மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6 பண்டைத் தமிழ் நூல்கள் கால ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 448 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 420/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பண்டைத்தமிழ் நூல்கள் கால ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் தொல்காப்பியம், சிலப்பதி காரம், திருக்குறள், தேவாரம், சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நூல்கள் குறித்துச் செய்த ஆய்வுகள் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பண்டைத் தமிழ் நூல்கள் அச்சிட்டு வெளிவந்த சூழலில் அவற்றின் காலம் குறித்த உரையாடல்கள் பெரிதும் முன்னெடுக்கப் பட்டன. வடமொழி சார்புடைய ஆய்வாளர்கள், திராவிடக் கருத்தியல் சார்பான ஆய்வாளர்கள் என இருபிரிவினராக அடையாளம் காணப்பட்டனர். இச்சார்பு அடிப்படையில் தமிழ்நூல்களின் தொன்மை குறித்த உரையாடல்கள் நிகழ்ந்தன. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் திராவிடக் கருத்தியல் சார்பாளராகச் செயல்பட்டவர். எனவே பண்டைத்தமிழ் நூல்களின் காலத்தை மிகவும் பின்னுக்குக் கொண்டுவருவதை மறுத்து கட்டுரைகள் எழுதினார். அவ்வகையான கட்டுரைகள் `சங்க காலத் தமிழக வரலாற்றில் சிலசெய்திகள்’ (1970) எனும் நூலில் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை செய்துள்ள கால ஆய்வு களை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மறுத்து எழுதியுள்ளார். குறிப்பாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகியவை தொடர்பான கால ஆய்வுகள் இத்தொகுதியில் பேசப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை பங்களர் என்னும் சொல் வங்களர் என்னும் சொல்லின் திரிபாகக் கருதி வங்காள நாட்டவரைக் குறிப்பதாக எழுதியுள்ளார். எனவே சிலப்பதிகாரம் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக அமையவேண்டும் என்பது அவருடைய வாதம். ஆனால் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பங்காளர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதாகவும் அது ஒரு குடியினரைக் குறிப்பதாகவும் எடுத்துக்காட்டி வையாபுரிப்பிள்ளையின் கருத்தை மறுக்கிறார். இவ்வகையில் சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் மயிலை சீனி அவர்கள் பெரிதும் ஈடுபாட்டுடன் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம். மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் சிலப்பதிகாரம் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளில் கண்ணகி தொடர்பான ஆய்வை விரிவாகச் செய்துள்ளார். மேலும் மணிமேகலைக்கும் சிலப்பதிகாரத் துக்கும் உள்ள உறவுகள் தொடர்பாகவும் இவரது ஆய்வுகள் அமைந் துள்ளன. திருக்குறள் தமிழரின் மிகமுக்கியமான நூல் என்பதோடு அந்நூல் சமண, பௌத்த மதங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதை விரிவாக ஆய்வு செய்துள்ளார். பல்லவ மன்னவர்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மயிலை சீனி அவர்கள், அக்காலத்திய பக்தி இலக்கியங்கள் குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார். பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் காலத்திலும் எழுதப்பட்ட பக்திப் பாடல்கள் எவையெவை என்பது குறித்து இவர் செய்துள்ள ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேவாரத்தில் காணப்படும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சமணர்களும் பௌத்தர்களும் எவ்வகையில் சைவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டனர் என்பதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் செய்திகளைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட சமயங்களின் வரலாற்றை மிக விரிவாக ஆய்வு செய்தவர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள். இந்தத் தொகுதியில் சைவ சமயம் எவ்வாறெல்லாம் செயல்பட்டது என்பது குறித்த தகவல்களை ஆழ்வார் பாடல்கள் மற்றும் நாயன்மார் பாடல்கள் மூலம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் சமணம் மற்றும் பௌத்தம் தொடர்பான ஆய்வுகள் குறித்து அறிந்த அளவிற்கு அவரது சைவ சமயம் குறித்த ஆய்வை தமிழுலகம் அறிந்திருக்கவில்லை. இத்தொகுதியின் மூலம் அவரது சைவ சமயம் தொடர்பான ஆய்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் பண்டைத் தமிழ் நூல்களின் கால ஆய்வுகள் பற்றிய விரிவான உரையாடல்கள் நிகழ்ந்த பொழுது அதில் பங்குபெற்றவர்களில் சீனி வேங்கடசாமி அவர்களும் குறிப்பிடத்தக்கவர். ஆனால், பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை மா. இராசமாணிக்கனார், தேவநேயப் பாவாணர், ஆகிய பிறர் செய்த கால ஆய்வுகள் குறித்து தமிழுலகம் அறிந்த அளவிற்கு மயிலை சீனி அவர்களின் கால ஆய்வை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இத்தொகுதியில் அவரது காலஆய்வுகள் குறித்த விரிவான தகவல்கள் பதிவாகியுள்ளன. தர்க்கப் போக்கில் தமிழ்நூல்களின் காலத்தை நிர்ணயம் செய்தவர்களில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுக்கு முக்கியமான இடமுண்டு என்று கூறமுடியும். இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96 ஏப்ரல் 2010 வீ. அரசு தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் பண்டைத் தமிழகம் கால ஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி I. தொல்காப்பிய ஆராய்ச்சிக் காரர்கள் 18 II தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள் 1. தொல்காப்பியர் காலம் 22 2. தொல்காப்பியர் காலம் - வேங்கடம் 31 3. தொல்காப்பியர் காலம் - ஓரை 38 4. தொல்காப்பியர் காலம் தமிழ்ச்சங்கமும், திரமிள சங்கமும் 50 5. தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும் 57 6. மதுரைக் காஞ்சியின் காலம் 64 7. வருணன் வணக்கம் 77 8. இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் 83 9. சிலப்பதிகார ஆய்வுரை 90 10. சிலப்பதிகாரமும் பங்களரும் 99 11. இளங்கோ அடிகளின் கவிதை நயம் 105 12. மாநாய்கனும் மாசாத்துவானும் 112 13. இளங்கோவும் சாத்தனாரும் 118 14. பத்தினிச் செய்யுளும், கண்ணகியும் 125 15. திருமாவுண்ணி கண்ணகியா? 138 16. உண்மைப் பொருள் 151 17. கண்ணகியார் தெய்வமான இடம் எது? 160 18. தேவந்தி 176 19. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்தின் கலைச்செல்வி 179 20. மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா? 190 21. தேவாரத்தில் திருக்குறள் 199 22. மலர்மிசை ஏகினான் 202 23. அறவாழி அந்தணன் 209 24. யாரால் மழை பெய்கிறது? 213 25. திருவள்ளுவர் கூறிய பொருட்செல்வம் 218 26. ஜைன மதமும் திருக்குறளும் 225 27. ஒரு குறளுக்குப் பௌத்த விரிவுரை 229 28. முதலாழ்வார், திருமழிசையாழ்வார் கால ஆராய்ச்சி 232 29. ஆழ்வார் நாயன்மார் பாடல்கள் 244 30. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் 255 31. தேவார ஆராய்ச்சி 259 32. இலக்கியம் 294 33. தமிழிலக்கியம் 326 34. திருநாவுக்கரசர் தேவார ஆராய்ச்சி 333 பின்னிணைப்பு 1. வெள்ளிப்பாட்டு 356 2. தேவார ஆராய்ச்சி 406 3. செந்தமிழ்ச் சிந்தாமணி 418 4. தேசிகப் பாவை 422 5. கம்பரும் சரளரும் 427 6. தமிழ் நூல்களில் மீன் வகை 431 7. அவையடக்கச் செய்யுட்கள் 439 தொல்காப்பிய “ஆராய்ச்சிக்”காரர்கள்* தொல்காப்பியத்தைப் பற்றியும் தொல்காப்பியரைப் பற்றியும் சிலர் ஆராய்ந்து எழுதியுள்ளனர். இவர்களில் சிலர், தொல்காப்பியம் பிற்காலத்து நூல், அதாவது கி.பி. 400-க்குப் பிறகு எழுதப்பட்ட நூல் என்றும், தொல்காப்பியத்தில் கூறப்படும் கருத்துக்கள் சில வடமொழி நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், கற்பு முறையைத் தமிழர் களுக்குக் கற்பித்தவர் ஆரியப் பார்ப்பனர் என்றும் இந்த “ஆராய்ச்சிக்” காரர்கள் எழுதியுள்ளனர். யானைகண்ட பிறவிக் குருடர்கள், யானை முறம் போல இருக்கிறது என்றும், யானை உரல் போல இருக்கிற தென்றும், யானை உலக்கைபோல இருக்கிறதென்றும், யானை துடைப்பம் போல இருக்கிறதென்றும் கூறினதுபோல, இந்த “ஆராய்ச்சிக் குருடர்களும்” உண்மை யறியாமல் தங்கள் மனம் போல எழுதி யுள்ளனர். இவர்கள் கூறுவதற்குத் தக்க விடை கூறி உண்மையை நிலை நாட்ட வேண்டுவது கற்றறிந்தவரின் கடமை அல்லவா? முதலில் இந்த “ஆராய்ச்சிக்” காரர்கள் தொல்காப்பியத்தைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். கே.ஜி. சங்கர் என்பவர் 1924இல் “சங்கநூல்களில் மௌரியர்” என்னும் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இவர் கூறும் கருத்தின் சுருக்கம்: “அகநானூறு 251 ஆம் செய்யுளில், தமிழ்நாட்டு மோகூர் மன்னனுக்கு எதிராகப் போர்செய்ய வந்த கோசருக்கு உதவியாக மௌரியர் வந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த மௌரியர் அல்லது மோரியர் என்பவர். கி.மு. 324 முதல் கி.மு.187 வரையில் மகதநாட்டை அரசாண்ட பழைய மௌரியர் அல்லர்; கொங்கண நாட்டை அரசாண்ட “திரை கூடகர்” என்னும் அரசர் காலத்திற்குப் பிறகு அரசாண்ட மௌரியர் ஆவர். இவர்கள் கி.பி. 6,7,8 -ஆம் நூற்றாண்டுகளில் கொங்கண நாட்டை அரசாண்டார்கள். இந்த மௌரியர் கொங்கண நாட்டுக்குக் கி.பி. 494 இல் வந்தார்கள். ஆகவே, மௌரியரைக் கூறுகிற இந்தச் சங்கச் செய்யுள் கி.பி. 500க்குப் பிறகு எழுதப்பட்டதாதல் வேண்டும். ஆகவே சங்க நூல்களும் கி.பி. 500 - க்கு பிறகு எழுதப்பட்டவை. தொல்காப்பியம் சங்க நூல்களுக்கு முற்பட்டகாலத்தில் எழுதப்பட்ட தாதலால் அது கி.பி. 400க்குப் பிறகு எழுதப்பட்டிருக்கவேண்டும். ஹோரா என்னும் கிரேக்கச் சொல் தொல்காப்பியத்தில் ஓரை என்று கூறப்படுகிறது. கி.பி. 378 இல் இருந்த ஞயரடரள ஹடநஒயனேசiரேள என்பவர் எழுதிய கிரேக்க வான சாஸ்திர நூலில் இருந்து இந்தச் சொல்லைத் தொல்காப்பியர் பெற்றிருக்கவேண்டும். ஆகவே, தொல்காப்பியம் கி.பி. 400க்குப் பிறகு எழுதப்பட்ட நூல்.” இதுதான் கே.ஜி. சங்கர் என்பவர் எழுதியிருப்பதன் சுருக்கம்(The Moriyars of the Sangam Works by K.G. Sankar. PP 664-667. Journal of the Royal Asiatic Society 1924 )1956 இல் வெளிவந்த “தமிழ்மொழி தமிழ் இலக்கியவரலாறு” என்னும் ஆங்கில நூலில் திரு. ளு.வையாபுரிப் பிள்ளை அவர்களும் தொல்காப்பிய நூலின் காலத்தைப்பற்றி ஆராய்கின்றார். சங்க நூல்களில் மௌரியர் என்னும் அரசர் கூறப்படுவதைக் குறிப்பிட்டு, இந்த மௌரியர் சரித்திரத்தில் கூறப்படும் மௌரியர் அல்லர் என்று ஐயம் கொள்கிறார். (பக்கம் 12.) மேலும் வையாபுரிப் பிள்ளை கீழ்க்கண்டபடியும் எழுதி யுள்ளார்: மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்படுகிற சமுதாயத்தைப் பற்றிய சில செய்திகளைத் தொல்காப்பியர் தமது தொல்காப்பிய நூலில் எழுதி யிருக்கிறார். இதனால் தொல்காப்பியர் கி.பி.200-க்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கிறது. கௌடல்யர் தமது அர்த்த சாஸ்திரத்திலே எழுதியிருக்கிற 32 உத்திகளைத் தொல்காப்பியர் எடுத்துத் தொல் காப்பிய நூலில் எழுதியுள்ளார். வடமொழியில் உள்ள பரத நாட்டிய சாஸ்திரத்திலிருந்தும், வாத்சாயனரின் காமசூத்திரத்திலிருந்தும் சிலவற்றை எடுத்துக் கொண்டார். எட்டு மெய்ப்பாடுகளையும், தசா வஸ்தைகளையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். இவையெல்லாம், தொல்காப்பியம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பதைக் காட்டுகின்றன. ஆகவே, தொல்காப்பியர் காலம் கி.பி. 5-ஆம் நூற்hண்டு என்று சொல்லலாம். வச்சிர நந்தி நிறுவிய பேர்போன திராவிட சங்கம் கி.பி. 470 இல் நிறுவப்பட்டது என்பதும் இதற்குச் சாதகமாக இருக்கின்றது. இந்தத் தமிழ்ச் சங்கத்தில் எழுதப்பட்ட முதல் நூல் தொல்காப்பியமாக இருக்கலாம். தொல்காப்பியம் ஓரை என்னும் (வடமொழியில் ஹோரா) என்னும் கிரேக்கச் சொல்லைப் பயன் படுத்துகிறது. கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் வடமொழி யாளர் தாம் எழுதிய சோதிட சாஸ்திர நூல்களில், ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லைக் கடனாகப் பெற்றுக்கொண்டு எழுதினார்கள். வட மொழியாளர் உபயோகப்படுத்திய ஹோரா என்னும் சொல்லைத் தொல் காப்பியர் ஓரை என்று பயன்படுத்தி யுள்ளார். எனவே, தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். (பக்கம் 14). மேலும் பிள்ளையவர்கள் எழுதியுள்ளார்:- “தொல்காப்பியர் காலம் விவாதத்திற்குரியது. ஆனால், தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளன” (பக்கம் 65 - History of Tamil Language and Literature. by Prof. S. Vaiyapuri Pillai. 1956)வையாபுரிப்பிள்ளை இன்னொரு கட்டுரையில், தொல்காப்பியர் கி.மு.150க்குப் பிற்பட்டகாலத்தவர் என்று எழுதியுள்ளார். தொல்காப்பியர் பதஞ்சலியின் சூத்திரங்களைக் கையாளுகிறார் என்றும் ஆகவே பதஞ்சலியின் காலமாகிய கி.பி. 150-க்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் என்றும் எழுதுகிறார். (Tolkappiyar and Patanjali. by Rao Sahib S. Vaiyapuri Pillai. PP. 134-138. Dr. C. Kunhan Raja Presentation Volume. Madras - 1946) மேலும் வையாபுரிப் பிள்ளை, தமது இலக்கிய தீபம் என்னும் நூலில் (பக்கம் 131-144), தொல்காப்பியர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதை எழுதியுள்ளார். இனி, மு. இராகவையங்கார் அவர்கள், “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காரணம் என்ப” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்குப் பொருள் கூறியபோது, தமிழர்களுக்குக் கற்புத் தெரியாது என்றும், ஆரியப் பார்ப்பனர் வந்து, மணம்செய்துகொண்டு கற்புடன் வாழும் முறையைக் கற்றுக் கொடுத் தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். (தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி. மு. இராகவையங்கார்.) இந்த ஐயங்கார் எழுதிய இதே செய்தியை இன்னோர் ஐயரும் எழுதி யுள்ளார். பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் தாம் எழுதிய தொல் காப்பிய ஆங்கில உரையில் இதனை எழுதியிருக்கிறார். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே ஆரியப் பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்திருந் தனர் என்றும், அந்தப் பார்ப்பனர் கற்பு முறை தெரியயாத தமிழர் களுக்குக் கற்பு முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் என்றும் எழுதியிருக்கிறார். (பக்கம் 92, Tolkappiyam. Porul Atikaram by P. S. Subramaniya Sastri. The Kuppuswami Sastri research Institute. Mylapore, Madras 1949). இவ்வாறு ஐயங்காரும் ஐயரும், ஆரியப் பார்ப்பனர் தமிழர்களுக்குக் கற்பு முறையைத் கற்றுக்கொடுத்தார்கள் என்று தொல்காப்பியர் கூறி யுள்ளதாக எழுதியுள்ளனர். இந்தச் சுப்பிரமணிய சாஸ்திரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத ஆசிரியர். இவர் 1946 ஆம் ஆண்டில், திருவாங் கூர்ப் பல்கலைக் கழகத்திலே, “தமிழுக்கும் சமஸ் கிருதத்திற்கும் உள்ள தொடர்புபற்றிய ஆராய்ச்சி” என்னும் தலைப்பில் சொற் பொழிவுகள் செய்தார். அச் சொற்பொழிவுகள் புத்தகமாக அச்சிடப் பட்டுள்ளன. அதில் தொல்காப்பியத்தைப் பற்றியும் தொல்காப்பியரைப் பற்றியும் கூறியுள்ளார். இதிலும், பார்ப்பனர் தமிழருக்குக் கற்பைக் கற்றுக் கொடுத்தனர் என்று எழுதியுள்ளார். அன்றியும், சமஸ்கிருத இலக் கணத்திலிருந்தும், தர்ம சாஸ்திரம், காமசூத்திரம், கௌடல்லியர் அர்த்த சாஸ்திரம் முதலிய வடமொழி நூல்களில் இருந்தும் சில கருத்துக் களைத் தொல்காப்பியர் எடுத்துத் தொல்காப்பியத்தில் எழுதியுள்ளார் என்று இவர் எழுதியுள்ளார். இந்நூலில் இவர் கூறியுள்ளவற்றை எழுதினால் இடம் பெருகும் என்று அவற்றை யெல்லாம் இங்கு எழுதவில்லை. வேண்டுவோர் அந்நூலில் காண்க (An enquiry into the Relationship of Sanskrit and Tamil. by Vidyaratna P.S. Subramaniya Sastri. Travancore University Publications English No. 2. University of Travancore 1946. Price Rs. 2-4-0) இவ்வாறு தொல்காப்பியர் காலத்தைப் பற்றியும் தொல்காப்பிய நூலைப் பற்றியும் இவர்கள், யானைகண்ட பிறவிக் குருடரைப்போல, “ஆராய்ச்சி”களை எழுதியிருப்பதை அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார் களா? “பொய்யுடை ஒருவன் சொல்வன்மை யினால் மெய்போலும்மே மெய்போலும்மே” என்பதற்கிணங்க, மெய்போலத் தோன்றுகின்ற இந்தப் பொய்யுரைகளை உண்மை என்று ஏற்றுக்கொள்வது அறிஞர் களுக்கு அழகாமோ? மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்குப் பரம உண்மை போலவும், அசைக்க முடியாத ஆராய்ச்சி போலவும் காணப் படுகிற இந்தப் பொய்க்கூற்றுக்களைக் பிட்டுப்பிட்டுக் காட்டி, அலசி அலசிக் காட்டி உண்மையை நிலைநாட்டவேண்டுவது கற்றறிந்தோர் கடமை யல்லவா? பாவாணர்களும் கவிவாணர்களும், வித்துவான்களும், புலவர் களும், டாக்டர்களும் புரொபசர்களும் இப்பொய்க் கூற்று களுக்குத் தக்க விடை எழுதி உலகத்துக்கு உண்மையைக் காட்டுவார்கள் என்று நம்புகிறோம்.1 தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்* 1. தொல்காப்பியர் காலம் தொல்காப்பியம் இடைச்சங்க காலத்து நூல் என்று செவி வழிச் செய்தி கூறுகிறது. தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்கள் பாண்டிய மன்னரால் பாண்டி நாட்டில் அமைக்கப் பட்டிருந் தன என்றும் அச்சங்கங்களில் இடைச்சங்க காலத்தின் இறுதியில் தொல் காப்பியம் தோன்றியது என்றும், இடைச்சங்க காலத்தின் இறுதியில் தோன்றிய தொல்காப்பியம் கடைச்சங்க காலத்திலும் இலக்கணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. இறையனார் அகப்பொருளின் முதல் சூத்திரத்தின் உரைப்பாயிரத்தில் இந்த முச்சங்கங்களின் செய்தி கூறப் படுகிறது. இச் செய்தியில் சங்கங்கள் இருந்த காலம் மிகமிக நீண்ட காலமாகக் கூறப்படுவதனால், இந்தச் செய்திகளைச் சிலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சங்கங்கள் நீண்டகாலம் இருந்ததாகக் கூறப் படுவதனாலே, அதன் காரணமாகச் சங்கங்கள் இருந்தனவா என்பதையே சிலர் ஐயுறுகிறார்கள்; கற்பனைக் கதை என்று கருதுகிறார்கள். இதுபற்றி ஆராய்வோம். இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் முச்சங்கங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார். அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முது நாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாக் கடுங்கோ னீறாக எண்பத்தொன்பதின்மர் என்ப அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந் தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.’ ‘இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக்கோனும், கீரந்தையு மென இத் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை யகவலுமென இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும் பூதபுராணமுமென இவை என்ப. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்க மிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவி யரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டி நாட்டைக் கடல் கொண்டது.’ ‘இனிக் கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவி யாரும் சேந்தம்பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங்குன்றூர்க் கிழாரும் இளந்திருமாறனும் மதுரை யாசிரியர் நல்லத்துவனாரும் மருதளிளநாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப் பட்டன நெடுந்தொகை நானூரும் குறுந்தொகை நானூரும் நற்றிணை நானூறும் புறநானூறும் ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும் நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப் பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத் தொண்ணூற் றைம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇ யினர் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருக்க முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெரு வழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை என்ப.’ இவ்வாறு கூறப்படுகிற செய்தியில் தலைச்சங்கம் 4440 ஆண்டு இருந்தது என்றும், இடைச்சங்கம் 3700 ஆண்டு இருந்தது என்றும், கடைச் சங்கம் 1850 ஆண்டு இருந்தது என்றும் கூறப்படுகிறது. நீண்ட கால எல்லை கூறப்படுவதனாலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன என்பதே புனைகதை என்று சிலர் கருதுகிறார்கள். இதனை ஆராய்வோம். திரு. ஸ்ரீனிவாச ஐயங்கார் தாம் எழுதிய ‘தமிழ் ஆய்வுரை’ என்னும் நூலில்1 இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார். “இதில் கூறப்படும் கால எல்லையை நம்பமுடியாதபடியால் இதுபுனை கதை.” என்று கூறி மறுக்கிறார். திரு எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் தாம் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு’2 என்னும் நூலிலே இதே காரணத்தைக் காட்டிச் சங்கம் என்பது கட்டுக் கதை என்று கூறுகிறார். “But the traditional view is that there existed three tamil sangams or Academies in which Tamil Literary works were ‘heard’ and assessed, the first academy lasting for 4440 years, the second for 3700 years and the third for 1850 years. Altogether these three Sangams lasted for 9990 years. Since scholars hold that the last phase of the third Sangam was coeval with the beginning of the Christian Era, the first Sangam, according to these tradition, must have come into existence about B.C. 10,000! This tradition, is recorded in Iraiyanar Ahapporul, a work perhaps of the 13th century. Gods also are said to have participated in the deliberations of the first Sangam! We may leave such fables alone and seek for historical truth elsewhere.” தலைச்சங்கத்தை நடத்திய பாண்டியர் 89 பேர் என்றும், அவர்கள் சங்கம் நடத்தியகாலம் 4440 ஆண்டு என்றும் கூறப்படுகின்றன. அதாவது அந்தப் பாண்டியர் ஒவ்வொருவரும் சராசரி ஏறக்குறைய 49 ஆண்டு அரசாண்டனர் என்பது தெரிகிறது. இடைச் சங்கத்தை நடத்திய பாண்டியர் 59 பேர் என்றும், அவர்கள் 3700 ஆண்டு சங்கம் நடத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு பாண்டியனும் சராசரி ஏறக்குறைய 62 ஆண்டு அரசாண்டான் என்பது தெரிகிறது. கடைச்சங்கத்தை நடத்திய பாண்டியர் 49 பேர் என்றும், அவர்கள் 1850 ஆண்டு சங்கம் நடத்தினார்கள் என்றும் கூறப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு பாண்டியனும் சராசரி 37 ஆண்டு அரசாண்டான் என்பது தெரிகிறது. கடைச்சங்கத்தை நடத்திய பாண்டியர் 49 பேர் என்றும், அவர்கள் 1850 ஆண்டு சங்கம் நடத்தினர் என்றும் கூறப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு பாண்டியனும் சராசரி 37 ஆண்டு அரசாண்டான் என்பது தெரிகின்றது. சரித்திரநூல் அறிஞர்கள், ஒரு அரசனுடைய ஆட்சிக் காலத்தைச் சராசரி 20 அல்லது 25 ஆண்டு என்று வரையறுத்துக் கணித்து வருகிறார்கள். இறையனார் அகப்பொருள் பாயிரக் கணக்குப் படிப் பார்த்தால், கடைச்சங்க காலப் பாண்டியரின் சராசரி ஆட்சி யாண்டு 37 ஆண்டு ஆகவும், இடைச்சங்கப் பாண்டியரின் சராசரி ஆட்சியாண்டு 62 ஆண்டாகவும், தலைச்சங்கப் பாண்டியரின் சராசரி ஆட்சியாண்டு 50 ஆண்டாகவும் அமைகின்றன. இந்த ஆண்டுகள், சரித்திர ஆராய்ச்சி முறைக்கு ஒவ்வாமல் அதிகப்படியாகக் காணப் படுகின்றன. கால அளவு அதிகமாகக் கூறப்படுவதனாலேயே சங்கங்கள் இருந்தன என்பதை ஐயப்படவேண்டியது இல்லை. அதிகக் கால அளவு கூறுவது நமது நாட்டில் மட்டும் அன்று, வேறு நாடுகளிலும் அரசர்களின் ஆட்சிக் காலத்தை அதிகப்படுத்திக்கூறும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது. சிறிய ஆசியா (Asia Minor) தேசத்திலே தைகிரிஸ் யூபிரெயிட்டிஸ் ஆறுகள் பாய்கிற இடத்திலே பழைய காலத்தில் பாபிலோனியா நாடு இருந்தது. அது பாரசீகக் குடாக்கடலில், மேற்படி தைகிரிஸ் யூபெரிடிஸ் ஆறுகள் கடலில் விழுகிற இடத்தில் இருந்தது. அந்த பாபிலோனியாவுக்கு வடக்கே அசிரியா நாடு இருந்தது. (பாபிலோனியாவுக்கு சுமேரியா என்பதும் பெயர். அசிரியாவுக்கு அக்காடு என்பதும் பெயர்). சுமேரியரும் அக்காடியரும் ஒருவரை ஒருவர் வென்று நெடுங் காலம் அரசாண்டார்கள். அந்த அரசர்களின் பட்டியல் இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. களிமண் பலகைகளில் அவர்கள் எழுதி வைத்த கூனி பார்ம் (ஆப்பு வடிவ) எழுத்துச்சுவடிகளை (பூமியில் புதைந்து கிடந்தவை) மேல் நாட்டுப் புதைபொருள் ஆராய்ச்சிக் காரர்கள் அகழ்ந்தெடுத்து அச்சுவடிகளைப் படித்தறிந்தார்கள். அச் சுவடிகளில் அந்த நாட்டை ஆண்ட அரசர் பரம்பரை கூறப்படுகிறது. அதிலே, வெள்ளப்பிரளயத்துக்கு முறபட்ட எட்டு அரசர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. எட்டு அரசர் 2,41,200 ஆண்டு அரசாண் டார்கள் என்று கூறப்படுகிறது; அதாவது ஒவ்வொரு அரசனும் சராசரி 3150 ஆண்டு அரசாண்டான் என்று கூறப்படுகிறது! இதை எப்படி நம்புவது? அது போகட்டும். வெள்ளப்பிரளயத்துக்குப் பின் அரசாண்ட அரசர்களின் பட்டியல் கூட கிடைத்திருக்கின்றது. அதன்படி 23 அரசர்கள் 24510 ஆண்டு 3 மாதம் 3ஙூ நாட்கள் அரசாண்டார்களாம்! (French Excavation. Sumer and Akkad Kings’ list. The first dynasty of Kish) இதன்படி ஒவ்வொரு அரசனும் சராசரி 106ஙூ ஆண்டு அரசாண்டான் என்று தெரிகிறது. கால்டிய நாட்டு இன்னொரு அரசர் பரம்பரைப் பட்டியலும் கிடைத்திருக்கிறது. அதில் 12 அரசர்கள் 2310 ஆண்டு அரசாண்டனர் என்று கூறப்படுகின்றனர். அதாவது, ஒவ்வொரு அரசனுடைய சராசரி ஆட்சி, ஆண்டு 192ஙூ வருஷம். (The first dynasty of Erich. German Excavation at Warka.) இந்தப் பட்டியலில் சில தெய்வங்களின் பெயர்கள் அரசர்களின் பெயருடன் கூறப்பட்டுள்ளன. மதுரையில் பாண்டியர் அமைந்த தலைச்சங்கத்திலே திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த முருகவேளும், நிதியின் கிழவனும் முதலிய தெய்வங்களின் பெயர்கள் கூறப்படுவதுபோல கால்டிய நாட்டு அரசர் பரம்பரைப் பட்டியலிலும் சூரியதேவனுடைய மகனாக மெஸ்-கி-அக்-க-ஸெ-யிர் என்னும் தெய்வத்தின் பெயர் கூறப்படுகிறது. மேலும் ஆட்டிடைய னாகிய லூகல்பண்ட என்னும் தெய்வத்தின் பெயரும், மீன்காரனாகிய தூமுஸி (Dumuzi) என்னும் தெய்வத்தின் பெயரும், கூறப்படுகின்றன. இன்னொரு பட்டியலில் 4 அரசர்கள் 177 ஆண்டு அரசாண்ட செய்தி கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அரசனும் சராசரி 40 ஆண்டு அரசாண்டனர் என்று கூறப்படுகின்றனர். (The First dynasty of ur Excavation by Sir Leonard Woolly.) முதலில் கூறப்பட்ட பட்டியலைச் சரித்திர ஆராய்ச்சிக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு அரசனும் சராசரி 3150 ஆண்டு அரசாண்டான் என்று கூறப்படுகிற காரணத்தினால். ஆனால், மற்றப் பட்டியலில் கூறப்படுகிற அரசர்களைச் சரித்திர காலத்து அரசர் என்று ஆராய்ச்சிக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பிரஞ்சு அகழ்வாளர் (French Excavation) பட்டியலில் கூறப்படுகிற ஒவ்வொரு அரசனும் 106ஙூ ஆண்டு வீதம் 23 அரசர்கள் 24510 ஆண்டு அரசாண்டனர் என்பதை சரித்திரக்காரர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜெர்மனி அகழ்வாளர் (German Excavation) பட்டியலில் காணப்படுகிற, ஒவ்வொரு அரசனும் சராசரி 192ஙூ ஆண்டு வீதம் 12 அரசர்கள் 2310 ஆண்டு ஆட்சி செய்தனர் என்னும் பட்டியலையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சர் லியோனார்டு உல்லியின் “ஊர்” நகர அகழ்வாராய்ச்சிப் பட்டியலில் கூறப்படுகிற ஒவ்வொரு அரசனும் 44 ஆண்டு வீதம் 4 அரசர்கள் 177 ஆண்டு அரசாண்டனர் என்பதையும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் ஒப்புக் கொண்டிருக் கிறார்கள். ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் நெடுங்காலம் அரசாண்டனர் என்பதை ஒப்புக்கொள்ளாமல், அதில் கூறப்படுகிற அரசர்கள் உண்மையில் வாழ்ந்திருந்து அந்நாட்டை அரசாண்டனர் என்பதை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சுமேரிய நாட்டு அரசர் பட்டியலில் அரசர்கள் நெடுங்காலம் அரசாண்டதாகக் கூறப்படுகிறது. போலவே, தமிழ்ச் சங்கம் வைத்து நடத்திய பாண்டியர் ஒவ்வொருவரும் நெடுங்காலம் அரசாண்டனர் என்று கூறப்படுகிறது. ஆனால், சுமேரிய பட்டியலில் கால அளவு மிக அதிகமாகவும் பாண்டியர் பட்டியலில் கால அளவு சற்றுக் குறைவாகவும் கூறப்படுகிறது. ஆனால் இரண்டும், சாஸ்திரீய ஆராய்ச்சி முறைக்கு அதிகப்பட்ட காலத்தைக் கூறுகின்றன. சுமேரிய அரசரின் சராசரி ஆட்சி ஆண்டுகள் 106ஙூ , 192ஙூ , 44 என்றும், பாண்டிய மன்னரின் சராசரி ஆட்சி ஆண்டு 50, 62, 37 என்றும் அறியப்டுகின்றன. சுமேரிய அரசர்கள் சரித்திர புருஷர்கள் என்று மேல் நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறபடியால், பாண்டிய அரசர்களும் சரித்திரகாலப் புருஷர்கள் என்று ஏற்றுக் கொள்ளப் படவேண்டியவர்களே. தலைச் சங்கத்தின் பட்டியலில் சிவபெருமான், திருமால், முருகன், குபேரன் முதலிய தெய்வங்களின் பெயர்கள் கூறப்படுகிறபடியால் அந்தப் பட்டியலை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருக்கக்கூடும். ஆனால், இடைச்சங்க, கடைச்சங்கத்துப் பட்டியலில் அவ்விதமாகத் தெய்வங் களின் பெயர் காணப்படாதபடியால் அவ்விரண்டு சங்கங்களையும் அச்சங்கங்களிலிருந்த பாண்டியர்களையும் சரித்திர புருஷர்கள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், அவற்றில் கூறப்பட்ட காலத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது இல்லை சுமேரிய அரசர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும்போது பாண்டிய அரசர் பட்டியலையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பாண்டியர் பட்டியலை ஏற்றுக்கொள்ளா விட்டால் சுமேரியப் பட்டியலையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆராய்ச்சி என்பது எல்லா நாட்டுக்கும் பொதுவானது. ஒரு நாட்டுக்கு ஒருமுறை, இன்னொரு நாட்டுக்கு வேறொரு முறை என்பது பொருந்தாது. நான் சுமேரிய நாட்டு அரசர் பட்டியலையும் பாண்டியரின் முச்சங்கப் பட்டியலையும் ஒப்பிட்டுக் கூறுகிறதற்கு அடிப்படையான. சில காரணங்கள் உள்ளன. சுமேரியரும் திராவிடரும் ஒரு காலத்தில் ஒன்றாக ஒரே இடத்தில் வாழ்ந்தவர் என்று மேல்நாட்டுக் கீழ்நாட்டுச் சரித்திர அறிஞர்கள் கூறுகிறார்கள். திராவிடரும் சுமேரியரும் ஒரே இனத்தவர் என்று அவர்கள் எழுதியுள்ளார்கள். சுமேரியருக்கும் திராவிடருக்கும் (தமிழர்) முன் ஒரு காலத்தில் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குச் சான்றாகச் சுமேரிய நாட்டின் பழைய ஊர்ப் பெயர்கள் உள்ளன. சுமேரிய நாட்டின் முக்கிய பட்டினத்துக்கு ஊர் என்று பெயர் இருந்தது. இன்னொரு நகரத்துக்கு எருதூர் என்று பெயர் இருந்தது. மற்றொரு ஊருக்கு நிப்பூர் என்று பெயர் இருந்தது. ஊர், எருதூர் நிப்பூர் என்னும் பெயர்களில் ஊர் என்னும் திராவிடப் பெயர் அமைந்திருப்பது காண்க. ஊர் என்னும் சொல்லுக்குத் தமிழில் என்ன பொருள் உண்டோ அதே பொருள்தான் சுமேரிய மொழியிலும் ஊர் என்னும் சொல்லின் பொருளாக இருந்தது. மேலும் சுமேரிய மொழியில் அமர, பீடு, ஆள் முதலிய சொற்கள் திராவிட தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன. அமா என்னும் சுமேரிய வார்த்தைக்கு அம்மா என்பது பொருள். பீடு என்னும் சுமேரிய சொல்லுக்கு வீடு என்பது பொருள். ஆள் என்னும் சொல்லுக்கு ஓசை, யாழ் ஒலி, யாழ் என்னும் பொருள்கள் உள்ளன. ஆள் என்னும் சுமேரியச் சொல் தமிழில் யாழ் என்று கூறப்படுகிறது. தமிழரின் பழைய யாழ் வடிவம்போலவே சுமேரியரின் பழைய யாழ் வடிவமும் இருந்தது. பிற்காலத்தில் சுமேரிய யாழின் பத்தருக்கு முனபக்கத்தில் எருதுத் தலையில் உருவம் அமைக்கப்பட்டது. ஆனால் சுமேரிய, தமிழரின் இசைக் கருவிக்கு யாழ் (ஆள்) என்றே பெயர் இருந்தது கருதத்தக்கது. இவ்வாறு திராவிடருக்கும் சுமேரியருக்கும் பழங்காலத்தில் தொடர்பு இருந்ததை யறிகிறோம். சுமேரிய அரசரின் பட்டியலிலும் சங்ககாலப் பாண்டிய மன்னரின் பட்டியலும், கால அளவைப் பொறுத்த மட்டிலும், ஒரேமாதிரி அமைந்திருப்பதும் இங்குக் கருதத் தக்கன. சுமேரிய அரசரின் ஆட்சிக்காலம், நம்ப முடியாத அளவு கால எல்லை அதிகப்படியாகக் கூறியுள்ளது போலவே, தமிழ்ச் சங்கங்களில் கூறப்படுகிற பாண்டிய அரசர்களின் ஆட்சிக்கால எல்லையும் அதிகப்படியாகவே கூறப்படுகின்றன. இதிலும் இரண்டு நாட்டுக்கும் ஒரு பொருத்தம் காணப்படுகிறது. நமது பாரத தேசத்தில் உள்ள பழைய கலிங்க நாடு இக்காலத்தில் ஒரிசா நாடு என்றும் ஒட்டர தேசம் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. (சோழன் இந்நாட்டை வென்றதுபற்றிக் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் ஒன்று உண்டு.) ஒரிசா அல்லது ஒரியா மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்; திராவிடப் பண்பாடுடையவர்கள். ஒரிசா நாட்டில் உள்ள பேர் பெற்ற பூரிஜகனாதர் ஆலயத்தில், அந்நாட்டை அரசாண்ட பழைய மன்னர்களின் பட்டியல் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில், அம்மன்னர்களுக்கு நீண்டகால ஆட்சி கூறப்பட்டுள்ளது. அப்பட்டியலைக் கீழே தருகிறேன்: 1. சங்கரதேவர். ஆட்சிக் காலம் 400 ஆண்டு. கி.மு. 1807 முதல் 1407 வரையில் அரசாண்டார். 2. மகேந்திரதேவர். ஆட்சிக் காலம் 215 ஆண்டு. கி.மு. 1037 முதல் 822 வரை அரசாண்டார். 3. இஷ்டதேவர். ஆட்சிக் காலம் 134 ஆண்டு. கி.மு. 688 முதல் 538 வரை அரசாண்டார். 4. பஜ்ரதேவர். ஆட்சிக் காலம் 117 ஆண்டு. கி.மு. 538 முதல் 421 வரை. 5. நரசிங்கதேவர். ஆட்சிக் காலம் 115 ஆண்டு. கி.மு. 426 முதல் 306 வரை. 6. மன்கிருஷ்ணதேவர். ஆட்சிக்காலம் 122 ஆண்டு. கி.மு. 306 முதல் 144 வரை. 7. போஜ்தேவர். ஆட்சிக் காலம் 127 ஆண்டு. கி.மு. 184 முதல் 57 வரை. இவ்வரசர்கள் நெடுங்காலம் ஆட்சி செய்திருப்பதனாலே இவர்களைக் கற்பனைப் புருஷர் என்று சரித்திரக்காரர் ஒதுக்கிவிட வில்லை. ஆனால், ஆட்சி ஆண்டை ஏற்றுக்கொள்ளவில்லை. காலக் கணிப்பில் பண்டையோர் ஏதோ ஒரு முறையைக் கையாண்டிருக் கின்றனர். அந்த முறையின் உண்மை நமக்கு இப்போது விளங்க வில்லை. இனி ஆராய்ச்சியில் வெளிப்படக் கூடும். இவற்றை எல்லாம் நான் இங்கு எடுத்துக்காட்டிய தன் கருத்து என்னவென்றால், மூன்று சங்கங்கள் இருந்த கால எல்லை மிக அதிகமாகக் காணப்படுவதனால், அது காரணமாக முச்சங்கங்கள் இருந்தன என்பது பொய்க்கதை என்று கூறி அவற்றைத் தள்ளுவது கூடாது என்றும், இதைவிட அதிக கால எல்லையைக் கூறுகிற சுமேரிய அரசர் பட்டியலையும் கலிங்க நாட்டுப் பட்டியலையும் சரித்திரக்காரர் ஏற்றுக்கொண்டு சரித்திரம் எழுதியிருக்கிறபடியால், பாண்டியர் பட்டியலையும் அவர் அமைத்த சங்கத்தையும் ஏற்றுக் கொண்டு அதில் கூறப்படும் நீண்டகால வரையரையைத் தள்ளிவிடலாம் என்றும் காட்டுவதற்காகவே. சங்கங்களின் காலம் மிக நீண்டதாகக் கூறப்படுவதால், அது காரணம் பற்றிச் சங்கங்கள் இல்லை என்று கருதிக்கொண்டு, ஆகவே தொல்காப்பியர் காலம் மிகப் பிற்காலம் என்று கூறுவது ஒவ்வாது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுவதுபோல தொல் காப்பியம் இடைச்சங்க காலத்தின் இறுதியில் தோன்றிய நூல் என்பதில் ஐயமில்லை. கடைச்சங்க காலத்தில் 49 பாண்டியர் இருந்தனர் என்று கூறப் படுவதால், தலைமுறையொன்றுக்கு 20 ஆண்டு என்று சாதாரணமாகச் சரித்திர நூலோர் கணிக்கிற கணக்குப்படி பார்த்தால் 980 ஆண்டு கடைச் சங்கம் இருந்தது என்று கொள்ளலாம். கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் (கீழ்வரம்பு) கி.பி. 300 என்று வைத்துக்கொண்டால், கி.மு. 680 இல் கடைச்சங்கம்தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் இடைச்சங்கத்தின் இறுதியில் தோன்றியது என்று கூறப்படுவதால், ஏறத்தாழ கி.மு. 800 இல் தொல்காப்பியம் தோன்றியிருக்கலாம் என்று கருதலாம். *** 2. தொல்காப்பியர் காலம் - வேங்கடம் சிவராசபிள்ளையவர்கள், தொல்காப்பியப் பாயிரத்தில், தமிழகத் தின் வடவெல்லையாகக் கூறப்படுகிற வேங்கடத்தை ஆதாரமாகக் கொண்டு தொல்காப்பியர் காலத்தை ஆராய்கிறார்.1 அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘பழந்தமிழரசரின் கால அட்டவணை’ என்னும் நூலிலே இதுபற்றி எழுவதன் சுருக்கம் இது: ‘சோழ அரசரின் ஆறாவது பரம்பரையில் வந்த கரிகாற்சோழன் (இரண்டாமவன்) அருவா நாட்டை வென்றான். அவனுடைய தந்தை, பாட்டன் காலத்தில் வேங்கடமலை சோழநாட்டின் எல்லையாக அமையவில்லை. கரிகாலன் இரண்டாமவன் காலத்தில் சோழநாட்டின் வடக்கு எல்லை வேங்கடம் வரையில் இருந்தது. இந்த வேங்கடமலை எல்லை, தொல்காப்பியரின் காலத்தைத் துணிந்து கூறுவதற்கு உதவியாக இருக்கிறது. தொல்காப்பியருடன் கல்வி பயின்ற பனம் பாரனார், தாம் இயற்றிய தொல்காப்பியப் பாயிர உரையில் வேங்கட மலையைத் தமிழ் நாட்டின் வட எல்லை என்று கூறுகிறார். ஆகவே, சோழர் ஆட்சி வேங்கட எல்லை வரையில் பரவு வதற்கு முன்பு தொல்காப்பியர் தமது இலக்கண நூiலை எழுதியிருக்க முடியாது என்று நியாயமாகத் தீர்மானிக்கலாம். புல்லி என்பவன் தலைமையில் கொள்ளைக் கூட்டத்தார் வாழ்ந்திருந்த காலத்தில் வேங்கட மலைப் பிரதேசத்தில் சோழரின் நாகரிக ஆட்சி இருந்திருக்க முடியாது. அருவாநாடு, அருவா வடதலை நாடுகளைச் சோழன் வென்று தமிழரை அங்குக் குடியேற்றிய பிறகுதான் வேங்கடம் சோழரின் வட எல்லை யாகவும் தமிழகத்தின் வட எல்லையாகவும் இருந்ததாகக் கருத வேண்டும்.’ அன்றியும் சிவராசபிள்ளை, தொல்காப்பியம்புறநானூற்றுக்குப் பின்னால் எழுதப்பட்ட நூல் என்றும் கூறுகிறார். (பக்கம் 259) இவ்வாறு இவர் இரண்டு புதிய கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். 1. சோழன் கரிகாலன் காலத்துக்குப் பிறகு, வேங்கடமலை சோழரின் வடக்கு எல்லையாக அமைந்த பிறகு, தொல்காப்பியம் எழுதப்பட்டது. 2. தொல்காப்பியம், புறநானூறு பாடல்கள் பாடப்பட்ட காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டது. இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம். முதலில் வேங்கட எல்லையைப் பற்றிப் பார்ப்போம். அரசியல் எல்லை (இராசங்க எல்லை) க்கும் மொழி எல்லைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இலக்கண ஆசிரியர்கள் தாம் எந்த மொழிக்கு இலக்கணம் எழுதுகிறார்களோ அந்த மொழி வழங்குகிற எல்லையை மட்டும் கருதுவார்களேயல்லாமல், அரசியல் எல்லை களைக் கருதமாட்டார்கள். இந்த உண்மைப் படித்தான் தொல்காப்பியப் பாயிரச் செய்யுள் தமிழகத்தின் (தமிழ் மக்கள் வாழ்ந்த இடத்தின்) எல்லையைக் கூறுகிறதே தவிர அரசர்களின் இராச்சியப் பரப்பு எல்லையைக் கூறவில்லை. இதையறியாமல் சிவராசபிள்ளை, கரிகாற் சோழன் வேங்கட மலையை எல்லையாகக்கொண்ட பிறகுதான் தமிழக வட எல்லை வேங்கடமாக அமைந்தது என்று கூறுவது தவறானது. அருவா, அருவாவடதலை நாடுகளைத் (தொண்டை மண்டலத்தைச்) சோழன் கரிகாலன் கொள்வதற்கு முன்பு அந்நாடுகள் தமிழ் நாடாக இருக்க வில்லை என்று இவர் கருதுகிறாரா? அப்படியானால், அங்குத் தமிழைத் தவிர வேறு என் மொழி வழங்கியது என்று இவர் கருதுகிறார்? தொன்று தொட்டு அருவா, அருவா வடதலை நாடுகள் தமிழகத்தைச் சேர்ந்தவை யாகவே இருந்து வந்தன. வடுகர் (தெலுங்கரும், கன்னடரும்) தமிழரை (அரவர், அருவர்) அதாவது அருவா நாட்டார் என்றும் தமிழ் மொழியை அரவ பாஷை (அருவா நாட்டார் பாஷை) என்றும் தொன்றுதொட்டு இன்று வரையும் கூறிவருகின்ற வழக்காறு, அருவா, அருவா வடதலை நாடுகள் தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வந்தன என்பதை அங்கை நெல்லிக் கனிபோல் விளக்குகின்றன. வேங்கடமலை ஆதிகாலம் முதல் தமிழகத்தின் வட எல்லை யாகவே இருந்து வந்திருக்கிறது. கரிகாற் சோழனுக்குப் பிறகுதான் அது தமிழகத்தின் வட எல்லையாக அமைந்தது என்று கூறுவது சற்றும் ஆதாரம் அற்ற கூற்றாகும். அரசாங்க எல்லைக்கும் மொழி எல்லைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. கரிகாலன் வேங்கடத்தையும் கடந்து ஆந்திர நாட்டையும் கலிங்க நாட்டையும் வென்று அரசாண்டான் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது, சோழன் ஆட்சி கலிங்கம் வரையில் சென்றதாலே, தமிழ் நாட்டின் எல்லை (தமிழ் மொழி வழங்கும் எல்லை) கலிங்கம் என்று யாரேனும் கூறுவரோ? கூறமாட்டார் அல்லவா? எனவே சிவராசபிள்ளை சோழ இராச்சிய எல்லையுடன் தமிழ கத்தின் மொழி எல்லையை இணைத்து அது காரணமாகத் தொல்காப்பியர் இரண்டாம் கரிகாலன் காலத்துக்குப் பிற்பட்டவர் என்று முடிவு கூறுவது சரித்திர ஆராய்ச்சிக்குச் சிறிதும் பொருந்தாது. அருவா நாடும் அருவாவடதலை நாடும் (தொண்டை மண்டலம்) தமிழ் நாடு தோன்றிய காலம் முதல் தமிழகத்தின் பகுதியாகவே இருந்து வந்தன. அதன் வட எல்லையாகிய வேங்கடமும் தமிழகத்தின் வட எல்லையாகவே இருந்து வந்தது. அதனால்தான் பனம்பாரனாரின் பாயிரம், வேங்கடத்தை வடவெல்லையாகக் கூறிற்று. தமிழகத்தின் வட எல்லையாகிய வேங்கடத்துக்கும், அது பிற்காலத்தில் சோழன் கரிகாலன் ஆட்சி எல்லையாக அமைந்ததற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இது வேறு செயல், அது வேறு செயல். இதையறியாமல், சிவராசபிள்ளை இரண்டையும் பொருத்தி இணைத்துக்காட்டி, அது காரணமாகத் தொல்காப்பியர் காலத்தைக் கணிப்பது பிழையான பொருத்தமற்ற செயலாகும். எனவே, தொல்காப்பியம் கரிகாலன் இரண்டாமவன் காலத்திற்குப் பின்னர் (அதாவது இவர் கருத்துப்படி கி.பி. 100க்குப் பின்னர்) இயற்றப்பட்டதென்பது, இவர் காட்டிய சான்றுப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று. இனி, புறநானூற்றுச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்துக்குப் பிறகு தொல்காப்பிய இலக்கணம் எழுதப்பட்டது என்று சிவராசப் பிள்ளை கூறுவதும் பிழையான கருத்தாகும். நேர்மாறாகத் தொல்காப் பியர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் புறநானூற்றுச் செய்யுட்கள் பாடப்பட்டன என்பதற்குப் புறநானூற்றி லேயே சான்றுகள் கிடைக்கின்றன. அச்சான்றுகளாவன: ‘சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனும் மூன்றலங் கடையே’ என்பது தொல். எழுத்ததிகாரம், 29-ம் சூத்திரம். அ, ஐ, ஒள என்னும் எழுத்துடன் சேர்ந்து சகர எழுத்து மொழிக்கு முதலில் வராது. மற்ற உயிரெழுத்துடன் சேர்ந்து வரும் என்பது இதன் கருத்து. இந்தத் தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறாகப் புறநானூற்றிலும் வேறு சங்கச் செய்யுள்களிலும் சொற்கள் வந்துள்ளன: ‘இருங்கரை நின்ற உப்பொய் சகடம்’ (குறும். 165 :3) ‘சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே’ (புறம். 202 : 2) ‘ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்’ (பெரும்பாண்.50) ‘நன்றாய்ந்த நீள்நிமிர் சடை’ (புறம். 166 : 1) ‘புறந்தாழ் புரிசடை’ (புறம். 251 : 7) “தில்லையன்ன புல்லென் சடையோன்” (புறம். 252 : 2) ‘அருஞ்சமஞ் சிதையத் தாக்கி’ (புறம். 72 : 8) யகர எழுத்தைப்பற்றித் தொல்காப்பியம் கூறுவது இது: ‘ஆவோ டல்லது யகரம் முதலாது’ என்பது தொல். எழுத்ததிகாரம் 32ஆம் சூத்திரம். யகர எழுத்து ஆகாரத்தோடு சேர்ந்து மொழிக்கு முதலில் வரும். மற்ற உயிரெழுத்துடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வராது என்பது இதன் கருத்து. இந்தச் சூத்திரத்துக்கு மாறாக யகரத்தையும் யூகாரத்தை யும் முதலாகவுடைய சொற்கள் புறநானூற்றுச் செய்யுள்களிலும் வேறு சங்கச் செய்யுள்களிலும் காணப்படுகின்றன: ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ (அகம். 149 : 9) ‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்’ (புறம் 56 : 18) ‘யூபம் நட்ட வியன்களம்’ (புறம். 15 : 21) ‘எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்’ (புறம். 224 : 8) ‘பிணை யூபம் எழுத்தாய’ (மதுரைக். 27) ஞகர எழுத்தைப்பற்றித் தொல்காப்பியர் கூறுவது இது: ‘ஆஎ ஒள எனும் மூவுயிர் ஞகாரத் துரிய’ என்பது தொல். எழுத்து, 31 ஆவது சூத்திரம் ஞகார எழுத்து ஞா, ஞெ, ஞொ என்னும் எழுத்துக்களை முதலாகவுடைய சொற்களில் வரும். ஏனை உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து வராது என்பது இச்சூத்திரத்தின் பொருள். இதற்கு மாறாகப் புறநானூற்றில் சொற்கள் வந்துள்ளன: ‘தெரிகோன் ஞமன்ன் போல’ (புறம். 6 : 9) ‘கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை’ (பட்டினப். 140) ‘தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீ இய’ (புறம். 74 : 3) ‘வரிஞிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து’ (புறம். 93 : 12) வியங்கோள் வினையைப்பற்றித் தொல்காப்பியம் கூறுவது: ‘முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி’ என்பது தொல்: சொல். 226 - ஆவது சூத்திரம். வியங்கோள் வினை, படர்க்கையில் மட்டும் வரும் என்பது இச்சூத்திரத்தின் கருத்து. இதற்கு மாறாகப் புறநானூற்றில் முன்னிலை இடத்தில் வியங்கோள்வினை வந்துள்ளது. ‘பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலீயரோ’ (புறம். 2 : 17-20 முரஞ்சியூர் முடிநாக ராயர்) ‘தண்டா ஈகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே’ (புறம்.6 : 26-29. காரிகிழார்) ‘எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’ (புறம். 9 : 8-11. நெட்டிமையார்) இவ்வாறு புறநானூற்றுச் செய்யுட்களில் சில சொற்கள் தொல்காப்பிய இலக்கணத்துக்கு மாறுபடக் காணப்படுகின்றன. தொல்காப்பியர் தம் காலத்து இலக்கிய வழக்குக்கு ஏற்ப இலக்கணம் செய்தார். இலக்கணம் எழுதுவோர் இலக்கிய வழக்கைப் பின்பற்றி நூல் இயற்றுவது வழக்கம். இலக்கியத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதுவது மரபு. அதன்படி தொல்காப்பியர் தமது காலத்து இலக்கிய வழக்கத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதினார். தொல்காப்பிய இலக்கணம் எழுதியபின், பல நூற்றாண்டு களுக்குப் பிறகு சில புதிய சொற்கள் தமிழில் வந்து கலந்தன. பேச்சு வழக்கிலுள்ள மொழிகளில் காலந்தோறும் புதிய புதிய சொற்கள் வந்து கலப்பது இயற்கை. இதைத் தடுக்க முடியாது. இந்த முறைப்படித் தொல்காப்பியர் காலத்தில் வழங்காத, அந்த இலக்கண முறைக்கு அமையாத, வேறு சில சொற்கள் சில நூற்றாண்டு களுக்குப் பின்னர் தமிழில் வந்து கலந்து விட்டன. அந்தச் சொற்கள் தான் மேலே எடுத்துக் காட்டிய சகடம், சடை, யவனர், யூபம், ஞமலி, ஞமன் முதலியன. காலப் போக்கில் வியங்கோள் வினைச் சொற்களும் தொல்காப்பிய இலக் கணத்துக்கு மாறாக முன்னிலை யிலும் வந்து வழங்கப்பட்டது. இவை எல்லாம் தொல்காப்பியத் துக்குப் பிற்காலத்திலே ஏற்பட்ட மாறுதல்கள். இவ்விதச் சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருந்தால் இவற்றிற்கு ஏற்பவே அவர் தமது இலக்கணத்தில் இணைத்துச் சூத்திரஞ் செய்திருப்பார். இச்சொற்களை சேர்க்காமையினாலேதொல்காப்பியம் இச்சொற்கள் தமிழில் வழங்குவதற்கு முன்னே எழுதப்பட்ட நூல் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. ஆனால், சிவராசபிள்ளையவர்களோ இந்த உண்மைக்கு மாறாக வரலாற்றைத் தலைகீழாக மாற்றுகிறார். மாற்றிப் புற நானூற்றுக்குப் பிறகு தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டது என்று கூறுகிறார். இவர் கூற்றை அறிவுடையுலகம் ஏற்றுக்கொள்ளுமா? வையாபுரிபிள்ளை, தொல்காப்பியம் கி.பி. 5-ஆம் நூற் றாண்டில் வச்சிரநந்தி அமைந்த திரமிள சங்கத்தில் இயற்றப்பட்டி ருக்கலாம் என்று கூறுகிறார். (ஞயபந 14. ழளைவடிசல டிக கூயஅடை டுயபேரயபந யனே டுவைநசயவரசந). சங்கம், சட்டி முதலிய சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் வழங்காத காலத்திலிருந்த தொல்காப்பியர், ‘சகரக் கிளவியும் அவற்றோ எற்றே அஐ ஒளவெனும் மூன்றலங் கடையே’ என்று சூத்திரம் அமைத்த தொல்காப்பியர், ‘திரமிள சங்கம்’ என்னும் பெயருடன் அமைக்கப்பட்ட சங்கம் என்னும் சொல் வழங்கிய காலத்தில் இருந்தார் என்று வையாபுரியார் கூறுவது ஆராய்ச்சியா என்று கேட்கிறோம். (இதுபற்றிப் பிறிதோர் இடத்தில் விளக்கியுள்ளோம்). இவ்வாறு வையாபுரிப்பிள்ளையும் சிவராசப்பிள்ளையும் முன்பின் சிந்திக்காமல், வரலாற்று முறையைச் சிறிதும் எண்ணிப் பாராமல் ‘வாய் புளித்ததா மாங்காய் புளித்ததா’ என்பதுபோல மனம் போனபடி எல்லாம் எழுதிவிட்டால் அவை எல்லாம் ஆராய்ச்சியாய் விடுமா? படிக்கிறவர்களுக்கும் பகுத்தறிவும் ஆராய்ச்சியறிவும் சிந்திக்கும் ஆற்றலும் உண்டு என்பதைச் சிறிதும் எண்ணாமல் கண்டபடி எழுதுவது அறிவுடைமை யாகுமா? மேலே காட்டிய சான்றுகளால், தொல்காப்பியம் பழமையான நூல் என்பதும், புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் தொல்காப்பியத்துக்குப் பிற்பட்ட செய்யுட்கள் என்பதும் அங்கை நெல்லிக்கனி போல் விளங்குகின்றன. *** 3. தொல்காப்பியர் காலம் - ஓர ‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவற் கில்லை’ என்பது தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் 45 ஆம் சூத்திரம். இதற்கு உரை கூறுகிற இளம்பூரண அடிகள், ஓரை என்பதற்கு முகுர்த்தம் என்று பொருள் கூறுகிறார். நச்சினார்க்கினியர் இராசி என்று பொருள் கூறுகிறார். எனவே ஓரை என்பதற்கு இராசி, முகுர்த்தம் என்னும் பொருள்கள் உண்டென்பது தெரிகின்றது. ஓரை என்னும் சொல்லுக்கு ‘மகளிர் விளையாட்டு ஆயம்’ என்னும் பொருளும் உண்டு. குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களிலே மகளிர் விளையாட்டுக் கூட்டத்துக்கு ஓரை என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளன. ‘ஓரை ஆயம் கூறக்கேட்டும்’, ‘ஓரை மகளிர் அஞ்சி யீர்ஞெண்டு கடலிற் பரிக்கும்’ (குறும். 48 : 5, 401 : 3-4) ‘விளையாட டாயமோ டோரை யாடாது’, ‘ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்’ - (அகம். 219 : 2) கோதை ஆயமொடு வண்டல் தைஇ, ஓரை ஆடினும் உயங்கும் நின்ஒளி’- (அகம். 60 : 10 - 11) ‘விளையாட் டாயமொடு ஓரை ஆடாது’ (நற். 68 : 1) ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து, ஓரை யாயமும்’. (நற்றிணை 143 : 2 - 3) `ஓரைஆயத்து ஒண்டொடி மகளிர்’ (புறம். 176:1) என்று வருவன காண்க. எனவே ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர் விளையாட்டு ஆயம் என்றும், முகுர்த்தம் அல்லது இராசி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன என்று அறிகிறோம். முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருள் உள்ள ஓரை என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் என்று சிலர் கருது கிறார்கள். மகளிர் ஆயம் என்னும் பொருளுடைய ஓரை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கும்போது, முகுர்த்தம் அல்லது இராசி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன என்று அறிகிறோம். முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருள் உள்ள ஓரை என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் என்று சிலர் கருதுகிறார்கள். மகளிர் ஆயம் என்னும் பொருளுடைய ஓரை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கும்போது. முகுர்த்தம் என்னும் பொருள் உள்ள ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியாக இருக்கவேண்டிய காரணம் என்ன? இராசி என்று பொருள் உள்ள ‘ஹோரா’ என்னும் கிரேக்க மொழிச் சொல் தமிழில் வந்து ஓரை என்று வழங்குகிறது என்று கூறப்படுகிறது. இச்சொல் கிரேக்க மொழியி லிருந்து வந்த சொல்லா என்பது ஐயமாக இருக்கிறது. கிரேக்க மொழிச் சொற்கள் சில தமிழ் மொழியில் கலந்து வழங்குவது உண்மைதான். மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் முதலிய சொற்கள் கிரேக்க மொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்குகிற சொற்கள். இச்சொற்கள் சங்க நூல்களிலேயே வழங்கப்படுகின்றன. மத்திகை என்பது குதிரை ஓட்டும் சம்மட்டி என்னும் பொருளுள்ள சொல். சுருங்கை என்பது தரையின் கீழே அமைக்கப்படும் சாக்கடை (கரந்து படை) என்னும் பொருள் உள்ளது. கலம் என்பது கப்பல் என்னும் பொருளுடைய சொல். முயடடிn என்பதற்குக் கிரேக்க மொழியில் ‘மரவீடு’ என்பது பொருள். இச் சொல்லைக் கப்பல் ஓட்டிகளான கிரேக்கர் கப்பல் என்னும் பொருளில் வழங்கினார்கள். கிரேக்கரிட மிருந்து தமிழர் இச்சொல்லையும் கடன் கொண்டனர். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னோடு வந்து கறியொடு பெயரும்’ என்று அகநானூறும் (149), ‘யவனர், நன்கலம் தந்த தண்கமழ்தேறல்’ என்று புறநானூறும் (56) கூறுகின்றன. மண் பாத்திரம் என்னும் பொருள் உள்ள கலம் என்னும் சொல்லும் தமிழில் உண்டு. (இந்தக் கலம் என்னும் தமிழ்ச் சொல்லையும் கலம் என்னும் கிரேக்கச் சொல்லையும் வேறு பிரித்து அறியும் பொருட்டு மண், மரம் என்னும் அடைமொழி கொடுத்து மட்கலம், மரக்கலம் என்று பிற்காலத்தவர் வழங்கினார்கள்.) கன்னல் என்பது பொழுதை அளக்கும் கருவிக்குப் பெயர். முhசடிnடிள என்னும் கிரேக்க மொழிச் சொல் கன்னல் என்று வழங்குகிறது என்பர். இவை தமிழில் வழங்கும் கிரேக்க மொழிச் சொற்கள். கி.பி. முதல் நூற்றாண்டிலேயே கிரேக்கராகிய யவனர் கடல் வழியாகக் கப்பலில் வந்து தமிழ் நாட்டுடன் வாணிகஞ் செய்யத் தொடங்கினார்கள். அந்த வாணிகம் நாளுக்கு நாள் அதிகப்பட்டது. கி.பி. 45ஆம் ஆண்டில், ஹிப்பலஸ் என்னும் பெயருள்ள கிரேக்க மாலுமி, தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியினால் சுருங்கிய காலத்தில் முசிறித் துறைமுகத்துக்கு வந்து போகலாம் என்பதைக் கண்டு பிடித்த பிறகு, யவன - தமிழர் வாணிகம் மேலும் அதிகமாகப் பெருகிற்று. கிரேக்கராகிய யவனக் கப்பலோட்டிகள் காவிரிப் பூம்பட்டினம், முசிரி முதலிய துறைமுகப்பட்டினங்களில் வந்து தங்கி யிருந்ததையும் அவர்கள் தமிழருடன் வாணிகம் செய்ததையும் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். மதுரை முதலிய ஊர்களிலும் யவன வீரர்கள் அரச ஊழியத்தில் அமர்ந்திருந்ததைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களினால் அறிகிறோம். புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரை யூரிலே மண்ணில் புதைந்து மறைந்துகிடந்த துறைமுகம் ஒன்றைச் சில ஆண்டுக்கு முன்னர் ஆர்க்கியாலஜி-இலாகா கண்டு அகழ்ந் தெடுத்தது. அது கி.பி. முதல் நூற்றாண்டில் யவனர் வந்து தங்கியிருந்து வாணிகம் செய்த துறைமுகம் என்று அங்குக் கிடைத்த பொருள்களினால் தெரியவந்தது.1 இவ்வாறு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் நடைபெற்று வந்த கிரேக்க - தமிழ வாணிபம், மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடைபெறாமற் போயிற்று. கிரேக்கர் தமிழ் நாட்டுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த காலத்திலேதான் மேலே கூறப்பட்ட கிரேக்க மொழிச் சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன. ஆனால் ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் தானா என்பதில் பலமான ஐயம் தோன்றுகிறது. இதுபற்றி ஆராய்வதற்கு முன்னே, இச்சொல் கிரேக்கச் சொல் தான் என்று துணிந்து கொண்டு, அச்சொல்லை ஆண்டுள்ள தொல் காப்பியம் பிற்காலத்திலே எழுதப்பட்ட நூலாகும் என்று கூறுகிறவர் களின் கூற்றை ஆராய்ந்து பார்ப்போம். இராசி என்னும் பொருளுடைய ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து வடமொழியில் புகுந்து, பின்னர்த் தமிழ் மொழியில் நுழைந்தது என்றும், ஆகவே அச்சொல்லை வழங்கி யுள்ள தொல் காப்பிய நூல் ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் முதல் முதலாகக் கூறியவர் கே. என். சிவராச பிள்ளையவர்கள் இவர் தாம் ஆங்கிலத்தில் 1932 ஆம் ஆண்டில் எழுதிய ‘பழந்தமிழரின் சரித்திரகால அட்டவணை’ என்னும் நூலிலே, பிற்சேர்க்கை பதினைந்திலே, ‘தொல்காப்பியத்தின் காலம்’ என்னும் தலைப்பில் இச்செய்தியைக் கூறுகிறார். (இவர்இதிலே கூறுகிற வேறு காரணங்களை வேறு இடத்திலே ஆராய்வோம். இங்கு ஓரை என்பதை மட்டும் ஆராய்வோம்) சிவராசப் பிள்ளையவர்கள் ஓரை என்னும் சொல் காரணமாகத் தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண் டுக்குப் பிற்பட்ட நூல் என்று எழுதுவதை இங்குக் காட்டுவோம். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதன் கருத்து இது: “கீழ்க்கண்ட தொல்காப்பிய சூத்திரம், தொல்காப்பியத்தின் காலத்தை உறுதியாக நிச்சயிக்க மிக உயர்ந்த சான்றாகும். ‘மறைந்த வொழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த வொழுக்கம் கிழவோர்க் கில்லை.” (களவியல் 135) இந்தச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்னுஞ் சொல் தனக்கென்று ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது இச்சொல், தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தினுடைய மேல்வரம்பை நிச்சயப்படுத்தத் துணை செய்கிறது. ஓரை என்னுஞ் சொல் உண்மையில் தமிழ்ச் சொல் அன்று. வடநாட்டு வானநூலோர் அதைக் கிரேக்கரிடமிருந்து கடனாகக் கொள்வதற்கு முன்பு அச்சொல் சமஸ்கிருத மொழியிலும் இல்லை. பிற்காலத்து இந்திய வானநூல் ஆராய்ச்சியானது கிரேக்க வானநூலின் உதவிபெற்று வளர்ந்தது என்று கோல்புரூக்கு (ஊடிடநசெடிடிமந), விட்னி (றுhவைநேல), திபாட்டு (கூhiயெரவ), ஜகோபி (துயஉடிbi), கீத்து (முநவைவந) முதலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். கயே என்னும் ஆசிரியர் (ழு.சு. முயலந) தாம் எழுதிய ‘இந்திய வான சாஸ்திரம்’ என்னும் நூலில் (ஆநஅடிசளை டிக வாந ஹசஉhயநடிடடிபiஉயட ளுரசஎநல டிக ஐனேயை சூடி.18) வேதகாலத்திலும் அதன் பிற் காலத்திலும் கிறிஸ்து சகாப்தத்தின் முதல் நூற்றாண்டு வரையில், இந்திய நாட்டு வானசாஸ்திரம் வெளிநாட்டுச் சார்பு இல்லாமல் இருந்தது என்று தெளிவாக விளக்கியுள்ளார். பிறகு அந்த வான சாஸ்திர வரலாற்று நூலிலே, மூன்றாவது வரிசை முறையில், கி.பி.320 முதல் 650 வரையில் உள்ள குப்த அரசர் காலத்தில் இந்திய வானசாஸ்திரம், கிரேக்க நாட்டாரின் முறைப்படியும் போக்குப்படியும் ஆராயப்பட்டது என்று கூறுகிறார். கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவரான ஆரியபட்டரும், கி.பி.6ஆம் நூற்றாண்டில் இருந்தவரான வராக மிகிரரும் கிரேக்க நாட்டு வானசாஸ்திர முறையை முதன்முதலாக ஏற்றுக்கொண்டவர்கள். இவர்கள் வானநூலைப் பற்றிய கிரேக்கச் சொற்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டார்கள். அச்சொற்களில் ஒன்று ஹோரா என்பது சமஸ்கிருத பாஷையே இந்தச் சொல்லைக் குப்த அரசர் காலம் அல்லது ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்றிருக்கவில்லை என்றால், சமஸ் கிருதத்திலிருந்து இந்தச் சொல்லைப் பெற்றுக்கொண்ட தொல்காப்பியர் - (இந்தச் சொல்லை அவர் நேரே கிரேக்க மொழியிலிருந்து எடுத்துக் கொண்டார் என்று சிலர் கருதக்கூடும் என் எண்ணுகிறேன்) - எப்படிப் பழைய காலத்தவராக இருக்க முடியும்?1 இவ்வாறு சிவராக பிள்ளையவர்கள், ஹோரா என்ற கிரேக்க மொழிச் சொல் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் சென்று பிறகு அச்சொல் ஓரை என்று தொல்காப்பியத்தில் புகுந்தது என்றும், ஆகவே அச்சொல்லை வழங்குகிற தொல்காப்பியர், கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தவர் என்றும் 1932 ஆம் ஆண்டில் தமது நூலில் எழுதி வைத்தார். இவருக்குப் பிறகு வந்த எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள், சிவராசபிள்ளை கூறியதையே திரும்பக் கூறினார், ஆனால் இக் கருத்தை முதல்முதல் சிவராச பிள்ளை கூறினார் என்பதை வையா புரி பிள்ளை கூறாமல், தாமே இக்கருத்தைக் கூறுபவர்போலக் கூறினார். 1956 ஆம் ஆண்டில் வையாபுரிபிள்ளையவர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட ‘தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலிலே இவ்வாறு எழுதுகிறார்: “அதனுடைய (தொல்காப்பியத்தினுடைய) ஆசிரியர் ஓரை என்னுஞ் சொல்லை (சமஸ்கிருதம் ஹோரா) ஆள்கிறார். ஓரை என்னும் கிரேக்க மொழிச் சொல்லைக் கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழி வானசாஸ்திரிகள் கிரேக்க மொழியி லிருந்து கடனாகக் கொண்டனர்” (பக்கம் 14) என்றும், “தொல்காப்பியரின் காலத்தைப் பற்றிய விஷயம் விவாதத்துக் குரியது. ஆனால், அவர் கி.பி.5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர் என்பதற்கு மிகப் பலமான ஆதாரங்கள் உள்ளன. இதுபற்றி முன்னமே விளக்கியுள்ளோம்” (பக்கம் 65) என்றும் எழுதுகிறார்.2 ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து சமஸ்கிருத மொழியில் போனது ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டில் என்று சான்று காட்டிச் சிவராசபிள்ளை கூறினார். அதே செய்தியைக் கூறும் வையாபுரிப் பிள்ளை சான்று காட்டாமலே ஓரை என்னுஞ் சொல் சமஸ் கிருதத்தில் சென்றது கி.பி.4, அல்லது 5ஆம் நூற்றாண்டில் என்று கூறுகிறார். ஆனால், ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து முதலில் சமஸ்கிருதத்தில் சென்று பிறகு, சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் நுழைந்தது என்று இருவரும் மாறுபாடு இல்லாமல் கூறுகிறார்கள். இவ்வாறு கூறுவதில்தான் இவர்கள் உண்மை காணும் நோக்கத்துடன் ஆராயவில்லை என்பதும் சார்பு பற்றிப் பக்கஞ் சார்ந்து பேசுகிறார்கள் என்பதும் விளங்குகின்றன. கண்ணை மூடிக்கொண்டு மூடபக்தி காரணமாகச் சமஸ்கிருதத்திற்குத் தொன்மை ஏற்றிக் கூறுவதும், உண்மையை மறைத்து வேண்டு மென்றே தமிழ்நூலைப் பிற் காலத்திற்குத் தள்ளிக் கூறுவதும் இவர்களுடைய நோக்கம் என்பது நன்கு விளங்குகின்றது. இதனை விளக்குவோம். இவர்கள் கருதுவது போல, ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் வந்த தாகவே வைத்துக் கொள்வோம். கிரேக்கருக்கும் தமிழருக்கும் வாணிகத் தொடர்பினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்த காலத்தில் கிரேக்க மொழிகள் தமிழிலும், தமிழ் மொழிகள் கிரேக்கத்திலும் புகுந் திருக்கும் என்பது உண்மையே. மேலே காட்டிய மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் போன்ற கிரேக் மொழிச் சொற்கள் தமிழில் கலந்தது போலவே. ஓரை என்னும் சொல்லும் (இது கிரேக்க மொழியிலிருந்து தமிழில் வந்ததாக இருந்தால்) - தமிழர் - யவனர் வாணிபத் தொடர் பிருந்த கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குள் தமிழில் கலந்திருக்க வேண்டும். (கி.பி.3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கிரேக்கரின் வாணிபத் தொடர்பு தமிழ் நாட்டில் நின்றுவிட்டது.) வாணிபத் தொடர்பு இருந்த அக்காலத்திலே தான் அரிசி முதலிய தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் சென்றிருக்க வேண்டும். (அரிசிக்குக் கிரேக்க மொழியில் ஒரிஜா (டீசலணய) என்பது பெயர்) இதுதான் இயற்கை. இந்த இயற்கையான, நேரடியான சந்தர்ப்பத்தில் ஓரை என்னுஞ்சொல் தமிழில் கலந்து வழங்காமல், வாணிகத் தொடர்பு அற்றுப்போன பிறகும் சில நூற்றாண்டு வரையில் காத்திருந்து, அச்சொல் கி.பி.5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் நுழைந்த பிறகு அதிலிருந்து அச்சொல்லைத் தமிழ்மொழி கடன் வாங்கிற்று என்று ஒருவர் கூறுவாரானால், அவரை ஆராய்ச்சிக்குத் தகுதியுள்ளவர் என்று ஏற்றுக்கொள்ளலாமா? அவர் கூறுவது ஆராய்ச்சியாகுமா? ஒரு மொழியிலிருந்து ஒரு சொல்லைக் கொள்ளவேண்டு மானால், அது அயல்நாட்டு மொழியாக இருந்தாலும், அச்சொல் சமஸ்கிருத மொழியில் சென்ற பிறகுதான், சமஸ்கிருதத்திலிருந்து மற்ற மொழிக்குக் கொள்ளவேண்டும் என்று மூடத்தனமான ஒரு கொள்கை, சமஸ்கிருதத்தில் மூடபக்தியுள்ள, ஆராய்ச்சியற்ற சில பண்டிதர்களின் கொள்கையாக இக்காலத்திலும் இருந்து வருகிறது. சமஸ்கிருத மொழியைப் பற்றி இருந்து வருகிற சில மூடக் கொள்கைகளில் இதுவும் ஒன்று. இத்தகைய மூடக்கொள்கை, ஆராய்ச்சி இல்லாத சமஸ்கிருத பண்டிதரிடத்தில் இருப்பது பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் இடத்தில் அமர்ந்துகொண்டு ஆராய்ச்சி செய்கிறேன் என்று நூல் எழுதுகிறவர்கள், சிறிதும் ஆராய்ந்து பாராமல் இவ்வாறு எழுதுவது அறிவுடைமையல்ல. இது ஆராய்ச்சியாகாது. சமஸ்கிருதத்தில் இச்சொல் வருவதற்குச் சில நூற்றாண்டுக ளுக்கு முன்னமேயே தமிழருக்கும் கிரேக்கருக்கும் நேரடியான நெருங்கிய தொடர்பு இருந்த காலத்தில் ஓரை என்னுஞ் சொல் (அது கிரேக்கச் சொல்லாக இருந்தால்) தமிழில் கலவாமல் இருந்தது என்றும், பிறகு அச்சொல் சிலநூற்றாண்டுகளுக்குப் பிறகு வட மொழியில் சென்ற பிறகு தமிழில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் இந்த ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுவதை சமஸ்கிருத மூடாபிமானம் என்று ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர, அறிவுடையவர் யார்தான் ஏற்றுக் கொள்வர்? ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் வந்திருந் தால் அச்சொல் ஏறத்தாழ கி.பி. முதல் நூற்றாண்டிலேயே தமிழில் கலந்திருக்க வேண்டும். அச்சொல்லை ஆள்கிற தொல் காப்பியமும் கி.பி. முதல் நூற்றாண்டிலே தோன்றியிருக்கவேண்டும் என்று இவர்கள் கூறி யிருந்தால் அதை ஒருவாறு ஏற்றுக்கொள்ள இயலும். அப்படியில் லாமல் “ஓரை”யைக் கூறுகிற தொல்காப்பியம் கி.பி.5ஆம் நூற்றாண்டிலோ அல்லது 6ஆம் நூற்றாண்டிலோ தோன்றியது என்று பொருத்தமற்ற செய்தியைக் கூறும் இவர்கள் ஆராய்ச்சியை என்னென்பது? ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து சமஸ்கிருத மொழியில் கி.பி.5ஆம் நூற்றாண்டில் சென்றிருக்கலாம். அதுபற்றி நமக்கு இங்கு ஆராய்ச்சி இல்லை. தமிழிலே அச்சொல் எந்தக் காலத்தில் வந்திருக்கக்கூடும் என்று ஆராய்ந்தால், நிச்சயமாகக் கி.பி. முதல் நூற்றாண்டிலே வந்திருக்க வேண்டும் என்று சரித்திரச் சான்று கொண்டு உறுதியாகத் துணியலாம். ஆகவே, சிவராச பிள்ளையும் வையாபுரிப் பிள்ளையும் சார்பு பற்றி நடுநிலை தவறிக் கூறுகிற இந்தக் கருத்து ஏற்கத்தக்கது அன்று எனத் தள்ளுக. இப்படிச் சொல்லுவதனாலே, ஓரை என்னும் சொல்லை ஆள்கிற தொல்காப்பியம் கி.பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் (கிரேக்க - தமிழ் வாணிபத் தொடர்பு இருந்த காலத்தில்) இயற்றப்பட்ட நூல் என்று நான் கூறுவதாகக் கருத வேண்டாம். ஏனென்றால், முதலிலேயே நான் சொன்னது போல, ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச் சொல்தானா என்பதில் பலமான ஐயம் இருக்கிறது. ஓரை அல்லது ஹோரா என்னும் சொல் கிரேக்க மொழியில் வழங்கி வரலாம். அச்சொல்லைக் கிரேக்க (யவன) மொழியிலிருந்து சமஸ்கிருத மொழிக்காரர் கடன் வாங்கியும் இருக்கலாம். ஆனால், தமிழில் வழங்கும் ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச் சொல்தானா என்பதில் ஐயம் இருக்கிறது. இச்சொல் வேறு மொழியிலிருந்து தமிழில் வந்து கலந்ததாக இருந்தால் சுமேரிய மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும். இதனை விளக்குவோம். ஓரையென்னுஞ் சொல் இராசி என்னும் பொருளுள்ள தமிழ்ச் சொல்லாகவே இருக்கலாம். இச் சொல்லைக் கிரேக்கர்கள் தமிழி லிருந்து கடன்பெற்றிருக்கலாம். அரிசி என்னும் சொல்லை ஒரிஜா என்று கிரேக்கர் வழங்கியதுபோல ஓரை என்னுஞ் தமிழ்ச் சொல்லை ஹோரோ என்று வழங்கியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்தில் கிரேக்க நாட்டில் வசித்திருந்த திராவிட இனத்தவரிடமிருந்து கிரேக்கர் இச்சொல்லைப் பெற்றிருக்கக்கூடும். மிகப் பழைய காலத்தில், பழைய திராவிட இனத் தவர் கிரேக்க தேசத்திலும் அதை அடுத்த கிரீட் முதலிய தீவுகளிலும் வாழ்ந்திருந்தார்கள் என்றும், பிற்காலத்தில் ஆரியராகிய கிரேக்கர் வந்து அந்த நாட்டில் குடியேறித் தங்கினார்கள் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கிரேக்க நாட்டில் வந்து தங்கிய ஆரியராகிய கிரேக்கர்க்ள, அவர்கள் வருவதற்கு முன்பே அந்நாட்டில் வாழ்ந்திருந்த பூர்வீகத் திராவிடரிடமிருந்து ஓரையென்னுஞ் சொல்லைப் பெற்றிருக்கக்கூடும். மேலும் ஐரோப்பா கண்டத்தில் இப்போதும் இருக்கிற ஜிப்ஸிஸ் என்னும் நாடோடி மக்கள் பேசுகிற மொழியில் திராவிட மொழிச் சொற்களும் காணப்படுகின்றன என்று மொழி நூல் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுவது இங்குக் கருதத்தக்கது. அவர்களிடத்தி லிருந்து கிரேக்கர் இச் சொல்லைப் பெற்றிருக்கலாம். ஓரை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாக இல்லாமல், வேறு மொழியிலிருந்து வந்த சொல்லாக இருந்தால், அது சுமேரிய மொழியிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. இப்போது ஈராக் என்று கூறப்படுகிற தேசம் மெசபொடோமியா என்றும் கூறப் படுகிறது. இங்கு யூபெரிடிஸ், தைகிரிஸ் என்னும் பெயருள்ள இரண்டு ஆறுகளுக்கு இடையிலே மிகப் பழைய காலத்திலே பாபிலோனியா என்றும் அசிரியா என்றும் பெயருள்ள தேசம் இருந்தது. பாபிலோனிய ராகிய அசிரியர், அக்காலத்தில் நாகரிகம் படைத்த மக்களாக இருந்தார்கள். அவர்கள் திராவிடர் களோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிகின்றனர். ஏனென்றால் அவர்களின் ஊர்ப் பெயர்கள் ஊர் என்னும் திராவிடச் சொல்லாகவே இருக்கிறது. அவர்களுடைய பழைய நகரங்கள் ஊர் என்றும், நிப்பூர் என்றும், எருதூர் என்றும் பெயர் பெற்றிருந்தன. அன்றியும் அம்மா,வீடு, யாழ் (பாட்டு இசைக்கருவி) முதலிய திராவிட மொழிச் சொற்கள் பாபிலோனிய மொழியில் காணப் படுகின்றன. புராதன காலத்தில், திராவிடர் மத்தியதரைக் கடல் பக்கத்தி லிருந்து இந்தியா தேசத்திற்கு வந்தார்கள் என்றும், இந்தியாவுக்கு வருவதற்கு முன்னே அவர்கள் இடைவழியில் பாபிலோனியா, பாரசீகம் முதலிய நாடுகளில் தங்கினார்கள் என்றும் சரித்திர ஆசிரியர்கள் (மேல் நாட்டவரும் கீழ்நாட்டவரும் ஆகிய சரித்திர ஆசிரியர்கள்) கூறுகிறார்கள். அது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்டிலிருந்து பழங் காலத்தில் திராவிடராகிய தமிழர், சுமேரியா முதலிய நாடுகளுடன் கடல் மூலமாகக் கப்பலில் சென்று வாணிபம் செய்துவந்தனர் என்றும் வேறு சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு திராவிடர்களுக்கும் பாபிலோனியருக்கும் பழைய காலத்தில் தொடர்பு இருந்தது என்பது தெரிகிறது. அந்தக் காலத்தில் ஓரை என்னுஞ் சொல் பாபிலோனிய மொழியிலிருந்து தமிழில் கலந்திருக்கக்கூடும். அது மிகப் பழைய காலமாகும். பாபிலோனியர் ஆதிகாலத்தில் வானசாஸ்திரத்தை வளர்த்த பழங்காலத்து மக்கள் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பாபிலோனிய குருமார்கள் வானசாஸ்திரத்தில் தேர்ந்தவர்கள். அவர்களிடத்திலிருந்து தான் அக்காலத்தில் வாழ்ந்திருந்த எகிப்தியர் முதலிய மக்கள் வான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டார்கள் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள். காலத்தை அறுபது என்னும் எண்ணினால் அளந்தவர் பாபிலோனியரே. இப்போது உலகம் முழுவதும் வழங்குகிற 60 வினாடி ஒரு நிமிஷம், 60 நிமிஷம் ஒரு மணி நேரம் என்னும் காலக் கணிதம் பாபிலோனியரிடமிருந்து ஏனைய மக்கள் கற்றுக்கொண்டவை என்று ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லோரும் கூறுகிறார்கள். ஏன்? நமது தமிழ் நாட்டிலும், பாரதநாட்டிலும் முற்காலத்தில் வழங்கிவந்த 60 நாழிகை ஒரு நாள் என்னும் காலக்கணக்கும் பாபிலோனியரிடமிருந்து கற்றுக் கொண்டதே. அல்லும் பகலும் அறுபது நாழிகை என்னும் பழமொழியும் நமது நாட்டில் வழங்குகிறது. 60 என்னும் எண்ணினால் காலத்தை ஆதி காலத்தில் அளந்தவர் பாபிலோனியரே. பன்னிரண்டு இராசிகளையும் கண்டு பிடித்த ஆதிகாலத்து மக்களும் பாபிலோனியர் என்று சரித்திரம் அறிந்தவர் கூறுகின்றனர். இவ்வாறு இராசிகளைக் கண்டுபிடித்து காலத்தை வரையறுத்த பாபிலோனிய (சுமேரிய மொழியிலிருந்து ஓரை என்னுஞ் சொல்லைத் தமிழர் பெற்றிருக்கக்கூடும். அதுபோலவே, கிரேக்கரும் சுமேரியரிட மிருந்து ஹோரா என்னுஞ் சொல்லைப் பெற்றிருக்கலாம். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் கிரேக்க மொழியிலிருந்து ஹோரா என்னுஞ் சொல்லை சமஸ்கிருத மொழி ஏற்றுக்கொண்ட பிறகு, சமஸ் கிருதத்திலிருந்து அச்சொல்லைத் தமிழ் மொழி ஏற்றுக் கொண்டது என்று வையாபுரியாரும் சிவராசரும் கூறுவது வரலாற்று உண்மைக்கு மாறுபட்டதாகும். இது சமஸ்கிருத மூடபக்தியுள்ளவரின் பொருளற்ற கூற்றாகும். மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் என்னும் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்கு, நச்சினார்க்கினியரும் இளம்பூரண அடிகளும் ஆகிய பிற்காலத்து உரையாசிரியர்கள், இராசி அல்லது முகூர்த்தம் என்று பொருள் கூறுவது பொருத்தமன்று என்றும், ஓரை என்பதற்கு விளையாட்டு என்பதே செம்பொருள் ஆகும் என்றும் பேராசிரியர் ளு.சோமசுந்தர பாரதியார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துச் சஞ்சிகையில் (ஆறாந்தொகுதி 142, 143 ஆம் பக்கங்களில்) “தொல்காப்பிய ஆராய்ச்சி” என்னுந் தலைப்பில் எழுதி யுள்ளது ஈண்டு கருதத்தக்கது. அவர் எழுதியிருப்பதை ஈண்டுத் தருகின்றேன்: “மறைந்த வொழுக்கத் தோரையு நாளும் துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை.” இதன் பொருள்: மறைந்த வொழுக்கத்து - களவொழுக்கத் திலே, ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் - தனக்கியல்பான விளையாட்டு களையும் நாள் வேலைகளையும் துறந்து அனவரதம் காதலிலேயே அழுந்திக் கிடக்கும் வழக்கம், கிழவோற்கில்லை - தலைவன் மாட்டுக் காணப்படுவ தொன்றன்று. “எனவே களவில் தலைவிக்குத் தன் காதலன்றிப் பிறி தெதிலும் உளங்கொள்ளாமல் முழுதும் தன்னைக் காதலுக்கே கொடுத்துப் பிறவெல்லாவற்றையும் மறந்தொழுகுதலியல்பா மென்பதும், தலைவன் அவ்வாறன்றித் தன் தகுதிக்கேற்ற விளை யாட்டுகளை ஒழித்து விடாமல் ஆடியும் நாள்தோறும் தனக்குரிய தொழிலாற்றியும் வருவதுடன் ஏற்றபெற்றியால் காலமிடங் கருதிக் காதலின்பத்தையும் துய்ப்பானாவான்” என்பதும், உலகியல் கருதி இச்சூத்திரம் கூறுகின்றது. “ஓரை - விளையாட்டென்பது, சங்க இலக்கிய முழுதும் அச் சொல்லுக்கு அப்பொருளாட்சி யுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல் காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதனிலேனும் சான்று காணுத லறிது. மிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளினுள் நன்மை தீமைகளுக்குரிய தாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவு) என்ற பொருளில் இச்சொல்லைப் பிரயோகிக்கலானார். அக் கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், “ஓரை” யென்னும் தனித்தமிழ்ச் சொல்லுக்கு, அக் காலத் திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதைவிட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளை இத்தமிழ்ச் சொலுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்குமேல் அச் சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சி யறத்திற்கும் பொருந்தாது.” இவ்வாறு தமிழில் எழுதிய சோமசுந்தர பாரதியார் அவர்கள் இச்செய்தியையே ஆங்கிலக் கட்டுரையிலும் எழுதியுள்ளார்கள்1 இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் பாரதியாரவர்கள் கூறும் பொருளே சாலச் சிறந்தது. ஓரை என்பதற்கு ‘விளையாட்டு’ என்னும் பொருளே அமைதியுடைத்து. எனவே, பிற்காலத்து உரையாசிரியர் கூறும் பிற்காலத்துப் பொருளாகிய இராசி அல்லது முகூர்த்தம் என்பது ஏற்கத்தக்கதன்று. ‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வரும் ஓரை என்னுஞ் சொல்லுக்கு முகூர்த்தம் அல்லது இராசி என்பது பொருள் அல்ல என்பதும், திரு. எஸ். சோமசுந்தர பாரதியார் கூறுகிற ‘விளையாட்டு’ என்னும் பொருளே பொருத்தமானது என்பதும் தெற்றென விளங்கு கின்றன. இச் சொல்லுக்கு மிகப் பிற்காலத்தில் முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருள் ஏற்பட்ட தென்பதும், அந்தப் பிற்காலத்துப் பொருளைப் பிற்காலத்து உரை ஆசிரியர் அதனுடன் பொருத்திக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்பதும் தெரிகின்றன. ஆகவே, ஓரை என்னுஞ் சொல்லைக் கிரேக்க (யவன) மொழிச்சொல் என்று கொள்வது முடியாது. ஓரை என்பது முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொரு ளுள்ள அயல் மொழிச் சொல்லாக இருந்தால், அப்பொருளில் இச்சொல் இச்சூத்திரத்தில் வழங்கப்பட்டு இருக்குமானால் இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வராமல் பாபிலோனிய மொழியிலிருந்து தமிழில் வந்திருக்க வேண்டும். இதற்குக் காரணங்களை மேலே கூறினோம். எனவே, ஐயப்பாடுள்ள ஓரை என்னுஞ் சொல்லை ஆதாரமாகக் கொண்டு தொல்காப்பியர் காலத்தை ஆராய்வது தவறாகும். அப்படி ஆராய்ந்தால், வழுக்கு நிலத்தில் நடப்பவர் சறுக்கி விழுவது திண்ண மாதல் போல, பிழையான முடிவையேயடையப் பெறுவர். ஆகவே, வையாபுரியாரும்; சிவராசபிள்ளையும் ஓரை என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தை ஆராய்ந்த முடிவு தவறு டைத்தாகும். *** 4. தொல்காப்பியர் காலம் பாண்டியரின் தமிழ்ச் சங்கமும் வச்சிர நந்தியின் திரமிள சங்கமும் இடைச்சங்க காலத்திலும் கடைச்சங்க காலத்திலும் தொல் காப்பியம் இலக்கண நூலாக இருந்தது என்பதைப் பழைய தமிழ் இலக்கியங்களி லிருந்து அறிகிறோம். தொல்காப்பியம் கி.மு.8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் அன்று என்பதை முன்னரே விளக்கினோம். ஆனால் சிலர் கி.பி. ஐந்தாம் நூற்hண்டில் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் கூடும் என்று கூறுகின்றனர். அவர்கள் கூற்றைத் தக்க சான்றுகாட்டி மேலே மறுத்துள்ளோம். கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் ஜைன முனிவர் மதுரையில் ஒரு ‘திரமிள சங்கத்தை’ அமைத்ததைச் சுட்டிக்காட்டி அந்தச் சங்கத்தில் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இது பற்றி இங்கு ஆராய்வோம். திகம்பர தரிசனம் என்னும் ஜைன சமய நூலிலே அதை எழுதிய தேவசேனர் என்பவர், பூஜ்யபாதரின் சீடராகிய வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525-இல் (கி.பி. 470-இல்) தென் மதுரையிலே திராவிட சங்கத்தை நிறுவினார் என்று கூறுகிறார்.1 ‘ஸ்ரீ பூஜ்ஜ பாதஸீஸோ தாவிட ஸங்கஸ்ஸ காரகோ விஷ்டோ நாமேன வஜ்ஜநந்தீ பாஹுணவேதீ மஹாஸத்தோ’ ‘பம்சஸயே சவீஸே விக்ரமார்யஸ்ஸ மரண பத்தஸ்ஸ தக்கிண மஹுராஜாதோ தாவிட ஸங்கோ மஹாமஹோ’. இந்தச் செய்தியைக்கொண்டு திரு.எஸ். வையாபுரி பிள்ளை யவர்கள், “வச்சிர நந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470-இல் அமைக்கப்பட்டது. தொல்காப்பியம்அந்தச் சங்கத்தில் வெளிவந்த நூலாக இருக்கலாம்” என்றும், “தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் தரமான முக்கிய நிகழ்ச்சி கி.பி. 470 -இல் நிகழ்ந்தது. வச்சிரநந்தியின் மேற் பார்வையில் மதுரையில் ஒரு திரமிள சங்கம் அமைக்கப்பட்டது தான் அந்த நிகழ்ச்சி. ... ... ... முற்காலப் பாண்டியரைப் பற்றிய சாசனங்களில் சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனத்தில் மட்டும (கி.பி.10ஆம் நூற்றாண்டு), தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழிய னுக்குப் பிறகு வந்த ஒரு பாண்டியன். நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கம் குறிப்பிடப்படுகிறது. இது வச்சிரநந்தியின் சங்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்” என்றும், தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 14ஆம் பக்கத்திலும், 58, 59 ஆம் பக்கங்களிலும் எழுதுகிறார். மேலும் அந்நூல் 61ஆம் பக்கத்தில், “வச்சிரநந்தி சங்கத்தைப்பற்றிச் சரியான சாதனங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அச்சங்ககத்தை நிறுவியவுடனே ஒழுக்க நூல்களும் இலக்கண நூல்களும் வெளிவந்திருப்பது அச்சங்கத்தின் பெரிய செயலைக் காட்டுகிறது” என்றும் எழுதுகிறார். முற்காலத்தில் பாண்டிய மன்னர் அமைத்துத் தமிழாராய்ச்சி செய்த தமிழ்ச் சங்கத்தையும் பிற்காலத்தில் வச்சிரநந்தி அமைத்த ஜைன மதப் பிரசாரச் சங்கத்தையும்ஒன்றாகப் பொருத்திக் காட்டுகிறார் வையாபுரிப்பிள்ளை. பொருத்தி காட்டுவதுடன் அல்லாமல் தொல்காப்பியர், வச்சிரநந்தி காலத்தில் (கி.பி. 470க்குப் பிறகு) தொல்காப்பிய இலக்கணத்தை எழுதினார் என்றும் கூறுகிறார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிற கதையாக இருக்கிறது. பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கம் வேறு; வச்சிர நந்தி அமைத்த தமிழ்ச் சங்கம் (திராவிட சங்கம்) வேறு. பாண்டியர் அமைத்தது தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிச் சங்கம். வச்சிரநந்தி அமைத்தது ஜைன சமய பிரசாரச் சங்கம். இதையறியாமல், வையாபுரிப் பிள்ளை இரண்டு வெவ்வேறு சங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பிணைத்துக் குழப்பி யிருக்கிறார். சாதாரண அறிவுள்ளவரும் இதனை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால், வையாபுரிப் பிள்ளை யவர்கள் ஏனோ இவ்வாறு குழப்புகிறார். ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் வச்சிரநந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச் சங்கம் வேறு என்று தெளிவாகக் கூறுகிறார். “தமிழ்ச் சங்கம் என்று நாம் அறிந்திருக்கிற சங்கம் அன்று இது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும். இது (வச்சிர நந்தியின் சங்கம்) தமிழ்நாட்டு ஜைனர்கள் தம்முடைய மத தர்மத்தைத் தமது மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதற்காக அமைக்கப் பட்ட ஒரு அமைப் பாகும்”2 என்று அவர் எழுதுகிறார். இவ்வாறு 1927 -இல் திரு. பி. தி. சீனிவாச அய்யங்கார் எழுதியிருப்பதையும் பாராமல், எஸ் வையாபுரிப்பிள்ளையவர்கள் 1956 - இல் பாண்டியரின் பழைய சங்கமும் பிற்காலத்து வச்சிரநந்தி யின் சங்கமும் ஒன்று என்று கூறுகிறார். ‘மதுரை’, ‘சங்கம்’ என்னும் இரண்டு சொற்களின் பெயர் ஒற்றுமையைக் கொண்டு இரண்டு சங்கங்களும் ஒன்று என்று கூறுவது அறிவுடைமையாகாது. சங்கம் என்றார், கூட்டம், குழு, கழகம் என்பது பொருள். பௌத்த பிக்ஷ&க்களின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். பௌத்தர்கள் மும்மணியைக் (திரி சரணத்தைக்) கூறுகின்ற ‘புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி’ என்பதில் பௌத்த முனிவர்களின் கூட்டம் சங்கம் என்று கூறப்படுவது காண்க. இதுபோன்று, ஜைன முனிவர்களின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். வச்சிரநந்தி முனிவர், ஏன் திராவிட சங்கம் என்னும் ஜைன முனிவர் சங்கத்தை அமைத்தார் என்பதைக் கூறுவோம். சமண (ஜைன) சமயத் துறவிகளின் சங்கம் ஆதி காலத்தில் ஒரே சங்கமாக இருந்தது. அதற்கு மூல சங்கம் என்பது பெயர் பிற்காலத்தில் ஜைன முனிவர் சங்கம் பெரிதாக வளர்ந்துவிட்டது. பெரிதாக வளர்ந்து போன ஜைன முனிவர் சங்கத்தை நான்கு பிரிவாகப் பிரித்து நந்தி கணம், சேனகணம், சிம்கணம், தேவகணம் என்று பெயரிட்டார்கள். ஒவ் வொரு கணத்திலும் கச்சை என்றும் அன்வயம் என்றும் உட்பிரிவுகள் இருந்தன. இச்செய்தி ஜைனசமய நூல்களில் கூறப்படுகின்றது. இந்த நான்கு பிரிவுகளில் நந்திகணம் பேர்பெற்றது. நந்தி கணத்தில் நாளடைவில் ஜைன முனிவர்கள் தொகை அதிகமாகி விட்டது. ஆகவே, வச்சிநந்தி முனிவர், கி.பி. 470 -இல் நந்திகணத்தை (நந்தி சங்கத்தை) இரண்டாகப் பிரித்து இரண்டாவது பிரிவுக்குத் திரமிள சங்கம் (தமிழ்நாட்டுச் சங்கம், தமிழ் ஜைனர் சங்கம்) என்று பெயர் கொடுத்தார். நந்தி சங்கத்திலிருந்து திரமிள (திராவிட) சங்கம் ஏற்பட்டது என்பதை மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது: ‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸதி அருங்களா அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வாராஸி பாரகைஹி’3 ‘நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வய பிரிவு’ என்பது இதன் பொருள். இந்தத் திராவிட ஜைன முனிவர் சங்கத்தின் கொண்ட குண்டான் வயம் என்னும் பிரிவில் புஸ்தக கச்சை என்னும் உட் பிரிவைச் சேர்ந்த முனி பட்டாரகர் என்னும் ஜைன முனிவரைக் கர்நாடக நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.4 திரமிள சங்கத்து அருங்கலான்வயப் பிரிவைச் சேர்ந்த சாந்தி முனி என்பவரை இன்னொரு சாசனம் கூறுகிறது.5 திரமிள சங்கத்து அருங்கலான்வயத்து ஸ்ரீபால திரைவித்யர் என்னும் முனிவரை மற்றொரு சாசனம் கூறுகிறது6 திராவிட சங்கத்துத் தவுளகணத்து இருங்கலான் வயப் பிரிவைச் சேர்ந்த குணசேன பண்டிதரை இன்னொரு சாசனம் கூறுகிறது.7 இதிலிருந்து, பாண்டியர் தமிழை வளர்ப்பதற்கு மதுரையில் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் வேறு என்பதும், வச்சிர நந்தி ஜைன சமயத்தை வளர்ப்பதற்காக மதுரையில் நிறுவிய நந்தி சங்கத்தின் பிரிவாகிய திரமிள சங்கம் வேறு என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனி போல் விளங்குகிறதல்லவா? இது சாதாரண அறிவுடைய வருக்கும் நன்கு விளங்குகிறது. இதை உணராமல் மொழிவளர்ச்சிக் காக ஏற்பட்ட பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தையும் சமய வளர்ச்சிக் காக வச்சிரநந்தி அமைத்த திரமிள ஜைன சங்கத்தையும் ஒன்றாக இணைத்துக் கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுகிறது போன்ற செயலாகும். பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கத்து நூல்களிலே காதல் வாழ்க்கைச் செய்திகளும் போர்ச் செய்திகளும் உலகியல் செய்தி களும் கூறப்படுவது யாவரம் அறிந்ததே. வச்சிரநந்தியமைத்த திராவிட சங்கமாகிய ஜைனமத சங்கத்தில், ஜைன முனிவர்கள் காதலைப் பற்றியும் போரைப் பற்றியும் லௌகிக விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பேதைமை! அன்றியும் சீத்தலைச்சாத்தனார், கபிலர், பரணர், மாமூலனார், அரிசில் கிழார், நத்தத்தனார், வெள்ளிவீதியார், இடைக்காடனார், ஓரம்போகியார், மாங் குடிமருதனார் முதலிய ஜைனரல்லாத புலவர்கள் ஜைன முனிவர்களின் மத சங்கத்தில் இருந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பேதைமை. வச்சிரநந்தி அமைத்த திராவிட ஜைன சங்கத்தில் தொல்காப்பி யர் தொல்காப்பிய இலக்கணத்தை இயற்றினார் என்று கூறுவது ஆராயாமல் கூறும் வெற்றுரை யாகும். என்னை? சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்குவது இல்லை என்று தொல்காப்பிய இலக்கணச் சூத்திரம் கூறுகிறது. ‘கத நபம வெனுமா வைந்தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே’ (28 எழுத்ததிகாரம்) ‘சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனு மூன்றலங்கடையே’ (29 எழுத்ததிகாரம்) சங்கம், சங்கு, சமம், சகடம், சந்து, சலம், சண்பு முதலிய சகர எழுத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்குவதில்லை என்று இந்தச் சூத்திரம் கூறுகிறது. ஆகவே இச்சொற்கள் வழங்காத காலத்தில் தொல்காப்பியம் இயற்றப்பட்டது என்பது விளங்கு கின்றது. இவ்வா றிருக்க, திரமிள சங்கம் என்னும் பெயரையுடைய ஒரு சங்கத்தில் தொல்காப்பியர் இருந்தார். அவர் அச்சங்கத்தில் நூல் இயற்றினார் என்பது எவ்வளவு அறியாமை? ‘திரமிள சங்கம்’ என்னும் சகர எழுத்தை முதலாகவுடைய ஒரு சங்கத்தில் தொல் காப்பியர் அங்கத் தினராக இருந்திருந்தால், அவர் சகரத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்கா என்று இலக்கணம் எழுதியிருப்பாரா? பாண்டியரின் தமிழ்ச் சங்கத்துக்கும் சங்கம் என்று பெயர் இருக்கிறதே என்று சிலர் கேட்கக்கூடும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்துக்கு ஆதியில் ஏற்பட்ட பெயர் தமிழ்க் கழகம் என்பது. தமிழ்ச் சங்கம் என்னும் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது என அறிக. சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் பாண்டியன் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிக் கூறுகிறதென்றும், அத்தமிழ்சங்கம் வச்சிரநந்தி மதுரையில் நிறுவிய தமிழ்ச் சங்கமாக இருக்கக்கூடும் என்றும் வையாபுரிபிள்ளை எழுதுகிறார். இதுவும் வாசகரை மயக்குகிற ஒரு செய்தியாகும். சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனத்தின் வாசகம் இது. “மஹாபாரதந் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்பது. இந்தச் சாசனத்தில் மதுரையில் சங்கம் வைத்ததும் பாரதத்தை தமிழில் எழுதுவித்ததும் பாண்டிய மன்னர் செய்ததாகக் கூறுகிறதே யல்லாமல் வச்சிரந்தி செய்த தாகக் கூறவில்லை. இவ்வாறு ஒன்றை வேறொன்றாகத் திரித்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் உண்மை யாகாது; ஆராய்ச்சியும் ஆகாது. வச்சிரநந்தி ஆசாரியர் அமைத்த திராவிட சங்கமும் பாண்டிய மன்னர் அமைத்த தமிழ்ச் சங்கமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணம் பற்றி அமைக்கப்பட்ட சங்கங்கள் என்றும் இரண்டுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் எழுதியதை முன்னமே காட்டினேன். திரு எம்.எஸ். இராமசாமி அய்யங்கார் அவர்கள் தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தென்இந்திய ஜைன சமய ஆய்வுரைகள்’ என்னும் நூலிலேயும் வச்சிரநந்தியின் சங்கத்தைப் பற்றிக் கூறுகிறார். ‘தென்னாட்டில் குடியேறிய திகம்பர ஜைன முனிவர்கள் தங்களுடைய ஜைன சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அறிகிறோம்’ என்று அவர் எழுதுகிறார்.8 மதுரை, சங்கம் என்னும் இரண்டு சொற்களின் ஒற்றுமையை மட்டும் வைத்துக்கொண்டு, பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தையும் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தையும் ஒன்றாக இணைத்துப் பொருந்திக் கூறுவதும், வச்சிரநந்தியின் சங்கத்தில் தொல்காப்பியனார் தமது தொல்காப்பிய இலக்கண நூலை இயற்றி வெளிப்படுத்தினார் என்றும், ஆகவே அவர் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்றும் கற்பித்துக் கூறுவதும் ஆகிய எல்லாம் மாறுபடக் கூறல் மயங்கக் கூறல் திரித்துக் கூறல் ஆகும் என்று அறிதல் வேண்டும். இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அது என்னவென்றால், வச்சிர நந்தி திராவிட சங்கத்தை ஏற்படுத்தியது கி.பி. 470-ல் ஆகும். அந்தக் காலத்தில் பாண்டி நாட்டைக் காப்பிர அரசர் ஆண்டனர். பாண்டியர் ஏற்படுத்திய தமிழ்ச் சங்கம் கி.பி. 300-க்கு முன்பு மறைந்துபோயிற்று என்பதை ஆராய்ச்சிக்காரர் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பொருத்தமற்றதைப் பொருத்திக் கூறுவதும், திரித்துக் கூறுவதும் உண்மையாராய்ச்சியாகாது. நுனிப் புல்லை மேய்வதுபோல மேற் போக்காகப் பாராமல், ஆழ்ந்து சிந்தித்து உண்மை காண்பதே ஆராய்ச்சியாகும். நடுநின்று உண்மையைக் காண்பதே செம்மையான ஆராய்ச்சியாகும். மேற்பார்வைக்கு மெய் போலத் தோன்றுகிற பொய்மொழிகள் உண்மையாராய்ச்சியாகா. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” *** 5. தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும் தொல்காப்பியர் காலத்தை ஆராய்கின்ற சமஸ்கிருத மொழிப் பக்தர்கள் சிலர், தகுந்த சான்றுகளையும் ஆதாரங்களையும் காட்டாமல், சமஸ்கிருதப் பண்டிதர்களுக்குப் பரம்பரையாக இருந்து வருகிற மூட நம்பிக்கையைமட்டும் ஆதாரமாகக்கொண்டு, தொல்காப்பியர் காலத்தைக் கணிக்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் களாக இருக்கிற சமஸ்கிருத பக்தர்களுங்கூட சம்ஸ்கிருத மொழியைப் பற்றியவரையில், பழைய பண்டிதர்களின் மூடநம்பிக்கையைத்தான் பின்பற்றுகிறார்கள். சமஸ்கிருத பாஷைதான் பாரத நாட்டின் ஆதி பாஷை என்றும் அதிலிருந்துதான் தமிழ் உட்பட மற்றப் பாஷைகள் சொற்களையும் கருத்துக்களையும் கடனாகப் பெற்றன என்றும் இவர்கள் கண்மூடித்தனமாகக் கூறுகிறார்கள். வடநாட்டுப் பாஷைகளைப் பொறுத்தவரையில் இக்கருத்து உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், மிகப் பழைமையான தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் இக் கருத்து மிகமிகத் தவறானது. தமிழ் மொழி சமஸ்கிருத பாஷையைவிட மிகப் பழைமையானது என்பதை உலக அறிஞர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதம் புதிதாக உண்டாக்கப்பட்ட பாஷை என்பதை அதன் பெயரே தெரிவிக்கின்றது. (சமம் - நன்றாக, கிருதம் - செய்யப்பட்டது.) செம்மை செய்யப்பட்ட மொழி, அல்லது புதிதாக அமைக்கப்பட்ட மொழி என்பது இதன் பொருளாகும். (வேதகால மொழியாகிய ஆரிய மொழியையும் பிற்காலத்தில் உண்டான சமஸ்கிருத மொழியையும் இணைக்கக்கூடாது.) பிற்காலத்திலே, தமிழ் முதலிய திராவிட மொழிகள் சமஸ்கிருதச் சொற்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டது போலவே, சமஸ்கிருத பாஷையும் தமிழ் முதலிய திராவிட மொழிச் சொற்களை ஏராளமாகக் கடன் வாங்கியிருக்கிறது. தமிழ் முதலிய திராவிட மொழியிலிருந்து சமஸ்கிருத பாஷை பல நூற்றுக்கணக்கான சொற்களைக் கடன் பெற்றிருக்கிற உண்மையைச் சமஸ்கிருத பக்தர்கள் சொல்லுவதில்லை. ஆனால், நடுவு நிலையுள்ள நல்லவர்கள் சிலர் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். சமஸ்கிருதத்திலுள்ள பூர்வ மீமாம்ஸை சூத்திரங்களுக்கு உரை எழுதிய சபர சுவாமியும் குமரில பட்டரும் தம்முடைய உரைகளில் நீர், மீன், குயில், தாமரை முதலான தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத பாஷை கடன் வாங்கியிருப்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர். சமஸ்கிருத பாஷையைக் கற்றவர்களான ஜர்மனி, பிரான்ஸ் முதலிய மேல்நாட்டு அறிஞர்களும், திராவிட பாஷைச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருத மொழி கடனாகப் பெற்றிருக்கிறதை எடுத்துக்காட்டியுள்ளனர். கன்னட மொழி அகராதி எழுதிய டாக்டர் கெட்டில் என்னும் ஐரோப்பியர், திராவிட மொழிகளி லிருந்து சமஸ்கிருதத்தில் சென்று வழங்குகின்ற நூற்றைம்பதுக்கு மேற்பட்ட சொற்களை அந்நூலின் முகவுரையில் எடுத்துக்காட்டி யுள்ளார். சமஸ்கிருத பாஷை என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பர்ரோ அவர்கள்1 ‘சமஸ்கிருத பாஷையில் வேறு மொழிச் சொற்கள் என்னும் அதிகாரத்தில், சமஸ்கிருத மொழியில் கலந்துள்ள திராவிட மொழிச்சொற்களின் பெரிய பட்டியலைக் கொடுத்திருக்கிறார். பர்ரோவும் எமுனோவும் சேர்ந்து அண்மையில் வெளியிட்ட திராவிட மொழி அகராதியிலே, பல நூற்றுக்கணக்கான திராவிட பாஷைச் சொற்கள் சமஸ்கிருத மொழியிலே கலந்திருப்பதை எடுத்துக் காட்டி யுள்ளார்கள்.2 ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் சமஸ்கிருத மொழியில் மூட பக்திகொண்டவர்கள் கருதுவதில்லை. தங்களுடைய வரட்டு மூட நம்பிக்கையைத் திருப்பித் திருப்பிக் கூறிவருகிறார்கள். எல்லோரையும் எக்காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்கமுடியாது என்பதை அறிந்திருந்தும். பழைய மூடத்தனத்தையே இக்காலத்திலும் ஆதாரமாகக் காட்டி வருகிறார்கள். வடமொழி நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சில கருத்துக்களைத் தொல்காப்பியர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர்களில் சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன காட்டுகிறார்கள் என்றால், வட மொழி நாட்டிய சாஸ்திரத்தில் தொல்காப்பியர் கூறுகிற கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதுதான்! தொல் காப்பியத்தில் கூறப்படுகிற கருத்துக்கள் வடமொழி நாட்டிய சாஸ்திரத்திலே காணப்படுவதால், அவை தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூறலா மல்லவா? ஆனால் இவர்கள் அப்படிக் கூறுவதில்லை. சமஸ்கிருதத்தி லிருந்துதான் கருத்துக்கள் மற்ற மொழிகளில் சென்றிருக்கவேண்டும் என்றும் மூட நம்பிக்கைதான் இவர்களுக்கு ஆதாரம். திரு. பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி தாம் எழுதிய “வடமொழி வரலாறு” என்னும் நூலில் 536 ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “த்ருச்ய காவ்யத்திற்கு ரூபகம் எனவும் பெயர் உண்டு. அதனைப்பற்றி விரிவாய்க் கூறும் நூல் நாட்டிய சாஸ்திரம் ஆகும். அந்நூல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் உள்ளது எனக் கொள்ளத்தக்க சான்று இல்லை எனக் கீத் (ஹ. முநiவா) கூறினார். ஆனால், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னதான தமிழ்த் தொல்காப்பியத்திலுள்ள மெய்ப் பாட்டியற் சூத்திரங்கள் பல, நாட்டிய சாஸ்திரத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டனவாகத் தோன்றுகின்றது.3 ஆகலின் நாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாய் இருத்தல்வேண்டும்”.4 மேலும், இதே செய்தியை மேற்படி நூலின் இன்னொரு இடத்திலும் எழுதுகிறார்: “தமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டி யலில் ஏழு சூத்திரங்கள் நாட்டிய சாஸ்திரப் பகுதியின் மொழி பெயர்ப்பாக இருத்தலாலும், தொல்காப்பியமும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூலன்றாகலானும், நாட்டிய சாஸ்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னது எனக்கொள்ளத்தகும்.”5 இவருடைய ஆராய்ச்சியின் போக்கு எப்படியிருக்கிறது பாருங்கள்! தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள், வடமொழி நாட்டிய சாஸ்திரத்தில் இருப்பதனாலே, தொல்காப்பியம் நாட்டிய சாஸ்திரத்துக்குப் பிற்பட்ட நூலாம்! தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் நாட்டிய சாஸ்திரத்தில் காணப்படுகிறபடியினாலே, நாட்டிய சாஸ்திரம் தொல் காப்பியத்திற்குப் பிற்பட்ட நூல் என்று கூறலாம் அல்லவா? ஆனால், சுப்பிரமணிய சாஸ்திரி அப்படிக் கூறவில்லை. ஏனென்றால், சமஸ் கிருதத்திலிருந்து தான் மற்றப் பாஷைகள் கடன் கொண்டிருக்க வேண்டும் என்பது சமஸ்கிருத பண்டிதர்களின் அழுத்தமான மூட நம்பிக்கையல்லவா? ஆகவேதான், சுப்பிரமணி சாஸ்திரி நாட்டிய சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் எடுக்கப்பட்டன என்று சரியான சான்று காட்டாமல் தைரியமாக எழுதிவிட்டார். திரு.எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும், இந்தச் சமஸ்கிருத மூடபக்தி ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, சுப்பிரமணிய சாஸ்திரி கூறிய அதே கருத்தைத் தமது நூலிலும் எழுதிவிட்டார். இவர், தாம் ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலிலே 14, 71 ஆம் பக்கங்களில், வடமொழி நாட்டிய சாஸ்திரத்திலிருந்து தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் சூத்திரக் கருத்துக்களை எடுத்துக் கொண்டார் என்று எழுதியிருக்கிறார்:6 சுப்பிரமணிய சாஸ்திரி, பரதநாட்டிய சாஸ்திரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலென்றும், ஆகவே தொல்காப்பியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலென்றும் எழுதியுள்ளார். கீத் முதலிய சமஸ்கிருத ஆராய்ச்சி யாளர்கள், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது அன்று என்று எழுதினார்கள். அதாவது பரதநாட்டிய சாஸ்திரம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் என்று கூறினார்கள். வடமொழியறிந்த ஆராய்ச்சி யாளர்களில் பெரும் பாலோர், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வையாபுரிப் பிள்ளையும் பரத நாட்டிய சாஸ்திரம் கி. பி. 4ஆம் நூற்றாண்டு நூல் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், சமஸ் கிருத பக்தியும், சமஸ்கிருதத்திலிருந்து தான் மற்ற மொழிகளில் கருத்துக்கள் எடுக்கப்பட வேண்டும் என்னும் ‘பண்டித’ மனப் பான்மையும் கொண்டவரானபடியினால், தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்:7 இவர்களின் கூற்றை ஆராய்வோம். முதலில் சுப்பிரமணிய சாஸ்திரி கூறுவதை ஆராய்வோம். கீத் ஆசிரியர் பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் என்று கூறினார். வடமொழி அறிஞர்கள் பெரும் பாலோரும் பரதநாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். வையாபுரிப் பிள்ளையும், அந்நூல் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தென்பதைத்தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், சாஸ்திரி, கி. மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பரத சாஸ்திரம் எழுதப்பட்டது என்று தகுந்த சான்று காட்டாமல் கூறுகிறார். மேலும், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரக் கருத்துக்கள் பரத நாட்டிய சாஸ்திரத்தில் காணப்படுவதால், கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்காப்பியத்துககு முன்பு பரத சாஸ்திரம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கூறுகிறார். இது ஒரு சான்றாகுமா? இவர் கூறுவதையே மாற்றிக் கூறலாமல்லவா? தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத சாஸ்திரத்தில் காணப்படுவதனாலே, பரத சாஸ்திரம் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவது பொருந்தும் அல்லவா? ஆனால் இப்படி எல்லாம் மனம் போனபடிக் கூறுவது ஆராய்ச்சியாகுமா? பரதநாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டு நூல் என்று பலரும் கருதுவதனால், சாஸ்திரி வெறும் யூகமாகக் கூறுவதை உண்மைஎன்று ஏற்றுக்கொள்ள முடியாது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு நூலாகிய பரத சாஸ்திரத்திலிருந்து, அதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முற்பட்ட நூலாகிய தொல்காப்பியம் கருத்துக்களை எடுத்திருக்க முடியாது. அதற்கு மாறாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்திலிருந்து பிற்காலத்து (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) நூலாகிய பரத நாட்டிய சாஸ்திரம் சில கருத்துக்களை (மெய்ப்பாட்டுச் சூத்திரங்களை) எடுத்திருக்கக் கூடும் என்பது பொருத்தமானது. இனி, வையாபுரியார் கூற்றை ஆராய்வோம். இவர், பரத நாட்டிய சாஸ்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டு, தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத நாட்டிய சாஸ்திரச் சூத்திரங்களுடன் பொருந்தி யிருப்பதனால், தொல் காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரங்கள் பரத நாட்டிய சாஸ்திரத்தி லிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆகவே தொல்காப்பியம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும என்று கூறுகிறார். ஏன், அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்குக் காரணமோ சான்றோ காட்டவில்லை. கடைச்சங்க காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் என்பதும், எட்டுத் தொகையில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட் கள் எல்லாம் அப்புலவர்களால் அக்காலத்தில் பாடப்பட்டவை என்பதும் எல்லோரும் அறிந்ததே. கடைச்சங்க காலப் புலவர்களுக்கு இலக் கணமாக இருந்தது தொல்காப்பியம் என்பதும் எல்லோருக்கும் உடன் பாடே. வையாபுரியார் கூறுவதுபோல, தொல்காப்பியம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்தால், அது எப்படி கடைச்சங்கப் புலவருக்கு இலக்கணமாக இருந்திருக்கக்கூடும்? ஆகவே, வையா புரியார் கூற்று ஏற்கத்தக்கதன்று. தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு முன்பு எழுதப்பட்டிருக்கவேண்டுமென்பது தெளிவா கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்பு இரண்டாம் சங்கத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டது என்றுதான் பழைய வரலாறு கூறுகின்றது. மேலும், கடைச்சங்க நூல்களில், தொல்காப்பிய இலக் கணத்துக்கு மாறுபட்ட சொற்களும் காணப்படுகின்றன. (சங்கு, சட்டி, யூபம், யவனர் முதலியன.) வழக்கத்தில் உள்ளதும் பழைய இலக்கணத்துக்கு மாறு பட்டதுமான சொற்களை அப்புலவர்கள் தங்கள் செய்யுட்களில் வழங்கி யிருக்கிறார்கள். அப்படி வழங்க வேண்டுமானால், தொல்காப்பிய விலக்கணம் எழுதப்பட்ட நெடுங் காலத்துக்குப் பிறகு தான் அப்புதிய சொற்கள் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதிலும் பழங்காலத்தில் இலக்கண வரம்புக்கு மாறுபட்ட சொற்கள் புதிதாக வந்து வழங்கு வதற்கு நெடுங்காலம் சென்றிருக்க வேண்டும். எனவே, தொல்காப்பி யம் எழுதப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவ்விலக் கணத்துக்கு முரண்பட்ட புதிய சொற்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால், கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்பு தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. எனவே, இதனாலும் வையாபுரியார் கூறும் கூற்று ஏற்கத்தக்கதன்று என்பது நன்கு விளங்குகிறது. பரத நாட்டியம் என்பது தமிழ் நாட்டுக்கே உரிய கலையாகும். அன்று முதல் இன்றளவும் பரதநாட்டியம் தமிழ் நாட்டில் பேரும் புகழும் பெற்று நின்று நிலவுகிறது. (அண்மைக் காலத்தில்தான் வட இந்தியரும் மேல் நாட்டு ஐரோப்பியரும் இக்கலையைப் பயிலத் தொடங்கியுள்ளனர்.) இயல் இசை நாடகம் என்னும் மூன்று கலைகளை ஆராய்ந் தவர் தமிழ்ச் சங்கத்தார். இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் தொன்று தொட்டுப் பேர் போனது. நாடகத்துக்கு முக்கியமான சுவைகள், மெய்ப்பாடுகள் முதலியவற்றை நாடகத் தமிழ்ப் புலவர்கள் ஆராய்ந்தனர். இசைக் கலையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்கென்றே பாணர் என்னும் ஒரு தனிப் பிரிவினர் தமிழ் நாட்டில் இருந்தனர். பரத நாட்டியக் கலைக்கென்றே இன்றும் இசை வேளாளர் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் அன்றோ? நாடகத் தமிழ்ப் புலவர்கள் ஆராய்ந்த மெய்ப்பாடுகளைத் தான் தொல்காப்பியர் தமது தொல்காப்பிய இலக்கணத்தில் கூறினார். இந்த வரலாற்று வரன் முறையை அறியாதவர்கள் வடமொழிப் பரதநாட்டிய சாத்திரத்தி லிருந்து தொல்காப்பியர் கருத்துக்களை எடுத்துக்கொண்டார் என்று கூறுவது எவ்வளவு பேதைமை! இது நகைப்புக்கிடமாகவல்லவா இருக்கிறது! பாரதநாட்டு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பல சாஸ்திரக் கருத்துக்களைப் பிற்காலத்தவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டதைப் போலவே, தமிழ் நாட்டில் வழங்கிய பரத நாட்டியக்கலை நூலைப் பரதநாட்டிய சாஸ்திரம் என்னும் பெயருடன் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டனர். பிறகு, அந்த மொழி பெயர்ப்பு நூலை முதல் நூல் என்று கூறுகின்றனர். உதாரணமாக ஒன்று காட்டுவோம். நாடக மேடையில் அமைக்கப் படுகிற திரைக்கு எழினி என்பது பெயர். இந்த எழினி ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி என்று மூன்று வகைப்படும். இந்தத் தமிழ் எழினியைச் சம்ஸ்கிருத நாடக நூலோர் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், எழினியைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல், எழினி, எவனி என்று கூறிக் கடைசியில் யவனிகா என்று அழைத்துக் கொண்டனர். இவ்வாறு, எழினி என்னும் தமிழ்ச் சொல் யவனிகா என்றாயிற்று என்பதை அறியாமல், அது யவன என்னும் சொல்லிலிருந்து தோன்றிற்று என்று கூறுகிறார்கள். இதுபற்றி எழினி - யவனிகா என்னும் இணைப்பு காண்க. எனவே, வையாபுரியாரும் சுப்பிரமணிய சாஸ்திரியாரும் வடமொழிப் பற்றுச் சார்பு கொண்டு, யூகமாகக் கூறும், சான்று இல்லாதவையும் அறிவுக்குப் பொருந்தாதவையுமான கூற்றுகள், வெறும் வெற்றுரைகள் எனத்தள்ளுக. *** 6. மதுரைக் காஞ்சியின் காலம்* பத்துப்பாட்டு என்னும் தொகைநூலின் ஆறாம் பாட்டாக அமைந்தது மதுரைக் காஞ்சி. அது பாண்டியன் நெடுஞ்செழிய னுடைய சிறப்பைக் கூறுகிறது. இப்பாட்டினைப் பாடியவர் மாங்குடி மருதனார். மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துப் போரிலே சேரன் சோழன் என்னும் முடியுடை மன்னர் இருவரையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்று புகழ் கொண்டவன்... ஆகையால் இப் பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். இவன் கடைச்சங்க காலத்தில் இருந்தவன். கடைச்சங்க காலம் என்பது ஏறக்குறைய கி.பி. 300-க்கு முற்பட்ட காலம் என்பது பல அறிஞர்களின் கருத்து. எனவே, மதுரைக் காஞ்சியின் காலமும், அப்பாட்டுடைத் தலை வனாகிய நெடுஞ்செழியன் காலமும் கி.பி. 300-க்கு முற்பட்ட காலமாகும். ஆயின், இக்காலத்துச் சிலர், சரியாக ஆராயாமல் கடைச்சங்க காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு என்று மனம்போனபடி கூற முற்பட்டுள்ளனர். இதனால், கடைச் சங்க காலம் எது என்பதை உறுதியாக அறிய முடியாமல் மாணவர்களும் மற்றவர்களும் இடர்ப்படுகின்றனர். கடைச்சங்க நூலாகிய மதுரைக் காஞ்சியின் காலத்தை ஆராய்வதன் மூலம் கடைச்சங்க காலம் எது என்பதை அறியலாம். ஆகவே இதனை ஆராய்வோம். அரசாங்க சாசன ஆராய்ச்சி இலாகாவில் இருந்த கே.வி. சுப்பிர மணி அய்யர், கடைச்சங்க காலத்தைக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளார். இவர் “மதுரைக் காஞ்சியின் காலமும் அப்பாட்டுடைத் தலைவன் காலமும்” என்னும் தலைப் புள்ள கட்டுரையை 1911-ஆம் ஆண்டில், “இந்தியப் பழம்பொருள் ஆராய்ச்சி” என்னும் ஆங்கில வெளியீட்டில் எழுதியிருக்கிறார்.1 இந்தக் கட்டுரையிலே இவர், சிறப்பாக வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனத்தை ஆதாரமாகக் கொண்டு, பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தை ஆராய்கிறார். பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னுடன் போர்செய்ய வந்த சேரன் சோழன் என்னும் இரண்டு பேரரசர் களையும் இவர்களுக்குத் துணையாக வந்த ஐந்து குறுநில மன்னர்களையும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் போர் செய்து வென்றான் என்றும், அந்தப் பாண்டியன்மீது மதுரைக் காஞ்சியை மாங்குடி மருதனார் என்னும் புலவர் பாடினார் என்றும் கூறிய பிறகு, சுப்பிரமணிய ஐயர் அப் பாண்டியன் காலத்தை ஆராய்கிறார். முடிவில், மதுரைக் காஞ்சித் தலைவனான பாண்டியன் நெடுஞ் செழியனும் வேள்விக்குடி சாசனம் கூறுகிற செழியனும் ஒருவரே என்றும் இந்தப் பாண்டியன் (நெடுஞ்செழியன் - செழியன்) கி.பி. 620 முதல் 650 வரையில் அரசாண்டான் என்றும், ஆகவே, மதுரைக் காஞ்சி இயற்றப் பட்ட காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்றும் முடிவுகாண்கிறார்; அதாவது, கடைச்சங்க காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று கூறுகிறார். இவ்வாறு கூறுகிற சுப்பிரமணிய ஐயரைப் போலவே, திருவனந்த புரத்தில் சாசன இலாகாவில் இருந்த து.அ. கோபிநாத ராவ் அவர்களும், கடைச்சங்க காலம் கி.பி. 7-ஆம நூற்றாண்டு என்று செந்தமிழ் ஆறாந் தொகுதியில், “பாண்டியர்களும் தமிழ்ப் புலவர்களும்” என்னும் கட்டுரையில் கூறியுள்ளார். மதுரைக் காஞ்சியின் காலமும் அப்பாட்டுடைத் தலைவனான நெடுஞ்செழியன் காலமும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று கே.வி. சுப்பிரமணிய ஐயர் தமது கட்டுரையில் கூறியுள்ளது சரியா என்பதைப் பார்ப்போம். ஐயர் அவர்கள் காட்டும சான்றுகள் சரியான வையாக இருந்தால் அவர்கண்ட முடிவும் சரியானவையாக இருக்கும். சான்றுகள் பிழையுடையனவாக இருந்தால் அதன் முடிவும் பிழையானதாக இருக்கும். ஆகவே, அவர் காட்டும் சான்றுகள் சரியானவையா அல்லது பிழையுடையனவா என்பதை ஆராய்வோம். சுப்பிரமணிய ஐயர் தமது கட்டுரையில் காட்டும் சான்றுகளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை: அ. வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் பல்யாகசாலை முது குடுமியைக் கூறுகிறது. இந்த முதுகுடுமிப் பெருவழுதி பாண்டிய அரசர் பரம்பரையில் கடைசி அரசன். முதுகுடுமிப் பெரு வழுதியை அயல்நாட்டிலிருந்து வந்த களப்பிரர் வென்று பாண்டிய நாட்டை அரசாண்டனர். பாண்டி நாடு களப்பிர அரசர் வசம் சிலகாலம் இருந்தது. ஆ. சிலகாலஞ் சென்ற பிறகு பாண்டியன் மரபில்வந்த கடுங்கோன் என்பவன் களப்பிரரை வென்று பாண்டிய நாட்டை மீட்டுக் கொண்டு அரசாண்டான். இந்தப் பாண்டியன் கடுங்கோன் இறையனார் களவியல் உரையில் கூறுப்படுகிற முதற்சங்க காலத்தின் இறுதியில் இருந்த கடுங்கோன் ஆவன். இ. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப்பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்தான் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. வேள்விக்குடி சாசனமும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதியைக் கூறிய பிறகு, கடுங்கோனின் பேரனாகிய செழியன் என்பவனைக் கூறுகிறது. ஆகவே, வேள்விக்குடி சாசனம் கூறுகிற செழியனும் மதுரைக் காஞ்சியின் தலைவனான நெடுஞ் செழியனும் ஒருவரே. இந்த நெடுஞ்செழியன் - செழியன் கி.பி. 620 முதல் 650 வரையில் அரசாண்டான். ஆகவே, அவன் காலமும் அவனைப் பாடிய மதுரைக் காஞ்சியின் காலமும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டாகும். மதுரைக் காஞ்சி கடைச்சங்க காலத்து நூல் என்று கூறுப்படுகிறபடியால், கடைச்சங்க காலம் மதுரைக் காஞ்சியின் காலமாகிய கி.பி.7-ஆம் நூற்றாண்டு ஆகும். இவைதாம் சுப்பிரமணிய ஐயருடைய சான்றுகளும் முடிவு களும். இவை சரியானவையா பிழையுள்ளவையா என்பதை இனி ஆராய்ந்து பார்ப்போம். ஆராய்வதற்கு முன்பு, வேள்விக்குடி சாசனத்தில் காணப்படுகிற பாண்டிய அரசர் பரம்பரையை அறிந்து கொள்வது நலம். ஆகவே, பாண்டிய அரசர் பரம்பரையை வேள்விக் குடி சாசனத்தின்படி கீழே தருகிறோம். வேள்விக்குடி சாசனத்தின்படி பாண்டிய மன்னர் பரம்பரை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி (வேள்விகுடியைத் தானம் கொடுத்தவன்) ஞு களப்பிரர் ஆட்சி ஞு கடுங்கோன் 1. (களப்பிரரிடமிருந்து பாண்டி நாட்டை மீட்டுக்கொண்ட பாண்டியன்) ஞு 2. அவனி சூளாமணி மாறவர்மன். ஞு 3. செழியன் வானவன் சேந்தன். ஞு 4. அரிகேசரி அசமசமன் மாறவர்மன் ஞு 5. செழியன் ரணதீரன் ஞு 6. தேர்மாறன் இராஜ சிம்மன் - ஐ ஞு 7. ஜடிலன் பராந்தகன் நெடுஞ்சடையன் (வேள்விக்குடி செப்பேட்டுச் சாசனம் வழங்கியவன்) இனி, சுப்பிரமணிய ஐயரின் ஆராய்ச்சியைச் சீர்தூக்கிப் பார்ப்போம். முதலாவதாக: பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதியைக் களப்பிர அரசர் வென்று பாண்டி நாட்டினைக் கைப்பற்றினர் என்று வேள்விக் குடி சாசனம் கூறுவதாகச் சுப்பிரமணிய ஐயர் கூறுகிறார். இவர் கூறுவது தவறு. சாசனம் இவ்வாறு கூறவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி, வேள்விக் குடி என்னும் ஊரைக் கொற்கை கிழான் கொற்றன் என்பவனுக்குத் தானமாகக் கொடுத்தான் என்று சாசனம் கூறுகிறதே தவிர, அவனைக் களப்பிரர் வென்றதாகக் கூறவில்லை. சாசனத்தின் வாசகம் இது: “கொல்யானை பல ஓட்டிக் கூடா மன்னர் குழாந்தவிர்த்த பல் யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதி ராஜனாக மா மலர்ச் சோலை நளிர் சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்ற மென்னும் பழனக்கிடக்கை நீர் நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட ஸ்மிருதி மார்க்கம் பிழையாத கொற்கைகிழா னற்கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத் துரைத்து வேள்விசாலை முன்பு நின்று வேள்விகுடி என்றப் படியைச் சீரோடு திருவளரச் செய்தார் வேந்தனப் பொழுதேய் நீரோட்டிக் கொடுத்தமையான்.”2  இவ்வாறு வேள்விக்குடி கூறு வதால், பாண்டியன் முது குடுமிப்பெருவழுதி வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங் கொடுத்தான் என்பது தெரிகிறது. களப்பிரர் அவனை வென்றதாகச் சாசனம் கூறவில்லை. அவனுக்குப் பிற்காலத்தில், அவன் பரம் பரையில் வந்த வேறு ஒரு பாண்டியனைக் களப்பிரர் வென்றதாகப் பொருள்படும்படி வேள்விக்குடி சாசனம் கூறுகிறது. சாசனம் மேலும் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள் : “வேந்த னப்பொழுதேய் நீரோடட்டிக் குடுத்தமையா னீடு புக்தி துய்த்தபின் னளவரிய ஆதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் களபர னென்னுங் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கிய பின்.” இவ்வாறு சாசனம் கூறுவதிலிருந்து வேள்விக்குடியைத் தானமாகப் பெற்றவர், பரம்பரை பரம்பரையாக நெடுங்காலம் அந்தத் தானத்தை அநுபவித்து வந்தார்கள் என்பது தெரிகிறது. நீடுபுக்தி துய்த்தபின் என்று சாசனம் கூறுவதை நோக்குக. இதனால், வேள்விக்குடியைத் தானமாகப் பெற்றவர் பல தலைமுறை அதனைப் பரம்பரை பரம்பரையாக அநுபவித்து வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தானம் பெற்ற குடும்பத்தினர் பல தலைமுறையாக அதனை அநுபவித்து வந்தார்கள் என்றால், தானம் கொடுத்த அரசர் பரம்பரையிலும் பல அரசர்கள் அரசாண்டார்கள் என்பது சொல்லாமலே விளங்குகிறது. ஆகவே, முதுகுடுமிப் பெருவழுதியைக் களப்பிரர் வென்று பாண்டி நாட்டைப் பிடித்துக் கொண்டார்கள் என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது தவறாகிறது. “நீடு புக்தி துய்த்தபின் அளவரிய ஆதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் களபரனென்னுங் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கிய பின்” என்று வேள்விக்குடி சாசனம் தெளி வாகக் கூறுகிறபடியினாலே, முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகும் பல பாண்டிய அரசர்கள் பாண்டிநாட்டை அரசாண்டார்கள் என்பதும், அதன் பின்னரே களப்பிரர் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதோடு தானங்கொடுக்கப்பட்ட வேள்விக்குடியையும் பறித்துக் கொண்டார்கள் என்பதும் ஐயமற விளங்குகின்றன. எனவே, முதுகுடுமிப் பெருவழுதியைக் களப்பிரர் வென்று பாண்டி நாட்டினைக் கைப்பற்றினார்கள் என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது சாசனச் சான்றுக்கு மாறுபட்டதாகும். ஆகவே, அவருடைய முடிவு முற்றிலும் தவறாகிறது. இரண்டாவதாக: பாண்டியன் மரபில் வந்த கடுங்கோன் என்னும் அரசன், களப் பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான் என்றும் கடுங் கோன் காலத்தில் முதற் சங்கம் அழிந்தது என்றும் சுப்பிரமணிய ஐயர் தமது கட்டுரையில் கூறுகிறார். இதில் முற்பகுதி சரியானது; பிற்பகுதி தவறானது. கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான் என்பது வேள்விக்குடி சாசனத் தின்படி உண்மையே. ஆனால், இந்தக் கடுங்கோன் காலத்தில்தான், இறையனார் களவியல் உரையின்படி, தலைச் சங்கம் அழிந்தது என்று கூறுவது தவறானது. பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான் என்பதை வேள்விக்குடி சாசனம் இவ்வாறு கூறுகிறது : “களபரனென்னுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கிய பின் படுகடன் முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிரவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங் கோலோச்சி வெண்குடை நீழற்றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பாலுரிமை திறவிதினீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த மானம் பேர்த்த தானை வேந்தன் னெடுங்கா மன்ன ரொளி நகரளித்த கடுங்கோனென்னுங் கதிர்வேற் றென்னன்.” இவ்வாறு வேள்விக்குடி சாசனம் கூறுவதனாலே, கடுங்கோன் களப்பிரரிடமிருந்து பாண்டி நாட்டை மீட்டுக் கொண்டான் என்பது தெரிகிறது. ஆனால், இந்தக் கடுங்கோன் காலத்தில் முதற் சங்கம் அழிந்தது என்று சுப்பிரமணிய ஐயர் கருதுவது தவறு. இது பற்றி வேள்விக்குடி சாசனம் ஒன்றுமே கூறவில்லை. இந்தச் சாசனம் கூறுகிற கடுங்கோன், அதாவது, களப்பிரரிடமிருந்து பாண்டி நாட்டை மீட்டுக் கொண்ட பாண்டியன் கடுங்கோன், முதற்சங்க காலத்தில் இருந்த கடுங் கோன் அல்லன். அவன் வேறு, இவன் வேறு. கடுங்கோன் என்னும் பெயர் ஒற்றுமையைக் கொண்டு, வெவ்வேறு காலத்திலிருந்த இருவரையும் ஒருவர் என்று தவறாகக் கருதுகிறார் சுப்பிரமணிய ஐயர். முதற் சங்க காலத்தின் இறுதியில் இருந்த பாண்டியன் கடுங்கோன், கடல் கொண்ட மதுரையில் இருந்தான் என்று இறையனார் அகப் பொருள் உரையினால் அறிகிறோம். “அவர்களைச் (தலைச் சங்கத்தாரை) சங்கம் இரீ இயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோ னீறாக எண்பத் தொன்பதின்மர் என்க ... ... அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்க.” என்று இறையனார் அகப்பொருளுரைப் பாயிரம் கூறுகிறது. களப்பிரரிடமிருந்து பாண்டிநாட்டை மீட்டுக்கொண்ட கடுங் கோன், II முதற்சங்க காலத்தில் இருந்த மதுரையைக் கடல் கொண்ட பிறகு, இடைச்சங்க காலத்திலிருந்த கபாடபுரத்தையுங் கடல்கொண்ட பிறகு, இப்போதுள்ள மதுரையில் கடைச் சங்கம் இருந்து மறைந்த பிறகு அரசாண்டவன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த கடுங்கோனை யும் I பல நூற்றாண்டுகளுக்குப் பின்பிருந்த கடுங்கோனையும் II ஒன்றாகப் பிணைத்து அவ் விருவரும் ஒருவரே என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது பெருந்தவறு. ஆகவே அவருடைய முடிவும் தவறாகிறது. மேலும், கடுங்கோன் அல்லது கடுங்கோ என்னும் பெயர் அக் காலத்தில் ஓர் அரசனுக்கு மட்டும் வழங்கிய பெயர் அன்று. பல அரசர் அப் பெயரைக் கொண்டிருந்தனர். செல்வக் கடுங்கோ, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, மாந்தரன் பொறையன் கடுங்கோ என்று பெயர் பெற்றிருந்த சேர அரசர்களின் பெயர்களைக் காண்க. இதுபோன்று பாண்டிய அரசரிலும் கடுங்கோ அல்லது கடுங்கோன் என்னும் பெயருள்ள அரசர் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே, இறையனார் அகப் பொருளுரைப் பாயிரம் கூறுகிற கடுங்கோன் வேறு, வேள்விக்குடி சாசனம் கூறுகிற கடுங்கோன் வேறு என்பது ஐயமற விளங்குகிறது. மூன்றாவதாக: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்தான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்துக்குப் பல தலைமுறைக்கு முன்பு முதுகுடுமிப் பெருவழுதி இருந்தான் என்று மதுரைக்காஞ்சியிலிருந்து தெரிகிறது. சுப்பிரமணிய ஐயரும் இதை ஒப்புக்கொள்கிறார். இது மட்டும் சரியே. ஆனால், மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய தலை யாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், வேள்விக்குடி சாசனம் கூறுகிற கடுங்கோனின் பேரனாகிய செழியனும் ஒருவரே என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது தவறு. நெடுஞ்செழியன் - செழியன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன என்று இவர் யூகிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. மேலும், இவர் கூறுவது போல, வேள்விக்குடி சாசனம், கடுங்கோனின் பேரனைச் செழியன் என்று கூறவில்லை; சேந்தன் என்று கூறுகிறது.3 சாசனத்தின் வாசகம் இது : “ மற்றவற்கு மருவினிய மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வெளிப்பட்டு விலங்கல்வேல் பொறிவேந்தர் வேந்தன் சிலைத்தடக்கை கொலைக்களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன்.” இச்சாசனத்தில், பட்டியலில் 3-ஆம் எண்ணுள்ள பாண்டி யனுக்குச் செழியன், வானவன், சேந்தன் என்னும் பெயர்கள் கூறப் படுகின்றன. செழியன் என்பது பாண்டிய அரசர்களின் பொதுப்பெயர். வானவன் என்பது சேரஅரசர்களின் பொதுப்பெயர். சேரநாட்டை வென்று ஆண்ட படியால் இவன், சேர அரசரின் பொதுப் பெயராகிய ‘வானவன்’ என்னும் பெயரைச் சூடிக்கொண்டான். சேந்தன் என்பது இவனுடைய இயற் பெயர். சுப்பிரமணிய ஐயர் இவனுடைய இயற்பெயரைச் செழியன் என்று தவறாகக் கருதுகிறார். சேந்தன் என்பதே இவனுடைய இயற்பெயர். சுப்பிரமணிய ஐயர் இவனுடைய இயற்பெயரைச் செழியன் என்று தவறாகக் கருதுகிறார். சேந்தன் என்பதே இவனுடைய இயற் பெயர். இதனை மேலே காட்டிய சாசனத்தில் வாசகத்தினால் அறிகிறோம். எனவே, “மதுரைக்காஞ்சி”த் தலைவனான நெடுஞ்செழியன் வேறு, வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படுகிற கடுங்கோனின் பேரனாகிய சேந்தன் வேறு. சேந்தனைச் செழியன் என்று கருதிக்கொண்டு அவனை நெடுஞ்செழியனுடன் பிணைத்து விடுகிறார் சுப்பிரமணிய ஐயர். இது தவறான ஆராய்ச்சி அல்லவா? இவ்வாறு தவறான முடிபைக் கொண்டு மதுரைக் காஞ்சியின் காலமும், அதன் தலைவனான நெடுஞ்செழியன் காலமும் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்றும், ஆகவே கடைச்சங்க காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்றும் சுப்பிரமணிய ஐயர் கூறுவது பெருந் தவறு. வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படும் கடுங்கோனின் பேர னாகிய சேந்தன் (செழியன் என்பது தவறு) ஐயரின் ஆராய்ச்சிப்படி கி.பி.620 முதல் 65) வரை அரசாண்டவனாக இருக்கலாம். அதுபற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை. இங்கு நாம் கூறுவது நெடுஞ்செழியன் வேறு, செழியன் (சேந்தன்) வேறு என்பதே. வேள்விக்குடி சாசனம் கூறுகிற, “செழியன் வானவன் செங்கோற் சேந்தன்”, சுப்பிரமணிய ஐயர் கருதுவதுபோல மதுரைக் காஞ்சியின் தலைவனான தலையாலங்கானத்துச் செருவேன்ற நெடுஞ் செழியனாக இருந்தால், அவனுடைய பெரும் புகழாகிய இரு பெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் ஒரே போர்க்களத்தில் தன்னந் தனியனாய் வென்ற வெற்றியைச் சாசனம் தவறாமல் கூறியிருக்கும் அல்லவா? அரசர்கள் தங்கள் புகழையும் தமது முன்னோருடைய புகழையும் (சிறப்பாகப் போரில் வெற்றி பெற்ற செய்தியை) தம் சாசனங்களில் எழுதுவது வழக்கம். இதனாலும் நெடுஞ்செழியன் வேறு, சேந்தன் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. சுப்பிரமணிய ஐயரின் ஆராய்ச்சிக் கட்டுரையில் இத்துணைத் தவறுகளும் பிழைகளும் காணப்படுகின்றன. தவறுகளையும் பிழை களையும் ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்த முடிவுகளும் தவறாகவே முடிந்தன. எனவே, மதுரைக் காஞ்சியின் காலமும் அதன் தலைவ னாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் காலமும் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்று ஐயர் கண்ட முடிபு தவறாகிறது. அன்றியும், கடைச்சங்க காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்று அவர்கள் கண்ட முடிபும் தவறாகிறது. அப்படியாயின், மதுரைக்காஞ்சியின் காலமும், அதன் தலைவனான பாண்டியன் நெடுஞ்செழியன் காலமும் எது என்னும் கேள்வி எழுகிறது. இதற்கு விடை ஆராய்வோம். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்தான் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது. “பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல” மகிழ்ந்து இனிது உறைவாயாக என்று நெடுஞ்செழியனை மதுரைக் காஞ்சி வாழ்த்துகிறது. எனவே, முதுகுடுமிப் பெரு வழுதிக்குப் பிற்காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்ந் திருந்தான் என்பது தெரிகிறது. இது இவன் காலத்துக்கு மேல் வரம்பு. கீழ் வரம்பு, களப்பிரர் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதற்கு முந்திய காலம். அதாவது, முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின்பும், களப்பிரர் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்பும் உள்ள காலத்தில் நெடுஞ்செழியன் வாழ்ந்தான். இதனைச் சிறிது விளக்குவோம். களப்பிரர் பாண்டிநாட்டை மட்டும் கைப்பற்றவில்லை; சேரம், சோழம், பாண்டியம் என்னும் மூன்று நாடுகளையும் ஒரே சமயத்தில் கைப்பற்றினார்கள். களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியர்களை வென்று அவர்களுக்குக் காலில் தளையிட்டபோது அம்மூவரும் பாடிய வெண்பாக்கள் தனிப் பாடற்றிரட்டில் காணப்படுவது இதற்குச் சான்றாகும். களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றிய காலம் உறுதியாகத் தெரியவில்லை. ஏறக்குறையக் கி.பி.300-இல் கைப்பற்றியிருக்கலாம். கி.பி.450-இல் களப்பிரப் பரம்பரையைச் சேர்ந்த அச்சுவிக்கந்தன் (அச்சுத களப்பாளன்) என்னும் அரசன் அரசாண்டான் என்பது உறுதியாகத் தெரிகிறது. முதல் முதலில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றியது ஏறக்குறையக் கி.பி.300 என்று கொள்வது தவறாகாது. ஆகவே, பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி.300-க்கு முற்பட்ட காலத்தில் இருந்தவன் என்பது தெரிகிறது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெடுஞ்செழியன் இருந்தான் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.4 பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியாது; கி.பி.300-க்கு முந்திய (களப்பிரர் வருவதற்கு முந்திய) காலத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதற்குச் சரித்திரச் சான்று உண்டு. அதனைச் சுருக்கமாகக் கூறுவோம். களப்பிரர் சேர சோழ பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்ட போது அம்மூவேந்தரும் களப்பிரருக்குக் கீழடங்கி இருந்தார்கள். அக் காலத்தில் தொண்டைநாட்டைப் பல்லவ அரசர்கள் அரசாண்டனர். களப்பிரர் ஏறக்குறைய 250 ஆண்டு அரசாண்டனர். பிறகு ஏறக் குறையக் கி.பி.550-இல் பல்லவ அரசனான சிம்மவிஷ்ணு, சோழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அங்கு அரசாண்டிருந்த களப் பிரனை வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக்கொண்டான் என்று பல்லவ சாசனங்கள் கூறுகின்றன. இதனை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். சிம்மவிஷ்ணு களப்பிரரிட மிருந்து சோழநாட்டைக் கைப்பற்றிய அதே காலத்தில் பாண்டியன் கடுங்கோன் களப்பிரனுடன் போர் செய்து தனது பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான். வேள்விக்குடி சாசனத்தை ஆராய்ந்து அதில் கூறப்படுகிற பாண்டிய அரசர்களின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால் இது நன்கு விளங்கும்.5 அதே சமயத்தில்தான் சேரனும் களப்பிரனிட மிருந்து தனது நாட்டை மீட்டுக்கொண்டான். அதாவது, பாண்டியன் கடுங்கோனும் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சேரனும் ஒரே சமயத் தில் களப்பிர அரசர்களை எதிர்த்துப் போராடி முறையே பாண்டி நாட்டையும் சோழநாட்டையும் சேரநாட்டையும் மீட்டுக் கொண்டனர். இது நிகழ்ந்தது பல்லவ சாசனத்தின்படி ஏறக்குறையக் கி.பி.550-இல் ஆகும். சோழ நாட்டைப் பல்லவன் கைப்பற்றிய படியால் அது வரையில் களப் பிரருக்குக் கீழடங்கியிருந்த சோழர் பிறகு பல்லவ அரசர்களுக்குக் கீழடங்கியிருந்தனர். அதாவது, ஏறக்குறையக் கி.பி.300 முதல் 900 வரையில் சோழ மன்னர் முதலில் களப்பிரருக்கும் பின்னர்ப் பல்லவ மன்னருக்கும் அடங்கியிருந்தனர். இது வரலாற்று ஆசிரியர் எல்லோரும் அறிந்த வரலாற்று உண்மை இந்த வரலாற்று உண்மையை ஆதார மாக வைத்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பாண்டியன் நெடுஞ் செழியன் களப்பிரர் காலத்துக்கு முன்பு (கி.பி.300-க்கு முன்பு) வாழ்ந்திருந் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. எப்படி என்பதைக் கூறுவோம். தலையாலங்கானத்துப் போர்க்களத்திலே, பாண்டியன் நெடுஞ் செழியன், சேரன், சோழன் என்னும் இரு பெருவேந்தரையும் குறுநில மன்ன ராகிய ஐந்து வேளிரையும் வென்றான் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. “இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருதவரைச் செருவென்று.” என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது.6 “சேரன் சோழனாகிய இரு பெரு வேந்தருடனே குறுநில மன்னரும் இளைக்கும்படிப் பொருது அவரைப் போரில் வென்று” என்று நச்சினார்க்கினியர் இதற்கு உரை எழுதுகிறார். நெடுஞ்செழியன் போரில் வென்ற அரசர்களில் சோழனும் ஒருவன். அச்சோழன் பெருவேந்தனாக முடிபுனைந்து முரசுடை வேந்தனாக இருந்தான் என்று மதுரைக்காஞ்சியினால் அறிகிறோம். அந்தச் சோழன் கி.பி.300-க்கு முன்பு இருந்தவனாதல் வேண்டும். ஏனென்றால், கி.பி.300 முதல் 900 வரையில் சோழ மன்னர்கள் களப்பிரருக்கும் பல்லவ மன்னருக்கும் கீழடங்கியிருந்தார்கள். ஆகவே, இந்தக் காலத்தில் சோழர் பரம்பரையில் முடிபுனைந்து சுதந்தரராக அரசாண்ட பெரு வேந்தர் இருந்திருக்க முடியாது. எனவே, பாண்டியன் நெடுஞ்செழிய னுடன் போர் செய்த சோழப் பெருவேந்தன் கி.பி.300-க்கு முன்புதான் இருந்திருக்க முடியும். இதனால், தலையாலங்கானத்துப் போர் வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி.300-க்கு முன்னர் இருந்தவனாதல் வேண்டும் என்பது தெரிகிறது. எனவே மதுரைக்காஞ்சி இயற்றப்பட்ட காலமும், அதனை இயற்றிய மாங்குடி மருதனார் காலமும் கி.பி.300-க்கு முற்பட்ட காலம் என்பது தெரிகிறது. அதாவது, கடைச்சங்க காலம் கி.பி.300-க்கு முற்பட்ட காலம் என்பது உறுதியாகிறது. அப்படியானால், கி.பி.300-க்கு முன்னே மதுரைக்காஞ்சி எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று கேட்கலாம். கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியிலாவது, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலாவது மதுரைக்காஞ்சி இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்று சில சான்றுகளினால் தெரிகிறது. இங்கு இடம் இல்லாத படியால், அதற்குரிய சான்றுகளைக் காட்டி இங்கு ஆராய முற்படவில்லை. இதுகாறும் ஆராய்ந்ததன் தொகுப்பு இது : பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விக்குடி என்னும் ஊரைக் கொற்கை கிழான் கொற்றனுக்குத் தானமாகக் கொடுத்தான். முதுகுடுமிப் பெரு வழுதிக்குப் பிறகு சில தலைமுறை கழிந்தபின் பாண்டியன் நெடுஞ் செழியன் இருந்தான். இவன்மீது மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். நெடுஞ்செழியனுக்குச் சில தலைமுறைக்குப் பின்னர்க் களப்பிரர் என்னும் அரசர் சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழகம் முழுவதையும் அரசாண்டனர். களப்பிரர் ஏறக்குறைய 250 ஆண்டு அரசாண்டனர். அக் காலத்தில் தொண்டை நாட்டைப் பல்லவ அரசர் ஆட்சி செய்தனர். கி.பி.550-இல் பல்லவ அரசன் சிம்மவிஷ்ணுவும் பாண்டியன் கடுங்கோனும் சேர மன்னனும் களப்பிரரைத் தாக்கிப் போர் செய்து அவர்களிடமிருந்து முறையே சோழ நாட்டையும் பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் மீட்டுக் கொண்டனர். ஆகவே, களப்பிர அரசர் வீழ்ச்சியடைந்து சிற்றரசராயினர். சோழர் பரம்பரையினர் மட்டும் சுதந்தரம் பெறாமல் பல்லவ அரசருக்குக் கீழடங்கினார்கள். அதாவது, கி.பி.300-க்கும் 900-க்கும் இடைப்பட்ட காலம் வரையில் சோழர் களப்பிரருக்கும் பல்லவருக்கும் கீழடங்கிச் சிற்றரசராக இருந்தனர். இந்தக் காலத்தில் சோழர் பரம்பரையில் சுதந்தரராக அரசாண்ட முடிமன்னர் ஒருவரும் இலர். எனவே கி.பி.300-க்கு முன்னர் சுதந்தரராக இருந்த சோழப் பெருவேந்தனுடன் பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்து வென்றான். அந்தக் காலம் கி.பி.300-க்கு மேற்பட்ட காலம். எனவே சங்க காலம் என்பது கி.பி.300-க்கு முற்பட்ட காலமாகும். *** 7. வருணன் வணக்கம்* நிலத்தை அதன் இயற்கைக்கு ஏற்பக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து பிரிவாகப் பிரித்தனர். பண்டைத் தமிழர் அவ்வாறு பிரித்த ஒவ்வொரு நிலப்பிரிவுக்கும் ஒவ்வொரு தெய்வத்தை அமைத்து வழிபட்டார்கள். மலை நாடாகிய குறிஞ்சிக்குத் தெய்வம் முருகன். காட்டு நிலமாகிய முல்லைக்குத் தெய்வம் மாயோன் என்னும் திருமால். வயல் நாடாகிய மருதத்துக்குத் தெய்வம் வேந்தன் என்னும் இந்திரன். கடற்கரைப் பகுதியாகிய நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன். வளம் அற்ற பாலை நிலத்துக்குத் தெய்வம் கொற்றவை ஆகிய காளி. மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் இச்செய்தி கூறப்படுகிறது. மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்-பொருள் அகத்திணையியல் - 5) இந்தக் கட்டுரையிலே கடல் தெய்வமாகிய வருணனைப் பற்றிச் சிறப்பாக ஆராய்வோம். வருணன் மேய பெருமணல் உலகம் என்பது வருணனுக்கரிய நெய்தல் நிலம் ஆகும். அலைகடலைத் தமது வாழ்க்கைக் களமாகக் கொண்டு கடற்கரையில் வாழ்கின்ற பட்டின வரும், கடல் கடந்து கப்பல் வாணிகம் செய்யும் வணிகப் பெருமக்களும் பண்டைக் காலத்தில் வருணனைத் தமது வழிபடு கடவுளாகக் கொண் டிருந்தார்கள். எனவே, கடற்றெய்வமாகிய வருணன், கடற்கரை ஊர்களில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வளிக்கும் தெய்வமாக விளங்கிற்று. வருணனைப் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் அதிகமாகக் காணப்படவில்லை. ஏனைய முருகன், திருமால், இந்திரன், கொற்றவை என்னும் தெய்வங்களைப் பற்றிச் சங்கநூல்களில் பல செய்திகள் கிடைக்கின்றன. ஆனால், வருணனைப் பற்றிய செய்திகள் கிடைக்க வில்லை. இதனால், கடைச்சங்க காலத்தி லேயே வருணன் வழிபாடு மறைந்துவிட்டது என்று கருதலாம். வருணன் வழிபாடு மறைந்ததற்குக் காரணமும் உண்டு. அஃதென்ன காரணம் என்றால், மணிமேகலை என்னும் கடற்காவல் தெய்வத்தின் வழிபாடு புதிதாகப் புகுந்ததுதான். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்த மதம் தமிழ் நாட்டில் இடம் பெற்றது. பௌத்த மதத்தின் சிறு தெய்வங்களில் மணிமேகலா தெய்வமும் ஒன்று. மணிமேகலை கடற்காவல் தெய்வம். கடற் காவல் தெய்வம். கடலில் செல்பவர்களுக்கு இடுக்கண் நேராமல் பாதுகாக்க வேண்டியது மணிமேகலையின் கடமை. எனவே, பௌத்த சமய மணிமேகலை வந்தபிறகு பழைய வருணன் வணக்கம் பையப் பைய மறைந்து போயிற்றுப் போலும். இக்காரணத்தினால் போலும் கடைச் சங்க நூல்களிலே வருணனைப் பற்றிய செய்திகள் காணப் படவில்லை. தொல்காப்பியத்திலே வருணன் பெயர் கூறப்பட்டது. பிறகு சிலப்பதிகாரத்திலே வருணனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அக்குறிப்பிலும் வருணன் என்னும் பெயர் கூறப்படாமல் கடற்தெய்வம் என்று மட்டும் கூறப்படுகிறது. “கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்தெய்வங் காட்டிக்காட்டி யரியசூன் பொய்த்தார் அறனிலரென் றேழையம்யாங் கறிகோமைய” (சிலம்பு : கானல்வரி - 5) “பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் தெய்வநின் மலரடி வணங்குவதும்” (சிலம்பு : கானல்வரி - 51). இவையன்றி, வருணனைப் பற்றிய வேறு குறிப்புகளைச் சங்க நூல்களில் நான் காணவில்லை. ஆகவே, இத்தெய்வத்தைப்பற்றிய முழு வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி.2-ஆம் நூற்றாண் டிலேயே வருணன் வழிபாடு தமிழ்நாட்டில் மறக்கப்பட்டு மறைந்து போயிற்று என்று கருதலாம். ஆனால், வருணன் வழிபாடு மிகப் பழங் காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழரைப்போலவே ஆரியரும் வருணனை வணங்கினார்கள். ஆனால், தமிழரின் வருணன் வேறு; ஆரியரின் வருணன் வேறு. இவ்விரு வருணருக்கும் பெயர் ஒற்றுமை தவிர வேறு ஒற்றுமைகள் இல. இங்கு, இரண்டு வருணர்களைப்பற்றிய ஆராய்ச்சியில் புக வேண்டுவதில்லை. தமிழ் வருணனும் ஆரிய வருணனும் ஆதியில் வெவ்வேறு தெய்வங்களாக இருந்தனர். பின்னர், திராவிட தெய்வங் களுக்கும் ஆரிய தெய்வங்களுக்கும் பிற்காலத்தில் தொடர்பு கற்பிக்கப்பட்டதுபோல, இந்த வருணர்களுக்கும் தொடர்பு கற்பிக்கப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்திலே தமிழரில் நாகர் என்னும் பெயருள்ள இனத்தினர் இருந்தனர் என்பது சங்க நூல்களினால் தெரிகிறது. நாகர் கடற்கரைப் பகுதிகளிலே வாழ்ந்தனர் என்பதும் அவர்கள் கடல்மீது கலத்தில் சென்றனர் என்பதும் தெரிகின்றன. அவர்கள் இப்போது பட்டினவர் என்று கூறப்படுகிற நெய்தல் நில மக்களின் இனத்தவர் போலும். கடற்கரைப் பக்கங்களில் வசித்த அவர்கள் வருணனை வணங்கினார்கள் போலும். வருணன் வழிபாடு, தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்ததாகக் கருத வேண்டா. தமிழகத்தை அடுத்துள்ள இலங்கைத் தீவிலும் வருணன் வழிபாடு பண்டைக் காலத்தில் நிகழ்ந்தது. வருணன் வழிபாடு மட்டு மன்று, ஏனைய முருகன், திருமால், இந்திரன் வழிபாடுகளும் இலங்கைத் தீவிலே நடைபெற்றன. இலங்கையில் நிகழ்ந்த இந்தக் கடவுளர் வழி பாட்டைப்பற்றிப் பின்னர் விரிவாக ஆராய்வோம். இப்போது, வருணன் வணக்கம் இலங்கையில் நிகழ்ந்ததைப் பற்றி மட்டும் கூறுவோம். இலங்கைத்தீவிலே வருணன் வழிபாடு தொன்றுதொட்டு நடை பெற்றுவந்தது. தமிழ்நாட்டில் நிகழ்ந்ததுபோலவே இலங்கையிலும் வருணன் வழிபாடு கடற்கரைப் பகுதிகளிலேதான் நிகழ்ந்தன. இலங்கைத் துவின் தென்கோடியிலே, கடற்கரை ஓரத்திலே தேவுந்தா என்னும் நகரம் உண்டு. தேவுந்தர என்பது தேவிநுவர என்பதன் திரிபு. தேவிநுவர என்னும் சிங்கள மொழியின் பொருள் தேவநகரம் என்பது. தேவிநுவர என்னும் சொல்லைச் சிங்களவர் தேவுந்தர என்றும் தேநு வர என்றும் வழங்குவர். தமிழர் தனவா என்று வழங்குவர். ஆங்கிலேயர் தொண்ட்ரா என்று வழங்கினார்கள். இந்த நகரத்திலே உபுல்வன் என்னும் தெய்வத்திற்கு ஒருகோயில் இருந்தது. பேர்போன இந்த உபுல்வன் கோயிலைப் போர்ச்சுகீசியர் 18-ஆம் நூற்றாண்டில் இடித்துத் தகர்த்து அழித்துவிட்டார்கள். சிங்கள மொழியில் உபுல்வன் என்றால் வருணனைக் குறிக்கும். வருணனுக்கு உபுல்வன் என்னும் பெயர் எப்படி உண்டாயிற்று? உதகபால வருணன் என்னும் சொல்லின் சிதைவுதான் உபுல்வன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆட்சி செய்கிறவனென்பது பொருள். சிங்கள இலக்கண முறைப்படி உதகபால என்பது உதபால என்றாகிப் பின்னர் உதபால என்பது உபுல் என்றாயிற்று என்பர். சிங்கள மொழி அறிந்தவர். வன் என்பது வருணன் என்னும் சொல்லின் திரிபு என்பர். வருணன் என்பது வணன் என்றாகிப் பின்னர் வணன் என்பது வன் என்றாயிற்று. எனவே, உதகபால வருணன் என்னும் சொல்லின் திரிபு உபுல்வன் என்பது. உதகபாலன் என்பது நீர்க்கடவுளாகிய வருணனையே குறிக்கும். தேவுந்தர நகரத்தில் கோயில் கொண்டிருந்த உபுல்வன் (உதகபால வருணன்) தெய்வம், கடலிலிருந்து வந்ததாகக் கூறுப்படுகிறது. அப்படி என்றாற் பொருள் என்ன? உபுல்வன், கடல் தெய்வம் என்பது தானே பொருள். உபுல்வன் தெய்வத்தை கிஹிராளி உபுல்வன் என்பவர் சிங்களவர். கிஹிராளி என்றால் செஞ்சந்தன மரம் என்பது பொருள். செஞ் சந்தன மரத்தினால் செய்யப்பட்ட உபுல்வன் (வருணன்) உருவம் கடலில் மிதந்து வந்து தேவுந்தர நகரத்துக் கடற்கரையில் ஒதுங்கியதாகவும் அதனை எடுத்துவந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்ததாகவும் கூறுவர். இலங்கைத் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் கடற்கரை யோரத்தில் வருணனுக்கு ஒரு கோயில் இருந்ததாகத் தெரிகிறது. அக் கோயிலில் எழுந்தருளியிருந்த தெய்வத்திற்குச் சிங்களவர் தெவொல் என்று பெயர் கூறுவர். தெவொல் என்பது உதகபால என்னும் சொல்லின் திரிபு என்பர். உதக, தக, உத என்னும் சிங்களச் சொற்களுக்குத் தண்ணீர் என்பது பொருள் நீர்க்கடவுள் என்னும் பொருள் உள்ள தகபால என்னும் சிங்களச் சொல் தகபல என்றாகி, பிறகு தகபல என்பது தபவல என்றாகி, பின்னர் தயவல என்பது தெவல என்றாகி, தெவல என்பது தெவொல் என்றாயிற்று என்று கூறுவர் சிங்கள அறிஞரான டாக்டர் ளு. பாணவிதன அவர்கள். எனவே தெவொல் என்னும் பெயர் உதக பாலனாகிய வருணனைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. தெவொல் தெய்வம் இலங்கைக்கு வந்த வரலாறு கூறப்படுகிறது. அது என்னவென்றால்: தமிழ்நாட்டுக் கப்பல் வாணி கன் ஒருவன் கடலிற் சென்றுகொண்டிருந்தபோது, அவனுடைய மரக்கலம் உடைந்து, கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அல்லலைக் கண்ட கடற்காவல் தெய்வமாகிய மணிமேகலை (இது பௌத்த மதத்தைச் சேர்ந்த கடற்காவல் தெய்வம்), அவனுக்குக் கல்தெப்பம் ஒன்றைக் கொடுத்து அவனைக் கரையேற்றியது.) அந்த வணிகனுக்கு ஏற்பட்ட கோயில்தான் தெவொல் கோயில். இந்தக் கதையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இதில் சில உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. தமிழ் நாட்டு வாணிகனுக்கு மணிமேகலா தெய்வம் உதவிசெய்திருந்தால் அந்த நன்றிக்காக அவன் கட்டிய கோவிலில் மணிமேகலா தெய்வத்தை வைத்துப் பூசை செய்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக தெவொல் (உதகபாலன்) தெய்வத்தை வைத்துப் பூசை செய்திருக் கிறான். தமிழ்நாட்டு வாணிகன், தனக்கு உதவி செய்த தெய்வம் உதக பாலன் ஆகிய வருணன் என்று நம்பிய படியால் அத்தெய்வத்திற்குக் கோயில் அமைத்து வழிபட்டான். தமிழருடைய பழய கடற் தெய்வம் வருணன் ஆகையால் அந்த முறைப்படி வருணனுக்குக் கோயில் கட்டி வணங்கினான். பின்னர், பௌத்த மதம் பரவிய காலத்தில், பௌத்த மதத்தின் கடற் தெய்வமாகிய மணிமேகலை வணக்கம் ஏற்பட்ட காலத்தில், தமிழ வணிகனுக்குக் கடலில் உதவிசெய்த தெய்வம் மணிமேகலைதான் (வருணன் அல்லன்) என்பதை வற்புறுத்த மணிமேகலை வணிகனுக்கு உதவி செய்தது என்னும் கதை கற்பிக்கப் பட்டதுபோலும். எனவே, தெவொல் தெய்வம் என்பது தமிழரின் வருணன் என்பது உறுதிப்படுகிறது. பழந் தமிழ் நாட்டில் நிகழ்ந்த வருணன் வணக்கம் இலங்கைத் தீவில் எப்போது இடம்பெற்றது? இலங்கைத்தீவு பௌத்தமதத்தின் கோட்டை போன்றது. எனவே, இலங்கைத்தீவில் பௌத்த மதம் பரவிய பிறகு, தமிழரின் வருணன் வணக்கம் இலங்கையில் புகுந்திருக்க முடியாது இலங்கையில் பௌத்தமதம் புகுவதற்கு முன்பே வருணன் வணக்கம் அங்குச் சென்றிருக்வேண்டும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பௌத்தமதம் இலங்கைக்குச் சென்றது என்பது சரித்திர உண்மை. பௌத்தமதம் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு, இலங்கையில் வாழ்ந்திருந்த மக்கள் யாதொரு தெய்வ வழிபாடும் இல்லாமல் மிருகங் களைப்போல வாழவில்லை, அவர்கள், தமிழர் வணங்கிவந்த முருகன், திருமால், இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களை வணங்கிவந்தனர். பௌத்தமதம் இலங்கையில் பரவி வேர் ஊன்றியபிறகும் பழைய தெய்வ வணக்கங்கள் மறைந்துவிட வில்லை. ஆனால், ஒரு மாறுபாடு ஏற்பட்டது. அது என்னவென்றால், புத்தர் வணக்கம் (புத்தர் வழிபாடு) முதன்மை இடம் பெற்றது: முருகன், திருமால், வருணன் முதலிய தெய்வங்கள் பின் அணியில் நின்றன. அதாவது, பழைய தெய்வங்கள் சிறு தெய்வங்களாகக் கருதப்பட்டன. ஆனால், இத்தெய்வங்களின் வணக்கம் மறைந்துவிடவில்லை. இலங்கைத் தீவின் தென்கேடியில் தேவுந்தர நகரத்தில் இருந்த உபுல்வன் (வருணன்) கோயில் போர்ச்சுகீசிய மதவெறியர்களால் தகர்த்து அழிக்கப்பட்டபோதிலும், அத்தெய்வத்திற்கு ஆண்டுதோறும் விழா நடைபெறுகிறதாம். அவ்விழாவில் வருணனுடைய முத்துக் குடை ஊர்வலமாகக் கொண்டுபோகப்படுகிறதாம். வருணன், கடலுக்குத் தெய்வம் ஆகையால், கடலில் கிடைக்கும் சிறந்த பொரு ளாகிய முத்தினால் குடையமைத்து வருணனை வழிபடுகிறார்கள் போலும். இலங்கையில் இருந்த வருணன் வழிபாடு, வடஇந்தியாவி லிருந்து ஆரியர்கள் இலங்கையில் புகுத்திய வழிபாடு என்று சிங்கள அறிஞர்கள் கருதுகிறார்கள். இது தவறான கருத்து, இலங்கைக்கு அருகில் உள்ள தமிழ்நாட்டிலே, சங்க காலத்திலே வருணன் வழிபாடு நிகழ்ந்து வந்தது என்னும் உண்மையை அவர்கள் அறியார். அறிந் திருந்தால் தமிழ் நாட்டிலிருந்து வருணன் வழிபாடு இலங்கைக்குச் சென்றது என்னும் உண்மையை ஒப்புக் கொள் வார்கள். “வருணன் மேய பெருமணல் உலகம்” என்னும் தொல்காப்பிய சூத்திரத்தை ஓதியுணர்ந்து அவர்கள் உண்மையறி வார்களாக. வருணன் வழிபாடு தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலேயே மறைந்துவிட்டது. ஆனால் அந்த வழிபாடு இலங்கையில் சமீபகாலம் வரையில் நிகழ்ந்து வந்தது. ஏன்? கோயில் அழிந்து விட்டபோதிலும், இன்றும் வருணன் திருவிழா நடைபெறுகிறது! வருணனைப் பற்றிய வேறு செய்திகளைப் பின்னர்க் கூறுவோம். *** 8. இலங்கைத் தீவில் வருணன் வணக்கம்* பழந்தமிழ் நாட்டிலே நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடல் தெய்வமாகிய வருணனை வழிபட்டார்கள் என்றும், அவ்வருணன் வழிபாடு தமிழ் நாட்டிலிருந்து இலங்கைத் தீவிலும் பரவியிருந்தது என்றும் சென்ற திங்கள் தமிழ்ப் பொழிலில் எழுதியிருந்தோம். இலங்கைத் தீவில், வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் என்று அழைத்தனர் என்றும், உதகபால வருணன் என்னும் சொல் உபுல்வன் என்று சிங்கள மொழியில் திரிந்து வழங்கிற்று என்றும் எழுதியிருந்தோம். உபுல்வன் என்னும் சிங்கள மொழிச் சொல்லினைப் பாலி மொழியில் உப்பலவண்ணன் என்றும், வடமொழியில் உத்பல வர்ணன் என்றும் மாற்றிப் பிற்காலத்தவர் வழங்கினார்கள். வழங்கியது மட்டுமல்ல, உபுல்வனை (வருணனை) விஷ்ணுவாகவும் மாற்றி விட்டார்கள். இது பிற்காலத்தில் உண்டான மாறுபாடு. ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் சேர்ந்தது உதகபால வருணன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆள்பவன் என்பது பொருள். வருணன் என்றாலும் நீர்க்கடவுள் என்பது பொருள். சிங்களவர் முருகனைக் கந்த குமரன் என்றும் கூறுகின்றனர். கந்தன் என்றாலும் முருகன்; குமரன் என்றாலும் முருகன். ஒரே பொருள் உள்ள இரண்டு சொற்களை இணைத்துக் கந்த குமரன் என்று கூறுவது போலவே, கடல் தெய்வத்தை உதகபால வருணன் என்று வழங்கினார்கள். உதகபால வருணன் என்னும் சொல் பிற்காலத்தில் சிங்கள மொழியில் உபுல்வன் என்று மருவி வழங்கிற்று. இலங்கைத்தீவிலே உரோகண என்னும் பகுதியைக் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட தப்புலன் (தாபுளு சேன்) என்னும் அரச னுடைய சாசனம் ஒன்று, அவ்வரசன் உபுல்வன் என்னும் தெய்வத்தை வழிபட்டான் என்று கூறுகிறது. உபுல்வன் (வருணன்) வழிபாடு இலங்கை யில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் நிகழ்ந்தது. உபுல்வன் கோயில், இலங்கையின் தென்கோடியில் உள்ள தேவுந்தர நகரத்திலே இருந்தது தேவுந்தர நகரம் அக்காலத்தில் உலகப்புகழ் பெற்ற துறைமுகமாகவும் இருந்தது. அத்துறைமுகத்தில் தமிழர், யவனர், அராபியர், சீனர் முதலியோரின் வாணிகக் கப்பல்கள் தங்கின. இந்நகரத்திலிருந்த உபுல்வன் (வருணன்) கோயில் சீனநாடு வரையிலும் புகழ் பெற்றிருந்தது. (இக்காலத்தில் உலகப்புகழ் பெற்றுள்ள கொழும்பு துறைமுகம் அக்காலத்தில் இல்லை. இது பிற்காலத்தில் போர்ச்சு கீசியரால் உண்டாக்கப்பட்டது.) கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே உபுல்வன், விஷ்ணு வாக மாற்றப்பட்டான். உபுல்வன் எப்படி விஷ்ணுவாக மாற்றப்பட்டான்? உபுல்வன் என்னும் சிக்ஙளச் சொல்லை உப்பல வண்ணன் என்று சிங்க மொழியிலும், உத்பல வர்ணன் என்று சம்ஸ்கிருத மொழியிலும் மாற்றினார்கள் என்று முன்னர் சொன்னோம். இவ்வாறு மாற்றப்பட்ட இச் சொல், நீலத்தாமரை நிறமுள்ளவன் அல்லது நீல நிறமுள்ளவன் என்று பொருள் கொண்டது. உப்பலம் அல்லது உத்பலம் என்றால் நீலத் தாமரைக்குப் பெயர். வண்ணம் என்றாலும் வர்ணம் என்றாலும் நீலத் தாமரைக்குப் பெயர். வண்ணம் என்றாலும் வர்ணம் என்றாலும் நிறம் என்பது பொருள். எனவே உத்பல வண்ணன் என்பது நீலத்தாமரைப்பூ போன்ற நிறமுள்ளவன் என்று பொருள் கொண்டு, அது நீலநிறமுடைய விஷ்ணுவைக் குறிக்கும் என்று கற்பிக்கப்பட்டது. இவ்வாறு உபுல்வன் என்னும் வருணன் விஷ்ணுவாக மாற்றப் பட்டான். உபுல்வன் கோயில், விஷ்ணு (திருமால்) கோயிலாகக் கருதப்பட்டது. ஆனால், வழிபாட்டு முறையில், வருணனுக்குரிய வழிபாடும் நடைபெற்றுவந்தது. இவ்வாறு, பிற்காலத்திலே உபுல்வன் கோயிலில் வருணன் வழிபாடும் திருமால் வழிபாடும் நிகழ்ந்தன. பின்னர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில், போர்ச்சு கீசியர் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் தொமெ-டி-ஸெளஸா என்னும் சேனைத் தலைவன் தனது போர் வீரர்களை அழைத்துக் கொண்டுபோய் (கி.பி. 1558-ஆம் ஆண்டு) இந்தக்கோயிலை இடித்துத் தகர்த்து அழித்துப்போட்டான். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்தக் கோயில் இவ்வாறு அழிக்கப்பட்டது. பிறகு, கண்டி நகரத்தில் இருந்து அரசாண்ட இராஜ சிம்மன் (இரண்டாவன்) என்னும் சிங்கள அரசன் கி.பி. (1635-87) அந்தக் கோயில் இருந்த இடத்தில் விஷ்ணு வுக்கு ஒரு கோயில் கட்டினான். பிற்காலத்திலே, கடல் தெய்வமாகிய உபுல்வனை விஷ்ணு வுடன் பொருத்தி அக்கடவுளைத் திருமால் எனக் கற்பித்துவிட்டனர் என்று கூறினோம். உத்பலவர்ணன் என்றால் நீலத்தாமரை நிறம் என்பது பொருள் என்றும் அது நீலநிறமுடைய விஷ்ணுவைக் குறிக்கும் என்றும் உத்பலவர்ணன் என்னும் சொல்லைத்தான் சிங்களவர் உபுல்வன் என்று வழங்கினார்கள் என்றும் பொருத்தங்காட்டினார்கள். இந்தப் பொருத்தம் வெளித்தோற்றத்திற்குச் சரியானதாகத் தோன்றினாலும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது உண்மைக்கு மாறான போலிரக்காரணம் என்பது விளங்கும். சிங்கள அறிஞர்கள் இதுபற்றி ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கூறும் காரணத்தை இங்கு காட்டுவோம். இந்தக் காரணங்களைக் கொண்டு உபுல்வன் என்பது திருமால் ஆகிய விஷ்ணு அல்ல என்பதும், அது வருணன்தான் என்பதும் நன்கு விளங்கிக்கொள்ளலாம். அ. உத்பலவர்ணன் என்பது விஷ்ணு என்பது பொருந்தாது. என்னை? விஷ்ணுவாகிய திருமால் கருமை நிறமுடையவர். ஆகவே அவருக்குக் கார்வண்ணன், கடல்வண்ணன், மேகவர்ணன், பச்சை வண்ணன் என்றெல்லாம் பெயர் உண்டு. ஆனால் உத்பல வர்ணன் என்னும் பெயர் கூறப்படவில்லை. விஷ்ணுவுக்குரிய ஆயிரம் பெயர்களில் (சகஸ்ரநாமம்) உத்பலவர்ணன் என்னும் பெயர் காணப்பட வில்லை. ஆகவே உத்பலவர்ணன் என்பதுதான் உபுல்வன் ஆயிற்று என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. உபுல்வன் என்பது உதகபால வருணன் என்னும் கடல் தெய்வத்தைத்தான் குறிக்கும். விஷ்ணுவைச் சுட்டவில்லை. ஆ. சிங்கள மொழியில் உள்ள திஸர ஸந்தேஸம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது ஒரு தூதுப்பிரபந்தம். இந் நூலின் 18-ஆம் செய்யுளில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படு கின்றது:- “ஸ்ரீயும் சரஸ்வதியும் மகிழ்ச்சியோடு உபுல்வனிடம் தங்கிய பிறகு, ஸ்ரீயை (இலக்குமியைப்) பிரிந்த காரணத்தினால் வருத்தம் என்னும் தீயினால் கருகிக் கருநிறம் அடைந்த விஷ்ணுவைப் போலக் கருநிறம் அடையாமல், பிரமன் பிரமசரியம் காத்து வெண்ணிற மாகவே இருந்தான்”. அதாவது, பிரமன் மனைவியாகிய சரசுவதியும் விஷ்ணுவின் மனைவியாகிய ஸ்ரீயும் உபுல்வனிடத்திலே (வருணன் இடத்திலே) தங்கிவிட்டபடியினாலே விஷ்ணு, ஸ்ரீயைப் பிரிந்த வருத்தத்தினால் கருநிறமானான். ஆனால், பிரமன் சரசு வதியைப் பிரிந்ததனால் வருத்தம் அடையாமல் வெண்ணிற மாகவே இருந்தான் என்பது ³ செய்யுள் கூறும் கருத்து ஆகும். இதிலிருந்து உபுல்வன் வேறு விஷ்ணு வேறு என்பது தெரிகிறது. உபுல்வனும் (வருணனும்) உத்பலவர்ணனும் (விஷ்ணுவும்) ஒருவராகவே இருந்தால், விஷ்ணு தன் மனைவியாகிய ஸ்ரீயைப் பிரிந்து வருந்தினான் என்று கூறுவதில் பொருள் இல்லை அன்றோ? இதனால் உத்பலவர்ணனும் உபுல்வனும் விஷ்ணு வாகிய ஒருவரையே குறிக்கும் என்பது தவறாகிறது. இதனால் உபுல்வனாகிய வருணன் வேறு, உத்பலவர்ணனாகிய விஷ்ணு வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது. இ. கோகில சந்தேசம் என்பதும் ஒரு சிங்கள நூல். இது குயில்விடு தூது. இதுவும், மேலே கூறப்பட்ட திசர சந்தேசத்தைப் போலவே, தேவுந்தர நகரத்தில் கோயில் கொண்டிருந்த உபுல்வனை (வருணனைப்) புகழ்கிறது. இந்நூலின் 21-ஆம் செய்யுள், உபுல்வன் விஷ்ணுவுக்கு நிகரானவன் என்று கூறுகிறது. உபுல் வனும் (வருணனும்) உத்பலவர்ணனும் (விஷ்ணுவும்) ஒருவரே என்றால் இந்த உவமை எப்படிப் பொருந்தும்? உபுல்வன், விஷ்ணுவுக்கு நிகரானவன் என்று கூறுப்படுகிறபடியினாலே, உபுல்வன் வேறு உத்பலவர்ணன் வேறு என்பதும் இருவரும் ஒருவர் அல்லர் என்பதும் தெரிகின்றன. ஈ. மயூர சந்தேசம் என்பதும் ஒரு சிங்கள நூல். இது மயில் விடு தூது. இதுவும் உபுல்வனைப் பற்றிய நூல். இந்நூலின் 151-ஆம் செய்யுள், தேவுந்தர நகரத்தில் எழுந்தருளியிருந்த உபுல்வனுக்கு இரண்டு கைகள் இருந்தன என்று கூறுகிறது. உபுல்வன், உத்பல வர்ணனாக (விஷ்ணுவாக) இருந்தால் அவருக்கு நான்கு திருக் கைகள் கூறப்படவேண்டும். விஷ்ணுவுக்குச் சங்கு சக்கரம் ஏந்திய இரண்டு கைகளும் வாத அபயம் அளிக்கும் இரண்டு கைகளும் ஆக நான்கு கைகள் உண்டல்லவா? இரண்டு கைகளைக் கூறுகின்றபடியினால், உபுல்வன் வருணனே, விஷ்ணு அல்லன் என்பது விளங்குகிறது. உ. தேவுந்தர நகரத்தில் இருந்த பழைய வருணன் கோயில், பிற் காலத்தில் (15-ஆம் நூற்றாண்டில்) விஷ்ணு கோயிலாக மாற்றப் பட்டபோதிலும் அக்கோயிலில் வருணன் வழிபாடு அறவே மறக்கப்படவில்லை. விஷ்ணு வழிபாட்டுடன் பழைய வருணன் வழிபாடும் நடைபெற்று வந்தது. வருணனுக்குரிய சிறப்புப் பொருள் முத்துக் குடையாகும். வருணன், கடல் தெய்வம் ஆகையினால், கடல் படுபொருள்களில் சிறந்ததும் விலை யுயர்ந்ததும் ஆகிய முத்துக்குடை வருணனுக்குரிய சிறப்புப் பொருள் ஆம். தேவுந்தர நகரத்துக்கோயில் இப்போது விஷ்ணு கோயிலாகக் கருதப்படுகிறபோதிலும் அங்கு நடைபெறுகிற ஆண்டுவிழாக் காலத்தில் வருணனுடைய முத்துக் குடை ஊர்வலம் சிறப்பாகக் செய்யப்படுகிறது. அன்றியும் அக் கோவிலில் சத்ரக் கிருகம் என்னும் திருவுண்ணாழிகை உண்டு. சத்ரக் கிருகம் என்றால் குடை இருக்கும் அறை என்பது பொருள். வருணனுடைய முத்துக் குடை அங்கு வைக்கப் பட்டிருக்கிறது. இதனால் உபுல்வன் கோயில் என்பது வருணன் கோயில் என்பது நன்கு விளங்குகிறது. விஷ்ணுவுக்குச் சிறப்பு செய்வதென்றால், திருவிழாக் காலத்தில் விஷ்ணுவுக்குரிய சக்கரம் (சக்கரத்தாழ்வார்) அல்லவோ வீதிவலம் வரவேண்டும்? அதுவன்றோ மரபு? அவ்வாறில்லாமல், முத்துக் குடை முதன்மை இடம்பெற்று ஊர்வலம் வருகிறது என்றால், அது வருணனுக்குரிய சிறப்பு விழா என்பதில் ஏதேனும் ஐயம் உண்டா? பழமையாகத் தொன்றுதொட்டு இலங்கையில் தேவுந்தர நகரத்திலே இருந்த வருணன் கோயிலைப் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றிவிட்டபோதிலும், உபுல்வன் முழுவதும மறக்கப் படவில்லை. உபுல்வன் (வருணன்) உதகபாலனாகிய வருணனே. உத்பலவருணன் என்பது உபுல்வன் ஆயிற்று என்பதும் தவறு. உபுல்வன் என்னும் சிங்களச் சொல்லிலிருந்து உத்பலவர்ணன் என்னும் சொல் கற்பிக்கப்பட்டு, பிறகு அச்சொல் விஷ்ணுக்குப் பெயர் என்று கூறப்பட்டது. இது ஆராய்ச்சியில் பிழைபடுகிற தென்பது மேலே விளக்கப்பட்டது. கி.மு 3-ஆம் நூற்றாண்டிலிருந்து, அசோக சக்கரவர்த்தி காலம் முதல், இலங்கை பௌத்தமத நாடாக இருந்து வருகிறது. பௌத்த மதத்தில் வருணன் வணக்கம் கூறப்படவில்லை. வருணன் வணக்கம் பௌத்தருக்குரியதன்று. பௌத்த மதத்துக்கு உரிய கடல்தெய்வம் மணிமேகலை ஆகும். ஆனால், மணிமேகலைக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்யப்படவில்லை. பௌத்த நாடாகிய இலங்கைத் தீவிலும் மணிமேகலைக்குக் கோயிலும் வழிபாடும் கிடையாது. வருணன் என்னும் கடல் தெய்வத்துக்கு மட்டும் இலங்கை யில் கோயிலும் வழிபாடும் உண்டு. அப்படியானால், இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளாகப் பௌத்த நாடாக இருந்துவருகிற இலங்கைத்தீவிலே வருணன் வணக்கம் எப்போது நுழைந்தது? இலங்கைத் தீவு முன் ஒரு காலத்தில் தமிழ் நாட்டுடன் இணைந் திருந்தது. பின்னர் அவ்வப்போது கடற் பெருக்கு ஏற்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் உடைப்புண்டு இலங்கை தனித் தீவாகப் பிரிந்துபோய்விட்டது. இச்செய்தியை நில நூல் வல்ல அறிஞர்கள் கூறுகிறார்கள். இலங்கை நூல்களாகிய மகாவம்சம், தீபவம்சம் என்னும் நூல்களும், வெவ்வேறு காலத்தில் இலங்கையில் நிகழ்ந்த இரண்டு பெரிய கடல்கோள்களைக் கூறுகின்றன. இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்த நிலப்பரப்பு இரண்டு பெரிய கடல் கோள்களினால் அழிந்துபோயின என்றும். ஆயிரக்கணக்கான ஊர்கள் கடலில் மூழ்கிவிட்டன என்றும் அந்நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழ் நூல்களும், கன்னியாகுமரிக்குத் தெற்கே நிலப்பரப்பு இருந்தது என்றும் அங்குப் பாண்டியனுடைய தலைநகரங்கள இருந்தன என்றும் பிற்காலத்தில் இரண்டு பெரிய கடல் கோள்களினால் அந்நிலப்பரப்பு கடலில் மூழ்கி மறைந்து விட்டது என்றும் கூறுகின்றன. இந்த மூன்று செய்திகளையும் இணைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, இலங்கைத் தீவும் வேறு சில நிலப்பகுதிகளும் முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டுடன் இணைந்திருந்தன என்றும், பின்னர் அவ்வப்போது நிகழ்ந்த கடல் கோள்களினால் சில பகுதிகள் கடலில் முழுகி மறைந்தும் ஒரு பகுதி இலங்கைத் தீவாகப் பிரிந்தும் போயிற்று என்றும் தெரிகின்றன. இது நிகழ்ந்தது ஏறக்குறைய இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். இலங்கை தனித் தீவாகப் பிரிந்துபோவதற்கு முன்னே, அது தமிழ் நாட்டுடன் சேர்ந்திருந்த காலத்தில், தமிழருடைய பழைய தெய்வமாகிய வருணன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள் அங்குப் பரவியிருக்க வேண்டும். அக்காலத்தில் சிங்கள வரும் பௌத்த மதமும் அப்பகுதியில் இல்லை. அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்தவர் நாகரும், இயக்கரும், வேடரும் ஆவர் அவர்கள், தமிழரைப் போலவே வருணன், முருகன், திருமால் முதலிய தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், கடல் கோள்களினால் நிலம் உடைப்புண்டு இலங்கை தனித் தீவாகப் பிரிந்துபோன பிறகும், இத்தெய்வங்களையே அவர்கள் வணங்கி வந்தார்கள். பிறகு, ஏறக்குறைய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், விசயன் என்னும் வடநாட்டரசன் தனது தோழர்களுடன் இலங்கைக்கு வந்து, அங்கிருந்த இயக்கர், வேடர்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் விசயனும் அவனைச் சேர்ந்தவர்களும் பாண்டியன் மகளையும் பாண்டி நாட்டுப் பெண்களையும் முறையே மணஞ் செய்து கொண்டனர். இவர்களின் சந்ததியார்தான் சிங்களவர். பின்னர் நாகர் இயக்கர் முதலியவர்களும் சிங்களவருடன் கலந்து சிங்களவராயினர். ஆனால், அந்தக் காலத்திலும் பழைய வருணன் முருகன் திருமால் வணக்கம் நிலைபெற்றிருந்தது. பின்னர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், இந்திய நாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி காலத்தில், பௌத்த மதம் இலங்கை யிற் பரவிற்று. பௌத்த மதம், கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லிருந்து இன்று வரையிலும் இலங்கையில் நிலைத்து நிற்கிறது. பௌத்தம், இலங் கையிலே முக்கிய மதமாக இருந்தபோதிலும், அங்குப் பழைய தெய்வங்களின் வணக்கமும் இன்றளவும் இருந்து கொண்டிருக் கின்றன. திருமால், முருகன், வருணன் ஆகிய பழையதெய்வங்களைச் சிங்களவர் இன்றும் மறந்து விடவில்லை. முருகனைக் கந்தகுமரன் என்றும், திருமாலை விஷ்ணு என்றும் வருணனை உபுல்வன் என்றும் சிங்களவர் கூறுகின்றனர். தமிழரின் பழங் கடவுளராகிய சேயோனும் மாயோனும் வருணனும் இலங்கைத் தீவிலே சிங்களவரால் இன்றும் போற்றப்படுகின்றனர். ஆனால், இந்தத் தெய்வங்கள், புத்தர்பிரானுக்குக் கீழடங்கிய சிறு தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர். பௌத்தமதம் செல்வாக்கடைந்த பிறகு இத்தெய்வங்களின் நிலை சற்று இறங்கிய போதிலும், பௌத்த மதம் வருவதற்கு முன்பு இத்தெய்வங்கள் முதன்மை பெற்றிருந்தன. இந்தத் தமிழ்த்தெய்வங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இலங் கையில் வணங்கப்பெற்றன என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. *** 9. சிலப்பதிகார ஆய்வுரை* காவிரி - காவேரி “சோழநாடு சோறுடைத்து” என்பது பழமொழி. சொல்லி லிருந்து உண்டாவது சோறு. சொல் என்றால் நெல் என்பது பொருள். சோழநாடு, தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம். சோழ நாட்டை நெற்களஞ்சிய மாக்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அந்நாட்டில் பாய்கிற காவிரி ஆறு. காவிரி ஆறு தமிழ்நாட்டின் புண்ணியநதி என்பதைத் தமிழ்நூல்கள் கூறுகின்றன. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களும் காவிரி ஆற்றின் சிறப்பைக் கூறுகின்றன. முற் காலத்து நூல்களும் பிற்காலத்து நூல்களும் காவிரி ஆற்றைக் காவிரி ஆறு என்றே கூறுகின்றன. காவேரி என்பது கொச்சை வழக்குச் சொல். இது பேச்சுவழக்கில் மட்டும் வழங்கப்படுகிறது. காவிரி என்பதுதான் நூல் வழக்குச் சொல். பழைய நூல்களிலும் புதிய நூல்களிலும் காவிரி என்னும் சொல்லே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரக் காவியத்தில் மட்டும் காவிரி என்றும் காவேரி என்றும் இரண்டு வகையாக இந்தப் பெயர் கூறப்படுகிறது. இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்திலே கானல்வரியில் மட்டும் காவேரி என்னுஞ் சொல்லை வழங்குகிறார். மற்ற இயற்றமிழ்ப் பகுதி களில் காவிரி என்னுஞ் சொல்லை வழங்குகிறார். தமிழ் மொழியின் ஆதி காவியத்திலே இளங்கோவடிகள் ஏன் இவ்விரண்டு சொற்களை வழங்கி யுள்ளார்? இதன் காரணம் என்ன? இதற்குக் காரணங் கண்டுபிடிப் பதற்கு முன்னம், இந்தச் சொற்கள் சிலப்பதிகாரத்தில் எந்தெந்த இடங்களில் வந்துள்ளன என்பதைச் தெரிந்து கொள்வோம். முதலில் காவிரி என்னும் சொல் வந்துள்ள இடங்களைப் பார்போம். `தண்ணுறுங் காவிரித் தாதுமலி பெருந்துறை. (இந்திர விழா, 165.) கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாறு. (கடலாடு,163) காவிரிவாயில்கடைமுகங்கழிந்த(நாடுகாண்.33.) காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை (நாடுகாண், 108) சாரணி பூம்பொழில் காவிரிப் பேர் யாறு (நாடுகாண், 114) விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தி.(காடுகாண்.39) காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்.(அடைக்கலம், 151) முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல் (காட்சி. 123) சிலப்பதிகாரத்தில் இயற்றமிழ்ப் பகுதி முழுவதும் இந்த ஆறு ‘காவிரி’ என்றே கூறப்படுவது காண்க. இயற்றமிழ்ப் பகுதியில் ஓரிடத்தி லேனும் ‘காவேரி’ என்று கூறுப்படவே இல்லை. சிலப்பதிகாரக் காவியத்தில் கானல்வரியில் மட்டும் இளங்கோ வடிகள் காவேரி என்னுஞ் சொல்லைப் பயன்படுத்து கிறார். காவிரி ஆறு கடலுடன் கலக்கிற புகர்முகத்தண்டைக் கடற்கரை மணலிலே அமர்ந்து கோவலனும் மாதவியும் கானல்வரி பாடினார்கள். அந்த இசைப்பாடல் களிலே முதலில், தங்களுக்கு அருகில் பாய்ந்தோடுகிற காவிரி ஆற்றைப் பற்றிப் பாடின பிறகு மற்ற இசைப்பாடல்களைப் பாடினார்கள். கோவலன் காவிரி ஆற்றை மூன்று பாடல்களில் பாடினான். அம்மூன்று செய்யுள்களிலும் காவிரி ஆறு காவேரி என்று கூறுப்படுகிறது. திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற் கண்ணாய்! மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி!” மற்ற இரண்டு பாடல்களிலும் காவேரி என்னுஞ் சொல்லே பயின்றுள்ளது.” “கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி! ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி! “விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி! ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. மழவ ரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி!” மாதவியும் காவிரி ஆற்றின்மேல் மூன்று இசைப் பாடல்கள் பாடினாள். அவ்விசைப்பாடல்களிலும் காவிரி என்னும் பெயர் காவேரி என்று காணப்படுகிறது. “மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன் வாழி காவேரி!” “காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி! ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. நாம வேலின் திறங்கண்டே யறிந்தேன் வாழி காவேரி!” “ஊழி உய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி! ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி!” இயற்றமிழ்ப் பகுதிகளில் காவிரி என்னுஞ் சொல்லை வழங்கிய இளங்கோவடிகள் இசைத்தமிழ்ப் பகுதியாகிய கானல்வரியில் மட்டும் ஏன் காவேரி என்னுஞ் சொல்லை வழங்கினார். சிலப்பதிகாரத்தில் வருகிற கானல்வரி என்பது இசைத்தமிழ். அஃதாவது இசைப்பாட்டு. கடற்கரையில் பாடப்பட்ட தாகையால் அது கானல்வரி என்று பெயர்பெற்றது. கானல் - கடற்கரை. வரி - இசைப் பாட்டு. மேலே காட்டப்பட்ட வரிபாட்டுகளின் கடைசிச் சொற்கள் மூவசைச் சீராக முடிகின்றன. அதனால் காவிரி என்னும் ஈரசைச் சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ் விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை யமைத்தால் ஈரசைச் சீராகித் தளை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றி யமைத்தார். இவ்வாறு அமைப்பது இசைத் தமிழ் இலக்கணத் துக்குப் பொருந்தும். இசைத்தமிழ் இலக்கணத்தில் குற்றெழுத்து நெட்டெழுத் தாகவும் நெட்டெழுத்து குற்றெழுத்தாகவும் வருவது மரபு. அந்த முறைப்படி, இசைப்பாட்டுப் பகுதியாகையால், இங்கு மட்டும் காவிரி, காவேரி என்று வழங்கப்பட்டிருக்கிறது. இசைத்தமிழிலக் கணத்துக் ஏற்பவும் தளை தட்டாமலிருக்கவும் இளங்கேவடிகள் வரிப்பாட்டில் (இசைப்பாட்டில்) மட்டும் காவிரி என்னுஞ் சொல்லை காவேரி என்று வழங்கியுள்ளார். ஏனைய இயற்றமிழ் புலவர்களில் காவிரியைக் காவேரி என்று கூறவே இல்லை. இந்த நுட்பத்தை அறியாதவர், சிலப்பதிகாரத்தில் காவிரி என்னுஞ் சொல் காவேரி என்று வழங்கப்பட்டிருந்தபடியால், அந்நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்று கூறுவர். அவ்வாறு ஒருவர் எழுதியும் உள்ளார். திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், காவேரி என்பது பிற்காலத்து வழக்குச் சொல் என்றும், இச்சொல்லை யாளுகிற சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் (சங்ககாலத்து நூல் அன்று) என்றும் தாம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ்மொழி - தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் 148 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்.1 இவ்வாறு கூறுவது, ஆழ்ந்து கூர்ந்து ஆராயாமல் மேற்போக்காக மட்டும் ஆராய்கிறவர்களின் கூற்றாகும். மேலும், பிள்ளையவர்கள் கூறுவது போலக் காவேரி என்னும் சொல் பிற்கால இலக்கியங்களிலும் வழங்கப் படவில்லை. காவேரி என்பது பேச்சு வழக்கில், கொச்சைத் தமிழில் தவிர, இச்சொல் பிற்கால இலக்கியங்களிலும் வழங்கப்பட வில்லை. காவிரி என்னும் சொல்தான் முற்காலப் பிற்கால இலக்கியங்களில் வழங்கி வந்துள்ளது. காவேரி என்னுஞ் சொல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வருகிறது. காவேரி என்னும் சொல் ஒரே ஓர் இலக்கியத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கிய நூல் மேலே காட்டிய படி சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்திலும் இசைப் பகுதியாகிய கானல்வரியில் மட்டும் இச்சொல் ஆளப்பட்டிருக்கிறது. ஏனைய இயற்றமிழ்ப் பகுதியில் காவிரி என்றே ஆளப்பட்டிருக்கிறது. இதனை இக்கட்டுரையின் முற்பகுதியில் விளக்கமாகக் காட்டியுள்ளோம். எனவே, வையாபுரியார் கருதுவது போல, சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் அன்று. அது கடைச்சங்க காலத்தின் இறுதியில் எழுதப்பட்ட நூலாகும். இதற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. அச்சான்றுகளைச் சமயம் வாய்க்கும்போது எழுதுவோம். கண்ணகியின் கைவளை மதுரை மாநகரத்திலே கோவலன் இறந்தபிறகு கைம் பெண்ணான கண்ணகியார் தமது கையிலணிந்திருந்த சங்கு வளையை (வளை - சங்கு)க் கொற்றவை கோயிலின் வாயிலில் சென்று தகர்த்து ஒடித்துக் கைம்மைக் கோலங் கொண்டார் என்று சிலப்பதிகாரங் கூறுகிறது. “கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து”என்பது அவ்வாசகம். (சிலம்பு. 23:18)பொற்றொடி என்பது பொன்வளை என்று பொருள் படுமானாலும் இங்கு வளை (சங்கு) யினால் செய்யப்பட்ட தொடி என்பதே பொருளாகும். சிலப்பதிகார அரும் பதவுரை யாசிரியரும் இவ்வாறே பொருள் கூறுகிறார்: ‘பொற்றொடி- பொலிவினையுடைய சங்கவளை’ என்று அவர் உரை எழுதியிருப்பது காண்க. சங்ககாலத்தில் வறியவர் முதலாக அரசியர் வரையில் எல்லா மகளிரும் கைகளில் வளை (சங்குவளை)அணிந்திருந்தார்கள். இக் காலத்து மகளிர் கழுத்தில் தாலி அணிவது இன்றியமையாதது போல அக்காலத்து மகளிர் கைகளில் சங்குவளை அணிய வேண்டுவது இன்றி யமையாததாக இருந்தது. செல்வர் வீட்டு மகளிர் பொன் தொடிகளை அணிந்திருந்தாலும் அதனுடன், இன்றியமையாத சங்குவளைகளை யும் அணிந்திருந்தனர். இக்காலத்துக் கைம்பெண்கள் தாலிகளைக் களைந்துவிடுவது போல, அக்காலத்துக் கைம்பெண்கள் தம்முடைய கைவளைகளை உடைத்தெறிந்து வெறுங்கையினராக இருந்தனர். இந்த வழக்கப் படிதான் கண்ணகியார் தம்முடைய கைவளைகளைக் கொற்றவை கோயிலின் வாயிலில் சென்று தகர்ந்து உடைத்தார். கைம்பெண்கள் தங்களுடைய தொடிகளை (வளைகளைக் - கழித்துவிட்டபடியால் அவர்கள் ‘தொடிகழி மகளிர்’ என்று கூறப்பட்டனர். “தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி” என்று சங்கச் செய்யுள் (புறம், 238 : 7) கூறுகிறது. ‘கழிகல மகடூஉ’ என்பது புறம், 261 :18. தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள கடல்களில் வளை (சங்கு) கிடைத்தது. பாண்டிநாட்டுக் கொற்கைக் குடாக்கடலில் முத்துச்சிப்பிகளும் இடம்புரிச் சங்கு வலம்புரிச் சங்குகளும் அதிகமாகக் கிடைத்தன. (பிற் காலத்தில் கொற்கைக் குடாக்கடல் மண்தூர்ந்து ஐந்து மைல் அளவுக்குத் தரையாக மாறி விட்டது.) சங்குகளைத் தொடியாக அறுத்து அரத்தினால் அராவிப் பலவகையான அளவில் தொடிகளைச் செய்தார்கள். அந்தத் தொடி களிலே பூ உருவங்களும் கொடி உருவங் களும் செதுக்கப்பட்டிருந் தன. சில வளைகளுக்குப் பலவித நிறங்கள் ஊட்டப்பட்டு வண்ண வளைகளாக அமைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் உறையூர் முதலான நகரங்களில் நிலத்தை அகழ்ந்து ஆராய்ந்தபோது அங்குக் கிடைத்த பல பொருள்களில் ஒடிந்துபோன வளைத் துண்டுகளும் கிடைத்துள்ளன. தமிழகத்து மகளிர் சங்கு வளைகளை அணிந் திருந்ததைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். ‘கோணேறி லங்கு வளை,’ (ஐங்குறு, நெய்தல், பாணற் குரைத்த பத்து 6), ‘இறைகேழ் எல்வளை’, ( ³ சிறுவெண்காக்கை. 5) ‘கடற்கோடு செறிந்த மயிர்வார் முன்கை’, (ஐங்குறு, நெய்தல், வளைப்பத்து.1), ‘நிரைவளை முன்கை நேரிழை மகளிர்’, (குறுந். 336 : 1), அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை, (அகம். 361 : 4) சின்னிரை வால்வளைக் குறுமகள், (குறுந். 189:6), ‘சுடரிலங்கு எல்வளை’, (அகம். 68: 12) முதலியவை காண்க. பழங்காலத் தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திலும் கடைத் தெருக்களில் வளைகளை அறுத்துத் தொடி செய்யும் தொழிற் சாலைகளும் வளை விற்கும் கடைகளும் இருந்தன. பகன்றைக் கொடியின் மலர், சங்கை அறுத்து எறியப்பட்ட கொழுந்து போன்று (சங்கின் உச்சியைப்போல) இருந்தது என்று ஒரு புலவர் கூறுகிறார். “வேளாப் பார்ப்பான் வாளரந் துமிழ்த்த வளைகழிந் தொழிந்த கொழுந்தின் அன்ன தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை.”(அகம்.24 : 1-3) வளைசெய்யும் தொழிலாளிகள் சிறு வாளினால் சங்கை அறுத்து அரத்தினால் அராவி வளைகளைச் செய்தார்கள் என்று சங்க நூல்களி லிருந்து தெரிகின்றது. ‘கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை’, (ஐங்குறு. நெய்தல், வளைப்பத்து), ‘அரம்போழ் அவ்வளை பொலிந்த முன்கை’, (அகம். 6:2) அரம்போழ் அவ்வளைக் குறுமகள் (ஐங்குறு, நெய்தல், நெய்தற்பத்து, 5) என்பன காண்க. தமிழ்நாடு மட்டும் அன்று, பாரதநாடு முழுவதிலும் அந்தக்காலத்தில் மகளிர் சங்குவளைகளை அணியும் வழக்ம் இருந்தது. சங்குவளை அணியும் வழக்கம் இருந்தபடியால் சங்குவளை செய்யுந் தொழிலும் வளை வாணிகமும் நாடெங்கும் இருந்தன. அண்மைக்காலம் வரையில் சங்குவளை யணியும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்தது. சங்குவளை வாணிகர் சங்குவளைகளை எடுத்துக்கொண்டு நகர வீதிகளில் சென்று விற்றனர். அவர்கள் வயது சென்ற ஆடவர். சொக்கப்பெருமான் வளை வாணிகனாக வந்து மதுரைத் தெருக்களில் வளைகளை விற்றார் என்று திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன. (வளையல் விற்ற படலம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், வளையல் விற்ற திருவிளையாடல், நம்பி திருவிளையாடற் புராணம்.) சங்குவளைகளை மகளிர்அணிந்த வழக்கம் அண்மைக் காலத்தில் மறைந்துபோய், கண்ணாடிவளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இதனால், தமிழ்நாட்டு வாணிகருக்குக் கிடைத்துவந்த ஊதியம் இப்போது அயல்நாட்டு வாணிகருக்குப் போய்க்கொண்டிருக் கிறது. மேலும் வளை செய்யும் தொழிலும் தமிழ்நாட்டில் மறைந்துபோய் அத்தொழிலாளிகளுக்கு வேலை இல்லாமலும் போய்விட்டது. இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட்ட காலத்தில், சங்குவளை மறைந்துபோய்க் கண்ணாடிவளைகள் வழக்கத்தில் வந்து விட்டன. ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிவளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு சங்ககாலத்திலிருந்து சங்குவளைகளை அணியும் வழக்கம் இருந்து வந்தது. பழங்காலத்தில் தமிழ் மகளிர் எல்லோரும் - ஏழைகள், நடுத்தரக் குடிமக்கள், செல்வர், அரசியர் முதலிய எல்லோரும்-, கட்டாயமாகக் கைவளைகளை அணிந்திருந்தனர் என்று கூறினோம். ஏழைகளும் நடுத்தர மகளிரும் இடம்புரிச் சங்குவளைகளை அணிந்திருந்தனர். இடம்புரிச் சங்குவளைகளின் விலை அதிகம் இல்லை. ஆனால் செல்வந்தரின் மகளிரும் அரசர்களின் மகளிரும் வலம்புரிச் சங்குவளைகளை அணிந்திருந்தார்கள். வலம்புரிச் சங்குவளைகள் அதிக விலையுள்ளவை. செல்வர் வீட்டுமகளிர், பொன்னாற் செய்த தொடிகளை அணிந்திருந்ததுடன் அவற்றொடு வலம்புரிச் சங்கு வளைகளையும் அணிந்திருந்தார்கள். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசியான பாண்டிமா தேவியார் கையில் பொன் தொடிகளை அணிந்திருந்ததோடு வலம்புரிச் சங்குவளைகளையும் அணிந்திருந்தார். “பொலந்தொடி நின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து.” என்று இச்செய்தியை நெடுநல்வாடை (அடி, 141-142) கூறுகிறது. பெருஞ் செல்வக்குடியில் பிறந்தவரான கண்ணகியார் அணிந் திருந்ததும் வலம்புரிச் சங்குவளைகாளகத்தான் இருக்க வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். என்னை? அவர் காலிலே அணிந் திருந்த பொற்சிலம்பினுள்ளே இட்டிருந்த பரல்கள் மாணிக்கக்கற்களாக இருந்தபோது அவர் கையில் அணிந்திருந்த வளைகள் வலம்புரிச் சங்குவளைகளாகத்தானே இருக்கவேண்டும்? அவர் மாநாய்கனுடைய மகள் அல்லரா? (மாநாய்கன் என்பது மா+நாவிகன் - பெரிய கப்பல் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல்.) மாசாத்துவனின் மருமகள் அல்லரா? (மாசாத்துவன் என்பது மா + சாத்துவன் - பெரிய வணிகச் சாத்தின் தலைவன் என்பது பொருள்.) ஆகவே, கண்ணகியார் கையில் அணிந்திருந்த வளை விலையுயர்ந்த வலம்புரிச் சங்குவளை என்பதில் ஐயமில்லை. கண்ணகியின் காற்சிலம்பு பழங்காலத் தமிழக மகளிர் கால்களில் சிலம்பு என்னும் அணியை அணிந்திருந்தார்கள். திருமணம் ஆவதற்கு முன்பு சிலம்பைக் கழிப்பது அக்காலத்து வழக்கமாக இருந்தது. அது, ‘சிலம்பு கழி நோன்பு’ என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. சிலம்பு, மகளிரின் சொந்தச் சொத்தாகக் கருதப்பட்டது. அதனை மகளிர் அருமையாகப் போற்றிவைத்தனர். செல்வந்தர் வீட்டுப் பெண்களும் அரச குடும்பத்து மகளிரும் பொன்னாற்செய்த சிலம்புகளை அணிந்திருந்தனர். சிலம் பினுள் பரல்கற்களை இடுவது வழக்கம். அரசர்களும் செல்வர்களும் சிலம்பினுள்ளே முத்துக் களையும் மாணிக்கங்களையும் பரல்களாக இட்டு வைத்தார்கள். அரசு கட்டிலில் துஞ்சிய ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி பாண்டிமாதேவியாரின் பொற் சிலம்பினுள்ளே கொற்கைக் குடாக்கடலில் கிடைத்த முத்துக்களைப் பரல்களாக இட்டிருந்தனர் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். (வழக்குரை காதை) பெருங் கப்பல் வாணிகனான மாநாயகன் (மா நாவிகன். நாவாய் - கப்பல்) மகளான கண்ணகியாரின் பொற்சிலம்பில் மாணிக்கக்கற்கள் பரற்கற்களாக இடப்பட்டிருந்தன. இதை வழக்குரை காதையிலிருந்து அறிகிறோம். “நற்றிறம் படராக் கொற்கை வேந்தே! என்காற் பொற்சிலம்பு மணியுடை யரியே, எனத், தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி, யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே.”(சிலப். 20 : 66-69) கைவளையும் காற்சிலம்பும் அக்காலத்து மகளிர்க்கு இன்றி யமையாத அணிகலன்களாகக் கருதப்பட்டன. இவ்விரு அணிகலன் களையும் அக்காலத்து மகளிர் அருமையாகப் போற்றிவைத்தனர். இந்தக் காரணத்தினால்தான், கண்ணகியார் தாம் அணிந்திருந்த விலை யுயர்ந்த மற்ற நகைகளை யெல்லாம் மாதவியின் செலவுக்காகக் கோவலனிடம் கொடுத்து விட்ட பிறகு இவற்றை மட்டும் கொடுக்காமல் தம்மிடமே வைத்துக் கொண்டார். கடைசியாகக் கண்ணகியாரிடம் எஞ்சி இருந்தவை கைவளைகளும் காற்சிலம்புகளுமே என்பதை யறிகிறோம். கடைசியாகக் காற்சிலம்பையும் விற்கவேண்டிய நிலை கோவலனுக்கு ஏற்பட்டது. சிலம்புக்குக் குடைச்சூல் என்னும் பெயரும் உண்டு. சங்க காலத்தில் வழங்கிவந்த இச்சொல் பிற்காலத்தில் வழக்கிழந்து விட்டது. “வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர்.” (பதிற்று. 6 ஆம் பத்து. 7) (குடைச்சூல்-சிலம்பு. பழைய உரை.) “அவ்வரிக் குடைச்சூல் அணங்கெழில் அரிவையர்.” - (பதிற்று. 7 ஆம் பத்து. 8) கண்ணகி, பெருஞ்செல்வனான மாநாய்கனின் மகளாதலின், அவருடைய காற்சிலம்பு (குடைச்சூல்) பொன்னாற் செய்யப்பட்டு அதன் உள்ளில் மாணிக்கக்கற்கள் பரலாக இடப்பட்டிருந்ததுமன்றி அதன் மேற்புறத்தில் இடையிடையே மாணிக்கக்கற்களும் வயிரக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன என்று சிலப்பதிகாரங் கூறுகிறது. “மந்தக மணியொடு வயிரங் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல் சித்திரச் சிலம்பு.” (கொலைக்கள. 117-119) (மத்தகமணி - தலையான மாணிக்கம். வயிரம் - வயிரக்கல். பத்திக்கே வணம் - பத்தியாக வகுத்த கேவணம். கேவணம்-கல்லழுத்துங்குழி.) *** 10. சிலப்பதிகாரமும் பங்களரும்* சிலப்பதிகாரத்திலே பங்களர் என்னும் நாட்டினர் கூறப்படு கின்றனர். அந்தப் பங்களர் என்பவரைப்பற்றிய ஆராய்ச்சிதான் இக் கட்டுரை. பங்களர் என்னும் பெயரை ஆராய்ந்து சில அறிஞர்கள் ஒருவிதக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். பங்களர் என்பவர் பங்காள (வங்காள) நாட்டவர் என்றும், பங்களர் என்னும் பெயர் வழங்கப்பட்டது பிற்காலத்தில் என்றும், ஆகவே இச்சொல்லை வழங்குகிற சிலப்பதிகாரம் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்றும் இந்த ஆராய்ச்சிக்காரர்கள் முடிவு கூறியுள்ளனர். இப்படிக் கூறியவர்கள் சென்னை, வங்காளம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் ஆவர். இவர்கள் ச. வையாபுரிப்பிள்ளை, மு.ஹ. நீலகண்ட சாஸ்திரி, ஏ.சு. இராமச் சந்திர தீட்சிதர், ஹேமசந்திர ராய் சவுத்திரி என்பவர்கள். இவர்களில் முதல் மூவரும் சென்னைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள். ராய் சவுத்திரி, வங்காளப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர். சிலப்பதிகாரம் காட்சிக் காதையிலே, செங்குட்டுவ னுடைய போர்க்கள வெற்றிகளைக் கூறுகிற இடத்திலே, அமைச்சனான வில்லவன் கோதை செங்குட்டுவன் வென்ற நாட்டவர் பெயர்களைக் கூறுகிறான். அப்பெயர்களில் பங்களர் என்னும் பெயரையும் கூறுகிறான். இப் பெயரைக் கூறுகிற சிலப்பதிகாரப் பகுதி இது: “கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடலை வேட்டமென் கட்புலம் பிரியாது” (காட்சிக் காதை 156-159) இதில் வருகிற பங்களர் என்னும் சொல்லை ஆராய்ந்து, மேற்சொன்ன நான்கு பேராசிரியர்களும், பங்களர் என்னும் சொல் பிற்காலத்தில் வழங் கிய சொல், இந்தச் சொல்லை வழங்குகிற சிலப்பதிகாரமும் பிற்காலத்து நூல் என்று எழுதியுள்ளனர். இவர்கள், இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார்கள்: திரு.எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள், சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் என்பதற்குப் பங்களர் என்னும் சொல்லையும் ஒரு காரணமாகக் கூறுகிறார். “வங்க தேசத்தினருக்குப் பங்களர் என்பது பிற்காலப் பெயர். இதுவும் இக்காவியத்தில் (சிலப்பதிகாரத்தில்) காணப்படுகிறது” என்று “இலக்கிய மணிமாலை” என்னும் நூலில் (பக்கம் 138) எழுதுகிறார். மேலும் தமது “தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் ஆங்கில நூலிலும் இவ்வாறு ஏழுதுகிறார்: “ஹ கநற உடிரவேசநைள டமைந முயசயேவயமய யனே க்ஷநபேயட றாiஉh றநசந ரமேnடிறn வடி வாந கூயஅடைள டிக வாந ளுயபேயஅ ஞநசiடின யசந அநவேiடிநேன.” (ஞ.148. ழளைவடிசல டிக கூயஅடை டுயபேரயபந யனே டுவைநசயவரசந) ஆகவே, சிலப்பதிகாரம் கி.பி. 500க்குப் பிறகு இயற்றப்பட்டது என்பது பிள்ளையவர்கள் கருத்து. திரு. மு.ஹ. நீலகண்ட சாஸ்திரியும் இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார்: “பங்காள தேசத்து மக்களைப் பங்களர் என்னும் சொல்லால் குறிப்பிடுவதும் இந்நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டது என்பதற்குச் சான்றாகும்.” (“The form Bangalar for the people of Bengal.... are also evidences of late composition” (University of Ceylon Review Vol. VII 1949. p.21 - 27) சென்னைப் பல்கலைக் கழகத்துச் சரித்திர ஆசிரியராக இருந்த திரு.வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும், தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துளள “சிலப்பதிகாரம்” என்னும் ஆங்கில நூலில், 289-ஆம் பக்கத்தில், மூன்றாவது அடிக் குறிப்பில் இதே கருத்தை எழுது கிறார். “பங்களர் என்பது பங்களா நாட்டு மக்களைக் குறிப்பிடுகிறது.” (“The Bangalar are probabaly the people of Bengal” என்று எழுதுகிறார்) கல்கத்தாப் பல்கலைக் கழகத்து இந்திய சரித்திர ஆசிரியராகிய ஹேமசந்திர ராய் சவுத்திரி என்பவரும், இவர்கள் கூறும் கருத்தையே கூறுகிறார்: இவர் ஆங்கிலத்தில் கூறியதன் கருத்து இது: “பங்களர் என்னும் பெயரும் இதில் (சிலப்பதிகாரத்தில்) கூறப்படு கிறது. வங்கம் என்னும் பழைய பெயர் சமஸ்கிருத காவியங்களிலும் தர்ம சூத்திரங்களிலும், நாகார்ச்சுன கொண்ட’ மேக ரவுளி சாசனங் களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வங்களர் என்னும் பெயர் நிச்சயமாகப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் இப்பெயர் சாசனங்களில் காணப்பட வில்லை. கங்கை கொண்ட சோழனான முதலாம் இராஜேந்திர சோழன் உடைய திருமலை சாசனத்தில் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.” (கோபால கிருஷ்ணமாசாரியர் மலர் மாலை) பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் நால்வரும், பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறுவது பங்காள (வங்காள) நாட்டினரைத்தான் என்று முடிவு செய்துவிட்டனர். இந்த முடிவின் விளைவாகச் சிலப்பதிகாரம் சங்ககாலத்து நூல் அன்று பிற்காலத்து நூல் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். ‘இவர்கள் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது’ இவர்கள் கூறுவது சரியாகத்தானே, பொருத்த மாகத்தானே இருக்கிறது’ என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளும் படியாகத்தான் இருக்கிறது இவர்கள் கூறிய முடிவு. பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறிய பங்காளரைத்தானா? வங்காள தேசத் தவரையா பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது? மேல்நோக்காகப் பார்க்கும்போது, பங்களரும் வங்காளரும் ஒருவர் போலக் காணப்பட்டாலும், ஊன்றிப் பார்க்கும்போது பங்களரும் வங்காளரும் வெவ்வேறு நாடினர் என்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுகிற பங்களர் வங்காள நாட்டுப் பங்காளரை அன்று என்பது தெரிகிறது. பங்களர், பங்காளர் என்னும் சொற்கள் ஒரே ஒலியுடைய வாகக் காணப் பட்டாலும் இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றன என்று தோன்றுகிறது. இதற்கு சாசனக் சான்றுகள் கிடைக்கின்றன. தென் இந்தியச் சாசனங்கள் என்னும் நூலிலே எட்டாவது தொகுதியிலே கீழ் கண்ட செய்திகள் கிடைக்கின்றன. 1.“சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு வடக்கில் வன்முகைநாட்டு உய்யக்கொண்டான் சோழபுரம்” 2. சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு முகைநாட்டுக் காட்டுத்தும்பூர்” 3. “பங்களநாட்டுக் காட்டுத்தும்பூர் நந்திகம்பீஸ்வரம்” 4. “பங்களநாட்டு வடக்கில் வன்முகைநாட்டு உய்யக்கொண்டான் சோழபுரம்” மேலே காட்டப்பட்ட சாசனப்பகுதிகளிலிருந்து பங்கள நாடு, சயங்கொண்ட சோழமண்டலம் செயங்கொண்ட மண்டலம் என்பது தொண்டை மண்டலம். தொண்டை மண்டலத்துக்குப் பழைய பெயர் அருவா நாடு என்பது. சயங்கொண்ட சோழமண்டலம், தொண்டை மண்டலம், அருவா நாடு என்னும் பெயருடைய நாடு தமிழகத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் (தமிழகத்தின் வட எல்லையில்) சேர்ந்ததுதான் பங்களநாடு என்பது இந்தச் சாசனங் களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பங்களநாடு சில உட் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும் அப்பிரிவுகளில் இரண்டு வன்முகை நாடு, முகைநாடு என்பன என்பதும் இந்தச் சாசனங் களினாலே தெரிகின்றன. இந்தச் சான்றுகளைக் கொண்டு, சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற பங்களர் என்பவர் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்திருந்த பங்கள நாட்டினர் என்பது நன்கு விளங்குகிறது. பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் கருதியது போல, பங்களர் என்னும் சொல் பங்காளரை (வங்காளரை)ச் சுட்டவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஒலி ஒப்புமையைக் கொண்டு, பங்களரும் பங்களாரும் ஒருவரே என்றும் அவர்கள் வங்களா தேசத்தவர் என்றும் இவர்கள் கொண்ட முடிவு தவறாகிறது. இந்தத் தவறான முடிவு காரணமாக, சிலப்பதிகாரம் பிற்பட்ட நூல் என்று இவர்கள் கூறியதும் பிழைபட்ட முடிவாகிறது. திரு. வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியங்களைப் பயின்றவர்; சாசனங்களையும் சரித்திரங்களையும் பயின்றவர் அல்லர் என்பது அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து தெரி கிறது. இவர், தம் நண்பரான நீலகண்ட சாஸ்திரியார் ஆராயாமல் கூறிய கருத்தை உண்மையெனக் கருதிக்கொண்டு, தமிழ்நாட்டு வடநாட்டுப் பங்காளர் என்று எழுதிவிட்டார். ஹேமசந்திர ராய் சவுத்திரி அவர்கள் வங்களா நாட்டவர்; தமிழ்மொழி அறியாதவர். ஆகவே, அவர் மேலே காட்டிய தமிழ்ச் சாசனங்களைப் படித்திருக்க மாட்டார். ஆகவே, அவர் தமிழ்நாட்டில் ஒரு பங்களநாடு இருந்தது என்பதை அறிந்திருக்க மாட்டார். ஆனால், நீலகண்ட சாஸ்திரியும், இராமச்சந்திர தீட்சிதரும் தமிழ்நாட்டவர்; தமிழ்மொழியறிந்தவர். அன்றியும், சரித்திரத் துறையில் பேராசிரியர்கள். ஆகையினால் நாம் மேலே காட்டிய சாசனப் பகுதிகளைப் படித்திருக்க வேண்டி யவர்கள். ஆனால், இச்சாசனங்களை இவர்கள் படித்திருப்பதாகத் தோன்றவில்லை. படித்திருப்பார் களானால், பங்களரை வங்களார் என்று எழுதியிருக்க மாட்டார்கள். சரித்திரத் துறையிலே பயின்று அத்துறையிலே ஆசிரியர் களாக இருந்த இவர்கள் தென் இந்தியச் சாசனங்களைப் பயின்றிருக்க கடமைப்பட்டவர்கள். இவர்கள் தமிழ்ச் சாசனத்தில் கூறப்படுகிற பங்களரைப் பற்றி அறியாம லிருப்பது வியப்பாக இருக்கிறது. அறியாம லிருந்தாலும் தவறில்லை. வெறும் சொல் ஒற்றுமையையும் ஒலி ஒற்றுமையையும் மட்டும் வைத்துக்கொண்டு பங்களரும் வங்களரும் ஒருவரே என்றும், வங்க மக்களுக்குப் பங்காளர் என்னும் பெயர் வழங்கியது பிற்காலத்தில் ஆகையால், பங்களர் என்னும் சொல்லை ஆள்கிற சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் என்றும் எழுதியது எவ்வளவு தவறானது! இவர்கள் எழுதியதை வேத வாக்காகக் கருதி வையாபுரிப்பிள்ளை போன்றவர்களும், சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் என்று எழுதியது எவ்வளவு பிழையானது! பங்களர் என்பது பங்காளரை (வங்காளரைக்) குறிப்பதாக இருந்தால் அப்பெயர் பிற்காலத்து வழக்குச் சொல் என்று இவர்கள் கூறியதில் தவறில்லை. ஆனால், பங்களர் என்னும் சொல் வங்காளரைக் குறிக்கவில்லை, தமிழரில் ஒரு பகுதியாரைக் குறிக்கிறது என்பதற்குச் சாசனச் சான்று காட்டி நிறுவப்பட்டது. கொங்கணர், கங்கர், கட்டியர் முதலிய பெயர்களைப் போலவே பங்களர் என்னும் பெயரும் சங்ககாலம் முதல் தொன்று தொட்டு உள்ள பெயராகும். பங்களர் என்னும் பெயர் பிற்காலத்து வழக்குச் சொல் அன்று. எனவே, இவர்கள் தவறாகக் கூறுவதுபோல, சிலப்பதிகாரம் பிற்காலத்து நூலன்று; சங்க காலத்து நூலேயாகும். அதாவது, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும். பிள்ளையும் சாஸ்திரியும் தீட்சிதரும், சவுத்திரியும் பல்கலைக் கழகத்து அறிஞர்களாக இருந்தாலும், இவ் வாராய்ச்சியில் பிழைபட்டுத் தவறான முடிவைக் கூறிய படியால் இவர்கள் முடிவு கொள்ளத்தக்க தன்று; தள்ளத்தக்க தாகும். பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் ஆகையால், இவர்கள் கூறிய கருத்துக்கள் சரியாகத் தான் இருக்கும் என்று மாணவர்கள் கருதி மேலும் மேலும் பிழை செய்யக் கூடாது என்பதற்காகவே இக்கட்டுரை எழுத வேண்டியதாயிற்று. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” *** 11. இளங்கோ அடிகளின் கவிதை நயம்* காவியப் புலவர்களின் கவித்திறன் அவர்களுடைய காவியங் களிலே நன்கு புலனாகின்றன. அவர்களுடைய புலமையினால் அவர்களுடைய காவியங்கள் படிப்பவரின் மனத்தை அள்ளிக் கொள்கின்றன. உவமைகளையும் கற்பனைகளையும் கையாள் வதோடு சந்தர்ப்பத்துக் கேற்றபடி கவிதைகளை இனிமையாகவும் அழகாகவும் அமைக்கும் ஆற்றல் காவியப் புலவர்களுக்கு உண்டு. அதனாலே தான் அவர்களுடைய காவியங்கள் கற்பவர் மனத்தை ஈர்த்துத் தம் வயப்படுத்துகின்றன. காவியப் புலவர்களின் கனிந்த செய்யுட்கள் அவற்றைக் கற்பவருக்குத் தெவிட்டுவதில்லை. எத்தனை தடவை படித்தாலும் அந்தச் செய்யுட்கள் உள்ளத்தைக் கவர்ந்து மனத்தைக் கவர்ந்து மனத்துக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கின்றன. தமிழிலே ஆதிகாவியத்தை அளித்த இளங்கோ அடிகள் தலை சிறந்த காவியப் புலவர். அவர் இயற்றிய சிலப்பதிகாரம் அமரகாவியம். இதனாலன்றோ தேசிய கவி பாரதியார், ‘நெஞ்சை யள்ளும் சிலப்பதி காரக் காவியத்தைப் படித்த அறிஞர்கள் எல்லோரும் இதனைப் புகழ்ந்து பேசுகிறார்கள். சிலப்பதிகாரம் உலகக் காவியங்களில் ஒன்று என்பதில் தடைஇல்லை. சிலப்பதிகாரக் காவியத்திலிருந்து இளங்கோ அடிகளின் கவிதைகள் ஒரு சிலவற்றை இங்குக் காட்டுவோம். மதுரையில் கோவலன் மேல் சுமத்தப்பட்ட வீண்பழியை, அவன் பொற்சிலம்பைக் களவாடினான் என்னும் கறையைப் போக்கி அவன் அப்பழக்கற்றவன் என்பதை நிலை நாட்டவேண்டிய பொறுப்பும் கடமையும் கண்ணகிக்கு ஏற்பட்டது. கண்ணகி, வழக்கு மன்றத்திலே சென்று தன் கணவன் குற்ற செம்மல், அவன் மீது பொய்யாகப் பழி சுமத்தப்பட்டது என்பதைப் பாண்டியனுக்கும் உலகத்தாருக்கும் நிரூபித்துக் காட்டினாள். தன் கணவன் மேல் சுமத்தப்பட்ட இழிந்த பழியைப் போக்கி, அவன் தூய்மையான பெருமகன் என்பதை உலகத்துக்குக் காட்டிய பிறகு, கண்ணகி தன் கணவனுக்குச் செய்ய வேண்டியிருந்த கடமையும் பொறுப்பும் முடிந்துவிட்டன. அதற்குப் பிறகு அவள் உயிர்வாழ விரும்ப வில்லை. கண்ணுக்குக் கண்ணான கணவன், உயிருக்கு உயிரான காதலன் மறைந்துபோன பிறகு அவளுக்கு உலகத்திலே என்ன இருக்கிறது? உலகத்தில் உயிர் வாழ அவள் விரும்பவில்லை. அவள் தந்தை மாசாத்துவனுடைய பெருஞ் செல்வம் ஒரே மகளான அவளுக்கேயுரியது. மாமனாரான மாநாய்கனுடைய அளவற்ற செல்வமும அவளுக்கே உரியது.. ஆனால் கோவலன் இல்லாத போது இச்செல்வம் அவளுக்கு ஏன்? அவள் உயிரைவிட்டு விடத்தீர்மானித்தாள். உணவும் உறக்கமும் கொள்ளாமல் எங்கும் தங்காமல் இரவும் பகலும் நெடுக நடந்தாள். எங்குச்செல்ல வேண்டும் என்னும் குறிக்கோளில்லாமல் பல நாள் காட்டிலும் மேட்டிலும் நெடுக நடந்தாள். பதினான்காம் நாள் ஒரு குன்றின் மேலே ஒரு வேங்கை மரத்தின் கீழே வந்து நிற்க அங்கு அவளுடைய உயிர் உடலை விட்டு பிரிந்தது. இந்தப் பத்தினிப் பெண்டின் வரலாற்றைக் சேரன் செங்குட்டுவ னின் இராணியாகிய சேரமாதேவி இந்தப் பத்தினியைப் போற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதைச் செங்குட்டுவன் ..... அந்த விழாவைக் ......... பத்தினிக் ......... அவளுடன் நெருங்கிப் பழகிய பெண்மணிகள் நால்வர் இருந்தனர். அவர்களும் பத்தினிக் கோட்டம் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்தப் பெண் மணிகள் கோவலன் கண்ணகியரின் உறவினர் அல்லர். கோவலனின் தாயும் கண்ணகியின் தாயும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் அயல் நாட்டிலே நேரிட்ட துனபங்களையும் கடைசியில் அவர்கள் இறந்து போனதையும் கேட்டு தீராத்துயரடைந்து மனவேதனையினால் முன்னமே இறந்து போனார்கள். கோவலன் தந்தையாகிய மாநாய்கன் தன் குடும்பத்துக்கு நேர்ந்த துன்பங்களையும் துயரங்களையும் கண்டு மனம் வெறுத்துத் தன்னுடைய பெருஞ் செல்வத்தையெல்லாம் தான தருமம் செய்துவிட்டுப் பௌத்தமதம் பிக்ஷ& ஆனான். கண்ணகியின் தந்தையாகிய மாசாத்துவனும் அவ்வாறே மனம் வெறுத்துத் தன்னுடைய செல்வங்களையெல்லாம் தானம் செய்து விட்டு ஆசீவகமதத் துறவியாய் விட்டான். ஆகவே கோவலன் கண்ணகியரின் உறவினர் யாரும் பத்தினிக் கோட்டத் துக்கு வரவில்லை. அப்படியானால், பத்தினிக் கோட்டத்துககு வந்த இந்த நான்கு பெண் மணிகள் யாவர்? நான்கு பெண்மணிகள் இவர்களில் ஒருத்தி காவற்பெண்டு என்பவள். இவள் கண்ணகி யின் தந்தையான மாசாத்துவனின் மாளிகையில் நெருக்கமாக ஊழியம் செய்து கொண்டிருந்தவன்; கண்ணகியைக் குழந்தைப் பருவத்தி லிருந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்த செவிலித்தாய், இவளுக்கு வயது ஐம்பதுக்குமேலிருக்கும். தன்னால் வளர்க்கப்பட்ட கண்ணகியிடத்தில் இவளுக்குப் பற்றும் பாசமும் இருக்கத்தானே செய்யும்? மற்றொரு பெண்மணி அடித்தோழி என்பவள். இவள் கோவலன் கண்ணகியர் வாழ்ந்திருந்த மாளிகையில் கண்ணகிக்கு ஊழியப் பெண்ணாக இருந்தவள். ஊழியக் காரியாகக் கண்ணகியுடன் நெடுங் காலம் பழகிய இவளுக்குப் பத்தினிக் கோட்டம் செல்ல ஆசை யுண்டாயிற்று. இவளுக்கு ஏறத்தாழ முப்பது வயதிருக்கலாம். மற்றொரு பெண்மணி தேவந்தி என்பவள். இவள் கண்ணகியின் தோழி. காவிரிப்பூம்பட்டினத்தில் இவள் கண்ணகியுடன் பலகாலம் நெருங்கிப் பழகியவள். தன் தோழியின் பத்தினிக் கோட்டத்துக்குப் போக இவளும் ஆசை கொண்டாள். இந்த மூன்று பெண்மகளிரும் காவிரிப் பூம்பட்டினத் திலிருந்து ஒன்று சேர்ந்து புறப்பட்டுப் பத்தினிக் கோட்டத்துக்கு வந்தார்கள். பூம்பு காரிலிருந்து மதுரைக்கு வந்து அங்கிருந்துசேரநாட்டு வஞ்சிமா நகரத்துககு வந்தனர். அக்காலத்தில் வஞ்சிமா நகரத்துக்குப் போகச் செவ்வையான வழி இதுதான். மேலும் கண்ணகியும் கோவலனும் மதுரையில் மாதரியின் இல்லத்தில் தங்கியிருந்தபோது அங்கு நடந்தவைகளை நேரில் கேட்டறிய வேண்டும் என்னும் எண்ணமும் இவர்களுக்கு இருந்தது. பூம்புகாரிலிருந்து புறப்பட்ட இவர்கள் கால் நடையாக நடந்து மதுரைக்குச் செல்ல ஏறத்தாழ ஒரு மாதம் சென்றது. மதுரைக்கு வந்த இவர்கள் வழிகேட்டுக கொண்டு மாதரியின் வீட்டையடைந்தனர். மாதரி வீட்டில் இல்லை. அவள் மகள் ஐயை என்னும் கன்னிப் பெண்மட்டும் அவ்வீட்டில் இருந்தாள். அவளுடைய தாயான மாதரி, கோவலன் கொலையுண்டு இறந்த துக்கந் தாங்க முடியாமலும், பாண்டியன் இறந்து போன திடுக்கிடும் செய்தியறிந்த படியாலும் அரண்மனை தீப்பற்றி எரிந்தபோது அவள் அத்தீயில் விழுந்து மாய்ந்துபோனாள். இவர்கள் இச்செய்தியைக் கேட்டுப் பெரிதும் மனங் கவன்றார்கள். பிறகு ஐயை கோவலன் கண்ணகியர் தங்கள் வீட்டில் தங்கி உணவு சமைத்து உண்டதையும் தான் அவர் களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ததையும் கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து கண்ணகி புலம்பி அழுததையும் நகரமக்கள் திரண்டதையும் கண்ணகி வழக்குரைத்துக் கோவலன் சிலம்பைக் களவாடவில்லை. அந்தச் சிலம்பு தன்னுடையது என்பதை நிலைநாட்டியதையும் பிறகு நகர மக்கள் சீற்றங் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டுக் கொளுத்தி யதையும் எல்லாம் இவர்களுக்குக் கூறினாள். இவைகளை யெல்லாம் கேட்ட சோழ நாட்டுப் பெண்மணிகள் மூவரும் மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்கள். ஐயை, தானும் கண்ணகியின் பத்தினிக் கோட்டத்தைக் காண இவர்களுடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டாள். கண்ணகியுடன் பழகியிருந்த இந்த நான்கு பெண்மணிகளும் மதுரையிலிருந்து புறப்பட்டு நெடுக வழி நடந்து வஞ்சிமா நகரத்துக்கு வந்து பத்தினிக் கோட்டத்தை யடைந்தனர். இந்தச் செய்திகளையெல்லாம் காவியப் புலவரான இளங்கோ அடிகள் சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் சுருக்கமாகக் கூறியுள்ளார். இச்செய்திகளை உரைப்பாட்டாக (வசனச் செய்யுளாக) அமைத் துள்ளார். அவ்வுரைப் பாட்டின் ஒருபகுதி இது: “கோவலன்தன் வினையுருத்துக் குறுமகனாற் கொலை யுண்ணக் காவலன்தன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர் கண்டு மண்ணரசர் பெருந்தோன்றல் உண்ணீரற்று உயிரிழந்தமை மாமறையோன் வாய் கேட்டு மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனப் பெருந்துன்பமெய்திக் காவற்பெண்டும் அடித்தோழியுங் கடவுட் சாத்தன் உடனுறைந்த தேவந்தியும் உடன் கூடிச் சேயிழையைக் காண்டுமென்று மதுரை மாநகர்புகுந்து முதிரா முலைப்பூசல் கேட்டாங் கடைக்கலமிழந் துயிர் இழந்த இடைக்குல மகள் இடமெய்தி ஐயை யவள் மகளோடும் வையையொரு வழிக்கொண்டு மாமலைமிசை ஏறிக் கோமகள் தன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டு வற்குத் திறமுரைப்பர்மன்.” புதிதாக அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தது. அரசன் செய்த விழா அல்லவா? அந்த விழாவில் நம்முடைய நான்கு பெண்மணிகளும் கலந்து கொண்டு சிரத்தையோடு கண்டு மகிழ்ந்தார்கள். கண்ணகி வழிபாட்டில் இவர்கள் கொண்ட சிரத்தையும் அக்கறையும் அங்கிருந்தவரின் கருத்தைக் கவர்ந்தன. சோழ நாட்டுககு அப்பாலிருந்து ஆண் மக்கள் துணை யில்லாமல் வந்து சிரத்தையோடு வழிபடுகிற இவர்கள் யார்? ஒரு வேளை பத்தினியாகிய கண்ணகியின் உறவினராக இருக்கக் கூடுமோ? இதுபற்றி அங்கிருந்த சிலர் இவர்களை விசாரித்தார்கள். அவர்களுக்கு இவர்கள் தாங்கள் யார் என்பதையும் கண்ணகிக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பு இன்னதென்பதையும் கூறினார்கள். இது சாதாரணச் சிறு நிகழ்ச்சி. இதைக் காவியப் புலவரான இளங்கோ வடிகள் இனிய சுவையுள்ள கவிதையாகச் சிலப்பதிகாரக் காவியத்தில் அமைத்திருக்கிறார். இச்செய்யுள்களைப் படியுங்கள்: தேவந்தி சொன்னதாக இளங்கோவடிகள் கவிதையாகக் கூறுகிறார்: “முடிமன்னர் மூவருங் காத்தோம்பும் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்.” காவற் பெண்டு கூறியதைச் செய்யுளாக அமைக்கிறார்: “மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர் தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்.” அடித்தோழி கூறியதைக் கவிதையாக வடிக்கிறார்: “தற்பயந்தாட் கில்லைத் தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்கும்ஓர் சொல்லில்லைக் கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர் பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர்.” வசனமாகச் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதை இளங்கோ அடிகள் கவிதையாகக் கூறிக் காவியத்தைச் சிறப்புறச் செய் துள்ளார். காவியப் புலவரின் வாக்குத் திறமையினால் இக்கவிதைகள் கற்பவர் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கின்றன அல்லவோ? வாய்விட்டுப் புலம்பினர் பத்தினிக் கோட்டத்தில் வழிபாடு நடந்த பின்னர், எல்லோரும் சென்றுவிட்டனர். ஆனால், நம்முடைய பெண்மணிகள் நால்வரும் அங்கேயே தங்கியிருந்தனர். இவர்கள் தனியே கோயிலில் சென்று பத்தினித் தெய்வ உருவமாகக் காட்சியளிக்கிற கண்ணகியின் சிலையை உயிருள்ள கண்ணகியாகவே கருதிக் கொண்டு தங்கள் மனத்திலிருந்த கருத்தை வாய்விட்டுக் கூறினார்கள். இவர்கள் வாய்விட்டு வருந்திக் கூறியதையும் காவியப் புலவர் இளங்கோ அடிகள் அழகாக இனிய கவிதைகளாக அமைத்துக் கூறுகிறார். இந்தக் கவிதைகளும் எழிலோடும் இனிமையோடும் சுவை பயக்கின்றன. கவிதையைப் படியுங்கள்: தேவந்தி புலம்பியது: “செய்தவம் இல்லாதேன், தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன். மற்றேன்செய்தேன்! மொய்குழல் மங்கை! முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ, தோழி! அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழி! காவற் பெண்டு புலம்பியது: “கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாயோ, அன்னை! மாநாய்கன் தன்துறவுங் கேட்டாயோ, அன்னை!” அடித்தோழி புலம்பியது: “காதலன் தன்வீவும் காதலிநீ பட்டதூஉம் ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையுங் கேட்டேங்கிப் போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா - னம்புரிந்த மாதவி தன்துறவுங் கேட்டாயோ, தோழீ! மணிமே கலைதுறவுங் கேட்டாயோ, தோழீ!” ஐயையைக் காட்டித் தேவந்தி கூறியது: “ஐயந்தீர் காட்சி அடைக்கலங் காத்தோம்ப வல்லாதேன், பெற்றேன் மயலென் றுயிர்நீத்த அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலாள் வையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி! மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ!” இந்தச் செய்யுள்களின் அமைப்பும் வனப்பும் எவ்வியும் நயமும் புதுமையாக இருக்கின்றன. படிப்பவர்மனத்தைக் கவர்ந்து கொள் கின்றன. எத்தனை தடவை படித்தாலும் தெவிட்டாமல் இருக்கின்றன. பல மாதங்கள் சென்று படித்தாலும் ஆண்டுகள் கடந்து படித்தாலும் எப்போதும் புது மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இது காவியப் புலவனின் கவித்திறன் அன்றோ? சிற்பக் கலைஞரும் ஓவியக் கலைஞரும் இசைப்புலவரும் நாட்டிய நாடகக் கலைஞரும் தத்தம் அழகுக் கலைகளை எழிலுடன் அமைக் கிறார்கள். இவர்களின் நுண்கலைகள் கண் வழியாகவும் செவி வழி யாகவும் கருத்தைக் கவர்ந்து மனத்துக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. இக் கலைகள் எல்லாவற்றையும் விடமிகச் சிறந்த உயர்ந்த கலை காவியக் கலையே. கம்பனுடைய இராமயணமும், திருத்தக்க தேவரின் சிந்தாம ணியும், தோலாமொழித் தேவரின் சூளாமணியும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும், இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரமும் தமிழரின் காவியச் செல்வங்கள். இந்தக் காவியங்களைப்படித்துப் படித்துச் சுவைத்து சுவைத்து இன்புறுவோர் பேரின்பம் அடைகின்றனர். இந்த இன்பத்தை நாமும் அடைவோமாக. *** 12. மாநாய்கனும் மாசாத்துவானும்* உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினத்திலே கோவலனும் கண்ணகியும் பிறந்து வாழ்ந்தார்கள். அவர்களுடைய பெற்றோர் புகார்ப்பட்டினத்தில் பெரு வாணிகராகத் திகழ்ந்தார்கள். இவர்களைத் தவிர வேறு பல வாணிகர் புகார்ப்பட்டினத்தில் வாணிகஞ் செய்திருந் தார்கள். அவர்களில் சிலர் எட்டி என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந் தார்கள். அக்காலத்தில் வாணிகத்தினால் பெரும் பொருள் ஈட்டிச் செல்வங்கொழித்தவருக்கு ‘எட்டி’ என்னும் பட்டங் கொடுத்துத் தமிழ் வேந்தர் அவர்களைச் சிறப்புச் செய்தார்கள். எட்டிப் பட்டம் வழங்கும் போது அரசன் ‘எட்டிப்பூ’ என்னும் பொற் வூவை அளிப்பது வழக்கம். எட்டிப் பட்டம் பெற்ற ஒரு வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந் ததை மணிமேகலை கூறுகிறது. எட்டிகுமரன் ஆசனத்தில் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருந்ததை மணிமேகலை இவ்வாறு கூறுகிறது. “மகர யாழின் வான்கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டி குமரன் இருந்தோன்.” (மணி: பளிக்கறைபுக்க காதை. 56-58) காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த இன்னொரு வாணிகன், தரும தத்தன் என்னும் பெயருடையவன், பாண்டி நாட்டு மதுரைக்குச் சென்று வாணிபஞ் செய்து பெரும் பொருள் ஈட்டினான். அப்போது பாண்டிய அரசன் அவனுக்கு ‘எட்டி’ப் பட்டமும் எட்டிப்பூவும் வழங்கிச் சிறப்புச் செய்தான் என்பதை மணிமேகலை காவியமே கூறுகிறது. “வாணிக மரபின் வருபொருள் ஈட்டி நீணிதிச் செல்வனாய் நீணில வேந்தனின் எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்.” (மணி: சிறைசெய்காதை. 111-114) காவிரிப்பூம்பட்டினத்தில் கப்பல் வாணிகனாக இருந்த சாதுவன் என்பவன் தன்னுடைய செல்வத்தை யெல்லாம் சூதாட்டத்திலும் கணிகையரிடத்திலும் செலவு செய்து வறுமையடைந்தான். பிறகு அவன் தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்காகக் கப்பல் வாணிகத்தைத் தொடங்கி கிழக்குக் கடலில் சாவக நாட்டுடன் வாணிகஞ்செய்யக் கப்பல் ஏறிச் சென்றதை மணிமேகலை காவியமே கூறுகிறது. (மணி: ஆதிரை பிச்சையிட்ட காதை) இவ்வாறு சங்ககாலத்துக் காவிரிப்பூம் பட்டினத்தில் பெரிய பெரிய வாணிகர் இருந்ததை யறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம் அக்காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த துறைமுகப் பட்டினம். அங்கிருந்த வாணிகர், வாணிகப் பொருள் களைக் கப்பல்களில் ஏற்றுமதி செய்து கடல் கடந்த நாடு களுக்கு அனுப்பியும், இறக்குமதியான பொருள்களை உள் நாடுகளில் வணிகச் சாத்துகளின் மூலமாக அனுப்பி விற்றும் பெருஞ் செல்வத்தைத் தேடினார்கள். அவ்வாறு வாணிகஞ் செய்தவர்களில் கண்ணகியின் தந்தையும் கோவலனின் தந்தையும் குறிப்பிடத் தக்கவர் ஆவார்கள். அவர்களுடைய பெயரே அவர்கள் பெரிய வாணிகர் என்பதைத் தெரிவிக்கின்றன. மாநாய்கன் கண்ணகியின் தந்தை மாநாய்கன் என்று பெயர் பெற்றி ருந்தான். மாநாய்கன் என்பது அவனுடைய சொந்தப் பெயர் அன்று; சிறப்புப் பெயர். மாநாய்கன் என்பது மாநாவிகன் என்னும் சொல்லின் திரிபு. மா - பெரிய. நாவிகன் - கப்பல் வாணிகன். (நாவாய் - கப்பல். நாவிகன் - கப்பற்றலைவன்) மாநாவிகன் என்னும் பெயர் திரிந்து மாநாய்கன் என்று ஆயிற்று. கடல் கடந்த அயல் நாடுகளுடன் கப்பல் வாணிகஞ் செய்த படியால் இவன் மாநாய்கன் என்று பெயர் பெற்றான். இவனுடைய முன்னோரும் பரம்பரையாக நாவாய் வாணிகராக இருந்தனர் போலத் தெரிகின்றது. பெருஞ் செல்வனாகிய மாநாய்கனுக்கு ஒரே செல்வ மகள் கண்ணகி. சிலப்பதிகார காவியம் மாநாய்கனையும் அவன் மகள் கண்ணகியையும் இவ்வாறு கூறுகிறது. “நாகநீள் நகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கள் குலக்கொம்பர் ஈகைவாள் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்.” (சிலம்பு: மங்கல வாழ்த்துப் பாடல்) நாகநீள்நகர் - சுவர்க்கம். நாகநாடு - பவணலோகம். மாகவான் - விசும்பின் மேகம். மாநாய்கன் - மாநாவிகன் (சிறப்புப் பெயர்) ஈகை - பொன். மாசாத்துவான் கோவலனுடைய தந்தை மாசாத்துவான் என்று பெயர் பெற்றிருந்தான். மாசாத்துவான் என்பது சொந்தப் பெயர் அன்று; குடிப்பெயர். சாத்து என்றால் வணிகச் சாத்து, தரை வாணிகர். தரை வழியே பல நாடுகளுக்குச் சென்று வாணிகஞ் செய்யும் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்துவன் - சாத்தின் தலைவன் மாசாத்துவான் - என்பது பெரிய சாத்தின் தலைவன் மாசாத்துவான் தன்னுடைய செல்வச் சிறப்பினாலே காவிரிப்பூம்பட்டினத்துப் பெருமக்களில் முதல் மகனாக விளங்கினான். சோழ அரசனுக்கு அடுத்தபடியாக இவன் முதல்வனாகக் கருதப்பட்டான். இவனுடைய ஒரே மகன் கோவலன். இதனைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது. “பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகவையான்.” (சிலம்பு: மங்கல வாழ்த்துப் பாடல்) பெருநிலம் முழுதாளும் பெருமகன் - சோழ அரசன். பிறர்க்கு ஆர்த்தும் - பொருளில்லார்க்கு நிறைவிக்கும் (கொடுக்கும்) இருநிதிக் கிழவன் - குபேரன். (குபேரன் போன்ற மாசாத்துவான்) மகன் - கோவலன். கோவலனுடைய மூதாதையர், தரை வாணிகம் மட்டும் அல்லாமல் கடல் வாணிகமும் செய்தனர் என்பது தெரிகின்றது. கோவலனுடைய பாட்டன் ஒருவன் கிழக்குக் கடலில் (வங்காளக் குடாக்கடலில்) நா வாயில் சென்றபோது நாவாய் உடைந்து அல்லற்பட்டுக் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது, கடல் தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் அருளால் கரையேறி உயிர் பிழைத்தான் என்றும், அதன் காரண மாகவே, கோவலனுக்கு மாதவியிடத்தில் பிறந்த குழந்தைக்கு மணி மேகலை என்று பெயர் இட்டான் என்றும் சிலப்பதிகாரங் கூறுகிறது. “மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று தாமின் புறூஉம் தகைமொழி கேட்டடாங்(கு) இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த ‘இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன், அஞ்சல் மணிமே கலையான். உன்பெருந் தானத் துறுதி ஒழியாது துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழி’ கென விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் ‘மணிமேக லை’ என வாழ்த்திய ஞான்று.” (சிலம்பு: அடைக்கலக்காதை 25-39) வணிகச் செல்வராகிய மாசாத்துவானும் மாநாய்கனும் கோவ லனுக்குக் கண்ணகியை மணஞ்செய்வித்துத் திருமண விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். திருமணமான சில காலத்துக்குப் பிறகு கோவலனுடைய தாய், தன்னுடைய மகன் இல்வாழ்க்கையை இனிது நடத்திச் சிறப்பாக வாழ வேண்டும் என்னும் கருத்துடன் கண்ணகி யையும் கோவலனையும் தனித்து வாழ மனையறம்படுத்தினாள். சுற்றத் தாரைப் பேணுதல், விருந்தினரைப் போற்றுதல், துறந்தோரைக் காத்தல், இரந்தோர்க்கு அளித்தல் முதலிய மனையறத்தை நடத்தி வாழ்வாங்கு வாழ்வதைக் காண விரும்பினாள். தனி மாளிகையும் பொன்னும் பொருளுங் கொடுத்து ஏவலாளர் முதலிய பணியாளர்களையும் அளித்தாள். இதனைச் சிலம்பு, “மறப்பருங் கேண்மையோடு அறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க” என்று கூறுகிறது. மறப்பு அரும் - மறக்க முடியாத. கேண்மை - சுற்றம். அறப் பரிகாரம் - துறந்தாரைப் போற்றுதல் முதலிய அறச் செயல். விருந்து புறந் தருதல் - புதிதாக வந்தவர்களை உபசரித்துப போற்றுதல். வேறுபடு திரு - வெவ்வேறான செல்வம். வீறுபட - பெருமைப்பட. உரிமைச் சுற்றம் - பணிவிடையாளர்கள். கோவலனுடைய பெற்றோர் அவனிடம் என்ன எதிர் பார்த்தார்களோ அந்தச் சிறந்த வாழ்க்கை நிறைவேறவில்லை. ஆடல் பாடல் முதலிய வினோதங்களில் மனத்தைச் செலுத்தி மாதவியின் மையலில் சிக்கிப் பொன்னும் பொருளும் இழந்து வறுமையடைந்து கடைசியில் ஒருவரிடமும் சொல்லாமல் மதுரைக்குச் சென்று, அங்குக் கள்ளன் என்று பழியடைந்து இறக்க நேரிட்டது. கண்ணகி, இறந்துபோன தன் கணவனுக்கும் தன் குலத்துக்கும் நேரிட்ட வீண்பழியை நீக்குவதற் காகப் பாண்டியன் சபையில் வழக்காடி வீண்பழியை நீக்கிப் பின்னர் உயிர் நீத்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வனான மாடல மறை யோன், கன்னியாகுமரிக்குச் சென்று புனித நீராடித் திரும்பி வருகிற வழியில் மதுரையில் வந்து தங்கினபோது கோவலனின் மரணமும் கண்ணகியின் வழக்கும் நடந்தன. பிறகு மாடலன் தன் ஊருக்கு வந்து கோவலன் கண்ணகியரின் பெற்றோருக்கும் ஊராருக்கும் இந்தச் செய்திகளைச் சொன்னான். இந்த அவலச் செய்தியைக் கேட்ட கோவலனுடைய தாயும் கண்ணகியினுடைய அன்னையும் மக்களை இழந்த தீராத் துயரத் தினாலும், அவர்களுக்கு நேரிட்ட பெருந்துன்பங்களை எண்ணியும் மன நோயினால் இறந்துபோனார்கள். மாசாத்துவான் தன்னுடைய பெருஞ் செல்வங்களைத் தானதருமம் செய்து வாழ்க்கையை வெறுத்துப் பௌத்த சமயத்தைச் சார்ந்து பௌத்த பிக்குவாகி ஊரைவிட்டுப் போய் விட்டான். மாநாய்கனும் தன்னுடைய பெருஞ் செல்வத்தைத் தான தருமம் செய்து வாழ்க்கையை வெறுத்து ஆசீவக மதத்தைச் சார்ந்து துறவியாகித் தேசாத்தரஞ் சென்றான். இவ்வாறு இவ்விரு பெருஞ் செல்வர்களாகிய வாணிகப் பெருமக்களின் வாழ்க்கை முடிவுற்றது. இவற்றையெல்லாம், “செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும் செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக் கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி மாபெருந் தானமா வான்பொருள் ஈத்தாங்கு இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள் இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும் கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன் புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி நாள்விடுஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்” (சிலம்பு: நீர்ப்படைக் காதை 87-102) வாழ்த்துக் காதையிலும் இந்தச் செய்தி கூறுப்படுகிறது. “கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் தன்னுயிர் நீத்துதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ அன்னை.” (காவற்பெண்டரற்று) *** 13. இளங்கோவும் சாத்தனாரும்* தமிழ் மொழியில் முதல் முதலாகத் தோன்றின ஆதிகாவியங்கள் இரண்டு. அவை இளங்கோவடிகள் செய்த சிலப்பதிகாரமும் சீத்தலைச் சாத்தனார் செய்த மணி மேகலையும் ஆகும். இவ்விரண்டு காவியங் களும் ஒரேகாலத்தில் தோன்றினபடியாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் இவற்றின் தலைவர்களாக இருப்பதனாலும் இந்தக் காவியங்கள் இரட்டைக் காப்பியம் என்றும் கூறப்படுகின்றன. தென்னிந்திய திராவிட மொழிகளிலே தோன்றின - ஏன்? அகில இந்திய திராவிட மொழி களிலே தோன்றின முதல் காப்பியங்கள் இவை. இந்தக் காவியங் களைச் செய்த இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் சம காலத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டுமல்லாமல் இருவரும் உற்ற நண்பர்க ளாகவும் இருந்தார்கள். கடைச் சங்க காலத்தின் கடைசியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்திருந்த இவ்விரு காவியப் புலவரும் திட்டமிட்டு முடிவுசெய்து இக்காவியங்களை எழுதினார்கள். சங்ககாலத்து மக்கட் பெயர்களில் அதிகமாக வழங்கின பெயர்கள் சாத்தன், கொற்றன் என்பவை. சாத்தன் - சாத்தி, கொற்றன் - கொற்றி என்னும் பெயர்கள் கடைச்சங்க காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெருக வழங்கி வந்தன. நம்முடைய சாத்தனார் பாண்டிய நாட்டிலே சீத்தலை என்னும் ஊரில் பிறத்படியால் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் பெற்றார். சீத்தலை பாண்டி நாட்டில் எங்கிருந்தது என்பது தெரியவில்லை. வாழ்க்கையை நடத்துவதற்காக இவர் செய்து வந்த தொழில் கூல வாணிகம். கூல வாணிகம் என்றால் நவதானியக்கடை. கூல வாணிகத்தை இவர் பாண்டி நாட்டுத் தலைநகரமான மதுரையில் நடத்தி வந்தார். இக்காரணம் பற்றி இவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் பெற்றார். சாத்தனார் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். அவர் வாழ்ந்த கடைச் சங்க காலத்தில் பௌத்த மதம் ஓரளவு தமிழகத்தில் பரவியிருந்தது. பௌத்த மதம் அல்லாமல் சமண சமயமும் (சைன மதம்) தமிழகத்திலே ஓரளவு பரவியிருந்தது. கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத நாட்டை யரசாண்ட சந்திரகுப்த மௌரியன் காலத்தில் சமண சமயம் தென்னிந்தி யாவில் பரவிற்று. சந்திர குப்த மௌரியனுடைய பேரனான அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் பௌத்த மதம் தென்னிந்தியாவில் வந்து பரவிற்று. அசோக சக்கரவர்த்தி எழுதி வைத்துள்ள பிராமி எழுத்துக் கற் சாசனங்களில் இரண்டு, அவர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பௌத்த மதத்தைப் பரவச் செய்தார் என்பதைக் கூறுகின்றன. தமிழகத் திலும் சிங்களத் தீவிலும் (இலங்கைத் தீவு) பௌத்த மதப் பிரச்சாரஞ் செய்வதற்காகப் பௌத்தப் பிக்குகளை அவர் அனுப்பி வைத்த செய்தி அந்தச் சாசனங்களில் கூறப்படுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டி லிருந்து தமிழகத்தில் வளரத் தொடங்கின பௌத்த மதம் சீத்தலைச் சாத்தனார் வாழ்ந்திருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் நிலைத்தது - அதுபோலவே ஆருகத (ஜைன) மதமும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தில் பரவியிருந்தது. பௌத்த மும் சமணமும் சங்க காலத்தில் வளர்ந்து வந்தன என்றால், தமிழரின் பழைய சமயங்களான சைவமும் வைணவமும் அழிந்து விட்டன என்பது பொருள் அன்று. மாயோன் சேயோன், கொற்றவை, வருணன், வேந்தன் (இந்திரன்) முதலான தெய்வ வழிபாடு தொன்று தொட்டு இருந்து வந்தன. அவற்றோடு பௌத்தமும் சமணமும் ஒன்றி வளர்ந்தன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையில் ஐந்நூறு ஆண்டுக்காலம், சாக்கிய (பௌத்த) மதமும், ஆருகத (ஜைன) மதமும, சீத்தலைச் சாத்தனாரும், இளங்கோ வடிகளும் வாழ்ந்திருந்த கடைச்சங்க காலத்தின் இறுதி வரையில் நன்றாக வளர்ந்து வந்தன. அந்தக் காலத்தில் சமயப் பூசல்களும், மதக் கலகங்களும், தமிழகத்தில் தோன்றவில்லை. மதக் காழ்ப்பும் சமயச் சண்டைகளும் கடைச் சங்க காலத்துக்குப் பிறகு, களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தலையெடுத்துத் தமிழகத்தின் அமைதி வாழ்க்கையை குலைத்துவிட்டன. ஆனால், பிற்காலத்தில் நிகழ்ந்த இந்த அவல நிலை சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோ வடிகளும் வாழ்ந்திருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஏற்படவில்லை. அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்த சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோவடிகளும், சமய வெறி இல்லாத காலத்தில் வாழ்ந்தனர். பொதுமக்கள் வாழ்க்கையில் சமய வெறியும், மதப் பூசலும் அக்காலத்தில் இல்லையென்றாலும், கற்றவர் இடையில் அவை இங்கும் அங்கும் தலைகாட்டின என்பதையும் அறிகிறோம். தமிழரான சாத்தனார் தாய் மொழியாகிய தமிழைக் கற்றுப் புலவராக விளங்கினார். மற்றும், பௌத்தர் என்னும் முறையில் அவர் பௌத்த சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்தர். பௌத்த சமய நூல்கள் அந்த மதத்தின் ‘தெய்வ பாஷை’ யான மாகதி என்னும் பாலி மொழியில் எழுதப் பட்டிருந்த படியால் சாத்தனார் பாலி மொழியைக் கற்றுப் பௌத்த மத நூல்களைப் பயின்றார். பௌத்த பிக்குகள் பாலி மொழியை நன்றாகக் கற்றவர்கள். அவர்களிடத்தில் சாத்தனார் பாலி மொழியைக் கற்றிருக்க வேண்டும். தமிழகத்துக்கு அடுத்திருந்த ஈழ (இலங்கை) நாட்டில் பௌத்தமும் நன்றாகப் பரவி பௌத்த மதத்தின் நிலைக்களமாக இருந்தது. ஈழநாட்டில் பௌத்தமும் பாலி மொழியும் சிறந்து வளர்ந் திருந்தன. அரசியல், வாணிகம், சமயம் ஆகிய மூன்று வழியிலும் ஈழ நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் நெருங்கின. தொடர்பு அக்காலத்தில் இருந்தது. இந்தச் சூழ்நிலை, சாத்தனார் பாலி மொழியை நன்கு கற்பதற்குப் பெரிய வாய்ப்பாக இருந்தது. பாலி மொழி வாயிலாக அவர் பௌத்த மதத்தை நன்றாகப் பயின்றார் என்பதை அவர் எழுதிய மணி மேகலை காவியத்திலிருந்து அறிகிறோம். பாலி மொழியைப் பயின்ற வர்க்குச் சம்ஸ்கிருத மொழி எளிதாக இருக்கும். சம்ஸ்கிருதம் படித்த வருக்குப் பாலி மொழி எளிதாகக் கைவரும். பாலி மொழியில் வல்லவ ரான சாத்தனார் எளிதில் சம்ஸ்கிருத மொழியையும் கற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் தமிழ், பாலி சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழியிலும் வல்லவர் என்பதை அவருடைய மணிமேகலை காவியத்திலிருந்து அறிகிறோம். சாத்தனாருடைய நண்பரும் சிலப்பதிகாரக் காவியத்தின் ஆசிரியருமான இளங்கோவடிகளும் மும்மொழிப் புலமை வாய்ந்தவர். தமிழில் பெரும் புலவராக விளங்கின அவர் தாம் சார்ந்திருந்த ஆருகத (ஜைன) சமயத்தை அறிவதற்கு அந்த மதத்தின் ‘தெய்வ பாஷை’யான அர்த்தமாகதி என்னும் சூரசேனி மொழியைக் கற்றவர். மாகதி (பாலி) மொழியைப் போலவே அர்த்தமாகதி (சூரசேனி) மொழி யும் பிராகிருத மொழியைச் சேர்ந்தது. ஜைன சமயத்தார் தங்களுடைய ஆருகத மத நூல்களை அர்த்தமாகதியில் எழுதி வைத்தனர். சமண ராகிய இளங்கோ வடிகள் அந்த மதத் தத்துவங்களை அறிவதற்கு அர்த்த மாகதியைக் கற்றார். அதைக் கற்ற அவருக்கு சம்ஸ்கிருதமும் எளிதில் கைவந்த மொழியாயிற்று. அடிகளுடைய சிலப்பதிகாரக் காவியத்தைப் படிக்கும்போது இவருடைய சீத்தலைச் சாத்தனார், கூல வாணிகர் என்னும் நிலையிலும் பௌத்த சமயத்தவர் என்னும் நிலையிலும் பல நாடுகளைச் சுற்றிப் பிரயாணம் செய்தவர் என்பதை அவருடைய காவியத்திலிருந்து அறிகிறார். சங்கப் புலவர் தமிழகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்தவர்கள். சீத்தலைச்சாத்தனார் புலவர் நிலையிலும் வாணிகர் நிலையிலும் பௌத்த மதத்தவர் என்னும் நிலையிலும் தமிழகம் முழுவதும் பிரயாணம் செய்திருக்கிறார். அன்றி யும் அவர் ஈழ நாட்டிலும் சில முக்கியமான இடங்களுக்குச் சென்றிருக் கிறார். இவற்றை இவருடைய காவியத்திலிருந்து அறிய முடிகிறது. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் சேர நாட்டு வஞ்சி நகரம் தொண்டை நாட்டுக் காஞ்சிபுரம் முதலான ஊர்களை இவர் தம்முடைய மணிமேகலையில் கூறியிருப்பதைப் படிக்கும்போது இவ்வூர்களை அவர் நேரில் கண்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது. நேரில் கண்டிரா விட்டால் இவ்வூர்களை இவ்வளவு தெளிவாகக் கூறியிருக்க முடியாது. சேர நாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்துக்கு இவர் பல முறை சென்றிருக்கின்றார் என்பது தெரிகிறது. வஞ்சி நகரம் மதில் சூழ்ந்த கோட்டைக்குள் இருந்தது. கோட்டை மதிலின் கிழக்கு வாயிலுக்கு (குணவாயிலுக்கு) அருகில் இவருடைய நண்பரான இளங் கோவடிகள், சமணத் துறவியாகி அருகன்கோட்டத்தில் தங்கியிருந்தார். வஞ்சி மா நகரத்துககுப் போன போதெல்லாம், சாத்தனார், நகருக்கு வெளியே அருகன்கோட்டத்தில் இருந்த இளங்கோவடிகளைக் கண்ட பிறகு நகரத்துக்குள்ளே இருந்த அரண்மனைக்குச் சென்று சேரன் செங்குட்டுவனைக் காண்பது இவருடைய வழக்கமே என்பது தெரிகிறது. வஞ்சிமா நகரத்தை இவர் நன்றாக அறிந்திருந்தார் என்பதை, இவருடைய மணிமேகலை காவியத்தில் ‘சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை’, ‘சச்சிமாநகர்புக்ககாதை’ என்னும் இரண்டு காதைகளில் இவர் அந்நகர அமைப்பைக் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோ அடிகளும் தங்கள் காவியங் களைப் பாடத் தொடங்கின காரணம் தற்செயலாக நேர்ந்தது. தற் செயலாக நேரிட்ட சூழ்நிலை இது: சேரன் செங்குட்டுவன், மலை மேலிருந்து பேரியாறு இழிகிற இடத்தில் கூடாரம் அமைத்துச் சுற்றத் தோடு போய்த் தங்கி வேனிற் காலத்தைக் கழிப்பது வழக்கம். இந்தச் செய்தியைப் பரணர் செங்குட்டுவனைப் பாடிய (பதிற்றுப்பத்து) ஐந்தாம் பத்தில் கூறுகிறார். செங்குட்டுவன் ஆணடுதோறும் வேனிற் காலத்தில் மலையடிவாரஞ் சென்று ‘பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை’ நுகர்வது வழக்கம் என்று பரணர் கூறுகிறார்.* (*பதிற்றுப்பத்து, 5-ம் பத்து, 8-ம் செய்யுள்) செங்குட்டுவனுடைய ‘பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கையை’ப் பரணர் கூறுவது போலவே, சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் கூறுகிறார். ‘மஞ்சு சூழ்சோலை மலை’க்குப் போய்ப் ‘பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை கருமணல் எக்கரில்’ செங்குட்டுவன் சுற்றத்தோடு தங்கியதைச் சிலப்பதிகாரம் காட்சிக் காதையில் கூறுகிறார். எனவே இது செங்குட்டுவன் வாழ்க்கையில் ஆண்டுதோறும் வழக்கமாக நிகழ்ந்த நிகழ்ச்சி என்பது தெரிகிறது. செங்குட்டுவன் மலையடிவாரத்துக்குப் போய்த் தங்கும் போது அவனுடைய தம்பியாரான இளங்கோவடிகள் அங்குச் சென்று அவனைக் காண்பது வழக்கம். செங்குட்டுவன் வஞ்சிமா நகரத்தில் அரண்மனையில் இருக்கும் போது, நகரக்கிழக்கு வாயிலில் அருகன் கோட்டத்தில் இருந்த இளங்கோவடிகள் அரண்மனைக்குப் போய்த் தமயனைக் காண்பது வழக்கமில்லை. ஏனென்றால், துறவிகள் தங்களுடைய உறவினர் வீட்டுக்குப் போவது கூடாது என்பது துறவற ஒழுக்கம் ஆகும். ஆகையால் இளங்கோ அடிகள், தமயன் செங்குட்டு வனை நகரத்தில் உள்ள அரண்மனைக்குப் போய்க் காணவில்லை. அரசன் என்னும் நிலையில் செங்குட்டுவன் இளங்கோ அடிகளிடம் செல்லவில்லை. ஆனால் இருவருக்கும் உடன்பிறப்புப் பாசம் அகல வில்லை. இந்த நிலையில் இளங்கோ அடிகள் செங்குட்டுவன் மலையடிவாரத்துக்குச் செல்லும்போது அங்குச் சென்று கண்டு வருவது வழக்கமாக இருந்தது. சமயம் நேரும்போது சீத்தலைச் சாத்தனார் இளங்கோ அடிகளோடு போய்ச் செங்குட்டுவனை மலையடிவாரத்தில் காண்பது உண்டு. ஒரு வேனிற்காலத்தில் செங்குட்டுவன் வழக்கம்போல மலையடி வாரஞ் சென்று தங்கியிருந்தபோது இளங்கோ அடிகள் அங்குச் சென்றார். சீத்தலைச் சாத்தனாரும் அவ்விடஞ் சென்றார். அப்போது ஒரு நாள் குன்றக் குறவர் கூட்டமாக வந்து செங்குட்டுவனுக்குக் கை யுறை கொடுத்து வணங்கினார்கள். வணங்கித் தங்கள் குறிச்சியில் தாங்கள் கண்ட செய்தியைக் கூறினார்கள். ‘வேங்கை மரத்தின் அடியில் ஒரு காரிகை வந்து தங்கினாள். அவள் உயிர் அங்குப் பிரிந்து விட்டது. உயிர்விட்ட அவள் யாரோ, என்னாட்டவளோ அறியோம்’ என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த சாத்தனார், கண்ணகியின் செய்தியைக் கூறினார். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்ததும் கோவலன் கொலைப்பட்டதும கண்ணகி மதுரையைத் தீயிட்டுக் கொளுத்தியதையும் பிறகு அவள் நகரத்தைவிட்டுப் போய்விட்ட தையும் தெரிவித்து, குன்றக் குறவர் கூறிய வேங்கை மரத்தின் கீழ் வந்த காரிகை கண்ணகியாக இருக்கவேண்டும் என்று கூறினார். இந்தச் செய்தியைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் பத்தினியைப் போற்றி அவளுக்குக் கோட்டம் அமைக்க எண்ணினான். இளங்கோ அடிகள், கோவலன் கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றைச் சிலப்பதிகாரக் காவியமாகப் பாட எண்ணங்கொண்டார். சீத்தலைச் சாத்தனார் கோவலன் மகள் மணிமேகலையின் துறவைக் காவியமாகப் பாட உறுதி கொண்டார். இவ்வாறு இம் மூன்று செயல்களும் பேராற்றங் கரையில், செங்குட்டுவனுடைய பொழில் வாழ்க்கையின் போது, உருவெடுத்தன. மணிமேகலை காவியத்தைச் சாத்தனார் புலவர்களுக்காக எழுத வில்லை. சாதாரண கல்வி கற்ற மக்களுக்காகவும் அவர் எழுதினார். ஆகவே அந்தக் காவியம் எளிய நடையில் அமைந் துள்ளது. புலவர் மட்டும் அறிந்து கொள்ளும் உயர்ந்த நடையில் எழுதாமல் சாதாரண படிப்புள்ளவர்களுக்கும் விளங்கும்படி எளிய நடையில் அக்காலத்துத் தமிழில் எழுதினார். இப்படி எழுத வேண்டியது பௌத்த மதத்தின் கோட்பாடாகும். இதைப் பகவான் புத்தரே தம்முடைய காலத்தில் வற்புறுத்திக் கூறியுள்ளார். அந்தக் கட்டளையைக் கடைப்பிடித்து சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காவியத்தை எழுதினார். பகவான் புத்தர் தம்முடைய உபதேசங்களை அக்காலத்தில் வட இந்தியாவில் வழங்கி வந்த பாலி மொழியில் போதித்தார். அவர், மக்களுக்கு விளங்காத, கற்றவருக்கு மட்டும் விளங்கும்படியாக, பேச்சு வழக்கில் இல்லாத சம்ஸ்கிருத மொழியில் உபதேசம் செய்யவில்லை. அவருடைய சீடர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் போய் அந்தந்த நாடுகளில் பேசுகிற தாய் மொழியில் புத்தர் உபதேசங்களைப் போதித்தார்கள். அப்போது சம்ஸ்கிருத மொழியை நன்றாகக் கற்றவர்களான இரண்டு பிராமண பிக்குகள் பகவன் புத்தரிடம் வந்து, புத்தர் உபதேசங்களைச் சம்ஸ் கிருத பாஷையில் எழுதி வைப்பது நல்லது என்று கூறினார்கள். புத்தருடைய உபதேசங்களை வெவ்வேறு நாடுகளுக்குப் போய்ப் போதிக்கிற பிக்குகள் அந்தந்த நாட்டுத் தாய் மொழிகளில் போதிக்கிறார்கள். இப்படிச் செய்வதனால் புத்தருடைய உபதேசங்கள் கெட்டுப்போகின்றன. ஆகையால் பகவன் புத்தருடைய உபதேசங்களைச் சந்த பாஷையில் (சம்ஸ்கிருத மொழியில்) போதிப்பது நல்லது என்று சொன்னார்கள். இதைக்கேட்ட பகவன் புத்தர் அவர்களுடைய கருத்தை வன்மையாக மறுத்தார். படித்தவர் களுக்கு மட்டும் விளங்குகிறதும் பொதுமக்களுக்கு விளங்காதது மான சம்ஸ்கிருத மொழியில் புத்தர் உபதேசங்களை எழுதி வைப்பது கூடாது. அப்படிச் செய்வது பெருந்தவறாகும். புத்தருடைய உபதேசங்களை மக்களுக்கு விளங்குகிற அந்தந்த நாட்டு மொழி களிலே போதிக்க வேண்டும் என்று கூறினார். இந்தச் செய்தி பௌத்தருடைய பிடக நூல்களில் ‘சுல்லவக்க’ என்னும் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது. பௌத்தராகிய சீத்தலைச் சாத்தனார் இந்தக் கருத்தை நன்றாக அறிந்தவராகையால், பௌத்தக் கொள்கைகளைக் கூறுகிற மணி மேகலை காவியத்தை உயர்ந்த சங்கத் தமிழ் நடையில் புலவர்கள் மெச்சும் காவிய நடையில் எழுதாமல், எல்லோருக்கும் விளங்குகிற எளிய நடையில் தமிழ் மரபு குன்றாத நடையில் எழுதினார். மணி மேகலை பௌத்த மதக் காவியம் ஆகையால் அதை மதப்பிரசார நோக்கத் தோடு எளிய நடையில் எழுதினார். இதனால்தான் இவர் காலத்துச் சங்கத் தமிழ் நடைக்கும் இவருடைய மணிமேகலை காவியத்துக்கும் மொழி நடையில் பெருத்த வேறுபாடுகள் காணப் படுகின்றன. இந்த பௌத்த சமய மரபை அறியாதவர்கள், மணி மேகலையின் எளிய நடையின் காரணத்தை யறியாமல், சங்கச் செய்யுள் நடைக்கும் மணிமேகலைச் செய்யுள் நடைக்கும் வேறுபாடு தோன்றுகிறபடியால் மணிமேகலை சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல் என்று கூறுவாராயினர். அவர்களுக்குப் பௌத்த சமய மரபுதெரியாதபடியால் இவ்வாறு தவறாகக் கூறுகிறார் கள். அவர்களுடைய தவறான கருத்து மெய் போலத் தோன்றுகிற படியால் மற்றவர்களும் இவர் கூறுவது உண்மை என்று கருதுகின்றனர். இக்கருத்து தவறானது. மணிமேகலை காவியம் கடைச்சங்க காலத்து (கி.பி. 2-ம் நூற்றாண்டின் பிற்பாதியில்) எழுதப்பட்ட நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மணிமேகலை காவியத்தை எழுதிய சீத்தலைச் சாத்தனாரே சங்கத் தமிழ் நடையில் வேறு சில செய்யுட்களைப் பாடியுள்ளார். அந்தச் செய்யுட்கள் சங்கத்தொகை நூல்களில் தொகுக்கப் பட்டுள்ளன. அகநானூறு 53, 134, 229, 306, 320. குறுந்தொகை 154. நற்றிணை 36, 127, 339. புறாநனூறு, 59. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடியது. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைப்பற்றி இவ்வளவுதான் அறிய முடிகிறது. சீத்தலைச் சாத்தனாரைப் பற்றிப் பிற்காலத்தவர் கற்பித்த கதைகள் பல உள்ளன. *** 14. பத்தினிச் செய்யுளும், கண்ணகியும் யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலிலே அதன் விரிவுரைதாரர் ஒரு வெண்பாவை மேற்கோள் காட்டி அதனைப் பத்தினிச் செய்யுள் என்று கூறியுள்ளார். அந்தச் செய்யுள் இது. “கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க ஒண்செங் குருதியின் ஓஒகிடந்ததே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை.” இந்த வெண்பாவைப்பற்றிச் சில அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து விசித்திரமான முடிவு கூறியுள்ளனர். இந்தச் செய்யுளைப் பாடியவர் சிலப்பதிகாரக் காவியத் தலைவியாகிய கண்ணகியார் என்றும், கோவலன் கண்ணகியின் வரலாறு இதில் கூறப்படுகிறது என்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். இதனோடு நிற்கவில்லை. இது, சிலப்பதி காரக் காவியம் இயற்றப்படுவதற்குமுன்னே பாடப்பட்ட செய்யுள் என்றும், ஒரு பழைய கதையை இது கூறுகிறது என்றும், அந்தப் பழைய கதையை ஆதாரமாகக்கொண்டு பிற்காலத்திலே சிலப்பதிகாரக் காவியம் இயற்றப்பட்டதென்றும் எழுதியுள்ளார்கள். இவர்கள் கருத்து செம்மையானதுதானா, இவர்கள் ஆராய்ச்சி சரியா என்பதைப் பார்ப்போம். முதலில் இந்த அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். இந்தப் பத்தினிச் செய்யுளைப்பற்றி முதன்முதலில் ஆராய்ந் தவர் திரு.மு. இராகவையங்கார் அவர்கள். இவர், தமது “ஆராய்ச்சித் தொகுதி” என்னும் நூலில் “கண்ணகியின் தமிழ்ப் புலமை” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:- “இனி, இப்பத்தினிச் செய்யுளை நோக்குமிடத்து, இது, தம் இன்னுயிர்க் கணவன் வெட்டுண்டு வீழ்ந்த நிலைகண்டு புலம்பிப் பாடியதாதல் தெரியலாம். சங்க காலத்தே பத்தினித் தேவி என்று பரவப்பெற்றவளும், பாண்டியன் ஏவலால் வெட்டுண்டு வீழ்ந்த கணவனுக்காகப் பரிந்து செயலற்று நின்றவளும் கோவலன் மனைவியே என்பது சொல்லவும் வேண்டுமோ? இவ் வெண்பாவில், கெழுதகைமை யில்லேன் ............................... பன்னாள் அழுத கண்ணீர் துடைத்த கை’ என்று கூறப்படுவதால் கணவனுடன் தனக்கு நெடுங்காலம் கூட்டமின்றிப் பிரிவு நிகழத் தன் நாயகன் பின்பு தலை யளி செய்து போந்தமையும் நன்கு விளங்கும். அங்ஙனம் பன்னா ளாழுத கண்ணீரை மாற்றி அருள்புரிந்தது அவன் கரமேயாதலின், அக்கரம் தன்முன் குருதியளைந்து கிடக்கு நிலைக்கு வருந்தி ஒண்செங் குருதியின் ஓஒ கிடந்ததே’ என்று புலம்பிப் பாடினள் நம் பத்தினிதேவி என்க. “கண்பொழி புனல்சோரக் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ” என்றிவ்வாறு கண்ணகி, வெட்டுண்ட கணவன்முன் புலம்பி நின்ற நிலையை இளங்கோவடிகள் கூறுதலுங் காண்க ................... இத்தகைய அரிய பத்தினிப் பாட்டை இளங்கோவடிகள் எடுத்தாளாமைக்குக் காரணந் தெரிந்திலது. ஆயினும் இச்செய்யுள் பத்தினித் தேவியது என்ற வழக்குப் பழமையானதென்பதிற் சிறிதும ஐயமில்லை” (பக்கம் 237-238) திரு. ளு. வையாபுரிப் பிள்ளையவர்கள் இச்செய்யுளைப்பற்றித் தமது “இலக்கிய மணிமாலை” (1954) என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்.:- ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு வெண்பா இவ் விருத்தியில் (யாப்பருங்கல விருத்தியில்) காணப்படுகிறது. ...................................... இதனைப் ‘பத்தினிச்’ செய்யுள் என்று விருத்தியுரைகாரர் கூறினர். பத்தினி யொருத்தியின் வரலாறு பற்றியதென்று இது கொள்ளத்தக்கது. ஊர்சூழ் வரியை நோக்குமிடத்து (சிலம்பு ஓஐஓ 39-50) இப்பத்தினி கண்ணகியாகலா மென்பது புலப்படும். இவள் வரலாறு ஒருபடியாக உருப்பெற்ற காலத்து, அவலச்சுவை மிகுந்த இப்பகுதியுடன் பிற கதைப் பகுதிகளையும் அமைத்து வெண்பாவினால் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந்தா னென்று கொள்ளலாம்” (பக்கம் 134) வையாபுரிப் பிள்ளையவர்கள் தாம் எழுதிய “காவிய காலம்” என்னும் புத்தகத்திலும் இவ்வாறு எழுதுகிறார்:- “ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு செய்யுள் யாப்பருங்கல விருத்தியிலும், பேராசிரியர் உரை முதலியவற்றிலும் காணப்படுகிறது. அது வருமாறு:- “கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க ஒண்செங் குருதியின் ஓஒ கிடப்பதே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுத கண்ணீர் துடைத்த கை.” இரண்டாமடி ஐஞ்சீராய் மிக்கு வந்துள்ளது. ஆரிடப்போலி அல்லது ஆரிட வாசகம் என்று இதனைக் கூறுவர். ஆரிடம் அல்லது ஆர்ஷம் என்பதனால் இதுமிக்க பழைமை வாய்ந்ததெனல் துணியப் படும். இச்செய்யுள் பத்தினிச் செய்யுளென வழங்கப்படுதலினாலே, பத்தினித் தெய்வமாகிய கண்ணகி வரலாறு பற்றியதென்றே கொள்ளத்தக்கது. ............................... இங்ஙனமாகப் பழையதொரு வரலாறு பற்றியே சிலப்பதிகாரக் கதைப் பொருள் தோன்றிய தாகும்.” (பக்கம் 105-106)” வையாபுரிப் பிள்ளையின் ஆராய்ச்சியை அப்படியே பின்பற்றுகிற அவருடைய நண்பரான திரு. மு. ஹ. நீலகண்ட சாஸ்திரி, தாம் எழுதிய ‘மணிமேகலை சிலப்பதிகாரக் காலம்’ என்னும் ஆங்கிலக் கட்டுரை யிலே, பிள்ளையவர்கள் கூறிய கருத்தையே எழுதுகிறார்- “ஒரு பெண்மணி குருதியில் கிடக்கிற தன் கணவனின் இறந்த உடம்பைக்கண்டு புலம்பியதாக ஒரு பழைய வெண்பாவை யாப்பருங்கல விருத்தி மேற்கோள் காட்டுகிறது. இந்தச் செய்யுள் பத்தினிச் செய்யுள் என்று கூறுப்படுகிறது. இதில், கண்ணகி கதையின் அடிப்படையான கருத்து உள்ளது என்பதில் ஐயமில்லை. இது ஆரிடச் செய்யுள் எனப்படுகிறது. இச்செய்யுளைச் சிலப்பதிகார நூலுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.” “The Yapparungala Viruthi reproduces and old Venba in which a woman laments over the dead body of her husband lying in a pool of blood-and the Verse is marked pattini Ceyyul-song of the chaste wife. There can be no doubt that we are here right in the heart of Kannaki story and as this verse is called ‘Arida’ it must be taken to have preceded the Cilappadikaram.” (University of Ceylon Review Vol. VII.p.p. 21-27.) இவ்வாறு இந்தப் பத்தினிச் செய்யுளைப்பற்றி இம்மூன்று அறிஞரும் கூறுகிறார்கள். இவர்களில் இராகவையங்கார், இப் பத்தினிச் செய்யுள் கண்ணகியார் பாடியது என்று கூறுகிறார். வையா புரியாரும் நீலகண்டரும், இச்செய்யுள் கண்ணகியார் பாடியது அல்ல என்று கருதினாலும், இதில் கூறப்படுகிறவர்கள் கண்ணகியாரும் கோவலனும் என்று கருதுகிறார்க்ள. பிள்ளையவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாகச் சென்று கண்ணகி சரிதத்தைப்பற்றிய ஒரு நூலை, ஒரு புலவர் வெண்பா வினால் இயற்றி யிருந்தார் என்றும், அந் நூலின் ஒரு செய்யுள்தான் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டிய பத்தினிச் செய்யுள் என்றும் கூறுகிறார். இம் மூவரும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அலுவல் புரிந்தவர்கள். இராகவையங்காரும் வையாபுரிப் பிள்ளையும் பல்கலைக் கழகத்தில் தமிழ் அகராதி வெளியீட்டில் அலுவல் செய்தவர்ககள். அகராதி அலுவல் முடிந்த பிறகு பிள்ளையவர்கள் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். இதே பல்கலைக் கழகத்தில் சரித்திரத் துறைத் தலைவராக இருந்தவர் நீல கண்ட சாஸ்திரியார் இவர்கள் அடிக்கடி கலந்துபேசிக் கருத்துக் களைப் பரிமாறிக்கொண்டவர்கள். ஆகையால் இவ்வாராய்ச்சியில் ஒரே விதமான கருத்தைக் கூறுகிறார்கள். பத்தினிச் செய்யுளைப் பற்றி இவர்கள் கொண்ட கருத்தை மேலே காட்டினோம். இனி, இவர்களின் ஆராய்ச்சியும் முடிவும் சரிதானா என்பதைப் பார்ப்போம். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் வெண்பாவை மேற்கோள் காட்டி இதனைப் பத்தினிச் செய்யுள் என்று கூறினர். பத்தினிப் என்ற பெயரைக் கண்டதும், இம்மூன்றுபேரும், பத்தினி என்பது கண்ணகி தான் என்று முடிவு செய்துவிட்டனர். பத்தினிச் செய்யுளைப் பாடியவர் கண்ணகியார் என்று அய்யங்கார் முடிவுசெய்துவிட்டார். பத்தினிச் செய்யுள், கோவலனையும் கண்ணகியையும் பற்றியது என்று பிள்ளை யவர்களும் சாஸ்திரியாரும் முடிவு செய்து விட்டனர். கண்ணகியார் ஒருவர் மட்டுந்தானா பத்தினி? வேறு பத்தினிப் பெண்கள் தமிழ் நாட்டில் இருந்ததில்லையா? பத்தினி களில் சிறந்தவர் மாபெரும் பத்தினி யாகிய கண்ணகியார் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், கண்ணகியாருக்கு முன்னும் பின்னும் பத்தினியர் பலர் உள்ளனர். அந்தப் பத்தினிப் பெண்களில், பத்தினிச் செய்யுளைப் பாடியவர் எந்தப் பத்தினியோ? கண்ணகியார் தான் “பத்தினிச் செய்யுளை”ப் பாடினார் என்பதற்கு என்ன சான்று உள்ளது? பத்தினிச் செய்யுள், கண்ணகியார் பாடியது என்றும் கண்ணகியாரைப்பற்றியது என்றும் இவர்கள் கருதியது பிழையான கருத்தாகும். இவர்களின் கருத்துக்கு நேர்மாறாக இச் செய்யுளின் அகச்சான்று இருக்கிறது. இச் செய்யுள் கோவலனை யும் கண்ணகியையும் பற்றியது அல்ல. அவர்களைப்பற்றி இந்த வெண்பாவில் ஒன்றும் கூறப்படவில்லை. வேறு யாரைப்பற்றியோ கூறுகிறது. செய்யுளைப் படித்துப் பாருங்கள். “கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க ஒண்செங் குருதியின் ஓஒகிடந்ததே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை.” செங்குருதியில் (இரத்தத்தில்) தோய்ந்து இறந்துகிடக்கிறான் ஒரு வீரன். அவன் கையிலே உடைவாள் (கண்டகம்) பிடித்திருக் கிறான். அல்லா மலும் அவன் கையில் கடகம் அணிந்திருக்கிறான். அது மணிகள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கடகம். இச் செய்யுளின் முதல் இரண்டடிகள் இவற்றைக் கூறுகின்றன. யாரோ ஒரு வீரன் போர்க்களத்தில் இறந்துகிடப்பதை இச் செய்யுள் கூறுகிறது. கோவலன் கொலையுண்டிறந்தபோது அவன் கையில் மணிக் கடகம் இல்லை; கட்டாரியும் இல்லை. இவை இரண்டையும் உடைய ஒருவன் இறந்துகிடப்பதாக இச் செய்யுள் கூறுகிறது. செய்யுளில் அகச் சான்று இவ்வாறு இருக்க, இதில் கூறப்படுகிறவன் கோவலன் என்று இந்த மூன்று அறிஞர்களும் கருதுகிறார்கள்! யாரோ ஒரு போர் வீரன் போர்க்களத்திலே இறந்துகிடக்கிறான் என்பதையும், போர் முடிந்த பிறகு அவ்வீரனுடைய மனைவியாகிய பத்தினிப் பெண் அவன் இறந்து கிடக்கும் நிலையைக்கண்டு புலம்பியதையும் இப்பத்தினிச் செய்யுள் பட்டப் பகல்போல் தெரிவிக்கிறது. அகச் சான்று தெளிவாக இருக்கிறது. அப்படியிருந்தும், இம்மூவரும், இறந்து கிடப்பவன் கோவலன் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதைப் பகுத்தறிவுள்ள உலகம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இறந்துகிடப்பவன், கையில் மணிக் கடகம் அணிந்திருப்பதை இச்செய்யுள் கூறுகிறது. கோவலன் மதுரையில் கொலை யுண்டிருந்த போது, மணிக் கடகம் அணிந்திருந்ததாகச் சிலப்பதி காரம் கூறவில்லை. செல்வங்களை எல்லாம் இழந்துவிட்ட கோவலனிடம் மணிக்கடகம் ஏது? சாதாரண பொன் கடகந்தான் ஏது? கோவலனிடம் கடகம் இருந்திருந்தால், அதை விற்காமல் கண்ணகியின் காற்சிலம்பை விற்கக் கொண்டு போவானா? சங்க காலத்தில் மங்கையரின் காற் சிலம்புக்குத் தனிப் பெருமையும் மதிப்பும் இருந்தது. மங்கையர் மணம் செய்து கொள்ளும் போது, அவர்களின் காற்சிலம்பைக் கழிக்கும் சிலம்புகழி நோன்பு சிறப்பாக நடைபெற்றது. அக்காலத்து மகளிர் காற்சிலம்பைச் சிறந்த, தனிமதிப்புள்ள பொருளாகக் கருதியிருந்தனர். ஆகவே கோவல னிடம் மணிக் கடகம் இருந்திருந்தால், அதை விற்காமல் கண்ணகியின் காற்சிலம்பை விற்பதற்கு மணந் துணிமாட்டான் கோவலன். அவனிடம் வேறு அணிகலன் இல்லாத வறுமை நிலையில், தன் மனைவியின் காற்சிலம்பை விற்பதற்குக் கொண்டு வோனான். எனவே, பத்தினிச் செய்யுளில், கையில் மணிக்கடகம் அணிந்து இறந்துகிடப்பதாகக் கூறுப்படுகிறவன் கோவலன் அல்லன், வேறு யாரோ போர் வீரன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது. அவ்வீரன் கடகம் அணிந்து இருக்கிறான் என்று கூறப்படுவதால், அவன் செல்வம் படைத்த சேனைத் தலைவனாக இருக்கக் கூடும் என்பதும் தெரிகிறது. இன்னும் அகச் சான்றும், இவ்வறிஞர்கள் கொண்ட கருத்து தவறானது என்பதைக் காட்டுகிறது. இறந்து கிடக்கிற வீரன், தன் கையில் கண்டகம் (உடைவாள்) ஏந்தியிருக்கிறான் என்று இந்தப் பத்தினிச் செய்யுள் கூறுகிறது. கோவலன் கொலையுண்டபோது அவன் கையில் உடைவாள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. கோவலன் கையில் வாள் இருந்திருக்குமானால், அவன் வெட்டுண்டு மடிந்திருக்க மாட்டான். சிலப்பதிகார வரலாறு வேறுவிதமாக முடிந்திருக்கும். ஏனென்றால், கோவலன் படைக் கலப் பயிற்சியுள்ளவன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மதங்கொண்ட யானை பிச்சைக்காரன் ஒருவனைத் தன் கையில் பிடித்துக்கொண்டபோது கோவலன் யானையின் கையிலிருந்து அவனை விடுவித்துத் தானும் தப்பித்துக் கொண்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலம்பு-15-ஆம் காதை 43-53.) இதிலிருந்து, “களிறு அடக்கிய கருணை மறவ” னாகிய கோவலன் யானைப் போர்ப் பழகியவன் என்பது தெரிகிறது. யானைப் போர் பழகியவன் சாதாரண வாட்போரிலும் பழகியிருப்பானன்றோ? மதங்கொண்ட யானையையும் அடக்கவல்ல கோவலன், மதுரையில் கொலையுண்டபோது, அவன் கையில் உடைவாள் இருந்திருக்குமானால், அவன் வெட்டுண்டு மடிந்திருக்க மாட்டான். அப்படி மடிந்திருந்தாலும் தற்காப்புக்காகப் போர் செய்து பிறகு மடிந்திருப்பான். கோவலன் ஆயுதம் இல்லாமல் அயர்ந்திருக்கும் நிலையில் கொலைசெய்யப்பட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இதற்கு நேர்மாறாகப் பத்தினிச் செய்யுள், கையில் கட்டாரி ஏந்திப்போர் செய்து இறந்து கிடக்கிற வீரனைக் கூறுகிறது. எனவே, இச்செய்யுளில் கூறப்படுகிறவன் கோவலன் அல்லன் என்பதும், அவன் வேறு யாரோ போர் வீரன் என்பதும ஐயம் இல்லாமல் தெளிவாகத்தெரிகிறது. இவ்வளவு தெளிவான அகச் சான்று இருக்க, இதனைச் சிறிதும் கருதாமல், பல்கலைக் கழகத்து மூன்று அறிஞர்களும், இச்செய்யுளில் கூறப்பட்டவன் கோவலன் என்று கூறுகிறார்கள். இவர்கள் கருத்தை அறிவுடையோர் ஏற்றுக்கொள்வரோ? “கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை” என்னும் இச்செய்யுளின் பின் இரண்டடிகளும், கண்ணகியைப் பற்றி எதையுங் கூறவில்லை, வேறு யாரோ ஒரு பெண்ணின் செய்தியைத் தான் கூறுகிறது. கற்புள் ஒரு பெண்மணியின் ஊடற் செய்தி இதில் கூறப் படுகிறது; அவளுடைய வாழ்க்கையிலே தன் கணவனுடன் பல நாட்கள் ஊடல் கூடல்கள் நிகழ்ந்ததைக் கூறுகிறாள். இச்செய்யுளில். இந்த ஊடல் கூடல்களைக் கண்ணகி கோவலனுடன் இணைத்துக் கூறுவது பொருந்தாது. கண்ணகிக்கும் கோவலனுக்கும் ஊடல் கூடல்கள் நிகழ்ந்ததாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. அதற்கு மாறாக, மாதவிக்கும் கோவலனுக்கும் பலமுறை ஊடல் கூடல்கள் நிகழ்ந்ததைச் சிலப்பதி காரம் கூறுகிறது. கண்ணகியுங் கோவலனும் மதுரைக்குச் சென்ற பிறகுங் கூட அவர்களுக்குள் ஊடலும் கூடலும் நிகழவில்லை. அவர்களுக்கு அங்கு ஊடல் கூடல்களுக்கு வாய்ப்பும் ஏற்படவில்லை. எனவே, இச் செய்யுளின் பின் இரண்டடிகளும் கண்ணகியைப் பற்றியதல்ல; வேறு யாரோ ஒரு பத்தினிப்பெண்ணைப் பற்றிய செய்தியாகக் காணப்படுகிறது. எனவே, இந்தப் பத்தினிச்செய்யுள், கோவலன் கண்ணகியரைப் பற்றியதல்ல, வேறு யாரோ ஒரு வீரனையும் அவன் மனைவியை யும் பற்றிய செய்யுள் என்பது ஐயமில்லாமல் விளங்குகிறது. ஆனால், அய்யங்காரும், சாஸ்தியாரும், பிள்ளையும், இச்செய்யுள் கோவலன் கண்ணகியரைப்பற்றியது என்று கூறினர். இவர்கள் இவ்வாறு கூறியதற்குக் காரணம் என்னவென்றால், யாப்பருங்கல உரையாசிரியர் இதனைப் பத்தினிச் செய்யுள் என்று கூறியதுதான். உரையாசிரியரின் மேல் தவறில்லை. பத்தினி என்றால் கண்ணகி தான் என்று கருதிக் கொண்டது இவர்கள் த்வறு. பத்தினி என்றால் பொருள் என்ன? பத்தினி என்றால் கற்புடைய பெண் என்பது பொருள். எனவே பத்தினிப் பெண்கள் - கற்புடைய பெண்கள் - பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு பத்தினிப் பெண்ணைப் பற்றிய செய்யுள் இது. பத்தினி என்றால் கண்ணகி, பத்தினிச் செய்யுள் என்றால் கண்ணகியைப்பற்றிய செய்யுள் என்று ஏன் கருத வேண்டும்? செய்யுளில் கூறப்படுகிறதைப் பார்த்தாலே, இது கண்ணகி கோவலரைப்பற்றிய செய்தியல்ல என்பது நன்கு தெரி கிறதே. விழிப்பாக இருந்து, இச்செய்யுளின் பொருளைக் கவனித்து, அகச் சான்று புறச்சான்றுகளைக்கொண்டு ஆராய்ந்து பார்த்திருந்தால் இவர்கள் இத்தவறான கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். பத்தினி என்பதன் பொருள் என்ன என்பதைச் சிந்திக்காமல் அகச்சான்று புறச்சான்றுகளைக் கருதாமல், பத்தினி என்றால் கண்ணகி ஒருவர்தான் என்று தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தபடியினாலே, இவர்களின் முடிவு தவறாயிற்று. தவறான ஆராய்ச்சியினால் பெற்ற தவறான முடிவை வைத்துக் கொண்டு. அதன் மேலே யூகமான கருத்துக்களை இவர்கள் கற்பித்துக் கொண்டார்கள். பத்தினிச்செய்யுள், கண்ணகியின் வரலாற்றைக் கூறுகிற செய்தி என்றும், அது கண்ணகியார் பாடிய செய்யுள் என்றும் இவர்கள் கூறுவது மருட்சியே யல்லாமல் தெருட்சியல்ல. இது கண்ணகி கோவரைப் ற்றிய செய்யுளாக இருந்தால், இச்செய்யுளை இளங்கோ அடிகள் தமது சிலப்பதிகாரத் தில் கூறியிருப்பார் அன்றோ? உரையாசிரியர்களாகிய அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரையாசிரியரும் தமது உரைகளில் மேற்கோள் காட்டியிருப்பார்கள் அல்லவா? வேறு யாரோ ஒரு பத்தினிப் பெண்ணைப்பற்றிய செய்யுள் ஆகையினாலே, இச் செய்யுளை அவர்கள் தமது உரையில் மேற்கோள் காட்டவில்லை. சிலப் பதிகார வரலாற்றுக்கும் இப்பத்தினிச் செய்யுளுக்கும் உண்மையில் யாதொரு தொடர்பும் இல்லை. யாரோ ஒரு பத்தினிப் பெண், போர்க் களத்தில் இறந்துபோன தன் கணவனைப் பற்றிப் பாடிய செய்யுள் இப்பத்தினிச் செய்யுள் என்பது தெளிவாகக் தெரிகிறது. “இச் செய்யுள் பத்தினிச் செய்யுள் என வழங்குகிற படியினாலே, பத்தினித் தெய்வமாகிய கண்ணகி வரலாற்றைப் பற்றியதென்றே கொள்ளத் தக்கது” என்று வையாபுரிப் பிள்ளையும், “இந்தச் செய்யுள் பத்தினிச் செய்யுள் என்று கூறப்படுகிறது. இதில் கண்ணகி கதையின் அடிப்படையான கருத்து உள்ளது என்பதில் ஐயமில்லை” என்று நீலகண்ட சாஸ்திரியார் எழுதியது முற்றிலும் தவறு என்பது மேலே காட்டிய காரணங்களினாலே நன்கு விளங்கும். பத்தினிச் செய்யுள் என்று பெயர் இருப்பதனாலேயே இந்தச் செய்யுள் எப்படி கண்ணகியின் வரலாறு ஆகும்? தமிழ் நாட்டிலே ஒரே ஒரு பத்தினிதான் உண்டா? கண்ணகிக்கு முன்னும் பின்னும் வேறு பத்தினிப் பெண்கள் இல்லையா? என்று மீண்டும் கேட்கிறnhம். “இவள் வரலாறு ஒருபடியாக உருப்பெற்றகாலத்து, அவலச் சுவை மிகுந்த இப்பகுதியுடன் பிற கதைப் பகுதிகளையும் அமைத்து வெண்பாவினால் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந்தான் என்று கொள்ளலாம்” என்று வையாபுரிப் பிள்ளை எழுதியதும், “இதில் கண்ணகி கதையின் அடிப்படையான கருத்து உள்ளது என்பதில் ஐயமில்லை” என்று நீலகண்ட சாஸ்திரியார் எழுதியதும் பொருளற்ற வீண் கருத்தாகும். என்னை? பத்தினிச் செய்யுள் யாரோ ஒரு பத்தினியின் செய்யுளாயிருக்கும்போது, அச் செய்யுளிலிருந்து கண்ணகி வரலாறு தோன்றிற்று என்று கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலாகும். வையாபுரியாரும் நீலகண்டரும் இதனோடு நின்றார்களா? இல்லை. மேலும் மேலும் ஆகாயக்கோட்டையைக் கட்டிக்கொண்டு போகிறார்கள். மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் பிற்காலத்து நூல்கள் என்று நிலைநாட்டவேண்டும் என்னும் ஆவேசத்தினால் அறிவுக்கு ஒவ்வாத காரணத்தைக் காட்டுகிறார்கள். தொல்காப்பியம், சொல்லதிகாரம் 100-ஆம் சூத்திர உரையில் தெய்வச் சிலையார் என்னும் உரையாசிரியர் ஒரு செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது: “காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையி னகன்றுபோய்க் கோதி யிறைவனது கூடற்கட் கோவலன்சென் றேத முறுதல் வினை.” இச்செய்யுளைக்குறித்து, வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது. “இலக்கிய மணிமாலை” என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்:- “இவள் (கண்ணகியார்) வரலாறு ஒருபடியாக உருப்பெற்ற காலத்து, அவலச் சுவைமிகுந்த இப்பகுதியுடன் பிற கதைப் பகுதிகளை யும் அமைத்து வெண்பாவினால் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந் தானென்று கொள்ளலாம். (தொல்.சொல்.100) தெய்வச் சிலையார் கூறும் வெண்பா இந்நூலைச் சேர்ந்ததாகலாம். ‘ஆரிடப் போலி அல்லது ஆரிடவர்க்கம்’ என்று முதற்செய்யுள் (பத்தினிச் செய்யுள்) குறிப்பிடப் படுவதால், இந்நூல் சிலப்பதி காரத்திற்கு முற்பட்டதாதல்வேண்டும். எனவே இக்காவியத்துக்கு (சிலப்பதிகாரத்துக்கு) முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்துள்ளதெனக் கருதுதல் தகும்” (இலக்கிய மணிமாலை பக்கம் 135) சிலப்பதிகாரத்துக்கு முன்பே கண்ணகி வரலாறு பற்றிய ஒரு வெண்பா நூல் இருந்தது என்று கூறுகிற வையாபுரிப் பிள்ளைக்கே இதுபற்றி உறுதியான நம்பிக்கை இல்லை. ஏனென்றால், இவரே இன்னொரு இடத்தில் இதற்கு மாறுபட எழுதுகிறார். தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் (1957) என்னும் நூலில் இவர், இக்கருத் துக்கு நேர்மாறாக இவ்வாறு எழுதுகிறார்:- “சிலம்பு - அதிகாரம் என்னும் பெயர் நயம்பெற அமைந்த தாகும். இதில் கட்டுப்படுத்துதற்குரிய முன்னூல் முதலியன. இந்த ஆராய்ச்சியில் பிள்ளையவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிற திரு. நீலகண்ட சாஸ்திரி, சிலப்பதிகாரத்துக்கு முன்பு ஒரு வெண்பா நூல் இருந்திருக்கக்கூடும் என்று பிள்ளையவர்கள் கூறி யதையொட்டி தமது ஆங்கிலக் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:- “Another Venba of a narrative character refering to the trouble Kovalan got into at Madurai is cited by Deivaccilaiyar in his commentary on Tolkappiyam Sol. 100. Hence the superb work of Ilango like the Ramayana of Valmiki must be taken to clothe in the best literary form a moving story of wide appeal which found expression in several other works besides though not of equal merit.” (University of Ceylon Review Vol. VII. 1949) முதற்கோணல் முற்றும் கோணல் என்பது பழமொழி. வையாபுரி யாரும் நீலகண்டரும் அடிப்படையிலேயே தவறான கருத்தை வைத்துக்கொண்டு அதன்மேல் ஆராய்ச்சிக் கட்டடத்தைக் கட்டுகிறார் கள். அடிப்படையே அழிந்து விட்ட பிறகு கட்டடம் எப்படி நிற்க முடியும்? “இவள் (கண்ணகி) வரலாறு ஒருபடியாக உருப்பெற்ற காலத்து அவலச் சுவை மிகுந்த இப்பகுதியுடன் பின்கதைப் பகுதி களையும் அமைத்து வெண்பா யாப்பியல் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந்தானென்பது கொள்ளலாம். தெய்வச் சிலையர் கூறும் வெண்பா இந்நூலைச் சேர்ந்ததாகலாம்” என்று தங்கள் கருத்தை (யூகத்தைத்) தெரிவிக்கிறார்கள் வையாபுரியாரும் நீலகண்டரும். (சிலப்பதிகாரத்துக்கு முன்னூல் முதலியன இல்லை என்று வையா புரியார் மற்றோர் இடத்தில் எழுதியிருப்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.) இவர்கள் காட்டிய பத்தினிச் செய்யுள், கண்ணகி கோவலரைப் பற்றியது அன்று என்று மேலே அகச்சான்று புறச்சான்றுகள் காட்டி நிறுவப்பட்டது. எனவே, கோவலன் கண்ணகியார் வரலாறு ஒரு பழைய கட்டுக்கதை என்று இவர்கள் நிலைநாட்ட எடுத்துககொண்ட முயற்சி வீண் முயற்சியாயிற்று. இவர்களுடைய போலிக் காரணங்கள் சரிந்து விழுந்தபிறகு, அதனோடு மற்ற யூகங்களும் சரிந்து விழுந்து விட்டன. ஒரு புலவன் வெண்பாவினால் ஒரு நூல் இயற்றியிருக்கக்கூடும் என்றும், யாப்பருங்கல உரையாசிரியர் காட்டும் பத்தினிச் செய்யுளும், தெய்வச்சிலையார் மேற்கோள் காட்டும் “காதலியைக் கொண்டு” என்னும் வெண்பாவும் அந்நூலைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்றும், ஆகவே, கோவலன் கண்ணகியார் கதை ஒரு பழைய கதை என்றும், அப்பழைய கதையை ஆதாரமாகக்கொண்டு இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்றும் பிள்ளையும் சாஸ்திரியாரும் ஒரு கற்பனையைக் கட்டுகிறார்கள். இவர்கள் இட்டுக் கட்டிக் கூறுவதுபோல ஒரு பழைய வெண்பா நூல் உண்மையில் இருந்திருக்குமானால் அந் நூற் பெயரையும் அந்நூலாசிரியரின் பெயரையும் யாப்பருங்கல உரையாசிரியரும், தெய்வச்சிலையாரும், அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும், இளங்கோ அடிகளும் தமது உரைகளிலும் நூல்களிலும் கூறியிருப்பார்கள் அன்றோ? இச்செய்யுள் ஆரிடச் செய்யுள் என்று கூறப்படுவதால், இச் செய்யுளைக்கொண்ட நூலை இயற்றியவர் பேர்போன இருடியாகத் தானே இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட இருடியின் பெயரும் அவர் இயற்றிய நூலின் பெயரும் சிறப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அல்லவா? அவர் பெயரையும் நூலின் பெயரையும் ஏன் உரை யாசிரியர்களும் மற்றவர்களும் கூறவில்லை? அப்படி ஒரு நூலும் ஆசிரியரும் இல்லாதபடியினாலே அவர்கள் கூறவில்லை. மேற்கோள் காட்டப்பட்ட இச் செய்யுள்கள் தனிப்பாடல்கள் என்பது விளங்கின்றது. பத்தினிச் செய்யுள் என்பது உண்மையில், சங்க காலத்துக்குப் பிற்காலத்திலே இருந்த யாரோ ஒரு பத்தினிப் பெண் பாடிய ஒரு தனிப் பாடல் என்று தோன்றுகிறது. பத்தினிச் செய்யுளைக் கண்ணகியார் பாடிய செய்யுள் என்று தவறாகக் கருதிக்கொண்ட இராகவையங் காரும், இச் செய்யுளைத் தனிச் செய்யுளாகக் கருதினாரே தவிர, ஒரு நூலில் இருந்து எடுத்த செய்யுள் என்று கருதவில்லை. எனவே, கண்ணகி கதையைக் கூறுகிற வெசண்பா நூலொன்று சிலப்பதிகாரம் இயற்றுவதற்கு முன்பு இருந்ததென்று சாஸ்திரியாரும் பிள்ளையும் யூகிப்பது ஆதாரம் அற்ற கட்டுக்கதை என விடுக. ஒரே விருத்தப் பாவினால் இராமாயணக் கதை முழுவதையும் அமைத்து “ஏக விருத்த இராமாயணம்” என்னும் ஒரு விருத்தப்பா தனிப்பாடற்றிரட்டில் உண்டு. அதுபோல, சிலப்பதிகாரக் கதையை ஒரு வெண்பாவினால் அமைத்துப் பிற்காலத்தில் இருந்த யாரோ ஒரு புலவர் பாடியதுதான், தெய்வச் சிலையார் மேற்கோள் காட்டிய வெண்பா. ஏகவிருத்த இராமாயணம் ஒரு பழைய இராமாயண நூல் என்றும், அந்நூலைப் பார்த்துத்தான் கம்பன் இராமாயணத்தைப் பாடினான் என்றும் யாரேனும் ஒரு அறிஞர் புனைந்துரைப்பாரானால் எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது, “காதலியைக் கொண்டு” என்னும் வெண்பாவைப் பார்த்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடினார் என்று சாஸ்திரியாரும் பிள்ளையும் கூறுவது. தக்க சான்று காட்டாமல், இப்படியிருக்கலாம், அப்படி இருக்கக்கூடும் என்று யூகங் களையும் யோசனைகளையும் சொல்லுவதுதான் ஆராய்ச்சியோ? பொறுப்புள்ள இடத்தில் இருந்துகொண்டு வாய் புளித்தா, மாங்காய் புளித்தா என்பதுபோல், எதையும் கூறிவிட்டால் அறிஞர் உலகம் ஏற்றுக்கொள்ளுமா? மேலும் இவ்விரு அறிஞர்களும் எழுதுகிறார்கள்:- “ஆரிடப் போலி அல்லது ஆரிடவர்க்கம் என்று பத்தினிச் செய்யுள் குறிப்பிடப் படுவதால், இந்நூல் (இவர்கள் யூகமாகக் கற்பித்துக்கொண்ட நூல்) சிலப்பதிகாரத்துக்கு முற்பட்டதாதல்வேண்டும். எனவே, இக் காவியத்துக்கு (சிலப்பதிகாரத்துக்கு) முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்துள்ளதெனக் கருதுதல் தகும்” என்று வையாபுரி யாரும் நீலகண்டரும் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் எங்கே? சான்று எங்கே உள்ளது? ஆரிடம் என்றால், இருடிகள் வாக்கு என்பது பொருள். ஆரிடச் செய்யுள்கள் எல்லாம், சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்புதான் இயற்றப் படும், அதற்குப் பிற்காலத்தில் இயற்றப்படமாட்டா என்று இவர்கள் எங்கே கண்டார்கள்? சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின்பு ஆரிடச் செய்யுள்கள் இயற்றப்படக் கூடாது என்று எங்கேனும் கட்டளையோ நியதியோ உண்டா? இதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? சாஸ்திரியாரும் பிள்ளையும் ஒன்று சேர்ந்துகொண்டு எதை எதையோ காரணங்காட்டி எழுதுகிறார்கள். அவலை நினைத்துக கொண்டு உரலை இடிக்கிறார்கள். அவர்கள் காட்டும் சான்றுகள் போலிச் சான்றுகளாய், அவர்களுக்குத் துணைசெய்யவில்லை. மாறாகவே காணப்படுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கட்டுக்கதைகள், சரித்திர சம்பந்தம் இல்லாத புனைகதைகள், மிகப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் - என்பதை எப்படியாவது நிலைநாட்டவேண்டும் என்பதுதான் பிள்ளையும் சாஸ்திரியாரும் கொண்ட நோக்கம். இக்கருத்தை அடிப் படையாகக் கொண்டுதான் இவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை எழுதி யிருக்கிறார்கள். ஆராய்ச்சி என்பது, ஏற்கனவே ஒரு கருத்தை எண்ணிக்கொண்டு, அதற்கு ஏற்பச் சான்றுகளைத் தேடுவதுஅல்ல. சான்றுகள் காட்டுகிற வழியே சென்று அவை காட்டுகிற முடிவைக் காண்பதுதான் ஆராய்ச்சி. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பிற் காலத்து நூல்கள் என்று சான்றுகள் காட்டுமானால், அதை யாவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால், அச்சான்றுகள் உண்மையான உறுதியான நேர்மையான சான்றுகளாக இருக்க வேண்டும்; ஆதாரம் அற்ற போலிச் சான்றுகளும் உண்மைபோல் தோன்றுகிற பொய்ச் சான்றுகளுமாக இருக்கக் கூடாது. *** 15. திருமாவுண்ணி கண்ணகியா?* நற்றிணை நானூறு என்னும் நூலிலே, 216-ஆம் செய்யுளிலே, மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் திருமாவுண்ணி என்னும் பெண்மணியின் செய்தியைக் கூறுகிறார். வேங்கை, மரத்தின் மேலே பரண் அமைத்துக்கொண்டு, தினைப் புனத்தைக் காவல் காத்து வந்த திருமாவுண்ணி, ஏதிலாளன் ஒருத்தன் அவளைக் காதல் மணஞ் செய்துபிறகு கைவிட்டபடியால் கவலையினாலே வருத்த முற்றுத் தனது ஒரு முலையை அறுத்தாள் என்று கூறப்படுகிறாள். திருமா வுண்ணியின் இச்செய்தியைக் கூறுகிற நற்றிணைச் செய்யுள் இது: “எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியின் இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமா வுண்ணிக் கேட்டோ ரனையார் ஆயினும் வேட்டோ ரல்லது பிறரின் னாரே” இதன் பொருள்: ‘குருவிகள் ஆரவாரிக்கும் வயலிலே தெய்வத் தன்மை வாய்ந்த தீச்சுடர் போன்ற பூவையுடைய வேங்கை மரத்திலே கட்டிய கட்டுப் பரண் அருகிலே, அயலான் ஒருவன் செய்த கவலை யினாலே வருத்த மடைந்து ஒரு கொங்கையை அறுத்த திருமா வுண்ணிபற்றிக் கேட்டவர், அவள் துன்பத்தை அறிந்தவராயினும், அவளிடம் அன்பு உள்ளவர் மாத்திரம் வருந்து வார்களே யல்லாமல் எல்லோரும் வருத்தமடைய மாட்டார்கள்’ என்பது. இதில், திருமாவுண்ணி என்னும் பெண் மணி வேங்கை மரத்தின் மேல் பரண் கட்டிக்கொண்டு அதில் இருந்தாள் என்பதும், அங்கு ஒருவனால் ஏற்பட்ட கவலையினால் ஒரு முலையை அறுத்துக் கொண்டாள் என்பது கூறப்படுகின்றன. சிலப்பதிகாரம் கூறுகிற கண்ணகி மதுரை நகரத்தை எரித்தபிறகு சேர நாட்டுக்குப் போகிற வழியிலே ஒரு வேங்கை மரத்தின் நிழலிலே தங்கினார் என்றும், மதுரையை எரிக்குமுன் தமது ஒரு கொங்கையை அறுத்து எறிந்தார் என்றும் கூறப்படுகிறார். வேங்கை மரத்தண்டை நின்றது, ஒரு கொங்கையை அறுத்தது என்னும் ஒப்புமையைக்கொண்டு சிலப்பதிகாரக் கண்ணகியாரும் நற்றிணைச் செய்யுள் கூறுகிற திருமாவுண்ணியும் ஒருவரே என்றும், இவ்விரண்டும் ஒரே செய்தியைத்தான் கூறுகின்றன என்றும் சிலர் கருதுகிறார்கள். திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருவரே என்னும் கருத்தை முதன்முதலில் கூறியவர், நற்றிணையை முதன்முதலில் அச்சிட்ட பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்கள். இவர், நற்றிணைச் செய்யுட்களுக்குத் தாமே புதிய உரை எழுதியுள்ளார். திருமாவுண்ணி யின் வரலாற்றைக் கூறுகிற செய்யுளின் உரையிலே நாராயணசாமி அய்யர், “திருமாவுண்ணி என்பது கண்ணகியைக் குறிக்கிறது. போலும்” என்று ஒரு குறிப்பு எழுதினார். மேலும், அந்நூலின் பாடினோர் வரலாறு என்னும் பகுதியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார்: “மதுரை மருதளிளநாகனார் - ஒரு கொங்கை யறுத்த திருமாவுண்ணி என்பாள் கதையைச் சுருக்கிக் கூறுகிறார்; அது கண்ணகி கதைபோலு மென்று கருதற் கிடனாகிறது; செவ்வையாக விளங்கவில்லை.” இவ்வாறு, நாராயண சாமி அய்யரவர்கள், திருமாவுண்ணியின் கதை கண்ணகி கதைபோலக் காணப்படுகிறதோ என்று ஐயங் கொண்டார். இவருக்குப் பிறகு திரு. மு. இராகவ அய்யங்கார் அவர்கள், “பத்தினி தேவியைப் பற்றிய சில குறிப்புகள்” என்னும் தலைப்புள்ள கட்டுரை ஒன்றைக் கா.நமசிவாய முதலியார் நினைவு மலரில் எழுதினார். பின்னர் அக்கட்டுரையைத் தமது “ஆராய்ச்சித் தொகுதி” என்னும் நூலில் வெளியிட்டார். அக்கட்டுரையிலே, நற்றிணைச் செய்யுள் கூறுகிற ஒரு முலையறுத்த திருமாவுண்ணியும், சிலப்பதி காரம் கூறுகிற ஒரு முலை யறுத்த கண்ணகியாரும் ஒருவரே என்று கூறுகிறார். ³ நற்றிணைச் செய்யுளில் தமது கருத்துக்கு ஒத்தாற் போலச் சில திருத்தங்களையும் செய்துகொள்கிறார். குருகார் கழனி என்பதைக் குருகார் துழனி என்றும், கேட்டோர் அனையார் என்பதைக் கேட்டோர் இனியார் என்றும் தமது மனம் போனபடி திருத்திக்கொள்கிறார். பிறகு, “இங்ஙனம் வேங்கைக்கீழ் நின்ற ஒரு முலையறுத்த திருமாவுண்ணி என்பவள், கோவலன் மனைவியன்றி வேறு யாவர் உளர்?” என்று கேட்கிறார். மேலும், “இந்நற்றிணைப் பாட்டுப் பாடியவர் மதுரை யாசிரிய ரான சங்கப் புலவர் ஆகலின், தம் ஊரினும் பிறவிடத்திலும் நிகழ்ந்த கண்ணகி செய்தியையே தாம் கேட்டறிந்தபடி கூறுவாராயினர் என்பதும், ஒரு முலை குறைத்த வளாய் வேங்கை மரத்தை யடைந்தவள் அப்பத் தினியேயன்றி வேறிலர் என்பதும் திண்ணமாம்” என்றும் எழுதினார். வேங்கை மரம், ஒருமுலை யறுத்தல் என்னும் இந்த இரண்டு குறிப்புகளைக் கொண்டு, கண்ணகியாரும் திருமாவுண்ணியும் ஒருவரே என்று திரு. மு. இராகவையங்கார் முடிவு கூறுகிறார். திரு.எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களும் இதுபற்றித் தமது கருத்தை எழுதியுள்ளார். திருமாவுண்ணியின் கதை பழைய கதை என்றும் அக்கதையிலிருந்து கண்ணகியின் கதை தோன்றியது என்றும் இவர் கருதுகிறார். இவர் தமது “இலக்கிய மணிமாலை” என்னும் நூலிலே கீழ்வருமாறு எழுதுகிறார்:- “இக் காவியத்துக்கு (சிலப்பதிகார காவியத்துக்கு) முற்பட்ட பண்டைக் காலத்தே இவ்வகை வரலாறு வழங்கிய துண்டோ என வினவலாம். ஒரு சான்று நற்றிணையில் உளது. திருமாவுண்ணி யென்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான்போலாகி விட்ட தன் காதலனைப் பற்றிக் கவலைகொண்டு வருந்தினா னெனவும், பின் தனது ஒரு முலையைத் திருகி யெறிந்து வேங்கை மரத்தின் கீழ் நின்றானெனவும் ஒரு வரலாறு இச்சங்க நூலில் வருகின்றது. எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியின் இதணத் தாங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வுண்ணி என்ற அடிகளால் இது நன்கு புலப்படுகின்றது. பெயர் வேறுபாடு முதலிய வற்றால் இது கண்ணகியின் சரித்திர மன்று என்பது வெளிப்படை ஆனால், இதனின்றும் கண்ணகி வரலாறு பிறந்ததாகலாமென எளிதில் ஊகிக்கலாம்.” (பக்கம 133-134) பிறிதொரு செய்தி, கண்ணகி தனது காதலனைப் பிரிந்த துயராற்ற மாட்டாது ஒரு முலையைத் திருகி எறிந்தாள் என்பது. இதுவும் நற்றிணையிற் காணப்படும் ஒரு செய்தியோடு ஒத்துள்ளது: எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் ... .. ... .. ... .. ... .. ஒருமுலை யறுத்த திருமா வுண்ணி என அந்நூற் செய்யுளொன்று கூறுகிறது. இங்குக் குறித்த வரலாறு மறைந்துவிட்டது. எனினும், தன்மீது அன்பு அற்றுத் துறந்து தனக்கு அயலான்போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலைகொண்டு வருந்தித் தனது ஒரு முலையை அறுத்தெறிந்த ஒருத்தியின் சரித்திரமே அது வெளிப்படுப்பது என்பது புலனாகின்றது. நற்றிணை அடிகளை ஞாபகப்படுத்திக்கொண்டு, பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினி என்ற பதிகத்தின் அடிகள் தோன்றின என்பதும் எளிதில் ஊகிக்கக் கூடியதே. வேங்கை நிழற்கீழ்க் கண்ணகி வந்து நின்றால் என்பது மேலைப் பதிக அடிகளாலும், கட்டுரை காதை (91-92), குன்றக் குரவை (14-23), குன்றக் குரவை இறுதிப் பாட்டுமடை (16-21), அடிகளில் வருவனவற்றாலும் உணரலாகும். நற்றிணை அடியிலும் இவ்வேங்கை பயின்று வருதல் காணலாம். இங்ஙனம் வரும் ஒற்றுமைகளை மனத்துள் கொண்டு, நற்றிணையுரைகாரர் ‘திருமாவுண்ணி யென்பது கண்ணகியைக் குறிக்கின்றதுபோலும்’ என்றெழுதினர். இவர் துணிவு எவ்வாறாயினும் மேற்குறித்தன போன்ற செய்திகளே கால அமைவிற் கண்ணகி வரலாறாக வளர்ந்து பரிணமித்தன எனக் கொள்ளுதல் தவறாகாது.” (இலக்கிய மணிமாலை பக்கம் 147-148) இதே கருத்தை வையாபுரிப்பிள்ளையவர்கள் தாம் ஆங்கிலத் தில் எழுதிய தமிழ் மொழி, இலக்கிய வரலாறு என்னும் நூலிலும் எழுதி யுள்ளார். (ழளைவடிசல டிக கூயஅடை டுயபேரயபந யனே டுவைநசயவரசந ஞயபந 146) திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் தமது ‘சிலப்பதிகார மணி மேகலை - கால ஆராய்ச்சி’ என்னும் ஆங்கிலக் கட்டுரையிலே, வையாபுரிப்பிள்ளை கூறிய கருத்தையே கூறுகிறார்: “Again Narrinai contains a short poem (216) which mentions a woman Tirumavunni who after pining for husband’s coldness to her tore off and cast away one of her breasts and stood beneath a vengai tree - incidents with a strong resemblance to the main traits of the Kannaki saga.” (Page 25 University of Ceylon Review Vol. VII-1949) பின்னத்தூர் நாராயணசாமி அய்யரும், மு. இராகவையங் காரும், திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருவரே என்று கருதினர். வையா புரிப்பிள்ளையும், நீலகண்ட சாஸ்திரியும், திருமாவுண்ணி யின் கதை ஒரு பழைய கதை என்றும், அப் பழைய கதையிலிருந்து கண்ணகி யின் கதை தோன்றிய தென்றும் கூறினர். இவர்களை இவ்வாறு கருதச் செய்தவை இரண்டு செய்திகள். அவை: திருமா வுண்ணியும் கண்ணகி யும் வேங்கை மரத்தின் அடியில் இருந்தனர் என்பது ஒன்று; திருமா வுண்ணியும் கண்ணகியும் ஒரு முலை குறைத்தனர் என்பது மற்றொன்று. இந்த இரண்டு பொருத்தங்களாக கொண்டு இவ் விரண்டு பெண் மணிகளும் ஒருவரே என்று இவ்வறிஞர்கள் கருதுகின்றனர். மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு இவர்கள் கூறுவது உண்மைபோலத் தோன்றும், நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் திருமாவுண்ணியின் கதைவேறு; கண்ணகியின் கதை வேறு என்பதும், இருவரும் வெவ்வேறு காலத்தில் இருந்த வெவ்வேறு பெண்மணிகள் என்பதும், இருவருக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லை என்பதும் தெளிவாகும்; பிள்ளையவர்களும் சாஸ்திரி அவர்களும் கருதுவது போல இவை கற்பனைக் கதைகள் அல்ல என்பதும், உண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகள் என்பதும் நன்கு விளங்கும். கண்ணகியின் வரலாறு வேறு, திருமா வுண்ணியின் வரலாறு வேறு. இரண்டு வேறுபட்ட வரலாறுகளை ஒரே வரலாறு என்று இணைத்துக் கூறுவது சற்றும் பொருந்தாது என்பதை இங்கு விளக்கிக் கூறுவோம். இதை, வேங்கை மரம், முலையறுத்தல் என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு தனித் தனியே ஆராய்வோம். முலையறுத்தல் என்பதுபற்றி இதுவரையில் ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. முலையறுத்தல் என்றால், உண்மை யாகவே அறுத்துக் கொள்வது என்று பொருளா? ஒரு பெண் தன் மார்பை அறுத்துக் கொள்ள முடியுமா? இது நிகழக் கூடியதா? கண்ணகியாரும், திருமா வுண்ணியும் ஏனைய பெண் மகளிரும் தமது கொங்கையை அறுத்தனர் என்றால், உண்மையாகவே கொங்கையை அறுத்தனர் என்பது கருத்து அன்று. அதன் உண்மைக் கருத்து வேறு. இதுபற்றித் தனியே அடுத்த கட்டுரையில் விளக்கமாக எழுதுவோம். முதலில் இந்தக் கட்டுரையில் வேங்கை மரத்தைப்பற்றி ஆராய்வோம். அதாவது, திருமாவுண்ணியும் கண்ணகியும் வேங்கை மரத்தின்கீழ் நின்றனர். ஆகவே இருவரும் ஒருவரே என்று இவர்கள் கூறுகிறதைப்பற்றி ஆராய்வோம். வேங்கை மரம், குறிஞ்சி நிலத்திலே வளர்கிற மரம். குறிஞ்சி நிலம் என்பது மலையும் காடும் சேர்ந்த நிலம். குறிஞ்சி நில மக்களாகிய குறவர் தினை என்னும் தானியத்தைப் பயிரிடுவார்கள். தினைப் பயிர் வளர்ந்து கதிர்விட்டு முற்றும்போது கிளி முதலிய பறவைகள் கூட்டங் கூட்டமாக வந்து தினைக் கதிரைக் கொய்து தின்னும். காட்டில் வாழும் யானை, காட்டுப் பன்றி முதலிய மிருகங்களும் வந்து பயிரைத் தின்று அழிக்கும். ஆகவே அவற்றை ஓட்டிக் கழனியைக் காவல் காக்க வேண்டும். தினை வயலைக் காவல் காக்கும் வேலையைச் சாதாரணமாகக் குறப் பெண்கள் செய்வார்கள். வயலின் நடுவில் வளர்ந்திருக்கிற வேங்கை மரத்தின் கிளைகளின்மேல் பரண் (இதணம்) கட்டிக்கொண்டு அதில் அமர்ந்து பெண்கள் தினைப்புனைத்தைக் காவல் புரிவார்கள். பன்றி யானை முதலிய காட்டு மிருகங்கள் தங்களைத் தாக்காதபடி உயரமான இடத்திலே, வேங்கை மரத்தின்மேலே பரண் கட்டிக்கொள்வார்கள். பரணில் இருந்து கொண்டு, தட்டை அல்லது குளிர் என்னும் மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அவர்கள் கிளிகளையும் குருவிகளையும் ஓட்டுவார்கள். தட்டை என்பது மூங்கில் கழி. மூங்கிலின் ஒரு பக்கத்தைப் பல பிளவுகளாகப் பிளந்திருப்பார்கள். அதைத் தட்டினால் உரத்த ஒலி உண்டாகும் அவ்வொலியைக் கேட்டுப் பறவைகள் அஞ்சி ஓடிப்போகும். இவ்வாறு வேங்கை மரத்தின்மேலே பரணின்மேல் இருந்துகொண்டே தட்டையினால் ஒலி உண்டாக்கி மகளிர் தினைப் புனத்தைக் காவல் காப்பார்கள். இது சங்ககாலத்திலே குறிஞ்சி நிலத்திலே அன்றாடம் நிகழ்ந்த சாதாரண நிகழ்ச்சி. மகளிர் தினைப்புனத்தைக் காவல் காக்கும்போது, காளைப் பருவம் உள்ள வாலிபர்கள் வேட்டைக்கு வந்தவர்போலச் சந்தர்ப்பம் உண்டாக்கிக்கொண்டு, அவர்களிடம் வந்து ‘நான் அம்பு எய்து துரத்திய மான் இவ்விடம் வந்ததா? நான் அம்பு எய்த யானை இந்தப் பக்கமாக வந்ததா? என்று அப்பெண்களைக் கேட்டு, அவர்களோடு வார்த்தை யாட வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு தங்கள் காதலில் கருத்துச் செலுத்து வார்கள். வேங்கை மரத்தின்மேல் பரண் கட்டிக்கொண்டு அதிலிருந்து பெண் மகளிர் தினை வயலைக் காவல் புரிந்த செய்தியைச் சங்கச் செய்யுள்களில் காணலாம். “காரரும் பவிழ்ந்த கனிவாய் வேங்கைப் பாவமை இதணம் ஏறிப் பாசினம் வணர்குரற் சிறுதினை கடியப் புணர்வது கொல்லோ நாளையும் நமக்கே”(நற்றிணை 373) களிறு அணந்தெய்தாக் கன்முகை இதணத்துச் சிறுதினைப் படுகிளி யெம்மோ டோப்பி”(அகம். 308) “திறத்திறம் பகர்ந்து சேணேங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்” (சிலம்பு. நீர்ப்படைக் காதை 223-224) இவ்வாறு குறமகளிர் வேங்கை மரத்தும் பரணில் அமர்ந்து காவல் காக்கும் போது காளைப் பருவம் உள்ள வாலிபர் அவரிடம் காதல் நிகழ்த்துவர் என்று கூறினோம். இக்காவியற் காதலில் மனம் ஒத்த காதலர்கள், பலர் அறிய மணம் புரிந்து வாழ்வார்கள். இக்காதல் நிகழ்ச்சிகளில் சில சமயங்களில் தவறு உண்டாகித் துன்பமாக முடிவதும் உண்டு. திருமாவுண்ணி என்னும் மங்கை வேங்கை மரத்தின்மேல் பரண் அமைத்துக்கொண்டு காவல் இருந்தபோது, முன்பின் அறியாத இளைஞன் ஒருவன் அவளிடம் வந்து அவளை மணம் புரிவதாகக் கூறி அவளை நம்பச் செய்தான். பிறகு அவர்கள் காந்தர்வ முறைப்படி மணந்து இன்புற்றனர். பிறகு அந்த இளைஞன். திரும்பி வந்து ஊரார் அறிய அவளை மணம் புரிவதாகச் சொல்லிப் போய்விட்டான். போனவன் திரும்பி வரவே இல்லை; நெடுநாள் ஆகியும் அவன் திரும்பி வரவில்லை. அவன் அவளை அறவே கைவிட்டான். அதனால் திருமாவுண்ணி கவலைகொண்டு வருந்தினாள். அவள் கற்புள்ள மங்கை யாகையால், வேறு மணம் புரிய முடியாது. இவள் செய்தியை யறிந்தவர்கள், இவள்மீது இரக்கங் கொண்டனர். இது தான் நற்றிணைச் செய்யுளில் கூறப்படுகிற திருமாவுண்ணியின் வரலாறு. இவ் வரலாற்றில் திருமாவுண்ணி ஒரு முலை குறைத்தவள் என்று கூறப்படுகிறாள். ஏன் இவ்வாறு கூறப்படுகிறாள்? ஒருமுலை குறைத்தல் என்றால் என்ன? இது பற்றி அடுத்த கட்டுரையில் எழுதப் போகிறபடியால் இப்போது ஆராய வேண்டியதில்லை. ஆனால், ஒன்றுமட்டும் கூற விரும்புகிறோம். ஒரு முலை இழந்த பெண்கள் அக்காலத்தில் கண்ணகியைத் தவிர வேறு சிலரும் இருந்தார்கள் என்பதே. இங்கு நாம் ஆராய்வது வேங்கை மரத்தைப்பற்றியும் அதன் மேல் கட்டப்பட்ட பரணைப் பற்றியுமே. தமிழரின் பழங்கடவுளாகிய, முருகன், பழந்தமிழர் முறைப்படி வள்ளியைக் காதல் மணம் புரிந்தது, வள்ளி வேங்கை, மரத்தின் மேல் பரணில் இருந்து தினைப்பயிரைக் காத்துக்கொண்டிருந்தபோதுதான் வேங்கை மரத்தண்டை இருந்து காத்த பெண்கள் திருமாவுண்ணியைப் போன்று பல பெண்கள் அக் காலத்தில் இருந்தனர் என்பதைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம். இனி, திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறு மகளிர் என்பதையும், அவர்கள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு காரியத்துக்காக வேங்கை மரத்தண்டையிருந்தனர் என்பதையும் விளக்கிக் கூறுவோம். திருமாவுண்ணி இருந்த வேங்கை மரம் வயலின் மத்தியில் இருந்த வேங்கை மரம்; வயலின் மத்தியில் இருந்த வேங்கை மரம்; கண்ணகி இருந்த வேங்கைமரம் காட்டிலே மலையின்மேலே வளர்ந்திருந்த வேங்கை மரம். திருமாவுண்ணி இருந்த வேங்கை மரம் பரண் கட்டப்பட்ட வேங்கை மரம். கண்ணகி இருந்த வேங்கை மரம் பரண் கட்டப்படாமல் மலைமேல் இருந்த வேங்கை மரம். “எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனி இதணத் தரங்கண்” என்று திருமாவுண்ணி இருந்த வேங்கை மரத்தை நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. கண்ணகி நிழலுக்காக நின்ற வேங்கை மரமோ, காட்டிலே மலை மேலே இருந்தது என்பதைச் சிலப்பதிகாரம் தெளிவாகக் கூறுகிறது. “னெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்” கண்ணகியார் நின்றார் என்று சிலப்பதிகாரம் (கட்டுரை காதை 190-191) கூறுகிறது. மலை வேங்கையின்கீழ்க் கண்ணகி யார் நின்றதைக் குற மகளிர் கண்டு, போல்வீர்! மனநடுங்க முலையிழந்து வந்து நின்றீர். யாவிரோ?” என்று வினவியதாகச் சிலம்பு (உரைப்பாட்டு மடை) கூறுகிறது. மேலும், “கானநறு வேங்கைக் கீழாளோர் காரிகையே காநறு வேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே (குன்றக் குரவை) என்றும், “கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை யிழந்து தனித்துயர் எய்தி” (காட்சிக் காதை 57-58) என்றும் சிலம்பு, கண்ணகியார் தங்கிய கானகத்தில் மலைமேல் இருந்த வேங்கை மரத்தைக் கூறுகிறது. இவற்றிலிருந்து கண்ணகியார் நிழலுக்காக ஒதுங்கி நின்ற வேங்கை மரம் ஊருக்கு அப்பாலே காட்டின் மத்தியிலே மலையின் மேல் வளர்ந்திருந்த வேங்கை மரம் என்பது ஐயமில்லாமல் தெளி வாகத் தெரிகிறது. திருமாவுண்ணியார் இருந்த வேங்கை மரம் ஊருக்கு அருகிலே வயலுக்கு மத்தியிலே பரண் கட்டப்பட்டிருந்த வேங்கை மரம் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கண்ணகியார் பாண்டி நாட்டு மதுரையிலிருந்து சேரநாட்டுக்குப் போகிறபோது காட்டு வழியிலே மலைமேலே இருந்த ஒரு வேங்கை மரத்தின் நிழலிலே சிறிதுநேரம் தங்கினார். அப்போது, பதினான்கு நாட்களாக உணவும் தண்ணீரும் அருந்தாமல் பட்டினி கிடந்து இளைத்துக் களைத்திருந்த அவர் அம்மரத்தின்கீழ் உயிர் நீத்தார் திருமாவுண்ணியார் வேங்கை மரத்தின் கீழ் உயிர் விடவில்லை. திருமாவுண்ணியார் ஒரு கொங்கை அறுத்தது வேங்கை மரத்தண்டை. கண்ணகியார் கொங்கை யறுத்த இடம் வேங்கை மர நிழல் அன்று; மதுரை மாநகரம். கண்ணகியார், நெடுந்தூரம் வழி நடந்த களைப்பினாலும் உணவு கொள்ளாமல் பட்டினி கிடந்த இளைப்பினாலும் வேங்கை மரத்தின் நிழலில் தங்கினார். திருமாவுண்ணியார், தினைப் புனத்தைக் காவல் காப்பதற்காக வேங்கை மரத்தின் பரண்மேல் தங்கினார். கண்ணகியார் வேங்கை மரத்தின்கீழே தங்கியிருந்தபோது ஏதிலர் யாராலும் துன்புறுத்தப்பட வில்லை. அதற்கு மாறாக, அவருக்குக் குறமகளிர் அன்புள்ள துணைவராக இருந்தனர். கண்ணகி யார் வேங்கை மரத்தின்கீழே உயிர் நீத்தார். திருமாவுண்ணியார், வேங்கை மரத்தில் இருந்தபோது ஏதிலாளன் ஒருவனால் துன்பம் அடைந்தார். ஆனால், அவர் வேங்கை மரத் தண்டை உயிர்விட வில்லை. கண்ணகியார் வழியிலிருந்த வேங்கை மரத்தடியில் சிறிது நேரந்தான் தங்கினார். திருமாவுண்ணியார் வேங்கை மரத்தின் மேல் பல நாட்கள் தங்கியிருந்தார். எனவே, கண்ணகியார் தங்கிய கான வேங்கை மரம் வேறு; திருமாவுண்ணியார் தங்கிய கழனி வேங்கை மரம் வேறு. அஃது இருந்த இடம் வேறு, இஃது இருந்த இடம் வேறு. இவற்றை யறியாமல் வையாபுரிப்பிள்ளை முதலிய அறிஞர்கள், இரண்டு மரமும் ஒரே மரம் என்றும் இரண்டு மகளிரும் ஒருவரே என்றும் கூறுவது சிறிதும் பொருந்தாது. திருமாவுண்ணி குறிஞ்சி நிலத்தில் குறுவர் குலத்தில் பிறந்து வாழ்ந்த ஏழைப் பெண். கண்ணகியோ காவிரிப்பூம்பட்டினத்தில், சோழ அரசனுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்பட்ட செல்வம் படைத்த குடியில் பிறந்து செல்வமாக வளர்ந்து, தன்னைப்போல் செல்வக் குடும்பத்தில் பிறந்த கோவலனை மணஞ்செய்த திருவமர் செல்வி. திருமாவுண்ணி, மணவயதுள்ள, ஆனால் மணம் ஆகாத மங்கை. கண்ணகியோ மணம் ஆன இருபத் தைந்து வயது கடந்த நடுத்தர வயதுள்ள பெண்மணி. இவ்வாறு பல வகையிலும் வேறுபட்டவர்கள் இவ்விரு பெண்மணிகளும். இவர்கள் இருவரையும் ஒருவரே என்று கூறுவது எவ்வளவு தவறானது பொருத்தம் அற்றது! சங்ககாலத்தில், அதாவது கி.பி. 300க்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மக்களிடையே காதல் மணம் நிகழ்ந்தது. வாலிப வயதுள்ள ஆணும் பெண்ணும் காதல் மணம் செய்துவந்த காலம் அது. அக் காதல் மணம் பெரும்பாலும் நன்றாக அமைந்து இன்ப வாழ்க்கை யாக அமையும். சிறு பான்மைக் காதல் மணம்; திருமாவுண்ணியது போன்று தீதாக அமைந்து துன்பமாக முடிவதும் உண்டு. ஆனால், அது மிக மிகக் குறைவு. சங்க காலத்தில் பெரிதும் காதல் மணம் நிகழ்ந்தாலும், ஓரளவு திருமணங்கள் பெற்றோரால் செய்துவைக்கப் பட்டனவும் உண்டு. முக்கியமாகச் செல்வம் படைத்த பெருங்குடியிற் சேர்ந்தவர் திருமணங்கள், பெற்றோரால் செய்து வைக்கப் பட்டவையே. சங்க காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பெருங்குடி மக்கள் என்றும் சிறுகுடி மக்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதைச் சங்க நூல்களை ஆழ்ந்து படித்தவர்கள் அறிவார்கள். பழங்காலத்து உரோம நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் பெருங்குடி, சிறுகுடி என்னும் பிரிவு இருந்திரு க்கிறது. பெருங்குடி மக்களான பிரபுக்களை ஞயவசiஉயைளே என்றும் சிறுகுடி மக்களை ஞடநநெயைளே என்றும் அந்நாட்டில் பெயர் வழங்கி வந்தனர். இத்தகைய பிரிவு தமிழ்நாட்டிலும் சங்க காலத்தில் இருந்ததைச் சங்க நூல்களில் காண்கிறோம். பெருங்குடி மக்களிடத்தில் பெரும்பாலும் காதல் மணம் நிகழ்வதில்லை; பெற்றோரே மணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. அந்த முறையில்தான் பெருங் குடி வகுப்பைச் சேர்ந்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆகவே, திருமாவுண்ணிக்கும் கண்ணகிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இருவரும் வெவ்வேறு மகளிர் ஆவர். வேங்கை மரத்தின்மேல் பரண் அமைத்துக்கொண்டிருந்த பெண்கள் கணக்கற்ற பேர் உண்டு. அவர்கள் எல்லோரும் திருமா வுண்ணிகள் அல்லர்.வேங்கைமர நிழலில் தங்கிய பெண்கள் எல்லோரும் கண்ணகியர் அல்லர். முலை குறைத்தவர் பல பெண் கள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் திருமாவுண்ணிகளும் கண்ணகி களும் அல்லர். திருமாவுண்ணியுடன் கண்ணகியை இணைத்துப் பிணைப்பது போலவே, பேகன் என்னும் வள்ளலின் மனைவியாகிய கண்ணகி யைக் கோவலன் மனைவியாகிய கண்ணகியுடன் இணைத்துப் பிணைத்து முடி போடுகிறார் வையாபுரிப்பிள்ளை. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் என்னும் வள்ளல் தன் மனைவி கண்ணகியைப் புறக்கணித்து வேறொருத்தியுடன் வாழ்ந்ததாகப் புறநானூற்றி லிருந்து அறிகிறோம். கண்ணகி என்ற பெயரைக் கண்டவுடன் வையாபுரிப் பிள்ளை, அந்தக் கண்ணகியைக் கோவலன் கண்ணகியுடன் முடிபோடுகிறார். (இலக்கிய மணி மாலை பக்கம் 146) கண்ணகி என்னும் பெயர் கோவலன் மனைவிக்குமட்டுந்தான் வழங்கியதாக இவர் கருதுகிறார் போலும்! வையாபுரி என்னும் பெயர் இவருக்கு மட்டுந் தானா உரியது? கண்ணகி என்னும் பெயர் சங்க காலத்தில் ஒருத்திக்கு மட்டுந்தானா வழங்கியிருக்கும்? கண்ணகி என்னும் பெயர் கண்ணழகி என்பதன் திரிபு. பெண் களின் கண் உறுப்பைச் சிறப்பித்துப் பெயர் இடுவது தொன்றுதொட்டு இன்று வரையும் உள்ள மரபு. கண்ணம்மாள் என்னும் பெயர் இன்றும் எத்தனையோ பெண்களுக்கு வழங்கப்படுகிறது. காமாட்சி, மீனாட்சி விசாலாட்சி, அஞ்சனாட்சி முதலிய கண்ணைச் சிறப்பித்துள்ள பெயர்களும் இன்றும் பெண்மணிகளுக்கு வழங்கப் படுகின்றன. அது போல, கண்ணகி (கண்ணழகி) என்னும் பெயரையும் அக்காலத்தில் பல பெண்மணிகளுக்கு வழங்கியிருப்பார்கள் அன்றோ? (நக்கண்ணி என்னும் பெயரும் அக்காலத்தில் வழங்கியது) ஆகவே, இதனை யறியாமல், வள்ளல் பேகனுடைய மனைவி கண்ணகியையும் கோவலனுடைய மனைவி கண்ணகியையும் ஒருவராகக் கூறுவது ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் பொருந்தாது. கண்ணகிகள் என்னும் பெயருள்ளவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. அதுபோல ஒரு முலை குறைத்த பெண் மணிகளும் சிலர் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அவர்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம். இதுகாறும் ஆராய்ந்தவற்றால், திருமாவுண்ணியும் கண்ணகி யும் ஒருவர் அல்லர், வெவ்வேறு பெண்மணிகள் என்பதும வேங்கை மரத்தின்கீழ் இருந்தவர் என்பது காரணமாக இருவரையும் ஒரு வராகப் பொருத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்க தன்று என்பதும் ஆகும். இவை பழங்கதைகள் அல்ல என்பதும், வெவ்வேறு இடத்தில் சங்க காலத்தில் நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சிகள் என்பதும் அறியத்தக்கன. *** 16. உண்மைப் பொருள்* சிலப்பதிகாரக் காவியத்திலே, அக்காவியத் தலைவியாகிய கண்ணகியார், ஒரு முலை குறைத்த திருமா பத்தினி’ என்று கூறப் பாடுகிறார். நற்றிணை என்னும் சங்கத்தொகை நூலிலே 216 - ஆம் செய்யுளிலே, திருமாவுண்ணி என்னும் பெண்மணி, தன்னுடைய ஒரு கொங்கையை அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறார். அப் பெண் மணியை, ‘ஒரு முலை அறுத்த ‘திருமாவுண்ணி’ என்று கூறுகிறார் அச் செய்யுளாசிரியர். இவ்வாறு கொங்கை குறைத்தாகக் கூறப்படுவது கி.பி. 