சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 3 அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) அணைந்த விளக்கு (அரசியல், சமூக, சீர்திருத்த நாடகம்) ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 3 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 208 = 216 படிகள் : 1000 விலை : உரு. 135/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந்நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளி யிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப் படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள் வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக்காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல்களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறை களும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் பண் பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவுபடுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியை யும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளை யும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) வாழ்த்துரை 4 ஆய்வுரை 5 அணிந்துரை 7 சிறப்புரை 10 முன்னுரை 14 சாமி. சிதப்பரனாரின் அணைந்த விளக்கு 19 Foreword by the Authour to “Anaintha Vilaku” 28 STORY OF “ANAINTHA VILAKU” 33 1. சிந்திய கண்மலர் 39 2. கருகிய கஞ்சம் 47 3. ஆச்சிரியப் பேரிருள் 52 4. பாலைவன மழை 65 5. சொன்னதே சட்டம் 73 6. பூனை கையிற் கிளி 81 7. குற்றமுள்ள நெஞ்சு 91 8. கசந்த வாழ்வு 100 9. ஊர் வாய்க்கு மூடியில்லை 109 தமிழறிஞர் சாமி சிதம்பரனார் (1900 - 1961) 118 அணைந்த விளக்கு (அரசியல், சமூக, சீர்திருத்த நாடகம்) முன்னுரை 139 அணைந்த விளக்கு 140 அணிந்துரை 143 அணைந்த விளக்கு 148 தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் எழுதிய அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) தமிழ்ப் பேரறிஞர்களின் பாராட்டுகள் 150 அணைந்த விளக்கு 153 அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) (1944) உலகெலாம் போற்றும் உயர்சோழ நாட்டில் நிலவிய சீர்கரந்தை நீள்நகர வீதியிலே செங்கதிரோன் தோன்றிச் சிவந்த கதிர்பரப்பி எங்குவிழி வைத்தாலும் எப்பொருளும் பொன்மயமாய்க் காணச்செய் காலையில் காரிகையார் கண்விழித்து பூண்திருத்தி வேலைகளைச் செய்கின்ற போதில் நடந்த நிகழ்ச்சியிது; --நாட்பலவாய் மக்கள் உடம்போ டுயிர்நடுங்கி உறங்காமல் வாழ்ந்த கொடுந்துயர்க்குக் காரணமாய் வாழ்ந்த கொலைஞன் பிடிபட்ட தால்மகிழ்ந்தே பேசினார் இவைகளையே வாழ்த்துரை டாக்டர் கலைஞர் மாண்புமிகு மு.கருணாநிதி தமிழக முதல்வர். தமிழறிஞர் கவிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலாசிய அணைந்த விளக்கு பெயரளவில் அணைந்த விளக்காக இருந்தாலும், உண்மையில் இது அணையா விளக்கு என்பதை இதனைப் படிக்கின்ற அனைவரும் நன்கு உணர்வார்கள். இன்றைய தலைமுறையினர்க்குச் சாமி.சிதம் பரனார் அவர்களின் பெயர் அவ்வளவாக அறிமுகமாகியிருக்க நியாயமில்லை. தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அந்தக் காலத்திலேயே அருமையான ஒரு வரலாற்று நூலை தமிழர் தலைவர் என்ற தலைப்பில் அரிய இலக்கியமாக ஆக்கியவர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் ஆவார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய முதல் கவிதை நூல் வெளிவந்தபோது, அதற்கு அணிந்துரை வழங்கிப் புரட்சிக் கவிஞரையே அறிமுகப்படுத்தியவர் கவிஞர் சிதம்பரனார் ஆவார். அவரும் அவர்தம் துணைவியார் திருமதி சிவகாமி சிதம்பரனாரும், கலப்புத் திருமணம் புரிந்து, அந்தக் காலத்தி லேயே புரட்சிகரமான இலட்சியத் தம்பதிகளாக பகுத்தறிவுப் பாசறையில் விளங்கியவர்கள். சங்க இலக்கியத்திற்கு நிகரான இந்தப் புதுமை இலக்கியத்தை இன்றையத் தமிழுலகம் நல்லாதரவு நல்கி வரவேற்கும் என்று திடமாக நம்புகின்றேன். ஆய்வுரை மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை ஆசிரியர் சாமி.சிதம்பரனார் கலைதேருள்ளம் வாய்ந்தவர். தம் நுண்ணறிவால் நூல் பல ஆய்ந்து சில நூல்களுக்கு உரை யெழுதியதுடன் நல்ல கருத்துகளடங்கிய நூல் சிலவற்றைத் தாமே இயற்றியும் வெளியிட்டவர். அவர்தம் புலமை போற்று தற்குரியது. அவர் எழுதி வைத்துச் சென்ற நூல்களுள் இதுகாறும் அச்சேறாக நூல்களுள் அணைந்த விளக்கு என்னும் இச் செய்யுள் நூலும் ஒன்று. இதனை அவர் தம் இல்லத்தரசியார் திருவாட்டியார் சிவகாமியம்மையார் ஒல்லும் வகை முயன்று வெளியிட்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்க செயலாகும். நூலின் செய்யுள் நடை கற்பார்க்கு இன்பம் பயத்தற்குரிய தாய் அமைந்துள்ளது. ஆசிரியரே இந்நூலைப் பதிப்பித்திருந் தால், நூல் பின்னும் பெருஞ்சிறப்பெய்தியிருக்கும்; பதிப்பு முறை மேலும் செப்பமுற்றிருக்கும். இச்சிறு காப்பியத்திற்குக் கருவாயமைந்த கதை, ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து மறைந்த குண்டல கேசியின் கதையாகும். மறைந்த நூலுக்கு மறு வாழ்வளிக்க விழைந்து ஆசிரியர் மேற்கொண்ட நன் முயற்சியின் பயனே இந்நூல். செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ச் செம்மக்கள் இதனை ஒல்லும் வகை உதவிப் பரவச்செய்வதைத் தம் கடனாகக் கொள்வார்களாயின், அடுத்து வரும் பதிப்பு பின்னும் சிறப் செய்துவதுடன், மறைந்த கருந்தனத்தை மீண்டும் பெற்று மகிழ்வது போன்ற இன்பத்தை இந்நூல் வாயிலாகத் தமிழகம் பெறும் என்பது உறுதி. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் புகழை இச்சிறுகாப்பியம் குன்றின் மீதிட்ட விளக்குப் போலக் குலவச் செய்யும் என்பது எனது கருத்து. வாழ்க சிதம்பரனார் தம் வளர்புக ழென வாழ்த்து கின்றேன்! அணிந்துரை உயர்திரு நெ.து.சுந்தரவடிவேலு M.A.,L.T.அவர்கள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் எளிய இனிய தமிழ் உரைநடை நூல்கள் பல இயற்றி அழியாப்புகழ் அடைந்தவர் சாமி சிதம்பரனார். இவர்களுடைய கவிதை நூல்களுள் ஒன்றாகிய அணைந்த விளக்கு இப்போழுது மீண்டும் சுடர்விடும் பேறு பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரிய தேயாகும். பழைய குண்டலகேசி காப்பியத்தைத் தழுவிய கதைச் செய்யுளாய் அமைந்தது அணைந்த விளக்கு. ஆசிரியர் 1. சிந்திய கண்மலர்; 2. கருகிய கஞ்சம்; 3. ஆச்சரியப் பேரிருள்; 4. பாலைவன மழை; 5. சொன்னதே சட்டம்; 6. பூனை கையிற் கிளி; 7. குற்றமுள்ள நெஞ்சு; 8. கசந்த வாழ்வு; 9. ஊர் வாய்க்கு மூடியில்லை என்னும் ஒன்பது தலைப்புகளில் கலிவெண்பா, ஆசிரிய விருத்தம், சிந்து, பஃறொடை வெண்பா; ஆசிரியப்பா முதலிய பல பாவகைகளாலும் இந்நூலை யாத்துள்ளார். சாமி சிதம்பரனார் எளிய இனிய உரைநடையில் மட்டுமே வல்லவர்கள் என்று எண்ணிவந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாய் விளங்குவது இந்நூல். சாமி சிதம்பரனார் தமது வண்ணத் தமிழ் புலமையால் இனிய தமிழ்க்கவிகள் தரவல்லவர் என்பதற்கு அணையா விளக்கம் அணைந்த விளக்கு. அணைந்த விளக்கின் பெருஞ்சிறப்பு முடியரசு தொலைந்து குடியரசு அமைவதேயாகும். அதனினும் பெருஞ் சிறப்பு கள்ளனைக் காதலித்து கணவனாகக் கொண்ட இளவரசி அவனைக் கொன்றபின் அக்குடியரசையும் பொதுவுடைமை அரசாக மாற்ற முனைவதேயாகும். சாமி சிதம்பரனார். செந்தமிழ்ப் பற்றில் சிறந்தவர் என்ப தற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு காதல் மொழியிலும் வரும் கன்னித்தமிழின் புகழேயாகும். எடுத்துக்காட்டு: செந்தமிழ்த் தேனூற்றும் செஞ்சொற் கவியான அந்தச் சிலப்பதிகாரம் அளிக்கின்ற சிந்தாமணியே! சிறந்தமணி மேகலையே! முந்தைத் தமிழ்மறவர் போர்வீரம் முற்றும் இறவாமல் மெய்ப்புலவர் இன்சொல்லாற் செய்த புறநானூறே! புகழ் பதிற்ப்பத்தே என் அகநானூறே! நற்றிணையே! யருஞ்சொற் புகலும் குறுந்தொகையே! ஐங்குறு நூறே! நல் பரிபாடலே! தமிழர் பண்டைநாள் மாண்பும் அரியதமிழ் நாட்டின் அமைந்த நில வளமும் முத்துமுத்தாக முழுதுந் தொடுத்துரைக்கும் பத்துப்பாட்டே! என் பழந்தமிழின் தேன்பெருக்கே! எல்லாப் பொருளும் இதன்பாலுள் விதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று புகல் பொய்யா மொழியார் புகன்ற திருக்குறளின் மெய்யான முப்பொருளே! முத்தமிழின் மெல்லொலியே உன்னாலே யன்றோ உயிர்வாழ்வேன் நானுலகில் மன்னவனே! என்றன் மனம்பறித்த மாருதமே! அணைந்த விளக்கின் ஆசிரியர் தம்முடைய நூலின் தலைவியை இளவரசியை நூல் பலவும் கற்றறிந்தாள். நுட்ப மதியுடையாள் என்று போற்றுகிறார். அப்படிப்பட்டவள் ஆராயாமல் ஒரு கள்ளனைக் காதலிப்பது ஏனோ? நூல் பல கற்றாலும் நுண்ணறிவு பெற்றாலும் காமத்திற்குக் கண் இல்லை போலும்! அதன் விளைவாகப் பட்டறிந்தே பகுத்தறிவாளியும் பயன்பெற வேண்டும் போலும். எளிய இனிய தமிழ்ச்செய்யுள் இயற்றுதலிலும் வல்லவ ராய் விளங்கும் சாமி சிதரம்பரனார் புதிய உவமைகளைப் புகல் வதிலும் காலத்தை எதிரொலி செய்கிறார் என்பது தெளிவு. ஓர் எடுத்துக்காட்டு : கையால் திருகியதும் கட்டுண்ட தண்ணீரைப் பெய்யும் குழாய்போலப் பெண்ணமுது தன்கையைக் கண்களிலே வைத்துக் கசக்கியதும் தாரையாய் மண்மீது நீர்சிந்த நின்று மனங்குழைந்தாள். மறைந்த சாமி.சிதம்பரனார் மறையாத தமிழ்ப் புகழுக்கு எப்பொழுதும் உரியவர். இந்த அணைந்த விளக்கு. அதற்கு ஓர் அணையா விளக்கு ஆவதாக! சிறப்புரை டாக்டர்சி.பாலசுப்பிரமணியன், எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி., தமிழ்த்துணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம். தமிழறிஞர் திரு.சாமி சிதம்பரனார் தமிழிற்கு நிலையான தொண்டுசெய்து மறைந்தவர்; தாம் இயற்றிய தகுதி வாய்ந்த நூற்களின் வாயிலாக இறந்தும் இறவாது வாழ்பவர். பகுத்தறிவுக் கொள்கையுடன், சிறந்த குறிக்கோளோடு தமிழ் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்தவர். அவருடைய எழுதுகோல் தமிழின் பல துறைகளையும் பற்றி நின்றது; பயனுற எழுதியது. அவர்தம் படைப்புக்களில் அவர்தம் அரிய உழைப்பு முயற்சியினையும், உயரிய உண்மையான ஆராய்ச்சிப் போக்கினையும் ஒருங்கே காணலாம். சங்க இலக்யி மாயினும் சரி, இடைக்கால பக்தி இலக்கியமாயினும் சரி பிற்கால இலக்கியமாயினும் சரி, அவர்தம் எழுதுகோல் நடுவு நிலைமையுடன் உண்மைகளை ஆராய்ந்து கண்டது. சிறந்த இலக்கிய ஆசிரியரிடம் குடி கொண்டிருக்க வேண்டிய பண்புகள் அனைத்தும் அவர்கள்பால் குறைவற நிரம்பியிருந்தன. அவர்தம் உயரிய உழைப்பும் விழுமிய தொண்டும் தமிழிளைஞர் போற்றி மேற்கொள்ளத் தக்கவையாகும். அறிஞர் திரு. சாமி சிரம்பரனார் அவர்கள் இயற்றி, இது வரை வெளிவராத அணைந்த விளக்கு என்னும் கதைச் செய்யுள் இப்போது வெளிவருகின்றது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் கதையினை அப்படியே எடுத்துக்கொண்டு, பெரும்பாலும் கலிவெண்பாவிலும், சிறுபான்மை சிந்து அசிரிய விருத்தம் ஆசிரியப்பஃறொடை வெண்பா முதலிய யாப்பு நடைகளிலும் ஆசிரியர் இக் கவிதை நூலினை யாத்துள்ளார். நூல், சிந்திய கண்மலர், கருகிய கஞ்சம், ஆச்சரியப் பேரிருள், பாலைவன மழை, சொன்னதே சட்டம், பூனை கையிற் கிளி, குற்றமுள்ள நெஞ்சு, கசந்த வாழ்வு, ஊர் வாய்க்கு மூடி யில்லை என்று ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது இந் நூலினுட் சென்று நயங்கண்டு தெளிவோம். கவிமணி அவர்கள், உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை என்று குயிப்பிட்டிருப்பதற்கேற்ப ஆசிரியர் கவிதை, நூலின் பலவிடங்களிலும் உள்ளத்து உணர்ச்சிகளைத் தெள்ளத் தெளியக் கொண்டு தெளிந்த நீரோட்டம் போல் செல்கின்றது. உணர்ச்சி வேகமும். கற்பனை நயமும், கருத்துவளமும், வடிவச் சிறப்புங்கொண்டு கவிதை வீறார்ந்து நிற்கின்றது. ஆசிரியரின் வருணனைத் திறம், உச்சியிலே கார்மேகம் வாழ உடம்பினிலே பச்சைச் சிவப்பு மயில மஞ்சணிறப் பட்டுடுத்திக் காதிலே தோடணிந்து கையில் வளைதரித்து வீதி விளக்கேபோல் வீசும் பணி பூண்டு மின்னல் கொடிபலவும் மேதினியில் வந்துலவிக் கன்னல் மொழிபெய்து காதற் பயிர் வளர்த்து நின்று நடப்பவென, நேரிழையார் பற்பலரும் ஒன்று குழுமினார். (ப.61) என்று பெண்களை வருணிக்கும் பகுதியால் வெளிப்படு கின்றது. உவமை யழகு, விண்மீன் புடைசூழ வெள்ளை நிலாவீசித் தண்மதியம் ஒன்று தவம்புகுந்து நிற்பதுபோல் காரிகையாள் நின்றுதன் கண்மலர்கள் வீசுவதை வீரனுந் தான்கண்டான் (ப:64) வெப்பத்திற் பட்டுருகும் வெண்ணெயைப் போலுள்ளம் இப்படி நைந்துருகச் செய்தாள், எழிலரசி (ப:66) நீர்புகுந்து பாலுள்ளே நின்று மறைந்ததுபோல் வீரனவன் என்னுள் விரைவாய்க் கலந்துவிட்டான் (ப:89) முதலிய பகுதிகளில் விளக்கமுறுகின்றது. மணமக்களை வாழ்த்தும் மக்கள், காதலர்கள் நீடுழி வாழ்ந்து களிப்புறுக! ஏதும் குறைவின்றி இன்பக் கடல்படிக! மக்கட் பெரும்பேற்றை எய்தி மகிழ்வுடனே எக்காலும் வாழ்க (ப:116) என வாழ்த்துகின்றனர். வாழ்த்தியலில் கவிஞர் மரபைப் போற்றக் காணலாம். இளவரசி சுந்தரனைப் புகழும்போது தமிழ்ப்பெரு நூல்களோடு உவமித்துப் பேசுதல் ஆசிரியர்தம் தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். (ப. 121, 122) பழமொழிகளை ஆசிரியர் இடையிடையே கையாளும்திறம் குற்றமுளார் நெஞ்சு குறுகுறுக்குமாமற்று (ப:126) காமாலைக் கண்ணனுக்குக் கண்டவெலாம் மஞ்சணிறம் (ப:128) என்ற அடிகளால் விளங்கும். திருக்குறளைப் பல விடங்களில் அப்படியே அகழ்ந்தெடுத்து அழகுறக் கையாளுகின்றார் (64, 136) இறுதியில் இளவரசி, மன்றில் உறைவீர்! மதியுடையீர் கேண்மினோ! இன்று முதலாக யானும் இனிய தமிழ்த் தென்றல் வளர்ந்தோங்கத் தெள்ளமுதம் நாடெல்லாம் ஓடுறவே செய்வேன்! உலகெல்லாம் செந்தமிழை நாடும்படிசெய்வேன்! நாளும் இதற்குழைப்பேன்! (ப:146) என்று கூறுவது, ஆசிரியர் கொண்டுள்ள உள்ளக் கிடக்கை யாகும். கவிதை வளம் நிறைந்த எழில் நூல் அணைந்த விளக்கு இதனை வெளியிடும் அன்னையாம் திருமதி சிவகாமி சிதம்பரனார் அவர்கள் தம் ஆருயிர்க் கணவர் நினைவு போற்றி, பண்பு போற்றி, தொண்டுபோற்றி வாழ்பவர். அன்னார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து இடையறாது இயற்றிவருபவர். அவர் தூய பணி வாழ்க, வெல்க என வாழ்த்துவன். தமிழ் கூறு நல்லுலகம் இவ்வினிய கவிதை நூலை வாழ்த்தி வரவேற்று இலக்கியப் பயன் துய்க்குமாக! தமிழகம் சி.