள்ளை முள்ளால் கிள்ளி எறிக 741. நீதி யாலறுத் தந்நிதி யீட்டுதல் ஆதி யாய வரும்பகை நாட்டுதல் மோதி முள்ளொடு 3முட்பகை கண்டிடல் பேது செய்து பிளந்திடல் பெட்டதே. -சீவகசிந்தாமணி 1920 அறிவனே எனினும் அறிவரோ டாய்க 742. ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினால் ஆயிரங் கதிரொடு 1மழுங்கக் கண்டுகொல் ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமொ ராயிர மமைச்சர்சொல் வழியி னாயதே. -சாந்திபுராணம் உற்றதால் உறுவ தறிவார் அமைச்சர் 743. உற்றது கொண்டு மேல்வந் துறுபொரு 2ளுணர்வா ருற்றால் மற்றது வினையின் வந்த தாயினு மாற்ற லாற்றும் பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவ ரரிய நூலுங் கற்றவர் மான நோக்கிற் கவரிமா வனைய நீரார். ஒல்லையில் நல்லவை உதவுவார் அமைச்சர் 744. நல்லவுந் தீயவு நாடி நாயகற் கெல்லையின் மருத்துவ ரியல்பி னெண்ணுவார் ஒல்லைவந் துறுவன வுற்ற பெற்றியிற் றொல்லைநல் வினையென வுதவுஞ் சூழ்ச்சியார். அறநெறி உரைக்க அஞ்சார் அமைச்சர் 745. தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கு 3மெய்யர் செம்மையிற் றிறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியுங் கால மும்மையு முணர வல்லா ரொருமையே மொழியு நீரார். -இராமா, அயோத், 9, 12, 11 72. சொல் வன்மை (எண்ணிய எண்ணம் முற்றும் பெறுமாறு சொற்களைத் திறம்படச் சொல்லும் ஆற்றல் - கா.சு. இ.பெ.அ: திருக். 65. நீதிக். 24.) தோற்பன கொண்டு தொல்லவை போகேல் 746. கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண் வேட்கை யறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால் வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் தோற்பன கொண்டு புகாஅ ரவை. ஆய்ந்துணர் அமைச்சரை ஆய்ந்து கொள்க 747. நல்லவுந் தீயவு நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவு முணர்வாரைக் கட்டுரையின் வல்லிதி னாடி வலிப்பதே புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு. முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிதல் 748. துன்னி யிருவர் தொடங்கிய மாற்றத்திற் பின்னை யுரைக்கப் படற்பாலான் - முன்னி மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு இடையிடை மறித்தே இயம்புதல் ஒழிக 749. ஒருவ ருரைப்ப வுரைத்தலா லதுகொண் டிருவரா வாரும் எதிர்மொழியற் பாலா பெருவரை நாட சிறிதேனு மின்னா திருவ ருடனாடல் நாய் சொல்லைச் சொல்லால் வெல்லுவ தாற்றல் 750. மாற்றத்தை மாற்ற முடைத்தலான் மற்றவர்க் காற்றும் வகையா னவர்க்களைய வேண்டுமே வேற்றுமை யார்க்குமுண் டாதலா னாற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும். -பழமொழி 17, 261, 19, 18, 307 செவ்வி யறிந்து செப்புக திறமாய் 751. விரைந்துரையார் மேன்மே லுரையார்பொய் யாய பரந்துரையார் பாரித் துரையார் - 1ஒருங்கெனைத்துஞ் சில்லெழுத்தி னானே பொருளடங்கக் காலத்தாற் சொல்லுக செவ்வி யறிந்து. -ஆசாரக்கோவை 76 சொல்லின் வனப்பே சொல்லரும் வனப்பு 752. மயிர்வனப்புங் 2கண்கவரு மார்பின் வனப்பும் உகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த பல்லீன் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு. -சிறுபஞ்சமூலம் 37 எளியவை நான்கும் அரியவை நான்கும் 753. சாவ தெளிதரிது சான்றாண்மை நல்லது மேவ லெளிதரிது 3மெய்போற்றல் - ஆவதன்கண் சேற லெளிது நிலையரிது தெள்ளியரா வேற லெளிதரிது சொல். -ஏலாதி 39 கற்றுத் தேர்ந்தவர் சொற்றிற மாண்பு 754. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். - திரிகடுகம் 32 அகலங் காட்டுதல் ஆருரை மாண்பு 755. பொழிப்பகலம் நுட்பநூ லெச்சமிந் நான்கிற் கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா 1சேக்கு நெடுங்குன்ற நாட உரையாமோ நூலிற்கு நன்கு. -நாலடியார் 319 சொல்லிற் கழகு வெல்லுமா றுரைத்தல் 756. சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் - பல்லார் பழித்தசொற் றீண்மடாற் சொல்லும் - விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்வானேற் - பூக்குழலாய் புல்லலி னூட லினிது. -தகடூர் யாத்திரை 73. வினைசெயல்வகை (மனஉறுதி உடையவர்கள். செயல்களைச் செய்யும் திறம்-கா.சு. இ.பெ.அ: திருக். 68.) பகையொழிப் பதற்குப் பண்புறு வழிகள் 757. மறையா தினிதுரைத்தல் மாண்பொரு ளீதல் அறையா னகப்படுத்துக் கோடல் - முறையால் நடுவணாச் சென்றவரை நன்கெறித லல்லால் ஓடியெறியத் தீராப் பகை. பகையுட் பகையைப் பகுத்துக் கொள்க 758. தெள்ளி யுணருந் திறனுடையார் தம்பகைக் குள்வாழ் பகையைப் பெறுத லுறுதியே கள்ளினாற் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ முள்ளினால் முட்களையு மாறு. தருவன தந்து தாங்குக வெற்றி 759. யானுமற் றிவ்விருந்த வெம்முன்னு மாயக்கால் 1ஈனஞ் செயக்கிடந்த தில்லென்று - 2கூனற் படைமாறு கொள்ளப் படைதீண்ட லஃதே 3இடைநாய்க் கெலும்பிடு மாறு. நலிக்கும் பகையுள் நாடியொன் றேற்க 760. தன்னலி கிற்பான் தலைவரிற் றானவற்குப் பின்னலி வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம் வாய்முன்ன தாகவலிப்பினும் போகாதே நாய்பின்ன தாகத் தகர். அறிவரை அறிவால் அகப்படுத் தாள்க 761. ஆண முடைய வறிவினார் தந்நல மானு மறிவி னவரைத் தலைப்படுத்தல் மானமர் கண்ணாய் மறங்கெழு மாமன்னர் யானையால் 4யானையாத் தற்று. இடுபொரு ளாலே அடுபகை ஒழிக்க 762. தெருளா தொழுகுந் திறனிலா தாரைப் பொருளா னறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பப் பாணித்து நிற்கிற்பார் 5யாருளரோ வேற்குத்திற் காணியின் குத்தே வலிது. அவ்வவர்க் கேற்ப அவ்வவ ராகுக 763. மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும் பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும் எந்நீர ராயினு மாக அவரவர் தந்நீர ராதல் தலை. -பழமொழி 310, 308, 305, 304, 29, 196, 192 இன்னா தவற்றுள் இன்னா கொடுங்கோல் 764. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா 1உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா மறையின்றிச் செய்யும் வினை. -இன்னா நாற்பது 6 சூழ்வாரைச் சூழல் வாழ்வார் வழக்கு 765. சூதினா னாகத்தன் றோள்வலியாற் றானாக யாதினா னாயினும்வந் தெய்துமேல் - தீதெண்ணிச் சூழ்வாரைத் தாமுன்னஞ் சூழ்வதே மன்னராய் வாழ்வாருக் குள்ள வழக்கு. -பாரதம் வலியவர் தொடர்பு வலிமையில் வலிமை 766. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட் புலிய னார்மகட் கோடலும் பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகட் கோடலும் நிலைகொள் மன்னர் வழக்கென நேர்பவே. -சீவகசிந்தாமணி 1919 74. தூது (மாற்றரசர் மாட்டுச் சந்து செய்யும் அமாத்தியர் இலக்கணம் கூறுதல் - மணக். (அமாத்தியர் - அமைச்சர். இவண் தூதர்) இ.பெ.அ: திருக். 69) ஆற்றல் பலவும் அமைந்தவர் தூதர் 767. மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை யாண்டமைந்த கல்வியே சொல்லாற்றால் - பூண்டமைந்த கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு ஞால மறிந்த புகழ். -ஏலாதி 26 வென்றன்றி மீளா விறலர் தூதர் 768. ஒல்லெனீர் ஞாலத் துணர்வோ விழுமிதே நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - 1செல்லலும் வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை யென்றன்றி மீண்ட திலர். -புறப்பொருள் வெண்பாமாலை 172 உதவாச் சொல்லை ஒதுக்குவர் தூதர் 769. செருக்குடையா மன்ன ரிடைப்புக் கவருள் ஒருத்தற் குதவாத சொல்லிற் றனக்குத் திருத்தலு மாகாது தீதா மதுவே எருத்திடை வைக்கோல் தினல். -பழமொழி 278 சொல்லுமா சொல்ல வல்லது தூது 770. ஒருவ ரகத்தொருவ ருண்டுடுத்துத் தம்மின் மருவி மனமகிழ்வ ராயிற் செருமுனையின் மன்னைப்போர் செய்யு மழைமதமால் யானையாய் பின்னைப்போர் தக்கதோ பேசு. இடத்தோ டினத்தை எண்ணி யுரைக்க 771. செல்லுங்காற் றேயத் தியறெரிந்து சென்றக்கால் புல்லிய சுற்றம் புணர்வறிந்து - புல்லார் மனத்தாற் பிரித்து வலயா லுதவும் இனத்தாற் றெரிவது தூது. சோராச் சொல்லன் சீரார் தூதன் 772. தடுமாற்ற மின்றித் தகைசான்ற சொல்லான் வடுமாற்றம் வாய்சோரா னாகி - விடுமாற்றம் எஞ்சாது கூறி யிகல்வேந்தன் சீறுங்கால் அஞ்சா தமைவது தூது. தூதர் பண்பு துலக்கும் அடக்கம் 773. படையளவு கூறார் 1பெரியார்முன் மாற்றார் படையளவிற் றென்று வியவார் - கொடைவேந்தன் ஈத்ததுகண் டின்புறா ரேந்திழையார் தோள்சேரார் பார்த்திபர்தூ தாயடைந்தார் பண்பு. மூவகைத் தூதர் யாவரென் றுரைத்தது 774. தானறிந்து கூறுந் தலைமற் றிடையது கோனறைந்த தீதென்று கூறுமால் - தானறியா தோலையே காட்டுங் கடையென் றொருமூன்று மேலையோர் தூதுரைத்த வாறு. தூதின் கடமை துணிந்து சொற்றது 775. அன்புடைமை யாய்ந்த வறிவுடைமை யிற்பிறப்பு நன்குடைமை நல்ல நயனுடைமை - நன்கமைந்த சுற்ற முடைமை வடிவுடைமை சொல்வன்மை கற்றடங்கல் தூதின் கடன். -பாரதம் உடன்பிறந் தாரை உருத்து வெகுளேல் 776. கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச் சாலுந் துணையுங் கழறிச் சிறியதோர் கோல்கொண்டு மேற்சேறல் வேண்டா வதுகண்டாய் நூல்கண்டார்கண்ட நெறி. -தகடூர்யாத்திரை சூழ்பொருள் அனைத்தும் சூழ்வது தூது 777. ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பெலா மமைந்து நின்றான் தூதனாச் செல்லிற் செல்லாச் சூழ்பொரு ளில்லை போலாம் ஏதிலார்க் காவ துண்டோ யின்னன புகுந்த போதிற் கோதிலாக் குணங்கள் தேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான். தூதர் என்னும் துகளிலா எந்திரம் 778. மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்டோள் தோழராச் செவிக ளொற்றா அந்தர வுணர்வு நூலா வரசெனு முருவு கொண்ட எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார். உற்றன உற்றன உரைக்கும் ஆற்றல் 779. கற்றவர் கற்றன கருதுங் கட்டுரைக் குற்றன வுற்றன வுரைக்கு மாற்றலான் மற்றவன் மருசியே யவனை நாம்விடச் சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே. -சூளாமணி 566, 565, 427 ஔவை ஆற்றிய அருமைத் தூதுரை 780. இவ்வே, பீலீ யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் 1கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ ரொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே. இருவர் வெல்லுதல் இயற்கை அன்று 781. இரும்பனை வெண்டோடு 2மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் தெரியலோ னல்லன் நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனால் குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. சிலவே சொல்லிப் பலவே செய்தல் 782. வயலைக் கொடியின் வாடிய 1மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே. ஏணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனவே. அறவையோ மறவையோ ஆகுக மன்னே! 783. இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த் 2தலமரல் யானை யுருமென முழங்கவும் பாலில் குழவி யலறவு மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில் வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும் இன்னா தம்ம வீண்டினி திருத்தல் துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் நீண்மதி லொருசிறை யொடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. கடிமரந் தடியினும் காவலுள் இருப்பதோ? 784. அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் தண்ணான் பொருனை வெண்மணற் சிதையக் கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங் கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் 1சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. -புறநானூறு 95, 45, 805, 44, 36 இருதலைப் புள்ளின் ஓருயிர்ப் பிறப்போர் 785. ஒளிவிடு பசும்பொ னோடை சூட்டிய வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே வினவுதி யாயிற் கேண்மதி சினவா தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றும் இருதலைப் புள்ளி னோருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோ லெய்தி 2நும்மூர்க்கு, நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை 3நும்மு னுமக்குத்துணை யாகலு முரிய னதனாற் றொடங்க வுரிய வினைபெரி தாயினும் அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான் துணையிலன் றமியன் மன்னும் புணையிலன் பேர்யா 4றெதிர்நீந்து மொருவ னதனைத் தாழ்த லன்றோ வரிது 1தலைப்படுதல் வேண்டிற் பொருந்திய வினையி னடங்கல் வேண்டும் அனைய மாகீண் டறிந்திசி னோர்க்கே. தீண்டற் கரிது திறவோர் அரணம் 786. மொய்வேற் கையர் முரசெறிந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட 2திவ்வழி யென்றி யியறார் மார்ப எவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை 3யெறிந்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் 4மலிந்துபிறர் தீண்டற் காகாது வேந்துடை யரணே. -தகடூர்யாத்திரை 75. மன்னரைச் சேர்ந்தொழுகல் (அமைச்சர், குருக்கள் படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐம்பெருங் குழுவினர் அரசனை அடுத்து ஒழுகும் முறை - பாவாணர். இ.பெ.அ: திருக். 70. பழமொழி 27. ப.பா.தி. 47.) அரசு துணையெனின் அனைத்தும் கிட்டும் 787. விடலமை செய்ய வெருண்டகன்று நில்லா துடலரு மன்ன ருவப்ப வொழுகின் மடலணி பெண்ணை மலிதிரைச் சேர்ப்ப கடல்படா வெல்லாம் படும். வேண்டாமை ஒன்றால் வேண்டிய பெறலாம் 788. ஆண்டகை மன்னரைச் 5சார்ந்தா ரலவுறினும் ஆண்டொன்று வேண்டுது மென்ப துரையற்க பூண்டகு மார்ப பொருடக்கார் வேண்டாமை வேண்டிய தெல்லாந் தரும். தலைவன் ஏவினால் தாழா துஞற்றுக 789. வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும் பெற்றிலே மென்பது பேதைமையே - மற்றதனை 1எவ்வ மிலராகிச் செய்க வதுவன்றோ செய்கென்றா லுண்கென்னு மாறு. அவர்பொரு ளாலே அவர்க்கோர் உதவியோ? 790. பன்னாள் தொழில்செய் துடைய கவர்ந்துண்டார் இன்னாத செய்யாமை வேண்டி யிறைவர்க்குப் பொன்யாத்துக் கொண்டு புகுதல் குவளையைத் தன்னாரால் யாத்து விடல். -பழமொழி 269, 273, 267, 279 மன்னவன் மதிக்கின் மக்களும் மதிப்பர் 791. வேந்தன் மதித்துணரப் பட்டாரைக் கொண்டேனை மாந்தரு மாங்கே மதித்துணர்ப - ஆய்ந்த நலமென் கதுப்பினாய் நாடிநெய் பெய்த கலமேநெய் பெய்து விடும். ஆள்வோர் துணைபெறின் அச்சமும் உண்டோ? 792. செருக்கெழு மன்னர்த் திறலுடையார்ச் சேர்ந்தால் ஒருத்தரை யஞ்சி யுலைதலு முண்டோ உருத்த சுணங்கி னொளியிழையாய் கூரி தெருத்து வலியதன் கொம்பு. தலைவனே நண்பெனிற் றாங்கப் பிறரார்? 793. காவலனை யாக வழிபட்டார் மற்றவன் ஏவல் வழிசெய் திருந்தார்க் குதவடுத்தல் ஆவணைய நின்றதன் கன்று முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று. வேந்தன் பணிக்கின் வேலினும் வீழ்க 794. எமரிது செய்தக வெமக்கென்று வேந்தன் தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு வேலின்வா யாயினும் 1வீழ்வார் மறுத்துரைப்பின் ஆலென்னிற் பூலென்னு மாறு. இருந்து பெறுவதைக் கிடந்தும் பெறலாம் 795. சிறிதாய கூழ்பெற்றச் செல்வரைச் சேர்ந்தாற் பெரிதாய கூழும் பெறுவர் - 2அரிதாம் இடத்து ளொருவ னிருப்புழிப் பெற்றாற் கிடப்புழியும் பெற்று விடும். எருது எழுமுன் எழுமோ வண்டி? 796. ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத் தாற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள் வழாஅமைக் காத்தோம்பி வாங்கு3மெருத்தும் எழாஅமைச் சாகா டெழல். -பழமொழி 272, 271, 274, 268, 190, 313 செவ்வியா னுரைத்தால் செழுநலம் சேரும் 797. சிறப்புடை மன்னரைச் செவ்வியா னோக்கித் திறத்தி னுரைப்பார்க்கொன் றாகாத தில்லை விறற்புகழ் மன்னர்க் குயிரன்ன ரேனும் புறத்தமைச்சி னன்றகத்துக் கூன். -பழமொழி 275 உழைப்படு மாயின் உறுபயன் எய்தலாம் 798. மன்னர் திருவு மகளி ரெழினலமுந் துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம் உழைதங்கட் சென்றார்க் கொருங்கு. -நாலடியார் 167 தலைவன் முன்னே தவிர்க்கத் தக்கவை 799. கடைவிலக்கிற் காயார் கழிகிழமை 1செய்யார் கொடையளிக்கட் பொச்சாவார் கோலநேர் செய்யார் இடையறுத்துப் போகிப் பிறனொருவற் சேரார் 2கடைபெருகி வாழ்துமென் பார். விரும்பிய சொல்லின் விழைந்தவை பெறுவார் 800. முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார் தனிமை யிடத்துக்கண் தங்கருமஞ் சொல்லார் இனியவை யாமறிது மென்னார் கரிதன்று காக்கைவெள் ளென்னு மெனின். பெரியார் அவையிற் பேணத் தகாதவை 801. 3உமிவு முயர்ந்துழி யேறலும் பாகும் வகையி லுரையும் வளர்ச்சியு மைந்தும் புணரார் பெரியா ரகத்து. குணத்தோர் அவையிற் கூறத் தகாதவை 802. இறைவர்முற் செல்வமுங் கல்வியுந் தேசும் 4குலனுங் குணனுடையார் கூறார் பகைவர்போற் பாரித்து பல்காற் பயின்று. -ஆசாரக்கோவை 66, 69, 70, 71 நிலைமை யறிந்து நெறியோ டமைக 803. நின்றக்கால் நிற்க வடக்கத்தா லென்றும் இருந்தக்கா லேவாமை 5யேறார் - பெருந்தக்கார் சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும் வினாவற்க சொல்லொழிந்தக் கால். பெரியரின் முன்னர்ப் பிறிதெதும் நோக்கேல் 804. தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார் எம்மேனி யாயினு நோக்கார் தலைமகன் தன்மேனி யல்லாற் பிற. ஒட்டுக் கேட்டல் உறுதுயர் ஆக்கும் 805. பிறரொடு மந்திரங் கொள்ளா ரிறைவனைச் சாரார் செவியோரார் 1சாரிற் பிறிதொன்று தேர்வார்போல் நிற்க திரிந்து. செல்லலும் சொல்லலும் செவ்விதாய்ப் பேணுக 806. 2நிரைபடச் செல்லார் நிழல்மிதித்து நில்லார் உரையிடைப் பாய்ந்துரையா ரூர்முனிவ செய்யார் அரசர் படையளவுஞ் சொல்லாரே யென்றும் புரைதீர்ந்த காட்சி யவர். அரசை விஞ்சி அறமுஞ் செய்யேல் 807. அறத்தொடு கல்யாண மாள்வினை கூரை இறப்பப் பெருகியக் கண்ணுந் - திறப்பட்டார் மன்னரின் 3மேம்படச் செய்யற்க செய்பவேல் மன்னிய செல்வங் கெடும். இளைய வென்ன எள்ளத் தகாதவை 808. அளையுறை பாம்பு மரசு நெருப்பும் முழையுறை சீயமு மென்றிவை நான்கும் இளைய வெளிய பயின்றனவென் றெண்ணி இகழி னிழுக்கந் தரும். -ஆசாரக்கோவை 74, 77, 78, 83, 85, 84 76. குறிப்பறிதல் (பிறர் எண்ணத்தை அவர் கூறா முன்னமே குறிப்பால் அறிதல் - கா.சு. இ.பெ.அ: திருக். 71. நீதிக். 23. இ.சா.அ: பழமொழி. 16. (பிறரியல்பைக் குறிப்பாலறிதல்)) கள்ள முடையரைக் கண்டே யறியலாம் 809. வெள்ளம் வருங்காலை யீர்ப்படுக்கு மஃதேபோற் கள்ள முடையாரைக் கண்டே யறியலாம் ஒள்ளமர்க் கண்ணா யொளிப்பினு முள்ளம் 1பரந்ததே கூறு முகம். பார்த்தே அறியலாம் பளிங்குபோல் உள்ளம் 810. நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி நோக்கி யறிப வதுவேபோல் - நோக்கி முகனறிவார் முன்ன மறிப வதுவே மகனறிவு தந்தை யறிவு. பானை சோற்றுக்குப் பதமோர் அவிழே 811. பேருலையுட் பெய்த வரிசியை வெந்தமை 2யோரவிழி னாலே யுணர்ந்தாங்கு - யார்கண்ணுங் கண்டதனாற் காண்டலே வேண்டுமாம் யாதற்குங் கண்டது காரணமா 3மாறு மனத்துள தறிதல் மாண்பினர் சீர்மை 812. நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த குடிஞை 4யிரட்டுங் குளிர்வரை நாட கடிஞையுட் கல்லிடுவா ரில். -பழமொழி, 144, 145, 142, 375 அகம்பொதி யுணர்வை முகமிகக் காட்டும் 813. நாற்ற முரைக்கு மலருண்மை கூறிய மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின் அகம்பொதிந்த தீமை முகனுரைக்கு 1மெல்லா முகம்போல முன்னுரைப்ப தில். உள்ள வேட்கையை உரைப்பது முகமே 814. மகனுரைக்குந் தந்தை நலத்தை 2யொருத்தன் முகனுரைக்கு முண்ணின்ற வேட்கை - அகனீர்ப் 3பிலத்தியல்பு புக்கா னுரைக்கும் நிலத்தியல்பு வான முரைத்து விடும் முன்னம் வித்தாய் முளைக்கும் பகைமை 815. புகைவித்தாப் பொங்கழல் தோன்றுஞ் சிறந்த நகைவித்தாத் தோன்று முவகை - பகையொருவன் முன்னம்வித் தாக முளைக்கு முளைத்தபின் இன்னாவித் தாகி விடும். களித்தான் என்பதைக் காட்டும் முகமே 816. சொல்லா னறிப 4வொருவனை மெல்லென்ற நீரா னறிப மடுவினை யார்கண்ணும் ஒப்புரவி னானறிய 5கண்ணோட்ட 6மெய்க்கண் மகிழா னறிப நறா. -நான்மணிக்கடிகை 46, 69, 31, 78 77. அவையறிதல் (இருந்த அவையறிந்து அதற்குத் தக்க சொல்லுதல் - மணக். இ.பெ.அ: திருக். 72. நாலடி. 32. பழமொழி 3 நீதிக். 22.) ஆன்றோர் அவையுள் அறிவிலார் உரையேல் 817. நடலை யிலராகி நன்றுணரா ராய முடலை முழுமக்கள் மொய்கொ ளவையுள் உடலா வொருவற் குறுதி யுரைத்தல் கடலுளால் மாவடித் தற்று. குன்றூ டறுப்பினும் மன்றூ டறாதொழி 818. அறிவன் றழகன் றறிவதூஉ மன்று சிறிய ரெனற்பாடுஞ் செய்யும் - எறிதிரை சென்றுலாஞ் சேர்ப்ப குழுவத்தர் மேயிருந்த 1குன்றூ டறுப்பினு மன்று. பெயலின் அளவைப் பெருக்குநீர் காட்டும் 819. கல்வி யகலமுங் கட்டுரை வாய்பாடுங் கொல்சின வேந்த னவைகாட்டு - மல்கித் தலைப்பெய் திழிதரூஉந் தண்புனல் நீத்த மலைப்பெயல் காட்டுந் துணை. நல்லவும் தீயவாம் கல்லார் முன்னே 820. 2கல்வியி னாய கழி நுட்பங் கல்லார்முற் சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லா மிவர்வரை நாட தமரையில் லார்க்கு நகரமுங் 3காடுபோன் றாங்கு. கல்லார்முற் கட்டுரை பொல்லாங் காகும் 821. கல்லா தவரிடைக் கடுரையின் 4மிக்கதுபோற் பொல்லாத தில்லை யொருவற்கு - நல்லாய் இழுக்கத்தின் மிக்க விழிவில்லை யில்லை ஒழுக்கத்தின் மிக்க வுயர்வு. அறிஞர் அறிவை அறிவிலா தெள்ளேல் 822. அல்லவையுட் டோன்றி யலவலைத்து வாழ்பவர் நல்லவையுட் புக்கிருந்து நாவடங்காக் - கல்வி யளவிறந்து மிக்கா ரறிவெள்ளிக் கூறல் மிளகுளு வுண்பான் புகல். -பழமொழி 25, 60, 258, 14, 15, 23 பெற்றவட் கிரங்கிப் பெரும்பொறை கொள்க 823. பாடமே யோதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் முனிதக்க சொல்லுங்காற் - கேடருஞ்சீர்ச் சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை யீன்றாட் கிறப்பப் பரிந்து. ஞானம் இலிமுன் நல்லுரை விடுக 824. மெய்ஞ்ஞானக் கோட்டி யுறழ்வழி விட்டாங்கோர் அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க் கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன் சொன்ஞானஞ் சோர விடல். செல்லுதற் குரையார் புல்லுவர் தோல்வி 825. சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர் கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார் - கற்ற செலவுரைக்கு மாறறியார் தோற்ப தறியார் பலவுரைக்கு மாந்தர் பலர். அகல்வான் இன்பம் அறிவரோ டளாவல் 826. தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலில ரெஃகுடையார் தம்முட் குழீஇ நகலி னினிதாயிற் காண்பா - மகல்வானத் தும்ப ருறைவார் பதி. -நாலடியார் 316, 311, 313, 137 தோலா நாவின் மேலோர் பெருமை 827. குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்யின் காத லின்பத்துட் டங்கித் தீதறு நடுவுநிலை 1நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை யவாவின்மை யென்றாங் கிருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை 1யுடன்மரீஇ யிருக்கை யொருநாள் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து ஞாங்கர் ஞாங்கர் நின்றுழி நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே. -ஆசிரியமாலை 78. நாடு (மக்களின் நல்வாழ்வுக்கு உறையுளாம் நாட்டின் இலக்கணம் கூறுதல். இ.பெ.அ: திருக். 74) வளமிகு நாடு வானகம் ஒக்கும் 828. எண்ணி னிடரெட்டு மின்றி வயற்செந்நெற் கண்ணின் மலரக் கருநீலம் - விண்ணின் வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென்வேல் நகைத்தாரான் தான்விரும்பு நாடு. -புறப்பொருள் வெண்பாமாலை 205 அச்சமொன் றில்லா அருமலை நாடு 829. அள்ளற் பழனத் தரக்காம்பல் 2வாயவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் - புள்ளினந்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. திகழ்வள முத்துத் தென்னாவன் நாடு 830. நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்த ரிளங்கமுகின் பாளையும் - சிந்தித் திகழ்முத்தம் போற்றோன்றுஞ் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையா னாடு. -முத்தொள்ளாயிரம் 1, 2 களப்போர் மல்கும் காவிரி நாடு 831. காவ லுழவர் களத்தகத்துப் போரேறி நாவலோஓ 1வென்றழைக்கு நாளோதை - காவலன்றன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு. -முத்தொள்ளாயிரம் 3 தவம்பொருள் போகம் தங்கிடின் நாடு 832. நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம் நற்பொருள்செய் வார்க்கிடம் பொருள்செய்வார்க்கு மஃதிடம் வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென மற்றநாடு 2வட்டமாக 3வைகுமற்ற நாடரோ. கற்றவர் தகைமை காட்டும் நெற்கதிர் 833. சொல்லருஞ் சூற்பசம் பாம்பின் றோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் 4காய்த்தவே. -சீவகசிந்தாமணி 77, 53 கமுகினை ஒக்கும் காய்கதிர்ச் செந்நெல் 834. மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும் பூடு கொண்ட 5பொதும்ப ரொளிவிராய்த் தோடு கொண்டபைங் 6காய்கதிர்ச் செந்நெலின் காடு கொண்டுள கண்ணக னாடெலாம். நானிலங் கலக்கும் நலத்தது நாடு 835. வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த் தேனிலங் கருவிய 1திணையுந் தேறல்சேர் 2பானலங் கழனியுங் கடலும் பாங்கணி நானிலங் கலந்துபொன் னரலு நாடதே. -சூளாமணி 31, 12 கடல்வளம் மிக்கது கவின்மிகு நாடு 836. சங்கு நித்தில 3முங்கட லிப்பியுந் தெங்கந் தீங்குலை யூறிய தேறலும் வங்க வாரியும் 4வாரலை வாரியும் தங்கு வாரிய தண்கட னாடெலாம். - சூளாமணி 32 இகலி எழுபவை இனிய மரங்களே 837. செந்நெலங் கரும்பினொ டிகலுந் தீஞ்சவைக் கன்னலங் 5கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை 6காண்கில 7னென்று பூகமும் முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே. -வளையாபதி 70 எருமை குயில்களால் இனங்கண் டறிவன *838. கரும்பிவை கமுகிவை யென்று கண்டறி வருந்துணை யுயர்தலி னருந்து மேதிகள் கரும்புக ளிவையெனக் கனையுங் கார்ப்பொழிற் சுரும்பிவர் கமுகினைக் குயில்கள் சொல்லுமே. வெறிய வென்பது வீழ்மலர்க் கூந்தல் 839. நெறிக டந்து பரந்தன நீத்தமே குறிய ழிந்தன குங்குமத் தோள்களே சிறிய மங்கையர் தேயு மருங்குலே வெறிய வும்மவர் மென்மலர்க் கூந்தலே. குற்றம் இன்மையாற் கூற்றமும் இல்லை 840. கூற்ற மில்லையொர் குற்ற மிலாமையாற் சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செம்மையால் ஆற்ற நல்லற மல்லதி லாமையால் ஏற்ற மல்ல திழித்தக வில்லையே. -இராமா. பால. 72, 71 மீனெலாம் களிக்கத் தேனெலாம் ஒழுகும் 841. ஆலைவாய்க் கரும்பின் தேனு மரிதலைப் பாளைத் தேனுஞ் 1சோலைவாய்க் கனியின் தேனுந் 2தொடையிழி யிறாலின் தேனும் மாலைவா 3யுகுத்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப 4உண்டு மீனெலாங் களிக்கு மாதோ. நோக்கிய இடமெலாம் நீக்கமில் வளமை 842. வரம்பெலா முத்தந் தத்து மடையெலாம் பணில மாநீர்க் குரம்பெலாஞ் செம்பொன் மேதி குழியெலாங் கழுநீர்க் கொள்ளை பரம்பெலாம் பவளஞ் 5சாலிப் பரப்பெலா மன்னம் பாங்கர்க் கரும்பெலாஞ் செந்தேன் சந்தக் காவெலாங் களிவண் டீட்டம். வண்டுகள் சூழ வழிந்திடும் ஆறு 843. வெண்டளக் கலவைச் சேறுங் குங்கும விரைமென் சாந்துங் குண்டலக் 1கோதை மாதர் குடைந்தநீர்க் கொள்ளைச் சாற்றிற் றண்டலைப் பரப்புஞ் சாலி வேலியுந் தழீஇய வைப்பின் வண்டலிட் டோட 2மண்ணு மதுகர 3மொய்த்த தன்றே. -இராமா, பால 41, 34, 44 காவா தமையுங் களப்போர் மல்குக 844. பெருநீரால் வாரி சிறக்க விருநிலத் திட்டவித் தெஞ்சாமை நாறுக நாறார முட்டாது வந்து மழைபெய்க பெய்தபி னொட்டாது வந்து கிளைபயில்க வக்கிளை பால்வார் பிறைஞ்சிக் கதிரீன வக்கதிர் ஏர்கெழு செல்வர் களநிறைக வக்களத்துப் போரெலாங் காவாது வைகுக போரின் உருகெழு மோதை வெரீஇப் பெடையொடு நாரை யிரியும் விளைவயல் யாணர்த் தாகவவ னகன்றலை நாடே. -தகடூர் யாத்திரை பூசல் இடுவது பூம்புனல் ஒன்றே 845. திருவுடைத் தம்ம பெருவிறற் பகைவர் பைங்கண் யானைப் புணர்நிரை துமிய உரந்துரந் தெறிந்த கறையடிக் கழற்காற் கடுமான் மறவர் கதழ்தொடை மறப்ப 4வினையினிது தந்த விளைவுமுட் டுறாது புலம்பா வுறையுள் நீதொழி லாற்றலின் விடுநிலக் கரம்பை விடரளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி யற்ற பெருவறற் காலையும் 1நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேர்யாற்றுச் சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர் உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூச லல்லது வெம்மை யறியாநின் னகன்றலை நாடே. -பதிற்றுப்பத்து 28 ஏரோர் களவழி இனிது வாழிய 846. தாமரை வெண்கிழங்கு விரவி யோராங்குக் கருமலங்கு மிளிரக் கொழுமுகந் 2தியக்கி பழஞ்சேற்றுப் பரப்பிற் பருமுத லெடுத்து நெடுங்கதி ரிறைஞ்ச வாங்கிக் கால்சாய்த்து வாளிற் றுமித்த சூடே மாவின் சினைகளைந்து பிறக்கிய 3போர்பே யெருத்தின் கவையடி யவைத்த வுணாவே மருதின் கொழுநிழற் குவைஇய குப்பையோ டனைத்தினும் பலர்மகிழ் தூங்க வுலகுபுறந் தரூஉ மாவண் சோணாட் டூர்தொறும் ஏரோர் களவழி வாழிய நெடிதே. -ஆசிரிய மாலை 79. அரண் (பகைவராற் கைப்பற்றப்படாவாறும் கொள்ளையடிக்கப் படாவாறும் அழிக்கப்படாவாறும் நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகை அமைப்பு - பாவாணர். இ.பெ.அ: திருக். 75) அரணைந் தமைநாட் டரசே வேந்து 847. நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயு மாண்ட மலைமக்க ளுள்ளிட்டு - மாண்டவர் ஆய்ந்தன வைந்து மரணா வுடையானை வேந்தென நாட்டல் விதி. -சிறுபஞ்சமூலம் 49 காவலிற் களவு வலிதெனக் காண்க 848. அமையா விடத்தோ ரரும்பொருள் வைத்தால் இமையாது காப்பினு மாகா - இமையாரும் அக்காலத் தோம்பி யமிழ்துகோட் பட்டமையின் நற்காப்பிற் றீச்சிறையே நன்று. -பழமொழி 207 நகராம் நங்கையின் நல்லுரு வகங்காண் 849. அகழ்கிடங் கந்துகி லாய்பொற் பாம்புரி புதழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ் சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே. கொடியாம் கையாற் கூவி அழைத்தல் 850. இஞ்சி மாக நெஞ்சு போழ்ந் தெல்லை காண வேகலின் மஞ்சு சூழ்ந்து கொண்ட ணிந்து மாக நீண்ட நாகமும் அஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன் குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே. -சீவகசிந்தாமணி 1444, 148 பற்றி நெருங்கிற் பழிவாங்கு பொறிகள் 851. மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின் நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியும் தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங் கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா. தாவி யழிக்கும் தனித்திறப் பொறிகள் 852. விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக் கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை நற்றலைகள் திருக்கும்வலி நெருக்குமர நிலையே. உமிழ்ந்து தாக்கி உயிரைப் போக்குவ 853. செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ அம்புமிழ்வ 1கல்லுமிழ்வ வேலுமிழ்வ வாகித் தம்புலன்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே. பன்றியாய்க் குரங்காய்ப் பாயும் பொறிகள் 854. கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடம் குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல் பரந்தபசும்பொற்கொடிப தாகையொடு 2கொழிக்குந் திருந்துமதில் தெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே. மதிலாங் கன்னியின் மாண்பு சொற்றது 855. வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும் வயிரமணித் தாழ்க்கதவின் வாயின்முகமாக வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடிக் கூந்தல் வயிரக்கிடங் காடைமதிற் கன்னியது கவினே. -சீவகசிந்தாமணி 101, 102, 103, 104, 105 கதிர்ச்செல வொழிக்கக் கதிர்த்தெழு புரிசை 856. செஞ்சுடர்க் கடவுட் டிண்டே ரிவுளிகால் திவள வூன்று மஞ்சுடை மகர நெற்றி 3வானுழு வாயில் மாடத் தஞ்சுட ரிஞ்சி யாங்கோ ரகழணிந் 4திருந்த தோற்றம் வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே. -சூளாமணி 38 ஒள்ளியர் உணர்வென ஓங்கிய மாமதில் 857. நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி நனிதவ வுயர்ந்தன 1மதிதோய் மால்வரைக் குலத்தில் யாவையு மில்லை யாதலா லுவமைமற் றில்லை 2நூல்வகைத் தொடர்ந்து பயத்தொடும் பழகி நுணங்கிய நுவலரு முணர்வே போல்வரைத் தல்லா லுயர்வினோ டுயர்ந்த தென்னலாம் பொன்மதி னிலையே. செங்கோல் வேந்தை ஒப்பது சீர்மதில் 858. கோலிடை யுலக மளத்தலிற் பகைஞர் முடித்தலை கோடலின் மனுவின் 3நூடிடை நடக்குஞ் 4செவ்வையின் யார்க்கு நோக்கருங் காவலின் வலியின் வேலொடு வாள்விற் 5பயிறலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கரு 6நலத்திற் சால்புடை யுயர்விற் சக்கர நடத்துந் தன்மையிற் றலைவரொத் துளதே. ஈசனை ஒக்கும் இணையிலா அரணம் 859. 7மேவரு முணர்வு முடிவிலா மையினால் வேதமு மொக்கும் விண்புகலால் தேவரு மொக்கும் முனிவரு மொக்குந் திண்பொறி யடக்கிய செயலால் காவலிற் கலையூர் கன்னியை யொக்குஞ் சூலத்தாற் காளியை யொக்கும் 8யாவரு மொக்கும் பெருமையா லெய்தற் கருமையா லீசனை யொக்கும். -இராம. பால. 101, 104, 102 மனத்தையும்எறியும் மாப்பொறி மதிலகம் 860. சினத்தயில் கொலைவாள் 1சிலைமழுத் தண்டு செம்புருக் கரக்கெணெய் சிவணிக் கனத்திடை யுருமின் வெருவருங் கவண்க லென்றிவை கணிப்பில களிற்றின் இனத்தையு முவணத் திறையையு மியங்குங் காலையு மதியெலா நினையு மனத்தையு மெறியும் பொறியுள வென்றால் மற்றினி யுணர்த்து மாறெவனோ. -இராமா. பால. 105 மாளிகை மதில்கள் மாமலை ஒப்பன 861. மன்னன் மேவு கோயில் மேரு மான மற்றி மண்ணெலா மென்ன லாய வூரிடத் திலங்கு மாளி கைக்குலம் பொன்னின் மேரு வின்புறம் பொருப்பு நேர வப்புறந் துன்னு நேமி வெற்பை யென்பர் சூழ்மதிற் பரப்பையே. -நாரதசரிதை 80. நகர் (மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய அமைப்புக்கள் அனைத்தும் பெற்ற நகரச்சீர் உரைத்தல். நகர் முதற்கண் மாளிகை என்னும் பொருளுடையதாக இருந்து பின்னர் மாளிகைகள் மல்கிய பேரூர்க்குப் பெயராயிற்று.) வஞ்சிமா நகர வனப்பின் வண்ணம் 862. களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற் களிகள் விதிர்த்திட்ட வெங்கட் - டுளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச்சே 2றாகுமே பூம்பொழில் வஞ்சி யகம். உறந்தை வளமை உணரக் கூறியது 863. மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச் சால மிகுவதோர் 1தன்மைத்தால் - காலையே விற்பயில் வானகம் போலுமே வேல்வளவன் பொற்பா ருறந்தை யகம். கூடற் சிறப்பைக் குறித்துக் காட்டியது 864. மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட குங்கும வீர்ஞ்சாந்தின் சேறிழுக்கி - எங்குந் தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன் நெடுமாடக் கூட 2லகம். -முத்தொள்ளாயிரம் 111, 65, 9 கடலினும் கச்சி கலிவளம் மிக்கது 865. மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள் ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும். -யாப்பருங்கலம் 61, உரைமேற். வாடா வளமை மாடக் கூடல் 866. உலக மொருநிறையாத் தானோர் நிறையாப் புலவர் புலக்கோலாற் றூக்க - உலகனைத்துந் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூட னகர். -பரிபாடல் திரட்டு 6 மழலையும் யாழும் மலிந்த மாடம் 867. நிழலகந் தவழ்ந்துதே 3னிமிர்ந்து தாதுசேர் பொழிலகம் பூவையுங் கிளியும் பாடுமே குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர் மழலையும் யாழுமே மலிந்த மாடமே. ஞாலத் தாமரைப் பொகுட்டன சுரமை 868. சங்கமேய் தரங்க வேலைத் தடங்கடற் பொய்கை பூத்த அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யகத்து ளாங்கே செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும் நங்கையோர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே. மலையொடும் இகலும் மாட மாளிகை 869. அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும் முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் இகலின மலையொடு மாட மென்பவே. -சூளாமணி 10, 37, 41 பல்கலை முரற்சியும் பல்கு மாநகர் 870. மாடவாய் மணிமுழ விசையு மங்கையர் ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும் பாடுவார் பாணியும் பயின்று பல்கல மூடிமா நகரது முரல்வ தொத்ததே. -சூளாமணி 43 செங்கதிர் தடவும் ஒண்கொடி அரணம் 871. திருவ நீணகர்ச் செம்பொனி னீடிய உருவ வொண்கொடி யூழி னுடங்குவ பரவை வெங்கதிர்ச் செல்வன பன்மயிர்ப் புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே. கடலே நகராய்க் கவிந்தாற் போன்றது 872. எறிசுற விளையவ ரேந்து பூங்கொடி மறிதிரை 1வரைபுரை மாட மாக்கலம் பெறலருந் திருவனா ரமுதம் பேரொலி அறைகடல் வளநக ராய தென்பவே. மாட மணிக்குடம் மயிற்குழாம் மானும் 873. பாத்தரும் பசும்பொனின் மாடத் துச்சிமேல் தூத்திரள் மணிக்குடம் நிரைத்துத் தோன்றுவ பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந் தேத்தரு மயிற்குழா 1மிருந்த போன்றவே. -சீவகசிந்தாமணி 126, 1446, 87 கோழியின் எழாத பேரூர் மதுரை 874. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவ மிதழகத் தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் தாதி னனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண், பறவை யனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோ 2னாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப ஏம வின்றுயி லெழுத லல்லதை வாழிய வஞ்சியுங் கோழியும் போலக் கோழியி னெழாதெம் பேரூர் துயிலே. -பரிபாடல்திரட்டு 7 குன்றம் உளவரை குன்றா மதுரை 875. 3தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது குன்றுத லுண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு. வையை யுளவரை பொய்யா மதுரை 876. செய்யாட் கிழைத்த திலகம்போற் சீர்க்கொப்ப வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது பொய்யாத லுண்டோ மதுரை புனைதேரான் வையையுண் டாகு மளவு. மொழியுள வரையும் அழியா மதுரை 877. கார்த்திகைக் காதிற் கனமகர குண்டலம்போற் சீர்த்து விளங்கித் திருப்பூத்த லல்லது 1கோர்த்தையுண் டாமோ மதுரை கொடித்தேரான் வார்த்தையுண் டாகு மளவு. சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் 878. ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ் சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார் போவாரார் புத்தே ளுலகு. -பரிபாடல் திரட்டு 8, 9, 10, 11 81. பொருள் செயல்வகை (பொருள் தேடுமாறும் அதனால் பயன் கொள்ளுமாறும் கூறுதல் - மணக். இ.பெ.அ: திருக். 76 இ.சா.அ: பழமொழி 21, 22 (பொருள், பொருளைப் போற்றுதல்) நீதிக். பொருளுடைமை.) நடுவண தெய்தின் இருதலையு மெய்தும் 879. வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவண தெய்த விருதலையு மெய்தும் நடுவண தெய்தாதா னெய்தும் உலைப்பெய் தடுவது போலுந் துயர். -நாலடியார் 114 பொலியும் எல்லாம் பொருளிற் பிறக்கும் 880. கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் - மெல்லென் அருளிற் பிறக்கும் அறநெறி யெல்லாம் பொருளிற் பிறந்து விடும். -நான்மணிக்கடிகை 5 எல்லாம் நல்லவாய் இயலும் பொருளால் 881. 1ஒல்லாதொன் றின்றி யுடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க் கிடரா யியலு மிலங்குநீர்ச் சேர்ப்ப கடலுள்ளுங் காண்பவே நன்கு. அயிரை விட்டு வராலைக் கவர்தல் 882. சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையாற் பெரிய பொருள்கருது வாரே - விரிபூ விராஅம் புனலூர வேண்டயிரை யிட்டு வராஅஅல் வாங்கு பவர். பருவம் அறிந்து வரிகளைப் பெறுக 883. பொருத்த 2மழியாத பூந்தண்டார் மன்னர் அருத்தமடிநிழ லாரை - வருத்தாது கொண்டாரும் போலாது கோட லதுவன்றோ 3வண்டூதா துண்டு விடல். கறப்பவர் போல இறைமுறை பெறுக 884. பாற்பட்டு வாழ்வ ரெனினுங் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு 4மிகைநிற்றல் வேண்டாவே 5கோற்றலை யாயினுங் கொண்டீக காணுங்காற் பாற்றலைப் 6பாலூற லில். -பழமொழி 197, 372, 244, 245 அரிதே எனினும் அணித்தே நன்று 885. எனைப்பலவே யாயினுஞ் 1சேய்த்தாப் பெறலிற் றினைத்துணையே யானு 2மணிக்கொண்ட னன்றே இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப பனைப்பதித் துண்ணார் பழம். பின்னைக் குரியதை முன்னைத் தேடுக 886. தந்தம் பொருளுந் தமர்கள் வளமையும் முந்துற நாடிப் புறந்தர லோம்புக அந்த ணருவி மலைநாட சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று. புலிக்குப் புதர்வலி; புதர்க்குப் புலிவலி 887. உடையதனைக் காப்பா னுடையா னதுவே உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையிற் புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும். கலச்சோற் றுக்குக் காக்கையோ காவல்? 888. ஊக்கி 3யுழந்தொருவ ரீட்டிய வொண்பொருளை நோக்குமி 4னென்றுவந்து நொவ்வியார் கைவிடுதல் 5போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப காக்கையைக் காப்பிட்ட சோறு. வெண்ணெய் வைத்து மயிலைப் பிடித்தல் 889. முன்னை யுடையது காவா திகழ்ந்திருந்து பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியற்கை மைத்தடங்கண் மாதரா யஃதாலவ் வெண்ணெய்மேல் வைத்து மயில்கொள்ளு மாறு. வள்ளியோர் செல்வம் வருந்துதல் இல்லை 890. களமர் பலரானும் கள்ளம் படினும் வளமிக்கார் செல்வம் வருந்தா - வளைநெல் 1அரிநீ ரணைதிறக்கு மூர அறுமோ நரிநக்கிற் றென்று கடல். -பழமொழி 187, 205, 200, 208, 210, 203 பொருளுடை யாரைப் போற்றி வருவர் 891. அருமை யுடைய பொருளுடையார் தங்கட் கரும முடையாரை நாடார் - எருமைமேல் நாரை துயில்வதியு மூர குளந்தொட்டுத் தேரை வழிச்சென்றா ரில். காப்பார் தம்மிற் கள்வார் பலரால் 892. நோக்கி யிருந்தா ரிமைக்கு மளவின்கண் ஒப்பப் படினு முணங்கலைப் புட்கவரும் போற்றிப் புறந்தந்தக் கண்ணும் பொருளினைக் காப்பாரிற் பார்ப்பார் மிகும். பொருளுடை யாரைப் புகழார் இல்லை 893. அருளுடை யாருமற் றல்லா தவரும் பொருளுடை யாரைப் புகழாதா ரில்லை பொருபடைக் கண்ணா யதுவாற் றிருவுடையார் பண்ட மிருவர் கொளல். -பழமொழி 198, 368, 199 பொய்யில் பொருளே பொருளாய்க் கொள்க 894. செய்கபொரு ளாருஞ்செறு வாரைச்செறு கிற்கும் எஃகுபிறி தில்லையிருந் தேயுமிரு முண்ணும் ஐயமிலை யின்பமற னோடெவையு மாக்கும் பொய்யில்பொரு ளேபொருண்மற் றில்லைபிற பொருளே. துன்னும் பொருளால் துன்னா தவையில் 895. பொன்னி னாகு பொருபடை யப்படை தன்னி னாகுந் தரணி தரணியிற் 1பின்ன ராகும் பெரும்பொரு ளப்பொருள் துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே. -சீவகசிந்தாமணி 497, 1923 எல்லாம் ஆக்க வல்லது பொருளே 896. வென்றி யாக்கலு மேதக வாக்கலும் குன்றி 2னார்தமைக் குன்றென வாக்கலும் அன்றி யுங்கல்வி யோடழ காக்கலும் பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே. -சீவகசிந்தாமணி 1922 பொருளைப் பெற்றிடின் புன்கண் ணில்லை 897. குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைக ளழிபசி தீர்க்கும் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ. -வளையாபதி 47 82. படைமாட்சி (அரசன் நல்வழியில் ஈட்டிய பொருளைக் கொண்டு அமைப்பதும் அவனாட்சிக்கும் பகைவரினின்று நாட்டைக் காத்தற்கும் இன்றியமையாததுமான படையின் சிறப்பு - பாவாணர். இ.பெ.அ: திருக். 77. இ.சா.அ: பழமொழி. 29. (படைவீரர்)) படையறின் ஆள்வோர் பாங்கெலாம் அற்றிடும் 898. 1போரறின் வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த 2வேரறின் வாடு மரமெல்லாம் - நீர்பாய் மடையறின் நீணெய்தல் வாடும் படையறின் மன்னர்சீர் வாடி விடும். -நான்மணிக்கடிகை 42 மண்ணின் மூத்த மறக்குடி மாண்பு 899. பொய்யகல நாளும் 3புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலி நீர் - கையகலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி. -புறப்பொருள் வெண்பாமாலை 35 வேற்படை வீரம் விளங்க உரைத்தது 900. மின்னார் சினஞ்சொரிவேல் மீளிக் கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின் - என்னாங்கொல் ஆழித்தேர் வெல்புரவி யண்ணல் மதயானைப் பாழித்தோள் மன்னர் படை. வீரர் தொழிலை விரித்துச் சொன்னது 901. தமருட் டலையாதல் தார்தாங்கி நிற்றல் எமருள்யா மின்னமென் றெண்ணல் - 4அமருள் முடுகழலின் முந்துறுதல் முல்லைத்தார் வேந்தன் தொடுகழல் மைந்தர் தொழில். -புறப்பொருள் வெண்பாமாலை 131, 41 ஆயிரம் பேரையும் அலைக்கும் உரவோன் 902. மறுமனத்தா னல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்தா னாகி யொழுகின் - தெறுமனத்தார் பாயிரங் கூறிப் படைதொக்கா லென்செய்ப ஆயிரங் காக்கைக்கோர் கல். மெய்ம்மை தவறார் மேதகு சான்றோர் 903. மொய்கொண் டெழுந்த வமரகத்து மாற்றார்வாய்ப் பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் 1கென்கொலாம் மையுண் டமர்த்தகண் மாணிழாய் சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய். இல்லாத் திறத்தை இயம்புங் கீழ்கள் 904. 2உருத்தெழு ஞாட்பினு ளொன்னார் தொலையச் செருக்கினாற் செய்கலார் செய்வாரே போலத் தருக்கினாற் றம்மிறைவன் கூழுண் பவரே கருத்தினாற் கூறைகொள் வார். ஊன்றாத் துணையில் ஒருதனி நன்று 905. கொடையு மொழுக்கமுங் கோளுள் ளுணர்வும் உடைய ரெனப்பட் டொழுகிப் பகைவர் உடையமேற் செல்கிற்கு மூற்ற 3மிலாதார் படையிற் படைத்தனிமை நன்று. -பழமொழி 249, 83, 321, 325 முன்னோர் பெயரால் தன்வயி றருத்துவோர் 906. அமர்விலங்கி யாற்ற வறியவும் பட்டார் எமர்மேலை யின்னரால் யார்க்குரைத்து மென்று தமர்மறையாக் கூழுண்டு சேற லதுவே மகன்மறையாத் தாய்வாழு மாறு. வாய்ப்புக் கருதியே வழங்குதல் இயற்கை 907. தன்னின் வலியானைத் தானுடைய 4னல்லாக்கால் என்ன குறைய னிளையரான் மன்னும் புலியிற் பெருந்திறல வாயினும் பூசை எலியில் வழிப்பெறா பால். -பழமொழி 322, 324 அணுகத் தகாத ஐவர் இவராம் 908. உடையிட்டார் புன்மேய்ந்தா ரோடுநீர்ப் புக்கார் படையிட்டார் பற்றேது மின்றி - நடையிட்டார் 1இவ்வகை யைவரையு மென்று மணுகாரே 2செவ்வகைச் சேவகர் சென்று -சிறுபஞ்சமூலம். 41 மாளவஞ் சிந்து மாச்சீர் உரைத்தது 909. தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசால் மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற் குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய. பார சூரவப் பல்லவப் பரிகள் 910. பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச் சோரும் வார்புயல் துளங்கவிண் புகுவன துரகம். விலங்கிப் பாயும் கலிமாத் திறமை 911. அலங்கு வெண்மதி யைப்பசி யடையவப் பகலே நிலங்கொண் 3டோங்கின நிரம்பின 4புகர்சுழி யுடைய உலம்பி முன்னிரு தாள்களு முமிழ்வன போல விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா. -சீவகசிந்தாமணி 2159, 2160, 1770 வரையையும் பிளக்கும் வன்மைசேர் கரிகள் 912. அரும்பனைத் தடக்கை 5யபரகாத் திரம்வா லெயிறிவை யைந்தினுங் கொல்வ கருங்கடற் சங்குங் கறந்தவான் பாலுங் கனற்றிய காலுகி ருடைய பெரும்புலி முழக்கின் மாறெதிர் முழங்கிப் பெருவரை கீண்டிடுந் திறல திருந்தியே ழுறுப்புந் திண்ணிலந் தோய்வ தீயுமிழ் தறுகணிற் சிறந்த. -சீவகசிந்தாமணி 2154 83. நட்பு (துன்புற்ற காலத்துத் துணையாளராகவும், தவறிய இடத்து இடித்துரைக்கும் உரிமையாளராகவும் விளங்கும் நட்பின் இயல்பு கூறுதல். இ.பெ.அ: திருக். 79. பழமொழி. 14. ப.பா.தி. 55. நீதிக். 25.) மலர்ந்து கூம்பா மாண்புறு நட்பு 913. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரு நட்பாரு மில். இன்பொடு துன்பில் இணைந்ததே நட்பு 914. நறுமலர்த் தண்கோதாய்நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ - இறுமளவும் இன்புறுவ தின்புற் 1றெரீஇ யவரொடு துன்புறுவ துன்புறாக் கால். நண்பரின் கடுஞ்சொல் நலமே விளைக்கும் 915. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் லுவந்துரைக்கும் ஏதிலா ரின்சொல்லிற் றீதாமோ - போதெலாம் மாதர்வண் டார்க்கு மலிகடற் றண்சேர்ப்ப ஆவ தறிவார்ப் பெறின் -நாலடியார் 215, 209, 73 நட்டபின் நாடேல் குற்றமும் குணனும் 916. குற்றமு மேனைக் குணனு மொருவனை நட்டபி னாடித் 1திரிவனேல் - நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க அறைகடல்சூழ் வையம் நக. பிறைபோல் வளரும் பெரியவர் கேண்மை 917. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை ளரிசையா நந்தும் - வரிசையால் வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே தானே சிறியார் தொடர்பு. -நாலடியார் 230, 125 எவர்நட் பெனினும் ஏற்பது நலமே 918. தானட் டொழுகற்குத் தக்கா ரெனவேண்டா யார்நட்ப தாயினும் நட்புக் கொளல்வேண்டும் கானட்டு நாறுங் கதுப்பினாய் தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல். உறுகுறை மறையா தோதுக நட்பிடம் 919. தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்ப ரெனப்பட்டார்க் குற்ற குறையை யுரைப்பதாந் - தெற்ற அறையா ரணிவளையாய் தீர்த லுறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய். ஒன்றுக்குதவா ஒருபொருள் இல்லை 920. நன்றே யொருவற் றுணைக்கோடல் பாப்பிடுக்கண் ஞெண்டேயும் பார்ப்பான்கட் 2டீர்த்தலான் - விண்டோயுங் குன்றக நன்னாட கூறுங்கா லில்லையே ஒன்றுக் குதவாத வொன்று. மாறுபா டுடையரை மதித்துக் கூடேல் 921. உற்றா 1லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான் மற்றவற் கொன்னாரொ டொன்றுமோ - தெற்ற முரண்கொண்டு மாறாய வுண்ணுமோ வுண்ணா இரண்டே றொருதுறையி னீர். -பழமொழி 128, 133, 341, 312 நண்பர் செல்வழி நயந்து சேறுக 922. தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினு மவர்செய்வ செய்வதே இன்னொலி வெற்ப விடரென்னை துன்னூசி போம்வழிப் போகு மிழை. ஒருவழி நீடி உறைவது துன்பம் 923. கருவினுட் கொண்டு கலந்தாருந் தம்முள் ஒருவழி 2நீடி யுறைதலோ துன்பம் பொருகடற் றண்சேர்ப்ப பூந்தா மரைமேற் றிருவொடு மின்னாது துச்சு. - பழமொழி 354, 355 அன்பரைப் பிரிதலின் அனல்புகல் நன்று 924. பறைநன்று பண்ணமையா யாழி னிறைநின்ற பெண்ணன்று பீடிலா மாந்தரிற் - பண்ணழிந் தார்தலி னன்று பசித்தல் பசைந்தாரிற் றீர்தலிற் றீப்புகுத னன்று. - நான்மணிக்கடிகை 13 பெட்டது சொல்லிப் பெரிதிகழ் பேதை 925. கெட்டே மிதுவெந் நிலையென்று சார்தற்கண் நட்டவ ரல்லார் நனிமிகு பவர்சுற்றம் பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவும் 1எட்டவந் தோரிடத் தேகி நிற்பவே - வளையாபதி 48 இன்னுயிர் ஈயும் தொன்னட் பாளர் 926. பலர்க்கு நிழலாகி யுலகமீக் கூறத் தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுக லாகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ டின்னுயிர் 2விரும்புங் கிழமைத் தொன்னட் புடையார் தம்முழைச் செலினே. - புறநானூறு 223 84. நட்பாராய்தல் (நட்பிற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளுமாறு கூறுதல் - மணக். இ.பெ.அ: திருக். 80. நாலடி. 22. நீதிக். 26.) நாய்போல் நன்றியர் நட்புக் குரியர் 927. யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டு - யானை அறிந்தறிந்தும் பாகனையே சொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய் உற்றுப் பழகினும் ஒட்டார் ஒட்டார் 928. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சிற் சிலநாளு மொட்டாரோ டொட்டார் - பலநாளும் நீத்தா ரெனக்கை விடலுண்டோ தந்நெஞ்சத் 3தியாத்தாரோ டியாத்த தொடர்பு. பயின்ற நண்பர் பனையை அனையார் 929. கடையாயார் நட்புக் கமுகனைய ரேனை இடையாயார் தெங்கி னனையார் - தலையாயர் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை யுடையார் தொடர்பு. வாய்க்கா லன்னவர் வளநட் பெய்துக 930. நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்காற் றுணையு முதவாதார் நட்பென்னாம் சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டுஞ் 1செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு. பாம்போ டாயினும் படுதுயர் பிரிவு 931. மரீஇப் பலரொடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. -நாலடியார் 213, 214, 216, 218, 220 நுண்ணியர் நட்பு நுனிமுதற் கரும்புணல் 932. கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியிற் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈரமி லாளர் தொடர்பு. அடிமுதற் கரும்புணல் அறிவிலார் நட்பு 933. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றும் குருத்திற் கரும்புதின் றற்றே - குருத்திற் கெதிர்ச்செலத் தின்ற தகைத்தரோ வென்று மதுர மிலாளர் தொடர்பு. -நாலடியார் 138, 211 கெட்டபோ தறியலாம் கேளிரா லாம்பயன் 934. மண்ணி யறிய மணிநலம் பண்ணமைத் 1தேறிய பின்னறிப மாநல - மாசறச் சுட்டறிப பொன்னி னலங்காண்பான் கெட்டறிப கேளிரா லாய பயன். -நான்மணிக்கடிகை 3 கொள்கை யாளன் கொண்டதை மறவான் 935. தாளாள னென்பான் கடம்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணதான் கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர் கேளாக வாழ்த லினிது. -திரிகடுகம் 12 85. நட்பிற் பிழைபொறுத்தல் (தம்மால் நட்புக் கொள்ளப்பட்டவர் தம்முடைய மனதுக்கு வாராத குற்றஞ் செய்தாராயின் அஃது அறியாமற் செய்தார் என்றாதல் உள்ளுரிமையாற் செய்தார் என்றாதல் அவர் செய்த பிழையைப் பொறுத்தலாம் - தருமர். இ.