300-க்கு முற்பட்ட சங்க காலத்து நூல்களில் ஆகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலே இருந்தவரும், வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவரும், பெரியாழ்வாரின் மகளாரும் ஆகிய ஆண்டாள் (நாச்சியார்) என்னும் பெண்மணியாரும் முலையறுப்பது பற்றித் தம் பாசுரங்களில் கூறுகிறார். உலகத்திலே பெண்மகள் ஒருத்தி தாங்க முடியாத மனவருத்தம் அடைந்தால் - வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டால் அவள் என்ன செய்கிறாள்? தன்னுடைய உயிரை மாயத்துக் கொள்கிறாள். தற்கொலை செய்துகொண்டு உயிர் துறக்கிறாள். நீரில் மூழ்கியோ, எண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டோ, தூக்கிட்டுக் கொண்டோ தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதுதான் உலகம் முழுவதும் எக்காலத்திலும் எந் நாட்டிலும் நிகழ்கிற நிகழ்ச்சி. ஆனால், எந்தப் பெண்ணும் தன் கொங்கையை அறுத்துக் கொண்டதாக இதுவரையில் நாம் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் தலைசிறந்த காவியமாகிய சிலப்பதிகாரம், “ஒரு முலை இழந்தாளோர் திருமா பத்தினி” (பதிகம் : 5) “முத்தார மார்பில் முலைமுகந் திருகி நிலைகிளர் கூடல் நீளெரி யூட்டிய பலர் புகழ் பத்தினி” “முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் மதுராபதி என்னும் மாது” (அழற்படுகாதை) “ஒருமுலை குறைத்த திருமாபத்தினி” (நீர்ப்படை 129) “கலிகெழு கூடல் கதழெரிமண்ட முலைமுகந் திருகிய மூவா மேனிப் பத்தினி.” (வரந்தரு காதை) என்று, கண்ணகியார் தமது நகிலை அறுத்துக் கொண்டதாகத் தெளிவாகக் கூறுகிறது. மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் திருமாவுண்ணி என்னும் பெண் மணி தனது ஒரு நகிலை அறுத்துக்கொண்டதாக ஒரு செய்யுளில் கூறுகிறார். நற்றிணையில் இடம் பெற்றுள்ள அப்பாடலில் “எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனி இதணத் தாங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமா வுண்ணி” (நற்றிணை 216) என்று அவர் கூறுகிறார். அப்படியானால், இளங்கேவடிகளும், மதுரை மருதன் இள நாகனாரும் “முலை குறைத்தல்” என்று கூறியது பொய்யா, வெறும் கற்பனையா, கட்டுக் கதையா - என்னும் கேள்வி எழுகிறது. இப் புலவர்கள் கூறியது பொய்யும்அன்று, கற்பனையும் அன்று, கட்டுக் கதையும் அன்று. முலை குறைத்தல் என்னும் சொல்லுக்கு, உண்மை யாகவே கொங்கையை அறுத்துக்கொள்வது என்பது பொருள் அல்ல. இச்சொல் வேறு மறை பொருளுடைய குறிப்புச் சொல். முற் காலத்தில் வழங்கப்பட்டு பிற்காலத்தில் வழக்கு இழந்து போன சொற்களில் இதுவும் ஒன்று. அந்த மறை பொருள் என்ன? இக் கேள்விக்கு விடை காண்போம். ஆண்டாள் பாசுரத்தில் இக் கேள்விக்கு விடை காணலாம். பெரியாழ்வார் என்னும் வைணவ பக்தரின் மகளார் ஆண்டாள் எனப்படும் நாச்சியார். ஆண்டாள், சிறு வயது முதல் கண்ணனையே மணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். மங்கையாக வளர்ந்து மணப்பருவம் அடைந்தபோதும் இவருக்குக் கண்ணனையே (திரு மாலை) மணம் செய்யவேண்டும் என்னும் ஆசை அதிகப்பட்டது. கண்ணனையே மணம் செய்வதாக உறுதிகொண்டார். காதல் உணர்ச்சி பெருகிற்று. நாச்சியார் தமது காதல் செய்தியைத் தாமே தம் பா சுரங்களில் கூறுகிறார். தமது காதலைத் தமது நகிலின்மேல் வைத்துக் கூறுகிறார். “அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்தஎன் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத்தேன், ஒல்லை விதிக்கிற்றியே” (நாச்சியார் திருமொழி ஐ. 4.) என்று காம தேவனை இவர் வேண்டுகிறார். தமது தணியாத காதலைத் தமது கொங்கைமேல் ஏற்றி இன்னும் பல இடங்களில் கூறுகிறார்.1 மானிடராகப் பிறந்த நாச்சியார் தெய்வ மாகிய கண்ணனைக் காதலித்து நெடுங்காலம் அவர் வரவை எதிர் பார்த்திருக்கிறார். கண்ணன் வரவே இல்லை. கடைசியில் நாச்சியார் தமது வாழ்க்கையை வெறுக்கிறார். தாம் காதலித்த காதலன் தம்மைப் புறக் கணித்துவிட்டபடியால், இனித் தமக்கு இன்ப வாழ்வு இல்லை, மண வாழ்க்கை இல்லை, தமது வாழ்வு அழிந்துவிட்டது என்று துன்புறுகிறார். தமது கொங்கையைப் பிய்த்து எறிவதாகக் கூறுகிறார். இங்குத்தான், நமது ஆராய்ச்சிக்கு உண்மைப் பொருள் விளங்குகிறது. அச்செய்யுள் இது: “உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன்ஒன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவள் மார்பில் எறிந்துஎன் அழலைத் தீர்வேனே” (நா. திருமொழி 13) என்று, தமது கொங்கையை அடியோடு பறித்து எறிந்து விடுவ தாகக் கூறுகிறார். இதிலிருந்து கொங்கை அறுத்தல் என்பதற்கு உண்மைப் பொருள் தெரிகிறதல்வா? ஆண்டாள், ‘தமது இன்ப வாழ்வு அழிந்து விட்டது, மணவாழ்க்கை இழக்கப்பட்டது’ என்று கூறுவதைத்தான் இவ்வாறு தமது கொங்கையைக் கிழங்கோடு பறித்து எறிவதாகக் கூறுகிறார். எனவே, கொங்கை அறுத்தல், முலை குறைத்தல் என்பது மெய் யாகவே அதே பொருளுடையது அல்ல என்பது, கற்புள்ள இள மங்கை யரின் சிற்றின்ப வாழ்வு அவர்தம் காதலரால் புறக்கணிக் கப்படடது காரணமாக அறுபட்டது, அழிந்து விட்டது என்பதுதான் இச் சொல்லின் உண்மைப் பொருள் என்பதும் அறிகிறோம். நற்றிணைச் செய்யுளும் இக் கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.2 இனி, கண்ணகியாரைப் பார்ப்போம் கண்ணகிக்கும் கோவ லனுக்கும் காதல் மணம் நிகழவில்லை. அக் காலத்துக் செல்வப் பிரபுக் களின் வழக்கப்படி இவர்களின் பெற்றோர் இவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். அப்போது கோவலனுக்கு வயது பதினாறு. கண்ணகிக்கு வயது பன்னிரண்டு. கோவலன், மாதவி என்னும் ஆடல் மங்கையின் வலையில் சிக்கி அவளிடத்திலேயே தங்கிவிட்டான். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகழிகிறது. கற்புடைய கண்ணகி மண வாழ்க்கை இழந்து பன்னிரண்டு ஆண்டு காத்திருக் கிறாள். கடைசியில் கோவலன் மாதவிமேல் வெறுப்படைந்து கண்ணகியிடம் வருகிறான். நெடு நாட்களாகக் கணவன் அன்பை இழந்திருந்த கண்ணகி பெரு மகிழ்ச்சி யடைகிறாள். கோவலன் மதுரைக்குப் புறப்படுகிறான். கண்ணகியும் வீடு வாசல், தாய் தந்தையர், மாமன் மாமியார், ஏவலாளர் எல்லோரையும் விட்டு ஒருவருக்கும் சொல்லாமல் கோவலனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். மதுரையை அடைந்து மாதரியின் இல்லத்தில் தங்கியபோது, கோவலன் கண்ணகிக்குத் தான் செய்த கொடுமையைக் கூறி வருந்துகிறான். கண்ணகியை வாயாறப் புகழ்கிறான். புதிய நல்வாழ்வு பெற்றதாகக் கண்ணகி மகிழ்கிறாள். பகல் உணவு அருந்திக் கோவலன் சிலம்பை விற்பதற்கு நகரத்திற்குள் செல்கிறான். கோவலன் வருகையை மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த கண்ணகிக்குக் கோவலன் கொலை யுண்ட செய்தி எட்டுகிறது. இச் செய்தி அவள் மேல் இடி விழுந்தது போல் இருந்தது. அவள் கண்டுகொண்டிருந்த இன்பக் கனவும் மகிழ்ச்சியும் மறைந்தன. புதிதாக இன்பவாழ்வு அடையப் போகிற தறுவாயில், எதிர்பாரா வண்ணம் கணவனை இழந்தாள். அவள் வாழ்வு அறுந்துவிட்டது. முலை குறைத்தல் அல்லது குறைமுலை என்னும் சொல்லுக்கு நேர் மாறான கருத்துள்ள நிறைமுலை என்னும்சொல்லும் முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகிறது. பொன் நிறத்தாள் கதை என்னும் ஒரு செய்யுள் நூல் உண்டு. தமிழ்ச் செய்யுள் இயற்ப்பட்ட இந்தக் கதை, இப்போது தமிழ் நாட்டில் மறைந்து விட்டது. ஆனால் மலையாள நாட்டில் வழங்கிவருகிறது. இத் தமிழ்நூலை மலையாள எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆகவே, இதில் பல தமிழ்ச் சொற்கள் மலையாளச் சொற்களாகக் காணப்படுகின்றன. இந்நூல் திருவாங்கூரில் அச்சிடப்பட்டிருக் கிறது. (பொன் நிறத்தாள் கத, தெக்கன் பாட்டு, பாஷாகிரந்தாவலி, அங்கம் 88) இந்தக் கதையில் பொன்நிறத்தாள் என்னும் அழகுள்ள பெண்மணி மணஞ்செய்துகொண்டு கணவனுடன் இன்பவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதும், பிறகு அவள் வயிறு வாய்த்துச் சூல்கொள்வதும் கூறுப்படுகிறது. சூல்கொண்ட பொன் நிறத்தாள், அருவியாட ஆசை கொண்டு மலைக்குப் போகிறாள். போகிற வழியில் மழைபெய்ய, அவள் ஓர் ஆலமரத்தின் அடியில் தங்கு கிறாள். அந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு காளி கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் இருக்கிற புதையலைக் கைப்பற்றக் கள்ளர் சிலர் கருதுகிறார்கள். நிறை சூலி ஒருத்தியைக் காளிக்குப் பலியிட்டால் புதையலை எடுக்கலாம் என்று நம்புகிறார்கள். அவ்வமயம் காளிக்குப் பூசை செய்யும் பூசாரி அங்கு வருகிறான். அவனிடம் கள்ளர்கள் தங்கள் கருத்தைச் சொல்லு கிறார்கள். “கொங்கை நிறைந்த நிறை சூலி ஒருத்தி வேண்டும்’என்று கேட் கிறார்கள். அவன், “கொங்கை நிறைந்த நிறை சூலி” ஒருத்தியைத் தான் ஆலமரத்தின்கீழ்க் கண்டதாகக் கூறுகிறான். இங்கு, நிறைசூலி என்றுமட்டும் சொல்லாமல், “கொங்கை நிறைந்த நிறை சூலி”என்று கூறப்படுவதை வாசகர்கள் கவனிக்கவேண்டும். கொங்கை குறைந் தவள் (அறுத்தவள்) என்றும், கொங்கை நிறைந்தவள் என்றும் சொல் வழக்கு அக் காலத்தில் வழங்கியிருந்ததை இது தெரிவிக்கிற தல்லவா? இதிலிருந்து கணவனோடு வாழ்ந்து சூல் கொண்டு பிள்ளைப் பேறு அடைந்தவள் நிறை கொங்கையாள் என்றும், கணவனுடன் வாழும் வாழ்க்கையை இழந்தவள் குறை கொங்கை யாள் என்றும் கூறப்படும் வழக்குச் சொல் இருந்தது என்பது .................... என்பது கணவனுடன் வாழும் வாழ்க்கையை இழந்ததைக் குறிப்பதே என்பது நன்கு விளங்குகிறது. வாசகர்களுக்கு இவ்விடத்தில் ஐயம் ஏற்படக்கூடும். கொங்கை குறைத்தல் என்பது இள மங்கையர் கணவனுடன் வாழும் வாழ்க்கை இழத்தல் என்று பொருள்படுமானால், இளங்கோவடிகள் ஏன் அச் சொல்லை அப் பொருளில் வழங்காமல், வேறு விதமாகப் பயன் படுத்துகிறார்? “முத்தார மார்பில் முலைமுகந் திருகி நிலைகிளர் கூடல் நீளெரி யூட்டிய பலர் புகழ் பத்தினி” என்றும், “முதிரா முலைமுகத் தெழுந்த தீயின் மதுரை மூதூர் மாநகர் சுட்டது” என்றும், “இடமுலை கையாற் றிருகி மதுரை வலமுறை மும்முறை வாரா வலம்வந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள்” என்றும் “கலிகெழு கூடல் கதழெரி மண்ட முலைமுகந் திருகிய பூவாமேனிப் பத்தினி” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகிறார். மணிமேகலைக் காவியத்திலும், சாத்தனார், “கண்ணீ ராடிய கதிரிள வளமுலை திண்ணிதிற் றிருக்கித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி மூட்டிய மாபெரும் பத்தினி” என்று கூறுகிறார். ஆகவே கண்ணகியார் கொங்கையைப் பிய்த்தது உண்மையாகத்தானே இருக்கவேண்டும் - என்னும் கேள்வி எழுகிறது. இது சரியான கேள்வியே. இளங்கோ அடிகளும் சாத்தனாரும் கோவலன் கண்ணகி யருடைய வரலாறு (க்ஷiடிபசயயீhல) எழுதவில்லை. அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு காவியம் எழுதினார்கள். இதை நாம் மறத்தல் ஆகாது. காவியம் எழுதுவது ........................ .......................தான் இவர்களின் முக்கியமான கருத்து காவிய நூலில் கற்பனை இடம்பெறும். கற்பனை யமையாத ‘காவியம்’ காவிய மாகக் கருதப்பட வில்லை. கற்பனையே காவியப் புலவனின் இயல்பு கற்பனை இல்லாத காவியம் சுவைக்காது. ஆகவே, காவியப் புலவரான இளங்கோவடிகள், கண்ணகி வாழ்க்கை இழந்ததை, உண்மையிலேயே கொங்கையைக் குறைத்தாகக் கற்பனை செய்து மதுரை நகரம் எரிந்ததற்கு அதை காரணமாகக் கூறுகிறார். இவ்வாறு கற்பனை செய்தபடியினாலே, இது இக்காவியத்துக்கும் புதுமையைத் தந்து வாசிப்பதற்கு உணர்ச்சி யூட்டுகிறது. இதுகாறும், கொங்கை குறைத்த என்பது இள வயதுள்ள மகளிர் பிள்ளை பேறடைவதற்கு முன்பே கணவனால் கைவிடப்பட்டவர் என்னும் பொருளுடையது எனக் கண்டோம். இதன் மெய்ப் பொருளை அறியாதவர், கண்ணகியார் மெய்யாகவே அவ்வுறுப்பை அறுத்துக் கொண்டார் என்று கருதிக் கொண்டனர். இவ்வாறு செய்தவர் கண்ணகி ஒருவர் தாம் என்றும், ஒரு முலை யறுத்த திருமாவுண்ணியுங்கூடக் கண்ணகிதான் என்றும் முடிவு கொண்டனர். அதுமட்டுமா கொங்கை அறுத்தது ஒரு பழைய கதை என்றும், அது திருமாவுண்ணியின் கதை என்றும், அந்தக் கதை யிலிருந்து கண்ணகியின் கதை கற்பிக்கப்பட்டது என்றும் எழுதி விட்டார்கள். உண்மைப் பொருளை அறிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்கமாட்டார்கள். கண்ணகியின் கதை வெறும் கட்டுக் கதை யன்று காவியப் புலவரின் கற்பனைகளைக்களைந்து விட்டால் அதில் அசம்பாவிதமான நிகழ்ச்சி ஒன்றும் கிடையாது. நிற்க. வையாபுரிப்பிள்ளையவர்கள், இன்னொரு செய்தியைப் பொருத்தம் இல்லாமல் கூறுகிறார். வின்ட்டர்னிட்ஸ் என்னும் ஜெர்மானியர், தாம் எழுதிய இந்திய இலக்கிய வரலாறு என்னும் நூலிலே பௌத்த நூலிலிருந்து, தன் மார்பை அறுத்த ஒரு பெண்ணின் கதையாக குறிப்பிடுகிறார். இதைப் பிள்ளையவர்கள் சுட்டிக்காட்டி, திவ்விய வதானம், ஜாதகமாலை என்னும் பௌத்த நூல்களில் முலைகளைப் பிய்த்தெறிந்தகதை கூறப்படுகின்றது. ஆகவே, இந்தக் கதை (கண்ணகியின் கதை) ஆதியில் பௌத்தரிட மிருந்து வந்ததென்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம் என்று எழுதுகிறார்: “We hear Buddhist Divyavadana and jatakamala stories in which tearing of breasts occur. And we might easily that the story was originally buddhist origin” (page 147 History of Tamil Language and Literature. திவ்வியவதானம் ஜாதகமாலை என்னும் பௌத்த நூல்களில் கூறுப்படுகிற இந்தக் கதையைப் பிள்ளையவர்கள் நேரில் படித்து அறிந்ததாகத் தெரியவில்லை. படித்திருந்தால் இந்தக் கதையைக் கண்ணகியின் கதையுடன் பொருத்திக் கூறமாட்டார். ரூபாவதி என்னும் பௌத்தப் பெண்ணின் கதைதான் இந்த நூல்களில் கூறப்படுகிறது. அக்கதை இது: பசியினால் வருந்திய ஒரு பெண் உணவு கிடைக்காமல் அலைந்து கடைசியில் தன்னுடைய குழந்தையைக் கொன்று தின்பதற்குத் துணிகிறாள். இதையறிந்த ரூபாவதி என்னும் பௌத்தப் பெண்மணி தன்னுடைய கொங்கையை அறுத்து அவளுக்கு ஆகாரமாகக் கொடுத்தாள். இதுதான் ரூபாவதியின் கதை. இந்த ரூபாவதியே பிற்பிறப்பில், ஒரு முனிவராகப் பிறக்கிறாள். அப்போது காட்டிலே புலி ஒன்று குட்டிகளை ஈன்று, பசி பொறுக்கமாட்டாமல், உணவு கிடைக்காத நிலையில், தன் குட்டியைக் கொன்று தின்ன முற்படுகிறது. இதையறிந்த முனிவர் (முன் பிறப்பில் ரூபாவதியா யிருந்தவர்) அந்தப் புலிக்குத் தம்மையே உணவாகக் கொடுக்கிறார். பிற்காலத்தில், புத்தராகப் பிறக்கப் போகிற போதிசத்துவர்கள், பாரமிதைகளைச் செய்தததாகப் பௌத்த நூல்கள் கூறுகின்றன. போதிசத்துவர் பார மிதைகளைச் செய்யும்போது தம்முடைய கணக்குகளைப் பிடுங்கித் தானமாகக் கொடுத்ததையும், தம் உடம்பிலுள்ள இரத்தத்தைத் தானமாகக் கொடுத்ததையும் தம் உடம்பையே தானமாகக் கொடுத் ததையும் பௌத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. இந்த முறையில், போதிசத்துவர் நிலையில் இருந்த ரூபாவதி, தன் கொங்கைகளை அறுத்துப் பசியோடிருந்த பெண்ணுக்கு உணவாகக் கொடுத்தாள் என்று பௌத்த நூல் கூறுகிறது. ரூபாவதி கதைக்கும் கண்ணகி கதைக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது? கண்ணகியும் திருமாவுண்ணியும் உண்மையாகவே கொங்கையை அறுத்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும், ரூபாவதியைப் போல உணவுக்காக, மாமிசதானம் செய்யவா அப்படிச் செய்தார்கள் கருத்தை நன்றாக அறியாமல் குதிரைக்கும் குர்ரம், ஆனைக்கு அர்ரம் என்று கூறுவதுபோல, வையாபுரியார் இரண்டையும் ஒன்றாக இணைத்துக் கூறுகிறார். வாசகர்களின் மனத்தைக் குழப்பி மருளச் செய்வதற்கு இது பயன்படுமே தவிர, உண்மை யாராய்ச்சிக்கு வழிகாட்டப்பயன்படாது. நிகழ்ச்சி ஒன்றே ஆயினும் காரணமும் சூழ்நிலையும் வெவ்வே றானவை. இது சாதாரண அறிவினருக்கும் நன்கு விளங்கும். ரூபாவதி கதையைக் கண்ணகி கதையுடன் பொருத்துவது ஒரு சிறிதும் பொருந்தாது. வையாபுரிப் பிள்ளையும் நீலகண்ட சாஸ்திரியும் சிலப்பதிகாரம் கட்டுக்கதை என்னும் ஒரு கருத்தை யூகித்துக் கொண்டு, அக் கருத்துக்கு ஆதாரங்களைத் தேடுகிறார்கள். இவர்களுக்கு மாறுபட்ட ஆதாரங் களையெல்லாம் காட்டாமல் மறைத்துவிடுகிறார்கள். தங்கள் கருத்துக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதிக்கொண்டு இவர்கள் கூறும் சான்றுக ளெல்லாம்; இவர்கள் கருத்துக்கு முரண்படுகின்றன. இவர்களின் ஆராய்ச்சி, உண்மை காணும் நோக்கமுடையதாக இல்லை. *** 17. கண்ணகியார் தெய்வமான இடம் எது? * பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனோடு கண்ணகியார் வழக்காடிப், பாண்டிமா தேவியின் சிலம்பைக் களவாடிய தாகக் கோவலன்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது, அவன் கள்வன் அல்லன், அவனைப் பாண்டியன் கொன்றது அநீதி யானது என்று சான்று காட்டி நிறுவி வழக்கை வென்றபிறகு அவர் மதுரை நகரத்தை விட்டு வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்பு கொற்றவை கோயில் வாயிலில் தம்முடைய கைகளில் அணிந்திருந்த சங்கு வளையல்களை உடைத்துக் கைம்மைக் கோலம் பூண்டார். அந்த இரவிலே மதுரைக் கோட்டையின் மேற்கு வாயில் வழியாக வெளியேறித் தன்னந் தனியே வைகையாற்றின் கரை வழியே மேற்கு நோக்கி நடந்தார். மரணமடைந்த தம்முடைய கணவனைக் காண்பதற்கு முன்னர் இருப்பதுமில்லை நிற்பதுமில்லை உறங்குவதுமில்லை என்று உறுதி செய்துகொண்டு இரவு பகலாகத் தாம் எங்குச் செல்கிறார் என்ற குறிக்கோளில்லாமல் நடந்தார். அதாவது, தாமும் உயிர்விட்டு, விண்ணுலகஞ் சென்ற தம்முடைய கணவனை அடைவது என்று முடிவு செய்துகொண்டார். ஆனால், தற்கொலை செய்துகொண்டு உயிர் விடுகிற வில்லை. ஆகையால், ஓயாமல் நடந்து கொண்டே யிருப்பது, எங்கு உயிர் பிரிகிறதோ அங்கு உயிர் விடுவது என்று முடிவு செய்துகொண்டு கண்ணகியார் வைகையாற்றின் கரை வழியே தம்முடைய இறுதிப்பயணத்தை மேற்கொண்டார். “கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருந்தலு மில்லேன் நிற்றலும் இலனெனக் கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேல் மேற்றிசை வாயில் வறியேன் பொய்கென இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு” (கட்டுரை காதை 179-185) நிற்காமலும் இருக்காமலும் இரவுபகல் பாராமலும் திக்குத்திசை தெரியாமல் எங்குப் போகிறார் என்றறியாமல் கண்ணகி யார் நெடுக நடந்தார். அவர் நடந்த இடங்கள் மேடு பள்ளங்களும் காடுகளும் குன்றுகளுமாக இருந்தன. ஓய்வு உறக்கம் இல்லாமல் பதினான்கு நாள்களாகத் தொடர்ந்து வழி நடந்தார். (மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர் தம்முடைய இறுதிக் காலத்தில் வடக்கு நோக்கி நீள் யாத்திரை செய்தார்கள் என்று கூறுவதை இங்கே நினைவு கொள்ளலாம். பதினான்கு நாள்களாக ஊணுறக்க மின்றி ஓயாமல் நடந்த கண்ணகியாரின் உடம்பு இளைத்து வாடி வதங்கிக் கண் பஞ்சடைந் திருக்கவேண்டும். பதினைந்தாம் நாள் அவர் ஒரு குன்றின்மேல் நடந்த போது மேலும் அடியெடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து போனார். இளைப்பும் களைப்பும் மேலிட்டன. அருகிலிருந்த வேங்கை மரத்தின் கீழே அமர்ந்தார். அந்தக் குன்றின் சாரலிலே குறிச்சியில் வாழ்ந்த குறச் சிறுமிகள், புதியவள் ஒருத்தி அங்கு வந்திருப்பதைக் கண்டு ஓடிவந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர். ‘அம்மையீர்! நீங்கள்யார்? எங்கிருந்து வருகிறீர்? எங்குச் செல்கிறீர்? என்று குறச்சிறுமியர் வினவினார்கள். கண்ணகியாரால் பேச முடியவில்லை. நாக்குழறத் தட்டுத் தடுமாறிப் பேசினார். தம்முடைய கணவன் மதுரையில் கொல்லப்பட்டதும், தாம் மதுரையை எரித்த பிறகு வழிநடந்து வந்ததும் ஆகிய செய்தியைச் சுருக்கமாகக் கூறினார். அவரால் மேலும் பேச முடியவில்லை. அப்போது அவருடைய உயிர் பிரிந்தது. கண்ணகியார் தெய்வம் ஆனார், அஃதாவது இறந்துவிட்டார். “அவல என்னாள் அவலித் திழிதலின்மீசைய என்னாள் மிசைவைத் தேறலின் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் ‘தீத்தொழி லாட்டியேன் யானென்றேங்கி எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்” (கட்டுரை காதை, 186-193) உயிர் நீத்தார். (தீத்தொழிலாட்டியேன் யான்-குறத்தியர் கேட்கத் தீத்தொழி லாட்டியேன் யான் என்று சொல்லி. ஏங்கி - என்றது சொல்லி என்றவாறு. பழைய அரும்பதவுரை.) கண்ணகியார் இறந்து போனதைக் காவியப் புலவரான இளங்கோ அடிகள் அழகாகக் கற்பனை செய்துள்ளார். தேவர்கள் கோவலனை விமானத்தில் ஏற்றிக்கொண்டு, உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கண்ண கியார் இடத்துக்கு வந்து அவனோடு அவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வானுலகம் சென்றார்கள் என்று இளங்கோவடிகள் கற்பனை செய்கிறார். சிலப்பதிகாரம் காவிய நூல் ஆகையால், காவியத்துக்குக் கற்பனை வேண்டியிருக்கிறது. இந்தக் கற்பனை காவியத்துக்கு வியப்புச் சுவையைத் தருகிறது. மேலும், சிலப்பதிகாரம் நாடக நூல் ஆகையாலும், இந்தக் கற்பனைக் காட்சி, தேவர்கள் கோவலனோடு விமானத்தில்வந்து இறங்கி மனித உருவத்தைவிட்டுத் தெய்வ உருவத்தைப் பெற்ற கண்ணகியை அவனோடு ஏற்றிக் கொண்டு தேவருலகத்துக்குச் செல்லுங் காட்சி நாடகத்துக்குச் சிறப்பையளிக்கிறது. வியப்புச்சுவை யளிக்கிற இந்தக் காட்சியை இளங்கோ அடிகள் தம்முடைய காவியத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கிறார். “தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினன் மாதோ கானமர் புரிகுழல் கண்ணகி தானென்” (கட்டுரை காதை, 194-200) மேலும், இளங்கோ அடிகள் இந்தக் கற்பனையைக் குன்றக் குரவையிலும் உறுதிப் படுத்துகிறார். “மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக் கணவனையங் கிழந்துபோந்த கடு வினையேன் யானென்றாள் என்றலும் இறைஞ்சியஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி நின்றவெல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்” (குன்றக்குரவை, உரைப்பாட்டு மடை) காவியத்துக்கும் நாடகத்துக்கும் வியப்புச் சுவையூட்டுவதற்கு இளங்கோ அடிகள் கற்பித்த இந்தக் கற்பனையைச் சரித்திரக்காரர் உண்மை நிகழ்ச்சி என்று கொள்ளமாட்டார். கண்ணகியார் குன்றின்மேல் வேங்கை மரத்தின்கீழே உயிர் நீத்தார் என்பதை மட்டும் இயற்கையான உண்மை நிகழ்ச்சி என்று கொள்வார்கள். இது நிற்க. கண்ணகியார் உயிர்விட்ட இடம் எது என்பதை ஆராய்வதற்கு இந்தக் கட்டுரையைத் தொடங்கினோம். அதனைத் தொடர்வோம். மாறுபட்ட கருத்துகள் கண்ணகியார் நெடுவேள்குன்றம் அடிவைத் தேறிப், பூத்த வேங்கைப் பொங்கர்க்கீழ்’ உயிர் விட்டார் என்று இளங்கோ அடிகள் கூறுகிறார். அந்த நெடுவேள் குன்றம் எது என்பதை அறிய வேண்டும். நெடுவேள் குன்றம் எது என்பது பற்றிப் பழைய உரையா சிரியர்கள் மாறுபட்டு வெவ்வேறு இடங்களை கூறுகிறார்கள். சிலப்பதிகாரத்தின் பழைய உரையாசிரியர் (அரும்பத உரையா சிரியர்) நெடுவேள் குன்றம் என்பது திருச்செங்கோடு மலை என்றும், அவருக்குப் பிற்காலத்தவ ரான அடியார்க்கு நல்லார் (சேர நாட்டு மேற்குக் கடற்கரை ஓரமாக உள்ள) கொடுங்கோளூர்க்குப் பக்கத்திலுள் செங்குன்றுமலை என்றும் கூறுகிறார்கள். நெடுவேள் குன்றம் (கட்டுரை காi, 190) என்பதற்குப் பழைய அரும்பத உரையாசிரியர், நெடுவேள் குன்று - திருச்செங் கோடு என்று உரை எழுதியுள்hர். அஃதாவது கொங்கு நாட்டில் ஈரோட்டுக்கு அடுத்துள்ள திருச்செங்கோடு மலையைக் கூறுகிறார். அவருக்குப் பின்னவரான அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரப் பதிகத்தின் மூன்றாவது வரியான, குன்றக்குறவர் ஒருங்குடன் கூடி என்பதற்கு உரை எழுதுகிறவர். குன்றம் - கொடுங்கோளூர்க்கு அயலதாகிய செங்குன்றென்னு மலை என்றுஎழுதுகிறார். எழுதிய பிறகு, பழைய அரும்பத உரை யாசிரியர் கூறியதை மறுக்கவும் செய்கிறார். அது திருச்செங்கோடு என்பராலெனின், அவர் அறியார் என்று கூறிக் காரணத்தையும் சொல்லுகிறார். இவர் கூறுகிற காரணமாவது என்னை? அத்திருச்செங்கோடு வஞ்சிநகர்க்கு கொடுங்கோளூர்க்கு) வடகீழ்த்திசைக் கண்ணதாய் அறுபதின்காத ஆறு உண்டாகலானும் அரசனும் உரிமையும் (செங்குட்டுவனும் அவனுடைய அரசியும்) மலை காண்குவமென்று வந்து, கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையினென்க” (சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை.) கண்ணகியார் உயிர்விட்ட இடம் நெடுவேள் குன்று என்று கூறிய இளங்கோ அடிகள் செங்குன்று எங்கிருக்கிறது என்று கூறவில்லை. நெடுவேள் குன்றம், கொங்கு நாட்டிலுள்ள திருச்செங்கோடு மலை என்பது பழைய அரும்பத உரையாசிரியர் கருத்து. அஃதன்று, அது சேரநாட்டில் கடற்கரைக்கு அருகிலிருந்த, கொடுங்கோளூர்க்குப் பக்கத்திலிருந்த செங்குன்று என்பது அடியார்க்கு நல்லாரின் கருத்து. அஃதாவது, மதுரையிலிருந்து பதினான்கு நாள்கள் வழிநடந்த கண்ணகியார் கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு மலைக்கு வந்து அங்கு உயிர் நீத்தார் என்று அரும்பதவுரை யாசிரியரும், சேர நாட்டுக் கொடுங்கோளூர்க்கு (வஞ்சிக் கருவூருக்கு)ப் பக்கத்தில் செங்குன்று என்னும் குன்றுக்கு வந்து உயிர் நீத்தார் என்று அடியார்க்கு நல்லாரும் மாறுபடக் கூறுகிறார்கள். கோவிந்தராசனார் கருத்து பேராசிரியர் சி. கோவிந்தராசனார் இதுபற்றி ஆராய்ந்து, பாண்டி நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளிமலை என்னும் குன்றுதான் நெடுவேள் குன்று என்றும் அங்குதான் கண்ணகியார் உயிர்விட்டார் என்றும் அந்த இடத்தில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்றும் கூறுகிறார். நெடுவேள் குன்று என்னும் பெயர் பிற்காலத்தில் சுருளிமலை என்று மாறிவிட்டது என்றும் கூறுகிறார். ‘இதுதான் சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை என்னும் தலைப்பில் ஆனந்த விகடனில் (27-2-1972) இவர் இதுபற்றி நீண்ட தோர் கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த நீண்ட கட்டுரையின் கருத்தைச் சுருக்கமாக இங்குத் தொகுத்துக் கூறுவோம்:- “வர்ஷ நாடு என்று குறிப்பிடப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்துகிடக்கிறது. இப்பள்ளதாக்கைச் சூழ்ந்து முப் புறமும் சுவர் வைத்தது போல் சுருளிமலைத் தொடரும் பழனி மலைத் தொடரும் இணைந்து நிற்கின்றன.” “சுருளிமலைதான் நெடுவேள் குன்றம் நெடுவேள் குன்றம் என்ற பெயர், மலையிலிருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளிமலை என்று மாறியிருக்கிறது.” “வர்ஷ நாடு என்னும் மலையடிவாரப் பகுதிகளை ஆராய்ந்து பார்த்தபோது கீழ்க் கூடலூருக்குத் தெற்கே உள்ள பழைய கோயிலில் ஒரு குத்துக் கல்லைக் கண்டேன். மங்கல தேவி அம்மன் கோவிலுக்குச் சேர மன்னர் ஒருவர் தர்மமாக அளித்த நிலங்களைப் பற்றிய செய்தி அதில் இருந்தது. கி.பி. 14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டாகும் அது.” “மிகப் பழைமையோடு கூடியதும் பலிபீடத்துடன் இருப்பது மாகிய மூன்றாவது கோயிலை அடைந்தேன். உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில் ஒரேகல்லில் இரண்டு கைகளுடன் இடக் காலைப் பீடத்தில் மடக்கி, வலக்காலை ஊன்றிய பாங்கில் இருந்த ஒரு பெண்சிலை, இடிபாடுகளுக்கிடையே காணப்பட்டது. அதன் தலையில் கிரீடம் இல்லை. கொண்டையில் விரிந்த கூந்தல்போல இருபுறமும் அழகு செய்யப்பட்டிருந்தது. இடப்புற மார்பு சிறியதாக இருந்தது. இதுவே செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை.” “சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை என்னும் காதையுள் ............. அருவியினையுடைய நெடுவேள் நிறத்தின்மீது, வேங்கை மரத்து நல்ல நிழலின்கண்ணே (கண்ணகியை) ஒப்பற்ற தெய்வமாகப் பண்ணிக் கொள்ளுமின் என்று கூறுவதாக ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். அப்பகுதி இதுவே யாகும்.” “பின்னர், பேரியாற்றின் (பெரியாறு) கரையின் மலைவளம் காண வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் மலைவாழ் வேடர்கள் (குறவர்கள்) கண்ணகிஇறந்த இடம் இதுவென்று குறித்துக் காட்டிய இடத்திலேயே அம்மன்னன் பத்தினிக் கோட்டம் அமைத்துள்ளான்..... எனவே இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் குறிப்பிடும் நெடுவேள் குன்றமும் பத்தினிக் கோட்டமும் இதுதான். சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுவே.” பேராசிரியர் சி. கேவிந்தராசனார் எழுதியுள்ள கட்டுரையின் முக்கியமான சாரம் இவை. இதில் நான்கு கருத்துக் களைக் கூறுகிறார். அவை : 1. நெடுவேள் குன்று என்று சிலப்பதிகாரம் கூறுவது, பாண்டி நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கு அடுத்துள்ள சுருளிமலை. 2. நெடுவேள் குன்று என்று பெயர் பெற்றிருந்த சுருளிமலையின் மேல் கண்ணகியார் உயிர் விட்டார். 3. இந்த இடத்தில்தான் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்hன். 4. இப்போது இங்குக் காணப்படுகிற சிலை யுருவம் செங்குட்டுவன் அமைத்த கண்ணகியின் சிலையுருவ மாகும். நெடுவேள் குன்றம் என்பதற்கு இவ்வாறு வெவ்வேறு மூன்று இடங்கள் கூறப்படுகின்றன. கண்ணகியார் ஏதோ ஓர் இடத்தில் மட்டும் உயிர்விட்டிருக்க வேண்டுமே யல்லாமல் மூன்று இடங் களில் உயிர் விட்டிருக்க முடியாது. ஆகவே, கண்ணகியார், இந்த மூன்று குன்று களில் ஏதேனும் ஒரு குன்றின்மேல் உயிர் விட்டிருக்கவேண்டும். அப்படியானால் அந்தக் குன்று எது? திரு. கோவிந்தராசனார் கூறுவது போல சுருளிமலைக் குன்றுதானா, அல்லது உரையாசிரியர்கள் கூறுகிற குன்றுகளா? அல்லது இம் மூன்று குன்றுகளும் அல்லாத வேறு குன்றா? இவற்றை ஆராய்வோம். நெடுவேள் குன்றம் நெடுவேள் ஆகிய முருகன் தமிழரின் தொன்மையான கடவுள். முருகன் சிறப்பாக மலைகளிலே எழுந்தருளியிருக்கிறான் என்பது தமிழர் நம்பிக்கை. குன்றுகள் மலைகள் தோறும் அவன் எழுந்தருளி யிருக்கிறான். இந்த முறையிலேதான் இளங்கோ வடிகள் நெடுவேள் குன்றம் ஒன்றைக் கூறினார். அந்தக் குன்றம் எங்கிருந்தது என்பதைத் திட்டவட்டமாக அவர் கூறவில்லை. முருகன் இருந்த ஒரு குன்றின் மேலே கண்ணகியார் உயிர் விட்டார். அந்தக் காலத்திலே குன்றுகளிலும் மலைச் சரிவுகளிலும் குறவர் (இக்hலத்து நாடோடிக் குறவர் அல்லர்) வாழ்ந்து வந்தார்கள். கண்ணகியார் உயிர்விட்ட குன்றம் எது? இளங்கோ அடிகள் அந்தக் குன்றம் இருந்த இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக் கூறவில்லை. ‘நெடுவேள் குன்றம்’ என்று கூறுகிறார். முருகனுக்குக் கோயில் உள்ள குன்றுகள் எல்லாம் நெடுவேள் குன்றுதான். ஆகவே கண்ணகியார் உயிர் நீத்த குன்று எது? என்கிற கேள்வி எழுகிறது. இதற்கு விடை என்ன? அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், கோவிந்த ராசனார் ஆகிய மூவரும் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு குன்று களைக் காட்டுகிறார்கள். இவர்கள் காட்டுகிற நெடுவேள் குன்றங்கள் தவறான இடங்கள். இவர்கள் காட்டுகிற இடங்களில் கண்ணகியார் உயிர் விட்டிருக்க முடியாது. அது வேறு இடமாக இருக்க வேண்டும் என்று சிலப்பதிகாரத்தில் உள்ள சில குறிப்புகளினால் தெரிகிறது. இளங்கோவடிகள், கண்ணகியார் உயிர்விட்ட நெடுவேள் குன்றத்தைச் சில இடங்களில் நுட்பமாகக் குறிப்பிடுகிறார். அவர் கூறுகிற நுட்பமான குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், அவர் சுட்டுகிற நெடுவேள்குன்று இவர்கள் காட்டுகிற நெடுவேள் குன்றுகள் அல்ல என்பது தெரிகிறது. இளங்கோ அடிகள் கூறுவது கண்ணகியார் உயிர்விட்ட இடத்தைப் பற்றி இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்தில் மூன்று குறிப்புகளை நுட்பமாகக் கூறுகிறார். அந்த நுட்பமான குறிப்புகள் எவை என்பதைப் பார்ப்போம். சேர மன்னன் செங்குட்டுவன் தன்னுடைய அரசியை நோக்கி, ‘பாண்டிமாதேவி, கண்ணகி என்னும் இரண்டு பெண்மணி களில் நீ போற்றுகிறவர் யார்?’ என்று வினவினபோது அரசியார், ‘பாண்டிமா தேவியார் விண்ணுலகத்திலே பெருந்திருவுறுக, நம்முடைய நாட்டுக்கு வந்த பத்தினியை (கண்ணகியை)ச் சிறப்பிக்கவேண்டும்’ என்று விடையிறுத்தார். “நம் அகநாடடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” (சிலம்பு, காட்சிக்காதை, 113-114) இதனால் கண்ணகியார் முடிவாகச் சென்றது சேரர் ஆட்சிக்குட்பட்ட நாடு என்பது தெரிகிறது. கண்ணகியார் இறுதியாகச் சேரநாட்டுக்குச் சென்றதை இளங்கோ வடிகள் இன்னொரு இடத்திலுங் கூறுகிறார். சேரன் செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்று கல் எடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து கங்கைக் கரைமேல் பாசறையில் தங்கியிருந்தான். அப்போது சோழ நாட்டவனான மாடலன் என்னும் மறையவன் (இவன் மதுரையில் கோவலன் கண்ணகி கவுந்தி அடிகள் ஆகிய மூவரையும் சந்தித்தவன், மதுரையில் கோவலன் இறந்தபோதும் கண்ணகி வழக்காடினபிறகு மதுரையை எரித்தபோதும் அங்கிருந்து நேரில் கண்டவன்) கங்கை யாற்றுக்குத் தீர்த்த யாத்திரை சென்றவன் தற்செயலாகச் செங்குட்டு வனைப் பாசறையில் கண்டான். கண்டு அரசனோடு உரையாடின போது, “கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி, குடவர் கோவே! நின்னாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள்” (நீர்ப்படைக் காதை, 63-65) என்று கூறினான். கண்ணகியார் சேர நாட்டுக்குச் சென்றார் என்பதை இக்குறிப்பு மூலமாக இளங்கோ அடிகள் கூறுவது அறிக. சேரநாட்டுத் தலைநகரான வஞ்சிமா நகரத்தில் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்தான். அவ்வமயம் வஞ்சி நகரத்து மகளிர் கண்ணகியின் புகழைப் பாடுவதற்குப் பத்தினிக் கோட்டத்துக்கு வந்தார்கள். வந்தவர்கள் தங்கள் தோழியர்களையும் பத்தினிக் கோட்டத்துக்கு அழைத்தார்கள். அவர்கள், “செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர்என்று எங்கோ முறைநா இயம்ப, இத் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் தன்மகனைப் பாடுதும் வம்மெல்லாம்” (வாழ்த்துக் காதை, வஞ்சிமகளிர் சொல்) என்று அழைத்தாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். ‘இந் நாட்டை யடைந்த பைந்தொடி’ என்று சேரநாட்டு மகளிர் பெருமிதத் தோடு கூறியபடியால், கண்ணகியார் இறுதியாகச் சென்றது சேரநாடு என்பதும் அந்நாட்டில் ஏதோ ஒரு குன்றின்மேல் அவர் உயிர்நீத்தார் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகின்றன. இவ்வாறு, இளங் கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரத்திலே மூன்று இடங்களிலே கண்ணகியார் சேரநாட்டுக்குச் சென்று உயிர்விட்ட செய்தியை நுட்பமாகக் கூறியுள்ளார். மற்றும், சிலப்பதிகாரப் பதிகத்திலும் இந்தக் குறிப்பு காணப்படுகிறது. “சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனாரிடம் கூறியபோது சாத்தனார், “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக” என்று கூற அடிகள் காவியம் இயற்றினார் என்று பதிகம் கூறுகிறது. இதில், ‘முடி கெழு வேந்தர் மூவர்க்கு முரியது’ என்பதற்கு அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் ‘புகாரினும் மதுரையினும் வஞ்சியினும் நிகழ்தலான் மூவர்க்கு முரியது’ என்று உரை கூறுகிறார்கள். கோவலனும் கண்ணகியும் பிறந்து மணந்து வாழ்ந்தது சோழருடைய புகார்ப் பட்டினத்தில்; கோவலன் கொலையுண்டதும் கண்ணகி துனபுற்றதும் பாண்டிய ருடைய மதுரை மாநகரத்தில்; கண்ணகி உயிர்விட்டது சேரருடைய நாட்டில். பத்தினிக்கோட்டம் பெற்றுப் பரவப் பெற்றதும் சேரருடைய தலை நகரமான வஞ்சிப்பட்டினத்தில். இதி லிருந்தும் கண்ணகியார் உயிர்நீத்தது சேரநாட்டில் என்பது தெரிகிறது. சேரன் செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் சேரநாட்டு ஆட்சிக் குட்பட்ட ஏதோ ஓரிடத்தில் கண்ணகியார் உயிர்விட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது. அரும்பத உரையாசிரியர் கருத்துச் சரியா? நெடுவேள் குன்று என்பது பற்றிஉரையாசிரியர் கூறியுள்ளதை ஆராய்வோம். பழையஅரும்பதவுரையாசிரியர்.நெடுவேள் குன்று என்பது திருசசெங்கோடு மலை என்று கருதியதை முன்னமே கூறினோம். சிலப்பதிகாரத்தில் இன்னோர் இடத்திலும் இவர் கதையேகூறுகிறார். வாழ்த்துக் காதையிலே செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டியது என்னுஞ் செய்யுளில் அவர் உயிர்விட்ட ‘வென்வேலான் குன்று’ கூறப்படுகிறது. “வெல்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்” இங்கக் கூறப்படுகிற ‘வென்வேலான் குன்று’ என்பதற்கு அரும் பதவுரையாசிரியர் மீண்டும் செங்கோடு என்று உரை எழுதியுள்ளார். ஏன் இவர் செங்கோடு மலையைக் கூறினார். இவர் காலத்தில் திருச்செங்கோடு மலையில் கண்ணகிக்குக் கோயில் இருந்தது. இந்தக் கோயில், சேரன் செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் எடுத்த பத்தினிக் கோட்டத்துக்குச் சென்றுவந்த கொங்கு நாட்டு இளங்கோசரால் அமைக்கப்பட்டது. கொங்கிளங்கோசர் கொங்கு நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்ததைச் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கூறுகிறது. “அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழைதொழிலென்றும் மாறாதாயிற்று” என்பது அதன் வாசகம். திருச்செங்கோடு மலைமேல் கொங்கிளங்கோசர் கண்ணகிக்குக் கோயில் அமைத்து விழாச் செய்தார்கள் என்பது இதனால் தெரிகிறது. பிற்காலத்திலே திருச்செங்கோடு கண்ணகி கோயில் அர்த்நாரீசுவரர் கோயில் என்று பெயர் மாற்றப்பட்டுச் சிவன் கோயிலாயிற்று. அரும்பத வுரையாசிரியர் இக்கோயிலைக் கண்ணகி கோயில் என்று அறிந் திருந்தபடியால், இந்த மலையில்தான் கண்ணகியார் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று கருதினார் போலும். ஆகையினால் தான் அவர் நெடுவேள் குன்றம் வென்வேலான் குன்று என்பதற்குத் திருச்செங் கோடு என்று உரை எழுதினார் என்று தோன்றுகிறது. திருச்செங்கோடு மலையில் இப்போதுள்ள அர்த்த நாரீசுவரர் கோயில் பழைய கண்ணகி கோயில் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. (அதுபற்றி விளக்கிக் கூற இஃது இடமன்று) சேரன் செங்குட்டு வன் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாடு சேரர் ஆட்சிக்குட்பட்டிருந்தது உண்மைதான். ஆனால், அரும்பத வுரையாசிரியர் கருதுகிறபடி, கண்ணகியார் உயிர்விட்ட இடம் இந்த மலையன்று. திருச்செங்கோடு மலைமேல் முருகனுக்கும் ஒரு கோயில் உண்டு. ஆனால், கண்ணகியார் உயிர்விட்ட நெடுவேள் குன்றம் வென்வேலான் குன்று இஃது அன்று. அடியார்க்கு நல்லார் கருத்துச் சரியா? கொடுங்கோளூர் என்று பிற்காலத்தில் பெயர்பெற்றதும் வஞ்சி என்று பழைய பெயரையுடையதுமான சேரநாட்டுத் தலைநகர்க்கு அருகில் செங்குன்று என்னும் குன்றின்மேல் கண்ணகியார் உயிர்விட்டதாக அடியார்க்கு நல்லார் கருதுகிறார். இவர் கூறுகிற செங்குன்று மேற்குக் கடற்கரைக்கு அருகில் இருந்திருக்க வேண்டும். மிகச்சிறியதாகவும் மலைவளம் இல்லாததாகவும் இருக்கவேண்டும். இக்குன்றில் குறவர் வாழ்ந்ததாகவும் இதிலிருந்து பெரியாறு உண்டானதாகவும் தெரிய வில்லை. இந்தக் குன்றின்மேல் கண்ணகி யார் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று அடியார்க்கு நல்லார் ஊகிக்கிறார். இந்த ஊகத்துக்குக் காரணத்தையும் அவர் கூறுகிறார். “அரசனும் உரிமையும் (செங்குட்டு வனும் அவனுடைய இராணியும்) மலைகாண்குவம் என்று வந்து கண்ட அன்றே வஞ்சி”க்குச் சென்றபடியினாலே, செங்குட்டுவன் காணவந்த மலை கடற்கரையில் இருந்த வஞ்சி நகரத்துக்கு அருகில் இருக்கும் (இப்படி ஒரு குன்று இருக்கிறதா?) குன்றில் தான் கண்ணகியார் உயிர் விட்டிருக்க வேண்டும். அரசன் வந்தபோது இச்செய்தியைக் குறவர் அவனுக்குக் கூறியிருக்கவேண்டும் என்பது இவருடைய ஊகம். இவருடைய ஊகத்துக்கு மாறாகவும் எதிர்ப்பாகவும் சான்றுகள் இருக்கின்றன. சேரன்செங்குட்டுவன் மலைகாண்பதற்கு வந்து கண்டு அன்றைக்கே நகரத்துக்குத் திரும்பிவிடவில்லை. அவன், வாரக் கணக்காக வேனிற் காலம் முடிகிற வரையிலே மலையடிவாரத்தில் தங்கியிருந்தான் என்றும் அவன் தங்கியிருந்த இடம், மலையிலிருந்து இழிந்துவந்த ஆற்றின் கரை மணல் என்றும் சிலப்பதிகாரமும், அவன் மேல் பாடப்பட்ட ஐந்தாம் பத்தும் தெளிவாகக் கூறுகின்றன. சிலப்பதி காரக் காட்சிக் காதையில் இளங்கோவடிகள் இந்த இடத்தைத் தெளிவாகக் கூறுகிறார். “நெடியோன் மார்பிர் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகல இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப” (அடி21) என்று கூறுகிறார். இதில் தவறு இருக்க முடியாது. ஏனென்றால் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் சென்று அங்கு தங்கினார் என்று சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். ‘பெருமலை விலங்கிய பேரியாறு’ என்பதற்கு அரும்பத வுரையாசிரியர் இவ்வடி விளக்குகிறார். “மலையை விலங்கிய ஆறு, பேரியாறு இஃது ஓர் ஆற்றின் பெயர்.” சேரநாட்டில் பாய்கிற பெரியாறு மேற்குத் தொடர் மலையில் உண்டாகி அம்மலையிலிருந்து கீழே இழிந்து நெடுந்தூரம் ஓடிக் கடைசி அரபிக்கடலில் விழுகிறது எல்லோரும் அறிந்ததே. இந்த ஆறு மலை மேலிருந்து கீழே இறங்குகிற அழகான இயற்கை காட்சியுள்ள இடத்தில் செங்குட்டுவன் தங்கினான் என்பது தெரிகிறது. மேலும் செங்குட்டுவன் வந்த மலை, ‘துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுசூழ் சோலைமலை என்று (காட்சிக்காதை, அடி 6-7) கூறுகிற படியால் உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு மலை என்பதும் நன்கு தொடர்கிறது. குன்றுகளின்மேல் மஞ்சு இருப்பது இல்லை. மேலும் உயரமான மேற்கு தொடர்ச்சி மலைகளில் குன்றக் குறவர் வாழ்ந்தனர். செங்குட்டுவன் வழக்கமாக ஆண்டுதோறும் மலையடி வாரத்துக்கு வந்து இளவேனிற் காலத்தைக் கழித்தான் என்பது அவன்மேல் (பதிற்றுப்பத்து) ஐந்தாம் பத்துப் பாடிய பரணரும் கூறுகிறார். பரணர் செங்குட்டுவனை இவ்வாறு வாழ்ந்துகிறார். “நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும்திநீர் விழவில் பொழில்வதி வேனில் பேரெழில் வாழ் மேவரு சுற்றமோடு உண்டினிது நுகரும் தீம்புனல் ஆயம் ஆடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும்பல” (5ஆம் பத்து) இதன் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார். பொழில் வதி வேனில் பேரெழில் வாழ்க்கை - என்றது வேனிற்காலத்து. (அரண்) மனையில் வைகாது பொழில்களிலே வதியும் பெரிய செல்வ அழகை யுடைய இல்வாழ்க்கை என்றவாறு’. இதனால், அடியார்க்கு நல்லார், செங்குட்டுவன் மலை காணவந்த அன்றே தன்னுடைய நகரத்துக்குத் திரும்பிப்போனான். என்று ஊகிப்பது தவறு என்று தெரிகிறது. செங்குட்டுவன் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், பெரியாறு மலையிலிருந்து தரையில் இழிகிற நீர்வீழ்ச்சிக்கு அருகில் மணல் பரந்த சோலையில் வேனிற் காலம் முழுவதும் தங்குவது வழக்கம் என்பதும் அவ்வாறு வந்து தங்கிய ஓராண்டின்போது குறவர் கண்ணகியார் வந்து உயிர்விட்ட செய்தியைக் கூறினார்கள் என்பதும் தெரிகின்றன. சேரநாட்டுக் கடற்கரைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் உள்ள தூரம் ஏறத்தாழ ஐம்பது மைல் தூரந்தான். செங்குட்டுவன் மலைக் குறவர்களிடமிருந்து கண்ணகியின் செய்தியை அறிந்தது மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் பெரியாறு மலையிலிருந்து விழுகிற இடத்தில் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே அடியார்க்கு நல்லார் கருதுவதுபோன்று, கண்ணகியார் மேற்குத் தொடர்ச்சி மலையையுங் கடந்து மேற்கே அரபிக்கடலுக்கு அருகிலே இருந்த ஒரு குன்றின்மேல் உயிர்விட்டிருக்க முடியாது. முன்பின் நெடுந்தூரம் நடந்து பழகாத கண்ணகியார், மதுரையிலிருந்து சேரநாடு சென்று அந்நாட்டின் மேற்குக் கடற்கரை அருகில் பதினான்கு நாளில் சென்றிருக்கமுடியாது. அதிலும் உணவு உறக்கம் இல்லாமல் களைப் படைந்திருந்தவர் அவ்வளவு தூரம் சென்றிருக்க முடியாது. எனவே, அடியார்க்கு நல்லார், கொடுங்கோளூர்க்கு அருகில் செங்குன்று என்னும் குன்றின்மேல் உயிர்விட்டார் என்று ஊகிப்பது ஏற்கத்தக்கது அன்று. கண்ணகி யார்சேரநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏதோ ஒரு குன்றின் மேல் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கோவிந்தராசனார் கருத்துச் சரியா? பாண்டிநாட்டைச் சேர்ந்த சுருளிமலையில் கண்ணகியார் உயிர் விட்டார் என்று கோவிந்தராசனார் கூறுவதும் ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், மேலே காட்டினபடி, சேரநாட்டில் கண்ணகியார் உயிர் துறந்தார். பாண்டி நாட்டில் அல்ல. மிகமிகப் பிற்காலத்தில், கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சுருளிமலைப்பகுதி சேர அரசர் ஆட்சிக்கு வந்திருக்கக்கூடும். ஆனால், சிலப்பதிகார நிகழ்ச்சி நடந்த காலத்தில் இப்பகுதி பாண்டியர் ஆட்சியில் இருந்தது. ஆகவே, கண்ணகியார் தெய்வமான இடம் சுருளிமலை வட்டாரமாக இருக்க முடியாது. செங்குட்டுவன், தன் ஆட்சிக்குரிய தல்லாத இடத்தில் பத்தினிக் கோட்டம் அமைக்கவில்லை. தன் தலைநகரமான வஞ்சி மாநகரத்தில் (கொடுங்கோளூரில்) பத்தினிக் கோட்டம் அமைத்தான். பத்தினிக் கோட்டத்தை மலையின்மேல் அமைக்கவில்லை. கோவலனின் மகளான மணிமேகலை, செங்குட்டுவன் வஞ்சிமாநகரத்தில் அமைத்த பத்தினிக் கோட்டத்துக்கு வந்து கண்ணகியை வணங்கினாள் என்று மணிமேகலை காவியம், வஞ்சிமா நகர்புக்க காதையில் அறிகிறோம். எனவே, செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தது சுருளிமலை அன்று. மேலும், ஐயமிருந்தால், கோவிந்த ராசனார் சுருளிமலையில் கண்ட கற்சிலைகளை நிலநூல் அறிந்த பேராசிரியர்களுக்கு அனுப்பி அந்தக்கல் இமயமலைக்கல்லா என்று சோதித்துப் பார்த்து உண்மையை அறியலாம். இதுபற்றி அதிக விளக்கம் தேவை இல்லை. முடிவு என்ன? மேற்குத்தொடர்ச்சிமலைகளைச் சேர்ந்த ஒரு குன்றின்மேல் கண்ணகியார் உயிர் விட்டிருகக வேண்டும் என்று கூறினேன். மேற்குத் தொடர்ச்சி மலைகள் சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையிலே வடக்குத் தெற்காகச் சென்று பாண்டி நாட்டில் பொதிகை மலையில் முடிகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் சேரநாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் எல்லையாக அக்காலத்தில் அமைந்திருந்தன. வைகையாற்றின் கரை வழியே மேற்கு நோக்கி வழிநடந்த கண்ணகியார், வைகையாறு குறுகியதாயும் ஆழமில்லாமலும் உள்ள இடத்தில் ஆற்றைக் கடந்து அக்கரையடைந்து வடமேற்காக நடந் திருக்கவேண்டும். கடைசியில் பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலை மேல் தோன்றுகிற இடத்தில் (அயிரிமலைக்கு அருகில்) வந்தபோது கண்ணகியார் உயிர்பிரிந்திருக்கவேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த அயிரிமலைமேல் பெரியாறு தோன்றுகிறது. அங்கு அந்த ஆற்றுக்கு அயிரியாறு என்று பெயர். அந்த இடத்தில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. அந்தக் கொற்றவைக்கு அயிரிக் கொற்றவை என்பது பெயர். அயிரிமலையையும் அங்கு உண்டாகிய அயிரி ஆற்றையும் அங்கிருந்த அயிரிக் கொற்றவையையும் பதிற்றுப் பத்துச் செய்யுட்கள் கூறுகின்றன. அயிரி மலைக் கொற்றவை சேர அரசர்களின் குலதெய்வம். அயிரிமலைமேல் தோன்றுகிற அயிரியாறு பிறகு அம்மலையின் மேற்குப் பக்கமாகத் தரையில் இழிந்து பெரியாறு என்று பெயர்பெற்றுச் சேரநாட்டில் பாய்ந்து வஞ்சிமாநகர்க்கு அருகிலே முசிறித்துறை முகத்தண்டை கடலில் கலந்தது. மலைமேலிருந்து பெரியாறு கீழே இறங்குகிற இடத்தில்தான் செங்குட்டுவன் ஆண்டு தோறும் சென்று சுற்றத்தோடு தங்கி வேனிற்காலத்தைக் கழித்தான். கோவலன் கண்ணகியார் வாழ்ந்திருந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சேர நாட்டுக்குக் கிழக்கே இருந்த கொங்கு நாடு சேர அரசரின் ஆட்சியில் இருந்தது. அந்தக் கொங்கு நாட்டு சேர அரசர்களின் இளைய வழிப்பொறையர் என்று பெயர்பெற்று ஆட்சி செய்தார்கள் என்பதைப் பதிற்றுப்பத்தில் அறிகிறோம். கொங்கு நாடு சேர இனத்தோடு சேர்ந்து இரும்பொறை அரசர்களால் ஆட்சி செய்யப் பட்ட காலத்தில் கண்ணகியார் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த அயிரிமலைக்கு அருகில் ஏதோ குன்றின்மேல் உயிர் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சேர அரசர் ஆட்சிக்குட்பட்டிருந்த ஓரிடத்தில் கண்ணகியார் சென்று விட்டார் என்று சிலப்பதிகார இளங்கோவடிகள் கூறுகிற குறிப்பு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் முடிவுக்குத்தான் வரவேண்டி யிருக்கிறது “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள்) “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள்) *** 18. தேவந்தி * கண்ணகியின் தோழி தேவந்தி என்பவள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த ஒரு பார்ப்பனப் பெண்மணி. இவள் கோவலனின் மனைவியாகிய கண்ணகி யுடன் நெருங்கிய நட்பு உள்ளவள். கண்ணகியுடன் நட்புக் கொண் டிருந்தபடியால் கண்ணகியின் செவிலித்தாயாகிய காவற் பெண்டுக்கும் அவள் மகளாகிய அடித்தோழிக்கும் (கண்ணகியின் பணிவிடைப் பெண்) அறிமுகமானவள். கண்ணகியைப் போலவே தேவந்தியும் தன் கணவனால் கைவிடப்பட்டவள். ஆகையால் தேவந்தி சாத்தன் கோவிலில் சென்று அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்தாள். தேவந்தியைப் பற்றி ஒரு கதை கூறப்பட்டது. பாசண்டச்சாத்தன் என்னும் தெய்வம் பார்ப்பனன் வடிவமாக வந்து இவளை மணஞ் செய்து கொண்டு சில ஆண்டுகள் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். பிறகு இவளுக்குத் தன்னுடைய உண்மையான வடிவத்தைக் காட்டி ‘நீ என் கோவிலில் வந்து என்னை வழிபட்டுக் கொண்டிரு’ என்று கூறி மறைந்து போனான். அன்று முதலாக அவள் சாத்தன் கோவிலில் போய்ச் சாத்தனை வழிபட்டுக் கொண்டிருந்தாள் என்பது அந்தக் கதை. ஒரு நாள் கண்ணகியின் மாளிகைக்குத் தேவந்தி சென்றிருந்த போது கண்ணகி தான் கண்ட தீய கனவைத் தேவந்திக்குத் கூறினாள். அதைக் கேட்ட தேவந்தி, சாத்தன் கோவிலுக்குப் போய்ச் சாத்தனை வழிபட்டால் உன்னுடைய துன்பம் நீங்கும் என்று கூறினாள். இதற்குக் கண்ணகி உடன்படவில்லை. காவிரியாறு கடலுடன் கலக்கிற புகார்த் துறைக்கு அருகில் உள்ள சூரிய குண்டம் சோமகுண்டம் என்னும் ஏரிகளில் முழுகிக் குளித்து அங்குள்ள காமன் கோட்டத்தை வழிபட்டால் உன்னுடைய கணவனை நீ பெறுவாய் என்று தேவந்தி கண்ணகிக்குக் கூறினாள். அதற்கும் கண்ணகி உடன்படவில்லை. பிறகு கோவலனும் கண்ணகியும் பாண்டி நாட்டு மதுரைக்குச் சென்றதும். அங்குக் கோவலன் கள்வன் என்று பொய்க் குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டு இறந்ததும் கண்ணகி பாண்டியன் சபைக்குச் சென்று வழக்குரைத்துத் தன் கணவன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்துக் காட்டித் தன் கணவனைக் கொன்றது அநியாயம் என்று தெளிவு படுத்தியபோது நகரமக்கள் பாண்டியன் அரண்மனையைத் தீயிட்டுக் கொளுத்தியதும், பிறகு கண்ணகி உண்ணா நோன்பிருந்து பதினான்கு நாட்களுக்குப் பிறகு இறந்து போனதும் ஆகிய இச் செய்திகளை யெல்லாம் தேவந்தி அறிந்தாள். சில காலஞ் சென்றபிறகு, சேர மன்னனான செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்ய இருப்பதை அறிந்து தேவந்தி பத்தினிக் கோட்டஞ் சென்றாள். அவளுடன் கண்ணகியின் செவிலித் தாயாகிய காவற் பெண்டும், கண்ணகியின் பணிப் பெண்ணாகிய அடித்தோழியும் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து சென்றார்கள். சென்று பத்தினிக் கோட்ட விழாவில் கலந்து கொண்டார்கள். தேவந்தி, வஞ்சிமா நகரத்துக்குச் சென்று பத்தினிக் கோட்டத்துக் கண்ணகி விழாவில் கலந்து கொண்டபோது, இவளுடைய சிரத்தையை யும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் கண்ட அக்கோயிலில்இருந்தவர், இவளுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு என்பதைக் கேட்டார்கள். கண்ணகி காவிரிப்பூம் பட்டினத்தில், வாழ்ந்திருந்தபோது தான் அவளுடைய தோழியாக இருந்ததைத் தேவந்தி அவர்களுக்குத் தெரிவித்தாள். பிறகு கோவிலில் சென்று தெய்வ உருவத்துடன் கல்லாகக் காட்சியளித்த கண்ணகியைக் கண்டு, உயிருள்ள கண்ணகி யாகவே கருதிக்கொண்டு, ‘நீ கண்ட தீய கனவை அன்று எனக்குச் சொன்னபோது அதை’ ஏதோ வெறுங் கனவு என்று கருதினேன், தோழி! மதுரையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு உன்னுடைய தாய் மனக் கவலையுடன் இறந்து போனதை நீ அறிவாயா? உன் மாமியும் துயரம் அடைந்து இறந்து போனதையும் நீ அறிவாயா என்று வாய்விட்டுக் கூறி வருந்தினாள். தேவந்தி கூறியவைகளை இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்தில் அழகான இனிய செய்யுளாக அமைத் திருக்கிறார் அந்தச் செய்யுள்கள் இவை. “முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையில் பிறந்து கடுவால் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டம் பாவைக்குத் தோழி நான் கண்டீர்” “செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணராது இருந்தேன்மற் றென் செய்தேன் மொய்குழல் மங்கை! முலைப் பூசல்கேட்ட நாள் அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ தோழீ! அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழி!” கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டத்தில் விழா மிகச்சிறப்பாக நடந்தது. பிறகு பத்தினிக் கோட்டத்தை அமைத்த சேரன் செங்குட்டுவன், அந்தக் கோவிலுக்கு மானியங்கள் வழங்கி நித்திய பூசை செய்யும்படி தேவந் தியை அமைத்தான். தேவந்தி கண்ணகியின் பத்தினிக் கோட்டத்தில் நாள் தோறும் பூசைசெய்து கொண்டே தன் வாழ்நாளைக் கழித்தாள். *** 19. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்தின் கலைச்செல்வி * இசைக்கலை நாடகக்கலைகளிலே தேர்ந்தவளான மாதவிக்குச் சிலப்பதிகாரக் காவியத்திலே சிறப்பான தனியிடம் உண்டு. மதிப்புள்ள சிறப்பான இடத்தை மாதவி பெற்றது. அவள் செல்வச் சீமானான கோவலனுடைய காமக்கிழத்தி என்பதால் அன்று. இசைக் கலை நாடகக் கலைகளாகிய கவின்கலைகளில் அவள் பெற்றிருந்த முதன்மை இடமே அவளுக்குப் பெருஞ்சிறப்பைத் தந்தது. செல்வமும் நாகரிகமுங் கொழித்து உலகப் புகழ் பெற்றிருந்த அக்காலத்துக் காவிரிப்பூம் பட்டினத்திலே, கணிகையர் குலத்திலே, அதிலும் பெருந்தனம் என்னும் சிறப்புடைய கணிகையர் பிரிவிலே பிறந்த மாதவி, தன்னுடைய குலமுறைப்படி ஐந்து வயது தொடங்கிப் பன்னிரண்டு வயதுவரையில் ஏழு ஆண்டு இசைக்கலை நாகடகக் கலைகளை முறைப்படி நன்கு பயின்றாள். கலைகளைப் பயின்று தேர்ந்த பிறகு, சோழ மன்னனுடைய அவைக்களத்திலே கலைஞர்களின் முன்னிலையிலே அரங்கேறித் தான் கற்ற கலைகளைத் திறம்படக் காட்டினாள். அக்காலத்திலிருந்த சோழ மன்னன் சரித்திரப் புகழ்பெற்ற கரிகால் வளவன். மாதவி அரங்கேறியபோது அவ்வரசன் முதுமை யடைந்திருந்தான். வயது முதிர்ந்த கரிகால் வளவன் அவையிலே பன்னிரண்டு வயதினளாகிய மாதவி அரங்கேறினாள். தான் கற்ற இசைக்கலை ஆடற்கலைகளையெல்லாம் இசைபாடியும் ஆடல் நிகழ்த்தியும் சபையோருக்குக் காட்டினாள். அவளுடைய கலைத் திறமையைக் கண்டுமெச்சிய சோழ அரசனும் ................ அக்காலத்து வழக்கப்படி தலைக்கோலி என்னும் பட்டத்தையும் அதற்கு அடையாளமாகிய தலைக்கோலையும் அவளுக்கு வழங்கினார்கள். தலைக்கோல் என்பது ........யான மூங்கிற் கழியில் பொன்னால் பூணு....... அமைத்து நவரத்தினங்கள் இழைபட்டகோல். தலைக் கோலிப் பட்டம் வழங்கியது மட்டுமல்லாமல் அரசன் ஆயிரத்தொ........... ழஞ்சு நிறையுள்ள பொன் ........................ தலை வரிசையாகக் கொடுத்த கலைச் செல்வியாகிய மாதவி அரங்கே ............பட்டமும் பரிசும் பெற்றதைச் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை மிக நன்றாகக் கூறுகிறது. அக்காலத்திலே காவிரிப்பூம்பட்டினத்திலே செல்வம் படைத்த சீமானாக இருந்த ........ இளைஞனாகிய கோவலன். கோவலன் இசை பயின்றவன்; கலைரசிகன். கோவலன் மாதவியின் அழகிலும் இசைப் பாடல்களிலும் ஆடற் கலைகளிலும் ஈடுபட்டு அவளைத் தன்னுடைய காமக் கிழத்தியாக்கிக் கொண்டு அவளுடன் வாழ்ந்து வந்தான். சோழ அரசனால் பட்டமும் பரிசும் பெற்றுக் கலைஞர்களின் நன்மதிப்பைப் பெற்ற மாதவி, காவிரிப்பூம்பட்டினத்திலே ஆண்டு தோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இந்திர விழாவிலே நாள் தோறும் அரங்கே........ இசைபாடியும் ஆடல் நிகழ்த்தியும் விழாவை சிறப்பித்து நகர மக்களை மகிழ்வித்து வந்தாள். விழாக் காலங்களில் மாதவியினுடைய ஆடல் பாடல் நாட்டியம் நடங்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்த உள்ளூர் வெளியூர் மக்கள் எல்லோரும் அவளுடைய கலைத் திறமையை மெச்சிப் புகழ்ந்தார்கள். அவளுடைய கலைப் புகழ் சோழ நாட்டில் மட்டுமல்லாமல் பாண்டி நாட்டிலும் சேரநாட்டிலும் பரவிற்று. தமிழகத்துக்கு அப்பாலும் அவளுடைய புகழ் சென்றது. தமிழகத்துப் பேர்போன கலைச் செல்வியாக அக்காலத்தில் மாதவி விளங்கினாள். மாதவி பிறந்த கணிகையர் குலம் தலைமுறை தலைமுறையாக ஆடற்பாடற் கலைகளில் பேரும் புகழும் பெற்றிருந்தது. அவளுடைய குலத்தைப்பற்றி ஒரு கதையுங்கூட வழங்கி வந்தது. தேவலோகத்திலே இந்திரனுடைய சபையிலே ஆடல்பாடல் முதலிய கலைகளில் தேர்ந்த அரம்பையர் சிலர் இருந்தனராம். அந்த அரம்பையரில் ஒருத்தி மாதவி என்பவளாம். அந்த மாதவி ஒரு நாள் இந்திர சபையிலே நடினம் ஆடின போது அச்சபையிலிருந்த சயந்த குமரன் என்பவன் அவளுடைய அழகில் ஈடுபட்டானாம். அவளும் அவன் மேல் மனத்தைச் செலுத்தினாளாம். அதன் காரணமாக அவளுடைய ஆடல் பாடல்கள் முறைப்படி நிகழாமல் வழுவடைந்து சிறப்படையாமற் போயிற்றாம். இந்திர சபையிலிருந்த இசைக்கலை யாசிரியராகிய நாரதர் மாதவியின் ஆடல்பாடல்கள் வழுப்பட்டதன் காரணத்தையறிந்து மாதவிக்கும் சயந்த குமரனுக்கும் சாபங்கொடுத்தாராம். மாதவி விண்ணுலகத்தைவிட்டு மண்ணுலகத்திலே மானிடமகளாகப் பிறக்கக் கடவள் என்றும், சயந்த குமரன் மண்ணுலகத்தில் மலையிலே மூங்கிலாகப் பிறந்து பிறகு தலைக் கோலாகக் கடவன் என்றும் சாபங் கொடுத்தாராம். சாபம் பெற்ற மாதவி மண்ணுலகத்திலே காவிரிப்பூம்பட்டினத்திலே மானிட மகளாகப் பிறந்து ஆடல் பாடல் கலைகளைப் பயின்று வாழ்ந்தாளாம். அவளுடைய பரம்பரையிலே எத்தனையோ கூத்தியர்கள் தோன்றிக் கலைகளைப் பயின்று புகழ் படைத்திருந்தார் களாம். அந்த மாதவி பரம்பரையில் வந்தவள்தான் கோவலன் காலத்தி லிருந்த நமது மாதவி. இந்தச் செய்தியைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகின்றது: ‘நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரங் கண்ணேன் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல்காள் ஆகி மங்கல மிழப்ப வீணை மண்மிசைத் தங்குக விவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய அங்கர வல்குல் ஆடலுங் காண்குதும்’ (சிலம்பு, கடலாடுகாதை: 18-25) மற்றும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையின் முதல் ஏழு அடி களும் இச்செய்தியைக் கூறுகிறது. மணிமேகலை 24-ஆவது காதை 13, 14ஆம் அடிகளிலும் இந்த வரலாறு குறிப்பாகக் கூறப்படுகிறது. பூம்புகார் நகரம் என்னும் காவிரிப்பூம்பட்டினத்திலே ஆண்டு தோறும் நிகழ்ந்த இந்திர விழா நாட்களிலே மாதவியின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன என்று கூறினோம். அக்கலை நிகழ்ச்சிகள் பரத நாட்டியமும் இசைப்பாட்டும் மட்டுந்தான் என்று கருதவேண்டா. இவற் றுடன் பதினொரு வகையான ஆடல்களையும் அவள் நிகழ்த்தினாள். கொடு கொட்டியாடல், பாண்டரங்கக் கூத்து, அல்லிய ஆடல், மல்லாடல், துடிக்கூத்து, குடைக் கூத்து, குடக்கூத்து, பேடியாடல், மரக் காலாடல், பாவையாடல், கடையக்கூத்து என்னும் பதினொரு ஆடல் களையும் அவள் ஆடினாள். (சிலம்பு, கடலாடு காதை: 39-63) இந்தப் பதினொரு ஆடல்களையும் ஆடினபோது அந்தந்த ஆடல்களுக்குரிய பாத்திரங்களாகிய சிவபெருமான், கண்ணன், முருகன், காமன், கொற்றவை, திருமகள், அயிராணி (இஇந்திராணி) முதலியவர் களின் உருவத்தில் அவரவர்களின் ஆடையணிகளை அணிந்து கொண்டு ஆடினாள். அவளுடைய அணிகளும் ஆடைகளும் ஆடல் பாடல்களும் காண்பவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து மகிழ்ச்சி யளித்தன. மாதவியினுடைய ஆடற்பாடற் கலைப்புகழ் தமிழகத்துக்கு அப்பாலும் பரவியிருந்தது என்று சொன்னோம் அல்லவா? வட இந்தியாவிலேயும் மாதவியின் கலைப்புகழ் பரவியிருந்தது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். காவியப்புலவருக்கேயுரிய கற்பனை நயத்துடன் இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காவியத்திலே இதை வெகு அழகாகக் கூறுகிறார். இமயமலைக்கு அப்பால் வடசேடி என்னும் இடத்திலே தன் காதலியுடன் இருந்த விஞ்சையன் ஒருவன், காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திரவிழாவின்போது மாதவி நிகழ்த்துகிற ஆடல்பாடல்களைக் கண்டு மகிழ எண்ணினான். அவன் தன் காதலியுடன் ஆகாய வழியே பறந்துவந்து பூம்புகாரில் இறங்கி மாதவியின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தான் என்று காவியப் புலவர் கற்பனை செய்கிறார். விஞ்சையருக்கு வித்தியாதரர் என்றும் பெயர் உண்டு. அவர்கள் இசை நாட்டியம் நடனம் முதலிய அழகுக்கலைகளை அறிந்தவர். அக் கலைகளைக் கண்டுங் கேட்டும் நுகர்ந்து ரசிப்பவர். விஞ்சையர் தேவர்களுக்குத் தாழ்ந்தவராகவும் மனிதருக்கு மேம்பட்டவராகவும் கருதப்படுபவர். ஆகாயவழியே பறந்து போகும் ஆற்றல் உள்ளவர். இத்தகைய விஞ்சையரில் ஒருவன் இமயமலைச் சாரலில் வடசேடியில் இருந்தபோது தன் காதலியாகிய விஞ்சைமகளுக்குக் கூறினான்: பூம்புகார் நகரத்திலே இந்திரவிழா நடக்கிறது. அந்த விழாவில், இசைக் கலை நடனக்கலைகளில் பேர்போன மாதவி மங்கையின் கலை நிகழ்ச் சிகள் நடைபெறுகின்றன. நாம் போய் அவற்றைப் பார்த்து மகிழலாம். இவ்வாறு கூறிய விஞ்சையன் விஞ்சைமகளுடன் புறப்பட்டு ஆகாய வழியே வேகமாகப் பறந்து காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்தான். அவ் விஞ்சையர் வந்த வேகம் வாயுவேகம் மனோ வேகமாக இருந்தது. ஆகாய வழியே தெற்கு நோக்கிப்பறந்த அவர்களுக்குக் கீழே பாய்ந் தோடும் கங்கையாறு காணப்பட்டது. பிறகு அவந்தி நாட்டின் தலை நகரமாகிய உஞ்சை (உச்சயினி) நகரம் தென்பட்டது. அடுத்தாற் போல் விந்தியமலையும் காடுகளும் புலப்பட்டன. அதற்கடுத்து வேங்கட மலை காணப்பட்டது. உடனேசோழநாடு தென்பட்டது. இவ்வளவு வேகமாகப் பறந்துவந்து மிகக் குறுகிய காலத்தில் அவர்கள் சோழ நாட்டையடைந்தார்கள். பூம்புகார் நகரத்தில் இறங்கியபின் விஞ்சையன் அந்நகரத்திலிருந்த கோயில்களையும் பூஞ்சோலை களையும் தன் காதலிக்குக் காட்டினான். பிறகு மாதவியாடிய அரங்கத்துக்கு வந்து அவளுடைய ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். ‘சிமையத் திமையமும் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்க விளையுள் காவிரி நாடுங் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச் சொல்லிய முறையில் தொழுதனன் காட்டி மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன்’ ‘அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் நிலையும் படிதமும் நீங்கா மரபிற் பதினோ ராடலும் பாட்டின் பகுதியும் விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய் தாதவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய மாதவி மரபின் மாதவி இவள்’ எனக் காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய மேதகு சிறப்பின் விஞ்சையன்’ என்று இந்தச் செய்தியைச் சிலப்பதிகாரத்தில் (கடலாடுகாதை : 28-71) இளங்கோ அடிகள் கூறுகிறார். இமயமலையின் வடசேடியில் வாழ்ந்த விஞ்சையன் ஒருவன் தன் காதலியுடன் புறப்பட்டு ஆகாய வழியே பறந்துவந்து காவிரிப்பூம் பட்டினத்தில் இறங்கி மாதவியின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந் தான் என்பது வெறுங் கற்பனைதான். இந்தக் கற்பனை, மாதவியின் கலைச் சிறப்பை விளக்கு வதற்காகவே காவியப் புலவரால் கற்பிக்கப் பட்டது. காவிய நூல்களை அழகுபடுத்துவது கற்பனைகளே. காவிய நூல்களுக்குக் கற்பனைகளே பெரிதும் அணிசெய்கின்றன. விஞ்சையன் என்னும் ஒரு பாத்திரத்தைக் கற்பனையாக அமைத்து அவள் இமய மலையிலிருந்து ஆகாயயவழியே பறந்துவந்து மாதவியின் ஆடல் பாடல்களைக் கண்டு மகிழ்ந்தான் என்று கூறுவதன் மூலம் மாதவியின் கலைச் சிறப்பை அறிவிக்கிறார் காவியப் புலவரான இளங்கோ வடிகள். இந்தக் கற்பனை சிலப்பதிகாரக் காவியத்தில் மிக அழகாக அமைந்திருக்கிறது. சுற்றுப்புற நாடுகளில் இருந் தெல்லாம் மக்கள் திரள் திரளாக வந்து மாதவியின் ஆடல்பாடல்களைக் கண்டுங் கேட்டும் மகிழ்ந்தனர் என்று சொல் வதைவிட, வடசேடியிலிருந்து இசைக்கலை நாடகக் கலை களை யறிந்த ஒரு விஞ்சையனும் வந்து பார்த்து மகிழ்ந்தான் என்று கூறுவது மாதவியின் கலைச்சிறப்பைப் பன் மடங்கு உயர்ந்துகிறதன்றோ? இவ்வாறு உலகப் புகழ்பெற்ற கலையரசியாகிய மாதவி காவிரிப் பூம்பட்டினத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆடல்பாடல் களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கலைரசிகனாகிய கோவலனும் அவளுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக வாழ்ந்து வந்தான். இவர்களுக்குப் பிறந்த மணிமேகலை என்னும் மகளும் இசைக்கலைகளையும் பரதநாட்டியம் முதலிய ஆடற்கலைகளையும் நன்றாகப் பயின்று பன்னிரண்டு வயதை யடைந்திருந்தாள். மாதவி, பதியிலாராகிய கணிகையர் குலத்தில் பிறந்தவள் தான். ஆனால், சிப்பிக்குள் முத்துப் பிறப்பது போலவும் சேற்றில் தாமரை மலர்வதுபோலவும் அவள் நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவளாக இருந்தாள். கணிகையருக்கு உரிய, ‘நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு’ போன்ற தன்மை அவளிடம் இல்லை. கோவலனைக் கணவனாகக் கொண்டு அவள் குலமகள் போலவே வாழ்ந்தாள். ஆனால், மாதவியிடம் ஒரே ஒரு குற்றம் இருந்தது. அது, எக்காலத்திலும் கணிகையருக்கும் நடிகைகளுக்கும் உள்ள படாடோப வாழ்க்கை. பூம்புகார் நகரம் நாகரிகம் படைத்த பட்டினம். மேற்கே ரோமாபுரி (யவனநாடு) முதலிய நாடுகளிலிருந்தும், கிழக்கே காழகம் (பர்மா), கடாரம், சாவகம் (ஜாவா, கமாத்திரா தீவுகள்) முதலிய நாடுகளி லிருந்தும் கடல் வழியாகக் கப்பல்களில் வந்து இறங்கிய பண்டங்கள் பூம்புகார்ப் பட்டினத்தைச் செல்வமும் நாகரிகமும் அடையச் செய்தன. நாகரிக நகரங்களில் படாடோப வாழ்க்கை இயற்கைதானே. பொது மக்களிடையே மாதவியிடம் இருந்த நன்மதிப்பும் பாராட்டும் அவளை மேலும் மேலும் படாடோப வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தது. அவளுடைய படாடோப வாழ்க்கை கோவலனுடைய பெருஞ் செல்வத்தை விரைவில் அழித்துவிட்டது. செல்வச் சீமானாக இருந்த கோவலன் மாதவியின் ஆடம்பர வாழ்க்கைக்காகத் தன்னுடைய பெருஞ் செல்வத்தைச் செலவு செய்து விரைவில் ஏழ்மை யடைந்து வறியவனானான். இந்த நிலையில் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து சென்றான். கோவலன் தன்னை விட்டுப் பிரிவானென்று மாதவி கனவிலும் கருதவில்லை. தற்செயலாகத் திடீரென்று ஏற்பட்ட இந்தப் பிரிவு தற்காலிகமான ஒரு நிகழ்ச்சி என்று அவள் கருதினாள். பிரிந்து சென்ற கோவலனுக்கு மாதவி, தன் காதலையும் அன்பையும் நினை வுறுத்தி உடனே வரும்படிக் கடிதம் எழுதித் தன் தோழி வயந்தமாலை மூலமாக அனுப்பினாள். கோவலன் அந்தக் கடிதத்தைக் கையில் வாங்காமலே திருப்பியனுப்பிவிட்ட போதுதான், கோவலன் உண்மை யாகவே தன்னை விட்டுப் பிரிந்து விட்டான் என்பதை உணர்ந்தாள். அவனுடைய பிரிவு அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கிற்று. குலமகள் ஒருத்தி தன் கணவன் தன்னைவிட்டுப் பிரிந்தால் எவ்வளவு துன்பமடைவாளோ, அவ்வளவு துன்பமும் மனவேதனையுமடைந்தாள் மாதவி, கோவலன் மாதவி பிரிவு ஊழ்வினையினால் ஏற்பட்ட பிரிவே. கோவலன்தான் இழந்த செல்வத்தை வாணிகத்தின் மூலம் ஈட்டும் பொருட்டு, உறவினர் ஒருவருக்குஞ் சொல்லாமல் கண்ணகியை மட்டும் அழைத்துக் கொண்டு மதுரைக்குப் போய்விட்டான். கோவலன் தன்னை மெய்யாகவே வெறுத்துவிட்டான் என்பதை அறிந்த மாதவி அவனுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதிக் கௌசிகன் என்னும் பார்ப்பனிடங் கொடுத்துக் கோவலனை எங்காகிலும் கண்டு கொடுக்கும்படி அனுப்பினாள். கௌசிகன் கோவலனைப் பல இடங் களில் தேடிக் கொண்டு போய்க் கடைசியாக மதுரைக்கு அருகிலே ஓரிடத்தில் கண்டு கடிதத்தைக் கொடுத்தான். கோவலன் அந்த முடங்கலைப் பிரித்துப் படித்தான். மாதவி எழுதியிருந்த வாசகம் இது: ‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறும் நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி!’(சிலம்பு. 13:87-92) இந்த வாசகத்தைப் படித்த கோவலனுக்கு மாதவியின் மேலிருந்த வெறுப்பு நீங்கிற்று. ஆனால் அவன் பூம்புகாருக்குத் திரும்பி வர வில்லை. மதுரை மாநகரத்துக்கே போய்விட்டான். போனவன், அரண்மனையில் சிலம்பைக் களவாடினான் என்று பொய்யாகக் குற்றஞ் சாற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். கோவலன் இறந்த செய்தியைக் கேட்டபோது மாதவி தீராத் துயரம் அடைந்தாள். அவள் கைம்மை நோன்பை மேற்கொண்டாள். அரங்கேறி ஆடல் பாடல் நிகழ்த்துவதை அடியோடு நிறுத்தி விட்டாள். அன்று முதல் அவள் அரங்கேறவே இல்லை. மாதவியின் தாயாகிய சித்திராபதி மாதவியின் மனத்தை மாற்ற முயற்சி செய்தாள். மாதவி குலமகள் அல்லன் என்பதையும் கணிகையர் குலத்தில் பிறந்தவள் என்பதையும் நினைவுறுத்தி அவளை மறுபடியும் அரங்கேறி ஆடல் பாடல்களை நிகழ்த்துமபடித் தூண்டினாள். மீண்டும் கணிகையர் தொழிலை மேற்கொள்ளும்படி வற்புறுத்தினாள். மாதவியோ அதற்குச் சற்றும் இணங்கவே இல்லை. அவள் கணிகைத் தொழிலை மேற் கொள்ளாமலும் அரங்கேறி ஆடல் பாடல் நிகழ்த்தாமலும் குலமகள் போலக் கைம்மை நோன்பை மேற்கொண்டாள். மாதவி கணிகைத் தொழிலில் ஈடுபடாத படியினாலே சித்திராபதி வெறுப்படைந்தாள். ஆனால், தன் குலத்தொழிலை நடத்தும்படி தன் பேர்த்தியும் மாதவியின் மகளுமான மணிமேகலையைத் தூண்டினாள். மணிமேகலையை அரங்கேற்றித் தலைக்கோலிப் பட்டம் பெறச் செய்யவும், பிறகு அவளைச் சோழ அரசன் மகனான உதயகுமரனின் காமக்கிழத்தியாக்கவும் முயற்சி செய்தாள். ஆனால் மாதவியோ தன் மகள் மணிமேகலையைக் கணிகையர் வாழ்க்கையில் புகுத்த விரும்ப வில்லை. அவனை ஒரு நல்ல குடும்ப மகள் வாழ்க்கையில் புகுத்த எண்ணினாள். இதனால் சித்திராபதிக்குப் மாதவிக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தன் தாயாகிய சித்திராபதி தன் மகளான பன்னிரண்டு வயதுள்ள மணி மேகலையை எப்படியும் கணிகை வாழ்க்கையில் புகுத்திவிடுவாள் என்று அஞ்சினாள் மாதவி. அவ்வாறு நிகழாமல் தடுக்க வேண்டுமென்று விரும்பினாள். ஆகவே சித்திராபதியிடமிருந்து விலகி வாழ மாதவி கருதினாள். அக்காலத்துச் சமுதாய சூழ்நிலை மாதவியின் கருத்துக்கு ஆதரவு காட்டவில்லை. கணிகையர் குலத்தில் பிறந்தவர் கணிகை யராகவே இருக்கவேண்டும், அவர்கள் குலமகளிராக வாழக்கூடாது என்னும் தவறான கருத்து அக்காலத்து மக்கட் சமுதாயத்தில் வேரூன்றி யிருந்தது. சைவம், வைணவம், சமணம் (ஜைனம்) என்னும் சமயங்களைச் சேர்ந்த அக்காலத்து மனித சமூகம் மாதவியின் சீர்திருத்த வாழ்க்கைக்கு ஆதரவு காட்டுவதாக, உதவி செய்வதாக இல்லை. அக்காலத்தில் அவளுக்கு ஒரே ஒரு புகலிடம்தான் இருந்தது. அதுதான் பௌத்தமதம். புத்தர் பெருமான் தமது வாழ்க்கைக் காலத்திலேயே கணிகையர், கள்வர் போன்ற தீய வாழ்க்கையாளரையும் திருத்தி அவர்களையும் நல்வழிப்படுத்தியிருக்கிறார். அவரைப்பின்பற்றி வந்த பௌத்த மதம், தீய வழியில் வாழ்பவர்களையும் நல்வழிப் படுத்தி உதவி செய்து வந்தது. மாதவி இதனை நன்கறிந்தாள். தானும் தன் மகளான மணி மேகலையும் நல்வாழ்க்கை வாழ்வ தற்குக் கைகொடுத்து உதவக் கூடியது பௌத்த மதம் ஒன்றுதான் என்பதை மாதவி நன்கறிந்தாள். தனக்கும் தன் மகளுக்கும் பௌத்த மதந்தான் ஒப்பற்ற புகலிடம் என்பதை அறிந்தாள். அக்காலத்தில் தமிழ்நாட்டில், சிறப்பாகக் காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தமதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது. அந்தப் பட்டினத்திலே பேர்பெற்றிருந்த பௌத்த விகாரையின் தலைவராக இருந்தவர் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட அறவண அடிகள் என்னும் பெரியார். மாதவி, தன் தாயாகிய சித்திராபதியை விட்டுப் பிரிந்து மணிமேகலையுடன் பௌத்த விகாரைக்குச் சென்று அறவண அடிகளிடம் அடைக்கலம் புகுந்து திரிசர ....... ணத்தைப் புகலடைந்து பஞ்சசீலம் பெற்று பௌத்த மதத்தை மேற்கொண்டாள். பௌத்த மதத்தைப் புகலடைந்து அந்த மதத்தை மேற்கொண்ட மாதவி தன் மகள் மணிமேகலையுடனும் சுதமதி என்னும் தோழியுடனும் பௌத்த சமூகத்தில் இடம் பெற்று வாழ்ந்தாள். வழக்கம்போல அந்த ஆண்டிலும் காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரவிழாக் கொண்டாடப்பட்டது. வழக்கப்படி விழாவுக்கு வேண்டிய ஆயத்தங்கள் எல்லாம் நகரத்தில் நடைபெற்றன. இந்திர விழாவில் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி அரங்கமேடை யல்லவா? மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவள் கலையரசி மாதவி! அவளுடைய ஆடல் பாடல்கள் நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்தன. கோவலன் இறந்து போன காரணமாக அவள் இப்போது மேடைஏறமாட்டாள். மேலும் பௌத்த மதத்தில் புகலடைந்து விட்டாள் கணிகைத்தொழிலை அடியோடுவிட்டுவிட்டாள். நல்ல அழகி, தேர்ந்த பாடகி, சிறந்த நர்த்தகி! அவளுடைய இனிய ஆடல் பாடல் களை இனி எப்போது கேட்கப்போகிறோம்! என்று கலை ரசிகர்கள் நகரத்தில் பேசிக்கொண்டார்கள். நகரத்தில் இந்திரவிழா தொடங்கின போது சித்திராபதிக்கு மனம் துடித்தது. தன் மகள் மாதவி அரங்க மேடைக்கு வரமாட்டாள் என்று அறிந்தபோது அவளுக்கு உயிரேபோய்விட்டது போல இருந்தது. தன்னுடைய மகளின் இடத்தை (அரங்க மேடையை) இன்னொரு விட்டுக் கணிகை கைப்பற்றி விடுவாளே என்று பொறாமை எண்ணம் அவளுடைய மனத்தை அலட்டியது அவள் வயந்தமாலை என்னும் தோழியை அழைத்து, அவளை மாதவி யிடம் அனுப்பிக் கலையரங்கத் துக்கு வந்து கலைநிகழ்ச்சிகளைச் செய்யும்படி மீண்டும் வேண்டினாள். மாதவி கண்டிப்பாக மறுத்து விட்டாள். புத்த தன்ம சங்கம் என்னும் மும்மணிகளை அடைக்கலம் புகுந்து பஞ்ச சீலம் பெற்று பௌத்தராக வாழ்கிறோம். இனி, மீண்டும் முன்னைய தொழிலுக்கு வர மாட்டோம். இச்செய்தியை நீ போய் என் தாய்க்குச் சொல் என்று வயந்த மாலையிடம் மாதவி கூறினாள். மாதவியைக் கணிகை வாழ்க்கையில் மீண்டும் புகுத்தச் சித்திரா பதி செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகப் போயின. மாதவி குலமகள் போலக் கைம்மை நோன்பு நோற்றுக்கொண்டு புத்தர் பெருமானை வணங்கிக் கொண்டிருந்தாள். மாதவி கடைசி வரையில் பௌத்த மதத்தில் நின்று வாழ்நாளைக் கழித்தாள். காவிரிப்பூம் பட்டினம் வெள்ளப் பெருக்கினால் மூழ்கியபோது மாதவி, அறவண அடிகளுடன் காஞ்சீ புரஞ் சென்று அந்த நகரத்தில் தங்கியிருந்தாள். (அறவண அடிகள் காஞ்சீபுரத்தில் தங்கியருந்த தெரு அறவணஞ்சேரி என்று பெயர் பெற்றது. அந்தப் பெயர் இப்போது அறப்பணஞ்சேரி என்று மருவி வழங்கப்படுகிறது. (சேரி என்றால் தெரு என்பது பொருள்.) மாதவி, காஞ்சீபுரத்தில் நெடுங் காலம் தங்கியிருந்து கடைசியில் அந்த நகரத்திலே காலமானாள். கோவலனோடு வாழ்ந்த வரையில் மாதவியின் வாழ்க்கை இன்ப வாழ்க்கையாக இருந்தது. அவன் இறந்த பிறகு அவள் வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கையாக மாறிவிட்டது. அவள் நல்ல குலத்தில் பிறந் திருக்க வேண்டியவள். தவறிக் கணிகையர் குலத்தில் பிறந்துவிட்டாள். ஆனால், குலமகள் போலவே வாழ்ந் தாள். மாதவி சிப்பியில் பிறந்த முத்து, சேற்றில் மலர்ந்த செந் தாமரை. சிலப்பதிகாரக் காவியம் இருக்கும் வரையில் அவள் புகழ் நிலைத்திருக்கும். *** 20. மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா?* மணிமேகலை என்னும் காவியத்திலே, அதன் ஆசிரியராகிய கூல வாணிகன் சாத்தனார், சரித்திர சம்பந்தமாக முரண்பட்ட செய்தியைக் கூறியுள்ளதாகத் திருவாளர்கள் ளு. வையாபுரிப் பிள்ளையும், மு.ஹ. நீலகண்ட சாஸ்திரியும் எழுதியிருக்கிறார்கள். கூலவாணிகன் சாத்தனார் சங்கப் புலவர், பௌத்த மதத்தவர், பௌத்த மத தத்துவங்களையும் பௌத்த சரித்திரத்தையும் நன்கு அறிந்தவர். இத்தகைய அறிஞர் தாம் இயற்றிய மணிமேகலை என்னும் காவியத்தில் முரணான செய்திகளைக் கூறுவாரா? திரு. வையாபுரிப் பிள்ளையும், திரு. நீலகண்ட சாஸ்திரியும் சென்னைப் பல்கலைக் கழகத்திலே முறையே தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும், சரித்திர ஆராய்ச்சித்துறைத் தலைவராக வும் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தவர்கள். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்கு ஆராய்ச்சித்துறையில் வழிகாட்டியவர்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலும் தமிழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்கிறவர்கள். இப்பெரியார்கள் கூறுகிறார்கள் - மணிமேகலையிலே சாத்தனார் முரண்பட்ட செய்திகளைச் கூறு கிறார் என்று. இவர்கள் கூறுவதுபோல, மணிமேகலைக் காவியத் தில் முரண்பட்ட செய்தி உண்டா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டுவது தமிழரின் கடமை அல்லவா? இதனை ஆராய்வோம். தமது “இலக்கிய மணிமாலை” என்னும் நூலிலே வையாபுரிப் பிள்ளை அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்: “மேலும் கோவலனும் கண்ணகியும், புத்ததேவன் கபில வாஸ்துவில் அவதரித்துச் செய்யும் தருமோபதேசத்தைக் கேட்டு வீடு அடைவார்கள் என்று மாசாத்துவான் கூறியதாகச் சாத்தனார் மணி மேகலையில் எழுதினர். புத்தர் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்திலேயே கோவலன் முதலியோர் வாழ்ந்தன ரென்பது இவர் கொண்ட கதை. இது முன்பின் முரண். இச்சாத்தனார் இவர்களது காலத்தினர் என்று கொள்ளுவது எத்தனை அசம்பாவிதம்! இவரைச் சங்கப் புலவர் அல்லரெனக் கொள்ளுதற்கு மேற்காட்டியன தக்க சான்றுகளாகும். இங்ஙனமாக, இளங்கோவடிகளும் கூலவாணிகன் சாத்தனாரும் பிற்பட்ட காலத்தவரே யாவர்”. (பக்கம் 136) வையாபுரிப் பிள்ளை தாம் எழுதிய “தமிழ் மொழி - தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் ஆங்கில நூலிலும் இதே கருத்தை எழுதி யுள்ளார். (ழளைவடிசல டிக கூயஅடை டயபேரயபந யனே டுவைநசயவசரந - 1956) “கோவலனும் கண்ணகியும் புத்தர் காலத்துக்குப் பல தலை முறைக்கு முன்னே இருந்தவர்கள் என்று மணிமேகலைக் காவியம் கூறுகிறது. மதுரை நகரத்தை அழித்தனால் தனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்குக் கண்ணகி கோவலனுடன் இவ் வுலகத்தில் பல பிறப்புக்கள் பிறந்து கடைசிப் பிறப்பிலே புத் தருடைய தருமோபசேத்தைக் கேட்டு வீடுபேறடையப் போவதாகத் தெய்வ உருவ மடைந்த கண்ணகி மணிமேகலையிடம் கூறுகிறார். இதனால் கண்ணகியும் கோவலனும் சரித்திரத் தொடர்புடைய ஆட்கள் அல்லர்”. “Kannagi as deity informs Manimekalai that to expiate her sin of destroying Madurai she and Kovalan would be undergoing births and deaths for generations together in this world and at long last they would hear the dharmic word from the mouth of Buddha himself and then they would get the final release. These statements clearly show that Kannagi and Kobalan are not historic figures.” (page 146) பிள்ளையவர்கள் கூறிய இதே செய்தியைத்தான் இவருடைய நண்பரான திரு. நீலகண்ட சாஸ்திரியும் கூறுகிறார். “சிலப்பதிகார மணி மேகலை காலம்” என்னும் ஆங்கிலக் கட்டுரையிலே சாஸ்திரியார் கூறுவது வருமாறு: “கபிலவாஸ்து நகரத்தில் புத்தர் உபதேசம் செய்யும்போது கோவலனும் கண்ணகியும் அவ்வுபதேசத்தைக் கேட்டு மோட்சம் அடைவார்கள் என்றும், தானும் அவ்வமயம் அங்கு இருப்பார் என்றும் கோவலனுடைய தந்தை மணிமேகலையிடத்தில் கூறியதாக மணி மேகலைக் காவியம் கூறுகிறது. இவ்வாறு கூறுவதனால் இக்காவியங் களின் ஆசிரியர்களும் காவியத் தலைவனும் காவியத் தலைவியும் சேரன் செங்குட்டுவனும் சரித்திர புருஷர்கள் என்றும் அவர்கள் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும் கனவுகூடக் காணமுடியுமா? “Manimekalai (XXVIII 141-146) makes the father of Kovalan say that Kovalan and Kannaki will be present at the Buddha’s preaching in Kapilavastu and attain release and that he too would be there at the time. Is it possible after this to dream of treating the anthors of the epics, the hero and heroiue of the poems and the Cera monarch Cenkuttuvan as historical contemporaries?” (University of Ceylon Review Vol. VII (1949) 21-27) இவ்வாறு ஒரே பல்கலைக் கழகத்தில் இருந்த இரண்டு பேராசிரியர்களும் கூறுகிறார்கள். முழு உண்மைபோலத் தோன்று கிற இவர்கள் கூற்று சரியானதுதானா, ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை ஆராய்வோம். ஆராய்வதற்கு முன்ர், இவர்கள் காட்டுகிற மணிமேகலை நூலின் வாசகத்தைத் தெரிந்துகொள்வோம். கோவலன் தந்தையாகிய மாசாத்துவான், மணிமேகலையை வஞ்சிமாநகரத்திற் கண்டபோது, அவர் அவளிடம் இவ்வாறு கூறுகிறார்: “இன்னுங் கேளாய், நன்னெறி மாதே! தீவினை உறுப்பச் சென்றநின் தாதையும் தேவரிற் றோற்றிமுற் செய்தவப் பயத்தால் ஆங்கத் தீவினை இன்னுந் துய்த்துப் பூங்கொடி! முன் அவன் போதியின் நல்லறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாதன் நல்லறம் கேட்டுவீ டெய்துமென்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் சொற்பயன் உணர்ந்தேன், தோகை! யானும் அந்நாள் ஆங்கவன் அறநெறி கேட்குவன்” (கச்சிமாநகர் புக்க காதை 137-147) மணிமேகலை வஞ்சிமாநகரத்திற்குச் சென்று பத்தினிக் கோட்டத்தில் தெய்வமாக இருந்த கண்ணகியாரைக் கண்டு வணங்கிய போது கண்ணகியார் மணிமேகலைக்கு இவ்வாறு கூறுகிறார்: “நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் மறந்தும் மழைமறா மகதநன் னாட்டுக் கொருபெருந் திலகமென் றுரவோ ருரைக்குங் கரவரும் பெருமைக் கபிலையம் பதியில் அளப்பரும் பாரமிதை அளவின்றி நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப் போதி மூலம் பொருந்திவந் தருளி ........................................... அண்ணல் அறக்கதிர் விரிக்குங் காலைப் பைந்தொடி தந்தை யுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும்ஏத் துதலிற் றுன்பக் கதியில் தோற்றர வின்றி அன்புறு மனத்தோடு அவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்” (வஞ்சிமாநகர் புக்க காதை 40-59) இதிலே, கோவலனும் கண்ணகியாரும் மீண்டும் மீண்டும் பல பிறப்புகள் பிறந்து வாழ்வார்கள் என்றும், கடைசியில்புத்தருடைய உபதேசங்களை நேரில் அவர் வாய்மொழியாகக் கேட்டுத் தெளிந்து வீடுபேறடைவார்கள் என்றும் கூலவாணிகன் சாத்தனார் ஐய மில்லாமல் தெளிவாகக் கூறுகிறார். கபிலவாஸ்து நகரத்திலே கௌதமர் புத்தர் பிறந்து போதி ஞானம் பெற்று உலகத்தில் உபதேசம் செய்து மறைந்துபோய் இற்றைக்கு 2500 ஆண்டுக்கு மேலாய்விட்டது. அப்படியிருக்க, கோவலனும் கண்ணகியும் மாசாத்துவானும் புத்தருடைய உபதேசத்தை இனிமேல் கேட்கப் போவதாக மணிமேகலைக் காவியத்தில் கூலவாணிகன் சாத்தனார் கூறுகிறார். இவருக்குச் சரித்திரம் தெரிந்திருந்தால், கௌதம புத்தரின் வரலாற்றை அறிந்திருந்தால், இவ்வாறு முன்னுக்குப்பின் முரண்படக் கூற மாட்டார். ஆகவே இது சரித்திரத்துக்கு மாறுபட்ட கட்டுக்கதை, பொய்க் கதை என்று திரு. பிள்ளையும் திரு. சாஸ்திரியும் கூறுகிறார்கள். இப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கூறுவது உண்மைபோலத் தோன்று கிறது. ஐயமில்லாமல், முழு உண்மைபோலக் காணப்படுகிறது. ஏற்றுக் கொள்ளவேண்டிய, மறுக்கமுடியாத உண்மை போலத் தெரிகிறது. ஆனால், பௌத்தராக வாழ்ந்து பௌத்தமதத் தத்துவங்களை நுட்பமாக ஆராய்ந்து அறிந்த கூலவாணிகன் சாத்தனார் - பௌத்த மதப் பிரசாரத்துக்காகவே மணிமேகலைக் காவியத்தை இயற்றிய சாத்தனார் - தமது காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே கௌதம புத்தர் வாழ்ந்து மறைந்துவிட்டார் என்னும் சாதாரண உண்மை யையும் அறியாதவரா? அவர் கௌதம புத்தரின் வரலாற்றினை அறியாதவரா? புத்தர் பெருமான் இனிப் பிறந்து உபதேசம் செய்யும் போது கோவலனும் கண்ணகியும் மாசாத்து வானும் அவ்வற நெறியைக் கேட்டறிந்து வீடுபேறடைவார்கள் என்று சாத்தனார் கூறியதன் கருத்து என்ன? இதைக் கருதும்போதுதான் எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்பது புலனாகிறது. இங்குத்தான் ஆராய்ச்சியாளர்கள் பகுத்தறிவைச் சரியாகச் செலுத்திக், காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையில் நின்று ஆராய வேண்டியிருக்கிறது. “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றும் “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றும் அறிவுடைமைக்கும் மெய்யுணர்தலுக்கும் திருவள்ளுவர் விளக்கங் காட்டுகிறார். அவ்வழியில் நின்று இதன் உண்மையை ஆராய்வோம். பிள்ளையவர்களும் சாஸ்திரியவர்களும் கூறுவது உண்மை தான், சாத்தனார் வரலாற்றுக்கு முரண்பட்ட செய்தியைத்தான் கூறி யுள்ளார் என்று எல்லோரும் கருதுவார்கள்; ஆனால், ஆழ்ந்து நோக்கு வோருக்குச் சாத்தனார் கூறியதில் முரண்பாடு தோன்றாது. இதன் உண்மையைக் கண்டறிய தமிழ் அறிவும் சரித்திர அறிவும் மட்டும் இருந்தாற் போதாது. சாத்தனார் இவ்விடத்தில்கூறுவது பௌத்தமத சம்பந்தமான ஒரு செய்தி. ஆகவே, பௌத்தமத ஆராய்ச்சியுடையவர் களுக்குத்தான் இவர் கூறியதன் பொருள்- உண்மையான மெய்ப் பொருள் நன்கு விளங்கும். ஏனையோருக்கு விளங்கவே விளங்காது. திரு. பிள்ளையும் திரு. சாஸ்திரியும் பௌத்த சமய சம்பிரதாயத்தை யறியாமல், இப்பகுதியை ஆராய்ந்த படியால் பிழையான முடிவைக் கண்டார்கள். பௌத்த சம்பிரதாயம் அறியாதவர்களுக்கு இவர்கள் ஆராய்ச்சி முழு உண்மை போலத் தான் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று, அப்படியானால் உண்மை எது? எதிர் காலத்திலே ஒரு புத்தர் இனிப் பிறக்கப்போகிறார் என்று பௌத்தர்களுக்குள் ஒரு நம்பிக்கை உண்டு. நமது பாரத நாட்டிலே இன்னொரு புத்தர் பிறந்து அறவுரைகளைப் போதித்து பௌத்த மதத்தை நிலைநாட்டப்போகிறார் என்பது நமது நாட்டுப் பௌத்தர் களின் கொள்கை. இதுபோலவே, மகாவீரர் எதிர்காலத்திலே இவ் வுலகத்திலே பிறந்து ஜைன (சமண) மதத்தை நிலைநாட்டப் போகிறார் என்பது சமண சமயக்கொள்கை. இந்தக் கொள்கையைத் தான் கூல வாணிகன் சாத்தனார் தமது மணிமேகலையிற் கூறினார். சாத்தனார் இவ் விடத்திற் கூறியது, பிறந்து வாழ்ந்துமறைந்துபோன கௌதம புத்தரை அல்ல. அவர் கூறியது இனிவரப்போகிற புத்தரை. இனி வரப்போகிற புத்தரை அநாக புத்தர் (பிறக்காத புத்தர்) என்று பௌத்தர்கள் கூறு வார்கள். இனி, எதிர்காலத்திலே ஒரு புத்தர் தோன்றி தர்மோபதேசம் செய்யும்போது கண்ணகியும் கோவலனும் மாசாத்துவானும் அவ்வுபதேசங்களைக் கேட்டு முத்தியடைவார்கள் என்று சாத்தனார் கூறியதில் என்ன முரண்பாடு இருக்கிறது? ஆராயவேண்டிய முறைப்படி ஆராய்ச்சி செய்யாமல், தவறான வழியிற் சென்று ஆராய்ந்தபடியால் இவர்களின் முடிவு தவறான முடிவாயிற்று. தங்களுடைய தவற்றினை உணராமல் சாத்தனார் மேல் அறியாமைக் குற்றத்தைச் சுமத்தி, முன்னுக்குப்பின் முரணாகக் கூறினார் என்று பழி கூறியதோடு மட்டும் நில்லாமல், கோவலன், கண்ணகி, சாத்தனார், இளங்கோவடிகள், செங்குட்டுவன் ஆகிய இவர்கள் எல்லோரும் உண்மையில் இருந்தவர்கள் அல்லர், கற்பனையாகக் கட்டிவிடப்பட்ட கற்பனைப் புருஷர்கள் என்றும் இந்த ஆராய்ச்சி யாளர்கள் எழுதிவிட்டார்கள். முதற் கோணல் முற்றுங்கோணல். இவர்கள் மேற்கோள் காட்டிய மணிமேகலைப் பகுதிக்கு இவர்கள் தவறாகப் பொருள் செய்ததுதான் முதற் கோணல், பௌத்த சம்பிரதாயத்தை அறியாத காரணத்தினாலே, எதிர்காலப் புத்தரை இறந்த காலப் புத்தராக (கௌதம புத்தராக)க் கருதிக் கொண்டது. இவர்கள் ஆராய்ச்சியில் முதற் பிழையாகும். பௌத்த சம்பிரதாயப் படி இதற்குப் பொருள் கூறுகிறவர்கள், இனி தோன்றப்போகிற புத்தர் என்று பொருள்கூறுவார்களே தவிர, மறைந்துபோன கௌதம புத்தர் என்று பொருள்கொள்ளமாட்டார்கள்; பொருள்கொள்ளக் கூடாது. அப்படிப் பொருள்கொள்வது தவறு. எனவே, சாத்தனார் கருதிய பொருளுக்கு மாறாகப் பொருள் கொண்டபடியினாலே, பிள்ளையும் திரு. சாஸ்திரி யும் தமதுஆராய்ச்சியில் தவறு செய்துவிட்டார்கள். அந்தத் தவறு காரணமாக அவர்களின் ஆராய்ச்சி முடிவும் தவறான முடிவாய் விட்டது. இவர்களின் தவறான முடிவை அறிஞர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? பௌத்த மதக்கோட்பாடுகளை நன்கறிந்தவர்கள் சாத்தனாரின் மணிமேகலைக் காவியத்திலே சரித்திர முரண்பாட்டைக் காண மாட்டார்கள். “முன்பின் மலையா மங்கல மொழி” என்று சாத்தனாரே கூறுகிறபடி, முன்னுக்குப்பின் முரண்பட்ட செய்தியோ, மாறுபட்ட கருத்துக்களோ சாத்தனாரின் மணிமேகலையிற் காணப் படவில்லை. புத்தர் சரித்திரத்துக்கு மாறுபட்ட வரலாற்றையும் சாத்தனார் கூற வில்லை. ஆராய்ந்து பார்க்கவேண்டிய முறைப்படி, ஆராய்ந்து பார்க்காமல், தவறான முறையில் ஆராய்ந்த படியினாலே பிள்ளை யவர்களும் சாஸ்திரியவர்களும் தவறான முடிவுக்கு வந்தார்கள். புத்தர் என்னும் சொல்லுக்குக் கௌதம புத்தர் என்று தவறான பொருள் கொண்ட படியினாலே அவர்கள் தமது ஆராய்ச்சியில் பிழையான முடிவைக் கண்டார்கள். அது பெரும் பிழையான முடிபு. அவர்களைப் போல மேற்போக்காக ஆராய் கிறவர்களுக்கு அவர்கள் ஆராய்ச்சி முடிபு உண்மை போலக் காணப்பட்டாலும், அவை தவறான முடிபுகளே; தள்ளத்தக்க முடிபுகளே; கொள்ளத்தக்கவை அல்ல. சாத்தனார் மணிமேகலையில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறவில்லை; முரண்படாமல் சரியாகவே கூறியுள்ளார் என்பது நன்கு விளக்கப்பட்டபடியால், பிள்ளையவர்கள் கொண்ட முடிபு தவறாகிறது. தம்முடைய பிழையுள்ள தவறான முடிபை வைத்துக் கொண்டு, இளங்கோ அடிகளும் சாத்தனாரும் பிற்பட்ட காலத்தவர் என்று அவர் கூறியது ஏற்கத்தக்கதல்ல. கண்ணகியும் கோவலனும் சரித்திரத் தொடர்புடைய ஆட்கள் அல்லர் என்று அவர் எழுதியதும் தவறாகிறது. எனவே, அவரது கருத்து தள்ளப்படவேண்டியதாகும். இதனால், கோவலனும் கண்ணகியும் சரித்திரத் தொடர்புடைய ஆட்கள் என்பதும் அவர்கள் உண்மையில் உலகத்திலே வாழ்ந்திருந் தனர்கள் என்பதும் தெளிவாக விளங்குகிறது. சாத்தனார் சரித்திரத்துக்கு மாறாகக் கூறவில்லை. வரலாற்றுக்கு ஏற்றபடியே கூறியுள்ளார் என்பது விளக்கப்பட்ட படியால், நீலகண்ட சாஸ்திரியாரின் ஆராய்ச்சி முடிவும் பகற்கன வாய்ப் பலனில்லாமற் போயிற்று. “மணிமேகலை ஆசிரியரும் சிலப்பதிகார ஆசிரியரும் காவியத் தலைவர்களாகிய கோவலனும் கண்ணகியும் சேரன் செங்குட் டுவனும் சரித்திர புருஷர்கள் என்றும், இவர்கள் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும் கனவுகூடக் காண முடியுமா?” என்று நீலகண்ட சாஸ்திரியார் பௌத்தமத சம்பிரதாயத்தை அறியாமல் ஆராய்ந்து முடிவு கூறியது பொருளற்ற வீண்கேள்வியாய் விட்டது. சாத்தனாரும் இளங்கோவடிகளும் கோவலனும் கண்ணகியும் சேரன் செங்குட்டுவனும் சரித்திர புருஷர்கள்தாம், உலகத்தில் உயிர் வாழ்ந்திருந்தவர்கள் தாம் என்னும் உண்மை ஐயத்துக்கிடமில்லாமல் தெளிவாய்த் தெரிகிறது. வையாபுரிப் பிள்ளையும் நீலகண்ட சாஸ்திரியாரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாக இருந்தும், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டுச் சரித்திர வரலாறுகளைப் பொறுத்த வரையில், இதுபோன்ற தவறான ஆராய்ச்சிகளை வெளியிட்டிருக் கிறார்கள். அவற்றையும் பின்னர் விளக்கிக் கூறுவோம். குறிப்பு: (தமிழ்ப் பொழில் துணர் 35, மலர் 3-ல், “மணிமேகலை யில் முரண்பட்ட செய்தியா?” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஒன்று விடுபட்டுப்போயிற்று. அதனை இங்கு எழுதுகிறேன்.) *இனி வரப்போகிற புத்தரிடம் கோவலனும் கண்ணகியும் உபதேசம் கேட்டு வீடு பேறடையப் போகிறார்கள் என்று சாத்தனார் மணிமேகலையில் கூறியதை எடுத்துக் காட்டினேன். அக்கட்டுரை யில் மேற்கோள் காட்டப்பட்ட மணிமேகலைச் செய்யுளில், “காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாதன் நல்லறம் கேட்டுவீ டெய்தும்” என்றும், “கரவரும் பெருமைக் கபிலையம் பதியில் ... .. ... .. ... ... .. ... .. ... ... .. ... .. ... அன்புறு மனத்தோடு அவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்” என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு, படிப்போர்க்கு ஓர் ஐயம் தோன்றக்கூடும். எதிர்காலப் புத்தரைக் கூறுவதாக இருந்தால் கபில வாஸ்து நகரத்தை ஏன் குறிப்பிடவேண்டும்? கபிலவாஸ்து சென்று போன கௌதமபுத்தர் பிறந்த இடமாயிற்றே; இதைஏன் எதிர்காலப் புத்தருடன் தொடர்புபடுத்தவேண்டும்; என்னும் ஐயம் தோன்றலாம். இனி வரப்போகிற புத்தர் எந்த ஊரில் பிறக்கப்போகிறார் என்பது தெரியாது. புதிதாகத் தோன்றும் புத்தர்கள், தங்களுக்கு முன்பு இருந்து மறைந்துபோன புத்தர்கள் பிறந்த இடத்தையும் நிர்வாண மோட்சம் அடைந்த இடத்தையும் புண்ணிய திருப்பதி யாகப்போற்றுவது மரபு. இந்த மரபுப்படி, இனி வரப்போகிற புத்தர், சென்றுபோன கௌதம புத்தர் பிறந்த இடமாகிய கபிலவாஸ்து நகரத்தைப் போற்றி அங்குத் தமது உபதேசத்தைச் செய்வார். இதைத்தான் சாத்தனார் மேற்காட்டிய செய்யுட்பகுதியில் கூறினார். எனவே, கோவலனும்கண்ணகியும் இனி வரப்போகிற புத்தரிடம் கபிலவாஸ்து நகரத்திலே நல்லறங்கேட்டு வீடு பெறுவார்கள் என்பது சாத்தனாரின் கருத்து. சென்றுபோன கௌதம புத்தரிடம் நல்லறங் கேட்பவர்கள் என்பது பொருள் அன்று. *** 21. தேவாரத்தில் திருக்குறள்* “சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப்பொருளிது வென்ற வள்ளுவர்” அருளிச்செய்த “திருக்குறள்” தமிழருக்கு மட்டுமின்றி உலகமக்கள் அனைவருக்கும் ஒழுக்கத்தைப் போதிக் கும் ஒப்பற்ற உயர்ந்த நூலாகும். இலத்தீன், கிரீக்கு, இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலான மேல்நாட்டு மொழி களிலும், மலை யாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சமஸ்கிருதம் முதலான இந்திய மொழிகளிலும் இதனை மொழிபெயர்த் திருப்பதிலிருந்தே திருக்குறளின் அருமை பெருமைகளை நன்குணரக்கூடும். திருக்குறளில் கூறப்படாத உயர்ந்த உண்மை களும், கருத்துக்களும், நீதிகளும், ஒழுக்கங்களும் இல்லையென்றே நிச்சயமாகச் சொல்லலாம். திருக்குறள் செய்யுளையோ அன்றி அதன் கருத்தையோ அன்றி அதன் சொற்றொடரையோ தத்தம் நூல்களில் எடுத்தாளாத தமிழாசிரியர் இலர். இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், திருத்தக்க தேவர், கம்பர் முதலான கவியரசர்கள் திருக்குறள் பாக்களையும், சொற் றொடர்களையும், கருத்துக்களையும் எடுத்தாண்டிருப்பதை அவர்கள் இயற்றிய நூல்களில் காணலாம். சைவ சமய குரவர்களில் ஒருவராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச்செய்த தேவாரத்தில் திருக்குறள் கருத்துக்களையும் சொற்றொடர்களையும் எடுத்தாண்டிருப்பதை இங்கு விளக்கிக் காட்டுவோம். “கறிமாமிளகும் மிகுவன்மரமும் மிகவுந்திவருந் நிவவின்கரைமேல் நெறிவார்குழலா ரவர்காணநடஞ்செய் நெல்வாயிலரத் துறைநின்மலனே வறிதேநிலையா தவிம்மண்ணுலகின் னரனாகவகுத் தனைநானிலையேன் பொறிவாயி லிவ்வைந்தினை யும்மவியப் பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.” இத் தேவாரத்தில், “பொறிவாயிலைந் தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.” என்னும் திருக்குறளின் சொற்றொடரும் கருத்தும் அமைந் திருப்பது காண்க. ஐஐ “புற்றாடரவம் மரையார்த்துகந்தாய் புனிதாபொரு வெள்விடையூர் தியினாய் எற்றேயொருகண் ணிலனின்னை யல்லா னெல்வாயிலரத் துறைநின்மலனே மற்றேலொருபற் றிலனெம்பெருமான் வண்டார்குழலாண் மங்கைபங்கினனே அற்றார்பிறவிக் கடனீந்தியேறி யடியேனுய்யப்போ வதொர்சூழல்சொல்லே.” இத் தேவாரப் பதிகத்தில், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்” என்னும் திருக்குறளின் கருத்தும் சொற்றொடருங் காணப் படுதல் அறிக. ஐஐஐ “கோடுயர்கோங் கலர்வேங்கையலர் மிகவுந்திவருந் நிவவின்கரைமேல் நீடுயர்சோலை நெல்வாயிலரத் துறைநின்மலனே! நினைவார்மனத்தாய்! ஓடுபுனற்கரை யாமிளமை யுறங் கிவிழித்தாலொக் குமிப்பிறவி வாடியிருந்து வருந்தல்செய்யா தடியேனுய்யப்போ வதொர்சூழல்சொல்லே” என்னும் இத்தேவாரத் திருப்பதிகத்தில், “உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்னும் தமிழ்வேதத்தின் கருத்துஞ் சொற்றொடரும் விளங்குதல் காண்க. ஐஏ “சிகரம்முகத்திற் றிரளாரகிலும் மிகவுந்திவருந் நிவலின்கரைமேல் நிகரின்மயிலா ரவர்தாம்பயிலுந் நெல்வாயிலரத் துறைநின்மலனே மகரக்குழையாய்! மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியிதுதான் அகரம்முதலி னெழுத்தாகிநின்றா யடியேனுயப்போ வதோர்சூழல்சொல்லே.” இதில், “அகர முதல வெழுத் தெல்லா மாதிபகவன் முதற்றே யுலகு” என்னுந் திருக்குறள் காணக் கிடக்கிறது. ஏ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உற்ற நண்பராய் விளங்கிய சேரமான் பெருமாள் நாயனாரும், தாம் அருளிச்செய்த ஆதியுலா என்னும் கைலாய ஞான உலாவில், பேரிளம் பெண்ணைக் கூறுமிடத்து, “பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரு மின்சொற் பணிமொழியாண் - மண்ணின் மேற் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் மொண்டொடி கண்ணே யுளவென்று - பண்டையோர்” கட்டுரையை மேம்படுத்தாள்....” என்று அருளிச் செய் திருப்பதில் வள்ளுவர் திருக்குறள் நடுநாயகமாய் விளங்குவது காண்க. *** 22. மலர்மிசை ஏகினான்* “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” என்னும் திருக்குறளில் ‘மலர்மிசை ஏகினான்’ என்பது எந்தக் கடவுளைக் குறிக்கும் என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இந்தக் குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், இன்ன மதக் கடவுளைத் தான் இச்சொற்றொடரை குறிக்கும் என்பதைக் கூறாமல், பொதுவாக ‘மலரின் கண்ணே சென்றவன்’ என்று பொருள் கூறினார். கூறிய பின்னும், ‘இதனைப் பூமேனடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கேற்றுவாருமுளர்’ என்று விளக்குகின்றார். எனவே, அவர் காலத்திலேயே, மலர்மிசை ஏகினான் என்னும் சொற்றொடர், குறிப்பிட்ட ............ மதக்கடவுளைக் குறிக்கிற தென்னும் வழக்கு இருந்து வருகிறதென்பது விளங்குகின்றது. பரிமேலழகர் குறிப்பிடுகி....... அந்த ‘பிறிதொரு கடவுள்’ யார்? அவர் தாம் சமணரின் அருகக் கடவுள். இது எவ்வாறு பொருந்தும்? மலர்மிசை ஏகினான் என்பது அருகக் கடவுளையன்றி ஏனைய மற்ற கடவுளர்க்கும் பொருந்தாதோ எனின், பொருந்தாத அருகக் கடவுளையே இச்சொற்றோடர் குறிக்கும். இதனை விளக்குவோம். பல்வேறு மதத்தவரும் தத்தம் கடவுளை வாழ்த்திப் போற்றும் பாக்களில் தத்தம் கடவுளது திருவடிகளை தாமரைப்பூவிற்கு உவமை கூறியிருக்கின்றனர். மலர்மிசை போன்றதிருவடி என்னும் பொருள்பட அவர்கள் யாவரும்கூறிச்சென்றனர். ஆனால், ஆருகத மதத்தவராகிய சமண சாக்கிய மதத்தாராகிய பௌத்தரும் தமது கடவுளின் திரு வடியைக் கூறும்போதெல்லாம் மலர்போன்ற திருவடி என்று கூறுவது மட்டுமன்றி மலர்மேல் நடந்த திருவடி என்றும் யாண்டும் கூறியிருக் கின்றனர். இக்கருத்தினைச் சமண பௌத்த சமய நூல்கள் எல்லா வற்றிலும் காணலாம். புத்தர் பிறந்த வுடனே ஏழடி நடந்தார் என்றும், பாதத்தைப் பூமியில் வைக்கும் போது ஒவ்வொரு தாமரைப் பாதத்தைத் தாங்கிக்கொண்டன என்றும் பௌத்த சமய நூல் கூறுகிறது. சமண ராகிய மணக்குடவர் இக்கருத்தைத் தழுவியே திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில், மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப் பட்ட திருவடி என்று எழுதியிருக்கின்றார். இனி, சமண சமய நூல்கள், அருகக் கடவுள் மலர்மேல் நடந்த திருவடி உடையவன் என்று கூறி யிருப்பதை எடுத்துக்காட்டுவாம். முதலில் நிகண்டுகளைப் பார்ப்போம். சூடாமணி கண்டு அருகக் கடவுளைப் ‘பூமிசை நடந்தோன்’ என்றும், மலவூர்தி என்றும் கூறுகின்றது. சேந்தன் திவாகரமும் முருகனைப் பூமிசை நடந்தோன் என்றே செப்புகின்றது. பிங்கல நிகண்டும் அவ்வாறே `பூமிசை நடந்தோன்’ எனக் கூறுவதோடு, `அருகன் ஊர்தி அம்புயம்’ என்று குறைகின்றது இதனால் சமணரின் அருகக் கடவுள் மலர் மிசை ஏகினவன் என்பது நன்கு விளங்குகின்றது. கோவலனையும் கண்ணகியையும் உடன் கொண்டு மதுரைக் குச் சென்ற கௌந்தியடிகள் என்னும் ஜைன சமயமூதாட்டியார் அருகக் கடவுளைப் போற்றித் துதித்தபோது, “மலர்மிசை நடந்த மலரடி யல்லதுஎன் தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅது” என்று வாழ்த்திய தாக ஜைனராகிய இளங்கோ அடிகள் தாம் அருளிய சிலப்பதிகாரத்தில் (நாடுகாண் காதை) கூறுகின்றார். இதில் அருகக் கடவுள் மலர்மேல் நடந்த மலர் போன்ற திருவடிகளை யுடையவன் என்று கூறப்பட்டுள்ளது காண்க. மற்றொரு ஜைன நூலாகிய சீவகசிந்தாமணியைப் பார்போம்: “எங்கு முலகமிருள் நீங்க இருந்த எந்தை பெருமானார் தங்கு செந்தா மரையடி என் தலையவே, என் தலையவே” இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சைவராக இருந்தும், ஆருகத மதக்கொள்கையை நன்குணர்ந்தவராதலின், அந்த மரபைப் பின்பற்றி, எந்தையாகிய பெருமானாருடைய தாமரைமேற் றங்கினவடி என்று ......... விளக்கியிருப்பது நோக்குக: “மன்றனாறு மணிமுடிமேல் மலிந்தசூளா மணி போலும் வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரிபூந்தாமரைமேல் சென்ற திருவாரடி ஏத்தித் தெளிவும் பொருள்க ளோரைந்தும் அன்றி யாறும் ஒன்பானும் ஆகுமென்பா ரறவோரே.” (முத்தியிலம்பகம், நற்காட்சி 1,2 ஆம் செய்யுள்) செந்தாமரைமேல் நடந்தானுக்கு (அருகக் கடவுளுக்கு) நந்தா விளக்குக்கென்றும் பூசனைகென்றும் நான்கு கோடி பொன்னையும், நூறு ஊர்களையும், தேர்களையும், யானைகளையும் சீவகன் வழங் கினான் என்று சிந்தாமணி (இலக்கணையார், 117) கூறுகின்றது: “நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடி நொந்தார்க் கடந்தான் கொடுத்தான்பின்னை நூறு ........ கந்தார்க் கடாத்த களிறுங்கொடித் தேர்கள் நூறு செந்தா மரைமேல் நடந்தானடி சேர்த்தி னானே.” மற்றொரு செய்யுளிலும் சிந்தாமணி (முத்தியிலம்பகம், துறவு, 424) அருகக் கடவுள் பூமேல் நடந்தவன் என்பதைக் கூறுகின்றது: “குண்டலமும் பொற்றொடும் பைந்தாரும் குளிர்முத்தும் வண்டலம்பு மாலையு மணித்தொத்தும் நிலந்திவள விண்டலர்பூந் தாமரையின் விரைததும்ப மேனடந்த வண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான்.” இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் என்னும் சைவர், விரைத்ததும்ப விரிந்த மலர்ந்த தாமரையின்மேல் நடந்தவடி’ என்று உரை எழுதியிருப்பதையும் காண்க. இன்சுவையும் கவிநயமும் ததும்பும் சூளாமணி என்னும் ஜைனக் காவியத்திலும் பல இடங்களில், அருகக் கடவுள் பூமேல் நடந்த திருவடிகளையுடையவன் என்று கூறப்படுகின்றார். அச்செய்யுள்க ளில் சிலவற்றைக் காட்டுவோம்: “விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய் உரைமணந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை.” “முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர் மேற்சென்றாய் யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை.” “மணமயங்கு தாமரைமேல், வான்வணங்கச் சென்றாய் குணமயங்கி யாம் பரவக்கொண்டுவப்பா யல்லை” “மணங்கமழுந் தாமரையின் மதுத்திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் அணங்கிவர்சே வடியினழ கெழிலோரார் ஒளிபருகி யலரும் போலும்.” “அரும்பிவரும் அரவிந்தம் அறிவரன தடிநிழல தடைந்தோ மென்று சுரும்பிவரி இசைபாடச் செம்மாந்து சுடருமிழ்ந்து துளும்பும் போலும்.” “அழலணங்கு தாமரையார் அருளாழி யுடையகோன் அடிக்கீழ்ச் சேர்ந்து நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும்.” மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண முழுதுலக முடியெழின் முனைவயிரம் நாற்றித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற் சுடரோயுன் அடிபோற்றிச் சொல்லுவ தொன்றுண்டால்; சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து, புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே. ஆருகதரின் அருகக் கடவுள் மலர்மிசை ஏகினவன் என்பதற்கு இன்னும் ஐயமுண்டோ? தாமரை, அருகக் கடவுளின் ஊர்தி என்பதைச் சமண நூலாகிய திருநூற்றந்தாதி கவிநயத்துடன் கூறுவது காண்க: “தாமரையே எத்தவங்கள் செய்தாய்! சகம்மூன் றினுக்குந் தாமரைசே என்று சாற்று போலும் முச் சத்திரத்துத் தாமரைசேர் திருவைத் திருமார்பிற் றரித் தவர்செந் தாமரையேய் சரணந்தலை மேற்கொண்டு தாங்கு தற்கே” ஜைன நூலாகிய நீலகேசியின் அவையடக்கச் செய்யுள் களாலும் அருகன் மலர்மிசை ஏகினவன் என்பதை அறியலாம். அச் செய்யுள் இது: “பண்டா கமத்துட் பயிலாவுரை என்று மிக்கார் விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு வன்யான் தண்டா மரைமேல் நடந்தான் தடந்தாள் வணங்கிக் கண்டேன் கிடந்தேன் கனவின்னிது கண்ட வாறே” அறநெறிச் சாரச் செய்யுளுள் ஒன்று இச் செய்தியையே கூறுகின்றது: “தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப் பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின் துதித்தீண்ட டறநெறிச் சாரத்தைத் தோன்ற விரிப்பன் சுருக்காய் விரைந்து.” சமண சமயத்தவரால் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தி யில் கீழ்க்கண்ட செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இச் செய்யுள் களிலும் அருகக் கடவுள் பூவின்மேல் நடந்தவன் என்று கூறப் பட்டுள்ளது காண்க: “காமரு கதிர்மதி முகத்தினை சாமரை இடையிடை மகிழ்ந்தனை தாமரை மலர்புரை அடியினை தாமரை மலர்மிசை ஒதுங்கினை” “மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை.” “ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி” இதுகாறும் ஜைனசமய நூல்களினின்று எடுத்துக்காட்டிய மேற் கோள்களினால் மலர்மிசை ஏகினான் என்று திருவள்ளுவர் கூறியது அருகக் கடவுளையே என்பது அங்கை நெல்லிக்கனி என விளங்கு கின்றது. ஜைன மதத்திலும் பௌத்த மதத்திலும் அல்லாமல் ஏனைய சமயங்களில் கடவுளைப் பூமேல் நடந்தவன் என்று கூறியிருப்பதாக நான் அறிந்தவரையில் காணப்படவில்லை. அவ்வாறு கூறப்பட்டிருப் பின், அன்புகூர்ந்து காட்டினால் வணக்கத்தோடு ஏற்றுக் கொள்ளப் படும். தேவாரத்தில் எங்கேனும் சிவனுடைய பாதம், பூமேல் நடந்த பாதம் எனக் கூறப்பட்டுள்ளதா என்பதை அறிய...... அதனைத் துருவித் துருவி ஆராய்ந்தேன். ஒரே இடத்தில் அன்றி மற்றெல்லா இடங் களிலும் அவ்வாறு கூறப்படாததைக் கண்டேன். சிவனது திருவடி தாமரைமேல் நடந்த திருவடி என்று கூறப்பட்ட அந்த ஒரே இடமும் அப்பர் சுவாமிகள் கூறியது. அப்பர் சுவாமிகள் ஜைன மதத்தில் நெடு நாள் பழகி அந்த மதக்கொள்கைகளை நன்கு பயின்று தருமசேனர் என்னும் பெயருடன் ஜைனமதத்தலைவராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததொன்றே. அவர் சைவ சமயத்தை மேற் கொண்ட பிறகும் ஜைனமதக் கொள்கையாகிய மலர்மிசை ஏகினான் என்னும் கொள்கையைத் தமது தேவாரத்தில் ஓர் இடத்தில் கூறி யுள்ளார். இதனை அறிந்து கூறினாரோ அல்லது பக்திப் பெருக் கினால் மறந்து கூறினாரோ தெரியவில்லை; அத்தேவாரச் செய்யுள் இது: “தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியார் போலும் நாளுடைக் காலன்வீழ வுதைசெய்த நம்பர் போலும் கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனைமேய ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே.” அப்பர் சுவாமிகள் ஜைனமதக் கொள்கைகள் சிலவற்றை எக் காரணத்தாலோ சில இடங்களில் சைவ சமயத்தில் ஏற்றித் தமது தேவாரத்தில் கூறியிருக்கின்றார்; ஜைனமதக் கொள்கைகளை நன்குணர்ந்தவர்கள் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தை ஊன்றிப் படிப்பார்களானால், இதனை நன்குணரக்கூடும். சிவபெருமான் தாமரை மேல் தங்கிய திருவடியுடையவன் என்று அப்பர் ஒரே ஓர் இடத்தில் மட்டும் கூறியிருக்கின்றார்; வேறு இடங்களில் கூறினார்களில்லை. சுந்தரரும் சம்பந்தரும் ஓரிடத்திலேனும் இவ்வாறு கூறவே இல்லை. ஜைனமதக் கொள்கையாகையால் அவர்கள் இதனைக் கூறாமல் விட்டனர்போலும். சிவபெருமான் ‘தாளுடைச் செங்கமலத்தடங்கொள் சேவடியார்’ என்று அப்பர் ஒரே ஓர் இடத்தில் கூறினார். அப்பர் சுவாமிகளே, ‘திருவடித் தாண்டகம்’ அருளியிருக்கிறார். அதில் சிவபெருமானது திருவடி களின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து போற்றியுள்ளார். ஆனால், அந்தத் திருவடித் தாண்டகத்தில், சிவபெருமான் மலர்மிசை ஏகின திருவடியுடையவர் என்பதைக் கூறாமலே விட்டுவிட்டார். சிவன் மலர் மேல் நடந்த திருவடியுடையவன் என்பது சைவ சமயத்தவரின் கொள்கையாக இருந்திருந்தால். சிவனது திருவடிகளைப் புகழ்வதற் கென்றே முற்பட்ட அப்பர் சுவாமிகள் அக்கொள்கைக்கு முதன்மை கொடுத்து வற்புறுத்திக் கூறியிருப்பாரன்றோ? அவ்வாறு அவர் கூறாது விட்ட காரணம், இக்கொள்கை சைவசமயக் கொள்கை ................றென்பதே. சிவபெருமான் பூமேல் நடந்த திருவடி யுடையவன் என்பது சைவ சமயக் கொள்கையாக இருந்தால், இக்கொள்கை மூவர் தேவாரங் களிலும் ஏனைய சைவ நூல்களிலும் கூறப்பட்டிருக்குமன்றோ? மாறாக, ஜைன சமய நூல்களில் இக்கொள்கை பெரிதும் அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, மலர்மிசை ஏகினான் என்பது ஜைனக் கடவுளைக் குறிக்கிறது என்பதில் யாதேனும் ஐயம் உளதோ? *** 23. அறவாழி அந்தணன்* “அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.” இத்திருக்குறளில் கூறப்பட்ட அறவாழி அந்தணன் என்பவர் யாவர், அவர் எந்தக் கடவுள் என்பதை ஆராய்வோம். உரையாசிரியர் பரிமேலழகர், அறவாழி என்பதற்கு அறக்கடல் என்று பொருள் கூறினார். .............மற்றொரு பொருளையும் குறிக்கின்றார். அது: “அறவாழி என்பதனைத் தரும சக்கரமாக்கி அதனையுடைய அந்தணர் என்று உரைப்பாருமுளர்” என்பது. .......................... அந்தணன் என்று பொருள் கொள்வதைவிடத் தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்ள .......... சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுளும் பௌத்தருடைய புத்தர் பெருமானும் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகின்றனர். ஆகவே, அறவாழி அந்தணன் என்று குறிக்கப்பட்டவர் அருகக் கடவுளும் புத்தர் பெருமானும் எனக் கொள்ளத்தகும். ஆழிப்படையையுடைய திருமால் அறவாழி அந்தணர் அல்லரோ எனின், அல்லர். அவர் மறவாழியை யுடைவராகலின் அறவாழி அந்தணன் ஆகார். என்னை? திருமாலின் திருத்தொண்டர்க ளான ஆழ்வார்கள் எல்லோரும் அவரை அறவாழி அந்தணன் என்று கூறாமல் மறவாழி படையான் என்றே கூறியுள்ளனர். “அடலாழி ஏந்தி அசுவண்குலம் வேர் மருங் கறுத்தாய்” என்றும், “அமர்கெ........... ஆழி” என்றும், “காய்சின ஆழி” என்றும், “கொ............. ஆழி” என்றும், “கூர் ஆழி” என்றும், “கனலாழிப் ............புடையவன்” என்றும், “போராழி கொண்ட பிரான்” என்றும், “ஊன்திகழ் நேமி” என்றும், “ஈர்க்கின்ற சக்கரத் தெம்மான்” என்றும் திருமாலின் ஆழி (சக்கரம்) மறவாழி என்றே ஆழ்வார் கள் கூறியிருப்பதை அவர்கள் பாடல்களிலே நெடுகக் காணலாம். ஆகவே, அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்குப் பொருந்தாது. சிவன், முருகன், பிரமன் முதலிய கடவுளரும் அறவாழி அந்தணர், அதாவது, தருமச் சக்கரத்தையுடையவர் என்று நூல்களில் யாண்டும் கூறப்பட்டனர் இலர். ஆகவே, அவர்களும் தருமச் சக்கரத்தையுடையவர் ஆகார். ஆனால், ஜைனரின் அருகக் கடவுள் அறவாழியை (தருமச் சக்கரத்தை) உடையவர் என்று நூல்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றை ஈண்டுக் காட்டுவாம்: “ஆதியங் கடவுள் அறவாழி அந்தணன் அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன் என்பது திவாகரம். “அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன்” என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. “அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்” என்று பிங்கல நிகண்டு பேசுகிறது. “மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோரியில் பிறங்க வென்ற வென்றியோர் அனேக பேர்; உலகெல்லாம் இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர் அறங்கொள் நேமிகொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே.” (திருக்கலம்பகம், 25) “மகர வாருதி வலயத்துலக மேழும் வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டேத்தும் சிகரமா மணிநீல மன்ன வெற்பைத் தேராதார் தாந்தம்மைத் தேராதாரே.” (திருக்கலம்பகம், 31) “ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை சீரருள் மொழிய நின் திருவடி தொழுதனம்” (சூளாமணி, இரதநூபுரம், 98) அறவாழியையுடைய அருகக் கடவுளைச் சீவகச்சாமி தலையுற வணங்கின செய்தியைச் சீவகசிந்தாமணி கூறும் செய்யுள் இது: “நிலவிலகி உயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகை நோய் உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி அலகையிலாக் குணக்கடலை அகன்ஞான வரம்பனை விலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான்” (முத்தியிலம்பகம், 425) மற்றும், தண்மதிபோல் நேமி, மலமறு திகிரி அறவாழி வேந்தன் என்று சீவக சிந்தாமணியில் அருகக் கடவுளின் அறவாழி கூறப்படுகிறது. மேலும், “அரு ............... சக்கரம் ஏந்திய சங்கரன்” என்றும், பொருளாக என்னை ஆண்டு கொண்டாய் அறவாழி கொண்டே வென்ற அந்தணனே” என்றும் திருநூற்றந்தாதி முழங்குகின்றது. “அந்தரத் துருளும்நின் அலர்கதிர் அறவாழி இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றோ” என்பதும், “மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்” என்பதும் யாப்பருங்கல விருத்தி மேற்கோள் செய்யுள்கள். இதுகாறும், ஜைனசமய நூல்களிலிருந்து காட்டிய மேற்கோள்களைக் கொண்டு, அருகக் கடவுள் அறவாழி யுடையவர் என்பதை அறிந்தாம். அறவாழி, இன்றும் ஜைனக் கோயில்களில் வழிபடப்பட்டு வருகின்றது. பேரரசராக விளங்கும் சக்கரவர்த்திகளின் படைக் கலச் சாலையில் ஆழிப்படை (சக்கர ரத்தினம்) தோன்றும் என்பதும், அச்சக்கரத்தைப் பின்தொடர்ந்து சக்கரவர்த்தி சேனையுடன் சென்றால் அது பணியாத மன்னர்களை யெல்லாம் பணியச் செய்து திரும்பும் என்பதும், அடங்காத மன்னர் யாரேனும் இருந்தால் அவர்களைப் பணியச்செய்ததற்கே அச்சக்கரம் ஆயுதசாலைக்குத் திரும்பும் என்பதும், சக்கரப் படையைப் பெற்ற சக்கரவர்த்திகள் சக்கரச் செல்வர் எனப்படுவர் என்பதும் ஜைனசமயக் கொள்கை. இதுபோன்றே, அருகக் கடவுளுக்கு அறவாழி உண்டென்பதும், அவருக்கு முன் புறத்தில் அறவாழி எப்போதும் இருக்கும் என்பதும், அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவ்வறவாழி அவரை முன்னிட்டுச் செல்லும் என்பதும் ஜைன சமயக் கொள்கையாகும். இம்மரபை மனத்துட் கொண்டு, அருகப்பெருமானை விளித்து ஓர் ஐயவினா நிகழ்த்தும் நகைச்சுவையுடைய செய்யுள் சூளாமணி என்னும் காவியத்துள் காணப்படுகிறது. அச் செய்யுள் பின்னே வருகிறது. அதனைப் படித்துப் பொருள் உணர்ந்து சுவையை நுகர்க. “தெருளாமை யால்வினவற் பாலதொன் றுண்டு திருவடிகள் செம்பொனார் அரவிந்தம் ஏந்த இருளாழி ஏழுலகும் சூழொளியின் மூழ்க இமையாத செங்கண்ணின் இமையோர் வந்தேத் உருளாழியானும் ஒளிமணி முடிமேற் கைவைத்(து) ஒருபாலின் வர, உலகம் நின்னுழைய தாக, அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ அடிப்படா தாய்நின்ற அகன்ஞாலம் உண்டோ?” (துறவுச் சருக்கம், ..............) *** 24. யாரால் மழை பெய்கிறது?* மழையின் பெருமையும் இன்றியமையாமையையும் உலகத்திலே எல்லா மக்களும் அறிந்திருக்கிறார்கள். மழையின் சிறப்பை ஏனையோர் அறிந்ததைவிட மிக நன்றாக அறிந்தவர் தமிழரே. ஏனென்றால், தமிழ் வேதம் எழுதி அருளிய திருவள்ளுவ நாயனார் வான்சிறப்பு என்றும் ஓர் அதிகாரம் வகுத்து அதில் மழையின் சிறப்பை எடுத்தோதியுள்ளார். சிலப்பதிகாரம் என்னும் ஆதித் தமிழ்க் காவியத்தை எழுதிய இளங்கோ அடிகள், “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல் மேனின்று தான்சுரத்த லான்” என்று மழையைப் போற்றினார். இவ்வாறு மழையைப் போற்றிச் சிறப்பித்தவர் தமிழரைத் தவிர வேறு எம்மொழியாளர் உளர்? பறவை, விலங்கு, மக்கள் முதலிய எல்லா உயிர்களும் உலகத் திலே உயிர்வாழவேண்டுமானால், புல்பூண்டு செடிகொடி மரம் ஆகிய தாவரங்கள் உலகத்தில் செழித்து வளரவேண்டும். ஓரறிவுயிராகிய மரம் செடி புல் பூண்டுகள் இல்லையானால், ஈரறிவுயிர்முதல் ஆறறிவுயிர் வரையில் எந்த உயிரும் உலகத்தில் உயிர்வாழ முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள தாவரங்களாகிய மரம் செடி கொடி புல் பூண்டுகளை ஒரே நாளில் முழுவதும் அழித்து விடுவோமானால், அப் பொழுதே உலகத்தில் வாழும் ஏனைய உயிர்கள் எல்லாம் மாய்ந்து உலகத்தில் உயிர்களே இல்லாமற்போகும். எனவே, ஓரறிவுயிராகிய தாவரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது ஏனைய உயிர்களின் வாழ்க்கை. எல்லா உயிர்களுக்கும் ஆதரவாக உள்ள தாவரங்களை உண்டாக்கி அவற்றை நிலைபெறச் செய்வது மழை. இதனால் அன்றே, “விசும்பின் துளிவீழி னல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது” என்றும், “விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி,” என்றும் திருவள்ளுவர் கூறினார். அன்றியும், தாவரங்கள் உண்டாக்கி அவற்றின் மூலம் உயிர்களுக்கு உணவை கொடுப்பது மட்டுமல்லாமல், உயிர்களுக்குத் தானே உணவாகவும் இருப்பது மழை (நீர்). இதனைத் திருவள்ளுவர் “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை” என்று அழகாகக் கூறினார். தொன்றுதொட்டு நமது நாட்டின் முக்கியத் தொழிலாக உள்ளது, நாட்டின் முதுகெலும்பு போன்றது உழவுத் தொழில். ஆகவே, நம்மவர் மழையின் இன்றியமையாமையை நன்கறிவர். ஆனால், மழை எப்படிப் பெய்கிறது என்பதைப் பண்டைப் பெரியோர் அறியார். நமது நாட்டில் மட்டுமல்ல; ஏனைய நாட்டிலும் பண்டைக் காலத்தில் இருந்தவர் மழை பெய்வதன் காரணத்தை அறிந்திலர். இந்திரன் என்னும் தெய்வம் மழையைப் பெய்யச் செய்கிறான் என்றும், வருணன் என்னும் கடல்தெய்வம் மழையை அனுப்புகிறது என்றும் அவர்கள் கருதிவந்தனர். வெண் மேகங்கள் சென்று கடலில் படிந்து வயிறு நிறைய நீரைக் குடித்துக் கருமேகமாகி வானத்திலே வந்து மழையாய் பெய்கிறது என்று காவியப் புலவர்கள் பாடிய பாடல்களிலே, வெயிலின் சூட்டினாலே நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகச் சென்று ஆகாயத்திலே மேகமாகி மழையாகப் பெய்கிறது என்கிற ‘சயன்ஸ்’ என்னும் விஞ்ஞானத்தின் சாயல் காணப்பட்டாலும், அதை நம் முன்னோர் காவியப் புலவரின் கற்பனை என்று கருதினார்களே யல்லாமல் உண்மை என்று கொள்ளவில்லை. நமது நாட்டுப் பண்டைப் பெரியோர் மழை எப்படிப் பெய்கிறது என்று கருதினார்கள் என்பதைப் பார்ப்போம். அரசரும், மகளிரும், முனிவரும் மழை பெய்வதற்கும் பெய்யாமல் இருப்பதற்கும் காரணம் ஆவர் என்று அவர்கள் கருதினார்கள். மகளிர் கற்புடன் இருந்தால் மழை பெய்யும்; கற்புத் தவறினால் மழை பெய்யாது என்றும், அரசர் செங்கோல் செலுத்தினால் மழை பெய்யும்; அரசர் கொடுங்கொல் செலுத்தினால் மழை பெய்யாது என்றும், துறவிகளாகிய முனிவர் ஒழுக்கம் பிழையாமல் தவம் செய்தால் மழை பெய்யும்; நெறி தவறினால் மழை பெய்யாது என்றும் அவர்கள் கருதிவந்தார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை அரசாண்ட இளங்கிள்ளி என்னும் அரசன் காலத்தில் மழை பெய்யாமல் வற்கடம் உண்டாயிற்று. அப்போது மணி மேகலையார் அந் நகரத்திற்கு வந்தார். வந்தவரை அரசன் வரவேற்றான். வரவேற்று, மழையில்லாமல் நாடு அல்லற் படுவதன் காரணத்தைக் கூறுகிறான்: “செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ நலத்தகை நல்லாய்! நன்னா டெல்லாம் அலத்தற் காலை யாகிய தறியேன்.”(மணி., 28:188-91) அரசன் செங்கோல் செலுத்தினால் மழைபெய்யும்; கொடுங் கோல் செலுத்தினால் மழைபெய்யாது என்பதைத் திருவள்ளுவரும் கூறுகிறார். “இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு” என்றும், “முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்” என்றும் அவர் கூறியது காண்க. கற்புடைய மங்கையரால் நாட்டில் மழை பெய்கிறது என்பதை யும் திருவள்ளுவர் கூறுகிறார்: “தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.” “வறனோடின் வையகத்து வான்தருங் கற்பினாள்” என்பது கலித்தொகை. “புண்ணிய முட்டாள், பொழிமழை தரூஉம் அரும்பெறன் மரபிற் பத்தினிப் பெண்டிர்” என்பது மணிமேகலை. “நாடு மூரும் நனிபுகழ்ந் தேத்தலும் பீடுறும்மழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லதுகூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே” என்பது வளையாபதிச் செய்யுள். கற்புடைப் பெண்கள் இருக்கும் நாட்டில் மழை தவறாமல் பெய்து நாடு வளம்படும் என்றும், அரசனுடைய ஆட்சியும் செங்கோலாக நடைபெறும் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது: “வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு.” (சிலம்பு., 15: 14) இதுபோன்றே அரசனுடைய செங்கோலினாலேதான் மகளிர் கற்பு நிலைபெறுகிறது என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது: “அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.” (சிலம்பு. 28:207-9) தவசிகள் தவம் செய்யாவிட்டால் மழை பெய்யாது என்று நான்மணிக் கடிகை என்னும் நூல் கூறுகிறது: “மழையின்றி மாநிலத்தார்க் கில்லை, மழையும் தவமிலார் இல்வழி இல்லைத், தவமும் அரசிலார் இல்வழி யில்லை, யரசனும் இல்வாழ்வான் இல்வழி இல்.” (நான்மணிக் கடிகை, 48) இவையன்றி, பார்ப்பனர் அழல் ஓம்புதலினாலேயும் மழை பெய்கிறது என்னும் கருத்தும் பண்டைக் காலத்தில் இருந்தது. இதனை, “மழைவளந் தரூஉம் அழலோம் ............பாளன்” என்னும் மணிமேகலை யினால் அறியலாம். இவர்களாலேதான் பண்டைக் காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது என்று பிற்காலத்து நூலாகிய விவேக சிந்தாமணி கூறுகிறது: “வேத மோதிய வேதியர்க் கோர்மழை நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை காதல் மங்கையர் கற்பினுக் கோர்மழை மாத மூன்று மழையெனப் பெய்யுமே” என்பது அது மாதம் மும்மாரி பெய்தது எந்தக் காலத்தில் என்பது தெரியவில்லை. ஆனால், வேதியரும் மன்னரும் மங்கையரும் தத்தம் அறநெறியிலிருந்து தவறியபடியால், ஆண்டில் மூன்று மழை பெய்தது என்று அந்நூலே கூறுகின்றது. “அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர்மழை வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை புருடனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே” என்பது அது. “என்ன ஐயா! இந்த விஞ்ஞான காலத்தில் அணுக்குண்டு யுகத்தில் பழைய புராணங்களைப் புரட்டுகிறீர்” என்று வாசகர் கருதுவர் என்று தோன்றுகிறது. எப்படியெல்லாம் மழையைப் பற்றிப் பண்டைக் காலத்தவர் கருதிவந்தனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி மக்கள் எவ்வாறு கருதினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சத்தியத்தைக் கண்டுபிடிக்கக் கொதிக்கும் எண்ணெயில் கை விடுதல், பாம்புக் குடத்தில் கைவிடுதல்போன்ற செயல்களும் அக் காலத்தில் இருந்தனவே! *** 25. திருவள்ளுவர் கூறிய பொருட்செல்வம் உலகத்திலே மக்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருட் செல்வம் இன்றியமையாதது ஆகும். பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் மனிதவாழ்க்கைக்குப் பொருள்வேண்டியிருக்கிறது. இனி நல்வாழ்வு வாழ்வதற்குக் காரணமாயிருப்பது பொருள். பொருள் இல்லாதவனுக்கு உலக வாழ்வு, நல்வாழ்வு, இனிய வாழ்வு இல்லை; இல்லை; இல்லை. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது திருவள்ளுவர் பொய்யா மொழி. பணம் இல்லாதவன் பிணம். பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும் செல்வப்பொருள் அல்லாமல் வேறுபொருள் இல்லை. இல்லாரை எல்லாரும் எள்ளுவதும், செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வதும் உலகத் திலே கண்கூடாகக் காணப்படும் உண்மை நிகழ்ச்சி. பொருளுடை யவர், தாம் செய்வதற்கு எண்ணிய செயல்கள் தட்டுத்தடையின்றி இனிது முடிகின்றன. பொருள் இல்லாதவர் செய்துமுடிக்க எண்ணிய செயல்கள் கைகூடாமல் போகின்றன. பொருள் என்னும் பொய்யாவிளக்கம், இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. அம்மட்டோ? குன்றேறியானைப் போர்கண்டற்றால், தன் கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. ஆகவே, செய்கபொருளை என்று ஆணையிடுகிறார் திருவள்ளுவர். பொருளை ஈட்டுக; ஈட்டுக; ஈட்டுக. செல்வம் என்பது பணம் மட்டும் அன்று; பொன்னும் வெள்ளி யும் மாத்திரம் அன்று. வீடு வாசல், தோட்டம் துரவு, நிலவுலம், காணி பூமி, ஆடு மாடு, உண்டி உடை, துணி மணி, தானிய தவசம் முதலிய எல்லாம் செல்வப்பொருளாகும். இவை எல்லாம் வாழ்க்கைக்கு வேண்டப் படுகின்றன. ஆகவே தான், தமிழன் செல்வத்திற்குப் பொருள் என்று பெயர்கொடுத்தான். ஆயினும், எல்லாப் பொருள்களையும் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது பணம். ஆகவே, பணத்தை ஈட்ட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். செய்க பொருளை என்று திருவள்ளுவர் அழுத்தந்திருந்தமாகக் கூறிவிட்டபடியினாலே, எப்படியாவது எந்தவழியிலாவது பொருளைத் தேடலாம் என்று கருதவேண்டா. பொருளை ஈட்டுவதற்கு நல்ல வழிகளும் உள்ளன; தீய வழிகளும் உள்ளன. ‘நல்லவை யெல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு’ ஆனால், தீய வழியில் பொருளைத் தேடாதே என்கிறார் திருவள்ளுவர். கள்ளத்தனம், திருட்டுப் புரட்டு, மோசநாசம் முதலிய தீய வழிகளால் தேடிய பணம் நன்மை பயக்காது. ‘களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக்கெடும்.’ ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்,’ ‘அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரளவிடல்’ ‘அஃகாமை செல்வத்திற்கு யாதெனின், வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்’ ‘அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறனறிந்து தீதின்றி’வந்த பொருள்’ ஆகவே, நல்ல வழியில், அறநெறியில் ஈட்டுக பொருளை என்கிறார் திருவள்ளுவர். பொருள் ஈட்டுவதற்கு எத்துணையோ துறைகள் உள்ளன. விஞ் ஞானமும் நாகரிகமும் பெருகியுள்ள இந்த இருபதாம் நூற்றாண்டிலே, பொருள் ஈட்டுந்துறைகள் எண்ணிறந்தன என்றே கூறலாம். ஆனால் பொருள் ஈட்டுதற்குச் சிறந்ததும் முதன்மையானதும் ஆன துறை என்று திருவள்ளுவர் கருதுவது உழவுத் தொழிலையே. இஃது, அவர் காலத்துக்கு மட்டும் அன்று; இக்காலத்துக்கும் பொருந்தும். ‘இலம் என்று அசைஇ’ இருப்பாரைக் காணில் நிலம் என்னும் நல்லாள் நகும்’ என்கிறார். உழவின் சிறப்பை உழவு என்னும் அதிகாரத்தில் விளக்குகிறார். உழவுக்கு அடுத்தபடியாக, அதிகப்பொருள் வருவாய்க்குக் காரணமா யிருப்பது வாணிபம் என்று திருவள்ளுவர் கருதுகிறார். வாணிகத் துறை பலவாற்றானும் சிறப்புற்றுப் பெருகியுள்ள இக்காலத்தில், அதன் ஊதியத்தை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வாணிப முயற்சிதான் செல்வத்தை நிறையக் கொடுக்கிறது. ஆனால், அதிலும் அறவழியில் நின்று, கள்ள வாணிகம் இல்லாமல், செம்மை நெறியில் பொருள் ஈட்ட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்’ என்கிறார். இதனால், மற்றத்தொழில்கள் தாழ்ந்தவை என்று திருவள்ளுவர் கூறியதாகக் கருதவேண்டா. எந்தத் தொழிலாயினும் நன்றே. அறவழியில் பொருள் தேடவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. பொருட்செல்வத்தின் சிறப்பைக்காட்டி, அதனை ஈட்டுக என்று வற்புறுத்திக்கூறி, நல்வழியில் பொருள் ஈட்டுக என்று அறவழி காட்டிய வள்ளுவர், ஊக்கத்தோடும மனவுறுதியுடனும் விடாமுயற்சியோடும் பொருளைத் தேடுக என்று வற்புறுத்துகிறார். ஏனைய செயல்களுக்கும் ஊக்கமும் முயற்சியும் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வாறே, பொருள் தேடுவதிலும் ஊக்கமும் முயற்சியும் வேண்டும் என்கிறார். ‘முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்’. ‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை’. ‘மடியுளாள் மாமுகடி என்ப, மடியிலான் தாளுளாள் தாமரை யினாள்’. ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி மெய்வருந்தக் கூலிதரும்’ ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்றுபவர். அரியவென்றாகாத இல்லை, பொச்சாவாக் கருவியாற் போற்றிச்செயின். மடியுடையான் மாண்பயன் எய்தல், அரிது. உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம் என்று இவ்வாறெல்லாம் ஊக்கம் ஊட்டுகின்றார் திருவள்ளுவர். பொருள் ஈட்டும் துறையில் இறங்கியவர்களுக்கு முதல் வேண்டும். முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்று திருவள்ளுவர் உரைக்கிறார். அதனோடு, ஓர் எச்சரிக்கை கொடுக்கிறார். அவ்வெச் சரிக்கை யாது? ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார் என்பதுதான் அது. இதனை ஒவ்வொருவரும் பொன்னேபோல் போற்றி மனத்துட் கொள்ள வேண்டும். பிறகு, ஈட்டிய பொருளைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்கிறார். பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை என்பது அவர் பொன்மொழி. அற்றேம் என்று அல்லற்படுபவோ, பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர்? என்று கேட்கிறார். மேலும், அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும் என்று எச்சரிக்கை செய்கிறார். ஆகவே, ஊதாரித்தனமாக வீண்செலவு செய்யாமலும், தகுதிக்கு மேற்பட்ட ஆகுலச் (டம்பச்) செலவு செய்யாமலும், பொருளின் அளவுக்கு ஏற்ற முறையில் அளவறிந்து வாழ்க என்று அறிவுறுத்துகிறார். மேலும், பொருள் அழிவுக்குக் காரணமாகவுள்ள சிலவற்றைக் கூறி அவற்றைச் செய்யாதே என்று அறிவுறுத்துகிறார். பொருட் பெண்டிர் தொடர்பும், கள்ளுண்டலும், சூதாடலும் பொருள் அழிவுக்குக் காரணங்கள் என்று கூறுகிறார். இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப்பட்டார் தொடர்பு என்கிறார். (இதனைப் பொருட்பெண்டிர், கள்ளுண்ணாமை, சூது என்னும் அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.) பொருளைத் தேடுகிறவர்களுக்கும். தேடிய பொருளைப் போற்று கிறவர்களுக்கும் இவை கூடா என்று கூறுகிறார். அன்றியும், மனைவி சொற்படிகேட்டு அவளுக்கு ஏவல் செய்யும் சுய அறிவு அற்றவ னுக்கும் பொருள் செய்யும் முயற்சியும் ஏனைய நற்செயல்களும் செய்ய இயலாது என்கிறார். பின்னர், ஈட்டிப் போற்றிய பொருளை அறம் செய்க என்று திருவள்ளுவர் கூறுகிறார். அஃதாவது, ஏழைமக்களுக்கு, இல்லாதவர் களுக்குப் பொருளை உதவவேண்டும் என்கிறார். என்னை? போற்றுக பொருளை, பொருளாட்சி போற்றாதார்க்கில்லை என்று கூறிய வள்ளுவர், அதனைத் தானதருமம் செய்யவேண்டும் என்கிறாரே! தான தருமம் செய்வத பொருளைப் போற்றுவது ஆகுமா? செல்வம் சென்று விடும் அல்வா? என்ற கேள்விகள் எழுகின்றன. பொருளைத் தேடிச் சேர்ப்பது அதனைச் சேமித்துப் பாதுகாத்தற்காக அல்ல; அதனைத் தக்கவழியில் பயன்படுத்துதற்கே. மனிதவாழ்க்கை மிருகவாழ்க்கை அன்று. தானும் மற்றவர்களும் நன்கு வாழ்வதற்கு ஒவ்வொருவரும் உதவி செய்துகொள்வதே மக்கள் சமூகத்தின் உயரிய பண்பி- பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலைமையான அறம். பகுத்துண்டு வாழவேண்டும் என்பதைத் திருவள்ளுவர் திருக்குறளில் பல இடங்களில் வற்புறுத்திக் கூறுகிறார். பொருளாதாரத்துறையிலே மக்கள் ஒரு தன்மைத்தாக இருக்கவில்லை. பலதரமாகக் காணப்படுகின்றனர். இவர்களை முக்கியமாக நான்கு பிரிவாகப் பிரிக்கிறார் திருவள்ளுவர். இரவலர், தமது வாழ்க்கைக்கு மட்டும் போதுமான வருவாயுடையவர், சிறிதுபொருள் உள்ளவர், பெருஞ்செல்வர் என நான்கு வகையினர். இந்நான்கு வகையினரைத் திருவள்ளுவர் குறிப்பாகக் கூறியுள்ளார். திருவள்ளுவர் குறிப்பாகக் கூறிப்போந்த இதனை, திருக்குறள் உரையாசிரியர்களில் ஒருவராகிய மணக்குடவர் தமது உரையிலே நன்கெடுத்தோதுகிறார். திருக்குறள் இல்லற இயலின் தொடக்கத்தில் மணக்குடவர் கூறும் விளக்கத்தில் இதனைக் காணலாம். அதுவருமாறு: “காருகத்த (இல்லற) இலக்கணங் கூறுவார் நல்கூர்ந்தார், நல்குரவினீங்கினார், செல்வர், வள்ளியோர் என்னும் நால்வரினும் அன்புடைமை முதலாக ஒழுக்கமுடைமை ஈறாக நல்கூர்ந்தாரார் செய்யப்படுவன எழும், பிறனில் விழையாமை முதலாகத் தீவினை அச்சம் ஈறாக இவராற் றவிரப்படுவன ஏழும் பதினான்கதிகாரத்தாற் கூறி, இவற்றோடுங்கூட ஒப்புரவறிதல் நல்குரவினீங்கினாரால் செய்யப்படும் என்று கூறி, இவற்றோடுங்கூட ஈதல்செல்வரால் செய்யப்படுமாறு கூறி, இவற்றோடுங் கூடப் புகழ்வள்ளியோரால் செய்யப்படுமென்று கூறினாராகக் கொள்ளப்படும்.” இவ்வாறு பொருளாதாரத் துறைப்படி மக்களை நான்கு பிரிவாகப் பிரிக்கிறார். மேலும் இவ்வுரையாசிரியர் வேறு இடங்களிலும் இதனை விளக்கிக் கூறியுள்ளார். ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தின் தொடக்கத்தில், “ஒப்புரவறிதலாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இலரெனினும் தம்மள விற்கும் வருவாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத்தல்” என்று எழுதியுள்ளார். இதில், நல்கூர்ந்தார், நல்குரவின் நீங்கினார் என்னும் இருபகுதியாரைக் கூறியது காண்க. இவ்வுரை யாசிரியர் ஈகை என்னும் அதிகாரத்தின் தொடக்கத்தில், ஈகையாவது இல்லென இரந்துவந்தார் யாவர்க்கும் வரையாது கொடுத்தல் எனச் செல்வரைக் குறிக்கிறார். புகழ் என்னும் அதிகாரத்தில் “புகழாவது புகழ் படவாழ்தல் என்று பெருஞ் செல்வராகிய வள்ளியோரைக் குறிப்பிடுகிறார். (இத்தகைய பாகுபாடு இன்றும் மக்கள் சமுதாயத்தில் காணப்படுகிறது.) ஆகவே, மக்கள் வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் ஒழுக்கமும் நிலைபெற வழிவகுத்த திருவள்ளுவர், பொருள் பெற்றோர் தத்தம் பொருளின் அளவுக்கு ஏற்ப அறம் செய்யவேண்டும் என்று கூறுகிறார். அறம் என்பது சமுதாய ஊழியம் செய்தல்; உள்ளவர் இல்லாதவருக்குத் தத்தம் சக்திக்கேற்ப உதவி செய்தல். திருவள்ளுவர் கூறுவதைப் பாருங்கள்; ‘ஆற்றின் அள வறிந்து ஈக, அது பொருள் போற்றி வழங்கும் நெறி என்று கூறுகிறார். இதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஊன்றிப்படித்து உணரவேண்டும். ஈகையாகிய சமூகத் தொண்டினையும் செய்ய வேண்டும்; பொருளையும் போற்றவேண்டும் என்று போற்றிவழங்கும் நெறியை நுட்பமாகக் கூறுகிறார். எனவே, திருவள்ளுவர் பொருளைப் போற்றவேண்டும் என்று சொல்லி, பொருளை இல்லாதவர்க்கு உதவவேண்டும் என்று கூறியது முன்னுக்குப் பின் முரண்படக்கூறியது அன்று. பொருளை இறுகப்பிடித்துக் கருமித்தனமாய் இராதே; ஊதாரித் தனமாய் தானம் செய்து ஏழ்மைப்படாதே என்று கூறுகிறார். அஃதாவது, பொருளை அளவோடு பகிர்ந்துகொடுத்து வாழவேண்டும் என்கிறார். இதற்கு இக்காலத்தில் சமதர்மம் (ளுடிஉயைடளையஅ) என்று பெயர் கூறுகிறார்கள். திருவள்ளுவர் கூறிய சமதர்மம் (பகிர்ந்து கொடுத்து வாழ்தல்) என்பதற்கும், இக்காலத்தில் கூறப்படுகிற சமதர்மத்திற்கும் வேறுபாடு என்னவென்றால், திருவள்ளுவர், ஒவ்வொருவரும் தாமாகவே, தத்தம் பொருளைத் தமது பொருள் அளவுக்கு ஏற்ப இல்லாதவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கவேண்டும் என்கிறார். இப்போதைய சமதர்மக்காரர், மக்கள் தம்மிடமுள்ள பொருளைத் தாமாகவே பகிர்ந்துகொடுக்க மாட்டார்கள்; அரசாங்கத்தார் சட்டம்செய்து பொருளைப் பகிர்ந்து வழங்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே திருவள்ளு வருக்கும் இப்போதைய சமதர்மக் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு. ஆனால், அடிப்படையான அமைப்பால், அஃதாவது பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்னும் கொள்கையில் இருவருக்கும் முரண்பாடு இல்லை. பொருள் உள்ளவர் அஃது இல்லாதவர்க்கு அறம் (உதவி) செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் எவ்வாறு வற்புறுத்து கிறார் என்பதைக் காண்போம். “காக்கை கரவா கரைந்துண்ணும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள” என்று கூறிப் பொருளைப் பகிர்ந்து கொடுக்கச் சொல்கிறார். ஈயாமல் இறுகப் பிடிக்கும் கஞ்சத்தன மாகிய கருமித்தனம் கூடாது என்று வற்புறுத்துகிறார். “பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று” என்றும், “அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம், மிகநலம் பெற்றாள் தமியள்மூத்தற்று” என்றும் கூறுகிறார். மேலும், சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் என்றும் அளவளாவில்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று என்று விளக்குகிறார். இல்லாதவர்க்கு ஈயும் பண்பில்லதவனிடம் உள்ள செல்வமானது, நல்ல இனிய பாலைத் தீயபாத்திரத்தில் வைத்துக் கெடுத்து உதவாமற் செய்வதற்குச் சமானம் என்று அறிவுறுத்துகிறார். நச்சப்படாதவன் செல்வம், ஊர் நடுவில் நச்சுமரம் காய்த்துப் பழுத்ததற்குச் சமானம் என்றும், நயன் உடையவனிடத்தில் உள்ள செல்வ மானது உள்ளூரிலே பயன்படுகிற நல்ல மரம் பழுத்து உதிர்வதற்குச் சமானம் என்றும் உவமை காட்டி விளக்குகிறார். மேலும், “ஊருணி நீர் நிறைந்தற்றே, உலகவாம் பேரறி வாளன் திரு” என்று பகிர்ந்து கொடுத்து வாழ்வதன் சிறப்பை நன்கெடுத்தோதுகிறார். அறம் செய்வ திலும் (பகிர்ந்து கொடுப்பதிலும்) அறிவுடைமை வேண்டும், பாத்திரம் அறிந்து பிச்சையிடவேண்டும் என்பதையும் கூறுகிறார். சோம்பேறிகளுக்கும், ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களுக்கும், தகுதியற்றவர்களுக்கும் உதவி செய்வது முட்டாள்தனம்; பேதையர் செயல் என்று எச்சரிக்கை செய்கிறார். “அறிவுஇலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் இல்லை; பெறுவான் தவம் என்றும், “ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை” என்றும் கூறுவதன் மூலம், அறம் செய்வதிலும் அறிவுடைமை வேண்டும் என்று விளக்குகிறார். “தாளாற்றித் தந்தபொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” என்றும்; வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்றும், அற்றாற்கு ஒன்று ஈவதே ஈகை, அற்றார் அழிபசி தீர்த்தல் என்றும் இதனை மேன்மேலும் வற்புறுத்துகிறார். பொருளை நல்லவழியில் ஈட்டி, அதனைத் தானும் தன் சுற்றமும் சூழ துய்த்து இனிய வாழ்வு வாழ்ந்து, மற்றவர் வாழ்க்கைக்கும் உதவவேண்டும் என்பதே திருவள்ளுவர் கருத்து ஆகும்.” *** 26. ஜைன மதமும் திருக்குறளும்* திருக்குறளிலே ஜைன மதத்தைப் பற்றிய கருத்துகளும் இருக்கின்றன. மற்றச் சமயத்தாருக்குத் திருக்குறளிலே காணப்படுகிற கொள்கையைவிட, அதிக உறுதியான ஜைன சமயக் கொள்கைகள் திருக்குறளிலே இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள் கடவுள் வாழ்த்திலேயே ஜைன சமயத்தின் கடவுட் கொள்கைகள் விளக்கமாகக் காணப்படுகின்றன. அவைகளிலே முக்கியமாக நான்கைமட்டும் கூற முயலுவோம். திருக்குறள் கடவுள் வாழ்த்து, முதற் குறளிலே திருவள்ளுவர் ஆதிபகவனைக் கூறுகிறார். ஆதிபகவன் என்பவர், ஜைன சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆவார். ரிஷபநாதர் என்பது அவருடைய இயற்பெயர். இவர்தான் ஜைன சமயத்தின் முதல் தீர்த்தங்கரர். ஜைன மதத்தை முதன் முதலாக உண்டாக்கியவரும் இவரே. ஆகையினாலே, ஜைனர்கள் இவரை ஆதிநாதர் என்றும், ஆதிபகவன் என்றும் கூறுகிறார்கள். திருக்குறள் கடவுள் வாழ்த்திலே முதன்முதலாக ஆதிபகவன் வணக்கம் கூறுப்படுகிறது. அந்தக் குறள், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது. இந்தக் குறள் ரிஷபதேவரின் பெயராகிய ஆதிபகவன் என்பதைக் கூறுவது காண்க. பொறிவாயில் ஐந்தவித்தான் என்று திருக்குறளில் கூறப் படுகிறவரும் சமண சமயத் தெய்வம் ஆகம். அனாதியான ஒரு பரம் பொருள், உலகத்தையும் உயிர்களையும் படைத்த ஒரு மூலக்கடவுள் உண்டு என்பது ஜைன சமயக் கொள்கை அன்று. ஐம்பொறியும் ஐம் புலனும் உடைய மனிதனாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, ஐம்பொறி களையும் ஐம்புலன்களையும் அடக்கித் தவம்செய்து, வினைகளை அறுத்துக் கடவுள் நிலையை அடைந் தவர்தான் ஜைன சமயத்தின் தெய்வம். அவர்தான் அருகக்கடவுள் என்றும், தீர்த்தங்கரர் என்றும் கூறப்படுகிறார். மற்ற மதங்களில் கூறப்படுகிற, அனாதியாகிய, பொறி வாயில்கள் இல்லாதவரான பரம்பொருள் ஜைன சமயத்துக்கு உடன் பாடு இல்லை. ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் பெற்றிருந்து, பிறகு தவத்தினாலே ஐம்பொறிவாயில்களை அவித்து, பிறவித் துன்பத்தை நீக்கி, வீடுபேறு பெற்ற தீர்த்தங்கரர் அருகக் கடவுள் எனப்படுவார். இவர்தான் பொறிவாயில் ஐந்தைஅவித்துக் கடவுள் நிலையை அடைந்தவர். இவரைத்தான் திருக்குறள், “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” என்று கூறுகிறது. மேலும், மலர்மிசை ஏகினான் என்பதும், அறவாழி அந்தணன் என்பதும் ஜைனக் கடவுளையே குறிக்கின்றன. மலர்மிசை ஏகினான் என்பது ஜைனக் கடவுளுக்கு உரிய முக்கியமான சிறப்பாகும். ஜைனசமயக் கடவுளான அருகப் பெருமான் நடக்கும்போதெல்லாம் அவருடைய திருவடிகளைத் தாமரை மலர்கள் தாங்குகின்றன என்பது ஜைனசமயக் கொள்கை. இதை ஜைனசமய நூல்களில் நெடுகக் காணலாம். இந்த ஜைனசமயக் கருத்தைத் திருக்குறள் கூறுகிறது: “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” என்னும் குறளிலே, மலர்மிசை ஏகினான் என்று கூறப்படுவது ஜைனசமயக் கருத்தாகும். அறவாழி (தரும சக்கரம்) என்பதும் ஜைனசமயத்துக்கு உரிய முக்கியக் கொள்கையாகும். ஜைன சமயத்தவரின் அருகக் கடவுள் (தீர்த்தங்கரர்) தான் போகிற இடங்களிலெல்லாம் ஜைன தருமத்தைப் போதிக்கிறார் என்பதும், அவர் போதனையைக் கேட்கிற மக்கள் எல்லோரும், அவர்கள் வெவ்வேறு பாஷையைக் பேசுகிறவராக இருந்தாலும், அவர் கூறுகிற ஜைன தருமத்தை நன்றாகத் தெரிந்து கொள்கிறார்கள் என்பதும் ஜைன சமயக் கொள்கை. அருகப்பெருமான் போதிக்கிற ஜைனதருமத்திற்கு - உபதேசத்திற்கு தருமச் சக்கரம் என்றும், அறவாழி என்றும் பெயர். அதனால்தான், ஜைனக் கடவுளாகிய அருகப்பெருமான் (தீர்த்தங்கரர்) அறவாழி அந்தணன் என்று கூறப்படுகிறார். இது ஜைனக் கொள்கைதான் திருக்குறள், “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது” என்று கூறுகிறது. எனவே, அறவாழி அந்தணன் என்று திருக்குறள் கூறுவது ஜைனக் கடவுள் என்பது ஐயமற விளங்குகிறது. இது பற்றி இந்நூலில் வேறு இடத்திலும் கூறியுள்ளேன். திருக்குறளில் ஜைனசமயக் கடவுள் கூறப்பட்டிருப்பதைக் காட்டினோம். இனி, ஜைன சமயத்தின் முக்கியக் கொள்கை திருக் குறளில் இருப்பதைக் காட்டுவோம். அஹிம்சைதான் ஜைன சமயத்தின் முக்கியமான கொள்கை; அஹிம்சையே ஜைனமதத்தின் உயிர்த்தத்துவம். “அஹிம்சா பரமோதர்மஹ” என்பதும், “தயா மூலதர்மம்” என்பதும் ஜைனசமயத்தின் முக்கியமான, முதன்மையான தத்துவம். அஹிம்சை என்னும் சொல், பல கருத்துகளை உள்ளடக்கி யுள்ள வார்த்தை. அதற்கு ஒரு வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியாது. அன்புடைமை, தீங்கு செய்யாமை, கொல்லாமை முதலிய கருத்துகளைக் கொண்டது அஹிம்சை என்னும் சொல். இந்தக் கருத்து களைத் திருக்குறள் சில அதிகாரங்களினால் விளக்குகிறது. இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலிய அதிகாரங்களின் கருத்துகள் சேர்ந்ததுதான் அஹிம்சை என்பதன் உண்மைப் பொருள். கொல்லாமைக்கு அடுத்தபடியாக உள்ள ஜைனதருமம் பொய்யாமை என்பது. - அதாவது, மெய் பேசவேண்டும் என்பது. இந்த இரண்டு முக்கிய தருமத்தை, “ஒன்றாக நல்லது கொல்லாமை, மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்று திருக்குறள் கூறுகிறது. கொல்லாமை, பொய்யாமை இரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டது ஜைன சமயம். ஆனால், கொலையைத் தடுக்கக்கூடுமானால், ஓர் உயிரைப் போக்குவதைத் தடுக்க வாய்ப்பு ஏற்படுமானால் அப்போது பொய் சொல்லியாகிலும் கொலையைத் தடுக்கலாம் என்பது ஜைனமதக் கொள்கை. அதாவது, ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்குமட்டும் பொய் சொல்லலாம். இதையும் திருக்குறள் கூறுகிறது. “பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்று திருக்குறள் கூறுகிறது. இதனால், திருக்குறள் ஜைன சமயத் தின் கொல்லா விரதத்தை, அஹிம்சையை வற்புறத்துவது காண்க. விதி, வினை, ஊழ் என்னும் நம்பிக்கையை மற்ற மதங்களைவிட அதிகமாக ஜைனசமயம் போற்றுகிறது. ஜைன சமய நூல்களிலெல்லாம், ஊழின் முக்கியத்துவத்தை பற்றி நெடுகக் காணலாம்.ஊழ்வினையில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஜைன சமயம், ஆள்வினையுடைமையாகிய முயற்சி யுடைமையிலும் உறுதியான நம்பிக்கை உள்ளது. உயிர்களின் ஊழ்வினையை மாற்றி நன்மையையோ தீமையையோ கொடுக்க ஜைன சமயக் கடவுளால் முடியாது. அவரவர் முயற்சியினாலேயே, அவரவர் நல்ல கதியையும் தீய கதியையும் அடையவேண்டும் என்பது ஜைனசமய நம்பிக்கை. இந்த ஜைனமதக் கொள்கையைத் திருக்குறளும் கூறுகிறது. ‘ஊழ்’ என்னும் அதிகாரமும், ‘ஆள்வினையுடைமை’ (முயற்சி என்னும் அதிகாரமும் திருக்குறளில் கூறப்படுவது ஜைனமதக் கருத்தைத் தழுவியதாகும். “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும்” என்று ஊழைப் பற்றிக் கூறிய திருக்குறள், “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்” என்னும் ஆள்வினையுடைமையைப் பற்றியும் கூறுகிறது. கடைசியாக இதைச் சொல்லவேண்டும். எல்லா மதத்தாரும் திருக்குறளைத் தத்தம் நூலென்று கூறுகிறார்கள். போற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஜைனரைத் தவிர மற்ற மதத்தினர் யாரும் திருக்குறள் எங்கள் வேதம், எங்கள் ஓத்து என்று கூறவில்லை. நீலகேசி என்னும் ஜைன நூலிலே, மொக்கவாதச் சருக்கத்தில், 60ஆம் செய்யுள் உரையிலே, சமய திவாகரவாமன முனிவர் என்னும் ஜைனர், “பொய்ம்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்பது எம் ஓத்து (எங்கள் வேதம்) என்று எழுதுகிறார். இதுபோன்று, திருக்குறளை எங்கள் வேதம், எங்கள் ஓத்து என்று எழுதிய வேறு மதத்தினர் யாரெனும் உண்டா? சொல்லுங்கள். *** 27. ஒரு குறளுக்குப் பௌத்த விரிவுரை* மனித வாழ்க்கையில் இல்லறத்தை மேற்கொண்ட கணவனும் மனைவியும் ஒத்த மனத்தினராய்க் கூடி அடைகிற இன்பம் சிறந்தது. ஐம்பொறிகளின் வாயிலாக ஐம்புலனாலும் அடையப்படுவது இந்த இன்பம். இந்த இன்பத்தைச் சிற்றின்பம் என்று கூறுவார்கள். அன்புடைய மனைவியும் கணவனும் ஒத்த மனத்தினராய் கூடித் துய்க்கும் இன்பம், ஐம்பொறி இன்பங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில் இந்த இன்பத்தை நன்கு கூறுகிறார், கணவன் ஒருவன் தான் அடைந்த இன்பத்தைத் தன்னுடைய மனைவியின் மேல் சார்த்திக் கூறுவதாகத் திருவள்ளுவர் ஒரு குறட்பாவைக் கூறியுள்ளார். அந்தக் குறட்பா இது. “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டோடி கண்ணே உள.” கண்ணால் கண்டும் காதால் கேட்டும் வாயினால் சுவைத்தும் மூக்கினால் முகர்ந்தும் உடம்பினால் உணர்ந்தும் அடையப்பெறு கின்ற ஐம்புல இன்பம் ஒள்ளிய தொடியணிந்த இந்த மங்கை யிடத்தில் உள்ளன என்பது இந்தக் குறளின் பொருள். திருவள்ளுவர் கூறிய இதே கருத்தை இவருக்குப் பின்னர் சில நூற்றாண்டு கழித்து இருந்தவரான நம்மாழ்வார் தம்முடைய திருவாய் மொழியில் கூறுகிறார். “கண்டு கேட்டு உற்று மோந்து உண்டுழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவிலாச் சிற்றின்பம்” என்று நம்மாழ்வார் கூறுகிறார்.* (**திருவாய் மொழி. 4-ஆம் பத்து. 9-ஆம் திருமொழி. 10-ஆம் செய்யுள்) இதை இவர் அளவிலாச் சிற்றின்பம் என்று கூறுவது காண்க. இந்த ‘அளவிலாச் சிற்றின்பம்’ ஆண்மகனுக்கு மட்டுமா கிடைக் கிறது? அவன் அனுபவித்த அளவிலாச் சிற்றின்பம் அவளுக்கும் உண்டன்றோ? ஆண் மகன் அடைகிற அளவிலா ஐம்புல இன்பத் துக்கு பெண் மகள் நிலைக்களமாக இருப்பது போலவே. பெண் மகள் அடைகிற அளவிலா ஐம்புல இன்பத்துக்கு ஆண் மகன் நிலைக் களமாக இருக்கிறான் என்பது சொல்லாமலே அமையும். இது பௌத்த மத நூலில் தெளிவாகவும் விரிவாகவும் கூறுப்படுகிறது. திருவள்ளுவர் வாழ்ந்திருந்த காலத்துக்கு சில நூற்றாண்டுக்கு முன்பு இருந்தவர் பகவன் புத்தர் அவர், சிற்றின்பம் பொருளாகக் கூறியுள்ள அறிவுரை இந்தக் குறட்பாவுக்கு நல்லதோர் விரிவுரை போலக் காணப்படுகிறது. பௌத்த மத வேதமாகிய திரிபிடகத்தில் சூத்திரபிடகம் என்பதும் ஒன்று. சூத்திரபிடகத்தில் அங்குத்தரநிகாயம் என்னும் பகுதியில் ஏக நிபாதம் என்னும் பிரிவில், ஐம்புலன்களின் வாயிலாக ஆணும் பெண்ணும் அடைகிற சிற்றின்பம் விளக்கப்படுகின்றது சாவத்தி (சிராவத்தி) நகரத்திலே அநாத பிண்டிகனுடைய தோட்டத்திலே ஜேதவன ஆரா மத்திலே பகவன் புத்தர் தங்கியிருந்தபோது ஒரு நாள் அவர் தம் முடைய பிக்குச் சங்கத்துக்கு இது பற்றிக் கூறினார். அவர் கூறியது இது. துறவிகளே! ஆணின் மனத்தை மயக்கிக் கவர்ந்து கொள்கிற பெண்ணின் உருவம் போன்ற வேறு உருவத்தைக் காண்பது இல்லை, பெண்ணின் உருவம் ஆண் மகனுடைய மனத்தைக் கவர்ந்து ஈர்க்கிறது. துறவிகளே! ஆண் மகனின் மனத்தை மயக்கிக் கவர்ந்து கொள்கிற பெண்ணின் குரல் போன்ற வேறு எந்தக் குரலையும் காணவில்லை. பெண்ணின் குரல் ஆண் மகனுடைய மனத்தைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! ஆணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற பெண் ணினுடைய மனம் போன்று வேறே எந்த மனத்தையும் கண்டது இல்லை. பெண்ணினுடைய மனமானது ஆணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! ஆண் மகனின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற பெண்சுவை போன்று வேற இனிமையான சுவையைக் கண்டது இல்லை. பெண் சுவை ஆணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! ஆண் மகனின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற பெண்ணின் ஊறுணர்ச்சியைப்போல (உடலுணர்ச்சியைப் போல) வேறு சிறந்த உடலுணர்ச்சியைக் கண்டது இல்லை. பெண்ணின் ஊறுணர்ச்சி ஆண் மகனின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! பெண்ணின் மனதைக் கவர்ந்து கொள்கிற ஆண் மகனின் உருவம் போன்று வேறு எந்த உருவத்தையும் காணவில்லை. ஆண் உருவம் பெண்ணின் மனசைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிற ஆணின் குரல் போன்று வேறு குரலையும் காணவில்லை. ஆணின் குரல் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து விடுகிறது. துறவிகளே! பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிற ஆணின் மணம் போன்ற வேறு மணத்தைக் காணவில்லை. ஆணின் மணம் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிற ஆணின் சுவை போன்று வேறு சுவையைக் காணவில்லை. ஆணின் சுவை பெண்ணின் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கிறது. துறவிகளே! பெண்ணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற ஆணின் ஊறு உணர்ச்சியைப் போன்று வேறு உடலுணர்ச்சியைக் காணவில்லை. ஆணின் ஊறுணர்ச்சி பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிறது. இவ்வாறு ஆண் பெண்களின் ஐம்புலக் கவர்ச்சிகளைப் பற்றி விளக்கிய பகவன் புத்தர் ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று பிக்குகளுக்குக் கூறினார். இவ்வாறு ஆண் பெண்களுடைய ஐம்புல உணர்ச்சி ஒன்றை யொன்று ஈர்த்துக் கொள்வதை அங்குத்தரநிகாயத்தின் ஏக பாதம் முதல் அதிகாரத்தில் கூறுகிறது. சங்க காலத்திலிருந்த திருவள்ளுவர் ஐம்புல இன்பத்தைப் பற்றிக் கூறியதை அவருக்கு முன்பு சில நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பகவன் புத்தர் விரிவாகக் கூறியுள்ளார். பகவன் புத்தர் கூறிய இந்தத் தெளிவுரை. “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” என்னும் குறட்பாவுக்குச் சிறந்த உரையாக அமைந்திருக்கிறது. மேலும், காதலன் ஒருவன் தான் பெற்ற சிற்றின்பம் தன் காதலியிடம் அமைந்து இருந்தது போலத் திருவள்ளுவர் கூறியதை உடன்பட்டுக் கூறுகிற பகவன் புத்தர் காதலி ஒருத்தி தான் பெற்ற சிற்றின்பம் தன் காதலனிடம் அமைந்து கிடப்பது போலவும் கூறியிருப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது. *** 28. முதலாழ்வார், திருமழிசையாழ்வார் கால ஆராய்ச்சி* பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இம்மூவரும் முதலாழ்வார் எனப்படுவர். இம் மூவரும் ஒரே காலத்தில் இருந்தவர் கள். இவர்கள் காலத்தில் இருந்த திருமழிசையாழ்வார் இவர்களுக்கு இளையவர். ஆனால், நால்வரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பதற்கு இவர்களின் வரலாறு சான்று கூறுகிறது. வைணவ அடியார்க ளான இவர்கள், சைவ அடியார்களான நாவுக்கரசர், ஞான சம்பந்தர், சிறுத்தொண்டர், முருகநாயனார் முதலிய சைவ நாயன்மார்கள் வாழ்ந் திருந்த அதே காலத்தில், அஃதாவது மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர்கள். இந்த ஆழ்வார்களின் காலத்தை எளிதாகக் கண்டுகொள்ள இவர்கள் நூல்களிலே சான்றுகள் இல்லை. ஆனால், பூதத்தாழ்வார் தமது செய்யுளில் மாமல்லபுரத்தைத் குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பைக்கொண்டு, இவரும் இவருடனிருந்த மற்ற ஆழ்வார்களும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில், மாமல்லன் நரசிம்ம வர்ம பல்லவன் காலத்தில், இருந்தவர்கள் என்று தீர்மானிக்கலாம். இதனை ஆராய்வோம். பூதத்தாழ்வார் பாடிய திருவந்தாதியில், “தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால் தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும் மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே ஏவல்ல எந்தைக்கு இடம்.” என்னும் செய்யுளைப்பாடியுள்ளார்.1 இச் செய்யுளில் மாமல்லபுரத்தை மாமல்லை என்று கூறு கிறார். பூதத்தாழ்வார் பிறந்ததும் மாமல்லபுரந்தான். மாமல்லபுரம் இப்போது மகாபலிபுரம் என்று பெயர் வழங்கப்படுகிறது. மாமல்லை என்னும் மாமல்லபுரம் பல்லவ அரசர்களின் துறைமுகப்பட்டினம். ஆகவே இங்குப் பல்லவ இளவரசர்கள் வாழ்ந்திருந்தார்கள். தந்தையாகிய மகேந்திரவர்மன் காலத்தில், இளவரசனாயிருந்த நரசிம்மவர்மன் இந் நகரத்தில் வாழ்ந்திருந் தான். நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயரும் உண்டு. இவன் காலத்துக்கு முன்பு இத் துறைமுகப்பட்டினத்துக்கு மாமல்லபுரம் என்னும் பெயர் இல்லை. வேறு பெயர் இருந்தது. மாமல்லன் காலத்தில் இவ்வூருக்கு இவன் பெயர் சூட்டப்பட்டு மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டது. மாமல்லபுரம் மாமல்லை என்று சுருக்கமாக வழங்கப்பட்டது. தமது செய்யுளிலே மாமல் புரத்தைக் குறிப்பிடுகிற படியால், பூதத்தாழ்வார் மாமல்லன் காலத்திலாவது அவன் காலத்திற்குப் பின்னராவது வாழ்ந்திருக்க வேண்டும். ழூவோ தூப்ராய் அவர்கள் தமது ‘பல்லவர் பழமை’ என்னும் நூலிலே, நரசிம்வர்மன் தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரினால் மாமல்லபுரத்தைப் புதிதாக உண்டாக்கினான் என்று கூறுகிறார்.2 இவர் கூறுவதுபோல மாமல்லன் புத்தம்புதிதாக இவ்வூரை உண்டாக்கவில்லை. இவ்வூரின் பழைய பெயரை மாற்றித் தன் பெயரைச் சூட்டினான். அரசர்கள், ஊரின் பழைய பெயரை மாற்றித் தமது பெயரைச் சூட்டுவது மரபு. இதற்குச் சாசனங்களில் பல சான்றுகள் உள்ளன. மாமல்லபுரம் சங்ககாலம் முதல் வேறு பெயருடன் இருந்து வந்ததென்றும், பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிற நீர்ப்பெயற்று அல்லது நீர்ப்பெயர்த்து என்பது அதன் பழைய பெயர் என்றுங் கூறுவர்.3 நீர்ப்பாயல் என்று இவ்வூருக்குப் பெயர் இருந்ததென்றும் அப் பெயரையே பிற்காலத்தவர் ஜலசயனம் என்று வழங்கினார்கள் என்று கருதுவோரும் உளர். கடல்மல்லை என்பது இதன் பழைய பெயர் என்றும், பிறகு மாமல்லன் தன் பெயரை இட்டு மாமல்லபுரம் என்று வழங்கினான் எனக் கூறுவோரும் உளர். இதன் பழைய பெயர் எதுவாக இருந்தாலும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த முதலாம் நரசிம்வர்மனால் மாமல்லபுரம் என்னும் புதியபெயர் இடப்பட்டதென்பதில் சிறிதும் ஐயமில்லை. பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் பிறந்தவர் என்று சொல்லப்படுகிறபடியாலும், அவ்வூரை மாமல்லை என்று அவர் தமது செய்யுளிலே கூறுகிறபடியாலும், அவ்வூருக்கு மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்ட பிறகு இருந்தவராதல் வேண்டும். ஏனைய ஆதாரங்களை ஒத்திட்டுப் பார்க்கும்போது, பூதத்தாழ்வார், நரசிம்மவர்மன் காலத்திலே, மாமல்லபுரம் என்னும் பெயர் ஏற்பட்ட காலத்திலேயே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே, பூதத்தாழ் வாரும் அவருடன் நண்பர்களாக இருந்த பொய்கையாழ்வார் பேயாழ்வார் திருமழிசையாழ்வார் ஆகிய ஏனைய மூன்று ஆழ்வார்களும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்திருந்தவர் என்பது தெரிகிறது. இதே கருத்தைத் திரு. கோபி நாதராயரும் கொண்டுள்ளார்.4 பூதத்தாழ்வார் தாம் பிறந்த மாமல்லபுரத்தை மாமல்லை என்று வெளிப்படையாகக் கூறியிருக்க, மு. இராகவைங்கார் அவர்கள் தமது ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில், மல்லை என்பதை மா என்னும் அடைமொழியுடன் ஆழ்வார் கூறினார் என்று பண்டிதர் முறையில் வலிந்து பொருள் கூறுகிறார். அவர் கூறுவது இது: “மல்லை என்றும் அவ்வூர் ஆழ்வார் திருவாக்குகளில் வழங்கு கின்றது. ‘மாமல்லை கோவல்திற்குடந்தை’ என்று பூதத்தாழ்வார் அருளிய தொடருள் ‘மல்லை’ என்பதற்குக் கொடுக்கப்பட்ட விசேடணம்- “நீளோதம், வந்தலைக்கு மாமயிலை மாவல்லிக் கேணியான்” என்ற திருமழிசைப்பிரான் வாக்கிற்போல வந்த அடை சொல்லாகக் கொள்ளற் குரியதன்றி, மாமல்லபுரம் என்பதன் திரிபாகவே கொள்ளவேண்டும் என்னும் நியதியில்லை.”5 இவ்வாறு மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பதன் திரிபு அல்ல என்றும், மாமல்லை என்பதில் மா என்பது விசேடணம் (அடைமொழி) என்றும் வலிந்து பொருள் கூறுகிறார் அய்யங்கார். அப்படியானால், பூதத்தாழ்வார், “மாமல்லை மாகோவல் மாக்குடந்தை என்பரே” என்று கூறாமல், “மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே” என்று ஏன் கூறினார்? மல்லைக்குக் கொடுத்த மா என்னும் அடையைக் கோவலுக்கும் குடந்தைக்கும் ஏன் கொடுக்கவில்லை? இந்த ஐயம் அவருக்கும் ஏற்பட்டுப் பிறகு மாமல்லை என்பது மாமல்லபுரமாகத்தான் இருக்கவேண்டும் என்னும் முடிபுக்கு வருகிறார். அவர், அதே ஆழ்வார்கள் காலநிலை என்னும் நூலில் 32-ஆம் பக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “இவ்வாறு கடல்வளம் பெற்றிருந்த பண்டைத் துறைமுகப் பட்டினம், முதல் நரசிம்மவர்மனால் பின்பு புதுப்பிக்கப்பட்டு மாமல்லன் என்ற அவன் சிறப்புப்பெயரைப் பெற்றிருத்தலும், அதனால், கடன் மல்லை என்ற தன் பழம் பெயரேயன்றி, மாமல்லபுரம் என்ற புதுப் பெயரும் அதற்குப் பெரு வழக்காயமைந்திருத்தலும் கூடியனவே.” இவ்வாறு மாமல்லை என்பதற்கு மாமல்லபுரம் என்னும் பொருளை இவர் ஒப்புக்கொள்கிறார். இதனோடு நிற்கவில்லை. மாமல்லன் நரசிம்மவர்மனுடைய தந்தையாகிய முதலாம் மகேந்திர வர்மனுக்குச் சத்துருமல்லன் என்னும் சிறப்புப்பெயர் உண் டென்பதைக் கூறி, சத்துருமல்லன் என்னும் பெயரால் மல்லை என்னும் பெயர் வந்திருக்கக்கூடும் என்று குறிப்பாகக் கூறுகிறார்.6 இவர் குறிப்பாகக் கூறுவது போல இவ்வூருக்குச் சத்துருமல்லபுரம் என்ற பெயர் வழங்கியதாக இதுவரையில் சாசனங்களிலும் இலக்கியங் களிலும் சான்று கிடையாது. ஆகவே, மாமல்லை என்பது மாமல்லபுரம் என்பது உறுதியாகிறது. மேலும், அய்யங்கார் அவர்கள் மாமல்லபுரத்து ஆதிவராகர் சந்நிதியுள் மகேந்திவர்மனுக்கும் அவன் தந்தை சிம்மவிஷ்ணுவுக் கும் சிலையுருவங்கள் உள்ளன என்று கூறி அதனால் அக்கோயில் நரசிம்மவர்மன் காலத்துக்கு முன்பே ஏற்பட்ட தென்று கூறுகிறார். இதுவும் தவறு. ³ ஆதிவராகர் சந்நிதியுள், நரசிம்மவர்மன் காலத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட சிங்கத்தூண்கள் இருப்பதனால், அக்கோயில் நரசிம்மன் காலத்துக்கு முற்பட்டதல்ல. எனவே, பூதத்தாழ்வார் மாமல்லை யாகிய மாமல்ல புரத்தைக் கூறுகிற படியினாலே, அப்பெயர் ஏற்பட்ட மாமல்லன் நரசிம்மவர் மன் காலத்தில் அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவராதல் வேண்டும். மற்ற ஆதாரங்களைக் கொண்டு பார்க்கிறபோது, நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவராகத் தெரிகிறார். ஆகவே அவர் காலத்தில் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற மூன்று ஆழ்வார்களும் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஐஐ பூதத்தாழ்வார் காலத்தை மேலே ஆராய்ந்து, அவர்காலம் நரசிம்மவர்மன் காலம் என்று கூறினோம். அவருடன் அவர் காலத்தில் இருந்த பொய்கையாழ்வாரைப் பற்றிய சில ஐயங்களைப் பற்றி இங்கு ஆராய்வோம். நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பொய்கை ஆழ்வாரும், கடைச்சங்ககாலத்தின் இறுதியில் இருந்த களவழி நாற்பது பாடியவரும் ஆன பொய்கையாரும், ஒருவரே என்றும், ஆகவே பொய்கையாழ்வார் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்தவர் என்றும் சிலர் கருதுகிறார்கள். பொய்கை என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றைமட்டும் சான்றாகக்கொண்டு இவ்வாறு கூறுகின்றனர். இது பொருந்தாது. சங்ககாலத்தின் கடைசியில் இருந்த பொய்கையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்னும் சேர அரசனுடைய அவைப் புலவர். இவரே கோக்கோதை மார்பன் என்னும் சேர அரசனையும் படியிருக்கிறார் (புறம்: 48, 49.) சோழன் செங்கணான், கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று பிடித்துச் சிறைவைத்தபோது, அவனைச் சிறை மீட்பதற்காகப் பொய்கையார் களவழி நாற்பது பாடினார். அரசரைப்பாடி அரசரிடம் ஊழியம் செய்து வாழ்ந்தவர் பொய்கையார் என்னும் புலவர். பொய்கையாழ்வாரோ, மானிடரைப் பாடாதவர். திருமாலைத் தவிர வேறு ஒருவரையும் மறந்தும் பாடாதவர். இதனை இவரே தெள்ளத்தெளியக் கூறுகிறார்: “திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்” என்றும்,7 “நாடிலும் நின்னடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின்புகழே பாடுவன்.” என்றும்,8 “மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என்நா.” என்றும்,9 பொய்கையாழ்வார் கூறுவது காண்க. ஆகவே, களவழி நாற்பது பாடிய பொய்கையார் வேறு; முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாழ்வார் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது. ஆனால், பொருந்தாக் காரணத்தைப் பொருத்திக்கூறி இருவரும் ஒருவரே என்று சொல்பவரும் உளர். “.................... சோழன் கோச்செங்கணானைக் களவழி நாற்பது என்ற நூலாற்புகழ்ந்த பொய்கையார், மேற்கூறிய தமிழ் முனிவரான பொய்கையாழ்வாராகவே இருத்தல் கூடும் என்பது என் கருத்து” என்று மு. இராகவையங்கார் அவர்கள் கூறுகிறார்கள்.10 கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று அய்யங்கார் அவர்கள் கருதுகிற பொய்கையார் என்னும் புலவரே பொய்கை யாழ்வாராக இருப்பாரானால், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாருடன் அவர் எப்படி நண்பராக இருக்கமுடியும்? பூதத்தாழ்வார் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்று மேலே காட்டினோம். ஆகவே அவருடன் நண்பராக இருந்த பொய்கையாழ்வாரும் கி.பி. 7-ஆம் நூற்றாணடில் வாழ்ந்தவராக வேண்டும். எனவே, சோழன் செங்கணனைப் பாடிய பொய்கையார் என்னும் புலவரே பொய்கையாழ்வாராக இருக்க முடியாது. பொய்கையார் என்னும் பெயரையுடையவர் பலர் வெவ்வேறு காலத்தில் இருந்திருக்கிறார்கள். களவழி நாற்பது பாடிய பொய்கை யாரையன்றி, பன்னிருபாட்டியல் என்னும் நூலில் காணப்படுகிற இலக்கண சூத்திரங்களை எழுதிய பொய்கையாரும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோள் காட்டப்படுகிற செய்யுள்களைப் பாடிய பொய்கையாரும், இன்னிலை என்னும் நூலைப் பாடியவர் என்று கூறப்படுகிற பொய்கையாரும் இவ்வாறு பல பொய்கையார்கள் இருந்திருக்கின்றனர். பொய்கையார் என்னும் பெயர் முற்காலத்தில் மக்கள் பெயராகப் பலருக்கு வழங்கி வந்துள்ளது. ஆகவே, பெயர் ஒற்றுமையைமட்டும் ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்துப் பொய்கையாரையும் நரசிம்மவர்மன் காலத்துப் பொய்கையாரையும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. 7-ஆம் நூற்றாண்டில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பர் என்று கூறப்படுகிறபடியால் பொய்கையாழ் வாரும் இக் காலத்திலேதான் இருந்திருக்க வேண்டும். மற்றொரு நண்பரான பேயாழ்வாரும் இக் காலத்தில் இருந்திருக்க வேண்டும். ஐஐஐ பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவர் காலத்திலே அவர்களோடு நண்பர்களாக இருந்தவர் திருமழிசையாழ்வார். ஆனால், இவர் மற்ற மூவரிலும் ஆண்டில் இளையவர். திருமழிசையாழ்வார் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதியில், “காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பு அங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! உன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.” என்று பாடுகிறார். இதில் குணப்பரனே என்று வருவதால், குணப்பரன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மனை (முதலாவன்) இது குறிக்கிறது என்றும், ஆகவே திருமழிசையாழ் வார் மகேந்திர வர்மன் காலத்தவர் என்றும் சீநிவாச அய்யங்கார் அவர்கள் கூறுகிறார்.11 மு. இராகவையங்கார் அவர்களும் இதனை ஒருவாறு ஏற்றுக் கொள்கிறார். “ஆழ்வாரும் (திருமழிசையாழ் வாரும்) குணபரப்பெயரை வழங்கினர் என்பது ஏற்றுக் கொள்ளப்படின், அப் பெயர் கொண்ட மகேந்திரவர்மனது ஆட்சிக் காலத்தைத் (618-646) திருமழிசை யாழ்வாரது வாழ்நாளின் பிற்பகுதியாகக் கொள்ளலாம்” என்று அவர் எழுதுகிறார்.12 மேலும், “இவற்றால், சமயவாதஞ் செறிந்து நிகழ்ந்த மகேந்திரவர்மனது ஆட்சிக்காலமே திருமழிசைப் பிரானுக்கும் உரியதென்று கொள்வது பெரிதும் பொருந்தும் என்னலாம். இதற்கேற்ப, குணபரன் என்ற பல்லவன் பெயரையே, பொருட்பேறு சிறத்தல் பற்றி அவ் வாழ்வார் திருமாலுக்கு வழங்கலாயினர் - என்று மேற்கூறிய கருத்தும் ஏற்புடைத்தாயின், அப் பல்லவன் ஆட்சிபுரிந்த 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கமே, திருமழிசையாரது வாழ் நாளின் பிற்பகுதி யென்று துணியத் தடையில்லை.”13 என்று கூறுகிறார். ஆழ்வார், குணப்பரனே என்று கூறியது குணபரன் என்னும் மகேந்திர வர்மனைத்தான் குறிக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இவர்கள், இவ் வாழ்வாருக்கு முடிவு கட்டுகிற காலம் எமது ஆராய்ச்சிக்கு ஏறக்குறைய இணைந்து வருகிறது. இவர்கள், திருமழிசை யாழ்வார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்கின்றனர். எமது ஆராய்ச்சியில், இவ்வாழ்வார் அதே நூற்றாண்டில் ஆனால், மகேந்திரவர்மன் மகனான மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது தெரிகிறது. இதனை ஆராய்வோம். திருமழிசை ஆழ்வாரையும் அவர் சீடரான கணிகண்ணரையும் காஞ்சீபுரத்திலிருந்து ஒரு பல்லவ அரசன் “நாடு கடத்தினான்” என்று வரலாறு கூறுகிறது. இவர்களை “நாடு கடத்திய” பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் அல்லது அவன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் ஆக இருக்கக்கூடும் என்றும், இவ் வரசர்கள் மிகுந்த சைவப் பற்றுள்ளவர்கள் என்றும் ஸ்ரீநிவாச அய்யங்கார் கருதுகிறார்.14 இவர்களை மகேந்திரவர்மன் நாடு கடத்தியிருக்க முடியாது. அவன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் தான் நாடு கடத்தி யிருக்கக் கூடும். ஏனென்றால், மாமல்ல புரத்திற்கு அப்பெயரைச் சூட்டியவன் நரசிம்மவர்மனே. மாமல்ல புரமாகிய மாமல்லையைப் பூதத்தாழ்வார் தமது செய்யுளில் பாடி யிருப்பதை மேலே காட்டி னோம். ஆகவே, மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்தில் இருந்த பூதத்தாழ்வாரின் நண்பரும் சமகாலத்தவருமான திருமழிசை யாழ்வாரை அந்த நரசிம்மவர்மனே நாடு கடத்தியிருக்கக் கூடும் என்பது பொருத்தமானது. இதனாலும், இந்த ஆழ்வார்கள் நால்வரும் நரசிம்மவர்மன் காலத்தில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்பது மேலும் உறுதியாகிறது. திருமழிசையாழ்வாரைக் காஞ்சியிலிருந்து பல்லவ அரசன் நாடு கடத்தியதற்குக் காரணம் ஒன்று கூறப்படுகிறது. ஆழ்வாரின் சீடராகிய கணிகண்ணரை அரசன் தன்னைப் பாடும்படி கேட்டான் என்றும், அதற்கு அவர் மறுக்கவே அவன் அவரை நகரத்தைவிட்டுப் போகும்படி கட்டளையிட்டான் என்றும், அதனால் கணிகண்ணருடன் திருமழிசை யாழ்வாரும் அவருடன் கோயிலிலிருந்த பெருமாளும் நகரத்தை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், பிறகு அரசன் அவர்களைத் திரும்பி வரும்படி கேட்டுக் கொண்டான் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காரணம் சரியென்று தோன்றவில்லை. வேறு காரணம் இருக்கவேண்டும். அக் காரணம் யாது? கணிகண்ணருடன் திருமழிசை யாழ்வார் காஞ்சீபுரத்தில் இருந்த போது இவர்களால் அந்நகரத்தில் சமயப் பூசல் நேரிட்டிருக் கலாம். அதாவது சைவ வைணவர் கலகம் ஏற்பட்டிருக்கலாம். சைவனாகிய நரசிம்மவர்மன் கலகத்தை யடக்க இவர்களைக் காஞ்சியிலிருந்து “நாடு கடத்தி” யிருக்கலாம். திருமழிசை யாழ்வார் பாடல்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன. இவர் பௌத்த சமண சமயங்களைக் கடுமை யாகத் தாக்கிப் பாடுகிறார். அதனுடன் சைவர்களையும் கடுமையாகத் தாக்குகிறார். இதனால் சைவர்கள் சினங்கொண்டு எதிர்வாதம் செய்திருக்கக் கூடும். இதனால் சமயப் பூசலும் குழப்பமும ஏற்பட்டிருக்கும். நகரத்தில் இருக்கும் அரசன், இக் குழப்பத்துக்குக் காரணமாயிருந்த திருமழிசையாரையும் கணிகண்ணரையும் தற்காலிக மாக நாடு கடத்தியிருக்கக் கூடும். கலகம் அடங்கியவுடன் அரசன் நகரத்திற்கு வர அனுமதி யளித்திருக்கக் கூடும். திருமழிசையாழ்வாரது பாடல்களில் சைவர்களைத் தாக்கும் செய்யுள்கள் சிலவற்றைக் காட்டுவோம். “அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய மாயவனை மாலவனை மாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலால் இன்று.”15 “ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலையுகத் துரைத்தான் மெய்த்தவத்தோன் - ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு”16 “குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு.”17 “ழண்டன்நீறன் மக்கள் வெப்புமோடி அங்கி ஓடிடக் கண்டுநாணி வாணனுக்கு இரங்கினான் எம்மாயனே.”18 விரிவஞ்சி நிறுத்துகிறோம். சிவவாக்கியர் என்னும் பெயருடன் பழுத்த சைவ அடியாராக இருந்து சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த இவர், பேயாழ்வாரால் வைணவ பக்தராக்கப் பட்ட பிறகு, இவ் வாறெல் லாம் சிவனையும் சைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பாடியது சைவருக்கு ஆத்திரம் மூட்டியிருக்கலாம். இதனால் நகரத்தில் சைவ வைணவ கலகங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். கலகத்தை யடக்குவதற் காக, அதற்கு முதல் காரணராயிருந்த ஆழ்வாரை நாடு கடத்தியிருக் கலாம். இவ்வாறு இவரை நாடு கடத்திய பல்லவ அரசன் மாமல்லனான நரசிம்மவர்மனாகத்தான் இருக்க முடியும். இதனாலும், திருமழிசை யாரும் மற்ற மூன்று ஆழ்வார்களும் நரசிம்மவர்மன் காலத்தவர் என்பது தெரிகிறது. ஐஏ இதுகாறும் ஆராய்ந்தவற்றால் பொய்கை பூதம் பேய் திரு மழிசை என்னும் ஆழ்வார்கள் நால்வரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலே மாமல்லனான நரசிம்மவர்மன் காலத்திலே இருந்தவர்கள் என்பது தெரிகிறது. திரு. மு. இராகவையங்கார் அவர்கள் இவ்வாழ்வார்கள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 7-ஆம் நூற்றாண்டுவரையில் இருந்தவர்கள் என்று கூறுகிறார்:- “இதுவரை கூறியவற்றால் முதலாழ்வார் மூவரும் திருமழிசை யாழ்வாரும் 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை வாழ்ந்த பேரடியார்கள் என்பது ஒருபடியாகத் தெரியலாம்”19 என்றும், “முதல் நந்திவர்மன் (கி.பி. 534), சிம்ம விஷ்ணு (கி.பி. 590) போன்ற பரம பாகவதரான அரசர்கள தாட்சியில் பூதத்தாழ்வார் போன்றவர் களும், மகேந்திரவர்மனான குணபரன தாட்சியில் திருமழிசை யாழ்வாரும் விளங்கியவர்கள் என்ற என் கருத்து எவ்வகையினும் பொருந்துவதாதல் அறிந்து கொள்ளத்தக்கன.”20 என்றும் கூறுகிறார். இவர் கூறும் காலம் ஏற்கத்தக்கதல்ல, பூதத்தாழ்வார் தமது பாடலில் மாமல்லையைப் பாடியிருப்பதால், அவர் மாமல்லன் நரசிம்ம வர்மன் காலத்தவர் என்பதையும் அவருடன் நண்பர்களாக இருந்த மற்ற பேயாழ்வார் பொய்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார்களும் இவ் வரசன் காலத்தில் இருந்தவர்கள் என்பதையும் மேலே விளக்கினோம். இராக வையங்கார் அவர்கள் தமது ஆராய்ச்சி முடிவை உறுதியாகக் கூறாமல் வழ வழவென்று நெகிழ்த்திக் கொண்டே போகிறார். முதலில் இவர் பொய்கை யாழ்வாரைக் களவழி நாற்பது நூலின் தலைவனாகிய செங்கட் சோழன் காலத்தவர் என்று கூறினார். செங்கட் சோழன் காலம் உத்தேசம் கி.பி. 350-ல் ஆகும். அவன் மகன் காலத்தில் களபரர் என்னும் கலியரசர் வந்து சேர சோழ பாண்டிய நாடுகளைப் பிடித்து அரசாண்டனர். அவ்வாறு அரசாண்ட களபர அரசர்களில் அச்சுத விக்கந்தன் என்பவன் கி.பி. 450-இல் சோழநாட்டை யரசாண்டான். ஆகவே சோழன் செங்கணான் கி.பி. 350-இல் இருந்தவனாதல் வேண்டும். அக்காலத்திலேயே, அய்யங்கார் கருத்துப்படி பொய்கை யாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் இருந்தவராதல் வேண்டும். ஆனால், மேலேகாட்டியபடி முதல் நந்திவர்மன் (கி.பி.534) சிம்மவிஷ்ணு (கி.பி.590) போன்ற பல்லவ அரசர் ஆட்சியில் பூதத்தாழ்வார் முதலியவர்கள் இருந்தார்கள் என்கிறார். இவ்வாறு உறுதியில்லாமலும் உறுதியான சான்றுகள் இல்லாமலும் கூறுகிற இவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் காலத்தை நீட்டுகிறார். ஏறக் குறைய 250 ஆண்டுகளை இவ்வாழ்வார்களின் ஆயுள் காலமாகக் காட்டுகிறார். ஆழ்வார்கள் யோகிகளாய்ப் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருந் தார்கள் என்பதைச் சமய நம்பிக்கையும் பக்தியும் உள்ளவர்கள் நம்பட்டும். ஆனால், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவ்வளவு நீண்டகாலத்தை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஒப்புக் கொள்வதும் தவறு. இவ்வாழ்வார்கள் நால்வரும் பொதுவாக நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்கள் என்றுகொண்டு உச்தேசம் கி.பி.600 முதல் 700 வரையில் இருந்தவர்கள் என்று கருதலாம். மாமல்லன் நரசிம்மவர்மன் ஆட்சியும் இக் காலத்தில் அடங்குகிறது. சைவ அடியார்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் காலமும் இதில் அடங்குகிறது. பக்தி யியக்கம் சிறந்திருந்த காலமும் இதுவே. திவான்பகதூர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள், வானநூல் முறைப்படி கணித்து ஆழ்வார்கள் காலத்தை முடிவு கூறுகிறார். பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் கி.பி. 719-இல் பிறந்தவர்கள் என்றும், திருமழிசையாழ்வார் கி.பி. 720 இல் (ஜனவரி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை) பிறந்தவர் என்றும் கூறுகிறார்.1 இது ஒரு நூற்றாண்டு பின்தள்ளிப் போகிறது. அன்றியும் ஏனைய சரித்திர ஆதாரங்களுக்கு ஒத்திருக்க வில்லை. ஆகவே இந்த முடிவையும் நாம் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. பொய்கை, பூதம், பேய், திருமழிசை ஆழ்வார்கள் மாமல்லன் நரசிம்மவர்மன் (கி.பி.630-668) காலத்தில் இருந்தவர்கள் என்பதும், இதே காலத்தில் சைவ அடியார்களாகிய நாவுக்கரசரும் ஞான சம்பந்தர் முதலியவர்களும் இருந்தார்கள் என்பதும் எமது ஆராய்ச்சியின் முடிவு ஆகும். *** 29. ஆழ்வார் நாயன்மார் பாடல்கள்* மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்திலிருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்களில் சிலவற்றை மாதிரிக்காகக் காட்டுவோம். இப் பாடல்கள், அக்காலத்தில் இருந்த சைவ வைணவக் கருத்துக்களையும், பக்தியையும், சமயக் காழ்ப்பு முதலியவற்றையும், கண்ணாடிபோல் காட்டுகின்றன. அன்றியும் செய்யுள் நடையையும் புலப்படுத்துகின்றன. இவை பொய்கை ஆழ்வார் இயற்றிய இயற்பா முதல் திருவந்தாதியிலிருந்து எடுக்கப்பட்டவை: வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே யென்று. 1 நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி - அறிவானாம் ஆலமரநீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த ஆலமர் கண்டத் தரன். 2 அவரவர் தாம்தாம் அறிந்தவா றேத்தி இவரிவ ரெம்பெருமா னென்று - சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த மூர்த்தி யுருவே முதல். 3 கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ணத் தைய! மலர்மகள்நின் ஆகத்தாள் - செய்ய மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த இறையான்நின் னாகத் திறை. 4 மனமாசுதீரும் அருவினையும் சாரா தனமாய தானேகை கூடும் - புனமேய பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி தாம்தொழா நிற்பார் தமர். 5 சென்றால் குடையாம், இருந்தால்சிங் காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடலுள் - என்றும் புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம், புல்கும் அணையாம் திருமாற் கரவு. 6 அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம் மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் - நுடங்கிடையை முன்இலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள் தன்விலங்கை வைத்தான் சரண். 7 தோளவனை யல்லால் தொழாஎன் செவியிரண்டும் கேளவன தின்மொழியே கேட்டிருக்கும் - நாள்நாளும் கோணா கணையான் குரைகழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம். 8 நயவேன் பிறர்பொருளை நள்ளேன்கீ ழாரோடு உயவேன் உயர்ந்தவரோ டல்லால் - வியவேன் திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன் வருமாறென் நம்மேல் வினை. 9 வினயால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார் தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் - நினைதற் கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கண் கரியானைக் கைதொழுதக் கால். 10 ஏற்றான்புள் ளூர்ந்தான் எயிலெரித்தான் மார்விடந்தான் நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் - கூற்றொருபால் மங்கையான் பூமகளான் வார்சடையான் நீள்முடியான் சங்கையான் நீள்கழலான் காப்பு. 11 கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்? மண்தா வெனவிரந்து மாவலியை - ஒண்தாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள்விசும்பில் ஆரங்கை தோய வடுத்து. 12 நாடிலும் நின்னடியே நாடுவன் நாள்தோறும் பாடடிலும் நின்புகழே பாடுவன்- சூடிலும் பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு என்னாகி லென்னே எனக்கு. 13 பிடிசேர் களிறளித்த பேராளா! உன்தன் அடிசேர்ந் தருள்பெற்றா ளன்றே - பொடிசேர் அனற்கங்கை யேற்றான் அவிரிசடைமேல் பாய்ந்த புனற்கங்கை யென்னும்பேர்ப் பொன். 14 பொன்திகழு மேனிப் புரிசடையம்புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும் இருவரங்கத் தால்திரிவ தேலும் ஒருவன் ஒருவனங்கத் தெஎன்று முளன். 15 கீழ்க்கண்ட செய்யுட்கள் பூதத்தாழ்வார் இயற்றிய இயற்பா இரண்டாந் திருவந்தாதியிலிருந்து எடுத்தவை:- அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இனபுருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். 1 மற்றா ரியலாவார்? வானவர்கோன் மாமலரோன் சுற்றும் வணங்கும் தொழிலானை - ஒற்றைப் பிறையிருந்த செஞ்சடையான் பின்சென்று மாலைக் குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 2 சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் - அறந்தாங்கும் மாதவனே! என்னும் மனம்படைத்து மற்றவன்பேர் ஓதுவதே நாவினால் உள்ளு. 3 ஒருருவ னல்லை ஒளியுருவம் நின்னுருவம் ஈருருவ மென்பர் இருநிலத்தோர் - ஒருருவம் ஆதியாம் வண்ணம் அறிந்தா ரவர்கண்டீர் நீதியால் மண்காப்பார் நின்று. 4 கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கைக் கண்டேன் கனலும் சுடராழி - கண்டேன் உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும் மறுநோய் செறுவான் வலி. 5 யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவமுடையேன் எம்பெருமான்! - யானே இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 6 வரைச்சந் தனக்குழம்பும் வான்கலனும் பட்டும் விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண் டாதிக்கண் நின்ற அறிவ னடியிணையே ஓதிப் பணிவ துறும். 7 பகல்கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில் மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன் ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான் வான்திகழும் சோதி வடிவு. 8 மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகந் தன்னகத்து மேவேனே - நண்ணித் திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கைதொழுத பின். 9 அத்தியூ ரான்புள்ளை யூர்வாதன் அணிமணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் - முத்தீ மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான். 10 கீழ்க்கண்டவை பேயாழ்வார் அருதுளிச்செய்த அயற்பா மூன்றாந் திருவந்தாதியிலிருந்து எடுக்கப்பட்டவை:- திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்க னணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று. 1 முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க் கவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதன்றே - என்னே! திருமாலே! செங்கண் நெடியானே! எங்கள் பெருமானே! நீ இதனைப் பேசு. 2 தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும் தானே தவவுருவும் தாரகையும் - தானே எரிசுடரும் மால்வரையும் எண்திசையும் அண்டத் திருசுடரு மாய இறை. 3 இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய் மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான் உள்ளத்தி னுள்ளே உளன். 4 தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு இரண்டுருவ மொன்றா யிசைந்து. 5 இனியவன் மாயன் எனஉரைப்ப ரேலும் இனியவன் காண்பரிய னேலும் - இனியவன் கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான் உள்ளத்தி னுள்ளேஉளன். 6 அதுநன் றிதுதீதென் றையப்ப டாதே மதுநின்ற தண்துழாய் மார்வன் -பொதுநின்ற பொன்னங் கழலே தொழுமின் முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து. 7 உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்தவனை நாடி வலைப்படுத்தேன் - மெத்தெனவே நின்றான் இருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து. 8 அலரெடுத்த உந்தியான் ஆங்கெழி லாய மலரெடுத்த மாமேனி மாயன் - அலரெடுத்த வண்ணத்தான் மாமலரான் வார்சடையான் என்றிவர்கட் கெண்ணத்தா னாமோ? இமை. 9 சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்துழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்தா மரைநெடுங்கண் தேனமரும் பூமேல் திரு. 10 கீழ்க்கண்டவை திருமழிசையாழ்வார் இயற்றிய நான்முகன் திருவந்தாதியிலிருந்து எடுத்தவை:- நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்முகமாய் அந்தாதிமேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து. 1 ஆறுசடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடைய னென்பதுவும் கொள்கைத்தே - வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து. 2 அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் சிறியார் சிவப்பட்டார் செப்பில் - வெறியாய மாயவனை மாலவனை மாதவனை யேத்தாதார் ஈனவரே யாதலால் இன்று. 3 குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி - கறைகொண்ட கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை யாங்கு. 4 ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலையுகத் துரைத்தான் மெய்த்தவத்தோன் - ஞால மளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு. 5 சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று வினைகெடுக்கும் நீர்மையால் என்றும் கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும் அடிக்கமல மிட்டேத்தும் அங்கு. 6 தேவராய் நிற்கும்அத் தேவும்அத் தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் - யாவராய் நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாம் கடை. 7 உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி - செயல்தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறுசமயப் பந்தனையார் வாழ்வேல் பழுது. 8 தமராவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும் அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள் தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி மால்வண்ணன் தாள்தா மரையடைவோ மென்று. 9 இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை - இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான். 10 கீழ்க்கண்ட செய்யுட்கள் திருமழிசையாழ்வார் இயற்றிய திருச்சந்த விருத்தத்திலிருந்து எடுத்தவை:- பூநிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய முன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ணம்நின்னை யார்நினைக்க வல்லரே. 1 ஒன்றிரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய் ஒன்றிரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே ஒன்றிரண்டு கண்ணினானும் உன்னைஏத்த வல்லனே. 2 விண்கடந்த சோதியாய் விளங்குஞான மூர்த்தியாய் பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே எண் கடந்த யோகினோ டிரந்துசென்று மாணியாய் மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே. 3 வேறிசைந்த செக்கர்மேனி நீறணிந்த புன்சடை கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை ஊறுசெங் குருதியால் நிறைத்தகார ணந்தனை ஏறுசென்ற டர்த்தஈச! பேசுகூச மின்றியே. 4 மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான் கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்து ஓடவாண னாயிரம் கரம்கழித்த ஆதிமால் பீடுகோயில் கூடுநீர் அரங்கமென்ற பேரதே. 5 இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர் நிறத்தமா! வரம்தரும் திருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர் பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீநினைக்க வேண்டுமே. 6 கேடில்சீர் வரத்தனாய்க் கெடும்வரத்த யன்அரன் நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும் வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும் கூடும்ஆசை யல்லதொன்று கொள்வனோ? குறிப்பிலே. 7 வாள்களாகி நாங்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி மாளுநாள தாதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே ஆளதாகும் நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே. 8 சலங்கலந்த செஞ்சடைக் கறுத்தகண்டன் வெண்தலை புலன்கலங்க வுண்டபாத கத்தன்வன்து யர்கெட அலங்கல் மார்பில் வாசநீர் கொடுத்தவன் அடுத்தசீர் நலங்கொள்மாலை நண்ணும்வண்ணம் எண்ணுவாழி நெஞ்சமே. 9 அச்சம்நோயொ டல்லல்பல பிறப்புஆய மூப்பிவை வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றிவானி லேற்றுவான் அச்சுதன் அனந்தகீர்த்தி ஆதியந்த மில்லவன் நச்சுநா கணைக்கிடந்த நாதன்வே கீதனே. 10 கீழ்க்கண்ட செய்யுகள் திருஞானசம்பந்தநாயனார் இயற்றிய தேவாரத் திருமுறையிலிருந்து எடுத்தவை. “சித்தந் தெளிவீர்காள் அத்தன் ஆரூரைப் பத்தி மலர்தூவ முத்தி யாகுமே.” 1 பறையும்பழி பாவம்படு துயரம் பல தீரும் பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர் அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தான மெனீரே. 2 மூவருமாகி யிருவருமாகி முதல்வனுமாய் நின்ற மூர்த்தி பாவங்கடீர்தர நல்வினைநல்கிப் பல்கணநின்று பணியச் சாவமதாகிய மால்வரைகொண்டு தண்மதின்மூன்று மெரித்த தேவர்கள்தேவ ரெம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே. 3 மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே நைவனாயே னுன்றனாமம் நாளுநவிற் றுகின்றேன் வையமுன்னே வந்து நல்காய் வலிவல மேயவனே. 4 சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 5 நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனும் மறியா தன்று தேரும் வகை நிமிர்ந்தா னவன்சேரு மிடம்வினவிற் பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாக மூரு மரவசைத்தான் திருவூறலை யுள்குதுமே. 6 ஆல முண்டமு தம்மம ரர்க்கரு ளண்ணலார் கால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார் சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம் மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே 7 தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத் துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான் அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும் மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே. 8 வெல்பற வைக்கொடி மாலு மற்றை விரைமலர் மேலயனும் பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்ப ணிந்தும் செல்வற நீண்டெஞ் சிந்தை கொண்ட செல்வ ரிடம்போலும் தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத் தோணிபுரந்தானே. 9 ஆலநீழ லுகந்த திருக்கையே யானபாட லுகந்த திருக்கையே பாலினேர்மொழி யாளொரு பங்கனே பாதமோதலர் சேர்புர பங்கனே கோலநீறணி மேதகு பூதனே கோதிலார்மன மேவிய பூதனே யாலநஞ்சமு துண்ட களத்தனே யாலவாயுறை யண்டர்க ளத்தனே. 10 தோடுடையசெவி யன்விடை யேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன் ஏடையமல ரான்முனைநாள் பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மான்இவ னன்றே. 11 பாங்குடைத் துவத்துப் பகீரதற்கருளிப் படர்சடைக்கரந்தநீர்க் கங்கை தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம் வினவில் ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையாலாகுதி வேட்கும் ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே. 12 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினு முன்கழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே. இதுவோ வெமை யாளுமாறு ஈவதொன்றெமக் கில்லையேல் அதுவா வுனதின் னருள் ஆவடுதுறை யரனே. 13 உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண் நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர் நமர்க ளாதலால் வரைகொள் பெண்ணைவந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் விரைகொள் சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. 14 கண்காட்டும் நுதலானும் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டிலுறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 15 *** 30. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்* திரு. ளு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றவுடனே அவர் ஆங்கிலத்தில் எழுதிய. “தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வரலாறு”என்னும் நூல் 1956-இல் வெளியிடப்பட்டது. (ழளைவடிசல டிக கூயஅடை டுயபேரயபந யனே டுவைநசயவரசந, லெ ஞசடிக. ளு. ஏயலையயீரசi ஞடைடயi, சூநற ஊநவேரசல க்ஷடிடிம ழடிரளந, ஆயனசயள 2.) இந்த நூலிலே பிள்ளையவர்கள் பல தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். சில செய்திகளைத் திரித்துக் கூறுகிறார். சில செய்திகளை மறைத்துக் கூறுகிறார். இந்த நூலைப் படிக்கின்ற வெளி நாட்டவர் தவறான கருத்துக்களை உண்மை எனக் கருதிக் கொள்கின்றனர். நமது நாட்டிலுங் கூடப் பலர், பிள்ளை யவர்களின் பிழையான கருத்துக்களை உண்மைச் செய்திகள் என்று நம்புகின்றனர். பிள்ளையவர்கள் கூறுகிற தவறான செய்தி ஒன்றை இங்கு எடுத்துக் காட்டுவோம். சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றி இந்த நூலில் இவர் இவ்வாறு எழுதுகிறார்:- “இந்தக் காலத்தின் நிலமை இந்தப் பதிகங்களில் (சுந்தர மூர்த்தி சுவாமிகளின் தேவாரப் பதிகங்களில்) காணப்படுகிறது, ஜைன சமயத்தினால் சைவ சமயத்துக்கு இருந்த அபாயகரமான நிலை மறைந்து போய்விட்டது. சுந்தரமூர்த்தியின் தேவாரப் பாடல்களிலே ஜைனர்களைப் பற்றிய ஒரு குறிப்புக்கூட இல்லை” (பக்கம் 110) பிள்ளையவர்கள் இவ்வாறு எழுதுவது உண்மைக்கு மாறானது. உண்மைக்கு மாறானது மட்டும் அல்ல; உண்மையை மறைத்துக் கூறுகிறார். பிள்ளையவர்கள் சைவர் என்கிற முறையில் சுந்தரர் தேவாரத்தைப் படித்திருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டாலும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் என்கிற நிலையிலாவது சுந்தரர் தேவாரத்தைப் படித்திருக்கவேண்டும். அப்படி இல்லா விட்டாலும், சுந்தரர் தேவாரத்தைப் பற்றி எழுதுகிறபடியால், அந்தத் தேவாரத்தைப் படித்திருக்க வேண்டும். படித்தாரோ, படிக்க வில்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், சுந்தரர் தேவாரத்தைப் பற்றி ஒரு தவறான செய்தியை உண்மைக்கு மாறாகக் கூறுகிறார். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். சுந்தரர் தேவாரத்திலே ஜைனரைப்பற்றி ஒரு குறிப்புக் கூட இல்லை என்று சிறிதும் அஞ்சாமல் தைரியமாகக் கூறுகின்றார். இது உண்மைதானா என்பதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரத்தில் தேடிப் பார்ப்போம். “குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராகிலும் கொள்ளக் கண்டாலுங் கருதேன் எருதேறுங் கண்ணா நின்னல தறியேன்”. (திருநாட்டியத்தான்குடி 9) “வெற்றரைக்கற் றமணும் விரையாது விண்டால முணுந் துற்றரைத் துற்றறுப்பான் துன்னவாடைத் தொழிலுடை யீர்”. (பழமண்ணிப்படிக்கரை 9) “குண்டாடுஞ் சமணரும் சாக்கியரும் புறங்கூறுங்கொகுடிக்கோயில்”. (திருக்கருப்பறியலூர் 10) “இருந்துண் தேரரும் நின்றுண் சமணரும் ஏச நின்றவன்”. (திருவாழ்கொளிபுத்தூர் 10) “நமையெலாம் பலர் இகழ்ந் துரைப்பதன் முன் நன்மை யொன்றிலாத் தேரர் புன்சமணஞ் சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்”, (திருத்தினைநகர் 9) ஜைனரை (சமணரை) மட்டும் அல்லாமல் பௌத்தர்களையும் கூறுகிறார் சுந்தரமூர்த்திநாயனார். தேரர், சாக்கியர் என்று பௌத்தர் களையும், சமணர் என்று ஜைனரையும் இத் தேவாரப் பதிகங்களில் கூறுவது காண்க. திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் சமணர்களைப் பற்றி ஒரு குறிப்பும் கூறவில்லை என்று எழுதுகிறார்! மேலே ஐந்து குறிப்புகளைக் கண்டோம். இன்னும் பல குறிப்புகள் உள்ளன. அவைகளையும் காண்போம். “நமண நந்தியும் கருமவீரனும் தரும சேனனும் என்றிவர் குமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறை ஒன் றின்றியே ஞமண ஞாஞண ஞாண ஞோண மென் றோதி யாரையும் நாணிலா அமணராற் பழிப் புடைய ரோ நமக் கடிகளாகிய அடிகளே”. (நமக்கடிகளாகிய அடிகள் 9) இதில், சுந்தரர்மூர்த்தி சுவாமிகள் நந்திகணம், சேனகணம் முதலிய ஜைன சமயச் சங்கங்களின் பெயர்களையும், அச் சங்கங்களில் தலைமை பூண்டிருந்த ஜைன முனிவரின் பெயர்களையும் கூறுகிறார். மேலும் அவர்கள் ஓதிக்கொண்டிருந்த பிராகிருத மந்திரச் சொற்களை யும் கூறுகிறார். ஆனால், வையாபுரிப் பிள்ளை அவர்களோ, சமணரைப்பற்றி ஒரு குறிப்பும் சுந்தரர் தேவாரத்தில் இல்லை என்று எழுதுகிறார்! மேலும் சுந்தரர் தேவாரத்தைப் பார்ப்போம். “நன்மையொன் றிலாத்தோர் புன்சமணாம் சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மைவிட்டு” (திருத்தினை நகர் 9) “குண்டாடியும் சமணாடியும் குற்றுடுக்கையர் தாமும் கண்டார் கண்ட காரணம்மவை கருதாது கை தொழுமின்” (திருமறைக்காடு 9) “குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கியர் அறியா மிண்டாடிய வதுசெய்தது வானால் வருவிதியே”. (திருச்சுழியல் 9) “குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண் சாக்கியப்பேய் மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோ (திருநாகேச்சரம் 10) “மோடுடைய சமணர்க்கு முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே”. (கோயில் 9) “கரியமணச் சமண் காடியாடு கழுக்களால் எரிய வசவுணுந் தன்மையோ ... ... ... ... ...”