இளங்குமரனார் தமிழ்வளம் 5 புறநானூற்றுக் கதைகள் அந்த உணர்வு எங்கே? பெரும் புலவர் மூவர் பண்டைத் தமிழ் மன்றங்கள் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் -5 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 488 = 504 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் புறநானூற்றுக் கதைகள் 1. பறம்பிற் கோமான் பாரி 1 2. கொல்லி ஆண்ட வல்வில் ஓரி 8 3. மாரி ஈகை மறப்போர் மலையன் 12 4. அதியமான் நெடுமான் அஞ்சி 18 5. வள்ளல் பேகன் 28 6. வள்ளல் ஆய் அண்டிரன் 37 7. வள்ளல் நள்ளி 45 8. வள்ளல் குமணன் 50 9. மானம் போற்றிய மன்னவன் கதை 60 10. வசை ஒழிய வாழ்ந்த வளவன் கதை 80 11. வீரமங்கையின் வெற்றிக்கதை 100 12. பெருஞ்சாத்தன் கதை 133 13. கணியன் பூங்குன்றன் கதை 158 14. மல்லனை வென்ற மன்னவன் கதை 183 15. வள்ளலைப் பாடிய வளவன் கதை 204 16. உலகங் காணா உயர்வீரர் கதை 224 அந்த உணர்வு எங்கே? நூல் வரவு 244 மூன்றாம் பதிப்பு 248 1. நெஞ்சம் திறப்போர் 249 2. வாழும் நாளும் 254 3. உள்ளடி முள்ளும் 260 4. நோகோ யானே 266 5. குடிப்பொருள் அன்று 272 6. இருவரை நினைப்பில் 277 7. நெடுந்தேர் பூண்க! 283 8. யான்கண்டனையர் 289 9. நாடும் சொல்லான் 294 10. அறிவுடையோன் ஆறு 300 11. இன்றே போல்க! 306 12. தீதும் நன்றும் 311 பெரும் புலவர் மூவர் 1. தோற்றுவாய் 320 2. பெருஞ்சித்திரனார் 331 3. பெருந்தலைச் சாத்தனார் 350 4. பெருங்குன்றூர் கிழார் 375 பண்டைத் தமிழ் மன்றங்கள் 1. அரசவை 400 2. அரண்மனை 407 3. அந்தப் புரம் 414 4. படைக்கலக் கொட்டில் 420 5. போர்க்களம் 427 6. கொலைக்களம் 435 7. சிறைக் கோட்டம் 441 8. வீடு 449 9. திண்ணை 456 10. முல்லைப் பந்தல் 462 11. குப்பை மேடு 468 12. ஆற்றங் கரை 475 கணியன் பூங்குன்றன் பாட்டு 483 கட்டுரைப் பயிற்சி 484 புறநானூற்றுக் கதைகள் 1. பறம்பிற் கோமான் பாரி தேருடன் சென்றார் வேந்தர். தேரைக் காணவில்லை; குதிரை மட்டும் வருகின்றதே! ஒருவேளை குதிரை தேரை விட்டுத் திமிறிக் கொண்டு வந்து விட்டதோ? இருக்கவே இருக்காது! வேந்தரைக் கண்டவுடனே முதுகை நெளித்து வளைத்துக் கொடுத்து நிற்குமே குதிரை. அவர் ஏறிய தேரிலா திமிறும்? அதோ வேந்தரும் வருகின்றார், ஐயோ! கால்நடையாக அல்லவா வருகின்றார். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. ஆனால் அதை எப்படிக் கேட்டு அறிவது? வேண்டாம் வேண்டாம்! வேந்தர் செல்லட்டும். நாம் அவர் வந்த வழியே சென்று பார்த்துத் தெரிந்து கொள்வோம். இப்படிப் பலவாறாகப் பேசிக் கொண்டு நகரமக்கள் பலர் அரசர் வந்த வழியிலே சென்றனர். சற்றுத் தொலைவு சென்று, சென்ற எல்லோரும் ஒரு சேரத் திகைத்து நின்றனர். ஆ ஆ! அரசர் என்ன காரியம் செய்தார்; எவரே இப்படிச் செய்வர்! சாதாரணமாகக் காட்டிலே வளர்ந்தது இம்முல்லைக் கொடி; இக்கொடி படருவதற்காகத் தேரையோ விட்டுச் செல்வர்? பூப்போன்ற கால்கள் புழுதிமீது படிய நடந்து செல் கின்றாரே வேந்தர். அவர் இப்பூங்கொடி மீது கொண்ட அருள் தான் என்னே! பூங்கொடி எவ்வளவு கொழு கொழு என்று இருக்கின்றது. இதன் தளிர் ஆட்டம் பாம்பு நெளிவையல்லவா நினைவூட்டுகின்றது. காற்றின் தாலாட்டிலே, வண்டின் பாட்டிலே உள்ளம் பறிகொடுத்து முல்லைக் கொடியாள் சிரிப்பது போலவே இருக்கின்றது. என்ன அழகிய பூக்கள்! என்ன நறுமணம்! முல்லைப்பூப் போன்ற பற்களையுடைய அழகிய பெண்கள் கலையழகு தவழ அரண்மனையிலே ஆடும் ஆட்டம் கண்டு கண்டு கலையே உருவாகிவிட்டவர் காவலர். ஆதலால் இக் கொடி படர்கொம்பின்றி ஆடுவதையும் நடனமெனக் கருதி விட்டார் போலும்! அதனாலே தான், ஏறி வந்த தேரை முல்லைக்குப் பந்தலாக விட்டுவிட்டுப் போய்விட்டார். அரசர் அருள் உள்ளம் போல் உண்டோ? இப்படிப் பேசிக் கொண்டு வேந்தரை வாயார வாழ்த்தினர்; மனமாரப் போற்றினர். முல்லைக்குத் தேரீந்த வள்ளல் என்று ஊரெல்லாம் பரப்பினர். பாடக் கொடுப்பார் உண்டு; இரந்து வேண்டக் கொடுப்பார் உண்டு. ஆனால் பாடாமலும் வேண்டாமலும் இருந்தும் தானே தந்துதவும் வள்ளல் நம் வேந்தர் தான் என்று மக்கள் மகிழ்ந்தனர். இம் மன்னர் பெருமகனார் ஆட்சியிலே வாழப்பெற்ற பெருமை நோக்கித் தங்களைத் தாங்களே வியந்து கொண்டனர். முல்லைக்குத் தேரீந்த நல்லோன் யார்? அவர் வரலாறு தான் என்ன? இந்நாளில் பிரான்மலை என்று வழங்கப் பெறும் மலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பறம்பு மலை என்னும் பெயரால் வழங்கப் பெற்றது. அம்மலையைச் சூழவும் நூற்றுக்கணக்கான வளமிக்க ஊர்கள் இருந்தன. அவ்வூர்களும் மலையும் சேர்ந்த பகுதி பறம்பு நாடு என்று அழைக்கப்பெற்றது. பறம்பு நாட்டின் எல்லை தெற்கே பரமக்குடி என இக்காலத்து வழங்கும் பறம்புக் குடி வரை நீண்டு இருந்தது. பறம்பு நாட்டின் வேந்தன் பாரி என்பான். அவன் வேளிர் என்று அழைக்கப்படும் உயர்ந்த உழவர் குடியைச் சேர்ந்தவன். ஆதலால் வேள்பாரி என்றும் அழைக்கப்பெற்றான். வேள் பாரி பறம்பு மலையையே தலைநகராகக் கொண்டு தன்னாட்டை இனிது ஆண்டுவந்தான். அவன் வீரமும் ஈரமும் ஒருங்கே அமைந்த உயர் குணத்தினன். மக்களையெல்லாம் தன்னுயிர் போல் எண்ணிச் செங்கோல் செலுத்தி வந்தான். தக்கதொரு பெண்மணியை மணந்து தனிப்பெரும் இல்லறம் நடத்தினான். அவனது இல்லறத்தின் பயனாய் அறிவும், அழகும், பண்பும் ஒருங்கே அமைந்த மக்கள் இருவர் பிறந்தனர் இருவரும் கவி பாடும் ஆற்றல் பெற்றுத் திகழ்ந்தனர். பாரியின் பறம்பு மலை உழாமலே பயன்தரும் பலவளங் களைத் தன்னகத்துக் கொண்டிருந்தது. மலைநெல் அளவின்றி விளையும்; இனிய சுளைகளையுடைய பலாப்பழம் இடந் தொறும் கிடைக்கும்; வள்ளிக்கிழங்கு கொள்ளக் குறையாமல் குவியும்; தேனடை முதிர்வு அடைந்து ஒழுகும்; மலையடி வாரத்தில் வரகும் தினையும். பெருகிக் கிடக்கும். இவ்வளவும் குறைவில்லாமல் கிடைத்தலால் உணவுப் பஞ்சம் இல்லை. விண்மீன்களின் பெருக்கம் போலாக மலையில் சுனைகள் பெருகி இருப்பதால் நீருக்குக் குறைவு இல்லை. நல்லதொரு வேந்தன் நயமிக்க ஆட்சியில் இருப்பதால் நெஞ்சத்துக்கும் குறைவு இல்லை. நன்மக்கள் நிறையக் கொண்ட நாடு ஆண்ட வேந்தன் பாரிக்கும் அல்லல் இல்லை; அனைவரும் இனிது வாழ்ந்தனர். இத்தகைய நிலையிலே ஒருநாள் நாடு வளங்கண்டு வரச் சென்ற காவலன் முல்லைக் கொடி காற்றில் அசைவதைக் கண்டு மனம் பொறானாகித் தான் ஏறிவந்த தேரையே கொடி படரு வதற்காக விட்டு விட்டு நடந்து வந்தான். அவன் அருஞ் செயலைக் கண்ட புலவர் பெருமக்களும், பொதுமக்களும், புகழ்ந்து சிறப்பித்தனர். பாரி கொடைத் தன்மையால் தேர்வண் பாரியாகவும், வள்ளல் பாரியாகவும் உயர்ந்துவிட்டான். பாரி கொடைச் சிறப்பால் பெரும் புகழ் பெற்று விட்டான் இல்லையா! இது சேர, சோழ பாண்டியராகிய வேந்தர் களுக்கும், பிடிக்கவில்லை. கொடையால் வெல்லஇயலாது, ஆகையால் படையாலேனும் வெல்லுமாறு கருதினர். அதுவும் பாரியைப் பொறுத்த அளவில் எளிமையானது அல்ல என்பதை யும் அறிவர். எனினும் மூவரும் ஒன்றுபட்டுத் தாக்கினால் பெற்றுவிடலாம் வெற்றி என்ற முடிவுக்கு வந்தனர். திடுமெனப் போர் தொடங்குவது எப்படி? காரணம் வேண்டாமா? முறைமை வேண்டாமா? இதற்காக மூவேந்தரும் பாரிக்கு ஓலை யொன்று எழுதி அனுப்பினார். அவ்வோலையைக் கண்ணுற்றதும் கண்கள் கனற்பொறி போலச் சிவப்பேறின. விலாவெடிக்கச் பாரி சிரித்தான். என்னே அறியாமை! என் மக்களை நான் மூவேந்தருக்கும் திருமணம் செய்து தர வேண்டு மாம்! இல்லையேல் களத்திலே சந்திக்க நேரிடுமாம்! அழகு! அழகு! பெண் கேட்கும் முறையே தனி அழகு! வேந்தர் மூவர்! மகளிரோ இருவர்! பெண் வேண்டுமாம் பெண்! என்ன அறிவு கொண்டு இக்கேள்வி கேட்கத் துணிந்தார்கள்? சிந்தனை என்ன அவர்களிடம் செத்துத் தொலைந்துவிட்டதா? என்று கொதிப்புடன் மடமட வென்று பேசினான். களத்திலே சந்திக் கட்டும்! அவர்கள் போராண்மையையும் நம் போராண்மை யையும் அங்கே காண்போம் என்று ஓலை கொண்டு வந்தவனை அனுப்பி வைத்தான். மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். மலைக் கோட்டைக்குள்ளிருந்து எவரும் வெளியேறவோ, வெளியே இருந்து உள்ளே புகவோ முடியாதவாறு தடுத்தனர். நெடுநாட் களாக இவ்வாறே முற்றுகையைத் தடுக்காமலும், நேரடியாகப் போரில் இறங்காதும் இருந்தனர் பறம்புமலை தான்பெரு வருவாய் உடையதாயிற்றே! வேந்தர் முற்றுகையால் எத்தகைய இடையூறுக்கும் ஆட்படவில்லை. மேலும் பாரியின் உயிர் நண்பரும் புலவருமான கபிலர் பறம்பு மலையில் இருந்தார். அவர் கிளிகளை நன்கு பழக்கப்படுத்தி வைத்து, செந்நெற் கதிர்களைக் கொய்துவருமாறு செய்தார். கிளிகள் கணக்கின்றிக் கதிர்களைக் கொய்து கொண்டு வந்து குவித்தன. அதனால் பறம்பு மக்கள் எத்தகைய இன்னலுமின்றி இருந்தனர். எனினும் இத்தகைய நிலைமை ஒரு நாட்டுக்கு நன்மை தராது. அல்லவா! ஆதலால் அருட்புலவரான கபிலர் மூவேந்தரையும் நெருங்கினார். வேந்தர்களே! இம்முற்றுகை யாலோ. களப்போராலோ பாரியை நீங்கள் வென்றுவிட முடியாது. நீங்கள் அவனை வெல்ல வேண்டுமானால் அதற்குரிய வழிவகைகளைத் தேடி அலைய வேண்டாம். நானே சொல் கின்றேன். பாரிக்கு முன்னூறு ஊர்களும், இம்மலையும் உண்டு. முன்னமே, ஆடுவாரும், பாடுவோரும் முன்னூறு ஊர்களையும் பரிசிலாகப் பெற்றுக் கொண்டுவிட்டனர். இம்மலை ஒன்றே எஞ்சியுள்ளது. நீங்கள் மூவரும் பாடும் பாணராகி, உங்கள் உரிமை மனைவியர் ஆடும் விறலியராகி வந்தால் இம் மலையை எளிதில் பெறுவீர்கள். இவ்வாறு கையேந்திப் பெறுவது இல்லாமல் வாளேந்திப் பெற இயலாது என்றார். மூவேந்தரும் கபிலர் உரையைப் பன்முறை எண்ணிப் பார்த்தனர். அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை என்னும் முடிவுக்கும் வந்தனர். அந்தோ! முற்றுகையைவிட்டுப் போய் விடுவர் என்ற எண்ணத்துடன் கபிலர் உரைத்த உரையையே பாரியை வெல்லத் தக்க - இல்லை - கொல்லத் தக்க வஞ்சக வழிக்குப் பயன்படுத்திக் கொண்டுவிட்டனர். மூவரும் இரவலர் போல் வந்து பாரி முன் நின்றனர். கொடை வேண்டிவந்த கலைஞர்களே! இடையற உதவுவேன்; யாதுவேண்டும்! என்று கேட்டான் வள்ளல் பாரி. இக்கேள்வி வந்தும் வராமலும் இருக்கும்பொழுதே படைக்கருவி எதுவுமற்று நின்ற வள்ளலை வளைத்துக்கொண்டு வஞ்சத்தால் கொன்று விட்டனர். முல்லைக்கொடி அசைவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல் கண்ணீர் விட்டுக் கலங்கிய பாரி மூவர் செயலால் செந்நீர் பெருக வீழ்ந்துமாண்டான். கொடையால் சிறந்தவன் கொடையாலே இறந்து அழியா வாழ்வு பெற்றான். வாழ்க அவன் புகழ்! பாரியின் மறைவுச் செய்தி கேட்டவுடனே அவன் மனைவி இறந்துவிட்டாள். மகளிர் இருவரும் தாய் தந்தையர் இருவரை யும் இழந்து தாங்காக் கவலை கொண்டனர். வஞ்சத்தால் கொன்ற மூவேந்தரையும் எண்ணிப் புழுங்கினர். கபிலரால் பாரியின் பிரிவைத் தாங்க முடிய வில்லை. உடனே இறக்கத் துணிந்தார். ஆனால் தாய் தந்தை அற்ற பிள்ளைகளுக்கு உதவி யாகத் தானும் இல்லாவிடில் என்ன நேருமோ என்ற ஏக்கத்தால் ஒருவாறு உயிர் தாங்கியிருந்தார். தக்க இடத்திற்குப் பாரி மகளிரை அழைத்துச் சென்று திருமணம் செய்து வைக்க நினைத்தார். அந்நினைவோடே பறம்பு மலையைவிட்டு வெளி யேறினார். எத்துணை வளங்களையுடையது பறம்புமலை? வந்தவர் களை யெல்லாம் இதுவரை எப்படி எப்படியெல்லாம் காத்து வந்தது? அதன் புகழ் போகாத திசை உண்டா? இவ்வளவிற்கும் காரணம் பாரி வள்ளல் தானே! அவன் போய் விட்டான்! பறம்பு மலையை விட்டுப் போகும் நிலைக்கு ஆகினர் கபிலரும் பாரி மகளிரும் பேயோடாயினும் பிரிவு கொடுமை தருமே! பறம்பின் பிரிவு இவர்களை எப்பாடுபடுத்தியதோ? பறம்பைப் பிரிந்த பின்னர் ஒருநாள் முழுமதியைக் கண்டனர் பாரிமகளிர். அடங்காக் கவலைகொண்டு அழுதுவிட்டனர். இத்திங்கள் போலவே சென்ற திங்களும் முழுமதி தோன்றியது. அன்று எமது தந்தை பாரி இருந்தனர்! எம்மலையுமிருந்தது! இன்றும் முழுமதி தோன்றியுள்ளது. எந்தையும் இல்லை! எம்மலையுமில்லை. என்று வருந்தினர். அவ்வருத்தம் ஒரு பாட்டாகக் கிளம்பியது. இருவரும் சேர்ந்து அப்பாடலை அழுதுகொண்டே பாடினர்! இன்றும் புறநானூற்றில் ஒரு மணியாகத் திகழ்கின்றது அப்பாடல். ஒருநாள் புல்செறிந்த ஒற்றையடிப்பாதை வழியே மூவரும் நடந்தனர். அங்கே முள்வேலி ஒன்று காணப்பெற்றது. அதன் பக்கத்தே சிறிய குடிசையும், அதன் முற்றத்தின் பக்கத்தே குப்பை மேடொன்றும் காணப்பெற்றன. குப்பையிலிருந்து முளைத்து எழுந்த பீர்க்குக்கொடி கூரைவரைப் படர்ந்து சென்றிருந்தது. அக்குப்பை மேட்டிலே பாரி மகளிருவரும் ஒதுங்கி நின்றனர். ஏனென்றால், கீழ்கடலில் விளைந்த உப்பினைமேல் மலையில் விற்று வருவதற்காக உப்பு வாணிகர்கள் வண்டிகளை ஓட்டிக் கொண்டு வந்தனர். அவர்களுக்கு வழிதந்து விட்டுக் குப்பை மேட்டிலே நின்ற இருவரும் ஒன்று, இரண்டு, மூன்று என்று உப்பு வண்டிகளை எண்ணத் தொடங்கினர். செல்வச் சிறுமியர்களான அவர்கள் செயல் கபிலருக்குப் பெருங்கவலையைக் கிளப்பி விட்டது. இக்கொடிய காட்சியைக் கண்டு கொண்டும் நான் வாழவா? எனக்கு விரைவில் சாவு வராதா? என்று ஏங்கினார். பெரியமலை மீது இருந்து, பாரியின் வீரத்தை அறியாமல் எதிர்த்துத் தோற்றோடும் வேந்தர்களின் குதிரைகளை எண்ணிக்கையிட்டு மகிழ்ந்தோர் இவ்வாறு உப்பு வண்டியை எண்ணிப்பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டனரே என்று அரற்றினார். மேலும் நிற்க விடாதவராய் அவர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்தைக் கடந்தார். பின்னர், விச்சி என்னும் நாட்டினை ஆண்டு வந்த வேந்தன் விச்சிக்கோன் என்பவனைக் கண்டார். அவனிடம் மகளிருவரையும் மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டினார். ஆனால் விச்சிக்கோன் மூவேந்தர் பகைமைக்கு ஆளாக நேரிடுமே என்ற அச்சத்தால் புலவர் மொழியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். அதன் பின் இருங்கோவேள் என்னும் குறுநில மன்னனைக் குறுகி, மணம் செய்து கொள்ளுமாறு வேண்டினார். அவனும் விச்சிக் கோன் போலவே மறுத்து விட்டான். தோழனான பாரிக்குத் தான் செய்ய வேண்டிய கடமை களைச் செய்து முடிக்குமாறு கபிலர் முயன்றார். ஆனால் எவ்வழியும் கைகூடாது போகவே, இனி என்ன செய்வது என்று எண்ணியவராய்ப் பார்ப்பார் ஒருவரிடம் மகளிரை அடைக்கல மாக வைத்துவிட்டுத் திருக்கோவலூர் சென்றார். அவ்வூரில் வள்ளல் காரியின் மைந்தர் இருவர் இருந்தனர். அவர்களை நெருங்கி வள்ளல் காரியின் வழிவந்தவர்கள் நீங்கள்! வள்ளல் பாரியின் வழிவந்த மகளிரும் இருவர்! எனக்குக் காரியும் நண்பன்; பாரியும் நண்பன்! எங்கள் அன்புடைமை கருதி என்சொல்லை மறுத்து விடாது நீங்கள் இருவரும் பாரி மகளிரை மணம் செய்து கொள்ள வேண்டும்; இதுவே நான் இப்பொழுது உங்களிடம் வேண்டும் பரிசுப்பொருள் என்றார். காரிமைந்தர் இருவரும் பாரி மகளிர் இருவரையும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனர். அப்படியே புலவர்களும் அரசர்களும் கூடி நன்னாள் ஒன்றிலே திருமணம் நடத்தி வைத்தனர். கபிலர் செயலைப் பெரிதும் போற்றினர். தோழமைக்காகக் கபிலர் ஆற்றிய தொண்டுபோல் எவரே செய்வார் என்று புகழ்ந்தனர். இப்புகழ் மொழியைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை கபிலர். விரைந்து சென்று வடக்கு நோக்கி ஓரிடத்தே உட்கார்ந்து உணவு கொள்ளவில்லை. நீர்பருகவில்லை. பாரி! என்னோடு எவ்வளவு உயர்ந்த நட்புச் செய்தாய்! எனினும் என்னை விட்டுப் போய் விட்டாயே! இதுவரை உன்னைப் பிரிந்து இருந்தேன். இனியும் அவ்வாறு இருக்க மாட்டேன். நீ சென்ற இடத்திற்கே வந்து சேர்வேன் வேறு பிறப்பு உண்டாயினும் அப்பிறப்பிலும் உன்னை இடைவிடாது இருந்து இன்புற விதி வழிகாட்டுமாக என்று கூறியிருந்து இறந்தார். பாரியைப் போல் வள்ளலும் அரியர்! கபிலரைப்போல் தோழரும் அரியர்! என்று உலகம் பேசுமாறு கபிலரும், பாரியும் ஒன்றுபட்டுவிட்டனர். கொடைக்காகவே உயிர்வாழ்ந்த பாரியும், கடமைக்காகவே உயிர்வாழ்ந்த கபிலரும் அரியர் அல்லவா! அவர்கள் வழி வாழ்க! 2. கொல்லி ஆண்ட வல்வில் ஓரி புலவர்களே! இந்த வில் வீரனைப் பார்த்தீர்களா? இவனைப் போலொரு வீரனை இதுகாறும் கண்டது உண்டோ? யான் கண்டறியேன்; கேட்டும் அறியேன். ஆகா! இதோ பாருங்கள்! என்ன வீரம்! வில்லை வளைப்பதைப் பார்த்தீர்களா? கைத் தசைத் திரட்சியைப் பார்த்தீர்களா? அம்புதான் என்ன விரைவில் போகின்றது? அது இருக்கட்டும் எத்தனை உயிர்கள் தான் ஓர் அம்பில் வீழ்ந்துவிட்டன; வலியயானை ஒன்று! அதனைத் தாக்குமாறு பொழுது நோக்கியிருந்த பெருவாய்ப் புலி ஒன்று! நெடிய கொம்புடைய கலைமான் ஒன்று! திண்ணிய தலையுடைய பன்றி ஒன்று! புற்றிலே புதைந்து கிடந்த உடும்பு ஒன்று! ஆ! ஆ! யானையைத் தைத்துருவிய அம்பு இப்படி ஒவ்வொன்றாய்த் தாக்கிச் சென்று உடும்பின் உடலோடு உடலாகப் பொருந்தி விட்டது! இவ்வாறு அம்பு எய்யப் பயின்றோர் யார்? எத்தனையோ நாடுகளைக் கண்டுள்ளோம். காடுகளையும் கண்டுள்ளோம். இத்தகைய வீரக் காளையைக் கண்டதுமில்லை! இன்னும் எங்கே தான் காண இயலும். இவனை நோக்கினால், கொலை வேட்டுவனாகவும் தோன்றவில்லை; அன்றி விலைவேட்டுவனாகவும் தோன்றவில்லை. ஏதோ ஒரு நாட்டின் வேந்தனாகவேயிருக்கவேண்டும் இவன் தோற்றமே அதனைக் காட்டுகின்றது. ஆமாம்! இவன் கொல்லிமலைக் கொற்றவனான வல்வில் ஓரியாகவே இருக்கவேண்டும். செயலும் தோற்றமும் அப்படியே காட்டுகின்றன. கலைஞர்களே! நான் இவன் மீது பாடுகின்றேன்; நீங்கள் முழவை இயக்குங்கள்; யாழை மீட்டுங்கள்; யானைத் துதிக்கை போன்ற பெருவங்கியத்தை இசையுங்கள்; சிறு பறையை அறையுங்கள்; பதலை என்னும் கருவியின் ஒரு பக்கத்தைப் பையத் தட்டுங்கள்; வேந்தன் முன்னிலையில் பாடவேண்டிய இசைத் துறைப்பாடல்களையும் பாடுவோம். இவ்வாறு கூறி வேட்டையாடிக் கொண்டிருந்த வல்வில் ஓரியை வன்பரணர் முதலான புலவர்கள் சுற்றம் வளைத்துக் கொண்டது. யாம் நாடுதோறும் சென்று வருவோம்; ஆனால் நின்னொத்த வேடனைக் கண்டிலேம் என்று தங்கள் மனக்கருத்தை உரைக்கத் தொடங்கினர். அதற்கு அவன் விட்டுத்தராதவனாய் அங் கிருந்தும் நடந்தான். நொடிப் பொழுதில் மான் தசையைச் சுட்டுக் கொண்டு, பசு நெய் போன்ற மதுவுடன் மீண்டான். உண்டும் அருந்தியும் களைப்பு நீங்குக என்று வேண்டிக் கொண்டான். இதோ இதனைக் கொண்டு செல்க என்று பொன்னும் மணியும் அள்ளி வீசினான். கொல்லிக் கோமான் வல்வில் ஓரி வாழ்க என்று புலவர் கூட்டம் வாழ்த்திச் சென்றது! ஓரியின் கொடையால் வறுமை தேய்ந்து வளமை பெருகிக் களிப்படைந்தது கலைஞர் கூட்டம். ஓரியை மற்றுமொரு தடவை கழைதின் யானையார் என்னும் புலவர் கண்டார். அவனை வாழ்த்த வேண்டும் என்ற ஆவல் புலவருக்கு அரும்பியது. அதற்காக இல்லாததையும் பொல்லாததையும் கூறிவிடுமாறு புலவர் எண்ணிவிடவில்லை. உள்ளதை உள்ளவாறே கூறத் தொடங்கினார். வேந்தே! எப்பொருள் ஆயினும் சரி; இல்லை;, இது நீ தருக என்று ஒருவரிடம் போய் இரந்து நிற்பது இழிவுடையது ஆகும். அத்தகைய இழிவினைக் கருதாராய் எவரேனும் வந்து இல்லை; இது தருக என்று கேட்ட போது இல்லை என்று கூறி அனுப்புதல் முன்னை இழிவினும் பேரிழிவு ஆகும். ஆனால் ஒன்றையும் கேளாது இருக்க இதைப் பெற்றுக் கொள்க என்று வற்புறுத்திக் கொடுப்பது உணர்வுடையதாகும். அவ்வாறு கொடுப்பதையும் வேண்டாம்; வேண்டவே வேண்டாம் என்று மறுத்துப் பெறாது ஒதுங்குவது மிகவும் உயர்வுடையதாகும் என்றார். புலவர் பொன்மொழியைச் சிக்கெனப் பிடித்து வாழ்ந்தான் ஓரி. அவனைத் தேடிப் பரிசு பெற்ற கூட்டத்திற்கு அளவே இல்லை. நாள் என இல்லை; பொழுது என இல்லை; இரவு என இல்லை; பகல் என இல்லை! எப்பொழுதும் கொடை யாகவே கழிந்தது. ஓரியைப் பார்க்கிலும் நிலவளம் நீர்வளம் பெருகக் கொண்ட வேந்தர் பலர் இருந்தனர். ஆனல் ஓரியை நாடிய அளவு இவர்களைப் புலவர்களும் கலைஞர்களும் நாடவில்லை, கடல் எவ்வளவு பெரியது! ஆனால் நீர்பருகப் பயன்படுமா? கடற்பக்கத்தே இருக்கும் சிறிய ஊற்று எவ்வளவு பயன்படுகிறது! அதனைத் தானே மக்கள் தேடி அலைகின்றனர். காட்டின் இடையே ஓர் ஊற்று இருந்தால் அதற்கு எத்தனை எத்தனை வழிகள் ஏற்பட்டு விடுகின்றன. விலங்குகள் பறவைகள் மக்கள் இப்படி எல்லோரும் பயன்படுத்த வில்லையா? அத் தண்ணீர் சேறும் தூரும் பட்டுக் கலங்கலாக இருந்தாலும் நீர் வேட்கையாளரால் விரும்பப்படுகின்றது அல்லவா! அந் நீரூற்றைப் போலவே ஓரியும் விரும்பப் பெற்றான். அவன் கொல்லி மலைக்கும் இது வழி என்று இல்லாது கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வழிதுறைகள் ஏற்பட்டன. எல்லாம் ஓரியின் கைவண்ணம்! மழை பொழிவது போல அவன் வளம் பொழிந்தான்! மழை கண்ட பயிர்போல மக்கள் மகிழ்ந்தனர். ஓரி கொல்லி நாட்டுக் கொற்றவன். ஈகையால் புகழ்பெற்ற வள்ளல் பெருமக்களுள் ஒருவன்; உயரிய புலவர்களால் பாடும் பேறு பெற்றவன். வீரமும் கொடையும் ஒருங்கு அமைந்த உயர் குணத்தினன். கொல்லிமலை, மிகுந்த வளங்களைத் தன்னகத்துக் கொண்டது; வானம் தழுவும் உயர்வுடையது; சுனையும் அருவியும் நிறைய அமைந்தது; சந்தனமும் தேக்கும் சாலவும் செறிந்தது; பலாவும், வாழையும் மிகவும் பல்கியது; கிழங்கும், கீரையும் கணக்கின்றிக் கிடைப்பது. இத்தகைய வளமலை நாட்டைத் தனக்கு உரியதாக்கி விட வேண்டும் என்ற ஆசை சேரனுக்கு ஏற்பட்டது. ஆயினும் ஓரியை நேரில் சென்று தாக்குவதற்குத் துணிவு இல்லை. கொல்லி நாட்டை அடுத்து இருந்ததான முள்ளூர் நாட்டின் வேந்தன் காரி என்பவனைத் தூண்டி விட்டான். ஓரியைக் கொன்று கொல்லி மலையைக் கைப்பற்றிச் சேரனுக்குத் தருவதாகவும் உறுதி கூறினான் காரி. ஏனெனில் காரிக்கு நெடுநாட் பகைவன் ஒருவன் இருந்தான். அவன் தகடூர் மன்னன் அதியமான் ஆவான் அவனை அழிக்கவும், அவன் நாட்டைப் பறிக்கவும் சேரன் படைத்துணை புரிவதாக வாக்களித்திருந்தான். இருவர் பகையையும் ஒழித்து விடுமாறு செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம்தானே இது! காரியும், ஓரியும், அதியனும் பெருவள்ளல்கள்! அருள் உள்ளம் மிக்கவர்கள். இவர்கள் ஒன்றுபட்டு நின்று நன்றி புரிந்திருந்தால் நாடு மணக்காடு ஆகி வளமும், உளமும் பொங்க நின்றிருக்கும். மாறுபட்டு நின்ற நிலைமையால் பிணக் காடு ஆகிப் பிளவும் பிணக்கும் முதிருமாறு அமைந்துவிட்டது! கூட்டு ஒப்பந்தம் உரையளவில் இருக்கும் போதே அதனை ஒற்றர் வழியாக அறிந்தான் ஓரி. காரி பெரு வீரன்; அவனோடும் சேரனும் சேர்ந்துகொண்டான்; ஒருங்கே இருவரும் களத்திற்கு வர நேரின் என்ன நிகழுமோ? என்று எண்ணினான். அவர்கள் தன்னைத் தாக்கும் வரைக்கும் காத்திருக்கக்கூடாது என்று கருதி, உடனே முள்ளூர் மீது படை நடத்திச் சென்றான். ஓரியின் படையும், காரியின் படையும் களத்திலே சந்தித்தன. கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்தது. சேரன் வரு முன்னமே தன்னை ஓரி ஒழித்து விடுவானோ என்று அஞ்சினான் காரி! இருபக்கப் படைகளும் கணக்கின்றி வீழ்ந்தன. போரை விரைவில் முடிக்கக் கருதிய வேந்தர் இருவரும் தங்கள் தங்கள் குதிரை மீது ஏறிக்கொண்டு போரை ஊக்கினர். ஓரி குதிரை ஓரி என்னும் பெயருடையது; குதிரைகளும் தம் பெயருக்கு ஏற்பவே, ஓரி போலவும், காரிபோலவும் சினம் செருக்கிப் போரிட்டன. இந்நிலைமையில் சேரன் உதவியும் காரிக்குக் கிடைத்தது. அந்தோ! முன்னோங்கிய ஓரியின் படை பின் வாங்கி ஓட்டம் பிடித்தது; ஓரி மட்டும் அஞ்சாது முன்னின்றான்; அவன் வாள் பரணி பாடியது; எவ்வளவு நேரம்தான் தனி ஒருவனாய் நின்று தாக்க முடியும். பாடுவோரும் ஆடுவோரும், கலங்கிக் கண்ணீர் வடிக்க ஓரி போர்க்களத்தே மாண்டான்! புகழால் நிலை பெற்றான். இன்றும் கொல்லி மலை வட்டாரத்தே ஓரியின் பெயரால் ஆண்டுதோறும் விழா ஒன்று நடைபெற்று வருகின்றது. ஆனால் ஓரி வேட்டை என்னும் உயர் பெயர் நரிவேட்டையாக மாறித் தாழ்வுற்றுப் பாழ்பட்டு விட்டது. ஓரி கொல்லிமலைக் காவலன் அல்லவா! பெருவில் வீரனும் ஆவன் அல்லவா! ஆதலால் ஓரி வேட்டை என்னும் விழா எடுப்பது சால்புடையதே! அவ்வாறே கொல்லி வட்டாரப் பெருமக்கள் விழாவும் எடுத்தனர். பிற் காலத்தே ஓரியை மக்கள் மறந்தனர்; அறவே மறந்தனர். ஓரி என்னும் சொல்லுக்கு நரி என்னும் பொருள் இருத்தலை இலக்கியத்தில் அறிந்தனர். ஆதலால் ஓரி இருந்த இடத்திலே நரியை நிறுத்தி வேட்டையாடி விட்டனர். அந்தோ! ஓரி வேட்டை, நரி வேட்டையாகும் அளவுக்குக் கெட்டு விட்டது தமிழகம்! பழைய மாண்பினை நினைவுகூறும் அளவுக்காவது இன்று ஏற்பட்டுள்ள நல்லுணர்ச்சிக்கு வாழ்த்து! 3. மாரி ஈகை மறப்போர் மலையன் யானை விரைவாக வந்துகொண்டு இருந்தது. யானை மீது ஏறியிருந்த பாகன் மேலும் மேலும் அதனை விரைவுபடுத்தினான். அதன் விரைவால் மணிபேரொலி செய்தது. நின்றவர் அனைவரும் களிற்றின் விரைவைக்கண்டு கலங்கி ஆங்காங்கு ஒளிந்தனர். எதற்காக இதனை இவ்வளவு விரைவில் செலுத்திக்கொண்டு போகின்றான் பாகன் என்று விளங்காமல் கையை நெரித்துக் கொண்டு நின்றனர். அவ் யானையைத் தொடர்ந்து முன்னும் பின்னும் வீரர் பலர் வேலும் கையுமாய்ப் போய்க் கொண்டிருந்தது ஐயத்தை மேலும் வளர்த்தது. அரண்மனை வாயிலை யானை அடைந்தது. அங்கு மக்கள் கூடியிருந்தனர். அக்கூட்டத்தினிடையே பாகன் யானையைச் செலுத்தினான். அதுவும் கூட்டத்தை மணி ஒலியால் விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது. அதன் பிளிறலையும், கடுகடுப்பையும் கண்ட மாந்தர் கலங்கினர். சிலர் வாயைத் துணியால் பொத்திக்கொண்டு கண்ணீர் சொரிந்து நின்றனர்; சிலர் வாய் விட்டு அலறவும் செய்தனர்; சிலர் வியப்போடு என்ன நேருமோ என்று நோக்கி நின்றனர். ஆனால் இரும்பு இதயம் படைத்த பாகனும் வீரர்களும் யானையை மேலும் ஏவினர். கூட்டத்தின் இடையே மன்னன் நின்றான்; மற்றிரு சிறுவர் களும் நின்றனர். அச் சிறுவர்களை யானையால் மிதிக்க வைத்துக் கொல்ல வேண்டும் என்ற மன்னவன் ஆணையை நிறைவேற்றவே யானை சென்றது. சிறுவர்களோ படைக் கருவிகளையும், கூட்டத்தையும் கண்டு கலங்கிக் கதறி அழுது நின்றனர். ஆனால் மணியோசை கேட்டதிலிருந்து அழுகையை விட்டு விட்டு ஒலி கேட்ட திசையையே நோக்கி நின்றனர்! யானையின் பெரிய உருவத்தையும், அசை நடையையும் அழகு நெற்றியையும் கண்டு, புதிய மகிழ்ச்சியிலே நின்றனர். தங்களை மிதித்துக் கொல்லவே வந்திருக்கிறது; உரல் போன்ற கால்களால் மிதிக்கப்பெற்று மண்ணோடு மண்ணாய், சேறோடு சேராய், நீரோடு நீராய், தூசியோடு தூசியாய்ச் சிறிது நேரத்தில் கலந்து விடுவோம் என்ற உணர்ச்சி அற்ற சிறுவர்கள் உவகையோடு யானையைக் கண்டு நின்றனர். வெட்டப்படப் போகின்றோம் என்ற உணர்ச்சி அற்று மேளதாளம் ஒலிக்க, மாலை கழுத்திலே புரள, தழை தின்று கொண்டிருக்கும் அறிவில்லாத ஆடுகளைப் போல சிறுவர் இருவரும் நின்றனர்! பாவம் வயது எவருக்கும் பத்தினைத் தாண்டியிருக்காது. யானை சிறுவர்களை நெருங்கி விட்டது. இனித் தன் காலைத் தூக்கிச் சிறுவர் தலையிலே அழுத்த வேண்டியதுதான் குறை, அந்தோ! யானையும் தன் தொழிலைச் செய்யத் தொடங்கி விட்டது. மன்னவன் நடக்கட்டும் என்றதும் ஆணையை நிறைவேற்ற வேண்டும். அவ்வளவு தான். வேலை முடிந்தது. அரசனும் ஆணையிட வாயைத் திறந்து விட்டான், பொறுங்கள், பொறுங்கள்; கொலையை நிறுத்துங்கள்; நிறுத்துங்கள் என்னும் பரபரப்புக் குரல் கூட்டத்தார் காது களில் முழங்கியது. குரல் கேட்ட பக்கம் நோக்கினர், மன்னவன் ஆணையையும் மறுத்து உரைக்கும் ஆள் உண்டோ? என்று திகைத்து நின்றனர். அரசனும் குரல் கேட்ட திக்கை நோக்கினான். படபடப்பு உணர்ச்சியோடும், வியர்த்து விறுவிறுத்து நடையோடும் ஒரு புலவர் வந்தார். அவருடைய அருள் நிறைவைக் கண்கள் காட்டின. அறிவு முதிர்வைப் படர்ந்த நெற்றி விளக்கியது. ஆத்திர நடை நல்லெண்ணத்தை வெளிக் காட்டியது. எல்லோரும் விலகி நின்று வழி விட்டனர். மன்னர் முன்னிலையை அடைந்தார் புலவர். குரல் வந்த திசையை நோக்கி நின்ற வேந்தன் புலவரைக் கண்டவுடன் புன்முறுவல் பூத்தான், புலவரைக் கட்டித் தழுவிக் கொண்டு அன்பு காட்டினான். புலவர் பெருமானே! கொலையை நிறுத்துமாறு கூறியது எதற்காக? என்னை எதிர்த்தவர்களுக்கு உய்வே கிடையாது என்பதை உலகம் உணர வேண்டாமா? நீர் என்ன சொல்கின்றீர். பகையை அழிக்கத் தவறும் வேந்தன் பட்டழிவான் என்பது மெய்யுரை அல்லவா! என்று கூறினான். புலவர் உரையை எதிர் நோக்கி நின்றான். புலவர் பேசினார். அரசே! உன் பரம்பரை எவ்வளவு உயரிய பரம்பரை! கருணையுள்ளம் அன்றிக் கல்லுள்ளம் படைத்தோர் எவரும் உன் முன்னோருள் இருந்தது உண்டோ? ஈரநெஞ்சம், இன்னருளும் கொண்டு உலகப் புகழுக்கு உறைவிட மானோர் வழியில் வந்தவன் நீ என்பது போலுமொரு பெருமை உனக்கு உண்டோ? வெருண்டு வந்த புறவுக்காக அருள் காட்டினோன் உன் முன்னோன் அல்லவா! அவன் அப் புறாவின் உயிரைக் காக்குமாறு தன் அரிய உடலையே அரிந்து அரிந்து வைத்தானே! அத்தகையவன் உன் முன்னோன் என்பதால் ஏற்படும் சிறப்பை எப்படித்தான் புகழ்வது? நின் புகழ் இவ்வாறு இருக்க, இதோபார்! இச் சிறுவர் களின் முன்னோர்தான் எத்தகையர்! பிறர் வறுமைப் பிணியைப் போக்குவதையே வாழ்வுப் பணியாகக் கொண்டிருந்தவர் அல்லரோ! பிறர் பசியையோ, வறுமையையோ கேட்டுக் கல் மனம் கொண்டு கை விரித்தவர் இல்லையே! பிறர் கலங்குவதைக் காணப் பொறுக்காதவர்களாயிற்றே! அவர்கள்தான் என்ன கேடு செய்தார்கள்? அன்றி இச் சிறுவர்கள்தான் என்ன கேடு செய்தார்கள்? கூட்டத்தைக் கண்டு வாட்டமுற்று அழுத சிறுவர்கள், யானையின் வருகையைக் கண்டு வியப்புடன் நோக்கி நிற்கின்ற னரே! என்ன நேரப்போகின்றதோ என்பதை அறியாமல் மணி யோசையைக் கேட்டு நிற்கும் இச் சிறுவர் தான் உன் எதிரிகளா? உன் முன்னோர் பெருமையை எண்ணிப்பார்! இவர்தம் முன் னோர் இயல்பையும் நினைத்துப்பார்! புலவனான என் வேண்டுதலையும் ஆராய்ந்துப் பார்! அதற்குப் பின் உன் விருப்பம் எதுவோ அதனைச் செய்து முடி! இதனை இச் சமயத்தில் நினைவுபடுத்தல் ஒன்றே என் கடனாம். வேந்தே விரும்பியதைச் செய்! நன்றாகச் செய் என்றார். புலவர் உரை வேந்தனைக் குலுக்கி எடுத்தது. தன் வஞ்சினத்தை முடிப்பதினும் தன் பரம்பரைப் பெருமையை நிலைநாட்டுவதே பெருமையாகத் தோன்றியது. புலவர் உரையைத் தட்டுவதின் கேட்டையும், ஏற்றுப் போற்றுவதின் மாண்பையும் உணர்ந்தான். சிறுவரை யானைக்காற் கீழிருந்து விடுவித்துப் பெரும்பேறு பெற்றான். மைந்தர் இருவரும் புலவர் செயலை எண்ணி மகிழ்ந்தனர்! புலவரோ அரசன் செயலை வாயார வாழ்த்தினார். பொது மக்கள் புகழ்மாலை பொழிந்து கொண்டு சென்றனர். யானையின் காலுக்குக் கீழ்க் கிடந்து மடியும் நிலைக்கு ஆட்பட்ட சிறுவர் யார்? அவர் தந்தையார் யார்? அவர் வரலாறு என்ன? இளஞ்சிறார் இருவரும் வள்ளல் பெருமகனாம் மலைய மான் திருமுடிக் காரி என்னும் வேந்தன் மைந்தர் ஆவர். மலைய மான் எழுவர் வள்ளல் என்று சிறப்பித்துக் கூறப்படுவோருள் ஒருவன் ஆவான், அவன் பெண்ணையாற்றின் தென்கரையிலிருந்த மலாடு என்னும் நாட்டைக் கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். மலையமான் ஆண்டுவந்த நாடு மலாடு ஆயிற்று. மலையமான் கொடைச் சிறப்பால் உயர் வடைந்தது போலவே படைச் சிறப்பாலும் உயர்வடைந்தான். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தரும் ஒருவரோடு ஒருவர் மாறுபட்டோ, பிற வேந்தர்களுடன் வேறுபட்டோ நிற்குங்காலையில் தங்களுக்குத் துணையாக வரவேண்டுமென்று வேண்டி இவனைச் சேர்த்துக்கொண்டு போர்க்களம் புகுவர். அவ்வுதவிக்காகக் காரிக்குப் பெரும் பொருள் தருவர். காரி கேட்கும் பொருள் எவ்வளவாயினும் தர மறுப்பது இல்லை. ஏனெனில் அவன் இல்லையேல் தமக்கு வெற்றி இல்லை என்பதைத் தெள்ளிதில் அறிவர். காரியும் பொருளைத் தனக்கு எனப் பெற்றானில்லை. பரிசில் மக்களுக்காகவே பொருளை வாங்கினான். வீரத்தால் தேடிய பொருளைக் கொடையால் செலவழித்தான். அவனுக்கு உரிமைப் பொருள் ஒன்றே ஒன்று தான்! அதுவும் அவன் மனைவிதான்! எனின் காரியின் ஈகைச் சிறப்பை என்னென்பது? காரியின் கொடையைப் பெற நாள் பார்க்க வேண்டியது இல்லை; பொழுது நோக்க வேண்டியது இல்லை; நற்குறி நாடவேண்டியது இல்லை. புகழ் உரையோ, புனைவுரையோ தேடித்திரிய வேண்டியது இல்லை. எவ்வாறு சென்று காரி முன் நின்றாலும் வெறுங்கையினராய்த் திரும்புவது மட்டும் இல்லை. மதுமயக்க நேரத்தே சில வேந்தர்கள் தேரும் குதிரையும் வாரி வழங்குவது உண்டு. அது மனமகிழ்ச்சியால் மட்டும் கொடுக்கும் கொடையாம். அது என்ன உண்மைக் கொடையா? இல்லை இல்லை! ஆனால் காரி கொடை மகிழ்ச்சியிலோ, மது மயக் கத்திலோ ஏற்படுவது அன்று. உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து சுரக்கும் ஊற்றுப் போன்றது; பொய்யாது பெய்யும் மழை போன்றது. காரியின் வீரம்தான் எத்தகையது? அவனை எதிர்க்கும் துணிவு எவருக்கும் வராது. காரி எனக்குத் துணையாக வந்ததால் நான் வென்றேன் என்றும். காரி என் பகைவனுக்குத் துணையாக வந்ததால் நான் தோற்றேன் என்றும் வென் றோரும், தோற்றோரும் ஒரு சேரப் புகழும் பெருமைக்குரியவன் அவன் என்றால், அவனது வீரச் சிறப்புத்தான் என்னே! கடலும் காரியின் ஆணைவழி நிற்கும். எல்லை கடந்து வந்து அவன் மண்ணைக் கவர்ந்து செல்லாது. கடல் நிலைமையே இவ் வாறானால் மற்றைக் காவலர் நிலைமை என்னாம்? காரிக்கு முள்ளூர் என்னும் ஓர் ஊர் உரிமையானதாக இருந்தது. அவ்வூர் நீர்வள, நிலவளங்களைத் தன்னகத்தே கொண்டது. பறையொலிப்பதுபோல அருவி விழும்; நீரில் புகுந்தாற்போன்று தண்ணிய தன்மை தவழும்! இருளைப் பகுத்து வைத்தால் போன்று சோலைகள் விரிந்து காணும்; இத்தகைய வளம் உடைய ஊரைப் பற்றிக்கொள்ளும் ஆசையால் காரியின் வலிமையை அறியாத அரசர்கள் சிலர் முற்றுகை இட்டுச் சுற்றி வளைத்தனர். போரெனப் பொங்கி எழும் வீர மறவரையுடைய காரி, காரி எனும் குதிரைமேல் ஏறினான்! காற்றெனக் கடுகி னான்; வேல் தூக்கி விளையாடினான்; பகைவர் படைக் கலங்கள் பார்மேல் குவிந்துவிட்டன. பகைவர் பஞ்சு பறப்பதுபோல் புறங்காட்டி ஓடி ஒளிந்து கொண்டனர். காரியை எதிர்து வந்த கயமையை நினைத்துக் கலங்கினர். அவர்கள் போன திசை தெரியவில்லை! ஒரு சமயம், பெருநற்கிள்ளி என்னும் சோழவேந்தனும், மாந்தரஞ்சேரல் இரும் பொறை என்னும் சேரவேந்தனும் பகை கொண்டு போருக்கெழுந்தனர். சோழன் காரியின் துணையை நாடி நின்றான். காரியும் துணையாகச் சென்று களம் புகுந்தான்! பின்னர் வெற்றி தோல்வி பற்றிக் கேட்க வேண்டுமா? சோழன் வென்றான்; சேரன் தோற்றான்! இல்லை இல்லை! காரியால் சோழன் வென்றான்! காரியாலேயே சேரன் தோற்றான்! இதுதானே உண்மை! கொல்லிமலைக் கொற்றவனான ஓரியைக் காரி ஒரு சமயம் களத்திலே சந்தித்தான். வில் வீரனான ஓரியையும் எளிதில் விட்டு விடவில்லை காரி. தன் வலிமையை எல்லாம் ஒன்று கூட்டித் தாக்கி ஒழித்துவிட்டே மீண்டான் காரி! அந்தோ! நல்லவர் களையெல்லாம் நச்சுருவமாக்கும் போர்வெறி என்றுதான் ஒழியுமோ? கிள்ளிவளவன் என்னும் சோழவேந்தனுக்கும் மலைய மான் காரிக்கும் நெடுநாட்களாக உட்பகை இருந்துவந்தது. அவ்வுட்பகை புறப்பகையாகவும் மாறிக்கொழுந்துவிட்டு எரிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அழித்துவிட முந்தி நின்றனர். அவர்கள் கோப நெருப்பால் மூங்கில் காடு அழிந்து படுவதுபோல வீரர் கூட்டம் அழிந்தது. ஊருண்கேணியாகவும், நடுவூர்ப் பழமர மாகவும் பயன்பட்டுவந்த வள்ளற் கோமான் காரி களத்திலே பட்டு மாய்ந்தான். காரி இறந்த பின்னாவது கிள்ளி வளவன் அமைதி கொண்டான் இல்லை. மேலும் வெஞ்சினம் கொண்டான். காரியின் பரம்பரையையே அழித்துவிடுவது என்னும் உணர்ச்சிக்கு ஆளானான். அப்படியே; காரியின் சின்னஞ்சிறு புதல்வர் இருவரையும் இழுத்துக்கொண்டு வருமாறு உத்தரவிட்டான். வந்த சிறுவர்களை யானைக் காலின் கீழ்க் கிடத்திக் கொல்லவும் ஏற்பாடு செய்தான். அருள் நெஞ்சத்தினரான கோவூர் கிழார் மட்டும் காலத்தால் நல்லுரைகூறிக் கிள்ளிவளவன் மனத்தை மாற்றாமல் இருந்திருப்பாரேல் அழியாப் பழிக்கு ஆளாகி இருப்பான். வள்ளல் வழிவந்த ஒரு குடியையே ஒழித்துக்கட்டிய குடிகேடனும் ஆகியிருப்பான்! கோவூர் கிழார் செய்த உதவி காலத்தால் செய்த உதவி! அது ஞாலத்தின் மாணப் பெரிது அல்லவா? 4. அதியமான் நெடுமான் அஞ்சி ஆசைக்கு அளவில்லை; எல்லாம் எனக்கு உரியதாக இருக்க வேண்டும்; எல்லோரும் என் புகழ் பாட வேண்டும்; எல்லாரும் என் ஆணை வழி நிற்கவேண்டும்; இவ்வாறெல்லாம் எண்ணித் திரிவது மாந்தர் இயல்பு ஆகிவிட்டது. இத்தகைய மாந்தருள்ளும் எல்லாரும் இன்புற்றிருக்க நினைவதுவே அல்லாமல் வேறொன்றறியேன் என்னும் பேருள்ளம் படைத்த வர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைந்தவர்களே ஆவர். இவர்களுள் ஒருவனாக வைத்து எண்ணத்தக்கவன் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் பெருமகன் ஆவன். சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்னும் ஊர் ஒன் றுள்ளது. அது ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தகடூர் என்னும் பெயரோடு விளங்கியது. இத் தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்த கொங்கு நாட்டை அதியமான் ஆண்டு வந்தான். இன்றும் தருமபுரியின் பக்கத்தில் அதமன் கோட்டை என்னும் ஓரிடம் உள்ளது. அது பழங்காலத்தே அதியமான் கோட்டை கொத் தளங்கள் அமைத்து அரண் செய்திருந்த இடமாகும். அதிய மான் கோட்டை என்றிருந்த பெயர், காலம் செல்லச் செல்ல அதமன் கோட்டை என்று மாறிக்கொண்டு வந்து விட்டது. அதியமான் பெருவீரன். அவன் வீரர் பெரு மக்களுடன் நெருங்கி உறவாடி, அவர்களுள் உயர்ந்தவர்களைத் தெரிந் தெடுத்து வைத்திருந்தான். அவ்வீரர்களுக்கு மழவர் என்ற சிறப்புப் பட்டம் தந்தான். மழவர் தலைவன் என்னும் சிறப் புடன் அவன் விளங்கினான். வீரர்களிடம் காட்டிய பேரன்பு போலவே அதியமான் புலவர்களிடமும் பேரன்பு காட்டினான். புலவர்களைக் காண்பதிலும், அவர்களுடன் உரையாடுவதிலும், உடன் இருக்கச் செய்து விருந்துண்பதிலும் பெரு விருப்புக் காட்டினான். புலவர்களைச் சுற்றமாகக் கொண்டு வாழ்வதை போலும் உயர்ந்த வாழ்வு ஒன்று இல்லை என்பது அவன் தெளிந்து கண்ட முடிவாகும். ஔவையார் என்னும் புலவர் பெருமாட்டி அதியமான் காலத்தில் வாழ்ந்தார். அவர் புலமைத் திறம் நாடெல்லாம் பரவியிருந்தது. அதியமானும் அவரைப்பற்றி நன்றாகக் கேள்விப் பட்டிருந்தான். எப்பொழுது அவரைக் காணக் கிடைக்குமோ என்று எதிர்நோக்கி இருந்தான். அதியமான் ஔவையாரைக் கேள்விப்பட்டிருந்தது போலவே, ஔவையாரும் அதியமானைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அறிவும் அன்பும் உடைய அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை தூண்ட ஒரு நாள் தகடூருக்கு வந்தார். தம் வருகையினை வாயில் காவலர் வழியாக அரசனுக்கு அறிவித்தார். அரசன், நொடிப்பொழுதும் தாமதிக்காமல் ஓடிவந்து வணங்கி, வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். இன் சொல்லாலும், நல் விருந்தாலும் தமிழ் மூதாட்டியின் களைப்பை நீக்கினான். அருமைத் தாய்க்கு அன்புப் புதல்வன் செய்யும் தொண்டுபோல விரும்பி எதனையும் செய்தான். அவன் அன்பு வெள்ளத்திலே மூழ்கினார் ஔவையார். அதனால் அங்கே சில நாட்கள் தங்கியிருந்து அனைவரும் இலக்கிய இன்பம் அனுபவிக்குமாறு செய்தார். ஔவையார் யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்னும் எண்ணம் உடையவர்; நாடெல்லாம் சுற்றி நல்லறிவு பரப்பும் தொண்டினைக் கொண்டவர்; ஆகையால் ஓரிடத்திலே தங்கியிருக்க அவர் மனம் ஒருப்படவில்லை. அதியமானோ ஔவையார் மீது அளவற்ற அன்பு கொண்டுவிட்டான். அவர் எப்பொழுதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்றும், அவர் கூறும் அறிவுரைகளையும், இலக்கிய விருந்தையும் கேட்டு அடிக்கடி அனுபவிக்க வேண்டும் என்று ஆசைகொண்டிருந் தான். சில நாட்களில் அவ்வாசை பேராசையாக வளர்ந்து விட்டது. அதனால் அவர் வந்தாலும் பெரும் அளவில் பொருள் தந்து அனுப்பும் அதியமான், ஔவையாருக்கு எதுவும் அளிக்காது, வாளா இருந்தான். ஏன்? கொடுக்கக்கூடாது என்றா? செல்வங் குறைந்துவிடுமே என்றா? இவ்வெண்ணங்கள்தான் அதியமான் அறியாதவை ஆயிற்றே! பரிசு பெற்றுவிட்டால் ஔவையார் வேறிடம் போய்விடுவாரே! அவரோடும் அளவளாவும் அரிய வாய்ப்புக் கெட்டுவிடுமே! என்ற எண்ணம்தான் காரணமாம். அதியமான் பெரும் வள்ளல் என்று கேள்விப்பட்டுத் தானே ஔவையார் வந்தார். ஆனால் அவன் தனக்கு ஒன்றும் தராமல் பொழுது போக்குவதை அறிந்தார். அவன்மேல் வெறுப்புக்கொண்டார். அரண்மனையை விட்டும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறினார். தன் உள்ளக் கருத்தை உரைக் காமல் செல்லவும் அவருக்கு மனமில்லை, அதனால் வாயில் காவலனை அழைத்தார். வாயில் காவலனே! வாயில் காவலனே! வள்ளன்மை இல்லாதவனது அடையாத வாயிலைக் காக்கும் காவலனே! அதியமான் நெடுமான் அஞ்சி தன் தரம் அறியானோ? அன்றி என் தரமும் அறியானோ? கொடையாளர் அனைவரும் ஒரு சேர உலகில் இறந்துவிட்டார்கள் இல்லையே! இன்னும் எத்திசைக்கு யான் சென்றாலும் சோறு இடுவார் உண்டு. என் இசைக் கருவிகளை எடுத்துக் கொண்டேன்; மூட்டைகளைக் கட்டிக் கொண்டேன்; புறப்படுகின்றேன் என்று சொல்லிவிட்டு நடந்தார். அரசனுடைய அன்புக்குரிய புலவர் இவ்வாறு வெறுத்துப் போவதை அறிந்த வாயில் காவலன் ஓடோடிப்போய் அரசனிடம் உரைத்தான். ஒன்றை நினைக்க அது ஒழிந்து ஒன்றாவது கண்ட அதியன் விரைந்து சென்று ஔவையாரை அழைத்து வந்து பெரும் பொருள் கொடுத்தான். மன்னிக்குமாறும் வேண்டிக்கொண்டான். பரிசில் கொடுக்கத் தாமதித்தமைக் குரிய காரணத்தையும் தெரிவித்தான். ஔவையாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தான் அவசரப்பட்டு அதியமானை வெறுத்து வெளியேறியமைக்காக வருந்தினர். அவர் கொடைச் சிறப்பு இத்தகையது என்று பாராட்டினார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, பல நாட்கள் பலரோடு தொடர்ந்து சென்றாலும் முதல் நாள் போன்று கொடுக்கும் உயர்குணத்தினன் அதியன் என்று வாழ்த்தினார். இது இவ்வாறு இருக்க, அதியமான் ஒரு நாள் வேட்டையாடச் சென்றான். அவன் சென்ற இடம் பெரிய மலைப்பகுதியாகும். அம்மலைப்பகுதியின் பிளவு ஒன்றிலே அரிய நெல்லி மரம் ஒன்று இருப்பதாகவும், அதன் கனி, தன்னை உண்டோரை நெடுங்காலம் வாழச் செய்ய வல்லது என்றும் முன்னரே அறிந் திருந்தான். அந்நினைவு வரப்பெற்ற அதியன் வேட்டை ஆடு தலையும் விட்டுவிட்டு நெல்லி மரத்தைத் தேடி அலைந்தான். கண்டும் விட்டான்! ஆனால் சிறிய சிறிய இலைகளால் மிக நெருங்கிச் செறிந்திருந்த அம் மரத்தில் கனியைக் கண்டுபிடிப்பது அரிதாக இருந்தது. அரிதில் தேடி, பெரிதில் முயன்று கனி ஒன்றைப் பறித்தான். கனி கையில் வந்தவுடன் எண்ணங்கள் பலவாகக் கிளம்பின. கிடைத்ததற்கு அரிய கனி இது; உண்டால் நெடுங்காலம் வாழலாம்; ஐயமில்லை. ஆனால் நான் உண்டதனால் ஏற்படக் கூடிய பயன்தான் என்ன? வேண்டுமானால் இன்னும் சில ஆண்டுகள் நாட்டை ஆளலாம். அந்நெடுங்காலத்தில் நன்மையும் செய்யலாம்; அன்றி, கேடே செய்யினும் செய்யலாம். செங் கோலன் என்ற சிறப்புப் பெறலாம்; இன்றேல் கொடுங்கோலன் என்ற இழிவும் பெறலாம். அரச வாழ்வு நன்மை ஒன்று புரியும் வாழ்வு அன்று. ஆனால் புலவர் வாழ்க்கையோ, பிறருக்குத் தீமையறியாதது; சென்ற இடங்களிலெல்லாம் நன்னெறி பரப்பி வருவது. உலகத் தீமைகளை நாவென்னும் படைக்கருவி யாலேயே ஒழித்து வெற்றி காண்பது; தான் கண்ட இன்பப் பொருளைப் பிறருக்கும் பகுத்தளித்து இன்புறுவது; ஆதலால் உயர்ந்த வாழ்வுடைய புலவர் பெருமாட்டியான ஔவை இந் நெல்லிக்கனி உண்டு நெடுங்காலம் வாழ்வதே நலம் தரும் என்று எண்ணினான். நெல்லிக் கனியின் சிறப்பை வெளிப்படையாகக் கூறினால் ஔவையார் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நினைத்து ஒன்றும் சொல்லாமலே மற்றைப் பழத்தோடு பழமாகச் சேர்த்துக் கொடுத்து விட்டான். அதியமான் நெல்லிக் கனியையா ஔவைக்குத் தந்தான்; தன் உயரிய வாழ்வை அல்லவோ தந்து தன் மாறா அன்பைக் காட்டினான்! இத்தகைய காவலனைக் காணக் கிடைக்குமோ? bešÈ¡fÅia c©lh® xsitah®!அதன் தீஞ்சுவை அவரை வியப்பில் ஆழ்த்தியது. அதைப் போலொரு கனியைக் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை; ஆகையால் அதியனை வற்புறுத்திக் கேட்டறிந்து உண்மையை உணர்ந்தார். தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த அதியன் பேரன்பிலே மூழ்கினார். நஞ்சுண்டும் சாவாத கறைமிடற்றுப் பிறைநுதல் அண்ணல் போல நீ நெடிது வாழ்க! என்று வாழ்த்தினார். அதியன் நெல்லிக் கனியால் ஔவையாரை நெடிது வாழச் செய்தான். ஔவையாரோ தம் வாழ்த்துரையின் வாயிலாய் அதியனை நீடுவாழச் செய்து விட்டார். அதியமான் கொங்கு நாட்டை ஆண்டு வந்தபொழுது காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டைத் தொண்டைமான் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் கவிப்புலமையும் அறிவு நுண்மையும் பெருகக் கொண்டிருந்தான். அவனுக்குப் படைபலமும் அரண்வளமும் வாய்த்து இருந்தன. கலைவழியிலே தன் பொழுதைப் போக்கிய அவன் படைக் கலங்களை அடுக்கி அடுக்கி அழகு பார்த்துப் பெருமிதம் கொண்டான்; வீரர்களை விளையாட விட்டுப் பார்த்து இறு மாப்புக் கொண்டான். தன்னை எதிர்க்கும் ஆற்றல் எவர்க்கும் இருக்கமுடியாது எனவும் தனக்குள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டான். உள்ளத்து எண்ணம் வெளிப்பட எத்தனை நாட்கள்தான் ஆகும். காஞ்சி மகாநகரில் இருந்த அதியமானது ஒற்றர்கள், தொண்டைமானின் இறுமாப்புணர்ச்சியையும், தக்கவேளையில் அதியனைத் தாக்க நினைத்துக் கொண் டிருக்கும் எண்ணத்தையும் அறிந்தனர். தம் வேந்தனிடமும் விரைவில் அறிவித்தனர். ஔவையாரின் நண்பனான அதியமான் வீணேமக்கள் மடிவதை விரும்பவில்லை. தொண்டைமான் ஆராயாமல் செய்ய இருக்கும் செயலால் இரு நாடுகளுக்கும் ஏற்பட விருக்கும் தீங்கினை எண்ணி வருந்தினான். தான் வெற்றி பெறுவது உறுதி எனக் கொண்டாலும் இருநாடுகளுக்கும் ஏற்படும் கேட்டினை நினைத்துக் கலங்கினான். ஔவையாரிடமும் எடுத்துக்கூறி ஆராய்ந்தான். அருள் உள்ளம் கொண்ட ஔவையார் மக்களுக்கு அல்லல் எதுவும் ஏற்படாதவாறு செய்யவும் மன்னர்களை ஒன்றுபடுத்தவும் விரும்பினார். அதனால் தாமே தொண்டை மானிடம் தூது போகுமாறு புறப்பட்டார். தகடூருக்கும் காஞ்சிமாநகருக்கும் நெடுந்தொலைவு இருந்தது. பல காடு மலைகளைக் கடக்கவும் ஏற்பட்டது. இருந்தாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் உயரிய எண்ணத்தால் நடந்தே சென்று காஞ்சி மாநகர் அடைந்தார். தொண்டைமான் தமிழ்ப்புலவன் அல்லவா. அவன் ஔவையாரை முன்னரே நன்கு கேள்வியுற்றிருந்தான்; தக்க சிறப்புடன் வரவேற்றான்! நன் மொழிகளால் பெருமைப் படுத்தி னான்! பேச்சின் இடையே அதியமானது தூதாக ஔவையார் வந்துள்ளார் என்பதையும் அறிந்து கொண்டான். அதனால் தன் படைக்கலப் பெருக்கைக் காட்ட வேண்டும் என்ற நாட்டம் ஏற்பட்டது. படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான்; ஒவ்வொரு வரிசையாகச் சுட்டிக் காட்டிக் கொண்டே நடந்தான். படைக் கலங்களைக் கண்டவுடன் ஔவையார் சோர்ந்து விடுவார் என்று தொண்டைமான் கருதினான். அதியமானினும் உயரிய படைக்கலங்கள் உடையவன் நீ என்று தன்னைப் புகழ்ந்து விடுவார் என்று கருதினான். ஔவையாரோ சற்று நேரம் அமைதியாக இருந்தார். ã‹d® ngádh®; “munr!உன் படைக்கலங்கள் எவ்வளவு பெரிய இடத்தே - அதுவும் காவல் மிக்க இடத்தே - இருக்கின்றன! இவற்றை நீ அடுக்கி வைத்திருக்கும் அழகுதான் என்னே! மயில் தோகையுடன் விளங்குபவை; மாலையுடன் திகழ்பவை; வைரப்பிடியுடன் பொலிபவை; எண்ணெய்ப்பதம் வாடாதவை; ஆ! ஆ! எத்தகைய அழகு! ஏதேனும் மாசு மறு உண்டா? களங்கம் கறை உண்டா? எதுவும் இல்லையே! உன் படைக்கலம் இவ்வாறு இருக்க, அதியன் படைக்கலங்கள் எப்படிக்கிடக்கின்றன என்று கேள்! பக்கங்கள் சிதைந்துவிட்டன; மாலையோ தோகையோ சூட்டப் படவில்லை; நெய் பூசப் படவும் இல்லை; ஓயாமல் போர்க்களம் போர்க்களம் என்றே சென்று கொல்லன் உலைக்கூடமே தஞ்ச மாகக் கிடக்கின்றன. கொல்லன் உலைக்கூடம் இவ்வளவு பரந்த இடத்தை உடையதா? கட்டுக்காவல் உடையதா? சின்னஞ் சிறு குடில்; பேணிக் காப்பாரற்ற நிலை என்றார். தொண்டைமான் தலை சுற்றியது. ஔவையார், தன்படையைப் புகழ்வதுபோலப் போர்க்களத்திற்குப் போய் அறியாதவை என்று இகழ்ந்தும், அதியமான் கருவிகளை இகழ்வது போலப் போர்க்களத்திலேயே பழக்கப்படுபவை என்று புகழ்ந்தும் கூறியதை அறிந்தான். எனினும் பழைய செருக்கு மாறிவிடவில்லை. வீரர்களை வரிசை வரிசையாக நடக்கவிட்டும், விளையாட விட்டும், வேடிக்கை பார்த்து மகிழ்ந்தவன் அல்லவா! அதனை மறந்து விடுவானா? வீரர் சிலரைக் காட்டினான். போர் இல்லை என்று புலம்பிக் கொண்டு திரியும் இவர்களைப் பார்த்துமா அதியமானுடைய வீரர்களை உயர்வாகக் கூறுகின்றீர்கள்? என்றான். ஔவையார், இவன் வீரர்களைப் பெரிதாக மதித்துள்ளான். உண்மையை உணரச் செய்தலான்றி வழிக்கு வரமாட்டான் என்று எண்ணியவராய்ப் பேசினார் வேந்தே! அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது எதிர்த்து மீண்டும் அரவம் போன்ற வீரர்கள் உளர். அவ்வீரர்களை முன்னடத்திச் செல்லும் வீரன்தான் எத்தகையன்? கலை நலம் வாய்ந்த தச்சன் ஒருவன் உள்ளான், அவன் நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்வான். அத்தச்சன் அருமுயற்சி கொண்டு ஒரு மாத அளவில் ஒரே ஒரு தேர்க்கால் மட்டும் செய்கின்றான். அத் தேர்க்காலின் வலிமை எத்தகையதாக இருக்கும்? அத்தேர்க்கால் போன்றவன் அதிய மான். கூற்றுவனே எதிர்த்தாலும் தோற்றோடச் செய்யும் ஆற்றல் படைத்தவன் அவன் என்பதற்கு ஐயமில்லை. பலபல எண்ணிப் பழுது பட்டுப் போகவேண்டாம் என்றார். ஔவையார் உரை அருளுரை என்பதுடன் உண்மையுரை என்பதையும் தொண்டைமான் அறிந்தான். படை எடுப்பை நிறுத்திக் கொண்டான். நல்வழிப்பட்ட காஞ்சி வேந்தனைப் பல வழிகளாலும் பாராட்டிவிட்டு ஔவையார் தகடூர் வந்தடைந்தார். முதுபெருங் கிழவியான ஔவை பாட்டு மட்டுமா பாடித்திரிந்தாள்? அரிய அமைச்சராலும் ஆற்றமுடியாத செயலை ஆற்றி முடித்த அவர் அரசியல் திறம்தான் என்னே! அவர் போலும் தூதரைக் காண்பதும் எளிதில் கூடுவதோ! அதியமான் காலத்தில் கோவலூரைத் தலை நகரமாகக் கொண்டு முள்ளூர் நாட்டை மலையமான் திருமுடிக்காரி ஆட்சிபுரிந்து வந்தான். அவனது வீரப்புகழ் போய்ப் புகாத இடமில்லை. மூவேந்தருமே அவன் முற்றத்து நின்று தத்தமக்குப் போர்த்துணைப் புரிந்துதவுமாறு அழைக்கும் சிறப்புடன் விளங்கினான். இச்சிறப்பால் அவன் அளவுக்குமிஞ்சிய பெருமிதம் கொண்டு தருக்கியிருந்தான். அதனைக் கேள்வியுற்ற அதியன் சினங்கொண்டான். காரியை அடக்கி ஒடுக்க வேண்டுமென்று கருதினான். படை கொண்டு கோவலூரை முற்றுகை யிட்டான். காரியும், அதியமானும் ஒருவருக்கொருவர் இளைக்காத வீரர்கள் ஆவர். இருவரும் சிங்கமும் சிங்கமும் தாக்குவதுபோல் தாக்கினர். படைகளின் அழிபாடோ சொல்லும் தரத்ததாய் இல்லை. களத்தின் கொடுமைக் காட்சி ஔவையாரைத் துன்புறுத்தியது. போரை ஒழிக்குமாறு முயன்றார். காரியையும், அவன் படை வீரர்களையும் நெருங்கி, வீரர்களே அதியனை எதிர்க்கவோ முனைந்தீர்! அவன் படை என்ன அவ்வளவு எளியதா? உங்களுக்கு நாடு நகர் வேண்டுமா? வீடுவளம் வேண்டுமா? அப்படியானால் இப்பொழுதே ஒன்றைச் செய்யுங்கள்! படைக் கருவிகளை வீசி யெறிந்துவிட்டு வீரன் அதியமானை அடைக்கலம் புகுங்கள்! அது ஒன்றே நீங்கள் பிழைக்க வழி! இன்றேல் சிறிது நேரத்தில் உங்கள் மனைவியர் அனைவரும் தங்கள் மங்கல நாணை இழக்க வேண்டி நேரிடும் ஐயமில்லை என்றார். ஆனால் ஔவையார் சொல்லக் காரியோ அவன் வீரர்களோ கேட்கவில்லை. அதியனும் போரை விடவில்லை கடும் தாக்குதல் புரிந்தான். காரி படையுடன் ஓட்டம் பிடித்தான். வெற்றி முழக்கம் செய்துவிட்டு வீரர்களுடன் தகடூர் நோக்கி விரைந்தான் அதியமான். வெற்றி வேந்தரை வரவேற்க நாடு நகரெல்லாம் தகடூரில் கூடியிருந்தது. வீரர்களுடன் வேந்தன் பெருமிதத்துடன் சென்றான். அப் பொழுது ஒரு மகிழ்ச்சிமிக்க செய்தியைக் கேட்டான். அச் செய்தியைக் கேட்க ஆண்டுக்கணக்காக ஆசைப்பட்டிருந்தான். ஆனால் ஒரு நாள் தானே ஆகும்? அது என்ன செய்தி? அரசே! உமக்கு ஓர் அருமை மைந்தன் பிறந்துள்ளான் என்பதே அச்செய்தி. வேந்தன் கையிலே வேல் இருந்தது; அதனைக் கீழே போடவில்லை. காலிலே கழல் இருந்தது; அதனைக் கழற்ற வில்லை. உடலிலே வியர்வை இருந்தது; அதைத் துடைக்கவில்லை. கழுத்திலே புண் இருந்தது; அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தலையிலே போர்ப்பூ இருந்தது; அதை எடுக்க வில்லை. மைந்தன் பிறந்தான் என்ற மகிழ்ச்சிச் செய்தியால் ஓடினான். வாழ்வை வளப்படுத்த வந்த செல்வத்தைத் தழுவினான். அப்பொழுதும் பகைவர் மேல் கொண்ட சினம் மாறிவிடவில்லை. கண்களிலே இருந்த சிவப்பு நிறம் குறைந்து விடவில்லை. ஆண்டு நின்ற அனைவரும் அரசன் தன் மைந்தன் மீது கொண்ட அன்புப் பெருக்கை உணர்ந்தனர். ஔவையாரும் உணர்ந்தார். புலவர் பெருமாட்டியாம் அவர் தம் திருவாயால் ஒரு பாடல் பாடிச் சிறப்பித்தார். புதல்வன் பொகுட்டெழினி என்னும் பெயருடன் பொலிவோடு வளர்ந்தான். காரி அதியமானுக்குத் தோற்றோடினான் அல்லவா! அவன் ஓய்ந்து விடவில்லை. சேர வேந்தனைச் சேர்த்துக்கொண்டு அதியனை எதிர்க்கத் துணிந்தான். அதியனுக்கு நண்பனான ஓரியை முதலில் ஒழிப்பது என்று உறுதி கொண்டான். ஓரிக்குத் துணையாக அதியமான் வந்தே தீர்வான் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் கொல்லிமலையை முற்றுகை இட்டுத் தாக்கினான். அதியமானும் ஓரிக்கு உதவிபுரிய ஓடோடி வந்தான். சோழ பாண்டியரும் அதியனுடன் வந்தனர். ஆனால் ஓரி களத்தில் இறந்தான் என்ற சொல்லையே அவர்களால் கேட்க முடிந்தது. ஓரியின் மறைவும், காரியின் கொடுஞ் செயலும் வீரன் அதியனை அதிர்ச்சியடையச் செய்தது. உயிர் நண்பனான ஓரியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகத் தோன்றியது உலகமே இருண்டு விட்டதுபோல் ஆயிற்று. போர்க்களத்திலே நிற்கின்றோம் என்பதை மறந்தான். பகைவர் தாக்குதல் முதிர்ச்சி யடைந்தது. ஓரியைக் கொன்ற களிப்பிலே உரத்துடன் தாக்கினார். மழவர் புறங்காட்டினார்; மன்னவனும் பின் தொடர்ந்தான். காரி அவர்களை ஓட விட்டுவிட்டு நின்றானா? வெருட்டிச் சென்றான் தகடூர் வரை. ஓரியை இழந்து நின்ற அதியமானுக்கு உலகம் சுடுகாடாகவே தோன்றியது. என்னே கொடுமை என்று ஏங்கிக் கொண்டு இருந்தான். அவன் ஏக்கத்தின் இடையே காரியின் முற்றுகையை அறியவில்லை; தனக்குவர இருக்கும் இழிவினையும் எண்ணவில்லை; கவலையே உருவமாகி விட்டான். அதியமான் கோழை! அஞ்சியோடி விட்டான்; எதிர்த்துத் தாக்க இயலாதவன் என்று பகைவர் பழித்துப் பேசினர். ஔவையார் அவர் சொல்லைக் கேட்டறிந்தார். அதியமான் கோழை என்ற சொல்லை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விரைந்து அதியனை அணுகினார். வேந்தே! புலி தாக்குவதற்குச் செல்லுங்காலையில் அதனை மான் தடுத்து நிறுத்துமா? கதிரோன் புறப்பட்டு விட்டால் காரிருள் தொலை யாமல் நிற்குமா? நீ போர்க்களம் புகுந்தால் உன்னை எதிர்ப் போரும் உளரோ? வீரப் புலியே! போரில் புகுக! மான வீரம் மிக்க மழவரே! மன்னவனைப் பின் தொடர்க! என்றார். அதியன் போர்க்களத்தில் குதித்தான். மழவர்களும் பழி வாங்கினர். குன்றெனப்பிணங்கள் குவிந்தன. ஆறு எனக் குருதி ஓடியது. போர்க் கொடுமையைக் கண்டு நிலமகள் முகம் சிவந்தது போலக் களம் இரத்தக்கறை படிந்து விட்டது. காரி வெல்வானா? அதியன் வெல்வானா? எவர் வெல்வார் என்று கூற முடியாத நிலை. ஆனால் சற்று நேரத்திற்குள் ஓரியைக் கொன்ற ஊக்கநிலை காரியை உந்தியது; ஓரி மாண்ட துயர்நிலை அதியனைத் தளர்த்தியது. கைவேலைத் தூக்கி விளையாடினான் காரி. மெய்யிலே பட்டுருவியது அதியனை. தைத்து வெளியே செல்லாது நின்றிருந்தால் அது அதியன் கைவேல் ஆகி யிருக்கவும் கூடும்; அதுவே காரியின் மெய்வேல் ஆகியிருக்கவும் கூடும். வீரவேந்தர் இருவரும் ஒருசேர மாய்ந்த பேறும் அடைந் திருக்கக் கூடும். ஆனால்......? அதியன் மானவீரனாய் மண்ணிலே வீழ்ந்தான். அவனுக்கு இறப்பது குறித்து எத்தகைய கவலையும் இல்லை. ஆனால் ஒரே கவலை இல்லாமலும் இல்லை. அது ஔவையாரின் அமுதனைய கவிகளைக் கேட்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதே இவ்வேல் என்ற கவலை தான்! அதியமான் மார்பிலே தைத்துருவியது வேல்! மார்பிலே மட்டுமா தைத்துருவியது! இல்லை. பாணரது பாத்திரத்தைத் தைத்துருவியது; இரவலரது கையைத் தைத்துருவியது; புரவலரது கண்ணைத் துளைத்துருவியது; புலவர்களது நாவைத் தைத்துருவியது. இனிப்பாடுவாரும் இல்லை; பாட ஒன்று தருவாரும் இல்லை என்று கூறி ஆறாத்துயருற்றார் ஔவையார். ஔவையார் எவ்வளவு துயருற்றாலும் அதியமான் பிழைத்து விடுவானா? மாண்டவன் மாண்டவன்தானே! இனி நாட்டை ஆள வேண்டுமல்லவா! அதியமான் மகன் பொகுட்டெழினியையே அரசனாக்கி வைத்து. அவனுக்குப் பெருந்துணையாக இருந்தார் ஔவையார். அதியமானுக்கு அமைச்சராகவும் தூதராகவும் இருந்தவர், அவன் மகனுக்கு அரசத் துணையாக விளங்கினார்! முடிசூடா அரசியாக இருந்த ஔவை புகழ் வாழ்க! 5. வள்ளல் பேகன் அழியாப் புகழ் பெற்ற வள்ளல்கள் நால்வரை முன்னே கண்டோம். அவர்கள். பறம்பு மலைக் கோமான் பாரி; கொல்லிமலைக் கோமான் ஓரி; முள்ளூர் மன்னன் காரி, குதிரைமலைக் கொற்றவன் அதியமான் எழினி என்பார். ஈதலும் இசைபட வாழ்தலுமாக அமைந்த அவ் வள்ளல்கள் வரிசையில் சொல்லப் பட்டார் மேலும் நால்வர் உளர். அவர்கள் வையாவிக் கோப் பெரும் பேகன், ஆய் அண்டிரன், நள்ளி, குமணன் என்பார். இவ்வெண்மரையும் வரிசைப்படுத்திக் கூறினார் சங்கப் பெரும் புலவர் பெருஞ்சித்திரனார். முன் ஏழு பேர்களையும் சிறுபாணாற்றுப் படையும் கூறியது. ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளிமுழை அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன் பேகன் என்பது புறநானூறு (158). வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன் என்பது சிறுபாணாற்றுப் படை. கொடையாளர் எண்மரிலும் பேகனும், பாரியும் குமணனும் தனிச் சிறப்பினராகப் பழம்புலவர்களால் பாராட்டப் பட்டனர். ஏனெனில் இம்மூவரும் கொடுத்த கொடையின் சிறப்பு அத்தகையதாம். மழைமேகம் கண்டுமயில் ஒன்று ஆடியது. அதனைக் கண்ட பேகன் மயில் குளிர் தாங்காமல் ஆடுவதாக எண்ணி னான். இரக்கம் கொண்டான். வாடைக் குளிர்க்குக் காப்பாகப் போர்த்திருந்த போர்வையை மயிலுக்குப் போர்த்தினான்! தான் நடுங்கினாலும் அது நடுங்கக் கூடாது என்று போர்த்தியதால் மயிலுக்குப் போர்வை போர்த்திய மாப்பெருவள்ளலாகப் பாடு புகழ் பெற்றான். பேகனிலும் பெருமை பெற்றவனாகப் புலவர்களுக்குப் பாரி தோன்றினான். அவன் முல்லைக் கொடி பந்தல் இல்லாமல் காற்றில் ஆடுவது கண்டு உருகினான். தான் ஊர்ந்து போன தேரை அதற்குப் பந்தலாக வழங்கிவிட்டு நடந்து போனான். மயில் ஐந்தறிவு உயிரி. முல்லையோ ஓரறிவு உயிரி. ஆதலால் மயிலுக்கு வழங்கிய கொடையிலும், முல்லைக்கு வழங்கிய கொடை பெருமை மிக்கதாயிற்று. புலவர்கள் முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் வழங்கியவர்கள் என வரிசைப் படுத்தினர். பாரியைப் பற்றி முன்னர் அறிந்தோம். பேகனை இவண் அறிவோம். குமணன் நிறைவில் வருவான். பேகன் ஆட்சிபுரிந்த இடம் இப்பொழுது பழனி எனப் படும் பழம்பெரும் மலையும் அதன் பகுதியுமாகும். அதன் பழம் பெயர் பொதினி என்பது. பொதினி என்பதே மக்கள் வழக்கில் பழனியாகிவிட்டது. நம் பழைய வரலாறுகள் பலவற்றுக்கும் கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி வரலாற்றை மறைக்கும் செயலை நெடுங்காலமாக வடமொழி கற்றவர்களும், அவர்கள் வழியைப் பற்றியவர்களும், கோயில் பூசை செய்தவர்களும் செய்து வந்தனர். அதனால் உண்மை பலவகையாலும் மறைக்கப்பட்டது. வரலாறு அழிக்கப் பட்டது. பொருந்தாக் கதைகள் பொதுமக்கள் மனத்தில் படிந்து போனது. அதற்கு ஏற்பக் கதைகளைப் புராணங்களாகப் புலவர்கள் பாடிவிட்டனர். பொதினி, பழனி எனப்பட்டது; அதன்பின் பழநி எனப்பட்டது. பழநீ என இறுதி எழுத்து நீட்டப்பட்டது. சிவபெருமான் கையில் ஒருபழம் இருந்தது; அது மாம்பழம். அதனை மூத்த பிள்ளையாரும், முருகனும் தத்தமக்குக் கேட்ட னர். பெருமான், உலகத்தை முதலாவதாகச் சுற்றி வருபவனுக்கே பழத்தைத் தருவதாகக் கூறினார். முருகன் மயில் மீதில் ஏறி உலகை வலம் வரப் புறப்பட்டார். பிள்ளையார் ஊர்தி பேரெலி (பெருச்சாளி); மயில் போல் விரைந்து செல்லமுடியாதே. அதனால் பிள்ளையார் ஒரு தந்திரம் செய்தார். அம்மையும் அப்பனுமே உலகம் ஆதலால் அவர்களைச் சுற்றினாலே உலகத்தைச் சுற்றியதாகும் என்று, அவர்கள் இருவரையும் சுற்றி வந்து, உலகைச் சுற்றி விட்டதாகச் சொல்லி மாங்கனியைப் பெற்று விட்டார். உலகை உலாவந்த முருகன், பிள்ளையார் சூழ்ச்சியையும் தாய் தந்தை ஓரஞ் சார்ந்து நின்றதையும் வெறுத்துத் துறவு கொண்டு வெளியேறிப் பழனி மலைக்கு வந்து விட்டார். முருகனே பழம் என அடியார்கள் போற்றினார்; பழம் நீ என்றது, பழநி என வழங்குகிறது என்றனர். பொதினி என்பது என்பது பூவில் பொதுளி நிற்கும் தேன் என்றும் பொருள் தருவது. அவ்வளவு மரம் செடி கொடி இயற்கை வளம் வாய்ந்தது. காலம் மாறாது மழை பொழியும் வளம் மிக்கது என்பதன் சான்று அப்பெயர். பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் வையாவிபுரி என்பது. பேகன் வையாவிக் கோமான் பேகன் எனப் பட்டமையாலும், அவன் முன்னோர்களாகிய ஆவியர் அங்கே குடிகொண்டிருந்தமையாலும் அவ்வூர் அப் பெயர் பெற்றது. முருகன் படைவீடு கொண்டமையால் பெரும் புகழுக்கு இருக்கையாய் விளங்குகின்றது. நூல்கள் பலவற்றையும், பல்லாயிரம் பாடல்களையும் அடியார்கள் புலமைச் செல்வர்கள் என்றும் உறைதலையும் கொண்டு விளங்குகிறது. பேகனைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் (141ஆம் பாடல் முதல் 147 ஆம் பாடல் வரையுள்ள) ஏழு பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றைப் பாடியவர்கள் பரணர் (141, 142) கபிலர் (143), பரணர் (144, 145). அரிசில் கிழார் (146), பெருங் குன்றூர் கிழார் (147) என்னும் புலவர்கள் நால்வர் ஆவர். பிற்காலப் புலவர்களும் பேகன் வரலாற்றை அறிந்து பாடி யுள்ளனர். ஆனால் இவ்வைந்துப் புலவர்களும் பேகன் காலத் தில் வாழ்ந்து நேருக்கு நேர் நின்று பாடியவர்கள் ஆவர். பேகன் மயிலுக்குப் போர்வை போர்த்தும் அளவுக்கு அருட் கொடையாளனாக விளங்கினாலும், அவனிடமும் ஒரு குறை இருந்தது. அக் குறை அவன் மனைவியைப் பிரிந்து அயலாள் ஒருத்தியோடு வாழ்ந்ததாகும். பேகன் வாழ்விலா இப்படி? மயிலும் வாடக் கூடாது என்பவனா, தன் மனைவியாம் மயிலை வாடச் செய்தான்? என எண்ணவே தோன்றும்! ஒரு முகப்பட்ட மனைவிக்கு ஒரு முகப்பட்ட கணவன் வாய்க்கும் வாழுநம் என்னும் பெரு மிதத்தைக் குன்றச் செய்வதேயாம்; இக் குறையால், குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாகி விட்டான், பொதினிக் குன்றின் கோமானாகிய பேகன். பேகன் மனைவி கண்ணகி என்பார். இப் பெயரைக் கேட்ட அளவில் தமிழ் கற்றார் நினைவில் எல்லாம் இருப்பவர் சிலப்பதிகாரக் கண்ணகியாரே ஆவர். கோவலன் பிரிய அவர்பட்ட நிலையைச் சுட்டிக் காட்டித் திருத்த வல்ல புலமைச் சான்றோர், அறங்கூறவையோர், நன்னெறிக் காட்டும் நயன்மை நட்பர் வாய்த்திலாமையால் தீரத்துயர்க்கு ஆட்பட்டார்! கபிலர் பரணர் முதலாம் சங்கச் சான்றோர் வாழ்ந்த நற்காலமாக இருந்தமையால், பேகன் துணைவியராம் கண்ணகியார் துயர் அறிந்து, பிரிந்தவர்களைக் கூடச் செய்து புலமையின் பேற்றை நிறுவிக் காட்டினர். பேகனும் புலவர்கள் உறையைப் பொன்னெனப் போற்றி நன்னெறி நின்றான். அழியாப் புகழும் பெற்றான். நம் குறிப்பிட்ட பரணர், கபிலர் முதலாம் புலவர்கள் பொதினிச் சாரலில் நடந்து போகின்றனர். இயற்கையைக் கண்டு இனிமையில் தோய்ந்து மென்மென இயலும் புலவர்கள் செவி யில், புல்லாங்குழலின் ஒலியென ஓர் ஒலி கேட்டது. நால்வரும் நடை தளர்த்தி மேலும் மெல்லெனக் கூர்ந்து, செவியில் அவ்வொலியை ஏற்று நடந்தனர். அவர்கள் மேலும் நடையிடா வகையில் குழல் ஒன்று அழுவதாக இரங்க வைத்தது. தங்கள் நடைச் செலவு வழியை மாற்றி, அவலக் குரல் வந்த ஒதுக்குப் புறத்தை நாடி நடந்தனர். ஒரு பெண்மணி அடக்க முடியாத் துயரில் அழுது கொண்டிருக்கக் கண்டனர். புலவர்கள் உருகினர்; செல்வச் செழுமை மிக்கவராக இவர் இருக்க வேண்டும். இவர் தோற்றம் அத்தகையதாக உள்ளது. ஆற்றுவார், தேற்றுவார் இவர்க்குப் பலர் இருக்கவே செய்வர். ஆயினும்,அவர்கள் அறியும் வகையில் தம் கவலை வெளிப்படக் கூடாது; குடிப் பெருமை குன்றி விடக் கூடாது என்றும் உறுதியால் இங்கே ஒதுங்கி வந்து தனியே இருந்து கண்ணீர் வடிக்கிறார் என எண்ணினார். அம்மா, எம் தலைவன் பேகனுக்கு நீ உறவு ஆவாயோ? என வினவினார். அவள் அடக்க முடியாத் துயரொடு, யாம் அவன் உறவினேம் அல்லேம்; அவன் நல்லூரில் ஒரு நங்கைக்கு உறவாக உள்ளான் என்றனர். புலவர்கள் உருகினர்; நல்லுரை நோக்கி நடையிட்டனர் புலவர்கள் நால்வரும் புலவர்கள் நல்லுரை நெருங்கினர். ஊரை வளைய வேலி இருந்தது. கல் வேலியா, முள்வேலியா இல்லை; முல்லை வேலி! ஊரே கமழ - ஊரை வளைத்துப் போடப்பட்ட முல்லை வேலி! புலவர்கள் எண்ணினர்: தமிழர் கற்பு என்னும் பண்பின் அடையாளம் முல்லையாகக் கொண்டனர்! முல்லைக் கொடியை நட்டு வளர்ப்பதில் பேரின்பம் கொண்டனர்! இங்கோ முல்லை வேலியூரில், பேகன் மாற்றாள் ஒருத்தியின் மையலில் கிடக் கிறான் என எண்ணத் தக்கதாய் இருந்தது ஊர்வேலி! ஊரில் பேகன் உறையும் இடத்தை அடுத்தனர். புலவர் தோழனாகிய பேகன் மனத்து என்ன நினைத்தானோ? புலவர்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை! புலவர்கள் அரண்மனைக்குச் சென்று ஆங்கில்லாமை அறிந்துதான் இங்கு வந்திருக்கக் கூடும் என எண்ணியிருப்பான்! அன்பொடும் பணிவொடும் வரவேற்று அவர்கள் இருக்கச் செய்து முகம் நோக்கினான். கபிலர், பேகனை நோக்கினார். மலைவாணர்கள் மலை மேல் முகில் சூழ்ந்து மழை பொழிவதாக என வேண்டுவர்; மழை அளவுக்கு மேலே பெய்து விடுமானால், மழைபோதும் முகிலே மேலெழுக என வேண்டுவர்; மழை அவர்கள் வேண்டல்படி அகலுமானால் மகிழ்வர்; மலையின் விளைவாம் உணவு களையுண்டு உவகையராய் வாழ்வர்; அத்தகைய வளமிக்க மலை நாட்டு மன்னனே, பகைமேல் சினந்து போரிடுவதும் இல்லை என இரப்பவர்க்கு எல்லையிலாது ஈவதுமுடைய பேகனே, நாங்கள் நேற்று, காட்டுவழியே நடந்து வந்த களைப் பாலும் சுற்றத்தினர்க்கு, ஏற்பட்ட பசியாலும் முரசறைவதுபோல முழங்கிவிழும் அருவியை அடுத்த சிற்றூரைச் சார்ந்து நின்று உன்னையும், உன் புகழையும் பாடினோம்! அப்பொழுது எங்கள் உள்ளத்தை உருக வைக்கும் தோற்றத்தினளாய் கண்ணீர் வழிந் தோட ஒருமகள் வருந்தியிருந்தாள்! குழலின் அழுகையென அழுத அவள் யாவளோ தான்? நீ அறிவாயோ? என வினாவினார். நின்னும் நின்மலையும் பாட, குழல் இனைவதுபோல் அழுதனள் பேக! யார் கொல் அளியள் தானே! பேகன் பிரிந்து வந்த பிழையைச் சுட்டும் நயம்உள்ளதே. இதன் உள்ளிடை என்ன? இடித்துரைப்பது அன்று! இணைந்து வாழ்க என்பதாம்! யார் கொல் அளியள்? சிந்திப்பவன் சிந்தனையைத் தட்டி எழுப்பும் இல்லையா? உன்னையும் உன்மலையையும் பாடிய அளவில் உவகை கொள்ள வேண்டிய அவள் ஓவென அழுதது ஏன்? சிந்திக்காதொதுக்க முடியுமா? தன் களைப்பும் சுற்றத்துப் பசியும் என்ன ஆயின? பரிசையா நாடின! பரிவை அல்லவோ நாடின! பின்னர்க் களைப்பேது? பசியேது? இந்தப் பாட்டுக்கு அமைந்த வரலாற்றுக் குறிப்பு - பழங் குறிப்பு - என்ன? பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி காரண மாக அவனைக் கபிலர் பாடியது என்பது அது. கபிலரைத் தொடுத்துத் தொடர்ந்தார் பரணர்; வன்பரணர் என்பதும் பாடம்; எனினும் கபில பரணர் என்பதற்கு ஏற்பப் பரணர் என்பதே ஏற்கும். பேக, நீ அருளாமல் இங்கே இருப்பது கொடுமை என்றார். என்ன அருளாமை? மனைவி மேல் உயிரன்பு வைக்க வேண்டிய நீ, அவளைத் தவிக்க விடுவது அருளாகுமோ? என்பதாம். எம்சிறிய யாழை எடுத்துச் செவ்வழிப் பண்ணை இசைத்து நின் நாட்டைப் பாடினேம். அவ்வளவில் நீலமலரில் இருந்து முத்துகள் உதிர்வது போலக் கண்ணீர் வடித்துக் கவலையே வடிவாய் இருந்தாள். எம் விருப்பம் மிக்க வேந்தன் பேகனுக்கு விரும்பத்தக்க உறவாட்டியோ என்று கைகூப்பி வணங்கிக் கேட்டேம். அவள் தன் காந்தள் மலர் போலும் கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு யாம் அவன் உறவாட்டியேம் அல்லேம்; கேட்பாயாக எம்மைப் போலும் ஒருத்தியை நாடி அவளொடு வாழ்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன்; அவன் முல்லையே வேலியாகக் கொண்ட நல்லூரில் உள்ளான் என்றாள்! அவளுக்கு அருள் செய்யாமை அறமாமோ? அருளுக என்றார். (144).மேலும் அப்பரணரே தொடர்ந்தார்! மெல்லியல் வாய்ந்த மயில் நடுங்குவதாக எண்ணி, போர்வையைப் போர்த்திய அருளாளனே, வள்ளலே, யானையும், குதிரையும், படையும் பிறவும் கொண்ட பேகனே, எமக்கு எப்படி உண்பேம்; எப்படி உடுப்பேம்; எப்படி உறைவேம் என்னும் வறுமை எதுவும் இல்லை எமக்குப் பாரமாம் பெருஞ் சுற்றமும், கூட்டமும், இல்லை. யாம், எம் சிறிய யாழை மீட்டி நீ விரும்பித் தலையசைக்குமாறு பாடுவதெல்லாம் உன்மனைவிக்கு உடனே அருறைவோனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையாம். யாம்நின்னிடம் வேண்டும் பரிசில் அஃதொன்றுமேயாம்! உன் தேரில் உடனே ஏறி உன் துணைவியின் துயர் களைவாயாக என்றார். நீ அருள் செய்தலே யாம் வேண்டும் பரிசில்; உடனே தேர் ஏறுக என்பது புலவர் நெஞ்சத்தையும், நயத்தகு தூண்டலையும் வெளிப்படுத்தும். (145) அரிசில் கிழார் புலவர் பரணர் உரையைத் தொடர்ந்து, அவ்வாறே செய்வாயாக. உன்னிடம் ஆடை அணி முதலாம் எவற்றையும் யாம் பெற விரும்பவில்லை. வழக்கம் போல் உன்னையும் உன் நாட்டையும் யாம் பாட நீ வழங்கும் பரிசிலாக இப்பொழுது யாங்கள் வேண்டுவது ஒன்றேயாம். அவ்வொன்றா வது, உன் அருளைப் பெறாளாய் அவலமே வடிவாய விளங்கும் உன் இனிய மனைவி தன் கூந்தலில் மணம் கமழுமாறு தண்ணிய நறிய மலர் சூடி மகிழுமாறு உன் குதிரைகளைத் தேரில் பூட்டி உடனே அவள் இருக்கும் இடத்தை அடைவதேயாம் என்றார் (146). நின் அருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டேம் தண்கமழ் கோதைபுனைய, வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே! மனைவியின் துயர் தீர்த்தலே மாண்பரிசில் என்பதைக் கபிலர் பரணர் போலவே வலியுறுத்தினார். ஒருவர்க்கு மூவருமாக உரைத்தவை அவனை வருத்தி உருக்கியது. அந்நிலையில், பெருங்குன்றூர் கிழார் வாளாவிருந்திலர். அவர் தொடர்ந்தார். ஆவியர் பெருமானே, யாம் கல்லும் காடும் அருவியும் ஆறு மெனப் பலமலைப் பகுதிகளைக் கடந்து வந்துநின்னையடைந் தோம். யாம் வரும் வழியில் வழக்கம் போல் வழிநடை தோற்றாமல் இருக்கவும் கற்றகலையின் காதலாலும் எம் சிறிய யாழை இசைத்துப் பாடினேம்; அதனை அப்பொழுது, கரிய வானத்து மழைத் துளியின் ஒலியைத் தனியே இருந்து கேட்டுக் கொண்டு ஒரு பக்கத்தில் நேற்று வருந்திக் கொண்டிருந்தாள் ஒருத்தி; செவ்வரி படர்ந்ததும் நீர் ஒழுகுவதுமாகிய கண்ணை யுடைய அவள், நெய்பூசப்படாத கரிய கூந்தலைக் கழுவப்பட்ட நீலமணிபோல் விளக்கக் கழுவிப் புதுமலர் பொலியச் சூடுமாறு இன்று இங்கிருந்து புறப்படுக. அதுவே யாம் வேண்டும் பரிசில் என்றார் (147). ஆவியர் கோவே, புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன் எம்பரிசில் இவ்வாறு பரிசில் வாழ்க்கையராகிய சான்றோர்கள் அப்பரிசிலே குறியினராய் வாழாமல் பிரிந்த குடும்பத்தைச் சேர்ந்து வாழச் செய்தலே பரிசென வாழ்ந்தமை அவர்கள் மேம்பட்ட சால்புச் சான்றாம். யானையின் அடி, பரவியதே! ஆயினும் அதற்கும் சறுக்கல் ஏற்படலுண்டு! அவ்வாறே அருளானும் வள்ளலுமாம் பேகன் தன் துணையைப் பிரிந்து வேறொருத்தி வயப்பட்டு வாழ்ந்த குறை நீங்கி வாழச் சான்றோர் அறிவுறுத்தினர். சங்கச் சான்றோர் வாழ்வு இத்தகு மாண்பினதாக விளங்கியமையால் அக்காலம் பொற்காலம் எனத் தக்கதாம்! அவலம் தடுக்கும் அறிவர் இல்லாமையால், கோவலன் குற்றமற்றவனாக இருந்தும் கொலையுண்டமை கண்டு, சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல் என்று நான்கு முறை அடுக்கிக் கூறினார்! அவர்க்கு முன்னரே, சான்றோர் நால்வர் ஒன்றாக நின்று, ஒன்றாகவும், நன்றாகவும் உரைத்துக் குடும்ப ஒருமைப்பாட்டை ஆக்கிய அருமையை எண்ணி வாழ்தல் எக்காலச் சான்றோர் கடனுமாம். நால்வரொடும் கூடி நின்ற பரணர் அந்நிகழ்வுக்கு முன்னரே பேகனைக் கண்டு அவன் பெரும் புகழைப் பாடியமையைப் புறப்பாடல்களால் அறிய வாய்க்கின்றது. அப்பாடல்களில் அவன் மாசில்லா மணியாகவே அவன் காணப்படுகிறான். (புறம் : 141, 142). முதற்பாடல் பரிசுபெற்ற பாணன் ஒருவன், பரிசு பெற விரும்பும் பாணன் ஒருவனைப் பேகன்பால் விடுப்பதாக அமைந்த பாணாற்றுப் படை அல்லது புலவராற்றுப் படைப் பாடல். கலப்பில்லாத பொன்னரி மலை, பொற்றாமரைப்பூ ஆகியவை விளங்க இருப்பவர்களே, குதிரையை அவிழ்த்து விட்டு விட்டுச் சொந்த ஊரில் வளமாக இருப்பவர்கள் போல் இருப்பவர்களே நீங்கள் யார்? என்கிறீர்கள். யாழ்வல்ல பாணர்களே, வறுமையான சுற்றதையும், கடிய பசியையும் உடையவர்களே, நாங்கள் முன்னே உங்களினும் வறியவராகவும் வாட்டமிக்கவராகவுமே இருந்தோம்; இப் பொழுது இவ்வாய்ப்பைப் பெற்றுள்ளோம்! உடுத்துதலோ, போர்த்துதலோ இல்லாதது என அறிந்தும் மயிலுக்குத் தன் போர்வையை அளித்த எம் தலைவன், மதமிக்க யானையையும் எழுச்சி மிக்க குதிரையையுமுடைய பேகன், மறுமையை நோக்காமல் பிறர் வறுமையை நோக்கி ஈயும் வள்ளல் கொடையால் இந்நிலை எய்தினோம்; நீங்களும் அவன் பால் செல்வீராக என்னும் ஆற்றுப் படைப் பாடலைப் பாடினார். மேலும், நீரற்ற குளத்தை நிறையச் செய்யும்; விளை நிலத்திலே பெய்து விளைவைப் பெருக்கும். இவ்விடத்துப் பெய்து பயன் என்ன என்று எண்ணாமல் உவர் நிலத்திலேயும் பொழியும் மழை. அது போல் வள்ளல் பேகனும் இவர் அவர் என்னாமல் எவர்க்கும் கொடுப்பவன்; அவன் கொடைத் தன்மையில் இவ்வாறு கொடைத் தன்மையில் மடவனாக இருப்பானே அல்லாமல், படைக் களத்துப் புகுந்து போரிடுங் கால் மடவனாக இருக்கமாட்டான்! என்றார். சங்கச் சான்றோருள் தலைப்பட்ட கபிலர், பரணர், அரிசில் கிழார், பாடுபுகழ் பெற்ற பேகன் அழியாப் புகழாளனாய் என்றும் விளங்குகிறான்! ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - திருக்குறள் 6. வள்ளல் ஆய் அண்டிரன் வேள் ஆய் என்பவனும் இவனே. வேள் என்பது முடி வேந்தர்களால் கொடுக்கப்பட்ட பட்டங்களுள் ஒன்று அவர்கள் வேளிர் எனவும் வழங்கப்படுவர். வேள் என்பதற்கு நிலம் என்பதும் ஒரு பொருள். நிலக் கிழாராக இருந்து குடிநலம் காத்த பெருமையர் இவர். பாரிவேள் முதலியோர் இத்தகையரே. ஆளும் பேறும், வேந்தரொடு கொண்டு கொடுக்கும் பேறும், போர்த் துணையாம் பேறும் வாய்ந்த வளமையும் வண்மையும் அமைந்த குடியினர் இவர். ஆய் என்பது தாய் என்னும் பொருளும் தரும். தம் + ஆய் = தாய்; தம் + அந்தை = தந்தை; தம் + அக்கை = தமக்கை; தம் + ஐயன் = தமையன் என்பவற்றை எண்ணினால் மக்கட்குத் தாயன்னவனாகத் திகழ்ந்தவன் என்னும் சிறப்பை அறியலாம். அண் திரன் என்பது மேம்பட்ட - செறிந்த - வலிமையாளன் என்பதாம். பொதிய மலை என இக்காலம் வழங்கும் பொதியில் பகுதியை ஆட்சி செய்தவன் இவ் ஆய். அப்பகுதியில் இந் நாளிலும் ஆய்(க்)குடி என்னும் ஓர் ஊர் இருந்து வள்ளல் ஆயை நினைவூட்டுகின்றது. ஆய் வள்ளலைப் பாடிய சங்கச் சான்றோர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ; துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார் என்பார். இவருள் மோசியார் பாடிய பாடல் சிறப்பால் ஆய், மோசி பாடிய ஆயும் என்று சங்கச் சான்றோராலேயே பாடு புகழும் பெற்றான். மோசியார் ஆயைப் பற்றிப் பதினொரு பாடல்கள் பாடி யுள்ளார் (புறம் : 127 - 135 ; 374, 375) உறையூரைச் சார்ந்த ஏணிச் சேரியினர் மோசியார்; இவர் முடமோசி என வழங்கப் படுதலால் காலோ கையோ முடம் பட்டவராக இருந்திருக்கலாம். முடம்பட்ட திருமாறன் அல்லன்; முட்டம் என்றும் ஊரினன் ஆதலால் அவன் முட்டத் திருமாறன் என்று விளக்கம் பெற்றது போல் முட்டத்து மோசியார் தாமோ எனக் கருதின் ஊர்ப் பெயர் உறையூர் ஏணிச்சேரி என்று இருந்தலால் அவ்வாறு கொள்ள இயல வில்லை. கூன் பாண்டியன், அந்தகக் கவி என்பார் போலக் கொள்ளலாம். உறுப்புக் குறை குறையன்று என்பது வள்ளுவம். அது, பொறிஇன்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்பது. பொறியாவது உறுப்பு. இன்மையாவது குறைபாடு உடைமை. உறுப்புக்குறை பழியில்லை; உறுப்புகள் செவ்வையாய் இருந்தும் செயல்பாடாமையே பழி என்பது இதன் பொருளாம். ஆய்வேளின் அரண்மனை, மற்றைப் பெருவேந்தர்களின் அரண்மனை போலப் பொலிவுடையதாக இல்லை என்று சிலர் பேசிக் கொண்டனர். அவர்கள் பேச்சைக் கேட்ட மோசிகீரனார், களாப்பழம் போன்ற கருநிறத் தண்டினையுடைய சிறிய யாழைக் கொண்டு பாடுதற்கு இனிய பாடல்களைப் பாடும் பாணர் யானைகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு போயினர். அதனால் யானைக் கூடம் வெறுமையுற்றது. அவ்விடத்தே காட்டு மயில்கள் தம் கூட்டத்தொடு வந்து தங்கின. பொன்னும் பொருளும் பரிசிலாப் பலரும் பெற்றுக் கொண்டு போயாமை யால், மகளிர் தம்மங்கல அணியை அன்றி வேறு அணிகள் இல்லாமல் உள்ளனர். இவ்வாறு ஆய் வள்ளல் அரண்மனை பொலிவு குறைந்ததென எண்ணுகின்றனர். ஆனால், சுவைமிக்க உணவுகளைப் பிறர்க்குத் தருதல் இல்லாமல் தாமேயுண்டு தம் வயிற்றையே நிரப்பிப் பாடுபுகழ் அற்றோராய் இருக்கும் அரசர் அரண்மனைப் பொலிவு, ஆய் அரண்மனைப் பொலிவுக்கு ஒப்பாக மாட்டாது என்றார் (127) கொடுத்து மகிழும் பொலிவுக்குக், கொடார் வளம் பொலிவாக மாட்டாது புகழும் பெறாது என்று மோசியார் எண்ணியது புலப்படும். ஆய்வள்ளலின் கொடை வளம் கூறிய மோசியார், அவன் படை வளம் பற்றியும் கூறினார். ஆய்வள்ளலைத் தேடி வந்த இரவலர்கள் தாம் கொண்டு வந்த முழவு என்னும் பறையைப் பொதியில் மன்றத்துள்ள பலாமரத்தின் பரிய கிளையில் தொங்க விட்டுள்ளனர். அம் முழவை மந்தி தட்டுதலால் ஒலிமிக் கெழுந்தது. அதனைக் கேட்ட அன்னச் சேவல் அதற்கு மாறாக ஒலிக்கும். இத்தகைய ஆய்வேளின் பொதியிலை, ஆடுமகள் குறுகின் அல்லது பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே என்றார். ஆடியும் பாடியும் பரிசு பெற வருவார்க்கு எளியனும் இனியனுமாகிய ஆய், பகை கொண்டு வருவார்க்கு எளியனும் இனியனுமாக இருக்கமாட்டான். அத்தகையர் நெருங்குவார் அல்லர் என்றார் (128). ஆய்வேளின் மலையகத்து யானைகளைப் பற்றி மோசி கீரனார் எண்ணினார். பெருவியப்புற்றார்! விண்ணுக்கு ஏறி யுயர்ந்தது, அவர் எண்ணமும் பார்வையும். குட்டையான இறப்பையுடைய குடிசையில் குறவர், வளைந்த மூங்கில் குழாயில் வைத்துப் புளித்த மதுவைப் பருகி வேங்கை மரம் நிற்கும் முற்றத்தில் குரவைக் கூத்து ஆடுவர். இனிய சுளையையுடைய பலாமரம் எங்கும் இருக்கும். மலையத் தலைவனாம் ஆய் போர் வல்லான். அரும் பெரும் கொடையாளன்; அவனைப் பரிசில் வேண்டி வந்தவர் பெற்ற யானைகளை எண்ணிக் கணக்கிடற்கு இயலாது. முகில் மூடாமல் வானத்தில் ஓர் இடமும் கருமை இல்லாமல் முழுமையும் வெள்ளி முளைப்பின் அவ் வெள்ளி மீன் தொகைக்கு இணையாம் என்றார் (129). ஆயின் யானைக் கொடையை வியந்த மோசியார், அவனிடமே வினாவினார். அழகிய அணிகலம் பூண்ட ஆய்வேளே, உன் நாட்டில் உள்ள இளைய பெண் யானைகள் ஒரு கருவில் ஒன்றையன்றிப் பத்துக் கன்றுகளை ஈனுமோ? உன்னையும் உன்மலையையும் பாடி வருபவர்க்கு நீ இனிது மகிழ்ந்து கொடுத்த யானைகளின் எண்ணிக்கைதான் எவ்வளவு? நீ மேல் கடல் பகுதியில் கொங்கு வேந்தரோடு போரிட அவர்கள் உனக்கு ஈடு தர மாட்டாமல் தோற்றுப் போட்டுவிட்டுச் சென்ற வேல்களினும் பலவாக இருக்கும் போலும் யானைகள் என்றார். ஆய்வள்ளல் கொங்கு வேந்தரை வென்ற வரலாற்றை மோசியார் இப்பாடலில் பதிவு செய்துள்ளார்; இத்தகையவே நம் பழவரலாற்று ஆவணம், செப்பேடு,கல்வெட்டு அன்னவாம் (130)! ஆய் நாட்டின் யானைவளம் கண்ட புலவர் மோசியார் மேலும் மேலும் வியப்புற்றார். முகில் கூட்டம் தங்கும் உயர்ந்த பொதியில் மலைத் தலைவனும் சுரபுன்னைப் பூக் கண்ணி அணிந்தவனும் தப்பாத வாளினையுடையவனும் ஆகிய ஆய் அண்டிரனின் மலையைப் பாடினவோ, யானைகளை மிக வுடைய இவ்வழகிய காடு என்றார் (131). ஆயையும் ஆயின்மலையையும் பாடிப் பரிசில் பெறுவது போல, காடே, நீ ஆயின் மலையைப் பாடியதால் இவ் யானைப் பெருக்கைப் பெற்றாயோ எனப், பாடாதது பாடுவதாய் வியந்து கூறும் மோசியார், ஆய், சுரபுன்னை மலர் சூடுபவன் என்று அவன் அடையாளப் பூவைக் காட்டினார் (131). ஆய்வள்ளலின் அரிய பண்பு நலங்களைக் காணக் காண மோசியார்க்கு அளவிலா அன்பு உண்டாயிற்று. பண்புடையவர்கள் இருப்பதால்தான உலகம் அழியாமல் வாழும் பேறு பெறுகிறது. அத்தகு பண்பாளர்களில் மேம்பட்டான் ஆய். அவன் வாழும் பேற்றால் ஆய்குடி பனிமால் இமயப் புகழொடு ஒப்ப விளங்குகிறது என எண்ணினார். தாம் நெடிய நாள்கள் பலப்பலரை வள்ளல்களென எண்ணிச் சென்றதையும் அவர்களைப் பாடியதையும் அவர்களைப் பற்றிக் கேட்டதையும் நினைந்து அக்காலமெல்லாம் பாழான காலம் என வருந்தினார். அதனை ஒரு பாடலாக வடித்தார் : முன் உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே; ஆழ்க என் உள்ளம்; போழ்க என் நாவே; பாழூர்க் கிணற்றில் தூர்க என் செவியே; எனத் தம் கடந்த காலக் கழிவை நினைத்து ஏங்கினார். முன்னே நினைக்கத் தக்கவனைப் பின்னே நினைத்தேனே! அக்குற்றத்தால் என் உள்ளம் சூழ்ந்து அழிந்து போவதாக! எவரெவரையோ பாடிய என்நா துண்டிக்கப் படுவதாக! பாழ்பட்ட ஊரின் கிணறு போல என் செவி மேடிட்டுப் போவதாக என்ற அவர், நறும்புல் மேய்ந்த கவரி மான் சுனை நீரைப் பருகித் தண்ணிய நிழலில் படுக்கும் வளமையதாம் வட திசை வான்தோய் இமயரும், இத்தென் திசை ஆய் குடியும் இல்லை யானால் இப்பரந்த உலகியல் கெட்டொழியும் என்று பாடினார் (132). நல்லோர் உறையும் நிலம் அந் நல்லோரால் பாடு புகழ் பெறும் என்னும் ஔவையார் உரையை நினைவூட்டுகிறது இவ்வுறையூர் மோசியார் பாட்டு. ஆடல் மகள் ஒருத்தியை வழியிலே நடந்து வர மோசியார் காண்கிறார். அவளை ஆய் வேள் பால் செல்லுமாறு வழிப் படுத்த நினைக்கிறார். அவள் அதற்குமுன் ஆய் வேள் பற்றிக் கேள்விப்பட்டதை அன்றிக் கண்டாள் அல்லள் என்பதை எண்ணுகிறார். அதனால், மெல்லியல் விறலி, நீ! நல்லிசை செவியில் கேட்பின் அல்லது காண்பு அறி யலையே; காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி உரைக் கலவ மஞ்ஞையில் காண்வர இயலி மாரி அன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே என்றார். மணமிக்க நின் கூந்தல் மலையில் விசிறும் காற்றால் அசைபடுதல் அல்லாமல் வேறு எவ்வசைவும் உனக்கு ஏற்படாது. தோகை விரித்தாடும் மயில் போல மழையன்ன கொடையாளன் ஆயைக் காண்பதற்காகச் செல்வாயாக என்று அவ்விறலி எத்துயரும் இல்லாமல் தன்னந் தனியே செல்லத்தக்க செங் கோன்மையுடையது ஆய் மலை நாடு என்று குறிப்பிடுகிறார். விறலிக்கு ஆறுதல் மட்டுமா இது! ஆய் நாட்டு மாந்தர் மாண்புக்கும் ஆட்சிக்கும் சான்றும் வழங்குகிறார். ஆயின் கொடை நலத்தை எண்ணிய மோசியார், உலகத்துக் கொடை யாளருள் பலரும் இப்பொழுது அறம் செய்தால் மறுமைக்குப் பயனாம் என்று எண்ணியே செய்கின்றனர். ஆனால் ஆய் மறுமைப் பயன் கருதி இம்மையில் அறம் செய்பவன் அல்லன். அப்படிச் செய்து மதிப்புப் பெறுவார் கொண்டு கொடுக்கும் பண்ட மாற்று வணிகர் போன்றவர் ஆவர். ஆயோ, குணங்களால் நிறைந்த சான்றோர் முன்னே நடந்து காட்டிய வழி என்று கொடுக்கும் கொடையாளனாம் (134). இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய் அலன்; பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே மோசியார் புலமையிலும் இனிய அன்பு நண்பிலும் கட்டுண்ட ஆய்வேன், ஒருபோது மற்றை விறலியர் கூத்தர் பாணர் புலவர் ஆகியோருக்குக் கொடை வழங்கியது போல் கொடுக்க விழைகின்றான். அவன் குறிப்பை அறிந்த புலவர் ஒரு நெடும் பாடல் பாடினார். அப்பாட்டில், உன்னைக் காண வேண்டும் என்றும் விருப்பம் ஒன்றை அன்றி வேறு விருப்புடை யேன் அல்லேன் என்றார் (135) புலி உலாவும் முடி உயர்ந்த நெடிய மலையின் சிறு வழியில் ஏறுதலால் வருந்தி மெல்லென நடக்கும் விறலி என் பின்னவள் ஆக, பொன்னுருக்குப் போன்ற நரம்பினையுடைய சிறிய யாழை ஒரு பக்கம் அணைத்துக் கொண்டு வந்தாள். உன் புகழை நினைத்துக் கொண்டே என் தந்தை போன்றவளே, உன்னைக் காண வந்தேன். பரிசிலரைக் கண்டு என்றும் கன்றும் களிறும் வழங்கும் வள்ளலே, வேள் ஆயே, யாம் உன்னிடத்து வேண்டுவது யானையும் அன்று; குதிரையும் அன்று; தேரும் பிறவும் அன்று; பாணரும், புலவரும், கூத்தரும் தம்முடைய பொருள் என்று எடுக்க நினைவராயின் அதனை எம்முடையதென்று கொள்ளுதல் இல்லாத சுற்றத்தொடு கூடி நீ நெடிது வாழ்வாயாக. உன்னைக் காண வேண்டிய அளவே எம் விருப்பமாம் என்றார். ஆய் போலவே அவன் சுற்றத்தாரும் கொடைத் தன்மை யும் விரிந்த நோக்கும் உடையவர் என்பதும், ஆய் சுற்றத்தார் சுற்றப்பட வாழ்பவன் என்பதையும் பாராட்டுதல், என்றும் எண்ணிப் போற்றத் தக்கதாம். மோசியார் ஆயின் கொடை ஒளியை எண்ணுகிறார்! கதிரோன் விண்ணில் செல்லும் நடை ஒளியைக் காண்கிறார். அதனை நோக்கிப் பாடுகிறார். விடிபொழுதில் ஊர் மன்றத்தில் நின்று என் தடாரிப் பறையை இசைத்துப் பாடினேன்; புலிப்பல் தாலியை அணிந்த புதல்வர்களைப் பெற்ற தாய்மார்களின் கணவன்மார், முளவு மான் தசையையும், சந்தனக் கட்டையையும், யானைத் தந்தத்தையும் புலித் தோலில் குவித்து வழங்கும் கொடையராய் விளங்கினர்; அவர்கள் தலைவனாகிய ஆயைப் போலும் கொடையை உடையாயோ நீ என்று பாடுகிறார் (374). பெரிதாகச் சொன்னாலும் சிறிதும் உணராத பெருமை யற்ற வளமான மன்னரை மாண்புலவர் பாடார் என்பதை மோசியார் மற்றொரு பாடலில் கூறுகிறார் (375) பாடுதற்குத் தக்கோராய் எவரும் இல்லாமையால் மழைநீர் கடலை நோக்கி ஓடுவது போல யான் உன்னை நோக்கி வந்தேன்; புலவர்களுக்குப் புகலிடமாகிய நீ நிலைபெற்று வாழ்வாயாக. நீ இல்லாமல் வெறுமையாகும் உலகில் புலவர்கள் இல்லாமல் போவாராக என்றும் கூறுகிறார். வள்ளல் ஆய்வேளைப் பொதியில் சென்று காண்கிறார் துறையூர் ஓடை கிழார். தமக்குள்ள துயர்ப்பாடுகளை வரிசையாய் அடுக்கிக் கூறுகிறார். கிழிந்த தையல் பலவுடைய உடையின் தையல்வாய் தொறும் பற்றிக் கிடக்கும் பேனின் பகையைச் சொல்வேனா?) ஊணின்றி ஒடுங்கி கண்ணீர் கசிய நிற்கும் சுற்றத்தார் பசிப் பகையைச் சொல்வேனா? வறுமையால் வாடும் துயர் நீக்கக் கிடைத்த பொருளைக் கொண்டு செல்லும் வழியில் குரங்கு போல் தட்டிப் பறித்துக் கொள்ளும் கள்வர் பகையைச் சொல்வேனா? இப்பகைகளை யெல்லாம் அறியக் கூடியவன் ஆய் என்று அறிந்து வெப்பமிக்க காட்டுவழியில் நடந்து வந்த நச்சுதலை யுடையேம்யாம். எம்மைப் போன்றவர்க்குத் தரும் கொடையே பிறர்க்குத் தரும் கொடை. எம்மைப் போன்றவர் அல்லாத பிறர்க்குத் தரும் கொடை தமக்குத் தாமே தந்து கொள்வதாம்! நீ உனக்குத் தக்கது ஆய்ந்து செய்க! எம் துறை யூரின் துறையில் கிடக்கும் மணலினும் நெடிது வாழ்வாயாக என்று வாழ்த்தி நீதந்த வளத்தை யாம் உண்பேம் என்றார். எமக் கீவோர் பிறர்க்கீவோர் பிறர்க்கீவோர் தமக்கீப என்பதும், நினக் கொத்தது நீ நாடி நல்கினை விடுமதி என்பதும் வறுமை ஓவியமும் செம்மை ஓவியமுமாம் (136) வள்ளல் ஆய் மறைந்தபின்னரும் மோசியார் வாழ்ந் துள்ளார். இரங்கலும் பாடி ஏங்கியுள்ளார். வலிய தேரை இரவலர்க்கு வழங்கிய ஆய் வருகின்றான் என்று வச்சிரத் தடக்கை வளையுடைய இந்திரன் அரண்மனையில் முரசம் முழங்குவத வானில் ஓசைப் படுவதாயிற்று என்கிறார் (241) ஆய் வேளைக் காணவந்த புலவருள் ஒருவர் குட்டுவன் கீரனார். அவர் ஆயைக் காண வாயராய் இறப்புச் செய்தியையே கேட்டு இரங்கினார். அவர் இரங்கல் ஒரு பாட்டாயது: குதிரையும், யானையும், தேரும், ஊரும் எல்லாம் வழங்கு கொடையாளன் ஆய் அண்டிரன் மனைவியரொடு விண்ணுல கடைந்தான். சுட்டுக்குவி என்று கூகை கூவ ஒள்ளெரி நைப்ப உடல் மாய்ந்தது. புலவர் புரவலரைக் காணாது வாடிய பசிய ராகிப் பிறர் நாடு படு செலவினர் ஆயினர் என்பது அப் பாடற் பொருளாம். ஆயொடு அவன் மனைவியரும் மாய்ந்தார் என்பது அந்நாள்அரசர் வழக்கு என்பதைப் புலப்படுத்துகிறது (240). ஆய் வேள் பிறவாப் பெரியவாம் இறைவன் மேல் பற்றாள னாக இருந்தான் என்பது நாகம் நல்கிய நீல ஆடை ஒன்றனை அவனுக்கு வழங்கினான் என்னும் சிறுபாணாற்றுப்படைக் குறிப்பால் அறியப்படும். ஆய்போலும் வள்ளல் எனினும், முடியுடை மன்னர் எனினும் அவர்களை அந்நாளில் பாடிய புலவர்கள் இல்லாக் கால், இக்காலம் அவர்களை அறிதற்கு இயலுமோ? ஆய் பெயரையும், அவன் மலையத்தையும் அவன் ஆய் குடியையும் அவற்றின் பழமையையும் பாடிய புலவன் பாடல்கள் தாமே அழியாமல் இன்றும் அறியச் செய்கின்றன! வரலாற்றைப் போற்றிக் கொள்ளாமல் விட்ட தமிழ் உலகத்தில் வாய்த்த தொல் பழ வரலாற்றுப் பெட்டகமாக இருப்பவை புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் முதலாம் இலக்கியங்களும் பொருளியல் வாழ்வுப் பொலிவாக விளங்கும் தொல்காப்பியமாம் இலக்கணமுமாம் ஆகியவை யாம். ஆதலால் அவற்றை ஆழ்ந்து கற்று ஆய்தல் வழிவழிமக்கள் கடமையாம்! 7. வள்ளல் நள்ளி வள்ளல்கள் வரிசையில் ஏழாமவனாகச் சொல்லப்படு பவன் நள்ளி என்பான். அவன் கண்டீரக்கோப் பெருநள்ளி எனப்படுவான். இவன் மலை தோட்டி என்பது. நள்ளி என்பதோர் ஊர் தென்தமிழ் நாட்டில் உள்ளது. தொடர் வண்டி நிலையமும் உடையது. அப் பகுதி மலையும் காடும் கண்டீரக் கோப் பெருநள்ளி ஆட்சி புரிந்த பகுதியாகலாம். ஆர்வமற் றுள்ளி உலைபு நனி தீரத் தள்ளா தீயும் தகைசால் வண்மைக் கொள்ளார் ஓட்டிய நள்ளி என்று, புலவர் பெருஞ்சித்திரனாரால் பாராட்டப்படுகிறான் (புறம். 158) நட்டோர் உவப்ப நடைப்பரி காரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளி என்று சிறுபாணாற்றுப்படையில் புகழப்படுகிறான். இப் புகழாளனைப் பாடிய புலவர்கள் வன்பரணரும், பெருந்தலைச் சாத்தனாரும் ஆவர் (புறம்: 148-151). நள்ளியின் தோட்டி மலை அருவி வளமிக்கது. ஆதலால் மழைவளம் மிக்கது என்பது புலப்படும். நள்ளி அயரா முயற்சி யாளன். அவன் முயற்சியால் வாய்த்த வளங்களையெல்லாம் நாள் தொறும் வாரி வாரி வழங்கினான். நல்ல அணிகலங்களும் யானையும் வழங்கினான். அதனால் புலவர்கள் பெருமை யில்லாத வேந்தர்களைத் தேடிச் சென்று, அவர்கள் செய்யாத வற்றையெல்லாம் செய்ததாகவும், அவர்களுக்கு இல்லாத நற்குணங்களையெல்லாம் இருப்பதாகவும் பொய்யாகப் புனைந்து பாடுதலை விட்டனர். ஆதலால் புலவர் வன்பரணர் புலவர்கள் சார்பாக, பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல் எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே என்கிறார் (148) கொடையாளர் எனினும் மதியாது கொடுப்பாரை மதி யாது புறந்தள்ளி வந்தவர்களும், அவர்கள் நாணப் பிறரிடம் பரிசு பெற்று வந்த யானையை அவர்களுக்கு வழங்குவதாகக் கூறி விட்டுச் சென்றமையும் சங்கச் சான்றோர் வரலாற்று வழி அறியப் படுவனவாம். சிலர் செய்த சிறுசெயலால் அவர்கள் ஆள் நிலத்தைப் பாடாமையும், அவர்களைக் கண்டாலும் புறக்கணித்து ஒதுக்க லும் அக்கால வழக்காக இருந்தமை இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரலாற்றாறே அறிய வருகின்றதாம். அதனை மேலே காண்போம். பாணர்கள் விடியலில் தம் யாழில் மருதப் பண்பாடுவர். மாலைப் பொழுதில் செவ்வழிப் பண்பாடுவர். நள்ளி கொடுத்த கொடை வளச் செழிப்பாலும், பெருமிதத்தாலும் கற்ற கலையை மறந்தவராய்ப் பாணர் விடியலில் செவ்வழிப் பண்பாடினர்; மாலையில் மருதப் பண்பாடினர்; இசை வல்லவனாம் நள்ளி வன்பரணரிடம் இப்பாணர் காலைப் பொழுதுப் பண்ணை மாலைப் பொழுதிலும், மாலைப் பொழுதுப் பண்ணைக் காலை யிலும் பாடிய முறைமாற்றம் என்ன என்றான். அதற்கு விடையாக வன்பரணர் நீ வழங்கிய கொடை வளமே அவர்களை நிலை மறந்து மாறிப் பாட வைத்ததாம் என்பதை, நள்ளி வாழியோ! நள்ளி, நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி வரஎமர் மறந்தனர்; அது நீ புரவுக்கடன் பூண்ட வண்மை யானே என்றொரு பாடலாகப் பாடினார் (149). புலவர் வன்பரணர் ஒரு காட்டுவழியில் தம் கூட்டத்தொடு வந்தார். நெடிய செலவு; கடியபசி; அயர்பு மிகுதி ; ஆதலால் மேல் நடக்க இயலாதவராக ஒரு பலாமரத்தடியில் சோர்ந்து அமர்ந்திருந்தார். அப்பொழுது செல்வப் பொலிவும் அரசத் தோற்றமும் உடையவனாய் வில் வேட்டுவனாக ஒருவன் அவர் முன் தோன்றினான். அயர்ந்து அமர்ந்திருந்த அவரை அவன் தோற்றப் பொலிவு எழுந்திருக்குமாறு ஏவியது; அவரும் எழமுயன்றார். ஆனால் அவ்வேட்டுவன் கையமர்த்தி எழாமல் இருக்கச் செய்தான். அவ்வேட்டுவானொடு வந்த கூட்டத்தார் வேறிடத்து இருந்தனர். அவர்கள் வருவதற்கு முன்னர்த் தானே காட்டுள் சென்று விரைந்து, நெய்யிழுது போன்ற ஊனைத், தானே தீமூட்டிச் சுட்டு உம் சுற்றத்தொடும் உண்க என்று வழங்கினான். யாம் எம் சுற்றத்தொடு தின்று பசியாறினோம். அடுத்தே மலைச் சாரலில் ஒழுகிய அருவியின் தண்ணிய நீரைப் பருகிக் களைப்பு நீங்கினோம். யாங்கள் கேளாமலே வந்து கிளை போன்ற உரிமையுடன் ஏவலர்களையும் எதிர்பாராமல் தானே உதவிய அப் பெருந் தகையாளன் தன்மையை வியந்து விடை பெற எண்ணிய போதில், அவன் தன் மார்பிலும், கையிலும் பூண்ட உயர்ந்த அணிகலங்களைக் கழற்றி வழங்கினான். அவன் நாடு யாதோ எனக் கேட்க நாட்டைச் சொன்னான் அல்லன். நீவிர் யாரோ என வினாவப் பெயரையும் சொன்னான் அல்லன். யாம் வியப்பின்மேல் வியப்புற்று ஊரும், பேரும் உரையாமல் வழங்கிய அவ்வள்ளல் யாவனோ என வழியே கண்டோரைக் கேட்டு அவன் தோட்டி என்னும் மலைத் தலைவன் என்றும், நள்ளி என்பது அவன் பெயர் என்றும் அறிந்தோம் என்று பாடினார் புலவர் வன்பரணர். எந்நா டோஎன நாடும் சொல்லான் யாரீரோ எனப் பேரும் சொல்லான் பிறர்பிறர்கூறவழிக்கேட்டிசினே... நளிமலை நாடன் நள்ளியவன் எனவே புலவர் வன்பரணர்க்கு நள்ளி தந்த ஒரு வேளை உணவைவியந்Jஅவ®தந்jபாட்Lஇன்று«அவர்கŸகாட்சியை¡கண்மு‹காட்oமகிழ்விக்கின்றJஅல்லவோ! இவருள் எவர் கொடை உயர் கொடை! புலவர் பாடும் புகழே புகழ் என்று வாழ்ந்த வாழ்வுக் கொடை தானேஇவ்வாழ்த்துக்கொடை(150).f©Ou¡ nகாப்bபருeள்ளியின்cடன்ãறந்தான்ïளங்fண்டீரக்கோvன்பான்.mtD« இளவிச்சிக்கோ என்பானும் ஓரிடத்து ஒருங்கிருந்தனர். அவ்விடத்திற்குப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் சான்றோர் வந்தார். தம் அன்பின் பெருக்கைக் காட்டும் வகையால் இளங் கண்டீரக் கோவை அவர் தழுவிக் கொண்டார். ஆனால் அவ னொடும் இருந்த இளவிச்சிக் கோவைத் தழுவினார் அல்லர். விச்சிக்கோ என்பானும் ஒரு வேந்தன். அவன்உடன் பிறந்தானே இளவிச்சிக்கோ. இவ்வாறாகவும் ஓர் இளவரசனைத் தழுவி, மற்றோர் இளவரசனைத் தழுவாமைக்குக் காரணம் என்ன? அவ்வாறு அவர் நடந்து கொண்டதை அறிய விரும்பினான் இளவிச்சிக்கோ. அதனால், என்னை என் செயத் தழுவீர் ஆயினீர் என்று வினாவினான். இக்கண்டீரக் கோவை நான் தழுவியதற்குக் காரணம் உண்டு. தொன்று தொட்டே புலமைச் செல்வர்கள் தம்மை நாடி வருவராயின், அரசர் மலைமேல் சென்றிருப்பாராயின் அவர் வந்து வழங்கும் வரை காத்திராமல் அரசப் பெண்டிரே தாம் வழங்கும் தகுதியில் பொருள் வழங்கும் தகைமையினர் ஆதலின் கண்டீரக் கோவைத் தழுவினேன். நீயும் தழுவுதற்குத் தக்கவன் தான் எனினும், பெண்கொலை புரிந்த நன்னன் வழி வந்தவனாக உள்ளனை. பாடிவருவார்க்கு அடைத்த கதவினையுடைய உன் நாட்டைப் பாடுதலைப் புலமையாளர் தவிர்த்தனர். ஆதலால் உன்னைத் தழுவினேன் அல்லேன் என்றார். கொடுங்கோன்மையினரைப் புலமைச் சான்றோர் கொண்டாடார் என்பதன் கல்வெட்டன்ன சான்று இப்பாடலாம். ஆற்றில் வந்த மாங்கனி ஒன்றனை ஒரு மங்கை எடுத்துத் தின்ன, அரண்மனைத் தோட்டத்துக் கனி ஆதலின் அவள் உண்டதற்குத் தண்டமாக எண்பத்தொரு யானைகளைத் தருவ தாகக் கூறியும் கொலைபுரிந்து பெண் கொலை புரிந்த நன்னன் என்னும் பெரும் பழியுற்றான்என்பது இளவிச்சிக்கோவின் முன்னோர் வரலாறாம் (குறுந். 292). பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன் கிழவன் சேண்புலம் படரின் இழையணிந்து புன்தலை மடப்பிடி பரிசில் ஆகப் பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க் கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் முயங்க லான்றிசின் யானே; பொலந்தேர் நன்னன் மருகன் அன்றியும் நீயும் முயங்கற் கொத்தனை மன்னே; வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை அணங்குசால் அடுக்கம் பொழியும்நும் மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே என்பது பெருந்தலைச் சாத்தனார் பாடல் (151) புலவர் பெருமையும் புரவலர் பெருமிதமும் அறிய வரும் வரலாறு நள்ளியினது என்பதை நாம் அறியலாம். ஈந்தவன் தகுதி பெரியதே! அதனினும் ஈயப் பெற்றவன் தகுதியும்பெரியதே! உண்ட ஒரு வேளை உணவு எனினும் உண்பவனுக்கு உயிரூட்டும் அமிழ்த மன்ன உணவு! அவனோடு அவன் சுற்றத்தவர்க்கும் வழங்கிய விழுமியது. ஏவலர் இருந்தும் ஏவி வழங்காமல்தானே வேவித்துத் தந்து அவ்வளவில் நில்லாமல் பரிசிலும் வழங்கிப், புகழும் விரும்பாப் புகழாளனாய் ஊரும், பேரும் உரையாமல் கொடுத்த கொடை ஒப்பிலாததாம்! ஒருவேளையில் ஒழிந்து போம் உணவினை பல்லாயிர வாண்டு வரலாறாக ஆக்கிய புலமையன் கொடை, கொடையின் கொடுமுடியாம்! பத்து உருபா தந்தானைப் பத்து உருபாயனன் (திருமால்) எனப் பாடிப் புகழும் பிற்றைக் காலப் போலிப் புலமையர் போலன்றி அறக் கொலை புரிந்தானைப் பாடாமல் புறந்தள்ளிய புலமை வீறு உள்ளதே அது எத்தகைய பெருமையது! இத்தகைய வரலாற்று ஊடகங்களே நாம் மீட்டெடுக்க வேண்டிய மேன்மையவாம்! 8. வள்ளல் குமணன் சங்கக் காலக் கொடை வள்ளல்கள் எழுவர்க்குப் பின்னர்க் கொடையாளனாகத் திகழ்ந்தவன் குமணன். இவனைப் பாடிய புலவர் பெருஞ்சித்திரனார், முன்னைஎழுவரையும் முறையே கூறி அம்மரபில் வந்தவன் நீ என்று குமணனைப் பாடிப் பரிசில் வேண்டுதலால் புலப்படும். குமணன் ஆட்சி செய்த பகுதி முதிர மலைப் பகுதியாகும். பழனிமலைத் தொடரின் ஒருபகுதி இது. இங்கே குமணமங்கலம் என்றோர் ஊரும் உண்டு. உடுமலைப் பேட்டைப் பகுதியைத் தன்னகத்துக் கொண்டது குமணன் ஆட்சி செய்த நாடு. அது முன்னர்ப் பேகனால் ஆட்சி செய்யப் பட்ட பகுதியாம். முதிரப் பகுதி இயற்கை வளம் மிக்கது. முகிலுக்கு ஒரு பெயர் முதிரம் என்பது. எப்பொழுதும் முகில் மூட்டத்தொடும் இருக்கும் மலைப் பகுதி என்பதால் அப் பெயர் பெற்றது போலும். நிலவளமிக்க முதிரத்தை மனவளமிக்க குமணன் ஆட்சி செய்தமையால் புலவளமிக்க புலவர்களும், கலைவளமிக்க பாணர் கூத்தர் முதலியவர்களும் முதிரத்தை நாடினர்; ஆடினர்; பாடினர்! குமணன் தன் பேறாகக் கருத அவர்களைத் தக்கவாறு பேணி, வேண்டுவனவற்றை வழங்கினான். பழமரம் நாடும் பறவை போலக் குமணனை நாடிப் பரிசிலர் இடையறவின்றி வந்து பரிசில் பெற்றுச் சென்றனர். புகழால் சிறந்து விளங்கினான் குமணன். குமணனுக்கு முன்னர் வள்ளல்கள் எழுவர் அங்குமிங்கு மாக வாழ்ந்தனர். புலமைச் செல்வர்கள், கலை வல்லார்கள் அவர்களை அடுத்துப் பரிசில் பெற்றுத் தம் கலைவாழ்வை உலகுக்குத் தட்டாமல் வழங்கினர். அவர்களால் அக்கால மக்கள் வாழ்க்கை, அரசியல் வரலாறு முதலியவை இன்றும் நம் கையிடைக் காணுமாறு நிலைபெறச் செய்யப்பட்டன. எழுவர்க்குப் பின்னர் எவரே புலமையாளரைப் போற்று வார்; இரவலர்க்கு உதவுவார் என ஏங்கிநின்ற காலத்தில் கருதிக் கருதி வழங்கும் கார்முகில் போலக் குமணன் தோன்றினான். அவர்கள் எல்லையிலா மகிழ்வுற்று அவனை நாடினர்; பாடினர். அவ்வாறு பாடியும், ஆடியும் பரிசில் பெற்றவர் எவரெவரோ அறியோம்! அறவே அறிந்து கொள்ள முடியாமல் போய்விடா வண்ணம் பெருமைமிக்க புலவர்கள் இருவர் பாடல்கள் புற நானூற்றில் கிடைக்கின்றன. அவற்றைப் பயிலும் போது குமணனைப் பற்றிய தமிழ்வளப் பரப்பு எத்தகையதாக இருந் ததோ அவற்றை முற்றாக அறிந்து கொள்ள வாய்த்திலதே என்றும்ஏக்கம் ஏற்படவே செய்கின்றது. புலவர் பெருஞ்சித்திரனார் முதிரத்திற்குச் சென்று வள்ளல் குமணனைக் காண்கிறார். அவர் நெஞ்சில் கடந்த காலத்திலிருந்த வள்ளல்கள் தோற்றம் கிளர்கின்றது. அதனால், கறங்குவெள் அருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும், கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும், மாரி ஈகை மறப்போர் மலையனும், கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும், பெருங்கல் நாடன் பேகனும், மோசி பாடிய ஆயும், தள்ளாது ஈயும் தகைசால் நள்ளியும் ஆகிய எழுவரும் மாய்ந்த பின்னர், முதிரத்துக் கிழவ, இயல் தேர்க்குமண, நீ இரந்தோர் அற்றம் தீர்க்கென யான் உன்னை உள்ளி வந்தனென் என ஒரு பாடலைப் பாடி நின்றார். எழுவரும் மாய்ந்த பின்னர் எம்மைக் காக்க எவருளார் என்று இரவலர் ஏங்கும் நிலையில் இங்குள்ளான் குமணன் என அறிந்து வந்தேன்! உன் கொடை சிறக்க! உன் படையும் சிறக்க! புகழ் ஓங்குக என்றார் (158) எழுவர் கொடைக் கடமையும் ஒருவன் மேல் உள்ளதாய்க் கூறிய புலவர் உரை, குமணனை வயப்படுத்தாமல் விடுமோ? புகழுக்காக இல்லை எனினும், பொறுப்பாகக் கொண்டு வழங்க ஏவும் அல்லவோ! இந்நிலையில், அவர் மொழியைச் செவியேற்ற குமணன் உருகுமாறு, புலவர் பெருஞ்சித்திரனார் தம் குடும்ப நிலையை எடுத்துரைத்தார்: நெடிய பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் இறவாமல் உள்ளேனே எனத் தன் வாழ்வை வெறுத்து கோல்காலாகக் குறுகியவளாய் முற்றத்துக்கும் போக முடியாத முதிர்வினளாக என் தாய் உள்ளாள். இடுப்பில் கொண்ட பல சிறுமக்கள் பிசைந்து தின்ன மெலிந்த மார்பினளாய், குப்பைக் கீரையைப் பறித்து உப் பில்லாமல் வேகவைத்த கீரையைத் தின்று அழுக்கேறிய கிழிந்த உடையினளாய் உள்ளாள் என் மனைவி! சுட்டுக் கரிந்த காட்டில் விதைக்கப்பட்ட தினைப் பயிர்க்கு இடிமுழக்குடன் மழை பொழிந்தது போல் நீ வழங்கிய கொடையைப் பாராட்டியுண்டு எம் சுற்றம் மகிழ வேண்டும். யானையேபரிசிலாகத் தரினும் முகம் மாறித் தரும் பரி சிலையான் கொள்ளேன். விருப்புடன் தருவதாயின் ஒரு குன்றி அளவையும்நிறைவாகக் கொள்வேன் கூரிய வேலையுடைய குமணனே, முறையாகக் கொடுத்தலை வேண்டுகின்றேன். என்றார் (159). மானமிக்க புலவரையும் வாட்டும் வறுமை இப்படிக் குடும்ப அவலத்தைக் கூற வைக்கிறது என்றால் அதன் கொடுமை அத்தகையதாம். இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என்பது வள்ளுவர் வாய்மொழி! பெருஞ்சித்திரனார் மேலும் பாடினார் : காய்ந்த காடு தழைக்கக் கல் என்னும் ஓசையொடு மழை பொழிந்தது போல எம் கடிய பசிக்கு வளமான ஊனும், ஊணும் மதியத்தைச்சுற்றிய விண்மீன்கள் போலப் பெரிய தட்டத்தைச் சுற்றி வைத்த சிறிய தட்டங்களில் படைத்து, வறுமை இல்லாமல் வாழ்க என வாழ்த்திப் பொன்னணிகள் பல வழங்கினான். அவன் முதிரத் துள்ளான். நீ அவனிடம் சென்றால் பலவும் தருவான் என்று பலரும் உன்னைப் பற்றிச் சொன்னமையால் இவன் வந்தேன். இல்லத்தில் உணவு இல்லாமையால் சிறுவர் வீட்டை மறந்துவிட்டனர். பால் பருகும் குழந்தை பாலின்றி வற்றிய மார்பைச் சுவைத்துப் பால் பெறாமையுடன் உணவும் இல்லாமல் அழ, அவ்வழுகையை நிறுத்துதற்குப் புலியைக் காட்டியும், நிலவைக் காட்டியும் முடியாமல் அப் பாவைப் போல் வலிச்சம் காட்டு என்றும் தணிக்க முடியாமல் துயரடையும் மனைவியும் மக்களும் துயர் நீங்குமாறு உடனே கொடை வழங்கி விடுத்தல் வேண்டும் என்றார். தம் மக்கள் மனைவி நிலையை, இல் உணாத் துறத்தலின் இல்மறந்து உறையும் புல் உளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்இல் வறுங்கலம் திறந்தழக் கண்டு மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும் நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும் வினவல் ஆனாள் என்பது எவரையும் உருக்கும் செய்தியாம். பெருஞ்சித்திரனார் பட்ட வறுமை தாயைக் கண்டு சேய் அரற்றி கண்டு சேய் அரற்றி உரைப்பது போல மேலும் தொடர்ந்தது: மழைவளம் போலவும் மழை நீங்கிய கோடையில் ஆற்று நீர் போலவும் நீ உள்ளாய். கொடுங் காட்டில் சென்றவர் ஓராண்டளவு கடந்தும் இன்னும் மீண்டிலர் என்று வருந்தி நிற்கும் என் மனைவி உன் கொடையால் வாய்த்த செல்வத்தைக் கண்டு வியப்புறும் வகையில் மணி மாறி, மாறி ஒலிக்க அணி நடையிடும் யானை மேல் ஏறிச் செல்ல விரும்பினேன். வெற்றி மிக்க வேந்தே, வறுமை பின்னே நின்று துரத்த உன்புகழ் அழைக்க வந்தயான் சில சொன்னேன். சொல்ல அறிவேன் எனினும், அறியேன் எனினும் அதனை அளவிட்டு அறியாமல் உன்னை அளவிட்டறிந்து வழங்குவாயாக. வளமிக்க அரசர் நாணும்படி வளத்துடன் திரும்புவேன்! நீ வளத்துடன் வாழ்வாயாக! என்றார் (162). குமணனைப் பாடி, யானையும், பொன்னும், பொருளும், போகமும் பெற்ற பெருஞ்சித்திரனார், குமணனைக் காண்பதற்கு முன் வெளிமான் என்பானைக் காணச் சென்றார். வெளிமான் உறங்கப் போகின்றவன் தன் தம்பியிடம், புலவர்க்கு வேண்டுவ கொடுத்து அனுப்புக என்றான். தம்பியாம் இளவெளிமான் புலவர் தகுதி நோக்காமல் கொடுக்க அதனைக் கொள்ளாமல் திரும்பினார் பெருஞ்சித்திரனார். குமணனைப் பாடினார். யானைப் பரிசு பெற்றதும் விம்மித முற்றார். வெளிமான் அரண்மனையை அடைந்தார். அங்கிருந்த காவல் மரத்தில் யானையைக் கட்டி ஈயாதானுக்கு ஈயும் கொடை ஈதெனக் கூறிச் சென்றார். புலவர் பெருமிதப் பொற்றகடு அப்பாட்டாம் : இரவலர் புரவலை நீயும் அல்லை : புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் ; இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி; நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானைஎம் பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே! என்பது அது (162). குமணனிடம், பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய உயர்மருப் பேந்திய வரைமருள் நோன்பகடு ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில் படு மணி இரட்ட ஏறிச் செம்மாந்து செலல்நசைஇ உற்றனென் என்று கூறிய அவர் உள்ளக் கிடக்கை புலப்படச் செய்யும் நிகழ்ச்சி, வெளிமானூர்க் கடிமரத்தில் களிற்றைக் கட்டிவிட்டுச் சென்றதாம்! யானையொடு வந்த பெருமிதப் புலவர் அதனை விடுத்துத் தேரொடோ, பரியொடோ தம் இல்லத்தை அடைந்து மனை யாளிடம் கூறினார். வெளிமானிடம் காட்டிய பெருமிதத்தைக் கூட்டிய பெரு மிதம் ஈதெனக் காட்டிய பாட்டு ஈதாம் : நின் நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க் கென்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே என் இனிய மனையுரிமையாட்டியே, பழம் பழுத்துத் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிர மலைத் தலைவன் குமணன் கொடுத்த வளம் இது. இதனை, உன்னை விரும்பியிருப்பவர்க்கும், நீ விரும்பி இருப்பவர்க்கும், பலவகைளாலும்சிறந்த கற்பமைந்த உன் சுற்றத் தார்க்கும், நம் சுற்றத்தின் கடிய பசி நீங்க அன்புடைமையாளன் கைம்மாற்றாகக் கொடுத்தவர்க்கும், இன்னவர்க்கு என்னாமலும் என்னைக் கேட்டுத்தர வேண்டும் என்பது இல்லாமலும், இதனை வைத்து நெடுங்காலம் வாழ்வோம் என்பது இல்லாமலும் என்னோடு நீயும்எல்லோர்க்கும் கொடுப்பாயாக என்பது இப்பாடல் பொருளாம். எங்கும் பெருமிதம்! எல்லாம் பெருமிதம்! என வாழ்வோர், இரவலர் எனினும் புரவலர் புகழை அடைகிறார்கள் அல்லவா! குமணன் நாடாண்ட காலத்திலே கேள்விப்பட்ட ஒரு புலவர் பெருந்தலைச் சாத்தனார். எனினும் அக் காலத்தே சென்று அவ்வள்ளலைக் கண்டார் அல்லர். அவர் குமணனைக் காணச் சென்றபோது அவன் காட்டில் வாழ்ந்தான். அவன் தம்பி நாடாண்டான். ஏன்? பொறாமைகளில் எல்லாம் கொடிய பொறாமை, பிறர், புகழ் அடைவதைத் தாங்கிக் கொள்ள முடியாத பொறாமை! குமணன் கொடையால் அரசு வளத்தை அழிக்கிறான் என்ப துடன், அவ் வழிவு வேலையால் புகழும் பெறுகிறான் என்னும் இரட்டைத் தூண்டல் இளையவனை ஏவியது : தீயோர் கூட்டம் நல்லோர்க்கு மாறாக இல்லாதிருந்த காலம் எதுவும்உண்டா? மனந்தூய்மை இனந்தூய்மை வினைத்தூய்மை மூன்றும் வாய்த்தார் வாழ்வாங்கு வாழ்வார். இம்மூன்றும் எதிரிடை யாயமைந்தோர் வாழ்வாரை வாழவிடுவாரா? அரசாண்ட அண்ணன் குமணனை அதிரச் செய்தது. அவனேனும் நன்றாக வாழட்டும் என்ற எண்ணத்தில் காடு சென்று உறைந்தான்! காடு சென்றவன் காவலன் மட்டுமல்லன்! நாடு புகழ் நல்லோன்! அவன் நாடாள வேண்டும் என்று நாடே விரும்பி னால் என்ன செய்வது? நாம் முந்திக் கொண்டு அவன் தலையைக் கொய்ய வழிசெய்து விட்டால் நிலைமை சரியாகிவிடும் என எண்ணினான். தீயோரும் தலையாட்டினர். இத்தகு இடராம் சூழலில் தான் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டார். அவர் குடும்ப வறுமை அர சிழந்து காடாளும் வேந்தனை இரந்து வேண்டத் தகுமா என்று கூட எண்ண இயலாத நிலைமை! அதனால் தம் குடும்ப நிலையை எடுத்துரைத்தார். ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையில் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை; சுவைத்தொறு அழூஉம்தன் மகத்துமுகம் நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண் என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்நிலை அறிந்தனை ஆயின் இந்நிலைத் தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே என்பது அவர் பாடிய பாட்டு (164) கூத்தர் பாணர் வறுமைத் தீர்க்கும் வள்ளல் குமணனே, சமையல் செய்யப் படாத அடுப்பு. அங்கே காளான் பூத்துக் கிடக்கிறது; குழந்தை பாலுக்கு அழுகிறது; தாயின் மார்புப்பால் துளையே தூர்ந்து போய்க் கிடக்கிறது; குழந்தையோ பசி யாறாமல் தாய் முகம் நோக்கி அழுகிறது; தாயோ மகவின் முகம் நோக்கிக் கண்ணீர் விடுகின்றாள். யானோ அவ்விருவரையும் நோக்கி நோவுற்று, நின்னை நோக்கி வந்தேன். என் நிலையை நீ அறிந்தனை என்றால், உன்னை வற்புறுத்திப் பெறுவதை விட மாட்டேன் என்பது அவர் வேண்டுதலாம். நிலைமையை அறியாமல் புலவன் புரவலனை இப்படி வாட்டி வருத்தலாமா? அவன் புலமைக்கு இஃது அழகாகுமா? என வினவத் தோன்றும்! ஆனால் புலவன் பின்னைச் செயல் மாண்பை எண்ணும் ஒருவர்க்கு அவன்மேல் அப்படிக் குறை கூற மனம் வாராதாம்! புலவன் தன் உள்ளுள், உடன் பிறந்தார் பிணக்கத்தை மாற்றி இணக்கமாக்க இவ்வுத்தியைக் கொண் டிருக்கக் கூடும். ஏனெனில் இச் சாத்தனார் பாடலைக் கேட்ட குமணன், பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனிஇன் னாது என எண்ணி வருந்துகிறான் அல்லவோ! ஆதலால் நாட் டாட்சி பெறக் குமணனைத் தூண்டுகிறார் அல்லவோ! மன்னன் எனத் தான் இருந்தால் இல்லை என்று சொல்லும் அவலம் ஏற்படாதே எனச் சிந்திக்க வைத்தார். குமணனோ, தன் தம்பியின் இயல்பை அறிந்து தன் தலையைக் கொண்டு போய் அவனிடம் தந்தால் புலவனுக்குப் பரிசு வழங்குவான் என்ற உறுதியால், என் தலையைக் கொய்து தம்பியிடம் தந்து பரிசு பெறுக என வாளைப் பரிசாக வழங்கு கிறான். அது புலவனை மேலும் சிந்திக்க வைக்கிறது! இவனிடம் வாள் இருப்பது தீது; எவனோ ஒருவன் இரந்து நின்றால் இவன் என்னிடம் தந்தது போல் அவனிடமும் வாளைத் தந்து தன் தலையைக் கொய்து பரிசு பெறச் செய்து விடுவான் என எண்ணிவனாய், இளங்குமணனைப் போய்க் கண்டான். சாத்தனார் வாளொடும், அரண்மனையுள் நுழைந்தது கண்ட இளங் குமணன் திகைப்படைந்தான். என்ன நடந்தது என அறியத் தவித்தான். நிலை பெறா உலகத்தில் நிலை பெற விரும்பினோர் தம் புகழை நிறுவி விட்டுத் தாம் இறந்து போயினர்; பெருஞ் செல்வராக இருந்தும் இரப்பவர்க்கு ஈயாமையால் வரலாற்றில் தொடர்பு இல்லாமல் ஒழிந்தார்கள். யான் குமணனைப் பாடி நின்றேன். அவன் பாடுபுலவன் பரிசில் இல்லாமல் போகும் துயரம் என் நாட்டை இழந்ததைப் பார்க்கிலும் பெரியதாம் என்று தன் தலையைக் கொய்யுமாறு வாளை என் கையில் தந்தான். அவனைப் பார்க்கிலும் சிறந்த கொடையென அவன் அப்பொழுதில் என்ன வைத்திருந்தான்? தலைக் கொடை யாளனாம் அவன் செயலை எவர் செய்வார்! தன்னை ஈயும் ஈகைக்கு முன் பொன் என்ன? பொருள் என்ன? அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பதன் சான்று அல்லவோ இது என்று எண்ணவைத்தார்! ஆம்! கல்லையும் கரைய வைத்தார், கைவாளால்! அக் கைவாளைத் தரவும் - தான் பெறவும் தன் வறுமைப் பாட்டுதானே ஊடக மாயிற்று! புலவனோடு தானும் உருகிப் புறப்பட்டான். அண்ணனை அழைத்து அரியணை ஏற்றினான். பண்புடையவர்களால் தான் உலகம் வாழ்கின்றது என்பதற்கு இத்தலைக் கொடை சான்றாம்! புலவர் சாத்தனார் பெருந்தலை என்னும் ஊரினர் என்பர்; குமணன் பெருந்தலையைக் காத்த சிறப்பால் அப் பெயர் பெற்றார் என்பதும் தகுதிதானே! அவர் பாடிய பாடல் : மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க் கீஇயாமையில் தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினும் நனிஇன் னாதென வாள்தந் தனனே தலை எனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி உவகையொடு வருவல் ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே என்பது (புறம். 165) புகழ் பட வாழ்வார் எண்மரைக் கண்டோம். பாடு புகழ்ப் பேறு வாயாமல் எத்தனை எத்தனையோ கொடையாளர்கள் நம்மால் அறியப் படாதவர்களாய்ப் போயிருக்கவும் கூடும்! உதவுவார் சிறப்பு, உதவப் பட்டார் சிறப்பால் அல்லவோ அழியா வரலாறாய் இடம் பெறுகின்றது. புலமைச் செல்வர்கள் பலர் பலப்பல தொழில் வல்லா ராகவும் இருந்துளர், வணிகராகவும், உழவராகவும் இருந்துளர். அன்றிப் புலமை பெறுதலும் பிறருக்குப் பயன்படுத்துதலுமே தம் பிறவி நோக்காகக் கொண்டு தொண்டு செய்தவர்களை அரசு தாங்குதலும், குடிமக்கள் தாங்குதலும் அத் தொண்டு சிறக்க வகையாம்! அக் கடமை நாட்டுத் தொண்டாக மதித்தமையால் தான் புலவர்கள் பெருமிதத்தோடு பாடும் பறவையாய் வாழந்தனர்! அக் கொடைஞரும் அப்பாவலரும் இருந்திராக் கால் வரலாற்று உலகம் மிக வறண்டு மெலிவுற்றுப் போயிருக்கும் என்று நாம் எண்ண வேண்டும் செய்தியாம்! 9. மானம் போற்றிய மன்னவன் கதை மைந்தரும் மகளிரும் அணிந்த மாலையில் இருந்து தேன் ஒழுகும்; துறைகளிலே நிறைந்துள்ள பூக்களிலிருந்தும் தேன் ஒழுகும். எங்கெங்கும் தேன் பருகி வழியும்! .