பெ.அ: நாலடி. 23.) நண்பர் குறையை நயமாய்த் தாங்குக 936. நண்பொன்றித் தம்மாலே நட்கப்பட் டார்களைக் கண்கண்ட குற்ற முளவெனினுங் 2காய்ந்தீயார் பண்கொண்ட தீஞ்சொற் பணைத்தோளா யாருளரோ தங்கன்று சாக்கறப் பார். பேயோ டாயினும் பெருந்துயர் பிரிவு 937. விலங்கேயுந் தம்மோ டுடனுறைதல் மேவுங் கலந்தாரைக் கைவிடுத லொல்லா - இலங்கருவி தாஅ யிழியு மலைநாட வின்னாதே பேஎயோ டானும் பிரிவு. நண்பர் பழியை நாடித் தூற்றேல் 938. கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப் பழித்துப் 1பலர்நடுவட் சொல்லாடா ரென்கொல் விழித்தலரும் நெய்தற் றுறைவ வுரையார் இழித்தக்க காணிற் கனா. வெறுப்பக் கூறி விலக்கேல் நட்பை 939. ஆண்டீன் டெனவொன்றோ வேண்டா வடைந்தாரை 2மாண்டில ரென்று மறுப்பக் கிடந்ததோ 3பூண்டாங் கிளைமுலைப் பொற்றொடீஇ - பூண்ட 4பறையறையார் போயினா ரில். ஒருவர் பொறுத்தால் இருவர் நட்பாம் 940. தந்தீமை யில்லவர் நட்டவர் தீமையையும் எந்தீமை யென்றே 5யுணர்பதாம் - அந்தண் பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப ஒருவர் பொறையிருவர் நட்பு. -பழமொழி 131, 126, 130, 84, 132 அல்லார் எனினும் அமைத்துக் கொள்க 941. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை யல்லா ரெனினு மடக்கிக் கொளல்வேண்டும் 6நெல்லிற் குமியுண்டு நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கு முண்டு. -நாலடியார் 221 துன்பந் தரினும் துறவேல் நட்பை 942. இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் 7துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை. இன்னா தவரையும் பொன்னாய்ப் போற்றுக 943. இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடொறு நாடித்தம் இல்லத்தி லாக்குத லான். மதியார் தம்மையும் மதித்துப் போற்றுக 944. தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயி னவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்மு ளடக்கிக் கொளல் போற்றா விடினும் தூற்றா தமைக 945. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா வொழுக்க மொருவன்க னுண்டாயின் ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின் தூற்றாதே தூர விடல். பெரியவர் நட்பில் அரியவை பொறுப்பர் 946. பெரியார் பெருநட்புக் கோடல்தாஞ் செய்த அரிய 1பொறுப்பரென் றன்றோ - அரியரோ ஒல்லெ னருவி யுயர்வரை நன்னாட நல்லசெய் வார்க்குத் தமர். -நாலடியார் 226, 225, 229, 75, 77 நடுங்கும் வினையை நட்டவர் செய்யார் 947. மலைப்பினும் வாரணந் தாங்குங் குழவி 2அலைப்பினும் அன்னேயென் 3றோடும் - சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யா ரொட்டார் 4உடனுறையுங் காலமு மில். -நான்மணிக்கடிகை 23 86. தீநட்பு (தீய குணத்தாராகிய மாந்தரோடு நட்டதனால் வருங்குற்றங் கூறுதல் - மணக். இ.பெ.அ:திருக். 82.) ஒருவரோ டொருப்படார் இருதலைக் கொள்ளி 948. பெரியநட் டார்க்கும் பகைவர்க்குஞ் சென்று திரிவின்றித் தீர்ந்தார்போற் சொல்லி யவருள் ஒருவரோ டொன்றி யொருப்படா தாரே இருதலைக் 1கொள்ளியென் பார். தம்மவர்க் குற்றதைத் தம்மதாய்க் கொள்க 949. தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற தெமக்குற்ற வென்றுணரா விட்டக்கா லென்னாம் இமைத்தருவி பொன்வரன்று மீர்ங்குன்ற நாட 2உமிக்குற்றுக் கைவருந்து மாறு. தீமை யுடையார் திருந்திச் சேரார் 950. 3திருந்தாய்நீ யார்வத்தைத் தீமை யுடையார் வருந்தினா ரென்றே வயப்படுத்த லுண்டோ அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தாமண் ணாகா சுவர். செத்தபின் செய்யும் சிறப்பினால் என்னாம்? 951. பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத் தாக்கி யமருட் டலைப்பெய்யார் - போக்கி வழியரா நட்டார்க்கு மாதவஞ்செய் வாரே கழிவிழாத் 4தோளேற்று வார். -பழமொழி 141, 348, 110, 137 காட்டு நிலவால் கண்ட பயனென்? 952. தானகத்தா னட்டுத் தமரென் றொழுகியக்கால் நாணகத்துத் தாமின்றி நன்கொழுகா ராபவேல் மானமர்க் கண்ணி மறந்தும் பரியலராற் கானகத் துக்க நிலா. மாடி ஏற்றி ஏணி களைதல் 953. எய்ப்புழி வைப்பா மெனப்போற்றப் பட்டவர் உற்றுழி யொன்றுக் குதவலராய்ப் பைந்தொடீஇ அச்சிடை யிட்டுத் திரியி னதுவன்றோ 1மச்சேற்றி யேணி களைவு. பேதையர் நட்புப் பின்னின் னாவாம் 954. இடையீ டுடையர் ரிவரவரோ டென்று தலையாயா 2ராய்தந்துங் காணார் - கடையாயார் முன்னின்று கூறுங்குறளை தெரிதலாற் பின்னின்னா பேதையார் நட்பு. -பழமொழி 139, 136, 138 மருவார் நட்பு விரைவாய் ஒழியும் 955. 3பெருகு வதுபோலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதுஞ் 4செல்லாதே நந்து - மருகெலாஞ் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட பந்தமி லாளர் தொடர்பு. சாந்துச் செப்பில் பாம்பு கண்டது 956. சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மற் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்க ணில்லாயிற் - சார்ந்தோய்கேள் சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து. -நாலடியார் 234, 126 நயமிலா மனத்தர் நட்பு நனிஇன்னா 957. பகல்போலும் நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி 1லெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு. -இன்னாநாற்பது 8 87. கூடா நட்பு (பகைமையான் அகத்தாற் கூடா திருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடி ஒழுகுவார் நட்பு - பரிமே. இ.பெ.அ: திருக். 83. நாலடி. 24. நீதிக். 28 இ.சா.அ: பழமொழி. 15. (நட்பில் விலக்கு)) போரிற் புக்குப் புறங்காட் டுவதோ? 958. நலிந்தொருவர் நாளு மடுபாக்குப் புக்கால் மெலிந்தவர் வீழாமை கண்டு - மலிந்தடைதல் பூப்பிழைத்து வண்டு புடையாடுங் கண்ணினாய் ஏப்பிழைத்துக் காகொள்ளு மாறு. -பழமொழி 309. உள்ளம் அறிவதே ஒருவர்க் கருமை 959. 2யாவ ரொருவ ரொருவர்தம் முள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் - சாரற் கனமணி நின்றிமைக்கு நாடகேள் மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு. நினைத்ததை முடித்திட நீரிலுங் கிடப்பர் 960. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக இறைத்து நீ ரேற்றுங் கிடப்பர் - கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட தங்கரும முற்றுந் துணை. கள்ள நட்பு, கறையாம் மனத்தில் 961. உள்ளத்தால் நள்ளா துறுதித் தொழிலராய்க் கள்ளத்தால் நட்டார் 1கழிகிழமை - தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட மனத்துக்கண் மாசாய் விடும். -நாலடியார் 127, 231, 128 88. பேதைமை (கேட்டிற்குக் காரணமாகியவற்றை அறியாதார் இயல்பு. கூறுதல் - மணக். இ.பெ.அ: திருக். 84. நாலடி. 34. நீதிக். 33.) அறிஞனுக் கிணையோ ஆயிரம் அறிவிலார் 962. ஆயிரவ ரானு மறிவிலார் தொக்கக்கால் மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கல்லார் பாயிருள் நீக்கு மதியம்போற் பன்மீனுங் காய்கலா வாகு நிலா. பெரியர் சிறப்பைச் சிறியர்க்குச் செய்யேல் 963. பெரியார்க்குச் செய்யுஞ் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு பூமே லிசைமுரலு மூர வதுவன்றோ நாய்மேற் 2றவிசிடு மாறு. மூர்க்கற் குறுதி மொழிவது வீணே 964. ஓர்த்த கருத்து முலகு முணராத மூர்க்கற் குறுதி மொழியற்க - மூர்க்கன்றான் கொண்டதே கொண்டு விடானாகு மாகாதே உண்டது நீலம் பிறிது. காவா தவரே கள்ளராச் செய்வார் 965. தெரியாதார் சொல்லுந் திறனின்மை தீதாப் பரியார் பயனின்மை செய்து - பெரியார்சொற் கொள்ளாது தாந்தம்மைக் காவா தவர்பிறரைக் கள்ளராச் செய்குறு வார். தங்குறை தீரார் பிறர்குறை தீர்த்தல் 966. தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம் எங்கெங்கும் நீக்கற் கிடைப்புகுதல் - எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீரா தயல்வளி தீர்த்து விடல். -பழமொழி 27, 105, 94, 117, 38 இயல்பிலா வெகுளியை இல்லிற் கடியேல் 967. சொல்லெதிர்ந்து தம்மை வழிபட் டொழுகலராய்க் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல் - உள்ளிருந் தச்சாணி தாங்கழிக்கு மாறு. இரண்டுங் கெட்ட இயல்பினர் இவராம் 968. இல்வாழ்க்கை யானு மிலதானு மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுவுநின் - றெல்லாம் ஒருதலையாச் சென்நு துணியா தவரே இருதலையுங் காக்கழிப் பார். -பழமொழி 112, 387 அறியாத் தன்மையால் அடுத்திடுங் கேடு 969. கல்லார்க் கினனா யொழுகலுங் காழ்க்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லஞ் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றம் அறியாமை யான்வருங் கேடு. இழுக்கிய சொல்லன் இணையிலாப் பேதை 970. நண்பிலார் மாட்டு நகைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பின் இழுக்காய் சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கங் கடைப்பிடியா தார். வாழு முயிர்க்கு வரையாப் பேதைமை 971. இருளாய்க் கழியு 1முலகமும் யாதுந் தெருளா துரைக்கும் 2வெகுளியும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு. கடைப்பி கருதார் இடர்ப்படு பேதையர் 972. கொலைநின்று தின்றுழல் வானும் பெரியவர் புல்லுங்காற் றான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன் றீயென் பவனை நகுவானு மிம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். -திரிகடுகம் 3, 94, 93, 74 விஞ்சிய பேதையர் நெஞ்சிடை நோயராம் 973. பழியஞ்சான் வாழும் பசுவும் 3பரிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானுங் - 4கொண்டிருந் தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய். அறிவிலார் காதற் கமைந்த மூன்று 974. பெருமை யுடையா ரினத்தி னகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. -திரிகடுகம் 79, 9 கழுவினால் பாலால் கரியும் வெளுக்குமோ? 975. பாலாற் கழீஇப் பலநா ளுணக்கினும் வாலிதாம் பக்க மிருந்ததைக் கிருந்தன்று கோலாற் கடாஅய்க் குறினும் 1புகலொல்லா தோலா வுடம்பிற் கறிவு. நல்லவை கூறினால் நாவை அரிக்குமோ? 976. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக் கறுவுகொண் டேலாதார் மாட்டுங் - கறுவினாற் கோத்தின்னா கூறி யுரையாக்காற் பேதைக்கு நாத்தின்னு நல்ல சுனைத்து. இருக்கும் நாளில் வெறுப்பும் இலையோ? 977. நல்லவை நாடொறு மெய்தா ரறஞ்செய்யார் 2இல்லாதார்க் கியாதொன்று மீகலார் - எல்லாம் இனியார்தோள் சேரா ரிசைபட வாழார் முனியார்கொல் தாம்வாழும் நாள். -நாலடியார் 258, 335, 338 பன்றிப் பத்தரில் தேமா வடிப்பது 978. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்காற் குன்றின்மேற் கொட்டுந் தறிபோற் 3றலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு. வெந்நீர் உலையுள் விழைந்தா(டு) ஆமை 979. கொலைஞ ருலையேற்றித் தீமடுப்ப யாமை நிலையறியா தந்நீர்ப் படிந்தாடி யற்றே கொலைவல் பெருங்கூற்றம் கோட்பார்ப்ப வீண்டை வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. -நாலடியார் 257, 331 தெண்ணீர் பரவும் எண்ணெயை ஈட்டல் 980. தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண் டீட்டற் கிவறுத லென்னொக்கும் பெண்மனம் பேதித் தொருப்படுப்பே னென்னும் எண்ணி லொருவ னியல்பெண்ணு மாறே. குறிப்புக் காட்டிக் கூட்டம் விழைவார் 981. நீண்முகை கையாற் கிழித்தது மோக்குறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற் பேணலு மன்பும் பிறந்துழிப் பேதுசெய் தாணைப்பெண் ணைய வணைக்குறு மாறே. -வளையாபதி 49, 50 89. புல்லறிவாண்மை (புல்லிய அறிவினை ஆடற்றன்மை என விரியும். அஃதாவது தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல் கொள்ளாமை - பரிமே. இ.பெ.அ: திருக். 85. நாலடி. 33. நீதிக். 32.) காதலால் இட்டிகை கண்ணில் இடுவார் 982. மறுமையொன் றுண்டோ மனம்பட்ட தெல்லாம் பெறுமாறு செய்ம்மினென் பாரே - நறுநெய்யுட் கட்டி யடையைக் களைவித்துக் 1கண்செரீஇ இட்டிகை தீற்று பவர். -பழமொழி 108 பேர்த்துத் தெருட்டல் பெரியோர்க் கியலா 983. நீர்த்தன் றொருவர் நெறியன்றிக் கொண்டக்காற் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கு மாகாதே கூர்த்தநுண் கேள்வி யறிவுடையார்க் காயினும் ஓர்த்த 2படுமே பறை. நெஞ்சங் கரியரை அஞ்சி அகல்க 984. கல்லாதுங் கேளாதுங் கற்றா ரவைநடுவட் 1சொல்லாடு வாரையு மஞ்சற்பாற் - 2றெல்லருவி 3பாயுமலை நாட பரிசழிந் தாரொடு தேவரு மாற்ற லிலர். நல்லவைக் கொடுங்கிப் புல்லவை போவார் 985. நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி. நன்றுணராப் புல்லவையுட் டம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார் 4புடைத்தறுக ணஞ்சுவா னில்லுள்வில் லேற்றி இடைக்கலத் தெய்து விடல். பற்பிடித் தாய்வரோ பருத்த யானையை? 986. மானமும் நாணு மறியார் மதிமயங்கி ஞான மறிவா ரிடைப்புக்குத் தாமிருந்து ஞானம் வினாஅ 5யுரைக்கி னகையாகும் யானைப்பற் காண்பான் புகல். இயற்கை அறிவிலான் எழுத்தாற் பயன்பெறான் 987. நற்கறி வில்லாரை நாட்டவு மாகாதே சொற்குறி கொண்டு துடிப்பண் ணுறுத்ததுபோல் வெற்பறைமேற் றாழும் விலங்கருவி நன்னாட 6கற்பறிவு 7போகாக் கடை. -பழமொழி 37, 20, 24, 22, 28 இளமையில் அறஞ்செயார் இறுதியிற் செய்வதென்? 988. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்னறிவா மென்றுரைக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். ஆக்கம் பெற்றும் போக்கும் புல்லியார் 989. தாமேயு மின்புறார் தக்கார்க்கு நன்றாற்றார் 1ஏமஞ்சால் நன்னெறியுஞ் சேர்கலார் - தாமயங்கி ஆக்கத்துட் டூங்கி யவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார். கடுகள வேனும் கருதுக அறநெறி 990. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் 2போதும் மறுமை மனத்தரே யாகி - மறுமையை ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னார். பலரொடு பழகும் பான்மை எய்துக 991. உளநாள் சிலவா லுயிர்க்கேம மின்றால் பலர்மன்னுந் தூற்றும் பழியாற் - பலருள்ளுங் கண்டாரோ டெல்லா நகாஅ தெவனொருவன் தண்டித் தனிப்பகை கோள். பேய்ச்சுரைக் காய்க்குப் போருமோ கசப்பு? 992. இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும் அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய். தன்னைத்தான் புகழ்வோன் மன்னிய பித்தன் 993. கற்றவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்துந் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும். -நாலடியார் 328, 327, 329, 324, 116, 340 குற்றமே பார்ப்போன் முற்றிய புல்லன் 994. வெல்வது 1வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் 2பார்த்திருப் பானுமிவ் மூவர் 3உமிக்குற்றுக் கைவருந்து வார். -திரிகடுகம் 28 கற்றவர் சிறப்பைக் கயமை அறியுமோ? 995. அரும்பொனன் னார்கோட்டி யார்வுற்றக் கண்ணுங் கரும்புதின் பார்முன்னர் நாய்போற் - கரும்புலவர் கொண்டொழிப வொன்றோ துயில்மடிப வல்லாக்கால் விண்டுரைப்பர் வேறா விருந்து. -தகடூர் யாத்திரை குருடும் குருடும் குழிவிழு மாறே 996. அந்தக னந்தகற் 4காறு சொலலொக்கும் முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும் நன்கறி வில்லா 5னதுவறி யாதவற் கின்புறு வீட்டி னெறிசொல்லு மாறே. -வளையாபதி 69 90. பகைத்திறந் தெரிதல் (பகை பற்றிய பல்வேறு பகுதிகளையும் ஆராய்ந்து அறிதல். இ.பெ.அ: திருக். 88 இ.சா.அ: பழமொழி 28. (பகைத்திறம்) ப.பா.தி. 56. (பகை) நீதிக். 70. (பகைத்திறம்)) எதிர்த்த பகையை இளைதே களைக 997. எதிர்த்த பகையை யிளைதாய போழ்தே 6கதித்துக் களைக முதிரா - தெதிர்த்து நனிநிற்பச் செய்தவர் நண்பெலாந் தீர்க்கத் தனிமரங் 1காடாவ தில். - பழமொழி 286 புல்லியர் பகையால் பொருந்துதல் கேடே 998. வன்பாட் டவர்பகை கொள்ளினு மேலாயார் புன்பாட் டவர்பகை கோடல் பயமின்றே கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப வெண்பாட்டம் வெள்ளந் தரும். காலம் வந்தால் கால்கொளும் பகைமை 999. தழங்குகுரல் வானத்துத் தண்பெயல் பெற்றாற் கிழங்குடைய வெல்லா முளைக்குமோ ராற்றான் விழைந்தவரை 2வேறன்றிக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை 3நட்பாத லில். கல்லை மோதிக் கையும் வெல்லுமோ? 1000. அமர்நின்ற போழ்தின்க ணாற்றுவ ரேனும் 4நிகரொன்றின் மேல்விடுத லேதம் - நிகரின்றி வில்லொடுநே ரொத்த புருவத்தா யஃதன்றோ கல்லொடு கையெறியு மாறு. கூற்றின் முதுகைக் கொட்டினார் இல்லை 1001. ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க போற்றாது கொண்டரக்கன் போரு ளகப்பட்டான் நோற்ற பெருமை யுடையாருங் கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில். பின்னே நலிப்பதாய்ப் பேசுதல் பேதைமை 1002. முன்னலிந் தாற்ற முரண்கொண் டெழுந்தாரைப் பின்னலிது மென்றுரைத்தல் பேதைமையே - பின்னின்று காம்பன்ன தோளி 5கலங்கக் கடித்தோடும் பாம்பின்பற் கொள்வாரோ வில். அறுத்ததை மிதித்தே அழுக நீர்விடல் 1003. பொருந்தா தவரைப் பொருதட்ட கண்ணும் இருந்தமையா ராகி யிறப்ப வெகுடல் விரிந்தருவி வீழ்தரும் வெற்ப வதுவே அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு. -பழமொழி 300, 296, 317, 291, 287, 299 நெற்பயிர் பேணப் புற்பயிர் ஒழியும் 1004. உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ கற்றறிந்தார் தம்மை வெகுளாமற் காப்பதே நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும். கல்லைக் கிள்ளிக் கையும் உய்யுமோ? 1005. மிக்குடைய ராகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப் படமுயறு மென்ற லிழுக்காகும் நற்கெளி தாகி விடினும் நளிவரைமேற் கற்கிள்ளிக் கையுய்ந்தா ரில். பகையை மற்றோர் பகையால் அழிக்க 1006. இயற்பகை வெல்குறுவா னேமாப்ப முன்னே அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தாற் கறுவழங்கிக் கைக்கெளிதாச் செய்க வதுவே சிறுகுரங்கின் கையாற் றுழா. குடிநலம் நினையின் குறையும் குறையிலை 1007. நிரம்ப நிரையத்தைக் கண்டந் நிரையம் வரம்பில் பெரியானும் புக்கான் - இரங்கார் கொடியார மார்ப குடிகெட வந்தால் 1அடிகெடமன் றாடி விடல். -பழமொழி 53, 48, 306, 288 சிறுதீ எனினும் பேரழி வன்றோ! 1008. எரியுந் தீத்திர ளெட்டுணை யாயினும் கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேல் தெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும் விரியப் பெற்றிடின் வென்றிடு கிற்குமே. கிள்ளத் தவறினால் கேட்கும் கோடரி 1009. முட்கொ ணச்சு மரமுளை யாகவே உட்க நீக்கி னுகிரினும்நீக்கலாம் வட்க நீண்டதற் பின்மழுத் 1தள்ளினுங் கட்கொ 2டாமன்ன யார்களை கிற்பவே. -சூளாமணி 643, 644 91. உட்பகை (புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந் துணையும் உள்ளாய் நிற்கும் பகை - பரிமே. இ.பெ.அ:திருக். 89.) படுக்கை அறையிற் பாம்போ டுறைதல் 1010. தலைமை கருதுந் தகையாரை வேந்தன் நிலைமையா னேர்செய் திருத்தல் - மலைமிசைக் காம்பனுக்கு மென்றோளா யஃதாலவ் வோரறையுட் பாம்போ டுடனுறையு மாறு. கருதிய செய்யக் காக்கும் உட்பகை 1011. 3கண்ணின் மணியேபோற் காதலராய் நட்டாரும் எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பரால் எண்ணி யுயிர்கொள்வா 4னேன்று திரியினும் உண்ணுந் துணைக்காக்குங் கூற்று. உட்பகை என்பது உள்ளிற் கடனே 1012. வெள்ளம் 1பகைவரினும்வேறிடத்தார் செய்வதென் கள்ள முடைத்தாகிச் சார்ந்தார் கழிநட்புப் புள்ளொலிப் பொய்கைப் புனலூர வஃதன்றோ 2உள்ளில்லத் துண்ட தனிசு. செவ்வியர் பகைமை செய்யா திடரே 1013. இம்மைப் பழியு மறுமைக்குப் பாவமுந் தம்மைப் பிரியார் தமர்போ லடைந்தாரிற் செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ மைம்மைப்பின் நன்று குருடு. -பழமொழி 253, 135, 297, 298 வணங்கு கையுளும் வன்படை யுண்டாம் 1014. தொழுததங் கையி னுள்ளுந் துறுமுடி யகத்துஞ் சோர அழுதகண் ணீரி னுள்ளு 3மணிகலத் தகத்து மாய்ந்து பழுதுகண் ணரிந்து கொல்லும் படையுட னடங்கும் பற்றா தொழிகயார் கண்ணுந் தேற்றந் தெளிகுற்றார் விளிகுற் றாரே. மாதர் மயக்கமும் மதியொடு புரிக 1015. தோய்தகை மகளிர்த் 4தோயின் மெய்யணி நீகித் 5தூய்நீர் ஆய்முது மகளிர் தம்மா 6லரிறபத் திமிரி யாட்டி வேய்நிறத் தோளி னார்க்கு வெண்டுகில் மாலை சாந்தத் தாய்நல கலங்கள் சேர்த்தித் தடமுலை தோய்க வென்றான். நெடும்பகை யுள்ளம் நிலைபெற நில்லா 1016. பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும் வகைசெய் மேகலை மங்கையர் நெஞ்சமும் மிகைசெல் மேகத்து 1மின்னுஞ்செந் நில்லல புகையும் வேலினீர் போற்றுபு சென்மினே. -சீவகசிந்தாமணி 1891, 1892, 1816 92. பெரியாரைப் பிழையாமை (அறிவாலும் ஆற்றலாலும் பெரியாரை இகழ்ந்து தவறு செய்யாமை - பாவாணர். இ.பெ.அ: திருக். 90. நாலடி. 17.) தலைவன் முன்பிறர் தருவதோ ஆணை? 1017. மன்னவ னாணைக்கீழ் மற்றையர் மீக்கூற்றம் என்ன வகையாற் செயப்பெறுப - புன்னைப் பரப்புநீர் 2தாஅம் படுகடற்றண் சேர்ப்ப மரத்தின்கீ ழாகா மரம். -பழமொழி 251 வேந்தன் சினப்பினும் வெஞ்சினம் கொள்ளேல் 1018. வெஞ்சின மன்னவன் வேண்டாத செய்யினும் 3நெஞ்சத்துக் கொள்வ சிறிதுஞ் செயல்வேண்டா என்செய் தகப்பட்டக் கண்ணு 4மெடுப்புவவோ துஞ்சு புலியைத் துயில். தம்மைக் காவார் தலைவனைக் காய்வதென்? 1019. தாமேயுந் தம்மைப் புறந்தர வாற்றாதார் வாமான்றேர் மன்னரைக் காய்வ தெவன்கொலோ ஆமா வுகளு மணிவரை வெற்பகேள் ஏமாரார் கோங்கேறி னார். தலைவன் விரும்புவ தாமும் விரும்பேல் 1020. இடுகுடைத்தேர் மன்ன ரெமக்கமையு மென்று கடிதவர் காதலிப்பத் தாங்காதல் கொண்டு முடிய வெனைத்து முணரா முயறல் கடிய கனைத்து விடல். எள்ளி இகழ்தல் இன்னலைப் பெருக்கும் 1021. உரைத்தவர் நாவோ பருந்தெறியா தென்று சிலைத்தெழுந்து செம்மாப் பவரே - மலைத்தால் இழைத்த திறவா தவரைக் கனற்றிப் பலிப்புறத் துண்ப ருணா. எருக்கு மறைந்து யானையை எறிசெயல் 1022. எல்லாத் திறத்து மிறப்பப் பெரியாரைக் கல்லாத் 1துணையார் கயப்பித்தல் - சொல்லின் 2நிறைந்தார் வளையினா யஃதா லெருக்கு மறைந்தியானை 3காய்த்தி விடல். -பழமொழி 281, 282, 276, 295, 62 புலியின் முன்னர்ப் புல்வாய் போகுமோ? 1023. தீயன வல்ல செயினுந் திறல்வேந்தன் காய்வன செய்தொழுகார் கற்றறிந்தார் - 4காயும் புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கி லதுவே வலிமுன்னர் வைப்பார மில். பிழைப்பே பெருகிற் பொறுப்பார் எவரே? 1024. முன்னு மொருகால் பிழைப்பானை யாற்றவும் பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை யாழின்வண் டார்க்கும் புனலூர ஈனுமோ வாழை 5யிருகாற் குலை. தலைமேல் பனையைத் தாமே வீழ்த்துவார் 1025. மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர் கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப் பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன் றார்குறைப்பர் தம்மேலே வீழப் பனை. பொறுக்கப் பொங்குதல் கூன்மேற் புண்ணே 1026. உறாஅ வகையது செய்தாரை வேந்தன் பொறாஅஅன் போலப் பொறுத்தாற் - பொறாஅமை மேன்மேலுஞ் செய்து விடுத லதுவன்றோ கூன்மே லெழுந்த குரு. பெரியாரைப் பழித்தல் பிறையைநாய் குரைத்தல் 1027. நெறியா லுணராது நீர்மையு மின்றிச் சிறியா 1ரளியரா லென்று - பெரியாரைத் தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல் திங்களை நாய்குரைத் தற்று. இளையனென் றெள்ளி இகழேல் தலைவனை 1028. சீர்த்தகு மன்னர்2. சிறந்தனைத்துங் கெட்டாலும் நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும் இளைதென்று பாம்பிகழ்வா ரில். -பழமொழி 265, 63, 280, 283, 107, 277 வென்றடு வலியாரை வெதுப்புதல் தீது 1029. வென்றடு கிற்பாரை வேர்ப்பித் தவர்காய்வ தொன்றொடு நின்ற சிறியார் பலசெய்தல் குன்றொடு 3தேங்குலாம் வெற்ப வதுபெரிது நன்றொடு வந்ததொன் றன்று. -பழமொழி 294 பொறுப்ப ரென்று வெறுப்பன செய்யேல் 1030. பொறுப்பரென் றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும் வெறுப்பன செய்யாமை வேண்டும் - வெறுத்தபின் ஆர்க்கு மருவீ யணிமலை நன்னாட 1பேர்த்தரல் யார்க்கு மரிது. பெரியர் பகைப்பின் அரணம் என்செயும்? 1031. விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும் அருமை யுடைய வரண்சேர்ந்து முய்யார் பெருமை யுடையார் செறின். பெரியோர் புகழிகழ் பேணிக் கொள்க 1032. அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு 2மிகன்மக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார். பெரியர் மதிக்கும் பெருமையே பெருமை 1033. எம்மை யறிந்திலி ரெம்போல்வா ரில்லென்று தம்மைத்தாங் கொள்வது கோளன்று - தம்மை அரியரா நோக்கி யறனறியுஞ் சான்றோர் பெரியராக் கொள்வது கோள். அரிய பெரியரால் ஆம்பயன் கொள்க 1034. பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ பயமில் பொழுதாக் 3கழிப்பரே நல்ல நயமி லறிவி னவர். -நாலடியார் 161, 164, 168, 165, 162 ஆக்கலும் அழித்தலும் அரசால் ஆகும் 1035. அருளு மேலர சாக்குமன் காயுமேல் வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம் 1அருளி மற்றவை வாழ்த்தினு வையினும் அருளி யாக்க லழித்தலங் காபவோ. அரசுவழிச் செலின் அழிப்பார் இல்லை 1036. தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னை வௌவிற் பிறழ்ந்திடும் பூமகள் 2அன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப் பின்னைத் தன்குலம் பேர்க்குந ரில்லையே. ஆக்கினோன் வழியில் அயரா தணைக 1037. பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாட் குறைபடு மதியந் தேயக் குறுமுயல் தேய்வ தேபோல் இறைவனாத் தன்னை யாக்கி யவன்வழி யொழுகி னென்று நிறைமதி யிருளைப் போழு நெடும்புகழ் விளைக்கு மன்றே. நால்வர் பின்வரின் நாயகர் ஆவார் 1038. யாவ ராயினும் நால்வரைப் பின்னிடின் தேவ ரென்பது தேறுமிவ் வையகம் காவல் மன்னவர் காய்வன சிந்தியார் நாவி னும்முரை யார்நவை யஞ்சுவார். சுற்றமோ டனைத்தும் பற்றா தெரிதீ 1039 தீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீ ஈண்டுதங்கிளை யோடு மெரித்திடும் வேண்டி 1னின்னமு தாநஞ்சு மாதலான் மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே. -சீவகசிந்தாமணி 247, 245, 254, 249, 250 93. பொதுமகளிர் (நல்லார் தீயவர் என்னாமல் வரைவின்றிப் பொருள் கொடுப்பார் எல்லார்க்கும் பொதுப்பட்ட உடம்பினை உடையராகிக் குணத்தினாலன்றி வடிவினால் பெண்டிர் என்னும் வடிவுடையவர் - தருமர். இ.பெ.அ: நாலடி. 38. இ.சா.அ: திருக். 92. (வரைவின் மகளிர்)) கொடுப்பதொன் றின்றேல் விடுப்பரால் விரைந்து 1040. அங்கண் விசும்பி னமரர் தொழப்படுஞ் செங்கண்மா லாயினு மாகமன் - தங்கைக் கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார் விடுப்பர்தங் கையாற் றொழுது. பாவ உடம்பினர் பார்த்தும் தெளியார் 1041. உள்ள மொருவ னுழையதா வொண்ணுதலார் கள்ளத்தாற் செய்யுங் கருத்தெல்லாம் - தெள்ளி அறிந்த விடத்தும் அறியாராம் பாவஞ் செறிந்த வுடம்பி னவர். செந்நெறிச் சேர்வார் சேரத் தகாவிடம் 1042. 1ஏமார்ந்த போழ்தி னினியார்போன் றின்னாராய்த் தாமார்ந்த போழ்தே தகர்க்கோடா - மானோக்கிற் றந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே செந்நெறிச் சேர்துமென் பார். எவர்க்கும் பொதுவாய் இணையும் இயல்பினர் 1043. ஊறுசெய் நெஞ்சந்தம் முள்ளடக்கி யொண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி எமரென்று கொள்வாருங் கொள்பவே யார்க்குந் தமரல்லர் தம்முடம்பி னார். -நாலடியார் 373, 380, 378, 379 கூத்தி கூறிய குறிப்புரை இஃதால் 1044. யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோ லொழுகென்று கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை வேறோ ரிடத்து வெளிப்பட நன்றாம். அடைந்தவர்க் கேற்க அடைவே புரிக 1045. ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள் மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி யாவ 1ரடைந்தவர்க் கவையும் புரைப. பொருளை அளந்து போகம் அளிப்பவர் 1046. வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி யறவறும் வார்புன லாற்றின் வகையும் புரைப. பாண்மகற் கிசையும் யாழ்புரை தன்மையர் 1047. எங்ஙன மாகி யதிப்பொரு ளப்பொருட் கங்ஙன மாகி யவன்பின ராதலின் எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற் கங்ஙன மாகிய யாழும் புரைப. தீக்கடை கோல்போல் தீண்ட எரிப்பவர் 1048. கரணம் பலசெய்து கையுற் றவர்கட் கரண மெனுமில ராற்றிற் கலந்து திரணி யுபாயத்திற் றிண்பொருள் கோடற் கரணி ஞெலிகோ லமைவர வொப்ப. நாடொறுந் தேயும் நகைமதி ஒப்பவர் 1049. நாடொறு நாடொறு நந்திய காதலை நாடொறு நாடொறு நைய வொழுகலின் நாடொறு நாடொறு நந்தி யுயர்வெய்தி நாடொறுந் தேயும் நகைமதி யொப்ப. -வளையாபதி 51, 52, 53, 54, 55, 56 புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்பவர் 1050. 1வனப்பில ராயினும் 2வன்மையி லோரை நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாங் கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப் புனத்திடைப் 3பூத்ததோர் பூங்கொடி யொப்ப. வாணிகர் கலமென வாய்த்த தன்மையர் 1051. தங்கட் பிறந்த கழியன்பி னார்களை வன்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொரு ளேற்றி யெழநின்ற வாணிகர்க் கங்கட் பரப்பகத் தாழ்கல மொப்ப. பண்பாய் வழிபடும் பத்தினி போல்பவர் 1052. ஒத்த பொருளா னுறுதிசெய் வார்களை யெத்திறத் தானும் வழிபட் டொழுகலிற் பைத்தர வல்குற்பொற் பாவையி னல்லவர் பத்தினிப் பெண்டிர் 4படியும் புரைப. மேய்புலம் தேடும் மாவினை ஒப்பவர் 1053. வீபொரு ளானை யகன்று பிறனுமோர் மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலரன்ன கண்ணார். கொம்பிடை வாழும் குரங்கு போன்றவா 1054. நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. வரிச்சிறை வண்டின் வகைமை கொண்டவர் 1055. முருக்கலர் போற்சிவந் தொள்ளிய ரேனும் 1பருக்கர டில்லவர் பக்க நினையார் அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. -வளையாபதி 57, 58, 59, 60, 61, 62 துய்த்துக் கழித்தல் தொடருங் கீழ்மை 1056. மக்கட் பயந்து மனையற மாற்றுதல் தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப பைத்தர வல்குற் 2படிற்றுரை யாரொடு துய்த்துக் 3கழிப்பது தோற்றமொன் றின்றே. -வளையாபதி. 63 நுகர்தற் கருமையால் நோயும் போல்பவர் 1057. நாயும் போல்வர்பல் லெச்சிலு நச்சலால் தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால் நோயும் போல்வர் நுகர்தற் கருமையால் வேயும் போல்வரிவ் வேனெடுங் கண்ணினார். வாளை ஒக்கும் வாணெடுங் கண்ணினார் 1058. தோளு மென்முலை யும்மல்குற் பாரமும் நாளு நாளு நவின்று பருகிய கேள்வன் மார்க்கும் பகைஞர்க்கு மொத்தலால் வாளும் போல்வரிவ் வாணெடுங் கண்ணினார். -சாந்திபுராணம் அன்பால் கூடினும் பின்செலும் பிறர்க்கே 1059. அன்புநூ லாக வின்சொ லலர்தொடுத் தமைந்த காதல் இன்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் 1தேற்ற மாலை நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினும் நங்கை மார்க்குப் பின்செலும் பிறர்க ணுள்ளம் பிணையனார்க் கடிய தொன்றே. -சீவகசிந்தாமணி 1596 பூசல் பெருக்குவார்ப் பொருந்தா தொழிக 1060. ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக் கூசு மொழியும் புருவமுங் குடில மாகி யிருப்பாரை வாசக் குழலு மலர்க்கண்ணு மனமுங் கரிய மடவாரைப் பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே. -நாரதசரிதை 94. கள்ளுண்ணாமை (கள் உண்டலைத் தவிர வேண்டும் என்று கூறுதல் - மணக். கள் என்பது மயக்கும் வெறியும் ஊட்டித் தன்னறிவை மறைக்கச் செய்யும் அனைத்துக் குடி வகைக்கும் பொதுமை கருதிய பெயர். இ.பெ.அ: திருக். 93. ப.பா.தி. 61 இ.சா.அ: நீதிக். 18. (குடியாமை)) கண்டதே உண்டதாய்க் களிப்பான் களியன் 1061. மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார் பேணா துரைக்கு முரைகேட் டுவந்ததுபோல் ஊணார்ந் துதவுவதொன் றில்லெனினுங் கள்ளினைக் காணாக் களிக்குங் களி. -பழமொழி 99 களியன் குடிமை உளபோன் றொழியும் 1062. கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கட் போற்றா னுழவும் - இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும் 1உள்ளபோன் றில்லாப் பொருள். -திரிகடுகம் 59 ஒளியும் செயலும் ஒழியும் களியால் 1063. ஒளியு மொளிசான்ற செய்கையுஞ் சான்றோர் தெளிவுடைய னென்றுரைக்குந் தேசுங் - களியென்னுங் கட்டுரையாற் 2கோது படுமே லிவையெல்லாம் விட்டொழியும் வேறாய் விரைந்து. -அறநெறிச்சாரம் 86 எள்ளுதற் காகு கள்ளுணல் விடுக 1064. உள்ளமொழி செய்கைகளி 1னொன்றியுல கேத்துந் தள்ளரிய தன்மைவழி நிற்றலுறு நல்லீர் எள்ளுநர்கள் தன்மையிது நிற்கவிடர் செய்யு கள்ளுமுணல் குற்றங் கடைப்பிடிமி னென்றான். -சீவகசிந்தாமணி நன்னெறி யுணர்வோர் நறவுண் ணார்காண் 1065. மாலைப் பந்து மாலையு மேந்தி மதுவார்பூஞ் சோலைம் மஞ்ஞைச் சூழ்வளை யார்தோள் விளையாடி ஞாலங் காக்கு மன்னவ ராவார் நறவுண்ணாச் சீலங் காக்குஞ் சிற்றுப கார முடையாரே. -சீவகசிந்தாமணி 2928 நறவுண் மயக்கம் நவையெலாம் நல்கும் 1066. தன்னைத்தா னுணரத் தீரும் தகையது பிறவி யென்ப தென்னத்தா மறையு மற்றைத் துறைகளு மிசைப்ப தெல்லா முன்னைத்தான் றன்னை யோரான் 2முடையெழு மழுக்கின் மேலே பின்னைத்தான் பெறுவ தம்மா நறவுண்டு திகைக்கும் பித்தே. அனைத்தும் மறைத்திடும் அருந்திய கள்ளே 1067. செற்றதும் பகைஞர் நட்டார் செய்தபே ருதவி தானுங் கற்றதுங் கண்கூ டாகக் கண்டதுங் 3கரையி னூலிற் சொற்றதும் பாவம் தொடர்ந்ததும் படர்ந்த துன்ப முற்றது முணர்வ ராயி னுறுதிவே றிதனி னுண்டோ. -இராமாவ. கிட்கி. 665, 667 நஞ்சினிற் கள்ளே நனிகே டுடைத்தாம் 1068. வஞ்சமுங் களவும் பொய்யு மயக்கமும் வரம்பில் கொட்புந் தஞ்சமென் றாரை நீக்குந் தன்மையுங் களிப்புந் தாக்கும் 1வஞ்சமும் நன்குந் தீங்கும் கள்ளினால் மயக்கல் போல நஞ்சமுங் கொல்வ தல்லால் நரகினை நல்கா தன்றே. -இராமா. கிட். 668 95. சூது சூதாடினால் வருங் குற்றங் கூறுதல் - மணக். சூது என்பது பொருளைப் பொய்ம்மை வழியில் பறிக்கும் அனைத்துக்கும் பொதுப் பெயர். இ.பெ.அ: திருக். 94. ப.பா.தி. 62. நீதிக். 20.) பாடுறு வளமெலாம் பறித்திடும் சூதே 1069 பாரதத் துள்ளும் பணையந்தந் தாயமா ஈரைம் பதின்மரும் போரெதிர்ந் தைவரொ டேதில ராகி யிடைவிண்டா ராதலாற் காதலோ டாடார் கவறு. -பழமொழி 356 இன்னா தவற்றுள் இன்னா சூதே 1070. நட்டா ரிடுக்கண் 2தனிகாண்டல் நற்கின்னா ஓட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா கட்டிலா மூதூ ருறைவின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது. -இன்னாநாற்பது 26 நன்மை வேண்டார் நண்ணுக சூதை 1071. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல் 1கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்மயக்கஞ் சூதின்கட் டங்குத லிம்மூன்றும் நன்மையி லாளர் தொழில். -திரிகடுகம் 39 தக்கோர் புரியத் தகாதது சூது 1072. உருவழிக்கு முண்மை நலனழிக்கும் வண்மைத் திருவழிக்கு மானஞ் சிதைக்கும் - ஒருவ ரொருவரோ டன்பழிக்கு மொன்றலாச் சூது பொருவரோ தக்கார் புரிந்து. வஞ்சமும் போரும் வளர்ப்பது சூது 1073. முன்னர் விளையாடி முட்டுவார் முட்டினால் தன்மை திரிந்து சலந்தோன்றும் - பின்னர் மிகாதோ வெகுளி வெகுண்டாலச் சூது தகாதோ தகுவதோ தான். கேட்டின் வித்தாய்க் கிளர்வது சூது 1074. பிறன்றாரம் வேட்டல் பிழைப்பிலார்ச் சீறல் அறன்கேட 2னாயமே சூழ்தல் - 3மறந்தேயுந் தீநிலத்தார் சொற்கேட்டல் தீச்சூ திவைகண்டாய் மேனிலத்தார் கேட்டுக்கு வித்து. -பாரதம் சூதை விரும்புவோன் மேதை எனப்படான் 1075. ஓதலு மோதி யுணர்தலுஞ் சான்றோரால் மேதை யெனப்படு மேன்மையுஞ் - சூது பொருமென்னுஞ் சொல்லினாற் புல்லப் படுமேல் இருளா மொருங்கே யிவை. - அறநெறிச்சாரம் 87 பேதையர் புகுமிடம் சூதர் கழகம் 1076. சூதர் கழக மரவ மறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் 1புகுபவேல் ஏதம் பலவுந் தரும். -ஆசாரக்கோவை 98 செம்மை சுட்டெரி செந்தீ சூதே 1077. பொய்யொடு மிடைந்தபொரு ளாசையுரு ளாய மைபடு 2வினைத்துகள் வழங்குநெறி மாயஞ் செய்தபொருள் பெய்தகலஞ் செம்மைசுடு செந்தீக் கைதவ நுனித்தகவ றாடலொழி கென்றான். -சீவகசிந்தாமணி 2873 96. குடிப்பிறப்பு (அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தாரது இயல்பு. இ.பெ.அ: நாலடி. 15. நீதிக். 53. இ.சா.அ: திருக். 96. ப.பா.தி. 54. (குடிமை)) வழிவரு வார்க்கு வனப்புத் தருபவை 1078. சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் 3செவ்வனே நின்ற 4நெறிகல்வி வள்ளன்மை - 5ஒன்றும் அளிவந்தார் பூங்கோதா யாறு மறையின் வழிவந்தார் கண்ணே வனப்பு. -ஏலாதி 1 ஒன்றிலாப் போதும் ஒப்புர வாற்றுவார் 1079. ஈட்டிய வொண்பொரு ளில்லெனினு மொப்புர 6வாற்றுங் குடிப்பிறந்த சான்றவர் - ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன் றேறாய் விடும். புலப்புலப் புட்போல் குலக்குல மக்கள் 1080. ஒரு மொருவ ரொருவர்தம் முள்ளத்தைத் தேருந் திறமரிதாற் 1றேமொழீஇ - ஆருங் குலக்குல வண்ணத்த ராகுப வாங்கே புலப்புல வண்ணத்த புள். -பழமொழி 81, 146 வேளாண் குடியின் விழுப்பச் செய்கை 1081. கழகத்தான் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போ லொழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. -திரிகடுகம் 42 குடிமா சிலார்க்குக் குறித்தன மூன்று 1082. கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை நள்ளிருளுங் கைவிடார் நட்டொழுகல் - தெள்ளி வடுவான வாராமற் காத்தலிம் மூன்றுங் குடிமாசி லார்க்கே யுள. குலைந்த போதும் குடிமை தாழேல் 1083. அலந்தார்க்கொன் றீந்த புகழுந் துளங்கினுந் தங்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாணாளும் நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. -திரிகடுகம் 77, 41 குடிப்பிறப் பாளர் குன்றா ஒழுக்கம் 1084. இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று. ஊதிய மாவது உயர்குடிப் பிறப்பே 1085. நல்லவை செய்யி னியல்பாகுந் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம் உணருங் குடிப்பிறப்பி னூதிய மென்னோ புணரு மொருவற் கெனின். குடிப்பிறப் பாளர் குன்றார் வறுமையில் 1086. ஒருபுடை பாம்பு கொளினு மொருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போற் செல்லாமை செவ்வனேர் நிற்பினு மொப்புரவிற் கொல்கார் குடிப்பிறந் தார். இற்பிறந் தாருக் கிருக்கும் பண்புகள் 1087. இனநன்மை யின்சொலொன் றீதல்மற் றேனை மனநன்மை யென்றிவை யெல்லாங் - கனமணி முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப இற்பிறந்தார் கண்ணே யுள. -நாலடியார் 143, 144, 148, 146 சிதைந்த வுரையார் முதிர்ந்த மேலோர் 1088. கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி இடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே யாகும். வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் - குடிப்பிறந்தார் 1கூறார்தம் வாயிற் சிதைந்து. மாணாக் குடிக்கு மண்டும் அச்சம் 1089. கல்லாமை யச்சங் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோ சோர்வச்சம் - எல்லாம் இரப்பார்ககொன் றீயாமை யச்ச மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந் தார். -நாலடியார் 156, 145 97. மானம் (எந்நாளும் தம் நிலைமையில் தாழாமையும் யாதானும் ஒரு காரணத்தால் ஒருகால் தாழ்வு வருமாயின் உயிர் வாழாமையும் ஆம். இ.பெ.அ: திருக். 97. நாலடி. 30. ப.பா.தி. 48 நீதிக். 59.) இம்மையும் உம்மையும் இனிதாம் மானம் 1090. 1இம்மையு நன்றா வியனெறியுங் கைவிடா தும்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின் நானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண் மான முடையார் மதிப்பு. திறனிலார் செய்கை தீப்போற் கனற்றும் 1091. திருமதுகை யாகத் திறனில்லார் செய்யும் பெருமிதங் கண்டக் 2கடைத்தும் - எரிமண்டிக் கானந் தலைக்கொண்ட தீப்போற் கனலுமே மான முடையார் மனம். புறங்கடை வைப்பார் புல்லுற வொழிக்க 1092. யாமாயி னெம்மில்லங் காட்டுதுந் தாமாயிற் காணவே கற்பழியு மென்பார்போல் - நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறு மதனான் மறந்தீக செல்வர் தொடர்பு. -நாலடியார் 294, 291, 293 எள்ளும் சிறுநோக் கெரிபோல் வெதுப்பும் 1093. நல்லர் 3பெரிதளியர் நல்கூர்ந்தா ரென்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்காற் - கொல்லன் 4உலையூதுந் தீயேபோ லுள்கனலுங் கொல்லோ தலையாய சான்றோர் மனம். இயல்பிலார் பின்சென் றேதும் உரையேல் 1094. என்பா யுகினு மியல்பில்லார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார் - தம்பா 1டுரையாமை முன்னுணரு மொண்மை யுடையார்க் 2குரையாரோ தாமுற்ற நோய். பழிவழிப் படாத பசிநலம் பெரிதே 1095. இழித்தக்க செய்தொருவ னார வுணலிற் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ விழித்திமைக்கு மாத்திரை யன்றோ வொருவற் கழித்துப் பிறக்கும் பிறப்பு. மான மழுங்கிட வானமும் வேண்டா 1096. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடனுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மான 3மழுங்க வரின். வருவன வனைத்தும் வந்தே தீரும் 1097. தம்மை யிகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க என்னை யவரொடு பட்டது - புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கு முறும். -நாலடியார் 298, 292, 302, 300, 117 உள்ளங் குறைபட உரவோர் வாழார் 1098. பறைபட வாழா வசுணமா வுள்ளங் குறைபட வாழா ருரவோர் - நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் 4தனக்கொவ்வாச் சொற்பட்டாற் சாவதாஞ் சால்பு. -நான்மணிக்கடிகை 2 அறியார் தமக்கும் அறியார் ஆகுக 1099. கண்டறியார் போல்வர் கெழீஇன்மை செய்வாரைப் பண்டறிவார் போலாது தாமு மவரேபேல் விண்டொரீஇ மாற்றி விடுத லதுவன்றோ விண்டற்கு விண்டல் மருந்து. -பழமொழி 140 நல்லவை கூறி அல்லவை மறைக்க 1100. நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந் தொல்லை யுயிர்க்கூற்றுக் கோலாகி - 1ஒல்லுமெனின் மாயம் பிறர்பொருட்கண் மாற்றிய மானத்தான் ஆயி 2னொழித லறிவு. -சிறுபஞ்சமூலம் 57 98. பெருமை (செயற்கரிய செய்தல், தருக்கின்மை, பிறர் குற்றம் கூறாமை என்று இவை முதலிய நற்குணங்களால் பெரியாரது தன்மை - பரிமே. இ.பெ.அ: திருக். 98. நாலடி. 19. நீதிக். 58.) பெரியரை மறைக்கப் பிறராற் கூடுமோ? 1101. பரந்த திறலாரைப் பாசிமே லிட்டுக் கரந்து மறைக்கலு மாமோ - 3நிரந்தெழுந்த வேயிற் றிரண்டதோள் வேற்கண்ணாய் விண்ணியங்கு ஞாயிற்றைக் கைம்மறைப்பா ரில். -பழமொழி 32 பெரிதாள் பவனே பெரியன் என்க 1102. பொற்பவும் பொல்லா தனவும் 4புணர்ந்திருந்தார் சொற்பெய் துணர்த்துதல் வேண்டுமோ - விற்கீழ் அரிதாய்ப் பரந்தகன்ற கண்ணா யறியும் பெரிதாள் பவனே பெரிது. வாடிய போதும் வட்கார் பெரியர் 1103. நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து வாடிய காலத்தும் வட்குபவோ - வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் புலித்தலை நாய்மோத்த 1லின்று. மாடம் இடிந்திடிற் கூடம் அமைக்கவாம் 1104. மாட 2மிடிந்தக்கால் மற்று மெடுப்பதோர் 3கூட மரத்திற்குத் துப்பாகு மஃதேபோற் பீடிலாக் கண்ணும் பெரியார் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு. உயர்ந்தோர்க் கமைந்த உருவும் திருவாம் 1105. வாட்டிற லானை வளைத்தார்க ளஞ்ஞான்று வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப் பொருவறு தன்மைகண் டஃதொழிந்தா ரஃதால் உருவு திருவூட்டு மாறு. ஒருநூ றாயிரர்க் கொப்பா மொருவன் 1106. நீறார்ந்து மொட்டா நிகரில் மணியேபோல் வேறாகத் தோன்றும் விளக்க முடைத்தாகும் தாறாப் படினுந் தலைமகன் றன்னொளி நூறா யிரவர்க்கு நேர். -பழமொழி 31, 204, 71, 301, 69 நல்லவை எல்லாம் நகையே நல்கும் 1107. அமையப் பொருளில்லா ராற்றாதா ரென்ப திமையத் தனையார்க ணில்லை - சிமைய நகையே ரிலங்கருவி நல்வரை நாட நகையேதா னாற்றி விடும். -பழமொழி மாண்பினர் செய்பிழை மதிக்கண் மறுவாம் 1108. விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார் 1கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப் 2பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மாறு. வெண்ணிறப் பசுவிற் கருஞ்சூ டொப்பது 1109. நிரைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும் உரையொழியா வாகு முயர்ந்தோர்கட் குற்றம் மரையாகன் றூட்டு மலைநாட மாயா நரையான் புறத்திட்ட சூடு. -பழமொழி 258, 79 தக்கார் போற்றும் தகுதிப் பொருள்கள் 1110. தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து 3வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றும் தாந்தம்மைக் கூறாப் பொருள். நல்லவர் கோளாய் நாட்டிய மூன்று 1111. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் 4செய்தமை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். -திரிகடுகம் 8, 21 வரிசையால் உவப்பர் வளர்குடிச் சான்றோர் 1112. ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் புல்லினா லின்புறூஉங் 5காலேயம் - நெல்லின் அரிசியா னின்புறூஉங் கீழெல்லாந் தத்தம் வரிசையா னின்புறூஉ. மேல். -நான்மணிக்கடிகை 66 மெலியரை அழிக்க வலியர் செல்லார் 1113. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையர் தாமேயும் நாணித் தலைச்செல்லார் - காணாய் இளம்பிறை யாயக்கால் திங்களைச் சாரா தணங்கருந் துப்பி னரா. தலையாம் பெரியர் தம்பழிக் கஞ்சுவர் 1114. கடையெல்லாங் காய்பசி யஞ்சுமற் றேனை இடையெல்லா மின்னாத வஞ்சும் - புடைபரந்த விற்புருவ வேனெடுங் கண்ணாய் தலையெல்லாஞ் சொற்பழி யஞ்சி விடும். -நாலடியார் 241, 297 தக்கவர் ஆய்ந்தே தவத்தினர் செல்வர் 1115. கருங்கடற் 1பிறப்பி னல்லால் வலம்புரி காணுங் காலைப் பெருங்குளத் தென்றுந் தோன்றா பிறைநுதற் பிணைய னீரே அருங்கொடைத் தான மாய்ந்த வருந்தவந் தெரியின் மண்மேல் மருங்குடை யவர்கட் கல்லால் மற்றையார்க் காவ துண்டோ. -சீவகசிந்தாமணி 2924 99. சான்றாண்மை (பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆடல் தன்மை - பரிமே. இ.பெ.அ: திருக். 99 இ.சா.அ: பழமொழி. 10,11 (சான்றோரியல்பு, சான்றோர் செய்கை.)) உவவு மதிபோல் உயர்வர் சான்றோர் 1116. உறையார் விசும்பி னுவவு மதிபோல் 1நிறையா நிலவுத லன்றிக் - குறையாத வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ சங்கம்போல் வாய்மையார் சால்பு. -புறப்பொருள் வெண்பாமாலை 185 கடன்பெற் றாயினும் கடமை புரிவோர் 1117. அடர்ந்து வறியரா யாற்றாத. போழ்தும் இடங்கண் டறிவாமென் றெண்ணி யிராஅர் மடங்கொண்ட சாயல் மயிலன்னாய் சான்றோர் 2கடன்கொண்டுஞ் செய்வர் கடன். பண்பிலர் தமக்கும் பரிபவர் சான்றோர் 1118. பரியப் படுபவர் பண்பில ரேனுந் திரியப் 3பெறுபவோ சான்றோர் - விரிதிரைப் பாரெறியு முந்நீர்த் துறைவ கடனன்றோ ஊரறிய நட்டார்க் குணா. கண்ணாற் கண்டதும் கருதிச் சொல்க 1119. பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு வேத்நன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன் கொண்டதனை நாணி மறைத்தலாற் றன்கண்ணிற் கண்டதூஉ மெண்ணிச் சொலல். -பழமொழி 82, 85, 185 செல்வழிக் கேண்மையைத் தொல்வழி யாக்குவார் 1120. செல்வழிக் கண்ணொருநாள் காணினுஞ் சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் றோன்றப் புரிந்தியாப்பர் நல்வரை நாட சிலநா ளடிப்படிற் கல்வரையு முண்டாம் நெறி. இன்னது செய்கென இவர்க்கேன் அறவுரை 1121. பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந் தேதிலா ரிற்கட் குருடனாய்த் - தீய புறங்கூற்றின் 1மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு. சாவு நேரினும் பாவம் புரியார் 1122. பாவமு மேனைப் பழியும் படவருவ சாவினுஞ் சான்றவர் செய்கல்லார் - சாதல் ஒருநா ளொருபொழுதைத் துன்ப மதுபோல் அருநவை யாற்றுத லின்று. -நாலடியார் 154, 158, 295 ஞாலம் எனப்படும் சீல ஆசான் 1123. ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார். நன்றறி மாந்தர் நாடுஞ் செயல்கள் 1124. இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகின் நில்லாமை கண்ட நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறியு மாந்தர்க் குள சான்றோர் தம்மிற் சான்றோர் ஆகுக 1125. சான்றாருட் சான்றா ரெனப்படுத லெஞ்ஞான்றும் 2தோய்ந்தாருட் டோய்ந்தா ரெனப்படுதல் வாய்ந்தெழுந்த கொள்ளாருட் கொள்ளாத கூறாமை யிம்மூன்றும் 1நல்லாள் வழங்கு நெறி. -திரிகடுகம் 26, 68, 82 சான்றோர் சான்றோர் பால ராப 1126. பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் 2தொடைபுணர்ந் தருவிலை நன்கல மமைக்குங் காலை ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே. -புறநானூறு 218 எவ்வழி ஆடவர் அவ்வழி நிலமே 1127. நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே. -புறநானூறு 187 100. பண்புடைமை (பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 100. நீதிக். 54.) பூவும் நாரும் பொருந்திய தன்மை 1128. பெரிய குடிப்பிறந் தாருந் தமக்குச் சிறியா ரினமா வொழுகல் - வெறியிலை வேலொடு நேரொக்குங் கண்ணா 1யஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு. வறியர் விருந்தாய் வளத்தோர் செல்லேல் 1129. நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார் செல்விருந் தாகிச் செலல்வேண்டா - ஒல்வ திறந்தவர் செய்யும் வருத்தங் குருவி குறங்கறுப்பச் சோருங் குடர். -பழமொழி 88, 337 நண்பர்க் குற்றது நமக்கும் உற்றதே 1130. சாக்காடு கேடு பகைதுன்ப 1மீனமே நோக்காடு 2நாட்டறை போக்கின்ன - நாக்காட்டார் நட்டோர்க் கியைபிற் றமக்கியைந்த 3கூறுடம் பட்டார்வாய்ப் பட்டது பண்பு. -ஏலாதி 79 நாணப் பரிந்து நல்லார் கேட்பர் 1131. புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி கல்லா வொருவ னுரைப்பவுங் கண்ணோடி நல்லார் வருந்தியுங் 4கேட்பவே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து. -நாலடியார் 155 பண்புடை யார்க்குப் படாத நாட்கள் 1132. கல்லாது போகிய நாளும் பெரியவர்கட் செல்லாது வைகிய வைகலும் - ஒல்வ கொடாஅ தொழிந்த பகலு முரைப்பிற் படாஅவாம் பண்புடையார் கண். பன்னாட் செலினும் பண்போ டுதவுவார் 1133. பன்னாளுஞ் சென்றக்காற் பண்பிலா தம்முழை என்னானும் வேண்டுப வென்றிகழ்வார் - என்னானும் வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு. -நாலடியார் 169, 159 வானுல கெய்தி வாழும் தகைமையர் 1134. நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீயா ரோடும் இவைமிகு பொருளென் றிறத்த லிலரே வகைமிகு வானுல கெய்திவாழ் பவரே. -வளையாபதி 64 தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர் 1135. உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே. -புறநானூறு 182 101. நன்றியில் செல்வம் (அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தின் இயல்பு கூறுதல் - மணக். ஈட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுதல் இல்லாத செல்வத்தினது இயல்பு. - பரிமே. இ.பெ.அ: திருக். 101. நாலடி. 27. பழமொழி. 23. ப.பா.தி. 6. நீதிக். 63.) வழங்கித் துய்க்கான் வளத்தால் என் பயன்? 1136. வழங்கலுந் துய்த்தலுந் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப வதுவன்றோ நாய்பெற்ற 1தெங்கம் பழம். கண்ணிலி யொருவன் காணும் அழகு 1137. முழவொலி முந்நீர் 2முழுவது மாண்டோர் விழவூரிற் கூத்தேபோல் 3வீழ்ந்தவிதல் கண்டும் இழவென் றொருபொருளு மீயாதான் செல்வம் அழகொடு கண்ணி னிழவு. இழிவுறு மாறே எய்திய செல்வம் 1138. தொன்மையின் மாண்ட துணிவொன்று மில்லாதார் நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர் கன்மே லிலங்கு மலைநாட மாக்காய்த்துத் தன்மேற் குணில்கொள்ளு மாறு -பழமொழி 216, 217, 214 ஆடுபேய் விடுமோ அறைபறை கிடைத்தல்? 1139. அறியாமை யோடிளமை யாவதா மாங்கே செறியப் பெறுவதாஞ் செல்வஞ் - சிறிய பிறைபெற்ற வாணுதலாய் தானேயா டும்பேய் பறைபெற்றா லாடாதே பாய்ந்து. -பழமொழி உற்றார்க் குதவார் உறுபொருள் வீணே 1140. விரும்பி யடைந்தார்க்குஞ் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க் குதவல் இரும்பணைவில் வென்ற புருவத்தா யாற்றக் கரும்பனை யன்ன துடைத்து. -பழமொழி 286 கைக்குள் இருப்பினும் கருமியை அணுகார் 1141. அருகுள தாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வங் கருதுங் கடப்பாட்ட தன்று. கள்ளிப் பூவும் கயவரும் ஒப்பர் 1142. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ வன்மையாற் செல்வம் பெரிதுடைய ராயினுங் கீழ்களை நள்ளா ரறிவுடை யார். ஈயார் செல்வம் ஏதிலார்க் குதவும் 1143. கொடுத்தலுந் துய்த்தலுந் 1தேற்றா விடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வ - மில்லத் துருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலன் துய்க்கப் படும். கடலரு காயினும் கருதுவ தூற்றே 1144. மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும் வல்லூற் றுவரிற் கிணற்றின்கீழ்ச் சென்றுண்பர் செல்வம் பெரிதுடைய ராயினுஞ் சேட்சென்று நல்குவார் கட்டே நகை. -நாலடியார் 261, 262, 274, 263 வேண்டார்க் குதவும் விரகிலாக் கீழ்கள் 1145. பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும் வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால் வண்மையு மன்ன தகைத்து. இரவா வறியரே ஈடிலாச் செல்வர் 1146. ஓதியு மோதா ருணர்விலா ரோதாதும் ஓதி யனைய ருணர்வுடையார் - தூய்தாக நல்கூர்ந்துஞ் செல்வ ரிரவாதார் செல்வரும் நல்கூர்ந்தா ரீயா ரெனின். ஈட்டலும் காத்தலும் இயம்பொணாத் துன்பம் 1147. ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பங் - 1காத்தல் குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பந் துன்பக் குறைபதி மற்றைப் பொருள். -நாலடியார் 269, 270, 280 மாயும் பொருளால் மாயா திடரே 1148. தீயாலோ நீராலோ தேர்வேந்தர் தம்மாலோ மாயாத தெவ்வர் வலியாலோ - யாதாலோ இப்பொருள்போய் மாய்கின்ற தேன்றுபொருள் வைத்தார்கள் எப்பொழுதும் நீங்கா ரிடர். -பாரதம் 102. நாணுடைமை (சால்பு பண்பு முதலிய குணங்களான் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந் தன்மை - பரிமே. இ.பெ.அ: திருக். 102. நீதிக். 7.) தமரே புகழினும் தாழா தகற்றுக 1149. தமரேயுந் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தின் அமரா ததனை யகற்றலே வேண்டும் அமையாரும் வெற்ப வணியாரே தம்மைத் தமவேயுங் கொள்ளாக் கலம். -பழமொழி 332 பிறர்புகழ் கூறிப் பெருமை கொள்ளேல் 1150. நச்சியார்க் கீயாமை நாணன்றாம் நாணாளும் அச்சத்தால் நாணுதல் 1நாணன்றாம் - எச்சத்தின் 2மெல்லிய 3ராகித்தம் மேலாயார் 4செய்தது சொல்லா திருப்பது நாண். -நாலடியார் 299 103. குடிமரபு (தொன்றுதொட்டு வந்த குடியின் சிறப்பினை உணர்ந்து அதனைக் குன்றாது உயரச் செய்தலின் முறைமை கூறுதல். இ.சா.அ: திருக். 103. (குடி செயல்வகை)) வேள்விச் சுடரோன் விறன்மிகுத் தன்று 1151. ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள் வேதங் கரைகண்டான் வீற்றிருக்கும் - ஏதஞ் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுசுடர் வேள்வி யகத்து. இருநிலங் காவலன் இயல்புரைத் தன்று 1152. செயிர்க்க ணிகழாது செங்கோ லுயரி மயிர்க்கண் முரச முழங்க - உயிர்க்கெல்லாம் நாவ லகலிடத்து ஞாயி றனையனாய்க் காவலன் சேறல் கடன். வணிகர் செய்தொழில் வனப்புரைத் தன்று 1153. உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர ஓதி யழல்வழிபட் டோம்பாத ஈகையான் ஆதி வணிகர்க் கரசு. -புறப்பொருள் வெண்பாமாலை 161, 171, 164 வறுமை போக்கும் வண்மை வணிகர் 1154. காடுங் கடுந்திரை நீர்ச்சுழியுங் கண்ணஞ்சான் சாடுங் கலனும் பலவியக்கி - நீடும் பலிசையாற் பண்டம் பகர்வான் 1பரியான் கலிகையால் நீக்கல் கடன். உலகுக் குயிராம் உழவன் சீர்மை 1155. மூவரு நெஞ்சமர முற்றி யவரவர் ஏவ லெதிர்கொண்டு 2மீண்டுரையான் - ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழுவா 3னுலகுக் குயிர். நீணெறி யுழவன் நிலனுழு வென்றி 1156. மண்பதம் நோக்கி மலிவயலும் புன்செய்யுங் கண்பட வேர்பூட்டிக் காலத்தால் - எண்பதனுந் தத்துநீ ரார்க்குங் கடல்வேலித் தாயாபோல் வித்தித் தருவான் விளைவு. -புறப்பொருள் வெண்பாமாலை 344, 165, 346 உழவற் கேலா உறுகே டுரைத்தது 1157. பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு முற்றாமை கேடு முரண்கேடு - 4தெற்றத் தொழின்மகன் றன்னொடு மாறாயி னென்றும் உழுமகற்குக் கேடென் றுரை. நூலோர் உரைத்த நுண்ணிய உழவியல் 1158. நன்புலத்து வையடக்கி 5நாளுநா ளேர்போற்றிப் புன்புலத்தைச் செய்தெருப் போற்றியபின் - இன்புலத்துப் 6பண்கலப்பைப் பாற்படுத்து வானுழவ னென்பவே நுண்கலப்பை நூலோது வார். -சிறுபஞ்சமூலம் 50, 60 பார்வேந் தொப்பாப் பகட்டேர் உழவர் 1159. யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு. -பெரும்பொருள் விளக்கம் குலம்பெறு தீங்கு கொள்ளா அந்தணர் 1160. நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார். நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்த தாம். ஈட்டிய வெல்லாம் காட்டிய ஈகையர் 1161. ஈட்டிய வெல்லா மிதன்பொருட் டென்பது காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து. -பெரும்பொருள் விளக்கம் 104. நல்குரவு (நுகர்வன யாவு மில்லாமை. நல்கூர்வது நல்குரவு. நன்- நன்மை. கூர்தல் மிகுதல். நன்மையின்மையை நன்மை மிகுதி என்றது மங்கல வழக்கு, வெறுமையாகிய வறுமை நிரப்பு என்றது போல். இனி, நல்கு + ஊர்தல் என்று பகுத்து பிறர் கொடுப்பதன் மேல் ஊர்ந்து செல்லுதல் என்று கூறினுமாம் - பாவாணர். இ.பெ.அ: திருக். 105. இ.சா.அ: நாலடி. 29. (இன்மை) ப.பா.தி. 64. (வறுமை) நீதிக். 61. (இன்மை)) ஆசை ஒருவனை அருநர காழ்த்தும் 1162. கொண்டொழுகு மூன்றற் குதவாப் பசித்தோற்றம் பண்டொழுகி வந்த வளமைத்தங் - குண்டது 1கும்பியெற் றிச்சென் 2றடுதலாற் றன்னாசை அம்பாயுள் புக்கு விடும். -பழமொழி 392 பிறப்பற முயலல் பெரும்பே றாகும் 1163. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்பின் 3வெரூஉம் - புலந்தெரியா மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றுந் துக்கப் பிறப்பாய் விடும். -திரிகடுகம் 60 மலராப் போதில் மருவா வண்டு 1164. கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்காற் செல்லாவாஞ் செம்பொறி வண்டினங் - கொல்லைக் கலாஅற் கிளிகடியுங் கானக நாட இலாஅஅற் கில்லை தமர். இன்மை உடையார்க் கெல்லாம் மாயும் 1165. பிறந்த குலமாயும் பேராண்மை மாயுஞ் சிறந்ததங் கல்வியு மாயுங் - கறங்கருவி கன்மேற் 4றவழுங் 5கணமலை நன்னாட இன்மை தழுவப்பட் டார்க்கு. சென்றார்க் குதவான், செல்வதே நன்று! 1166. உள்கூர் பசியா லுழைநசைஇச் சென்றாருக் குள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான் - உள்ளூர் இருந்துயிர் கொன்னே. கழியாது தான்போய் விருந்தின னாதலே நன்று. வளமிலா தார்க்கு வருவதோர் உறவிலை 1167. ஆர்த்த பொறிய வணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம் - நீர்த்தருவி தாழா வுயர்சிறப்பிற் றண்குன்ற நன்னாட வாழாதார்க் கில்லைத் தமர். இடராம் பொழுதில் தொடர்பார் சிலரே 1168. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடரொருவ ருற்றக்கா லீர்ங்குன்ற நாட 1தொடர்புடையோ மென்பார் சிலர். -நாலடியார் 283, 285, 286, 290, 113 வறியவர் வாய்ச்சொல் வளமாய்ச் செல்லா 1169. நல்லாவின் கன்றாயி னாகும் 2விலைபெறூஉம் கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லீரப் போழ்தி னுழவேபோல் மீதாடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். -நாலடியார் 115 மனைவி மக்களும் மதியார் வறியரை 1170. பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின் மண்டினர் போவர்தம் மக்களு மொட்டார். இல்லார் இடத்தே கல்வியும் புல்லெனும் 1171. சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் நல்லவை யாரும் நனிமதிப் பாரல்லர் கல்வியுங் கைப்பொரு ளில்லார் பயிற்றிய புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணீ. பல்வளம் உடையான் பழுமரம் போல்வான் 1172. தொழுமக னாயினுந் துற்றுடை யானைப் பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப. இருளில் இட்ட இருண்மை இஃதாம் 1173. பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும் அருளி லறனு மமைச்சி லரசும் இருளினு ளிட்ட விருண்மையி தென்றே மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப. -வளையாபதி 65, 66, 67, 68 105. இரவு (பிறர் மாட்டுச் சென்று இரந்து கோடல் - மணக். இ.பெ.அ: திருக். 106.) அகம்புகச் சொலார்முன் முகம்புக வேண்டா 1174. இல்லாமை கந்தா விரவு துணிந்தொருவர் செல்லாரு மல்லர் சிறுநெறி - புல்லா அகம்புகுமி னுண்ணுமி னென்பவர்மாட் டல்லால் 1முகம்புகுத லாற்றுமோ மேல். -நாலடியார் 303 உள்ளது கரத்தலால் ஒருவரும் இரவேல் 1175. மறாஅ தவனும் பலரொன் றிரந்தாற் 2பெறாஅ பேதுறுத லெண்ணிப் - பொறாஅன் கரந்துள்ள தூஉ மறைக்கு மதனால் இரந்தூட்கும் பன்மையோ தீது. மரம்போல் பவரிடம் இரந்தார் பெறுவதென்? 1176. மரம்போல் வலிய மனத்தினார் பின்சென் 1றிரந்தார் பெறுவதொன் றில்லை - குரங்கூசல் வள்ளியி னாடு மலைநாட வஃதன்றோ பள்ளியு ளையம் புகல். -பழமொழி 384, 224 இயலறம் சிதைத்தான் இரந்தூண் வாழ்வான் 1177. செருக்கினால் வாழுஞ் சிறியவரும் பைத்தகன்ற அல்குல் விலைபகரு மாய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொண்டானு மிம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். -திரிகடுகம் 25 கானலை நாடும் கலைமான் அன்னர் 1178. விசையி னோடுவெண் டேர்செலக் கண்டுநீர் நசையி னோடிய நவ்வி யிருங்குழாம் இசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய வசையில் மேன்மகன் போல வருந்துமே. -சூளாமணி 784 வளைத்தும் வாங்கும் வறுமைத் துயரம் 1179. ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி 2பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத் 1தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே அறிவையும் அழிக்கும் அருளிலா வறுமை 1180. பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக் கயங்களி 2முளியுங் கோடை யாயினும் புழற்கா லாம்ப லகலடை நீழற் கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல் வான்றோய் நீள்குடை வயமான் சென்னி சான்றோ ரிருந்த 3வவையத் துற்றோன் ஆசா கென்னும் பூசல் போல வல்லே களைமதி யத்தை யுள்ளிய விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப் 4பொறிப்புண ருடம்பிற் றோன்றியென் அறிவுகெட நின்ற நல்கூர் மையே. -புறநானூறு 164, 266 106. இரவச்சம் (மானந் தீரவரும் இரவிற்கு அஞ்சுதல் - பரிமே. இ.பெ.அ: திருக். 107. நாலடி. 31. நீதிக். 62 இ.சா.அ: ப.பா.தி. 65 (இரவாமை)) உள்ளுவார் உள்ளம் உருக்கும் இரவு 1181. கரவாத திண்ணன்பிற் கண்ணன்னார் கண்ணும் இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை உள்ளுங்கா லுள்ள 5முருகுமா லென்கொலோ கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு. இரவா இயல்பை இரக்க தன்னிடம் 1182. இன்னா 1வியைக வினிய வொழிகென்று தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல் காதல் கவற்று மனத்தினாற் கண்பாழ்பட் டேதி லவரை யிரவு. மாறிப் பிறப்போன் மற்றையோர் எள்வதோ? 1183. என்றும் புதியார் பிறப்பினு மிவ்வுலகத் தென்று மவனே பிறக்கலான் - குன்றின் பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட இரப்பாரை யெள்ளா மகன். இரப்பினும் இனிது தொழுதூண் வாழ்வு 1184. ஒருவ ரொருவரைச் சாந்தொழுக லாற்றி வழிபடுதல் வல்லுத லல்லாற் - பரிசழிந்து செய்யீரோ வென்னானு மென்னுஞ்சொற் கின்னாதே பையத்தாஞ் செல்லு நெறி. அறிவிலார் பின்சென் றிறைஞ்சார் மேலோர் 1185. திருத்தன்னை நீப்பினுந் தெய்வஞ் செறினும் உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால் அருத்தஞ் செறிக்கு மறிவிலார் பின்சென் றெருத்திறைஞ்சி நில்லாதா மேல். -நாலடியார் 305, 306, 307, 309, 304 பிறரை இரவாப் பெருமுத் தரையர் 1186. மல்லல்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெலாஞ் செல்வ ரெனினுங் கொடா அதவர் நல்கூர்ந்தார் நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே செல்வரைச் சென்றிரவா தார். இரந்துடல் ஊட்டலாம் என்றும் இருக்குமேல் 1187. மான வருங்கலம் நீக்கி யிரவென்னும் ஈன 1விளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால் ஊட்டியக் கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின். ஈதலில் இரட்டி இரவாப் பெருமை 1188. மறுயு மிம்மையும் நோக்கி யொருவற் 2குறுவ தியையக் கொடுத்தல் - வறுமையால் ஈத லிசையா தெனினு மிரவாமை ஈத லிரட்டி யுறும். அற்றம் மறைப்பார் அறிய உரைக்க 1189. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க் கற்ற மறிய வுரையற்க - அற்றம் மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்குந் துணிவிலா தார். -நாலடியார் 296, 40, 95, 78 107. கயமை (இழிகுணத்தாராகிய மாந்தர் இயல்பு கூறுதல் - மணக். இ.பெ.அ: திருக். 108. நாலடி. 36. ப.பா.தி. 58. இ.சா.அ: பழமொழி. 12. (கீழ்மக்களியல்பு) நீதிக். 66. (கீழ்மை)) நன்முகக் குரங்கு நானிலத் துண்டோ? 1190. நிரந்து வழிவந்த நீசரு ளெல்லாம் பரந்தொருவர் நாடுங்காற் பண்புடையார் தோன்றார் மரம்பயில் சோலை மலைநாட வென்றுங் குரங்கினுள் நன்முகத்த தில். பனைமேல் வைத்துப் பஞ்சு கொட்டல் 1191. பெருமலை நாட பிறரறிய லாகா 1அருமறைய யான்றோரே காப்பர் - அருமறையை நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேற் 2பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று. நரியிற் குண்டோ நன்னாள் தீநாள்? 1192. அல்லவை செய்ப வலப்பி னலவாக்கால் செய்வ தறிகில ராகிச் சிதைத்தெழுவர் கல்லாக் கயவ ரியற்கை 3நரியிற்கு நல்யாண்டுந் தீயாண்டு மில். அழுவதைக் கண்டே அஞ்சுமோ தின்பது 1193. கருந்தொழில ராய 4கடையாயார் தம்மேற் பெரும்பழி யேறுவ 5பேணார் - இரும்புன்னை புன்புலால் தீர்க்குந் துறைவமற் றஞ்சாதே தின்ப தழுவதன் கண். -பழமொழி 103, 181, 101, 97 பேணா தார்க்குப் பெரும்பழி இல்லை 1194. உரிஞ்சி நடப்பாரை யுள்ளடி நோவ நெருஞ்சியுஞ் செய்வதொன் றில்லை - செருந்தி இருங்கழித் தாழு 6மெறிகடற்றண் சேர்ப்ப பெரும்பழியும் பேணாதார்க் கில். இனநலம் வாய்த்தல் மனநலம் ஆக்குமோ? 1195. மிக்குப் பெருகி மிகுபுனல் 7சேர்ந்தாலும் உப்பொழிதல் 8செல்லா வொலிகடல்போல் - மிக்க இனநலம் நன்குடைய 9வாயினு மென்றும் மனநல வாகாவாங் கீழ். வெறுப்பன செய்வார் இருப்பது கேடு 1196. த்ர்ந்துகண் ணோடாது தீவினையு மஞ்சலராய்ச் சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்துத் - தீர்ந்த விரகர்கட் கெல்லாம் வெறுப்பனவே செய்யும் நரகர்கட் கில்லையோ நஞ்சு. கணையினும் பாய்ந்து காண்பது கண்ணே 1197. யாந்தீய செய்த மலைமறைத்த தென்றெண்ணித் தாந்தீயார் தந்தீமை தேற்றாரால் - ஆம்பல் மணவில் கமழு மலிதிரைச் சேர்ப்ப கணையிலுங் கூரியவாங் கண். -பழமொழி 41, 90, 123, 143 பெருநடை பெறினும் ஒருநடைச் சான்றோர் 1198. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையா தொருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை பெற்றக் கடைத்தும் பிறங்கருவி நன்னாட வற்றா மொருநடை கீழ். முந்திரி மிகுந்தால் இந்திரனா எண்ணுவான் 1199. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர் எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல் - எக்காலும் முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா வெண்ணி விடும். செம்மணி பதிப்பினும் செருப்பு செருப்பே 1200. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினுங் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும். இன்னல் விளைப்பதில் இன்புறுங் கீழ்கள் 1201. கடுக்கெனச் சொல்வற்றாங் கண்ணோட்ட மின்றாம் இடுக்கண் பிறர்மாட் டுவக்கும் அடுத்தடுத்து வேக முடைத்தாம் விறன்மலை நன்னாட ஏகுமா மெள்ளுமாங் கீழ். -நாலடியார் 343, 346, 347, 349 குற்றங் கூறுநா எற்றா னியன்றது? 1202. கணமலை நன்னாட கண்ணின் றொருவன் குணனேயுங் கூறற் கரிதாற் - குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர்கட் கெற்றா 1னியன்றதுகொல் நா. இன்னல் செய்வார்க் கெதுவுஞ் செயுங்கீழ் 1203. தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா உளிநீரார் மாதோ கயவர் - அளிநீரார்க் கென்னானுஞ் செய்யா ரெனைத்தானுஞ் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். நன்றியை நினைத்து நலிவெலாம் பொறுப்பார் 1204. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர் கயவர்க் கெழுநூறு நன்றிசெய் தொன்றுதீ 2தாயின் எழுநூறுந் தீதாய் விடும். -நாலடியார் 353, 355, 357 நல்லவை அறியார் நாடுந் தொழில்கள் 1205. ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற எஞ்சாத நட்பினுட் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலு மிம்மூன்றும் நற்புடையி 3லாளர் 4தொழில். எச்சம் இழப்பார் இவர்கள் என்றது 1206. நன்றிப் பயன்றூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்ச மிழந்துவாழ் வர். -திரிகடுகம் 97, 62 மாசினை மறைக்க மாட்டாக் கீழ்கள் 1207. மாசு படினு மணிதன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினு 1மிரும்பின்கண் மாசொட்டும் பாசத்து ளிட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். -நான்மணிக்கடிகை 98 கடையோர் கற்ற கல்வியுங் கடையே 1208. பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட 2தேம்படு தெண்ணீ ரமிழ்தமாம் - ஓம்பற் கொளியா முயர்ந்தார்கண் ஞான மதுவே களியாங் கடையாயார் மாட்டு. -அறநெறிச்சாரம் 188 108. பல்பொருள் (குறித்த ஒரு பொருள் பற்றியன்றி ஒரு பாடற்கண் பல்வகைப் பொருள்கள் அமையக் கூறியது. இ.சா.அ: நாலடி. 37. (பன்னெறி)) தாயிற் சிறந்தொரு கோயிலும்இல்லை 1209. கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை கொண்டானிற் றுன்னிய கேளிர் பிறரில்லை மக்களின் 3ஒண்மைவாய்ச் சான்ற பொருளில்லை 4யீன்றாளின் என்ன கடவுளு மில். நலனு மிளமையும் நல்குர விற்சாம் 1210. நலனு மிளமையும் நல்குரவின் கீழ்ச்சாம் குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் - பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. எல்லா ஊரும் இவர்தம் ஊரே 1211. நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - கல்லாக் கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கு மெவ்வூரு மூர். -நால்மணிக்கடிகை 55, 81, 82 செல்லா விடத்துச் சினத்தைச் சுருக்குக 1212. பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத் தருக்குக 1மாற்றாரைக் கால 2மறிந்தே அருக்குக யார்மாட்டு முண்டி - சுருக்குக செல்லா விடத்துச் சினம். கூறத் தகாதவை கூற விழையேல் 1213. எள்ளற்க வென்றும் 3எளியரென் றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கை 4மேலாக - வுள்சுடினுஞ் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல்ல வற்றை விரைந்து. கொண்டுகண் மாறல் கெலையை ஓக்கும் 1214. திருவொக்குந் தீதி லொழுக்கம் பெரிய அறனொக்கு மாற்றி னொழுகல் - பிறனைக் கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு. வெல்வது வேண்டினால் வெகுளி விடுக 1215. 1இன்னாத வேண்டி னிரவொழுக விந்நிலத்து மன்னுதல் வேண்டி னிசைநடுக - தன்னொடு செல்வது வேண்டி னறஞ்செய்க வெல்வது வேண்டின் வெகுளி விடல். கல்லா உடலம் கழிபாழ் தனக்கு 1216. மனைக்குப்பாழ் வாணுத லின்மைதான் செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை யின்மை யிருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா வுடம்பு. -நான்மணிக்கடிகை 87, 1, 6, 15, 20 கல்விக்கு விளக்கம் கனிந்த உணர்வே 1217. மனைக்கு விளக்க மடவாள் மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர் - 2மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும் ஓதிற் புகழ்சா லுணர்வு வளமையோ டொக்கும் வனப்பாவ தில்லை 1218. அந்தணரி னல்ல பிறப்பில்லை யென்செயினுந் தாயிற் சிறந்த தமரில்லை யாதும் வளமையோ டொக்கும் வனப்பில்லை யெண்ணின் இளமையோ 3டொப்பது மில். கெடுக்க வேண்டின் வெகுளி கெடுக்க 1219. கொடுப்பி 4னசனங் கொடுக்க விடுப்பின் உயிரிடை யீட்டை விடுக்க - எடுப்பிற் 5கிளையு ளழிந்தா ரெடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல். அல்லவை செய்வார்க் கறமே கூற்றம் 1220. கல்லா வொருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் 1மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க் கறங்கூற்றங் கூற்றமே 2இல்லிருந்து தீங்கொழுகு வாள். வளமிலாப் பொழுதில் வண்மை குற்றம் 1221. இளமைப் பருவத்துக் 3கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந் தமரல்லார் 4கையகத் துண். -நான்மணிக்கடிகை 103, 33, 80, 83, 92 ஈவார் முகம்போல் இலங்கும் திங்கள் 1222. கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலிற் றோன்றல் இரப்பவர்கட் டேய்வேபோற் றோன்றல் - இரப்பவர்க்கொன் றீவார் முகம்போ லொளிவிடுத லிம்மூன்றும் ஓவாதே திங்கட் 5குள. -திரிகடுகம் அறநெறி துலங்க அருநூல் செய்க 1223. ஈதற்குச் செய்க பொருளை யறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகஞ் சேராத வாறு. மாதம் மூன்று மழைபெய வித்து 1224. செந்தீ முதல்வ ரறம்நினைந்து வாழ்தலும் வெந்திறல் வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந் திங்கள்மும் மாரிக்கு வித்து. மழையை ஒழிக்க மலர்ந்த மூவர் 1225. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே 1மழையருக்குங் கோள். அறியார் உரைக்கும் அடாச்சொல் பொறுக்க 1226. பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அநவினையைக் காராண்மை 2யாக வொழுகலு மிம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. நன்மையின்றி நலிப்பவை மூன்று 1227. கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும் - 3பாத்துண்ணாத் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. -திரிகடுகம் 90, 98, 50, 6, 10 அருளிலான் செய்யும் அறத்தாற் பயனிலை 1228. பொருளி லொருவற் கிளமையும் போற்றும் அருளி லொருவற் கறனும் - தெருளான் அறந்தாழு நெஞ்சினான் 4கல்வியு மூன்றும் பரிந்தாலுஞ் செய்யாப் பயன். -திரிகடுகம் அல்லல் களைவாரை அடுப்பார் எவரும் 1229. பெரியார் பெருமை 5சிறுதகைமை யொன்றிற் குரியா ருரிமை யடக்கம் - தெரியுங்காற் செல்வ முடையாருஞ் செல்வரே தற்சேர்ந்தார் அல்லல் களைப வெனின். இல்ல புகழ்தலில் இனிது வைதல் 1230. தெளிவிலார் நட்பிற் பகைநன்று சாதல் விளியா வருநோயி னன்றால் - அளிய இகழ்தலிற் கோற லினிதேமற் றில்ல புகழ்தலின் வைதலே நன்று. -நாலடியார் 170, 219 விண்ணும் மண்ணும் வீழும் அடிக்கீழ் 1231. அற்றவர் வருத்தம் நீக்கி யாருயிர் கொண்டு நிற்குந் துற்றவி ழீதல் செய்யிற் றுறக்கத்திற் கேணி யாகும் உற்றுயி ரோம்பித் தீந்தே னூனொடு 1துறக்கு மாயின் மற்றுறை யில்லை விண்ணு மண்ணுநும் மடியவன்றே. -சீவகசிந்தாமணி 2927 109. நிரைகோடல் (பகைவர் நாட்டின்மேல் படை யெடுக்கக் கருதுவார் அதற்கு அடையாளமாக அவர் தம் நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வருதல் நிரை கோடலாம். நிரை - பசு. கோடல் - கொள்ளல். இச்செயற்குச் செல்வார் வெட்சிப் பூச்சூடிச் செல்வாராகலின் இது வெட்சி யென்று கூறப்பெறும். ஆகோள், நிரைகவர்தல், ஆதந் தோம்பல் என்பதுவும் இது. மேற்கோள்: தொல். பொருள். 57; பு.வெ.மா. 1. வெட்சி நிரை கவர்தல் வீரசோ. பொருள். 21. மேற்.) அடையார் முனைகெட விடையாயங் கொள்க 1232. மண்டு மெரியுள் மரந்தடிந் திட்டற்றால் கொண்ட 2கொடுஞ்சிலையன் கோறெரியக் - கண்டே அடையார் முனையலற வையிலைவேற் காளை விடையாயங் கொள்கென்றான் வேந்து. வீழ்ந்தனர் வீரர்; சூழ்ந்தன புட்கள் 1233. சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த புலவுக் கணைவழிபோய்ப் புள். கடுத்து வரினும் கலங்கா வீரன் 1234. புல்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வில்மே லசைஇயகை வெல்கழலான் - தன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டு நெடுவரை நீழல் நிரை. -புறப்பொருள் வெண்பாமாலை 1, 10,11 கள்ளின் விலையாம் களங்கொள் வளனே 1235. அங்கட் கிணையன் றுடியன் விறலிபாண் வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கண் செருச்சிலையா மன்னர் செருமுனையிற் சீறி வரிச்சிலையாற் றந்த வளம். -புறப்பொருள் வெண்பாமாலை 16 வெட்சி சூடி விரைந்து செல்வோர் 1236. வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியொடு புக்கு. பாலால் நனைவது போலு மிவ்வூர் 1237. வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலால் தாள்வ லிளையவர் தாஞ்சொல்லின் - நாளைக் கனைகுரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின் நனைவது போலுமிவ் வூர். கொற்றவை போரில் கொற்றங் கொடுக்க 1238. வந்த நிரையி னிருப்பு மணியுடன் எந்தலை நின்றலை யான்றருவன் - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு. நிரையே அன்றி நிலமும் கிட்டும் 1239. திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னேற்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வைய மிறையோற் களிக்குமால் வல்லையே சென்மின் வழி. யானைப் படாமெனத் தானை சென்றது 1240. பிறர்புல மென்னார் தமர்புல மென்னார் விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றார் - நிரையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானை படாஅ முகம்படுத் தாங்கு. -பெரும்பொருள் விளக்கம் விரிச்சி வேண்டா; வெற்றி நமதே 1241. நாளும் புள்ளுங் கேளா வூக்கமோ டெங்கோ னேயின னாதலின் யாமத்துச் 1செங்கால் வெட்சியுந் தினையுந் 2தூஉய் மறிக்குரற் குறுதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா எயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. -தகடூர் யாத்திரை அருந்திப் பருகி ஆக்கள் சென்றன 1242. சிறுபுன் சில்லி நெடுவிளி யானா மரம்பயில் கானத்துப் பரற்புறங் 1கண்ட வடியா நெடுநெறிச் செல்லாப் புடையது முல்லை வகுந்திற் போகிப் புல்லருந்திக் கான்யாற்றுத் தெண்ணீர் பருகிக் காமுறக் கன்றுபா லருந்துபு சென்றன மாதோ முன்ப லரும்பிய பானாறு செவ்வாய்ப் புன்றலை மகாஅர் தந்தை 2கன்றுசூழ் கடிமனைக் கவைஇய நிரையே. -ஆசிரியமாலை 110. நிரைமீட்சி (வெட்சியாரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல். இவர் இச்செயற்குக் கரந்தைப் பூச் சூடிச்செல்வாராகலின் கரந்தை எனப்படும். ஆபெயர்த்துத் தருதல் என்பதுவும் இது. மேற்கோள்: பு.வெ.மா. 22. மீட்டல் கரந்தை யாம் வீரசோ. பொருள். 21. மேற்.) விழுங்கிய கூற்றம் விடுதலை கொண்டது 1243. அழுங்குநீர் வையகத் தாருயிரைக் கூற்றம் விழுங்கியபின் வீடுகொண் டற்றால் - செழுங்குடிகள் தாரார் கரந்தை 3தலைமலைந்து தாங்கோடல் நேரார்கைக் கொண்ட நிரை. -புறப்பொருள் வெண்பாமாலை 22 உருவங் கரந்த கரந்தை உரவோன் 1244. உரைப்பி னதுவியப்போ வொன்னார்கைக் கொண்ட நிரைப்பி னெடுந்தகை சென்றான் - புரைப்பின் றுளப்பட்ட வாறெல்லா மொள்வாள் கவரக் களப்பட்டான் றோன்றான் கரந்து. -புறப்பொருள் வெண்பாமாலை 27 மடிநிரை மீளாது மீளா மறவன் 1245. அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளான் விறல்வெய்யோன் யாதாங்கொல் வாளார் துடியார் வலம். கங்கைப் பெருக்கென எங்கும் எழுந்தார் 1246. கங்கை கவர்ந்தாங்குக் கானப் பெருங்கவலை எங்கு மறவ 1ரிரைத்தெழுந்தார் - நுங்கிளைகள் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு. உலகெலாம் சுமக்கும் உரனுடை வீரர் 1247. கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதா 2ருள்ளத் துரந்து நிரைமீட்ட தோள். வீடுகாண் விருப்பில் விரையும் நிரைகள் 1248. 3கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையு நிரையென்னோ தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும் மள்ளர் நடவா வகை. -பெரும்பொருள் விளக்கம் ஆவைத் தழுவி அன்னை கலுழ்ந்தாள் 1249. காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான் மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து தன்னெதிர் தோன்றும் புளிற்றாத் தழீஇக்கலுழும் 1என்னது பட்டாயோ வென்று. கன்று போலாக் கண்டது வீரரை 1250. யாமே பகர்ந்திட வேண்டா வினநிரை தாமே தமரை யறிந்தனகொல் - ஏமமுற் றன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச் 2சென்றீயு மாங்கவர்பாற் சேர்ந்து. -பெரும்பொருள் விளக்கம் எப்பிறப் புக்கும் இனிய மாலை 1251. இருநில மருங்கி னெப்பிறப் பாயினும் மருவின் மாயோ வினிதோ யிரவின் ஆகோள் மள்ளரு மளவாக் கானத்து 3நாம்புறத் திறுத்தனெ மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி யேற்றன சென்றுபடு நிரையே. -தகடூர் யாத்திரை 111. பகைவயிற் சேறல் (பகைவருடைய நாட்டைக் கொள்ளக் கருதிப் போர் செய்தற்கு மேற்செல்லல். வயின் - இடம். சேறல் -செல்லுதல். பகைமேற் செல்வார் வஞ்சிப்பூச் சூடிச் சேறலின் இது வஞ்சி எனப் பெறும். மேற்: தொல். பொருள். 62. பு.வெ.மா. 36. வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - வீரசோ. பொருள். 21. மேற்.) வணங்கார் வணக்க வஞ்சி மலைந்தான் 1252. செங்கண் மழவிடையிற் 4றண்டிச் சிலைமறவர் வெங்கண் மகிழ்ந்து விழவயர - அங்குழைய வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக் குஞ்சி மலைந்தானெங் கோ. -புறப்பொருள் வெண்பாமாலை 36 குடைநாட் கொள்ள உடைநாள் உலந்தன 1253. முன்னர் 1முரசியம்ப மூரிக் கடற்றானைத் துன்னருந் துப்பிற் றொழுதெழா - மன்னர் உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக் குடைநா ளிறைவன் கொள. மாலையும் மதியமும் கூகை ஒலிக்கும் 1254. அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னர் எறிந்திலங் கொள்வா ளியக்க - மறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நண்பகலுங் கூகை நகும். - புறப்பொருள் வெண்பாமாலை 38, 39 ஒருபாற் படவும் இருபாற் படுவதேன் 1255. விண்ணசைஇச் செல்கின்ற வேலிளைய ரார்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் முள்ளம் இருபாற் படுவ தெவன். பார்ப்புர வெண்ணான் பார்த்திபன் என்னே! 1256. போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ 2பார்ப்புர 3வெண்ணான்கொல் பார்வேந்தன் - ஊர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிப்ப நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது. -பெரும்பொருள் விளக்கம் திரும்பி வந்து தருவேன் என்னான்! 1257. வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்தினர்க் 1கீத்துமென் றெண்ணுமோ - பாத்திப் புடைக்கல மான்றே ருடனீத்தா னீத்த படைக்கலத்திற் சாலப் பல. நாரரிக் காக நல்லுயிர் ஈவோர் 1258. உண்டியின் முந்தா னுடனுண்டான் தண்டேறல் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறலிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடா ரோர்ந்து -தகடூர் யாத்திரை இதுநீ எண்ணின் எதிர்ப்போர் எவரே? 1259. அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ 2முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல் ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத் தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு வடபுல மன்னர் வாட வடல்குறித் தின்னா வெம்போ ரியறேர் வழுதி இதுநீ கண்ணிய தாயி னிருநிலத் தியார்கொ லளியர் தாமே யூர்தொறு மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரி னொரீஇ யினியே கலிகெழு 3கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூ தாளர் நாயிடக் குழிந்த வல்லி 4னல்லக நிறையப் பல்பொறிக் கான வாரண மீனுங் காடாகி விளியு நாடுடை யோரே. -புறநானூறு 52 வணங்கா வலியர் வையகத் துளரோ? 1260. இருங்கண் யானையொ டருங்கலந் 1தெறுத்துப் 2பணிந்துகுறை மொழிவ தல்லது பகைவர் வணங்கா ராதல் 3யாவதோ 4மற்றே யுருமுடன்று சிலைத்தலின் விசும்பதிர்ந் தாங்குக் கண்ணதிர்பு முழங்குங் கடுங்குரல் முரசமொடு கால்கிளர்ந் தன்ன வூர்திக் கான்முனை எரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றத்து நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி நீர்துனைந் தன்ன செலவின் நிலந்திரைப் பன்ன தானையோய் நினக்கே. -பதிற்றுப்பத்து (விடுபகுதி 1) 112. எதிரூன்றல் (நாடு கொள்ளுமாறு வந்த வஞ்சியாரைத் தாக்குதற்கு எதிர்நிற்றல் எதிரூன்றல் ஆகும். இவர் காஞ்சிப் பூச்சூடுவராகலின் இது காஞ்சி எனப் பெயர் பெறும். மேற்: பு.வெ.மா. 61. உட்காது, எதிரூன்றல் காஞ்சியாம் வீரசோ. பொருள். 21. மேற்.) அமரிலை என்றால் அருவரை பாய்தும் 1261. அருவரை 5பாய்ந்திறுது மென்பார்பண் டின்றிப் பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன் காஞ்சி மலையக கடைக்கணித்து நிற்பதோ தோஞ்செய் மறவர் தொழில். தொல்குடி மகார்க்குத் தொடுகலம் தந்தான் 1262. ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப 6வையிலைவே லெஃக மவைபலவு - மொய்யிடை ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான் வாட்குடி வன்க ணவர்க்கு. கூடார் வந்தபின் கொள்க வாட்கோள் 1263. உணங்கு புலவறா வொன்னார் குரம்பை 1நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய குந்த மலியும் புரவியான் கூடாதார் வந்தபின் செல்கென்றான் வாள். குன்றூர் குருதி யாறாய் ஆகுமோ? 1264. பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் - கருதி மறத்திறத்து மாறா 2மறவருங் கொண்டார் 3புறத்திறுத்த 4வேந்திரியப் பூ. விடலைக்கு வெங்கள் விடுவாள் முதியள் 1265. ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில் மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள் விடலைக்கு வெங்கள் விடும். ஆர்த்த பகைவரைப் பேர்த்த கழலான் 1266. கடிகமழ் வேரிக் கடைதொறும் செல்லக் கொடிமலி கொல்களி றேவித் - 5துடிமகிழ ஆர்த்திட் டமரு ளடையாரை வெம்முனையிற் பேர்த்திட்டான் பெய்கழலி னான். -புறப்பொருள் வெண்பாமாலை 61, 64, 67, 70, 81, 85 இனியை நுமர்க்கே இன்னாய் பகைக்கே 1267. கார்மழை முன்பிற் 6கைபரந் தெழுதரும் வான்பறைக் குருகின் நெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி 7யவிர்வரப் பொலிந்து செலவுபெரி தினிதுநிற் காணு மோர்க்கே இன்னா தம்ம தானே பன்மாண் நாடுகெட வெருக்கி நன்கலந் தரூஉநின் 1போரருட் கடுஞ்சின மெதிர்ந்து மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. -பதிற்றுப்பத்து 83 113. பாசறை (போர்க் காலத்தில் வேந்தனும் வீரரும் தங்குதற்கெனக் களத்தருகே அமைக்கப் பெறுவது பாசறையாம். கட்டூர், என்பதும் இது. மேற். தொல். பொருள். 76. பு.வெ.மா. 53, 56) கட்டூ ரகத்துக் காட்சி யுரைத்தது 1268. அவிழ்மலர்க் கோதையா ராட வொருபால் இமிழ்முழவம் யாழோ டியம்பக் - கவிழ்மணிய காய்கடா யானை யொருபாற் களித்ததிரும் ஆய்கழலான் கட்டூ ரகத்து. பகைவரை மெலிக்கும் பாசறைத் தங்கல் 1269. கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப் பெரும்புனல் வாய்திறந்த பின்னுஞ் - சுரும்பின் தொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான் பகைமெலியப் பாசறையு ளான். வெஞ்சினம் பெருகும், வேந்துமேற் செல்ல 1270. மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல் இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் - நுடங்கெரிபோல் வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற் செல்லப் பெருகுஞ் சினம். -புறப்பொருள் வெண்பாமாலை 53, 56, 59 ஐங்கணைத் தோற்றம் அழிக்கும் பாசறை 1271. மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடை மாதர்பாற் பெற்ற 1வலியுளவோ - கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான் ஐங்கணை தோற்ற வழிவு. படையின் ஒலியிற் பாணொலி மிக்கது 1272. மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி யமர்க்களங்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னார் உடையன தாம்பெற் றுவந்து. புகலுஞ் சொல்லால் புண்ணும் ஆறுமே! 1273. தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். -பெரும்பொருள் விளக்கம் கொடைக்கடன் தீர்க்கப் படைக்கடன் செய்தோன் 1274. குழிபல வாயினுஞ் சால்பா னாதே முழைபடு முதுமரம் போலெவ் வாயு மடைநுழைந் தறுத்த விடனுடை விழுப்புண் நெய்யிடை நிற்ற லானாது பையென மெழுகுசெய் பாவையிற் கிழிபல கொண்டு முழுவதும் பொதியல் வேண்டும் பழிதீர் கொடைக்கட னாற்றிய வேந்தர்க்குப் படைக்கட னாற்றிய புகழோன் புண்ணே. -தகடூர்யாத்திரை நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை 1275. வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமாத் தேரொடு சுரந்து நன்கல னீயும் நகைசா லிருக்கை மாரி யென்னாய் பனியென மடி1யாய் பகைவெம் மையி னசையா வூக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெந் தானையொடு மாறா மைந்தர் மாறுநிலை தேய மைந்துமலி யூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கும் இடாஅ வேணிநின் பாசறை யானே. -பதிற்றுப்பத்து (விடுபகுதி 4) 114. பகைப்புலம் பழித்தல் (பகைவர் நாட்டின் அழிபாடு குறித்துப் பழித்துக் கூறுதல். புலம் - நாடு. பகைப்புலம் அழித்தல் என்பதும் பாட வேறுபாடு. மேற். பு.வெ.மா. 59, 60.) சுரையும் பீருஞ் சுமந்த மாடம் 1276. குரையழல் மண்டிய கோடுயர் மாடஞ் சுரையொடு பீரஞ் சுமந்த - நிரைதிண்டேர்ப் பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப நல்லிசை கொண்டடையார் நாடு. கண்கள் சேந்தன கடிய விளிவர் 1277. தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவால் பாழாய்ப் பரிய 2விளிவதுகொல் - யாழாய்ப் புடைத்தே னிமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு. -புறப்பொருள் வெண்பாமாலை 60, 43 செங்கண் சிவக்கக் கரிபரந் தெழுந்தது 1278. கரிபரந் தெங்கங் கடுமுள்ளி பம்பி நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. ஊரை அறியா உலைவு பட்டது 1279. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேலைபூத் தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு. ஊமன் பாட உறங்கும் குழவி 1280. இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற வரியிளஞ் செங்காற் குழவி - அரையிரவின் ஊமன்பா ராட்ட புறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு. கூகை பாடக் கூத்திடும் பேய்கள் 1281. வாகை வனமாலை சூடி யரசுறையும் ஓகை 1யுயர்மாடத் துள்ளிருந்து - கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. எவரும் போக இருந்தது பேயே! 1282. 2பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையி னுய்யாதார் தேயம் - முறைமுறையின் ஆன்போ யரிவையர்போ யாடவர்போ 3யாயின்றே ஈன்பே யுறையு மிடம். -முத்தொள்ளாயிரம் 8, 9, 10, 11, 12 செழுவளச் சிந்தையை உருக்கும் சிதைவு 1283. தேஎர் பரந்தபுல மேஎர் பரவா களிறா டியபுலம் நாஞ்சி லாடா மத்துர றியமனை யின்னிய மிமிழா ஆங்கப், பண்டுநற் கறியுநர் செழுவளம் நினைப்பின் நோகோ யானே நோதக வருமே பெயல்மழை புரவின் றாகி வெய்துற்று வலனின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் பீரிவர் வேலிப் பாழ்மனை நெஞ்சிக் காடுறு கடுநெறி யாக மன்னிய முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் உரும்பில் கூற்றத் தன்னநின் திருந்துதொழில் வயவர் சீறிய நாடே. -பதிற்றுப்பத்து 26 களிற்றின் கந்தாம் கடிமரம் தடியேல் 1284. வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சால் மாற நின்னொன்று கூறுவ துடையே னென்னெனில் நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க நனந்தலைப் பேரூ ரெரியுண நைகுக 1மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉங் கடிமரந் தடித லோம்புநின் நெடுநல் யானைக்குக் 2கந்தாற் றாவே. -புறநானூறு 57 115. திறை (பகைவேந்தர் பணிந்து திறை கொடுத்தலும், அதனைப் பெற்றுக்கொண்டு பெயர்தலும் திறையாகும் (திறை - கப்பம்). மேற்: பு.வெ.மா. 52, 124.) வாழுமா றெழுதுவார் வானவர் வில்லே 1285. பல்யானை மன்னர் படுதிறை தந்துய்மின் மல்ல னெடுமதில் வாங்குவிற் பூட்டுமின் வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வர் விசும்பு. இமையார் திருந்தடி ஏனோ மிதியார்? 1286. நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன் காமர் நெடுங்குடைக் காவல னாணையால் ஏம மணிப்பூ ணிடையார் திருந்தடி பூமி மிதியாய் பொருள். இறையோ என்பவர் முறையோ என்றார் 1287. நிறைமதிபோல் யானைமேல் நிலத்தார் மாறன் குடைதோன்ற ஞாலத் தரசர் - திறைகொள் இறையோ வெனவந் திடம்பெறுத லின்றி முறையோ வெனநின்றார் மொய்த்து. வீழ்ந்து வணங்கிட வெம்புண் பட்டதாம்! 1288. நின்றீமின் மன்னீர் நெருநற் நிறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க- இன்றுந் திருந்தடி புண்ணாகிச் செவ்வி யிலனே பெருந்தண் 1ணுறந்தையார் கோ. -முத்தொள்ளாயிரம் 13, 14, 15, 16 படைவௌம் தடுத்தான் பாய்மாக் கொடுத்து 1289. தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான் வாட்டானை வெள்ளம் வரவஞ்சி - மீட்டான் மலையா மறமன்னன் மால்வரையே போலுங் கொலையானை பாய்மாக் கொடுத்து. நேரார் பணிய ஆறினான் வேந்தன் 1290. கூடி 1முரசியம்பக் கொய்யுளைமா முன்னுகளப் பாடி பெயர்த்திட்டான் பல்வேலான் - கோடி நிதியந் திறையளந்தார் நேராரு 2நின்கீழ் முதியமென் றாறி முரண் -புறப்பொருள் வெண்பாமாலை 52, 45 அழகிது நங்கள் அரச வாழ்க்கையே! 1291. உழுதுநன் கடன்கழித் துண்டு வேந்தரை வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போல் எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதேல் அழகிது பெரிதுநம் 3மரச வாழ்ககையே. வாளினால் வந்த பயனென் னோதான்? 1292. நாளினுந் 4திறைநுமக் குவப்பத் தந்துநா டாளுது மன்றெனி லழிது மேலெம தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ் வாளினும் பயனெனோ மழீஇய மாந்தர்காள். -சூளாமணி 685, 686 கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே 1293. நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை வளிமிகின் வலியு மில்லை யொளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே அளியரோ வளியரவ னளியிழந் தோரே நுண்பல் சிதலை யரிதுமுயன் றெடுத்த செம்புற் றீயல் போல ஒருபகல் வாழ்க்கைக் 1குலம்வரு வோரே. இறும்பூ தன்றே இனியவர் தோள்விடல்! 1294. 2போர்க்குரைஇப் புகன்றுகழித்தவாள் உடன்றவர்காப்புடை மதிலழித்தலின் 3ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர் நறுங்கள்ளி னாடுநைத்தலிற் சுரைதழீஇய விருங்காழொடு மடைகலங்கி நிலைதிரிந்தனவே களிறே, எழூஉத்தாகிய கதவமலைத்தவர் 4குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலிற் பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே மாவே, பரந்தொருங்கு மலைந்தமறவர் பொலம்பைந்தார் கெடப்பரிதலிற் களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே அவன்றானும், நிலந்திரைக்குங் கடற்றானைப் பொலந்தும்பைக் கழற்பாண்டிற் கணைபொருத துளைத்தோலன்னே ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட் பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர் நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற் கிறுத்தல் வேண்டுந் திறையே மறுப்பின் ஒல்வா னல்லன் வெல்போ ரானெனச் சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற் கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல் இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே. -புறநானூறு 51, 97 116. மகள் மறுத்தல் (நின் மகளை எனக்குத் தருக என்று சொல்லும் வேந்தனொடு மாறுபட்டு நின்றது. மறம் என்பது இது. மேற்: தொல்.பொருள். 79. பு.வெ.மா. 84; 94.) கண்போற் பகழி கடிது பாயும் 1295. 1அளியர் கழல்வேந்த ரம்மா வரிவை எளியளென் றெள்ளி யுரைப்பிற் - குளியாவோ பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாண்முகத்த கண்போற் பகழி கடிது. களிற்றுக் கோடே கட்டிற் காலாம்! 1296. ஒள்வாள் மறவ ருருத்தெழுந் தும்பர்நாட் கள்வார் நறுங்கோதை காரணமாக் - கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால். -புறப்பொருள் வெண்பாமாலை 84, 94 வணங்கார்க் கீயான் அணங்கின் தந்தை 1297. ஏர்பரந்தவயலி னீர்பரந்த செறுவில் நெல்மலிந்தமனையிற் பொன்மலிந்தமறுகிற் படுவண் டார்க்கும் 2பன்மலர்க் காவின் நெடுவே 3லாதன் போந்தை யன்ன பெருஞ்சீ ரருங்கொண் டியளே கருஞ்சினை வேம்பு மாரும் போந்தையு மூன்று மலைந்த சென்னிய ரணிந்த வில்லர் கொற்ற வேந்தர் வரினுந் தற்றக வணங்கார்க் கீகுவ னல்லன் வண்டோட்டுப் பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற் றுணங்குகல னாழியிற் றோன்றும் ஓரெயில் மன்ன னொருமட மகளே. மாற்றா மாறா மறலிய சினத்தன் 1298. வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட் டம்பூத் தொடலை யணித்தழை யல்குற் செம்பொறிச் சிலம்பி னிளையோள் 1தந்தை எழுவிட் டமைந்த திண்ணிலைக் கதவி னரைமண் ணிஞ்சி நாட்கொடி நுடங்கப் புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு மாற்ற மாறான் மறலிய சினத்தன் பூக்கோ ளெனவேஎய்க் கயம்புக் கனனே 2விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் சுணங்கணி வனமுலை யவளொடு நாளை மணம்புகு வைக லாகுக வொன்றோ ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பி னேரிலை யெஃக மறுத்த வுடம்பொடு வாரா வுலகம் புகுக வொன்றெனப் படைதொட் டனனே குரிசி லாயிடைக் களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப் பெருங்கவி னிழப்பது கொல்லோ மென்புல வைப்பினித் தண்பணை யூரே. பிறந்த வூர்க்குப் பெருந்தீ அன்னாள் 1299. நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய வல்ல பணிந்துமொழி யலனே 3ஈதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே. -புறநானூறு 338, 341, 349 117. வஞ்சினம் (இதனைச் செய்து முடியேன் எனின் யான் இன்னவாறு ஆவேன் எனச் சூளுரைத்தல். நெடுமொழி என்பதும் இது. மேற்: தொல்.பொருள். 79. பு.வெ.மா. 47, 69.) கதிரோன் மறையுமுன் காண்பேன் வென்றி 1300. இன்று பகலோ னிறவாமுன் 1னேனோரை வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும் 2அரணழியப் பாயு மடையார்முன் னிற்பென் 3முரணொழிய முன்முன் மொழிந்து. -புறப்பொருள் வெண்பாமாலை 69 களிற்றுமேல் எறிவேல் கைக்கொடு வருவேன் 1301. செவ்விக் கடாக்களிற்றின் செம்மத் தகத்தெறிந்த கெளவை நெடுவேல் கொணரேனேல் - எவ்வை கடிபட்ட வில்லகத்துக் கைபார்த் திருப்பன் விடிவளவிற் சென்று விரைந்து. -தகடூர்யாத்திரை உளைவன செய்தார் உயிரை ஒழிப்போம் 1302. இளையருட் பெரியவன் சொல்லு மெம்மிறைக் குளைவன செய்தவ ருயிரை மற்றவர் கிளையொடு கீண்டர 4சாண்டு மன்றெனின் வளையொடு தலைமுடித் திருந்து வாழ்துமே. -சூளாமணி 1261 ஓம்பேன் என்னில் தேம்பு பேடியேன் 1303. தன்பால் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னும் இன்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலாம் நன்பாற் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார் என்பாரை யோம்பே னெனில்யானவ னாக வென்றான். -சீவகசிந்தாமணி 443 இரப்போற் குதவாக் கரப்போன் சிறுமை 1304. கலிமா னோயே கலிமா னோயே நாகத் தன்ன நன்னெடுந் தடக்கைக் காய்சின யானைக் கலிமா னோயே வெள்ளத் தானைநும் வேந்தொப் பான்முன் உள்ளழித்துப் புகேஎ னாயி னுள்ள திரப்போ னின்மை கண்டும் கரப்போன் சிறுமை யானுறு கவ்வே. -தகடூர்யாத்திரை இரப்போர்க் கீயா இன்மையான் உறுவேன் 1305. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றூறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை 1அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. எதிர்க்குவோன் துஞ்சுபுலி இடறிய சிதடனாம்! 1306. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈயென விரக்குவ ராயிற் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத் தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென் னுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட வன்றிணி நீண்முளை போலச் சென்றவண் 1வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே. -புறநானூறு 72, 73 118. படைச் செருக்கு (படையினது வீர மிகுதியையும், வெற்றிச் சிறப்பினையும் கூறுதல். படைவீரர் செருக்கிக் கூறலும் இது. மேற். பு.வெ.மா. 47, 134.) சிறுசுடர் முன்னர்ப் பேரிருட் படையாம் 1307. உறுசுடர் வாளொ டொருகால் விலங்கிற் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய் - எறிசுடர்வேற் றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்த நின்னொடு பாங்கலா மன்னர் படை. மண்ணே அன்றி விண்ணும் வேண்டுமோ? 1308. துன்னருந் துப்பிற் 1றொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னமரு மொள்வாளென் கைத்தந்தான் - மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து. விண்ணின் விருந்தா விழைவார் வருக 1309. இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி முன்னர் வருக முரணகலும் - மன்னர் பருந்தார் படையமருட் பல்லார் புகழ விருந்தா யடைகுறுவார் விண். தான்படை தீண்டாத் தறுகண் உரவோன் 1310. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந் தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல் கண்ணியபி னன்றிக்கறுத்தார் மறந்தொலைதல் 2எண்ணியபி னோக்குமோ வெஃகு. -புறப்பொருள் வெண்பாமாலை 134, 65, 47, 55 கொல்லும் உரிமை கொடுப்பான் வேந்தன் 1311. நல்வா னவர்காண நம்மை யமரகத்து வெல்வான் விரும்பிய வேல்வேந்தைக் - கொல்வான் உனக்கே யுரிமை யுளதெனினு மிப்போ ரெனக்கே தருவா னிறை. -பாரதம் ஏவு முன்னர் ஏற்பார் சிலரே 1312. தாரேற்ற நீள்மார்பிற் றன்னிறைவ னோக்கியக்காற் போரேற்று மென்பார் பொதுவாக்கல் வேண்டுமோ யார்மேற்றாக் கொள்ளினுங் 1கோடுக காணுங்கா 2லூர்மேற் றமணர்க்கு மோடு. அலையை அழித்து ஆடுவ ரார்கடல்? 1313. வரைபுரை வேழத்தை வன்கையென் றஞ்சிப் புரையுடை மன்னருள் புக்காங் கவையுள் நிரையுரைத்துப் போகாதோ னாற்றத் துணிதல் திரையவித் தாடார் கடல். -பழமொழி 314, 318 அடுதல் அல்லது விளிதல் கடனே 1314. கூற்றுறழ் முன்பி னிறைதலை வைத்தபின் ஆற்றி யவனை யடுத லடாக்காலை ஏற்றுக் களத்தே விளிதல் விளியாக்கால் மாற்ற மளவுங் கொடுப்பவோ சான்றோர்தந் தோற்றமுந் தேசு மிழந்து. போகும் உயிர்க்குப் புன்மை சேர்ப்பதோ? 1315. தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துதவினா னாகுமாற் - பிற்பிற் பலரேத்துஞ் செம்ம லுடைத்தாற் பலர்தொழ வானுறை வாழ்க்கை யியையுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருப செய்பவோ தாமேயும் போகு முயிர்க்கு. புண்ணும் படாதவன் கண்ணும் படுமோ? 1316. நகையுள்ளு நல்லவை யெய்தார் 3இகலிய ... .... .... .... வேற்றுக் களத்தி லொருவர் தமராகச் சென்றா லொருவற் மேற் புண்ணும் படுக்கலான் றான்படான் போந்தாரக் கண்ணும் படுங்கொல் கவன்று. கற்சிறை போலக் கலங்காத் திட்பம் 1317. வேற்றானை வெள்ள 1நெரிதர யாற்றுக் கடும்புனற் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லா லெளியவோ - பொற்பார் முறியிலைக் கண்ணி முழவுத்தோள் மன்னர் அறியுந ரென்னுஞ் செருக்கு. உற்றுழி உதவார் இளையர் ஆவர் 1318. பிறந்த பொழுதேயும் பெய்தண்டார் மன்னர்க் குடம்பு கொடுத்தாரே மூத்தார் - உடம்பொடு முற்றுழிக் கண்ணு மிளையவரே தங்கோமாற் குற்றுழிச் சாவா தவர். தலைவன் ஆதலால் தரித்திலேன் Ãன்நா1319. பரவைவேற் றானைப் பகலஞ்சு வேனா இரவே யெறியென்றா யென்னை - விரைவிரைந்து வேந்தனீ யாயினா யன்றிப் புகுவதோ போந்தென்னைச் சொல்லிய நா. விலங்கை வெல்வது வீரம் அன்றுகாண்! 1320. வான்வணங்கி யன்ன வலிதரு நீள்தடக்கை யானைக்கீ தென்கையி லெஃகமால் - தானும் விலங்கா லொருகைத்தால் வெல்கைநன் றென்னும் நலங்காணே னாணுத் தரும். காலாள் என்று காலாள் எறியான் 1321. காலாளாய்க் காலா ளெறியான் களிற்றெருத்தின் மேலா ளெறியான் மிகநாணக் - காளை கருத்தினதே யென்று களிறெறியா னம்ம தருக்கினனே சான்றோர் மகன். -தகடூர் யாத்திரை 119. எயில் கோடல் (பகைவர் மதிலைப் பற்றிக் கொள்ளுதல் (எயில் - மதில். கோடல் - கொள்ளுதல்) இவ்வீரர் உழிஞைப் பூச் சூடுவராகலின் இஃது உழிஞை எனப் பெயர் பெறும். மேற்: தொல்.பொருள். 65; 67. பு.வெ.மா. 95. உழிஞை அது வளைத்தல் வீரசோ. பொருள். 21. மேற்.) உழிஞை சூடி ஒன்னார் மதில்கொளல் 1322. உழிஞை 1முடிபுனைந் தொன்னாப் போர் மன்னர் விழுமதில் வெல்களிறு பாயக் - கழிமகிழ் வெய்தாரு மெய்தி யிசைநுவலுஞ் சீர்த்தியனே கொய்தார மார்பினெங் கோ. ஏணி பலவும் எயில்மேல் சார்த்தல் 1323. கற்பொறியும் பாம்புங் கனலுங் கடிகுரங்கும் விற்பொறியும் வேலும் விலங்கவும் - பொற்புடைய பாணி நடைப்புரவிப் பல்களிற்றார் சார்த்தினார் ஏணி பலவு மெயில் உதிரா மதிலும் உண்டோ எங்கும்? 1324. கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல் - அதிருமால் பூக்கள் மலிதார்ப் புகழ்வெய்யோன் - கோயிலுள் மாக்கண் முரச மழை. -புறப்பொருள் வெண்பாமாலை 95, 112, 98 பாலன மதியம் பகலில் எறிக்குமோ? 