பாலசுப்பிரமணியன் சென்னை 29 8.10.1973 முன்னுரை கதைத் தோற்றம் நீண்ட நாளாக எனக்கோர் ஆவல் உண்டு. ஒரு கதைச் செய்யுள் எழுதவேண்டும் என்பதே அது. அந்த ஆவலின் எழுச்சியே அணைந்த விளக்கு, இந்தக் கதை முழுவதும் எனது கற்பனையன்று. பழங்கதையும், எனது கற்பனையும் கலந்துள்ள கதையே இது. இக் கதைக்கு அடிப்படை குண்டலகேசி; அது பழங்கதை. ஐம்பெரும் காப்பியங்கள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பவை. இவற்றுள் குண்டல கேசியும் ஒரு காப்பியம். ஆனால் இத் தமிழ்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை இத் தமிழ்க் காப்பியத்தின் உண்மைக் கதையும் இன்ன தென்று உணரமுடியவில்லை. பாளி மொழியில் உள்ள தேரி காதை என்னும் நூலிலும். தம்ம பாதா; அங்குத்தரநியாகா என்னும் நூல்களிலும் குண்டல கேசியின் கதை கூறப்பட்டிருப்பதாக மொழிகின்றனர். சமணசமய நூலாகிய நீலாகேசி என்னும் நூலில் 286 ஆம் செய்யுளின் உரையிலும் குண்டலகேசியின் கதை கூறப் பட்டிருக்கிறது இராசகிருகத்து மன்னனது அமைச்சனுக்கு ஒரு மகள். அவள் பெயர் பத்திரை. அவள் தக்க பருவமுற்றாள். ஒரு நாள் தன் மாளிகையின் மாடியின் மேல் உலவிக்கொண்டிருந்தாள். அரசனது கொலையாளிகள் ஒரு கட்டழகனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்றனர். அதை அவள் கண்டாள். அவன் மீது காதலுற்றாள். அவன் வழிப்பறி செய்த குற்றத்திற்காக மன்னனால் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவன்; அரசனுடைய புரோகிதன் மகன். அவனையே மணக்கவேண்டும் என்று பத்திரை பிடிவாதம் செய்தாள். அமைச்சன், கொலையாளிகளுக்குக் கைக்கூலி கொடுத்தான், திருடனை உயிர் பிழைக்கச் செய்தான். கள்வனுக்குப் பத்திரையை மணமுடித்துக் கொடுத்தான் திருடனும் பத்திரையும் பலநாள் இன்புற்று வாழ்ந்தனர். ஒருநாள் ஊடலின் போது, பத்திரை, முன்பு நீ கள்வன் அன்றோ என்று கூறினாள். அவன் அவள் தன்னை இகழ்ந்ததாக எண்ணிச் சினங்கொண்டான். ஆயினும் அப்பொழுது அவன் சினத்தை வெளியிடாது மறைத்து வாழ்ந்திருந்தான். ஒருநாள் அவன், பத்திரையிடம் என் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வணங்க, அண்மையிலிருக்கும் மலைமுகட்டிற்குச் செல்கிறேன். நீயும்வருக என்றான் அவளும் உடன்பட்டாள். இருவரும் மலையுச்சியை அடைந்தனர். அடைந்ததும் திருடன், நீ என்னைக் கள்வனென்று இகழ்ந்தாய் அன்றோ! ஆதலால் இன்று உண்னைக் கொல்லப் போகிறேன் உன் வழிபடு தெய்வத்தை வணங்கிகொள் என்றான். அவள் திடுக்குற்றாள். தற்கொல்லியை முற்கொல்ல வேண்டும் என்பதை உள்ளத்தில் எண்ணினாள். அவன் ஆணையை ஏற்றவள் போல் நடித்தாள். உன்னையன்றி எனக்குத் தெய்வ மில்லை; உன்னையே வலம் வந்து வணங்குவேன் என்றாள். அவனை வலம் வருபவள் போல் பின்புறமாக வந்து, அவனைக் கீழே தள்ளிக் கொன்றாள். பின்னர் அவள் உலகை வெறுத்துச் சமண மதத் திற்சேர்ந்து துறவு பூண்டாள். துறவியானவுடன் தலை மயிர் களையப் பட்டது. ஆயினும் மீண்டும் தலைமயிர் முளைத்துச் சுருண்டு காணப்பட்டது. ஆதலால் இவளுக்குக் குண்டலகேசி என்ற பெயர் வழங்கிற்று. குண்டலகேசி யென்றால் சுருண்ட மயிரினை யுடையவள் என்பது பொருள். இதுவே நீலகேசியிற் காணும் கதையாகும். இக்கதையினை, இந் நூலின் கதை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும், முதலிலிருந்து இறுதிவரையிற் பல மாறுதல்களையுடையது. இதன் கதைச் சுருக்கத்தையும் கீழே தருகிறோம். தஞ்சை நகர் அரசன் மகள் கோமளவல்லி. அவளே பட்டத்திளவரசி தமிழ்க் கல்வி நிறைந்தவள். சுந்தரநாதன் என்னும் திருடனைக் கண்டாள்; அவன் மேல் காதல் கொண்டாள். திருடனை அரசன் விசாரித்துக் கொலைத் தண்டனை தந்தான்; கோமளவல்லி அவனையே மணக்கப் பிடிவாதம் செய்தாள்; அரசன் அவனுடைய தண்டனையை மாற்றினான். அவனைச் சேனைத் தலைவன் ஆக்கினான். மதுரை மன்னன் பிரதாபன். அவன் கோமளவல்லியின் பொருட்டு, தஞ்சை நகர் மீது படையெடுத்து வந்தான். சுந்தரநாதன் அவனை எதிர்த்துத் தோல்வியுறச் செய்தான். இவனுடைய வெற்றிக்குப் பரிசாக கேமளவல்லியை மணம் செய்து கொடுத்தான் மன்னன். கள்வனும் இளவரசியும் ஒருநாள் தோட்டத்தில் காதல் மொழிபேசிக் களித்திருந்தனர். இருவரும் தங்கள் காதல் வெளிப் படப் பாடிக்கொண்டிந்தனர், கோமளவல்லி, தன் காதல் மிகுதியால், நீ இன்னும் உன் திருட்டையும், கொலையையும் மறந்துவிடவில்லை என்று பாடினாள், கள்வன் கடுஞ் சினமுற்று, அதை மறைத்துக் கொண்டு, பொய்யன்பு காட்டி வாழ்ந்து வந்தான். கோடை நாள் வந்தது. வெய்யிலின் கொடுமையால் கோமளவல்லி துன்புறுவது கண்டு, பழிதீர்க்க அதுவே பருவம் என்று திருடன் கருதினான். அவளுடன் நீல மலைக்குச் சென்று தங்கினான் ஒருநான் மறைமதி நாளில் இருவரும் ஒரு மலைச் சிகரத்தை அடைந்து உரையாடிக் கொண்டிருந்தனர். பொழுது போயிற்று. கோமளவல்லி கள்வனை உறைவிடத்திற்கு அழைத் தாள். அவன் தன் உள்ளத்தை வெளியிட்டு, உன் வழிபடு தெய்வத்தை வணங்கிக் கொள் என்றான். அவள் நீயே வழிபடு தெய்வம் என்று வலம் வந்தாள். காலம் பார்த்து அவனைப் படுகுழியில் தள்ளினாள் - கள்வன் மாண்டான். பின்னர் இளவரசி ஊர் வந்து சேர்ந்தாள். அரசன் வயது முதிர்ந்த காரணத்தால் அரசாட்சியிலிருந்து விலக முடிவு செய்தான். யாரிடம் அரசை ஒப்புவிப்பது என்று அவை யினரை வினவ, கோமளவல்லியே அரசுக்குரியவள் என்றனர். கோமளவல்லி அரசேற்க மறுத்தாள். குடி அரசே சிறந்த தென்று அவையினருக்குக் கூறினாள். அனைவரும் ஒப்பினர் அரசன் விலகினான். குடிகளுள் ஒருவனானான் கோமளவல்லியும் குடிகளுள் ஒருத்தியானாள் அரசு குடியரசாயிற்று. இதுவே அணைந்த விளக்கின் கதைச் சுருக்கம். இதனையும், குண்டலகேசியின் கதையினையும் ஒப்பு நோக்கின், வேறுபாடு விளங்கும். இக்கதை இந்நூலில் ஒன்பது பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒப்வொரு பிரிவின் சிறந்த கருத்தை விளக்கும் அடிகளில் உள்ள சொற்களையே அப்பிரிவுகளுக்குத் தலைப் பெயராக அமைக்கப் பட்டுள்ளன. கதைப்பகுதிச் சுருக்கம் என்னும் தலைப்பின் கீழ், ஒவ்வொரு பகுதியின் கதையையும் சுருக்கமாக எழுதியுள்ளேன். அதைப் படித்த பின் நூலைப் படித்தால், உய்த்துணர்வின்றிக் கதையை அறிந்து படிக்கலாம். பெயர்க்காரணம் அணைந்த விளக்கு இந்நூலுக்கு பொருத்தமான பெயராக இருக்குமென்று கருதியே அப்பெயர் கொடுத்தேன். வெண்பாவின், நெடு வெண்பாட்டு, அல்லது பஃறொடை வெண்பாவே நான்கிற்கு மேற்பட்ட அடிகளையுடையது. தொல் காப்பியத்தில், நெடு வெண்பாட்டுக்கு 12 அடிகள் எல்லை கூறப்பட்டுள்ளது. நெடு வெண்பாட்டே முந்நாலடித்தே என்பது தொல் காப்பியம். (தொல், செய். 470) பிற்கால நூலாகிய யாப்பருங்கலக் காரிகையில், நெடு வெண் பாட்டையே பஃறொடை வெண்பா வெனக் கூறினர். பிற்கால இலக்கண நூலார் பலரும் இப் பெயரையே கூறினர். காரிகையில் பஃறொடை வெண்பாவுக்கு, அடி வரையறை கூறப்பட வில்லை. பல அடிகளையுடையது பஃறொடை வெண்பாவென்றே கூறப்பட் டுள்ளது. அடி பலவாய்ச், சென்று நிகழ்வ பஃறொடையாம் என்பது காரிகை. தொல்காப்பியத்தில் அடிவரையறை கூறிய பாவுக்குப் பிற்காலத்தார் அடிவரையறை கூறாமல் விட்ட காரணம், புதியன புகுதல் ஆகுமென்றே கருது கின்றனர் சிலர். இவ்வாறு அடி பலவுடைய வெண்பாவுக்கு இலக்கியம் கிடைக்க வில்லை. ஆதலின் இதனை வெண்பா வகையிற் சேர்த்தல் பொருந்தாது. வெண்பாத்தளை விரவிய மற்றோர் பாட்டு கலி வெண்பாவாகும். கலிவெண் பாவைத் தொல்காப்பியர் கலிவெண்பாட்டெனக் குறிப்பர். கலிவெண்பாட்டு என்பதற்குத் தொல்காப்பியத்திற் கூறப்படும் இலக்கணம் :- ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலாற் றிரிபின்றி வருவது கலிவெண்பாட்டே என்பது. சிலப்பதிகாரத்தில் உள்ள கனாத்திறம் உரைத்த காதை யென்பது, இத்தகைய வெண்பாத்தளை பெற்ற பாட்டால் ஆகியது. அக் காதையின் இறுதியில் அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அப்பாடலைக் கலிவெண்பாட்டு என்றே குறிப்பிடுகின்றார். இது கனவென்னும் பொருளையே கருதாது. மாலதி கதையையும், தேவந்தி கதையையும் கலந்து கூறிற்றேனும், உறுப்பழிவின்றி நடந்ததேனும், முந் நான்கடியினிறந்து வருதலான் நெடுவெண் பாட்டாகாது கலிவெண்பாட்டாத லுணர்க! என்பது அடியார்க்கு நல்லார் உரை ஆதலால் நாம் வெண்பாத்தளை பிறழாமல் வருகின்ற 12 அடிகளுக்கு மேற் பட்ட பாடலை கலிவெண்பாட்டு என்றே அழைப்போம். ஆதலால் இந் நூலின் பெரும்பாலான பாட்டுக்கள் கலிவெண் பாட்டுக்கள் ஆகும். இன்னும், விருத்தப்பா, ஆசிரியப்பா, புதிய வகையில் உள்ள சில பாடல் களும் இதில் கலந்துள்ளன. எளிய நடையும், இனிய சந்தமும், புதிய பொருளும் உடைய பாக்கள் பல தோன்றவேண்டும் என்பது என் கருத்து. அறிஞர்களும், இது தமிழன்னைக்குப் புதுப் பணி என்று கருது கின்றனர். இந் நூலும், இந் நூற் பாடல்களும், இந் நூற் கருத்தும், செந்தமிழன்னைக்கு ஒரு புதுப் பூணாக இருக்கலாகாதா? என்ற ஆவலுடனேயே யானும் இந்நூலை எழுதினேன். இந்நூல் சிறிதளவாவது தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாயின். அதுவே என் கருத்துக்குச் சிறந்த பரிசு கிடைத்ததாகக் கொண்டு மகிழ்வேன். அன்பன், சாமி.சிதம்பனார். சாமி. சிதப்பரனாரின் அணைந்த விளக்கு கதைப் பகுதிச் சுருக்கம் 1 சுந்தரநாதன் ஒரு பெருங் கள்வன்; அவன் அடிக்கடி தஞ்சை நகரைக் கொள்ளையிட்டு வந்தான். தஞ்சை நகர் மன்னன் தயாநிதி. அவன் மனைவி தண் கோதை தேவி. அவர்களுக்கு ஒரே பெண். அவள் பெயர் கோமளவல்லி. அழகிற் சிறந்தவள்; தமிழ்க் கல்வியிற் தேர்ந்தவள். அவளே பட்டத்திளவரசி. கள்வனைப் பிடிக்கக் காவலர்கள் பல நாட்கள் முயன்றனர். இறுதியில் பிடிபட்டான். தஞ்சை நகர்ப்புறத்தில் ஒரு பெரிய ஏரி. அதன் கரையில் ஒரு தாழங்காடு. அதில் ஒளிந்திருந்தான் சுந்தரநாதன். காவலர் தலைவர்களுள் ஒருவன் இருளப்பன். இவன் கள்வனைப் பிடித்தான். காவலர்கள் கள்வனுக்கு விலங் கிட்டனர். தஞ்சை நகரின் தெருக்களின் வழியே இழுத்து வந்தனர். பொதுமக்கள் அக் காட்சியைக் கண்டனர். கள்வனைப் பற்றிப் பலப் பல பகர்ந்தனர்,. அவனுடைய தோழர்கள் பலர் அவனை மீட்க வழியின்றி வருந்திச் சென்றனர். அரண்மனை மாடியில் மேல் இளவரசி, தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அபபொழுது, கள்வனை, அரண்மனை வீதி வழியாக அழைத்து வந்தனர். இளவரசி தெருவில் எழுந்த முழக்கத்தைக் கேட்டாள். வியைட்டை விட்டு ஓடி வந்து தெருவை நோக்கினாள். கட்டழகுடைய சுந்தரநாதனைக் கண்டாள்; காதல் கொண்டாள்; கள்வனும் அண்ணாந்து பார்த்தான்; அரசகுமாரியைக் கண்டான்; இருவர் கண்களும் ஒன்றுபட்டன. காவலர் தலைவன், அரசன் முன் கள்வனைக் கொண்டு சென்றான். அரசன் இன்று இரவு சிறையில் வைத்திருப்பீர். நாளை நமது சபைக்குக் கொண்டு வருக என்று பணித்தான். கள்வனைப் பிடித்த இருளப்னுக்குப் பரிசு பல வழங்கினான். கள்வனை அன்றிரவு சிறையில் வைத்தனர்; காவலர் காத்து நின்றனர். 2 சிறைக்குள்ளிருந்த சுந்தரநாதனுக்கு உறக்கம் வரவில்லை. அரச குமாரியின் தோற்றம் அவன் நெஞ்சை விட்டு அகல வில்லை; அவள் உருவெளித் தோற்றங் கண்டு உள்ளங் குழைந் தான்; உண்மையாக அவளே வந்து விட்டதாக எண்ணினான்; எழுந்தான்; நடந்தான்; ஆடினான்; பாடினான்; பதறினான். காவலர் அவனைப் பித்தனென்று இகழ்ந்தனர். கள்வனுடைய கடுநெஞ்சம் காரிகையின் நோக்கால் கனிவடைந்தது. அரச குமாரியும், அரண்மனையில் காதலால் கலங்கி நின்றாள். கள்வனுருவைக் கருத்திற் பதித்தாள் அவனை மணப்ப தெவ்வாறு என்று கருதிச் சோர்ந்தாள். தோழியர் அவள் நோய் கண்டு வருந்தி நின்றனர். அவள் நோயை நீக்கப் பலவித பணி விடைகள் செய்து நின்றனர். 3 பொழுதும் புலர்ந்தது. கள்வன் வழக்கைப் பார்க்கும் பொருட்டு ஊரார் திரண்டனர்; அரசனுடைய அவைக் களத்தை அடைந்தனர். அமைச்சர்களும் அரசவை வந்து அமர்ந்தனர். தயாநிதி அன்று நடைபெறப் போகும், கள்வன் வழக்கைப் பற்றிக் கோமள வல்லிக்கு விளம்பினான். அவளையும் அழைத்துக் கொண்டு சபைக்கு வந்தான்; அரியாசனத்தில் அமர்ந்தான். இளவரசியும், ஒரு புறத்தில் உட்கார்ந்தாள். காவலர்கள் கள்வனைக் கொண்டு வந்து அரசன்முன் நிறுத்தினர். அரசன் கள்வனுடைய குற்றங்களை எடுத்துக் காட்டினான். கள்வன் அரசனை எதிர்த்து, நீயும் என் போன்ற திருடன்; கொலைகாரன்; நம்மிருவள் வேற்றுமையில்லை என்றான். அரசன் சீற்றங் கொண்டு அவனை வெட்டுதற்கு வாளெடுத்தான். ஆய்மதியன் என்பவன் முதல் அமைச்சன். அவன் விரைந் தெழுந்து மன்னன் கையைப் பிடித்துக் கொண்டான். திருடன் மொழியின் கருத்தை நன்றாக உணர்ந்து கொள்ளு வோம்; பிறகு தண்டனை கொடுப்போம் என்றான். மன்னனும் சினந்தணிந்து உட்கார்ந்தான். ஆய்மதியன் கள்வனை நோக்கி. அரசனும் உன் போன்றவன் என்பது எவ்வாறு? விளங்கச் சொல் என்றான். கள்வன் நான் திருடுகின்றேன்; என்னைப் பிடிக்க வருவோரைக் கொல்லு கின்றேன். செல்வர் பொருளையே கொள்ளை கொள்வேன்; தற்காப்புக்காகவே கொலை செய்வேன். அரசன் உழைப்பாளர் பொருளை வரியின் வழியாகக் கொள்ளை கொள்ளு கின்றான்;போர் புரிவதன் மூலம் கொலை செய்கின்றான். இது கொலையன்றோ? என்றான். அமைச்சன் அரசன் செயல், நாட்டு நலங் கருதியது; ஆன்றோரால் ஒப்புக் கொள்ளப்பட்டது; நூலாதரவுள்ளது; வெளிப்படையாகச் செய்யப்படுவது. உன் செயல் எல்லோராலும் இகழப்படுவது என்றான். கள்வன் இதற்கு மறுமொழி கூறாமல் நின்றான். அரசன், கள்வனுக்குத் தண்டனை யாது? என்று அவை யினரைக் கேட்டான். கொலைத் தண்டனையே தக்கது எனறு எல்லேரும் கூறினர். வெற்றிநாதன் என்னும் அமைச்சன் இவன் இளைஞன் அஞ்சா நெஞ்சன்; பகுத்தறிவாளன்; ஆதலாற் கொல்ல வேண்டாம். இவனைச் சீர்திருத்தி நல்லோனாக்கி நாட்டுத் தொண்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றான். அவையினர் இவ்வமைச்சன் மொழியை யிகழ்ந்தனர்.அரசனும் அவமதித்தான் கள்வனுக்கு மரண தண்டனை என்று முடிவு கூறினான் மன்னன். மரண தண்டனை என்ற முடிவு கேட்டதும் கள்வன் திகைத்தான்; இளவரசி திடுக்கிட்டாள்; அவையோர் மகிழ்ந்தனர். இளவரசியின் கண்களும், கள்வன் கண்களும் சந்கித்தன. கள்வன் சோர்வுற்றுக் கீழே விழுந்தான். இளவரசியும் பேச்சு மூச்சற்றாள்; சோர்ந்தாள்; சாய்ந்து விட்டாள். அவையோர் இக்காட்சி கண்டனர்; வியந்தனர் இளவரசியை அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர். அவை கலைந்தது. 4 கள்வன் பெற்ற கடுந்தண்டனையால் இளவரசி ஆவி துடித்தாள்; சோர்ந்து கிடந்தாள். அன்று பகலும், இரவும் அரசனும், அரசியும் தோழியரும் அவள் பக்கத்திலிருந்து வருந்தினர்; துயரம் தணியப் பணி விடைகள் பல புரிந்தனர்; மருத்துவர்கள் பலர் மருந்தளித்தனர். அவள் துன்பம் மாற வில்லை. மறு நாள் பொழுது விடிந்தது. அன்றுதான் கள்வனைக் கொலை செய்யும் நாள். இளவரசி, தான் கள்வன் மீது கொண்டிருக்கும் காதலை மெல்ல வெளியிட்டாள். அது கேட்ட அனைவரும் திகைத்தனர். அரசன் நீ திருடன் மீது வைத்த ஆசை காதல் அல்ல; காமமே; அதை மறந்து விடு என்றான் தண்கோதை தேவியும் எவ்வளவோ கூறினள். கோமளவல்லி காதல் வேறன்று; காமம் வேறன்று; இரண்டும் ஒன்றே; கட்டழகனை மணக்காவிடில் உயிர் வாழேன் என்று முடிவாகக் கூறிவிட்டாள். தண்கோதை தேவியும், கள்வனுடைய கொலைத் தண்டனையை மாற்றுமாறு அரசனை வேண்டினள். அரசனும் மனமிரங்கினான். சுந்தரநாதனுடைய கொலைத் தண்டனையை மாற்றி விட்டதாக ஒரு ஓலை யெழுதினான். அதை ஒரு தோழியின் கையிற் கொடுத்தான்; கொலைக் களத்தில் உள்ள அதிகாரியின் கையிற் சேர்க்கும் படி பணித்தான். தோழியும், அவ்வோலையை வாங்கிக் கொண்டு விரைந் தோடினாள். 5 நல்ல நடுப்பகல். கொலைக் களத்தில் கள்வன் ஒரு மேடையின் மேல் நிறுத்தப்பட்டுள்ளான். பல மக்கள் குழுமியிருக்கின்றனர். சிலர் அவன் மாளப் போவது கருதி இரங்குகின்றனர், பலர் அவன் மாளப் போவது கருதி மகிழ்ச்சி யடைகின்றனர். இச் சமயத்தில், கொலைத் தண்டனையை நிறைவேற்றும் அதிகாரி திருடன் தலையைத் துணிக்குமாறு கொலையாளிகளுக்கு அறிவித்தான். ஒரு கொலைஞன் கள்வன் கழுத்திற்கு நேரக வாளை ஓங்கினான்.ஆனால் வெட்டு விழுமாறு வீசவில்லை. இச்சமயத்தில் கொல்லாதே! நில்லு! கொலைத் தண்டணையை மாற்றினான் மன்னவன் என்று கூவிக் கொண்டு ஓடி வந்தாள் ஒரு பெண். அவள் அரசன் கட்டளையை அதிகாரி யின் கையிற் கொடுத்தாள். அதிகாரி கொலைத் தண்டனையை நிறுத்தினான்.கள்வனை அரசவைக்குக் கொண்டு போயினர். இது கண்டு பொது மக்கள் வியப்புற்றுப் பற்பல மொழிந்தனர். அரசவை கூடியிருந்தது. பலரும் சூழ்ந்திருந்தனர். அரசன் நேற்று வெற்றிநாதன் கூறிய மொழிகள் என் மனத்திற் பதிந்தன. ஆதலால் கொலைத் தண்டனையை மாற்றினேன்; இக் கட்டிளைஞனைச் சீர்திருத்தலாமென்று கருதுகின்றேன். உங்கள் எண்ணம் யாது? உரைமின் என்றான் வெற்றிநாதன் மன்னன் செய்கையை ஆதரித்தான். இவ்வீரனை நமது சேனைத் தலைவனாக்குதல் நலம் என்றான். ஆய்மதியன் இவன் நல் வழியில் நடப்பதாக உறுதி கூறினால் அவ்வாறே செய்யலாம் என்றான். மன்னன் கள்வனை நோக்கி, உன் எண்ணம் என்ன வென்றான். கள்வன் நான் வறுமையால் கொடுமை செய் தேன். இனி ஒழுங்காக நடப்பேன். எனக்குக் கொடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வேன் என்றான். அரசன் அப்போதே கள்வனைச் சேனைத் தலைவனாக் கினான்; வரிசை பல தந்தான். இம்முடிவைச் சிலர் வெறுத்தனர்; சிலர் புகழ்ந்தனர். அவை கலைந்தபின் அரசன் இளவரசியிடம் சென்றான். இந்நிகழ்ச்சிகளை அறிவித்தான்; அவள் துன்பம் நீங்கி யின்ப முற்றாள். 