இதற்குத் தக்க நீர்வளம் நிறைந்தது தொண்டி! தொண்டியின் பக்கமுள்ள தினைக் கொல்லையில் புகுந்து கொள்ளையிடும் பறவையை ஓட்டுவதற்குத் தட்டை என்னும் பெயருடைய கருவியை அடிப்பர். அதனால் அடுத்திருக்கும் வயலிலும் கடலிலும் இருக்கும் பறவைகளும் எழுந்து ஆர வாரிக்கும்! அவ்வளவு அடுத்து அடுத்துக் காடும் வயலும் கடலும் உள்ள பகுதி தொண்டி. இத்தொண்டி சேரவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டு இருந் தது. சேரர்களுக்கு இரும்பொறை என்னும் பட்டப்பெயரும் உண்டு. அதனால் தங்கள் இயற்பெயருடன் இரும்பொறை என்னும் பட்டப் பெயரையும் பலர் சேர்த்துக் கொண்டனர். அவர்களுள் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவனும் ஒருவன் ஆவன். இவ்விரும்பொறை சிறுவனாக இருக்கும் போதே திண்மை யான வலிய கால்களை உடையவனாக இருந்தான். அதனால் கணைக்காலன் என்று அழைக்கப்பெற்றான். கணை என்ற சொல்லுக்குத் திண்மை,. வலிமை என்பது பொருளாம். திண்ணிய கால் வீரமிகுதிக்குரிய அடையாளங்களுள் ஒன் றாகும். கணைக்காலனும் சிறுவனாக இருக்கும்போதே வீர விளையாட்டுகளில் தன்னிகரற்று விளங்கினான். அரச குடும்பத்திலே பிறந்த கணைக்காலன் நல்ல முறை யில் வளர்க்கப் பெற்றான். எதிர் கால அரசன் அல்லவா அவன்! எத்தகைய குறைவும் அவனுக்கு இல்லை. கண்ணை இமை காப்பது போலப் பெற்றோர்கள் செல்வன் கணைக்காலனைக் காத்தனர். அவனும் சின்னஞ் சிறு பருவத்திலேயே நல்லுடலும் அஞ்சாத வலிமையும் கொண்டு விளங்கினான். உரிய பருவத்திலே கல்வி கற்பிக்க வேண்டும் என்று விரும்பிய அரசர் தக்க ஆசிரியர் ஒருவரிடம் கணைக்காலனை ஒப்படைத்து அரண்மனையிலேயே கற்றுவர ஏற்பாடு செய்தார். கல்வித் தொடக்க நாளை அரசர் பெருவிழாப் போல் கொண் டாடினார். தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் பரிசு வழங்கினார். நாடு நகரெல்லாம் இசையும் நடனமும் நிகழுமாறு ஏற்பாடு செய்தார். அருமை மைந்தன் கற்கப் போகிறான் என்பதிலே ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வாறு செய்தது. இளைஞன் கணைக்காலனும் தாய் தந்தையர் விருப்பம் போலக் கற்கத் தொடங்கினான். எழுத்தறிவிப்பவன் இறைவன் என்று தன் பிஞ்சு நெஞ்சத்தே பதித்துக்கொண்டான். அதனால் படிப்புத் தொடங்கிய நாளில் இருந்தே ஆசிரியரே கண்கண்ட தெய்வம் என்று கருதி அவருக்கு வழிபாடு செய்து பணிந்து நின்று பாடம் கேட்டான். அவனோ அரசகுமரன். தான் அரசன் மைந்தன் என்ற இறுமாப்புடன் இருந்திருக்கலாம். தனது ஆட்சிக்கு உட்பட்டவர்தாமே இவ்வாசிரியர் என்றும் எண்ணி யிருக்கலாம். ஆனால் உண்மை அறிவும், உயர் குணமும் ஒருங்கே கொண்ட கணைக்காலன் அவ்வாறு எண்ணவில்லை. அறிவு தரும் ஆசிரியருக்கு அரசனும் தாழ்ந்து நிற்க வேண்டியவனே அல்லாமல் உயர்ந்து நிற்கத் தக்கவன் அல்லன் என்று உறுதி கொண்டான். எழுத்தறிவில் அழுத்தமான பயிற்சி பெற்றான். எண்ணறிவில் ஏற்றமுற்றான். இலக்கிய இலக்கணப் பயிற்சியிலும் இணையின்றி விளங்கினான். ஆசிரியர் சொல்லித் தரும் பாடங்களை எல்லாம் சிறிதும் பிழையில்லாமல் சிந்தையில் நிறுத்தினான். வேண்டும் பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் கூறிப் பயிற்சி செய்தான். ஆராய்ச்சியைப் பெருக்கி அரும்புலவனாக ஆனான். அருமை அருமையான கவிபாடும் திறம் பெற்றான். கல்வி அறிவிலே சிறந்தோங்கும் மைந்தனைக் கண்டு அரசர் களிப்புற்றார். எதிர்கால அரசனான அவனுக்குப் போர் பயிற்சி தேவை என்றறிந்து அப்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார். குதிரை ஏற்றம், யானை ஏற்றம் முதலான ஏற்றப் பயிற்சிகளில் உயர்ந்தான். விற்போர், வாட்போர் முதலான போர் வகைகளில் சிறந்தான். வளைதடி சுழற்றலிலும், வேல் ஏவுதலிலும் வளர்ந்தான். அறிவும், உரமும் ஒருங்கே கொண்ட மைந்தனை நினைத்து நினைத்து நெஞ்சம் பூரித்தான் அரசன். மக்களும் மகிழ்ந்தனர். அரசவையிலே பெரும் பெரும் புலவர்கள் இருந்து ஆராய்ச்சி செய்வதுண்டு. அச்சமயங்களிலெல்லாம் கணைக்காலனும் உடனிருப்பான். வயதில் இளைஞனான அவன் புலவர்கள் ஆராய்ச்சி உரைகளைக் கேட்டு அளவிலா இன்பம் கொள்வான். புலவர்களுடன் நெருங்கி உரையாடி இன்பங் காணுவது போல் வேறின்பம் இல்லையென உறுதிகொண்டான். அதனால் புலவர்கள் அரசவையில் கூடும் பொழுதெல்லாம் உடனிருந்துவரத் தவறுவ தில்லை. ஒரு நாள் பெரும்புலவராம் பொய்கையார் அரசவைக்கு வந்தார். அரசனும் புலவர்களும் பணிவுடன் எழுந்து வர வேற்றனர். பொய்கையாரும் அரசனையும், நாட்டினையும் வாழ்த்தி விட்டு அரியதோர் ஆராய்ச்சியுரை நிகழ்த்தினார். அவர் பேச்சிலும் ஆராய்ச்சியிலும் கணைக்காலனுக்குத் தனிப் பற்று ஏற்பட்டது. அவனை அறியாமலே எழுந்து, பொய்கை யாரை அடுத்துச் சென்று தலை தாழ்ந்து வணங்கினான். புலவர் பெருமானே! உம் பொன்னடி போற்றுகின்றேன் என்றான். இளவரசன் பொய்கையார் பக்கம் சென்று வணங்குவதும், பணிந்து நிற்பதும் பெருவியப்பாக இருந்தது. அரசருக்குத் தம் மைந்தன் பொய்கையார் மேல் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன் என்பது விளங்காது இருந்தது. புலவர்களுக்கே கணைக்காலன் பொய்கையார் மீது அன்பு ஏன் செலுத்துகின்றான் என்று புலப் படாத போது அரசருக்கு விளங்காததில் வியப்பில்லை அல்லவா! கணைக்காலன் பொய்கையார் கைகளைப் பிடித்துக் கொண்டே அரசர் முன் வந்தான். தந்தையே! இந்த அவையிலே எத்துணையோ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவை யனைத்தும் பயனற்றவையாய் விட்டன. இன்று இப்புலவர் பெருமகனார் பேசிய ஆராய்ச்சியுரை என்ன எளிமையானதா? இதுவரை இலக்கிய இலக்கண நூல்கள் எத்தனை எத்தனையோ படித்துள்ளேன். ஆசிரியரும் படிக்குமாறு தூண்டினார் . இவை யனைத்தும் இவ்வுலக இன்பத்திற்குத்தான் பயன்படும் என்று கருதி இருந்தேன். இப்பொழுதே என்றும் அழியா வீட்டின்பம் பெறவும் துணையாகும் என்பதை அறிந்து கொண்டேன். இவரை எனக்கு ஆசிரியராக இருக்கச் செய்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். அரசன் பொய்கையாரை நோக்கினான். அரசனது குறிப்பையும், அரசிளங்குமரன் வேண்டுதலையும் புரிந்து கொண்ட பொய்கையார் ஒப்புதல் தந்தார். அன்றுமுதல் கணைக்காலன் பொய்கையாரிடம் அறிவு நூல்களைக் கற்று வந்தான். பொய்கையார் சேரநாட்டைச் சேர்ந்த பொய்கை என்னும் ஊரிலே பிறந்தவர். பின்னர் தொண்டி மாநகரில் வாழ்ந்து வந்தார். தொண்டிமா நகரத்தினர் புலவர் பெயரைக் கூறாமல் பொய்கையார், பொய்கையார் என்றே அழைக்கலாயினர். இதனால் உண்மைப் பெயர் மறைந்து, ஊரார் உரைத்த பெயரே நிலைத்து விட்டது. பொய்கையாரைச் சேர வேந்தர்கள் பெரிதும் மதித்து வந்தனர். மற்றைய வேந்தர்களும் இவர் புகழையும், புலமையையும் கேள்விப்பட்டுத் தத்தம் அவைக்கு வருமாறும், தங்களுக்கு ஆசிரியராக இருக்குமாறும் வேண்டிக் கொண்டனர். பொருளையோ, புகழையோ மதிக்காத இயல்புடையவராக இவர் இருந்ததால் எவர் அழைப்பினையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். கணைக்காலன் சிறுவனாக இருப்பினும், அவனது கூர்மையான அறிவையும், அறிவு நூல் கற்க வேண்டுமென்று கொண்டுள்ள ஆசையையும் கருதியே சொல்லித்தர ஒப்புக் கொண்டார். நாள் செல்லச் செல்ல கணைக்காலன்மீது கொண்ட பற்று மிகுதிப்பட்டு வரவே அவனை விட்டுப் பிரிய முடியாத நிலைமைக்கு ஆட்பட்டார். கணைக்காலனாலும் புலவரைவிட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியவில்லை. பொய்கையாரைப் போல் ஆசிரியரும் அரியர். கணைக் காலனைப் போல் மாணவனும் அரியன் என்று சொல்லு மளவுக்கு இருவர் அன்பும் வளர்ந்தது. இப்படி அல்லவோ ஆசிரியர், மாணவர் இருக்க வேண்டும்! பொய்கையார் தொடர்பு ஏற்பட்ட பின்பு கணைக்காலன் எச்சிறு நிகழ்ச்சியையும் எளிதில் விடாமல் சிந்திக்கும் தன்மை பெற்றான். அவன் சிந்தனையை ஓர் அளவில்லாது வளர்த்தான். ஏன்? சிந்தனையே உருவாகிவிட்டான் என்று கூறலாம். ஒரு நாள் வீரர்களுடன் சேர்ந்து வாள் பயிற்சி செய்து கொண்டிருந் தான் கணைக்காலன். விளையாட்டுப் போரையும் உண்மைப் போராகவே எண்ணிக் கொண்டு தன்னை மறந்து சண்டை செய்தான். ஒவ்வொருவராகத் தாக்கித் தாக்கி எல்லோரும் தோற்று விட நிகரற்று விளங்கினான். அதற்குப் பின்னர் தான் அப்பாடா! எல்லோரையும் வென்றேன் என்று வாளை உறையுள் போட்டு அமைதி அடைந்தான் அப்பொழுதுதான் தன்னோடு விளையாடிய வீரர்களில் சிலர் பெரும் வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி விட்டனர் என்பதை உணர்ந்தான். ஆ! ஆ! விளையாட்டு என்பதை மறந்து தவறு செய்து விட்டேனே என்று வருந்தினான். ஆனால் புண்பட்ட வீரர் களில் எவரும் சிறிதும் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை கணைக்காலனுக்கு. mjdhš ‘V‹ c§fŸ fha§fËš tÈ ïšiyah?; கவலை அற்று இருக்கிறீர்களே என்று கேட்டான். எங்களுக்குக் கவலை இல்லாதது மட்டுமல்ல! களிப்பினை யும் உண்டாக்கியிருக்கிறது இப்புண். இது புண்ணா? இல்லை! இல்லை! புகழின் கண்! வீரர்கள் இவற்றைப் பெறுவதுதான் அழகு! அழகுக்குப் பரிசு! ஆனால் கோழைகள் வடுப்படாமல் வாழ்ந்து போலி அழகிலே போய்த் தொலைகின்றார்கள். எங்களுக்கு வீரப் பரிசு தந்த உன்னை நாங்கள் எவ்வாறு வாழ்த்து வது என்று பேசினார்கள். கணைக்காலன் மார்பு விம்மியது! ஆகா! இப்படியும் ஒரு வீர வாழ்வு உண்டா? இவ்வாழ்வுடைய குடியிலேயா யான் பிறந்துள்ளேன். வாழ்க வீரர் குடி! என்று வாழ்த்தினான். அப்பொழுது தெரு நிறையப் பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருந்தனர். இளைஞர்கள் அனைவரும் கூட்டம் வரும் இடத்திற்கு ஓட்டமாக ஓடினர். கணைக்காலனும் ஓடிப்போய் உற்றுக் கவனித்தான் தெருவே ஆரவாரமாக இருந்தது. வீரர்கள் வேலும் கம்பும் சுழற்றிக்கொண்டு விளையாடினர். மகளிர் குரவையும் கும்மியும் ஆடினர். சங்கு முழக்கமும், பறையொலியும் ஆங்காங்கு ஓங்கின. ஆண்கள், பெண்கள், முதியர் இளைஞர் அனைவரும் வீர முழக்கமிட்டு நடந்து கொண்டு இருந்தனர். இடையே பிணம் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அப்பிணத்தின் பக்கம் வாள் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. வீரன் வாழ்க வீரன் வாழ்க என்று முழங்கிக் கொண்டே பிணத்தைச் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்றனர். அவர்கள் போனபின் இறந்ததற்காகக் கவலைப்படாமல் இப்படி ஆரவாரம் செய்கின்றார்களே ஏன்? என்று நண்பர்களிடம் கேட்டான் கணைக்காலன். ஒருவன் சொன்னான் கோழைகளே சாவுக்கு அஞ்சு வார்கள்! வீரனுக்குச் சாவு துரும்பு! உண்மை வீரர்கள் சாவே வா என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பர். அவ்வாறு எதிர்பார்த்து இருந்து போர்க் களம் சென்று, அஞ்சாமல் போர் புரிந்து மார்பில் புண்பட்டுச் சாவர். அப்படி இறந்தால் அழியாத வீட்டின்பம் அவர்களுக்குக் கிட்டும் என்பது நம்மவர் உறுதிப்பாடு என்றான். அது சரி; இதோ பிணமாகப் போகின்றான் இல்லையா? இவன் நான்கு அல்லது ஐந்து வயதுடையவனாகத்தானே இருப்பான். இதற்குள் எந்தப் போருக்குப் போனான்? புண் பட்டான்? நான் அறிய எந்தப் போருக்கும் நம் ஊரார் போக வேண்டியது ஏற்பட்டது இல்லையே! என்றான் கணைக்காலன். நீ கேட்பது சரி; எல்லோரும் சாவது உறுதி. ஆனால் போருக்குச் சென்று சாகக் கிடைக்குமா? சில வேளைகளில் சிலருக்குக் கிடைக்கிறது. பல வேளைகளில் பலருக்குக் கிடைப்பது இல்லை. போருக்குப் போய்ச் சாகா விட்டாலும், வயது மூத்தோ, நோயுற்றோ சாகத்தானே செய்கின்றார்கள். அவர்களுக்கும் வீரச்சாவு வேண்டாமா? வீட்டின்பம் வேண்டாமா? அதற்காக என்று இடைமறித்தான் கணைக்காலன். போருக்குப் போய்ப் புண்பட்டுச் சாகா விட்டாலும் அப்படிச் செத்ததாகவே கருதிக் கொள்ள வேண்டும். அதற் காகத்தானே பிணத்தின் பக்கம் வாள் இருந்தது. அதைப் பார்த்தாய் அல்லவா! அவ்வாள் எதற்கு என்று தெரியுமா? பிணத்தைக் கட்டையில் அடுக்கி வைத்து எரிக்கு முன்னாக வெட்டிச் சிதைத்து அதன் பின்னரே தீ மூட்டுவர். அவ்வாறு வெட்டப்படா விட்டால் அவன் வீரனாகச் சாகவில்லை என்பது பொருள். இது இன்று நேற்றுத் தோன்றிய வழக்கம் இல்லை. நம் பரம்பரையின் தொடக்க முதலே இருந்துவரும் வழக்கம் என்றான் நண்பன். என் குடியினர் வீரக்குடியினர்! வீரனாகச் சாகும் சாவு ஒன்றே சாவு என்று கருதும் குடியினர்! இது என்னைப் பெரு மிதத்தில் ஆழ்த்துகின்றது. இத்தகைய குடியில் பிறந்தேனே என்று மேலும் வியப்பு அடைந்தான் கணைக்காலன். இல்லை! இல்லை இக்குடியிலே வீரனாகப் பிறந்தது மட்டும் இல்லை. இக்குடியினரின் தனிப்பெரும் வேந்தனாகவே பிறந்துள்ளாய். அதை மறந்துவிட்டாயே என்றான் நண்பன். மேலும் ஒன்று என்று பேச்சைத் தொடர்ந்தான். என்ன என்றான் கணைக்காலன். பிறந்து வளர்ந்தவர்களுக்குத்தான் இப்படி என்று நினைக் காதே! தாய் வயிற்றில் கருவாக இருந்து உருவாகப் பிறக்காமல் தசையாகப் பிறப்பதும் உண்டு அல்லவா! அதனையும் வெட்டி வைத்துச் சுட்டெரிப்பதே நம்மவர் வழக்கம் என்றான் நண்பன். கணைக்காலனுக்குப் பேச நா எழவில்லை. சிந்தனையிலே ஆழ்ந்தான், அன்று இரவும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. என் னென்னவோ காட்சிகள் நினைவுக்கு வந்து கொண்டு இருந்தன. சிந்தனையோட்டம் எங்கேயோ போய்க்கொண்டு இருந்தது. வீரர்களுடன் கணைக்காலன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். காட்டில் சுற்றித் திரிந்து களைப்பு அறியாமல் வேட்டை ஆடினான். வீரர்களும் உயிர்த் தொகைகளைக் கொன்று குவித்தனர். தூக்கிக்கொண்டு வருவதற்குத் திண்டாடும் அளவும் வேட்டையாடித் தீர்த்து விட்டனர். அங்கேயே ஓரிடத்தே நெருப்புமூட்டி வாட்டினர். உண்ணுமட்டும் உண்டனர். தங்கள் உதவிக்குக் கொண்டுவந்த வேட்டை நாய்களுக்கும் வேண்டு மட்டும் ஊன் போட்டனர். நாய்களெல்லாம் எலும்பையும் கறியையும் ஆசையாய்த் தின்றுகொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாயை மட்டும் அருகில் வர விடவில்லை. அன்று வந்த புதிய நாய் அது. வேட்டையாடும் திறமையைக் கருதி எங்கிருந்தோ கொண்டு வந்திருந்தனர். அது மற்ற நாய்களுடன் வரவே மறுத்தது. இருப்பினும் வீரர்கள் விடாமல் இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக் கொண்டே வந்து விட்டனர். அதுவும் தப்பிச்செல்ல முனைந்தது. கைக்கு வந்த நாயை விட்டுவிடுவார்களா? இழுபட்டுக்கொண்டே வந்தது. மற்ற நாய்கள் வேட்டையாடும் பொழுதில் அமைந்து கிடந்தன. இப்பொழுது ஊனைப் பங்கு வைக்க வருகின்றது என்று நினைத்துக் கொண்டு ஓடி ஓடி வெருட்டிக் கடித்தன. இரத்தமும் ஒழுகிக்கொண்டு வந்தது. வேட்டைக்கு உதவி புரிந்த நாயை, நாய்களே வேட்டை யாடுவதைக் கண்ட வீரர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் முடிய வில்லை. புதிய நாயையே பிடித்து மீண்டும் சங்கிலியால் பிணைத்துக் கட்டினர். ஊன் தனியே இட்டனர். ஆனாலும் மற்ற நாய்களின் உறுமல் ஓயவில்லை. அவ்வொலியைக் கேட்டுக்கொண்டு புதிய நாயும் தின்ன முடியவில்லை. உறுமிக்கொண்டே நின்றது. பொழுது போய்விட்டது; வீரர்கள் வீடு நோக்கினர். புதிய நாயை மட்டும் விட்டுவிடாது பிடித்துக் கொண்டு நடந்தனர். ஐயோ! அதன் கழுத்து வலி எடுக்க, நாக்குத்தள்ள, பசி வருத்த துன்புற்றுக்கொண்டே நடந்தது. ஓடவும் முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. ஓரிடத்தே நடக்கமுடியாமல் விழுந்தது. பாராமல் நடந்த வீரன் இழுத்துவிட்டான். நிலத்திலே இழுபட்டுத் துடித் தது. சுற்றித் திரியும் நாய்க்கு, மற்ற நாய்களின் சண்டையால் ஏற்பட்ட கொடுமை இது. இந்நிகழ்ச்சியை எளிதாகக் கருதி வீரர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் கணைக்காலனோ இது என்ன பிழைப்பு? மானம் அற்ற பிழைப்பு? இது நாயானதால் இழுபடும் சிறுமையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது ஏற்படுகிறது. மனித இனத்திற்கு அதிலும் மானமிக்க வீரர் இனத்திற்கு இக் கொடுமையைத் தாங்க முடியுமா? என்று நினைத்தான். அந் நாயைத் தனியே கட்டுமாறு செய்து ஊனும் போடச் செய்தான். நாய் எத்தகைய பழைய நினைவும் இல்லாமல் ஆசையுடன் தின்றது. அதனைக் கண்டு இழுப்பும் இழிவும் பட்ட நாய் இப்பொழுது தனியிடத்திலே நிற்கிறது. எதிரே எந்த நாயும் இல்லை. பழைய நிகழ்ச்சியை மறந்து விட்டு வயிறு புடைக்கத் தின்கிறது. மனிதர் இச்செயல் செய்வரோ? நாய் நாய்தான்! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான், கணைக் காலன் இவ்வாறு சிந்தித்தான்; மற்று எல்லோரும் சிந்திக்கவா செய்தார்கள்? கணைக்காலனுக்கு ஆண்டுகள் சில கடந்தன. அவன் முடி சூடி ஆட்சிபுரிய வேண்டுமென்று அரசன் வேண்டிக் கொண்டான். அமைச்சர்களும் அதுவே தக்கது என்று கூறினர். அரசர் நன்னிலைமையில் இருக்கும்பொழுதே முடி சூட்டி வைத்து அரசியலுக்குத் துணையாக இருப்பதே நலம் தரும் என்று அறிவுடையவர்களும் வேண்டினர். அதனால் நல்லதோர் நாளிலே கணைக்காலன் சேர நாட்டின் வேந்தன் ஆனான். அதுமுதல் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்று அழைக்கப் பெற்றான். கணைக்காலன் தன் மாணவன் அரசப் பொறுப்பு ஏற்ற அன்று பொய்கையார் அடைந்த மகிழ்ச்சி ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதனினும் பன்மடங்கு மிகுந்திருந்தது எனலாம், நாடு போற்ற, நல்லவர் வாழ்த்த கணைக்காலன் முடி சூட்டிக் கொண்டான். அரசனான பின் கணைக்காலன் முன்போல அமைதியாக இருந்துவிட முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பு அவனை அலைக் கழித்தது. அவன் உள்ளம் அறிவு நூல்களிலே தோய்ந்தும், பொய்கையார் உரையில் பதிந்தும் இருந்தாலும் சிக்கல்கள் மிகுந்தன. உள்ளத்தின் உறுதிப் பாட்டுக்குச் சூழ்நிலையும் உதவி செய்யுமானால் நன்மையாக இருக்கும். ஆனால் முரண்பாடுகள் குறுக்கிட்டால் என்ன செய்வது? கணைக்காலனுக்கு மூவன் என்பவன் பகைவனாகி விட் டான். மூவன் நாடு வளமான நாடு. அது கடற்கரையை அடுத்து இருந்தது. பொய்கையிலே இருக்கும் மீனைப் பற்றியுண்ட நாரைகள் வைக்கோற் போரிலே கவலை அற்று உறங்கும். நெல்லரியும் உழவர் மக்கள் ஆம்பல் இலையைத் தொன்னையாக மடித்து அதில் சுவை மிகுந்த மதுவை ஊற்றி உண்டு களிப்பர். களைப்பு மிகுதியாகி விட்டால் கடலிலே புகுந்து விளையாடி இன்புறுவர் . இவ்வாறு இன்பமே உருவான வளநாட்டை அமைதியாக ஆண்டு கொண்டிருக்காமல் கணைக்காலனை எதிர்த்தான் மூவன். இது பெரும் தவறு அல்லவா! கணைக்காலனும் மூவனும் களத்தில் சந்தித்தனர். மூவன் தன் படை ஒன்றையே நம்பி வந்தான். கணைக்காலனோ தன் படையோடு தன்னையும் நம்பி வந்தான். அவனால் தனித்து நின்று ஊக்கத்துடன் போர் செய்து எத்தகைய பகைவரையும் அடக்கி விட முடியும். இதனை முன்பு மூவன் அறியமாட்டான். போர்க் களத்திற்கு வந்த பின்பே அறிந்தான். அறிந்து பயன்? தன்னுடன் வந்து தனியே விட்டுச் செல்லும் வீரர்களைத் தொடர்ந்து ஓட முடியவில்லை சூழ்ந்து கொண்டு சிறை செய்து பல்லைப்பிடுங்கினான். பிடுங்கிக் கொண்டு நாட்டுக்கு ஓடுமாறு வெருட்டி விட்டான். மூவனைக் கொன்றே இருக்கலாம் கணைக்காலன். அது இயல்பாகப் போயிருக்கும். நாடு இகழுமாறு இத்தகைய பாட மாக இருக்காது என்று கருதிவிட்டான். போலும்! அமைதி யோடும், வளத்தோடும் வாழ்ந்த மக்களைப் போர்க்களத்திற்கு இழுத்து வந்து நிறுத்தியதன் தண்டனையால்தான் மூவன் பல்லைப் பறிகொடுத்தான் போலும். மூவன் பல்லைக் கணைக்காலன் என்ன செய்தான்? களத் திலே எறிந்து விட்டானா? தவறி விடாமல் கொண்டு வந்து தொண்டி நகரின் கோட்டை வாயில் கதவிலே பதித்தான். மூவன் வாயிலே இருந்து பறித்துக் கோட்டை வாயிலிலே பதித்து விட்டான். வாய்க்குப் பல் இன்றியமையாதது. வாயிலுக்குப் பல் வேண்டியது இல்லை. தேவையற்றதையும் செய்து முடிக்கின்றது கிளர்ச்சி கொண்ட உள்ளம்! வாயில் கதவிலே பதித்த பல்லைப் பார்த்து ஒரு புலவர் கூறினார். இது இழிவுமிக்க வாயில் இருந்த பல்! இப்பொழுது தான் இதற்குச் சிறிது பெருமை என்றார். ஏனென்றார் இன்னொரு புலவர், இப்பல்லைக் கொண்டிருந்த வாய் புலவர் பெருந்தலைச் சாத்தனார்க்குச் சிறிதும் இரக்கம் காட்டாமல் நல்லுரையும் கூறாமல் இல்லை போய் வா என்று அனுப்பியது. அதற்குத் தண்டனை வேண்டாமா? என்றார். அவ்வாறு கூறுவது தவறு. பெருந்தலைச் சாத்தனார் அதைத் தவறு என்றாரா? வாழ்க என்றல்லவா வாழ்த்திச் சென்றார். அவரா பல்லைப் பறித்த நிகழ்ச்சியை ஒப்புவார்? பெரும் புலவர் மேல் பழி சுமத்தாதீர் என்று எச்சரித்தார். இப் புலவர்கள் பேச்சு கணைக் காலனுக்கும் தெரிய வந்தது. இத்தகைய இழி தகைமை படைத் தவனுக்கு இது வேண்டியதுதான் என்றான் அவன். பொய்கையாரும் இவ்வுரையாடல்களை அறியாமல் போய்விடவில்லை. ஆனால் அதற்கும் பொழுது வரட்டும் என்று அமைதியாக இருந்தார். ஒருநாள் அவையிலே பேசினார். கணைக்காலன் போர்த் தொல்லையிலே ஈடுபட்டு இழந்த புலமை இன்பத்தை அன்று பெற இருந்ததால் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். நாவிற்கு இழிவு எது? என்பதே அவர் முதல் கேள்வியாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினர். இரப்பது இழிவு; தன் தகுதி அறியாத ஒருவனிடம் போய் இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்பது மிகவும் இழிவு! இல்லாததையும், பொல்லாததையும் எடுத்துரைத்து எப்படியாவது வாங்கிக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று எண்ணி ஏங்கி நிற்பது மாபெரும் இழிவு! ஆனால் விரும்பிக் கொடுக்கும் ஒன்றை வாங்கிக் கொள்வதோ, அன்புடைய வனிடத்துத் தன் நிலைமை கூறிப் பெறுவதோ இழிவுடையது ஆகாதது மட்டுமல்ல, பெருமை தருவதுங்கூட என்றார். தனக்காக அல்லாது பிறருக்காக என்றாலும் இரப்பது இழிவே! பகுத்தறிவு அற்றது பசு, அதற்குத் தனக்குள்ள நீர் வேட்கையைக் கூறித் தண்ணீர் கேட்க இயலாது. அதன் நீர் வேட்கையை உணர்கின்றான் ஒருவன். அவன் நீரிறைப்பான் ஒருவனைக்கொண்டு இப்பசு நீர் வேட்கை கொண்டுள்ளது; இதற்கு நீர் தந்துதவுக என்று வேண்டுகின்றான். இத்தகைய வேண்டுதலும் இழிவே!. பசு, நீரை உண்டு பாலைத் தருவதுதான்! பசும் புல்லை உண்டு பயிருக்கு உரமாகும் சாணம் தருவதுதான்! தன் வாழ் நாளெல்லாம் பிறருக்கே பயன்படும் ஒன்று தான்! தெய்வத் திருக்கோலத்தை வெளிக் காட்டுவதுதான்! இருப்பினும் அதற் காகக் கூட நீர் தருக என்று இரந்து கேட்பது நாவுக்கு இழிவே. இதனைப் பொய்யில் புலவரும். ஆவிற்கு நீரென்(று) இரப்பினும் நாவிற்(கு) இரவின் இழிவந்த(து) இல் என்றார். இத்தகைய இழிவுகள் நிரம்பிக் கிடக்க மூவன் பல்லைப் பறித்தது, அவனுக்கு இழிவாவது எப்படி? என்று கேட்டார். புலவர்கள் வாயடங்கினர். கணைக்காலன் செருக்கழிந்து தலை குனிந்தான். தலைக்குனிவின் இடையே புலவர் உரை இதுகாறும் அறியாத அறிவுச் சுரங்கம் ஒன்றைத் தந்தது குறித்து மகிழ்ச்சியும் அடைந்தான். பொய்கையார் கணைக்காலன்மேல் கொண்ட அன்பால் அவனிடமே தங்கிவிட்டார் அல்லவா! அவர் எப்படியும் தன்னை நாடி வருவார் என்று சோழவேந்தன் செங்கட்சோழன் என்னும் செங்கணான் எண்ணியிருந்தான். பொய்கையாரைப் பற்றிக் கேள்விப்பட்ட பின்னர், அவரைப்பார்க்கவும், அவர் புலமைச் செல்வத்தை அடையவும் ஆசைப்பட்டு இருந்தனன். பொருள் கருதி வரும் சமயம் ஒன்று ஏற்படாமலா போய்விடும் என்பது அவன் எண்ணம். புலவர்தான், இழிவிலே தலையாய இழிவு தம் திறமை அறியாத ஒருவனிடம் போய் இரந்து நிற்பது என்ற முடி வுடையவர் ஆயினரே. வருவாரோ? வரவே இல்லை. செங்கட் சோழனுக்குப் பாராமல் இருக்கவும் முடியவில்லை. தக்கார் சிலரை அனுப்பிப் பொய்கையாரைத் தம் நாட்டுக்கு அழைத்து வருமாறு வேண்டினான். ஆனால் பொய்கையார் சோழ நாட்டுக்குச் செல்ல மறுத்து விட்டார். வந்தவர்கள் காரணம் கேட்டனர். ஆராய்ந்த பேரறிவும், அடங்கி அமைந்த பண்பும் இல்லாத ஒருவன் அழைப்பை ஏற்றுக் கொண்டு வர ஒருப்படேன் என்றார், ஏமாற்றத்துடன் வந்தவர்கள் திரும்பினர். சோழனிடமும் புலவர் உரையை உரைத்தனர். நாடாளும் வேந்தன் என்ற காரணம் கொண்டாவது அழைப்பை ஏற்றிருக்கலாம். அது முடியாது ஆயின் தாம் வரமுடியாது என்று கூறி மறுத்திருக்கலாம் அதற்கு என்னை இகழ்ந்துரைக்கவும் வேண்டுமா? என்று புண்பட்டான். ஆனாலும் நொடிப் பொழுதில் அதனை மறந்தான். ஏனென்றால் அதனை நினைத்துக்கொண்டு செயல் ஆற்றினால் ஒரு நாளும் புலவர் வரும் நல் வாய்ப்பைப் பெற முடியாது என்று தெளிவாக அறிந்துகொண்டான். ஆனால் பொய்கையார் மீதுள்ள பகை அவரை விட்டு அவரை உரிமையாகக் கொண்டுள்ள சேரன் கணைக்காலன் மேல் தாவியது. அவ்வளவுதான்.....! ஒரு நாள் சோழன் படைத்தலைவன் பழையன் என்பவன் பறை முழக்கினான். சேரநாட்டீர்! வருக போருக்கு என்று அழைத்தான். அவன் இறுமாப்புரையைக் கேட்டுவிட்டும் வாளா இருப்பானா கணைக்காலன்? அவனுடைய வீரர்களும் ஓய்ந்திருக்க விடுவார்களா? புறப்பட்டுவிட்டார்கள் போர்க் களத்திற்கு. சேரன் தன் படைகளை நான்கு கூறுகளாகப் பிரித்தான். நன்னன், அத்தி, கங்கன்கட்டி, புன்றுறை ஆகியவர்கள் பொறுப்பில் ஒவ்வொரு பிரிவையும் ஒப்படைத்தான். சேரநாட்டின் காட்டிலே திரிந்த களிறுகள் அனைத்தும் களம் நோக்கிப் புறப்பட்டன. குதிரைகளுக்கும் தேர்களுக்கும் குறைவு இல்லை. கடல் அலை போலக் காலாள் வீரர் அணிவகுத்துச் சென்றனர். பழையன் இப்படைகளைக் கண்டு அஞ்சிவிடவில்லை. அவனோ இப்படைகள் அனைத்தையும் ஒரு பகலில் ஒழிப்பேன். போரி லேயே பழகி விட்ட என்னை எதிர்க்கும் பகைவரும் உளரோ? இன்று பழையன் போர் அன்று; எமன் போர் என்று எதிரிகள் அறியட்டும் என்று ஓங்கார ஒலியிட்டு படையை எதிர்நோக்கி நின்றான். இருதிறப் படைகளும் கழுமலம் என்னும் இடத்தே சந்தித்தன. புலியும் புலியும், சிங்கமும் சிங்கமும், மேகமும் மேகமும், மலையும் மலையும், கடலும் கடலும் எதிர்த்துத் தாக்குவது போல இருபக்கத்துப் படைகளும் தாக்கின. ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பழி வாங்குவதில் முனைந்து நின்றனர். பழையன் ஒருவனைச் சேர வீரர் நால்வரும் வளைத்துக் கொண்டு தாக்கினர். சோழ வீரர்கள் சோர்ந்துவிடவில்லை. நல்ல எதிர்த் தாக்குதல் தாக்கினர். இதற்கு முன் இப்போரைப் போலும் ஒரு போரைக் கண்டதே இல்லை என்று கூறும் அளவுக்கு மேலோங்கினர். நேரம் செல்லச் செல்லப் பிணக்குவியல் மலை மலையாகக் குவிந்தது. இரத்தம் வெள்ளமாகப் பெருகியது, மூளைச் சேறும், கொழுப்பும் மிகுந்து வழுக்குதல் உண்டாக்கின. வழுக்கி வீழ் வோர் தங்கள் படைக் கருவிகளாலேயே தாங்கள் தாக்குண்டனர். எழுந்து நடக்கத் தொடங்கிச் சறுக்கி வீழ்ந்தனர். குதிரைகளும் யானைகளும் பட்டுமாய்ந்து குவிந்து விட்டன! களத்திலே நிற்பதற்கே இடமில்லாது போய்விட்டது. சேரன் தன் படைத் தலைவர்களை ஊக்கப்படுத்தினான். பழையன் ஒருவன். நீங்களோ நால்வர் என்றான். சங்கம் முழக்கினான். அது படைத் தலைவர்களையும், வீரர்களையும் பழிவாங்குமாறு தட்டி எழுப்பியது. அடியுங்கள்: எறியுங்கள்; தாக்குங்கள்; வெட்டுங்கள்; வீழ்த்துங்கள் என்று முழக்கிக் கொண்டே களத்தில் புகுந்தான். கணைக்காலன் போரில் குதித்துவிட்டான் என்று அறிந்தது சேரர் படை. செம்மாந்து தாக்கியது. இதோ! இதோ! பார்! என் வீரத்தை என்று மேல் மேல் பாய்ந்தது. பொழுதும் மறையத் தொடங்கியது. பாவம்! பழையன் தலையும் நிலத்திலே வீழ்ந்தது. ஓ வென்று அலறிக் கொண்டிருந்த போர்க்களம் பழையன் வீழ்ந்ததும் ஒருவாறு அடங்கியது. படை இரவிலே திரும்புதல் கூடாது என்று சேரன் பாசறை உண்டாக்கித் தங்கினான். சோழர் படை, பழையன் இறந்து விட்டாலும் பதைபதைத்து விடவில்லை. விடியட்டும் என்று எண்ணிக்கொண்டு தங்கினர். சோழன் நடந்ததை அறிந்தான். பெரும் படையுடன் புறப்பட்டான். வெற்றி பெறாமல் மீளாது என் வீரவாள் என்று வஞ்சினம் கூறினான். பழையனைக் கொன்ற பகைவர்களே! வருகின்றேன் உங்கள் கை வரிசையைக் காட்டுங்கள். அவனை நீங்கள் எங்கே அனுப்பி வைத்தீர்களோ, அங்கேயே உங்களை அனுப்பி வைப்பேன்; ஐயமில்லை என்று சினங்கொண்டு இரவோடு இரவாகப் போர்க்களத்திற்கு வந்து தங்கினான். சோழன் வந்து சேர்ந்தது நள்ளிரவுப் பொழுது! அயர்ச்சி மிகுதியால் வீரர் சிலர் உறங்கினர். சிலர் தங்கள் புண்ணின் வலியால் முணகிக் கிடந்தனர். இன்னும் சிலர் தோல்வியை எண்ணி நெஞ்சம் கொதித்துக் கண்ணை மூடாது அரற்றிக் கொண்டு இருந்தனர். அடுத்த நாள் எப்படிப் பகையை ஒழிப்பது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையிலே சோழன் படைவீரர்களைப் பார்வையிட்டான். அது அவ் வீரர்களுக்குத் தேறுதலாக இருந்தது. இதே நேரத்தே சேரன் படையிடையே ஒரு கூக்குரல் கேட்டது. ஒவ்வொருவரும் பாசறையை விட்டு வெளியே ஓடி வந்தனர். பதை பதைத்துப் போய் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர். வெளிச்சம் இல்லாததால் பலர் கீழே வீழ்ந்து வீழ்ந்து எழுந்தனர். சோழர் பாசறைக்கும் இவ்வாரவார ஒலி கேட்டது. அவர்கள் திகைத்துப் போய்த் தங்கள் தங்கள் கருவிகளைத் தயாராக வைத்துக்கொண்டு நின்றனர். ஓ வென்று அலறிக்கொண்டு செயலற்று இருந்தனர். ஏன்? சேரனது யானை ஒன்று திடீரென்று மதங் கொண்டு விட்டது. அது கட்டுப்பாடு அற்றுக் கண்டவர்களையெல்லாம் காலால் மிதித்துக் கொல்லவும், துதிக்கையால் தூக்கி எறியவும்,. குடியிருப்பை மோதவும் ஆரம்பித்ததே காரணமாம். அதனை, அஞ்சாமல் அடுத்துச் சென்றான் கணைக்காலன்! அதன் துதிக் கையைப் பற்றிப் பிடித்து மத்தகத்தில் ஏறி இருந்துகொண்டு குத்துத் தடியால் அடக்கினான். அமைதி அடைந்தது யானை! விடியுமளவும் அமைதி கொண்டனர் வீரர்! செங்கணானுக்குச் சேரனுடைய யானைப் பயிற்சி உள்ளவாறு விளங்கிற்று. ஆம்! யானைப் படை சிதைப்பதிலேதான் தன் வெற்றி உள்ளது எனக் கொண்டான். மற்றவர்களுக்குக் குதிரைப் போரையும், காலாட் போரையும் விட்டுவிட்டான். எழுந்தது கதிர்! புகுந்தது படை! புதிய உணர்ச்சி! புதிய வேகம்! கூற்றமும் அஞ்சும் கொடுமை! களக்காட்சி கண்ணால் காணமுடியாத அளவுக்குத் துயரத்தின் உறைவிடமாகி விட்டது. எப்படித்தான் இருந்தது? காலையிலே பட்டு வீழ்ந்தவர் இரத்தத்தை மிதித்து உழக்கியது களிறு! மாலையிலே கிளம்பியது புழுதி! என்ன புழுதி! பவழப் புழுதி! இரத்தம் பெருக்கெடுத் தோடியது செங்குளத்திலிருந்து நீர் வடிவது போல! உடைந்த முரசமே மடை! இரத்தமும் மூளைச் சேறும் வழுக்கி விடுகின்றது; விழு கின்றார்கள்; தட்டுத் தடுமாறி எழுகின்றார்கள்! தந்தங்கள் ஊன்று கம்புகளாகப் பயன்படுகின்றன. கருநிறக் காகம் செந்நிறம் கொண்டுவிட்டது. போர்க்களம் தந்த பரிசு அது! மலைகள் இடிந்து கிடப்பது போல் தோன்றியது; மத யானைகளைக் கொன்று குவித்த காட்சி. யானை மீது அம்புகள் நிறையச் சென்று தாக்கி அமைந் தன. குன்றத்திலே குருவிகள் புகுந்து தங்கியது போல! வெட்டப்பட்டன வீரர் கால்கள்! அவை இரத்த வெள்ளத் திலே நகர்ந்தன சுறாமீன்களைப் போல! துதிக்கைகள் வெட்டப்பட்டுப் புரண்டன, இடியுண்ட பாம்பு போல! கொற்றக் குடைமேல் விழுகின்றது அற்ற துதிக்கை, வெண்ணிலாத் தழுவும் பாம்பு போல! வெட்டப்பட்ட துதிக்கையிலிருந்து ஓடுகின்றது குருதி; பவழம் நிறைந்த பை வாய்மூட்டு கிழிந்தது போல! எழுகின்றது கழுகு; வாயிலே இருக்கின்றது தசை; அடித்துப் பறக்கின்றது சிறகை! மத்தளம் அடிப்பவனே ஒப்பாக இருக்கின்றது காட்சி! காற்றிலே தூம் தூம் என்று விழும் பனங்காய் போல வீழ்கின்றது தலை! போர்க்களக் காற்று பேய்க்காற்று அல்லவா! FUâ¡ Fl§fŸ Ãiwªjd fs¤âny; ahid Äâ¤j gŸsnk Fl«!அதில் பெருகிய குருதியே நீர்! கேடயத்தோடு அற்றது கை; பற்றுகிறது நரி! கொண்டது வாயில்! கண்ணாடி காண்பவர்களை நினைவு படுத்துகின்றது அது. கோடைக் காற்றுக்கு ஆற்றாத் தோகை மயில் போல் அலறி ஓடுகின்றனர் மங்கையர். தம் கணவர் இறந்துபட்ட இடம் நோக்கி! நிற்கிறது வேல்; தொங்குகிறது குடல்; இழுக்கிறது ஓநாய்! தூணிலே கட்டப்பட்டுள்ள நாய்க்குச் சரியான ஒப்புமை! களிறு எற்றித் தள்ளுகிறது கொற்றக் குடையை; புரள் கின்றது அது; பசு மிதித்த காளான் போல. உழுகின்றது யானை! மந்திரங் கேட்டு மண்ணில் சாய் கின்றது குதிரை! போர்க்கள மகள் செவ்வாடை உடுத்தி விட்டாள்! செங்கணான் கையிலே வெற்றிக்கொடி! வீரன் கணைக்காலன் கைகளிலே தளை! இதற்கு முன் கணைக்காலன் கவிதைகளிலேதான் தளை களைக் கண்டான். இப்பொழுது கைகளிலே காணுகின்றான், சோழ வீரர் பற்றிச் செல்கின்றனர் சேர வேந்தனை. சேர வீரர்களோ சிதறியோடிப் புலம்புகின்றனர். ஒரே ஒரு எரிமலை மட்டும் புகைந்துகொண்டு நின்றது என்ன இருந்தாலும் உயி ரன்ன மாணவன் அல்லவா! - கொடுமையின் உச்ச நிலையம்தானே கழுமலப் போர்க் களம். கணைக்காலன் வாய் திறக்கவில்லை; வழி நடந்தான். மலை நாடு தெரியும் அளவும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். சோழ நாட்டின் எல்லை வந்தது. ஐயகோ! என்று வெம்பினான். சொந்த நாட்டைவிட்டுப் பகைவன் நாட்டுக்கு அடிமையாகப் போகவோ என்னைப் பெற்றெடுத்தனர்? சேர வீரர்கள் எத்துணைப்பேர் செத்தனர்? அவர்களோடும் நானும் செத்திருக்கக் கூடாதா? என்று ஏங்கினான். நடந்தான்! காவிரி குறுக்கிட்டது, தன் கண்ணீரை வடித்து மேலும் அதனைப் பெருக்கினான். அதன் தண்ணீரை மட்டும் குடிக்க வில்லை! சோழன் தலைநகரம் உறையூர் நெருங்கியது. அதன் மேல் திசையில் இருந்தது கணைக்காலனுக்காகச் சிறைக்கூடம். சேரர் கோமான் சிறைக் கோட்டத்துள் புகுந்தான். அதன் இரும்புக் கதவுகள் மூடப் பெற்றன. அவன் இதயக் கதவு திறந்துகொண்டு குமுறியது! பொய்கையார் சேரனுக்கு ஏற்பட்ட துயர நிலைமையை எண்ணித் துணுக்குற்றார். அவனை எப்படியும் விடுதலை செய்தே ஆகவேண்டும்; சோழன் இயல்பை ஆராய்ந்து கொண்டு பொழுது போக்குவது சரியன்று என்று நினைத்தார், விரைந்து நடந்தார், சோழ நாட்டின் தலைநகரம் நோக்கி! சோழன் புலவர் வருகையை அறிந்தான்; மகிழ்ந்தான். தக்கமுறையில் வரவேற்றான். வாழ்த்துக் கூறினான். புலவர் எதுவும் பேசவில்லை. தன்னுணர்வு அற்றவர் போலவே அரண் மனைக்குள் உலாவினார். சேரனை எங்கேனும் காணக்கூடுமோ என்று ஏங்கினார். ஆனால் குடவாயில் கோட்டச் சிறைக் கூடத்தே இருக்கின்றான் கணைக்காலன் என்பதை அறிந்து பொறுமினார். என் செய்வது? சோழன் புலவருடன் அளவளாவிப் பேச ஆசை கொண்டான். அடுத்தடுத்து நெருங்கினான். நன்முறையில் கவனித்தான் இருப்பினும் புலவர் எண்ணமெல்லாம் அங்கு இல்லை. பணிந்து நின்று புலவர் பெருமானே! உம் வருகைக்காக இது நாள்வரைக் காத்திருந்தேன். ஆனால் கிட்டவில்லை. இன்று வலியவந்தது. தங்கள் திருவாக்கால் நான் பாடப்பெற வேண்டும்! இது என் தாழாத ஆசை. அருள்வீராக என்றான். புலவர், சோழன் பணிவையும் சொல்லையும் அறிந்தார். சிந்தனையைச் சற்று அவன் மேல் திரும்பினார். உன் வேண்டு கோளை நான் நிறைவேற்றினால்? என்றார். தாங்கள் வேண்டுவது எதுவாயினும் அதனை நிறைவேற்றுகின்றேன் என்றான் சோழன். சரி! அப்படியே ஆகட்டும்; பாடுகின்றேன் என்றார் புலவர். என்ன பாடுவது? வெறிகொண்டு களம் புகுந்த காவலர்கள்! மக்கள் மடிவைப்பற்றி மனத்தே சிறிதும் நினைக்காத மன்னர்கள்! இவர்களைப் புகழவேண்டும். வென்றவனுக்குப் புகழ்; தோற்றவ னுக்குப் பழி; இல்லை - இல்லை! பொதுவில் இருவருக்குமே பழி! செத்த மாந்தர்கள் இவ்வேந்தர்களை வாழ்த்துவார்களா? வெட்டப்பட்ட விலங்குகள் வாழ்த்துமா? நாயும், நரியும், காகமும், கழுகும் வாழ்த்துமாறு கொடுமை புரிந்த இவர் களுக்குப் புகழோ உண்டு? பாடுவோம் களவழி. அதனைக் கண்டேனும் இவர்கள் வாழ்வில் கொலைக் கொடுமை அகலாதா? காலனுக்குத் துணை போகும் கயமை தொலையாதா? என்று நினைத்துக்கொண்டு பாடினார் நாற்பது பாட்டு. களவழி நாற்பது என்னும் பெயருடையது அது. பொய்கையார் பாடல் கேட்ட செங்கணான் பூரிப்பு அடைந்தான். அவனுக்கு வேண்டியது பொய்கையார் பாட்டுத் தானே! உட்பொருளைப் பற்றிக் கவலைப்படவில்லை. புலவரே! ÚÉ® nt©LtJ v‹d? என் தனிப்பெரும் மாணவன் - சேரச் செம்மல் - விடுதலை பெற வேண்டும். இதனையே கேட்பீர் என்பதை அறிவேன்! அவ்வாறே விடுதலை செய்தேன். நன்றி மன்னா நன்றி! புலவன் சொல்லுக்காகப் புவியாள் வேந்தன் ஒருவன் விடுதலை பெற்றான் என்ற பெருமையைத் தந்தாய்! நீ நீடு வாழ்க! சோழன் தந்த விடுதலைச் சீட்டுக் கொண்டு குடவாயில் கோட்டத்திற்குப் புறப்பட்டார் பொய்கையார். சிறையிற் கிடந்த சேரமன்னன் உண்ணவும் இல்லை; உறங்கவும் இல்லை. சோர்ந்து விட்டான். நாவறண்டது. அவ னால் நீர்வேட்கையைத் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்தவனாய் வாயில் காவலனை நோக்கித் தண்ணீர் தருக என்றான். அவனும் சற்று காலம் தாழ்த்தித் தண்ணீர் கொணர்ந்து தந்தான். தண்ணீர்க் குவளையைத் தன் கையால் எடுத்தான் சேரன்! தண்ணீர் பேசியது! உணர்ச்சிமிக்க சேரனிடம் தண்ணீர் பேசியது. எப்படி? ஆவிற்கு நீரென்று இரப்பதும் நாவிற்கு இழிவு என்று. சேரன் தலை சுழன்றது. உள்ளம் நடுங்கியது. உடலெல்லாம் ஆட்டம் கொடுத்தது. என்ன கொடுமை செய்துவிட்டேன்! தண்ணீர் தாவென்று இரந்து வாங்கி உண்ணும் வாழ்வும் ஒரு வாழ்வா? ஐயகோ! இப்படி இரந்தும் உயிர் வாழவா என்னை ஈன்றார்கள் என் பெற்றோர். அம்மவோ! கொடுமை! மாபெருங் கொடுமை! உயிர் தந்து, உடல் தந்து, உணவு தந்து காப்பாற்றிய நாட்டுக்காகத் தங்கள் உயிரைத் தந்தார்கள் சேர வீரர். அவர்க ளோடு நானும் என்னருமைத் திருநாட்டுக்காக உயிரை ஈந்திருக்க வேண்டும் போர்க்களத்தே! அது தவறினேன். பகைவர் நாட்டின் எல்லையை மிதிக்கும் போதாவது ஆ! ஆ! கொடுமை! பகைவன் மண்ணிலே அடிமையாய் மிதிக்கவா! முடியாது; முடியவே முடியாது என்று செத்துத் தொலைந் திருக்க வேண்டும். அதையும் விட்டுத் தொலைத்தேன். காவிரி வெள்ளத்தையும் கடந்துவந்தேன் கசடன். இனி இவன் தரும் தண்ணீரை உண்டு தானே உயிர் வாழவேண்டும்? அதுவும் ஒரு வாழ்வா என்று எண்ணி அலையோடு அலையாக உருண்டு தொலைந்திருக்கவேண்டும் பாவி! தவறிவிட்டேன். இச்சிறைக் கோட்டத்தின் இரும்புக் கதவுகளுக்கு இடையே சிக்கிச் சீரழியுமாறு தள்ளப் பெற்றேன். அந் நேரமாவது உணர்ச்சி வந்திருக்க வேண்டும். சேரா! உன் உயிர் என்ன கரும்பா! உன் நாட்டை இழந்து, நம்பியிருந்த மக்களைத் துறந்து, நாய்போல் இழுக்கப் பெற்றுக் கொடு விலங்கு போல் சிறை வைக்கப் பெற்றுள்ளாயே இப் பிழைப்பும் ஒரு பிழைப்பா என்று எண்ணிச் செத்திருக்க வேண்டும். அதுவும் கெட்டேன். ஐயோ! ‘áiw¡fhtynd á¿J j©Ù® jh! என்று என் வாயால் கேட்டேனே! மானம் உண்டோ எனக்கு? மன்னவன் என்ற தன்மானம் உண்டோ எனக்கு? எல்லாம் கெட்டேன். ஆனால் கேட்டு வாங்கிய தண்ணீரைப் பருகிவிடவில்லை. பிழைத்தேன்! நீரே! என் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தண் ணீரே! நன்றி. பொய்கைப் புனிதர் கூறினார். பொய்யா மொழி யாரின் ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இழிவு என்ற உரையை. அது என்னை மானமுடையவனாக ஆக்கிவிட்டது. தக்க சமயத்தில் நினைவு படுத்தி விட்டாய். உன்னை வாழ்த்து கின்றேன். புலவர் பெருமானே! நீர் எங்குள்ளீரோ? எவ்வாறு ஏங்குகின்றீரோ? உம் நிலையை உணர்வினால் இப்பொழுது அறிகின்றேன். இனிமேல் அதுவும் முடியாது! உம் மாணவன் வணக்கம்! சோழ! நீ வாழ்க! நீ இங்கு வருவாய். என்னைக் கண்டு இறுமாப்பு அடையும் ஒன்று கருதியாவது இங்கு வருவாய்! ஆனால் இங்கு வந்தவுடன் நீ என்ன பாடு படுவாய் என்பதை அறிவேன். nrhH!என்ன ஆனாலும் சரி, சேரன் செத்துத் தொலைந்தான் என்று செம்மாந்து திரியமாட்டாய். முட்டி முட்டி அழுவாய்! மோதிக் கொண்டு புரள்வாய்! என் வெறியையும், உன் வெறியின் விளைவையும் எண்ணி எண்ணிப் புண்படுவாய். அறிவேன்; நன்றாக அறிவேன். குழந்தையாகப் பிறந்து இருந்தாலும் சரி, கருவிலேயே செத்து வந்தாலும் சரி, சுட்டெரிக்கும் போது வெட்டத் தவறாத வீர இனம் என் இனம். இவ்வினத்தின் தலைவர்களாகிய என் பெற்றோர் மானமின்றி வாழவோ பெற்றனர் என்னை? சங்கிலியால் பிணைக்கப் பெற்ற நாய் போல இழுபட்டு வரவோ பெற்றனர்? மானமின்றி மாற்றான் சிறைக் கூடத்திலே கிடந்து தண்ணீர் தாவென்று கேட்டு இரந்து வாங்கி உண்ணும் ஈன நிலைமைக்காகவோ பெற்றனர்? நெஞ்சம் கொதிக்கின்றதே நினைத்துவிட்டால்! என் பரம்பரைக்கே இழுக்கு என் வாழ்வு! கணைக்காலன் பாட்டு ஒன்று எழுதினான். நிலத்திலே வீழ்ந்தான்! சுருண்டு கிடந்தான். அதற்குமேல் புரளவே இல்லை! அன்பனைக் காணும் ஆசையுடன் அரசன் ஆணையைக் கொண்டு வந்த பொய்கையார் சிறைக் கோட்டத்தின் வாயிலுக்கு வந்தார். காவலன் கதவைத் திறந்து விட்டான். கதவு, கிரீச் என்னும் ஒலியுடன் திறந்து, ஓ வென்று அலறியது. அது கணைக்காலன் இறந்துவிட்டான் என்று கூவி அழுவது போல் இருந்தது. பொய்கையார் உள்ளே புகுந்தார். சேரன் நிலத்தில் கிடப்பது வேதனை ஊட்டியது. சேரச் செம்மலே! எழுந்திரு. அரச பாரத்தைச் சுமந்து இளைத்த நீ அயர்ந்து உறங்கு கின்றாயோ? கணைக்காலா! கதிர் எழுந்துவிட்டது. இன்னுமா உறக்கம்? மாண்பு மாணவ! எழுந்திரு! மன்னவ! எழுந்திரு! என்று எழுப்பினார். இறந்த சேரன் எழும்புவது எங்கே? புலவர் குனிந்து புரட்டினார்; ஐயகோ! உணர்ச்சி இல்லை சேரனுக்கு. விழுந்தார்; புரண்டார்; எழுந்தார்; விம்மினார்; முட்டினார்; மோதினார்; மார்பிலே தாக்கினார்; திட்டினார்; உளறினார்; ஓங்கித் தலையிலே இடித்தார். துடித்தார்! அந்தோ! அறிவுப் புலவர் அவர் மாணவனுடன் ஒன்றுபட்டுவிட்டார். நான்கு மலர் விழிகள் மூடிக்கிடந்தன! அதற்குமேல் அவை மலரவே இல்லை! சேரமான் கணைக்கால் இரும்பொறை பாடிய பாட்டு. குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளில் தப்பார் தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ் வுலகத் தானே! - புறநானூறு 74. 10. வசை ஒழிய வாழ்ந்த வளவன் கதை பம் பம் பம்என்று சங்கு முழங்கியது. அதனொடு சேர்ந்து முரசமும் மத்தளமும் ஒலித்தன. போர் போர் என்று கூச்சலிட்டுக் கொண்டு வீரர்கள் ஆர்த்தனர். மைந்தரும் மகளிரும் வேறுபாடு அற்று வெறியிலே கிளம்பிப் போர்க்களம் நோக்கினர். தோளிலே கிடந்த துண்டுகளைத் தூக்கி உயர்த்தி எறிந்து பறக்க விட்டுப் பரவசமுற்றனர் வீரக்காளையர். யானைகளின் பிளிறலும், குதிரைகளின் எக்காளமும், வீரர்களின் ஆரவாரமும் கடலலை முழக்கினை விஞ்சின! செவிகள் செவிடுபட்டன! படைக்கருவிகளின் பளபளப்பிலே கண்கள் மயக்க முற்றன. எங்கே? கோழியூர் என்னும் உறையூரிலே! முன்னரே வீரத்திற்குப் பெயர் பெற்ற இடம் கோழியூர். சோழவேந்தன் ஒருவன் யானைமீது சென்றான். அவன் ஏறிச் சென்ற யானையை இடைமறித்தது கோழி ஒன்று! தாவி எழுந்து மத்தகத்தில் ஏறிக்கொண்டது. கூரிய அலகால் குத்திக் குத்தித் தாக்கியது. பட்டத்து யானையும் பரிதவித்தது கோழியின் தாக்குதலுக்கு ஆற்றாது. அடியெடுத்து வைக்கமுடியாத அளவுக்கு அதிர்ச்சிகொண்டது! யானையின் திகைப்பைக் கண்டான் வேந்தன். என்னே! இக்கோழியின் வீரம்! யானையையும் வலிமை இழக்கச் செய்து அடக்கும் இதன் ஆற்றலே ஆற்றல்! இது இக்கோழிக்கு இயல்பான வீரம் அன்று! இம்மண்ணுக்கு அமைந்த வீரம்! இவ் வீரமிக்க மண்ணிலே குடியிருப்பு ஏற்படுத்தினால், இங்கு வாழ்வோர் இணையற்ற வீரராகத் திகழ்வர் என்பதில் ஐயம் இல்லை இப்படி எண்ணினான்! சோழன் எண்ணம் சொல் அளவில் இல்லை; செயல் அளவில் உருவாகியது. குடியிருப்பு ஏற்பட்டது மக்களுக்கு; மன்னவனுக்கு மாடங்களும் மாளிகைகளும் கட்டப்பெற்றன. கோபுரங்களும், கோட்டைகளும் எழுப்பப் பெற்றன. என்ன பெயர் இடுவது ஊருக்கு? கோழியை மறக்கலாமா? வீர மண்ணின் இயல்பை வெளிக்காட்டிய கோழியை மறப் பானா வீரமிக்க சோழன்! கோழியூர் என்று பெயரிட்டான். மக்கள் உறைவதற்குத் தேர்ந்தெடுத்த நல்ல இடமல்லவா அது. அதனால் உறையூர் என்ற பெயரும் ஏற்புடையதுதானே! இக்கோழியூர் மக்கள்தான் போருக்குக் கிளம்பினர். அவர்கள் மண்ணே வீரமண்; ஊர்த் தோற்றமே வீரத்தோற்றம்; வாழ்ந்தவர்களும் வீரக்குடியினர். விழுப்புண் படவேண்டும் போரில், இல்லையேல் வீண் நாள்; வீரமாய்ப் போர் செய்து சாவதே புகழ்ச்சாவு, மற்றெல்லாம் பழிச் சாவு - இத்தகைய உயர் கொள்கை உடையவர்கள்! மன்னவனோ மக்களுக்கு எல்லா விழிகளிலும் முதல்வன். இத்தகைய ஊரினர் போருக்குக் கிளம்பி னால் அது எப்படி இருக்கும்? போருக்குக் கிளம்பியவர்கள் யார் யார்? எல்லோரும் கோழியூரினரே! எங்கேயிருந்தும் பகை இல்லை. அங்கேயே பகை; ஒரே குடும்பத்திலேயே பகை; ஆம்! அழிக்கக் கிளம்பியவர்களும். அழிபட இருந்தவர்களும் அவர் களே தான்! யாருக்கு யார் சளைப்பு? எல்லோரும் இணையான வீரர்கள்! எல்லோருக்கும் ஒப்பான மானம்! பிறகு கேட் பானேன்! போருக்குக் கிளம்பியது ஏன்? கோழியூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் கோப்பெருஞ்சோழன். புகழ் வாய்ந்த சோழர்களுள் அவன் ஒருவன். அவன் உரிய காலத்தே மனைவாழ்க்கையைக் கைக் கொண்டு, மக்களைப் பெற்று மகிழ்ந்தான். மகிழ்ச்சிக்கு உறைவிடமானவர் மக்கள்; தாய் தந்தையரை இன்புறுத்தும் அருஞ்செல்வம் மக்கட் செல்வமே; வீட்டு வாழ்வில் மட்டும் இல்லை, வீட்டுலக வாழ்வுக்குரிய பேரும் புகழும் தருபவர் பிள்ளைகளே என்பது சோழன் கருத்து. மக்கள் ஒருவர் பின் ஒருவராக இருவர் பிறந்தனர். மக்களைக் கண்டு மகிழ்வு கொண்டான் மன்னவன். குழந்தைகள் தவழும் அழகிலே கொள்ளை மகிழ்ச்சி கொண்டான்; மழலை மொழி பேசுவதிலே மனதைப் பறிகொடுத்தான். தத்தித் தாவி நடந்து ஓடும் தனிப் பேரழகிலே தன் வயம் இழந்தான். கைகாட்டி கால்காட்டி, முகங்காட்டி விளையாடும் வனப்பிலே இன்பத்தின் எல்லையனைத்தும் கண்டான். பள்ளிக்கு அனுப்பினானா பிள்ளைகளை? நாட்டின் வேந்தன் வெளியிடத்திற்கு அனுப்புவானா? அரண்மனை தேடிவந்தார் ஆசிரியர்! அடியுண்டா? தடியுண்டா? அன்பு கமழ அருள் ஒழுகப் பாடம் புகட்டினார் ஆசிரியர். வேந்தனது அன்புக்கு உறைவிடமான பிள்ளைகளைக் கண்டிக்கலாமா? தண்டிக்கலாமா? மக்கள் கண்ணிலே நீர் வடிந்தால், மன்னன் கண்ணிலே உதிரமே ஒழுகிவிடும் என்று ஆசிரியர் அறிந்துகொண்ட பின்னரும் அடிப்பரா? நயவழியால் சொல்லிக் கொடுத்தார்; பிள்ளைகளும் படித்தனர். இலக்கியத்தில் படித்திருந்தான் பிள்ளைக் கனி அமுதின் சிறப்பை. அப்படியே அனுபவிக்க ஆரம்பித்து விட்டான். எதற்கும் உரிமை! அவ்வளவும் உரிமை! வரன் முறை அற்ற உரிமை! இவ்வுரிமை என்ன செய்தது? ஆசிரியர் அன்புரையை மறுக்கவும், நல்லுரையை வெறுக்கவும் தூண்டியது. செல்வச் செருக்கைக் கிளறிவிட்டது. சிற்றினச் சேர்க்கையைக் கூட்டியது. தங்களுக்கு நிகரானவர் எவருமே இல்லை; தம் நாட்டில் வாழ்வோர் அனைவரும் தமக்கு அடிமைகளே; எங்கள் கருத்து என்னவோ அதனைச் செய்து முடிக்கவே நாட்டினர் உள்ளனர் என்ற இறுமாப்பை வளர்த்தது. மக்கள் வயதில் வளர்ந்தனர்; செருக்கிலும் வளர்ந்தனர். ஆசிரியர் உரையை மட்டுமல்ல! அறிஞர்கள் உரையையும், தந்தையார் உரையையும் மறுத்து ஒதுக்கும் அளவை அடைந்தது. அரசனுக்கு அப்பொழுதுதான் கவலைப்பற்றியது. எல்லாம் தன் வினை என்பதனை உணர்ந்தான். பிள்ளைப் பருவத்திலே அளவான அன்பு செலுத்தி வளர்த்திருந்தால், அளவான உரிமை கொடுத்துப் பழக்கி இருந்தால் இந்நிலைமை ஏற்படவே ஏற்படாது. செய்துவிட்ட பழியை அனுபவித்துத் தானே ஆகவேண்டும். சிறுவர்கள் இளைஞர் ஆயினர்; இளைஞர் காளையர் ஆயினர். காளைப் பருவத்திலே கட்டுப் பாடு வந்துவிடுமா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? பாவம்! நாட்டின் மன்னவன் வீட்டின் நிலைமையை எண்ணி எண்ணி வேதனை கொண்டான். மக்கள் கொடுமையின் எல்லைக்கோடு நோக்கி நடை போட்டனர். பண்பும், ஒழுக்கமும் இல்லாத இளைஞர், காளையர்களைச் சேர்த்துக் கொண்டனர். அவர்களுக்குப் பணத்தை அள்ளி வீசினர். பணம் பத்தும் செய்யும் அல்லவா! அரச மைந்தருக்கு அவர்கள் நாய்போல் ஏவல் கேட்டு நின்றனர். எத்தீய செயலையும் அப்படி அப்படியே செய்ய ஒப்பினர். கண்ணாடிக்கு முன் நின்று சைகை செய்தால் என்ன செய்யும்? அப்படியே ஆகிவிட்டனர், சிற்றினமும் பேராசையும் கொண்ட சிலர். அரச மைந்தர் பணத்தைத் தொடர்ந்து பறிப்பதற்கு வழிவகை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். அதற்கு வழி என்ன? திருடுவதா? கொள்ளையடிப்பதா? அல்ல, அல்ல! இவ்வழி களைப் பார்க்கிலும் கொள்ளை கொள்ளையாகப் பணம் பறிக்கும் வழிகள்தாம் எத்தனையோ உள்ளனவே. மதியை மயக்கும் மது வகைகள்; சூதாட்ட விளையாட்டுகள், தீய பெண்களின் களியாட்டங்கள் - இவை போதாவா? இவற்றி லெல்லாம் தூண்டிவிட்டனர். சிறியதாக இருக்கும்போதே முட்செடியைக் கிள்ளி எறிய வேண்டும். வளர்ந்துவிட்டால் கையால் கிள்ளமுடியுமா? கருவி தேவை. கருவி இருப்பினும் கைக்கு வலிமையும் தேவை இவ் விரண்டும் இருப்பினும் கூட அது கருவியையோ கையையோ சிதைத்து விட்டாலும் விடும் அல்லவா! என்ன செய்வது? காலத்தே கடமை தவறிவிட்டால்? வேந்தனது செல்வர்கள், செல்வத்தைத் தொலைத்தார்கள். சிறுமைத் தன்மையை வளர்த்தார்கள். பெரியவர் சினத்திற்கு ஆளானார்கள்; சிறியவர்கள் உறவுக்கு அமைந்தார்கள்; பகைத்த பெரியவர்களோ சில பேர்! நெருங்கிய சிறியவர்களோ பல பேர்! பெருமைக் குணம் எப்பொழுதும் பொறுக்கும். சிறுமைக்குணம் முறுக்கும்! திருந்தாமல் இப்படியோ மைந்தர் போய்விடுவார் என்று எண்ணினான் மன்னவன். அப்படியே நம்பினர் பெரியவர். அதன் விளைவு என்ன? மன்னனையே பகைக்கும் அளவுக்கு மாறி விட்டது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது உண்மை; முற்றிலும் உண்மை! ஆனால் அவ்வுண்மை உறுதியாவது எப்பொழுது? இறுதிக் கட்டத்தில்தானே! அது வரைக்கும் பொறாமைக்காரர் பாடு கொண்டாட்டம் தானே! அரசர் எங்களை மதிக்கவில்லை; ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கவில்லை; அவர் மனம் போல் செயலாற்றுகிறார்; எங்களையும் கட்டுப்படுத்தி அடக்கி ஒடுக்கப் பார்க்கிறார். நாங்கள் இன்பமாக வாழ்வது, நண்பர்களுடன் உறவாடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வாழ்வது எங்களுக்காகவே! அவருக்காகவா? உரிமையை இழவோம்! ஒருநாளும் இழவோம்! இது உறுதி இது மன்னவன் மக்களின் மாண்புக் குரல்! ஆமாம்! ஆமாம்! இது ஒத்து ஊதுவோரின் தலை யாட்டச் சொல்! அடிப்படைத் திட்டம் உருவாகியது. என்ன திட்டம்? வேந்தனை ஒழிப்பது; ஆட்சியைப் பறிப்பது. ஆள என்ன திறமை இல்லையா எங்களுக்கு? மீனுக்கு நீச்சலும், குருவிக்குப் பறத்தலும், முயலுக்குத் தாவலும் படித்துக் கொடுத்தோ வரவேண்டும்? பார்த்துக் கொள்கிறோம். ஆள எங்களுக்குத் தெரியும்; வாழவும் எங்களுக்குத் தெரியும். மன்னர் ஆராய்ச்சியை அவரோடு நெருங்கிப் பழகும் புலவர்களிடமே வைத்துக்கொள்ளட்டும் இது ஒருமித்த முடிவு. முடிவுப்படி செயலாற்றத் தொடங்கினர். பதவிக்காகப் பலர் நெருங்கினர்; பணத்திற்காகப் பலர் நாடினர்; சிந்தனை அற்றுச் செருக்கித் திரிந்த வீரர்கள் துணைக்கு நின்றனர். அனைவரும் யாரும் அறியாதவாறு ஓர் இடத்தே கூடினர். மன்னன் மைந்தன் ஒருவன் எழுந்தான். மன்னர் ஆட்சியை ஒப்படைக்கமாட்டார், எங்களையும் உரிமை வாழ்வு வாழ விடமாட்டார். இந் நிலைமையில் என்ன செய்வது? இது எங்களை நோக்கியுள்ள சிக்கல் என்றான். கட்டளை என்ன ஆனாலும் சரி! கண்ணை இமைத்து மூடுமுன் செய்தே முடிப்போம். உங்கள் சோற்றை உண்ட உடல் உங்களுக்கு உழைத்தே தீரும் - இப்படித் துள்ளினான் சிறுமை யின் பெருநிலையிலே நின்ற ஒருவன். ஆமாம் ஆமாம் என்று கூத்தாடினர் அவனை ஒத்தவர்கள்! வீரர்களே! ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அன்புக்குக் கட்டுப்படமாட்டார் அரசர். அறிவுரைக்கும் செவி சாய்க்க மாட்டார். அப்படி ஏலாதவர்களாக நின்று கையேந்தி எங்கள் உரிமைகளைப் பெறவும் விருப்பமில்லை. சந்திக்க வேண்டும் களத்திலே! காட்ட வேண்டும் கைவரிசையை! அந்தக் கிழப்புலி என்னதான் செய்கின்றது என்று பார்க்கலாம் - இது மன்னர் மைந்தருள் மற்றொருவன் திருவாக்கு! ஆம்! ஆம்! அதுவே சரி! துடிக்கிறது உள்ளம்; தோன்று கிறது எழுச்சி; எழுங்கள் எழுங்கள்! செல்லுவோம் உடனே! வெல்லுவோம் பகையை இது வீரர் ஆரவாரக்குரல். ஒவ்வொருவரையும் தழுவித் தந்து இப்படியும் உண்மை வீரர் உலகில் உளரோ; எங்களுக்கு அன்றி எவருக்கே இத்தகைய வீரர் கிடைத்தனர் என்று தனித்தனியே புகழ்ந்து கொண்டனர். எழுந்தது படை! படர்ந்தது தூசி! முழங்கியது குரல்! ஒரே கலகலப்பு. மன்னவனே போருக்கு வா! வீரனே வெளியேறு! அரசனே! ஆட்சி உரிமையை விடு! இப்படி முழங்கிக் கொண்டே அரண்மனையைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது படை. இந்நிலைமையில் என்ன செய்வது? அமைச்சர் ஆன்றோர் உள்ளம் உருகியது. அதன் கடமையை ஆற்ற வேண்டும் அல்லவா! மக்களையும் அவர்களது கூலிப்படைகளையும் வஞ்சத் தலைவர்களையும் அரண்மனைக்குள்ளிருந்தே பலகணி வழி யாகப் பார்த்தான் மன்னன். அவன், மக்கள் முன்னழகையும் பின்னழகையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தது உண்டு. ஆனால் இன்று அந்த அழகு வெறி கொள்ளுமாறு தூண்டுகிறது. இதற்கு இடையிலும் தந்தை மைந்தன் என்ற பற்று தலை காட்டாமலா போய்விடுகின்றது. மைந்தரோடு போர் செய்யவா? குடும்பப் பகைக்காகக் குடிபடைகளைக் கொல்வதா? நாட்டு மக்களை இரு பிரிவு ஆக்கி வேட்டை ஆடவா? இப்படியெல்லாம் கவலைகொண்டான் வேந்தன். ஆனால் அதற்காக, மைந்தர் செய்யும் கொடுமைகளை யெல்லாம் பொறுத்துக் கொள்வதா? போருக்கு வா ஒன்று. பொறுப்பற்று அழைக்கும்போது புறப்படாமல் பதுங்கிக் கொள்வதா? மைந்தர் செயலைத் தட்டிக் கேட்காத மன்னவன் என்ற பழியை ஏற்பதா? கூடவே கூடாது. மைந்தர் ஆனால் என்ன! அரச நெறிக்கு மாறுபட்டுச் சென்றால் அழிக்க வேண்டுவதே கடன். வெளிப் பகையை அழிப்பதைப் பார்க்கிலும் உட்பகையை ஒடுக்குவதே உண்மை வீரன் கடமை. அதில் ஈவு இரக்கம் காட்டி வளரவிட்டுக்கொண்டே இருப்பவன் அறிவு இல்லாதவன். நெருப்பை மடியிலே கட்டிக்கொண்டு எரிக்காது என்று வாய் வேதாந்தம் பேசுபவன் வீணன். வீரர்களே! படை திரளட்டும். சோறளிக்கும் சோழநாட்டுப் பகைவர்கள் வெளியே இல்லை. உள்ளேயே உள்ளனர்! உங்கள் நாட்டுப்பற்றை நாட்டுங்கள்! வீரத்தை வெளிப்படுத்துங்கள்! வீரனுக்குச் சாவு ஒருமுறை! கோழைகளுக்குச் சாவு கோடி முறை! நரிக் கூட்டத்தை ஊளை யிட விட்டுவிட்டு அரிக்கூட்டம் அமைந்து கிடக்குமா? பூனைக் கூட்டம் போருக்கு எழுவதைப் பார்த்துவிட்டுப் புலிக்கூட்டம் ஓய்ந்து கிடக்குமா? எலிப்படை அப்படை! புலிப்படை நம்படை! எழட்டும் போருக்கு! விழட்டும் களப்பலி! பெறுவோம் வெற்றி! உறுவோம் புகழ் திரண்டது படை! சந்தித்தது கோழியூர் வெளியிலே; அலைபோன்ற அணி வகுப்புகள். தந்தை ஒரு பக்கம்; மைந்தர் மற்றொரு பக்கம். நாட்டு மக்களோ இரு பக்கங்களிலும்! என்ன கொடுமை! வீட்டுப்போர் நாட்டுப் போராக வளர்ந்து விட்டது. சூழ்நிலை வளர்த்துவிட்டது. இனிப் போர்க்காற்று அடிக்க வேண்டியதுதான். சூறைக்காற்றிலே பனம் பழம் விழுவது போல வீரர் தலைகள் விழும். எப்பக்கம் விழ்ந்தால் என்ன? சாவது சோழரே! போர் நிகழ்ச்சி அறிஞர்களைத் தட்டி எழுப்பியது. ஆன்றோர்களைத் தூண்டியது. போரை நிறுத்த முனையுங்கள்; முயற்சி செய்யுங்கள் என்றது உள்ளம். புலவர் ஒருவர் துணிந்தார். எழுந்தார்; ஏனையோர் வாழ்த்தி அனுப்பினர், போர் நீக்கப்போன புலவர் பெயர் புல்லாற்றூர் எயிற்றியனார் என்பது. படைக்கடல் இடையே ஓடிவந்தார் புலவர். போர் முழக்கம் செய்துவிட்டு இருவரும் பொர வேண்டிய நேரம். எனினும் புலவரை மதித்து நடக்கும் புரவலனாம் சோழன் புலவர் வருகை கண்டு படை வீரர்களைக் கையமைத்துவிட்டுப் புலவரை வரவேற்றான். புலவர் நடுங்கிய உள்ளத்துடனும் பதை பதைப்புடனும் இருப்பதை அவர் தோற்றம் காட்டியது. வியர்வை வடியும் நெற்றி அவர் வந்த விரைவைப் புலப்படுத்தியது அரசன் கையைப் பற்றிக்கொண்டு களத்திற்கு வெளியே வந்தார். புலவர் வருகையும், அரசர் செலவும் படைகளுக்குத் திகைப்பூட்டின. அரசன் ஆணையை எதிர்நோக்கிக்கொண்டு அமைதியாகினர். எதிர்ப்பக்கத்தில் முழக்கம் மிகுதிப்பட்டது. பதில் முழக்கம் இல்லாமையால் அதனை எதிர்நோக்கிக் கொண்டு நின்றனர். போர்க்கு என ஒரு நெறி உண்டு அல்லவா! அது போர் தொடுக்காது இருக்குமாறு செய்தது. களத்தின் புறத்தே காவலனொடும் நடந்த புலவர் ஒரு தனி இடத்தே நின்றார். வீரமிக்க வேந்தே! என்று அழைத்தார். புலவர் பெருமானே கூறுங்கள் என்றான் சோழன். நீயோ வீரன்; மாபெரும் வீரன்; உன் வீரத்தினை இதற்கு முன் நீ நடத்திய போர்களே அறிவிக்கும்; தாக்கி எழும் போரைக் காணக் காண ஊக்கமுடன் கிளம்பி வெற்றி கண்டவன் நீ! அவ் வெற்றியை உன் கொற்றக் குடையும் காட்டும். வெற்றி வேந்தன் குடைதானே கொற்றக்குடை. மற்றைக் குடையும் குடையா? என்றார். ஆம் ! ஆம்! அது பழைய கதை. இப்பொழுது தாங்கள் அவ்வீரத்தை நினைவுபடுத்துவது? என்று புலவரை மேலும் பேசுமாறு தூண்டினான் சோழன். உனக்குப் பகைவர் முன்பும் உண்டு; இன்னும் உளர். ஆனால் முன்னைய பகைவர்கள் நிலைமை வேறு. இன்று எதிர்த்து நிற்கும் பகைவர்கள் நிலைமை வேறு. உன்னை எதிர்த்து நிற்கும் இப்பகைவர் இருவரும் யாவர்? உன் பழைய பகைவர் போன்று பிறநாட்டவரா? சேர பாண்டியரா? குறுநில மன்னரா? கொள்ளைக் கூட்டத்தினரா? அவர்களை விடு; அவர்களொடு எதிர்த்து நிற்கும் நீயும் தான் அவர்களுக்குப் பகைவனா? வேற்றுக் குடியினனா? பழி வழியே நிற்கும் பரம்பரைப் பகைவனா? இல்லையே! இதோ கேள்! இவர்கள் யார்? உனக்கு என்ன உரிமையர்? இவர்கட்கு நீ என்ன உரிமையினன்! உன் மக்கள் இவர்கள்! இவர்கள் தந்தை நீ! ஆனால் பகைகொண்டு விட்டீர்கள், படைகொண்டும் வந்துவிட்டீர்கள். நீங்கள் பகைத்து நிற்குமாறு காரணம் இருக்கலாம். பலப்பலவாக இருக்கலாம். பகைக் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்கத் தக்க நேரமா இது? அதற்கேற்ற இடமா இது? தீ வைத்தவனைக் கண்டுபிடித்து விட்டுத்தான் தீயை அணைக்க வேண்டும் என்று ஒருவன் சொன்னால் அவனைப் போலும் தீமையாளன் உலகில் உண்டா? எண்ணிப் பார்க்கவேண்டிய காரியங்களைத்தான் எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். பகைக் காரணத்தை எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். இதோ.... ஏற்படவிருக்கும் அழிவை எண்ணிப்பார்! யாருக்கு என்று எண்ணிப்பார்! பழியையும் எண்ணிப்பார்! என்றார் புலவர். புலவரே! வேறு ஏதோவோர் வழிக்குத் தாங்கள் என்னை என்று இழுத்தான் சோழன். கொல்லும் யானைக் கூட்டத்தைக் கொண்ட கொற்றவ! சற்றுச் சிந்தித்துப் பார்! பிறந்தோர் அனைவரும் இறந்துபோவது உறுதி! முடி வேந்தராயினும் பிடி சாம்பல் ஆவது தெளிவு. அவ்வரம்பை யாவரே கடப்பர்? நீயும் கடக்க இயலாதே! அதே நேரம் இன்னொன்றும் கேள்; அரச உரிமை எப்படி இறங்கும்? எவருக்கு இறங்கவேண்டியது பரம்பரை முறை. மைந்தருக்குத் தானே. அரசன் முதுமைக் காலத்தே மூத்தவனுக்கு உரிமை தந்து ஆட்சிக்குத் துணை ஆகிப் பின்னர் அரச பதவியைத் தர வேண்டுமே! நீ பெரும்புகழ் பெற்று ஒரு நாள் வீட்டின்பம் அடையத்தானே செய்வாய்! அன்று நீ விட்டுச் சென்ற அரச உரிமை எவர்க்கே உண்டு? வேறு யாருக்கும் கொடுத்துச் சென்றுவிடுவாயா? உன்னையே பகைத்துக் கொண்டு படைக் களம் வந்த இவர்கள் வேறு எவரும் அரசியல் பொறுப்பேற்றுக் கொண்டு ஆளவிட்டு விடுவரோ? இக் காரியங்களை நான் மட்டுமோ அறிவேன்? நீ என்ன அறியமாட்டாயா? சாதாரண மக்களே அறிய வாய்ப்பு இருக்கும்பொழுது புலமை மிகக் கொண்டு புலவர் தோழனாய் விளங்கும் நீ அறியமாட்டாயா? c‹ kd« ï¥bghGJ ‘òyt® ciu¥gJ rÇjhnd’ v‹W TwÉšiyah? கூறுகின்றது; நன்றாகக் கூறுகின்றது; நானும் உணர்கின்றேன். ஆனால் பயன்! பகையை அழிக்காமல்? சரி சரி! இதைக்கேள். புகழ் மேம்பட்டவன் நீ. பிறர் பழிக்குமாறு செயல் புரியமாட்டாய். புலவன் ஒருவன் போர்க் களம் புகுந்து தடுத்தான் போரை விடுக என்று. அறிவும் பண்பும் அமைந்தவன் என்றே புலவன் அவனிடம் சென்றான். கயமை மிக்க மக்கள் இருவரினும் காவலன் நற்செயல்கேட்டுத் திருந்தக்கூடும் என்ற நம்பிக்கையால்தான் புலவன் தந்தையை நெருங்கினான். ஆனால் மதி நலமும், மன நலமும் வாய்ந்த தந்தையும் புலவன் உரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற பழிக்கு ஆளாகி விடமாட்டாய். அதே பொழுதில் தகுதி யறியாத ஒருவனிடம் போய்ப் புலவன் ஒருவன் பாடி ஏமாற்றத் துடன் திரும்பினான் என்ற பழிக்கு என்னையும் ஆளாக்கி விடமாட்டாய் என்றே கருதுகின்றேன். இஃது இவ்வாறாக, என் சொல்லைக் கேளாமல் போரில் முனைந்து நிற்கிறாய் என்றே நினைத்துக்கொள். வலிமையை யெல்லாம் கூட்டிப் போர் புரிகின்றாய்! தந்தை என்றும் மதிக்காமல் தம் வீரத்தையும் எண்ணிப்பாராமல் எதிர்த்து நிற்கின்றார்களே நீ எடுத்து வளர்த்து இன்புற்ற பிள்ளைகள், இவர்கள் தோற்றுவிடுகின்றார்கள். அப்பொழுது என்ன செய்வாய்? உன் அரசச் செல்வத்தை அவரை விட்டு எவருக்குக் கொடுப்பாய்? எப்படியும் அவருக்குச் சேரத்தானே போகின்றது. அன்றி மற்றொன்றும் உண்டு. நீ வீரன் தான். ஐயப் படுவேன் இல்லை. ஆனால்... ஒரு வேளை. நின்னொடு பகைத்து நிற்கும் மைந்தர்களிடம் தோற்றுவிட்டால்...... நீ அடையும் பழிக்கு அளவும் உண்டோ? உன் வெளிப் பகைவர்களே - இப்பொழுது உன்னை நினைத்துத் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிகின்றார்களே அவர்களே - நிமிர்ந்து செருக்கி நடக்கமாட்டார்களா? சமயத்தை எதிர்நோக்கி நிற்கும் அவர்கள் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா? அப்பொழுது நீ பெறுவது புகழா? பழியா? என்ன சொல்லுகிறாய்? ஐயையோ! கெட்டேன்; புலவரே! nghJ« nghJ«; brhšyhš F¤â¡ F¤â¡ Fil»‹Önu!என்ன செய்வேன்! இக்கட்டான நிலைமையில் மாட்டிக்கொண்டேனே! யாரை நோவ! நாட்டுப் பழியைத் துடைப்பேனா? என் வீட்டுப் பழியைத் துடைப்பேனா? ஐயகோ! கொடிது கொடிது! அறக்கொடுமை இதுதான் போலும்! - இவ்வாறு கலங்கிக் கசிந்து அழுதான் சோழன். சோழ! வருந்திப் பயனில்லை. நீ உண்மையாகவே உணர்வாயானால் போரை ஒழி! இப்பொழுதே போர் வெறியை ஒழி! உன்னை நம்பி வாழும் நாட்டு மக்களை மயங்கவைக்காதே! மடியச் செய்யாதே! உன் காலடி நிழலை நம்பி வந்த மக்களைக் காலன் உலகுக்கு அனுப்பி வைக்காதே. போரை ஒழி! புகழ்வழியை நாடு. மக்கள் விரும்புமாறு மட்டுமல்ல! வானவர்களே உன்னை விருந்தாளியாக வர வேற்கத்தக்க செயல்களைத் தேர்ந்து செய். பழிவழியைச் செய்ய எவராலும் இயலும். புகழ்வழியிலே நடப்பதுதான் அரிது! எல்லோரும் செய்து முடிக்கத்தக்க எளிய காரியங்கள் பெருமை தருமா? பிறரால் செய்தற்கு அரியவற்றைச் செய்து முடிப்பதே பெருமை! செயல் வீரருக்கும் அழகு. புலவன் உரைக்காகப் போரைவிட்டான் புவி காப்பவன்; புகழ் உற்றான் என்னும் பேறு அடை. என்ன கருதுகிறாய்? இனிச் சொல்ல என்ன இருக்கிறது. உங்கள் சொல்லைத் தவறி நடந்து பழிக்கு ஆளாகும் வாழ்வும் வாழ்வா? வெற்றியும் வெற்றியா? என் படைகள் மீளுமாறு ஆணை பிறப்பிக்கின்றேன். அவர்கள் வெற்றி முழக்கம். செய்யத்தான் போகின்றனர். வீரம் உண்டு எனக்கு. அதே நேரம் மானமும் உண்டு. மானத்திற்காக வீரத்தை விடுகின்றேன். புகழ்கிட்டினாலும் சரி; பழி கிட்டி னாலும் சரி; புலமையாளருக்குச் செவிசாய்த்தான்; ஆன்றோர் அறவுரைக்குத் தலை தாழ்த்தினான் என்ற உரை போதும் உற்றபொழுதில் ஓடிவந்து உரைத்த தங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் மன்னவ! நீயே மன்னவன்! மானமிக்க மன்னவன்; என் சொல்லுக்குச் செவி சாய்த்தாய்; அறநெறிக்காகவே ஆட் பட்டாய். உன் கொற்றம் வாழ்க! gh®!உலகில் நிகரிலாப் புகழ் உனக்குண்டு. நீ போரிலே வெற்றி பெற்றாலும் பழியே எஞ்சும்! ஆனால் இன்று உன் பண்பால் பெறும் வெற்றி உலகம் அழி யினும் அழியாப் புகழ் தந்தே தீரும். இது உறுதி! விடை பெறுகின்றார் புலவர்! வேந்தன் விம்முதலுடனே தன் படைகளை ஊருக்குத் திரும்புமாறு கட்டளை இட்டான். தினவு கொண்ட தோள் உடைய வீரர்கள் ஏதேதோ பேசிக் கொண்டு திரும்பினர். எதிர்ப் புறத்தே ஓங்காரம் இட்டது வெற்றி ஒலி. அது வேந்தன் காதுகளையும் துளைத்தது. அது அவன் எதிர் பார்த்ததுதானே! உள்ளம் வெதும்புதலுடன் தலையைக் கீழே போட்டுக் கொண்டு தளர்ச்சியான நடையுடன் அரண்மனைக்குச் சென்றான் வேந்தன். பகைவர்களைக்கண்டு பருத்து எழும்பும் தோள்கள் சோம்பிக் கிடந்தன. கனல் கக்கும் கண்கள் கவலை வடிவாகிக் காட்சியளித்தன. கையிலிருந்த வேலைத் தூக்கி வீசி எறிந்தான் வேந்தன். தலையிலே பொலிந்த மணிமுடி, கழுத்திலே திகழ்ந்த ஆரங்கள், கைக்கு அழகு செய்த கடகம், காலுக்கு அணி செய்த கழல்கள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்தான். பட்டாடையை நீக்கிப் பஞ்சாடை உடுத்தான். அரியணையிலே அமர்ந்து இருக்க விடவில்லை உள்ளம். உந்தித் தள்ளியது வெளியே! நடக்கத் தொடங்கினான் அகன்று விரிந்த ஆறு நோக்கி - கால் பல கொண்டு கழனிகளை வளப்படுத்தும் கன்னித் தாயாம் காவிரி ஆறு நோக்கி. மன்னவன் மனக்குழப்பம் கண்டு மருண்டனர் மாந்தர். எங்கே போகிறார்? ஏன் போகிறார்? என்பது புலப்படாது புலம்பினர். நல்லோர் கூட்டம் மன்னனைப் பின் தொடர்ந்தது. நங்கையரும் நம்பியரும் போட்டியிட்டு முந்தினர். சீறியெழுந்த சிறு தன்மையாளர் தவிர்த்து அனைவரும் பின் சென்றனர். வேந்தன் ஆற்றின் இடையே இருந்த திட்டை ஒன்றிலே வடக்கு நோக்கி உட்கார்ந்தான்! ஆ! ஆ! வேந்தன் வடக்கு இருக்க அல்லவோ வந்துள்ளான் என்று வருந்தினர் உடன் வந்தோர். வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரணத்தால் வெறுப்புக் கொண்டு இறக்கக் கருதியவர்கள் ஓரிடத்தே வடக்குத் திசை நோக்கி உட்கார்ந்து வெப்பமும் குளிரும் பொருட்படுத்தாது அமைந்து, சோறும் நீரும் மறுத்து இறப்பர். இவ்வாறு இருந்து இறப்பதையே வடக்கிருத்தல் என்பர். மானம் கருதிய சோழனும் இவ்வழியே தனக்குத் தகுந்தது என்று தேர்ந்து கொண்டான். வீரன் அல்லனோ அவன்! வேந்தனைத் தொடர்ந்து வந்தவர்கள் பலவாறாய்ப் பேசினர்; வருந்தினர்; அலறினர்; சோர்வில் ஆழ்ந்தனர். சிலர் திடம்கொண்டு வேண்டாம்; வேண்டாம் இச்செயல் என்று தடுத்தனர். ஆனால் கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை சோழன். தடுத்து நின்றவர்கள் தெளியுமாறு எடுத்துரைத்தான். எனக்கு வடக்கிருத்தல் போல் செய்யத் தக்க நல்வினை வேறு ஒன்றும் இல்லை. தெளிந்த அறிவு இல்லாதவர்களே இந் நல்வினை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று ஐயங் கொண்டு அஞ்சிச் சோர்வர். இதனைக் கேளுங்கள்: யானை வேட்டைக்குச் செல்லுகின்றான் ஒருவன். அவ்வேட்டை கிடைத் தற்கு அரியதே. எனினும் யானை வேட்டத்தில் முனைந்து நின்று யானைகொண்டு மீள்கிறான். மற்றொருவன் பறவை வேட்டைக்குச் செல்கின்றான். அவ்வேட்டை மிகவும் எளியது. பேரும் புகழும் தருவதும் இல்லை. எனினும் பறவை கைவரப் பெறாது வறிதே மீளுவது உண்டு. இவற்றை நோக்கினால் புலப்படுவது என்ன? உயர்ந்த நோக்கத்தினர் தம் உயர்ந்த நோக்கம் கைவரப் பெற்றே தீர்கின்றனர்; தாழ்ந்த நோக்கத்தினர் அதனை இழந்துவிட்டு ஏமாற்றம் எய்துகின்றனர். எண்ணத்தைப் பொறுத்தே முடிவு ஏற்படுகின்றது; என்பது புலப்பட வில்லையா? எல்லாவற்றையும் துறந்து வடக்கிருத்தலால் வீட்டின்பம் பெறுவர். அதனினும் விஞ்சியதான என்றும் பிறவாப் பேரின் பமும் பெறுவர். இதில் ஐயமில்லை ஆனால் ஐயங்கொள்வோர் இங்கு உண்டானால் ஒன்று கூறுவேன். இவ்வின்ப நிலைகள் வரினும் வருக. வராது ஒழியினும் ஒழிக. இமயமலையின் உயரம் போன்ற உயர்ந்த புகழை உலகிலே நிலை நிறுத்திவிடுவது உறுதி. இதனைக் கருதியாவது யான் கருதிய நல்வினையைத் தடுக்காது இருக்க என்றான். புழுங்கினவர்களும், புலம்பினவர்களும் வாய் பேசாமல் வாளா இருந்தனர். சோழன் வடக்கிருக்கும் நிகழ்ச்சி நகரெங்கும் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சோழனும் வந்தவர்களைக் கனிவுடன் நோக்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் பொத்தியார் என்னும் புலவர் ஒருவர் வந்தார். அவர் சோழன் உயிர் நண்பன்; சோழனைப் பிரிந்து அறியார். பொத்தில் நண்பின் பொத்தியொடும் கூடி இன்புற்று வாழ்பவன் சோழன். என்பது பிசிராந்தையார் கூறிய உண்மை உரை இத்தகையர் நட்பினை எவ்வாறு அளவிட்டுரைப்பது? உயர் பண்புடையவனும், உயிர்த் தோழனுமான சோழன் வடக்கிருத்தலைக் கண்டு அடக்க முடியாக் கவலைக்கு ஆளானார். அவனை விட்டுப் பிரிந்து வாழ மனம் கொள்ள வில்லை. வேந்தனுடன் வடக்கு நோக்கி உட்கார்ந்தார். கூடியிருந் தோர் திகைத்தனர். என்னே! புலவர் நட்பு; என்னே சோழன் பெருமை என்று புகழ்ந்தனர், சோழன் நன்றாக அறிவான், புலவர் எப்படியும் பிரிந்து வாழமாட்டார் என்று. உறுதியாக வடக்கிருந்து உயிர் விடத்தான் போகின்றார். அதனால் தடுப்பது தக்கது அன்று என்றாலும், அவர் வடக்கிருத்தற்கு உரியகாலம் சிறிது உள்ளது இவ்வாறு உள்ளுணர்வால் அறிந்தான். என் அருமை நண்பரே! உயிர்த் தோழரே! நீவிர் வடக்கிருப்பதைத் தடுப்பேன் அல்லேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள், உம் கடமைகளுள் ஒன்று எஞ்சியுள்ளது. அதனைச் செய்து முடித்து இவ்விடம் வருக! வந்து உம் விருப்பம் போல் செய்க என்றான். என் கடமைகளுள் எஞ்சியிருப்பது யாது? என்றார். பொத்தியார். மாந்தருக்குரிய கடமைகளுள் தலையாயது புதல்வரைப் பெறுதல். அக்கடப்பாட்டை நீர் செய்து முடித்தீர் இல்லை. ஆதலால் கருவுற்றிருக்கும் உம் மனைவியொடும் இன்னும் சின்னாட்கள் இனிதுவாழ்ந்து மைந்தன் ஒருவனைப் பெற் றெடுத்த பின் இங்கு வருக! உமக்கு இங்கே இடம் உண்டு என்றான். சோழன் உயர் நோக்கம்தான் என்னே! மைந்தரொடு பகைத்து நின்று வடக்கிருக்கும் போழ்தும் புதல்வரைப் பெற்று வருக என்று புகலும் இவன் போலும் உயர் குணத்தோனும் உண்டோ? இத்தகையவன் தன் புதல்வர்களைப்பற்றி என்னென்ன மனக்கோட்டைகள் கட்டியிருந்தானோ? எல்லாவற்றையும் பாழ்படுத்தி விட்டனரே பழிகாரர்! பொத்தியார் வேந்தன் கட்டளையை மறுக்கவில்லை. விம்மியபடி எழுந்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களிடம் சோழன் அன்பர்களே என் உயிர் நண்பர் ஆந்தையார் இங்கு வருவார் அவருக்கு ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள் என்றான். ஆந்தையார் வருவது நடக்காத காரியம்; அரசர் வடக் கிருப்பது சோழ நாட்டிலே. ஆந்தையார் குடியிருப்பது பாண்டி நாட்டிலே! இந் நிகழ்ச்சியை எப்படி அறிவார்? அறிவிப்பார்தாம் யார்? எத்துணை நாட்கள் செல்லும்? அப்படியே அறிந்தாலும் உடனே வருவார் என்பது என்ன உறுதி. அவ்வாறே வரினும் வடக்கிருப்பார் என்பது என்ன உண்மை? - இப்படிப் பல வாறாகப் பேசினர் மக்கள். அரசன் பேசினான்: நீங்கள் எண்ணுகிறபடி ஆந்தையார் பாண்டி நாட்டி னர்தான். இதற்குமுன் - நான் ஆண்டுவந்த பொழுது - வராத அவர் இப்பொழுது நான் மாண்டு போகப் போகும் பொழுது - வருவாரா என்ற ஐயம் உங்களுக்கு எழுவது இயல்பே. ஆனால் அவ்வையம் எனக்கு இல்லை. செல்வம் உள்ளபோது என்னை நாடிவராது நின்றார். ஆயினும், யான் அல்லல் உறும் இப் பொழுது நில்லார்; ஓடி வருவார். இவ்வளவும் கூறியும் ஆங்கிருந்தோர் ஐயம் அகலவில்லை. அரசே! ஆந்தையார்மேல் அன்பு மிகக் கொண்டுள்ள உங்கள் பண்பைப் போற்றுகின்றோம். ஆனால் கேள்வி அளவிலே இருப்பதே உங்கள் நட்பு, நீவிரோ அன்றி அவரோ ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததோ பழகியதோ இல்லை. நெருங்கிப் பழகியவர் நட்பே ஆண்டுகள் கழியக் கழிய ஒரு நிலைமையில் நிற்பது இல்லை. இவ்வாறு உலகியல் இருக்க அவர் இந்நிலைமையில் வருவார் என்பதை எப்படி ஏற்பது என்றனர். பேரறிவுடையவர்களும் இப்படி ஆந்தையார் அன்பு பற்றியும், வருகை பற்றியும் ஐயம் கொள்கின்றனரே என்று எண்ணினான். அறிவுமிக்க பெரியோர்களே! உங்கள் ஐயம் ஒழிவீர்களாக! சிறந்த நட்புடைய அவர் என்னை எக்காரணம் கொண்டும் இகழும் இழிபாடுடையவர் அல்லர். இனிய குணங்களை ஒருங்கே உடையர். உயிரொடு பின்னிய உயர் நட்பு உடையர். புகழைத் தொலைத்துவிடுவதான பொய்யை விரும்பாதவர். உம் பெயரென்ன என்று கேட்டோரிடத்து என் பெயர். கோப்பெருஞ்சோழன் என்று கூறும் தன்மையர் இத்தகையரா வராது நிற்பர்? விரைந்து வருவர். அவர் வடக்கிருக்க இடம் ஒன்று வைம்மின்! என்றான். இந்த உரையாடல் நடந்து முடிந்தது. நாட்கள் சில கடந்தன. உண்ணா நோன்பால் அரசன் உயிர் ஒடுங்கியது. இந்நிலையில் வந்துவிட்டார் புலவர் ஆந்தையார். பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த இவர் எப்பொழுதும் சோழன் நினைவாகவே இருந்தார். தன்னாட்டுச் சீரிய வேந்தன் ஒருவன் இருக்க, அவன் மேல் கொண்ட அன்பினும் பன்மடங்கு அன்பு கொண்டிருந்தார் வேற்றுநாட்டு வேந்தன்மேல். பொருள் நலம்கருதிச் சோழனொடு உறவு கொண்டாரோ? அன்று! அப்படி நினைத்திருந்தால் முன்னமே சோழநாடு தேடி வந்திருக்க மாட்டாரா? சோழன் கொடைக் கரங்கள் பொன் மழை பொழியச் செல்வ வெள்ளத்திலே நீந்தியிருக்கமாட்டாரா? அது அவர் விருப்பமன்று. வானிலே பறந்து செல்லும் அன்னப் பறவைகளை அழைத்துத் தென்னங் குமரியிலிருந்து வடதிசை நோக்கிச் செல்லும் அன்னச் சேவலே! அன்னச் சேவலே! உன் பெடையுடன் சோழநாட்டின் தலை நகராம் உறையூர் நெடு மாடத்தே நீ தங்கு! சோழனை எவர் அனுமதியும் இன்றி எளிதில் காண்பாய். கண்டு பிசிராந்தையார்க்கு அடியேன் என்று ஒரே ஒரு சொல் மட்டும் சொல்லு. பிறகு பாரேன்; உன் மனைவியால் சுமக்கமுடியுமா? சோழன் தரும் பொன் அணிகலன்களை? இப்படிக் கூறும் முகத்தால் சோழன் பெயரைச் சொல்லி வாழ்ந்தவர் புலவர் பிசிராந்தையார். சோழன் சொற்போலவே, செல்வக் காலை வராத அவர், அல்லல் காலை வந்தார்! அருமை நண்பன் வடக்கிருப்பதைக் கண்டார். நெஞ்சத்தே நின்ற சோழன் உருவத்தைக் கண்குளிரக் கண்டார். வியப்பு அடைந்தாரா? திகைப்பு அடைந்தாரா? கசிந்து அழுதாரா, கவலைமுகம் காட்டினாரா? எதுவும் இல்லை. அமைதியாக வடக்கு இருந்தார். புலவர் வருகை கண்டு வியந்து நின்ற மக்கள் வடக் கிருந்ததைக் கண்டு திகைப்படைந்தனர். பெருமூச்சுவிட்டு ஏங்கினர். சொல்லி வைத்துச் செய்தாலும் இப்படி நடக்காதே! எல்லோர் வாழ்விலும் நடக்கக்கூடியதா? நட்புக்கு ஒருவர் என்றால் இவர்களேதான்! கோப்பெருஞ் சோழனுக்குப் பிசிராந்தையார்! பிசிராந்தையார்க்குக் கோப்பெருஞ் சோழன். தொட்டுப் பழகும் புணர்ச்சி நட்பு வேண்டாம். உரையாடிப் பழகும் பழக்க நட்பே வேண்டும் என்ற வள்ளுவனுக்கு வீடு தோறும் பொற்சிலை எடுத்துப் போற்றலாமே! சோழனொடு ஒருங்கிருந்த ஆந்தையாரைக் கண்டார் பொத்தியார். சிந்தனையிலே ஆழ்ந்தார். அச்சிந்தனைக்கரு அரிய கவிதை மணி ஒன்றினை ஈன்றது. எவ்வளவு பெரிய பதவி? சோழவள நாட்டின் வேந்தன் என்னும் பதவி என்ன சிறியதா? இத்தகைய பெரும் பதவியிருந்தும் வடக்கிருக்கத் துணிந்த வேந்தனை நினைக்கும்பொழுது வியப்பாக உள்ளது. அதனினும் வியப்பாக உள்ளது மற்றொன்று. வேற்று நாட்டிலே வாழ்ந்த ஒருவன் இதற்கு முன் கேட்டலின்றிக் கண்டறியாத ஒருவன் கேள்வியே வழியாக, நட்பே துணையாக இத்துன்பப் பொழுதிலே இங்கு வந்தது. இவற்றுள் எதனை வியப்பது? ஒன்றை ஒன்று விஞ்சும் வியப்பு அல்லவோ? என் நண்பன் ஆந்தை இவண் வருவார் என்ற அரசனுடைய பெருமையின் அளவைச் சொல்வேனா? அல்லாமல் அரசன் உரை பொய்யாகாமல் வந்த ஆந்தைப் புலவனின் அறிவின் முதிர்வைச் சொல்வேனா? இவற்றை நினைக்க நினைக்க வியப்பு அளவின்றி வளர்கின்றதே! தன் ஆட்சிக்கு உட்படாததும் அயலான் ஆட்சிக்கு உட்பட்டதுமான ஒரு நாட்டின் சிற்றூரிலே வாழ்ந்த இப் பெரியோனது நன்னெஞ்சத்தைக் கவர்ந்து கொண்ட பழமைப் பட்ட இப்புகழாளன் வாழ்வானாக! இவனை இழந்து விட்டதே உலகம்! அரியவனாம் இவனை இழந்த உலகம் இனி உய்யுமா? அந்தோ! இனி அதன் நிலைமை வருந்தத்தக்கதே. பொத்தியார் புலம்பல் ஆந்தையாரைச் சிறிதும் தாக்க வில்லை. அவர்தான் தன்னை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு உட்கார்ந்துவிட்டாரே! புற நிகழ்ச்சி பற்றி ஏன் கவலைப் படுகின்றார்? ஆனால் பொத்தியார் உரை கேட்டு அருகில் நின்ற பலர் அழுது ஏங்கினர். அவர்களுள் கருவூர் பூத நாதனார் என்பவரும், கண்ணகனார் என்பவரும் முக்கியமானவர் ஆவர். புலவர் பூத நாதனார் சோழனை அடுத்துச் சென்று அழைத்தார். அவன் பேசும் நிலைமையில் இல்லை. தன் சொல் அவன் காதில் விழுமா என்பதே ஐயமாகிவிட்டது. நாடித்துடிப்பு ஒடுங்கும் பொழுது அது. சோழன் வாயினின்றும் ஒரு சொல் லேனும் பெற்றுவிட ஆசை கொண்டார் புலவர். பெற முடியாது என்பதை அறிந்த அவர் கண்கள் குளங்கள் ஆயின. தன்னை நொந்துகொண்டு புலம்பினார். பொத்தியார்க்கு இடம் ஒதுக்கியதையும், ஆந்தையார்க்கு இடம் தந்ததையும், இன்னும் சிலர் உடன் வடக்கு இருந்ததையும் நோக்கித் தனக்கு அப்பேறு வாய்க்காது போயிற்றே என்று விழுந்து அழுதார். ஆற்றின் இடையே அமர்ந்து உடம்பை வாட்டும் உரம் மிக்கவனே சான்றோர் பலர்க்கு இடம் தந்த நீ என்னையும் ஏன் உன்னுடன் சேர்த்துக் கொள்ளாது வெறுத்து ஒதுக்குகின்றாய்! நான் பிந்தி வந்தேன் என்பது காரணமா? ஐயகோ! வாழ்வுப் பயனை இழந்தேன்! என்று கூறி வருந்தினார். சோழனை எப்படிப் புகழ்வது? எத்தனை பேர் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு இறக்க விழைகின்றனர். இறக்கின்றனர் எவர் இறந்தாலும் இப்படியா நடக்கின்றது? பிறர் கண்ணீர் விட்டு அழுது வருந்தும் அளவுக்குச் சாவும் சாவு எவராலும் மேலும் மேலும் விரும்பத் தக்கது என்றார் வள்ளுவர். பிறர் அழுமாறு சாவும் சாவே புகழ்ச் சாவு ஆகும்போது இச்சாவு எவ்வகையைச் சேர்ந்தது? நிகழ்ந்தவற்றை இடைவிடாமல் கண்ட கண்ணகனார் கலங்கினார். கண்ணீர் அவர் மார்பை நனைத்தது. நா தள தளத்தது. நாடி விரைந்து துடித்தது. சாவிலே இவர்கள் ஒன்று பட்டது. எப்படி என்று எண்ணினார். ஒரு மாலை நினைவுக்கு வந்தது. பூமாலை அன்று! பொன்னும் பவழமும் முத்தும் மணியும் தொடுக்கப் பெற்ற மாலை. அதன் நினைவால் பாமாலை ஒன்று தொடுக்கத் தொடங்கினார். நிலத்திலே கிடைப்பது பொன்; நீரிலே கிடைப்பது பவழம், முத்து! மலையிலே கிடைப்பது மணி! எங்கெங்கு கிடைக்கின்றன. பிறக்கும் இடத்தால் தொடர்பு உண்டா? எடுத்துச் சேர்க்கும் வழியாலும் இயைபு உண்டா? எதுவும் இல்லை. இருப்பினும் எப்படி ஒன்று சேர்ந்தன. எப்படி ஓரிடத்தே சேர்ந்து ஒளிமயமாக இலங்குகின்றன. இதுபோலத்தான் நற்குணம் உடையோர் நற்குணம் உடையோரைச் சேர்கின்றனர். தீக்குணம் உடையோர் தீக்குணம் உடையோரைத் தேடிப்பிடித்துக் கூடுகின்றனர், - இது கண்ணகனார் குறித்த மாலையின் கருத்து! பொன் கொழிக்கும் பொய்யாக் காவிரி நாட்டுக் காவலனும், முத்துக் கொழிக்கும் முதுகடல் பாண்டி நாட்டுப் பாவலனைப் போல் எவரே இந் நட்பு மாலைக்கு இணையிட்டுப் பேசத் தக்கார்? புதல்வனைப் பெற்றபின் வருக என்று தடை மொழிக்கு ஆளான பொத்தியாரால் சோழனைப் பிரிய முடியவில்லை. கன்றினை விட்டுப் பிரியமாட்டாத கறவை போலத் துடித்தார். ஆற்றிலேயே அரற்றிக் கிடந்தார். பொத்தில் நண்பிற் பொத்தி யாற் (குற்றமற்ற நட்புடைய பொத்தியார்) அல்லரோ அவர்! சோழன் ஒருநாள் தன் ஊனுடலை ஒழித்து விட்டான். அந்தோ! புகழே வடிவான அவன் இறந்தது குறித்து எழுந்த அழுகை! பாடுவோர் ஒரு பக்கம்; ஆடுவோர் ஒரு பக்கம்; அறவோர் ஒரு பக்கம்; சான்றோர் ஒரு பக்கம். ஐயோ! நீர் வெள்ளத்தை விஞ்சி நின்றது மக்கள் வெள்ளம்! வெள்ள நீரை மேலும் பெருகச் செய்தது கண்ணீர் வெள்ளம்! அந்திவானம் சிவப்பது போல முகங்கள் சிவந்தன! சோழன் உடலுக்குச் செய்யும் சிறப்புக்கள் யாவும் செய்யப் பட்டன. அவன் வடக்கிருந்து இறந்த இடத்தே அவன் சீரும் சிறப்பும் விளக்கும் நடுகல் ஊன்றப் பெற்றது. உடன் இறந் தோர்க்கும் கல் நாட்டப் பெற்றது. ஆம்! பண்பினால் மனித நிலை கடந்த உயர்நிலை எய்தினர்! பொத்தியார் அழுவதைவிட்டு வெகுளிக்கு ஆட்பட்டார். ஆ! கூற்றுவனே! கொடியாய் நீ! யாரைக் கொண்டு சென்றாய்! உலகம் வாழ வாழ்ந்த ஒருவனையா கொண்டு செல்வது? அறிவில்லாத கூற்றுவனே ஒழிக! புலவர்களே வாருங்கள்; ஒன்றுகூடி வாருங்கள். பொல்லாத செயல் புரிந்த கூற்றுவனைக் கூடி வைவோம் என்று வாயைக் கடித்துக்கொண்டு அறை கூவினார். எவர் என்ன சொன்னாலும் மாண்ட மன்னவன் மீள்வானா? அனைவரும் அமைதியாக உறையூர் போயினர், பொத்தியாரும் போனார். பொத்தியாரால் உறையூரில் அமைதியாக இருக்க இயல வில்லை. எங்கெங்குச் சென்றாலும் அங்கங்கெல்லாம் சோழன் நினைவும் உருவுமே காணப்பெற்றன. ஒருநாள் உறையூர் மன்றத்தைக் கண்டார். அம் மன்றத்தே சிங்கம்போல அமர்ந் திருப்பான் சோழன்; அவன் பக்கத்தே அமர்ந்திருப்பார் புலவர் பொத்தியார். கலை நிகழ்ச்சிகள் குறைவற நடைபெறும். நீதி வேண்டி வருவோரும். பொருள் நாடி வருவோரும் பார்க்க வேண்டியே வருவோரும் பலர் பலர்! அக்காட்சிகள் அனைத்தும் புலவர் மனக் கண்களுக்குப் புலனாயின. அவை சோழனை முன்னிறுத்திக் காட்டி வருந்தச் செய்தன. மன்றத்தைக் கண்டு அழுதார் - அன்பாய் வளர்த்த யானையை இழந்துவிட்டு அதன் கூடத்தைக் கண்டு அழும் பாகன்போல் அழுதார்! ஒரு வயல்; யானையின் உணவுக்கென்றே உரிய வயல். அதில் நெல் விதைத்து விளையச் செய்திருக்கிறது. அதன் பாகனோ நெல்லை அறுத்துப் பக்குவமாகச் சோறாக்கிக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்குத் தருகின்றான். அப்படி ஒருநாள் இரு நாட்கள் அல்ல! பல்லாண்டுகளாக! யானை உருவால் பெருத்து விட்டது. அதேபோல் அன்பாலும் பெருத்து விட்டது. பாகன் பேரன்புக்கு எல்லா வழிகளிலும் கட்டுப்பட்டுக் கிடந்தது. பாகனும் யானையின் குணத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் பூரித்தான். ஆனால் ...... அந்தோ..... ஒருநாள் யானை இறந்து விட்டது கூட்டத்தை விட்டும் அப்புறப்படுத்தப் பட்டுவிட்டது. யானைக் கூடம் ஆரவாரம் இழந்தது; கட்டுத் தறியும் பொலிவு இழந்தது. யானையை புதைத்துவிட்டு மீண்ட பாகன் யானைக் கூடத்தையும் கட்டுத் தறியையும் காணுகின்றான். அவன் நிலைமை எப்படியிருக்கும்? இந் நிலைமையில் இருந்தார் பொத்தியார் அன்பும் நண்பும் கொடிது! அம்மவோ எவ்வளவு கொடிது. பொத்தியாரை அமைந்திருக்க விட்டதா? எப்படியோ வாழ்ந்தார் பொத்தியார். மைந்தன் பிறந்தான். மகிழ்ச்சி கொண்டார். மகிழ்வுக்குக் காரணங்கள் இரண்டு. சோழன் உரை பொய்யாகவில்லை என்பது ஒன்று; தன் ஆசை மெய்யாகும் காலம் வந்துவிட்டது என்பது மற்றொன்று, புதல்வன் முகத்தைக் கண்டு மகிழ்ச்சி தாழாத பொத்தியார் சோழன் நடுகல் முன் நின்றார். இதற்கு முன்னெல்லாம், சோழன் வடக்கிருத்தலையும் நடுகல்லானதையும் பார்த்துக் கவலை கொண்டார், ஆனால் இன்றோ பூத்த மலர் போல இருந்தார் பொத்தியார். பிள்ளை பெற்றுவிட்டு இவ்விடம் வருக என்று என்னைத் தடுத்து நிறுத்திய அன்பில்லாதவனே! இதோ.... வந்துள்ளேன். எனக்கென எவ்விடத்தை ஒதுக்கி வைத்துள்ளாய் கூறு என்று கேட்டார். தம் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையிலே ஆழ்ந்தார். சோழன் உருவம் மனக்கண்ணில் தோன்றியது. ஏதோ ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் உணர்ந்தார். அவ் விடத்தே உட்கார்ந்தார். அப்பொழுது அவர் அடைந்த வியப்புக்கு அளவு இல்லை! உடம்பும் உயிரும் இணைந்தது போன்ற உயரிய நட் புடையவர்கள் எந்நிலைமை அடைந்தால்தான் என்ன? தம் பழைய நட்பினை மறப்பரோ? ஆண்ட பெருமகன் மாண்டு கல்லானான். எனினும் இடங் கொடுத்து உதவினான். பழமை யான நட்புடையாரிடம் சென்றால் எது தான் கிட்டாது என்று சோழனே நினைவாக உயிர் நீத்தார் பொத்தியார்! அம்மம்ம! சோழன் கொண்ட சிறப்புத்தான் என்னே! அவனொடும் வடக்கிருந்து உயிர் நீத்தவர்கள் எத்தகையர்? மாண்புமிக்க மனைவி - அத்தன்மைமிக்க மக்கள் - கருத்தறிந்து ஏவல் செய்யும் பணியாள் - உயர்ந்தோர், சான்றோர் வாழும் ஊர் - செங்கோல் தவறா மன்னன் - இத்தகையவர்களை ஒருங்கே கொண்டு இனிது வாழ்ந்த பிசிராந்தையார்! நிழல் அகன்றாலும் அகலலாம்; அந்நிழலினும் பிரியாத பேரன்புடைய இளம் மனைவி - குடிக்கு ஒருவனாய் அன்று பிறந்த அருமை மைந்தன் - இவர்களை உடைய பொத்தியார்! இவர்கள் வடக்கிருக்கத் துணிந்தது ஏன்? இதுஅல்லவோ உயிர் நட்பு! 11. வீரமங்கையின் வெற்றிக்கதை வானத்தைத் தொடுமாறு வளர்ந்து நின்ற மலை அது. அதன் உயரம் போலவே பொருள் வளங்களும் பொலிந்து விளங்கின. அகில், தேக்கு, வேங்கை, கோங்கு, சந்தனம், குங்குமம் இன்ன மரங்கள் செறிந்து ஓங்கி நிற்கும் காட்சி தனிப்பேரழகு.! மேகம் மலைமுகடுகளிலே மோதுவதும், மரங்களை உராய்வதும் கொள்ளை வனப்பு! விதவிதமான கொடிகள் சுற்றிப்படர்ந்து மரங்களைப் பற்றி நிற்கும் நிலைமையோ ஒருமித்த அன்பர்கள் உள்ளத்திற்குத் தக்க எடுத்துக்காட்டு! பளிங்கினை உருக்கி விட்டாற்போன்று ஒழுகும் அருவி யினை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அருவியின் இடையே புகுந்து மென்காற்று விளையாட சிதறி விழும் மெல்லிய தூவல் அடடா! நுகர வேண்டிய ஒன்று. பகலெல்லாம் இலைகளிலே நடனமிடும் கதிரொளியின் அழகை எந்த ஓவியன் எழுத வல்லான். வெண்ணிலவு பொழியும் இரவுப் பொழுது வந்துவிட்டதா, தண்ணிழல் அனைத்துமே புலிக் கூட்டம்! ஆம்! நிலவின் ஒளியிலே நிழல்கள் அனைத்தும் புலியாகிவிடுகின்றன. அதனை என்ன மலை என்பது? வேங்கை மலை அது. வேங்கை மலையின் அடிவாரத்திலே வளமிக்க ஒரு தினைக் கொல்லை. உழாமலே - உழுகருவியோ, உழுபவர்களோ இல்லாமலே - உழவான இடம். எளிய உழவா? ஆழமான உழவு! பக்குவமான உழவு. ஆம்; கிழங்குகளைத் தோண்டி உண்பதற் காகப் பன்றிகள் உழுத உழவு! பருவத்தில் விதை போட்டனர். அவ்வளவே. மழையி லேயே விளைந்துவிட்டது. எங்கு நோக்கினும் குதிரை வால் களைப் போலத் தினைக் கதிர்கள்; யானைத் தலையசைவு போன்ற அசைவு; காற்றெனும் பாம்பாட்டி தினைப்பயிராம் பாம்புகளை நெளித்து ஆட்டுவது கொடுமையாக இருந்தாலும் கலைக்கொள்ளைதான்! தினைக் கொல்லையை உழுவதிலே - விதைப்பதிலே - விளைய வைப்பதிலே - படாத கவலையெல்லாம் கதிர் முற்றிய போது காப்பதிலே போதும் போதும் என்று ஆகிவிடும். எத்தனை எத்தனை பறவைகள்? எத்தனை எத்தனை விலங்குகள்? ஆனால் காட்டுக் காவலா? அது எனக்குக் களிப்பு விளையாட்டு என்று கூறும் வீரமங்கை இருக்கும்போது வேங்கை மறவனுக்குக் கவலையுண்டா? வேங்கைமறவன் வேங்கைமலையின் அடிவாரத்தில் இருந்த தினைக்காட்டுக்கு உரியவன். அவன் மகள்தான் வீர மங்கை. பெயருக்கு ஏற்றாற்போலவே அவள் வீரமங்கையாகவே இருந்தாள். அச்சம் என்ற ஒரு பொருளை அவள் கற்பனை செய்துதான் கண்டு கொண்டிருக்கக் கூடும். அப்படி ஒன்று இருப்பதாகவே அறியாமல் வளர்ந்துவிட்டாள். வேங்கை மறவனும் அவளை அவ்வாறு வளர்த்தும் விட்டான். தினைக்கொல்லையின் உயரமான ஓர் இடத்திலே ஒரு பரண்! காடு முழுவதையும் அங்கிருந்தே கண்டுகொள்ளலாம். மலையடிவாரத்திலே தூணுக்கும் கம்புக்குமா பஞ்சம்? உயர மான வலிய கம்புகளால் அமைந்த பரணிற்கு ஏணியும் உண்டு. ஏணிக்குப் படிகள் தான் ஆறே ஒழிய, வீரமங்கை ஏறும்பொழுது அதற்கு மூன்று படிகள். இறங்கும் பொழுது இரண்டே படிகள். வேங்கைமறவன் என்றோ ஒரு நாள் பகற் பொழுதில் தினைக்கொல்லைப் பக்கம் வருவான் போவான். பெரும்பாலும் வருவதே இல்லை ஏனப்பா! eh‹ v‹d mÊa É£L ÉLntdh? இக்காவலுக்கு நீங்களுமா வரவேண்டும்? என்பாள். அப்படி ஒன்றும் இல்லை; உன்னை நான் அறியமாட்டேனா என்ன! பயிரைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்றுதான் வந்தேன்; வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான். காலையிலே வருபவள் கதிர் மறையும் வரை காத்துக் கொண்டே இருப்பாள். ஊரைவிட்டுத் தீப்பந்தம் புறப்பட்டு விட்டால் சரி பரணைவிட்டுக் கீழே இறங்குவாள். ஏனென்றால் இரவுக்காவல் வேங்கைமறவன் பொறுப்பு. ஒரு நாள் மாலைப் பொழுது, மஞ்சள் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. தினைக் கதிரின் நிறத்திற்கும் வெயிலின் நிறத்திற்கும் வேறுபாடு இல்லை. ஆனால் ஒரு சலசலப்பு; பயிர் நெளிவல்ல அது; ஆ! ஆ! தீப்பந்தம் போன்ற கண்கள்! அச்சமற்ற நடை! ஆணவக் குரல்; புலி - புலியேதான்! பரண்மீது இருந்த புலி பாய்ந்து இறங்கியது. புள்ளிமான் போல் துள்ளி ஓடியது பூனைக்குட்டியின் கால்களைப் பிடிப்பது போல் பிடித்தது. போர்; கடும்போர்; மங்கைப் புலிக்கும் மறப்புலிக்கும் தாழாப்போர்; வலசாரி இடசாரிப் பாய்ச்சல்; தாவுதல்; தாக்குதல்; மோதுதல் எல்லாம். எத்தகைய குறைவும் இல்லாப்போர்; கொடுத்து வைக்க வேண்டும் பார்க்க! வென்றது எது? மறப்புலிபட்ட பாட்டையும், இழு பறியையும் அதுதானே அறிந்திருக்கும். தாடையிலே குத்தித் தரையிலே உருட்டிவிட்டு வெற்றிக் களிப்பிலே ஒரே தாண்டில் ஏறிக் கொண்டாள் பரண்மீது. பிறகும் வெற்றி யாருக்கென்று சொல்லவேண்டுமா? பரணில் ஏறிக்கொண்ட பின்தான் பார்த்தாள். தான் ஏணி வழி ஏறி வரவில்லை என்று மறப்புலியைத் தாக்க மங்கைப் புலிபோன துடிப்பைப் பார்த்துவிட்டுப் பரணின் கீழே கூர்ந்து நோக்கிக் கொண்டு நின்றான் வரிப்புலி. இமைத்த கண் மூடாமல் நோக்கிக்கொண்டே நின்ற அவன் தன்னை மறந்துவிட்டான். வளைந்து குனிந்து நின்ற தான் தான் ஏணியாக இருந்தது என்பதை அவனே அறிந்துகொள்ள முடியாத போது வீரமங்கை அறியாமல் இருந்ததில் வியப்பு இல்லைதானே! அவள் அறிந்து கொண்ட பின்னர் - பாவம்! - செவ்வானம் போல முகம் நாணத்தால் சிவந்துவிட்டது. வரிப்புலி பரணைவிட்டு நடந்தான். எப்படி? அடி ஒன்று வைக்க அரை நாழிகை தேவைப் படும்போல் இருந்தது. ஒரு பார்வை மறப்புலி மீது! மற்றொரு பார்வை மங்கைப்புலி மீது! என்ன செய்வான் சிறிது தொலைவு மனமில்லாமலே நடந்தான். இனிய இசைக்குரல் ஒன்று தென்றலிலே மிதந்து வந்தது. அது இசையா? இன்ப வெள்ளம்; தேன்மாரி; தெய்வக் கனிச் சாறு. ஆ! ஆ! வரிப்புலி மேலும் நடந்தானா? நடந்தான். திரும்பியபடியே பரணுக்கு! மங்கைப் புலி பரணிலே; வரிப்புலி பரணின் கீழே; ஆனால் போர் இல்லை! அமைதி குடி கொண்டது! ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் நோக்கினர். தலை நிமிரும் ஒரு பக்கம்; தலை தாழும் மற்றொரு பக்கம். தெய்வ அன்பு புகுந்து விட்டது. பேச்சும் வேண்டுமா? வருந்திப் பிரிந்தான்; பழைய தொலைவு கூடப் போக வில்லை. புலி புலி என்று ஒரு குரல் எழுந்தது. அது வீரமங்கை குரல்தான். கால் பிடர்பட ஓடிவந்தான் வரிப்புலி. கொல் என்று சிரித்தாள் வீரமங்கை! ஏன் சிரிக்கிறாய்? என்றான் வரிப்புலி. புலிக்குப் பயந்தா உன்னை அழைத்தேன்; புலி வந்தால் அதனைச் சாய்க்க நான் போதாதா என்ன! நீ புலியைப் பார்த்துப் போ என்று சொல்வதற்குத்தான் என்றாள். ஊரின் பக்கம் தீப்பந்தம் தெரிந்தது. தொட்டாலும் கூட மங்கையை வெதுப்பாத பந்தம் தொலைவிலிருந்தே வெதுப்பத் தொடங்கியது. நாளைக்கும் காவல் நீதானே என்றான் வரிப்புலி. இவ்வழிதானே உன் பாதை என்றாள் மங்கை, பந்தம் நெருங்கிவிட்டது. மறுநாள் பறவைக் கூட்டத்திற்குக் கொண்டாட்டமாகி விட்டது! ஏன்? மங்கை காவலுக்கு வரவில்லையா? வந்திருந்தாள். ஆனால் அவள் பார்வையெல்லாம் பாதையிலேயே இருந்தது. பறவை தினைக் கதிரைக் கொத்துவதைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. வரிப்புலியும் வந்துவிட்டான். பரணை அடுத்து வந்ததும் திகைத்து நின்றான் வரிப்புலி. யானை ஒன்று தினைக்காட்டை அழித்துக்கொண்டு இருந்தது. யானை யானை என்று கூச்சலிட்டான். யானையா? இதோ வருகிறேன் என்றாள் மங்கை. இரு இரு! அங்கேயே இரு; இன்றையப் போர் என்னைச் சேர்ந்தது என்றான் வரிப்புலி. வெறிமிக்க யானைதான் அது. வரிப்புலி தன் வலுவை யெல்லாம் ஒன்று சேர்த்துத் துதிக்கையைப் பிடித்தான். துதிக்கை நுனியைப் பெரு விரலையும் ஆள் காட்டிவிரலையும் கொண்டு அழுத்தினான். அந்தோ! வெறிகொண்ட யானையும் வீர் வீர் என்று கதறியது. நிற்கவிடாது துதிக்கையைப் பிடித்துக்கொண்டு யானையைப் பம்பரம் போல் சுழற்றினான். யானை திமிரித் திமிரிப் பார்த்தது. துதிக்கையால் வளைக்கவும், கால்களால் மிதிக்கவும், உடலால் அழுத்தவும் முனைந்தது. வரிப்புலியோ சிக்கிக்கொள்ளவில்லை. யானையை ஓலமிடச் செய்து கொண்டிருந்தான்; வலிய யானையும் சோர்ந்தது. புலி, பால்நிறத் தந்தத்தைப் பற்றிக்கொண்டு யானை முதுகின் மீது ஏறிக்கொண்டான். பரணுக்கும் உயரமாக யானை மேல் உட்கார்ந்திருந்தான். கதிரோன் மலைமீது இருந்தான். அதனைச் சுட்டிக் காட்டினாள் மங்கை. சிறிது தொலைவு செலுத்திக் கொண்டே போய் யானையை வெருட்டிவிட்டு வந்தான் வரிப்புலி. நான் புலியைக் கொன்றேன்; நீயோ யானையைக் கொல்ல வில்லை! யார் வீரம் சிறந்தது? கைகொட்டிச் சிரித்தாள் வீரமங்கை. இழிவு; இரு கைகளுடைய நான், ஒரு கையுடைய யானையைக் கொல்வதோ ஆண்மை? அது கோழையின் செயல் என்றான் வரிப்புலி. மூச்சு நின்றுவிடும்போல் இருந்தது மங்கைக்கு . மானவீரம் வாழ்க என்றாள். கண்ணை இமைத்து இமைத்து மூடிக் கொள்வது போலக் காற்றின் சுழற்சியிலே தெரிந்தது தீப்பந்தம். இப்பந்தத்திற்கு விடிவு வராதா? என்று ஏங்கிக் கொண்டே விடை தந்தாள் மங்கை.. நாள்கள் சில கடந்தன. வீரமங்கை! தினைக் கதிர் முற்றி விட்டதால் நாளைக்குக் கதிரைக் கொய்துவிடுவோம். உனக்குக் காவல் தொல்லை இல்லை என்றான் வேங்கைமறவன். காவல் நாளையோடு சரியா அப்பா - ஏக்கத்தோடு கேட்டாள் மங்கை. ஏன்? என்றான் மறவன். வேறொன்றும் இல்லை; பரண் இருக்கிறதே. அதனை விட்டு விட்டு என்று முடிக்காமல் நிறுத்தினாள். ஓ ஓ! பரணுக்கு வேறு காவலா? நன்றாக இருக்கிறது; பரணைத்தான் பிரித்துவிடுவேனே என்றான். பரணைப் பிரிக்கவா? என்று தொண்டை அடைக்கக் கூறினாள் - கூடு பிரிக்கப்படுவதைக் கண்ட குருவிபோல மங்கையின் முகத்திலே கவலை குடியேறியது, தினைக்காடு நோக்கி வந்தாள் மங்கை அன்றுதான் பரண் ஏணிக்குப் படிகளும் ஆறு; மங்கையின் கால் எட்டுகளும் ஆறு ஆக இருந்தது. நாளைமுதல் எனக்கு இங்கே காவல் இல்லை! இனி வீட்டைவிட்டு வெளியேறவே முடியாது. உன்னைப் பிரிந்திருக்கவும் முடியாது. என்ன செய்யப் போகி றாய்? - கண்ணீர் கன்னங்களை நனைக்கக் கூறினாள் மங்கை. ஓங்கிய தோளையும், உந்தியெழும் கவலையையும் அடக்கிக் கொண்டு நிலமுகம் நோக்கிக்கொண்டே தளர் நடையிட்டுப் பிரிந்தான் வரிப்புலி. அவன் நின்று பிரிந்த இடத்தில் இருந்த புல்கள் மேகம் இல்லாமலே மழைத்துளி பெற்றன! அன்று வேங்கைமறவன் வீட்டிலே தினையின் புதுச்சோறு பொங்கும் நாள். காட்டு ஆடுகளைக் கறந்துவந்த பாலையே உலையாக வைத்துச் சந்தன விறகை எரித்துப் பொங்கினர். காட்டு மல்லிகை கம கம என்று மணக்கும் முற்றத்திலே ஓங்கி வளர்ந்த வாழையின் அகன்று விரிந்த இலையைக் கொய்து சோற்றைப் படைத்தனர். வளம் பெருகுக; வாழ்வு பொங்குக. என்று தெய்வத்திற்குப் பூவும் படையலும் இட்டு வாழ்த்தினர். உற்றார் உறவினர் சூழ இருந்து உண்டனர். அப்பொழுது வீரமங்கை மட்டும் உணவிலே கருத்து வைக்காது கருமுகில்மேல் திகழ்ந்து கொண்டிருந்த வெண்ணிலாவை இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். “v‹d åuk§if rh¥ãlÉšiyah? என்றான் வேங்கை மறவன். சாப்பிட்டேன் சாப்பிட்டேன் என்று வாய் மட்டும் பேசியது. உள்ளம் எங்கோ போயிருந்தது. ஒரு நாள் வேங்கை மறவனைத் தேடி ஒரு கிழவன் வந்தான். நரைத்த தலை; கூனிய முதுகு; ஆனால் வலிய உடலுடைய அவன் கன்னத்தில் முதுமைக் கோடுகள் தெரியவில்லை. ஆண் சிங்கம் போல நடந்து வந்தான். வேங்கை மறவனோ மிகக் கருத்தாக அம்புகளைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தான். வந்த கிழவன் நின்றுகொண்டு இருந்தான், மறவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. அம்பைத் தீட்டுவதிலேயே முனைந் திருந்தான். பளபளப்பு ஏறும்வரை தீட்டினான். கை நகத்தில் தேய்த்துத் தேய்த்துப் பதம் பார்த்துக் கொண்டே மேலும் மேலும் தீட்டினான். அவன் செயல் திறத்தை அம்பு தீட்டும் அக்கறையே காட்டியது. ஐயா என்றான் நின்ற கிழவன். யார்? வாருங்கள்! என்று கொண்டே நிமிர்ந்து பார்த்தான் வேங்கை மறவன். மறவன் கண்களிலே வீரம் விளையாடுவது கிழவனுக்குத் தெரிந்தது. அம்பினை ஒதுக்கி வைத்துவிட்டு அருகிலிருந்த மரப்பலகையைக் காட்டினான் உட்காருமாறு. கிழவன் உட்கார்ந்தான். மறவன் பேசினான். என்னைத்தான் தேடி வந்தீர்களா? நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும் வேறு எவரையும் அல்ல உங்களைத்தான் பார்க்க வந்தேன் - கிழவன் உரைத்தான். அப்படியா மகிழ்ச்சி! நீங்கள்.... என்று பேச்சை இழுத் தான் மறவன். அவன் விருப்பத்தை அறிந்துகொண்ட கிழவன் நான் அரிக் குடியைச் சேர்ந்தவன்; நம்பி என்பது என்பெயர் என்றான். நல்லது வீட்டுக்குப் போகலாம் வாருங்கள் என்று எழுந்தான் மறவன். வீட்டின் முற்றத்தில் நின்ற வேங்கைமரத்தின் கீழ் இருந்த கல்லில் உட்கார்ந்தனர். தண்ணிய தென்றற் காற்று வீசியது. காட்டு மல்லிகை கமழ்ந்தது. வெண் மணற் பரப்பு முற்றத்தைத் தனியழகு செய்தது. வில்லும் அம்பும் வேங்கை மரத்தின் அடியிலே சார்த்தி வைக்கப்பட்டது. பேச்சுத் தொடங்கினர். ஒரு நல்ல செய்தியைப் பேசுவதற்காக உங்களைத் தேடி வந்தேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு உங்கள் மகளைத் திருமணம் செய்துவைக்கலாம் என்பது என் ஆசை. அப்படியா; நல்லது. ஆனால், அவனைப் பார்க்க வேண்டும்; மனத்திற்குப் பிடிக்கவேண்டும்; அதற்குப் பின் னல்லவா மற்றவை ஆமாம் ஆமாம்; பார்க்க வேண்டியதுதான், இதோ பாருங்கள் என்று எழுந்தான் வேங்கை மறவன், வில்லை எடுத்து நன்றாக வளைத்து அம்பைச் செலுத்தினான். வேங்கை மரத்தின் உச்சிக் கிளையிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு மரப்பலகையின் சிறிய ஓட்டை வழியாக ஊடுருவிச் சென்றது அம்பு. விரைந்து வீட்டுக்குள் சென்றான். கவண் ஒன்றை எடுத்து வந்தான். அதில் ஈரமான களிமண் உருண்டை இருந்தது. வீசி எறிந்தான். ஓட்டை அடைக்கப் பெற்றுவிட்டது. உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தான் நம்பி. இதனை அவன் செய்ய வல்லவனா என்கிறீர்களா? நான் முயல்கிறேன் நான் வென்றால் அவனும் வெல்வான். நான் தோற்றால் அவனும் தோற்பான். ஐயம் இல்லை. என் ஆண்மைக்கு அவன் ஆண்மை சளைத்ததல்ல; வில்லைக் கொடுங்கள் - வில்லையும் அம்பையும் வாங்கினான் நம்பி. நொடிப்பொழு தினுள் பலகையில் இருந்த துளையை அம்பு ஊடுருவிச் சென்றது. கவணை வாங்கினான். இடக் கையால் சுழற்றினான். ஓட்டையை அடைத்துக் கொண்டது மண்! ஏன் வலக்கையால் கவணைச் சுற்ற வில்லை? இது வேங்கையின் வியப்பான கேள்வி. வலக்கை வில்லுக்கு! இடக்கை கவணுக்கு! ஒரு கையினுக்கு மட்டும் தனிப் பயிற்சி தந்துவிட்டு ஒரு கையினை ஒன்றுக்கும் ஆகாமல் செய்து விடுவது ஆண்மையா? என்றான் நம்பி. நல்ல திட்டம் என்று கொண்டே புன்முறுவலோடு தலையை ஆட்டினான் மறவன். இதற்குள் வீரமங்கை பழம் பிழிந்த கொழுஞ்சாறு; நறுந் தேன், தண்ணீர்க்குவளை - இவற்றுடன் வந்தாள். மகிழ்வுடன் விருந்து அருந்தினர். உங்கள் பையனை அனுப்பி வையுங்கள்; பின்னர் பேசிக் கொள்வோம்; வருகிறீர்களா? விடை தந்தான் வேங்கை மறவன். வீரத்தின் மேம்பாட்டையும், விருந்தின் சிறப்பையும் நினைத்துக் கொண்டே பிரிந்தான் நம்பி. அவன் வந்து போனபின் வீர மங்கையின் முகத்திலே கவலைபடர்ந்து இருந்தது. காரணம்? கதவோடு கதவாக அவள் நின்றுகொண்டிருந்ததுதான். ஒரு நாள் நள்ளிரவில் வீட்டுத் தோட்டத்தின் பக்கம் சலசலப்புக் கேட்டது. அதற்கு முன்னமே அங்குக் காத்திருந்தாள் வீரமங்கை. சலசலக்க வந்தவன் வரிப்புலிதான். திருடுவதற்கு நுழைபவன் போல நுழைந்து நுழைந்து வந்தான். மங்கையை நெருங்கினான். “m¥gh ïšiyah? வேற்றூருக்குப் போயிருக்கிறார் நல்லதாகப் போய்விட்டது இல்லை! காரியம் கெட்டுப் போய்விட்டது; யாரோ ஒரு கிழவர் வந்து தன் மகனுக்கு என்னைப் பெண் கேட்டுவிட்டுப் போயிருக்கிறார். நீ எக்கவலையும் இல்லாமல் இருக்கிறாய். இதைப் பார்க்கிலும் கேடு உண்டா? உன்னையா பெண் கேட்டு வந்தார்? இல்லை உன்னை கோபப்படாதே! உன் தந்தை என்ன சொன்னார்? நீ என்ன சொன்னாய்? விரைந்து திகைப்புடன் கேட்டான். நான் என்ன சொல்வது? என்னிடம் கேட்கவே இல்லையே. அவர்கள் பேசினார்கள். நான் மறைந்து நின்று கேட்டேன், வீரப் போட்டி வேறு நடந்துவிட்டது. வந்த கிழவன் கிழவனாகவா இருந்தான். உறுதியாக - அவன் வீரத்தைக் கண்டே அப்பா வுக்குப் பிடித்துப் போய்விட்டது. நீ உறங்கிக்கொண்டிரு. உறங்கவா செய்கிறேன். நடப்பதுதானே நடக்கும்; நான் என்ன செய்வது? நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இங்கு நில்லாமலாவது போ. திருமணம் நடக்கவேண்டும் என்ற ஆசை இருந்தால் உன் பெற்றோரை உடனே அனுப்பி வை. அந்தக் கிழவன் மகன் நாளையே வந்தாலும் வந்துவிடுவான் போய்வா. என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? பெற்றோர் யாரும் எனக்கு இல்லையே. - சோர்ந்துபோய்விட்டாள் வீரமங்கை. நெருங்கிக் கேட்டான். வந்த கிழவன் யார் என்று தெரியுமா? நம்பி என்பது பெயராம். அரிக்குடி நம்பியா? என்ன சொல்லிப் போனான்? மகனை அனுப்பிவைப்பதாகப் போயிருக்கிறார். இன்னும் வரவில்லையே. விடு கவலையை. நான் அவர் அனுப்பிவைத்தவன் என்று நாளைக்கே வந்துவிடுகிறேன். மாட்டிக்கொண்டால்... மாட்டிக்கொள்ளவா? அது வரிப்புலி வாழ்க்கையிலே நடக்கமுடியாத ஒன்று. - ஓர் ஒலி கேட்டது. அது என்ன ஒலி? காட்டுப் பூனையா? ஆமாம் காட்டுப் பூனைதான் என்றாள் மங்கை - அந்நேரம் கதவைத் தட்டும் ஒலி கேட்டது. விரைந்து போ! இதோ வீட்டுப் புலியும் வந்துவிட்டது. நில்லாதே என்று கதவைத் திறக்கச் சென்றாள் மங்கை. அமைதி யாகப் பிரிந்தான் வரிப்புலி. நிலா அரைவட்ட வடிவத்தில் தோன்றியது. அதன் பாலொளி பட்டு மர நிழல்கள் வேங்கைப் புலிகளாகத் தோன்றின. பழைய மறப் புலியையும், மங்கைப் புலியையும் நினைத்துக்கொண்டே வழிநடந்தான். தொலைவோ தெரியவில்லை, அச்சமும் தோன்ற வில்லை. நேரில் வந்த புலிக்கே அஞ்சாத வரிப்புலி நிழற்புலிக்கு அஞ்சுவானா? வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சந்தன மரத்திலிருந்து ஒரு குயில் பாடிக்கொண்டு இருந்தது. வீட்டுக்குள்ளிருந்தும் ஒரு குயில் பாடிக்கொண்டிருந்தது. வேங்கை மறவன் வீட்டின் முற்றத்துக் கல்லிலே உட்கார்ந்து மெய்ம்மறந்து இசை வெள்ளத் திலே மிதந்து கொண்டிருந்தான். அவன் சிந்தனைப் பறவை எப்படி எப்படியோ சிறகடித்துப் பறந்துகொண்டு இருந்தது. அப்பொழுது கல்லின் அண்டை வந்து சேர்ந்தான் வரிப்புலி. வேங்கை மறவனைத் தலை தாழ்த்தி வணங்கினான். அப் பொழுது சந்தன மரக் குயில் மட்டும் பாடிக் கொண்டு இருந்தது. வீட்டுக்குயில் நாணிப்போய் விட்டது போலிருக்கிறது. ஏனோ? அரிக்குடி நம்பி அனுப்பி வைத்தாரா? உட்கார் என்று சொல்லிக்கொண்டே கல்லின் ஒரு பக்கத்தில் சிறிது அசைந்து உட்கார்ந்தான் வேங்கைமறவன், உன் பெயர் என்று முகத்தைக் கூர்ந்து நோக்கிக் கொண்டே கேட்டான். வரிப்புலி என்றான் காளை. வரிப்புலியா? நல்ல பெயர் என்று முகத்தை மேலும் கூர்மையாகப் பார்த்தான். திடீரென்று வேங்கைமறவன் முகத்திலே ஐயக்குறி தோன்றியது. மேலும் பேசாமல் வீட்டுக்குள் போனான். விரைவில் முற்றத்திற்குத் திரும்பிவந்து வரிப்புலியின் முகத்தைப் பார்த்தான். மீண்டும் வீட்டுக்குள் சென்றான். வெளியே வந்து வரிப்புலியின் முகம் உடல் தோற்றம் அனைத்தையும் உற்று நோக்கி னான். போனவன் சற்று நேரம் திரும்பவில்லை, பிறகு வந்தான். இங்கே வா என்று அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் போனான். இப்படி ஒரு செயல் நீ செய்ததுண்டா? சுவரைச் சுட்டிக் காட்டிக்கொண்டே கேட்டான் மறவன். தலையைக் கீழே தொங்கப் போட்டான் வரிப்புலி. நெஞ்சம் படபட என்று அடிக்கத் தொடங்கியது. கால் நிலத்தில் கோடு போட்டுக் கொண்டிருந்தது. அந்நேரம் அடுப்பில் ஏற்றியிருந்த தினை உலை குபுகுபு என்று கொதிக்க ஆரம்பித்தது. வேங்கைமறவன் வரிப்புலியின் முதுகிலே கையைப் போட்டான். தட்டிக் கொடுத்துக்கொண்டே நிமிர்ந்து பார்; உண்மையைச் சொல்ல வெட்கமா? நீ செய்த செயல் தானே என்றான். ஆமாம் என்று அரைகுறையாய்ச் சொல்லிவிட்டுத் தலையைத் தாழப் போட்டுக்கொண்டான் வரிப்புலி. வீரமங்கை என்று கத்தினான் மறவன். தாமரையிலையில் இருந்த தண்ணீர் முத்துக்களைக் காற்று உதிர்ப்பது போல முகத்தைத் துடைத்துக் கொண்டு அங்கு இருந்தவாறே என்னப்பா என்றாள் மங்கை. கிணற்றினுள் இருந்து பேசுவது போல் குரல் கேட்டது. நீ கல்லில் போய் இரு என்று வரிப் புலியை அனுப்பிவிட்டு வீரமங்கையின் அருகில் சென்றான் மறவன். என்ன நிகழப் போகிறதோ என்ற துடிப்பிலே நடந்தான் வரிப்புலி. நீ தினைக்காவல் காக்கும்போது இவன் வந்து யானையைத் துரத்தினானா? யானைத் துதிக்கையைப் பற்றிக் கொண்டு சுழற்றியவன் இவன் தானே! என்றான் மறவன். ஆமாம் என்று நடுங்கிப் போய்ச் சொன்னாள் மங்கை. உள்ளிருந்தே மறவன் கத்தினான் வரிப் புலி! வீட்டுக்குள்ளே உயிரை வைத்துவிட்டு உடலை மட்டும் வெளியே கொண்டுபோன வரிப் புலி முன்னின்றான். இச்சித்திரம் கற்பனையாக எழுதப் பட்டது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உண்மை இன்றே புலனாயிற்று. உன்னை இதுவரை நான் பார்த்ததே இல்லை, பார்த்திருந்தால்... சிறிது நேரம் வீடு அமைதியாயிற்று. ஒரு பெரும் சிக்கல் உள்ளது. நம்பிக்கு ஓய்வு ஏற்படும் பொழுது இங்கே வந்து போகச் சொல். அவரிடம்தான் சொல்ல வேண்டுமா? என்னிடமே சொல்லி விட்டாலும் நான் அவரிடம் சொல்லிவிடுகிறேன். அவரே வரவேண்டுமானாலும் வரச்சொல்கிறேன். ஆம். அவர்தான் வரவேண்டும். போய் வருகிறாயா? ஓ! மறந்து விட்டேன். திண்ணையில் உட்கார். சாப்பிட்டுப் போகலாம். வரிப்புலிக்கு என்னென்னவோ ஐயங்கள் ஏற்பட்டன. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்தான். அங்கு உணவா உண்டான்? உயிரூட்டும் அமுதம் அல்லவோ அவன் உண்டான். வரிப்புலி போனபின் இரவெல்லாம் மங்கைக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை இனி என்ன நடக்குமோ? தந்தையார் சொல்லிய சிக்கல்தான் என்னவோ? என்றெல்லாம் எண்ணினாள். அரிக்குடி நம்பி என்னைத் தன் மகனுக்குக் கேட்டு வந்தார். வரிப்புலியோ அவர் அனுப்பி வைத்தவனாகவே சொல்லிக் கொண்டு வந்துபோய்விட்டான். எனக்கும் அவனுக்கும் முன்னமே உண்டான உறவைச் சித்திரம் வேறு உறுதிப்படுத்தி விட்டது. அரிக்குடி நம்பி எங்கள் பழைய அன்புக்காகத் தம் கருத்தை மாற்றிக்கொண்டு, வரிப்புலிக்காக மீண்டும் இங்கு வருவாரா? அப்படி அவர் வந்தால் அல்லாமல் எங்கள் திருமணம் இன்பமாக நடைபெற முடியாது. நம்பியினிடம் தெய்வக் குணம் இருந்தால் அல்லாமல் இதனை ஒப்பி வரவும் மாட்டார் என்று ஆயிரம் ஆயிரம் எண்ண அலைகள் உள்ளக் கடலிலே கொந்தளித்து எழுந்தன. எப்படியோ விடிபொழுது ஆயிற்று. பறவைக் குரல் எழுந்தது; சேவல் கூவிற்று. பசுக் கன்று கதறியது. கருங் கூந்தல் போல மையிருள் இருந்தது. அதனைக் கிழித்துக் கொண்டு - இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்து கவலையால் சிவந்த முகம் போலச் - செவ்வானம் தோன்றியது. பெரிதாகக் கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்தான் மறவன். இரண்டு மூன்று கல் தொலை நடந்து போய்க் காட்டை யெல்லாம் பார்த்துவிட்டுத்தான் காலையுணவுக்கு வருவான்; அவ்வழக்கம்போல் புறப்பட்டான். விடிந்தும் விடியாமலும் நம்பி வந்து விடுவான் என்று மங்கை நினைக்கவில்லை. வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். உட்சுவரைக் கண்டவுடனே கொதிப்படைந்தான் நம்பி. சுவரைப் பார்த்துக்கொண்டே இதை வரைந்தது யார்? என்று கண்களில் கனல் பொறி கக்குமாறு பேசினான். தனக்கு இவ்வாறு கேட்கும் உரிமை உண்டா என்பதைக் கூட நினைக்காமல் கத்தினான். தலையைத் தாழ்த்துக் கொண்டாள் மங்கை. இதை வரைந்தது யார்? நீதானே! - இன்னும் பேசாமல் இருக்க மங்கையால் முடியவில்லை. ஆம் என்றாள். இவ்வளவு ஆகிவிட்டதா? அந்தப் பயலையே கட்டி அழு என்று குமுறி னான் நம்பி. விம்மி விம்மி அழுதாள் மங்கை. அவள் தலை சுற்றுவதுபோல் இருந்தது. துணிந்து பேசினாள். எங்களுக்கு அன்பு இயற்கையாகத் தோன்றிவிட்டது. அதைத் தடுக்கவோ, கெடுக்கவோ எவராலும் முடியாது. வற்புறுத்தலுக்காக உள்ளம் மாறவும் மாறாது. மாற்ற நினைப்பதும் அறிவுக்குப் பொருந்துவது ஆகாது; வரிப்புலி நேற்று வந்தார். அவரை என் தந்தைக்கும் பிடித்துவிட்டது. எங்கள் நட்பையும் தந்தை அறிந்து கொண்டார். என் கருத்தை மாற்றி அவர் பேசுவதே இல்லை. உமக்குப் பெருமை ஏற்பட வேண்டுமானால் வரிப்புலியையே உம்மகனாக எண்ணி விட வேண்டியது தான் இவ்வாறு காட்டாற்றுப் பெருக்குப் போல் கொட்டினாள். மேலும் ஒரு முறை சுவர்ப்படத்தை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறினான் நம்பி. மங்கை சோர்ந்துபோய் உட்கார்ந்தாள். பசுக்கன்று கத்திக் கொண்டு இருந்தது. பசுவின் கதறல் ஓங்கிக்கொண்டே சென்றது. அம்மா என்று பதிலுக்குக் கதறி அன்பைக் காட்டியது பசு. ஆனால் அவ்வன்பை மங்கை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. முகத்தைத் துடைத்துக் கொண்டு கன்றை அவிழ்த்து விட்டாள். இதற்கு முன்போலல்லாமல் கன்று இன்று மிகுந்த ஆவலோடும் அன்போடும் துள்ளிக் குதித்து ஓடியதையும், தாய்ப்பசுவுடன் விளையாடியதையும் கண்டு கொண்டு தன்னை மறந்து நின்றாள் மங்கை. என்றும் காணாத அளவு அன்றுதான் தாய் சேய் அன்பை அவளால் காண முடிந்தது. திரும்பி வீட்டுக்குள் போகப் பார்த்தாள். அங்கே வெளியே போன நம்பி நின்றுகொண்டு இருந்தது என்னவோபோல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டு வீட்டுக்குள்ளே நடந்தாள். நம்பியின் முகத்திலே பழைய கடுகடுப்பு இல்லாதது மங்கைக்குப் புலனாகாமல் போகவில்லை. வெளிக்கல்லிலே நம்பி உட்கார்ந்திருந்தான். வேங்கை மறவன் வந்தான். வரவேற்றுக் கொண்டே, என்ன வந்து நெடு நேரமாகி விட்டதோ? காட்டுக்குப் போய் விட்டேன் என்று மன்னிப்பு வேண்டுபவன் போல் பேசி விட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். திண்ணையிலே உட்கார்ந்தவுடன் நம்பி சுவரிலிருந்த வரிப்புலியின் சித்திரத்தைச் சுட்டிக்காட்டி இவனை முன்ன தாகவே அறிவீர்களா? சித்திரம் தீட்டியிருக்கிறீர்களே! என்றான். நான் அறியவா? அறிந்திருந்தால் அவனை விட்டு வைத்திருப்பேனா? என்றான் மறவன். விட்டு வைக்காமல் என்று பேச்சை இழுத்தான் நம்பி. உண்மையைச் சொல்லாமல் இருந்த அந்த முட்டாளை அழைத்து வைத்து நானே தாலி கட்டச் சொல்லியிருப்பேன் என்றான் மறவன். நம்பி குலுங்கக் குலுங்கச் சிரித்தான். சமையல் அறையில் சில முல்லை மலர்கள் அரும்பின! ஆனால் அங்கோ முல்லைக் கொடியைக் காண வில்லை. மங்கை மட்டும் இருந்தாள். நம்பி! உம்மிடம் ஒரு பரிசு கேட்கப் போகின்றேன் தருவீரா? என்றான் மறவன். என்னிடமா? பரிசா? juKoªj gÇrhÆ‹ jilÆšiy v‹d gÇR? என்று ஆவலோடு கேட்டான் நம்பி. மங்கையைப் பிரிந்துவாழ என்னால் முடியாது இவ்வீடும் நிலமும் அவளுக்கே உரியன. உலகில் அவளை அன்றி வேறு எவரும் எனக்கு இல்லை. வரிப்புலியையே எனக்குப் பரிசாகத் தந்துவிட வேண்டும். அவன் இவ்வீட்டிலேயே இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் நீர் எனக்குச் செய்ய வேண்டியது என்றான். சிறிது நேரம் பேசாமல் சிந்தித்துக் கொண்டிருந்தான் நம்பி. சரி! உம் விருப்பம் அதுவானால் தடையில்லை, என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டான் நம்பி. உணவு ஆகி விட்டது அப்பா என்று ஒரு கிளியின் குரல் கேட்டது. அங்கே கிளியும் காணவில்லை; கிளிக்கூண்டும் காணவில்லை. நம்பி போன பின் மங்கை கொண்ட மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. நம்பி இப்படி மாறுவார் என்றோ, வரிப்புலிக்குத் தந்தைபோலவே நல்லெண்ணத்தால் நாடகமாடுவார் என்றோ அவள் நினைக்கவில்லை அல்லவா! ஆனால் நடந்தபின் இப்படி யும் மனிதர்கள் இருக்கிறார்களா? பிறர்க்கென வாழும் பெருந் தகையோர்கள் இருக்கிறார்களா? என்று வியப்படைந்தாள். வாயார மனமாரப் போற்றி வாழ்த்தினாள். பாவம்! வரிப் புலிக்குக் கிடைத்த வேடிக்கையான தந்தையை எண்ணி எண்ணித் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். வீட்டின் முற்றத்தில் புதுமணல் பரப்பப் பட்டது. தூண்கள் நிறுத்தப்பட்டன; வாழைகள் கட்டப்பட்டன; பந்தல் போடப் பட்டது. இடந்தோறும் இடந்தோறும் பச்சிலை மாலைகளும் பூ மாலைகளும் தொங்கவிடப்பெற்றன. நீல நிற மேற்கட்டி பந்தலிலே கட்டப்பெற்றது. மங்கையும். வரிப்புலியும் மண மேடையில் இருந்தனர். பிள்ளைகளைப் பெற்றெடுத்த முதிய பெண்கள் பலர் கூடி நின்று எல்லாப் பேறுகளும் பெற்று நல்வாழ்வு வாழ்க என்று வாழ்த்தினர். இசை முழக்கம் இனிது ஓங்கியது. அதனை வெற்றி கொண்டது மகளிர் குரவைக் குரல். திருமணம் இனிது நடந்தேறியது. வேங்கை மறவன் உள்ளத்திலே இன்ப வெள்ளம் பெருக் கெடுத்துக் கொண்டிருந்தது. வான் வழியே வந்த இரண்டு புறாக்கள் வீட்டின் முற்றத்தில் இருந்த வேங்கை மரத்தில் தங்கின. அதனைக் காண்பதிலே மறவனுக்கு இருந்த இன்பத்திற்கு இணை அதுவே தான். வரிப்புலி! உன் தந்தை உன் திருமணத்திற்கும் வரவில்லை. mj‰F¥ ã‹ò« fhzÉšiyna V‹? என்றான் மறவன். அவரைப் பார்ப்பது அரிது. அவராக எங்கேனும் வந்து போவார். ஆனால் தேடித் தேடி அலைந்தாலும் கண்டுபிடிப்பது அரிது என்றான் புலி. நம்பி இவர் தந்தை அல்லப்பா! உங்களை நன்றாக இவர் ஏமாற்றிவிட்டார் பெரிய ஏமாற்றுக்காரர் என்றாள் மங்கை. ஏமாற்றி விட்டாரா? என்று சற்றுத் துடிப்போடு கேட்டான் மறவன். இல்லை, அவரை இங்கு வரச்சொல்லுகிறேன். அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று வெளியே போனான் புலி. சிறிது நேரத்துக்குள் நம்பி வந்தான். மங்கையும், மறவனும் வரவேற்றனர். இருக்கச் சொல்லினர். மறவன் பேச்சின் ஊடே கேட்டான். உங்களைக் காணவே முடியவில்லை; திருமணத் திற்கு நீங்கள் வரவில்லை என்றான் வேங்கை. நான் வந்திருந்தேனே. நீங்கள்தான். என்னைப் பார்க்க வில்லை. உங்கள் பரபரப்பில் அப்பொழுது என்னைத் தெரியுமா? ஒரே ஒரு மகளின் திருமணம் அல்லவா. அன்று நீங்கள் இருபது வயதுக் காளைபோல் அல்லவா ஓடித் திரிந்தீர்கள். என்னைப் பார்க்க நேரம் ஏது. இந்தக் கிழவனைப் பார்க்க மங்கைக்கும் தான் முடியுமா? என்று குத்தலாகப் பேசினான் நம்பி. இல்லை நீங்கள் வரவே இல்லை; வந்தால் எங்கள் கண்களில் படாமல் இருக்கமுடியாது என்றான் மறவன். நன்றாக இரண்டுபேரும் ஏமாந்துவிட்டீர்கள். இந்த நம்பி வந்திருந்தான். ஆனால் என்ன உருவத்தில் தெரியுமா? என்று வெண்ணரையை நீக்கினான். உடையை மாற்றினான்.tÇ¥òÈ நின்றான். வேங்கை, புலியின் தோளைப் பற்றித் தூக்கிக்கொண்டு பிசைந்து எடுத்துவிட்டான். மங்கைக்குத் தன்னுணர்ச்சி வரச் சிறிது நேரம் ஆயிற்று. தாய் தந்தையர் இல்லாத நான் என்ன செய்யமுடியும்? உங்கள் மகளை எனக்குப் பெண் தாருங்கள் என்று உங்களிடமே கேட்பதற்கு வெட்கம் ஏற்படாதா என்ன? இதற்கு மற்றவர்களிடம் மண்டியிட்டுக் கிடந்து எனக்காக அவர்களை அனுப்பி வைப்பதும் சரியாகப்படவில்லை. எப்பொழுதும் நம்மால் முடியாததற்குத்தான் அடுத்தவர் உதவியை நாடவேண்டும். இது என் எண்ணம் என்றான் நன்றாக இருக்கிறது என்று கூறிக் கொண்டு சிந்தனையை முகத்தில் தேக்கி எங்கேயோ போனார். என்னிடமாவது உண்மையைச் சொல்லியிருக்கக்கூடாது? என்றாள் மங்கை. உடனே வெளிப்படும் உண்மையைப் பார்க்கிலும் காலங் கடந்து வெளிப்படும் உண்மைக்கே தனிப் பெருமை. அந்த இன்பத்தைப் போல் வேறொரு இன்பம் உலகில் உண்டா? என்றான். ஆமாம்! நம்பியாக நீங்கள் வந்ததும் போதும். அன்று நடுக்கி வைத்ததும் போதும் என்று கூறிக் கொண்டு முகத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டாள். நீ அன்று கவலைப்பட்டதும் போதும்; கன்றையும் பசுவையும் துடிக்கவிட்டதும் போதும் என்றான். கல கல என்னும் சிரிப்புக்குரல் அடங்கவில்லை. சுவரின் அண்டையில் மறவன் நின்றுகொணடிருந்தான். அவன் பக்கத்திலே சில பச்சிலைகள் கிடந்தன. ஒரு கிண்ணத்தில் இலைச்சாறு இருந்தது. ஒரு தூரிகையைக் கையிலே பிடித்திருந்தான். என்ன வரையப் போகின்றீர்கள் என்றான் வரிப்புலி. உடனே வெளிப்படும் உண்மையைப் பார்க்கிலும் காலங்கடந்து வெளிப்படும் உண்மைக்கே தனிப் பெருமை! என்றான் மறவன். வரிப்புலி புன்முறுவல் பூத்துக் கொண்டே மங்கையை நோக்கினான். முன்னெல்லாம் சித்திரம் நன்றாக வரைய முடிந்தது. சித்திரக் கலைக்கு ஏற்றவாறு நரம்புகளிலே தளர்ச்சி நடுக்கம் எதுவும் முன் இல்லை. இப்பொழுது வயது போய்விட்டது. விரல்களும் மரத்துவிட்டன. ஆனால் கலைப்பித்து மட்டும் இருக்கிறது. அந்தப் பித்தினால்தான் இன்னும் ஏதோ நினைக் கும்போது வரைகின்றேன். அந்தப் படத்திலே யானையின் முகத்தில் எவ்வளவு கவலைக் களை தோன்றுகின்றது. அதன் உடலில் தோன்றும் வளைவும், துதிக்கையிலே காணும் சுருக்கமும், கண்ணிலே வழியும் துயரும் உண்மையாகவே - உயிர்க்கலையாகவே - தோன்றுகின்றன அல்லவா. யானையைப் பிடித்து இழுப்பவன் முகத்திலே பொலியும் வீர உணர்ச்சியை வரைய இன்னொரு முறை மங்கையே நினைத்தாலும் முடியாமல் போனாலும் போகலாம். வீரனின் கண்கள் கக்கும் கனல் பொறியும், தோள் தசையின் முறுக்கும், எப்படித்தான் உருவாகினவோ? வேறொன்றும் இல்லை மங்கையின் உள்ளம் உணர்ச்சி எல்லாம் இந்தக் காட்சியாகவே இருந்திருக்கிறது. அப்படியே கலையாக வடித்துவிட்டாள். ஏன் அவளே யானையாகவும். வரிப்புலியாகவும் மாறிக் கொண்டுவிட்டுத்தான். வரைந்துவிட்டாள். எனக்கு அப்படி முடிவதில்லை என்று கூறிக் கொண்டே கலவைச் சாற்றினைத் தூரிகையால் துழாவினான். மங்கை வரைந்திருந்த சித்திரத்தின் பக்கத்தில் ஒரு வரம்பு கட்டிக்கொண்டு வரைந்தான். ஏதேதோ சில கோடுகளை இடை இடையே தூரிகையால் வரைந்து கொண்டான். உருவம் புலப் படுமாறு வரையப்படவில்லை. சில மரங்கள், குடிசை, இவை தூரத்தில் தோன்றுவது போல உருவாகின. பக்கத்தே தோன்று மாறு ஒரு பலகை, அம்பு, வில் இவை உருவாகின. அவ்வளவுடன் அன்றைய வேலை நின்றது. என்னதான் வரையப் போகின்றான் என்பதை வெளிப் படுத்தவில்லை வேங்கை. மங்கையும் புலியும் மாறி மாறி இது வாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று பேசிப் பேசி நேரத்தைச் செலவிட்டனர். மீண்டும் மறவன் தூரிகையைப் பிடித்தான். தான் உட் கார்ந்துகொண்டு நிமிர்ந்து பார்ப்பது போல வரைந்தான். அதன் பக்கத்தில் நிற்கும் ஓர் உருவத்தைத் தொடங்கி வைத்துவிட்டான். இரண்டு மூன்று நாட்கள் தூரிகையைத் தொடவே இல்லை. எப்பொழுதும் சிந்தனையாகவே திரிந்தான். இன்று உங்கள் இருவருக்கும் ஒருவேலை. நமது காட்டைப் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். வீட்டுக்குள்ளேயே அடை பட்டா கிடக்க வேண்டும்? என்று அனுப்பிவைத்தான், மங்கையையும் புலியையும். தூரிகையை எடுத்துக் கொண்டு வரைந்து முடித்தான். அவனை அவனே நம்பவில்லை. இப்படியும் சித்திரம் அமைந்து விடும் என்று அவன் கனவுகூடக் கண்டது இல்லை. அடுத்து நின்று நோக்கினான் எக்குற்றமும் தெரியவில்லை. அதன் அழகை நோக்கிய வண்ணமே உட்கார்ந்திருந்தான். தான் பெற்ற பிள்ளை யின் முன்னழகையும் பின்னழகையும் பார்த்து மகிழாத தாய் உண்டா? வரிப்புலியும் மங்கையும் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். மறவன் கதவை ஓடிப்போய் அடைத்தான். அப்பா! கை! கை! என்றாள் மங்கை. என்ன? கையில் பட்டுவிட்டதா? என்றான் வேங்கை. ஆமாம்! பொய்! பொய் என்று சொல்லிக்கொண்டே சுவரைப் பார்த்தாள். வியப்புத் தாங்க முடியவில்லை. அப்பா! என்று வாய்விட்டுக் கத்தினாள். வரிப்புலி அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். “V‹ c§fS¡F ï¥gl« e‹whf¤ bjÇaÉšiyah? என்றாள். தெரியாமல் என்ன! நன்றாகத் தெரிகிறது. ஆனால் என்னதான் வரையப்போகின்றார் என்பதை நான் நேற்றே அறிந்து கொண்டேன் என்றான். இவர் இரவெல்லாம் உறங்கவா செய்தார்! நாம் உறங்கி விட்டோமா என்பதைப் பார்த்துக்கொண்டு, நான் நம்பியாக வந்தபோது எப்படி இருந்தேனோ அப்படியே ஒப்பனை செய்து செய்து பார்த்துக்கொண்டிருந்தாரே! ஏதோ - சிறிது வேளை கண்ணயர்ந்தாலும் நம்பி நம்பி என்றுதானே உளறிக்கொண் டிருந்தார். பிறகு எதனை வரைவார்? இப்படி வரைய வேண்டு மானால் இவரே நம்பியாகித்தானே தீரவேண்டும் என்றான். யானையை மடக்கும் வரிப்புலி ஒரு பக்கம். மறவனுடன் பேசும் நம்பி ஒரு பக்கம். இளமையுள்ளம் அங்கே பேசுகிறது. முதுமை உள்ளம் இங்கே பேசுகிறது. ஆம்! அவள் காதல் அங்கே நிலைத்தது. இவன் காதல் இங்கே நிலைத்தது வெண்சுவரிலே இரண்டுள்ளப் படைப்புகளும் உயிர்க்களை கொண்டு திகழ்ந்தன. ஆண்டுகள் மூன்று உருண்டோடின. வேங்கை மரத்துப் புறாவின் குடும்பம் பெருகியது. பெருகிப் பெருகி எங்கோ போகவும் வரவும் ஆகின. தாய் எது பிள்ளை எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவு பெருகின. பெருகிய பின், தாய் தான் பெற்ற குஞ்சை மறந்து விட்டது. குஞ்சு தன் தாயை மறந்துவிட்டது. அப்படி அப்படியே அதன் தொடர் கதைகள் வளர்கின்றன. ஆனால் என் கதை அப்படியா? என்று தன்னையறியாத மகிழ்ச்சியிலே சிரித்தான் மறவன். என்னப்பா! உறக்கத்திலே சிரிக்கின்றீர்களே என்ன? கனவா! என்றாள் மங்கை. கண்களைத் துடைத்துக்கொண்டே ஓகோ! உறக்கத்திலே சிரித்தேனோ? ஒன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என்று புரண்டு படுத்துக் கொண்டான் மறவன். த்தா, த்தா என்ற குரலோடு தன் போர்வை இழுக்கப் படுவதை அறிந்தான். ஏனடா! பொல்லாத பயல். இதற்குள் நீயும் எழுந்து விட்டாயா? வாடா வா என்று போர்வையை ஒதுக்கிக் கொண்டு கைகளால் தழுவி எடுத்து மடிமேல் வைத்துக் கொண் டான். வீரமங்கை பெற்றெடுத்த அரியேற்றினை. பொடிப்பயல், விடிய இரண்டு நாழிகை இருக்கும்போதே எழுந்து கொள் கின்றான். எழுந்து என்னதான் செய்யப் போகின்றானோ? என்று அன்பினால் திட்டிக் கொண்டே தோளோடு அணைத்துக் கொண்டான் மறவன் அரியேறு ஓராண்டிலே துள்ளித் திரிந்தான். வேங்கை மரத்துப் புறாக்களைப் பார்ப்பதிலே தனி இன்பம் அவனுக்கு. சில வேளைகளில் அவை உட்கார்ந்து சிறு சிறு நடை நடப்பதிலே உள்ளம் பறிகொடுத்துப் பின்தொடர்ந்து ஓடுவான். அவை பறந்துபோவதைக் கண்டு கைகொட்டி நகைப்பான். கையிலே பிடிக்க முயன்று முடியாமல் ஏமாந்த முகத்தோடும் திரும்புவான். அரியேறு முற்றத்திலே இருந்து துள்ளி விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது மறவன் கல்லிலே உட்கார்ந் திருந்தான். சிறுவனுடைய ஆட்டத்திலும், பாட்டிலும் தன்னை மறந்து இருக்கும் அவன் இன்று வேறொன்றிலே ஈடுபட்டு மறந்து இருந்தான். அந்நேரம் வரிப் புலி வந்தான். என்ன கனவா? கற்பனையா? என்று கேட்டான். இல்லை கலை என்றான் மறவன். ஆமாம்; கனவு கற்பனைகளின் விளைவு தானே கலை என்றான். வரிப்புலி. உண்மை! எல்லோராலும் கனவையும் கற்பனையையும் கலையாக்கிவிட முடிகின்றதா? சிலர் எவ்வளவு எளிதில் ஒன்றைக் கலையாக்கி விடுகின்றனர். நான் அரியேற்றைப் பார்த்துப் பார்த்துப் பூரிக்கின்றேன். ஆனால், கலைவடிவம் தரத்தான் முடியவில்லை என்று ஏக்கத்தின் இடையே கூறினான் மறவன். ஏன், நீங்கள் தான் அவனையும் விட்டா வைத்தீர்கள். சுவரில் சித்திரமாகத் தீட்டியிருக்கிறீர்களே! அது கலையில்லையா! என்று விளக்கிப் பேசினான் வரிப்புலி. அதுவும் கலைதான். இருப்பினும் உள்ளத்து நினைவையெல்லாம் கொட்டிவிடமுடியவில்லையே! இந்த ஏக்கம் எனக்கு நெடுநாளாக இருந்துகொண்டே இருக்கின்றது. அதிலும் அரியேறு பிறந்தபின் அவ்வெண்ணமும், ஏக்கமும் மிகுதியாகிவிட்டன. சின்னஞ் சிறிய பிஞ்சுக் கால்களால் குறுகக் குறுக எட்டு வைக்கும் அழகு, சிறிய தாமரைக் கைகளை நீட்டி நீட்டி மடக்கும் அழகு, சோற்றுக் கிண்ணத்திலே கையை இட்டுத் துழாவித் தெளிக்கும் அழகு, பொக்கைவாயிலே அரும்பிய ஒன்றிரண்டு பற்களால் பண்டங்களைக் கடிக்கும் அழகு, சோற்றை வாயிலும் வயிற்றிலும், கீழும் மேலும் சிதறியுண்ணும் அழகு. சோறுண்ட கைகளோடும் வாயோடும் ஓடி வந்து மின் வெட்டுப்போல் கண்களை வெட்டிக் கொண்டு தோளில் சாய்ந்து கொள்ளும் அழகு. ஆ ஆ! இப்படி அழகுக் கொள்ளைகளையெல்லாம் அந்தச் சித்திரத்தில் வரைந்துவிட முடிந்ததா? அப்படி அப்படியே வரைய எத்தனை சித்திரங்கள் வேண்டும்? எத்தனை நாட்கள் வேண்டும்? காவியக் கலை மட்டும் எனக்குக் கைவந்திருந்தால் விட்டுவைத்திருப்பேனா? அரியேற்றைப் பற்றிப் பாடிப்பாடித் தள்ளியிருக்க மாட்டேனா? பேசிக்கொண்டே இருந்தான் மறவன். ஆனால் எனக்குப் பாடல் பாட வரவில்லை என்பதற்காக நான் விட்டுவிட்டேனா? என்று நிறுத்தினான். ஏன் நீங்கள் பாடியும் விட்டீர்களா? என்றான் வரிப்புலி. இல்லை நான் அரியேறு பிறக்கு முன்னாகவே ஒரு புலவரைச் சந்தித்தேன், அவரிடம் கொஞ்சநேரம் பேசிக் கொண்டும் இருந்தேன். அப்பொழுது குழந்தையைப் பற்றி அருமையான பாட்டொன்று கூறினார். அப்பாட்டும் அவர் பாடிய பாட்டு இல்லையாம். நம் மன்னவன் - பாண்டியன் - பாடிய பாட்டாம். அப்பாட்டு நன்றாக இருந்ததுடன், பாண்டியன் பாடிய பாட்டு என்றவுடன் மனப்பாடம் பண்ணிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அதனால் ஓர் ஏட்டிலே அப்பாட்டை எழுதி வைத்துக் கொண்டேன். அதனைத்தான் ஓயாமல் சொல்லிக் கொள்வேன், என்ன சொல்ல! அப்பாடல் சுரங்கத்தை எத்தனை முறை தோண்டிப் பார்த்தாலும் சரி புதுப் புதுப் புதையல்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. இன்று குறுகுறு நடந்து சிறுகை நீட்டி என்னும் ஒரு வரியை ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். அரியேற்றின் நடையோட்டத்தைக் குறிப் பிட வேறு எச்சொல்லைக் கையாள்வது? என்று நிறுத்தினான். பாட்டினை நானும் கேட்கலாமா? என்றான் வரிப்புலி. கேட்க என்ன! மனப்பாடமே செய்து கொள்ளலாம். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந்துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்கள் என்று உணர்ச்சியோடு பாடினான் மறவன் அவன் கூறிய முறையிலே அப்பாட்டின்மேல் அவன்கொண்டிருந்த பற்றும் சுவையும் புலப்பட்டன. வரிப்புலி மூன்று நான்கு தடவை பாடக்கேட்டான். வீட்டிற்குள் சென்றான் - அங்கே ஒரு இலக்கிய வகுப்பு நடப்பது மறவனுக்குத் தெரிந்தது. அரி யேற்றை மகிழ்ச்சியால் தழுவிக்கொண்டு ஆடினான். அரியேறு த்தாத்தா என்று கூறிக்கொண்டு மகிழ்ச்சிக்கூத்தாடினான். வேங்கைமறவன் காட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தான். அரியேறு விம்மி விம்மி அழுதான். மங்கையும் வரிப் புலியும் எவ்வளவோ தேற்றிப் பார்த்தனர். அது வேண்டுமா, இது வேண்டுமா என்று கேட்டனர். அவன் த்தா, த்தா என்று சொல்லி விடாமல் அழுது கொண்டே இருந்தான். தாத்தா தூக்கிக் கொள்ள வேண்டுமா என்று மங்கை, மறவனின் தோள் மீது ஏற்றினாள். அரியேறு மறவன் தோளிலே கிடந்த வில்லைப் பிடித்து இழுத்தான், ஓ ஓ! உனக்கும் வேண்டுமா? என்று சொல்லிக் கொண்டே ஒரு மூங்கிலை வளைத்து அதில் கயிற்றைக் கட்டி வில்லாக்கி அரியேற்றின் தோளில் மாட்டினான். அரியேறு சிரித்துக் கொண்டே ஓடினான். பொல்லாத பயல்; இப் பொழுதே வில் வேண்டுமாம் என்று சிரித்துக் கொண்டான் மறவன். கதிர் மறைந்து இருள் கப்பிக்கொண்டு வந்தது. வேங்கை! அதோ பறை முழக்கம் கேட்டாயா? என்று சொல்லிக் கொண்டு வந்தான் கிழவன் ஒருவன். ஆமாம்! ஏன்? என்று கேட்டான் மறவன். பாலூற்றில் இருந்து இப்பொழுது நான் வருகின்றேன். அங்கும் பறையடித்தார்கள். மன்னன் வாழ்க! செங்கோல் சிறக்க! மறக்குடி மக்களே மன்னவன் ஆணை! இதுவரை நட்புப் பாராட்டி அடங்கி நடந்த அண்டை நாட்டினர் போர் வெறி கொண்டு புறப்பட்டுள்ளனர். மண்ணாசை கொண்டுவரும் அவர்களை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் வீட்டுக்கு ஓர் ஆள் புறப்படுக; படைக்கருவிகள் தாங்குக; உயிர்காத்துவரும் நாட்டின் மானங்காக்கப் புறப்படுக என்று முழக்கினான். அதைத்தான் இங்கும் சொல்ல வருகிறான் போலும் என்றான். நாடுவிட்டு நாடு கடந்து மண்ணாசையால் எழுந்து விட்டான் மாற்று மன்னவன். சே! சே! இங்குள்ளவர்களை யெல்லாம் எலியென எண்ணி விட்டானா என்ன? இந் நாட்டினர் உடலிலே குருதிதான் ஓடுகின்றது. அக்குருதியின் ஒவ்வோர் அணுவிலும் தாய் நாட்டுப் பற்றுத்தான் இருக்கின்றது என்பதை உணர்த்துவோம்; உணர்த்துமாறு இப்பொழுதே புறப்படுவோம். மறக்குடி மக்களே எழுங்கள். மன்னவன். ஆணைக்காகக் காத்துக்கிடக்க வேண்டாம் கிடைத்த கருவிகளை எடுத்துக் கொள்ளுங்கள் கிளம்புங்கள் போருக்கு. கிட்டிய பகையை வெட்டி வீழ்த்துங்கள் என்று தெருவெல்லாம் சுழன்று ஆரவாரித்தான் மறவன். அவன் கிழவன் போலவா அப்பொழுது துடித்தான்! மங்கையினிடம் ம்மா ம்மா த்தா த்தா என்று கையை ஆட்டி ஆட்டிப் பேசினான் அரியேறு. அவனைத் தூக்கித் தோளோடு தோளாக அணைத்துக் கொண்டு சிங்கக் குட்டியே இரு; சீறியெழுந்த பகைவர்களைச் சிதைத்து வருகிறேன் என்று தழுவிக் கொடுத்துவிட்டு வேலுடன் புறப்பட்டான் மறவன். மலையூர் கிளம்பியது. இரவுப்பொழுதெல்லாம் ஊர் ஊராக நாடே திரண்டது. கதிர் கிளம்பியது; படையும் கிளம்பியது. பகைப்படை குழுமியிருந்த இடத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. முன்னணியில் நின்றான் வேங்கை. வேந்தன் படைத் தலைவர்களை ஊக்கப்படுத்தினான். படைத் தலைவர்களை ஊக்கப்படுத்தினர் படைவீரர் யானை, குதிரை களை விரைவுபடுத்தினர். இமை மூடித் திறக்குமுன் நின்றவர் வீழ்ந்தனர்; வீழ்ந்தவர் இறந்தனர்; இறந்தவர் குருதியாற்றில் மிதந்தனர். வீரர்களின் கண்கள் சிவப்பேறின. உடனே வாளும் வேலும் அம்பும் சிவந்தன. உருண்டது தலை; புரண்டது உடல்; பெருகியது குருதி. படிந்தது சேறு. மறவன் வேலைக்கொண்டு போர் செய்யவில்லை. விளை யாடினான். குதிரைகளைக் குத்தித் தூக்கிக் குடைபோலப் பிடித்தான். யானைகளை மருமத்திலே குத்திக் குத்திச் சாய்த் தான். காலாள் வீரர்களை வேலை வீசி, வீச்சுக்கு ஐவர் அறுவர் என வீழ்த்தினான். இவன் வீரன் அல்லன்; காலன் என்று யானைகளும் குதிரைகளும் கலங்கின. காலாள் வீரர்கள் ஓல மிட்டனர். கிடைத்த சமயத்தே விலங்குகளும் வீரர்களும் ஓட்டம் பிடித்தனர். பகைகொண்டுவந்த மன்னனுக்கு ஓடுபவர்களைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகிவிட்டது, மானம் தாழவில்லை அவனுக்கு; படைத்தலைவர்களை ஏவினான். ஓடும் கோழைகள் தொலையட்டும் வீரம் இருப்போர் காலைப் பின் வையாது தாக்கி முன்னேறட்டும் என்று முழங்கினான். சங்கம் ஊதினான். துடிப்பறை அடித்தான். பகைப்படை ஊக்கமுடன் கிளம்பியது யானைகளைச் சூறையாடும் வேங்கையைச் சூறையாடினால் அல்லாமல் வெற்றி இல்லை என எண்ணித் தாக்கினர். மறவனை யானைகளின் வீரர்களும் வளைத்துக் கொண்டனர். ஒருவர் இருவர் அல்லர்; பலர் ஒற்றைப் புலியைப் பத்துப் பதினைந்து யானைகளும் புலிகளும் சேர்த்து வளைத்துக்கொண்டால் எப்படி - அப்படித் தாக்கினர். எனினும் உள்ளம் தளரா வேங்கை ஓங்கி எழுந்தான், எதிர்த்தோர்களையும், யானைகளையும் வேல் முனையில் விழச்செய்தான். யானைமேல் இருந்தோர் தலைகளை உருட்டி னான். படைத் தலைவன் குறுக்கிட்டான்; வேங்கையைத் தடுத்து நிறுத்தினான். விலாப்பக்கம் வேலால் தாக்கினான், படைத் தலைவன் உடல் கீழே சாய்ந்தது. யானையின் மருமத்தைத் துளைத்தான் யானை நிற்கமுடியாமல் சுழன்றது. வேல் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கம் வந்திருந்தது. யானை வெறி கொண்டு தடுமாறியது; வேங்கையின்மீது சாய்ந்தது. வேங்கை ஏவியவேல் அவனுக்கே கிடைத்தது. ஆனால் எடுத்துப் போர் செய்ய அவனால் இயலவில்லை. மார்பில் வேல் பட்டுருவ - யானை மேலே விழ - மலர்ந்த முகத்துடன் மான வீரனாக மாண்டான். பகைப்படை, தலைவனை இழந்தது. பகை மன்னனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. அது வரை, பொறுத்து நின்ற படையும் தலைவன் வீழ்ந்தபின் தலைகால் தெரியாமல் ஓட்டம் பிடித்தது. நாட்டுப்படை, மறவன் மாண்டதை எண்ணிக் கொதித்து எழுந்தது. ஆனால் எதிரில் கழுகும் பருந்தும் வட்டமிட்டன. பகைவர் களைக் காணவில்லை. வேங்கை வீழ்ந்துபட்டதை அறிந்த வேந்தன் ஓடிவந்தான். தன் மைந்தன் போலத் தழுவினான். வீரர்கள் வேங்கையின் மார்பில் ஒழுகிக் கொண்டிருந்த குருதியைத் தொட்டு நெற்றி யிலே பொட்டு இட்டுக் கொண்டனர். அழுகை இல்லை; அலறல் இல்லை; மறவனைத் தூக்கிக்கொண்டு வீரர்கள் ஆடிப் பாடினர். வீரச்சாவு கிடைத்தது வேங்கைக்கு என்று கொண்டாடினர். போர்க்களத்திலிருந்து வெருண்டோடிய வீரர்களைப் போல யானைகளும் வெருண்டோடின அல்லவா! அவற்றுள் சில செல்லும் திசை அறியாமல் காடு மலைகளுக்கு ஓடின. பேரிரைச்சல் இட்டுக்கொண்டு அலறித் திரிந்தன. சில யானை களின் மீது தலை வீழ்ந்துபட்ட வீரர்களின் உடல்கள் நின்றிருந் தன; சில சாய்ந்து இழுபட்டுக் கிடந்தன. வரிப்புலி, குறையுடலைச் சுமந்துவந்த யானை ஒன்றைக் கண்டான். அவன் பல நாட்களுக்கு முன்னமே வேங்கை மலைக்கு நெடுந்தொலைவில் இருந்த ஒரு மலைக்குச் சென்றிருந்தான். அம் மலையில் யானைகள் புகுந்து வாழைத் தோட்டங்களை அழித்ததையும், குடியிருப்புக்களைச் சிதைத்ததையும் பொறுக்க மாட்டாத மக்கள் யானைக்கூட்டத்தை ஒடுக்குமாறு வரிப் புலியை நாடினர். அமைதியாக வாழ்ந்திருந்த மக்களுக்கு ஏற்பட்ட அல்லலைக் கேட்டு, வரிப்புலியும் மலைக்குச் சென்று பாதுகாத்துக் கொண் டிருந்தான். இந்நிலைமையிலேதான் தப்பிவந்த யானையை அவன் கண்டான். சிந்தித்தான். அச்சமிக்க சூழ்நிலை ஒன்று நாட்டில் உருவாகியிருக்கிறது என்று எண்ணி மலையூர் நோக்கி விரைந்தான். ஆனால் அதற்குள் மறவன் கல்லாகி நின்றிருந்தான். அரியேறு த்தா த்தா என்று சொல்லிக் கொண்டே இருந்தான். கல்லைச் சுட்டிக் காட்டினாள் மங்கை, மறவனது வீரப் பெருமை மறைவுத் துயரை அடக்கிக் கொள்ளுமாறு செய்தது. ஆனால் அவனது அன்பின் வலிமை கண்ணீர் வடிக்கு மாறு செய்தது. குடிப் பெருமைக்காக மங்கை கவலையை அடக்கிக் கொண்டிருந்தாள். அன்புப் பிழம்பாய் இருந்த குடும்பச் சுடருக்காகக் கண்ணீரைப் பெருக்கினாள். நாட்டுப்பற்றும், குடிப்பெருமையும் வீரப்பேறும் கருதா தவளாக மங்கை இருந்திருந்தால் - அந்தோ - முட்டி முட்டி மண்டையை உடைத்துக்கொண்டே இருந்திருப்பாள். மறவ னுக்கு மட்டும் கற்சிலை எழுப்பவேண்டியிருந்திருக்காது. எழுப்ப வேண்டியிருந்தால், நாட்டுக்காக உயிர்விட்ட வீரனுக்கு ஒன்றும், தந்தைக்காக உயிர்நீத்த மகளுக்கு ஒன்றும் ஆக இரண்டு கற் சிலைகள் நடவேண்டியிருந்திருக்கும். வரிப்புலி கதறி அழுதேவிட்டான்! நாட்டுக்கு வீரர் ஏராளம் பேர் கிடைக்கலாம் ஆனால் வீட்டுக்கு இப்படி ஓர் அன்பன் கிடைக்கவே மாட்டான். வீரம் விஞ்சியிருந்ததா? அன்பு விஞ்சியிருந்ததா? உறுதியாக ஒன்றை ஒன்று விஞ்சியிருந்தன என்றே கூறலாம். வேங்கையின் வீரம் எப்பொழுதாவது எவருக் காவது பொல்லாங்கு செய்ததா? அந்தோ! கொடுமை செய்ததா? தன்னலத்திற்காகப் பயன் பட்டதா? இல்லவே இல்லை. நாட்டுக்கே பயன்பட்டது பிறர்க்கெனவே பயன்பட்டது என்றாவது ஒரு கொலை செய்ய நான் கண்டதே இல்லை. நல்லவன் வீரம் ஒருநாளும் கேடு செய்யாது. வீரம் வேண்டும் - நல்லவனுக்கே வீரம் வேண்டும் என்று ஏங்கி ஏங்கித் துடித்தான் வரிப்புலி. கற்சிலையைப் பார்க்கிலும். மறவன் வரைந்த படமும், குறு குறு பாட்டும் கொடுமை செய்தன - அம்மம்மா! மிகக் கொடுமை செய்தன. மறவன் உயர் வீரத்தையும், வெற்றிச் சிறப்பையும் கேள்விப் பட்டு எத்தனை எத்தனையோ வீரர்கள் வந்து நடுகல்லுக்கு மாலை சூட்டிச் சென்றனர். பாவாணர்களும், புலவர்களும் வந்து பாமாலையும் சூட்டிச் சிறப்புச் செய்தனர். அவர்களுள் ஒரு புலவர் பெருமாட்டியும் இருந்தார். அவர் மாசாத்தியார் என்னும் பெயரினார். ஒக்கூர் என்னும் ஊரினைச் சேர்ந்த அவ்வம்மையார் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப் பெற்றார். மலையூரிலே நெடுங்காலமாக வாழ்ந்திருந்தார். மறவன் வீரச் சிறப்பு அவர் உள்ளத்தை உருக்கியது. நடுகல்லைத் தாழ்ந்து வணங்கிவிட்டு நாட்ட பற்றாளன் குடி வாழ்க என்று வாழ்த்திச் சென்றார். இதோ பார்! இப்படியடா! இப்படி! இதை இழு! நன்றாக இழு! ஙம் சரி - குறிபார்த்துக் கொண்டாயா? அடி விற்பயிற்சி யளித்துக் கொண்டிருந்தான் வரிப்புலி. அரியேறுக்கு, ஏழெட்டு ஆண்டுகள் நடந்தேறிவிட்டன. விற்பயிற்சியும், மற்பயிற்சியும் தந்தான் வரிப்புலி, வீரக்குடியிலே பிறந்த அரியேறு போர்க் கலையில் உணர்ச்சி பெற்றான். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பது பழமொழியல்லவா! அம்மொழி பழுதாகி விடவில்லை,அரியேறைப் பொறுத்த அளவில்! அரியேறு! உனக்கேன் இப்பெயர் வைத்தேன் என்று தெரியுமா? என்று மங்கை ஒரு நாள் கேட்டாள். என்னம்மா காரணம் என்று ஆவலோடு கேட்டான். புலியின் மேல் தனிப் பெருமை கொண்டிருந்தேன் நான். வீரத்திற்கு அதனையே தக்க சான்றாக எண்ணினேன் புலியை வெல்லும் வல்லமைக்கு இணையான வல்லமை இல்லை என்று முடிவு கட்டினேன் உன் அப்பா, தாத்தா பெயர்களும் புலிதானே ஆனால் புலிமீது வைத்திருந்த உயர்வெல்லாம் ஒருநாள் தவிடுபொடியாகி விட்டது. நீ பிறந்து ஒன்றிரண்டு திங்களுக்குள் நடந்தது அது. வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாமல் காட்டின் பக்கம் போய் வரலாம் என்று போனேன். நம் தினைக்காட்டுக்கே போய் விட்டேன். அங்கே தாத்தா இருந்தார். அப்பொழுது அவர் அங்கே நின்ற ஒரு புலியை எனக்குச் சுட்டிக்காட்டினார். புலி புதருக்குள் மறைந்து நின்று வாலைச் சுழற்றிக்கொண்டு இருந்தது. பக்கத்திலே ஒரு யானை நல்ல தழைகளைக் கொய்து குவித்துக் கொண்டு இருந்தது. அதனைக் கொல்லவேண்டும் என்பது புலியின் எண்ணம் போலும். அதற்கு, மறைந்து நின்று கொல்வதா வழி? வலிமை இருந்தால் நேரடியாகத் தாக்க வேண்டும். சே! சே! புலியின் வீரம் இழிவானது. மறைந்து தாக்க நினைக்கும். இப்புலி மானவீரம் உடையதா? என்றாள். புலிக் கூட்டத்திற்கே இழிவு என்றான் அரியேறு. மங்கை அவனை அணைத்துக் கொண்டாள். அன்றுதான் உனக்கு அரியேறு எனப் பெயர் வைத்தேன். ஆண் சிங்கம் முழங்கிக் கொண்டு வந்து, மலையையே அதிரச் செய்து தானே தாக்கும் என்றாள். அம்மா! யானை என்ன ஆயிற்று என்றான் அரியேறு. மானங்கொண்டு எதிர்த்தது யானை. வெண்ணிறத் தந்தங் களால் குத்திக் குத்திச் சாடியது. துதிக்கையால் தூக்கி எறிந்து , கால்களால் உதைத்தது. புலி ஊக்கமெல்லாம் காட்டி யானையைக் கொன்றுவிடப் பார்த்தது. ஆனால் தக்க பிடி கிடைக்காத காரணத்தால் மானமிக்க யானைமுன் நிற்க முடியவில்லை. ஓடிப்போய் விட்டது என்றாள். யானைக்குப் பயந்து ஓடவா செய்தது? சண்டையில் செத்திருந்தாலாவது பெருமை. தோற்றோடி உயிரைக் காப்பது இழிவு இல்லையா அம்மா! அவ்வாழ்க்கை என்ன, வாழ்க்கையா? அந்த வேங்கை, தாத்தா வேங்கையை அறிந்து வெட்கப்பட வேண்டும் என்றான். அரியேறு. தன் முன்தானைத் துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டு மறுபக்கம் திரும்பினாள் மங்கை. என்னம்மா! என்றான். அந்த வேங்கையைப்போல் என் அரியேறு இருக் காது என்றாள். ஆமாம்! அரியேறு பிறந்த மறக்குடியே அவ்வளவு சிறப்பானது. அவ்வேங்கையைப் போல உயிருக்கு அஞ்சும் உணர்ச்சியே வராது என்றான். வெட்கத்தால் தலை குனிந்தாள் மங்கை. அரியேறு சிறுவர்களுடன் விரும்பி விளையாடுவான். அவன் விளையாட்டிலேயே வீரம் புலப்படும். பெரும் பெரும் வீரர்களும் சிறுவர்களின் வீர விளையாட்டைக்கண்டு வியப்புக் கொண்டனர். சமையற்கலை வல்லவளாம் தாய், பிள்ளை சிறுசோறு பொங்குவதைக் கண்டு தன்னை மறந்து வியப் படைவது இல்லையா? விளையாட்டு வீரம் உண்மை வீரத்தின் தோற்றுவாய் தானே! வரிப்புலி அரியேறுக்கு வீரப்பயிற்சியளித்தான். மங்கை நாட்டுப்பற்று ஊட்டினாள்; குடிச் சிறப்பு எடுத்துரைத்தாள். பிறந்தோர் அனைவரும் இறப்பது உறுதி; ஆனால் சிறந் தோராக இறப்பது அரிது; என்று ஒரு சமயம் கூறினாள். தாத்தாவை நினைத்துக் கொண்டு நடுகல்லுக்கு மாலையிட்டான் அரியேறு. வேங்கை மரத்தின் கீழே நின்று வரிப்புலி விற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான். பலகையில் இருந்த துளையைப் பார்த்து அடித்துக் கொள்வதிலே தனி ஆசை. குறிதவறாமல் அடிப்பது மகிழ்ச்சிதானே. பக்கத்தில் இருந்த நெல்லிமரத்தில் ஒருகாயைச் சுட்டிக் காட்டினான் அரியேறு. அக்காயையே வீழ்த்தினான் வரிப்புலி. துவர்ப்பான நெல்லிக் காயும் இனித்தது. குறிப்புப்படி வீழ்ந்தது அல்லவா! அப்பா! இப்பலகை மிகப்பக்கத்தில் இருக்கிறது. என் கையில் எடுத்துக் கொடுங்கள். தொலைதூரத்தில் நின்று பிடித்துக் கொள்கிறேன். அம்பைத் துளையின் வழி செலுத் துங்கள்! இந்த அளவை மட்டும் பயிற்சி செய்து பயனில்லை என்றான். ஆமாம்! அதுசரி நீ பிடித்திருந்தால் என் குறி பலகையில் படாமல் உன் மேல் பட்டுவிட்டால் என்றான். உங்கள் அம்புக் குறிமேல் எனக்கு ஐயமே வருவதில்லை. மேலே பட்டாலும் படட்டும்! அது எப்படியும் முதுகில் படாது அல்லவா என்றான் நீ புலியல்லடா! அரியேறு என்று தட்டிக்கொடுத்தான் வரிப்புலி. அப்படியே பயிற்சி செய்தார்கள். அரியேறும் அம்புவிடக் கற்றுக்கொண்டான். அவனது வில் வளைப்பையும், அம்பு செலுத்துதலையும் கண்டு வரிப்புலி மெய் மறந்து நிற்பான். அவ்வளவு திறமை வந்துவிட்டது அரியேறுக்கு. ஒரு பெருங்கூட்டத்தார் வேங்கை மலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களையெல்லாம் திரட்டினர். தினைக் காட்டிலே வரிப்புலி இருந்தான், பசு மேய்ப்பவர்கள் சிதறி யோடினர். மனஞ்செருக்கி வந்தவர்கள் மாடுகளைத் திரட்டிக் கொண்டு சென்றனர். பசுக்காரர் சிலர் மன்னனிடம் உரைக்க ஓடினர். பக்கத்து ஊரில் சொல்லவும் விரைந்தனர். படைக்கருவி எதுவும் இல்லாமல் தினைக் காட்டிற்கு வந்த வரிப்புலிக்கு இந்நிகழ்ச்சி கோபத்தை எழுப்பியது. விரைவாக ஊருக்கு ஓடினான். வில்லும் அம்பும் எடுத்தான். ஊர்க் காரரை யும் உரக்கக் கூவி அழைத்தான். பசுக்கள் பகைவரால் திரட்டப் படுகின்றன. பழிவராமல் காப்பதற்குப் புறப்படுங்கள். சிங்கங்கள் வாழும் இடத்திலே சிறுநரி எக்காளமிட விட்டு விடாதீர்கள் என்று அறைகூவல் விடுத்தான். பெருகித் திரண்டனர் வீரர். ஒருவரை முந்தி ஒருவர் படைக் கருவிகளுடன் புறப்பட்டனர். வரிப்புலி பசுவைத் திருப்பப்போகும் அடையாளமாக ஒரு மாலையை அணிந்தான். தன் வெற்றிக்கு அடையாளமாக மங்கை கழுத்திலும் ஒரு மாலையை அணிவித்தான். அப் பொழுது தன்னுடைய கழுத்து மாலையை எடுத்து வரிப் புலியின் கழுத்திலே போட்டு வெற்றியொடு மீள்க என்று வாழ்த்தினாள். வரிப்புலி தன் கழுத்து மாலையை எடுத்து அவள் கழுத்திலே போட்டு மானவீரம் நம்குடிப் பொருள் என்று விடைபெற்றுக்கொண்டு சென்றான். வந்த வீரர்களையெல்லாம் வழிகாட்டி அனுப்பிவிட்டு, மன்னன் உறையும் அரண்மனைக்குச் சென்றான் வரிப்புலி. அங்கிருந்தும் படை திரண்டது. வரிப்புலியை முன்னமே அறிந் திருந்த மன்னன் மார்போடு தழுவிக்கொண்டு வேங்கை மறவன் மருக, வெற்றியொடு வருக! உன் வெற்றிக்கும் நம் அன்புக்கும் இதோ.... என்று தன் பொன்மாலையைக் கழற்றி வரிப் புலிக்கு அணிவித்து, அவன் பொன்மாலையை எடுத்துத் தான் அணிந்து கொண்டான். மன்னவன் தழுவி, அன்பு காட்டியபின் வரிப்புலி இரட்டைப் பங்கு வீரம் பெற்றான். விரைந்து சென்று, பசுவை மீட்குமாறு செல்லும் படைக்கு முன்னின்றான். பெரியபாறை ஒன்றின் மேல் ஏறிக்கொண்டு பார்த்தான் வரிப்புலி. பகைவர்கள் பசுக்களை விரைந்து திரட்டிச் சென்றனர். தன்னொடும் வந்த வீரர்களை இரு பிரிவாக்கி, இருபக்கங் களிலும் வளைக்குமாறு ஏவினான். பின் வருவது பற்றிக் கவலைப் படாத அவ்வீரர்கள் செறிந்த காட்டினுள் நுழைந்து நுழைந்து சென்று திடுமெனப் பகைவர் முன் வெளிக்கிளம்பினர். உயர்ந்த பாறைமேல் நின்று கொண்டு அம்பு மழை பொழிந்தனர். இவ்வாறு ஏற்படும் என்று எண்ணாமல் நடந்து கொண்டிருந்த பகைவர்கள் பசுக்களை ஓடாமல் காத்துக்கொள்ளுமாறு சிலரை வைத்து விட்டு எதிர்த்துப் போர் தொடுத்தனர். மின்னல் வெட்டுப் போலவும், மீன் பிறழ்வு போலவும் அம்புகள் பாய்ந்தன. சிலபேர் தொகுத்துவிட்ட அம்புகள் கூட்டமாகத் தொகுத்துச் செல்லும் பறவைகளைப் போல் காட்சியளித்தன. உரங்கொண்ட இருபடைகளும் எளிதில் சலித்து விட வில்லை. காலைப் பொழுதிலே தொடங்கிய போர், உச்சிப் பொழுதுவரை ஓய்ந்து விடவில்லை. வீரர்கள் பள்ளத்தாக்கிலே நின்று போரிட்ட பொழுது, பகைவர்களில் சிலர் மறைவாக மலை மீது ஏறிப் பாறைக் கற்களைப் புரட்டிப் புரட்டித் தள்ளினர். அவர்கள் வஞ்சகச் செயலைக் கண்டு தலைக்குக் குறிபார்த்து அம்பு ஏவினான் வரிப்புலி. ஒருவர் இருவர் தப்பிச் செல்ல நினைத்தனர். அவர்களையும், ஓடாதவாறு குறி வைத்தான். மலையின் உச்சியில் இருந்த அவர்கள் மரம் ஒன்றில் மறைவாக இருந்து, எப்பக்கத்திலிருந்து அம்பு வருகிறது என்று புரிந்து கொள்ள முடியாத அளவில் அம்பு ஏவினர். வரிப் புலியும் சோர்வு கொள்ளாது அம்புகளை நூறு, ஆயிரம், என்று தள்ளிக் கொண்டு இருந்தான். பலர் உருண்டனர்; பலர் ஓடினர்; பலர் வீழ்ந்தனர்; சிலர் உரங்கொண்டு எதிர்த்துத் தாக்கினர்; வாள்கள் சுழன்றன. வில்களும் அம்புகளும் விளையாடின. வரிப்புலியின் வில் பேசியது. நாண் பாடியது; அம்பு வீரக் கூத்தாடியது. அவன் உடலில் இடமில்லாமல் ஏற்பட்டிருந்த புண்களில் இருந்து குருதி எழுந்தது. சோர்ந்து விடவில்லை தாக்குதல் உச்ச நிலைக்கு வந்தது. பகைவர் ஓட்டம் பிடித்தனர். அவர்கள் ஓடிய பின்தான் தன் உடல் நிலையை உணர்ந்து பார்த்தான் வரிப் புலி. அப்பொழுது அவனால் நிற்கக் கூட முடியவில்லை. சோர்ந்து வீழ்ந்தான். இவ்வில்லையும் அம்பையும் அரியேறிடம் கொடுங்கள்; குருதி படிந்த இம்மாலையை மங்கையினிடம் கொடுங்கள்; நாட்டுப் பற்றால் உயிர் விட்டேன் என்று நாடாள்வோனுக்கு உரையுங்கள் என்று பேச்சை முடித்துக் கொண்டான். மன்னவன் புகழ வாழ்ந்த மானவாழ்வு மண்ணில் சாய்ந்தது. ஆனால் மாயாப்புகழ் பெற்று விட்டது. வரிப்புலியின் செய்தியை மங்கை அறிந்தாள். வாய் பேச எழவில்லை; தொண்டை கப்பிக்கொண்டது; ஏங்கினாள்; உள்ளம் வீங்கினாள்; ஆனால் எரிமலைபோல் அடங்கிக் கிடந்தாள்; உள்ளத்தின் குமுறல் என்னென்னவோ? ஊரெங்கும் பரவியது செய்தி. மறவன் இறப்பே ஈடு செய்ய இயலா இழப்பு. வரிப்புலியும் சேர்ந்துகொண்டான். அவனைப்பற்றிக் கேட்டுச்செல்ல மலையூர் மட்டுமன்று. பக்கத் தூர்களெல்லாம் திரண்டன. மங்கையின் வீடு கண்ணீரால் மெழுகப்பட்டது. அவளோ வரிப் புலியின் வில்லை ஊன்றி வைத்து, இரண்டு மாலைகளை அதில் சூட்டியிருந்தாள்! வீரத்தின் பரிசு.....! மறுநாள் காலையிலும் மங்கையின் வீட்டுக்குச் சிலர் வந்தனர். சிலர் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஒக்கூர் மாசாத்தியார் உள்ளத்தை மறவன் செயலே பறித்திருந்தது. வரிப் புலியின் செயலோ உருக்கியேவிட்டது. தேறுதல் சொல்ல வந்த அவ்வம்மையார் அனலிடைப் பட்ட புழுவெனத் துடித்தார். கண்ணீர் வடித்தார். மங்கைதான் அவ்வம்மையாரைத் தேற்றிக் கொண்டிருந்தாள். மங்கையின் உள்ள நிலையும், துணிவும் மாசாத்தியாரை, வியப்பில் ஆழ்த்தின, மறக்குடியின் மாண்பைப் பலபட எண்ணிக் கொண்டிருந்தார். அப்பொழுதிலே தெருவில் போர்ப்பறை முழங்கியது. அம்முழக்கம் மாசாத்தியாரைத் திகைக்கச் செய்தது. மறக்குடி வீரர்களோ வில்லை விட்டுக் கிளம்பும் அம்பு போலவும், குகையை விட்டு வெளியேறும் வேங்கை போலவும் கிளம்பிக் கொண்டு இருந்தனர். மங்கையும் பொங்கும் சினத்துடன் எழுந்தாள். போர்ப் பறையா அது? என்று துடி துடித்துக் கேட்டாள்; வீதிப்புறத்தே நின்றிருந்த அரியேற்றை ஓடிப்போய் அழைத்தாள்; நன்னீ ராட்டினாள்; வெண்பட்டு உடுத்தாள்; மயிரைக் கோதிக்கட்டிப் பூமுடித்தாள். கிண்கிணி இலங்கும் கால்களிலே வீரக்கழலைச் செறித்தாள். வளையல் விளங்கும் முன்கைகளிலும், இடுப் பிலும் கச்சைகளைக் கட்டினாள். வேலும் கேடயமும் விருப் புடன் தந்தாள். போய் வாடா மகனே போருக்கு; மறக்குடியின் மாண்பை நிலை நாட்டு. எங்களுக்கு மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதில்லை; மாற்றான் காலடி எங்கள் தாயகத்து மண்ணிலே பட விட மாட்டோம் என்று கிளம்பு; வெற்றியோடு திரும்பி வாடா! என் வீரச் செல்வா! என்று அனுப்பி வைத்தாள். அரியேறு சிங்க மெனச் செம்மாந்து போர்க்களம் சென்றான். ஒழிக உள்ளம்; ஒழிக உள்ளம். இவள் துணிவு கொடிது; மிகக் கொடிது. இச் சிறுவயதிலேயே வேலும் கையுமாய்ப் போர்க்களம் புகவிடும் இவள் கொடியவள்; முன்னாள் போரிலே மாண்டான் தந்தை; நேற்றைப் போரிலே இறந்தான் கணவன்; இன்று பறையொலி கேட்டவுடன் தன்குடிக்கு ஒரே மகனாக இருக்கும் இவனையும் போருக்கு அனுப்புகிறாள். போருக்கு அனுப்பிவைப்பதிலேதான் எவ்வளவு மகிழ்ச்சி வீதியிலே நின்ற மகனை அழைத்து வைத்து அழகு வகையெல்லாம் செய்து வேல் தந்து வெற்றியோடு வா என்று வாழ்த்தி அனுப்பும் இவள் மறக்குடி மங்கை என்பது தகும். மிகத் தகும், என்று புலம்பினார் மாசாத்தியார். புலவர் பெருமாட்டியின் புலம்பல் வெறுமனே போய் விடவில்லை. மறக்குடியின் சிறப்புக்கு ஏற்ற ஒரு பாமாலை யாகி விட்டது. போருக்குச் சென்ற அரியேறு நெடுநேரம் வீட்டுக்குத் திரும்பவில்லை. பொழுது போய்விட்டது. வீரர் அனைவரும் வீடு திரும்பி விட்டனர். அவனைப் பற்றிய செய்தி ஒன்றும் மங்கைக்குத் தெரியவரவில்லை. விரைந்து போர்க்களம் சென்றாள். பிணக்குவியல்களை நாயும் நரியும் இழுத்துக் கொண்டிருந்தன. கழுகும் காக்கையும் குத்திக் குடைந்து கொண்டிருந்தன. அரியேறு களத்தின் இடையே தலையில் கைகளை வைத்துக் கொண்டு கவலையுடன் உட்கார்ந்திருந்தான். அரியேறு தனித்திருப்பதைக் கண்ட மங்கை ஏனடா! வீட்டுக்கு வரவில்லை என்றாள். வர மாட்டேன் அம்மா! வரமாட்டேன். எந்த முகத்துடன் வீட்டுக்குத் திரும்புவேன். தாத்தா போருக்குப் போனார் திரும்பி வரவில்லை. அப்பா போருக்குப் போனார் திரும்பிவரவில்லை. அவர்களெல்லாம் வீரப்போர் செய்து நாட்டுக்காக இறந்தார்கள், என்று சொன்னாய். நான் மட்டும் என்ன கோழையா, தாத்தாவும் அப்பாவும் என்ன நினைப்பார்கள்? ஒரு காயமும் இல்லாமல் இப்படியே வந்தால் நீதான் என்ன நினைப்பாய்? எங்கோ பயந்து போய்க்கிடந்து வந்திருக்கிறேன் என்றுதானே நினைப்பாய்; நான் மார்பில் புண் இல்லாமல் வருவது உனக்குப் பெருமையா? நம் குடிக்குப் பெருமையா? இல்லை - எனக்குத் தான் பெருமையா? அதனால் தான் வீட்டுக்கு வரவெட்கமாக இருக்கிறது. நான் இங்கு வந்து அம்பு தொடுத்தேன். ஐந்தாறு தான் தொடுத்தேன். ஆனால் அதற்குள் வெற்றி வெற்றி என்று வீரர்கள் போய்விட்டார்கள், நமக்குத்தான் வெற்றியாம். சாவாமல் காயம் படாமல் எப்படித்தான் வெற்றி கிடைத்ததோ? கோழைகள் என்று மூச்சுவிடாமல் பேசினான். வீரமங்கை ஓயாமல் அழுதாள். இப் பேச்சை வேங்கை இருந்து கேட்கவேண்டும்; புலி இருந்து கேட்கவேண்டும். நான் இருந்து கேட்கிறேன் என்று விம்மி விம்மி அழுதாள். அரியேறைத் தழுவிக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். மாசாத்தியார் பாடல் அரசன் காதுக்கும் எட்டியது, மறக்குடியினருக்கும் தெரிந்தது. அரசன் அரியேறை அழைத்துச் சிறப்புச் செய்தான். வீரர்க்குரிய பொற்பூவும், பொன்னாடையும் அளித்தான். வாள் ஒன்றைப் பரிசாகத் தந்தான். தக்க சிறப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். வீரவாளைப் பெறுதற்கு உரியவர்கள் இதோ கல்லாகவும் வில்லாகவும் நிற்கின்றனர். பெறத் தகுதி அற்ற நான் பெறு கின்றேன். இவர்கள் குடியில் நான் பிறந்துவிட்ட ஒன்றுதான் காரணம். வாழ்க மறக்குடி என்று வாழ்த்திக் கொண்டு வாளைச் சிலைமுன் வைத்துத் தலைதாழ்த்தி வணங்கினான். அரியேறைப் பெற்ற அன்றினும் பெரிது மகிழ்ந்தாள் மங்கை. மன்னன் வரிப்புலிக்குச் சிலை செய்து அனுப்பிவைத் திருந்தான். படைவீரர்கள் அதனை நிறுத்தி மாலை சூட்டி வாழ்க வாழ்க என்று வாழ்த்தினர். வாழ்த்தொலி செவியைப் பிளந்தது - என்னவென்று உறக்கத்திலிருந்து எழுந்தேன். அப் பொழுது என் உள்ளத்தில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்னும் புறப்பாடல் ததும்பிக் கொண்டு இருந்தது. நான் மாசாத்தியார் வாழ்க என்று வாழ்த்தினேன். ஒக்கூர் மாசாத்தியார் பாடிய புறநானூற்றுப் பாடல் கெடுக சிந்தை கடிதிவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேனாள் உற்ற செருவிற் கிவள் தன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே; நெருநல் உற்ற செருவிற் கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறு மயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமகன் அல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே. (புறம். 279) (இவளது சிந்தை கெடுக; இவள் துணிவு அச்சம் பொருந் தியதாகவுளது; இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாம் எனல் தக்கதே; முன்னாளில் உண்டாகிய போரின் கண் இவளுடைய தந்தையானவன் யானையைக் கொன்று தானும் வீழ்ந்து மாண்டான். நேற்று உண்டாகிய போரின்கண் இவளுடைய கணவன் பெரியவாகிய பசுக்களைக் கவர்ந்து செல்லாவாறு பகைவரைக் குறுக்கிட்டு நின்று போர் செய்து அவ்விடத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறையைக் கேட்டு விருப்பம் மிக்கு, அறிவு மயங்கி வேலைக் கையிலே தந்து வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து அரையில் உடுத்தி, உலறிய மயிர் பொருந்திய குடுமியில் எண்ணெயைத் தடவிச் சீவி, இந்த ஒரு மகனை அல்லது இல்லாதவளே ஆயினும் போர்க்களம் நோக்கிச் செல்வாயாக எனச் சொல்லித் தன் மகனை விடுகின்றாள்.) 12. பெருஞ்சாத்தன் கதை இருள் பெருகிக் கொண்டிருந்தது; அதற்குத் துணை செய்வதுபோல மேகமும் இருண்டு கொண்டு வந்தது; பாம்பு நெளிவது போல மின்னல் வெட்டியது; மத்தளம் முழங்குவது போல திடு திடு மட மட வென இடி இடித்தது. அங் கொன்றும் இங்கொன்றுமாகச் சட்டச்சட சட்டச்சட என்று மழைத்துளி விழுந்தது. அம்மா! குழந்தையைக் காணவில்லை என்று பதை பதைத்துக்கொண்டு ஓடிவந்து நங்கை முன் நின்றாள் வேலைக் காரி, என்ன சாத்தனைக் காணவில்லையா? எங்கே? தேடிப் பார்; தேடிப்பார் என்று திரிகை சுழல்வது போல சுற்றினாள் நங்கை. வீடே சுற்றுவது போல் அனைவரும் ஓடியாடித் தேடினர். திண்ணை, முற்றம், அறைகள், மாடி, பக்கம், தெரு எல்லாம் பார்த்தாகிவிட்டன. சிறுவன் சாத்தனைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. இடியால் தாக்குண்ட மயில்போல நங்கை உள்ளம் உடைந்து போயினாள். வேலைக்காரி ஊர் முழுவதும் வட்ட வளையம் இட்டுக் கொண்டிருந்தாள். மழை வலுத்தது; கொல்லைப்புறக் கிணற்றண்டையிலே சில துணிகள் கிடந்தன. சாத்தனைத் தேடும் விரைவில் அவற்றை எடுக்க மறந்துபோய் விட்டனர். ஊரெல்லாம் தேடி விட்டு ஏக்கத்துடன் வந்த வேலைக்காரிக்கு உலரப் போட்டு வைத்த துணிகளின் நினைவு வந்தது. அதனால் கிணற்றருகே சென்றாள், மழை நன்றாக அடித்தது. துணிகளை விரைவாக உதறி எடுத்தாள். விரைந்து திரும்பினாள். முல்லைப் பந்தலின் இடையேயிருந்து ஒரு சிரிப்புக் குரல் கேட்டது. உற்றுக் கவனித்தாள் வேலைக்காரி. ஆம்! சாத்தன் தான், தவழ்ந்து வந்து முல்லைப் பந்தலுக்கு இடையே இருந் திருக்கிறான். ஓங்கிச் சத்தமிட்டாள் அம்மா! சாத்தன்! ஓடி வாருங்கள். நங்கை ஓடிவந்தாள். சாத்தன் ஒற்றைக் காலை மடக்கி வைத்து, ஒற்றைக் காலை நீட்டிக் கொண்டு முல்லைக் கொடியையும், பூக்களையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அந்த அழகுக் காட்சியை நங்கை காணவேண்டும் என்றுதான் வேலைக் காரி உடனே சாத்தனைத் தூக்கிவிடவில்லை. நங்கை கொடிக்குள் சென்று, முதுகிலே அன்பால் மெத் தெனச் சிறுதட்டுத் தட்டிக் கொண்டு, கன்னத்தைக் கிள்ளாமல் கிள்ளித் தூக்கிக்கொண்டாள். மார்போடு அணைத்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தாள். மழையும் பெருகக் கொட்டியது. சாத்தன் சிறு வண்டி ஒன்றை இழுத்துக் கொண்டு தெரு வழியே ஓடினான். அதே வண்டி முன்பு நடை வண்டியாக இருந்தது. அப்பொழுதெல்லாம் வண்டியைத் தள்ளிக் கொண்டு நடக்கப் பழகினான். இப்பொழுது நடப்பது மட்டும் அல்லாமல் விரைந்து ஓடவும் கற்றுக் கொண்டுவிட்ட படியால் வண்டியை ஒரு கயிற்றால் கட்டிப் பிடித்துக்கொண்டு ஓடுவான், ஓட்டத்தில் களைப்போ, சளைப்போ சாத்தனுக்கு ஏற்படுவதே இல்லை. சாத்தனுக்கு ஒத்த வயதினனான பூதன் வண்டி இழுத்துக் கொண்டு வந்தான், டே! சாத்தா! எங்கே பார்க்கலாம்! யார் வண்டி முந்தும்? என்று வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். சாத்த னுக்குத் தாங்கமுடியவில்லை! என் வண்டி தான் முந்தும் என்றான். போடா, தற்பெருமை! பார்த்து விடுகிறேன். இப் போது என்று இறுமாப்போடு பேசினான் பூதன். உம்.....! இதோ கோடு; இங்கிருந்து தொடங்கி ஊரை ஒரு சுற்றுச் சுற்றி இங்கே வந்து சேர வேண்டும் தெரிந்ததா? தெரியும், தெரியும்; ஒரு சுற்றாம் சுற்று! போடா! இரண்டு சுற்றுச் சுற்ற வேண்டும்; முடியாவிட்டால் தோற்றுவிட்டேன் என்று ஓடு. இரண்டென்ன, மூன்று சுற்று வருவோம் நீ சொல்வதை நான் கேட்கவேண்டுமோ? நான்கு சுற்று ஐந்து சுற்று ஆறு சுற்று ஏழு சுற்று தகராறு வேண்டாம்! அதோ அழிசி வருகின்றான் அவனைக்கேட்போம், அவனை நடுவனாக வைத்துக் கொண்டு ஓடுவோம். என்ன சொல்கிறாய்? சம்மதம் அழிசி! எனக்கும் இவனுக்கும் வொவ் வொவ்வோ. இப்பொழுது இரண்டு பேரும் ஊரைச் சுற்றி ஓடப் போகிறோம். நீதான் நடுவன்; எத்தனை சுற்றுச் சுற்ற வேண்டும் பூதன் கேட்டான். “v¤jid R‰W? சிறிது பொழுது புருவத்தை நெரித்துக் கொண்டிருந்தான் அழிசி. ஐந்து தரம்; ஒப்புதலா? எனக்கும் ஒப்புதல்தான் எனக்கும் ஒப்புதல்தான் சரி; ஒவ்வொரு சுற்று வந்ததும் ஒரு கல்லைப் போடுவேன். சாத்தனுக்கு இந்த வட்டம்; பூதனுக்கு இந்த வட்டம் சுட்டிக் காட்டினான் அழிசி. ஓட்டத்தைத் தொடங்கி வைத்தான் அழிசி. இருவரும் ஓடினர். சுற்றுக்கு ஒருமுறை கல் போட்டுக் கொண்டு வந்தான் நடுவன் அழிசி. சாத்தன் ஓட்டம் தளரவில்லை. பூதனுக்கு ஓட்டத்தில் அவ்வளவு பயிற்சியில்லை. மேலும் அவன் உடல் பருமனும் ஓட்டத்திற்கு ஒத்துவர வில்லை. உடலை இழுத்துக்கொண்டு ஓடுவதற்கே பெரும்பாடாகிவிட்டது, டே! அழிசி, என்னை இழிவுபடுத்தி விடாதே! நான்தான் சாத்தனை ஓட்டத்திற்கு வலிய அழைத்தேன். அந்தப் பயல் இப்படி ஓடுவான் என்று எனக்குத் தெரியாது - சாத்தன் நான்காம் சுற்று வரும்போது மூன்றாம் சுற்றில் வந்து கொண் டிருந்த பூதன் கூறினான். நீ ஓடு! நான் பார்த்துக்கொள்கிறேன்; நான் நினைத்தால் உன்னை வெற்றி பெறச் செய்வது எளிது! இதோ இரண்டு கற்கள்! போதுமா ஓடு! இது அழிசியினது நேர்மை தவறாத உரை. சாத்தன் நான்காவது சுற்றுமுடித்து, ஐந்தாம் சுற்றுக்கு ஓடினான். பின்னால் பூதன் இளைத்துப் போய்வந்து கொண் டிருந்தான். உண்மையில் அதுதான் அவனுக்கு நான்காம் சுற்று. ஆனால் நின்றுகொண்டான். சாத்தன் இளைப்புக்காணாத குதிரைபோல தாவித்தாவி வந்தான். தனக்கு முன்னே நின்றுகொண்டிருக்கும் பூதனைக் கண்டு திகைப்படைந்தான். ஏன் ஓடவில்லை! வீண் வம்புக்கு இழுத்து இழிவுகொள்ள வேண்டுமா? என்று இடித்துப் பேசினான் சாத்தன். பூதன், நன்றாகப் பார்! கண்களைத் துடைத்துக்கொண்டு பார்! நான் எத்தனை சுற்றுகள் வந்திருக்கிறேன் தெரியுமா? என்றான். என்ன சொல்கிறாய்? IªJ R‰WfŸ tªJÉ£lhah? திகைப்புடன் கேட்டான் சாத்தன். ஆமாம்! ஆமாம்! வாய்ச்சொல் வீரம் எல்லோருக்கும் வரும்; ஓடவேண்டும்! அழிசி இவனுக்கு நீயே சொல் - இறுமாப்புடன் பேசினான் பூதன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுற்று ஓடிவந்த வுடன் ஒவ்வோர் கல் போட்டுக் கொண்டே வந்தேன். இவன் வட்டத்தில் ஐந்து கற்கள்; உன் வட்டத்தில் நான்கு கற்கள்; யார் தோற்றது? - சிறிதும் தயக்கமில்லாமல் அழிசி பேசினான். பொய்! பொய்! சுத்தப்பொய்! இரண்டு பேரும் கூடி வஞ்சம் செய்துவிட்டீர்கள். நான் நம்பவே மாட்டேன் சாத்தன் உரையில் துடிப்பு இருந்தது. நீ எப்படி நம்புவாய்? செருக்கு உன்னை நம்பவிடுமா? என்று குத்திப் பேசினான் பூதன். உண்மையாகவே சொல்கிறேன்; நீ நான்கு சுற்றுகளே சுற்றினாய். நானே ஐந்து சுற்றுகள் சுற்றினேன். கல்லைப் போட்டுக் கொண்டால் மட்டும் உண்மையாகி விடுமோ? ஏய் சாத்தா! நீங்கள் இருவரும் கூடி என்னை நடுவனாக இருக்கச் சொல்லிவிட்டு இப்பொழுது நீ பழி போடுகிறாய் என்மேல் இல்லாத பழியைப் போட்டால் பொல்லாத சினம் எனக்கு வரும். நீ சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு இந்தப் பூதனைப் போல் சும்மா இருக்கமாட்டேன். கொடுமை செய்துவிட்டுச் சினம் வேறு வருகிறதோ? டேய் வந்து பார் என்று சொல்லிக் கொண்டே வெறி பிடித்தவன் போல் சாத்தன் மீது பாய்ந்தான் அழிசி! பூதனும் முன்னும் பின்னும் நின்று நையப் புடைத்தான். சாத்தன் சிறிது நேரம் பொறுத்திருந்தான். இனிப் பொறுத்துப் பயனில்லை என்று சீறி எழுந்தான்; புலிப் பாய்ச்சல் பாய்ந்து இருவரையும் நொடிப் பொழுதில் கீழே உருட்டினான். இரண்டு பேருக்கும் பொறுக்கமுடியாத அளவுக்கு அடி... குத்து! அழிசி வாயிலிருந்து குருதி கொப்பளித்துக் கொண்டு வந்தது. பூதனும் அழிசியும் சோர்ந்துபோய் விட்டனர். சண்டை ஓரளவு ஓய்ந்தது. வாய்ச் சண்டையில் கிளம்பி விட்டனர் நண்பர் இருவரும்! தோற்று ஓடும் நாய் வாலை மடக்கிக் கால்களுக்குள் வைத்துக்கொண்டு குரைப்பது இல்லையா! சாத்தன் பேசவில்லை. தன் வண்டியைத் தூக்கினான். பூதன் வண்டியின் மீது ஒரு போடு போட்டான்; பூதன் வண்டி நொறுங்கியது பின் தன் வண்டியையும் நொறுக்கினான். கொடுமைக்குக் கூட்டுச் சேர்ந்துள்ள உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தான் சாத்தன். வொவ் வொவ்வோ என்று அழுத்தம் காட்டினான் பூதன். அழிசி வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டு இருந்தது. இல்லாவிடில் அவனும் அழுத்தம் காட்டியிருப்பான். சாத்தன் வீட்டுக்குச் சென்றான். அவனுக்குப் பூதன் மேலும், அழிசி மேலும் சினம் தான். இருந்தாலும் அதைப் பெரிது பண்ணி பெற்றோர்களிடம் கூறுவதற்கு அவன் விரும்பவில்லை. அறிந்தோ, அறியாமலோ தவறு செய்து விட்டார்கள். அதன் பயனையும் அள்ளிக் கட்டிக் கொண்டார்கள். இன்னும் அதையேன் ஊரெல்லாம் பரப்பவேண்டும் என்று அடக்கமாக இருந்தான். ஆனால் அழிசிக்கும் பூதனுக்கும் வெட்கம் வெட்கமாக இருந்தது. எப்படியும் சாத்தன் தங்களை இழிவாக ஊரெல்லாம் தூற்றித் திரிவான் என்றே எண்ணினர். இரண்டு மூன்று நாள்கள் ஊருக்குள் நடமாடு வதையேவிட்டு ஒளிந்து திரிந்தனர். சாத்தனது தந்தையார் பெயர் ஒல்லையூர் கிழார் என்பது. அவர் ஒல்லையூரிலே இருந்த பெருஞ்செல்வரான படியாலும், உழவுத்தொழில் புரியும் குடியிலே பிறந்ததாலும் ஒல்லையூர் கிழார் என்று அழைக்கப்பெற்றார். கிழார் என்று சுருக்கமாக அழைத்தாலும் அவரையே குறிக்கும் அளவுக்கு எல்லோருக்கும் தெரிந்த பெரிய மனிதராக அவர் இருந்தார். அவருக்குச் சாத்தன் மேல் அளவு கடந்த அன்பு உண்டு. அதனால் கண்ணே பொன்னே என்று போற்றி வளர்த்தார். உடல் வளர்ந்தால் மட்டும் போதுமா? அறிவும் வளர வேண்டும்; பண்பும் வளர வேண்டும் என்று நினைத்துத் தக்க ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்தார். ஆசிரியர் நல்லறிவும் பெருங்குணமும் ஒருங்கே கொண்டவர். அதனால் சாத்தனை மிகவும் அன்பாக நடத்தி அறிவைப் பெருக்கினார். அவ்வப்பொழுது ஏற்படக்கூடிய ஐயங்களை மிகத் தெளிவாக விளக்கினார். உலாவப் போகும் பொழுதும் சிறுவன் சாத்தனை அழைத்துக் கொண்டு போவது உண்டு. அப்பொழுது அருமை அருமையான பாடல்களைப் பாடி மகிழ்விப்பார். பழைய இலக்கியங்களை எடுத்துக்காட்டி விளக்குவார். பாடல்களை இசையோடு பாடுவார். சாத்தனை யும் பாடச் செய்வார். அதனால் சாத்தனுக்கு ஆசிரியர் மீது வாஞ்சை உண்டாயிற்று. ஒருநாள் ஆசிரியர் சாத்தன் வீட்டுக்கு வந்தார். அப் பொழுது கிழார் இருந்தார். சாத்தன் வீட்டில் இல்லை. கொல்லைப் புறத்தில் கையில் ஒரு குடத்துடன் நின்றுகொண்டிருந்தான். கிழார் ஆசிரியரை அழைத்துக்கொண்டு சாத்தன் பக்கத்திலே சென்றார். சாத்தன் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்தினான்; பணிவுடன் நின்றான். கிழார், ஐயா, இதோ பாருங்கள் என்று முல்லைப் பந்தலைச் சுட்டிக் காட்டினார். இங்கே வேலையாட்கள் உண்டு. இருந்தாலும் அவர்கள் இம்முல்லைப் பதியனுக்கு நீர் வார்ப்பதோ, களை பறிப்பதோ செய்வதில்லை. சாத்தன் அவர்களை இப்பந்தல் அருகில் போகவும் விடுவதில்லை நானே செய்கிறேன் என்று வரிந்துகட்டிக் கொண்டு வேலைபார்க் கிறான் என்றார். அப்படியா! நல்லது! மிகவும் மகிழ்ச்சி! என்று கூறிக் கொண்டு சாத்தனை அன்பால் தட்டித் தந்தார். சாத்தா! உனக்கு எப்படி இம்முல்லைக் கொடியின் மீது பற்று ஏற்பட்டது? என்று வினவினார். ஐயா, எப்படிப் பற்று ஏற்பட்டது என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இம் மலரும் இதன் மணமும் என்னை மிகக் கவர்ந்திருப்பது மட்டும் உண்மை. எனக்கு இளமைப் பருவமுதலே முல்லை மலர் மீது தனி அன்பு ஏற்பட்டு விட்டது. அது நானே வலிய உண்டாக்கிக் கொண்டதாகவும் இல்லை. என்றான் சாத்தன். அப்படியா என்றார் ஆசிரியர். அவர் வாய்தான் பேசியது. அவர் சிந்தனை எங்கேயோ இருந்தது. ஐயா, இவன் குழந்தையாக இருக்கும் பொழுது ஒருநாள் காணாமல் போய்விட்டான். வானம் இருண்டு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. நாங்கள் திகைத்துப் போய் எங்கெங்கோ தேடினோம். இவன் இக்கிணற்றருகே இருந்த முல்லைப் பந்தலுக்குள் தான் இருக்கிறான். பின்னர் கண்டுபிடித்தோம் என்றார் கிழார் பழங் கதையை. கிழார் பேசியதை அரைகுறையாகக் கேட்டுக்கொண்டு பேசினார் ஆசிரியர். முல்லை மலர் தூய வெண்ணிறமுடையது. மலரும் போது மணத்தை அள்ளிக் கொட்டுகின்றது. வண்டு களுக்குத் தேன்தந்து இன்புறுத்துகின்றது. இது கற்றுத்தரும் கல்வி ஒன்றே மக்கள் நல்வாழ்க்கைக்குப் போதுமானது. மக்கள் தூயஉள்ளமும், மலர்முகமும் இன்சொல்லும் உடையவர்களாக இருப்பின் முல்லை மலரின் மணம் பரவுவது போல அவர்கள் புகழும் பரவத் தானே செய்யும்! என்றார். ஆசிரியர் பேச்சு கிழாருக்கு இன்பமாக இருந்தது. சாத்த னுக்குச் சிந்தனையைப் பெருக்கியது. நல்ல சிந்தனை தானே வாழ்வை வளப்படுத்தி உலகையும் வாழவைக்கும்? ஆசிரியர் வீடு ஊரைவிட்டுத் தனித்து இருந்தது, அவ் வீட்டின் பக்கத்தே ஒரு கிணறும் தோட்டமும் உண்டு. தோட்டத்தின் நடுவில் ஒரு கொடிப்பந்தல் இருந்தது. ஆசிரி யரும் மாணவனும் சேர்ந்து ஆக்கியதுதான் அது. அங்கே தான் கல்விப் பணியை இப்பொழுது நடத்தி வந்தனர். சாத்தன் படிப்பதற்குப் போக வீட்டிலிருந்து புறப் பட்டான். தெருவில் வரும் பொழுது பூதனைக் கண்டான். பாவம்! அவன் நடுநடுங்கிப் போய்த் திண்டாடிக் கொண்டிருந் தான். ஒரு பெரிய நாய் அவனை வெருட்டி வெருட்டிக் குரைத் தது. மேலே தாவிக் கிழித்தது; எவ்வளவோ கத்திப் பார்த்தான். நாய் விடுவதாக இல்லை. வேறு எவரும் அங்கே இல்லை. சாத்தன் இந்த நிலைமையிலேதான் பூதனைக் கண்டான். சண்டைக்காரன் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் ஓடிப் போய் நாயை வெருட்டினான் சாத்தன். இந்த நல்ல சமயத்திலே உதவுவான் என்று பூதன் நினைக்கவில்லை. தலையை நிமிர்த்திப் பார்க்கவும் முடியாமல் வெட்கத்தோடு நாணிக்கோணி நின்றான். சாத்தன்! நீ நல்ல சமயத்தில் உதவினாய் என்றான். ஆனால் அவன் விழுங்கி விழுங்கிப் பேசினான். சண்டைக் காரனுடன் வெட்கம் கெட்டுப்போய் பேசவேண்டுமல்லவா! நான் என்ன உதவி செய்து விட்டேன், என்று தன்னடக்கத் துடன் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினான் சாத்தன். உனக்கு இப்படி ஒன்று ஏற்பட்டிருந்தால் நான் உதவி செய்திருப்பேனோ என்னவோ? - என்று அரைகுறையாகப் பேசினான் பூதன். சண்டைக் காரனை நாய் கடிக்கட்டும் என்று போயிருப் பாயோ? பூதா! நேர்மைக்காகப் போராடுவதுதான் வீரம்! பகை கருதி இச் சமயத்தில் ஒதுங்கிக் கொண்டு போவது மனிதன் செயல் அன்று. அது இழிவானது. நாய் உன்னைக் கடித்து விட்டால் எனக்கு ஏதேனும் கிடைத்து விடுமா? என்றான். சாத்தா என்று வாய்விட்டுக் கதறிக் கொண்டு கட்டித் தழுவினான் பூதன். பகைபட்டுப் பிரிந்தவர் கூடினர். மகிழ்ச்சியை அவர்கள் அகமும் முகமும் காட்டின. சாத்தன், கண்ணால் விடை பெற்றுக்கொண்டு ஆசிரியர் இருக்கும் கொடிப் பந்த லுக்குச் சென்றான். பெரிதும் சிறிதுமான யாழ்களை வைத்திருந்த ஒரு கூட்டத் தார் ஆசிரியர் இருந்த இடத்திற்கு வந்தனர். யாழ்மீட்டிக் கொண்டு பாட்டுப் பாடும் அவர்கள் பாணர் என்று அழைக்கப் படுவர். அவர்களை வரவேற்று; நல்லுரை கூறினார் ஆசிரியர். அவர்களை ஆசிரியர் முன்பு அறியாதவராக இருந்தாலும் அன்புமிகக் கொண்டு விருந்து செய்வித்தார். அன்று பகலெல் லாம் அங்கேயே தங்கியிருந்து இசைவிருந்தளித்தார்கள். ஏழ்மை நிலைமையில் இருந்த ஆசிரியர் பாணர்களுக்குச் செய்த உதவி களை எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொண்டான் சாத்தன். ஆசிரியர் செயலையும், பாணர்கள் இசைத் திறமையையும் பாராட்டிக் கொண்டான் சாத்தன். பாணர்கள் ஆசிரியரிடம் விடைபெற்றுச் சென்றபின், அவர்களுக்கு மிக விருப்பமுடன் விருந்து செய்து அனுப்பியது ஏன்? என்றான் சாத்தன். ஆசிரியர் கூறினார். சாத்தா! பாணர்கள் பாடுவதையும், இசை மீட்டுவதையுமே தொழிலாகக் கொண்டவர்கள். பிறருக்கு மகிழ்ச்சியான இசை விருந்து அளிப்பதையே தொழிலாகக் கொண்ட இவர்கள், ஊதியம் தரும் வேறு தொழில் எதனையும் செய்வது இல்லை. ஆனால் இவர்களுக்கும் நம்மைப்போல் வாயும் வயிறும் உண்டு அல்லவா? பொருள் வருவாய் இல்லா விடில் என்ன செய்வார்கள்? இசை விருந்து அளிக்கும் இவர் களுக்குச் சுவை விருந்து அளிப்பது மக்கள் கடமை அல்லவா? இவர்களைப் பாதுகாக்காமல் பட்டினி போட்டு விட்டால் பாவம்! காப்பாரற்றுச் செத்துச் சீரழிந்து போகத் தானே செய்வார்கள். இவர்கள் சீரழிவு இசைக் கலைக்குப் பிடித்த சீரழிவுதானே! பிறர் நன்மையே கருதி கலையையே தொழிலாகக் கொண்டதற்குத் தண்டனையா இக்கேடுகள்? இதனால் இவர் களை மதித்துப் போற்றுவதும், காப்பதும் நம்மவர் கடமை யாகும். என்னிடம் செல்வம் இருந்தால் வேண்டுமட்டும் அள்ளிக் கொடுத்து அனுப்பி வைத்திருப்பேன். அது இல்லை; மனம் மட்டும் இருக்கிறது செல்வர்கள் அனைவரும் இவர்கள் பசித்துயரைப் போக்கத் தொடங்கி விட்டால் கவலை இருக்காதே! கலையும் வளருமே என்று ஆவலோடு கேட்டான் சாத்தன். ஆமாம்! கலைஞர்களைப் பாதுகாத்தால் உறுதியாகக் கலை செழிக்கத் தான் செய்யும். பயிர்களைக் காத்தால் பயன்கிடைப்பது உறுதி தானே. என்றார் ஆசிரியர். இன்று ஒரு நன்னாள் என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் சாத்தன். ஆமாம்! ஆமாம்! என்று கூறிக்கொண்டே புன்முறுவல் பூத்தார் ஆசிரியர். கொடிப் பந்தலில் காற்றுப் புகுந்து விளையாடி உலாவத் தொடங்கியது. சாத்தன் ஊர்க் குளத்திற்குச் சென்றான். அவனுடன் பூதனும் அழிசியும் சென்றார்கள். வேறு சில சிறுவர்களும் உடன் போயினர். ஒரே கொண்டாட்டந்தான், குளத்தின் பக்கத்தில் இருந்த மணல் மேட்டில், ஓடுதல், கம்பு சுழற்றல் ஆகிய வீர விளையாட்டுகள் பல புரிந்தனர். களைப்பு ஏற்பட்டபின் குளத்தினுள் புகுந்து நீராடத் தொடங்கினர். குளத்தின் கரையிலே சில மரங்கள் நின்றன, அவற்றின் கிளைகள் நீண்டு மிகவும் தாழ்ந்து நீரைத் தொடுவது போல் இருந்தன; அதன் மீது ஏறி வீழ்ந்து எழுந்தனர்; பாய்ந்து தாவினர்; மூச்சை அடக்கிக் கொண்டு நெடுந்தொலைவு சென்று எழுந்தனர். இளைஞர்களின் விளையாட்டையும், குளிப்பையும் ஒரு கிழவர் நெடுநேரமாக இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு இளைஞர்களின் இன்ப விளையாட்டு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. அதனால், தண்டூன்று கிழமாக முக்கால் நடையிலே தளர்ந்து செல்லும் அவர் பலபடிகளைக் கொண்ட குளக் கரையையும் பொருட் படுத்தாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்தார். கிழவர் வருகையைச் சாத்தன் உற்று நோக்கினான், அவர் ஏன் நெடுநேரமாகத் தங்களைக் கூர்ந்து பார்க்கிறார் என்று எண்ணினான். அப்பொழுது கிழவர் ஒரு படியிலிருந்து மற் றொரு படிக்குக் கம்பினைத் தூக்கி வைத்துக் காலையும் எடுத்து வைக்க முயன்றார். அதற்குள் இருமல் வந்துவிட்டது. தளர்ந்துபோய் அடியெடுத்து வைக்க முடியாதவராய் உட்கார்ந்து கொண்டார். சாத்தன் நெருங்கினான். பெரியவரே! நீங்கள் எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் ஏன்? இந்தத் தள்ளாட்டத்துடன் இப்படியில் ஏன் இறங்கவேண்டும்? என்றான். இளைஞனே! உங்கள் இளமை விளையாட்டைப் பார்க்கப் பார்க்க இன்பமாக இருக்கிறது. இது என் இளமை விளையாட்டையெல்லாம் கண் முன்னே நிறுத்திக் காட்டு கின்றது. அதனால் தான் உங்களையே பார்க்கிறேன் என்றார் கிழவர். ஓ ஓ! எங்கள் விளையாட்டு உங்கள் இளமை விளையாட்டை நினைவு படுத்துகின்றதா? அதை எங்களுக்குச் சொல்லுகிறீர்களா? கேட்க ஆசையாக இருக்கிறது என்றான் சாத்தன். இதற்குள் இளைஞர் இருவர் மூவராக வந்து கூடி விட்டனர். இப்பொழுது பழைய கதையை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. இளமையிலே என்னென்ன விளை யாட்டுக்கள் விளையாடினேன். அந்தப் பருவம் இனியும் வரவோ செய்யும்? என்றார். தாத்தா! அதனை ஒழிவின்றிக் கூறவேண்டும் என்று வற்புறுத்தினான் சாத்தன். இப்பொழுது கால்கள் வலுவற்று விட்ட படியால் தண்டு ஊன்ற வேண்டியிருக்கிறது. தண்டூன்றிக் கொண்டாலும் தளர்ச்சி போய்விடவில்லை. நடுக்கம் ஏற்படுகிறது, அதற்கு மேலும் வாட்டுவதற்கென்று இருமல் இருக்கிறது. சிறிது பேசு வதற்கும் இயலாத நாத் தளர்வும், நரை திரை சேர்ந்து வாட்டும் மூப்பும் கூடி விட்டன. ஆனால் இளமையிலே... என்று நிறுத்தினார் பெரியவர். இளமையிலே..... என்று வினாவிப் பேசுமாறு தூண்டி னான் சாத்தன். இளமையிலே ஆற்றங்கரைக்குச் செல்வேன், மணலிலே விரும்பிப் புரள்வேன்; என்னொத்த சிறுவர், சிறுமியர்களுடன் சேர்ந்து விளையாடுவேன். மணலைத் திரட்டிவைத்துப் பாவை யாக்குவேன். கண்ட கண்ட பூக்களைப் பறித்து, மனம்போல் மாலையாகத் தொடுத்துக் கட்டி, பாவைக்குச் சூட்டுவேன். அதன் அழகிலும், என் கைத் திறத்திலும் உள்ளம் இழந்து உவகையுடன் பார்த்துக்கொண்டே நிற்பேன் இதற்குள் கிழவருக்கு இருமல் வந்துவிட்டது. இடையே சிறிது நேரம் நிறுத்தினார், இருமல் ஓய்ந்தது; அதற்குப் பின் என்று தூண்டி னான் சாத்தன். ஆற்றங் கரையின் பக்கம் ஒரு குளம் உண்டு; அதன் நீர் மிகவும் தண்மையானது; பளிங்குபோல் தெளிவானது; அங்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்து நீராடுவது உண்டு; நானும் அங்கு நீராடும் பெண்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நீராடு வேன், அவர்கள் தொட்டு விளையாடும் பொழுது நானும் தொட்டு விளையாடுவேன். அவர்கள் வளைந்து வளைந்து ஓடும் பொழுது நானும் ஓடுவேன். அக்காட்சியை இன்று நினைத் தாலும் வேடிக்கையாக இருக்கிறது. அறியாப் பருவத்துச் செயல் பெரியவர் நா வறண்டு விட்டது. பேச இயலவில்லை. சாத்தன் ஒருவனைத் தண்ணீர் கொண்டு வருமாறு ஏவினான். தண்ணீர் வந்ததும் பருகினார் பெரியவர். தண்ணீர் குடிப்ப தற்குக் கூட அல்லல்படும் முதுமையை நினைத்து வருந்தினான் சாத்தன்; குளித்துக் கொண்டு இருந்த இளைஞர்கள் அனைவரும் ஒருவர் இருவராய் வந்து சூழ்ந்து கொண்டனர். பிறகு என்று பேச்சைக் கிளறினான் சாத்தன். கேள்! உன் பெயர் சாத்தன் தானே! கிழாரது மகன் தானே என்றார். எப்படி அறிந்து கொண்டீர்கள். நான் உங்களை இதற்கு முன் பார்த்ததே இல்லையே ஆவலோடு கேட்டான் சாத்தன். நான் கிழாரை முன்பே அறிவேன். உன்முகம் காட்டுகிறதே இன்னார் மகன் என்று. கிழாருக்கு மகன் ஒருவன் உள்ளான் என்பதையும், அவன் பெயர் சாத்தன் என்பதையும் பலர் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன் என்றார். மிகவும் மகிழ்ச்சி! உங்கள் இளமைக் கதையை அரை குறை இல்லாமல் கேட்க வேண்டும்போல் இருக்கிறது என்றான். சரி, கேள்; இதனை மறைத்துச் செய்ய வேண்டும், இதனை மறைத்துச் செய்யக்கூடாது என்று அறியாத கள்ளம் கபடம் அற்ற இளைஞர்களுடன் உயரமான மருத மரத்தில் ஏறுவேன். ஏறிக் கிளைவழியே நுனிவரைக்கும் செல்வேன், கிளைமீது ஏறிச் செல்லச் செல்ல அது தாழுமல்லவா! மேலும் கீழும் மிதித்து மிதித்துக்கிளை போய் ஆடுவதிலே வந்த இன்பத்தை எப்படிக் கூறுவது! இதற்கு மேல் செல்ல முடியாது என்னும் அளவுக்குக் கிளையின் நுனிவரைசென்று பொய்கை நீருடன் கிளையைப் படியுமாறு செய்து அங்கிருந்து அலை ஓங்கி எழுமாறும், ஓசை பெருகக் கேட்குமாறும் விழுவேன். பொய்கைக் கரையில் இருந்தவர்கள் என்னே! விளையாட்டு என்று மயங்குவார்கள். திடுமென வீழ்ந்தமையால் எழுந்த நீர்த்துளி உயர்ந்து செல்லும். வீழ்ந்த நான் நீருள் மூழ்கி நெடுநேரம் சென்று கை நிறைய மணல் அள்ளிக் கொண்டு வந்து வெளியில் இருப்பவர்களுக்குக் காட்டு வேன். என்னை நானே பாராட்டிக் கொண்டு மகிழ்ந்து கொள் வேன். அந்தக் கல்வி அறிவு இல்லாத இளமையை இன்று நினைத்துப் பார்த்தாலும் கவலை அளிப்பதாகவே உள்ளது என்றார் பெரியவர். சிறுவர்கள் அனைவரும் பெரியவர் கூறிய இளமைக் கதையைக் கேட்க மகிழ்ச்சி அடைந்தனர். சாத்தன் பெரியவரைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றான். கிழார் பெரியவர் வருகைக்காக மகிழ்ந்தார். பெரியவர் பெரும்புலவர் என்பதை முன்னமே நன்கறிவார் கிழார், அதனால் அவர் திறத்தைப் பற்றிச் சாத்தன் அறியுமாறு செய்தார். பெரியவர் ஒரு புலவர் என்பதை அறிந்து கொண்ட சாத்தன், ஒருநாள் பெரியீர்! தங்களிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் உங்கள் இளமைக் கதையை எங்களுக்கு அழகாக எடுத்துரைத்தீர்கள். அதை நாங்கள் என்றும் மறவா திருக்கும்படி நீங்கள் ஒரு பாட்டாகப் பாடித் தந்துவிட வேண்டும். என் தாழ்ந்த வேண்டுதலை மறுத்துவிட மாட்டீர் களே என்று நுட்பமாகக் கேட்டான். மகிழ்ச்சியடைந்த புலவர் சரி என்று தம் இளமை நினைவுகளை ஒரு பாடலாக்கி ஓலையிலே எழுதித்தந்தார். சாத்தன் பொன் பெற்றதுபோல் பேணுதலோடு வைத்துக்கொண்டான். புலவரும் கிழாரிடம் விடை பெற்றுக் கொண்டு தம் ஊருக்குப் போனார். புலவர் பாடித் தந்த பாட்டினை எடுத்துக் கொண்டு சாத்தன் தன் ஆசிரியரிடம் சென்றான். ஆசிரியர் புல் காணு மிடமெல்லாம் தேடி ஓடும் பசுவைப் போன்று அறிவு கண்ட இடமெல்லாம் ஆவலோடு ஓடிப்பார்க்கும் இயல்புடையவர் தம்மைத் தேடிக்கொண்டு அறிவுக் குவியல் ஒன்று வந்தால் விடுவாரா? சாத்தன் பாடல் கொண்டு வந்து தந்த அன்று வேறு ஒரு வேலையும் செய்யவில்லை. உண்பதையும் மறந்து புதிய பாடலைப் பாடிப்பாடித் திளைத்தார். சாத்தனையும் பாட்டின் பத்தில் ஆழ்த்தினார். சாத்தா! விளையாட்டின்பம் ஒன்றே கருதிக்கொண் டிருக்கும் இளமை கல்லா இளமை என்று குறிக்கப்படுவதைப் பார்த்தாயா? ஆம்! அது கல்லா இளமைதான்! கற்றறிந்த இளமையோ அறிவையும் பண்பையும் பெருக்குவதற்குத் துடிக்கும். எதிர்கால வாழ்வினை எண்ணி ஏற்றமிக்க கோட் பாடுகளைக் கொண்டு சிறக்கும். என்று விளக்கினார் ஆசிரியர். ஆசிரியருக்கு ஏற்ற மாணவனாகச் சாத்தன் ஆராய்ச்சியிலே இன்பங் கொண்டான். ஒல்லையூர் கிழார் பெருஞ்செல்வர். அவருக்கு நிகரான செல்வர் அவ்வூரிலே அன்றி அடுத்திருந்த ஊர்களிலும் இல்லை. செல்வப் பெருமை போலவே குணப் பெருமையும் அவரிடம் நிறைந்து விளங்கியது. கிழார், சாத்தனுக்கு நல்வழிகள் காட்டிக் கொண்டே வளர்த்து வந்தார். அதனால் சாத்தன் உரிமை யோடும். மகிழ்ச்சியோடும் விளங்கினான். அவன் பொறுப்பிலேயே வீட்டுச் செயல்களையும் கிழார் விட்டு விட்டார். இதனால் இயல்பிலேயே பெருங்குணம் படைத்திருந்த சாத்தன் மேலும் உயர்ந்த வழிகளிலே சென்று பிறருக்கு உதவியாக வாழ்ந்தான். சாத்தன் புகழ் விரைவில் பரவத் தொடங்கியது. அவனைத் தேடிக்கொண்டு வந்து வறுமையாளர் பலர் வாழ்வு பெற்றனர்; பாவலர்கள் பரிசு பெற்றனர்; இசை வல்லார்கள் ஏற்ற முற்றனர். தன் செல்வத்தைப் பிறருக்குக் கொடுக்க, அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் காணும் இன்பத்திலே தன் வாழ்நாளைச் செலவிட்டான். அதனால் அவன் வாழ்வில் இன்பமே அன்றித் துன்பம் இல்லை என்னும் நிலையில் உயர்ந்தான். ஒரு நாள் குடவாயில் என்னும் ஊரிலிருந்து கீரத்தனார் என்னும் புலவர் ஒல்லையூருக்கு வந்தார். அவர் முன்பே சாத்தனையும் கிழாரையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். நல்லவரைக் காண்பதும், நல்லவர் சொற்கேட்பதும், நல்லவர் குணங்கள் உரைப்பதும், அவரோடு இணங்கி இருப்பதும் நன்று என்னும் கருத்துடையவர் கீரத்தனார். அதனால் ஆசை உந்தித் தள்ள ஒல்லையூருக்கு வந்து சேர்ந்தார். சோழ நாட்டுக் குடவாயிலுக்கும், பாண்டி நாட்டு ஒல்லை யூருக்கும் நெடுந்தொலைவு உண்டு. இருப்பினும் அன்பு இழுக்கும் பொழுது எவ்வளவு தொலைவு ஆனால்தான் என்ன? பல நாள்களாக மலைகளையும் காடுகளையும் கடந்து வந்தார். புலவர் ஊரை அடுத்து வரும் பொழுது ஊர் ஒரே ஆரவாரமாக இருக்கக் கண்டார். மக்கள் அனைவரும் சாரை சாரையாக எறும்புக் கூட்டம் போவதுபோல ஊரின் நடுவில் இருந்த மன்றத்திற்குச் செல்வதைப் பார்த்தார். சாத்தனும் கிழாரும் கூட்டத்தில் இருப்பதையும் அறிந்தார். சாத்தனை முதல் தடவையாகக் காண்பதால் பேராவலோடு உற்றுக் கவனித்தார். எத்தகைய எடுப்பான தோற்றம்! மார்பின் விரிவுதான் என்ன! தோளின் உயரமும் திண்மையும்தான் என்ன! கைகளின் நீட்சிதான் என்ன! முகத்தின் பொலிவு... ஆ ஆ! கண்களின் ஒளி....! இப்படி யொருவனை முன்பு பார்த்தது இல்லை. இனிப் பார்ப்பதும் அருமைதான் என்று எண்ணிக் கொண்டு கூட்டம் சென்ற வழியே சென்று மன்றத்தை அடைந்தார். மன்றத்தில் சிறிதும் இடமில்லாதபடி மக்கள் குழுமி விட்டனர். ஆரவாரம் பெருகியது; மிகுந்த ஒலியுடன் பறை விம்மி யெழுந்தது. வீரர்களே வருக! வீர நங்கையர்களே வருக! பெரியோர் களே வருக! கண் பெற்ற பயனைக் காண்பதற்கு வருக! என்று இடையிடையே கூறிக்கொண்டு பறையை முழக்கினான் வீரன் ஒருவன். கண்கட்டு வித்தையோ, களியாட்டமோ நடைபெற வில்லை. பொம்மலாட்டமோ பொய்க்கால் குதிரையாட்டமோ நிகழவில்லை. வீரர்களின் ஒருமித்த கையொலிக்கு இடையே சிங்கம்போலப் பாய்ந்து வந்து நின்றான் சாத்தன். மாலை நேரத்து மஞ்சள் வெயிலிலே அவன் உடல் ஒரு தனி அழகோடும் பொலிந்தது. இயல்பாக விரிந்து பரந்த மார்பு வீரர்களின் ஆர்ப்பாட்டத்தாலும், ஊக்க உரைகளாலும் வாழ்த்தொலி களாலும் மேலும் விரிந்து பரந்தது. கைகளையும், கால்களையும் ஆட்டி அசைத்து நீட்டி மடக்கித் தசைகளை ஒரு ஒழுங்கு நிலைக்குக் கொண்டு வந்தான். அவனுக்கு எவ்விதத்திலும் சளைக்காத ஒருவன் புலிபோன்று பாய்ந்து வந்து முன்னின்றான். அவனைச் சார்ந்தவர்கள் புலியை வாலுருவி விடுவதுபோல் தழுவிக் கொடுத்து ஊக்கப்படுத்தி அனுப்பிவைத்தனர். முதலில் வாட்போர் என்றான் வந்தவன். சரி; எடுத்துக் கொள் என்றான் சாத்தன், போர் தொடங்கியது. சுறா மீன்கள் பிறழ்வது போன்று சுழன்றன வாள்கள்; மின் வெட்டுப் போல் கதிரொளிபட்டுத் துலங்கின; இமைத்த கண் மூடாமல் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். நண்பர்கள் ஆட்டத்திலே ஒன்றிப் போய் மெய் மறந்து போயினர். பெரியவர்கள் யாது நேருமோ என்று திகைத்து நின்றனர். வாள் வீச்சு முடிந்தது, சாத்தனே வெற்றி கொண்டான். ஆரவாரத்தால் காதுகள் செவிடு பட்டன! தோற்றவன் வெட்கப்பட்டுத் தலை குனிந்து வெளியேறினான். கம்பு சுழற்றலுக்கு ஒருவன் வந்தான்; விரைவில் தோல்வி கண்டான்; அதன் பின்பு விற்போர், வேற்போர், மற்போர் தொடர்ந்து நடைபெற்றன, சாத்தனே வெற்றி கண்டான், தான் ஒருவனாக நின்று வந்த வீரர்களை வென்றது பெருஞ் சிறப்பாக இருந்தது. அதிலும், மற்போருக்கு வந்தவன் மண்ணில் உருண்ட போது சாத்தனே துடைத்துவிட்டுத் தூக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது வெற்றிக்கு முடி மணியாகத் திகழ்ந்தது. சாத்தனை ஒரு மேடைமீது ஏற்றிவைத்து மாலைகளாலே மறைத்துவிட்டனர்! அவ்வளவு மகிழ்ச்சி மக்களுக்கு, குப்பிகளில் பனிநீரையும், மணக் கலவையையும் கொண்டு தெளித்து அத னாலேயே நீராட்டினர். அவனைத் தூக்கிக் கொண்டு ஆடினர். தங்கள் தங்கள் தோளிலே கிடந்த துண்டுகளை எடுத்து வீசி எறிந்து காற்றிலே பறக்கவிட்டுக் களிப்புற்றனர். சாத்தன் வாழ்க! வீரன் வாழ்க! ஒல்லையூர் ஓங்குக என்று வாழ்த்தினர். எதிர்த்துத் தாக்கியவர்களோ இங்கொருவரும் அங்கொருவருமாக ஒருவருக் கொருவர் தெரியாமல் ஒளிந்துகொண்டு போயினர். அவர் களுக்குத் துணையாக இருந்து ஊக்கப்படுத்திய வீரர்கள் தலை கவிழ்ந்து ஓடினர். கீரத்தனார்க்கு ஒல்லையூர் நிகழ்ச்சி வியப்பாக இருந்தது.V‹” என்பது புரியவில்லை. ngh® Ãfœ¢áÆny cŸs« x‹¿¥ nghŒ Ëw mt® xU bgÇatÇl« nf£lh® ‘Iah, ï§nf ngh® brŒjh®fns V‹? அதுவா? அது ஒரு பெரிய கதை! உட்கார்ந்துகொண்டு பேசுவோம் என்று ஒரு திண்ணையைச் சுட்டிக் காட்டி அங்கு அழைத்துச் சென்றார். இருவரும் திண்ணையிலே இருந்து கொண்டு பேசத் தொடங்கினர். சண்டைகளில் வென்றானே ஒரு வீரன் அவன் பெயர் சாத்தன்; இன்று அவன் செய்த போர் அவனுக்காக இல்லை; ஊருக்காக. ஊருக்கு ஏற்பட்ட போரைத்தான் அவனே பொறுப் பேற்றுக் கொண்டு நடத்தினான். அப்படி என்றால் என்றார் கீரத்தனார். அடுத்துள்ள ஊர் மங்கலம் என்பது, அவ்வூர் மாடுகள் இங்குள்ள மேய்ச்சல் நிலத்திற்கு வந்திருந்தன. தானே வளர்ந்த புல்லை மேய்ந்து வானம் பொழிந்த நீரைக் குடித்துச் சென்றால் யாருக்கும் கேடா? அதனால் தடுப்பார் இல்லாமல் நாள் தோறும் மேய்த்துச் சென்றனர். ஆனால் விட்டுக்கொடுத்த உரிமையைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை அவர்களுக்கு. அதனால் மனம் போனபடி விளை நிலங்களிலும் பசுக்களைவிட்டு மேய்த்துக் கெடுக்கலாயினர். அழிசி என்பவன் ஒருவன்; அவன் மிக ஏழை. அவன் வயலிலே கதிர் ஈனும் அளவில் இருந்த நெற்பயிரை அழித்து விட்டனர். தன் வயல் அழிக்கப்படுவதை அறிந்து அழிசி ஓடிப் போய் மாடுகளை வெருட்டியிருக்கிறான், மேய்ப்பவர்களையும் திட்டியிருக்கிறான். ஆத்திரத்தால் வயல்காரன் பேசினால், மன்னிப்புக் கேட்டிருக்கவேண்டும். அழிபாட்டுக்கு வழி செய் திருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு, அழிசியைத் திட்டி அடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நாம் பலர்; இவன் ஒருவன் என்று எண்ணி இறுமாப்புடன் செய்து விட்டார்கள்போல் இருக்கிறது. ஊருக்கு நெடுந்தொலைவில் வயல் இருந்த காரணத்தால் யாருக்கும் இந்த நிகழ்ச்சி தெரியாது. அழிசி நெடுநேரம் மயங்கிப்போய்க் கிடந்துவிட்டு, பின் எப்படியோ தன் உணர்வு வர வீட்டுக்குத் தள்ளாடித் தள்ளாடி வந்திருக்கிறான். அவன் வந்து நடந்ததைக் கூறியவுடனே இளைஞர் அனைவரும் கொதித்து எழுந்தனர். சுற்றத்தார் அனைவரும் துடிதுடித்துக் கொண்டு கிளம்பி சுட்டு எரிப்போம் அவர்கள் ஊரை என்று திரண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதே பெரும்பாடாகி விட்டது. எப்படியோ அமைதி உண்டாக்கினோம். இன்றும் மேய்ச்சலுக்கு மாடுகள் வரவே செய்யும்; அவற்றைத் திரட்டிக்கொண்டு ஊருக்கு வந்துவிடுவோம். அவர்கள், குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்குமாறு செய்வோம். அது முடியவில்லை என்றால் அதற்குப் பின்பு ஊரை வளைப்போம் என்று உறுதி செய்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே மறுநாளும் பசுக்கள் மேய்ச்சலுக்கு வந்தன. ஏதேனும் தகராறு வரக்கூடும் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்பட்டிருந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் கருவிகளுடன் வந்திருந்தனர். நாங்கள் போய் மாடுகளைத் திரட்ட அவர்கள் மீட்க, ஒரே கலவரம் ஆகிவிட்டது. ஆனால் இங்கிருந்து போனவர் களோ மிகப்பலர்! அவர்கள் தகராறு வரும் என்று நினைத் திருந்தாலும் கூட இவ்வளவு பெரிதாக ஆகிவிடும் என நினைக்க வில்லை. அதனால் ஓட்டம் பிடித்தனர். பசுக்களைத் திரட்டிக் கொண்டு வந்துவிட்டோம், மங்கலத்தார் சிலர் வந்து மன்னிப்புக் கேட்டு மாடுகளைக் கொண்டு சென்றிருக்கலாம். அவர்களுக்கு அது பெருமைக் குறைவாகத் தோன்றிவிட்டதுபோல் இருக்கிறது. அதனால் வலிமையாலே பெறவேண்டும் என்று கருதிக் கொண்டு ஊரை வளைத்துக்கொண்டனர். யாரும் வெளியே போகவோ வரவோ முடியாது என்ற அளவில் சூழ்ந்து கொண்டனர். இன்னும் சும்மா இருக்கமுடியுமா? நாங்களும் திரண்டோம்; அழிவுக் காலம் அவர்களுக்கு வந்துவிட்டது; இல்லையேல் இவ்வளவு அறிவில்லாமல் நடந்து கொள்ளமாட்டார்கள் என்ற ஏக்கம் முதியவர்களுக்கு இருந்தது. இளைஞர்களோ இரைவிரும்பிச் செல்லும் புலிபோல் தாக்குவ தற்குக் கிளம்பினர். இரண்டு ஊரார்களும் நேருக்குநேர் தாக்க முனைந்து விட்டோம். அப்பொழுது சாத்தன் ஓடிவந்து போரைத் தொடங்காதவாறு தடுத்தான். போர் வேட்கையிலே கிளம்பியுள்ள வீரர்களே! பொறுங்கள் என்று கையமைத்துக் காட்டி, ஒரு மேடான இடத்தில் நின்றான். நீங்கள் உண்மையான வீரர்களாக இருந் தால் - மான வீரர்களாக இருந்தால் - நான் சொல்வதைக் கேட்டு, அதன் பின் உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்றான். தொடக்க முதல் தவறுகள் செய்துவிட்டு, இன்னும் தவற்றை உணராது ஊர்விட்டு ஊர்வந்து தாக்க முனைந்து நிற்பதுதான் உங்கள் நேர்மையோ? நேர்மையான வீரன் மற் றொரு நேர்மையான வீரனுக்கு மதிப்புக் கொடுத்தே தீர்வான். உங்களை எதிர்த்து வெற்றி கொள்ளத் தக்க வீரர் இந்த ஊரிலே இல்லை என்பது உங்கள் எண்ணமா? அப்படி எண்ணினால் நீங்கள் பழியடைவது உறுதி. அங்கே நேர்மையை விரும்புபவர்கள் இருந்தால் மான வீரத்தை மதிப்பவர்கள் இருந்தால் ஆற்றல் படைத்தவர்களைத் தனித் தனியே அனுப்பிவையுங்கள். வேல், வில், கத்தி, வாள், மல் - எப்போர் ஆயினும் சரி, என்னைத் தாக்குமாறு அவர்கள் தனித் தனியே வரட்டும். என் ஒருவனை எப்போரிலாவது எவனேனும் வெற்றி கொண்டானானால் இவ்வூரையே வென்றதாகப் பொருள். இல்லாவிடில் தோற்றதாகப் பொருள். தோற்றவர்கள் வென்றவர்கள் கேட்கும் தண்டனையைத் தருதல் வேண்டும். ஊரின் நடுவில் உள்ள மன்றத்தை இடமாகக் கொள்வோம். இரண்டூரார்களும் பகைவர்களாக இருக்கவேண்டாம்; பார்வை யாளராக இருக்கட்டும். v‹d brhšY»Ö®fŸ? என்று பேச்சை நிறுத்தினான் சாத்தன். சிறிதுநேரம் அமைதியாக இருந்தது கூட்டம். என்னை எதிர்க்கும் வீரன் ஒருவனும் அங்கில்லை என்றால் வெட்கக்கேடு! உங்கள் விருப்பம் போல் ஊரை வளைப்பினும் வளைக்க; ஊருக்கு ஓடினும் ஓடுக என்று கைகொட்டிச் சிரித்தான் சாத்தன். ஏ ஏ! இறுமாப்புக் கொள்ளாதே! வந்து பார்! என்று எதிர்ப்பக்கத்திலிருந்து குரல் எழுந்தது. இம்முடிவின்படி போர் தொடங்கியது. போராட்டத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? என்றார் முதியவர். கீரத்தனார் பெருமூச்சு விட்டுவிட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார். இதோ சாத்தன்; நீங்கள் இவனைப் பார்க்க வேண்டுமா? என்று சுட்டிக்காட்டினார் பெரியவர். தெரு வழியே வந்த சாத்தன் பெரியவர் பேச்சைக்கேட்டு நின்றான். கீரத்தனார் அடுத்துச் சென்றார். சாத்தனை அன்புடன் தழுவிக்கொண்டார். வல்லாண்மை மிக்க நல்லோனே! நின் பெயர் சாத்தன் என்பதை அறிவேன். உன்வேற்போரில் உள்ளம் இழந்தேன். அருமையினும் அருமையானது நின் வேற் பயிற்சி, அதனால் நீ இன்று தொட்டு வேல் சாத்தன் என்னும் பெயரோடும் விளங்குவாயாக என்று வாழ்த்தினார். புலவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் போனான் சாத்தன். அவ்வேளையில் திரளாக மக்கள் சிலர் அங்கு வந்தனர்; அவர்கள் தனித்தனியே மாலையும், பனிநீரும் கொண்டுவந்தனர். சாத்தனது வெற்றியைப் பாராட்டு முகத்தான் மாலையைப் போட்டு, பனிநீரைத் தெளித்தனர். அவரவர்க்குத் தக்கபடி சாத்தன் நன்றியுரை கூறியனுப்பினான், ஒவ்வொருவருக்கும் முல்லைப் பூப்பந்துகளை அன்பளிப்பாக வழங்கினான்; ï¢rka¤nj ‘bt‰¿!வெற்றி! என்று கூறிக்கொண்டு அழிசி வந்தான். கட்டிலோடு கட்டிலாய்ப் படுத்துக்கிடந்த அழிசி, சாத்தன் வெற்றிபெற்ற மகிழ்ச்சியிலேதான் ஓடிவந்தான். அவனுக்கு வேதனை போன இடம் தெரியவில்லை. சாத்தன் வெற்றி அவன் வெற்றியல்லவா! சாத்தா! நீயே வீரன்; அவர்களுக்கு இவ்வளவு வேண்டும்; இன்னும் வேண்டும்; யாரிடம் வாலாட்டுவது என்று தெரி யாமல் மாட்டிக் கொண்டு மானம் தொலைந்தார்கள் என்று துள்ளித் துள்ளிப் பேசினான். அவன் காலாட்டமும், கையாட்ட மும், வாய்த்துடிப்பும் அவனுக்கிருந்த மகிழ்ச்சியை வெளிப் படுத்தின, கீரத்தனார் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தார். சாத்தன் வீரம் தன்னலத்திற்குப் பயன் படுத்தப்படவில்லை. பொதுநலத்திற்குப் பயன்பட்டது. அத னால்தான் இவ்வளவு சிறப்பு அடைந்தது. வீரம் தேவையானது. ஆனால் அது அறத்தைக் காப்பதற்கும், பொதுநலம் பேணு வதற்குமே பயன்படுத்தப்படவேண்டும் என்று நினைத்துக் கொண்டார், மறுநாள் காலையில் கீரத்தனார் குடவாயிலுக்குப் புறப் பட்டார். கிழார் விடைதந்து அனுப்பினார். சாத்தன் கீரத்தனா ருடன் நெடுந் தொலை நடந்து சென்றான். திரும்பிவர நெடு நேரம் ஆயிற்று. ஒல்லையூர்க் காளைகள் சிலருக்கு இரவெல்லாம் உறக்கம் பிடிக்கவில்லை; செருக்கி வந்து சிறுமையடைந்து ஓடியவர் களுக்குத் தண்டனை தரவேண்டும் என்பது அவர்கள் ஆசை! ஊர் விட்டு ஊர் வந்து தாக்கி இழிவுபட்டு ஓடியபின் விட்டுவிட மனம் வருமா? பெருங் கூட்டமாகக் கிளம்பி, பகைவர் ஊருக்குச் சென்றனர். ஒல்லையூரார் வருகை அறிந்து பலர் வீட்டை விட்டு வெளியேற வெட்கப்பட்டனர். சிலர் பதுங்கிக் கொண்டனர். சிலர் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு மறைந்து ஊரைவிட்டு வெளியேறினர், வயது சென்ற சிலர் மட்டும் கூட்டத்திற்கு வந்தனர். துடிப்புடைய இளைஞன் ஒருவன் எழுந்தான். உண்மை யான வீரம் இவ்வூரார்க்கு இருந்திருந்தால் போட்டிப்போரில் தோற்றவுடன் என்ன தண்டனை தருகிறீர்கள்? என்று கேட் டிருக்க வேண்டும். யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து விடுவதுதான் வீரமோ? ஏன்! ஓடிவந்து விட்டால் விட்டுவிடு வார்கள் என்ற எண்ணமா? எங்கள் உடம்பிலும் இரத்தம் ஓடு கிறது என்றான். உங்கள் உடம்பில் மட்டும் என்ன எல்லார் உடம்பிலும் இரத்தம்தான் ஓடுகிறது என்று ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் கேட்டது. மங்கலத்தார் ஒருவர் குரல் அது. முதலில் பேசிய இளைஞனுக்குச் சீற்றம் பொத்துக் கொண்டு வந்தது. வெட்கக்கேடு வெட்கக்கேடு; இரத்தம் ஓடுகிறதாம்! நேற்று நாங்கள் கண்டுவிட்டோமே என்ன ஓடுகிறது என்று; சொல்லுக்கு அஞ்சாத சூரப்புலி என்றான். அளந்து பேசு! சாத்தன் வீரன். அவன் வீரத்திற்குத் தலை வணங்குகிறோம். ஆனால் உன்னைப்போன்ற பதர் களுக்கு நாங்கள் பணிவு காட்ட வேண்டியது இல்லை. இப்பொழுது வைத்துக் கொள்வோம்; இவர்கள் முன்னிலையிலே வைத்துக் கொள்வோம், வேறு எவரும் வேண்டாம் நீயும் நானும்தான்! போர் தொடங்குவோம்; என்ன சொல்கிறாய் என்று மங்கலத் தார் கூட்டத்திலிருந்த கிழச் சிங்கம் ஒன்று முழங்கியது. சொல்ல ஒன்றும் இல்லை; வந்துபார்! என்று ஓடி வந்தான் ஒல்லையூர் இளைஞன். ஒல்லையூரார் எவரும் பேசவில்லை, இன்னொரு போட்டியா என்று திகைத்துக் கிடந்தனர். கூட்டத்தில் உள்ளூர்க்காரர்களில் நடுவு நிலைமையும் மான உணர்ச்சியும் உள்ள பெரியவர்கள் பலர் இருந்தனர். அவர்கட்கு இப்போட்டி சரியானதாகத் தோன்றவில்லை. அதனால் தம் ஊர்க்காரனைத் தட்டிக் கேட்டுத் தடுத்தனர். அவன் பேசுவது தவறு என்று சுட்டிக்காட்டினர். முதலாவதே தவறு செய்து விட்டதும் அன்றி, ஊர் திரண்டு போருக்குப் போன இடத்திலே தோற்றுப் போய்விட்டு வந்து இன்னும் வீரம் பேசுவது ஆண்மையன்று! ஒல்லையூரார் கூறும் தண்டனையைக் கேட்டு ஒத்துக் கொள்வதே முறை என்றனர். ஒருவாறு கூட்டம் அமைதியடைந்தது. எளிதில் விடக்கூடாது; நல்ல தண்டனை தரவேண்டும் என்று ஒல்லையூர் காளைகள் சிலர் குதித்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மனம் போல் 100 பொன்கள், 200 பொன்கள் என்று அடுக்கிக்கொண்டிருந்தனர். தண்டனையின் அளவு மிகமிகத் தங்கள் வெற்றியும் மிகுவதாக அவர்கள் எண்ணம்! கூட்டம் சலசலப்பாகியது மீண்டும்! கீரத்தனாரை அனுப்பிவிட்டு, ஊருக்கு வந்த சாத்தன், மங்கலத்திற்கு ஊரார் போயிருப்பதை அறிந்தான். என்ன நேருமோ என்று எண்ணி விரைந்தான். அவன் வந்து சேரும் பொழுது கூட்டம் ஒரு நிலையில் இல்லை. இரு பக்கமும் பகையுணர்ச்சி பற்றிக்கொண்டு இருந்தது. சில இளைஞர்கள் குறுக்கிட்டுக் குறுக்கிட்டு முதியவர்களைச் சூடுபடுத்திக் கொண்டு இருந்தனர். சாத்தனுக்கு நிலைமை புலப்படாமல் போகவில்லை; கேட்டும் அறிந்துகொண்டான். அவர்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி அமைதியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டான். பெரியோர்களே! அடுத்தடுத்துள்ள நம் இரண்டு ஊரார் களும் ஒன்றுபட்டு இருந்தால் அயலார் எவரும் நம்மை எவ் வழியாலும் கெடுத்துவிட முடியாது. ஆனால் நமக்குள் பிளவு இருப்பது மட்டும் வெளிக்குத் தெரிந்துவிட்டால் இங்கும் அங்கும் மனம் போனபடி தூண்டி வைத்து நம்மை மோதுமாறு விட்டுவிட்டு இரண்டு பக்கத்திலும் சுரண்டிக்கொள்வது அவர் களுக்கு எளிதாகப் போய்விடும். அதற்கு இடம் தருவது அறிவுடைமையாக எனக்குத் தெரியவில்லை. இனத்தாலும், மொழியாலும், பழக்கவழக்கத்தாலும் ஒன்றுபட்ட நாம் ஒரு சிறு செயலுக்காக வேறுபட்டு நிற்பது முறையன்று. ஏதோ உணர்ச்சியினால் ஒவ்வொரு சமயம் ஒவ் வொரு செயல் நடந்துவிடுகிறது. அதை அறிவோடு எண்ணிப் பார்த்து மறந்துவிட வேண்டும். நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு இருந்தால் தப்பிப் பிழைக்கமுடியுமா? குற்றத்திற்குத் தண்டனை தரவேண்டும். அதுவும் இவ்வளவு தரவேண்டும். அவ்வளவு தரவேண்டும் என்று நினைக்கிறீர்கள். தண்டனையா? எங்களிடம் வாங்கிவிடட்டும் பார்க்கிறோம் என்று எதிர்க்கிறார்கள். இந்த இரண்டும் நம் சிந்தனைக்குரியது அன்று. இந்தத் தண்டனைப் பொருளால் ஒல்லையூர் வாழ்ந்து விடுமா? தண்டனை தந்துவிட்டதால் மங்கலம் கெட்டுப் போய்விடுமா? இரண்டும் இல்லை. ஆனால் தண்டனை விதிப்பதும், தருவதும் என்றும் அழியாப் பகைமையை உண்டாக்கும் என்பதில் மட்டும் ஐயம் இல்லை, போராட்டத்தை என் விருப்பத் திற்கு விட்டது உண்மையானால், இப் பேச்சையும் என் பொறுப் பிலே விட்டுவிடுங்கள். நான் உண்மையாகச் சொல்கிறேன், எனக்கு ஒல்லையூராரும், மங்கலத்தாரும் இரண்டு கண்கள்! வேற்றுமையானவர் அல்லர். என் கண்களில் எந்தக் கண்ணாவது கெட்டுப் போகும் செயல் செய்வேனா? - என்றான். பெரியவர்கள் அனைவரும் சரி சரி என்றனர். சாத்தன் கூறுவதை மாறின்றி ஏற்றுக் கொள்வோம் என்று ஒப்பினர். இவர்கள் என்ன எண்ணத்தோடு வந்திருந்தாலும் சரி, நீங்கள் என்ன கருத்தோடு கூடியிருந்தாலும் சரி, கவலையில்லை. நாம் இன்றுமுதல் ஒன்றுபடுவதற்காகக் கூடவேண்டுமே ஒழிய, வேறுபடுத்துவதற்காகக் கூடவே கூடாது. நீங்கள் குற்றத் தண்டமாக எதுவும் தரவும் வேண்டாம் இவர்கள் கேட்கவும் கூடாது. இப்பொழுதே பகையை மறந்து ஒவ்வொருவரும் அன்பராகி விடவேண்டும். அதுதான் நான்தரும் தண்டனை. உங்களைத் தேடிவந்த அழையா விருந்தாளிகள் நாங்கள். நிறைய - நீங்கள் விரும்பி எவ்வளவு போட்டாலும் - சாப்பிடுவோம். அந்த வழிக்கு எவ்வளவு பொருளை நீங்கள் தொலைத்தாலும் கவலை இல்லை. நன்றாகத் தொலையுங்கள்! என்ன சொல்கிறீர்கள் என்றான். ஒல்லையூரார் பதில் பேசவில்லை. மங்கலத்தார். நல்லது, நல்லது, அப்படியே செய்கிறோம். இன்று இங்கே விருந்துக்கு மட்டும் இல்லை, கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கிறோம். எல்லோரும் இரவுப் பொழுது தங்கிச் செல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டனர். நீரின் கிழிவுபோல ஒல்லையூரார் மங்கலத்தார் பகை ஒழிந்தது. சாத்தன் புகழால் பெருஞ்சாத்தன் ஆகிவிட்டான். அந்த வட்டாரத்தினர் சாத்தன் பெருமையை நன்றாக அறியத் தொடங்கிவிட்டனர். மங்கலத்தார்க்குச் சாத்தன் பேரன்பன் ஆகிவிட்டான். அவனைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினர். ஒல்லையூர் பாண்டி நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் நடுவே அமைந்த இடமாக இருந்தது. சோழர்க்கு உரியதாகவும், பாண்டியர்க்கு உரியதாகவும் அது ஒவ்வொரு சமயத்தில் இருந்தது உண்டு. ஆனால் இச்சமயத்தே அது பாண்டியர்க்கு உரியதாக இருந்தது! பாண்டியனும் ஒல்லையூரை அக்கறையுடன் காத்து வந்தான். எல்லையூராம் ஒல்லையூரில் சின்னஞ் சிறு பிணக்கு இருந்தாலும் அது வேற்று நாட்டினர். புகுவதற்கும், பற்றிக் கொள்வதற்கும் துணையாகி விடக்கூடும் என்று தெளி வாக அறிந்திருந்தான். அதனால் ஒற்றர்களை அங்கங்கே நிறுத்தி வைத்திருந்தான், ஒற்றர்கள் ஒல்லையூரார்க்கும் மங்கலத் தார்க்கும் ஏற்பட்ட பகை நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தெரியப் படுத்திக்கொண்டு இருந்தனர், அவர்கள் வழியாக மன்னனுக்குச் சாத்தன் வீரமும், உயரிய பண்பும் புலனாயிற்று. ஆதலால் அவனைத் தக்கவாறு சிறப்புச் செய்வது பெரும் பயன் தரும் என்று கருதினான். பாண்டியன் சாத்தனை அரசவைக்கு அழைத்தான். அரசன் என்ற பெருமிதம் இன்றிச் சாத்தனை மார்புறத் தழுவிக் கொண்டான். சாத்தா! உன் வீரமும் உயர் பண்பும் வாழ்வதாக! என்று வாழ்த்தினான். புகழ் மொழிகள் பல கூறினான். இன்று முதல் படைத் தலைவர்களுள் ஒருவனாக உன்னை ஆக்கி இருக்கிறேன். படைத்தலைவர்களுக்குள்ள சிறப்பனைத்தும் உனக்கு உண்டு. எல்லைப் பகுதியில் இருந்துகொண்டு இந் நாட்டை இனிது காத்து வருவாயாக! என்று வேண்டிக் கொண்டான். நம் அன்பின் அடையாளமாக இதனை ஏற்றுக் கொள்க என்று முத்துமாலை ஒன்றைச் சூட்டினான், சிறப்போடும் அனுப்பிவைத்தான். சாத்தன் நாடறியப்பட்ட புகழாளன் ஆன போது ஒல்லையூர் கிழார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒல்லையூரார் தங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த சிறப் பாகவே கருதினர். சாத்தனும் யாவரும் விரும்புமாறு அரசியல் கடமைகளையும், பொதுப்பணிகளையும் ஆற்றிவந்தான். ஆண்டுகள் சில உருண்டோடின. அவ்வுருள்தலிலே திடு மென ஒரு கொடிய இருள் கப்பிக் கொண்டுவிட்டது. எவரும் எதிர்பார்த்திருக்க முடியாத நிகழ்ச்சி அது. நம்பமுடியுமா? ஏறு நடை போட்டுக்கொண்டு தெருவிலே சென்ற யானை ஏங்கித் துடித்துச் செத்தது என்றால்! கலையால் முதிர்ந்து, வீரத்தால் சிறந்து, தொண்டால் உயர்ந்த சாத்தன் ஒருநாள் வெளியே போய் உலாவினான். ஏதோ சற்று மயக்கம் என்று படுத்தான். மூச்சுத் திணறியது. காற்றுக்குழாய் கப்பிக் கொண்டது. மருத்துவர் வந்தார். கிழார் கண்ணீர் விட்டுக்கொண்டே, ஓடியாடிப் பார்த்தார்; ஊரெல்லாம் திரண்டு விட்டது. கிழார் வீட்டில் நிற்பதற்கும் இடமில்லை. நாழிகைப் பொழுதுக்குள் நாடு கதறி அழ, சாத்தன் உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுக் கொண்டான்! ஈடு இணை காட்டமுடியாத இழப்பு, நாட்டுக்கு ஏற்பட்டு விட்டது. அரிதில் கிடைத்த செல்வத்தை ஒல்லையூரார் இழந்து விட்டனர். கிழார் கட்டிலிலே கட்டைபோல் கிடந்தார். வாழ்க்கை அவரைப் பொறுத்தமட்டில் இருண்டு விட்டது! குடவாயில் புலவர் கீரத்தனார் சாத்தனைக் காண்பதற்காக வந்தார். ஆசை நிறைவேறியதா? கண்ணீர் வடித்துக் கதறியழுதார். ஒரு நாள் பழகினும் பெரியோர் உறவு அல்லவா! ஐயகோ! சாத்தன் புதை குழியிலே கீரத்தனார் வடித்த கண்ணீர் பெருகியது. சாத்த! வல்வேல் சாத்த! உலகுக்காக வாழ்ந்த உரவோய்! கண்டுகளிக்க வந்த என்னைக் கண்ணீர்விட வைத்துப் போய் விட்டாயே! உன் புதை குழியைக் காணவோ புறப்பட்டு வந்தேன். வீர! நீ போய்விட்டாய்! இனி இரவலர் நிலை என்னாகும்! ஏழையர் வாழ வாழ்ந்த ஏந்தலே எல்லோரையும் ஏங்கச் செய்து விட்டுப் போய்விட்டாயே! நீ கொடியோய் என்று அரற்றினார். புதைகுழியின் பக்கமாகக் கற்சிலை போல் உட்கார்ந்தார். பக்கத்தே முல்லைக்கொடி ஒன்று பூவுடன் விளங்கியது. அது என்னென்னவோ எண்ணங்களை எழுப்பியது. முல்லையே! நீ அறிவில்லாய்; உணர்வும் இல்லாய்! எக்காலம் பூக்கவேண்டும் என்னும் தெளிவு இன்றிப் பூத்து விட்டாய்! நீ பூக்கத்தக்க பருவமாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது உன்னை எவரேனும் பறித்துச் சூடுவரோ? நீ பிறந்ததன் பயன் - மலர்ந்ததன் பயன் - மணம் பரப்புவதன் பயன் - பிறர் பறித்து மகிழ்வுடன் சூடுவது அன்றோ! உன்னை எவரேனும் இன்று பறிப்பரா? சூடுவரா? அன்றிச் சூட்டவாவது செய்வரா? பயனில்லாமல் மலர்ந்து பாழ் பட்டாய்! அதோ! காளைகள் சிலர் வருகின்றனர். அவர்களுக்குப் பக்கத்தே அவர்களின் காதலுக்குரிய கன்னியர்களும் வளை குலுங்க நடந்து வருகின்றனர். வழியே போகிறவர்கள்தாம்! இருப்பினும் உன்னைப் பறிப்பரா? சூடுவரா? அன்றி ஒருவருக் கொருவர் மாறிமாறிச் சூட்டிக்கொள்வரா?.... அவர்கள் உன்னை ஏறெடுத்துப் பார்க்காமலே போய்விட்டனர். இதோ! இன்னும் இருவர் வருகின்றனர். ஒருவன் பாணன், ஒருத்தி பாடினி; பாணன் கையிலே யாழ் இருக்கிறது. அவன் முன்னெல்லாம் பூக்களைப் பறித்து, பாணிக்குச் சூட்டும் வழக்கம் உடையவன். கொடியின் உச்சியில் இருக்கும் பூக்கள் எட்ட வில்லை என்றுகூட விடும் பழக்கம் உடையவன் இல்லை. யாழைத் தோட்டியாகக் கொண்டு மெதுவாக நரம்பு அறுந்து படாவாறும், பூச் சிதையாவாறும் பறித்து எடுக்க வல்லவன். முல்லைப் பூவின்மேல் அவ்வளவு காதலுண்டு அவனுக்கு. ஆனால் இப்பொழுது.... திரும்பிக்கூடப் பார்க்கவில்லையே! இக்காளையும், கன்னியும், பாணனும், பாடினியுமே பறிக்க விரும்பாத உன்னை இனி எவருமே பாரார்! இது உறுதி. நீரை உண்டு, நிலத்தே வளர்ந்து, உழைப்பைச் சுரண்டி, நீ பிறந்ததன் பயனாம் சிறந்த நிலையை அடையாமலே போகின் றாய். ஏன்? இது ஏன்? உரிய காலத்தே பூக்கவில்லை. விரும்பிச் சூடும் மகிழ்ச்சி மிக்க காலத்தே பிறக்கவில்லை. நாடு அலறி அழுமாறு வல்வேல் சாத்தன் இறந்த வேளையிலே நீ மலர்ந்துள்ளாய்! இவ் வொல்லையூர் நாட்டிலே இவ்வல்லல் காலத்திலே முல்லையே! நீ பூக்கலாமா? சாத்தன் இறந்தபின் நான் பயனற்று இருப்பதுபோல நீயும் பயனின்றி மலர்ந்துள்ளாய். ஒரு வழியால் நாம் இருவரும் ஒப்பானவரே! எது வந்தாலும் வருக! பயனற்ற வாழ்வு மட்டும் தொலைக! ஏக்கத்தோடு புலவர் புலம்பினார். புலவர் அழுகை யும் புலம்பலும் வறிதே போய் விடுமா? அது இளையோர் சூடார் என்னும் பாட்டாகக் கிளம்பியது. மற்றவர்கள் வடித்த கண்ணீரும், துடித்த துடிப்பும், செத்துத் தொலைந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. புலவன் கண்ணீரும் துடிப்பும் இன்றும் நம்முன் தோன்றி உருக்குகின்றன. மற்றை உடலெல்லாம் வெற்றுடல்! புலவன் படைக்கும் கலை உடல் புகழுடல்! அழியா உடல்! சாத்தன் கல்வியாலும் பண்பாலும். வீரத்தாலும் அழியா உடல் பெற ஆசை கொண்டான். கீரத்தனார் அவனுக்கு அழியா உடல் தந்துவிட்டார். வாழ்க அழியா உடம்பு! கீரத்தனார் பாட்டு: புறநானூறு 242. இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே 13. கணியன் பூங்குன்றன் கதை ஊருக்குப் பக்கத்தே திரடு ஒன்று இருந்தது. அதற்குக் கோயில் திரடு என்பது பெயர். அத்திரடு ஒரு காலத்தில் பொலிவும் வலிவும் மிக்க கட்டிடங்களோடு இலங்கியது. அதன் பழமைக்குச் சான்று காட்டுவது போல் கல்லால் அடித்து வைத்த காளை உருவம் ஒன்று பாதியளவாக மண்ணில் புதையுண்டு கிடந்தது. அதன் பக்கத்தில் இரண்டு தூண்கள் நின்றன. அவற்றின் இடையே ஒரு மணி தொங்கிக் கிடந்து. அது காற்றின் தாக்குதலால் அசைந்து அசைந்து மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. வெண்கல மணியின் ஒலிக்குப் பின்னொலி போன்று, பக்கத்தே மேய்ந்து கொண்டிருந்த பசுவின் கழுத்துமணி ஒலித்தது. பசு எலும்பும் தோலுமாக இருந்த படியால், அதன் மணி ஒலி, காற்றால் அசைக்கப்பட்ட மணி ஒலியை விஞ்சுவதாக இல்லை. பசு, புல்லே காணப்படாத அந்த மேய்ச்சல் நிலத்தில் நாவால் நக்கி நக்கிப் பசியை ஆற்றிக் கொண்டு இருந்தது. பசுவிற்குச் சற்றுத் தொலைவில் எருமை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் வரிச்செலும்புளை எண்ணி விடலாம் போல் மெலிந்து இருந்தது. அதன் பருத்த கொம்பையும், கனத்த தலையையும் தாங்குவதற்கு ஏற்ற வலிமை கழுத்தில் இருக்கவில்லை. ஆம்! அதன் தலையும் கொம்பும் அதற்குச் சுமையாக இருந்தன. இந்நிலையிலும் அதன் முதுகில் ஒரு காக்கை உட்கார்ந்து பழம் புண்ணைக் குடைவதை விடவில்லை. உணர்ச்சி கெட்டு, உரமும் அற்றுத் திண்டாடிக்கொண்டு அசையும் மாட்டைக் குத்திக் குடைவது காக்கைக்கு எளி தாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது என்பதற்கு ஐயமே இல்லை. எங்கிருந்தோ ஒரு கரிக்குருவி வந்தது. அதன் கண்ணோட்டம் காக்கை மீது பாய்ந்தது. காக்கையைத் துரத்திக் கொண்டு விடாமல் நெடுந்தொலைவு வெருட்டிச் சென்றது. கொழுத்த காக்கையும் ஊக்கமிக்க குருவியை எதிர்த்து நிற்க முடியவில்லை! ஓடி மறைந்து போய் விட்டது. ஊருக்கு மிகவும் நெருக்கமாக ஒரு கழுதை நின்றது. அதன் மீது பொதிச் சுமை ஒன்றும் இல்லை. இருந்தாலும், நிற்கவே திண்டாடியது. நல்ல வேளையிலேயே கால் தட்டும் கழுதை ஒட்டி உலர்ந்து போன இவ்வேளையில் நடக்க முடியுமா? முட்டி தட்டித் தட்டிப் புண்பட்டுப் போய்க் கிடந்தது. கழிவுப் பொருள்கள் குப்பை, கூளங்கள் ஏதாவது கிடக்கின்றனவா என்று தேடித் திரிந்தது. ஊரின் பெயர் குடகூர் என்பது. ஊரின் கடைசியிலே ஒரு வீடு இருந்தது; வீட்டுச் சுவர் நிழலிலே ஒரு நாய் படுத்துக் கிடந்தது. அது தன் கண்ணைத் திறக்க முடியாத அளவில் மயங்கிப் போய்க் கிடந்தது. ஊடே ஊடே உறுமிக் கொண்டது. அது ஐந்தாறு குட்டிகள் போட்ட நாய்! குட்டிகள் மேலே விழுந்து புரண்டன. கண் திறவாத அக்குட்டிகள் தாயின் மடுவில் வாய் வைத்துச் சுவைத்துச் சுவைத்து இழுத்தன. நாயும் உருண்டு பார்த்தது முடியவில்லை. குட்டிகளை விட்டுவிட்டு ஓடவும் தாயன்பு விடவில்லை. இரத்தம் வெளி வரும் அளவுக்கும் குட்டிகள் கடித்து இழுத்துக்கொண்டே இருந்தன. நாயின் மடுவில் யாரும் பாலைக் கறந்து கொண்டார்களா? கறக்க முடியுமா? நாய்க்குட்டி அன்றிப் பிறிதெதனாலும் கறக்கப்படாத நிலையுடைய நாய்க்கே இத்துயர் நிலைமை என்றால் அவ்வூர் வறுமைத் துயரை எப்படிச் சொல்வது? பசு, எருமை, கழுதை, நாய் இவற்றை நோக்கிக் கொண்டே வந்தார் ஒரு கிழவர். அவருக்கு வயது அறுபதைத் தொட்டு இருக்கும். ஒன்றிரண்டாய் நரைத்த தலை; அடர்ந்த மயிர்; பரந்த நெற்றி; நிறைந்த சுருக்கங்கள். கன்னத்திலே சில முதுமைக் கோடுகள்; சற்று நீண்ட மூக்கு; ஒளியூட்டும் கண்கள்; கறை படாத பல் வரிசை; முகத்திற்குத் தனியழகு ஊட்டும் தாடி - அதிலும் ஒன்று இரண்டாய் நரை; நீண்ட கைகள்; அளவிட்டு நடக்கும் கால்கள்; ஆழ்ந்த சிந்தனை - நடந்து வந்த கிழவரின் பொதுவான அடையாளங்கள்! கிழவர், நாய் படுத்துக் கிடந்த வீட்டை நோக்கினார். அதன் கதவு தாழ் போடப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டினுள் ஆரவாரம் பலமாக இருந்தது. திறந்து கிடந்த சாளரத்தின் வழியே உற்றுப்பார்த்தார். ஒரு பெண் கையிலே கூழ்ச்சட்டி வைத்திருந்தாள். அதிலிருந்த கூழை, அளவிட்டுத் தன் மக்கள் ஒவ்வொருவருக்கும் விட்டுக் கொண்டே வந்தாள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு ஏனங்களை நீட்டினர். அவர்களைச் சமாளிப்ப தற்குப் பெரும் பாடுபட்டாள். சின்னக் குழந்தை ஒன்று தன் பங்கை வாங்கி அரைகுறையாகக் குடித்து விட்டு அம்மா! பசிக்குது; அதிகமாய்ப் பசிக்குது; இன்னுங் கொஞ்சம் விடும்மா; இன்னுங் கொஞ்சம் விடும்மா என்று அழுகையும் கண்ணீருமாய்க் கேட்டது. மற்றக் குழந்தைகளுக்கு அந்த அளவுகூட வராதே என்று அறிந்த தாய், வாய் பேசாமல் கூழை வார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை துடிப்போடு துணியைப் பிடித்துக் கொண்டு தாய் மேல் தாவியது. அத்தாவுதலால் தாய் சட்டியை விட்டுவிட்டாள்! சிறிதிருந்த கூழும் கொட்டிப் போய்விட்டது. இந்த வறுமைப் போராட்டத்தை நட்டுக் கால் மேல் நாடியை ஊன்றிக்கொண்டு, கவனித்துக்கொண்டிருந்த வீட்டுக் காரன், சட்டி வீழ்ந்தவுடன் கைகளால் தன் தலையைப் பிடித்துக் கொண்டு கல்போல் உட்கார்ந்து விட்டான். அவனுக்கு மூச்சு விடுவதே பெரும்பாடாக இருந்தது! வீட்டு நிகழ்ச்சியைச் சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த கிழவர் கண்களிலிருந்த சில நீர்த்துளிகள் கிளம் பின. வைர நெஞ்சம் பாய்ந்த அவரை நடுக்கிவிட்ட அந் நிகழ்ச்சி அம்மவோ! கொடிது கொடிது! மிகக் கொடிதுதான்! கிழவர் கால்கள் சிறிது நடந்தன. அருகில் இருந்த வேறொரு வீட்டின் முற்றத்தில் நின்றன. அங்கே ஒரு கணவன் மனைவியின் தலையைப் பிடித்துக் கீழே இழுத்துப்போட்டு அடித்துக் கொண்டிருந்தான். அவள் பெற்றெடுத்த இரண்டு மூன்று குழந்தைகளும் தாய்மேல் விழுந்து புரண்டு துடித்துக் கொண்டிருந்தன! அவனுக்குக் குழந்தைகளைக் கண்டும்கூட இரக்கம் வரவில்லை. குடிவெறியிலே நிற்பவனுக்குக் குடிகேடு இது, கொடுமை இது என்று தெரியுமா? முற்றத்திலே நின்று கொண்டிருந்த கிழவருக்கு அடுத்த வீட்டுத் திண்ணை நன்றாகத் தெரிந்தது. அங்கே ஒரு கட்டில் கிடந்தது. அக்கட்டிலில் இருந்து ஒரு முணகல் ஒலி கிளம்பி வந்தது. அவன் அம்மா! அம்மா! என்று புலம்பிக்கொண்டே இருந்தான். அவனை நெருங்கிப் போய் பார்த்துப் பேச நினைவு வந்தது கிழவருக்கு. ஆனால் அடக்கிக் கொண்டார். அவனுக்கு வேறு நோய் ஒன்றும் இல்லை. வயிற்றுக் கடி நோய்தான் அது. அது தீர வழியில்லாது போகவே, என்னென்னவோ நோய்கள் வட்டமிட்டுக்கொண்டு வந்துவிட்டன. கிழவர் கால்கள் நிலத்தில் தான் நடந்தன. ஆனால் சிந்தனையோ வானில் பறந்து கொண்டிருந்தது. நடுத்தெரு வழியே சென்றார். அங்கொரு வீட்டில் பத்துப் பதினைந்து பேர்கள் கூடி ஆரவாரமாகக் கூத்தாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் குரல் தெருவையே அலறச் செய்தது. வீட்டுக்காரன் சேந்தன் என்பவன். அவன் ஒலி ஊருக்கே போதும். அவன் நொடி நொடி தோறும் ஏதேதோ ஆணைகளை இட்டுக் கொண்டே இருந்தான். மற்றவர்கள் கைகட்டி, வாய்பொத்தி நின்றனர். இவற்றையெல்லாம் கண்ட கிழவர் ஊரை அடுத்து இருந்த வறண்ட ஆற்றுக்குச் சென்றார். அதில் நீர் ஓடி நீண்டகாலம் ஆகிவிட்டது. நிழல் தரு வதற்கு ஒரு மரங்கூட இல்லை. பச்சைப் புல் கண்ணில் காண வில்லை. ஏதோவொரு முட் செடியின் நிழலிலே உட்கார்ந்து கொண்டு உலகியலைச் சிந்தித்தார். எத்தனையோ நிகழ்ச்சிகள் படக்காட்சி போன்று வந்து வந்து மறைந்து கொண்டிருந்தன. வறுமை கொடிது! அதனினும் கொடிது வறுமை எண்ணம்; வறுமை எண்ணத்தைப் போக்கிவிட்டால் வறுமை தானாகப் போய்விடும். வறுமை எண்ணம் தொலையவேண்டு மாயின் உண்மையறிவு வேண்டும் என்று அவர் சிந்தனைக்கு இடையே ஒரு கருத்துத் தோன்றியது. ஆம்! இனி உண்மையறிவு உண்டாக்குவது என் தொண்டு என்று முடிவுகொண்டார். அவர் எங்கெங்கோ செல்வதாக இருந்தார் ஆறு, குளம், அருவி, மலை, நாடு, நகர், இவற்றைக் காண வேண்டுமன்பது அவர் அவா! திட்டத்தை மாற்றிக் கொண்டார். மக்களை மக்களாக வாழச் செய்வதைப் பார்க்கிலும் உயர்ந்த தொண்டு ஒன்றுமே இல்லை என்பதே அவர் கண்ட தெளிவு ஆயிற்று. கிழவர் பூங்குன்றம் என்னும் ஊரினர். அவர் பெயர் பூங்குன்றன் என்பதாம். இன்றைய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மகிபாலன் பட்டியே பண்டைப் பூங்குன்றமாகும். பூங்குன்றன் பிறவியிலேயே நல்லறிவு வாய்ந்து விளங்கினார். இளமையிலேயே உயரிய நூல்களைக் கற்று நுண்ணறிவு பெற்றார். செயற்கரிய செய்த பெரியோர்களோடும், அறிவது அறிந்த ஆன்றோர்களோடும் பழகி இயற்கை அறிவை மிகுதியாக்கிக் கொண்டார். இன்பம் துன்பம், வாழ்வு தாழ்வு இவற்றால் சோர்வு காணாத உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டது. தம் கையே தமக்கு உதவி என்னும் கருத்தால் தம் வயிற்றுப் பாட்டுக்காகவும், பிறர் நல்வாழ்வுக்காகவும் மருத்துவத் தொழிலும் கணியத் தொழிலும் செய்துவந்தார். அதனால் கணியன் என்றும், கணியன் பூங்குன்றன் என்றும் பெயர் பெற்றார். பூங்குன்றன் தாம் செய்த தொழிலால் கிடைத்த வருமானத் தைத் திரட்டி வைத்தார் இல்லை. பெரும்பாலும் பொருள் பெறாமல் தொண்டாகவே கருதிச் செய்தார். ஏதோ கிடைத்த வருவாயிலும் தம் வாழ்வுக்குப் போக எஞ்சியதை ஏழையர்க் காகவே பயன்படுத்தினார். இந்நிலையிலே தான் வேறிடங் களுக்குச் சென்று வர விரும்பிப் புறப்பட்டார். தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டு விட்ட பின்பு அவருக்கு ஊர் ஏது! உறவு ஏது! தம் ஊருக்காகவும், உறவுக்காகவும் மட்டும் வருவது இல்லையே தொண்டு! கணியன் முதலாவதாகக் கண்ட வீட்டுக்கு வந்தார். வீட்டுக் காரர் பெயர் மருதன்; மனைவி பெயர் நல்லாள். அவர்கள் குழந்தைகள் தெருக்களிலே அலைந்து திரிந்தனர். மருதனும் நல்லாளும் திண்ணையிலே உட்கார்ந்து சோர்ந்து போய் ஒரு வரை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையிலே சிறிதும் இன்பக் களை இல்லை. வலுவாகச் சிறிது சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கணியனை வரவேற்றனர். ஓர் ஓலைத் தடுக்குத் தந்து உட்கார வைத்தனர். பேச மருதனுக்கு வாய் எழவில்லை. என்ன பேசுவது, எதைப் பேசுவது? மனம் இருக்கிறது, விருந்து செய்ய வேண்டு மென்று! வளம் இருக்கிறதா? அது இல்லாத பொழுதில் அமைதி தானே தக்க மருந்து! fÂa‹ ngr¤ bjhl§»dh®; “V‹ kiHna bgŒa Éšiyah? ஆமாம் நெடுநாட்களாகப் பெய்யவில்லை வெளியூருக்கும் மக்கள் பிழைப்புக்காகப் போயிருப் பார்களோ? பல வீடுகளில் ஆள்களே இல்லையே! ஆமாம்! என்ன செய்வார்கள்? வயிற்றைக் கழுவிக் கொள்வதற்காகப் பிறந்த ஊரை விட்டு வெளியேறுவது கொடுமையாகத்தான் இருக்கிறது. வழியில்லாதபோது? நாங் களும் முன்பே போயிருப்போம். ஆனால் இந்த மண்ணை விட்டுப் போக மனம் வரவில்லை. இந்த உறுதியும் இன்னும் எவ்வளவு நாள்களுக்குத்தான் நீடிக்குமோ? தெரியவில்லை. நீங்கள் யாரென்று.....! ஆம்; அதைச் சொல்லிக் கொள்ளவில்லை. என் ஊர் பூங்குன்றம். என் பெயர் பூங்குன்றன். ஊர்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் வந்தேன். எங்கெங்கோ அலைந்து விட்டு வருகின்றேன். ஆனால் என்னை மேலும் செல்லாதவாறு தடுத்துவிட்டது இவ்வூர் வறுமை! பாவம்! துன்பம்தான், யார் என்ன செய்துவிட முடியும்? என்ன செய்து விடவும் முடியாதுதான், எதுவும் முடியாது என்று எல்லோரும் சும்மா இருந்து விடுவதும் சரியில்லை அல்லவா! ஆமாம்! இந்நிலைமையில் யாருக்கு யார் தான் என்ன செய்துவிட முடியும்? ஏதோ ஒன்றிரண்டு பேர்களுக்கு என்ன வறுமை வாட்டினாலும் கவலையில்லை. அவர்களை ஒட்டி வாழும் சிலருக்கு ஒருவாறு கவலையில்லை. மற்றவர்கள் பாடு? இந்த ஊரிலுள்ள நல்லுள்ளம் படைத்த ஒன்றிரண்டு பேரிட மாவது செல்வம் இருந்தால் பயன்படும். அவர்கள் தங்களைத் தாங்கள் காத்துக் கொள்ள முடியாமல் ஊரை விட்டு வெளி யேறிவிட்டனர். எரியும் வீட்டிலே எடுத்தது மீதம் என்று, வறுமைக்குத் துயரப்பட வேண்டாத நிலையை ஏற்படுத்திக் கொண்டது ஒன்றிரண்டு பேர்களும் அவர்களை ஒட்டிய வர்களும் திரிகின்றார்கள். மருதன் பேச்சிலே இடை இடையே பொறுமலும், விம்மலும், தயக்கமும் காணப்பட்டன. பூங்குன்றன் தம் கையில் கொண்டுவந்திருந்த சுமையை அவிழ்த்தார். அதில் இருந்த கட்டுச்சோறு, ஏதோ சில பண்டங்கள் ஆகியவற்றை எடுத்து மருதனிடம் கொடுத்தார். இருக்கட்டும்; வேண்டாம்; வேண்டாம் என்று மருதன் வாய் பேசியது. எவ்வளவு தொலைவு போகின்றீர்களோ! இருக்கட்டும் என்று ஒரு தூண் மறைவில் நின்று கொண்டிருந்த நல்லாள் கூறினாள். பண்டத்தின் மணத்தால் நெடுந்தொலைவிலிருந்து அறிந்து கொண்டு படையெடுக்கும் எறும்புபோல் வீதியில் திரிந்த சிறுவர்கள் வீட்டுக்கு ஓடி வந்தனர். போட்டிபோட்டுக்கொண்டு அள்ளித் தின்றனர். கணியனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. கவலையும் இல்லாமல் இல்லை. நோய்ப் படுக்கையில் கிடந்தவனைப் பார்க்கச் சென்றார் கணியன். அவருக்கு மருத்துவம் செய்யத் தெரியும் அல்லவா! நாடி பிடித்துப் பார்த்தார். காய்ச்சலால் இரத்தவோட்டம் இன்றி, வெளிறிப் போய்க் கிடந்த அவன் உடல் நிலைமையை ஆராய்ந்து பார்த்து மருந்து உதவினார். கஞ்சி போட்டுத் தருவதற்கும் வழியற்றிருந்த அவ்வீட்டார், கணியனுக்கு என்ன தான் கொடுத்துவிடுவார்கள். கணியனே, காசு கொடுத்தார். கஞ்சிபோட்டுக் குடிப்பதற்கு. இப்படியும் மருத்துவர்கள் இருப்பார்களா? என்று நினைக்கும்போதே நோயாளனுக்கு நோயும், வீட்டாருக்கு வறுமையும் தீர்ந்தது போல் ஆயிற்று. பூங்குன்றன் வேறிடம் செல்லும் எண்ணத்தை விட்டு விட்டார் அல்லவா! அதனால் ஆளில்லாத ஒரு வீட்டில் தங்கிக் கொண்டார். குடகூரிலே ஆளில்லாத வீடுகள் தானே நிறைய இருந்தன! வருவாயை எதிர்பாராமல் தொண்டாற்றிய பூங்குன்றன் இப்பொழுது கணியம் பார்த்தலையும், மருத்துவம் செய் தலையும் வருவாய்க்கான தொழிலாகவே கருதிக்கொண்டு வெளியூர்களில் போய் ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டார். பொருள் தேடுவதற்காக மருத்துவத் தொழிலைக் கற்றவர் அல்லரே கணியன். அதனால் மிகவும் தெளிவாகக் கற்றிருந்தார். நோயைத் தெளிவாக அறிந்து, நோய் தோன்றிய காரணத்தைத் திட்டவட்டமாக அறிந்து, அதைத் தணிப்பதற்குரிய மருந்து வகைகளை நுட்பமாகக் கண்டு செய்யக்கூடிய முறையின்படி செய்து நோயாளரைப்ணினார்.அனால் கணியன்பூங்குன்றனைக் கண்டவுடன் நோய்கள் ஓட்டமெடுத்தன. நோயாளர்களும் பூங்குன்றன் தரும் நன் மருந்தாலும், இன் சொல்லாலும் பிணி அகன்று மகிழ்ந்தனர். தவசமும் பயறும் கிழங்கும் கீரையும் சுமை சுமையாகத் தந்தனர். நாள்தோறும் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வருவார் பூங்குன்றன். வந்து சேர்ந்ததும் என்ன கொண்டு வந்தார் என்பதற்குரிய அடையாளமே இல்லாது போய்விடும். பூங்குன்றன் ஊரை விட்டுக் கிளம்பியதிலிருந்து குடகூர் மக்கள் அவர் எப்பொழுது வருவார் என்று நோக்கிக் கொண்டே இருப்பர். வந்தவுடன் ஒருவரை முந்திப்போய் ஒருவர் சுமையை வாங்கிக்கொள்வர்; பூங்குன்றன் ஊர் மன்றத்திற்குச் செல்வார். இருக்கும் மக்களைக் கணக்கிட்டுப் பகுத்துத் தருவார். பெற்றதைப் பெரிதும் மகிழ்ந்து வாங்கிக் கொள்வர். பச்சையாகவே அவ்விடத்திலேயே உண்டு விடுவர் சிலர்; பசி என்னவாயினும் வீட்டாரை நினைத்துக் கொண்டு செல்வர் சிலர்; சிறிது கிடைத்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியால், வேறு பங்கு களைப் பெறாமல் ஓடுவிடுவர் சிலர். அரிசியோ, பழமோ கிடைத்தால் பூங்குன்றன் வந்த வர்களிடம் தந்து விடுவது இல்லை. அதை வேறொரு துணியில் முடித்து வைத்துக் கொண்டு கூட்டமெல்லாம் போன பின் தாமே எடுத்துக் கொண்டு தெரு வழியே செல்வார். வீட்டை விட்டு வெளியேற மாட்டாத முதியர், நோயர், நொய்ந்து மெலிந்த சிறுவர் ஆகியவர்களுக்குத் தந்துதவுவார். பகற் பொழுதெல்லாம் வெவ்வேறு ஊர்களிலே அலைந்து திரிந்து வர வேண்டியது ஏற்பட்டமையால், இரவு நெடு நேரம் வரைக்கும் உள்ளூர் நோயாளரைக் கண்டு மருந்து தரவும், அளவளாவவும் செல விட்டார். அவர் எப்பொழுது சாப்பிடுகிறார், உறங்குகிறார் என்பவை மக்கள் அறியக் கூடா தவையாகப் போய்விட்டன. உயர்ந்த அவர் உள்ளம் அமைந்து உண்ணவும் விடவில்லை; உறங்கவும் விடவில்லை. தன்னலமே குறியானவன் அருகில் இருக்கும் வறுமையைப் பற்றி அணுவும் எண்ணாது உண்கின்றான்; அடுத்திருப்போர் அழுகை அவலம் பற்றி எண்ணாது அயர்ந்து உறங்குகின்றான்; அண்டை வீட்டிலே நோய் முணகலும் சாக்காட்டழுகையும் கேட்கும் போதும் குடித்து விட்டுக் களியாட்டம் ஆடுகின்றான்; வெடிச் சிரிப்புடன் உலா வருகின்றான்; அவனிடம் உள்ளம் என்பது இல்லை; உயர்ந்தோரிடம் அது இருக்கிறது! வேற்றுமை இவ்வொன்றே தான்! பூங்குன்றன், கீரை வகைகளைப் பயன்படுத்துமாறு மக்களைத் தூண்டினார். அருகே இருந்த ஊர்களுக்கும், வயல் களுக்கும் மக்களை அனுப்பி முஞ்ஞைக் கீரை, குப்பைக் கீரை, வேளைக்கீரை, அரைக்கீரை ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு வந்து உணவாகக் கொள்ளச் செய்தார். இது மக்கள் உயிர் போகாதிருக்கப் பெருந்துணை புரிந்தது. கணியன் உள்ளூரார்க்குக் கண்கண்ட தெய்வம் ஆனார். காலத்தில் உதவும் உயர் தெய்வம் ஆனார். ஆனால் மக்கள் பாராட்டுக்காகவா இதைச் செய்தார். புகழ்மொழி கருதிச் செய்வார் தொண்டுகள் வாயளவுடன் ஒழியுமே ஒழிய கையளவுக்கு எட்டாது. அதனைப் பெற்ற மக்களும் வாயளவுடன் வாழ்த்துவதோடு சரி! உண்மைத் தொண்டன் தன்னை வாயால் வாழ்த்துவதை விரும்பான்; பிறரும் வாயால் வாழ்த் தார்; அவனை யாம் வாழும் நாளும் வாழிய என்று உள்ளத் தால் வாழ்த்துவர்! எமக்கு உயிர் ஊட்டி வரும் நல்லோனுக்கே இவ்வுயிர் என்று தருவர். உடல் பொருள் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டுத் தமக்கென ஒன்றின்றி வாழ்வர்! வெறும் வாய் வாழ்த்துச் செய்து நில்லார். பூங்குன்றன் தொண்டு வெளியூர்க்கும் பரவியது. விரைந்து பரவியது. முன்னெல்லாம் கணியன் எனவும், மருத்துவன் எனவும் அறிந்திருந்த மக்கள் இப்பொழுது குணக்குன்றம் என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் உள்ளூரில் சிலர் உள்ளத்தே கணியன் மீது வெறுப்புணர்ச்சி ஏற்படாமல் இல்லை. வெறுப் புணர்ச்சி ஏற்பட்டபின் பகைத் தீ பற்றாமல் போகுமா? பற்றிய தீ சுடாமல் விடுமா? பூங்குன்றனை எவ்வளவுக் கெவ்வளவு நன் மக்கள் விரும்பி னார்களோ, அவ்வளவுக்கு இணையாக ஒரு சில புன்மாக்கள் வெறுப்புக்கொண்டு ஒழித்துவிடுவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். பூங்குன்றன் செய்த கெடுதல் என்ன? ஊர் மக்களுக்கு உதவுவது தவறுதானே? சாகத் துடிப்பவர்களை வாழவைப்பது தவறுதானே? பட்டழியும் நிலையிலுள்ள பயிருக்கு மழை கொட்டினால் மன்னிக்க முடியுமா? அந்தோ.......! என்று வருந்தவேண்டிய நிலைமை! அவ்வளவுதான். கணியன் மீது கொண்ட அன்பினால் பல பேர் அவரைக் குடகூருக்குத் தேடிவந்தனர். அவரை கண்டு போவதிலே இன்பங் கொண்டனர் அவரோடு உரையாடுவதிலே பேரின்பங் கண்டனர்; அரும் பெரும் நீதிகளையும், வாழ்க்கை அனுபவங் களையும் கேட்டுத் தம் தலைமேல் தாங்கினர். கணியன் வாழ்ந்த ஊர், பக்கத்தூர் மக்களால் புனிதவூர் ஆக்கப் பெற்று விட்டது. அவ்வளவு பேர் வருவர்; போவர். எல்லாம் ஒரே ஒரு பூங்குன்றனுக்காக! ஊரையே தம் கையில் பிடித்துக் கொண்டு ஆட்டி வைத்த உள்ளூர்த் தடிகாரப் பேர்வழிகளுக்கு, ஊர்ப் பொருளைச் சுரண்டித் தின்பதையே திருப்பணியாகக் கொண்ட பழம் பெருச் சாளிகளுக்கு, வாயடியாலே வயிற்றை நிரப்பிக் கொண்டு வாழும் வாலாட்டிப் பிழைப்புகளுக்கு மதிப்பு இல்லை; புகழ் இல்லை! புதிதாக வந்த பூங்குன்றனுக்குப் புகழ் விஞ்சுகிறது. கொதிப்பு வராதா என்ன? நேற்றைய நிலை என்ன? இன்றைய மாற்றம் என்ன? அணு அணுவாக உள்ளூரார் வெறி ஏறிக்கொண்டே போனது. பூங்குன்றன் எது பற்றியும் அறியார்; அறிந்தாலும் அது பற்றிக் கனவிலும் கவலை கொள்ளார்! பகை அதுபற்றிக் கனவிலும் கவலைகொள்ளார்! பகை பாராட்டிக் கொண்டு வெறுக்கவும் மாட்டார். ஒரு நாள் பூங்குன்றன் வீட்டு முற்றத்தில் 10, 15 தவச மூடைகள் கிடந்தன. விடிந்து வெளியே வந்த பூங்குன்றன் வியப்படைந்தார். இவை இங்கெப்படி வந்தன என்று சிந்தித்தார். என்றும் புரியவில்லை. ஊர் விழிக்கும் பொழுது ஆயிற்று. இரண்டு ஒன்றாக இருந்த சேவற் கோழிகள் ஊக்கமின்றிக் கூவின. அவற்றின் குரல்கள், பசுக்களையும் நாய்களையும் எழுப்பி விட்டன. மக்களும் ஒருபின் ஒருவராய் எழுந்தனர். பூங்குன்றன் வீட்டு பக்கம் வந்த ஒருவன் அங்குள்ள மூடைகளை கண்டு ஊரெல்லாம் சொன்னான். பெட்டி, சட்டி கூடைகளுடன் மக்கள் கூடி விட்டனர். பூங்குன்றன் சொன்னார்; இந்த மூடைகள் யாருடையவை என்பவை தெரியவில்லை. இவை எப்படி வந்தன என்பதும் விளங்கவில்லை. இவ்வாறு இருக்க நாம் பங்கிட்டுக்கொள்வது தவறாகும் மக்களுக்கு ஆவல் பெருகியது. சிலருக்கு பூங்குன்றன் உரைகூட வருத்தத்தை உண்டாக்கியது. அவர் முன் கிடக்கும் தவசத்தை எடுத்துக்கொள்ளத் தடுக்கிறாரே என்பது அவர்கள் எண்ணமாக இருந்தது. பொருள் தான் முதன்மையே ஒழிய, அது எப்படி வருகிறது என்பது முதன்மையிட இல்லை .