1325. பசுலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி இகலரணத் துள்ளவ ரெல்லாம் - அகலிய விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சும்பிளித்தார் கண். தொழாமை கருதி அழுது வீழ்ந்தார் 1326. தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைத்து. உள்மதிற் புக்கே உணவு கொள்வான் 1327. இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப் பொற்றேரான் போனகங் கைக்கொளான் - எற்றாங்கொல் ஆறாத வெம்பசித் தீயா லுயிர்பருகி மாறா மறலி வயிறு. தாய்வாங்கு மகவைப் பேய்வாங்கு தன்மை 1328. தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு. ஆன்றோர் போல அடங்கிய பொறிகள் 1329. வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி யொதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசைப் பொறியு மடங்கினவால் ஆன்றோ ரடக்கம்போ லாங்கு. மண்ணக ஏணி விண்ணக ஏணியாம் 1330. பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ 1ருடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும். -பெரும்பொருள் விளக்கம் முரசம் இடிக்க எரியும் வேந்து 1331. செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமி னிடிமுர சார்ப்ப - வரவுறழ்ந் தாமா வுகளு மணிவரையி னப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து. -முத்தொள்ளாயிரம் 17 சுற்றம் இன்றிச் சுற்றிய வீறு 1332. மாமுது தாதை யேவலி னூர்துறந்து கானுறை வாழ்க்கையிற் கலந்த விராமன் மாஅ விரலை வேட்டம் போகித் தலைமகட் பிரிந்த தனிமையன் றனாது சுற்றமுஞ் சேணிடை யதுவே முற்றியது நஞ்சுகறை படுத்த 1புன்மிடற் றிறைவ னுலகுபொதி யுருவமொடு 2தொகைஇத் தலைநாள் வெண்கோட்டுக் குன்ற மெடுத்த மீளி வன்றோ ளாண்டகை யூரே யன்றே சொன்முறை மறந்தனம் வாழி வில்லு முண்டவற் கந்நா ளாங்கே. அகமும் கண்ணும் அருநீர் உகுத்தன 1333. மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும் நீலக் குவளை நிறனும் பாழ்பட இலங்கை யகழி மூன்று மரக்கியர் கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து பெருநீ ருகுத்தன மாதோ வதுவக் குரங்குதொழி லாண்ட விராமன் அலங்குதட றொள்வா 3ளகன்ற ஞான்றே. படைசூழ் இலங்கை, கடல்சூழ் அரணம் 1334. இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை எண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற் பச்சை போர்த்த பல்புறத் தண்ணடை எச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற் கடல்சூ ழரணம் போன்ற உடல்சின வேந்தன் முற்றிய வூரே. -ஆசிரியமாலை 120. எயில் காத்தல் (பகைவர் தம் மதிலை முற்றுகை இட்ட காலத்து, மதில் அகத்தோர் அம்மதில் சிதையாவாறும், பகைவர் உட்புகாவாறும் காத்தல். இவர் நொச்சிப் பூச்சூடுவராகலின் இது நொச்சி எனப்படும். மேற்: தொல். பொருள். 65, 67. பு.வெ.மா. 86. நொச்சி எயில் காத்தல் வீரசோ. பொருள். 21. மேற்.) மதில்காப் பதற்கு மலைந்தார் நொச்சி 1335. ஆடரவம் பூண்டா னழலுண்மார் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச் - சூடினார் உச்சி மதிதவழு மோங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர். தாளும் தோளும் தனித்தனிக் கிடக்கை 1336. அகத்தன வார்கழல் நோன்றா ளரணின் புறத்தன 1போரெழிற் றிண்டோள் - உறத்தழீஇத் தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான். -புறப்பொருள் வெண்பாமாலை 86, 92 வெண்மதி சூழும்விண்மீன் இனங்கள் 1337. குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார் விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் றோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து. புற்றழி நாகமாய்ப் புலம்பினர் வேந்தர் 1338. முற்றரண மென்னு முகிற்குருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - 1புற்றிழந்த நாகக் குழம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து. ஒருவரும் நெருங்கா உயர்பே ரிருக்கை 1339. பொருசின மாறாப் புலிப்போத் துறையும் அருவரை கண்டார்போ லஞ்சி - ஒருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன் எல்லார்க்கு மெல்லாங் கொடுத்து. சீற்றந் தீயாய்ச் செய்யிய செயல்கள் 1340. மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந் தெழுவாளோ னேற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை. தாக்குந் தகரென ஊக்கிச் சென்றவர் 1341. தாக்கற்குப் பேருந் தகர்போல் மதிலகத் தூக்க முடையா ரொதுங்கியுங் - கார்க்கீண் டிடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார் அடிபுறத் தீடு மரிது. -பெரும்பொருள் விளக்கம் விடலை பேணிய வியத்தகு காவல் 1342. பல்சான் றீரே பல்சான் றீரே வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயில் கணையிற் றூர்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லன் மூதூர்ப் பல்சான் றீரே பலநாள் வருந்தி யிளையரு முதியரும் நன்னுதல் மகளிரு மின்னுங்கண் டுவப்ப யாமங் கொள்பரு மொழிய மேனாட் கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக் கருங்குரல் நொச்சி மிலைந்த திருந்துவேல் விடலை காப்பமைந் தனனே. குறைநாள் மறவீர் குறுக லோம்புமின் 1343. இவனே, பொறிவரி யன்ன பொங்குளை வயமான் மேலோன் யாரென வினவிற் றோலா உரனுடை யுள்ளத் தொன்னா ருட்குஞ் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ ணோனே அவனே யெம்மிறை யீதவன் மாவே கறுவுகொள் நெஞ்சங் கதுவவந் தனனே யாவருங், குறுக லோம்புமின் குறைநாண் மறவீர் நெருந லெல்லி நரைவரு கடுந்திறற் பருமத யானை பதைப்ப நூறி யடுகளத் தொழிந்தோன் றம்பி தொடுகழல் நொச்சித் தெரியல் நெடுந்தகை அச்ச மறியா னாரணங் கினனே. -தகடூர்யாத்திரை அரக்கர் கோமான் அமைத்த நொச்சி 1344. மேலது வானத்து மூவா நகருங் கீழது நாகர் நாடும் புடையன திசைகாப் பாளர் தேயக் குறும்புங் கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் றந்த பல்வேறு விழுநெதி யெல்லா மவ்வழிக் கண்ணுதல் வானவன் காதலி னிருந்த குன்றேந்து தடக்கை யனைத்துந் தொழிலுறத் தோலாத் துப்பிற் றாணிழல் வாழ்க்கை 1வலம்படு மள்ளர்க்கு வீசி யிலங்கையில் வாடா நொச்சி வகுத்தனன் மாலை வெண்குடை யரக்கர் கோவே. -ஆசிரியமாலை 121. அமர் (இருபால் வீரரும் போரிடல், அமர். போர் என்பதும் இது. இவர் தும்பைப் பூச் சூடுவராகலின் இது தும்பைத் திணையாம். மேற்: தொல். பொருள். 70. பு.வெ.மா. 127. அதிரப் பொருவது தும்பை - வீரசோ. பொருள். 121. மேற். பொருதல் தும்பை புணர்வ தென்ப - பன்னிரு படலம்.) தும்பை மிலைந்தான் துப்புடை வேந்து 1345. கார்கருதி நின்றதிருங் கெளவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மிலைந்தான் துகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து. வாளை வீசி வயவர் ஆடுதல் 1346. வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார் ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக் காய்ந்தடு துப்பிற் 2கழல்மறவ ராடினார் வேந்தொடு வெள்வாள் விதிர்த்து. -புறப்பொருள்வெண்பாமாலை 127, 147 விண்ணை வேண்டி விரைந்தார் வெங்களம் 1347. கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து மலிபுகழ் வேண்டு மனத்தர் - ஒலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணியமாம் போர்க்களத்துப் போந்து. -பாரதம் இடிமுகில் இடியால் இடிபட லொக்கும் 1348. இடியா னிடிமுகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மன்ன ரிமையாத 1கண்கண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு. வீழ்ந்தவன் அடிமண் விரும்பிச் சூடினார் 1349. ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாங் 2கேளின்றிக் கொன்றாரே 3கேளாகி - வாள்வீசி ஆடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. துறக்கம் போகத் துணிந்ததோ உடலம்? 1350. வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல. -பெரும்பொருள் விளக்கம் கடலிரண் டெதிர்ந்த கால மொத்தது 1351. முடிமன ரெழுதரு பருதி மொய்களி றுடைதிரை மரக்கல மொளிறு வாட்படை அடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன கடலிரண் 4டெதிர்ந்ததோர் கால 5மொத்ததே. சரங்கள் அழுத்தச் சொரிந்தது குருதி 1352. நிணம்பிறங் ககலமுந் தோளும் நெற்றியும் அணங்கருஞ் சரங்களி னழுத்தி யையென மணங்கமழ் வருபுனல் மறலு மாந்தரிற் பிணங்கமர் மலைந்தனர் பெற்றி யின்னதே. -சீவகசிந்தாமணி 2223, 2225 இடைநில மில்லா இருகடல் இப்படை 1353. கடலிரண் டுளவென வெண்ணி னக்கடல் இடைநில முடையன வெண்ணு மொப்பில அடலரும் படையவை யிரண்டு மவ்வழி உடலரும் படையவை யிரண்டு மொக்குமே. பாடலால் ஆகும் பயன்தான் என்ன? 1354. தூவயிலின் வீசுமொரு வன்னது விளக்குங் காவலொடு மீளுமொரு வன்னது கருத்தின் ஆவதிது வன்றியய னின்றவர்கள் காணும் பாவனைய ரல்லர்பல பாடியினி யென்னோ. -சூளாமணி 1268, 1291 சென்றிடு முலகம் ஒன்றே யாகும் 1355. குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம் விழாக்களம் போல மெய்ம்மலி யுவகை ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின் அழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரும் நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத் தாக்கிய விசையிற் றிரிந்துநிலம் படுநரும் தகருந் தகருந் தாக்கிய தாக்கின் முகமுஞ் சிதர முட்டு வோரும் முட்டியின் முறைமுறை குத்து வோருங் கட்டிய கையொடு காறட் குநருஞ் சுட்டிய கையிற் றொட்டுநிற் போருஞ் சுட்டிய பெயரை யிட்டிழைப் போருஞ் சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ் சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரும் மல்லிற் பிடித்தும் வல்லிய னெற்றியும் ஊக்கியு முரப்பியும் நோக்கியும் நுவன்றும் போக்கியும் புழுங்கியும் நாக்கினிடை கவ்வியும் எயிறுடன் றிருத்தியுங் கயிறுபல வீசியும் இனைய செய்தியின் முனைமுயங் குநரும் பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும் அரசறி பெயரு முரைசெய லாண்மையும் உடையோ ராகிய படைகோண் மாக்கள் சென்றுபுகு முலக மொன்றே யாகலின் ஒன்றுபடு மனத்தொடு கொன்றுகொன் றுவப்பச் செஞ்சோற்று விலையுந் தீர்ந்ததும் 1மனைவியர் தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும் புதுவது புனைந்த மகளிர்க்கு வதுவை சூட்டிய வான்படர்ந் தனரே. பாசறை யகத்துப் பைந்தலை யதுவே 1356. அரிநறுங் கள்ளி னாண்மகிழ் செருக்கி நெருந லெல்லைநம் பெருமகண் முன்னர்த் திருமலி முற்றத் தோனே யின்றே கச்சை நின்ற கதழெரி நோன்றாட் புட்டி லார்க்கும் புனைதார் மாவொடு செருக்கிச் செய்த சிறுகட் பெரும்புண் முருக்கிதழ் மடந்தையர் முயங்கிய மார்பே ஆர்கெழு சுறாமீ னடங்குங் கிடங்கு நீர்மலி பழனத் ததுவே யிவன்றலை ஒளிருவேல் விடலை யுவப்பக் களிறுகெழு வேந்தன் பாசறை யதுவே. போர்க்களத் தொழிந்த புகழோ னீர்மை 1357. ஆட்புலங் கொன்று 3வாட்சால் போக்கி எஃகம் வித்திய வைக லுழவன் அழித்துப்படை பாய்தலி னணிவளை யிழந்து மலைப்புற மலைந்த தோளிணை பலகையொடு போர்க்களத் தொழிந்த புகழோ 4னீர்மை கயமூசு கயலிற் றோன்றியவ னிறமூழ்கி நின்ற வெஃகமிகப் பலவே. செம்ம லொடு சேர்ந்தனன் நிலனே 1358. உண்மையு முறுதியு முயக்கொளல் பொருளென எண்ணிநீ மொழித லெவன்கொலோ விவன்கைப் பண்ணமை கூர்ம்படை படவுயி ரிழந்தோர் எண்ணிலர் நனிமிக் கனரே நமரே இன்று, வேழக் கோடு மடுத்துளங் கிழிப்பப் பேழைப் பாம்பின் வரிக்குடர் துயல்வரத் தம்மிறைக் கொத்த செம்மலொடு செருநவி லாளன் சேர்ந்தன னிலனே. எதிர்ந்த மள்ளர் எஞ்சுவர் கொல்லோ 1359. மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி மன்ற வேம்பி னொண்குழை மிலைந்து தெண்கிணை முன்னர்க் களிற்றி 1னியலி வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே. -புறநானூறு 79 122. தானை மறம் (தானை என்பது காலாட் படை. அப்படை வீரர்களின் ஆற்றல் மிகுதியைச் சொல்லியது. மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 129.) வாள்வௌம் வரினும் ஆளுடன் போகான் 1360. கடுங்கண் மறவன் 2கனல்விழியாச் சீறி நெடுங்கைப் பிணத்திடையே நின்றான் - நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி வாள்வெள்ளந் தன்மேல் வரை. எஃகம் பறித்தான் எதிர்ப்பவர் நிலையென்? 1361. மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல் கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த படுசுட ரெஃகம் பறித்து. துறக்கம் புகவரின் தூக்குவன் வேலை 1362. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந் தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் எண்ணியபின் னோக்குமோ வெஃகு. -புறப்பொருள் வெண்பாமாலை 139, 142, 55 தார்தாங்கி நிற்கும் தனிப்பே றாளன் 1363. வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச் செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னர்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை. -பெரும்பொருள் விளக்கம் திண்டோர்க் கால்வலி கொண்ட திறலோன் 1364. களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந் தெம்முளு முளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யுந் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே. குடப்பால் உறைபோல் படைக்குநோய் ஆவோன் 1365. நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் இரங்குகா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே. புறங்கண்டு நகூஉம் புகழ்மேம் படுநன் 1366. வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை ஆடிக் காதலிற் றமியன் வந்த மூதி லாளன் 1அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருந்தத் தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே. படைக்கண் முந்திப் பாய்ந்தொளிர் வீரன் 1367. கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைக் கொடுத்தலும் ஒத்தன்று மாதோ விவற்கே தெற்றிய திணிநிலை யலறக் கூழ்வை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி ஓம்புமி னோம்புமி னிவணென வோம்பாது தொடர்கோள் யானையிற் குடர்கால் தட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் றோழற்கு வருமே பூவிலைப் பெண்டின் பொருட்டுக் கலங்கல் 1368. 2நிறப்புட் கொல்கா யானை மேலோன் குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை நாணுடை மாக்கட் கிரங்கு மாயின் எம்மினும் பேரெழி லிழந்த 3வினையெனப் பிறர்மனை புகுவள் கொல்லோ அளியன் தானே பூவிலைப் பெண்டே. -புறநானூறு 87, 276, 284, 275, 293 நெடுஞ்சேட் பொழுது நின்ற ஓருயிர் 1369. இருபாற் சேனையும் நனிமருண்டு நோக்க முடுகியற் பெருவிசை 1யுரவுக்கடுங் கொட்பின் எண்டிசை மருங்கினு மெண்ணிறைந்து தோன்றினும் ஒருதனி யனுமன் கையகன்று பரப்பிய வன்மரந் துணிபட வேறுபல நோன்படை வழங்கி யகம்பன்றோள் படையாக வோச்சி ஆங்க, அனும னங்கையி னழுத்தலிற் றனாது வன்றலை யுடல்புக்குக் குளிப்ப முகங்கரிந் துயிர்போகு 2செந்நெறி பெருமையிற் பொருகளத்து நின்நன நெடுஞ்சேட் பொழுதே - (ஆசிரியமாலை) நோக்கி நோக்கி நோயற நகுவோன் 1370. கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் தார்ப்பற்றி யேர்தருந் தோணோக்கித் -தார்ப்பின்னை நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் தேர்க்குழாம் நோக்கித்தன் மானோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும். கரிமேல் அன்றி எறியான் வேலை 1371. இகழ்த லோம்புமின் புகழ்சான் மறவர் கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசைப் பண்ணமை புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே. புண்கூர் யானையான் கண்படை பெறாஅன் 1372. அதிரா தற்ற நோக்கு ஞாயிலுட் கதிர்விடு சுடரின் விளங்கும் வெள்வேல் எதிரிய திருவி னிளையோ னின்றுந்தன் குதிரை தோன்ற வந்துநின் றனனே அவன்கை யொண்படை யிகழ்த லோம்புமின் விழுச்சீர் விண்பொரு நெடுங்குடை வேந்தன் கண்படை பெறாஅன் வைகின னிவன்கைத் திண்கூ ரெஃகந் திறந்த புண்கூர் யானை நவில்குரல் கேட்டே. -தகடூர் யாத்திரை தானையை விலக்கி யானைமேல் எறிவோன் 1373. கட்டி யன்ன காரி மேலோன் தொட்டது கழலே கையது வேலே சுட்டி யதுவுங் களிறே யொட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே. அஞ்சு தக்கனள் அஞ்சா மகன்றாய் 1374. அஞ்சுதக் கனளே யஞ்சுதக் கனளே பயறு காவலர் பந்த ரன்ன அலறுதலை முதியாள் அஞ்சதக் கனளே வெஞ்சமத், தென்செய் கென்னும் வேந்தர்க் கஞ்ச லென்பதோர் களிறீன் றனளே. புகழ்சால் மன்னிர்! இகழ்தல் ஓம்புமின் 1375. வல்லோன் செய்த வகையமை வனப்பிற் கொல்வினை முடியக் குருதிக் கூரிலை வெல்வேல் கைவல னேந்திக் கொள்ளெனிற் கொள்ளுங் காலு மாவேண் டானே மேலோன், அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக் கழற்கா லிளையோ னழற்றிகழ் வெகுளி இகழ்த லோம்புமின் புகழ்சால் மன்னிர் தொல்லை ஞான்றைச் செருவினு ளிவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம் பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே, அதனால் வல்லோர் பூழை நின்மின் கல்லென வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின் அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோ னிலையே. வரையேறு புலிபோல் வருவதோர் காளை 1376. உண்டது, கள்ளு மன்று களிப்பட் டனனே ஊர்ந்தது, புள்ளு மன்று பறந்தியங் கும்மே மேலோர், தெய்வ மல்லன் மகனே நொய்தாங்குத் தெரியல ரெடுத்த பாசிலைக் கண்ணி வெருவத் தக்க வேலி னோன்வேல் பைய நிமிர்ந்து பருந்தி னோடிக் கழிந்தார்த் தன்றவ னெறிந்ததை கழறொட் டேந்துவரை யிவரும் புலிபோல் வேந்துவந் தூரும் வெஞ்சினக் களிறே உள்ளினும் நடுக்கும் ஒருவே லோனே 1377. நிலையமை நெடுந்திணை யேறி நல்லோரி னிலைபொலி புதுப்பூண் கணவனொ டூடிச் சிந்தி யன்ன 1சேடுபடு வனப்பிற் புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின் உள்ளினும் பனிக்கு மொருவே லோனே குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம் அணிநல் யானைக் கூறளக் கும்மே. தாயும் யாயும் உடன்மூழ் குபவே 1378. வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் உருவக் குதிரை யொருவே லோனே இருகை மாக்களை யானஞ் சலனே நாற்கை மாக்களிந் நாட்டகத் தில்லை அவனும், தாரொடு துயல்வருந் தயங்குமணிக் கொடும்பூண் மார்புடைக் கருந்தலை யெற்குறித் தனனே யானும், கடிகம ழுவகைக் கைவல் காட்சியென் றுடியவற் கவனரை யறுவை யீந்தனனே அதனால், என்னெறிந்து பெயர்த லவற்குமாங் கரிதே அவனெறிந்து பெயர்த லெமக்குமாங் கரிதே அதனால், என்ன தாகிலு மாக முந்நீர் நீர்கொள் பெருங்குளந் தயங்க நாளை நோய்பொதி நெஞ்சங் குளிர்ப்ப வவன்றாய் மூழ்குவ ளொன்றோ வன்றே லென்யாய் மூழ்குவ ளொன்றோ வன்றியவன் றாயும் யாயு முடன்மூழ் குபவே. -தகடூர்யாத்திரை 123. குதிரை மறம் (போர்க் கலையில் தேர்ச்சி மிக்க குதிரையின் வீரத்தை மிகுத்துக் கூறியது. மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 133.) தானை மறவீர் தாங்கன் மின்மா 1379. தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல்மறவிர் ஓங்கல் மதிலு ளொருதனிமா - ஞாங்கர் மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார் உயிருணிய வோடி வரும். கணையின் முந்திக் களம்வரும் குதிரை 1380. குந்தங் கொடுவிற் குருதிவேல் கூடாதார் வந்த வகையறியா வாளமருள் - வெந்திறல் ஆர்கழல் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும். -புறப்பொருள் வெண்பாமாலை, 90, 133 குதிரைக் குளம்பு பொன்னால் ஆயதோ? 1381. நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யறநிமிர்ந்து பொங்கா - அரசர்தம் முன்முன்னா 1வீழ்ந்தார் முடிக ளுதைத்தமாப் பொன்னுரைகற் போன்ற குளம்பு. -முத்தொள்ளாயிரம் 18 கொட்டுந் துடிக்குக் கொட்டுங் குளம்பு 1382. அடுதிறன் முன்பின னாற்ற முருக்கிப் படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவ னூர்ந்தமாத் தீதின்றி நாண்மகிழ் தூங்குந் துடியன் துடிகொட்டும் பாணியிற் கொட்டுங் குளம்பு. -தகடூர்யாத்திரை புரவிகள் கறங்கெனத் திரிதர் கின்றவே 1383. கறங்கெனக் காலசக் கரங்கள் தாமென மறங்கிளர் 2மன்னவர் மகுட நெற்றியும் உறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த் திறங்கிளர் புரவிகள் திரிதர் கின்றவே. -சூளாமணி 1276 கடல்புகு தோணியிற் படைமுகம் போழ்மா 1384. பருத்தி வேலிச் சீறூர் மன்னன் 3உருத்தத ருண்ட வோய்நடைப் புரவி கடல்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்தின் தண்ணடை மன்னர் தாருடைக் கலிமான் அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரி னிகந்துநின் றனவே. யானை வீரனும் அஞ்சுதகு கலிமா 1385. நிலம்பிறக் கிடுவதுபோற் குளம்பு கடையூஉ உள்ள மொழிக்குங் கொட்பின் மாமேல் எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த வெந்திற லெஃகம் நெஞ்சுவடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே நெருநை உரைசால் சிறப்பின் 1வேந்தர்தா முன்னர்க் கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர் கயந்தலை மடப்பிடி புலம்ப இலங்குமருப் பியானை யெறிந்த வெற்கே. வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி 1386. கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி நடுங்குபனிக் களைஇயர் 2நாரரி பருகி வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரை நீயே நெருநை எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு நாளைச் செய்குவ மமரெனக் கூறிப் புன்வயி றருத்தலுஞ் செய்யான் 3வன்மான் கடவு மென்ப பெரிதே யதுகேட்டு வலம்படு முரசின் வெல்போர் வேந்தர் இலங்கிரும் பாசறை நடுங்கின் றிரண்டா காதவன் கூறிய தெனவே. -புறநானூறு 299, 303, 304 துணையிலா ஒருவன் இணையிலா ஆண்மை 1387. உருவப் புள்ளியி னுட்குவரு கடுந்திறற் குருகுபறந் தன்ன வெள்ளை மாயோன் முருகுமா மாயனிவன் யாவன் கொல்லோ வயவே றிருக்குங் கண்ணியுந் திருத்துந் துணையோ தஞ்ச மில்லை கிணையெனக் கண்ணார் நடுவட் டோன்றித்தன் பண்ணியற் புரவி யாய்தல் தகுமே. 124. யானை மறம் (மதஞ் செருக்கிப் போர்க்களத்தை அலறச் செய்தல் வல்ல யானையின் வீரத்தை மிகுத்துக் கூறியது. மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 132.) பேயும் பின்வரக் காயுங் கழலான் 1388. அடக்கருந் தானை யலங்குதார் மன்னர் விடக்கு முயிரு முணீஇயக் - கடற்படையுட் பேயு மெருவையுங் கூற்றுந்தன் பிற்படரக் காயுங் கழலான் களிறு. -புறப்பொருள் வெண்பாமாலை 132 திங்கள் மீது திருக்கை நீட்டுதல் 1389. வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற வெறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை. காய்சினக் களிறு நாவாய் போன்ற 1390. அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சால் மன்னர் எயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் 1கிள்ளி களிறு. மருப்பே ஊசி; மார்பே ஓலை! 1391. மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் திருத்தகு மார்போலை யாகத் - திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு. மதிலும் திறக்கும் மார்பும் உழுமால் 1392. உருவத்தார்த் தென்னவ னோங்கெழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் 1தேரில் - ஒருகோடு வேற்றா ரகல முழுமே யொருகோடு மாற்றார் மதிறிறக்கு மால். கிள்ளி களிறு கொள்ளும் நாணம் 1393. கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே. கல்லார்தோட் கிள்ளி களிறு. நாடெலாம் நடுங்க நடக்கும் நால்வாய் 1394. கச்சி யொருகால் மிதியா வொருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் - பிற்றையும் ஈழ மொருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு. நரியும் பேயும் நண்ண வருங்கரி 1395. பாற்றின மார்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையு மோடி நரிகதிப்ப - ஆற்ற அலங்கலம் பேய்மகளி ராட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு. -முத்தொள்ளாயிரம் 19, 20, 21, 22, 23, 24, 25 கடலும் புயலுங் காற்றுங் கலந்தவோ? 1396. தோற்ற மலைகட லோசை புயல்கடாங் காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் - கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளுந் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு. மன்னர் குடரால் மறைக்குங் கோடு 1397. அடுமதில் பாய 1வழிந்தன கோட்டைப் 2பிடிமுன் பழகழிதல் நாணி - முடியுடை மன்னர் 3குடரால் மறைக்குமே செங்கனல்வேற் றென்னவர் கோமான் களிறு. -முத்தொள்ளாயிரம் 26, 27. அருவி ஆடும் அழகுக் குடும்பம்! 1398. இளங்களிறொன்ற மடப்பிடி சார விலங்கருவி நீராற் றெளிக்கும் - நலங்கிளர்வேற் றுன்னரும்போர்க் கோதை தொடாஅன் செருக்கின மன்னர் 4மதிலாய வென்று. -முத்தொள்ளாயிரம் மதியும் அரவும் குடையுங் கையும் 1399. மம்மர் விசும்பின் மதியு மதிப்பகையுந் தம்மிற் றடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற் போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக் கார்யானை யன்றடர்த்த கை. ஆற்றில் படஞ்செல ஆர்வமாய் நோக்குவ 1400. வான்றோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும் ஊன்றோய் நரியு முடன்றொக்க - மூன்று கடமா நிலநனைக்குங் கார்யானைக் கிட்ட படமாறு நீப்பதனைப் பார்த்து. மலையுறை தெய்வமாய் மாமேல் வருவோர் 1401. மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற் காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போயச் - சாயுந் தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேல் மலையுறையுந் தெய்வம்போல் வந்து. -பெரும்பொருள் விளக்கம் பறியா முறியா திரியும் களிறே 1402. நெறியா நடைமா வொடுதேர் களெடுத் தெறியா வகையா நுதலே றுசரம் பறியா முறியா படையோர் படையுட் செறியா மதயா னைதிரிந் தனவே. -சூளாமணி 1237 அளியர் தாமே அவன்கைப் பட்டோர் 1403. ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே கார்ப்பெய லுருமின் முழங்க லானாதே யார்கொ லளியர் தாமே யாராற் செறியத் தொடுத்த கண்ணி கவிகை மள்ளன் கைப்பட் டோரே. -புறநானூறு 81 125. மூதில் மறம் (பழமையான வீரர் குடியிற் பிறந்த ஆடவர்க்கே அன்றி. அக் குடியிற் பிறந்த மகளிர்க்கும் வீரமுண்டு என்பதைச் சிறப்பித்துக் கூறுவது. மேற்: தொல்.பொருள். 79. பு.வெ.மா. 175) வாள்வாய் முயங்கும் வளமே வளமாம் 1404. தருமமு மீதேயாந் தானமுமீ தேயாங் கருமமுங் காணுங்கா லீதாஞ் - செருமுனையிற் கோள்வாய் மறவர் தலைதுமிய வென்மகன் வாள்வாய் முயங்கப் பெறின். அன்பால் தன்னுயிர் மறக்கும் அணங்கு 1405. இன்ப முடம்புகொண் டெய்துவீர் காண்மினோ அன்பி னுயிர்மறக்கு மாரணங்கு - தன்கணவன் அல்லாமை யுட்கொள்ளு 1மச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண். அவிழ்பூ வென்ன அம்பணைக் கிடந்தோன் 1406. எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ என்மக னாத லெற்கண் டறிகோ கண்ணே கணைமூழ் கினவே தலையே வண்ண மாலை வாள்விடக் குறைந்தன வாயே, பொருநனைப் பகழி மூழ்கலிற் புலால்வழிந் தாவ நாழிகை யம்புசெறித் தற்றே நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பல்சர நிறைத்தன வதனால் அவிழ்பூ வம்பணைக் கிடந்த காளை கவிழ்பூங் கழற்றிண் காய்போன் றனனே. மறக்குடி அறியா மாப்பழி செய்தான் 1407. வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோலா வதனகத் துன்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம் 1அதன்முகத் தொழிய நீபோந் தனையே 2எம்மில் செய்யா 3வரும்பழி செய்த -தகடூர்யாத்திரை தம்மிற் சாவார் தறுகண ரல்லர் 1408. முலைத்தா யிரங்கப் புலைப்பறை முழங்கத் தம்மிற் சாவார் தம்மில் லோரே கல்லாக் காளைநின் னீன்ற வயிறே. அன்ன ரல்லரென் சிறுவர் முன்னிய வேந்துகளத் தவிய நூறி வேந்தரொடு முளிபுற் கானத்து விளியி னல்லதை. ................................................ கழுகுணக் கிடந்த காளை யாவன்? 1409. குரங்கு மேனித் திரங்குமுகச் செதுமுலை நரைமூ தாட்டி வினவுதி யாயின் நும்மகன் கொல்லோ வறியே 1னிம்மகன் கொற்ற வெண்குடை மன்னர்க் குதவிச் செஞ்சோற் றருங்கடன் வெஞ்சமத் தாற்றிக் களிறுதலை யடுத்து மாகா னீட்டிப் பிளிறுகுரல் முரச மெத்தனை யாகப் பருந்தின் செந்நிழற் பந்த ராக அழிபிணக் குன்றே வேலி யாகக் கழுகுணக் கிடந்த காளை நும்மகன் கொல்லோ யானறி யேனே. கழித்தனன் ஒள்வாள் களிறுகள் வீழ்ந்தன 1410. வாழிய துடிய வாழிய துடிய என்மகன், ஆர்த்தெறிந் தனனோ வெறிந்தார்த் தனனோ ஆர்த்து மெறியா னெறிந்து மாரான் கையது வேலே காலது கழலே மெய்யது சினமே மேற்சென் றனனே வேந்த ரெல்லாந் தன்னோக் கினரே நோக்கி நோக்கா முறுவலன் றாக்கித் தழீஇந்தா மென்னத் தண்ணுமை கழித்தா னொள்வாள் வீழ்ந்தன களிறே. களிறு வீழ்த்தல் காளையர் கடனே 1411. ஈன்று புறந்தருத லென்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள்1 வெஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. கால்கழி கட்டில் கைவர விலையே! 1412. வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோ ரன்ன விளைய ரிருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக் 2கால்கழி கட்டிலிற் கிடத்தித் தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே. மலையில் மறைப்பினும் மாயாய் போலும்! 1413. தோறா தோறா வென்றி தோலொடு துறுகல் மறையினு முய்குவை போலாய் நெருந லெல்லைநீ யெறிந்தோன் றம்பி அகற்பெய் குன்றியிற் சுழலுங் கண்ணன் பேரூ ரட்ட கள்ளிற் கோரிற் 3கோயிற் றேருமால் நின்னே. போகிடம் அறியேன் போய்ப்பார் போர்க்களம்! 1414. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள 4னோவென வினவுதி யென்மகன் யாண்டுள னாயினு மறியே னோரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ விதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. -புறநானூறு 312, 286, 300, 86 ஒருமகன் தன்னையும் செருமுகம் விடுவோள் 1415. கெடுக சிந்தை கடிதிவள் துணிவே 5மூதின் மகளி ராதல் தகுமே மேனா ளுற்ற செருவிற்கிவள் தன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே நெருந லுற்ற செருவிற்கிவள் கொழுநன் 1பொருநரை விலக்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று 2மயங்கி வேல்கைக் கொடுத்து 3வெளிதுவிரித் துடீப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே. ஈராற் றொருமரம் ஒக்கும் பாய்மா 1416. மாவா ராதே மாவா ராதே எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே இருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல உலைந்தன்று கொல்லவன் மலைந்த மாவே. எல்லார் மனையுங் கல்லென் றனவே 1417. வேம்புசினை யொடிப்பவுங் காஞ்சி 4பாடவும் நெய்யுடைக் கைய ரையவி புகைப்பவும் எல்லா மனையுங் கல்லென் றவ்வே வேந்துடன் றேவான் கொல்லென நெடிதுவந் தன்றா னெடுந்தகை தேரே. விடலை தாயின் விம்மிதம் என்னே! 1418. கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண் 5வேந்துவாய் மடித்து வேறலைப் பெயரித் தோறுவைத் தெழுதரூஉத் துரந்தெறி ஞாட்பின் வருபடை போழ்ந்து வாய்ப்படை விலங்கி இடைப்படை யழுவத்துச் சிதைந்து வேறாகிய சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி வாடுமுலை யூறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. -புறநானூறு 279, 273, 296, 295. 126. களம் (ஏர்க்களத்தில் நெற்கதிரை அடித்து மிதித்துச் சவட்டுவது போலப் போர்க்களத்தில் படைகளைச் சவட்டி அழித்தலைக் கூறுவது. மேற்: தொல். பொருள். 76. பு.வெ. மா. 159. கள வழி நாற்பது.) கவளக் கைகள் பவளப் பைகள்! 1419. கவளங்கொள் யானைதன் 1கைதுமியப் பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோல் - 2திவளொளிய ஒண்செங் குருதி யுமிழும் புனனாடன் கொங்கரை யட்ட களத்து. கதிரோன் விளங்கும் கருமலைக் காட்சி 1420. உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பருதி சுமந்தெழுந்த யானை - இருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. தச்சர் பட்டடைத் தன்மைய போர்க்களம் 1421. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் வினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களம். பெண்ணையந் தோப்பில் பெருவளி புக்கது 1422. திண்டோள் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை பாறிப் புரள்பவை - நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற் 1காவிரி நீர்நாடன் எண்ணாரை யட்ட களத்து. -களவழி நாற்பது 14, 4, 15, 24 ஐவாய்ப் பாம்பு கவ்விய பருந்து 1423. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் 2விடநாகங் கவ்வி விசும்பிவருஞ் செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. உருமிற் குடையும் அரியும் வரையும் 1424. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தன்றால் - மல்கிக் கரைகொன் றிழிதருங் காவிரி நாடன் உரைசா லுடம்பிடி முழ்க வரசோ டரசுவா வீழ்ந்த களத்து. மாவுதை குடைகள் ஆவுதை காளான் 1425. ஓஒ உவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய் 3ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. மதியம் நக்கும் பாம்பை ஒக்கும்! 1426. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ 1ளொண்மதிய நக்குபாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. செங்குளம் வடிந்து செல்லுங் காட்சி 1427. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி கார்ப்பெயல் 2பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் ஆர்த்தம ரட்ட களத்து. -களவழி நாற்பது, 26, 35, 36, 22, 2 குடைமறை இகலன், குளிர்மதி முயலாம் 1428. படைப்பொலிதார் மன்னர் பரூஉக்குடர் மாந்திக் குடைப்புறத்துத் துஞ்சு மிகலன் - இடைப்பொலிந்த திங்களிற் றோன்று முயல்போலுஞ் செம்பியன் செங்கண் சிவந்த களத்து. -களவழி நாற்பது மூங்கில் எரியும் முளிபுதர்க் காடு 1429. கைபொருத வோசையாற் கண்ணுமிழ்ந்த செந்தீயான் மெய்பொருது தோய்ந்தெழுந்த வெம்புகையான் - ஐயோ வெதிர்வேங் கடுங்கானம் போன்றதே வெம்போர் எதிர்வேந்தர் செய்த விடம். -பாரதம் பரிசு கண்டு குரவை ஆடுதல் 1430. வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து. -பெரும்பொருள் விளக்கம் நரியும் வெருவி நண்ணா வெங்களம் 1431. வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார் புருவ முரிவுகண் டஞ்சி - நரிவெரீஇச் சேட்கணித்தாய் நின்றழைக்குஞ் செம்மற்றே தென்னவன் வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். புண்ணுற் றழைக்கும் புதுமை நரிகள் 1432. மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித் - துயருழந்து புண்ணுற் றழைக்குங் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். சேஎயின் களத்தில் பேஎயின் விளக்கம் 1433. மூடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி - எடுத்தெடுத்துப் பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேஎய் பொருத களம். காவலன் பட்டது களிறும் பட்டது 1434. 1ஏனைய பெண்டி ரெரிமூழ்கக் கண்டுதன் தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி - யானையும் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்ததே 2பல்யானை யட்ட களத்து. -முத்தொள்ளாயிரம் 28, 29, 30, 31 புற்றெடுத் தனைய பொருகளத் தன்மை 1435. பெருகிய குருதியுட் பிறக்குஞ் செந்தடி யறுகுடை யளற்றினு ளழுந்திப் பாகமோர் சொரிகதிர்க் கோடக முடிகள் தோன்றலாற் பொருகளம் புற்றெடுக் கின்ற 1போன்றவே. -சூளாமணி 1397 127. இரங்கல் (மண்ணவர் மயங்க விண்ணுலகு சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது. கையறுநிலை என்பதும் இது. மேற்.தொல்.பொருள். 79. பு.வெ.மா. 31; 80; 267; 274.) அறத்தின் வாயிலை அடைத்தது வேலே 1436. போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன் ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் - யார்க்கு மறந்திறந்த வாயி லடைத்ததே யண்ணல் நிறந்திறந்த 2நீணிலைய வேல். அழுதார் ஆற்றில் ஆடுங் கூகை 1437. முன்புறந் தான்காணு மிவ்வுலக மிவ்வுலகிற் றன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின் அழுதார்க ணீர்விடுத்த 3வாறாடிக் கூகை கழுதார்ந் திரவழங்குங் காடு. -புறப்பொருள் வெண்பாமாலை 80, 274 தோற்கண் ஆதலால் துடிகள் அழுதில 1438. இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க. வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி. -தகடூர் யாத்திரை உலகெலாம் ஒடுக்கும் ஒருபெருங் காடு 1439. உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ டிலைநெடுவே லோனை யிழந்து. உலக மேத்தும் உனக்கும் ஒழிவோ? 1440. அரச ரேறே யடலாழி வலவா யார்க்குந் தோலாதாய் புரிசை நகர்நூற் றொருபதுடைப் பூமி முழுதுந் தானாண்டோய் உரைசெய் துலகம் பாராட்டு மொளியா யோடை யானையாய் வரைசெய் தனைய திரடோளாய் மறைதல் பொருளோ வயவேந்தே. காவல் முனிந்து கடந்தாய் கொல்லோ! 1441. மூரி முந்நீ ருலகங்கள் முழுதுங் காவல் முனிதாயோ ஆரு மில்லா வடியோங்கள் 1வழிபா டாற்ற மாட்டாயோ சீரின் மன்னும் வளநாடுந் தெய்வப் படையுஞ் செல்வமுமிப் பாரின் மன்னர் பிறர்கொள்ளப் பணித்த தென்னோ படைவேந்தே. -சூளாமணி 1473 1481, எள்ளிருக்க இடமற ஏனோ துளைத்தது? 1442. வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலுங் கீழும் எள்ளிருக்கு மிடமின்றி யுயிரிருக்கு மிடநாடி யிழைத்த வாறோ சுள்ளிருக்கு மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து தடவியதோ வொருவன் வாளி, -இராமா. உயுத்த 3906 கூற்றம் இரந்து கொண்டது கொல்லோ! 1443. செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினு முய்வின்று மாதோ பாடுநர் போலக் கைதொழு தேத்தி இரந்தன் 1றாகல் வேண்டும் பொலந்தார் மண்டமர் 2கடந்த தானைத் 3திண்டோள் வளவற் கொண்ட கூற்றே. மாயாப் புகழை மாய்க்குமோ ஈமம்? 1444. எறிபுனக் குறவன் குறைய லன்ன கரிபுற விறகி னீம வொள்ளழற் குறுகினுங் குறுகுக குறுகாது சென்று விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த் திங்க ளன்ன வெண்குடை ஞாயிற் றன்னோன் புகழ்மா யலவே. -புறநானூறு 226, 231 வாய்மொழிப் புலவீர் வைகம் வம்மோ 1445. பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே ஆடுநர்க் கீத்த பேரன் பினனே அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் அனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று 1பைதற் சுற்றங் கெழீஇ யதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கேடி னல்லிசை சூடி நடுக லாயினன் புரவல னெனவே. பலரோ டுண்டோன் பிண்டமுண் டனனோ 1446. நோகோ யானே தேய்கமா காலை பிடியடி யன்ன சிறுவழி மெழுகித் தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் உலகுபுகத் திறந்த வாயிற் பலரோ டுண்டல் மரீஇ யோனே. -புனறநானூறு 221, 234 இடுக வொன்றோ! சுடுக வொன்றோ! 1447. தொடியுடைய தோண்மணந்தனன் கடிகாவிற் பூச்சூடினன் தண்கமழுஞ் சாந்து நீவினன் செற்றோரை 2வழிதபுத்தனன் நட்டோரை யுயர்வு கூறினன் வலியரென வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன் பிறரைத்தா னிரப்பறியலன் இரந்தோர்க்கு மறுப்பறியலன் வேந்துடை 3யவையத் தோங்குபுகழ் தோற்றினன் வருபடை யெதிர்தாங்கினன் பொருபடை புறங்கண்டனன் கடும்பரிய மாக்கடவினன் நெடுந்தெருவிற் றேர்வழங்கினன் ஓங்கியல களிறூர்ந்தனன் 1தீஞ்சேற்ற தசும்புதொலைச்சினன் பாணுவப்பப் பசிதீர்த்தனன் மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச் செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின் இடுக வொன்றோ சுடுக வொன்றோ படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே. வித்தட் டுண்ட விரகிலாக் கூற்றம் 1448. நனிபே தையே நயமில் கூற்றம் விரகின் மையின் வித்தட் டுண்டனை இன்னுங் காண்குவை நன்வா யாகுதல் ஒளிறுவாள் மறவருங் களிறு மாவும் குருதியங் குரூஉப்புனற் 2பொதுகளத் தொழிய நாளு மானான் 3கடந்தட் 4டென்றுநின் 5வாடுபசி யருத்திய வசைதீ ராற்றல் நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண் வளவ னென்னும் 6வண்டுமூசு கண்ணி அனையோற் கொண்டனை யாயின் இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே. இன்னாக் கூற்றம் என்போல் விதிர்க்க 1449. ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே உய்த்தனென் கொளினே மார்பெடுக் கல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை இன்னா துற்ற வறனில் 7கூற்றே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர்கம் நடத்திசிற் சிறிதே. சாத்தன் மாய்ந்தபின் பூத்தியோ முல்லை! 1450. இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் 2சூடான் பாடினி யணியாள் ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே. -புறநானூறு 239, 227, 255, 242 வெளில்பா ழாக விம்மிய புன்கண் 1451. பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த இருங்களி றிழந்த பைதற் பாகன் அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை வெளில்பா ழாகக் கண்டு கலிழ்ந்தாங்குக் கலங்கினெ னல்லனோ யானே பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே. தழையாம் அல்லி உணவும் ஆயது 1452. அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே, இனியே பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா யினவே. பொய்கையும் தீயும் ஒக்கும் எனக்கே 1453. பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா 1தடகிடை மிடைந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே. -புறநானூறு 220, 248, 246 ஈண்டுநின் றணிமின்! எய்துவிர் புகழே! 1454. இழுமென முழங்கு முரசமொடு குழுமிய ஒன்னார் மள்ளர்த் தந்த முன்னூர்ச் சிறையில் விலங்கிச் செவ்வே லேந்தி யாண்டுப்பட் டனனே நெடுந்தகை ஈண்டுநின் றம்ம வணியில்பெரும் புகழே. -தகடூர்யாத்திரை ஆர்தர அறியா அஞ்சுவரு காடு 1455. நாய்ப்பிண வொடுங்கிய கிழநரி யேற்றை 1கிளைக்கு மிறும்பிற் றெறுவரக் கூடிய கூற்றுயிர் கொண்ட வுடம்புகரி பறந்தலைப் பாற்றிய சுடலைப் பல்குர றெழித்தே பார்பொரு பனிக்கடல் போல வார்தர வறியா வஞ்சுவரு காடே. 128. வென்றி (வாகைப் பூவைப் புனைந்து பகைவேந்தனைக் கொன்று ஆரவாரித்தலைக் கூறுவது. வாகை என்பதும் இது. மேற்: தொல். பொருள். 18. பு.வெ.மா. 155. போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம் வீரசோ. பொருள். 21. மேற்.) சூடினான் வாகை; பாடினார் புலவர் 1456. சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் சூடுதலும் பாடினார் தொல்புகழ் பல்புலவர் - கூடார் உடல்வே லழுவத் தொளிதிகழும் பைம்பூண் அடல்வேந்த னட்டார்த் தரசு. -புறப்பொருள் வெண்பாமாலை 155 களிறே அணையாக் கண்படு வீரன் 1457. கொடித்தலைத்தார்த் தென்னவன் தேற்றான்போல் நின்றான் மடித்தவராய் சுட்டிய கையாற் - பிடித்தவேற் கண்ணேரா வோச்சிக் களிறணையாக் கண்படுத்த மண்ணேரா மன்னரைக் கண்டு. கண்சிவப் பொழிக்கக் கண்ட மருந்து 1458. தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின் றழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் - கழலடைந்து 1மண்ணிரத்த லென்ப வயங்குதார் மாமாறன் 2கண்ணிரத்தந் தீர்க்கு மருந்து. -முத்தொள்ளாயிரம் 32, 33 அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழியன் 1459. நளிகட லிருங்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறுசென்று களனகற்றவுங் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய வெஃகேந்தி அரசுபட வமருழக்கி உரைசெல முரைசுவௌவி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்னர் 1செய்தொழி லயர மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றார் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றற்றா ராயினும் மாண்டுவாழ் வோரே. நெஞ்சு நடுங்கித் துஞ்சார் வடவர் 1460. சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார் கடிமதில் பாயுநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழல் மறவர் காடிடைக் கிடந்த நாடுநனி சேய செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குணகடல் பின் னதாகக் குடகல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப வலமுறை வருதலு 2முண்டென வலம்வந்து நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. தண்பணை இருந்தும் கண்படை இல்லை 1461. உழுதூர் காளை யூழ்கோ டன்ன கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப் புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும் புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய மன்றிற் பாயும் வன்புலத் ததுவே கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட் டண்பணை யாளும் வேந்தர்க்குக் கண்படை யீயா வேலோ னூரே -புறநானூறு 26, 31, 322 ஞாயிறும் மதியும் நிலஞ்சேர்ந் தனவோ? 1462. மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅய் குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை புணங்கப் பண்ணிப் பிணியுறு முரசங் கொண்ட காலை நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய முலைபொலி யாக முருப்ப நூறி மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர அவிரறல் கடுக்கு மம்மென் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே. எழுவ ரடங்க ஒருதா னானோன் 1463. ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை இன்றி னூங்கோ கேளலந் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் 1கண்ணி 2ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடுஞ் செம்மலு மறியார் கூடிப் பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. மகிழவு மில்லன்; இகழவு மில்லன் 1464. கிண்கிணி களைந்தகா லொண்கழல் தொட்டுக் குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை அழுங்கப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்து நிலஞ்சேர வட்டதை மகிழ்ந்தன்று மிகழ்ந்தன்று மதனினு மிலனே. -புறநானூறு 25, 76, 77 129. புகழ் (வெற்றிநடை கொண்ட வேந்தனைத் தேவர்களுடன் ஒப்பிட்டுப் புகழ்ந்து கூறுவதும் அவன் சிறப்பியல்புகளை விரித்துக் கூறுவதும் புகழாகும். மேற்: தொல். பொருள். 60. பு.வெ.மா. 227.) மயிலூர் மைந்தனும் மாறனும் ஒப்பர் 1465. மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளுங் கடம்பம்பூக் கொண்டேத்தி யற்றால் - தொடங்கமருள் நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை இன்றமிழால் யாம்பாடும் பாட்டு. மாறன் அடிக்கண் மற்றையோர் முடிப்பூ 1466. செங்க ணெடியான்மேற் றேர்விசைய னேற்றியபூப் பைங்கண்வெள் ளேற்றான்பாற் கண்டற்றால் - எங்கும் அடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும். மார்பில் மறுவிலா மாயன் மாறன் 1467. கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு. செழுமதி போலும் சேரன் கோதை 1468. வாளிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். வையகம் நிழல்செயும் வளவன் தண்குடை 1469. மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமா - எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை. -முத்தொள்ளாயிரம் 34, 35, 36, 37, 38 பாண்டியன் பதியிற் படுவ முத்தமிழ் 1470. பார்படுப செம்பொன் பதிபடுப 1முத்தமிழ்நூல் நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் - சாரல் மலைபடுப யானை வயமாறன் கூர்வேற் றலைபடுப தார்வேந்தர் மார்பு. வேலுக் கஞ்சும் ஞாலத்தரசு 1471. அருமணி யைந்தலை யாடரவம் வானத் துருமேற்றை யஞ்சி யொளிக்கும் - செருமிகுதோட் செங்கண்மா மாறன் சினவேல் கனவுமே அங்கண்மா ஞாலத் தரசு. புலவுஞ் சாந்தும் பொருந்தும் ஒள்வேல் 1472. அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி கொண்டாடும் பக்கமு முண்டு. கதவந் திறந்து களிக்கத் தகுநாள் 1473. கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணார்தந் தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாட் போர்வேந்தன் பூச லிலன். சிலம்பி செய்த சிறுதவ றென்ன? 1474. அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை இலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு. -முத்தொள்ளாயிரம் 39, 40, 41, 42, 43 மாறன் முன்னர் மாறேற் பார்யார்? 1475. திறலொடு தீருந்தீப் பூமிய னல்லன் மறலொடு மைந்து தருக்கிப் - பிறரொருவர் தென்ன னிளங்கோத் திருமால் வழுதிமுன் மன்னர்யார் மாறேற் பவர். மண்ணெலாம் தாங்கும் தொண்டை யான்தோள் 1476. கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம் இருங்கடி மண்மகளை யேந்தினவே யாயிற் பெரும்பெய ரேனத் தெயிறனைய வன்றே சுரும்பறை தொண்டையான் தோள். -இரும்பல்காஞ்சி இடையன் செல்லா இரும்புலிக் காடு 1477. எங்கோ னிருந்த கம்பலை மூதூர் உடையோர் போல விடையின்று குறுகிச் செம்மல் நாளவை யண்ணாந்து புகுதற் கெம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே இரவலர்க் கெண்மை யல்லதுபுரவெதிர்ந்து வானம் நாண வரையாது சென்றோர்க் கானா தீயுங் கவிகை 1வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப் பாசிலைத்தொடுத்த வுவலைக் கண்ணி மாசு ணுடுக்கை மடிவா யிடையன் சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே. செங்கதிர் ஒவ்வா சேரலா தற்கே 1478. வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப ஒடுங்காவுள்ளத் தோம்பா வீகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. நானில வளமும் நண்ணிய சேரன் 1479. நாட னென்கோ வூர னென்கோ பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப் புனவர் தட்டை புடைப்பி னயல திறங்குகதி ரலமருங் கழனியும் பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே. எமக்குத் திங்கள்; பகைக்கு ஞாயிறு 1480. ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பிற் றாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி வல்லை மன்ற நீநயந் தளித்தல் தேற்றாய் பெரும பொய்யே யென்றுங் காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும் ஞாயி றனையைநின் பகவைர்க்குத் திங்க ளனையை யெம்ம னோர்க்கே. இன்னா மண்கொண் டினிதுசெயல் அறனோ? 1481. பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறல்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. ஒப்ப நாடி அத்தக வொறுத்தல் 1482. வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி யத்தக வொறுத்தி வந்தடி பணிந்து முந்தை நிற்பின் தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே. -புறநானூறு 54, 8, 49, 59, 12, 10 களிற்று வெளிலில் கான மஞ்ஞை 1483. களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே. குன்றம் பாடிக் கொண்டதோ களிறு? 1484. மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே. மாரி யன்ன தேர்வேள் ஆஅய் 1485. மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே 1காண்டல் வேண்டினை யாயின் 2மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி மாரி யன்ன 3வண்மைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே. அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் 1486. இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக 4னாஅ யல்லன் பிறருஞ், சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே. -புறநானூறு 127, 131, 133, 134 அரிசி கேட்க யானை தருவதோ? 1487. தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினெ மாகத் தான்பிற வரிசை யறிதலாற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகொல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. கேள்விக் கினியனும் கண்ணுக் கினியனும் 1488. நீயே, அமர்காணி னமர்கடந்தவர் படைவிலக்கி யெதிர்நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னாயே அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் ஊறறி யாமெய் யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே அதனால், நீயுமொன் றினியை யவருமொன் றினியர் 1ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி நின்னை வியக்குமிவ் வுலகமஃ தென்னோ பெரும வுரைத்திசி னெமக்கே. -புறநானூறு 140, 167 இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன் 1489. ஓரை யாயத் தொண்டொடி மகளிர் கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத் தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம் இழுமென வொலிக்கும் புனலம் புதவிற் பெருமா விலங்கைக் 2கிழவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் ஒரூ ருண்மையி னிகழ்ந்தோர் போலக் காணாது கழிந்த வைகல் காணா வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன் கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே. கொல்லனை இரக்கும் வல்லாண் மையோன் 1490. நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே இறையுறு விழுமந் தாங்கி யமரகத் திரும்புசுவைக் கொண்ட விழுப்புணோய் தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந் தீர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன் இன்மை தீர வேண்டி னெம்மொடு நீயும் வம்மோமுதுவா யிரவல யாந்தன் னிரக்குங் காலைத் தானெம் உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க் கருங்கைக் கொல்லனை யிரக்குந் திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே. தோன்றுங் காலைத் தோன்றவும் வல்லன் 1491. உடைய னாயி னுண்ணவும் வல்லன் கடவர் மீது மிரப்போர்க் கீயும் 1மடவர் மகிழ்துணை நெடுமா னஞ்சி இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன் கான்றுபடு கனையெரி போலத் தோன்றவும் வல்லன்றான் தோன்றுங் காலே. -புறநானூறு 176, 180, 315 தமிழ்ச்சிறு கெண்டை இமயத்து வைத்தவன் 1492. பொருபோர்க் கிரிவ தவனெதிர் வோனே, அவனே தமிழ்ச்சிறு கெண்டை யிமயத்து வைத்து வடதிசை யாண்ட தென்னவன் கடிகொள முனிந்த கூற்றத்துப் புருவம் போல வாங்கிருங் கொழுங்கடை வளைந்த வேம்பி னிலையவன் சூடும் பூவே. விருந்துண்டு மிகுந்தால் தானும் உண்பான் 1493. 