6 மதுரை நகர் மன்னன் பிரதாபன்; மணமாகாதவன். அவனுக்குப் பலர் பெண் கொடுக்க முன்வந்ததும், மணம் புரிய மறுத்திருந்தான். அவன் ஒரு நாள் தனியாக அரண்மனைத் தோட்டத்திற்குச் சென்றான். அங்கே ஒரு மேடையில் உட்கார்ந் தான். பக்கத்து மரக்கிளையில் இரு குயில்கள் இருந்தன. அவை காதல் மொழி பெசிக் களித்தன. அது கண்ட மன்னன் ஒரு புத்துணர்ச்சி பெற்றான் அன்று முதல் அவன் மனதில் கவலை குடி கொண்டது. அக் கவலை முகத்தில் வெளிப் பட்டிருந்தது. அமைச்சர்கள் அவனுடைய முகச் சோர்வு கண்டனர். அவனுக்கு மணமுடிப்பதே அவன் கவலை தீர்வதற்கு வழி யென்று முடிவு கண்டனர். அரசனை யடைந்தனர். நீங்களனை வரும் வந்தது என் கருதி? உரைமின்! என்றான் மன்னன். முதலைமைச்சன் சுகுணன், கோமள வல்லியின் அழகையும், அறிவையும் எடுத்துக் கூறி. அவளே உனக்கேற்ற பெண் அவளை மணந்தால் நீ மகிழ்ச்சியடைவாய் என்றான் மன்னனும் மணம் புரிந்துகெள்ள ஒப்பினான். பிரதாபனுக்குப் பெண் கொடுக்குமாறு தயாநிதிக்கு அமைச்சர்கள் கடிதம் விடுத்தனர். பல நாட்கள் கடந்த பின், தயாநிதியினுடைய மறுமொழி கிடைத்தது; பிரதாபனுக்குப் பெண் கொடுக்க மறுத்தான். உடனே பிரதாபன் சினங் கொண்டான். அமைச்சர்கள் சூழ்ச்சியின்படி, பிரதாபன் படை திரட்டிச் சென்று தஞ்சை நகரை முற்றுகை யிட்டான். இச்சமயம், தயாநிதி அரச மன்றத்திலிருந்தான் அமைச்சர் களும். பிறரும் சூழ்ந்திருந்தனர். ஒற்றர்கள் ஓடிவந்து பிரதாபன் படையெடுத்து வந்திருக்கும் செய்தியைக் கூறினர். அது கேட்டு அரசன் திகைத்தான்; அமைச்சர்கள் விழித்தனர். சுந்தரநாதன் எழுந்தான். நான் சென்று பிரதாபனையும், அவனுடைய படைகளையும் முறியடித்து வருகிறேன் என்றான். அரசனும் மகிழ்ந்து விடை தந்தான். சுந்தரநாதன், தன் சேனை களுடன் நகர்ப்புறத்தை யடைந்தான் பிரதாபன் படையுடன் போர் தொடுத்தான் பிரதாபனும், அவன் படை வீரர்களும் தோற்றுப் புறமுதுகிட்டனர். சுந்தரநாதனின் வெற்றியைக் கேட்டு மன்னவனும் மக்களும் மிகிழ்ந்தனர். மன்னவன் சுந்தரநாகன் பெற்ற வெற்றிக்குப் பரிசாக கோமளவல்லியை மணஞ் செய்து கொடுக்கப் போகிறேன். அவளும் இவன் மேல் ஆராத காதல் கொண்டாள் என்றான் பலரும் நன்றே யென்றனர்; சிலர் இஃதென்ன விபரீதம்! என்று வெறுத்தனர். திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. தமிழ் முறைப்படி சுந்தர நாதனுக்கும் இளவரசிக்கும் கடிமணம் நிகழ்ந்தது மன்னன் மகிழ்ந்து பரிசு பல வழங்கினான் மக்களும் மகிழ்ந்தனர். கள்வனும் இளவரசியும் கலந்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். 7 அரண்மனைச் சோலை. அதில் ஒரு தாமரை பூத்த தடாகம்; அதன் கரையில் ஒரு மண்டபம்; அம்மண்டபத்தில் ஓர்மேடை; அம் மேடையில் சுந்தரநானும் இளவரசியும் வீற்றிருந்தனர். காதல்மொழி பல பேசிக் களித்தனர் காவின் வளங்களைக் கண்டுமகிழ்ந்தனர். ஒருவரை ஒரவர் பாராட்டிப் புகழ்ந்தனர். சுந்தரநாதனை ஒரு பாடல் பாடவேண்டினள். கள்வன் இளவரசியின் காதலே தன்னை நல்வழிப்படுத்திற்று என்னும் கருத்துப் படப் பாடினான். பிறகு அவளும் தன் காதலை வெளியிட்டுப் பாடினாள் அவள் தனது பாட்டில் நீ என்னை உன்மனத்தில் திருடி வைத்திருக்கின்றாய்! நீ சிறிது நேரம் என்னை விட்டுப் பிரிந்திருந்தாலும், அப்பிரிவு என்னைக் கொல்லுகிறது ஆதலால் உன் பழந்தொழிலை இன்னும் நீ விடவில்லை என்ற கருத்தை வெளியிட்டாள். திருடன் அவள் காதற் கருத்தை உணர முடியாமல் சினமுற்றான். அவன் தன் சினத்தை வெளியிடாமல் மறைத்துக் கொண்டான். பின்னும் சிறிது நேரம் அவர்கள் அங்கே யிருந்துவிட்டுப் பொழுது பட்டதும் அரண்மனைக்குப் போயினர். 8 அன்று முதல் கள்வன் கலக்கமுற்றான். அவனுடைய பழய செயல்களைப் பற்றிய நினைவுகள் வந்துவிட்டன. பிறர் தன்னை நோக்கும் போதெல்லாம். கள்வனென்று கருதி நோக்குவதாகவே நினைத்தான் பிறர் பார்க்கும் போதெல்லாம் நாணித் தலை கவிழ்ந்தான். அவனுக்கு அரச வாழ்வு புளித்துவிட்டது; கோமள வல்லியின் மேல் வெறுப்புற்றான்; அவளைப் பழிவாங்குதற்குக் காலங்கருதிநின்றான். கோடை நாள் பிறந்தது. வெய்யிற் கொடுமை தாங்க முடியவில்லை வெப்பத்தின் மிகுதியால் இளவரசியின் உடம்பில் கொப்புளங்கள் எழுந்தன இதுவே அவளை பழிவாங்கச் சமயம் என்று கருதினான். சுந்தரநாதன் இளவரசியை நோக்கி கோடைக் கொடுமை நீங்க, நீலகிரிக்குச் செல்வோம் என்றான் அவளும் உடன்பட்டாள் இருவரும் போதிய ஏவலர் களுடன் நீலமலையை அடைந்தனர். அங்கோர் மாளிகையில் தங்கினர். பலநாட்கள் நீலகிரியில் வாழ்ந்தனர். ஒரு அமாவாசைநாள் அன்று மாலை சுந்தரநாதனும் இளவரிசியும் ஒரு குவட்டை யடைந்தனர். கீழே கிடுகிடு பள்ளம். அவ்விடத்தில் உட் கார்ந்து இருவரும் காதல் மொழி பேசினர் இருள் சூழ்ந்தது அது கண்டு இளவரசி நேரமாயிற்று விடுதிக்குச் செல்வோம் என்றாள் சுந்தரநாதன் நீ என்னைக் கள்வன் கொலைகாரன் என்று செருக்கால் இகழ்ந்தாய்! ஆதலால் உன்னைக் கொன்று என் வெஞ்சினத்தைத் தீர்த்துக்கொள்ளப் போகிறேன். இப்பொழுதே உனது வழிபடு தெய்வத்தை வணங்கிக்கொள் என்றான். இளவரசி, என்னைக் கொல்ல நினைக்கும் இவ் வஞ்ச கனை நான் கொல்வேன் என்று முடிவு செய்து கொண்டாள். கள்வனை நோக்கி,நீயே என் வழிபடு தெய்வம்! உன்னை யன்றி வேறு தெய்வமறியேன்! எழுந்து நில்; வலம் வந்து வணங்கு கிறேன் என்றாள். திருடனும் எழுந்து நின்றான். அவள் அவனைச் சுற்றி வரும்போது, தக்க சமயம் பார்த்துப் படுகுழியில் தள்ளி விட்டாள் அவனும் ஆவென்றலறி வீழ்ந்து மாண்டான். இது நிகழ்ந்த பின் இளவரசி தாங்கா-த் துயருற்றாள் வாய் விட்டு அரற்றினாள். அரற்றிக் கொண்டே, அவ்விடத்தை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தாள். இதந்குள் ஏவலர்கள் அவளை யும் சுந்தரநாதனையும் தேடி வந்தனர். அவர்கள். இளவரசியின் அழுகுரல் கேட்டு அவளை யடைந்து, அழைத்துச் சென்றனர். நடந்த நிகழ்சசியை ஏவலர்களும் அறிந்து துன்புற்றனர். அனை வரும் அன்றிரவு நடந்து தஞ்சை யடைந்தனர். இளவரசியின் செய்தி தஞ்சைநகர் முழுவதும் பரவிட்டது. 9 தஞ்சை நகர் முழுவதும் இளவரசியை பற்றியே பேச்சு; அரசனைப் பற்றியும், கள்வனைப் பற்றியும் பலர் பேசினர் அரசனும், அரசியும், இளவரசியின் நிலைகுறித்து வருந்தினர் வயது முதிர்ந்த மன்னன் ஆட்சியில் வெறுப்புற்றான்; அரச வையைக் கூட்டினான். அவையினரை நோக்கிநான் தள்ளாத பருவமுற்றேன். கோமளவல்லி கள்வனை மணந்து கடும் பழிக்கு ஆளாயினள். இனி அரசாளுவது யார்? உங்கள் விருப்பம் என்ன? என்றான். முதல் மந்திரி கோமளவல்லியே அரசாளலாம் அவள் கள்வனைக் கொன்றது வீரச் செயலே அதனால் பழியொன்று மில்லை. என்றான் எல்லோரும் அமைச்சன் மொழியை ஆதரித்தனர். மன்னன் கோமளவல்லியின் முகத்தை நோக்கினான். அவள் நான் காதலை நம்பிக் கெட்டேன். உலைவாய்க்கு மூடியுண்டு; ஊர் வாய்க்கு மூடியில்லை அழியாப் பழிபூண்ட நான் அரசியாக விரும்பவில்லை. குடிகளே தாங்கள் விரும்பும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆட்சி புரியலாம். குடி அரசு சிறந்த அரசு என்றாள். அவள் மொழியை அரசனும் அமைச்சர்களும், பொது மக்களும் ஒப்புக் கொண்டனர். உடனே அரசன், நீங்களே அரசாளுங்கள்! நான் உங்களுள் ஒருவனாயிருந்து அரசாட்சிக்கு உதவி செய்கிறேன் என்று கூற, கோமள வல்லியும் இன்றுமுதல் நானும் குடிகளுள் ஒருத்தியாய் இருப்பேன். தமிழ் மொழிக்கும் தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கும் உழைப்பேன். அரசுக்கும் உதவுவேன் என்றாள். மக்களும், தங்களுட் சிலரை ஒரு குழுவாகத் தேர்ந் தெடுத்தனர். அக்குழுவினருள் ஒருவனைத் தலைவனாக்கினர் குடி அரசுக்கு வேண்டிய சட்ட திட்டங்களமைத்தனர். குடியரசாகி இன்புற்று வாழ்ந்து வந்தனர். Foreword by the Authour to “Anaintha Vilaku” (Transl ation) It was my ambition to create a good story in mellodious verse. அணைந்த விளக்கு (Blown out lamp) is the out- come of it. This is not my pure imaginary creation. It is a subtle mixture of an ancient story and mine own stuff. The basis of this story is adapted from Kundalakesi, an epic. Kundalakesi is one among the five celebrated great Tamil epic Poems, the four other being, Silapathikaram, Chintamani, Manimekalai and Valayapathi. The Story proper of Kundalakesi, as narrated in that great epic is not at available anywhere in the world, as the Poem is a lost treasure. Still, the outline and synopsis of the story are said to contain in Theri Kaathai, Dhamma Patha and Angutharaniyaka which are of Pali literature. Besides, in the commentary of verse 286 in Nilakesi, a Jainist Philosophy, the following summary of Kundalakesi is manifested. The Prime-minister of the kingdom of Raja Graham had a beautiful grown-up daughter named Baddhirai. One day as The was strolling on the balcony of her mansion she beheld a handsome youth led away by gaolers to the gallows. Instantly she fell in love with him. That unhappy fellow who was the target of this “Love at first sight” had been the son of the king’s Priest. the Criminal was condemned to death for High way Robbery. As Badhirai expressed her desire to marry this condemned man above as her spouse. and admently stated that she would never marry anyone else, the minister greased the palms of the gaolers and saved the dacoit from the halter. Later the prime - minister gave Baddhirai in marriage to that thief. They lived happily for many days. But as illuck would have it, one night in a lighter vein she remarked that after all he was a Robber! Though he pretended to have swallowed the insult, he never forgot or forgave that humiliation. Later, one day he invited his wife to accompany him to a hillock, where he was proceeding, he claimed, to offer his grateful and thank-giving prayers to the deity that saved him from death. As she readily consented and went with him to the top of the hillock he shouted at her and cried, “Now fall in worship to any deity that you hold sacred, as you are going to meet with your end at my own hands in a few minutes. “How adacious had you been to call me a Robber at my own face!” She was much too shocked at this unexpected outburst. However, wise, clever and intelligent that she was, she decided to outwit him. “Whoever be a greater god than a husband to a chaste wife?” asked she and cajoled him, “Pray, permit me to circumambulate you, my Lord, and offer my humble prayers at your feet” As he nodded in consenm, she went round him, and kicked him down into the steep valley to his death. Thus the rogue met with the poetic justice. As Baddirai felt disgusted with the way of this mundane world, she embraced jainism, became a Sanyasini, and had her head completely tonsured according to Jain tradition and rites. But lo! Her hairlock again grew lustily in all magestic waves and curls. She was hence called “Kundalakesi”, a term which denotes curly hairlocks. This is the story which Nilakesi offers us. Our story in this book is broadly based upon it. But there is a vast difference throughout. Synopsis of our story that follows is as here under: the crown princess Komalavalli is the only issue of the king of Thanjavur, She is a scholer in Tamil. She met with Sundaranathan, a thief, and fell in love with him. As the king condenned him to death for his crime, the princess intervened to express her desire that she would ever remain a spinster if he is executed, as she had already given room in her bosom as her only husband. The king remmitted the sentence, and made him the chief of the Army. Prathapan, the king of Madurai, in his lust towards Komalavalli invaded on Thanjavur, sundaranathan met him on the battle-field and won his victory. The king, immensely pleased at this valour of his army- chief, gave his daughter in marriage to him. One day as the thief and the princess were mutually adoring each other in amorous speech and verse, Komalavalli expressed that he has not yet given up robbery nor murders. He was highly incensed. But he never showed his mind out. As summer came, Komalavalli was found suffering from the agonies of summer - heat. He thought it was the proper moment for him to avenge himself. He took her to some hill resort. On a moonless night as the couple were spending happy moments on the top of a hill, the robber burst out his anger and ordered her to offer her last prayers to her deity. She went round him with folded hands calling him as the only deity and at the right moment pushed him down the precipice to his doom. Later as she arrived home, her old father due to advance in age offered to abdicate his throne in favour of his daughter. But she refused the crown. she favoured only the Republican form of government, which was readily accepted by all. the king after his abdication had himself become an ordinary citizen, so also his daughter, and the kingdom became a Republic. This is the summary of the story of this book. A comparison would reveal the difference between this story and that of Kundalakesi. This story is divided into nine parts in this book. This heading of each part is named in the every words that are employed in the verses of the climax of such parts. Under the heading of Synopses of story proper in each part I have given the outlines of the narration. If the book is read in the footsteps of such synopses, the whole story will reel in easy flow. The Title I have chosen the title “Blown out lamp” in earnest and hope this would justify the cause. Corresponding verse to denote this title is found in the ninth part of this book. Komalavalli’s lamentation - “I am indeed a blown out lamp!” is called out from there to adorn the title of this book. Komalavalli was indeed a flame of glory in the fields of culture, knowledge, wisdom, and beauty. Her lusture diminished as she married a thief. The flame of her happy days was after all blown out. This is subtly expressed in her lamentation. Hence, the title of this book is shaped from the heroine’s tragie life proper. The book Some cheif aims of this book are: 1. If there is no good political system of govement, no country, no citizen can ever live in peace. Therefore it is that there are constitutions framed in each land. 2. The reason why citizens resort to robbery, larceny. murder etc. is poverty and unemployment. Therefore, it is the duty of the govt. to erase them out. 3. It is a mistake to call love ‘divine’, and lust “beast-like” Love is a common phenomenon, whereas lust is a unique feature. The essence of love is lust. Lust, in general, means happiness. Hence, it is not proper to praise one and condemn the other totally. 4. However much a lady is lettered and learned she is disappointed in her love or lust. Men can easily dupe them or cheat them. Women-flolk are seldom equipped with clairvoyance. 5. It is the duty of the government, of a state to convert the criminals into law-abiding citizens. 6. Those who are indulged habitually in criminal dealings since their childhood cannot be easily corrected. Bad habits never get erased quickly. 