என்னும் குணத்தில் போய்விட்டார்கள் அவர்கள்! அவர்கள் நிலைமை பூங்குன்றனுக்குப் புரியாததா? நீங்கள் ஆத்திரப்படும் அளவு அரிக்கும் வறுமை உங்களுக்கு உண்டு. ஆனால், மனிதன் சாவே கிட்டினாலும் கூட முறையான வழியில் வந்ததை அன்றி எடுத்துக் கொள்ளக் கூடாது. m¥go vL¤J¡ bfh©lhš m¿itnah g©ignah bfh©lt‹ mt‹ v‹gj‰F¤ jh‹ milahs« v‹d? என்று ஒருவாறு அமைதிப் படுத்தினார். சேந்தனுக்கு - பூங்குன்றன் மீது சிலருக்கு வெறுப்பு ஏற்படு மாறு கிளப்பி விட்டுக் கொண்டிருந்த குழப்பக்காரனுக்கு - பூங்குன்றன் வீட்டின் முன் மக்கள் ஒரே கூட்டமாய் இருப்பதும். தவச மூடைகள் கிடப்பதும் தெரிய வந்தன. அங்கே வந்தான். சிறிது நேரம் நின்றான்; மக்களுள் சிலர் அவற்றை எடுத்துச் செல்ல ஆவல் கொண்டிருப்பதையும் பூங்குன்றன் அவ்வப்போது அமைதி செய்வதையும் கண்டான். தன் சொற்படியாடும் கூட்டத் தாரைக் கூட்டிக் கொண்டு வந்தான். தாறுமாறாகப் பேசுமாறும், வலிந்து எடுத்துச் செல்லுமாறும் தூண்டிக் கொண்டிருந்தான். வந்தவர்கள் தகராறு அன்று வேறு எதுவும் வாழ்க்கையில் கற்றறியாதவர்கள். அவர்களிடம் நல்ல பண்புகள் இல்லாமல் இல்லை. அறிவும் இல்லாமல் இல்லை. தலைவன் கெடுத்து விட்டான். அவனும் தீய வழிகளைக் காட்டிக் காட்டி, அதிலேயே ஊறிப் போகுமாறு செய்து விட்டான். இத்தகையவர்களை நொந்துகொள்ளலாமா? அவர்கள் இயல்புக்குத் தக்கப்படியே நடந்து கொண்டனர். வாய் போனபடி பேசினார்கள்; ஊருக்கு உதவி புரிவ தாகப் பேச்சு! தெருவில் கிடக்கும் தவச எடுத்துக் கொள்ளத் தடை. இதுதான் உதவியோ? தெருவிலே கிடக்கும் மூடைகளை எடுக்க இவர் என்ன உரிமையானவர்? இவருக்குத் தடுக்க உரிமை உண்டு என்றால் எங்களுக்கு எடுக்க உரிமை உண்டு அயலூர்க்காரனுக்கு இடம் தந்து அவனுக்குத் தக்கபடி ஆடும் மக்களுக்கு இதுவும் வேண்டும் - இன்னும் வேண்டும் - ஏதேதோ பேசினர். பூங்குன்றன் எரிமலைக்கு முன் நின்று கொண்டும் குடல் குலுங்கச் சிரிக்கும் இயல்பு படைத்தவர். இந்நிகழ்ச்சியும், என் செயலும் இவர்கள் பேசி மகிழுமாறு இருந்தால் எனக்கு என்ன துன்பம்! நல்லதே என்று சிரித்துக் கொண்டார். கெட்டவன்! சிரித்துச் சிரித்துக் கொல்வான். அழுபவனை நம்பலாம். சிரிப்பவனை நம்பினோம், கெட்டோம் இது சேந்தன் மொழி. பூங்குன்றன் மேலும் சிரித்தார். சேந்தனுக்குப் பொத்துக் கொண்டு வந்தது சீற்றம். தன்னைச் சுட்டெரிப்பது போலாகக் கருதினான். வெறி கொண்டான். தன் ஆட்களை ஏவி எடுத்துச் செல்லுமாறு தூண்டினான். அதுவரை, பூங்குன்றன் சொல்லுக்காக ஓய்ந்து கிடந்த மக்கள் எதிர்த்து எழுந்தனர். பூங்குன்றனை இழிவு படுத்தும் இவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று கொதித் தனர். வரிந்து கட்டிக் கொண்டு நின்றனர். நாங்கள் பட்டினி கிடந்து சாவோம்! எல்லோரும் கூடி இன்றைக்கே வேண்டு மானாலும் சாவோம்! இந்த வறுமைக்காக இழிசெயலில் போகமாட்டோம். எங்கள் செல்வத்தைச் சுரண்டிச் சுரண்டிக் கொழுத்துப் போய்த் திரியும் நீங்கள், எங்கள் எதிரிகளே அன்றி உதவி புரிந்து வரும் இவர் எதிரியாக மாட்டார்! எச்சரிக்கை சேந்தா! உன் வீட்டில் எத்தனை எத்தனை மூடைகள், களஞ்சியங்கள் கிடக்கின்றன. அவை யாருடையவை? அவற்றை நாங்கள் இனி விட்டு வைக்கப் போவது இல்லை. வெள்ளம் புறப்பட்டு விட்டது. தலை மேல் போகின்றது. இனிச் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? இந்த மூடையைத் தொடுங்கள்! உங்கள் எலும்புகளைக் கூடையில் தான் அள்ள வேண்டியது வரும். அறிவோடு உங்கள் செயலை நீங்கள் பாருங்கள் என்று கூறி உரத்துடன் நின்றார்கள். தடியர்கள் ஏசினார்கள்; பேசினார்கள். ஆனால் செயல் கெட்டுவிடும்; ஊரை எதிர்க்க முடியாது என்னும் எண்ணத் தால் வாலை மடக்கிக்கொண்டு திரும்பினர். பூங்குன்றனுக்கு ஊரின் பிளவு நிலைமை வேதனை தந்தது. மக்களை அடக்கி வைக்க முடியவில்லை. எப்படியும் செல்வன் சேந்தன் வீட்டைக் கொள்ளையடித்து அங்குள்ள தவசத்தைச் சூறையாடவேண்டும் என்ற வெறி உண்டாயிற்று. வறுமைக் கொடுமையைப் பார்க்கிலும், இவ்வெறிக் கொடுமை கொடிது. ஆனால் அது மூண்டு கொண்டு எழுகிறது. ஒன்றை ஒன்று விஞ்சிய கொடுமைகளின் இடையே வாழ வேண்டிய நிலைமை மிகக் கொடியது என எண்ணினார் பூங்குன்றன். மக்களே ஒன்று கேளுங்கள்; நான் சொல்லிவிடுகின்றேன். நான் ஏன் இந்த ஊரில் தங்கினேன்? உங்கள் வாழ்வே என் வாழ்வென ஏன் கொண்டேன்? எனக்காகவா? உங்கள் நன்மைக்கு அன்றித் தீமைக்காக ஏதும் சொல்வேனா? செய்வேனா? என்னே நம்புகிறீர்களா? நம்பினால் அமைதி கொள்ளுங்கள்! நமக்கு பகைவர் எவரும் அல்லர். நமக்குப் பகைவரும் நாம்தான்; நண்பரும் நாம்தான்; நாம்தான் பகையையோ, நட்பையோ உண்டாக்கிக்கொள்கிறோம் நல்லதை உண்டாக்குவதும், கெட்டதை உண்டாக்குவதும் நாம்தான். எனின், கெட்டதைத் தேடிப் பிடித்து ஏன் உண்டாக்கிக் கொள்ளவேண்டும்? அது அறிவுடைமை ஆகுமா? சிற்சில வேளைகளில் சிலர் அறிந்தோ, அறியாமலோ தவறாகப் பேசிவிடலாம்; தவறாகச் செய்துவிடலாம். அதற்குப் பதில் தவறு. தவறுக்குத் தவறு.... இப்படியே போய்க் கொண்டு இருந்தால் உலகம் என்னாவது? என்னை நம்பினால் பகை யுணர்ச்சியை விடுங்கள். அன்பு நெறியைக் கடைப்பிடியுங்கள். எவ்வூர் ஆனால் என்ன? எவர் ஆனால் என்ன? எல்லோரும் நம்மவர்; நம் அன்பர்; நம் உறவினர்; யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பினைத் தந்து அந்த அன்பினை மீண்டும் பெறக் கூடாதா? நீங்கள் பகை பட்டு நின்றால் - உறுதியாக - அது என்னால் விளைந்ததுதான். உங்களுக்குப் பணி செய்வதற்காக வந்து, பகை மூட்டி விட்ட குற்றம் என்னைத் தான் சேரும். நான் குற்றம் சாட்டப்படவேண்டியவன்தான் என்றால் உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள். என்று கூறினார் கணியன். அவர் உரையிலே துடிப்பு இருந்தது! பொங்கி வரும் பாலில் நீர்விட அது அமைந்ததுபோல் மக்கள் பூங்குன்றன் உரை கேட்டு அமைந்தனர். கலைந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். சிறுவர்கள் மட்டும் விளை யாடிக் கொண்டிருந்தனர். சில ஆட்டுக் குட்டிகள் மூடை மேல் ஏறித் தாவிக்கொண்டிருந்தன. ஒன்றிரண்டு பேர் தொலைவில் நின்றுகொண்டு கூர்ந்து மூடைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். பூங்குன்றன் உலாவச் சென்றார். அவரை நன்றாக அறிந் திருந்த இரண்டு மூன்று பேர் வந்தனர். அவர்களோடு அள வளாவிப் பேசினார். காலையில் நடைபெற்ற நிகழ்ச்சி எதுவும் அவர் உரையிலிருந்து வெளிப்படவில்லை. பேசிக் கொண்டே ஊருக்குள் அழைத்து வந்தார். வீட்டுக்குட் சென்று உட் கார்ந்தனர். இந்த மூடைகள்... என்று தொடங்கினார் வந்தவருள் ஒருவர். இவை யாருடையவையோ? யாருக்காகக் கொண்டு வந்தவையோ? என்றார் கணியன். உங்களுக்காகத்தான்; இல்லாவிடில் உங்கள் வீட்டின் முன் ஏன் கிடக்கிறது? நான் இருக்கும் வீட்டின்முன் கிடந்தால் எனக்குரியது தானா? பிறகென்ன! அப்படித்தான் என்னுடையதல்லாதவற்றை எடுத்துக் கொள்ள எனக்கு உரிமை ஏது? ஊர் நிலைமையில் இதை எண்ணக் கூடாது என நினைக்கிறோம் ஊர் நிலைமை! என் நிலைமை! நிலைமை கொடுமையாக இருக்கலாம். அதற்காக முறை தவறலாமா? இது எனக்காக அல்லது எங்களுக்காக என்று தெரிந்திருந்தால் ஏதாவது செய் திருக்கலாம். ஐயம் கொள்ளவேண்டாம் உங்களுக்காகத்தான் வந்தவை. நேரடியாகப் பெற்றுக் கொள்ள என்ன சொல்கிறீர் களோ என்று கருதி இரவிலே எங்கள் ஏற்பாட்டின்படிதான் இம் மூடைகள் வந்தன. எப்படியும் மக்களுக்குப் பகுத்தளித்து விடு வீர்கள் என்று நாங்கள் எண்ணினோம். தவறாகிவிட்டது. மக்களுக்காக - அவர்கள் வறுமையைப் போக்குவதற்காக - நீதான் மன நிறைவோடு இதனை உதவுகிறீர்கள். கேளாமல் உதவுவது பெருஞ் சிறப்பு! நாங்கள் எங்களுக்குரியது என்பது தெரியாமல் எடுப்பது தகுதியா? நாங்கள் அதை நினைக்கவில்லை. மன்னிக்க வேண்டும். இதை எடுத்துக் கொண்டு உங்கள் விருப்பம் போல் பயன் படுத்துங்கள். நீங்கள் ஒப்புக்கொண்டால் நாங்கள் இன்னும் எப்பொழுதும் உதவக் காத்திருக்கிறோம். நன்றி, இதனை நீங்களே பகுத்தளிக்க வேண்டும். இல்லை. அது உங்களைச் சேர்ந்தது. இல்லை. எனக்கும் ஒரு பங்கு மற்றவர்களைப்போல் உண்டு; நீங்களே பிரித்துக் கொடுக்கவேண்டும். உங்களை வேலை வாங்கி விட வேண்டும் என்பது என் எண்ணம். ஓகோ! நன்றாகச் செய்யுங்கள். ஊரினர் கூடுகின்றனர். காலையில் தகராறு செய்து போனவர்களையும் பூங்குன்றன் அழைத்தார்; வரவில்லை; எனினும் அவர்களுக்கும் பங்கு தரவேண்டும் என விரும்பினார். நேரே அழைக்கச் சென்றார். பூங்குன்றன் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட சேந்தன் தன் கூட்டத்தினரை அழைத்தான். யாரும் போகக்கூடாது என்றும், இனிமேல் ஊராரையும், பூங்குன்றனையும் பகைவராக வைத்துப் பார்க்க வேண்டும் என்றும் பேசினான். எல்லோரையும் தட்டித் தந்து, மார்போடு தழுவிக்கொண்டு முறுக்கு ஏற்றினான். மீசைகளைத் திருகிக் கொண்டே சேந்தன் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். அவர்கள் மீசையும், பல்லும் நகங்களும் தான் மெலிந்து காணவில்லை! செல்வன் உதவி மதுவுக்கும் சூதுக்கும் இருந்தது அன்றி உணவுக்குப் பயன் படவில்லையே! உங்களுக்கும் தவசத்தில் பங்குண்டு. நீங்கள் வந்து எடுத்துக் கொள்கிறீர்களா? அனுப்பி வைக்க வேண்டுமானா லும் செய்கிறேன் என்றார் பூங்குன்றன். ஊருக்கு நல்லது செய்கிறானாம் நல்லது; பாவி! ஊரையே பிளவு படுத்தி விட்டான். வரவும் வேண்டாம். தவசம் வாங்கவும் வேண்டாம் தலையைமட்டும்பாதுகாப்பாகவைத்துக்கொள்.எங்களிடம்உன்நடிப்புபசப்புஎதுவும்நடக்காது.’ ஏதேதோ வாய்க்கு வந்த படியெல்லாம் பேசினார்கள். பூங்குன்றன் மனத்தே சிறிது அசைவு ஏற்பட்டது. அடுத்த நொடியில்,இவர்கள் நம்மைப் பழித்ததாக ஏன் எண்ண வேண்டும். புகழ்வதாகக் கொண்டு விட்டால் என்ன? எல்லாம் நாம் நினைப்பது தானே. புகழ் என்றால் புகழ்! பழி என்றால் பழி! இன்பம் என்றால் இன்பம்! துன்பம் என்றால் துன்பம்! எல்லாம் உள்ளத்தைப் பொறுத்தது என்று எண்ணிக்கொண்டார். இவ்வேளையில் இவர்களிடம் பேசுவது தவறு எனக் கருதித் திரும்பினார். ஆனாலும் பூங்குன்றனுக்கு இவர்கள் வீட்டிலே கிடந்து அல்லலுறும் மனைவி மக்களைப் பற்றிய கவலை இல்லாமல் இல்லை, அதுபற்றி நினைத்துக் கொண்டே நடந்தார். ஊராருக்குப் பல நாட்களுக்கு உணவு கிடைத்தது. பக்கத்து ஊரிலிருந்தும் தேடித் தேடி உதவிகள் வரலாயின, பூங் குன்றனைப் பார்க்க வந்த போது அவரது தொண்டினையும். ஊர் நிலைமையையும் கண்ட நல்லவர்களது உதவிகள் தான் இவை! யாரும் அறியாமலே நடுத்தெருவில் தவச மூடைகளைப் போட்டுச் செல்வது சாதாரணமாக எங்கும் நடக்கக் கூடியதா! ஊரினர் கவலை நீங்கிக் கொண்டு வந்தது. அதே நேரம் வெறியர் களின் பகையும் கேடும் வலுத்துக்கொண்டு வந்தது. கணியன் தெருவழியே சென்று bகாண்டிருந்தார்.áy சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவிலே விளை யாடிக் கொண்டிருந்தால் அவர்களைக் கடந்து செல்ல வேண்டி நேரிட்டது. அப்பொழுது சேந்தன் தன் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தான். அவன் மகன் விளையாடுபவர்களுடன் இருந்தான். அவன் பூங்குன்றனைக் கண்டு தாடி தாடி தாடி, தாழ்ந்து தொங்கும் தாடி என்று கேலி செய்தான். சேந்தன் சிரித்தான். தெரு வழியே வந்த ஒருவர் சிறுவனைக் கண்டித் தார். இப்படியா கேலி செய்வது? ntW ahUkhf ïUªjhš v‹d el¡F«? என்று கொதிப்புடன் கூறினார். குழந்தை தானே! அவனுக்கு என்ன தெரியும். என் தாடியைப் பார்த்து அவனுக்கு ஒரு மகிழ்ச்சி! அவ்வளவுதான். இதிலென்ன தவறு என்று கூறிக் கொண்டு நடந்தார். பூங்குன்றன். சினம் கொள்வார் பூங்குன்றன் என்பது சேந்தன் எண்ணம். அப்படிச் செய்தால் அதைக் கொண்டு வம்புக்கு இழுக்க வாய்ப்பு ஏற்படும் என்பது அவன் உள்ளாசை தோண்டு பவரையும் தாங்கிக் கொள்ளும் நிலம் போன்ற பொறுமை யுடைய பூங்குன்றன் பொறுமை இழப்பாரா? கேலி செய்த சிறுவனுக்குப் பூங்குன்றன் பேச்சு வியப்பாக இருந்தது. நல்ல மனிதர்! இவரைக் கேலி செய்தது தவறு என்று அவன் வாய் பேசியது. சிரித்து நின்ற சேந்தனுக்குச் சிறுவன் செயல் சினத்தை உண்டாக்கியது. பின் உண்டாகாதா? தன்னைப் போன்ற குணம் மகனுக்கு இல்லையல்லவா! பூங்குன்றன் இருந்த வீட்டில் ஒரு நாள் தீப்பற்றிக் கொண்டது. அதனை ஊர்க்காரர் கண்டு விட்டனர். வெளித் திண்ணையில் படுத்திருந்த பூங்குன்றன் எழுந்து விட்டார். மக்கள் ஓடியாடி வேலை பார்த்தனர். விரைவில் தீயை அணைக்க முயன்றனர். சுடர் விட்டெழுந்த கொடுவாய் நெருப்பும், ஊர் மக்களால் அணைக்கப்பட்டது. வீடு வேவது பற்றி எத்தகைய கவலையும் அற்றுப்போய் உற்று நோக்கிக் கொண்டு இருந்தார் கணியன். வாழ்வு அழியும் போது, ஏற்படும் சுடர் என்று வியந்தார். மலருக்கு உதிர்கிறேனே என்ற கவலையுண்டா? கவலையற்று எரிந்து விழும் கூரையும் இத்தகையதே என்று எண்ணினார். வெறி நெருப்பாகிறது; அன்பு தண்ணீராகிறது. அன்புத் தண்ணீர் பாய்ச்சியவுடனே வெறி நெருப்பு அணைந்து விட்டது. ஆனால் வெறி நெருப்பைத் தொலைக்க வெறி நெருப்பே மூட்டினால் ஊரே பாழ்பட்டு இருக்கும்! என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். இன்பம்! இன்பம்! இனித்துன்பம் இல்லை! வெற்றுச் சுவரில் கூரை இருந்தது. இனி அது இல்லை; இயற்கை தரும் மர நிழல்! ஆம்! இயற்கை வீடு என்வீடு!! எழில் வீடு என்வீடு! என்று மகிழ்ந்தார். ஒரு மரத்தின் அடியில் போய் அமைதியாக உட்கார்ந்து நிகழ்ச்சிகளைக் கவனித்தார். மக்களுக்குக் கிளர்ச்சி வலுத்தது. என்னென்னவோ செய்ய வேண்டும் போல் தோன்றி யது! பொறுத்துக்கொண்டனர் பூங்குன்றனுக்காக! மறுநாள் சேந்தனும், அவனைச் சேர்ந்த சிலரும் பூங்குன்றன் வீட்டின் வழியே வந்தனர். எரிந்த வீட்டைக் கண்டு பெருஞ்சிரிப்புச் சிரித்தனர்! அவர்கள் ஏவி விட்ட தீப்படை கொண்ட வெற்றிக் காட்சி யல்லவா! பூங்குன்றனை மர நிழலில் கண்டு எக்களித்தனர். பூங்குன்றனுக்கோ புன்முறுவல் வந்தது. ஒருவன் சொன்னான் இவ்வளவு நடந்தும் சிரிக்கிறான்! கொடியவன்! உடம்பெல்லாம் நஞ்சு! ஆமாம் கெட்டவன், ஊரை நம்ப வைத்து, நம் பேரைக் கெடுத்து விட்டான். இவனை ஒழித்தால்தான் நிம்மதி. இப்படி ஒருவன் கூறினான். எல் லோருமா இரும்புக் காதினர்? தோற்காதுள்ளவர்கள் யாரேனும் இருக்க மாட்டார்களா? இது அவர்கள் சிலருக்குக் கேட்டது. ஊரெல்லாம் பேச்சாயிற்று. அதற்கு உலைமூடி உண்டா? சேந்தன் வீட்டிலே பழித் திட்டம் உருவாகியது. எப்படியும் பூங்குன்றனை உருட்டி விட வேண்டும்; இன்றேல் வெருட்டி விட வேண்டும். இதுவே திட்டம். வெறியர்கள் சேந்தனுக்குத் துணை நின்றனர். அவர்கள் வழக்கத்திற்கு மேல் மதுவகைகளைச் சேந்தன் தந்தான். பணங் காசுகளையும் எடுத்து வீசினான். பூங்குன்றனுக்குக் கேடு செய்தால் அன்றி அவ்வூரில் தன் புகழை நிலை நாட்ட முடியாது. மக்களும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்னும் அளவுக்கு உறுதி கொண்டு விட்டான் சேந்தன். இனி எதுவும் செய்ய மாட்டானா? சேந்தன் திட்டங்களை யெல்லாம் அவன் மகன் அறிந்து கொண்டான். அவன் சிறுவன் தான். இருந்தாலும் வீட்டில் நடக்கும் பேச்சினைப் புரிந்து கொள்ள முடியாமல் போக வில்லை. பூங்குன்றனை அடிப்பதற்காகப் போட்டிருக்கும் திட்டம் அவனுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. தான் அறிந்த அளவில் எப்படியும் தடுத்து விட வேண்டும் என்று எண்ணி னான். அதனால் சேந்தனுக்கும் வெறியர்களுக்கும் தெரியாமல் வீட்டினின்று வெளியேறினான். பூங்குன்றன் வழக்கம்போல் வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். அவரைச் சிறுவன் தொடர்ந்தான். ஐயா என்றான் சிறுவன். குரல் கேட்டுத் திரும்பினார் பூங்குன்றன். என்னப்பா? இப்படித் தன்னந்தனியாய்! ஒரு செய்தி! உங்கள் மேல் என் தந்தையாருக்கும் வேறு சிலருக்கும் வெறுப்புப்போல் இருக்கிறது. அதனால் உங்களை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எப் பொழுதும் வீட்டில் உங்கள் பேச்சாகவே இருக்கிறது. உங்களை அடித்து ஊரை விட்டு ஓட்டி விடவேண்டும் என்று இன்று கூடிப்பேசி இருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்று. எனக்குப் பயமாக இருக்கிறது. நீங்கள் எப்படியாவது தப்பித்துக் கொள்ளவேண்டும். எங்கள் அப்பா கொடியவர்; முரட்டுத் தனமாகப் பேசுவார்; எதையும் செய்வார் பையன் தொடர்ந்து பேசினான். சிறுவனது முதுகைத் தடவிக் கொடுத்தார் கணியன். மகிழ்ச்சியோடு கூறினார்; நீ கவலைப் படாதே! எனக்கு ஒன்றும் வராது! என்னை ஏன் அவர்கள் அடிக்கப் போகிறார்கள். நான் ஒன்றும் அவர்களுக்குக் கெடுதல் செய்யவில்லையே! பிறகு எனக்கு என்ன கவலை? உனது நல்லெண்ணத்திற்கு வாழ்த்து என்றார். நான் சொல்வது உண்மை; பொய்யில்லை எங்கப்பா மாதிரி தான் நான் இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் கெட்ட எண்ணத்தோடு சொல்லவில்லை என்றான் சிறுவன். நீ கெட்ட எண்ணத்துடன் சொல்கிறாய் என்று நினைக்க வில்லை. அப்படி யாரையும் நினைக்கமாட்டேன். நீ போய் வா! வருவதைத் தடுக்க எவராலும் முடியாது என்றார் கணியன். சிறுவன் வருத்தத்துடன் நடந்து ஊரையடைந்தான். பூங்குன்றன் வேற்றூர்களுக்குப் போய் விட்டு மாலைப் பொழுதில் திரும்பினார். ஆனால் அதற்குள் ஊரே கலகலத்துப் போய் இருந்தது. பூங்குன்றனை அடிக்கத் திட்டமிட்ட செய்தி யின் விளைவுதான் அது. பூங்குன்றன் மேல் துரும்பு பட்டால் சேந்தன் மேல் இரும்பு படாமல் தீராது என்று பேசிக் கொண்டனர். பொறுமை வேண்டியதுதான். ஆனால் பொறாமைக் காரர்களிடம் பொறுமை காட்டவே கூடாது என்று சொல்லவும் தொடங்கி விட்டனர். அவ்வளவு வேதனை ஏற்பட்டு விட்டது மக்களுக்கு! ஊருக்கு வந்தும் வராதிருக்கும் பொழுதே செய்திகளை அறிந்தார் பூங்குன்றன். கடுகடுப்புக் காட்டினார் இல்லை. சிறிது பொழுது சிந்தித்தார். ஊரார் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு சேந்தனைப் பார்த்து விடுகிறோம்; எங்களை அனுமதியுங்கள்; உங்களைக் கேட்காமல் செய்யக் கூடாது என்று தான் பார்க்கிறோம் என்றனர். சேந்தன் நமக்கு என்ன செய்தான். அவன் பகைவனா? நான் பகைவன் என்று நினைத்தால் பகைவன்! உள்ளான் என் எண்ணம் அவன் நண்பன் என்பதே! பின் எப்படிப் பகைவன் ஆவான். நீங்கள் ஆத்திரத்துடன் பேசுகின்றீர்கள். எனக்கு ஒன்றும் வராது. நன்மையோ தீமையோ பிறர் தர வருவன அல்ல. ஒருவன் செய்வது அவன் கருத்துப்படி நன்மையாக இருக்கலாம். ஆனால் பெறுபவனுக்கு அதுவே தீமையாக இருக்கலாம். ஒருவன் நினைவில் பிறருக்குத் துன்பம் செய்வதாக இருக்கலாம். ஆனால் பெறுபவனுக்கு அதுவே இன்பமாக இருக்கலாம். ஆதலால் நன்மை தீமை; இன்பம், துன்பம் ஆகியவை பிறர் தர வருவன அல்ல, தன் மனம் தருவது தான். நீங்கள் என்னைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம். எனக்கு ஒன்றும் வராது. உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும இறந்தே ஆக வேண்டும். இறவாதவர் உண்டா? உறுதியாக அடைந்தே தீரவேண்டிய சாவுக்காக அஞ்சுவது அறிவின்மையும், கோழைத்தன்மையும் அல்லவா? எனக்கு மட்டும் அமைவதா சாவு! அல்லது புதுமையான ஒன்றா சாவு? நானே சேந்தன் வீட்டுக்குச் சென்று வருகிறேன் என்று புறப்பட்டார். இது தவறு! மிகத் தவறு! உரலுக்குள் தலையைக் கொடுப்பதுபோல் இருக்கிறது திட்டம். வேண்டாம். தீயவனைத் தேடிக் கொண்டு போய்ப் பார்ப்பது போல் தீமை இல்லவே இல்லை என்று தடுத்தனர் மக்கள். கணியன் கேட்கவில்லை. மற்றவர்கள் எதுவும் கூறவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் திண்டாடினர். ஆனால் அவரைத் தொடர்ந்து போவது என்று உறுதி கொண்டனர். இரவுப் பொழுது ஆகிவிட்டது. இருள் கப்பிக்கொண்டது. தெருவில் ஒன்றிரண்டு இடங்களில் கிழியஞ்சட்டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. சேந்தன் வீட்டின் உள்ளறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. வெளித்திண்ணை இருள் கப்பி இருந்தது. ஆனால் கதவு திறந்து கிடந்தது. சிறிதும் அஞ்சாமல் பூங்குன்றன் வீட்டுக்குள் சென்றார். வெளியே நின்றுகொண்டு ஐயா என்று அழைத்தார். ஏழெட்டுப் பேர்களின் சல சலப்புக் குரல்கள் ஓய்ந்தன. எட்டிப்பாராமலே யார்? என்று கேட்டது ஒரு குரல். பூங்குன்றன் உங்களைப் பார்ப்பதற்காக வந்தேன். பொறுத்துக் கொள்ள வேண்டும்! இப்பொழுது உங்களைத் தேடி வந்ததற்காக என்று கூறிக் கொண்டு உள் வீட்டுக்கு வந்தார். சிறிய வெளிச்சத்திலே சில உருவு வாள்களும், கத்திகளும் ஒளிவிட்டன. கம்புகள் சில மின்னின. என்னை அடிப்பதற்காகக் கூடிப் பேசுவதாக அறிந்தேன். நீங்கள் தேடிவரும் தொல்லை எதற்கு? நானே வந்து விடுவது நல்லது என்று கருதி வந்தேன். உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். இவ்விடம் போதுமா? வேறிடத்திற்கு வரவேண்டுமா? என்றார் பூங்குன்றன். ஓய்ந்த கடலாகி விட்டது வீடு; எரிந்த கட்டையாகி விட்டது உள்ளம்! எவரும் பேசவில்லை. சேந்தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றான். மற்றவர்கள் ஒவ் வொரு வராய் நிற்காமல் நழுவினர். உங்கள் விருப்பம்போல செய்யுங்கள் என்றார் பூங்குன்றன். ஒன்றும் மறுமொழி வரவில்லை. பெருமூச்சு மட்டும் சேந்தனுக்கு வந்து கொண்டிருந்தது. சேந்தன் மைந்தன் அச்சத்தோடு அடுத்து வந்தான்.... ஐயா நீங்கள் வாருங்கள்! அப்பா அடிக்க மாட்டார். இனி அடிக்கச் சொல்லவும் மாட்டார் என்றான். வெளியே அழைத்தான். என் செயல் இவர்களுக்குத் தவறாகப்படுகின்றது. அதற்கு இவர்கள் விருப்பம் போல் தண்டனை தர நினைக்கிறார்கள். இவர்கள் தண்டனை எதுவாயினும் எனக்கு இன்பமே! இன்னும் சொல்கிறேன். இவர்கள் விருப்பம் எதுவாயினும் எனக்கு நலமே என்று பேசினார். சேந்தன் கல்லுள்ளங் கூடக் கரைந்துவிட்டது போல் இருக்கிறது. இல்லாவிடில் காய்ந்து போன அவன் கண்களி லிருந்தும் கண்ணீர்த் துளிகள் வந்திருக்கமாட்டா! கணியன் போனபின், சேந்தனது நண்பர்கள் வந்தனர். என்ன செய்ய வேண்டும், செய்கின்றோம் என்றனர். இப் பொழுதே புறப்பட வேண்டும் என்றான் சேந்தன். அனைவரும் சேந்தனைத் தொடர்ந்து சென்றனர். இன்னும் கொடியவர்கள் கொடுமையை விடவில்லை போலிருக்கிறது. வரட்டும் என்று மக்கள் தொடர்ந்தனர். கையிலிருந்த உறைவாளை வீசி எறிந்தான் சேந்தன். என் வீரம், பேடி வீரம்! உங்கள் வீரமே, ஆண்மை வீரம்! மன்னிக்க வேண்டும் என்று கணியன் முன் வீழ்ந்தான். ஊரார் திகைத்தனர்; வெறியர் மருண்டனர். தலைவன் ஆட்டத்திற்குத் தக்கப் படி ஆடும் அவர்களும் மன்னிப்புக் கேட்டனர். பூங்குன்றன் சேந்தனைத் தூக்கினார். அன்பா! பொறுத்துக் கொள்ள ஒன்றும் இல்லையே! உன் சொல் தவறாக இருந்தால் அல்லவோ, பொறுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை உண்மை புரியவில்லை உனக்கு. இன்றே புரிந்தது. உண்மை புரியாமல் செய்தது தவறாகுமா?.... பலவாறு தேற்றினார். பண்புடையவர்களால் தான் உலகம் இருக்கிறது என்பதை இன்றே அறிந்து கொண்டேன் என்றான் சேந்தன். ஊரே மகிழ்ந்தது. பூங்குன்றனைப் புரிந்து கொள்ள நல்லதோர் வாய்ப்பு ஆயிற்று சேந்தன் பகையுணர்ச்சி என்று மக்கள் பேசிக்கொண்டனர். சேந்தன் புதியவனாகி விட்டான். அவன் பொறாமை, போட்டிக் குணங்கள் போய்த் தொலைந்தன. அன்பு வழியால் ஊரைத் திருத்த முயல்வது கடினமான செயல். ஆனால் திருத்த நினைப்பவர்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கையும், உயிர்க்கு இறுதி வந்தாலும் அன்பு வழியிலிருந்து மாறாத உறுதியும் இருக்கு மானால் அதுபோல் வெற்றி தரும் இன்பமான செயல் வேறொன்றும் இல்லை. பொறுமையால் பொறாமையை வென்றார் பூங்குன்றன். அன்பினால் வன்மை வென்று வாகை சூடினார். குடகூர் ஒன்று பட்டது. வறண்டு போய், உழவுத் தொழிலைக் கை விட்டு நின்ற குடகூரில் மழை பெய்யத் தொடங்கியது. கரை புரண்டோடு மாறு பெருமழை பெய்தது. மக்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. சேந்தன் உழவர்களுக்கு உதவினான். விதை களும், வேண்டிய கருவிகளும் தந்தான். உணவுக் கவலையையும் ஓரளவு போக்கினான். இப்பொழுது பூங்குன்றனுக்கு முன்னைப் போல் அரும் பாடுபட்டு, வருவாய் சேர்க்கவேண்டிய தேவை இல்லாது போய்விட்டது. அதனால் ஊர்ச் சிறுவர்களை அழைத்து வைத்து எழுத்தறிவு உண்டாக்கினார். முதியவர் களுக்கு உலகியலறிவு வழங்கினார். குடகூருக்கு நற்காலம் பிறந்து விட்டது. இரண்டு மூன்று திங்களில் கீரைகளும், கிழங்குகளும், காய்கறிகளும் தவசங்களும் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து வர ஆரம்பித்து விட்டன. தன் முயற்சியால் வரும் செல்வத்தை உண்பதைப் பார்க்கிலும் இன்பம் ஏது? உணவுக் கவலை இல்லாதபோது மக்கள் மகிழ்வது இயற்கை தானே. அதனால் நிலாக் காலங்களில் ஊராரெல்லாம் கூடி கும்மி நடனம், களியாட்டம் ஆடினர். சிற்சில வேளைகளில் நாடகத்திற்கும் ஏற்பாடு செய்தனர். முழு மதியன்று இரவு முழுவதும் களியாட்டமாகவே இருக்கும். பக்கத்து ஊர்களும் வந்து கூடும்! குடகூர் வறுமைக் கொடுமை நீங்கி வளம் பெற்றது. ஒருநாள் இன்பமாக நாடகம் நடந்து கொண்டு இருந்தது. அந்நாடகத்தில் வந்த செய்திகள் குடகூர் நிகழ்ச்சியாகவே இருந்தன. அதற்கு ஏற்பட்ட வறுமையும், பூங்குன்றன் வருகையும், வளம் பெறுகையும் காட்டப் பெற்றன. அன்று மக்களுக்கு ஒரே ஆரவாரம் தான்! கைத்தட்டுக்குக் கணக்கில்லை. அதிலும் பூங்குன்றனாக நடிப்பவன் வந்தால் போதும் ஒரே சிரிப்பு, கைத்தட்டு! காரணம் பூங்குன்றனாக நடித்தவன் சேந்தன்! கூட்டத்தில் துறவி ஒருவர் இருந்தார். அவர் பூங்குன்றன் இருந்த இடத்தை அடுத்து இருந்தார். அவரிடம் நாடகம் எப்படி? என்று ஒருவர் கேட்டார். என்னென்னவோ பேசினார் துறவியார். என்ன வாழ்க்கை இது! நிலையற்றது. நேற்று இருந்தவன், இன்று இருப்பது இல்லை. இன்று இருப்பவன், நாளை இருப்பான் என்னும் உறுதியில்லை; நொடி நொடி தோறும் சாவு; சஞ்சலம்,பக்கமெல்லாம் கொடுமை; கொலை, பேராசை; ஒருவனை ஒருவன் அடக்குதல்; பொறாமையால் அழித்தல்; போட்டியால் வாட்டல்; சே! சே! வாழ்வா இது? இருபதில் எழுச்சி; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம் என்று போகின்ற வாழ்வு போற்றக் கூடியதா?... இன்னும் பேசினார். துறவியார் கூறினாரே இதுபற்றித் தங்கள் கருத்து என்ன என்று கணியனிடம் ஒருவர் கேட்டார். வாழ்க்கை இனிது என்பது சிலர் கருத்து! வாழ்க்கை இன்னாதது என்பது இத் துறவியார் கருத்து. சரி, விருப்பினால் வாழ்க்கை இனிது என்னும் மகிழ்ச்சியும் எனக்கில்லை. வெறுப்பினால் வாழ்க்கை கொடிது என்னும் கவலையும் இல்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு. இரண்டும் இணையாத வாழ்வு வாழ்வன்று. துன்பம், பயிருக்குக் களை வெட்டுப் போல்வது. இன்பம், களை வெட்டிய பயிருக்கு மழை போல்வது. பயிர் நன்றாக வளர்வதற்குக் களை வெட்டும் வேண்டும், மழையும் வேண்டும். ஒன்றே போதும் என்று அறிவுள்ள உழவன் சொல்ல மாட்டான் என்றார், வாழ்க்கையின் உயர் கோட்பாட்டினைப் பலர் அறிந்து கொண்டனர். துறவியாருக்குப் பூங்குன்றன் உரை பிடிக்கவில்லை போல் இருக்கிறது. அதனால் முணகிக்கொண்டே நடந்தார். முறையா, முறையில்லையா என்பது பற்றிக் கவலைப்படுவது இல்லை. தங்கள் தங்கள் விருப்பம்போல் பேச வேண்டும். அதுவே மெய்யுரை என்று நினைப்பவர்கள் பலர் அல்லவா! அவர்களுள் ஒருவர் அத்துறவியார் போல் இருக்கிறது. பகற்பொழுது ஒன்றில் பூங்குன்றன் ஆற்றங்கரைக்குச் சென்றார். சேந்தன், மருதன் முதலான சிலர் உடன் வந்தனர். வறண்ட அவ்வாற்றிலே வெள்ளம் வருகின்றது என்றால் இன்பம் தானே! அந்த இன்பத்திலே கணியன் களி துளும்பினார். அப்பொழுது ஒரு காட்சி அனைவரையும் கவர்ந்தது. ஒரு பெரிய யானை ஆடிவரும் மணிகள், ஓங்கிய நடை; ஒளிவிடும் நெற்றி; அதன்மேல் எடுப்புடன் ஒரு புலவர்; அவரைத் தொடர்ந்து ஏவலர் பலர்! செல்வப்பொலிவைக் காட்டும் ஆடை அணிகலங்கள்; அவர் புகழை வெளிப் படித்தும் பாணர், கூத்தர், சீர்வரிசைகள். உயர்ந்த வள்ளல் ஒருவனைப் பாடிப் பரிசு பெற்றுக் கொண்டுவரும் சீர்மிகு செந்தமிழ்ப் புலவர் என்பதற் குரிய அடையாளங்கள். இதோ ஒரு பெரும் புலவர்! யானை மேல் அமர்ந்திருக்கும் மாண்பு என்னே! அறிவின் சிறப்பைக் காட்டும் முகப்பொலிவு என்னே! செல்வச் சிறப்பைக் காட்டும் சீர்வரிசை என்னே! நாம் போய் அவரைப் பார்த்து வருவோம் ஆமாம்; ஆமாம்! என்று ஒத்துப்பேசினர். கணியன் அமைதியாக ஆற்றிலே மிதந்து வந்த கட்டையைச் சுட்டிக் காட்டினார். இந்தக் கட்டையைப் பாருங்கள் என்றார். அனைவரும் பார்த்தனர். கணியன் கூறினார். இக்கட்டை ஒரு காட்டிலோ, மலையிலோ கிடந்திருக்கும். இங்கு எப்படி வந்தது, இந்த வெள்ளம் இழுத்துக்கொண்டு வந்ததால் தானே வந்தது. வெள்ளத்தினால் இழுத்து வரப் பட்டாலும் கூட வேறு எங்கேனும் தடையோ, சுழலோ, அணையோ கிடந்து தடுத் திருக்குமாயின் இவ்வளவு தொலை வந்திருக்குமா? இங்கு வந்து சேர்ந்தது கட்டையின் முயற்சியாலோ அறிவாலோ அன்று; ஆற்றலாலும் அன்று. எல்லாம் இவ்வெள்ளத்தால் - வெள்ளத்திலும் குறுக்கீடு இல்லாமையால்! இந்தக் கட்டைக்கு வாய்ப்புக் கிடைத்தது. நீந்தி நெடுந்தொலை வந்து விட்டது. இன்னும் சில கட்டைகள் கிடந்த இடத்திலேயே கிடக்கலாம். ïGg£L« ïilbtËÆš Ë¿U¡fyh«; ïªj Ãiyik kÅj thœ¡if¡F« bghUªj Éšiyah? கால வெள்ளம் (ஊழ்) சிலரை வெற்றி வீரராக, சிறந் தோராகப் பெரியோராகச் செய்கிறது. சிலரைத் தோற்றோராக, தாழ்ந்தோராகச் சிறியோராகச் செய்கிறது. மக்களுக்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகள் ஊழைப் பொறுத்தது. ஆதலால் பெரி யோரைப் புகழ்தற்கும், சிறியோரை இகழ்தற்கும் நேரிய காரணம் இல்லை! புகழ்வதும் இகழ்வதும் முறைமையும் அல்ல. ஆதலின் இப்பெரியவர் சிறப்பினைக் கருதி அவரைப் பார்க்க நான் விரும்பவில்லை என்றார். மற்றவர்கள் அமைதி கொண்டனர். பூங்குன்றனுக்கு வேற்றூர்களையும் சுற்றி வரும் ஆவல் ஏற்பட்டது. இவ்வெண்ணத்தால் தானே பூங்குன்றத்தை விட்டு புறப்பட்டார்! குடகூர் மக்கள் அவரைப் பிரிவதற்குப் பெரிதும் வருந்தினர். பூங்குன்றன் செல்வதைத் தடுக்க முயன்றனர். அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. பூங்குன்றன் நல்ல பல உரைகளைக் கூறி செல்லுதற்கு ஒப்புதல் பெற்றார். மக்கள், நீங்கள் எங்கள் வாழ்க்கைக்கு உரியன எனக் கருதுவதை இப்பொழுது உரைக்கவேண்டும், என வேண்டிக்கொண்டனர், அவர்கள் விருப்பம்போல், தம் கருத்தினை, யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்னுமொரு பாடலாகப் பாடித் தந்தார். எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார். கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது பிறர் தர வாரா. நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதிது அன்று. வாழ்வதை இனிது என்று மகிழ்வதும் இலம். வெறுப்பினால் இன்னாதது என்று இருத்தலும் இலம். மின்னலுடன் மழை பெய்தலால் கற்களிடையே ஒலியுடன் ஓடும் பெரிய ஆற்றின் நீரின் வழியே செல்லும் மிதவை போல அரிய உயிர் ஊழின் வழியே செல்லும் என்பதை தெளிந்த அறிவினர்களால் தெரிந்தோமாதலால் பெரியோரை மதித்தலும், சிறியோரை இகழ்தலும் இலம் என்னும் கருத்துக்கள் பொதிந்துள்ள இப்பாடலைக் கொண்டு இன்புற்றனர். இக்கருத்துக்கள் அனைத்தும் பூங்குன்றன் வாழ்க்கையுடன் ஒளி விட்டவை அல்லவா! அதனால் குடகூரார் ஒரு புதையல் போல் போற்றிக் கொண்டனர். பூங்குன்றன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். அவர் ஊரைக் கடந்து கோயில் மேட்டின் வழியே சென்றார். அப்பொழுது கோயில் மணி கணீர் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருந்தது; பசுவும் காளையும் கண கண என்னும் ஒலியுடன் மேய்ந்து திரிந்தன, ஆடுமாடுகள் அகங் களிக்க ஓடியாடித் திரிந்தன; பறவைகளின் பரபரப்புக் குரல் கடல் அலையை நினைவூட்டின. பூங்குன்றன் கண்டும் கேட்டும் மகிழ்ந்து கொண்டு குடகூரை விட்டு அகன்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கருத்துடன் ஊர் தோறும் சென்று உறவாடிக் கொண்டு தம் வாழ் நாளை இன்பமாகக் கழித்தார். 14. மல்லனை வென்ற மன்னவன் கதை ஊர் எனப்படுவது உறையூர் என்னும் சிறப்புப் பெற்றது உறையூர் ஆகும். உறைவதற்குத் தக்க வாய்ப்புடைய ஊராக இருந்த காரணத்தினால் உறையூர் என்ற பெயர் பெற்றதாகும். மிகப் பழங்காலந் தொட்டே, சோழர்களின் தலைநகராக இருந்த பெருமை உறையூருக்கு உண்டு. உறையூரைத் தலைநகராகக் கொண்டு சிறப்புடன் ஆண்டு வந்த சோழர்கள் பலர் பலர். அவர்களுள் தித்தன் என்பவனும் ஒருவன். உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றான். தித்தன் பெருவீரனாகத் திகழ்ந்தவன். அவன் பெயர் கேட்ட அளவிலே பகைவர் நடுங்கிச் சோர்ந்தனர். உள்நாட்டிலும் கொள்ளையர்களோ குறும்பர் களோ தலைகாட்டினர் இல்லை. அதனால் தித்தன் இனிதே நெடுங்காலம் ஆண்டு வந்தான். தித்தன் உரிய வயதில் திருமணம் செய்து கொண்டு இருந் தான். அத்திருமணத்தின் பயனாக நன்மக்கள் இருவர் பிறந்தனர். மைந்தன் ஒருவன், மகள் ஒருத்தி. மைந்தன் பெருநற் கிள்ளி என்னும் பெயருடன் விளங்கினான். மகள் ஐயை என்னும் பெயருடன் இலங்கினாள். தித்தன் பெயரைக் கேட்ட அளவில் பகைவர் நடுங்கினர் எனினும், அந்நாளில் வடுக நாடாண்ட கட்டி என்னும் அரசன் சிறிதும் மதிக்காதவனாக இருந்தான். ஆராயாமல் தித்தனைக் கணக்குப் போட்டுக் கொண்டு வெற்றி பெற்றுவிடலாம் என்னும் செருக்கடைந்தான். அவனுக்கு நண்பனாக இருந்த பாணன் என்பவனை அழைத்து நாம் இருவரும் சேர்ந்து தித்தன் நாட்டைப் பறித்துப் பாகம் வைத்துக் கொள்வோம் என்று ஆசைமொழி கூறினான். பாணன் பெருவீரன் அல்லன். தன்னைப் பார்க்கிலும் கட்டி வீரமிக்கவன் என்பதை பாணனே அறிவான். அதனால் தன்னைப் பார்க்கிலும் வீரனான கட்டி தன்னைக் கூட்டுக்கு அழைப்பதைப் பெருமையாகக் கொண்டான். ஆசை யாரைத் தான் விட்டது! கட்டிக்குத் தித்தனை வெல்லும் ஆற்றல் இருப்பதனால் தான் எதிர்க்கச் செல்கிறான். அவனொடும் ஏனோ தானோ என்று நாமும் படையுடன் சென்று கலந்து கொண்டால் வெற்றி பெற்று விடலாம். துணைக்கு வந்த உதவி கருதி நமக்கும் சோழ நாட்டில் ஒரு பங்கு தருவான். அவ் வளநாட்டினால் நம் நாட்டைச் செல்வம் கொழிக்கச் செய்து விடலாம். வெற்றி எவ்வாறாயினும் கூட கட்டிக்குத் துணையாக வேண்டியதும் தேவை ஆகின்றது.அவன் அழைப்பை மறுத்து விட்டால் பின்னர் ஏற்படும் கேட்டினைத் தாங்கிக் கொள்ள முடியாது. இப்படி எண்ணிக்கொண்டு போருக்கு வந்தான் பாணன். ஒப்புக்குப் போனவன் உதவியும் ஊக்கமும் எப்படி இருக்கும்? கட்டியும், பாணனும் உறையூரை ஒட்டி வந்தனர். நள்ளிருளிலேயே உறையூர்க் கோட்டையை வளைத்து விடத் திட்ட மிட்டனர். தித்தன் பெருவீரன் அல்லவா! அதற்கு ஏற்ப அவன் கோட்டைகள் வலியனவாக இருந்தன. கோட்டையைச் சுற்றிலும் காடுகள் செறிந்து இருந்தன. அக்காடுகளைக் கடந்த பின்னர்அகழி உண்டு! காட்டையும் அகழையும் கடந்த பின்பே மதிலை நெருங்க முடியும். காவற் காட்டின் பக்கம் வந்த வுடனேயே கட்டி திட்டமிட்டுக் கொண்டான் தித்தனை வென்றதாக! ஆனால் காவற் காட்டைக் கடந்து, வெளியேறவே அப்பாடா! என்று ஆகி விட்டது. ஆழமும், நீளமும் அகலமும் மிக்கதாய்க் கொடுவாய் முதலையும் சுறாவும் கலித்துத் திரியும் அகழைக் கண்டவுடனே அச்சமாக இருந்தது. ஏனடா வந்தோம் என்று கட்டி எண்ணிக்கொண்டு இருந்தான். பாணனுக்குத் திரும்பி விட லாமா என்று ஆசை! சொன்னால் கட்டி என்ன சொல்வானோ, செய்வானோ என்று அஞ்சிப் போய் அடங்கிக் கிடந்தான். வீரர்களையெல்லாம் அமைதியாக இருக்குமாறு கையமர்த்திக் கொண்டான் கட்டி; அவர்களும் வேந்தனுக்கு ஏற்ற வீரர்கள்,! நமக்கேன் வம்பு என்று இருக்கும் இடம் தெரியாமல் காட்டுக் குள் பதுங்கிக் கொண்டனர். பொழுது விடிந்தது! வெளியேறித் தாக்க வேண்டும்; இல்லையேல் ஓட்டம் பிடிக்க வேண்டும்! தாக்குவது பற்றிய எண்ணம் எப்பொழுதோ தொலைந்து விட்டது. தொலைத் தவை, காடும் அகழும் மதிலும் தான்! ஓடுவதற்கு ஊக்கம் எழுந்தது. ஆனால் மானம் தடுத்துக்கொண்டு நின்றது. அன்றியும் பாணன் என்ன நினைப்பான் என்பது கட்டியின் எண்ணம். கட்டி என்ன சொல்வான் என்பது பாணன் எண்ணம். காலையிலே முரசு முழங்கியது. அரசன் அவைக்குச் செல்லும் நேரத்தைக் காட்டும் முரசு அது. அதன் முழக்கம் மதிலில் பட்டு எதிரொலித்தது. நெடு நேரம் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. போர்ப்பறை முழக்குவதாகப் பாண னுக்கும் கட்டிக்கும் தெரிந்தது. அவர்கள் நெஞ்சங்கள் பதை பதைப்பால் பறையடித்துக் கொண்டன; நரம்புகள் துடி துடித்தன; கால் கைகள் நடுநடுங்கின. நாம் இங்கு வந்திருப்பதை எப்படியோ ஒற்றர் வழியாகத் தித்தன் அறிந்து கொண்டான். இனி விட மாட்டான்; சுற்றி வளைத்துக் கொண்டு வாட்டினால் என்ன செய்வது? என்று ஏங்கினர். பாணனும் கட்டியும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். இனி இருக்கப் பொறுப்பது இல்லை என்னும் நிலைமை ஆகிவிட்டது அவர்களுக்கு! ஓட்டம் பிடித்தனர். எதிர்த்துத் தாக்குவோர் இல்லாமலே, ஏக்கம் பிடித்து ஓடும் வீரம் உயர் வீரம் அல்லவா! பொன்னெழுத்துக்களில் தான் பொறித்து வைக்க வேண்டும்! தலைவிரி கோலமாய் ஓடும் வீரர்கள் ஓட்டத்தைக் காவல் வீரர்களும், நகரமக்களும் பாராமலா விட்டு விட்டனர்? ஓடத் துணிந்து விட்ட பிறகு எவர் பார்த்தால் என்ன? பாரா விட்டால் தான் என்ன? தித்தன் செய்தியினை அறிந்தான். நன்று நன்று! இவர்கள் வீரம் இருந்தவாறு என்னே! என்று நகைத்தான். கட்டியும் பாணனும் ஓடிய அலங்கோலத்தைப் பார்த்தவர்கள் விரித்துக் கூறிய போது அவையினர் கைகொட்டிச் சிரித்தனர். சிறுவனான பெருநற்கிள்ளிக்குக் கட்டியும் பாணனும் வந்து போரிடாமலே ஓடிய செய்தி தெரிந்தது. தன் தந்தையின் உயர்ந்த வீரத்தை நினைத்து நெஞ்சாரப் போற்றினான். அவன் மைந்தன் என்பதற்காகப் பெருமைப் பட்டுக் கொண்டான். கிள்ளிக்கு மற்பயிற்சியில் பேரார்வம் இளமையிலேயே ஏற்பட்டிருந்தது. கட்டுடல் வாய்ந்தவனான அவன் காளைப் பருவம் அடைந்தவுடனே மற்போர் ஆசை பேராசையாகியது. அதனால் அரண்மனையில் இருந்த மல்லர்களையெல்லாம் அழைத்து அவர்களை ஒருவருடன் ஒருவர் மோத விட்டு இணையிலா மல்லன் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லனுக்கு மல்லர் தலைவன் என்னும் பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்தான். அவனிடம் மற்போர்ப் பயிற்சி வரன் முறையாகப் பெற்றுக் கொண்டு வந்தான் கிள்ளி. சில ஆண்டுகளில், மல்லர் தலைவனையே அசைக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றான் கிள்ளி. ikªj‹ âwikia¡ f©L k‹dt‹ â¤j‹ k»œ¢á bfh©lh‹!தன் மைந்தன் அல்லவா! அந்தப் பெருமிதம் இருக்கத்தானே செய்யும்! கிள்ளி ஒரு நாள் தெரு வழியே உலாவச் சென்று கொண் டிருந்தான். அப்பொழுது மக்கள் தித்தனது. வீரச்சிறப்பு வென்றிச் சிறப்பு ஆகியவற்றைப் பலவாறாய்ப் புகழ்ந்து பேசிக் கொண்டனர். கேட்டுக் கேட்டுக் கிளர்ச்சி கொண்டான் கிள்ளி. இடைஇடையே ஓரிருவர் அரசன் காட்சிக்கு எளியவ னாகவும், இனிய சொல்லாளனாகவும் இருந்திருந்தால் எவ் வளவு நன்றாக இருக்கும்; போர் போர் என்று போராட்ட மாகவே இருக்கின்றான்; அதிகாரிகள் வைத்தது தான் சட்டம். அவர்கள் சொல்லுவதுதான் நீதி. இந்நிலைமை மட்டும் இல்லா விட்டால்.... என்று பேசிக் கொண்டனர். தந்தையரின் சிறப்பினைக் கேள்விப்பட்டுப் பெருமிதம் கொண்ட கிள்ளி பழிமொழிகளைக் கேட்டுத் தலை குனிந்து கொண்டு சென்றான். மகிழ்ச்சி யெல்லாம் எங்கோ ஓடிப் போய்த் தொலைந்து விட்டது. தந்தையார் செய்யும் தவற்றினை எப்படித் தட்டிக் கேட்பது? சமயம் வாய்க்கும் போது சொல்லலாம் என்று காத்திருந்தான். எந்நேரமும் தித்தன் வீரர்களின் இடையே வாழ்வதைக் கண்டானே ஒழிய, அமைச்சர்அறவோர் இடையே இருப்பதாகத் தெரியவில்லை. நகர மாந்தர்கள் காணுவதற்கு அரசர் வாய்ப்பு தருவதாகத் தோன்றவில்லை. இவை நாடாள் வேந்தன் சீரினைச் சிதைக்கும் செயல்கள் அல்லவா? ஒரு நாள் அரசன் அமைச்சர்கள், படைத் தலைவர், நகரப் பெரியோர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியவர்களை அழைத் தான். அரண்மனையில் கூடுமாறு செய்தான். நல்லகாலம் என்று கிள்ளி மகிழ்ந்தான். அவன் எதிர்பார்த்திருந்தது அதனைத் தானே. அரண்மனையில் ஆடலும் பாடலும் நடைபெற்றன. விருந்தும் குறைவில்லாது நடந்தது. அரண்மனை வளாகமே மகிழ்ச்சி ஆரவாரத்தில் மிதந்தது. நிகழ்ச்சிகளெல்லாம் முடிவுற்ற பின், அவை கூடியது. அவையினிடை அரசன் தித்தன் பொலிவுடன் வீற்றிருந் தான். மற்றையோர் அவரவர்க்கென்று இருந்த இருக்கைகளில் இருந்தனர். கிள்ளியும் அரசன் பக்கத்தே அமர்ந்திருந்தான். அவன் எதிர் கால வேந்தன் அல்லவா! அமைச்சர்களே, பெரியோர்களே, இன்று உங்களை ஒரு முக்கிய கடமையை நோக்கி அழைத்து வைத்தோம். அது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு செயலாகும். நம் காவல் காட்டையும், மதில் வலுவையும், அகழ் நிலையையும் கண்டு குடல் கருகி ஓடிய பகைவர்களை நீங்கள் அறிவீர்கள், வலிய காப்பு நிகழ்ச்சிகளைக் கேள்விப்பட்டு என்னைப் போலவே நீங்களும் மகிழ்வீர்கள் என்பதை அறிவேன். இன்னும் நம் காவலைப் பல வழிகளாலும் பெருக்க வேண்டி யுள்ளது, அவ்வாறு செய்து நம் எதிர்கால மக்களுக்கும் மன்னனுக்கும் நாம் செய்து வைக்கும் தொண்டாக இருக்கும். இவ்வாறு கூறிக்கொண்டு இளவரசனைப் புன்முறுவலுடன் நோக்கினான் வேந்தன். இளவரசன் முகத்திலே தித்தன் எதிர்பார்த்த மகிழ்ச்சிக் குறி தெரியவில்லை, சிறிது வெறுப்புக் குறி தான் தெரிந்தது. அவையோர் முகத்திலே அமைதி குடிகொண்டிருந்தது. அவர்கள் முகங்களிலே மகிழ்ச்சியோ, கவலையோ எதுவும் தெரியவில்லை, வேறு வழியாகச் சொன்னால் அவர்கள் முகத் தில் அவர்கள் உள்ளம் தெரியவில்லை. அரசன் மீண்டும் பேசினான். மதிலுக்கு உள்மதில் ஒன்று வேண்டும். மதிற்குள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவர்களை அழிக்கும் படைக் கருவிகளை மதிலில் பொருத்தி வைக்க வேண்டும், பல இடங்களில் சுரங்கப் பாதைகளும், கரவு வழி களும் அமைக்க வேண்டும். பகைவர்கள் அறியாமலே அவர் களை முன்னும் பின்னும் வளைத்துக் கொண்டு தாக்குவதற்குத் தக்கவாறு இவற்றை அமைக்க வேண்டும். காவற் காட்டில் புகுந்தோர் வெளியேறித் தப்பிச் செல்லா வண்ணம், துன்புறுத்தும் பொறிகளும், செடி கொடிகளும் அமைக்க வேண்டும். இவற்றிற்கு மக்கள் உதவி தேவை. அதாவது அவர்களிடம். நாட்டுப் பாதுகாப்புக்கு ஆகும் செலவினை வரிப்பணத்துடன் சேர்த்து வாங்க வேண்டும். இந்த செயலை நீங்கள் அனைவரும் வரவேற்பீர்கள் என்பதை நான் அறிவேன். படைத்தலைவன் எழுந்து அரசன் எண்ணத்தைப் பாராட்டிப் பாதுகாப்பைப் பெருக்குவதன். தேவையைப் பலவாறாக எடுத்துரைத்தான். எவரும் எதிர்க்கவில்லை. பேசிப் பயன் படாது என்று எண்ணி விட்டார்கள் போல் இருக்கிறது! கிள்ளிக்கு அரசன் உரை சற்றும் பிடிக்கவில்லை. இவ்வளவும் படைத் தலைவன் தூண்டுதலின் விளைவே என்று தெரிந்து கொண்டான். அவையோர்களே, உங்கள் அனைவருக்கும் அரசர் சொல்லும், படைத் தலைவர் சொல்லும் சரியெனத் தோன்று கின்றனவா? அல்லது தவறு எனத் தோன்றினாலும், தடுத்துக் கூறத் தயங்குகிறீர்களா? நம் கோட்டை வலியது. காவற்காடு சிறந்தது, அகழ் நிகரிலாதது; படை வீரர்களுக்கும் குறைவு இல்லை. இன்னும் இவற்றுக்காகச் செலவிட வேண்டிய தேவை இல்லை. மக்க ளிடம் வரி எதிர்பார்க்க வேண்டிய தேவையே இல்லை. மக்கள் அனைவரையும் தாக்கும் வரி இது. ஆனால் நம் நாட்டு மக்களுள் பலர் வரி தரும் நிலையில் இன்று வளமுடையவர்களாக இல்லை. சிலர் இருக்கலாம். அவர்களை மட்டும் பொறுத்தது அன்று இது. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது இது. நான் சொல்கிறேன், மக்கள் அன்பைத் தேடிக்கொள்வ தற்குப் பதிலாகப் பகையைத் தேடிக் கொள்ளச் செய்வது இத்திட்டம்; ஆக்க வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, அழிவு வேலைக்குத் துணை போவது இத்திட்டம்; அரசர், படைத்தலைவர் கூறிய படியே நடக்கின்றாரே ஒழியத் தமக்கென ஒருவழி கொள்ளாதவர் என்று எண்ணத்துணை செய்வது இத்திட்டம்; நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று எங்களுக்கு மன்னனே உயிர் என்று அமைந்து வாழும் மக்களைக் கிளர்ச்சிக் காரராக்குவது இத்திட்டம்..... உணர்ச்சி வயப்பட்டுப் பேசினான் கிள்ளி. அரசன் முன்னிலை என்பதையும் அரசன் தன் தந்தை என்பதையும் - அவன் படைத் தலைவன் கைப்பாவை என்பதை யும் மறந்துவிட்டுப் பேசினான். பேச்சை நிறுத்து என்று உறுமினான் அரசன், யார்முன் பேசுகிறேன் என்பதை நீ மறந்து விட்டுப் பேசுகிறாய்! என் மகன் ஆனாலும், இளவரசனாக இருந்தாலும் கவலை இல்லை. என்னை எதிர்த்து உரைக்கும் துணிவு எவனுக்கு உண்டு. சீ ! சிறு சொல் சொன்னாய்! பெரியோர் முன்னிலை என்பதற்காகப் பொறுக்கிறேன். நீ சொல்லிய சொற்கள் அனைத்தும் அறிவற்றவை. ஆண்மையற்ற கோழைகளுடையவை. இப்பொழுதே நான் கூறியது தவறு என நீ மன்னிப்புக் கேட்கவேண்டும். மன்னிக்க வேண்டும் வேந்தே! மன்னிக்க வேண்டும், நீங்கள் மன்னித்து உதவ வேண்டும் என்று என்னால் கேட்க முடியாமைக்காக! நான் கூறுவதில் சிறிதேனும் தவறு இருந்தால் அல்லவோ மன்னிக்க வேண்டும் என்று மண்டியிட்டுக் கிடக்க வேண்டும். அற நெறி தவறுவதும், அற நெறி இதுவென எடுத்துக் காட்டினால் வெறி கொண்டு சீறுவதும் தான் எனக்குத் தாங்கள் கற்பித்துத் தரும் பாடங்களா? நன்று! நன்று!. இப்பெரியவர்களின் வாய்கள் மூடிக் கிடக்கின்றன என்றால் என் வாயும் அவ்வாறே மூடிக் கிடக்க வேண்டுமா? பொய்யாக நடிக்க எனக்குத் தெரியாது. உங்கள் திட்டம் தவறு பட்டது என்று உரத்த குரலில் பல்லாயிர முறை பறை சாற்றுவேன் கிள்ளி! இப்பொழுதே ஆணை இடுகின்றேன். டேய்! காவலா இவனை அவையை விட்டு வெளியே தள்ளு! அரசன் முன்னிலை என்பதை அறியாவிட்டால் எவனாக இருந்தால் தான் என்ன? வேண்டாம்! வேந்தே. வேண்டாம்! இவனுக்கு வேலை தரமாட்டேன். அவையை விட்டு வெளியேற மட்டும் இல்லை. உங்கள் திருக் கண்காணிப்பில் உள்ள நாட்டிலேயே இருக்கப் போவதில்லை. நாட்டை விட்டு இப்பொழுதே வெளியேறு கின்றேன். போ, போ! அதுதான் வீரம் இப்பொழுதே வெளியேறு அவையோர் ஒவ்வொருவராய் அரசன் ஆணையை எதிர் பார்க்காமல் வெளியேறினர். அரசனும் படைத் தலைவனும் மட்டும் மாறி மாறிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு உட் கார்ந்திருந்தனர். மைந்தன் மறுக்கிறான் என்பதற்காக மன்னன் தன் கருத்தை மாற்றிக் கொண்டானா? மாற்றிக் கொண்டால் அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பெருமிதம் என்னாவது? படைத் தலைவன் கருத்துப் படியே தன் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினான். கிள்ளி தந்தையை வெறுத்து, நாட்டை விட்டு வெளி யேறியது படிப்படியாக மக்களுக்குத் தெரியவந்தது. மூலை முடுக்குகளிலும் அரண்மனைச் செய்திகள் அடிபட ஆரம் பித்தன. அதற்கு முன்னெல்லாம் அரசனைப் பற்றி எதுவும் பேச முடியாத ஊமையராகக் கிடந்தவர்கள் கூட வாய் திறக்க ஆரம்பித்து விட்டனர். மன்னவன் வெளிநாட்டுப் பகைவரை ஒழிப்பதற்காகத் திட்டமிட்ட செயலாலே, உள்நாட்டுப் பகை உருவாகும் படி யான நிலைமை இருப்பதை உணராமல் செயலாற்றிக் கொண் டிருந்தான். கிள்ளியின் மீது மக்கள் அன்பு மறைமுகமாக வளர்ந்து கொண்டு வந்தது. கிள்ளி, வீரன் அல்லவா! வைர நெஞ்சம் இருக்காதா? சொன்னபடியே நாட்டை விட்டு வெளியேறினான். எவர் துணையையும் அவன் நாடவில்லை. எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை. எதுவும் அற்ற ஓர் ஏழை மகன் போலவே உண்ட சோற்றோடு, உடுத்திய உடையொடும் வெளியேறினான். உள்ளத்தில் உரம் இருந்ததே ஒழியக் கிள்ளிக்கு மிகுதி யான நடைப் பழக்கமோ, பசித்துக் கிடந்த பழக்கமோ இல்லை. வேளையறிந்து வகை வகையான உணவுகளைப் படைத்துக் கொண்டு காத்துக் கிடப்போர் இருக்க தேரும், குதிரையும், யானையும் இருக்க அவன் எப்படிப் பசித்துயருக்கும், நடைத் துயருக்கும் ஆளாகியிருப்பான்? கால்கள் நோவெடுத்தன; கொப்புளங்கள்; கிளம்பின; இரத்தம் வடிந்தது; பசி கண்ணொளியை மங்கச் செய்தது; காதடைத்துக் கொண்டு வந்தது. நாக்கு வறண்டு கீழே வீழ்த்தும் அளவுக்குப் போய்விட்டது. ஆமூர் என்னும் ஊரை அடைந் தான். ஆமூர் வேறொரு வேந்தனுக்கு உரியதாக இருந்தது. தன் தந்தையின் ஆட்சிக்கு உட்பட்ட ஊரில்லை அல்லவா? அதனால் அங்கே தங்கிவிட நினைத்தான். ஒரு திண்ணையிலே களைப்போடு உட்கார்ந்திருந்தான். அங்கு யாரும் காணப்படவில்லை. அது ஒரு குடிசை வீடு! உள்ளும் மக்கள் நடமாட்டம் தெரியவில்லை. அக்குடிசை வீட்டை ஒட்டி ஒரு மாடி வீடு இருந்தது. அங்கிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒலிகள் அது ஒரு செல்வர் வீடு என்பதைக் காட்டின. கிள்ளி களைப்பு மிகுதியால் திண்ணையில் படுத்தான். படுத்த சிறிது நேரத்திற்குள் கண்ணயர்ந்து விட்டான். பசித் துயரும் நடைத்துயரும் மிகுந்த உறக்கத்திலே ஆழ்த்தி விட்டன! நெடுநேரம் கழித்துக் கிள்ளியைக் கிழவி ஒருத்தி எழுப்பினாள். அவளே வீட்டுக்காரக் கிழவி என்பதை அறிந்து கொண்டான். கிழவி துணை யாரும் இல்லாதவள். அவள் மிகுந்த அன்புடன் கிள்ளியை வினவினாள். கிள்ளியும் ஏதேதோ சொன்னான். ஆனால் அரசன் மகன் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ளவில்லை. தன் தந்தையுடன் தகராறு என்னும் அளவில் பேசினான், இவன் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும்; ஏதோ இப்படி வந்து விட்டான். என்று எண்ணிய கிழவி அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். நீரும் சோறுமாகப் பானையில் இருந்ததை ஒரு ஏனத்தில் விட்டு வைத்தாள். இதற்குமுன் அரண்மனையிலே கூடக் காண முடி யாத சுவையைக் கிழவி தந்த கஞ்சியிலே கண்டான் கிள்ளி! கிழவி சொன்னாள்; பையா! நீ உன் வீட்டுக்குப் போகு மட்டும் வேறெங்கும் போகவேண்டாம். இங்கேயே இருக்கலாம். இங்கு வேறு யாரும் இல்லை. எனக்குத் துணையாகவும் இருக்கும். உனக்கும் நல்லது. நீ வேறு எங்கும் போய்த்தான் என்ன செய்வாய் என்றாள். கிழவியின் அன்புரை கிள்ளியின் நெஞ் சத்தைத் தொட்டது. அவள் உரைப்படி நடப்பதற்கு ஒப்பினான். கிழவியின் உள்ளம் விரிந்திருந்தது. ஆனால் அவளுக்குச் செல்வம் சுருங்கி இருந்தது. அவள் செல்வ வாய்ப்பைக் குடி யிருந்த குடிசை ஒன்றே காட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. மழை பெய்தால் போதும், குடிசை எல்லாம் ஈரமாகிவிடும். கண்ணாடி பதித்த கூரையோ என்று நினைக்குமாறு வெயில் பொழுது காட்சியளிக்கும். தளமும் குண்டு குழியுமாகவே இருந்தது. கிள்ளிக்கு இவையெல்லாம் புதிய அனுபவந்தான் இருப் பினும் கிழவியின் உள்ளார்ந்த அன்பு இன்ப நிலையமாக எண்ணுமாறு செய்தது. தினை, வரகு முதலான புல்லரிசிகளைப் போட்டு ஆக்கிய கஞ்சி உணவையே உண்டு இன்பமாக வாழ்ந்து வந்தான். கிழவியின் குடிசைக்குப் பக்கத்தில் மாடம் ஓங்கிய வீடு ஒன்று இருந்தது அல்லவா! அவ் வீட்டில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் கடல் கடந்து சென்று. அயல்நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்து வந்தான், ஆமூரே அன்றி வேறு பல ஊர்களிலும் அவனுக்குக் கடைகள் இருந்தன. ஆற்று மணலை எண்ணினாலும் அவன் செல்வத்தை எண்ணிவிட முடியாது என்னும் அளவுக்குச் செல்வனாக இருந்தான், அச் செல்வன் பெயரைச் சொல்லி எவரும் அழைப்பதே இல்லை. நாவாய் ( கப்பல்) வாணிகம் செய்து வந்ததால் நாய்கன் என்று அழைத்தனர். அவன் பெருமை பெற்றதான உறையூரினன். அவனது வணிகக் கிடங்குகளும், குடியிருப்பு மாளிகைகளும் அங்குதான் இருந்தன. அவன் ஆமூருக்கும் வந்து தங்குவது உண்டு. இதனால் பெருங்கோழி நாய்கன் என்று அழைத்தனர். கோழி என்னும் பெயர் உறையூருக்கு உண்டு. பெருங்கோழி நாய்கன் செல்வத்தைப் போலாகப் பண் பிலும் சிறந்தவனாக இருந்தான். பேரறிவும் பெற்றிருந்தான். அவன் மனைவியும் கல்வியறிவுகளில் சிறந்து விளங்கினாள். இவர்களின் இல்வாழ்க்கைப் பயனாக ஒரு நன்மகள் பிறந்தாள். அவளுக்குத் தாய் தந்தையர் நக்கண்ணை என்னும் அருமைப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தனர். கல்வி, செல்வம், பண்பு அனைத்தும் ஒருங்கே கொண்ட நற்குடும்பத்தில் பிறந்த நக்கண்ணைக்கு என்ன குறைவு இருக்க முடியும்? சிறந்த நிலையிலே வளர்ந்து வந்தாள். இளமையில் கல் என்பதன் படி கற்று, ஓதுவது ஒழியேல் என்பதன்படி நின்று, ஏடது கைவிடேல் என்னும் பொன்னெறி போற்றி இருந்த நக்கண்ணை, எண்ணிய கருத்தினை வண்ணம் குலை யாமல் பாவாக வடித்துத் தரும் பேறு பெற்றிருந்தாள்! புலவர் பெருமாட்டி ஒருத்தியைப் பெற்றெடுத்தேன் என்னும் பெருமையோடு செல்வன் மகிழ்ந்திருந்தான். மகளின் மாண்பினை அறிந்து ஈன்ற அன்றினும் தாய் பெரிது மகிழ்ந்து இருந்தாள். நக்கண்ணை பாடல் ஒன்றை ஒருநாள் இசையுடன் பாடிக் கொண்டிருந்தாள். அதற்கு ஏற்பத், தாய் யாழ் மீட்டினாள். மாடத்தில் எழுப்பிய மண் குடிசையில் நுழைய வெட்கப்படுமா? மாளிகையில் மணக்கும் மல்லிகைப்பூ மண்குடிசையை ஒதுக்கி விடுவது இல்லையே! இசை இன்ப வெள்ளமாக இருந்தது. அந்தத் தேனைக் காதல் பருகும் வண்டானான் கிள்ளி! மெய்ம் மறந்து கேட்டுக் கொண்டு இருந்தான். இசை முடியும் தறுவாயில் மாடிப்பக்கம் நோக்கினான். ஒரு சாளரத்தின் வழியே ஒரு செந்தாமரை முகத்தைக் கண்டான். இசைத் தேன் வடித்த தாமரை இதுதான் போலும் என்று ஏக்கத்துடன் எண்ணிக் கொண்டான். அன்று முதல் கிள்ளியின் செயலிலே ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது முதல் கிழவியின் மீது பேரன்பு செலுத்தினான். அவன் ஏவாமலே அவள் விரும்புமாறு செயல்கள் செய்தான். முன்னையினும் பன்மடங்கு அவன் அன்பு செலுத்துமாறு செயல்கள் நாள் தோறும் வளர்ந்தன. எப்படியும் கிழவிக்குத் தன் மேல் வெறுப்பு ஏற்பட்டு விட்டால் வீட்டை விட்டு வெளியேறும்படி ஆகிவிடு மல்லவா! அரசன் மேல் ஏற்பட்ட வெறுப்புக்காக அரண்மனையை விட்டு வெளியேறிய கிள்ளி, கிழவி வீட்டை விட்டு வெளியேற மன மின்றி இருந்தான்! இது விந்தையல்லவா! தனித்திருந்த கிழவியுடன் ஒரு கட்டிளங்காளையும் இருந்து வருவது நக்கண்ணைக்குச் சில நாள்கள் கழித்தே தெரிய வந்தது. நாய்கனோ பெரும் பாலும் வணிகமாகவே அலைபவர். அவர் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. நக்கண்ணை ஒரு நாள் கிள்ளியை நேரடியாகக் கண்டாள். கிள்ளியும் விருப்பத்துடன் பார்த்தான். இருவரும் அன்பு பெருக நின்றனர். நக்கண்ணை மாடத்தில் இருந்தாள்; கிள்ளி குடிசையில் இருந்தான். மாடத்தின் உயரமும், மண் குடிசையின் தாழ்வும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை! இப்பொழுதெல்லாம் நக்கண்ணை முன்னைப் பார்க் கிலும் விரும்பி விரும்பிப் பாடுவாள். யாழையும் நுட்பமாக மீட்டுவாள். தன்னை நன்றாக அழகு செய்து கொள்ளுவாள், செல்வச் சிறுமி தானே! பெற்றோர்களுக்குப் பெரு மகிழ்ச்சி தான்! ஒரு நாள் மாடத்திலே நின்றாள். நக்கண்ணை. கிழவி கிள்ளி என்றாள். பாட்டி என்று கூறிக்கொண்டே வீட்டுக்குள் சென்றான். நீரும் கஞ்சியுமாக விட்டு வைத்துச் சாப்பிடு என்றாள். நக்கண்ணை கண்ணுக்கு உணவு தெரியாமல் போய் விட வில்லை. மிக வருந்தினாள். தன் செல்வச் செழிப்பையும், அண்டை வீட்டின் ஏழ்மை நிலையையும் எண்ணிப் பார்த்தாள், புல்லரிசி யுண்டும் பொலி வோடு விளங்கும் அவனை நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணானாள். இந்த ஏற்றத் தாழ்வுகள் இருவர் அன்பையும் மிகவும் விரைவில் வளர்த்துக் கொண்டிருந்தன. கிள்ளி நக்கண்ணையைச் சந்திப்பதற்கும், நக்கண்ணை கிள்ளியைச் சந்திப்பதற்கும் பெரிதும் விரும்பினர். ஆனால் ஏற்றத் தாழ்வான அவர்கள் நிலைமை அதற்குத் துணை செய்ய வில்லை. ஏங்கி ஏங்கிப் பொழுதைக் கழித்தனர். ஒரே ஒரு நாள் நக்கண்ணை கிழவியைப் பார்க்க வருவது போல வந்தாள். அப் பொழுது கிழவி உள்ளே இருந்ததால், வெளித் திண்ணையில் இருந்த கிள்ளியினிடம் திண்டாடித் திண்டாடிச் சிறிது பேசினாள். அவனும் சமாளித்துக் கொண்டு பேசினான். வெட்கமாகத் தான் இருந்தது....! கிழவியினிடம் செய்தியை மறைத்து வைத்த கிள்ளி, சிறிது பொழுதில் நக்கண்ணையி னிடம் தான் அரசன் மகன் என்பது முதல் அனைத்தும் சொல்லி விட்டான். மகிழ்ச்சி தாழவில்லை நக்கண்ணைக்கு. கிழவியைப் பார்க்காமலே கிளம்பினாள் வீட்டுக்கு! அவள் கிழவியைப் பார்ப்பதற்காகவா அங்கு வந்தாள்? திங்கள் பல கடந்தன. ஒரு நாள் ஆமூருக்கு ஒரு பரபரப் பான நிலைமை ஏற்பட்டது. அது மகிழ்ச்சியினால் ஏற்பட்டது அன்று! கவலையால் ஏற்பட்டது. வெளியூரிலிருந்து மல்லன் ஒருவன் வந்தான், அவன் தெருவை வட்டமிட்டு என்னை எதிர்ப்போர் உளரோ? மற்போரில் வெல்வோர் உளரோ? என்று கேட்டுக்கொண்டு திரிந்தான் எண்ணிப் பாராமல் தன்னை எதிர்த்துத் தோல்வி கண்ட வீரர்களின் பெயர்களை ஒப்பித்தான். இங்கு எதிர்ப்போர் எவரும் இல்லை எனில் இவ்வூரே எனக்கு அடிமை. என் சொற் படி கேட்டே தீர வேண்டும் என்று வீரமொழி பேசினான் ஊரே நடுங்கியது. ஊர்த் தலைவனான நாய்கனும் அன்று அங்கு இருந்தான்; அவனுக்குப் பெருங் கவலையாக இருந்தது. இந்நிலையிலே மல்லன் கிள்ளியிருந்த குடிசைக்கு முன் வந்தான். கைகளால் தோள்களிலும், தொடைகளிலும் தட்டிப் புடைத்துக் கொண்டு வந்தான். வீரமொழிகளை இடைவிடாமல் கூறினான். மல்லா நில்! என்று ஒரு குரல் கேட்டது. திகைத்தான் மல்லன். குரல் தந்தவன் கிள்ளி தான்! நாய்கன் நடுக்கத்துடன் எட்டிப் பார்த்தான். நக்கண்ணையும் ஆவலுடன் பார்த்தாள்; கிழவி துடித்துப் போனாள். ஏனப்பா இது! இவனோடு எதற்கு? வேண்டாம்! என்றாள் பாட்டி, வம்புக்கு நான் போகவில்லை. வீரம் யாருக்குத் தான் சொந்தம். எல்லோருக்கும் பொதுவானது தானே! பார்த்து வருகிறேன். நீங்கள் என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே சிங்கம் போல் செருக்கி நடை போட்டான். மல்லனோடு மல்லனாக நடக்கும் கிள்ளியைக் கண்ட நக்கண்ணை உள்ளம் பட படத்து என்னாகுமோ? என்று ஏங்கினாள். அவர்களைத் தொடுத்துச் செல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் தந்தை என்ன நினைப்பார்? தாய் என்ன சொல்வாள்? ஊர் என்ன கூறும்? நாணம் விட்டு வைக்கிறதா? அடக்கிக் கொண்டு எடுத்து வைத்த காலைத் தடுத்து நிறுத்திக் கொண்டாள். கிள்ளியைத் தொடர்ந்து போனவர்களில் கிழவி தான் முதல் ஆள்! தாயன்புக்கு நிகருண்டா? மக்கள் கூட்டம் திரண்டு விட்டது,. போருக்காகக் கூடிய அவை அல்லவா அது. அதனால் அது போரவையாயிற்று. போரவையின் இடையே ஓர் எல்லைக் கோடு போட்டு, அதற்குள் மற்போர் வீரர்கள் புகுந்தனர். மல்லன் கால்களையும், கைகளையும் ஆட்டிக் கொண்டு எக்களிப்போடு நின்றான். கிள்ளி தன் பரம்பரைக்குரிய ஆத்திப் பூவைத் தலையிலே சூடிக்கொண்டான். குலப்பூவைச் சூடிக் கொண்டதும் மல்லனாகத் தெரியவில்லை! கோளரி போல் தாவினான். முரசமும் முரசமும் முட்டுவது போன்று தோள்கள் மோதின; துதிக்கையும் துதிக்கையும் வளைத்துப் பற்றுவது போலக் கைகள் பற்றின; பாம்புகள் சுற்றி வளைப்பது போல் கால்கள் பின்னின; பாறைக் கல்லின் மேல் இரும்புக் குண்டு வீழ்ந்து தாக்குவது போல மார்புகளிலே தலைகள் மோதின; உலக்கை தாக்குவது போல கைகள் தாக்கின; கோடரி போல் கழுத்தின் அடிப்பகுதிகளைக் கைகள் வெட்டின; இருந்தவர் அனைவரும் இரங்கினர். என்னாகுமோ என்று ஏங்கினர். ஊரிலே எவரும் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் திரண்டு போயிருந்தனர். கிள்ளியே வெல்வான் என்றனர் சிலர்; கிள்ளி தோற்றாலும் தோற்கலாம் என்றனர் சிலர். வெற்றி தோல்விகளை எவர் கண்டார் என்றனர் சிலர். “»ŸË¡F bt‰¿ »il¡f¡ Tlhjh? என்று துடி யாகத் துடித்தாள் நக்கண்ணை. மற்போரைக் காண வேண்டும் என்னும் ஆவல் உந்தி எழுந்தது. ஓடினாள்; நாணம் ஓடவிடாமல் தடுத்தது. வீட்டின் பக்கத்தே நின்ற பனைமரம் வரைக்கும் ஓடினாள். அதன் அடியைப் பற்றிக் கொண்டு, ஒரு பக்கம் மறைந்து நின்று மற்போரைப் பார்த்தாள். நொடி நொடி தோறும் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து சென்றன. கிள்ளி வென்றான் என்று மகிழ்வாள். ஒரு நொடியில் மல்லன் கிள்ளியை வாரியடித்து அவன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு தாக்குவான். மறுநொடியில் அவனைக் கீழே தள்ளி விட்டு மேலே ஏறிக் கொண்டு சிங்கம் போல் பிய்த்து எடுப்பான் கிள்ளி, கூட்டம் ஆரவார ஒலி எழுப்பும்! இப்படி மாறி மாறி நேரம் போய்க் கொண்டிருந்தது. நக்கண்ணை இமை கொட்டாது பார்த்துக் கொண்டே இருந்தாள். அம்மா! கிள்ளி மல்லனைக் கீழே உருட்டித் தள்ளி விட் டான்! மல்லன் மார்பின் மீது ஒரு காலை ஊன்றி மடக்கினான். மற்றொரு காலால் அவன் எதிர்ப்புகளைத் தடுத்துக் கொண்டு முதுகை நெருக்கினான். மூங்கில் மூட்டை நெரிக்கும் யானை போன்று மல்லனது தலையையும் காலையும், வளைத்து நெரித் தான். கைகளால் மாறி மாறிக் குத்தினான். குத்துவதிலே எவ்வளவு விரைவு! குத்திக் குத்தி மல்லனைக் கொன்றே போட்டான். வெற்றி வெற்றி என்று ஓங்கிச் சத்தமிட்டாள் நக் கண்ணை. வெற்றி வெற்றி என்று முழங்கியது அவை. ஒலி விண்ணைத் தொடும் போல் இருந்தது. கிள்ளியின் வெற்றி ஆமூர் வெற்றியாகியது. “v¥goalh!அந்த மல்லனைக் கொன்றாய்? என்று கண்ணீர் வடிய நின்று கேட்டாள் கிழவி. கிள்ளியின் தோள் களைத் தடவித் தந்தாள். அந்த அன்புப் பிழம்பின் கை பட்ட வுடன் வலிபோன போக்குத் தெரியவில்லை. மாடியிலே நின்று புன் முறுவல் பூத்தது ஒரு பூங்கொடி. நக்கண்ணையாகத்தானே இருக்கவேண்டும் அப் பூங்கொடி! சாத் தந்தையார் என்பவர் ஒரு புலவர். அவர் கிள்ளியும் மல்லனும் பொருது நின்ற போரவைக்கு வந்திருந்தார். போர் நிகழ்ச்சியும் வெற்றியும் கிள்ளியைப் பார்க்காமல் அவரைப் போக விடவில்லை. கிள்ளி, தித்தன் மகன் என்பதையும், தந்தை யோடு பகைத்து ஆமூரில் வாழுகின்றான் என்பதையும் அவர் அறிவார். ஆனால், அவன் மல்லனை வென்ற மல்லனாக நின்ற போதே, அவன் ஊக்கத்திலும், உடலழகிலும் ஈடுபட்டுத் தம்மை மறந்து நின்றார். அந்நிலை, கிள்ளியைக் கண்டு அன்புறத் தழுவிக் கொள்ளுமாறு தூண்டியது. அதனால் கிள்ளியைக் கண்டார். அவரோடு வேறு சில பெரியவர்களும் வந்திருந்தனர். அவர்கள், புலவரும் கிள்ளியும் அன்பு குழையத் தழுவிக்கொண்டு இன் புற்று இருந்த பின்னர், புலவரே! மற்போர் எப்படி என்று கேட்டனர். மற்போரா! அக்காட்சியை எப்படி விவரிப்பது! ஆ! ஆ! அழகுக் கொள்ளை! ஆண்மையின் முதிர்ச்சி! மல்லன் வலிமையைத் தேய்க்கக் கால் கைகள் செய்த பணி என்ன? ஒரு கால், மல்லன் மார்பின் மீதி ஏறி உட்கார்ந்து கொண்டது கைகளோ தலையையும், கால்களையும் ஒன்று கூட்டி மடக்கி நெரித்தது. அவனை அடித்து நெரிக்கும் போது அவன் கை போன விரைவு! ஊரிலோ விழா; வீட்டிலோ மனைவியின் பிள்ளைப் பேறு, தனக்கோ அயலூரில் கட்டில் பின்னும் வேலை; பொழுதோ மழை பெய்யும் மாலைப் பொழுது; கதிரும் விழுந்து விட்டது! கண்ணொளி மயங்குமுன் கட்டில் வேலையை முடித்துக்கொண்டு போய் மனைவிக்கு உதவ வேண்டும்; விழாவும் காண வேண்டும். இந் நிலையில் கட்டில் பின்னுவோன் கை என்ன வேகமாக வேலை செய்யும்? இவ்வேகத்திலே வேலை செய்தது கிள்ளியின் கை. ஊர் கொளவந்த மல்லன் பட்டபாட்டைக் காண வேண்டும்; யார்? ஆத்திமாலை சூடிக் கொண்டு அரண்மனையிலே இருக்கும் அரசன் தித்தன் காண வேண்டும். மகன் நிகழ்த்தும் போர் என்று அவனுக்கு மகிழ்ச்சியாக இருப்பினும் இருக்கலாம். தன்னை வெறுத்து வெளியேறியவன் என்னும் கறுவினால் வெறுப்பாக இருப்பினும் இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும், அவன் கண்டிருக்க வேண்டிய காட்சி இது என்றார். கிள்ளி தலை குனிந்து நின்று கேட்டான். வெட்க மிகுதியால் கால் விரல்களால் மண்ணில் வட்டக் கோடுகள் போட்டுக் கொண்டு இருந்தான். புலவர் உரை முடிந்த பின், அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையே என்று வருந்தினான். சாத்தந்தையாரோ பொருள் கருதியோ புகழ் கருதியோ பாடினேனில்லை. உன் ஆண்மை என்னைப் பாடச் செய்தது. அவ்வளவே என்றார். நிகழ்ச்சிகளை உடன் நின்று அறிந்த கிழவி கிள்ளியின் இருபக்க நெற்றிகளிலும் தன் கை விரல்களை மடித்து வைத்து முத்தித் தன் தலையிலே கையை வைத்து நெரித்து கொண்டாள். நீ சோழன் மகனா? இந்தக் கிழவியை ஏமாற்றி விட்டாயே! பொல்லாதவன் என்று புன்முறுவல் பூத்தாள். கூட்டத்தில் இருந்த நாய்கன் கிள்ளி வேந்தன் மகன் என்பதை அறிந்து வியப்படைந்தான். கிள்ளி மிக இளைஞனாக இருக்கும்போது, நாய்கன் பார்த்திருக்கிறான். ஆண்டுகள் பல கடந்துவிட்டன. கிள்ளியும் வளர்ச்சியில் பெருமாற்றம் அடைந்து விட்டான். இப்பொழுது அறிந்துகொண்டதும் தாழமுடியாத இன்பம் கொண்டான். அவ்வின்ப மிகுதியால் புலவருக்கும், கிள்ளிக்கும் ஊர்ப் பெரியோர்களுக்கும் சிறப்பான விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதற்குப் பின் ஊரில் பல பல வீடுகளில் கிள்ளிக்கு விருந்து நடைபெற்றன. என்றாலும் அவனால் முதல் நாள் விருந்தை மட்டும் மறக்க முடியவில்லை. மறப்பானா? வேலைக்காரரை யெல்லாம் தடுத்துவிட்டுப் பெருமை மிக்க விருந்தாளிக்கு வீட்டுக்காரரே சமைத்துப் போட வேண்டும். அதுதான் பெருமை என்று கூறித் தானே முன் னின்று வேலை செய்தாள் நக்கண்ணை. அவள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு அங்குக் கிடையாது! இப்படி நடந்த விருந்து கிள்ளியின் உள்ளத்தைக் கவர்ந்ததில் வியப்பு இல்லையே! இப்படி விருந்து நாள்தோறும் கிடைக்கக்கூடாதா? என்பது கிள்ளியின் ஆவ லாக இருந்தது! நக்கண்ணைக்கும் தான் என்ன, அவ்வெண்ணம் இல்லாமலா போய்விட்டது? தித்தனது ஒற்றர்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். அவர்களில் சிலர் ஆமூர் மல்லன் நிகழ்ச்சியைக் கூறினார்கள். சாத்தந்தையார் கூறியதையும் கூறினார்கள். அதற்கு மேலும் மைந்தனை வெறுத்துக் கொண்டிருக்க அவனுக்கு மனமில்லை. நகரத்திலும் மக்களுக்குத் தன் மேல் வெறுப்புணர்ச்சி வளர்ந்துகொண்டிருப்பதையும், கிள்ளியின் மீது அன்பு வளர்ந்து கொண்டு இருப்பதையும் அறிந்தான். இச்சூழ்நிலையில் மக்கள் கிள்ளியைத் தூண்டிவிட்டுத் துணை நின்று நம்மைத் தாக்க முனைந்தாலும் முனையலாம். அது மிகவும் இழிவானது என்று கருதிப் பழைய நிகழ்ச்சிகளை யெல்லாம் மறந்து அழைப்ப தற்கு முடிவுகொண்டான். கால நிலையை நன்றாக அறிந்துகொண்ட படைத் தலைவனும் ஆமாம் என்றான். கிள்ளியை அழைப்பதற்காக அரசன் அமைச்சரை அனுப்பி வைத்தான். அரசன் ஏவற்படி, அமைச்சர் ஆமூர் சென்று கிள்ளியைக் கண்டார். மன்னன் உரையைத் தெளிவாகச் சொன்னார். நாட்டின் நிலைமையையும் கூறினார். கிள்ளி முதலாவது ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அமைச்சர் உரையை மறுக்கவும் இயலவில்லை. உறையூருக்கு வர ஒப்புக் கொண்டான். ஆனால் நக்கண்ணையைப் பிரியவேண்டிய ஒன்றை நினைக்க, இடி வீழ்ந்து தாக்குவது போல் இருந்தது. கிள்ளியை அழைத்துச் செல்வதற்கு அமைச்சர் தேருடன் வந்திருப்பதை அறிந்தாள். அவள் கண்கள் கவலையால் சிவந்து விட்டன. கிள்ளியை மறக்கத்தான் வேண்டுமா? என்று வருந்தினாள். துணிவுகொண்டு கிழவியின் வீட்டுக்கு வந்தாள். கிள்ளிக்கு அவளைக் கண்டவுடன் அடக்கிக் கொள்ள முடியாத அளவு கவலை பெருகியது. கண்ணீர்த் துளிகள் மார்பை நனைத்தன. நக்கண்ணை! நான் உன்னை மறக்க மாட்டேன்; உயிரே பிரிந்தாலும் உன்னை மறக்க மாட்டேன். என் நெஞ்சத்தில் உன்னை அன்றி வேறு யாருக்கும் இடமில்லை. என் பெற்றோர்களின் ஒப்புதலுடன் விரைந்து இங்கு வருவேன். உன்னை மணந்துகொள்வேன். அரசர் என் கருத்துக்கு இணைந்து வராவிட்டால், மீண்டும் அரசரை வெறுத்து வெளியேறி உன்னை மணந்து கொண்டு வாழ்வேனே அன்றி, நாட்டை ஆண்டுகொண்டு அவர் விருப்பம் போல் இருக்க மாட்டேன். இது உண்மை என்று விரைந்து பேசினான். நக்கண்ணையால் அங்கு நின்றுகொண்டிருக்க முடிய வில்லை. துணியால் வாயைப் பொத்திக்கொண்டு ஓடிப்போய்க் கட்டிலிலே வீழ்ந்துகொண்டாள். கிள்ளியின் நெஞ்சம் வெடித்து விடும்போல் இருந்தது. மார்பைப் பிடித்து அழுத்திக்கொண் டிருந்தான். கிழவியைத் தன்னுடன் வருமாறு கிள்ளி அழைத்தான். நான் பிறந்த மண்ணைவிட்டு வரமாட்டேன்! அரசனாகப் போகிறவன் நீ. என்னை நினைக்க நேரம் எங்கே இருக்கும். நீ மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். போய் வா! உறையூருக்கு ஒருநாள் வரத்தான் போகின்றேன் என்றாள். பாட்டி என்று தன் அன்பையெல்லாம் கூட்டிக் கத்தி னான். வாழ்க என்றாள் அவள். தேர் நகர்ந்தது. கிள்ளியின் கண்கள் நீரை வடித்துகொண்டே சென்றன. நக்கண்ணை அன்று முழுவதும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. உறையூர் மக்கள் கிள்ளியை மகிழ்ச்சியாக வரவேற்றனர். அவர்கள் உள்ளன்பெல்லாம் வெளிப்படுமாறு வரவேற் பிருந்தது. தித்தன் பழையவற்றை எல்லாம் மறந்துவிட்டு மைந்தனைத் தழுவிக்கொண்டு இன்புற்றான். இந்த மகிழ்ச்சிப் பொழுதிலேயே முடிசூட்டி விட வேண்டும் என்பது அவன் ஆசையாயிற்று. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைந்தான். அதற்குள் திருமணம் பற்றிய பேச்சும் எழவேண்டியது ஆயிற்று. தித்தன் எத்தனையோ மன்னர் மகளிரைக் கிள்ளிக்குத் தக்கவர்களைக் கொண்டு நினைவு படுத்தினான். அவன் எண்ண மெல்லாம் அரச மகளிரையே வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அதுதானே வழக்கமுங் கூட! கிள்ளியின் உள்ளம் நக்கண்ணை மீது நிலைத்து இருந்தது அல்லவா! அரசனிடமும் அரசியிடமும் மறைவின்றித் தன் கருத்தை எடுத்துரைத்தான் கிள்ளி. ஒரு வணிகன் மகள் என்ப தால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஆனால் கிள்ளி உறுதிப்பாட்டுடன் இருந்தான். நக்கண்ணையைத் திருமணம் செய்து கொள்வதற்குத் தடையாக அரசு இருக்குமானால் அவ்வரசு எனக்கு வேண்டாம். தாய் தந்தையர் தடையாக இருந்தால் அவர்களை விட்டு வெளி யேறுவேனே அன்றி அவர்கள் விருப்பத்திற்காக வேறு எவரை யும் மணமுடித்துக் கொள்ளப் போவது இல்லை. என் திரு மணத்தில் எனக்குத் தடையாக இருக்க எவரையும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறி விட்டான். மீண்டும் மைந்தனைப் பிரியத் தித்தன் விரும்பவில்லை. கிள்ளிக்கு மக்கள் ஆதரவும் பெருகி இருந்ததல்லவா! அதனால் அரசன் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான். இங்கு இவ்வாறு இருக்க நக்கண்ணையோ கிள்ளியின் நினைவாகவே இருந்தாள். கிள்ளி தன் வாக்கினைக் காப்பாற்றத் தவறான் என்ற நினைவாலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள். இருந்தாலும் அவள் அளவுக்கு மிஞ்சி மெலிந்து போனாள். கையிலே கிடந்த வளையல்கள் கழன்று விழுமாறு மெலிந்து விட்டாள். தங்க நிறமான அவள் உடல் ஏக்கத்தினால் சாம்பல் பூத்து வெண்ணிறமாகி விட்டது. உண்பதிலோ, உடுப்பதிலோ, உறங்கு வதிலோ சிறிதும் எண்ணம் செலுத்தினாள் இல்லை. சிற்சில வேளைகளிலே தன்னை மறந்து உறங்கினாலும் கூடக் கிள்ளியைக் கண்டதாகக் கனவுகள் கண்டு துன்புற்றாள். கனவுகள் மெய்யாகுமோ அன்றிப் பொய்யாகத்தான் போய்விடுமோ என்று வருந்தினாள். நாள்கள் மாதங்கள் ஆயின. அவள் என்ன செய்யமுடியும்? உறையூர்ப் பக்கத்தே நோக்கி நோக்கிக் கண்ணீரை வடித்துக் கொண்டே இருந்தாள். இந்நிலைமையைப் பெற்றோர்கள் அறிந்து கொண்டார்கள். ஊரவர்களும் ஒவ்வொருவராய் எல்லோரும் அறிந்துகொண்டார்கள். இரண்டு மூன்று பேர்கள் சந்தித்த இடங்களிலெல்லாம் நக்கண்ணை - கிள்ளி பற்றிய பேச்சாகவே இருந்தது. மறைந்து மறைந்து பேசித் திரிந்தனர். இயற்கையாகவே நொந்து போய் இருந்த நக்கண்ணையை இவ்வுரைகள் வேல் கொண்டு துளைப்பது போலாக இருந்தன. அழுது அழுது முகம் வீங்கினாள். ஒரே மகளின் நிலைமையை நினைத்துப் பெற்றோர் பெரும் பாடு பட்டனர். ஊர்ப் பழிக்கு ஒரு புறம் அஞ்சினர்! மகளின் நிலைக்காக மற்றொரு பக்கம் கலங்கினர். இருந்தாலும் ஊர்ப் பேச்சு ஊசி போல் தைத்து அவர்கள் உள்ளத்தைக் கல்லாக்கியது. அதனால் பெண் பிள்ளை ஊருக்குப் பயந்து நடக்க வேண்டும் என்றும், நாணத்தைக் கைவிட்டுத் திரிவது இழிவு என்றும் கண்டித்து வீட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து நிறுத்தினர். உரிமையுடன் வாழ்ந்த நக்கண்ணைக்குத் தொல்லை யாக இருந்தது. கிள்ளியைப் பற்றி ஆறுதலுக்காகவாவது ஒரு செய்தியும் தெரியவில்லை. ஒருநாள் தோழியுடன் வீட்டின் பின்புறக் கொல்லையிலே நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு தேர் வந்து நின்றது. தேரில் வந்தவன் கிள்ளிதான். அவனைக் கண்டவுடனே, அதற்கு முன் பட்ட துன்பத்தையெல்லாம் மறந்து உள்ளம் பூரித்தாள். ஆனாலும் திருமணம் செய்து கொண்டால் அல்லவா நிலைத்த இன்பம். அதற்காகத் தோழியுடன் பேசிக்கொள்வது போலப் பேசினாள். தோழி! தலைவன் வர வேண்டிய வழி தொலைவானது; துன்பமிக்கது; அவர் வராமல் இருப்பதையும் தாங்கிக் கொள்ள என்னால் முடிய வில்லை. இங்கே தாய் தரும் தொல்லையும், ஊரார் பேச்சும் நாள் தோறும் மீளாத் துயரமாக இருக்கின்றன. இனி யாது செய்வோம்? என்றாள். கிள்ளிக்குச் சொல்வது போலச் சொல்லிவிட்டாள். கிள்ளி இதனை அறியமாட்டானா? நக்கண்ணை! உன் துன்பத்தை விடுக, அரசர் நம் திரு மணத்திற்கு இசைவு தந்து விட்டார். விரைவில் பெண் கேட்டு வருவர். அதற்கு இசைய வேண்டுவது உன் பெற்றோர் கடமை. அவர்கள் மறுத்தாலும் நம் திருமணம் நடை பெறத்தான் போகின்றது. இருந்தாலும் முறையோடு ஏற்றுக்கொள்வது நலம் தரும் என்றான். அவன் சொல் வறண்ட பயிருக்கு வான் தந்த மழை போல் இருந்தது. ஏக்கத்தின் இடையே இன்புற்றாள் அன்புக் கிழவியைத் தேடிப் பார்த்தான் கிள்ளி. அவளைக் காணவில்லை. தேர் திரும்பியது உறையூருக்கு. அமைச்சரும், சில பெரியோர்களும் பெருங்கோழி நாய்கன் வீட்டுக்குப் பெண் கேட்டு வந்தனர். நாய்கன் அரசன் விருப்பத்தை மறுத்துரைக்க நினைக்கவில்லை. மகள் விருப் பத்தை முன்பே அறிந்து கொண்டும் இருந்தான் அல்லவா! நல்லதோர் நாளிலே மன்னர்கள் சூழ, மக்கள் வாழ்த்த, புலவர்கள் போற்ற, கிள்ளிக்கும் நக்கண்ணைக்கும் இனிதே திருமணம் நிறைவேறியது. ஊரே திருவிழாக் கொண்டாடி மகிழ்ந்தது. இரவிலே மணமக்கள் ஊர்வலம் வந்தனர்; உயரிய யானை மீது மணமக்கள் இருந்தனர். யானை முழக்கமிட்டுக் கொண்டு உலா வந்தது; அவ்வுலாப் பொழுதிலே சாத்தந்தையாரும் அங்கு இருந்தார். ஆரவாரம் கடல் ஓசையை வெல்லுகிறது; யானையின் பிளிறல் இடி மழையையும் அடக்குகிறது; இனிக் கிள்ளியைப் பகைத்தவர் பாடு வருந்தத் தக்கதே என்று பாராட்டிப் பேசினார். புல்லரிசி யுண்டும் மல்லனை வென்ற வல்லாளனே நெடிது வாழ்க! என்னும் ஒரு வாழ்த்தொலி ஆரவாரத்தின் இடையே எழுந்தது. ஒலியெழுந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர். கிள்ளி யானையை விட்டுக் கீழே இறங்கினான். ஒரு கிழவி யின் பக்கத்தே அவள் பெற்றெடுத்த மைந்தன் போல் பணி வோடும் நின்றான் கிள்ளி. அவள் யார்? ஆமூர் அன்புக் கிழவி தான் அவள். நீ மறந்தாலும் நான் உன்னை மறவேன்! ஒரு நாள் உறையூருக்கு வருவேன் என்று அனுப்பி வைத்தாள் அல்லவா அவள்? கிள்ளிக்கு முடிசூட்டு விழாவும் தொடுத்து நடத்தி விடுமாறு தித்தன் ஏற்பாடு செய்தான். அவ்வாறே மங்கலமாக நன் முடிசூட்டு நடை பெற்றது. முடிசூடிக் கொண்ட பின் பெருநற் கிள்ளி என்றி அழைக்கப் பெற்றான். போரவையிலே மல்லனை வென்ற மன்னவன் அல்லவா! அதனால் போரவைக்கோ என்னும் பட்டம் தந்தது பொருத்தமானதுதானே !. புலமையாட்டியாம் நக்கண்ணையை மனைவியாகப் பெற்ற அவன் வாழ்க்கைக்கு என்ன குறைவிருக்க முடியும்? இல்லறமும், நல்லாட்சியும் இணைந்து வர நெடுங்காலம் இனிது வாழ்ந்தான்! 15. வள்ளலைப் பாடிய வளவன் கதை கருவூர் பழமையும் பெருமையும் வாய்ந்த பேரூர். அவ் வூரினை அடுத்து ஆன்பொருனை என்னும் ஆறு அழகுற ஓடி வளமிகச் செய்கிறது. மைந்தரும் மகளிரும் ஆன்பொருனைக் கரைகளிலே அமைந்துகிடக்கும் மணல் மேடுகளிலே மற்போர் புரிவதும், கழங்கு ஆடுவதும், ஓடியாடுவதும், ஓய்வுகொள்வதும், நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள். ஆற்றினை அடுத்துக் காவற்காடு இருந்தது. காவற்காடு, நகரைப் பகைவர்களிடமிருந்து காப்பதற்காகக் காவலர்களால் அமைக்கப் பெற்றதாகும். காவற்காட்டு மரங்களை எவரும், எக்காரணம் கொண்டும் அழிக்கக்கூடாது, மரத்தை அழிப்பதும், மன்னனை அழிப்பதும் நிகர் என்னும் நெறியுண்டு. ஆதலால் அழிபாட்டுக்கு ஆளாகாது பேணி வளர்க்கப் பெற்ற அவை, வலிவும் பொலிவும் உடையவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காவற்காட்டினை அடுத்து முதலை, சுறாஆகியவை உலாவித் திரியும். ஆழ்ந்து அகன்ற அகழும், அதனை அடுத்துப் பல்வகைப் பொறிகளும் பொருத்திவைக்கப் பெற்ற திண்ணிய மதிலும் உண்டு. இம் மூன்று அரண்களையும் அழித்தால் அன்றி நகரையோ, அரண்மனையையோ அடைய இயலாது. நண்பர்கள் சென்றுவர எளிய நகர் கருவூர்! ஆனால் பகைவர்கள் சென்று வருவர அரிதினும் அரிய நகர். என்ன அருமைப்பாடுடைய அரணைக் கொண்டதாயினும் ஆள் வோம் உள்ளத்துள்ள உரம் தானே பேரரண் . அவ்வரண் இன்றேல் எவ்வரண்தான் உதவும்? ஒரு மகளிர் மணல் மேட்டிலே பொன்னால் செய்யப் பட்ட கழங்குகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் மணற்கரைகளிலே புரண்டு உருண்டு களிப்புற்றுக் கொண்டிருந்தனர். நீருள் வீழ்ந்து நீந்திச் செல்வோரும், தொட்டு விளையாடுவோருமாக ஆறு பொலிவுடன் விளங்கிக் கொண் டிருந்தது. முட்டைகளைத் தூக்கிக்கொண்டு திட்டை ஏறிச் செல்லும் எறும்புக்கூட்டம் போல மகளிர் நீர்க் குடங்களுடன் கரையேறிக் கொண்டிருந்தனர். பாடுவோர், பாட்டொலியும், கதை நொடி பேசுவோர் ஒலியும், விளையாடுவோர் களிப்பொலிவும் மாறி மாறி ஒன்றை ஒன்று விஞ்சி ஒலித்துக் கொண்டிருந்தன. இத்தகைய வெளியிலே, தேனீக்கூட்டமோ என்று ஐயுறு மாறு வீரர்கள் வந்தனர்; கொக்குக் கூட்டமோ என்று மயங்கு மாறு குதிரைகள் குவிந்தன! மேகம் திரண்டுவிட்டதோ என்று பேசுமாறு யானைகள் பெருகின; குன்றுகள் ஓடி வருகின்ற னவோ என்று புகலுமாறு தேர்கள் நிறைந்தன; ஒன்றன் பின் ஒன்றாக வந்து காவற் காட்டினைச் சூழ்ந்து நின்றன. குதிரைகளையும் யானைகளையும் காவல் மரங்களிலே கட்டிவிட்டு வீரர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் சோழ நாட்டைச் சுற்றித்திரிந்தனர். அவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை, அவர்கள் தேர்களிலும், கைகளிலும் இருந்த புலிக் கொடிகள் காட்டின. மகிழ்ச்சியோடிருந்தவர் மனத்தை அச்சம் பிடித்துக் கொண்டது. கடுங்காற்றுக்குத் தப்பியோடும் காட்டு மயில் போல் மகளிர் ஓடினர். ஏதுமறியா இளைஞர் வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். வீரமிக்கவர் வேந்த னிடம் செய்தியைக் கூறியிருந்தனர். இருந்தாலும் வேந்தன் எதுவும் செய்தான் இல்லை, கோட்டையைவிட்டு வெளி யேறவும் இல்லை. படைகளை ஏவிப் போர் செய்யுமாறும் தூண்டவில்லை. இருக்குமிடம் தெரியாமல் அடங்கிப் போய்க் கிடந்தான். நாட்கள் சில உருண்டோடின. புலிக்கொடி வைத்திருந்த வீரர்கள் புலியாகவே மாறி விட்டனர். எவரையும் மதிலைவிட்டு வெளியேறுவதற்கு விடவில்லை. உள்ளே நுழையவும் விட வில்லை. ஆற்றுக்குச் செல்லவோ, வயல் வெளிகளுக்குப் போகவோ முடியவில்லை என்றால் எவ்வளவு கொடுந்துன்பம்? ஒரு வேந்தன் முற்றுகையிட்டிருக்கின்றான்; ஒருவன் வெளி யேறாமல் அடங்கிக் கிடக்கின்றான்! ஆனால் இவர்கட்கு இடையே இருக்கும் மக்களுக்கோ இன்னல்! ஏன் இவர்கள் வளைத்துக்கொண்டிருக்கிறார்கள்? நம் வேந்தன் இச் சோழ வேந்தனுக்கு என்ன கேடு செய்தான்? அவனே கேடு செய்திருந்தாலும் நகரமக்கள் என் செய்வர்? வீரம் வேண்டும் ஆண் மகனுக்கு - அரசனுக்கு வீரம் இல்லாவிட்டாலும் மானமாவது வேண்டும்! இரண்டுமில்லாத வாழ்வு என்ன வாழ்வு! ஒன்று கோட்டையைவிட்டு வெளியேறி வந்து முற்றுகை இட்டிருப்பவனோடு போரிட வேண்டும். இல்லாவிடில் நான் தோற்றேன் என்று காலடியிலே வீழ்ந்து கிடக்க வேண்டும். இரண்டும் இன்றி அடங்கிக் கிடப்பது இழிவு உண்மையான வீரன் தனக்கு இணையான வீரனுடன் அன்றிப் போரிடமாட்டான். மயிர் குலைந்தோன், ஆடை அவிழ்ந்தோன். ஒத்தப் படை எடாதோன் ஆகியவர்களை விலக்கி, அவர்களுடன் போரிடாத தமிழ் மகன் வீரம் எங்கே? இவன் வீரம் எங்கே? அடைபட்டுக் கிடக்கும் இவனைப் படையுடன் வளைத்துக் கொண்டிருக்கும் சோழ வேந்தனுக்கும் இழிவு தான்! ஆன்றோர்கள் இல்லையா? அறவோர்கள் இல்லையா? அமைச்சர்கள் இல்லையா? இருந்தும் எமக்கென்ன என்று நெஞ்சத்தை இரும்புக் கூடாக்கிக் கொண்டார்களா? வாய் மூடிக்கொண்டு வாளா கிடக்கின்றார்களா? உற்றதை அறியாத ஓட்டைக் காதினர் ஆகிவிட்டார்களா? கொடுமை! கொடுமை! இப்படியெல்லாம் நொந்துபோய் மக்கள் பேசிக் கொண்டனர். உரத்துடன் கொதித்து எழ வேண்டியவனே ஒடுங்கிக் கிடக்கின்றான். மற்றவர் என்ன செய்வர்? மேலும் சில நாட்கள் நடந்தன. சோழன் முற்றுகையை விட்டபாடும் இல்லை. மதிலுக்குள் இருக்கும் சேரன் வெளி யேறிய பாடும் இல்லை. வெட்டுக; வெட்டுக; காவல் மரங்களை வெட்டுக; எத்தனை நாட்கள் மதிற் புறத்தே காத்துக் கிடப்பது. போருக்கு வராது அடங்கிக் கிடக்கும் வேந்தன் காதுகளிலே முட்டுமாறு வெட்டுக என்று படைத் தலைவன் வீரர்களை ஏவினான். கூர்மையான கோடரிகள் கிளம்பின; கட்டுக்கட்டு என்று மரங்கள் வெட்டப்பட்டன. மடமட என்று கிளைகள் முரிந்து வீழ்ந்தன. காவற்காட்டை வளைத்துக்கொள்வதே காவலனை இழிவுபடுத்தியதாகும். மரத்தை வெட்டுவது எத்தகைய இழிவாகும்? மன்னனை வெட்டுவதற்கும் மரத்தை வெட்டுவதற்கும் வேறுபாடு இல்லை. இத்தகைய இழிபாட்டையும், அழிபாட்டையும் பொருளாகக் கொள்ளாது, உயிரே பெரிதென எண்ணிக்கிடக்கும் வேந்தன் வீரத்தை எப்படிப் புகழ்வது? சோழனது படைவீரர்கள் நகரமக்களை மனம் போன வாறு நடுங்கவைத்தனர். கருவூர் மக்கள் கண்ணீர் உகுத்தனர். கலங்கி அழுதனர். இன்னும் இந்நிலை எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ என்று ஏங்கினர். இது ஆன்றோர்கள் உள்ளத்தை வாட்டியது. எப்படியேனும் முற்றுகையை ஒழிக்குமாறு உள்ளம் தூண்டியது. அறநெஞ்சம் உடைய புலவர்கள் இருவர் சோழனை அடுத்துச் சென்றனர். அவனிடம் சொல்வதுதானே முறை. ஒளிந்து கொண்டிருப்பவனிடம் உரைத்தால் என்ன? உரைக்கா விட்டால் தான் என்ன? புலவர்களில் ஒருவர் ஆடவர்; மற்றொருவர் பெண்டிர். முன்னவர் ஆலத்தூர் கிழார்; பின்னவர் மாறோகத்து நப்பசலையார். முன்னவர் சோழ நாட்டினர்; பின்னவர் பாண்டி நாட்டினர்; சோழனிடம் உரிமையாகப் பழகிய உயர் பேரன்புடையவர்கள். அத்தகையவர்கள் தாமே, மன்னவன் கருத்தை மாற்ற முடியும். மன்னவ! நீ சேரனை அட்டுக்கொன்றாலும் சரி! விட்டுச் சென்றாலும் சரி! உனக்குள்ள பெருமையை யாம் சொல்ல வேண்டியது இல்லை. நீயே தெளிவாக அறிவாய். காவல் மரங்களை வெட்டும் ஓசை மதிலகத்துச் சென்று அதனுள் ளிருக்கும் வேந்தன் காதுகளில் விழுகின்றது. அதனைக் கேட்டுக் கொண்டும் மானமின்றி இனிதாக மதிலுக்குள் இருக்கின்றான். இத்தகைய வேந்தனுடன் நீ போர் செய்தாய் என்பது கேள்விப் பட்டவர்களுக்கு நாணத்தைத் தரும்! உனக்குப் பெருமை தருமோ இது? என்று சிந்திக்கத் தூண்டி வைத்தார் ஆலத்தூர் கிழார். வேந்தே! அருளாளன் வழிவந்தவன் உன் முன்னோன் அல்லவா! நீ மதிலுக்குள் மறைந்திருக்கும் சேரனை மாட்டக் கருதுகின்றாய். இந் நிகழ்ச்சி மலைக்குகைக்குள் ஐந்தலை நாகம் பதுங்கியிருக்க வானம் இடி இடித்து அல்லலுறுத்துவதுபோல் இருக்கிறது. இவனோ வீரன்! இவன் பரம்பரையும் வீரர் பரம்பரை. பிறரால் அழிக்கமுடியாத மதில் இவனுக்கு உண்டு. இரவுப் பொழுதில் நகர் காவல் புரிவோர், கையிலே வைத்திருக்கும் விளக்கின் ஒளியைப் பற்றிப் பிடிக்குமாறு வாயைத் திறந்து கொண்டு வரும் முதலைகள் வாழும் அகழ் உண்டு. இவை யிருந்தும் ஊக்கமொன்று இல்லாமையால் வெளியேறினான் இல்லை. நீயும் இத்தகையன் என அறிந்து கொண்டும் முற்றுகை விட்டாய் இல்லை! புறாவுக்காக உடல் தந்த வள்ளல் வழி வந்த உனக்கு ஈகை இயல்பானது. அது, தனிப் பெருமை தருவது அன்று! பகைவர் களது நெருங்குதற்கு அரிய வலிய மதில்களை அழிக்கும் பேரரசர் வழி வந்த உனக்கு வெற்றி இயல்பானது. அது தனிப் பெருமை தருவது அன்று. அறம் நிலைத்து நிற்கும் உறையூர் வேந்தனான உனக்கு முறை இயல்பானது. அது, தனிப் பெருமை தருவது அன்று. இவ்வாறு இருக்கவும் இமயத்தே விற் பொறித்த வல்லோன் வழிவந்த இச் சேரனது கருவூரை வாட்டுவதை என்னவென்று சொல்வேன். ஈகையாலும், வெற்றியாலும், அறநெறியாலும் மாண் புடைய நீ இப்பொழுது முற்றுகை தவிர்த்தலால் - அருள் காட்டு தலால் - தனிப் பெருமை பெறுவாயாக! என்றார் நப்பசலையார். புலவர்கள் உரை, சோழன் செவிகளில் பாய்ந்து சிந்தனையை எழுப்பிற்று. ஆம்! இச் செயல் எனக்குப் பெருமை தருவது அன்று. ஒப்பான வீரனுடன் போர் செய்வதன்றி ஒளிந்திருப்போனிடம் என் முன்னோர் போர் செய்தனரா? நான் இவனை வென்று, அன்றிக் கொன்று கொள்ளும் வெற்றியும் ஒரு வெற்றியா? இல்லவே இல்லை! என்று சிந்தித்தான். ஒரு முடிவுக்கும் வந்தான். வீரர்களே! திரும்புங்கள் உறையூருக்கு! மதிலுக்குள் மானமின்றி இருப்பவன் மகிழ்ச்சியாக வெளியே வந்து திரி யட்டும். மறைந்திருக்கும் ஒன்றே அவன் தோல்விக்குச் சான்று. நாட்டைச் சூறையாடித்தான் நம் வெற்றியையும், அவன் தோல்வியையும் நிலை நாட்ட வேண்டும் என்பது இல்லை. நமதே வெற்றி! ஊதுக சங்கம்! முழக்குக முரசு! என்று கட்டளையிட்டான். வெற்றி முழக்கத்துடன் சோழநாட்டு வீரர்கள் உறையூருக்குத் திரும்பினர். ஆவூர்கிழார், நப்பசலையார் உள்ளங்களில் இன்ப வெள்ளம் பெருகியது. சோழன் வாழ்க அருளாளன் வாழ்க என்று வாழ்த்தினர். கருவூர் மக்களோ, அருட் புலவர்கள் வாழ்க என்று நெஞ்சார வாழ்த்தினர். சோழ வேந்தன் சேர நாட்டை முற்றுகை இடுகின்றான். சோழ நாட்டினரான நப்பசலையாரும் கருவூரை நோக்கி ஓடுகின்றனர்; போர் விடுக என்று வேண்டுகின்றனர்; புலவர் சொற்களைத் தலைமேற்கொண்ட சோழன் முற்றுகையை விடுகின்றான்; புலவர்களின் உயர் உள்ளங்களைப் போற்றுவதா? புலவர்களின் சொற்படி நடந்த சோழனைப் பாராட்டுவதா? இரு திறத்தவருமே பாராட்டுக்குரியவர்கள் அன்றோ! கருவூரை முற்றுகையிட்டிருந்த சோழன் கிள்ளிவளவன் என்னும் பெயருடையவன். அவன் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழநாட்டை நெடுங்காலம் இனிது ஆண்டு வந் தான்; புகழ்வாய்ந்த பண்டைச் சோழன்களுள் அவனும் ஒருவன். சிறந்த வீரமும் நுண்ணிய அறிவும் வாய்ந்தவன். அவன் கோவேந்தனாக விளங்கியதுடன் பாவேந்தனாகவும் இலங்கி னான். அதனால் அறிவரும் அமைச்சரும் புலவரும் எப்பொழு தும் அவன் அவையைச் சிறப்புச் செய்தனர். தன் புலமையாலும் இப்பெரியவர்களின் தொடர்பாலும் நல்லாட்சி செலுத்தினான். கிள்ளிவளவன் நாடு வளநாடு என்னும் பெருமைக்குரியது ஆகும். வளநாட்டில் வளத்திற்குக் குறைவு இருக்குமா? காவிரித் தாய் தரும் நீர்வளம் போலவே நெல்வளம் பெருகியது. கோடை யென்றோ, காலம் என்றோ விளைவில் வேற்றுமை இல்லை. ஒரு பெண் யானை படுக்கும் இடத்திலே விளைந்த நெல் ஏழு ஆண் யானைகளின் உணவுக்குப் போதுமானதாக இருந் தது. இது என்ன சாதாரணமான வருவாயா? எளிதில் காணக் கூடிய வளமா? வளநாட்டின் பெருமையைக் காட்ட இது வொன்றே போதும். வளவன் நாட்டு வயல்களுக்கு வேலியுண்டு; முள்வேலியா? கல்வேலியா? சுவர் வேலியா? - கரும்பு வேலி! வேலிக் கரும்போ பூத்துப் பொலிவுடன் திகழும் காடு, பசுக்கூட்டங்களாய் நிரம்பிக் காணும். காட்டின் இடை இடையே வில்வீரர்கள் உறையும் காவற் கூடங்கள் காணப்படும். கடலிலே வரும் மரக்கலங்களை மகளிர் விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பர். அவர்கள் தங்கியிருக்கும் சோலையி லுள்ள புன்னை மரத்தைக் கடலலை அசைக்கும். உப்பங்கழிகளிலே ஓடங்கள் மிகுந்து நிற்கும். உப்பு வாணிகர்களின் ஆரவாரம் ஓங்கிக்காணும். வயலுக்கு வயல், காட்டுக்குக் காடு, கடலுக்குக் கடல் ஆகிய வளங்களால் நிரம்பி வழிவது வளவன் நாடு. வளவன் நாட்டிலே இருக்கும் மக்கள் எப்படி வாழு கிறார்கள்? நெல்லறுப்பவர், கடைமடையிலே வாளை மீனைப் பிடிக்கின்றனர்; தொழியிலே ஆமையைப் பிடிக்கின்றனர்; கரும்பு வெட்டுபவர், கரும்பில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் எடுக்கின்றனர்; தங்களுக்காகவா? இல்லை! வரும் விருந்தினர் களை வரவேற்று, வருவாரை எதிர்பார்த்து உண்ணச் செய்வதற்கு. விருந்துக்கு வருபவர்களில் பெண்களும் இருப்பார்கள் அல்லவா! அவர்களைத் தனிச் சிறப்புடன் பேணுவர். அவர்கள் மகிழுமாறு, மகளிர் நீரெடுக்கச் செல்லும்பொழுது குவளைப் பூக்களையும் பறித்துக் கொண்டு வருவர். பூ - பூவையர் தனி விருப்பிற்கு உரியது அல்லவா! நாட்டு வளமும் மக்கள் உளமும் இத்தகையனவாக இருக்க, நாடாள் வேந்தன் எத்தகையனாக இருக்கின்றான். அவன் கொடைச் சிறப்பை அளவிட்டுரைத்தல் அரிது. அது பற்றி அவனை அடுத்திருந்த புலவர்களே தெளிவுபடக் கூறி யுள்ளனர். அதனை அறிவது போதுமானது. ஒரு சமயம் கிள்ளி வளவனைப் பார்ப்பதற்காகக் கோவூர் கிழார் சென்றிருந்தார். அப்பொழுது அவரை அன்புடன் வரவேற்றான்; இன்சொல் கூறினான்; விருந்தோம்பினான். சுடுசோறு, நெய்யிலே வறுத்த வறுவல், பக்குவமாக வாட்டப் பெற்ற மீன், சுவைமிகக் காய்ச்சிய பால், இப்படி இப்படிச் சுவைமிக்க விருந்து; கிழாருக்கு உண்ட வியர்ப்பு அல்லது உழைப்பு வியர்ப்பு ஏற்படாதவாறு கொடுத்தான். நன்றி மறவாக் கிழார் சோழன் கொடைச் சிறப்பினை ஒரு பாடலாகப் பாடினார். (புறம் - 386) சோழனைக் கண்டு வருவதற்குத் தாயங் கண்ணனார் என்னும் புலவர் சென்றார். அவர் விடிவதற்கு முன்னமே அரண் மனையை அடைந்தார். அவர் போனபின், விடிவெள்ளி எழுந்தது; பறவைகள் ஒலித்தன; பொய்கைப் பூக்கள் மலர்ந்தன. திங்கள் ஒளி மழுங்கியது. முரசும் சங்கும் முழங்கின; இருள் போயிற்று; வைகறை தோன்றிற்று; வேந்தே! எழுக என்று எழுப்பினார் புலவர். நேரம் பொழுது நினையானாய், மகிழ்வுடன் வந்து வர வேற்றான் அரசன். தன்னொடும் இருக்கச் செய்தான். மனம் விரும்பும் உணவு வகை; மணமிக்க மதுவகை; வெண்பட்டாடை; விரும்பத்தக்க அரும் பொருள்கள் - அனைத்தும் தந்துதவினான். இவற்றால் மகிழ்ந்தார் புலவர். வளவன் வாழ்க என்று வாழ்த்தி னார். தம் வாழ்த்தையே ஒரு பாட்டாகப்பாடி இன்புறுத்தினார். (புறம்- 397) நல்லிறையனார் என்பவர் ஒரு புலவர். அவர் வறுமை இன்னதென அறியாமல் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டார். ஆனால் இடைக்காலத்தே வறுமை அவர்மீது அழுத்தமாக உட்கார்ந்து கொண்டது. ஊர் ஊராக அலைந்தார். நாடு நாடாக அலைந்தார். அலைந்தும் பயன் கொண்டார் அல்லர். அவர் வறுமையைப் போக்க வள்ளல் எவரும் முன்வந்தார் இல்லை. இந்நிலையிலே கிள்ளிவளவன் கொடைத் தன்மையைக் கேள்விப்பட்டார். உள்ளம் அவனை அடையுமாறு உந்தித் தள்ளியது. அப்படியே வந்து சேர்ந்து உண்மை நிலைமையை எடுத்துரைத்தார். இறையனார், இனி வேறெவரையும் தேடிச் சென்று வருந்தாவண்ணம் பெருஞ்செல்வம் தந்தான்; மகிழ்ந்த இறையனார் வளவன் மாண்பினைப் பாடிச் சிறப்புச் செய்தார். (புறம்- 393) பாணன் ஒருவன் வருகின்றான்; அவன் கையிலே யாழ் இருக்கின்றது; வயிற்றிலே பசி இருக்கின்றது! இடுப்பிலே கிழிசல் உடை இருக்கின்றது; உள்ளத்திலே சோர்வு இருக்கின்றது. உடன் வந்த சுற்றத்தார்க்கு வாட்டும் வறுமை இருக்கின்றது; இத் தகையவறிய பாணனைக் காண்கிறார், கிள்ளி வளவனது நண்பரான ஆலத்தூர் கிழார். பாணர் வறுமை நோக்கிப் பதைப்புற்றார். ஏதேனும் வழிகாட்ட வேண்டும் என்று எண்ணி னார். பழமரம் பக்கத்தே இருக்கும்பொழுது பறவைக்குக் கவலையுண்டா? பாணர்களே, இதே வழியாக உயர்நிலை மாடம் திகழும் உறையூருக்குச் செல்லுங்கள். உறையூர்க்குப் பொலிவு ஏற்படு மாறுள்ள மன்னவன் கிள்ளிவளவன் உள்ளான். அவனைக் காண்பது அரிது என்னும் கவலைவேண்டாம். பன்னாட்கள் காத்துக்கிடக்க வேண்டுமே என்றும் எண்ணவேண்டாம். நீங்கள் அவன் தலைவாயிலில் சிறிதும் பொழுதும் காத் திருக்க வேண்டி வராது. உள்ளே சென்றபின் தருவான், தர மாட்டான் என்று ஐயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கண்டவுடனே காலம் பொழுதே நோக்காமல், பொற்றாமரைப் பூவைத் தருவான். உங்கள் வறுமை தொலையுமாறு பொருள் தருவான். நீங்கள் அவற்றைப் பெறாமல் திரும்ப இயலாது. விரைந்து செல்க என்று அனுப்பிவைத்தார். ஆலத்தூர் கிழார் அருளுரை கேட்ட பாணர் அகமகிழ்ந்து நடந்துகொண்டிருந்தனர். எதிரே, கோவூர்கிழார் வரக் கண்டனர். அவர் கிள்ளிவளவனால் நன்கு மதிக்கப்படும் புலவர் என்பதை அறிவர். அதனால் ஆலத்தூர் கிழார் உரையின் மெய்மையை மேலும் உணருமாறு விரும்பினார். கிழாரைச் சிறிது தங்கிச் செல்லுமாறு வேண்டினர். பாணர்களின் உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உணர்ந்த கோவூரார் தங்கினார். பாணர்கள் அவர் மகிழுமாறு பாட்டிசைத்தனர். இன்புற்ற கிழார் பாணர் தலைவனைப் பார்த்து இனிய இசைபாடும் யாழ்ப் பாணனே! சிறிது பொழுது இங்கு தங்கிச் செல்க என்று கூறினாய். உன் நினைவு யாது? என அறிந்துகொண்டேன். நீர் வளமிக்க திங்கள் தைத் திங்கள் என்பதை அறிவாய். அத் தைத் திங்களில் எவ்வளவு, எவ்வளவு எடுத்தாலும் குறையா நீர்வளம் குளத்தில் இருக்கும் அல்லவா! அக்குளம் போல்வதான ஊர் ஒன்றுண்டு. அவ்வூர் உறையூராம். கொள்ளக் கொள்ளக் குறையாச் சோற்றுவளம் உடையது உறையூர்; அவ்வூர் சோறாக்குவதற்கான அடு தீயையே அறியும். பிறரைத் துன்புறுத்தும் சுடு தீ யை அறியாது. அங்கே நல்லோன் ஒருவன் உள்ளான். அவன் பெயர் கிள்ளி வளவன் என்பது. அவனைக் காணுவதற்குச் செல்வையாயின் செல்வை (செல்வம் உடையவன்) ஆகுவை ஐயம் இல்லை என்றார். பாணன் மகிழ்ந்து விடைபெற்றுக்கொண்டான். பின், உறையூர் சென்று வளவனைக் கண்டு வறுமையைத் தொலைத்துக் கொண்டான். வறுமைப் பிணி மருத்துவன் வளவன் என்று வாழ்த்தினான். வளவன் கலையுள்ளம் படைத்தவன். அதனால் எப் பொழுதும் கலைவல்லார்களுடனே பொழுதைப் போக்கினான். காவிரி தரும் பொய்யா வளத்தாலும், வளவன் செங்கோல் திறத்தாலும் மக்கள் இனிது வாழ்ந்தனர். பெருகிவரும் நீரில் அலைகள் இருந்தனவே அல்லாமல், மக்கள் நெஞ்சத்தே அலைத் துயர் இருந்தது இல்லை. புலி தன் குட்டியைக் காப்பது போல வளவன் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுகிறான் என்று பாராட்டிப் பேசினர் மக்கள். அரசன் போர்நிலை, கலைநிலை இவற்றை அறிந்து கொண்ட அதிகாரிகள் சிலர், அரசின் பெயரால் ஒவ்வோரிடத்தில் கொடுமை புரியத் தலைப்பட்டான். குறிப்பாக, வெள்ளைக்குடி என்பது சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஓர் ஊர். அவ்வூர் மக்கள் அனைவரும் உழவுத் தொழிலை நம்பி வாழ்பவர்கள். அவர்களுக்கு அவ்வாண்டு மழை இல்லாமலும், ஆற்றுநீர் தேவைக்குத் தக்கபடி கிடைக்காமலும் போகவே விளைவு கெட்டுவிட்டது, வீட்டில் இருந்தவற்றையும் நிலத்திலே போட்டு விட்டு மக்கள் ஏக்கமுற்று நின்றனர். இந்நிலை அவர்களுக்கு இதற்குமுன் ஏற்பட்டதே இல்லை. இப்பொழுதும் இவ்வாறு ஏற்படும் என்று எண்ணினார் அல்லர். என் செய்வது? தவணை தவறாமல் வரிப்பணம் கட்டி வந்த அவர்கள் வருவாய் இல்லாமையால் பணம் கட்டுவதற்குத் திண்டாடினர். ஊரிலே ஒருவர் இருவருக்கு விளைவில்லை என்றால் மற்றை யோர் உதவி கிடைக்கும். ஊருக்கே விளைவு இல்லை என்னும் போது யாருக்கு யார் கொடுத்துதவ முடியும்? அரசுதான் உதவவேண்டும். ஆனால் அரசியல் அதிகாரிகளோ வரி! வரி! என்று வாட்டிக் கொண்டிருந்தனர். வெள்ளைக் குடியினர் உள்ளங்களிலே துயரம் பற்றிக் கொண்டது. தங்கள் நிலைமையைச் சொல்லிப் பார்த்தனர். மரத்துப்போன செவி படைத்த அதிகாரிகள் காதுகளில் மக்கள் குரல் ஏறவில்லை. பெரும்பாடு படுத்தினர். வரிதர முடியாதவர்களின் வீடுகளில் புகுந்து தட்டு முட்டுச், சாமான்களைப் பொறுக்கினார். உணவுக்காக இருந்த தானியத்தை அள்ளினர்; தர மறுத்தவர்களைத் தடியால் தாக்கினர்; சினந்தவர்களைச் சிறைக்கூடம் சேர்த்தனர். ஊரே துயரத்தில் ஆழ்ந்தது. வெள்ளைக்குடி மக்கள் சிலர் ஓடிப்போய் வேந்தனிடம் உரைத்தனர். அதுவரை எதுவும் அறியாமல் மன்னவன் இருந் தான். ஆதலால், அதிகாரிகளை அழைத்தான். நடந்ததைச் சொல்லுமாறு கட்டளையிட்டான். அதிகாரிகள் வல்லவர்கள்; உண்மையைத் திரித்துக் கூறு வதிலே கைதேர்ந்தவர்கள். மக்கள் கூறுவது அனைத்தும் பொய் என்றும் வரிகட்ட முடியாத அளவுக்கு அவர்கள் நிலைமை போய் விடவில்லை என்றும், இதற்கு விட்டுக் கொடுப்பது ஏமாற்றுக்கு இடம் கொடுப்பதாக இருக்குமென்றும், அதிகாரி களையும் ஏவலர்களையும் மதிக்காமல் எதிர்க்கும் இழிகுணம் பெற்றுவிடுவர் என்றும் சொல்லி, தங்கள் செயலே சரியானது என்று சாதித்துவிட்டனர். மன்னனும் அதிகாரிகளின் உரையை நம்பி விட்டான். மேலும் கவலை தருவதாக ஆகிவிட்டது மக்கள் நிலைமை. ஊரில் அச்சமின்றி வாழ முடியாது என்னும் நிலைமை விரைவில் ஏற்பட்டது. ஆடுமாடுகளையும் சிலர் இழந்தார்கள். வீடுகளில் புகுந்து கிடைத்ததையெல்லாம் சுருட்டிக் கொண்டு சென்றனர் சிலர்; அதிகாரிகள் கொண்டு சென்றது பாதி; அவர்கள் பெயரால் தடிகாரர்கள் கொண்டு சென்றனர் சிலர்; அதிகாரிகள் கெண்டு சென்றது பாதி; எவரையும் தடுக்க முடியாமல் ஏங்கி நின்றது வெள்ளைக்குடி. வெள்ளைக்குடியிலிருந்த உழவர்களில் நாகனார் என்ப வரும் ஒருவர். அவர் கற்றறிந்து கவிபாடும் திறமும் பெற்றவர். கிள்ளிவளவனை நன்கு அறிந்தவர். அரசன் அறியாமல் அதி காரிகள் செய்யும் கொடுமைகளே இவை. அவன் அறிந்திருந்தால் இதனை அனுமதிக்கமாட்டான் என்று எண்ணினார். எண்ணிக் கொண்டிருந்து பயனென்ன நேரடியாகச் சென்று உண்மையை எடுத்துரைத்து ஊருக்கு உதவுவதே தம் கடன் என்று கருதி உறையூருக்குப் புறப்பட்டுச் சென்றார். வளவன் அரசவையிலே பொலிவுடன் அமர்ந்திருந்தான். அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். வாயில் காவலன் வழியாகத் தம் வருகையை அறிவித்தார் நாகனார். அவனும் விரைந்து சென்று அரசன் அனுமதியுடன் மீண்டு, அழைத்துச் சென்றான். நாகனாரை அரசன் வரவேற்று ஓராசனத்தில் இருக்கு மாறு செய்தான். நாகனார் சிறிது நேரம் அமைதியாக இருந்து, தக்க பொழுதிலே பேசத் தொடங்கினார். அரசே! கடல் சூழ்ந்த இத்தமிழ் உலகை ஆளும் அரசு மூன்று! அம்மூன்றுள்ளும் அரசென்று சிறப்பித்துச் சொல்லத் தக்கது. நின்னரசு ஒன்றே! cy»š ehLfŸ gythŒ¥ guÉ¡ »l¥ãD« mit ehL Mfh; ehbl‹W áw¥ã¡f¥gLtJ fhš gy bfhŸS« fhÉÇah‰¿š ts Äf¡ bfhÊ¡F« ËdhL x‹nw! என்று பெருமிதத்துடன் கூறினார். அரசன் மகிழ்ந்தான். அவையோர் பாராட்டினர்; புலவர்கள் போற்றினர். நாகனார் மேலும் பேசினார். அரசே! நான் கூறுவதைக் கேட்பாயாக, மக்கள் வாழ் விலே சிக்கல்கள் எப்பொழுதும் நேரலாம். அவர்கள் மன்னவ னாம் உன்னிடம் கூறி வழி வகை செய்ய விரும்பலாம். அதற்காக நின் அவையை நாடி வரலாம். அவ்வாறு வருங்கால் அவர்கள் காத்துக் கிடக்க வைக்காமல், உடனே கண்டு தக்க உதவி தருவது நன்மையாம். அச்செயல், மழை வேண்டும் என்று கூறியவுடனே மழை பெய்தால் எவ்வளவு நலம் உண்டாகுமோ அவ்வளவு நலம் தரும். எவரையும் காத்திருக்க வைத்தேனோ? துயருற்று அவைக்கு வந்தோரை ஆதரிக்காது விட்டோனோ? எதுவும் நினைவுக்கு வரவில்லையே! என்று வளவன் எண்ணம் ஊச லாடியது. ஞாயிற்றின் வெயிலைத் தடுத்து நிழல் தருவதற்காகவா நின்குடை உளது? அவ்வாறு தண்ணிழல் தரும் குடைகள் எண்ணில உண்டு. ஆனால் வேந்தனாய உன் குடையோ வெயில் மறைத்தற்காக எடுக்கப்பட்டது அன்று. வெங்கொடுமைக் காட்பட்ட குடிகளைக் காப்பதற்காக அமைந்தது நாகனார் உரை, அரசனை அசைத்தது; அமைச்சர்களை ஆட்டியது, அதிகாரிகளைக் கலக்கியது. அமைதியாயிற்று அவைக்களம். ஏதோவொரு தவறு நடந்திருக்கிறது என்னும் அளவில் எண்ணி எல்லோரும் நாகனாரை நோக்கினர். கூர்மையான வேலையுடைய வளவனே! பனந்துண்டங் களை வெட்டி வெட்டி வேறு வேறாகக் குவித்து வைத்ததுபோல யானைக் கூட்டங்களை வெட்டுவதற்கு உன் படைஞருக்கு ஆற்றல் உண்டு. வருகின்ற படைகளைக்கண்டு ஆரவாரித்து அடுபோர் செய்து புறங்காட்ட வைக்கும் திறம் உன் படைஞ ருக்கு உண்டு. வெற்றியின் வேறொன்று அறியாக் கொற்றமும் நின் படைகளுக்குஉண்டு.எனினும்அப்பொருபடைவெற்றியெல்லாம் உழுபடை தரும் வெற்றி என்று அறிவாயாக! உழவர் தொழிலின் வெற்றி என்று நினைவாயாக. உழுவோர் தந்த விளைவின் வெற்றி என்று தெளிவாயாக அதை நான் மறந்தறியேனே! உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்னும் உரை மணியை மறந்தேனில்லையே! உழுபவர்க்கு உதவாது இருக்கும் அரசு அழுது மடியும் என்பது நன்கறிவேனே! ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அது அறியாமையால் ஏற்பட்டதேயாகும் என்று வருந்தினான் வளவன். நாகனார் பேசினார்; அரசே! மழை பெய்ய வேண்டிய காலத்துப் பெய்யாவிட்டாலும், அதன் காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ விளைவு குறைந்துவிட் டாலும் முறை கெட்ட செயல்கள் நாட்டிலே நடைபெற்றாலும் - உலகம் அரசர்களையே பழித்துக்கூறும்! அதனை நீ நன்றாக அறிந்து கொண்டாய் என்றால் இல்லதும், பொல்லதும் கூறி வருவோரின் உறுதியற்ற மொழிகளை உண்மையெனக் கொள்ளாது, உழவர் குடியைப் பாதுகாத்து அப்பாதுகாப்பினால் மற்றைக் குடியினருக்கும் உதவவேண்டும். அவ்வாறு செயல்பட்டால் நின் பகைவரும் நின்னைப் போற்றுவர்; ஐயமில்லை என்று நிறுத்தினார். அரசன் பெருமூச்சுவிட்டான்; நடந்ததைத் தெளியக் கூறுமாறு வேண்டினான். நாகனார் வெள்ளைக்குடி நிலைமையை விளம்பினார். அரசன் அறியாது நடந்த நிகழ்ச்சிக்காக வருந்தி வரிப்பணத்தைத் தள்ளுபடி செய்தான். மேலும் மக்கள் உழவினைத் தொடுத்துச் செய்யுமாறும் வறுமையைத் தொலைக்குமாறும் பெரும் பொருளுதவி புரிந்தான். நாகனாரால் ஊர் துயர் நீங்கியது. உயர்ந்தவர்கள் செயல் உற்ற சமயத்தில் உறுபயன் தந்துதவுமல்லவா! கிள்ளிவளவன் புலவர் தோழனாய் வாழ்ந்தான் அல்லவா! அவனைக் காண்பதற்காக ஆவூர் மூலங்கிழாரும், ஆலத்தூர் கிழாரும் சென்றிருந்தனர். பன்னாட்கள் உடன் தங்கினர். அவர்கள் மீண்டும் வேறொருவரிடம் போய்ப் பாடிப் பரிசு வேண்டாவாறு பெருங் கொடை கொடுத்தான். கொடை தந்தபின் அவனுக்கு ஓர் ஐயம் உண்டாயிற்று இவர்கள் பொருள் வளத்தால் என்னைக் காண்பதற்கும் மறந்து விடுவார்களோ? என்பதே அது. அதனால் புலவர்களே, எம்மை நினைப்பீரோ? நினைத்து ஈங்கு வருவீரோ? என்று வினாவினான். இச் சொல் புலவர் களுக்கு வேதனையாக இருந்தது. வள்ளலாம் கிள்ளி வளவனை மறக்கவோ செய்வோம்; மறந்தால் நன்றியுடைய செயலாகுமா? என்று புழுங்கினர். அரசே! எத்தவறு செய்தாலும் அதனின்று தப்பிப் பிழைக்க வழியுண்டு. ஆனால் ஒருவன் செய்த நன்றியை மறந்த வர்களுக்கு நல்வழியே கிடையாது. நாங்கள் எங்கோன் வளவன் வாழ்க என்று உன்னை நாள்தோறும் பாடாவிட்டால் அறங் கொன்றவர்கள் ஆவோம். நீ நெடுங்காலம் வாழ்க என்றார் ஆலத்தூர் கிழார். நினைத்ததை முடிக்கும் நெஞ்சங்கொண்ட வேந்தனே! நின் நிழலிலே பிறந்து. நின் நிழலிலே வளர்ந்த எம் நிலைமையைச் சொல்ல வேண்டுமோ? வானத்தே உறைபவர்களும் அவரவர் செய்வினைப் பயனை அனுபவிப்பதன்றி வேறொன்றும் அறியாரே! கொடுப்பவரும் ஏற்பவரும் இல்லாத அவ்வானிலே கிடைக்கும் எல்லா நலங்களும் நின்னாட்டிலும் கிடைக்கும் காரணத்தால் பரிசு பெறுவோர் நின்னாட்டையே நினைப்பர். பகைவர் நாட்டுப் பரிசிலர்களே நின்னை நினைத்து வாழும் பொழுது, எம்மைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?என்றார் ஆவூர் மூலங்கிழார். வேந்தன் மகிழ்ந்தான். புலவர்களின் அன்புளங்களை அன்புளத்தால் தழுவுவான் போலத் தழுவிக்கொண்டான். அவர்கள் நட்பினை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். கிள்ளிவளவன் புலவர்கள் கலைஞர்கள் அன்றி வேறொரு வள்ளலிடத்தும் பேரன்பு கொண்டிருந்தான். நாடாள் வேந்தன் வளவன். அவன் விருப்பிற்குரிமை யானவனோ ஓர் உழவன்! முடியுடை மூவருள் ஒருவன் வளவன். உழவனோ இவன் குடிகளுள் ஒருவன்! கல்வியாலும் கற்றோராலும் பொலிவு பெற்றோன் வளவன்; அவனோ அத்தகைய வாய்ப்பு ஒன்றும் இல்லாதவன். பெருநகரில் வாழ்பவன் வளவன்; அவனோ நாட்டுப்புறச் சிறுகுடியில் வாழ்பவன்; இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் அவன்மீது பேரன்புகொள்ளுமாறு செய்தது வளவன் நல்லுள்ளமேயாம். வளவன் அன்புக்கு ஆட்பட்ட பெருமைக்குரியவன் பண்ணன் என்னும் நல்லோன் அவன் காவிரிக் கரையிலே இருந்த சிறுகுடியிலே வாழ்ந்து வந்த ஓர் உழவன். சிறுகுடி கிழான் பண்ணன் என்றும் அழைக்கப்படுவான் கொடையும், தயையும் பிறவிக்குணம் என்பது போல் அவன் ஊனோடும் உயிரோடும் கொடைத் தன்மை செறிந்து கிடந்தது. இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று கூறி அறியான் அவன்,அவன் வளம் சுருங்கிப் போவதும் உண்டு. ஆனால் உளம் சுருங்கியதை எவரும் கண்டது இல்லை. சிறுகுடியின் சிறப்பு பெரு நகரங்களிலும் பரவத்தொடங் கியது. உழவன் புகழ் உலகாளும் வேந்தனுக்கும் எட்டியது. மரம் பழுத்தால் வௌவாலை வாவெனக் கூவி அழைக்க வேண்டுமா? பரிசிலரும், இரவலரும் வள்ளல் பண்ணன் இல்லத்தைத் தேடித் தேடிவந்து குவிந்தனர். அவன் அவர்கள் இன்புறுமாறு பொருள்களைச் சிறக்க வழங்கினான். பண்ணன் சிறுகுடி பசித்தோர்க்கு உணவளிக்கும் அட்டிற்கூடம் ஆகியது. நோயாளர்க்கு மருந்தளிக்கும் மருத்துவ மனையாகியது; எழுத்தறியார்க்குப் பள்ளிக்கூடம் ஆகியது; கலை நாடுவார்க்குக் கலைக்கூடம் ஆகியது. எல்லார்க்கும் எல்லாம் ஆகியது. பண்ணன் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் ஆனான்; பசிப்பிணி மருத்துவன் ஆனான். பண்ணன் சிறுகுடியைத் தேடிக் கொண்டு வளவன் சென்றான். சிறுகுடி செய்த பெருமை என்னே! பண்ணன் வரவேற்றுப் போகவில்லை வளவன்; தேடிக் கொண்டு போகின்றான்; அவன் ஊரை அடுத்துச் சென்றவுடன் ஆரவாரம் எழுவதைக் கேட்டான். இன்னும் சிறிது சென்றான். சிறுவர்கள் வரிசை வரிசையாக ஓடி வந்தனர். எப்படி? மழையை எண்ணி முட்டை கொண்டு திட்டை ஏறிச்செல்லும் சிற்றெறும்புக் கூட்டங்களைப்போல ஓடிவந்தனர். பண்ணன் தந்த சோற்றுத்திரளைக் கையிலே! சோறு பெற்ற உவகை உணர்ச்சி உள்ளத்திலே. ஓட்டம் ஓட்டமாக - ஆனால் விலக இடமின்றி வரிசை வரிசையாக வந்தனர். ஆ! ஆ! இவ்வழகுக் காட்சி வளவன் உள்ளத்தில் பதிந்து விட்டது. உணர்ச்சி அவனை உந்தித் தள்ளியது. அவ்வுந்துதலிலே பாவலனாக அவன் பாடினான்; யாரை? தன் குடிகளுள் ஒருவ னான பண்ணனை! அவன் சிறு குடியை! சிறுகுடியின் பெரு வளத்தை எப்படி? யான் வாழு நாளும் பண்ணன் வாழிய - இது தான் சோழன் பண்ணனைப் பற்றிப் பாடிய முதல் வரி. வளவன் வாழ்த்துகின்றான் பண்ணனை; நெடிது காலம் வாழ்வானாக. யான் நிலவுலகில் எவ்வளவு காலம் வாழ்வோனோ. அவ்வளவு காலத்தையும் அவனே எடுத்துக்கொண்டு வாழ்வானாக! பேரருள் படைத்த அவ்வள்ளல் தன் வாழ்நாள் மட்டும் வாழ்ந்தால் போதாது; என் வாழ்நாளையும் கொண்டு வாழட் டும் என்றுரைத்தான்; இது உதட்டிலே இருந்து வெளிவரும் உரையா? பெருங்கொடை புரிந்துவரும் வள்ளல் பண்ணனுக்கு உயிர்க்கொடை புரியும் வள்ளலாக அல்லவா சோழன் காணு கின்றான்! வள்ளல் தானே உணர்வான்; கற்றோரைக் கற்றாரே காமுறுவர் என்பது நம் மொழியன்றோ! வளவன் எதிரே பாணர் சிலர் வருகின்றனர். அவர்கள் பண்ணன் தந்த பரிசினைப் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் வருபவர்கள். “ghz®fns! என்று அழைத்துத் தன் பக்கத்தில் நிறுத்திக் கொண்டான். வளமிக்க பழமரத்தின் கண் பறவைக்கூட்டம் ஒலிப்பது போன்ற ஊண் ஒலி கேட்கின்றது! பருவ மழை கருதித் தன் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலம் செல்லும் சிற் றெறும்புகள் போல சோற்றுத்திரள்களை ஏந்திய கையினராய்ப் பெரியவரும், பிள்ளைகளும் செல்வதைக் காண்கின்றேன். வழிநடைக் களைப்பும், பேராவலும் உந்த உங்களைக் கேட்கின்றேன். பசிப்பிணி மருத்துவனாம் பண்ணன்மனை பக்கமோ? தொலைவோ சொல்லுங்கள் என்றான். பாணர்கள் உவகையுடன் பண்ணன் சிறு குடியைச் சுட்டிக் காட்டினர். உணவுப் பசியாலா வளவன் பண்ணனைத் தேடு கின்றான்? அன்புப் பசியால்! வாழ்க வளவன்! வளவன் வரக்கண்ட பண்ணன் மகிழ்ச்சிக்கு அளவும் உண்டோ? பண்ணன் அழியாப் புகழ்பெற்றான். சிறுகுடி பெரு மிதம் உற்றது. பாவேந்தரால் பாடப்பெற்று வந்த சிறுகுடி கோவேந்தனாலும் சிறப்புச் செய்யப்பெற்றது. அதன் இசை, திசையெல்லாம் பரவியது. பண்ணனும் நெடுங்காலம் வாழ்ந்து, சோழனுக்குத் தோழனாய், வறியவர்க்கு வள்ளலாய் விளங்கி னான். சோழன் உள்ளத்தே அருளும், அன்பும் இருந்த அளவுக்குச் சற்றும் குறைபடாமல் ஆண்மையும், வீரமும் கூடியிருந்தன. அவன் வீரம் இத்தகையதெனப் புலவர் பெருமக்களால் அவ்வப்போது சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. மான வீரத்தை மதித்துப் பாடினரே அன்றி, மக்களை அழிவுக்கு ஆளாக்கும் போரைப் புகழ்ந்தார் இல்லை. தக்க பொழுதில் தடுத்துரைத்து நல்வழியும் படுத்தினர். இதற்குச் சோழன் கருவூர் முற்றுகையும், மீட்சியுமே சான்றாவதற்குப் போதுமானது. கூற்றுவனுக்கு நிகரான வீரன் என்று பாராட்டினார் இடைக்காடர். காற்றும் நெருப்பும் கலந்துகொண்டதுபோல் படைகொண்டு பகைவரை அழிப்பவன் என்றார் கோவூர்கிழார் குறுதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலால்நாறச் செய்வோன் என்றார் ஆலத்தூர் கிழார். மன்னன் வளவன் மாறுபட்டுப் பார்க்கும் இடம் ஏரி தவழும். விரும்பிப் பார்க்கும் இடம் பொன் பொலியும் என்றார் ஆவூர் மூலங்கிழார். வளவன் சென்ற போரிலெல்லாம் வெற்றி கொண்டான். பகைத்து நிற்போர் இல்லை என்னும் அளவுக்குப் பல காலம் பாராண்டு சிறந்தான். கொங்கு நாட்டையும், குடநாட்டையும் வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். கிள்ளி சில சமயங்களில் போருணர்ச்சிக்கு ஆளாகி விடுவது உண்டு. அச்சமயங்களில் அவன் மென் மலர் உள்ளமும் வல்லிரும்பாக மாறிவிடுவது உண்டு. வஞ்சினம் என்னும் நெருப்பு நெஞ்சத்தில் புகுந்துவிட்டால் பற்றி எரிக்கத்தானே செய்யும்? ஆனால் அதனைத் தக்கோர் இருந்து, நேரிய பொழுதில் சீரிய முறையில் சுட்டிக் காட்டினால் திருந்திக்கொள்ளும் பெருந் தகைமையும் கிள்ளியினிடம் இருந்தது. மாறாப் பகைவனாக இருந்த மலையமான் காரியின் மக்களை ஒரு சமயம் பற்றி வந்தான் சோழன். பச்சிளஞ் சிறுவராக இருந்த அவர்களை, யானையை ஏவி மிதித்துக் கொல்லச் செய்ய நினைத்தான். காரணம் என்ன? சிறுவர்கள் செய்த தவறு யாது? அவர்கள் தந்தை காரி பகைவனாக இருந்த ஒன்றே காரணமாம். ஐயோ! கொடுமை! கொடுமை! தந்தை பகை பட்டு நின்றால், அரசியல் பிணக்குள் எத்தனை எத்தனையோ? அதற்குச் சிறுவர்கள் யாது செய்வர்? சிறுவர்களை நிறுத்தி வைத்தான் சினங் கொண்ட வேந்தன். ஆணை கடக்கமுடியாத யானைப்பாகன் ஒருவன் மலைபோலும் யானை ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்தான். யானையின் நிலைமை எங்கே? யாதும் அறியாச் சிறுவர் நிலைமை எங்கே? உணர்ச்சியும் உள்ளமும் உடையோர் வாயடைத்துப் போய் அழுதனர். கன்னத்தின் வழி கண்ணீர் பெருக நின்றனர். ஒரு சில வெறியர்க்கு வேந்தன் செயல் மகிழ்ச்சியாக இருந்தது. பகைவனைப் பூண்டோடு அழிக்கும் எங்கள் பார்த்திபன் வாழ்க! சிறிதானாலும், பெரிதானாலும் நெருப்பு நெருப்பே! சிறுவன் ஆனாலும் பெரியன் ஆனாலும் பகை பகையே! என்று வாழ்த்தும் கூறினர். அந்தோ! கொடுமைக்குத் துணைபோகும் குறுகிய மதியாளர் என்றும் உண்டு போலும்! கூட்டத்தின் இடையே புலவர் ஒருவர் ஓடி வந்தார். உலகம் வாழ்வதற்காகவே வாழ்ந்து வரும் உழவர் குடியிலே பிறந்த புலவர் ஓடிவந்தார். தமிழகத்திற்குத் தனிப்புகழ் தந்த புலவர் கோவூர் கிழார்தான் அவர். கிழாரைக் கண்டவுடன் கிள்ளி தன்னை மறந்து அவரை நோக்கினான். வேந்தே! நீ விரும்பியதைச் செய். தடையின்றி நீ விரும்பியதைச் செய். ஆனால் நான் கூறுவதனைக் கேட்ட பின்னர் உன் விருப்பம் போல் செய். நீ யார்? அதனை நானோ சொல்லவேண்டும்? ஒரு புறாவின் துயரை நீக்குவதற்காகத் தன்னுயிர் தந்த சோழன் வழி வந்தவன் அல்லவா! இரக்கமிக்க பரம்பரை அல்லவா? உன் பரம்பரை! இவர்கள் யார்? நீ நன்கு அறிவாயே! அறிவால் உழுது அதனால் கிடைக்கும் பயனை உண்ணும் கலைஞர்களது பசியைத் தீர்க்கும் வள்ளல் காரியின் மைந்தர் அல்லரோ! இவர்கள்தான் எந்நிலையர்? இக்கூட்டத்தையும் உன் செயலையும் கண்டு கண்ணீர் சொரிந்து நின்ற, இவர்கள் இவ் யானையைக் கண்டவுடன் அழுகையை விட்டு வியப்புடன் பார்க்கின்றனரே! தம்மைக் கொல்ல வரும் யானை என்பது கூடத் தெரியாதிருக்கும் இச்சிறுவர்களோ உன் பகைவர்? அருள் வேந்தே! உன் விருப்பம் எப்படியோ! அப்படியே செய் என்றார். சோழன், தாழ்த்திய தலையை நிமிர்த்தினான் இல்லை. கொலைக் களத்தை விட்டு அரண்மனையை நோக்கி நடை போட்டான். வேந்தன் வாழ்க என்னும் ஒலி எழுந்தது. அருட் புலவர் வாழ்க என்னும் ஒலி அதனை விஞ்சியது. வாழ்நாளெல்லாம் சோழன் வீரத்தால் விளங்கினான்; கொடையால் உயர்ந்தான்; புலவர் பாடும் புகழால் பூரித்தான்; பாவன்மையாற் சிறந்தான்; நண்பர்களால் பொலிந்தான்; வேந்தருள் வேந்தனாய்த் திகழ்ந்தான். ஆனாலும், என்றேனும் ஒருநாள் அடைந்தே தீர வேண்டிய இறப்பை அடையாதிருக்க முடியுமா? வளவனும் ஒருநாள் காலன் வாய்ப்படவே செய்தான். சோழன் அரண்மனைகள் பல இடங்களில் இருந்தன. சூழ்நிலை, காலநிலை இவற்றை எண்ணித் தங்குவதற்கு வாய்ப்பாக இருக்கும் பொருட்டுப் பல இடங்களில் அழகிய அரண் மனைகளைக் கட்டியிருந்தான். அவற்றுள் குளமுற்றம் என்னும் இடத்திலே இருந்த அரண்மனை மிகவும் சிறந்தது. அவ் வரண்மனையிலே தங்கியிருக்கும்போது கிள்ளிவளவன் இயற்கை எய்தினான். புலவர்கள் பலர் செய்தியினைக் கேட்டு ஓடி வந்தனர், இரவலர் ஏக்கத்தோடு சூழ்ந்தனர். மன்னவன் மறைவால் நாடு நகரெல்லாங் குளமுற்றத்தில் கூடிக் கசிந்து அழுதது. குளமுற்றம் கண்ணீரால் பெருகி வழிந்தது. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வர மாட்டார் என்பதை எவ்வளவு தெளிவாய் அறிந்திருந்தாலும் மனம் அமைதி கொள்வது இல்லையே! அதிலும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பைக் கண்ட மக்கள் நிலைமை யாதாகும்? வளவன் மறைவினைக் கேட்டு வருந்தி வந்தவர்களுள் நப்பசலையார் என்பவரும் ஒருவர். அவர் வளவன் களப்போர்ச் சிறப்பையும், காலன் வாய்ப்பட்டதையும் இணைய எண்ணித் துன்புற்றார். அந்தோ! காலனே! நீ வளவன் உயிரைக் கொண்டாய். ஆனால் உண்மையாகச் சொல்கிறேன். நீ காலன் உருவில் வந்து உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. மனக்கறுவினைக் காட்டிக் கொண்டு கிள்ளியினிடம் வந்திருந்தால் உன்னை மாட்டி வதைத்துத் தொலைத்திருப்பான். வெளிப்பட நின்று நீ அவன் உயிரைக் கொண்டு செல்ல வந் திருந்தால் உன்னை வெட்டி வீழ்த்தியிருப்பான். அவனை மெய் யோடு தீண்டிக்கொண்டு செல்ல வந்திருப்பின் உன்னைக் கையோடு பிணைத்துச் சிதைத்திருப்பான். ஆகையால் இவ்வழிகளால் நீ அவனைக் கொன்றிருக்க முடியாது; இரவலர் புரவலனாய் விளங்கிய அவன் பண்பினை அறிந்து நீயும் ஓர் இரவலன் வடிவிலே வந்து உயிரைப் பரிசாகப் பெற்றிருக்க வேண்டும் என்று கலக்கமுடன் கண்ணீர்த் துளி களுக்கிடையே பேசினார். வளவனுடலுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன் களைச் செய்துமுடித்தனர். அக் காலத்தில், இறந்தவர்களைத் தாழிகளிலே இட்டுப் புதைத்து வைக்கும் வழக்கம் இருந்தது. அத்தாழி முதுமக்கள் தாழிஎன்று அழைக்கப் பெற்றது. அத் தாழியிலே வளவன் உடலை வைத்து அடக்கம் செய்தனர். அந்நிகழ்ச்சியைக் கண்டார் ஐயூர் முடவனார் என்னும் புலவர். அவரால் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலம் செய்யும் வேட்கோவே! (குயவனே) கலம் செய்யும் வேட்கோவே! புலவர் பாடும் புகழும், கதிரோன் போன்ற உணர்ச்சியும் உடைய வளவன் வானவர் உலகம் போயினான். மண்ணோடு விண்வரை வளர்ந்த அவனை மூடி வைக்கும் தாழி செய்ய உன்னால் இயலுமா? இரங்கத் தக்கது உன் நிலை என்று ஏங்கித் துடித்தார். அறிவில்லாத கூற்றுவனே! கேடு செய்து கொண்டாய்! உனக்கே கேடு செய்து கொண்டாய். உன் பசியைக் களப் பலியால் நாள் தோறும் போக்கி வந்த வளவனைக் கொன்று விட்டாய். இனி உன் பசியைத் தீர்ப்போர் யார்? கொடிய கூற்று, விதைக்காக வைத்திருந்த மணியை - ஒன்றுக்கு நூறாக விளைந்து பயன்தர வைத்திருந்த மணியை - அறிவில்லாத உழவன் சோறாக்கி உண்டதுபோல் வளவனை உண்டு விட்டாய். உன் சிறு செயல் உனக்குப் பெருந் தீமை தந்தனை அறிவாயோ?