2சில்செவி யன்னே பெருங்கேள்வி யன்னே குறுங்கண் ணினனே நெடுங்காட்சி யன்னே இளைய னாயினு மறிவின்மூத் தனனே மகளி ரூடினும் பொய்யறி யலனே கீழோர் கீழ்மை செய்யினுந் தான்றன் வாய்மை வழுக்க மறுத்த லஞ்சி மேனெறி படரும் பேரா ளன்னே ஈண்டுநலந் தருதல் வேண்டிப் பாண்டியர் பாடுதமிழ் வளர்த்த கூடலின் வடாஅது பல்குடி துவன்றிய கள்ளியம் பெரும்பதிச் சால்புமேந் தோன்றிய தாழி காதலின் மேவலன் பிறர்பிறர்க் கீந்து தானு முண்ணும் விருந்துண்டு மிகினே. -ஆசிரியமாலை 130. பரிசில் (பரிசில் பெற்றார் தாம் பெற்ற பரிசில் சிறப்பையும் அதனை வழங்கியோன் வண்மைச் சிறப்பையும் கூறுதல். மேற்: தொல். பொருள். 90. பு.வெ.மா.213; 214) உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம் 1494. வளிநடந் தன்ன 1விரைசெல லிவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரினி ரெனாஅக் கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றினி ரெனாஅ உருமுடன் றன்ன வுட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியி ரெனாஅ மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே எம்மால் வியக்கப் படூஉ மோரே இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் 2கொழுங்குற் றடகு புன்புல வரவின் சொன்றியொடு பெறூஉஞ் சீறூர் மன்ன ராயினு மெம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பி னோரே மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும் உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளே நல்லறி வுடையோர் நல்குர வுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே. கையகத் துள்ள பொய்யா வளமை 1495. ஒருநாட் செல்லலெ மிருநாட் செல்லலெம் 1பலநாட் பயின்று பலரொடு செலினுந் 2தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் யதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினும் நீட்டா தாயினும் 3யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் 4ததுவது பொய்யா காதே அருந்தே மாந்த நெஞ்சம் வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. வள்ளியர் உடைமை கொள்ளுவார் உடைமை 1496. கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருந 5லுண்டு மமையாது பின்னுஞ் செலவா னாவே கலிகொள் புள்ளினம் அனையர் வாழியோ விரவல ரவரைப் புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய் யாடவர் உடைமை யாகுமவ ருடைமை இன்மை யாகு மவரின் மையே. -புறநானூறு 197, 101, 199 உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும் 1497. ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர் ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று 6கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர் கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல் உண்ணா ராகுப நீர்வேட் டோரே ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச் சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும் உண்ணீர் மருங்கி னதர்பல வாகும் புள்ளும் பொழுதும் 1பழிப்பி னல்லதை உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற் புலவேன் வாழிய ரோரி விசும்பிற் கருவி வானம் போல வரையாது 2சுரக்கும் வள்ளியோய் நின்னே. கடவன் பாரி கைவண் மையே 1498. நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப் புல்லிலை யெருக்க மாயினு முடையவை கடவுள் பேணே மென்னா வாங்கு மடவர் மெல்லியர் செலினுங் கடவன் பாரி கைவண் மையே. மலையற் பாடியோர் வறிது பெயரார் 1499. நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது 3பெயர்குவ ரல்லர் 4நெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப் பீடுகெழு மலையற் பாடி யோரே. -புறநானூறு 204, 106, 124 131. வாழ்த்து (நீவழிபடும் தெய்வம் நின்னைக் காக்க, நின் வழிவழி மிகுவதாக என வாழ்த்திக் கூறியது. மேற்: தொல்.பொருள் 88. பு.வெ.மா. 226) மாமலை போல மன்னி வாழ்க 1500. கொடிவிடு முத்தலைவேற் கூற்றக் கணிச்சிக் கடிவிடு கொன்றையோன் காக்க - நெடிதுலகிற் பூமலி நாவற் பொழிலகத்துப் போய்நின்ற மாமலைபோல் மன்னுக நீ. -புறப்பொருள் வெண்பாமாலை 226 சென்னிச் செல்வ மன்னுக நெடிதே 1501. கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க எண்ணிருந்தோ ளேந்திழையாள் தான்காக்கப் - 1பண்ணியனூற் சென்னியர்க் களிக்குஞ் செல்வனீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே. -பெரும்பொருள் விளக்கம் செந்தில் மணலினும் சிறக்க வாணாள் 1502. ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கு மொருகண் போல வேந்துமேம் பட்ட பூந்தார் மாற கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய பரிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவருமெனு நான்குடன் மாண்ட தாயினு மாண்ட அறநெறி முதற்றே யரசின் கொற்றம் அதனால், நமரெனக் கோல்கோடாது பிறரெனக் குணங்கொல்லாது ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந் திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையு மூன்றும் உடையை யாகி யில்லோர் கையற நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்றுறைக் கடுவளி தொகுப்ப வீண்டிய வடுவா ழெக்கர் மணலினும் பலவே. -புறநானூறு 55 வான மீனினும் வயங்கிப் பொலிக 1503. நாகத் தன்ன பாகார் மண்டிலந் தமவே யாயினுந் தம்மொடு செல்லா வேற்றா ராயினும் நோற்றார்க் கொழியும் ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய நாரரி தேறல் 1மாந்தி மகிழ்சிறந் திரவலர்க் கருங்கல மருகாது வீசி வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல் வாழச் செய்த நல்வினை யல்ல தாழுங் காலைத் துணைபிறி தில்லை ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்டக விருந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர் வேந்திர் யானறி யளவையோ 2விதுவே வானத்து வயங்கித் தோன்று மீனினு மிம்மென 3வியங்கு மாமழை யுறையினும் உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநுந் நாளே. மணிமிடற் றொருவன் போல மன்னுக 1504. 4வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார் களம்படக் கடந்த கழறொடித் தடக்கை ஆர்கலி நறவி னதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க வெமக்கீத்1தனையே. -புறநானூறு 367, 91 பஃறுளி மணலினும் பலவே வாழிய 1505. ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. -புறநானூறு 9 வாழி யாத வாழிய பலவே 1506. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் மகளிர்க் கல்லது 2மலைப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினும் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டமை மிகைபடத் தண்டமிழ் செறித்துக் 1குன்றுநிலை தளர்க்கு குருமிற் சீறி ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயும் 2நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக 3கனந்தலை யெடுத்த முழங்குகடல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனின் அடையெடுப் பறியா வருவி யாம்பல் ஆயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே. -பதிற்றுப்பத்து 63 பொருட்பால் முற்றும். குறிப்புரை புறத்திரட்டு என்னும் இனிய இத் தொகை நூல் அறத்துப் பால்,பொருட்பால் என்னும் இரண்டு பால் களுடன் நிறைவு பெற்றுள்ளது. இதன்கண் காமத்துப்பால் என்னும் பகுதி இடம் பெறவில்லை. பொருட்பால், வாழ்த்து என்னும் பகுதியுடன் முற்றுப் பெற்றிருப்பதே இதற்குச் சான்றாம். ஆனால், புறத்திரட்டுச் சுருக்கம் என்னும் நூற்கண் கைக்கிளைப் பொருள் ஒன்றுமே அமைந்த முத்தொள்ளாயிர வெண்பாக்கள் அறுபத்து ஐந்தும், தகையணங்குறுத்தல் முதல் ஊடலுவகை ஈறாக உள்ள அதிகாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறளாகத் தேர்ந்தமைத்த திருக்குறட்பாக்கள் இருபத்தைந்தும் காமத்துப்பால் என்னும் தலைப்பின்கீழ் இடம் பெற்றுள. இக் காமத்துப் பாற் பகுதி புறத்திரட்டு என்னும் பொருளுடன் பொருந்துவதில்லை ஆகலின் அப் பகுதியை விடுத்துத் தொல்காப்பியம் முதலாய தொன்னூல் உரைகளில் காணக் கிடக்கும் புறப்பொருட் பாடல்களைத் தேர்ந்து திரட்டிப் பின்னிணைப்பாகச் சேர்த்துக் குறிப்புரையும் எழுதப் பெற்றுள்ளது. இங்கு விலக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்கள் அடுத்து வெளிவர இருக்கும் அகத்திரட்டில் இடம்பெறும். பின்னிணைப்பு - 1 (தொல்காப்பியவுரை முதலியவற்றிலிருந்து திரட்டப்பெற்றவை) 1. (5) அறன்வலியுறுத்தல் தீநெறி செல்லல் தீரத் தவிர்க 1. சொல்ல லோம்புமின் றோநனி செல்ல லோம்புமின் றீநெறி கல்ல லோம்புமின் கைதவம் மல்லன் ஞாலத்து மாந்தர்காள். நிற்க வேண்டா நீசரைச் சார்ந்து 2. சொல்லல் சொல்லல் துயவை சொல்லல் - எஞ்ஞான்றும் புல்லல் புல்லல் தீநெறி புல்லல் - எஞ்ஞான்றும் கொல்லல் கொல்லல் செய்ந்நலங் கொல்லல் - எஞ்ஞான்றும் நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்தங் - கெஞ்ஞான்றும். -யாப்பருங்கலவிருத்தி 92, 68 இன்மை மேவுவார் இன்ப மெய்தார் 3. நன்மை மேவுவார் மேவுவார் பெரும்பொரு ணான்கும் புன்மை மேவுவார் யாவரும் புகழொடு பொருந்தார் தொன்மை மேவுவார் மேவுவார் தொடர்வறாச் சுற்றம் இன்மை மேவுவார் யாவரு மின்பமொன் றெய்தார். - வீரசோழியம். யாப். 17. வாழும் பொழுதே வானெய்த வழிகள் 4. தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதிக்கட் சுழல்வார் தாமும். மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்று முனிவார் தாமும் வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே. -யாப். வி. 94; யா.கா. ஒழி. 7; நன். 415, மயிலை. 2. (12) செய்ந்நன்றியறிதல் ஒருவரூ னுண்டார் பிறர்க்குரித் தாகார் 5. முன்னொருவன் செய்யு முபகாரம் மூவுலகுந் தன்னைக் கொடுத்தாலுஞ் சாலுமே - யென்னே உயிர்க்குறுதி யாக வொருவர்சோ றுண்டார் பிறர்க்குரிய ராவரோ பேசு. -(பாரதவெண்பா) பெருந்தொகை - 290 3. (14) அடக்கமுடைமை கடுஞ்சொல் அரவங் கடிக்கும் நல்லரை 6. கல்லார் வாயிற் கடுஞ்சொல்லாங் காரரவு நல்லாரைச் சென்று நனிகடிக்குஞ் - சொல்லாவோர் மந்திரமு மில்லை மகிதலத்தே மற்றுமொரு தந்திரமு மில்லையதன் சால்பு. -வீரசோ. அலங். 23. மேற். உறவுற வருவன உரைப்பன உரையேல் 7. வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வருவன உரைப்பன உரையன்மற் செறிவுறு தொழிலினர் சிறந்தவர் இவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிற பிற நிகழ்வன பின். -யாப். வி. 67. மேற் வெட்டென உரைத்தலை விடுதல் வேண்டும் 8. கெட்டகழு தைக்குரல தென்பர் குயில்கூவின் நட்டவர்கள் போன்மகிழ்வர் நண்பதனோ டென்னை பட்டபொருள் சொல்லலுற லுண்டெனினும் யாரும் வெட்டென வுரைத்தலை விடுத்திடுமி னென்றான். -நீலகேசி. 251 மேற் 4 (24) ஈகை உடையராய்ச் சென்றால் ஊரெலாம் உறவு 9. உடையராய்ச் சென்றக்கால் ஊரெல்லாஞ் சுற்றம் முடவராய்க் கோலூன்றிச் சென்றக்காற் சுற்றம் உடையானும் வேறு படும். -யாப். வி. 93 மேற். கொடையிலா வாழ்க்கை அடைபடல் நன்று 10. கருங்கட லுடுத்த மல்லல் ஞாலத்துச் செம்மையின் வழாஅது கொடைக்கடம் பூண்டு வாழ்வது பொருந்தா தாகிற் சாவது மினிதவர் வீவது முறுமே. - யாப்.வி. 53 மேற். உவர்க்கடல் தன்னினும் ஊற்றே உயர்வு 11. உவர்க்கட லன்ன செல்வரு முளரே கிணற்றூற் றன்ன நீயுமா ருளையே செல்வர்தாம் பெருந்திரு வுறுக பல்பகல் நீவா ழியரோ நெடிதே யீயாச் சிறுவிலைக் காலத் தானு முறுபொரு டந்தெஞ் சொற்கள் வோயே. -நன்னூல் 268 மயிலை. மேற். 5. (26) புகழ் ஈதல் இசைபடல் ஊதிய மாகும் 12. எய்தற் கரிய வியன்றக்கா லந்நிலையே செய்தற் கரிய செயலென்று - வையகத் தீத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு. - யாப்.வி. 60. மேற். பொருளைப் பொழிவார் மேலே புகழாம் 13. வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும் பெய்யு மழைமுகிலைப் பேணுவரால் - வையத் திருள்பொழியுங் குற்றம் பலவெனினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ். - வீரசோ. அலங். 20 மேற். கல்லார் நாவிற் கட்டுரை கொள்ளேல் 14. கல்லார் நாவிற் கட்டுரை கொள்வார் - புகழெய்தார் புல்லார் வாயிற் சொற்றெளி வுற்றார் - புகழெய்தார் நல்லார் மேவு நண்பு துறந்தார் - புகழெய்தார் இல்லா ராய்நின் றின்ப முவந்தார் - புகழெய்தார். -வீரசோ. யாப். 15 மேற். 6. (33) பொய்யாமை பொய்யின் தன்மை பொருந்த உரைத்தது 15. அற்றன் றாத லதுதான் மனஞ்செய்தல் சொற்றன் மாட்டு நிகழ்தல்1 பிறனோர்த்தல் மற்றித் தன்மை படுமாயின் மாண்பிலாக் குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார். -நீலகேசி. 1. மேற். (குண்டலகேசி) 7. (37) செல்வ நிலையாமை நில்லாத் தன்மையே நித்த நிலைமை 16. கல்வியா னல்லனே காமாதி யாற்றீயன் செல்வத் துயர்ந்தான் குலத்தினிற் றாழ்ந்தானாம் வல்லுவா னொன்றொன்று வல்லானிதுவன்றோ நில்லாமை நித்த நிலை. -நீலகேசி. மொக்கல. 113 மேற். சிலமுறை யல்லது செல்வ நில்லா 17. பலமுறையு மோம்பப் படுவன கேண்மின் சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையி னாண்ட நிகரிலார் மாட்டுஞ் சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா விலங்கு மெறிபடையு மாற்றலு மாண்புங் கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும் விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா அனைத்தாத னீயிருங் காண்டிர் நினைத்தகக் கூறிய வெம்மொழி பிழையாது தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே. செல்வநிலை கருதிச் சிவகதிக் குறுக 18. நில்லாது செல்வ நிலவா ருடம்படைந்தார் செல்லா ரொருங்கென்று சிந்தித்து - நல்லார் அருளுளம் புரிகுவ ராயி னிருளறு சிவகதி யெய்தலோ வெளிதே. -யாப். வி. 55. மேற். பரியினும் போகா துவப்பினும் வருமால் 19. பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவண் வரவும் பகற்பின் முட்டா திரவினது வரவும் பசியு மார்கையும் வரவும் பரியினும் போகா துவப்பினும் வருமே. -யாப்.வி. 40 மேற். அரசச் செல்வமும் அழியு மொருநாள் 20. வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டான் மயங்காதே உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேற் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே. -வளையாபதி. 4. யாப். வி. 93 8. (39) யாக்கை நிலையாமை போகும் பூளையாய்ப் போகும் வாழ்வு 21. அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையா மந்தரம் போலு மனைவாழ்க்கை - அந்தரத்து வாழ்கின்றோ மென்று மகிழன்மின் வாணாளும் போகின்ற பூளையே போன்று. -வீரசோ.யாப். 5 மேற். யாப். வி. 55 மேற். இளமை கழிந்தது; இன்பம் ஒழிந்தது 22. கழிந்த திளமை களிமயக்கந் தீர்ந்த தொழிந்தது காதன்மே லூக்கஞ் - சுழிந்து கருநெரியுங் கூந்தலார் காதனோய் தீர்ந்த தொருநெறியே சேர்ந்த துளம். -வீரசோ. அலங். 26 மேற். கோலக் குழலும் காலக் கனலும் 23. நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலுங் கொடுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியின் மேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே. -வளையாவதி. 3. யாப். வி. 93. 9. (43) மெய்யுணர்தல் துறவிக் கின்பம் தோற்றுமெய் யுணர்வே 24. கற்நுத் துறைபோய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த பெருமகன்போல் - முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்வு தோற்றுவதே யின்பம் இறந்தவெலாந் துன்பமலா தில். -பெருந்தொகை. 339. 10. (44) அவாவறுத்தல் பற்றற எவையும் பரிவறத் துறக்க 25. உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும் பிற்கொடுத்தார் முற்கொளவும் உறுதிவழி யொழுகு மென்ப அதனால், நற்றிற நாடுத லன்மை பற்றற யாவையும் பரிவறத் துறந்தே. -யாப். வி. 94. 11. (47) கல்வி முட்டறக் கற்றல் கட்டறு வீடாம் 26. எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். -திருக். 392. பரிமே. மேற். கற்றலும் அரிது! நிற்றலும் அரிது! 27. எழுதரிது முன்ன மெழுதியபின் னத்தைப் பழுதறவா சிப்பரிது பண்பா முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை. -தனிப்பாட பெருந். 352. 12. (63) செங்கோன்மை தண்மையும் வெம்மையுந் தாங்குவான் வேந்தன் 28. நண்ணினர்க்கு நண்ணார்க்கு நாடோறுங் கோடாமைத் தண்ணியராய் வெய்யராய்த் தக்காரோ - டெண்ணிக் கருங்கடல்சூழ் மாநிலத்தைக் காப்பதா மன்றே இருங்கழற்கால் வேந்தர்க் கியல்பு. -யாப்.வி. 94. மேற். கொடிய தென்பது குன்றுசூழ் மாளிகை 29. சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன இறைவநீ காத்தளிக்கு மெல்லை - முறையிற் கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக் கடியவிழ்பூங் காவு முள. இரங்கி யொலிப்ப தின்குரல் யாழே 30. வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெளியவாய்க் கண்ணீர்மை சோர்வ கடிபொழிலே - பண்ணீர மென்கோலி யாழே யிரங்குவன வேல்வேந்தே நின்கோ னிலவு நிலத்து. -தண்டி. 75. மேற். தங்குறை நீக்கிப் பிறர்குறை தீர்த்தல் 31. திருக்கொண்டு பெருக்கமெய்தி வீற்றிருந்து குற்றங்கெடுத்து விசும்புதைவரக் கொற்றங்குடை யெடுப்பித்து நிலநெளியப் படைபரப்பி ஆங்காங்கு களிறியாத்து நாடுவளம் பெருகக் கிளைகுடி யோம்பி நற்றாய் போல வுற்றது பரிந்து நுகத்துக்குப் பகலாணி போலவும் மக்கட்குக் கொப்பூழ் போலவும் உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவுநின்று செங் கோலோச்சி யாறில்வழி யாறுதோற்று வித்துக் குளனில்வழிக் குளந் தொடுவித்து முயல்பாய்வழி கயல்பாயப் பண்ணியும் களிறுபிளிற்றும்வழிப் பெற்றம் பிளிற்றக் கண்டும் களிறூர் பலகால் சென்றுதேன் றோயவும் தண்புனற் படப்பைத் தாகியும் குழைகொண்டு கோழியெறிந்தும் இழைகொண்டான் றட்டும் இலக்கங்கொண்டு செங்கானாரையெறிந்தும் உலக்கைகொண்டு வாளையோச்சியும் தங்குறை நீக்கியும் பிறர்குறை தீர்த்தும் நாடாள்வதே யரசாட்சி. -யாப்.வி. 93. மேற். 13. (69) தாளாண்மை முயன்றால் முடியாப் பொருளெதும் இல்லை 32. தண்டுறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு புண்டரிக நின்வதனம் போன்றதால் - உண்டோ பயின்றா ருளம்பருகும் பான்மொழியாப் பார்மேல் முயன்றால் முடியாப் பொருள். -தண்டி. 87. மேற். யானைக் கோடு பீலியாய்ப் போவதேன்? 33. தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே. -யாப். வி. 67 மேற். 14. (98) பெருமை பெருமை போற்றுவார் பிறங்கி நிற்பார் 34. நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணுஞ் சால்பினும் மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார். -நீலகேசி. 51 மேற். குற்ற முடையருட் குணத்தோர் பலரால் 35. காதன் மதியங் களங்கமுடைத் தானாலும் பூதலத்தை யெல்லாம் பொலிவிக்கும் - ஓதுசில குற்ற முடையா ரெனினுங் குவலயத்துள் நற்றகையார் நல்லரென்றே நாடு. -வீரசோ. அலங். 30 மேற். பெரியோர் பிழைப்பின் பேருல கறியும் 36. பெரியோ ருழையும் பிழைசிறிதுண் டானும் இருநிலத்தில் யாரு மறிதல் - தெரிவிக்கும் தேக்குங் கடலுலகில் யாவர்க்குந் தெள்ளமுதம் வாக்கு மதிமேன் மறு. - வீரசோ. அலங். 32. மேற். பெரியோர் கடமை பிறிதுயிர் காத்தல் 37. எண்ணும் பயன்தூக்கா தியார்க்கும் வரையாது மண்ணுலகில் வாமன் அருள்வளர்க்கும் - தண்ணறுந்தேன் பூத்தளிக்குந் தாராய் புகழாளர்க் கெவ்வுயிரும் காத்தளிக்கை யன்றோ கடன். -வீரசோ. அலங். 20. மேற். பெரியோர் பெருமையைப் பேசும் உலகம் 38. உலகினுட். பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும் இருந்தகைய 1இறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே சிறுதகையார் சிறுதகைமை சிறப்பென்றும் பிறழ்வின்றி யுறுதகைய வுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாவே. -யாப்.வி. 94. மேற். 15. (109) நிரைகோடல் ஒருவர் ஒருவர் உணராச் செலவு 39. ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு. -தொல்.பொருள். 58. நச்.மேற். மள்ளர் பதிந்தார் மயு மிவ்வூர் 40. கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தா - ரரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி யெரிந்தவியும் போலுமிவ் வூர். கொல்வார்ப் பெறாஅர் கொதித்து நின்றார் 41. அரவூர் மதியிற் கரிதூர வீம விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து. ஒத்த வயவர் ஒருங்கவி நிலைமை 42. ஒத்த வயவர் ஒருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் தாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில். கானெலாம் வளைந்த ஆநிரைப் பெருக்கம் 43. குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் களிறொதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம். மள்ளர் வருக வாயிற் கடைக்கே 44. கடிமனைச் சீறூர்க் கடுங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லொட்டா னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை. வேவுரைத் தார்க்கு வேண்டுஞ் சிறப்பு 45. மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற் புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வே யுரைத்தார்க்கு நாம். குடிநிரை புகழக் கொண்ட பெயர்ச்சி 46. நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு மொத்திலங்க மெய்ப்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு. -தொல்.புறத். 59. நச். மேற். எருமைப் பலிக்கே இசைந்த ஐயை 47. அருமை தலைத்தரு மாநிரையு ளையை யெருமைப்புலிக்கோ ளியைந்தா - ளரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று. -தொல். புறத். 59. நச். மேற். வாளை வாங்கத் துடித்தவை பலவாம் 48. எடுத்த நிரைகொணா வென்றலுமே வென்றி வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ணார மார்புந் தடந்தோளும் வேல்விழியும் எண்ணாத மன்னர்க் கிடம். -தண்டி. 39. மேற். 19. (110) நிரைமீட்சி வந்து காணெனும் வாய்மொழி கேட்டது 49. வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்பான் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண். சுவடு கண்டு சூழ்ந்து சென்றது 50. நெடுநிலையா யத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் வயவேந்த னென்று நினக்குரிய வாக நிரை. நின்ற மறவர் நிலஞ்சேர் வென்றி 51. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலிழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு. புல்லொடு நீர்தந்து போற்றுக ஆவை 52. கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து. கொடைக்கு வரம்பு குறிப்போர் எவரே? 53. கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பில னென்றே மருண்டா னிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு. -தொல். பொருள். 58. நச். மேற் அஞ்சு தக்க செஞ்சோற் றுடனிலை 54. 1ஆவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த வெட்சி மறவர் வீழவு முட்காது கயிறியல் பாவை போல வயிறிரித் துளைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல முற்படு பூசல் கேட்டனர் பிற்பட நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண் மாக்கட னெருப்புப் போல நோக்குபு வெஞ்சிலை விடலை வீழ்ந்தனன் அஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே. கைதூ வாத கள்விலை யாட்டி 55. பகைவர் கொண்ட படுமணி யாய மீட்டிவட் டந்த வாட்டிறற் குரிசின் முழவுத்துயின் மறந்த மூதூ ராங்கண் விழவுத் தலைக்கொண்ட விளையாட் டாயத் தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர் மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே கைவல் கம்மியர் பலகூட் டாரமொடு நெய்பிழி நறுவிரை நிலம்பரந் தன்றே காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப் பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய வாடுறு நறவின் சாடி தோறும் கொள்வினை மாற்றாக் கொடையொடு கள்விலை யாட்டியுங் கைதூ வாளே. -தொல். பொருள். 58. நச். மேற். 17. (111) பகைவயிற் சேறல் விண்மதி சூழ்ந்த வெண்மீன் இனங்கள் 56. மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பரிசினா - னாற்கடல்சூழ் மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோல் மேம்பட்டான் வேந்து. ஏனாதிப் பட்டத் தானாதி சீர்மை 57. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன். இன்னும் பகைவர் எங்கே உள்ளனர்? 58. நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் தோள்சுமந் திருத்த லாற்றா ராள்வினைக் கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே. -தொல். பொருள். 63. நச். மேற். 18. (117) வஞ்சினம் இருகையேன் எறிவெனோ ஒருகை யானை? 59. தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரவால் - யானை யொருகை யுடைய தெறிவாலோ யானு மிருகை சுமந்துவாழ் வேன். -தொல்.பொருள். 60. நச். மேற். 19. (119) எயில் கோடல் ஏணி இன்றியும் எயிலில் ஏறல் 60. சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பறந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு. கருமலை சூழும் கடலன படைகள் 61. கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புவிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு. ஏனை மகளிர்க் கிரங்கினர் மகளிர் 62. மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு. பிணத்தைக் குவித்துப் பெருங்குழி மூடல் 63. வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து. கூடார் நாட்டைக் கோடியர்க் கீதல் 64. மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து. பூப்புகை வேண்டுமோ புகழ்மீக் கொற்றவை? 65. செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன் பூவொடு சாந்தம் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு. வீழுங் கதிரை ஒக்கும் வேந்தன் 66. கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர்சுருக்கி 1யேந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு. -தொல்.பொருள். 68. நச். மேற். நோக்குநர் நோவத் தாக்கருந் தானை 67. மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்று சென்றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை இரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே. - (பொன்முடியார் பாட்டு) இன்று மிளைபோய் நாளையூர் கொள்குவம் 68. கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள் இனியே அமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்கால் கருங்கண் ஆடவர் உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே யுருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சிரங்க வூர்கொள் குவமே.1 -தகடூர்யாத்திரை - தொல் பொருள். 67. நச். மேற். 20. (120) எயில் காத்தல் வளநகர் செல்ல வாயில் இல்லை 69. இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலும் மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயில் எவனாங்கொல் மற்று. கார்சூழ் குன்றாம் கடிமதிற் காட்சி 70. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து. கூற்றே அரணிற் கூடிய தன்மை 71. இருகன்றி னொன்றிழந்த வீற்றாப் போற் சீறி யொருதன் பதிச்சுற் றொழியப் - புரிசையின் வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று. வேத்தமர் செய்யும் விரகுதான் என்னாம் 72. பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலத்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோல் நின்று. பதுக்கையும் வேண்டாப் பற்றின் சீர்மை 73. தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு மதுக்கமழுந் தார்மன்னற் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று. அவுணர் போல அந்தரந் தோன்றினார் 74. புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலை வேலோர் - கொற்றவ னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் கூடாத போரெயின் மேல் வாழவுணர் போன்று. விருந்தாய் வந்தவர் விண்விருந் தானார் 75. வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர். வையமுங் கொடுத்தாள் வானுங் கொடுத்தாள் 76. வருபெரு வேந்தர்க்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூ ரீந்தா - ளொருவன்வா ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா ளவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு. வலைவன் வலைபோல் வளைத்துக் கோடல் 77. தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா னுண்டற்ற 1 சோற்றா ரொழிந்து. ஆரெயில் வேட்ட அரசர் மறத்துறை 78. அறத்துறைபோ லாரெயில்வேட்ட வரசர் மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங் கின்றிவர் வீழ்ந்தார் எதிர்ந்து. -தொல். பொருள். 68. நச். மேற். வேண்டார் வணக்கி விறன்மதில் கோடல் 79. பூத்தாட் புறவிற் புனைமதில் கைவிடார் காத்தவிக் காவலர் ஏனையார் - பார்த்துறார் வேண்டார் வணக்கி விறன்மதில் தான்கோடல் வேண்டுமாம் வேண்டார் மகன். -யாப்.வி. 94. 21. (121) அமர் உள்ளும் புறம்பும் உடலம் வீழ்ந்தது 80. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று. -தொல்.பொருள். 71. நச். மேற். ஒருவன் போதும் ஒட்டார் தமக்கு 81. 1கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலும் இங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம். எருமை அன்ன இகல்மாண் வீரன் 82. சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால் ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்கால் பின்வருவார் யார். -தொல்.பொருள். 72. நச். மேற். வீமன் மாமனைப் புல்லிப் பொருதது 83. கொல்லேறு 1பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப் - புல்லிக்கொண் டாறாத போர்மலைந் தாங்கரசர் கண்டார்த்தா ரேறாட லாய ரென. -பாரதம் காட்டுத் தீயென் கதழ்ந்து செல்லல் 84. அறத்திற் பிறழ அரசெறியுந் தானை மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி. -தொல்.பொருள். 72. நச். மேற். உறையைக் கழிக்கவும் ஓடிய வெள்ளம் 85. ஆளுங் கரியும் பரியும் சொரிகுருதி தோளுந் தலையும் சுழித்தெறிந்து - நீள்குடையும் வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக வெள்வாள் உறைகழித்தான் வேந்து. -தண்டி. 54. மேற். கண்கள் சிவந்தன களமும் சிவந்தது 86. சேந்தன வேந்தன் திருநெடுங்கண் டெவ்வேந்தர் ஏந்து தடந்தோள் இழிகுருதி - பாய்ந்த திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும் மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து. -தண்டி. 39. மேற். செம்மையர் சொல்லெனச் செல்லும் பகழி 87. செம்மை யுடையார் சிறியாமேற் சொல்லுஞ்சொல் வெம்மை யுடைய விறற்பகழி - தம்வன்மை காலிட்டா னென்னாது காய்ந்தவர்மேற் பாய்ந்தனவே மேலிட் டுயிர்போக மிக்கு. - வீரசோழியம். அலங். 12. மேற். ஒருத்தி வேட்கையின் இருவர் பொருதது 88. ஆதி சான்ற மேதகு வேட்கையி னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின் மதியமு ஞாயிறும் பொருவன போல வொருத்தி வேட்கையி னுடன்வயிற் றிருவர் செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு மரவணி கொடியோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந் தும்பியடி பிணங்க மண்ணிற் றோற்றமொடு கொடிகொடி பிணங்கு வீழ்வன போல வொருவயின் வீழ்ந்தடு காலை யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே. -பாரதம் இன்னோ ரினிப்பிற ரில்லென வியத்தல் 89. மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபின் அருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் தன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறித்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்து காலைக் கோயிற் கம்பலை யூர்முத லுணர்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்த விசும்பி னியன்றதலை யுலகமு மறிந்ததா லதுவே. - பாரதம். தொல். பொருள். 72. நச். மேற். 22. (122) தானைமறம் நிற்கு முடலம் பொற்பா மரவடி 90. சென்ற வுயிர்பேலத் தோன்றா துடல்சிதைந்தோ னின்ற வடிபெயரா நின்றவை - மன்ற லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த மரவடியே போன்றன வந்து. -தொல்.பொருள். 72. நச். மேற். கடலில் கலங்கள் களத்தில் தேர்கள் 91. கார்க்குலமும் பாய்திரையுங் காட்டும் கடற்படையும் போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமால் - ஏற்ற கலமுடைத்து முந்நீர் கதிராழித் திண்டேர் பலவுடைத்து வேந்தன் படை. -தண்டி. 48. மேற். பனிக்கடல் ஒக்கும் படைக்கடல் மாண்பு 92. அனைத்துலகுஞ் சூழ்போ யருநிதியங் கைக்கொண் டினைத்தளவைத் தென்றற் கரிதாம் - பனிக்கடன் மன்னவநின் சேனைபோன் மற்றது நீர்வடிவிற் றென்னு மிதுவொன்றே வேறு. -வீரசோழியம். அலங். 23. மேற். தானே களத்தைத் தாங்கிய மறவன் 93. 1மாநாக முன்னுயர்த்தான் சேனை களமுழுதுந் தானா வருமதனைத் தாங்கினான் - மேனாள் அருகணையா வண்ண மடற்போரின் வென்று வருகணையான் பெற்ற மகன். -வீரசோழியம். பொருட். 15. மேற். வேல்திரித் திட்டு விரும்பி நகுதல் 94. 2மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேறிரித் திட்டு நகுதலு நகுமே. -தகடூர்யாத்திரை. தொல்.பொருள். 63. நச்.மேற். 23. (123) குதிரைமறம் ஒருகணந் தாக்கி யுருவொழி பாய்மா 95. பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் றொல்லை யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்து புரண்டு. -தொல். பொருள். 72. நச். மேற். காற்குளம் பனைத்தும் கடமை வல்லன 96. முற்குளம்பி னாற்கிளறி மோந்தங்கோர் முக்காலும் பொற்சுண்ண மாடிப் புரண்டெழுந்து - தற்சென்னி நேர்நிறுத்தி நின்றுதறிக் கங்கைநீ ருண்டனவே பானிறத்த மால்வெண் பரி. -வீரசோழியம். அலங். 10 மேற். 24. (124) யானை மறம் காவிரி நாடன் களிறும் முகிலும் 97. ஏங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும் பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா வளைபட்ட தாளணிகண் 1மாறெதிர்ந்த தெவ்வர் தளைபட்ட தாட்டா மரை. -வீரசோழியம். அலங். 31. மேற். வல்லி அறுந்தால் மங்கலம் அறுந்தது 98. கானிமிர்ந்தாற் கண்பரிய வல்லியோ புல்லாதார் மானனையார் மங்கலநா ணல்லவோ - தான மழைத்தடக்கை வார்கழற்கான் மானவேற் கிள்ளி புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு. -தண்டி. 24. மேற். அகல உழவும் மதிலின் திறப்பும் 99. உருவத்தார்த் தென்னவன் ஓங்கெழில் வேழத் திருகோடுஞ் செய்தொழி லெண்ணி - னொருகோடு வேற்றா ரகல முழுமே யொருகோடு மாற்றார் மதில்திறக்கு மால். -முத்தொள்ளாயிரம் 15. களிறு போகக் கழுகுந் தொடரும் 100. படுபருந்தும் சூர்ப்பேயும் பல்விலங்கும் செந்நாய் கொடிகழுகு மின்னவெலாங் கூடி - வடிவுடைய கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு போமாறு போமாறு போம். -தனிப்பாடல். பெருந். 522. மன்னர் மதில்கள் என்ன வாகுமோ? 101. ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன் பொன்னோடை யானையின் மேற்கொண்டா னொன்னாங்கொல் மன்ன ருறையு மதில். எதிர்க்க வல்லார் எவரே யுள்ளார்? 102. மட்டுத்தா னுண்டு மதஞ்சேர்ந்து விட்டுக் களியானை கொண்டுவா வென்றான் களியானைக் கியாரோ வெதிர்நிற் பவர். -யாப். வி. 94. மேற். மன்னர் தலையை மகிழ்ந்துநீ ராட்டல் 103. கையது கையோ டொருதுணி கோட்டது மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை - பைய வுயர்பொய்கை நீராடிச் செல்லுமே 1யெங்கோன் வயவெம்போர் 2மாறன் களிறு. -தொல். புறத். 72. இளம். நச். மேற். பிறக்கிடங் கொடாத பெருந்திறல் வீமன் 104. வானவர் போரிற் றானவர்க் கடந்த மான வேந்தன் யானையிற் றனாஅது பல்படை நெரிவ தொல்லான் வீமன் பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மர்பொடு நிலஞ் சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன் பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே. - பாரதம் இன்னா இன்பம் எய்திய களப்போர் 105. நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந் திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச் சூர்மருங் கறுத்த நெடுவேள் போல மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய வாளுகு களத்து வாள்பல வீசி யொன்னா மன்னரு மாடினர் துவன்றி யின்னா வின்ப மெய்தித் தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே. -பாரதம். தொல். பொருள். 72. நச். மேற். 25 (125) மூதில் மறம் கூற்றினும் தாயே கொடுமை மிக்காள் 106. ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினாள் கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு காணா விளமையாற் கண்டிவனோ நின்றிலனேன் மாணாருள் யார்பிழைப்பார் மற்று. சிறுவன் வீழச் சிந்தை மகிழ்ந்தாள் 107. ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல் வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே கேளா வழுதார் கிடந்து. -தொல்.பொருள். 60. நச். மேற். 26. (126) களம் பேயே காக்கும் பெருந்தனி நிலைமை 108. புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு முளையோரி யுட்க வுணர்வொடுசா யாத விளையோன் கிடந்த விடத்து. -தொல். பொருள். 79. நச். மேற். தீராப் பசியைத் தீர்க்க வம்மின் 109. ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம். -தொல்.பொருள். 91. நச். மேற். 27. (127) இரங்கல் உடலைப் பெறாமல் தலையைப் பெற்றாள் 110. நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன் றலையொழிய மெய்பெறாள் சாய்ந்தா - டலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றத னுண்ணின்ற தன்றோ வுயிர். மறவன் களம்பட மகளும் பட்டாள் 111. தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை வாரா வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ வலகற்ற கற்பி னவள். ஈன்ற ஞான்றில் இனிதாம் உவகை 112. வானரைக் கூந்தன் முதியோள்சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு மூவகை யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. மெலியும் யாக்கையிற் கழியு முயிரே 113. மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப் புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை இருள்புக்குத் துணிந்த வெண்குவரற் கல்லளை யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக லெழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை யவரின்று நிகழ்தரு முறவே யதனா லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச் சேணிடை யகன்ற துயிலே யதுவினி யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள் வாரா தாயினும் யாதாங் கொல்லோ மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் னாருயிர் நிலையே. -தொல். பொருள். 79. நச். மேற். 28. (128) வென்றி போந்தை புனையப் புவியெலாம் நடுங்கும் 114. ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுந் தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ போந்தையங் கண்ணி புனைந்து. எள்ளி இகழும் எண்ணம் வேண்டா 115. குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத லிறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று. பறைவா ரணமும் சிறைவா ரணமும் 116. ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறைகெழு வாரணப்போர் செய்து -தொல். பொருள். 60. நச். மேற். குன்று துகள்செயுங் கூரிய கணையன் 117. குன்று துகளாக்கும் கூர்ங்கணையான் வேலெறிந் தன்று திருநெடுமா லாடினான் - என்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ டினிச்சென் றமர்பொரா யென்று. -தொல்.பொருள். 76. நச். மேற். 29. (129) புகழ் இவன்போல் இந்நிலை யானும் பெறுக 118. பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுபடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே. -தொல். பொருள். 79. நச். மேற். 30. (131) வாழ்த்து மார்பிற் கிடந்த மறுவைக் காட்டு 119. குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய் - மரம்பெறாப் போரிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட மார்பிற் கிடந்த மறு. கணிச்சியோ டிவற்குக் கண்ணே வேற்றுமை 120. 1ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா மாற்றல்சால் வானவன் கண். கோழியான் அல்லன் ஆழியான் இவனே 121. இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று. -தொல்.பொருள். 60. நச். மேற். கற்கால் கொண்டே இற்கண் புக்கனர் 122. வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக் கோட்புலி யன்ன குரிசில்கல் - ஆட்கடிந்து விற்கொண்ட வென்றி வியன்மறவ ரெல்லாரும் இற்கொண்டு புக்கா ரியைந்து. -தொல்.பொருள். 63. இளம். மேற். கதிரை நோக்கிக் கனிந்த வாழ்த்து 123. 1மேகத்தான் வெற்பான் இமையான் விழுப்பனியான் நாகத்தான் நீமறைய நாட்கதிரே - யோகத்தாற் காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் 2காணாத கண்ணெனக்கு நல்கு. பிறையை நோக்கிப் பெருகிய வாழ்த்து 124. 3பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம். சார்பிலாச் சார்பைச் சாற்றிய வாழ்த்து 125. 4சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்கும் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தான் அறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர். - தொல்.பொருள். 88. நச். மேற். மறப்புகழ் சேர்ந்த மலையே வாழி 126. தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை - ஆழிசூழ் 1மண்டில மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனெ னின்மாட்டோர் கல். இன்னிசை பாடி எடுப்போம் கல்லே 127. கல்லாயு 2மெற்றெரிந்து காண்டற் கெளிவந்த 3வல்லாண் விடலைக்கு வம்மினோ - வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாந் தொட. வரையறை இலாற்கு, வரையறை காண்போம் 128. வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ - வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கும் ஓராற்றாற் செய்வ துடைத்து. காப்புநூல் யாத்துப் பூப்பலி பெய்க 129. காப்புநூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மின் நாளை வரக்கடவ நாள். கண்ணீரி னின்று கன்னீர்ப் படுத்தார் 130. வாளமர் வீழ்ந்த மறவோன்கல் ஈர்த்தொழுக்கிக் கேளிர் அடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்கல் நீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று. மன்னட்ட வென்றியால் கன்னட்டார் கடத்து 131. சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து. செய்வினை வாய்ப்பச் செய்த கற்சிலை 132. கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்துஞ் செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது. பீடம் வகுத்துப் பிறங்கொளி யேற்றுமின் 133. அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்றுகொள் பல்லா னினமெல்லாம் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ பீடம் வகுத்து. இடைகொள லின்றி மடைகொளல் வேண்டும் 134. கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டு மகிழ்ந்து. பொற்கோட் டிமயமே போன்று வாழிய 135. ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுகல் - ஓவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் 1பெயர்பொறித்த பொற்கோட் டிமயமே போன்று. -தொல். பொருள். 60. நச். மேற். தெண்ணீர் ஆடு மீன் தீர்த்தமாம் அதுவே 136. பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினும் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீஇத் தெண்ணீ ராடுமின் தீர்த்தமா மதுவே. -தொல். பொருள். 60. நச். மேற். ஆக்கள் வாழிய அரும்பயன் சிறந்தே 137. நாகின நந்தி இனம் பொலியும் போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப வாயர் அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்று நெய்பயந்து நல்லமு தன்ன வளையாகு நல்ல புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி யன்ன பெரும்பயந்த வாகலாற் றொன்மரபிற் காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது. ஊழி யூழி வாழி உறந்தை 138. புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தரசுதொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின் னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ டூழி யூழி வாழி யாழி மாநில மாழியிற் புரந்தே. - தொல்.பொருள். 81. நச். மேற். சூலம் பிடித்த காலக் கடவுள் 139. எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன் பொன்றா ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்ந் தாடிய வாட னீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவா யீரணி பெற்ற வெழிற்றகைய னேரு மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே. -தொல்.பொருள். 81. நச். மேற். புறத்திரட்டு பின்னிணைப்பு - 1 முற்றும். குறிப்புரை ஆசிரியமாலை. 16 பாடல்கள் *(9) மூவிலை நெடுவேல் - மூன்று இலை வடிவாக அமைந்த நெடிய வேல் (சூலம்). ஆதிவானவன் - முழுமுதல் இறைவனாகிய சிவபெருமான். இடமருங்கு ஒளிக்கும் - இடப் பாகத்தே மறைந்துறையும். இமயக் கிழவி - இமவான் மகளாகிய உமையம்மை. ஒப்பு: பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும். -புறம். 1. நுதற்பிறை - நுதலாகிய பிறை. நுதல் - நெற்றி. மிகை - மிகுதி கதுப்பு - கூந்தல். நுதலாகிய பிறையின்மேல் அமைந்த கூந்தலில் அணிந்த பிறை, மிகைப்பிறை ஆயிற்று. பிறை - ஒரு தலைஅணி. வளைக்கை - வளையல் அணிந்த கை. ஆளி - சிங்கம். தானவன் - அசுரன்; எருமைத் தலையுடன் வந்த மகிடாசுரன். மாள - சாவ. கடந்த - வென்ற. மலர்தலை உலகு - அகன்ற இடத்தை யுடைய உலகு. இமயக் கிழவி மெல்லடி இவ்வுலகு காக்க என முடிக்க. ஒப்பு: அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை. - சிலப். 20. 34 - 37. (49) நுமக்கு நீர் நல்குதிராயின் - உங்களுக்கு நீங்களே நன்மை செய்வதானால். பிறக்கும்: பிறங்கும் என்பதன் வலித்தல் விகாரம். பிறங்கும் - விளங்கும். மொழியினும் - சொன்னாலும். தொழிற் படின் - செயலாற்றினால். சினைவிடூஉப் பயக்கும் - பிறவியில் இருந்து விடுதலை தரும். இவண் - இவ்வுலகம். உம்பர் - மேலுலகம். துறைதோறும் துறைதோறும் - எல்லா வழிகளிலும் நிறுத்துமின் - நிலைபெறச் செய்யுங்கள். அறிந்திசினோரே - அறத்தியல்பை அறிந்தோரே. அறத்தியல்பு அறிந்தோரே, நுங்கட்கு நீங்களே நலம்புரிய விரும்பின் எளிதென இகழாதும், அரிதெனக் கூறாதும் அறம் செய்க. அறத்தை மனத்தால் நினைப்பின் ஒளி விளங்கும். சொன்னால் நன்மை பெருகும். செயலுக்குக் கொண்டு வந்தால் வீட்டின்பம் கிட்டும். அதன் இயல்பை உணர்த்தினால், இவ்வுலகிலும் மேலுலகிலும் அதற்கு இணை அதுவேயாம். ஆதலால் எல்லா வழிகளிலும் அறத்தை நிலைபெறச் செய்வீர்களாக. ஒப்பு: ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல். -திருக். 33. (283) மேதக - சிறப்பாக. மணித்தோடு பெய்து - உருத்திராக்க மணி அல்லது துளசிமணித் தொகுதிகளை அணிந்து. வாள்முகம் - ஒளியுடைய முகம். கெழீஇய - பொருந்திய வல்லி - கொடி. ஒரு சிறை - ஒரு பக்கம். சேக்கை - படுக்கை. மெல் உரி - மெல்லிய மரவுரி. படை - கலப்பை. குலமுறை - பரம்பரை. வரையாது - அளவு இல்லாது. வரை - மலை. வென்று - ஐம்பொறிகளையும் வெற்றி கொண்டு. உடுத்த - சூழ்ந்த. வரைப்பின் - உலகின். இனிதன்று - இன்பமில்லாதது. மணித்தோடு பெய்தல், கான்யாற்றாடல், நிலத்துப் படுத்தல், மெல்லுரி உடுத்தல், உழாவிளையுளாம் காய், கனி, இலையுண்ணல், சுடரோம்பல், விருந்தோம்பல், மலையிலும் காட்டிலும் வாழ்தல் என்பனவற்றைப் பேணி ஐம்பொறிகளை வெல்லும் துறவு வாழ்வை அரசியல் வாழ்வோ டொப்பக் கூறினார். நாலிரு வழக்கில் தாபதப் பக்கம் என்பதற்கு இஃதெடுத்துக் காட்டு. - தொல். பொருள். 75. நச். (357) அரை - இடுப்ப. துகில் - மெல்லிய ஆடை. ஆரம் - மாலை (முத்து மாலை) முருகு நாறும் - மணம் பரப்பும். தொடையல் - மாலை. (பூமாலை) புடையன - பக்கங்களில் உள்ளவை. பால்வெண் கவரியின் கற்றை - பால்போலும் வெண்ணிறச் சாமரை. கால் - (குடைக்) காம்பு. தானை - படை. இனைய - இத்தகைய. இமைப்பதும் செய்தனர் ஆதலால் தேவரல்லர் மாந்தரே என இயைக்க. களிறு - யானை. மிசை - மேல். நெருநல் - நேற்று. பசிப்பிணி - பசியாகிய நோய் (உருவகம்). உணங்கி - வாட்டம் அடைந்து. துணி - கிழிந்த கந்தை. மாசுமீப் போர்த்த யாக்கை - அழுக்கு மேலே படிந்த உடல். ஒருசிறை - (ஒதுக்கமான) ஒரு பக்கம். யானை எருத்தம் பொலிய எனத் தொடங்கும் நாலடிச் செய்யுளை நோக்குக. (நாலடி. 3) ஒப்பு: குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். - வெற்றிவேற்கை. (369) யாணர் வரவின் - இவனது புதிய உலாவின்போது. மேனாள் - முன்னாள். நயந்த பேதையர் - விரும்பிய இளம் பெண்டிர். உண்கண் - மையுண்ட கண், ஒளியுடைய கண்ணுமாம். வருபனி - கண்ணீர் போர்வை - தோல். பசையற உணங்கி - கொழுமை சிறிதும் இன்றி வாடி. பழந்தலைச் சீறியாழ் - பழைமை யான சிறிய யாழ். பதிகெழு மூதூர் - குடியுடன் வாழ்ந்த பழைய ஊர். மன்றத்துப் பொதியில் - மன்றமாகிய பொதியில். அஃதாவது ஊர்ப் பொதுவிடம். புறஞ்சிறை - புறத்தே ஒரு பக்கம். நயந்த பேதையர் உண்கண் துயில் கொண்டில, இவன் உணங்கி, அழிந்து, மூப்புறப் பொதியிற் புறஞ் சார்ந்தனன். புறம். 251, 252 ஆம் பாடல்கள் இணைத்து நோக்குதற் குரியன. (392) உள்ளது கரக்கும் இக் கள்ள யாக்கை - உள்ளே உள்ளே குறைகளை குறைத்துத் தோற்றமளிக்கும் வஞ்சத் தன்மை வாய்ந்த இவ்வுடல். மற்றமூன்று - வாதம், பித்தம், சிலேத்துமம். வழங்கலின் - இயங்குதலின். உண்டி நல்லரசு - உணவாகிய நல்ல அரசு. தண்டத்தின் வகுத்த நோன்பிணி - தண்டத் தலைவனாக அமைத்த வலிய நோய். உணவு, அரசன்; அவனால் நியமிக்கப் பெற்ற தண்டத் தலைவன் பிணி; அப் பிணியால் உடல் சூழப்பட்டிருத்தலின் முன்னர் அதனைத் தடுத்து நிறுத்தினாலும் பின்னர்த் தோன்றுவது கண்கூடாம். யாக்கை நிலையாமை கூறிற்று. (402) நெருநல் - நேற்று. நின்ற - நிகழ்கின்றநாள். செல்லா நின்றது - சென்று கொண்டிருக்கின்றது. முன்சென்று வருநாள் கண்டவர் யாரே - அடுத்து வருநாளை அது வருமுன்னே சென்று இத்தகையது என்று கண்டவர் எவரே? ஒருநாள் கைப்படுத்து உடையோர் இன்மையின் - தமக்கு இறுதியாகும் ஒருநாளைக் கையிற் பிடித்து வைத்துக் கொண்டவர் போலத் தெளிந்தவர் ஒருவரும் இல்லாமையால் நாடு மின் - (செய்தற்கு) விரும்புங்கள். வழாஅ - குற்றமற்ற. இன்பமும் புணர்மின் - இன்பத்தையும் அடையுங்கள். அதான்று - அது அன்றி. நீரகம் - கடல். விசும்பு - வானம் பிடர்த்தலை - உச்சி. புடையது - பக்கத்துள்ளது. நேமி மால்வரை - சக்கர வாளம் என்னும் நெடுமலை. கோள்வாய்த்துக் கொட்கும் கூற்று - கொலைசெய்தலில் தவறாது சுழன்று திரியும் இயமன். மீளிக் கொடு நா - வலிய கொடிய நாக்கு. புகினும், ஏறினும், அப்புறம் புகினும் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற்கு அரிது; அதனால் நாடுமின்; கொடுமின்; புணர்மின் என்க. ஒப்பு: நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு -திருக். 336 மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண் டன்ன - புறம். 42. (679) தன் - மேகம். தற்பாடு பறவை - வானம்பாடி. தற்பாடிய தளியுணவின் புள் (பட். 