7. Republican form of government is by far better than one-man rule. These ideas are specially conveyed in this book- Besides, some ideals and imaginary description of natural events also find their place. Poems The verses of this book generally follow the pattern set by Post Bharathi in his “Kuyil Paatu” and Bharathi Dasan in his “Sanjeevi Parvatham” Following verse are composed in the metrics of “Venba” Generally a Venba contains four lines only, but those exceeding four and reaching 12 lines are called “Nedu Ven Paattu” or “Pahrodai Venba” நெடு வெண் பாட்டே முந்நாலடித்தே (தொல், செய், 470) The Tholkappiam sets 12 lines as maximum limit of such lyrics. Yapparungalak Kaarikai calls “Nedu Ven Paattu” as “Pahrodai Venba” Later grammarians also follow this rule. The Kaarikai does not prescibe the maximum number of lines of a Pahrodai Venba, though it mentions that such Venbas contain more number of lines or verses: அடி பலவாய்ச் சென்று நிகழ்வ பஃறொடையாம் (காரிகை) Whereas Tholkappiam prescribed the maximum limit, later grammarians conveniently omitted the same to accommodate the later innovations of succeeding generations. Hence it is permissible, they claim. There are no literature available to show Venba of many lines. Therefore, it is not right to include the same in Venba series. But there is a lyric called “Kali Venba” which qualifies the qualities of Venbas. Tholkappiar calls Kali Venba as Kaliven Paattu”. 1. Definition given in Tholkappiam for Kaliven Paattu” is as follows: ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலாற் றிரிபின்றி வருவது கலிவெண் பாட்டே. 2. There is a sub story under the title கனாத்திறம் உரைத்த காதை in Silappathikaram composed in Venba lyrics. Towards the end of that story Adiyarkku Nallar (a commentator) writers of say that poem is “Kaliven Paattu”. He says: - இது கனவென்னும் பொருளையே கருதாது, மாலதி கதையையும், தேவந்தி கதை யையும் கலந்து கூறிற்றேனும், உறுப்பழிவின்றி நடந்ததேனும் முந் நான்கடியி னிறந்து வருதலான் நெடு வெண்பாட்டாகாது கலி வெண் பாட்டாத லுணர்க. 3. This is Adiyarkku Nallar’s commentary. Hence, we call any stanza containing more than 12 lines, but composed in the metrics of Venba, as a Kali Venba. Many lyrics and verse of this book are of Kaliven Paattu metrics. Besides, Viruthappa, Aasiriyappa, and modern verses also are employed here. That easy style, sweet melody and modern meanings should adorn any poem is my dictum. Learned authors also consider such poems as new service to the Mother Tamil. How I hope that this book of mine containing such poems and ideals will be a new jewel in the crest of sweet Tamil. I wrote this only with such a cherised desire. If this book in its own humble way assists the growth of Tamil, I shall be highly elated and delighted as the one who gained the great prize. Anban SAMI. CHIDAMBARANAR STORY OF “ANAINTHA VILAKU” By Sami. Chidambaranar Sundaranathan was a great robber. He was often plundering the city of Tanjore. Dayanidhi was the king of Tanjore. His wife was Thankothai Devi. They had an only daughter - Komalavalli. She was of great beauty and was well educated in Tamil method of studies. She was the crown princess. The king’s men took great efforts for many days to catch the theif. At last their efforts fructified. On the outskirts of the city of Tanjore ran a big river, on the banks of which had grown great forest, dark with bushes and trees. There Sundaranathan was hiding himself. At last Irulappan one of the armdty chiefs of the king traced the thief and arrested him. The arrested robber was manacled adtnd dragged through the wide streets of the great city of Tanjore. People witnessing the scense spoke a thousand trivial things about the thief. His companions could not liberate him. Unable as they were they returned to the forest with grief. On the terrace of the palace the princess was playing with her friends. Attracted by the noise of the people she left her play and came running to the street. There she saw the handsome Sundaranathan; he saw her; their eyes met; that one moment of ecstacy! Oh! love had born at first sight. The army chief brought the thief before the king. The king ordered him to be put behind the bars that night and to be brought before him the next day. Irulappan was given great many rewards. Sundaranathan was locked in the prison; Vigilant soldiers were placed to watch him. II Sundaranathan was sleepless in the prison; the beautious form of the princess occupied his mind and eyes; he felt as if she hereself was present there; he sung with all the fanciful and mad delight of a lover; the soldiers laughed at his mad behaviour. His heartlessness left him because he had given his heart to a beautiful graceful damsel whom he loved with all frenzy. The princess, state in the palace was none the better. She dreamt of the thief. She was disturbed and dissipatted by the thought of her marriage with him may remain a dream for ever. Her friends were all in great sympathy of her state and strived hard to alluviate her grief. But instead it grew. III The next day dawned beautifully but it was a painfull beauty to the lovers. Immense throngs were pouring in at the kings court to witness the trial. The king came with his entourage and occudtpied the torone. He was sorrounded by wise ministers. Komalavalli was also present there because the king had told her about the trial and had taken her to the court. The thief was produced before the king. The king levelled many charges against him. But the robber unafraid retorted “Oh king! you are also a thief; murderer. There is no difference between us” he said. The king infuriated took his sword to behead the thief. But Aaimathiyan. the chief minister of the king stopped the king; and admonished, “Oh king; let us know what the robber implies and then punish him.” His rage alluviated the king settled in his royal seat. “Oh thief” interrogated Aaimathiyan “how there come no difference between the king and you? tell me” Replies the robber. “Yes. Your majesty! I commit thievery; and I kill those who try to trap me. Moreover I rob only the rich and I kill only in self defence. But the king, What he does? He robs the toiling peasants and labourers in the name of taxes; he commits homicide in wars. Is it not robbery? Is it not murder?” The learned counsellor said “But oh thief! the king’s acts are aimed at the country’s welfare. It is accepted by the wise and admired by many a man. It is done in public. But your act is despised by all. The thief could not answer; he remained silent. Terible wave of silence reigned at the moments that glided away. At last the king consulted the counsellors as to what punishment is to be given. It was agreed that he should be beheaded. But vetrinathan, a learned counsellor of the court interfered and said “your majesty! this man is young and brave; moreover he is wise. Kill him not. Reform him and make him usefull to the country’s service”. But the people rediculed the learned words of Vetrinathan. The king also turned deaf ears of his words. The death Sentence was confirmed. On the pro nonuncement of the death sentence the robber was bewildered but the courtiers were happy. The eyes of the thief and the princess met. The thief fell down in great grief. The princess was also deeply grieved and she swooned. The courtiers wondered at the happenings. The court was dispersed and the princess was taken to the palace. IV The punishment pronounced upon the thief plunged the princess in great sorrow. Her heart throbbed at the thought; She swooned. Everybody in the palace including the king and Queen attended her. They tried their best to heal her ailment but it did not. The next day’s sun rose above the rough mountains and the vast seas. That day had been fixed for the beheading of the robber. The princess, encouraged by her pure love, exhibidtted it to her parents. They were greatly bewildered. “Your love on the robber is not love” said the king. “But it is mere lust. Forget it” Thankothai Devi also persuaded her. But Komalavalli would not give up. She argued that love and lust are the same and ultimately said that she would not live if she was not married to her hand some lover. Then the Queen also persuaded the king to change the death sentence. The king took great pity at the lover of his beautiful daughter. He sent a signed message, altering the death sentence. A girl of the palace hurried to the execution place. V It was noon. The scorching sun was at the zenith. The robber was standing on a raised place. A great mob was around him excited. Some people pitied him and others were happy that the robber is going to die. The king’s officer has given the command. The killer raised the sword over the thieves neck. All of a sudden a cry stopped him. A girl was running towards the killer shouting “Stop! kill him not! The king has altered the sentence!” The message was handed over to the official. The execution was stopped. The robber was taken to the king’s court. The people were astonished by the happenings of the day. In the court. the king declared. “I am impressed by Vetrinathan’s words. Hence only we stopped the execution. We think it befitting that this young man may be reformed. What do you opine? Vetrinathan approved of the king’s action and suggested that Sundaranathan may be made the chief of the army. Aaimathiyan approved of the king’s action and suggested that Sundaranathan may be made the chief of the army. Aaimathiyan also said that he would accept the same provided the robber promises that he behave in a good manner. Then the king questioned the robber as to his intention. The robber replied “Your majestry, it was my poverty which compelled me to commit robbery. From now onword I would be a different man; and I would do unto perfection whatever you command” At once the robber was made the commander of the king’s force. The king gave him fabulous prizes. Some of the courtiers hated the king’s decision but some others appreciated it. The king went to the princess and told her about the happenings; her sorrow vanished like snow before the sun. VI Madurai - it was an adjacent territory to Tanjore and its king was Prathabhan. Many a king was ready to marry their daughters to him. But he did not assent to many. One fine evening he went to the garden in his palace. He sat on one of the many beautiful benches in the park. In a nearby treebranch were perched two lovebirds. They were wooing. On seeing the love of the birds, a sudden flash of a feeling had come into him. Henceforward he became sorrowful. The ministers in his court found that the only penance to his newborn sorrow is marying a beautiful girl to him. They approached the king and Sugunan, the Chief minister told him about the beauty and intelligence of Komalavalli. The king accepted to marry her. Message was sent to Dayanidhi. After waiting for many days they got the reply from Dayanidhi declining the offer. Prathabhan got enraged. He invaded the city of Tanjore with his forces. Dayanidhi convened the court immediately. The spies of the king informed him of the unpending invasion. He was astonished. Even the ministers could not utter a syllable. But Sundaranathan rose up. “I shall go with my forces and vanquish the proud alien king.” he swore. The king also happily granted permission. The armies faced each other on the battle field in the outskirts of the city. Prathabhan wad defeated and his forces were driven away. The king and the people were filled with joy on hearing about the great victory. He was given a grand welcome in the court. The king declared “I give my daughter Komalavalli in marriage to Sundaranathan as a trophy of his great victory. She also is in deep love with him.” Many a man appreciated the decision; a few people hated this. The royal wedding was celebrated in a grand manner on the fixed day. The king confered many boons upon the people. The united lovers revelled in great pleasure VII There was a pleasant park behind the palace. In the park was there a beautiful pool/ with blooming lotuses. The lovers were there, speaking about their love, their dreams and so on. The princess requested him to sing a song. He sang a song in which he said that the pure love of the princedts alone did make him a reformed man. Then Komalavalli also sang a song. She sang “Oh my dear! you’ve robbed my heart. I cannot bear even a little while of parting. So you’ve n’t left your old profession of robbery” But the old robber could not catch the meaning. He got his feelings lacerated. He got offended. But he did not show out his anger. Then they left the park and went to the palace. VIII From then onwards the robber got perplexed in mind. thoughts of his old guilt tormented him. He found suspicion in the eyes of the others whenever they locked at him. He was haunted by an ever-growing sense of guilt. The royal life became sour to him. He began to hate Komalavalli. He awaited a chance to take vengence upon her. The Summer season also had come. The princess got inflammation of skin owing to excessive heat of the climate. Nathan thought that apt chance had come to execute his vengence. He proposed that they may go to Nilgiris where it would be pleasant to be in the summer season. She also accepted. They reached Nilgiri with their attendants. They settled in a palace. Many days glided by. It was a newmoon day. On that evening they reached a mount. Below the mount was a deep canyon. It became dark. The princess proposed that