. (முடிப்பது கங்கை 9) சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில், ஜைனர் (சமணர்) களைப் பற்றியும், பௌத்தர்களைப் பற்றியும் இவ்வளவு குறிப்புகளைத் தருகிறார். வையாபுரிப் பிள்ளையவர்கள், சுந்தரர் தேவாரத்தில் ஒரு குறிப்புக்கூட இல்லை என்று மறைக்கிறார். தமிழாராய்ச்சித் துறை மாணவர் களுக்கு வழிகாட்டிக்கொண்டு, பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்தவரின் ஆராய்ச்சி இது. பிள்ளை அவர்கள் எழுதிய நூல்களில் இதுபோன்ற “ஆராய்ச்சி”கள் பல உள்ளன. தமிழ் ஆராய்ச்சி யில், “வையாபுரிப் பிள்ளை பரம்பரை” ஒன்று சென்னையில் உருவடைந்து வருகிறது. இந்தப் பரம்பரை பிள்ளை யவர்களின் போக்கைத் தழுவிச் செல்கிறது. வையாபுரிப் பிள்ளை நல்ல பதிப்பாசிரியர். அவர் பதிப்பித்த நூல்கள் சிறந்த பதிப்புகள். அதற்காக அவருக்குத் தமிழுலகம் நன்றி செலுத்துகிறது. ஆனால், அவர் சொந்தமாக எழுதிய நூல்களைப் பற்றி விழிப்பாக இருக்கவேண்டும். அவர் எழுதிய நூல்களிலே குழிகளும், பள்ளங்களும் உள்ளன; தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லும்பல வழிகள் உள்ளன; என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி யிருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தைப் பற்றி எவ்வாறு நேர் மாறாக எழுதியிருக்கிறார் பாருங்கள்!! பிற பின். *** 31. தேவார ஆராய்ச்சி* 1. இயற்கைக் காட்சிகள் ஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் ஆங்காங்கே இயற்கைக் காட்சிகளைக் கூறுகிறார். ஒவ்வோர் ஊரிலும் இவர் கண்ட இயற்கைக் காட்சிகளைக் கண்டது கண்டபடியே கூறுகிறார். சில இடங்களில் அக் காட்சிகளை உருவகப்படுத்திக் கூறுகிறார். இவர் அமைத்துக் காட்டிய சொல் ஓவியங்களை வர்ண ஓவியங்களாகத் தீட்டினால் அவை, இயற்கையழகு வாய்ந்த அழகுள்ள படங்களாக அமையும். அவர் கூறிய சொல் ஓவியச் சித்திரக் காட்சிகளைக் கீழே தருகிறோம். அவற்றைப் படித்து அப் படங்களை அகக் காட்சியிலே கண்டு களிக்கலாம். “செய்யருகே புனல்பாய வோங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன் கையருகே கனிவாழை யீன்று காலெலாங் கமழ் காட்டுப்பள்ளி.” “தளையவிழ் தண்ணிற நீலம் நெய்தல் தாமரை செங்கழுநீரும் எலாம் களையவிழுங் குழலார் கடியக் காதலிக்கப்படுங் காட்டுப்பள்ளி.” “பொன்னியல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவெய்து பொய்கைக் கன்னியர் தாங் குடை காட்டுப் பள்ளி.” “தெங்குயர் சோலைசேர் ஆலை சாலி திளைக்கும் விளைவயல் சேரும் பொய்கை.” “வண்தாமரை மலர்மேல் மடஅன்னம் நடைபயில வெண்தாமரை செந்தாது உதிர் வீழிமிழலை.” “பங்கயங்கள் மலரும் பழனத்துச் செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்.” “நீருள் கயலும் வயல்வாளை வராலொடு ஆரும் புனல் அன்பிலாலந் துறை.” “குரவம் சுரபுன்னையும் வன்னி மருவும் மயிலாடுதுறை.” “சங்கமதார் குறமாதர் தங்கையில் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை.” “மருங்களியார் பிடிவாயில் வால்வெதிரின் முளைவாரிக் கருங்களியானை கொடுக்கும் கற்குடிமாமலை.” “கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன் மொய்த்து ஆர்க்கும் பழையனூர்.” “தவழுங் கொடி முல்லை புறவம்சேர நறவம்பூத்து அவிழும் பழையனூர்.” “நடையடைந்த களைகளாகச் செழுங்கழுநீர் மலர்கள் செய்யடைந்த வயல்கள் சூழ் சிரபுரம்.” “அந்தலாய மல்லிகையும்புன்னை வளர்குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரம்.” “ஈளைப்படுககிளையார்தெங்கிற்குலையார் வாழையின் பாளைக் கமுகின் பழம்வீழ் சோலைப் பழனநகர்.” “வண்தாமரையின் மலர்மேல் நறவமது வாய்மிக உண்டு பண்தான் கெழும வண்டுயாழ் செய்யும் பழனநகர்.” “வெஞ்சொற் பேசும் வேடர் மடவார் இதணமது வேறி அஞ்சொற் கிளிகள் ஆயோவென்னும் அண்ணாமலை.” “கனைத்த மேதி காணாது ஆயன் கைமேல்குழல் ஊத அனைத்துஞ்சென்று திரளும் சாரல் அண்ணாமலை.” “பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை பொருந்து செண்பகம் சென்றார் செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரம்.” “குயில்ஆர் கோலமாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை செயிலார் பொய்கை சேரும் நறையூர்ச் சித்தீச்சரம்.” “பூவார் பொய்கை அலர்தாமரை செங்கழுநீர், புறவெலாம் கூவார் குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொல் கிளிப்பிள்ளை காவார் பொழில் சூழ்ந்து அழகார் குடந்தைக் காரோணம்.” “கானமான் வெருவுறக் கருவிரல் ஊகம் கடுவனொடு உகளும்ஊர், கற்கடுஞ்சாரல் ஏனமான் உழிதரும் இலம்பையங் கோட்டூர்” “மைச்செறி குவளை தவளைவாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் பச்சிறவு எறிவயல் வெறிகமழ் காழிப்பதி.” “கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக் கயலினம் வயல்இள வாளைகள் இரிய எருமைகள் படிதர இளவனமாலும் இடைச்சுரம்.” “குரவம் சுரபுன்னை குளிர் கோங்கு இளவேங்கை விரவும் பொழில் அந்தண் வீழிமிழலை.” “செல்வமல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக் கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குற்றாலம்.” “பெருந்தண் சாரல் வாழ் சிறைவண்டு, பெடைபுல்கிக் குறுந்தம் ஏறிச் செவ்வழிபாடும் குற்றாலம்.” “அள்ளல்விளை கழனி அழகார் விரைத்தாமரை மேலன்னம் புள்ளினம் வைகி எழும் புகலிப்பதி.” “மாதவி வான் வகுளமலர்ந்தும் விரைதோயவாய்ந்த போதலர் சோலைகள் சூழ் புகலிப்பதி.” “செங்கயல் நின்றுகளும்செறுவில் திகழ்கின்ற சோதிப் பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளேச்சரம்.” “இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி யிரிந்தங் கோடிச் செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செங்கமல வயல்படியுந் திருவையாறு.” “முத்தாறு, வகையாரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டு கரையருகும் மறிய மோதித் தகையாரும் வரம்பிடறிச் சாலிகழுநீர் குவளை சாயப் பாய்ந்து முகையார் செந்தாமரைகள் முகமலர வயல்தழுவும் முதுகுன்றம்.” “குருந்தம் மல்லிகை கோங்குமாதவி நல்லகுராமாவிற் திருந்து பைம்பொழில் கச்சி யேகம்பம்.” “கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர் ஆலமரம்.” “நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை, நீடிய சேலும் ஆலுங்கழனி வளம் மல்கிய சிக்கல்.” “வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார்புனற்கரை அருகெலாம் வயல் பாளையொண் கமுகம் புறவார் பனங்காட்டூர்.” “அந்தண்மாதவி புன்னை நல்லவசோகமும் அரவிந்தம் மல்லிகை பைந்தண் நாழல்கள்சூழ் புறவார் பனங்காட்டூர்.” “பாசித்தடமும் வயலும் சூழ்ந்த பாசூர்.” “வெண்தாமரைமேல் கருவண்டுயாழ்செய் வெண்காடு.” “கள்ளார் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூர்.” “கொம்பார் குரவுகொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டுபாடும் முதுகுன்று.” ‘கயல்வளாவிய கழனிக் கருநிறக் குவளை கண்மலரும் வயல்வளாவிய புகலூர் வர்த்தமானீச்சுரம்.” “செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்.” “சேறும் வாளையும் கயலும் செறிந்துதன் கிளையொடுமேய ஆலுஞ்சாலி நற்கதிர்கள் அணிவயற்காழி நன்னகர்.” “துள்ளிவாளை பாய்வயல், சுரும்புலவும் நெய்தல்வாய், அள்ளல் நாரை ஆரல் வாரும் அந்தண் ஆரூர்.” “செருந்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழுங்குரா அரும்பு சோலை வாசம் நாறும் அந்தண் ஆரூர்.” “முறித்து மேதிகள் கரும்பு தின்று வாவியின் மூழ்கிட இனவாளை வெறித்துப் பாய்வயல் சிரபுரம்.” “செம்பொனார்தரு வேங்கையுநா ழலுஞ் செருந்தி செண்பகமானைக் கொம்புமாரமு மாதவி சுரபுனை குருந்தலர்போந்துந்தி அம்பொனேர்வரு காவிரிவடகரை மாந்துறை.” “கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலருந்தி ஓங்கி நீர் வரு காவிரிவடகரை மாந்துறை.” “நறவ மல்லிகை முல்லையு மௌவலு நாண்மலரவை வாரி யிறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை” “மடையின் நெய்தல் கருங்குவளை செய்ய மலர்த்தாமரை புடைகொள் செந்நெல் விளைகழனி மல்கும் புகலூர்.” “கெண்டைபாய மடுவில் உயர் கேதகை மாதவி புண்டரீக மலர்ப் பொய்கை நிலாவும் புகலி.” “கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்வாய்ப் புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புளவாயில்.” “நாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும் தாழை வெண்குருகு அயல் தயங்கு கானல்.” “குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள விரவிய பொழிலணி விசய மங்கை.” “கோங்கமே குரவமே கொன்றையும் பாதிரி மூங்கில் வந்தணைதரும் முகலியின் கரை.” “கரும்பும் செந்நெலும் காய்கமுகின் வளம் நெருங்கு தண்டலை நீணெறி.” “பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும் காசினியில் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்.” “பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு கானிலவும் மலமர்ப் பொய்கை கைதல்சூழ்கழிக் கானல்.” “கோங்கமே குரவமே கொழுமலர்ப்புன்னையே கொகுடி முல்ல வேங்கையே நாழலே விம்மு பாதிரி களேவிரவி யெங்கும் ஓங்குமா காவிரி வடகரை யடை குரங்காடு துறை.” “குருந்துயர் கோங்கு கொங்கு கொடிவிடு முல்லை மல்லிகை செண்பகம் வேங்கை, கருந்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர்.” “தேங்கொள் பூங்கமுகு தெங்கு இளங்கொடிமாச் செண்பகம் வண்பலா இலுப்பை, வேங்கை பூமகிழ்ஆல் வெயில்புகா வீழிமிழலை,” “இஞ்சிக் கேகதலிக்கனி விழக் கமுகின் குலையொடும் பழம் விழத் தெங்கின், மிஞ்சுக்கே மஞ்சுசேர் பொழில் வீழிமிழலை.” “தேனார்தெழு கதலிக்கனி உண்பான் திகழ்மந்தி மேனோக்கி நின்றிரங்கும் பொழில்.” “தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்பக் கொக்கின் காய்கள் கவணெறிகல்போற் சுனையின் கரைசேரப் புள்ளிரியுங் கழுமலமே.” 2. உவமைகள் ஞானசம்பந்தர் தம்முடைய பாடல்களில் சிற்சில இடங்களில் அழகான உவமைகளை நயமாகக் கூறுகிறார். அப் பகுதிகள் சில வருமாறு: ஒரு பூம்பொழிலிலே வண்டு ரீங்காரஞ் செய்து இசை பாடிக்கொண்டிருக்க, அங்கு ஒரு மயில் தனது தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்க, பொன்போன்ற தாதுகள் நிறைந்த மலரைப் புன்னை மரம் பூத்திருந்தது. இந்தக் காட்சி, அரங்கத்திலே இசைப்பாட்டிற்கு ஏற்ப நடனமாது ஒருத்தி நாட்டியம் ஆட, அதனைக் கண்டு மகிழ்ந்தவர் அவளுக்குப் பொன்னைத் தாராளமாக வழங்குவது போல இருந்தது என்று உவமை கூறுகிறார் ஞானசம்பந்தர். “மாதவி மேய வண்டு இசைபாட மயில் ஆடப் போது அலர் செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்.” பொய்கைகளில் தாமரை குமுதம் குவளை நெய்தல் ஆகிய மலர்கள் பூத்து மலர்ந்திருப்பது, தாமரைப்பூ மகளிரின் முகம் போலவும் செங்குமுதம் வாய் போலவும் குவளையும் நெய்தலும் கண்கள் போலவும் காணப்பட்டன என்று உவமை கூறுகிறார்: “வாவி தொறும் வண்கமலம் முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே.” மகளிரின் முகத்துக்கும் வெண்ணகைக்கும் கருங்கண்ணுக்கும் செவ்வாய்க்கும் இன்னொரு உவமை கூறுகிறார்: “கொழுந் தரளம் நகைகாட்ட கோகனகம் முகங்காட்டக் குதித்து நீர்மேல் விழுந்த கயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலை யாமே.” வயலைச் சார்ந்த ஒரு நீர் நிலையிலே தாமரைப் பூ பூத்திருந்தது. அந்தப் பூவின்மேலே ஓர் இளம் அன்னப் பறவை அமர்ந்திருந்தது. பூவிற்கு மேலே, உயர்ந்து நீண்டு வளர்ந்திருந்த ஒரு தாமரை இலை குடைபிடிப்பது போல நின்றது. அருகிலே வளர்ந்திருந்த செந்நெற்கதிர் பூவின் அருகில் காற்றினாலே அசைந்து கொண்டிருந்தது. இந்தக் காட்சி, அரசிளங் குமரன் ஒருவன் கொற்றக் குடையின் கீழே பொன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, தாதிப் பெண்கள் சாமரை வீசிக்கொண்டிருப்பது போலக் காணப்பட்டது என்று உவமை கூறுகிறார்: “செறியிலைத் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல் வெறிகதிர்ச் சாமரை யிரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலை யாமே.” கடற்கரையை யடுத்த ஒரு கானல் கழியின் ஓரத்திலே அடர்ந்து வளர்ந்த தாழம் புதரில் தாழம் பூ பூத்திருந்தது. அதன் அருகில் தண்ணீரிலே தாமரை மலர் அலர்ந்திருந்தது. அக் கழியில் வாழும் கெண்டைமீன் அவ்விடத்திற்கு வந்தபோது, தண்ணீரில் காணப்படுகிற தாழம்பூவின் நிழல் ஒரு பறவைபோல் தோன்ற அதைக் கண்டு கெண்டைமீன் அச்சங்கொண்டு தாமரைப் பூவின் கீழே ஓடி ஒளிந்தது. கெண்டை மீனின் அறியாமையைக் கண்ட கழிக்கரையில் கிடந்த முத்துகளும் சிப்பிகளும் நகைப்பது போலத் தோன்றின என்று கூறுகிறார் : “மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று தடமண்டு துறைக் கெண்டை தாமரையின் பூ மறையக் கடல் விண்ட கதிர்முத்தம் நகை காட்டுங் காட்சியதே.” குடவாயில் தோட்டத்திலே வாழை மரங்களின் மஞ்சள் நிறமான வாழைப்பழங்கள் பொன் காய்த்தது போலவும், பாக்கு மரங்களின் செந்நிறமாகப் பழுத்த காய்கள் பவழம் காய்த்தது போலவும் தோன்றின என்பதை, “குலைவாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்” என்று கூறுகிறார். புங்கமரத்தின் பூக்கள் தரையில்உதிர்ந்து கிடப்பது நெல் பொறியைச் சிதறியிருப்பது போலத் தோன்றிற்று என்றும், கோங்கு மலர் பொன் பூத்தது போல மஞ்சள் நிறமாக இருந்தது என்றும், பசுமையான இலைகளுக்கு இடையிலே செந்நிறமான ஆலங்காய்கள் காய்த்திருப்பது திரண்ட பவளங்களைப் போல இருந்தன என்றும் உவமை கூறுகிறார்: “பொரியேர் புன்கு சொரி புஞ்சோலை.” “பொன்போதலர் கோங்கோங்கு சோலை.” “கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர் ஆலமரம்.” பாம்பின் வாயிலே அகப்பட்ட சிறு பறவை புதரிலேயுள்ள பூவின் தேனைச் சுவைத்து இன்புற்றதுபோல நோய், மூப்பு, சாக்காடு என்ப கைகளினால் பிணிப்புண்டுள்ள இந்த உடம்பு சிற்றின்பத்தை விரும்புகிறது என்று கூறுகிறார்: “செடிகொள் நோயாக்கையைப் பாம்பின் வாய்த் தேரைவாய்ச் சிறுபறவைக் கடிகொள் பூந்தேன் சுவைத்தின் புறலாமென்று கருதினாயே.......................................” கழிக்கரையில் தாழம்புதரின் அருகே நின்றிருந்த ஒரு கொக்கு, தாழைமடல் தொங்குவதைத் தன் மனைவியாகிய கொக்கு என்று கருதி அதைத் தழுவிற்றாம்! “ஏழை வெண் குருகயலே யிளம்பெடை தனதெனக் கருதித் தாழை வெண் மடல்புல்குந் தண்மறைக் காடு.” ஆண் அன்னப் பறவை பெண் அன்னத்துடன் தாமரைப் பூவின்மேலே அமர்ந்திருப்பதும் அருகிலே நின்ற நெற்கதிர்கள் காற்றில் அசைவதும் ஆன காட்சி, அரசனும் அரசியும் சிம்மாசனத்தில் வீற்றிருக்க அவர்களுக்கு இருபுறத்திலும் மங்கையர் சாமரை வீசுவதுபோலிருந்தது என்று கூறுகிறார்: “தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம்தன் இளம்பெடை யொடும் புல்கி விளைகதிர் கவரிவீ வீற்றிருக்கும்.” 3.சிறுத்தொண்டர் ஞானசம்பந்தர் “சிறுத்தொண்டரை”க் குறிப்பிடுகிறார். சிறுத் தொண்டர் என்பது சிறுத்தொண்ட நாயனாராகிய பரஞ்சோதியாரை அன்று. அவரைத் தவிர்த்து வேறு சிறுத்தொண்டரையும் குறிப்பிடு கிறார். செங்காட்டங் குடியில் கணபதீச்சரம் அமைத்துத் திருத்தொண்டு செய்த வந்த பரஞ்சோதியாராகிய சிறுத்தொண்ட நாயனாரை ஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்தில் கூறுவது யாவரும் அறிவர். அந்தச் சிறுத்தொண்டர் நரசிம்மவர்மனின் யானைப் படைத்தலைவராக இருந்து, வாதாவி நகரத்திற்குச் சென்று போர்புரிந்தார் என்றும், பின்னர் அரசரது ஊழியத்தை விட்டுப் பக்தியில் ஈடுபட்டு இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தரும் அப்பரும் நட்புக்கொண்டிருந்தனர் என்றும் முன்னமே கூறியுள்ளோம். ஞானசம்பந்தர் அவரைத் தமது திருப்பதிகங்களில் இவ்வாறு கூறுகிறார் : “பொடிநுகரும் சிறுத்தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே.” என்றும், “செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன்.” என்றும், “செருவடிதோட் சிறுத்தொண்டன்.” என்றும், “சீராளன் சிறுத்தொண்டன்.” என்றும், “சிறப்புலவன் சிறுத்தொண்டன்.” என்றும், “வெந்த நீறணி மார்பன் சிறுத்தொண்டன்.” என்றும் கூறுகிறார். இந்தச் சிறுத்தொண்டரைத் தவிர வேறு சிறுத்தொண்டர் களையும் ஞானசம்பந்தர் கூறுகிறார். அவர் கூறுவது இது: “வணங்கும் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்தும் கேட்டு அணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.” “வெள்ளமெல்லாம் விரிசடை மேலோர் விரிகொன்றை கொள்ளவல்லான் குரைகழல் ஏத்தும் சிறுத்தொண்டர் உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடும் கள்ளம் வல்லான் காதல்செய் கோயில் கழுக்குன்றமே.” “பழகவல்ல சிறுத்தொண்டர் பாவின்னிசை குழகரென்று குழையா வழையாவரும் கழல்கொள் பாடலுடையார் கருகாவூரெம் அழகர் வண்ணம் அழலும் அழல்வண்ணமே.” இப் பாடல்களில் கூறப்படுகிற சிறுத்தொண்டர் என்பவர் யாவர்? அவர் ஏன் சிறுத்தொண்டர் என்று கூறப்படுகின்றனர்? என்பன ஒன்றும் விளங்கவில்லை. இதனை ஆராயவேண்டுவது அறிவுடையவர் கடனாகும். 4. கழியில் மீன்பிடித்தல் பௌத்தப் பள்ளிகளையடுத்த கழிகளிலே பௌத்தத் துறவி களில் சிலர் ஒருவருமறியாமல் மீன்பிடித்த செய்தியை ஞானசம்பந்தர் கூறுகிறார். துறவிகளுக்குரிய சீலங்களில் உயிர்களைக் கொல்லக் கூடாது என்பதும் ஒன்று. பௌத்தத் துறவிகளில் சிலர் இவ்வாறு உயிர்க் கொலை செய்து வந்தது பௌத்த ஒழுக்கத்துக்குப் புறம்பானது. ஒவ்வொரு சமயத்திலும் கால வேறுபாட்டினாலே சிற்சிலர் சமய ஒழுக்கத்தைத் தவறி நடப்பது உண்டு. அவ்வாறு தவறி நடந்த செய்தியை ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். “கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள்.” என்றும், “கழிக்கறைப் படுமீன் கவர்வார்.” என்றும், “கழியருகு பள்ளியிடமாக வடுமீன்கள் கவர்வாரும்.” என்றும், பௌத்தத் துறவிகள் மீன்பிடித்த செய்தியைக் கூறுகிறார். சமண சமய நூலாகிய நீலகேசி உரையிலும் பௌத்தர் கழிகளிலே மீன்பிடித்த செய்தி கூறப்படுகிறது. 5. அரசரைப்பற்றிய செய்திகள் சம்பந்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, சங்ககாலத்தின் கடைசியில் இருந்த செங்கண் சோழனை இவர் தமது தேவாரத்தில் சிற்சில இடங்களில் குறிப்பிடுகிறார். அவரைத் தவிர, வெங்குரு, சிரபுரம், புறவம், சண்பை என்றும் வேறு பெயர்களையுடைய சீகாழியில் இவர் காலத்துக்கு முன்பு அரசாண்ட சில அரசர்களின் பெயரைக் கூறுகிறார். அவ்வரசர்கள் தருமன், சிலம்பன், தேர்வலவன், சண்டன், நந்தன் என்பவர்கள். “செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினை மெய்தெரிய எங்கோத் தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே.” “தலையாய்க் கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணை நடாய்ச் சிலையால் மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே.” “ஒருதேர் கடாவி ஆரமருள் ஒருபது தோள்தொலையப் பொரு தேர் வலவன் மேவி யாண்ட புறவமர் புண்ணியனே.” “தவர்செய் நெடுவேல் சண்டனாளச் சண்பை யமர்ந்தவனே.” “நட்டார் நடுவே நந்தனான நல்வினையா லுயர்ந்த கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சை யமர்ந்தவனே.” இதில் கூறப்படுகிற தருமன், சிலம்பன், தேர்வலவன், சண்டன், நந்தன் என்பவர் யாவர்? சோழநாட்டை யாண்ட இவர்கள் சோழ அரசரா? பல்லவ அரசரா? அல்லது வேறு குலத்து அரசரா? என்பது தெரியவில்லை. இதில் தேர்வலவன் என்பவன் ஐந்து பகையரசரின் (ஒருபது தோள்களை) அழித்தான் என்று கூறப்படுகிறான். அந்தப் பகையரசர்யாவர்? திருமூக்கீச்சரக் கோயிலைக் கட்டியமைத்தவர் சேர சோழ பாண்டியர் என்று கூறுகிறார். “தென்னவன் கோழியெழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் செய்த மூக்கீச்சரம்” என்றும், “வடமனீடு புகழ்ப் பூழியன் தென்னவன் கோழிமன்” செய்த மூக்கீச்சரம் என்றும், “அந்தண மாதன னேரியன் செம்பிய னாக்கிய” மூக்கீச்சரம் என்றும், “சீரினாலங்கொளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்” சேரும் மூக்கீச்சரம் என்றும் கூறுகிற இவர், மூவேந்தரின் கொடிகளையும் கூறுகிறார். “செருவிலாரும் புலி செங்கயல் ஆனையினான் செய்த பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள்” என்று கூறுகிறார். இதில் சோழருடைய புலிக் கொடியையும் பாண்டிய ருடைய மீன்கொடியையும் கூறி, சேரருடைய விற்கொடியைக் கூறாமல் ஆனைக்கொடியைக் கூறுகிறார். சேரர்களுக்கு யானைக் கொடியும் இருந்த தென்பது இதனால் தெரிகிறது. யானைக் கொடி எந்தக் காலத்தில் சேரர் களுக்குரியதாயிருந்தது என்பதை ஆராய்வது சரித்திர வரலாற்றுக்கு முக்கியமாகும். தென்னாட்டிலே யானை பொறித்த காசுகள் வழங்கி வந்தன என்று நாணய ஆராய்ச்சியாளர்கள் (சூரஅiளேஅயவiஉள) கூறுகிறார்கள். இவற்றை யாராய்வது தமிழ் நாட்டுச் சரித்திர வரலாற்றாசிரியர் கடமையாகும். சம்பந்தர் தமது காலத்திலோ அல்லது தமக்கு முற்பட்ட காலத் திலோ இருந்த பல்லவ மன்னர்களைத் தமது தேவாரத்தில் குறிப்பிட வில்லை. ஆனால், தமது காலத்திலிருந்த சோழ அரசனைக் குறிப்பிடுகிறார். அந்தச் சோழ மன்னன் பெயரைக் கூறவில்லை. நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் மனைவியாராகிய பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியாரின் தந்தையாகிய சோழனை அவர் குறிப்பிடுகிறார். அந்தச் சோழனை மணிமுடி தரித்துப் பெரிய இராச்சியத்தை யரசாண்டவன் என்று கூறுகிறார்: “மண்ணெலாம் திகழ மன்னனாய் மன்னு மணிமுடி சோழன் றன் மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினாற் பணிசெய்து பரவும்.” ஆலவாய்த் திருக்கோயில் என்று கூறுகிறார். இது சரித்திரத் துக்கு முரண்பட்ட செய்தி. மங்கையர்க்கரசியின் தந்தையாரான சோழ அரசன், பல்லவ அரசருக்குக்கீழ் (மகேந்திரவர்மன் நரசிம்மவர்ம னுக்குக் கீழ்.) குறுநில மன்னனாக இருந்தார் என்று சரித்திரம் கூறுகிறது. ஞானசம்பந்தர், சமண சமயத்தவனாக இருந்த பாண்டியன் நெடுமாறனைச் சைசமயத்தில் சேர்த்தனர் என்பதை முன்னமே கூறியுள்ளோம். 6. பழமொழி, திருக்குறள் ஞானசம்பந்தர் தம்முடைய தேவாரப்பதிகங்களில் எடுத்தாளும் பழமொழிகளும் திருக்குறளும் வருமாறு:- “மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார்.............” “தாமலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார்தங் கனாவாக்கினான் ஒரு நொடி.” “எழுந்துவகை நலிந்துழலும் அவுணர்கடம் புரமூன்றும் எழிற்கணாடி உழுந்துருளு மளவையி னொள்ளெரி கொளவெஞ் சீலை வளைத்தா னுறையுங் கோயில்.” “அகர முதலானை அணியாப்ப னூரானைப் பகரு மனமுடையார் வினைபற்றறுப்பரே.” (திருஆப்பனூர் 5.) “செடிகணோ யாக்கைப் பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவைக் கடிகொள் பூந்தேன் சுவைத் தின் புறலாமென்று கருதினாயே.” (சம்பந்தர் ஐஐ திருவாரூர் 6.) 7. நாளும் கோளும் கோளும் நாளும் பார்த்துப் பிரயாணம் செய்யும் வழக்கம் ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தது என்பது அவருடைய தேவாரப் பாடல்களால் தெரிகிறது. “கோளும் நாளும் தீயவேனும் நன்காம் குறிக்கொண்மினே.” (ஐஐ திருநாகேச்சரம் 6.) என்று அவர் கூறுகிறார். “ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டோ டாறு முடனாய நாள்கள் அவைதான் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.” என்று பிரயாணத்திற்கு ஆகாத பன்னிரண்டு நட்சத்திரங்களை அவர் கூறுகிறார். இதில் ஒன்பது என்றது கிருத்திகைக்கு ஒன்பதாவதாகிய பூரம், ஒன்று என்றது கிருத்திகை, ஏழு என்றது ஆயிலியம், பதினெட்டு என்றது பூராடம். ஆறுடன் ஆய நாட்கள் என்றது மேலே கூறிய நான்கு நட்சத்திரங்கள் அல்லாத ஏனைய எட்டு நட்சத்திரங்கள். அவை: பூரட்டாதி, மகம், கேட்டை, பரணி, சுவாதி, விசாகம், ஆதிரை, சித்திரை எனபன. “தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய், ஆன சொன்மாலை” என்றும் கூறுகிறார். இதனால், இவர் காலத்தில் நாள்கோள் பார்க்கும் வழக்கம் உண்டென்பது தெரிகிறது. 8. சமணமுனிவர் குன்றுகளில் தங்கியது சமண முனிவர்கள் மலைக் குகைகளில் தங்கி தவம் செய்து வந்தனர். மலைக் குகைகளுக்குப் பாழி என்பது பெயர். குன்றுகளிலுள்ள பாழிகளில் சமண முனிவர் தங்கியிருந்த செய்தி, அப் பாழிகளில் இப்போதும் காணப்படுகிற கற்படுக்கைகளினாலும், கல்வெட்டுச் சாசனங்களினாலும் தெரிகிறது. ஞான சம்பந்தரும் தமது தேவாரத்தில் “பாழியுறை வேழநிகர் பாழமணர்” என்று கூறுகிறார். அன்றியும், இவர் காலத்திலே மதுரை மாநகரத்தைச் சூழ இருந்த யானை மலை முதலிய மலைகளிலே சமண முனிவர் இருந்த செய்தியையும் கூறுகிறார்: “ஆனைமாமலை யாதியாய விடங்களில் பல அல்லல் சேர் ஈனர்கட் கெளியேனலேன் திருவாலவாய் அரனிற்கவே.” என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இவர் கூறுகிற யானை மலையாதியாய இடங்கள் என்பது மதுரையைச் சூழ்ந்துள்ள யானை மலை, நாகமலை, இடபமாலை, சமணமலை முதலான எட்டு மலைகள். இந்த எட்டு மலைகளில் சமண முனிவர் இருந்தனர் என்பதைப் பெரியபுராணம், “எண்பெருங் குன்றத்து எண்ணாயிரஞ் சமணர்,” என்று கூறுகிறது. யானைமலை என்பது, யானை படுத்திருப்பதுபோல அமைந்த மலை. நாகமலை என்பது நாகப்பாம்பு படுத்திருப்பதுபோன்ற மலை. இயற்கையாக யானையும் நாகப்பாம்பும் போன்று அமைந்துள்ள இந்த மலைகளைப் பற்றி இடைக்காலத்திலே சில கதைகள் கற்பிக்கப்பட்டன. சமணர் தமது மந்திர சக்தியினாலே யானையை மலைப்பாம்பு விழுங்குவதுபோலக் காட்டிப் பாண்டிய அரசனை வசப்படுத்தினார்கள் என்பது ஒரு கதை. இந்தக் கதையைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கதை சமணர் மந்திர சக்தியுடையவர் என்பதைக் காட்டக் கற்பிக்கப்பட்டது போலும். ஞானசம்பந்தர் காலத்தில் இந்தக் கதை கற்பிக்கப்படவில்லை. அவர் காலத்தில் இக்கதை வழங்கியி ருந்தால் இதனைத் தமது தேவாரத்தில் கூறியிருப்பார். அவர் காலத் தில் இக்கதை வழங்காதபடியால், சமணர்கள் வசித்த யானைமலை முதலிய மலைகள் என்று மட்டும் கூறினார். இன்னும் பிற்காலத்தில் யானையைப் பாம்பு விழுங்கிய கதை வேறு விதமாகக் கற்பிக்கப்பட்டது. சமணர் தமது மந்திர சக்தி யினால் யானையை யுண்டாக்கி, அதனை மதுரையை யழிக்கும்படி விட்டனர் என்றும் அதனைச் சிவபெருமான் நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், பிறகு மலைப்பாம்பை யுண்டாக்கி அனுப்ப அதனையும் அவர் அம்பு எய்து கொன்றார் என்றும், அவ்வாறு கொல்லப்பட்ட யானையும் பாம்பும் மலையாக அமைந்து யானை மலை நாகமலை எனப் பெயர்பெற்றன என்றும் பிற்காலத்தில் கதைகள் கற்பிக்கப் பட்டடன. இக்கதைகளைத் திருவிளையாடற் புராணத்தில் காணலாம். ஞானசம்பந்தர் காலத்துக்குச் சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு யானைமலையிலிருந்த குகையில் வைணவர் நரசிங்கப் பெருமாளை அமைத்தனர் என்னும் செய்தி அங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. யானைமலை முதலிய எண்பெருங் குன்றுகளைப் பற்றி இந் நூலாசிரியர் எழுதியுள்ள சமணமும் தமிழும் என்னும் நூலில் காணலாம். 9. இசை, ஆடல், பாடல் இசை ஆடல் பாடல் ஆகிய கலைகளைப்பற்றி ஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இந்தக் கலைகள் அக் காலத் திலே நமது நாட்டில் நன்கு பயிலப்பட்டன என்பது தெரிகிறது. இக் கலைகளைப்பற்றி அவர் குறிப்பிடுகிற பகுதிகளைக் கீழே தருகிறோம்: “பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர் வாயினார் எண்ணின் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார் வண்ணம்பாடி வலிபாடித் தம் வாய்மொழி பாடவே,” “புரிகுழலார் சுவடொற்றி முற்றப் பாவிய பாடல் அறாத ஆவூர்,” “விழவொ டொலிமிகு மங்கையர் தகுமாடசாலை முழவொடிசை நடமுஞ் செயு முதுகுன்று,” “கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியதுபாடி முருகன்னது பெருமை பகர் முதுகுன்று,” “நொம் பைந்து புடைத் தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழி,” “கருந்தடங் கண்ணார் கழல் பந்தம்மானைப் பாட்டயரும் கழுமலம்,” “பண்ணின்மொழியார் பாடலோவாப் பாசூர்,” “பண்ணியல் பாடலறாத ஆவூர்,” “வேலியின் விரைக் கமல மன்ன முகமாதர் பாலென மிழற்ற நடமாடு பழுவூர்,” “பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடலாட லோடார வாழ்பதி” திருக்களர். “சரியின் முனகை நன்மாதர் சதிர்பட மாநடமாடி யுரிய நாமங் களேத்தும் ஒலிபுனற்காழி நன்னகர்,” “பஞ்சியாரு மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூர் என்பதே,” “வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவை மொழியும் தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூர்,” “வாசமலர் மென்குழல் மடந்தையர்கள் மாளிகையின் மன்னி யழகார் ஊசல்மிசை யேறி இனிதாக இசை பாடுதவி மாணி குழியே,” “சொல்வள ரிசைக் கிளவிபாடி மடவார் நடமாடும்,” திருநல்லூர். “பண்ணிடை ஒன்பதும் உணர்த்தவர்,” “மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசை முரலவைத்த பாலையாழ்ப் பாட்டு,” “சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலையாமே,” “செங்கயல் லொடு சேல் செருச் செயச் சீறியாழ் ழால் தேனினத்தொடு பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்,” “பஞ்சுரம் பாடி வண்டியாழ் முரலும் பருதிநியமமே,” “கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று சேலோடச் சிiயாடச் சேயிழையார் நடமாடுந் திருவை யாறே.” மேலும், இசைக் கருவிகளையும் தமது பாசுரங்களில் குறிப்பிடுகிறார். அப் பகுதிகளில் சில வருமாறு: “துளைபயிலுங் குழலியாழ் முரலத் துன்னிய வின்னிசையாற் றுதைந்து,” “மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர வோர் வாய்மூரி பாடி,” “பண்ணுமூன்று வீணையோடு,” “குழலினோசை வீணை மொந்தை கொட்டமுழ வதிர,” “தண்டுடுக்கை தாளந் தக்கை சார நடம் பயில்வார்,” “தமிழினீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்குபாடல் செய்கையிட மோவார்,” “பாடல் வீணை முழவங் குழல்மொந்தை பண்ணாகவே ஆடுமாறு வல்லான்,” “பாராரு முழவ மொந்தை குழலியாழொலி சீரா லே பாடலாடல் சிதைவில்ல தோர்,” “தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும்,” “கத்தரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கை படக மெத்தனையு லப்பில் கருவித்திர ளலம்ப,” “சல்லரி யாழ்முழவ மொந்தை குழல்தாள மதியம்ப.” 10. திரு ஏகபாத உரை ஏகபாதம் என்பது, ஒரு செய்யுளின் முதல் அடி போலவே ஏனைய அடிகளும் வருவது. இதற்குப் பொருள் கூறுவது கடினம். திருஞானசம்பந்தர் இயற்றிய இந்தத் திரு ஏகபாதப் பதிகத்துக்கு ஒரு பழைய உரை உண்டு. மகா வித்வான் காஞ்சீபுரம் சபாபதி முதலியார் அவர்கள் 1864-இல் அச்சிட்ட தேவாரத் திருமுறையில், அந்தப் பழைய உரையை அச்சிட்டிருக்கிறார்கள். அவ் வுரையை ஈண்டும் தருகின்றேன். பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான் 1 முதலடி பதபொருள் : பிரமம் - ஞானாகாசமாகிய பராசத்தியை, புரத்துறை - அந்தப் பரிபூரணத்தை மிகுதியாக வியக்கப்பட்டது, பெம்மான் - பெருமான், எம்மான் - எந்தப் பெரியோன். பொழிப்பு : ஞானாகாசமாகிய பராசத்தியான பரி பூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசக்திக் கதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு விறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன். இரண்டாமடி பதப்பொருள்: பிரமபுரத்து - மேல் நிலத்து, உறை - தண்ணீர், பெரும் - விருப்பம், மான் - மான்போலும் விழியுடைய பெண், எம் - எம்முடைய, ஆன் - ஆன்மா. பொழிப்பு : மேல் நிலமாகிய ஆகாசத்தின்கண்ணே யோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமதுயிர். மூன்றாமடி பதப்பொருள்: பிரமம் - பிரமதத்துவம், புரம் - சரீரம், உறை - எண்ணுதல், பெம் - ஆசை, ஆன் - அமையாமை, எம்மான் - என்னை யொக்க வந்தவன். பொழிப்பு : பிரரூபத்திலே யெண்ணப்பட்ட என்னை முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாயென்னை யொக்க வந்தவன். நான்காமடி பதப்பொருள் : பிரமபுரத்துறை - பிரமபுரமென்கிற சீகாழிப்பதியிலே வீற்றிரா நின்ற, பெம்மான் - கர்த்தா வானவன், எம்மான் - என்னுடைய சுவாமி. பொழிப்பு : பிரமபுரமென்கிற சீகாழிப் பதியிலே வீற்றிரா நின்ற கர்த்தாவானவன் என்னுடைய சுவாமி. பெரியோனும் எனக்குயிரானவனும் என்னை யொக்க வந்தவனும் சீகாழிப் பதியில் வீற்றிருக்குங் கடவுளெனக் கூட்டிப் பொருள் கொள்க. விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன் விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன் விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன் விண்டலர் பொழிலணி வேணுபுரத்தரன் 2 முதலடி பதபொருள் : விண்டு - மலை; அலர் - ஒலி, பொழில் - உலகம், அணிவு - அகப்படுதல், ஏண் - பெருமை, நுபுரம் - சிலம்பு, தரன் - தரித்துள்ளவன். பொழிப்பு : அஷ்டகுல பர்வதங்களும், ஒலி சிறந்த தரிசு மணியாகவும், அகில லோகங்களையும் உள்ளே யகப்படுத்துந் தன்மையவாயும், பெரிதாயுமுள்ள திருச்சிலம் பினைத் தரித்துள்ளவன் (நூபுரம் எனற்பாலது, நுபுரம் எனக் குறுகிநின்றது.) இரண்டாமடி பதப்பொருள் : விண்டு - விஷ்ணு, அலர் - புறனுரை, பொழில் - அரசினிழல், அணி - பொருந்தி, வேணு - விருப்பம், புரத்து அரன் - புரத்தையரித்தவன். பொழிப்பு : விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரசமரனீழலில் அவனுடனிருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச் சங்கரித்துள்ளவன். (அண்ணி யெனற்பாலது, அணியென இடைக்குறைவாய் நின்றது.) மூன்றாமடி பதப்பொருள் : விண்தலர் - தேவர்கள், பொழில் - கற்பகப் பூஞ்சோலை, அணிவு -சூடுதல், ஏணு - எண்ணும், புரத்தரன் - தேவேந்திரன். பொழிப்பு : தேவர்கள் கற்பகப் பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப்படுகின்ற தேவேந்திரனுடைய. (எணு எனற்பாலது, ஏணு என நீண்டது. புரந்தரன் எனற்பாலது, புரத்தரனென வலித்து நின்றது.) நான்காமடி பதப்பொருள் : விண்டு - இதழ்கள் விண்டு, அலர் - மலர்கின்ற, பொழில் அணி - சோலை சூழ்ந்த, வேணுபுரத்து அரன் - வேணு புரமென்று மொரு பெயருள்ள சீகாழிப் பதிக்குக் கர்த்தா. பொழிப்பு : இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை சூழ்ந்த சீகாழிப் பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன். (தேவேந்திரன் மூங்கில் வழியாக வந்து பூசித்ததால் வேணுபுரமென்னும் பெயர் பெற்றது.) சிலம்பினைத் தரித்துள்ளவரும், முப்புரத்தை யெரித்தவரும், தேவேந்திரனுடைய சோலை சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவரெனக் கூட்டி யுரைத்துக் கொள்க. புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே 3 முதலடி பதப்பொருள் : புண்டரிகத்தவன் - இதய கமலத்திலுள்ளவன், மேவிய புகலியே - எனக்கின்பந் தருவானுமாய் மீளா வழியாகிய புகலிடமாயுமுள்ளவன். பொழிப்பு : இதய கமலத்திலிருந் திடையறாத வானந்தம் பொழியப்பட்டென்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக் கடைக்கலப் பொருளாயுள்ளவன். இரண்டாடி பதபொருள் : புண்டரிகம் - திரிபுண்டரம், தவன் - மிக்க பெருமையையுடையவன், மேவிய - பொருந்திய, புகலி -சொல்லப்பட்டவன். ஏ - என்பதீற்றசை. பொழிப்பு: ஆன்மாக்களுக்கு இரiக்ஷயாக முண்டம்போலிருந்த திருநீற்றை யணியப்பட்ட மிக்க கருணையானவனே யான் பாடும் பாடலை யுவந்துள்ளவன். மூன்றாமடி பதப்பொருள் : புண்டரிகம் - புலி, தவன் - தவமுனி, மே - கூத்து, வியம் - பொன், பு - பொது, கலி - கற்றவன். பொழிப்பு: புலிக்காலும் புலிக் கையும் பெற்றுள்ள வியாக் கிரபாத முனிவருக்கு ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபை யிலே யாடல் செய்யும் பரதவித்தையைக் கற்றுள்ளான். (வியம் எனற்பாலது, வியவெனக் கடை குறைந்து நின்றது.) நான்காமடி பதபொருள் : புண்டரிகத்தவன் - பிரமதேவன், மேவிய - தனது போதத்தாலே பணியலுற்ற, புகலியே - புகலியென்னுஞ் சீகாழிப் பதியே. பொழிப்பு : கீழ்ச் சொன்ன லீலைகளெல்லாஞ் செய்கின்ற சிவன் தனதிச்சையால் பொருந்தியிருக்குமூர் பிர்மாவானவன் பூசித்த புகலி யென்னுந் திருப்பதி. விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் 4 முதலடி பதப்பொருள் : விள - விளாம்பழத்தை, கொளி - கன்று குணிலாக எறிந்து கொண்டவனாகிய விஷ்ணு, தி - விட்டு விளங்கா நின்ற, கழ்தரு - நின்மல நீடிய, எங்கு - எவ்விடத்தில், உருமேவினன் - தனது திருமேனியிலே மேவினன். பொழிப்பு : கன்று குணிலாக எறிந்து விளவின் கனியைக் கொண்ட நாரணனைப் பிரகாசஞ் செய்யப்பட்டு நின்மலமாயி ருந்துள்ள தனது பெரிய திருமேனியிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான். (தீ எனற்பாலது, தி எனக் குறுகிநின்றது. கழுதரு எனற்பாலது, கழ்தரு என நின்றது.) இரண்டாமடி பதப்பொருள் : விலங்கு எனற்பாலது விளங்கு எனவும், ஒலி எனற் பாலது ஒளி எனவுந் திரிந்து நின்றது. விலங்கு - மாறு பாடாய், ஒலி - கதறப்பட்ட பௌத்தனது தலையிலே, தீ - அக்கினியைச் சொரிந்து, கழ்தரு - மிக்க பயத்தோடும் விழுகின்ற, எங்கு - ஒலிக்கும், உருமு - இடியை, ஏவினன் - விழும்படி யேவினன். பொழிப்பு : மாறுபாடாய்க் கதறப்பட்ட பௌத்தனது தலை யிலே அக்கினியைச் சொரிந்து மிக்க பயத்தோடும் விழுகின்ற இடியை விழும்படி யேவிப் பௌத்தரை வேரறுத்தானுந் தானேயன்றியானன் றாகும். தீ எனற்பாலது தி எனவும், காழ்தரு எனற்பாலது கழ்தரு எனவும், ஏங்கு எனற்பாலது எங்கு எனவுங் குறுகி நின்றன. மூன்றாமடி பதப்பொருள் : விள் - நீங்குதல், அங்கு - அவ்விடத்தில், ஒளிது - ஒள்ளியது, இகழ்தரு - இகழப்படும், எங்குரு - எம்முடைய குரு, மேவினன் - கலந்தனன். பொழிப்பு : தனது பரிபூரணத்திலே தன்னையிழந்து இரண்டாய் விசுவமுருகித் தான் விஷமாகத் தூஷணப் பட்டு நிற்கின்ற எனக்கும் குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை யொழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனதடிமை குலையாம லிரண்டற வைத்தவன். நான்காமடி பதப்பொருள் : விளங்குஒளி - எங்கும் பிரகாசியா நின்ற கீர்த்தி, திகழ்தரு - சிறத்தல், வெங்குரு - இயமனால் பூசிக்கப்பட்டட திருப்பதி, மேவினன் - விரும்பினன். பொழிப்பு : கீழ்ச் சொல்லிப் போந்த செய்திகளெல்லாமுடைய னெத்தன்மையனோ வென்னில், எங்கும் பிரகாசியாநின்ற கீர்த்தியினாற் சிறக்கப்பட்டுள்ள இயமனாற் பூசிக்கப்பட்ட வெங்குரு வென்னும் திருப்பதியை விரும்பியுள்ளான். (வெங்குரு என்பதும் சீகாழி.) சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் 5 முதலடி பதபொருள் : சுடர்மண் - சூடார்மண், இம் - ஈமம், ஆளி- ஆளப்பட்டவன், கைத்தோணி - போர்தொலைத்த தும்பைமாலை, புரத்து - திரிபுரங்களையும், அவன் - அவம்பண்ணினவன். பொழிப்பு : சுடுநிலமாகிய மயானத்தை நடமாடுமிடமாகக் கொண்டும், முப்புரங்களையும் நகைசெய்து சுடப்பட்ட வெற்றிப் போரையுடைய தும்பைமாலைக் கடவுள். சூடார் எனப்பாலது சுடர் எனவும், ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகிநின்றன. துரோணமெனற் பாலது தோணியென மருவிற்று. இரண்டாமடி பதபொருள்: சுடர்மணி - சூடாமணி, மாளி - மாலி, கைத்தோள் - துதிக்கையினையுடைய யானையை, நிபுரத்தவன் - வடிவில்லாமற் செய்தோன். பொழிப்பு: என்னுச்சிக்குச் சூடாமணியாய் என்மேல் வைத்த மாலினையுடையவனுமாய் யாகத்தின்கண் வந்த யானையை வடிவொழித்துப் போர்க்குந் தன்மையையுடையவன். சூடாமணி யெனற்பாலது சடர்மணி யெனவும், மாலியெனற்பாலது மாளியெனவும், தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. மாலையையுடையவன் மாலி. தோல் - யானை. மூன்றாமடி பதப்பொருள்: சுடர் - சூரியன், மணி - கழுவி, மாளி - கெட்டவன். கைத்தோணி - தெப்பம், புரத்தவன் - புரந்தவன். பொழிப்பு: சூரியனுடைய களங்கத்தைக் கழுவப்பட்ட சமுத்திரம் போன்ற செனனக்கடலிலே கீழ்ப்பட்டழுந்திக்கெடாநின்ற ஆன்மாக் களுக்குக் கைப்பற்றிக் கiயேறுந் தெப்பமாகப் பிரணவ மென்கிற மந்திரத்தை அவரது செவியின்கண்ணே யுண்டாக்கா நின்றவன். மண்ணி என்பது மணியென இடைகுறைந்து நின்றது. புரந்தவன் எனற்பாலது புரத்தவன் என வலித்தல் விகார மாயிற்று. நான்காமடி பதபொருள் : சுடர் - விளக்கத்தையுடைய, மணி - நவரத்தினங் களாலே அலங்கரிக்கப்பட்ட, மாளிகை - மாளிகைகள் சூழ்ந்த, தோணி புரத்தவன் - திருத்தோணிபுரத்தின் கண்ணே வாழ்கின்றவன். பொழிப்பு: விளக்கத்தை யுடைய நவரத்தினங்களாலே அலங் கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணி புரத்திலே வீற்றிருக்குஞ் சிவன் இத்தன்மையன். பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி 6 முதலடி பதப்பொருள் : பூ - பூமியிலுள்ளோர், சுரர் - தேவர்கள், சேர் - தோன்றுதல், பூ - இதயகமலம். தராயவன் - தரித்தவன், பொன் - பொலிவு, அடி - கண்ணாடி. பொழிப்பு : பூமியிலுள்ளாரையுந் தேவகணங்களா யுள்ளாரையுந் தனது நாபிக்கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிர்மா, விஷ்ணுவினது போதத்திலே கண்ணாடியும் நிழலும்போலப் பிரதிவிம்பியா நின்றவன். (ஆடி என்பது அடியெனக் குறுகிநின்றது) இரண்டாமடி பதபொருள்: பூசுரர் - மலத்தைக் கழுவிய சிவஞானிகள், சேர் - திரட்சி, பூ - பொலிவு, தராய் - பெறப்பட்ட, அவன் - அக் கடவுள், பொன் - வனப்பு, நடி- நாடகமாடப்பட்டவன். பொழிப்பு: மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தஞ் செய்தருள்பவன். மூன்றாமடி பதப்பொருள்: பூசு - திருநீற்றையுத்தூளிக்கப்பட்ட, உரர் - மார்பையுடையவர், சேர்பு- அரிதல், உளந்தராய் - தள்ளுதல், யவன் - யௌவனம், பொன் - அழகு, அடி - மூலம். பொழிப்பு: சர்வாங்கமு முத்தூளனம் பண்ணின மார்பை யுடைய சிவஞானிகளும், புண்ணிய பாவக்கட்டை யரிந்து விசுவத் தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன். உந்தராய் என்பது ஊந்தராயென நீண்டது. நான்காமடி பதப்பொருள் : பூசுரர் - மறையோர், சேர் - திரட்சி, பூந்தராயவன் - பூந்தராயென்னுந் திருப்பதியிலே யுள்ளவன், பொன்னடி - அழகிய திருவடித்தாமரை. பொழிப்பு: மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தரா யென்னுந் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை யென்னை யாண்டிடுவதாக. (பூந்தரா யென்பது சீகாழி.) செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் 7 முதலடி பதபொருள் : செருக்கு - மயக்கம், வாய்ப்பு - மேலீடு, உடையான் - கேடு செய்யான், சிரபுரம் - மேலாகிய இருப்பு, என்னில் - என்னுடைய போதமே. பொழிப்பு: தனது திருவடிப் பிரசாத மில்லாதார்க்கு மலமயக்கத் தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவா தீனமான இருப்பிடம் எனது சைதனியமே. இரண்டாமடி பதப்பொருள்: செர் - சத்தாதிக ளஞ்சுஞ் சேரப்பட்ட, உக்கு - அந்தப் பூமி, வாய்ப்புடையான் - தன் வாயினிடமாக வுள்ள விஷ்ணு, சிர் - சிறப்பு, அபுரம் - உயிர்போன களேபரம், என்னில் - மேனிலை. பொழிப்பு : சத்தாதிகளஞ்சுஞ் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனி யிலே தரித்துள்ளான். சேர் எனற்பாலது செர் எனவும், சீர் எனப்பாலது சிர் எனவுங் குறுகிநின்றன. மூன்றாமடி பதபொருள் : செருக்கு - ஆத்தும விகாரமாகிய கர்வம், வாய் - இந்திரியம், புடையான் - இடத்தான், சிரம் - மேல், புரம் - சரீரம், என்னில் - சத்தியம். பொழிப்பு: ஆத்தும விகாரமாகிய கர்வத்தினாலே இந்திரியங் களுக்கு விடயமாகிய சுவர்க்கத்தி லிச்சையை யுடையானுக்கு அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேஷித்திருக்கு மன்றே. நான்காமடி பதப்பொருள் : செருக்கு - இந்திரியயுத்தத்திற்கு, ஆய்ப்பு - இளைப்பு, உள்தையான்- உள் தைக்கப்படான், சிரபுரமென்னில் - சிரபுரமென்று றுரைக்கில். பொழிப்பு : இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனதறிவுக்குள் தைக்கப்படான். தாற்பரியம் - ஒருகாற் சிரபுரமென்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங் களையும் அவியப் பொருது சிவனுடைய திருவடியிலே அடையா நிற்பன். பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் 8 முதலடி பதப்பொருள் : பொன் - பொலிவு, நடி - கூத்துடையான், மாது - பத்திரகாளி, அவர - பூத கணங்கள், சேர் - தங்குதல், புறவத்தவன் - சுடுகாட்டிலுள்ளவன். பொழிப்பு : பொலிவினையுடைய மாயாநிருத்தம்புரிகின்ற பத்திரகாளியும், பூத பசாசும் பொருந்திய மயானமே திருக்கோயிலாக வுள்ளவன். இரண்டாமடி பதபொருள் : பொன் - தூய்மை, அடி - வழி, மாதவர் - தபோதனர், சேர் - திரட்சி, புறவம் - முல்லை நிலம், தவன் - தவம் புரிந்துள்ளான். பொழிப்பு : சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாஇருஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம்புரியா நிற்குந் தபோதனன். மூன்றாமடி பதப்பொருள் : பொன் - இலக்குமி, அடி - ஆபரணத்தொகுதி, மாது அவர் - இருடிபத்தினிகள், சேர்பு உறு - பிச்சையிட வந்தணைதல், அவத்தவன் - கலை சோர்தலைச் செய்த நிருவாணி. பொழிப்பு : அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடிபத்தினிகள் பிச்சையிட வந்தணையு மிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன். நான்காமடி பதப்பொருள் : பொன் - பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுர காலாழிகள் முதலியவு மிடப்பட்ட, அடி - பாதம், மாதவர் - கன்னியர், சேர் - இனமாய் விளையாடுதல், புறத்தவன் - திருப்புறவமென்கின்ற திருப்பதியில் வாழ்கின்றவன். பொழிப்பு : பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுசாதிகளைப் பாதங்களிலே யணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவமென்னுத் திருப்பதியில் வாழ்கின்ற சிவன். புறவம் என்பதுஞ் சீகாழி தசமுக னெரிதர வூன்று சண்பையான் தசமுக னெரிதர வூன்று சண்பையான் தசமுக னெரிதர வூன்று சண்பையான் தசமுக னெரிதர வூன்று சண்பையான் 9 முதலடி பதப்பொருள் : தசமுகன் - தயவையுடையான், எரிதர - எரி வீசு, ஊன்று - அழுந்து, சண் - வேகம், பையான் - படம் பொருந்திய பாம்பையுடையான். பொழிப்பு: ஆத்துமாக்களிடத்துக் கருணை பிறக்கு மிடமா யுள்ளவன். அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தி யுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாக வுடையான். இரண்டாமடி பதப்பொருள் : த - அது, சமுகம் - திரட்சி, நெரி - நேரானவன், தர - புவி, ஊன் - மாமிசம், தூசு - தூசு, அண்பையான்- விரித்துடுத்தான். பொழிப்பு : எல்லா மிறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள் ளானுமாய்ப் புலியினது ஊன் பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன். நேரி எனற்பாலது, நெரி எனக் குறுகிநின்றது. தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது. தூசு எனற்பாலது, தூசு எனக் குறுகி நின்றது. பாயான் எனற்பாலது, பையானெனக் குறுகிப் போலியாயிற்று. மூன்றாமடி பதப்பொருள் : தசம் - தைசதம், உக - கெட, நெரி - எதிர்ப் பட்டவன், தாம் - மலை, ஊன் - திருவுளத்தடைத்தல், து - விசேஷ ஞானமுள்ளவன், சண் - சட்சமயம், பையான் - பயனாயுள்ளவன். பொழிப்பு : ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறி விலெதிர்ப்பட்டவன் கயிலாய மலையைத் திருவுள்ளத் தடைத் தெழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை யி ரக்ஷியா நின்ற விசேஷத்தை யுடையவனென் றேத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர் கொண்ட பயனாயுள்ளவன். (நேரி எனற்பாலது நெறியெனக் குறுகிநின்றது.) நான்காமடி பதப்பொருள்: தசமுகன் - பத்துத் தலைகளையுடைய இராவணன், நெரிதர - முறிய, ஊன்று - அமுக்கிய, சண்பையான் - சண்பை என்னும் திருப்பதியில் வீற்றிருப்பவன். பொழிப்பு: பத்துத் தலையுள்ள இராவணன் முறியும்படி திரு விரலாலடர்த்தவன் யாரென்னில், சண்பையென்னுந் திருப்பதியிலே வீற்றிருக்குங் கடவுள். காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே 10 முதலடி பதப்பொருள்: காழியான - நிலைபெற்று நின்மலமான சித்தத்தையுடைய பத்தரிடத்து, உள்ளவா- சத்தியம், காண்பரே - நோக்குவர். பொழிப்பு : நிலைபெற்று நின்ற நின்மலமாகிய சித்தத்தை யுடைய பத்தரிடத்துச் சத்தியப்பொருள் விளையும் பொருட்டு ஞான நாட்டத்தினாலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன். இரண்டாமடி பதப்பொருள் : காழியான் - களங்கமுள்ளவன், நயனுள்ளவா - ஞானக் கண்ணுள்ளவாறு, காண்பரே - நிலைமையாக நினைப்பரே. பொழிப்பு : திருமிடற்றிற் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞான நாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குதே பணியெனத் தமதறிவிலே கருதாநிற்பர். மூன்றாமடி பதப்பொருள் : காழியான் - விஷ்ணு, அயன் - பிர்மா, உள்ள - நினைக்க, ஆ - அதிசயம, கண் - கருதுதல், பரே - அன்னியம். பொழிப்பு : விஷ்ணுவும் பிர்மாவுந் திருமுடியுந் திருவடியுங் காணும்பொருட்டு, வராகமு மன்னமுமாகக் கருதி வடிவு கொண்டார் ஐயோ உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதே தென்னில், அன்னியமே கண்டனர். (கண் எனற்பாலது காண் என நீண்டது.) நான்காமடி பதப்பொருள் : காழியான் - காழிப்பதியினுள்ளான், அயன் - ஐயன், உள் - என்னறிவிலுண்டான, அவா - ஆசை, காண்பரே - தரிசிப்பரே. பொழிப்பு : என் பொருட்டாற் காழியென்னுந் திருப்பதியைப் படைத்தானை என்னையனை எனதாசையைக் கீழ்ச்சொன்ன விருவர்களும் தாங்கள் தேடுந் தேட்டப் பிறிவில் மயக்கத்திலே தெட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந் தெவ்வாறு காண்பர். கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே 11 முதலடி பதப்பொருள்: கொச்சை - அறியாமையைப் பொருந்தியுள்ள ஆணவமலம், அண்ணலை - பொருந்துதலை, கூடகிலார் - மாறு பட்டார், உடல் - உடலாலே, மூடரே- மூடாரே. பொழிப்பு: ஆணவ மலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலு மந்திரதனுவாலு மறைக்கப்படார்கள். (மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகி நின்றது.) இரண்டாமடி பதப்பொருள்: கொச்சை - புலால் நாற்றம், அண்ணல் - அணுகுதல், கூடகிலார் - மனம் பொருந்தமாட்டாதார், உடல் மூடரே - சரீரத்தைப் புதைப்பரே. பொழிப்பு: புலால் நாற்றத்தைப் பொருந்திய மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது நிலைபெற் வுருவாக நினைத்துத் துவராடையாலேயுடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும். மூன்றாமடி பதப்பொருள் : கொச்சையள் - பேதைத் தன்மையுடைய மச்சியா கந்தி, நலை - புலப்படாநின்ற அவளது நலத்தைக் கருதி, கூடு -சரீரம், அகில்ஆர் - அகில்மணம் பொருந்திய, உடன் - அத்தன்மை யாளுடன், மூடரே - மொய்க்குமாறு பண்ணினது அது பொருந்துதல். பொழிப்பு : பேதைத் தன்மையையுடைய மச்சிய கந்தியினுடைய நலத்தைக் கொள்ளும்பொருட்டு அவளது சரீரமெல்லாம் சுகந்த மொய்க்கும்படி யவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடி வந்து சிவனைப் பொருந்தியருச்சிக்கப் படுதலால். நான்காமடி பதப்பொருள் : கொச்சை- கொச்சையாகிய பராசரன் பேராலுள்ள கொச்சையென்னுந் திருப்பதி, அண்ணலை -கர்த்தாவை, கூடகிலார் - நேர்படமாட்டாதார், உள்தல் - உள்ளுதல், மூடரே - அந்தகார நிறைந்த போதத்தை யுடையவரே. பொழிப்பு : பராசர முனிவனாற் பூசிக்கப்பட்டு அவன் பெயரால் பெயர் பெற்றுள்ள கொச்சை நகரென்னுந் திருப்பதியிலே எழுந்தருளி யிரா நின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி வழிபட மாட்டார் களது நினைவு எவ்வறிருக்கு மென்னில், மழைக்கா லிருளும் வெளி தென இருண்ட மயக்கத்தை யுடைய ஆணவ போதமா யிருக்கும். கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை 12 முதலடி பதப்பொருள் : கழுமலம் - மிகுதிப்பட்ட குற்றம், அமுது - செலம், பதிக்க - விளைவிக்க, உள்நி - உள்ள நீ, கட்டு - வடிவாகக் கட்டுண்டல், உரை - தேய்தல். பொழிப்பு: மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சிக்கில சுரோணித மாகிய இருவகை நீரின்கண் பதிந்து விளைதற்குள்ள நீயுமாயந்தக் கருப்பாசைய நீரின் கண்ணே சிரமுதலாகிய அவயவமாகத் தோற்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும். (பரிணமித்தல் - வேறுபடுதல்.) இரண்டாமடி பதப்பொருள் : கழு - கழுவப்படும், மலம்உது - ஆணவமலமு மற்றதனுடன் சுட்டிச் சொல்லப்பட்ட மாயா மலத்தையுங் கன்ம மலத்தையும், பதி - பாதி, கவுணி - உள்ளே அகப்படுததிக் கவுளிகரித்துக் கொள்ளுதல், அன்கண் - ஆத்துமானிடத்து, துரை - இறைவர். பொழிப்பு : கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையுங் கழுவிமலத் திரயங்களையுங் கழுவாநிற்கும், (என்றபதம் நிற்க. இனிச் சிவனது நாமமுரைக்கற் பாற்று.) தனது பாதியாகிய திருவருளினாலே என்னை யகப்படுத்திக் கவுளி கரித்துக்கொண்டந்த அருள்வழியாக என திடத்தி விடையறாமல் வாழுந் தன்னை யெனக்குத்தந் தடிமைகுலையாமலெக் கண்ணும்விட்டு விளங்குங் கர்த்தர். பாதி எனற்பாலது பதியெனக் குறுகிநின்றது. மூன்றாமடி பதப்பொருள் : கழும் - மயக்கம், அலம் - அலக்கண் படுதல், அமுது - அமுதம், பதி - கர்த்தர், க - சிரசு, உணியன் - உண்ணப் பட்டவர், கட்டு - விளக்கம், உரை - பொன். பொழிப்பு: மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கிப் பெத்தமுத்தி யிரண்டுந் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளக்கப்படா நின்ற பொன்னு ருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகருங் கருணையாளனே. நான்காமடி பதப்பொருள்: கழுமல முதுபதி - கீழ்ச் சொன்ன பதியின்கண், கவுணியன் - கவுணிய கோத்திரத்துவந்த மறையோனாகிய யான், கட்டு - காட்டு, உரை - உரைப்பீராக. பொழிப்பு: திருக்கழுமல மென்னும் மூவாப்பழங் கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக் கவுணிய கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான் நிவேதிக்கப்படும் காட்டாகிய இப் பாடலைக் கீழ்ச் சொன்னவற்றிலும் மலத்திரயங்களிலும் அழுந்தா நின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரைசெய்வார் உயர்ந்தாரே யாதலா லிப்பாடலை யிடைவிடாமலுரை செய்வீராக. காட்டு என்பது, கட்டெனக் குறுகிநின்றது. *** 32. இலக்கியம் ஐ தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் உண்டான இலக்கியங் களைப்பற்றி ஆராய்வோம். அக்காலத்தில் மக்கள் எல்லோரும் கல்வி கற்றிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், கற்றவருக்கு மதிப்பும் பெருமையும் இருந்தபடியால், மக்கள் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்கள். அக்காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார், இயற்றமிழ்ப் புலவராகவும் இசைத் தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். அவர் தமது தேவாரத்தில், அக்காலத்துக் கல்வியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “காவிரி புடைசூழ் சோணாட்டவர்தாம் பரவிய பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்” என்றும், “கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கார் கலைபயில் அந்தணர் வாழும் கலைய நல்லூர்” என்றும் கூறுவதிலிருந்து அவ்வூர்களின் கல்வி நிலையை உணரலாம். கடவுளே கல்வியாகவும் கலைப்பொருளாகவும் புலவராகவும் புலவர்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறுகிறார். “கற்ற கல்வியிலும் இனியானைக் காணப் பெறுமவர்க் கெளியானை”1 என்றும், “பல்கலைப் பொருளே! படுதுயர் களையாய்”2 என்றும் “நம்மானே தண்டமிழ் நூற் புலவர்க் கோர் அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே”3 என்றும் அவர் பாடுகிறார். அவர் காலத்தில் இருந்த புலவர்கள், செல்வரைப் பாடிப் பரிசு பெறாமல் வாழ்க்கையில் துன்பமடைந்தார்கள் போலும். அப்புலவர் களைச் சுந்தரர் தமது திருப்புகலூர்ப் பதிகத்தில் கூறுகிறார். “மிடுக்கிலா தானை வீமனே விறல் விசையனே வில்லுக்கியவன் என்று கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினுங் கொடுப்பாரிலை” “நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல் நடுங்கிநிற்கும் இக்கிழவனை வரைகள்போல் திரள்தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பாரிலை” “நலமிலாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே குலமிலாதானைக் குலவனே என்று கூறினுங் கொடுப்பாரிலை” “கற்றிலாதானைக் கற்று நல்லனே காமதேவனை யொக்குமே முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பாரிலை” “நோயனைத் தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய தாயன்றோ புலவோர்க்கெலாம் என்று சாற்றினும் கொடுப்பாரிலை” “எள்விழுந்திடம் பார்க்கும் ஆகிலும் ஈக்கும் ஈகிலன் ஆகிலும் வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பாரிலை” “தையலாருக்கோர் காமனே சால நலவழகுடை ஐயனே கையுலாவிய வேலனே என்று கழறினுங் கொடுப்பாரிலை” ஆகையினால், “பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம்” என்று கூறுகிறார். இறைவனாகிய சொக்கப் பெருமானே புலவராக இருந்து, பாணபத்திரன் பொருட்டுச் சேரமான் பெருமாளுக்குத் திருமுகப் பாசுரம் எழுதியதாக அக்காலத்தில் நம்பிக்கை இருந்தது. நந்திவர்மன் காலத்துச் சாசனம் ஒன்று செய்யுளாகவே அமைந் திருக்கிறது. அந்தச் சாசனம் திருச்சி மாவட்டத்து லால்குடி தாலுகா திருவெள்ளறைக் கிராமத்தில், ஜம்புநாதசுவாமி கோயில் முன் புறத்தில் உள்ள கல்லில் எழுதப்பட்டிருக்கிறது. ஸ்ரீ தந்திவர்மனின் 3-வது” ஆண்டில் அது எழுதப்பட்டது. அதாவது தந்திவர்மனின் மகன் நந்தி வர்மனுடைய காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தின் நடுப்பகுதி, பிற்காலத்தவரால் செதுக்கிவிடப்பட்டதால், எழுத்துக்கள் மறைந்து விட்டன. படிக்கக்கூடியதாக உள்ள பகுதி, “பிரம்மதேயத்து உறுதியான் விழுப்பேரரையன் சாத்தன் மற்றவன் புகழ் நிற்க. இது பாடித் தந்தோன் பெருங்காவிதி சடையன் பள்ளி” என்று காணப்படுகிறது. எனவே, இச்சானச் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் பெருங்காவிதி சடையன் பள்ளி என்பது தெரிகிறது.4 இனி, அக்காலத்தில் இருந்த வேறு புலவர்களையும் அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் ஆராய்வோம். பாரத வெண்பா பெருந்தேவனார் என்னும் புலவர், நந்திவர்மன் காலத்தில் இருந்தார். இவர் பாரத வெண்பா என்னும் நூலை இயற்றினார். இவர், நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இந்நூல், பரிபாலகர் புகழைக் கூறும் செய்யுளினால் இதனை அறியலாம். அச் செய்யுள் இது. “வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால் உண்மையால் பாரா ளுரிமையால் - திண்மையால் தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு யார்வேந்தர் ஏற்பா ரெதிர்” இச்செய்யுள் தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்மனைக் கூறுகிறது. இதன்கீழ், பெருந்தேவனார் எழுதும் வசனம் இது : “எல்லை யினிறைந்த எண்டிசை யுலகத்து மலையுமலையும் உள்ளிட்ட மண் மிசை முழுதும் மறையது வளர்க்க அல்லிபீடத் தரிவைக்குத் தன்னழ கமர் தோளே ஆலயமாக்கிய பல்லவர் கோமான் பண்டிதரலயனைப் பரவினேம்; இனி, ஈண்டிய தொல்புகழ் எழுமணிவரைத்தோட் பாண்டவர் நிலைமை யாதாயிற் றோவெனில்.” இதிலிருந்து, தெள்ளாறெறிந்த நந்திவர்மனுக்குப் பண்டிதரால யன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டென்பது தெரிகிறது. இப் பெயரினால், இவன் பண்டிதர்களை ஆதரித்தான் என்பது தெரிகிறது. இந்நூலை இயற்றிய பெருந்தேவனாரின் வரலாறு தெரிய வில்லை. இவர் இயற்றிய பாரத வெண்பா, பாண்டவருக்கும் கௌரவருக்கும் நிகழ்ந்த பாரதப்போரைக் கூறுகிறது. பாரதக் கதை முழுவதையும் கூறவில்லை. உத்தியோக பருவம், வீடும் பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களை மட்டும் கூறுகிறது. துரோண பருவத்தின் பிற்பகுதிச் செய்யுள்கள் மறைந்துவிட்டன. பெருந்தேவனாரின் பாரத வெண்பா, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். இடையிடையே சில விருத்தப் பாக்களும் அகவற்பாக்களும் காணப்பட்ட போதிலும் பெரிதும் வெண்பாவாலான நூலாதலால், இதற்குப் பாரத வெண்பா என்று பெயர் கூறப்பட்டது. இந் நூலின் பாக்கள் இனிய கம்பீரமான நடை யுடையன. படித்து இன்புறத் தக்கன. ஆனால், இடையிடையேயுள்ள உரைநடை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையாக இருக்கிறது. ஆகவே படிக்க இனிமை யற்றிருக்கிறது. தேவை யில்லாத வடசொற்களைப் புகத்தித் தூய்மையைக் கெடுத்துவிட்டார் இதன் ஆசிரியர். வடமொழிச் சொற்கள் கலவாமல் தூய தமிழ்நடையாக இருந்தால் இந்த வசனநடை பெரிதும் அழகுபெற்றுச் செய்யுளுக்கு ஏற்ற வசனமாக அமைந்திருக்கும். இந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் பற்றி, அரசாங்கத்துச் சாசன இலாகா அறிக்கையொன்று தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது. “பல்லவ அரசன் (மூன்றாம் நந்தி) காலத்தில் பாரத வெண்பா என்னும் தமிழ்ச் செய்யுள் நூலைப் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் வாழ்ந்திருந்தார். எப்படி என்றால், அந்த நூலின் உத்தியோக பர்வத்தின் வாழ்த்துச் செய்யுளில் தன்னை ஆதரித்த பல்லவ அரசனை ‘தெள்ளாற்றில் வென்றவன்’ என்று குறிப்பிடுகிறார். தமிழ் நூல்களாகிய புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு என்பவற்றின் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் இதே பெருந்தேவரினால் பாடப்பட்டன என்று நம்பப் படுகின்றன”5 என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த அரசாங்க அறிக்கையை உண்மை என்று கொண்டு, பிரெஞ்சுக்காரரான ழூவோ தூப்ராய் அவர்கள் தாம் எழுதிய பல்லவர்கள் என்னும் நூலில் இதனை மேற்கோள்காட்டியுள்ளார்.6 இந்தச் சாசன அறிக்கை எழுதிய கே. வி. சுப்பிரமணிய ஐயர், தாம் எழுதிய ஹnஉநைவே னுநமாயn7 என்னும் நூலிலும், தெள்ளா றெறிந்த நந்திவர்மன் காலத்திலிருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனாரே, அகநானூறு புறநானூறு முதலிய தொகை நூல்களைத் தொகுத்து அவற்றிற்குத் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று எழுதுகிறார். பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்று கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்கது அல்ல. இவர், கடவுள் வாழ்த்துப் பாக்களைப் பாடியதாக யாதொரு சான்றும் கிடையாது. இவருக்கு முன்பு சில பெருந்தேவனார்கள் இருந்தார்கள். அப்பெருந் தேவனார்களில் இருவர் பாரதத் தைத் தமிழில் பாடினார்கள். அவர்களில் ஒருவர் சங்கத் தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார், சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், அவர் காலத்தில் தான் அந்தத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படியானால் அதற்குச் சான்று என்ன? முன்னமே தொகுக்கப்பட்ட தொகை நூல்களுக்கு இவர் பிற்காலத்தில் கடவுள் வாழ்த்துப் பாடினார் என்றால், தொகுக்கப்பட்ட காலத்திலேயே கடவுள் வாழ்த்துப் பாடியதாக வரலாறு கூறுகிறது. ஆகவே, அரசாங்கத்துச் சாசன இலாகா அறிக்கை தவறானது. அகநானூறு, புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல் களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்பவர்; அரசாங்க அறிக்கை கூறுகிற படி பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் அல்லர். சின்னமனூர் செப்பேட்டுச் சாசனம், பாண்டியர் வழியில் வந்த ஒரு அரசனைக் கூறும்போது, “மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” செங்கோல் நடத்தினான் என்று கூறுகிறது. அந்த மகாபாரதம் மறைந்து போயிற்று. அதற்குப் பிறகு மற்றொரு பெருந்தேவனார் என்பவர் மகாபாரதத்தைத் தமிழில் இயற்றினார். அது பெரிதும் அகவற்பாவினாலானது. அப்பாரதமும் இப்போது முழுவதும் கிடைக்க வில்லை. சில செய்யுள்கள்மட்டும், தொல்காப்பிய உரையில் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டடப்பட்டுள்ளன. அந்தப் பாரதம் பாடிய பெருந்தேவனார் காலத்தில்தான், அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை முதலிய எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்டு, அவரால் கடவுள் வாழ்த்துச் செய்யுள்கள் பாடப்பட்டன. அது நிகழ்ந்தது கி.பி. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டிலாகும். அதாவது, சங்கத் தொகை நூல்களைக் கூறுகிற அப்பர் சுவாமிகளுக்கு முற்பட்ட காலமாகும். எனவே, கி.பி. ஒன்பதாம்நூற்றாண்டிலிருந்த பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் சங்கத்தொகை நூல்களைத் தொகுத்தவரும் அல்லர்; அவற்றிற்குக் கடவுள் வாழ்த்துப் பாடினவரும் அல்லர். மேலும், 1907-ஆம் ஆண்டுச் சாசன அறிக்கையிலும் இதே தவறு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையைத் தமிழ்ப்படுத்திக் கீழே தருகிறேன்.8 “தமிழில் பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் கடைசி மதுரைக் கல்லூரியில் (தமிழில் கடைச் சங்கம் என்பர்) ஒரு அங்கத்தினராக இருந்தார் என்று பரம்பரைச் செய்தி கூறப்படுகிறது. இச்செய்தியில் ஏதேனும் உண்மை இருக்குமானால், சின்னமனூர் பெரிய செப்பேடு கூறுகிற தமிழ் மகாபாரதம் அவர் எழுதியதாக இருக்கவேண்டும். ஆனால், பெருந்தேவனார், தம்மைப் போற்றிய அரசன் தெள்ளாற்றுப் போர் வென்ற பல்லவ அரசன் என்று கூறுகிறார். (ஹnரேயட சுநடிசவ கடிச 1899-99, ஞயசய 16) இந்தப் பல்லவ அரசன் தெள்ளாறெறிந்த நந்திப் போத்தரசன் என்றால், - இவனுடைய சாசனங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகின்றன - பெருந்தேவனார் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவராதல் வேண்டும். சின்னமனூர் செப்பேடு கூறுகிற பாரத மொழி பெயர்ப்பு, பாரத வெண்பாவில் உள்ள பாரதமாகுமானால், இச்செயல், பாண்டிய அரச பரம்பரையில், கடந்துபோன முதல் பாண்டியர்கள் மேல் ஏன் ஏற்றிக் கூறப்பட வேண்டும் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. பாரதம் பாடியது, ஏதோ ஒரு அரசன் அல்லது அரசர்கள் காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும். அந்த அரசர் பெயரைச் சாசனம் எழுதியவர் சாசனத்தில் குறிப்பிட விருப்ப மில்லாதவராக இருந்தார்போலும் என்றால், இவ்வாறு கருதுவதற்குச் சான்றுகள் கிடையா. இந்தச் சாசனத்தில் மகாபாரத மொழிபெயர்ப்பு என்று குறிக்ப்படுவது கடைச் சங்க (மூன்றாம் சங்கம்) காலத்தில் செய்யப்பட்ட பாரத மொழி பெயர்ப்பு என்று தற்காலிகமாக ஒப்புக்கொள்ளலாம். அது, பெருந்தேவனாருக்கு முன்பு செய்யப் பட்டிருக்கவேண்டும். மதுரையில் சங்கம் வைத்தது என்பது மதுரையில் நிறுவப்பட்ட மூன்று சங்கங்களில் கடைசியானது. அரிகேசரி மாறவர்மனுக்குக் கூறப்பட்ட காலம் சரியானதாக இருக்குமானால், கடைச்சங்கம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும்.” இந்த அரசாங்க அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிற தவறான கருத்துக்களைத் தமிழறிந்தவர் நன்கு அறிந்து கொள்ளக் கூடும். பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் கடைச் சங்கத்தில் இருந்தவர் என்று பரம்பரைச் செய்தி கூறுவதாக இவ்வறிக்கையில் எழுதப்பட்டிருக் கிறது. இது தவறான செய்தி. அவ்வாறு பரம்பரைச் செய்தி கிடையாது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடைச் சங்கத்தில் இருந்தார் என்பது பரம்பரைச் செய்தி. இதை நன்கு தெரிந்து கொள்ளாமல், இந்த அரசாங்க அறிக்கையை எழுதியவர் பாரதம் பாடியவரையும், பாரத வெண்பா பாடியவரையும் குழப்பி மழுப்புகிறார். இவ்வாறு எழுதுவது செம்மையாகத் தெரிந்து கொள்ளாததனால் ஏற்பட்ட மயக்கமாகும். இந்த மயக்கத்தின் காரணமாக, தெள்ளாறெறிந்த பல்லவன் காலத்தில் எழுதப் பட்ட பாரதத்தைப் பாண்டியன்மேல் ஏற்றிக் கூறப்பட்டதாகக் கருதுகிறார். அதன் பிறகு, இரண்டு பெருந்தேவர்களும் வெவ்வேறு காலத்தவர் என்று சரியான முடிவுக்கு வருகிறார். அதுவும் உறுதியற்ற முடிவு என்று கூறுகிறார். பிறகு கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கடைச் சங்கம் தோன்றியது என்று தவறான முடிபு கூறுகிறார். இதைச் சான்று காட்டி மறுக்க முடியுமாயினும், இது இடம் அன்று. ஆகவே இதைப் பற்றிப் பேசாமல் விடுகிறோம். பாரதம் பாடியவரும், பாரத வெண்பா பாடியவரும் வெவ்வேறு காலத்தில் இருந்த வெவ்வேறு பெருந்தேவனார்கள் என்பதை மட்டும் அழுத்தமாகக் கூறுகிறோம். நந்திக்கலம்பகம் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் மேல் பாடப்பட்ட நூல் நந்திக்கலம்பகம். கலம்பகம் என்பது, சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் உண்டான பிரபந்த நூல்களில் ஒன்று; பலவகையான பாக்களினாலே அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்படுவது. அந்தாதித் தொடையாக வந்து, இறுதிச் செய்யுளின் கடைசிச் சொல்லும் முதற்பாட்டின் முதற் சொல்லும் ஒன்றாக அமைந்து மண்டலமாக முடிய வேண்டும். இந்த முறைப்படி நந்திக் கலம்பகம் அமைந்திருக்கிறது. ஆனால், 78-ஆம் பாட்டுக்கும் 79-ஆம் பாட்டுக்கும் அந்தாதித்தொடை அமையவில்லை. இதனால், இச்செய்யுள்களுக் கிடையே ஒன்று அல்லது பல செய்யுள்கள் இருந்து மறைந்துவிட்டன என்று தோன்றுகிறது. அரசர்மீது பாடப்படுகிற கலம்பகம் தொண்ணூறு செய்யுள் களைக் கொண்டிருக்கவேண்டும் என்பது பிற்காலத்து இலக்கணச் சட்டம். இதன்படி நந்திக் கலம்பகம் தொண்ணூறு செய்யுளைக் கொண் டிருந்ததா என்பது தெரியவில்லை. இப்போது இந்நூலில் காணப்படுகிற செய்யுட்கள் எண்பத்தெட்டுதான். மேலே கூறியபடி, ஓரிடத்தில் அந்தாதித் தொடையற்றிருக்கிறபடியால், சில செய்யுள்கள் பிற்காலத் தில் மறைந்திருக்க வேண்டும். சில பிரதிகளில், இருபத்திரண்டு செய்யுட்கள் அதிகமாகக் காணப்படு கின்றன. எழுபத்தாறாம் செய்யுளின் பின்னிரண்டடிகள் மறைந்து விட்டன. நான்கு பாயிரச் செய்யுட்கள் உள்ளன. எனவே, நந்திக் கலம்பகம் ஆதியில் எத்தனைச் செய்யுள்களைக் கொண்டிருந்தது என்பது இப்போது தெரியவில்லை. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பாரத வெண்பாவைப் பாடிய பெருந்தேவனாரே இந்நூலையும் பாடியிருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். இந்நூலை இயற்றியவர் இவ்வரச னுடைய தம்பியார் என்றும், அவர் இவ்வரசனைப் பகைத்து இவர்மீது வசை பாடுவதற்காக இந்நூலை இயற்றினார் என்றும், இந்நூலைப் பாடக் கேட்ட நந்திவர்மன் உயிர் நீத்தான் என்றும் ஒரு கதை வழங்குகிறது. அண்மைக் காலத்து நூலாகிய சோமேசர் முதுமொழி வெண்பா, “நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்” என்று கூறுகிறது. இக்கதை கற்பனைக் கதை என்று தோன்றுகிறது. இக்கதைக்குக் காரணம் கீழ்க்கண்ட செய்யுளாக இருக்கக் கூடும் : “வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை யடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம் நானும் என்கவியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயா பரனே” என்பது அச் செய்யுள். இச் செய்யுளை, நந்திக் கலம்பகச் செய்யுள் எனக் கொண்டு, நந்திவர்மன் உயிரோடிருந்தபோது பாடப்பட்ட வசைப் பாடல் என்று கருதி, மேற்படி கதையைக் கட்டிவிட்டார்கள் போலும். இச் செய்யுள், நந்திவர்மன் இறந்து அவன் உடம்பு எரிக்கப்பட்டபோது, யாரோ ஒரு புலவர் இயற்றிய தனிப்பாடல் என்று தோன்றுகிறது. இத் தனிப்பாடல், பிற்காலத்திலே நந்திக் கலகம்பக நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டது. இச்செய்யுளே இக்கற்பனைக் கதைக்குக் காரண மாயிற்று என்று கருதலாம். கலம்பக நூல்களில், காலத்தால் முற்பட்டது இந்த நந்திக் கலம்பகம் எனத் தெரிகிறது. சொல்லும் பொருளும் நயம்பட அமைந்துள்ள இந்த நந்திக் கலம்பகம், வெறும் இலக்கிய நூல் மட்டும் அன்று; நந்தி வர்மன் வரலாற்றை ஆராய்வதற்கும் உதவியாக இருக்கிறது. ஆகவே, இந்நூல் முழுவதையும் பின் இணைப்பில் சேர்ந்துள்ளேன். நந்திக்கோவை தெள்ளாறெறிந்த நந்திவர்மன்மேல் சில கோவைப் பிரபந்தங் கள் பாடப்பட்டன என்பது, நந்திக் கலம்பகச் செய்யுள் ஒன்றினால் தெரிகிறது. அச் செய்யுள் : “இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம் அந்தக் குமுதமே அல்லவோ - நந்தி தடங்கைப் பூ பாலன்மேல் தண்கோவை பாடி அடங்கப்பூ பால ரானார்” இந்த உலகத்திலே இரவலர் என்று கூறப்படுவது குமுதம் என்னும் அல்லிப் பூ அல்லாமல் வேறு இரவலர் இலர். (இரவு + அலர் = இரவலர் = இரவில் பூக்கும் குமுதம். இரவலர் = யாசிப்பவர்) ஏனென்றால் நந்திவர்மன்மீது இரவலர்கள் கோவைப் பிரபந்தம் பாடிப் பரிசில் பெற்றுப் பூபாலராக (மன்னர்களாக) ஆய்விட்டார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து. இதனால், வறுமை யடைந்த புலவர்கள் சிலர், இவ்வரசன் மீது கோவைப் பிரபந்தங்கள் பாடினார்கள் என்பது தெரிகிறது. அக்கோவை நூல்கள் இப்போது கிடைத்தில. சுந்தரர் தேவாரம் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பதிகங்களைப் பாடினார். அவர் பாடியவை முப்பத்தெண்ணாயிரம் பதிகங்கள் என்று கூறுவர். “பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி பிறங்குதிரு வெண்ணெய் நல்லூர்ப் பித்தா என்னும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும் ஈறாய் முப்பத்தெண்hயிரமதாக முன்புபுகன் றவர்நொடித்தான் மலையிற் சேர்ந்தார் முறைகளெலாந் திருத்தில்லை மூதூர் தன்னில் அன்றவர்கை இலச்சினையால் வைத்தார் மன்ன! ஆராய்ந்து தருகஎன அருளிச் செய்தார்.”9 பின்னர், இராசராசன் என்னும் அபயகுல சேகர மன்னன் காலத்தில் இப்பதிக ஏடுகளைச் சோதித்துப் பார்த்த போது, நூறு பதிகங்கள் தவிர மற்றைய பதிகங்கள் எல்லாம் மண் தின்றுபோயின. ஆகவே, சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருப்பதிகங்களில் பெரும் பாலும் மறைந்து விட்டன. எஞ்சியுள்ள நூறு தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வெள்ளி யம்பலத் தம்பிரான் என்பவர் காரோணப் பதிகம் ஒன்றை இயற்றி இடைச் செருகலாக இதனுடன் சேர்த்து விட்டார். அப்பதிகத்தைப் பின் இணைப்பில் காண்க. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் அக்காலத்து இயற்றமி ழாகவும் இசைத்தமிழாகவும் விளங்குகிறது. திருமுகப்பாசுரம் மதுரையில் கோயில் கொண்டருளிய சொங்கலிங்கப் பெருமா னுக்குத் திரு ஆலவாய் உடையார் என்னும் பெயரும் உண்டு. இவர் தமது அடியாராகிய பாணபத்திரன் பொருட்டுச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு ஒரு திருமுகப் பாசுரம் எழுதியனுப்பினார் என்று புராணங்கள் கூறுகின்றன. “அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே எதிரில் செல்வத்துக் கேற்ற இருநிதி கொடுக் என்று மதிமலிபுரிசை என்னும் வாசகம்வரைந்த வாய்மைக் கதிரொளி விரிந்த தோட்டுத் திருமுகம் கொடுத்தார் காண.”10 “விதமுறு தனங்கள் மிக்க வேண்டுப அளிப்பன் தாழாது அதர்வுற விரைவற் சென்றிவ் ஓலையைஅளித்தி என்று மதிமலி புரிசை என்றோர் வரைதரு திருமுகத்தை முதர்தரு கனவிற்காணக் கொடுத்தனன் முக்கட் சொக்கன்”11 “மறைக்குரை செய்த வாக்கான் மதிமலிபுரிசை என்னும் சிறப்பியல் சீர்சால் செய்யுட் பாசுரம் செப்பித் தீட்டிப் பிறைச்சடைப் பெருமான் நல்கி மறைந்தனன், பெரும்பாண் செல்வன் உறக்கம்நீத்து ஆடிப்பாடி உவகைமமா கடலில் ஆழ்ந்தான்”12 இது, சொக்கப் பெருமானே பாடியதோ அல்லது அக்கோயிலில் இருந்த புலவர் ஒருவர் பாடியதோ, உண்மை எதுவாக இருந்த போதிலும், திருவாலவாய் உடையார் பெயரினால் ஒரு திருமுகப் பாசுரம் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. பொன்வண்ணத் தந்தாதி பொன்வண்ணத் தந்தாதி என்னும் இந்நூலை இயற்றியவர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பரும் சைவ நாயன் மார்களில் ஒருவரும் ஆகிய, கழறிற்றறிவார் என்னும் சிறப்புப் பெயரையுடைய சேரமான் பெருமாள் நாயனார். இவர், இந்த அந்தாதியைத் தில்லைச் சிறறம்பலத்தில் அரங்கேற்றினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. “ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் திளைத்தே அமர்ந் தருளால் சீரார் வண்ணப் பொன்வண்ணத் திருவந் தாதி திருப்படிக் கீழ்ப் பாராதரிக்க எடுத்தேத்திப் பணிந்தார் பருவ மழை பொழியும் காரால் நிகர்த்த அரியகொடைக் கையார் கழறிற் றறிவார் தாம்”13 இந்நூல், பொன்வண்ணத் தந்தாதி என்று பெயர் பெற்றதன் காரணம், பொன்வண்ணம் என்னும் சொல்லை முதலில் கொண்டு தொடங்குவதனால்தான். நூலின்முதல் சொல்லே அந்நூலின் பெயராக அமைவதும் உண்டு. வாக்குண்டாம், வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன், ஆத்திசூடி என்னும் நூலின் பெயர்கள், அந்நூல்களின் முதற் சொல்லினாலே அமைந்ததுபோல இந்நூலும் இதன் முதற் சொல்லினாலே பெயர்பெற்றது. பொன் வண்ணத்தந்தாதி, நூறு கலித்துறைச் செய்யுட்களைக் கொண்டு அந்தாதித் தொடையாக இயன்றது. முதற் செய்யுளின் அந்தமும் அடுத்த செய்யுளின் ஆதியும் ஒன்றாகத் தொடங்குவதே அந்தாதி எனப்படும். அதாவது, முதற் செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாவது அசையாவது சீராவது அடுத்த செய்யுளின் முதற் சொல்லாக அமையப்பாடுவது. கடைசிச் செய்யுளின் முதற் சொல்லாக அமையப்பாடுவது. கடைசிச் செய்யுளின் ஈற்றுச் சொல் முதற் செய்யுளின் தொடக்கமாகவும் அமையவேண்டும். பொன் வண்ணம் என்று தொடங்குகிற இந்நூல், செய்யுள்தோறும் அந்தாதியாக அமைந்து ஈற்றுச் செய்யுளின் இறுதிச் சொல் பொன்வண்ணமே என்று முடிந்து, அந்தாதியின் இலக்கணத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அந்தாதி, பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக் கிறது. திருவாரூர் மும்மணிக் கோவை இந்நூலை இயற்றியவரும் கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் நாயனாரே. இக்கோவையைத் திருவாரூர் திருக்கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் முன்னிலையில் அரங்கேற்றினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. “தேவர் முனிவர் வந்திறைஞ்சுந் தெய்வப் பெருமாள்கழல் வணங்கி மூவர் தமக்கு முதலாகு மவரைத் திருமும்மணிக் கோவை நாவ லூரர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்தாவில் பெருமைச் சேரலனார், தம்பி ரானார் தாங்கொண்டார்”14 மும்மணிக் கோவை என்பது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் செய்யுட்கள் விரவி வகைக்குப் பத்துச் செய்யுளாக முப்பது செய்யுட்களால் அமைக்கப்படும் நூல். இந்த இலக்கணப்படியே இக் கோவையும் அமைந்திருக்கிறது. இந்நூலும், பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. ஆதி உலா ஆதி உலாவுக்குக் கயிலாய ஞான உலா என்னும் பெயரும் உண்டு. இதை இயற்றியவரும் கழறிற்றறிவாராகிய சேரமான் பொருமாள் நாயனாரே. தமிழில் உள்ள உலா நூல்களிலே இதுவே முதன் முதலாக ஏற்பட்டது என்பதை இதற்கு உள்ள ஆதி உலா என்னும் பெயரினாலேயே அறியலாம். இந்த உலாவைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. சேர மான்பெருமாள் நாயனார் இந்த உலாவைப் பாடி, சுந்தரமூர்த்தி நாயனாரோடு திருக்கயிலாயம் சென்று அங்கேஅரங்கேற்றினாராம். பிறகு, திருக்கயிலாயத்திலிருந்து இவ்வுலாவை மாசாத்தர் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள திருப்பிடவூரில் கொண்டுவந்து வெளி யிட்டாராம். இதைப் பெரிய புராணம் கூறுகிறது. “பெருகுவேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய்! உனை அன்பால் திருஉலாப்புறம் பாடினேன் திருச்செவி சாத்திடப் பெற வேண்டும் மருவு பாசத்தை அகற்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன அருளும்ஈசரும் சொல்லுக என்றனர் \அன்பரும் கேட்பித்தார்” “சேரர்காவலர் விண்ணப்பஞ் செய்த அத் திருவுலாப்புறம் அன்று சாரல்வெள்ளியங் கயிலையில் கேட்டமா சாத்தனார் தரித்திந்தப் பாரில்வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும் நகரவேலைசூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே”15 திருமறைக்காட்டந்தாதி இந்த அந்தாதியைப் பாடியவர் சேரமான்பெருமாள் நாயனார். சேரமான்பெருமாள், சுந்தரமூர்த்தி நாயனாருடன் தல யாத்திரை செய்துகொண்டு திருமறைக்காட்டுக்குச் சென்றபோது இவ்வந் தாதியைப் பாடினார் என்று பெரிய புராணம் கூறுகிறது. “நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட் டருமணியை இறைஞ்சி விழ்ந்து பணிந்தெழுந்து போற்றியாழைப் பழித்து என்னும் அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த அருட்சேரர் சிறந்த அந்தாதியிற் சிறப்பித் தனவே யோதித்திளைத் தெழுந்தார்”16 இந்த அந்தாதியைப்பற்றி இப்போது ஒன்றும் தெரியவில்லை. இந்நூல் முழுவதும் மறைந்துவிட்டது போலும். பதினோராந் திருமுறையைத் தொகத்த நம்பியாண்டார்நம்பி காலத்திலேயே இது மறைந்துவிட்டது போலும். அக்காலத்து இலக்கியங்களைப் பற்றிக் கூறினோம். இனி, அவ்விலக்கியங்களின் நடைப்போக்கை அறிய அவற்றிலிருந்து சில செய்யுட்களைக் காட்டுவோம். பாரத வெண்பா பாரதப் போர் நிகழப்போவது உறுதியாய்விட்டது. போர்க் களத்தில் பாண்டவரைக் கொல்லக்கூடாது என்று வரம் கேட்கும்படி குந்தி தேவியைக் கண்ணன் கன்னனிடம் அனுப்புகிறான். தேர்ப் பாகனால் வளர்க்கப்பெற்ற ஒரு அனாதைப் பிள்ளை என்று தன்னைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் கன்னராசனிடம் குந்திதேவி சென்று, கன்னன், தான் பெற்ற மகன் என்று கூறுகிறாள். தன் பிறப்பை அறிந்த கன்னன் சொல்லுகிறான். அப்பகுதியின் வசன நடையையும் செய்யுள் நடையையும் கீழே காண்க:- “பாண்டவர்க்கு முன்னோன்றலாய்ப் பாண்டு புத்திரனென்னும் படி ஆண்டகையாயது அறிந்திலேன்; என்பால் அருவினை நின்று அகற்றுகையால் நீயும் முன்னமே அறிவித்திலை; முடிவிற்காலத் தறிவித்தனை; இதற்கு என்ன வண்ணஞ் செய்வேனென்று இரு நிலத்துமிசை மயங்கி வீழ்ந்து, பின்னும் யாது சொன்னான் கன்னன்”: இன்னா னெனவறியா வென்னை முடிகவித்து மன்னர் வணங்க வரசியற்றிப் - பின்னையுந் தன்னெச்சி லுண்ணாத்தகைமையான் றானுண்டா bன்னெச்சி லென்னோ டினிது. அன்றியும், கொன்னவிலுந் தேர்ப்பாக னென்னு குலம்பேசி யென்னைப் பலரு மிகழ்ந்துரைப்ப - பின்னையுந்தா bன்னெச்சி லென்னோடு முண்டானை யெங்ஙனே யுன்னச் சிழப்பே னுரை. தேர்ப்பாகன் மகனென்று என்னை மன்னர் பலரும் இகழ்ந்துரைப்ப, மற்று அவரை முனிந்து என்னுடன் இன்னடிசில் உண்டு என்னை மன்னர் வணங்க முடிகவித்த ராச ராசனை எங்ஙனே நான் விடுவேன் என்று பின்னுஞ் சொல்லுவான் கன்னன்: மருவார்வண் டாரான் மணிமுடியான் செய்த வருடா னறியாதா ரில்லை - தெருளா வழிகொடா வாறே யடுகளிற்றாற் காகிற் பழிகடாஞ் சாலப் பல. என்று பின்னுஞ் சொல்லுவான் கன்னன்: மதமா மழகளிற்றான் மற்றெனக்குச் செய்த வுதவி யுலகறியு மன்றே - யுதவிதனை நன்றுசெய்தோர் தங்களுக்கு நானிலத்தி னல்லோர்கள் குன்றுவதோ செய்ந்நன்றி கூறு. என்றிவ்வகை சொல்லிப் பின்னுஞ் சொல்லுவான் கன்னன்: பன்மணிகள் சிந்திப் பரந்து கிடந்ததுகண் டின்மணிக் கென்புகுந்த தென்னாம - னன்மணியைக் கோக்கோ பொறுக்கவோ வென்றானுக் கென்னுயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு. இராசராசன் தேவி லக்ஷணையும் நானும் ஒரு தனி மண்டபத்து இருந்து சூதாடி நிற்ப, இராசராசன் துரியோதனன் மிருகவேட்டை போய்க் கதுமென வந்தது கண்டு மற்று அவளும் போகவென்று எழுந்திருப்ப, போகாமல் தடுக்கவென்று அவள் பூந்துகிலைப் பற்றி யான் பிடித்திட, மேகலாபரணம் அற்று நவரத்தினங்கள் நாற்றிசையும் சிந்தியிட்ட வெல்லைக்கண், அடல் வேந்தனும் வந்து என்னை அருகு அணைந்து மற்று இதற்குக் காரணம் என் என்னாது கருணையுடன் அகமலர்ந்து நகையரும்பி யானும் கோப்பேனோ பொறுக்குவேனோ வென்ற வேந்தனுக்கு என் நல்லுயிரை யுத்தமண்டலத்துத் துறப்பே னென்று பின்னுஞ் சொல்லுவான் கன்னன் : உந்தமது புத்திரர்க்கா நல்லீராய் வந்தீர் நீர் இன்றென்மே லாசையிலை யுமக்கு - அன்று வடுவஞ்சிப் போவிட்டீர் மாண்டேனே லின்று நடவென்பீ ராரை நயந்து. உம்முடைய புத்திரர்க்கு நல்லீராய் ஒரு காரணத்தினாற் போந்தீரல்லது, மற்று எனக்கு நல்லீராகில் முன்னமே வந்து என்பால் மருவீரோ என்னுமது நிற்க, அன்று குழவிக் காலத்தே வடுவஞ்சிப் பேராற்றிடை யொழுக்கிய ஞான்று புத்திரனென்று உணராது மித்திர பாவத்தை நோக்கினீர்; அன்று மற்று அந்த ஆற்றிடையின் மாண்டவ னன்றோ யான்? சன்ம சங்கற்பத்தால் வாழ்வேந்தன் திருதராஷ்டிரன் சூதன் எடுத்து இனிதுடன் வளர்க்க, வண்மையுடன் ராசராசன் துரியோ தனனும் தோழனாகக் கொண்டு அங்கவள நாட்டுக்கு அபிஷேகம் பண்ணிப் பாராஷ்டிரத்து க்ஷத்திரியரும் வணங்கப் பண்ணி என்னை யும் இவ்வகை பிரகாசிப்பித்தானில்லையாகில், நீரும் வந்து அழைப்பீர் ஆரை என்று எடுத்துரைத்துப பின்னுஞ் சொல்லுவான் கன்னன்: நன்றாக மன் னெனக்கிந்த நாடறியக் குன்றாத நன்மை பலகொடுத்தா -னென்றாலு மீண்டவன் செய்த வுதவியினை யான்மறந்தாற் றீண்டுவளோ தாமரையாள் சேர்ந்து. இராசராசன் துரியோதனன் என்னை இன்னானென்று அறியாதே இன்னடிசில் உடனூட்டி, மன்னர் இகழாது நிற்க அங்கராசன் என்று அபிஷேகம் பண்ணி அங்கதேசம் எனக்கு அளித்துத் தன் பிராதாக்கள் தொண்ணூற்றொன்பதின்பமரும் சர்வ க்ஷத்திரியரும் தொழுது இறைஞ்சிக் கீழிருப்பதற்கத் தொலைவிலாத அசனமளித்து, ஏகாந்தத் துடன் இரு சரீரமும் ஒரு சரீரமாய் இனிதிருந்தோனுக்கு, எப்படி யாயினும் பழி பாவம் விளையாமல் காத்து இராச்சியம் பண்ணிக் கொடுத்துப் பின்பு வந்து பாண்டவரைப் பிராதாக்களெனக் காண்பேன்; அதுவன்றி, துரியோதனுக்கு ஆபத்து விளைந்த விடத்து மற்று அவனால் முன்னம் செய்யப்பட்ட உபகாரத்துக்கு யானும் சிறிது பிரதியுபகாரமாக அவனுக்குப் போர்விளைந்த யுத்தமண்டலத்து நிகழப்பட்ட கசதுரங்க பதாதிகளோடும் சர்வாயுதங்களோடு மவன்மேல் வரப்பட்ட வினைகளையும் விநாசஞ் செய்து, என் சர்வ சக்தி யெல்லாம் வஞ்சியாமற் காத்துக்கொண்டு, இரண முகத்தி லுள்ள சத்துரு பக்ஷத் தாரும் பரராஷ்டிரத்துச் சர்வக்ஷத்திரியரும் காணப் போர் மலைந்து, யுத்த பூமிவிட்டு நீங்காது துரியோதனன் கண்டு களிகூரச் சர்வாயுதங் களாற் சலிப்புண்டு குருதிப்புனற் குளித்து, யானைக் கோடுகளாற் குத்துண்டு, வீரசுவர்க்கம் பெறுவதன்றி, மற்று என்னாற் பேசத்தக்க தில்லை யென்று அநேகஞ் சொல்லிக் குந்திதேவியை நோக்கி நமஸ் கரித்து, உனக்கு வேண்டு வன வேண்டி என்பக்கல் வாங்கிக் கொண்டு ஈண்டன் எழுத்தருள் வாயாக என்று கன்னன் சொல்லக் கேட்டுப் பொறியற்ற கருவிபோல அறிவற்று மயங்கிக் கண்ணீர்மல்கி யாது சொன்னாள் குந்திதேவி: உம்பரிக லேறுபோ லுற்றெழுந்த வஞ்ஞான்று தம்பியரைக் கொல்கை தவிரென்றாள் - நம்பி யியலாரும் வேலங்க நீணாடன் றன்னைக் குயிலாரு மென்மொழியாள் கூர்ந்து. நீ உற்றெழுந்த சமர பூமியில் வெற்றி கொள்ளுமிடத்து மற்று உன் பிரதாக்கள் ஐவரையும் இரட்சித்துக் கொள்வாயாக வென்று குந்திதேவி கூறக்கேட்டு, யாது சொன்னான் கன்னன்: பார்த்தனையான் கோற லவன்கைப் படுதலெனும் வார்த்தை யுரைசெய்தேன் மனமகிழ - வேற்கும் பொருவெஞ் சமர்தன்னிற் போந்தெதிர்ந்தான் மற்றாங் கொருவருந்தா மில்லை யெதிர். என்றிவ்வகை அருச்சனனை யான் கொல்லல், மற்று அவன் கையில் யான் படுதல் - இரண்டில் ஒன்று ஆமென்று பரராஷ்டிரத்து க்ஷத்திரியர் பலருங் கேட்கச் சொன்னேன்; இது தவிராது; யானும் அவனுமொழியத் தீங்கு ஒருவர்க்குஞ்செய்யே னென்று சொல்ல, பொறியற்ற பாவைபோல் அறிவற்று அகஞ் குழைந்து யாது வேண்டிக் கொண்டாள் குந்திதேவி : வெஞ்சரங்கோத் தெய்து விறலழிக்கு நன்மகனே பஞ்சவரிற் பார்த்த னுடன்மலைந்தா - லஞ்சுதலை நாக மிருகாற் றொடாதொழிக வென்றுரைத்தாள் ஆக முறத்தழுவி யாங்கு. அன்றியும், வம்பவிழ்தார் மன்னா! மணிநெடுந்தேர் மேலேறி யும்பியரைக் கொண்டுநீ நில்லாயே - லம்பொன்று இருகாற் றொடாயாக வேண்டுவனா னென்றாள் செருகாற் றடங்கண்ணா டேர்ந்து. அன்றியும், என்மக்க ளைவர்க்கு மூத்தாய்! எழிலுறையு மினொக்கும் பைம்பூண் விறல்வீரா! வன்மைக்கண் வெந்திறன்மா நாக மிரண்டாவ தெய்யாதி; இந்தவரம் வேண்டுவனா னின்று. அசுவ சேன னென்னும் மகா நாகம் யுத்த பூமியில் அருச்சுனன் மேல் இரண்டாவது எச்சிற் கணையாகத் தொடா தொழிவாயாக என்று வேண்டிக்கொள்ளக் கேட்டு வியாகுல மெய்திப் பின்னும் யாது சொன்னான் கன்னன். நந்திக் கலம்பகம் நந்திக்கலம்பகம் செய்யுளிலக்கியம் மட்டும் அல்லாமல் சரித்திர ஆராய்ச்சிக்குரிய குறிப்புகள் அதில் காணப்படுகிற படியால், அந்நூல் முழுவதையும் இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப் பட்டிருக்கிறது. அதனை அங்குக் காண்க. சுந்தரர் தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவராத்திலிருந்து சில பாடல்கள், மாதிரிக்காகத் தரப்படுகின்றன. மத்தயானை ஏறிமன்னர் சூழ வருவீர்காள் செத்தபோதில் ஆருமில்லைச் சிந்தையுள் வைம்மின்கள் வைத்தஉள்ளம் மாற்றவேண்டா வம்மின் மனத்தீரே அத்தர்கோயில் எதிர்கொள் பாடிஎன்ப தடைவோமே. 1 அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையுமென் றிருந்தேன் என்னையும் ஒருவனுளன் என்று கருதி இறை இறை திருவருள் காட்டாய் அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச் சிராமத் துறை யடிகள் பின்னையே யடியார்க் கருள்செய்வதாகில் இவரலா தில்லையோ பிரானார். 2 நீளநினைந் தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன் வாளனகண் மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான்! குண்டையூர்சிலநெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே. 3 தம்மையேபுகழ்ந் திச்சை பேசினும் சார்விலுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மையேதரும் சோறுங் கூறையும் ஏத்தலாம் இடம் கெடலுமாம் அம்மையே சிவலோக மாள்வதற் கியாது மையுற வில்லையே. 4 குற்றொருவரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே மற்றொரு வரைப் பற்றிலேன் மறவாதெழு மட நெஞ்சமே புற்றரா வுடைப்பெற்ற மேறி புறம்புயந் தொழப் போதுமே. 5 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளா நீரிருந்தீர் வாழ்விப்பனென ஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவே திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில் தோற்றமிகு முக்கூறில் ஒருகூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும் கடனாகைக் காரோணம் மேவி இருந்தீரே. 6 பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னை என்பிழையைப் பொறுப்பானைப் பிழையெலாந் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையன் என்றறிய ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை அன்னம் வைகும் வயல் பழனத்து அணிஆரூரனை மறக்கலும் ஆமே? 7 உழக்கேஉண்டு படைத்தீட்டி வைத்திழப்பார்களும் சிலர்கள் வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதிமாந்திய மாந்தர் சழக்கே பறிநிறைப்பாரொடு தவமாவது செய்மின் கிழக்கே சலமிடுவார் தொழுகேதாரம் என்னீரே. 8 இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையால் தாழுந் தவத்தோர்க் கென்றும் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே. 9 ஒன்றலா உயிர்வாழ்க்கையை நினைந்திட்டு உடல்தளர்ந்து அருமாநிதி இயற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யெனவே நினைஉளமே குன்று நிலாவிய புயமுடையானைக் கூத்தனைக் குலாவிக் குவலயத் தோர் சென்றெலாம் பயில் திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே. 10 ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி மாழைஒண்கண் பரவையைத் தந்தாண்டானை மதியிலா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. 11 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லைகாப்பது ஒன்றில்லையாகில் நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே. 12 பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றறை ணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 13 அகத்தடிமை செய்யும் அந்தணாளன் அரிசிற் புனல்கொண்டு வந்தாட்டுகின்றான் மிகத்தளர் வெய்திக் குடத்தைநும் முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற் படியும் வருமென் றொரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 14 திருமுகப் பாசுரம் திருவாலவாயுடையார் சேரமான் பெருமாள் நாயனாருக்கு அருளிச்செய்த திருமுகப் பாசுரம். நேரிசை யாசிரியப்பா “மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை யன்னம் பயில்பொழி லால வாயின் மன்னிய சிவனியான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் 17குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பால் யாழ்வல்ல பாண பத்திரன் தன்போ லென்பா லன்பன் றன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.” பொன்வண்ணத் தந்தாதி பொன்வண்ணத் தந்தாதியிலிருந்து சில செய்யுட்களைக் காட்டுவோம். “பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மால்விடை தன்னைக்கண்ட என்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மாகிய வீசனுக்கே.” 1 பல்உயிர் பாகம் உடல்தலை தோல்பகலோன்மறல் பெண் வில்லியோர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப் புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துக் கொண்டான் புகழே சொல்லியும் பாடியும் மேத்தக் கெடும் நங்கள் சூழ்துயரே. 2 சொல்லாதன கொழு நாவல்ல சோதியுட் சோதிதன் பேர் செல்லாச் செவிமரந் தேறித் தொழாத கை மண்டிணிந்த கல்லாம் நினையா மனம்வணங் காத்தலையும் பொறையாம் அல்லா வவயவந் தானும் மனிதர்க் கசேதனமே. 3 தனக்குன்றம் மாவையஞ் சங்கரன் தன்னரு ளன்றிப் பெற்றால் மனக்கென்று நஞ்சிற் கடையா நினைவன், மதுவிரியும் புனக்கொன்றை யானரு ளாற்புழு வாகிப் பிறந்திடினும் எக் கென்றும் வானவர்பொன்னுலகோ டொக்க வெண்ணுவனே. 4 கூறுமி னீசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின் கண்கள் தேறுமின் சித்தந் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை யறுமின் அவல மிவை நெறியா ஏறுமின் வானத் திருமின் விருந்தா விமைய வர்க்கே. 5 ஆவன யாரே யழிக்கவல்லார் அமையா வுலகில் போவன யாரே பொதியகிற்பார் புரமூன் றெரித்த தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேனிழந்தேன் கலை யோடு செறிவளையே. 6 மாயனன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின வானை வளருங் கனக மலையருகே போயின காக்கையு மன்றே படைத்தது பொன்வண்ணமே. 7 திருவாரூர் மும்மணிக் கோவை சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்த திருவாரூர் மும்மணிக் கோவையிலிருந்து முதல் மூன்று செய்யுள்களை மாதிரிக் காகக் காட்டுகிறோம். நேரிசை ஆசிரியப்பா (இடையில் ஐஞ்சீரடி பெற்று வந்தது.) விரிகடல் பருகி யளறுபட் டன்ன கருநிற மேகம் கன்முக டேறி நுண்டுளி பொழிய நோக்கிய ஒண்டொடி பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்(டு) இலங்கெழிற் செவ்வாய்க் கோபம்18 ஊர்தரக் கைத்தலம் என்னும் காந்தள் மலர முத்திலங் கெயிறெனும் முல்லை யரும்பக் குழலும் சுணங்கும் கொன்றை காட்ட எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை யூர்தரக் கண்ணெனப் பெயரிய கனம்19 மழை பொழிதலின் ஒண்ணிறக் தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி எஞ்சா மணியும் பொன்னும் மாசறு வயிரமும் அணிகிளர் அகிலும் ஆரமும்20 உரிஞ்சிக் கொங்கை என்னும் குவட்டிடை இழிதரப் பொங்குபுனல்21 காட்டி யோனே கங்கை வருவிசை தவிரித்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ணல் ஆரூர் எல்லை இரும்பலி சொரியும் கல்லோ சென்ற காதலர் மனமே. இச்செய்யுள், பருவம்நீடு பருவரல் என்னும் துறையின் பாற்படும்: வெண்பா மனமாலுறாதே மற்றென் செய்யும் வாய்ந்த கனமால் விடையுடையோன் கண்டத்து - இனமாகிக் தோன்றினகார் தோன்றிலதேர்22 சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்23 கான்றனநீர் ஏந்திழையாள் கண். இச்செய்யுள், கார்கண்டிரங்கல் என்னும் துறை; தோழிக்கூற்று. கலித்துறை கண்ணார் நுதல்எந்தை காமரு கண்டமென இருண்ட 24விண்ணார் உருமொடு மேலதுகீழது 25கொண்டல்விண்ட மண்ணார் மலைமே லிமையிலாலுற26 மானனைய பெண்ணா மிவள்இனி என்னாக்கழியும் பிரிந்துறைவே. ஆதியுலா திருக்கயிலாய ஞானஉலா என்னும் ஆதியுலாவையும் சேரமான் பெருமாள் நாயனார் இயற்றினார். அதன் ஒரு பகுதியை மாதிரிக்காகக் காட்டுவோம். கலிவெண்பா “திருமாலு நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங்கு அருமாலுற அழலாய் நின்ற - பெருமான் பிறவாதே தோன்றினான் காணதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான் ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் ஓதாதுணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகாது அணுகியான் - ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுந் தானே - பரனாய தேவரறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவியவாறே விதித் தமைத்தான் - ஓவாதே எவ்வுருவில் யாரொருவர் உள்குவா ருள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத சீரார் சிவலோகந் தன்னுட் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப - ஆராய்ந்து செங்கணமரர் புறங்கடைச் சென்றீண்டி எம்பெருமான் எங்கட்கு அருளென்ன - அங்கொருநாள்.” திருவாசகம் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்திலிருந்து சில செய்யுள் களைக் காட்டுகிறோம். “நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க! ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க! ஏகன் அநகேன் இறைவன் அடிவாழ்க! வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க! பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க! கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க! சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க!”27 “காதார் குழைஆடப் பைம்பூண் கலன்ஆடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம் ஆமாபாடி பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்”28 “தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேனுண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத்தேன் சொரியும் குனிப் புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ”29 “வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் - உந்தீபற! ஒருங்குடன் வெந்தவாறு - உந்தீபற!”30 “பாரோர் விண்ணோர் பரவிஏத்தும் பரனே! பரஞ்சோதீ! வாராய்; வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே! பேராயிரமும் பரவித் திரிந்து எம்பெருமான் எனஏத்த, ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே!”31 “வாள்உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்” தாள தாமரைகள் ஏத்தி தடமலர் புனைந்து நையும் அளலா தவரைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுமாறே”32 “கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்து உற்றிருமாந்து இருந்தேன் எம்பெருமானே! அடியேற்குப் பொன்தவிசு நாய்க்குஇடும் ஆறன்றே நின்பொன் அருளே”33 “பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும்? காணேடீ! பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை? ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!”34 “உற்றாரை யான் வேண்டேன், ஊர்வேண்டேன்; பேர்வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந் துறையும் கூத்தாஉன்குரை கழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”35 “இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்து சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து”36 “முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா ஆர்பெறுவார் அச்சோவே!”37 திருக்கோவையார் கீழ்க்கண்ட செய்யுள்கள் மாணிக்கவாசகர் இயற்றிய திருக் கோவையாரிலிருந்து எடுக்கப்பட்டவை. “திருவளர் தாமரை சீர்வளர் காவிகளீசர் தில்லைக் குருவளர்பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண்டோங்கு தெய்வ மருவளர் மாலையோர் வல்லியினொல்கி யனநடை வாய்ந்து உருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே”38 தெங்கம்பழம் கமுகின்குலை சாடிக்கதலி செற்றுக் கொங்கம் பழனத்தொளிர் குளிர்நாட்டின் நீயுமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந்திரிதரு சீறூர்ச் சிறுமி என்றே மொழியே39 “மாவை வந்தாண்ட மென்னோக்கிதன் பங்கர் வண்டில்லை மல்லற் கோவை வந்தாண்ட செவ்வாய்க் கருங்கண்ணி குறிப்பறியேன் பூவைதந்தாள் பொன்னம் பந்துதந்தாள் என்னைப் புல்லிக்கொண்டு பாவைதந்தாள் பைங்கிளி யளித்தாள் இன்றென் பைந்தொடியே”40 “இருந்துதி என்வயிற் கொண்டவன்யான் எப்பொழுதும் உன்னும் அருந்திசை முகன் மாற்கரியோன் தில்லைவாழ்த்து நர்போல் இருந்துதி வண்டனவா லெரிமுன் வலஞ்செய்தி டப்பால் அருந்துதி காணு மளவுஞ் சிலம்பன் அருந்தழையே”41 “காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல் சீரணி சிந்தாமணி யணிதில்லைச் சிவன் அடிக்குத் தாரணி கொன்றையன் றக்கோர்தம் சங்கநிதி விதிசேர் ஊருணி யுற்றவர்க் கூரன் மற்றியாவர்க்கும் ஊதியமே”42 திருநாவுக்கரசர் திருப்பாடல்கள் மகேந்திரவர்மன் இயற்றிய மத்த விலாசம் வடமொழியில் எழுதப்பட்டது. இவன் காலத்தில் இயற்றப்பட்ட தமிழிலக்கியம் இப்போது நாம் அறிந்தவரையில் திருநாவுக்கரசரின் தேவாரப் பாக்கள் ஒன்றுதான்.1 அத் தேவாரப் பாக்களும் முழுவதும் நமக்குக் கிடைக்க வில்லை. திருநாவுக்கரசர் பாடியருளிய பதிகங்கள் 4900 என்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுகிறார் என்னை? “இணைகொள் ஏழேழு நூறிரும் பனுவல் ஈன்றவன் திருநாவுக் கரையன்.” என்று அவர் கூறியது காண்க. திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை, “பதிகமே றெழு நூறு பகருமா கவியோகி பரசுநா வரசான பரமகா ரணவீசன்.” என்று கூறுகிறது. இவர் பாடியருளிய 4900 பதிகங்களுள் இப்போது உள்ளவை 312 பதிகங்கள்தாம். மற்றவை செல்லரித்து விட்டன. எனவே, நாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களில் ஏறக்குறைய வீசம் பங்குதான் (16 இல் ஒரு பங்குதான்) இப்போது நமக்குக் கிடைத்துள்ளன! நாவுக்கரசர் தந்த இலக்கியச் செல்வத்தில் மிகப் பெரும் பகுதியைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. திருநாவுக்கரசரின் தேவாரப் பாக்கள் சொல் அழகும் பொருள் ஆழமும் உடைய இனிய செய்யுள்கள். இந்தச் செய்யுள்களில் இவருடைய கல்வியின் ஆழத்தையும் சொல்லின் ஆற்றலையும் நன்கறியலாம். இவர் தலைசிறந்த புலவர் என்பதை இவருடைய செய்யுள்கள் சான்று கூறுகின்றன. ஆழ்ந்த கருத்துள்ள இனிய கவிகளைப் பாடும் இவருடைய நாவன்மையைக் கண்டு, இவர் காலத்திலிருந்த அறிஞர்கள் இவருக்கு நாவுக்கரசர் என்று சிறப்புப் பெயர் வழங்கினார்கள் - இல்லை, சிவபெருமானே இப் பெயரை வழங்கினார் என்பர். திருநேரிசை, திருக்குறுந்தொகை, திரு நெடுந் தாண்டகம் முதலிய இவர் இயற்றிய செய்யுள்கள் இசைத் தமிழின் பாற்படுவன. சேக்கிழார் இவரை இன்தமிழ் ஈசர், தாண்டகவேந்தர், நாவின் மொழிக்கிறையாகிய அன்பர், இன் தமிழ்க்கு மன்னனான வாகீசத்திருமுனி, சிந்தை கரைந்துருகத்திருக் குறுந்தொகையும், தாண்டகமும், சந்த நிறை நேரிசையும் முதலான தமிழ் பாடிய பெரியார் என்று புகழ்கிறார். ஏன்? நாவுக்கரசரே, தாம் பாமாலை பாடியதைத் தம் பதிகங்களில் கூறுகிறார். “பத்திமையாற் பணிந்தடி யேன்றன்னைப் பன்னாட் பாமாலை பாடப் பயில்வித்தானை.” என்றும், “நாயேன் முன்னைப் பந்தமறுத் தாளாக்கிப் பண்கொண்டங்கே பன்னிய நூற்றமிழ் மாலை பாடுவித்தென் சிந்தை மயக்கறுத்த திருவருளினான்.” என்றும் கூறுகிறார். திருநாவுக்கரசர் வேறு ஏதேனும் ஒரு காவியத்தை இயற்றி யிருந்தால், அந்தக் காவியம் தமிழ்மொழியில் தலை சிறந்த காவியமாக விளங்கியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பக்தி வழியிலும், சமயத் துறையிலும் சென்ற இவர் பக்திப் பாடல் களை மட்டும் இயற்றியருளினார். இப்பாடல்களின் கம்பீரமும், சொல் நயமும், பொருள் அழகும் திருநாவுக்கரசர் பெருநாவலர் பெருநாவலர் என்று பறைசாற்றுகின்றன. இவர் பாடிய பாடல்களில் சிலவற்றை இங்குக் காட்டுவாம்: தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின் நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப் பாடிஅண் ணாமல கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே. நன்று நாடொறும் நம்வினை போயறும், என்று மின்பம் தழைக்க இருக்கலாம்; சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. பஞ்ச பூத வலையிற் படுதற்கு அஞ்சி நானும்ஆ மாத்தூர் அழகனை நெஞ்சி னால்நினைத் தேன்;நினை வெய்தலும், வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. வேத மோதிலென்? சாத்திரங் கேட்கிலென்? நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்? ஓதி யங்கம் ஓராறும் உணரிலென்? ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே. நன்று நோக்கிலென்? பட்டினி யாகிலென்? குன்றம் ஏறி இருந்தவஞ் செய்யிலென்? சென்று நீரிற் குளித்துத் திரியிலென்? என்றும் ஈசன்என் பார்க்கன்றி யில்லையே. சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ணவுரிவை உடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண் முரணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவதியா தொன்று மில்லை அஞ்ச வருவதும் இல்லை. மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீறர்சுமந் தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன். சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான், முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ? பூங்கழல்தொழு தும்பரவியும் புண்ணியாபுனி தாஉன்பொற்கழல் ஈங்கிருக்கப்பெற் றேன்; என்ன குறையுடையேன்? ஓங்குதெங்குஇலை யார்கமுகுஇள வாழைமாவொடு மாதுளம்பல தீங்கனி சிதறும் திருவாரூ ரம்மானே. பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழமாட்டேன் மாயமுந் தெளின கில்லேன் அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அழிக்கப்பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனாரே. தழைத்ததோர் ஆத்தியின்கீழ்த் தாபரம்மணலாற்கூப்பி அழைத்தங்கே ஆவின்பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே. அருகெலாங் குவளை செந்நெ லகவிலை யாம்பல் நெய்தல் தெவெலாம் தெங்கும் மாவும் பழம்விழும் படப்பையெல்லாம் குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி மருவலாம் இடங்கள் காட்டும் வலம்புரம் தடிக ளாரே. மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமில் அமர ரேத்த ஆயிர முகம தாகி வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே. கரும்பினும் இனியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இருங்கடல் அமுதந் தன்னை இறப்பொடு பிறப்பி லானைப் பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங்களையை வாங்கிப் பொறையெனும் நிரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகில் சிவகதி விளையு மன்றே. குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும் பனித்த சடையும்பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. சிந்திப் பரியன, சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி அந்திப் பிறையணிந்து ஆடும் யாறன் அடித்தலமே. இருடரு துன்பப் படலம் மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் பொருடரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்று அவடரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே. மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் இமயவர்தஞ் சிரத்தின் மேலான் ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன் புனத்ககத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான் காளத்தி யானவன்என் கண்ணு ளானே. குலங்கெடுத்துச் கோள்நீக்க வல்லான் தன்னைக் குலவரையன் மடப்ப்hவை யிடப்பா லானை மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச் சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னும் தத்துவத்தின் வழிநின்ற தாழ்ந்தார்க் கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. உன்னுருவில் சுவைஒளியூ றோசை நாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர், நுங்கள் மன்னுருவைத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ வையகமே போதாதே, யானே வானோர் பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப் புவிக்கொழிலாஞ்சிவக் கொழுந்தைப் புகுந்தென்சிந்தை தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத் தலைப்படுவேன் றுலைப்படுப்பான் தருக்கேன் மின்னே. இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி இடர்ப்பாவங் கெடுத்(து) ஏழை யேனை யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை ஆதிமா தவத்துளானை ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானைப் புள்ளிருக்கம் வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ(டு) இசைந்திலேன் நடுவே நின்ற விலங்கலேன் விலங்கலா தொழிந்தே னல்லேன் வெறுப்பனவே மிகப்பெரிதும் பேசவல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன் என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே. சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்(கு) ஏகாந்தர் அல்ல ராகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பர் ஆகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் புண்ணியனே உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. அடிக்குறிப்புகள் 1. திருமழிசையாழ்வார் தமது பாசுர மொன்றில் குணப்பரன் என்னும் பெயரைக் கூறுகிறபடியினாலே அவர் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தவர் என்று சிலர் கருதுகிறார்கள். காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன் ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய் தெளிந்தார் தாம். என்பது திருமழிசையாழ்வார் பாடல். இதில் மகா விஷ்ணுவைக் குணப்பரனே என்று விளிக்கிறார். குணப்பரன் என்பது, குணபரன் என்னும் சிறப்புப் பெயரையுடைய மகேந்திரவர்மனைக் கூறியதாகச் சிலர் தவறாக நினைத்துக்கொண்டு, திருமழிசை யாழ்வார் மகேந்திரவர்மன் காலத்தவர் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. *** 34. திருநாவுக்கரசர் தேவார ஆராய்ச்சி* 1. பழமொழிகளும் உவமைகளும் திருநாவுக்கரசர் தம் பதிகங்களில் ஆங்காங்கே பழமொழி களையும் உவமைகளையும் எடுத்தாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம். கனியிருக்கக் காய் கவர்தல். முயல்விட்டுக் காக்கைப் பின் போனதுபோல். அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டதுபோல, பனிநீரால் பாவை செய்வதுபோல. ஏதன்போர்க்கு ஆதன் போல. இருட்டறையில் மலட்டுப் பசுவைக் கறப்பதுபோல. விளக்கிருக்க மின் மினியில் தீக்காய்ந்தது போல. பாழூரில் பயிக்கம் புக்கது போல. (பயிக்கம் = பிச்சை.) தவம் இருக்க அவம் செய்தல். கரும்பு இருக்க இரும்பைக் கடித்தல்போல. இப் பழமொழிகள் திருவாரூர்ப் பழ மொழிப் பதிகத்தில் வந்துள. மேலும், இவர் எடுத்தாண்ட பழமொழிகள் வருமாறு:- “நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தோற்றம்.” (திருவதிகை நேரிசை, 5) “தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி விலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்.” “பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீரிறைத்து வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்.” “பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன் உற்றலால் கயவர் தேறார் என்னுங் கட்டுரையோ டொத்தேன்.” (திருக்கடவூர் நேரிசை, 5,6,8) “பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை ஓம்பிநீ யுய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே.” (ஒற்றியூர்நேரிசை) “பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்து.” “மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்.” (திருஆரூர் நேரிசை, 7, 9) “வஞ்சனை பாற்சோறு.” (திருநனிபள்ளி நேரிசை, 5) “எள்கினேன் எந்தை பெம்மான், இருதலை யினும்வே கின்ற கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம், எங்ஙனம் கூடு மாறே.” (திரு நேரிசை, 6) “நூலும்வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்க்கு.” (திருமயிலாடுதுறை. குறுந்தொகை, 8) “மையலாய் மறவா மனத்தார்க் கெலாம் கையில் ஆமல கக்கனி யொக்குமே” (திருநீலக்குடி. குறுந்தொகை, 2) “பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச் சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை வெற்பிற் றோன்றிய வெங்கதிர் கண்டவப் புற்ப னிக்கெடு மாறது போலுமே.” (சித்தத்தொகை. குறுந்தொகை, 23) “பிற்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன்.” (திருவதிகை. நேரிசை) “ஆற்றிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப்போல்.” (திருநல்லூர் திருவித்தம், 6) இனி, திருநாவுக்கரசர் கூறும் உவமைகள் சிலவற்றைக் காண்பாம். “அழிவுடைத் தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப் பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னாரே.” (திருக்கடவூர் நேரிசை, 6) உயிர்நிலை யுடம்பே காலாய் உள்ளமே தாழி யாகத் துயரமே ஏற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க் காற்றேன் ஆரூர்மூ லட்ட னாரே. (திருவாரூர் நேரிசை, 8) “சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ்செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் உள்ளந் தானும்.” (திருவாரூர் நேரிசை, 9) வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் இளைத்துநின் றாடு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே. (குறைந்த திருநேரிசை) “ஓடுநீரினை ஓட்டைக் குடத்து அட்டி ழடி வைத்திட்ட ழர்க்கனோ டொக்குமே.” (பாவநாசக் குறுந்தொகை, 9) “கூவல் ஆமை குரைகடல் ஆமையைக் கூவ லோடுஒக்கு மோகடல் என்றல்போல்.” (ஆதிபுராணக் குறுந்தொகை, 5) “பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போல் மறுகும் என்சிந்தை, மறுகொழிவி.” (திருச்சத்திமுற்றம் திருவிருத்தம், 3) திருநாவுக்கரசர் திருக்குறள் கருத்துக்களையும், திருக்குறள் சொற்றொடர்களையும் சில இடங்களில் எடுத்தாள்கிறார். அவை :- “சொற்றுணை மாலைகொண்டு தொழுதெழு வார்கட்கெல்லாம் நற்றுணை யாவர்போலும் நாகவீச்சர வனாரே.” (திருநாகேச்சரம்நேரிசை, 3) “வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச் சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.” (திருப்பராய்த்துறை : குறுந்தொகை, 5) “தன்னை நோக்கித் தொழுதெழுவார்க் கெலாம் பின்னை யென்னார் பெருமா னடிகளே.” (திருக்கடவூர் மயானம் : குறுந்தொகை, 2) “தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.” (திருவான்மியூர் : குறுந்தொகை, 5) இப் பதிகங்களில் இவர் எடுத்தாள்கிற “தொழுதெழுவார்” என்னும் சொற்றொடர், திருக்குறளில், “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.” என்னும் திருக்குறளின் சொற்றொடரை நினைவுறுத்துகிறது. “பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்.” (திருக்கோடிக்கா திருந்தாண்டகம், 5) “சுற்றினார் மதில்சூழ் மணஞ் சேரியார் பற்றினாவர் பற்றவன் காண்மினே.” (திருமணஞ்சேரி குறுந்தொகை, 3) “பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த வெந்தை யவன்பற்றே பற்றாகக் காணினல்லால்.” (திருநாகைக்காரோணம் திருத்தாண்டகம், 10) இவை, “பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.” என்னும் திருக்குறளின் கருத்தையும் சொற்றொடரையும் அடியொற்றி யுள்ளன. “உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணாற் பீடுலாந் தனைசெய் வார்.” (திருப்பந்தணைநல்லூர் திருத்தாண்டகம், 2) இதில் உள்ள உறுபிணியும் செறுபகையும் என்னும் சொற்றொடர்கள், “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையுஞ் சேரா தியல்வது நாடு.” என்னும் திருக்குறளை நினைவுறுத்துகின்றன. “வேண்டாமை வேண்டுவது மில்லான் றன்னை.” (திருவாவடுதுறை திருத்தாண்டகம், 9) இது, “வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை யில.” என்னும் திருக்குறள் கருத்தையும் சொற்றொடரையும் கொண்டுள்ளது. “இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டிங் கிளைக்கின்றேற்கு அக்கரைக்கே ஏறவாங்கும் தோணியை.” (திருவாவடுதுறை திருத்தாண்டகம், 4) இக்கருத்து, “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.” என்னும் திருக்குறள் கருத்தைக் கொண்டிருக்கிறது. “ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்.” (திருமறைக்காடு திருத்தாண்டகம், 5) இக்கருத்து, “ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு.” என்னும் திருக்குறளைப் பின்பற்றியுள்ளது காண்க. “இன்று ளார்நாளை யில்லை யெனும் பொருள் ஒன்று மோராது உழிதரு மூமர்காள்!” (திருக்காட்டுப்பள்ளி, 9) என்னும் இப்பாடல், “நெருநல் உள்னொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு.” என்னும் திருக்குறளை நினைவுறுத்துகிறது. 2. சில மீன்களின் பெயர்கள் திருநாவுக்கரசர் தம் பாடல்களில் சில மீன்களின் பெயர்களைக் கூறுகிறார். அவையாவன : “முடங்கு இறால் முதுநீர் மலங்கு இளவாளை செங்கயல் சேல் வரால் கெளிறு, அடைந்த தண் கழனி அணியாரூர்.......................................” “மாட்டில் நீர் வாளைபாயும் மல்கு சிற்றம்பலம்.” வண்டு கொப்புளித்த தீந்தேன் வரிக் கயல் பருகி மாந்தக் கெண்டை கொப்புளித்த தெண்ணீர்க் கெடிலம். “வரிவரால் உகளுந் தெண்ணீர்க் கழனிசூழ் பழனவேலி யரிவரால் வயல்கள் சூழ்ந்த வதிககை வீரட்டம்.” “மடுக்களில் வாளைபாயும் திரு வையாறு.” செய் வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறை.” “மடுக்களில் வாளை பாய வண்டினமிரிந்த பொய்கைப் பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணை வரால்கள்.” “செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித் தங்கயந் துரந்துபோந்து தடம்பொய்கை யடைந்து.” “சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச்சரம்.” “செய்த்தலை வாளைகள் பாய்ந்துகளுந் திருவேதிகுடி.” இதனால் இறால், மலங்கு, வாளை, கயல், சேல், வரால், கெளிறு, கெண்டை என்னும் மீன்களின் பெயர்கள் தெரிகின்றன. கீழ்க்கண்ட செய்யுளடியில் நெல் வகைகளில் சில பெயரைக் கூறுகிறார் :- “பெரிய செந்நெல் பிரம்புரி சேந்தசாலி திப்பியமென்றி வையகத் தரியுந் தண்கழனி யணி யாரூர்.......................” 3. கட்டங்கம் சிவபெருமான் தமது கையில் கட்டங்கம் என்றும் கட்டுவாங்கம் என்றும் பெயருடைய ஆயுதத்தை வைத்திருக்கிறார் என்று திருநாவுக்கரசர் தம்தேவாரப் பாடல்களில் பல இடங்களில் கூறுகிறார். சில இடங்களில் கட்டங்கக் கொடி என்று கூறுகிறார். அப்பருக்குப் பிற்பட்ட காலங்களில் கட்டுவாங்கத்தைப்பற்றிய செய்தி நூல்களில் கூறப்படவில்லை. கட்டங்கம் ஏந்திய சிவபெரு மானுடைய திருவுருவங்கள் காணப்படவில்லை. கட்டங்கம் அல்லது கட்டுவாங்கம் என்றால் எனன? சிறுகோலின் ஒரு நுனியில் மண்டையோட்டைக் கட்டியிருக்கம் ஆயுதத் திற்குக் கட்டங்கம் என்பது பெயர். இதன் உருவ அமைப்பைப் பல்லவர் காலத்துச் சிற்பங்களில் காணலாம். நாவுக்கரசர் தமது தேவாரத்தில் கட்டுவாங்கத்தைக் குறிப்பிடுகிற பகுதிகள் இவை:- “கட்டங்கம் தோள்மேல் வைத்தார்.” “கைகொள்சூலத்தர் கட்டு வாங்கத்தினர்.” ‘கட்டுவாங்கம் காபலங்கைக் கொண்டிலர்.’ காதார் குழையினர் கட்டங்கத்தர் கயிலை மாமலையார். கல்லலகு நெடும் புருவக் கபால மேந்திக் கட்டங்கத்தோடுறைவார் காப்புக்களே. கட்டங் கந்தாமொன்று கையிலேந்தி. “நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுருவர், கட்டங்கர், நினைவார்க்கென்றும் ஈசர். “கட்டங்கம் ஒன்றுதன் கையிலேந்தி.” “காபாலங் கட்டங்கக் கொடியர் போலும்.” “கட்டங்கக் கொடி துடி கைக்கொண்டார் போலும்.” “கங்காள வேடத் தானைக் கட்டங்கக் கொடியானை.” “காபாலி, கட்டங்கம் ஏந்தினானை.” கட்டங்கக் கொடி திண்டோ ளாடக் கண்டேன்.” இவருக்கு இளையரும் இவர் காலத்தில் இருந்தவருமான திருஞானசம்பந்தரும் கட்டங்கத்தைக் கூறுகிறார். “கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கள்,” என்று அவர் கூறியது காண்க. 4. ஆரியமும் தமிழும் ஆரியக்கலையும் தமிழ்க்கலையும் நன்கு கலந்தது “இந்து” சமயம். “இந்து” சமயம் என்பது சைவ வைணவ சமயமாகும். வைதிகப் பிராமணராகிய ஆரியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் வந்திருந்தனர். ஆனால், தமிழ்ப் பண்போடு (திராவிடப் பண்புடன்) கலக்காமல் நெடுங்காலம் தனித்து இருந்து தமது வைதிக ஒழுக்கத்தை நடாத்தி வந்தனர். அவர்கள் தனித்து இருந்த வரையில் அவர்கள் தமிழ்நாட்டிலே சிறப்படைய முடியவில்லை. பௌத்தரும் சமணரும் வைதீக ஆரியரை அடக்கி வைத்தனர். ஆதியில் வைதீகப் பிராமணர் இலிங்க வழிபாட்டையும், சிவன் திருமால் வணக்கத்தையும் மேற் கொள்ளா ணமல் புறக்கணித்தார்கள். ஆகவே அவர்கள் அக்காலத்தில் சைவ வைணவர்களாலும் பௌத்தர் சமணர்களாலும் புறக்கணிக்கப் பட்டிருந்தனர். பிறகு வைதீகர், திராவிடரின் கடவுள் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு சைவ வைணவ மதத்துடன் கலந்து கொண்டனர். அதாவது தமிழர் (திராவிடர்) நாகரிகமும், ஆரிய (வைதீக) நாகரிகமும் கலக்கப்பெற்றன. ஆரியக்கலையும் தமிழ்க் கலையும் உறவு கொண்டன. திராவிடக்கலையை மேற்கொண்ட பிறகுதான் வைதீகப் பிராமணரின் நிலை உயர்ந்தது திருநாவுக்கரசர் இந்தத் திராவிட - ஆரிய சமயக் கலப்பைத் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இவர் காலத்திலிருந்த இவருக்கு இளையரான திருஞான சம்பந்தரும் இந்தக் கலப்பைக் கூறுகிறார். ஆரியம் - தமிழ் என்னும் இரண்டு பண்புகளும் ஒன்று சேர்ந்ததுதான் சைவம் என்று திருநாவுக்கரசர் கூறும் வாக்குகள் இவை : “ஆரி யந்தமி ழோடிசை யானவன்.” “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்.” “அண்ணா மலையுறையும் அண்ணல் கண்டாய்.” “முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்.” “செந்தமிழோடு ஆரியனைச் சீரியனை.” “வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்.” இவ்வாறே ஞானசம்பந்தரும் கூறுகிறார் :- “தம்மலரடி யென் றடியவர் பரவத் தமிழ்ச் சொலும் வடசொலுந் தரணிமேற் சேர வம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் அச்சிறுபாக்கம தாட்சி கொண்டாரே.” “செந்தமிழர் தெய்வ மறைநாவர் செழுங்கலை தெரிந்த வவரோடு அந்தமில் குணத்தவர்களர்ச் சனைகள் செய்ய அமர்கின்றவனூர்.” “தென்சொல் விஞ்சமர் வடசொற்றிசைமொழி எழில்நரம் பெடுத்துத் துஞ்சுநெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூர்.” “செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி.” - திருமங். திருநெடு - 4. என்று இவ்வாறு ஆரியக்கலையும் தமிழ்க்கலையும் ஒன் றென்று கூறிய நாவுக்கரசரும்ஞானசம்பந்தரும், வேறு வழியாக வும்இந்தக் கலப்பினைத் தம் தேவாரங்களில் வற்புறுத்திக் கூறு கிறார்கள். அஃதாவது, இருக்கு ஏசுர் சாமம், அதர்வணம் என்னும் வடமொழி நான் மறையும் அறம் பொருள் இன்பம் வீட்டைக் கூறும் தென்மொழி நான் மறையும் ஒன்றே; இவ்விரண்டையும் அருளியவர் சிவபெருமானே; இரு மறைகளும் ஒரே பொருளைக் கூறுகின்றன என்பதைத் தம் தேவாரப் பாடல்களில் ஆங்காங்கே கூறிச் செல்கிறார்கள். முதர்லில் திருநாவுக்கரசர் கூறியதைக் காண்போம்: “தூய காவிரியின் நன்னீர் கொண்டு இருக்கு ஓதி ஆட்டி,” என்றும், சாமத்து வேதமாகி நின்றதோர் சம்புதன்னை என்றும், சாம வேதத்தர் எந்தையும் எந்தை தந்தையும் ஆய ஈசர் என்றும், “வேதத் தோடாறங்கம் சொன்னார் போலும்” என்றும், “அருமறையோ டாறங்கம் ஆய்ந்துகொண்டு பாடினார் நால் வேதம்” என்றும், “வேதியன்காண் வேதவிதி காட்டினான் காண்” என்றும் வடமொழி வேதங்களைச் சிவபெருமான் அருளிச் செய்தார் என்று கூறிய திரு நாவுக்கரசர், தென்மொழி வேதத்தையும் ஆலின்கீழிலிருந்து அருளிச்செய்தார் என்று கூறுகிறார். ஆலின் கீழ் அறம் அருளியது : சிவபெருமான் ஆலின் கீழிருந்து அறம் உரைத்த செய்தியைத் திருநாவுக்கரசர் இவ்வாறு கூறுகிறார்: ஆலின் நிழற்கீழ் அறமோதிய குழகன்.மடற்பெரிய ஆலின்கீழ் அறம் நால்வர்க்கன்றுரைத்தான். விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள். “ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க் கருளிச் செய்து நூலின்கீ ழவர்கட் கெல்லாம் நுண்பொருளாகி நின்று.” “வருந்தின நெருக லின்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ் இருந்தின பொருள்கள் நால்வர்க் கியம்பினர் ........” பணைத்தெழுந்த ஆல்நிழற் கீழிருந்து ஆரணமோதி. ஆலின்கீழறத்தா ரன்னியூராரே. ஆலின்கீழ் அறம் பகர்ந்தார். “ஆலத்தார் நீழலில் லறம் நால்வர்க்குக் கோலத்தால் உரை செய்தவன்.......” “நற்றவஞ் செய்த நால்வர்க்கு நல்லறம் உற்றவண் மொழியால் அருள்செய்த நற்.” கொற்றவன். அறங்காட்டி யந்தணர்க்கன் றாலநீழல் அறம் அருளிச் செய்த அரனார். சொல்லருளி யறநால்வர்க் கறியவைத்தார். ஆலின்கீழ் அறநால்வர்க் களித்தான்கண்டாய். ஆலநீழல்அறஞ்சொன்னாய் போற்றி. அன்றாலின் கீழிருந்துஅறஞ் சொன்னானை. ஆலதனில் அறநால்வர்க் கருள்செய்தானை. அன்றலின்கீழ்த் திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை. இவ்வாறு ஆரிய வேதத்தையும் திராவிட வேதத்தையும் சிவ பெருமான் அருளிச்செய்தார் என்று தனித்தனியே கூறிய நாவுக்கரசர், “வேதநான்கும் கல்லாலின் நீழற்கீழ் அறங்கண்டானை.” “பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் `வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ.” “ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு `அறம் பொருள் வீடின்பம் `ஆறங்கம் வேதம் தெரித்தானை.” என்றும் கூறுகிறார். இவ்வாறு ஆரிய திராவிடக்கலைக் கலப்பைக் கூறிய நாவுக்கரசர், “புதியனவுமாய் மிகவும் பழையான் தன்னை” என்று ஒரே சொல்லில் முடிவாகக் கூறிவிட்டார். இவருக்கு வயதில் இளையரான இவர் காலத்திலிருந்த ஞானசம்பந்தரும், ஆரியவேதத் திராவிடவேதக் கலப்பினைத் தமது தேவாரப் பாடல்களில் ஆங்காங்கே காட்டுகிறார். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் சிவபெருமான் அருளிச்செய்தார் என்று ஆங்காங்குக் கூறிய ஞானசம்பந்தர், சிவபெருமான் ஆலநிழலிலிருந்து அறமுரைத்தார் என்றும் கூறுகிறார். அவற்றில் சில வருமாறு:- “மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல் மேவி யருமறை சொன்னதென்னே.” “அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.” “நண்ணியோர் வடத்தி னீழல் நால்வர் முனிவர்க்கன்று எண்ணிலி மறைப் பொருள் விரித்தவர்................” “ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை.” “கல்லா னிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று எல்லா வறனுரையும் இன்னருளாற் சொல்லினான்.” “அங்கம் நான்மறை, நால்வர்க் கறம்பொருளின்பம் பயனளித்த திங்கள் சேர் சடையான்.” சிவபெருமான் ஆலமரத்தின் கீழிருந்து அறநெறியை அருளிச் செய்தார் என்று நாயன்மார்கள் கூறுவது போலவே, திருமழிசை ஆழ்வாரும் தாம் அருளிய நான்முகன் திருவந்தாதியில் (17) கூறுகிறார்: “ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகந்துரைத்தான் மெய்த் தவத்தோன்.” என்பது அவர் வாக்கு. இவ்வாறு ஆரியத் திராவிடக் கலப்பினை நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் கூறுவதுபோலவே பிற்காலத்தவரான சேக் கிழாரும் தமது பெரிய புராணத்தில் கூறுகிறார். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம் : - “ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு.” என்றும், “மன்னிய சைவவாய்மை வைதிக வழக்கமாகும் நன்னெறி திரிந்துமாறி நவைநெறி நடந்ததன்றே.” என்றும், “பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க.” என்றும், “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க.” என்றும் சேக்கிழார் வைதிக நெறியையும் சைவ நெறியையும் தனித்தனியாகவும் இணைத்தும் ஓதுவது காண்க. இதனால் இந்துமதம் (சைவம் வைணவம்) என்பது திராவிட சமயமும், வைதிக சமயமும், பக்தியியக்கமும் கலந்துண்டாகிய ஒரு மதம் என்பது தெளிவாகிறது. 5. அகப்புறச் சமயங்கள் திருநாவுக்கரசர் காலத்திலே சைவ சமயத்தில் சில உட் பிரிவு களும் இருந்தன. அந்த உட்பிரிவுகளை அகப்புறச் சமயம் என்று கூறுவர். அவை பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வைரவம் என்பன. பாசு பதமும் மாவிரதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. காபாலிகமும் வைரவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. திருநாவுக்கரசர் தமது திருவாரூர்ப் பதிகத்தில், அருமணித் தடம்பூண்முலை யரம்பையோ டருளிப்பாடி உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார் விரிசடை விரதிகள் அந்தணர் சைவர்பாசுபதர் கபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் அம்மானே. என்று இந்தச் சமயங்களைக் கூறுகிறார். திருஞான சம்பந்தரும் தமது திருச்சண்பைநகர் தேவாரத்தில், “காதலால், சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே.” என்று பாசுபத மதத்தாரைக் கூறுகிறார். திருநாவுக்கரசரால் சைவனான மகேந்திரவர்மன், தான் எழுதிய மத்தவிலாசம் என்னும் நாடகத்தில், காஞ்சிபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயிலும் அதனை அடுத்திருந்த மயானத்திலும் கபாலிகரும் பாசுபதரும் இருந்தனர் என்று கூறுகிறான். மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் மகாவிரதியரைப் பற்றியும், சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் வைரவரைப் பற்றியும் சேக்கிழார் கூறுகிறார். மாவிரதியர் என்றும் மகாவிரதியர் என்றும் கூறப்படுகிற வரைப் பற்றி ஆராய்வோம். இந்தப் பிரிவினரோடு தொடர்புடையவர் பாசுபதர். இவர்கள் பசுபதியை வணங்குகிறவர்கள். இவ்விரு வருக்குள் பெரிய வேறுபாடு இல்லை. சில சமயங்களில் இருவரும் ஒருவராகவே கூறப் படுகின்றனர். இந்தப் பாசுபதராகிய மாவிரதிகள், சுடுகாட்டில் வசிப்பவர். சுடுகாட்டுச் சாம்பலை உடம்பில் பூசி, இறந்தவர் எலும்பையும் தலை யோட்டையும் மாலையாகக் கழுத்திலும் தலையிலும் அணிந்து கொண்டு, தலை மயிரினால் செய்த பஞ்சவடி என்னும் பெயருடைய பூணூலை மார்பில் அணிந்து கொண்டிருப்பார்கள் என்று அப்பர் சுவாமிகள் தேவாரத்தினால் அறிகிறோம். “முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலைமாலை விரதிகள் அத்தனாரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.” (திருவாரூர் திருவாதிரைப் பதிகம். 1) “சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு தலையோடு மயிர்க் கயிறு தரித்தான் தன்னைப் பவந்தாங்கு பாசுபத வேடத்தானைப் பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம் கவர்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை.” (திருவீழிமிழலை திருத்தாண்டகம்.) “பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானை.” (திருக்கஞ்சனூர், 5) இந்தப் பாசுபத மாவிரதக் கோலத்தைச் சிவபெருமானே பூண்டிருந்தார் என்றும், அது விலையில்லாத வேடம் என்றும் அப்பர் கூறுகிறார். “தலையினாற் றரித்த வென்புந் தலைமயிர் வடமும் பூண்ட விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.” (திருவிழிமிழலை...........) பெரிய புராணத்தில், மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில், மாவிரதியர் வேடம் இவ்வாறே கூறப்படுகிறது. சிவபெருமான் மாவிரதி வேடங் கொண்டு நாயனாரிடம் வந்துஅவருடைய மகளின் கூந்தலைத் தமது பஞ்சவடிப் பூணூலுக்காகக் கேட்டார் என்றும், நாயனாரும் அதற் கிசைந்து மகளின் கூந்தலை அரிந்து கொடுத்தார் என்றும் கூறுகிறது. தலையிலே எலும்புமணி மாலையும், காதுகளிலே எலும்பினால் செய்த குண்டலங்களும், கபத்திலே எலும்பைக் கோத்தமைத்த தாழ்வடமும், மார்பிலே மயிரினால் செய்யப்பட்ட பஞ்சவடிப் பூணூலும், தோளிலே பட்டிகையில் அணிந்து திருநீற்றுப் பொக்கணத்துடன் மாவிரத மூர்த்தி எழுந்தருளினார் என்று பெரியபுராணம் கூறுகிறது. “முண்டநிறை நெற்றியின்மேல் முண்டித்த திருமுடியில் கொண்டசிகை முச்சியின்கண் கோத்தணிந்த எற்புமணி பண்டொருவன் உடல்அங்கம் பரித்தநாள் அதுகடைந்த வெண்டரளம் எனக்காதின் மிசை அசையுங் குண்டலமும்.” “அவ்வென்பின் ஒளிமணிகோத் தணிந்ததிருத் தாழ்வடமும் பைவன்பேர் அரவொழியத் தோளில்இடும் பட்டிகையும் மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்மனச் செவ்வன்பர் பவமாற்றுந் திருநீற்றுப் பொக்கணமும்.” இவ்வாறு மாவிரத முனிவர் வரக்கண்டு, மானக்கஞ்சாறா எதிர்சென்று வணங்கி, மணப்பெண் கோலங் கொண்டிருந்த தம் மகளை அழைத்து அவரை வணங்கச் செய்தார். அப்போது அப் பெண்மணியின் கரிய கூந்தலைக் கண்ட மாவிரதியார் அக் கூந்தலைத் தமக்குத் தரும்படி அடியாரைக் கேட்டார். “தஞ்சரணத் திடைப்பணிந்து தாழ்ந்தெழுந்த மடக்கொடிதன் மஞ்சுதழைத் தெனவளர்ந்த மலர்க்கூந்தல் புறம் நோக்கி அஞ்சலிமெய்த் தொண்டரைப் பார்த்தணங்கிவள் தன் மயிர் நமக்குப் பஞ்சவடிக் காம்என்றார் பாவஅடித் தலங்கொடுப்பார்.” அப்போது அடியவர், “இருள்செய்த கருங்கூந்தல் அடியில் அரிந் தெதிர்நின்ற மருள்செய்த பிறப்பறுப்பார் மலர்க்கரத்தி னிடைநீட்ட.” திருநாவுக்கரசர் பாசுபதரைத் “தலையறுத்த பாசுபதர்,” “தலையறுத்த மாவிரதியர்” என்று கூறுகிறார். “முறைமையால் ஐம்பொறியும் வழுவா வண்ணம் படித்தான் தலையறுத்த பாசுபதன்காண், பராய்த்துறை யான் காண்.” (திருக்காளத்தி திருத்தாண்டகம். 2) “தாட்பரவு கமலமலர் தயங்கு வானைத் தலையறுத்த மாவிரதந் தரித்தான் றன்னை.” (திருக்கீழ்வேளூர். 4) இனி, வைரவராகிய காபாலிகரைப்பற்றி ஆராய்வோம். காபாலிகருக்குக் காளமுகர் எனும் பெயருமுண்டு. இதை, “விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல கால பயிரவ னாகி.” என்று திருச் சேறைப் பதிகத்தில் திருநாவுக்ரசர் கூறுகிறார். வைரவ வேடத்தைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது : “படர்ந்த தலை மயிரைக் கொந்தளமாகப் பரப்பி, காதுகளில் தோடு அணிந்து, அக்கு மணியால் ஆன சன்னவீரம், ஆரம், தாழ்வடம் இவைகளை யணிந்து, கையிலே காபலபாத்திரமும் சூலமும் ஏந்திக் காபாலிகர் திரிவார்கள். இவர்களுக்கு முக்கிய அங்கம் தலையோடு. தலையோட்டிலே பிச்சை ஏற்று அதிலே உண்பார்கள். மது பானத்தையும் தலையோட்டிலே ஊற்றிக் குடிப்பார்கள். இவர்கள் நர மாமிசமும் உண்பார்கள் என்று பெரிய புராணம் கூறுகிறது. “பெரிய பயிர வக்கோலப் பிரானார் அருளிச் செய்வார் ‘யாம், பரியுந் தொண்டீர்! மூவிருது கழித்தால் பசுவீழ்த் திட வுண்பது.” என்றும், “பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் ‘நண்பு மிக்கீர், நாம்உண்ணப் படுக்கம் பசுவும்நரபசுவாம்.” என்றும் வைரவர் சிறுத்தொண்டரிடம் கூறியதாகப் பெரிய புராணம் கூறுவது காண்க. பவபூதி என்பவர் எழுதிய மாலதீமாதவம் என்னும் வடமொழி நூலில், மாலதீ என்பவளைக் காபாலிகன் ஒருவன் சாமுண்டிக்குப் பலியிட முயன்றதைக் கூறுகிறது.” காபாலிகர் பைரவமூர்த்தியை வழிபடுவர். காபாலி கரைப் பற்றி, மத்தவிலாசப் பிரகசனத்தில் மகேந்திரவர்மன் அழகாகக் கூறுவதை அந் நாடகத்தில் காணலாம். இந்த அகப்புறச் சமயங்கள் நான்கும் வடஇந்தியாவில் தோன்றியன. லகுலீ என்பவர், சிவபெருமானின் அவதாரமாகத் தோன்றிப் பாசுபத மதத்தை உண்டாக்கினார் என்பர். ஆகவே இதற்கு லகுலீ பாசுபதம் என்றும் பெயர் வழங்குகிறது. லகுலீ என்றால் தண்டு அல்லது தடியை யுடையவர் என்பது பொருள். இராசபுதன தேசத்தில் பரோடா சமத் தானத்துத் தபோய் தாலுகாவைச் சேர்ந்த கார்வான் என்னும் ஊரில் லகுலீ பிறந்தார். இந்தக் கார்வான் நகரத்தின் பழைய பெயர் காயா ரோஹணம் என்பது. இந்தக் காயாரோஹணம் என்னும் பெயர் காரோ கணம் என்றாகிப் பிறகு காரோணம் என்றாகி இப்போது கார்வான் என்று வழங்கப்படுகிறது. இங்குப் பிறந்த லகுலீசர் பாசுபத மதத்தை உண்டாக்கினார். இவருக்குக் கௌசிகர் (குசிகர்), கர்க்கர் (கார்க்கியர்), மித்ரர் (மித்ரகர்), கௌருஷ்யர் (ருஷ்டர்) எனநான்குபேர் சீடர்கள் இருந்தார்கள். இவர்களுக்குப் பாசுபத சாத்திர பஞ்சார்த்த தர்சனம் என்றும் ஒரு நூல் இருந்தது. அது ஐந்து அத்தியாயங்களைக் கொண்டி ருந்தபடியால் பஞ்சத்யாயீ என்றும் அதற்குப் பெயர் உண்டு. அன்றியும் பாசர்வஜ்ஞர் (பாவ சர்வஜ்ஞர்) என்பவர் இயற்றிய கணகாரிகை என்னும் ஒரு நூலும் உண்டு. இதற்கு ஒரு டீகை (உரை)யும் உண்டு.1 லகுலீசருக்கு இராஜபுதனத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. லகுலீ பாசுபதம் வடநாட்டில் உண்டான சமயம் என்பதற்குச் சான்றாக, சிறுத்தொண்டரிடம் வந்த பைரவர் தம்மை வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறுவதிலிருந்தும் அறியலாம் பைரவர் சிறுத்தொண் டரைப் பார்த்து, “நிகழும் தவத்தீர்; உமைக் காணும்படியால் வந்தோம், உத்தராபதியோம்” என்று கூறியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. இப்போதும் செங்காட்டங்குடி கணபதேச்சரத்தில் உத்தராபதியா ராகிய வடக்குநாதருக்குக் கோயில் உண்டு. இரண்டாம் புலிகேசியின் மருமகனான நாகவர்த்தனன் இகத் புரியின் அருகில் ஓர் ஊரைத் தானம் செய்து அதனால் கபாலீசுவரரை வழிபடவும், காபாலிகரை ஆதரிக்கவும் செய்தான் என்று சாசனத்தினால் தெரிகிறது. வட இந்தியாவுக்குச் சென்று புலிகேசியின் வாதாபி நகரத்தை வென்ற சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) வட இந்தியாவிலிருந்த காபாலிகருடனும் பைரவருடனும் தொடர்பு கொண்டிருக்கக்கூடும். அதனால்தான், பிற்காலத்தில் கணபதீச்சரத் துக்கு வந்து சிறுத்தொண்டரைக் கண்ட பைரவர், தம்மை “உத்தராபதி யோம்” (வடக்கிலிருந்து வந்தவர்) என்று அவரிடம் கூறினார் போலும். வடநாட்டில் காயாரொகணத்தில் (காரோணத்தில்) தோன்றிய இந்த லகுலீ பாசுபத மதமும் அதன் பிரிவுகளும் அப்பர் சம்பந்தர் காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டிலும் வந்து சிற்சில இடங்களில் நிலைபெற்றிருந்தன. நாகைக்காரோணம், குடந்தைக்காரோணம் என்னும் இரண்டு காரோணங்களை அப்பரும் சம்பந்தரும் தம் பதிகங்களில் பாடியுள்ளார்கள். திருவாரூரிலும் சீகாழியிலும் இந்தக் காபாலிக பாசுபதர்கள் இருந்தனர் என்பதை அப்பர். சம்பந்தர் தேவாரத் தினால் அறிகிறோம் காஞ்சிபுரத்தையும் காரோண nக்ஷத்திரம் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது. அதற்கு ஏற்பவே அப்பர் சுவாமிகளும் அவர் காலத்தில் இயற்றப்பட்ட மத்தவிலாச மும் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலும் அதையடுத்த கச்சி மயானத் திலும் பாசுபதரும் காபாலிகரும் இருந்த செய்தியைக் கூறுகிறார்கள். பிற்காலக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் பாசுபதர், காபாலிகர் முதலியோர் தமிழ்நாட்டில் சில இடங்களில் இருந்தார்கள் என்பதை அறிகிறோம். லகுலீ பாசுபதர் திருவொற்றியூரிலும் இருந்தார்கள். சென்னைக்கு அடுத்த திருவொற்றியூர்க் கோயிலில் வட்டப் பாறை நாச்சியார் சந்நிதிக்கு எதிரில் பாசுபத மூர்த்திக்கு ஒரு கோயில் உண்டு. இக் கோயிலில் பாசுபதமூர்த்தியின் உருவம் மிக அழகாக அமைந்திருக் கிறது. அது, பெரிய புராணத்தில், “மடல்கொண்ட மலரிதழி நெடுஞ்சடையை வனப்பெய்தக் கடல்மண்டி முகந்தெழுந்த காளமே கச்சுருள்போல் தொடர்பங்கி சுருண்டிருண்டு தூறிநெறித் தசைந்துசெறி படர்துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமா கப்பரப்பி.” “அயன்கபா லந்தரித்த இடத்திருக்கை யால்அணைத்த வயங்கொளிமூ லைச்சூல மணித்திருத்தோள் மிசைப்பொலியத் தயங்குசுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப் பயன்தவத்தால் பெறும்புவியும் பாததா மரைசூட.” “அருள்பொழியுந் திருமுகத்தில் அணிமுறுவல் நிலவெறிப்ப மருள்பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப.” (சிறுத்தொண்டர், 26, 34, 35) என்று கூறியபடி சுடர்விட்டெரிவது போன்ற தலைமயிரும், குண்டலங் கள் விளங்கும் காதுகளும், புன்முறுவல் பூத்த திருவாயும், நின்ற கோலமாகக் காட்சியளிக்கிறார் பைரவ மூர்த்தி. அவருடைய ஒரு கையில் தண்டாயுதமும் (லகுலியும்), ஒரு கையில் கபால பாத்திரமும் மற்றொரு கையில் சூலமும் தாங்கியுள்ளார். இன்னொரு கையை அபயக் கையாகத் தாங்கியுள்ளார். இந்தஅழகான திருவுருவத்தில் சிற்பியின் கலைத்திறன் காணப்படுகிறது. திருவொற்றியூர்க் கோயிலிலே இன்னொரு லகுலீசர் (பைரவர்)திருவுருவமும் காணப்படுகிறது. இந்த மூர்த்தியைக் கௌளீசர் என்று கூறுகிறார்கள். கௌளீசர் என்பது லகுலீசர் என்பதன் திரிபு. இருந்த கோலமாகக் காணப்படும் இந்த உருவமும் சடைமுடியில் கபாலந்தரித்து வலது கையில் திரிசூலமும் இடது கையில் காபலமும் ஏந்தி, மற்ற இரண்டு வலது இடது கைகளில் அபயவரத முத்திரை காட்டிப் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமர்ந்திருக்கிறது. இந்த உருவங்கள் இங்கு இருப்பதனாலே முற்காலத்தில் காபாலிகரும் பாசுபதரும் இங்கு இருந்தார்கள் என்பதை அறியலாம். பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வைரவம் என்னும் இந்த அகப்புறச் சமயங்கள் நான்கும் இப்போது மறைந்து விட்டன. 6. சிவனும் திருமாலும் சிவபெருமானையும் திருமாலையும் தமிழர் தொன்று தொட்டு வணங்கிவந்தார்கள். இருவரையும் வெவ்வேறு கடவுளாகப் பிரிக்காமல் இருவரையும் ஒருவராக வழிபட்டனர். ஒரே கோயிலில், ஒரே இடத்தில் இந்த இரு தெய்வ வணக்கம் நடைபெற்றது. பத்தி யியக்கம் தோன்றிய பிற்காலத்திலும், அதாவது கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிவபெருமானையும் திருமாலையும் தனித்தனி தெய்வங்களாகப் பத்திசெய்து திருப்பதிகங்கள் பாடிய காலத்திலுங்கூட, இரு கடவுளரும் பெரும்பாலும் ஒரே கோயிலில் வழிபடப்பட்டனர். அக்காலத்தில் சிவபெருமானுக்கு அம்மன் சந்நிதி தனியே இருந்ததில்லை. அக்காலத்துக் கோயில்களில் சிவ பெருமான் உருவமும் திருமால் உருவமும் அமைக்கப்பட்டிருந்தன. ஏனென்னறால், சைவசமயம் என்றும் வைணவசமயம் என்றும் வெவ்வேறு சமயப் பிரிவுகளும் சமயப் பிளவுகளும் அக்காலத்தில் ஏற்படவில்லை. நாயன்மார்கள் சிவனின் சக்தியை (அம்மையை)த் தம் பாடல்களில் பாடியபோதிலும் அந்த அம்மைக்குத் தனியே கோயில்கள் ஏற்படவில்லை. சைவம் வைணவம் என்னும் பெயர்கள் இருந்தபோதிலும், அக்காலத்தில் இரண்டு சமயமும் ஒரு சமயமாகவே, வேற்றுமை இன்றிக் கருதப்பட்டன. நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலத்துக்குப் பிறகு, சைவசித்தாந்தம் என்றும் வைணவ விசிஷ்டாத்வைதம் என்றும் தத்துவ சாத்திரங்கள் எழுதப்பட்ட பிறகு, சைவ சமயமும் வைணவ சமயமும் தனித்தனியே பிரிந்துவிட்டது மட்டுமன்றிப், பிற்காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டன. சைவமும் வைணவமும் வெவ்வேறாகப் பிரிந்துவிட்ட பிறகுதான், ஏறக்குறைய கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, சிவன் கோயில்களிலே தனியாக அம்மன் சந்நிதி கட்டத் தொடங் கினார்கள். இந்த உண்மை கல்வெட்டுச் சாசன ஆராய்ச்சியினாலும் விளங்குகிறது. இதற்குச்சான்று காட்டி எழுதுவதற்கு இஃது இடமன்று. சைவமும் வைணவமும் தனித்தனியே வெவ்வேறு மதங்களாகப் பிரிந்து போவதற்கு முன்பு (ஏறக்குறைய கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு) சிவன் வழிபாடும் திருமால் வழிபாடும் பெரும்பாலும் ஒரே கோயிலில் நிகழ்ந்துவந்தன. திருநாவுக்கரசர் காலத்தில் சைவம் வைணவம் என்னும் வேறுபாடு அதிகமாகக் காணப்படவில்லை. சிவபெருமான் திருமாலின் ஒரு பகுதியாகவும் திருமால் சிவபெருமானின் ஒரு பகுதியாகவும் - இருவரும் ஒருவராக, சக்தியும்சிவமுமாக, அரிஹர மூர்த்தியாக-, வழிபடப்பட்டனர். திருநாவுக்கரசர் தம் தேவாரப் பாடல்களில் இதனைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார் : - “காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண னாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.” “மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.” “அரியலால் தேவி யில்லை ஐயன்ஐ யாற னார்க்கே.” “மண்ணினை யுண்ட மாயன் றன்னையோர் பாகங் கொண்டார்.” “நாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்.” “தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவம் திகழ்ந்த செல்வர்.” “திருமாலோர் பங்கத்தன் சாண்.” “குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்.” “மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்.” இவர் காலத்தில்இருந்த திருஞானசம்பந்தரும் இவ்வாறே சிவபெருமான் திருமாலைப் பாகமாகவுடையவர் என்று கூறுகிறார். மற்றும் திருநாவுக்கரசர், திருமால் அணியும் துழாய் (துளசி) மாலையைச் சிவபெருமானும் அணிந்திருக்கிறார் என்று கூறுகிறார் : “தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல் வாங்கான் மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான்.” (திருசெய்த்தானம் திருவிருத்தம்,9.) இதைப்போன்றே நம்மாழ்வாரும், சிவபெருமான் அணியும் திருநீற்றினைத் திருமாலும் அணிகிறார் என்று கூறுகிறார். “கரிய மேனி மிசைவெளிய நீறு சிறிதே யிடும் பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை.” என்று அவர் கூறியது காண்க. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூறியது போலவே, ஆழ்வார்களும், திருமால் சிவபெருமானின் ஒரு கூறாக நின்று அரிஹர மூர்த்தியாக விளங்குகிறார் என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவன வருமாறு : - “பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப் பிரமனைத்தன் உந்தியிலே தோற்று வித்து.” (திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி) “தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும் உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.” (திருவாய்மொழி, 4.ப.அ.தி.10) “கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்பன் குலவரையன் மடப்பாலை இடப்பால் கொண்டான் பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின்மேலாய்! பனிவரையி னுச்சியாய்! பவள வண்ணா!” (திருநெடுந்தாண்டகம். 9.) “பொன்திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகம் தாய நெடுமாலும் - என்றும் இருவரங்கத் தால்திரிவ ரேலும் ஒருவன் ஒருவனங்கத்து என்றம் உளன்.” (முதல் திருவந்தாதி 99. பொய்கையாழ்வார்.) “நாகத்தான் நால்வேதத் துள்ளான் நறவேற்றான் பாகத்தான் பாற்கடலுளான்.” (3-ஆம் திருவந்தாதி 31. பேயாழ்வார்.) “தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும்தோன்றுமால் - சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவு மொன்றா யிசைந்து.” (3-ஆம் திருவந்தாதி 63பேயாழ்வார்.) “ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் தன்னோடும் கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே.” (நான்முகன் திருவந்தாதி 4. திருமழிசையாழ்வார்.) இந்தச் சான்றுகளினால் நமக்கு ஓர் உண்மை விளங்குகிறது. நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலங்களில், திருமாலும் சிவபெரு மானும் ஒரே கடவுளாக, அரிஹர மூர்த்தமாக, வேற்றுமையின்றி வணங்கப் பட்டனர். இந்த ஒற்றுமை அவர்கள் காலத்திற்கு முன்பே நெடுங் காலமாக இருந்து வந்தது. பக்தியியக்கம் தோன்றி வளர்ந்த காலத்தில், நாயன்மார்கள் சிவபெருமானையும் ஆழ்வார்கள் திருமாலையும் சிறப்பாக வழிபடலாயினர். பக்தியில் ஆழ்ந்து போன நிலையில் ஆழ்வார்கள் சிவபெருமானையும் நாயன்மார்கள் திருமாலையும் சற்றுத் தாழ்த்தித் தம் பாசுரங்களில் பாடிய போதிலும், சிவபெருமானை யும் திருமாலையும் ஒன்றுபடுத்தியும் கூறினர். அதாவது இருவரையும் ஒன்று சேர்த்தும், வேறு பிரித்தும் இரண்டு வகையாகக் கூறினார்கள். அக்கால நிலையும் இருவரும் ஒத்துப்போகவேண்டிய தாயிருந்தது. எப்படி யென்றால், சமணரும் பௌத்தரும் நாட்டில் சிறப்பும் ஆதிக்கமும் பெற்றுச் சைவ வைணவ மதத்தைக் குன்றச் செய்து விட்டனர். இந்த நிலையில், பௌத்த சமணருடன் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் தங்களுக்குள் வேற்றுமையையும் பிளவையும் ஏற்படுத்திக் கொண்டால், இவர்களுடைய குறிக்கோள் நிறைவேறாது. ஆகவே, சைவ வைணவ வேற்றுமையை அவர்கள் உண்டாக்கவில்லை. ஆனால் பிரிவுபடுத்திக் கூறாமலும் விடவில்லை. நாயன்மார்கள் ஆழ்வார்கள் திருப்பாசுரங்களை முழுவதும் படித்தால் அப்பாசுரங்களில் சிவன் திருமால்களைப்பற்றி ஒற்றுமையும் வேற்றுமையும் விரவியிருப்பதைக் காண்கிறோம். பக்தி இயக்கத்தின் மூலமாக ஆழ்வார்களும் நாயன்மார்களும் பௌத்த சமண சமயங்களை ஒருவாறு அடக்கிய பிறகு, பௌத்தமும் சமணமும் சற்று வலிவு குன்றிய பின்னர், ஏறக்குறைய கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சைவமும் வைணவமும் வெளிப்படையாக வேறு வேறு மதங்களாகப் பிரிந்துவிட்டன. பிரிந்து, சைவ சித்தாந்தம் என்றும், விசிஷ்டாத்வைதம் என்றும் தனித்தனி சமயநூல்களை ஏற்படுத்திக்கொண்டு, திரிபுண்டரம் ஊர்த்துவபுண்டரம் முதலிய வேறுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு, ஒன்றை யொன்று தாக்கிச் சண்டை சச்சரவுகள் செய்துகொண்டன. ஆனால், திருநாவுக்கரசர் காலத்தில் சைவம் வைணவம் என்னும் சமயப்பிரிவு வெளிப்படையாக ஏற்படாமல் இரண்டு கடவுளரும் ஒருவராகவே கருதப்பட்டனர் என்பது அவருடைய திருப்பாடல்களினால் தெரிகிறது. *** 35. பின்னிணைப்பு* 1. வெள்ளிப் பாட்டு சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில், இடைச்செருகலாகத் திருக்காரோணப்பதிகம் ஒன்று உண்டு. அதற்கு வெள்ளிப்பாட்டு என்பது பெயர். வெள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தாகலின் இதற்கு இப்பெயர் அமைந்தது. இவர் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர். ஆதிகுமரகுருபர சுவாமிகளிடம் தமிழ்க்கல்வி பயின்றவர். இவரே இன்னொரு வெள்ளிப்பாட்டைத் திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரத் தில் இடைச்செருகலாக நுழைத்திருக் கிறார். சுந்தரர் தேவாரத்தில் இவர் நுழைத்த வெள்ளிப் பாட்டைக் கீழே தருகிறோம். இதில் 4-ஆம் பாட்டில் எலும்புங்கிலும்பும் என்னும் சொல் பயின் றிருப்பது காண்க. பொன்னா மிதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரிசடைமேல் முன்னா வரவ மதியமுஞ்சென்னி வைத்தல் மூர்க்கன்றே துன்னா மயூரஞ் சோலைதொறு மாடத்தூரத் துணைவண்டு தென்னா வென்னுந் தென்னாகைத் திருக்காரோணத் திருப் பீரே. 1 வரைக்கைவேழ முரித்துமா னடமாட்டானால் மனைதோறும் இரக்கை யொழியீர் பழியறியி லேற்றைவிற்று நெற்கொள்ளீர் முரைக்கைப் பவழக் கால் காட்ட மூரிச் சங்கத்தொடு முத்தந் திரைக் கைகாட்டுந் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 2 புல்லும் பெறுமேவிடை புணரச் சடைமே லொருபெண் புகவைத்தீ ரில்லந்தோறும் பலியென்றா லிரக்க விடுவா ரிடுவாரே முல்லைமுறுவல் கொடி யெடுப்பக் கொன்றை முகமோதிரங் காட்டச் செல்லும் புறவிற் றென்னாகைத் திருக்காரோணத் திருப்பீரே. 3 மாண்டா ரெலும்புங் கிலும்பு மெல்லா மாலையாக மகிழ்ந்தருளிப் பூண்டார் பொறியாடர வாமை புரமூன் றெரித்தீர் பொருளாகத் தூண்டா விளக்கு மணிமாட வீதிதோறுஞ் சுடருய்க்கச் சேண்டார் புரிசைத் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 4 ஒருவர்க் கொருவ ரரிதாகி லுடை வெண்டலை கொண்டூரூரி னிருவர்க் கொருவரிரந் துண்டா லெளிதே சொல்லீ ரெத்தனையும் பருவற்கனகங் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவாத் தெருவிற் சிந்துந் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 5 தோடையுடுத்த காதுடையீர் தோலையுடுத்துச் சோம்பாதே யாடையுடுத்துக் கண்டக்கா லழகிதன்றே யரிதென்று ஒடையுடுத்த குமுதமுளங் கைமறிப்பப் பறுங்கை யனஞ் சேடை யுடுத்துந் தென்னாகைத் திருக்கா ரோணத்திருப்பீரே. 6 கடுநஞ்சுண்டீ ராகவே கண்டங் கறுத்த திக்காலம் விடு நஞ்சுண்டு நாகத்தை வீட்டிலாட்ட வேண்டாநீர் கொடுமஞ் சுகடோய் நெடுமாடங் குலாவு மணிமாளிகைக் குழா மிடுமிஞ்சிகை சூழ் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 7 பள்ளம்பாறு நறும்புனலைச் சூடிப் பெண்ணோர் பாகமா வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே தொள்ளை யான்ற காத்தானைச் சுமந்து வங்கஞ் சுங்கமிடத் தெள்ளும் வேலைத் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 8 மத்தங் கவரு மலர்க் கொன்றை மாலை மேன் மாலானானை உய்த்தங் கவருமுரை செய்தா லுமக் கேயன்றே பழியுரையீர் முத்தங்கவரு நகையினையார் மூரித்தானை முடிமன்னர் சித்தங் கவருந் தென்hகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 9 மறையன் றாலின்கீழ் நால்வர்க் களித்தீர் களித்தார் மதின்மூன்று மிறையி லெரித்தீரே ழுலகு முடையீ ரிரந்துணி னினிதேதான் திறைகொண்டமரர் சிறந்திறைஞ்சித் திருக்கோபுர்த்து நெருக்க மலர்ச் சிறைவண் டறையுந் தென்னாகைத் திருக்கா ரோணத் திருப்பீரே. 10 தேரார் வீதித் தென்னாகைத் திருக்கா ரோணத் திறையானைச் சீரார் மாடத் திருநாவ லுர்க்கோன் சிறந்த வன்றொண்ட னாராவன் போடுரைசெய்த அஞ்சோடஞ்சு மறிவார்கள் வாரார் முலையா ளுமை கணவன் மதிக்கவிருப்பார் வானகத்தே. 11 மாணிக்க வாசகர் காலம் மாணிக்கவாசகர் காலத்தைப் பலபேர் ஆராய்ந்து பலவித கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலத்தை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகப் பெருமான் வாழ்ந்திருந்தார் என்பதை இப்போது பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்கிறார்கள். எமது ஆராய்ச்சியில் கண்ட முடிபும் அதுவே. அதாவது, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலே, பாண்டிய நாட்டை வரகுண பாண்டியனும், பல்லவ இராச்சியத்தைத் தெள்ளாறெறிந்த நந்திவர்மனும் அரசாண்ட காலத்திலே, சுந்ரமூர்த்திநாயனாரும் சேரமான் பெருமாற் நாயனாரும் வாழ்ந்திருந்த காலத்திலேயே, மாணிக்கவாசகரும் உயிர் வாழ்ந்திருந்தார் என்பது எமது ஆராய்ச்சியிற் கண்ட முடிபு. இதனைச் சான்று காட்டி விளக்குவோம். மாணிக்கவாசக சுவாமிகள், தாம் அருளிய திருக்கோவை யாரில், இரண்டு இடங்களில் வரகுண பாண்டியனைக் குறிப்பிடு கிறார். அவையாவன :- “மன்னவன் தெம்முனைமேல் செல்லுமாயினும் மாலரியேறு அன்னவன்தேர் புறத்தல்கல் செல்லாது வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் மூலவன் நாளும் மற்றோர் தெய்வம் உன்னலனே” “புயல் ஓங்கலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும் அய லோங்கிருங் களியானை வரகுணன் வெற்பின் வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டு மன் கோபமுங் காட்டிவரும் செயலோங் கெயிலேரி செய்த பினின்றோர் திருமுகமே”1 இந்தச் செய்யுள்களிலே வரகுண பாண்டியனை மாணிக்க வாசகர் குறிப்பிடுவது காண்க. குறிப்பிடுவது மட்முமல்லாமல், அப்பாண்டிய னைத் தமது காலத்திலிருந்தவன் என்னும் கருத்துப்பட நிகழ்காலத்தில் கூறுகிறார். “வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்” என்று கூறியதிலிருந்து இதனை அறியலாம். இந்த வரகுண பாண்டியனிடத்திலே, மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்னும் சிறப்புப் பெயருடன், அமைச்சராக இருந்தார் என்று அவர் வரலாறு கூறுகிறது. வரகுண பாண்டியனும், மாணிக்க வாசகரைப் போலவே, மிகுந்த சிவபக்தன் என்பது எல்லோரும் அறிந்ததே. பட்டினத்துப்பிள்ளையார், தாம் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் வரகுண மகாராசனின் சிறந்த சிவத் தொண்டுகளைப் புகழ்ந்து பாராட்டுகிறார். திரு விளையாடற் புராணங் களும் வரகுண பாண்டியனுடைய சிவபக்தியைப் புகழ்கின்றன. வரகுண பாண்டியனின் சிவத்தொண்டுகள் பலவற்றிலும், திருவெண்ணீற்றின்மேல் அவனுக்கிருந்த பக்தி பெரிதும் போற்றப் படுகிறது. சேவகர், கள்ளன் ஒருவனைப் பிடித்துக் கொண்டுபோய் வரகுண பாண்டியனிடம் விட்டபோது, அக் கள்ளன் திருநீறு அணிந் திருந்ததைக் கண்டு வரகுண பாண்டியன் அவனை விடுவித்தாராம். “வெள்ளைநீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையில் கட்டவிழ்ப் பித்தும்” என்று பட்டினத்துப் பிள்ளையார் வரகுணரின் திருநீற்றுப் பக்தியைப் புகழ்கிறார். வரகுண பாண்டியன், திருவெண்ணீற்றைப் பக்தியோடு அணிவது மட்டுமல்லாமல்! போருக்குச் செல்லும் போதும், உடம்பு முழுவதும் வெண்ணீறு அணிந்து கொண்டு செல்வது வழக்கம். ஒரு சமயம் அவன் அவ்வாறு நீறணிந்து போர்க்களம் சென்ற போது, பகைவருடைய அம்பு இவ்வரசன் காலில் தைத்து ஊடுறுவியது. அப்போது, வரகுணன், “நீறு அணியாத இடத்தில் அம்பு தைத்தது அமையும்” என்று கூறினானாம், இதனை, நம்பியாண்டார் நம்பியார் தமது கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் கூறுகிறார். “பொடியேர்தரு மேனிய னாகிப் புசல்புக வடிக்கே கடிசேர்கணை குளிப்பக் கண்டுகோயில் கருவிஇல்லா அடியே பட அமையுங்கணை என்ற வரகுணன்தன் முடியே தருகழல் அம்பலத்தாடிதன் மொய்கழலே”1 வரகுண பாண்டியனின் திருநீற்றுப் பக்தியை, அவனுடைய பொடியேர் தருமேனியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தமது தேவாரத் தில் சிறப்பித்துக் கூறுகிறார். திருவதிகை வீரட்டானப் பதிகத்தில், 8-ஆம் செய்யுளில், சுந்தர மூர்த்தி சுவாமிகள் இவ்வரசனை இவ்வாறு புகழ்கிறார். “பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல் தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற் சோராத சிந்தையான் செக்கர் வானந்தி” இதில் “பொடியாடு திருமேனி நெடுமாறன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறுவது, வரகுண பாண்டியனையே யாகும். என்னை? வரகுண பாண்டியனுக்கு மாறன்சடையன் என்னும் பெயரும் சாசனங்களில் கூறப்படுகிறது. மாறன் என்னும் பெயரைத்தான் சுந்தரர் நெடுமாறன் என்று கூறுகிறார். இந்த நெடுமாறன், சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் கூறுகிற நெடுமாறனாக இருக்கலாகாதோ எனின், இல்லை. இந்த நெடுமாறன் அந்த நெடுமாறன் ஆகான். அந்த நெடுமாறன், “நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்.” இந்த நெடுமாறனோ, “பொடியாடு திருமேனி நெடுமாறன்.” எனவே, இவன் வேறு, அவன் வேறு என்பது திட்டமாகத் தெரிகிறது. “இந்தப் பொடியாடு திருமேனி நெடுமாறனை”த் தான், நம்பியாண்டார் நம்பி தமது கோயில் திருப்பண்ணியர் விருத்தத் தில் “பொடியேர் தருமேனியனாகிய வரகுணன்” என்று கூறினார். எனவே, திருக்கோவையாரில் மாணிக்க வாசகர் கூறுகிற வரகுண பாண்டியனும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரப்பதிகத் தில் கூறுகிற நெடுமாறனும் (நெடுமாறன் - மாறன், சடையன் - வரகுண பாண்டியன்) ஒருவனே என்பது தெரிகிறது. சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் பாண்டி நாட்டில் தலயாத்திரை செய்தபோது, பாண்டியன் அரண்மனையில் தங்கினார் என்று கூறப்படுகிறது. அந்தப் பாண்டியன் வரகுண பாண்டிய னாகத்தான் இருக்கவேண்டும். அப்போது, அப்பாண்டியனின் மருகனாகிய சோழ அரசனும் பாண்டியன் அரண்மனையில் தங்கியிருந்தான். (சோழ அரசன் அக்காலத்தில் பல்லவ அரசனுக்குக் கீழடங்கி யிருந்தான்.) சேர சோழ பாண்டிய அரசர் மூவரும் ஒருங்குசேர்ந்திருந்ததைச் சுந்தரர் தமது தேவாரத்தில் பாடுகிறார் : “அடிகேளுமக் காட்செய வஞ்சுதுமென் றமரர் பெருமானை யாரூர னஞ்சி முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்”1 எனவே, தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் காலத்தில் இருந்த வரகுண பாண்டியன் காலத்திலே மாணிக்கவாசர் இருந்தார் என்பதும், அக் காலத்திலேயே சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இருந்தார் என்பதும் தெரிகின்றன. மாணிக்கவாசகர், சிவபக்தனான வரகுணபாண்டியனைத் திருக் கோவையாரில் கூறியது போலவே, அவருக்குப் பிற்காலத்த வரான பட்டினத்துப்பிள்ளையாரும், வரகுண பாண்டியனின் பக்திச் செயல்களைத் தமது திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் கூறுகிறார். அவை : 1. நீறு பூசிய கள்ளனை விடுதலை செய்தது. 2. நரிகளுக்கு ஆடை அளித்தது. 3. தவளைகளுக்குக் காசு அளித்தது. 4. எச்சில் எள்ளை உண்டது. 5. மருதூரில் கிடந்த தலையோட்iப் போற்றியது. 6. கோயிலில் நாய்க்கட்டம் எடுத்தது. 7. வேம்புகளுக்கு விதானம் அளித்தது. 8. தேவியைச் சிவபெருமானுக்குப் பணி விடை செய்ய அளித்தது என்பன.2 பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் (பழைய திருவிளையாடற் புராணத்தில்), வரகுணபாண்டியனுக்குச் சிவலோகங் காட்டிய திருவிளையாடலில், மேற்படி எட்டுச் செயல்களையும் வரகுணபாண்டியன் பக்தியினால் செய்தான் என்று கூறுப்படுகிறது.3 ஆனால், புதிய திருவிளையாடற் புராணமாகிய பரஞ்சோதி முனிவர் தீருவிளையாடற் புராணத்தில் அந்த எட்டு பக்திச் செயல்களும் கூறப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன. மாணிக்கவாசகர் கூறுகிற வரகுணபாண்டியனும், பட்டினத்துப் பிள்ளையார் கூறுகிற வரகுணபாண்டியனும், பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது (பழைய) திருவிளையாடற் புராணத்தில் கூறுகிற வரகுண பாண்டியனும், நம்பியாண்டார் நம்பி கூறுகிற வரகுணபாண்டியனும் ஒரே பாண்டியன் என்பதில் ஐயம் இல்லை. என்னை? வரகுண பாண்டியன் என்னும் பெயரையுடைய பாண்டியர் களில் ஒருவன் மட்டும் மிகுந்த சிவபக்தியுடையவனாக இருந்தான் ஆகலின். இந்த வரகுணபாண்டியன், பல்லவ அரசர்களான தந்திவர் மன் காலத்திலும் அவன் மகனான நந்திவர்மன் காலத்திலும் இருந்தவன். இவனே முதலாம் வரகுணபாண்டியன். இந்த வரகுணபாண்டியன், பல்லவருக்குரிய சோழ நாட்டைத் தந்திவர்மன் காலத்தில் வென்று அரசாண்டான் என்று முன்னரே கூறினோம். அவன் சோழநாட்டை வென்று அரசாண்ட படியினால்தான் சோழநாட்டிலிருக்கும் திருவிடைமருதூர், சிதம்பரம் முதலிய இடங்களில் நெடுநாள் தங்கிச் சிவபெருமானை வழிபட்டான். மேலும் அவன் சோழநாட்டிலிருந்த இடவை என்னும் ஊரை வென்றான் என்று முன்னரே கூறினோம். அந்த இடவை என்னும் ஊரை, வரகுணன் காலத்தவரும் அவ்வரசனுக்கு அமைச் சராக இருந்தவரும் ஆன மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் கூறுகிறார். இந்த இடவையை அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய அடியார்கள் தமது தேவாரத்தில் கூறவில்லை. மாணிக்கவாசகர், வரகுணபாண்டியன் இடவையை வென்று அங்கத் தங்கிய காலத்தில் தாமும் தங்கியிருந்தார் போலும். ஆகவே, அவ்வூர் சிவ பெருமானைத் தமது திருவாசகத்தில் குறிப்பிட்டார் எனக் கருதலாம். அவர் இடவையைக் கூறும் செய்யுள் இது: “மால் அயன் வானவர்கோனும் வந்து வணங்கஅவர்க்கு அருள்செய்த ஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டிநலம் திகழும் கோலமணி அணிமாட நீடு குலாவும் இடவை மடநல்லாட்கு சீலம்மிகக் கருணை அளிக்கும் திறம்அறிவார் எம்பிரா னாவாரே.1 வரகுணபாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மாணிக்க வாசகர். வரகுணபாண்டியனின் இசைப்புலவராக இருந்தவர் பாண பத்திரர். பாணபத்திரர் பொருட்டுச் சிவபெருமான், சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகப் பாசுரம் அளித்தார் என்று வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமாளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் நண்பர்களாக இருந்து இருவரும் பாண்டிநாடு சென்றனர் என்றும் அங்குப் பாண்டி யனும், அவன் மருகனான சோழனும் அவர்களை வரவேற்றார்கள் என்றும் சேரசோழ பாண்டியர் மூவரும் ஒருங்கிருந்ததைச் சுந்தரர் தமது தேவாரத்தில் பாடினார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது. “கோத்திட்டை என்றெடுத்துக் கோதில்திருப் பதிகஇசை மூர்த்தியார் தமைவணங்கி முக்கோக்களுடன் முன்பே ஏத்தியவண் தமிழ்மாலை இன்னிசைபாடிப் பரவிச் சாத்தினார் சங்கரனார் தங்குதிருப் பரங்குன்றில்.” “முறைபுரியும் முதல்வேந்தர் மூவர்களும் கேட்டிறைஞ்சி மறைமுந்நூல் மணிமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார்.”1 இதற்கேற்பவே, சுந்தரர் “திருக்கோத்திட்டையும் திருக்கோவ லூரும்” பதிகத்தின் கடைசிச் செய்யுளில் “முடியாலுலகாண்ட மூவர் முன்னே மொழிந்ததாகக் கூறுகிறார். சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகம் அனுப்பியது வரகுணபாண்டியன் காலத்தில், சேரமான் பெருமாளும் சுந்தரரும் நண்பர்களானது வரகுணபாண்டியன் காலமான பிறகு. அதாவது சுந்தரர் 17 வயதுள்ள வாலிபராக இருந்தபோது. வயதால் மூத்தவராகிய சேரமான் பெருமாள் சுந்தரருடன் நண்பரானார். சந்தரருடன் சேரமான் பெருமாள் மதுரைக்குச் சென்ற போது அவர்களை வரவேற்ற பாண்டியன், வரகுணபாண்டியனின் மகனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் என்பது தெரிகிறது. இதனால், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலே மாணிக்க வாசகர் இருந்தார் என்பது தெரிகிறது. மாணிக்கவாசகர், சுந்தர மூர்த்திக்கு வயதினால் மூத்தவர். அப்படியானால், சந்தரர் மாணிக்கவாசகரை ஏன் திருத் தொண்டத் தொகையில் கூறவில்லை? இந்தக் கேள்விக்கு விடை என்ன? சுந்தரமூர்த்தி, திடீரென்று ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை யொட்டித் திருத்தொண்டத்தொகை பாடினார். எதிர்பாராதபடி திடீரென்று பாடும்படி நேரிட்டபடியால், அச்சமயம் அவர் நினைவுக்கு வந்த சிவனடியார்களை மட்டும் குறிப்பிட்டார். அவர் காலத்து அடியார்கள் எல்லோரையும் கூற அவர் கருதியிருந்தால், மாணிக்கவாசகரை மட்டும் அல்லாமல், மற்றும் விட்டுப்போன ஏனைய சைவ அடியார் களையும் கூறியிருப்பார். மாணிக்கவாசகரை மட்டும் விடவில்லையே. அக்காலத்தில் சிறந்த சிவனடியாராகிய வரகுண பாண்டியனையும் கூறாமல் விட்டுவிட்டார். திருவாரூரில், கடவுளை வணங்கச் சென்றபோது அங்கிருந்த விறன் மிண்ட நாயனார், “அடியார்களை வணங்காமற் போகிற வன்றொண் டான் (சுந்தரர்) அடியார்களுக்குப் புறம்பானவன்” என்று கூற, அதைக் கேட்ட சுந்தரர், தமது அடியார் பக்தியைத் தெரிவிப்பதற்காகத் திருத் தொண்டத் தொகையைத் திடீரென்று பாடினாரேயல்லாமல், திருத் தொண்டர் பட்டியலைத் தொகுக்கவேண்டும் என்னும் கருத்தோடு பாடவில்லை. எனவே, அச்சமயம் அவர் நினைவுக்கு வந்த அடியார்களை மட்டும் பாடி முடித்தார். மாணிக்கவாசகர், தமது போற்றித் திரு அகவலில், “கலையார் அரிகேசரியாய் போற்றி” என்று கூறுகிறார். இதில் கூறப்படும் அரி கேசரி என்பது ஒரு பாண்டிய அரசன் பெயர் என்று தவறாகக் கருதிக் கொண்டு சிலர், பாண்டியன் அரிகேசரி காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று ஆராய்ச்சி செய்ய முற்படுகின்றனர். அவர் கூறிய அரிகேசரியார் என்பது அரிகேசரி என்னும் அரசனையன்று; அரி கேசரி என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் குறிக்கிறது. கலைகள் பொருந்திய அரிகேசரி என்னும் ஊரில் உள்ள சிவபெருமா னுக்கு வணக்கம் என்பது அதன் பொருள். இதன் பொருளை அறியா மல் சிலர், அரிகேசரி பாண்டியன், பாண்டியன் என்னும் இரண்டு அரசர் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று கூறுகின்றனர். ஓர் ஆய்வாளர், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை மட்டும் துணையாகக்கொண்டு ஆராய்கிறார். பரஞ் சோதியார் திருவிளையாடல் புராணம், அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று கூறுவதை ஆதாரமாகக் கொண்டு அவர் ஆராய்கிறார். பரஞ்சோதியார் திருவிளையாடலுக்கு முற்பட்ட, பழைய திருவிளையாடற்புராணம் ஒன்று இருப்பதை அவர் தெரியாமலேயிருக்கிறார். பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற் பராணம் ஆராய்ச்சிக்குச் சிறிது உதவுகிறது. புதிய திருவிளையாடற் புராணமாகிய பரஞ்சோதியார்புராணம் ஆராய்ச்சிக்கு உதவாதது; சரித்திரத்துக்கு மாறுபட்ட பல கருத்துக்களை மனம்போன படி கூறுகிறது. ஆகவே, பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை யோடிருக்க வேண்டும். மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சிக்கு ஒரே ஒரு அகச்சான்று மட்டும் உண்டு. அதுதான், வரகுணபாண்டியனைச் சுட்டுகிற சான்று. அந்தச் சான்றைக்கொண்டு ஆராய்ந்தால், நாம் மேலே காட்டியபடி, பல்லவ அரசர்களான தந்திவர்மன் அவன் மகனான தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்னும் அரசர்கள் காலத்தில் இருந்த பாண்டியன் வரகுண மகாராசனைத்தான் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார் என்பது ஏற்படுகிறது. இந்த வரகுண மகாராசன் முதலாம் வரகுணபாண்டியன் ஆவான். ஆகவே, அவ்வரசனைக் குறிப்பிடுகிற மாணிக்கவாசகர், அவ்வரசன் காலத்தில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவார். அக்காலத்திலேயே, சில ஆண்டுகளுக்குப் பின்னர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இருந்தார். “குடமுழ நந்திசேனை வாசகனாகக் கொண்டார்” என்றும், ‘நரியைக் குதிரை செய்வானும் நரகரைத்தேவு செய்வானும்” என்றும் திருநாவுக் கரசர் கூறியுள்ளதைச் சான்று காட்டி மாணிக்கவாசகர் காலத்தைச் சிலர் ஆராய்கின்றனர். இது தவறு. இவற்றை எல்லாம் இங்கு ஆராய முற்பட்டால் இடம் விரியும் என அஞ்சி ஆராயாமல் விடுகிறோம். மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்தவர்கள், கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் ஒவ்வோர் காலத்தைக் காட்டியுள்ளார்கள். சிலர் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு என்றும் கூறினார்கள். அவைகளையெல்லாம் ஆராய விரும்புவோர் கீழ்க்கண்ட கட்டுரைகளையும் நூல்களையும் படிப்பார்களாக: பண்டித வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதிய கட்டுரை : கூhந ஐனேயைn சுநஎநைற ஹயீசடை, 1901. கூ. பொன்னம்பலம் பிள்ளையவர்கள் கட்டுரை : கூhந ஆயடயயெச ணுரயசவநசடல சுநஎநைற, ஏடிட. ஐஐஐ, யீ. 203. பண்டித வேதாசலம் பிள்ளை அவர்கள்: கூhந ஊhசளைவயைn ஊடிடடநபந ஆயபயணiநே 1904. பண்டித வேதாசலம் பிள்ளை அவர்களே (மறைமலை அடிகள்) ³ கருத்தைத் தழுவி, “மாணிக்கவாசகர் காலமும் ஆராய்ச்சியும்” என்னும் நூலை எழுதியிருக்கிறார். இதில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இருந்தார் என்று கூறுகிறார். கே. ஜி. சேஷ அய்யர் : கூhந ஊhசளைவயைn ஊடிடடநபந ஆயபயணiநே, ளுநயீவநஅநெச 1901. டாக்டர் போப் ஐயர் அவர்கள், தாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசக நூலின் முகவுரையில், மாணிக்கவாசகர் கி.பி. 7-ஆம் 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறுகிறார். சென்னை நீதிமன்றத்து நீதி பதியாயிருந்த திரு. இன்னஸ், மாணிக்கவாசகர் சங்கரரைப் பின்பற்றியவர் என்றும், ஆகவே அவர் 9-ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகிறார். ஆச. ஐnநேள: கூhந ஐனேயைn ஆயபயணiநே யனே சுநஎநைற, னுநஉ. 1900. கூhந ஐஅயீநசயைட யனே ஹளயைவiஉ ணுரயசவநசடல சுநஎநைற, ஹயீசடை 1902. ஞசடிக. துரடநைn ஏiளேடிn: ஆயடயயெச ணுரயசவநசடல சுநஎநைற ஏடிட. ஏஐஐ, யீ. 112, சுநஎ. ஆச. ழுடிரனநை: கூhந ஊhசளைவயைn ஊடிடடநபந ஆயபயணiநே, ஹரபரளவ 1902. ஆச. சூநடளடிn : ஆயனரசய ஆயரேயட ஏடிட. ஐ, யீ.53. கி.பி. 819-இல் மாணிக்கவாசகர் இருந்தார் என்கிறார். கோபிநாத ராயர், கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்ததாகக் கூறுகிறார் : கூhந ஊhசளைவயைn ஊடிடடநபந ஆயபயணiநே, துரநே 1905. சி.வி. நாராயண அய்யர் கூன்பாண்டியன் காலம் என்கிறார். டீ.நு.ழ.ளு.ளு.ஐ. ஊhயயீவநச ஓஐஐ. சீனிவாசபிள்ளைஅவர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்பர்: “தமிழ் இலக்கிய வரலாறு.” திரு.வி. வெங்கையா அவர்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு என்பர். ஹஅயௌயஅரனசயஅ ஐளேஉசiயீவiடிn டிக ஏயசயபரயே ஞயனேலய நுi. ஐனே ஏடிட. ஐஓ . 89. சுந்தரர் கால ஆராய்ச்சி நாராயண அய்யர் தாம் எழுதிய தென் இந்திய சைவ சமயத்தின் தோற்றமும் வரலாறும் என்னும் ஆங்கில நூலிலே1 சுந்தரர் கி.பி. 710 முதல் 735 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார். இவர் கூற்று ஏற்கத்தக்கதன்று. ஏனென்றால், சுந்தரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது சரித்திர ஆசிரியர்கள் கண்ட முடிபு. அந்த முடிபுக்கு மாறாக இவர் கி.பி. 8-ஆம் நூற்றாணடின் முற்பகுதியில் இருந்தவர் என்று கூறுவது கொள்ளத் தக்கதன்று. மு. இராகவையங்கார் அவர்கள், இரண்டாம் நரசிம்மவர் மனான இராஜ சிம்மன் காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் இருந்ததாகக் கூறுகிறார். அன்றியும், திருமங்கை யாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஒரே காலத்தில் இருந்த வர்கள் என்றும் கூறுகிறார். மேலும், “காடவர்கோன் கழற்சிங்கன்” என்னும் அரசனைச் சுந்தரர் தமது திருத்தொண்டத்தொகையில் கூறியது இராஜசிம்ம பல்லவனையே என்னும் கூறுகிறார்.1 இவர் கருத்தும் ஏற்கத்தக்கதன்று. இவர் கூறுகிற இரண்டாம் நரசிம்மவர்மனான இராஜசிம்மன் கி.பி. 680 முதல் 700 வரையில் அரசாண்டவன். ஆகவே, கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்த இவ் வரசனும் 9-ஆம் நூற்றாண்டிலிருந்த சுந்தரரும் ஒரு காலத்தில் இருந் திருக்கமுடியாது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில் கூறுகிற “காடவர்கோன் கழற்சிங்கன்” என்பவன் இராஜசிம்ம பல்லவன் அல்லன். வேறு ஒரு பல்லவ அரசன். திருமங்கை யாழ்வார் காலத்தில் சுந்தரர் இருந்தார் என்று கூறுவதும் தவறு. சுந்தரர், திருமங்கை யாழ்வாருக்குப் பிறகு (குறைந்தது 25 ஆண்டுக்குப் பின்னர்) இக்காரணங்களினாலே இராகவையங்கார் கருத்து ஏற்கத் தக்கதன்று. கோபாலன் அவர்கள் தாம் எழுதிய காஞ்சிப் பல்லவ சரித்திரம் என்னும் ஆங்கில நூலிலே,2 சுந்தரர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலே இருந்தவர் என்று கூறுகிறார். ஆனால், இந் நூற்றாண்டின் முற்பகுதி யிலா பிற்பகுதியிலா என்பதைக் கூறவில்லை. ஸ்ரீநிவாச பிள்ளை அவர்கள், தமது தமிழ் வரலாறு (இரண்டாம் பாகம்) என்னும் நூலிலே சுந்தரர் காலத்தை ஆராய்ந்து கி.பி. 804 முதல் 825 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார். இது சுந்தரர் கால மாகிய கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு உட்படுகிறது. ஆனால் அகச்சான்று கொண்டு ஆராயப்படவில்லை. சுந்தரர் காலத்தை அகச்சான்று கொண்டு ஆராய்ந்து பார்ப்போம். சுந்தரர், தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், தமது காலத்தில் இருந்த கழற்சிங்கர் என்னும் அரசரைக் குறிப்பிடுகிறார். “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்பது அவர் வாக்கு. காடவர் (பல்லவர்) குலத்து கழற்சிங்கன் என்னும் அரசன், பேரரசன் என்றும் அவன் தமது காலத்தில் வாழ்ந் தவன் என்றும் அவன் சிறந்த சிவபக்தன் என்றும் இதில் கூறுகிறார். உலகெலாம் காக்கின்ற பெருமான் என்று நிகழ்காலத்திலே கூறுவது கவனிக்கத் தக்கது. இதனால், கழற்சிங்கன் என்னும் அரசன் காலத்தில் சுந்தரர் வாழ்ந்திருந்தார் என்பது ஐயமின்றித் தெரிகிறது. கழற்சிங்கன் என்னும் அரசன் யார்? அவன் எந்தக் காலத்தில் அரசாண்டான்? சுந்தரர் கூறிய காடவர்கோன் கழற் சிங்கனைச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் (கழற்சிங்கநாயனார் புராணத்தில்) சற்று விளக்கமாகக் கூறுகிறார். “படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார் கடிமதில் மூன்றுஞ் செற்ற கங்கைவார் சடையார் செய்ய அடிமலர் அன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மைக கொடி நெடுந்தானை மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார்.” “காடவர் குரிசி லாராங் கழற் பெருஞ்சிங்கர் தாம் ஆடக மேரு வில்லார் அருளினால் அமரிற் சென்று கூடலர் முனைகள் சாய வடபுலங் கவர்ந்து கொண்டு நாடற நெறியில்வைக நன்னெறி வளர்க்கு நாளில்.” மேலும், ழரசுடைத்தானை மன்னர்1 என்றும், சிங்கர் என்றும்,2 உலகு நிகழ்ந்த பல்லவர் கோச்சிங்கர்3 என்றும் சேக்கிழார் கூறுகிறார். இதனால், கழற்சிங்க நாயனாருக்குச் சிங்கர், பெருஞ்சிங்கர், கழற்சிங்கர் என்னும் பெயர்கள் உண்டு என்பதும் அவர் பல அரசர்களைப் போரில் வென்றவர் என்பதும் வடபுலங்களையும் வென்றவர் என்பதும் சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தியுடையவர் என்பதும் தெரிகின்றன. பல்லவ அரசர்களில் இவ்விதச் சிறப்பு களைக் கொண்டவன் யார் என்று பார்த்தால், மூன்றாம் நந்தி வர்மனே இத்தகைய சிறப்புகளைக் கொண்டிருந்தான் என்பது தெரிகிறது. மூன்றாம் நந்திவர்மனுக்குத் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பெயர் உண்டென்பதை அறிவோம். இவனைப் பாடிய நந்திக் கலம்பகம் இவனை, குறைகழல் வீரநந்தி என்றும், அறைகழல் ழடித்த அவனிநாரணன் என்றும் கூறுகிறது.1 மேலும், பல்லவர் கோளரி என்றும் கூறுகிறது.2 கோளரி = சிங்கம். காலில் வீரக்கழலை அணிந்த சிங்கன் என்பது இவற்றின் கருத்தாகும். அவனிநாரணன் என்னும் சிறப்புப் பெயரும் இவனுக்கு உண்டு என்பதை நந்திக் கலம்பகம் கூறுகிறது. சுந்தரர் “கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்” என்று கூறியது “அவனி நாரணன் என்னும் பெயரின் பொருளாகும்”. கழற்சிங்கன் என்றால், காலில் வீரக்கழலை யணிந்து சிங்கம் போலப் போரை வென்றவன் என்பது பொருள். இது தெள்ளாறெறிந்த நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று. போர் வீரர்கள் தமது காலில் வீரக் கழல்களை அணிவது வழக்கம் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. நந்திவர்மன் பல போர்களை வென்றவன். முககியமாகத் தெள்ளாற்றுப் போர் புகழ்வாய்ந்தது. இதனாலே அவன் தெள்ளா றெறிந்த நந்திவர்மன் என்று புகழப்பட்டான். மேலும் பாழையாறு, வெள்ளாறு, நல்லாறு, குறுகோடு முதலிய வேறு பல இடங்களிலும் போர் செய்து வென்றான் என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது. இத்தனைப் போர்களை வென்ற வீரன், காலில் கழல் அணிந்து சிங்கன் என்னும் சிறப்புப் பெயர் பெற்று கழற்சிங்கன் என்று அழைக்கப்பெற்றதில் வியப்பு இல்லை. கழற்சிங்கன் என்னும் சிறப்புப் பெயரையே சுந்தரரும் சேக்கிழாரும் தமது நூல்களில் கூறினார்கள். கழற்சிங்கனாகிய நந்திவர்மன், வடபுலங்களையும் கவர்ந்து கொண்டான் என்று சேக்கிழார் கூறுவதைப் போலவே, நந்திக் கலம்பகம் குறுகோடு என்னும் கோட்டையை வென்றான் என்று கூறுகிறது. குறுகோடு என்பது பல்லாரி மாவட்டம் பல்லாரி தாலூகாவில் உள்ளது. “............... மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திரைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையால் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.” என்று சுந்தரர் தமது கோயில் பதிகத்தில் கூறுகிற பல்லவ மன்னன், கழற்சிங்கனாகிய மூன்றாம் நந்திவர்மனே என்று கொள்ளத்தகும். இதனால், இவ்வரசன் பல அரசரை வென்று பேரரசனாக விளங்கினான் என்பது தெரிகிறது. சுந்தரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், இவ்வரசனைச் சிவபக்தன் என்று கூறுகிறார். சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில் (கழற்சிங்க நாயனார் புராணம்) இவனைச் சிறந்த சிவபக்தன் என்று கூறுகிறார். இதற்கேற்பவே, இவனைப் பாடிய நந்திக் கலம்பகமும் “சிவனை முழுவதும் மறவாத சிந்தையான்” என்று கூறுகிறது. வேலூர் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனம், இவன் சிறந்த சிவபக்தன் என்பதைக் கூறுகிறது.1 எனவே, சுந்தரர் காலத்திலிருந்த கழற்சிங்கன் என்னும் அரசன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்பது தெரிகிறது. இவ்வரசன் ஏறக்குறைய கி.மு. 830 முதல் 854 வரையில் அரசாண்டான் என்பது அறிவோம். ஆகவே, சுந்தரமூர்த்தி நாயனார் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது தெளிவாகிறது. மூன்றாம் நந்திவர்மன் தெள்ளாறு, நள்ளாறு முதலிய ஊர்களில் போர் வென்றான் என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது. அவ்வரசன் காலத்திலிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் தெள்ளாறு, நள்ளாறு என்னும் ஊர்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தமது பதிகத்தில் குறிப்பிடுகிறார். “நள்ளாறு தெள்ளாற ரத்துறைவா! எங்கள் நம்பனே! வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்”2 என்பது அச்செய்யுள். நந்திக் கலம்பகம் நந்திக் கலம்பகம், தெள்ளாநெறிந்த நந்திவர்மன் மேல் பாடப்பட்டது. இக்கலம்பகத்தில், நந்திவர்மனைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் காணப்படுவதால், இந்நூல் முழுதும் இங்குத் தரப்படு கிறது. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா தரவு மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய் ஒண்சுடராய் ஒளியென்னும் ஒருருவம் மூன்றுருவம் மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ செவ்வடிவோ பொன்வடிவோ சிவனேநின் திருமேனி. 1அருவரையி னகங்குழைய வனலம்பு தெரிந்தவுணர் பொருமதில்க ளவைமூன்றும் பொன்றுவித்த புனிதற்கும் குருமணிசே ரணிமுறுவல் குலக்கங்கை நதிபாயத் திருமுடியைக் கொடுத்தாற்கும் செம்பாகந் திறம்பிற்றே. இலகொளிய மூவிலைவே லிறைவாநின் னியற்கயிலைக் குலகிரியு மருமறையுங் குளிர்விசும்பும் வறிதாக அலைகதிர்வேல் படைநந்தி யவனிநா ராயணனிவ் உலகுடையான் திருமுடியு முள்ளமுமே யுவந்தனையே. அராகம் செழுமலர் துதைதரு தெரிகணை மதனனது எழிலுடல் பொடிபட வெரிதரு நுதலினை. அருவரை யடியெழ முடுகிய அவுணனது ஒருபது முடியிற ஒருவிரல் நிறுவினை. தாழிசை வீசிகையில் கொன்றையும் வெள்ளெருக்கம் விராய்த் தொடுத்த வாசிகையி னூடேவெண் மதிக்கொழுந்தைச் சொருகினையே. பாய்புலியி னுரியசைத்த பலபுள்ளிப் படிவமெலாம் ஆயிரவாய்க் கருங்கச்சை யழலுமிழ வசைத்தனையே. சோர்மதத்த வார்குருதி சோனைநீர் எனத்துளிப்ப வேர்மதத்த கரியுரிவை யேகாசம் இட்டனையே. திசைநடுங்கத் தோன்றிற்று நீயுண்ட திறனஞ்சம் உயிர்நடுங்கத் தோன்றிற்று நீயுதைத்த வெங்கூற்றம். அம்போதரங்கம் அனைத்துலகில் பிறப்புநீ அனைத்துலகில் இறப்புநீ அனைத்துலகில் துனபமுநீ அனைத்துலகில் இன் பமுநீ. வானோர்க்குத் தாதையுநீ வந்தோர்க்குஙத தந்தையுநீ ஏனோர்க்குத் தலைவனுநீ எவ்வுயிர்க்கும் இறைவனுநீ. ஊழிநீ, உலகும்நீ உருவும்நீ, அருவும்நீ ஆழிநீ, அமுதமும்நீ அறமும்நீ, மறமும்நீ. எனவாங்கு சுரிதகம் ஒருபெருங் கடவுணிற் பரவுது மெங்கோன் மல்லை வேந்தன் மயிலை காவலன் பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி வடவரை யளவுந் தென்பொதி யளவும் விடையுடன் மங்கல விசயமும் நடப்ப ஒருபெருந் தனிக்குடை நீழல் அரசுவீற் றிருக்க வருளுக எனவே. 1 குறிப்பு :- இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் நந்திவர்ம னுடைய சிறப்புப் பெயராகிய அவனிநாரணன் என்னும் பெயர் கூறப் படுகிறது. மாமல்லபுரம், மயிலாப்பூர் என்னும் அவனுடைய நகரங் களும் கூறப்படுகின்றன. விடை (எருது)க் கொடியும், முத்திரையும் குறிக்கப்படுகின்றன. நேரிசை வெண்பா எனதே கலைவளையும் என்னதே மன்னர் சினவேறு செந்தனிக்கோல் நந்தி - இன்வேழங் கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும் பூமறுகிற் போகாப் பொழுது. 2 கட்டளைக் கலித்துறை பொழுதுகண் டாயதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றும் தொழுதுகொண் டேனென்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு முழுதுகண் டானந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப் பழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே. 3 குறிப்பு:- நந்திவர்மன் பழைய நூல்களை யெல்லாம் கற்றவன் என்று இதில் கூறப்படுவது காண்க. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்ம் குருகுதிர்முன் பனிக்கொதுங்கிக் கூசுங் கங்குல் குளிர்திவலை தோய்ந்தெழுந்த நறுந்தண் வாடை யருகுபனி சிதறவர அஞ்சு வாளை யஞ்சலஞ்சல் என்றுரைத்தா லழிவ துண்டோ? திருகுசினக் கடக்களிற்றுச் செங்கோல் நந்தி தென்னவர்கோன் தன்குறும்பிற் சென்று சூழ்ந்த கரிகைவினைப் பகைஞருடல் துண்ட மாகத் துயிலுணர்ந்த வல்லண்மைத் தொண்டர் வேந்தே. 4 குறிப்பு: இதில், நந்திவர்மனுடைய பகைவனான பாண்டியனை யும் அவனைச் சார்ந்திருந்த அரசர்களையும் நந்தி வென்ற செய்தி கூறப்படுகிறது. அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் தொண்டை வேந்தன் சோணாடன் தொன்னீ ரலங்கல் முந்நீருங் கொண்ட வேந்தர் கோனந்தி கொற்ற வாயில் முற்றத்தே விண்ட வேந்தர் தந்நாடும் வீரத் திருவும் எங்கோனைக் கண்ட வேந்தர் கொண்மின்க ளென்னுங் கன்னிக் கடுவாயே. எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட வங்கண் மறுகே யடுவார் மருப்பி னயிரா வதத்தின் அடுபோர் செய் நந்தி வருமே கொடுவார் புனைந்து நகுவாட் படைக்கண் மடவா ரிடைக்குண் மனமே வடுவா யிருக்கு மகளேயி முன்றின் மணியூசல் ஆடல் மறவே. 6 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மறமத கரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன விறலர சர்கண்மன நெகிழ்வன விரைமலர் களிமுலை பொருவன திறலுடை யனதொடை புகழ்வன திகழொளி யனபுகழ் ததைவன நறுமலர் அணியணி முடியன நயபுர நினதிருப் புயமதே. 7 இதில், நயபரன் என்பது நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகக் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கலி விருத்தம் புயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின் நயங்கொளத் தகுபுகழ் நந்தி கச்சி சூழ் கயங்களிற் கடிமலர் துழாவிக் காமுகர் பயங்கொளப் புகுந்தது பருவ வாடையே. 8 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வாடை நோக வீசு மாலம் மாரன் வாளி தூவுமால் ஆட லோத மார்க்கு மாலென் ஆவி காக்க வல்லனோ ஏடு லாவு மாலை சேரி ராசன் மல்லை நந்திதோள் கூடினால் லர்வ ராது கொங்கு விம்மு கோதையே. 9 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கோதை சோரிற் சோர்கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல் சோதி வெளுக்கில் வெளுமருங்குல் துவளி னீயுந் துவள்கண்டாய் காது நெடுவேற் படை நந்தி கண்டன் கச்சி வளநாட்டு மாத ரிவரோ டுறுகின்றாய் வாழி மற்றென் மடநெஞ்சே. 10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நெஞ்சாகுல முற்றிங் னேமெலிய நிலவின் கதிர் நீளெரி யாய்விரியத் துஞ்சாநய னத்தொடு சோருமிவட் கருளாதொழிகின்றது தொண்டைகொலோ செஞ்சாலி வயல்படர் காவிரிசூழ் திருநாடுடை நந்தி சினக்கலியின் வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான் விடைமண்பொறி யோலை விடேல் விடுகே. 11 கட்டளைக் கலித்துறை விடுதிர்கொல் லோவள நாடுடை வீரர சற்குமுன்னின் றிடுதிர்கொல் லோபண்டி றுக்குந் திறையெரி கானத்தும்மை யடுதிர்கொல் லோதிற னந்தியெங் கோனயி ராவதத்திற் படுதிர்கொல் லோபடை மன்னீரென் னாமுங்கன் பாவனையே. 12 வஞ்சி விருத்தம் வனைவார்குழல் வேணியும் வாடைகணீர் நனைவார்துகி லும்மிவை நாளுமிரா வினைவார்கழல் நந்திவி டேல்விடுகின் கனைவார்முர சொத்தது காரதிர்வே. 13 தரவு கொச்சகக் கலிப்பா அதிர்குரல மணிநெடுந்தேர் அவனிநா ரணன் களிற்றின் கதிரொளிய வெண்மருப்புக் கனவயிரஞ் செறிந்ததால் மதுரைகொலோ அடுபுலிக்கோன் நகரிகொலோ மாளிகைசாய்ந் தெதிரெதிரே கெடநின்ற தெவ்வூர்கொ லறியோமால். 14 நேரிசை வெண்பா ஓம மறைவாண ரொண்பொற் கழல்வேந்தர் தாம முடிக்கணிந்த தாளிப்புல் - கோமறுகில் பாவடிக்கீழ்ப் பல்யானைப் பல்லவர்கேர னந்திதன் சேவடிக்கீழ்க் காணலாஞ் சென்று. 15 கட்டளைக் கலித்துறை சென்றஞ்சி மேற்செங்கண் வேழஞ் சிவப்பச் சிலர்திகைப்ப வன்றுஞ் சினத்தா ரினமறுத் தார்போலு மஃதஃதே குன்றஞ்செய் தோள்நந்தி நாட்டங்குறி குறுக்கோட்டையின்மேல் சென்றஞ்சப் பட்டதெல் லாம்படு மாற்றலர் திண்பதியே. 16 அறுசீர்க் கழிbடிலடி ஆசிரிய விருத்தம் பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெல் கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி வளநாடா நிதிதரு கவிகையு நிலமக ளுரிமையு மிவையிவை யுடைநந்தி! மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர் வானக மாள்வாரே. 17 கலி விருத்தம் ஆட்குலாங் கடற்படை யவனி நாரணன் தோட்குலா மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர் வாட்குலாங் கண்ணினால் வளைத்த மம்மர்நோய் மீட்கலா மடல்கையில் விரவு மாகிலே. 18 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் விரவாத மன்னரெலாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக் கிரவாத பரிசெல்லா மிரந்தேற்றும் பாவைமீ ரெல்லீர் வாடை வரவாதை யுற்றிருந்து வருந்துவார் பலரென்றும் வாழி வாழி பரவாதை நந்திசெங்கோ லிதுவாகி லதுபார்க்கும் பரிசுநன்றே 19 ³ வேறு நன்றுந்நெடி தாயவிர் கின்றதிரா நலிகின்றது மாருத சாலமெனக் கென்றின்னில வென்னு மிளம்பிறையும் எரியேசொரி கின்றதியாது செய்கோ வன்றிந்நில மேழுமளந்த பிரான் அடல்உக்ரம கோபன் அடங்கலர்போல் இன்றென்னுயி ரன்னவள் கொங்கையைவிட் டெங்ஙன்றுயில் கின்றன னேழையனே. 20 வஞ்சித் துறை ஏழை மார்துணை வாழி நந்தி தண் நீழல் வெண்குடை ஊழி நிற்கவே. 21 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகை விற்கொ ணன்னுதன் மடந்தை மார்மிக முயங்குதோள் அவனி நாரணன் நற்கொள் வார்மதிற் கச்சி நந்தி நலங்கொ ளன்னவ னலங்கன்மே லொற்க மென்மக ளுரைசெய் தோவுல களிப்ப னித்திற னுரைத்திடே 22 இணைக்குற ளாசிரியப்பா உரைவரம் பிகந்த வுயர்புகழ்ப் பல்லவன் அரசர் கோமான் அடுபோர் நந்தி மாவெள் ளாற்று மேவலர்க் கடந்த செருவேல் உயர்வு பாடினன் சொல்லோ நெருநற் றுணியாரைச் சுற்றிப் பரடு திறப்பத் தன்னாற் பல்கடை திரிந்த பாண னறுந்தார் பெற்றுக் காஅர் தளிர்த்த கானக் கொன்றையின் புதுப்பூப் பொலன்கல னணிந்து விளங்கொளி யானன னிப்போ திளங்களி யானை யெருத்தமிசை யன்னே. 23 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அன்ன மடமயிலை யாளி மதயானை நந்தி வறியோர் சொன்ன பொருணல்கு வள்ள றொகுநீர தொண்டை வளநாட்டு அன்னநடையாளை யல்குல் பெரியாளை யங்கை யகல்வான் மின்னை மெலிவாளை நூலி னிடையாளை நேர்வ மயிலே. 24 எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே மான்கண்டால் மானுக்கே வாடி மாதர் குயில்கண்டால் குயிலுக்கே குழைதி யாகில் கொடுஞ்சுரம்போக் கொழிநெஞ்சே கூடாமன்னர் எயில்கொண்டான் மல்லையங்கோன்நந்தி வேந்தன் இகல்கொண்டா ரிருங்கடம்பூர் விசும்புக் கேற்றி அயில்கொண்டான் காவிரிநாட் டன்னப் பேடை யதிசயிக்கு நடையாரை யகல னூற்றேன். 25 கலி விருத்தம் நூற்க டற்புல வன்னுரை வெண்டிரை நாற்க டற்கொரு நாயகன் நந்திதன் கோற்க டைப்புரு வந்துடிக் குந்துணை வேற்க டற்படை வேந்தர்தம் வீரமே. 26 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வீரதீரனல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச் செருவென்றோன் ஆர்வ மாவுள நின்றவ ரன்பன்மற்று அவன்பெருங் கடைநின்ற சேரசோழருந் தென்னரும் வடவுலத் தரசருந் திரைதந்த வீரமாமத கரியிவை பரியிவை யிரவலர் கவர்வாரே. 27 ³ வேறு கவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன் குமரிக் கொண்கண் கங்கை மணாளன் குரைகழல் விறல்நந்தி அமரில் தெள்ளாற் றஞ்சிய நெஞ்சத் நரசர்கள் திரள்போகும் இவரிக் கானத்தேகிய வாறென் எழிநகை யிவனோடே. 28 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ வூசல் உத்தரியப் பட்டாட வாடாமோ வூசல் ஆடகப்பூண் மின்னாட வாடாமோ வூசல் அம்மென் மலர்க் குழல்சரிய ஆடாமோ வூசல் கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன் காடவற்கு முன்றோன்றல் கைவேலைப் பாடிக் காஞ்சீபுரம்பாடி யாடாமோ வூசல். 29 கலி விருத்தம் ஊசல் மறந்தாலும் ஒண்கழல் அம்மானை வீசல் மறந்தாலும் மெல்லிய லென்பேதை பூசல் இலங்கிலைவேல் பொற்கழல் நந்திநின் பாசிலை யந்தொண்டை யல்லது பாடாளே. 30 நேரிசை வெண்பா பாடிய நாவலரோ வேந்தரோ பல்பிரவிப் பீடியன் மாகளிற்றார் பிச்சத்தார் - கூடார் படையாறு சாயப் பழையாறு வென்றான் கடையாறு போந்தார் கலந்து. 31 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்ம் கலங்கொள் அலங்கல் வேல்நந்த கச்சி நாட்டோன் அவன் கழல் புலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின் றோர்க்கும் பொன்னார நலங்கொண் முறுவல் முகஞ்சாய்த்து நாணாநின்று மெல்லவே விலங்கல் வைத்த மின்னோக்கின் மேலு முண்டோ வினையேற்கே. 32 கட்டளைக் கலித்துறை வினையின் சிலம்பன் பரிவும் இவடன் மெலிவு மென்பூந் தினையும் விளைந்தது வாழிதன் மீறுதெள் ளாற்று நள்ளார் முனையுமன்றேக முனிந்தபி ரான்முனை யிற்பெருந்தேன் வனையும் வடவேங் கடத்தார்தண் சாரலின் வார்புனமே . 33 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் புனத்துநின்ற வேங்கைமேல் புகைந்தெ ழுந்த வானையின் சினத்தை யன்றொ ழித்தகைச் சிலைக்கை வீரர் தீரமோ மனத்து ணின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட திர்ந்தமான் வனத்த கன்ற திர்ந்ததோ நந்தி மல்லை யார்ப்பதே. 34 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆர்க்கின்ற கடலோத மார்க்கு மாறு மசைகின்ற விளந்தென்ற லசையு மாறுங் கூர்க்கின்ற விளமதியங் கூர்க்க மாறுங் காணலாங்ங குருக் கோட்டை குறுகா மன்னர் போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி பூதலத்தில் வடிம்பலம்பப் பூண்ட வில்லோன் பார்க்கொன்று செந்தனிக் கோல் பைந்தார் நந்தி பல்லவர்கோன் றன்னருள்யாம் படைத்த ஞான்றே. 