என்று அழுகைக் கிடையே கூறினார் மாசாத்தனார் என்னும் புலவர். மண்ணவனாய் வாழ்ந்தும் விண்ணவனாய்ப் புகழ்பெற் றான் வளவன். அவன் புகழ் வாழ்வதாக! 16. உலகங் காணா உயர்வீரர் கதை 1 பள்ளிகள் தோறும் விளையாட்டுகள் நடை பெறுகின்றன. விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்குமாறு போட்டிகள் நடத்துகின்றனர். போட்டியில் தனித்தோர் போட்டியும் உண்டு, குழுவினர் போட்டியும் உண்டு. உயரத் தாண்டல், நீளத் தாண்டல், கழை தாவல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம் ஆகியவை தனிப்பட்டோர் போட்டி! உந்து பந்து, உதை பந்து, வளை பந்து, கூடைப் பந்து, பூப் பந்து, சடுகுடு ஆகியவை குழுவினர் போட்டி. தனித்தோர் போட்டியிலும் வெற்றி, தோல்வி உண்டு. இரு சாராரும் வெல்வதோ, இருவரும் தோற்பதோ இல்லை. ஒருவர் வென்றால் ஒருவர் தோற்றே தீரவேண்டும். ஓரொரு வேளையில் இருவர் ஆட்ட நிலையும் இணையாக இருக்குமாயினும், மீண்டும் ஒரு வேளை ஆடச் செய்து வெற்றி தோல்வி காண்பதும், பதக்கங்களும் - பரிசுகளும் தருவதும் வழக்கு! விளையாட்டுப் போட்டி போன்றதுதான் வீரப்போட்டி யும், தாக்குவோன் ஒருவன்; தடுத்து நிறுத்துவோனும் ஒருவன். தனித்தோர் போர் இது. தாக்குவோர் பலர்; தடுத்து நிற்போரும் பலர்; இது குழுப்போர், இனப்போர், நாட்டுப்போர்! மற்போர் புரியவோ, கருவிப்போர் புரியவோ ஒருவர் விரும்பி நிற்கலாம். அவனை அவனுக்கு நிகரான வலியவன் எதிர்த்து நிற்கலாம். காட்டை அழிக்கவோ, மதிலை இடிக்கவோ, மண்ணைக் கவரவோ பலர் விரும்பி வரலாம். அவர்களுக்கு இணையான வீரர்கள் அவர்கள் ஆசையை அழிக்குமாறு முனையலாம். எனினும் இப்போட்டிகளிலும் வெல்வோர் ஒருவர், அல்லது ஒரு கூட்டத்தார். தோற்போரும் ஒருவர் அல்லது ஒரு கூட்டத்தார். இருவரும் - தாக்குவோரும் தடுப்போரும் - வெல்வதும் இல்லை; தோற்பதும் இல்லை. போட்டி விளையாட்டில் கலந்துகொண்ட இருபக்கத் தவரும் வென்றனர்; எவரும் தோற்கவில்லை என்றால் வியப்பாக இருக்குமல்லவா? அதேபோல் போரில் கலந்துகொண்ட இருசாராரும் வெற்றி கொண்டார்கள், தோற்றவர்கள் இல்லை என்றாலும் வியப்புத்தானே! ஆனால் உலகம் காணமுடியாத - உலகியலில் நம்புவதற்கு அரிய - தாக்கினோரும் எதிர்த்து நின்றோரும் ஆகிய இரு திறத்தவர்களும் வெற்றி கொண்ட போர்கள் தமிழகத்தில் பழங்காலத்தில் இரண்டு நடைபெற்றுள்ளன. அவற்றை அறிந்து கொள்ள ஆவல் எழுவது இயற்கைதானே! நம் முன் னோர் பெருமை, நம் பெருமை அன்றோ! நம் பரம்பரைப் பெருமையிலே நமக்கும் பங்கு உண்டு அல்லவா! 2 வானவர் நாடெனப் போற்றும் சிறப்புடையது சேரநாடு. வானளாவ வளர்ந்துள்ள மலைகளையுடைய நாடாகலின் வானவர் நாடெனப் பெயர் பெற்றது. சேரர் வில்லவர் என்றும் பெயர் பெற்றனர். வில்லினைக் கொடியாகக் கொண்டிருந்த அவர்களது வில் வீரத்திற்கு வேறு சான்றுகள் வேண்டா. இவ் வில்லவர் குடியிலே வந்த வீரவேந்தர்களுள் நெடுஞ்சேரலாதன் என்பவனும் ஒருவன் ஆவன். நெடுஞ்சேரலாதன், குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றும் அழைக்கப்படுவான். தமிழகத்தின் மேல்பால் பகுதியை அரசோச்சி வந்தமையால் சேரருக்கு குடவர் கோமான் என்பதும் பெயராயிற்று. (குடம் - மேற்கு) சேரநாடு குடபுலம் என்று குறிக்கவும் பெற்றது. சேரலாதன் பெருங் கொடையாளி. அவனை இரவலர் தேடிவராத நாளே இருக்காது புலவர் பாடிச் செல்லாத நாளென ஒன்றைக் கூறமுடியாது. அவன் அரண்மனையில் இருக்கும் நாள்களிலெல்லாம் ஏதேனும் இசை நிகழ்ச்சியோ, கூத்து நிகழ்ச்சியோ இல்லாமல் இருக்காது. அவன் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான் என்றால் போர்க் களத்தில்தான் காணவேண்டும். குகையைவிட்டு வெளியேறி இரை மீது செல்கின்ற புலி போன்று இருக்கும் அவன் போர்ச் செலவு! மானத்தையே பெரிது எனக் கருதும் சேரன் மாற்றுவழி களிலே வெற்றி கொள்ள ஒப்பான். நேர்மையான வீரன்தானே மான வீரன்! புலி தன் பசியைப் போக்கிக் கொள்ளுமாறு ஒன்றைத் தாக்கி, மேலே தூக்கி எறிந்து கொல்லும். மேலே சென்றது வலப்பக்கம் விழுந்தால் அதை உண்ணுமாம்; இடப்பக்கம் விழுந்தால் எவ்வளவு பசித்திருந்தாலும் பொருட்படுத்தாமல் வேறொன்றை வலம்பட வீழ்த்தி அதன் பின்னதே உண்ணுமாம். அத்தகைய இயல்புணர்ச்சி அதற்கு உண்டு. புலி போல் அன்றி அறிவறிந்த மானம் உடையவன் சேரன். பின்னர், முறைகெடப் போர் புரிவானா? சேரன் போருக்குப் புறப்பட்டுவிட்டான் என்றால் வீரர் களுக்குக் கொண்டாட்டந்தான், ஏனெனில் அவன் போருக்குப் போகுமுன் வீரர்கள் வேண்டிய பொருள்களை வேண்டியபடி தருவான். தங்கள் விருப்பம்போல் அரசர் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லவா! இதனை அன்றிப் போருக்குப் புறப்படு முன் விருந்தொன்றும் உண்டு. விருந்து மிகத் தடபுடலாக இருக்கும். தொட்டால் மீதம் வைக்கமுடியாத சுவையும், பட்டால் மாறாத நறுமணமும் விருந்துப் பண்டங்களிலே கமழும். போருக்குச் செல்லும் வீரர் அனைவரும் ஒருங்கிருந்து உண்ணுவது உணவு தரும் இன்பத்தினும் பேரின்பம் தரும் அதனினும், மன்னனும் உடன் இருந்து உண்பான் என்றால் சிறப்புக்குக் கேட்கவேண்டுமா? வேந்தன் வீரர்களின் முன்னே சென்று என்ன வேண்டும்? என்ன வேண்டும்? என்று கேட்பான். சோறு போடு, கறி போடு, குழம்பு போடு என்று கூறிக்கொண்டு பம்பரம் போல் திரிவான். இந்நிலைமையில் மன்னனைக் காணவும் அவனோடு பழகவும் ஏற்படும் வாய்ப்பு வேறு ஒரு சமயத்துக்குக் கிடைக் குமா? இந்த மகிழ்ச்சியிலே உயிரையும் பொருட்படுத்தாது பகைவர்கள் மீது பாய்ந்து செல்வார்கள் இல்லையா! இவ்வாறு போருக்குப் புறப்படுமுன் அரசனுடன் இருந்து வீரர்கள் உண்பதை பெருஞ்சோற்று உடனிலை என்று கூறுவர். சேரன் பெருஞ்சோறு கொடுத்தான்; வேண்டிய பொருள் களை வீசி எறிந்தான். பறை முழக்கத்துடன் படை எழுந்தது. எங்கே? போர்ப்புறம் என்னும் இடத்திற்கு. போர்ப்புறம் சோழநாட்டைச் சேர்ந்த ஓரிடம். சோழனைத் தாக்குவதற்காகவே படை எடுப்பு நடந்தது. அந்நாளில் சோழ நாட்டைச் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்னும் அரசன் ஆண்டுவந்தான். கம்பு சுழற்றுதல் என்பது ஒரு கலை. சிலம்பம் என்றும் பெயர் பெறும். தற்காப்புக்காக அமைத்துக் கொண்ட பயிற்சிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது இக் கம்பு சுழற்றும் சிலம்பம். கம்பு சுழலும் விரைவில் பிறர் எறியும் சரமாறியான கற்களையும் தடுத்துவிடுகின்றனர். சிலர் இரு கைகளிலும் கம்புகளை வைத்துக் கொண்டு ஒன்றை ஒன்று முட்டாமல் - முரணாமல் - நிறுத்தாமல் - நெகிழாமல் கலையழகு தவழச் சுழற்றவும் பழகியிருக்கின்றனர். எல்லோர்க்கும் உரியதாம் பொதுத் திறமையினும் உயர் திறமை பெற்றோரை அத்திறமை கருதிப் பாராட்டுவதும், சிறப்பிப்பதும் இயற்கை. உயர்ந்தோர்க்கு உரியதுதானே புகழ்! இச்சோழன் வேல் தூக்கிச் சுழற்றுவதிலே தாக்குவதிலே பெரு வீரன். அவனுக்கு வேற்பயிற்சி விளையாட்டு ஆக இருந்ததேயன்றி வேலையாக இருந்தது இல்லை. ஒற்றை வேல் சுழற்றும் வீரப்பயிற்சியா கொண்டான் சோழன்? அது அவ் வளவு புகழ் தந்துவிடுமா? இரண்டு வேல்களை - பல வேல்களை - ஒரே சமயத்தில் கைகளில் எடுத்துக்கொண்டு திரிகை போல் சுழல்வான்! எதிர்த்து வந்தோர் வேல் சுழற்றும் விளையாட்டிலே மெய் மறந்து, விளக்கிடை வீழ்ந்து சாகும் விட்டிற்பூச்சி போலாவர். சோழன் கையும்தான் எத்தகைய கை? குறுகிய கை வேற்பயிற்சிக்குச் சரிப்படுமா? வேற்பயிற்சிக்காகவே நீண்டு வளர்ந்தது போன்ற கை - தடக்கை! இத்தகு சிறப்புகள் செறியப் பெற்ற வேந்தனை வாளா கூறுவரோ? சோழன் வேல் பல் தடக்கைப் பெருவிறற் கிள்ளி என்று கூறிச் சிறப்பித்தனர். (வேல், பல், தட, கை - வேற் பஃறடக்கை) தன் பெயரை நினையுந்தோறும், நினையுந்தோறும் நெஞ்சம் விரிய, தோள் நிமிர இருந்தான். இவனும் வீரன்; சேரலாதனும் வீரன். இருவரும் களத்தில் புகுந்தால் எப்படி இருக்கும்? வீரத்தின் உச்சநிலை எதுவோ - அழிவின் கடைசி நிலை எதுவோ - அதைக் கண்டுதானே தீர்வர். சிங்கமும் சிங்கமும் தாக்கினால்....? ஆண்டாலும், ஆண்மை யாலும் ஒத்த சிங்கங்கள் மனஞ் செருக்கிச் செம்மாந்து தாக்கி னால்....? மானம் உடையது வெல்லும். இல்லாதது தோற்கும். ஐயறிவுடைய அவற்றுக்கு இயற்கை மானம் உண்டு; அறிவுடன் கூடிய மானம் இல்லை. சீற்றமும், வெற்றி வேட்கையுமே அவற்றுக்கு உண்டு. ஆனால் ஆறறிவு பெற்று மானமே உயிர் எனக்கொண்ட வீரர் இருவர் பொருமாறு கூடினால்.....? படைவலியாலோ, அரண்வலியாலோ, ஒருவனில் ஒருவன் இளைத்திருந்தால், மிகுந்திருந்தால் ஒருவன் வெல்வான், மற்றொருவன் தோற்பான். எவ்வழியாலும் இணைந்த இருவருள் எவர் வெல்வது? தோற்பது? சேரனும் சோழனும் போர்ப்புறத்தில் சந்தித்தனர். உள்ள இடம் போதும், செல்வம் போதும் என்று பொதுவாக யாரும் நினைப்பது இல்லை. மேலுமேலும் நாட்டின் பரப்பையும், வளத்தையும் பெருக்குவதே குறியாகக் கொள்வர். இது இன்று நேற்று வந்தது அன்று. பண்டு தொட்டே அரசர்க்குரிய பொதுச் சொத்து ஆகிவிட்டது. இதற்குச் சேரன் விதி விலக்கா? சோழன் விதி விலக்கா? அறநெறியால் தன் நாட்டின் வளத்தைப் பெருக்கு வது வேந்தனுக்கும் மக்களுக்கும் - ஏன் - பகைவனுக்குக்கூட நன்மை தருவதே. ஆனால் மற்றவர்கள் உடைமையைக் கவர்வது கொள்ளை. அரசியலின் பெயரால் - ஆண்மையின் பெயரால் செய்யும் கொள்ளை. ஆனால் இக்கொள்ளையையும் கொள்ளை யர்களையும் உலகம் என்று பாராட்டத் தொடங்கிவிட்டதோ - வீரர் என்றும் வீராதி வீரர்என்றும் புகழத் தொடங்கியதோ அன்று தொட்டே ஒருவர் நாட்டை ஒருவர் சூறையாடுவது புகழ் ஆகிவிட்டது. பல்லாயிரம் பேர்களைப் பலியிடுவது பெருமிதம் ஆகி விட்டது. பெயர் கேட்டாலே பகைவர் நடுங்குவர் என்று பாராட்டினால் போதும் என்ற அளவில் பலவரசர்கள் நிலைமை இருந்தது. அவர்கள் நோக்கம் என்ன என்பதை முன்னமே அறிந்துகொண்டு ஆமாம் போடும் தளபதிகளுக்கும் பஞ்சம் இல்லை. போருக்குப் பஞ்சமா? போர் நடக்கும்; நாட்டிலே புகை சூழும்; பகை மூளும்; குருதியாறு ஓட்டமெடுக்கும். பிணங்கள் மலை மலையாகக் குவியும்! நாடு கவரும் எண்ணத்துடன் சேரன் சோழ நாட்டின் மீது பாய்ந்தான். போர்ப்புறம் என்னும் இடத்தே தங் கூடாரத்தை அடித்துக் கொண்டான். சோழன் சொரணை அற்றவனா? சேர்ந்துவிடுவானா? வருகிறேன் பார்; உன் வல்லமையைக் காட்டு என்று களத்துக்கு வந்துவிட்டான். போர் நடந்துதானே தீர வேண்டும். சோழன் வீரர்கள் ஆத்திப்பூ சூடியிருந்தனர். புலிக்கொடி பிடித்திருந்தனர். இருபக்கத்திலும் கடல்களோ, மேகமோ என்று கருதுமாறு படைகள் அணிவகுத்து நின்றன. பெரிய பெரிய மலைகளாகக் காட்சியளித்தன யானைகள். கொக்குகளைப் போன்று குதிரைகள் காணப்பட்டன. அம்புகள் கிளம்பின; வேல்கள் பாய்ந்தன; ஈட்டிகள் விரைந்தன; குந்தம் கோடரிகள் பறந்தன; பறவைகள் வட்டமிட்டன. இரத்த ஆறு பெருகிற்று. யானைகளையும், குதிரை களையும் இழுத்துச் செல்லும் அளவுக்குப் பெருகிற்று. இரு பக்கமும் கரைகளைப் போன்று பிணங்கள் குவிந்து கிடந்தன. சுறா மீன்களைப் போல ஈட்டிகளும் வேல்களும் வாள்களும் இரத்த வெள்ளத்துள் கிடந்தன. உடைந்த முரசங்கள் வழியாக மடையிலிருந்து நீர் ஓடுவது போன்று இரத்தம் ஓடிற்று. யானை களின் தந்தங்களும், முத்துக்களும்,மணிகளும் வைரங்களும் எடுப்பாரின்றிக் கிடந்தன. அற்ற தலைகள்; இற்ற உடல்கள்; வெட்டுண்ட கால் கைகள்; கிழிந்த முரசங்கள்; உடைந்த தேர்கள்; ஆ! ஆ! கொடுமை, கொடுமை. பருந்துகளும் கழுகுகளும் பந்தலிட்டன. நரிகளும் நாய்களும் ஓலமிட்டன; போர்க்களம் பலிபீடம் ஆயிற்று. களத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் எவர்? vŠá¥ ãiH¤jt®fŸ vt®?யாரும் இல்லை. உருத்து எழுந்த வீரர்கள் ஓடினர் அல்லர்; உணர்வொடும் உயிரொடும் இருந்தாரும் அல்லர். படைத் தலைவர்கள் கெட்டழிந்தனர் அல்லர் - பட்டழிந்தனர். வேந்தர் இருவரே எஞ்சியவர். போரை விட்டனரா? இல்லை. மீண்டும் போர்; மேலும் போர்; இடைவிடாப் போர்; தனித்த இருவராய்த் தாக்கிய போர். விற்போர் - வேற்போர் - வாட்போர் - ஈட்டிப் போர் - மற்போர் - மாறி மாறிப் போர்கள்! இறுதி நிலை என்ன? வேந்தர் இருவரும் வீழ்ந்தனர். குற்றுயிராய் வீழ்ந்தனர், சோழன் இறந்தான்! சேரன் குற்றுயிராய்க் கிடந் தான். அந்நிலையிலும் அவன் உணர்ச்சி தேய்ந்து விடவில்லை. உயிரொடும் ஒன்றிய வள்ளன்மை குறைந்தது இல்லை. போர்ப்பறை அறையக்கூடியவர்கள் அவன் கண்களுக்குத் தென்பட்டனர். கையசைத்து அழைத்தான் வீரமன்னன். பறை முழக்குவோர் பக்கலில் வந்தனர். இதோ, இதனைக் கொள்க என்று தன் கையால் சுட்டிக் காட்டினான். எதனை? தன் கழுத்திலே கிடந்த பொன்னாரத்தை. இறக்கும் வேளையிலும் ஈகை போகவில்லை. எடுத்துக்கொள் மாலையை என்று சுட்டிக் காட்டுகிறான். என்னே வள்ளன்மை! பறை முழக்குவோர் குடியின் வறுமையை நினைந்து வருந்திக் கொடை புரிய விழைகின்றது. வள்ளன்மை யுள்ளம். ஆனால் வாள், வேல் இவற்றைக் கொண்டு வீரத்தின் பெயரால் களத்திலே ஆயிரம் ஆயிரம் உயிர்களை வெட்டி வீழ்த்துகின்றது. வன்மையுள்ளம். தனியொருவன் வாழ்வு பொது வாழ்வின் போக்கைப் பொறுத்தது. அன்றைப் பொது வாழ்வின் அதுவாக இருந்தது. தனி வாழ்வும் அதுவாயிற்று. சேரலாதன் செயல் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. போர்க்களத்திற்கு வந்த புலவர் கழாத் தலையார் என்பவரைக் கவர்ந்தது. கழுத்தில் கிடந்த ஆரத்தை ஆவியோ நிலையில் கலங்கி, ஆக்கை அகத்ததோ புறத்ததோ என்று அறிய இயலாத இறுதிப் பொழுதிலும் கழற்றிக் கொள்ளுமாறு ஏவும் உயர் நலம் புலவர் உணர்வைத் தட்டி எழுப்பியது. அது ஒரு பாட்டு ஆயிற்று. வீரர்கள் கூடிப் போர் புரியும் இக்களத்திலே யானைகள் நிறையத் திரியும். வெற்றி கொண்ட வேந்தர் அவற்றைத் தரப் பெறலாம் என வந்தோம். ஆனால் மழை முகிலைத் தடுத்து நிற்கும் மலைபோன்று யானைகள் கிடக்கின்றன, அம்புகளால் தாக்கப்பட்டு, அழகுமிக்க தேர்களைப் பெற்றுப் போகலாம் என விரும்பினோம். ஆனால் அவை விரைவுமிக்க குதிரைகள் இழுத்துத் திரிதலால் சிதைந்து முறிந்து சிதறிப் போய்க் கிடக்கின்றன. வெட்டிக் கத்தரிக்கப் பெற்ற தலையாட்டம் உடைய குதிரைகளைக் கொடுக்கக் கொண்டு செல்லலாம் என்று கருதி னோம். ஆனால் உடலெல்லாம் புண்ணாகி நிலத்திடை வீழ்ந்து காற்றினால் தள்ளப்படாத கப்பல் போல இரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன. இனியும் பெறுவதற்கு என்ன உளது? பரிசில் பெறாத வறுமையுள்ளத்திற்கு மகிழ்வும் உண்டோ? என்று வருந்துமாறு ஆயது. போர்க்களத்தையே வயலாக்கி, வாளையே ஏராக்கி உழுது, காலாட்படையையே வைக்கோலாக்கி மிதிக்கும் உழவனே! யானையின் கால் தடத்தைப் போன்றதாம் தடாரி என்னும் பெயருடைய பறையை அடித்துக்கொண்டு வந்தது உனது திண்ணிய தோளில் பாம்பு சுற்றிக் கிடந்தால் போல் கிடக்கும் ஆரத்தைப் பெறுவோம் என்பதற்காகவோ? என்று இரக்க மிக்குப் பாடினார். சேரமான் கொடையிலே தோய்ந்து நின்று பாடிய கழாத் தலையாரைக் களக்காட்சிகள் இழுத்தன. நெக்குருகிக் கண்டார்.tªjt®fŸ எத்துணையர்? பிழைத்தவர் உளரா? எல்லோரும் இறந்தொழிந்தனரே! இருநாடுகளிலும் இருந்த ஏற்றமிக்க வீரர்கள் இறந்துபட்டனரே! என்னே கொடுமை! என்று ஏங்கினார். இணையான வீரர்கள் எப்படி ஒருவரை ஒருவர் வெல்வர்? இருவரும் பட்டனர். எத்தனை எத்தனை புண்கள்! புண்களைப் பேய்கள் விடுகின்றனவா? தம் கையால் தோண்டியும் குடைந்தும் கிளறியும், கைகளை இரத்தமாக்கித் தலையிலும் தேய்த்துக் கொள்கின்றனவே. மெதுவாக ஒலிக்கும் அழுகைப் பறை போன்று சிறகுகளை அடித்துக்கொண்டு ஊனைத் தின்னுமாறு பருந்துகள் செல்கின்றனவே. அரசர்கள் வீழ்ந்ததனால் அவர்களின் குடைகள் நிற் கின்றனவா? முரசங்கள் முழங்குகின்றனவா? வீரர்கள் உயிரோடு இருக்கின்றனரா? போர்க்களத்தை உரிமையாக்கிக் கொள்வோர் உளரா? வெற்றி பெற்றோம் என விம்மிதம் கொள்வோர் உளரா? தோற்றோம் என்று தொல்லைப்படுவோர் உளரா? இல்லையே. ஊனை உண்ணுதற்கு வந்தவற்றின் ஆரவாரம் அன்றி வேறு ஆரவாரம் ஒன்றும் இல்லையே! அந்தோ! வீரர் இறந்தபின் அவர் மகளிர் உயிர் வாழ எண்ணினரோ? பச்சிலையைத் தின்றுகொண்டு கைம்மை நோன்பு கொண்டு இருக்க நினைந்தனரோ? பட்டார் கணவர் என்னும் ஒலி காதில் பட்டவுடனே களத்திற்கு வந்து அவர் மார்பிலே வீழ்ந்து புரண்டு வீரச்சாவு பெற்றனரே. வேந்தர்களே! வீர வேந்தர்களே பொலிக நும்புகழ் என்று வாழ்த்தினார். போரினைக் கேள்விப்பட்டுக் குலை குலைந்து ஓடிவந்த புலவர்களுள் பரணரும் ஒருவர். அவர் களமெல்லாம் அடங்கிக் கிடந்த இறுதிப் பொழுதிலே வந்துசேர்ந்தார். களக்காட்சி கொடுமையாக இருந்தது. முழுக் களத்தையும் முறை முறையே கண்டார். கண்கள் குளமாயின. இத்தகைய அழிபாட்டை இதற்குமுன் கண்டாரல்லர். அவர் இதற்கு முன்னும் களங் களைக் கண்டது உண்டு. வீரர்களையும் கண்டது உண்டு. ஆனால் இக்களம்போல் கடுந்துயர் ஆக்கிற்று இல்லை. என்ன கொடுமை! நாட்டையே ஒரு சேரக் கொன்று குவிக்கும் சூறைக் காற்றோ இப்போர்க் களம்? பெருங்காட்டைச் சிதைத்துப் போட்டது போலாக அல்லவோ உள்ளது என்று வருந்தியது அம்மெல்லிய மனம்; மீண்டும் அவர் கண்கள் அழிபாட்டைக் கண்டன. எத்தனை எத்தனை யானைகள்; அத்தனையும் ஓய்ந்து விட்டனவே; மண்ணிலே சாய்ந்தும் விட்டனவே; காற்றுப் போல் விரைந்து செல்லும் தேர்கள்தான் எத்தனை? அவையும் என்ன ஆயின? கண்ட துண்டங்களாகிச் சிதைந்து பட்டனவே. குதிரைகள் தாம் எத்தனை? ஒன்றாவது நிமிர்ந்து நிற்கின்றதா? நிலத்திலே வீழ்ந்தும் அவற்றின் மீது இருந்த வீரர்கள் கீழே இறங்கினார்களா? தலையற்றுப்போய் முண்டமாகியும் விழ வில்லையே? வீரர்கள் மட்டுமா இறந்தனர். வேந்தர்களும் வேல் துளைத்துச் சென்றமையால் இறந்தனரே! இனி இவர்கள் நாடுகள் என்ன ஆவது? நாட்டிலே வளம் உண்டு. வளத்தினைக் கொண்டு வருவோர்க்கு விருந்து செய்து பேணிக் காக்கும் வளைக்கை மகளிர் உளர்; ஆனால் இனிப் பயன்படுமோ? என்று புலம்பினார். எதிர்காலத்தவராயினும் எண்ணிப் பார்த்துத் திருந்த வேண்டும் என்று கருதிய பரணர் தம் கருத்தை ஒரு பாடல் ஆக்கினார். அழிபாட்டுக்குமேல் அழிபாடு சூழும் கேட்டை, இறந்து பட்டோர் அன்றி இருப்போர்க்கு உளதாம் கேட்டை, அந்நாட்டினரே அன்றி அயனாட்டினார்க்கும் எய்தும் கேட்டை விளக்கமாக உரைத்தார். அருள் உள்ளம் அச்சமிக்க களம் சென்றும் அஞ்சாது அருளுரை கூறியது. அக்களத்தில் கிடந் தோர் அறியும் நிலைமையில் இல்லை. ஆனால் பின் வரு வோராவது அறியவேண்டும்! அறிந்து திருந்தவேண்டுமே! நாட்டின் நலங்கருதி உரைக்கும் உரைமணிகள் எப் பொழுது சிறக்கும்? எப்பொழுது பயன்படும்? ஏற்றுப் போற்று வோர் - நடைமுறைக்குக் கொண்டு வருவோர் உளராயின் அன்றோ! தேன் என்பது சுவைமிக்க சொல்தான். ஆனால் தேன் என்னும் சொல்லுடன் அப்பொருளும் வந்தால் அல்லவோ நற்சுவை! மக்கள் சுவையை விரும்பாமலா இருக்கின்றனர்? விரும்பு கின்றனர். தங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கவேண்டும் என விரும்புகின்றனர்; பிறர் விரும்பினால் வெறிகொள்கின்றனர், வெறியை எவ்வெவ் வழிகளிலெல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வழிகளிலெல்லாம் வளர்த்து விடுகின்றனர். வளர்ந்த வெறி வெறியாட்டம் ஆடாமல் போகுமா? பிறரை ஆட்டாமல் போகுமா? மனிதர்க்கு மானம் வேண்டும்; ஆண்மையும் வேண்டும். ஆனால் அந்த மானமும் ஆண்மையும் போர்க்களத்தில் முளைத்துக் கிளைத்து முதிர்ந்து கனி தரவேண்டும் என்பது இல்லை. தன்னை - தன் குடும்பத்தை - தன் நாட்டை - உலகத்தைக் காக்குமாறு பயன்படவேண்டும், மானத்தையும் ஆண்மையை யும் காக்குமாறு புகுந்த செயலிலே நாடுகளை அழிந்து படுமாறு ஆவது கொடுமை! சங்க காலத்தே ஆண்மையும் மானமும் மிக ஆட்சி செலுத்தின. போர்க்களத்தையே அரங்கமாகக் கொண்டு மன்னர்களைக் கூத்தர்களாக ஆக்கி ஆட்சி செலுத்தின. பார்வையாளர்களும் இல்லாமல் போகவில்லை; அறிவு மாண்பும், ஒழுக்க மாண்பும் உரிமை மாண்பும் பல்கியிருந்த காலம்தான். எனினும் போர் வீரம் பாராட்டுதற்குரிய புகழ்வழியாக - புகழ் வழிகளுள் சிறந்ததாகப் போய்விட்டது. அன்றும் போர் வெறியை வெறுத்தோர், ஒழிக்க முனைந்தோர் இல்லாமல் இல்லை. எனினும் அவர்கள் எண்ணிக்கை குறைவு. வெறியாளர் எண்ணிக்கையோ நிறைவு. போர் நின்றபாடில்லை. என்னதான் உணர்ச்சியால் உந்தப்பட்டுப் போருக்குச் சென்றாலும் வெல்பவர் ஒருவர் - தோற்பவர் ஒருவர். ஆனால் இருவரும் வெல்வது காணமுடியாத ஒன்று. குடக்கோ நெடுஞ் சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் இணையான வீரர் ஆயினர்! இருவரும் வென்ற வீரர் ஆயினர்! இதனால் உலகங்காணா உயர் வீரர்களே இவர்கள். 3 ஒரு பெருங்கூட்டம்; ஆண்கள் பெண்கள் அனைவரும் கூடிய கூட்டம்; கிழவரும் இளையரும் திரள் திரளாய்க் கூடி யிருக்கின்றனர். யாழும் குழலும் வைத்திருக்கும் கலைஞர்களே அன்றி வேலும் வில்லும் வைத்திருக்கும் மறவர்களும் கூடி யிருக்கின்றனர். எல்லோரும் இமைகொட்டாமல் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர்! கூட்டத்தின் இடையே வீரன் ஒருவன் உட்கார்ந் திருக்கிறான். அமைதியாக வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறான், அவன் முகம் பொலிவுடன் விளங்குன்றது. .அவன் அகத்தின் தெளிவு முகத்திற்கு மேலும் பொலிவு ஆக்குகின்றது. கண்கள் செவ்வானம்போல் சிவந்துள்ளன. ஆனாலும் கருணையும் வீரமும் மாறி மாறிக் காண்கின்றன. முகத்திற்கு அழகு ஊட்டும் மீசை திருகிக் குழைந்து நிமிர்ந்து காட்டுகின்றது. அதன் தோற்றம் உட்கார்ந்திருப்பவன் வீரத்தைப் புலப்படுத்தத் தவறவில்லை. தோள்கள் முரசங்களை நினைவூட்டுகின்றன. தோள் மேல் கிடக்கும் மணி மாலைகள் வானவில்லினை நினைவுறுத்துகின்றன. முகத்திலும் மார்பிலும் பட்டிருக்கும் புண்கள் ஏராளம். அவை புகழ் முத்திரைகளாகவும். புகழின் கண்களாகவும் அருகில் இருப்போரால் பாராட்டப்படுகின்றன. இத்தனை புண்களையும் தாங்கிக் கொண்டு இனிதின் இருக்கும் இவனே வீரன் என்னும் வாழ்த்தொலி செவி செவிடுபடச் செய்கின்றது. மார்பிலே பட்டு முதுகுவழி உருவிச்சென்ற வேல் ஒன்றே அவனை வடக்கிருக்க வைத்துவிட்டது. ஏன்? ஆழமாகப் புதைந்து ஆருயிரைத் தளரச் செய்து விட்டதா? இரத்தம் எல்லாம் கொட்டிப்போய் விட்டதா? வலி தாழவில்லையா? இவையெல்லாம் பொருட்டல்ல வடக் கிருக்கும் வீரனுக்கு. கடைசி மூச்சுவரை அவன் வீரம் குறையப் போவது இல்லை. மார்பிலே புண்படுவது மானப் புண்ணாகும்; மாண்புப் புண்ணாகும்; ஆனால் முதுகிலே படுவது ஈனப்புண்; இழிவுப்புண்! முதுகிலும் புண்பட்டுள்ளதே! இல்லை! இல்லை! மார்பில் பட்டு முதுகுவழி வந்த வேலின் உருவலால் ஏற்பட்டதன்றோ இப்புண். பின் எப்படி முதுகுப்புண் ஆகும்? உடனிருந்தோர். களத்திலே நின்றிருந்தோர் முதுகுப்புண் அன்று, மார்பின் வழி வந்த புண் என்று அறிவர். முதுகை மட்டும் பார்த்தவர்களுக்கு அது முதுகுப்புண் ணன்றோ? ஏன் இப்படியும் எண்ணலாமே! முதுகில் பட்டு ஊடுருவிச் சென்றதால் மார்புப் புண் ஆயிற்று என்று அது எவ்வளவு இழுக்கு. ஒருவன் நினைவு - மார்பு புண் ஆயிற்று என்று. அது எவ்வளவு இழுக்கு. ஒருவன் நினைவு - ஒருவன் பேச்சு - அவ்வொருவனுடன் நிற்குமா? உறக்கமின்றி ஊரெல்லாம் பரவும் அன்றோ, அது பெருமையா? ஆதலால் உயிருடன் இருப்பது பெருமையன்று. வடக்கிருந்து இறப்பதே முறை என்று கருதி வடக்கிருக்கிறான். உடலெல்லாம் குருதி பெருகிக் கிடக்கிறது. பக்கமெல்லாம் கண்ணீர் வடித்து நிற்கின்றனர். சூழலெல்லாம் பிணக்காடுகளும் அறை குறை உயிருடன் கிடந்து அலறுபவற்றின் ஒலியும், பிணங்களை இழுத்துச்சென்று வயிறு புடைக்க விரும்பும் நாய், நரி, கழுகு, கூகை இவற்றின் ஆரவாரமும் மிகுகின்றன. வடக்கு இருப்போனுக்கு எதிரே தெற்கு நோக்கி ஒருவன் நிற்கின்றான்; வடக்கிருப்பவனது மார்புப் புண்ணைப் பார்த்துப் பார்த்து மனந்தளருகின்றான். தன் வீரத்தை நினைத்து நினைத்து வெட்க முறுகின்றான். அவனே போர்க்களத்தில் வேலை மார்பு நோக்கி ஏவி யவன். அவனே வடக்கிருக்கும் வீரன் மார்பைத் துளைத்தவன். வேலின் கூர்மையும், கையின் வன்மையும் தங்கள் வரிசையைக் காட்ட அதுகண்டு உவகை பூத்தவன். வெற்றி, வெற்றி பகைவன் வீழ்ந்தான் என்று முழங்கியவன். அவனே இப்பொழுது கண்ணீர் வடிக்கின்றான். போரில் வென்றேன் யான்; புகழால் வென்றான் இவன். இவ்வெற்றிகளுள் எவ்வெற்றி சிறந்தது, புகழ் வெற்றியே சிறந் தது. இவன் வெற்றியே சிறந்தது வென்றும் தோற்றேன் என்று நெக்குருகி நிற்கின்றான். வடக்கிருப்பவன் யாவன்? அவனைக்கண்டு கலங்கிக் கண்ணீர் வடிப்பவன் யாவன்? வடக்கிருப்பவன் சேரமான் பெருஞ் சேரலாதன் என்னும் பெயரான். சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டுப் போர்க்களத்திலே மாண்ட குடக்கோ நெடுஞ் சேரலாதனுக்குப்பின் சேர நாட்டின் அரசினை ஏற்றுக் கொண்டவன். இளமை முறுக்கு மிக்கவன். எழுச்சியின் எல்லை போயவன். விரைவில் சோழன் மீது வஞ்சினங் கொண்டான். தன் முன்னோனைக் களப்பலியாக்கிய சோழப் பரம்பரையைத் தாக்கி யழிக்குமாறு ஊக்கம் உந்தியது. போருக்குக் கிளம்பி விட்டான். மலை நாட்டிலே யானைக்குக் குறைவுண்டா? “‘xU NY¡F¥ g¤J F£ofŸ nghL»‹wdth Ëeh£oš ahidfŸ? என்று வியந்து கேட்குமாறு விளங்கிய நாடன்றோ சேரநாடு கருங்கற் பாறைகளின் இடையே பசுக்கள் திரிவது போன்று களிறுகள் திரியும் நாடு என்று பாராட்டிப் புகழும் நாடன்றோ அந்நாடு: நிறைந்து வந்தன யானைகள்; சேரனும் வீரச் செம்மல்தான். எனினும் எதிர்த்து நிற்பவன் எத்தகையன்? கரிகளுக்குக் காலன் ஆனவன். கரிகாலன் என்பது அவன் பெயர் கால்கரிந்தவன் என்றும் கரிகளைக்காலால் எற்றித்தள்ள வல்லான் என்றும் காரணம் காட்டுவர். ஆனால் அவை உண்மையோ பொய்யோ! அவன் கரிகளுக்குக் காலனாக அமைந்தவன் என்பது மட்டும் உண்மை. எள்ளளவும் ஐயமற்ற உண்மை காவிரிக்கு அணைகட்டிக் கழனி நாடாக்கிய கரிகால் வளவன்தான் இவன். இளமையிலே பகைவர்க்கு இடையே சிக்கிக்கொண்டான் இவன். பகைவரைப் பொருட்டாய் எண்ணினானா? இளைத் தானா? ஏங்கிக் கிடந்தானா? பகைவர்கள் சிறுவனான இவனைச் சிறுவன் என்றும் எண்ணாது அச்சங்கொண்டு அரணுக்குள். வைத்துக் காத்தனர். ஆனால் அரணுக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை அரியேறுபோல் கிளம்பினான். மடங்கல்போல் மதில் மேல் தாவினான். கொம்புடைய பேராண்மைக் களிறுபோல் குழிந்து ஆழ்ந்திருந்த அகழைத் தாண்டினான். பகைவர்கள் கண்களுக்கு அகப்படாமல் பாதுகாப்பான இடத்திற்குச் சேர்ந்து விட்டான். பச்சிளம் பருவத்தே இருந்த இந்த ஆண்மை பாராளும் வேந்தன் ஆனபிறகு விஞ்சாமல் குறையவோ செய்யும்? கரிகாலன் அருமை மாமன் இரும்பிடர்த் தலையார். நூலறிவும் நுண்ணறிவும் வாய்ந்தவர். அரசியலும் பொரு ளியலும் ஆய்ந்து கண்டவர். கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மிக்கவர். அவரே மருகனை மறைவிடத்தில் வைத்துக் காத்தவர். தக்க நாளிலே மன்னனும் ஆக்கிவைத்தார். பகைபட்டு நின்றோர் செய்தியினை அறிந்து, நகைப்பட்டுப் போயினர். அற்றை இளமையிலே பகைவர் முகத்தில் கரியைப் பூசிக்காட்டி அவர்க்குக் காலனாக இருந்தவனன்றோ இக் கரிகாலன்? இற்றை நிலையில் எத்தகையனாக இருக்கமுடியும்? ஆண்மை இப்படி இருக்க. அறிவுடைமையும் அரசியல் திறமையும்தான் எவ்வாறு இருந்தன? தங்கள் வழக்குக் காரணமாக நாடாள்வோனிடம் முறையிட வந்த முதியவர் இருவர் இளைஞன் கரிகாலனைக் கண்டு இவனோ மன்னவன்? இவ்விளைஞனோ மன்னன்? அனுபவமோ, அரசியல் அறிவோ பெற்றிருக்க இயலாத இவ்விளையனோ முதியராம் நம் வழக்கை முறையோடு கேட்டு நிறைபடச் செய்பவன்? இவனிடம் முறைகேட்டு நிற்பதே பெருங்குறை என்று பேசிக்கொண்டு வெளியேறினர். அதனை வாயில் காவலர் வழி அறிந்துகொண்ட கரிகாலன், வேந்தர் உள்ளே இருக்கிறார்; இவனல்லன் என்று அவனால் அறியச் செய்து அவர்களை மீண்டும் வரச்செய்தான். வந்தவர்களோ நரைத்த தலையும், திரைத்த முகமும் முதுமைக் கோலமும் உடைய மன்னரைக் கண்டு மகிழ்வு கொண்டனர். புவி யாள்பவனும் புன்முறுவல் பூத்து வழக்கினை நன்முறையில் கேட்டறிந்து நன்று நன்று என்று அவர்கள், இருவரும் ஏற்குமாறு நீதிமுறை செய்தான். மன்னன் மாண்பு என்னே! மதிநலம் என்னே! ஆய்வியல் அறியும் அரசியல் தெளிவும் என்னே! சோழ வேந்தனல்லன் இவன். அறமாம் தெய்வமே இவ்வரசன் உருவில் அரியணையில் அமர்ந்துள்ளது. இத்தெய்வத்தின் அடிக் கீழ்வாழும் பேறே பெறு என்று வியந்து பாராட்டினர். விடை பெறவும் விரும்பினர். அப்பொழுது. மன்னன் நரை அகன்றது; கருமயிர் முகிழ்த் தது; திரைச் சுருக்கும் அகன்றது; திங்கள் முகம் திகழ்ந்தது; முதுமைக் கோலம் அகன்றது. இளமைத் திருக்கோலம் பொலிந் தது. ஆம்! அரசன் முகமூடிகளை அகற்றினான். வெட்கம்! வெட்கம்! முதியவர்களுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. இவ்விளைஞன் யாவன்? முன்பு கண்ட இளைஞனே இவன். இவனே முதிய வேந்தன்! ஆ! ஆ! இளைஞன் என்று இவனைப் பழித்தோம்; முதியனாய் முறை கூறியது கண்டு வாழ்த்தினோம். இவன் திறம்தான் என்னே? வையும் வாயை வாழ்த்துமாறு செய்யவைப்பது எல்லாராலும் இயலக் கூடியதா? என்று வியப்பிலே பேசி நின்றனர். சோழன் பெரியவர்கள் கருத்தை அறியமாட்டானா? நொடிப்பொழுதில் அறிந்துகொண்டு விட்டான். முதியர்களே! வேதனையும் வேண்டாம். வியப்பும் வேண்டாம். முதுமை இளமை இவற்றைப் பொறுத்தது அன்று அறிவுடைமை. அது தனிப்பட்டோர் முயற்சியையும், குலத்தின் இயற்கையையும் சார்ந்தது. நடந்தது பற்றிக் கவலைப் படவேண்டாம். இனிதில் போய் வருக என்று அனுப்பி வைத்தான். முதியர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு தலை குனிந்து நடந்தனர். இந்நிகழ்ச்சி ஒன்று போதாதா கரிகாலன் அரசியல் சூழ்ச்சியையும், அறிவு மாண்பையும் காட்டுதற்கு? இவனிடம் மாட்டிக்கொண்டோர் உய்வது எப்படி? உரலுக்குள் தலையைத் தந்து உலக்கைக்குத் தப்ப முடியுமா? என்பது பழமொழி. வாலிபப் பருவத்தில்தான் என்ன செய்தான்? வாளா இருந்தானா? வடநாட்டு வேந்தர்களையெல்லாம் ஒருசேர வென்றவன் யாவன்? இமயத்தே புலிக்கொடி நாட்டியவன் யாவன்? வச்சிரவேந்தன் தந்த கொற்றப் பந்தல் பெற்றவன் எவன்? மகதவேந்தன் அளித்த பட்டி மண்டபம் பெற்றவன் எவன்? அவந்தி வேந்தன் தந்த தோரண வாயிலைக் கண்டவன் எவன்? கரிகாலன் அல்லனோ? இவையனைத்தும் வீரத்தால் பெற்ற விருதுகள் அல்லவோ? இக் கரிகாலன் குளம் தொட்டு வளம் பெருக்கினான். காடு கெடுத்து நாடாக்கினான். அணை கட்டி ஆற்றைப் பயன்படுத்தி னான். உழவர்களைப் பேணிக்காத்து உயர்வு எய்தினான். கலைஞர்களை ஆதரித்துக் கவின் அடைந்தான். பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்தான் ஒரு புலவனுக்கு. 301 வரி களையுடைய பட்டினப் பாலை என்னும் ஒப்புயர்வற்ற நூலை எழுதியமைக்காக. பட்டினப்பாலை இன்றும் கரிகாலனை உலகத்தோர் கண்முன் காட்டும் கலங்கரை விளக்கமாக இலங்கு கின்றது. கலையாலும், அறிவாலும் ஆண்மையாலும் சிறந் தோங்கிய கரிகாலனே தன் வீரப் பேற்றை வெண்ணியிலே காட்டினான். வெண்ணிக் களத்திற்குச் சேரன் மட்டுமோ படையுடன் வந்தான்? பாண்டியன் பக்கத் துணையானான். வேளிர் என்னும் குறுநில மன்னர் கூடிவந்தனர். வந்ததற்குக் காரணம் மண் ணாசைதான்! இருக்கும் இடம் போதும் என்று அமைதி கொள்வது அரசர்களுக்கு இழுக்கு ஆகுமாம். வீரங் காட்டாது சோம்பிக் கிடப்பது வேந்தர்களின் வீழ்ச்சிக்கு அறிகுறி ஆகுமாம். பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்துக் களப்பலி புரியா விட்டால் பழியாகுமாம். இவ்வாறு நாடும் ஏடும் கருதிக் கொண்டிருக்க - வேந்தர்கள் அமைதியாக இருப்பார்களா? பதிலுக்குப் பதில் தான். எடுத்தெறிந்த பந்து எழும்பித்தானே தீரவேண்டும். கைவிட்டுத் தவறிய கண்ணாடி தூள் தூள்! கரிகாலன் போருக்கு யானை மீது புறப்பட எண்ணினான். யானையின் தளையைக் கழற்றினர் யானைக் காவலர். அது பகைவரின் மனைவியர் தாலிகளைக் கழற்றி எறிவது உறுதி என்பதைக் காட்டிற்று. நிலமதிர நடந்த நடை பகைவர் குலம் அதிரும் என்பதைக் காட்டிற்று. ஆடி ஆசையும் டாண் டாண் மணியொலி எதிர்த்தோர்க்குச் சாவுமணி அடிக்கப்படும் என்பதைக் காட்டிற்று. கருமேகத்தின் மேல் ஏறிக்கொண்டு களத்திற்கு வந்தான். களம் வந்த யானை சூறைக் காற்றுப்போல் சூழ்ந்திருந் தோரை அலைக்கழித்தது. யானையையும் அதன் செயலையும் கண்டு உயிர் மேல் துளியளவு பற்றுக்கொண்டவர்களும் நிற்க ஆற்றாது அஞ்சினர். ஓடி ஒளிந்தனர்; ஒதுங்கினர். மலை நாடு கண்டறியா யானை வயல் நாட்டுக்கு எப்படிக் கிடைத்தது என்று திகைக்குமாறு களத்தைச் சிதைத்தது. சேரன் உள்ளம் வெதும்பியது. யானையை வீழ்த்துமாறு உள்ளம் துடித்தது. வேலினை எடுத்தான்; வீசி எறிந்தான். விரைந்து சென்ற வேல் - அம்மவோ - யானையின் மருமத்தில் தைத்து மறுபக்கம் உருவியது. (மருமம் = காதின் அடி) மலைபோலும் யானையும் நிலை தடுமாறியது. ஒருபக்கக் களம் கலங்கியது! மற்றொரு பக்கக் களம் களித்து ஆரவாரித்தது. கரிகாலனுக்கு - அவன் ஏறிவந்த கரிக்கு காலனாக வந்த சேரன்மேல் ஏற்பட்ட கடுஞ்சினம் எத்தகையதாக இருந்திருக்கும்? கண்கள் கனல் கக்க, முகம் சிவக்க, மயிர்க் கூச்செறியத் துடிதுடித்துப் போனான். என் யானையின் மருமத்தைத் துளைத்த சேரன் மார்பினை என் வேலால் துளைப்பேன் என்றான்; வலியவன் வஞ்சினம் வாய்க்காமல் போகுமா? களத்தைச் சூறையாடினான். படைவீரர்கள் பட்டழிந்தனர்; யானைகள் அலறித் தொலைந்தன; குதிரைகள் வீழ்ந்தன; தேர்கள் சிதைந்தன; களம் பிணக்காடு ஆயிற்று. சேரனை நோக்கிச் செம்மாந்து சென்றான் கரிகாலன். அவன் கண்களில் கப்பிக்கொண்டிருந்த கனல் வேலிலும் பாய்ந்தது போல் பொலிவுடன் விளங்கியது. வீசினான் - வேலை- அம்மவோ! குறி தவறவில்லை. சேரன் மார்பிலே பட்டது. முதுகு வழி வெளியேறியது. வஞ்சினத்தை முடித்து வைத்தது வலியவேல். சேரன் வீரத்தில் தாழ்ந்து விடவில்லை. போரே கண்ணும் கருத்துமாக இருந்தான். மார்புப்புண் என்றே எண்ணிக் கொண்டிருந்தான். வேல் மறுபக்கம் போனதை எண்ணினான் இல்லை. உணர்ச்சி வேகம் அறியாமல் செய்தது. விரைவில் அறிந்தான். அறிந்தபின் போர் உணர்ச்சி போய்த் தொலைந்தது. மான உணர்ச்சி தலைதூக்கியது. இப்புண்ணை முதுகுப் புண் என்பதா? மார்புப்புண் என்பதா? முதுகுப்புண் பட்டான் என்று எவனாவது சொல்வா னானால் - அறிவானானால் அது எம் குடிக்கு வராத பழி யாயிற்றே. முதுகுப்புண் பட்டேன் என்று எவனேனும் கூறக் கேட்பராயின் என் வீரத்தாய் என்ன கருதுவாள்? ஊட்டி வளர்த்து உரமூட்டிய தாய் என்ன நினைப்பாள்? முறங் கொண்டு புலிவெருட்டும் மலைநாட்டு மகளிர்தாம் என்ன நினைப்பர்? வேற்று நாட்டவர் விலா வெடிக்கச் சிரிக்கமாட்டார்களா? இனி எனக்கு வாழ்க்கைப் போர் வேண்டாம். வேண்டுவது மானப் போரே! வடக் கிருத்தலே அதற்கு வழி என்று முடிவு கொண்டான். களத்தின் இடையே ஓரிடத்தே வடக்கிருக்கத் தொடங்கி னான். தாங்கள் கருதிய ஒன்று இனிது கைகூடாது. இன்னல் சூழுமாயின் மானங்கருதி, உண்ணாதும் பருகாதும் வடக்கு நோக்கி இருந்து இறப்பர். இது வடக்கிருத்தல் என்றுகூறப்படும். மானம் அழிந்தபின் வாழாமை இனிது என்னும் கொள்கை யில் தலை நின்ற சேரன் வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்தான். மானமிக்க நிகழ்ச்சியை மான மழிந்த நிகழ்ச்சியாகக் கருதுமாறு செய்தது அவன் மான உணர்வின் மிகுதியே யாகும். கரிகாற் சோழன் வீரத்தால் வென்றான். சேரனோ மானத்தால் வெல்லுமாறு விரும்பினான். சேரனும் சோழனும் பொருத வெண்ணிப் போர்க்களத் திற்குப் புலவர் கழாத் தலையார் வந்து சேர்ந்தார். அவர் முன்னரும் சேர சோழர் செய்த ஒரு போரினைக் கண்டு புண் பட்டவர் அன்றோ. இப்போர் மேலும் துயரப்படுத்திற்று. ஞாயிறும் திங்களும் எதிர், எதிர் நின்று ஞாயிறு மேலே எழத் திங்கள் மலையிடை, மறைவதுபோல உரங்கொண்டு ஓச்சிய வேல் மார்பினை ஊடுருவிப் பட்ட புண்ணுக்கு நாண மிக்கு சேரன் வடக்கிருந்தான். இனி வரும் நாள் நன்னாள் அன்று. கெடியது அது. முன்போல் இனிவரும் நாள்கள் கழியவே கழியா. நாடு நகரங்களில் முரசு ஒலித்தலை இழக்கும். யாழ் இசைத்தலை இழக்கும்; பால் கடைதலை இழக்கும்; வண்டு தேன் எடுத்தலை இழக்கும்! உழவர் தொழிலை மறப்பர்; ஊர் விழா எடுத்தலை இழக்கும் என்று வருந்திக் கூறினார். வெண்ணி என்னும் அவ்வூரிலே பிறந்து சிறந்த நல்லியல் புலமை மெல்லியலார் ஒருவர் இருந்தார். அவர் குயவர் குடியிலே சிறந்தோங்கியிருந்தால் சீர்மை நோக்கிய சோழ வேந்தன் குயம் என்னும் தலைமைப்பட்டம் வழங்கினான். அதனால் அவர் வெண்ணிக் குயத்தியார் என்று அழைக்கப்பட்டார். அவர் ஊரில் தானே போர் நடைபெற்றது. அறியமாட்டாரா அவர்? சோழன் தம் நாட்டு வேந்தன்; அவன் பெற்ற வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்வது இயற்கையே. ஆனால் யாதும் ஊர், யாவரும் கேளிர் என்னும் உயர் வாழ்பினர்க்குத் தம் நாடு - வேற்று நாடு, தந்நாட்டு - வேந்தன் பிறநாட்டு வேந்தன் என்னும் இரு வேறுபட்ட எண்ணங்கள் ஏற்படுவது இல்லையே! இவ்வம்மையார் சோழன் வெற்றியைப் பாராட்டினார். அவ்வெற்றிப்பாட்டின் துன்ப நிலையைச் சுட்டிக் காட்டாமலும் செல்ல விரும்பவில்லை. வெற்றி கண்டு விம்மிதம் உறுவதற்கு வழியில்லை. சுட்டிக் காட்டவும் தவறவில்லை. உன்னைப் பார்க்கிலும் எவ்வகையிலும் குறைந்தவன் அல்லன் சேரன் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறவும் அயர்ந்தார் அல்லர். கடலிடைக் கலம் செலுத்திய காவல! களிப்புமிக்க யானைகள் மிக்க கரிகால் வளவ! போரிலே வெற்றி கண்ட புகழாள! உன்னினும் நல்லன் இவன் - வெண்ணிப் போரிலே புகழ் மிகப் பெற்று, புறப் புண்ணுக்கு வெட்கி வடக்கிருக்கும் இவ்வீரன்! என்றார். சேரன் வடக்கிருத்தலை நோக்கி அடக்க முடியாக் கவலைக்கு ஆளாகியிருந்த கரிகாலனுக்கு வெண்ணிக் குயத்தியார் உரை உண்மை என்றே தோன்றியது; இனித் தோன்றி ஆவது என்ன? அழுதாலும் வராது ஆனதற் பின்னே என்பது பழமொழி. சேரன் வடக்கிருத்தலைக் கேட்டறிந்தனர் ஆன்றோர் சிலர். ஓடோடியும் அவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள் வாய் பேசியது இல்லை. உணர்ச்சி பொங்கிற்று. சேரன் நிலைமையைக் கண்டு உள்ளம் அடங்கிப் போய்விட்டனர். அவர்களும் வடக்கிருந்தனர். அந்தோ! ஆன்றோர் பலரையும் உடன் சேர்த்துக் கொண்டான் சேரன். அவன் என்ன செய்வான்? இவர்கள் வந்து தன்னுடன் வடக்கிருப்பதையே அறியானே. பிறர் அழுது அரற்றுமாறு சாவும் சாவே சிறந்தது என்று கூறும் உலகத்தே, அறிவு நலமும், பண்பு நலமும் ஒருங்கு கனிந்த ஆன்றோர் பலர் உடன் இறக்குமாறு சாவும் சாவு எல்லோருக்கும் கிடைப்பதா? போர் வீரம் காட்டினோர்க்குக் கிடைப்பதா? சேரனுக்குக் கிட்டியது. உலகங்காணா உயர் வீரனாக அவன் இருந்ததால்! அந்த உணர்வு எங்கே? நூல் வரவு மொழிஞாயிறு பாவாணர்க்கு அணுக்கத் தொண்டர் புலவர் திருமலி செங்கை மதுவனார். பாவாணரையும் பாவேந்தரையும் ஒருங்கே கண்டு அவர்கள் உரையாட்டில் கொண்ட தனித்தமிழ் ஈர்ப்பால் ஓவியப் புலவராக இருந்த அவர், ஒண்டமிழ்ப் புலவரும் ஆகியவர், பாவாணரால் முனைவர் எனவும் பாராட்டப் பட்டவர். செங்கை என்னும் செங்காட்டுப் பட்டியின் செங்கைச் செந்தமிழ்க்கிழார், செங்கைப் பொதுவனார், செங்கை மது வனார் என்னும் முத்தமிழ் மணிகளுள் ஒருவர் அவர். புலிவலம் அரசு உயர்பள்ளித் தமிழாசிரியராகத் திகழ்பவர். புலிவலம் உயர்பள்ளி இலக்கிய மன்றத் தொடக்க விழாவுக்கு வருதல் வேண்டுமென அழைத்தார். கெழுதகைய அன்புடைய அவர் அழைப்பை, உவப்பாக ஏற்றுக் கொண்டேன். உவப்பின் மேல் உவப்பாகத் தமிழ்ச்சுடர் திருமலி மீ.சு. இளமுருகு பொற் செல்வி அவர்களும் திருமலி செந்தமிழ்க்கிழார் அவர்களும் கலந்து கொள்ளுதல் அறிந்தேன். ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று அறிஞர்களும் ஆர்வலர் களும் பாராட்டும் வகையில் திங்கள் நிகழ்ச்சிகளும் பெரு விழாக்களும் நடத்தி வருபவர் தமிழ்ச்சுடர் அவர்கள். தமிழ்க் காசு இலக்கியக் குழுவை நிறுவி இருபத்தாறாண்டுகளாப் பொலிவு மிக நடத்தி வருபவர். அரும்பெரும் நூலக வைப்பகர். என் தமிழ்த் தொண்டை ஊக்கி உதவி வளர்ப்பவர். நம் செந் தமிழ்க்கிழார் அவர்களோ பாவாணரால், உ.த.க.வின் நிலைத் தகு பொருளாளர் செந்தமிழ்க் கிழாரே எனப் பாராட்டுப் பெற்ற பைந்தமிழ்ச் செல்வர். ஆதலால், உள்ளார்ந்த நேயர் களின் ஒருமித்த நிகழ்ச்சி உவப்பில் உவப்பாகத் தோன்றியது. 14.08.91 (தி.பி.2022 ஆடி 28)இல், இலக்கியமன்றத் தொடக்க விழா. பெயர் அப்படித்தான் அழைப்பில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியோ வியப்பினும் வியப்பாயிற்று. பள்ளித் தலைமையாசிரியர் திருமலி அ.ஆ. கலியாண சுந்தரனார் தலைமையில் விழாத் தொடங்கியது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் துணைத்தலைவரும் ஆகிய திரு வாளர்கள் ந. பிரசன்னரும், கரு. முருகரும் முன்னிலை ஏற்றனர். பள்ளித் தமிழாசிரியர் திருமலி பொன். நல். இராம சாமியார் வரவேற்புரைத்தார். பட்டுச் சுருணை வரவேற்பும் வழங்கப்பட்டது. தமிழ்ச்சுடர் அவர்கள் பொன்னாடை போர்த்தினார். இதன் மேல், பொழிவு என்பதுதானே நடைமுறை. விழாவின் மேல் விழாக்கள் போல, எளியேனுக்குத் தமிழ்க்கடல் என்னும் பட்டம் வழங்கிப் பட்டப் பேழையும் வழங்கிப் பாராட்டுரைத்தார் செந்தமிழ்க்கிழார். பாராட்டு என்னும் பெயரால், பள்ளியின் சார்பிலும் பெற்றோர் ஆசிரியர் கழகச் சார்பிலும் ஊர்ப்பெருமக்கள் சார்பிலும் ஒவ்வொரு வகுப்பின் சார்பிலும் நூலாடை போர்த் தும் விழா நிகழ்ந்தது. நூல் வெளியீட்டுக்கெனப் பொற்கிழியாக உருபா 3000 வழங்கவும் பட்டது. பின்னேயும் உருபா 2000 தொகுத்து வழங்கவும் பட்டது. உவகையும் வியப்பும் நாணமும் ஒருங்கே வராமல் இருக்குமா? ஊரும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் வழங் கிய வள்ளல் நள்ளி வரலாறு புறத்தில் கண்டது, அஃது அகத்தில் மின்னியது! இலக்கியமன்றத் தொடக்க விழாவா, எளியேனைச் சிறப்பிக்கும் விழாவா? பாவாணரை வரவேற்று விழாவெடுத்து நூல் வெளியீட்டுக்கு உதவிய பெருமக்கள், அவர் அடி தழுவு வழிஞன் என்பதால் வழங்கினார் என்பதையன்றி எனக்குரிமை யாவது என்ன! உரையும் பாவுமாய் எழுதி வரவேண்டிய நூல்கள் நாற்பதுக்கும் மேலுள. இப்பொற்கிழித் தொகை கிளர்ந்த உணர்வொடும் பொருந்த, எதனை வெளியிடலாம்? என எண்ணினேன். செந்தமிழ்ச் செல்வி 54-ம் சிலம்பில் (1979-80) அந்த உணர்வு எங்கே? என்னும் தலைப்பில் மூன்று கட்டுரைகள் வரைந்திருந்தேன். அத்தொடர் பன்னிரு கட்டுரைக்கெனத் திட்டப்படுத்தப் பட்டிருந்தது. இடைப்பட்ட அதனை நடைப் படுத்தி வெளியிடல் தகுமென உணர்ந்தேன். ஒன்பான் கட்டுரைகளைப் புதுவதாக எழுதி இணைத்து அந்த உணர்வு எங்கே? என்னும் அத்தலைப்பிலேயே வெளி யிடத் தீர்மானித்தேன். செங்கைசெந்தமிழ்க்கிழார் அவர்களும், செங்கை மதுவனார் அவர்களும் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டனர். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்னும் தொல்லாசான் உரியியல் உரை, உள்ளுரிமையா யிற்று! ‘mªj cz®î v§nf?- அவ்வுரிமை தழுவி வெளி வரலுமாயிற்று! இதன் வருவாய்... வள்ளுவத் தொண்டுக் கும் பாவாணத் தொண்டுக்கும் பயன்படுத்தப்படும். நூற்றொகை எம்மை நினைப்பீரோ என்றான் ஒருவனுக்கு, என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே என்ற ஒருவரின் மறுமொழி விளக்கம் முதற்கட்டுரை. பசிப்பிணி தீர்ப்பானாகிய ஒருவனை என் வாழ் நாளையும் சேர்த்து அவன் வாழ்வானாக எனப் பெருமகன் ஒருவன் வாழ்த்திய வாழ்த்துதல் இரண்டாம் கட்டுரை. என் தந்தை போல்வானாகிய அவன் உள்ளடியில் முள்ளும் அவன் நோவுமாறு தைக்காதிருக்க என்னும் கெழு தகைமையுரைப்பது அடுத்தது. நண்பன் இருந்து அவன் செய்ய வேண்டும் கடமையைச் செய்வதற்காகவே தாம் வாழ்ந்து, அக்கடன் முடித்தபின் அவ னோடு ஒன்றிய பெருந்தகு வாழ்வு நான்காவது. ஒரு குடிப் பிறந்தார் பகைத்து நிற்கும் கேட்டால், அக்குடியே பழியுற்றுக் கெடும் எனத் தெளிவிப்பது ஐந்தாம் கட்டுரை. ஆறாம் கட்டுரை, தந்தையும் மைந்தரும் பகைத்து நிற்கும் பழிநிலையை மாற்றி வழிப்படுத்துதல் பற்றியது. பிரிந்து சென்ற கணவன்தன் மனைவியொடும் ஒன்றி வாழ வழிப்படுத்தியது ஏழாம் கட்டுரை. எட்டாம் கட்டுரை, மூவா முதுநலப்பேறு முட்டில்லாது அமைய அமைந்த, வாழ்வு நலப்பேறு சுட்டியுரைப்பது. அடுத்த கட்டுரை, புகழும் வேண்டாப் புகழ்நிலை ஈதென எடுத்துரைப்பது. அறிவாளர் துணைநலங் கொண்டு ஆளும் அரசே அமைந்த அரசென விளக்குவது பத்தாம் கட்டுரை. தனிக்கருத்தில் எதிர் எதிர் நின்றாலும் பொதுக் கருத்தில் ஒன்றுபட்டுத் தூண்டலும் துணையுமாய் இருப்பதே இனநலம் காப்பது என்பதை விளக்குவது பதினொன்றாம் கட்டுரை. தாம் அடையும் நன்மைக்கும் தாம் அடையும் தீமைக்கும் தாமே பொறுப்பாளர்; பிறர் அல்லர் என்பதை விளக்குவது இறுதிக் கட்டுரை. இப்பன்னிரு கட்டுரைகளும் பழந்தமிழ் வரலாற்றுப் பேழையாகத் திகழும், புறநானூற்றை அடிக்களமாகக் கொண்டவை. அந்த உணர்வு எங்கே? என்னும் நிறைவினா முறை, முறையாகத் தொடர்ந்து உணர்வு ஊடகமாக உதவுகின்றது. இது, நூல் வந்த வரலாறும், நூல் வரலாறுமா. தமிழ்த் தொண்டன் இரா.இளங்குமரன் 15.09.1991 பாவாணர் ஆராய்ச்சி நூலகம் திருநகர். மதுரை - 625006 மூன்றாம் பதிப்பு முதற்பதிப்பு முற்றிலும் தீர்ந்த நிலையில், திருச்சிராப்பள்ளி சீதாலக்குமி இராமசாமி கல்லூரி, இளங்கலைத் தமிழ்த் துணை நூலாக இந்நூலைத் தேர்ந்து கொண்டதால் இரண்டாம் பதிப்பும், பெங்களூர் பல்கலைக்கழகம் இளங்கலைத் தமிழ்த் துணை நூலாகத் தேர்ந்து கொண்டதால் மூன்றாம் பதிப்பும் பெற்றது. பல்கலைக்கழகப் பாட நூலாக்கிய பண்புப் பெரு மக்களைப் பாராட்டுதல் என் கடனாம். நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு திருவள்ளுவர் தவச்சாலை இரா. இளங்குமரன் திருவளர்குடி (அல்லூர்) 23.5.96 திருச்சி மாவட்டம் - 620101 1. நெஞ்சம் திறப்போர் நெஞ்சுக்கு உலகம் தரும் மதிப்பு மிகுதி. வாழ்வையே மனம் போல வாழ்வு என்பர். திருமணத்தை இருமனம் கூடினால் திருமணம் என்பர். நெஞ்சே நேரான சான்று என்பதை, நெஞ்சை ஒளித் தொரு வஞ்சகம் இல்லை என்பதால் குறிப்பர். பொய் கூறுதலை விலக்குவாரும், நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா என்பர். வெறுங் கல்வியுடையவனை, நெஞ்சிலக்கணம் அறியாதவன் பஞ்சலக்கணம் அறிந்தும் பயனென்ன? என இழித்துரைப்பர். “mHfhtJ beŠr¤J mHnf! என அறுதியிட்டு உரைப்பர். முறைமையை வேண்டுவாரும் நெஞ்சிலே கைவைத்துக் கூறு என்று ஆணை இடுவர். நெஞ்சினால் பிழைப்பு இலாள் எனப் பாவக் கழுவாய்க்கு நெஞ்சு உதவுதலையும் கூறுவர். மெய்யுணர்வுப் பெருக்கால் நெஞ்சம் பெருங்கோயிலாகக் கண்டு நெஞ்சம் உமக்கு என இறைப்படையலாக்கி இறைஞ்சுவர். - இன்னவை எல்லாம் நெஞ்சுக்கு உலகம் தரும் மதிப்பின் சான்றுகளேயாகும். ஆனால், பலர் வாழ்வில், நெஞ்சு என்ப தொன்றும் உண்டோ? என்பது வினாவுக்குரியதாகவே உள்ளது. சுடுசோற்றை அள்ளினாள் ஒரு தலைவி. அள்ளியதை அப்படியே தட்டத்தில் போட்டாள், ஏன்? கை சுட்டு விட்டதா? இல்லை! சுடு நெருப்பில் சோறாக்கிச் சுடச்சுட வடித்துச், சூட்டிலே இறக்கிச் சுவைப்படுத்தத் தேர்ந்த அவள் கை, சூட்டைத் தாங்காமலா போய்விடும்! சோறு கையைச் சுடவில்லை. நெஞ்சைச் சுட்டுவிடுமாம், அப்பஞ்சின் மெல்லியலாளின் நெஞ்சுச் சூடு, அவள் நெஞ்சம் கவர் கள்வனாக வீற்றிருக்கும் நேயக் காதலனைச் சுட்டு விடுமாம்! அவன் வெந்துவிடக் கூடாதே என நொந்து, சுடு சோற்றை அவள் உண்ணவில்லையாம். வள்ளுவர் வரைந்த நெஞ்சக் காதல் கொஞ்சிக்குலவும் ஓவியங்களுள் ஈதொன்று! * * * அவன் எழுதுகிறான் ஓர் ஓவியம். சுவரிலா? இரட்டுத் துணியிலா? தாளிலா? இல்லை. உள்ளத் திரையில் உவகையால் எழுதுகின்றான். தண்ணீர் வண்ணமோ எண்ணெய் வண்ணமோ எடாமல் தண்ணிய எண்ண வண்ணம் ததும்ப எழுதுகிறான் ஓவியம். எழுதுவதும் தான் எப்படி? அழகு என்றால் அழகு; இதுவே அழகு! என்று சொக்கு மாறு அந்தச் சொக்கன் தன் சொக்கியை எழுதுகின்றான். அப்படிச் சொக்குப்பொடி போட்டு மயக்கியிருக்கிறாள் அச்சொக்கி! எழுதப்பட்ட ஓவியம் எவருக்கோ எழுதப்பட்டதோ? இல்லை! அவனுக்கு என்றே எழுதப்பட்டது. அதனையும் மூடிமறைத்துப் பொதிந்து வைத்துக் கொள்ளாமல் இமைத்த கண் மூடாமல் இமையாநாட்டப் பெரியோனாய் நோக்கிக் கொண்டிருத்தற்கே எழுதுகிறான். சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை சிரிக்குமா? ஓவியத்தில் உள்ளவள் ஓடி ஆடிக் களிப்பாளா? அவள் உயிர் ஓவியமாக விளங்குகிறாள். ஆகலின், காண் கிறாள்; களிக்கிறாள்; நோக்குகிறாள்; நோக்கெதிர் நோக்கு கிறாள்; தாக்கணங்காக விளங்குகிறாள். அவள் ஒருவன் திரு வுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமாகத் திகழ்கிறாள். குமரகுருபரர் குறித்த தெய்வக் காதல் நெஞ்ச ஓவியங்களுள் ஈதொன்று. * * * நெஞ்சம் காதலுக்குத்தானா உறையுள்? சிலர் கொண் டுள்ள சீரிய நட்பு செவ்விய காதலையும் வென்று விடுமோ? காதல், பருவஒற்றுமை பால்வேற்றுமை இவற்றிடையே அரும்பி வளர்வது. நட்போ பருவ வேற்றுமை பால் ஒற்றுமை இவற்றிடை யேயும் இனிதின் அரும்பி இலங்கும் இயல்பினது. காதலோ, புலக்குறும்புக்கு ஓரளவேனும் இடம் தாராது ஒழிவது இல்லை. நட்போ, புலக்குறும்பு புகுதலும் அறியாப் பொறுப்பில் ஓங்குவது. இவற்றால், காதலையும் வெற்றி கண்டுவிடும் போலும் கனிந்து வளர் நட்பு. இயற்கைக் காதலும் இனிய நட்பும் முரண்படுபவை போலத் தோன்றினும் இணையானவையே. நட்பு, காதலாம். காதல் நட்பாம். புறப்படும் இடம், போகும் தடம் இவற்றால், சிலச்சில வேறுபாடுகளையுடையவை எனினும் முடிவில் இரண்டும் ஒன்றானவையே. இத்தகையதை நட்புக் காதல் என்பதா, காதல் நட்பு என்பதா? எப்படி உரைப்பினும் ஒப்புக் கொள்பவை அவை. * * * உயர்வற உயர்ந்த ஒரு நட்புக் காதல். சென்னை நகரின் ஒருபகுதி நுங்கன் பாக்கம். அது, நுங்கன் என்பான் ஒருவன் பெயரால் அமைந்த பழைமையானதோர் ஊர். சங்க நாளில் வேங்கட மலைப்பகுதியைப் பாங்குடன் ஆட்சி செய்த வேந்தன் பெயர் நுங்கன். அவன் தந்தை ஆதன். ஆதலால் அவன் ஆதனுங்கன் என வழங்கப்பட்டான். ஆதனுங்கன் அருங்கொடையாளன். அறிவறிந்த பண்பாளன்; புலவர் தோழமைப் புகழாளன்; அவன் பண்பிலே ஊன்றிப் பாடிய புலவர் ஆத்திரையன் என்பார். அவர் கள்ளில் என்னும் ஊரினர். ஆதலால், கள்ளில் ஆத்திரையனார் என வழங்கப் பட்டார். ஆத்திரையனார் ஆதனுங்கனை ஒருநாள் கண்டார்; களிப்புற்றார்; இருவரும் பெருநண்பினர் ஆயினர். புலவரைப் பிரிய விரும்பாப் பெருநிலையாளனாகத் திகழ்ந்தான். அவன் விருப்பும், விழுமிய அன்பும் புலவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ஆத்திரையனார் ஆதனுங்கனை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து மகிழ்ந்தார். உள்ளுதோறும் உள்ளு தோறும் உவகை ஊற்றெடுக்க உறவாடினார். உரிமை அன்பில் உருகினார். அந்நிலையிலும் ஆதனுங்கன், எம்மை உள்ளுமோ (எம்மை நினைப்பீரோ) என வினாவினான். அவ்வினாவினால், ஆத்திரையர் வியப்பும் விம்மிதமும் ஒருங்கே எய்தினார். வேந்தே! நின்னை நினைப்பது எப்படி? நின்னை மறந்தால் அன்றோ நினைக்க முடியும்? மன்னவ! நுண்ணிய கருவி கொண்டு என் நெஞ்சைத் திறந்து காணவல்லார் ஒருவர் உளராயின், அவர் அங்கே என்ன காண்பார் என்பதை நீ அறிவையோ? அங்கே நின்னையே காண்பார்! இன்னும் கேள்: என்னினும் எனக்கு இனியவனே நீ வினவியவாறு நான் நின்னை மறக்கும் நாளும் உண்டு! அது எந்நாள்? என்னை நானே மறந்தொழிவதாகிய நாள் அது! ஆம்; நான் இறக்கும்நாள் அந்நாள்! என்னை மறக்கும் அப்பொழுதில் எப்படி நின்னை நினைப்பேன்? அண்ணலே! அம்மறப்புக்கு யான் என்ன செய்வேன்? அம்மறப்பும் இல்லாதொழிய வழிவகை உண்டோ? ஏங்குகிறேன்! இரங்கத் தக்க அந்நிலையில் யான் என்ன செய்தல் கூடும்? இயம்புக என்றார்! எந்தை வாழி! ஆத னுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே; நின்னியான மறப்பின் மறக்கும் காலை என்னுயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் என்னியான மறப்பின் மறக்குவென் என்பது ஆத்திரையனார் வாக்கு (புறநானூறு. 175) * * * அரசன் ஆதனுங்கன்; புலவர் ஆத்திரையனார். புரவலன் ஒருவன்; இரவலர் ஒருவர். மாட மாளிகையன் ஒருவன்; கூரைக் குடிசையர் ஒருவர். அண்ணல் யானை, அணிதேர்ப் புரவி, ஆட்பெரும் படையன் ஒருவன். ஏடு எழுத்தாணி என வாழும், பாடு தொழிலர் ஒருவர். இரைவேட்டெழுந்த புலிபோலும் இயல்பாளன் ஒருவன். கலைந்தோடும் மான்போலும் தன்மையாளர் ஒருவர். செல்வம் செல்வாக்கு, பட்டம் பதவி, பழக்கம் வழக்கம் இவற்றால் அமைந்த இடைவெளி பெரிதாயினும் நட்புரிமை அவற்றை அகற்றி நெஞ்சந் திறக்கும் நெருக்கத்தை அமைத்து விட்டது. இத்தன்மை எதற்கு உண்டு? காதல் நட்புக்கே உண்டு! அந்த உணர்வு எங்கே? எங்கே? என்று அலமர வைக்கிறது இற்றை உலகம்! வஞ்சமின்றி நெஞ்சந் திறந்து பழகும் நண்பர் எத்தனை பேர்? ஒவ்வொரு கோலம், ஒவ்வொரு நோக்கு, ஒவ்வொரு போக்கு, ஒவ்வோர் எதிர்பார்ப்பு, உள்ளொன்று புறம் பொன்றாம் நடிப்பு, உண்மையில்லாப் பசப்பு - என்பனவே நட்புக் கோலம் காட்டி வரும் நாளில், என் நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே என்னும் அந்த உணர்வைத் தேடிக் காண்டலும் உண்டோ? நெஞ்சால் வாழ்ந்த அந்த வாழ்வு எங்கே? அந்த வாழ்வும் வருமோ? 2. வாழும் நாளும் வாழ்க! நெடிது வாழ்க! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! ஆல்போல் படர்ந்து அறுகுபோல் ஊன்றி அரசுபோல் துளிர்த்து வாழ்க! மழைத்துளியினும் மணற் பெருக்கினும் மல்கி வாழ்க! - இன்னவாறெல்லாம் வாழ்த்துவதை உலகியலிலும் இலக்கிய உலகிலும் கேட்டுள்ளோம். வாழ்த்து ஒருவரை வாழவைக்குமா? வாழவைக்கும் என்பது நம்பிக்கை! வாழ்த்துபவர்க்கும் வாழ்த்தப் பெறுபவர்க்கும் உள்ள நம்பிக்கை! அதனால் தான் மணவாழ்த்து முதல் எத்துணையோ வாழ்த்துகள் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. ஆயிரம் திட்டு ஆனையையும் சாய்க்கும் என்பது பழமொழி என்றால், ஆயிரம் வாழ்த்து பூனையையும் யானை யாக்கும் என்பதுதானே பொருள். வாழ்த்துதலால் வாழ்த்துவோர் வாய் இனிக்கும்; கேட் போர் செவி இனிக்கும். வாழ்த்துக்கு உரியவர் நெஞ்சு இனிக்கும். * * * இனியவை கூறுதலே கனியினை அனையது என்றால், செவ்விய இனிய வாழ்த்து ஔவையுண்ட நெல்லிக்கனி அனையது. அதனால் அன்றே, நீலமணிமிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே என்று ஔவையாரின் வாழ்த்தைப் பெறும்பேறு பெற்றான் அதியமான். கனியால் பெற்ற பேறா அது? கனிவால் பெற்றபேறா? தான் வாழக் கருதாமல் தண்டமிழ் வாழவாழும் தனியுயர் ஔவை வாழ்தலே தமிழ் வாழ்வெனக் கருதிய தமிழ் வழங்கிய வாழ்த்தே அது. ஒழிக என்பதும் வாய்தான். வாழ்க என்பதும் வாய்தான். வாய்க்கு மணம் தருவது எது? ஒழிகவா? வாழ்கவா? மணம் தருவதைச் சொல்க! சொல்ல முடியவில்லையா? மணம் தாராததைச் சொல்லாமலேனும் விடுக! அடியாமல் விட்டுவிட்டால், தானே படுத்துவிடும் பந்து! ஆட்டாமல் விட்டுவிட்டால், தானே நின்றுவிடும் ஊசல்! நேரில் காண்பதை நிகழ்த்திக் காட்டுவதுதானே முறைமை! முதியர் இளையரை வாழ்த்துவதா? இளையர் முதியரை வாழ்த்துவதா? இளையர் முதியரை வணங்குவதும், முதியர் இளையரை வாழ்த்துவதும் வழக்கம். அதற்காக இளையர் முதியரை வாழ்த்துதல் கூடாது எனின் முறையன்றாம். உலகுக்கு மூலமாம் ஒன்றை வாழ்த்துகிறோம். அதற்கு இறைவாழ்த்து என்பது பெயர். நாம் வாழ அதனை வாழ்த்து கிறோம். அதுபோல் பெருமக்களும் நல்லோரும் வாழ்த்தப் பெறுதலால் பெருமையும் நன்மையும் வாழ்த்தப் பெற்று, வாழ்த்துவார் தமக்கே நலம் செய்வதாம். பன்னீரை இறைத்தால் இறைப்பவனுக்கு மணவாதா? * * * வாழ்த்துக்கு அடிப்படை உள்ளார்ந்த அன்பு. அவ்வன்பு உடையோர் எவரையும் வாழ்த்தலாம். வாழ்த்துக்கு முதுமை இளமை இல்லை! உள்ளமுதிர்வே முதிர்வு! நெஞ்ச நெருக்கமே நிறைவு! வாழ்த்துவதன் நோக்கம், எதையும் எதிர்நோக்குதல் - தமக்காக எதிர்நோக்குதல் - அன்று. அது கிடைக்கும் இது கிடைக்கும் என எதிர்பார்த்து, வாழ்த்தும் வாழ்த்து, வாணிக வாழ்த்து. வாய் வாழ்த்து, வாய்மை வாழ்த்துமாவது வருபயன் கருதாமையாலேயே! வாழ்த்தின் நோக்கு பலபல அல்ல! ஒன்றே! அது வாழ்த்துதல் என்னும் ஒன்றே! கையசைவே வாழ்த்தா? வாயசைவே வாழ்த்தா? கண் ணசைவே வாழ்த்தா? எதுவானால் என்ன? வாழ்த்துவார் நெஞ்சம், வாழ்த்தப் பெறுவார் நெஞ்சுக்கு நிறைவு செய்வதாய் அமையவேண்டும்! அதுவே வாழ்த்து! மணிக்கணக்காக வாழ்த்தும் வாழ்த்தில் உண்டாகும் உள்ள உருக்கத்தினும், மணித்துளிப்பொழுது வாழ்த்தும் வாழ்த்திலே உருக்கமிக்கு இருப்பது இல்லையா? அதனினும் கண்மணி அசையும் ஓரசைவிலே, உண்மை உருக்கம் வெளிப்பட்டு விடுவது இல்லையா? வாழ்த்தின் மதிப்பீட்டுக்கு நெஞ்சத்து அளவே யன்றி வேறு அளவு இல்லை! இதோ, ஒரு வாழ்த்து. நெடுங்காலத்திற்கு முற்பட்ட வாழ்த்து. ஆனால், காலத்தை வென்று இன்றும் பசுமையாக விளங்கும் வாழ்த்து. * * * வாழ்த்துபவன் முடியுடை வேந்தன். வாழ்த்துப் பெறுபவன் அவன் குடிபடைகளுள் ஒருவன். வாழ்த்துபவன் போரேர் உழவன் வாழ்த்துப் பெறுபவன் சீரேர் உழவன். வாழ்த்துபவன் மதிலும் கோட்டையும் மாடமும் கூடமும் மலிந்த மாநகராளி. வாழ்த்துப் பெறுபவன் வயலும் சோலையும் தோட்டமும் துரவும் சூழ்ந்த சிறுகுடியாளி. இத்துணை வேறுபாடுகள் இருப்பினும் நெஞ்சார்ந்த வாழ்த்துப் பிறக்கிறது. நெஞ்சுக்கு வேண்டுவது உண்மை. அதனைக்கண்ட இடத்தில் நெஞ்சு, கொஞ்சி விளையாடுவதும் உண்மை! * * * பெருநடை நடந்து சிறுகுடியை நெருங்குகிறான் வேந்தன். அவன் செல்லும் வழியில் முட்ட நிரம்பிய வயிற்றோடு கிட்ட நெருங்கி வருகிறது ஒரு கூட்டம். அவர்கள் அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் வெளிப்படுகிறது. அவர்கள் பாணிசைத்து வாழும் பாணர்கள். பாணர்களை நோக்கிய அதே பொழுதில் அவன் செவியில் ஒலி கேட்கின்றது. ஒலிமட்டுமோ? முட்டைகளைத் தூக்கிக் கொண்டு திட்டைமேலே ஏறும் எறும்பு வரிசைகள் போலச், சோற்றுக் கலங்களைத் தூக்கிக் கொண்டு இப்பாலும் அப்பாலும் வரிசை வரிசையாகச் சிறுவர்கள் செல்வதையும், காண்கிறான் இந்த ஒலி எங்கே இருந்து வருகிறது? இச்சிறுவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள்? நான்தேடிவரும் சிறுகுடி அணித்தே தோன்றும் இவ்வூரோ? அன்றி வேறோர் ஊரோ? எனத் திகைக்கிறான். தன் திகைப்பை வினாவாக்கிப் பாணர் களிடம் கேட்கிறான். பண்ணன் சிறுகுடி அதுவே என்றும், பண்ணன் வழங்கிய உணவை உண்டுமகிழ்வார் ஒலியும், கொண்டு செல்வார் வரிசையுமே தான் கேட்பதும் காண்பதும் என்றும் அறிந்து கொள்கிறான். நாட்டில் பசியும் பிணியும் பகையும் நலிவும் இல்லாமல் காக்க வேண்டுவது காவலனாம் என்கடன். என்கடனை என்னைப் பார்க்கிலும் இவனல்லனோ நன்றாகச் செய்கின்றான்! என் கடனை நானே செய்தலில் என்ன சிறப்பு? என்கடனைச் செய்தேன் என்ற அளவில் ஓர் நிறைவு. அவ்வளவே! ஆனால், இவன் செய்வதோ, உயிர் இரக்கம் ஒன்றாலே செய்யும் உயர்வற உயர்ந்த உயர்செயல்! இவனல்லனோ உலகை வாழ வைப்ப தற்காக நெடிது வாழ வேண்டியவன்! பண்ணன்! ஆ! M!பண்ணன்! இப்பெயர், எத்துணைப் பேர் இசைத்து மகிழும் பெயர்! இசைந்து வழங்கிய பெயர்! இசை எவரையும் இசையவைப்பது. இவ்விசையாளன் தன் இனிய கொடையால் இசைபோலவே இசைய வைத்துள்ளான். பண் அன்னவனை எப்பெயரால் அழைப்பது? பண்ணன் என்பதே தகும். நல்லவற்றைத் தேர்ந்து தேர்ந்து பண்ணும் நல்லோனைப் பண்ணன் என்றது எத்தகைய பொருத்தம்! பண்ணன் வாழ்க! பண்ணவன் வாழ்க! பண்ணையாளனாம் பண்பாளன் வாழ்க! மருத்துவர் என்ன செய்கிறார்? உடற் பிணியைத் தீர்க்கிறார். அப்பிணி தீர்ந்தார்க்கும், பிணி இல்லார்க்கும் தீராப் பிணியாக இருப்பது அன்றோ பசிப்பிணி! அப்பசி, பிணியா? பாழும் பாவி! அப்பாவியின் பிடியில் சிக்குண்டவர் அடையும் துயர்க்கு அளவும் உண்டோ? பசிப்பிணி தீர்ப்போர் அறவோர்; அவர், பிறரையும் அறவோர் ஆக்கும் உயர் அறவோர்! பசிப்பிணி தீர்த்தல் என்பது சோம்பர்களையும் மடவர் களையும் தடியர்களையும் உருவாக்குவது அன்று. அதனைச் செய்யின் சட்டி தூக்கிச் சாய்ந்தழியும் கூட்டமே பெருகும்; நாட்டைக் கெடுக்கும்; உழைப்பவரையும் உழைப்பில் நம்பிக்கை இழக்கச் செய்து ஒழிக்கும். இப்பண்ணன் பணி, கேட்டைப் பெருக்கும் பணியன்று நாட்டைக் காக்கும் பணி. உழைத்து உழைத்து உருக்குலைவோர் வாட்டம் போக்கும் வளப்பணி. ஆதலால் இப்பணி வாழ்க! இப்பணியாளன் வாழ்க! இவனை, நீடு வாழ்க என்பேனா? வாழ்த்து என்பதே அதுதானே! காவலன் கடமையை ஆவலுடன் தானே தாங்கிக் கண்ணெனக் குடிகளைக் காக்கும் இவன், ஒரு சிறந்த காவலன்! ஆதலால், காவலனாம் என் வாழ்நாளையும் இவனே கொண்டு நெடுங்காலம் வாழ்வானாக! என் வாழ்நாள் அளவு எவ்வளவு? எனக்குத் தெரியாது. அனால் அதனை முழுமையாக வழங்க உடன்படுகின்றது என் உள்ளம் என்னால் முடிவது அதுவே. இதனை நன்றி யுணர் வால் கூறுகிறேன் என்பது இல்லை. நாட்டு வேந்தனாம் நான் பட்டுள்ள கடனைத் தீர்ப்பதற்காகக் கூகிறேன் என் வாழ் நாளையும் இவனே கொண்டு வாழவானாக? யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! * * * ஒருவன் தான் வாழ்நாளை மற்றொருவனுக்குத் தந்து வாழ வைக்கவும் முடியுமோ? முடியும் என்ன ஓரிரு சான்று காட்டுவார் காட்டுக. முடியாது என நாட்டுவார் நாட்டுக! நெஞ்சார்ந்த உணர்வோடு தன் வாழ்நாளைத் தருதற்கும் முந்து வந்து நின்றானே அந்த வேந்தன் - கிள்ளி வளவன்! அந்த உணர்வு எளிதில் உண்டாவதோ? அலுவலக ஊழியனை அலுவலகத் தலைமையன் ஒருவன் இவ்வாறு நெஞ்சாரப் பாராட்டும் நிலைமை உண்டா? அதுவே அரிதாம் எனின், ஆட்சியில் அமர்ந்தோன் தானா, தன் ஆளுகைக்கு உட்பட்டோனைப் பாடிப் பரவுவான்! பாராட்டிப் போற்றுவான்! பண்ணனைப் பாணாற்றுப் படை பாடிப் பரவிய சோழன் கிள்ளி வளவனின் அந்த உணர்வு எங்கே? எங்கே? என்று நம்முள் வினா எழுகின்றது அன்றோ! 3. உள்ளடி முள்ளும் தமிழ் என்பதற்கு இனிமை என்னும் பொருளை நம் முன்னோர் கண்டனர். அக்காட்சி தேன் பால் அமுது என்றும், இணையில்லா இன்பவீடு என்றும் பொருள் கொள்ளுமாறு புலவர்களைத் தூண்டியது. தமிழர் என்பதற்கும் இனியர் என்னும் பொருள் கிளர்ந்தது. தமிழ் தழீஇய சாயலவர் என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 2021) தமிழர் இனியர் என்பதற்குச் சான்று என்ன? அவர்தம் சாயலே - பண்பாடே - நாகரிகமே - வாழ்வே - இனியர் என்பதை நிறுவும் சான்று. தமிழர் இனியர் என்பதற்கு வாழ்வுச் சான்று வாய்க்கும் நிலையில்தான் பெருமையுண்டு. பேறும் உண்டு. இல்லையேல் போலிப் புகழும் பொருந்தா உரையுமாய்ப் போயொழியும். கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு என்பது வள்ளுவர் கண்ட தமிழினியர் தகைமை. * * * வயல் வரப்பில் அமைந்த வளைக்குள் நண்டும் அதன் பெண்டும் உள. வன்மையாய் வரப்பில் அடி வைத்து நடந்தால் அவை அஞ்சிப் பிரிதல் கூடும். ஆதலால் மெல்ல நட என்றும், பயிரூடு இருந்த குவளை அல்லிக் களைகளைப் பறித்து வரப்பிலே போட்டுளர். அப் பூக்களை மிதியாமல் செல்க, ஏனெனில், அதனுள் தேனருந்தப் புகுந்துள்ள ஈக்களைத் துயராக்கும் என்றும் இயம்புவது இளங்கோவடிகள் தமிழ் நெஞ்சம். ஓடும் தேரில் மணி ஒலிக்கிறது. அவ்வொலிக்கு, இணை யொடு வாழும் வண்டு அஞ்சுகிறது. ஆதலால், மணியின் நாவை ஒலியாமல் இறுக்கிக் கட்டிக் கொண்டு தேரைச் செலுத்துக எனத் தன் தேர்ப்பாகனுக்கு ஆணையிடுகிறான் ஒரு தமிழ்த் தலைவன். இது குறுங்குடி மருதனார் என்னும் பெருந்தகைப் புலவர் கண்ட தமிழினியர் உள்ளம் (அகம். 4) நம் உடலில் தினவு வந்தால் சொறிகின்றோமே; நமக்குச் சொறியுமாறு எட்டா இடத்தில் தினவு வந்தால் பிறரைச் சொல்லிச் சொறிந்து கொள்கிறோமே; கையும் இல்லா, பேசும் திறமும் இல்லா விலங்குகளுக்குத் தினவு வந்தால் அவை என்ன செய்யும்? என இரங்கி, ஆடுமாடு செல்லும் வழிகளில் ஆஉறிஞ்சு குற்றியை நட்டு வைக்கிறதே இளகிய தமிழ் நெஞ்சம்! இத்தமிழினிய நெஞ்சங்கள் இன்று என்ன வினாவு கின்றன? ‘mªj cz®î v§nf? என நம்மை நோக்கி வினாவு கின்றன? தமிழர் என்பார் தமிழுணர்வாளராக இருப்பார் அல்லரோ! * * * தமிழினியர் உள்ளத்தைத் தளிர்ப்புடன் சொல்லும் இவ் வேளையிலேயே கொள்ளும் பொருள் இல்லை என்றாலும், துள்ளும் உடலைக் கண்டு களிப்பதற்காகவே கொல்லும் கொடி யரும் இருந்தனர் என்னும் குறிப்பும் இல்லையோ என்னும் தமிழறிவாளரும் உளர். ஆம்! உண்மையே! மறக்கவும் இல்லை! மறுக்கவும் இல்லை! ஆனால், அக்கொடியரைக் கல்லாக் கயவன் என்றும், கல்லாக் களிமகன் என்றும், கல்லினும் வலிய நெஞ்சக் கண்ணிலி என்றும் இடித்துரைக்கும் சான்றோர் இருந்தனரே! இந்நாளில் அவர் உளரோ? கொடுமை செய்வாரைக் கொடியர் என்று இடித்துக் கூறும் கொடுமை அறியாச் சான்றோர் உளரோ? நல்லது பாராட்டி அல்லது இடித்துரைக்கும் ஆன்றோரும் உளரோ? உருகி நிற்கும் நெஞ்சும், உருக்காகி நிற்கும் உரமும் ஒருங்கே கொண்ட உயர்ந்தோரும் உளரோ? * * * என் சாதி, என் சமயம், என் கட்சி என்பதால், என்னென்ன கொடுமை செய்வாரையும் கண்டும் காணாமல் போகும் சார்புக் குருடர் இலரா? என்னலமே என்குறி என்பதால் எத்தகைய கயமை நிகழினும் என்னவென்று கண்டு கொள்ளாமல் ஒட்டிக் கொள்ளும் ஒட்டடைப் பிறவியர் இலரா? என் கூட்டில் உள்ளவனா அவன் தூயன்; மாற்றான் கூட்டில் இருப்பவனா அவன் தீயன் என்று கண்ணை இறுக மூடிக் கொண்டு உலகறிந்த பொய்ம்மைக்கு இருப்பாகிக் கிடக்கும் தலைமையர் இலரா? அறத்தைத் தான் சொல்ல வேண்டும்; ஆனால், அவ்வறம் என் பக்கம் இருப்பதாகவே கூற வேண்டும்; இல்லாக்கால் என் பகையே என்னும் மூட முனைப்பாரை ஒட்டியிருப்பாரும், உவகையால் பாராட்டும் போலிமை நடிப்பாரும் கூட்டுறவாக இருந்து நாட்டைக் கெடுத்து வரும் போழ்திலே தமிழினியர் உள்ளம் நாணிக் குனியாமல் இருக்குமா? ‘mªj cz®î v§nf? என்று வினவாமல் இருக்குமா? வஞ்சக வலை விரிப்பையே வாழ்வாகக் கொண்டவர்கள் போகட்டும்! குணக் கேட்டையே கண் கண்ட கடவுளாகக் கொண்டு குலவுவார்கள் ஒழியட்டும்! கொலை செய்து புதைத்த குழியிலே கொடி முல்லை நட்டு மணங் கொள்ளும் மணவாளர்கள் நீங்கட்டும்! பொய்ம்மையே பெருக்கிப், போலிமையே நெருக்கிப் புன்மைக்கு இடமாகிப் பொருந்துபவர்கள் தொலையட்டும்! தமிழ் வாழ்வுடைய தமிழர்க்கேனும் தமிழ்த்தகவு வேண்டாவா? தகவமைந்த தமிழினியரைக்கண்டு வாழ்த்தும் தகவு வேண்டாவா? * * * ஒரு தலைவன்; வீர மிக்கவன்; அதே பொழுதில் ஈரமும் மிக்கவன். வீரத்தினை எங்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் அறிவான். ஈரத்தினை எங்கு எப்படிக் காட்ட வேண்டும் என்பதும் அறிவான். ஆதலால், அவனை வீரச் சுற்றம் ஒருபால் சூழ்ந்திருக்கும்; ஈரச் சுற்றமும் ஒருபால் இணைந் திருக்கும். அச்சுற்றங்களுள் பிணக்கம் உண்டாக அவன் நடந்து கொண்டது இல்லை. அவர்கள் பிணங்கியதும் இல்லை. அவன் தேர்ச்சித் திறம் அவ்வாறு பாலமாக இணைத்திருந்தது. அவன் பெருநிலம் முழுதாளும் வேந்தனும் அல்லன்; குறுநிலங் காக்கும் கொற்றவனும் அல்லன்; சிற்றூர்த் தலைவனே அவன். ஆனால் வேந்தர்களும் விரும்பும் ஏந்து புகழாளனாக இலங்கினான். பொய்யாச் செந்நாவின் புலவர் புகழுக்கு இலக்காகிச் சிறந்தான். பிட்டங் கொற்றன் என்பது அவன் பெயர். பிட்டங் கொற்றனுக்கு இப்பெருமை எப்படி ஆயது? வாழ்வோர் வாழ வாழ்ந்தவன்அவன் ஆதலால், புகழின் கொள்கலம் ஆனான். உலகில் எவர் இடரின்றி வாழ வேண்டும்? வாழத்தக்க நல்லோர் அல்லல் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும். அவர் நல்வாழ்வே உலகின் நல்வாழ்வு. ஆதலல் அவர் நெடிது வாழ்வதற்கு அரண்போல் அமைந்து காக்க வல்லார் கட்டாயம் வேண்டும். பிறர்க்கென வாழும் பெருந்தகையர் தம்மைக் காத்துக் கொள்ளத் தாம் எண்ணார். அத்தகையர்க்கு உதவிக் காக்கும் கடப்பாட்டாளர் வேண்டும். அவ்வாறு காப்பவரே வாழ்வோர் வாழ வாழ்பவர் ஆவர். அவ்வாறு வாழ்ந்தவன் பிட்டன் என்றால் அவன் மட்டிலாப் புகழுக்கு இருப்பிடமானவன் தானே! பிட்டனைப் பாடிய புலவர் பெருமக்களுள் ஒருவர் கண்ணனார். அழகுமிக்க கருநீலக்கண்ணர் அவர். காவிரிப் பூம் பட்டினத்தார். முடியுடைய மூவேந்தர் அன்பையும் ஒரு படியாகப் பெற்ற பெருமையர் அவர் முழுப் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பது. * * * பிட்டன் பெரும் புகழ் கேட்டு அவனை அண்மினார் கண்ணனார். தாம் கேட்டறிந்த புகழ் அனைத்தும் உண்மையே என்பதை உணர்ந்தார். தமக்கு அள்ளி வழங்கிய வள்ளன்மையில் ஒன்றினார். அவ்வொன்றுதல் தந்நலத்தால் ஆயது அன்று. அவர்க்கு எப்படி வழங்கினானோ அப்படியே பிறர்க்கும் வழங்கி னான் பிட்டன். அதனால் இப் பெருந்தகை பிறர்க்கும் அன்னன் என்பதை உணர்ந்த பெருமிதத்தில் ஓங்கினார். இப்பொழுது தருகிறான். இன்னும் சில நாள் சென்று வரினும் தருவான். அதற்குப் பின்னரும் முன்னே தந்தேன் என்னாமல் பின்னும் தருவான். சென்ற பருவத்தில் கனி தந்தேனே என்று இல்லாமல் பருவந்தோறும் தரும் கனிமரம் போலத் தருவான். கனிமரத்திற்குக் கூடப் பருவம் என ஒன்று உண்டு. ஆனால், இவன் கொடைக்குப் பருவம் என்பதுதானும் இல்லை. எப் பொழுதும் வேண்டினும் வேண்டுமாறு தருவான். இவன் நெடிது வாழ வேண்டும், வாழ்வோர் வாழ இவன் நெடிது வாழ வேண்டும். இவன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாய் முடிய வேண்டும் - எனப் பலவாறு எண்ணி மகிழ்ந்தார் கண்ணனார், என் தந்தை போல்வானாகிய இவனை நான் வாழ்த்துதல் வேண்டும். எப்படி வாழ்த்துவேன் எனச் சிந்தித்தார். பிட்டனைப் பற்றிப் பாடியவர் பாடல்கள் அவர் நினைவில் நின்றன. கொல்லன் தன் சம்மட்டியை ஓங்கி ஓங்கி அறைகிறானே உலைக்கல் (பட்டடை)! அவ்வுலைக் கல் அசைகின்றதா? சம்மட்டி எப்படித் தாக்கினால் என்ன? இம்மியும் நடுங்காத உலைக்கல் அன்னவன் பிட்டன் என்ற மருத்துவன் தாமோதரனார் பாடல் நினைவில் வந்தது. (புறம், 17). கோசர் என்பார் படைப்பயிற்சியில் சிறந்தவர். அப் பயிற்சிக்காக அகன்ற பெரிய முண்முருங்கை மரத்தைக் கம்பமாக நட்டு அதனை இலக்காக வைத்து வேலும் அம்பும் ஏவிப் பயிற்சி செய்வர். அக்கருவிகளுக்கு இலக்காகிய மரம் போல், பகைவர் படைக்கலம் தைக்கவும் நிமிர்ந்து நிற்கும் வல்லாளன் பிட்டன் என வியந்து போற்றினார். பிட்டன் விழுப்புண் படட்டும்; நேர் தாக்குதலில் நெஞ்ச கத்து இடமில்லையாய்ப் படைகள் துளைப்பினும் துளைக்கட்டும். ஆனால் அவன் உள்ளடியில் முள்ளும் தைக்காமல் இருக் கட்டும் என்று பெருமூச்சு விட்டார். பிறருக்காக வாழ்பவனுக்கு அவன் அறியாமல் மறை முகமாக, ஒரு முள்ளும்கூட - அதுவும் புறத்தடியில் இல்லாமல் உள்ளடியில் கூட - தைத்தல் கூடாது என்னும் கொள்கைச் சிறப்பு என்னே! என்னே! இக்கொள்கையில் ஊன்றியிருந்தால் முத்த நாதனியமும் கோட்சேயியமும் இன்ன பிற வல்லியங்களும் நாட்டில் தோன்றி யிருக்குமா? மாந்தர் நோக மாந்தர் பார்க்கும் வழக்கமும் வாழ்க்கையும் தலைவிரித்தாடுமா? எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்க என்று கனிவுடன் வேண்டும் காரிக்கண்ணரின், அந்த உணர்வு எங்கே எங்கே? 4. நோகோ யானே பாரி அருமையான பெயர்! பெருமையான பெயரும் கூட! முல்லைக்குத் தேர் தந்த முதிர் வள்ளல் பாரி. ஓரறிவு உயிரிக்குக் கூட உருகி உதவும் உதவியாளன் அவன் என்பதன் சான்று முல்லைக்குத் தேர்! ஆடும் கொடிக்கு, ஓடும் தேரை நிறுத்தும் உள்ளத்தான், பாடும் புலவரையும் ஆடும் கூத்தரையும் எப்படியெல்லாம் போற்றியிருப்பான்! பாரியின் மலை பறம்பு மலை! அது இந்நாள் பிரான் மலை. பறம்பின் எல்லை பறம்புக்குடி வரை இருந்தது. பறம்புக் குடியே, பரமக்குடியாகியுள்ளது. முந்நூறு ஊர்கள் பாரிக்கு இருந்தன. அம் முந்நூறு ஊர்களையும் தன்னாட்சியாளுமாறு உரிமை வழங்கிப் புலமை யரிடம் ஒப்படைத்த நலமையன் பாரி! நாடு காவல் கடனைப் பீடுறச் செய்வதற்குக் கொண்ட பெருவழி இவ்வழி. பாரியின் புகழ் பரவியது! பாராளும் பிற வேந்தர்களிலும் பெரிதாகப் பரவியது. பாரிதான் கொடையாளனோ, பிறனொருவன் இலனோ? எனவும் வினா எழுந்தது. “V‹!பாரி ஒருவன்தான் கொடையாளன் என்று எவர் சொன்னார்? அவனைப் போல் கைம்மாறு கருதாமல் கொடுக்க மாரி என்பதொன்றும் உண்டே என்று விடையும் பிறந்தது. பொருளால் வாழ்வால் கலையால் மட்டுமா பொறாமை உண்டாகும்? புகழாலும் பொறாமை உண்டாகும் என்பதன் சான்று பாரிக்கு உண்டாகிய பகை. மூவேந்தரும் கூடினராம் பாரியை அழிக்க சூழ்ச்சியால் வெற்றி கொண்டனராம் அவனை! பாரிக்கு மகளிர் இருவர் பாடல் பெற்ற தந்தையின் மக்கள், பாடவல்ல மெல்லியல் மேதையர். வீழ்ந்துபட்ட வேந்தனின் மகளிர், அங்கே வாழ்ந்திருக்க இயலுமா? அவர்கள், அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே என்று முன்னை முழுமதி நாள் வாழ்வையும், பின்னை முழுமதி நாள் வீழ்வையும் வெதும்பியுரைத்தனர். * * * தந்தைக்குத் தந்தைபோல், தம் தாதைபோல் இருந்தவர் செந்தண்மை அந்தணர் கபிலர். பாரியுடன் மாய இருந்த அவரைப் பாரியே தடுத்துத் தான் செய்ய வேண்டும் கடனைச் செய்விக்க நிறுத்தி வைக்கப்பட்டவர் அவர். பாரியுடன் மாய இருந்தாரா கபிலர்? பாரிதான் நிறுத்தி வைத்தானா? ஒருங்குவரல் விடாது ஒழிக எனக் கூறிய செய்தியைக் கபிலரே கூறுகிறார். அம்மட்டோ? அப் பாரியின் மேல் வெறுத் துரைக்கவும் துணிகிறார் (புறம். 236) கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் என்கிறார். உயிர்கலந்து ஒன்றிய நட்புக்கு உன் செயல் தகுமா? என இடித்துரைக்கிறார் அல்லரோ! முள்வேலி! இலவம் பஞ்சு பறக்கும் முற்றம்! சிறிய குடிசை! பீர்க்கங் கொடி ஏறிப்படர்ந்த கூரை! குப்பை மேடு! பாரி மகளிர் நிற்கும் இற்றை நிலை! பூஞ்சோலை! மயில் ஆட்டம்! மான்களின் கூட்டம்! பறித்து உண்ணுதலையும் வெறுக்கும் அளவு பழுத்திருக்கும் பழமரங்கள்! பறம்பு மலை மாளிகை! - பாரி மகளிர் நின்ற அற்றை நிலை! பாரி மகளிர் இற்றை நிலையில் எதனை எண்ணுகின்றனர்? உப்பு வாணிகரின் உப்பு வண்டிகளை ஒன்று இரண்டென எண்ணுகின்றனர்! எங்கே இருந்து? குப்பை மேட்டில் இருந்து! பாரி மகளிர் அற்றை நிலையில் எதனை எண்ணினர்? போரிட வந்த பகை வேந்தர்களின் தலையாட்ட மிக்க குதிரைகளை எண்ணினர். எங்கே இருந்து? பறம்பு மலை முகட்டிலே இருந்து! இற்றைக் காட்சியையும் அற்றைக் காட்சியையும் உட னிருந்து கண்ட கபிலர் நிலையென்ன? நினைவென்ன? நெஞ்ச உருக்கமென்ன? ஒருவரி: நோகோ யானே தேய்கமா காலை என்பது அது (புறம் - 116) இக்கொடுமையைக் காணுமாறோ யான் இருக்கிறேன்; ஓஓ! நோகின்றேன்! ஒழியட்டும் என் வாழ்நாள்! சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னத் தோன்றுமே! பறம்பைப் பார்க்கிறார்! பார்க்கிறார்! இமைகொட்டாமல் பார்க்கிறார். எத்தகைய இயற்கை வளமிக்க மலை! உழவர் உழாமலே கிடைக்கும் பயன்கள் எத்தனை? ஒன்று, மலைநெல்; இரண்டு, பலாப்பழம்; மூன்று, வள்ளிக்கிழங்கு; நான்கு, தேன்வளம். - இக் கொடைமலையைப் பிரிவதா? புளிக்காடி நிரம்பிய மிடாவைத் திறந்து, ஆட்டுக் கடா வின் கறியை வீழ்த்தி ஆக்கியளித்த ஊன் சோற்றுக் கொடையை விரும்ப விரும்ப வழங்கியதை மறந்தும் பிரிவதா? பறம்பே, பிரிய விரும்பாமலே பிரிகின்றேன். நண்பன் பாரிக்குச் செய்ய வேண்டும் கடமைக்காகவே பிரிகின்றேன். இம்மகளிர்க்குரிய மணவாளரைக் கண்டு சேர்ப்பதற் காகவே பிரிகின்றேன்! அழுகையும் அரற்றலுமாகப் பிரிகின் றேன். என நொந்து நொந்து பிரிகின்றார். திரும்பித் திரும்பிப்பார்க்கிறார் பறம்புமலையை. நடை ஓடவில்லை, எண்ணம் வாட்டுகின்றது! பறம்பே இங்கே இருந்து பார்க்கவும் தோன்றுவாய்! இன்னும் சிறிது தொலைவு சென்று பார்க்கவும் தோன்றுவாய்; அப்பால் அப்பால் போனால்? அவனிருந்தான், நீ எங்கும் புகழால் விளங்கினாய் இனி, மற்றை மலைபோல் தான், காணும் அளவுக்குத் தோன்றுவாய்! மன்னன் போன பின்னே என்னே, உன் நிலை இறக்கம்! என்று வெதும்பினார் (புறம். 109, 113, 114) பாரி மகளிர்க்கு வாழ்வு தேடி, விச்சிக்கோன் என்பானிடத்துச் சென்றார். பின்னர் இருங்கோவேள் என்பான் இடத்தும் சென்றார். பயன் படவில்லை. பாரி மகளிரைப் பார்ப்பாரிடம் ஒப்படைத்தார். அவருள்ளத்தில் பாரியைப் பிரிந்த பின்னர் எழுந்த போராட்டம், ஓய்ந்ததில்லைபோலும். அதனால் அந்நாளின் வழக்கப்படி வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்த செய்தியை அறியமுடிகின்றது. (புறம். 216) உண்ணாமல் பருகாமல் இருந்து உயிர்விடும் வடக்கிருத் தலையும் பின்னர்த் துறந்து, தீப்பாய்ந்து உயிரை விட்டாரோ என்று எண்ணவும் ஒரு குறிப்புள்ளது. திருக்கோவலூர்க்குச் சென்று காரியொடும் தொடர்பு கொண்டார். பெண்களை மலையர்க்கு உதவினார் (திருமணம் செய்வித்தார்). பின்னர்த் தம் கடமை முடியவே அக் கோவலூர் அருகில் ஓடும் பெண்ணையாற்றின் இடையே அமைந்த பெரிய கல் ஒன்றில் ஏறி எரி மூட்டி, அதில் பாய்ந்து இறந்தார் என்பது அது கபிலக்கல் என ஆற்றிடையில் ஒரு பாறை. அக்கல்லின் மேல் ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளதையும் அறிகிறோம். கனல் புகும் கபிலக் கல்லது என்னும் கல்வெட்டுக் குறிப் பொன்றும் இச் செய்திக்குத் துணையாவதையும் தெரிகிறோம் (சாசனக்கவி சரிதம், 5) கபிலர் உணர்வு எத்தகையது! உள்ளூறிச் சுரக்கும் ஊற்றுப்போல, அள்ளூறி எழுந்த தன்றோ அது! பொருளில்லையா, போய்விடு பதவி இல்லையா, எட்டியும் பாராதே நட்பா, நாலுகாசுக்குப் பயன்படுமா? தொண்டா, அதில் கண்ட பயன் உண்டா? சேருமா செல்வம். சேராத கூட்டிலும் சேர்! ஒட்டுமா பதவி? ஒட்டு; இல்லையானால் அங்கிருந்து வெட்டு. மானம் - மதிப்பா? அவையென்ன மாறாதவையா? அரசியலா? நிரந்தரக் கூட்டும் இல்லை; பகையும் இல்லை. - இத்தகைய இற்றை உலகியலோடு, கபிலர் உணர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாரி மறைவையும் மகளிர் நிலையையும் பறம்பின் பிரிவையும் ஒரு சேர எண்ணி உடலெல்லாம் வாயாக, உள்ளெல்லாம் கண்ணாக, மயிர்க்கால் எல்லாம் கண்ணீராகத் தேக்கி எழுந்தாற்போல, நோகோ யானே தேய்கமா காலை v‹w mªj cz®î v§nf?பெரும் புகழ்வாய்ந்த நட்பிற்குப் பொருந்தாமல் - உன்னொடும் கூடிவருவதற்கு விடாமல் தடுத்து விட்ட வேறுபாடுடையை என்று இடித்துக்கூறு முகத்தால், பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது ஒருங்குவரல் விடாஅது ஒழிகெனக்கூறி இனையை ஆதலின் நினக்கு மற்றியான் மேயினேன் அன்மை யானே என்ற அந்த உணர்வு எங்கே? கேண்மை என்பது இருபால் ஒன்றுபடுதல் அல்லவோ! நீ என்னைத் தவிர்த்துவிட்டமையால் நாம் கலந்த கேண்மையர் ஆவமோ என்னுமுகத்தால், கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் என்ற அந்த உணர்வு எங்கே? எங்கே? v§nf? என்னும் நிலைமாறி இங்கே! ï§nf! என்னும் நிலையும் வருமா? 5. குடிப்பொருள் அன்று உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் ஆமருந்து போல்வாரும் உண்டு என்பதொரு வெண்பாட்டு. ஔவையார் இயற்றிய மூதுரையில் உள்ளது, உடன்பிறந்தார் சுற்றத்தாராக இருக்க முடியாதா? உடன் பிறந்தார்க்குள் நெருக்கம் மிகுதி; ஓரிடத்து இருந்து ஓரிடத்து உறைந்து ஒன்றி அமையும் நிலை. உடையும் உணவும் உறவாடலும் ஒன்றிய நிலை பங்கு பாகம் பணம் பற்று வரவு என ஒட்டிய நிலை. நெருங்கிப் பார்க்க - உற்றுப்பார்க்கத் தெரியும் ஒட் டடையும் தூசியும் வெடிவும் விரிவும் உதிர்வும் உராய்வும் வீட்டுக்கு வெளியே இருப்பார்க்குத் தெரிவது இல்லை! தெருவிலே இருப்பார்க்கோ, தெரியவே தெரியாது சாலையில் போகின்றவர்க்குச் சாரவே சாராது நெருக்கத்தில் மனக்கசப்பும் வெறுப்பும் பிணக்கும் பிளவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டுதான். ஒரு குழந்தையின் மேல் பெற்றோர் காட்டும் பற்றுமை மற்றோர் குழந்தைக்கு எரிச்சல் ஏற்படுத்தத்தான் செய்யும்! வாய்ப்பாக இருந்தாலும் பங்கு என்று வரும்போது விட்டுக் கொடுத்துப்போகத் தன்னலம் விடுவது அருமைதான்! வீட்டுக்காரன் உள்ளம் போல் வீட்டுக்கு வந்தவள் உள்ளமும் ஒத்துப்போகின்ற நிலைமையும் அரிதுதான்! எனினும் சுற்றம் என்பது இல்லாமல் போகுமா? ஒட்டு உறவு பற்று பாசம் என்பவை இல்லாமல் போக வேண்டுமா? * * * சுற்றந்தழாஅல் என்னும் அருமைப்பகுதியைத் திருக் குறளில் காண்பார் - அமைந்து கற்பார் - இவ்வெண்பாவின் கருத்தை வெற்றி கொள்வார். சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் என்பது சுற்றந் தழாஅலில் அமைந்த மணிக்குறள்களுள் ஒன்று. சுற்றத்தாரைப் பேணாக்கால் என்ன விளையும்? சுற்றத்தார் பாராமுகமாவர். பின்னர் புறக்கணிப்பர். அதன்பின்னர் வெறுப்பர். அதன்மேல் பகைப்பர். அதன்மேல் பகைவர்க்குத் துணையாகி அழிப்பர் அப் பகையால். அச்சுற்றத்தாரும் அழிந்து படுவர். மாற்றானுக்கு இடந் தந்து மடிந்த குடிகளின் எண்ணிக்கை எண்ணி முடியாது! அதிவீரராமன் அறிவிலாதவனா? இல்லை, அவன் அண்ணன் வரகுணராமன் அறிவிலாத வனா? இருவரும் பாடும் புலமையர்! ஆனால் முட்டுதல்! மோதுதல்! அறிவறிந்த அண்ணி யிருந்தார்; அண்ணன் தம்பியர் முட்டலை ஒழித்தார்; மோதலை அழித்தார்; குடிகாத்த குணச் செல்வியர் ஆனார்! வில்லியார் புலமை இல்லாதவரா? அவர்க்கும் அவர் உடன் பிறந்தார்க்கும் பாகப்பிரிவில் மாறுபாடாம்! பாரதம் பாடு வித்து, பாகப் பிரிவுச் சச்சரவு ஒழியும் வழியைக் கண்டானாம் வக்கபாகை வரபதியாட் கொண்டான்! வரப்பிலே இருந்த ஒரே ஒரு மரத்திற்காக உடன் பங்காளிகள் தில்லி உச்ச முறை மன்றம் வரை சென்ற வழக்காட்டும் உண்டு! எத்தனை இலக்கம்! மரத்தால் வந்ததா? உள்ளம் மரத்துபோனதால் வந்தது தானே அது! முறை மன்றத்தில் நிறுத்தப் பட்டார் சிற்றப்பா. அவர் அண்ணார் மகனார், தமக்கு உரிய பங்கு சிற்றப்பா தரவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். குற்றக்கூண்டில் நின்ற சிற்றப்பா, முழுச் சொத்தையும் முறை மன்றத்தாரிடமோ, முறையிட்ட வரிடமோ ஒப்படைத்து விடுவதாகவும் அவர் தமக்கெனத் தருவதைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். வழக்கு கண்ணீரும் கட்டித் தழுவுதலுமாய் அமைந்தது. வீண்புக்கு விலை என்ன? வீட்டின் அழிவே வீண்புக்கு விலை! வீட்டாட்சிக்கே வீண்பு ஆகாது என்றால் நாட்டாட்சிக்கு ஆகுமா? பட்டுப்பட்டுப் பட்டாரைக் கண்டும், பட்டறிவு பட்டழி வார்க்குத் தோன்றாதோ? வெறியில் வெறியாவது, பதவி வெறியே போலும்? இதோ இருவர்; இற்றையாள் அல்லர்; சற்றை முந்தை ஆள் அல்லர்! பழநாள் ஆள்களே! பதவி ஆள்களே! ஒரு குடியில் பிறந்த ஈராள்களே! நெடுங்கிள்ளி நலங்கிள்ளி என்பார் அவர், கிள்ளிப் பெயர் சொல்லிவிடவில்லையா, ஒரு குடிப்பிறப்பை! குடிப் பெயரை மறவாமல் சூட்டிக் கொண்ட அவர்கள், குடியைக் கெடுக்கும் செயலில் தலைப்பட்டனர். ஆவூர்க்கோட்டையை முற்றுகை இட்டிருந்தான் நலங் கிள்ளி. கோட்டையை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தான் நெடுங்கிள்ளி! போரிட வேண்டியவன் பதுங்கிக் கொண்டால், போரிட வந்தவன் வாளா அமைவானா? கோட்டைச் சூழலும் நகரமும், அரற்றும் அழுகையும் அவலமும் ஆயின! மதிலைக் கடந்து மறைந்து கிடப்பவன் காதில் அவல ஒலி விழுந்தும், அவன் போரிட, எழுந்தான் அல்லன். அவன் செயல் ஆன்றோரைச் சுட்டது; சான்றோரை ஏவியது! வேந்தே! உன் செயல் அறத்தைச் சார்ந்ததும் அன்று, மறத்தைச் சார்ந்ததும் அன்று. நீ அறவோன் என்னின் முற்றுகை யிட்டவனிடம் கோட்டையை ஒப்படைத்து விடு; மறவோன் (வீரன்) என்னின் வா போருக்கு என வந்து நில். நீ அறவோனும் ஆகாமல், மறவோனும் ஆகாமல் அடைபட்டுக்கிடப்பது காணு வார்க்கெல்லாம் நாணுதலை உடையது என்றார். அவர் கோவூர்கிழார் என்னும் சான்றோர். கோட்டையை விட்டு வெளிப்பட்டான் நெடுங்கிள்ளி. ஓட்டம் பிடித்தான் உறையூர்க்கு. ஆங்கும் விடாமல் தொடர்ந்தான் நலங்கிள்ளி * * * இருவர் செய்கையும் சான்றோர் கோவூராரை வாட்டின. நேரே உறையூர் சென்றார். ஏன்? இவர்கள், தம் குடிகேட்டை அறியாரோ? தம் நாட்டின் அழிவை உணராரோ? இவரை இடித்துரைத்துத் திருத்தாக்கால் சான்றாண்மை என்பது தான் என்ன? என்பதால், தூய நெஞ்சும் துணிவும் கொண்ட சான்றோர் கோவூரார் உறையூர் சென்றார்! களத்தில் எதிரெதிர் நின்ற கிள்ளியர் இடையே புகுந்தார் கோவூரார். அவரை மதித்துச் செவிசாய்த்த கிள்ளியர் இருவரை யும் பக்கல் பக்கல் அழைத்துக் கூறினார். ஒவ்வொருவரும் பாருங்கள். நீங்கள் சூடியுள்ளது என்ன பூ! உன் தலையிலும் ஆத்திப் பூ. உன்னோடு போர்க்கு எதிர்த்து நிற்பவன் தலையிலும் ஆத்திப் பூ. உங்களுள் எவன் சூடியதாவது வேற்றுப் பூவா? உங்களுள் எவனேனும் பனம் பூவைச் சூடிய சேரனோ? உங்களுள் எவனேனும் வேப்பம் பூவைச் சூடிய பாண்டியனோ இல்லையோ! நீங்கள் இருவரும் சூடிய ஆத்தியே ஒரு குடிப்பிறப்பை வெளிப்பட உணர்த்துமாகவும் உம் செயல் இருந்தவாறு என்ன? போரென்று வந்து விட்டால் ஒருவர்க்கு வெற்றியும் ஒருவர்க்குத் தோல்வியும் தானே உண்டாகும்? எப்போரிலாவது போரிட்ட இருவரும் வெற்றி பெற்றார் என்னும் செய்தி உண்டா? உங்களுள் எவரோ ஒருவர் தோற்பது உறுதி. c§fSŸ vt®jh« njh‰whš v‹d?தோற்றுப் போவது உங்கள் குடியே அன்றோ! சோழர் குடித் தோல்விக்குச் சோழர் குடியே மார்தட்டி நிற்பதா? குடிக்குப் பெருமை தரும் செயலா உங்கள் செயல்? உங்கள் வேண்டாச் செயல், என்ன விளைவை உண்டாக்கும்? உங்களைப் போலும் வேந்தர் உங்கள் செயலைக் கண்டு கைகொட்டி நகைக்கும் நகைப்பையே உண்டாக்கும். குடி கெடுக்கும் செயலில் நீங்கள் அடியிடுதல் வேண்டா என்றார். விளை நிலத்திலே பொழிந்த மழை போல், கோவூர் கிழார் சொல் பயன்பட்டது! போர் ஒழிந்தது! குடிப் பொருள் அன்றுநும் செய்தி என்ற கோவூரார் உணர்வு எத்தகைய மேம்பாடு உடையது! * * * ஒரு நூறா, இரு நூறா, ஈராயிரம் ஆண்டுகளாகியும் இன்றும் அவ்வுரை நம் பொன்னுரையாக அல்லவோ போற்றிக் கொள்ள வேண்டுவதாக உள்ளது. ஒரு குடிக்குள், முட்டுதல் மோதுதல் ஒழிந்தனவா? ஒரு குடிப் பெருக்கமாகிய ஓர் இனத்துள், முட்டுதல் மோதுதல் ஒழிந்தனவா? அங்கேதானே முட்டுதலும் மோதுதலும் மிகுதி! அங்கேதானே அழிவும் கேடும் மிகுதி! நமக்குப் பகையாய் நமக்கு அழிப்பாய் நிற்பார் எவர்? நம்மவர் தாமே அவர்? எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள தமிழர் ஒன்றாதல் கண்டே என்பது, கோவூர்கிழார் கூறிய குடிப்பொருளை உணர்த்தப் பாவேந்தர் முழங்கிய சங்கமுழக்கமன்றோ! குடிகாக்கப் போகிறேன் என்று, குடியழிப்புச் செய்பவர், குடிப் பொருள் அன்றுநும் செய்தி என்னும் கோவூரார் பொன்மொழியை எண்ணுதல் வேண்டும், அந்நிலையில் குடியழிவு என்பது நீங்கிக் கோலோச்சும் பேறும் தானே உண்டாகும். அந்த உணர்வு எங்கே? எங்கே? 6. இருவரை நினைப்பில் மக்களைத் தந்தவன் தந்தை. அம்மகவை ஆகி - உண்டாகி - இருந்தவள் ஆய் - தாய். பெற்றோர் என்பார் மகப்பெற்றோரே! பேறு என்பது மகப்பேறே! பெற்றோர் பெற்றுள்ள பேறுகள் பலவாகலாம், ஆனால், மகப்பேற்றாலேயே பெற்றோர் ஆகின்றனர். பெற்றோர்க்குப் பலவகைப் பொருள்கள் இருக்கலாம் ஆனால் தம் பொருள் என்ப தம் மக்கள் என்பது வள்ளுவம். அமிழ்தம் ஆகிய ஆருயிர்த் துணை தந்த அமிழ்தம் மகவு. அதில் ஆண் என்றோ பெண் என்றோ வேற்றுமை இல்லை. அம்மகவு சொல்லைக் கேட்டல் இன்பச் சுரப்பு. அம்மகவு கைப்பட்ட உணவுண்ணல் இன்பச் சுரப்பு. அம்மகவு மெய்பட்டுத் தழுவுதல் இன்பச் சுரப்பு. இவையெல்லாம் உயிர் தளிர்க்க வாய்த்த வாய்ப்பு. மகவு, என்றும் மகவா? மகவு வளர்கிறது; பெரியது ஆகிறது; வீட்டுக் கட்டினும், வெளி ஒட்டு வளர்கிறது. சூழல் கவர்கிறது. நண்பு வளர்கிறது. பயிலகமும் தொழிலகமும் தொடுகின்றன. பட்டறிவும் படிப்பறிவும் முதிர்கின்றன. கட்சியும் காட்சி யும் கவர்கின்றன. பிள்ளை நேற்றைப்போல் இல்லை; வீட்டில் தங்குவது இல்லை; ஒட்டி உறவாடுவது இல்லை; உள்ளம் எங்கேயோ உள்ளது இப்படி இப்படிப் பெற்றோர்கள் எண்ணத்தில் மின்னல்! பெற்றோர்களும் பிள்ளைகளாக இருந்து வளர்ந்தவர்கள் தாமே! அவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் இடை வெளி இல்லாமலா இருந்தது? இடைவெளியில் வேண்டுமானால் அளவு வேறுபாடு இருக்கலாமே அன்றி, இடைவெளி இல்லாமலா இருந்தது? அந்நாளில், உரிமை வேட்கை, உணர்வு வெப்பம் அவர் களுக்கு இல்லாமலா இருந்தது? தம்மினும் தம் மக்களின் இடச் சூழல் வளர்ச்சி மங்கி மடிந்து மட்கியா போனது? புதுப்புதுக் கவர்ச்சிகளும் எண்ணங் களும் உணர்வுகளும் அல்லவா பொங்கிப் பொங்கி வழிகின்றன. எண்ணிப் பார்த்து இசைத்துக் கொண்டு அதுவும் இசைந்து கொண்டு போகாக் கால் என்ன ஆகும்? அறியாத் தனம் அடம்பிடித்தால், அறிந்ததனமும் முடம் பிடித்துக் கொண்டு இருப்பதா? இளமை வீறு காட்டினால், முதுமையும் கூறு போட்டுப் பார்ப்பதா? * * * இளமை வெட்டிக் கொண்டு போய்விட்டால், கட்டிக் கொண்டும் முட்டிக் கொண்டும் அழ வேண்டியது முதுமைக்கு இல்லையா? பெற்ற பிள்ளைகளை ஒட்டி வாழ வைக்கவோ, ஒட்டி வாழவோ இயலாத பெற்றவர் தாமா, உலகத்தோடு ஒட்ட ஒழுகப் போகிறார்? விட்டுக் கொடுக்கும் விரிவு இல்லாத எவரும், தட்டிக் கொண்ட வெற்றி உண்டா? தாயானாலும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு என்றால் என்ன பொருள்? அதன் உணவு அதற்கு என்பதுதானே! உணவுக்கு உரிய உரிமை. உணர்வுக்கு இல்லாமலா போய் விடும்? இதனை உணராமல் எதிரிட்டு நின்ற குடும்பம் அதிரிட்டு வீழாமல் நின்றதுண்டா? பெற்றவர்க்குப் பகை பிள்ளைகளா? பிள்ளை, தொடையில் வெளிக்குப் போனால், தொடையைச் சீவியா விடுவார்கள் என்னும் பழமொழி காட்டும் வழிமுறை என்ன? குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்னும் போது, இன்னும் நெருக்கமான மக்கள் மட்டும் சுற்றமாய் இருக்க முடியுமா? பொறுக்கும் பொறுப்பு பெற்றோர்க்கே இல்லை என்றால், பிள்ளைகளுக்குத் தானா வந்து விடும்! பொறுப்பற்றுப்பெற்றோரும் பிள்ளைகளும் முட்டினால் முதற்குற்றம் எவர் குற்றம்! பெற்றோர் குற்றம்தானே! இதனைப் பெற்றோர் உணராக்கால், பிள்ளைகள் தாமா உணர்வர்! * * * ஒரு பெற்றோன்! அவன், பெயரும் பெற்றோன்! அரசும் பெற்றோன்! அறிஞர் உறவும் பெற்றோன்! அவனுக்கும், அவன் மக்களுக்கும் வேறுபாடு; பின்னே மாறுபாடு. சிறு பொறி பெருந்தீ சிறுத்துச் சிறுத்து வீட்டளவில் இருந்து, நாட்டளவில் விரிந்தது. பெற்றவன்பால் குற்றம் இல்லாமலும் இருந்திருக்கலாம். அல்லது மக்கள்பால் குற்றம் இல்லாமலும் இருந்திருக்கலாம். குற்றம் எவர் பக்கம் என்பது, முற்றிய பின்னே ஆய்வுக்கு உரியது ஆகாது. இருபாலும் குற்றமாகி விடலே இயல்பு. பெற்றோன் படையொடு களப்போரில் நின்றான். அவன் மக்கள் இருவரும் தந்தைக்குப் பகையாய், ஒன்று பட்டுத் தம் படையொடு நின்றனர். படையே இரண்டுபட்டு நின்றால், பகை வளர்ந்து விட்டது என்பது தெளிவுதானே! தந்தையும் மைந்தரும் தாக்குவதற்கு ஊக்கி நிற்கும் களத் திற்கு, எவர் போய் அமைதிப்படுத்த முடியும்? நாட்டு நலம் கருதும் நல்லவரே புக முடியும். இல்லையேல் அவர் ஒரு சார்பர் ஆக்கப்பட்டு விடுவாரே! தந்தை மைந்தர் ஆகிய இருபாலருள் எவரிடத்து அறிவுரை கூறல் கடன்? தமக்கு நட்புரிமை எவருடையரோ அவரிடத்துத்தான் கூறல் கடன்! நாட்டின் அமைதியை நாடிய அந் நல்லவர் தம் நண்பராம் தந்தையையே அடுத்துச் சென்றார். * * * பலப்பல போர்களிலும் புகுந்து பகைவரை வெற்றி கொண்ட வீறுமிக்க வேந்தனே என விளித்தார்; அவன் விழித்தான்! இதுகாறும் நின் எதிர்நின்ற பகைவர் போன்றவரா இவர்? நீயே நன்றாகப் பார் என்றார். நின்னைத் தாக்க நிற்கும் அவர்களும் நினக்குப் பகைவர் அல்லர்; நீ தாக்க நிற்கும் அவர்களுக்கு நீயும் பகைவன் அல்லை! பகையல்லாப் பகையழிக்கப் படையொடு நீங்கள் நிற்கும் இக்காட்சி - உலகம் இதுகாறும் காணாக் காட்சி! வெற்றி மிக்க வேந்தே, உன் காலமெல்லாம் நீயே ஆட்சி நடத்துவாய். நின்கால முடிவில் அவ்வாட்சிக்கு உரியவர் எவர்? உன் முன்னே படையொடு நிற்கும் அவர் தாமே உரியர்? இது நீ அறியாத செய்தியா? இன்னும் கேட்பாயாக; துணிந்து வந்து நின்னொடு போரிட நிற்கும் இவர்கள் இப்போரில் தோற்றுப் போக நீயே வெல்கிறாய் எனக் கொள்வோம்! நீ வென்ற அரசை நின் காலத்திற்குப்பின் இவரை விடுத்து எவர்க்கே வழங்குவை? போர் வேட்கையுடையவனே; யான் கூறியவாறு அன்றி இப்போரில் அவர்கள் வெற்றி பெற நீ தோற்று விடுவையாயின் பகைவரும் நகைக்க நீ எய்தும் பழிக்கு எல்லையும் உண்டோ? எண்ணிப்பார் வேந்தே, எண்ணிப்பார். எப்படி எண்ணி னாலும் சரி, உன் போர்க்கோலம் அழகிது அன்று. அமைந்து, போர் ஒழிந்து, அறத்தின் பாற்பட்டு நிற்றலே நீ செய்தக்க கடமையாம் என்றார். நல்லுரை கூறிய சான்றோர் சொல்லைச் செவ்விதிற் கேட்ட வேந்தன், அவர் முகம் நோக்கினான். அமைந்து தன் அகம் நோக்கினான். நிலத்தை நோக்கிக் கொண்டே நடந்து களத்தைவிட்டுச் சென்றான். சென்ற வேந்தன் கோப்பெருஞ் சோழன். நன்றறி சொல்லை நயமாய் உரைத்த சான்றோர் புல்லாற்றூர் எயிற்றியனார் (புறம். 213) மாறுபட்டு நிற்கும் பெற்றோர்க்கும் மக்களுக்கும் இடையே புகுந்து கேடு செய்வார் எத்தனை பேர்? வம்பிலும் வழக்கிலும் தலைப்படுத்துவார் எத்தனை பேர்? வாளை உருவிவிட்டு வன்பகையாய் வளர்த்து அலைக்கும் கொலைக்கும் ஆளாக்கும் ஆள்கள் எத்தனை பேர்? அவரைச் சார்ந்தும் இவரைச் சார்ந்தும் என இருபாலும் எதிரிட்டு நின்ற ஊர்ப்பகையாக்கி உவப்பார் எத்தனை பேர்? ஊர் ஊர்க்குப் புல்லாற்றூர் எயிற்றியனார் இருக்கும் பேறும், பிறக்கும் பேறும் இல்லாமல் இருக்கலாம். ஆனால். அவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே முழங்கிய முழக்கம் மறைந்துவிட வில்லை! மணியொலி செய்து கொண்டே இருக் கிறது. அதனை ஏற்றுக் கொண்டு தொண்டு பூணும் தொண்டர் மணிகளே ஊரூர்க்கு வேண்டும்! நின்றலை வந்த இருவரை நினைப்பில் தொன்றுரை துப்பின்நின் பகைஞரும் அல்லர் என்னும் அந்த உணர்வை எடுத்துரைப்பார் எவர்? நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு அனையை இல்லை என்னும் அருமை உணர்வை எடுத்துரைப்பார் எவர்? ஒழிந்த தாயம் அவர்க்கு உரித்தன்றே என்னும் உண்மை உணர்வை எடுத்துரைப்பார் எவர்? எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே என்னும் உறுதி உணர்வை எடுத்துரைப்பார் எவர்? அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே என்னும் இடிக்கும் உணர்வை எடுத்துரைப்பார் எவர்? ஒழிகதில் அத்தை நின் மறனே; வல்விரைந்து எழுமதி வாழ்கநின் உள்ளம் என்னும் ஆணை உணர்வை எடுத்துரைப்பார் எவர்? புல்லாற்றூர் எயிற்றியனார் உளரோ, உளரோ எனத் தமிழுலகம் ஏங்கும் கால நிலை இது! “cŸns« cŸns«, mtiu cŸshf¡ bfh©l cŸsKilna« cŸns«; JªJËW fldh‰w cŸns«! என்னும் தொண்டரணி எழுமாறு தூண்டவல்ல அந்த உணர்வு எங்கே? எங்கே? 7. நெடுந்தேர் பூண்க! குடும்பம் குடும்பம் என்பது பெருக்கத்தின் சுருக்கம். ஒற்றைத் திரி விளக்கு, ஓராயிரம் திரி விளக்கை ஒளியூட்டும் பெருக்கச் சுருக்கம். வித்தாக நிற்கும் ஆல் விரிவாக அமைய இருக்கும் பெருக்கச் சுருக்கம். * * * கணவன் மனைவியர் என்னும் இருவர் உள்ள குடும்பமும் குடும்பமே. பிள்ளையுள்ள குடும்பமும் குடும்பமே. பெற்றோரும் பிறரும் பெருகிய குடும்பமும் குடும்பமே. குடிசையானாலும் கூடமானாலும் நிலைவாயில் உண்டு. அரிசி ஆழாக்கு ஆனாலும் ஆக்க அடுப்பு வேண்டும். ஆள் சுருங்கினாலும் பெருகினாலும் குடும்பம் குடும்பமே. குடும்பம் என்றால் இன்பமும் உண்டு; துன்பமும் உண்டு. துன்பமே இல்லாக் குடும்பம் உண்டு என்றால் அது இன்னும் (என்றும்) பிறவாத குடும்பமே. சமையல் கட்டிலே கண்ணீர்! விருந்தறையிலே களிப்பு கட்டிலிலே களிப்பு! தொட்டிலிலே கவலை! வெளியே வெளிச்சம்! உள்ளே இருட்டு! வீட்டுக்கு வீடு வாயிற்படி! ஊடும்ஊடல் எதற்கு? கூடும் கூடலுக்கு! வாட்டும் வெயில் எதற்கு? வளமாகும் மழைப் பொழிவுக்கு! சுடுதல் எதற்கு? சுடர்விடுவதற்கு! வலி எதற்கு? வலிமை வருவதற்கு! பாலைப்பிரிவு எதற்கு? குறிஞ்சிப் புணர்வு சிறத்தற்கு! ஒருவர் கடிகாரம்போல், ஒருவர் கடிகாரம் மணி காட்டுவது இல்லை! ஒருவர் நாடித்துடிப்புப்போல், ஒருவர் நாடித்துடிப்பு இல்லை! ஒருவர் நாவின் சுவைபோல், ஒருவர் நாவின் சுவை இல்லை! ஒருவர் நினைவுபோல், ஒருவர் நினைவு எப்படி முற்றாக ஒத்துப் போகும்? * * * ஆயினும், ஒத்துப் போகின்றது அன்பு. நெட்டை குட்டையிலும் நேர்ந்து போகின்றது அன்பு. வறுமையிலும் வளமையிலும் இசைந்து போகின்றது அன்பு. ஒருவருக்கு ஒருவராகி, இருவரும் ஒருவராகி இசைந்து போகின்றது அன்பு. அந்த அன்பின் வாழ்வே வாழ்வு. அதனால், அன்பின் வழியது உயிர்நிலை அன்புற்று அமர்ந்த வழக்கு அன்போடு இயைந்த வழக்கு அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் வானுயர் வள்ளுவங்கள் கிளர்ந்தன. * * * அன்பு வாழ்விலே ஏற்றம் இல்லை! இறக்கம் இல்லை! அன்பு புகாவாழ்விலே ஏற்றம் உண்டு; இறக்கமும் உண்டு. ஆனால், அன்பு என்றும் ஒற்றை வழிப்பாதை அன்று; அஃது இரட்டை வழிப்பாதை! அன்பு, பிரிவறியாது. பிரிவறியின் தாங்கிக் கொள்ளாது. அன்பு, தன் உரிமையைப் பங்கு போட்டுத்தர ஒத்துக் கொள் ளாது, அந்நிலையில் ஆற்றாத் துயராம்! அவலப் பெருக்காம்! ஆமாம்! அவ்வன்பு காதல் அன்பு! அன்பின் விரிவு அருள் எவ்வுயிர்க்கும் அன்பு செலுத்தும் விரிவினது. அன்பு, தாய்; அருள், பிள்ளை; தாயினும் பிள்ளை பெருக்க மிக்கது, அருளில் விரிந்தாரும், அன்பைத் துறக்கும் நிலையும் உண்டு. அருமைத் துணையையும் அன்பு மகனையும் பிரிந்து சென்ற புத்தர் அதற்குச் சான்று? அருளில் விரிந்தாரும், உள்ள அசைவால் மனைவியைத் துறந்து மாற்றாளைச் சார்தல் உண்டு! அதற்குச் சான்று பொதினி (பழனி) மலைத் தலைவன் பேகன். மயிலுக்குப் போர்வையளித்த மாண்பாளன் பேகன்! உடுத்துமா மயில்? போர்த்துமா மயில்? ஆடுதல் எல்லாம் அவலக் குறிதானா? களித்தாடுதல் கலைமயில் இயல்பல்லவோ? இவற்றை யறியானோ பேகன்? பேகன் அறிவுள்ளம் அறியும்? அவன் அருளுள்ளம், அவன் அறிவுள்ளத்தை வெற்றி கொண்டு விட்டது! அதன்பயன் என்ன! அழியாப் புகழ் பெற்றான்; உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ சடாஅ யானைக் கலிமான் பேகன் (புறம். 141) மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேகன் (புறம். 145) என்பன அப்பேறு படைமடம் படாத அவன் கொடைமடம் படுவன் என்பதன் சான்று இது. தன்மனை இருக்கத் தன்னையோ மற்றொருத்திக்குக் கொடுத்து விட்டான்? அவன் மனைவியோ, அவனே உயிராகி ஒன்றிப் போனவள்! அவன் செயலைக், கொடைமடம் எனப் புலமையாளர் போற்றினர் அல்லர். இடித்துரைக்கவும் ஒருப்படுத்தவும் தவிர்ந்தனர் அல்லர். அவன் இருக்கும் இடம் தேடிப் போய் உரைத்தனர். ஒருவரா இருவரா? ஒரு நால்வர்! எளிய புலமையரா? அந்நாளில் புகழ்க் கொடி கட்டிப் பறந்த புலமைச் செல்வர்கள்; கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் என்பார் (புறநானூறு 143- 146) என்ன மொழிந்தனர்? பேக நேற்று உன்னைப் பாடினேன். உன்மலையைப் பாடினேன். என்ன தவறு செய்தேன் யான்? என்பாடலைக் கேட்ட அவள், கண்ணீர் ஒழுக்கை நிறுத் தாமல் கலங்கி அழுதாள்! இரங்கல் பண் இசைக்கும் குழல் போல் அவள் அழுகை ஒலி வெளிவந்தது. இரங்கத் தக்க அவள் எவள்? நீ அறிவையோ? என்றார் கபிலர். அன்ப, யாழிசை மீட்டிக் கொண்டு உன் கானத்தைப் பாடினேன். நைந்து நைந்து அழுதாள்! இளைய நங்கையே, எம் தலைவன் பேகனுக்கு உரிமை உடையையோ என்று அவளை வணங்கிக் கேட்டேன். யான் அவனுக்கு உரியேன் அல்லேன்; எம்போலும் ஒருத்திக்கு அவன் உரியன்; நல்லூரில் உள்ளான் என்றாள். அருளாளனாகிய நீ அவளுக்கு அருளாதிருத்தல் கொடுமையே யாம் என்றார் பரணர். அவரே மேலும், மயிலுக்குப் போர்வையளித்த மன்னவ, அருளாள, யாம் பசித்தும் வாரேம்; பாரமும் இல்லேம்; யாம் நின்னிடம் வேண்டும் பரிசில் வருந்தி நிற்கும் நின்மனைக் கிழத்தியின், தீராத் துயரைத் தீர்க்க உடனே தேர்ஏறிச் செல்வதேயாம் என்றார். வெல்லும் போர்ப் பேக, உன் பரிசில் வேண்டா; பாராட்டு வேண்டா; உன்னைப் பாடிவந்த எமக்குப் பரிசில் ஒன்று வழங்குவை யாயின், உன்னையே நினைந்து நையும் உன்துணையின் கூந்தல், புகையும் பூவும் கொள்ளுமாறு விரைந்து செல்ல, உன் குதிரையைத் தேரில் பூட்டி உடனே புறப்படுவதேயாம் என்றார் அரிசில்கிழார். ஆவியர் கோவே, மலைகளையும் அருவிகளையும் கடந்து நின்னைக்காணவந்தேன். யாழை மீட்டிச் செவ்வழிப் பண் பாடினேன். இசை கேட்டு மகிழ வேண்டிய அவள் இணைந்து அழுதாள். அவள் நீராடி மலர் சூடி மகிழுமாறு நீ புறப்படும் அதுவே யாம், நின்னை வேண்டிக் கொள்ளும் பரிசில் என்றார் பெருங்குன்றூர் கிழார். வையாவிக் கோப்பெரும் பேகன் வாய்மொழிப் புலவர்கள் சொல்வழி நின்று நல்வழி கொண்டான். அவன் ஆருயிர்த் துணையாம் கண்ணகியார் துணை கொண்டு துயர் நீங்கினார். பரிசே குறியாம் புலவர் இப்பண்பாரும் பணியைச் செய்வரோ? முறை செய்து காக்க வேண்டும் மன்னவன் தன் குடும்பக் கடமையில் முறைகேடு புரிகின்றான். அவன் எளியன் அல்லன். அவன் ஆணை இறையாணை. அவன் வழி நிற்பது படைத்துறை. அதன் வழிப்பட்டது சிறைத்துறை. அவன் வழிச் செல்வதே முறைமன்றத் துறை. இடித்துக் கூற வேண்டும் அமைச்சரும் நாட்டுக்கடமை அல்லா வீட்டுக் கடமையைக் கூறுதற்கு நாமென்ன செய்வோம் என்று ஒதுங்கி விட்டனர் போலும்! ஆனால், அவ்வாறு ஒதுங்கினர் அல்லர் அறிவறிந்த அருட்பெரும் புலமைச் செல்வர்கள். அரசன் ஆயின் என்ன? அவன் செயல் அடாதது. அவனுக்கோ அவன் நாட்டுக்கோ பெருமை தாராது. அவனைத் திருத்துதல் அறிவறிந்த நம்கடன் எனக் கடமையைத் தம் மேல் அள்ளிப் போட்டுக் கொண்டு நயமாகக் கடனாற்றி நன்றாக்கினர். சிக்கல்மிக்க கடமை இது. ஏனெனில், நன்றாற்றல் என்றுமட்டும் துணிந்து இறங்கிவிட முடியாத செயல்! பின் விளைவு என்ன ஆயினும் ஆக என்று முடிவெடுத்துக் கொண்டு செய்யத்தக்க செயல். புலவர்கள் சான்றாண்மைக் கடமை போற்றத்தக்கது. அதனினும் போற்றத்தக்கது, அவர்கள் சொல்லை மதித்துப் போற்றிய வல்லாளன் பேகன் செயல்! * * * இற்றை நடைமுறையில் இவ்வாறு அறிவுறுத்தும் சான்றோர் அரியர். அப்படி ஒரு சான்றோர் துணியின், அவர் உரையைச் செவிக் கொண்டு கேட்கும் ஆள்வோர் இருப்பாரே அரியர் எனின், ஏற்போர் எவர்? முடிமன்னன் காலத்தில் முடிந்த, காட்சிக்கு எளிமையும் கடுஞ் சொல் இன்மையும் கூட, குடியாட்சிக் காலத்தில் கொள்ளை போகிவிட்டதே! ஆள்வோரிடம் உண்மையை எடுத்துரைப்பதே ஆகாப்பகையாகும் நிலையில், இடித்துரைப் பார் நிலைமை என்னாம்? இந்நிலையிலே தான், அருளாய் ஆகலோ கொடிதே என்று இடித்துக் கூறிய அந்த உணர்வு எங்கே? இன்னா துறைவி அரும்படர் களைமே என்றும், வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே என்றும் ஆணையிட்டுக் கூறிய அந்த உணர்வு எங்கே? என்று ஏங்கும் நிலையில் இற்றை உலகம் உள்ளது. 8. யான்கண்டனையர் மெய்ப்பொருள் கொள்கைகளுள் ஒன்று சார்ந்ததன் வண்ணமாதல் என்பது. நெருப்பினை நெருங்கினால் வெப்பத் தாக்குதல் நீரினை நெருங்கினால் தண்மைத் தழுவல். பற்றி எரியும் வைக்கோற் போரின் பக்கத்தில் இருக்கும் போதும், பொங்கி வழிந்து பூரிக்கும் அருவிச்சூழலில் இருக்கும் போதும் வேறுபாடு இல்லையா? பட்டுடையுடுத்துப் பளிச்செனத் திரியும் நிலைக்கும், பழங் கந்தை யுடுத்துப் பசித்துத் திரியும் நிலைக்கும் உளப்பாட்டில் எவ்வளவு வேற்றுமை? இவையெல்லாம் உடலைத் தாக்கி உள்ளத்தைத் தாக்கு பவை. இனி உள்ளத்தைத் தாக்கி உடலைத் தாக்குபவையும் உண்டு. அவற்றையே திருவள்ளுவர் சிற்றினம் சேராமை என்றும் பெரியோரைத் துணைக் கோடல் என்றும் கூறினார். நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று என வரவேற்று, தீயாரைக் காண்பதுவும் தீதே - திருவற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது என ஒதுக்கி யுரைக்கும் இத்தகு பாடல்களும் அறிவுரை களும் நல்லதும் அல்லதுமாம் இனச்சார்பு சுட்டி நலப்பாடு செய்வன ஆகும். * * * சார்பு நன்றாக அமையுமானால், தீயோனும் தூயோன் ஆவான். சார்பு அன்றாக அமையுமானால், தூயோனும் தீயோன் ஆவான். பன்றியோடு சேர்ந்த கன்றும் அது தின்னும் என்பது போலும் பழமொழிகளும் தீச்சார்புத் தீமையை உரைப்பனவே. மாசில் வீணை, மாலைமதியம், வீசுதென்றல், வீங்கிள வேனில், மூசு வண்டறை பொய்கை எனச் சார்பு வளத்தை அடுக்குகிறார் நாவுக்கரசர். குளிர் தரு, தரு நிழல், நிழல் கனிந்த கனி, மென்பூங்காற்று, காற்றில் விளை சுகம், சுகத்தில் உறும் பயன், ஊற்றுச் சுவை நீர், தண்ணீரிடை மலர்ந்த மலர், அதன் மணம் எனச் சார்பு நலங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்குகிறார் வள்ளலார் உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் என்பதும், நீ கற்கும் நூலைக் கொண்டே உன்னைச் சொல்லி விடலாம் என்பதும் சார்பு விளக்கங்கள். ஒருவன் வைத்துள்ள விளை நிலம் அவன் உழைப்பனா சோம்பனா என்பதைச் சொல்லிவிடும். * * * நல்ல சார்பு எத்தகைய நலத்தைச் செய்யும்? தீயனை நல்லன் ஆக்கும், சோம்பனை உழைப்பாளன் ஆக்கும். நோயனை நலத்தன் ஆக்கும். குடியனைத் திருத்திக் கொள்கையாளனாக்கும் பாவ இருப்பையும் பண்பாட்டுச் சின்னமாக்கும். பக்கத்துப் பூந்தோட்டம், மணத்தால் கவரும்; பார்வையால் வயப்படுத்தும்; என்னைப் போல் அமை என ஏவும்; தன் வீட்டுச் சூழலையும் பூந்தோட்டமாக்கி விடவைக்கும். நல்ல தூண்டல், நல்ல துலங்கல். * * * நாங்கள் உங்களைக் கேள்விப்பட்டே நாற்பது ஆண்டு களுக்கு மேலாகி விட்டன. பிள்ளைகளாக இருந்த நாளில் கேள்விப் பட்டோம். நாங்களோ நரைத்துத் திரைத்து முதிர்ந்து விட்டோம்! உங்களைப் பார்த்தால் வயதும் தெரியவில்லை; மூப்புச் சான்றும் தோன்றவில்லை. மொய்த்து வளர் பேரழகும் மூத்துத் தோன்றுகின்றதே அன்றி. மூப்புக் கோலம் தெரியவில்லை. எங்கள் நினைவுத் தோற்றத்திற்கும் நேர்த் தோற்றத்திற்கும்தாம் எத்துணை வேற்றுமை? இதன் உள்ளடக்கம் என்ன? உரைக்க வேண்டும் என்று உவப்பாலும் திகைப்பாலும் பெருமூதாளர் பிசிராந்தையாரை வினவுகின்றனர், நரைத்தலையர் சிலர். மூப்பை வெளிப்படுத்தும் நரை இல்லை என்றுதானே வியப்படைகிறீர்கள். சொல்கிறேன் என்றார். பிசிராந்தையார். * * * நான் நல்ல நிறைவோடு இருக்கிறேன்; அதனால் எனக்கு நரை இல்லை என்று சொல்லிவிடலாம்.. அப்படி ஒருவர் தாமாக மட்டும் நல்ல நிறைவோடு வாழ்ந்து விடவும் முடியாது. அப்படி அவர் சொன்னால் தற்செருக்காக அமையுமே அன்றி உண்மையும் ஆகாது. எங்கள் பரம்பரை இப்படி என்றும் சொல்லிக் கொள்ளலாம். பரம்பரை மட்டுமே காரணமாகி விடுவது இல்லை என்பதை ஒரு குடிப்பிறந்தாரை ஒட்டு மொத்தமாக ஆராய்வார் உண்மை அறிவார். நெடுவாழ்வுப் பெற்றோர்க்குக் குறு வாழ்வுப் பிள்ளை களும், குறுவாழ்வுப் பெற்றோர்க்கு நெடுவாழ்வுப் பிள்ளைகளும் பிறத்தல் உலகம் அறியாதது அன்றே! பிசிராந்தையார் சொன்னார்: என் சார்புகள் இனிக்க இனிக்க நலமாக அமைந்துள. அவை என்னை இளமை உள்ளத்தனாகவும் இளமைக் கோலத்த னாகவும் விளங்கச் செய்கின்றன. அவ்வினிய சார்புகளுள் தலையாயது, என் இனிய உயிர்த் துணையாம் மனைவியின் சார்பு. அவளைப் பெற்றேன்; பெற இயலா அருமைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றேன். என்னினும் என்மேல் பேரன்புக் காதல் செலுத்தும், என் துயர்க்கு என்னினும் துடித்து நிற்கும் அன்புப் பிழம்பு, என் தேவையை அறிந்து என்னினும் முந்து நின்று உதவும் அந்த அருட்கனி, எனக்காகவே தன்னை முற்றாகத் தந்து விட்ட அந்தப் பிறவி ஈகி என் உடலாய், உணர்வாய், உயிராய் விளங்குகின்றாள். அவள் இருக்கிறாள். எனக்கு இல்லாக் குறை, பொல்லாக் குறை என எதுவுமே இல்லை! என் காவல் தெய்வம் அவள். அவள் தன்னை மட்டுமோ காக்கிறாள்? என்னையும் காக்கிறாள். தன் குழந்தைபோல என்னைக் காக்கிறாள். கண்ணைக் காக்கும் கண்ணிமை போலக் காக்கிறாள்; முதியரைப் பேணிக் காக்கும் இளையரைப் போலக் காக்கிறாள்; இவற்றிக்கு மேலே உயிர்க் காதலனைக் காக்கும் உயிர்க் காதலியாகக் காக்கிறாள். தன்புகழோடு என்புகழையும், பிறந்த குடிப் புகழோடு புகுந்த குடிப்புகழையும் ஒருங்கே காக்கிறாள். இத்தகைய காவல் கடமையளைப் பெற்றபேறே யான் முதுமையை வெற்றி கொண்ட பேறு! தலையாய பேறு. மனைவி மனம் போல வாய்த்தாலும், மக்களும் அப்படி வாய்க்க வேண்டுமே! மண்ணின் வளத்தை வித்தின் முளை காட்டும். பெண்ணின் வளத்தை அவள் வயிற்று மக்கள் காட்டு வர் என்பதை மெய்யாக்கும் மக்கள் எனக்கு வாய்த்துளர். அறிவால் நிரம்புவர் மக்கள்; அதே பொழுதில் செருக் காலும் நிரம்புவர். என் மக்களோ தாயின் பண்பு நலங்களெல் லாம் ஒருங்கே கொண்டு திகழ்கின்றனர். அவளைப் பெற்ற பேற்றைப் பெருமிதமாக நினைப்பதா? அவள் பெற்றுத்தந்த பேறுகளைப் பெருமிதமாக நினைப்பதா? இல்லை; ஒன்றில் ஒன்று விஞ்சி நிற்கும் பேற்றைப் பெருமிதமாக நினைப்பதா? மனைவியைப் போலவே மக்களும் மனை நிரம்பியவராய் மனம் நிரம்பியவராய் திகழ்கின்றனர். இது இரண்டாம் காரணம். எனக்கு ஏவலர் உளர். அவர்க்கு ஏவலர் என்னும் பெயர் தரலும் ஆகாது. ஏனெனில் ஏவிச் செய்பவர் அல்லரோ ஏவலர்? அவரை நான் என்று ஏவினேன்? அவரும் தாம் எந்த ஏவலை நோக்கிச் செய்தனர். குறிப்புணர்தல் அரிய திறம்! குறிப்புணர்ந்து உள்ளம் கொள்ளக் கடமை புரிதல் அதனினும் அரிய திறம்! அத்திறம் உடையவரை நம் உறுப்புகளுள் எதனைக் கொடுத்தேனும் கொள்ளுதற்கு உரியர். ஆனால், உறுப்பைக்கொடாமலே தம் பொறுப்பைத் தகவாக முடித்துக் காட்டும் ஏவா ஏவல் இளைஞர் எனக்கு வாய்த்துள்ளாரே, இப்பேறு பெரும்பேறு. ஏனெனின் முன்னையிரு பேறு வாய்த்தார்க்கும் இப்பேறு வாய்த்தல் அருமையை உலகம் காட்டுமே! மனை மக்களும் ஏவலரும் இனிதின் அமைந்தால் நாடும் ஊரும் நன்றாக இருக்க வேண்டும்! நாட்டின் நலம் எவரைப் பொறுத்தது? ஆட்சியாளரைப் பொறுத்தது! ஆட்சியாளர் என்பார் அஞ்சத் தக்கார்; அடுத்து நெருங்கத் தகார் என்ப தெல்லாம் பிற பிற நாட்டுக்கும் ஆட்சியர்க்கும் ஏற்கலாம். v« eh£L M£áandh mšyit fUjh‹; ešyitna fUJ th‹; Kiw brŒJ fh¡F« ‘ïiw mt‹! ஆகலின் மக்கள் அலை கொலையின்றி அமைந்து வாழ இயல்கின்றது. இன்னும் நிறைவான ஒன்று; உறையும் இடத்தை இன்ப உறையுள் ஆக்கும் சான்றோர் பலர் யான் வாழும் ஊரில் இருக்கின்ற இணையில்லாப் பேறு. அச்சான்றோர் எத்தகையர்? அறிய வேண்டுவன எல்லாம் அறிந்த அருமையர்; உயர் பண்புகள் எல்லாம் ஒருங்கே கொண்ட உயர்வினர்; அடக்கத்தின் கொள்கலர்; கொள்கையின் வடிவர். அவர்தம் காலடிபட்ட இடத்தும் கவலைபடியாக் கனிவு, தானே உண்டாகத் தக்கார். இவ்வளவு நலங்களும் இருப்பதால்தான் எனக்கு அவலக் கவலை இல்லை. ஆசையும் அலைப்பும் இன்மை வெறுமையும் இல்லை. எல்லாம் இன்பமே; எங்கும் இன்பமே என்னும் இனிய வீறே உண்டு! இந்நிலையில் முதுமைக்குச் சீட்டுத் தந்து விட்டு இளமைக்கு ஆட்சி இருப்பதில் வியப்பு இல்லையே! என்றார். வினாவிய இளைய முதுமையர், இம்முதிய இளைஞரின் உரையை கேட்டு வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்து நின்றனர். பெருந்தகைப் புலவர் பிசிராந்தையார்க்கு அமைந்த உணர்வுமிக்க மனையும் மக்களும் வினை வலரும் வேந்தும் சான்றோர் ஒருங்கே அமையும் இன்புலகப் பேறும் நமக்கு உண்டோ உண்டோ என்ற எண்ணம் எழுகின்றது. பிசிராந்தை யார்க்கு வாய்த்த, அந்த உணர்வு எங்கே? எங்கே? 9. நாடும் சொல்லான் ஊதியம் என்பது, முதல் வழியாக உண்டாகும் மிகை வருவாய். பொருள் வழிப்பட்ட இவ்வூதியம், உயிர்வழிக்கும் உண்டு என்பதைக் குறித்தார் திருவள்ளுவர். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார். உயிர்க்கு ஊதிய மாவன ஈதலும் புகழும் என்றார். உலகில் அழியாத ஒன்றே ஒன்று புகழே என்றும் குறித்தார். புகழ் பெறுவிப்பனவற்றுள் கொடைக்கே முதன்மை உண்டு என்பதால் ஈதலும் இசைபட வாழ்தலும் என இணைத்துக் கூறினார். நிலைபெறாத இவ்வுலகில் நிலைபெற நிற்பது புகழே என்று புறநானூறும் கூறிற்று. புகழின் புகழைச் சொல்லி முடியாதுதான்! பொன் முதலாகிய மூவாசைகளைத் துறந்தார்க்கும் புகழாசை உண்டு என்பது கண்கூடு. மெய்யாகத் துறந்த மெய்த் துறவியர்க்கே அந்நிலை என்னின் பொய்த் துறவியரையும் பிறரையும் சொல்வானேன்? புகழ் பலரைக் கூத்தாட்டம் ஆடவே வைக்கிறது. பேயோட்டி என்பான் உடுக்கடித்து எப்படி ஆட்டி வைக்கிறானோ அவனினும் விஞ்சவே புகழ் பலரை ஆட்டி வைக்கிறது. புகழ் என்பது மாலை மதிப்பு, பாராட்டு பொன்னாடை, படம் பட்டம் என்றெல்லாம் விரிந்து படமெடுத்தே ஆடுகின்றது! என்னை மதித்தாரா? வரவேற்றாரா? நல்லிருக்கை தந்தாரா? ஒரு சொல் சொன்னாரா? ஒரு சொல் சொல்லச் சொன்னாரா? வந்து வழியனுப்பினாரா? என்றெல்லாம் புகழ் விரும்பிகள் புலம்பிப் புலம்பிப் பட்டியல் இடுதல் நாளும் கேட்கக் கூடியதே. முன்னெல்லாம் இப்போலிப் புகழ்ம்மை மாமன் என்னும் பெயரிலும், ஊர்த்தலைமை நாட்டாண்மை முதன்மைக்காரர் என்னும் பெயரிலும் நிகழ்ந்தன. மாமன் முதன்மையும் அவன் சார்புடையார் செய்கையும் எந்தவொரு நல்ல நிகழ்ச்சியையும் அல்ல நிகழ்ச்சியாக்காமல் போய்விட்டால் அவன் ஓரளவு பண்பட்ட மாமன் - மாமன் கூட்டம் - என்பது பொருள். இந்நாளில் மேடை ஏறுவார் மேடை போடுவார் மேடை நடக்க உதவுவார் ஆகிய எல்லாரும் பெரும்பாலும் போலிப் புகழராகப் போய்விட்டமையால், படிப்பாளிகளும் வழிகாட்டி களும் ஆட்சி நடத்திகளும் எப்படியெல்லாம் இழிநிலையில் இருக்கிறார்கள் என்பதை உள்நகையால் நகைப்பாரும், கைகொட்டி நகைப்பாருமாய்ப் பொதுமக்கள் ஆய்விட்டனர். அப் பொது மக்களுக்கும் இப்போலிப் புகழ் தொற்று நோயெனப் பற்றிக் கொண்டு சிற்றாட்டம் nguh£l.