they may go to the palace. But the thief said “you humiliated me. You called me a thief your vanity. I am going to kill you. You now itself pray your god.” The princess thought in her mind that she would kill the trecherous robber. So she said to the thief, “you are my Deity. I do not pray any god but you. Please stand up. I will come around you thrice and pray you.” The robber also stood up. She came behind as on the pretence of prayer and pushed him from behind. He was thrown into the deep canyon and was elimenated for ever. But the princess could not bear the sorrow of it. She began to cry. The attendants found her in that state. They took her to the palace. The next day they left for Tanjore. The city was plunged in grief. The people were all in sympathy for the pitiful plight of the princess. The aged king also became fed up with his kingly status. He convened the court and declared “My dear citizens! I have grown old! The Princess became the most pitiable woman because she married a robber who is to rule this country. We shall like to know your opinion.” The chief minister argued “Komalavalli may ascend the throne. Her act of killing the thief was an act of courage. It is no sin.” All the courtiers accepted the view. The king stared interrogatively at her face. She spoke “I am doomed because I did belive in false love. “The mouth of a furnace can be sealed but one cannot shut the mouth of the gossipping world. Moreover, people’s government is the best government. People can rule themselves in a better way than we rule. So let this land become a peoples land, a republic.” The king and other accepted her words. The king expressed his wish that he would be one of the citizens; helping the rule of the poeples republic. Komalavalli also nodded her assent to be a citizen helping the republic to thrive, the republic of the great Tamils. The people formed in a great republic; elected a repreentative assemply, made one among them the chief and lived very happily thence forward. சிந்திய கண்மலர் (கலிவெண்பா) "வாருங்கள்! எல்லோரும் ! வாருங்கள் ! எல்லோரும் ! பாருங்கள் ! இந்தப் பழிவளர்க்கும் பாதகனை பொல்லாத கள்வன்! பிடிபட்டான்! போக்கிரி! நல்லோர்கள் கண்டஞ்சும் நஞ்சனையான்! நற்செயல்கள் என்றும்தன் நெஞ்சத்தில் எண்ணாத தீச்சிலந்தி! கொன்று குவிக்கும் கொடுந்தொழிலே கொள்கையான் நீருள்ளே மூழ்கி நெடுநாள் கிடந்தாலும் ஊறாக் கருங்கல்லை ஒத்தவலி நெஞ்சுடையான்! மாறாகச் சினத்தையே மனமாகப் பெற்றுள்ளான்! ஏறுபோல் செல்கின்றான்! என்னே இவன் ஆண்மை! வானம் பளபளக்க வாழ்கின்ற மீன்தொகையைக் காணக் கணக்கெடுத்துக் காட்டிடினும், மக்கள் உடலம் வருந்தவெழும் நோய்கணக் கிட்டாலும், கடலில் வருந்திரையைக் கண்டு பதிந்தாலும், ஆற்றின் மணலையெலாம் அக்கக்காய் எண்ணிடினும், காற்றின் பரப்பை அளவிட்டுக் காட்டிடினும், தீயன் இவன்செய்த தீமை தொகைகுறிக்கச் சாயுமோ என்றுபல சாற்றிப் பொதுமக்கள் ஓவென் றிரைத்தெழுந்தார் ஓசைப் பெருங்கடலாய்; காவலர்கள் அந்தக் கடுமறவன் கைகளிலும் தாள்களிலும் தக்க தளைபூட்டி விட்டார்கள் வாள்கொண்டார் சுற்றிவர வாய்த்த மிகப்பெரிய சிங்கத் தையிழுத்துச் செல்வதே போல்கரந்தை எங்கும் பரபரப்பு ஏற்படவே அஞ்சாத சுந்தர நாதன்எனும் சோரனை வீதிவழி வந்தவர்கள் காண நடத்தி வருகையிலே இந்தவிதம் எல்லாம் இயம்பிப் பொதுமக்கள் கூடினார்; ஓடினார்;கூச்சல் கடல்குடைந்தார்; பாடினார் தம்மனம் போல்; பாய்ந்து குதித்தார்கள். காவலர்கள் கூறுவது இக்கொடிய கள்வன் இருக்கும் இடங்காணத் திக்கொல்லாம் சென்றார்; பல ஆண்டு தேடி மலைகளும், காடுகளும், மக்கள்வாழ் நாடும், அலைகடல்சூழ் தீவுகளும், ஆற்றுப் பெரும்புதரும் எத்தனையோ வீரர் இராப்பகலாய்ச் சுற்றினார் அத்தனைக்கும் தண்டாமல் வாழ்ந்திருந்தான் ஆண்மையுளான். இன்னவனை இன்றே பிடித்தான் இருளப்பன். மன்னன் மனமகிழ்வான்; மாணப் பரிசளிப்பான்; காவலரில் முன்னவனாய்க் காணும் படிவைப்பான்; யாவரும் போற்றிப் புகழ்வார் இவன்திறத்தை இப்பெருமை எங்கட்கு வாய்த்திலதே! எம்மீது தப்பில்லை; யாம்செய் தவக்குறைவே! என்னப் பொறாமை மனத்தெழுந்த வீரர் புகன்றார்கள் அறாத துயருடனே சென்றார்கள் அங்கொருபால். விளையாட்டுப் பிள்ளைகள் விளம்புவது தங்கத்தாற் செய்த பதுமை தரையுருண்டு பொங்கும் புழுதி உடல்பூசி நிற்பதுபோல் அங்கம் முழுதும் அழுக்கால் ஒளிகுறைந்தார்; தங்காமல் ஓரிடத்தும் தாண்டிக் குதித்தெழுந்தார். ஓடி விளையாடி ஓய்வின்றிச் சண்டையிட்டுக் கூடிக் குலாவும் குழந்தைகள்; கூட்டமாய் கூரையிலும், மாடியிலும், கோட்டு மரங்களிலும், ஏறிக் குரங்கினம் போல்இருந்து நோக்கினார்; அப்பாவோ! இத்திருடன் இன்றே அகப்பட்டான் எப்போதும் இந்நகரம் பேசும் இவன்பேச்சே! ஆழக்கண் வாய்க்கரையில் ஆரும் புகமுடியாத் தாழம் புதர்நடுவே தங்கி மறைந்தானாம்! இச்செய்தி கண்டான்; இருளப்பன் நம்வீரன்; அச்சம் சிறிதறியான் அக்காட்டின் உட்புகுந்தான்; கட்டிக் கொணர்ந்துவிட்டான்; காண்பீர் அவன்முகத்தை துட்டத் தனமெல்லாம் துள்ளிக் குதிப்பனவே! கெட்ட பயலிவன்பேர்க் கேட்டதும் நம்மரசன் வெட்டித் தலைவீழ்த்த ஆணை விரைந்தளிப்பான்; விட்டுவிட மாட்டான்; விருப்பமுடன் நாமினிமேல் வெட்ட வெளிச்சத்தும், வெண்ணிலாப் போதினிலும், அப்பக்கம் சென்றுநாம் ஆடிவிளை யாடலாம் எப்பொழுதும் என்றார் இனிது. சான்றோர் கண்டு வருந்தல் வாடும் பயிர்க்கு மழையைப் போல் - கெட்ட வறுமை அரக்கனால் துன்புறும் - மக்கள் நாடும் சுகங்கள் பெறும்படி - இந்த நாட்டில் பணிசெய் துவாழ்ந்திலன் - இவன் கேடு மனங்கொண்டு செய்ததால் - இந்தக் கீழ் நிலைக்காளா கிவிட்டனன் - என்று கேடும் அறிவுடை மாந்தர்கள் - அந்தத் தீரனைக் கண்டு மொழிந்தனர். நம்மை மனத்தில் நாடுவோர் - அதை நாளும் புரிந்து மகிழுவார் - எந்தத் தின்மை யவரைச் சூழினும் - சற்றும் தீரம் குறைந்திடல் இல்லைகாண் - பெருந் தம்மை இவன்கை விடுத்தனன் - வெறுந் தறுதலை யாகித் திரிந்திட்டான்- இவன் தன்மை யழகும் பயனின்றி - வீழ்ந்து வாடிய பூவினைப் போன்றவே. முள்ளுப் புதர்நிறை காட்டுள்ளே - ஒரு முதிர்ந்த கனிமரம் நின்றிட்டால் - அதைக் கொள்ளக் குறுகுவர் யார்உள்ளார் - இந்தக் கோபக் குறிகொண்ட வாலிபன் - துட்டக் குள்ள மனிதர்கள் சேர்க்கையால் - நல்ல கூட்டம் பெறக் கெட்டனன் - இதில் எள்ளளவும் ஐயம் இல்லைகாண் - என்று இயம்பி நின்றனர் வருந்தியே. இந்நிலத்தில் வாழ்வின்றி என்றும் பெரும்துயரில் மன்னுவோர் துன்பமெலாம் மாண்டு மறைந்தொழிய நல்லறங்கள் செய்திருந்தால், நாள்பலவாய்ச் சூரியன்றன் பொல்லாக் கடுவெயிலால் பொன்றும் நிலையடைந்த நெல்லின் பயிரும் நிலையழிந்த புற்பூண்டும் சில்லென்று மேகம் செறிந்து மழைபொழியத் தங்கள் துயரம் தவிர்ந்து தலைநிமிர்ந்தே எங்கும் பசுமை எழில்விளங்க நிற்பதுபோல் ஆனந்த மாகி அனைவோரும் வாழ்த்துவார். ஈனன் எனக்கூறி எள்ளுவார் யாருமிலர்; ஏழைக் குடிமக்கள் இன்பம் பெறவுரைத்தல் பாழுடம்பை நல்லுடம்பாய்ப் பண்ணும் வழி, இந்த உண்மையைக் காணான், உலகோர் பழிமொழியத் திண்மை உடையான் திருடன் கொலைஞனாய் வாழ்ந்தான்; அறத்தின் வழியறியான்; என்று துயர் ஆழ்ந்து பலசொல்லி நின்றார் அறிவுடையோர். பெண்கள் பேச்சு உச்சியிலே கார்மேகம் வாழ உடம்பினிலே பச்சைச் சிவப்புமயில் மஞ்சணிறப் பட்டுடுத்திக் காதிலே தோடணிந்து கையில் வளைதரித்து வீதி விளக்கேபோல் வீசும் பணிபூண்டு மின்னல் கொடிபலவும் மேதினியில் வந்துலவிக் கன்னல் மொழிபெய்து காதற் பயிர்வளர்த்து நின்று நடப்பவென, நேரிழையார் பற்பலரும் ஒன்று குழுமினார்; ஒண்புருவ வில்லினிலே கண்ணம்பு பூட்டிக் கடிதெறிந்தார்; வஞ்சனுடல் வண்ணத்தைக் கண்டு வளைகோத்த கைகளைத்தம் கன்னத்தில் ஊன்றினார்; கண்ணிமைப்பு நீக்கினார்; என்னடி! ஆயி ! இவனுமொரு கள்வனோ! சித்திரத்தும் காணச் சிறந்த வடிவழகன்! இத்கைய வீரன் இழிதொழிலைச் செய்வானோ! பூரணச் சந்திரனைப் போன்ற முகமுடையான்! மாரனும் மண்டியிட்டு மன்றாடும் பேரழகன்! பால்போல் வெளுத்த பல்லழகுக் காரனிவன்! சேல்போல் விழியுடையார் சிந்தை குடிபுகுவான்! என்று பலர்பேச இளையாள் ஒருமங்கை நன்று புகன்றீர்நீர் நாட்டு நடப்பறியீர்! தெய்வபத்திக் கான திருவேடம் கொண்டவர்கள் வையகத்தில் பாதகராய் வாழுவதைக் காணீரோ! நாட்டின் நலத்துக்கே நாங்கள் உழைக்கின்றோம்! கேட்டை அழிக்குமுன் கீழ்ப்படியோம் ! யார்க்குமெனக் கூட்டத்தில் நின்று குதித்துப் பலபேசி வீட்டுக்குள் வேறுபல செய்திருக்கும் வீணரைநீர்! கண்டும் அறியீரோ! கேட்டும் உணரீரோ! உண்டோ உமதகத்தில் உண்மை தெரியுமொளி? நல்ல மரகதம்போல் கண்கவரும் நஞ்சினிலே கொல்லும் கொடுமை குடியிருத்தல் காணீரோ! கண்ணாடி போலக் கவிழ்ந்து முகம்பார்க்க ஒண்ணும் தெளிநீரின் உள்ளே பலநஞ்சுப் பூச்சிகளும் வாழ்ந்து புசிப்போரை மாய்க்கின்ற ஆச்சிரியம் நீங்கள் அறியீரோ! தங்ககைள்! தங்க விலைமதிப்பைத் தாழ்வாகச் செய்யுலகம் அங்கதனிற் சேர்ந்திருக்கும் செய்தி அறியீரோ! வாச மலர்ச்சோலை வாழ்ந்துவரும் தென்றலுடன் நாச விடக்காற்றுச் சேர்ந்து நலியாதோ! ஆதலால் நீங்கள் அழகால் மயங்காதீர்! மாதரீர்! சொன்ன மடமை மொழிமறப்பீர்! என்னக் குயிற்குலத்தார் உண்மையிவள் சொல்லென்றே பன்னி மெதுவாகப் பாவையரும் சென்றார்கள். தோழர்கள் செய்கை கூட்டாளிக் கள்வர் குழுவின் நடுவினிலே காட்டாமல் தம்முருவைக் கண்கலங்கிச் சென்றார்கள்; தங்கள் தலைவனைத் தப்பிவிக்கச் சிந்தித்தார் எங்கெங்கும் காவலர்கள் எச்சரிக்கை யாய்ச்சூழ்ந்து செல்லுவதனா லொன்றும் செய்ய வழியின்றி மெல்ல நழுவிவிட்டார் மிக்க துயருடனே. இளவரசியும் கள்வனும் ஒருவரையொருவர் காணுதல் இந்த வகையாக எல்லாலோரும் சூழ்ந்துவர அந்தப் பெருவீரன் தன்னை அரண்மனையின் வீதி வழியாக விரைந்திழுத்து வந்தார்கள்; ஓதும் பெருவிழாவில் ஓங்கும் ஒலிபோன்ற மக்கள் குரலோசை மன்னன் மகள்கேட்டாள்; எக்கா ரணமிந்த ஓசைக்கு எனநினைந்தாள்; சேடியர் கூட்டமுடன் சேர்ந்துவிளை யாடியவள் ஓடியே வந்துற்றாள் உப்பரிகை மீதினிலே கூட்டத்தை நோக்கினாள் கோமள வல்லியவள் வாட்டமிலாத் தோற்றம்! வளர்ந்தபிறை போன்றமுகம், ஆர்வப் பயிர்வளர ஆண்மை மழைபொழியும் மார்பம் உடையான்! மனக்கினிய னாய்நின்றான்! குன்றனைய தோள்கள் ! குறையாக்கெம் பீரநடை அன்றலர்ந்த தாமரையே அன்ன திருக்கண்கள்! உள்ளான் இக்கட்டழகன்! ஊர்க்கா வலர்கூடிக் கள்ளனைப்போல் கட்டி இழுக்கின்றார் ஏனோதான்? என்று பலவெண்ணி இமையாமற் கண்மலரைச் சென்று முகங்குளிரச் சிந்தினாள்; சுந்தரனும் அண்ணாந்து பார்க்க அரண்மனையின் மாடியிலே தண்ணாரம் பூண்டிருந்த தையல் ஒருத்திபல விண்மீன் புடைசூழ வெள்ளை நிலாவீசித் தண்மதியம் ஒன்று தவம்புரிந்து நிற்பதுபோல் காரிகையாள் நின்றுதன் கண்மலர்கள் வீசுவதை வீரனுந் தான்கண்டான் விட்டெறிந்தான் தாமரையைச் செந்தா மரையோடி செவ்வரிசூழ் வண்டுகளைப் பைந்தேன் அருத்துதற்குப் பற்றுமொரு செய்கைபோல் அன்னத்தின் கண்களுடன் அன்பாற் கலந்துவிட மின்னல் இடையாளும், மெய்மறந்து நின்று விட்டாள் நன்றாய் அவனுருவை நாட்டிவிட்டு நெஞ்சினிலே அன்றே அவன்மார்பில் அன்பைப் பதித்துவிட்டாள்; காதல் பெருநோக்கால் கட்டழகன் ஆண்மைதனை மோதி அழித்தவளும் மோக வலைவீழ்ந்தாள்; கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல வென்று வள்ளுவர் சொன்ன மொழிபலிக்கச் சுந்தரனும் அப்பொழுதே தேங்கிப் பெருமூச்சு விட்டான்; திகைப்புற்றாள்; பாங்கிருந்த தோழியரும் பார்த்தார் அவள்நிலையை; கூட்டம் மறையுமட்டும் கண்ணிமைகள் கொட்டாமல் தீட்டாத சித்திரமாய் நின்றாள் தெருநோக்கி; மாந்தர் திரள்மறைந்த பின்னர், மதிமுகத்துச் சாந்தணிந்த கூந்தலைச் சலிப்புற்ற பார்வையாளின் வாடி மனம்சோர் வடிவமதைத் தோழியர்கள் வேடிக்கை பேசி விளையாடக் கொண்டணைந்தார். கள்வனை அரசன்முன் கொணர்தல் பெற்றோரை யன்றிப் பிறபொருள்கள் வேண்டுவன முற்றாக வாங்க முடியும் கடைத்தெருவும் வானகத்தே யாம் பெற்ற வாழ்வுளவோ என்றறிய ஆனவரை யோங்கி அழகிருக்கும் மாடங்கள் மீதே முகிலிருந்து மிக்ககுளீர் காட்டுகின்ற வீதி களும்கடந்து வீரம் நிறைந்தபெரும் அஞ்சாத சுந்தர நாதன் அவன் தன்னைக் கொஞ்ச நேரத்திற்குள் கொண்டணைந்தார் மன்னன்முன் மன்னன் தயாநிதி மகிழ்வடைந்தான் அப்போது; கன்னெஞ்சச் சுந்தரனைக் கட்டிக் கொணர்ந்தவர்க்குத் தக்க பரிசளித்தான்; தாழாமல் நீரிவனை இக்கணமே கொண்டு சிறைக்குள் இருத்திடுவீர்! நாளைப் பகற்போதில் நம்முடைய மன்றத்தில் நீள விசரித்து நீதிமுறை செய்வோம்! என்ன மொழிந்தன்பின் எல்லோரும் போய்விட்டார். மண்ணுளோர் நெஞ்சம் கலங்கி மயக்கமுறப் பண்ணும் பெருநோயைப் பற்றிப் பிணித்தாற்போல் அன்னவ னைச்சிறையில் தள்ளி அடைத்தார்; இரவு விடியுமட்டும் காவலர்கள் எல்லாம் உறங்காமல் காத்தார் ஒருங்கு. 2 கருகிய கஞ்சம் அஞ்சுகத்தை மன்னன் அளித்த சுடர்விளக்கை நெஞ்ச வலைப்படுத்தி நின்றதொரு சுந்தரனும் தூங்கான் விழித்திருந்தான்; துக்கக் கடல்படிந்தான்; ஆங்கே தான்பார்த்த அழகான பெண்மயிலை எண்ணியெண்ணி இன்புறுவான்; ஏங்குவான் நெஞ்சாகும் கண்ணினாற் கண்டு கலங்குவான்; சிந்திப்பான்; கள்வன் மனக்காதல் பாருலகிகல் நான்கண்ட பாவையர்கள் பற்பலபேர் ஆருமென் நெஞ்சினிலே அஞ்சாமல் வந்ததிலை; எத்தனையோ மங்கைமார் என்னை மணப்பதற்குச் சித்தத்தில் எண்ணியெனைச் சேர்ந்துரைத்த காலமெலாம் சற்றும் உமைவிரும்பேன் ! நான்மணக்கச் சம்மதியேன் முற்றும் வெறுக்கின்றேன்! மொய்குழலீர்! என்றுரைத்தேன்! வெப்பத்திற் பட்டுருகும் வெண்ணெய்யைப் போலுள்ளம் இப்படி நைந்துருகச் செய்தாள், எழிலரசி! உப்பரிகை மேல்நின் றொருபூங் கொடியென்மேல் ஒப்பரிய நீல மலரை உதிர்த்துவிட்டாள்! அந்நீலப் பூவைநான் ஆவலாய்க் கண்வழியே என்னெஞ்சின் உள்வைத்தேன்! இன்புற்றேன்! என்செய்வேன்! கொல்லும்விலங்கு குடியிருக்கும் காடுகளில் செல்லும் பொழுதும்நான் சிந்தை அழிந்ததிலை; நின்றுகீழ் நோக்கின் நிலைகலங்கச் செய்கின்ற குன்றின்மேல் ஏறிக் குதித்தபோ தும் அஞ்சேன்! வெள்ளங் கரைபுரண்டு வீழப் பலமரங்கள் தள்ளி அணையுடைத்துத் தாங்காமல் ஓடும் நதிகளைத் தாண்டுதற்கும் நான் சிறிதும் அஞ்சேன் புதியவழி முட்புதர்க்குள் போவேன் துணிவுடனே! கண்கொண்டு பார்த்தால் கலக்கமுறும் காரிருளில் மண்முழுதும் சுற்றி மகிழ்வேன்! மனங்கலங்கேன்! சிங்கம் புலிகளெனைச் சீறி எதிர்த்தாலும் அங்கே தடுப்பேன்! அழிப்பேன் அவைமாள! வீராதி வீரரெலாம் வீழ்ந்தே தரைபுரளத் தீரமுடன் போர்செய்வேன்! தீர்ப்பேன் அவருடலை! உள்ளமும் பேச்சும் ஒருதன்மை யில்லாமல் கள்ளத் தனஞ்செய் கயவரைக் கண்டாலும் எள்ளத் தனைகூட அஞ்சா(து) எதிர்த்தவரைப் பள்ளத்தில் வீழும் படிவெற்றி பெற்றிடுவேன் எக்காலும் சோராத தன்மையுள என்னெஞ்சம் இக்காலம் வாடி இருக்கும் திறமறியேன்! கன்னிகையின் வேல்விழியும் கட்டழகும் சேர்ந்தென்னை இந்நிலையில் வைத்தனவே ஆஆ! இதுவியப்பே! ஆ! வென் மதியிருந்த வாறென்? அறிவில்லேன்! பாவி அவளிவ்வூர்ப் பார்த்திபன் செல்விதான்! எட்டாத மாங்கனியை எய்த ஒருசிறுவன் கொட்டாவி போக்கல்போல் ஆனேன்! கொடியனேன்! வானத் திளம்பிறையை வாவென் றழைத்தழுது கானல் குரல்காட்டும் கைக்குழந்தை போலானேன்! பஞ்சவர் ணக்கிளியைப் பார்ப்பதற்குக் கண்ணில்லான் கொஞ்சிக் கொடுவென்று கேட்பதால் என்னபயன்? வாயில்லா மங்கை வளர்கீதம் கற்பதனால் ஆய பலன்என்ன? அங்கோர் மலைமுகட்டில் செந்தேன் அடைபிளந்து சிந்த அதைவிரும்பி நொந்துதன் நாநீட்டும் நொண்டி பெறும்பயன்என்? இந்த விதமெல்லாம் எண்ணி அவனிமைப்பில் சிந்தை பறிபோகச் செய்திருந்த நேரத்தே! மானேர் விழிக்குமரி மங்கை மலரணிந்து தானே அவனெதிரில் புன்முறுவல் தந்திருக்க, மன்னன் மகள்வந்தாள் என்று மருண்டவனாய்ச் சொன்னான் பலமொழிகள் சோர்ந்து கள்வன் கூறுதல் சிந்து நெஞ்சில் குடிபுகுந்தாய் - நிலை நின்று கண்காட்டி மயக்கினை மானே! அஞ்சும் வினைபுரிந்தேன்! - இனி அத்தொழில் செய்திலேன்! விட்டனென் ஆணை! நஞ்சாய் எனை வருத்தேல் !