3-4) பசை அற - நீர்ப்பசை அற்றுப்போக. சூற் கொள்ளாது - (மேகம்) கருக் கொள்ளாது. மாறிக்கால் பொர - மாறிக் காற்றடிக்க. சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ - ஆடை போன்ற வெண்ணிறமான இடத்தைக் கொண்ட சிறிய புல்லிய மேகம். காலூன்றா - பெய்யா. சேட்சென்று கரக்கும் - தொலைவிடத் தோடி மறையும். தீதுதர - தீமை பெருகுமாறு. பிறவும் எல்லாம் நெறிமாறு படுமே - மற்றை அறநெறிகள் அனைத்தும் மாறிவிடும். கடுஞ்சினம் கவைஇய - கடிய சினம் பொருந்திய. காட்சி - தோற்றம். கொடுங் கோல் வேந்தன் காக்கும் நாடு பறவை பசிப்ப, மழை காலூன்றா; வளவயல் விளையா; வாய்மை கரக்கும்; நெறிமாறும் என்று இயைக்க. (827) பனுவல் - புலமை, நூலறிவு. காமுற - விரும்ப. வாய்மடுத்து மாந்தி - வாயிலிட்டு அருந்தி. வைகி - தங்கி. வைகலும் - நாள்தோறும். அழுக்காறின்மை - பொறாமை இல்லாமை. அவா இன்மை - ஆசை இல்லாமை. நிதியம் - செல்வம். ஒருதாம் ஈட்டு - ஒன்றாகத் தாம் தேடி. தோலா நா - புலமைப் போரில் தோல்வி காணாத நாக்கு. மரீஇ - மருவி, பொருந்தி, பொதிந்து - மூடி. ஞாங்கர் ஞாங்கர் - இடந்தோறும். கொட்கும் - (மாறி மாறிப் பிறப்பில்) சுழலும். குடிப் பிறப்பாகிய ஆடை உடுத்து, அறிவாகிய முடிசூடி, ஒழுக்க மாகிய அணி பூண்டு, வாய்மையாகிய உணவு உண்டு, தூய்மையாகிய காதலின்பம் நுகர்ந்து, நடுவு நிலையாகிய நகரில் வதிந்து, அழுக்கா றின்மை, அவாவின்மை யாகிய பெருஞ் செல்வங் களையும் தேடி வாழும் தோலா நாவின் மேலோர் அவையில் ஒருநாள் உடன் இருக்கும் பேறு பெறுவேம் ஆயின் புலால் பொதிந்து நிலைபேறின்றிப் பல்கால் சுழலும் அல்லல் பிறப்பும் பெறுவேமாக என்பதாம். எட்டுவகை நுதலிய அவையத் தானும் என்பதற்கு மேற்கோளாக இப்பாடலைக் காட்டினார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். -தொல். பொருள். 76. (846) விரவி - கலந்து, ஓராங்கு - ஒருதன்மையாக. மலங்கு - ஒரு வகைமீன். மிளிர - விளங்க; தியக்கிய - கலக்கிய. பருமுதல் எட்டு - பக்கம் செறிந்து நாற்றுநிமிர்ந்து. இறைஞ்ச - தலைதாழ. வாங்கி - வளைத்து. கால் - அடித்தூறு. துமித்த - அறுத்த. சினை - கிளை. பிறக்கிய - விளங்கிய. எருத்தின் - எருதின். கவை அடி - பிளவுபட்ட குளம்பு. அவைத்த - மிதித்த. உணா - உணவாகும்நெல். குவைஇய - கூட்டிய, திரட்டிய. மகிழ் தூங்க - மகிழ. புறந்தரூஉம் - காக்கும் ஏரோர் களவழி - உழவர் ஏர்க்களத்தில் செய்யும் செய்கை. ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றி - தொல். பொருள். 76. சூடு - மணியுடன் கூடியது; அஃதாவது அரிக்கட்டு. போர்பு - அரி அடித்து மணியாக்கியது. அஃதாவது நெற்போர். (1242) சில்லி - சிள்வண்டு. நெடுவிளி - பேரொலி. ஆனா - குறை வில்லாத. மரம்பயில் - மரங்கள் செறிந்த. பரற் புறங்கண்ட - பருக்கைக் கற்கள் மேலே எழும்பிக் கிடக்கும். வடியா நெடு நெறி - செப்பம் செய்யப் பெறாத தொலை வழி. செல்லா - சென்று. புடையது - பக்கமாக அமைந்த. வகுந்து - வழி. வகுந்து செல் வருத்தத்து - சிலப். 11:167. காமுற - விரும்ப. பானாறு செவ்வாய் - பால் மணக்கும் சிவந்த வாய். புன்றலை - மெல்லிய இளந்தலை மகாஅர் - மக்கள். கடிமனை - விருப்பமிக்க மனை. நிரை - பசுக்கூட்டம். கவைஇய - திரண்ட. செல்லா, போகி, பருகி, கவையிய நிரை கன்று சூழ் கடிமனை சென்றன என்க. (1332) மாமுது தாதை - மிக முதிர்ந்த தந்தை (தயரதன்). மா இரலை - பொன்மான் (மாரீசன்). வேட்டம் - வேட்டை. தலைமகள் - சீதை. சேணிடை - நெடுந்தொலைவிடம். முற்றியது - முற்றுகை யிட்டது. இறைவன் - சிவன், நீலமணிமிடற்று ஒருவன் - புறம். 91. உலகு பொதி உருவம் - உலகினை உள்ளடக்கும் உருவம் உலகு பொதி உருவத் துயர்ந்தோன் - சிலப். 26:55. தொகைஇ - சேர்த்து. தலைநாள் - முன்னாள். வெண்கோட்டுக் குன்றம் - பனிக்குவடு களையுடைய இமயம். மீளி - வல்லாளன் (இராவணன்). ஊர் - இலங்கை. மீளியாகிய வண்தோள் ஆண்டகை. மாதர் - அழகு. கெண்டையின் வரிப்புறத் தோற்றமும், குவளை நிறனும் பாழ்பட அகழி விளிம்பழிந்து நீருகுத்தது. அரக்கியர் கண் பாழ்பட விளிம் பழிந்து நீருகுத்தது. விளிம்பழிந்து நீருகுத்தல் அகழிக்கும் கண்ணுக்கும் பொதுவாயிற்று. அலங்குதடறு - ஒளிமிக்க உறை. ஞான்று - பொழுது. (1334) இருசுடர் - ஞாயிறும் திங்களும். வழங்கா - செல வோட்டாத. கடந்த ஞான்று - வஞ்சித்தல் இன்றி எதிரே நின்ற பொழுது. கடத்தல் - வஞ்சியாது எதிர்நிற்றல்; - புறம் 8:5. உரை. எண்கு - கரடி. மிடைந்த - செறிந்த. சேனை - குரங்குப்படை. பச்சை போர்த்த தண்ணடை - பசும்போர்வை போர்த்தாற் போன்ற வளமிக்க வயல் நிலம். எச்சார் மருங்கினும் - எல்லாப் பக்கங் களிலும். எயில் - மதில். இறுத்தல் - தங்கல். அரணம் - மதில். உல்சினம் - அழிக்கும்சினம். முற்றிய ஊர் - முற்றுகை இடப்பெற்ற ஊர். தோலின் பெருக்கம் - புறத்தோர் படை, மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டு சேறல் என்பார் நச். தொல். பொருள். 67. சேனை எயிற் புறத்திருத்தல் கடல் சூழ் அரணம் போன்றது என்க. (1344) மூவா நகர் - பழமையான நகர், அமராவதி. நாகநாடு - கிழக்கின் கண்ணதொரு நாடு. பவணலோகம் என்றும் கூறுவர். புடையன - பக்கங்களில். குறும்பு - அரணிருக்கை. கொள்ளை சாற்றி - கொள்ளையடித்து. விழுநெதி - சிறந்த செல்வம். கண்ணுதல் வானவன் - சிவபெருமான். இருந்தகுன்று - கயிலைமலை. தடக்கை அனைத்தும் - பெரிய கைகள் இருபதும். தோலாத்துப்பு - தோல்வி காணாத வலிமை. தாள்நிழல் வாழ்க்கை - அடி நிழலில் வாழும் வாழ்க்கை; அஃதாவது அவன் அருளில் வாழும் வாழ்க்கை. யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை - புறம். 379. மள்ளர் - வீரர். வீசுதல் - வழங்குதல். தேர்வீசிருக்கை - புறம். 69, 114. நொச்சி வகுத்தனன் - மதிற் போர்க்குத் திட்டமிட்டான். அரக்கர் கோ - இராவணன். (1369) இருபாற்சேனை - இராம இராவணப்படைகள். நனி மருண்டு நோக்க - மிகத் திகைப்புற்றுப் பார்க்க. உரவுக்கடுங் கொட்பின் - வலிய கடுமையான சுழற்சியால். வன்மரம் - தோமரம். தண்டாயுதம் எனினும் ஆம். துணிபட - துண்டாக. நோன்படை - வலிய படைக்கருவிகள் அகம்பன் - சுமாலி என்பான் மகன். அனுமனால் அழிக்கப்பெற்றவன். ஓச்சி - செலுத்தி. குளிப்ப - மூழ்க. நெடுஞ்சேட் பொழுது - மிகப் பெரும்பொழுது. அனுமன் அங்கையின் அழுத்தலில் தலை உடல்புக்குக் குளிப்ப உயிர்போகு நெறிபெறாது களத்து நெடும்பொழுது நின்றனன் என்க. (1493) சில்செவியன்னே பெருங்கேள்வியன்னே - பிறரைப் போல் சில (இரண்டு) செவிகளே உடையவன் எனினும் விரிந்த கேள்வியுடையவன். இவ்வாறே குறுங்கண் நெடுங்காட்சி, இளையன் அறிவின் முதியன் என்பனவும் ஒட்டிக் கொள்க. மகளிர் ஊடற் பொழுதினும் அதுதணித்தல் கருதிப் பொய் கூறான். வாய்மை வழுக்க - வாய்மை தவற. பேராளன் - பெருமையானவன். ஈண்டு நலம் - மிகுநலம். வடாஅது - வடக்கு. துவன்றிய - நிறைந்த, செறிந்த. கள்ளி - ஊரின் பெயர். தாழி - வள்ளல் பெயர். காதலின் மேவலன் - அன்பு நண்பாளன். கூடலின் வடாஅது கள்ளியம் பெரும்பதித்தாழி பிறர் பிறர்க்கீந்து, விருந்துண்டு மிகினே தானும் உண்ணும் என்க. ஒப்பு: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. - திருக். 212 இராமாயணம் - பாடல்கள் 2. இராமாயணத்தில் இடம்பெறாத பாடல்கள் மட்டும் (332) குறைத்தவன் - வெட்டித் துண்டமாக்கியவன். கொணர்ந்து - கொண்டு வந்து. ஒன்றிய பொருள் - உரியவிலை. நன்றிது வென்றவன் - ஊன், உடற்கு நல்லது என்று கூறியவன். நாவிற் பெய்தவன் - உண்டவன். இதன்கண் அறுவர் என எண்ணப் பெறுதலால் கொணர்ந்து விற்றவன் என்பதில் கொணர்ந்தவனும் விற்றவனும் எனக் கூட்டிக் காண்க. (725) எய்த இன்னல் - வரக்கூடாத கொடிய துன்பம். சேண் நெறிக்கண் ஏகிட - நெடுந்தொலை வழியிற் செல்ல. கண்ணி - சீதை. வல்லவாய - வலிமை பெற்றன. இவன் - இலக்குவன். பன்னசாலை - பன்னகசாலை. (குடிசை) இரும்பல் காஞ்சி - பாடல்கள் 8. (5) கொண்மூ - மேகம். நீர்கொண்டது என்னும்காரணப் பொருட்டு. நெற்றி - உச்சி. நிழல் நாறி - ஒளியுடன் தோன்றி. நிழல் - ஒளி; நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் - சிறுபாண். 95-6. நாறி - தோன்றி; மலை நாறிய வியன் ஞாலத்து - மதுரைக். 4. சீக்கும் - அழிக்கும், நீக்கும். காய்கதிர் - கதிரோன்: வினைத்தொகை. கோல - அழகிய. மணித்தோகை - நீலமணி போன்ற தோகை. மாக் கடற்சூர் - பெரிய கடற்கண் மறைந்திருந்த சூரபன்மன். சேவடி - சிவந்த திருவடி. நீல மயில்மேல் தோன்றிச் சூரனை அழித்த செவ்வேட்கு நீல முகில்மேல் தோன்றி இருள் ஒழிக்கும் செங்கதிர் உவமையாயிற்று. இவ்வாறே, பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு (முருகு. 2) என்று நக்கீரர் பாடுவார். ஒப்பு; நீனிறக் கொண்மூ நெற்றி மூழ்கும் வானிற வளர்பிறை - பெருங். 1: 41: 74. நளவெண்பாவின் பாயிரப் பாடலாக இதனைக் காட்டினார் சிலர் (பெருந். 98) (601) ஆர்கலி - கடல்; ஒலி மிக்கது என்னும் காரணப் பொருட்டு. ஞாலம் - உலகம். ஆர்கலி ஞாலம் - கடலால் சூழப் பட்ட உலகம். பெறலருமை யாது - பெறுதற்கு அருமையானது எது? எதுவும் இல்லை என்பதாம். அரோ: அசைநிலை. வார்திரை - நெடிய அலை. மாமகர வெள்ளம் - பெரிய மீன்கள் நிரம்பிய கடல். நாப்பண் - இடையே. போர் மலைதல் - போரிடல். அறக்காவலும். அருளும் நிரம்பிய அரசற்குக் கடற்போர் வெற்றியும் எளிதில் கை கூடும். செங்கோல் பேணிய வேந்தன் சேரன் செங்குட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனாகத் திகழ்ந்ததை அறிக. (1476) கருங்கலி முந்நீர் - கருமையும் ஆரவாரமும் உடைய கடல். இருங்கடி - சிறந்த காவல்.மண்மகள்: உருவகம். ஏனம் - பன்றி, பெரும் பெயர் ஏனம் - வராகமூர்த்தி. எயிறு - பல்; ஈண்டுக் கொம்பு. சுரும்பு அறை - வண்டு ஒலிக்கும். தொண்டையன் தோள் மண்மகளை ஏந்தி யபெரும்பெயர் ஏனத்து எயிறனைய என்க. இதனால், தொண்டை மான் உலகனைத்தும் ஒரு குடைக்கீழ் ஆட்சி புரிந்தான் என்பது கூறினார். வரலாறு: இரணியாக்கன் நிலவுலகைச் சுருட்டிக் கொண்டு பாதலம் செல்ல, திருமால் வராக மூர்த்தியாகித் தம் கொம்பால் மீட்டுக் கொணர்ந்த புராணக் கதை இதனுள் அடங்கியுள்ளது. சாந்திபுராணம் - பாடல்கள் 9 (173) உரித்து - உரியது. தானம் - கொடை. கிளைக்கு ஈயில் - சுற்றத்தார்க்குத் தந்தால். ஈனம் - இழிவு. உய்க்கும் - செலுத்தும். எச்சம் - புகழ். மானம் - பெருமை. துய்க்கின் - தான் நுகர்ந்தால் ஊனத்து நரகத்து - இழிந்த நிரயத்தில். வேந்தே பிறர்பொருள் உவக்கில் இவை உண்டாம்; ஆதலால், வெஃகாமை வேண்டும் என்பதாம். (292) ஊறு - தொட்டுணர்வு அல்லது உற்றறிதல். அசுணம் - ஒரு வகைப் பறவை. விலங்கென்பாரும் உளர். அளி - வண்டு. பதங்கம் - விட்டில். ஐம்பொறிகளில் ஒவ்வொன்றால் கெடுபவை இவை. இவை எல்லாம் ஐம்பொறிகள் அனைத்தும். கெளவை - துயர். வரையாது - விலக்கி ஒதுக்காது. மாந்தர் சாயலாரை வரையாது வைப்பதெவன் என இயைக்க. (306) எரிவிடம் - எரிபோன்ற விடம். எரியும் விடமும் எனினுமாம். அருநரகு - நீங்குதற்கு அரிய நரகம். நவை - குற்றம். உளமொழி மெய்நெறி ஒழுகி - உள்ளத்தாலும், உரையாலும் உடலாலும் நேரியவழியில் நடந்து. உறுபொருள் சிதைக்கும் - தம்மிடத்து உள்ள பொருளையும் அழிக்கும். நனி நன்று - மிக நன்று. (307) பிளவு கெழு - வேறுவேறாக அமைந்த. எரிகொளுவல் - தீ வைத்தல். ஈர்தல் - அரிதல். உளைய - வருந்த. தடிதல் - துண்டாக்கல். உறுதுயரம் - மிகப் பல துன்பம். கிளையறவு தரும் - உறவினர் இலராகச் செய்யும். அரிய புகழ் - கிட்டுதற்கு அரிய புகழ். நனி விடுதல் - நெஞ்சால் நினைக்காமலும் மிக ஒதுக்குதல். (442) விண்ணில் இன்பமும் - வானுலக இன்பமும். வீதல் - அழிதல். மாய்தல் - அழிதல். எண்ணில் - ஆராய்ந்தால். ஈறு இலாதது - முடிவற்றது. அஃதாவது வீட்டின்பம். மற்றவை - முடிவுள்ளவை. அஃதொன்றே அழியாப் பேரின்பம். நண்ணி - அடைந்து. நயக்கற் பாலது - விரும்பத்தக்கது. (448) கழறுவார் - இடித்துரைப்பார் (பாகர்). முனிந்திடும் - சினந்து பார்க்கும். நீரார் - தன்மையார். சுணங்கன் - நாய். முத்தியை விளக்கு நீரார் களிறு போல்வார் பற்றிடைச் சுழலு நீரார் சுணங்கன் போல்வார். (742) அருக்கன் - கதிரோன். மழுங்கல் - ஒளி கம்முதல். அமரர் கோன் - இந்திரன். அமரர் கோன் அமைச்சர் வழியின் ஆயது அருக்கன் பாம்பினால் மழுங்கக் கண்டுகொல் என இயைக்க. இந்திரன் கண்கள் ஆயிரம் போலவே அமைச்சரும் ஆயிரவர் போலும். (1057) தீ தன்னை உண்பிப்பவற்றை எல்லாம் எரித்து அழித்தலால் நன்றி சிதைப்பதாம். உண்டி கையகத் திருப்பினும் அதனை உண்ண வொட்டாது வெறுப்பூட்டுவது நோய். வேய் - மூங்கில். உராய்ந்து தீப்பற்றுதலால் இனத்தோடு அழிப்பது வேய். (1058) நாளு நாளும் - நாள் தோறும். நவின்று - பாராட்டி யுரைத்தது. பகைவர் நண்பர் எனப் பாராது போருக்கு நெருங்கிய எவரையும் வாள் அழிக்கும். இவரும் அத்தகையர் என்பதாம். தகடூர் யாத்திரை. பாடல்கள் 44 (10) வியத் தக்க - வியக்கத்தக்கவை. வெண்மை - அறிவின்மை. வெண்மையில் தீர்ந்தார் - அறிவின்மை நீங்கினார். அறிவாளர். வியத்தக்க அல்ல - வியக்கத் தக்கவை அல்லாதவை. தாம்போல எல்லாம் - தம்மைப் போல அறிவில்லாதார் கூறுவதை எல்லாம் அறிவுடையார் வியக்கத்தக்கவற்றையே வியப்பர். அறிவிலார் தம்மைப் போலும் அறிவிலார் கூறும் அனைத்தையும் வியந்து பாராட்டுவர். (19) சிதாஅர் - உடை. (மரவுரி) வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் - புறம். 69. பாறிய சிதாரேன் - புறம். 150. ஏற்று இரந்துண்டும் - பிறரிடம் கையேந்தி இரந்துண்டும். படிவத்தர் - தவநெறியர். உண்ணின் - உண்ணுங்கால். தீ ஊட்டி உண்ணும் - முதற்கண் தீக்கு உண்பித்துப் பின்னர்த் தாம் உண்ணும். தீயவை ஆற்றுழி - பிறர் தமக்குத் தீயவை செய்யுங்கால். ஆற்றி - பொறுத்து. கழுவுபு தோற்றம் - அவர்க்குக் கழுவாய் தேடும் பெருமை. அவிர் - விளங்கும். கோலர் - கோல் உடையவர். துவர் மன்னும் ஆடையர் - செறிந்த காவியாடையர். பாடுஇன் அருமறையர் - அரிய மறைமொழிகளை இனிய இசையுடன் பாடுபவர். நீடின் உருவம் - சிறந்த உருவம். தமக்குத் தாமாய - தமக்குத் தாமே இணையான. இருபிறப்பாளர் - அந்தணர். மாதீது ஒரூஉக - பெருந் தீமைகளைச் செய்யாது ஒழிக. (227) தறுகண்ணர் - வீரர், நூற்றுவரிற் றோன்றும் - நூற்றுவர்க்கு ஒருவரே தோன்றுவர். ஆற்றுளித் தொக்க - கடனாற்றுதற்குக் கூடிய. அவை - கூட்டம். மாற்றம் - பதிலுரை. ஆற்றக்கொடுக்கும் - சரியாகக் கொடுக்கும். தேற்ற - தெளிவாக. பரப்புநீர் வையகம் - நீர் சூழ்ந்த நிலஉலகம். தேரினும் - ஆராய்ந்தாலும். எள்ளா - இகழாத. நூற்றுவரில் ஒருவனே சிறந்த வீரன். சான்றோர் கூடிய அவையில் தெளிவாகத் தருக்கம் செய்து வல்ல வல்லவன் ஆயிரத்தில் ஒருவனே. ஆயினும், இரப்பவரை இகழாத ஒருவனை உலக முழுவதும் தேடினும் இரான் என்க. (666) இறப்ப - மிக. இசைபடுவது - புகழ்பெறுவது. அறக் கோலால் - அறநெறிக்கண் அமைந்தசெங்கோலால். செற்றம் - மனக்கறுவு. இன்னாத வேண்டா - இனிமையில்லாதவற்றை விரும்பாத. இகல் வேல் மறமன்னர் - வெற்றி வேலையுடைய வீர வேந்தர். ஒன்னார்க்கு உயர்ந்த படை - பகைவர்மேல் எடுத்துவிட்ட படை. இன்னாத வேண்டா மன்னர் ஒன்னார்க்கு உயர்ந்தபடை சிறப்பிற் சிறுகுவ துண்டோ? என இயைக்க. (667) அரசிற் பிறத்தல் - அரசர் குடியில் பிறத்தல். அறம் புரிந்தன்று - அறம் புரிந்ததன் பயன் அன்று. அம்ம - இடைச்சொல். துறந்த தொடர்பொடு - துறவி போன்ற இயல்பொடு. துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் - நெருங்கிய உறவிற் சிறந்தவர்க்கும். பாடு செயலீயார் - (அவர்க்கெனச் சிறப்பாகக்) கடப்பாடு செய்ய இயலார். பிறந்த வேல் வென்றி - பிறந்த குடியின் போர் வெற்றி. துன்னிய கேண்மையர்க்கும் பாடுசெயலீயா அரசிற் பிறத்தல் அறம் புரிந்தன்று! என்று இகழ்வதுபோல் செங்கோற் சிறப்பு உரைப்பதாம். மன்பதை காக்கும்நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதக வில்லெனச் செங்குட்டுவன் கூறுவது நோக்கத்தக்கது. -சிலப். 25. 103 - 4 (756) வெலச் சொல்லும் - வெற்றி கொள்ளத்தக்க சொல்லும். பழித்த சொல் தீண்டாமல் சொல்லும் - பழித்துக் கூறிய சொல் கலவாமல் கூறும் சொல்லும். நறுஞ்சாந்தணியகலம் - நறுமண மிக்க சந்தனம் அணிந்த அழகிய மார்பு. புல்லலின். தழுவுதலின். ஊடல் - தழுவாது இருத்தல். சொல்லின் பயன்காணும் தான், சொல்லும் சொல்லும் சொல்லானேல் அகலம் புல்லலின் ஊடல் இனிது என இயைக்க. (776) கால வெகுளி - காலன் கொள்வது போன்ற வெகுளி. பொறைய - சேர. நும்பி - நின்தம்பி. சாலுந்துணையும் - வேண்டிய அளவும். கழறி - இடித்துரைத்து. மேற் சேறல் - தாக்குதற்காக அவன் மேற் செல்லல். அது கண்டாய் - அவ்வாறு செல்லாமையே. நூல் கண்டார் கண்டநெறி - நூலாராய்ச்சி மிக்கவர்கள் தெளிந்த அறநெறியாகும். (785) ஓடை - நெற்றிப்பள்ளம். வெளிறு - வயிரம் இல்லாமை. வெளிறில் - வயிரம் இல்லாமை இல்லாத. அஃதாவது வயிரம் உள்ள. களிறுகெழுவேந்தே - யானை களையுடைய அரசே. கேண்மதி - கேட்பாயாக. சினவாது - சினங் கொள்ளாது. இருதலைப்புள் - இருதலைகளையுடைய ஒரு பறவை. ஒரு குடர்ப் படுதர ஓர் இரை துற்றும் - ஒரு குடலில் சேருமாறு ஓர் இரையை உண்ணும். தூற்றுவ துற்றும் - பரிபா. 20:51. அழிதரு வெகுளி - அழிவு தரும் வெகுளி. தாங்காய் - பொறாய். வழிகெடக் கண்ணுறு பொழுதில் - வழி தோன்றாவண்ணம் கண் கேடுற்ற பொழுதில். கைபோல் எய்தி - கை வழிகாட்டுவது போல் முன் வந்து. நோதக - வருந்த. முன்னவை - முற்கூறிய வழி தோன்றாமையும், கண் கேடும். புணை - மிதவை. தலைப்படுதல் - கூடுதல். தாழ்தல் - தடுத்துக் கரையேறுதல் வேந்தே சினவாது கேண்மதி; நீ துணையாகலுமுளை; நம்முன் நுமக்குத் துணையாகலும் உரியன். வினை பெரிதாயினும் அடங்கல் வேண்டும் அனையையாகு என்று உடன்பிறந்தார் சினமொழித்துச் சந்து செய்வித்தார். (786) மொய் வேல் - வலியவேல், திரளான வேலுமாம். முரசெறிந்து - முரசத்தை அறைந்து. ஒய்யென - விரைவாக. வலிதலைக் கொண்டது - வலிமையை மேற்கொண்டது. என்றி - என்று உரைக்கின்றாய். இயல்தார் மார்ப -திறமாகத் தொடுக்கப் பெற்ற மாலையையணிந்த மார்பனே. எவ்வழியாயினும் - எவ்வா றாயினும். அவ்வழி - அவ்விடத்து. திண்கூர் எஃகின் - வலிய கூர்மையான வேலைக்கொண்ட. வயவர் - வீரர். புண்கூர் மெய் - புண்ணுற்ற உடல். உராஅய் - உராய்ந்து. பைந்தலையெறிந்த - செவ்விய தலையை வெட்டிய. மைந்து - வீரம். மறவர் மலிந்து - வீரர் ஊக்கத்தால் நிறைந்து. மார்ப, வயவர்க் காணின், மறவர் மலிந்து வேந்துடை அரண் தீண்டற்காகாது ஆதலால் முற்றுதல் ஒழி என்பதாம். இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது என்பார் நச். (தொல். பொருள். 67) (844) வாரி - வெள்ளம். எஞ்சாமை நாறுக - ஒன்று குறையாமல் முளைக்க. நாறு ஆர - நாற்று நிரம்ப. முட்டாது - முட்டுப்பாடு இல்லாது. ஒட்டாது - சுருங்காது. கிளை பயில்க -தூறு செறிக. பால் வார்பு இறைஞ்சி - பால் நிரம்பி மணியாகித் தலை தாழ்ந்து. ஏர் கெழு செல்வர் - உழவர். போர் - நெற்குவியல். வைகுக - கிடப்பதாக. உருகெழும் ஓதை - அச்சம் உண்டாக்கும் ஓசை. வெரீஇ - அஞ்சி. இரியும் - அகன்றோடும். யாணர்த்தாக - புது வருவாயினதாக. வாரியால் வளஞ்சிறந்து நாடு பொலிவுறுதலை விரித்துக் கூறினார். (995) அரும்பொன் அன்னார் கோட்டி - தங்கமே அனையவர் கூடிய சங்கம். ஆர்வுற்றக் கண்ணும் - நுகரும் வாய்ப்புற்ற போதும். கரும் புலவர் - மனமயக்கம் உடையார். புல்லறிவாளரைப் புலவர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. துயில் மடியா - துயிலில் மடிந்து, நெட்டுறக்கம் கொண்டு, வேறு இருந்து விண்டுரைப்பர் - வேறுபட இருந்து வெடிக்கப் பேசுவர். கரும்பு தின்பார் முன் நாய் இருத்தலால் பயன் கொள்ளாது அதுபோல் இவரும் பயன் கொள்ளார் என்பதாம். விண்டுரைத்தல் குரைத்தற்குக் குறிப்பு. (1241) புள் - புள்ளின் (பறவையின்) நிமித்தம். கேளா - கேட்டு. ஏயினன் - ஏவினன். தூஉய் - தூவி. வெட்சி மலரும் தினையும் தூவி, மறியை வீழ்த்தி விரிச்சி கேட்கும் முறைமை கூறப்பெற்றது. வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற் கீண்டிருள் மாலைச் சொல்லோர்த் தன்று என்பது புறப்பொருள் வெண்பாமாலை. (வெட்சி. 4) ஓர்தல் - கேட்டல். எங்கோன் ஏயினன் ஆதலின் விரிச்சி ஓர்தல் வேண்டா பகைப புலநிரை எயிற்புறம் தருதும் என வீரர் தம் பெருமிதம் தோன்றக் கூறியதாம். (1251) மருவுதல் - பொருந்துதல், கூடிப்பழகுதல் எப்பிறப் பாயினும் மருவின் மாலையோ இனிதே - எந்தப் பிறப்புடைய உயிராயினும் அவற்றொடு பழகுதல் இன்பமேயாம். ஆகோள் மள்ளர் - பசுவினைக் கவர்ந்து சென்ற வீரர்; அவராவார் வெட்சியார். வெட்சி நிரைகவர்தல் என்பது. அளவாக்கானம் - அளவிடற் கரிய காடு. புறத்து இறுத்தனெம் - புறத்தே தங்கினேம். தாம் தம் கன்று குரல் கேட்டன போல - பசுக்கள் தங்களுடைய கன்றின் குரலைக் கேட்டவை போல. சென்றுபடு நிரை நாம் புறத்து இறுத்தனமாகத் தாம் தம் கன்றின் குரல் கேட்டன போல (எம்குரல்) செவியேற்றன. ஆதலால் எப்பிறப்பாயினும் மருவின் மாலையோ இனிதே என்க. (1257) வேத்தமர் - தலைமையான போர்; பகை வேந்தனொடு போர் என்றுமாம். ஏத்தினர்க்கு - வாழ்த்தினவர்க்கு. ஈத்தும் என்று - கொடுப்போம் என்று. மான் - குதிரை. சால - மிக. படைக்கலத்திற் சாலப்பல மான்றேர் உடனீந்தான் என்க. மீண்டுவந்து ஈத்தும் என்று எண்ணுமோ என்றது அவன் கொடையாண்மை குறித்தது. (1258) உடனிருந்து தலைவன் உண்டல் வீரர்க்கு உவகை செய்வதாம். அது பெருஞ்சோற்றுடனிலை எனப்படும். தண்டேறல் மண்டி - தண்ணிய மதுவின் கலங்கல். வீரர்க்கு வேந்தர் மதுக் கலங்கல் தருவது வழக்கு. எமக்கே கலங்கல் தருமே என்பது புறப்பாட்டு. (298) வழீஇயதற்கோ - தவறு செய்ததற்கோ. இகழ்வதுபோல் புகழ்ந்தது. கொண்டி - கொள்ளை. தண்டமிழ் வரைப்பகம் கொண்டியாக புறம். 198. மறலி - இயமன். மன்னர்க்கு உறவிலராயினர் கண்ணோட்டம் இலராயினர் - என்பது பழிப்பது போலப் புகழ்தலாம். ஓர்ந்து - ஆராய்ந்து. பெருஞ்சோற்று நிலையாவது, திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று என்பது புறப்பொருள் வெண்பாமாலை. (58) (1274) ஆனாது - குறையாது. முழைபடுமுதுமரம் - பொந்து பட்ட முதிய மரம். எவ்வாயும் - எல்லா விடங்களிலும். மடை நுழைந்து - துளைபடக் கருவிகள் புகுந்து. இடனுடை விழுப்புண் - அகன்றபோர்ப்புண். பாவை - பதுமை. மெழுகால் செய்யப் பெற்ற பதுமை ஒழுகிவிடா வண்ணம் துணியைப் பொதிந்து வைத்தல் போல புண்ணில் நெய் நிற்குமாறு பொதிதல் வேண்டும். சால்பு - ஊக்கம். கிழி - துணி. புகழோன் புண் கிழி பல கொண்டு பொதியல் வேண்டும். ஒப்பு: இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன் -புறம். 180. (1301) செவ்விக் கடாக் களிறு - போர்த்தன்மை மிக்க ஆண்யானை. செம்மத்தகம் - செவ்விய நெற்றி. கெளவை - பழி. வேலை, யானை மேல் விடுத்து வந்ததாகக் கூறும் பழி. கொண ரேனேல் - கொண்டுவராவிடின். எவ்வை - தங்கை என்றும் அக்காள் என்றும் கூறுவர் (ஐங்குறு. 88 ஔவை. சு.து; பெருமழை) கடிபட்ட இல்லத்து - திருமணம் பட்ட வீட்டில். கைபார்த்து இருப்பன் - அவர்கள் கையை எதிர்பார்த்து வாழ்பவனாக இருப்பேன். யான் கொணரேனேல் கை பார்த்து இருப்பன் என்பதாம். பிறர் கையை எதிர்பார்த்து வாழ்தல் இழிவு! அவ்விழிவு எனக்கு எய்துமாக என்றானாம். (1304)கலிமான் - மணம் செருக்கிய குதிரை. நாகத்தன்ன - மலைபோன்ற. காய்சினம் - அழிக்கும் சினம். யானையை யுடைய கலிமா னோயே. ஒப்பு: கடாஅ யானைக் கலிமான்பேக - புறம். 145. வெள்ளத்தானை - புது வெள்ளப் பெருக்குப் போன்ற படை!. வேந்து ஒப்பான் முன் - வேந்தனுக்கு ஒப்பான வீரன் முன், புகேஎன் ஆயின் - யான் புகாதேன் ஆயின். உள்ளது இரப்போன் - தம்மிடம் உள்ள ஒன்றை இரப்போனது. இன்மை கண்டும் - இல்லாமையைக் கண்டும். கரப்போன் சிறுமை - மறைப்பவனது இழிவை. யானுறு கவ்வே - யான் அடைவேனாக. யான் உள்ளழித்துப் புகேஎனாயின் கரப்போன் சிறுமையான் உறுக (1314) இறை தலைவைத்தபின் - அரசன் தலைமை யாளனாக்கிச் சிறப்புச் செய்தபின். கூற்றுறழ் முன்பின் - கூற்றுவனையும் எதிர்க்கும் ஆற்றலொடு. அடுதல் - அழித்தல். அடாக்காலை - அழிக்க முடியாப் பொழுதில். விளிதல் - சாதல். விளியாக்கால் - சாவாக்கால். தோற்றம் - பெருமை. தேசு - ஒளி. மாற்றம் - புகழுரை. அடுதல், அடாக் காலை விளிதல், விளியாக்கால் சான்றோர் மாற்றமளவும் கொடுப்ப வோ? (1315) விறல் - வலிமை. ஒற்கத்து - தளர்ச்சியின்போது. பிற்பிற் பின்னர். செம்மல் - பெருமிதம். தாமேயும் உயிர்போகு; அத்தகைய உயிர் போகாமை கருதிப் பரிவருப செய்பவோ? போரில் இறத்தலால் உதவிய வேந்தனுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன்ஆவான்; பலர் புகழ் பேறு கிடைத்தவன் ஆவான்; பலரும் தொழுமாறு தெய்வநிலை எய்தியவனும் ஆவான் என்பதாம். இப்பாடலைத் தானை மறத்திற்கு மேற்கோளாகக் காட்டுவார் இளம்பூரணர். தொல். பொருள். 72. (1316) நகையுள்ளும் - மகிழ்ச்சியான பொழுதிலும். இகலிய வேற்றுக் களத்தில் - முரண்பட்ட பகைவர் போர்க்களத்தில். தமராக - துணையாக. படுத்தல் - உண்டாக்கல். ஆர - பொருந்த. படுங்கொல் - மூடுமோ? (உறங்குமோ). கவன்று - கவலைப்பட்டு. படுக்கலான், படான், படுங்கொல் என இயைக்க. பகை நலிய என்பதும் தமாறாக என்பதும் இகலிய, தமராக எனத் திருத்தப்பெற்றன. (1317) வேல் + தானை - வேற்றானை. நெரிதர - நெருங்கிவர. கடும் புனல் - பெருக்கெடுத்து வரும் வெள்ளம். கற்சிறை - கல்லணை. வருபுனற் கற்சிறை கடுப்ப - மதுரைக். 725. பொற்பார் - அழகு அமைந்த. முறிஇலை - தளிரிலை. கண்ணி - தலையில் சூடும் பூ. கண்ணிகார் நறுங்கொன்றை புறம். 1. மன்னர் அறியுநர் - மன்னராலும் அறியப் பெற்றவர். செருக்கு - பெருமிதம். யாற்றுக் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லால் மன்னர் அறியுநர் என்னும் செருக்கு எளியவோ? இப்பாடல் வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமைக்கு மேற்கோள். தொல்.பொருள். 63. நச். (1318) பெய்தண்தார் - சூடிய தண்ணிய மாலை. பிறந்த பொழுதேயும் - இளமை சுட்டியது. முற்றுழிக் கண்ணும் - முதுமையுற்ற போதும். உற்றுழி - உற்ற இடத்து, உதவி செய்தற்கு உரிய இடத்து. கோமான் - அரசன். மன்னர்க்கு உடம்பு கொடுத்தார் பிறந்த பொழுதேயும் மூத்தார். கோமாற் குற்றுழிக் காவாதவர் முற்றுழிக்கண்ணும் இளையர். செயலால் இளையர் முதியர் என்பதாம். காவாதவர் என்பதினும் சாவாதவர் என்பது பொருந்திய பாடமாம். (1319) பரவை வேல்தானை - கடல்போன்ற வேற்படை. எறியென்றாய் - அழிக்க என்றாய். விரை விரைந்து - மிக விரைந்து. அன்றி - அல்லாவிடின். என்னைச் சொல்லிய நா - பகலில் அஞ்சுவேன் எனக் கருதி இரவில் எறியக் கூறிய நா. புகுவதோ - மீண்டும் உள்ளே புகுமோ? அறுத்திருப்பேன் என்பதாம். இரவில் மறைந்து போரிடல் இழிவு எனக் கருதினானாம், ஒரு வீரன் கூற்று. (1320) வான் வணக்கியன்ன - வானையும் வளைப்பது போன்ற. வலிதரு - வலிமையமைந்த. எஃகம் - வேல். தானும் - அவ்யானையும். நலம் - பெருமிதம். என்கையில் எஃகம் உளது. அதற்கு இல்லை. அன்றியும் யான் மனிதன். அது விலங்கு. எனக்கு இரண்டு கைகள். அதற்கு ஒரு கை. அதனால் அதனை வெல்லல் எனக்கு நாணுத்தரும். (1321) எறியான் - வெட்டான். களிற்றெருத்தின் - யானைப் பிடரின். அம்ம - வியப்பு இடைச்சொல். தருக்குதல் - செருக்குக் கொள்ளுதல். சான்றோன் மகன் - வீரனின் மகனாகிய வீரன். காலாள், கால் ஆள் என்னும் பொருள் தருதலால் (முழு ஆள் அல்லாமையால்) அவனை வெட்டியழியான். யானை மேல் இருப்பவன் கீழே நிற்பவன் வீழ்த்தினானே என நாணங் கொள் வானே என உணர்ந்து அவனையும் வெட்டி யழியான். காளை போன்ற இளையனது கருத்தின்படி களத்தே வருதலால் களிற்றையும் வெட்டி வீழ்த்தான். இவ்வீரன் செருக்கிருந்தவாறு என்னே! (1342) பல் சான்றீரே - பல குணங்களால் நிறைந்து அமைந்தவரே. புரிசை - கோட்டை. ஞாயில் - சூட்டு என்பதோர் மதில் உறுப்பு. ஞாயிற், ஏப்புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டு என்பர் நச். (சீவக. 104) அம்பு எய்தற்கு மதின்மேல் சமைத்த ஒரு மதிலுறுப்பு; இதனை அடியார்க்கு நல்லார் குருவித்தலை என்பர் (பட். ஆரா. 95 மறைமலை.) கணையிற்றூர்ந்த - கணையின் தாக்குதலால் மேடான. அகழி கன்றுமேயுமாறு புற்றரை யாயிற்று. கிடங்கு - அகழி. நுதல் - நெற்றி. யாமங் கொள்பவர் - யாமந்தோறும் காவல் செய்தலை மேற் கொள்ளும் காவலர். (நற். 132) ஒழிய - பணிஒழிய. குரல் - கொத்து. நொச்சி - ஒருவகைப்பூ. எயில் (மதில்) காக்கும் வீரர் அணிவது. ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று என்பது புறப்பொருள் வெண்பாமாலை. (நொச்சி. 1.) (1343) பொறிவரி - பொலிவுடைய நெற்கதிர். அன்ன - போன்ற. உளை - பிடரிமயிர். வயமான் - வெற்றிப்பாடுடைய குதிரை. தோலா உரன் - தோல்வி கண்டறியாத வலிமை. ஒன்னார் -பகைவர். உட்கும் - அஞ்சச் செய்யும். சுரை - பூண். சுடர்ப் பூணோன் - ஒளியமைந்த அணிகலம் பூண்டோன். இறை - தலைவன். மா - குதிரை. கறுவு - செற்றம். கதுவ - பற்றி எரிய. குறுகலோம்புமின் - நெருங்கா திருங்கள். குறை நாள் மறவீர் - வாழும் நாள் குறைந்த வீரர்களே. நெருநல் எல்லி - நேற்றுப் பகலில். நரை - கருமை கலந்த வெண்மை. நூறி - அழித்து. தெரியல் - மாலை. ஆரணங்கினன் - மிகத் துன்புறுத்தினன். மறவீர் நெருநல் எல்லி யானை நூறி ஒழிந்தோன் தம்பி குறுகல் ஓம்புமின். (1370) கார்த்தரும் புல்லணல் - கருமையான அரிய இளந்தாடி. கண்ணஞ்சாக் காளை - அஞ்சாத வீரன். தார்ப்பற்றி - தூசிப் படையைச் சேர்ந்து. ஏர்தரும் - அழகமைந்த. நாட்பு - போர். கணம் - கூட்டம். மா - குதிரை. கிணைவன் - துடி கொட்டுபவன். காளை, தோள் நோக்கி, யானைக் கணம் நோக்கி தேர்க்குழாம் நோக்கி, மாநோக்கி, கணை நோக்கி, வேல்நோக்கிக் கிணைவனை நோக்கி நகும் என்க. அவனை நோக்கி நகுதல் பெருங் கொள்ளை கிட்டும் என்பதற்காம். (1371) இகழ்தல் ஓம்புமின் - எளியனென இகழ்வதை விடுங்கள். பண்ணமை புரவி - ஒப்பனை பண்ணுதலமைந்த குதிரை. எல்லிடைப் படர்தந்தோன் - நேற்றுப் பகற் பொழுதில் களத்திற்குத் துன்பம் ஊட்டின வீரன். கல் - ஆரவாரக் குறிப்பு. மலைபோன்ற என்றுமாம். வேந்தூர் யானை - அரசன் ஊர்ந்து செல்லும் யானை. அல்லது - பிற யானைகளுக்கு. வேல் ஏந்துவன் போலான் - வேல் ஏந்தமாட்டான். இலங்கு இலைவேல் - இலை வடிவில் விளங்கு மாறு செய்யப்பெற்ற வேல். பிற யானைகள் மேல் ஏவான் எனத் தறுகண்மை குறித்தவாறு. (1372) அற்றம் - காலம், சமயம், ஞாயில் - மதிலகத்து ஓர் உறுப்பு. சூட்டு என்பது. எதிரிய - எதிர்ப்பட்டுத் தோன்றிய. திரு - போர்ச் செல்வம். இகழ்தல் ஓம்புமின் - இவன் வேற் படை என் செய்யும் என இகழ்வதை விடுங்கள். விழுச்சீர் - மிகச்சிறந்த. விண்பொரு - விண்ணளவுயர்ந்த. கண்படை பெறாஅன் வைகினான் - கண்கள் மூடப் பெறானாக (உறங்காதவனாக) இருந்தான். எஃகம் திறந்த - வேல் பிளந்த. நவில் குரல் - அரற்றொலி. இகழன்மின், எஃகம் திறந்த புண்கூர் யானை நவில்குரல் கேட்டு வேந்தன் கண் படை பெறாஅன் வைகினன் என்க. (1373) கட்டி - ஒருவகைப் பறவை. பகைவர்க்குக் கட்டி (பரு) போன்ற என்றுமாம். காரி - கருநிறக் குதிரை. காரியூர்ந்து பேரமர் கடந்த என்றும் காரிக் குதிரைக் காரி என்றும் வருவன காரி குதிரையைச் சுட்டல் அறிக. (புறம். 158.) சிறுபாண். 110) தொட்டது - தொடுத்தது. சுட்டியதுவும் - குறித்துக் காட்டியதுவும். காமன் - காத்துக் கொள்ளுங்கள். பிறிது எறியலன் - மற்றெதனையும் தாக்கான். தானை முழுவதையும் விடுத்து யானை காமின் மேலோன் பிறிது எறியலன். (1374) அஞ்சுதக்கனளே - அஞ்சத் தக்கவளே. யறுகா வலா என்பதிலும் பயறு காவலர் என்பது பொருந்திய பாடம் அவர் பரணை போடுவராகலின. பந்தர் - வறுந்தலைக்கு உவமையாயிற்று. முதியளாகலின். வெஞ்சமம் - கொடிய போர். என் செய்கென்னும் - என் செய்வேன் எனச் சோர்ந்த. அஞ்சல் - அஞ்சாதீர். களிறு - மகனைக் குறித்தது. வேந்தர்க்கு அஞ்சல் என்பதோர் களிறு ஈன்றனள். முதியாள் அஞ்சு தக்கனள். (1375) வல்லோன் - தேர்ச்சியாளன். கொல்வினை - கொல்லனது வினைத்திறம். முடியக் கருதி - முற்ற நோக்கி. கைவலன் ஏந்தி - வலக்கையில் ஏந்தி; கையால் வெற்றியுடன் ஏந்தி என்றுமாம். கொள்ளுங் காலும் - களங் கொள்ளுமளவும். மா - யானை. புணர்ந்த - கூடிய. புரவி - குதிரை. அழல் திகழ் வெகுளி - தீக்கக்கும் வெகுளி. மன்னிர் - மன்னர்களே. தொல்லை ஞான்றை - முன்னை நாள். செரு - போர். வீழ்ந்தோர் பெண்டிர் - பட்டழிந் தோரின் மனைவியர். கூந்தற்பிறக்கம் - கூந்தலாகிய மலை. அஃதாவது பெருஞ்சுமை. சகடம் - வண்டி. பொறுத்தல் செல்லாது - தாங்கமாட்டாது. வல்லோர் - வல்லாண்மையாளர். பூழை நின்மின் - கோபுர வாயிற்கதவில் இட்டுப்புகும் வழியில் நில்லுங்கள். கல்லென - ஆரவாரத்துடன். குரைப்பக் கூர்தலின் - முழங்கக் கேட்டலின். அஞ்சுதகவுடைத்து - அஞ்சத்தக்கது. உடையது. மன்னிர் இளையோன் வெகுளி இகழ்தல் ஓம்புமின்; கூந்தற் பிறக்கஞ் சகடம் பலமுரிந்தன; பூழைநின்மின்; ஆற்றலோன் நிலை அஞ்சுதகவுடைத்து (1376) களிபட்டனன் - மகிழ்ந்தனன். புள் - பறவை. நொய் தாங்கு - விரைவாக. தெரியலர் - தெரியாதவர், பகைவர். பாசிலை - பசுமையான இலை. கண்ணி - சூடும் பூ. வேலினோனே. வேலே என்பது பொருந்திய பாடம். பருந்தின் ஓடி - பருந்து போல ஓடி. கழிந்து ஆர்த்தன்று - ஊடுருவிப் பாய்ந்து சென்றது. எறிந்ததை - எறிந்தது. கழல் தொட்டு - கழல் அணிந்து. ஏந்து வரை இவரும் உயர்ந்த மலை மேல் ஏறிவரும். அரசர்க்குப் புலியும், யானைக்கு மலையும் உவமை. (1377) திணை - ஒழுக்கம், திண்ணையுமாம். ஏறி - மிகுதிப் பட்டு, ஏறி. நிலைபொலி புதுப்பூண் - தகுதியால் பொலிவுடைய புதிய அணி கலங்களை அணிந்தவள். சிந்தியன்ன - சிதறி விட்டது போன்ற. சேடு படு வனப்பு - அழகமைந்த தோற்றம் புள்ளிக்காரி - புள்ளிகளையுடைய காரிக்குதிரை. சிந்தி அன்னகாரி என்க. உள்ளினும் பனிக்கும் - நினைக்கவே நடுங்கச் செய்யும். குண்டுநீர்க் கிடங்கில் - ஆழ்ந்த நீர்ப்பள்ளத்தில். கெண்டை - ஒருவகைமீன். மணிநிறம் - நீல நிறம். சிரல் - சிச்சிலி என்னும் பறவை; மீன் கொத்தி என்பதும் அது. கூறு அளக்கும் - கூறு படுத்தலை அளவிடும். சிந்தி அன்ன காரி மேலோன் கெண்டை பார்க்கும் சிரல் போல யானைக் கூறளக்கும் (1378) தாங்கன்மின் - தடாதிருங்கள். உருவக் குதிரை - காட்சிப் பொருளாயிருக்கும் அழகிய குதிரை. இருகை மாக்களை - இவனொழிந்த இருகையுடைய வீரரை. நாட்டகத்தில்லை - நாட்டில் இல்லை. துயல்வரும் - அசையும். தயங்கு மணி - விளங்கு மணி. கொடும்பூண் - வளைந்த அணி. கருந்தலை - பெரிய தலை அவனும் எற்குறித்தனனே. கடிகமழ் - மிகக் கமழ்தல், நறுமணம். கைவல் காட்சி - கைத்திறம் வல்ல அறிவு. துடியன் - துடி கொட்டு பவன். அரை அறுவை - இடையீயற் கட்டிய பட்டு. யானும் துடியற்கு அறுவை அரை அறுவை யீந்தனன் - உறுதிப்பாட்டால் ஈந்தனன் என இறத்ந காலத்தால் கூறினான். எறிதல் - வீழ்த்துதல். பெயர்தல் - திரும்புதல். ஆங்கு - அவ்வாறே. என்னதாகிலுமாக - எவ்வாறாயினும் ஆகுக. முந்நீர் நீர்கொள் பெருங்குளம் - கடல் போன்ற நீர்ப்பெருக் குள்ள குளம். “K‹Ü® - Ãy¤â‰F K‹dh»a Ú®” v‹gh® òweh}‰WiuaháÇa® (9) ja§f - És§f., நோய்பொதி நெஞ்சம் - துயர்கப்பிய நெஞ்சம். குளிர்ப்ப - குளிர்ந்து மகிழ. யாய் - என்தாய். தாயும் யாயு - அவன் தாயும், என்தாயும். வீரர் வீரம் விழுங்குகின்ற வீரன் உரை இஃது (1382)அடுதிறல் முன்பின் - கொல்லும் திறமை வாய்ந்த வீரத்தால். ஆற்ற முருக்கி - மிகச்சவட்டி. படுதலை - வெட்டுண்ட தலை; போர்க்களமுமாம். பாறு - பருந்து. அண்ண - நெருங்க. நூறி - வெட்டி. வடி - வடிக்கப்பட்ட, கூர்மையான. ஊர்ந்தமா - ஊர்ந்து செல்லும் குதிரை. நாண்மகிழ்ந்தூங்கும் துடியன் - புதியன கள்ளுண்டு மகிழும் துடியன். பாணி - தாளம். பெயர்பவன் ஊர்ந்தமா, துடியன் பாணியில் குளம்பு கொட்டும். (1404) ஈதேயாம் - இதுவேயாம். கருமம் - கடமை. செருமுனை - போர்முனை. கோள் - கொள்கை, குறிக்கோள். தலைதுமிய - தலைதுண்டாக. முயங்குதல் - தழுவுதல். மறவர் தலைதுமிய மகன் வாள்வாய் முயங்கப் பெறின் தருமம் தானம் கருமம் அனைத்து மாம் ஒரு மூதிற் பெண்டின் கூற்று. (1405) உடம்புகொண்டு இன்பம் எய்துவீர், கணவன் அன்பின் உயிர் மறக்கும் ஆரணங்கு காண்மினோ! அல்லாமை - அல்லது. புல்லார் வேல் - பகைவர் ஏவிய வேல். பயந்ததே - தந்ததோ? அல்லாமை புண் பயந்ததே (1406) எற்கண்டு அறிகோ - எதனைக்கொண்டு அறிவேனோ? வாளி - அம்பு. ஆவநாழிகை - கணைப்புட்டில். சரம் - அம்பு. குறங்கு - தொடை. நிறங்கரந்து - உண்மை நிறம் மறைந்து. அம்பு அணை - அம்புப் படுக்கை. கழற்காய் முட்களால் பொதியப் பெற்றது; அம்புகளாற் சூழப்பெற்ற வீரன் கழற்காய்க்கு ஒப்பானான். ஒப்பு: மொய்ப்படு சரங்கள் மூழ்க முனையெயிற் றாளிபோல அப்பணைக் கிடந்த மைந்தன்.... பொலங்கழற்காயு மொத்தான் -சிந்தாமணி. 2287. கதிரவன் காதல் மைந்தன் கழலிளம் பசுங்காயென்ன எதிரெதிர் பகழிதைத்த யாக்கையன் - இராமா. நாக. 200. (1407) வாதுவல் - அறுப்பேன். அத்தை - அசைநிலை. பொருந்தா மன்னர் - பகைவேந்தர். அருஞ்சமம் முருக்கி - கடத்தற்கு அரிய போரை அழித்து. களத்தொழிதல் செல்லாய் - களத்துப்பட்டு மடியாய் (இறவாய்). புகர் முகக்குஞ்சரம் - புள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட யானை. எஃகம் - வேல். அதன் முகத்தொழிய - அவ்யானையின் முகத்திலே தங்கிவிட எம்மில் - மூதில், பழங்குடி. கல்லாக்காளை - குடிப்பிறப்புக்கேற்ற வீரத்தைக் கல்லாக் காளை போல்வான். எஃகம் குஞ்சரமுகத் தொழியப் போந்த கல்லாக் காளையை ஈன்ற வயிற்றை வாதுவல் யானைமுகத்தே ஏவிய வேலை விட்டு வருதல் இழிவென மறக்குடி மக்கள் கருதினர் என்பதைச் செவ்விக் கடாக்களிறு என்னும் பாட்டாலும் அறியலாம். - புறத்திரட்டு. 1301. (1438) வம்மின் - வாருங்கள். இசைத்தல் - கூறுதல். மாய்ந் துழியும் - இறந்த போதும். பொங்கும் - மகிழ்ந்து ஒலிக்கும். உரையழுங்க - பேச்சு ஒடுங்க. வெம்பூசல் - கொடிய அரற்றல். துடியின் கண் தோற்கண்ண; இன்றேல் மகளிர் அரற்றொலி கேட்டும் ஒலிக்குமோ? (1454) இழும் - ஒலிக்குறிப்பு. குழுமிய - கூடிய. ஒன்னார் - பகைவர். மள்ளர்த் தந்த - நம் வீரர்க்கு அமைத்த. முன்னூர்ச் சிறையில் - ஊர் முன்னே அமைத்த தடையில். விலங்கி - குறுக்கிட்டு. பட்டனன் - இறந்தனன். ஈண்டு நின்று - அவன் பட்ட இவ்விடத்தே நின்று. அணியில் - படை வகுத்தால். ஒன்னார் சிறையில் விலங்கிப் பட்டனன் நெடுந்தகை; ஈண்டு நின்றணியில் புகழே என்க. வீரன் பட்ட மண்ணின் சிறப்புரைத்தலால் இரங்கல் சுட்டியவாறு. நாரத சரிதை - பாடல்கள் 8 (304) வெவ்விடம் - வெம்மை + விடம்; கொடிய நஞ்சு. எவ்விடம் - எ + இடம். எந்த இடம். அவ்விடம் - அ + இடம்; (இழிக்கத்தக்க) அந்த இடம்; உய்விடம் - கடைத்தேறும் வழி. உரைக்கற் பாலையோ - சொல்ல வல்லாயோ? (356) ஒற்றை மாமதிக்குடை அரசும் - ஒப்பற்ற முழுமதி போன்ற குடைக்கீழ் இருந்த அரசரும். இடவயின் - இடத்தில். இற்றை நாள் - இன்றைப் பொழுது. கண்படும் - உறங்கும். அரசும் பெற்றவை பெற்றுழி அருந்தி வயிறு தானிறைத்து இயற்றை நாள் கழித்தனம் எனக் கண்படும் காலமும் உண்டாம். செல்வ நிலையாமை இத்தன்மைத்து. (414) புழுமலக்குடர் - புழுக்கள் மல்கிய மலக்குடர். பழுநிய - பழுத்த. பொல்லாக்குழு - இழிந்த கூட்டம். குருடு தீர்ந்தார் - ஒளி பெற்றார். (மெய்யுணர்வாளர்) குருடு தீர்ந்தார் பொல்லாக் குழுவினை இன்பமாகக் கொள்வரோ என இயைக்க. (425) அருந்தியது அளவில் குறையினும் நிறையினும் துன்பம்; நோயிலும் நுகர்ச்சியிலும் துன்பம்; மருந்து செய்தலும் அருந்தலும் துன்பம். இருந்த நிலையில் செயலற்று இருத்தலும் துன்பம். எவரே துன்பமில்லார்? ஆதலால் துறவுகொள்க என்பதாம். (426) வாழ்கின்றாம் - நாம் நன்றாக வாழ்கின்றோம். மக்களும் நம் வழி நின்றார் - மக்களும் நம் கருத்துப்படியே நடக்கின்றார். உள்ளந் தாழ்கின்றார் உள்ளத்து மகிழ்கின்றார். தம நில்லா ஆனக்கால் - தம் முடையவை நிலையில்லாது போனபோது. ஆழ்கின்ற - ஆழமாகச் செல்கின்ற. ஆதாரம் - பிடிப்பு, பற்று. மெய்யதா - மெய்யாக. மெய் - உடல். (496) கொற்றவேலான் - வெற்றி வேலையுடைய வேந்தன். வல்லென்ற - கடுமையான. வழீஇய - வழுவிய (புகழ் வாய்மை இவற்றினின்று விலகிய) யாவர்மாட்டும் - எவரிடத்தும். சோரர் - திருடர், வஞ்சர், வேலான் சொல்லும், சொல்லும் இலனாகலின் யாவர்மாட்டும் குறை இன்மையின் சோரரும் இன்மையால் கொல்லென்று சொல்லும் உரைகற்றிலன் என்க. (861) மன்னன் மேவு கோயில் - அரசன் உறையும் அரண்மனை. மேருமான - மேரு என்னும் மலை போல. மாளிகைக் குலம் - பிற மாளிகைத் தொகுதிகள். மாளிகைகள் மேரு மலலையச் சூழவுள்ள நிலப்பரப்புப் போன்றன. பொருப்பு - மலை. நேர - ஒப்ப. நேமி வெற்பு - சக்கரவாளம் என்னும் மலை. மேருவின் புறத்தே அமைந்த சக்கரவாள மலை போன்றது மதில். (1060) குடிலம் - வளைவு, வஞ்சகம். பொருந்தல் - பொருந்தாதே. பெரும்பொருள் விளக்கம். 41 பாடல்கள் (228) மின்னும் - ஒளிவிடும். தமனியம் - தங்கம். ஓரினமா - பொன் என்னும் ஓரினமாக. தமனியத்திற்குப் பொன் என்னும் பெயர் செம்பொன்; பசும்பொன். செம்பொன் - கலப்பற்ற பொன். பாணன் சூடிய பசும்பொன் தாமரை புறம் 141. இரும்பு பொன்னென வழங்குதல் தூண்டில் பொன்மீன் என்பதால் - அறியப் பெறும். திருக் 931. போலாதே - போன்றதே அன்றோ. கொன்னே - வீணாக ஒளிப்பார் - ஈயாது மறைப்பவர். அளிப்பார் - ஈவார். தமனியமும் இரும்பும் பொன்னாதல் போன்றதே ஒளிப்பாரும் அளிப்பாரும் மக்கள் என்பது. (542) இருபால் பற்றி - இரண்டு பாகுபாடுபற்றி. விளையும் - உண்டாகும். என வேண்டா - என்று கூற வேண்டா. தாதை - தந்தை. ஒன்றாது -பொருந்தாது. நீத்தான் - விலக்கியவன் தன் தந்தை காமம் நுகர்தற்காகத் தன் காமம் நீத்தவன் வீடுமன். இவன் தந்தை சந்தனு மணம் புரியும் எண்ணத்தை ஈடேற்றுவதற்காகத் தான் மணம் புரியாமை மேற் கொண்டான் (பாரதம்) (1159) யானைநிரை - யானைக் கூட்டம். தேரோர் - அரசர். ஏனை நிரை - ஆனிரை (பசுக் கூட்டம்). ஏர்வாழ்நர் - உழவர். வென்றி பயக்கும் - வெற்றி தேடித் தரும். பகடு - காளை. அரசரோ ஏருடை யார்க்கு ஒப்பு? வேளாண்மை புரிவார்க்கு ஆட்சி புரிவார் ஒப்பாகார் என்பதாம். (1160) நிலம் பொறை ஆற்றா நிதி - நிலம் சுமக்க மாட்டாத செல்வம். கொண்டும் - பிறரிடம் கொடையாகப் பெற்றுக் கொண்டும் தீங்கு - குற்றம். அஃதாவது இரந்து பெற்றார் என்னும் இழிவு. நலம் கிளர் - நலம் விளங்கும். தாவாது - குறைவின்றி தீயில் அவி சொரியச் சொரிய ஒளிபெறுமாறுபோல், பிறர் பொருள் பெறப் பெறக் குறைவிலாது அந்தணர்க்கு ஒளியுண்டாம் என்றவாறு. (1161) ஈட்டிய வெல்லாம் - தேடியவை அனைத்தும். காட்டிய - காட்டுமாறு. வேட்டொறும் - விரும்புந்தோறும். காமருதார்ச் சென்னி - அழகிய ஆத்திமாலை அணிந்த சோழன். புகார் - பூம்புகார், காவிரிப்பூம் பட்டினம். தாமரை சங்கு என்பன பதுமநிதி, சங்கநிதி எனப்படுவன. சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து என்பது அப்பர் வாக்கு (6.95.10) தாமரை போன்றும் சங்கு போன்றும் அமைந்து, அள்ளக் குறையா நிதி என்பர். (1236) வெவ்வாள் - விரும்பத்தக்க வாள்; கொடியவாளு மாம். மிலைச்சிய -அணிந்த. வெட்சி - ஒருவகைப் பூ; பகைவர் பசுக்களைக் கவரச் செல்வார் அணியும் பூ. செம்மலர் சூடிச் செல்வது செவ்வானம் செல்வதுபோல் என்றார். எவ்வாயும் - எல்லா இடங்களிலும் ஆங்கண் - ஆங்கு படாலியரோ - படாது இருக்கட்டும். துடி - ஒரு வகைப் பறை. ஆகோட்பறை என்பதும் அது. செல்கின்றார் கழலொலி துடியொடு புக்குப் படாலியரோ என்க. (1237) வலம் - வலிமை. வயவேந்தன் - வெற்றி வேந்தன். தாள் வல் இளையவர் - முயற்சியிற் சிறந்த வீரர். கனைகுரல் - கனைப் பொலி. நல்லா - நற்பசு. கன்றுள்ள - கன்றை நினைக்க. வேந்நன் ஏவலால் இளையவர் செல்லின் பசு கன்றை நினைத்துக் கொட்டும் பாலால் இவ்வூர் நனையும் போலும். முதல் நாள் இளையர் போவதைக் கண்ட ஒருவர் துணிவுரை இது. (1238) வந்தநிரை - வர இருக்கும் பசுக்கூட்டம். இருப்புமணி - இரும்பால் செய்யப்பெற்ற மணி. எந்தலை நின்றலை யான் தருவன் - எம் தலையை நின்னிடத்து யாமே கொய்து தருவேம். முந்து - முதற்கண். கொற்றவை - காளி. கொற்றம் கொடு - வெற்றியைத் தா. முந்து நீ மணியுடன் தலை பெற்று வேந்தன் கோலோங்கக் கொற்றங்கொடு இது கொற்றவை நிலை. ஆவது, ஒளியினீங்கா விறற்படையோள் அளியினீங்கா அருளுரைத்தன்று -புறப்பொருள். 20 (1239) திரைகவுள் வெள்வாய் - சுருக்கம் அமைந்த கன்னத் தையும் வெளுத்த வாயையும். திரிந்து வீழ்தாடி - திரிக்கப்பெற்நுத் தொங்கும் மீசையையும். இது நரை முதியோன் தோற்றம் உரைத்த வாறு. நற்சொல் - சகுனம் (விரிச்சி) சொகினம் என்பது சகுனம் ஆயிற்று. எல்லை நீர்வையம் - நீரை எல்லையாக உடைய மண்ணுலகம். வல்லையே - விரைவாக. முதியோன் நற்சொல் இறையோர்க்கு நிரையன்றி வையமும் அளக்கும்; வல்லை வழி சென்மின். நிரைகொள்ள எழுந்தவர்களைக் கண்டவர்கள் கூற்று. (1240) பிறர்புலம் - பகைவர் இடம். தமர்புலம் - தம் இடம். என்னார் - என்று எண்ணாதவராய். விறல் வெய்யோர் - வலிய வீரர். வீங்கிருள் கண் - செறிந்த இருட்போதில். கடாஅம் - மதம். படாஅம் - நெற்றிப்பட்டயம் கட்படாமுமாம். முகம் படுத்தாங்கு - முகத்தில் அணியப்பெற்றது போல. கடாஅஞ் செருக்கும் யானைக்குப் படாஅம் படுத்தது போன்ற பேரிருளில் வீரர் சென்றார் என்க. (1245) அடி அதிர் ஆர்ப்பினர் - அடிகள் அதிர ஆரவாரத்தின ராய். ஆபெயர்த்தற்கு - வெட்சியார் கவர்ந்துபோன பசுக்களை மீட்டற்கு. கடிய மறவர் கதழ்ந்தார் - அஞ்சத்தக்க வீரர் சினந்தெழுந் தார். மடிநிரை - மடக்கிக்கொண்டு செல்லப்பட்ட பசுக்கூட்டத்தை. மீளாது மீளான் - மீட்டி வாராது வாரான். விறல் வெய்யோன் - வீரத்தால் உயர்ந்தோன். யாதாங்கொல் - என்னாகுமோ? வாளார் துடியார் வலம் - வாளைத் தாங்கிய துடி கொட்டுபவர் வெற்றி. துடிப்பறை அறைந்து வெட்சி வீரருடன் சென்ற துடியர் வெற்றி வெற்றி யாகாது. பசு மீட்டப்படும் என்பதாம் இனி வளம் எனப் பாடம் கொள்வார்க்கு துடியார் வளம் யாதாங்கொல்? எல்லாம் மீட்டப்பெறும் ஆதலால் அவர்க்கு ஒன்றும் இல்லையாம் என்றவாறு. அன்னாய், ஆபெயர்த்தற்கு மறவர் கதழ்ந்தார்; விறல் வெய்யோன் நிரை மீளாது மீளான்; வாளார் துடியார் வலம் (வளம்) யாதாங்கொல் என்க. (1216) பசுக்கன்றுகளை நோக்கிக் கூறியது. கவர்ந்தாங்கு - வாரிக்கொண்டு போவது போல. கவலை - கவர்த்த வழிகள். இரைத்தெழுந்தார் - ஆரவாரித்து எழுந்தார். நும் கிளைகள் - நும் உறவான பசுக்கள். மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப - தொழுவத்தைக் காணும் ஆவலால் மடி சுரப்புடன். மெய் குளிர்ப்பீர் - வெம்மை நீங்கி மகிழ்வீர். கன்றுகளே, மறவர் எழுந்தார்; நும்கிளைகள் மன்று காண் வேட்கையால் மடிசுரப்பத் தோன்றுவ; கண்டுமெய்குளிர்ப்பீர் (1247) கடல்புக்கு புக்கு - புகுந்து. மண் - நிலவுலகம். கார் ஏனம் - கரிய பன்றி; திருமாலின் பத்துத் தோற்றரவுகளுள் ஒன்று. கோடு - கொம்பு. மிடல் - வலிமை. தொடலை - இலையும் தழையும் அமைந்த மாலை. கருதாதார் - பகைவர். உள்ள - என்றும் மறவாது நினைக்க. துரந்து - ஓடச் செய்து. கரந்தை மறவர்தோள் ஏனக்கோட்டின் மிடல்பெரிது எய்தின என்க. (1248) கல்கெழு சீறூர் - முரம்புகள் அமைந்த சிறிய ஊர், கடை - வாயில். நடவா விரையும் - நடவாமல் விரைந்தோடும். என்னோ - என்ன? தெள்அறல் கான்யாற்றுத் தீநீர் - தெள்ளிய மணலைக் கொண்ட காட்டாற்றின் இனிய நீர். மள்ளர் - வீரர். இவண், கரந்தை மறவர். நிரை சீறூர்க் கடைகாண் விருப்பினால், மள்ளர் தீநீர் பருகவும் நடவாவகை விரையும் என்க. (1249) காட்டகம் - காடு. உயிர் போற்றான் - உயிரைப் பொருட்டாக எண்ணாதவனாக. கடுஞ்சுரையான் - பருத்த மடியை யுடைய பசுவை. வினவுறாள் - நிகழ்ந்ததெதுவும் கேளாதவளாய். ஓட்டந்து - ஓடிவந்து. புனிற்று ஆத்தழீஇ - இளங்கன்றுப் பசுவைத் தழுவி. என்னது பட்டாயோ - எத்துயர் பட்டாயோ. கலுழும் - அழும். ஆன் மீட்ட மகனை வினவுறாள்; என்னது பட்டாயோ என்று புனிற்றாத் தழீஇக் கலுழும் என்க. தாய் தன் ஆவின்மேல் கொண்ட அன்பைப் புலப்படுத்தியவாறு. (1250) பகர்ந்திட - கூற. தமர் - தமக்கு உரியவர். அறிந்தன கொல் - அறிந்தனவோ. ஏமம் உற்று - மகிழ்ச்சி கொண்டு. தம்மை - தம் தாய்ப் பசுவை. கன்று ஏய்ப்ப - கன்று போல. சென்றீயும் - செல்லும். ஈன்ற தாயை அன்றே அறிந்து கொள் கன்று போல இனநிரை தமரைத் தாமே அறிந்து அவர்பாற் சேரும் யாமே பகர்ந்திட வேண்டா என்று முடிக்க. (1255)நசைஇ - விரும்பி. எடுப்ப - மிக. ஒருபாற் படர்தர - வேந்தன் எண்ணம் ஒரு வழிப்பட்டதாய் அமைய. ஒன்னார் - பகைவர். இருபாற் படுவதெவன் - இருவழிப்பட்ட தென்ன? வேந்தன் எண்ணம் ஒருபாற் பட்டதாகப் பகைவர் உள்ளம் இருபாற் படுவது எவன் என இரங்குமுகத்தான் எழுச்சி மாண்பு உரைத்ததாம். விண்ணசைஇச் செல்லும்வீரரை யுடைமையால் அவன் எண்ணம் ஒருபாற் பட்டதாயிற்று. (1256) பார்ப்புரவு - நிலத்தைப் பேணிக் காத்தலை. எண்ணான் கொல் - எண்ணமாட்டானோ. ஊர்ப்புறத்து நில்லாத் தானை ஆகலான் அகத்துச்சேரும் என்பதாம். நிலனெளிப்ப - நிலத்தின் முதுகு நெளியுமாறு. மலைமுதுகு நெளிய என்றார். அடிகளார். சிலப். 26. 82. நீளிடை - நெடுந்தொலைவிடம். புல்லார் - பொருந்தார் (பகைவர்) பார்வேந்தன் புல்லார்மேற் செல்லும் பொழுது பொடியாய் எழும்; பார்ப்புரவு எண்ணான் கொல் என்க. பார்புரக்க வேண்டியவன் பார் புழுதி பட்டுக் கிளம்புவதை எண்ணான் கொல் என நயமுறக் கூறினார். (1271) வேனிலான் - மன்மதன். ஐங்கணை - ஐந்து மலரம்பு களும். மூதில்வாய் - பழம் பெருமை வாய்ந்த இல்லத்தில். முல்லைசால் - முல்லை ஒழுக்கம் அமைந்த. முல்லை ஒழுக்கமாவது இல் இருத்தல். கூதிரின் - குளிர் காலத்தில். ஆறு பருவங்களுள் கூதிர்ப்பருவம் ஒன்று. காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில், என ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்கள் எண்ணப் பெறும். இல்வாய்த் தங்கிய மகளிரிடம் பிரிவுத்துயர் உண்டாக்கிய வேனிலான், பாசறை வேந்தனிடம் உண்டாக்க முடியாமல் தோற்றான். பாசறைக்கண் இருக்கும் வேந்தன் பிரிவு நோக்கிக் கலங்கக் கூடாது என்பது விதி. அதனைக் கொண்டு கூறியது. வேனிலான் மகளிர்பாற் பெற்ற வலியளவோ, வேந்தன் பால் தோற்ற அழிவு? என வினவினார். அழிவு என்பதை அளவு எனப் பாடங் கொள்வாரும் உளர். (பெருந்தொகை. 544) (1272) மாற்றுப் புலம் - பகைவர் இடம். தேர்மண்டி - தேர் நிறைந்து; வேற்றுப் புலவேந்தர் - பகைவர். வெல் வேந்தர் - படை எடுத்துச் சென்ற அரசர். எற்ற - போர்மேற்கொண்ட. பாணொலி - பாணர் ஒலி. பல்கின்றால் மிகுதியாயிற்று. ஒன்னார் உடையன - பகைவர் உடைமையான பொருள்கள். வேற்றுப்புல வேந்தரும் வேந்தரும் போரிடுங்கால் கிளர்ந்த படை யொலியிலும், பகைவர் உடைமைகளைப் பெற்று வந்த பாணர் ஒலி மிகுதியாயிற்றாம் என்றவாறு. பாணர் உடன் வந்தது, பகைவரை வென்று அவர் பொருள் தருவதாக மன்னன் முன்னரே கூறிய உறுதிமொழி கொண்டாம். ஒன்னார் ஆரெயில் அவர்காட்டாகவும், நுமதெனப் பாண்கடன் இறுக்கும் தன்மை என்று பாராட்டும் புறம். (203) (1273) தழிச்சியவாட் புண்ணோர் - தம்மேல் வரும் படை களைத் தடுத்துக் கொண்ட வாட் புண்ணுடையோர். பழிச்சிய சீர் - பாராட்டி வாழ்த்தும் சிறப்புடைய. பாசறை - பாடி இருக்கை. தூர்ந்தன - மேடுபட்டு ஆறின. புல்லணலார் - இளந்தாடியுடைய வீரர். பாசறை வேந்தன், புண்ணோர் இல்லந்தொறும் சொல்லிய சொல்லே மருந்தாகப் புல்லணலார் புண் தூர்ந்தன என்க. தழிஞ்சி யாவது, கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டு புண்பட்ட வீரர்பால் அரசன் நேரிற் சென்று வினாவியும் பொருள் கொடுத்தும் தழுவிக் கோடல். தொல். பொருள். 63. நச். (1325) பால்மதி - வெண்ணிலவு. பகல் எறிப்பதென் கொலோ - பகற்பொழுதில் ஒளி செய்வது ஏனோ? பகற்பொழுதில் நில வெறிப்பது தீக்குறி எனக் கருதினர். இகல் அரணத்துள்ளவர் - வலிய கோட்டையுள் இருந்தவர் அகலிய விண் தஞ்சம் என்ன விரிந்த குடை - அகன்ற வானமும் சுருங்கியதே என்னுமாறு விரிந்த குடை. குடை நாட்கோள் - அரசன் தான் போர் குறித்துச் செல்லுவதற்கு முன், நற்பொழுதில் குடையை முன்னே செல்ல விடுவது குடை நாட்கோள் ஆகும். செற்றடையார் மதில் கருதிக்கொற்ற வேந்தன் குடைநாட் கொண்டன்று என்பது வெண்பா மாலை. 96. சும்பிளித் தார் - கூசினார். ஒளிமிகுதி கண்டு கண் கூசுவதைச் சும்பிளித்தல் என்பர். சுமந்த நாகமும் கண் சும்புளித்தவே என்பது கம்பர் வாக்கு. அரணத்தோர் அஞ்சிச் சும்பிளித்தார் கண் என்க. (1326) முதற்கண் தொழுது விழாத குற்றத்திற்குக் கழுவா யாகக் கடவுளைப் பேணி அழுது விழாக் கொண்டனர் மகளிர். அன்னோ - அந்தே: இரக்கக் குறிப்பு. முழுதளிப்போன் - நிலமுழுதும் காக்கும் வேந்தன்; அவன் முற்றிய வேந்தன்; வாள்நாட்கோள் - நற்பொழுதில் வாளை முன்னே செல்ல விடுவது. மகிழ்நர் - கணவர். நீள்நாட் கோள் என்று - நீண்ட வாழ்நாள் கொள்க என்று வேண்டி. மடந்தையர் வாணாட்கோள் கேட்டு, மகிழ்நர் நீள் நாட்கொள நினைத்துத் தொழுது விழாக் குறைக்குக் கடவுட்பேணி அழுது விழாக் கொள்வர் என்று இயைக்க. (1327) எயிலகம் - மதிலுள். புக்கன்றி - புகுந்து அல்லாமல். பொற்றேரான் - முற்றுகையிட்ட வேந்தன். போனகம் - உணவு. வெம்பசி - கொடிய பசி. பசித்தீ: உருவகம். மறலி - கூற்றுவன். எற்றாங்கொல் - என்னாமோ? எயிலகம் புக்கன்றிப் பொற்றேரான் போனகம் கொள்ளான். மறலி வயிறு எற்றாங்கொல்? ஒப்பு: நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப் புன்வயி றருத்தலும் செல்லான் -புறம். 