35 கலிவிருத்தம் ஞான்ற வெள்ளருவி யிருவி யெங்கள் பொற் றோன்றல் வந்திடிற் சொல்லுமின் ஒண்சுடர் போன்ற மன்னவன் னந்திதன் பூதரத் தீன்ற வேங்கை யிருங்கணிச் சூழ்ச்சியே. 36 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சூழி வன்மத யானையின் பிடர்படு கவடிகை சுவட்டின்கீழ் வாழி யிந்நில மன்னர்வந் தனுதினம் இறைஞ்சிய வடுக்கண்டோம் ஆழி மன்னவ வன்னைய ராய்ச்சிய ரடுங்கயிற் றடியிட்ட பாழி மன்னெடுந் தோள்வடுக் கண்டிலம் பல்லவ பகர்வாயே. 37 ³ வேறு பகரங்கொள் நெடுந்திவலை பனிவிசும்பில் பறித்தெறியப் பண்டு முந்நீர் மகரங் கொள் நெடுங்கூல வரைதிரித்த மாலென்பர் மன்னர் யானை சிகரங்கள் போன்மடியத் தெள்ளாற்றுக் கண் சிவந்தான் தென்னன் தொண்டி நகரங்கைப் படுத்த பிரான் நந்திநர பதிபணிகோ னங்கள் கோவே. 38 ³ வேறு நங்கள்கோத் தொண்டை வேந்தன் நாமவேல் மன்னர்க் கெல்லாம் தங்கள் கோனங்க நாடன் சந்திர குலப்ர காசன் திங்கள் போற் குடையி னீழல் செய்ய கோல் செலுத்து மென்பர் எங்கள்கோல் வளைகள் நில்லா விபரித மிருந்த வாறே. 39 கட்டளைக் கலித்துறை ஆறா விறலடு போர்வன்மை யாலம ராடியப்பாற் பாறார் களிற்றுயர் பல்லவர் கோனந்தி மல்லையன்றிக் கூறா ளிவளிளங் கொங்கை யவன்வளர் தொண்டையல்லா னாறா திவடிரு மேனியு நாமென்கொ னாணுவதே. 40 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் நாணா தித்திரு மடவார் முன்புநின் நன்பொற் கழலிணை தொழுதாரிற் பூணா கத்தொளிர் பொலனாகச் செய்த புதுமென் தொண்டைய தருளாயே வாணா ளைச்சுளி களியா னைப்படை வயவே லடையலர் குலகாலா கோணா மைக்கொரு குறையுண் டோவுரை கொங்கா நின்னது செங்கோலே. 41 ³ வேறு செங்கோல் வளைக்கை யிவளுந் துவண்டு செறியாமை வாட வெழிலார் அங்கோல் வளைக்கை யிளையா ரிழப்ப அரசாள்வ தென்ன வகையோ தங்கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலமேல் வெங்கோ னிமிர்த்த வரையுஞ் சிவந்த விறல் நந்தி மேன்மொழி வையே.. 42 கலிநிலைத் துறை மொழியார் தொண்டைப் பன்மலர் முற்றுந் தெருவந்து விழியா ளென்றும் மேனி வெளுத்துற மெலிரவாளே யொழியா வண்கைத் தண்ணருள் நந்தி தனூர்மட்டோ வழியாந் தமரக் கடல்வட் டத்தொரு வண்கோவே. 43 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒருகோமகன் நந்தி யுறந்தையர் கோன் உயர்நீள்வல யத்துயர் வாளைவளை குருகோடு வயற்படர் காவிரியின் குலவும்புயல் கண்டு புகார்மணலிற் பெருகோடு நெடுங்கழி சூழ்மயிலைப் பெருமானது பேரணி நீண்முடிமேற் றருகோதை நினைந்தயர் வேன்மெலியத் தழல்வீசுவ தோகுளிர் மாமதியே. 44 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மதிய மெரிசொரியு மாலையம் மாலை மறந்தும் புலராது கங்குலெலாங் கங்குல் கதிர்செயணிவண்டு காந்தாரம் பாடக் களிவண்டு புகுந்துலவுங் காலமாங் காலம் பதியின் வளர்ந்த நறுந் தொண்டையங்கோன் நந்தி பல்லவற்கு நேராத பாவையர்தம் பாவை விதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால் வினைமற்று முண்டோநம் மெல்லோதி மாட்டே. 45 தரவு கொச்சகக் கலிப்பா மாட்டாதே யித்தனைநாள் மால்நந்தி வான்வரைத் தோள் பாட்டாதே மல்லையர்கோன் பரியானைப் பருச்சுவடு காட்டாதே கைதைப் பொழிலுலவுங் காவிரிநீர் ஆட்டாதே வைத்தென்னை யாயிரமுஞ் செய்தீரே. 46 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் செய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை செறிந்திறு மருங்குற் கொம் பைய சாலவு மவிரிழை யல்குல மதுமலர்க் குழலென்றால் வெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி வீரவ னிவனைப் போய் நைய நாமிவ னகரிகை தொழுதில நம்முயி ரளவன்றே. 47 கட்டளைக் கலித்துறை அளவுகண் டாற்குடங் கைத்துணை போலு மரசர்புகும் வளவுகண் டான்நந்தி மானோ தயன்வையந் தன்னின்மகிழ் தளவுகண் டாலன்ன வெண்ணகை யாற்றமி யேனதுள்ளங் களவுகண் டார்முகத் துக்கண்க ளாய கயற்குலமே. 48 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் குலமரபு மொவ்வாது பயின்று வந்த குடித்தொழிலுங் கொள்படையின் குறையுங் கொற்றச் சிலவளவுஞ் சிந்தியாத் தெவ்வர் தேயத் தெள்ளாற்றிற் செருவென்ற செங்கோல் நந்தி புலவரசை புறங்கண்ட புகழ்சேர் கோவே! பூவலயந் தனிற்கரியாய் நின்ற மன்னா! சொலவரிய திருநாம முனக்கே யல்லாற் சொல்லொருவர்க் கிசையுமோ தொண்டைக்கோவே. 49 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் கோவே மாலை மாலையர்க்கோ கோவே வேண்டு நிலவோகண் கோவே மாலை மாலையது கொண்டார் குறுகு மாறறியேன் கோவே மாலை நீண்டுமுடியார் கொற்ற நந்தி கச்சியுளார் கோவே மாலை யுள்ளுமெங்கள் கோவே கம்ப ரானாரே. 50 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகிடுக மாமை யணிகெடுக மேனி யலரிடுக வாரு மயலோர் போகிடுக சங்கு புறகிடுக சேரி பொருபுணரி சங்கு வளைமென் னாகிடறு கானல் வளமயிலை யாளி நயபானும் எங்க ளளவே யேகொடி யனாக விவையியையும் வஞ்சி யினியுலகில் வாழ்வ துளதோ. 51 நேரிசை வெண்பா உளமே கொடிமருங் குண்டில்லை யென்னி லிளமுலைக ளெவ்வா றிருக்கும் - கிளரொளிய தெள்ளிலைவேற் கண்ணினா டெள்ளாற்றிவ் வென்றகோன் றன்மயிலை யன்னா டனக்கு 52 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தனக்குரிய வென்கொங்கை தான் பயந்த மழகளிற்றுக் காக்கித் தன்பால் எனக்குரிய வரைமார்பம் எங்கையர்க்கே யாக்கினான் இகல்வேல் மன்னர் சினக்கரியும் பாய்மாவுந் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி மனக்கினியா னவனிட்ட வழக்கன்றோ வழக்கிந்த வையத் தார்க்கே. 53 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் தார்வட் டக்கிளி மருவுஞ் சொற்பகர் தளரிடை தையல் வஞ்சிக்கின்று ஏர்வட் டத்தனி மதிவெள் ளிக்குடை கொடிதென் றாலது பழுதன்றோ போர்வட் டச்சிலை யுடையவாள் பற்றிய பொருகடன் மல்லைப் புரவலனே பார்வட் டத்தனி மதயா னைப்படை யுடையாய் பல்லவ ரடலேறே. 54 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அடலேறு வலத்துயர் வைத்தபிரான் அடலுக்ரம கோபன் அடங்கலர்தா மடலேறிட வாகை புனைந்தபிரான் வடவேங்கட நாடுடை மன்னர்பிரான் பெடையேறு நெடுங்கழி சூழ்மயிலைப் பெருமானது பேரருள் நீண்முடிமேல் மிடலேறிய கோதை நினைந்தயர்வாள் மெலியத்தழல் வீசுமி மாமதியே 55 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் மலர்ச்சூழ லமர்ந்தினிய வண்டார்க்குங் காலம் வரிக்குயில்கள் மாவிலிளந் தளிர்கோதுங் காலம் சிலர்க்கெல்லாஞ் செழுந்தென்ற லமுதளிக்குங் காலம் தீவினையேற் கத்தென்றல் தீவிசுங் காலம் பலர்க்கெல்லாம் கோனந்தி பன்மாடக் கச்சிப் பனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடுங் காலம் மலர்க்கெல்லா மைங்கணைவே ளலர்தூற்றுங் கால மகன்றுபோ னவர்நம்மை யயர்த்துவிட்ட காலம். 56 கலி விருத்தம் காலவினை வாணர்பயில் காவிரிந னாடா ஞாலமொரு கோலினி னடாவுபுகழ் நந்தி நீலமயில் கோதையிவ ணின்னருள்பெ றாளேல் கோலவளை கோடலிது மன்னர்புக ழன்றே. 57 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் புரவல னந்தி யெங்கள் பொன்னிநன் னாட்டு மன்னன் மரமயில் போற்று சாயல் வாணுதற் சேடி காணுங் குரவலர் பொழிலிற் கோலக் கோட்டிடை யில்லை யாகி லிரவலர் மலர்க ளெங்கு மில்லையோ நல்கு வேனே. 58 ³ வேறு நல்கு நந்தியிந் நானிலங் காவலன் மாரவே ணளிர் முத்தம் மலகு வெண்குடைப் பல்லவர்கோளரி மல்லலந் திண்டோண் மேல் மெல்கு தொண்டையுந் தந்தருள் கிலன் விடைமணியொடும் விடியாத அல்லி னோடும்வெண் டிங்களி னொடு முளன்உய்வகை யறியேனே. 59 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அறம்பெருகுந் தனிச்செங்கோல் மாயன் தொண்டை யங்கனிபோற் சிவந்துதிரு முகத்துப் பூத்து மறிந்துளதே பவளவாய் மருங்கி லாடும் வல்லியிடை மணிமுறுவன் முத்துச் சால நெறிதுளதே கருங்குழலங் குவளை கண்கள் நெடியவேய் தொடியதோ ணேர்ந்து வெம்மை செறிந்துளவே முலைசிலையே புருவ மாகி யவர்நம்மைச் சிந்தைநோய் திருத்தி னாரே. 60 இணைக்குற ளாசிரியப்பா திருவின் செம்மையும் நிலமக ளுரிமையும் பொதுவின்றி யாண்ட பொலம்பூட் பல்லவ! தோள்துணை யாக மாவெவ் ளாற்று மேவலர்க் கடந்த வண்ணால்! நந்திநின் திருவரு நெடுங்கண் சிவக்கு மாகில் செருநர் சேரும் பதிசிவக் கும்மே. நிறங்கிளர் புருவந் துடிக்கின் நின்கழல் இறைஞ்சா மன்னர்க் கிடந்துடிக் கும்மே மையில் வாளுறை கழிக்கு மாகி னடங்கார் பெண்டிர் பூண்முலை முத்தப் பூண்கழிக் கும்மே கடுவாய் போல்வளை யதிர நின்னோடு மருவா மன்னர் மனந்துடிக் கும்மே மாமத யானை பண்ணின் உதிர மன்னுநின் னெதிர்மலைந் தோர்க்கே. 61 நேரிசை வெண்பா ஓராதே யென்மகளைச் சொன்னீரே தொண்டைமேல் பேராசை வைக்கும் பிராயமோ - நேராதார் ஆள்வலியாற் கொண்ட வகன்ஞால மத்தனையும் தோள்வலியாற் கொண்ட துயக்கு. 62 கட்டளைக் கலித்துறை துயக்குவித் தான்றுயில் வாங்கவித் தான்றுயில் வித்திவளை வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யான்மலர்க் காவகத்து முயக்குவித் தான்றுகில் வாங்குவித் தான்முன நின்றிவளை மயக்குவித் தான்நந்தி மானோதய னென்று வட்டிப்பனே 63 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வட்டன்றே நீரிதனை மிகவுங் காண்மின் மற்றைக்கை கொட்டினேன் மாவின் வித்தொன் றிட்டன்றே பழம் பழுப்பித் துண்ணக் காண்மின் இவையல்ல சம்பிரத மிகலில் தெள்ளாற் றட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி அவனிநா ராயணன்பா ராளுங் கோமான் குட்டன்றே மழைநீரைக் குடங்கைக் கொண்டு குரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின்றேனே. 64 கட்டளைக் கலித்துறை குடக்குடை வேந்தன்தென் னாடுடை மன்னன் குணக்கினொடு வடக்குடை யான்நந்தி மானோ தயனிந்த வையமெல்லாம் படக்குடை யேந்திய பல்லவன் றன்னொடும் பாரறியத் துடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே. 65 கலி விருத்தம் பிறைதவழ் செஞ்சடைப் பிறங்க னாரணன் அறைகழல் முடித்தவன் அவனி நாரணன் நறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபி னிறைகெழு சங்குயி ரிவளுக் கீந்ததே. 66 ³ வேறு ஈகின்றது புனமுந்தினை யாமும்பதி புகுநாள் ஆகின்றது பருவம்மினி யாகும்வகை யறியேன் வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வடவேங்கட மலைவாய்த் தேய்கின்றதொ ருருவத்தொடு திரிவாரது திறமே. 67 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம் திறையிடுமி னன்றி மதில்விடுமி னுங்கள் செருவொழிய வெங்கண் முரச மறைவிடுமி னிந்த வவனிதனி லெங்கு மவனுடைய தொண்டை யரசே நிறைவிடுமின் நந்தி கழல்புகுமி னுங்க ணெடுமுடிகள் வந்து நிகழத் துறைவிடுமி னன்றி யுறைபதிய கன்று தொழுமினல துய்ந்த லரிதே. 68 கலி விருத்தம் அரிபயி னெடு நாட்டத் தஞ்சன முழுதூட்டிப் புரிகுழல் மடமானைப் போதர விட்டாரார்? நரபதி யெனுநந்தி நன்மயி லாபுரியில் உருவுடை யிவடாயர்க் குலகொடு பகையுண்டோ! 69 தரவு கொச்சகக் கலிப்பா பகையின்றிப் பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலி னகையும்வாண் மையும்பாடி நன்றாடு மதங்கிக்குத் தகையுநுண் ணிடையதிரத் தனபார மவற்றோடு மிகையொடுங்கா முன்னிக்கூத் தினைவிலக்க வேண்டாவோ.70 கலி நிலைத் துறை வேண்டா ரெண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு பூண்டா ணங்கா யன்றிவ ளென்றாற் பொல்லாதோ மூண்டார் தெள்ளாற்றுள்ளே மூழ்க முனிவாறி மீண்டான்நந்திக் கென்மகள்தோற்கும் வெண்சங்கே. 71 வெண்டுறை வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான் வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லைவேந்தன் தண்செங்கோல் நந்தி தனிக்குடைக்கீழ் வாழாரிற் கண்சிம் புளியாநோ யாமோ கடவோமே. 72 கலி விருத்தம் கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை மற்கூறு தோறு மலிமல்லை கங்குல் அடற்கூடு சாவே யமையா தவர்வை திடற்கூறு வேனுக் கேதாவி யுண்டோ. 73 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உண்டிரையிற் செங்கழுநீ ரிலஞ்சி மாடே ஒண்பொழிலிற் சண்பகத்தார் தடவி யோடித் தண்டலையிற் பூங்கமுகம் பாளை தாவித் தமிழ்த்தென்றல் புகுந்துலவுந் தண்சோணாடா விண்டொடுதிண் கிரியளவும் வீரஞ் செல்லும் விடேல்விடுகு நீகடவும் வீதி தோறுந் திண்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச் செங்கோல னல்லையோ நீசெப் பட்டே 74 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பட்ட வேந்தர் தம் பூணொடும் பாவைமார் நாணெடுந் தெள்ளாற்றில் வட்ட வெஞ்சிலை நாணிடக் கழித்தவன் மல்லையின் மயிலன்னாள் விட்ட கூந்தலும் விழியுநன் முறுவலு நுதன்மிசை யிடுகோல மிட்ட பொட்டினொ டிளமுலைப் போகமு மெழுதவு மாகாதே. 75 ³ வேறு 1ஆகாது போக மயில்விளைத் தகன்ற லவன்கை போகாத சங்கு மருளாள ரென்ற போதுவண்டோ ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. 76 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவ னசைந்தே னென்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதஞ் சேரார் ஆனைக் கொம்பன்றோ நங்குடிலில் குறுங்காலும் நெடுவளையுங் குனிந்து பாரே. 77 ³ வேறு பாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்திற் கோவையேய் நந்தி காக்குங் குளிர்பொழிற் கச்சி யன்னாள் பூவையும் பந்துந்தந்து புல்லினா ளென்னை யென்னே மாலியல் கானம் போந்த தறிகிலேன் மதியி லேனே.1 78 அறுசீரடி ஆசிரிய விருத்தம் 2நீண்டதாங்க கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி மூண்டதாம் மதியி னோடே முயங்குதார் வழங்கு தெள்ளாற்று ஈண்டினார் பரியுந் தேரும் இருகைவென் றொருகை வேழந் தூண்டினான் நந்தி யிந்தத் தொண்டைநா டுடைய கோவே. 79 வெண்டுறை கோலக்கொடி யன்னவர் நீள்செறுவிற் குறுதேன்வழி கொண்ட லருங்குவளை காலைப்பொழு தின்னெழு கன்னியர்தங் கண்ணின் படிகாட்டிடு கச்சியின்வாய் மாலத்தெள் ளாறெறிந்த மானோ தயன்குடைக்கீழ் ஞாலத்தோ டொத்ததே நான்பெற்ற நறுங்கொம்பே. 80 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்ம் கொம்புயர் வாமை நாகமெதிர் வந்த நந்தி குலவீர ராக மழியத் தம்பிய ரெண்ண மெல்லாம் பழுதாக வென்ற தலைமான வீரதுவசன் செம்பியர் தென்னர் சேர ரெதிர்வந்து மாயச் செருவென்ற பாரி முடிமேல் வம்புயர் தொண்டை காணு மடமாதர் தங்கை வளைகொண்ட தென்ன வலமே. 81 குறள்வெண் செந்துறை வலம்வரு திகிரியு மிடம்வரு பணிலமு மழைதவழ் கொடிபோலக் குலமயில் பாவையு மெறிகடல் வடிவமு மிவையிவை கொண்டாயே 82 கலி விருத்தம் கொண்ட லுறும்பொழில் வண்டின மாமணி வண்ட லிடுங்கடன் மல்லைகா வலனே பண்டை மராமர மெய்தபல் லவனே தொண்டை யொற்றுவ ளிவடோள் வளையே 83 நேரிசை வெண்பா தோளான் மெலியாமே யாழ்கடலாற் சோராமே வாளா பெறலாமே வாயற்றீர் - கேளாதார் குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை யத்தனையும் அஞ்சரங்க ளார்த்தா னருள். 84 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அருளான தெங்கையர்க்கே யன்னாயென் றியம்பிடுமெங் கன்னி செஞ்சொற் றெருளாமே னல்கு நந்தி தெள்ளாற்றிற் பொருதபோர் தன்னிலந்நா ளிருளான மதகரியும் பாய்மாவும் மிரதமுங்கொண் டெதிர்ந்தார் தம்முன் மருளாமே நன்கடம்பூர் வானேற வளைந்துவென்ற மன்ன ரேறே. 85 ³ வேறு ஏறு பாயவிளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக் கொங்கை வீறு பாயக் கொடுக்கின்ற விடலை யார்கோ வென்கின்றீர் மாறு பாயப் படைமன்னர் மாவுந் தேருந் தெள்hற்றில் ஆறு பாயச் சிவந்ததோ ளிணைகா விரிநா டாள்வானே. 86 கலி விருத்தம் ஆயர் வாய்க்குழல் காற்றுறு கின்றிலள் ஏயு மாங்குயிற் கென்னைகொ லாவதே தேய மார்புகழ்த் தேசபண் டாரிதன் பாயன் மேல்வரல் பார்த்துநின் றாளுக்கே. 87 கட்டளைக் கலித்துறை துளவுகண் டாய்பெறு கின்றிலஞ் சென்றினிச் சொல்லவல்ல வளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல் வேழமுண்ட விளவுகண் டாலன்ன மேனிகண் டாய்விறன் மாரன்செய்த களவுகண் டாய்நந்தி மல்லையங் கானல் கழிக்கம்புளே. 88 இவையல்லாமல், சில பிரதிகளில் அதிகமாகச் செய்யுட்கள் காணப்படுகின்றன. அவற்றில் நமது ஆராய்ச்சிக்கு வேண்டிய சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன். நேரிசை வெண்பா இந்தப்புவியி லிரவலகுண் டென்பதெல்லாம் அந்தக் குமுதமே யல்லவோ - நந்தி தடங்கைபூ பாலன்மேற் தண்கோவை பாடி அடங்கப்பூ பாலரா னார். இதனால் நந்திவர்மன்மீது கோவைப் பிரபந்தமும் பாடப் பட்டிருந்ததாகக் கருதலாம். கட்டளைக் கலித்துறை திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை வெற்பில் மருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகின் மகுடரத்னப் பரித்தேரும் பாகுமங் கென்பட்டவோ வென்று பங்கயக்கை நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்பளே வஞ்சி நெஞ்சுலர்ந்தே. 2 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சிவனை முழுது மறவாத சிந்தையான் செயமு னுறவு தவிராத நந்தியூர் குவளை மலரின் மதுவாரும் வண்டுகாள்! குமிழி சுழியில் விளையாடு தும்பியே! அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே யவரு மவதி சொனநாளும் வந்ததே கவலைபெரிது பழிகாரர் வந்திலார் கணவருறவு கதையாய் முடிந்ததே. 3 கட்டளைக் கலித்துறை வாரூரு மென்முலை வார்த்தைகண் டூரு மதிமுகத்தில் வேரூரு மேனி வியன்றளி ரூரும் விசயனுக்குத் தேரூரு மானந்தி தேசபண் டாரிளெள் தாறைவெற்பில் காரூர் குழலிக்குக் காதள வூருங் கடைக்கண்களே. 4 கோக்கருநந்தடக்கன்1 கோக்கருநந்தடக்கன் என்னும் அரசன், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும், வரகுணபாண்டியன் மகனான ஸ்ரீமாறன் காலத்திலும் இருந்தவன். இவன், சேர நாட்டின் தென்பகுதியை (திருவாங்கூர் நாட்டை) அரசாண்டான். பாண்டியன் ஸ்ரீமாறன், திருவாங் கூரை வென்றபடியினாலே, கோக்கருநந்தடக்கன் பாண்டியயனுக்குக் கீழடங்கி யிருந்தான். ஸ்ரீமாறனுடைய சிறப்புப் பெயராகிய ஸ்ரீவல்லபன் என்னும் பெயரைக் கோக்கருநந்தடக்கனும் சூட்டிக்கொண்டான். பேரரசன் பெயரை, அவனுக்குக் கீழடங்கிய சிறறரசர் சூட்டிக் கொள்வது அக்காலத்து மரபு. கோக்கருநந்தடக்கன் கி.பி. 857-ல் அரசனானான். பாண்டியன் ஸ்ரீமாறனுடைய மகனான விக்கிரமாதித்திய வரகுண பாண்டியன் (இரண்டாம் வரகுணன்) காலத்திலும், கோக்கருநந்தடக்கன் இருந்தான். கீழ்க்கண்ட இரண்டு சாசனங்கள், இவனது இரண்டாம் ஆண்டில், கி. பி. 859-இல் எழுதப்பட்டவை. திருவாங்கூரைச் சேர்ந்த திருவிடைக் கோடு என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இச்சாசனங் கள் உள்ளன. இவை வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன. ஐ சாசன வாசகம்1 1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கருந்நநந்தடக்க (ற்)கு 2. ச் செல்லா நின்ற யாண்டு இரண்டு இத 3. னெதிர் பன்னிரண்டு இவ்வாண்டு திருடைக்கோ 4. ட்டு மாதேவர்க்கு திருநொந்தாவிளக்கு 5. நியதிப்படி எரிவதாக செழிய 6. ந்த... உழக்கு நெய் அட்டுவதாக ஊ 7. ரும் இண்...க(ளு)ம் உள்ளிருக்க சடை... 8. இவன் பணிக்கைய்யில் விட்டபசு 9. சாகாமூவாப் பேருருவாக அட்டின பசு 10. இருப்பத்தஞ்சு முக்குளத்து யா ... ... ... ... 11. ன் புல்ல முருகனும் ஐஐ சாசன வாசகம்1 1. ஸ்வஸ்திஸ்ரீ கோக்கருநந்தடக்கர்க்கு செ 2. ல்லாநின்ற யாண்டு இரண்டு இ 3. தனெதிர் (இ) ருபது இவ்வாண்டு பிர 4. ட்டாசி திங்கள் திருவிடைக் கோட் 5. டு மாதேவற்கு திருநந்தாவி 6. ளக்கு நியதிப்படி யுழக்கு 7. நெயெரி ... ... ... ... ஐஐஐ கோக்கருநந்தடக்கன் செப்பேட்டுச் சாசனம் கருநத்தடக்கன், தனது ஒன்பதாவது ஆண்டில் விஷ்ணு படாரருக்கு (திருமாலுக்கு) ஒரு கோயில் அமைத்து அதற்கு வேண்டிய நில புலங்களைத் தானம் செய்தான். அந்தத் தானம் எழுதப்பட்ட செப்பேடு இது. இது, கலியுகம் பிறந்த 1449087-ஆம் நாள் எழுதப்பட்டது. அதாவது கலியுக ஆண்டு 3967-இல் (கி.பி.866 ஜூலை மாதத்தில்) எழுதப்பட்டது. திருவனந்தபுரத்து ஹுசூர் ஆபீஸில் இந்தச் செப்பேடுகள், இருந்தபடியால் இதற்கு ஹுசூர ஆபிஸ் செப்பேடுகள் என்று பெயர் கூறப்பட்டது. இந்தச் சாசனத்தின் சிறப்பு என்ன வென்றால், அக்காலத்தில் சேரநாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்தில் எழுதப்படாமல், அக்காலத்துப் பல்லவ அரசர் தொண்ட மண்டலத்தில் எழுதி வந்த பல்லவத் தமிழ் எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதுதான். சாசன வாசகம்1 (ழதல் ஏடு, ழன்பக்கம்) 1. ஸ்வஸ்திஸ்ரீ கலியுகக் கோட்டு நாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதியிரத்து எண்ப 2. த்து ஏழு சென்ற நாள் ஸ்வஸ்திஸ்ரீ கோக்கருநந்தடக் கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இ 3. ந்நாளால் முடாலநாட்டுப் பசுங்குளத்துப்படு நிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி 4. விளை என்னு நிலம் இவைகளுக்கு அடிக்கடி நிலங் குடுத்து மாறிக்கொண்டு இந்நிலம் பிடி சூ 5.ழ்ந்து ஸ்ரீகோயில் எடுத்து விஷ்ணுபட்டாரகரை பிரதிஷ்டை செய்து பார்த்திவ சேகரபுரம் எ 6. ன்று பேர் இட்டு காந்தளூர் மத்யார்த்தியால் தொண்ணூற்று ஐவர் சட்டர்க்கு சாலையுஞ் செய்தா 7. ன் ஸ்ரீ கோக்கருநந்தட்டன் அகநாழிகைச் சென்னடைக்கு அட்டின பூமி பொழி சூழ்நாட்டு குராத் (ழதல் ஏடு, பின்பக்கம்) 8. தூரில் இடைக்குராத்தூர் வயலுங்கரையும் உண்ணிலம் ஒழிவின்றி மேற்பாதி மீதாட்சி உள்ளட 9. ங்க அட்டிக்குடுத்தான் செங்கழு நாட்டு ஐம்மாக் கொல்லை மேற்கொல்லை வயலுள் வெஞ்சைக் குளத்தின் 10. கீழ் வெஞ்சைப்பொறை தடி ஒன்றும் சாயறைக்கலம் பாடு தடி மூன்றும் நெடுமட்குளத்தின் கீழ் 11. நரியறை தடி ஒன்றும் கொற்றனறை தடி ஒன்றும் குளவறை தடி ஒன்றும் நீரறை தடி ஒன் 12. று மாயிலறை தடி ஒன்றும் தலைவிலைச் செய் தடி இரண்டும் எருமை யறையுற்துடவர் இரண்டே 13. ற்றித் தடி மூன்றும் பகைதொங்கன் தடி ஒன்றும் ஏற்றித்தடி பதினைஞ்சு விதைமடைப்பள்ளிநா 14. ழியால் ஆயிரத்து இருநூற்று நாழியுங் காராண்மை மீதாட்சி உள்ளடங்க (உறா?) அட்டிக்குடுத்தன வள்ளு........ (இரண்டாம் ஏடு, ழன்பக்கம்) 1. பணி குத்துக்காற்படாது செய்விப்பது அகழாழிகைப் பணி செய்வார் படாரரை ஆட்டப் பொழுதிற் பந்திருகுடநீராக முப்ப 2. த்தறு குடநீர் குடுப்பது பூஇடுவான் குறைந்த பூ இண்டையு மாலையுங் கட்டிக் குறைவறக் குடுப்பது நொந்தா விளக்கினுக்காக மெ 3. துகின் மேற்பாற் கீழூரில் நெடுமண்ணென்னுந் தோட்டம் தென்னாட்டுக் கோனாயின சடையந் தனிச்செய்கெ சந்ததி சந்த 4. தி யேய்கீழ்பாதி அனுபவிப்பதாகக் காராண்மை யாகவு மேற்பாதி நந்தா விளக்கினுக்குமாக அட்டிக் குடுத்தான் 5. விழாப்புறமாக ஏழுநா டிருவிழாச்செய்து பங்குனி வியாகம் ஆறாடுவதாகவும் சட்டப்பெருமக்களும் பணிமக்க 6. ளும் ஏழு நாளும் படி இரட்டி ஆணியம் பெறுவதாகவு மற்றும் விழா வினுக்கு வேண்டுவதுக்குமாக அட்டின பூ 7. மி மெதுகின் மேற்பாதி கீழுர் பெருங்குளத்தின் கீழ் ஆதனறை இளவரதனறை தலைத்துடவை மஞ்சாடி யரைப 8. னையறை செத்தறைதடி இரண்டேற்றித்தடி ஏழு விதை எண்ணூற்று நாற்பதினாழி இவை தென்னாட்டுக் கோனாயினச 9. டையந்தனிச்செய்கை சந்ததி சந்ததியேய் போகத்துக்கும் பொலிக்கும் ஆயுவிக்கதிரேற்றி உடன்வாரம் நாற்கல (இரண்டாம் ஏடு, பின்புறம்) 10. னேய் எண்குறுணி நெல்லுக்கொண்டு கீழ்பாதி காராண்மை யாக உழுது ஆலிலை வாரம் ஊட்டு வதாக மேற்பாதி திருவிழாப்பு 11. றமாக அட்டிக்குடுத்தன பணிமக்களுக்கு விருத்திக் காக அட்டின பூமி தெங்கநாட்டு விளப்பில் தலைவிளப் 12. பில் பதினாழிக் காலால் எண்கல வித்துப்பாடும் இதனோடு செல்லுங்கரையுங் காராண்மை மீதாட்சி உ 13. ள்ளடங்க அட்டிக்குடுத்தன இந்நாட்டேய் இளவேணாட்டு நல்லூர் பதினாழிக் காலால் எண்கலவித்து 14. ப் பாடும் இதனோடு செல்லுங் கரையுங் காராண்மை மீதாட்சி உள்ளடங்க அட்டிக்குடுத்த 15. ன இந்நாட்டேய் இடை நீர்க்கால் பனையூரும் பியலாறும் பதினாழிக்காலால் எண்கல வித்துப்பா 16. டும் இதனnhடு செல்லுங் கரையுங் காராண்மை மீதாட்சி உள்ளடங்க அட்டிக் குடுத்தன செங்கழு நாட்டு 17. ப் பாறையில் சயவஞ் சரனாயின சாத்தஞ் சடையன் கீழ்ப்பாதி சாலாபோக மருசாதியினால் உழுதூ (ழன்றாம் ஏடு, முன்பக்கம்) 1. ல் காஞ்சிரங்குளத்தின் கீழ் கீழப்பொறை தடி ஒன்று விiதைகலம் செங்கழுனாட்டுக் குன்றத்தூருடைய குமார சுவாமி 2. டபட்டன் முடாலநாட்டுக் கீழ்குளத்து வயலுள்தான் பிரம தேயம் பெற்றுடைய நிலத்தில் அட்டினபூமி கடலங்குளத்தா 3. லும் இலைஞ்சக் குளத்தாலும் நீர் பெறுவன எருவிச் செய் தடி ஏழு விதைபதினாழிக் காலால் இருகலம் ஒமாயனாட் 4. டுச் சிறுமண்ணூர் இளையான் கண்டன் தாங்கள் கீழ்ப்பாதி உழுதூட்டுவதாக அட்டினபூமி சிறும 5. ண்ணூர் பொன்னறைக் கலம் பாட்டு டவயலுள் பொன்னறை தடி என்று விதைகலனேய் தூணி ஏற்றிப் ப 6. ணிமக்களுக்கு விருத்திக்காக அட்டி முதலாயின பூமி முப்பத் தெண்கலனேயிரு குறுணி. இதனுள் சாந்தி செய்வானு 7. க்கு விருத்திக்காக அடுத்த பூமி மீனச்சிச் சிறுகுண்டுர் ரா குளத்தின்கீழ் குருந்தறை பரனியறைபலா வனறைக் கலம்பா (ழன்றாம் எடு, பின்பக்கம்) 8.டபுளியறைக்கலம் பாடு........................................யறைக்கலம் பாடு ஊற்றுத்தடி ஆயினியறை ஏற்றிதடிபத்து விதை ...........(பப்பத்) ............. 9. (ட்டு)க்க சிஈ.................பன்னிரு குறுணியும் சிறுகோல் கீழ்ப்பொறை விதைகலமும் ஏற்றி ஐங்கலனேய் பந்நிரு கு 10.றுணிப்பாடும் குடுத்தன அகநாழிப்பணி நாலுக்குமாக ஈயானஞ்சுவானுக்குங் குமரங்கண்டனுக்கும் உருத்திர.... 11. ..............எண்கல விதைப்பாடும் இதனோடு செல்லுங் கரையும் அட்டிக்குடுத்தது பஞ்சகவ்ய 12.ந் தெளிப்பானுக்கு தேதிகீழ் குளத்து எருவிச்செய் தடிஏழு விதை இருகலமும் அடுத்தன பூஇடுவான் ஒரு 13.வனுக்கு விருத்தி அருமுனை ஆதனூர் வயலுள் படைப் பறைமருணறை மாத்தூர் வயலுள் பராயறையிற் கிழக்கி 14.ன்கூ றும் ஏற்றி விதை இருகலமும் அடுத்தனதட்டழி மத்தளி கரடிகை தாளம் காளகம் ஏற்றி எட்டுப் பணி (நாலாம் ஏடு, முன்பக்கம்) 1.மாயநாட்டாரும் செங்கழு நாட்டாரு முடாலநாட்டாரும் படைப்பா நாட்டாரும் வள்ளுவநாட்டாரும் அறமரு சாதி காக்கும் பரிசினா 2.ற் காப்பது இச்சாலைக்குப் பெய்த கலத்தில் பவிழிய சரணத்தார் உடைய கலம் நாற்பத் 3.தைந்து தயித்திரியச் சரணத்தார் உடைய கல முப்பத்தாறு தலவகார சரணத்தார் உடைய 4.கலம் பதினாலு இனிவருங்கல மூன்று சரணத்தார்க்கும் ஒப்பது பிரவேசகஞ் செய்யு 5.ம் பரிசு வையாகரண மீமாயப் புரோஹிதப் புன்பாய் புவிஸ்ரம் இலன் த்ரைராஜ்ய வ்யவஹா 6.ரத்துக்கு வேண்டும் ஒத்துடையான் இது ஸத்யம் என்று ஐவர்சட்டரைக் கொண்டு பஞ்சக்க 7.ஞ் செய்தான் புகவு பெறுவான் வாரம் ஓதும் பரிசு சூத்திரத் திலுஞ் சூத்திராரணத்தி (நாலாம் ஏடு, பின்பக்கம்) 8.லுஞ் துருச்சொல்லி ஒன்பது புகவினில் இரண்டு கிரம வாரம் அடுத்தோதுவது சாகையிலுங் 9. கற்பத்திலுங் கணத்திலுந் துருச்சொல்லி ஒன்பது புகவினில் இரண்டு வாரம் அடுத்தோதுவது நா 10.லு பாதத்திலுந் துருச்சொல்லி ஒன்பது புகவினில் அகத்தாஹத்தில் இரண்டு வாரம் அடுத்தோது 11.வது முக்கால்வட்டத்து வைத்து ஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாயில் பெருமக்க 12.ளுக்கு அஞ்சு காணம் பொன்றண்டம் இட்டுச்சாலை உண்பது. குட்டுவானாயில் ஒரு காசு தண்டம் இட்டு சாலை 13.உண்பது குட்டுண்டானும் அஞ்சு காணம் பொன்றண்டம் இட்டு சாலை உண்பது படைக்கலத்தால் புண்செ 14.ய்தான் அறத்துக்குப் புறத்தனாவது சட்டர் படைக் கலம் பிடித்துக் குட்டத்துக்கு செல்லப் பெறார்சட்ட (ஐந்தாம் ஏடு, முன்பக்கம்) 1.............. யிலகப்பட்ட எச்சூது முக்கால் வட்டத்திலிருந்து பொரப் பெறார் பொருவார் அற்றைக்கலம் இழப்பது சட்டர்வெள் 2.ளாட்டிகளை மடத்தில் வைத்துக்கொள்ளப் பெறார்சாலா போகமுந் தேவதானமும் சத்திமுகம் இன்றி விலக்கப்பெறார் வில 3.க்குவார் மெய்வேற்றுவகை ஐங்கழைந்து பொன்தண்டம் இட்டன்றிச் சாலையுண்ணப் பெறார். சாலாபோகத் திலுந்தேவ 4.தானத்திலுங் குடியை வலியக் கொண்ட முதல் ஒன்றுக்குப் பத்தாகக் குடுப்பது. சவைக் கடமை கடவார்பக்க 5.ல் மூன்று சரணத்திலு மூவர் சென்று புக்கது பாடாவது பாடுப்போகில் ஐம்பத்து நாலு காணம் பொன்த 6.ண்ட மும்பட்டு கடமையுங் குடுப்பது தேவர் சொன்னடையும் பதினாழிச் சாலையும் எவ்வழக்கு சொல்லியும் வி 7. லக்கப் பெறார். விலக்குவார் நியதி கழஞ்சு பொன் தண்டம் இட்டன்றிச் சாலை உண்ணப் பெறார் பணிமக்கள் சட்டரை 8. ப் பிழைக்கப் பேசுவார் ஒருகாசு தண்டப்படுவது. இப்பரிசு தெங்கநாட்டு வெண்ணீர் வெள்ளாளன் தெங்க நாடு கிழவ (ஐந்தாம் ஏடு, பின்பக்கம்) 9. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. 10. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. 11. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. 12. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. 1 13. னாயின சாத்த முருகன் ஆணத்தியாக ஓமாயனாட்டுப் பாகோட்டுப் பாப்பிகை கோட்டு திரையன் ஒமாயனாடு கிழவ 14. னாயின சிங்கக்குன்றப் போழன் எழுத்து ஸ்வஸ்திஸ்ரீ *** 1.இந்தச் சாசனத்தின் இடையிலே 9 முதல் 12-ஆவது வரி வரையில் வடமொழிச் செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. அதன் கருத்து இது:- ஸ்வஸ்தி ஸ்ரீ தன்னுடைய புகழினாலும் அருளினாலும் ஓங்கி, நந்தனையும் யாதவ குலத்தையும் உயர்த்தி, உலகத்தைத் துன்பம் அடையாமல் காத்து, வல்லமையுள்ள பகைவரைத்தன் வளரும் ஒளி யினால் அழித்து, தன் குருவினிடம் வணக்க முள்ளவனாய் பிராமணர் களால் விசுவாசிக்கப்படுகிற ஸ்ரீவல்லபன் நமக்கு நன்மையை அளிப்பானாக. (இக் கவி, கண்ணபிரானையும் ஸ்ரீவல்லபன் என்னும் பெயரையுடைய கருநந்தடக்கனையும் சிலேடையாகக் கூறுகிறது.) ஸ்வஸ்திஸ்ரீ யசோதைக்குப் பிறந்து அவளால் வளர்க்கப்பட்டு, நந்தனையும் யாதவகுலத்தையும் மேன்மைப்படுத்தி, துன்பம் அணுகா தபடி பசுக்களைக் காத்து, தன்னிடம் அன்புமிக்க புள்ளரசனின் (கருடனின்) அன்பை வளரச்செய்து, பலிச்சக்கரவர்த்தியை அழித்துப் புகழெய்திய அந்த ஸ்ரீவல்லவன் (திருமகள் கணவன்) நமக்கு மேன்மையை அளிப்பானாக. (இதில் ஸ்ரீவல்லவன் என்பது கண்ண பிரானையும் கருநந்தடக்கனையும் சிலேடையாகக் குறிக்கிறது) 2. தேவார ஆராய்ச்சி* சொல்லோவியம் ஓவியப் புலவன் பலவித நிறங்களைக்கொண்டு பலவிதக் காட்சிகளையும் கருத்துக்களையும் படம் எழுதிக் காட்டுகிறான். சிற்பக் கலைஞன், சுதை மரம் உலோகம் முதலிய பொருள்களைக் கொண்டு உருவக் காட்சிகளைச் சிற்பக் கலையில் அமைத்துக் காட்டுகிறான். நாவன்மை படைத்த காவியப் புலவன், தான் கண்ட காட்சிகளையும் கருதிய எண்ணங்களையும் சொற்களில் அமைத்துச் செய்யுளாகவும் வசனமாகவும் தருகிறான். ஓவியப் புலவனும் சிற்பக் கலைஞனும் அமைத்துக் காட்டிய ஓவியங்களையும் சிற்ப உருவங்களையும் கண்களால் கண்டு மகிழ்கிறோம். ஆனால், காவியப் புலவன் அமைத்துக் கொடுத்த சொல்லோவியங்களைப் படித்து அல்லது பிறர் படிக்கக் கேட்டு, மனக் கண்ணில் கண்டு மகிழ்கிறோம். சிறந்த செந்தமிழ்ப் புலவராகிய சுந்தரமூர்த்தி நாயனார், தமது தேவாரப் பதிகங்களில் சொல்லோவியங்களை அமைத்துக் காட்டுகிறார். அவற்றில் சில இயற்கைக் காட்சிகளாக மிளிர் கின்றன; சில இயற்கையும் செயற்கையும் அமைந்த காட்சிகளாக விளங்குகின்றன. அச் சொல் ஓவியக் காட்சிகளிற் சிலவற்றைக் காண்போம். கானாட்டு முள்ளூர் இயற்கை வளம் நிறைந்த அழகான ஊர். கொள்ளிடம் என்னும் ஆறு பாய்வதனால்தான் அது நீர்வளமும் நிலவளமும் செழித்திருக்கிறது.சில இடங்களில் தாழைப்புதர் வளர்ந்து தாழம்பூவின் மணம் கமகம வென்று கமழ்கிறது. அருகில் உள்ள கழனிகளில் கருங்குவளை மலர்ந்து கண்ணுக்கினிய காட்சியளிக்கிறது. தாமரைக் குளத்திலே செந்தாமரையும் வெண்டா மரையும் பசுமையான இலைகளுக்கிடையே வெண்மையாகவும் செம்மையாகவும் மலர்ந் திருக்கின்றன. அன்னப்பறவைகள் தாமரை மலர்களின் மேலே ஏறி விளையாடுகின்றன. வயல்களில் நெற்பயிர் கரும்புபோலச் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. இன்னொருபுறம் பாக்கு மரங்கள் அடர்ந்து கமுகந் தோப்புகளும் தென்னந் தோப்பு களும் காணப் படுகின்றன. அத் தோப்புகளில் கமுகம்பாளையும் தென்னம்பாளையும் வெடித்து மலர்ந்த பூக்களில் காளைவண்டுகள் தேன் குடித்து ரீங்காரம் செய்து பாடுகின்றன. மயிர்கள் தோகையை விரித்து ஆடுகின்றன. தெளிந்து பாயும் குளிர்ந்த ஆற்று நீரிலே இளமங்கையர் சிலர் நீரைக்குடைந்து ஆடிக் களிக்கிறார்கள். அதோ பாருங்கள்! பச்சைப் பசேலென்றிருக்கும் நெல் வயல்கள். அதற்கப்பால், செழிப்பாக வளர்ந்துள்ள கரும்புச் சோலை கள். கம்புச்சோலைகளுக்கப்பால் வானுற உயர்ந்து வளர்ந்து பச்சைப் பசேலென்றிருக்கும் மூங்கிற் காடு. இந்தக் கண்ணுக்கினிய இயற்கைக் காட்சியைக் கண்டு களியுங்கள். ஆற்றங்கரையை நோக்குங்கள். நீர்ப்பறவைகளான நாரை களும் கொக்குகளும் நீரில் ஓடி ஆடுகின்றன. கெண்டை மீன்களும் கயல்மீன்களும் துள்ளி விளையாடுகின்றன. ஆற்றங்கரை ஓரத்தில் பூத்துள்ள குவளை மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ரீங்கார ஓசை செய்து பண்பாடுகின்றன. “முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரிபொழில்சூழ் கள்வாய கருங்குவளை கண்வளரும் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” “அரும்புயர்ந்த அரவிந்தத் தனிமலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன்றுறையின் அருகே கரும்புயர்ந்த பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” “பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந்தெங்கின் படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக் காளைவண்டு பாடமயிலாலும் வளர் சோலைக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” “குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியும் துறைவாய்க் கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரை மேல் கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” “தழைதழுவு தண்ணிறத்த செந்நெலதன் அயலே தடந்தாள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” “தூவிவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் துறைக் கெண்டை மிளிர்ந்துகல் துள்ளிவிளையாடக் காலிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” சீபர்ப்பதம் என்பது ஸ்ரீபர்வதம் என்னும் மலை. அங்குள்ள குறிஞ்சி நிலத்துத் தினைப்புனக் காட்சியைச் சொல்லோவியமாகத் தீட்டுகிறார் சுந்தரர். தினைப்புனத்தில், தினைப் பயிர் விளைந்து கதிர் முற்றியிருக்கின்றன. கிளிகள் கூட்டமாக வந்து தினைக் கதிரைக் கொத்தித் தின்கின்றன. குறச் சிறுமி பரண்மேல் இருந்து கிளிகளை ஒட்டிக் காவல் காக்கிறாள். தட்டையை ஒலித்துக் கிளிகளைத் துரத்துகிறாள். “மன்னிப் புனங்காவல் மடமொழியாள் புனங்காக்கக் கன்னிக் கிளிவந்து கவைக்கோலிக் கதிர்கொய்ய என்னைக்கிளிமதியா தென்று எடுத்துக் கவண்ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே” “மையார் தடங்கண்ணாள் மடமொழியாள் புனங்காக்கச் செவ்வே திரிந்தாயோ எனப்போகாவிட விளிந்து கைபாவிய கவணால் மணிஎறிய விரந்தோடிச் செவ்வாயினகிளி பாடிடுஞ் சீபர்ப்பத மலையே” தினைப்புனங் காக்கும் குறப்பெண் ஒருத்தி கிளிகளிடத்தில் அன்புள்ளவள். “பாவம்! கிளிகளும் கொஞ்சம் தினையைத் தின்னட்டுமே” என்று சிறிது கருணை காட்டுகிறாள். கிளிகளோ, இவள் நம்மைத் துரத்தவில்லை. இவள் வயலிலேயே தினை தின்போம் என்று கருதிக் கூட்டங் கூட்டமாக வந்து தினையைக் கொத்தித் தின்றன. அப்போது அவள் அவற்றைத் துரத்துகிறாள். இதனைச் சுந்தரர் சொல்ஓவியம் தீட்டுகிறார். “அப்போது வந்துண்டீர்களுக் கழையாது முன்னிருந்தேன் எப்போதும் வந்துண்டால் எமைஎமர்கள் சுழியாரோ இப்போதுமக் கிதுவே தொழிலென் றோடியக் கிளியைச் செப்பேந் திளமுளையாள் எறி சீபர்ப்பத மலையே” மகோதைப் பட்டினம் என்னும் கொடுங்கோளுர் மலையாள நாட்டுக் கடற்கரையில் இருக்கிறது. மகோதையை அடுத்த அஞ்சைக் களத்தப்பன் கோயிலுக்குச் சென்ற சுந்தரர் கடற்கரைக்குச் சென்று கடற் காட்சியையும் அருகில் உள்ள தோட்டங்களின் காட்சியையும் கண்டார். கண்டு, அக்காட்சியைச் சொல் ஓவியமாகத் தீட்டுகிறார். “மலைக்குநிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு அலைக்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே” “மழைக்கு நிகர்ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு அழைக்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே” “உரவத்தொடு சங்கமோடிப்பி முத்தங்கொணர்ந் தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அரவக் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே” “நோக்கு நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப்பெய்து கொண்டேற நுந்தி ஆர்க்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே” “வடிக்கின்ற போல்சில வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண் டடிக்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே” அடர்ந்த பனந்தோப்புகளும் தென்னந் தோப்புகளும் தூரப் பார்வைக்கு வெகு அழகான காட்சியாகும். இயற்கைக் காட்சியில் மனத்தைச் செலுத்துவோருக்கு இக்காட்சிகள் கண்ணுக்கினிய தோற்றம் அளிப்பன. சுந்தரர் இக்காட்சிகளைக் கானாட்டு முள்ளூரிலும், கடற் கரையையடுத்த திருமறைக் காட்டிலும் கண்டு மகிழ்ந்தார். மகிழ்ந்து சொல்லோவியம் வரைந்து காட்டுகிறார். “கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே” “தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்விழ் மணற்படப்பைச் சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே” சுந்தரர் நம்மை இன்னொரு தோப்புக்கு அழைத்துக் கொண்டு போகிறார். அத்தோப்பு வெஞ்சமாக்கூடல் என்னும் ஊரில் இருக்கிறது. அங்கு ஒருபுறம் கமுகம் தோப்பு. பாக்கு மரங்கள் வரிசை வரிசையாக உயர்ந்து வளர்ந்து குலைகளைத் தாங்கியுள்ளன. அதற்கருகில் அடர்ந்து உயர்ந்த தென்னந்தோப்பு. அதற்குப் பக்கத்தில் பெரிய பலாத்தோப்பு. இயற்கைக் காட்சியில் திளைக்கும் மனமுடையவர் இவற்றைக் கண்டு மகிழுங்கள். “நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும் குறுந்தாள் பலவும் விரவிக் குளிரும் விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.” என்று படம் வரைந்து காட்டுகிறார். இதோ குரங்குகளின் காட்சியைக் காணுங்கள். வாழைத் தோப்பில் வாழைப்பழம் குரங்குக்குக் கிடைத்தது. ஒருவரும் இல்லாத அமைதியான இடத்தில் தின்ன விரும்பி, தாழைப் புதரின்கீழ் சென்று அமர்ந்து தின்கின்றது. இக்காட்சியைத் திருமறைக் காட்டில் கண்டார். “தாழைப்பொழில் ஊடேசென்று புழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே” திருவாஞ்சியம் என்னும் ஊர். அங்குக் குரங்குகள் கூடி வாழைப் பழத்தையும் பலாச் சுளைகளையும் கொண்டு வந்து பங்கு போட்டுக் கொண்டன. பிறகு, அவைகள் என் கூறு சிறிது என் கூறு சிறிது என்று சண்டை செய்து வாழை மட்டையினால் அடித்துக் கொண்டனவாம். “வாழையின் கனிதானும் மதுவிம்மு வருக்கையின் சுளையும் கூழைவானரம் தம்மில் கூறிதுசிறிது எனக் குழறித் தாழைவாழையந் தண்டார் செருச்செய்து தருக்கு வாஞ்சியம்” நீர்வளத்தின் மிகுதியினாலே வாளைமீன், மலங்கு மீன், கயல் மீன், வரால் மீன், சேல் மீன் முதலிய மீன்களைக் கூறுகிறார். அந்நீர் நிலைக்கு அருகில் உள்ள கமுது முதலிய தோப்புகளையும் கூறுகிறார். “வாளைபாய மலங்கு இளங்கயல் வரிவரால் உகளும் கழனிப் பாளைஒண் கமுகம் புடைசூழ் திருப்பனையூர்” சேற்றில் நடந்து சென்ற எருமைகள் நீரிலே சென்று படிய, நீரில் இருந்த சேல் மீன்களும் வாளை மீன்களும் அஞ்சிப் பாய்ந்தோடின. “செங்கண் மேதிகள் சேடெறிந்து தடம்படிதலில் சேலினத்தொடு பைங்கண் வாளைகள் பாய்பழனத் திருப்பனையூர்” எருமைகள் குளத்தில் சென்று வீழ்ந்து நீரில் படிந்தன. அதனால், கயல் மீன்கள் கூட்டமாக ஓடித் தாமரை மலர்களின்கீழ் ஒளிந்தன. அதனால், பூக்கள் அசைய, அவற்றில் மொய்த்திருந்த வண்டுகள் பறந்து சுழன்றன. இதனைக் கூறுகிறார். “கருமேதி புனல் மண்டக் கயல்மண்டக் கமலம் களிவண்டின் கணம்இரியும் கலையநல்லூர் காணே” தாமரைக் குளத்தில் வாளைமீன் துள்ளிக் குதித்தது. தாமரைப் பூவின்மேல் நண்டு படுத்து ஓய்வு கொண்டது. இவ்வியற்கைக் காட்சியைக் கூறுகிறார். “துள்ளிவெள்ளி வாளைபாய அயல்தோன்றும் தாமரைப் பூக்கள்மேல் புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பியந் தொழப் போதுமினே” தாமரைப் பூவில் நண்டு படுத்து உறங்க, அந்தப் பூவில் மொய்க்கும் வண்டுகள் பாடுவது, இசை பாடித் தூங்கவைப்பது போல இருந்தது. “பொள்ளலங் கழனிப் புதுவிரை மலரில் பொறிவண்டு இசைபாட அந்நலங் கமலத் தவிசின் மேலுறங்கும் அலவன்வந் துலவிட அண்ணல் செந்நெலங் கழனிசூழ் திருமுல்லை வாயில்” புன்னை மரத்தில் மலர்கள் அரும்பிப் பூத்து மலர்ந்து கொத்துக் கொத்தாய் இருக்கின்றன. அரும்புகள் முத்துப் போல் திரண்டு வெண்மையாக இருக்கின்றன. பூத்த மலருக்குள் மகரந்தம், பொன் பூத்ததுபோலக் காட்சியளிக்கிறது. பழைய பூக்களின் நடுவில் உள்ள கரு, பவளம் போலச் சிவந்து காணப்படுகிறது. புன்னை மலரை ஊன்றிப் பார்த்தவருக்கு இந்த இயற்கையும் உவமையும் நன்கு புலப்படும். இதனைச் சுந்தரர் கூறுகிறார். “கரும்புன்னை வெண்முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டும் கடிபொழில் சூழ் கலைய நல்லூர்காணே” காவி, குவளை, தாமரை, கழுநீர் முதலிய பூத்துள்ள குளத்தில் அன்னப்பறவைகள் விளையாடும் இயற்கைக் காட்சியைக் காட்டுகிறார் : “காவியும் குவளையும் கமலம் செங்கழு நீரும் மேவிய குருகாவூர்” “ஒப்புடை ஒளிநீலம் ஓங்கியமலர்ப் பொய்கை அப்படி அழகாய அணிநடை மடஅன்னம் மெய்ப்படு குருகாவூர்” திருக்குறளும் நாலடியாரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில், திருக்குறள் கருத்துக்களையும் நாலடியார் கருத்துக்களையும், இடையிடையே கூறுகிறார். திருநெல்வாயில் திருவரத்துறை தேவாரத்தில் இதனை நன்கு காணலாம். அவற்றைக் காண்போம். “நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்ற தறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”1 இச்செய்யுள், “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு” என்னும் திருக்குறளை நினைவுறுத்துகிறது. அன்றியும், “புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்த அறவினை - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்றான் எனப்படுத லான்” என்னும் நாலடியார் செய்யுளையும் நினைவுறுத்துகிறது. “வறிதே நிலையாத விம்மண் ணுலகில் நரனாக வகுத்தனை நானந்நிலையேன் பொறிவாயிலி வைந்தனையும் அவியப் பொருதுன் அடியே புகுஞ்சூழல் சொல்லே”2 இச்செய்யுள், “நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை” என்னும் திருக்குறளையும், “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து” என்னும் திருக்குறளையும், “பொறிவாயி லைந்தவித்தான்” என்னும் திருக்குறள் சொற்றொடரையும் நினைவுறுத்துகிறது. மேலும், “துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினா ரிவ்வுலகத் தில்” என்னும் நாலடியாரையும் நினைவுறுத்துகிறது. “மற்றே லொரு பற்றில னெம்பெருமான் வண்டார் குழலாள் மங்கை பங்கினனே அற்றார் பிறவிக்கடல் நீந்தியேறி யடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”1 இச்செய்யுள், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்” என்னும் திருக்குறளை நினைவுறுத்துகிறது. “ஓடுபுனற் கரையா மிளமை யுறங்கி விழித்தா லொக்கு மிப்பிறவி வாடியிருந்து வருந்தல் செய்யா தடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே”2 இச்செய்யுள், “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்னும் குறளை நினைவுறுத்துகிறது. “மகரக் குழையாய் மணக் கோலமதே பிணக் கோலமதாம் பிறவி யிதுதான் அகரமுதலின் எழுத்தாகி நின்றாய் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”3 இச்செய்யுள், “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்னும் திருக்குறளைக் கூறுவது காண்க. பழமொழிகளும் உவமைகளும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரப் பதிகங்களில் பழமொழி களையும் உவமைகளும் கூறுகிறார். அவைகளை இங்கு ஆராய்வோம். “ஆதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா”1 இது, திருநாவுக்கரசர் திருவாரூர்ப் பழமொழிப் பதிகத்தில் (5) கூறிய “ஏதன் போர்க் காதனாய் அகப்பட்டேனே” என்னும் பழமொழியை நினைவூட்டுகிறது. “பிண்டஞ் சுமந் தும்மொடுங்கூட மாட்டோம் பெரியாரொடு நட்பினி தென்றிருந்தும் அண்டங் கடந்தப் புறத்து மிருந்தீர் அடிகேளுமக் காட்செய வஞ்சுதுமே”2 இதில், “பெரியாரொடு நட்பு இனிது” என்னும் பழமொழி வந்துள்ளது. “வாணார் நுதலார் வலைப்பட்டு அடியேன் பலவின் கனியீயந்து போல்வதன் முன் ஆணொடு பொண்ணாமுரு வாகி நின்றாய் அடியே நுய்யப் போவதோர் சூழல்சொல்லே” “பலாப்பழத்தை ஈ மொய்ப்பதுபோல்” என்னும் பழமொழி இதில் கூறப்படுகிறது. “குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் அடியார் தமக்கோர் குடியே யொத்தியால்”3 “வாடிய பயிருக்கு மழை பெய்தாற் போல” என்னும் உவமை கூறப்பட்டது. “எள்விழுந் திடம்பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகில னாகிலும் வள்ளலே எங்கள் மைந்தனே யென்று வாழ்த்தினுங் கொடுப்பாரிலை” “எச்சிற் கையாலும் ஈ ஓட்டமாட்டான்” என்னும் பழமொழி இதில் வந்துள்ளது. “பஞ்சியிடப் புட்டில் கீறுமோ பணியீரருள் முஞ்சியிடைச் சங்கமார்க்குஞ்சீர் முதுகுன்றரே”1 “பஞ்சியிடப் புட்டில் கீறுமோ?” என்னும் பழமொழி. “வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும் பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கை பொன்னாமதுவே புகல்”2 சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பரான சேரமான் பெருமாள் நாயனார், தமது பொன்வண்ணத் தந்தாதியில், “காய்சினவானை வளரும் கநகமலை யருகே போயின காக்கையுமன்றே படைத்தது பொன்வண்ணமே” என்று இக்கருத்தையே கூறியது ஈண்டுக் கருதத்தக்கது. இதில், பொன்மலையைச் சேர்ந்த காக்கையும் பொன்னிற மாகும் என்னும் பழமொழி கூறப்பட்டது. “பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடிப் பிழையேன்”3 “பிழுக்கை வாரியும் பால்கொள்வர்” என்னும் பழமொழி. “சுழித்தலைப் பட்டநீரது போலச் சுழல்கின்றேன் சுழல்கின்றதென் னுள்ளம்”4 “நீர்ச்சுழியில் அகப்பட்ட துரும்புபோல” என்னும் உவமை. “அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்தா என்னிடம் யார்கெடுத் துரைக்கேன்” என்னும் உவமை “மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய் மைந்தனே மணியே மணவாளா” சூரியனை இராகு தொடர்ந்ததுபோல என்பது பொருள். சங்கிலியாரை விட்டுப் பிரிவதில்லை என்று சூளுரைத்துப் பின், அதனை மறந்து திருவாரூர் சென்றபோது, சுந்தரருக்குக் கண்பார்வை மறைந்தது. கண் பார்வையை மறைத்தபடியினாலே “மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய்” என்று உவமை கூறுகிறார். *** 3. செந்தமிழ்ச் சிந்தாமணி* கால ஆராய்ச்சி சிந்தாமணி இயற்றப்பட்ட காலத்தைக் கண்டறிவதற்கு அக் காவியத்திலே சான்று கிடைக்கவில்லை. திருத்தக்க தேவரைப் பற்றிய வரலாறும் தெரியவில்லை. ஆகவே, இந்நூலின் காலத்தைக் கண்டறி வது கடினமாய் இருக்கிறது. கடினமாய் இருந்தாலும், இந்நூலின் காலத்தை அறிவது தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு இன்றியமையா ததாகும். ஆகவே, இதன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்: முதலில் ஓர் ஐயத்தை நீக்கிக்கொள்ள வேண்டும்: இந்தக் காவியத்திலே பல்லவ நாடு கூறப்படுகிறபடியினாலே, பல்லவ அரசர் காலத்திலே இயற்றப்பட்டது இந்நூல் என்று சிலர் கருதுகின்றனர்; எழுதியும் வருகின்றனர். பல்லவ தேசம் என்று சிந்தாமணியில் கூறப் படுவது, தமிழ்நாட்டிலிருந்த பல்லவதேசம், அதாவது தொண்டைமண்டலம் அன்று; வேறு நாடு. “படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேயம் என்னும் தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாடு.” 1185 “வெல்களிற் றச்ச நீக்கி விரைவொடு வனத்தி னேகிப் பல்லவ தேயம் நண்ணி” 1754 “கோங்குபூத் துதிர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்த பரங்கமை பரும யானைப் பல்லவ தேச மன்னர்” 2253 “பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேய மன்னன் சேவகன் சிங்க நாதன் செருக்களம் குறுகி னானே.” 2278 என்று பல்லவ நாடு சிந்தாமணியில் கூறப்படுகிறது. பல்லவ நாட்டரசன் மகளைச் சீவகன் மணந்தான் என்றும், சீவகன் கட்டியங்காரனுடன் செய்த போரில் பல்லவ தேச மன்னன் சீவகன் பக்கல் நின்று போர் செய்தான் என்றும் சிந்தாமணி கூறுகிறது. ‘பல்லவ தேயம்’ என்றும், ‘பல்லவ மன்னன்’ என்றும் இதில் கூறப்படுவது, தமிழ் நாட்டுப் பல்வ தேசத்தை யும் தமிழ்நாட்டை அரசாண்ட பல்லவ மன்னனையும் அன்று. என்னை? பல்லவர் தமிழ்நாட்டிற்கு வந்து காஞ்சீபுரத்தைத் தலை நகராகக் கொண்டு அரசாளத் தொடங்கியது கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் என்று சரித்திரம் கூறுகிறது. சீவகன், வர்த்தமான மகாவீரர் காலத்திலே வாழ்ந்திருந்தவன். வர்த்தமான மகாவீரர் கி. மு. 6-ஆம் நூற்றாண்டிலே (கி.மு. 599-527) வாழ்ந்திருந்தவர். எனவே, கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சீவகன், கி.பி. 3-ஆம் நூற்hண்டிற்கப் பின்பிருந்த பல்லவ தேசத்தரசன் மகளை மணந்திருக்க முடியாது. ஆகவே, சிந்தாமணியில் பல்லவ தேசம் என்று கூறப்படுவது, தமிழ் நாட்டிலிருந்த பல்லவ தேசம் அன்று என்பது வெள்ளிடைமலை போல விளங்குகிறது. ஆனால், சிந்தாமணியில் கூறப்பட்ட பல்லவ நாடு என்பது எது? இப்போது ‘ஈரான்’ என்று வழங்கப்படுகிற பழைய பாரசீக தேசத்தில் பல்லவ அரசர்கள் இருந்தார்கள். ‘அவர்கள் பஹ்லவர் (ஞயாடயஎயள) என்று பெயர் பெற்றிருந்தார்கள். ஆகவே, பாரசீகத்துப் பஹ்லவருக்கும் தமிழ் நாட்டுப் பல்லவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சிந்தாமணியில், பல்லவ தேசம் என்று கூறுப்படுவது, பாரசீகத்துப் பஹ்லவ தேசமாக இருக்கக் கூடும். (பஹ்லவர் என்னும் பெயர் தமிழிற் பல்லவர் என்று வழங்கப்பட்டது.) ஆகவே, சிந்தாமணிக் காவியம் இயற்றப்பட்ட காலத்தை அறிவதற்கு இது துணைசெய்யவில்லை. வேறு சான்றுகளைக்கொண்டு இதன் காலத்தை ஆராய்வோம்: ‘வீரசோழியம்’ என்னும் இலக்கண நூலைப் புத்தமித்திரனார் என்பவர் இயற்றினார். இதற்கு உரை எழுதியவர் புத்தமித்திரனாரின் மாணவராகிய பெருந்தேவனார் என்பவர். எனவே, நூலாசிரியரும் உரை ஆசிரியரும் சம காலத்தவராவர். வீர சோழியம், புத்மித்திரனாரை ஆதரித்த வீரசோழன் என்னும் வீர நாசேந்திரன் பெயரால் இயற்றப் பட்டது. வீரசோழன் என்னும் வீர ராசேந்திரன், கி.பி. 1063 முதல் 1070 வரையில் சோழநாட்டை ஆண்டவன். எனவே, வீரசோழியம் இயற்றப் பட்ட காலம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டு என்பதில் ஒரு சிறிதும் ஐயம் இல்லை. வீரசோழிய உரையாசிரியர், தாம் எழுதிய உரையிலே, பல நூல்களிலிருந்து பல செய்யுட்களையும் சூத்திரங்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்ஙகலம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்; யாப்பருங்கலத்தி லிருந்து, “மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்” என்னும் தொடக்கத்துச் சூத்திரத்தை மேற்கோள் காட்டி, என்று அமிதசாகரனார் கூறியன கொள்க, என்று எழுதுகிறார். அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங் கலத்தை இவர் மேற்கோள் காட்டுகிறபடியினாலே, யாப்பருங்கலம் வீரசோழியத்திற்கு முற்பட்ட நூல் என்பது தெரிகிறது. யாப்பருங்கலம், வீர சோழியத்திற்கு முற்பட்ட நூல் என்றால் குறைந்தது ஒரு நூற்றாண் டிற்கு முற்பட்ட நூலாக இருக்க வேண்டும். என்னை? அக்காலத்தில் நூல்கள் நாட்டில் செல்வாக்குப் பெறுவதற்கு அதிக காலம் செல்லும் ஆகலின் என்க. ஆராய்ச்சியாளரும் இதனையே கூறுவர். யாப்பருங் கலம் முதலாம் ராஜாராஜன் காலத்தில் இயற்றப்பட்டது என்பர். முதலாம் ராஜராஜன் கி.பி. 985 முதல் 1013 வரையில் அரசாண்ட சோழ மன்னன் ஆவன். இந்த அரசன் காலத்திலேதான் அமிதசாகரனார், யாப்பருங்கலம் என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார் என்பர்.1 எனவே, யாப்பருங் கலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் ஆகும். யாப்பருங்கலம் இயற்றிய அமிதசாகரரும், அதற்கு உரை எழுதிய குணசாகரரும் சமகாலத்தவர் ஆவர். யாப்பருங்கல உரை யிலே, உரையாசிரியர் சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, குண்டலகேசி, வளையாபதி முதலிய நூல்களிலிருந்து பல விருத்தப்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். மேற்கோள் காட்டப்பட்ட இந்த நூல்கள். இவர் காலத்திற்கு முற்பட்டனவாதல் வேண்டும்; குறைந்தது ஒரு நூற்றாண் டிற்கு முற்பட்டனவாதல் வேண்டும். யாப்பருங்கலம், கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தாகலின், அதில் மேற்கோள் காட்டப்பட்ட இந்த நூல்கள், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இயற்றப்ட்டனவாதல் வேண்டும். விருத்த யாப்பால் இயற்றப்பட்ட நீலகேசி, குண்டலகேசி, வளை யாபதி, சூளாமணி ஆகிய நூல்களுக்குக் காலத்தினால் முந்தியது சிந்தா மணி ஆகும். என்னை? முதன்முதல் விருத்த யாப்பினால் இயற்றப் பட்ட காவியம் சிந்தாமணி என்று கூறப்படுகிறதாகலின். சங்க காலத்தில், விருத்த யாப்பினால் நூல்கள் இயற்றப்படவில்லை. சங்க காலத்திற்கப் பிறகு - அதாவது கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு - தமிழில் விருத்தப் பாக்கள் அமைப்பதற்கும், அவற்றிற்குச் செய்யுள் இலக் கணம் அமைப்பதற்கும், இப்பாக்களைப் புலவர் உலகம் ஒப்புக் கொள் வதற்கும் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும். விருத்தப் பாக்கள் தமிழில் திடீரென்று ஒரேநாளில் தோன்றிவிடவில்லை. வடமொழி முறையையும் தமிழ்மொழி முறையையும் நன்கறிந்து புதியனவாக விருத்தப் பாக்களைத் தமிழில் அமைத்தவர் சமணரும் பௌத்தரும் ஆவர். இவ்விருத்தப்பாக்கள், பல திருத்தங்களைப் பெற்றுத் திருந்திய அமைப்புப் பெறுவதற்கும் புலவர் உலகம் இவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறையில் வழங்குவதற்கும் சில நூற்hண்டு வேண்டும். முதல் முதல் விருத்த யாப்பில் இயற்றப்பட்ட பெருங் காவியம் சிந்தாமணியே என்று கூறுப்படுகிறது. இதற்குச் சிந்தாமணியில் அகச்சான்றும் காணப்படுகிறது. என்னை? சிந்தாமணியின் விருத்த யாப்பு இடையிடையே தடைபடுகிறதை யாப்பிலக்கணம் அறிந்த அறிஞர் அறிவர். முதன்முதல் விருத்த யாப்பினால் செய்யப்பட்ட காவியம் சிந்தாமணி என்பதற்கு இதுவே சான்றாகும். சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி முதலிய நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் இயற்றப்பட்டன என்று மேலே கூறினோம். ஆகவே, அவற்றிற் கெல்லாம் முற்பட்ட சிந்தாமணி, முதன்முதல் விருத்தயாப்பில் இயற்றப் பட்ட நூலாதலின், அந்நூல்களுக்கு முந்திய நூற்றாண்டில், அதாவது கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம். *** 4. தேசிகப் பாவை* பல்லவ தேசத்து அரசனான உலகபாலன் சந்திராபம் என்னும் தன்னுடைய தலைநகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய நண்பனான சீவககுமரன் என்னும் அரசகுமாரன் அவனிடம் வந்து அவனுடைய அரண்மனையில் சில காலம் தங்கினான். சீவககுமாரன் ஏமாங்கத நாட்டின் அரசன். ஆனால், அவனுடைய நாட்டைக் கட்டியங்காரன் கைப்பற்றிக் கொண்டபடி யால், அவன் தன்னுடைய இராச்சியத்தை மீட்டுக்கொள்ள முயன்று கொண்டிருந்தான். அந்தச் சூழ்நிலையில், சீவககுமாரன் பல நாடு களுக்குஞ் சென்று நண்பர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது பல்லவ தேசத்துக்கு வந்து உலகபாலனோடு தங்கினான். உலக பாலனுடைய அரண்மனையில் நாடகங்களும் நடனங்களும் இசைப் பாட்டுகளும் நடப்பது வழக்கம். அந்த நகரத்தின் பேர்போன நாட்டியக் காரியான தேசிகப்பாவை என்னும் கணிகைப்பெண் வழக்கம்போல அரண்மனையில் நாட்டியம் ஆடினாள். தேசிகப்பாவை எழில் உள்ளவள். இசைக்கலையிலும் நாடகக் கலையிலும் நாட்டியக்கலையிலும் வல்லவள். அவளுடைய கலைப் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. அவளுடைய நாட்டியத்தைக் காண அரசனும் அமைச்சரும்நகரப்பெருமக்களும் வந்திருந்தார்கள் விருந் தினனான சீவககுமாரனும் நாடக அரங்கத்துக்கு வந்திருந்தான். தேசிகப்பாவையின் நாட்டியம் எல்லோருடைய மனத்தையுங் கவர்ந்தது. இசைக்கு ஏற்றபடி யாழும் குழலும் மத்தளமும் தாளமும் இசைந்து முழங்கின. பாட்டின் கருத்துக்கு ஏற்ப தேசிகப்பாவை அபினயம் பிடித்து ஆடினாள். ‘குழலெடுத்து யாத்து மட்டார் கோதையில் பொலிந்து மின்னும் அழலவிர் செம்பொற் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி நிழலவிர் அல்குற் காசு சிலம்பொடு சிலம்ப நீள்தோள் அழகிகூத் தாடு கின்றாள் அரங்கின்மேல் அரம்பை யன்னாள்’ ‘தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயிலத் தண்பூம் கண்ணொடு புருவம் கைகால் கலையல்குல் நுசுப்புக் காமர் ஒண்ணுதல் கொண்ட ஆடல் தொட்டிமை யுருவம் நோக்கி வெண்ணெய்தீ யுற்ற வண்ணம் ஆடவர் மெலிகின் றாரே’ ‘பாடலொ டியைந்த ஆடல் பண்ணமை கருவி மூன்றும் கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த முற ஓடரி நெடுங்கண் அம்பால் உளங்கிழிந் துருவ எய்யா வீடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்.1 தேசிகப்பாவை இவ்வாறு அரங்கத்தில் ஆடும்போது, விருந்திவனான சீவக குமரன்மேல் அவளுடைய பார்வை சென்றது. இளமையும் வனப்பும் வீரமும் உடைய அரசகுமரனின் தோற்றம் அவளுடைய மனத்தைக் கவர்ந்தது. நாட்டியம் ஆடிக்கொண்டே அவள் அடிக்கடி தன்னுடைய பார்வையை அவன்மேல் செலுத்தினாள். கலைகளில் வல்லவனான சீவககுமரனும் அவளுடைய ஆடலிலும் பாடலிலும் அழகிலும் ஈடுபட்டு அவளை நோக்கினான். ‘வாணுதல் பட்டம் மின்ன வசர்குழை திருளில் வீசப் பூண்முலைப் பிறழப் போற்றோடு இடவாயில மாணிழை வளைக்கை தம்பால் வட்டணை போக்கு கின்றாள் காண்வரு குவளைக் கண்ணாள் காளைமேல் நோக்கினாளே’2 தேசிகப்பாவை சீவககுமரனைக் காதலித்தாள். அவனை யல்லா மல் வேறு ஒரு வரையும் விரும்புவதில்லை என்று உறுதி செய்து கொண்டாள். ‘கணிகை மகளுக்குப் பொன்னைக் கொடுத்தால் அவள் தன் கற்பை விற்றுவிடுவாள் என்று கூறுவார்கள். அந்தச் சொல் என்னிடத்தில் பொய்யாகும்’ என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள். ‘கன்னிமை கனித்து முற்றிக் காமுறக் கமழுங் காமத்து இன்னறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை பொன்னினால் உடையுங் கற்பென்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார் இன்னிசை இவற்கல் லால்என் நெஞ்சிடம் இல்லை என்றாள்’3 தேசிகப்பாவையும் சீவககுமரனும் ஒருவரையொருவர் விரும்பி னார்கள். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பு இல்லை. அவளோ கணிகைப் பெண். அவனோ அரசகுமரன் அரண்மனையில் விருந்தினனாக வந்திருக்கும் அரசகுமரன். கணிகைப்பெண்ணை நாடிப் போக இயலுமா? கணிகைப்பெண் அரசகுமரனாகிய விருந் தினனைத் தேடிவர முடியுமா? சிலநாட்கள் சென்றன. ஒருநாள் மாலைநேரத்தில் தேசிகப்பாவை பொழுது போக்காகத் தன்னந் தனியே அரண்மனைப் பூங்காவில் ஓரிடத்தில் அமர்ந்து விணை வாசித்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் சீவககுமரன் அப் பூங்காவில் இன்னொரு இடத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது வீணையின் இன்னிசையைக் கேட்டு அவ்விசை வந்த திசையை நோக்கி வந்தான். வந்தவன் எதிர்பாரா வண்ணம் தேசிகப் பாவையைக் கண்டு வியப்படைந்தான். அவளும் அவனைக் கண்டு வியப்படைந்தாள். முன்னமே நாடக அரங்கில் அவர்கள் ஒருவரை யொருவர் விரும்பியவராகையால் இந்தச் சந்திப்பில் அவர்கள் மனமொத்த நண்பர்களாகவும் காதலராகவும் ஆனார்கள். பின்னர் அவர்கள் நாள்தோறும் சந்தித்தார்க்ள. சில நாட்கள் சென்றபிறகு சீவககுமரன் தன்னுடைய நாட்டுக்குப் போய்விட்டான். சில மாதங்கள் வரையில் அவனைப் பற்றின செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. அவள் பொறுமையாகக் காத்திருந்தாள். பல மாதங்கள் சென்றன. கடைசியில் சீவக குமாரனைப்பற்றி அரண்மனை யில் பேசிக்கொண்டதை அவள் அறித்தாள். சீவககுமரன் கட்டியங் காரனோடு போர்செய்து வென்று தன்னுடைய இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். இப்போது அவன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு முடி சூடி அரசாள்கிறான் என்று அவர்கள் பேசிக்கொண்டதை அவள் அறிந்தாள் தேசிகப்பாவை மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாள். தன்னைக் காதலித்த அவன் தன்னை அழைத்துக் கொள்வான் என்று அவள் காந்திருந்தாள். நாட்கள் கழிந்தன. மாதங்கள் சென்றன. ஆண்டு கடந்தது. அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை அழைத்துக் கொள்ளும் குறி ஒன்றும் காணப்படவில்லை. அவள் நெடுநாள் காத்துக் கொண்டிருந்தாள். தேசிகப்பாவை தனக்குள் எண்ணினாள். சீவககுமரன் ஏமாங்கத நாட்டின் மன்னனாக முடிசூடிச் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாள் கிறாள். பட்டம் பதவி அரச போகங்கள் செல்வம் அதிகாரம் இவை களில் மூழ்கியிருக்கிறான். அதனால் அவன் என்னை மறந்துவிட்டான். அன்றியும் அவன் அரசகுலத்தில் பிறந்தவன். நானோ கணிகை குலத்தில் பிறந்தவள். சப்பி உமிழப்பட்ட மாங்கொட்டையைப்போல அவன் என்னை நினைத்திருப்பான்? இவ்வாறெல்லாம் அவள் தனக்குள் எண்ணினாள். ஆனால் அவள் அவனை வெறுக்கவில்லை. அவன் மேலிருந்த அன்பும் காதலும் அவளுக்குக் குறையவில்லை. எதற்கும் நேரில் போய்க் காண்போம் என்று எண்ணினாள். தன்னை அவன் ஏற்றுக்கொள்ள வில்லையானால் என்ன செய்வது? கடைசியில் அவள் அவனை நேரில் காணத் துணிந்தாள். தேசிகப்பாவை பல்லவ நாட்டை விட்டுப் பயணமானாள். பல நாட்கள் பயணஞ்செய்து கடைசியில் எமாங்கத நாட்டை அடைந்தாள். தலைநகரமான இராசகிரிய நகரத்துக்கு வந்து தங்கினாள். அங்குச் சில நாட்கள் தங்கியிருந்து சீவக குமரனைப்பற்றிய செய்திகளை விசாரித்து அறிந்தாள். அச்செய்திகளில் ஒன்று, அனங்கமாலை என்னும் கணிகைப்பெண் ஒருத்தி சீவக குமரனைக் காதலித்தாள். ஆனால், அவன் அவளைக் காதலிக்கவில்லை என்பது இந்தச்செய்தி தேசிகப் பாவைக்கு உதவியாக இருந்தது அனங்கமாலையின் ஊழியப் பெண் போல நடித்துச் சீவககுமரனிடம் போக அவள் திட்டம் இட்டாள். அனங்கமாலை, சீவககுமரனுக்குக் கடிதம் எழுதியதுபோல ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டு அக்கடிதத்தைச் சீவககுமரனிடம் கொடுக்கும் ஊழியப்பெண்போல அவள் கடிதத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றாள். சீவககுமரன் தனியே இருக்கும் நேரம் அறிந்து வாயிற்காவலனிடம். தான் அனங்கமாலையின் ஊழியப்பெண் என்றும் அரசனைக் காண வந்ததாகவும் கூறினாள். வாயிற்காவலன் அரசனிடஞ் சென்று கூற, அரசன் அவளை உள்ளே விடும்படி கட்டளையிட்டான். தேசிகப்பாவை உள்ளே சென்று ஊழியப்பெண் என்னும் நிலையில் அரசனுடைய காலில் விழுந்து வணங்கித்தான் கொண்டுவந்த கடிதத்தைக் கொடுத்தாள். அரசனான சீவககுமரன் அவளைக் கூர்ந்து நோக்கிப் புன்முறுவல் பூத்தான். அவளை அருகில் அழைத்துத் தழுவிக்கொண்டு அருகில் அமர்த்தி அவளைப் பார்த்துச சிரித்தான். ‘அரசர் பெருமானே! அடியேன் ஓர் எளிய ஊழியப்பெண். அடியேனுக்கு அரசர் பெருமான் இவ்வாறு அருளலாமோ?’ என்று சொன்னாள், ஊழியப்பெண் வேடத்தில் இருந்த தேசிகப்பாவை. ஆம். நீ யார்? என்பது எனக்குத் தெரியும். ஊழியப்பெண் வேடத்தில் வந்த தேசிகப்பாவை நீ என்பதை அறிவேன். அரச போகத்திலும் செல்வச் செருக்கிலும் முழுகி உன்னை மறந்துவிட்டேன் என்று கருதாதே. உன்னை நான் மறந்தேன் இல்லை என்று கூறி மகிழ்ந்தான் அது கேட்டுத் தேசிகப்பாவை விம்மித மடைந்து பேருவகை கொண்டாள். தேசிகப்பாவை அரண்மனையில் தங்கினாள். அரண்மனை நாடக அரங்கில்அவள் நாள்தோறும் இசைபாடியும் நடனம் ஆடியும் அரசனை மகிழ்வித்தாள். சீவககுமாரனுடைய அரண்மனையில் தேசிகப்பாவையின் ஆடல்பாடல்கள் நெடுங்காலம் நடந்தன. நரம்புமீது இறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும் இரங்குதீங் குழலும் ஏங்கக் கிண்கிணி சிலம்பொ டார்ப்பப் பரந்தவாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப்பாவை கோல அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித் தானே4 *** தமிழ்நாட்டுப் புலவராகிய கம்பரும் ஒரி சேரநாட்டுப் புலவரான சரளரும் புகழ்பெற்ற பெரும்புலவர்கள். கம்பர் தமிழில் இராமாயணம் இயற்றிப் புகழ் பெற்றார். சரளரும் ஒரியா பாஷையில் பாரத இராமாயணங்களை இயற்றிப் புகழ் பெற்றார். மேலும் இவ்விரு புலவர்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஒரிசா தேசம் ஆந்திர தேசத்துக்கு வடக்கே கடற்கரை யோரத்தில் இருக்கிறது. ஒரிசா தேசத்துக்கு ஒட்டர தேசம் என்றும் ஒடியதேசம் என்றும் உத்கலதேசம் என்றும், கலிங்கதேசம் என்றும் பழைய காலத்தில் பெயர்கள் வ்ழங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒட்டர அல்லது ஒடிய என்னும் பெயரை ஒரிசா என்று வழங்கினார்கள். அப்பெயரே இப்பொழுதும் வழங்கிவருகிறது. ஒரியா தேசத்தில் பேசப்படுவது ஒரியா மொழி. ஒரியா மொழிக்குத் தனிச் சிறப்பு உண்டு. மற்றப் பாஷைகளிலே பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் சிறிதுவித்தியாசம் உண்டு. ஆனால் அவ்வித வேறுபாடு ஒரியா பாஷையில் இல்லை. பேசுவது போலவே எழுதப்படுகிறது. ஒரிசா நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் பழைய காலத்தில் சரித்திர சம்பந்தமாகத் தொடர்பு உண்டு. நிற்க. ஒரிசா நாட்டுப்பெரும்புலவரான சரளதாசரைப்பற்றிக் கூறுவோம். சரளதாசருக்குத் சரஸதாசர் என்ற பெயரும் உண்டு. கம்பர் வாழ்ந்திருந்த இடம் திருவழுந்தூரில் கம்பர்மேடு என்று இன்னும் தமிழரால் போற்றப்படுகிறதல்லவா! அது போலவே, சரளர் அடக்கஞ் செய்யப்பட்ட இடம் இன்றும் ஒரிசா மக்களால் போற்றப் படுகிறது. ஒரிசா தேசத்தில் கட்டாக் மாவட்டத்தில் கனகபுரம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஒரு ஆலமரத்தின் கீழே சரளரில் சமாதி இருக்கிறது. தமிழர் கம்பரைப் போற்றுவது போலவே ஒரிசா மக்கள் சரளரை இன்றும் போற்றுகிறார்கள். கம்பர் தமிழில் இராமாயண காவியத்தை இயற்றினது போலவே சரளர் ஒரிய பாஷையில் பாரதத்தையும் ராமாணத்தையும் காவியமாக இயற்றிப் புகழ் பெற்றார் சரளர் கி.பி. 15-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்தார். கம்பர் காளிதேவியின் அருள் பெற்று கவிபாடும்புலவர் ஆனார். சரளதாசரும் சரசதேவியின் அருள்பெற்று கவிபாடும்புலவரனார். கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டது போல சரளரும் தம் .................... பரசுராமன் என்பவரால் ஆதரிக்கப்படார் கம்பர் தாம் பாடிய ராமாயணத்தில் சடையப்ப வள்ளலைப்புகழ்ந்திருப்பதுபோல், சடையப்ப சரளதாசரும் தாம் இயற்றிய பாரத காவியத்தில் தம்மை யாதரித்த பரசுராமனைப் பல இடங்களில் புகழ்ந்திருக்கிறார். கம்பர் இராமாயணக் கதையை தமிழ் நாட்டு மரபுக்கும் சூழ் நிலைக்கும் ஏற்றபடிச் சில இடங்களில் மாற்றியமைத்தது போலவே சரளரும் தமது ஒரியா நாட்டு மரபு.க்கும் நிலைக்கும் ஏற்ப தமது பாரதக் கதைகள் மாற்றி அமைத்துக் கொண்டார். இவ்வாறு கம்பருக்கும் சரள தாசருக்கும் முக்கியமான ஒற்றுமை உள்ளன. எனவே கம்பரை ஒரி நாட்டுக் கரளதாசர் என்றும், சரளதாசனை ஒரியா மொழியில் பல இரா மாயண பார தங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அவைகளில் எல்லாம் முதன்மைபெற்றிருப்பதுசரளதாசரின் பாரத இராமாயணங் களேயாகும். சரளரின் காவியங்கள் ஒரியா மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. கம்ப இராமாயணமும் தமிழ்நாட்டில் அப்படித் தானே? கம்பருக்கு சமஸ்கிருதம் தெரியாது. சமஸ்கிருதம் படித்தவர் களைக் கொண்டு கம்பர் வால்மீகி இராமாயணத்தை அறிந்து கொண்டார்; அதுபோலவே சரளதாசருக்கும் சமஸ்கிருதம் தெரியாது. சமஸ்கிருதம் படித்தவர்களைக் கொண்டு சரளர் பாரத இராமாயணங்களைத் தெரிந்து கொண்டார். சரளதாசர் ஒரியா பாஷையில் பாரதத்தையும் இராமாயணத்தை யும் இயற்றினார் எனக் கூறினோம். சண்டிபுராணம், விலங்கை இராமாயணம் என்னும் காவியங்களையும் இவர் எழுதியிருக்கிறார். விலங்கை இராமாயணத்தை இவர் அற்புத இராமாயணத்திலிருந்து எழுதினார். விலங்கை இராமாயணத்தின் சுருக்கம் இது. இலங்கையை அரசாண்ட பத்துத்தலை இராவணனைப் போரில் வென்ற இராமன் அயோத்தியில் சென்று அரசாட்சி செய்து கொண் டிருந்தான். அப்போது விலங்கையை அரசாண்ட நூறுதலை இராவணன் பத்துத் தலை இராவணன் இறந்துபோனதை அறிந்து அவனைக் கொன்ற இராமன் மேல் ஆத்திரங் கொண்டான். ஆகவே நூறுதலை இராவணன் இராமன்மேல் போர் தொடுத்தான். இராமனும் போருக்குத் தயாரானான் முதலில் சத்ருக்கினனையும் பிறகும் இலக்குமணனையும் பிறகு பரதனையும் ஒருவருக்குப் பின் ஒருவராகப் போருக்கு அனுப்பினான். இவர்கள் எல்லோரையும் விலங்கை இராவணன் கொன்று போட்டான். கடைசியாக இராமன் அனுமானைப் போருக்கு அனுப்பியபோது அவனை விலங்கை இராவணன் தூக்கி ஆயிரம் மைலுக்கப்பால் வீசியெறிந்துவிட்டான். கடைசியில் ........... போர் செய்ய முடியாமற் போகவே, சீதை இராமனுக்கு உதவியாக வந்து ஒரு தெய்வ பெண் உருக்கொண்டு நூறுமுக இராவணன் எதிரில் நின்றாள். அவள் எழிலைக் கண்டு மயங்கியவிலங்கை இராவணன் ஆண்மை வலி மையையும் இழந்து நின்றான். அப்பொழுது இராமன் அவனைக் கொன்றான். இதுதான் விலங்கை இராமாயணக் கதை. கம்பராமாயணம் தமிழ்நாட்டில் எப்படி போற்றப்படுகிறதோ அவ்வாறே சரளதாசரின் பாரத இராமாயணங்கள் ஒரியாநாட்டில் போற்றப்படுகின்றன. தமிழருக்குக் கம்பனும் ஒரிசா நாட்டுக்குச் சரளதாசரும் தலை சிறந்த புலவர்கள். இருவருடைய வாழ்க்கையும் ஒரே வாழ்க்கை போன்று அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரியா பாஷையில் சூன்ய சம்ஹிதை என்னும் ஒரு நூலை வீரசிம்மன் என்னும் புலவர் எழுதியிருக்கிறார். வீரசிம்மன் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழராகிய வீரசிம்மன் ஒரியா நாட்டில் குடியேறி ஒரியா மொழியைக்கற்று அந்த பாஷையில் ஒரு நூல் எழுதினார் என்பது தமிழருக்குப் பெருமை தருவதல்லவா? கடைசியாக, தமிழ் எழுத்தாளருக்கு ஒரு வார்த்தை. தமிழ் எழுத்தாளர் ஏனைய இரண்டு மூன்று மொழிகளையும் படித்திருப்பது நல்லது. ஒரியா பாஷை வங்காளி பாஷை தெலுங்கு, கன்னடம் முதலிய பாஷைகளில் ஒன்றையேனும் படித்திருக்க வேண்டும். புதிய பாரத நாட்டில் ஒரு பாஷையை மட்டும் கற்றவருக்கு இனி சிறப்பில்லை என்பதை அறியவேண்டும். ஆனால் தாய்மொழியை முதலில் நன்றாக அறிந்தபிறகு வேறு மொழியைக் கற்கவேண்டும். தாய்மொழியை நன்றாக படிக்குமுன்னமே வேறு மொழியைக் கற்கப் புகுவது குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதை போலாகும். தமிழ் எழுத்தாளர்கள் வெறும் கிணற்றுத் தவளைபோல இராமல் வேறு பாஷைகளில் ஒன்றிரண்டை அவசியம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். *** 6. தமிழ் நூல்களில் மீன் வகை* தமிழ்நாடு கடலினை எல்லையாகக் கொண்டது. சேரநாடு, கேரளநாடு ஆவதற்கு முன்னே, அஃதாவது ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே, மேல்கடலாகிய அரபிக்கடலும் தமிழ் நாட்டின் மேற்கு எல்லையாக அமைந்திருந்தது. ஆகவே கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பரந்த கடல்களை எல்லையாகக்கொண்ட தமிழ் நாட்டவருக்கு மீன்களைப்பற்றிய ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டி யது இயற்கையே. கடல் அன்றியும், ஏரிகள், ஆறுகள், குளங்கள் முதலிய நீர்நிலைகளிலும் மீன் இனங்கள் வாழ்கின்றன. இயற்கைக் காட்சிகளில் இயல்பாகவே கருத்தைச் செலுத்தும் வழக்க முள்ள தமிழ்ப் புலவர்கள், மீன்களைப் பற்றியும் தமது நூல்களில் கூறி யிருப்பார்களன்றோ! அவர்கள் தமது இலக்கிய நூல்களிலே மீன் வகை களைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்பதை ஈண்டு ஆராய்வோம். மீன்வகைகளையும் அவற்றின் பெயர்களையும் மீன் பிடிக்கும் வலைஞர்களாகிய மீன் வாணிகர்தாம் அறிந்திருப்பாரெனக் கருதவேண்டா. தமிழ்ப்புலவர்களும் அவற்றை அறிந்திருந்தனர். நாட்டின் நீர்வளத்தைக் கூறும்போதெல்லாம் ஏதேனும் மீன் இனங் களைக் குறிப்பிடுவது புலவர்மரபு. அன்றியும் மாதரின் கண்களுக்கு உவமை கூறும்போதெல்லாம் சேல், கயல் என்னும் இருவகை மீன்களைக் குறிப்பிடுகிறார்கள். இறைவியின் திரு நாமங்களில் ஒன்று அங்கயற்கண் அம்மை, (மீனாக்ஷி) என்பது. பழைய சங்க நூல்களிலும் பிற்காலத்துத் தேவாரம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய நூல்களிலும் இறால், சுறா, கயல்,சேல், குரவை, மடவை முதலிய மீன்களின் பெயர்களைக் காண்கிறோம். “பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பு,” எனவரும் மதுரைக் காஞ்சியடியினாலே, பனைமீன் என்னும் ஒருவகை மீன் பெயரை அறிகிறோம். “கல்லுத் தலையின்கண் யாதொரு மீனுக்குண்டு, அம்மீன் கற்றலை எனவும் சொல்லுவது, இரண்டு மொழியைத் தொகுத்தலால் இரு மொழித்தொகை” என்பது வீரசோழிய உரை. (சொல்லதிகாரம்) இதிலிருந்து கற்றலை என்னும் பெயருள்ள ஒருவகை மீன் உண்டென்று அறிகிறோம். இப்பெயர் உலகவழக்கில் கத்தலை என்று வழங்கப்படுகிறது. பள்ளு என்னும் பெயருள்ள ஒருவகைப் பிரபந்த நூல்கள் பிற்காலத்திலே தமிழில் தோன்றி வளர்ந்தன. இந்நூல்கள் காலத்தினால் பிற்பட்டவை. இந்தப்பள்ளு நூல்களிலே நீர்வளத்தைக் கூறுகிற ஆற்றுச் சிறப்புக்கவிகளில் பலவகை மீன் வகைகள் கூறப்படுகின்றன. இவைகளிலிருந்து மீன்வகைகளின் பெயரை நன்கு அறிந்து கொள்ளலாம். மீன்களிலே, உவர்நீராகிய கடலில் உள்ள மீன்கள் என்றும், உவர்ப்பற்ற ஏரி, குளம், ஆறுகளாகிய நன்னீரிலுள்ள மீன்கள் என்றும் இருவகையுண்டு. வாளை, வரால், இரால் முதலிய மீன்கள் உவர்நீர், நன்னீர் என்னும் இருவகை நீரிலும் காணப்படுகின்றன. சில மீன்கள் உவர்நீரில் மட்டும் வாழ்வன. சில மீன்கள் நன்னீரில்மட்டும் வாழ்வன. இந்தப் பாகுபாட்டினைப் பள்ளு நூல்களில் காணமுடியாது. இந்நூல்களிலே, ஆற்றுச் சிறப்பைக் கூறுகிறபோது, நன்னீரிலே வாழ்கிற மீன்களை மட்டும் கூறவேண்டியிருக்க கடல் மீன்களின் பெயர்களையும் சேர்த்துக் கூறுப்படுகின்றன. இந்நூல்களிலே, கூறப்படுகிற மீன்வகைகளைக் காண்போம். முக்கூடற்பள்ளு என்னும் நூல், பொருநையாற்று வெள்ளத்தில் காணப்பட்டதாகக் கீழ்கண்ட மீன்வகைகளைக் கூறுகிறது. “உதைத்து விகைகொண் டெதிர்த்துக் கடலின் உதரங் கீறி அதிரும் நீர் உதயவரைக்கும் பொதிகை வரைக்கும் ஒத்துப் போம்படி முற்றம் போய் பதைத்து நெளியும் துதிக்கை ழக்கன், பண்ணைச்சாளை, எண்ணெய்மீன் பசலி, திருக்கை, கசலி, கெளுத்தி, பண்ணாக்கும் பழம் பாசிமீன் வதைக்கும் மகரம், குதிக்குஞ் சள்ள மத்தி, உல்லம், பொத்தி மீன், மடந்தை, கடந்தை, சம்பான், நொறுக்கி, மலங்கும், பஞ்சலை, கருங்கண்ணி, புதைத்து மணலில் ஒதுக்கிக் கடலில் போக்கி அழகர் கருணைபோல் பொருநை யாறு பெருகிவார. புதுமை பாரும் பள்ளீரே.” ³ பள்ளு சித்திரா நதியின் சிறப்பை இவ்வாறு கூறுகிறது. “குற்றாலத் திரிகூட மால் வரை யுற்றே மேகம் பொழிந்த நீர் கூடிப் பொருநை நாடித் திருமுக் கூடற் பதியை வலங்கொண்டே வற்றா மடுவிற் பரவை, குரவை வாளை, கோளை, தேளி மீன், மயிந்தி, உழுவை, அயிந்தி, கூனி., மணலி, ஆரால், ஒராமின், பற்றா அயிரை, கெண்டை, கெளிறு, பருவராலும் அணையிலே பாயக் காலிற் பாயக் குளத்திற் பாய வயலிற் பாயவே, சிற்றாரென்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மனப் பெருமைபோல் சித்ரா நன்னதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே,” இந்தப் பள்ளில் பஞ்சலை மீனும், கெண்டை மீனும் மாதர் கண்களுக்கு உவமை கூறப்படுகின்றன: “பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும்” என்பது அச்செய்யுள் அடி. திருமலை முருகன்பள்ளு என்னும் நூலில் கீழ்கண்ட மீன்களின் பெயர்கள் கூறுப்படுகின்றன. “சுறவு, மசரி, கொளுவை, யுளுவை, சூடை, திருக்கை, விரிசிறா, சூரை, மயிலை, பயிரை, மணலி, பாரை, மகரம், ழள்ளிறால், குறவை, ழறல்வெங்கணை, கருங்கணி, குறளி, செங்கணி, திமிங்கிலம், கோளை, சாளை, தேளி, ழளி, குதிப்புத் திமிலை, பஞ்சிலை, பறவை, கெளிறு, மலங்கு, கலவாய், பருத்தகாரை, ஆரல் மீன், பன்றி, வாளை, யாற்றுவாளை, பரக்கும் ஐந்திணை நிரக்கவே நறவு கமழும் குவளைக் குன்றுறை நாயகன் மயில் வேகம் போல் நடக்கும் அனும நன்னதிப்புனல் முழக்கம் பாரும் பள்ளீரே.” பறாளை வினாயகர் பள்ளு என்னம் நூல், இலங்கைத் தீவில் உள்ள பேர்போன பெரிய ஆறாகிய மரவலிகங்கை ஆற்றின் சிறப்பைக் கூறும்போது கீழ்கண்ட மீன் வகை கூறுகின்றது. “குறவை, வாளை, யுளுவை, மயிந்தன் குப்புளாவுடன், திருக்கை மீன், கொழுத்த மடவை, தொகுத்த கிளி, குமிளா, மாசினி, செங்கண்ணன், உறுகிழாத்தி,காலை, பாலை ஒங்கு திரளி, வச்சிரம்,. ழடகத்துடன், சூடை, செப்பலி உற்ற நெடுவால் உடகம், பறவை, யுறவி, குளக்கன், தோகை, பருந்து வாயன், மட்டிமீன், பாரக்கெண்டை, தடியன், சீலா, பாரக்கத்தலை, யாரல் மீன், கறுவிக் கரையில் வாழைகள் ஒதுக்கிக் கதித்துக் குதித்துப் பாயவே கங்கையாறு பெருகிவாரகாட்சி பாரும் பள்ளீரே.” தாவு கெளிறு, வாரால், ஆரல், தகுவெள் ளாரல், தும்பையன், சாலுமாம் பழக்கெளிறு, சின்னத் தாளங், கறுத்த கெளிற்று மீன் வாவு கருங்கண் வாளை, பவள வாளை, ழக்கன் வாளை, கோ வஞ்சி, கடியன், பொதியன், கெளிறு, வவ்வால், வெள்ளை வவ்வால் மீன், ஓவினெடிய வாயன், மடவை, யுரிய மணலைக், கூரலோ(டு) ஓடும் பூனைக்கண் கெளிறு, வயலி னுதிக்குங் காணி யாளனும் “பூவின் றடத்தில் வயலில் பாயப் புறத்துப் பாயப் பாயவே பொருதுமா வலிகங்கை வார புதுமைபாரும் பள்ளீரே” “திருக்கை, புலியன் திருக்கை, யாரல் திருக்கை, கள்ளத் திருக்கை மீன், சிவந்த திருக்கை, சட்டித் தலையன், சீறுந் திருக்கை, வெட்டியான், தருக்குங் குறிஞ்சித் திருக்கை, கருமை தயங்கிறாலொடு, வெள்ளிறால், தண்டைச் சுறவு, மொய்ழறல் கிளை தக்கன் பாறைக், கல்லிறால், உருக்கழடைய கெண்டைக், காரல், ஊர்த்த வெள்ளைவாற் றிருக்கைமீன், ஒலைவாலன், கருங்கண் ணாளன் ஊரிற் பெரிய மீனெலாம் “வருக்கமுடைய பூகராசியின் மடைத்தலை தத்திப் பாயவே மாவலி கங்கை பெருகிவார வளமை பாரும் பள்ளீரே.” கதிரைமலைப்பள்ளு எனும் நூலிலும், திருக்கைக் கலியாணம் என்னும் நூலிலும் இதுபோலவே மீன்வகைகள் குறிக்கப்படுகின்றன. அவையும் ஏறக்குறைய மேற்கூறிய மீன்களின் பெயரையே கூறுகிற படியால், அந்நூற் செய்யுள்களை ஈண்டுக் காட்டவில்லை. திருக்கைக் கலியாணம் என்னும் சிறு நூல், திருக்கை என்னும் ஒருவகை மீனுக்குத் திருமணம் நடந்த போது, அத்திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்ட மீன் வகைகளை எல்லாம் குறிக்கின்றது. மேலே காட்டிய பள்ளுப் பிரபந்தச் செய்யுள்களின் கருத்துப்படி, கீழ்க்கண்ட மீன்களின் பெயர்களை அறிகிறோம். அவை: பரவை, குரவை, உழுவை, அயரை, கெண்டை, கெளிறு, வரால், திருக்கை, இறால், சுறா, மத்தி, உல்லம், மலங்கு, கலவாய், வாளை, வஞ்சிரம், மட்டி, கத்தலை, ஆரல், வவ்வால், அயிரை முதலியன. இவைமட்டுந்தான் எனக் கருதவேண்டா. செய்யுள்களில் கூறப்பட்ட இவை, மீன்வகை களின் சில பொதுப்பெயர்களே. கடலிற்சென்று மீன்பிடிக்கும் தொழிலிற் பழகியவர்களைக் கேட்டபோது, அவர்கள் ஒவ்வொரு மீன்இனத்திலும் பல உட்பிரிவுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கூறிய மீன்வகைகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் ஈண்டுக் குறிப்பிடுவது அமைவுடைத்து. அவையாவன:- இறால் : இது இறவு எனவும் கூறப்படும். “பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்பதி” என்றார் சம்பந்தர். இதன் இனத்தைச் சேர்ந்தவை வருமாறு: போர் இறால், மோட்டிறால், நெட்டிறால், துள்ளிறால், சிங்க இறால், கல்இறால், பாசிறால், பேயிறால், வெள்ளிறால், சிவப்பிறால், வலிச்சிறால். இவை அமாவாசையில் தோல் உரிக்குமாம். கெளுத்தி : வகையைச் சேர்ந்தவை. (கெளுத்தி, கெழுத்தி என்றும் வழங்கும்) பொருகெழுத்தி, இறுங்கெழுத்தி, நெடுமாங் கெழுத்தி, கருங்கெழுந்தி, உண்டைக்கெழுத்தி, ஈசாங்கெழுத்தி, வெள்ளைக்கெழுத்தி. சுறா: இது மகரம் என வழங்கப்படுகிறது. இதன் வகை: கொம்பன் சுறா, பால்சுறா, குரங்கன்சுறா, செஞ்சுறா, கோம ராஸ்சுறா, கருமுளிசுறா முதலியன. கவலைமீன்: கொடகவலை, செல்கவலை, ஒலைகவலை, தொணலைக்கவலை. உல்லம்: “உள்ளத்தை விற்று உல்லத்தை உண்,” என்று இம்மீனைப்பற்றி ஒரு பழமொழி வழங்குவதாகக் கூறுகிறார்கள். வஞ்சிரம், மாவுலாசி, கோல்மாவுலாசி, வெள்ளரா, படுலஞ்சிரம் முதலியவை இதன் இனத்தைச் சார்ந்தவையாம். கோலா: இதன் வகை : பருவகோலா, சப்பைக் கோலா, தாக் கோலா அல்லது பறவைக்கோலா (இது பறக்குமாம்), பாம் பன்கோலா, கருவேல்கோலா, மயில்கோலா. இந்த மீன்களுக்கு வாயில் நீண்ட கொம்பு உண்டாம். வெளவால்மீன்: கறுப்பு வெளவால், வெள்ளை வெளவால், மோலாசு வெளவால். திருக்கைமீன்: இந்த மீன்களுக்கு வால் கயிறுவோல் நீண்டிருக்கும். வாலில் முட்கள் உண்டு. இந்த வாலினால் அடித்தால், அடியுண்டவர் சதை பிய்ந்துவிடும். இதன் வகைகள்: பாஞ்சாலந் திருக்கை, புள்ளித்திருக்கை, குருவித்திருக்கை, மட்டைத்திருக்கை, செம்மந்திருக்கை, சக்கவாளத்திருக்கை, கொம்பன் திருக்கை, திமிலத் திருக்கை, (இதன் உடலில் மின்சார சக்தி உண்டு. ஆகவே, இதைத் தொட்டால், மின்சாரத்தைத் தொட்டால் இழுப்பதுபோல சிவுக்கென்று இழுக்கும்.) இந்த மீன் பெயரால், “திருக்கைக் கலியாணம்” என்னும் ஒரு சிறு நூல் உண்டு. வாளை : இது கடலிலும் உண்டு; நன்னீர் உள்ள நீர்நிலைகளிலும் உண்டு. இதைப்பற்றித் தமிழ் இலக்கியங்களில் அடிக்கடி கூறப் படுவதைக் காண்கிறோம். தட்டையாய் நீண்டிருக்கும், “வாளைமீன் உள்ளன் தலைப்படல் ... ... ... துஞ்சூமன் கண்டகனா,” என்பது திரி கடுகம். நீர்நிலைகளில் சிறுமீன்களை உண்டு வாழ்கிற உள்ளன் பறவை (இது உள்ளான் என்றும் வழங்கப்பெறும்.) அதைவிட உருவத்தில் பெரிய வாளைமீனைப் பிடித்து உண்ண முடியாது என்பது இதன் கருத்து. இதன்வகை: சொட்டை வாளை, கருவாளை, பவளவாளை, மூக்கன்வாளை, பன்றிவாளை. ஏனைய மீன்வகைகளின் உட்பிரிவுப் பெயர்களை, பட்டினவர் என்றும் பரதவர் என்றும் கூறப்படுகிற நெய்தல் நிலமிக்களிடமிருந்து அறியலாம். சென்னையில், அரசாங்க மீன்காட்சிச்சாலை பேர்போனது. இத்தகைய மீன்காட்சிச்சாலை உலகத்திலே வேறெங்கும் கிடையாது என்று பெருமையாகப் பேசப்படுவது. இந்தக் கண்காட்சிச்சாலை, சென்ற உலகயுத்தம் காரணமாக மூடப்பட்டிருக்கிறது. மீண்டும் அக் காட்சிச்சாலையை அரசியலார் திறப்பார்களானால், அங்குப் பலவித மீன்களையும் உயிரோடு நேரில் கண்டுகளிக்க வாய்ப்பாகும். நிற்க, மீன் இனங்களின் பெயர்களைத் தமிழ் இலக்கியங்களில் காண்பது போலவே, தாவர இனங்களின் பெயரையும் ஏராளமாகத் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் சாசனங்களிலும் காண்கிறோம். அவற்றையும் ஆராய்வது தமிழர் கடமையாகும். *** 7. அவையடக்கச் செய்யுட்கள்* பழங்காலத்துப் புலவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களிலே அவை யடக்கம் கூறியுள்ளனர். பழங்காலத்துப் புலவர்கள் புதிதாக நூல்களை எழுதுவார்களானால், அந்நூல்களைப் புலவர் அரங்கத்தில் படித்துக காட்டிப் புலவர்களின் நன்மதிப்பைப் பெறவேண்டியது அக்காலத்து வழக்கம். அதற்கு நூல் அரங்கேற்றம் என்பது பெயர். அரங்கேற்றம் செய்யப்படாத நூல்களை அக்காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வ தில்லை. அரங்கேற்ற அவையிலே நூலாசிரியர் தாம் எழுதிய நூலைப் படித்துக் காட்டுவார். அந்நூலில் ஏதேனுங் குற்றங் குறைகள் இருக்குமானால் அவையிலுள்ள புலவர்கள் அக்குற்றங் குறைகளை எடுத்துக் காட்டுவார்கள். அவைப்புலவர் கூறுகிற குற்றங்களுக்கு நூலாசிரியர் தகுந்த விடை கூறி அவர்களுடைய ஐயங்களைப் போக்கவேண்டும். அரங்கேற்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகுதான் அந்நூல் உலகத்தில் உலாவத் தொடங்கும். நூலை அரங்கேற்றும்போது நூலாசிரியர் அவையடக்கம் கூறுவது மரபு: அதனால்தான் பழைய நூல்களிலே அவையடக்கச் செய்யுட்கள் காணப்படுகின்றன. இந்தக் காலத்தில் நூலாசிரியர்கள் தங்களுடைய நூல்களை அரங் கேற்றுவதில்லை. ஆகவே அவையடக்கங் கூறுவது இல்லை. அரங் கேற்றத்துக்கு மாறாக நூல் மதிப்புரை எழுதும் வழக்கம் இப்போது இருந்துவருகிறது. திருத்தக்க தேவர், தோலாமொழித்தேவர், கம்பர், சேக்கிழார். புத்த மித்திரனார், புகழேந்திப்புலவர், அமிதசாகரர், குணவீரபண்டிதர், கச்சி யப்ப முனிவர். புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் முதலான பெரும் புலவர்களும் தத்தம் நூல்களிலே அவையடக்கங் கூறியுள்ளனர். அவர் கூறியுள்ள அவையடக்கச் செய்யுட்களையெல்லாம் ஒன்றாகத் தொகுத்துப் படிப்போமானால் அவை ஒரு தனி இலக்கியமாக அமைந்து இன்பந்த துருவதைக் காணலாம். இங்குப் பழங்காலத்துப் புலவர் சிலருடைய அவையடக்கச் செய்யுட்களைக் காட்டுவோம். கம்பர்: கல்வியிற் பெரியாராகிய கம்பர் தம்முடைய இராமா யணத்தில் அவையடக்கங் கூறியுள்ளார். அச்செய்யுட்களாவன: “ஓசைபெற் றுயர் பாற்கடல் உற்றுஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசைபற்றி அறையுலுற்றேன் மற்றவ் ஏசில் கொற்றத்து இராமன்கதையரோ” (பூசை - பூனை) “வையம் என்னை இகழவும் மாசுஎனக்கு எய்தவும் இயம்புவது யாதெனில் பொய்யில் கேள்விப் புலமையோர் புகல் தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே” “முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவன் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ” சேக்கிழார்: பெரியபுராணம் பாடிய சேக்கிழார் சுவாமிகள் கூறுகிற அவையடக்கம் இவை: “தெரிவரும் பெருமைத் திருத்தொண்டர்தம் பொருவருஞ்சீர் புகலலுற்றேன் முற்றப் பெருகுதண்கடல் ஊற்றுள் பெருநசை ஒருசுணங்கனை ஒக்குந் தகைமையயேன்” திருத்தக்கதேவர்: சீவக சிந்தாமணி இயற்றிய திருத்தக்கதேவர் கூறுகிற அவையடக்கம் இவை: “முந்நீர்ப் பிறந்த பவழத்தோடு சங்கும் முததும் அந்நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்? இந்நீர என்கொல் பழுதாயினும் கொள்பவன்றே பொய்ந்நீர அல்லாப் பொருளால் விண்புகுதும் என்பார்” கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டால் நற்பா லழியும் நகைவெண்மணி போல்நி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யிற்க ழூஉவிப் பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமைமிக்கார். தோலாமொழித்தேவர் சூளாமணி காவியம் இயற்றிய தோலாமொழித்தேவர் கூறம் அவையடக்கம்: செங்கண் நெடியான் திறம்பேசிய சிந்தை செய்த நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கள் முன்னர் அங்கண் விசும்பின் இருள்போழ்ந்த கல்வா னெழுந்த திங்கள் மறுவும் சிலர்கைதொழச் செல்லு மன்றே பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தைப் பாடியவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி. இவர் இந்நூலிலே அவை யடக்கங் கூறுகிறார். பெரும் புலவர் சபையிலே நான் கவிபாடுவது சூரியன் முன் மின்மினிப்பூச்சி ஒளிவிடுவது போன்றிருக்கிறது என்று கூறுகிறார். அளந்தபேர் அறிவி னோங்கும் ஆசிலா சிரியர் முன்னம் தளர்ந்தசிற் றறிவேன் நின்று தமிழ்கவி சாற்றுமாறு வளர்ந்ததீம் புவனம் முற்றும் வந்தபேர் இருளை ஒட்டி விளங்கிய பரிதி முன்னர் மின்மினி விளங்கல் போலும். உயரமான மலையின் உச்சியில் உள்ள மலைத்தேனை உண்பதற்குக் காலில்லாத முடவன் விரும்பியது போன்ற இருக்கிறது நான் இப்புராணத்தைக்கூற முற்பட்டது என்று கூறுகிறார். அவைநடு வோங்கும் தெய்வ அகத்தியன் முன்னஞ் சொன்ன கவிபொதி கதையை யானும் தமிழ்செய்வேன் என்கை காணில் புவிமிசை விசும்பில் நீடும் பொருப்பிடை முடவன் ஏறிச் சுவைதரு தேனை யுண்ண எண்ணுவான் துணிதல் போலும். நீர்வேட்கை கொண்ட நாய் பெரிய கடல் நீரை நக்கிக்குடிக்க ஆசைப் பட்டது போன்றது நான் இந்தப்புராணம் பாட முற்பட்ட என்று கூறுகிறார். ஏய பத்தி முனிவன் இயம்பிய சேய சொக்கன் திருவிளை யாடலைக் காய்ப சிக்குக் கடலைக் குடிக்குமோர் நாயை யொக்கும் தமியேன் நவிலுதல்: குழந்தையின் மழலைச் சொற்களைத் தாய் தந்தையர் விரும்பிக் கேட்பதுபோல பேதையாகிய என்னுடைய சொல்லையும் அறிஞர்கள் விரும்பிக்கேட்பார்கள் என்று கூறுகிறார். ஓதுபாலர் மழலை யுரையையும் தாதை தாயர் தயாவுறக் கேட்டெனப் பேதைஎன்புன் மொழிபெரு மான் புகழ் ஆதலால்நல் லறிஞர் வியப்பரே! பரஞ்சோதி முனிவர்: புலியூர் நம்பிக்குப்பிறகு திருவிளையாடற்புராணம் பாடியவர் பரஞ்சோதி முனிவர். இவர் இவ்வாறு அவையடக்கங் கூறுகிறார்: இறையனார் பாடிய செய்யுளில் கடைச் சங்கப் புலவர் குற்றங்கண்டார் என்றால் வெள்ளறிவுடைய என் பாடலிலும் குற்றங்களை எளிதில் காண்பார்கள் புலவர்கள். பாலில் உள்ள நீரைப் பிரித்துப் பாலை மட்டும் உண்கிற அன்னப்பறவையைப் போல, இந்நூலிலுள்ள குற்றங்களை நீக்கிக் குணங்களைக் கொள்க என்று கூறுகிறார். நாயகன் கவிக்குங் குற்றம் நாட்டிய கழக மாந்தர் மேயவத் தலத்தி னோர்க்கென் வெள்ளறி வுரையில் குற்றம் ஆயுமா றறிரதன் றேனும் நீர்பிரித் தன்னம் உண்ணும் தூயதீம் பால்போற் கொள்கசுந்தரன் சரிதந் தன்னை! கடல் நீரைப் பருகிய மேகமானது உப்பை நீக்கி நன்னீராகப் பொழிவதுபோல, கற்றறிவுடையnhர் இந்நூலின் குற்றத்தை நீக்கி நன்மையைக் கொள்வாராக என்றுங் கூறுகிறார். பாயவாரியுள் துவர்கெடுத்து உலகெலாம் பருகத் தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர் ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல் கச்சியப்ப முனிவர்: கந்தபுராணம் பாடியவர் கச்சியப்ப முனிவர். இவர் தம்முடைய நூலில் அவையடக்கம் கூறுகிறார். கற்றறிந்த புலவர் சபையில் நான் அமர்ந்து இந்நூலைக் கூறுவது. சூரியன் பக்கத்தில் விண்மீன் (நட்சத்திரம்) இருந்து வெளிச்சம்கொடுக்க ஆசைப்படுவது போன்று இருக்கிறது என்று கூறுகிறார். ஆன சொற்றமிழ் வல்ல அறிஞர் முன் யானும் இக்கதை கூறுதற் கெண்ணுதல் வான கத்தெழும் வான்கதி ரோன்புடை மீன்இ மைப்ப விரும்பிய போலுமால் சிவப்பிரகாச சுவாமிகள்: சீகாளத்திப் புராணம் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள். குழந்தைகள் பேசுகிற பொருளற்ற மழலைச் சொல்லைப் பெரியவர்கள் பழிக்க மாட்டார்கள். அதுபோலவே, நுண்ணறிவு இல்லாத என்னுடைய போலிச் செய்யுளையும் அறிஞர்கள் இகழமாட்டார்கள். ஏற்றுக் கொள்வார்கள் என்று அவையடக்கங் கூறுகிறார். நூற்றுறை பயின்று பெற்ற நுண்ணுணர் வுடையன் அல்லேன் சாற்றும் இப்போலிச் செய்யுள் சான்றவர் இகழ்தல் செய்யார் மேற்படும் உணர்வின் மூத்தோர் மென்னடைச் சிறுவர் செவ்வாய்ப் பால்கடி கமழும் புன்சொல் பழிப்பனர் உலகில் உண்டோ, ஆனந்தக்கூத்தர்: வீரைநகர் ஆனந்தக்கூத்தர் திருக்காளத்திப் புராணம் பாடியவர். இவர் தம்முடைய அவையடக்கத்தில், ‘பாம்பின் வாயிலிருந்து உமிழப் பட்டது மாணிக்கக்கல் என்பதற்காக மாணிக்கக்கல்லைத் தள்ளிவிடு வோர் இலர்; அதுபோல கற்றறியாத சிறியேன் சொல்லிய காளத்திப் பெருமான் புராணத்தை உலகோர் தள்ளிவிடாமல் ஏற்றுக்கொள் வார்கள்’ என்று கூறுகிறார். தீயவிட அரவுமிழ்ந்த செஞ்சுடர் மாணிக்கம் அதன் வாயினில் வந் ததுஎன்னத் தள்ளுவரோ, மகிழ்ந்து கொள்வர் ஆயதனால், தூயதமிழ் அறியாத சிறியேன் சொல் நாயகன்நன் சரிதமென் நயந்துகொள்வர் நல்லோரே, உமாபதி சிவாசாரியர்: கொற்றவன் குடி உமாபதி சிவாசாரியர் சேக்கிழார் சுவாமிகள் புராணம் பாடினார். இந்தப்புராணத்துக்குத் திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் பெயரும் உண்டு. சேக்கிழார் புராணத்தில் இவர் கூறுகிற அவையடக்கச் செய்யுட்கள் இவை: ஊர்க்கடலை யிவனெனவந் துதித்தநான் ஒங்குதமிழ் நூற்கடலைக்கரைகண்டு நுவல நினைக்குமது திருப் பாற்கடலைச் சிற்றெறும்பு பருக நினைப்பது போலும் நீர்க்கடல் சூழ் மண்ணுலகை நிறுக்க நினைக்கும தொக்கும். (ஊர்க்கடலை= சாம்பற்புழுதி, தமிழ்நூற்கடல் = பெரிய புராணம்) தேவுடனே கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாம் கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர் புகுதும் பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால். அமிதசாகரர்: யாப்பருங்கலக் காரிகை என்னும் செய்யுளிலக்கண நூலை இயற்றிய அமிதசாகரர் கூறுகிற அவையடக்கம் இவை. சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான் மொழிந்த பருப்பொருள் தானும் விழுப்பொருளாம் பனிமாலி....... பொருப்பகம் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாம் இருக்குமென் றிவ்வா நுரைக்கு மன்றோ இவ்விரு நிலமே தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீர் அருவிக் கானார் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ்நூல் யானாந டாத்துகின்றே னென்றெனக்கே நகைதருமால் ஆனா அறிவினவர்கட்கு என்னாங்கொல் என் ஆதரவே. புத்தமித்திரனார்: வீரசோழிய இலக்கண நூலை இயற்றிய புத்தமித்திரனார் கூறும் அவையடக்கத்தைப் பாருங்கள். ஆயுங் குணத்துஅவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பிய தண்தமிழ் ஈங்குரைக்க நீயும் உளையோ எனில், கருடன்சென்ற நீள்விசும்பில் ஈயும் றக்கும் இதற்கென்கொலோசொல்லும் ஏந்திழையே. கண்டிங்கு நாளும் கடல்வையம் காதல் செய்யும் வெண்திங்கள் தானும் விமலம் தனக்கில்ல தன்றே கொண்டென் சொலெல்லாம் குணனேனயெனக் கூறுகென்னேன் உண்டிங்கோர் குற்றம் எனில்யானும் ஒட்டாமை யுண்டோ புகழேந்திப்புலவர் வெண்பா பாடுவதில் புகழ்பெற்ற புகழேந்திப் புலவர் தாம் இயற்றிய நளவெண்பா என்னும் நூலுக்கு அவையடக்கம் கூறுவது காண்க. வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் பைந்தொடையில் தேன்பாடும் தார்நளன்தன் தெய்வத் திருக்தையை யான்பாட லுற்ற இது. (வேழம் = யானை. வேரி = வாசனை. தந்து = நூல்) அரிச்சந்திரவெண்பா அரிச்சந்திரவெண்பா பாடிய புலவர் பெயர் தெரியவில்லை அவர் அவையடக்கம் இவ்வாறு கூறுகிறார். கைத்தலங்க ளில்லான் கடைந்து பயோததியைப் புத்தமிழ்தம் தானளித்தல் போல்மணிற்சீர் - வைத்த அரிச்சந் திரன்சரிதை யாய்ந்துணர்வொன் றில்லேன் யீதரட்டிச் சொலுமிச் செயல். (கைத்தலங்கள் = கைகள். பயோததி = பாற்கடல்) கற்றுணர்ந்த மேலோர் கருதார்கள் இந்நூலில் குற்றமுள வேனுமிது கொள்வரால் - முற்றுலகில் நெல்லுக் குமியுண்டு. நீர்க்கு நுரையுண்டு, புல்லிதழ் பூவிற்கு முண்டு. வீரகவிராயர் அரிச்சந்திரபுராணம் பாடிய நல்லூர் வீரகவிராயர் கூறும் அவை யடக்கம் இவை. நீர்கொள்வார் பாலோடு நேர்உற்றால், பதர்கொள்வார் நெல்லோ டுற்றால், நார்கொள்வார் பூவுற்றால், வேர்கொள்வார் அதிற்சிறிது நறையுண் டாயின் சீர்கொள்வார் புன்சொல்லும் செஞ்சொல்லும் சேர்ந்த தொன்றில், சேரப் புன்சொல் ஆர்கொள்வார் என்பதுசற் றறியாமல் சிறியேன்நா வசைக்கின் றேனே. (வேர்= வெட்டிவேர், விலாமிச்சைவேர் முதலியன, சேர = ஒருங்கே) புருடனார்க் கேந்திழையார் பொருள்உரைப்ப தெனப், பிறர்தம் பொருளே வவ்வும் திருடனார் மேலவர்க் கறம்உரைப்ப தெனச்சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க் குப்பறவை கற்பிப்ப தென, அனந்தம் கண்ணுள் ளார்க்குக் குருடனார் வழிகாட்டல் எனப், பெரியோர் முன்சிறியேன் கூறல் உற்றேன்; (தெள்கு = கொச, பறவை= பறப்பது) அம்பிகாபதி அம்பிகாபதி கோவை பாடிய அம்பிகாபதிப்புலவர் கூறும் அவையடக்கத்தைப் பாருங்கள். அருளம்பி காபதி பொன்னடித் தாமரை சூட்டியகப் பொருளம்பி காபதி கம்புனைந் தேனிப்பு னைந்தசெஞ்சொல் தெருளம் புலவர்முன் செப்பிய போதுள தப்புரையார் மருளுங் குழவி மழலைக்கென்னோ பொருளா மற்றிங் கென்றே. (கம் = தலை. தப்பு = தவறு) யசோதர காவியம் யசோதர காவிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் அவையடக்கம் கூறுவதைப் பாருங்கள். உள்வி ரிந்த புகைக்கொடி உண்டென எள்ளு கின்றனர் இல்லை விளக்கினை. உள்ளு கின்ற பொருட்டிறம் ஒர்பவர் கொள்வர் எம்உரை கூறுதற் பாலதே. குணவீரபண்டிதர் நேமிநாதம் என்னும் இலக்கண நூலை எழுதிய குணவீரபண்டிதர் அவையடக்கங் கூறுகிறார். உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்(டு) எண்ண அமுதான திதல்லையோ?-மண்ணின்மேல் நல்லாரைச் சேரதலால் நாசொன்ன புன்சொல்லும் எல்லாரும் கொளவர் ஈங்கு. ஜீவசம்போதனை ஜீவசம்போதனை நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் இந்நூலில். மட்டவிழும் பங்கயங்கள் பூத்த மடுவகத்தே கொட்டிகளும் தோடவிழ்ந்தால் போலதே - விட்டநிறை மாண்கவிதை மாப்புலவோர்த் தொல்லவையுள் மாணாதே யான்கவிதை செய்யும் இது. என்று அடக்கங் கூறுகிறார். உமறுப்புலவர் சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவரின் அவையடக்கச் செய்யுட்கள் இவை. படித்தலத் தெழுகடல் குலகிரி நிலைபதற எடுத்து வீசிய சண்டமாருதத் தினுக் கெதிரே மிடித்துநொந்த சிற்றெறும்புஒரு மூச்சு விட்டதுபோல் வடித்த செந்தமிழ்ப் புலவர்முன் யான் சொலுமாறே! அடியடித் தொறம் வழுவலால் விதிவிலக்கறியேன் படிபடித்த செஞ்சொற் புலவோர் முனம் பகர்தல் இடியிடித்திடு மாரவாரத்தினுக் கெதிரோர் நொடிநொடிப்பது போலு மொத்திருந்த தென்நூலே இன்னும் அவையடக்கச் செய்யுட்கள் பல இருக்கின்றன. இடம் பெருகும் என்றஞ்சி அவற்றையெல்லாம் இங்குக் காட்டாமல் விடுகிறேன். அவையடக்கங் கூறும் வழக்கம் அற்றுப்போன இக்காலத்தில், பழைய அவையடக்கச் செய்யுட்களைப் படிக்கும் போது சுவையாக இருக்கிறதல்லவா? ***