- ஒரு நன்மொழி தந்துயிர் காத்தருள் வாய்நீ! வஞ்சி யிணைவிழியால் - மன வல்லமை தீர்ந்து மறைந்தது மாதே! பட்டினி வாதையினால் - இந்தப் பாரினில் துன்பம் பிணிகொண்டு தவிப்பார் கிட்டிய நல்லுணவால் - நெஞ்சம் கிளர்ந்து மகிழ்ந்து களிப்புறல் போலே கட்டிக் கரும்புனையே - நான் கண்டதும் காதல் கொண்டு மகிழ்ந்தேன்; மட்டித் தனமதனால் - இந்த மாநில மீதினி தீதுகள் செய்யேன்; காதல் தனையிதுநாள் - வரைக் கண்டறியேன்; சொல்லக் கேட்டதேயன்றிக், கோதை மார்பலரால் - மனம் கொள்ளை கொள்ளாமற் பிழைத்தனென்! இந்நாள், மாதே! உனதழகால் -இன்று மனங்கவர் காதல் இதுவென்று கண்டேன்! ஏதோ இதுவறியேன்! நீ என்உள்ளம் கொண்டனை ! வீழ்ந்தனென் உன்பால்! மன்னன் மடமகளே! - ஒளிர் மதிமுகங் கொண்டென் மனத்துள் நுழைந்தே என்னைப் புதுமையிலே - நீ இருத்தினை பித்தன்போல் ஆயினென் நின்றேன் உன்னால் குறையறிந்தேன் - இனி ஒருவகைத் தீமையும் செய்திட மாட்டேன்! கண்ணே! இனி வருத்தேல்! - என்றன் கையில் அணைந்தருள்! கண்கவர் தேவி! (கலிவெண்பா) கள்ளனிவ் வாறுரைத்துக் காரிகையைக் கைப்பிடிக்க மெள்ள வெழுத்திருந்தான்; மின்னற் கொடிமறைந்தாள்; உள்ளத்தே உண்மை உணராத தால்அவனும் துள்ளிக் குதித்தான்; துழாவினான் அங்கெல்லாம்; உள்ளத்தால் எண்ணும் உருவம் கனவினிலே மெள்ள வெளிப்படும்; மெய்மை அவனறியான் அன்னான் மனத்துள்ளே வாழ்ந்த அவளுருவே கண்ணின் எதிர்தோன்றிக் காட்சி அளித்ததெனக் கண்டறி யாமல் கதைகள் பலசொல்லித் திண்டாடி நின்றாள் திருடன்; அதுகாலை, காவலர் கடிதல் காவலர்கள் அன்னவனைக் கண்டு வியப்புற்றார்; ஆவா! இதுவென் ! அறியோம்! உளறல்! சிறையுள் இருக்குமிவன் சிந்தை கலங்கி அறைவான்! ஏதேதோ; ஐயமிலை பைத்தியமே! என்றவர்கள் பேசி ஏண்டா உளறுகிறாய்! நன்றறியாக் கள்வா! பிதற்றாதே! நன்றாய் உறங்குவாய் ! நாளை உயிர்கவர் வான்மன்னன் மறைந்து விடும்உன்றன் மனத்துயரம் என்றார்கள் கள்வன் விடை மன்னவன் பெண்பால் மனத்தை அடகுவைத்த அன்னவன்,பேதைகாள்! ஆய்ந்தென் நிலையறியீர்! பித்தனென் றேதேதோ பேசி இராமுழுதும் அந்தச் சிறைக்குள் இருந்தார்கள். அவ்விரவில் நெஞ்சம் பறிகொடுத்த நேரிழையாள் பட்டதுயர் கொஞ்சம்அல வெல்லாம் கூறுவதற் கார்வல்லார்? அரசகுமாரியின் துன்பம் நீலத் துகில்விரித்து நித்திலங்கள் மேள்பரப்பிக் கோலஞ்செய் வெள்ளிக் குடமொன்று வைத்ததுபோல் ஊடலிலே சோர்ந்திருந்த காதலர்கள் உள்ளமலர் கூடலிலே செல்லக் குமுதம் இதழ்விரிய, வெள்ளை நிலாச்சிந்தி, வெங்கதிரால் துன்புற்றோர் உள்ளமகிழ் வெய்த உதித்தான் மதிவானில்; வந்த மதிகண்டு வாழ்த்தினார் காதலர்கள்; இந்த நிலவமுதை எல்லோரும் உண்டிருந்தார்; கள்வனிடம் நெஞ்சு பறிபோன காரிகைதான் ஒள்வளைகள் சோர, உடம்பெல்லாம் தீச்சூழ, நாட்டியம் செய்பதுமை நாணற்று வீழ்ந்ததென ஆட்ட மெலாம்விட்டாள்; அமளியின் மேற்கிடந்தாள்; காய்க்குமொரு மாங்கன்றைக் கத்தியினால் வெட்டிச் சாய்த்த தெனக்கிடந்தாள்; சாம்பினாள்; தேம்பினாள்; நல்ல மலர்க்கொடியை நாசமுற வேரோடு கல்லிக் கடுவெயிலிற் காய விடுத்ததென முல்லை முறுவலாள் சோர்ந்தாள் முகமலர்தான்; கொல்லைமான் நெஞ்சம் குமுறினாள்; வாடினாள்; கஞ்ச மலர்ஒன்று கருகிக் கிடந்ததெனப் பஞ்சணையில் வீழ்ந்து படுத்திருந்தாள்; பாவைநிலை கண்டதுணைத் தோழிமார் கண்மலர்கள்; மூடவிலை; உண்டாளோ போதை! உணர்ச்சி மறந்ததென்? ஏதோ மயக்குற்றாள்; சொல்லாள் எமக்கொன்றும்; தீதோ இவளுடற்கே! தேறோம்! எனப்புலம்பிக் கொல்லனுலைக்காற்றேபோல் கோதைமார் மூச்சுயிர்த்தார்; அல்லி மலர்க்கொடியை ஆற்றாத வெய்யிலிலே கிள்ளி யெறியக் கிடந்து துவள்வதுபோல் கொள்ளைச் சிரிப்புடைய கொவ்வை யிதழாளும் சேர்ந்த படுக்கையிலே சிந்தை கலங்கிமுகம் சோர்ந்து கிடந்தாள் சுழன்று. ஆச்சிரியப் பேரிருள் ( கலிவெண்பா) நீலநிறக் கம்பளியை நீணிலத்தின் மேல்விரித்துக் கோலப் பசும்பொன் குடம்நிறுத்தி வைத்ததுபோல் காலைக் கதிரோன் கடல்முகத்தில் தோன்றுமுன், சோலைப் பறவையெலாம் சோர்வின்றிக் கொக்கரித்துக் கூடிக் களித்துக் குதூகல மாயிருப்பப் பாடும் பறவையினம் பாடி மகிழ்ந்திருக்க, வன்னச் சிறைக்குலங்கள் வாரிப் புசிப்பதற்கே அன்னத்தை யெங்கும் அள்ளி யிறைத்தாற்போல் முல்லை மலரும் முறுக்கவிழ்ந்த மல்லிகையும் எல்லையிலா வாசனையோ டெங்கும் மலர்ந்திருக்க, கொண்டான் கொதிப்டைந்து கூறும் மொழித்தீயால் சுண்டும் மனைவிமுகம் போலவே சோர்வாகி அல்லி மலர்குவிய; அன்பாய்ப் பலபேசிப் புல்ல வரும்கொழுநன் புன்னகையால் நெஞ்சினிலே துள்ளும் மகிழ்ச்சிமுகம் தோன்றுவது போல்மனத்தை அள்ளும் தடந்தோறும் தாமரைகள் வாயவிழப்; பள்ளிச் சிறுவரெலாம் பாடம் படிப்பதற்குத் துள்ளி யெழுந்திருந் துட்கார்ந்து தூங்கிவிழ வேலைக்குச் செல்வோர் விரைந்தெழுந்து தத்தமது காலைக் கடன்கள் கடிதாகச் செய்திருப்பத் தூக்கம் விழித்தெழுந்து தோகையர்கள் எல்லோரும் ஊக்கத்தை ஆடவரும் கூட்டும் முகந்திருத்தி இல்லத்து வேலைகளைச் செய்திருக்கும் எல்லையிலே, எல்லோரும் காண இளம்பரிதி தோன்றினான். பொங்கும் நெருப்பாய்ப் பொலிகின்ற சூரியனும் எங்கெங்கும் தன்னொளியை ஏறப் பரப்பினான். அவ்வொளியின் வெள்ளத்தில் ஆழ்ந்த பொருளெல்லாம் செவ்வையாய்ப் பொன்சால்வை போர்த்திச் சிறந்தனவே! தோட்ட மலர்கள் தொடையவிழ்ந்து வண்டுகளின் கூட்டங் களைக்கூவித் தேனருத்திக் கொண்டிருக்கும்; இந்நேரப் போதில்அவ் வூரில் இருப்பவர்கள் முன்னாள் நிகழ்ச்சி முதலில் நினைத்தார்கள்; அஞ்சாத சிங்கன் வழக்கை நமதரசன் சுந்தர நாதனெனும் சோரன் பெருவழக்கை இந்தநாள் நம்மரசன் கேட்பான், கொலைசெய்வான் இஞ்ஞான்று கேட்பான்; இடுவான் கொலைத்தண்டம்; நாமுன்னே சென்றந்த நன்னிகழ்ச்சி காணுவோம்! போமென்று யார்நம்மைத் தள்ளினும் போகோம்! எனப்பேசி மாந்தரெல்லாம் ஏராள மாக வனப்பான மன்னன் சபைநோக்கி வந்திருந்தார். கள்வன் வழக்கு கரந்தைநகர் வேந்தன் கலங்காத நெஞ்சன் அறந்தவறா மல்நெறியில் ஆளும் அறிவுடையோன் அன்னான் ஒருசெல்வம் ஆட்சிக் குரியமகள் பொன்னே எனக்கண்டார் போற்றும் எழிற்கொழுந்து கோமள வல்லியெனக் கூறும் பெயருடையாள், காமத்தைப் பாய்ச்சும் கண்ணுடையாள், செவ்விதழாள்; நீரில் நிமிர்ந்து நிற்கும் மலர்முகத்தாள்; பாரப் பெருஞ்சுவைசேர் பைந்தமிழின் சேமநிதி; நூல்பலவும் கற்றறிந்தாள்; நுட்ப மதியுடையாள்; பால்போன்ற வெண்மனத்தாள்; பாவின் சுவை நுகர்வாள்; நீதிநூற் கொள்கை யெலாம் நன்கறிவாள், நீள்குழலாள்; ஓதுவதிற் காலத்தை ஓயாமற் போக்குவாள். அன்னவள் பாலரசன் ஆரா விருப்புடையன்; என்னசெய லேனும் இவளிடத்திற் சொல்லாமல் செய்வதிலை ஆதாலால், செந்தமிழ்க் கன்னியவள் வைகும் இடந்தேடி வந்து முடிமன்னன், மாதர் குலக்கொழுந்தே! நாளைநம் மாசபையில் தீதுபல ஓருருவாய்த் திரண்டெழுந் தாற்போன்றோன் சூதிலே வல்லவன் சுந்தர நாதனெனும் காதகன் கள்வன் கடுஞ்சிந்தை யாளன்மேல் வழக்கு நடக்கும் வகைகாண நீயும் பழக்க முளதோழி யுடன்வந்து பார்த்திருப்பாய்! பட்டத் திளவரசி யாதலாற் பாராளும் சட்டதிட் டங்கள் சரியாகக் கண்டுணர்வாய்! என்றுரைத்தான். மன்னவனும் ஏற்ற உடைபூண்டு மன்றம் புகுந்தான்; மதியமைச்சர் போற்றினார்; ஊரார்கள் எல்லோரும் உள்ளக் களிப்புடனே பாராளும் வேந்தனை வாழ்த்திப் பணிந்தார்கள்; ஆரா அமுதனையாள் அங்கோர் புறத்தமர்ந்து மாரனுக் கோலை செலவிட்டு மகிழ்ந்திருந்தாள். காவலர்கள் அவ்விய கள்வனைக் கட்டுடனே, ஆவலுடன் மக்கள் அனைவோரும் பார்க்க நெருங்கி யிடித்து விழிபிதுங்கி நிற்கக், கருங்கல் மனக்கள்வன் தன்னைக், கலைமன்னன் மன்றத்தே யீர்த்துக் கொணர்ந்து, மனஞ்சலியா தென்றும் பணிபுரிவோர் வைத்தார், எதிர்நிறுத்தி. அப்பொழுது மன்னன் அவன்முன் புரிந்தபல தப்பிதங்கள் காட்டுவான் தான். அரசன் கூறுதுல் (ஆசிரிய விருத்தம்) ஊராரின் மனம்பதைக்கத் தீமை செய்தாய்! ஒருவருக்கும் தெரியமல் ஒளிந்தி ருந்தாய்! ஏராள மாயுழைத்து வருந்தி நாளும் இன்புறவே மக்களெலாம் செல்வம் சேர்ப்பார்; ஓராமல் அவைகளைநீ திருடிச் சென்றே உன்சுகத்தைப் பேணுதலோர் குற்றம் அன்றே? சீரான நன்னெறிகள் கடைப்பி டித்தே சிறந்தவனாய் வாழுமறி வுனக்கேன் இல்லை? பாடுபட்டிங் குழைப்பதற்கே காலுங் கையும் பலமான கட்டுடலும் பெற்றி ருப்பாய்! நாடுவிட்டு நாடோடிப் பலரு ழைத்தே நல்வாழ்வு நடத்துவதும் கண்டு நின்றாய் ! காடுதனில் விறகொடித்து விற்று வாழின் கண்டவர்கள் உனையிகழார் அன்றோ சொல்க! தேடுதற்கு முடியாத மானந் தன்னைத் திருடனெனும் பழிபூண்டு விட்டு விட்டாய்! பொதுமக்கள் மதிக்குமொரு தொழிலைச் செய்து புகழாக வாழ்வதற்காம் அறிவே யின்றிப் பதிதர்களின் கூட்டத்தைத் துணையாக் கொண்டாய்! பாலர்களும் மாதர்களும் நடுக்கம் கொள்ள அதிகொடிய செயல்களிலே ஈடு பட்டாய்! அழகியவுன் கட்டிளமை அழித்து விட்டாய்! மதுவருந்தி மதிகெட்டுத் திரிந்து நின்றாய்! மனிதனென உனையிங்கு மதிப்பார் உண்டோ! கள்ளவினைத் தொழில்புரிந்து வாழ்ந்து வந்தாய் கயவனே! இவ்வளவோ உனது குற்றம் ! மெள்ளஎவர் சொன்னாலும் அச்சொல் கேட்பின் மேனியெலாம் விதிர்விதிர்த்து வேர்வை யாகி உள்ளமெலாம் சோர்வடையும் கொலையைச் செய்ய ஒருபொழுதும் அஞ்சாத வலிய நெஞ்சா! கொள்ளையுயிர் கொன்றுலக கால னாகிக் கொலைப்புதரின் உள்வாழ்ந்த கொடிய தீயா! பிடித்துன்னைக் கொண்டுவரக் காவல் வீரர் பிரிந்துபல திசைகளிலும் தேடிப் பார்த்தார்; தடித்தனத்தால் அவர்கையில் அகப்படாமல் தப்பித்து மறைவாகத் திரிந்து வாழ்ந்தாய்! குடித்தனத்தார் பலருன்னால் துன்பம் எய்த கொடுங்கோல்கொள் மன்னவனாய்க் குறும்பு செய்தாய்! அடித்திங்கு விரட்டிவிட மாட்டேன் உன்றன் அடாதபழிக் கேற்றவொரு தண்டம் செய்வேன்! கள்வன் வேண்டுகோளும் அரசன் விடையும் (பஃறொடை வெண்பா) வேந்தன் உரைகேட்டு வீற்றிருந்த மந்திரிமார், மாந்தர் பலருமொரு மாற்றமுரையா திருந்தார். அஞ்சாத சிங்கன் அரசன்முக நோக்கிக் சோரா முகமுடைய சுந்தரநாதன் அவன் நேரே நிமிர்ந்தங்கு நின்று மொழிந்திட்டான்; கொஞ்சமும் சோர்விலான் கூறத் தொடங்கினான்; பூமண் டலமாளும் வேந்தே! புகழுடையோய்! யாமுமொரு விண்ணப்பம் செய்வோம்! எமக்குநீ உத்தரவு தந்தால் உரைக்கின்றோம் இச்சபையின் மத்தியிலே என்றவன் மாற்றுமொழி கூறினான்; எவ்வுரைகள் கூறநீ எண்ணிடினும் இப்பொழுதே அவ்வுரைகள் சொல்லலாம் அஞ்சாமல் என்றந்த மன்னன் விடைதந்தான்; மாவீரன் சுந்தரனும் சொன்னான் பலமொழிகள் சூழ்ந்து. கள்வன் மொழி என்னையொரு திருடனென முடிவு செய்தாய், இழிவாகப் பலமொழிகள் பேசி விட்டாய்! அன்னையினுந் தயவுடையான் நீயென் றெண்ணி அறியாதார் உன்பாதம் தாங்கி நின்றார்! உன்னையும்நான் திருடனெனக் கூறு கின்றேன்! உண்மை யென்றே மெய்ப்பிப்பேன் உறுதியாக! மன்னிப்பாய் என்னுரையை அரசர் ஏறே! மடமையினால் அழிவழக்குச் சொன்னேன் அல்லேன்! கொலைகாரன் எனவென்னை இகழ்ந்து மாந்தர் கூட்டமெலாம் பரிகசிக்க வசைமொ ழிந்தாய்! நிலையாக எனதாவி காப்ப தற்கே நின்றெனையார் எதிர்தாலும் அழித்தி ருப்பேன்! அலைசூழும் கடலுலகில் மன்னர் தம்மால் ஆருயிர்கள் அழிவதற்கோர் அளவும் உண்டோ! மலையாமல் என்மொழியை எண்ணிப் பார்நீ! மன்னவனே கொலைஞன்நான் ஒருவன் தானோ? அரசன் சினம் இவ்வுரைகள் சுந்தர நாதன் இயம்பியபின் கொவ்வையெனக் கண்சிவந்து கோபம் குடிகொள்ள மீசை துடிதுடிக்க, மேலுந்தன் மார்பினிலே வீசியபல் கூரம்பு பாய்ந்தால் எனவெகுண்டு, வேந்தன் எழுந்திருந்து விண்ணதிரக் கூவினான்; சாந்தத்தை மாய்த்தான்; சடசடடெனப் பெசுகின்றான்; ஏடா! கொலைக்கள்வா! உன்னாண்மை எவ்வளவு? தேடாப் பெரும்பழிக்குன் தேகம் பறிகொடுத்தாய்! நாட்டுக்கு மன்னவனை நாக்குப் புரளுமட்டும் கேட்டுக்குள் ஆனமொழி பேசினாய் கீழ்மகனே! தேசக் குடிமக்கள் தேம்பித் திரியாமல் வாசம் புரிவதற்கே வாழும் அரசனிடம் நேசத்தைக் காட்டாமல் நீதான் பழித்தாய் ! உன் மோசத்தை ஊரார் முழுதும் அறிவார் கள் ! என்னையுமுன் தோழனெனக் கூறி எதிர்மொழிந்தாய் உன்னைத் தலைவீழ்த்தி ஓட்டுகிறேன் பார்! என்று மன்னன் கடுகடுத்தான்; மன்றத்தார் அச்சமுறத் தன்னுடைய வாட்படையைக் கைக்கொண்டு தாண்டினான்; மன்றத்தார் எல்லோரும் மண்பதுமை யானார்கள்; சென்றோடி னான்மன்னன்; செங்கரத்து வாள்பற்றி, மந்திரி ஆய்மதியன் மன்றாடிக் கூறுகின்றான், செந்தமிழ் வல்லனே! சீற்றம் தணிந்திடுவாய்! இப்போ திவன்கூறும் ஈனப் பொருள்மொழிகள் எப்படித்தான் ஒக்குமெனக் கேட்போம் இவனையே! என்று மொழிந்தவுடன் வாள்கொண்ட ஏந்தலுந்தான் நின்றான் சினந்தணிந்து, நீர்விட்ட தீயாகி; ஆண்டிருந்த கள்வன் அஞ்சாமுகம் நோக்கி, ஏண்டா! தலைக்கிறுக்கா! இப்போது நீசொன்ன வீண்மொழியை நன்றாய் விளக்கி உரைத்தாற்பின் காண்கின்றேன் உன்னுடைய கைவரிசை யாவு மென மன்னன் சினந்திந்த மாற்றம் புகன்றவுடன், கன்னெஞ்சன் சொல்வான் கடிந்து. கள்வன் உரை தேசத்தார் துயர்களைய வாழ்வேன் என்று தெரிவித்த மலர்மார்பின் மன்னா கேள்நீ ! மாசற்ற மனமுடையார் ஏழை மக்கள் மாநிலத்தை வளப்படுத்தி விளைய வைப்பார்! வாசமலர்ப் பூஞ்சோலை வளர்த்து வைப்பார்! வாய்க்கால்கள் ஆறுகளும் அகழ்ந்து வைப்பார்! நேசத்தால் நீநலங்கள் செய்வா யென்று நினைத்திருந்தார் அறியாத தன்மை யாலே! இரத்தமழை வேர்வையென நிலத்தே சிந்தி எந்நாளும் பாடுபடும் மக்க ளாலே பெருத்தபல நகரங்கள், தெருக்கள், வீடு, பிழைத்திருந்து வாழ்வதற்காம் உணவுப் பண்டம் துரைத்தனத்தை நடத்துதற்குச் செல்வ மெல்லாம் தோன்றிவரும் உண்மையிது மறுக்க லாமோ! வருத்தியவர் தமைச்சுரண்டு வோரை நீங்கள் வாழ்விக்க ! விருக்கின்றீர் பயனும் உண்டோ! பகலிரவு பாராமல் உடலை வாட்டிப் பலதொழிலும் புரிந்துலகில் வாழும் மக்கள் மிகவருந்தி இடமில்லா துணவும் இன்றி மெலிந்தழிந்தே பதைக்கின்றார்; உதவி யில்லை; சகமெல்லாம் பஞ்சமெனும் கொடும்பேய் சூழ்ந்து சலிப்டைய மக்கள் தமைக் கசக்கினாலும் தகவின்றி வரிவாங்கி அரசு செய்தல் தருமமோ! நீதிவழி நடப்ப தாமோ! எந்நாளும் வரிகளின்மேல் வரிகள் போட்டே ஏழைகளின் விழிகலங்கக் கொடுமை செய்தல் மன்னாநற் செய்கையோ! நீதி தானோ! மதியுள்ளார் செயல்முயற்றும் அறமே தாமோ! உன்னாணை உரைக்கின்றேன், ஆய்ந்து பார் நீ ! ஒருவிதத்தும் பேதமிலை நானும் நீயும்! சொன்னால்நீ பகற்கொள்ளை அடித்து நிற்பாய்! சோரன் இராக் காலத்தில் திருடி நின்றேன்! கொலைகாரன் என்றென்னை இகழ்ந்தே சொன்னாய்! கூறுகிறேன் உன்கொலை யைக்குறித்துக் கேள்நீ! நிலையாயிம் மண்ணுலகை ஆளும் காதல் நினைப்போடு படைகள் பல சேர்ந்து வைத்தாய்! சலியாமல் போர்செய்து தலைகள் சாய்ப்பாய்! சளசளென இரத்தநதி ஓடச் செய்வாய்! உலையாத வீரனெனும் பெயரை நாடி உடல்துடிக்க உயிர்கொள்வாய் நீயும் அன்றோ! ஆதலினால் மன்னவனே! நீயும் நானும் ஆற்றுவது வேறுதொழில் என்ன வெண்ணேல்; பேதமிலை இருவருக்குள் எண்ணிப் பார்த்தால்; பித்துடைய மாந்தரிதை உணர மாட்டார்; சாதியிலே உயர்வுரைத்துத் தாழ்வும் சொல்லிச் சதிபுரிந்த தாலிங்கே மயங்கி நின்றாய்! நீதியிலே பகுத்தறிவை வைத்து நோக்கின் நிசந்தெரியும் என்மொழியை நினைத்துப் பார்நீ! அமைச்சன் மொழிதல் (ஆசிரியப்பா) அஞ்சாத சிங்கன் அறைந்த மொழிகள் நெஞ்சிற் புகுந்து நஞ்சாய் கலக்க, மன்னன் சினத்தால் தன்னறி விழந்தான்; என்ன விடைதான்இறுப்பதென் றெண்ணான்; பேரவ மானப் பிலத்துள் வீழ்ந்தான், ஆரவன்? மடப்பயல்! ஈரமில் நெஞ்சன்! உலக நீதி ஒன்றும் உணரான்! பலபல உளறினன் பகுத்தறி வின்றி! மன்னவன் இன்றேல் மானிடச் சோலை தன்னிற் கலகச் சுழல்தான் புகுந்து சாந்தம் குலைக்கும்; சட்டதிட் டங்கள் மாந்தர் அறியார்! மாக்கள் போன்றே வரைதுறை யில்லா வாழ்க்கையிற் சிக்கிக் கரையிலாக் கண்வாய் நீரெனப் போவர்; இந்நிலை நேரா திருக்கும் பொருட்டே மன்னன் வரிகள் வாங்கி வாங்கி அவற்றை ஆளுகைப் புகைரதம் ஆபத் தின்றி நாளும் நன்கு நடைபெற நல்குவன்; அரிய அமைதி முறியும் படியே வெறிநாய் ஆகிக் கலகம் விளைப்போர்ச் சிதற அடிப்பான் சேனைகள் கொண்டே; இதிலென் குற்றம்? இயம்புதி பேதாய்! என்றாய் மதியன் நின்று மொழிந்திட, ஒன்றும் உரையான் அக்கொடுங் கள்வன். நன்று நன்றிம் மந்திரி சூடென மன்றுளோர் மகிழ்ந்துகை கொட்ட, நின்ற கள்வனும் நோக்கினன் நிமிர்ந்தே. கள்வன் விடை மதிநிறைந்த மந்திரியார் பதிலைக் கேட்டீர்! மகிழ்ச்சியுடன் கரங்கொட்டி ஆர்ப்ப ரித்தீர்! புதுமையதில் ஏதுமில்லை; பழைய வார்த்தை; புகல்கின்றேன் நானுமிதோ உண்மை கேளீர்! கதியறியார் பிழைப்பதற்கும், கால மெல்லாம் கலக்கங்கொள் மனிதர்பலர் என்னே