ம் போடலும் காணக் கூடியவாகவே உள்ளன. புகழென்ன புகழ்; தேடிப் போவதா புகழ்; தேடிவர வேண்டியது என்றால், அது ஒரு தனிப்பிறவி; அது என்றும் திருந்தாது; கடைத்தேறவும் செய்யாது என்று ஓரங்கட்டலும் ஒதுக்கி விடலும் கண்கூடு. எனக்கு ஒரு பாராட்டு விழா வைக்கக் கூடாதா? எனக்கு ஒரு பட்டமளிப்பு வழங்கக் கூடாதா? எனக்கு மணிவிழா ஏற்பாடு செய்யக் கூடாதா? எனக்கு ஒரு வரவேற்பு வாழ்த்து வைக்கக் கூடாதா? என்று தாமே தூண்டி, தாமே ஊரைக் கூட்டி, தாமே மேடைச் செலவும், தமக்குரிய மாலையும் பொன்னாடையும் வாழ்த்தவருவார்க்குரிய போக்கு வரவும் விருந்தும் வேற்றுமாம் எல்லாம் எல்லாம் தாமே ஏற்றுக் கொண்டு, அழைக்கிறோம் என்பவர்க்குரிய பெயர்க் கொடைக்கும் பெருங்கொடை வழங்கி விழாக்கோலம் கொள்ளும் வேடிக்கைக் காட்சிகளை எண்ணிப் பார்க்கும் எவருக்கும் போலியாகக்கூடப் புகழுக்கு இந்த உலகம் வைத்திருக்கும் பற்றுமை நன்கு விளங்கும். இப்போலிமையின் விளைவு என்ன? மெய்யாகவே புகழுக்குரியராய்ப் பாராட்டுக்கு உரியராய் இருக்கும் ஒருவரை உள்ளார்ந்த அன்புடன் தாமே முன்னின்று தம் கைப் பணம் செலவிட்டு நடத்தும் நல்லெண்ணமுள்ள வரையும் முன்னைக் கூட்டத்துள் ஒருவராகச் சேர்த்துவிடும் இழிமைக்கு இடமாக்கி விடுகிறது. பழம் புலவர்களின் இயல்பு நவிற்சியை விடுத்து, பிற்காலப் புலவர்கள் பத்து உருபா தந்தவரையும் பத்துப் பிறப்பெடுத்த திருமாலெனப் புகழ்ந்து, போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடின் தூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் என்பதற்குச் சான்றானவர்களையும் வெல்லுவார் போலப் பதவியுடையாரைப் பாட்டுடைத் தலைவராக்கிப் பாடிப் பாடிக் குவித்து அவர்களுக்கு இயல்பான தலைக்கனத்தை மேலும் பெருக்கித் தாளம் போடும் நிலைமை பெருகிவிட்ட போது, மெய்ப்புகழும் பொய்ப்புகழாகவே தோன்றும் என்பதற்கு ஐயமில்லயே! தம்புகழ் கேட்க நாணம் கொள்ளுதல் இயல்பான ஆண்மைப் பண்பாடு. தம் புகழை நேருக்குநேர் கூறுதல் நட்புக்கும் ஒரு குறைவே என்பது நட்புச் சால்பு. புகழும் வேண்டாப் புகழின் வாழ்வாதல் மெய்ப் புகழாளர் இயற்கை. * * * வறிய புலவர் பெருஞ்சித்திரனார். முதிரத்துக் குமணனைப் பாடிப் பரிசிலுடன் திரும்பினார். தம் மனையாளிடம் அதனைத் தந்து இன்னவர்க்கு என்று எண்ணாதே; என்னைக் கேட்க வேண்டும் என்றும் எண்ணாதே; வைத்து வாழ்வோம் என்றும் கருதாதே; எல்லோர்க்கும் கொடு; இப்பரிசில் வழங்கியோன் வள்ளல் குமணன் ஆவன் என்று கொடைப் புகழைக் கொடுத்தானுக்கே கொடுத்தவர் அவர். காணார் கேளார் கால்முடம் ஆயோர் பேணா மாந்தர் பிணிநோய் உற்றோர் யாவரும் வருக ஆபுத்திரன் கை அமுத சுரபி என்று அமுதக் கொடையை, அக்கொடையாளன் பாலே சேர்த்திப் புகழ் வேண்டாப் புகழாட்டியாய்ப் புகழுற்றவர் மணிமேகலையார்! பலாமரத்தின் அடியிலே ஒரு பெரியவர். அவர் உடையோ கிழிந்த கந்தல். அவர் சுற்றமோ பெரியது. அவர்கள் அம்மர நிழலில், வழிநடந்த களைப்பால் அயர்ந்து கிடந்தனர். அப்பெருஞ்சுற்றத்தின் அயர்வுக்கு அயர்ந் தார் பெரியவர். அங்கே ஓர் இளைஞன். செல்வச் செழிப்பாளன் போலும் தோற்றத்தன். வேட்டை யாட வந்தவன்; வில்லும் கையுமாக இருந்தான். வேட்டையில் மானை வீழ்த்தினன் போலும்! அவனைக் கண்டதும் பெரியவர் எழுந்தார். அவரை எழ விடாமல் இருக்க வைத்து, அவர்தம் அயர்வையும் சுற்றத்தின் களைப்பையும், கண்டு தன்னொடு வந்தவர்களை எதிர்பாராது தீயைத் தானே பற்றவைத்து மானை வாட்டினான். பெரியவரும் சுற்றத்தரும் பசியார உண்பித்தான். அருகிலே இருந்த அருவியைச் சுட்டிக்காட்டி நீர்பருகச் செய்தான். பசியும் களைப்பும் நீங்கிய பெரியவர் தம் சுற்றத்தினருடன் வழி நடையைத் தொடரக் கருதினார். விடைபெற்றுக் கொள்கிறேன் என்று பெரியவர் சொல்ல விரும்பும் குறிப்பை உணர்ந்து கொண்ட அவன், காட்டிலே இருக்கும் எம்மிடம் சிறந்த அணிகலம் வேறு இல்லை என்று கூறி, மார்பில் விளங்கிய முத்து மாலையையும் கையில் விளங்கிய கடகத்தையும் கழற்றி எடுத்துக் கையில் தந்து வணங்கி நின்று விடை தந்தான். பெரியவர் திகைத்தார்; திகைப்பின்மேல் திகைப்பானார். என்ன பணிவு, என்ன தொண்டு; என்ன கொடை என வியப்பின் மேல் வியப்பானார். அப்பா, அருமையாகப் பசியாற்றினை; அணிந்துள்ள அணிகளையும் அப்படியே கழற்றி வழங்கினை; நின்நாடு எது? Ë bga® v‹d? நாங்கள் அறிந்து கொள்ளுமாறு கூறு என்று பெரியவர் கேட்டார். உவந்து உவந்து வழங்கிய அவ்வள்ளல் ஊரையும் சொல் லாமல் பேரையும் சொல்லாமல் பெரியவரே நீர் செல்லும்வழி இது என்று கைகாட்டிவிட்டுப் போய் விட்டான். என்னே உள்ளம்! என்னே கொடை எனமேலும் வியந்தார் பெரியவர் அவன் ஊரையும் பேரையும் அறிந்து கொள்ளப் பேராசைப்பட்டார் பெரியவர். கைகாட்டிப் போக விட்டுவிட்ட அவனை அறிந்து கொள்வது எப்படி? வரும் வழியிலே வருவோர் போவோரைக் கேட்டுக் கேட்டு அவன் யாவன்? அவன் ஊர் எது? என்பதை அறிந்து கொண்டார் பெரியார். அவன் தோட்டி மலைத் தலைவன் நள்ளி என்பான் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்பானும் அவனே அப்பெரியவர் வன்பரணர் என்பார். அவர் உரைத்த இயல்நிலைக் காட்சி புறநானூறு 150 ஆம்பாட்டு. புகழுக்கு உரியனவெல்லாம் தானாகவே முந்து முந்து நின்று செய்து, ஊரையும் பேரையும் சொல்லாமல் போய் விட்ட அவன் பெருந் தக்க பண்பு எங்கே? கோயிலுக்குப் போடும் குழை விளக்கின் வெளிச்சமும் வெளிப்படவிடா வகையில் பெயரைப் பொறித்து வைக்கும் பெருமை எங்கே? கங்கையும் கொண்டு, கடாரமும் கொண்டு, ஈழமும் கொண்டு - கங்கை கொண்டான், கடாரங்கொண்டான்; ஈழந் திறை கொண்டான் என்று விருதும் கொண்டு ஊரும் கண்ட உரம் எங்கே? காக்க வேண்டும் தொல்லியல் வரலாற்றுச் சின்னங் களிலும் பாறைகளிலும் கோயில் படிகளிலும் தம் பெயரையும் தம் காதற் கிழமையர் பெயர்களையும் வெட்டியும் எழுதியும் வைக்கும் இறங்கு நிலை எங்கே? ngUªJ ÃW¤j ÃH‰FilfS« Ãiya§fS« bjhl® t©o Ãiya§fS« V‹ gŸË¡fšÿÇ Ú®¡Tl ky¡Tl§fS« jh§»Ã‰F« »W¡fšfis¡ f©lhny ‘»W¡f® cyfkhfnt ngh»É£ljh? என்று எண்ணுவார் எண்ணங்களில் தோன்றாமல் போகாதே! அந்த வாழ்நிலை எங்கே இந்த வீழ்நிலை எங்கே? எந்நாடோ என நாடும் சொல்லான் யாரீரோ எனப் பேரும் சொல்லான் பிறர் பிறர்கூற வழிக்கேட்டிசினே நளிமலை நாடன் நள்ளியவன் எனவே என்னும் வன்பரணர் கண்ட, புகழையும் விரும்பாப் புகழுலகம் எங்கே? எங்கே என்று வினவும் நாம். அந்த உணர்வு எங்கே? எங்கே? எனத் தவிக்கிறோம். 10. அறிவுடையோன் ஆறு பேரறிவுச் செல்வர் சாக்ரடீசு. நூலறிவும் பெற்றார்; நுண்ணறிவும் உற்றார்; உலகியல் அறிவும் நிறைந்தார். புல்லை முன்னே ஒருவன் காட்டிச் சென்றால், அவன் பின்னாலே மாடு போவது போல, ஏடொன்றை ஒருவன் காட்டினால் அவன் பின்னாலே நான் போவேன் என்ற கல்விக் காதலர் அவர். எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும். அது எனக்கு எதுவும் தெரியாது என்ற மெய்யறிவு மேதையும் அவர். நஞ்சுண்ட பின்னரும், தம் செவியில் விழுந்த ஓர் அரிய பாடலை அறிந்து கொள்வதற்கு அவாவியபோது இந்நிலையி லுமா அறிவு வேட்கை என்று அருகில் இருந்தவர் கேட்க, போகிறதே போகிறேன்; இன்னொன்றையும் புதிதாகத் தெரிந்து கொண்டு போகலாமே என்று தான் கேட்கிறேன் என்றவர் அப்பேராளர். ஆய்தல் அறிதல் அறிவுறுத்தல் என்றே நாளெல்லாம் செலவிட்ட அப்பேராசிரியர், அறிஞர் ஆட்சி அமைவதையே விரும்பி விரும்பிக் கூறினார். அவர் தம் கருத்து விளக்கமாக எழுந்ததே பிளேட்டோவின் அரசியல் நூல்! திருவள்ளுவரும் இக்கருத்துகளில் அழுந்திய கொள்கையர் என்பது தெளிவான கருத்து. பொருட்பாலில் அரசியலைக் கூறத் தொடங்கிய அவர் இறைமாட்சி என்னும் முதல் அதிகாரத்தைஅடுத்தே கல்வியை வைத்த அருமை எண்ணத்தக்கதாம். அதனைத் தொடர்ந்து கல்லாமைக் கேட்டையும் கேள்விப்பயனையும் அறிவுடைமைப் பேற்றையும் தொடர்ந்து கூறினார். அறிவு அழிவில் இருந்து காக்கும் கருவி அறிவு பகைவரும் உட்புகுந்து அழிக்க முடியாத அரண் நன்னெறியில் செலுத்துவது அறிவு மெய்ப் பொருள் காண்பது அறிவு நுண்பொருள் காண்பது அறிவு அஞ்சுவது அஞ்சல் அறிவு எதிரது காத்தல் அறிவு அறிவுடையார் எல்லாம் உடையார் உலகியல் தழுவுவது அறிவு இவற்றை அறிவுடைமையில் கூறியதுடன் அறிதோறும் அறியாமை காணப்பெறும் என்னும் அறிவுப் பரப்பையும் இன்பப் பரப்புடன் இணைத்துக் கூறுவார். வலியறிதல், காலம் அறிதல், இடம் அறிதல், குறிப்பறிதல், அவையறிதல் முதலாம் அறிதல் வகைகளையும் பொருட்பாலில் கூறுவார். ஆள்வோன் கல்வி வல்லோனாக இருத்தலோடு கற்றறித லுடைய அமைச்சனையே திறமான தேர்ச்சித் துணையாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பார். மன்னராட்சி மக்களாட்சியாக மாறியுள்ள இக்கால நிலையில் அமைச்சர்களே ஆட்சியாளர்கள் ஆகிவிட்டனர். மக்கள் எவர்க்கு மிக்க வாக்குகளை அளிக்கின்றனரோ அவர்கள் ஆட்சி உறுப்பு ஆகின்றனர். அவருள் தலைவர் கட்சிப் பார்வையொடு குறித்த சிலரைத் தேர்ந்தெடுக்க அமைச்சுக் கட்டிலில் அமர்கின்றனர். ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துவிட்ட அளவில் அனைத் துத் திறங்களும் அறிவுக் கூர்ப்பும் துறைத் தேர்ச்சியும் ஒருவர்க்கு அமைந்துவிடும் என்பது இருக்கமுடியாதே! முடியாட்சிக் காலத்திலேயே மன்னராக இருந்தவர் அமைச்சர்கள் துணையொடு மட்டும் ஆட்சி செய்தார் என்பது இல்லை. எத்தனை எத்தனையோ சான்றோர்களும் அறிஞர்களும், அரசு செய்ய வேண்டும் செயல்களைச் செய்யுமாறு அறி வுறுத்தியதுடன் இடித்துக் கூறியும் திருத்தியுள்ளனர் என்பது அந்த உணர்வு எங்கே? என்னும் இச்சிறு சுவடியளவிலும் காணக் கூடியதே. ஆதலால், அறிவாளர் கருத்துக்கு ஆள்வோர் எத்தகைய மதிப்புத் தருதல் வேண்டும் என்பது நன்கு புலப்படும். அறிவு என்பது அவரவர் முயற்சியால் ஆர்வத்தால் பெறக் கூடிய பொருள். ஆணையால் ஆக்கப்படுவது அன்று. பொரு ளால் வாங்கிக் கொள்ளும் பொருளும் அன்று. ஆர்வத்துடிப்பும் உழைப்பும் உடையான் எத்தகு வறியன் எனினும் உறுப்புக்குறை உடையன் எனினும் தடையின்றி அறிவைப் பெற்றுக் கொள்ள இயலும். இன்மை என்பது வறுமை. இன்மைகளுள் எல்லாம் இன்மையாவது, அவ்வின்மையே என்று கூறியவர் திருவள்ளுவர். அதற்கு மேலும் ஆய்ந்து, அவ்வின்மையினும் அறிவின்மையே இன்மை பிறிதின்மை இன்மை என உலகத்தாரால் பழிக்கப் படாது எனவும் கூறினார். மேலும், திருவேறு; தேர்ந்த அறிவினர் ஆவதும் வேறு என்றும் கூறினார். ஆதலால் ஆட்சிப் பேறு உடையவர் எல்லாரும் அறிவுடையவர் ஆகிவிடார் என்பது வெளிப்படு செய்தி. மேலும் ஒன்று. அறிவு என்பது, கற்றறியும் அறிவு அளவுடன் நிற்பது அன்று. அருளுக்கும் அறிவுக்கும், இரண்டற்ற ஒருமை ஏற்படும் நிலைமையிலேயே அது முழுமை பெறுவது ஆகின்றது. அம்முழுமை பெறுவார் தனித்தன்மை உடையவர். அவர் அரசுக் கட்டிலைப் பற்றியோ, அதிகார ஆணைகள் பற்றியோ கவலைப் படாத உயிர்த் தொண்டர்கள். அவர்களை மேல் வரம்பாகக் கொண்டே அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போல் போற்றாக்கடை என்றார் திருவள்ளுவர். இவ்வறிவாளர் ஒரு மண்ணில் உள்ளார் என்பதே மண் பெற்ற பேறு அப்பேற்றை அரசு பயன் கொள்ளத் தவறின் அரசின் தவறாமே அன்றி அவர் தவறாகாது. நாட்டின் எல்லை தாண்டி வந்துவிட்டான் ஒரு புலவன். அவன் ஏறிய குதிரை கட்டுக்கு அடங்காமல் வந்ததன் விளைவு அது. ஆனால் அவனை அயல் நாட்டு ஒற்றன் என்று தண்டிக்கக் கிளர்ந்தான் வேந்தன். உண்மை உரைத்து அப்புலவனை உய்யக் கொண்டான் மற்றோர் உயிரிரக்கப் புலவன். அழுது கொண்டிருந்த சிறுவர், யானையின் ஆடி அசையும் மணி ஒலி கேட்டு அழுகை மறக்கின்றனர். அவர்களை மிதித்துக் கொல்ல வரும் கொலை யானை என்பதை அறியார்கள் அவ்விளஞ் சிறார்கள். அச்சிறார்களின் தந்தைக்கும் தனக்கும் உள்ள பகையால் பழிவாங்க முற்பட்ட வேந்தனின் கொடுஞ் செயலை எண்ணிக் குமையும் அளவில் நில்லாமல், ஏவும் வேந்தன் முன்னே சென்று நின் செயல் அறத்தொடும் அருளொடும் குடித்தகவொடும் இறையாண்மையொடும் கூடியது அன்று என்று எடுத்து உரைத்து உய்யக் கொள்கிறார் ஒருபுலவர். அதிகாரம் வந்து விட்டால் தலைக்கனம் இயல்பாக ஏறும்; ஏறவும் தன்னலக் கூட்டம் செய்துவிடும். நெருக்கடிகளும் சார்புகளும் நிலைக்கச் செய்யும் அந்நிலையில் ஆய்ந்து முடிவெடுத்து அறங்காணும் செம்மையும் மட்டுப்படும். இயல் பான நல்லவனுக்கே இந்நிலைகள் உண்டு எனின், அல்லவன் ஆட்சிக்கு உரியவனாக இருந்துவிடின் என்னாம் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை! வெற்றி வேற்கை என்பதொரு நூல். கடைக் காலப் பாண்டியருள் ஒருவனான அதிவீர ராமபாண்டியன் பாடியது அந்நூல். அதில், அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் என்கிறான். அறிவுடையவனை அரசன் விரும்புதல் ஒரு நிலை. விரும்பலாம்; பாராட்டலாம் மதித்துப்போற்றலாம்,நல்லுரைகேட்கலாம்;அளவளாவலாம்..m›tsnt அறிவுடையவனால் உலகம் எய்தும் பயனோ? சங்க நாளிலே இருந்த ஒரு பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். அவன் அறிஞன் அறிவினை மதித்தவன்; அறிஞர் வழி நின்றவன் என்பது அவன் பாடிய புறப்பாடல் ஒன்றால் புலப்படுகின்றது. அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்கிறான் அவன். கட்டடம் கட்டுவதற்கு வரைபடம் போட்டுத் தருகின்றார் ஒருவர். வரைபடத்திற்குத் தக்க கட்டடம் எழுப்புகிறார் கொற்றர். தொடர் வண்டி ஓடுவதற்குரிய வழியை வகுத்துக்கோடு காட்டுகிறார் பொறிஞர். சாலை அமைப்பார் அதன் வழியே அமைக்கிறார். நீர்த் தேக்க அணையின் இருப்பையும் கால்வழிகளையும் திட்டப்படுத்துகிறார் நீர்வள ஆய்ஞர்; அணையும் காலும் வாய்க்காலும் எழுப்பப்படுகின்றன. இவ்வாறே பொருளியல், வருவாய், மருத்துவம், கல்வி, குமுகாயம், சட்டம் என்பனவெல்லாம், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்? என்று அவன் கூறியபடிதானே நடை பெறுகின்றன என அமைவோம்! ஆனால், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்பதன் பொருள் இவ்வளவில் அமைவதா? ஆட்சிக்குள் அடங்கிய bபாறுப்புடையïவர்கள்mறிஞர்களேvனினும்,mரசின்MணைÃறைவேற்றற்fடமையர்ïலர்.muR ïவ்வாறுbசயல்படnவண்டும்vனvடுத்துரைக்கும்Kறையோ,cரிமையோ,mவர்ïல்லார்.m«Kiwí« உரிமையும் உடையவர் கட்சியரசுகளால் எந்த எந்த நோக்குகளுக்கு எல்லாம் ïரையாகிmல்லல்gடுவார்vன்பதுeற்பத்துIந்துMண்டுfளாகeல்லோர்mறிந்துtரும்bசய்தி.mâfhu« உடையவரும், ஆடிப் பாவை (கண்ணாடியில் தோன்றும் நிழல்) போலத் தூக்கத் தூக்கி ஓ ஓ என்று ஏற்றுப் போதலே ஒழுங்கு முறை எனக் கொண்டுவிட்டவர். மாறாக இருப்பார், மாற்றரசு அமையும் நாளில் கூற்றாக எதிரிட்டுக் கடனாற்றல் குறைவிலா நிறைவுக் காட்சி! இந்நிலையில் ஆட்சிக்குள் ஆட்பட்ட அறிஞர், அறவர் அவ்வுரிமை இழந்தே எவ்வகையாலும் நிற்கின்றனர். அதனால், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்னும் பாண்டியன் உரை மீண்டும் எண்ணத் தக்கதாகவே உள்ளது. அரசு சாராத - அரசு ஆணைக் கட்டுக்குள் அடங்காத - அறிவர் குழு, துறைவாரியாக அமைக்கப்படுதல் வேண்டும். ஆட்சி மாறினும் தொடரினும் அவர் வரிசை தொடர்வதாகவே இருக்க வேண்டும். எத்துறையிலும் எப்புதுத்திருத்தமும் மாற்றமும் மேற்கொள்வது எனினும் ஆள்வோரும் அதிகாரி களும் அக்குழுவின் கருத்துக்கு மதிப்புத் தந்து நடத்தல் வேண்டும். ஏறத்தாழ துறைவாரி முறை மன்றம் போலவே அவை இயலல் வேண்டும். அரசு ஏற்றுச் செய்யுமா? அறம் விரும்பும் அரசு எனின், மக்கள் நலம் நாடும் அரசு எனின், கையில் கறையும் நெஞ்சில் குறையும் இல்லா அரசு எனின் இதனை வரவேற்றுச் செயல்படுதலில் முந்து நிற்கும் செருக்கும் சிறுமையுமே ஆட்சி எனக் கொண்ட ஆட்சி எனின் இதனைச் சிந்திக்கவும் கருதாது. தன்னலப் பார்வை, அது தவிர்ந்தால் கட்சிப் பார்வை - என்று பார்த்து நடத்துதலே முறைமை என்று கொண்டு விட்டதால், அறிவுப் பார்வையும் தொண்டுப் பார்வையும் பரிசு பாராட்டுப் பார்வையும் எல்லாம் எல்லாம் அப்படியே ஆய்விட்ட பின்னர்ப் பதவிப் பார்வையும் பொருட்பார்வையும் தாமா பொதுமைப் பார்வையாய் அமையும்? தான் ஆட்சியாளனாக இருந்தும், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் என்று நெறிமுறை கண்டு பாடலாகப் பறையறைந்த அப் பாண்டிப் பெருமகன் உணர்வு எங்கே? இந்நாளை ஆள்வோர் உணர்வு எங்கே? அந்த உணர்வும் உண்டோ? உண்டோ? என்று ஏங்கவே வேண்டியுள்ளது. 11. இன்றே போல்க! காவிரி நீர்ச் சிக்கலா? தமிழக அரசியல் கட்சிகள் எத்தனை உண்டோ அத் தனைக்கும் தனித் தனிக் கருத்து இருக்கும். ஒன்றுபட்டு நிற்பது இல்லை! ஒன்றுபட்டு ஒலி எழுப்புவது இல்லை! ஒன்றுபட்டுப் போராடுவதும் இல்லை! ஏன்? கடையடைப்பு, சாலை மறிப்பு, உண்ணா நோன்பு - எல்லாம் தனித்தனி! நடுவண் அரசுக்குப் போய் நம் கருத்தை எடுத்து வைப்போம் வருக என ஆளும் அரசு சொன்னால், நாங்கள் உங்களோடு வாரோம். எங்களை உரிய சிறப்பொடு அழைக்க வில்லை. உரிய வகையில் - காலத்தில் அழைக்கவில்லை. நாங்கள் உங்களோடு வாரோம். எங்கள் கருத்தை நங்களே சொல்லிக் கொள்வோம்; எங்களுக்கு வழியும் தெரியும் வகையும் தெரியும் என நமக்குள் முட்டிக் கொண்டு நம் கருத்தின் நோக்கையும் போக்கையும் நாமே கெடுத்துவிடுதல் நமக்கு வழிவழி வந்த வாய்ப்பான பண்பாடு. * * * உங்களை எதற்கு அழைத்தார்? அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கா அழைத்தார்? உங்களை அழைத்துத்தான் உங்கள் நாட்டின் அரசின் சிக்கலைத் தீர்க்க நீங்கள் போக வேண்டுமா? அது உங்கள் தலைமேல் உள்ள கடமை அல்லவா! எவரிடம் எதற்கு வீண்பு காட்டுவது, ஆனால் அதே சிக்கலை உருவாக்கியவர் எப்படி நிற் கின்றனர்? ஆளுங்கட்சியா, எதிர்க் கட்சியா? உதிரிக் கட்சியா பெருங் கட்சியா? fh£á¡ f£áah, f£á¡ f£áah?வட்டாரக் கட்சியா, தேசியக் கட்சியா? சாதியக் கட்சியா? சமயக் கட்சியா? மோதல்கள், வரிந்து கட்டல்கள் வன்பகைகள் வைத்துக் கொண்டாலும், காவிரி நீர்ச் சிக்கல் என்பதை முழுக் கருநாடகச் சிக்கலாகவே கொண்டு கைகோத்து, தோள் தழுவி, மடிதட்டி, வரிந்து கட்டிப் போராட்டக் களத்தில் ஒன்றாக நின்று ஒன்றாக ஒலித்து ஒருமை காட்டுகின்றன! கண்ணிருப்பார்க்கு இது தெரியாததா? காதிருப்பார்க்குக் கேளாததா? அறிவிருப்பார்க்கு அறியவராததா? உணர்விருப் பார்க்கு ஒளிந்து போவதா? * * * உலகத் தமிழ் மாநாடு என்றால் ஆளுங்கட்சி மாநாடா? உலகந் தழுவிய தமிழரின் ஒருமித்த மாநாடு தானே அது; அத்தமிழ் மாநாட்டை அற்றை அரசு எதுவோ அது முன்னின்று நடத்துதல்தானே கடமை! அதற்கு எதிரிடை எது? கட்சியா? என்மொழி மாநாடு என்றால் எனக்கு என்ன உரிமையோ அதே உரிமைதானே அவனுக்கும்? அவன் அழைப்பு என்ன வேண்டிக் கிடக்கிறது? மாலையும் மதிப்பும் தேடிக் கொண்டிருக்கும் நெஞ்சம், தமிழ் நெஞ்சம் என்று தமிழ் நெஞ்சம் உரைக்குமா? தன்னலம் தடித்துப் போன நெஞ்சம்தானே அப்படி நினைக்கலாம்? எத்தனை வன்கொலைகள் - வன்கொடுமைகள் - வலக் காரங்கள் - வஞ்சங்கள் - ஆட்சிக்கவிழ்ப்புகள் இருக்கட்டுமே, இன்றை அரசு இல்லை என நாளையே ஆகட்டுமே, ஆனால் ஆட்சி மொழி பற்றிய கருத்தில் வடக்கே எந்த மாநிலமும் எந்த அரசும் எந்தக் கட்சியும் எந்தத் தலைவரும் இம்மியும் விட்டுக் கொடுக்கின்றனரா? இவற்றை, அழிந்து அழிந்து இழிந்து இழிந்து பட்டுள்ள இற்றை நிலையிலேனும் எண்ணிப் பார்த்து எட்டு வைக்க வேண்டாவா? அழியும் மொழியையும் அழியும் இனத்தையும் காத்தல் வேண்டாமா? இது தன்னலக் குறியா? குறிப்பா? தன் தாயை - தந்தையைப் போற்றுதல் என்பது தன்னலம் என்னும் விரிந்த பார்வையனே, உன்னிலை என்ன? எண்ணித் தான் சொல்கிறாயா, ஏமாற்றிப் பசப்பி முதுகில் ஏறிச் செலுத்து கிறாயா? தன் வீட்டுப் பற்றும் வீட்டு மொழிப் பற்றும் சுருங்கிய வட்டம் என்னும் பெரியவனே, உனக்கு வீட்டுப் பற்றும் வீட்டு மொழிப் பற்றும் இல்லவே இல்லையா? ஏமாற்றி ஏறிச் செல்ல முதுகு தேடுகிறாயா? நெஞ்சத்து நஞ்சை வாய்க்கரும்பால் வஞ்சித்துக் காட்டும் வாழ்வுப் போலிகளின் வாக்கை உணராமல், அழிவுக் குழியில் வீழ்ந்துபடுவார்க்கு என்றுதான் அறிவு வருமோ? காக்கைகள் ஒன்றுபட்டு வாழும் எறும்புகள் இணைந்து வாழும் தேனீக்கள் கட்டுப்பட்டு வாழும் புலிகளும் அரிமாக்களும் ஒன்றுபட்டு வாழா காக்கை எறும்பு தேனீ போல்வார் இணைந்து இயைந்து வாழ்வார்; புலியும் அரிமாவும் போல்வார் ஒன்று பட்டு வாழார் - இவை சிலர் கூறும் உரை! அழகாகத்தான் இருக்கிறது! தமிழன் கெட்டழிய எத்தனையோ அமைதிச் சான்றுகள்! அத்தகு சான்றுகளுள் ஈதொன்று! ஒன்றுபட்டு வாழ முடியாத - முடியாது என்றே தீர் மானித்துவிட்ட - எவனும் மாந்தன் ஆகான்! மாக்களில் கொடிய மாக்கள் ஆனவன் அவன்! தன்னின அழிவுக்குத் தலைப்பட்டவன் எவனும் உலக அழிஞனே! உலகக் காப்பாளன் அல்லன்! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்பது வாய்மையுரை. இன்னாதது என்று தான் உணர்கின்றது எதுவோ, அதனைப் பிறனுக்குச் செய்பவன் இனியவன் ஆவனோ? எனக்கு மட்டும் வேண்டுவது இனியது; உனக்கு நான் செய்வது இன்னாதது என்றால் எவன் ஏற்பான்! பிறனுக்கு இனிமையுண்டாகத் தான் எந்த இன்னாமையை யும் மேற்கொள்வான் எவனோ அவனே தலைவன். அதனை மேற்கொள்ளான் கொலைஞன்! புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்? என்பது வழிகாட்டும் ஒளிவள்ளுவம். இரண்டு பேர்கள் ஒன்றுபட்டிருக்கக் கண்டார் ஒருவர். இருவரும் எளியவர் அல்லர் எளிமையர் அல்லர்! முடி வேந்தர். அவருக்கு வியப்பினும் வியப்பாயிற்று. ஏனெனில் இந்த மண்ணில் ஆட்சி செய்பவர் இருவர் இணைந்து ஒருமுகமாகக் காட்சி தரும் மாட்சி என்பது எளிதாகக் காணக் கூடியதா? தமிழர் வரலாற்றுப் பேழையாகத் திகழும் புறநானூற்று நானூறு பாடல்களிலே இரண்டே பாடல்களில்தானே இருவர் வேந்தரும், மூவர் வேந்தரும் கூடியிருந்து காட்சி தந்து உள்ளனர்! குடியால் ஒருவழியர், மொழியால் ஒருவழியர், ஆளும் அவர்கள் போலவே வாழும் மக்களும் ஒரு மொழியர். கொண்டு கொடுத்தலும் அவர்களுக்குள் உண்டு. என்றாலும் ஒன்றுபட்டு நின்ற காட்சி அருமை ஆயிற்று! அவ்வருமைக் காட்சி இரண்டுள் ஒன்றே இவ்விருவர் இணைந்திருந்த காட்சி. ஒருவன், பெருந்திருமாவளவன், ஒருவன், பெருவழுதி. முன்னவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் என்றும், பின்னவன் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்றும் வழங்கப்படுவர். இவர்கள் இணைந்திருத்தலை இன்புறக்கண்டு களித்தவர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பார். காணாத காட்சியைக் கண்டுவிட்ட களிப்பு விஞ்சி விட்டது போலும்! சிலர் அழகாகப் பாடினால் ஆ! ஆ! இன்னொரு முறை என்பர். சில படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டால் திரும்பித் திரும்பி அங்கு நின்றும் இங்கு நின்றும் பார்க்க ஏவும். நல்ல அரிய தோற்றம் அமையும் என்றால் அருள் கூர்ந்து இன்னொரு படம் என ஒளிப்படம் எடுப்பவர் கூறுவர். காரிக்கண்ணனார் வியப்பிலே இன்றே போல்கநும் புணர்ச்சி என்றார். இப்பொழுதுபோலவே உங்கள் நட்பு என்றும் இருப்பதாக என்று வாழ்த்தினார். ஏன்? அவ்வளவு அரியது இந்தத் தமிழ் மண்ணிலே ஆள்வோர் இருவர் ஒன்றுபட்டு ஒருமைப்பட்டு இருப்பது என்பது! அப்பொழுதே அவர்க்கு ஓரையம் உண்டாயிற்றுப் போலும். இவர் இணைந்து இருந்தாலும் இணைந்திருக்க இவரைச் சார்ந்தார் விடவேண்டுமே என்னும் ஐயம்போலும் அது. அதனால், நும்புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! நுங்களுள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீராக! நீங்கள் இருவரும் கூடிநிற்கும் இந்நிலையில் வேறுபடாவிடின், இவ்வுலகமே கையகப்பட வேண்டும் எனினும் பொய்யாமல் கிட்டும்: ஆனால் உங்களுக்கு நல்லதே போலவும், முறையானதே போலவும் பழையோர் வழியே என்பது போலவும், உங்கள் அன்பு நெஞ்சங்களின் ஊடே புகுந்து உங்களைப் பிரிப்பதற்குத் துடிக்கும் அயலாருடைய கேட்டுரையைக் கேளாமல், இப் பொழுது இருப்பதைப் போலவே எப்பொழுதும் நீங்கள் இணைந்து இருப்பீராக என்றார். காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும் ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்க நும் புணர்ச்சி என்பது அவர்தம் முப்பத்தீரடிப் பாடலில் மூவடி! இம்மூவடிகளை மூவேந்தர் போற்றியிருப்பின், பின்னைச் சிக்கல்கள் எல்லாம் பிறந்திருக்குமா? இன்றை வரை தீராச் சிக்கலாகத் தொடருமா? தமிழர் தலைவர் என்பார் எவரும், இதுகாறும் இதனை எண்ணி எள் முனையளவாவது செயல் பட்டதுண்டா? இன்றே போல்கநும் புணர்ச்சி என்னும் அந்த உணர்வு எங்கே? எங்கே? என்று இன்றும் நாம் வினாவும் படியாகத்தானே நிலைமை உள்ளது! 12. தீதும் நன்றும் கெடுத்துவிட்டான். வேண்டுமென்றே கெடுத்துவிட்டான். திட்டமிட்டே கெடுத்துவிட்டான் என்கின்றனர். ஒருவன் வேண்டுமென்று திட்டமிட்டுக் கெடுக்க வேண்டு மானால், அவரால் அவனுக்கு ஏதோ ஒன்று நேர்ந்திருக்க வேண்டுமே அவனைப் புண்படுத்தியோ பொருளைக் கெடுத்தோ புகழைத் கெடுத்தோ போட்டியாக்கியோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டுமே! அப்படி ஒன்று நிகழவில்லை என்றால், அவன் கெடுக்க எண்ணும் போதே, நீ தவறாக நினைக்கிறாய், உண்மை இது என வெளிப்படுத்தி வழிப்படுத்தியிருக்க வேண்டுமே! அறியாத்தனத்தில் ஆளுக்கு ஆள் சரி என்ற நிலையில் உள்ளவர்களிடத்து மட்டும்தானா இத்தகு அவலக்குரல்கள் கேட்கின்றன? அறிவாளர்களும் கூறுகின்றனர்; பெரும்பதவியாளர்களும் கூறுகின்றனர் அரசியலாளர்களும் பொருட்பெருக்கர்களும் கூறுகின்றனர். கேடன் கெடுத்தான் என்றால் உம் அறிவும் திறமும் என்ன ஆனது? அதை, எண்ணிப் பார்த்தாலே உள்ளே நோக்க வழி பிறந்து விடுமே! * * * அம்மா அவன் அடித்து விட்டான் என்று ஓடிவந்து ஓ என்று அழுகிறான், ஒரு சிறுவன். அழுகையால் அம்மா அரவணைப்பை எளிதில் பெற்று விடலாம்; அழுகையால் எதனையும் எளிமையாய் முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அச்சிறுவனுக்கு இருக்கிறது. அச்சிறுவன் நிலையே வளர்ந்தவர்களுக்கும் உள்ள சான்று தான் - எண்ணம் தான் - தலைப்பில் குறித்த செய்தி. அடித்தானா? அவன் எதற்காக உன்னை அடித்தான்? நீ என்ன செய்தாய் என்பதைக் கூறு. அதனைச் சொல்லாவிட்டால் நான் அடித்தவனை என்ன என்று கேட்க மாட்டேன் என்னும் உறுதியுள்ளம் அப்பெற்ற மனத்திற்கு இருக்குமானால், குழந்தை சண்டை... குடும்பச் சண்டை ஆகாது; தெருச் சண்டையும் ஆகாது. * * * இன்னது சொன்னான்; இன்னது செய்தான் என்று சொல்லும் புறச் சொல்லை நான் காது கொடுத்துக் கேட்ப தில்லை; சொன்னவனை அல்லது செய்தவனை நேரில் கூட்டிக் கொண்டு வருகிறேன்; அவன் முன்னால் கூறு! அவனும் கூறட்டும் என்று ஒருவர் தெளிந்த முடிவு எடுத்துக் கொண்டால் அவரிடம் புறஞ்சொல்லி இட்டுக் கட்டிச் சொல்லித் திரியும் கூட்டம் தலைகாட்டவும் செய்யாது. பள்ளியில் ஆசிரியப்பணி செய்த நாளில், அவன் என்னைத் திட்டிவிட்டான்; இவன் என்னை அடித்து விட்டான் என்று சொல்லிக்கொண்டு மெய்யாகவே நடந்து விட்டது போலத் தான் குறையோ குற்றமோ செய்யான் போலக் கூறுவான் உண்டு. அத்தகைய வேளைகளில் குற்றம் சாற்றிய சாற்றப்பட்ட இருவரையும் முன்னே நிறுத்தி ஒவ்வொருவனும் நான் இன்ன செய்தேன் என்பதையே சொல்ல வேண்டும்; அடுத்தவன் என்ன செய்தான் என்பதைச் சொல்லவே கூடாது. இருவரும் நடந்ததை நடந்தபடி சொன்னால்தான் கேட்பேன்; இல்லாவிடில் இருவருக்கும் சரிசமமான தண்டனைதான் கிடைக்கும் என்று கண்டிப்பாகச் சொல்லும்போது அம் மாணவர்கள் சிந்திக்கிறார்கள். வருந்துகிறார்கள். திருந்து கிறார்கள். அவர்கள் மீண்டும் அவ்வகையான குற்றம் சுமத்து வதற்கும் முன்வருவதில்லை. இது பட்டறிவால் கண்டது. குற்றம் செய்யாதவர் எவரும் இலர்தாம். அவரவர்க்கே நன்றாகப் புலப்படவே செய்கின்றது! ஆனாலும். தாம் செய்யும் குற்றத்தை எண்ணிப்பார்க்கவும் விரும்புவது இல்லை. பிறர் குற்றமா ஒன்றுக்குப் பத்தாக அடுக்க வாய் வருவது வழக்கமாகப் போய்விட்டது. சோம்பிக் கிடப்பான்; சொன்னது கேளான்; வரவுக்கு மேல் செலவிடுவான்; உள்ளவை உரியவை எல்லாம் விற்றுத் தீர்ப்பான், பொல்லாத வேளை என்று சொல்லி, இவனைப் பற்றிய கவலையோ எவனைப் பற்றிய கவலையோ இல்லாமல் சுழன்று வரும் வேளை மேல் பாரத்தைப் போடுவான். எவர் மேலாவது, தான் கெடும் கேட்டுக்குப் பாரத்தைப் போட்டு விடுவதிலே ஒரு வகையான போலி அமைதி! ஆள் மேல் பழிபோட வேண்டியது; அல்லது நாள் மேல் பழிபோட வேண்டியது; இருக்கவே இருக்கின்றனர் கோள் மேல் பழி போடுவதற்கென்றே கூட்டம் கூட்டமாக? * * * பழிபோட்டு விட்டால் தீர்ந்து விடுமா? வழிவகை பிறந்து விடுமா? அழுதாலும் அவள்தானே பெற வேண்டும் என்பது தானே பழமொழி! என்குற்றம் இது என்று எண்ணிப்பாராதவனுக்கு, பிறன் குற்றம் இது என்று பேசும் - குறைகூறும் - உரிமையே இல்லை மனச் சான்றுடன் எண்ண வேண்டிய செய்தி இது. என்குற்றம் என எப்பொழுது எண்ணத் தொடங்கி விட்டேனோ, அப்பொழுதில் இருந்தே என் குற்றங்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்கி விடுகின்றன. இவ்வருமை நுணுக்கத்தைத் தெளிவாக நோக்கித் தேர்ந் தவர் திருவள்ளுவர். அதனால், சமயச் சார்பாளர்கள் இக் குற்றத்திற்கு இது செய்தால் குற்றம் நீங்கிவிடும் என்றும், மன்றாடிக் கேட்டுக் கொண்டால் குற்றத்திற்குக் கழுவாய் ஏற்பட்டுவிடும் என்றும் குறிப்பிடும் வழியை விலக்கி ஒரு செவ்விய வழிகாட்டினார். நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று வருந்து மாறான செயலைச் செய்யாதே. அப்படிச் செய்வாயே ஆனால் மீளவும் அச் செயலைச் செய்யாதிருத்தலே நலமாகும்என்றார். எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என்பது. * * * குற்றம் செய்து செய்து தடிப்பேறிய பின்னர் குற்றம் குற்றமாகத் தோன்றுமா? குணமாக அல்லவோ தோன்றும்! அதற்கு மாறான நல்லவை அல்லவோ, குற்றமாகத் தோன்றத் தொடங்கிவிடும். அந்நிலையிலேதான் பிறர் செய்த நன்மையும், குற்றமே வாழ்வானவனுக்குக் குற்றமாகத்தோன்றிப் பழிபாவஞ் செய்யவும் தூண்டி விடுகின்றது. அந்நிலைமையை உட் கொண்டுதான். நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை என்னும் மணிக்குறளைத் திருவள்ளுவர் தந்தார். எனக்கு வரும் தீமையெல்லாம் என்னால் வாராமல், பிறரால் வருவதாகவே எண்ணிவிட்டால் அதன் முடிவு. பிறர் செய்யும் நன்மையையும் தீமையாகவே முடிவெடுக்கும் குறை பாட்டுக்கு வழி வகுத்து விடும் என்பது திட்டவட்டமான செய்தி. இனித் தீமைதான் என்பது இல்லை; நன்மையையும் பிறர் தருவதாக எண்ணுவதும் மெய்யில்லையாம். நானே என் தீமைக்குக் காரணமானவன் போல், என் நன்மைக்கும் நானே காரணமானவன் என்று தெளிதல் வேண்டும். இல்லாக்கால் நன்மை என்பதும் நன்மையாய் அமையாமல் ஒழிந்து போதல் உறுதி. * * * மக்கள் இருவர் என்றால், இருவர்க்கும் ஒத்த கல்வி, ஒத்த வாய்ப்பு, ஒத்த செல்வம் என்றே பெற்றோர் தருகின்றனர். அவர்கள் பெற்ற மனம், சற்றும் ஏற்றம் இறக்கம் காட்டுதலோ ஒருவன் வாழ வேண்டும். ஒருவன் தாழ வேண்டும் என்று எண்ணுதலோ இல்லை. ஆனால், இருவருள் ஒருவன் வாழவும், ஒருவன் தாழவும் செய்தால், அதற்கு அப்பெற்றோர் பொறுப் பாளரா, அப்பிள்ளைகள் பொறுப்பாளரா? வாழ்வும் தாழ்வும் பிள்ளைகளைத்தானே சாரும்! வறுமையர் இருவர்: ஓர் அறநிறுவனம் அவர்கள் வறுமையைக் கருதித் தொழில் செய்து பிழைப்பதற்காக ஒரு தொகையை வழங்குகின்றது. அது நன்மை செய்ததா? தீமை செய்ததா? அத்தொகையை வாங்கியவருள் ஒருவன் அத்தொகை உள்ளவரை வெறியேறக் குடித்தான்; வெறிதீரும் வரை மனைவி மக்களை அடித்தான்! தொகை யெல்லாம் தீர்ந்த பின்னே தெருவிலே கைந்நீட்டி இரந்து குடிக்கத் துணிந்த அவனுக்கு அற நிறுவனம் உதவிய பணம் ஆக்கமாகவில்லையே. அவனிடத் திருந்த கேடு ஆக்கத்தையும் கேடாக்கிக்கொண்டது! ஏனெனில் தொகையில் அல்லது பொருளில் ஆக்கம் இல்லை; கேடும் இல்லை. உடையவன் தன்மையே உடைமைக்கு ஆகிவிட்டது! இன்னொருவனும் வறியன் தானே. ஆனால் அவன் உள்ளம் வாழத் தவித்த உள்ளம்; வாழ்ந்து காட்டியது; வைப்புக் காட்டியது; வளர்ச்சி காட்டியது; வாங்கியதற்கு வட்டியும் முதலும் சேர்த்துக் கட்டியும் சிறந்தது. அந்நலப்பாடு பொருளில் இருந்ததா? பொருளில் இருந்தது என்றால் முன்னவனுக்கும் நலமாகி இருக்க வேண்டுமே! உடையவன் தீமை உடைமைக்கு ஆகியது போல் உடையவன் நன்மை உடைமைக்கு ஆகியது. அதனால்தான் விரும்பப் படாதவன் ஒருவனிடத்துள்ள செல்வம் நட்ட நடுவூருள் நச்சுமரம் பழுத்தது போன்றது என்று குறித்தார் வள்ளுவர். நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று என்பது அது. ஆதலால் ஒருவனுக்குத் தீமையே ஆகட்டும்; நன்மையே ஆகட்டும்; பிறர்தந்து வருவன அல்ல; அவனவனுக்கு அவ னவனே உண்டாக்கிக் கொள்வதே தீமையும் நன்மையும் ஆகும் தீமையும் நன்மையும் பிறர்தர வருவன அல்ல என்றால் நாம் நோவதற்கும் நோவாது இருத்தற்கும் அவர்கள் காரணர் ஆகமாட்டாரே! அதற்குக் காரணர் எவர்? நாமே தாம் காரணர் என்று மேலாய்ந்த நிலையில் நின்ற மெய்ப்பொருள் நல்லார் ஒருவர் துணிந்துரைக்கின்றார். அவர் கணியன் பூங்குன்றன் என்பார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் மணித் தொடரைத் தந்தாரே அந்தப் பெருமகனார் தாம் அத்தொடரை அடுத்தே, தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றும் நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன என்றும் கூறுகின்றார். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்னும் மெய்யுணர்வு ஏற்பட்டுவிட்டால் பழித்தலுக்கு இட மேது; பழிவாங்குதலுக்கும் இடமேது. அவ்வுணர்வு வாரா வரை, பழித்தலும் பழிவாங்கலும் தொடர்கதையாகத் தொடர்வதை அன்றி, மாந்தர் வாழ்வுக்கு உய்வு உண்டா? தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது எத்தகைய மேம்பட்ட நிலையின் சுரப்பு. அவ்வுணர்வு எங்கே? எங்கே? என்று இந்நாளை உலகம் கேட்டுக் கேட்டு எதிர்நோக்குகின்றது. பெரும் புலவர் மூவர் முன்னுரை மக்களால் காலந்தோறும் மதிக்கப்படும் புலவர் பெரு மக்கள் இருந்துளர். இச்சுவடியில் சொல்லப்படும் பெரும் புலவர்களுள் இருவர் பெருந்தலை, பெருங்குன்றூர் என்னும் ஊர்களில் பிறந்தவர்கள். ஊர்க்கு அமைந்த பெருமையால் புலவர்கள் பெருமை பெற்றதோடு தம் அறிவு ஆற்றல் அறச் செயல் ஆகியவற்றாலும் பெருமையாக இருந்தனர் என்பது இவ்வரலாற்றால் புலப்படும். சித்திரனார் என்னும் பெயருடைய வேறு புலவரும் இருந் தமையால் அவரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பெருஞ்சித்திரனார் எனப் பெயர் சூட்டி வழங்கினர். இவ்வகையால் பழங்காலத்தில் பெரும் என்னும் அடை மொழியுடன் சான்றோர் பெருமக்களால் வழங்கப்பட்ட மூவர் வரலாறும் அவர்கள் பாடல்களைக் கொண்டே இவண் வரையப் பட்டுளது. பழங்காலப் புலவர்கள் தம் கல்வியால் பிறர் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தாம் முன்னின்று தீர்க்கும் பெரும் பணி செய்தமையும், மன்னராக இருப்பினும் மாறுபட நடப்பவர் எனினும் முன்னின்று திருத்த முந்துவர் என்பதும், மானம் குன்றும் வாழ்வைக் கொள்ளார் என்பதும் இவ்வரலாறுகளால் அறியக் கூடும். இதனைக் கற்பவர் நெஞ்சில் பதியச் செய்யும் வகையில் பதிப்பிக்கும் பதிப்புத் தோன்றல் மாணவர் பதிப்பக உரிமையாளர் இ. வளர்மதியார் நன்றிக்குரியர். இன்ப அன்புடன். இரா. இளங்குமரன் 1. தோற்றுவாய் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்னும் முன்னோர் மொழிகள் கல்வியின் சிறப்பினைக் காட்டு வனவாம். மாந்தர் உறுப்புக்களுள் தலை சிறப்புடையதாகும். அத்தலையின் கண்ணே அமைந்துள்ள பொறிகளுள்ளும் கண்ணே சிறப்புடையதாகும். இக்கண்ணினைக் காத்து ஒழுக வேண்டிய கடப்பாடு மாந்தர்க்கு இன்றியமையாததாகும். இக் கண்ணுக்கு இணையாக வைத்துக் கல்வி பேசப்படுமானால் அதன் சிறப்பினை விரித்துரைக்க வேண்டியது இல்லை. கற்றவர் கல்லாதவர் மக்களுக்கும் விலங்குகளுக்கும் வேற்றுமையுண்டாதலை விளக்குவது கல்வியே என்பதனை விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் என்று வள்ளுவனார் விளக்கினார். மற்றொரு புலமையாளர், கற்றறி வில்லா மாந்தர் கண்கெட்ட மாடே யாவர் மற்றவர் மண்ணின் மீதே மடமையில் மாழ்கி நிற்பர் உற்றமற் றவர்கள் இந்த உலகுக்கோர் சுமையே யாவர் பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறந்த தாமே என்றார். கல்லா மாந்தரை இவ்வாறு இடித்துரைத்ததன் பயன் அவர்களைப் பழிக்க வேண்டும் என்பதன்று; அவர்களும், கற்க முயல வேண்டும்; அப்படிக் கை கூடாததாகப் போய்விடினும் தம் மக்களையேனும் கல்வியில் நிலைநிற்கச் செய்ய வேண்டும் என்றெழுந்த நல்லெண்ண மிகுதியேதான் காரணமாம். கற்றல் நன்று அதனாலேதான் உற்ற பொழுதிலெல்லாம் உதவி புரிந்தும், பொருள் மிகக் கொடுத்தும், செய்யத் தக்க வழிபாடுகளைக் குறைவறச் செய்தும் ஆசிரியரிடம் மாணவன் கற்றல் கடன் என்று அறிவுடை நம்பி என்னும் ஆராய்வு மிக்க அரசன் கூறினான். அவனே இதனைத் தக்க சான்றுகள் காட்டியும் விளக்கினான். ஒரு தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் இருவர்; அவருள் ஒருவன் கற்றவன்; மற்றொருவன் கல்வியறியான். இருவரும் தம் வயிற்றுப் பிறந்த மக்களே எனினும் தாய் கற்றோ னிடத்துத் தனியன்பு செலுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். ஏன்? அன்பே உருவான தாயே இவ்வாறு வேற்றுமை காட்டிப் போற்றுவாளாயின் அதற்குக் காரணமாக இருப்பது கல்வி தானே! தாயின் நிலையே இத்தகையதெனின் பிறர்நிலையைக் கூறவும் வேண்டுமோ? அறிவுடை ஒருவனை அரசன் விரும்பு வானே அன்றி, அவன் உரையைக் கேட்பானே அன்றி, அவன் வழியே அரசு செய்வானே அன்றி, வயது முதிர்ந்த கல்வியறிவு இல்லா ஒருவனை விரும்பி, அவன் உரைகேட்டு, அரசு செய் வானோ? அவன் இனத்தால் உயர்வு தாழ்வு பாராட்டிக் கொண்டிருக்கும் பேதைமை உடையவரிடத்தும், கற்றவர்க்கு இருக்கும் சிறப்புத் தனிப்பட்டதாகும். கற்றவன் தாழ்ந்த இனத்த வன் ஆயினும் அவனிடம் உயர்ந்த இனத்தவனும் அடி பட்டு நின்று, கைகட்டி, வாய்பொத்தி, வழிபாடுகள் செய்து கற்பான் என்றெல்லாம் கூறினான். இவையனைத்தும் கல்வியின் சிறப்புக்களே யாம். கல்வியின் சிறப்பு கல்வி வளம் கொழிக்கும் நாட்டிலே - கற்றோர் தொகை மல்கிய நாட்டிலே குற்றத் தண்டனைகள் குறைவதைக் காணலாம். அதனாலேதான் வேந்தர் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமை களுள் கல்வியறிவு பரப்புதல் தலையாய கடமையாக ஆயது. அதற்காகவே ஆங்காங்குச் சங்கங்களையும், மன்றங் களையும் அமைத்து அதற்கு ஆதரவு அளித்தனர். அறிவு பரப்பும் தொழிலைத் தம் தொழிலெனக் கொண்டு வாழ்ந்த ஆன்றோர் களை ஆதரித்தனர். கோயில்களிலும் பொது மடங்களிலும் கல்விக் கூடங்களையும், தேவாரப் பள்ளிகளையும் அமைத்துத் தொண்டு புரிந்தனர். ஆனால் கல்விப் பணி அனைத்தையும் அரசே செய்துவிடுவது அரிது. புலமையாளர்களும், பொது மக்களும் தொண்டாற்ற முன்வருவராயின் ஒரு நாடு கல்வித் துறையில் விரைவாக முன்னேற்றமடையும். இப்பரந்த எண்ணம் பழங்காலத்தே நம்மவரிடத்துக் குடி கொண்டிருந்ததால்தான் திண்ணை தோறும் பள்ளிகள் வைத்து ஆங்காங்குக் கல்வித் தொண்டு புரிந்தனர். பேரறிவாளர்களான புலவர்களும் தங்கள் தகுதியையே பெரிதாக நினைத்துப் பெருமிதம் பாராட்டிக் கொண்டிருக்காது சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், கலைஞர்களுக்கும் கல்வி கற்பிப்பவர்களாக இருந்தனர். அவர்கள் பேராசிரியர்களாக இருப்பினும், பாலர்களுக்கும் பாடம் புகட்டிவந்த காரணத்தால் பாலாசிரியர் என்றும் அழைக்கப் பெற்றனர். பழங்காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்னும் பெயராலும் அழைக்கப் பெற்றனர். கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கறுக்கும் மூத்தோரில்லா அவையும் நன்மை பயவாதன என்ற கருத்து மக்களிடம் உலாவி வந்தது. இக்காரணங்களாலேதான், கல்வி குல ஏற்றத்தாழ்வு இன்றி எக்குலத்தோருக்கும் உரியது, ஆண் பெண் ஆய இருபாலினருக்கும் உரியது, என்று இன்று முழக்கமிடும் அரிய கோட்பாடுகள் சங்ககாலத்தே நடை முறையில் இருந்து வந்தன. இவற்றை நோக்குங்கால் கல்வியைக் கண்ணெனப் போற்றி வாழுவாரே நாட்டின் கண்களாக இருந்தனர். என்றும், அவர்கள் பெருங்குணம் கொண்டு கல்விப்பணி ஆற்றினர் என்றும், அவ்வாறு அவர்கள் ஆற்றிய பணியால் நாட்டில் குலவேறுபாடு பால் வேறுபாடு எதுவுமற்று அனைவரும் கற்றுணர்ந்து உயர்ந்தனர் என்றும் ஒருவாறு அறியலாம். புலவர் வாழ்வு இது இவ்வாறாக, கல்வித் தொண்டு புரிபவர்களுக்கும் வயிற்றுக் கவலை ஏற்படுமல்லவா! அவர்களிடம் விரிந்த உள்ளம் இருக்கிறது. நிறைந்த பண்பும் குடிபுகுந்துள்ளது. எனினும் பசியை வெற்றி கொள்ள வழி? உலகியல் அறிந்து பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதையும் தெளிவாக அறிந்து வாழ்ந்த சிலர் தங்கள் புலமைத் தொழிலொடு வருவாய் தரும் சில தொழில்களையும் கைக்கொண்டு வாழ்ந்தனர். அறுவை (துணி) வாணிகம், கூல (தானியம்) வாணிகம், பொன் வாணிகம், ஓலை வாணிகம், ஆகிய வணிகத் தொழில் களையும், தட்டாரத் தொழில், வண்ணக்கத் தொழில் (நாணய பரிசோதனைப்பணி) ஆகிய தொழில்களையும் கொண்டு வருவாய் பெற்றதுடன் புலமைத் திறமும் நடாத்தினார். இவ் வாறு வாழ்ந்தோருள்ளும் சிலருக்கு இவர் தம் வருவாய் குறைந்து வறுமைப்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டதுண்டு. ஓர் ஐய எண்ணம் பொருளே குறியென வாழ்பவருடன் தொண்டு புரியும் உள்ளத்தினர் போட்டி போட முடியாது. அப்படியே ஏதோ போட்டியின்றிப் பெற்ற பொருளையும் தம் நலமே குறியாகப் போற்றிவாழும் தன்மையும் இவர்களிடத்து இல்லை. இக் காரணங்களால் சொல்லொணா வறுமைக்கு ஆளாயினர். வள்ளல்களிடத்தும் அரசர்களிடத்தும் சென்று பொருள் பெற்று வந்து தம் தொண்டினைச் செய்ய வேண்டுபவராயினர். பிறரிடம் சென்று இரந்து ஏற்று வாழ்வது இழிவு அல்லவோ! புலமை நலம் படைத்தோர் வாழ்நாளெல்லாம் பொருள் தருவாரைப் புகழ்ந்து பேசிப் பரிசு பெற்று வாழ்ந்து வந்தனரே! உழைக்க மாட்டாது சோம்பராய் வாழ்க்கை நடத்திய இவர்கள் பிழைக்கும் வழியொன்று கண்டிலரோ? பாவலர் நாவலர் என்ற பெயர் பெற்றுப் பயன் யாது? என்று இன்ன பலவாறாய் எண்ணுவதாயினும், உரைப்பதாயினும், அது அவ்வவர்களது அறியாமை ஒன்றனையுமே காட்டுவதாகும். புலவன் தொண்டு புலவன் வாழ்க்கை உலகநலம் கனிந்த வாழ்க்கை; பரந்த நலம் கனிந்த வாழ்க்கை. உழைத்தவன் உழைப்புக்கு ஏற்ப ஊதியம் பெறுகின்றான். ஊதியம் கிடைக்காவிடின் அன்புமுறையிலோ, வன்புமுறையிலோ ஊதியம் பெற்றே தீருகின்றான். அதற்கும் பயனில்லை என்றால் தொழிலுக்குப் போவதை நிறுத்திக் கொள்கிறான். ஆனால் உள்ளத்தை உயர்வுடையதாக்கி, அறிவு ஆராய்ச்சியைப் பெருக்கி மனிதரை மனிதராய் ஆக்கும் புலவன் புலமைத்தொண்டு ஆற்றுகின்றான். உயிரை உடலோடு ஒட்டிக் கொண்டு இருக்கச் செய்ய அதுவும் தமக்கு மட்டுமின்றித் தம் சுற்றமும் ஊரும் உய்ய - உழைக்கின்றான். அன்பளிப்புக் கிடைத்தால் நன்றி செலுத்துதலுடன் பெறுகின்றான். இல்லை யென்றால் வாழ்த்திவிட்டு விடை பெறுகின்றான். எது எவ்வா றாயினும் தன் தொண்டினை மட்டும் அவன் விடுவது இல்லை. புலவர் ஊதியம் புலவர்கள் கல்வித் தொண்டினை அன்று செய்திருக்கா விட்டால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான தமிழகம் இன்றும் நாகரிகத்தில் பழைய கற்கால நிலையிலேதான் இருந் திருக்கக்கூடும்; இதற்கு யாதோர் ஐயமும் இல்லை. அன்றி, இக்காலம் கல்விப் பணி புரிபவர்க்கு அரசினர் திங்கள் தோறும் குறிப்பிட்ட ஊதியம் தந்து உதவுகின்றனர். ஏற்படும் நிர்வாகச் செலவினையும் ஏற்றுக் கொள்கின்றனர். கட்டடங்களையும் தளவாடப் பொருள்களையும் தந்துதவுகின்றனர். ஆனால் அந்நாளில் ஆசான் இல்லமே பள்ளி; அவனே அனைத்தும்! இதுவுமல்லாமல் பயிலவரும் மாணவர்களுக்கு அம்மையாய், அப்பனாய் அமைந்த அவனே உணவு உடைச் செலவினையும் ஏற்றுக் கொண்டு உறையுளையும் தந்துதவ வேண்டியவனாகவும் இருந்தான்! இதற்கு அரசர் தரும் பரிசுப் பொருளும் ஊரார் உதவும் சிற்றுதவியும் தாமே ஆசிரியன் ஊதியம்? அவற்றையும் பெறாமல் என்னே செய்ய இயலும்? உயரிய புலவர்கள் புலவர்களும் பொருள் தருவோரைப் புகழ்ந்து கூறுவது ஒன்றைமட்டுமோ தம் தொழிலாகக் கொண்டிருந்தனர்? முகங் கோணிக் குன்றத்தளவு கொடுப்பினும் கொள்ளேம்; உவந்து குன்றியளவு கொடுப்பினும் மகிழ்வொடு கொள்வேம்! என்றும், முடியுடை மூவராயினும் முறைமை தவறிக் கொடுப்பராயின் ஏற்றுக் கொள்ளேம் என்றும் வாழ்ந்த புலவர்களிடம் புகழ்வதே தொழிலாக இருந்தது எனின் தவறேயாம். புலவர்கள் எத்தகைய அரிய தொண்டுகள் செய்துள்ளனர்! போர் நிகழா வண்ணம் காத்த புலவர்கள் எத்துணையர்? அறநெறி தவறிய வேந்தனுக்கு அறமுரைத்த புலவர்கள் எத்துணையர்? மக்கள் எண்ணத்தை மன்னனிடம் எடுத்துரைத்த புலவர்கள் எத்துணையர்? நாடு நல முற நல்ல பல திட்டங்கள் தந்துதவிய புலவர்கள் எத்துணையர்? மக்களொடு மாறுபட்டவரை, மனைவியொடு மாறுபட்டவரை, உடன் பிறந்தவரொடு மாறுபட்டவரை ஒன்றுபடுத்திய புலவர்கள் எத்துணையர்? ஆராயாச் செயலில் செல்லும் வேந்தனை அடுத்த நல்லுரைகளால் திருத்திய புலவர்கள் எத்துணையர்? புறங்காட்டி ஓடிவந்து கோழையாய் மதிலினுள் மறைந்திருந்த மன்னர்களுக்கு வீரவுரை கூறிய புலவர்கள் எத்துணையர்? இவர்களனைவரும் என்ன பயனைக் கருதி வெயிலென்றும், மழையென்றும், இரவென்றும் பகலென்றும், மேடென்றும் பள்ளமென்றும், கல்லென்றும் முள்ளென்றும், பகையென்றும், நட்பென்றும் பாராது பணி புரிந்தனர்? இவர்களுக்கும் வயிறு உண்டு! மனைவி மக்கள் உண்டு; சுற்றம் சூழல் உண்டு; நம்மைப் போல் அனைத்தும் உண்டு. உலகம் வாழ வாழ்ந்த இவர்கள், உலகைக் காத்துதவ வேண்டுவதே கடனாகக் கொண்ட காவலனிடமோ, வள்ளலிடமோ பரிசு பெற்று வாழும் வாழ்வு குறைவுடையதன்று என்பது தெளி வாகும். அன்றியும் உலகம் வாழ்தற்காகவே, அவர்கள் பரிசினைப் பெற்று வந்து தாமும் வாழுகின்றனர். இதுவும் பரந்த பண்பின் விளைவேதான். வேண்டுகோள் இக்கண்ணோட்டத்துடன் முப்பெரும் புலவர் வாழ்வை யும் உற்று உணர்வோமாயின் உண்மையிலேயே இவர்கள் செய்த தொண்டு உலகம் உள்ளளவும் உலகத்தார் உள்ளத்தி லிருந்து அகற்ற முடியாத உயர் பெருந்தொண்டாக இருக்கும். இனி, இம் முப்பெரும் புலவர்களின் ஒப்புடைத் தன்மைகள் சிலவற்றை இங்கே காண்போம்: முப்பெரும் புலவர்கள் நாம் இந்நூலில் அறியும் பெரும்புலவர்கள் மூவர் ஆவர். அவர்களுள் ஒருவர் பெருஞ்சித்திரனார்; மற்றொருவர் பெருந்தலைச் சாத்தனார். இன்னொருவர் பெருங்குன்றூர் கிழார். இம்மூன்று புலவர்களும் முறையே பெயருக்கும், ஊருக்கும் முன்னர் பெரும் என்னும் அடைச் சிறப்புப் பெற்று விளங்கினர். ஆயினும் ஒருவரினும் ஒருவர் குறையாத அளவில் அருந்தகைமையும், ஆற்றலும் பெற்று விளங்கினர் என்பதை இவர்தம் பாக்களால் அறியலாம். கல்வி மூன்று புலவர்களும் இளமைப் பருவத்திலேயே கற்க வேண்டுவனவற்றைக் கற்றனர்; பிறருக்கும் கல்வி கற்பித் தனர்; கற்றபடியே வாழ்ந்து காட்டினர்; கவிபாடும் திறமையை இயல்பாகப் பெற்றனர்; மண் குடிசை முதல் மன்னவன் மாளிகை வரைத் தம் புலமையைப் பரப்பினர்; நிலைத்த புகழுக்குரியதான கவிகளைப் பாடியுதவினர்; கல்வியும் வாழ்வும் ஒன்றே என்பதை நிலைநிறுத்திச் சென்றனர். இல்லறம் மூன்று புலவர்களும் சீரிய இல்லற வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்தனர்; மக்களைப் பெற்று மகிழ்ந்தனர்; பெற்றவர்களைப் பேணினர்; சுற்றத்தினரைக் காத்துதவினர்; வறுமையில் செம்மை காக்கும் மனைவியைப் பெற்று, அவரது உரிமை நலம்பேணி உறுதுணையாக இனிது வாழ்ந்தனர். வறுமை மூன்று புலவர்களும் நாள்தோறும் கொல்வது போன்றதான வறுமைக்கு ஆட்பட்டனர்; பெருஞ்சித்திரனார் மனைவியார் பசி பொறுக்க மாட்டாமல் அழும் குழந்தையை மறப்புலி காட்டி அடக்க முயலுகின்றார். அவர் மைந்தன் உணவு வீட்டில் இல்லை என்ற தெளிவினால் வீட்டையே மறந்து தெருக்களில் திரிகின்றான். கொல்லைப் புறத்திலே தளிர்த்த குப்பைக் கீரை உப்பும் இல்லாது அடுப்பிலே வேகின்றது. பெருந்தலைச் சாத்தனார் மனைவி, வாய் வைத்துச் சுவைத்துப் பால் வராது விம்மியழும் குழந்தையைப் பொருமலுடன் பார்த்துக் கணவரை நோக்குகின்றார். குழந்தையோ கண்ணீர் வடித்து நிற்கும் தாய் முகத்தை நோக்குகின்றது. அவர் குமண வள்ளலை நோக்கி விரைகின்றார். அடுப்பிலே காளான் முளைக் கின்றது. பெருங்குன்றூர் கிழார் மனைவி, வறுமையின் பெயரால் எமன் கொன்றுவிடுவானோ என்று எண்ணுமளவுக்கு நோயரா கின்றார். பலபடி சுவைத்தும் பாலின்மையால் மேலும் சுவைத் தலை வெறுத்த புதல்வன் உள்ளான். உணவில்லாமையால் இடந்தோறும் இடந்தோறும் எலிகளால் மாறி மாறித் தோண்டப் பெற்ற சுவர் காணப்படுகின்றது. வறுமையில் செம்மை மூன்று புலவர்களும் வறுமைக்கு ஆளாயினரேனும் மானம் தாழ வாழ்ந்தது இல்லை. சித்திரனார், அதியமான் இள வெளிமான் ஆகியோரிடத்தும், சாத்தனார் கடிய நெடு வேட்டுவன் மூவன் ஆகியோரிடத்தும், கிழார் குடக்கோச் சேரல் இரும்பொறையினிடத்தும் பாடிச் சென்று பரிசின்றி மீண்டனர். எனினும் செய்யாத செயல் செய்தோ, சொல்லாத சொல் சொல்லியோ தம் மானத்திற்குக் குறைவு உண்டாக்கிக் கொண்டாரல்லர். வாழ்க என்று வாழ்த்தியே மீண்டனர். ã‹d® á¤âudhU¡F« rh¤jdhU¡F« FkzD«, »HhU¡F ïsŠnr£ br‹Åí«, ïsŠnruš ïU«bghiwí« bgU« bghUŸ bfhL¡f¤., தாமே வைத்துக் கொள்ளாது ஊருணி போல அனைவருக்கும் பயன்பட நின்றனர். உயரிய கோட்பாடு எப்படியோ வாழ்ந்தால் போதும் என்னும் கீழ்மனம் இம்முப் புலவர்களிடத்தும் இருந்ததே இல்லை. ஈயாதவன் வெட்கமடையுமாறு யானைப் பரிசு தந்த பெருமை சித்திர னாருக்கு உண்டு. உடன் பிறந்திருந்தும் உரிமையுடன் ஒன்றி வாழ மறந்த தம்பியை அண்ணனுடன் பிணைத்து வைத்த பெருமை சாத்தனாருக்கு உண்டு. அன்பொத்த இல்வாழ்வின் இடைப் புகுந்த பிணக்கினை அகற்றி இணைந்து இன்புறச் செய்த பெருமை கிழாருக்கு உண்டு. பொது நலம் பேணிய சிறப்பு இம்மூவருக்குமே உண்டு. நன்றியறிதல் முப்பெரும் புலவர்களிடத்தும் நன்றியறிதல் மிக்கிருந்தது. குமணன் தந்த வளம் இது: எல்லோருக்கும் கொடு என்று தம் நன்றி அறிதலைக் காட்டினார் சித்திரனார். புலவர்களைப் போற்றி வாழ்ந்த வள்ளல் வழியினனான இளங்கண்டீரக் கோவை மார்புறத் தழுவித் தம் நன்றியறிதலைக் காட்டினார் சாத்தனார். இளஞ்சேரல் இரும்பொறையினிடம் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் நாட்டைப் புகழ்வதால் தம் நன்றியறிதலைக் காட்டினார் கிழார். புலவரைப் போற்றும் முன்பு மூன்று புலவர்களும் முன்னைப் புலவர்கள் மாட்டுத் தணியாத அன்பு வைத்திருந்தனர். அவர்கள் வழியே சென்று தம் புலமையைக் காட்டினர். சித்திரனார் (மோசி பாடிய ஆய் என்று) ஆய் என்னும் வள்ளலைச் சிறப்பித்துக் கூற நேர்ந்த பொழுது மோசிகீரனாரால் பாடும் புகழ்பெற்ற ஆய் என்று தாம் அப்புலவர் மாட்டுக் கொண்டிருந்த அன்புடைமையை வெளிப் படுத்தினார். சாத்தனார் இளவிச்சிக்கோ! நும் பரம்பரையை எம் பரம்பரையினர் பாடாது விட்டனர். ஆதலால் யான் நின்னைத் தழுவிக் கொள்ளேன் என்று கூறுமுகத்தான் தாம் புலவர்கள் மாட்டுக் கொண்டுள்ள அன்புடைமையை வெளிப் படுத்தினார். கிழார், கபிலர் பாடிப் பெற்ற ஊர்களினும் நின் பகைவர் நினக்குத் தோற்றுப் போகட்டுச் சென்ற வேல்கள் பல என்று இளஞ்சேரலினிடம் கூறித் தாம் கபிலர் மாட்டுக் கொண் டுள்ள அன்புடைமையை வெளிப்படுத்தினார். சொற் சிறப்பு தமிழால் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம் போல, தம்மைப் பேணாத வேந்தரிடத்தும் சினம் கொள்ளாது தம்மையே நொந்து கொண்டு அவர்களை வாழ்த்திய தகைமையும், உயர்பண்புடைய வள்ளல்களிடத்துத் தம் வறுமையினைச் சிலசொற்களால் தெளிவாக உரைத்த பெருமையும் இவர்களது சொற் சிறப்பினைக் காட்டுவனவாம். பாமாலைகள் இம் மூவரும் தொடுத்த பாமாலைகள் தொகை நூல்களில் அமைந்து பொலிவோடு விளங்குகின்றன. சித்திரனார் பாடியன வற்றுள் பத்துப் பாடல்கள் கிடைத்துள்ளன. அவையனைத்தும் புறநானூற்றில் அமைந்து ஒளிவிடுகின்றன. சாத்தனார் பாடியன வற்றுள் ஒன்பது பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஆறு புறநானூற்றிலும், இரண்டு அகநானூற்றிலும், ஒன்று நற்றிணை யிலும் சுடர்விடுகின்றன. கிழார் பாடியனவற்றுள் இருபத்தொரு பாடல்கள் கிடைத் துள்ளன; அவற்றுள் ஐந்து புறநானூற்றிலும் ஒன்று அக நானூற்றிலும், ஒன்று குறுந்தொகையிலும், நான்கு நற்றிணை யிலும், பத்து பதிற்றுப்பத்திலும் மின்னுகின்றன. தொழில் சித்திரனார் புலமைத் தொழிலே தொழிலாயும் மற்றை யிருவரும் புலமைத் தொழிலொடு உழவுத் தொழிலையும் பேணி வந்தனர் என்பது உணரக்கிடக்கின்றது. காலம் முப்பெரும் புலவர்களும் சங்க காலத்தினர் என்பது இவர் தம் பாடல்கள் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளமை யாலும், பாடப்பெற்றுள்ள வேந்தர்கள் வரலாற்றாலும் அறியக் கிடக்கின்றன. சங்க காலம் என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். இம் மூவருள் பெருங் குன்றூர் கிழார் காலத்தால் முற்பட்டவர்; இவரை அடுத்துப் பெருஞ்சித்திரனாரும் பெருந்தலைச் சாத்தனாரும் வாழ்ந்தவர் என்பது இம்மூவரும் பாடிய கவிகளை யாய்ந்தால் நன்கு விளங்கும். பொது இம்மூவர்தம் வாழ்வும் இலக்கியச் சிறப்பினைப் படைத் திருப்பதுடன், எதிர்காலப் புத்துலகத்தைப் படைக்க விழை வோர் அனைவருக்கும் எழுச்சியை உண்டாக்குவதாகவும் அமைந்துள்ளது. இவர்கள் விரிந்த உள்ளம் பரந்த கண் ணோட்டத்தை உண்டாக்க உறுதுணையாக நிற்கும். படைப்புக் காலம் தொட்டு விளங்கி வரும் பழங்குடியினர் தமிழர் ஆவர். தமிழர்தம் சிறப்புக்குத் தலையாய காரணமாக இருப்பது, அவர்கள் கண்ட இலக்கியமேயாகும். தமிழர் இலக்கியம் தேனாறு பெருக்கெடுத்தாற்போலத் தித்திக்கும் இயல்பினது; முப்பழச் சுவைக்கும் முதிர் சுவையுடையது; ஊன் கலந்து உயிர் கலந்து ஒன்ற வைப்பது; இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் எடுத்துக்காட்டி எதிர்காலத்தை வாழ வைப்பது; அரசியல் முறையும், ஆய்வியல் தெளிவும் செறிந்தது; கலைநலனும், கடமை யுணர்வும் பின்னியது; உலகெல்லாம் ஒரு குடியாக்கும் உயர்வு உடையது; மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டும் வனப்பினது. பொய்யா நாவின் புலவர் பெருமக்கள் இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பை ஆக்கிய புலவர் பெருமக்களோ பொய்யாநாவுடையவர்கள்; குற்றம் கண்ட இடத்து இடித்துக் கூறிக் குணம் கண்ட இடத்துப் புகழ்ந்து பாடும் இயல்பினர்! குன்றம் ஒத்த செல்வம் கிடைத்தாலும் குறைபட்ட செயலில் புகாதவர்கள்! அறமே அவர்கள் மொழி. அதுவே அவர்கள் வழி; பாராள்பவனாகவே இருப்பினும் பண் பாட்டுடன் எடுத்துக் கூறத் தவறமாட்டார்கள்! பகைத்துக் கொள்வானே என்று அச்சங் கொண்டு விட்டுச் செல்வதும், ஆமாம் என்று ஒத்துப் பேசுவதும் அவர்கள் அறியாதவை! பேதமும் பிணக்கும் இல்லாது ஒருங்கு கூடித் தமிழ் வளர்த்த பெருமை அவர்களுக்கு உண்டு! அவர்கள் வளர்த்த தமிழே தங்கத் தமிழாம் சங்கத் தமிழ்! புலமைக்கொரு பொற்காலம் சங்க காலத்தே பண்பட்ட புலமையாளர் ஆயிரம் ஆயிரம் பேர் இலங்கினர்; அவர்களுள் அரசப் புலவர்கள் உண்டு; அந்தணப் புலவர்கள் உண்டு; வாணிகம் செய்து வளர்பொருள் ஈட்டிய புலவர்கள் உண்டு; வையகம் தழைக்க உழு தொழில் செய்து வாழ்ந்த உழவப் புலவர்கள் உண்டு; மருத்துவத்துறை கைவந்த மாண்பினரும் இசைத்துறை கனிந்த இயல்பினரும் உண்டு; ஆடவரும் மகளிரும் உண்டு; அரசினரும் அவர் அடியவர்களும் உண்டு; இரவலரும் புரவலரும் பாணரும் கூத்தரும் உண்டு! புலமையின் பொற்காலம் அது. 2. பெருஞ்சித்திரனார் இவர் யார்? அத்தகைய பொற்காலத்தே விளங்கினார் உயர் புலவர் ஒருவர்; மானமே உயிரென வாழ்ந்த மாண்பினர்; இலக்கியச் சித்திரம் இயற்கைக்கு மாறுபடாமல் இயற்றியவர்; வறுமையின் இடையிலே சிக்கித் தத்தளித்தாலும் வள்ளன்மை குறையாதவர்; பெற்றது கொண்டு சுற்றம் காக்கும் பெருநோக்குடையவர்; இவர் பெயர் பெருஞ்சித்திரனார் என்பதாம். சித்திரச் சிறப்பு வண்ண ஓவியம் வனப்புடன் வரைபவர்களைச் சித்திரக் காரர் என்னும் பெயரால் அழைப்பர். பழங்காலத்தே சித்திரக் காரர்கள் வாழ்ந்த தனித் தெருவே பெரு நகரங்களில் இருந்தது. சித்திரத்தால் இலங்கிய சித்திர மாடங்களும், சித்திர வேலைப் பாடுடைய சித்திரப் படங்களும் சித்திரம் வரையும் சித்திரச் சாலைகளும், பல இடங்களில் காட்சியளித்தன. இவை பழங் காலத்திய சித்திரச் சிறப்பினை வெளிக் காட்டுவனவாம். வண்ண ஓவியம் போலவே, எண்ணும் எண்ணத்தையும் எழில்பெற விளக்கிக் காட்டுபவர்களைச் சித்திரனார் என்று அழைப்பதுண்டு. அத்தகைய சித்திரனாருள் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றவரே பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் மணியாவர். இளமையும் இயற்கையும் பெருஞ்சித்திரனார் குன்று சூழ்ந்த ஓரூரைச் சேர்ந்தவர். கலையுள்ளம் நன்கு கைவரப் பெற்றவர். இயற்கையைக் காண்பதிலே தனி இன்பங் கண்டவர். அவர், இயற்கை வழியாகவே அரிய பல கலைகளைக் கற்றார்; குன்றும் மலையும் அவருக்கு உயரிய கலை விருந்தளித்தன; காடும் விலங்கும் அச்சம் அணுவளவும் இல்லாது ஓட்டின; அருவியும் அதன் முழக்கமும் நெஞ்சத்தில் கிளர்ச்சியூட்டின; பறவையையும், அதன் வனப்பையும் கண்டு கண்டு சித்திரனார் களி கூர்ந்தார்; இயற்கைத் தமிழை இளமை வயது தொடங்கியே சுவைத்து இன்பங் கொண்டார்; பெற்றோரின் கண்டிப்போ, தண்டிப்போ இல்லாது உரிமை வாழ்வு வாழ்ந்தார். வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருள் பெருஞ்சித்திரனார் பிறந்து வளர்ந்த காலம், இயற்கைச் சூழலிலே ஆசிரியர்கள் தங்கி மாணவர்களைத் தம்மோடு இருக்கச் செய்து கல்வி கற்றுத் தந்த காலம். அக்கால இயல்புக்கு ஏற்பப் பெருஞ்சித்திரனார் தக்கவாறு கல்வி பெற்றார். உலகியல் அறிவும் கலை பயில் நயமும் சிறப்பாகக் கைவரப் பெற்றார். வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளைக் கொண்டே வனப்பு மிக்க கவிதைகள் தீட்டும் வல்லமை பெற்றார். உரிமையுடன் வாழ்ந்து திரிந்த கலைஞராகிய அவர் வாழ்க்கைக்குரிய தொழிலொன்றை யும் தேர்ந்து எடுத்துக் கொள்ளவில்லை. வயிற்றுப் பாட்டுக்காக வாய்த்த தொழிலொன்று வேண்டுமே என்பதை மறந்தார். தமிழ்ச்சுவை அருந்துவதிலே தணியாத வேட்கை கொண்டார். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை யல்லவா? எவ்வளவு கல்வி இருந்தாலும், கலையிருந்தாலும் வயிற்றுப் பாட்டுக்குத் தொழிலொன்று வேண்டுமே! இல்லையேல், கலையை மதித்துக் காக்கும் பெருங்குணம் படைத்த கலைச் செல்வர்களாவது இருந்து காக்க வேண்டுமே! அவ்வாறிருந்தால் தானே வாழ்க்கைச் சக்கரம் சுழல முடியும்! மனை வாழ்க்கை பெருஞ்சித்திரனார் தக்க வயதில் திருமணம் செய்து கொண்டார்! மனைவியரோ நல்லவர்! மிகமிக நல்லவர்! வறுமை வந்த காலத்தில் தான் வாய்த்த மனைவியின் உண்மை இயல் பினை உணரலாம் என்பர். அதற்கேற்பச் சித்திரனாரின் மனைவியோ செம்மையான குணங்கள் உடையவர்! அன்றியும் வறுமையில் செம்மை காத்து, அமைந்த வாழ்க்கை நடத்தும் அருமைப்பாடு உடையவர். கருத்து ஒத்த அவர்கள் வாழ்க்கை யிலே மக்கட் செல்வமும் பெருகிற்று. ஆனால் பொருட் செல்வம் இன்மை அவர்தம் வாழ்வை அரித்தது. சித்திரனார் வறுமையைப் பொறுத்துக் கொண்டார்! வாய்த்த மனைவியும் பொறுத்துக் கொண்டார்! சிறுவர்கள் பொறுத்துக் கொள்வரோ? அன்றியும் சித்திரனாரைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னையும் வாழ்க்கையை வெறுத்துக் கொண்டே வாழ்கின்றார். முக்கால் சிறுதேர் உருட்டும் சிறுவர்கள் அவலம் ஒருபுறம்; முக்கால் நடையில் உழலும் அன்னை கவலை ஒருபுறம்; என் செய்வார் சித்திரனார்! வறுமைக் கொடுமை வைரமனம் படைத்திருந்தாலும் வறுமை ஆட்பட்ட சித்திரனார் சமாளிக்கத் திண்டாடினார். இளங் குழந்தை களையும், இரக்கமிக்க மனைவியையும், முதுமைத் தாயையும் தத்தளிக்க விடுவது தகுதியன்று என்றறிந்த அவர் எவரையேனும் கண்டு பரிசில் பெறக் கருதினார். பசித்துயருக்காகப் பாட்டுப் பாடிப் பொருள் பெற்று வாழும் வாழ்க்கை சிறப்பற்றது என்று சித்திரனார் அறிந்திருந்தார். ஆயினும் தம் சூழ்நிலையால், எவரையேனும் அண்டிப் பிழைத்தே தீரவேண்டும் என்ற உறுதிக்கு வந்தார். அக்காலத்தில் வள்ளல் பெருமகனாய்த் திகழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிச் சித்திரனார் கேள்வியுற்றிருந்தபடியால் அவனிடம் செல்வதென முடிவு கொண்டார். அதியமான் அதியமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன்; மழவர் என்னும் வீரர் கூட்டத்து முதல்வன்; குதிரை மலைக் கொற்றவன்; தகடூரின் தலைவன்; சேரமானின் உறவினன்; வேந்தர் எழுவரை வென்று அரசுரிமை பெற்றவன்; பரணரும், அவ்வையாரும், பொன்முடியாரும் புகழ்ந்து பாடும் பெருமைக்குரியோன்; அரிதில் பெற்ற நெல்லிக்கனியை அவ்வையாருக்கு அளித்து அவரை நெடுங்காலம் நிலவுலகில் வாழச் செய்த நல்லோன்; உயர்ந்த பண்பாடுகள் கொண்டோன். காட்டுவழி இத்தகு சிறப்பனைத்தையும் சித்திரனார் அறிந்திருந்தார். அதனால் அதியமானைக் காணுமாறு தகடூருக்குப் புறப்பட்டார். வீட்டின் வறுமை நிலையிலே விடைபெற்றுச் செல்வதும் அரிதாக இருந்தது; வேறு வழியும் இல்லை. அதனால் புறப் பட்டார். சித்திரனார்; நடந்து செல்ல வேண்டிய பாதையோ கொடுமையானது. எங்கும் கற்களும் பாறைகளுமாகவே காட்சி யளித்தன; மேடும் பள்ளமுமாகவே தோன்றின; சல சலக்கும் ஆறுகள் இடைமறித்துக் கொண்டு ஓடின; எச்சரிக்கை தவறினால் உண்டு ஏப்பமிடும் விலங்குகள் உறுமித் திரிந்தன. வளைந்து செல்லும் பாதைதான் என்றாலும் நெளிந்து செல்லும் பாம்புகளுக்குக் குறைவு இல்லை. ஆந்தையின் அலறலும், கூகையின் குழறலும் கேட்டுக் கொண்டே இருந்தன. நட்டு, ஏற்றமாக ஓரிடம் ஏறும்; செங்குத்து இறக்கமாக ஓரிடம் இறங்கும்; அடியடி தோறும் ஏறி இறங்க மூச்சு முட்டும்; நடையோடாது கால்கள் நடுங்கும்; உணர்வு ஒடுங்கும். நடைத்துயர் சித்திரனார் கால்களோ மென்மையானவை. உள்ளத்தில் உரம் இருந்தாலும் உடல் உரமும் வேண்டுமல்லவா! நடப்ப தற்குத் திண்டாடினார்; நிழல் கண்ட இடங்களிலெல்லாம் நின்று நின்று சென்றார்; வானுயர்ந்த மலைகள் செலவைத் தடுத்தன! வறுமை பிடர்பிடித்துப் போ போ என்று முன்னே தள்ளியது. இறுதியில் வறுமையே வென்றது. ஒருமலையா இருமலையா? பலபல! அத்தனையும் கடந்து தகடூர் போய்ச் சேர்ந்தார். சித்திரனார் சென்ற காலநிலை புலவர் வருகை கேட்டுப் பொருக்கென ஓடி வரும் அதியமான் அரண்மனையிலேதான் இருந்தான்; இருந்தாலும் புலவர் சித்திரனார் வருகையை அறிந்தும் வரவேற்க வந்தான் இல்லை. அவ்வையின் புலமையைப் பயன்படுத்திக் கொண்டு. பண்பையும் புகழையும் வளர்த்துக் கொண்ட அதியமான் புலவரை வரவேற்க வரவில்லை. அவனுக்கோ அரசியல் அலுவல் மிகுதியாயிற்று! போர் போர் என்று வீரமுரசு கொட்டித் திரிந்த அவனுக்குப் பகைவர்கள் பெருகிவிட்டனர். பலர் பலராகச் சேர்ந்து கொண்டு தக்க பொழுதில் தாக்கி அவனை அழிக்க முனைந்து நின்றனர் அயர்ந்திருந்தால் போதும், அடுத்த நொடியில் அழிவே என்னும் சிக்கலான பொழுதிலே தான் அதியமானிடம் சித்திரனார் போய்ச் சேர்ந்தார். புலவர் வருகை கேட்டு மகிழ்வுற்றான் அதியமான். அவரை நேரடியாகக் கண்டு வரவேற்றிருக்கலாம். நற்சொல் கூறி யிருக்கலாம்! அவர் பொன்னுரைகளைச் செவியேற்றிருக்கலாம்! ஆனால் நெருக்கடியிலே தவறி விட்டான். சித்திரனாரைக் காணாமலே தக்கவர்கள் வழியாகப் பரிசுப் பொருள் அனுப்பி வைத்தான். புலவர் மானம் கிடைத்ததைச் சுருட்டும் கீழ்மைக் குணம் படைத்தவர் அல்லர் சித்திரனார். வந்த புலவனை வரவேற்கவில்லை! அவன் வாய் மொழியைக் கேட்கவில்லை; காணாமலே எவர் வழியோ பொருளை அனுப்பி வைத்திருக்கின்றான். இதைப் பெற்றுச் செல்வதோ முறைமை? என்று எண்ணி எண்ணி வருந்தினார். இப்பொருளைப் பெற்றுச் செல்லேன்; பொருளே குறி என நச்சித் திரியும் புலவன் யான் அல்லேன். முகம் காட்டாமல் கொடுக்கும் இப்பணத்தை யான் பெற்றுச் செல்வேன் என்பதை அதியமான் எப்படி அறிந்தான்? யான் ஒரு வணிகப் பரிசிலனாக இருப்பேனேயானால் கிடைத்தது பேறு என்று மானம் நோக்காது சுருட்டிக் கொண்டு செல்வேன்! அதுவா வாழ்வு? மானமின்றிப் பொருள் மிகப் பெற்று வாழ்வதினும், மானத் தோடு வாழும் வறுமை வாழ்வே பெருமையானது. இப்பொழுது அதியமான் அனுப்பி வைத்துள்ள செல்வம் அவன் வள்ளன் மையைக் காட்டுகின்றதே அல்லாமல் என் தகுதியைக் காட்டு கின்றதோ? என்று பலபட எண்ணினார். பாடற் பரிசு நடந்து வந்த களைப்பையும், பாதைக் கொடுமையையும் சித்திரனார் மறந்துவிடவில்லை; வரவேற்க முன்வராத வள்ளல் அதியமானையும் மறந்து விடவில்லை; புலவனுக்கே உரிய மானத்தின் இயல்பையும் மறந்து விடவில்லை! மறக்காத சித்திரனார், பரிசு கொண்டு வந்து தந்தவர்களிடம் அதனைப் பெற்றுக் கொள்ளாமலே அவர்களுக்கு ஒரு பரிசினை நீட்டிச் சென்றார். என்ன பரிசு அது? அதுவா? குன்றும் மலையும் பலபின் ஒழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என்னயந்து அருளி ஈதுகொண்டு ஈங்கனம் செல்க தானென என்னை யாங்கு அறிந் தனனோ, தாங்கருங் காவலன் காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித் தினையனைத் தாயினும் இனிதவர் துணையளவு அறிந்து நல்கினர் விடினே! என்னும் பாடற் பரிசே அது. ஐயோ! அவ்வை பாடலால் அழியாப் புகழ்பெற்ற அதியமான் அறியாது செய்த பிழையால் அறிஞர் சித்திரனாரின் வசைக்கு ஆளானான். வெண்சுவரிலே பட்ட கறையும், விளங்கிய குடியிலே பிறந்தவனுக்கு ஏற்பட்ட வசையும் தெளிவாகப் புலப்படத்தானே செய்யும்! கோடைக் காலக் கொழுநிழல் மரம் அதியமானிடம் வெறுப்புக் கொண்ட புலவர் சித்திரனார் அப்படியே வீடு திரும்பும் நிலைமையில் இல்லை. வீட்டிலுள்ள வறுமை நிலைமையைத் தெரிந்திருந்தும் வெறுங்கையுடன் போவது முடியுமோ? அதனால் வெளிமான் என்னும் வேந்தனை யேனும் கண்டு செல்லலாம் என்று கருதினார். வெளிமான் சிற்றரசனே எனினும் பெருங்குணம் படைத்தவன். சித்திரனாரை நன்றாக அறிந்து இருந்தவன். நீ நீடு வாழ்க! என்று முன்னொரு சமயத்தே சித்திரனார் வாழ்த்தி வந்தாராக அவரை வரவேற்று, எண்ணிப் பாராது பெரும் பொருள் தந்த பேரன்பினன்; கோடைக் காலத்துக் கிடைத்த கொழுநிழல் மரம் போன்றவன். எங்கும் கவலை சித்திரனார் வெளிமானது தலைநகரத்தை நோக்கி நடந்து வந்தார். ஆனால் இதற்கு முன்பு போலக் காதம் பலவற்றுக்கு அப்பால் முழங்கி ஒலிக்கும் முரசொலி கேட்கவில்லை! துயில் கொண்ட நகரம் போல் இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டே நடந்தார். நகரை எவ்வளவு நெருங்கிவிட்டாலும் இன்பவொலி ஒன்றும் செவியில் ஏறவில்லை. மாறாகத் தோல் கிழிந்த முரசத்தையே கண்டார். தந்தம் இழந்து, பாகர் அற்ற யானைகளைக் கண்டார். யாழற்ற பாணரைக் கண்டார்; கால் நடை தளர்ந்த கூத்தரைக் கண்டார்; புலம்பித் திரியும் புலவரைக் கண்டார்; முகக் களை அற்ற பொது மக்களைக் கண்டார்; அத்தனை பேர் முகத்திலும் கவலை ஒழுகுவதைக் கண்டார்; அன்றியும் ஓரோரிடத்தே கண்ணீர் வடித்துக் கதறுவதையும் கண்டார். இடுகாட்டில் புலவர் வாழ்வளிப்பவனான வெளிமானது தலைநகரில் இத் தாழ்நிலை ஏன் ஏற்பட்டது? புலவர் தோழன் - வறியவர் வள்ளல் இசையின் தோன்றல் - வெளிமான் அத்துணைப் பேரையும் வாடுமாறு வைத்துவிட்டு வைய வாழ்வை நீத்துச் சென்றான். இதனைக் கேள்வியுற்ற சித்திரனார் கண்கள் பஞ்சடைந்தன; கால்கள் தளர்ந்தன; கைகள் பிசைந்தன; வாய் உளறிற்று; நெஞ்சு பறையடித்தது. உலகம் வாழ வாழ்ந்தவன் உயிர் துறந்தானே என்று ஏங்கினார். அரண்மனைக்குச் செல்ல, புலவருக்கு மனம் வரவில்லை. அன்பன் வெளிமான் துயிலும் இடுகாட்டை அடைந்தார். கூற்றத்தின் கொடுமை இறந்தோரது எலும்பும் பல்லும் வந்த புலவரை நோக்கி எள்ளி நகையாடின; கருகித் தீய்ந்த கட்டைகள் கவலை முகம் காட்டின; முள்ளும் செடியும் உலகியல்பைச் சுட்டிக் காட்டின; வாழ்வோர் அனைவரும் இங்கு வந்தே தீரவேண்டும் என்று சுடுகாடு பறை சாற்றியது. புலவரும் பாணரும் கூத்தரும் சூழ்ந்து வந்து பாடியும் இசைத்தும் ஆடியும் களிப்பூட்டப் பெற்ற காவலன் கழுகும் காக்கையும் கோட்டானும் சுற்றி வட்டமிட்டுத் திரியும் பிணக் காட்டில் குடி புகுந்தது கண்டு கண்ணீர் வடித்தார்! வேந்தன் பிரிவால் வருந்திய மகளிர் முட்டி மோதி அழுத பாடு என்னவோ என்று ஏங்கினார். இவனே தஞ்சம் என எண்ணிக் கொண்டிருந்த இரவலர்கள் நிலைமை என்ன ஆகுமோ? என்று துடித்தார்! கொடுங்கூற்றம் செய்த செயலை எண்ணி எண்ணிக் கொதித்தார். எழுந்தது கற்பனை சித்திரனார் வெளிமானை இழந்த துயரிலே ஆழ்ந்து விட்டார். சுடுகாட்டின் ஓரமாகத் தனியே உட்கார்ந்து கொண்டார். சிந்தனைகள் பல தோன்றி அவரைத் தின்று கொண்டு இருந்தன. வெளிமானை நினைக்கும் போது சித்திரனார் தம் வீட்டு நிலைமையையும் மறந்து விடவில்லை. இந்த இரண்டு நிலைமை களுக்கும் இடையே கிடந்து இருதலைக் கொள்ளி எறும்பு போல் திண்டாடினார். கவலை பெருகிற்று! புலவன் கவலை பொய்யாகப் போகுமா? கற்பனை ஒன்றை எழுப்பிற்று. சரியான மழை நாள்; மழை கப்பிக் கொண்டது; தன் கையைத் தானே அறிய முடியாத அவ்வளவு இருள்; நள்ளிரவுப் பொழுது; கப்பல் ஒன்று கடலிலே செல்கின்றது; காற்றும் மழையும் சேர்ந்து கப்பலைப் புரட்டின; இருந்தவர் அனைவரும் அலற கப்பல் கடலுள் ஆழ்ந்தது; அக்கப்பலின் மூலையிலே ஒருவன் உட்கார்ந்து கொண்டிருந்தான். உட்கார்ந்து கொண்டிருந்தவனோ ஊமன்; அன்றியும் கண்ணொளியும் இல்லாதவன்; அவனும் கப்பலிலிருந்து எப்படியோ கடலில் தப்பி விழுந்து விட்டான். ஒடிந்த கட்டையைப் பற்றிக் கொண்டு தப்பிச் சென்ற வர்கள் உண்டு; கட்டையை ஒடித்துப் பற்றிக் கொண்டு போன வர்கள் உண்டு; நான்கு பேர் மூன்று பேராகச் சேர்ந்து கிடைத்த கட்டையில் ஏறிக்கொண்டு சென்றவர்கள் உண்டு; மீனவர் படகிலும், வணிகர் கப்பலிலும், கட்டுமரங்களிலும் ஏறிக் கொண்டு கடல் கடந்தவர்கள் உண்டு; ஆனால், அந்தக் குருடனோ? என் செய்வான்? எந்தக் கட்டையை எடுப்பான்? எதை ஒடிப்பான்? எப்படித் தப்புவான்? உணர்வு அற்றகட்டை அவன் தனது உயிர் தப்பிப் பிழைக்குமாறு தானே முன்வந்து நிற்குமா? அப்படியே முன்வந்து நின்றாலும், அது கையிலும் தட்டவல்லவா வேண்டும்? ஓரடி தூரம் ஒதுங்கி நின்றாலுங் கூட அதனை அறியுமாறு அவனுக்குக் கண்ணொளி இல்லையே! அன்றியும் அவன்மேல் இரக்க முடையார் எவரேனும் இருந்து தம் கட்டையில் ஏறிக் கொள்ளு மாறு அழைத்தாலும் அவர்கள் அழைப்பைக் கேட்டறிய முடியாத செவிடனாக அல்லவா இருக்கிறான்? மற்ற எவரேனும் நெருங்கி வந்து அதனைக் கண்டுபிடித்துக் காப்பாற்றலாம். என்றாலோ, அதற்கு வாய்ப்பற்ற மழைக்காலத்து நள்ளிருட்டு ஆயிற்றே! தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே வழிதுறை அறியாமல் தத்தளிக்கும் நிலையினராக இருக்கும் அவர்கள் கண்கெட்ட ஊமனை நினைத்துக் கண்டு பிடித்துக் காக்கவா போகின்றார்கள்! அவன் கதறல் - ஊமை உளறல் - பிறர் காதுக்குக் கேட்கும்படியாகவா காற்றும் அலையும் முழங்கு கின்றன? அப்படியானால் கண்ணில் ஊமன் நிலை என்ன வாகும்? என்னவாகும்? கடலில் மூழ்கி மடிவதுதான் முடிவு. இது தவிர்த்து வேறு வழியேது? வகையேது? இக்கண்ணில் ஊமனது கடற் பயணம் போலவே எனது வாழ்வுப் பயணமும் உள்ளது. வறுமைக்கு ஆட்பட்ட நான், வள்ளல்களையும் இழந்து தவிக்கிறேன். என் வாழ்வோ தப்பிச் செல்ல முடியாத அவ்வளவு கொடுமைக்கு ஆட்பட்டுச் சிக்கிச் சீரழிந்துவிட்டது. இத்துன்பச் சுழியில் அகப்பட்டுச் சுழல்வதைப் பார்க்கிலும் இறந்துபடுதலே நல்லது. எனக்குத் தக்கது அதுவே. இவ்வாறு இடைவிடாது எண்ணினார் சித்திரனார். அவர் வாழ்க்கை கசப்பாகி விட்டது; ஏன்? வேம்பாகவே மாறி விட்டது. மேலுமோர் எண்ணம் இந்நேரம் மின்னல் போலாக ஓர் எண்ணம் தோன்றிற்று; அழும் குழந்தை, அதனை அணைத்துக் காக்கும் மனைவி; வாழ்வை முனிந்து நொந்து கொண்டிருக்கும் வயது முதிர்ந்த தாய்! இவர்களை எண்ணினார். தம் குறுகிய முடிவிலே தவறு மிக இருக்கிறது என்று நினைத்து. என்னா குவர் கொல் என்துன்னி யோரே! என்று சிந்திக்கத் தொடங்கினார். வெளிமான் புதை குழிக்குத் தம் கண்ணீர் மலரைச் சொரிந்து விட்டுச் சித்திரனார் புறப் பட்டார், வெளிமான் அரசாண்டிருந்த அரண்மனையை நோக்கி. இளவெளிமான் வெளிமானுக்குத் தம்பி யொருவன் இருந்தான். அவன் பெயர் இளவெளிமான் என்பது. இவன் வெளிமானைப் போலப் பெருங்குணம் படைத்தவன் அல்லன். புலவர் தகுதியறியும் இயல்பு இல்லாத ஓட்டைச் செவி படைத்தவன். முன்னரே இளவெளிமானைச் சித்திரனார் அறிந்ததுண்டு. ஆனால் அவன் அப்பொழுது இளவரசனாக இருந்தபடியால் தெளிவாக அறிய வாய்ப்பு இல்லாது போய்விட்டது. அண்ணன் போலவே இத்தம்பியும் இருப்பான் என்றே கருதினார். இல்லையேல் இளவெளிமான் அரண்மனைக்குள் சித்திரனார் காலடி வைத் திருக்க மாட்டார். தகுதியறியாக் கொடை இளவெளிமான் சித்திரனாரை வரவேற்றான். எனினும், புலவர் புலமைத் திறத்தை அறிய விரும்பவில்லை. அளவளாவிப் பேசக் கருதவில்லை. ஏதேனும் கொடுத்து அனுப்பி வைப்பதே கடமை என்று கருதினான் போலும்! அதனால் புலவரின் செம்மைப் பண்பினை அறியாதவனாய் ஏதோ ஓரளவு பொருளை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். புலி பசித்தாலும் புல்லை யுண்ணாதது போல, வந்த பொருளை வறுமை கருதி வாங்கிக் கொள்ளுமாறு புலவர் விரும்பவில்லை. செல்வர்களின் நகைப்புக் கிடமான பண்புகளை எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினார். பொருட் செல்வம் மட்டுமே உடையவர்களின் புன்மைக் குணம் சித்திரனாரைப் பெரிதும் புண்படுத்திற்று. அதனால் தம் நெஞ்சிற்குக் கூறுவார் போலக் கூறத் தொடங்கினார். புலியும் எலியும் நீடுவாழ்க என்று யான் வாழ்த்திவரக் கோடைக்கு அமைந்த கொழுநிழல் போன்றவனான வெளிமான் இறந்து பட்டான். சான்றோரது கேள்விப் பயன்மிக்க சால்புடையவன் மாண்டான். பசித்து வந்தவன் சோற்றுப் பானையை ஆவலோடு பார்க்க அதிலிருந்து தீக் கிளம்பியது போல நாடிவந்தோர் ஆசையைப் பழுதுபடச் செய்த கூற்றம் கொடிதே காண்! உரிமை மகளிர் தம் மார்பில் அறைந்து கொண்டு விழுந்து அழுது வாழைப்பூப் போல வளையல் உதிர்க்க இரவலர் இரங்கக் கள்ளி மண்டிய பாழ்பட்ட காட்டுக்கு வீரன் போய்விட்டான். அவனைக் கொன்ற கூற்றம் நோயின்றி வாழ்வதாக! யானையின் வேட்டைக்காக வந்த புலி, அவ் யானை வேட்டை தப்பியது கருதி எலி வேட்டையாடாது அன்றே! துள்ளிவரும் வெள்ளம் போன்று போய் வேறிடத்தே விரும்பிய பரிசைப் பெறுவேன். நெஞ்சமே எழுந்திரு! தெளிவு கொள்! என்றார். மேலும் கூறினார். கனியிருப்பக் காய்கவர்தல் அருகிலே வரக்கண்டும் ஆவல் பெருகப் பார்க்காது, அறிந்தும் அறியாதவர் போலாக நின்று, மனத்தே மகிழ்ச்சி குறைய, முகத்தே மாறுபாடு தோன்ற அளிக்கும் பரிசும் பரிசோ? அளவில் எவ்வளவு ஆயினும் என்ன? ஊக்கம் உடையவர் அதைப் பொருளாகக் கொள்வாரோ? வருக என வரவேற்றுச் செய்யும் சிறப்பெலாம் செய்து தரும் பொருளை ஏற்பதே முறை! வையமோ பெரிது; வரிசை யறிந்து கொடுக்கும் வள்ளல்களோ பலர்; சிங்கம் போன்று செம்மாந்து செல்லும் உள்ளமே, உடைந்து போகாதே! பலரும் அறியவும் நமக்கு இரக்கம் காட்டாதவனிடத்தே நிற்பது ஒழிக! கனியிருப்பக் காய் தேடி வருந்துவோர் உலகில் உளரோ? நெஞ்சமே எழுக! செல்வோம் யாம்! என்று கூறி, அரண் மனையை விட்டு வெளியேறினார் புலவர் சித்திரனார். மானமே பெரிது வள்ளல் அதியமான் பாராது கொடுத்த கொடையை வாங்க மறுத்த புலவர் மனம், இளவெளி மான் தானே நேரில் வந்து தந்தும் தகுதியறியாது கொடுத்த ஒரே ஒரு காரணத்தால் பெற மறுத்துக் கிளம்பியது. யானை வேட்டைக்கு வந்த புலி, எலி வேட்டை யாடுமா? என்றல்லவா கேட்கின்றார்? எவ்வளவு தன்மான உணர்வு? வந்த வறுமையை மாற்றியமைக்கலாம்; ஆனால் போன மானத்தை மீட்க முடியுமா? முடியாதே! இதனை வாழ்க்கையில் காட்டிய புலவர் சித்திரனார் பண்பு வாழ்வதாக! உலகு கொடிது! அம்மம்ம! மிகக் கொடிது! அதனாலல்லவா இன்றும் அளவிறந்த அல்லலோ, வாட்டும் வறுமையோ உற்றோன் ஒருவனைச் சித்திரவதைப்படுகின்றான் என்கின்றனர். சித்திரனார் பட்ட வறுமைக்கு ஒப்பான வறுமை என்பதன்றோ அவர்கள் உவமைக் கருத்து! என்னே வறுமைக் கொடுமை! பெருஞ்சித்திரனாரைப் பற்றிய வறுமை பெருஞ்சித்திரனார் வெறுங்கையராகவே வீடு சேர்ந்தார். மனைவியர் ஒன்றும் கேட்டார் இல்லை; கணவர் உள்ளம் கலங்குவது கண்டு தாமும் கலங்கினார். அடுத்த வேளைக்கு என்செய்வது என்ற நிலைமையில் இருந்தாலும் அதையும் பொறுத்துக் கொண்டார். யாவரும் கேளிர் என்னும் பெரு நோக்கம் படைத்தவராக இவ்வம்மையார் இருந்தபடியால் ஊரார் அனைவரும் இவர்மீது தனியன்பும் பற்றும் வைத்திருந் தனர். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர். இருந்தாலும் என்ன? கிடைத்த பொருளை நாளைக்கு வேண்டுமே என்று பேணிச் செலவழிக்கப் பழகாதவர் இவர். இவருக்கு அமைந்த சுற்றமும் பெரிதாக இருந்தது. சுற்றத்தார்களும் பெரும் ஏழைகள்! குப்பைக் கீரை வீட்டிலோ பொருள் சிறிதும் இல்லை; வெளியே இருந்தோ வருதற்கும் வழியில்லை; கீரைகளைப் பிடுங்கி அவித்துத் தின்றே காலம் கடத்தினர். எத்தனை நாள்களுக்குத் தான் கீரையும் கிடைக்கும்? முடிந்த அளவில் முதலில் நல்ல கீரைகள் கிடைத்தன. நாள் செல்லச் செல்ல அக்கீரையும் கிடைக்கவில்லை. வீட்டின் கொல்லைப்புறத்திலே குவிக்கப் பெற்றிருந்த குப்பையிலே முளைத்துவளர்ந்த கீரையைப் பிடுங்கி அவித்துண்டு குடும்பம் நடத்தினர். நாள்தோறும் வேளை தவறாமல் கீரையையே பறித்து உண்டு வருவதானால் குப்பைக் கீரையானால் கூட எப்படிக் கிடைக்கும்? கொல்லைப் புறத்திலிருந்து எவ்வளவுதான் கிடைத்துவிடும்? முன்பு பறித்துவிட்ட வேரிலே சிறிதே அரும்பிக் கிளைத்த கீரையே கிடைத்தது! அதனுடன் போட்டு வேகவைப்பதற்கும் உப்பு இல்லை! உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது வழக்கு மொழி. ஆனால் குப்பையில் விளைந்த பண்டம் வயிற்றிலே! அதற்கும் உப்பில்லை! மனைவியும் மக்களும் உப்பில்லாக் கீரையை உண்ண மறுத்து விட்டார் சித்திர னார் மனைவி! சுவையற்றது என்றா? உப்பில்லாதது என்றா? ஐயகோ சுவைவேறா வேண்டிக் கிடக்கிறது? பெற்ற பிள்ளைகள் பசியால் வருந்தி, வெயிலால் உலர்ந்த இலைபோல் வாடி நிற்கும் நிலைமையிலே உண்ணவோ வேண்டும் என்னும் பெற்ற மனத்தாலே தான்! கீரையும் உண்ணாத தாய் செயலால் கைக் குழந்தை திண்டாட்ட முறுகின்றது. பால் வேண்டிச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்தும், பெறாமையால் விம்மி விம்மி அழு கின்றது; இரத்தக் கசிவு வருவதன்றிப் பால் வரக் காணவில்லை. சற்று வயது வந்த பிள்ளைகள் பசி துரத்த ஓடி வந்து பானையைத் திறந்து பார்க்க அங்கொன்றுங் காணாமையினால் அழுகின்றன! அழுகையை நிறுத்துமாறு செய்ய, புலிப் பயம் காட்டுகின்றார் புண்பட்ட தாய்! உணவு கிடைக்காது என்ற தெளிவினால் வீட்டை மறந்துவிட்டுத் திரிகின்றனர் வீட்டு நிலை தெரிந்த புதல்வர்கள்! புதுப் புலவர் உரை இந்நிலைமையிலே சித்திரனாரை ஒருநாள் புலவ ரொருவர் காணுகின்றார். அவர், தம்மைப் போல் பாடிப் பிழைக்கும் புலவர் என்பதைச் சித்திரனார் அறிவார். அன்றியும் நாவின் உழைப்பால் வரும் வருமானம் அன்றி வேறு வருமானம் அவருக்கு இல்லை என்பதையும் நன்கு அறிவார். அதனால் அப்புலவர் வருகையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் பொருள் தேடிவந்த வழியை அறிய விரும்பினார். இதற்குள் புலவரே தாம் பொருள் பெற்ற வழியைச் சித்திரனாருக்கு உரைக்கத் தொடங்கினார். புலவர் பெரும! யான் பெரும் ஏழை என்பதை நீவிர் அறிவீர்! ஆனால் இன்று யான் பழைய ஏழ்மை நிலைமையில் இல்லேன் என்பதையும் அறிகின்றீர்! இதற்குக் காரணம் யான் பாடிப் பெற்ற பரிசிலேயாகும். பாடும் பாட்டைக் கேட்கும் திறனில்லாத ஓட்டைச் செவியர் பலர்; உள்ளத்தே செருக்குடைய சிறியர் பலர்; புலமையை விரும்பாப் புல்லர் பலர்; ஆனால் வறண்ட பயிருக்கு வானம் வழங்குவது போல் வழங்கும் வள்ளல்களும் இல்லாமல் இல்லை. தக்க இடத்தை அறிந்து தம் நிலைமையைக் கூறினால் தகுதி அறிந்து தரும் தாளாளர்களும் உலகில் இல்லாமல் இல்லை. பறம்பின் கோமகன் பாரியும். கொல்லிமலைக் கொற்றவன் ஓரியும், மாரிபோலும் ஈகைக் காரியும், குதிரை மலைக் குரிசில் அதியனும், தோகை மயிலுக்குப் போர்வை யளித்த பேகனும், மோசி கீரனாரின் பாடலேற்ற ஆயும், கொள்வோர் விருப்பம் அறிந்து கொடுக்கும் நள்ளியும் ஆகிய வள்ளல்கள் எழுவரும் மாண்ட பின்னர், புலவர்கள் வாழ்க்கை யில் கப்பிக் கொண்ட வறுமையைப் போக்குவதற்காக நிற்கும் ஒரே ஒரு வேந்தன் குமணனே என்பதை அறிவீராக! அவனே, பாடி வருபவரையும், ஆடி வருபவரையும் தகுதியறிந்து பரிசு தந்து பாதுகாக்கின்றான். அவன் தந்த வாழ்வே என் வாழ்வு! சிறிது கொடுக்கும் சிறுமையும், இல்லை என்று கூறும் இழிவும் இல்லாதவன் குமணன். முதிரம் என்னும் மலைக்கு உரியவன். வானைத் தொட நிற்கும் அவனது மலையைப் போன்ற உயர்ந்த உள்ளம் உடையவன்! பளிங்குபோல் காணப்படும் அவனது சுனை நீர் போன்ற இனிய சொல்லுடையவன். அவனிடத்தை நீவிர் அடையின் உம் வறுமை தொலையும்! வளம் மிகப் பெருகும்! இது உறுதி! உறுதி! என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார் வந்த புலவர்! சித்திரனார் செல்லுவதற்கு வழி யொன்று கிடைத்தது கேட்டுப் பெரிதுங் களிப்புற்றார். குமணன் குமணன் கூர்மையான வேல் உடையவன் நண்பர்க்கு நண்பன்; பகைவர்க்குப் பகைவன்; அதனால் பாடுவோர் அவனது ஆண்மையையும் அருளையும் ஒருங்குபடுமாறு விளங்கினான். நாட்டு வளப்பத்துடன் அவன் காட்டும் அன்பையும் பாட்டிலே காட்டினார் பாவலர் பலர்! குமணன் கொடைவளம் இத்தகைய குமணனைக் காணுமாறு புலவர் முதிர மலையை நோக்கி நடந்தார். எதிரே வரும் ஒரு கூட்டத்தைக் கண்டார்! அக்கூட்டத்தினர் அனைவரும் புலவரும், பாணரும், கூத்தரும் ஆவர்! அவர்களைக் கண்டவுடன் உள்ளம் மகிழ்ந்தார் புலவர் சித்திரனார். முகமலர்ச்சியுடன் அளவளாவினார். அவர்கள் சித்திரனார் இருக்கும் நிலைமையைச் சிந்தையில் கொண்டனர். தாங்கள் குமணனைக் கண்டதையும், அவன் செய்த செயற்கரிய உதவியையும் இப்புலவரிடம் உரைப்பது நலமெனக் கருதினர். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் எண்ண முதிர்ச்சியும் எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைவதுவே அல்லாமல் வேறொன்று அறியாத பெரு நோக்கும் உடையவர்கள் அப்புலவர்கள்! அதனால் சித்திர னாருக்கு உரைப்பாராயினர். நல்லோர் கூறிய நயவுரை புலவர் பெரும! வெப்பமிக்க கதிர் எரித்தலால் கரிந்த புல்வெளிபோல இருந்த எமக்கு இடி இடித்து மின்னல் மின்னி மழை பொழிந்தது ஒரு முகில். அம் முகிலை அறிவீரோ நீவிர்! அம்முகில் முதிரமலையிலே கொடைக் கைகள் இரண்டுடன் விளங்குகின்றது. அந்த முகிலைக் காணுமுன் எங்களைப் பசி தின்று கொண்டு இருந்தது. ஆனால் சோறு கண்டறியாத எங்களை அன்புடன் வரவேற்று, இன்புரை கூறி, நண்பரினும் நண்பராகப் போற்றித் தன்னொடும் இருக்கச் செய்து உணவு அளித்தது! உணவும் எத்தகையது? நெய்ச்சோறு! தாளிப்புக் கறிகள்! ஊட்டமிக்க துவையல்! தண்மதி போலாகத் திகழும் உண்கலம்! விண்மீன்கள் போலாகச் சூழவைத்த பொற் கிண்ணங்கள்! வாடிச் சுருங்கிய வயிற்றை எடுப்பாக்கக் கூடிய சுவை! பிறிதொருவனைத் தேடிச் சென்று தேம்ப வேண்டாதவாறு பெருகிய பொருட்கொடை! இவ் வளவும் தரும் முகில்தான் முதிரத்து முகில்! அம்முகிலின் பெயர் குமணன் என்பது! நீவிரும் அங்குச் செல்க! பெரும் பொருள் பெற்று வருக! செல்லும் வழியும் இதுவே! என்று சுட்டிக் காட்டி விட்டு நடந்தனர். சித்திரனார் அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டார் குமணனை நினைத்துக் கொண்டே முதிர மலையையடைந்தார். தகுதி அறிந்து தருக குமணன் சித்திரனார் வருகையை அறிந்து எதிர்கொண்ட ழைத்தான். புன்முறுவல் காட்டி வாழ்த்துரை வழங்கினான். புலவரின் களைப்புப் போகுமாறு அகம் குழையத் தழுவி, நல்லுணவு நல்கினான். நண்பரினும் நண்பராக வைத்துப் பெருமை பாராட்டினான். முன்னர் தாம் வரும் வழியில் புலவர்களும் பாணரும் கூத்தரும் கூறிய அனைத்தும் உண்மையாக இருத்தலை உணர்ந்து உவகை கொண்டார். ஆனாலும் அதியமானையும், இளவெளிமானையும் மறந்துவிட வில்லை. அவர்களைப் போல இவன் தன்மை இருக்க முடியாது என்று எண்ணினார். ஒரு சமயம் அவர்களைப் போலவே இவனும் நடந்து கொண்டால்? எவர் கண்டார்? ஆதலால் காரியம் கெட்டுவிடும் முன்னாகவே தம் கருத்தினைத் தெளிவுபடக் கூறிவிடுவது தக்கது எனக் கருதினார் அதனால் இரவலர் போற்றும் புரவல! உன் புகழைப் பாடி வருபவரும் பிறரும் கூறக் கேட்டு உன்னை நாடி வந்தேன். கொடை வள்ளல் எழுவரும் மாய்ந்த பிறகு இரவலர் துயரத்தைப் போக்குபவன் நீ ஒருவனே என்ற உரையினைக் கேட்ட பின்னரே இங்கடைந்தேன். யான் எத்தகைய வறுமை உடையவனாக இருந்தாலும் முறைகெட வரும் பொருளைக் கொள்ளமாட்டேன் நீ மனம் கசந்து யானையையே பரிசாகக் கொடுத்தாலும் அதைக் கொள்ளேன். ஆனால் விருப்பம் மிகுந்து இனிய முகத்துடன் ஒரு குன்றிமணியளவான செல்வத்தையே தருவாய் எனினும் கொள்வேன். ஆதலால் புலவன் தகுதி அறிந்தும், உன் தகுதி அறிந்தும், தரும் பொருளையே விரும்பு கின்றேன். தக்கதைச் செய்வாயாக! என்று வேண்டிக் கொண்டார். குடும்ப நிலையைக் குறிப்பிடுதல் குமணன் புலவர் சொல்லுக்குச் செவிசாய்த்தான் அவரது உள்ளத் திண்மையைப் பாராட்டிப் பேசினான். தன்னொடும் ஒருங்கிருக்கச் செய்து, அவர் வரலாறு அனைத்தையும் தெளி வாகக் கேட்டறிந்தான் குமணன் நல்லியல்பினை அறிந்து கொண்ட புலவர் தம் வீட்டு வறுமைக் கோலத்தை உள்ளது ஒழியாது தெள்ளிதில் விளக்கினார். குமணன் காட்டிய அன்பே இவ்வாறு குடும்ப நிலைமையைச் சொல்லுமாறு ஏவியது. முற்றம் வரைக்கும் கூட நடந்து செல்ல முடியாதவாறு முதிர்ந்துவிட்ட தாய் நிலைமையையும், மக்கள் மனைவி நிலைமையையும் எடுத்துக் கூறினார். புலவருக்கு ஏற்பட்டுள்ள வறுமையினைக் கேட்டறிந்த குமணன் அவரை மிகமிகப் பேணினான். அன்பு பெருக உறவாடினான். ஆனால் புலவர் மனம் குமணன் தந்த உணவிலும் செய்த வாய்ப்பிலும் செல்ல வில்லை. விரைவில் வீடு சேரவேண்டும் என்றே கருதியது. அதனால் குமணனுடன் தனித்துப் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒன்றில் வேந்தே! நிறைந்த செல்வத்துடன் விரை வாக என்னை அனுப்பி வைத்து எங்கள் வறுமைத் துயரை நீக்குவாயாக என்று வேண்டிக் கொண்டார். குமணனும் தக்க சிறப்பொடு புலவரை அனுப்பி வைக்க நினைந்தான் அவன் குறிப்பையும் அறிந்து கொண்டார் புலவர். அதனால் இவன் கொடையைக் கண்டே ஈயாத மன்னர் களுக்குத் தக்க அறிவு வருமாறு செய்வித்தல் தம் கடன் எனக் கொண்டார். அதனால் குமணனை நோக்கிக் கொடிய காட்டு வழியிலே சென்றவர், ஆண்டு ஒன்று கடந்தும் இன்னும் மீண்டார் இல்லையே என்று எதிர்நோக்கித் துன்புறும் என் மனைவி, மகிழுமாறு பனையை ஒக்கும் கையும், முத்து விளையும், தந்தமும், மலையை ஒக்கும் உருவும், அழகுற விளங்கும் பட்டமும், மாறி மாறி ஒலிக்கும் மணியும் உடைய யானை மீது ஏறிப் பெருமை விளங்கப் போதலை விரும்பினேன்! நீ தரும் கொடையால் என் மனைவி மகிழ்வதே அன்றி நின்னொத்த வேந்தர்களும் கண்டு வெட்கமுற வேண்டும்! யான் வல்லவன் ஆயினும் வல்லமை இல்லாதவன் ஆயினும் என்னை அளந்து பாராது நின் தகுதியையே அளந்து பார்த்துக் கொடுத்தல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். நின்னொத்த வேந்தர் வெட்குமாறு கொடை கொடுக்க வேண்டும் என்று கூறும் சித்திரனார், அதியமானையும் இளவெளிமானையும் மறந்து போயிருக்க மாட்டார் அல்லவா! பெருமிதமிக்க பிரிவு குமணன் புலவர் நோக்கத்தை அறிந்து மலை போன்ற யானையும்,அது சுமக்க ஆற்றாத பொருளும் அளித்துப் புலவரை அனுப்பினான். தினையளவு நன்றியையும் பனையள வாகக் கருதும் பண்பாடுடைய புலவர் சித்திரனார் மன்னனை மனமார வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டு விரைந்து சென்றார். யானைமேல் புலவர் விரைந்து சென்ற சித்திரனார் வீடு சென்றாரா? இல்லை! வீடு செல்வதற்கு முன், தம் தகுதியறியாத இளவெளிமானைக் கண்டு செல்லக் கருதினார். ஈயும் முறை அறியாத வேந்தன் இழிகுணத்தை இடித்துக் காட்ட எண்ணினார். வளமுடையவன் உள்ளச் சிறுமையால் வறுமையாளி ஆகின்றான். ஆனால் வறியவனோ உள்ள மிகுதியால் வள்ளல் ஆகின்றான்! இதை உலகுக்கு எடுத்துக் காட்டுவேன்! ஏன்? கொடையியல் அறியாத கொற்றவன் இளவெளிமானுக்கு எடுத்துக் காட்டுவேன் என்று, யானையை அவன் தலை நகரத்தை நோக்கிச் செலுத்தினார். காவல் மரத்தில் களிறு இளவெளிமான் அரண்மனையை அடுத்துப் பெரும் பெரும் மரங்கள் வானளாவ நின்றன. அவை பகைவர் முற்றுகை ஏற்பட்ட காலத்துக் காத்து உதவுவதற்காக வளர்க்கப் பெற்றவை யாகும். அதனால் அவை காவல் மரங்கள் என்னும் பெயரால் அழைக்கப் பெறுவனவாம். அம்மரங்களுள் ஒன்றன் பக்கத்தில் சித்திரனார் தாம் ஏறிவந்த யானையைக் கட்டினார். கட்டப்பெற்ற யானையோ வலிமை மிக்கது. மரத்தை முரித்துவிடும் அளவு உரம் வாய்ந்தது. சித்திரனார் ஏவி யிருந்தால் வேந்தன் வீரத்திற்கு இழுக்கு ஆக்கலாம்! காவல் மரத்தை முரிப்பது காவலனை மடிப்பதற்கு ஒப்பு ஆகும். ஆனால் சித்திரனார் வேந்தனுக்குப் புலவன் சிறப்பைச் சுட்டிக் காட்டவே கருதினார். அதற்குக் காவல் மரத்தில் களிற்றைக் கட்டிய ஒன்றே போதும்! ஆயினும் சித்திரனார்தாம் காவல் மரத்தில் யானையைக் கட்டிச் சென்றார் என்று காவலனுக்குத் தெரிய வேண்டாவா? அதனால் அரண்மனைக்குள் சென்றார். மீண்டும் இளவெளிமான் முன்னர் புலவர் முன்னொருகால் பரிசில் வேண்டிச் செல்லும் இரவலராக இதே அரண்மனைக்குள் சென்றிருக்கிறார் சித்திரனார். ஆனால் பரிசில் அளிப்பதற்காகத் தேடி வரும் உயர் புரவலராக இப் பொழுது அரண்மனைக்குள் செல்கின்றார். சித்திரனார் வருகை இளவெளிமானுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதனினும் அதிர்ச்சி தந்தது அவர் விரைவு! பேரதிர்ச்சியாக இருந்தது பேச்சு! என் பரிசினை ஏற்றுக்கொள் அரசே! இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு ஈபவன் நீ ஒருவன் மட்டும் இல்லை! இல்லை என்று கேட்டு வருபவனும் உலகில் நான் ஒருவன் மட்டும் இல்லை; உலகில் இரப்பவர்களும் உளர்; அவர்களைப் புரப்பவர்களும் உளர்; உனது காவல் மரத்தே யான் யானை ஒன்றைக் கட்டியுள்ளேன். அவ்யானை உனக்கு யான் தரும் பரிசிலாகும்; பெற்றுக்கொள், வருகிறேன். என்று விடையையும் எதிர்பாராது நடந்தார் சித்திரனார். இள வெளிமான் வெட்கமுற்றான். அதியமானையும் புலவர் விட்டு வைத்திருக்க மாட்டார்! ஆனால் அவன் முன்பே இறந்து போனான். குப்பைக் கீரையை உப்பில்லாது வேக வைத்து உண்ணும் ஏழைப் புலவன் நாடாளும் வேந்தனுக்கு நல்குகின்றான் பரிசு! இவருள் வறியவர் யார்? வள்ளல் யார்? வாழ்க சித்திரனார் உள்ளம்! புலமையின் இயல்பு வேந்தனுக்குக் கொடை வழங்கிய பெருமிதத்துடன் புலவர் வீடு சேர்ந்தார். மனைவியார் எதிர் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார். புலவர் குடும்பம் பொலிவுடன் விளங்கிற்று. ஆனால் தாம் மட்டும் வாழ எண்ணும் எண்ணத்தை அறியாதவர் அல்லவா சித்திரனார்! அதனால் பெற்ற பரிசுப் பொருளினைப் பேணிக் காத்து நெடுநாள் வாழ விரும்பினார் அல்லர். வறுமை நெருப்பு ஊரைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் பொழுது, தாம் மட்டும் வளமை நீரில் நீந்தி மகிழ்வாரோ? புலவர், மனைவிக்குப் புகன்றது மனைவியை அருகழைத்தார். அன்புக்குரிய அவர் புலவரை நெருங்கினார். மனையுரிமை பூண்ட மாண்பு உடை யோய்! நீ வியப்புடன் கண்டு களிக்கின்றாயே, இப்பொருள் அனைத்தும் குமண வள்ளல் தந்ததாகும். இச் செல்வத்தை நின்னை விரும்புவோர் அனைவருக்கும் தருக! அன்றி, நீ விரும்பு மாறுள்ள அனைவருக்கும் தருக! மற்றும், கற்புமிக நிற்கும் உன் உரிமைச் சுற்றத்திற்கும் உதவுக! நம் வறுமையை நோக்கி முன்பு நமக்கு உதவியவர்களுக்கும் தருக! அவ்வாறு நீ கொடுப்பதிலும், இன்னவர்க்குத் தருதல் வேண்டும் என்று கருதாது, என்னிடம் கேட்டே தரவேண்டும் என்றும் எண்ணாது, இந்நிதியால் நெடுங்காலம் வாழ்வோம் என்றும் நினைக்காது எல்லோருக்கும் அளவில்லாது தருவாயாக! என்று கூறினார். புதியவொரு வள்ளல் வறுமைப் புலவன் இல்லம் வள்ளல் இல்லமாக மாறியது. தமிழ் தந்த வளத்தைத் தாழ்வறப் பெற்றனர் ஊரார். உலகம் வாழ வாழ்ந்த புலவரது உயர்குணத்தை அவர்கள் பாராட்டினர். வாழ்க! தமிழ் தந்த வளம் என்று வாழ்த்தினர். உலகுக்கோர் உயர்கொடை சித்திரனார் வறுமைச் சூழலிலே பிறந்தார். அச் சூழலிலே வளர்ந்தார்; ஆயினும் பொருள் பெறுவது ஒன்றே குறியாகக் கொண்டு மான உணர்வை மறந்து விடவில்லை. மனிதனுக்கு இன்றியமையாத மானத்தை உயிர் தந்தும் காக்கவேண்டிய மானத்தை எந்தச் சமயத்திலும் எந்த இடத்திலும் காத்தே வந்தார். நாடாளும் வேந்தனாக இருந்தாலும் கேடு சூழும் பண்பினனாக இருந்தால் தக்கமுறையில் எடுத்துக் காட்டி இடித்துக் கூறத் தவறியதும் இல்லை அவ்வாறு இடித்துக் கூறிய பொழுதும் அவர்கள் பட்டுத் திருந்த வேண்டும் என்று கருதி னாரே யன்றிக் கெட்டழிய வேண்டும் என்று கருதினார் அல்லர். தகுதியறிந்து கொடுக்காத வேந்தனை இடித்து உரைப்பதே அன்றி, அறிவு வருமாறு தாமே முன்வந்து பரிசு தந்து நாணவைக்கும் நற்பண்பு சித்திரனார் இவ்வுலகுக்குத் தந்த உயர் கொடையாகும். சித்திரனார் நாகரிகம் தம்மொத்த புலவர்களைப் பெரிதும் மதிக்கும் பெருங் குணம் படைத்தவர் சித்திரனார். பெண்மையின் பிறப்பான மனைவியையும், மழலையையும் மக்களையும் பெற்றிருந்த இவர் ஈத்துவக்கும் இன்பத்தில் தலை நின்றார். பெற்றெடுத்த அன்னையைப் பேணுவதில் பெரும் அக்கறை செலுத்தினார்! சித்திரனார் போலி நாகரிகத்திற்கு ஆட்பட்டவரல்லர்! நெஞ்சத்தே தோன்றும் உண்மை நாகரிகத்திற்கு உறைவிடம் ஆக இலங்கியவர்! அவர் நாகரிகம் உலகைக் காப்பதாக! உணர்வு ஊட்டுவதாக. 3. பெருந்தலைச் சாத்தனார் தமிழகத்தைப் பழங்காலத்தே முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்து முடியுடை வேந்தர் மூவர் முறையொடும் ஆண்டு வந்தனர். இவர்கள் சேரர், சோழர், பாண்டியர் என்று அழைக்கப் பெற்றனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை இவர்கள் நாட்டின் பெயர்களாம். இந்நாடுகள் முறையே மலை நாடு, புனல் நாடு, கன்னி நாடு என்ற பெயர்களாலும் அழைக்கப் படுவது உண்டு. விண்தொட்டு நின்ற வெற்பாலும், பொய்யாது அளிக்கும் பொன்னி ஆற்றாலும், காவல் வல்ல கன்னித் தெய்வத் தாலும் இப்பெயர்கள் ஏற்பட்டன என்பது தெளிவாகும். சோழ நாட்டின் வளம் இம் மூன்று நாடுகளிலும் வளநாடு என்னும் சிறப்புக் குரியது சோழ நாடு ஆகும். இது சோழ வளநாடு என்றும் அழைக்கப் பெறும்.nrhH வளநாடு சோறுடைத்து என்று புகழ்ந்து பேசும் பெருமைக்குரியது இந்நாடு ஆகும். இங்கு வான் பொய்ப்பினும் தான் பொய்யாத வளமிக்க காவிரியாறு கால் பல கொண்டு செல்கின்றது. சோழ வேந்தர்கள் ஏற்ற இடங்களி லெல்லாம் அணைகள் கட்டி உதவியமையால் பொன் கொழிக்கும் நாடு என்னும் பெருமையும் பெற்றது. பார்க்குமிடமெல்லாம் கழனிகள் காட்சியளிக்கும்! யானை சென்றால் அதனை மறைக்கும் படியான அளவுக்கு நெற்பயிர்கள் வளர்ந்து காணும்! ஒரு பெண் யானை படுக்கும்படியான அளவுள்ள நிலத்திலே ஏழு ஆண் யானைகள் உண்டு வாழுவதற்கு ஏற்றதான நெல் விளையும்! கரும்பு ஆலையிலிருந்து வரும் புகையினால் பொய்கைப் பூக்கள் வாட்டமுறும்! எருமைக் கன்றுகள் வைக்கோல் போரிலே துயிலும்! வாழைகள் தென்னை போலவும், மஞ்சள் கமுகு போலவும் செழிப்புடன் வளர்ந்து காட்சி வழங்கும்! இன்னவாறெல்லாம் போற்றும் அளவுக்குச் சோழ நாட்டின் வளம் இருந்தது. ஆவூர் மூலங்கிழார். இத்தைகய நாட்டில் காவிரிக் கரையில் ஆவூர் என்னும் அழகியதோர் ஊர் இருந்தது. அவ்வூர் பொருட்செல்வத்தாலும் பொலிந்து விளங்கிற்று இவ்வூரினர் பெரும்பாலும் உழவுத் தொழிலே பார்த்து வந்தனர். ஆதலால் இவர்கள் கிழார் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றனர். கிழார் என்னும் சொல்லுக்கு உரிமையாளர் என்பது பொருளாம். நில உரிமை பெற்று வாழ்ந்தவர்களே கிழார் ஆயினர். இக்கிழார்களுள் மூல நாண்மீனில் பிறந்து புலவராய் விளங்கிய பெருமகனார். ஒருவர் ஆவூர் மூலங்கிழார் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். ஆவூர் மூலம் என்பது ஊரின் பெயர் என்றும், அதில் பிறந்து, வேளாண் தொழில் புரிந்த இவர் ஆவூர் மூலங்கிழார் என்று அழைக்கப்பெற்றார் என்றும் கூறுவது உண்டு. சாத்தன் ஆவூர் மூலங்கிழார் இளமையிலேயே கற்பன கற்றுக் கவிபாடும் திறம்பெற்றார். கற்புடையவரான மங்கை ஒருவரை மணம் செய்து கொண்டு இனிய முறையில் இல்லறம் நடத்தினார். இவரது இல்லறத்தின் பயனாக ஒரு புதல்வர் தோன்றினார். புதல்வரைக் கண்ட பெற்றோர் பெரிதும் மகிழ்ந்தனர். தாம் வழிபடு தெய்வமான சாத்தன் என்னும் தெய்வத்தின் திருப் பெயரையே தம் மைந்தர்க்கும் இட்டனர்; அதுமுதல் குழந்தை சாத்தன் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றது. கவிபாடும் ஆற்றல் சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை ஆதலாலும், கற்றோர் கூடிய அவையிலே மைந்தனை முதல்வனாக இருக்கச் செய்வது தந்தையின் தலையாய செயல் ஆதலாலும் மூலங் கிழார் சாத்தனாரை உரிய காலத்தே பள்ளிக்கு அனுப்பி வைத்தார். தாமே ஆசிரியராக இருந்தும் மைந்தர்க்குக் கற்பித்தார். இயற்கையாகவே நுண்ணறிவும் தெளிந்த புலமையும் உடையவரான சாத்தனார் பள்ளிப் படிப்பாலும், தந்தையின் உதவியாலும் கல்வியில் தலைசிறந்து விளங்கினார். தந்தையைப் போலவே கவிபாடும் ஆற்றலும் பெற்றார். பண்பட்ட உள்ளம் சாத்தனாரின் தந்தையார் உழவுத் தொழில் பார்ப்பவராக இருந்தாலும், அவரது செலவுக்குத் தகுமாறு வருவாய் வர வில்லை. கலையுள்ளம் படைத்தவரான அவர் பொருளே குறியாக இருந்து தேடுபவர்களைப் போலாகவோ, வந்த பொருளை எதிர்கால வாழ்வு கருதி ஈயாமல் பேணிக் காப்பவர்களைப் போலாகவோ இருக்க முடியவில்லை. எல்லாரும் இன்புற்று வாழ்வதே வாழ்வு என்ற உயர் கருத்துடைய அவருக்கு எத்துணை வருவாய்வரினும் நிற்குமோ? நாளைக்கு வேண்டுமே என்று எண்ணிப் பார்க்கும் இயல்பைப் பண்பட்ட உள்ளம் மறந்தல்லவா போய் விடுகின்றது! இளமை வறுமை இதனால் சாத்தனார் இளமையாக இருக்கும் பொழுதே குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. ஆனாலும் அதனைப் போக்காது வாளாவிருந்து விட வில்லை மூலங்கிழார். வாய்ப்புக் கிடைத்த சமயங்களிலெல்லாம் வள்ளல்களைக் கண்டு பாடிப் பரிசில் பெற்று வந்து வறுமையைப் போக்கினார்! கிள்ளி வளவன் என்னும் சோழ வேந்தனுக்குப் பேரன்பினராக இப் புலவர் இருந்து வந்தமையால் அவனது உதவி சில சமயங்களில் கிடைத்தது. மல்லி நாட்டுத் தலைவன் காரியாதி, மூலங்கிழார் மேல் தணியாத அன்புடையவன். காரியினது பெருங்குணமும், எளிய காட்சியும் வெகுவாகப் புலவரைக் கவர்ந்து விட்டன. அதனால் அவன் பனையோலையிலே பகுத்தளித்து உண்ணச் செய்த உணவை, வெள்ளிக் கலங்களிலே தரும் வேந்தர் உணவினும் பெரிதாக மதித்துப் போற்றினார். கண்ணொளி மங்குமாறு காக்க வைத்துக் காவலர் தரும் களிற்றினைப் பார்க்கிலும் காரியாதி காலையில் அளிக்கும் கறிச் சோறே சிறப்புடையது என்று புகழ்ந்தார். அவன் உள்ளன்போடு உதவிய பரிசுகளையும் பெற்று வந்தார். பாண்டியன் கீரஞ்சாத்தனது பண்பில் புலவர் மூழ்கினார். பசிக்கவில்லை; உண்ண இயலாது என்று பாவலர் எவரேனும் கூறுவாராயின் பாண்டியன் அவ்வளவுடன் விடாதவனாய் வற்புறுத்தி யுண்ணச் செய்யும் உயரன்புக்கு ஆட்பட்டார்! அவனது கொடையையும் பெற்று மகிழ்ந்தார். வேதம் வல்லவனான பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பவனது வேள்விச் சாலைக்குச் சென்று அவனைப் பாராட்டி அவனது விருந்தாளியாக இருந்தார். இவ்வாறெல்லாம் நல்ல பல வள்ளல்களை அடுத்திருந்து வாழ்ந்தாலுங்கூடப் பெருங்குணம் படைத்த மூலங்கிழாரால் பெற்றதைப் போற்றிவைத்து வாழ முடியவில்லை. வந்த பொருளையெல்லாம் வாரி வாரி வழங்கிப் பிறர் வறுமையைப் போக்குவதிலே அவருள்ளம் நிலைத்து நின்றதனால் வறுமையிலே வாழ வேண்டியது ஏற்பட்டது. ஆனால் வறுமை கருதித் தகுதி யில்லாதார் தரும் பொருளை ஏற்றுக் கொள்ளும் உள்ளம் அவருக்கு இருந்தது இல்லை. புலவர்களைத் தக்க முறையில் வரவேற்றுப் போற்றாத வேந்தர்களைப் புன்மையாகக் கருதினார் ஒரு சமயம் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணுமாறு சென்றார். அவன் புலவரைக் கண்டு அளவளாவினாலுங்கூடப் பரிசு தந்து அனுப்பும் நோக்கம் இல்லாதவனாய் நாள்களைக் கழித்து வந்தான். கூறாமை நோக்கிக் குறிப்பறியும் திறம் உடைய புலவர் மூலங்கிழார் அரசனது உள்ளக் கருத்தை உணர்ந்து அங்குத் தாழ்த்திருக்கக் கருதாதவராய் வெளியேற எண்ணினார். அரச னுக்குத் தக்கவாறு புத்தி புகட்டாமலும் வெளியேற மனம் வரவில்லை. அதனால் பாண்டி வேந்தனைப் பார்த்து அரசே! தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலும் என்று சொல்லிக் கொடுத்தலும் எவருக்கும் தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லை என்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியுடையார் செயலாம். தமக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை இல்லை என்று மறுத்தலுமாகிய இரண்டும் இரவலரை ஏமாற்றவும் புகழைக் கெடுக்கவும் உரிய வழியாம். இப்பொழுது நீ எமக்குச் செய்த செயலும் அத்தன்மையதே! இச் செயலை இதுகாறும் எம் புலவர் குடியினர் காணார்! அதனை யாம் கண்டோம்! இத்தீய நிகழ்ச்சியால் நின் புதல்வர்கள் தீதின்றி வாழ்வாராக; உன் வாழ்நாள் சிறப்பதாக. யான் வெயிலென்று கருதிச் செல்வதை வெறுக்காது பனியென்று கருதிச் சோம்பிக்கிடவாது. கொடிய வறுமையால் வெயிலையும் மழையையும் விருப்புடன் ஏற்கும் எமது மனையில் நாணும் கற்பும் அல்லது வேறு பொருளின்றி வாழும் மனைவியை நினைத்துப் போகின்றேன்! நின் வாழ்வு மிகுவதாக! என்று வாழ்த்தி விட்டுப் புறப்பட்டார் புலவர். கிழாரது புலமையையும் நெஞ்சத் திண்மையையும் தன் தவற்றையும் அறிந்த நன்மாறன் புலவரைப் போற்றித் தக்க சிறப்புடன் அனுப்பினான். மூலங்கிழார் மன்னவன் முன்னிலை என்றும் கருதாது, தமக்கு அறநெறி எனத் தோன்றியதை ஒளிவு மறைவு இல்லாது எடுத்துக் கூறிய சிறப்பும், அவ்வுரையிலே பொதிந்து கிடந்த உலகியல் அறமும், நயமிக்க சொற்கோவையும் புலவர் பழிக்கு ஆளான வேந்தனுக்கும், அவன் மைந்தனுக்கும் கேடு சூழா திருத்தலை விரும்பி, நோயிலராக நின் புதல்வர் நின் வாழ் நாள் சிறக்க என்றுரைத்த பரிவு உரையும் பல்கால் சிந்தித்தற் குரியனவாம். தந்தை அறிவு மகனறிவு மூலங்கிழாருக்கு அமைந்திருந்த இத் தன்மைகள் இளமை முதற்கொண்டே சாத்தனாருக்கும் பதியலாயின. தந்தையின் பண்பாடு தனயரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து நின்றது. நேர்மைக்குத் தலை வணங்கும் நெஞ்சம், நெறிகேட்டை எதிர்க்கும் உரனுடைமை ஆகிய பண்புகள் சாத்தனாரைப் பெரிதும் ஆட்படுத்திக் கொண்டன. ஆகையால் பெரும்பாலும் வாழ்க்கைக் கலையில் தந்தையாரை அடியொற்றிச் செல்லுபவ ராகவே சாத்தனார் இருந்தார் எனலாம். தந்தையை இழந்த மகன் முதுமையுற்ற மூலங்கிழார் இயற்கை எய்தினார். அவர் இருக்கும் வரை எவ்விதக் கவலையும் அற்றுக் கலைப்பித்தராய்த் திரிந்து வந்த சாத்தனார் தலைமேல் குடும்பப் பாரம் விழுந்தது. உழவுத் தொழில் பார்த்து வந்ததால் வந்த நிலவருவாயும், வள்ளல்களது செவியே நிலமாக நாவே உழவுக் கருவியாகக் கொண்டு கவிதை விதை விதைத்ததால் வந்த கொடை வரு வாயும் இருந்துமே மூலங்கிழார் வறுமைக்கு ஆட்பட்டு நின்றார்! அவ்வாறாயின் சாத்தனார் நிலைமையைச் சொல்வானேன்! வறுமைச் சுழலிலே சிக்கித் திணறினார். அடுப்பிலே ஆம்பி (காளான்) சாத்தனார் வீட்டிலே பெரிய அடுப்பு இருந்தது! ஆனால் அடுப்பிலே வைத்து உலையேற்றுவதற்கு வேண்டிய அரிசி இல்லை. ஒருநாளா இரு நாட்களா அடுப்பு ஏற்றப்படவில்லை! எத்தனையோ நாட்களாக அடுப்பு ஏற்றுதற்கு வாய்ப்பு இல்லாது போய்விட்டது. காட்டிலே முளைக்கும் காளான் அடுப்பிலே முளைத்தது. வெயிலும் மழையும் தாராளமாக விழுந்தாலன்றிக் காளான் முளைக்காது! ஆனால் சாத்தனார் வீட்டு அடுப்பிலே காளான் முளைத்து விட்டது. காரணம் என்ன? கூரை வேய்ந்து குடியிருக்கவும் வாய்ப்பில்லாமை தான். என்னே வறுமைக் கொடுமை செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் என்ற பொன்னெறியைப் பட்டினி கிடந்து கொண்டே எத்தனை நாட்களுக்குத்தான் போற்றி ஒழுக முடியும்? சிறிதேனும் வயிற் றுக்கு ஈந்தால் அல்லவா செவியுணவையும் ஏற்றுக்கொள்ள முடியும்? சாத்தனார் ஒருவாறு தாங்கிக் கொண்டார் பசியை! அவர் பண்பறிந்து நடக்கும் கற்புடை மனைவியும் பொறுத்துக் கொண்டார்! ஆனால் இவர்கள் மட்டுமா வீட்டில் இருக் கின்றனர்? குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து, மயக்குறும் மழலை பொழிய வேண்டிய சின்னஞ்சிறு குழந்தையு மல்லவா இருக்கின்றது? பெற்ற மனத்தில் இரக்கம் இருக்கின்றது. ஆனால் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் சுரக்க வழியில்லை. நடமாட முடியாத நிலைமைக்கு ஆளாகித் திரியும் தாய் நிலைமையைக் குழந்தையோ அறியும்! பால் பால் என்று தாய் மடிமீது மோதிக் கொண்டு வருகின்றது. தாய்க்கோ வயிற்றுக்கடி ஒரு பக்கம்; பால் குடிக்க முனைந்து முட்டி மோதிச் சுவைத்துக் கடித்தும் பால் வராமையால் விம்மி விம்மியழும் குழந்தையை நினைத்த மனத்துடிப்பு ஒரு பக்கம்! ஐயோ பாவம்! தாயின் கண்கள் அருவியாகிக் கொட்டுகின்றன; குழந்தையோ கண்ணீர்த் துளிகளால் நனைந்து கொண்டே தாயை நோக்குகின்றது! குழந்தைமீது பரிவு கொண்ட தாய் தம் கணவரை நோக்கு கின்றார்! கணவர் யாரை நோக்குவது? புலவர் சாத்தனாரால் வீட்டில் இருப்பதற்கு இயல வில்லை. எங்கேனும் சென்று பொருள் பெற்றுத் தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் பாடுவோர் புகழ் கேட்டுப் பரிசு தரும் பண்புடையர் எவரெனத் தேடத் தொடங்கினார். வள்ளல் நள்ளி அந்நாளில் தோட்டி என்னும் மலையும் அதனைச் சார்ந்த நாடும் கண்டீர நாடு என்னும் பெயரால் அழைக்கப் பெற்று வந்தது. அந்நாட்டின் வேந்தன் வள்ளல் எழுவருள் ஒருவனான நள்ளியாவன்! இந்நள்ளியை மக்கள் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்று இடத்தொடு பெயரும் சேர்த்து அழைத்தனர். இவன் தம்பியாகவும் இளவரசனாகவும் இருந்தவன் இளங் கண்டீரக்கோ என்பவன் ஆவன். நள்ளியின் காலம் முடிந்தபின் இளங் கண்டீரக்கோ ஆண்டு வந்தான்! அவன் புகழ் கேட் டறிந்த சாத்தனார் அவன் அரசு புரிந்து வரும் தோட்டி மலையை அடைந்தார். இளங் கண்டீரக்கோ இளங் கண்டீரக்கோ வள்ளல்கள் வழி வந்தவன்; பாடி வருபவர் பசிப்பிணி நீங்க உவந்து ஈயும் வண்மையாளனான நள்ளியின் உடன் பிறந்தவன். ஆடவர் அயலிடம் சென்ற பொழுதும் இரவலர்வரின் அவர் தகுதியும், தம் வளமும் தோன்ற ஆடவர்களுக்கு ஒப்பாகப் பரிசு வழங்கும் பெருங்குணம் படைத்த கற்பிற் சிறந்த நற்பெண்டிர் நிறைந்து வாழும் நாடாளும் புகழாளன்; ஆதலால் புலவர் மனம் அவனிடத்துச் சென்றது சாலவும் தகுதியுடையதே! இருவர் வேந்தர் இளங்கண்டீரக்கோவின் பெருமனையை அடைந்த புலவர் அங்கே இளவிச்சிக்கோ என்னும் வேந்தனையும் கண்டார். இவ்விள விச்சிக்கோ விச்சி நாடாண்ட விச்சி என்னும் வேந்த னின் தம்பியாவான். இளங்கண்டீரக் கோவின்மேல் வைத்திருந்த அன்புப் பெருக்காலே தான் கண்டீரக்கோவின் மனை தேடி வந்து உரையாடி அகமகிழ்ந்து இருந்தான். இவரின் நட்புடை மையைக் கண்ட சாத்தனார் மகிழ்ச்சி கொண்டார். ஆயினும் இளவிச்சிக்கோவின் மாட்டுத் தம் அன்பைக் காட்டும் படியான சொல்லோ செயலோ எதுவும் செய்தார் இல்லை. ஆனால் இளங்கண்டீரக் கோவை நெருங்கி மார்புறத் தழுவிக் கொண்டு மகிழ்வுற்றார். புலவர்செயல் இளங்கண்டீரக் கோவுக்கு வியப்பாக இருந்தது; இளவிச்சிக் கோவுக்கு வேதனையாக இருந்தது. ஆனாலும் இளவிச்சிக்கோ அறிவு நுட்பமும் அமைந்த பண்பும் உடையவன் ஆதலால் புலவர் செயலுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று கருதினான். அதனால் புலவர் பெரும! என்னை நீவிர் அன்புறத் தழுவிக் கொள்ளாமைக்குரிய காரணம் யாது? என்று வினவினான். நன்னன் மரபு புலவருக்குச் சிக்கலான நிலைமையாகத் தான் இருந்தது. இருப்பினும் உண்மையை உரைக்காது மழுப்புவது தக்கதில்லை என்று உணர்ந்தார். அதனால் இளவிச்சிக்கோ! நீ என்னால் தழுவப் படுவதற்குத் தகுதியுடையவன் என்பதை யான் அறிவேன்! ஆனால் உன்னைத் தழுவிக் கொள்ளத் தடையாக இருப்பது நீ நன்னன் என்பவனது மரபிலே வந்தவன் என்பதே யாகும். நின் முன்னோருள் ஒருவனான நன்னன் பெண்கொலை புரிந்துள்ளான். அவ்வாறு, கொலைபுரிந்தே தீரவேண்டும் என்ற அளவுக்குத் தக்கதான குற்றம் உண்டோ? ஆற்றுவழி வந்த மாங்கனி ஒன்றை ஆசையுடன் எடுத்து அருந்தியதைக் குற்ற மாகக் காட்டி அவளைக் கொலை செய்து விடுமாறு உத்தரவு இட்டான். ஆனால் அவளுக்கு உறவானவர்கள் வந்து அக் குற்றத்திற்காக அவள் அளவு பொன் தண்டமாகத் தருவதாகக் கூறியும் ஏற்றுக் கொள்ளாதவனாய் இரக்கமின்றி அப் பெண்ணைக் கொன்றொழித்தான்! பேயுங் கூட இரக்கம் காட்டும் என்று எதிர் பார்க்கும் படியான பெண் பிறப்புக்குக் கேடு சூழ்ந்த காரணத்தாலும், பாடி வருபவர் புகாதவாறு வாயிற் கதவு அடைத்துக் காக்கும் சிறுமைத் தன்மை உடைமையாலும் புலவர்கள் அவன் நில எல்லையைப் பாடாது ஒழிந்தனர். அதனாலேதான் உன்னை யான் தழுவவில்லை! புலவர்கள் மரபு நிலைமையை மாற்றி யமைத்தல் தகாது. அவர் நெறியே எனக்கும் தகுவது என்று விளக்கினார். தழுவ மறுத்த தகைமை சாத்தனார் மானப் புலவர்; இல்லையேல் அவர் உள்ளத் தில் இத்தகைய உணர்வே தோன்றியிருக்காது. பெண் கொலை புரிந்தவன் ஒருவன் விச்சிக்கோவுக்கு எத்தனையோ தலை முறைகளுக்கு முந்தியவன்; பாடி வந்தபோது பரிசு தாராராகிக் கதவடைத்துக் கொண்டதும் இவருக்கு அன்று! அன்றியும் கதவடைத்தவன் இவ்விச்சிக்கோவு மல்லன்! அவனைத் தழுவி நின்று பலபடப் பாராட்டியிருந்தால் பாடுபுகழ் பெற்ற பெரு மிதத்தால் இளவிச்சிக்கோ பெரும் பொருள் தந்து, செயற்கரும் சிறப்புக்களும் செய்திருக்கக் கூடும் ஆனால் புலவர் மனமோ அவன் பரம்பரையை எண்ணியும், தம் பரம்பரையை எண்ணியும் தழுவ மறுக்கின்றது; புகழ்ந்து பாட மறுக்கின்றது; தந்தையறிவு மகனறிவு என்பது முதுமொழியல்லவா! மூலங்கிழார் கிடைத் ததைச் சுருட்டிக் கொண்டு போய் வாழ்ந்தவரா? கோடைமலை புலவர் சாத்தனார் இளங்கண்டீரக் கோவினிடம் விடை பெற்றுக் கொண்டு ஆங்கிருந்தும் புறப்பட்டார். கோடைக் கானல் எனத் தற்காலத்து வழங்கும் கோடைமலையை வேடர் தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெருவீரன்; பாண்டி வேந்தனின் படைத் தலைவன்; வேட்டையாடுவதில் வல்லவன்; மலை வாழ்க்கை அவனை மாபெரு வீரனாக்கிற்று. அதனால் அவன் கடியநெடுவேட்டுவன் என்று அழைக்கப் பெற்றான். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்து பகைவர்களை அழிக்கும் பண்பு படைத்த வனாக அவன் இருந்தான். பாடு வோர்களின் வருகையை நோக்கிப் பரிசு தந்து உதவுவான் என்று சாத்தனார் கேள்விப்பட்ட படியால் கோடை மலைக்குச் சென்றார். வேட்டுவன் செயல் கோடை சென்ற புலவர் கடிய நெடுவேட்டுவனுடன் சில நாள்கள் தங்கியிருந்தார். எனினும் புலவரது நோக்கத்தை அறிந்து பொருள் தந்து அனுப்பத் தவறி விட்டான். ஒன்றும் பேசாமலே வாளா பொழுதைப் போக்கினான். அப்படியே கொடுத்தாலும் தம் தகுதியறிந்து கொடுக்கும் தன்மை அவனிடம் இல்லை என்பதைத் தெளிவாகச் சாத்தனார் உணர்ந்தார். ஆகவே இன்னும் இவனிடம் தாமதித்துக்கிடப்பது தக்க தன்று என்று நினைத்தார். சொல்லாமல் வெளியே கிளம்பவும் விரும்பினார் இல்லை. ஆதலால் நேரடியாக வேட்டுவனைக் கண்டார். அஞ்சி வந்தடைந்த பகைவர்களைப் பாதுகாப்பவனாய் சினந்து வந்து தாக்கும் பகைவர்களைக் கெடுப்பவனாய் இருக்கும் கோடைமலைத் தலைவ! குறுக்கும் நெடுக்குமாய் விரைந்து சென்று மானின் கூட்டத்தைத் தொலைக்கும் சினமிக்க நாயையும், திண்ணிய வில்லையும் உடைய வேட்டுவ! நிறைந்த செல்வத்தைக் கொண்ட மூவேந்தரே ஆயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை விரும்ப மாட்டேம்; இதனை நீ அறிவாயாக இதனை அறியாதவனாய் இருப்பினும் நீ நோயின்றி நெடிதுநாள் வாழ்வாயாக! கடலிடத்தே படிந்த முகில், நீர் கொள்ளாது வெறுமனே திரும்பாதவாறு போல, பரிசிலரது சுற்றம் யானைப் பரிசின்றித் திரும்பாது என்று கூறிவிட்டு வெளியேறினார். பாட்டுத் திறமும் வேட்டைத்திறமும் வேட்டைத் திறம் படைத்திருந்தானே அன்றிப் பாட்டுத் திறம் அறிந்தவன் அல்லன் என்ற காரணத்தால் புலவர் மனம் நைந்து கூறினார். இவனது வேட்டையாடும் திறனைப் புகழலாம்! மான் கணம் தொலைக்கு விரைந்த ஓட்டமுடைய நாயின் உரத்தைப் பாராட்டலாம்! அடைக்கலமாகப் புகுந்தவர்களை ஆதரிக்கும் பண்பைப் போற்றலாம். ஆனால் பாடிவந்த புலவனை வாடவிடும் இயல்பைப் பாராட்ட முடியுமோ? முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின் றீதல் யாம்வேண் டலமே என்ற சாத்தனார் உரை அவர்தம் உரத்தை உலகம் உள்ளளவும் காட்டப் போதுமானது. மூவேந்தரும் பெருஞ் செல்வர்கள்; கொடுக்கும் குணத்தை ஊனோடு உயிரோடு கொண்டவர்கள்; பாடிவரும் புலவரும் ஆடிவரும் விறலியரும் பாணரும் பிறரும் சுற்றம் சூழ உறைப வர்கள்! கொடையில்லாத நாளைக் குறைபட்ட நாளாகக் கருதுபவர்; ஒருநாள் இரு நாட்கள் அல்ல! ஒருவர் இருவர் அல்லர்! பலர் பலர் பலபல நாட்களாகத் தொடர்ந்து சென்றா லும், இல்லை என்று கூறாமல் எல்லையின்றி வழங்கக்கூடிய இயல்பினர்; புலவர் பாடும் புகழையே புகழாகக் கருதி அவரை வழிபட்டு வாழும் தன்மையர்; இத்தகைய பண்புடைய மூவேந்தர் களையும் புலவர்கள் நச்சித்திரிவதிலே வியப்பொன்றும் இல்லை. ஆயினும் இவர்களின் கொடை ஒன்றே கருதிப் புலவர்கள் பொருந்தி வாழ்ந்தனர் இல்லை. இவ்வேந்தர்களின் பண்புடைமையே புலவர்களைக் கவர்ந்தது எனலாம். தங்களை வரவேற்று, இன்சொல் கூறி, அளவளாவிப் பேசி, அறவுரை, அறிவுரைகளைக் கேட்டுத் தேவையையும், தகுதியையும் அறிந்து தக்க மதிப்புடன் பொருள் தந்தாலன்றி வாங்கிக் கொள்ளாத திண்மை யுள்ளம் புலவர் களுக்கு உண்டு. அதனால் முற்றிய திருவின் மூவராயினும் என்று ஓர் உம் போட்டுக் கூறினார். யாம் வேண்டலம் என்பதிலே தம்மெடுப்புணர்வு நோக்குதற்குரியது. புரவலர் இரவலர் மேகம் கடலில் நீரள்ளிக் கொண்டு மீள்வது போலப் புலவர்கள் யானை பெற்றே மீள்வர் என்று சாத்தனார் வற்புறுத்தும் அழகு பாராட்டற் குரியதாம். மேகம் காலத்தைக் கருதிக் காத்துக் கிடக்குமா? அள்ளிச் செல்ல அனுமதி வேண்டிக் கிடக்குமா? அள்ளிச் செல்வது அதன் இயற்கை! அதற்கு இடம் தந்து இன்புறுத்தி அனுப்புவது கடலின் இயற்கை! மேகமும் வேண்டும்; கடலும் வேண்டும்; இரண்டும் ஒன்றை ஒன்று பிரிக்கமுடியாத அளவுக்கு வேண்டும். புரவலரும் வேண்டும், இரவலரும் வேண்டும்; இரப்பவர் இல்லாயின் இவ்வுலக வாழ்க்கை மரப்பாவை வாழ்க்கை போலாகவே போய்விடும் என்பதல்லவா பொய்யாமொழிப் புலவர் பொருளுரை? புலவர்கள் அறநெறி காட்ட வேண்டும், அரசர்கள் பொருளுதவி புரிய வேண்டும்; இது இவ்விரு சாரார்க்கும் நலம் பயப்பதுடன் உலகுக்கும் இன்பம் பயப்பது. மேகம் கடலில் நீரள்ளிவந்து நிலத்துக் கொட்டுவதால் உலகமல்லவா வாழுகின்றது? உயிர்கள் அல்லவா வாழுகின்றன? புலவனுக்குத்தரும் கெடையால் அவன் மட்டுமோ வாழுகின்றான் உலகத்தை அல்லவா வாழ வைக்கின்றான்? இல்லையேல் மனைவியை நோக்கி, என்னைக் கேட்காமலே எண்ணிப் பாராமலே எல்லோருக்கும் கொடு என்று கூறுவானோ? இந்நெறிக்கு விலக்கு ஆகாத சாத்தனார் தம் எண்ணத்தை எல்லாம் வடித்து எடுத்தாற்போல, கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்கு என்றார். புலவர் வாக்கினைக் கேட்ட வேட்டுவன் புத்துணர்ச்சி பெற்றவனாய்த் தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டு அவரைப் பேணிச் சில நாள்கள் இருக்கச் செய்து அனுப்பு வித்தான்! மூவன் கடிய நெடு வேட்டுவனை நீங்கிய சாத்தனார் மூவன் என்னும் வேந்தனைக் கண்டார். மூவன் கடற்கரை நாட்டு வேந்தன். அவனது நாடு வளப்பம் மிகக் கொண்டது. பொய்கையிலே விரும்பிய இரையை உண்ட நாரை எத்தகைய கவலையுமின்றி நெற்போரின் கண்ணே உறங்கும்! நெற்கதிரை அரியும் உழவர் ஆம்பல் இலையில் இனிய மதுவினை ஊற்றி இன்புறப் பருகுவர்! வேலை முடிந்த பின்னர் ஆரவாரிக்கும் கடலிலே படிந்து எழுந்து அவர்களும் ஆரவாரித்து மகிழ்வர்! அவர்கள் ஆட்டத்திற்கு ஏற்பக் கடலலைகள் தாளம் போடும்,. இத்தகைய வளப்பங்களைக் கொண்டது மூவனது நெய்தல் நாடாகும். இதனால் நாட்டிலே வளப்பமும், மக்கள் வாழ்விலே களிப்பும் மிகுந்திருந்தமை நாடறிந்த உண்மையாயிற்று. இவ்வுண்மையைச் சாத்தனாரும் அறிந்துதான் மூவனைத் தேடி ஆவலுடன் வந்தார். ஓட்டைச் செவி நாட்டில் வளமை இருந்தது புலவருக்குத் தென் பட்டது. ஆனால் மூவனது உள்ளத்தில் வளமை இல்லை என்பதும் எளிதில் அவருக்குப் புலனாயிற்று. இருந்தாலும் பொறுத்துப் பார்த்தார். தேடி வந்த தம்மைப் பேணி அனுப்புவிக்காது நாட்கடத்திக் கொண்டுவரும் அவன் செயல் புலவரைத் துன் புறுத்திற்று! கொடுக்காது அமைந்து இருக்கும் வேந்தனைத், தம் வறுமை நிலையைக் கேட்டும் ஓட்டைச் செவியனாய் இருக்கும் காவலனை அடுத்திருந்து மேலும் பொழுது போக்க புலவருக்கு மனம் வரவில்லை. அதனால் வழக்கம் போலவே மூவனை விட்டுப் பிரிவதே தமக்குத் தகுதி எனக் கருதினார். அதனால் வேந்தே! நீ யாவரும் விரும்புமாறு உள்ளாய் என்று கேள்விப் பட்டேன். அக்கேள்வி என்னைத் தள்ளிக் கொண்டு வந்து உன் முன்னர் நிறுத்திற்று. பழம் கிடைக்கும் என்று பேராசைப்பட்ட பறவை வானவெளியிலே கிளம்பிப் பறந்து வந்து மரத்தைச் சேர்ந்தபோது, அம்மரம் பழுத்து மாறியது கண்டு ஏமாற்ற முற்றுச் செல்வது போல நின்னைத் தேடி வந்த நானும் பரிசு கிடைக்காது ஏமாற்றுமுற்றுச் செல்கின்றேன். ஆனால் இதற்காக வருந்துகின்றேன் இல்லை. நீ நோயில்லாது வாழ்வாயாக! உன்னை இவ்வாறு வாழ்த்துவதுடன் உன்னிடம் வேண்டிக் கொள்வதும் ஒன்றுண்டு! இப்பொழுது உன்னை இரந்து வந்து ஒன்றும் பெறாது செல்லும் இந் நிகழ்ச்சி உனக்குப் பெருமை தருவது இல்லை; எனக்கும் பெருமை தருவது இல்லை. ஆதலால் இது நாம் அறிந்து கொண்ட அளவுடனே இருக்கட்டும். இதுவே யான் உன்னிடம் வேண்டிக் கொள்வது என்று எழுச்சி மிக்க நடையுடன் வெளியேறினார். ஒரு படப்பிடிப்பு நோயின்றி வாழ்க என்னும் புலவருரை அவருடைய வருத்தமிகுதியைப் புலப்படுத்துவதாக இருப்பினும், அவன் கேடின்றி வாழ வேண்டும் என்று எண்ணும் பெருந்தகைமையைக் காட்டாதும் போய் விடவில்லை. நாம் அறிந்து கொண்ட அளவுடன் இது இருக்கட்டும் - குறுநணிக் காண்க - என்று கூறுவதே புலவரது மான உணர்வைக் காட்டும் உயரிய படப்பிடிப்பாகும். பசி வந்திடப் பறக்குமோ பண்பு? வறுமை அரிக்கிறது! சுற்றத்தையே அரிக்கிறது! புலவரால் தாங்கமுடியாத அளவுக்கு வறுமை புகுந்து வாட்டுகிறது! அதனால் இரத்தலையும் இழிவாகக் கருதாமல் போய்க் கேட் கின்றார். கேட்ட இடங்களில் வாய்ப்பு இருந்தும் இல்லை என்னும் பதில் உரையையே பெறுகின்றார். ஈயென இரப்பது இழிவு; ஈயேன் என்பது அதனினும் இழிவு - இவ்விரண்டு இழிவுகளும் எவருக்கேனும் பெருமை தருமோ? இதனாலே தான் எவரும் அறியச் செய்யாதிருக்குமாறு புலவர் வேண்டிக் கொள் கின்றார்! பசிவந்திடப் பத்தும் பறந்து போம் என்னும் உரையைப் பொய்ம்மையாக்கிய புலவர்கள் சிலருள் சாத்தனாரும் ஒருவர் என்பதற்கு ஐயமுண்டோ? பொய்கையார் மாணவன் சாத்தனாரது நெஞ்சக் கனல் மூவனை விட வில்லை போலும்! மானமே உயிரினும் பெரிது எனக் கருதி வாழ்ந்து, அந்த மானத்தைக் காப்பதற்காகவே உயிர்விட்ட பேரரசனான சேரமான் கணைக்காலிரும் பொறையால் மூவன் தோற்கடிக்கப் பெற்றான். தோற்றதுடன் விட்டுவிடாது அவனைப் பற்றிப் பிடித்துப் பல்லைப் பிடுங்கினான் கணைக்காலன். தன் தலைநகரமான தொண்டியின் மதில் கதவிலே பெருமிதம் தோன்றுமாறு பல்லைப் பதித்து வைத்தான். புலவரை இகழ்ந்த புன்மைக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருதிச் சேரமான் இச்செயல் செய்தானோ என்னவோ? பொய்கைப் புலவன் பொன்னடி போற்றி வந்த மாணவன் அல்லனோ அவன்! வறுமை தந்த வளம் சாத்தனார் என் செய்வார்? புலமை அவரிடம் இருக்கிறது; வாழுவதற்குப் புகல் இல்லையே! போன போன இடங்களி லெல்லாம் அவலநிலை சூழ்ந்து கொண்டு வருவதைக் கண்ட புலவர் உள்ளம் புண்பட்டுப் போயிற்று. அந்த மெல்லிய உள்ளம் எப்படித் தான் பொறுத்துக் கொண்டதோ! ஐயகோ! இது புலமையால் வந்த வறுமைதான்! புலமையில்லாதவராக இருந் திருந்தால் நெஞ்சத்தை விரிவாக்கியிருக்கமாட்டார். குறுகிய அளவிலே நின்று பெருகிய செல்வம் சேர்த்துவைத்திருப்பார்! தந்நலமே குறியெனக் கொண்டு பொழுதைப் போக்கியிருப்பார்! ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது புகழைப் பேசும்படியான கவிச் செல்வங்களைப் படைத்திருக்க மாட்டார்! இது வறுமை தந்த செல்வமேயாகும். வாழ்க வறுமைச் செல்வம்! முதிரத்தில் குமணன் புலவர் சாத்தனார் வீட்டுக்குத் திரும்ப நினைக்காதவராய் வேறு வேறு எண்ணித் துடித்தார். வெறுங்கையினராய்ப் போவதைப் பார்க்கிலும் வீட்டுப் பக்கமே போகாதிருத்தல் நல்லது என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அவருள்ளத்தே ஓர் எண்ணம் ஒளிவிடலாயிற்று. அஃது என்ன வெனில் இரப்பவரை எல்லாம் ஏற்றுப் போற்றுதலைக் கடப்பாடாகக் கொண்ட வள்ளல் குமணன் என்பான் உள்ளான் என்பதேயாகும். முதிர மலைத் தலைவனான வள்ளல் குமணனைப் பற்றியும், அவனைப் பெருஞ்சித்திரனார் பாடிப் பரிசு பெற்றது. பற்றியும் முன்னரே அறிந்துள்ளோம். அத்தகைய குமணனை அடைந்தேனும் குடும்ப நிலைமையைக் கூறிப் பொருள் பெறலாம் எனக் கருதினார் புலவர். பெற்றோர் இன்பம் குமணனின் குண நலன்களைக் கேள்விப்பட்டுக் கொண்டும், நாட்டு வளத்தைப் பார்த்து அனுபவித்துக் கொண்டும், பெரு வியப்புடையவராய்ப் புலவர் சாத்தனார் முதிரமலையைச் சேர்ந்தார். அரசனைக் கண்டு மகிழும் பெருநோக்குடன் அரண் மனையை அடைந்தார்! ஆனால் பாவம்! சாத்தனார் தமது நெஞ்சம் வெடித்து விடுவது போன்றதான பேருணர்ச்சிக்கு ஆட்பட்டார். ஆம்! அவர் எதிர்பார்த்து வந்த - தம் குடியை வாழ வைப்பான் என்று திண்ணமாய் எண்ணி நோக்கி வந்த - வள்ளல் குமணன் அங்கு இல்லை. வறுமையின் ஆழம் இன்னதெனக் கண்ட சித்திரனாரையே வாழ வைத்த பெருமகனைக் காணப்பெற்றால் பெற்றேம் இன்பம் என்று எண்ணிய நெஞ்சம் நெக்குருகியது ஏன்? குமணன் பண்பு குமணன் பெருங்கலைஞன். கலைஞர்களைக் காக்கும் வள்ளல் கலைஞன்; ஆடலும் பாடலும் கிடைத்தது என்றால் அரசியல் காரியங்களையும் - அடுத்து இருப்போர் செயலையும் - மறந்துவிடும் அளவுக்குக் கலைப்பித்துக் கொண்டிருந்தவன்; அவனது கலை உணர்ச்சியினால் உலகத்தவரெல்லாரும் கலையுணர்ச்சி மிக்கவர்களே என்றும், எல்லோரும் பரந்த பண்பட்ட குணம் உடையவர்களே என்றும் பிழைபடக் கருதி விட்டான். குமணனும் இளங்குமணனும் குமணனுக்கு இளங்குமணன் என்றொரு தம்பியிருந்தான். அவன் அண்ணன்மேல் அளவிறந்த அன்புடையவனாக இருந் தாலும் கேட்டு வருபவர்களுக்கெல்லாம் பொன்னும் பொருளும் ஈயும் அண்ணன் குண இயல்போ, நயமோ உணராதவனாக இருந்தான். பாடுபவருக்கும், இரவலருக்கும் பொருள் போய்க் கொண்டிருப்பதை வெறுத்தான். அவ் வெறுப்பு உடன் பிறந்த அண்ணன் என்பதையும் மறந்து, அவனை எதிரியாக்கும் அளவுக்கு வளர்ந்தது. அதிகாரிகள் சிலரையும், செல்வர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு அரசியல் சக்கரத்தைத் தன் பக்கமாகச் சுற்றிக்கொள்வதற்குப் பொழுதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். நாட்டில் நடந்த சூழ்ச்சி இவ்வளவு எதிர்ப்புக்களும் காரியங்களும் அரண்மனைக் குள்ளேயே நடந்து கொண்டிருந்தாலுங்கூடக் குமணன் இது பற்றிச் சிறிதும் அறியாதவனாய் வழக்கம் போலவே வாழ்ந்து வந்தான். நாள் செல்லச் செல்ல இளங்குமணனது உள்ளம் வெறிகொண்டது அண்ணனை எதிர்த்துப் பேசும் அளவுக்கு அன்று, நாட்டை விட்டே துரத்திவிடும். அளவுக்கு வெறி கொண்டு விட்டது. கயமை புரிவதற்கு அஞ்சாத அதிகாரி களையும், கைக்கூலிப் படைகளையும் பெருக்கிக் கொண்டே வந்தான். சூழ்ச்சி வேலைகள் எத்தனை நாள்களுக்குத் தான் வெளிப்படாமல் இருக்கமுடியும்? அதிலும் அருங்குணத் தண்ணல் குமணனுக்கு - நல்லோர் வாழ்வே தன் வாழ்வு என்று வாழும் பெரியோனுக்கு - இது எட்டாமலேயா போய் விடும்? செய்வதனைத்தும் நன்றே ஒருநாள் தன் தம்பியின் செயலை அறிந்தான் குமணன். சினங்கொண்டு தாக்கி எதிர்க்க வேண்டிய நேரத்தில் சிரித்த முகத்தொடும் விளங்கினான். தம்பியின் செயல் தன் நன்மைக்கென ஏற்பட்டதே என்று மகிழ்ந்தான். என் இயல்பினைத் தெளிவாக அறிந்த படியால்தான் எனக்குப் பெருஞ் சுமையாக இருக்கும் அரச பாரத்தை அவனே தாங்கிக் கொண்டு நான் உரிமையுடன் தனித்து வாழ வகை செய்கின்றான். என் தம்பிபோலும் தம்பியினை எவரே பெற்றார் என்று துள்ளினான். இளங்குமணனின் வஞ்சகச் செயல்கள் அனைத்தும் அண்ணன் என்னும் வாஞ்சையால் ஏற்பட்ட நயம்மிக்க செயல் என்றே புகழ்ந்தான். குமணனைப் போலவும் சிலர் பிறந்து வாழ்வதால் தான் உலகமும் நிலைத்து வாழுகின்றது போலும்! காட்டில் புலவர் தம்பி ஆள்வதும் தான் ஆள்வதும் ஒன்றே என்ற பெரு நோக்கினால் என்னிலும் நல்லனாம் தம்பியால் இனி நாடு நல்வளம் பெறும் என்ற உள்ள நிறைவுடன் அவனே ஆட்சியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். இதனை மறுக்கவோ செய்வான்? இளங் குமணன் ஆட்சியை ஏற்றுக்கொண்டான்! செம்மாந்து சிங்காதனத்தே உட்கார்ந்தான்! ஆனாலும் அவனுக் கோர் ஐயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு சமயம் அண்ணன் மீண்டும் நாட்டைக் கவர்ந்து கொள்ள எண்ணினால் - என்று எண்ணினான். வழக்கம் போல் தீமைக்குத் துணைபோகும் கயவர்கள் ஆமாம் அப்படி ஆனாலும் ஆகும் என்று பின்பாட்டுப் பாடினார்கள். இதனையும் அறிந்தான் குமணன். நாட்டை விட்டுக் காட்டில் வாழ்வதே தனக்கும், தன் தம்பிக்கும் நலம்தரும் எனக் கருதினான். அதனால் எவருக்கும் தெரியாமல் ஒரு காட்டையே நாடாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். இச் செய்தியை அறிந்தார் சாத்தனார். நெஞ்சம் நெக்குருகி ஓட நின்றார். இளங்குமணனை எண்ணி இரக்கம். கொண்டார். பொல்லாதவர்களால் அவன் முழுக்க முழுக்கக் கெட்டுப் போய் விட்டான் என்று எண்ணினார். ஆதலால் அந்நிலையில் அவனைப் போய்ப் பார்க்கவோ அவனோடு பேசவோ புலவர் மனம் இடந்தரவில்லை. குமணன் வாழ்ந்து கொண்டிருக்கும் காடு நோக்கிப் புறப்பட்டார். கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்னும் அறநெறி சாத்தனார் செயலால் உண்மையாக்கப் பெற்றது அல்லவா! இளங்குமணன் ஆணை குமணன் நாட்டை விட்டுக் காட்டிற்குச் சென்றவுடனே இளங்குமணன் மறைமுகமாக ஆணை ஒன்று பிறப்பித்திருந் தான். அது குமணன் தலையைக் கொண்டு வருபவருக்குக் கொள்ளை கொள்ளையாய்ப் பொன்னளிப்போம் என்பதாகும். அச்சத்தின் முதிர்ச்சியால் இளங்குமணன் இவ்வுத்தரவைப் பிறப்பித்தான். ஏனெனில் நல்லோன் ஆன குமணன்மேல் நாட்டு மக்களெல்லாம் நல்லன்பு செலுத்தி வருவதையும், தன்னை இழித்தும் பழித்தும் வெறுத்தொதுக்கி வருவதையும் அறிந்தான். இன்றில்லா விட்டாலும் என்றேனும் தன் பதவிக்கும், உயிருக்கும் கேடு வரலாம் எனத் தன்னறிவுக்கு ஒப்ப எண்ணினான். அதனால் தான் இவ்வாணையைப் பிறப்பித்தான். குமணனுக்கும் இது தெரியலாயிற்று. ஆகா! என் தலைக்குரிய விலை எண்ணரிய பொன்னா! என்னை மிகவும் பெருமைப்படுத்தி விட்டான் தம்பி! புன்மைப் பிணத்தைப் பொற்குவியல் ஆக்கிவிட்டான் என் தம்பி! எனக்குப் பெருமை தந்தவாறு என்னே! என்று மகிழ்ந்திருந்தான். இலக்கிய மணிகள் இஃது இவ்வாறாகப், புலவர் சாத்தனார் குமணனை நினைத்து நினைத்து உருகிக் கொண்டே நடந்தார். குமணன் போன்ற வள்ளல்களுக்கும் இத்தகைய துயர நிலைமை ஏற் படுகின்றதே என்று வருந்தினார். பின்னர் அதுவும் நிலைத்த புகழைத் தருவதற்கென அமைந்த ஒரு நிகழ்ச்சியே எனத் தேறினார். நொடிதோறும் தம்மையும், தம் குடும்பத்தையும், சுற்றத்தையும் கொன்று கொண்டிருக்கும் வறுமைக் கொடுமையை எண்ணிக் கொண்டே நடந்தார். அப்பொழுது ஏற்பட்ட கவலை சில கற்பனைக் காட்சிகளை உருவாக்கின. òytD¡F¡ ftiy V‰gLtJ« cyf e‹ik¡nf v‹gâš IaÄšiyjhnd!புலவர்கள் அனைவருக்கும் வயிறார உணவும், வளமிக்க வாழ்வும் கிடைத்திருக்குமானால் இன்று காணும் தமிழ் இலக்கியங்களில் உள்ள எத்தனையோ கவிமணிகளை நாம் பெற முடியாதன்றோ? நம் நாட்டிலுள்ள கவிகள் பலப்பல வறுமை மனங்குடையப் புலமைக் கடலிற் றோன்றிய புதுமணிகளன்றோ! கற்பனைக் காட்சி சாத்தனார் கண்ட கற்பனைக் காட்சிகளுள் ஒன்றைக் காண்போம். அழகிய புனம் ஒன்று காணப்படுகின்றது; அப்புனத்திற்கு அழகு செய்வன போல, கருங் குவளைகள் எங்கும் காட்சி யளிக்கின்றன? அவை மகளிர் கண்களை நினைவூட்டுகின்றன கண்களை மட்டுமா அவை நினைவூட்டுகின்றன? வாடைக் காலத்தே எழுந்தும் தாழ்ந்தும் விளங்கும் இம்மலர்களின் அழகுக் காட்சி, ஆடும் மயிலின் அழகுத் தோகை தரும் வனப்பு மிக்க காட்சியையும் நினைப்பூட்டுகின்றது. இருட்டிக் கொண்டு ஒரேயடியாக மழை கொட்டுகின்றது! படிப்படியாக நள்ளிருள் வருகின்றது. யாமப் பொழுதும் நெருங்கிவிட்டது. ஊர் அயர்ந்து உறங்குகின்றது! ஆனால் ஒருத்தி மட்டும் இமை மூடவில்லை. அவளோ அழகி; இயற்கை அழகி; அவளது நெரிந்து சுரிந்த குழலிலே குவளைப் பூவின் மணம் அடிக்கின்றது; தேன் போலும் மொழி பேசுகின்றாள்; புதிதாக வந்த தேமல்கள் அவளை அழகுபடுத்துகின்றன. இருந்தும் என்ன! நடுங்கு கின்றாள்; நலிகின்றாள்; அழகு அழிய அழுது நைகின்றாள்; அவளைத் துன்பம் தொடர்ந்து வாட்டுகின்றது. இத்தகைய அவள் நிலைமையை நன்கறிந்திருந்தும் - தன் பிரிவினை இவ்வாடைக் காலத்தே தாங்கிக் கொள்ள மாட்டாள் என்றறிந்திருந்தும் - அவள் கணவன் அவளைத் தனியே விட்டு விட்டுப் பொருள் தேடிவரும் பொருட்டு வேறிடம் செல்ல நினைக்கின்றான். அவனது நெஞ்சம் மனைவி மீது அன்புகாட்டி நீ புறப்படாதே என்று தடுக்கின்றது, வறுமையோ போ போ என வெருட்டியடிக்கின்றது. இறுதியில் யான் இவளைப் பிரிந்து பொருள் தேடி வருவேன் என்று உறுதி கொண்டு வெற்றிக் கொடி நாட்டி விட்டான். அன்புக்குரிய அவளை ஏங்க விட்டுவிட்டு அவன் புறப்படுகின்றான். அவனும் ஏக்கம் கொள்ளாமலா போகின்றான். பிரிந்தவன் எப்படிப் போனாலென்ன? அவனுக்குப் பொருளே பெரியது. அம்மம்மா! வறுமையினால் வரக்கூடிய இளி வரவு போலக் கொடுமையானது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை! நற்றிணையில் ஒரு மணி இது சாத்தனார் எண்ணிய கற்பனைக் காட்சி இதற்குக் கவியுருவம் தந்தார். ஆனால் இது கற்பனைக் காட்சிதானா? ஐயகோ! அவர் வாழ்வில் புகுந்து அரித்து வந்த வறுமைத் திருவுருவே இது எனலாம். ஆனால் அவர் வாழ்க்கை என்று வெளியே சொல்லி விடக் கூடாது. வெட்கக் கேடு! ஏனெனில் ஊர் பேர் வைத்துப் பாடக்கூடாத அகத்திணைப் பாடல் அல்லவா இது? எவருக்கோ உரியது போலக் கற்பனை செய்து பாடுகின்றார் சாத்தனார். ஆனாலும் அவரது வறுமை அக்கற்பனையிலும் தம் முத்திரையை மிகத் தெளிவாகப் பதித்து விட்டது. இக்கற்பனை மணி நற்றிணையிலே பதிப்பிக்கப் பெற்று ஒளிர்வதாகும். இப்படியே அவர் தந்த கற்பனை மணிகள் சில. அவை அகநானூற்றில் பதிப்பிக்கப் பெற்று ஒளியூட்டிக் கொண்டு இருக்கின்றன. நின்முகம் நோக்கினேன் சாத்தனார் குமணனை ஓரிடத்தே கண்டார். தாயினைக் கண்ட சேய்போல் களிகூர்ந்தார்; அளவளாவிப் பேசினார்; அவனது அருள் மிக்க குணத்திலே தம்வயம் இழந்து ஒன்றினார். அவன் இருக்கும் இடமோ காடு! இப்பொழுது நாடு இழந்து திரிகின்றான்! எத்துணைச் சிறு பொருளும் கூட அவனிடத்து இல்லை. இருந்தாலும் புலவர் தம் வறுமைக் கொடுமையைக் கூறாமல் விடவில்லை! வீட்டிலே கண்ட காட்சிகள் அனைத்தை யும் உள்ளது உள்ளவாறே கூறினார். உண்மை அன்பு ஏற்பட்ட இடத்து ஒளிவு மறைவு ஏன்? மகவுமுகம் நோக்கி மனைவி கண்ணீர் வடிக்கின்றாள்! மனைவி முகம் நோக்கிக் கலங்கிய யான் நின் முகம் நோக்கி வந்தேன் என்றார். எப்படியும் பரிசு வேண்டும் குமணன் என்ன செய்வான்! தனது நிலைமை நோக்கி வருந்தினான். நாடாண்ட காலத்து நாடிவராத புலவர், காடாளும் இப்போது தேடிவந்துள்ளாரே. யாது செய்வது! என்று ஏங்கினான். இல்லென மறுக்கும் சிறுசொல், குமணன் அறியாத ஒன்று! புலவருக்குத் தன் நிலைமையை எடுத்துக் கூறிப், போதாத காலம், போய் வருக என்று அனுப்பியிருக்கலாம். ஆனால், குமணனோ அவ்வாறு செய்வான்? நன்றாகச் சிந்தித்தான்; சாவது போன்ற கொடுமையான நிகழ்ச்சி உலகில் எதுவும் இல்லை! ஆனால் அந்தச் சாவு கூட, இரந்து வந்தவர்க்கு ஏதும் கொடுக்க முடியாத இழிநிலை வரும்பொழுது இன்பம் பயப்பதே என்ற முடிவுக்கு வந்தான். இதற்குள் சாத்தனார் வேந்தே! என் வறுமை நிலைமையை நோக்கினால் உனக்குள்ள இக்கட்டான இப் பொழுதிலும் உன்னை வளைத்துக் கொண்டும் ஏதேனும் பெற்றே தீர்வேன்; பெறாது விடேன்; என்றார். அரசாட்சியை இழந்தது குறித்து மகிழ்ந்த குமணன் சாத்தனார் போன்ற உயரிய கலைஞர்களுக்கு உடனே உதவ முடியாத நிலைமையை நினைக்கும்போதே ஆட்சியை இழந்தது கொடுமையானது என்று எண்ணினான். ஆனால் நொடிப் பொழுதில் அதனையும் மறந்து, தம்பி வாழ்க என்றே வாழ்த்தி னான். அன்பின் உச்ச நிலை காலம் தாழ்த்தித் தரும் கொடையையே ஏற்றுக் கொள்ள விரும்பாத புலவர் உன்னை வளைத்துக் கொண்டாவது வாங்கியே தீர்வேன் என்கிறார்; குமணன் காட்டிய அன்புப் பெருக்கே இதற்குக் காரணமாகும். தாய் எத்தகைய வறுமைக்கு ஆட்பட்டிருந்தாலும் கூடத் தன் தேவையைப் பெறாது குழந்தை விடுவது இல்லை! தன் எண்ணத்தை எடுத்துரைத்து - ஏக்கத்துடன் எடுத்துரைத்து காரியத்தை முடித்துக் கொள்ளவே முயலும்! தாயும், குழந்தை வேண்டுதலைக் கேட்டு வெறுக்கவோ இகழவோ மாட்டாள். குழந்தையின் எண்ணத்தை நிறை வேற்றுமாறே எல்லா முயற்சியும் செய்வாள். முடியாவிடில் குழந்தை நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்று தன்னைத்தானே நொந்து கொள்வாள். இதுவே மெல்லியல் புடைய தாயின் பண்பும், அவள் இயல்பறிந்த குழந்தையின் தன்மையும் ஆகும். இப்போது குமணன் வறுமை மிக்க தாயின் நிலைமையிலே நிற்கின்றான். எப்படியும் தன் வேண்டுதலை வெளியிட்டுப் பயன் பெற்றுவிட வேண்டும் என்னும் குழந்தை உள்ளத்திலே நிற்கின்றார் சாத்தனார். இதனை வறுமையின் முதிர்ந்த நிலை என்றுரைக்கலாம். ஆனால் இதுவே பண்பின் உச்ச நிலையாகும்! எண்ணினான் குமணன் சாத்தனார் வறுமையைப் போக்கியாக வேண்டும். அவர் வறுமையினை உறுதியாக யான் போக்கி விடுவேன் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டு விட்டது. அந்த நம்பிக்கையை அழிய விடுவது அறமன்று என்று எண்ணினான் குமணன். அவன் உள்ளத்திலே புத்துணர்ச்சி ஒன்று எழலாயிற்று. காணாததைக் கண்டான் போன்று துள்ளிக் குதித்தான். புலவர் வறுமை போனது போனது என்று மகிழ்ந்தான். தம்பியுடையவன் படைக்கு அஞ்சான் என்பது மெய்யோ பொய்யோ! ஆனால் கொடைக்கு அஞ்சான் என்பது மட்டும் என்மட்டில் உறுதியாகி விட்டது என்று தலை வணங்கி அவனை நினைந்து நினைந்து புகழ்ந்தான்! ஏன்? இளங்குமணன் பிறப்பித்திருந்த ஆணையை நினைத்துக் கொண்டான். புலவர் வறுமையை நாள் தோறும் போக்கி வந்த வண்மைக் கையால் தன் இடையில் வைத்திருந்த சுடர்வாளை எடுத்தான். பெரியீர்! நான் என் தம்பியால் பிழைத்தேன்! இதோ இவ்வாளால் தலையைக் கொய்து கொண்டுபோய் என் தம்பியின் கையில் தந்தால் தாங்காத மகிழ்ச்சி கொண்டு உம் வறுமையைப் போக்குவான். சிறிதும் அயர்ச்சி கொள்ளாது இதனைச் செய்க! வாளைக் கொள்க! என்று தலைவணங்கிப் பணிவுடன் நீட்டினான். புலவர் படபடப்புற்றார்; கால் கைகளும் அவருக்கு ஆட்டங் கொடுத்துவிட்டன! நெஞ்சம் பறையடித்தது! தலைக்கு விலையிட்டிருக்கும் தம்பியின் தன்மையையும், வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு அத்தலையைப் புலவனுக்குத் தர முன்வரும் அண்ணனின் அரிய பண்பையும் எண்ணி எண்ணிக் கண்ணீர் வடித்தார். சாத்தனார்க்கு ஏற்பட்ட உணர்ச்சித் துடிப்பு அவரைப் பேசவிடவில்லை! ஒரு சொல் கூடப் பேசவிடவில்லை. குமணன், தலையைக் கொண்டு செல்க; கொண்டு செல்க; வறுமை நீங்கி வாழ்க! என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தான். ஆனால் புலவரோ பதிலுரைக்காத ஊமையாக இருந்தார்; உள்ளக் கடல் கொந்தளிப்புக் கொண்டது! எரிமலைக் குழம்பாகவும் மாறியது! ஆனால் வெளியே கக்கி விடவில்லை. உடன் பிறந்த இவர்களின் மாறுபாட்டைப் போக்கி ஒன்றுபடுத்தியே யாவேன்: இது என் கடன் என்று உறுதி கொண்டார். குமணன் கையில் வாள் இருப்பது கொடுமை யானது என்பதையும் உணர்ந்தார். இன்னா செய்தலில் வல்ல இளங்குமணன் எவனோ ஒருவனைப் புலவனாகப் போகச் செய்து அண்ணன் தலையை வாங்க முயன்றாலும் முயலலாம். வஞ்சம் சூது அறியாத குமணன் போலிப்புலவனிடம் வாளைத் தந்து தலையைக் கொய்து கொள்ளச் சொன்னாலும் சொல்லலாம் என்று எண்ணினார். அதனால் அவன் தந்த வாளினை மறுத் துரைக்காமல் மலர்க் கையால் வாங்கிக் கொண்டார் புலவர். அன்பின் வழி தலையை வெட்டிக் கொள்க என்று குனிந்தான் குமணன். சற்று நேரம் சென்றும் தனக்கு ஒன்றும் நேராது இருப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தான். ஆனால் புலவரைப் பக்கத்தில் காணவில்லை. எழுச்சி மிக்கக் குதிரையின் விரைவிலே சாத்தனார் தொலைதூரத்தில் போய்க் கொண்டிருந்தார். குமணன் தனது கண்ணுக்குத் தோன்றும் அளவும் புலவரை நோக்கிக் கொண்டே இருந்தான். சாத்தனார் தம் குடும்பக் கவலையை மறக்கும் நிலைமையை அடைந்துவிட்டார். ஆனால் குமணனோ அவர் குடும்ப நிலைமைக்காக அவரினும் ஆயிரம் ஆயிரம் மடங்காகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அன்பின் வழியது தானே உயிர் நிலை. உடன்பிறப்பின் உணர்ச்சி சாத்தனார் காட்டிலிருந்து இளங்குமணன் இருக்கும் அரண்மனையை அடுத்தார்! காலம் நோக்கினார்; தக்க சமயம் இதுவே என்றறிந்து வாளும் கையுமாய் உள்ளே போனார். வீறாப்போடு வரும் புலவரைக் கண்டான் இளங்குமணன். என்னென்னவோ எண்ணினான். உற்றுநோக்கினான்; அண்ணன் கைவாள் என அறிந்துகொண்டான்; பிறந்த பாசம் அணு அணுவாக அவன் உதிரத்தோடு உதிரமாக ஓடி உணர்ச்சியை எழுப்பத் தொடங்கியது. அதன் பிறகு ஐயகோ! அண்ணன் மறைந்தானோ? என்று விம்மினான். அவன் தலைக்கு விலை வைத்த புல்லிய தன்மையை நினைத்து முட்டிக் கொண்டான்; மோதிக் கொண்டான். ஆட்சிப் பொறுப்பை அடையும் ஆசையிலே அண்ணனைக் கொல்லுமாறு ஏவியவன். அண்ணனது வாளுடன் வந்த புலவரைக் கண்டு அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று ஏங்கித் துடித்தான். வெறியிலே எக்கொடுமையைச் செய்யத் துணிந்தாலும் உற்ற சமயத்தே உடன் பிறப்பு என்பது மூண்டு வந்து சேருமல்லவா! சாத்தனார் சால்புரை துடிக்கும் நெஞ்சும், வடிக்கும் கண்ணும் உடைய இளங் குமணன், புலவர் யான் இட்ட ஆணையை நிறைவேற்றி விட்டுப் பொன் பெற வந்தாரோ? என்று படபடத்துக் கொண்டே, நடந்ததை அறிய அவாவினான். ஆனால் புலவரோ அமைதியாக, உடன் பிறந்தவன்மேல் அவனுக்கு வரும் உள்ளன்பினை அனுபவித்துக் கொண்டிருந்தார். அவனுக்கு அறிவு வரச் செய்யு மாறும் சிந்தித்துக் கொண்டே சிலை போலானார். சிறிது நேரம் கழித்து, இளங்குமணன் படும் அவலம் அளவுக்கு மீறி விடக் கூடாதே என்று எண்ணியவராய் நயமுடன் கூறத் தொடங்கினார். நிலையில்லாத இந்த உலகத்திலே நிலைக்குமாறு விரும்பியவர்கள் தமது புகழை நிறுத்தி விட்டு இறந்தனர் என்று கூறி நிறுத்தினார் புலவர். அந்தோ! பாவி கெட்டேன்; பழி காரன் கொன்று விட்டேன் என்று பதைபதைத்தான். புலவர் மேலும் பேசினார்: உயர்ந்த வளமிக்க செல்வம் உடையவர்கள் இரந்து வந்தவர்களுக்கு ஈயாமையினால் புகழாளருடன் வைத்து எண்ணப்படும் சிறப்பினைப் பெற்றார்களில்லை என்றார். ஆம் ஆம்! அத்தகைய புல்லியன் வேறு எவனுமல்லன்! யானேதான்; யானே தான் என்று தன் மார்பைப் புடைத்துக் கொண்டான் குமணன் தம்பி! வீரயானைகளை வேண்டுவோர்க்கெல்லாம் வரையறை யின்றி அளித்துதவும் வள்ளல் குமணனைப் போய்க் காட்டிலே கண்டு பாடினேன்; பாடிவந்தவன் பரிசு பெறாது போவது கொடிது கொடிது, மிகக் கொடிது! என்று எண்ணி வாளை எடுத்துத் தலையை வெட்டிக் கொள்ளுமாறு என்னிடம் நீட்டினான் என்றார். செவியைப் பொத்திக் கொண்டு அழுதான் இளங்குமணன். இன்னும் தாமதிப்பது தக்கதன்று என்று எண்ணிய புலவர், அங்கே மேலும் நிற்க முடியாதவனாய் வாள் பெற்ற களிப்பிலே இங்கு வந்தேன் என்றார். இளங்குமணன் இயம்பினான் புலவர் வாழ்க! பண்புப் புலவர் வாழ்க! வறுமைத் தொல்லை ஒன்றே கருதி வாளைப் பயன்படுத்தி விடாது என்னை உய்வித்த புலவர் பெருமகன் வாழ்க! என்று வாழ்த்திக் கொண்டே புலவரைத் தழுவினான். அங்கே நிற்க முடியாதவனாய் வெறி கொண்டவன் போலாகத் தலைவிரி கோலத்துடன் காடுதேடி ஓடினான்! பின்தொடர்ந்து செல்ல புலவருக்குப் பெரும்பாடு ஆய்விட்டது. அப்பொழுது இளங்குமணனது பாழ்மனம் ஓலமிட்டு ஓடலாயிற்று. நன்மனம் வாட்டத் தொடங்கிற்று. புலவன் வறுமையைப் போக்குமாறு உயிர் தரவும் முன் வந்த அந்த அன்புப் பிழம்புக்குக் கேடு செய்த யான் விளங்கு வேனோ? என்று அரற்றிக் கொண்டே அண்ணன் அடிமுன் வீழ்ந்தான்! அண்ணன் கால்களைப் பிடித்துக் கொண்டு விடாத வனாய்த் தரையில் கிடந்தான். தலைக் கொடையாளனான குமணன் வீழ்ந்து கிடக்கும். தம்பியை எடுத்துத் தோளோடு தோள் சேரத் தழுவிக் கொண்டான். இவையனைத்தும் புலவர் செயலே என்றறிந்து புலவரை நோக்கிப் புன் முறுவல் பூத்தான். பிரிந்தவர் கூடிய பெருமைக் காட்சியில் புலவர் ஒன்றிய உள்ளத் தராய் நின்றார். திருந்திய பெருந்தகை அண்ணா! அறிவற்ற என்னை மன்னித்து விடுங்கள்! அருள் கூர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மன்றாடினான்; கெஞ்சிக் கேட்டான். புலவரும் விட்டார் இல்லை; வற்புறுத்தினார். இவர்கள் உரையை மறுக்க முடியாத வனாய்க் காடுபற்றியிருந்த குமணன் நாடுநோக்கி நடந்தான். நல்லதொரு நாளில் தம்பி தாங்கா மகிழ்ச்சி கொள்ளுமாறு முடிசூடிக் கொண்டான். தவறுவது மனித இயல்பு! அத் தவற்றையுணர்ந்த பின்னராவது திருந்த வேண்டுவதே மனிதன் கடமை. அவ்வாறு திருந்திய பண்பாட்டினனாக இளங்குமணன் விளங்கினான். அண்ணனையே அன்னையாய்த், தந்தையாய், ஆசானாய், இறைவனாய்க் கொண்டு ஒழுகினான். முனைந்து நின்ற பாழ்பட்ட மனத்தைக் கொன்று பண்பட்டவனான இளங்குமணனும் சீரியோன் என்பதற்கு யாதோர் ஐயமும் இல்லை அன்றோ! சாத்தனார் நிலைமையை அறியாதவனா குமணன்? அவரை உணவாலும், உடையாலும், உரையாலும் மகிழ்வித்துத் திரண்ட நிதியமும் தந்து வாழ்த்தினான். அவரது பண்பாட்டினை மறக்காதவனாய்ப் போற்றிப் புகழ்ந்தான். தன்னொடும் வைத்துக் கொண்டிருக்குமாறே அவன் விரும்பினாலும் கூட, உரிமையுடன் உலகுக்குப் பணியாற்றும் புலவர்களை ஓரிடத்தே இருக்குமாறு சொல்வது தக்கதன்று என்ற காரணத்தால் ஊருக்கு அனுப்புவித் தான்! குமணனது தலையைக் காத்த சிறப்புமிக்க புலவரான சாத்தனார் புலவர்களாலும் ஏனையோராலும் பெருந்தலைச் சாத்தனார் என்று அழைக்கப் பெற்றார். ஆம்! குமணன் தலை பெருந்தலை தானே! அத்தலையைக் காத்துதவியவரும் பெருந் தலையுடைய பெருமகனார் தானே! வாழ்க பெருந்தலைச் சாத்தனார்! இன்னொன்றும் அறிதல் வேண்டும்! அவர் பிறந்த ஊர்ப் பெயரும் பெருந்தலை எனின் பெருமைக்கும் பெருமை தானே! வாழ்க தமிழ்ச் செல்வம் சாத்தனார் குமணனிடம் விடைபெற்றுக் கொண்டு தமது இல்லம் சேர்ந்தார். வெயிலிடைப் பட்ட புழுவென வறுமையிலே துடித்துக் கொண்டிருந்த வீட்டார் குமணன் தந்த வளத்தால் இன்புற்றனர். உண்பதற்கும், உடுப்பதற்கும், உறைவதற்கும், எத்தகயை குறைவு மற்றுச் சுற்றத்தாருடன் இனிது வாழ்ந்தனர். சாத்தனார் தந்த தமிழ்ச் செல்வத்தை ஊர் அனுபவித்தது; அவரது தமிழ்க் கவிச் செல்வத்தை ஊருடன் உலகமும் அனுப வித்துச் சிறந்தது. வாழ்க தமிழ்ச் செல்வம் என்ற வாழ்த்தொலி காதில் விழுமாறு சாத்தனார் பல்லாண்டுகள் வாழ்ந்தார். ஒன்றுபடுத்திய உயர்பண்பு சாத்தனார் கல்வியறிவு மிக்க குடும்பத்திலே பிறந்தார்; தந்தையாரைப் போலவே கவிபாடும் திறம் பெற்றார்;அவர் வாழ்ந்து காட்டிய முறையிலேயே தம் வழியையும் வகுத்துக் கொண்டு வாழ்ந்தார்; வறுமையிலும் செம்மை காத்து மானத்தை உயிரினும் போற்றி வாழ்ந்த பெருமை இவருக்கு உண்டு. பகைபட்டுப் பிரிந்து நின்ற உடன் பிறந்தோர்களை ஒன்று சேர்த்த பெருங்குணத்தவரான சாத்தனார் வரலாறு உலகுக்கு இன்றியமையாதது. குறிப்பாகப் பகைமை மிக்குப் பிணக்குற்று நாடு நலிவுறும் காலத்தே, மிகமிக இன்றியமை யாதது. சாத்தனார் பண்புநலன் உலகைக் காப்பதாக! அவர் தந்த தமிழ் உலகை வளர்ப்பதாக! 4. பெருங்குன்றூர் கிழார் தமிழ்நாடு நானிலவளமும் ஒருங்கே பெற்ற நாடு ஆகும். நானிலங்களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பெயர்களால் அழைத்தனர். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் குறிப்பிட்டு முன்னவர் அழைத்தனர். இந் நானிலங்களுள் மலைநிலம் ஆகிய குறிஞ்சி இயற்கைத் தாயின் வளத்தினைப் பெருகப் பெற்றுள்ள இடமாகும். அகிலும் தேக்கும், வேங்கையும், கோங்கும், குறிஞ்சியும் காந்தளும், அசோகும் சாந்தமும், வாழையும் கமுகும் வளம்பெற வளர்ந்து வானமளாவத் தோன்றும்; ஏலமும் மிளகும், காயமும் கரும்பும் வரம்பின்றிக் கிடக்கும்; நெல்லும் தினையும், புல்லும் சாமையும் மிகுதியும் விளையும்; அருவியின் முழக்கும், ஆற்றின் ஒழுக்கும், குரவைக் கூத்தும், கொடிச்சியர் பாட்டும், வேலன் பாணியும், வேடுவர் சீழ்க்கையும், புலியின் உறுமலும், யானையின் பிளிறலும், சிங்கத்தின் முழக்கமும், கரடியின் ஆர்ப்பும், மந்தியின் குரலும், மானின் அசைவும், பறவையின் இசையும், வண்டின் ஒலியும் எங்கெங்கும் கேட்டுக் கொண்டே இருக்கும்; அருவியும் சுனையும் ஆங்காங்குத் திகழும்; மலைக் குகை வீடும், சிறு குடியிருப்பும் இடந்தொறும் இடந்தொறும் காணப்பெறும்! ஊரும் நகரும் சிற்சில இடங்களில் விளங்கும். பெருங்குன்றூர் இத்தகைய வளப்பம் மல்கிய குறிஞ்சியினை அடுத்துப் பெருங்குன்றூர் என்னும் பேர் ஊர் ஒன்று இருந்தது. அவ்வூரினர் நாகரிகம் கைவரப் பெற்றவர்களாக விளங்கினர்; உழவும் தொழிலும் உயர்வெனப் பேணி வாழ்ந்தனர்; மலையினின்று கிடைக்கும் அரிய பொருள்களும்; உழவினால் கிடைத்த வருவாயும் அவர்களை வாழவைத்தன. இவ்வூரிலே உழுதொழில் புரியும் வாழ்க்கையினராகிய புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெருங்குன்றூர் கிழார் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார். மனைமாட்சி பெருங்குன்றூர்கிழார் தக்க காலத்தே பள்ளிக் கூடம் சென்று எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கருதிக் கற்றார். இலக்கிய இலக்கணங்களில் கை தேர்ந்தார். கவிபாடுவதில் நிகரிலாப் புலமை பெற்று விளங்கினார். உலகியல் அறிவும் அறநெறிமாண்பும் இத்தகையதென எளிதில் அறிந்தார். சிற்றுயிர்க்கு உற்றதுணை கல்வியே என வாழ்ந்தார். பாடும் புலவரான பெருங்குன்றூர் கிழார் தகுதி மிக்க மங்கை நல்லார் ஒருவரை மணந்து இல்லறத்தை நல்லறமாக்கிக் கனிவாய் மழலை பொழியும் அருமைக் குழந்தையையும் பெற் றெடுத்தார். மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு தானே! கருத்தொத்த இல்வாழ்வு பெருங்குன்றூர் கிழாருக்கு ஏற்ற அளவில் வருவாய் வரினும் அவரால் அதனைப் போற்றி வாழ முடியவில்லை. அவரது ஊரில் வாழ்ந்த பலர் வாழ்க்கை நடத்துவதற்கேற்ற வருவாய் எதுவுமற்று இருந்தனர். அவர்களில் பலருக்குப் பசித் துயரும், உடைப்பஞ்சமும் குடியிருப்புக் குறையும் ஏற்பட்டிருந்தன. மெல்லிய உள்ளம் படைத்தவரான கிழாரால் தம் நலமே குறியென வாழ முடியவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெரும் பண் பாடுடைய அவர் உள்ளூரினரைப் பற்றியா கவலைப்படாது இருந்து விடுவார்? இருந்த பொருளனைத்தையும் எண்ணிப் பாராது ஏழை எளியவர்க்குத் தந்தார். கொடிய வறுமைக்கு ஆளானார். பிறருக்கு உதவுவதற்காக ஏற்படும் வறுமையைத் தம்மை விற்றுக் கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற விரிந்த உள்ளம் உடைய கிழார் அடுத்த வேளைக்கு உணவு வேண்டுமே என்பதையும் எண்ணிப் பார்க்க மறந்துவிட்டார். அவர் வழிப் படியே செல்லும் மாண்புடைய மனைவியாரும் பிறருக்கு ஈந்துகாணும் இன்பத்திலே திளைத்தவர் ஆதலின் அவரும் இவர்தம் கருத்திற்கு இசைந்து நின்று உதவி புரிந்தார். சூழ்நிலை கிழார் தம்வருவாய் தமது சுற்றத்தை வாட்டும் வறுமையைப் போக்கும் அளவுக்குப் போதாது என்று உணர்ந்தார். அதனால் குன்றூரின் வறுமையைப் போக்குவது அவரின் கடமையாகி விட்டது. அவரவர் வீட்டு வறுமையைப் போக்குவதற்கே அயரா முயற்சி தேவை. காலமும் இடமும் அறிந்து, மெய் வருத்தம் பாராது பசி நோக்காது உழைத்தல் தேவை. ஆனால் ஊர் வறுமையைப் போக்குவது எளிய காரியமா? இத்தகு சூழலிலும் கிழார் பிறர் உதவியை நாடுதற்கு மனமின்றியே இருந்தார். எனினும் பிறர் நலம் கருதி நேரிய வழியில் அறிவினை விதைத்து அதன் பயனால் வரும் பொருள் விளைவைக் கொள்வது தவறன்று என்று கருதிக்கொண்டு இருந்தார். அதனால் உடனே வீட்டை விட்டு வெளியேறி வள்ளல்களைத் தேடிச் செல்வதற்குத் தன்மான உணர்ச்சி தடையாக நின்றது. விருந்தினர் வருகை இந்நிலைமையிலேயும் கிழாரைத் தேடிவந்த விருந்தினர். எண்ணிக்கைக்குக் குறைவில்லை. வீட்டில் வறுமை! ஊரில் பஞ்சம்! விருந்தினர் வந்தால் என் செய்வது! விருந்தினர்களைக் கண்டு முகங்கனிந்து வரவேற்று, இன்சொல் கூறி, இருக்கை தந்து, அறுசுவையுண்டி பெருமகிழ்வுடன் அருந்தச் செய்து அளவளாவி அனுப்பிவைக்க வேண்டுவது இல்வாழ்வோரின் கடமை. இக்கடமையைச் சரிவரச் செய்ய முடியாத நிலைமைக் காகத் தம்மைத் தாமே நொந்து கொண்டார். விருந்துக்கு எவரும் வரும்பொழுது வீட்டில் இருந்தாலும், வந்தவருக்குத் தெரியாமல் வெளியேறி விடுவார். வந்த விருந்தினரைப் பேணாது மகிழ்ந்து வறிதே வீட்டில் இருக்க விருந்தினர் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க - எவ்வளவு வன்மையான உள்ளம் வேண்டும்? இயற்கையாக இல்லையென்றாலும் எவ்வளவு முயன்று வன்மையான மனத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்? பாவம் உள்ளொன்றும் புறமொன்றும் ஆக வாழும் வழி அறியாத சான்றோரான கிழார் இவ்வாறு தலை தப்பி ஓடுவதன்றி என்செய்ய முடியும்? இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி, வேளாண்மை செய்தற் பொருட்டு என்பதைக் கிழாருடன் சேர்ந்து தெளிவாக அறிந்தவரல்லரோ அவ்வம்மையார்? அதனால் வாயிலிலே நின்று விருந்தினர் வருகையைக் கண்டால் வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு வேறிடத் திற்குப் போய் மறைந்து கொள்வார். இல்லெலி இவர்கள் நிலைமை இவ்வாறாயினும் வீட்டில் குடியிருந்த எலிகள் மட்டும் அவ் விடத்தை விட்டும் வெளியேறிவிடவில்லை. பகுத்தறிவற்ற அவை, உணர்வற்ற அவை, விருந்தோம்பல் அறியா அவை அவ்வீட்டிலேயே வாழ்ந்தன. சும்மா ஓய்ந்து கிடந்தனவா? முன்னமே தேடுமிடமெல்லாம் தேடி, ஓடுமிடமெல்லாம் ஓடி ஒன்றும் கிடைக்காது வாட்டமடைந்து வறண்டு போயின. ஆனாலும் ஆசைக்கு அளவில்லை அல்லவா! அதனால், தம்மால் இயன்ற மட்டும் இங்கும் அங்கும் குடைந்து குடைந்து சுவரின் அடிப்பகுதி யனைத்தும் தோண்டிக் குவித்தன. அப்படியாவது உணவு கிடைத்துவிடாதா என்றுதான். ஆனால் அருமுயற்சி யனைத்தும் வெறுமுயற்சியாகப் பசியால் மெலிந்தன. சில எலிகள் செயலற்றுச் சோம்பின! சில எலிகள் செத்துத் தொலைந்தன! சில எலிகள் திறனற்று உலாவின! எலிகளுக்கு இந்நிலை ஏற்படாது மட்டும் இருந்திருப்பின் சுவரோ ஆட்டம் கொடுத்துக் கூரையுடன் விழுந்திருக்கும். நல்ல வேளை! வீடு தப்பிப் பிழைத்துக் கொண்டிருந்தது. இந் நிலைமையிலேதான் பெருங்குன்றூர் கிழார் பல பல எண்ணிப் பாடிப் பரிசு பெற்று வரலாம் எனக் கருதி ஊரை விட்டு வெளியேறினார். குடக்கோச்சேரல் கிழார், அக்காலத்தில் சேரநாட்டை ஆண்டுவந்த குடக் கோச்சேரல் இரும்பொறை என்பவனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தார். அவனைப் பார்த்துப் பயன் பெறலாம் எனக் கருதிக் கொண்டு மலைநாட்டை அடைந்தார். கொடுப்பதும் புகழொடு வாழ்வதும் ஆகிய இரண்டுமே உயிருக்கு ஊதியமாக இருப்பன என்பதை உணர்ந்தவரே பெருங் கொடையாளராகத் திகழ்வர். ஊருணி போல உதவுவர்; பழமரம் போலப் பயன்படுவர்; அஃதறியாதவர் பதுக்கிக் காத்துத்தாமும் அனுபவிக்காது பிறருக்கும் பயன்படுத்தாது வறிதே விட்டுச் செல்வர். கொடை ஒருவரது பிறவிக்குணம். அக்கொடைத் தன்மை யுடையவரே புகழாளராய் உலகத்து நிலைபெற்றவராய் வாழ்வர். இனமா மனமா? குடக்கோச்சேரல் தேரும் குதிரையும் யானையும் காலாளும் ஆகிய நாற்படைகளும் உடையவன் தான்! முப்பெரு வேந்தர்களுள் ஒருவன்தான்! கொடைவள மிக்க கொற்றவர் வழி வழி வந்தவன் தான்! தமிழ்ச் சுவையுணர்ந்து பாடும் புகழேற்ற பரம் பரையினன் தான்! இருப்பினும் பெருந்தன்மை அவனிடம் இல்லாது போயிற்று. கடலையடுத்து நன்னீரும் ஊறும்! மலையையடுத்து உவர் நீரும் சுரக்கும். இதுபோல் இனத்தைப் பொறுத்தது மட்டுமல்ல ஒருவன் இயல்பு. அவன் மனத்தைப் பொறுத்ததாகவும் இருக்கும். சேரல் உள்ளம் புலவரைப் போற்றுமாறோ தமிழ் அமுதத்தை அள்ளிப் பருகுமாறோ அறிவுரையைக் கேட்கு மாறோ விரும்பவில்லை. எப்படியோ வரவேற்றான்; இருக்கச் செய்தான். புலவரும் பல நாள்கள் தங்கியிருந்தார். அவருக்கு வேண்டிய உணவுக்கு ஒரு குறைவும் இல்லை. ஆனால் அரசன் புலவரைக் காண்பதோ, நெருங்கிப் பேசுவதோ இல்லை. அவரைத் தக்க சிறப்புடன் அனுப்பிவைக்க வேண்டுமே என்பதைச் சிறிதும் எண்ணிப் பார்க்கவும் இல்லை. வாழ்க நீ! கிழார் சேரல் இவ்வாறு செய்வான் என்பதைச் சிறிதும் கருதவில்லை. அவ்வாறு எண்ணியிருப்பின் அவ்வரண்மனைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கமாட்டார். புலவர் சேரர் பரம்பரை மீது தணியாத அன்பு வைத்திருந்தார். குடக்கோச்சேரல் மீது தனிப்பற்றுக் கொண்டிருந்தார். அதனாலே வந்து தங்கினார். ஆனால் அங்கு நடைபெற்ற எதிர்பாராத நிகழ்ச்சிகள் அவரைப் பெருமூச்சுவிடச் செய்தன. பெருங், குணத்தினர் வழிவந்த இவன் இச்சிறு குணம் உடையவன். ஆனால் உண்மையாகவே, அது இவன் பழியன்று. என் பழியேதான் என்று ஏங்கினார். மேலும் அவ்விடத்தே தங்கிக் காலம் கடத்த விரும்பாதவராய் அரசனுக்குத் தக்க அறிவு வருமாறு சொல்லிவிட்டுப் புறப்படத் தொடங்கினார். அரசே! உன் சிறப்பென்ன? உன் பரம்பரை என்ன? உன் கடன் என்ன? உன் பண்பென்ன? இறைவனுக்கு ஒப்பாக இருந்து ஆளும் அரசர் பொறுப்பென்ன? இவ்வளவையும் நீ நோக்க வில்லை. அன்பைப் போக விட்டு விட்டாய்! அறத்தையும் நெகிழ விட்டு விட்டாய்! பிறரை மகிழ்விக்காத பார்வை யுடையவ னானாய்! உன்னைப் போன்ற மேன்மை உடையவர்களும் இத்தன்மை உடையவராயின் என்னைப் போன்று பிறரை நாடி வாழும் புலவர் - கலைஞர் - பாணர் - விறலியர் இனிப் பிறவாது ஒழிவாராக! குற்றமற்ற கற்புடைய என் மனைவியைப் பிரிந்து உன்னை நோக்கி வந்தேன். அவளுடன் வாழும் வாழ்வையும் விட்டு நீங்கி ஓடி வருமாறு வறுமை தூண்டியது. பிரிந்து வந்த என்னை அப்பெண்ணின் நல்லாள் எதிர் நோக்கிக் கொண்டே - வழி நோக்கி விழி நீர் பாய்ச்சிக் கொண்டே - நிற்பாள். ஒரு சமயம் அவள் உயிர் இழக்கப் பெற்றாலும் பெற்றிருக்கலாம். அப்படி இழவாது இன்னும் இருப்பாளேயாயின் என்னை நினையாது இருக்கமாட்டாள்; நெஞ்சு கொதியாது இருக்கமாட்டாள். அறமற்ற கூற்றம் என் உயிரைக் கொள்ள வலிமையற்றதோ? என்னைக் கொள்ளமாட்டாது அது இறந்து பட்டதோ? என் உயிர் போவதாக! என்று கூற்றத்தைத் திட்டிக் கொண்டே தன் வாழ்வையும் வெறுத்துக் கொண்டு இருப்பாள். அவள் துயரம் ஒழியுமாறு இப்பொழுதே யான் புறப் படுகின்றேன். நீ வாழ்வாயாக! வேந்தே! என்னைப் பார்! வறுமையை முன்னே செல்லவிட்டு அதன் பின்னே வருந்திய நெஞ்சுடன் யான் போகின்றேன் என்றார். இருவேறு இயல்பு புலவர் உரை சேரலை அசைத்தது; பலவாறு சிந்திக்க வைத்தது. நும்ம னோரு மற்றினைய ராயின் எம்மனோரிவண் பிறவலர் மாதோ என்ற புலவருரை சேரன் இதயத்தைக் குடைந்தது. எளிய வளமும் வாய்ப்பும், ஏவலும் எடுப்பும் உடையவனா சேரன்? மூவேந்தருள் ஒருவன்; கொடை வள்ளல்கள் வழிவந்தவன்; பொய்யா நாவிற் புலவர்களால் பாராட்டப் பெறும் இயல்புடையவன்; நூலறிவும் நுண்ணறிவும் மிக்கவன்; அறத்தின் கூறும் மறத்தின் கூறும் தெள்ளிதின் அறிந்த ஒள்ளியவர்கள் மரபினன். ஆனால், நேற்றுக் கொன்றது போல வந்து சென்ற வறுமை இன்றும் வருமோ? என்ற ஏக்கமும், என்னாவாரோ என்னை நோக்கியிருப்போர்? உயிரோடுள்ளாரோ இறந்தாரோ? என்ற கொடுந் துன்பமும் உடையவர் புலவர். புலவர் புலமைத்துலைக்கோலைத் தூக்குகின்றார். சேரன் வளமையை ஒரு பக்கத்தே தூக்கித், தம் வறுமையை ஒரு பக்கத்தே வைக்கின்றார்; நெஞ்சு வெடித்து விடுவது போன்றதான வேற்றுமை நிலைக்கு ஆளாகின்றார். அறிவால் வாழும் வாழ்க்கையின் கொடுமைக் காட்சிகள் அவர் கண்முன் நின்று கூத்தாடுகின்றன. அவற்றைக் கண்டு வருத்தமுற்று. நும்ம னோரு மற்றினைய ராயின் எம்ம னோரிவண் பிறவலர் மாதோ என்று கூறி வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு நெஞ்சும் தூண்டிற்று. இதனைக் கேட்டேனும் சேரலுக்கு உணர்ச்சி வரவேண்டுமே! வந்தது! வந்தது! என்ன வந்தது? எப்படி வந்தது? நல்ல படிப்பு புலவரைப் போற்ற எண்ணம் வந்தது! இருக்க வைக்கவும் எண்ணம் வந்தது! பழைய புன்மைக் குணம் அறவே போய் விட்டதோ! அவனவன் உயிரோடு உணர்வோடு ஒன்றிய தல்லவா. நற்சொல்லும் நற்செயலும்? சேரல் கொடுப்பது போலக் காட்டினான். தருவது போலப் பேசினான். இனிக்க உரை யாடினான். ஆனால் உள்ளத் துணர்வையெல்லாம் ஒரு நொடியில் அளவிட்டுவிடும் திறம்பெற்ற புலவருக்கா அவன் நடிப்பு தெரியாமல் போய்விடும்? நன்றாகத் தெரிந்தார். மேலும் இவனிடம் காத்திருப்பது தக்கது அன்று என்று எண்ணினார். பேசினார் புலவர் வேந்தே! நீ வளம் உடையவன் ஆதலால் உயர்ந்த பரிசில னாகிய என்னை வரவேற்றுத் தாழ்ந்து நின்று பரிசளிப்பாய் எனக் கருதினேன். அந்நினைவிலேயே ஈண்டுவந்து இதுகாறும் தங்கினேன். என்னை மதிக்காத மாந்தர்களைப் பற்றி யான் கூறவும் நீ கேட்டாய். அவ்வாறு கேட்பினும் உன் கொடாத் தன்மையிலே தான் உறுதியோடு உள்ளாய். கையில் பரிசு இருப்பதாகக் காட்டிச் செல்லச் செல்ல இல்லை என்று வெறுங்கையோடு போகச் செய்யும் உன் உளப்பாங்கிற்கு நான் நாணுவேனாயினும் நீ நாணுவதாகத் தெரியவில்லை. அல்லாமலும், ஆராய்ச்சியும் செம்மையும் உடைய என் புகழ்ப்பாக்களை மட்டும் குறைவின்றிக் கேட்ட உன் மார்பினை வாழ்த்துகின்றேன். சுவரெல்லாம் பாழ்படுமாறு தோண்டிக் குவித்தும் பெறுதற்கோர் உணவின்றிச் செயலற்றுக் கிடக்கும் எலி மிக்க என் வீடு உண்டு. தாயுணவைக் கூடப் பெறும் பேறிழந்து தவிக்கும் குழந்தை, எனது வருகையை நோக்கி வாடி நிற்கும் மனைவி - இவர்கள் உளர். அவர்களை நோக்கி நடக் கின்றேன். வாழ்க! எனக் கூறிவிட்டு விரைந்து சென்றார். சங்க காலத்துச் சால்பு மிக்க புலவரல்லரோ பெருங்குன்றூர் கிழார்? பேகன் புலவர், பெருஞ்சேரல் இரும்பொறையே அன்றி வேறு சில வேந்தர்களையும் கேள்வியுற்றிருந்தார். அவர்களுள் தலை யாயவன் பேகன் ஆவன். உடுத்துக் கொள்ளாததும், போர்த்துக் கொள்ளாததும் ஆகிய மயிலுக்குப் போர்வையளித்துப் போற்றிய பெருங் குணத்தினன் பேகனாவான். மழைகண்டு ஆடும் மயிலையே நடுங்குகின்றது என்று எண்ணி வருந்தும் நெஞ்சம் வறியவர்களின் வாழ்க்கையைக் கேட்டால் வறண்டு தூர்ந்து போய்விடாமல் வாழவைக்கும் என்று கருதினார். பாடாதே ஆடும் மயிலுக்கே ஆடை தரும் கொடை வள்ளல் பாடியும் ஆடியும் வரும் இரவலர்க்கு வழங்காதிருப்பானோ? வழங்குவன் என எண்ணினார். பேகன் மலை நாட்டின் வேந்தன். மலையின் கண்ணே தன் தலைநகரை அமைத்துக் கொண்டு சீர் சிறப்புடன் நாடாண்டு வந்தான். வள்ளல்கள் என்று பெருமையுடன் பேசப்படும் எழுவருள் ஒருவன்! ஆவியர் குடியின் வந்த அருங்குணத்தினன். பண்புமிக்க புலவர் பலரால் பாடும் புகழ் பெற்றவன். ஆதலால் அவனது நாட்டினைப் பெருங்குன்றூர் கிழார் அடைந்தார். கார்காலக் கவலை புலவர் கார்காலத்தே போனார்; மழை பெருகக் கொட்டிக் கொண்டிருந்தது. மகளிர் பலர் கூந்தல் முடிக்காது. மலர் சூடாது வாயில் கதவைத் திறந்தும் அடைத்தும் வழியையே நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் தலைவர்கள் பொருள் தேடும் விருப்புடன் கார்காலம் வருமுன் வந்துவிடுவேன் என்று கூறி விட்டு வேறு வேறு நாடுகளுக்குப் பிரிந்து சென்றிருந்தனர். கார்காலம் வந்தது உண்மையாயின் வாய்மை தவறாத தலைவரும் வந்து விடுவார் என்ற எண்ணத்தால்தான் நின்று நின்று நோக்கி நோக்கி மகளிர் அங்ஙனம் சோர்ந்தனர். இக் காட்சியைப் பல இடங்களிலும் பார்த்துக் கொண்டே தெருக் களைக் கடந்தார். மயில்களின் உவகை நடனத்தையே நடுக்கமாகக் கருதும் பேரருளாளன் ஆகிய பேகன் நாட்டிலே மங்கையர் இவ்வாறு தலைவரை எண்ணி ஏங்குகின்றனர். இவ்வாறு ஏக்கமிக்கு எதிர்நோக்கி வாழ்வதில் தானே இல்லறத்தின் இன்பம் பெருகக் கூடும்? பாவம்! ஆண்களுக்கு இத்தகைய கொடிய நெஞ்சம் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நாளைக் கடத்தி மகளிர் நெஞ்சத்தைக் கொன்று கொண்டு இருக்கக் கூடாது. பொருள் என்ன பொருள் ? அருள் இல்லாப் பொருள் பொருளா? பெண்மையை ஏங்கவிடும் ஆண்மையும் ஆண்மையா? ஏக்கத்தால் இவர்கள் இறந்துபடின் தலைவன் வாழ்வு வாழ்வாகுமோ? ஏதேனும் ஒன்று வந்த பின்னர் தான் அனைவருக்கும் அறிவு ஏற்படும் போலும் என்று ஏங்கிக் கொண்டே நடந்தார். அரண்மனை வாயிலை அடைவதற்குப் பதிலாக அந்தப் புரத்தின் வாயிலையே அடைந்துவிட்டார். முதிர்ந்த கவலை அங்கே புலவர் கண்டவொரு காட்சி அவரைப் புண்படச் செய்தது. வள்ளல் பேகனின் மனைவியான கண்ணகி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கண்ணீர்த் துளிகள் அவர் ஆடையை நனைத்துக் கொண்டிருந்தன. என்னென்னவோ நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார். புலவரைக் கண்டவுடனே உட்கார்ந் திருந்த அவ்விடத்தை விட்டும் அகன்று போய் வேறோரிடத்தே உட்கார்ந்து கொண்டார். தம் கவலைப் பாட்டினைப் புலவர் அறிய நேர்ந்ததே என்று வருந்துவது போலாகப் புலவருக்குத் தோன்றியது. அவரது அழுகைத் தோற்றமும், எண்ணெய் பூசப்படாத கூந்தலும், பூழ்தியும் தூசியும் பட்ட உடலும் உடைந்த உள்ளமும் புலவரை ஆறாத் துயரத்தில் ஆழ்த்தின. அந்த அம்மையாரே பேகன் மனைவியார் என்பதை அறிந்து மேலும் துன்புற்றார். அவர் வருத்த முற்றிருக்கும் காரணத்தை அறியாமல் செல்ல மனம் வரவில்லை புலவருக்கு. அதனால் அருகில் இருந்த மகளிரிடம் காரணம் என்னவென வினவினார். கண்ணகியாரின் மனை வாழ்வில் ஏற்பட்டுள்ள அத்துயர நிகழ்க்கியைக் கூற அவர்கள் விரும்பவில்லை. எனினும், சால்பு மிக்க பெருங் குன்றூர் கிழார் போன்ற புலமையாளர்களிடம் கூறுவது ஆறுதலாக இருப்பது மட்டுமல்ல. அரசிக்கு நன்மையாகவும் ஆகலாம் என்று கருதிக்கொண்டு சொல்ல விழைந்தனர். அங்கு அவன்! இங்கு நாங்கள் முதியவளான ஒருத்தி புலவர் பெரும! ஆவியர் குடியில் வந்த நல்லோனாகிய பேகன் தேவி கண்ணகியை விட்டுப் பிரிந்து சென்று நெடுநாட்கள் ஆகின்றன. அவன் நல்லூர் என்னும் ஊரிலே வாழ்ந்து வருகின்றான் என்றாள். அரண்மனை இங்கே! அரசியிங்கே! அரசன் நல்லூரில் வாழ்கின்றான்! ஏன்? என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் புலவர். அவரது சிந்தனை கிடையே அம் முதுமகள் அரசன் நல்லூர் மகள் ஒருத்திமேல் அன்பு கொண்டு அவளே தஞ்சமாகி வாழுகின்றான். மாடமும் மனையும் எழுப்பி அவளொடும் வாழுகின்றான். நாங்கள் இங்கு இருக்கின்றோம் என்று முடித்தாள். மெல்லிய உள்ளம் படைத்தவராயினும் சிற்சில வழிகளில் கல்லுள்ளம் உடையவராக இருப்பர் போலும். பேகன் போன்ற வர்களும் இத்தகைய இழிதகைமைக்குரியவர்களாக இருப் பார்கள் என்று எப்படி எண்ண முடியும்? அவன் என்ன காரணத் தாலோ தவறிவிட்டான். அதன் காரணத்தை ஆராய்ந்து கொண்டு திரிவதிலே பயன் ஒன்றும் இல்லை. தமிழ் தந்த புலமைவளம் நமக்கு இருக்கவே இருக்கிறது. தமிழ் மாட்டுக் கொண்டுள்ள அவனது அன்பும் இருக்கவே இருக்கிறது. பிரிந்த அவர்களைப் பிணைத்து ஒன்றாக்கும் இனிய தன்மை தமிழுக்குண்டு என்பதைத் தமிழகம் அறியட்டும்! உலகமும் அறியட்டும்! புலவர் தொழில் பிரிந்தவரைப் புணர்ப்பது என்று கூறுவது பெருமையே அன்றிச் சிறுமை தருமோ? என்று பலவாறாக எண்ணியவராய் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். மெல்லியல் உள்ளம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறைவிடம் சென்ற கண்ணகியார் தோழியர்களை அழைத்துப் புலவரை இருக்கச் செய்து பெருமைப்படுத்துமாறு கூறினார். ஆனால் புலவர் நில்லாமல் போய்விட்டார் என்ற செய்தியினைக் கேள்விப் பட்டவுடன் புண்பட்டார். தலைவன் பிரிவால் வருந்திய வருத்தத் தினும் புலவருக்கு ஒரு வேளை விருந்துகூடச் செய்து அனுப்ப முடியாத அளவுக்குத் தமது நிலைமை ஆகிவிட்டமை கருதி வருந்தினார். அரசர் இங்கு இருந்திருந்தால் புலவர் போயிருப் பாரோ? அவர் இல்லாமையால் தானே அரிய விருந்தினை இழந்தேன் என்று புலம்பினார். புலவரை எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும் அவர் இங்கிருக்க மறுத்துவிட்டார். ஏதோ பெருஞ் சிந்தனையுடன் போகின்றார். மன்னர் இருக்கும் நல்லூருக்குத் தான் போகின்றார். என்று எங்களுக்குத் தோன்று கிறது என்றார்கள். அய்யோ! நல்லூர் சென்றால் இங்கு அவர் கண்டவற்றைச் சொல்லி விடுவாரே என்று சில முத்துக்களை உதிர்த்துக் கொண்டு இருந்தார் அரசியார். பேகன் கொடை புலவர் பெருங்குன்றூர் கிழார் மலை பல கடந்தார்! அருவி பல அகன்றார்! இயற்கையை நுணுகி நுணுகி அனுபவிக்கும் புலவர் இப்பொழுது அங்கும் இங்கும் திரும்பிப்பார்க்காதவராய் ஒரே போக்காக நல்லூரை அடைந்தார். அவர் போய்ச் சேர்ந்த பொழுது மாலைப் பொழுது. கையிலே யாழ் வைத்திருந்தார். அவ்யாழ் அழகியதொரு சிறிய யாழாக இருந்தது. மாலைப் பொழுதிற்குரியதான செவ்வழி என்னும் பண்ணை நயமுடன் மீட்டினார். செவ்வழிப்பண் கல்மனத்தையும் கரைக்கும் தன்மையது. புலவர் கண்ணகியார் நிலைமையை நினைத்துக் கொண்டே செவ்வழிப் பண்ணை மீட்டினார். இரக்கம் மிகக்கொண்டான் பேகன். புலவர் எண்ணத்தை நிறைவேற்றி யனுப்ப நினைத்தான். அவர் வறுமைக்கு ஆட்பட்டு வாட்ட முற்றிருக்கும் காட்சி அரசனுக்குத் தெரிந்தது. குழிவிழுந்து பஞ்சடைந்து காணும் புலவர் நிலைமையைத் தெளிவாகத் தெரிந்தான். வறுமை வெருட்டவே ஆங்கு வந்திருப்பதாக முடிவு கட்டிக் கொண்டு ஒன்றும் கேட்காமலே பெரும் பொருள் தந்தான். புலவர் வேண்டுதல் புலவர் பொருளைக் கண்டவுடனே மகிழ்ந்து விடவில்லை. கையை நீட்டி வாங்கி விடவும் இல்லை. மாறாகப் பாடலொன்று பாடினார். ஏன், பாட மட்டுமா செய்தார்? வேந்தே! இதனைப் படி; படித்து நெஞ்சத்தே நிறுத்து; உன் நெஞ்சம் என்ன சொல்கிறதோஅதைச் செய்துமுடி; நாள் கடத்தாதே! எனக்குப் பரிசு வேண்டும். ஆனால், உன் பொருட் பரிசன்று யான் வேண்டுவது? அருட்பரிசு; அதனை உடனே தா! என்று கூறிக் கொண்டே பாட்டு எழுதப் பெற்றுள்ள ஏட்டை நீட்டினார்; அவ்வேட்டில், கன்மழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார்வான் இன்னுறை தமியள் கேளா நெருநல் ஒருசிறைப் புலம்புகொண் டுறையும் அரிமதர் மழைக்கண் அம்மா வரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞ்ல இன்று பெயரின் அதுமன்எம் பரிசில் ஆவியர் கோவே! என்று எழுதியிருந்தார். அதைப் பேகன் படித்து முடித்தவுடனே, பேக! நீ உடனே புறப்படுவதே என் பரிசு! உன் மனைவி - மழை ஒலிகேட்டுத் தன்னந் தனியாய் வருந்தி நிற்கும் உன் மனைவி - அரிபடர்ந்த கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழியக் கலங்கி நிற்கும் உன் மனைவி - எண்ணெய் தேய்த்தலை மறந்து, குளித் தலைத் துறந்து, இருக்கும் உன் மனைவி நறுமணநெய் தேய்க்க, பளிங்குநீரில் தோய புதுமலர் சூட நீ இங்கிருந்தும் உடனே புறப்படுவதே என் பரிசு ஆகும் என்றார். புலவர் வழி கிழாருக்குத் தம் இல்லத்து வறுமைக் காட்சி இப்பொழுது தோன்றவில்லை. பேகன் கண்ணகியாரைப் பிரிந்து வாழும் கொடுமை நிலைமையே தோன்றியது. இல்லாது வருந்தும் தம் வாழ்வினும் இருப்பதை மகிழ்வொடு அனுபவிக்க முடியாத நிலைமைக்கு ஆட்பட்ட கண்ணகியார் நிலைமையே இரங்கத் தக்கதாகத் தோன்றியது. ஆடவர்க் கடக்கும் ஆண்மை யுடைய அரசனாயினும் அறத்தின் முன்னர்ப் பணிந்து நிற்கத் தக்கவனே! அதைக் கூறவேண்டுவதும் அமைச்சர், அறிவர் கடனே! என்னும் தெளிவுடைய கிழார் பிரிந்த கணவன் மனைவியரை ஒன்றுபடுமாறு வேண்டினார். அதுவே தம் பரிசெனவும் புலப்படுத்தினார். அரசர் தம் இல்வாழ்வின் இடையிலும் புகுந்து இன்புறுத்திய பண்டைத் தண்டமிழ்ப் புலவர் வழியே வழி! அவ்வழி வாழ்வதாக! அருட்புலவர் வாழ்க! பெருங்குன்றூர் கிழார் மட்டுமோ இத் தூய தொண்டில் முனைந்து நின்றார். கபிலர், வன்பரணர், அரிசில் கிழார் இன்னோரன்ன பொய்யா நாவின் புலவர் மணிகள் முயன்றனர். உள்ளக் கருத்தினைத் தெள்ளிதில் எடுத்துரைத்தனர். நெஞ்சத்தை இளக்கினர். புலவர் பாடும் புகழாளனான பேகன் செவி சாய்த் தான். அவர்கள் வேண்டுதற்படியே தன் அந்தப்புரம் அடைந் தான்? ஆம்! பிரிந்தவர் கூடினர். பெருமகிழ்ச்சி அடைந்தது நாடு; அருட் புலவர் வாழ்க என்ற ஒலி திக்கெங்கும் எழுந்தது. அழியாப் புகழ் பேகன் தந்த பெருவளத்திணை மறுத்த கிழார் கண்ணகி யாருடன் கூடிவாழும் போழ்திலாவது அடுத்துச் சென்றாரா? பாடினாரா? பரிசு பெற்றாரா? அவ்வாறு சென்றுபாடிப் பரிசு பெற்றிருப்பின் தொண்டிற்கும் விலை பெற்றதாக அல்லவா ஆகும்? கூலிப் புலமை அல்லவா அது? நான் இது செய்தேன்; நீ இதனைத் தருக என்பது மானமிக்க புலவர் பெருங்குன்றூர் கிழார் வாழ்வில் தலைகாட்ட முடியும் என்று எண்ண முடியாது. அதனால் தான் அவர் அழியாப் புகழ் பெற்றார். வள்ளல் பேகன் வாழ்வைச் சிறக்கச் செய்த புலவர் தம் வாழ்வினையும் மறந்து விடவில்லை. அதனால் அந்நாளில் சோழ நாட்டை ஆண்டு வந்தவனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனைக் காண விழைந்தார். அவனைப் பாடியேனும் தம் வறுமையினைப் போக்கிக் கொள்ளக் கூடும் என நினைத்தார். இளஞ்சேட் சென்னி இளஞ்சேட் சென்னி, காவிரிக்கு அணை கட்டியவனும், காடு கெடுத்து, நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கியவனு மான கரிகால் வளவனது அருமைத் தந்தை ஆவான். அக்காலத் தமிழக வேந்தரனைவருக்கும் தேர்ப்படை உண்டேனும், இச் சென்னியின் தேர் மிகவும் கலை நுட்பம் பெற்றுக் கண்டவர்கள் விரும்புமாறு இருந்தமையாலும், இவன் மிகப் பலவான தேர் களைக் கொண்டிருந்தமையாலும் அவை உருவப்பஃறேர் என்று அழைக்கப்பெற்றன. சென்னியாகிய அச்சோழன் இளமையிலேயே பெரும் புகழாளனாய் உலகறிந்தவனாய் - இருந்தபடியால் இளஞ்சேட் சென்னி என்று அழைக்கப் பெற்றான். பின்னர் இவ்வனைத்தும் ஒரு சேரக் கொண்டு சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் பெயர் பெற்றான். பரணரால் பாடும் புகழ் பெற்றான். இவற்றை நன்கறிந்திருந்த கிழார் சோழனது தலைநகரம் நோக்கிச் சென்றார். நீர்வளமிக்க நாடு சோழ நாட்டின் வளம் புலவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எங்கும் காணப்பெற்ற நீர் நிலைகள் அவரது ஏக்கத்தைப் போக்கின. சோழ நாட்டின் வளப்பத்தைக் கண்ட வுடனேயே வறுமை அகன்றதாக எண்ணிக் கொண்டார். அவ்வெண்ணத்துடனேயே சோழ வேந்தனையும் கண்டார். வேந்தன் புலவரை அன்புடன் வரவேற்று இன்சொற் கூறினான். அதனால் அவனை மதித்து அங்கே தங்கியிருந்தார். தங்கருத்து இன்னதெனவும் தக்க சமயத்தே எடுத்துரைத்தார். நீர் வளமிக்க நாட்டின் வேந்தே உனது நாட்டில் நீருக்குக் குறைவில்லை. மழைக்கும் குறைவில்லை பருவந்தோறும் தவறாது மழை பொழிகின்றது. காவிரியும் நாளும் வற்றாது நீர் சுரக்கின்றது. ஏதோ ஒரு சமயத்தே மழை பொழியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அச்சமயத்தே ஆற்றிலே நீர்ப்பெருக்கு இல்லை எனவும் கொள்வோம் நீர் நிலைகள் வறண்டு கோடை வெயில் சுட நிலம் வெடித்துக் காய்ந்து காணும் நிலைக்குள்ளாயிற்று எனவும் கொள்வோம். இவ்வளவும் ஏற்பட்டுவிடினும் துளையுடைய தண்டினைக் கொண்ட ஆம்பல் நின்னாட்டில் குறைவின்றி வாழவே வாழும்! அதன் இலைகள் செழிப்புடன் காணவே காணும்! அவ்விலைகளின் நிழலிலே கதிர்போன்ற கொம்புகளையுடைய நத்தையினது ஆண் அதன் பெண்ணாகிய சங்குடனே கூடிப் பகற் பொழுதிலே மகிழ்ச்சியோடு திரியவும் திரியும்! இதற்கு யாதோர் ஐயமும் இல்லை. இத்தகைய வளப்பம் உடைய நாட்டின் வேந்தன் நீ. யானோ என்னைத் தேடிக் கொண்டு வந்த விருந்தினர்களை நேரில் கண்டும் அவர்களை ஏற்றுப் போற்ற முடியாதவனாய் ஓடி ஒளிந்து கொள்ளும்படியான கொடிய வறுமைக்கு ஆட்பட்டவன். ஐம்பொறிகளும் அமையப் பெற்றிருக்கிறேன். ஆனால் அப்பொறிகளால் அடையும் அறிவினை அறவே இல்லையாம் படி கொன்றழிக்கும் வறுமையும் உடையவனாக உள்ளேன். அறிவு மிக்கவர்கள் கூடிய அவைக்குச் சென்று யான் துன்பம் மிகக் கொண்டுள்ளேன். பெரியீர்! இதனைப் போக்கி உதவுவீராக! என்று ஒருவன் கூறுவானாயின் அவையோர் விரைந்து அவன் துயரைத் தீர்ப்பது போல என் வறுமையை எண்ணி நீ தீர்ப்பாயாக! வலிய குதிரையும், நெடிய குடையும் உடைய சோழ! உன்னிடம் யான் வேண்டுவது இதுவே என்றார். புலவர் குறிப்புரை சோழ நாட்டின் வளமையை நயமுடன் கூறிய புலவர், தம் வறுமையையும் குறிப்பால் அழகாக எடுத்துரைத்ததனைச் சோழன் கேட்டான். விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை என்றவரி சோழனைப் பெரிதும் சிந்திக்க வைத்தது. சான்றோர்கள் கூடிய அவையில் ஒருவன் தன் வேண்டு கோளைக் கூறி நிறைவேற்றிக் கொள்வது போல என்ற நயமிக்க வேண்டுதல் வேந்தனைக் கவர்ந்தது. உடனே பரிசளித்து உதவு மாறு அது தூண்டியது. அதனால் கிழார் கருத்துப் பொய்த்துப் போகாதவாறு பெருஞ் செல்வம் அளித்தான். புலவரைத் தக்க பெருமையுடன் ஊருக்கு அனுப்புவித்தான். புலவர் பொருட்பேறு பெருங்குன்றூர் கிழார் வீடும் சுற்றமும் மகிழ்வு கொள்ளு மாறு வீட்டை யடைந்தார். யாவர் வறுமையையும் போக்கினார். விருந்தினர்களை எதிர்கொண்டு அழைத்துப் பேணினார். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்தார். இவ்வாறு சோழன் தந்த வளத்தால் ஊருக்குப் பயன்படும் வாழ்வு வாழ்ந் தார். ஆனால் பொருள் வாழ்வால் ஊருக்குப் பயன்பட்டு வரும் அவர், புலமை வாழ்வால் உலகுக்குப் பயன்பட வேண்டு மல்லவா! ஓரிடத்தே ஒடுங்கிக் கிடப்பது புலமையின் இயல்பும், புலவன் இயல்பும் இல்லையே! அதனால் தம் ஊரே தஞ்சமாய் இருந்துவிட விரும்பாதவராய்ச் சேரநாடு செல்ல விரும்பினார். மீண்டும் பொருளுக்காகத் தொடங்கிய படையெடுப்புத் தானா? இல்லை இல்லை! அவர் சேரநாடு செல்லுமாறு கால நிலை தூண்டியது. சேரநாட்டு மன்னன் செயல் தூண்டியது. மக்கள் நிலைமையும் தூண்டிற்று. பிறர்க்கென வாழும் பெருந் தகைமையும், அருளுள்ளமும் தூண்டின; புலவர் புறப்பட்டார். சேரநாடு சென்றது ஏன்? சேரநாட்டிற்கு முன்னொரு சமயம் கிழார் போயது பற்றியும், அப்பொழுது ஆட்சி செய்து வந்த குடக்கோச்சேரல் இரும்பொறை புலவரைப் போற்றாது வெறுங்கையினராய் அனுப்பி வைத்தது பற்றியும் அறிவோம். அவ்வரசன் இறந்து விடவே அவன் தம்பி இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி யேற்றான். அவன் மாபெரு வீரன். போர்வேட்கையில் இவ்வளவு அவ்வளவு என்னும் வரையறை அற்று வாழ்ந்தான். வாழ்வின் பெரும் பகுதியினைப் போர்க்களத்திலேயே செலவழித்துக் கொண்டே இருந்தபடியால் அவனை அரசியல் பணியில் ஈடுபடச் செய்யுமாறு விழைந்தே புலவர் சேரநாடு சென்றார். அங்கே சேரமன்னனையும் கண்டார். புலவர் சேரனைக் கண்டது அரண்மனையிலா? அரச அவையிலா? அந்தப்புரத்திலா? இல்லை? இல்லை!! போர்க் களத்தை அடுத்தமைத்திருந்த பாசறையிலே கண்டார். சேரன் போர்வாழ்வே பேர் வாழ்வெனக் கொண்டவன் அல்லவா! சோழ பாண்டியராம் இருபெரு வேந்தர்களையும், விச்சி என்னும் குறுநில மன்னனையும் தாக்கி அழித்தான். கோப் பெருஞ் சோழனையும் இளம்பழையன் மாறன் என்பவனையும் வஞ்சினம் கூறி அது பொய்க்காதவாறு வென்றான். புகுதற்கரிய காவற் காட்டையுடைய ஐந்து மதில்களை அழித்தான். இத் தகையவன் பொழுதெல்லாம் போர்க்களத்தில் தானே கழிந் திருக்க வேண்டும்? இதனைக் கேள்வியுற்று வருந்திய நெஞ்சத் தால் தான் புலவர் பெருங்குன்றூர் கிழார் அவனைக் கண்டார்! மன்னன் ஒருவனுக்கும் மற்றொரு மன்னவனுக்கும் போர் நடந்தால் மடிபவர் அவர்கள் மட்டுமோ? மக்களும் விலங்கு களும் ஒரு சேர அல்லவா அழிந்து ஒழிய நேரிடுகின்றது! நாடன்றோ கேடுறுகின்றது! சிறு பஞ்சிலோ, குச்சியிலோ பற்றிய நெருப்பு நாடு நகரங்களையும், காடு மலைகளையும் அழிப்பது போலாக அல்லவா மன்னனுக்கு வரும் சிறு சினமும் மக்களை அழிக்கின்றது? படைவீரர் எத்தனைபேர் படுகின்றனர்! கரிகள் எத்தனை, பரிகள் எத்தனை போரில் மாய்கின்றன! எண்ணிறந் தனவன்றோ! அதனால்தான் சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் என்று அறநூல் கூறிற்று என்று எண்ணினார் கிழார். பாடினார்: பாசறை நீங்கினான் அதனால் வேந்தனை நயமாகப் பாடினார்! நல்லுரை பல நவின்றார்! அவன் நாட்டு வளத்தையும், வீர வாழ்வையும் பெரிதெடுத்துரைத்தார். பரம்பரைப் பெருமையைப் பலபடப் பேசினார். இருப்பினும் பேச்சின் இடைஇடையே தாம் கொண்டு வந்த கோட்பாட்டினை எடுத்துரைக்கத் தவறவில்லை. வந்த நோக்கத்தையும் ஐயத்துக் கிடமின்றி எடுத்துரைத்தார். மாற்றார் நிலங்களைக் கவர்ந்து நாட்டைப் பெருக்கிக் கொண்ட பெரியோய்! உன் போர் இருக்கை உன்னை விரும்பு வோர்க்கு இனிது. ஆனால் உன்னைப் பகைப்போர்க்கோ மிகக் கொடிது. இடி போல முழங்கிக் கொண்டு வரும் களிற்றின் காலில் மிதிபட்ட மூங்கிலின் இளமையான முளைகள் அழிந்து படுவது போல் பகைவர் அழிந்துபடுவர். உன்னைப் பகைத்துக் கொண்டு எதிர்த்து நின்றவர்கள் பட்ட அழிவுபாடு பெரிதாம். இத்தகு வன்மையனாகப் போர் புரியும் நின்னை வென்மையாளன் என்றே நின்னை நேரில் காணாத பொழுதுவரை எண்ணினேன். ஆனால் நீயோ தூய நீரினும் தண்ணியனாக உள்ளாய்! இதனைக் கண்டு மகிழ்ந்து உன்னைப் பாராட்டுகின்றேன். உன்னைக் காணுவதற்கின்றி வேறு எதனைக் கருதியும். யான் இங்கு வந்தேனல்லேன். உனக்கு நான் கூற விரும்புவன அனைத்தும் கூட்டிச் சேர்த்துக் கூறினால் இந்த ஒன்றே தான். கனவில் கூட உன்னைப் பிரிதலை அறியாது அரண்மனையிலே தனித்து வருந்தி இருக்கும் உன் கற்புடைய பெருந்தேவியின் கூந்தல் பூவினைப் பெற வேண்டும். நெற்றி பொலிவினைப் பெறவேண்டும். அதற்காக இப்பொழுதே தேரினைப் பூட்டிப் புறப்படுவாயாக! அச் செலவு உனக்கு விருந்தாகும்; உன் தேவிக்கு நலமாகும்! உறங்காத கண்ணர்களாய்த் திரிந்து போர்புரிந்து வாழும் உன் பகைவர்களும் போரை நிறுத்திச் சிறிது கண் ணுறங்குவதற்குத் துணையாகும் என்றுரைத்தருளினார். சேரனது வீர நெஞ்சம் புலவர் சொல்லை எண்ணியது. புலவரது அருளுள்ளத்தின் வேண்டுதலை அகற்றிவிட முடிய வில்லை. அவர் வேண்டியவாறே பாசறை நீங்கிப் புறப்பட்டான். உயிரோவியம் தேவியின் பிரிவுத் துயரைத் தெளிவாக எடுத்துரைத்த தன்மையும், பகைவேந்தருக்காகப் பரிந்துரைத்த பான்மையும், சேரனின் தன்மைகளைப் போற்றிக் கூறிய செம்மையும், நிற்காணுமாறே வந்தேன் என்ற சீர்மையும் சேரன் செவியைத் திறந்தன என்றால் புகழ்ச்சி யுரையாகுமோ? தேரினைத் தலைநகரம் நோக்கிச் செலுத்தினான். அவன் வரவினை எதிர்நோக்கியிருந்த தேவிக்கு விருந்தாயினான். வில்லும் வேலும் செய்ய மாட்டாத செயல்களைப் புலவன் சொல்லும் குறிப்பும் செய்து விடுகின்றன. காரணம் அன்று வாழ்ந்த புலவர்கள் நேரிய வாழ்வுடைய சீரியர்களாக இருந்தனர். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் மக்களும் மன்னரும் மதிப்புக் கொடுத்தனர். புலவர் கூறும் நல்லுரையை ஏற்பதிலே பெருமை கண்டனர். அதனால் தான் புலவர் பாடும் புகழைத் தலையாய புகழாகக் கருதி அரசர்கள் வாழ்ந்தனர். இதனால் கெட்டா போய்விட்டார்கள்? அவர்கள் ஆண்ட நாடு இன்று இல்லை! இருந்த நக ரில்லை! உறைந்த அரண்மனை இல்லை! உரிமைச் சுற்றம் உற்றார் எவரும் இல்லை. ஆனால் அவர்கள் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும் புலவர் தந்த பொய்யா உடல்கள் பாவடிவிலே அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவிய மாகத் திகழ்கின்றன அல்லவோ? இவையனைத்தும் சாகாப் பேறு பெற்றவை தாமே? பரிசளிப்பும் மறுப்பும் தலைநகரம் அடைந்த இரும்பொறை பெருங்குன்றூர் கிழாரை மறந்து விடவில்லை. பன்முறை வரவழைத்து அவர் உரையைக் கேட்டு மகிழ்ந்தான். அளவளாவிப் பேசிச் சிறப்புச் செய்தான். புலவர் பொன்னுரைகளைக் கேட்டுத் தலைவணங்கி நின்று தன் வாழ்வில் கொண்டொழுகும் திண்மை கொண்டான். இதன் இடையே அவனுக்கொரு வேட்கையும் கிளர்ந் தெழ லாயிற்று. ஒரு நாள் பேச்சின்ஊடே, புலவர் பெரும! நீவிர் ஈங்கண் வந்து பெருமைப் படுத்தியது குறித்து மகிழ்கின்றேன். அம்மகிழ்ச்சியினால் யான் நுமக்குத்தர விருக்கும் பரிசினைப் பெற்றருள வேண்டும் என்றான். புலவரோ யான் உன்னைக் கண்டு மகிழ்ந்து செல்லுவான் வேண்டி வந்தேனே அன்றிப் பாடிப் பரிசு பெறக் கருதினேன் அல்லேன்; சோழன் தந்த வளமே என் சுற்றம் முழுவதும் பல்லாண்டு காக்கப் போதுமானது என்று கூறி அரசன் தந்த பரிசுப் பொருளை மறுத்தார். நீவிர் உமக்காக இப்பரிசினைக் கொள்ளீர் ஆயினும் என் வேண்டு தலுக்காகவாயினும் ஏற்றருள வேண்டும் என்றான் அரசன். அதற்கும் புலவர் செவிசாய்க்காது இருந்தார். குறைவற்ற பொருள் இருக்கும் பொழுது மேலும் ஏன் பொருள் என்று எண்ணினார். இரும் பொறை அவ்வளவுடன் அமையாமல் வறுமைக்கோ அல்லலுக்கோ ஆட்படாதவர்களாக நும்மவர் இருப்பினும் அவர்கள் வியப்படையும் ஒன்றைக் கருதியேனும் இப்பரிசினைப் பெறுக என்று வற்புறுத்திப் பொற்காசுகள் வழங்கினான். சேரலைவிட்டு ஊர் சேர்தல் சேரல் புலவருக்குத் தர எண்ணிய பரிசுகள் பலவாம். ஆனால் புலவர் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனால் அவரைத் திங்கள் பல தன்னுடன் இருந்து செல்லுமாறு வேண்டினான். அறத்தை நிலை நாட்டும் ஒன்றே தம் தொண்டெனக் கொண்ட புலவர் பெருங்குன்றூர் கிழார், சேரன் உரையை ஏற்றுக் கொண்டு அரண்மனையிலே வாழ்ந்தார். சேரனது அன்புடைமையிலும், இன்சொல்லிலும் சுற்றம் தழுவிக் கொள்ளும் சிறப்பிலும், அரசியல் காரியங்களைச் செவ்வையாக நடத்திவரும் அருமைப் பாட்டிலும், அறிவின் மாட்சியிலும் ஈடுபட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். தம் கருத்துக்களைப் பத்துப் பாடல்களால் பாடிச் சிறப்புச் செய்தார். அவை பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்து எனப் பேர் பெற்றுத் திகழ்கின்றன. அதன் பின்னரும் அங்கேயே தங்கியிருக்க விரும்பாதவராய்ப் பெருங்குன்றூர் செல்ல விழைந்தார். அரசனும், புலவரின் பெருமைக்கேற்றபடி அவரை உயர்ந்த யானை மேல் ஏற்றி வைத்து ஏவலாளர்களுடன் ஊருக்கு அனுப்புவித்தான். ஊர் வந்து சேர்ந்தார். வியந்தார் புலவர் ஊருக்கு வந்த புலவர் பெருவியப்புக்கு ஆளானார். என்ன வெனில் பெருங்குன்றூர் தாம் பிரிந்து வந்த போது இருந்த நிலைமையிலே இப்பொழுது இல்லை. ஊராரனைவரும் மகிழ்ச்சியிலே திளைப்பதைக் கண்டார். பூத்த மலர்போல அனைவர் முகமும் அகமும் திகழக் கண்டார். வீடுகள் அனைத்தும் அழகு அழகாகக் காட்சிதரக் கண்டார். இடிந்ததும் கூரை போனதும், சிதைந்ததுமான வீடுகளையோ, வாடிவதையும் மக்களையோ அவர் காணவில்லை. உழவுக்குரிய வாய்ப்புக்கள் அத்துணையும் செய்யப் பெற்று வளம் சிறந்து காணப்பெற்றன. எங்கும் பச்சையும் பயிரும் கீரையும் கிழங்கும் காயும் கனியும் ஆகவே காணப்பெற்றன. வேறோர் ஊருக்கு வந்து விட்டோமோ என்ற திகைப்பும் ஏற்பட்டது. ஆனால் வரவேற்க வந்தோர் அனைவரும் பெருங் குன்றூர் கிழார் வாழ்க! புலவர் பெருமகனார் வாழ்க! என்று வாழ்த்திக்கொண்டு நிற்பதைக் கண்டே தம் ஊர் என உறுதி கொண்டார். அதன்பின் ஆங்கிருந்தவர்களொடும் அளவ ளாவிப் பேசி ஊரும் மனையும் வளமிகப் படைத்தவனும், ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பியவனும் சேரமான் இளஞ் சேரல் இரும்பொறையே என்பதை அறிந்தார். எனக்குத் தெரிந்தால் இச்செயலினை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று எண்ணியே என்னைத் தன் அரண் மனைக் கண்ணே திங்கள் பல தங்கியிருக்குமாறு செய்துள்ளான் போலும்! கைம்மாறு வேண்டாத இக் கடமையையுடைய சேரன் கொடை, மழைக்கு ஒப்பாவதன்றி எதற்கோ ஒப்புக்கூற இயலும்? வேண்டா என மறுக்கும் பொழுதும் அவரறியாமல் தரும் வள்ளல்கள் தமிழகத்தன்றி எங்கே பெருக வாழ்ந்தார்! அவர்கள் வாழ்க! என்று திசைநோக்கி, உள்ளம் களிதுளும்ப வாழ்த்தினார். புலவர் வீடு பின்னர் புலவர் தம் வீட்டினை அடைந்தார். அங்கே குவிக்கப் பெற்றிருந்த அணிகலங்களையும், அழகுப் பொருள் களையும், பொன்மணிகளையும் அளவிட்டுக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. சேரல் வாழ்க என்றே அவர் சிந்தை மீண்டும் கூறியது. ஊரார் அனைவரும் புலவரை வாழ்த்தினர். புலவரோ தமிழை வாழ்த்தினார். வாழ்க தமிழ் வளம்! என்று வாழ்த்திக் கொண்டே இனிது வாழ்ந்தார். மலைக் காட்சி பெருங்குன்றூர் குறிஞ்சி நிலத்தது என்றும், கிழார் மலைக் காட்சிகளில் தோய்ந்து நின்று கண்டு களித்தவர் என்றும் முன்னரே அறிவோம். கிழாரின் மலைக்காட்சிச் சிறப்பினை அவர்தம் பாடல்கள் காட்டுகின்றன. அவற்றுட் சிலவற்றை இங்கே காண்போம். மலைப் பகுதியிலே புற்று ஒன்று காணப்படுகின்றது. அது ஈயல்கள் வாழ்வதற்காக அமைத்துக் கொண்டதாகும். செறிந்த மரக்கூட்டத்தின் இடையே புற்று இருப்பதாலும், ஓயாமல் ஒழியாமல் அங்கு மழை பொழிந்து கொண்டிருப்பதாலும் அது தண்ணிதாக இருக்கின்றது. இப்புற்றிலுள்ள புற்றாஞ்சோற்றை உண்பதற்காகக் கரடி ஒன்று மான்கள் செல்லும் பாதையில், மின்னல் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு மெதுவாக வருகின்றது. வந்து புற்றின் மேற்புறத்தே சரிந்து உட்கார்ந்து கொண்டு புற்றாஞ்சோற்றை உண்பதற்காகக் கையைப் புற்றினுள்ளே நீட்டுகின்றது; துழாவுகின்றது. ஆனால் கரடி வருவதற்கு முன்னரே அப்புற்றுள் புகுந்து ஈயலை உண்ணச் சென்றிருந்த பாம்பு, கரடியின் தோலுறைக்குள் பொருந்தியதான கூரிய நகங்களுக்குட் சிக்குண்டு வலிமை தொலைந்து அழிகின்றது. பெரிய பன்றியொன்று மலைவழியே வருகின்றது. அது ஆண்பன்றியாகும். அதனைப் பின் தொடர்ந்து வாயைப் பிளந்து கொண்டு ஆண்புலியொன்று வருகின்றது. அது தக்க இடத்தே பன்றியை அடித்துக் கொல்லுகின்றது. இரத்தம் கசிய இட மெல்லாம் இழுத்துச் செல்லுகின்றது. இச் செயலால் மணம் மிகுந்த பலாத் தோப்பும் புலால் நாற்றம் உடையதாகின்றது மூங்கில் காடுகள் செறிந்த மலை அது. ஓரிடத்தே மூங்கிலுடன் புன்னை வாழை ஆகிய மரங்களும் செறிந்துள்ளன. அதன் பக்கத்தே அமைந்த தாழ்ந்த குழியொன்றில் நீர் நிறைந் துள்ளது. மூங்கில் முளையையும் வாழைப் பழத்தையும் உண்ண வந்த களிறு ஆழ்ந்த நீர்க்குழியிலே அகப்பட்டுக் கொண்டு மேலேற முடியாது வருந்துகின்றது. அதன் வருகையைக் காணாத பெண் யானை அங்கும் இங்கும் தேடிக் கண்டு பிடித்து, பெரிய பெரிய மரங்களையும், கிளைகளையும் ஒடித்துப் போட்டுக் களிறு ஏறி மேட்டுக்கு வரத் துணை செய்கின்றது. பெண்யானை மரங்களை முறித்த ஓசை விண்முட்டுகின்றது. குளிர்மிக்க முன்பனிப் பருவம் முடிந்தது. பின் பனிப் பருவம் தொடங்கியது. அப்பருவத்து மாலைப் பொழுதில் ஆண்மான் பெண்மானுடன் தண்மையும் செறிவும் மிக்க நிழல் ஒன்றில் தங்கியுள்ளது. அங்குள்ள மலர்ச் செறிவான படுக்கையிலே துயிலுகின்றது. பொழுது போவது கண்டு சுவைமிக்க பயற்றினைத் தின்று இன்புறுகின்றது. அரும்பு எதுவும் இல்லையாக வேங்கை மரம் பூக்கின்றது. அப்பொழுது மலை அதிரும்படி யானையொன்றைச் சாடி வீழ்த்துகின்றது புலி. மலை இமைப்பது போல் மின்னல் வெட்டுகின்றது. அகன்ற வாயினைக் கொண்ட தண்ணுமையை அடித்தால் போல அருவி விழுகின்றது. தினையைத் தின்றழிக்கும் பன்றியைப் பிடிப்பதற்குச் செய்துவைத்த அடார் என்னும் கற்பொறியிலே புலி யொன்று மாட்டிக் கொள்கின்றது. முசுக்கலைகள் மகிழ்ச்சிமிக்குக் காட்டு ஆடுகளுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடுகின்றன. இவை பெருங்குன்றூர் கிழார் கண்டுரைத்த காட்சிகளுட் சிலவாம். கருத்து நுண்மை இவையேயன்றி மலையில் வளரும் சந்தன மரத்தைப் பற்றி அரியதோர் ஆராய்ச்சிக் குறிப்பும் கிழார் வழங்கியுள்ளார். சந்தனக் கட்டைகளில் சில நறுமணமானவையாகவும், சில மணமற்றவையாகவும் இருக்கக் காண்கின்றோம். அவ்வேற்றுமைக்கு மரத்தின் வைரத்தையே காரணமாகக் காட்டுவர். ஆனால் கிழார் நுணுகி ஆராய்ச்சி செய்து அதன் பயனாக வேறொரு காரணங் கண்டு உரைத்தார். அது, ஏனை மரம் செடி கொடிகளின் வேர்கள் சந்தன மரத்தின் வேர்களோடு பின்னிப் பிணைந்து செல்லுமாயின் அம்மரத்தின் கட்டை நறுமணம் உடையதாகும், என்பதாம். இதனை நறைப்பவர் நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன என்று கூறினார். இங்குக் கூறியனவற்றால் பெருங்குன்றூர் கிழாரது காட்சிச் சிறப்பும், கருத்துச் செறிவும் ஒருவாறு புலனாம். விரிவு அவர் தம் பாடலில் காணற்குரியது. இதுகாறும் கூறியவற்றால் பெருங்குன்றூர் கிழாரது வரலாறு ஒருவாறு புலனாம். இவர் உழுதுண்ணும் உயர் குடியிலே பிறந்தார். அக்குடியின் இயற்கைப் பண்புக்கேற்ப வாழ் நாளெல்லாம் பிறருக்குதவி புரிந்து வாழுபவராகவே இருந்தார். தம் வறுமையைப் போக்க நினைக்கும் நேரத்தே உற்றார் ஊரார் வறுமையையும் போக்க நினைத்தார். மக்களொடு துவன்றி மனையறங்காத்தலில் சிறந்து விளங்கிய அவர் ஏனையோரும் அவ்வாறு இன்புற்று வாழவேண்டும் என்னும் பெருநோக்கு உடையவரானார். அதற்காகப் பேகனிடத்துச் சென்றும், இளஞ் சேரல் இரும்பொறையினிடத்துச் சென்றும் பயன் கருதாது பலவாறாய் எடுத்துரைத்துத் தம் வழிக்குக் கொண்டு வந்தார். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியாத அவர்தம் மான வாழ்வும், இல்லற மாண்பும், பிறர்க்கென வாழும் பெற்றியும் உலகைக் காக்குமாக! உயர் வினைத் தருமாக! பண்டைத் தமிழ் மன்றங்கள் முன்னுரை பழந்தமிழ் இலக்கியம் செவ்வியது; இனியது; சால்பு மிக்கது. அதனைப் பாடிய பெருமக்கள் அறிவியலின் ஏற்றமும், அறநெறியின் ஊற்றமும், கலை மாண்பும், பண்பாடும், பட்டறிவும் வாய்ந்தவர்களாக விளங்கினர். அவர்கள் காலத்தில், தமிழ் இலக்கியம் மன்பதையின் பொதுவுடைமையாக இருந்ததே அன்றித் தனியுடைமையாக இருந்ததில்லை. அவ்விலக்கியப் பொற்காலத்தில் புலவர் பேரவை மட்டும் அல்லாமல் புதுப்புது மன்றங்களில் புகுந்தும் தமிழ் பொலிவுற விளங்கியது. அதனை, இனிய, எளிய முறையில் விளக்குகின்றது இந்நூல், இதனைக் கற்போர் பண்டைத் தமிழர் வரலாற்றையும், வாழ்வியலையும், பேரருட் பான்மையையும், பன்மாண் புலமையையும் ஒருங்கே அறிந்து பயன் பெறுவர் என்பது என் கருத்து. இந்நூலை எழிலுற அச்சிட்டுத் தமிழ் உலகுக்குப் பயன் படச் செய்யும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும், கழக ஆட்சிக் குழுவின் தலைவர் உயர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கும் என் உள்ளார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வாழ்க! இங்ஙனம், இரா. இளங்குமாரன். 1. அரசவை அரசவை கூடியிருந்தது. அவையிடையே அரசர் பொலிவுடன் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னர் இரண்டு பக்கங்களிலும் வரிசைவரிசையாக அமைச்சர், படைத் தலைவர், அதிகாரிகள் ஆகியோர் தத்தமக்குரிய இடங்களில் அமர்ந் திருந்தனர். அரசின் வருவாய் குறித்து ஆராய்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. அரசின் வருவாய் குறைவாகவும், செலவு மிகுதியாகவும் இருந்தமை அரசர்க்குப் பெருந்தலைவலி யாகவே இருந்தது. பல நலங்களும் பல்கிப் பெருகியுள்ள இந்நாட்டின் பொருள்நிலை இவ்வளவு இழிநிலையில் இருப்பானேன் என்னும் ஐயம் அரசரைத் திகைக்கச் செய்தது. அவர் சிந்தனையில் தெளிவொன்றும் தோன்றுவதாக இல்லை. அந் நிலையில் அவைக்குப் பெரியவர் ஒருவர் வந்தார். பனிக்கட்டியின் பாடம் வந்த பெரியவர், ஆராய்ச்சிப் பொருளை அறிந்து உண்மை தெளிந்தார். அதனை அரசர்க்கு நயமாய் வெளிப்படுத்தும் வழியொன்று கண்டார். ஏவலனை அனுப்பி இரண்டு தட்டுக் களைக் கொண்டுவரச் செய்தார். இரண்டு பெரிய பனிக் கட்டித் துண்டுகளையும் கொணரச் செய்தார். அக்கட்டிகளைத் தட்டுக்கு ஒன்றாக வைத்து, அரசர்க்கு இரண்டு பக்கங்களிலும் இருந்தவர்களுள் கடைசியிலிருந்த இருவரிடம் கொடுத்துத் தட்டுக்களை அரசரிடம் சேர்ப்பிக்க வேண்டினார். அவர் வேண்டியபடியே தட்டுக்கள் கைமாறிக் கைமாறி இறுதியில் அரசரை அடைந்தன. ஆனால் பனிக்கட்டிகளோ உருகி உருகிக் குறைந்து போய்த்தான் அரசரை அடைந்தன. முதற் கண் இருந்த பனிக்கட்டிகளின் அளவு என்னே! அரசரை அடைந்த பனிக் கட்டிகளின் அளவு என்னே! எங்கே கரைந்தன பனிக்கட்டிகள்! இவை காட்டுவன என்ன? நாட்டில் வளம் இருந்தும், வருவாய் பெருகி இருந்தும் நாட்டுக்குப் பயன்படாது எப்படி எங்கெங்கெல்லாம் கரை கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் பெரியவர். அதன் பின்னர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் முறை பெற ஆராய்ந்து அரசர் வழிப்படுத்தினார். வருவாய் பெருகிற்று. இத்தகைய நிகழ்ச்சி ஒன்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகத்து அவை ஒன்றில் நிகழ்ந்தது. அறிவுடை நம்பி பாண்டி நாட்டைப் பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் காவலனாக இருந்ததேயன்றிப் பாவலனாகவும் விளங்கினான். வெள்ளை உள்ளத்தினனான் அவனிடம் அறம் அடைக்கலம் புகுந்திருந்தது. தன்னைப் போலவே அதிகாரிகளும் மக்களும் அறநெஞ்சம். படைத்தவர்களாக இருப்பர் எனவே கருதி இருந்தான். அதனால் அரசியலில் ஆங்காங்கே சில பல குறைபாடுகள் கிளம்பின. நன்னெஞ்சம் உடையவனாம் வேந்தன், நாட்டிலே நடந்து வந்த இவ்வன் செயல்களை அறிந்தான் அல்லன். அறிந்திருந்தோரும் அரச னிடம் சென்று உண்மை உரைத்தாரல்லர். அதிகாரிகளும், பதவி வேட்டைக்காரர்களும் செய்யும் கொடுமையைக் குறித்துக் காட்டுவதில் எல்லாருக்கும் துணிவு ஏற்பட்டுவிடமுடியுமா? அவர்களைக் குற்றம் சாட்டுவது கத்தியை நட்டு அதன் மீது பாய்வதற்கு ஒப்பானது அன்றோ! பிசிராந்தையார் பொதுநலம் நாடுபவர்கள் அச்சத்தால் நாட்டில் நடக்கும் தீய செயல்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். நல்லவற்றைப் பாராட்டுவதை எவ்வாறு நயத்தக்க செயல்களாகக் கருதுவார்களோ, அவ்வாறே அல்லவற்றை இடித்துக் காட்டுவதையும் அரிய கடமையாகக் கருதுவார்கள். இத்தகைய பொதுநலம் பூத்துக் குலுங்கும் புகழ்வாய்ந்த புலவர் மணியாகத் திகழ்ந்தார் ஒருவர். அவர் பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். ஆந்தையார் என்னும் பெயரினர். அரசனை நன்கு அறிந்தவர்; அவனைச் சூழ்ந்துள்ளவர்களையும் அறிந்தவர்; அரசராலும் நன்கு அறியப் பெற்றவர். அத்தகையவர்தாமே அறிவுரை கூறத்தகவுடையவர்! அரசவையில் புலவர் பிசிராந்தையார் அரசன் இயல்பையும், அதிகாரிகள் செயலையும், மக்கள் நிலையையும் தெள்ளிதின் அறிந்து, உண்மையை உரைத்து நாட்டைக் காப்பதொன்றே காலத்தால் செய்யும் நற்கடன் என்று துணிந்து அரசன் அவையை அடைந்தார். பாண்டியன் அறிவுடைநம்பி அரசியற் சுற்றம் சூழ்ந்திருக்கச் சிந்தனையில் ஈடுபட்டு இருந்தான். நாட்டின் வருவாய் நிலை குறித்த சிந்தனைக்கு இடையே - சிக்கலான பொருளாதாரச் சிந்தனைக் கிடையே - எவரும் புகமுடியுமா? mDkâ »£Lkh? அரசரும், அவையினரும் ஏற்பாரா? ஆட்சிச் சக்கரத்தை உருட்டிச் செல்லும் உயர் வட்டாரத் தினர் அன்றி எவரும் புகமுடியாத அவைக்கண் புகுந்தார் பிசிராந்தையார். காட்சிக்கு எளியனாம் பாண்டியன் அறிவுடை நம்பி, கவிக் குலக் கோமகனைக் கனிந்த சொற்களால் வரவேற்று இருக்கச் செய்தான்; இன்னுரை பல கூறினான். பின்னர், அவை, தான் மேற்கொண்ட பணியை ஆராயத் தொடங்கியது. புலவர் பெருமகனார்க்குத் தேடி வந்த வாய்ப்பு எளிதில் கிட்டியது; உள்ளத்தில் எழுந்த உணர்வை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தார். புலவர் பொருமல் நாட்டின் வருவாய் போதாது என்றும், குடிகளிடம் வரிகளைக் கூட்டி வாங்குதல் வேண்டும் என்றும் அதிகாரிகள் அனைவரும் ஒன்றுபோல் உரைத்தனர். அவர்கள் உரையையும் ஆராயாமல், மக்கள் உண்மை நிலைமையையும் அறியாமல் நல்லபடி நடக்கும் என்னும் கருத்தால் அமைதியாக இருந்தான் பாண்டியன். இவ்வளவு போதும் அல்லவா அதிகாரிகள் வேட்டைக்கு! ஏதேதோ வரிகளை அடுக்கினர். புலவர் பிசிராந்தையார் பொருமினார்; புண்பட்டார். இடித்துரைத்து இயல்நெறி காட்டுதற்கு உரிய இடம் இதுவே எனத் தெளிந்தார். திட்டமான கருத்துடைய அவர் தெளிவாகச் சொல்லமாட்டாரா? அருமையாக அவையோர் அஞ்ச, அறிவுடை நம்பி உண்மை நிலை அறிய அன்னைத் தமிழ் மொழியில் பேசினார். புலமை உரை வற்றா வயல்வள மிக்க பாண்டிய நாட்டின் வேந்தே! அறிவுடை நம்பி! இன்று இந்த அவையினிடை ஒன்று கூற விழைகின்றேன். அஃது உன்பொருட்டே ஆன ஒன்றன்று; உலகுக் கெல்லாம் உரித்தான பொதுமையான செய்தி. ஆனால் உன் முன்னிலையில் கூறுதற்குரிய நிலைமை இப்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. கேள்! நீ அறிவுடை வேந்தன் ஆகலின் - பைந் தமிழ்ப் பாவலன் ஆகலின் - என் மொழியை இனிது கேட்டு நடப்பாய் என்று நம்புகின்றேன் புலவர் மணியே! ஐயம் வேண்டா; தங்கள் பொன்னுரையை என் தலைமேல் கொண்டு போற்றி ஒழுகத்தவறேன்; புகலுங்கள் என்று கைகூப்பித் தலைதாழ்த்து நின்றான் நம்பி. அவையோ, புலவர் உரையை நோக்கி செவிசாய்த்துக் கிடந்தது. உவமை விளக்கம் நீர் வளமும் நிலவளமும் ஒருங்கமைந்தது நின் நாடு. இவ்வளங்களால் நின்னாட்டில் வயல் நிலமெங்கும் நெற்பயிர் கரும்போ, வாழையோ, கமுகோ, என்று ஐயுறுமாறு வளர்ந்து வளம் நல்கிவருவது கண்கூடாகும். மக்கள் பசித்துயர்க்கு வேண்டிய அளவில் உணவுதர முடியாத நாடா உன் நாடு? மா என்னும் அளவினையுடைய சிறு நிலத்தின் விளைவு கூட மலைபோன்ற பெரிய யானைக்கும் பல நாளைக்கு உணவாகப் போதுமே! இத்தகைய வள நாட்டின் வருவாய்க்குக் குறைவு ஏது? கால்வாயில் நீர் குறைவின்றிப் பெருக்கெடுத் தோடி வந்தும் குளத்தில் நீர்ப் பெருக்கு இல்லை என்றாலும், மடையில் இருந்து வாய்க்கால் வழி வெளியேறியும் வயலுக்கு நீர் எட்டவில்லை என்றாலும் ஏதோ தக்க காரணம் இருக்க வேண்டும் அல்லவா! என்று புலவர் தாம் கூற வந்த அறிவுரைக்கு முகவுரை வகுத்துக் கொண்டார். அறிஞரே! இதுவே எனக்கு இப்பொழுதுள்ள சிக்கல்; இந்த அவைக்கும், நாட்டுக்கும் பொதுவாகவுள்ள சிக்கல்; இதனைத் தீர்த்து வைக்கும் அளவில் திட்டம் தந்தால் மிக மகிழ்வேன். காலத்தில் தங்கள் வருகை கிடைத்தமை எங்கள் கடமையைச் சிறப்புற ஆற்றத் துணை செய்யும் என்று கருது கின்றேன் என்று அகமும் முகமும் மலர்ந்து புலவரை வேண்டினான் அறிவுடை நம்பி. அவைக்கண் இருந்த பலரும் திரு திரு என விழித்தனர். குற்றமுள்ள நெஞ்சும், குழிபறித்துக் கொடுமை செய்யும் நெஞ்சும் குறு குறு க்கும் அல்லவா திறமான முறை மா அளவுள்ள நிலத்தின் விளைவும் யானைக்குப் பன்னாள் உணவாகலாம்! எப்படிச் செய்தால்? மணி முற்றிய பின் அறுத்துப் பக்குவயமாய் அடித்துச் சிந்திச் சிதறிப் போகாமல் காத்து, வேண்டும் அளவுக்கு அரிசி ஆக்கிச் சமைத்துக் கவளம் கவளமாக உருட்டி உரிய பொழுதுகளில் உணவாகத் தந்தால், யானைக்குப் பன்னாள் உணவாகும். ஆனால் கதிரை அறுக்காமலே களிற்றைக் கழனிக்குள் கட்டுப்பாடற்று ஏவித் தின்ன விட்டு விட்டால், இல்லை, கதிர் ஈனுமுன்னே - பச்சைப் பயிராக இருக்கும்போதே - களிற்றைச் சுற்றித் திரிய விட்டு விட்டால்? என்று வினாவில் நிறுத்தினார் சொலல் வல்ல புலவர் பெருமான். அவ்வளவும் சிறிது பொழுதில் அழிந் தொழியும்; யானையின் பசிக்கும் அஃது உணவாகாது என்றான் அறிவுடை நம்பி. புலவர் தொடர்ந்தார். ஆமாம்! மா அளவு அன்று, மாபெரும் நிலமாகவே இருக்கட்டுமே! யானை மட்டும் கட்டுக் காவல் இன்றி நுழைந்து தின்னத் தொடங்கினால் போதும்! அனைத்தும் கெட்டொழியும். யானை யாவது நிறைந்த பயன்பெறுமா? அதன் வாய்க்குள் செல்லும் உணவைப் பார்க்கிலும், காலால் மிதிபட்டு மண்ணோடு மண்ணாகிக் கெடுவதே மிகுதியாகும். அதன் மிதிப்பிலும், நசுக்குதலிலும், அசைப்பிலும், ஆரவாரத்திலும் கெடாப் பயிர் இருக்க முடியுமா? முடியவே முடியாது என்றான் நம்பி. முடிப்புரை இவ்வுண்மையை அறிவுடைய வேந்தன் உணர வேண்டும். உண்மையாக உணர்ந்து, உள்ளத்தே கொண்டால் நாடு நலம் பெறும்; கோடி கோடியாகச் செல்வம் பெருகிக் குவிந்து மன்னனுக்கும் மக்களுக்கும் நன்முறையில் பயன்படும். ஆனால், அரசன் இம்முறையினை அறியாது, அறநெஞ்சம் சிறிதும் இல்லாத அரசியல் சுற்றத்தார்களுடன் கூடி இருந்து, இரக்கம் என்னும் ஒரு பொருளை எண்ணாமல் மக்களை அலறவைத்து, வரிவாங்குவதை மேற்கொண்டால், யானை தானும் உண்ணாமல், வளத்தையும் கெடுத்தது போல், அரசன் தானும் பயன் பெறாது நாட்டையும் கெடுத்தவன் ஆவான். அவன் நாடு ஒன்று மட்டுமோ கெடும்? தீய அவ்வேந்தனின் செயல் உலகைக் கெடுக்கவும் தவறாது. இதனை அரசனாய நீயும், உன் சுற்றமாகிய இவ்வவையினரும் நன்கு அறிந்து செயல்படுவீர்களாக என்றார் பிசிராந்தையார். சொல்லிய வண்ணம் செயல் அறிவுடை நம்பி, ஆன்றவிந்து அடங்கிய சான்றோராம் ஆந்தையார் உரையில் தன்னை மறந்து அரியணையில் சாய்ந்து இருந்தான். அவையோர் முகத்தில் உயிர்க்களை இல்லை. புலவர் பொன்னுரை நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. சொல்லும் சொல்லை, வெல்லுஞ் சொல் இல்லாதவாறு சொன்னார் அல்லரோ புலவர்! கட்டவிழ்த்து விடப்பெற்ற களிறு கழனியைச் சிதைப்பது போல, அதிகாரிகள் மக்களைச் சிதைத்து வருத்தி வரிவாங்கு கின்றனர் என்றும், கதிர், யானையின் வாய் புகுவதனினும் காலில் பட்டுக் கெட்டு ஒழிவது மிகுதியாதல் போலக் கருவூலம் வரும் பொருளினும் கையாடல், கையூட்டுக் (இலஞ்சம்)களால் அதிகாரிகள் கொள்ளை கொண்டு செல்வதே மிகு பொருள் என்றும், அரசின் வருவாயும் குறைந்து, நாடும் சீர்கேடு அடைய நேரிடுகிறது என்றும் தெளிவாக அறிந்தான் பாண்டியன் நம்பி. அறிந்ததை நாளை என்று தள்ளிப் போடாமல் உடனே நடை முறைக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டினான்; செயலாற்றினான்; நாடு வளம் பெற்றது; மக்கள் நலம் உற்றனர்; நம்பியும், புகழும் பொலிவும் ஒருங்கு பெற்று மகிழ்ந்தான் அறிவுடை நம்பி அல்லவா! புலமைப் பயன் புலவர் புலமை அவருக்கு மட்டுமோ பயன் பட்டது? அவர் சுற்றத்தின் அவவிலேயோ நின்றது? அவர் புலமை நலம் நாட்டுக்கு - ஏன்? உலகுக்கே பயன் பட்டது; பயன்படுகின்றது! பயன் படவும் செய்யும்! அவர் வாழ்க! புலவர் பிசிராந்தையார் தம் இலக்கியப் புலமையை இலக்கியம் வல்ல புலவர் இடையிலா காட்டினார்? புலவர் களுக்கு மட்டுமா இலக்கியம் உரிமை உடையது? இலக்கியம் பொதுச் சொத்து! மொழி பேசும் அனைவருக்கும் உரிய பொது நலச் சொத்து! அதனைத் தெள்ளிதின் அறிந்த பெரு மகன் ஆதலால், பிசிராந்தையார் அரசனது பொருள் ஆய்வுக் களத்தில் புகுந்து விருந்து படைத்தார்; நல்ல மருந்தாகவும் படைத்தார். விருந்தாகவும் மருந்தாகவும் அமையச் சமைத்துப் படைப்பது, அரிய கலை வல்லார்க்கும் அரிய கலை! அக் கலையில் கைதேர்ந்தவர் ஆந்தையார். ஆதலால், அரசவையையே இலக்கிய மன்ற மாக்கி இன்றமிழ் விருந்து படைத்து விட்டார். விருந்தின் சுவையோ, ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் நயத்தக்க நறுமணம் கமழ்வதாக உள்ளது. அவர் செய்த விருந்துப் படையல் இதோ...! காய்நெல் லறுத்துக் கவளம் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும், நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்; 5. அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்டம் நச்சின் 10. யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே (புறநானூறு: 184) 2. அரண்மனை பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்கிறார்கள். உண்மை தான்! ஆனால், இவ்வுரையை மாற்றி அமைக்க வல்ல மாண்பினர் எவரும் மாநிலத்தில் பிறக்கவில்லையா? ஊழையும் புறங்காணும் ஊக்கம் மிக்கவர்களைப் பசித்துயர் என்னதான் செய்துவிட முடியும்? வறுமைப் புலவர் பெரிய அடுப்பு; உலையேற்றி எத்தனையோ நாட்கள் இருக்கும்; காட்டுக் காளாணும் வீட்டின் அடுப்பில் கொழுத்து வளரும் படியான வறிய வாழ்வு; பசியால் துடித்து அழும் பச்சைக் குழந்தை; அதனை ஆற்றும் வழிவகை எதுவும் அறியாத அன்புத் தாய்; இருவர் தம் இடர்மிக்க நிலைமையையும் எப்படித் தீர்ப்பது என்னும் ஏக்கமிக்க தந்தை - இத்தகைய குடும்பம்; குடும்பத்தின் தலைவர் யார்? வறுமைத் தந்தையை தலைவர்; அவர் ஒரு புலவர் - பெரும் புலவர்! பெருந்தலைச் சாத்தனார் என்பது அவர்தம் பெயர். முதிரத்து வள்ளல் முதிர மலைக்குத் தலைவனும், நிகரில்லாத கொடை யாளனுமான குமணனைக் காணப் புறப்பட்டார். புலவர் சாத்தனார். கொற்ற மாமுடி தாங்கிக் கோல் செலுத்திக் கொண் டிருப்பான் குமணன் என்று எண்ணிக் கொள்ளை ஆசையோடு வந்த புலவர் குமணனைக்கண்டார் அல்லர். ஏன்? குமணனுக்கு இளங்குமணன் என்னும் தம்பி, ஒருவன் இருந்தான். அண்ணன் புகழ் ஓங்குவது கண்டு பொறாமையும், புலவர் முதலாயவர்களுக்கு வாரி வாரி வழங்கினால் பொருள் அனைத்தும் தொலைந்து போகுமே என்பதால் உண்டாய கவலையும் கொண்டு அண்ணன் குமணன் மேலும், அடுத்து இருந்த பெருமக்கள் மேலும் கோபமும் கொதிப்பும் உடையவனாய் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கொடுஞ்சொல் கூறிக் கொண்டிருந்தான் அவன். ஆம்! அவன் அறநிலை பிறழ்ந்து மறநிலை பேணினான். கண்ணினும், கருத்தினும் நல்ல அண்ணனைப் பகைவனாகவே கருதினான். இளங் குமணன் நெஞ்சில் வஞ்சம் நிலைத்தது; வாயில் வசை கிளைத்தது. செயலில் வன்கொடுமை ஊன்றியது. தன்னொத்த குணமுடைய வட்டத்தைத் தன்ன தாக்கிக் கொண்டு, சூழ்ச்சியால் நாட்டைக் கவரத் திட்ட மிட்டான். வள்ளல் குமணன் - வையம் வாழ வாழும் தாய்மைக் குமணன் - தம்பி சூழ்ச்சியையும், தகவற்ற துணிவையும், அவனுக்கமைந்த துணையையும் எண்ணி நயத்தக்க ஒரு செயலைச் செய்தான். காட்டில் கவிஞர் தம்பி மகிழ, கலைவல்லார் கவல, நாடு விடுத்துக் காடு தஞ்சமாக அடைந்தான் குமணவள்ளல் பாராண்ட வேந்தன் பாழுங் காட்டிலே வாழும் போழ்திலேதான் புலவர் பெருந் தலைச் சாத்தனார் அவனைத் தேடி அரண்மனைக்கு வந்தார்; நடந்த செய்தியை அறிந்தார்; காட்டுக்கே நடந்தார். கொடுங் கோல் மன்னர் வாழும் நாட்டில், கடும்புலி வாழும் காடே நன்று என்பது மன்னன் அதிவீர ராமன் ஆய்ந்து கண்ட முடிவுரை அல்லவா! தாயும் சேயும் தாய்க்கு எத்துணையோ தொல்லைகள் இருக்கலாம். எனினும் குழந்தை அவற்றைப்பற்றி எண்ணிப் பார்த்தா தன் ஆவலை வெளியிடுகின்றது? இடம், காலம் தெரிந்தா தன் வேட்கையை வெளியிடுகின்றது? அதன் கருத்து அனைத்தும் தான் விரும்பியதை எவ்வாறேனும் பெற வேண்டும் என்ற ஒன்றை அன்றி வேறென்ன உண்டு? குணங்களால் உயர்ந்த வள்ளல் குமணன் தாயாக இருந்தான். வேட்கையை உரைத்து நிறை வேற்றிக் கொள்ளும் விருப்பு மிக்க குழந்தையாக இருந்தார் பெருந்தலையார். நொந்த புலவர் வறியவர் துயர் துடைக்கும் வள்ளல் பெருமானே! குமண! குழந்தை பசித்துயரால்தாய் முகத்தை நோக்கியது; தாயோ என் முகத்தை நோக்கினாள்; நானோ, வள்ளலாகிய நின் முகத்தை நோக்கி வந்தேன்; நேற்றுக் கொன்றது போல் வந்த வறுமை இன்றும் வருமோ என்று எண்ணி எண்ணி நொடி தோறும் வறுமைத் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நான், உன்னை எப்படி வற்புறுத்தியாகிலும் பரிசு பெறாமல் போதற்கு இயலாது என்று வந்த நோக்கத்தை யுரைத்தார் நொந்த புலவர். வாட் கொடை பாவம்! குமணன் யாது செய்வான்? கொடிது கொடிது வறுமை கொடிது என்பது உண்மை தான். ஆனால் வறுமைத் துயரைக் கேட்ட அளவில் அதனை ஓட்ட வழிவகை வேண்டுமே! அல்லது, எதுவும் தருதற்கு இல்லை; போய்வா என்று கல்லாக நின்று சொல்லுதற்கு ஏற்ற உள்ள உறுதியேனும் வேண்டுமே! புலவனைப் பற்றிய பொல்லாத வறுமையைக் கண்டு பொருமி அழும் புரவலன் குமணன் நெஞ்சத்தில் அத் தகைய வன்மை உண்டாகுமா? தருகை நீண்ட தனிப் பெருங் கொடையாளனாகிய அவன் கைகள் தாம் வாளா கிடைக்குமா? நாட்டை இழந்தது என்னைப் பொறுத்த அளவில் சிறிய அளவில் கூடத் துன்பமாக இருந்தது இல்லை. நல்லவர்களும், கலை வல்லவர்களும் காப்பார் இன்றிக் கவலை அடைவார்களே என்ற கனிவால் ஏற்பட்ட துயரம் மட்டும் ஓரளவு எனக்கு இருந்தது உண்மை. கருப்பைக்குள் முட்டைக்கும், கல்லினுள் தேரைக்கும் விருப்புற்று அமுது அளிக்கும் இறைவன் இருக்கும் பொழுது இக் கவலை நமக்கேன் என்று துணிவு கொள்ள என்னால் முடிந்தது. ஆனால் வாட்டும் வறுமை, பிடர் பிடித்துத் தள்ளக் காட்டுக்கு வுந்த பாட்டுத் திறன் மிக்க பாவலனை வெறுங்கையனாக விடுவதுதான் கொடுந் துயராக உள்ளது என்று ஏங்கினான். வரிசை அறிந்து வழங்கிப் பழகிய கை வாளா கிடக்காமல், வாளைத் தூக்கியது. புழுத்தலைப் புலையனேன் தலைக்குப் பெருமதிப்புள்ள விலை தருவதாகக் கூறியுள்ளான் தம்பி இளங் குமணன்; என் தலையைக் கொய்து கொண்டு சென்று கொடுத்து உம் வறுமையைப் போக்குக என்று வலியுறுத்திக் கூறி வாளைப் புலவர் கையில் தந்தான். எழுத்தாணி பிடித்து வளர்ந்த மெல்லிய நல்ல கை, வாளை வாங்கியது; ஏங்கியது உள்ளம். பொது நலப் புலவர் புலவர் உள்ளத்தே புத்துணர்வு ஒன்று புகுந்தது. நல்ல வேளை! நாட்டுக்கு நல்ல வேளை! இவ்வேளையை நழுவ விடுதல்கூடாது என்று எண்ணினார். இவ்வாளை இவ் வள்ளல் கையில் இருந்து வாங்கியதே நலம்; இதனைக் கொண்டு எவ்வளவோ செய்யலாம்; இன்னாத பொழுதில் கூட இனிய வாய்ப்பு எய்துகின்றது! என்று துணிந்து, காட்டெல்லையிலே நில்லாமல், நாட்டெல்லையிலே கால் வைத்தார் புலவர் சாத்தனார்; இளங்குமணன் இருக்கும் அரண்மனையை அடைந்தார். தனித்திருந்த இளங்குமணன், தடையின்றி உள்ளே வாளுடன் வரும் புலவரைக் கண்டு தயங்கினான். அதற்குள் வெற்றி! வெற்றி என்று முழக்க மிட்டார் புலவர். திகைத்து நின்றான். இளங்குமணன். புலவர் பசித்துயர் போன இடம் தெரியவில்லை; வறுமைக் கொடுமை தலைகாட்டவே இல்லை; முதற்கண் வந்த போதிருந்த நோக்கம் சிந்தை விட்டு அகன்றது. புரிய புதிய எண்ணம்; புதிய புதிய வேட்கை; புதிய புதிய செயல்கள்; ஆம்! தன்னலங் கடந்த பொதுநலப் புலவர் கோன் ஆகிவிட்டார்! வெற்றி ! வெற்றி ! சிந்தனையில் ஆழ்ந்திருந்த இளங்குமணன் நிமிர்ந்து புலவரைப் பார்த்தான். வேந்தே! வெகுண்டு வந்தாரை விண்ணுலகுக்கு அனுப்புவதை விளையாட்டாகக் கொண்ட வீர வேந்தன் குமணனை எளிதில் வென்ற அரிய வெற்றிச் செருக் கோடு வருகின்றேன் என்றார். வெற்றி கொண்ட மகிழ்ச்சி ! - குமணனை - அண்ணனை - வெற்றி கொண்ட மகிழ்ச்சி! கையிலே வாள்! ... குமணனைக் கொன்றுவிட்டாரா?... உடன் பிறப்பின் உணர்ச்சி எழும்பியது இளங்குமணனுக்கு. புலவர் தொடர்ந்து பேசினார்: உலகநிலை இந்த நிலைபேறு இல்லாத உலகத்தே ஒருவன் நிலைக்க வேண்டுமானால் யாது செய்தல் வேண்டும்? சாவாமல் எவரும் இருக்க முடியுமா? முடியாதே! ஆயின், இறப்பினைக் கடக்கும் திறனற்ற மக்கள் நிலைப்பது எப்படி? இறப்பு என்பதை அறியாத ஒன்றனைத் தஞ்சமாக அடைதல் வேண்டும். இறப்பு இல்லாத அந்த ஒன்று எது? அதுவே புகழ், புகழை உலகில் நிலைநிறுத்தி இறந்தவர்களே என்றும் நிலைத்தவர்கள். புகழை நிலைநிறுத்த வழியென்ன? ஈகையே வழி! இல்லை என்று இரந்து வந்தவர்க்கு இல்லை என்று கூறாமல் உதவவேண்டும். ஈயும் கை உடையவரே ஈகை யாளர். ஈகைத் தன்மை இல்லாதவர் உலகில் இருந்தும் இல்லாதவரே! பலர் தம் செல்வத்தைச் சிக்கெனப் பிடித்துப் பிறர்க்குச் சிறிதும் உதவாக் குற்றத்தால், வள்ளல்கள் வரிசையில் வைத்து எண்ணப்படாமல் போய் ஒழிந்தார்கள் இத்தகையவருள் ஒருவனா யான் வெற்றி கொண்டு வந்திருக்கும் வேந்தன்! வள்ளலின் வாள் கால் அளவும் தாழ்ந்து தொங்கும் மணிகள் ஒலிக்க, பார் அதிர நடந்து, களத்திலே வெற்றி காணும் அழகிய நெற்றியினை உடைய யானை முதலாக உள்ள உயர்ந்த பொருள்களையும் எண்ணிப் பாராமல் பாடி வந்தவர்களுக்குப் பரிசாகத் தரும் வள்ளல் குமணனைக் கண்டு என் வறுமை நிலைமையைச் சொன்னேன். பாடி வந்த புலவன் பரிசின்றி மீள்வது நாடு இழந்ததினும் மிகக் கொடுமையானது என்று எண்ணித் தன் தலையைத் தருமாறு வாளைத் தந்தான். உயிரினும் உயரிய பொருள் ஒன்று உண்டா? உயிர்க் கொடை பெற்ற உவகைக்கு ஓர் அளவும் உண்டா? அவ்வுவகை பிடர் பிடித்துத் தள்ளவே உன்னிடம் வந்தேன் என்றார் சாத்தனார். விலங்கியல் விலகியது புலவர் உரை, இளங்குமணன் செவியைத் தட்டித் திறந்தது; சிந்தனையை மூட்டியது. தன் செயல் தவறு மிக்கது என்பதைத் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டியது. வள்ளல் குமணனுக்கும் கேடு சூழ்ந்தாயே கொடியாய்!என்று நெஞ்சம் குத்திக் குடைந்தது. களிறுகளை வெட்டி வெட்டிக் களத்திலே பரணி பாடிய வாள் - சாத்தனார் கையில் இருந்தவாள் -, கவிப் புலவன் கைப் பொருள் ஆனேன் என்று இளங்குமணனை நோக்கிச் சிரிப்பது போல் ஒளிவிட்டது. இந்நிலைமையில் விலங்கு நிலைமை விலகி ஓட மனித நிலைமை வந்து சேர்ந்தது. அண்ணன் இருந்த காட்டுக்கு ஆர்வம் உந்த ஓடினான் குமணன் தம்பி. காலடியிலே வீழ்ந்து கண்ணீர் சொரிந்தான். கட்டித் தழுவி எடுத்துக் கலக்கம் போக்கினான் அண்ணன். புலவர் செய்த பொருள் மிக்க செயலை அறிந்தான் குமணன். பெருந்தலை தம்பி வேண்டலும், புலவர் தூண்டலும் உந்தக் குமணன் காடு விடுத்து நாடு வந்து சேர்ந்தான். முதிரத்து மக்கள் மகிழ்வில் முதிர்ந்தனர். புலவர் சாத்தனார் குமணனது பெறற்கரிய தலையை - பெருமை மிக்க தலையைக் காத்தமையால் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பெருமக்களால் பெருமைப் படுத்தப் பெற்றார். கோவேந்தன் சிறுமையைப் போக்கிய பாவேந்தர் பெருமையை எண்ணும்போது பெருந் தலைச் சாத்தனார் என்னும் பெயர்த் தகவு நன்கு தோன்றும்! நல்ல நடுவர் சாத்தனார் தமிழ்ப் புலமை எதற்குப் பயன் பட்டது? எவ்வாறு பயன்பட்டது? எவ்விடத்தே பயன்பட்டது? நான்கு பேர் நன்று! நன்று! என்று தலை அசைத்துப் போற்றுதற் காகவா இலக்கியத்தைப் பயன் படுத்தினார்? பிளவுபட்டு நின்ற - பண்பில் பெரு வேற்றுமையுடன் நின்ற - உடன் பிறந்தவர்களை ஒன்றுபடுத்தும் நடுவராக இருந்தார் சாத்தனார். ஒன்றுபடுத்தும் அறத்தின் வரிச் சட்டமாக இருந்தது அவர் உரை அறம் வளரும் மன்றமாகவே ஆக்கிவிட்டார் இளங்குமணன் இருந்த அரண் மனையை! காலம் கருதி இடம் தெரிந்து, உள்ளத்தில் ஊன்று மாறு உரிய முறையில் உரைத்து நலமொன்றே செய்யும் நல்ல நடுவராக இருந்தார் சாத்தனார். அதே பொழுதில், அரிய இலக்கியப் புலவராகவும் இருந்தார். அதனால் அரண்மனையில் இருந்த அரசன் ஒருவனையே முன்னிலைப் படுத்தித் தம் இலக்கியச் சொற்பொழிவை வெற்றியுற நடத்திக் கொண்டார். விரும்பிய பயனையும் பெற்றார். அவர் அன்று படைத்த அந்த இலக்கியம் இன்றும் பொலிவோடு புறநானூற்றில் விளங்கக் காண்கிறோம். தாய்த் தமிழ் என்ன ஆளத் தகுதியற்ற மொழியா? சட்டத்தைத் தாங்கும் சால்பில்லாத மொழியா? பெருந்தலைச் சாத்தனார் படைப்பு வருமாறு மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே; துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க் கீஇ யாமையிற் றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே; 5. தாடாழ் படுமணி இரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் 10. நாடிழந் ததனினும் நனிஇன் னாதென வாடந்த தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி உவகையொடு வருவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. (புறநானூறு : 165) 3. அந்தப் புரம் சிலப்பதிகாரம் உயரிய செந்தமிழ்க் காவியம் ஆகும். அக்காவியத் தலைவி கண்ணகியார். அவரை அன்றி மற்றொரு கண்ணகியாரும் சங்க காலத்தே வாழ்ந்தார். அவர் மயிலுக்குப் போர்வை அளித்த மாபெருங் கொடையாளனாம் பேகன் என்னும் அரசனின் மனைவியார் ஆவர். பழம் பொதினி முருகன் திருக்கோயிலுடன் திகழும் பழனி பண்டைய நாளில் பொதினி என்னும் பெயருடன் இலங்கியது. பொதினியைத் தலைநகராகக் கொண்டு ஆவியர் குடியினர் என்னும் பழந்தமிழ்க் குடியினர் பன்னெடுங்காலம் நன்னிலையில் ஆண்டு வந்தனர். அக்குடியிலே புகழொடு தோன்றி பொலிவுற விளங்கியவனே பேகன் ஆவான். கொடை மடம் பேகன் புகழ், நாடெங்கும் பரவியது. அதற்குக் காரணம் அவனது கொடைத் தன்மையேயாம். மழையானது எவ் விடத்தில் பெய்ய வேண்டும், எக்காலத்தில் பெய்ய வேண்டும், எவர்க்குப் பெய்ய வேண்டும், எவ்வளவு பெய்ய வேண்டும் என்ற கருத்து இல்லாமல் எல்லார்க்கும் ஒன்று போல நினைத்த பொழுதில் நினைத்த அளவில் கொட்டிச் செல்கின்றது அல்லவா! அம்மழை போலவே அரும் பொருள்களை அள்ளி வழங்கியவன் பேகன்! அத்தகைய கொடையையும் இன்று செய்யின் நாளை அவர் தருவார் என்றும், இப்பிறவியில் கொடை புரிந்தால் மறுபிறவி நலத்திற்குத் துணையாம் என்றும் எண்ணிக் கொடுப்பவரே மிகுதியானவர்கள். ஆனால் பேகனோ இம்மை, மறுமை நலங்களை நோக்கிக் கொடுத்தான் அல்லன். பிறர் வறுமை நோக்கியே கொடுத்தான். கார்முகில் கண்டு களிப்பு மிக்கு ஆடும் கலாப மயிலைக் கண்டு மழையின் குளிரால் நடுங்குகின்றதாகக் கருதித் தானுற்ற வாடைத் துயரையும் ஒரு பொருளாக எண்ணாமல் தன் மேலாடையை எடுத்துப் போர்த்தும் அளவுக்கு ஈரம் அமைந்திருந்த அவன் இளகிய நெஞ்சம், ஏழையர் துயரை, இரவலர் வறுமையை, இது வேண்டும் என்று வேண்டி வந்தோர் அவலத்தைப் போக்காமல் இருக்குமா? பொழுதெல்லாம் கொடைப் பொழுதாகவே கழித்தான். தன்னிடம் பொருள் பெற்றபோது இரவலர் முகத்தில் தோன்றிய புன்முறுவலையும், களிப்பையும் கண்டு கண்டு இன்புற்றான். ஈத்துவக்கும் இன்பமே இன்பமாகக் கொண்ட அவன் புகழ் புவி சுருங்கும் அளவுக்குப் பெருகி வளராதா என்ன? இனிய இல்லறம் வள்ளல் பேகனுக்கு அன்புடைய மனைவியாக வாய்த்தவர் கண்ணகியார் அல்லரோ! அவர் திண்ணிய கற்பும், இணையிலா அழகும் வாய்ந்தவர் மனைமாண்பு மிக்கவர்; மறந்தும் பிறர் துயர் காணப் பொறுக்காதவர்; பிறருக்குத் துயரம் ஊட்டுமாறு வாழ்வதைக் கனவிலும் கருதாதவர்; இத்தகு குணக் குன்றாம் கண்ணகியாரும், வள்ளல் பேகனும் கருத்து ஒருமித்து இல்லற வாழ்வினை இனிது நடத்தி வந்தனர். இல்லறம் என்பது இவ் வாறல்லவோ இருத்தல் வேண்டும் என்று கண்டோர் பாராட்டி யுரைக்க அவர்கள் இல்லறம் சிறந்து திகழ்ந்தது. நல்லூர் நங்கை ஆண்டுகள் சில உருண்டன. பேகன், நல்லூர் என்னும் ஊருக்கு ஒரு சமயம் சென்றிருந்தான். அவ்வூர் அவனை மிகக் கவர்ந்தது. அதனினும் அவ்வூரில் இருந்த மங்கை நல்லாள் ஒருத்தியின் அழகு அவனைப் பெரிதும் கவர்ந்தது. காண்பவர் உள்ளத்தைக் கொள்ளும் அழகியான அவளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டான். அவன் அரண்மனைக்கு வந்தபோதும் அவன் உடல்தான் வந்ததே அன்றி. உயிர் நல்லூரில்தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் அவனால் நல்லூர் நங்கையை மறக்க முடியவில்லை. வேந்தனான அவன் அடிக்கடி அவ்வூருக்குச் சென்று அவள் வீட்டையே தஞ்சமாக அடைந்தான். நாள் செல்லச் செல்ல அவளைப் பிரிய மாட்டாத அளவுக்கு அன்பன் ஆகிவிட்டான். அவளும் தன் உயிரைப் பேகனிடம் ஒப்படைத்தவளாகவே விளங்கினாள். இரும்பும் காந்தமுமாய் இணைந்துவிட்ட அவர்கள் பிரிந்து வாழ ஒருப் படவில்லை. நல்லூரிலேயே தங்கலாயினான் பேகன். முல்லை வேலி அரசனே குடிவந்தபின் குடிசை குடிசையாகவே இருக்குமா? வளமனையாக மாறியது; சோலைகளும், நீராழி மண்டபங்களும், கலைக் கூடங்களும், நிலா முற்றங்களும் உருவாயின. வளமனைக்கு வேலி அமைத்தான். எப்படி? சுவராலா? கற்களாலா? முட்செடிகளாலா? இல்லவே இல்லை! முல்லைக் கொடிப் பந்தர்களாலேயே வேலி அமைத்தான். காற்றூர்ந்து வரும்பொழுது காத தூரம் மணம் பரப்பும் வண்ணம் கவின்மிக்க முல்லைப் பந்தரையே வேலியாக அமைத்தான் என்றால், மலை போலக் காட்சி வழங்கிய மனைக்குள்ளே அவன் என்னென்ன வேலைப்பாடுகள் செய்தி ருப்பான்! அவன் வீட்டிற்குள் செய்துள்ள வனப்பை எவர் கண்டார்? வேலி வனப்பில் ஆழ்ந்தவர்கள் முல்லை வேலி நல்லூர் என்று பெயர் சூட்டினார்கள் என்பது உண்மை. பிரிவும் பரிவும் என் கண், என் உயிர் என்று பேகனை எண்ணி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணகியார்க்குப் பேகனைப்பற்றிய இந்தச் செய்தி எப்படி இருந்திருக்கும்? கண்ணகியார் நெஞ்சம் புண்ணாகி விட்டது! அவரிடம் வந்தவர்களும், போனவர்களும் பேகனது நிலைமையை அன்பினர்போல் எடுத்துரைத்து ஆறாத் துயருக்கு ஆளாக்கிவைத்தனர். பழம் புண்ணிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பு புகுந்தாற் போல அவர்கள் சொல் இருந் துங்கூட, கணவனாவது கவலையற்று இருக்கட்டுமே என்று அடக்கி வைத்திருந்தார். என்றாலும், உண்ணுவது குறைந்தது! உயரிய உடை உடுத்தி அழகு கொள்வது நின்றது; புதுநீர் ஆடுதலும், பூச்சூடுதலும் நீங்கின. கனலிடைப்பட்ட புழுவெனத் துடித்து வாழ்ந்தார்; சிலவேளைகளில் கவலை தாங்கமாட்டாமல் கண்ணிர் சொரிந்தார். பாவம் நல்லூரிலே, முல்லை வேலி மாளிகையிலே இன்பமே பொருளாகத் தஞ்சம் புகுந்திருக்கும் பேகனுக்குக் கண்ணகியார் நினைவு வருமா? அவனுக்கு நினைவு வாராமல் போயினும், உயிர் போவதாக இருந்தாலும் உண்மை போயினும், உயிர் போவதாக இருந்தாலும் உண்மை உரைப்பதற்கு அஞ்சாத உயர்பெருமக்கள் பலராகப் பெருகி இருந்த அந்நாளில் நினைவு படுத்துபவர்கள் இல்லாமலா போய்விட்டார்கள்? நால்வர் வழி நல்வழி பொதினி அரண்மனைக்குப் பேகனைத் தேடிப் போன பெரும் புலவர்கள் நால்வர். அவர்கள் பேகனைக் கண்டார்கள் அல்லர். பேகனை நினைந்து நைந்து உருகிக்கிடந்த கண்ணகி யாரைக் கண்டார்கள். அவலத்தை அறிந்தார்கள். பரிசில் பெறுதற்காகவும், பார்த்துச் செல்வதற்காகவும், பண்புற்ற பழக்கத்திற்காகவும் வந்த அவர்கள் நல்லூரை நோக்கி நடையிட்டார்கள். நால்வர் சென்ற வழி அதிலும் அறிவும் பண்பாடும் முதிர்ந்த நால்வர் சென்ற வழி - நல்வழியாகத் தானே இருக்க முடியும். அந்த நால்வர் எவர்? கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் என்பவர்கள் ஆவர். சொல்லும் சொல் எளிய ஒருவனை இடித்துக் கேட்பதற்காகப் புலவர்கள் செல்லவில்லை. வலிய ஒருவனை வயப்படுத்துவதற்காக - வழிப்படுத்துவதற்காகச் செல்கின்றார்கள். அவர்கள் நாநலம் வாய்ந்தவர்கள்; தம்முடைய தகுதியையும் கேட்பவர் தகுதியையும் அறிந்து பேசவல்லவர்கள். ஆகவே சொல்ல வேண்டியதை முறைப்படி சொல்வார்கள். அவர்கள் சொல்லும் சொல், வெல்லும் சொல்லாக இருக்கும். நா என்னும் கலப்பையால் அறிவு நிலத்தை உழுது தேர்ந்த புலமை உழவர்கள் அல்லவா அவர்கள்! கபிலர் கருத்துரை வள்ளல் பேக! வளநாட! உன்னையும் உன்மலையையும் யாம் பாடினோம்; அதனைக் கேட்டுக் குழல் வருந்தி ஒலிப்பது போல் புலம்பி ஓயாது அழுதாள் ஒருத்தி; அவள் யாவள்? நீ அறிவாயோ? என்று அறியாத ஒருத்தியைச் சுட்டிக் காட்டி வினாவுவதுபோல் வினாவினார் வாய்மொழிக் கபிலர். பரணர் பாங்குரை வேந்தரே! நாங்கள் நும் கானகத்தை இனிக்கப் பாடி னோம்; அதனைக் கேட்டுக் கண்ணீர் சொரிந்தாள் ஒரு காரிகை. அம்மே! நீ எம் தலைவனாம் பேகனுக்கு உரிமை உடையவளோ எனக் கேட்டோம். அவள் யான் உரிமை உடையவள் அல்லள்! அவன் நல்லூரில் இருக்கும் நங்கை ஒருத்தியின் நலம் நுகர்ந்து வருகின்றான் என்று கேள்வியுற்றேன் என்றாள். உன்னையே நினைந்து இருக்கும் அவளுக்கு அருள் செய்யாது இருப்பது கொடிது என்றார் கபிலரின் நண்பர் பரணர். பேகன் நெஞ்சத் தில் நன்றாகத் தைத்தது! பேச்சு எதுவும் ஓடவில்லை பேகனுக்கு! பரணர் மேலும் தொடுத்தார். மயில் நடுங்கு மென்று மனம் இரங்கித் தான் மழையில் நனைவதையும் பொருட்டாக எண்ணாமல் போர்வை வழங்கிய மன்னவ! அருளாள! ah‹ gá bfh©L ï§F tªnj‹ mšny‹; ‘tWikahš thL« bgUŠ R‰w¤â‰F v‹d brŒnth«? என்னும், ஏக்கத்துடனும் இங்கு வந்தேன் அல்லேன்; எமக்கு நன்பொருள் எதுவும் வேண்டா! நீ இப்பொழுதே உன்தேரில் ஏறி, உன் மனைவியின் துயரைத் துடைக்கச் செல்லுவது ஒன்றே எமக்கு வேண்டிய பொருள். இப்பொழுதே புறப்படு; பூட்டப் படுவதாக உன் குதிரைகள். அரிசிலார் அன்புரை ஆமாம் அரசே! உன் பொருள் எதுவும் எமக்கு வேண்டா. உன் மனைவி தழைத்துக் கிளைத்த கூந்தலிலே பூச்சூடுமாறு இப்பொழுதே புறப்படு! உன் குதிரைகளை உடனே தேரில் பூட்டு என்று வற்புறுத்தினார் அரிசில் கிழார். குன்றூரார் குறிப்புரை காடுமலை கடந்து வந்தேன், உன்னைக் கண்டு உரைக்க விரும்பியது ஒன்றே! புலம்பி அழுது கொண்டு இருக்கும் உன் மனைவி பூச்சூடி மகிழுமாறு புறப்படு என்னும் ஒன்றே அது என்று ஏவினார் பெருங்குன்றூர் கிழார். திருந்திய வேந்தன் பெருநலங் கனிந்து பேணிச் சொல்லிய இப்பெரு மக்கள் உரை பேகன் செவிக்கண் செல்லாவா? நெஞ்சத்தில் நில்லாவா? நன்றாகச் சென்றன; நன்றாக நிலைத்தன; பேகன் வாயால் எதுவும் சொன்னான் அல்லன். வாய்ச் சொற்களால் வாய்க்கும் பயன் தான் என்ன? செய்ய வேண்டியது இன்ன தெனச் செம்மை யாகச் சொன்னார்கள் சீரிய புலவர்கள். செயலில் இறங்கினான் திருந்திய வேந்தன் பேகன். வேண்டுவது அது தானே! குதிரைகள் தேரில் பூட்டப் பெற்றன; பேகன் தேர் ஏறினான்; பொதினி பொலிவுற்றது; கண்ணகியார் கலக்கம் கலைந்தது; களிப்புக் குடிபுகுந்தது; கண்ணகியார்க்கு மட்டுமா களிப்பு? கவிஞர் பெருமக்கள் கொண்ட களிப்புக்குக் கரை யுண்டா? அவர்கள் செய்த - தொண்டுதான் எத்தகையது. அவர்கள் எவ்வளவு பரந்த மனப்பான்மையினர்! அரசனது இல்வாழ்க்கை இடைப் புகுந்து திருந்தி வாழுமாறு ஏவிய பெருந்தன்மைப் புலவர்களை எச் சொற்களால் புகழ்வது? புலவர் புகழ் நெறி தாம் அடையும் இன்பத்தை உலகமும் அடையக் கண்டு மகிழ்வது அல்லவா புலவர் நெறி! அந்நெறியைப் புவியெங்கும் பரப்ப வேண்டிக் கிடக்க, அதனைப் புலவர் மன்றத்தே மட்டும் சிறைப்படுத்தி விடுவரா? பொதினி அரண்மனையின் அந்தப் புரத்தில் கண்ட காட்சி, நல்லூர் அந்தப் புரத்தை அடைக்கல மாகக் கொண்டிருந்த அரசன் முன்னிலையில் விவரிக்கப்படு கின்றது. விரிவுரை கேட்ட வேந்தன் திருந்துகின்றான். வாழ்வு வளம் பெறுகின்றது! புதுமை பூக்கின்றது. காரணம், அந்தப் புரங்களும் தமிழ் மன்றங்களாகத் திகழ்ந்தமையே யாம். 4. படைக்கலக் கொட்டில் ஒரு கிழவி காட்டு வழியே நடந்து சென்று கொண் டிருந்தார். நல்ல முதுமை; நரைத்த தலை; உடலெங்கும் தோற் சுருக்கம்; சற்றே கூனிய முதுகு; கையில் தடி; எனினும் நடையில் விரைவு; இளமையும் எழுச்சியும் கூடிய உணர்ச்சி; கனிவு மிக்க கண்கள்; கற்கண்டுச் சொற்கள்; ஆண்டி முதல் ஆள்பவர் வரை அனைவரும் வரவேற்றுப் போற்றும் பெருமை; இவ்வளவு தன்மைகளும் ஒருங்கே பெற்றவர் அந்த முதிய அம்மையார். அருந்தமிழ் அன்னை அவர் பெயரைக் கேள்விப்பட்டிராத தமிழர் இரார்; கற்றவர்களுள் அவர் சொற்களில் சிலவற்றையேனும் அறியாதவர் இரார்; அவர் காலடி படாத அரண்மனை அவர் வாழ்ந்தநாளில் எதுவும் இருந்ததில்லை; அவரை வரவேற்றுச் சிறப்புச் செய்யாத- வருகையை எதிர்நோக்கி இருக்காத - அரசர் இருந்ததில்லை. மன்னவன் மாளிகையில் விருந்தாளியாக ஒருநாள் இருந்திருப்பார்; மண்குடிசையின் மனங்கனிந்த விருந்தாளியாக மறுநாள் இருந்திருப்பார்; அரசர் தரும் யானைப் பரிசிலையும் அகமுவந்து பெற்றிருப்பார்; நொய் நுறுங்கு அரிசியையும் ஏழையர் தந்த இனிய பரிசாகப் பெற்றிருப்பார்; அமர்க்களத்தில் புகுந்து ஆண்மை ஊட்டுமாறும் பாட்டுப் பாடியிருப்பார்; அந்தப் புரத்தில் புகுந்து அன்பு ததும்பி வழியவும் இசைத் திருப்பார்; உயரத்து உயரே சென்று ஆய்ந்து ஆய்ந்து அருங் கருத்துக்களைக் கொழித்திருப்பார்; உப்புக்கும் புளிக்கும் உள்ளந் தோய்ந்து பாடியிருப்பார்; இவர் பெயரை இன்னும் அறியாமல் இருக்க முடியாது! தென் மொழிகளில் பாட்டியைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர் உண்டே, அப்பெயர்க்குரிய அம்மையார் அவர். ஔவையார் என்பது அவர் பெயர். பழிமிக்க பற்று ஔவையார் எங்கே போகின்றார்? ஏன் போகின்றார்? காஞ்சி பழம் பெரு நகராகும். அதனைத் தலைநகராகக் கொண்டது தொண்டை நாடு. தொண்டைமான் என்னும் தமிழ் அரச மரபினர் அதனை ஆண்டு வந்தனர். அவர்களுள் தொண்டைமான் என்னும் பெயரினையுடைய அரசன் ஒருவன் இருந்தான். அவன் படைப் பெருக்கத்தால் பார் புகழ் பெருமை எய்தலாம் என்றும், பக்கத்து நாட்டை எல்லாம் கவர்ந்து கொள்ளலாம் என்றும் பற்று வைத்திருந்தான். அப் பற்றுதலால் படைவீரர்களையும், படைக்கலங்களையும் அளவிறந்து பெருக்கினான். கோட்டைச் சுவர்களை உயர்த்தியும், புதுப் பித்துக் கட்டியும் உறுதிப்படுத்தினான். அகழிகளையும் ஆழப் படுத்தினான். அரண்களில் புதுப்புதுப் பொறி வகைகளைப் பொருத்தினான். நாளெல்லாம் படைகளையும் படைக்கலங் களையும் கண்டுகளிப்பதையே தொழிலாகக் கொண்டான். இவையெல்லாம் அவனை அளவிறந்து செருக்கி வெறி கொள்ளுமாறு தூண்டின. சீரிலாச் செருக்கு எம்மை எதிர்க்க எவராலும் இயலாது. ‘ï¥gil njh‰ ã‹ v¥gil btšY«!’ ï¤jifa gil¡fy§fS«, mu© tÈikí«, âwÄ¡f gilfS«, cilnah® cy»š vt®? என்று எண்ணித் எண்ணி தன்னைத்தானே வியந்து கொண்டான்; தருக்கு விஞ்சியது! ஆகவே தமிழ் நாட்டு வேந்தர்களை வென்று அடிமைப் படுத்துவது தன் வேலை என்றும், அவ்வாறு செய்ய நினைத்தால் அது மிக எளிதில் நிறைவேறும் என்றும் எண்ணினான். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் , 471) ஆற்றுவதற்கு எவ்வளவு நுண்ணறிவு வேண்டும்? ஆனால், உணர்ச்சிமிக்க உள்ளம், அறிவுக்கு அவ்வளவாக வேலை தருவது இல்லையே! குதிரைமலைக் கோமான் தொண்டை நாட்டின் அடுத்து இருந்தது குதிரைமலை. இம்மலைப்பகுதியைத் தகடூர் என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு அதியமான் என்னும் புகழ்மிக்க சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மாபெரும் வீரன்! மாற்றாரைப் புறங்காணுதலில் தேர்ந்தவன்; ஆனால், பிறர் மண்ணைக் கொள்ள வேண்டும் என்னும் கொள்ளை விருப்புடையவன் அல்லன். அவன் கொண்டிருந்த வீரர்கள் மழவர்கள் என்னும் பெயர் பெற்றனர். இன்றும் மழவர் எனின் வீரர் என்னும் பொருளே தரும் அளவுக்கு அவர்கள் வீரர்களாக இருந்தனர். மிகமிக அகவையால் மூத்தோராக இருக்கலாம். எனினும் அவர்கள் இளந்துடிப்பு உடையவர்களாகத் திகழ்ந்தனர். மழ குழ என்னும் சொற்கள் இளமைப் பொருள் உடையன என்பது தொல்காப்பியனார் உரை. இளந்துடிப்புடைய வலிய வீரர்கள் மழவர் என்பதற்கு இஃதொரு சான்றாகும். குடிபடை அதியமான் படைவீரர்க்கும், மற்றை அரசர்கள் படை வீரர்க்கும் பெரியதொரு வேற்றுமை உண்டு. மற்றவர்கள் வீரர்களைப் போருக்காகவே தேர்ந்தெடுத்துப் பயிற்சி தந்து, அரசின் வருவாயில் இருந்து ஊதியமும் தந்து வந்தனர். படைக் கலக்கொட்டில்கள் பல கட்டி வைத்துக் காத்து வந்தனர். ஆனால், அதியமானுக்கு இவர்கள் தாம் வீரர்கள் என்பது இல்லை. அவன் நாட்டில் இருந்த அனைவரும் படைவீரர்களே. குடிகளே படைகள்! படைகளே குடிகள்! mtDila eh£oš ïUªjt®fŸ midtU« ‘Fo gilfŸ! இந்நிலையில் விரல் விட்டு எண்ணும் வீரர்களைக் கொண்டுள்ள வேந்தர்கள் வீர நிலைமை என்னாம்? குடிகளின் வீடெல்லாம் படைக்கலக் கொட்டில் என்றால் எதிர்ப்பவர் நிலைமை என்னாம்? எங்கு முற்றுகை இடுவது? எங்குத் தாக்குவது? எவ்வழியைத் தடுப்பது? சதுரங்க ஆட்டம் இந்த நிலைமைகளை யெல்லாம் அறியவல்லவன் அல்லன் தொண்டைமான். அவன் கண்ணோட்டம் மிகமிகச் சுருங்கி விட்டது. பகைவன் வலிமையை எண்ணிப் பார்ப்பதை விடுத்து வெற்றி நமதே; என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டான். குதிரை மலையைச் சூழ்ந்து தாக்குவதற் குரிய பொழுதையும் எதிர்நோக்கி யிருந்தான். எதிரியின் ஆட்டக் கால்களையும், அவை நிற்கும் நிலைகளையும் எண்ணிப் பாராமல், தன் ஆட்டக் காய்களை மட்டுமே கருதிச் சதுரங்கம் ஆடுபவன் வெற்றி கொள்ள முடியுமா? ஓர் எண்ணம் நாட்டுமக்களையெல்லாம் நல்ல வீரர்களாகக் கொண்ட அதியமானுக்குத், தொண்டைமான் தருக்கு எண்ணம் அறிய வந்தது. சினம் கொண்டான்; சீறி எழுந்தான். ஆனால் சிறிது பொழுதில் சினம் மாறிச் சிந்தித்தான். மன்னன் தொண்டை மானது மதியில்லாச் செயலால் நாட்டு மக்களல்லவோ அழிந்து பட நேரும்? ஏதும் அறியா மக்களை எதிரியாக்கி அழிப்பது கூடாது என்று எண்ணினான் போரை நிறுத்துவது, அமைதிக்கு முயல்வது என்னும் உயரிய எண்ணங்கள் அவனுக்கு உண்டாயின. போர் நிறுத்தம் வீரர்பொருள். வலிமையற்ற ஒருவன் ஆராயாமல் வலுவாகப் போர் தொடங்கப் பார்க்கின்றான். வெல்லுவதன்றி வேறறியாத மன்னன் போர் நிறுத்தத்தை விரும்புகின்றான். இதுதான் உண்மையான போர் நிறுத்தத் தன்மையாகும். இணையற்ற வீரர்களின் பொருளாகப் போர் நிறுத்தம் இருக்க வேண்டுமே ஒழியத் தோற்கும் கோழைகளின் பொருளாகப் போர் நிறுத்தம் இருத்தல் கூடாது என்பதற்கு ஏற்ற எடுத்துக் காட்டே அதிய மானது போர் நிறுத்த முயற்சி! அவன் முயற்சி வாழ்க! துணிந்து நிற்கும் தொண்டைமானிடம் போர்த் தூது அனுப்புதல் வேண்டும். எவரை அனுப்புவது? தூதர் யார்? படைத் தலைவரை அனுப்பலாம். ஆனால் படைத் தலைவர், சென்ற இடத்திலும் படைத் தலைவராக நடந்து கொண்டால், எதிர்பார்த்த செயல் இனிது நிறைவேறாதல்லவா! இனி, அமைச்சரை அனுப்பலாம்; ஆனால் அவர் பணியாற்றும் வேந்தனுக்குச் சார்பாளராக இருப்பவர் என்னும் எண்ணம் எழும்பாமல் போகாதே. எளிய எண்ணங்கூட எவ்வளவோ தடையாக நிற்கக் கூடுமே! பொது மக்களுள் எவரேனும் ஒருவரை அனுப்பலாம். அவர்க்கு எடுத்த பணியைத் தொடுத்து முடிக்கும் ஆற்றலும், நயமும் வேண்டுமே? அதனினும், அனுப்பும் வேந்தன் மதிப்பது போல, ஏற்கும் வேந்தனும் மதிக்கும் அளவு தகுதி வாய்ந்தவராக அனுப்பப் பெறுபவர் இருத்தல் வேண்டும். எங்காயினும் சரி, எவராயினும் சரி, வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் உண்மையை வன்மையாக - அதே பொழுதில் மென்மை கலந்ததாக - உரைத்தல் வேண்டும். இத் தகுதிகள் அனைத்தும் பொருந்திய ஒருவரைத் தேடிக் காணவேண்டுமே என்னும் சிந்தனையில் அதியமான் ஆழ்ந்து இருந்த போதுதான், ஔவையார் அவன் நினைவில் முன்வந்து நின்றார். அவரையே தொண்டைமானிடம் தூதாக அனுப்ப நினைத்தான். அருளே உருவான தாய்க் குலத்தின் தலைமணி யாம் ஔவையார் உவகையோடு அதனை ஏற்றுக் கொண்டார். இப்பணி தலைமேற் கொண்டேன் என்று விடை கொண்டு காஞ்சிமா நகர் சென்றார். அருமைத்தாய் - அன்புமகன் போர் வெறியிலே மயங்கியிருந்த தொண்டைமானுக்கு ஔவையார் வருகை திகைப் பூட்டியது. காரணம் என்ன? உலகெல்லாம் ஒரு குடும்பம் என்னும் உயர்ந்த கோட்பாடு உடையவர்கள் தாம் புலவர்கள். எனினும், அவர்களும் மனிதர்கள் தாமே! விருப்பு, வெறுப்பு, அன்பு, வன்பு இவற்றை அறவே துறந்து விட முடியாது அன்றோ! இதற்கு ஔவையார் மட்டும் விதி விலக்கு ஆகிவிட முடியுமா? அதியமான் மேல், மற்றை வேந்தர் களினும் மட்டற்ற அன்பு உடையவர் அவர். மற்றை வேந்தர் களுக்கும் ஔவையாருக்கும், புரவலர், புலவர் என்னும் அளவில் அன்பு இருந்தது. அதியமானைப் பொறுத்த அளவிலே, அருமைத் தாய், அன்பு மகன் என்னும் நிலையில் வளர்ந்திருந்தது. அதனால் வாழ்வின் ஒரு பெரும் பகுதியை அதியமான் அரண் மனையில் செலவிட்டார். அரசியல் கடமைகளிலும் கருத்துச் செலுத்தும் அளவுக்கு உரிமை வாழ்வு வாழ்ந்தார். இத்தகைய ஔவையார் வருகை - அதிலும் அதியமான் அரண்மனையில் இருந்தே வரும் வருகை - தொண்டைமானுக்குத் திகைப் பூட்டாமல் எப்படி இருந்திருக்க முடியும்? படைக்கலம் பார்த்தல் தொண்டைமான் அருந்தமிழ் ஔவையாரை அன்புடன் வரவேற்றான்; வாழ்த்து இயம்பினான்; போரினை நீக்கும் கருத்துடன் அவர் வந்துள்ள குறிப்பை ஒருவாறு அறிந்தான். தன் பெருமிதத்தை வெளிக்காட்டவும், படைக்கலப் பெருக்கத்தை அறிவிக்கவும் விரும்பினான். ஆகவே, வானுற வளர்ந்த பேரரணுக்குள் வகை வகையாக வனப்புற அடுக்கி வைக்கப்பெற் றிருக்கும் படைக்கலக் கொட்டிலுக்கு ஔவையாரை அழைத்துச் சென்றான். வாயாரச் சொல்லி அறிவிப்பதைப் பார்க்கிலும், கண்ணாரக் காணச் செய்து விடுவது நல்லது அல்லவா! படைக்கருவிகளைப் பகுதி பகுதியாகக் காட்டிக் கொண்டு வந்தான் தொண்டைமான். ஔவையாரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டு வந்தார். இடை இடையே படைக்கலப் பளபளப்பு, வேலைப்பாடு இவற்றைப் பாராட்டிப் பாராட்டி மகிழ்ந்தான் தொண்டைமான். ஔவையாரும் பாராட்டுவார் என்று தன்னுள் எண்ணினான். ஔவையார் எதுவும் கூறினார் அல்லர். கொட்டில் பகுதி முழுமையும் குறைவறக் கண்டு, வெளி வாயிலுக்கு வந்தனர். இனியும் ஔவையார் எதுவும் சொல்லாமல் இருக்கலாமா? தொண்டைமான் குறிப்பையும், தம்மைப் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்து வந்து காட்டியதன் உட்கருத்தையும், தாம் தொண்டை மானிடத்து வந்திருக்கும் நோக்கத்தையும் ஒருங்குரைக்கத் தக்க இடம் இதுவே என்று எண்ணினார். ஆனால், தொண்டைமானை நேராகப் பார்த்துப் பேசுதற்குக்கூட அவருக்கு மனம் வரவில்லை. படைக்கலம் இருந்த அரண்மனையைப் பார்த்துக்கொண்டே பேசினார். நயமிக்க நல்லுரை இங்கு அடுக்கி வைக்கப் பெற்றுள்ள படைக் கலங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. அதற்கு மேலும் அழகு ஊட்டுவதுபோல் மயில் தோகையும், மாலையும் சூட்டப் பெற்றுள்ளன. கருவிகள் திரண்ட வைரமான கைப்பிடிகளைக் கொண்டுள்ளன. இயல்பாக அமைந்த பளபளப்புக்கு மேலும் பளபளப்பு ஊட்டுவதுபோல் நெய் தடவப் பெற்றுள்ளன! பிறரால் அணுகுதற்கு அரிய நிலைமையில் அமைந்த, காவல் மிக்க அரணுக்குள் வைக்கப் பெற்றுள்ளன. ஆனால், ஊரவரை யெல்லாம் உற்றாராகக் கொண்டவனும், ஏழைகளை யெல்லாம் சுற்றமாகக் கருதுபவனும் ஆகிய அதியமான் படைக்கருவிகளோ இத்தகைய நிலையில் இல்லை. நாளும் பொழுதும் நடுக்கும் போர்க்களம் சென்று சென்று அதியமான் படைக்கலங்கள் பக்கங்கள் சிதைந்தன; நுனிகள் முரிந்தன; பிடிகளை இழந்தன; உருச் சிதைந்து எளிய கொல்லனது கரிபடிந்த உலைக்களத்தில் காப்பாரற்றுக் கிடக்கின்றன. இப்படைக் கலங்களுக்கு ஒப்பாகத் தக்கவையோ அவை? என்று நயமாக மொழிந்தார் ஔவையார். தொண்டைமான், ஔவையார் உரையைக் கேட்ட அளவில் மகிழ்ந்தான். அருந்தமிழ் ஔவை அவன் கருவிகளைப் பாராட்டி விட்டார் அல்லவா! பொழுது செல்லச் செல்லச், சிந்தனை அரும்ப அரும்ப ஔவையார் வாக்கில் அமைந்திருந்த குறிப்புப் பொருள் தொண்டைமானுக்கு வெளிப்படத் தொடங்கியது. சொல்லின் பயன் உன் கருவிகள் அழகுக்காக உள்ளவை; அதியன் படை களோ போர்க்களத்தே புகுந்து எந்நாளும் விளையாடுபவை; பயனற்ற கருவிகளையும், பழக்க மற்ற வீரர்களையும் கொண்டு இறுமாப்புறும் நீ அதியனைப் பகைத்து உன் படையுடன் கிளம்பினால் கெட்டொழிவது உறுதி என்று கூறாமல் கூறிய உரையை உணர்ந்தான். உணராவிட்டால் ஒரு பயனும் இல்லையே! சொல்லினால் உண்டாகும் பயன் சொல்பவரைப் பொறுத்தது இல்லையே! கேட்பவரை அல்லவா பொறுத் திருக்கிறது. இலக்கியப் படைப்பு ஓர் ஔவையார் துணிந்து உரைத்தார்; ஒரு தொண்டை மான் உணர்ந்து ஏற்றான். எத்துணையோ உயிர்கள் குருதி கொட்டாமல், கொல்லப் பெறாமல் தப்பின. வேந்தர் இருவர் தம் நாடும் எத்தகைய இழப்புக்கும் ஆட்படாமல் இனிது பிழைத்தன. இவ்வளவு நன்மைகளுக்கும் துணையாக இருந்தது எது? படைக் கலக் கொட்டிலையே பைந்தமிழ் மன்றம் ஆக்கிய பான்மை ஒன்றுதான் இவ்வளவு நன்மைகளுக்கும் துணையாயின. தமிழ் எங்கெங்குப் புகுந்து பயன்பட வேண்டுமோ, பணியாற்ற வேண்டுமோ அங்கங் கெல்லாம் புகுந்து பயன்பட்டது; பணியும் ஆற்றியது. நம் முன்னோர் இலக்கியத்தை ஏட்டளவில் நிறுத் தாமல், நாட்டினர் வாழ்வாங்கு வாழ்வதற்கே படைத்தனர். ஆகவே அதுவும் வாழ்கின்றது; நாட்டையும் வாழ வைக்கின்றது. படைக்கலக் கொட்டிலில் ஔவையார் பாடிய பா இது இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள், நோன்காழ் திருத்திநெய் அணிந்து கடியுடை வியனக ரவ்வே; அவ்வே, பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ! என்றும் உண்டாயின் பதங்கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எங் கோமான் வைந்நுதி வேலே. (புறம்: 95) 5. போர்க்களம் பாஞ்சாலங் குறிச்சி மண்ணுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு என்பர். வேட்டைக்கு வந்த நாயொன்று ஒரு முயலை வெருட்டியதாம். வெருண்டோடிய முயல் இடத்திற்கு வந்து சேர்ந்ததாம்! ஓட்டத்தை விடுத்து உரமாக எதிர்க்கத் தொடங்கிய தாம்! வெருட்டி வந்த நாயே, வெருண்டோடுமாறு முயல் தாக்கியதாம். முயல், நாயை எதிர்த்ததற்குரிய காரணம், அம் மண்ணிற்கு இயற்கையாக அமைந்திருந்த வலிமையே என்று கருதிக், கோட்டை, த்தளங்கள் அமைத்தார்களாம். அதுவே பாஞ்சாலங் குறிச்சியாம். வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; வந்தவனுக்கேன் வரிப்பணம் என்று வினாவி ஆங்கிலேயரை அலறத் தாக்கிய அடலேறு கட்ட பொம்மன் இருந்தான் அல்லவா! அவன் ஊர்ச் சிறப்பு அது. கோழியூர் செருக்கு மிக்க யானை ஒன்று செம்மாந்து நடந்தது. அதன் வருகை கண்டும், ஒருங்கற்றுக் கல கலக்கும் அதன் மணி ஒலி கேட்டும் மக்கள் ஓடி ஓடி மறைந்தனர். மதங் கொண்ட யானை அது. ஆனால் ஒரு கோழி அச்சம் சிறிதும் இன்றிப், பறந்து பாய்ந்து யானையின் மத்தகத்தின் மேல் ஏறி நின்று, அவ்யானை செயலற்றுப்போகும் அளவுக்குக் குத்திக் குடைந்தது; யானையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோழி தன்னால் இயலும் இடுக்கண் விளைத்து யானையின் நெற்றியில் நின்று வெற்றி முழக்கம் செய்தது. இதனை அறிந்தான் அந்நாட்டை ஆண்ட அருந்திறல் வேந்தன். இம்மண்ணின் சிறப்பே இந் நிகழ்ச்சிக்குக் காரணம் என்று கருதி அவ்விடத்தில் ஒரு நகரம் எழுப்பினான். அந் நன்னகரையே நாட்டுத் தலைநகரும் ஆக்கினார். அந்நகருக்கு என்ன பெயர் இட்டான்? கோழியின் செயற்கரும் செயலால் அல்லவா அந்நகர் எழுந்தது. ஆகவே அந்நிகழ்ச்சியின் நினைவாகக் கோழியூர் என்று பெயரிட்டான். கோழியூரே சோழ நாட்டுத் தலைநகர் ஆயது. பின்னாளில் அஃது உறையூர் என்னும் பெயரும் பெற்றது. உறைவதற்கு ஏற்ற ஊர்தானே உறையூர்! இன்றும், திருச்சிக்கு அருகில் உறையூர் உள்ளது! கோழியாம் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டைச் செவ்வையுற ஆண்ட வேந்தர்கள் பலர். அவர்களுள் கோப்பெருஞ் சோழனும் ஒருவன். உம் பெயர் என்ன? அறிவுடை நம்பியின் அரசவைக்குச் சென்று, அறவுரை கூறிய ஆந்தையாரை அறிவோம் அல்லவா! அவ்வாந்தை யாளீடம் ‘உம் பெயர் என்ன? என்றால் என்பெயர் கோப் பெருஞ்சோழன் என்பாராம். nfh¥bgUŠ nrhHÅl« br‹W ‘c‹ bga® v‹d? என்றால், என்பெயர் பிசிராந்தை யார் என்பானாம். இந்நிலையில் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய உணர்ச்சி ஒத்த நண்பர்களாக இருந்தனர். அன்னத் தூது ஓர் அன்னத்திடம் சொல்கிறார் ஆந்தையார்: அன்னமே! ஆண் அன்னமே! நீ தெற்கே இருந்து வடக்கே செல்கிறாய்! செல்லும் வழியில் கோழியூர் உள்ளது. அதன் உயரிய மாடத்தில் உன் மனைவியுடன் தங்கி இளைப்பாறு! அனுமதி எதுவும் பெறாமலே சோழன் அரண்மனைக்குள் செல்! உன் மனைவி சுமக்கமுடியாத அளவு பொன் அணிகலங்களை நல்குவான்! பிசிராந்தையார் இத்தகைய நட்பின் உறுதியாளராக இருக் கின்றார்! ஆனால், இதுவரை இருவரும் ஒருவரை ஒருவர் கண்ணால் கண்டது இல்லை! காதாரக் கேட்டது மட்டும் உண்டு! பேறற்ற பேராளன் கோப்பெருஞ் சோழன் மாபெரும் வீரன்! பகைவர் அவன் பெயர் கேட்டாலே அஞ்சி நடுங்குமாறு வாழ்ந்தான். அவனுக்கு மைந்தர் இருவர் இருந்தனர். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று உணர்ந்து, தந்தை தாய்ப்பேணி இவரைப் பெற்ற வயிறுடையாள் என்ன நோன்பு நோற்றாளோ என்று புகழுமாறு வாழ்ந்து நலம் பெருக்கும் மக்கள் எல்லாப் பெற் றோருக்குமா கிடைத்துவிடுகின்றனர்? கோப்பெருஞ் சோழன் எல்லா வகைகளிலும் நல்ல பேறு பெற்றவனாக இருந்தாலும், புதல்வர்களைப் பொறுத்த அளவில் அத்தகைய பேறு பெற்றான் அல்லன்! மாண்பிலா மைந்தர் தந்தையார் தன்மைக்கு மாறுபட்டவராக இருந்தனர் சோழன் மைந்தர். தந்தையார் ஆட்சியைத் தருமுன்னே தாமே வலிந்து கவர்ந்துகொள்ளும் நாட்ட மிக்கவராக இருந்தனர். தீயவர்கள் கூட்டத்தையே தம் திருக் கூட்டமாகக் கொண்டு மனம் போன போக்கெல்லாம் போயினர். மன்னவன் மனத்தை எவ்வளவு கலக்க வேண்டுமோ அவ்வளவு கலக்கினர். தம் மக்கள் சிறுகை அளாவிய கூழை அமிழ்தெனக் கருதித் தம் மக்கள் மழலை மொழியைக் குழலினும், யாழினும் இனிக்கச் சுவைத்துத் தம் மக்கள் மெய்தீண்டி இன்புற்று வாழ்ந்த தந்தையாம் சோழன், தகுதி யற்றவராக வளர்ந்துள்ள அம் மக்களைக் கண்டு என்ன செய்வான்? உடையாத அவன் உள்ளமும் உடைந்தது. தளராத உணர்ச்சியும் தளர்ந்தது. ஆனால், தலைகால் தெரியாமல் திரியும் மக்களைத் தண்டிக்காமல் இருந்தால் நாடு என்ன ஆவது? நாட்டைக் காக்கும் கடமை என்ன ஆவது? அறச்சட்டம் தான் என்ன ஆவது? ஆகவே, அவர்களை அடக்கி வைக்க எண்ணி இருந்த பொழுதுதான் ஆரவாரத்துடன் மக்கள் எழுந்தார்கள். எதற்கு? தந்தையோடு போரிட்டு அரசைக் கைப்பற்றுவதற்காக உலகத்தில் காணுதற்கு அரிய நிகழ்சசி இது. தந்தையும் மைந்தரும் பகைவராகப் போர்க்களத்தில் எதிரெதிர் நிற்பது புதுமைக் காட்சி தானே! மறைந்து நின்று, பிறரைத் தூண்டி நின்று தந்தையைக் கொன்று ஆட்சிக்கு வந்த மைந்தர்கள் பலர் பல நாடுகளில் இருந்ததுண்டு. ஆனால் நேருக்கு நேர் தந்தையுடன் போருக்கு நிற்கும் மைந்தர் அரியர். நாட்டோர் நடுக்கம் நாடே இரண்டு கூறு பட்டது. தந்தையார் பக்கம் ஒரு பிரிவினர்; மைந்தர் பக்கம் மற்றொரு பிரிவினர். கரியும், பரியும், தேரும், காலாளும் களத்தில் எதிர் எதிராக நிற்கின்றன. தன்னலப் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கும் மைந்தர் செயல், பொதுநலத் தந்தையையும் போர்க் களத்திற்கு இழுத்து வந்து நிறுத்தி விட்டது. நாட்டு மக்களையும், விலங்குகளையும் அழிக்கும் கொடுமைக்கு ஆளாக்கி விட்டனர் மன்னவன் மைந்தர். இந் நிகழ்ச்சி நாட்டினர். அனைவர் உள்ளத்தையும் நடுங்கவும் நலியவும் வைக்காவிட்டால் கூட, நல்லவர் உள்ளத்தையுமா நடுங்கவும் நலியவும் வைக்காது? நல்லோர் நலிவு வாடிய பயிரைக் கண்டாலும் வாடி வருந்துபவர்களும், மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும், கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன் என்னும் அருளாளர்களும் நாட்டில் அங்கொருவரும் இங்கொருவருமாகவாவது இல்லாமல் இல்லையே! அத்தைகையர்க்குத் தந்தையும் மைந்தரும் பொருவது தாழாத் துயராக இருந்தது. பிறர் துயரங்கண்டு தாமும் துயரங்கொள்பவர் மிகப் பலராக இருக்கலாம்; பிறர் துயர் துடைக்க நினைப்பவர் பலராக இருக்கலாம்; பிறர் துயரைத் துடைக்க முயல்பவர் சிலராகவே இருப்பர்; ஆனால், பிறர் துயரைத் துடைத்து நிறுத்த வல்லவர் மிகச் சிலரே ஆவர். அச்சிலருள் ஒருவராக இருந்தார் புல்லாற்றூர் என்னும் ஊரைச் சேர்ந்த எயிற்றியனார் என்னும் இன் றமிழ்ப் புலவர் பெருமான். எயிற்றியனார் முயற்சி புல்லாற்றூர் புலவர் போர்க்களத்திற்கு விரைந்து சென்றார். பறை அடிக்க வேண்டும்; சங்கு முழங்கவேண்டும்; உடனே குருதி மழை கொட்டும்; இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும்; அத்தகைய நெருக்கடியான வேளையில் இரு பக்கப் படைக்கும் இடையே போனார் புலவர். முதற் படையின் முதல் வீரனாக நிற்கும் சோழ வேந்தனிடமே போனார். அவன் கையைப் பற்றினார். களத்திற்கு வெளியே நடந்தார். பாகனுக்குப் பின்னே வரும் யானை போலப் புலவர் பின்னே நடந்து போனான் கோச்சோழன். மைந்தர்கள் நின்ற பகுதியில் இருந்து சங்கு முழங்கியது; பறை துடித்தது; ஆரவாரம் மிக்கது; ஆனால் பதில் முழக்கம் எதுவும் இல்லை; துடிப்பும் இல்லை. ஆகவே எழுந்த ஆர வாரம் அடங்கியது! போர்க்களம் அமைதிக்கோலம் பூண்டது. களத்தில் கனிவுரை களத்தின் ஒரு கடைசிப் பகுதிக்குச் சென்ற கவிஞர் புல் லாற்றூராரின் கனிவுரை கேட்டது: வந்த போர்களில் எல்லாம் வாகை சூடிய வேந்தே! வெற்றிக்கு அடையாளமாகக் கொற்றக் குடை தாங்கிய கோவே! எத்துணையோ போர்க்களம் போயவன் நீ! எந்த ஒரு களத்தி லாவது இத்தகைய பகைவர்களைக் கண்டது உண்டா? நின்னை எதிர்த்து நிற்கிறார்களே, அவர்களைக் கூர்ந்து பார்த்தாயா? அவர்கள் யார்? உன் பரம்பரைப் பகைவர்களா? உன் நேர்ப் பகைவர்களா? உன்னைத் தாக்குவதற்கு உன் நாட்டுப் படை களுடன் நிற்கும் அவர்கள் யார்? காவலன் கடன் சரி ! பகைவர்கள் போகட்டும்; அவர்கட்குத் துணையாக நிற்கும் வீரர்களைப் பார்த்தாயா? அவர்கள் உனக்கு எத் துணைப் போர்களில் துணையாக நின்றார்கள்? உன் வெற்றிக் காக எத்துணைப் போர்களில் பாடுபட்டார்கள்? குருதி கொட்டி னார்கள்? அவர்களின் உறவினர்களுள் எத்துணைப் பேர்கள் தாம் உன் வீர வெற்றிக்காகத் தம் உயிரையே தந்திருக்கிறார்கள்? இவர்கள் தாம் உன் பகைப்படைஞர்களா? ஆ ! ஆ! நன்றாக இருக்கிறது. எவன் காப்பவன் என்று கருதி வாழ்ந்தார்களோ அவனே அழிக்கக் கிடைக்கும் பேறு என்ன எளிதில் வாய்ப்பதா? எது சால்பு அவ்வீரர்கள் ஆராயாத உணர்ச்சியால் உன் நேரில் வந்து விட்டார்களே ஒழிய உண்மையை உணர்ந்திருந்தால் வந்திருப்பார்களா, அவர்கள் அறியாமைக்காக அல்லவோ நீ இரக்கம் காட்ட வேண்டும். நீ அவர்கள் பகைவன் அல்லன். அவர்களும் உன் பகைவர் அல்லர். அவர்கள் உன்னைப் பகைவனாகக் கருதி இருந்தால் நன்றி கொன்றவர்களே ஆவர். அறிவின்றித் தவறு செய்யும் அவர்களைப் பொறுப்பது அல்லவா அறிவறிந்தவன் சால்பு! எண்ணித் துணிக வேந்தே! நீ வெல்லுதற்கு அரிய வீரன்! ஐயம் இல்லை. ஆனால் எத்தகைய வேந்தரையும் வெற்றி கொள்ளும் வீரன் ஒருவன் உள்ளான் என்பதை உணர்வாயே! அவன் காலன் அல்லனோ அக் காலன் வாய்ப்படாத, காவலன் கூட உளனா? நீ மட்டும் இவ்விதிக்கு விலக்காகி விட முடியுமா? இதற்கு முன் எவனுக்கேனும் அத்தகைய விதி விலக்கு இருந்திருந்தால் அல்லவோ உனக்கும் அத்தகைய ஒன்றை எதிர்பார்க்க முடியும்? நீ காலன் வாய்ப்படும் காலத்தில் உன் ஆட்சிக்கு உரிமை உடையவர் எவர்? நீ மனங்கனிந்து உதவாவிட்டால் கூட ஆட்சி உரிமை எவருடையது? அவர்களுக்கே உரிய நாட்டை அவர் களிடம் தாராமல் தடுப்பதும், கெடுப்பதும் உரிமை நிலை உணர்ந்தவன் செய்யும் செயலாகுமா? உன்னையே எதிர்ந்து நிற்கும் இவர்கள், நீ வேறொருவனிடம் உரிமையாக அரசைத் தந்துவிட்டுச் சென்றால் விட்டு விடுவார்களா? நீ உழீரோடு ஹிருக்கும் போதும் ஹிறந்த நின்னரும் நாட்டுக்குத் தீங்கு உன் பெயரால் நடக்கும் வண்ணமோ உன் செயல் ஹிருத்தல் வேண்டும்? என்றார் புலவர். சோழன் தலை சுற்றியது; புலவர் உரை பெரும் பாறை ஒன்று தலைமேல் மோதுவது போல் இருந்தது. நிமிர மாட்டாமல் இருந்த மன்னன் தலை மார்புடன் பொருந்தித் தொங்கியது. கையில் இருந்த வேல் கீழே விழ விம்முதலுடன் நின்றான் மன்னன். நீ தோற்றால்? வேந்தனே! வீரனே! இன்னும் சொல்வேன் கேள்! இப் பொழுது நிகழ விருக்கும் போரில் நீயே வெற்றி பெறுவாய் உறுதியே! ஆனால் தெற்கில் இருந்து வந்த காற்றும் ஒருநாள் திரும்பி அடிப்பது உண்டே யானைக்கு ஒருகாலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் உண்டே! அதுபோல் உன் வெற்றி நிலை மாறி உன் மைந்தர் வெற்றி பெற்றால்.... உன் நிலைமை எவ்வாறு இருக்கும்? இயற்கையாகவே செருக்கித் திரியும் அவர்களும், அவர்கள் கூட்டமும் எதிர்பாராத அந்த வெற்றியால் எக்களிக்க மாட்டார்களா? உனக்கு அதுவரை இருந்த ஏற்றங்கள் அனைத்தும் என்ன ஆகும்? அப்படி நேர வேண்டும் என்று நான் சொல்லவில்லை! நேரவும் கூடாது. ஒரு வேளை அவ்வாறு நேர்ந்து விட்டால்....? என்று தான் எண்ணிப் பார்க்கச் சொல் கிறேன் இதற்கு முன் உன் பெயர் கேட்டாலே நடு நடுங்கிக் கிடந்த உன் பகைவர்கள் தாமே உன்னை வென்றதாகத் தருக்கி மகிழ மாட்டார்களா? வெற்றியே எய்திவந்தவன் தோற்பதில் தானே வெட்கக்கேடு! ஆகவே, வேந்தே! நீ போர் செய்வதை விட்டு விடு. உன்னை நம்பியுள்ள நாட்டு மக்களை மயங்க வைக்க வேண்டா! அதனைத்தான் இந்நாட்டவர் அன்றி விண்ணாட்ட வரும் விரும்புவர் என்றார். சோழன் கால் விரல்கள் நிலங்கிளைத்தன; கைகள் பிசைந்தன; உள்ளம் வெதும்பியது; உதடுகள் துடித்தன; மெய்ம் மயிர் பொடித்தது; கண்களில் நீர் மல்கியது; வாய் தழுதழுத்தது! மயங்கித் தயங்கிப் பேசினான் பெருஞ் சோழன். வணக்கம் ; வாழ்க புலவர் பெருந்தகையே! பழிவழிச் செல்லா வண்ணம் என்னைப் பண்படுத்தினீர்கள். வென்றாலும் சரி, தோற்றாலும் சரி, எனக்கு இழிவே என்பதை அறிந்தேன். அதனினும் இழி வாகும், என்னையும் பொருட்டாக எண்ணி இப்போர்க் களத் திற்கு வந்து உரைத்த தங்கள் பொன்னுரைகளை என்னுளத்தில் கொள்ளாது போரிடுதல் என்பதை உணர்ந்தேன். ஆகவே, தங்கள் உரையை என் தலைமேல் கொள்கிறேன். அதே பொழுதில், தன்னை வியந்த அச்சிறுவர்கள் என்ன ஆரவாரம் செய்வார்கள் என்பதையும் அறிவேன். இருந்தாலும் புலவர் சொல்லுக்கு - உலக நலம் நாடும் புலவர் சொல்லுக்குச் - செவிசாய்த்தல் என் கடன்! வணக்கம்! நும் பயன் கருதாத் தொண்டு வாழ்வதாக! என்றான் கோப் பெருஞ்சோழன். கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வழிய விடை கொண்டார் புலவர் எயிற்றியனார். இலக்கிய வாழ்வு பாடல் இயற்றுவதும், பாடலை ஆராய்வதும், அதனைப் பன்னிப் பன்னிப் பல்காலும் பயிற்றுவதும் மட்டுமே புலவர் தொழிலெனப் பொதுவாகக் கருதுவதுண்டு. ஆனால், உண்மை அஃது அன்று ஒரு வேளை, வெறும் இலக்கியப் புலவனுக்கு வேண்டுமானால் அது கடமையாக இருக்கலாம். வாழ்வே இலக்கியமாகவும், இலக்கியமே வாழ்வாகவும் கொண்டு வாழ்ந்து வந்த புலவர் பெருமக்கள் அவ்வாறு கருதார்! அவர்கள் இலக்கியப் படைப்பே தொண்டின் அடிப்படையில் தான் வளர்கின்றது! அதே தொண்டின் அடிப்படையில் தான் முதிர்ச்சியுற்று வாழ்கின்றது! அத்தகைய தொண்டினைச் செய்துவரும் புலவர் பெரு மக்கள் தாம் எம் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் தொண்டு வாழ்வைச் சுட்டிக் காட்டித் தாமே இலக்கியமாகச் சுடர் விடுகின்றனர். அவர் தம் தொண்டின் நாட்டமே, ஊனாகவும், உயிராகவும் கருதும் ஒள்ளிய இலக்கியப் படைப்பாக உந்தி எழுகின்றது. அதனை எவரும் எளிதில் மொழியும் உரைநடையில் கூறாமல் இனிய கவிதை நடையில் கூறித் தாமும் வாழ்கின்றனர்; மொழியையும் வாழ வைக்கின்றனர். அவர்கள் நற்பணி நாளும் வாழ்வதாக! எயிற்றியனார் இயற்றிய பாடல் மண்டமர் அட்ட மதனுடை நோன்தாள் வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே! பொங்கு நீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து நின்தலை வந்த இருவரை நினைப்பின் 5. தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்; அமர்வெங் காட்சியொடு மற்றெதிர்(பு) எழுந்தவர் நினையுங் காலை நீயு மற்றவர்க்(கு) அனையை அல்லை; அடுமான் தோன்றல் பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ 10. உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்குரித் தன்றே; அதனால், அன்ன தாதலும் அறிவோய் நன்றும் இன்னும் கேண்மதி இசைவெய் யோயே; நின்ற துப்பொடு நிற்குறித் தெழுந்த 15. எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்(கு) எஞ் சுவையே; அமர்வெஞ் செல்வ ! நீ அவர்க்(கு) உலையின் இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவைய; அதனால், ஒழிகதில் அத்தை நின் மறனே; வல்விரைந் 20. தெழுமதி வாழ்க நின் உள்ளம்; அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே; வானோர் அரும்பெறல் உலகத்(து) ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே. (புறம்:213) 6. கொலைக்களம் உழவனும் வளவனும் புலவர்கள் பொருளை விரும்பிப், புரவலராக இருக்கும் வள்ளல்களையும் மன்னர்களையும் பாடுவார்கள். ஆனால், தம் குடியாக இருக்கும் ஓர் உழவனை வேந்தரே பாடுவது உண்டா? பாடி இருக்கிறான் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். பாடல் பெற்றிருக்கிறான், சிறு குடிகிழான் பண்ணன். பொருளை வேண்டியா வளவன் பண்ணனைப் பாடினான்? தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாகப் பண்ணன் வாழ்ந்தமையால் தான் பெருமுடி வேந்தனாகிய வளவன் பண்ணனது சிறு குடியைத் தேடிச் சென்றான்: முட்டை கொண்டு திட்டை ஏறும் எறும்புகள் போல ஏழை மக்கள் சோற்றுத் திரளைப் பண்ணன் சிறுகுடியில் இருந்து வாங்கிக் கொண்டு போவதைக் கண்ணாரக் கண்டான். கழி பேருவகை யுற்றான்; அந்த உவகையில் தன்னை மறந்தான்! தன் வாழ்வை மறந்தான்! பண்ணன் பல்லாண்டு பல்லாண்டு வாழுதற்குக் கிள்ளி பெரு நாட்டங் கொண்டான். அந்த நாட்டம் நல்லதொரு கவிதையாக வெளிப்பட்டது. அதில் தொடக்கத்தி லேயே, நான் வாழும் நாளையும் எடுத்துக் கொண்டு இந்தப் பண்ணன் வாழ்வானாக என்று வாழ்த்தினான். யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய என்பது அம் மன்னன் வாயுரை! மனிதக்குறை பண்ணனை நாம் நெஞ்சாரப் பாராட்டலாம். அவனைப் பாடிய மன்னனையும் நெஞ்சாரப் பாரட்டலாம். பாராட்டு தல்கள் எதற்காக? நல்லவற்றை நாட்டுச் சொத்தாக ஆக்கிய பெருந்தகைமைக்காக! ஆனால் மிகமிகப் பெருந்தகைமை பெற்றவர்கள் என்கிறோமே! அவர்களிடத்தில் குற்றம் குறை களுள் எதுவும் அரும்பிய தில்லையா? பொருந்தாச் செயல்கள் இருத்தது இல்லையா? எச்சிறு குற்றமும் இல்லாதவன் இவன் என ஒருவனைக் காட்டுவது அரிது. அவ்வாறு எச்சிறு குற்றமும் காட்ட இயலாத வாழ்வுடையவன் ஒருவன் இருந்தால் அவனே, வானுறையும் தெய்வத்துள் வைக்கத் தக்கவன். வளவன் வன்னெஞ்சம் மென்னெஞ்சம் படைத்தவனான வளவன், வன்னெஞ்சமும் உடையவன் என்பது உண்மை! ஈரத்தைப் பெரிதெனப் பேணிய வேந்தர்கள், வீரத்தையும் பேணினர். வீரத்தைப் பெரிதெனப் பேணியவரிடம், ஈரத்தின் விளை நிலமான கொடை தன்னிகரற்று விளங்கியது கண்கூடு! அத்தகைய வீரத்தை வன்னெஞ்சம் என இங்குக் குறித்துக்காட்டவில்லை. m¿ah¢ áWt® ïUtiu., அவர்தம் தந்தைமேல் கொண்ட கொடும் பகை காரணமாகக் கொல்லத் துணிந்தான் வளவன்! இது வீரமாகுமா? வீரத்திற்கே இழுக்கு இல்லையா? வீரத்தின் இலக்கணத்தைத் தெள்ளிதின் அறிந்த அருளாளன் ஆகிய அவன், ஆறாச்சினத்தால் அல்லது செய்யத் துணிந்தான் அல்லவா! அது குற்றமேயாம்! அவன் நெஞ்சம் அப்பொழுது வலிதேயாயிற்று! வள்ளல் காரி காரி என்றொரு வள்ளல் இருந்தான். வள்ளல்கள் எழுவர் என வரையறுத்துக் கூறப்படுவோருள் காரியும் ஒருவன். அவன் முழுப் பெயர் மலையமான் திருமுடிக்காரி; அவன் நாடு மலைய மானாடு என்னும் மலாடு! அவனுக்குரியது முள்ளூர்மலை; அவன் தலை நகர் கோவலூர். காரியின் வீரம் கொடைத் தன்மையில் தலைநின்ற காரி படைத் தன்மை யிலும் தலைநின்றான். அவன் குறுநில மன்னனே எனினும் பெரு நில வேந்தரும் அவன் தலை வாயிலில் தாழ்ந்து நின்றனர். தாம் தாம் செய்யவிருக்கும் போருக்குத் தக்க துணையாகக் காரி இருக்க வேண்டும் என்றே அவன் தலைவாயிலை நாடினர் முடிவேந்தர். அவன் எப்பக்கம் சேர்ந்தானோ அப்பக்கமே வெற்றியுறும். அவனைத் துணை பெறாதார் எய்துவது தோல்வியே என்பது தெளிவு. ஆதலால், காரி துணைக்கு வந்ததால் தான் நான் வென்றேன் என்று வென்ற வேந்தனும் கூறுவான். காரி என்பக்கம் வாராமல் என்பகைவர் பக்கம் இருந்தமையால் தான் நான் தோற்றேன் என்று தோற்றவனும் சொல்வான். வென்றோனும் தோற்றோனும் ஒருங்கு புகழும் காரியின் வீரத்திறனை இனி விளக்குதல் வேண்டா! மாரியன்ன காரி தன்னலத்தால் காரி பிறர் போரை ஏற்றுச் செல்வது இல்லை. போருக்குச் செல்வதே, கொடைக் குறிப்புடன் தான். போர்த் துணையால் கிடைக்கும் பொருளை எல்லாம் இல்லை என இரந்து வந்தவர்க்கு எல்லை இன்றி வழங்குதற்கே செல விட்டான். எந்த ஒரு பொருளையும் தனக்கென வைத்துக் கொண்டான் அல்லன். முள்ளூர் மலையில் பெய்த மழைத் துளியினும் மிகுதியாகத் தேர்களை வழங்கினான்! போகக் கூடாத நாளில், பொருந்தாத வேளையில், காரியைக் கண்டு, பொருத்தமற்ற சொற்களைச் சொன்னால் கூட இரவலன் வெறுங் கையுடன் திரும்பான் என்னும் பாராட்டைப் பெற்றவன் காரி! எவர் வாயால்? பெய்யா நாவின் புலவர் பெருமான் கபிலர் வாயால். வள்ளுவர் வாயாலேயே அறவோன் என்னும் பட்டம் பெற்றுவிட்டால், மற்றவர்கள் சொல்ல என்ன இருக்கிறது? உணர்ச்சி மிக்க உள்ளம் வேண்டியவர்களுக் கெல்லாம், வேண்டிய பொழுது எல்லாம் விரும்பிச் சென்று போரிட்ட காரிக்கு வேண்டாதவர் இல்லாமல் போவாரா? காரியின் பகைவர் பலர். அவர்களுள் ஒருவனே பண்ணனைப் பாடிய கிள்ளிவளவன். கிள்ளியின் பகைமை காரி இறந்த பின்னரும் நிற்கவில்லை. அவன் மைந்தர் மேலும் பகைமை பாய்ந்தது! ஏதும் அறியா இளைஞர் என்ன செய்வர்? எய்தவன் இருக்க அம்பை நோவதில் பொருளில்லை என்னும்போது, இவ்வெறுப்பில் ஏதேனும் பொருளுண்டோ? உணர்ச்சி வயப்பட்ட உள்ளம் உண்மையை உணரத் தலைப்படுவதில்லை என்பது நாளும் அறிந்த ஒன்று தானே! காரியின் வழியையே ஒழித்து விடவேண்டும் என்பது கிள்ளியின் எண்ணம். ஆகவே காரியின் இளஞ்சிறுவர் இரு வரையும் கொண்டு வரச்செய்தான். எங்கு? கொலைக் களத்திற்கு! ஒளிவு மறைவின்றிக் கொல்ல வேண்டும் ( ஊரறியக் கொல்ல வேண்டும்) என்பதே அவன் எண்ணம் ஐயோ அழாதீர் இளைஞர்கள் நிற்கின்றனர்; சுற்றிலும் மக்கள் கூட்டம் நிற்கின்றது! மன்னனுக்குப் பகைவன் மக்களுக்கும் பகைவரே என்பதுதான் அன்று மக்களிடம் ஊறிக்கிடந்த எண்ணம். குன்றம் நடந்து வருவது போலக் கொடிய யானை ஒன்று கொலைக் களத்திற்கு வருகின்றது. கூற்றுவன் போன்ற பாகன் குத்துத்தடி கொண்டு விரைந்து செலுத்துகின்றான். அதன் மணி ஒலி கேட்போரை நடுங்க வைக்கிறது. பகைவர் களிறுகளுக்குக் காலனாக இருந்த காரியின் மைந்தர்களைக் காலால் மிதித்து வஞ்சந் தீர்த்துக் கொள்ள வருவது போல் அதன் ஆற்றல் வாய்ந்த நடை உள்ளது! ஆனால், நின்ற சிறுவர்களோ, அது வரைக்கும் அழுத அழுகையை விடுத்து, யானையை விருப்பொடு வேடிக்கை பார்க்கின்றனர்! எத்தகைய கொடுமை! நிறுத்து களிறு கொலைக்களத்தின் இடையே குறுகுகின்றது. கோவேந்தன் செலுத்து என்று ஏவ வேண்டும். ஆனால் நிறுத்து என்னும் ஒரு குரல் ஓங்கி எழுகின்றது. அவ்வொலி கோக்கிள்ளி வாயில் இருந்து வரவில்லை. கோவூர் கிழார் என்னும் அருட் புலவர் அருந்தமிழ் வாயில் இருந்து வெளி வந்தது! சொல்லொடு பொருள் உடன் வருவது போல, ஒலி யுடன் கோவூராரும் முன் வந்து நின்றார். பற்றி எரியும் வீட்டுள் புகுந்து பொருளைப் பாதுகாக்கும் ஊக்கம் எல்லார்க்கும் ஏற்படுவது இல்லை. உயிரை ஒரு பொருட் டாக எண்ணாத உரம் உடையவர்களுக்கே இயலும். அதனினும் உரம் உடையவர்களே சீற்றமிக்க வேந்தன் முன் நிற்கமுடியும். அதிலும் அவன் கொடுமை செய்யத் துணிந்து நிற்கும் பொழுதில் திடுமெனப் புகுந்து நிறுத்து என்பது, நெருப்புடன் விளையாடுவதாக அல்லாமல் வேறு எவ்வாறு இருக்க முடியும்? அந்த விளையாட்டுக்கும் துணிந்தவர் அருளாளர் கோவூரார். பரம்பரைப் பெருமை ஏன்? என்று கேட்டான் யானையை ஏவ நின்ற வேந்தன். வேந்தனே! உன் விருப்பம் போல் செய்! தடையற்றுச் செய். ஆனால், நான் சொல்லப் போகும் உரையைக் கேட்டு விட்டுச் செய் என்றார். என்ன அருமையான தொடக்கம்! தொண்டு செய்ய நினைவார்க்கு இத்தகைய பேச்சுத் திறம் அல்லவோ வேண்டும்! தொடக்கம் மட்டும் தானா நயம்? சுவைக் கட்டியை எந்தப் பக்கத்தில் கடித்தால் தான் என்ன? அரசே! ஒரு புறாவை வெருட்டிக் கொண்டு வந்தது ஒரு பருந்து; அஞ்சிய புறாவோ புவியாளும் வேந்தனை அடைக் கலமாக அடைந்தது. எளிய புறாவே என்று வேந்தன் புறக் கணித்தானா? வல்வாய்ப் பருந்தின் வாய்ப் பொருளாக விட்டு விட்டானா காவலன்? இல்லை! புறாவுக்கு அடைக்கலம் அளித் தான். பருந்துக்கும் பரிவு காட்டினான். எப்படி? புறாவின் தசையின் அளவுக்குத் தன் தசையை அரிந்து அரிந்து தராசில் வைத்தான். புறாவின் உயிரைப் புவி ஆளும் வேந்தன் தன் உயிரினும் பெரிதாகக் கருதினான் அல்லவா! அவன் யாவன்? உன் முன்னோனான செம்பியனே அவன் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? அத்தகைய அருளையுடையோர் பரம்பரையில் வந்த உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது? மருத்துவன் மைந்தர் அருளாளனே! இச் சிறுவர்கள் இருக்கிறார்களே! இவர்கள் மரபுதான் எத்தகையது! தன்னலத்தால் பொருள் தேடித் தானே உண்டு, மண்ணுக்குச் சுமையாக இருக்கும் மரபா இவர்களுடையது? அறிவே அருஞ் செல்வமாகக் கொண்டு வாழும புலவர்களது, புல்லிய பசியைத் தீர்க்கும் பசிப்பிணி மருத்துவர் அல்லரோ இவர் மரபினர்? ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என்பதை அறிந்த நீ அறியாதது என்ன? விரும்பிய வண்ணமே.......! பால் வழியும் முகத்தையுடைய இப் பச்சிளஞ் சிறுவர் களைக் கூர்ந்து பார்! அறியாத இடத்தில், அறியாத மக்களின் இடையே எதுவும் புரியாமல் விம்மி விம்மி அழுத இச் சிறுவர்கள், ஆரவாரத்துடன் வரும் யானையைக் கண்டு அழுகையை விடுத்து வேடிக்கை பார்க்கிறார்களே! இவர்கள் நிலைமையைப் பார்த்த பின்னும் கொல்லத்தான் உனக்கு விருப்பம் உண்டாகின்றதா! அவ்வாறு உண்டானால் உன் விருப்பம்போல் செய்! என்றார். கோவூரார் குணம் கோவூரார் பெருங்குணமே உருவானவர்; பேரருளாளர். அதே பொழுதில் பெரும் புலவராகவும் இருந்தார்; பிறர் தரும் பரிசிலைப் பெரிதெனக் கருதி வாழ வேண்டாத உழுதூண் வாழ்வினர் அவர். ஆகவே பிறர்க்கு அரியனவாக இருந்த செயல்கள் அனைத்தும் அவர்க்கு எளியனவாக இருந்தன. நலங்கிள்ளியின் இடத்தில் இருந்து நெடுங்கிள்ளியினிடம் வந்தான் ஒரு புலவன். அவன் பெயர் இளந் தத்தன் என்பது. அவன், கிள்ளியர் இருவருக்கும் பெரும் பகை என்பதை அறியாதவன். ஆகவே, அவனைப் பகவைனின் ஒற்றன் என்று எண்ணி நெடுங் கிள்ளி கொலை செய்தற்குப் புகுந்தான். அப் பொழுது தத்தன் செய்த நல்வினையால் தமிழ்க் கோவூரார் ஆங்கு இருந்தார். அவர், பழுமரம் நாடும் பறவை போலப், பரிசிலை நாடும் பாவலர் வாழ்வு பழுதுடையது அன்று; பிறருக்கு அழிவு சூழ்வதும் அன்று, என்று நயமாக எடுத் துரைத்துக் கொலையைத் தடுத்து நிறுத்தினார். அத்தகைய பெருந்தகைதாம் இங்குக் காரியின் மக்களைக் காத்தார். யாருக்குப் பாராட்டு? பொங்கி எழுந்த பாலை, நீர் அடக்கி விடுவது போல் கிள்ளி வளவன் கோபத்தைக் கோவூரார் அமைதிப் படுத்தினார். கிள்ளி, மனிதன் ஆனான்; மன்னவனும் ஆனான். கோவூர் கிழார் உரிய இடத்தில் உரிய பொழுதில் ஓடிப்போய் உதவியதனைப் பாராட்ட வேண்டும். அதே பொழுதில், அவர் உரையைக் கேட்டு அருள் செய்தானே கிள்ளி, அவனையும் நெஞ்சாரப் பாராட்ட வேண்டும். கொலைக்களத்திற்கும் போய்க் கொஞ்சி விளையாடிக் குளிரச் செய்த தண்டமிழ் இருக்கிறதே அதையும் உண்மை நெஞ்சம் உயர்த்திப் பாராட்டத் தவறாது! நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று என்பது பொன்னுரை யன்றோ! கொலைக் களத்தில் கோவூரார் கொழித்த பா: நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே, புலன் உழு துண்மார் புன்கண் அஞ்சித் தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்; 5. களிறுகண் டழூஉம் அழாஅல் மறந்த புன்தலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி விருந்தின் புன்கணோ உடையர்; கேட்டனை யாயின் வேட்டது செய்ம்மே. (புறம் : 46) 7. சிறைக் கோட்டம் வீரம் பற்பல வீட்டு வாயில்களில் மான் கொம்புகளைக் காண் கிறோம். சிலர் மான் தலையை மரத்தால் செய்து அதில் கொம்பைச் சேர்த்து உருவாக்கி வைத்துள்ளனர். கலைப் பொருள்களாக இன்று மான் தலையும், கொம்பும் காட்சி வழங்குகின்றன. ஆனால் அவற்றின் தொடக்கம் கலையால் அமைந்தது இல்லை! வீரத்தால் எழுந்தது! மரபுப் பெருமை வேட்டைக்குச் சென்றிருப்பான் ஒரு வீரன். அவன் வலியதும் அரியதும் ஆகிய விலங்குகளை வேட்டையாடி அழித்திருப்பான். அவன் ஆற்றிய வீரத்திற்கு அடையாளம் வேண்டாவா? வீழ்த்திய விலங்குகளை ஊரறியக் கொண்டு வந்தான்; வீழ்த்திய வீரத்தை நாடறியப் பரப்பினான். எனினும் அவை நிலைத்த அடையாளங்களாக அவனுக்குத் தோன்ற வில்லை. ஆகவே, தான் வேட்டையாடிய விலங்கின் தலை, கொம்பு, தந்தம், தோல் ஆகியவற்றை எடுத்து, அவை கெட்டுப் போகாமல் இருக்கவும், எழிலோடு விளங்கவும் ஏற்ற பாடங் களையும் வேலைப்பாடுகளையும் செய்தான். அவ்வாறு அமைக்கப் பெற்றவையே புலித்தலை மான் தலை, யானைத் தந்தம், மான் கொம்பு, காட்டெருமைத் தலை முதலியவை ஆகும். இப் பொருள்களை வீட்டின் உள்ளிடத்தே ஓர் இடத்தில் மறைத்து வைப்பதால் ஆவது என்ன? ஆகவே, வீட்டு வாயிலிலே, மாளிகை முகப்பிலே, அரண்மனை அரங்கிலே வீர விளக்கமான இக்காட்சிப் பொருள்களைக் கவினுற வைத்தான். இன்றும் பழைமை போற்றும் பல இடங்களில் இவற்றைக் காணலாம்; ஒவ்வொன்றின் உள்ளேயும் மறைந்து கிடக்கும் வரலாற்றுச் செய்திகளைத் தம் மரபுப் பெருமையாகக் கூறுவதைக் கேட்கலாம். இங்குக் குறிப்பிடப் பெற்ற காட்சிப் பொருள்களுக்கு மாறுபட்ட ஒரு பொருள் ஒரு மன்னவன் அரண்மனை முகப் பிலே - வாயில் கதவிலே - இருந்தது! அஃது ஒரு பல்லாகும். அப்பல்லும் ஒரு விலங்கின் பல்லன்று! ஒரு மனிதன் பல் ! அதிலும் ஒரு மன்னவன் பல்! பல்லைப் பறித்தல் எதிரிட்ட வேந்தர்களின் மணிமுடிகளையும் மார்பு ஆரங் களையும், மாண் பொருள்களையும் கவர்ந்து வருவதுதான் வழக்கம். ஆனால் ஒருவன் பல்லைப் பறித்து வந்து அரண் மனைக் கதவிலே பதித்து வைத்து நாடறியச் செய்வது வியப்புக் குரியது மட்டுமன்று - வேதனைமிக்கதும் கூட! பல்லை இழந் தவன் மூவன் என்னும் அரசன். பல்லைப் பறித்தவன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் வேந்தன். கணைக்காலன் இப்பொழுது ஒருவன் சிறைக் கோட்டத்தில் கிடக்கிறான். பல்லைப் பறிக்கும் வீரம் எங்கே? படுசிறைக்குள் கிடக்கும் துயர நிலைமை எங்கே? வீரனுக்கு வீரன் இல்லாமலா போகிறான்? வலிய வீரனுக்கும் அவன் வீரம் எந்நாளும் நிலைத் திருப்பது இல்லையே! முப்பதில் முறுக்காக இருப்பவன், நாற்பதில் நழுவத் தொடங்கி விடுகிறானே! ஐம்பது அறுபதில், அசதியும் ஆட்டமும் கண்டு விடுகிறானே! அப்பொழுது அவன் வீரம் வீரமாக இருக்குமா? அதனால் அல்லவா அறப்பெரு வேந்தர், வலியார்முன் தன்னை நினைக்க தான்தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (குறள், 250) என்று அறிவுறுத்தினார். புலவர் பொய்கையார் நானில வளமும் ஒருங்கு அமைந்த தொண்டி நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டு வந்தான், கணைக்காலன். அவன் அறிவு நூல் நாட்டம் மிக்கவன் ; புலவர் தோழன் ; கவியரங்கு ஏறிய காவலன் ; அவன், அரசவையில் மிகுதியாகப் பொழுதைப் போக்கினானா? அறிஞர் அவையில் மிகுதியாகப் பொழுதைப் போக்கினானா? அரச அவையையும் அறிஞர் அவையாக ஆக்கி அறிவு நூல் ஆராய்விலும், கலை நுகர்ச்சியிலும் காலத்தைச் செலவிட்டான். அவன் தன் உயிரினும் மேலாக மதித்த புலவர், பொய்கையார். சேரன் வாழ்வுக்குப் பொலிவூட்டிய பெருந்தகை இப்பொய்கையாரே! பழையன் மறைவு அறிவு நூலில் மிகுதியாகக் கணைக்காலன் ஈடுபட்டிருந்த காலத்தில் கோச்செங்கட் சோழன் என்னும் செங்கணான் சேரநாட்டின்மேல் படையெடுத்தான். படை எடுப்பைக் கேட்ட வுடன் புலிபோல் வெளியேறினான் சேரன். வீரர்களும் ஒரு வரை முந்தி ஒருவர் வெளியேறினர். படையெடுப்பு நேருமென எண்ணாமல் அறிவுக் களத்தில் இருந்து நேரிடையாக அமர்க் களம் சென்றவன் சேரன்! அவன் வீரர்களும் போரை நோக்கி யிருந்தார் அல்லர். எதிர்த்து நின்றவனோ எளியன் அல்லன்! பெருவீரன்! அவன் படைத்தலைவன் பழையன் என்பவன், மாபெரும் வீரன். சேரன் தன் படைகளை நான்கு பிரிவு படுத்தி நன்னன், அத்தி, கங்கன் கட்டி, புன்றுறை என்னும் நால்வரையும் பிரிவுத் தலைவர்கள் ஆக்கினார். போர், கழுமலம் என்னும் இடத்தில் நடை பெற்றது. தனித்தலைவன் சேரன்! துணைத் தலைவர் நால்வர் ! பழையனோ ஒரே தலைவன்! சேரன் படை வீரர் சூழ்ந்து நின்று தாக்கினர்; பழையன் வீழ்ந்து பட்டான்! பொழுதும் விழுந்தது; இருள் சூழ்ந்தது; வீரர்கள் ஆரவாரம் விழுந்தது; முதல் நாள் போர் பழையன் முடிவோடு முடிந்தது. களக்காட்சி செங்கட் சோழன கண்ணை, மேலும் சிவப்பு ஆக்கின பழையன் இறப்புக் கவலையும், அக்கவலையால் உண்டாய உறக்கம் இல்லாமையும்! விடிந்தது! சேரர் மடிந்தனர் என்று சோழன் தன் கால்களை எடுத்து வைத்தான் களம் நோக்கி. அவன் கண்ணினும் சிவந்து விட்டது களம்! ஒரே குருதிக்காடு! காலையிலே பட்டு வீழ்ந்தவர் இரத்தத்தை மிதித்து உழக்கியது களிறு! மாலையிலே கிளம்பியது புழுதி! என்ன புழுதி! பவழப் புழுதி! இரத்தம் பெருக் கெடுத்தோடியது செங்குளத்தில் இருந்து நீர் வடிவது போல! உடைந்த முரசமே மடை! கருநிறக் காகம் செந்நிறம் கொண்டு விட்டது. போர்க் களம் தந்த புகழ்ப் பரிசு அது! வெட்டப்பட்டன வீரர் கால்கள்! அவை இரத்த வெள் ளத்தில் நகர்ந்தன சுறா மீன்களைப் போல, துதிக்கைகள் வெட்டப்பட்டுப் புரண்டன; இடியுண்ட பாம்பு போல. கொற்றக் குடைமேல் விழுகின்றது அற்ற துதிக்கை, வெண்ணிலவைத் தழுவும் பாம்பு போல. வெட்டுண்ட துதிக்கையில் இருந்து சொட்டுகின்றது குருதி, பவழம் நிறைந்த பையின் மூட்டு வாய் கிழிந்தது போல. எழுகின்றது கழுகு; வாயிலே இருக்கின்றது தசை; அடித்துப் பறக்கின்றது சிறகை; மத்தளம் அடிப்பவனை ஒப்பாக இருக்கின்றது காட்சி. காற்றிலே தூம் தூம் என்று விழும் பனங்காய் போல வீழ்கின்றது தலை. போர்க்காற்று பேய்க் காற்று அல்லவா! கேடயத்தோடு அற்றது கை; அதனைப் பற்றுகிறது நரி; கவ்விக் கொண்டது வாயில்! கண்ணாடி காண்பவர்களை நினைவூட்டுகின்றது அது. கோடைக் காற்றுக்கு ஆற்றாத் தோகை மயில் போல அலறி ஓடி வருகின்றனர் மங்கைமார், தம் கணவர் இறந்துபட்ட இடம் நோக்கி. களிறு எற்றித் தள்ளுகிறது கொற்றக் குடையை; புரள் கிறது, பசு மிதித்த காளான் போல! கணைக்காலன் இதற்குமுன் கவிதைகளிலே தான் தளையைக் கண்டதுண்டு! இப்பொழுது தன் கைகளிலே தளையைக் காணுகின்றான். சோழ வீரர்கள் சேரவேந்தனை இழுத்துச் செல்கின்றனர். ஒரே ஓர் எரிமலை மட்டும் புகைந்து கொண்டு நின்றது. என்ன இருந்தாலும் சேரன் தம் உயிரன்ன மாணவன் அல்லவா! சிறையில் சேரன் சேரன் கால்கள் நடந்தன. எண்ணம் தாவித் தாவி எங் கெங்கோ அலைந்தது. அவன் இத்தகைய ஒரு நிலைமையை எண்ணிப் பார்த்திருக்கவே இயலாது. போரில் வெல்லலாம், அன்றித் தோற்கலாம். அது வீரர்க்கு இயல்பே. கைத் தளையுடன் பகைவன் சிறைக்கண் சிக்கிச் சிறுமையுறும் கொடுமையை நினைக்கத்தான் அவன் நெஞ்சம் நெக்குருகியது. போர்க் களத்தில் புண்பட்டு இறந்திருந்தால் புகழ் வாழ்வு வாழ்ந்ததாகக் கருதிப் புன்முறுவல் பூத்திருப்பான். அறிவு நூல் கற்ற அவன், செடியில் இருந்து பூ ஒன்று உதிர்வது போலத் தன் உடலில் இருந்து உயிரை உகுத்திருப்பான். ஆனால், மாறாப் பழியாக மாற்றான் சிறைக்கண் கிடக்க நேர்வது மன்னவன் நிலைமைக்குத் தகுமா? என்னும் சிந்தனைச் சிக்கல் போராடிக் கொண்டே இருந்தது. அந்நிலையில், உறையூர்க்கு மேல் பால் இருந்த குடவாயில் கோட்டச் சிறைக் கதவு திறந்து மூடப் பெற்றது. சேரன் இதயக் கதவு முன்னிலும் பன் மடங்கு மிகுதியாகத் திறந்து வெதும்பிக் குமுறியது. பாடற்குப் பரிசு சேரன் மட்டுமோ துயர் உற்றான்? அவன் சிறைக்குள் கிடந்து துயருற்றான். சிறைக்கு வெளியே இருந்து துடித்தார் புலவர் பொய்கையார். அவனுக்கு, விடுதலை ஏற்பட்டால் அல்லாமல் அவருக்கு ஓய்வு ஒழிவு இல்லை. நேரே சோழ வேந்தனிடம் சென்றார். அவனைப் பாட விரும்பாத - ஏன் - பார்க்கவே வெறுத்த - பொய்கையார் நா அவன் செய்த கழுமலப் போர் பற்றி நாற்பது பாடல்கள் பாடின. களவழி நாற்பது என்று பெயர் சூட்டி அதனை எடுத்துக் கொண்டு செங்கணானைத் தேடிப் போய்க் கண்டார். அவன் கேட்டு வக்குமாறு தம் பாடல்களைப் பாடினார். புலவர் பாடற்குப் பொன்னும் பொருளும், கரியும் பரியும் அல்லவோ பரிசு! பொய்கையார் வேண்டிய பாடற் பரிசு - நூற்பரிசு - என்ன? சேரன் கணைக் காலனுக்கு விடுதலை தரும் ஒன்றே நீ எனக்குத் தரும் பரிசு என்று வேண்டினார். புலவர் வேண்டுதலை மறுக்கக் கருதாத சோழன், சேரமானுக்கு விடுதலை அளித்தான். மகிழ்ச்சி மிக்க இச் செய்தியைத் தம் மாணவனாம் மன்னனுக்குச் சொல்ல ஓடினார் நல்ல புலவர்! பாவம்! ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும் என்னும் உரையை மெய்யுரை ஆக்கியது நிகழ்ச்சி! மானத்தின் மற்போர் சேரன், சிறைப்பட்டதில் இருந்து ஊண்கொள்ளவில்லை; நீர் பருகவில்லை; உறக்கமும் கொள்ளவில்லை ஓர் இடத்தில் உட்கார்ந்து இருக்கவும், கிடக்கவும் அவனால் முடியவில்லை. உடல் கொதித்தது; உள்ளம் வெதும்பியது; நா உலர்ந்தது: தாங்க முடியாத நீர் வேட்கை! ஏவல! தண்ணீர் தா என்றான் சேரர் காவலன். கடமை யுணரா ஏவலன் காலந்தாழ்த்துத் தண்ணீர் கொணர்ந்தான். அதற்குள் சேரன் சிந்தனை வேறு வகையில் திரும்பியது. இந் நீரைப் பருகி நிலத்தில் இன்னும் நெடுநாள் வாழவோ வேண்டும்? அதுவும் ஒரு வாழ்வோ? பகைவன் நாட்டில், அன்பின்றித் தந்த நீரை அருந்தி வாழ்வதும் ஒரு வாழ்வா? என்று அவன் மான உணர்வு பேசியது. ஒரு நொடிப் பொழுது உணர்ச்சிதானே வாழவைக்கவும் செய் கின்றது. சாவவைக்கவும் செய்கின்றது! சேரன் மேலும் எண்ணினான். அவன் எண்ணம் புலியை வால் உருவி விட்டது போல் ஆயிற்று. என்ன எண்ணினான் அவன்? குடிக்குக் குற்றம் போருக்குச் சென்று புண்பட்டு இறப்பதே புகழ் மிக்க இறப்பு என்று எண்ணுவது எம் குடிச் சிறப்பு. விழுப்புண் படாத நாளெல்லாம் வீண் நாள் என்று கருதுவது எம் நாட்டு வீரம் ஒருவன் போரில் மாயாமல், நோயாலோ, பிற வகைகளாலோ இறந்தால் கூட அவனும் போர்க்களத்தில் புண்பட்டு இறந்த தாகவே எண்ணி அவன் மார்பை வாள் கொண்டு கிழித்துக் கட்டைமேல் அடுக்கிச் சுட்டெரிப்பது தொன்று தொட்டு வந்த எம் குலத்தினுக்குரிய வழக்காறு. இவ்வழக்கமும், முழு உருப் பெற்றுப் பிறந்து வளர்ந்த ஆட்களுக்கு மட்டுமே உண்டு என்பது இல்லை. குழந்தை உருப்பெற்று இறந்தே பிறந்தால்கூட, உருப் பெறாத தசைப் பிண்டமாகக் கருச் சிதைந்து வந்தால் கூட அவற்றையும் முழுத்த ஆள் என்றே கருதி வாளால் வெட்டிச் சுட்டெரிக்கத் தவறார் எம்மரபினர். இத்தகைய பழைமையும், வீரமும் போற்றும் குடியிலே நான் பிறந்தேன். அக்குடியின் வேந்தனாகவும் இருந்தேன். ஆனால், என் நிலைமை அவ் வீரர்குடிக்குச் சற்றேனும் ஏற்றதாக உள்ளதா? நாவிற்கு இழிவு போர்க்களத்திலே என் வீரர்கள் மடிந்தார்களே, அப் பொழுதே நானும் இறந்திருக்க வேண்டும்; இல்லையேல் என் கையில் தளை பூட்டினார்களே அப்பொழுதாவது ஆருயிரை நீத்திருக்க வேண்டும்; இல்லையேல், பகைவர் நாட்டு எல் லைக்குள் கால் வைத்த போதாவது முடிந்திருக்க வேண்டும்; இல்லையேல், இக் கொடுஞ் சிறைக்குள் அடைபட்ட போதி லேனும் உயிர்விடுத்திருக்க வேண்டும். இத்தனை இடங்களிலும் தவறினால் கூட, ஆவிற்கு நீரென்(று) இரப்பினும் நாவிற்(கு) இரவின் இளிவந்த(து) இல் (குறள், 1066) என்பதை நன்கு அறிந்த நான் தண்ணீர் தா என்று கேளாம லாவது இருந்திருக்க வேண்டும். இருப்புச் சங்கிலியால் பிணைத்து நாயை இழுப்பது போல் இழுத்துக் கொண்டு வந்து சிறைக்குள் தள்ளிய பகைவர்கள் தரும் தண்ணீரையும் உணவையும் கொண்டு உயிர் வாழ்வதற்காகவோ என் இனிய அன்னை என்னை ஈன்றாள்? அந்தோ! இழிவு! மாபெரும் இழிவு! என் குடிக்கு மாறா இழிவு! இந்தக் கடைசி வாய்ப்பையும் இழந்து விடமாட்டேன். ஏவலன் தரும் தண்ணீரைப் பருகி மேலும் இழிவைத் தேடாமலேனும் இறப்பேன். ஒரே முடிவு என் உணர்ச்சியை எவரிடம் உரைப்பது? எப்படி உரைப் பது? நல்ல வேளை! ஏடும் எழுத்தாணியும் என்னிடம் உள. புலவர் பொய்கையாரின் பொருள் மிக்க பாடல்களை எழுதிப் பயன் கொள்ள வைத்திருந்த ஏடு, என் உணர்வின் வெளியீடாக இருக்கட்டும் என்று எழுதினான். எண்ணிய எண்ணங்கள் அனைத்தையும் ஏழுவரிகளில் அமைந்த இன்றமிழ்க் கவிதை ஒன்றில் வடித்தான்! அப்பாடல், குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆள் அன்(று) என்று வாளில் தப்பார்; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் 5. மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. (புறம்: 74) பாடலை எழுதி முடித்தான். உண்ணாத, பருகாத உடல் தளர்ச்சி யும், மானங் கருதிய உணர்ச்சிப் பெருக்கும் ஒன்று மாறி ஒன்று, மறு தலையாக வேலை செய்யவே உயிர் கூட்டை விட்டுப் பிரிந்தது. அந்நேரந்தான் திறந்தது விடுதலைக் கதவு! அரசன் விடுதலை வருமுன் இறைவன் தந்த விடுதலையை ஏற்றுக் கொண்டு, விட்டானே கணைக்காலன்! அவனை அந்நிலைமை யில் கண்ட பொய்கையார் நிலைமை எத்தகையதாக இருக்கும்? பிரியா இருவர் மாணவனைக் கண்டு கலங்கிக் கண்ணீர் வடித்தார் பொய்கையார் கட்டிப் புரண்டார்; இன்பத்திலே இரண்டறக் கலந்து வாழ்ந்த அவர்கள் துன்பத்திலும் இரண்டறக் கலந்து விட்டனர். ஆம் ! சிறிது பொழுதில் நான்கு விழிகள் மூடிக் கிடந்தன! இறவாப் புகழ் இருவரும் இறந்தார்கள் என்று ஏவலன் ஓடிப் போய்ச் செங்கணானிடம் சொன்னான்! செங்கணானும் இணைந்து இறப்புக்கருதி எண்ணி எண்ணிப் புண்ணானான்! எத்தனையோ நல்ல செயல்களைச் செய்தான், இருவரும் இறந்த பழியை ஒழிப்பதற்காக! அவர்கள் உண்மையில் இறந்தனரா? இரண் டாயிரம் ஆண்டுகள் கழித்தும் பேசுகின்றானே சேரமான் கணைக்காலன்! அவன் பொய்யுடம்பு மட்டுமோ கொண்டி ருந்தான்? கன்னித் தமிழ்ப் பாட்டால் சாவா உடம்பும் கொண்டிருந்தான் அல்லவா அவ்வுடம்பு அவனைச் சாவ விடாமையால்தான் இன்றும் நம்முடன் அவன் தன் வாயால் பேசுகின்றான். சிறைக் கோட்டத்தைச் செந்தமிழ்க் கோட்டம் ஆக்கிய சேரமான் புகழ் வாழ்வதாகுக! 8. வீடு வாழ்வு நோக்கம் வாழ்க்கை, வாழ்வதற்கே என்னும் பேச்சு பல இடங் களில் எழுகின்றது. அது கலை, கலைக்காகவே என்னும் முழக்கத்தில் இருந்து எழுந்ததாகும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பது மிகப் போற்றத்தக்க - விரும்பத்தக்க - ஒன்றே. அரிதினும் அரிதாகக் கிடைத்த மாந்தர்ப் பிறவியையே வாழ்வுக்குப் பயன்படுத்தாத ஒருவன் பிறகு எதைத் தான் வாழ்வுக்குப் பயன்படுத்துவான்? ஆனால், வாழ்வதற்கே என்பதில் அமைந்துள்ள வாழ்வு எவருடையது? சொல்பவரைப் பற்றியதாக மட்டும் இருந்தால் அதற்கு மானிடப் பிறவிதான் வேண்டும் என்பது இல்லை. எல்லா உயிர்களும் தம் வாழ்வையே, தனி வாழ்வையே - நாடித்திரிகின்றன. அவற்றிற்கும், ஆறாம் அறிவாகிய பகுத்தறிவும், பிறர் துயரும், பிறர் நலமும் அறியும் மன உணர்வும் உடைய மாந்தர்க்கும் வாழ்வு பற்றிய நோக்கம் ஒன்றாகவே இருக்குமானால் அது வாழ்வு ஆகாது. வாழ்வாங்கு வாழ்தல் மனிதன் வாழ்வாங்கு வாழ விரும்புபவர் வள்ளுவர். அதற்கு வழி வகுத்துக் காட்டியவரும் அவர்: தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (குறள், 46) என இல்வாழ்வினரால் காக்கத் தக்கவர் இவர் என எண்ணி உரைத்தார். இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை *(குறள், 41) துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை (குறள், 42) என இல்வாழ்வினர் எவர்க்குத் துணையாதல் வேண்டும் என இனிது உரைத்தார். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (குறள், 226) என்றும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள், 322) என்றும் அறவாழ்வை அறுதியிட்டு உரைத்தார். இவற்றைப் பேணி வாழ்பவர் வையத்துள் வாழ்ந்தாலும் கூட வானுறையும் தெய்வங்களுடன் வாழும் தெய்வ வாழ்வினராகக் கருதப்படுவார் என்று தெளிவு காட்டியுள்ளார். இத்தகைய உயரிய வாழ்வைக் கருதாமல் தம் வாழ்வையே கருதுபவர் மனிதர் அல்லர். அவர் மனித உருவில் இருக்கிறார் என்று கூறும் அளவே தகும். அவர், வேடிக்கை மனிதர் என்பது பாரதியார் கருத்து. தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பம் மிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? என்று பராசக்தியினிடம் வரம் வேண்டும் பகுதியால் பாரதியார் கருத்துத் தெளிவாகும். உள்ளங்கள் பல தன்னையே கருதும் அளவுடன் நில்லாமல், தன் குடும்பம், தன் சுற்றம் என்னும் ஒரு சிற்றளவு உள்ளம் வளர்ந்தவர்களும் உலகில் உளர். அவர்களும், வாழ்க்கை வாழ்வதற்கே என்பதன் முழுப் பொருள் அறியாதவரே! உலகம் அனைத்தும் ஒரு குடும்பம் என்னும் தூய தாயுள்ளம் கால்கொள்ளாதவரே! தன் மனைவி, தன் பிள்ளை, தன் சோறு, வீடு, செல்வம் இவையே உண்டு தானும் உண்டு என்று இருப்பவன் சின்னதொரு கடு கன்ன உள்ளம் உடையவன்; அவன், அவன் வாழும் தெருவுக்கும் பயன்படாத வீணன்! என் ஊரே இனிய ஊர் என்று ஊரளவில் நிற்பவன் கடுகுக்குச் சற்றே பெரிய துவரை உள்ளம் உடையவன்; தன்னுரிமையால் பிற நாட்டைத் துன்புறுத்தல் மிகக் கீழ் உள்ளம் ஆகும். உலகமக்களை எல்லாம் ஒப்பாகக் கருதுவதே தாயுள்ளம். அதுவே தூய உள்ளம்! அன்பு உள்ளம்! பெரிய உள்ளம்! அதுவே இன்ப உள்ளம்! அங்கேதான் சண்டை இல்லை! என்று புரட்சிக் கவி புகல்வார். தன்னல வாழ்வின் தரக்கேட்டையும், பொதுநல வாழ்வின் புகழ்ப் பேற்றையும், இப்பாடற்பகுதி எளிதில் விளக்குதல் உறுதி. வேடிக்கை மனிதரும், கடுகுள்ளம், துவரையுள்ளம் உடைய மாந்தரும்தாம் உலகில் உள்ளனரா? அவர்களாகவே இருந்தால் உலகம் உய்ய வேண்டாவா? உலகம் உய்வதற்காக உயர்வற உயர் நலம் உடைய பெருமக்கள் ஆங்காங்கு முன்னரும் இருந்திருக்கின்றனர்; அவர்களைப் பற்றி அறிவது நமக்கும் நன்மை பயக்கும்; பிறருக்கும் நன்மை பயக்கும். வறுமையும் வாழ்வும் பெருஞ்சித்திரனார் என்பார் ஒரு புலவர். அந்நாளில் வறுமை வாழ்வு வாழ்ந்த பெருமக்களுள் முதல் இரண்டு இடங் களில் ஒன்றைப் பெறத் தக்கவறிய வாழ்வினர் சித்திரனார் என்பது தகும். அவ்வறுமை வாழ்விலும், தாழ்விலாக் கொடை வேந்தரும் வெட்கும் அளவுக்குக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தவர் சித்திரனார். கிளைப் பொருள் இல்லான் கொடையே கொடை என்று வறியவர் கொடை நலத்தை வாழ்த்தும் பாங்குடையது தண்டமிழகம் அன்றோ! பொருளும் புலமையும் வெளிமான் என்னும் வேந்தன் சித்திரனாரைச் செவ்வையாக அறிவான். அவனை நாடியும் தேடியும் போய் அவன் நல்லன்பில் சித்திரனார் திளைத்த நாட்கள் பல. ஆனால், அவன் தம்பியாம் இளவெளிமான் அத்தகு பெருந்தன்மை கைவரப் பெற்றவன் அல்லன். புலமைப் பெருமை அறியானுக்குப் பொருட் பெருமையே பெருமையாகத் தோன்றும். அத்தகைய பொருட் பெருமையே கருத்தாக உடையவன் புலவரை மதிக்க நினை வானா? நினைவுதான் எழுமா? புல்லுண்ணாப் புலி இளவெளிமான் இயல்பை அறியாத சித்திரனார் ஒரு முறை அவனைத் தேடிச் சென்றார். புலவர் வருகை கேட்ட அவன் எதிர் வந்து உவந்து வர வேற்றிருக்க வேண்டும். உரிய சிறப்புக்கள் செய்திருக்க வேண்டும். உரையாடி உயர்ந்த கருத்துக் களைப் பெற்றிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் விடுத்து, நின்ற ஒருவனை அழைத்து வந்த புலவனுக்கு இச் செல்வத்தைச் சென்று கொடுத்து வா என்று ஏவினான். கிடைத்தது போதும் என்று எண்ணி ஏவலன் கொடுத்த கொடையைப் பெற்றார் அல்லர் சித்திரனார். காவலன் கொடையை நாடியவர், ஏவலன் கொடையை ஏற்பாரா? புலி பசித்தாலும் புல்லை உண்ணாது என்பதை மெய்ப்பித்தார் சித்திரனார். குன்றத்தின் அளவாயினும் சரி,. குறைபட்ட எண்ணத்துடன் கொடுப்பதைப் பெறேன்; குன்றி மணியின் அளவாயினும் சரி; குணத்துடன் கொடுக்கும் கொடையையே பெறுவேன் என்று கூறி இளவெளிமான் அரண்மனையை விட்டு வெளியேறினார் சித்திரனார். கொடானுக்குக் கொடை வள்ளலே ! கொடுக்கும் குணம் அறியாத வேந்தன் வெட்கம் அடையுமாறு யான் எடுப்புடன் செல்லுதற்கு ஏற்ற வண்ணம் களிறு ஒன்று நல்குவாயாக என்று அதிராச் சிறப்பின் முதிரத்துக் கோமான் குமணனிடம் வேண்டினார் புலவர். அவன் களிறு நல்க, அதன் மேல் செம்மாந்து ஏறிச் சென்று, அதனை இளவெளிமான் காவல் மரத்தில் பிணைத்தார். அரண் மனைக்குள் சென்று, இரப்பவரைக் காக்கக் கடமைப்பட்டவன் நீ ஒருவன் மட்டும் அல்லை. இரப்பதைத் தொழிலாகக் கொண்டவன் யான் ஒருவன் மட்டும் அல்லன். விரிந்து பரந்த இவ்வுலகிலே இரப்பவரும் பலர்! அவருக்கு இல்லை என்னாமல் ஈபவரும் பலர்! இவ்வுண்மைகளை எளிதாக அறியும் வண்ணம் யான் பரிசாகப் பெற்ற களிறு ஒன்றினை உன் காவல் மரத்திலே கட்டியுள்ளேன். இரவலன் ஆகிய யான் தரும் களிற்றுப் பரிசிலைக் காவல! நீ களிப்புடன் கொள்க! யான் வருகிறேன் என்று கூறி விரைந்து சென்றார் பெருஞ்சித்திரனார். கோடி கோடியாகக் குவித்து வைத்திருக்கும் ஒருவன் ஒரு காசைப் பொருட்டு இன்றி எடுத்து எறிவதுபோல் வறிய சித்திரனார் களிற்றை விட்டுச் செல்வது எளிதாக எங்கும் காணும் செயலா? சித்திரவதை சித்திரனார் வறுமைப்பாட்டை முன்னரே அறிந்தோம். ஈராயிரம் ஆண்டுகள் கழித்தும் சித்திரனார் பட்ட துயரை மறக்க நம்மால் முடியவில்லை. கொடுந்துயருக்கே அவர் பெயரிட்டு அழைக்கிறோம்! எப்படி? அவன் சித்திரவதைப்படுகிறான் என்று கூறுகிறோமே! என்ன சித்திரவதை? பெருஞ்சித்திரனார் பட்ட வதையே சித்திரவதை! கர்ணக் கொடை, பகீரதப் பிரயத்தனம் நளபாகம் என்பன போலச் சித்திரவதையும் சேர்ந்து கொண்டது. பெருகிய குடும்பம் சித்திரனார்க்கு மனைவி இருந்தார்; மக்கள் இருந்தனர்; சுற்றம் பெருகி இருந்தது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் அனைவரும் சித்திரனாரையே நம்பி இருந்தனர். சித்திரனாரோ நற்றமிழ் ஒன்றையே நம்பி இருந்தார். நம்பினார் கெடுவதில்லை. இது, நான்கு மறைத் தீர்ப்பு என்பது பாரதியார் வாக்கு. நற்றமிழை நம்பி இருந்தவன் கெட அத் தமிழ் விட்டது இல்லை. தண்டமிழ்த் தனிப்பெரும் செல்வம் இருக்கும்போது தாழ்ந்த வறுமை தலை காட்டுமா? வறுமை என்பது வறுமை உள்ளம் தானே! இஃது இல்லையே என்னும் ஏக்கம் இருந்தால் இதனை அனுபவிக்க முடியவில்லையே என்னும் ஆசை இருந்தால், வறுமை இருப்பதாகப் பொருள். அவை தலைகாட்டாத இடம் செல்வங்கொழிக்கும் இடமேயாம். இல்லாமை - ஏக்கமே பொருள் இல்லாமை வேறு; இல்லாமை குறித்த ஏக்கம் வேறு! ஏக்கம் இல்லை என்றாலும் பொருள் இல்லாமல் தீராதே! சித்திரனார் மனைவியார் கைம் மாற்றுப் பொருள் வாங்கினார்; கடன் பொருளும் வாங்கினார். சிலர் வலிய வந்தும் பொருள் உதவினர். சிலரைத் தேடியும் உதவி பெற வேண்டி இருந்தது. வயிற்றுத் தீ என்றானே மன்னன் கணைக்காலன்! பசி அறியாத அம் மன்னன், பசியறிந்த ஒரு வேளையில் பாடினானே இதனை, பசிப்பிணி என்கிறானே பண்ணனைப் பாடிய மன்னன் கிள்ளி வளவன். பசித்தோரைக் கண்டு பரிவுடன் நோக்கிப் பாத்திரம் நிறையச் சோறளித்துப் பசி நீக்கும் அப் பண்புசால் வள்ளலைப் பசிப்பிணி மருத்துவன் என்று பட்டம் வழங்கி அல்லவா பாராட்டுகின்றான்? வள்ளுவர் தாம் வறிதே விட்டொழிக்கக் கூடியவரா? பசியென்னும் தீப்பிணி என்று குடரை நெருக்கிப் பிடித்து எரிக்கும் பசியைச் சுருக்கி யரைத்து விட்டாரே அவர். இத்தகைய பசி பற்றவும், சுற்றவும் கொண்ட சித்திரனார், வீட்டை விட்டு வெளியேறி விடலாம். வீடே தஞ்சமான மனைவியார் என் செய்வார்? அவரை நோக்கிப் புலவர் சொல் கிறார் - குமணன் தந்த பரிசில் கொண்டு வந்த களிப்பில் சொல்கிறார் -வீட்டுக்குள் நுழையாமல் முற்றத்தில் நின்று கொண்டே சொல்கிறார். மனைவியிடம் மொழிந்த மணிமொழி என் இனிய மனைவியே! என் இனிய மனைவியே! இங்கே வா! இதோ பார்! இப்பெருஞ் செல்வத்தைக் காண்! முதிரத்து வள்ளல் குமணன் தந்த கொடை இது! உன்னைத் தேடி வந்து அன்புறப் பழகுகிறார்களே, அவர் களுக்குக் கொடு. நீயே தேடிப்போய் அன்பாகப் பழகுகிறாயே, அவர் களுக்கும் கொடு. உற்றார் உறவினர் என்னும் பெயருடன் சுற்றி இருக்கிறதே ஒரு பெருங் கூட்டம்; அஃது உவக்கும் வண்ணம் அள்ளி அள்ளிக் கொடு. நம் பசியத்துயர் நோக்கி வலிய வந்து முன்னர் உதவி னார்களே, கைம்மாற்றாகவும் கடனாகவும் கனிவுடன் தந்தார் களே, அவர்களுக்கும் அளவின்றி நிரம்பக் கொடு. இன்னும் என்ன? இவர் தாம் என்பது இல்லாமல் எல்லார்க்கும் கொடு. என்னிடம் கேட்டே தர வேண்டும் என்று எண்ணாமல் கொடு. இன்னொன்று, இதற்கு முன் பட்ட வறுமைத் துயரைக் கருதியோ, மேல் வரும் வறுமைத் துயருக்கு அஞ்சியோ இப்பொருளை இறுக்கமாக வைத்துப் போற்றி நெடுங்காலம் வாழ்வோம் என்று எண்ணாமல் கொடு! எல் லார்க்கும் கொடு! இவர் யார்? சித்திரனார் புலவரா? புரவலரா? என்ற ஐயம் நமக்கு எழுப்பி விடுகின்றது. அவர் பாடும் போது இணையற்ற புலவராக இருக்கின்றார். கொடுக்கும் போது இணையற்ற புரவலராகத் திகழ்கின்றார். இரண்டும் இரு வேறு நிலைகளாக இருக்கலாம். ஆனால், இணைந்த பெருமை இருக்கிறதே அஃது எண்ணி எண்ணித் திளைக்கத் தக்கது. பல்கலைக் கழகம் நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று இந்நாளைய அறிவாளர்கள் பலர் கூறுவதைக் கேட்கிறோம். சித்திரனார் குடும்பம் ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்ந்ததைச் சான்று கொண்டு அறிகிறோம். சங்கத் தமிழ்ப் பாட்டைச் சித்திரனார் பாடுகின்றார். யாரிடம் பாடுகின்றார்? தம் மனைவியிடம் பாடுகின்றார். அம் மனைவி அவர் பாடற் பொருளை அறிந்து கொள்ள மாட்டா மடவாரா இருந்திருக்க முடியுமா? இருந் திருந்தால் பொருள் அற்று, இப்பாடலில் அவரை முன்னிலைப் படுத்திப் பாடியிருப்பாரா? புலவர்க்கு இணையான புலமையாட்டியாக அவர் இருந்தார் என்பது தெளிவு. அத்தகைய பெற்றோர் - சுற்றமும் சூழலும் பசிக்காமல் காக்கும் கடப்பாட்டில் தலை நிற்கும் சான்றோர் - குடும்பம், அறிவும் செறிவும், அன்பும் அறனும் பெற்றோங்கி இருக்கும் என்பதில் என்ன தடை? தமிழ்ப்புலவர் வீட்டிலே தமிழ் மனைவி இருந்தார். அங்குத் தண்டமிழ் நங்கை கோவில் கொண்டாள். ஆகவே, அந் நங்கை ஈராயிரம் ஆண்டுகள் சென்றுங் கூட, புறநானூற்றில் இருந்து புன்னகை புரிகின்றாள். நின்னயந்த துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் 5. இன்னோர்க் கென்னாது என்னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே, பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே. (புறம்: 163) 9. திண்ணை வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு என்பது நம் நாட்டுக்கு அமைந்த பாராட்டுரை மட்டும் அன்று; உண்மை உரையேயாம். இதனை நம் பண்டை நூல்கள் பரக்க வலியுறுத்தக் காணலாம். வீரம் ஒரு நாடு வீரம் செறிந்ததாக அமைவதற்குரிய காரணங் கள் பலப்பல. தாய்மார் வீரமிக்கவர்களாக இருத்தலாம். நாட்டின் வீரம் வீட்டிலேயே பிறந்து வாழ்கின்றதே அன்றி வேறு வகையில் இல்லை. இந்த வீரக்கள வெற்றி, ஈட்டன் பள்ளி தந்த விளையாட்டுக் கள வெற்றியே என்று விம்மிதமுற்ற பெருந்தலைவர் ஒருவர் உரைத்தார். அந்த விளையாட்டுக்களம் தரும் வெற்றிக்கும், முதன்மையான வெற்றிதரும் களம் வீடே என்று கூற வேண்டும். பால் ஊட்டும் பொழுதே வீரத்தையும் சேர்த்து ஊட்டும் வீரத்தாய்மார் மிக்க நாடே வீரப் புதல்வரைப் பெற்று வீரம் செறிந்த நாடு என்னும் பேற்றை நல்கும். வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு பாரத பூமி பழம்பெரும் பூமி நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர் பாரத நாடு பாருக்கெலாம் திலகம் நீரதன் புதல்வர் இந் நினைவகற் றாதீர்! என்று சத்திரபதி சிவாசியின் வாக்காகப் பாடுகிறார் பாரதியார். இஃது எதனை விளக்குகிறது? தாய் தரும் வீரமே தலைப்பெரு வீரம் என்பதை விளக்குகிறது. பிள்ளையைப் பெறாதவள் மலடி என்பது ஊர் வழக்கு! வீரனைப் பெறாமல் வேறெவனைப் பெற்றாலும் அவள் மலடியே என்பது உயர்ந்தோர் - உரவோர் - வழக்கு ஆகிறது. ஆகவே தாயின் வீரத்தால் பிறந்து வளர்ந்து காக்கப் பெறும் நாடு தாய்மையால் காக்கப் பெறும் நாடேயாம். அதனைத் தாய் நாடு என்பது தகவும் முறையும் வாய்ந்த தாகும். வீரத்தாய் வீரத்தாய்மார்கள் தம் வாழ்வில் இரண்டு தடவை இணையற்ற மகிழ்ச்சி எய்துவது உண்டு. ஒன்று, என் வயிற்றில் இணையற்ற வீரமகன் ஒருவன் பிறந்துள்ளான் என்று அவன் பிறந்த பொழுது அடையும் இன்பம். மற்றொன்று, அம்மே, நின் மகன் அஞ்சாது அடலேறு போல் சாடிப் பகைவரை அழித்து மார்பில் விழுப்புண் பட்டுத் தானும் மாண்டான் என்று கண்டோர் உரைக்கக் கேட்டு அவன் இறந்த பொழுது அடையும் இணையற்ற இன்பம்! இத்தகைய இன்பங்களைக் கண்ட தாய்மார்தாம் எத்துணையர்? இதோ ஓர் அம்மையார்....! தலை நரைத்தவர்; நரையும் அரை குறையாகவா? மீனுண்ணும் கொக்கின் இறகு போல் கலப்பற்ற தூய வெள்ளை நரை! நல்ல முதுமை - ஆனால் அவர் உள்ளமோ மிக இளமை! அவர் மகிழ்கிறார் - மைந்தன் பிறந்த போது - அந்த ஒரே மைந்தன் பிறந்த போது - அடைந்த மகிழ்வுடைய அவர், அதனினும் மகிழ்கிறார். அவர்தம் மைந்தன் களம் சென்றானாம்! களிறு ஒன்றைக் கொன்றானாம்! களத்திலே மாண்டானாம்! இந்த நயத்தைப் புறநானூறு தான் எப்படிப் புகல்கின்றது! மீனுண் கொக்கின் தூவி யன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன்கழை துயல்வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே. (புறம்: 277) கண்ணீர்ப் பெருக்கு மைந்தன் மாண்டது கேட்ட தாய்க்குக் கண்ணீர் பெரு கியது! வீரத்தாய் பெருக்கியது அவலக் கண்ணீராக இருக் குமா? உவகைக் கண்ணீர் பெருகியது? எத்துணை? மலைமேல் பொழிந்த மழைத்துளி எத்துணை இருக்கும்? அத்துணைத் துளிகள் வீழ்ந்தன! வீரத்தாய் இயல்பைப் பாடியவர் யார்? இவ்வீரத்தாயைப் பாடியவரும் ஒரு வீரத்தாயே ஆவர் என்பது நம்மை நெஞ்சு நிமிரச் செய்கிறது; நெக்குருகவும் செய்கிறது. அவர் பெயர் பூங்கண் உத்திரையார் என்பது! தாய்மார் வீரம் அனைத்தையும் இங்குக் கூறுவது நம் கருத்தன்று. சிற்றில்லம் ஒன்றின் திண்ணையில் நிற்கும் செந் தமிழ்த்தாய் ஒருத்தியின் வீரத்தை மட்டும் இப்பகுதியில் காண்போம். பெருநற் கிள்ளி தித்தன் என்பவன் ஒரு சோழ வேந்தன்; அவனுக்கு ஒரு மைந்தன் இருந்தான். அவன் பெயர் கோப்பெரு நற்கிள்ளி என்பது. தந்தையாம் அரசனுக்கும், மைந்தனாம் கிள்ளிக்கும் கருத்து வேற்றுமைகள் கால்கொண்டன. ஆகவே, கிள்ளியின் கால்கள் அரண்மனையை விட்டு நடந்தன; நகரையும், நாட்டையும் கடந்தன. எங்கெங்கோ சென்றான் கிள்ளி. என்றாலும் தன்னை இன்னான் என்று காட்டிக் கொண்டான் அல்லன். உணவின்றியும், நீர்பருகாமலும் நடந்து அலைந்த அவன் தளர்ந்தான்; மெலிந்தான்! வேற்றூர் எனினும் பிறர் உதவி ஏற்று வாழும் வாழ்வைப் பெருகிய மானம் உடையோர் போற்றுவது இல்லை அல்லவா? ஆமூர் மல்லன் கிள்ளி அலைந்து திரிந்தபோது ஒரு நாள் ஓர் ஊரில் தங்கினான். அவ்வூர்க்கு ஒரு மல்லன் வந்தான். அவன், தனக்கு எதிரில்லை என்னும் மனச்செருக்கு உடையவனாகத் திரிந்தான்; ஊரவரைத் தன்னோடு மற்போர் புரிய வருமாறு தருக்கி மொழிந்தான். அவன் பெயர் ஆமூர் மல்லன் என்பது. மல்லனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்பது எல்லோர் எண்ணமாகவும் இருந்தது. Mdhš, ‘óid¡F k f£LtJ ah®? என்னும் எலிக்கதை போலவே அவர்கள் நிலைமை இருந்தது. ஒருவரும் முன்வந்தார் இலர். தளர்ந்து மெலிந்த கிள்ளியால் மல்லன் தருக்கு மொழியையும், ஊரவர் உரமிலாத் தன்மையையும் தாங்க முடியவில்லை! தானே மல்லனை எதிர்ப்பது என்னும் முடிவுக்கு வந்தான். மங்கையர் மாண்பு களம் குறிக்கப் பெற்றது; காலமும் குறிக்கப் பெற்றது. இருவரும் கைகலந்தனர். இளைத்த கிள்ளியின் கை செய்த வேலை எல்லாரையும் அயரச் செய்தது. எதிர்த்த ஆமூர் மல்லனை அலறச் செய்தது. அவன் மல்லாடும் அழகிலே அயர்ந்து தன்னை மறந்து நிற்கிறாள் ஒருத்தி. அவள் சொல் கிறாள், கிள்ளியின் கைகள் விளையாடும் விளையாட்டை! ஊரிலோ, திருவிழா; மனைவிக்கோ, மகப்பேறு; பொழுது போகிறது; மழை கொட்டு கொட்டு என்று கொட்டும் போல் இருக்கிறது; காட்டாற்றுக் கடுவெள்ளத்தையும் காரி ருளின் கொடுவெள்ளத்தையும் கடந்துதான் ஊர்க்குச் செல்ல வேண்டும். ஆனால், கட்டில் பின்னுதலோ இன்னும் அரை குறையாக இருக்கிறது. அந்நிலையில் கட்டில் பின்னுவோன் ஊசி எவ்வளவு விரைவாக வேலை செய்யும்? அவ்வளவு விரைவுத் தாக்குதல் நடத்துகின்றது கிள்ளியின் கை! மல்லனை வென்ற இம்மல்லனையும் ஓதி மங்கைதான் பாடுகிறாள்! இத் தகைய நிகழ்ச்சிகளை எண்ணும்போது, மங்கைய ராகப் பிறந்திடவே - நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா! என்று பாடும் கவிமணியுடன் நாமும் சேர்ந்து பாடாமல் இருக்க முடியாது! மற்போரில் கிள்ளி வென்றான்; ஊரார் கண்கள் அவன் மேல் பாய்ந்தன; அரசன் மைந்தன் என்னும் உண்மையும் புலப்பட்டது. அரசன் கருத்திலே ஒரு திருப்பம் உண்டாகியது: மைந்தன் மனத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்தவர் கூடினர்; நாடும் நல்லோரும் மகிழ்ந்தனர். போரவைக்கிள்ளி கிள்ளி மன்னவன் ஆனான்; போர் போர் என்றே திரிந்தான். கவிஞர் பேரவையும் கலைஞர் சீரவையும் அவனைக் கவர்ந்த அளவினும் போரவையே மிகுதியும் கவர்ந்தது. ஆகவே, அவன் இயல்புணர்ந்தவர்கள் போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்ற பெயர் சூட்டினர். அவனை வளர்த்து ஆளாக்கிய அன்னை தான், சிறு வீட்டுத் திண்ணையில் நிற்பவள். அவள் பெயர் காவற் பெண்டு. பெற்ற தாய், நற்றாய் எனப்படுவதும் வளர்த்த தாய், செவிலித்தாய், காவல் பெண்டு எனப்படுவதும் வழக்கு. நாம் காணும் காவற்பெண்டாம் செவிலித் தாய், செவிலித்தாய் மட்டும் அல்லள்! ஒரு மைந்தனுக்கு நற்றாயும் ஆவள். தாயும் மகனும் காவல் பெண்டு தன் மகனை இளமை தொட்டே வீரனாக வளர்த்தாள். அவனும் வீரனாக வளர்ந்தான். ஊட்டினால் மட்டும் போதுமா? உண்ணவும் வேண்டுமே? உப்புமலை மேல் இருந்து உண்டாலும் எடுத்துப் போடாக்கால் உப்புச் சுவை ஏறாதே! தாய் எண்ணம் சிறிதும் தவறாமல், அவன் வீரமகனாக விளங்கினான். போர்ப் பயிற்சிகள் அனைத்தும் பெற்றான். எங்கே போர்க் குரல் கேட்டாலும் அங்கே முந்தி நிற்பது அவன் இயல்பாயிற்று. அதைக் கண்டு இறும்பூது எய்துவது தாய்க்கும் இயல்பு ஆயிற்று! உன் மகன் எங்கே? ஒரு நாள் போர்ப் பறை முழங்கியது. வீடு தோறும் இருந்த வீரர்கள் புலிக் கூட்டம் புறப்படுவது போல் போர்க்களம் நோக்கிக் கிளம்பினர். காவற் பெண்டின் மகன் மட்டும் வீட்டுள் முடங்கிக் கிடப்பானா? அந் நிலைமையில் தான் பக்கத்து வீட்டுப் பெண்ணொருத்தி காவல் பெண்டின் வீட்டுக்கு வந்தாள். அவள் வீட்டுத் திண்ணையில் இருந்த சிறிய தூணைப் பற்றிக் கொண்டு அம்மா உன் மகன் எங்கேயுள்ளான்? என்று வினாவினான். தாய் எட்டடி; குட்டி பதினாறடி புன் முறுவலுடன் போர்க்களம் போன அரியேற்றைப் பெற்ற அன்னை என்ன சொன்னாள்? அம்மா ! என் மகன் எங்கே சென்றிருக்கிறான் என்பதை யான் அறியேன். இதோ பார்! புலி தங்கிச் சென்ற குகை போன்ற, அவனை ஈன்றெடுத்த வயிறு இதுதான்! அவன் போன இடத்தை அறியேன்! அவனைப் பார்க்க வேண்டுமானால், போர் எங்கே நடக்கிறதோ அங்கே போய்ப் பார்! என்றாள். தாய் வயிறு புலிக் குகையாக இருந்தது; ஆங்கிருந்த மைந்தன் புலியாக இருந்தான் பின்னர் அவன் வீரத்தைப் பேசவும் வேண்டுமோ? தாய் எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டாதா? தமிழுக்கும் தாய் வீர மகனுக்கு நற்றாயாக இருந்தவள், வேந்தன் ஒருவ னுக்குச் செவிலித் தாயாகவும் இருந்தாள். இவற்றால் அவள் பெயர் இவ்வுலகில் நிலைத்து விடவில்லை. அந்த அருமைச் செவிலித்தாய் அன்னைத் தமிழுக்கும் செவிலித்தாயாகத் திகழ்ந் தாள். அதனாலேயே நிலைபெற்றாள். தன் வீட்டுத் திண்ணை யில் நிகழ்ந்த நிகழ்ச்சியையே நிகழ்ச்சி ஆக்கி ஆங்கு நின்ற ஒருத்தியையே தீந்தமிழ்ப் பெருமன்ற மாக்கிப் பாடிவிட்டாள். அவள் பாடிய பாட்டு. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோஎன வினவுதி என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல 5. ஈன்ற வயிறோ இதுவே! தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே! (புறம்: 86) 10. முல்லைப் பந்தல் உணர்ச்சி நிலை உணர்ச்சி மிக்கவர்கள் தங்கள் உணர்ச்சியை உடனே காட்டி விடுகிறார்கள். அவர்கள் வெளிக் காட்டும் உணர்ச்சி, காட்டாற்று வெள்ளம் போன்றது. அறிவு மிக்கவர்கள் தங்கள் உணர்ச்சியைப் பிறர் அறியாமல் அடக்கி வைப்பதில் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் அரிதில் காட்டும் உணர்ச்சி வெளிப்பாடு, கிணற்றுள் ஆழ்ந்து கிடக்கும் நீர் போன்றது. உணர்ச்சியும் அறிவும் ஒருங்கு வளரப் பெற்றவர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஒருவாறு பக்குவமாக அளவுடன் வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் காட்டும் அளவமைந்த உணர்ச்சி வெளிப்பாடு, ஓடிவரும் நீரைத் தேக்கி வைத்து வேண்டியபோது மடைவழியாக வெளியேற்றும் ஏரி போன்றது. உணர்ச்சி வெளிப்பாடு உணர்ச்சியை வெள்ளமாக வெளிப்படுத்துவது தனக்கும் கேடு, பிறருக்கும் கேடு. உணர்ச்சியை அறவே அடக்குவதும் ஒருநாள் இல்லாவிடினும் ஒருநாள். உள்வெதுப்பையும், வெளி வெதுப்பையும் உண்டாக்கத் தவறாது. ஆகவே அதுவும் கேடே. உணர்ச்சியை அளவே வெளிப்படுத்துவது வெளிப் படுத்துபவர்க்கு நன்மை பயப்பதுடன் கேட்பவர்க்கும் பயன் படும். ஆகவே, வேண்டிய அளவில் வெளிப்படுத்தும் உணர்ச்சி மதிக்கத்தக்கது. இனி, வேண்டிய அளவில் வெளிப்படுத்தும் உணர்ச்சியையும் இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, வெளிப்படைச் சொல்லால் உணர்ச்சியை வெளிப்படுத்துவது. மற்றொன்று, குறிப்புச் சொல்லால் வெளிப்படுத்துவது. பின்னது அறிவும், உணர்வும் கைவரப் பெற்றிருப்பினும் அனைவருக்கும் இயல்வது அன்று; சிலருக்கே வாய்க்கும் தன்மையது. அத்திறம் வாய்ந்தவருள் கூடக் கலைமணம் கமழக் கவிதை நடையில் வெளிப்படுத்துவது ஒரு சிலர்க்கே இயலும், இத்தகைய அரிய கலையில், எளிதில் வெற்றி கண்ட வீரராகத் திகழ்ந்தார் ஒருவர். அவர் பெயர், கீரத்தனார். அவர் ஊர்ப்பெயர் குடவாயில். அவரைக் குடவாயில் கீரத்தனார் என்று அழைத்தனர். பெருஞ்சாத்தன் கீரத்தனாரின் உண்மை அன்புக்கு உரிமை படைத்தவனாக ஒருவன் இருந்தான், அவன் ஒல்லையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவன்; பெருஞ்சாத்தன் என்னும் பெயரினன். அவன் தந்தையார் உழவுத் தொழில் நடத்தினார் அந்நாளில் உழவுத் தொழில் செய்தவர்கள் கிழார் எனப் பெயர் பெற்றனர். நாம் காணும் கிழார் நாடறிந்த நல்லவராகவும், செல்வமும் கல்வியும் செழிக்கப் பெற்றவராகவும் இருந்தமையால் அவர் இயற் பெயரை விடுத்து ஒல்லையூர் கிழார் என்றே அழைக்கப் பெற்றார். இன்றும் நாம், அவர் இயற் பெயரை அறியாமல் ஒல்லையூர் கிழார் என்னும் சிறப்புப் பெயரை மட்டுமே அறிகிறோம். அவர் மைந்தனை இலக்கிய உலகம் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் என்று குறிப்பிடுகிறது. அன்பு வரவேற்பு கீரத்தனார் ஒல்லையூர் கிழாரை நன்கு அறிவார். அவரைப் பார்த்துப் பழகவும், பயன் பெறவும் பன்முறை போவார் ! காடும் மலையும் கடந்து செல்ல வேண்டிய நெடுந்தொலைவு உண்டு. கனிந்த அன்பு வரவேற்றால் காடும் மலையும் பொருட்டில்லை - கடலும் வானும் கூடப் பொருட்டு இல்லையே! ஈரமும் வீரமும் கிழாரைப் பார்க்கப் போகும்பொழுதெல்லாம் அவர் மைந்தனாம் சாத்தனையும் கீரத்தனார் காண்பது உண்டு. தந்தையாரின் ஈரத்தில் எவ்வளவு உள்ளம் தோய்ந்தாரோ, அந்த அளவினும் மைந்தன் காட்டிய வீரத்தில் மிகத் தோய்ந்தார் கீரத்தனார். காலம் செல்லச் செல்ல? ஈரமும் வீரமும் இப்படி ஒன்றை ஒன்று வெற்றி கொள்ளும் விதத்தில் இவனிடம் விளையாடுகின்றனவே என்று கீரத்தனார் விம்மிதம் அடைந்ததும் உண்டு. அவற்றைத் தம் பைந்தமிழ் நாவால் பாராட்டுதலையும், பிறர் பாராட்டுதலைக் காது குளிரக் கேட்டலையும் பேரின்ப மாகக் கொண்டதும் உண்டு. புலவர்கள் பாட்டில் அமைந்து கிடக்கும் பொருள் வளர்ச்சி போலவே, பெருஞ் சாத்தனும் புகழ் பெருக நாளும் வளர்ந்தான். ஊரின் உறக்கம் வழக்கம்போல் கீரத்தனார் ஒரு நாள் ஒல்லையூர் நோக்கி வருகிறார். ஊரை நெருங்கும் போது அவரை அறியாமலே ஓர் அதிர்ச்சி ஏற்படுகின்றது; அயர்ச்சியும் உடன் ஏற்படுகின்றது. ஆரவாரமிக்க ஒல்லையூர் அமைதிக் கோலம் கொண்டு கிடக் கிறதே; வீரமுரசும், மணமுரசும், கொடைமுரசும் சேர முழங்கும் ஒல்லையூர் உறங்கிக் கிடக்கிறதே - ஏன்? ஒல்லையூர்க்கு ஒளி விளக்காகத் திகழ்ந்த சாத்தன் ஒடுங்கி விட்டான். களப்போர்க்கு ஒடுங்காத உரவோனான அவன் காலன் வாய்ப்பட்டு ஒடுங்கி விட்டான். அவன் ஒடுங்குதலால் கவிஞர்களும், கலைஞர்களும், இளைஞர்களும், முதியவர்களும், காளையரும் கன்னியரும் அமைந்து விட்டனர், ஊரே என்றும் காணாத அமைதியை ஏற்றுக் கொண்டது. ஒல்லையூர் முல்லை வழிச் செல்பவர்களிடம் ஊரமைதிக்குரிய காரணத்தைக் கேட்டறிந்தார் கீரத்தனார். அவர் தலை சுற்றியது; தாங்க முடியாத் துயரம் கவிந்தது; இதயங் கலந்து பழகிய அவ்விணையற்ற வீரனது புதை குழிக்குச் சென்றார் புலவர். கண்ணீர் மாலை தொடுத்துக் கனிந்து சார்த்தினார். கலக்கம் கழியவில்லை; கண்ணீரும் ஒழியவில்லை. அந்நிலைமையில் முல்லைக் கொடி ஒன்று அரும்பும் பூவுமாய் அவர்க்குத் தோன்றியது. அறிவில்லாத முல்லை என்று கீரத்தனார் உள்ளம் வெதும்பியது. அறியாக் கலைஞர் அவ்வழியே கலைஞர் கூட்டம் ஒன்று வரக் கண்டார் கவிஞர். காளையர் கன்னியர், பாணர் பாடினியர் இணை இணையாக வந்தனர். பாவம்! இவர்களும் என்னைப் போல் உண்மை உணராதவர்களாகத் தாம் வருகிறார்கள். ஒல்லையூர்க்கு வந்து வாடிக்கையாகச் செல்வ வளத்துடன் திரும்பிச் சென்றவர்கள்! வாடிக் கைகால் சோர்ந்து கலங்கும் என்னைப் போலவே இவர்களும் திரும்பிப் போவார்கள். பெருஞ்சாத்தன் இல்லை என்பதை இவர்கள் அறிவார்களா? என்று எண்ணினார். முல்லைப் பல்லின் நகை இத்தகைய ஒன்றையும் எண்ணாத முல்லைப் பூ இளந் தென்றலிலே அசைந்து ஆடியது. முல்லை தன் பல்லைக் காட்டிச் சிரிப்பது போல் புலவர்க்குத் தோன்றியது. என்ன இது? வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்பது வழங்குமொழி. சாத்தனால் வளர்ந்து வாழ்ந்து சிறந்த முல்லைக் கொடியே அவன் பிரிவு நோக்கிப் பரிவு காட்டாமல் பல்லைக் காட்டு கிறதே என்று ஏங்கினார். முல்லையை நோக்கிப் பேசினார். புலவர் புலம்பல் முல்லையே? நீ அறிவில்லாய்; உணர்வும் இல்லாய்! எக்காலம் பூத்தல் வேண்டும் என்னும் தெளிவு இல்லாமல் பூத்துவிட்டாய், நீ பூக்கத் தக்க பருவமாக இருக்கலாம்; ஆனால், இப்பொழுது உன்னை எவரேனும் பறித்துச் சூடுவார்களா? முல்லையே! உன் பிறவிப்பயன் - மலர்ச்சியின் பயன் - மணம் பரப்புவதன் பயன் - பிறர் உன்னைப் பறித்து மகிழ்வுடன் சூடுவதில் அல்லவோ அமைந்து கிடக்கிறது! உன்னை எவரேனும் இப்பொழுது பறிப்பாரா? சூடுவாரா? அன்றிச் சூட்டவாவது செய்வாரா? பயன் எதுவும் இல்லாமல் மலர்ந்து பாழ்பட்டாய். அதோ...! காளைகள் சிலர் வருகின்றனர். அவர்களுக்கு அருகே அவர்களின் காதலுக்கு உரிய கன்னியர்களும் வளை குலுங்க நடந்து வருகின்றனர், இவர்கள் உன்னைப் பறிப்பாரா? சூடுவாரா? அன்றி ஒருவருக் கொருவர் மாறி மாறி மகிழ்வால் சூட்டிக் கொள்வாரா? அவர்கள் உன்னை ஏறெடுத்துப் பார்க் காமலே போய்விடுவர். இதோ....! இன்னும் இருவர் பின்னே வருகின்றனர். ஒருவன் பாணன்; ஒருத்தி பாடினி பாணி! பாணன் கையிலே மெல்லிய நல்ல யாழ் ஒன்று இருக்கிறது. அவன் முன்னர் எல்லாம் பூக்களைப் பறித்துப், பாடினிக்குச் சூட்டும் வழக்கம் உடையவன். கொடியின் உச்சியில் இருக்கும் பூக்கள் எட்ட வில்லையே என்று கூட விட்டுவிடும் இயல் புடையவன் அல்லன். யாழையே தோட்டியாகக் கொண்டு மெதுவாக நரம்பு அறுந்து படாதவாறும், முல்லை இதழ் சிதைந்து விடாதவாறும் நய மாகப் பறிக்க வல்லவன். ஆனால் அவனும் இன்று உன்னைக் கண்ணெடுத்தும் பாரான். இக் காளையும், கன்னியும், பாணனும் பாணியும் பறிக்க விரும்பாத உன்னை இனி எவரே பறிப்பார்? எவரும் பறியார்! நீரைப் பருகி, நிலத்தே வளர்ந்தும் நீ பிறந்த தன் பயனாம் சிறப்பினைப் பெறாமலே போகின்றாய்! ஏன்? இந் நிலைமை ஏன்? உரிய பொழுதில் நீ பூக்கவில்லை. எவரும் விரும்பிச் சூடும் இனிய காலத்தே நீ பூக்க வில்லை. நாடே அலறி அழுது நையுமாறு வல்வேல் சாத்தன் இறந்த இன்னாத வேளையிலே நீ மலர்ந்தாய். முல்லையே! இவ்வல்லல் மல்கிய காலத்தே ஒல்லை யூர் நாட்டிலே நீ பூக்கலாமா? முல்லையே! இன்னும் கேள்! சாத்தன் எத்தகையன்? நானே வெல்வேன்; நானே வெல்வேன் என்று போர்க்களம் நண்ணியவர்களையெல்லாம் விண்ணுலகுக்கு அனுப்பி வைத்த வல்லாளன். அவன் மறைவால், காட்ட முடியாத தலையைக் காட்ட வாய்த்ததே என்று அவன் பகைவர்கள் தலை காட்டு வதும் புன் முறுவல் பூப்பதும் பொருந்தும். அவன் அன்பில் தோய்ந்த நீ பூப்பது அடுக்குமா? கால மல்லாக் காலத்தே பூத்த கவின் முல்லையே! நீ பூத்தும் விட்டாய்; மூத்தும் விட்டாய்; நானும் அப்படித் தான் இருக்கிறேன். பிறவிப் பயனைப் பெறாதவர்களாக நாம் இருவரும் ஒழியப் போகிறோம். நமக்குள்ள இணைவு தான் என்னே! - ஏக்க மிக்க பெருமூச்சுடன் கீரத்தனார் நிறுத்தினார். முல்லை மட்டும் அதன் ஆட்டத்தை நிறுத்தவில்லை. கண்ணீரில் கவிதை சாத்தனுக்காகக் கீரத்தனார் மட்டுமோ கண்ணீர் வடித்தார்? எத்துணையோ பேர்கள் கண்ணீர் வடித்தனர். உலகத்தில் அவனுக்கு மட்டுமோ ஊரவர், நாட்டவர் கண்ணீர் வடித்துள்ளனர்? எத்துணையோ கோடிப் பேர்கட்கு எத்துணையோ கோடிப் பேர்கள் கண்ணீர் வடித்துள்ளனர். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டு உள்ளனர். அவர்கள் வடித்த கண்ணீரும், துடித்த துடிப்பும் காற்றோடு காற்றாகக் கலந்து போய் ஒழிந்து விட்டன. புலவர் வடித்த கண்ணீரும், துடித்த துடிப்பும் காற்றோடு காற்றாகக் கலந்துபோய் ஒழிந்து விட்டன. புலவர் வடித்த கண்ணீர் மட்டும் இன்றும் காட்சி வழங்குகின்றது. நம்மையும் அவர் அடைந்த கலக்க நிலைக்கு இழுத்துச் செல்கின்றது; இதயத்தையும் உருக்கி விடுகின்றது. புலாலும் தோலும் அமைந்தது வெற்றுடல். புலவன் படைப்பதோ அழியாப் புகழ் உடல். பெருஞ் சாத்தன் கல்வியாலும் பண்பாலும், வீரத்தாலும், கொடையாலும் அழியா உடல் எய்த அவாவினான். கீரத்தனார் அவனுக்கு அழியா உடலை அருளி விட்டார். அவர் தந்த அழியா உடல் இது: இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த 5. வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே. (புறம்: 242) 11. குப்பை மேடு நாளும் வாளும் உலக வாழ்வு நிலையற்றது; அழகுமிக்க உடல், கொழுமை யூட்டும் செல்வம், கொண்ட உறவுத் தொடர்புகள் ஆகிய அனைத்தும் நிலையற்றவை. இத்தகைய நிலையற்ற உலகத்தே நிலைக்குமாறு வாழ்வதே அரிய வாழ்வு. ஆகவே, உலகில் மக்கள் நிலைத்து வாழ்வதற்குரிய வழிகளை வரன்முறையாக எண்ணி வகுத்துரைத்தார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அவரே, தம் நூலகத்து நிலையாமை என்றோர் அதிகாரமும் வகுத்து உரைத்துள்ளார். கூத்தாட்டு அவைக்கு ஒவ்வொருவராகப் பலர் வந்து கூடி, ஆட்டம் முடிந்தவுடன் மொத்தமாக அகன்று செல்லும் மக்கள் போன்றதே, செல்வம் சேர்வதும், அச்செல்வம் ஒழிவதும் என்றும், நாள் என்பது நயமான பெயர்தான்; ஆனால் அது நாள் அன்று; வாளே! அவ்வாளும் உடலை அறுப்பது அன்று; உயிரையே அறுப்பது; அதை உணர்வுடையோர் அறிவர் என்றும் நிலையாமைப் பகுதியில் சுட்டிக் காட்டுகிறார். நிலையாமை இல்லற வாழ்வு எல்லா வாழ்விலும் உயர்வுடையது; பிறவகை வாழ்வுடையோரையும் தாங்கிக் காக்கும் சால் பமைந்த இல்லற வாழ்வுக்கு இணையில்லை; தன் பசியைத் தாங்கும் தவநெறியைப் பார்க்கிலும், பிறர் பசியைப் போக்கும் அறநெறியே சிறந்தது. இன்னவாறு இனி துரைக்கும் பொய்யா மொழிப்புலவரே நிலையாமையை உரைத்தார் எனில், துறவே வாழ்வாகக் கொண்ட சமணச் சான்றோர்களால் பாடப்பெற்ற நாலடி முதலாய அறநூல்களிலும், சிந்தாமணி முதலாய காவிய நூல்களிலும் காணக்கிடக்கும் நிலையாமைக் குறிப்புக்களை அளவிட்டு உரைக்க இயலுமோ? அவை ஒருபெரு நூலளவுக்கு விரிந்து பரந்து கிடப்பதை மேலோட்டமாகப் பார்ப்போரும் அறியலாம். காஞ்சித்திணை மண்ணுலக வாழ்வை மாண்புற நிகழ்த்துதலே மாந்தரது கடன் என்னும் உயரிய கொள்கை தலை நின்ற காலத்தில் எழுந்த தொல்காப்பியமும் நிலையாமையை வலியுறுத்திச் செல்கின்றது. பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே என்பது காஞ்சித்திணை இலக்கணம் கூறும் நூற்பா. நிலையாமையை எடுத்துக்கூறி நிலைத்தக்க செயல்களைச் செய்ய ஏவும் நோக்குடன் அமைந்ததே காஞ்சித் திணை. அதற்கு ஏற்ற இலக்கியமாகத் திகழ்கிறது மாங்குடி மருதனார் என்னும் புலவர் தலைவரால் இயற்றப்பெற்ற மதுரைக்காஞ்சி. பின் னாளில் காஞ்சித் திணை விரிவுகளும், நிலையாமை உரைகளும் சமய உலகத்தில் புகுந்து விரிந்து பெருகியுள்ளதை அள விட்டுரைக்க இயலாது. நிலைப்பும் நிலைப்பின்மையும் உலகில் நிலைத்து வாழ வழி வகுத்துக் கூறும் அருள் உடையபெருமக்களும் நிலையாமை பற்றிக் கூறுவானேன்? பெருமையின் உயர்வைக் கூறுமுகத்தான் சிறுமையின் இழிவை யும், சிறுமையின் இழிவைக் கூறுமுகத்தான் பெருமையின் உயர்வையும் விளக்குதல் உண்டு. ஒன்று நேரிடை முறை; மற் றொன்று எதிரிடை முறை. இவ்விருவகை முறைகளாலும் கூறுதல் வழக்கு ஆகவே நிலையாமை கொண்டு நிலைப்பை வலியுறுத்துதலும், நிலைப்பைக் காட்டி உலக நிலையாமை யைத் தெளிவுறுத்துதலும் கடனாகச் சான்றோர் கொள்கின் றனர். நிலையாமை நிலைப்பு ஆகிய இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாதவை; அவை;- நல்லது அல்லது, நட்பு பகை, இரவு பகல் இவை போல் ஒன்றற்கொன்று மறுதலை யாய் நெருக்கம் பெற்றுள்ளன. ஆகவே நீ காணும் உலகம் நிலையற்றது; இவ்வுலகில் நிலைக்க விரும்பினால் நீ ஆற்ற வேண்டிய அருஞ்செயல்கள் இவை என்று ஏவவும், செருக்கித் தருக்கித் திரிவது எத்துணை நாட்களுக்கு ஓடும் என்று இடித் துரைத்து நல்வழியில் திருப்பவும் நிலையாமை உரைகள் எழுந்தன, என்பது தெளிவாகும். இவ்வாறன்றிக் கன்றிக் கனன்று கலங்கிக் கண்ணீர் வடித்தற்காக நிலையாமை கூறப் பெற்றது இல்லை என்பதும் தெளிவாகும். நிற்க. குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர் என்றும், குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர் என்றும், அதிவீரராம பாண்டியன் என்னும் அரசர் பெருமான் செல்வம் நிலையாமை குறித்துச் செவ்வனம் செப்பியுள்ளார். அவர் உரைத்த செல்வ நிலையாமைக்கு ஆட்பட்ட இரண்டு செல்வியர்களைப் பற்றி இப் பகுதியில் காண்போம். பிரிவின் அருமை வள்ளல் பாரி மாய்ந்தான்; அவன் மக்களாம் இரட்டைச் செல்வியரையும் காப்பதற்கென்றே உயிர் தாங்கினார் கபிலர் பெருமான். மாற்றார் கைப்பட்ட பறம்பு மலையை நீத்துச் செல்வியர்களுடன் வெளியேறத் தொடங்குகின்றார். நீங்காப் பரிவு காட்டிய அம்மலையை விடுத்துப் பிரிவதற்கு அப் பெருமகனாலும், செல்வியர்களாலும் இயலவில்லை. பெரிதும் வருந்தினர். பிரியாப் பிரிவு பறம்புமலை காட்டிய கனிவுதான் எத்தகையது? அது தந்த கனிவகைதாம் எத்துணை? அதன் கண் இருந்த அருளாளன் கொண்டிருந்த பேரன்புதான் எத்தகையது? அந்த வள்ளலோடு கண்டு மகிழ்ந்த காட்சிகள் தாம் எத்துணை? அடுத்து வந்தவரை அகன்றோட வைக்கும் கரும் பாலை அல்லவே பறம்பு! கரும்பு ஆலை அன்றோ அது! கபிலர், மலையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கிறார்; நின்று நின்று பார்க்கிறார்; கண்ணீர் வழிகிறது; அதனைச் துடைத்துக் கொண்டும், என்னென்னவோ எண்ணிக் கொண்டும் நடக்கிறார்; நைந்து புலம்புகிறார்; பொங்கிவரும் கண்ணீரையும் துடைத்துக் கொள்கிறார். மெய்யுணர்வும், மூதறிவும் மிக்க கவிக்கோன் கபிலர் நிலை மையே இஃதெனின் இளைய செல்வியர் நிலைமை யாதாகும்? பறம்பு மலையை விட்டுப் பிரிந்தறியாத அப்பிஞ்சிளஞ் செல்வியர், மென்பஞ்சும் உருத்தும் மெல்லிய இயலினர், இன்பாலையும் நயத்தக்க வகைகளால் உண்பிக்கப் பெற்ற மெல்லியர், உற்ற தந்தையை இழந்து, உதவிய சுற்றங்களை விடுத்து, உடன் தோழியரைத் துறந்து, ஒன்றி வாழ்ந்த குன்றினை நீங்கிக் கரடுமுரடான வழியில் இங்கே என்று குறிப்பிட முடியாத எங்கோ ஓர் இடத்திற்குப் போகிறார்கள் என்றால் அவர்கள் துயரை அவர்களே அறிவர்; உடன் இருந்த புலவர் பெருமானும் அறிவர். அந்தோ! கொடிது! மிகக் கொடிது! அவர்கள் நிலைமை. நோகோ யானே இத்தகைய பிரியாப் பிரிவு நிலைமையிலே அத் தமிழ் மகளிர் அன்று தோன்றிய முழுநிலவினைப் பார்த்துச் சென்ற திங்களில் தோன்றிய முழு நிலவில் எங்கள் தந்தை இருந்தார்; எங்கள் குன்றும் எங்களுக்கு உரியதாக இருந்தது; இன்று வந்த இம் முழுநிலவிலே எங்கள் தந்தையை இழந்தோம்; எங்கள் மலையையும் பகைவர் கொண்டார் என்று ஒரு பாவினைப் பாடுகின்றனர். கபிலர் நிலைமை எத்தகையதாக இருக்கும், அந்தோ! செந்தண்மை மிக்க அந்த அந்தண்மைப் பெருமகன் அழுதே விடுகின்றார். நோகோ யானே; தேய்கமா காலை - (ஐயோ! நோகின்றேன் யான்; என் வாழ்வு ஒழியட்டும்) என்று நெக்குருகி நெட்டுயிர்ப்புக் கொள்கிறார். உமணர் வண்டி இத்துயர வடுச் சிறிதும் மாறவில்லை; அதற்குள் சிறிதும் பெரிதுமான கூட்டுவண்டிகள் வரிசையாக அவ்வழியில் வரு கின்றன. அவை உப்பு வண்டிகள். கடல் உப்பு அள்ளிக் கல்நாடு கொண்டு சென்று, நெல்லும் உப்பும் நேரே ஊரீர்! bfhŸ çnuh? என்று விற்கும் வாணிகத்திற்காக வரும் வண்டிகள்; அவ்வண்டிக் குரியவர் உமணர் - உப்பளவர் - எனப்படுவர். குப்பை மேடு வண்டிகள் தொலைவில் வருவதைக் கண்ட இளமகளிர் தம் கவலையை மறந்து அவற்றை நோக்கினர். நிரம்பவண்டிகள் வந்தன ஆதலால், ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கை இடத் தொடங்கி விட்டனர். களிறு கண்டு அழுத அழுகையை மறந்த காரியின் மைந்தர்களைக் கொலைக் களத்தில் கண்டோம். இங்கே உப்பு வண்டிகளை எண்ணுதலால் உள்ளக் கவலையை ஒழிக்கும் பாரியின் பாவையரைக் காண்கிறோம். எங்கே? ஒரு குப்பை மேட்டில்! என்னே வாழ்வின் நிலைமை! இருவகை எண்ணம் வண்டிப் பாதை ஒன்று; ஒற்றையடித் தடங்கள் சில; எல்லாவற்றிலும் அடிக்கடி போக்கு வரவு இல்லை; ஆகவே, புல் மூடிக் கிடக்கின்றன. அப்பாதை ஒன்றில் நிற்கிறார்கள் கபிலரும், பாரி மகளிரும்; அவர்கள் நிற்கும் இடத்தின் அருகே முள்வேலி ஒன்று உள்ளது. அவ்வேலி ஒரு வீட்டின் கொல்லைப் புறமாக இருந்தது, வீடு மிகவும் சிறியது ; கூரைவீடு. அதன் முற்ற மெல்லாம் ஒரே பஞ்சு! வெயிலிலே காய்ந்து வெடித்துக் காற்றிலே அடித்துவரும் அல்லவா இலவு முதலியவற்றின் நெற்றில் இருக்கும் பஞ்சுகள்? அவையே பரவிக் கிடக்கின்றன; வீட்டுச் சுவரை ஒட்டியே குப்பை இருக்கிறது. அதன் ஒரு பகுதியில் சுரைக் கொடி படர்ந்து, கூரையில் ஏறிச் சுற்றிக் கிடக்கிறது; பூவும் பிஞ்சுமாக அச்சுரைக் கொடி விளங்குகிறது. இத்தகைய சூழலில் தான் உப்பு வண்டியைக் கண்டு எண்ணிக்கை இடுகின்றனர் பாரிமகளிர். அப்பொழுது கபிலரும் எண்ணி னார்; வண்டிகளையா எண்ணினார்? கபிலரின் நிலைமை மிக இரங்கத்தக்கது! கபிலர் கலக்கம் குப்பை மேட்டில் நிற்கும் இம்மகளிர் சில நாட்களுக்கு முன் எந்நிலைமையில் இருந்தனர்? உப்பு வண்டியின் சக்கரங்கள் போலவே, காலச் சக்கரம் சுழன்ற நிலைமையைக் கலக்கத்துடன் எண்ணினார் கபிலர். இலையே இல்லை; ஒரே பூக்காடு: முகில் தவழும் மலை முகடு; கருமுகிலைக் கண்டு காலை எடுத்துத் தொகை விரித்து ஆடும் மயில் அதற்கு அருகே மரம் விட்டு மரம் தாவும் குரங்கு; அதன் பெண் குட்டிக் கூட்டங்கள்; அக் குரங்குகளும் வெறுக்கத் தக்க அளவில் இப்பருவம் என்று இல்லாமல் எப்பவருவமும் பூத்துக் காய்த்துக் கனிகுலுங்கும் சோலைகள்; புதுப்புது வரு வாய்களை வாரி வழங்கும் மரஞ் செடி கொடிகள்; பயிர் வகைகள்; காணற்கரிய கவின்மிகு காட்சிகள்; தண்ணிய நீரூற்றுக்கள், தேனடைகள்; இவ்வளவும் நிரம்பிய பறம்பு மலையிலே இருந்த இளமகளிர் இவர். இப்பொழுது ஈத்திலை நிரம்பிக் கிடக்கும் குப்பைமேல் நிற்கின்றனர்; அதை நானும் உடன் இருந்து காணுகின்றேன்; என் நிலைமை இருந்தவாறு என்னே; என்று கபிலர் ஏங்கினார். மேலும் எண்ணம் தடையின்றி நீண்டது. அன்றும் ! இன்றும்! உயர் வள்ளலாம் பாரியால் உலகம் வாழ்கிறது என்னும் அருமையை அறியாத வேந்தர்கள், படை கொண்டு பறம்பின் இடைமலை கடந்து ஏறிவந்த துண்டு. அவ்வேளைகளில், அச்சம் என்பதை அறவே அறியாத இம்மகளிர் முகில் தவழும் முகட்டில் அமைந்த மாடங்களில் நின்று கொண்டைகள் அசைய வரும் குதிரைகளை ஒன்று இரண்டு என்று வேடிக்கையாக எண்ணிப் பார்த்ததுண்டு. அவர்கள் தாம் இப்பொழுது உப்பு வண்டி களைக் குப்பை மேட்டில் இருந்து எண்ணுகின்றனர் என்று கசிந்து அழுதார். நம்மையே நைந்துவிடச் செய்யும் இக் காட்சியைக் கண்ணாரக் கண்டார் கபிலர்; ஆகவே அவர் உள்ளம் வெடித்துவிடும் போல் இருந்தது. ஆனால் அருந்தமிழ் நங்கை அங்கே ஒரு புன்முறுவல் பூத்தாள். அவள் புன் முறுவலாம் தண்பனிநீர்க் கூட்டில் கலந்த செஞ்சாந்துக் கலவைப் பூச்சால் உள்ளம் வெடிப்பதற்குப் பதில் உணர்ச்சி மிக்க கவிதை ஒன்று வெளிவந்தது. தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர் புல்மூசு கவலைய முள்மிடை வேலிப் 5. பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் பீரை நாறிய சுரையிவர் மருங்கின் ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பொய் ஒழுகை எண்ணுப மாதோ நோகோ யானே தேய்கமா காலை 10. பயில்பூஞ் சோலை மயில்எழுந் தாலவும் பயில்இருஞ் சிலம்பில் கலைபாய்ந் துகளவும் கலையும் கொள்ளா வாகப் பலவும் காலம் அன்றியும் மரம்பயம் பகரும் யாணர் அறாஅ வியன்மலை அற்றே 15. அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை பெரிய நறவில் கூர்வேல் பாரிய தருமை அறியார் போரெதிர்ந்து வந்த வலம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா எண்ணு வோரே. (புறம்: 116) குறிஞ்சிக் கபிலர் கபிலர் பாடியனவற்றுள் கைக்கெட்டியுள்ள அகத்திணைப் பாடல்கள் 197. அவற்றுள் குறிஞ்சித் திணை பற்றியவையாக உள்ளவை 191 பாடல்கள். இதனால் குறிஞ்சிக் கபிலர் என்று சிறப்புப் பெயர் பெற்ற அவர் குப்பையையும் பாடியுள்ளார். அதையும் குன்றத்தின் ஒருபகுதியில் வைத்துப் பொருத்திப் பாடியுள்ளார். குப்பை பெற்ற பேறே பேறு என அதனைப் போற்றவேண்டும். குப்பையில் குண்டுமணி ஆன்ற அறிவும், அமைந்த பண்பும் உடைய ஒருவர் எவ ராலும் அறிந்து போற்றப் பெறாமல் இருந்தால் அவரைக் குப்பையில் கிடக்கும் குண்டு மணி (குண்டு - உருண்டை) என்று கூறுவது உலகியல் வழக்கு. ஆனால், குப்பையில் கிடைத்த குண்டு மணியாகக் கபிலர் பாடிய இப்பாடல் இருக்கிறது என்று நாம் உறுதியாகக் கொள்ளலாம். குப்பைக் கோழி குப்பைக் கோழியார் என்றொரு புலவர் சங்க காலத்தில் வாழ்ந்தவர். அவர் குப்பைக் கோழியைத் தம் பாடலகத்துக் குறித்தமை கொண்டு அப்பெயர் பெற்றார். குப்பையிலே சண்டையிடும் கோழிகள் விலக்குவார் இன்றிப் போரிட்டுத் துன்புறும்; அவ் வண்ணமே யானும் விலக்குவார் இன்றித் துன்புறுகிறேன் என்று ஒரு தலைவி கூறுவதாகப் புலவர் பாடினார். கபிலரின் உள்ளப் போராட்டமும் குப்பைக் கோழியின் போராட்டம் போலவே இருந்தது. அப்பொழுது தமிழ்த் தாய் தன் தகவு வாய்ந்த கவிச் செல்வன் மேல் கண்ணோட்டம் செலுத்திக் காத்தாள். இருந்தமிழ் இருந்தமிழே உன்னால் இருந்தேன்; வானோர் விருந் தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்று ஒரு புலவர் உணர்ந்து பாடினார். இருந்தமிழால் அவர் உயிரோடு இருந்தது. உண்மை. அந்த இருந்தமிழே கபிலர் உயிரோடு இருக்க உதவியதும் உண்மை! அத்தமிழ் வாழ்க! அவர் புகழும் வாழ்க! என்று வாழ்த்துவோம். 12. ஆற்றங் கரை வளமும் வாழ்வும் உழவர் ஓதை மதகோதை உடைநீர் ஓதை தண்பதங் கொள் விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி! (சிலம்பு. 7:4) என்று வாழ்த்தினார் இளங்கோவடிகள். அதே ஆற்றின் வளத்தை, வான் பொய்ப்பினும், தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி என்றும், புனல்பரந்து பொன்கொழிக்கும் விளைவறா வியன்கழனி உடையது என்றும், இத்தகைய பெருவளம் மல்குதலால், சோறுவாக்கிய கொழுங்கஞ்சி ஆறுபோலப் பரந்தொழுகிச் செல்லும் என்றும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் தாம் இயற்றிய பட்டினப்பாலையில் பகர்கிறார். ஆற்றுப் படலம் ஆறு பற்பல புலவர்களுக்கும் பற்பல காட்சிகளை வழங்கி யுள்ளன. கவி மன்னர் மன்னன் கம்பனுக்கு ஆறு வழங்கிய காட்சி ஒரு படலமாகவே உருவெடுத்தது! எங்கு? இராமகாதையின் முதற்பாடலில் இருந்தே! ஆற்றுப் படலம் பாடிய பின்னரே நாட்டுப் படலமும், நகரப் படலமும், அரசியற் படலமும் பாடுகிறான் கம்பன். அவன் நூலின் அமைப்பு முறையிலேயே ஆற்றங்கரையை நாகரிகத்தின் பிறப்பிடம் என்பதை அறிய வைத்து விடுகின்றான். நீரின்று அமையாது உலகு என்பதை அறியாதவனா அவன்? கம்பன் காட்சி f«g‹ M‰w§fiuÆš ïUªJ f©l fh£áfŸ gy., அவற்றுள் ஒன்று: ஆறு முல்லை நிலத்தைக் குறிஞ்சி நிலம் ஆக்குகிறது; மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது; பயன்மிகத் தாராத நெய்தல் நிலத்தை வளமிக்க மருத நிலம் ஆக்குகிறது; ஓரி டத்துப் பொருளை மற்றோர் இடத்தில் கூட்டுகிறது; மாற்று கிறது; இச் செயல்களால்,வெவ்வேறு வகைப் பிறப்புகளில் உயிரைக் கூட்டுகின்ற வினையைப் போல் ஆறு அமைந்துள்ளது. (ஆற்று : 17) மற்றொன்று ஆறு மலையில் பிறந்தது; கடலை அடையப் போகிறது. இதற்கு இடையே இவ்வாற்று நீருக்கு எத்தனை பெயர்கள்? ஏரி, குளம், கால்வாய், வாய்க்கால், கிணறு, ஊற்று இன்னும் இன்னும்....! நீர் ஒன்று; பெயர்கள் மட்டும் பல! இறைவன் ஒருவன் - அவன் பெயர்கள் மட்டுமே பல! எவ்வெச் சமயத்தார் என் னென்ன பெயரிட்டு வேண்டுமானாலும் கூறட்டும் - இறைவன் ஒருவனே தான்! இதனை இந்த நீர் தெளிவாக்கும் (ஆற்று :19) இன்னொன்று சோலை, காடு, பொய்கை, மணல்வெளி, வயல் - இவ் வாறு எங்கேங்கோ நுழைந்து வந்துள்ளது இந்த ஆறு. இதன் ஓட்டம் எவ்வாறு உள்ளது? உடம்பில் உயிர் உலாவி வருவது போல் ஆற்றின் ஓட்டமும் அமைந்துள்ளது. (ஆற்று : 20) பெரியவர் உரை கம்பன் கண்ட ஆற்றங் கரைக் காட்சிகளுள் மூன்றினைக் கண்டோம். இதோ ஒரு மெய்யறிவுச் செல்வர் ஆற்றை உற்று நோக்கி உரைக்கிறார். அவர் உரையை நாமும் கேட்போம்: செறிந்து கூடிய கருமேகத்தின் இடையே மின் வெட்டு உண்டாயது; தண்ணிய நீர்த் துளிகள் அளவிறந்து கவிந்தன; அவை கூடிச் சேர்ந்து பெரு வெள்ளமாகக் கிளம்பின. தங்கு - தடை - உண்டா, கல்லை மோதிக் கடுகி வருகின்றது; கற்களை உருட்டிக் கொண்டும் வருகின்றது. விரைந்த ஓட்டத்தால் பேரொலியும் உண்டாகின்றது. இந் நீர்ப் பெருக்கை அறிந்ததால் தான் இதற்குப் பேர் யாறு என்று பெயரிட்டனர் போலும். கீழும் மேலும் நீர் உருட்டி வந்த கற்களில், அடியில் தங்க விட்டவையும் உண்டு. இன்னும் உருட்டிக் கொண்டு செல்லும் கற்களும் உண்டு. கீழ் உருளுதல் இருக்க, மேலே மிதப்பவையும் உண்டே! இம்மிதவைகளுக்கு என அமைந்த ஒரு கருத்து உண்டா? ஒரு வழி உண்டா? நீரின் வழி எப்படியோ அப்படியே மிதப்பும் செல்கிறது. அவ்வளவுதான் அதன் ஓட்ட நிலை. விரைந்து செல்ல வேண்டுமா? மெதுவாகச் செல்லவேண்டுமா? நின்று விட வேண்டுமா? எந்த ஒன்றுக்கும் நீர் பொறுப்பே அன்றி மிதவைக்குப் பொறுப்பு இல்லை. மிதப்பும் உயிரும் இப்பொழுது ஓர் எண்ணம் அரும்புகிறது. இம் மிதவை யின் செலவு, உயிர் இன்மையாலும், உயிரின் விளைவாம் அறிவும், உணர்வும் இன்மையாலும் ஏற்பட்டது என்பது அது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. உயரிய சான்றோர்களும் இம் மிதவை போலவே வாழ்ந்துள்ளனர் என்பதை அவர்கள் கண்ட நூல்களும், கொண்ட வாழ்வு நிலைகளும் காட்டுகின்றனவே. நீரின் வழியே செல்லும் மிதப்புப் போல் உயிரும் அதன் ஊழின் வழியே செல்லும் என்பதே உயரிய சான்றோர்கள் கண்ட காட்சி. இத்தகைய தெளிவு எல்லாருக்கும் ஏற்படுமா? மெய்யுணர்வு உடையவர்க்கே உண்டாகும். ஆகவே மெய்யுணர் வாளர் நூல்களையும், வரலாறுகளையும் வாழ்வுக்கு வழி காட்டிகளாகக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கொண் டால் உண்டாகும் நலங்கள் பலப்பல. இவ்வாறு உரைத்தார் ஆற்றங்கரைப் பெரியவர், அப் பொழுது மின் வெட்டுப் போல் மேலும் ஒரு கருத்து ஒளி விட்டது. பெரியர் சிறியர் இவர் மெய்யுணர்வாளர்; ஆகவே பெரியர் என்று ஒரு வரை வியப்பதற்கு இல்லை. ஏனெனில் அஃது அவரது ஊழ். இன்னொருவர் அவ்வளவுக்கு அறிவு, தெளிவு, ஆய்வு இல்லா தவர். ஆகவே இவர் சிறியர் என்று இகழ்வதற்கும் இல்லை. அவர் பெரியர் ஆவதற்கு எப்படி ஊழ் காரணமோ, அவ்வாறே இவர் சிறியர், ஆவதற்கும் ஊழே காரணம். இத்தகைய உணர்வு ஏற்படும்போது பெரியோரை வியக்கவும், சிறியோரை இகழவும் முறை உண்டா? இல்லை! என்று முடிவு செய்தார். அவர் முடிவு ஒரு பாவின் சில அடிகளாக அமைந்தன. அவை, மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. மேலும் அவர் சிந்தனை வேலை செய்யத் தொடங்கியது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது போல் எண்ணமும் பெருக் கெடுத்தது. ஊரும் உறவும் உயிர்களெல்லாம் ஊழின் வட்டத்தில் சுழல் கின்றன என்னும் தெளிவு ஏற்படும்போது உயிர்களிலே ஏற்றத் தாழ்வு கருத என்ன இருக்கிறது? இவர் உறவினர்; அவர் அயலார் என்பது என்ன முறை கொண்டது? இவர் நண்பர் அவர் பகைவர் என்று பிரிப்பதற்குத் தான் என்ன நியதி இருக்கிறது? இது என் ஊர்; அது அவர் ஊர் என்று எண்ணுவது எவ்வாறு அறம் ஆகும்? நாம் இருக்கும் ஊரெல்லாம், எண்ணும் ஊரெல் லாம் நம் ஊரே! நாம் கண்டு அறிபவர், கேட்டு அறிபவர் அனைவரும் உறவினரே! எல்லா ஊர்களும் நம் ஊர்; எல்லா மக்களும் நம் உறவினர் என்னும் உயர்ந்த எண்ணம் உண்மையாக உண்டாகி விடும் பொழுது தீமை செய்பவர் யார்? நன்மை செய்பவர் யார்? எவரும் இலர்! நன்றும் தீதும் தீமை நமக்கு உண்டானால் அது நமக்கு நாமே செய்து கொண்டதாகத் தான் இருக்க வேண்டும்; நன்மை உண்டானால் அதுவும் நமக்கு நாமே செய்து கொண்டதாகத் தான் இருக்க வேண்டும். நாம் எந்தப் படியால் பிறருக்கு அளந்து கொடுக் கிறோமோ அந்தப் படியால்தான் நாம் அளந்து கொடுக்கப் பெறுகிறோம். நமக்குப் பிறர் என்ன செய்கிறார்? நாம் பிறருக்கு என்ன செய்தோமோ அதையே அவர் திருப்பி நமக்குச் செய் கிறார். விதை ஒன்றும் முளை ஒன்றுமாக இருக்குமா? நமக்குத் தீமை செய்வார்க்கு, நாம் முன்னர் நன்மை செய் தோம் எனக் கருதிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நாம் செய்ததைத் தமக்கு நன்மை என்று கருதினார்களா? தீமை என்று கருதினார்களா? அவர்கள் கருதியதைப் பொறுத்தல்லவா பதில் செய்கிறார்கள்! ஒருவேளை அவர்கள் நன்மை என்று கருதிச் செய்வதே நமக்குத் தீமையாகத் தோன்றினாலும் தோன்றக் கூடுமே! இதனால் அன்றோ நன்றாற்றலுள்ளும் தவறுண்டு என்றார் செந்நாப் போதார். பாட்டின் பயன் தீமை நன்மைகளைப் பற்றிய இத்தெளிவு உண்டாகி விட்டால் நன்மைக்காக மகிழ்வதும், தீமைக்காக வருந்துவதும் ஏற்படா. பருவம் அறிந்து விதை தெளித்துப் பாத்தி கட்டி நீர்விட்டுக் களை பறித்துக் காவல் செய்தவன் பயன் கண்ட போது மகிழ என்ன இருக்கிறது? பட்ட பாட்டின் பயனை அடைகிறான்; அவ்வளவே. உழும் காலத்தில் ஊர்வழி போன வன், அறுக்கும் காலத்தில் ஆய பயன் இல்லையே என்றால் அவனும் அவன் செய்த வினையின் பயனை எண்ணினார். அருமை அருமையான மணி மொழிகளாக வெளிவந்தன. யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன; பொதுச் சொத்து நோவும், நோவின்மையும் தாமே வருவன என்றால், நோவில் எல்லாம் தலையாய நோவு என மக்களால் கருதப் பெறும் சாவு எத்தகையது? என்று கருதத் தொடங்கினார். அக்கருத்தும் பெருகி வளர்ந்தது. சாவு என்பது ஒருவருக்கு ஏற்பட்டதா? ஓர் உயிருக்கு மட்டும் ஏற்பட்டதா? ஒரு நாட்டளவில் கட்டுண்டதா? ஒரு கால அளவில் அமைவதா? இல்லவே இல்லை. உலகந் தோன்றிய நாள்முதல் எல்லா உயிர்களுக்கும் சாவு இயல்பாக வந்து கொண்டிருக்கும் ஒன்றே; புதிதாக இன்று வருவது அன்று! கணித வல்லுநராலும் கணிக்க முடியா அளவில் கணக்கிறந்து செல்லும் எண்ணிக்கையிலும், பழமையிலும் திளைத்தது சாவு! உயிர்களின் பொதுச் சொத்து அது. பிறப்பும் இறப்பும் தோற்றம் எங்கே உளதோ அங்கே ஒடுக்கமும் உளது; பிறப்பு எதற்கு உண்டோ அதற்கு இறப்பும் உண்டு; ஒன்றைவிட்டு ஒன்று பிரியாச் செறிவுடைய இரட்டைகளே இவை. பழமைக் கும் பழைமையான இவற்றைப் புதுமையானவை என்று எப்படிச் சொல்ல முடியும்? அல்லது புதியது என்று கொண்டு எவ ராலாவது மாற்றியமைக்கவாவது முடியுமா? முடியா ஒன்றை - நடந்தே தீரும் ஒன்றை - வியப்பானதாகவோ வேதனை யான தாகவோ எண்ணுவதால் ஆகும் பயன்தான் என்ன? உறக்கம் விழிப்பு உயிர்கட்கு விழிப்பு உண்டாகிறது; உறக்கமும் வருகிறது. அயர்வானால் உறக்கம், அயர்ச்சி போனால் விழிப்பு; உறக்கம் போன்றதே இறப்பும்; ஆகவே மெய்யுணர்வு உடையார் இறப்புப் பற்றிக் கவலையடைய இடமே இல்லை. செடியில் இருந்து அலர்ந்த பூ உதிர்வது போல், அவர்கள் தம் உடலில் இருந்து உயிரை உகுப்பர். இந்த இறப்புக்காவது எல்லை உண்டா? நன்கு பழுத்த இலை தான் காற்றில் உதிர்கிறது என்பது இல்லையே; பழுத்த இலையுடன் தளிரும் - ஏன் - இளந்தளிரும் உதிர்ந்து வீழ்வது உண்டே. காற்றில் இலைகள் உதிர்வது போலவே ஊழால் உயிர்கள் உடலில் இருந்து பிரிகின்றன. இந் நிலைமையை அறிந்து காற்றைப் போல விடுதலை; கட்டில்லாத விடுதலை என்று களிப்படைய வேண்டுமே அன்றிக் கவலை அடைதல் அறியாமை என்று ஒரு முடிவுக்கு வந்தார் பெரியவர். பாலை சோலை சாவு பற்றி முடிவு செய்த அவர்முன் வாழ்வு தலை நீட்டி யது. அதனை எண்ணிப் பாராமல் விடலாமா? வாழ்வைப் பாலை என்பாரும் உளர்; சோலை என் பாரும் உளர்; எந்த முடிவை நாம் கொள்வது? வாழ்வுச் சோலையே என்றால் அவ்வாழ்வை வெறுப் பார் எவரும் இருக்க இயலாது வாழ்வு பாலையே என்றால் அவ்வாழ்வை விரும்புவார் எவரும் இருக்க இயலாது. வாழ்வை வெறுப்பாரும் உளர். வாழ்வை விரும்புவாரும் உளர். ஆகவே வாழ்வு பாலையும் அன்று, சோலையும் அன்று என்று முடிவு செய்யலாம். நிறக் கண்ணாடி நினைப்பார் நினைப்புப் போல் உள்ளது வாழ்வு. பாலை யாக நினைப்பார்க்குப் பாலை; சோலையாக நினைப்பார்க்கு சோலை; எந்த நிறக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்க்கிறோமா, அந்த நிறமாகவே கதிரோனும் காட்சி வழங்கு கிறானே! இது கதிரோன் காட்டும் நிறமாற்றமா? காண்பவன் கண்ணாடி தந்த காட்சி மாற்றமா? மனம் போல வாழ்வு, எண்ணமே வாழ்வு என்பன பொருள் பொதிந்த பொன் மொழிகள். வாழ்வின் நிலைக் களத்தை முற்ற முடிய ஆராய்ந்த பெருமக்கள் வாயில் இருந்து கிளைத்தவை அவை. ஆகவே, விருப்பு மிகுதியால் வாழ்வு இனிமையானது என்று மகிழ்வதும், வெறுப்பு மிகுதியால் வாழ்வு இன்னாதது என்று மறுகுவதும் தகவுடையன ஆகா; இன்ப துன்பமற்ற இயற்கை ஓட்டமே வாழ்வு இவ்வாறு எண்ணித் தம் எண்ணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். அவர் எண்ணம் சில செஞ் சொற்களாக வெளி வந்தன. சாதலும் புதுவ(து) அன்றே; வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவில் இன்னா(து) என்றலும் இலமே கணியன் பூங்குன்றன் ஆற்றங்கரையில் இருந்து ஆய்வுரை நிகழ்த்திய பெரியவர் பெயர் என்ன? இதற்குள் பெரும்பாலோர் அறிந்திருத்தல் கூடும். அவர் பெயர் பூங்குன்றன் என்பது. நாளும் கோளும் நன்கனம் கணித்தறியக் கூடிய வல்லுநர் அவர். அத்தகையவர்களைச் சங்க காலத்தில் கணியர் என்று அழைத்தனர். அவ்வழக்குப் படியே பூங்குன்றன், கணியன் பூங்குன்றன் என்னும் பெயருடன் விளங்கினார். உலகம் உய்ய ஆற்றங்கரை எத்துணையோ நாடு நகரங்கைள் படைத்தது; நாகரிக வாழ்வினை நல்கியது; செல்வச் செழிப்பையும், கலைப் பேற்றையும் உதவியது; உயிர்களின் இனிய வாழ்வுக்கு உறு துணையாக அமைந்தது; அந்த ஆற்றங்கரையை உலகம் உய் வதற்கு ஏற்ற உயர் மருந்து என்று சொல்லத்தக்க ஒரு பாடலைப் பூங்குன்றன் வழியாக வழங்கியது. உலகம் அப்பாடல் முழுமையையும் ஏற்றாலும் ஏற்கட்டும்; ஏற்காமல் ஒழிந்தாலும் ஒழியட்டும்; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் முதல் அடியையாவது அப்படியே ஏற்றுக் கொண்டால் அல்லாமல் அதற்கு உய்வு இல்லை. அருந்தமிழ் அமிழ்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டு வகைகளும், வலவன் இன்றியே இயங்கி, வைத்த குறிதப்பாது தாக்கும் வானூர்தி வகைகளும் பேய் முழக்கம் செய்யும் நாகரிகப் போலி நாளிலே, உலகம் ஒரு குடி என்னும் உணர்வு உண்டாகாமல் உய்ய வழி உண்டா? உலகத்தின் அழிபாட்டை நீக்க ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழகத்து ஆற்றங்கரை தந்த அரிய அமுதம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது. அவ்வமுதை அருந்தி உலகம் இன்புற்று வாழுமாக! கணியன் பூங்குன்றன் பாட்டு யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன; சாதலும் (புதுவ(து) அன்றே; வாழ்தல் 5. இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னா(து) என்றலும் இலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் 10. முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் : 192) கட்டுரைப் பயிற்சி (குறிப்பு: விடைகள் கட்டுரை வடிவில் முகப்பு, உடல், முடிவு இவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும்) 1. அரசவை 1. பிசிராந்தையார் பாண்டியன் அவைக்குச் சென்ற போது ஆங்கிருந்த சூழ்நிலையை விவரிக்க. 2. அறிவுடை நம்பியின் அவையில் பிசிராந்தையார் உரைத்தவற்றைத் தொகுத்துரைக்க. 2. அரண்மனை 3. குமணன் காட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை எவ்வாறு ஏற்பட்டது? 4. புலவர் சாத்தனார் குடும்ப நிலைமை எவ்வாறிருந்தது? 5. சாத்தனார் குமணனையும் அவன் தம்பியையும் ஒற்றுமைப் படுத்தியதை உரைக்க. 3. அந்தப்புரம் 6. பேகனது கொடைத் தன்மையை விவரித்து எழுதுக. 7. கண்ணகியார்க்கு உண்டாகிய கவலையையும், அது நீங்கிய விதத்தையும் குறிப்பிடுக. 4. படைக்கலக் கொட்டில் 8. ஔவையாரது சிறப்பியல்புகளாக அறிந்தவை எவை? 9. ஔவையார் காஞ்சி மாநகர்க்கு எதற்காகச் சென்றார்? 10. தொண்டைமான் போரெண்ணம் எவ்வாறு ஒழிந்தது? 5. போர்க்களம் 11. கோழியூரின் வீரச் சிறப்பினை விளக்குக. 12. புல்லாற்றூர் எயிற்றியனார், போர் நீக்கிய சிறப்பை விவரிக்க. 6. கொலைக்களம் 13. காரியின் கொடைச் சிறப்பையும், வீரச் சிறப்பையும் குறித்து எழுதுக. 14. கோவூரார் காரியின் மைந்தரை எவ்வாறு காப் பாற்றினார்? 7. சிறைக்கோட்டம் 15. கழுமலத்தில் காணப்பெற்ற களக்காட்சிகளில் சில வற்றைக் கூறுக. 16. பொய்கையாரும், கணைக்கால் இரும்பொறையும் எத்தகைய அன்பு கொண்டிருந்தனர். 8. வீடு 17. வாழ்வாங்கு வாழும் வகை யாது? 18. சித்திரனார் இல்வாழ்க்கை எத்தகையது? 19. சித்திரனார் தம் மனைவியினிடம் உரைத்த நன்மொழி களைக் கூறுக. 9. திண்ணை 20. பழந்தமிழ்ப் பெண்களின் வீரச் சிறப்பாக அறிந்தவை எவை? 21. போரவைக் கிள்ளியின் நல்லியல்புகளைத் தொகுத் தெழுதுக. 22. காவல் பெண்டின் சிறப்பு எதனால் விளங்கும்? 10. முல்லைப் பந்தல் 23. பெருஞ்சாத்தனின் நல்லியல்புகளைத் தொகுத் தெழுதுக. 24. முல்லைக் கொடியை நோக்கிக் கீரத்தனார் உரைத்தவை யாவை? 25. முல்லையும் பூத்தியோ என்பதில் அமைந்துள்ள நயத்தைப் புலப்படுத்துக. 11. குப்பைமேடு 26. கபிலர் பாரி மகளிருடன் பறம்பு மலையை விட்டு ஏன் பிரிந்தார்? 27. கபிலரின் புலமைச் சிறப்பாக அறிவன எவை? 12. ஆற்றங்கரை 28. கம்பன் கண்ட ஆற்றுக் காட்சிகள் சிலவற்றைக் கூறுக. 29. பூங்குன்றனார் ஆற்றில் எதைக் கண்டார், அதைப் பற்றி என்ன எண்ணினார்? 30. உலகம் உய்தற்கு வேண்டிய பண்பாடு யாது? (நூற் பொது வினா) 1. பழங்காலத்தில் எவ்வெவ் விடங்கள் தமிழ் மன்றங் களாகத் திகழ்ந்தன? 2. புலவர்கள் செய்த தொண்டுகளில் சிலவற்றைக் குறிப் பிடுக. 3. புலவர்கள் உயர்ந்த தன்மைகளாக அறிவனவற்றைத் தொகுத்தெழுதுக. 4. அரசர்கள், புலவர்கள் சொற்களைப் போற்றி நடந்தனர் என்பதைச் சான்றுகளால் நிறுவுக. 5. தமிழ்மொழி சமுதாயத்தின் பொதுச் செல்வமாக இருந்தது என்பதை எவற்றால் அறியலாம்? 