304. காலை முரச மதிலியம்பக் கண்கனன்று வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் - மாலை அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு - புறப்பொருள் வெண்பாமாலை 117. (மூழை - அகப்பை). *1328) அன்னதோர் பெற்றித்தே - அத்தகையதோர் தன்மையதே. வாய் வாங்கு வெல்படை - வாய்மை அமைந்த வெற்றிமிக்க படை. விரும்பாதார் - பகைவர். முற்றி - முற்றுகை இட்டு. கொல்படை - இரக்கமின்றிக் கொல்லும் படை வீரர். வீட்டும் - அழிக்கும். விரும்பி அடிபணிந்திருந்தால் வேந்தன் ஏற்றுக் கொண்டிருப்பான். அவ்வாறு செய்யாமையால் அவன் வீரர்களின் கைப்பட்டு அழிந்தனர். இத்தன்மை தாய் வாங்குகின்ற மகனைத் தனக்கென்று பேய் வாங்கிக் கொண்ட தொப்பதாம் என்றவாறு. பேய் வாங்கிக் கொள்ளுதல், கொலைப்பொருட்டு. இடு பிணந்தின்னும் இடாகினிப் பேய்வாங்கி மடியகத் திட்டாள் மகவை -என்பதையும் (சிலப். 9:21) பேய் கோட்பட்டான் என்பதையும் (நன். 256) நோக்குக. (1329) எயில்கோள் - மதிலைக் கொள்ளுதல். மஞ்சு - மேகம். புரிசை - கோட்டை. பொறியும் - எந்திரங்களும். அவை, வளைவிற் பொறி, கருவிரலூகம், கல்லுமிழ் கவண் முதலியவாகக் கூறப்பெறுவன. (சிலப். 15:207 - 216). ஐம்பொறிகளும் அடங்கிய ஆன்றோர் போல் கோட்டையின் அனைத்துப் பொறிகளும் அடங்கின என்பதாம். அவற்றின் ஒடுக்கத்தால் வேந்தன் வீரமாண்பு வெளிப்படுத்தவாறு. (1330) பொருவருமூதூர் - இணைகாட்டுதற்கரிய தொன்மை யான ஊர். போர்வேட்டு - போர் செய்தலை விரும்பி. உடன்று - எதிரிட்டு. ஏணி - மதிலிற் சார்த்தி உட்புகுதற்குப் பயன்படுத்தப் படுவது. இப்போர் ஏணி நிலை எனப்படும். ஏணிநிலை. தொடுகழல் மறவர் துன்னித் துன்னார் இடுசூட் டிஞ்சியின் ஏணி சாத்தின்று - (பு.வெ.மா. 112.) எனக் கூறப்பெறும். மண்ணில் சார்த்தி, மதிலில் சார்த்திய ஏணி, விண்ணில் சார்த்தவும் ஆகிவிடும் என்றது இருசார் வீரரும் பட்டு மடிவர் என்றதாம். (1337) குன்றுயர் திங்கள் போல் குன்றத்தின்மேல் உயர்ந்து தோன்றும் திங்களைப் போல். நிவப்ப - மேலெழுந்து தோன்ற. ஒன்றார் - கூடார், பகைவர். துளங்கின - நடுங்கின. தோற்றம் தொலைந்து - பெருமிதம் இழந்து. வேந்தன் குடை திங்கட்கும், பகை வேந்தர்களின் குடைகள் விண் மீன்கட்கும் உவமையாயின. குடைகளின் துளக்கம். விண்மீன்களின் துளக்கத்துடன் எண்ணி நயங்காண்க. (1338) முற்றரணம் - முற்றப்பட்ட மதில். அரணத்தை முகில் என்றார்; அம் முகிலில் தோன்றும் உருமு (இடி) வாள் நாட்கோள் என்றார். புற்றிழந்த நாகம் - புற்று இடியுண்டு இழந்துபோக வாழிட மற்ற பாம்பு. வேகம் - விரைவு. குழாக்களிறு - களிற்றுக் கூட்டம். வேந்து - வேந்தர்கள். நாகம் பலவாயினமைக்கு ஏற்ப வேந்தரும் பல ராயினர். கொற்றவன் வாள் நாட்கோளால், பகை வேந்தர் புற்றிழந்த நாகம் போலாயினர் என்பதாம். (1339) பொருசின மாறாப் புலிப்போத்து - போர் செய்து வந்து அக்கோபம் ஆறாத ஆண்புலி. அருவரை - கடத்தற்கரிய மலை. புலிப் போத் துறையும் வரைகண்டார் போல் அஞ்சி ஒருவரும் உள்ளே புகாமையால் மதிலுள் இருந்த வேந்தன் வேண்டுவோர்க்கு வேண்டுவன தந்து வீற்றிருந்தான் என்றவாறு. அவன் பெயர் கேட்ட அளவிலே பகைவர் அடங்கியவாறு கூறியது. (1340) மழு - பரசு. அது கோடரி. மிளை - காவற்காடு. மதிலான் அகழ் தூர்ந்து - மதில் இடிபடுதலால் அகழ் மேடாகி. ஏற்றுண்டது - தாக்கப்பட்டது. மட்டுஅவிழ் கண்ணி - தேன் ஒழுகும் மாலை. வேந்தன் சீற்றத்தீயால் பெரும்பாலும் அழிந்தன. அழிபடா திருந்த மிளையை வீரர் மழுவும், அகழை மதிலிடிபாடும் கெடுத்தன என்பதாம். (1341) பேரும் - பின்வாங்கும். தகர் - செம்மறி யாட்டுக்கடா. ஒதுங்கியும் - பின் வாங்கியும். ஒடுங்கியும் என்பது பாடமென் பாரும் உளர். கார்க்கீண்டு - மேகத்தை ஊடுருவி. இடிபுறப் பட்டாங்கு - இடி எழுந்தாற் போல. எதிரேற்றார் - தடுத்தார். மாற்றார் அடி புறத்தீடும் அரிது - பகைவர் அடி பிறக்கிட்டு ஓடி உய்வதும் அரிது. புறத்தீடு - பிறக்கீடு. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து என்னும் குறள் (486) நோக்கத்தக்கது. (1348) ஏறுண்ணும் - இடியுண்ணும். அஃதாவது தாக்கப் படும். என்னும் படியால் - என்னுமாறு. பகடு - யானை. மீட்டு - விலக்கி. இமையாத கண் கண்டு - இமையாத கண்ணால் கண்டு. இடியால்இடி முகிலும் ஏறுண்ணும் என்பதுபோல் வேலால் பகடு எறிந்து ஆர்த்தார் என்க. வேலுக்கு இடியும் பகட்டுக்கு முகிலும் உவமை. (1349) குரிசில் - அரசன். கேள் - உறவு. உறவற்றாராகிக் கொன்றாரே உறவாகினார் என்பார் கேளின்றிக் கொன்றாரே கேளாகி என்றார். வீழ்ந்துபட்ட வீரனது தறுகண்மை பகைவர் பாராட்டும் தகையதாக இருந்தது; அவ்வீரன் பட்டுவீழ்ந்த மண்ணை அள்ளித் தம் தலையில் பூப்போல் இட்டுக்கொண்டு ஆடினார்; ஆர்த்தார். அரசன் கொள்ளும் உவகைக்கு அளவுண்டோ? இல்லை என்க. இதனைக் களிற்றொடு, பட்ட வேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலை என்பார் தொல்காப்பியர். பொருள். புறத். 17. (1359) வான்துறக்கம் - வானமாகிய துறக்கம்; தேவருலகம். வேட்டு - விரும்பி. தம்குறை - வீரர்களின் தலையற்ற உடற் குறைகள். மான்தேர் - குதிரை பூட்டப்பெற்ற தேர். பனிப்ப - நடுங்க. வேந்து - (பகை) வேந்தன். விட்ட உயிர் விடாப்பாய்ந்தன - போகும் உயிர் போகாநிலையில் துள்ளின. உடற்குறை பல துள்ளல் மறவர் துறக்கம் வேட்டெழுந்தார் என்பதற்குச் சான்றுரைப்ப போன்றன என்க. உடற்குறை துள்ளுதல் அட்டையாடல் என்னும் புறத் துறையைச் சாரும். துண்டிக்கப்பட்ட இடத்தும் அட்டைபோல வீரனுடல் வீரச்செயல் காட்டி ஆடுகை அட்டையாடல் என்பர். (தொல். பொருள். 71. நச்.) அட்டை - நீரட்டை. (1362) வெய்யோன் எழாமுன் - கதிரோன் வெளிப்படுமுன். வீங்கு இரா - இருட் செறிவுடைய இரவு. கையகல - விலகியோட. செம்மற்றே - பெருமையுடையது. கையகன்று - இடம் விரிந்து. புக்கு - புகுந்து. புகழ்வெய்யோன் - புகழால் விரும்பத்தக்கோன். தார் - முற்சென்று பொரும்படை. தாங்கி நின்ற - எதிரேற்று நின்ற. தகை - பெருந்தகையாகிய வீரன். கதிரோன் வெளிப்படுமுன் கப்பியுள்ள இருளைச் செங்கதிர் விலக்குவதுபோல, அரசனைச் சூழ்ந்து மொய்த்து நின்ற படையை விலக்கி மன்னன் முன்புக்குத் தார்தாங்கி நின்றான் என்க. இருளைப் பகைவர் கூட்டத்திற்கும் செங்கதிரை வீரனுக்கும் உவமை கூறினார். இது, வேன்மிகு வேந்தன் மொய்த்தவழி ஒருவன் றான்மீண் டெறிந்த தார்நிலையின் பாற்படும் -தொல்.பொருள். 68. (1399) மம்மர் - மயக்கம். விசும்பு - வானம். மதியும் மதிப்பகையும் - திங்களும் அதற்குப் பகையான கேதுவும். தம்மிற் றடுமாற்றம் போன்றது - தங்களுக்குள் மாறுபட்டுப் பற்றுதல் போன்றது. வெம்முனை - போர்முனை. புறங்கணித்த - புறத்தே போகட்டுச் சென்ற. அடர்த்த - நெருங்கிய வெண்குடையை யானை அடர்த்தகை, மதியும் மதிப்பகையும் தம்மிற் றடுமாற்றம் போன்ற என்க. (1400) வான்தோய் கழுகும் - வானளாவிப் பறக்கும் கழுகு. வள்ளுகிர் - வளமான நகம். தொக்க - கூடின. கடம் மாநிலம் நனைக்கும் - மதநீரால் நிலத்தை நனைக்கும். படம் - கட்படாம் (கண் மறைக்கவிட்டது) முகபடாமுமாம். ஆறு நீப்பதனை - ஆற்றில் நீந்துவதை. கழுகு, பேய், நரி ஆய மூன்றும் யானைக்கிட்ட படம் ஆறு நீப்பதனைப் பார்த்துத் தொக்க என்க. (1401) மாயத்தால் - சினத்தால். காயத்து ஊறு அஞ்சாக் களிறு - உடலில் உண்டாகும் புண்ணுக்கு அஞ்சாத யானை. சாயும் - வீழும். தொலைவு அறியா ஆடவரும் - அழிவு என்பதனை எண்ணியறியாத வீரரும். மலையும் மலையும் சினங்கொண்டு மோதுதல்போல் யானைகள் மோதி வீழ்ந்தன. அவற்றின்மேல் வீரர் தோற்றமளிப்பது மலையுறையும் தெய்வம் தோற்றமளிப்பது போன்றதாம். *1430) பிணநிணக் கூழ் - பிணத்தின் கொழுப்பாகிய கூழ் வேந்தன் தேர் பிணத்தின்மேற் செல்லுதலால் நிணக்கூழ் உண்டாயது. அதனைக் கொற்றவை போர்ப்பரிசிலாகப் பேய்கட்கு அளிக்க அவை குரவைக் கூத்தாடின என்பதாம். அடுதிறல் அணங்கார விடுதிறலான் களம் வேட்டன்று என்பது புறப்பொருள் வெண்பாமாலை 160. இது களவேள்வி யாம். (1501) கண்ணுதலோன் - சிவபெருமான். கடிநேமியோன் - உலகைக் காத்தற்காகச் சக்கரத்தைக்கொணட திருமால். எண்ணிருந் தோள் ஏந்திழையாள் - எண்ணத்தக்க பெருமைவாய்ந்த தோளை யுடைய கொற்றவை. பண்ணிய நூல் - படைத்த நூல். சென்னியர்க்கு - சோழர்க்கு. மன்னுக - நிலைபெறுக. மண்மிசை - மண்ணின் மேல். கண்ணுதலோன் நேமியோன் ஏந்திழையாள் காக்கச், செல்வ நீ நாளும் இம்மண்மிசை மன்னுக என்க. வெண்பா முன்னாகவும், அகவல் பின்னாகவும் வந்ததாகலின் இது மருட்பாவாம். மேருமந்தர புராணம் - பாடல் 1 (397) வானத்து இடு விலின் ஈண்ட மாயும் - வானத்துத் தோன்றும் வில்லைப்போல் விரைந்து அழியும். வாரிப் புதியதன் நீர் போலும் - காட்டாற்றுப் புதிய வெள்ளப் பெருக்குப்போல வரும். வெளியிடை விளக்குப்போல வீயும் ஆயுவும் - காற்றுமிக்க வெளி யிடத்தில் வைக்கப்பெற்ற விளக்கைப்போல் வாழ்நாள் அழியும். வீட்டுக்கு - வீட்டின்பம் பெறுதற்கு. உளபகல் - வாழ்நாள். நீரார் - தன்மையுடையார். யாப்பருங்கலம் - பாடல்கள் 2 (602) வரை - மலை. கீண்டு - கல்லி, தோண்டி. வரைவயிரம் - வயிரம்கொண்ட மூங்கில். தெரியில் - ஆராய்ந்தால். கரிய வரை நிலையார் - கருமலை போன்ற பெரியவர். வயிரங்கொண்டு - மனக்கறுவுகொண்டு, சினங்கொண்டு. வயிரங்கொண்ட மூங்கிலைக் கொண்டு மலையைத் தோண்டிக் காட்டுவார் எவர்? ஒருவரும் இலர். அது போலவே மலைபோன்ற பெரியவர் வெகுண்டால் அவரைச் சிறியவர் சினங்கொண்டு என் செய்வார்? எதுவும் செய்யார் என்பதாம். இரு குறள் நேரிசை வெண்பாவிற்கு இப்பாடல் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது. (யாப்பருங் கலம். 60. காரிகை. 23) (865) மலிதேர் - நிறைந்த தேர். கச்சி - காஞ்சி. கச்சிபடுவ - காஞ்சியில் உண்டாவன. கடல்படா - கடலில் உண்டாகா. கச்சி கடல்படுவவெல்லாம் படும் - கச்சியில் கடலில் உண்டாவன எல்லாம் உண்டு. ஒலியாலும் பெருமையாலும் கச்சியும் கடலும் ஒக்கும். கிடைக்கும் பொருளால் ஒவ்வா. இப்பாடல் மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா விற்கும் (யாப்பருங்கலம். 61. யாப்பருங்கலக்காரிகை. 24) உயர்ச்சி வேற்றுமையணிக்கும் (தண்டி. 48) மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. மூலம் விளங்காதன - பாடல்கள் 13 (838) கண்டறி வருந்துணை - கண்டு அறிதற்கு அரிய அளவு. மேதி - எருமை. கனையும் - நெருங்கும். சுரும்பிவர் கமுகு - வண்டுகள் சூழும் கமுகு. கரும்பும் கமுகும் ஒன்றை ஒன்று விஞ்சி வளர்ந்திருத்தலால் கரும்பு இது கமுகு இதுவெனக் காண்பது அரிதாயிற்று. எருமை கடித்துத் தின்னுதற்குச் செல்லுதலால் கரும்பையும், வண்டுகள் சூழ்ந்து மொய்த்தலால் கமுகையும் கண்டறிய முடியும் என்பதாம். (1355) குழாக்களிறு - களிற்றுக் கூட்டம். குறித்து - போர் குறித்து. மெய்ம்மலி உவகை - உடம்பு பூரிக்கும் உவகை. மெய்ம்மலி உவகை செய்யும் - புறம். 45. கேண்மை - வேந்தன் மேல்கொண்ட பற்று. துரத்தலின் - செலுத்துதலால். அழுந்துபடப் புல்லி - அழுத்தமாகத் தழுவி. நீர்ப்பெயல் - மழை. மொக்குள் - நீர்க்குமிழ். திரிந்து - சுழன்று. தகர் - செம்மறிக்கடா. முட்டி - கைம்முட்டி. கால்தட்குநர் - கால்தடுக்கி விழுபவர். சுட்டிய கையில் - சுட்டிக் காட்டிய கையொடும். தொட்டு - பற்றி. சுட்டிய பெயரை - குறிப்பிட்டவரை. இழைப்போர் - போர் புரிவோர். சிலைப்பு - முழக்கம். புடைத்தல் - அடித்தல். வல்லியன் - வன்மையாக. உரப்பல் - அதட்டல். எயிறு - பல்; ஈண்டுத் தந்தம். திருத்துதல் - (வளைந்த கருவிகளைச் சீர்செய்தல். ஒருகை இரும்பிணத்தெயிறு மிறையாகத் திரிந்த வாள்வாள் திருத்தா - புறம் 284. முனை முயங்குநர் - போரைத் தழுவிக்கொண்டவர். செஞ்சோற்று விலை - செஞ்சோற்றுக்குத் தரும் விலை அஃது உயிர். தழீஇ - தழுவி. மகளிர் - தேவமகளிர். வதுவை - மணம். எவரும் சென்று புகும் உலகம் ஒன்றே ஆகலின் இரங்க வான்படர்ந்தனர் என்க. (1356) அரிநறுங்கள் - அரித்து எடுக்கப்பெற்ற நறிய கள்.நாள் மகிழ் செருக்கி - புதிய மகிழ்ச்சி மீக்கூர்ந்து. நெருநல் எல்லை - நேற்றைப் பகற்பொழுதில். திருமலி முற்றம் - திருவிளங்கும் இல்லின் முற்றத்தில். கச்சை - கழுத்திலிடுங் கயிறு. கதழ்எரி - பற்றியெரியும். தீ. நோன்தாள் - வலியமுயற்சி. புட்டில் ஆர்க்கும் - கணைப்புட்டில் பிணைக்கப்பெற்ற. மாவொடு -குதிரையொடு. முருக்கிதழ் மடந்தையர் - முருக்கம்பூவின் இதழ் போன்ற இதழுடைய மகளிர். முயங்கிய மார்பு - தழுவிய மார்பு. ஆர்கெழு - ஆரவாரம் பொருந்திய. பழனம் - பொய்கை. விடலை - காளையர், வீரர், நெருநல், பெருமகள் முன்னர் முற்றத்தோனே; இன்றே, மாவொடு செருக்கி மடந்தையர். முயங்கிய மார்பு, பழனத்ததுவே; தலை, வேந்தன் பாசறை யதுவே என்க. (1357) ஆட்புலம் கொன்று - பகை வீரர்கள் ஆகிய நிலத்தை உழுது. வாட்சால் போக்கி - வாள் ஆகிய சாலடித்து. எஃகம் வித்திய - வேலாகிய வித்தினை விதைத்த. வைகல் உழவன் - நாளுழவன். படை பாய்தலின் - படைக்கண் பாய்ந்து தாக்குதலின். மலைப்புற மலைந்த - எதிரிட்ட வீரர் மலைப்படையுமாறு போரிட்ட. பலகை - கேடயம். கயமூசு கயல் - மிக மொய்க்கும் கெண்டை மீன். நிறமூழ்கி நின்ற எஃகம் - மார்பில் மூழ்கி வெளிப்பட்டு நின்ற வேல். வைகல் உழவன் தோளிணை பலகையொடு ஒழிந்த புகழோன் நிறமூழ்கி நின்ற எஃகம் கயமூசு கயலிற் பலவே என்க. வாட்சால் என்பதும், நீர்மேய் என்பதும் பொருந்திய பாடங்களாம். (1358) உயக் கொளல் - விலகியோடக் கொள்ளல். பொருள் என - மெய்யென்ற. பண்ணமை கூர்ம்படை - வேலைப்பாடு அமைந்த கூர்மையான படைக்கருவி. நமரே - நம்மவரே. வேழக் கோடு - தந்தம். மடுத்துளம் கிழிப்ப - பாய்ந்து மார்பைக் கிழிக்க. பேழைப் பாம்பின் வரிக்குடர் துயல்வர - பேழையில் இருந்து வெளிவரும் பாம்பைப்போல் நீண்ட குடர் அசைந்துவர. இறைக்கு ஒத்த - தலைமைக்குத் தக்க. செம்மலொடு - பெருமிதத்தோடு. செருநவிலாளன் - போர்ப் புகழாளன். சீரிய வீரன் ஒருவனை இகழ்ந்த பொய்மையாளனை இடித்து ஒருவன் கூறியது இது. நீ மொழிதல் எவன்? இவன் கை இறந்தோர் எண்ணிலர் நமரே இன்று, வேழக்கோடு கிழிப்ப, குடர் துயல்வர, செம்மலொடு நிலஞ் சேர்ந்தனனே என முடிக்க. (1387) உருவப்புள்ளி - அழகிய புள்ளி. உட்குவரு திறல் - பகைவர் அஞ்சத்தக்க மிகுந்த வலிமை. குருகு - அன்னம். நாரையுமாம். வெள்ளைமாயோன் - வெள்ளைக் குதிரைக்கு உரியோன். முருகு மாமாயன் - முருகன் எனக் கண்டவர் மிக மயங்கத் தகையன். வயவேல் திருக்கும் - தன் வீர வேலைச் சுழற்றுவான். துணையோ தஞ்சம் இல்லை - துணைக்கு எவரும் இலர். கிணை ஆர் கண் என நடுவட் டோன்றி - போர்ப்பறையில் அமைந்த கண் போன்று நடுவிடத்துத் தோன்றி. தன் - அவ்வீரனுடைய. புரவி - குதிரை. மாயோன் யாவன் கொல்லோ, திருக்கும், திருத்தும், துணையோ இல்லை, நடுவண் தோன்றித் தன் புரவி ஆய்தல் தகும் என்க. (1408) முலைத்தாய் இரங்க - பாலூட்டிய தாய் வருந்த. புலைப்பறை முழங்க - புலையன் அறையும் பறை முழங்க. தம் இல் சாவார் - தம் வீட்டிலே இறப்பவர். தம்இல்லோரே - பிறர் இல்லத்தவரே. அன்னர் அல்லர் என் சிறுவர் - என் விரச்சிறுவர் அத்தகையர் அல்லர். முன்னிய - முற்பட்ட. வேந்து - பகை வேந்து. களத்து அவிய நூறி - களத்தில் வீழ்ந்து படுமாறு தாக்கிக் கொன்று. முளிபுற் கானத்து - பற்றி யெரியும் புல்லிய சுடுகாட்டில். விளியின் அல்லதை - சாதலை அன்றி. அறியலரே - இல்லத்தில் சாவதை அறியலர். பிறர் மக்கட்கும் தம் மக்கட்கும் உள்ள வேற்றுமையை ஒரு மூதிற் பெண்டு கூறியதாம். தம்மிற் சாவார்தம்மில்லோரே; என் சிறுவர், நூறி, வேந்தரொடு முளிபுற் கானத்து விளிவர் என்பதாம். அரிய இப்பாடல் சிதைவு பட்டது தமிழன் தன் நிலை யறியா மடிமையாலே யாம். (1409) குரங்கு மேனி - வளைந்த உடல். திரங்கு முகச் செதுமுலை - உலர்ந்த கண்ணையுடைய வற்றிப் போன மார்பு. வினவுதியாயின் - என் மகன் யாண்டுளன் என வினவுதியாயின். (புறம். 86) சமம் - போர். களிறு தலை அடுத்து - களிற்றில் தலைவைத்து. மாகால் நீட்டி - குதிரையின் மேல் கால் வைத்து. முரச மெத்தணையாக - முரசை மெல்லிய அணையாகக் கொண்டு. நரைமூதாட்டி, மன்னர்க்குதவி, அருங்கடன் ஆற்றிக், கழுகுணக் கிடந்த காளை நும்மகன் கொல்லோ என்க. (1410) துடியன் - துடிப்பறை கொட்டுபவன். ஆர்த்தல் - ஆர வாரித்தல். எறிதல் - வெட்டுதல். மேற் சென்றனன் - போர்மேற் சென்றனன். தன் - அவ்வீரனாகிய என் மகனை. ஒள்வாள் கழித்தான் - ஒளிபொருந்திய வாளை உறையில் இருந்து எடுத்தான். தழீ இந்தாம் - ஒலிக்குறிப்பு. தழீஇம் தழீஇம் நாலடி. 6. தண்ணுமை - சாப்பறை. துடிய, என்மகன் மேற்சென்றனனே; முறுவலன் தாக்கித் தண்ணுமை தழீஇந் தாமென்ன ஒள்வாள் கழித்தான்; வீழ்ந்தன களிறே என்க. (1439)உலகு பொதி உருவம் தன்னுருவமாக - உலகை யெல்லாம் தன்னுள் அடக்கிய உருவமே தன்னுருவமாக. பறந்தலை நன்காடு - பறந்தலையாகிய நன்காடு.அஃதாவது சுடுகாடு. புலவுங் கொல் - உலகை வெறுத்து வருந்தி அழுமோ. புலவுக்களம் - போர்க்களம். நன்காடு என்போல் புலவுக்களத்தே வேலோனை இழந்து புலவுங் கொல் என்க. இது காடு வாழ்த்து. காடு வாழ்த்தாவது, பிறந்தவர் எல்லாம் அழிந்து ஒழியவும் தான் அழியாத புறங்காட்டை வாழ்த்துதல் (தொல். பொருள். புறத். 24) (1455) நாய்ப்பிணவு - பெட்டை நாய். பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை என்பது தொல்காப்பியம். (பொருள். மரபு. 59) கிழ நரி ஏற்றை - முதிய ஆண் நரி. நாய்ப்பிணவுக்கு ஒடுங்கிய கிழ நரி ஏற்றை என்க. இறும்பில் தெறுவர - தூறுகளில் சுடுமாறு. பறந்தலைப் பாற்றிய சுடலை - போர்க களத்தின் பாலதாகிய சுடலை. தெழித்து - பேரொலி செய்து. ஆர்தர அறியா - ஆரவாரிக்க அறியாது. அஞ்சுவரு காடு - அஞ்சத்தக்க சுடுகாடு. அஞ்சுவருகாடு பனிக்கடல் போல ஆர்தர அறியா - அதன் அடங்கி ஒடுங்கிய நிலை குறித்தவாறு. (1475) மறலொடு - கூற்றுவனொடு. மைந்து தருக்கி - வலிமையில் செருக்குக்கொண்டு. திருமால்வழுதி - மன்னன் பெயர். ‘âUkhš tGâ K‹khW V‰gt® k‹d® ah®? என்க. முன்னி ரண்டடிகளும் ஆய்ந்து தெளிதற் குரியன, பிழைபாடுளவாகலின். (1492) இரிவது - புறங்காட்டி ஓடுவது. கெண்டை - மீனக்கொடி, மீன் இலச்சினையுமாம். தென்னவன் - பாண்டியனது. கடி கொள முனிந்த - அழிக்குமாறு சினந்த. வாங்கு - வளைவு. அவன் புறங்காட்டி ஓடான். அவனை எதிர்ப்பவனே புறங்காட்டி ஓடுவான். ஏனெனில் தென்னவன் வேம்பின் இலை அவன் சூடும் பூ ஆதலால் என்க. வேம்பின் இலையைக் கடிகொள முனிந்த கூற்றத்தின் புருவத்திற்கு ஒப்பிட்ட உவமை நயம் அறிந்தின்புறற்பாலது. பின்னிணைப்பு - 1 குறிப்புரை 1. ஓம்புதல் - தவிர்தல். தோம் - குற்றம். கல்லல் - ஆராய்தல். தோண்டுதல். கைதவம் - வஞ்சம், சூது. தோம் நனி சொல்லல், தீநெறி செல்லல், கைதவம் கல்லல் என்க. 2. சொல்லல், புல்லல், கொல்லல், நில்லல் என்பன எதிர்மறைப் பொருளன. சொல்லாதிருக்க என்பது போலக் கொள்க. எஞ்ஞான்றும் - எப்பொழுதும். புல்லுதல் - பொருந்துதல். செய்ந்நலம் - செய்ந்நன்றி. 3. மேவுவார் - அடைவார். தொன்மை மேவுவார் - பழைமை கருதி வாழ்வார். தொடர்வறாச் சுற்றம் மேவுவார் - என்றும் பிணைப்பு அகலாப் பெருஞ் சுற்றத்தொடு உறைவார். இன்மை - வறுமை. 4. தாளுடைந்து - கால் வலுவிழந்து. யாக்கை - உடல். விளிந்து - இறந்து. நாற்கதி - மக்கள், தேவர், விலங்கு, நரக கதிகள். மூழ்ந்தன - வளைந்த என்பர் மயிலைநாதர். முனிவார் - வெறுப்பார். முன்னி - நினைத்து. அளைமறிபாப்புப் பொருள் கோளுக்கு இஃது எடுத்துக்காட்டு. 5. காலும் - தகும். மூவுலகையும் தன்னையும் கொடுப்பினும் தகும். உண்டியே உயிரளித்தலால், பிறர்க்குரிய ராவரோ என்றார். 6. கார் அரவு - கரும்பாம்பு. கல்லார் வாய்ச் சொல்லைக் கரும்பாம்பு என்றதால் அது நல்லார் செவியிற் புகுதலைக் கடித்தல் என்றார். மகிதலம் - உலகம். இப்பாம்புக் கடியைத் தீர்க்க மந்திரமும் இல்லை. தந்திரமும் இல்லை என்பதாம். 7. வெறியுறு கமழ் கண்ணி - மணம் மிகப் பரவும் தலை மாலை. உறவு உற வருவன - தொடர்பு மிகுந்து வருவன. செறிவு உறு தொழிலினர் - தம்மொடு நெருங்கிச் செய்யும் தொழிலுடையவர். அறிவுறு தொழிலர் - அறிந்து பழகிய தன்மையர். பிறபிற - கேடு தரும் பலப்பல. 8. பட்டபொருள் சொல்லல் - நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறுதல். கடியவை விடுத்து இனியவை யுரைத்தால் எவரும் மகிழ்வர் என்பதாம். 9. உடையர் - செல்வர், வாய்ப்புக்கள் உடையவருமாம். சுற்றத்தவரும், இல்லாரை மதியார் என்பது குறிப்பு. 10. உடுத்த - சூழ்ந்த. வழாஅது - தவறாது. கொடைக்கடம் பூண்டு - கொடை புரிவதைக் கடமையாக மேற்கொண்டு. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை என்னுங் குறளை நோக்குக. 11. பெரும்பொருள் இருந்தும் பிறர்க்குப் பயன்படாமையால் உவர்க்கடல் என்றார். பயன்படும் செல்வத்தை ஊற் றென்றார். உளையே - உள்ளாய். சிறுவிலைக்காலம் - அருங்காலம் (பஞ்சநாள்) உறுபொருள் - மிகுபொருள். 12. எய்தற்கரியது - கிடைத்தற்கரியது. அந்நிலையே - அப் பொழுதே. என்று வையகம் என்னும் இரண்டு சொற் களையும் விலக்க இரண்டு குறட்பாக்கள் அமைந்திருத்தல் அறிக. 13. வெய்ய குரல் - கொடிய ஒலி. ஏறு - இடி. இடியோடு கூடினும் முகிலை மதிப்பர்; குற்றம் உடையர் எனினும் கொடையாளரைப் புகழ்வர் என்க. 14. புல்லார் - பொருந்தார், புல்லிய தன்மை வாய்ந்தார். கட்டுரை - நல்லுரை, செறிவமைந்த உரை. 15. அற்று - அது; ஈண்டு, உண்மை. அற்று அன்று ஆதல் - அவ்வுண்மையன்றாதல், அஃதாவது பொய்மை. உண்மை யற்றதும், மனத்தில் வருவதும் சொல்லாக வெளிப்படுவதும் பிறர் கேட்குமாறு அமைவதும் ஆகிய தன்மைகளை யுடையதே பொய்யாம். ஓர்த்தல் - கேட்டல். 16. வல்லுவான் - வல்லவன். வல்லான் - வல்லமை இல்லான். நன்மை தீமை, உயர்வு தாழ்வு ஒருவனிடத்தே அமைந்து இருத்தல் போல், நிலைப்பும் நிலையாமையும் ஒவ்வொன் றிலும் உள என்பதாம். 17. ஓம்புதல் - பேணிக்காத்தல். சொலன் முறை - பாராட்டும் வகையுடைய குடிவழி. பொலம் - பொன்; அழகுமாம். கூற்றத்தை விலக்க இவ்வாறும் துணைக்கு நில்லா. எம் உரை பயன் தரும் என்பதாம். 18. நிலவார் - என்றும் நிலைத்திரார். அருளே இருளை அறுத்துச் சிவகதி சேர்க்கும். பிற பயன்படா என்பதாம். 19. திரை - அலை. முட்டாது - தடையின்றி. ஆர்கை - உண்ணுகை. பரியினும் - வெறுப்பினும். 20. வித்தகர் - தொழில் திறமை வாய்ந்த கம்மியர். மத்தகம் - தலை. சித்தி படர்தல் - வீட்டின்பத்தை அடைதல். மயங்காதே - மையல் கொள்ளாதே. ஊக்கஞ் செய்தல் - முயலுதல். 21. அந்தரம் - வானம். அந்தரம் (அம் + தரம்) - நன்னிலை. மந்தரம் - மாயம். வாணாள் - வாழும்நாள். பூளை - இலவம் பஞ்சு, மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை என்பது கம்பர் வாக்கு. 22. களி மயக்கம் - களிப்புடன் கூடிய மயக்கம். சுழிந்து - சுழன்று, சுருண்டு, கரு நெரியும் கூந்தல் - கருமையான புரியமைந்த கூந்தல். புரியாவது கற்றை; சடை. 23. போது - பூ. கோலங் குயின்ற - அழகு செறிந்த; ஒப்பனை செய்யப்பட்ட. சிகை - கொண்டை. வேம் - வேகும். சால - மிக. காலக்கனல் - ஈமத்தீ. 24. இறந்த வெல்லாம் - மற்றவை யெல்லாம். கற்றுத்துறை போய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த பெருமகன் போன்றது துறந்தவர்க்குத் தோற்றும் மெய்யுணர்வு என்பதாம். இல்லறத்தார் பெறுமவற்றுள் அறிவறிந்த மக்கட் பேறே சீரியதாகலின், துறவறத்தார் பெறுமவற்றுள் மெய்யுணர்வே பேறு என்க. இரண்டன் பயனும் இன்பமாம். 25. கொண்டது கொடுக்கவும், கொடுத்தது கொள்ளவும் உலகியன் முறை உளதாகலின் இரண்டும் அகன்ற பற்றற்ற நிலை கொள்க என்பதாம். நாடுதல் - விரும்புதல். அன்மை - விரும்பாமை இருவினையும் சேராமைக்கு வழி குறித்தார். 26. தீர்த்தான் - இழிதகைமை தீர்த்தான். முட்டறுத்தல் - தடையை நீக்குதல், வழுவகற்றுதலுமாம். கட்டறுத்தல் - பிறவிப் பிணியை அறுத்தல். 27. அத்தை - அதை. ஒன்றினும் ஒன்று பார்க்க அரிதாம். எழுதுதல், படித்தல், கற்றல் பயன்காணல், நிற்றல் என்பவை படிப்படியே அரிதாதல் அறிக. 28. நண்ணினர் - நண்பர், அன்பால் நெருங்கினவர். நண்ணார் - பகைவர். கோடாமை - ஒருசார் சாயாமை. அஃதாவது மனங்கோணாமை. இருங்கழல் - வலிய கழல். கழல விடப் படும் காலணி கழலாயிற்று. கழலில் அணிவதாலும் அப்பெயராம். கோடாமை, எண்ணல், காத்தல் - வேந்தர்க்கியல்பென்க. 29. சிறைப்படுவ புட்குலமே; சிறைவைக்கப் படுவார் இலர்; சிறகுகளை உடையவை பறவைகளே; அணை கட்டி நீர் தேக்குவதுண்டாகலின், தீம்புனலும் அன்ன என்றார். இவண் சிறை (தடை) அணை என்பதாம். கொடியன எவையும் இல்லை; குன்றத்து மாளிகைகளும், பூங்காக்களும் கொடி களை யுடையனவாம். 30. வெண்ணீர்மை - வெள்ளிய தன்மை. உள்ளீடின்மையைக் காட்டுவதும் வெண்மையாம். ஒளியார் முன் என்னுங் குறளில் வெளியார் என்றார் அறிவிலாரை. இங்கே, வெண்ணீர்மை யுடையார் இலர், முத்தே வெண்ணீர்மைய; கண்ணீர் வடிப்பார் இலர், கள் (தேன்) நீர் வடிப்பது பொழிலே; இரங்கி அழுவாரிலர்; யாழே மெல்லி தொலிக்கும். கோல் நிலவு நிலம் - ஆட்சி நிகழும் இடம். 31. தைவரல் - தடவல். பரிதல் - அன்பு செலுத்துதல். நுகம் - நுகக்கோல். பகலாணி - நடுவே அமைந்த ஆணி. தஞ்சை வாணனை நுகத்தில் பகலனையான் என்றார் பொய்யா மொழியாரும். நடுவு நிலைக்கு ஆணி, கொப்பூழ், மந்தரம் என்பவை உவமையாம். தொடுதல் - தோண்டுதல். முயல் பாய் வழி - முல்லை (காடு). கயல்பாய்வழி - மருதம் (வயல்). முயல்... கயல்களிறு...bg‰w«” - காடு கெடுத்து நாடாக்கல் கூறினார். படப்பை - தோட்டம். குழை - சிறுமியர் காதணி. இழை - அணிகலம். தட்டு - தடுத்து. இலக்கம் - பொன் வெள்ளிக் காசுகள். சொற் சீரடிக்கு எடுத்துக்காட்டாக இப்பாடல் காட்டப்பெற்றுள்ளது. யாப். வி. 99. 32. அளி - வண்டு. புண்டரிகம் - தாமரை. முயன்றால் முடியாப் பொருள் இல்லை என்பதாம். 33. தாளாளர் - முயற்சியாளர். யாளி - சிங்கம். கோடு - தந்தம். பீலி - மயிற்றோகை. 34. செந்நெறி - செம்மை + நெறி; நேரியவழி செந்நெறி, புகழ், சால்பு, மெய்ந்நெறி வாழ்வாரே வாழ்வார். 35. பூதலம், குவலயம் - உலகம். கறையுடைய தெனினும் மதி ஒளி விளக்கும். சில குறையுடைய ரெனினும் நல்லோர் நலம் புரிவர் என்பதாம். 36. பெரியோருழை - பெரியோரிடத்து. இருநிலம் - பெருநிலம். தேக்கும் கடல் - நீர்ப்பெருக்குடைய கடல். மதிமேல் மறுப்போல் பெரியோர் பிழை உலகறி பொருளாம். 37. பயன் தூக்காது - பயனை ஆராயாது. வரையாது - அளவு கருதாது. வாமன் - புத்ததேவன். தாராய் - மாலையை உடையாய் (ஆடூஉ முன்னிலை) 38. பிறழாது - மாறாது; தவறாது. இறுவரை - பெரிய மலை. பெரியோர் பிழை பெருமலை மேல் விளக்காய்ப்படும். சிறியோர் செய்தவறு உலகோர் கண்ணிற் படாது என்க. 39. வெருவரவீக்கும் - பகைவர் அஞ்சுமாறு கட்டும். சரம் - அம்பு. விறல் வெய்யோர் - வலிமையும் கொடுமையும் வாய்ந்தோர். வெம்மை வேண்டல் ஆதலால் போர் வேட்கையுடை யோருமாம். ஒருவர் ஒருவர் உணராமற் சென்றது என்பது ஒற்றின் சீர்மையாம். 40. மள்ளர் - வீரர். இவர் வெட்சியார். இவர் செலவு கரந்தியல் காட்டுத் தீப் போல்வதென்க. மறைந்து பரவி வளைத்துக் கொண்டு மூண்டெரியும் காட்டுத் தீ என இவர் செய்கை யோடு ஒட்டுக. அரந்தை - துன்பம். பதிதல் - தங்குதல் இஃது ஊர் அழிவிற்கு இரங்கி யுரைத்தது. 41. அரவூர்மதி - பாம்பால் பற்றப்பட்ட முழுமதி. கரிதூர - கரிமூட. ஈமம் - சுடுகாடு, விறகு. இரவில் தீக் கொளுவி விட்டுப் பகலிலே கொலை செய்தற்கு எண்ணியிருந்தோர், கொல்லுதற்கு எவரையும் பெற்றிலர். அனைவரும் அழிந்து பட்டனர் ஆகலின் என்க. 42. வயவர் - வீரர். அவிய - அழிய. நாண் - வில் நாண். பூசல் - போர் ஆரவாரம். கொள்வான் - கொள்ளுமாறு; வானீற்று எச்சம். நிரைகொள்வான் தாக்கினார் ஆகலின் இவர் வெட்சியார். பகைவர் அனைவரும் ஒழிந்தார் ஆகலின் வில் நாண் ஒலியவிந்தது என்க. 43. குளிறு குரல் முரசம் - பேரொலி செய்யும் முரசம். கொட்டின் - முழக்கினால். வெரூஉம் - அஞ்சும். காண்டலும் ஆற்றா - காணவும் பொறா. ஆதலால் கானமெல்லாம் நிரை இடம் பெறுக என்பதாம். 44. கடிமனைச் சீறூர் - மங்கல மனைகளைக் கொண்ட சிறிய ஊர். கடி - காவலுமாம். வடிநவில்வேல் - கூரிதாய் வடிக்கப் பெற்ற புகழ் வாய்ந்த வேல். அடிபுனைதோல் - மிதியடி. மறுத்தோம்பல் - மீட்டல். மறுத்தோம்பல் ஒட்டான் மள்ளன் ஆதலால் வருக என்க. இது படைத்தலைவர் படையாளரைக் கூவினது என்பார் நச். 45. மாற்றருந்துப்பு - பிறரால் விலக்குதற்கு அரிய வலிமை. வயம் - வெற்றி. வேந்தன் நல்லன் என்க. ஈதும் - ஈவோம். புல்வேய் குரம்பை - புல்லால் வேயப்பெற்ற குடிசை. புறஞ்சிறை வாய் - புறத்தே ஒரு பகுதியில். ஒற்றிவேய் உரைத்தார்க்கு ஈதும் என்க. 46. நித்திலம் - முத்து. பட்டம் - நெற்றிப்பட்டம், ஆவது ஓர் அணி. திலதம் - பொட்டு. ஓர்ந்து உடீஇ - தக்கதைத் தேர்ந்து உடுத்து. துடியர், வாழையடி வாழை மரபுவழி வருதலான் தத்தம் துடியர் என்றார். போர் மேற் செல்வார்க்கு ஊக்க மூட்டத் துடிகொட்டுதல் துடியர் தொழிலாம். மறங்கடைக் கூட்டிய துடிநிலை என்பார் தொல்காப்பியர். பொருள். 59. 47. ஐயை - தலைவி. இவண், கொற்றவை. கொற்றவைக்கு எருமைப் பலியூட்டல் பண்டை வழக்கு. அரசன் வேந்தன் என்பன, தாக்க எழுவானையும் தாக்கப்படுவானையுமாம். யாம் தன் மேல் சீறாமல் இன்று வஞ்சி சூடினான் என்க. வீரர் சீறுதல் வேந்தன் மேற் கொண்ட அன்பும், தம் வீறும் வெளிப் படுத்தும். 48. எடுத்த நிரை கொணா என்றது வேந்தன் கட்டளை. வைவாள் - கூரியவாள். வாள் வாங்கினவன் வீரன். அவன் வாள் வாங்கியதும் பகைவேந்தர் மார்பு. விழி ஆயவை இடந்துடித்தன. இடைநிலைக் குணத் தீவகத்திற்கு இப்பாடல் எடுத்துக்காட்டு. - தண்டியலங்காரம். 39. 49. ஆபெயர்ப்போன் - பசுக்கூட்டத்தை மீட்போன்; இவன் கரந்தையான் என்க. பறவாப்புள் - நிமித்தம்; அஃதாவது விரிச்சி. வெளிப்படை என்பது இது. வந்தநீர் காண்மின் என்றது விரிச்சியுரை. நீர்சூழ் கிடக்கை - கடல்சூழ்ந்த உலகம். 50. ஆயம் - தொகுதி, கூட்டம். சுவடு - தடம். படுமணி - ஒலிக்கும் மணி. பகர்தல் - கூறுதல். ஒற்றன் கடமைச் சிறப்பால் வயவேந்தன் காதலுக்கு உரியவனானான். நிரையும் நிரை யிருப்பும் உரைத்தோய், வேந்தன் காதலும்நிரையும் உரித் தாகுக உனக்கு என்க. 51. சீறூர் - சிறிய ஊர். கொடை கொண்டு - தொடுத்துக் கொண்டு. நிலஞ்சேர்தல் - வீழ்ந்து படுதல். இகல் - போர். இளையோர் - வீரர். தொழுவில் துகள் எழுதல், பசுவின் ஆர்வ வருகையும் மிகுதியும் பற்றியது. எருத்துகள் படுதல் மருந்து போலும்! இன்றும் புண்ணுக்குச் சாண ஒற்றடமிடல் சிற்றூர் வழக்கு. 52. கழு - கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டு தலையுஞ் சீவி மாலைபோற் கட்டியிடுங்கழி என்பார் நச். கலித் - 106. யாத்து - கட்டி. தொகுமின் - சேருங்கள். எழு - தூண், தொழுவில் உள்ள கட்டுத்தறி. புல்லொடு நீர்தந்து மேய் புலம் போலப் போற்றுக என்க. 53. மூத்தோன் - தலைவன். வரம்பிலன் - எல்லையில்லாதவன். மருண்டான் - மயங்கினான். நிரைகோள் கண்ணியானைக் கண்ட மூத்தோன் இவன் கொடைக்கு வரம்பிலன் என மருண்டான் என்க. எவ்வளவு கொடுப்பினும் இவன் செயற்கு ஈடாகா தென்பது குறிப்பு. 54. வெட்சி மறவர் வீழ்ந்தமை கேட்டு விடாது பின் வந்தோர் பாடு கூறினமையின் பூசன் மாற்றாயிற்று என்று இதற்குத் துறைகூறுவர் நச். கயிறு இயல் பாவை - கயிற்றால் இயங்கும் பாவை. அயில் திரித்து - வேலைச் சுழற்றி. உளைக்குரல் - மான் குரல். பூசல் - போர். நிலங்கெட - நிலம் மறைய. நோக்கம் ஊழித்தீ அன்ன தென்க. செஞ்சோற்றுக்காகத் தன்னைத் தருதலால் அஞ்சுதக்க தென்றார் அதனை. 55. படுமணி ஆயம் - ஒலிக்கும் மணி கட்டப் பெற்ற பசுக் கூட்டம். வாட்டிறல் - வாளின் வலிமை. குரிசில் - தலைவன். முழவு துயில் மறத்தல் - இடைவிடாது ஒலித்தல். முரசில் குணில் அடிபடும் இடத்தைக் கண் என்னும் வழக்கு அறிக. ஊன் சுடு புகை, விண்ணில் அமைந்த மீன் சுடுதற் கெழுந்தாற் போல் பரவும். கைவல் கம்மியர் - கைத்திறம் வல்ல கம்மகாரர். விரை - மணம். கணம் - தொகுதி. பூவிலை மகளிர் - அற்றைப் பரிசங் கொள்ளும் பரத்தையர் (சிலப். 5:51) சந்தி - முச்சந்தி. சதுக்கம் - நாற்சந்தி. வாடுறு நறவு - உப்புக் கண்டத்தோடு கூடிய கள். காய்ச்சப்பட்ட கள்ளுமாம். கொள்வினை மாற்றாக் கொடை - கொண்ட அளவிற் சிறிதும் குறையாத கொடை கைதூவாள் - கை ஒழியாள். 56. வேந்தன் படை கொண்டு செல்லும்போது, படைத் துணைக்கு வேந்தர் பலர் வர அவன் விண்மீன் இடையே தோன்றும் வெண்மதி என்ன விளங்கினான் என்பதாம். பரிசு - தன்மை 57. போர்க்கு அடல் ஆற்றும் - பேரில் வன்மை காட்ட வல்ல. புரவி - குதிரை. தானாதி - படைத்தலைவன். ஏனாதி என்பதொரு பட்டம். அதற்கு அடையாளமாக அரசன் மோதிரம் அளிப்பது வழக்கு. தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதி, கார்க்கடற்குக் கரை என்க. 58. போர் பெற்று நாளாயினமையின் அப்போர் பெறும் விருப்பினராய்த் தோள் சுமந்திருத்தலை வீரர் வெறுத்தனர். அவர் ஆண்மையால் பகைவர் நாட்டைக் கொள்ளையிட வல்லவர் ஆகலின் ஆள்வினைக் கொண்டி மாக்கள் எனப் பெற்றார். வெறுப்பால் உண்டி முனைந்தனர் என்க. ஊங்கு - இனிமேலும். செரு - போர். 59. தான், விலங்கு; தனித்தது; பிறன் ஆணைக்குரியது; ஒருகையுடையது! அதனை இருகையுடைய மகனாகிய யான் அழித்தல் இழிவே. இஃதொரு வீரன் கூற்று. 60. சேணுயர் ஞாயில் - மிக உயரத்துள்ள சூட்டு என்னும் மதிற்பொறி. ஏணி தவிர்தலால் பாய்ந்து ஏறினான். பாணியா - தாமதம் இன்றி. புள் - பறவை. குறும்பு - (பகைவர்) மதில். 61. கடல் பரந்து மேருச் சூழ்காலம் - ஊழிக்காலம். சென்றது ஊழி போன்றது. கொடிமதில் காத்தோரைக் கொன்று விடுதலால் தொக்கடைந்தார். வீரர்க்குக் கடலும், மதிலுக்கு மேருவும், அகத்து வீரர்க்குக் கடலால் மறைந்த புவியும் உவமைகள். 62. மறம் நாட்டும் - வீரத்தை நிலைநாட்டும். மைந்து - வீரம், வலிமை. அவர் மங்கலம் இழத்தல் ஒருதலை என எண்ணி நொந்தார் என்க. எறிதொறும் - அழிக்கும் தொறும். நீங்காமைக்குப் பாசி உவமையாயிற்று. 63. ஒடுக்குதல் - வளைத்தல். கோயில் - அரண்மனை. கோள் மறவர் - கொள்கையின் ஊற்றமுடைய மறவர். கொடுமுடி - பேருயரம். குப்புற்றார் - ஒருசேர மொய்த்தார். கோடல் - கொள்ளுதல். 64. மழுவாள் - ஒரு படை. பரசுராமன் கைக் கொண்டிருந்தது. மருங்கு - பரம்பரை. மால் - பரசுராமன். ஏழ்பொழில் - ஏழுதீவுகள். கோடியர் - கூத்தர். கூடார் - பகைவர். 65. செற்றவர் - முனைந்து போர்க்கு வந்தவர். கொற்றவை. வாட்கண் உறைவதாகக் கூறும் வழக்குண்மையால் வாள் சேர்ந்த கொற்றவை என்றார். பூ, சாந்தம், புகை இன்னன கொள்வளோ? 66. எயில் - மதில், அரணம். பதி - தன்னூர். படைப் பெருக்கத் தால் துகள் உண்டாயிற்று. தொகுத்த என்பது தொகை நிலை என்னும் புறத்துறை வகை. கடல் போல் பரவிய படை யனைத்திற்கும் சிறப்புச் செய்யுமாறு ஒருங்கு வருக எனத் தொகுத்தல் தொகை நிலை. 67. ஐயவி - வெண்சிறுகடுகு. அப்பி, இயற்றி, பரப்பி, இயற்றி வைக்கப்பட்ட மதில் என்க. தண்ணுமை - முரசு. கோட்டை வாயிலில் பந்தும் பாவையும் தூக்குதல், வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப், பொருநர்த் தேய்த்த போரறு வாயில் என்பதனாலும் அறியலாம். (முருகு. 69 - 70) 68. சிலை - வில். வயவர் - வீரர். தூற்றயல் - தூறு + அயல். தூறுகளை அடுத்து. களிறு உதைத்த தலை மூக்கறு நுங்குக்கு உவமை. உருகெழு - அச்சம் பொருந்திய. செறுத்தல் - அழித்தல். மிளை - காவற்காடு. உரும் - இடி. 69. இஃது ஏணிமயக்கம் என்பார் நச். மதிலில் சார்த்தப்பட்ட ஏணிமேல் நின்று வீரர் போர் செய்தல். எழு - கணைய மரம். மடை அமை ஏணி - மடுத்துச் செய்யப் பெற்ற ஏணி. மீதிடு பலகையால் மடுத்துச் செய்யப்பட்ட ஏணி என்பர் நச். ஞாயில் - சூட்டு. சூட்டளவு பிணங்குவித்து வாயிலைத் தூர்த்தார். தூர்த்தல் - மூடுதல், மேடாக்கல். 70. புரிசை - கோட்டை. கார் சூழ் குன்று - மேகத்தால் சூழப் பெற்ற மலை. கடை - வாயில். எயில் - மதில். விலங்கல் - மலை. ஆகம் - மார்பு. இஃது அகத்தோன் முற்றிய முதிர் வென்பர் நச். 71. ஈற்றா - ஈன்றணிய பசு. பதிச்சுற்று - வெளி மதில். வேற்றரணம் உள்மதில். அகமதில் புறமதில் ஆகிய இரண்டனுள் புறம திலை இழந்தமையால் இரு கன்றின் ஒன்றிழந்த ஈற்றாப் போற் சீறி என்றார். இஃது அகத்துழிஞையோன் எயில் காத்த நொச்சி நச். 72. பொலம் - பொன், அழகு. பொறை - சுமை. திடர்படல் மேடு படல். விரகு - அறிவு, சூழ்ச்சி, நீத்துநீர் - வெள்ளப்பெருக்கு. 73. இஃது அகத்தோன் பாசி மறம். அகத்தோர் மதிற்புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய நிலை பாசிமறமாம். பாசி என்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின் என்பர் நச். கடை - வாயில். மது - தேன். பதுக்கை - மேடை, திட்டை. வாயில் தோறும் வீழ்ந்தோர் மேலே வேந்தன் வீழ்ந்து பட்டதால் வேறு மேடை வேண்டா என்க. 74. கொல் + துறை = கொற்றுறை, கொல்லன் உலைக்களம். அந்தரம் - வானம். அவுணர் போன்று எயில்மேல் வேலோர் தோன்றினார். அவுணர் - அசுரர். 75. குடுமி - இவண், முடி. விருந்தினர் வந்தார் - புதியராய்ப் புகுந்த வீரர். முடி சூடுதற்குத் தடையாயவர்க்கு விண் விருந்து தந்தான் என்று பிறர் ஆர்த்தார். 76. வந்த வேந்தனுக்கு வானும், இருந்த வேந்தனுக்கு ஊரும் தந்தாள் கொற்றவை. ஊரவன் வாளை இவண் பெற்றான், வானவன் வாளை வானிற் பெறுவளோ? 77. வலைவன் - வலைஞன். ஆங்கு - போல. தண்டத்தலைவர் - படைத்தலைவர். தண்டாவது படை. விட்ட தண்டினில் என்றார் கலிங்கத்துப் பரணியிலும். தலைக்கூடல் - சேர்தல். உண்டற்ற சோற்றார் - செஞ்சோற்றுக் கடன் கழித்த வீரர். 78. இஃது இருவருந் தபு நிலை. தபுதல் - இறத்தல். வேட்டல் - மணத்தல்; வேள்வி செய்தலுமாம். கதிரும் திங்களும் - ஒன்று கூடிப் பகல்வாய்த் தோன்றி ஒளி தேய்ந்ததுபோல் இருவரும் வீழ்ந்தார். இம் மறத்துறை கொடிது என்க. 79. பூத்தாள் - மெல்லிய கால். புறவின் - புறாவைப்போல். வணக்கி - பணியச் செய்து. விறன் மதில் - வலியமதில். வேண்டார் - பகைவர். பார்க்கவே அரிதாம் மதிலைப் பற்றுதல் எளிதோ என்க. 80. பருதி - சக்கரம். பற்றார் - பகைவர். வாள், கூறு இரண்டு செய்தது. ஒரு கூறுமதிலுள் வீழ்ந்தது. 81. கங்கை சிறுவன் - வீடுமன். காய்கதிரோன் செம்மல் - கன்னன். செயிர்த்தார் - பகைவர். மறுவந்தார் - கலக்கங்கொண்டார். 82. கனற்ற - வெதுப்ப. சிறக்கணித்தல். கண்ணை ஒரு பக்கமாகச் சுருக்கிப் பார்த்தல். சிறக்கணித்தான் போல நகும் (திருக். 1095) எருமை - புறத்துறையுள் ஒன்று. கூழை தாங்கிய எருமை என்பது தொல். முதுகிட்டோடும் தன் சேனைக்குப் பின்னே சினம் செருக்கி நின்று தானே பகைப் படையைத் தாங்கும் நிலை. 83. கோடுபோல் தண்டினை விட்ட வீமன், மாமன் சகுனியைத் தழுவிப் போரிட்டான். ஏறு ஆடல் ஆயர் என - ஏறு தழுவும் விழாவைக் காணும் ஆயர்களைப் போல. 84. பிறழல் - தவறல். எறிதல் - அழித்தல். குறைத்து அடுக்குதல் - கொன்று குவித்தல். பல்படையார் - பகைவர். படி - தன்மை. கொன்று குவித்தல் நூழிலாட்டு என்னும் புறத்துறையைச் சார்ந்தது. 85. ஆள் - காலாள். வள்வார் முரசம் - வாரால் இறுக்கிக் கட்டப்பெற்ற முரசு. ஒழுகு உறைகழித்தான் என்க. உறை கழித்தல் - வாளை உறையினின்று எடுத்தல். தொழில திசயத்திற்கு இஃது எடுத்துக்காட்டு. 86. வேந்தன் கண் சிவத்தலால் பகைவர் தோள், திசை, அம்பு, புட் குலம் சிவந்தன என்க. தெவ் - பகை. சேந்தன - சிவந்தன. புள் - பறவை. முதனிலைக் குணத் தீவகத்திற்கு இஃது எடுத்துக் காட்டு. 87. பகழி - அம்பு. காய்ந்தவர் - எதிர்த்தவர். செம்மை யுடையார் சொல்லை அம்போடு ஒக்கச் சிலேடித்தமையால் சிலேடை யாயிற்று என்பது வீரசோழியக் குறிப்பு. 88. ஞாட்பு - போர். உடன் வயிற்றிருவர் - சுந்தோபசுந்தர் என்னும் உடன்பிறந்தார். உடன் வயிற்றோர் என்னும் அருந்தமிழ்ச் சொல், சகோதரர் எனும் வடமொழிப் போர் வைக்குள் ஒளிந்தது. செரு - போர். எருக்குதல் - நெருக்கித் தாக்குதல் அரவணிகொடியோன் - துரியோதனன். தமியர் - தனியர். தும்பி - யானை. இருவரும் இணைந்து பொரல், கொடிகொடி பிணங்கற்குவமை. 89. குறங்கு - தொடை. ஆசான் - துரோணன். மகன் - அசுவத்தாமன். வேர்முதல் - மக்கள். மாதுலன் - மாமன். நிறீஇ - நிறுத்தி. செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலை என்பதற்கு இப்பாடலை எடுத்துக் காட்டிக் குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊர் எறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையுங் கொன்று வென்றி கொண்ட அசுவத்தாமாவின் போர்த் தொழில் போல்வன என்னுங் குறிப்பெழுதியுள்ளார் நச். 90. உயிர் தோன்றாமை போல் உடலுந் தோன்றா வண்ணம் சிதைந்து பட்டது. அடிபெயரா நிற்றல் - பின் வாங்காது நிற்றல். அரமகளிர் - தெய்வப் பெண்கள். மரவடி - மரக்கால். மரக்காலை வரிசையாக வைத்து விளக்கேற்றல் மங்கலமாகக் கருதப்பெற்றது போலும். நிரைமரக்கால் வைத்தல் இன்றும் வழக்குண்மை அறிக. 91. கடல் முகிலையும் திரைகளையும் உடையது. படைகரி களையும் பரிகளையும் உடையது. கடல் மரக்கலம் உடையது. படை தேருடையது. பாய்மா - குதிரை. ஆழி - சக்கரம். கலம் - கப்பல். இருபொருள் வேற்றுமைச் சமத்திற்கு இப்பாடல் எடுத்துக்காட்டு. 92. அனைத்துலகுஞ் சூழ் போதல், நிதியங் கைக்கொள்ளல், அளவிடற்கருமை, ஆயவற்றால் கடலும் படையும் ஒப்புமை யுடையன. கடல், நீர் வடிவிற்று என்பதொன்றே வேற்றுமை. ஒருமை விரோதத்திற்கு இஃதெடுத்துக்காட்டு. 93. மாநாகம் முன்னுயர்த்தான் - துரியோதனன், வென்றுவரு கணையான் - அருச்சுனன். அவன் மகன் அபிமன்னு ஓடாப் படையாண்மைக்கு எடுத்துக்காட்டு. 94. பாண்டில் - தேர். இகந்து - கடந்து. தை அணல் - அழகு படுத்தப்பட்ட கழுத்து. கடுப்ப - போல. கடாஅம் - மதநீர்-கடியமை கள்- மணமிக்க கள் சிதர்தல் - சிதரிப் பரவுதல்; வேல் + திரித்து - வேறிரித்து. 95. பரியுருவ - நடைகெட. பாய்மா - குதிரை. 96. சுண்ணம் - மணப்பொடி. பால்நிறம் - பானிறம். 97. இடித்துப், பொழியாமலும் நீர்ப்பெருக்குக் குறையாதது காவிரி. யானையின் கால்கள் கழல் பூண்டன; அப்பொழுதே பகைவர் தாள்கள் தளைபட்டன. தாள் + தாமரை - தட்டா மரை. தெவ்வர் - பகைவர். இது தொழிற் குறை விசேடத்திற்கு எடுத்துக்காட்டு. 98. வல்லி - விலங்கு. புல்லாதார் - பகைவர். வார் - நீண்ட. மானவேல் - வலியவேல். புழை - துளை. தடக்கை - பெரிய கை. நால்வாய் - தொங்கும் வாய். பொருப்பு - மலைபோன்ற யானை. யானை கால் நிமிர்ந்தால் மங்கல நாண் அறும் என்க. வலி என்பதற்கு வைதருப்ப நெறியார் காட்டும் சான்று இது. 99. உருவம் - அழகு. கோடு - கொம்பு, தந்தம். அகலம் - மார்பு. வேற்றாரும் மாற்றாரும். பகைவர். 100. படு பருந்து - பெரும பருந்து. சூர் - அச்சம். போமாறு - போகும் வழி. கொடி - காகம். 101. கண்சேந்து - கண் சிவந்து. மேற்கொண்டான் - தலைவன். ஓடை - நெற்றிப்பள்ளம். 102. மட்டு - மது. களியானை - மதஞ் செருக்கிய யானை. 103. மாறன் களிறு பகைவேந்தர் கையுடன் கூடிய துண்டத்தைத் துதிக் கையிலும், முடித்தலையைக் கொம்பிலும் கொண்டு நீராடிச் செல்லும். துணி - துண்டம் கோடு - கொம்பு. 104. தானவர் - அசுரர். மானவேந்தன் - அருச்சுனன். பிறக்கிடம் - பின் வாங்குதல். மலைதல் - போரிடல். ஒல்லான் - ஏற்காத வனாக. 105. நிற்றந்து - நின்று. மணி நிறப்பாகன் - கண்ணன். ஐவர்க் கிடையோன் - அருச்சுனன். வேள் - முருகன். சூர் - சூரபன்மன். தவன்றி - செறிந்து. அமர்தல் - விரும்புதல். 106. தார் - படை. வெல்வருக - வென்று வருக. போர்க்களிறு காணா இளமையான் - போர்க்களிறும் கண்டறியாத வீரன் மாணார் - 107. சிறுவன் வீழ்ச்சி அறுகயிற்றுப் பாவை போல்வது. இதனைக் கண்ட தாய் மகிழ்ந்தாள். வீரனால்வீழ்ந்து பட்டோர் தாயரே, கேளிர் போல் அழுது கிடந்தனர். 108. புண் அனந்தர் - புண்ணுற்ற மயக்கம். போற்றுநர் - பேணு வார். உளை ஓரி - ஊளையிடும் நரி. உட்க - அஞ்ச. இது பேய்க் காஞ்சி. 109. ஆளி மதுகை - அரியேறு அன்ன வலிமை. கூளி - பேய். பசி தீர்ந்தமையால் தீர்த்த வாள்பாடிக் கூளிகள் ஆடின. இது வாள் மங்கலம். 110. மெய் பெறாள் - உடலைப் பெறாளாய். கொண்டோன் தலையொடு முடிந்த நிலைக்கு மேற்கோள் நச். 111. வாரா உலகம் - வீட்டுலகம். அலகற்ற - கணக்கற்ற. கழிந் தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலைக்கு மேற்கோள். நச். 112. வால் நரை - மிக வெளுத்த நரை. பட்டனன் - இறந்தான். ஞான்று - பொழுது. நோன் கழை - வலிய அடிமரம். துயல்வரும் - அசையும். வெதிர் - மூங்கில். சிதர் - மழைத்துளி. 113. பால் நாள் - (பானாள்) நடுநாள். அடுக்கம் - மலை. அதர் - வழி. எண்கு - கரடி. அளை - குகை. அவரின்றி நிகழும் உறவு கல்லளை ஒரு தனி வைகியதனைத்து. யாக்கை - உடல். 114. ஏழகம் - ஆட்டுக்கடா. தயங்குதல் - விளங்குதல். தயங்க - சோர. போந்தை - பனை. நாகம் - ஆதிசேடன். இஃது ஏழக நிலை என்னுந் துறைப்பாற்படும். போந்தை மலைந்தாடியது இது நச். 115. குறும்பூழ் - காடை. கொற்றம் - வெற்றி. செறுதல் - அழித்தல். மலையற் பாலதூஉம் - சூடத்தக்கதும். இது வேம்பு மலைந்தாடியது என்பர் நச். 116. ஆர் வேய்ந்த - ஆத்தி மாலை சூடிய. பறை கெழு வாரணம் - பறையறைந்து செல்ல விடும் வாரணமாகிய யானை. சிறை கெழு வாரணம் - சிறகுகள் அமைந்த வாரணம் ஆகிய கோழி. புறஞ் சிறை வாரணம் என்பது அடிகள் வாக்கு. சிலம்பு 10:248. இஃது ஆர் மலைந்தாடியது. நச். 117. துகள் - தூசி. மூளுதல் - பற்றிச் சூழ்தல். அமர்பொரய் - போர் செய்யாய். இது பாரதப் பாட்டு என்பார் நச். 118. வடு - புண், தழும்பு. எஃகம் - வேல். ஓடா விடலை - பிறக்கிடாத வீரன். பறந்தலை - போர்க்களம். ஓடா விடலை நடுகல் நோக்கிப் புண்வாய் கிழித்தனன் இவன் போல் இந்நிலை யான் பெறுக என என்க. இது போர் முடிந்தபின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புற வருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சி யாயிற்று என்பர் நச். 119. ஒசித்த - வளைத்த, ஒடித்த. கரந்த - மறைத்த. மரம் பெறாப் போரிற் குரு குறங்கும் - தங்குதற்கு மரத்தைத் தேடிப் பெறாது வைக்கோற் போரில் நாரை உறங்கும் மறு காட்டாய் என்க. இது சோழனை மாயோனாகக் கூறிற்று. நச். 120. ஏற்றூர்தியான் - சிவபெருமான். வானவன் - சேரன். ஆற்றல் ஆள்வினைகளில் ஒப்பாவர். கண்ணால் வேறுபடுவர். இது சேரனை அரனாகக் கூறியது. நச். 121. கோதை - சேரன். ஏறூர்ந்த அந்தரத்தான் - சிவபெருமான். கோழியான் - முருகன், கோழிக கொடியுடையவன் ஆகலின். ஆழியான் - பலதேவன். இது சேரனைப் பலதேவராகக் கூறியது. நச். 122. புகா - உணவு. இயம்ப - ஒலிக்க. குரிசில் - தலைவன். ஆள் - காலாள். 123. காணாத கண் - புறத்தே காணுதற்குரிய கண் அல்லாது அகத்தே காணுங் கண். நாகம் - பாம்பு. அலையாமை கட்டுரைப்பார் என்பதும் பாடம். 124. பிறை, வளர்தல் தேய்தல் பிறத்தல் இறத்தல் உடையது என்பது மாயை. நிலைபேறுடையது என்க. வள்ளியாவது தண்கதிர் மண்டிலம். 125. சார்பு - தொடர்பு, பற்று. சார்பற்ற அது பிறவற்றுக்குச் சார்பாயது. சுடர் - கதிர். கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் நச். 126. தாழி கவிப்ப - முதுமக்கட் டாழியால் மூட. நோற்றனை - நோன்பு கொண்டாய். வரை நோற்றனை என்க. உலகங் கொள்ளாத புகழோன் சீர் பொறிக்கும் கல் தருதலால் நோற்ற தாம். 127. கல்லாயும் - கல்லை ஆராயும். விடலை - வீரன். தூரியம் - இசைக்கருவிகள். தொட - இயக்க. சீரியல் பாடல் - பண்ணோ டிசைந்த பாடல். 128. இது கால் கோள் - திருவிழாத் தொடக்கமாகக் கால் நடுதல் கால் கோளாம். வரை அறை - மலையில் அமைந்த பாறை. மாத்தாள் - அகன்ற அடிவாரம். வரை அறை - வரை அறுத்தல். வரை யறை வாரா - அளவிடற்கரிய. 129. யாத்து - கட்டி. பூப்பலி - பூவைப் பலியாகத் தூவுதல். மீப்படர்ந்த - வானுலகு சென்ற. வரக் கடவ நாள் - எழுந்திருத்துச் செய்யு நாள். அஃதாவது பிரதிட்டை. 130. கார்ப்படுத்த - மேகத்தில் உண்டாகிய. வல்லேறு - இடி. அடைய - முழுமையாக. 131. சீர்த்த துகள் - சிறந்த மணப்பொடி. நிலை - இடம். மன் அட்ட - மிக அழித்த, மன்னனை அழித்த. கடம் - காடு. 132. பிணம் பிறக்கி - பிணங்களை மலைபோல் குவித்து, வாள் வாய்த்து - வாளால் வெட்டுண்டு. பிறபெயர் - பிறர் 133. அன்று ஆபெயர்த்து வீழ்ந்தோன் கல்லுக்கு இன்று ஆன்வளம் குன்றாமல் செய்க. பீடம் - மேடை. 134. கோள் - கொள்கை. மா - யானை. மடை கொளல் வேண்டும் - பண்ணிய படையல்களை ஏற்கவேண்டும். கல்லில் பீடும் பெயரும் எழுதுதல் வழக்காதலின் எழுத்துடைக் கல் என்றார். 135. குழக்கன்று - இளங்கன்று. உய்வித்தல் - மீட்டிக் காத்தல். கோட்ட - வளைத்த. 136. கல் ஆட்டிய நீர் வான் நீரினும் தூய்து என்க. அதில் நீராடுதலே தீர்த்தம். 137. நாகு - கன்று. நந்தி - பெருகி. போத்து - காளை. வாள் உழவர் - வீரர். அகன்று ஆர் சுரை - அகன்று விரிந்த மூங்கிற் குழாய். வட்டத் தயிர் - கட்டித்தயிர். அளை - வெண்ணெய். புறவு - காடு. கலித்த - தழைத்த. வாள் உழவர் போத்தென வளஞ்சிறப்ப ஆவாழியர் என்க. 138. நிவந்த - உயர்ந்தெழுந்த. வியல் அறை - அகன்ற பாறை. mÇkh‹ Õl« - á«khrd«., அஃதாவது அரியணை, திருவீழ் மார்பம் - திருமகள் விரும்பும் மார்பு. இகல் - மாறுபாடு, பகை; துகள் - குற்றம். பொழில் - நாடு. உறந்தை - உறையூர். ஆழி - சக்கரம். 139. எரி எள்ளு வன நிறத்தன் - தீயை இகழ்வது போன்ற அழகிய நிறத்தினன். அகலம் - மார்பு. பொன்றார் எயில் - முப்புறம். காடு - சுடுகாடு. புறம் - முதுகு. குறங்கு - தொடை. சிரந்தை - துடி. இரட்டுதல் - ஒலித்தல். இரண்டுரு - அம்மையப் பனுரு. ஈரணி - ஆண், பெண் இருபால் அணி. களங்கனிமாறு ஏற்கும் - களங்கனியும் தன் நிகரன்மையை ஏற்கும் நிறம். வலன் - வென்றி. இப்பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கூறுவர். செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை எண்: செய்யுளெண் அ அஃகுநீ செய்ய 192 அகத்தன வார்கழல் 1336 அகந்தூய்மை இல்லாரை 633 அகப்படு பொறியி 471 அகழ்கிடங் கந்துகி 849 அகிலெழு கொழும்புகை 869 அக்கேபோ லங்கை 262 அங்கட் கிணையன் 1235 அங்கண் விசும்பினக 451 அங்கண் விசும்பினம 1040 அங்கொளி விசும்பிற் 623 அங்கோ லவிர் தொடி 476 அச்ச மலை கடலிற் 545 அச்சமே யாயுங்கால் 206 அஞ்சனக்கோலி 658 அஞ்சுதக் கனளே 1374 அடக்கருந் தானை 1388 அடங்கி யகப்பட 120 அடர்ந்து வறியரா 1117 அடிநிழ லரசரை 488 அடிமிசை யரசர்கள் 345 அடியதி ரார்ப்பின 1245 அடுக்கல் மலைநாட 653 அடுதிறன் முன்பின 1382 அடுத்தொன் றிரந்தாற் 219 அடுநை யாயினும் 784 அடுமதில் பாய 1397 அடைய அடைந்தாரை 674 அடையப் பயின்றார் 234 அணங்குடை நெடுங் 1259 அதளெறிந் தன்ன 427 அதிரா தற்ற 1372 அந்தக னந்தகற் 996 அந்தண ராவொடு 1474 அந்தணரி னல்ல 1218 அந்தண ரொழுக்கமு 589 அந்தணர் சான்றோ 562 அந்த ணாளர் 17 அமர்நின்ற போழ்தின்க 1000 அமர்விலங்கி யாற்ற 906 அமையப் பொருளில்லா 1107 அமையா விடத்தோ 848 அம்ப லயலெடுப்ப 151 அம்பு மழலு 291 அயலூ ரவன் 86 அயிற்கதவம் பாய்ந்து 1390 அரச ரேறே 1440 அரச னுவாத்தியான் 136 அரசொடு நட்டவ 297 அரம்போற் கிளையடங் 56 அரவின மரக்க 389 அரிநறுங் கள்ளி 1356 அரிய வரைகீண்டு 602 அருகுள தாகிப் 1141 அருந்திய குறையிற் 425 அருமணி யைந்தலை 1471 அருமறை காவாத 692 அருமை யுடைய 891 அரும்பவிழ்தார்க் 1472 அரும்பனைத் தடக்கை 912 அரும்பெறல் யாக்கையை 33 அரும்பொனன் னார்கோட்டி 995 அருவரை பாய்ந் 1261 அருவிலை மாண்கலனு 698 அருளுடைமை கொல்லாமை 146 அருளுடை யாருமற் 893 அருளு மேலர 1035 அரையது துகிலே 357 அலங்கு வெண்மதி 911 அலந்தார்க்கொன் றீந்த 1083 அலைப்பான் கிறிதுயிரை 331 அலைபுனலுள் நிற்பினுந் 655 அல்லது செய்வா 171 அல்ல லொருவர்க் 645 அல்லவை செய்ப 1192 அல்லவையுட் டோன்றி 822 அல்லித்தா ளற்ற 468 அவமதிப்பு மான்ற 1032 அவாவறுக்க லுற்றான் 445 அவிழ்மலர்க் கோதை 1268 அழப்போகான் அஞசான் 275 அழல்மண்டு போழ்தி 651 அழித லின்றி 379 அழுங்குநீர் வையகத் 1243 அளிய தாமே. 