டுள்ளார்; அதிவறியர்! பரிதாபர்! அவரைக் காத்தல் அடியேற்கும் கடனாகும் காத்து நின்றேன்! என்னுடைய குடிபடைகள் பிழைப்பதற்கே எப்பொழுதும் செல்வர் பொருள் கொள்ளை கொண்டேன்; மண்ணுலகில் எந்நாளும் வறியர் செல்வம் மனதாரத் திருடினதே இல்லை! இல்லை! கன்னமிடுங் காலென்னைப் பிடித்து யிர்தான் கவரவரு வோரைநான் கொன்ற துண்டு! எண்ணுவேன் திருடல்கொலை குற்றம் என்றே என்னினும் பிறர்க்குதவி கருதிச் செய்வேன்! அமைச்சன் உரைத்தல் (ஆசிரியப்பா) அமைச்சன் இவ்வுரை அறிந்தனன் மனத்தில் இமைப்பில் மறுமொழி இயம்பக் கருதிக் களியனை நோக்கிக் கனைத்துத் தெளிவில் இம்மொழி தெரிவித் தனனே! (ஆசிரிய விருத்தம்) நீமொழிந்த உரைமுழுதும் கிளறிப் பார்த்தால் நிலைநிற்கும் பகுத்தறிவு மன்றந் தன்னில்; ஆமிதிலோர் ஐயமிலை, உண்மை! உண்மை! ஆனாலும் அறிஞர்களால் வகுத்து வைத்துப் பூமிதனில் வழங்கிவரும் கலைகள் ஒன்றும் புகலவிலை உன்தொழிலும் முறைதான்என்று; சேமமிலை உனதுரையால்; பயனு மில்லை; சிறுவயதில் பெருங்குற்றம் செய்து நின்றாய்! அரையனுக்குக் கடமையென விதித்த வற்றை அவன்புரிவ தறமன்றோ! பாவம் ஆமோ! சிறையேனோ! வழக்கேனோ! தண்ட மேனோ! சிந்திப்பாய்! இவையுலக நன்மைக் கன்றோ! குறைசொல்லி அரசுமுறை பழித்து நின்று கொடுவழக்குப் பேசும் நீ துரோகி யாவாய்! தரையிலினி உயிர்வாழத் தகுதி யற்றாய்! தந்திடுவோம் உனக்கின்று மரணத் தீர்ப்பே! அரசனது செயல்முற்றும் நீதி யென்றே அமைந்துள்ள காரணத்தால் அச்ச மின்றி முரசறைந்து பொதுமக்கள் காணும் வண்ணம் மொழிந்துமுறை செய்கின்றான் வெளிப் படையாய்! இரகசியத்தில் வைத்துன்றன் தொழிலை யென்றும் இரவுதனில் மறைவாகச் செய்தி யன்றோ! உரைசெய்வாய் ! இதுவொன்றே உனது செய்கை ஒவ்வாத தென்பதனைக் காட்டும் அன்றோ! அவையோர் கூறல் (கலிவெண்பா) மந்திரியின் பொன்னுரையால் மன்னன் மகிழ்வடைந்தான் அந்தச் சபையோரும் ஆழ்ந்தார் பெருங்களிப்பில் சுந்தர நாதனும் சோர்ந்தான் உரையிழந்தான் எந்த மொழியும் இயம்பா தலைகுனிந்தான் மன்னன் தயாநிதியும் மாசபையை நோக்கினான். இன்னான் வழக்கறித்தீர் தண்டனை தான்என்ன விதிக்கலாம் இப்பெரிய வீணனுக்கு? நீங்கள் கொதிப்பின்றி நன்றாய்க் குறித்தறிந்து கூறுவீர்! என்றவுடன் மன்றத்தார் எல்லோரும் ஓர்குரலாய்க் கொன்றே யழித்திடுவீர்! கொன்றே யழித்திடுவீர்! தக்கதித் தண்டனையே! சற்றுந் தயங்காதீர்! இக்கணமே செய்திடுவீர்! என்று புகன்றார்கள். அந்தவிதத் தண்டனையே ஆற்றத் தகுமென்று மந்திரிமார் எல்லோரும் மன்னனிடம் சொன்னார்கள்; குற்றம் புரிபவர்மேல் கோபப் படுவதுவே முற்றும் பொதுமக்கள் தன்மையாம், மூர்க்கனாய் இத்தரையில் ஏன்சிலர் ஆகின்றார் என்றெண்ணி அத்தகைய காரணங்கள் தம்மை அழித்துவிடின், எல்லோரும் இவ்வுலகில் இன்பம் பலவெய்தி நல்ல சமூகமாய் வாழ்ந்து நலம்பெறலாம் என்ற பகுத்தறிவுத் தன்மையவர்க் கின்மையால் கொன்றுவிட வேண்டுமெனக் கூறிவிட்டார்தீர்ப்பே. வெற்றிநாதன் கூறுதல் வெற்றிநா தன்என்போன் விவேகம் மிகவுடையோன் சற்றும் தளராமல் சாற்றுகிறான் மன்னன்பால்; வேந்தே பலவணக்கம்! வெற்றியோடு வாழ்கநீ! மாந்தரெல் லாமிவனை மாய்த்துவிடக் கூறினார்; குற்றத்திற் கேற்பக் கொடுந்தண்டம் நீ விதித்தல் முற்றும் முறைதான்; மொழிவதற்கும் ஒன்றுமில்லை; ஆயினும் வீரன்; அறிவுள்ள கட்டிளைஞன்! தீயன் இவனைத் திருத்துதற்குத் தக்கதொரு தண்டனையைத் தந்து தவறினிமேற் செய்யாமல் கண்டிப்ப தேநல்ல காரியம் என்றுரைத்தான். கள்வனைத் தண்டித்தல் இச்சொல்லைக் கேட்டவர்கள் எல்லோரும் கைகொட்டிச் சீச்சீ! இவன் பித்தன்! என்று சிரித்தார்கள்; மன்னன் இது சொன்ன மந்திரியின் நன்மொழியை என்னவெனக் கேளான் இகழ்ந்தான்; சினமுடனே, காளைப் பயலிவனைக் காவலில் இன்றுவைத்து நாளை நடுப்பகலில் நம்மூர்க் கொலைக்களத்தில் வைத்து நிறுத்தியே வாளால் இவன்தலையைச் செத்து விழவெட்டிச் சிதைப்பீர்! எனதாணை! இத்தீர்ப்புக் கூறி எழுந்தான் முடி மன்னன். கள்வனும் அரசியும் அத்தீய கள்வன் அமுதமென வீற்றிருந்த ஈரமலர்க் கூந்தல் ஏந்திழையை நோக்கினான்; நாரி வரவேற்றாள்; நாணித் தலைகுனிந்தாள்; கண்ணிருந்து முத்துக் கலகலெனத் சிந்தினாள்; எண்ணமெலாம் பாழாகி ஏங்கிப் பதைபதைத்தாள்; மன்னவனோ இன்று மரணமெனத் தீர்ப்பளித்தான்; என்னவினிச் செய்வோம் என்று நினைக்குமுன், அந்தோநம் வாழ்நாள் அனைத்தும் பயனின்றி இந்தவிதம் ஆயிற்றே என்றெண்ணிக் கள்வனும் மூச்சடங்கிக் கீழே விழுவதற்கு முன்னங்கே பேச்சின்றிப் பார்த்திருந்த பெண்ணரசி ஓலமிட்டு வீழ்ந்தாள்; அது கண்டார் வேந்துமுத லானவர்கள்; ஆழ்ந்தார்கள் அப்பொழுதே ஆச்சிரியப் பேரிருளில். பாங்கிருந்த தாதிமார் பாவையினைத் தாழ்க்காமல் ஆங்கிருந்து தூக்கி அடைந்தார் அரண்மனையை. வேந்தன் பதைத்தான்; விரைந்தெழுந்து போய்விட்டான்; மாந்தரும் சென்றார் மருண்டு. பாலைவன மழை (கலிவெண்பா) அஞ்சாத சுந்தரன் ஆவி பறிக்கவெனத் தஞ்சை நகர்மன்னன் தந்தகொடுந் தண்டனையால் கொஞ்சும் கிளிமொழியாள் கோமள வல்லியவள் நெஞ்சங் கலங்கினாள்; நீரால் நனைந்து விட்டாள்; தாங்காத துன்பம் தலைக்கொண்டாள். தேன்மலரை நீங்காத வண்டினம்போல் நின்றிருந்த தோழிமார், பற்பலவாம் மெய்ப்பணிகள் பாங்கிருந்து செய்தார்கள்; சொற்பமும் நன்மையிலை; சோர்வொன்றே கண்டபலன்! மன்னன் தாயநிதியும் பார்த்தான் மகள்நிலையை; அன்னை தண் கோதையும் கண்டாள்; அகம் உடைந்தாள்! அன்றுபகற் போதும், அடுத்தவிராப் போதினிலும் நன்றறிந்த பண்டிதர்கள் நாடி பிடித்தறிந்தார்; மெத்த வுயர்மருந்து மேன்மேலும் ஊட்டிவிட்டார்; அத்தனையும் வீணே! அவள்நோய் குறையவில்லை. கள்ளனைக் கொன்றுவிடும் காலம் மலர்ந்தவுடன் கொள்ளைச் சிரிப்புடைய கோமகள்தன் நாணழிந்தாள்; உள்ளத்தின் உள்ளே உறைந்திருந்த காதலினை மெள்ள வெளியிட்டாள்; மிக்க துயருற்றாள்; மங்கை மனமறிந்த மன்னவனுந் தேவியும் அங்கிருந்த தோழியரும் ஆவென் றலறிவிட்டார்; சிச்சீ! இளங்குயிலே! சின்னத் தனம்நினைந்தாய்! பச்சைக் குழந்தைபோல் பார்த்து விழிபதித்தாய்! ஊரார் இதையுணர்ந்தால் ஓங்கி நகையாரோ? பாரில்யார் இத்தகைய பள்ளத்தில் வீழ்வார்கள்? தஞ்சை நகர்மன்னன் தந்த குலக்கொழுந்து பஞ்சைத் திருடனைத்தான் பார்த்து மதியிழந்தாள்; காதலித்தாள்! என்றே கதைபேசி எப்போதும் பூதலத்தில் உள்ளோர்உன் புன்செயலை எள்ளாரோ! என்ன செயல்நினைத்தாய்! என்னருமைக் கண்மணியே! மன்னர் வழிவந்த மாமயிலே! இந்நினைப்பை முற்றும் மறந்துவிடு! மோகம் சிதைந்துவிடும்! சற்றும் பழிபடரா தென்றரசன் சாற்றினான். கோமளவல்லி கூறுதல் கையால் திருகியதும் கட்டுண்ட தண்ணீரைப் பெய்யும் குழாய்போலப் பெண்ணழுது தன்கையைக் கண்களிலே வைத்துக் கசக்கியதும் தாரையாய் மண்மீது நீர்சிந்தி நின்று மனங்குழைந்தாள்; வெய்யிற் புழுவாகி வெம்பினாள்; மோகத்தால் நையும் மன முடையாள் நாவடக்கம் விட்டுரைப்பாள்; நீர்புகுந்து பாலுள்ளே நின்று மறைந்ததுபோல் வீரனவன் என்னுள் விரைவாய்க் கலந்துவிட்டான்; வெண்ணிலவில் தண்மைபோல வேறுபா டின்றியென் கண்ணின் வழிப்புகுந்தான் கட்டழகன்; தங்கிவிட்டான். பூத்தமலர் வீசும் புதுமணத்தைப் போலவனைக் கோத்த அழகென்னைக் கொள்ளைகொண்டு விட்டதுவே! பண்டைநூல் கல்லான் பகுத்தறிவுக் காரனைநான் கண்டுவிட்ட போதினிலே காதல் வலைவீழ்ந்தேன்! காரணந்தான் ஏதொன்றும் கண்டறியேன் நானிதற்கே! ஆரென்றன் ஆவிதனைக் காப்பார் அவனன்றி! என்று துடிதுடித்தாள்; ஏங்கினாள்; தேம்பினாள் தன்றனி மாமகட்குத் தார்வேந்தன் சொல்கின்றான்; அரசன் உரை காவியங்கள் கற்றதுவும், கற்பனைகள் கண்டதுவும், பாவியற்று தற்குப் பழகியதும், பண்டையுள நீதிநூல் தேர்ந்ததுவும் நித்தம் தமிழ்க்கலைகள் ஓதியதும், அப்பொருளை உள்ளத்தே வைத்ததுவும், செந்தமிழ்ப் பாக்கனிகள் சேர்த்தென் செவிப்பிழிந்து அந்த நறுந்தேனால் ஆநந்தம் தந்ததுவும், எப்படித்தான் நீமறந்தாய், என்னரசு கொள்பவளே! தப்பிதமேன் செய்தாய்? தகுமோ உனக்கிதுதான்? என்னப் பலகூறி ஏங்கினான் மன்னவனே. அரசியின் மொழி அன்னையவள் தண்கோதை ஆறாத துன்பமுடன், உள்ளத்தைக் கொள்ளைகொளும் ரோசா மலர்சிந்திக் கள்ளிப்பூ வேண்டிக்கை நீட்டுவோர் யாருண்டு? தூசுபடி யாத துணிபலவே வைத்திருந்தும் மாசு படிந்தவுடை மக்கள் அணிவாரோ? மாம்பழச்சா றொத்த மதுரபா னம்சிந்தி வேம்பின் பழச்சாற்றை வேண்டுவரோ நாவுடையார்? தாமரைகள் பூத்த தடநீரில் மூழ்காமல் போமந்தச் சாக்கடையில் போய்விழுவார் யாரோ! பழுத்துமணம் வீசும் பலகனிகள் தள்ளிப் புழுத்தபழம் தேடிப் புசிப்பவர்கள் யார்கொல்லோ? மெத்தென்ற பஞ்சணைகள் கட்டிலின் மேற்கிடக்கப் பொத்தென்று வீழ்ந்தே புழுதியிலே தூங்குவரோ? உன்னறிவை யெங்கே உதிர்த்தாய் எனதுயிரே ! மன்னவர்கள் உன்னை மணக்க நினைத்துள்ளார்; வீரர் பலருன்னை வேண்டித் திரிகின்றார்; சோரனை நீகண்டு சோர்வுற்ற தென்னேடீ! என்று பல நல்லுரைகள் ஈன்றெடுத்த தாயுரைத்தாள் ஒன்றாக வாழ்ந்திருக்கும் தோழியரும் உள்ளத்தே துக்கம் வளர்ந்தெழுந்து தொண்டையிலே தாழ்போட தக்க பலமொழிக்ள் சொல்லித் தவித்தார்கள்; இளவரசி கூறுதல் நீல விழியாளிடத்தே சொன்ன விந் நீதியெலாம் பாலை வனமழையாய்ப் பாழாகிப் போயினவே! ஊமைச் செவிட்டுக்குச் செய்தவுப தேசமாய்க் கோமகளின் நெஞ்சத்தே கொஞ்சமும் தைக்கவிலை; பாவை மடமயிலும் பார்த்து விழிதிறந்து காவலனை நோக்கிக், கசிந்துருகித் தாய்நோக்கி, ஏவல்செய் தோழிமார் எல்லோரை யும்நோக்கி, கோவக் குறிகாட்டி நெஞ்சக் குமுறலுடன் சாவத் துணிந்தவள்போல் சாற்றுவதற் கஞ்சாமல் நாவலரைப் போலுரைப்பாள் நன்கு. ஆசிரிய விருத்தம் என்னெஞ்சைப் பிளந்தாலும், தீயை மூட்டி எரித்தாலும் அவனுருவை மறக்க மாட்டேன்! கன்னெஞ்சக் காவலர்கள் அவனைத் தேடித் திருடனெனக் கதைகூறி யிழுத்து வந்தார்; கொன்னஞ்ச விழிமாதர் அகத்தை யெல்லாம் கொள்ளைகொளும் அழகுள்ளான் கொலைஞன் தானோ? மன்னஞ்ச வழக்குரைத்த நாத னைநான் மணம்புரியேன் எனிலுயிரை விடுவ துண்மை! காதலெனும் உணர்வுக்கே கண்தான் ஏது? கருதுவதற் கறிவேது? கரையும் உண்டோ? சாதிமத பேதங்கள் அடித்து வீழ்த்திச் சாதிரங்கள் சொல்வதையும் தலைகீழ் ஆக்கி, மாதருடன் ஆடவரைப் பிணைத்தே யின்ப மதுக்கடலில் விளையாட வீழ்த்தும் அன்றோ! நீதியிது; தவறென்று தள்ள வேண்டாம்! நினைப்பீரும் பகுத்தறிவால் நிசமாய் நிற்கும். காதலெனும் மழையின்றேல் இனிமை யூட்டும் கலைப்பயிர்கள் உலகத்தே வளர்வ துண்டோ? கீதவொலி கேட்பதிலை; வீணை யில்லைக்; கிழவர்களாய் இளைஞர்களும் தளர்ந்து நிற்பார்! சீதமதி நிலவினுக்கும் வேலை யில்லை; சிந்தித்தால் உலகமொலம் பிணமே யாகி வேதனையை அடையும், நல் வாழ்வே யின்றி வீழ்ந்துவிடும்; நாகரிகம் அழியும் அன்றே மாறாத காதல்வாழ் வுலகி லின்றேல் மனிதர்குல வளங்காட்டும் காவி யங்கள், தீராத சுவைத்தேனை மனத்திற் சிந்தித் திடமளிக்கும் கவிமலர்சேர் சோலை யில்லை; நாறாத நிறம்பெற்ற பூவைப் போலே நங்கையரும் நம்பியரும் வீணே நிற்பார்; வாராது புதுவாழ்வு; மக்கள் கூட்டம் வற்றல்மர மாய்உலகம் சுமக்க வாழ்வார், கரைகடந்த வெள்ளம்போல் தடையின் றோடும் காதலைநீர் தடுப்பதனால் பயனும் உண்டோ? சிறையிழந்த பறவைக்கோர் வாழ்வும் உண்டோ? செப்பிடுவீர், காதலினைக் சிதைக்க லாமோ! குறையாமற் புலவரெலாம் கவிகள் மூலம் குவித்தாரால் காதல்மணம், இன்பம், அன்பே, மறைவாக அவையெல்லாம் படித்துப் பார்த்து மகிழ்வதுதான் மனம்படைத்த மக்கள் வாழ்வோ! அரசியின் அறிவுரை (ஆசிரியப்பா) இவ்வுரை கோமள வல்லி இயம்பச் செவ்விழி கொண்டான்; சினந்தான் மன்னன்; ஒன்றும் கூறா திருந்தான் ஒருபுறம். தன்மகள் முகமாம் தாமரை நோக்கி, நின்னுரை யாவும் நிசமே யாகும் என்னினும் நமக்கறி வில்லையோ? போயும் போயும் புலைத்தொழில் செய்த தீயனைத் தேடி மணப்பதா காதல்? ஒத்தசெல்வமும் ஒத்தகல்வியும் ஒத்த குணமும் ஒத்த மனமும் உடையவர்க் குள்ளே நடைபெறும் மணமே தடையறா தின்பம் தந்து நீடிக்கும் இந்நலம் ஒன்றும் இல்லா அந்தப் பொல்லனை மணக்க விரும்பும் புத்தி காதலே யல்ல; காமமே யாகும்; ஆதலால் மகளே! அடாப்பிடி யாக வல்லிழி வழக்குக் கூறேல்! உறுதி சொல்லினென் உண்மை! சோர்வுறல், நீயே! என்ற தாயை எதிர்த்துத் துன்று மலர்க்குழல் கூறுவள் தொடர்ந்தே இளவரசியின் உரை அன்புவளர் சுகவாழ்வைக் குறிக்கு மாறே அமைத்தார்கள் இருமொழிகள் காதல், காமம்; துன்பமுறீர் காதலது பொதுவில் நிற்கும்; தோன்றியதில் சிறப்பதுவே காம மாகும்; இன்பமுற வழிகாட்டும் காத லாலே எல்லோரும் காமமெனும் சோலை சேர்வார்; என்புகல்வீர், இதற்குநீர், இருமொழிக்கும் பேதமெனப் பொருள் கூறிப் பொருதல் வேண்டாம். இன்பமெனுந் தமிழ்ச்சொல்லை வெறுப்பார் இல்லை; இதைப்பெறவே உலகத்தார் விரும்பி நின்றார்; அன்பெனுமோர் குளந்தன்னில் மலர்ந்து நின்றே அழகுறுசெந் தாமரையே இன்ப மாகும்; பண்பறியார் வடமொழியிற் காம மென்றே பகர்ந்தார்கள் இன்பத்தை இதனைத்தேரீர்! துன்பமுறும் காமத்தால் என்றே சொல்லித் தொலைக்கின்றீர், சுகவாழ்வை! அறிவு தானோ! பொல்லாத மதப்போர்கள், சாதிப் பூசல், பொய்யுரைத்தல், கொலைபுரிதல், திருடி வாழ்தல். நல்லாரைப் பழிகூறல், வறியார் தம்மை நசுக்கிவிடல், பிறவுயிர்மேல் அன்பு சற்றும் இல்லாமல் துன்புறுத்தல், வலிய நெஞ்சம், இவை யெல்லாம் நீர்சொரிந்த நெருப்பே யாகிச் சொல்லாமல் மறைந்தொழியும் காதல் தன்னால் சுகவாழ்வு தழைக்குமிவ் வுலகி னுள்ளே. அருந்துவார் உயிர்பருகும் நஞ்சை நாமே அவுடதமாய்ச் செய்துபிணி தீர்ப்போம் அன்றோ! பொருந்தாத மணநீரில் வாச மான பொருள்கலந்தால் நறுநாற்றம் வீசும் அன்றோ! திருந்தாத தீமையெல்லாம் காதல் தீயால் தீய்ந்துவிடும்; நல்லியல்பு பலவும் தோன்றும்! வருந்தாதீர்! யானவனை மணக்கச் செய்வீர்! வாழ்வுறுவேன்! நீங்கள்பெரும் மகிழ்ச்சி கொள்வீர்! அன்பிலா ஆண்பெண் சேர்ந்து வாழ்ந்தால் அவர்வாழ்வில் ஒற்றுமையாம் மலரே யில்லை! இன்பமெனும் கனிதோன்றல் என்றும் இல்லை! இதையுணரார் சோதிடரால் மணங்கள் செய்வார்; என்பயனோ அச்சில்லாச் சகடத் தாலே! எவரதனை ஊர்ந்துநலம் எய்தல் கூடும்? துன்பமுறீர்! அன்புற்றேன்! நன்கு வாழ்வேன்! துணைவனென அவனைநான் அடையச் செய்வீர்! உண்மையாய்ச் சொல்கின்றேன்! விளையாட்டல்ல! ஒருமகள்நான் உயிர்வாழ விரும்பு வீரேல், கண்மணியாய் என்னுள்ளே கலந்து நின்றான் காதலெனும் தீவளர்ப்பான் மதன னாவன்! அண்மையினில் அழைத்திடுவீர்! கொல்லல் வேண்டாம்! ஆர்பழித்தால் நமக்கென்ன? அச்ச மேனோ! மண்மகள் மேல் ஆணையிட்டேன் சொல்ல வின்னும் மாற்றமிலை; உறுதியே ஆவி காப்பீர்! கள்வனுயிர் காத்தல் (கலிவெண்பா) என்னுமொழி கூறி விழுந்தாள் இளங்கொடிதான் மன்னவனும் பாத்தான்; மனமுருகிச் சோர்வுற்றான்; வேறுவழி என்னவென வேந்தன் நினைக்குமுன் நாறுமலர்க் கூந்தலவள், நாதா இனிக்காலம் தாழ்த்திருத்தல் நன்றல்ல; தக்கணமே வீரனுடல் வீழ்த்துதற்கு முன்னே விரைவிலோர் ஆள்விடுப்பீர்! கொல்லும் படியிட்ட தண்டனை யைக்குறைப்பீர்! நல்லவித மாயின்றோ நம்மன்றத் தேயழைப்பீர்! அஞ்சாத சுந்தரன்தன் ஆண்மைபா ராட்டுவீர் ! வஞ்சமன மில்லான் வணங்காத வீரனை நம் சேனைத் தலைவனாய்ச் செய்துவிட்டு நம்முடைய மானையவ னுக்கு மணம்புரிய வேண்டுவதே செய்யும் கடமையெனச் செப்பினாள்; மன்னவனும் கையிலோர் தாளெடுத்துக் கள்வனது தண்டனையை நீக்கிய தாய்வரைந்தான்; நின்றிருந்த பாங்கியரில் நோக்கி ஒருத்தியிடம் நீயே நொடிப்பொழுதில் நொந்து வருந்துகொடி நோய்நீங்கி வாழ்வதற்கே இந்தநம் கட்டளையை இப்பொழுதே கொண்டு கொலைக்களத்துக் கோடுவாய் கொல்லுமுன்னே அந்த மலைப்புயத்துக் காளையைநம் மன்றத்திற் கூட்டிவா! என்று மொழிவதற்குள் தோழி எழுந்தோடிச் சென்றனளே மான்போல் சிறந்து. 