1452 அனியர் கழல்வேந் 1295 அளையுறை பாம்பு 808 அள்ளற் பழனத் 829 அள்ளிக்கொள் வன்ன 1142 அறத்தொடு கல்யாண 807 அறம்புகழ் கேண்மை 149 அறம்புரிந்தன றம்ம 667 அறம் பெரிய கூறின் 333 அறவிய மனத்த 253 அறிந்தவ ராய்ந்த 1254 அறிமி னறநெறி 561 அறியாத தேயத்தா 143 அறியாப் பருவத் 580 அறியாமை யோடிளமை 1139 அறிவ தறிந்தடங்கி 62 அறிவன் றழகன் 818 அறிவினான் மாட்சியொன் 528 அறுவர்தந் நூலு 511 அறையு மாடரங் 14 அற்புப் பெருந்தளை 547 அற்றங்கள் பார்த்தங் 197 அற்றமின் றுலகங் 737 அற்றவர் வருத்தம் 1231 அற்றவுறுப் பெல்லா 169 அற்றாக நோக்கி 246 அனலென நினைப்பிற் 303 அன்பறிந்த பின்னல்லால் 586 அன்பினி னவலித் 719 அன்பி னெகிழ 604 அன்புடைமை யாய்ந்த 775 அன்புநூலாக 1059 ஆ ஆஅ மெனக் கெளிதென் 584 ஆகாதெனினு 177 ஆகுஞ் சமயத்தார்க் 454 ஆக்கப் படுக்கு 130 ஆசை யல்குற் 1060 ஆடகச் செம்பொற் 466 ஆடரவம் பூண்டா 1335 ஆடுகோ டாகி 704 ஆடுநனி மறந்த 1779 ஆட்புலங்கொன்று 1357 ஆன முடைய 761 ஆணியாக் கொண்ட 634 ஆண்டகை மன்னரைச் 788 ஆண்டின் டெனவொன்றோ 939 ஆதி நூலமைச்சர்க் 777 ஆமாலோ வென்று 599 ஆமினி மூப்பு 432 ஆம்பொருள்க ளாகுமவை 467 ஆயா தறிவயர்ந் 374 ஆயிரங் கதிருடை 742 ஆயிரவ ரானு 962 ஆய்குரங் கஞ்சிறை 145 ஆய்ந்த வறிவின 316 ஆரந் தாழ்ந்த 1480 ஆருயிர் யாதொன் 255 ஆர்கலி ஞாலத் 601 ஆர்த்த பொறிய 1167 ஆர்ப்பெழு கடலினும் 1403 ஆர்வமே செற்றங் 544 ஆலைவாய்க் கரும்பின் 841 ஆவ தற்கு 18 ஆவிற் கரும்பனி 185 ஆவு மானியற் 1505 ஆவே றுருவின 435 ஆளுங் குரிசி 1349 ஆறிலொன் றறமென 669 ஆற்றப் பெரியார் 1001 ஆற்றல்முன் றோதப் 482 ஆற்ற வினைசெய்தார் 796 ஆற்றவிங் கற்றா 500 ஆற்றா ரிவரென் 324 ஆற்றுந் துணையும் 606 ஆற்று மிளமைக்கண் 502 ஆற்று மின்னரு 256 ஆனை யடியு 330 ஆனை யூற்றின் 292 ஆன்படு நெய்பெய் 578 ஆன்முலை யறுத்த 115 இ இகலின் வலியாரை 598 இகழ்ச்சி யிற்கெடு 660 இகழ்த லோம்புமின் 1371 இசைந்த சிறுமை 577 இசையா தெனினு 708 இசையா வொரு 240 இசையு மெனினு 695 இசைவ கொடுப்பதூஉ 236 இஞ்சி மாக 850 இடத்தொடு பொழுது 609 இடம்பட மெஞ்ஞானங் 992 இடியா னிடிமுகிலு 1348 இடுகுடைத்தேர் மன்ன 1020 இடுக்கண்வந் துற்ற 713 இடையீ டுடையா 954 இணரோங்கி வந்தாரே 533 இது மன்னுந் தீதென் 452 இந்திரியக் குஞ்சரத்தை 129 இந்நோ யெமக்கு 329 இம்மி யரிசித் 210 இம்மூ வுலகி 541 இம்மைச் செய்தது 1486 இம்மைத் தவமும் 284 இம்மை நலனழி 311 இம்மைப் பழியு 1013 இம்மையு நன்றா 1090 இயற்பகை வெல்குறுவா 1006 இரந்துகொண் டொண் 181 இரப்பவர்க் கீயக் 217 இரவலர் தம்வரிசை 221 இரவலர் வம்மி 1438 இரியல் மகளி 1280 இருக்கை யெழலு 1084 இருங்கண் யானையொ 1260 இருசுடர் வழங்காப் 1334 இருநிலஞ் சேர்ந்த 1426 இருநில மருங்கி 1251 இருபாற் சேனையும் 1369 இருமுந்நீர்க் குட்டமும் 672 இரும்பனை வெண்டோடு 781 இரும்பிடித் தொழுதியொடு 783 இரும்பி னிரும்பிடை 556 இருளாய்க் கழியு 971 இருளே யுலகத் 433 இல்ல மிளமை 418 இல்லாமை கந்தா 1174 இல்லார்க்கொன் றீயு 1124 இல்லா விடத்து 224 இல்லியலார் நல்லறமு 434 இல்லெனின் வாழ்க்கை 355 இல்வாழ்க்கை யானு 968 இவனே, பொறிவரி 1343 இவ்வே, பீலி 780 இழித்தக்க செய்தொருவ 1095 இழுக்க லியல்பிற் 575 இழுமென முழங்கு 1454 இழைபொறை யாற்ற 615 இளங்களி றொன்ற 1398 இளமை கழியும் 429 இளமை நிலைதரை 421 இளமைப் பருவத்துக் 1221 இளமையு மெழிலும் 397 இளமையும் நிலையாவா 396 இளையருட் பெரியவன் 1302 இளையர் முதிய 452 இளையா னடக்க 163 இளையோர் சூடார் 1450 இறந்த நற்குண 494 இறந்த பிறப்பிற்றான் 460 இறப்பச் சிறிதென்னா 209 இறப்ப நினையுங்கா 581 இறப்ப நுமக்கடு 326 இறப்பப் பெருகி 666 இறப்ப வெமக்கீ 612 இறைவர்முற் செல்வமுங் 802 இற்றைப் பகலு 1327 இனநன்மை யின்சொலொன் 1087 இனிநினைந் திரக்க 368 இனியாரு மில்லாதா 701 இன்சொ லளாவ 100 இன்சொலா னாகுங் 106 இன்சொல்விளைநிலமா 212 இன்ப முடம்பு 1405 இன்புகை யார்ந்த 364 இன்மை யிளிவாம் 353 இன்றி யமையா 32 இன்று பகலோ 1300 இன்றுள ரின்றேயு 395 இன்ன தன்மையி 377 இன்ன ரெனவேண்டா 1309 இன்னா செயினும்... கை 942 இன்னா செயினும்... லான் 943 இன்னாத வேண்டி 1215 இன்னாது மிந்நிலையே 178 இன்னா வியைக 1182 ஈ ஈட்டலுந் துன்பமற் 1147 ஈட்டிய வெல்லா 1161 ஈட்டிய வொண்பொரு 1079 ஈண்ட லரிதாய் 354 ஈண்டுநீர் வையத்து 464 ஈதற்குச் செய்க 1223 ஈயென விரத்த 1497 ஈவாரி னில்லை 213 ஈவாரைக் கொண்டாடி 878 ஈனுலகத் தாயி 28 ஈன்றாள் மகடன் 142 ஈன்று புறந்தருத 1411 உ உச்சியம் போழ்தோ 138 உடற்றும் பிணித்தீ 386 உடாஅது முண்ணா 342 உடைநடை சொற் 139 உடைப்பெருஞ் செல்வத் 627 உடையதனைக் காப்பா 887 உடைய னாயி 1491 உடையிட்டார் புன்மேய்ந்தா 908 உணங்கு புலவறா 1263 உணர வுணரு 582 உணற் கினிய இன்னீர் 521 உண்டது, கள்ளு 1376 உண்டா லம்மவிவ் 1135 உண்டியின் முந்தா 1258 உண்டடியுட் காப்புண் 89 உண்ணா னொளிநிறா 341 உண்மையு முறுதியு 1358 உபகாரஞ் செய்ததனை 167 உமிவு முயர்ந்துழி 801 உயர்குடி நனியுட் 26 உயிர்க ளோம்புமி 266 உயிர் நோய்செய் யாமை 270 உய்த் தொன்றி யேர்தந் 473 உரிஞ்சி நடப்பாரை 1194 உரிதினிற் றம்மோ 176 உரிதினி னொருவன் 591 உருத்தெழு ஞாட்பினு 904 உருவக் கடுந்தேர் 1420 உருவத்தார்த் தென்னவ 1392 உருவப் புள்ளியி 1387 உருவமென் றுரைத்தி 408 உருவழிக்கு முண்மை 1072 உரைசான்ற சான்றோ 450 உரைத்தவர் நாவோ 1021 உரைப்பி னதுவியப் 1244 உரைமுடிவு காணா 664 உலக மொருநிரையாத் 866 உலகுடன் விளங்க 337 உலகு கொதியுரு 1439 உலகெலாங் காக்கு 38 உலப்பி லுலகத் 730 உவப்ப வுடன்படுத்தற் 587 உழந்ததூஉம் பேணா 636 உழந்தாலும்புத்த 387 உழந்துழந்து கொண்ட 320 உழிஞை முடிபுனைந் 1322 உழுதுநன் கடன்கழித் 1291 உழுது பயன்கொண் 1153 உழுதூர் காளை 1461 உழையிருந்து நுண்ணிய 631 உளநாள் சிலவா 991 உளையச் சிலைக்கு 614 உளைய வுரைத் 644 உள்கூர் பசியா 1166 உள்ளது கரக்கு 392 உள்ள தொருவ 170 உள்ளத்தால் நள்ளா 961 உள்ளமுடை யான்முயற்சி 710 உள்ள மொருவ 1041 உள்ளமொழி செய்கைகளி 1064 உள்ளுநின் றொலிபுறப் 595 உள்ளூ ரவரா 187 உறக்குந் துணையதோ 211 உறங்கு மாயினு 668 உறாஅ வகையது 1026 உறுசுடர் வாளொ 1307 உறுபடை மன்னர் 603 உறுபுலி யூனிரை 705 உறுப்புக்கள் தாமுடன் 412 உறுமக்க ளாக 635 உறுவர்ப் பேண 566 உறையார் விசும்பி 1116 உற்றதற் கெல்லா 1004 உற்றது கொண்டு 743 உற்ற நலத்தா 84 உற்ற வுதிர 423 உற்றா லிறைவற் 921 உற்றா னுறாஅ 624 உற்றுழி யுதவியு 514 ஊ ஊக்க முரண்மிகுதி 699 ஊக்கித்தாங் கொண்ட 27 ஊக்கி யுழந்தொருவ 888 ஊரங் கணநீ 557 ஊழாயி னாரைக் 639 ஊறுசெய், நஞ்சந்தம் 1043 ஊனுண் டுழுவை 1112 ஊன்சுவைத் துடம்பு 267 ஊன்சே றாடம்பென்னு 366 எ எங்கண் ணினைய 661 எங்கோ னிருந்த 1477 எங்ஙன மாகிய 1047 எச்சிலார் தீண்டார் 134 எடுத்தன னிலங்கு 734 எண்ணக் குறைபடாச் 446 எண்ணின ரெண்ணகப் 483 எண்ணி னிடரெட்டு 828 எண்ணின்றி யேதுணியு 293 எதிர்த்த பகையை 997 எத்துணை யாற்று 90 எந்நெறி யாலு 94 எப்பணியா லின்புறுவர் 77 எமக்குத் துணையாவார் 696 எமரிது செய்க 794 எம்மை யறிந்திலி 1033 எய்த வின்னல் 725 எய்ப்புழி வைப்பா 953 எரிதலைக் கொண்ட 301 எரிபுரை யெழில 400 எரிபொன் மேகலை 381 எரியுந் தீத்திர 1008 எரியு மாணையாற் 490 எருமை யன்ன 569 எல்லாத் திறத்து 1022 எல்லை யெனவின்றி 686 எவ்வந் துணையாப் 457 எவ்வாயு மோடி 1423 எளிதென விகழா 49 எள்ளப் படுமரபிற் 691 எள்ளற்க வென்றும் 1213 எள்ளிப் பிறருரைக்கு 168 எறிசுற விளையவ 872 எறிபுனக் குறவன் 1444 எறியென் றெதிர் 82 எற்கண் டறிகோ 1406 எனக்குத் தகவன்றா 191 எனதெனச் சிந்தித்த 413 எனதென தென்றிருக்கும் 238 எனைப்பலவே யாயினுஞ் 855 என்பா யுகினு 1094 என்பினை நரம்பிற் 406 என்றும் புதியார் 1183 ஏ ஏமார்ந்த போழ்தி 1042 ஏர்பரந்த வயலி 1297 ஏற்றகை மாற்றாமை 223 ஏற்றார்கட் கெல்லா 242 ஏனைய பெண்டி 1434 ஐ ஐங்குரவ ராணை 1205 ஐயங் களைந்திட் 1262 ஐயறிவுந் தம்மை 726 ஐயோ வெனின்யான் 1449 ஒ ஒக்கும் வகையா 117 ஒண்கதிர் வாண்மதியஞ் 558 ஒத்த பொருளா 1052 ஒருதிசை யொருவனை 571 ஒருநன்றி செய்தவர் 1204 ஒருநாட் செல்லலே 1495 ஒருபுடை பாம்பு 1086 ஒருமையாற் றுன்ப 487 ஒரு மொருவ 1080 ஒருவ ரகத்தொருவ 770 ஒருவ ருரைப்ப 749 ஒருவ ரொருவரை 1184 ஒருவன திரண்டி 245 ஒருவ னறிவானு 621 ஒருவனை யொருவ 1463 ஒல்லாதொன் றின்றி 821 ஒல்லெனீர் ஞாலத் 768 ஒல்வ தறியும் 1123 ஒழிந்த பிறவற 352 ஒழுக்கமே யன்றி 204 ஒளியு மொளிசான்ற 1063 ஒளிவிடு பசும்பொ 785 ஒள்வா ளமரு 480 ஒள்வாள் மறவ 1296 ஒற்றர் தங்களை 694 ஒற்றினா னொற்றிப் 693 ஒன்றாய வூக்கவேர் 280 ஒன்றி லிரண்டாய்ந்து 563 ஒன்று நரம்பென்கோ 668 ஒன்றுன் றெனவுணர் 592 ஒன்னா முனையோர்க் 1265 ஓ ஓஒ உவமை 1425 ஓங்குமலைப் பெருவிற் 1502 ஓதங் கரைதவழ்நீர் 1151 ஓதநீர் வேலி 531 ஓதலு மோதி 1075 ஓதியு மோதா 1146 ஓரில் நெய்தல் 443 ஓரை யாயத் 1489 ஓர்த்த கருத்து 964 க கங்கை கவர்ந்தாங்கு 1246 கச்சி யொருகால் 1394 கடமா தொலைச்சிய 1096 கடலிரண் டுளவென 1353 கடல்கிளர்ந் தன்ன 1418 கடல் சார்ந்து மின்னீர் 539 கடல்புக்கு மண்ணெடுத் 1247 கடவு ளாலத்துத் 1496 கடற்குட்டம் போழ்வர் 506 கடிகழ் வேரிக் 1266 கடித்துனைக் கரும்பினைக் 1088 கடிப்பிடு கண்முரசங் 244 கடிமாலை சூடிக் 361 கடுக்கெனச் சொல் 1201 கடுங்கண் மறவன் 1360 கடைநின் றவருறு 216 கடையாயார் நட்புக் 929 கடையெல்லாங் காய்பசி 1114 கடை விலக்கிற் காயார் 799 கட்கினியாள் காதலன் 69 கட்டி யன்ன 1373 கட்டுடைத்தாகக் 632 கணக்காய ரில்லாத 1227 கணமலை நன்னாட 1202 கண்டதே செய்பவாங் 709 கண்டறியார் போல்வர் 199 கண்ணகன் ஞால 3 கண்ணார் கதவந் 1473 கண்ணி கார்நறுங் 8 கண்ணிற் சிறந்த 1209 கண்ணின் மணியேபோற் 1011 கண்ணுக் கணிகலங் 687 கண்ணுங்காற் கண்ணுங் 509 கண்ணுதலோன் காக்க 1501 கண்ணெனப் படுவ 481 கண்மூன் றுடை 4 கண்வனப்புக் கண்ணோட்டங் 478 கதிரோடை வெல்களிறு 1324 கயவரைக் கையிகந்து 1082 கரணம் பலசெய்து 1048 கரப்பவர்க்குச் செல் 260 கரப்பவர் நீர்மைத் 1222 கரப்புடையார் வைத்த 218 கரவாத திண்ணன்பிற் 1181 கரிபரந் தெங்குங் 1278 கரிய மாலினுங் 16 கருங்கலி முந்நீரின் 1476 கருங்கடற் பிறப்பி 1115 கருங்கழல் வெண்குடை 93 கரத்துணர்ந்து கற்றறிந்தார் 933 கருத்துமாண் குலனுந் 469 கருந்தொழில ராய 1193 கருமமு முள்படாப் 63 கரும வரிசையாற் 537 கரும்பாட்டிக் கட்டி 34 கரும்பிவை கமுகிவை 838 கரும்பொடு காய்நெற் 1269 கரும்பொனியல் பன்றிகத 854 கருவி மாமழை 24 கருவினுட் கொண்டு 923 கலிமா னோயே 1304 கலிவர லூழியின் 1347 கல்கெழு சீறூர்க் 1248 கல்லா தவரிடைக் 821 கல்லாதா னூறுங் 518 கல்லாதான்... கற் 516 கல்லாதான்.. காட் 517 கல்லாதுங் கேளாதுங் 984 கல்லாது நீண்ட 519 கல்லாது போகிய 1132 கல்லாமை யச்சங் 1089 கல்லாரே யாயினுங் 523 கல்லார்க் கினனா 969 கல்லா வொருவர்க் 1220 கல்லிற் பிறக்குங் 880 கல்லெறிந் தன்ன 164 கல்லெனீர் வேலிக் 72 கல்லோங் குயர்வரைமேற் 1162 கல்வி கரையில 512 கல்வி யகலமுங் 819 கல்வியி னாய 820 கல்வி யின்மையும் 313 கவளங்கொள் யானைதன் 1419 கழகத்தான் வந்த 1081 கழிந்தவை தானிரங் 57 கழுமலத் தியாத்த 458 களங்கனி யன்ன 1483 களமர் பலரானும் 890 களம்புக லோம்புமின் 1364 களவி னாகிய 308 களிகள் களிகட்கு 862 கள்வமென் பார்க்குந் 179 கள்ளன் மின்கள 199 கள்ளி யகிலுங் 522 கள்ளி வயிற்றின் 188 கறங்கெனக் காலசக் 1383 கறங்குவெள் ளருவி 282 கறுத்தாற்றித் தம்மை 157 கற்பக் கழிமட 505 கற்பா லுமிழ்ந்த 12 கற்பொறியும் பாம்புங் 1323 கற்றதொன்றின்றி 534 கற்றவர் கடவுட் 66 கற்றவர் கற்றன 779 கற்றவுங் கண்ணகன்ற 993 கற்றறிந்த நாவினார் 125 கற்றறிந்தார் கண்ட 121 கற்றார் பலரைத்தங் 553 கற்றார்முன் தோன்றா 322 கற்றானுங் கற்றார்வாய்க் 515 கனிந்தநெய்க் கவளங் 448 கனைகடற் றண்சேர்ப்ப 932 கா காடுங் கடுந்திரை 1154 காட்சி யொழுக் 39 காட்டகஞ் சென்றுயிர் 1249 காட்டிக் கருமங் 628 காணிற் குடிப்பழி 152 காதலார் சொல்லுங் 915 காதலாள் கரிந்து 154 காதல் கவறாடல் 550 காதன் மிக்குழி 300 காப்பிறற் தோடிக் 680 காமம் பைபயக் 383 காய்த லுவத்த 116 காய்நெல் லறுத்துக் 684 காய்ந்தெறி கடுங்கற் 597 கார்குருதி நின்ற 1345 கார்த்தரும் புல்லணற் 1370 கார்த்திகைக் காதிற் 877 கார்மழை முன்பிற் 1267 கால வெகுளிப் 776 காலாடு போழ்திற் 1168 காலாளாய்க் காலா 1321 கால்பார் கோத்து 498 காவலனை யாக 793 காவ லுழவர் 831 காவா தொருவன்றன் 165 கான்படு தீயிற் 1310, 1362 கி கிண்கிணி களைந்தகா 1464 கிழிந்த சிதாஅ 19 கிளருமெரி விடமெழுதல் 306 கிளைஞர்க் குதவாதான் 1062 கு குடருங் கொழுவுங் 405 குடிப்பிறப் புடுத்துப் 827 குடிமிசை வெய்ய 671 குடியோம்பல் வன்கண்மை 727 குந்தங் கொடுவிற் 1380 குரங்கு மேனித் 1409 குரையழல் மண்டிய 1276 குலந்தருங் கல்வி 897 குழற்சிகைக் கோதை 200 குழாக்களிற் றரசர் 1355 குழிபல வாயினுஞ் 1274 குற்றமு மேனைக் 916 குன்றுயர் திங்கள் 1337 கூ கூஉய்க் கொடுப்பதொன் 648 வடி முரசியம்ப 1290 கூந்தன்மா கொன்று 1467 கூர்த்துநாய் கௌவிக் 318 கூற்ற மில்லையொர் 840 கூற்ற முயிர்கொள்ளும் 675 கூற்றுறழ் முன்பி 1314 கெ கெடுக சிந்தை 1415 கெடுத லவ்வழி 380 கெடுவ லெனப்பட்டக் 548 கெட்டே மிதுவெந் 925 கே கேடபாரை நாடிக் 746 கேளாதே வந்து 373 கை கைபொருத வோசை 1429 கைப்பொருள் கொடுத்துங் 513 கைம்மாறு மச்சமுங் 207 கையார வுண்டமை 161 கொ காடித்தலைத் தார்த் 1457 கொடிமதில் பாய்ந்திற்ற 1393 கொடிவிடு முத்தலை 1500 கொடுங்குழை மகளிர் 1386 கொடுத்தலுந் துய்த்தலுந் 1143 கொடுப்பி னசனங் 1219 கொடையு மொழுக்கமுங் 905 கொண்டொழுகு மூன்றற் 1162 கொய்தார மார்பிற் 73 கொலைஞ ருலையேற்றித் 979 கொலைநின்று தின்றுழல் 972 கொலையானை மேலோர் 399 கொலையி னீங்குமின் 339 கொல்யானை பாயக் 1421 கொல்லை யிரும்புனத்துக் 560 கொல்வதே கன்றி 202 கொழித்துக் கொளப்பட்ட 938 கொள்பொருள் வெஃகி 1225 கொன்றவன் குறைத்த 332 கொன்றான் கொலையை 327 கொன்றுயிர் நடுங்கச் 338 கொன்றூ னுகருங் 258 கொன்னே கழிந்தன் 419 கோ கோட்டங் கண்ணியுங் 1367 கோட்டுப்பூப் போல 913 கோணிலை திரிந்து 677 கோதி லார்குல 119 கோதை நித்திலஞ் 493 கோதை மங்கையர் 382 கோலஞ்சி வாழுங் 475 கோலிடை யுலக 858 கோளாற்றக் கொள்ளாக் 707 கோள்வலைப் பட்டுச் 391 கோறலு நஞ்சூனை 195 ச சக்கரச் செல்வம் 1199 சங்கமேய் தரங்க 868 சங்கு நித்தில 836 சத்தமே ஞானந் 510 சா சாக்காடு கேடு 1130 சாதலும் பிறத்தல் 714 சாமெனிற் சாத 79 சால மறைத்தோம்பிச் 662 சாவ தெளிதரிது 753 சாவாத வில்லை 393 சான்றாருட் சான்றா 1125 சான்றோ ருவர்ப்பத் 294 சான்றோ ரெனமதித்துச் 956 சி சிதலை தினப்பட்ட 92 சிதைவுரையான் செற்ற 107 சிலம்பிக்குத் தன்சினை 190 சிலையினான் மாக்கள் 336 சில்செவி யன்னே 1493 சில்சொற் பெருந்தோள் 654 சிறந்ததஞ் சுற்றமுஞ் 417 சிறந்த நுகர்ந் 247 சிறப்புடை மரபிற் 1460 சிறப்புடை மன்னரைச் 797 சிறிதாய கூழ்பெற்றுச் 798 சிறிய பொருள்கொடுத்துச் 282 சிறுகா பெருகா 463 சிறுகாலை யேதமக்குச் 988 சிறுபுன் சில்லி 1242 சிறைக்கிடந்தார் செத்தார் 59 சிறையில் கரும்பினைக் 764 சிற்றில் நற்றூண் 1414 சினத்தயில் கொலைவாள் 860 சீ சீர்த்தகு மன்னர் 1028 சீல மல்லன 610 சீற்றஞ் செற்றுப்பொய் 495 சு சுடப்பட் டுயிருய்ந்த 554 சுட்டிச் சொலப்படும் 456 சுந்தரச் சுரும்புண் 739 சுற்றத்தார் நட்டா 616 சுற்றுநின் றெரியுஞ் 736 சூ சூடினான் வாகை 1456 சூதர் கழக 1076 சூதினா னாகத்தன் 762 சூழிநீண் முகத்தன 96 சூழ்ந்த நிரை 1233 செ செங்க ணெடியான் 1466 செங்கண் மழவிடை 1252 செஞ்சுடர்க் கடவுட் 865 செந்தீ முதல்வ 1224 செந்நெலங் கரும்பினொ 837 செம்புருகு வெங்களிக 853 செம்மாந்து செல்லுஞ் 122 செம்மையொன் றின்றிச் 148 செயல்வேண்டா நல்லவை 552 செயிரறு செங்கோற் 665 செயிர்க்க ணிகழாது 1152 செய்கபொரு ளாருஞ்செறு 894 செய்குவங் கொல்லோ 48 செய்யாட் கிழைத்த 876 செருக்கினால் வாழுஞ் 1177 செருக்குடைய மன்ன 769 செருக்கெழு மன்னர்த் 792 செருவெங் கதிர் 1331 செல்லற்க சேர்ந்தார் 530 செல்லுங்காற் றேயத் 771 செல்வத் துணையுந்தம் 415 செல்வத்தைப் பெற்றார் 51 செல்வர்யா மென்று 343 செல்வழிக் கண்ணொடுநாள் 1120 செவ்வரைச் சென்னி 1424 செவ்விக் கடாக்களிற் 1301 செறிந்தவர் தெளிந்த 738 செறிப்பில் பழங்கூரை 960 செறிவுடைத் தார்வேந்தன் 729 செற்றதும் பகைஞர் 1067 செற்றன் றாயினுஞ் 1443 சென்ற புகழ்செல்வ 1078 சென்றநா ளெல்லாஞ் 375 சே சேர்ந்தா ரொருவரைச் 647 சேற்றுவளர் தாமரை 570 சொ சொல்லருஞ் சூற்பசும் 833 சொல்லவை சொல்லார் 1171 சொல்லாமை நோக்கி 68 சொல்லா னறிப 816 சொல்லுங்காற் சொல்லின் 756 சொல்லெதிர்ந்து தம்மை 967 சொற்றாற்றுக் கொண்டு 825 சொற்றொறுஞ் சோர்வு 501 ஞா ஞாட்பினு ளெஞ்சிய 1427 த தகாதுயிர் கொல் 264 தக்கமில் செய்கை 31 தக்க வின்ன 27 தங்கட் பிறந்த 1051 தங்குற்றம் நீக்கல 966 தடவுநிலைப் பலவி 1487 தடுமாற்ற மின்றித் 772 தண்சுடர்ச் கடவுள் 486 தண்டமிழ் வேலித் 875 தண்ணிய தடத்தவே 735 தண்ணுமை யாழ்குழல் 525 தத்தமக்குக் கொண்ட 269 தந்தம் பொருளுந் 886 தந்தீமை யில்லவர் 940 தந்தொழி லாற்றுந் 637 தந்நடை நோக்கார் 565 தமக்குற்ற தேயாகத் 949 தமரல் லவரைத் 629 தமராலுந் தம்மாலு 110 தமருட் டலையாதல் 901 தமரென்று தாங்கொள்ளப் 944 தமரேயுந் தம்மைப் 1149 தமனென் றிருநாழி 113 தம்மால் முடிவதனை 233 தம்முயிர்க் குறுதி 745 தம்மேனி நோக்கார் 804 தம்மை யிகழ்ந்த 249 தம்மை யிகழ்வாரைத் 1097 தருமமு மீதே 1404 தருமன் தண்ணளி 492 தலைமகனிற் றீர்ந்து 85 தலைமை கருதுந் 1010 தவத்தின் மேலுறை 278 தவலருந் தொல்கேள்வித் 826 தழங்குகுரல் வானத்துத் 999 தழிச்சிய வாட்புண் 1273 தளிப்பெயற் றண்டுளி 91 தளிர்மேலேநிற்பினு 1203 தறுக ணாண்மைய 909 தற்கொள் பெருவிறல் 1315 தற்பாடு பறவை 679 தற்றூக்கித் தன்றுணையுந் 583 தன்பால் மனையா 1303 தன்னலி கிற்பான் 760 தன்னிலையுந் தாழாத் 728 தன்னின் வலியானைத் 907 தன்னுடம்பு தாரம் 656 தன்னுணர் பொறிப்புலன் 732 தன்னுயிர் தான்பரிந் 254 தன்னைச் செறாதானை 196 தன்னைத்தன் னெஞ்சங் 127 தன்னைத்தா னுணரத் 1066 தன்னை மதித்துத் 922 தன்னை யாக்கிய 1036 தன்னை யொருவ 321 தன்னை வியந்து 546 தன்னை வென்றதண் 491 தன்னொக்குந் தெய்வம் 251 தா தாக்கற்குப் பேருந் 1341 தாக்குற்ற போழ்திற் 183 தாங்கன்மின் தாங்கன் 1379 தாஞ்செய் வினையல் 36 தாட்டாழ் தடக்கை 1289 தாமரை வெண்கிழங்கு 846 தாமாற்ற கில்லாதார் 111 தாமேயுந் தம்மைப் 1019 தாமேயு மின்புறார் 989 தாய்வாங்கு கின்ற 1328 தாரம் நல்வதந் 155 தாரேற்ற நீள்மார்பிற் 1312 தாழாத் தளராத் 360 தாழார மார்பினான் 1277 தாளாள னென்பான் 935 தானகத்தா னட்டுத் 952 தானஞ் செய்திலந் 424 தானட் டொழுகற்குத் 918 தானத்துக் குரித்து 173 தானறிந்துகூறுந் 774 தான்கெடினுந் தக்கார் 310 தான்பிறந்த இன்னினை 55 தி திண்டோள் மறவ 1422 திரியழற் காணின் 504 திரியு மிடிஞ்சிலும் 428 திருத்தன்னை நீப்பி 1185 திருந்தாய்நீ யார்வத்தைத் 950 திருந்திய நல்லறச் 45 திருமதுகை யாகத் 1091 திருவ நீணகர்ச் 871 திருவுடைத் தம்ம 841 திருவொக்குந் தீதி 1214 திரைகவுள் வெள்வாய் 1239 திறலொடு திருந்தீப் 1475 தினையனைத்தே யாயினுஞ் 114 தீ தீண்டி னார்தமைத் 1039 தீயன வல்ல 1023 தீயாலோ நீராலோ 1148 தீயினம் படர்ந்து 681 து துக்கத்துட் டூங்கி 261 துயிலும் பொழுதே 285 துய்த்துக் கழியான் 237 துறந்தார் துறவா 287 துறந்தார் துறவாதார் 60 துற்றுள வாகத் 215 துன்னருந் துப்பிற் 1308 துன்னி யிடுவர் 748 தூ தூய்மை மனத்தவர் 147 தூய்மை யுடைமை 271 தூவயிலின் வீசுமொரு 1354 தெ தெண்கடல் வளாகம் 230 தெண்ணீர் பரந்து 980 பதரியா தவர்தந் 158 தெரியாதார் சொல்லுந் 965 தெருளா தொழுகுந் 762 தெளிவிலார் நட்பிற் 1230 தெள்ளி யுணருந் 758 தெற்ற அறிவுடையார்க் 640 தெற்றப் பகைவ 685 தெற்றப் பரிந்தொருவர் 919 தெற்ற வொருவரைத் 618 தே தேஎர் பரந்த 1283 தேங்கொள் பூங்கண்ணி 371 தேர்ந்துகண் ணோடாது 1196 தேவ ரனையர் 524 தேவர் வழிபாடு 135 தேன்சென்ற நெறியுந் 721 தொ தொக்கிள மலர்துதை 95 தொடியுடைய தோண் 1447 தொல்லவையுட் டோன்றுங் 1110 தொல்லைநம் பிறவி 718 தொழில் தேற்றாப் 1458 தொழீஇ யடவுண் 145 தொழுததங் கையி 1014 தொழுதுவிழாக் 1326 தொழுமக னாயினுந் 1172 தொன்மையின் மாண்ட 1138 தோ தோய்தகை மகளிர்த் 1015 தோளுமென்முலை 1058 தோள்வழங்கி வாழுந் 180 தோறா தோறா 1413 தோற்றத்தாற் பொல்லாக் 676 தோற்ற மலைகட 1396 ந நகுதக் கனரே 1305 நகைநனி தீது 1134 நகையுள்ளு நல்லவை 1314 நகையொடு மந்திரம் 144 நக்கே விலாவி 296 நசைகொல்லார் நச்சியார் 328 நச்சியார்க் கீயாமை 1150 நடப்பார்க்கூ ணல்ல 61 நடலை யிலராகி 817 நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் 225 நடுவூருள் வேதிகை 226 நட்டா ரிடுக்கண் 1070 நட்பிடைக் குய்யம் 201 நண்பிலார் மாட்டு 970 நண்பொன்றித் தம்மாலே 936 நந்தி னினஞ்சினையுந் 830 நயவா நட்டொழுகு 585 நரைவரு மென் 358 நலனு மிளமையும் 1210 நலிந்தொருவர் நாளு 958 நலிவில் குன்றொடு 766 நல்கூர்ந் தவர்க்கு 1129 நல்ல குலமென்றுந் 706 நல்லர் பெரிதளியர் 1093 நல்லவுந்தீயவு...eha 744 நல்லவுந் தீயவு... பிற 747 நல்லவுந்தீயவு...kšy 1498 நல்ல வெளிப்படுத்துத் 1100 நல்லவை கண்டக்கால் 985 நல்லவை செய்யி 1085 நல்லவை நாடொறு 977 நல்லா ரெனத்தாம் 941 நல்லார்க்குந் தம்மூ 1211 நல்லார் நயவ 465 நல்லாவின் கன்றாயி 1169 நல்வா னவர்காண 1311 நல்விருந் தோம்பலி 74 நல்வினை யென்னும் 350 நளிகட லிருங்குட்டத் 1459 நளிகடற் றண்சேர்ப்ப 124 நறுமலர்த் தண்கோதாய் 914 நறுவிரை துறந்த 1365 நற்கறி வில்லாரை 984 நற்பால கற்றாரும் 160 நற்றவஞ்செய் வார்க்கிடந் 832 நற்றானஞ் சீல 40 நனிபே தையே 1448 நனியஞ்சத் தக்கவை 711 நன்கன நாறுமி 410 நன்கொன் றறிபவர் 109 நன்புலத்து வையடக்கி 1158 நன்றிப் பயன்றூக்கா 1206 நன்றி யறிதல் 131 நன்றே யொருவற் 920 நன்னிலைக்கண் தன்னை 536 நா நாகத் தன்ன 1503 நாடறியப்பட்ட 1103 நாட னென்கோ 1479 நாடா கொன்றோ 1127 நாடி நமரென்று 112 நாடு மூரும் 78 நாடொறு நாடொறு 1049 நாட்டிக் கொளப்பட்டார் 630 நாமவேல் நரபதி 670 நாயும் போல்வர்பல் 1057 நாய்க்காற் சிறுவிரல்போல் 930 நாய்ப் பிணவொடுங்கி 1455 நாலாறு மாறாய் 70 நால்வகைச் சதுரம் 857 நாவி னிரந்தார் 231 நாளன்று போகிப் 1499 நாளினுந் திறை 1292 நாளும் புள்ளுங் 1241eh‰T£l மூழ்த்த 608 நாற்ற முரைக்கு 813 நி நிணம்பிறங் ககலமுந் 1352 நிரந்து வழிவந்த 1190 நிரப்பாது கொடுக்குஞ் 1490 நிரம்ப நிரையத்தைக் 1007 நிரைகதிர்வேல் மாறனை 1381 நிரைதொடி தாங்கிய 1109 நிரைபடச் செல்லார் 806 நிலம்பிறக் »டுவது1385Ãy«bghiw யாற்றா 1160 நிலையாமை bநடுந்திணை1377ÃiyasÉ னின்ற 193 நிழலகந் தவழ்ந்துதே 867 நிழனிமிர் நெடுமதி 299 நிறந்தலை மயங்க 682Ãw¥ò£ கொல்கா 1368 நிறைமதிபோல் யானை 1287 நிறையான் மிகுகலா 80 நிறையி னிங்கிய 678 நினைத்த திதுவென்றற் 812 நின்றக்கால் நிற்க 803 நின்ற புகழொடு 102 நின்றீமின் மன்னீர் 1288 நின்னை யறப்பெறு 128 நீ நீண்டநீர் காடு 847 நீண்முகை கையாற் 981 நீதி யாலறுத் 741 நீயே, அமர்காணி 1488 நீயே பிறரோம்புறு 572 நீரறம் நன்று 37 நீர்த்தன் றொருவர் 983 நீர்பலகால் மூழ்கி 276 நீர்மிகிற் சிறையு 1293 நீல நெடுங் 5 நீறார்ந்து மொட்டா 1105 நீனிறங் கொண்ட 366 நு நுண்பொரு ளானை 1054 நுண்மொழி நோக்கிப் 754 நுதிவேல் கொண்டு 1299 நூ நூக்கி யவர் வெலினுந் 600 நூற்றுவரிற் றோன்றுந் 227 நெ நெடியது காண்கலாய் 455 bநடுங்கால மோடினும் 166 நருந லென்பது 402 நெருப்பழற் சேர்ந்தக்கால் 576 நெல்லு முயிரன்றே 497 நெறிக டந்து 839 நெறியா நடைமா 1402 நெறியா லுணராது 1027 நே நேமி நிமிர்தோள் 1286 நேர்த்து நிகரல்லார் 319 நோ நோகோ யானே 1446 நோக்கி யறிகல்லாத் 810 நோக்கி யிருந்தா 892 நோய்க்குற்ற மாந்தர் 13 நோவஞ்சா தாரொடு 65 நோவ வுரைத் 159 ப பகலெறிப்ப தென் 1325 பகல்போலுங் நெஞ்சத் 957 பகைய லாதவ 594 பகைவ ருள்ளமும் 1016 பகைவர் பணிவிடம் 1113 பஞ்சிநன் றூட்டப் 596 படைப்புப்பல படைத்து 99 படைப்பொலிதார் 1428 படையளவு கூறார் 773 பண்டாரம் பல்கணக்குக் 641 பண்டின்ன ரென்று 184 பண்டுருத்துச் செய்த 449 பண்ணார் களிறே 398 பத்திமை சான்ற 474 பந்த மிலாத 588 பயங்கெழு மாமழை 1180 பயனோக்கா தாற்றவும் 208 பரந்த திறலாரைப் 1101 பரப்புநீர் வையத்து 214 பரவா வெளிப்படர் 290 பரவை வெண்டிரை 21 பரவைவேற் றானைப் 1319 பரியப் படுபவர் 1118 பருதி சூழ்ந்த 281 பருதிசெல் வானம் 1264 பருத்தி வேலிச் 1384 பருவந்து சாலப் 438 பலகற்றேம் யாமென்று 189 பலதிரண்ட செல்வத்தை 394 பலநாளு மாற்றா 29 பலநாளும் பக்கத்தா 928 பலர்க்கு நிழலாகி 926 பல்கிளையுட் பார்த்துறா 649 பல்சான் றீரே... கயல் 568 பல்சான் றீரே... செல் 1453 பல்சான் றீரே... வீழ் 1342 பல்யானை மன்னர் 1285 பல்லா ரவைநடு 186 பல்லாவு ளுய்த்து 461 பல்லான்ற கேள்விப் 520 பவளவாய்ச் செறுவு 279 பரியஞ்சான் வாழும் 973 பள்ள முதுநீர்ப் 88 பறைநன்று பண்ணமையா 924 பறைநிறை கொல் 1282 பறைபட வாழா 1098 பற்றென்னும் பாசத் 436 பனிமதி பொழிகதிர் 298 பன்றிக்கூழ்ப் பத்தரிற் 978 பன்னாளுஞ் சென்றக்காற் 1133 பன்னாளு நின்ற 453 பன்னாள் தொழில்செய் 790 பா பாடமே யோதிப் 823 பாடுநர்க் கீத்த 1445 பாணர் தாமரை 1481 பாத்தரும் பசும்பொனின் 873 பாப்புக் கொடியாற்குப் 951 பாம்புண்ட நீரெல் 1208 பார சூரவம் 910 1. குறுந்தொகை 2. நற்றிணை 3. அகநானூறு 4. ஐங்குறுநூறு 5. கலித்தொகை 1. பதிகங்களுக்கு வழிகாட்டி, பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டும் என்பது நினைக்கத்தக்கது. 1. கலைக்களஞ்சியம் - தொகுதி 1. (ஆசிரியமாலை காண்க.) 1. புறம் 14 2. புறம். 113. 3. இன்னா. 23 4. ïன்னா 34 1. தொல் - எழுத்து புள்ளி. 55. 1. தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600. பக். 37. 1. அகம். 356. 2. புறம். 48. 1. தமிழ் ïலக்கியtரலாறு».பி.250 - 600. பக். 50. 1. தமிழ்ப் புலவர் அகராதி, ந.சி.க. காரியாசான் காண்க. 1. சீவக, 3143. 2. நச். உரைச்சிறப்பு. 3. செந்தமிழ் வெளியீடாக வெளிவந்துள்ளது. 4. செந்தமிழ். தொகுதி 5. பக். 95. 1. கார்வெட்டி நகரம் ஆர்க்காட்டில் உள்ளது என்பார் ந.சி.க. 1. செங்கோன் தரைச் செலவு என்பதொரு நூல் தமிழிலக்கியத்தில் பேசப்படுகிறது. ஏழ்தெங்கு நாட்டு முத்தூரகத்தியன் பாடிய பாயிரத்துடன் 1909இல் மதுரைச் சுந்தரபாண்டியன் ஓதுவார் பதிப்பித்துள்ளார் என்பது அறியத்தக்கது. 2. தகடூர் என்பது இந்நாள் தருமபுரியாம். ஆங்கிருந்த அதியமான் கோட்டை அதமன் கோட்டை என இன்று வழங்கப்பெறுகிறது. 1. தென்னாட்டுப் போர்க்களங்கள். பக். 111. 2. புறத்திரட்டு, முன்னுரை, பக். 46. 3. தொல். பொருள். 63. 4. மூன்று பாடல்கள் நச். உரையாடலும், ஒரு பாடல் தக்கயாகப் பரணி உரையாலும் கிடைத்துள. 1. சூடாமணி நிகண்டு 12 : 13. 2. சேந்தன் திவாகரம் 12 : 31 3. தொல். எழுத்து. புள்ளி. 53. 1. பிற்காலச் சோழர் சரித்திரம், ii. பக். 101. 1. பாடல். 42 2. பாடல் 267 1. பாடல் 218. 1. அறநிலை விசாகன் என்பார் அறிஞர் சதாசிவ பண்டாரத்தார். 2. செந்தமிழ் - தொகுதி 5, 60-64. 3. தமிழ் இலக்கிய அகராதி. 1. தொல். செய். 158. 2. தொல். செய். 239. 1. தமிழ் இலக்கிய வரலாறு. 250-600. பக். 87. 2. இன்பப் பகுதியான முத்தொள்ளாயிரப் பாடல்கள் ஈண்டு விலக்கப் பெற்றன. அவை வெளிவரவிருக்கும் அகத்திரட்டில் இடம் பெறும். 1. யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையால் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து - காரிகை உரை. 1. 1. உரையாசிரியர்கள். பக். 486. 2. தென்றலிலே தேன்மொழி. பக். 59-60. 1. னென்றென். றயருமால்; னென்றென் wயர்வுறுமீ 2.ntiy. 3. ரேய்க்கும், 1. சோலை. 1. மில்லான். 2. ழன்றா. 3. மறைநுவ. 4. கணங்களு. 3. வியப்பர். 2. நீக்க. 1. கும்படப். 2. கீறிடத் தச்சருங். 3. இறையுஞானமி; இறையுங் கேள்வியி. 5. தாரு. 4. நினைத்துணர்ந். 1. பேசுதி. 2. தேவரில். 3. நோய்தவிர்ந்தாரையு. 4. ஏவ 5. மம்மையுந். 6. மிழந்தார்போல். 1. ளறிவு. 2. வழுவா. 3. லூன்விழை. 4. ரிடனுங். 1. பிழையா ருருவின். 2. (ம்) பல்லு. 3. யதனிற் றோன்ற; 4. கேட்ட. 1. முலை நெருங்கி. 2. பெறலாமோ. 3. யென வெருடல். 4. மக்களைப். 5. வழிதடுப்ப. 1. ஆங்குத்தாம். 2. பயனின்றே. 3. தன்னில்லுட். 4. நாட்டிற். 1. லுழன்று; லுழந்து. 2. விலையுண்டாங். 3. ஞானம். 1. போழ்தைக் காற்றுணாக். 2. பருகி. 1. அறத்தினை. 1. கையுளு. 2. தெள்ளன்மின். 3. கேண்மினோ. 4. வெறுங்கையும். 5. செய்யா. 6. கூடுஞ். 7. செய்யா. 8. வரையாது 1. அரசியலா னில்வழி, அரசிய வில்வழி. 2. யானைமேற் பெற்ற தவிசு; யானைமே லேற்ற தவிசு. 1. யறஞ் செய்யின். 2. வெல்லஞ். 3. சாவவென வாழாதான். 4. எந்நாளும். 5. பெண் வியக்கத். 1. போகுயிரார். 2. முண்ணா. 3. மன்னவராய்க். 4. ரினையார். 5. நாளும். 6. றுடக்கார. 7. தானகத்தே. 1. இயல்பினா. 2. கோலஞ்சா. 3. மலர்கள் போல்வார்க். 1. தாளுங். 2. ளூரா. 1. ளமர்ந்ததே. 2. மாண்டமைந்த. 1. முனியாது. 2. யல்லாமை பெண் மகளிர்க் கைந்துந். 3. யின்புறுத்தி. 4. நீடு மாமழை. 1. பொற்பொடு. 2. மிகுகல்லா. 3. நேரிழையார் தம்மைச். 4. பேணொடுக்கம். 5. நன்றாகப். 6. பொன்வரைககோங் கேர்முலைப்; பொன்வண்ணக். 1. யுவவாதா. 2. வாயின். 3. னொழுகாதங் கெந்நாளும். 4. சேர்தல். 5. நோன்பிடுதல் 6. ரவன்போக. 7. புயலனைய. 8. வாளேர். 9. கொண்டோச்சிப். 1. விரும்புறும். 1. விண்ணார்மலிந்தார். 2. யிலாத. 3. பிறைவிசும்பிலாத. 4. யிலாதவர். 1. காழிநீர். 2. ரல்லரேல். 3. போல்பவ 4. பின்னு. 5. றாமகற். 1. யாவர்க்கும். 1. யகமலர்ந்து. 2. கிழமை. 3. வசைமன. 1. சீரில்லார். 2. நசையவர்க்குக். 3. மதுரமொழி. 1. தாமாற்று. 2. நன்குபுறந் தந்தாரைக். 3. நீடகல். 4. றுண்டாற். 5. (க்) கொள்ளுவர். 6. பார்ப்பார்த். 7. முளவென. 1. டின்றே. 1. றோவெனா. 2. லாதவர். 3. தீமையில். 1. ஐந்தினைக். 2. அடங்காதார். 3. நீர்துளும்ப. 4. வீரக். 5. நளிர்கடற். 1. னெய்தா நலனில்லைத். 2. குடிகெடுக்குந்தீநெஞ்சின். 3. செய்யிற் 4. சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே. 5. பயனு. 1. மைந்தினுள். 2. லறிவுடைமை. 3. தான்செய்யும். 1. டியாவதும். 2. அட்டமியு மேனைப். 2. ளிவ்வனைத்தும். 1. பிறப்பிடைப். 2. னுண்பான். 3. ஆர்த்த வறிவின; யாத்தாரறிந்தவ. 146. பழமொழியில் இப்பாடல் இல்லை. 2. கரியோ. 1. நீகொண்ட. 1. விழையு. 2. கூர்புன். 3. புடைப்பு. 4. டரியவை. 5. கசிந்து. 6. லாணை 7. நல்லிதந். 1. வானோங்கு மால்வரை. 2. தாழ்ப்பூட்டு. 3. லாகாதார். 4. சொல்லுவர். 5. சொற்சோரார் தாமோ விலர். 6. பொருளல்லார். 7. யென்பரிவ. 1. றவத்தினாற். 2. லவித்தொழுக. 1. மடங்கப். 2. காடொட்ட. 3. தானறிந் தீயிற். 4. மேலுரைக்கு. 1. கெடத்தோன்று. 2. குடத்துளும். 3. தேடி. 4. உரிமை கவிற். 5. யுண்டாகப். 6. புறஞ்சுற்றி. 1. துணிந்துவாழ். 2. றிழித்துரைக்கு மாந்தரை. 3. மெய்ம்மைக்கண். 1. பண்டினர். 2. அஃதாலவ். 3. கெனல்வேண்டா. 4. லொருவரையு முள்ளூன்றார். 5. லுணாந்தாம். 1. பலகற்றோம். 2. (ந்) தாங்கும். 3. முளவே. 1. அஃகநீ. 2. தாராய்ந்து. 3. வெஃகுமான். 4. வுரை. 5. மையெனநீள் கண்ணாய் மறுதலைய. 6. மெய்யள. 7. விதி 8. யுணர்ந்தார் மிகவுரைப்பர். 9. கோறலுநஞ் சூனதனைத். 10. தீதுரைத்தல். 1. தல்லழுந்து மவர். 2. குற்றங்கள். 3. கொல்வானுங். 4. பிழைப்பிலார்ப். 1. கொடியவை. 2. நீரால். 3. மறனு. 4. ராதியா. 5. பிறப்பவே. 6. கென்று. 1. றெனவைந்தால். 206, 207, இச்செய்யுட்கள் சிறுபஞ்சமூலப் பதிப்புக்களிற் காணப் பெறவில்லை. 2. க்குற்றுண்ணு. 1. கறப்பயன். 2. அன்புநீ ராக அறப்பைங்கூ ழாக்குவார்க் கென்று மிடும்பை யில. 3. மேவர. 4. பொழுதுந் தமதுடைமை. 5. வையகத்துப் 6. புகழு. 7. தம்மைத் தலைப்படுத்த. 1. றிரந்தவர். 2. கொடுப்போர். 1. சுரத்திடைத் தீரப். 2. றிரந்தார்க்கொன் றீந்தாரைக் கொண்டார். 3. அடுத்தற. 4. சிறந்தெனைத்து. 5. கயப்புலால். 1. தம்வரையா. 2. குணனுடை. 3. கொடுத்துத்தான். 4. வேதிகைச். 5. ளேற்றுப். 1. பொன்னென்று பேர்படைத்தாற். 2. யொல்லுவ. 3. உண்பவை நாழி யுடுப்பன. 1. யாற்றப். 2. செய்கல்லார். 3. யொருவனாற். 4. லாற்றுவார். 5. படைபெற். 6. பைந்தொடி 1. தனதாயின். 2. ருய்ந்த. 1. கொடுத்திருப்ப. 2. மண்ணகற்றிக். 3. மாண்புகழ் 4. மாசிலாப். 5. குறையின்றித். 6. கடிப்பிகு. 1. கேட்பரே. 2. உருவ மிங்கே. 3. வுணர்ந்தார். 1. நரகத்து. 2. வசையே வணக்கமது 3. செழுங்கிளை. 4. எழுத்தெண்ணே நோக்கி யிருமையும். 1. கண்டாங். 2. தன்னாற். 3. துயர்ந்து. 4. ஆங்கொன்றிடருறி லாங்கதற் 5. யுயக்கொள்ள. 1. மடுத்தானாந். 1. மறுவிலர். 2. கிடப்பக். 1. குறியோ. 2. சமத்தனாய். 3. செயிர்தோய். 4. இழிவன். 1. அளையாமை. 2. வென்று. 3. போகான். 4. ரென்று. 5. காலனீ டோரான். 6. தோலுடீஇச். 7. கானகத்தே. 8. னதுவே. 1. டிலர்பல. 2. பின்னாட். 3. மெய்யுஞ். 4. ஐயவித்துணையு. 5. விடாஅள் திருவே. 1. இல்விளங்கு. 2. மேதகு. 3. தாழ்க்கு. 4. தவத்தினரரசியற். 1. பொழுத. 2. சுடர்ப்பூண்மேற். 3. அறமறமேற். 4. துறந்தில ரென்றறிய. 1. ராயொழுகல். 2. வெருள்பிணைபோல். 3. மாலுள். 4. னளிநாற்ற மேனைப். 1. விளைத்தலான். 2. படுப்பக். 3. கொண்ட. 4. நிற்பர். 1. யின்கதிர். 2. பழனவென். 3. பணிக்கு. 4. தாங்கிய. 5. பிரிவின்கட். 1. போற்றி. 2. யுவப்பு. 3. பாலதே. 1. கீழ. 2. மன்னரத னாலும். 3. நரகிலரு. 4. மஞ்சி. 5. வீர்தல். 6. கிளைபழிவு. 7. வீறில். (308) இப்பாடல் சூளாமணியிற் காணப்பெறவில்லை. 1. யுலைக்குங். 2. தம்முடம்பில். 1. பொய்மொழிந்த. (311) இப்பாடல் பதிப்புக்களிற் காணப்பட வில்லை. 2. பொய்யன்மை. 3. லொன்றிலாக். (315) இப்பாடல் சீவகசிந்தாமணியிற் காணப் பெறவில்லை. 1. சொல்லுவரோ. 1. நிகரல்லர். 2. ஆர்த்ததனை. 3. தோன்றச். 4. துரை. 5. பெருமையோன். 6. மென்றகன்கண். 7. நெஞ்சநோ. 8.வுறாமுதல். 1. பிறர்துனிப்ப. 2. னெள்ளி. 3. கவ்வி. 4. நோவச்செய் நோயின்மை 5. றுமக்குநன் றெண்ணுதிர்நீ. 1. மேலுளவாக். 2. கட்டிறந்த. 3. இந்நோய் நமக்குண்டென் றெண்ணாதே யெவ்வுயிரு - முனனோவக் கொன்றுண்ணு மூர்க்கர்தா - மெந்நோவும். 4. பாவிகளிற் பாவிகளென். 5. ளடங்கா தனவில்லை. 6. ஊனுயிர்க். 1. பிறவுயிரை. 2. நன்றடு மடைமகன். (332) இஃது இராமாயணத் துள்ளதாகத் தெரியவில்லை. 3. மறம்புரிகொண். 4. சென்றுகதி யோடி. 5. அங்காந் தழுகின்றதார் கண்ணே. 6. நோக்குமால். 1. செந்நுனை. 2. மான. 3. கொழுந்தழ. 4. லழுந்தி. 5. நலிபவர். 338, 339ஆம் செய்யுட்கள் சூளாமணியிற் காணப்பெறவில்லை. 1. முனிவர். 2. முடிவது. 3. மாற்றான். 1. கெடாஅது. 2. எல்லிற். 3. யார்கள்போல். 4. னிகந்திடுங். 5. பணிய. 6. கடிமணம் புணர்பவள் கற்பினீர்மையே. 7. நாநவிர். 8. தேனி னிழிதுளி, தேனி னழிதுளி. 9. நக்கியனையது. 10. மானுட. 1. பற்றலன். 2. பலர்க. 3. துகிலுடை. 4. மடவா. 5. றயர்வார்க். 6. உண்ணாச். 7. றழுவாட். 1. தாழ நாற்றி யொல்கிப்போம். 2. புணர்ச்சி. 3. பிலரே. 4. யிழிவாம். 1. கழிந்தன, போக்கின. 2. யொருதனி. 1. புரைதீரா. 2. வெம்முலையார். 3. கண்புகைப்பச். 1. ஆற்றுமினே 2. மல்லிகைமென். 3. செல்வார். 4. யறிவாற்றள்ளி. 5. காதலர். 6. கொண்ட. 7. றூங்க. 8. தழுங்கி. 1. வரைமார்பந். 2. மகாரொடு. 3. கைபிணைந்து. 4. படுகோ. 1. நரம்புமுடித். 1. லால். 2. குறுக வருமரோ. 3. நின்றொருவன். 4. நாளுலக்க. 5. புன்மையே சாலப்பெரிது. 6. திலதவெண். 1. புணர்ந்தன. 2. றிரண்டன. 3. னாரொடு கிளையழக்கவிழினுங் கவிழும். 4. முழுவ தும்பெறு. 1. குழகுந்தன் னழகுங்கொண். 2. டெடுத்த. 3. அரிவையர்ப். 4. களிப்பப். 5. பிணமாய். 6. கழிதலுங். 7. யில்குளத். 1. கனிந்து நிற்கும். 2. கண்புதைத். 3. திகழ்ந்தார். 4. யிடும்பைநீர். 5. கொழுஞ்சீலங். 1. கூற்றையா. 2. றோமால் 3. பட்டுஞ். 1. மெய்படு. 2. திளமை. 1. ரவருடைமை. 2. இன்றே. 3. பிறருடைமை யாயிருக்கும். 4. உளமென. 5. னீண்டி. 6. நண்ணார் நரகத்துநான்கா. 1. நாளுள். 2. சருகிலை. 3. யாக. 4. சரிந்து மண். 5. வழக்குறு. 6. காணாச். 7. விலைநற் 8. அகப்படுத். 9. வாழ்வி லின்பமும் புணர்மி னஃதான்று. 1. ஈஇச் சிறகன்ன. 1. தச்சன் வல்லன் 2. மகளிரை. 3. மருங்குல். 4. சாய்கலார். 5. னுறைந்ததோற். 6. ரிறைச்சிப்பே. 1. வைப்படு. 2. சீழ்ப்பில்கு. 3. ளசிப்பப். 1. யியைத்த. 2. புழுக்கலந்தம்மா நுகரவு மிகழவும். 3. மாமே. 1. பதிக்கிடந்து. 2. செல்குவை. 3. யின்றழிவை. 4. சிறந்த தம் மக்களுஞ். 5. தொடர்ப்பா டெவன்கொல். 6. இஃதன்றோ. 1. தாளஞ்சா. 2. டெய்திய. 3. பாலினூ. 4. வியப்போத. 5. (ம்) வைகா. 6. வுழலு. 1. நானந்தோய் கூந்தலாய் நமக்கெய்த. 2. மானந்தீர்ந்தவர். 3. பொருந்தியே போகத் தக்க. 4. னோட்டும். 1. சுடரே ரனைத்தாய்த். 2. வோடிற். 3. வலியிவை. 4. தணியி. 5. வாழ்தல். தாழ்தல். 6. லாடுநர்போ லாகாமல்; லாடுநர் போலுழலா தென்றும். 7. நிரம்புமேல். 1. தலைவரும். 2. வெஃகாது. 3. மாய்த லறிவு. 4. இருளகற்றுங். 5. மேலுலகெய்து. 6. நல்லியலி. 1. பகையிருளு. 2. வீடும். 3. யன்றி. 4. துழல. 1. யுணர்ந்தவினை. 2. மென்றான். 3. விழைநரைப் 4. நீங்கி 1. புதுவதோ வன்றே. 2. மென்பதைத் துறவோர். 3. மதித்தலு. 4. யிகத்த. 1. அன்னா. 2. ரெனல் வேண்டா. 3. விலங்காமல். 1. பண்டொறுத்துச். 2. தெனவறியார். 3. சுரைதாழ 4. றிசைந்ததூஉம். 5. மதுமன்னும். 6. விரிகடற்றண் சேர்ப்ப. 1. நீயளிய. 2. விருத்தம். 1. கழுமலத்தில்யாத்த. 2. பெறுதலு மின்னார். 1. தகைத்தேதற். 2. மெட்டுணையும் 3. நயமிலாக். 1. யார்க்குமழிப்புண்ணா. 2. யாவே. 3. அல்லித்தண்டற்ற. 4. போது 5. (ச்) சூழ்வினை. 1. ரெனினுமவ ரூர்க்கே 2. மாலைப் பொற்கோல். 3. போழ்தே. 4. பொலித. 5. கெடாமைச். 1. எத்திசையு. 2. லுலவா. 3. விழுநிதியு. 4. வேந்தற். 5. மெள்ளுவரால். 1. வேந்தன்கண். 2. லெடுப்புமா. 3. மொய். 4. கோவுயரும். 5. மென்றுணர்த்தல். 6. விரும்பா தொருநாள். 1. சூழ. 2. அண்ணியர். 3. நண்ணுநர். 4. வெய்யனத். 5. மன்னனே. 1. விளங்கலால். 2. யம்மை. 3. கிளைப்ப நோக்கும். 4. முள்குமே. 1. னென்றான். 2. னண்பினால். 3. வரைப்பகம். 4. பொழிந்திட நின்றதே. 1. நீங்கிச்செங். 2. வெனுந்துணை. 3. யாமுயி. 4. ரென்பதறிதல். 5. வேந்தர்க்குக். 1. தியங்குங். 2. மன்னோ. 3. னாயி னீணீர்; னாயிற் கழுநீர். 1. நின்று. 2. கற்கலான். 3. புணருமே. 4. ரில்லையேயில்லை. 5. புற்பந்தீர்ந். 6. கோளுணரத். 7. லுலகி னிசைநிறீஇ. 1. முன்பெறக். 2. கணிதமே யாழினொடெண்ணுங்காற் சாந்தே யெழுத லிலைநறுக்கிட். 3. இட்டவிவ் வைந்து. 4. சத்தமெய்ஞ். 5. தந்தவிவ் வைந்து. 1. ஆசாரி யன்றனமைவு. 2. நினைக்கிற். 3. கற்றல். 4. யாகும். 5. ரனைய. 6. பாலாத் தாயுமனந். 1. மூத்தோர். 2. ரவருள். 3. (த்) தெற்ற; எற்றேல். 4. காட்டரிதாம். 5. மென்றொருவர். 6. சொல்லுவ. 1. இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா. 2. கேட்டலினிதூ. 1. யார்வாயின். 2. நோய்கொண்டாற். 3. தான்பயந்த வாங்கு. 4. யொழுகுவார். 5. பண்ணமை. 6. புலால் பழிப்பத் தாம்வளர்ந்து. 1. நீக்கி துறவுரைவிட்ட. 2. மாலையு மின்ன. 3. ஆடையிற். 4. பாம்பறியு மேபாம்பின். 1. தான்கண்ட. 2. ரந்நெறி. 3. பயின்றது. 1. லுயர. 1. பொதியினும். 1. வறிதலால். 2. தம்மின். 3. ரெனவிருபாற். 4. பொருட்கேடு. 1. முயிர்க்கூன. 2. நெகிழ்ந்தொழிதல். 3. (க்) காதலியைக். 1. பிணிபீ. 1. நல்லன. 2. பலரைத்தன் கண்ணாக வில்லாதான். 3. (த்) தான்போந் திலங்கைக். 4. நீருண்டார் நீரான்வாய். 1. வான்மதியஞ். 2. தொழப்படும். 3. னல்லதை. 4. நிறந்தெரிந்து. 1. றாறடக்கி. 1. காத்துக். 2. நல்லது; 3. அல்லது. 4. நெறியு மற்றதுவே. 1. விழுக்குடிப். 2. கெடாத. 3. வருப. 1. அதுநன். 2. பிறரோம்புற்ற மன்னெயில். 3. ரெருத்த மடங்கப். 1. முயலவோ. 2. முனிவரே. 3. கயலியலுங். 4. கரியரோ. 5. யிசைவிலா. 1. படுப. 2. தெளிவிலா. 1. கொள்வ. 2. பொலந்தொடி. 3. வுடம்படுதல் செய்த. 4. தாய்கான் மேல். 1. பந்தமில்லாத 2. தந்தையில்லாத. 3. மல்கு. 4. சூழ்ச்சிவயத்தினார். 1. தென்னை யென்றான். 2. றவருரையுலக மொட்டுமே. 3. மண்ணிய. 4. வெதும்புமே. 1. வெஞ்சமத்துள். 1. கலையுமுன் னுடற்றிற். 1. யுரைத்த. 2. போர்த்த. 3. மூர்த்த. 1. டெழுதல். 2. கோநா. 3. யெடுப்புமா. 4. திழிவரவென் றெண்ணார். 5. முழுவையுந்தான் றன்னை. 1. இழைபொறுத் தாற்ற. 2. தம்முடைய. 1. காலலைக்குங். 2. பேர்த்தருவா. 3. யாயினும். 4. விளிந்துவிடும். 5. இருடீரக். 6. மிலானு. 1. தீங்கதிர் முறுவன். 2. எங்குள ருலகுக் கெல்லா. 3. கைவிடுக. 1. தட்டாமற் 2. வலிந்து வியங்கொள்ளின். 3. யுழுதுவிடல். 4. ராற்றவெமக் கென்றே யமர்ந்திருத்தல். 1. இடம்பட்ட 2. வேள்வுண்டா. 3. உயவாமற். 1. தொறுத்தமை. 2. முழங்குறையச். 3. காஞ்சுரை. 1. காக்கைக்குக். 2. கோற்றருதல். 3. தேன்புரிந். 1. புட்குலாம். 2. வாடியக். 1. பலபல. 1. காப்பிகழ. 2. வுய்யாக்கால். 3. மன்னிய வேதந்தரும். 1. கூர்நுதி. 2. பஞ்சியின். 1. பிற்றையும். 2. னேரொக்க. 1. நரைமுதிர். 2. பாதம். 3. தீமை. 1. றெவரையுஞ். 2. கனற்ற. 1. வேட்டூ ணல்லது. 2. அல்லாக்காற். 1. னஃதாலச். 2. போழ்துங். 3. ரவரவர்க்குக். 4. விஞ்சி. 1. காப்பிகந். 2. கோப்பெரியான். 3. மீத்தவை. 1. வாயினு மிதித்துப்புக். 2. பரிவுதபக் கொள்ளும். 1. எல்லையொன் றின்றியே. 2. இன்னாத செய்தாரை. 1. யிவற்றி னமைந்ததெனுங். 2. ஒள்ளிய. 1. வேண்டுமென். 2. யார்க்கானும். 3. திட்பம் பெறும். 1. சிலம்ப. 2. முனிவில்லார். 3. தெய்தாமையில். 1. செய்வராங். 2. செய்வர். 1. பரிவு. 1. செறிதிரைப். 1. தாரிக்க. 725. இப்பாடல் இராமாயணத்தில் காணப்பெறவில்லை. 1. நிலையறித. 2. சீரேற்ற. 3. சுவைகேள்வி. 4. தொன்னிலையுந். 1. செவ்வியல பெற்றால். 2. துறுதியை. 3. கொளுத்தல். 4. வடந்திகழ். 5. பொறிபிறர் தங்கண் கூட்டென. 1. புரிந்து. 2. சூட்டி. 1. கடிவ. 2. சூழ்ச்சிசார்ந். 3. முட்புடை கொண்டிடல். 1. (ம்) விழுங்கக். 2. ளுணருங்கேளார். 3. (ம்) வீரர். 1. ஒருங்கனைத்துஞ் 2. கண்வவ்வு. 3. மெய்யோர்தல். 1. சேர்க்கு. 1. வீரஞ். 2. கூடற். 3. இடைநாயிற் கென்பிடு. 4. யானையார்த். 5. யாருளரே. 1. புரைசேர். 1. செல்லவும். 1. வெறியார்முன். 1. கோடுநுனி. 2. மிலைந்தோ. 1. மருங்கின். 2. துலமரல். 1. றிலைத்தார் 2. நம்மூர்க்கு. 3. நும்பி. 4. றெதிர்ந்து நீதுமொருவனதனகத். 1. கரைப்படுதல். 2. தெவ்வழி. 3. யெறிந்ததம். 4. மலிந்துபின். 5. சார்ந்தார்தாம் அல்லுறினும் 1. ஐய. 1. வீழார். 2. சிறிதாம். 3. மெருதாங்(கு). 1. பேசார். 2. கடைபோக. 3. உமிழ்வு. 4. குணனுங் குலனுடையார். 5. யேகார். 1. சாற்றிற். 2. நிரல்படச். 3. மேம்பட்ட. 1. படர்ந்ததே. 2. ஓர்முறையி. 3. மற்று. 1. யரற்றுங். 1. முன்னம். 2. யொருவன். 3. புலத்தியல்பு. 4. வறிவினை. 5. சான்றாண்மை. 6. மிக்க. 1. என்றூ. 2. கல்வியா. 3. காடுமொன். 4. மிக்கதோர். 1. நெடுங்கா. 1. யுடனம ரிருக்கை. 2. வாய்நெகிழ. 1. வென்றிசைக்கும் 2. வட்டமா. 3. வைகுமற்றை. 4. காய்த்ததே. 5. பொதும்பரொ. டுள்விராய்த். 6. காய்துவள். 1. தினையுந். 2. பானிலங். 3. முந்தவ ழிப்பியுந். 4. வார்வலை. 5. கரும்புதாம். 6. காண்கல. 7. காண்கலேமென்று *838 இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 1. சோலைவீழ். 2. தொடையளி. 3. யுக்க. 4. வேலை. 5. சோலைப். 1. கோல மைந்தர். 2. மன்னு. 3. மொய்க்கு மாதோ. 4. விளைவினிது. 1. நீர்வந்துகரையழிதரு. 2. தியக்கிய. 3. போர்வே. 1. வேலுமிழ்வ கல்லுமிழ்வ 2. கொட்குந். 3. வானுழை. 4. தலர்ந்த. 1. பனிதோய். 2. நூல்வரைத். 3. நூல்நெறி. 4. செவ்வியின். 5. பயிற்றலின். 6. வலத்திற் 7. மேவர வுணர்வு. 8. யாவையு 1. சக்கரந் தண்டு சிலைமழுத் தோமரம் உலக்கை. 1. றாயிற்றே பூம்புனல். 1. தன்மைத்தாய்க். 2. னகர். 3. னிரந்து. 1. மலைபுரை. 1. மிருத்தல். 2. னாவினிற். 3. தன்றமிழ். 1. கோத்தையுண். 1. ஒல்லாத வின்றி. 2. மிலராகிப். 3. வண்டுதா. 4. மிக நிற்றல். 5. கோற்றலையே. 6. பாலுற. 1. சேய்த்தாற். 2. மணிக்கோட. 3. யுழன்றொருவ. 4. னென்றிகழ்ந்து. 5. போக்குநீர் தூக்கும் பொருகடற். 1. அரிந. 1. பின்னை யாகும். 2. னார்களை. 1. போரன்றி. 2. வேரன்றி. 3. புகழ்விளைத. 4. அமரின். 1. கென்கொலோ. 2. உருத்தகு. 3. மிலாத. 4. னல்லாதான். 1. இவ்வகைய ரைவரையு. 2. செய்வகைச். 3. டோங்குவ. 4. புட்சுழி. 5. மருப்புக்காத் திரம்வா லெயி றைந்தினுங். 1. ரிரீஇ. 1. திரிவெனேல். 2. டீர்க்கலான். 1. லொருவற். 2. நீடு முறைதலோ. 1. ஒட்டவந். 2. வீழுங் 3. தியார்த்தாரோ டியார்த்தார். 1. செய்வினை. 1. தேறி யறியபின். 2. காய்ந்திடார். 1. பலர்நடுவுட். 2. மாண்டிலா. 3. பூண்டங். 4. பறையறையப். 5. யுணர்வதாம். 6. நெல்லுக். 7. துறத்தற் குறுவதோ. 1. பொறுப்பவென். 2.யுலப்பினும். 3. றோதும். 4. உடனுறங்குங். 1. கொள்ளியொப். 2. உமிக்குற்றிக். 3. திருந்தாத வார்வத்துத். 4. தேரேற்று. 1. மச்செறி. 2. ஆராய்ந்துங். 3. பெருகுவது போற்றோன்றி வைத்தீயே போல. 4. சொல்லாதே 1. னெழுந்தவ ரோடின்னா. 2. யாஅ. 1. கழிகேண்மை. 2. றவிசிட்ட வாறு. 1. முலோபியும். 2. வெகுள்வும். 1. அழிவினாற். 2. கொண்டிருந்த வில்லஞ்சி. 1. புகலொவ்வா. 2. இல்லாருக். 3. றலைசிதர்ந்து. 1. கண்சொரீஇ. 2. திசைக்கும். 1. சொல்லா வொருவரையு. 2. றொல்லருவி. 3. பாய்வரை. 4. படைத்தறுக. 5. உரைத்தல். 6. கற்றறிவு. 7. மேகா. 1. ஏமஞ்சார். 2. போழ்தும். 1. கொண்டு. 2. பார்த்தே யிருப்பானிம். 3. உமிக்குற்றிச். 4. காறுசொலல் யாதொக்கும் 5. னஃதறி. 6. கதிர்த்துக். 1. காடாத லில். 2. வேர்சுற்றக். 3. நட்பாவதில். 4. நிகரன்றி. 5. கடிதிற் 1. அடிகெட மன்றி. 1. தன்னினுங். 2. டார்மன்ன. 3. கண்ணுள். 4. வேண்டித். 1. பலவரினும். 2. அள்ளில்லத் துண்ட. 3. மருங்கலத். 4. தொய்யின். 5. தூநீர். 6. லரிப்பறத். 1. மின்னலு. 2. தாவும். 3. நெஞ்சகத்துக். 4. மெழுப்புபவோ. 1. துணையார்தாம் கைப்பித்தல். 2. அறைந்தார். 3. பாய்ச்சி. 4. பாயும். 5. பலகாற். 1. ரெளியரா. 2. சிறந்தெனைத்துங் 3. தேன்கலாம். 1. பேர்க்குதல். 2. மிகைமக்க. 3. கழிப்பவே. 3. அருளின் மற்றது. 1. மன்ன வவ்வழிச் சேறலிம். 1. லின்னிமிர் துந்நஞ்சு. 2. ஏமாந்த. 1. ரொருவ ரடைந்தாரெல்லாம். 1. வனப்பின. 2. வண்மையி. 3 பூத்த. 4. படிவம் 1. பருக்காட்டிலவலர். 2. படித்துறை. 3. களிப்பது. 1. தியற்றி. 1. உள்ளன போலக் கெடும். 2. கோதப். 1064. இப்பாடல் சிந்தாமணிப் பதிப்புக்களில் காணப்பெறவில்லை. 1. னொன்றுமுல. 2. முழுப்பிணி யழுக்கின். 3. கலைவலாளர். 1. வஞ்சமே நணுகுந். 2. நனிகாண்டல். 1. கலைமயக்கம். 2. னாய்மேய. 3. மறந்தோயுந். 1. புகுவவேல். 2. வினைக்கண மயங்குநெறி. 3. சேவகம். 4. நிறைகல்வி. 5. என்றும். 6. வாற்று மனைப்பிறந்த. 1. றேமொழி. 1. சொல்லார்தம். 1. இம்மையுநன் றாய. 2. கடைத்தே. 3. பெரிதெளியார். 4. உலையூது. 1. டுரையாமன். 2. குரையாரே. 3. மழிய. 4. தமக்கொல்லாச். 1. ஒல்லுமேல். 2. னழித. 3. நிரந்தெழுந்து. 4. புனைந்திருந்தார். 1. லில். 2. மழிந்தக்கால். 3. கூடகா ரத்திற்குத். 1107 இப்பாடல் பழமொழியில் காணப் பெறவில்லை. 1. கதிப்பட்ட 2. பதிப்பட்ட. 3. வேந்துவப்பப் பட்டார்த்த. 4. செய்தவை. 5. காலேசம். 2. பரப்பி. 1. நிறையால். 2. கடங்கொண்டுஞ். 3. பொறுப்பவோ. 1. மூங்கையா நிற்பானேல். 1. தோய்ந்தாரிற் றோய்ந்தா. 1. நல்லார். 2. தொடைபுனைந். 3. யதுவன்றோ. 1. மின்பமே. 2. நாட்டறைபோக் கின்னன. 3. நூலுடம். 4. கேட்பரே. 1. தெங்கின். 2. முழுதுடன். 3. வீந்தவிதல். 1139. இப் பாடல் பழமொழிப் பதிப்பில் இடம் பெற்றிலது. 1. தோற்றா. 1. காத்த. 1. நாணன்று. 2, 3. மெல்லியார்க் கீந்தது. 4. செய்ததும். 1. பரிவான். 2. மீட்டுரையான். 3. னுலகிற். 4. பெற்ற. 5. நாணாளு மேர்போற்றிப். 6. பண்கலப்பை என்றிவை பாற்படுப் பானுழவோன். 1. கும்பியிலுந் திச்சென். 2. றெறிதலால். 3. வெருவும். 4. கழூஉங். 5. கனமலை. 1. தொடர்புடைய. 2. விலைபெறும். 1. முகம்புக. 2. பெறாஅ தவன்பெறுத. 1. றிரந்தாற். 2. பூத்துத். 1. தடுத்துக். 2. முனியுங். 3. வையகத். 4. பொறியுணர். 5. முருக்குமா. 1. விசைக. 1. விழிவினால் வாழ்வெண்மின். 2. குறுமா றிசைவ. 1. அருமறை. 2. பஞ்சைவைத். 3. நரியிற்கூண். 4. கடையாவார். 5. பேணா திரும்புன்னை. 6. மிருங்கடற்றண். 7. பாய்ந்தாலும். 8. இல்லா. 9. ராயினு. 1. னியன்றதோ. 2. தாகில். 3. லாகார். 4. தொடர்பு. 1. மிரும்பின்றன். 2. தீம்புனற் றெண்ணி. 3. ஒண்மைய வாய. 4. ஈன்றாளோ டெண்ணக். 1. வொட்டாரை. 2. மறிந்தாங் கருக்குக. 3. இளையாரென். 4. மேற்பட. 1. இன்னாமை. 2. தனக்கினிய. 3. டொப்பதுவு. 4. னினிய. 5. கிளையுட் கழிந்தா ரெடுக்க. 1. மெல்லிலை. 2. இல்லத்துத். 3. கில்லாமை. 4. இல்லகத். 5. குணம். 1222. இப்பாடல் திரிகடுகப் பதிப்புக்களில் இடம்பெறவில்லை. 1. மழைவிலக்குங். 2. போல. 3. பாத்துண்ணு தன்மையிலாள. 4. கல்வியிம். இப்பாடல் திரிகடுகத்தில் இடம் பெறவில்லை. 5. சிறுதகை. 1. துறப்பராயின். 2. கொடுஞ்சிலையின். 1. செங்கோல். 2. தூவி. 1. கொண்ட. 2. குன்றுசூழ். 3. தலைமலிந்து. 1. ரியைந்தெழுந்தார். 2. ருள்ளந். 3. கல்லெழு. 1. என்னதுய ருற்றாயோ. 2. சென்றறியு. 3. நாம்புற மிறுத்தன. 4. கெண்டிச். 1. முரசிரங்க. 2. பார்ப்புற. 3. மெண்ணான்கொல். 1. கீதுமென் 2. முழங்கு நிமிர். 3. மூதூர்க்கந்து. 4. னில்லக. 1. துறுத்துப். 2. பணிந்து. 3. யாவதே. 4. மற்றை. 5. யாய்ந்தடுது. 6. வையிலை யெஃகம். 1. நுணங்கிய. 2. மறவருங்கொண் டார்த்தார். 3. புறத்திறத்து. 4. வேந்தீயப். 5. துடியுகள. 6. கைபரிந். 7. விரவப். 1. போரடுங். 1. வலியளவோ. 1. ஆய்பகை வெம்மையி. 2. விழுவதுகொல். 1. யுறைமாடத். 2. பறைநின்ற. 3. யாயீன்ற ஈன்போ. 1. மின்னு நிம்ர்ந். 2. கந்தொற். 1. மரந்தையார். 1. முரசிரங்கக். 2. (ந்)தன்கீழ். 3. மரசு. 4. திறையினு முவப்பத். 1. கலம்வரு. 2. போஓர்க் குரைஇப் புகன்று கழித்தவாஅள். 3. ஊனிற 4. குரூஉக்களிற்றுக். 1. அளிய. 2. காவிற் பஃறுளி. 3. ளாதன். 1. தாதை. 2. வயங்கிழைப். 3. இஃதிவர் 1. னொன்னாரை. 2. அரணவிய. 3. முரணவிய. 4. சாடு. 1. அருஞ்சமந் ததையத். 1. வருந்தவொற்றே. 1. றொழுகழலார். 2. எண்ணியபின் போக்குமோ. 1. கொண்டீக. 2. லூர்மேற்ற தாமமணர்க் கோடு. 1. பகைநலிய. 1. நெறிதர. 1. முடிபுனைந்த தொன்னார் போர். 1. ருடனெழுந்தா. 1. புன்மிடற்று விரண 2. கோதையைத். 3. ளழன்ற. 1. பேரெழிற். 1. புற்றழிந்த. 1. வளம்படு. 2. கழன்மடவா ராட்டினார் 1. கண்கொண். 2. கோளின்றிக். 3. கோளாகி. 4. டெழுந்ததோர். 1. மொத்தவே. 2. மனையர். 3. வாட்குரல். 4. னீர்மேய். 1. னிகலி. 2. கனல்விழியாற். 1355 முதல் 1358 வரையுள்ள நான்கு பாடல்கள் எந்நூலைச் சேர்ந்தவை என அறியக் கூடவில்லை. 1. வருஞ்சமந். 2. நிறப்புடைக். 3. விலையெனப். 1. யரவுக்கடுங். 2. சென்னெறி. 1. சேருபடு. 1. வீழ்ந்த. 2. மன்னர்த. 3. உழுத்தத. 1. வேந்தர். 2. நாளரி 3. பன்மான். 1387 இப்பாடல் எந்த நூலைச் சேர்ந்ததென்று தெரியவில்லை. 1. கோதை. 1. எண்ணில். 1. அழிந்திற்ற 2. பிடிமுன்பு செல்லாமை. 3. குடையால் 4. மதில்பாய. 1398. இப்பாடல் முத்தொள்ளாயிரத் தொகுப்பில் சேர்க்கப்படாது விடுபட்டுள்ளது. 1. மையம். 1. அதனகத். 2. எம்மிறை. 3. (ப்) பெரும்பழி. 1406. இத்தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கோளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலைஎன்பார் நச். தொல். புறத். 79 1407. இத் தகடூர் யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை என்பார். நச். தொல்.புறத். 79. 1408. இப்பாடலின் கடையிரண் டடிகள் சிதைவுற்றன. 1408 - 1410 இம் மூன்று பாடல்களும் எந்நூலைச் சேர்ந்தவை என அறியக்கூடவில்லை. 1. னம்மகன். 1. அருஞ்சம. 2. காலிழி. 3. கோரிற். 4. னாவது. 5. முதிரா மகளிராகற்க யாமே. 1. பெருநிரை. 2. முயங்கி. 3. வெளிறுவிரித். 4. படரவும். 5. வெந்துவாய். 1. கைதுணிக்கப். 2. திகழொளிய. 1. பாரிற் றன்னாடன். 2. வயநாகம். 3. ஆவுதைக்கு மாம்பி நிகர்த்த. 1.ளொண்மதியை. 2. பெய்தலிற். 1428 இப் பாடல் களவழிநாற்பதில் இடம்பெற்றிலது. 1. ஏனையார். 2. பல்வாயா (ர) 1. தொக்குமே. 2 நீளிலை. 1439. இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 3. வாறோடிக். 2. அடிபா ராட்ட. 1. றாதல். 2. கடக்குந். 3. திண்டேர். 1. பைத லொக்கற் றழீஇ. 2. வழிசெகுத்தனன். 1. யவையகத். 1. தீஞ்செறி. 2. பெருதகளத். 3. கடிந்தட். 4. டுண்டுநின் 5. வாயபசி. 6. வண்டு மூசுதார். 7. சூரே. 8. கொள்ளான். 1. தடையிடைக் கிடந்த. 1. யிளைக்கு. 1455. இப் பாடல் எந் நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 1. மண்ணீத்த. 2. கண்ணீத்தந். 1. ஏவல் செய்ய. 2. முண்டென் றலம்வந்து. 1. தெரியல். 2. கவின. 1. முத்தமிழ் நூல். 1475 இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 1. வன்கைக். 1482 இப்பாடலின் பின் ஏழு அடிகள் இத்திரட்டில் சேர்க்கப்பெறவில்லை. 1. காண்டல் சாலவேண்டினை யாயின். 2. மாண்ட. 3. வண்கைத். 4. னாயலன் பிறரும். 1. ஒல்லா. 2. (த்) தலைவன். 1492. இப்பாடல் எந்த நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 1. வடவர். 2. சிறுசெவி. 1. வாச்செல. 2. கொழுங்கட் குற்றடகு. 1. பன்னாளடுத்து. 2. தலைநாளன்ன பேணலன். 3. களிறுதன். 4. ததுவே. 5. லுண்டன மென்னாது. 6. கொள்கெனக். 1. பழித்த லல்லதை. 2. காக்கும். 3. பெயர்குந. 4. வெறிகொளப். 1. பண்ணியநூற். 1. தவாது நன்மகிழ்ந். 2. விவ்வே. 3. (ப்) பரந்தியங்கு. 4. வளம்படு. 1. தோயே. 2. மலர்ப்பறி. 1. குன்றினிலை. 2. நுன்னுங் கொண்டினுங் கொண்டி நுவன்றோய். 3. காறிரையெடுத்த முழங்கு குரல். () இக்குறியிலுள்ள எண் புறத்திரட்டிலுள்ள அதிகாரத்தைக் குறிப்பது. 1. பின்னோர்த்தல். 1. இருவரைமேல். 1. இரவூ. 1. யேற்றெயில்பா. 1. இது சேரமான் பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படை பட்ட தன்மை கூறக்கேட்டோர்க்கு அவர் கூறியது என்பார் நச். 1. செற்றார். 1. இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது என்பார் நச். 1. பாய்ந்திறுத்த. 1. மானாக. 2. இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது என்பார் நச். 1. மாறெதிர்ந்தார்க் கந்நாள். 1. அங்கோர். 2. மாண்ட. 1. இதனை முத்தொள்ளாயிரம் என்பர் இளம்பூரணர். புறத். 5. 1. கொடிநிலை வாழ்த்து என்பார் நச். 2. நாணாத. 3. இதனை வள்ளிவாழ்த்து எனக் கூறுவார் நச். 4. இதனைக் கந்தழி வாழ்த்து எனக் கூறுவர் நச். 1. மண்டல. 2. மேறெதிர்ந்து. 3. வல்லான் படலைக்கு. 1. புலிபொறித்த. * இவ்வெண்கள் புறத்திரட்டிலுள்ள பாடல்களைக் குறிக்கும்.