5 சொன்னதே சட்டம் (கலிவெண்பா) நல்ல நடுப்பகலில் நாட்டவரும் ஊரினரும் பொல்லாத கள்வன் தலைகீழ்ப் புரண்டுவிழ கள்ளன் உயிர்பறிக்கும் தண்டனையைக் காண்பதற்கே வெட்டும் கொலைக்களத்தை நோக்கி விரைந்தணைந்தார் கட்டியபல் கட்டுடனே! காவலர்கள் கள்வனையும் இட்டங்கே வந்தார்கள்; எல்லோரும் கண்பதித்தார் சட்டையதி காரியும் சார்ந்துவிட் டான்விரைவில் ஓடையிலே பூத்திருக்கும் ஒண்தா மரைபோன்ற வாடா முகப்பொலிவும், வன்னெஞ்ச மார்பழகும், எங்கு மொளிவீசி எழுந்துயர்ந்த பொன்மலையாய்ப் பொங்கும் புயத்தழகும், பொன்றாத வீரமுடன் ஏறுபோல் நோக்கும்; எழிலொழுகும் தோற்றமும் மாறமற் கண்கவர மக்களெல் லாம்பார்த்தார் நேற்றைப் பொழுதவர்கள் கொண்ட நினைப்பினிலே மாற்ற மடைந்தார்கள்; மனமிளகிச் சொல்வார்கள்; என்ன விருந்தாலும் இவ்விளைஞன் வல்லுடலைச் சின்னமுறக் கொன்று சிதைப்பதால் என்ன பயன்? ஐயைந்தே ஆண்டுடையான் ஆடவனை நல்வழியில் பையப் பழக்குவித்துப் பண்புடையோன் ஆக்கினால் நாட்டுக் குடிகளுக்கு நன்மைசெய் யும்முறையை ஊட்டிவிட்டால் இவனோர் உத்தமனாய் வாழானோ? ஏனிந்தச்சீர்திருத்த எண்ணத்தை நம்மரசன் பேணவிலை இக்கருத்தைப் பேசியதோர் மந்திரியின் சொல்லை மதிக்காமல் சொன்னான் கொலைத்தண்டம்; பொல்லாத காலமிவன் போகின்றான் மாண்டென்று சொல்லிச் சிலர்நின்றார்; சூழ்ந்தோர் பலர்மகிழ்ந்து, எல்லாப் பெரும்பயமும் இன்றோடு விட்டொழித்தோம்! ஆனந்த மாயுறங்கி வாழ்வோம் அனைவோரும்; ஈனன் ஒழிந்துவிட்டான்; ஏக்கமினி நாமெய்தோம்! தான்செய்த தீவினைக்குத் தக்கபல னேபெற்றான்; ஏனின்னும் கொல்லவிலை? என்றுரைத்தார் தோழரெலாம் ஐயையோ! நம்தலைவன் ஆருயிரை மாய்ப்பதற்கே கையினிலே வாள்கொண்டு நின்றார்கள் காவலரே! என்னவினி நாம்செய்வோம்! ஏதும் வழியறியோம்! மன்னன் மனமிரங்கி மன்னிக்க மாட்டானோ! என்றுமனஞ் சோர்ந்தவர்கள் பேசி யிருக்கையிலே கொன்றுவிடக் கள்வனையோர் மேடையிலே கொண்டு நிறுத்தவதி காரிதான் வாள்பிடித்து நின்ற கறுத்த கொலைஞனுக்கு கண்சாடை காட்டினான்; கொல்லுதற்கு வாளோங்கி விட்டான் கொலைஞனும், நில்லப்பா! சற்றேநில்! கொல்லேல் நிறுத்துவாய்! வேந்தன் கொலைமுடிவை வேறாக மாற்றிவிட்டான்; போந்தேன் அதனுடனே! போற்றுவீர் ! மன்னவனை! என்னக் குயில்கூவி ஏங்கிப் பறந்ததுபோல் மின்னொத்த தாதியவள் மேனி தளர்ந்தசைய கொங்கை யெழுந்தாடக், கொண்டை குடைபிடிக்க, அங்கத்தின் ஆடை அவிழ்ந்து தரைபுரள ஓடிப் புகுந்தரசன் உத்தரவைக் தாழாமல் மேடை அருகிருந்த மேலதி காரிகையில் சுந்தர நாதனுயிர் சோராமல் காப்பதற்கே அந்தரத்தில் நின்றோர் மருந்தொன்று வந்ததுபோல் தந்து விழுந்துவிட்டாள் தாதி தரையின்மேல்; அந்தக் கணத்தவளுக் கான உபசாரம் செய்தார்; களைதெளிந்தாள் சேல்கொண்ட தண்மதியாள், கொய்தமலர்க் கூந்தல் கொடிபோல் துவண்டெழுந்தாள். அரசன் உத்தரவைப் படித்தல் நம்முடைய மன்றத்தில் நாவலனைப் போல்நின்றே அம்மா! வெனவறிஞர் ஆச்சரியம் எய்த வழக்குரைத்த நல்லறிஞன்! வாடா விளைஞன், இழுக்ககன்று வாழற் கியன்ற வழிசெய்வோம்; ஆதலாற் கள்வற் களித்தகொலை மாற்றினோம்! தீதியற்றா திங்கே கொணர்வீர் திருடனையே! என்ராசன் கையால் எழுதியவக் கட்டளையை நின்றவதி காரி படித்து நிறுத்தினான்; மன்னன் இவன் கொலையை மாற்றுதற்குக் காரணந்தான் என்னவோ வேறறியோம்! இஃதென் விபரீதம் ? என்று முணுமுணுத்தே ஏதொன்றும் சொல்லாமல், நின்றார் பலபேர் நிலைத்த பெருமரமாய்; கள்வனுயிர் காக்கும் கருத்துடைய தோழர்களும், கொல்வதற்கு நெஞ்சம் குழைந்திருந்த மாந்தரும், கட்டிளைஞன் வாழ்கவே! வாழ்கவே கட்டிளைஞன்! வெட்டுவிழும் நேரத்தே வேந்தால் உயிர்பிழைத்த கட்டிளைஞன் வாழ்கவே! காவலன் கட்டளையைத் தட்டாமற் கொண்டணைந்த தாதிபுகழ் வாழ்க!வென ஆழக் கடலொலிபோல் ஆராவா ரம்புரிந்தே சூழப் பொதுமக்கள், சுந்தரனைக் காவலர்கள் வேந்தன் சபைக்கு விரைந்தழைத்து வந்தார்கள்! ஏந்து செங்கோலான் எதிரே கொணர்ந்தவனை நிற்கவைத்தார் காவலர்கள்; நின்றார் ஒருபுறத்தே; அற்புதத்தைக் கண்டார்போல் ஆச்சிரியம் உற்றமைச்சர், என்னவோ இந்நிகழ்ச்சி ஏதுமறி யோமென்றே மன்னன்வாய் நோக்கி மரப்பதுமை யாயிருந்தார்; பச்சைக் கடல்முழக்கம் ஓயந்திருந்த பான்மைபோல் அச்சபையோர் வீற்றிருத்தார் ஆங்கு. அரசன் அவை நோக்கிக்கூறல் (ஆசிரிய விருத்தம்) நாமிவனுக் களித்தகொலைத் தண்டனையை நடத்தாமல் தடுத்தோம் இந்நாள்; பாமரர்கள் அதிசயிக்கும் செய்கையிது காரணமும் பகரக் கேளீர்! சேமமுடன் மக்களெலாம் வாழ்வடையச் செய்வதுவே அரச நீதி! தீமைபுரி மனிதருக்குச் சிறைகாட்டும் கருத்தவரைத் திருத்தல் அன்றோ! நாட்டினிலே வறியபுதர் வளராமல் பலதொழில்கள் நடத்தல் வேண்டும்; வீட்டினிலே உணவில்லாத் தொழிலாளர் வேதனைகள் தவிர்த்தல் வேண்டும்; தேட்டமுற இளையோர்க்கு நீதிமுறை தேற்றுதல்நம் கடமை யாமே! வாட்டமுறார்; பொய்கொலைகள் வளரமாட்டா; களவுக்கு வழியும் இன்றே; தொட்டவரைத் கொலைபுரியும் மின்சாரம் கொடியதெனத் தொலைப்பார் யாரோ! எட்டாத கனிமரமொன் றறிவின்றி எரிமூட்டிச் சிதைப்பார் தாமோ! வெட்டுவதென் றரிவாளை வெறுத்து வீசி விட்டெறிதல் அறிவு மாமோ? துட்டர்களை நல்வழியில் நடக்க வைத்தே தூயவராய்ச் செய்தல் தீதோ? மதயானை சினந்தணிந்து மடங்கி நின்றால் மனிதருக்கு நலமே யன்றோ! உதவாமற்குறும்புபுரி குதிரைமீதே ஊர்ந்துசெலப் பழக்கல் தீதோ! இதமான வழிதவறும் இளையோர் தம்மை இழுத்தவர்க்கு வேலைதந்தே பதமான வாழ்வடையச் செய்வாதாலே பாரினுக்கு நலமே யன்றோ! கல்லுடனே முள்ளடர்ந்த கரம்பான நிலந்திருத்திக் கால்வாய் தோண்டி நல்லபயிர் பலவளர்த்துத் தானியங்கள் நவநவமாய் விளைய வைத்தால், இல்லையெனும் வறியநிலை பறந்தோடும்; மக்களெலாம் இனிதே உண்பார்; பொல்லனிவன் தனைத்திருத்திப் புதியவழி புகுத்துவதால் நன்மையாமே! உப்புடைய கடல்நீரே உயர்ந்தெழுந்து முகிலாகி, உண்ணும் நீரை இப்புவியில் மழைமூலம் ஏரிகுளம் நதிகளிலே நிரப்பி நின்றே எப்பொழுதும் நலமளிக்கும் இஃதறிவீர்! இவனைஉயிர் வாழ வைத்தால் ஒப்பறுபல் நலங்கிடைக்கும் நலமுயரும் இதுஉண்மை உணரு வீரே! நேற்றுநாம் இவன்வழக்கில் கொலைபுரியத் தீர்ப்பளித்த நேரம் நம்முன் வீற்றிருந்த மந்திரியார் வெற்றிநாதர் விளம்பிய சொல்என் மனத்தே மாற்றமுறச் செய்ததெனை; இரவெல்லாம் மனங்குழம்பி எண்ணி நின்றேன்! ஆற்றலுளன் இவன்திருத்தம் அடைவதற்கு வழியொன்றை அறிந்து சொல்வீர்! என்னுயிராம் ஒருமகளும் இவனுயிரை நீக்குவதற் கிசைய வில்லை; கன்னியர்கள் மனங்கவரும் அழகுடையான்; கவிஞர்மொழி நீதி நூல்கள் சொன்னவழி நடப்பானேல் உலகமெங்கும் சுகம் பெருகி நிறைந்து நிற்கும்; என்னபலன் மாய்ப்பதனால்? இவனுதவி பெருநம்மை அளிக்கும் அன்றோ! அமைச்சர் கூறுதுல் (கலிவெண்பா) மகளுயிரைக் காப்பாற்ற மன்னனிது தேர்ந்து புகன்ற மொழி கேட்டுப் பொருந்துமுரை என்றுபலர் எண்ணியிருக்குங்கால் எழுந்திளைய மந்திரியார் மண்ணுலகில் நின்பெருமை வாழ்கஉயர் மன்னவனே! அஞ்சாத சிங்கன் அறிவுடைய போர்வீரன், நஞ்சாம் எதிரிகளை நாசமுறச் செய்காலன், தீதுபுரி வோரைத் திருத்த வழியறிவான், ஆதலால் நாமவனை அன்பால் வயமாக்கி இந்நகரைக் காக்குமுயர் சேனைத் தலைவனாய் மன்னச் சிறப்பளித்தால், மாந்தர் மறுத்துரையார்; என்று நினைக்கின்றேன்! இறைவவினி யுன்விருப்பம்; மன்றுறையும் பேரறிஞர் மாற்றமும் கேட்க வெனக் கூறி யரசன் குறிப்பை யெதிர்பார்த்தான்; மாறிலா ஆய்மதியான் மன்னவனைப் போற்றியே வெற்றி நாதன் சொன்ன விவேக மொழிகளிலே குற்றமிலை; ஆனால் கொலைதிருட்டுக் காரனிவன் நல்லவழி நிற்க நமக்குறுதி கூறுவனேல் வல்லவனைச் சேனையிலே வைக்கலாம் என்றுரைத்தான் அரசன் வினா - சிங்கன் விடை வேந்தனும் அந்த விறலோன் முகநோக்கி, மாந்தர் மனநடுங்க வாழ்ந்த மதிமுகத்தோய்! மந்திரிமார் இங்குரைத்த மாற்றம் செவிமடுத்தாய்! எந்த வகை உன்கருத்தே? எல்லாம் உரைத்திடுவாய்! என்றவுடன் சுந்தர நாதன் இறைஞ்சினான்; மன்றுள்ளோர் கேட்டிருக்க மன்னனிடம் சொல்கின்றான்; நீரால் அணையாமல் நிற்கும் நெருப்புண்டோ! மாறாத அன்பால் மறையாத மாசுண்டோ! மாதர் விழிநோக்கால் மாறாத வன்னெஞ்சர் பூதலத்தில் இல்லை எனப்புகலல் யொய்யன்றே! இல்லாமைப் பேயதுவே எல்லோரும் தூற்ற வெனைப் பொல்லாத காரியங்கள் செய்யப் புகுத்தியதால்; என்னுடைய வல்லமைக் கேற்றதொரு வேலையினை மன்னவனே! தந்தால் மகிழ்வுடனே செய்வேன்! ஒருவரும் குற்றம் உரைக்காத வண்ணம் சரியாக நான்புரிவேன்; சற்றும் தவறிழையேன்! முதலமைச்சன் மொழி என்ன இளைஞன் எடுத்துரைத்த சொற்கேட்டு, மன்னவன் ஆய்மதிப்பேர் மந்திரியை நோக்கினான் வேந்தே இனியொன்றும் வீண்யோசனை வேண்டாம். மாந்தர் நலம் பெறுவார் மாநகரும் வாழ்வடையும்; சேனைத் தலைவனாயிவ் வீரனைச் செய்துவிட்டால் பூனையைக் கண்டவெலி போற் பதுங்கி நம்பகைவர் ஓடி ஒளித்திடுவார்; ஓங்கும் நமதரசு! ஈடில்லான் வீரத்தால் இன்புற்று நம்முடைய நாடு புகழடையும்; நாள்கழிய நீட்டாமல் பாடு பெறுமிவற்குத் தக்க பரிசுபல தந்து சிறப்பளிப்பாய்! தார்மன்னா! என்றுரைத்தார் மந்திரிமார் ஏற்றார், மகிழ்ந்து தலையசைத்தார். சிலர் வெறுத்தல் இந்நிகழ்ச்சி நோக்கி இருந்தவர்க ளிற்சிலபேர், என்ன ஒழுங்கின்மை! யாரே இதுசெய்வார் ! மன்னன் மொழிக்கு மறுமொழிகள் கூறாமல் சொன்னதே சட்டமெனச் சொல்லினார் மந்திரிமார்; ஓட்டுவோன் பின்புவர ஒன்றன்பின் ஒன்றுபோம் ஆட்டுக் கிடைபோல ஆமாம் எனமொழிந்தார். சின்னமுறச் செய்திவ்வூர்ச்செல்வம் கவர்ந்த கொடும் கன்னக்கோற் காரனே காவல் தலைவனாம் ! நல்லதற்குக் காலமிலை; நாசம் நமக் கென்றே மெல்ல முணுமுணுத்து மிக்க மனங்குழைந்தார். சுந்தரன் சேனைத் தலைவனாதல் காவலனும் சுந்தர நாதனைக் கண்ணோக்கி, வாவென் றருகழைத்தான்; வந்தான்; கழல்பணிந்தான் வீராநீ! இன்றுமுதல் வேந்தன் படைத்தலைவன்! கூரான வாளிதுகொள்! கோல உடைகொள்வாய்! சேனைப் பகுதியிலே சேர்ந்தோரே, நீங்களிவன் ஆணைப் படிநடப்பீர்! என்றே அறிவித்தான்; சேனைத் தலைவனுக்குச் செய்யும் வரிசையெலாம் காணக் கொடுத்தான்; கடிதில் எழுந்திருந்தான்; மண்டபத்தே வீற்றிருந்த மந்திரிகள் மற்றவர்கள் அண்டி யிருந்தோர் அனைவோரும் முன்னெழுந்து, சென்னி வணங்கினார்; சென்றுதான் பெற்றெடுத்த அன்னத் தருகணைந்தான்; அன்று நிகழ்ந்தவெலாம் கூறினான்; அந்தக் குமரியும் தன்துயரம் ஆறிக் களிப்புற்றாள் ஆங்கு. 6 பூனை கையிற் கிளி தங்குபுகழ்ச் செந்தமிழின் தாயாய்ப் பெருநிதியம் பொங்கும் புகழ்மதுரை மன்னன் பிரதாபன், மக்கள் நலம்பேணும் மந்திரிமார் சொல்லின்வழி மிக்க மதியுடனே மேவும் வனப்புடையான், பாண்டி வளநாடும் பாரில் பிறநாடும் நீண்டபுகழ் பேச, நிறைந்த குணமுடையான், காதலெனும் தேனைப் பருகாத கட்டழகன், மாதரை யீன்றெடுத்த மன்னவர்கள் பெண்கொடுக்க எண்ணி மனவோலை எவ்வளவோ பேர்விடுத்தார்; புண்ணியம் இல்லாமற் போயினவே எல்லாம்; பிரதாபன் ஓர்நாள் பெருந்துயரம் நெஞ்சில் உறத்தனியே சென்றோர் தளிர்வனத்தை உற்றவனும் சுற்றி மலர்க்கொம்பர் சூழ்ந்ததொரு மேடைமேல் சற்றேயுட் கார்ந்தான்; சரியுமலர்க் கொடியொன்று பக்கத்துக் கொன்றை மரம்பற்றிப் படருங்கால் தக்ககிளைக் கையால் தழுவி அதைப்பிடித்தே ஆநந்த மாகி அமர்ந்திருக்கும்; அம்மரத்தில் கானக் குயிலிரண்டு கண்சிமிட்டி வாழ்ந்ததிறம் பொன்னாற் பொலிவுபெறச் செய்ததொரு பூந்தட்டில் மின்னுமிரு நீலமணி மேலழுத்தி வைத்ததுபோல் தோன்ற வதுநோக்கித் தொல்புகழ் சேர்தமிழின் ஆன்ற மதியுடையோன் அங்கே மனம்வைத்தான்; ஆசைக் கடிமையாய் அல்லலுறும் மக்களைப் போல் மோசப் புதர்க்குள்ளே வீழாமல் முப்பொழுதும் நெஞ்சத் துயரின்றி வானவெளி நீந்திக்குளிர் மஞ்சு தவழ்சோலை மாநீர்த் தடங்களெலாம் சுற்றி இளைப்பாறிச் சோர்வின்றி இன்புறுவோம் மற்று நமக்கிங்கே மனக்கவலை ஏதென்று காதல் மொழிபேசும் காட்சியது கண்டான்; போதை மதுநுகர்ந்த புண்ணியனைப் போலானான்; தன்னை மறந்தான், தளர்ந்தானோர் புத்துணர்ச்சி மன்னன் மனத்துள்ளே ஓங்க, மலர்க்காவில் இந்தக் கருங்குயில்கள் எங்கிருந்து வந்தனவோ! சிந்தை கலங்கவெனைச் செய்தனவே! ஓகோகோ! பாரேன் இவைமுகத்தைப் பாதகரின் பக்கத்தில் யாரேனும் வாழ்வாரோ! இங்குறையேன் யானென்று பித்த மதிமன்னன் பேசித் திடீரென்று சத்தம் புரியாமல் சார்ந்தான் அரண்மனையை; அமைச்சர் அரசன் நிலையறிதல் அன்றுமுத லாக அவன்மனத்தில் ஊக்கமெலாம் குன்றி யிருந்தான் குறியறிந்தார் மந்திரிமார்; மன்னன் மனத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே பன்னும் கலைகள் பலவறிந்த பண்புடையாள் மாதொருத் தியைநாம் மணமுடித்து வைத்துவிட்டால் காதலலை யின்பக் கடலில் விளையாடி ஆட்சிக் குரியசெயல் எல்லாம் அவள்துணையால் மாட்சி புறப்புரிவான்; மாநகரும் மேன்மைபெறும் என்று முடிவுகட்டி ஏந்த லிடம்சென்று நின்றார்கள்; மன்னன் நிமிர்ந்து முகம் நோக்கி, இன்றுநீர் எல்லேரும் என்னருகி லெய்தியதேன்? நன்றுதீ தேதேனும் நாட்டில் நடந்ததோ? சொல்லுவீர் என்றான்; சுகுணன் முதலமைச்சன் மெல்ல மொழிகின்றான்; மன்னா! மிக வணக்கம்! தஞ்சைநகர் வேந்தன் தயாநிதி பேரறிஞன் கொஞ்சு மகளொருத்தி! கோமள வல்லியென்பாள், கல்வியிலே ஈடில்லாள்! கட்டழகைக் கண்டுவிட்டால் எல்லாந் துறந்தவரும் எண்ணம் பறிகொடுப்பார்; கற்ற கலைஞர் கவிவாணர் என்போரும் முற்றும் நிலையழிவார்; மொய்குழலாள் தன்வனப்பை உண்டு களிப்புறுவார்; ஓயாக் கவிமழையை மண்டலத்திற் சிந்தி மயங்கித் திரிவார்கள்; அந்த நறும்பூவை அணிந்தாலுன் மார்பினிலே சிந்தை தெளிவாய்! சிறப்புறுவோம் யா மென்றார் மன்னவனும் அந்த மடமாதின் இயல்பெல்லாம் முன்னே சிலர்மொழியக் கேட்டான், முதலமைச்சன் கூற்றும் மனம்பாய்ந்து செய்த குதூகலத்தால், மாற்றமெதிர் கூறான், மனம்போல்ச் செய்ம்மினென்றான். அறவீரன் மகட்கொடை மறுத்தல் மந்திரிமார் சூழ்ந்தார் தயாநிதி மன்னன்பால் சிந்தை களிக்கமணம் செய்யவென் வேந்தனுக்கே அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய் செந்நெல் விளைக்கும் செழித்தவயல் சூழ்தஞ்சை மன்னவநின் மாதை மகிழ்ந்தளிப்பாய்! என்றோலை பன்னி வரைந்தனுப்பிப் பார்த்தார் பதில்நிருபம். நாள் கடந்த பின்னர் தயாநிதி நல்லடிமை ஆள்வந் தணைந்தான் அவன்தந்த ஓலையுடன்; காவலனைப் பார்த்துக் கடிதம் கொடுத்தொதுங்கிப் பாவையென நின்றான் பணிவோடும் ஓர்புறத்தே; அவ்வோலை வாங்கி அரசன் பிரித்ததனைச் செவ்வை யுறப்படித்துக் கண்சிவந்து சீற்றமுடன் ஏடா! மடப்பயலே! ஓடுநீ என்னுறவை நாடாத மன்னன் நறுமலரை நான்மார்பில் சூடாமல் விட்டுவிடேன்; சொன்னேன் உறுதியிது; நீடாமல் நீபோய் நிகழ்த்துவாய் என்றுரைத்தான். பிரதாபன் போருக்கெழுதல் தூதுவனுன் ஓடினான்; தோன்றல் பிரதாபன் ஏதுமறி யாமல் இருக்கின்ற போதமைச்சர், இச்செய்தி யால்நீ இறையும் கலக்கமுறேல்! அச்சமுற நாமும் அவன்மேல் படையெடுத்து நிச்சயமாய் வெல்வோம்! நிறுத்துவோம் நம்வீரம்! பச்சைக் கிளியமுதைப் பாய்ந்தோடும் மான்பிணையை பட்டத் தரசியாய்ப் பார்புகழ வைத்தநீ மட்டற்ற இன்பமுடன் வாழலாம் மன்னவேன! என்ன இளமன்னன், எல்லையிலாக் கோபமுடன், இன் னே நமதுபடை எல்லாம் திரட்டுவீர் ! அந்நகரின் பக்கம் அடைவீர்! அறிவில்லான் தன்னைப் பிணித்துத் தலைகுனியச் செய்வோம் நாம் ! வீரத்தை நாட்டுவோம் ! வேந்தர் மனங்குழைத்த காரொத்த கூந்தல் கவித்தேனை நானுகர்வேன்! இன்றே நமதுபடை எல்லாம் திரண்டெழுந்து குன்றாத வளங்கள் குலவுகின்ற சோணாட்டின் தஞ்சை நகரடைக! என்றான்; தலைவர்கள் அஞ்சோம் புறப்பட்டோம்! ஆணை எனக்கூறி அன்றே படைதிரட்டி ஆண்மையுட னெழுந்தார் இரண்டு தமிழ்மன்னர் பொரில் எதிர்நின்றால் இரண்டு பேர்க்கும் வெற்றி கிடைப்பதெங்கிருந்து? நிச்சயமாய் ஒருவர் தோற்பார்; இதுகேட்கின், இச்சகம் தமிழரசன் தோற்றான் எனக்கூறும்; இந்த அவமானம் இருவர்க்கும் என்றெண்ணான் வந்தனனே போர்செய்ய, பேதைஎன வாடினான் நின்ற பெருமலைகள் நீர்சுரக்கும் மாநதிகள் நீண்ட புதர்க்காடு நிறைந்த வழிகளெல்லாம் தாண்டிப் பெருஞ்சேனை தஞ்சை நகர்க்கருகே வந்தொரு சோலையினில் தங்கி வழிநடந்து நொந்த களைப்பாற்றிக் கொண்டார்கள்; நோக்கினார் அந்தப் பெருஞ்சோலை ஆர்ந்த வளங்களெலாம் எந்தப் புறத்தும் இளந்தளிர் சூழ்மரங்கள் அம்மரங்கள் மேலே அணைந்து படர்ந்திருக்கும் செம்மைக் கொடிமலர்கள் சேர்த்த சுவைத்தேனை உண்ட வரிவண்டுக் கூட்டங்கள் ஓவென்று கண்டார் வியப்படையக் கானம் எனஒலித்தல் பாண்டி மறவரைப் பார்த்தந்த வண்டுகள் வேண்டாம்வீண் சண்டை விரைந்துநும் ஊர்திரும்பும் என்று மொழிவதாய் எண்ணினார் அன்னவர்கள்; நின்றுவான் நோக்கி வளர்ந்த நெடுமரங்கள் நாற்றிசையுங் கைந்நீட்டி நாங்கள் உமைக் காக்கின்றோம் ஏற்ற கனியளிப்போம் எம்மிடம் வம்மின்என ஆரையும் கூவி அழைப்பது போல்வளர்ந்த வாரக் கிளைகளிலே வாழ்ந்த பறவையினம், செந்தமிழ் வாழ்மதுரைச் சேவகரை நோக்கி, இந்தப் படைதிரட்டி ஏன்வந்தீர்! தோற்றிடுவீர்! உங்களுக்கு வெற்றியிலை ஓடுங்கள் உம் மூர்க்கே; தங்காதீர்! என்றவைகள் தாவிச் சிறையடித்தே கூவிக் குதூகலித்தும் குக்குக்கூ வென்றிரைந்தும் கானகத்தில் எப்பாங்கும் கத்துவதைப் பார்த்தார்கள் ஆயினும் அவ்வீரர் உண்மை அறியாராய், போயந்தச் சோழனுடன் போர்செய்து வெற்றி கொள்வோம் கோமள வல்லியெனும் கோதையைப் பாண்டியன் காமத் தீத்தணியக் காதலியாச் சேர்ப்போம்என்று இவ்விதமாய் எண்ணி இருந்தார்கள்; அவ்வேளை எவ்விடத்தும் சுற்றி அரசுக் கெதிராகச் செய்யும் சதியறிந்து செப்பிச் சதிகளெலாம் நையும் படிசெய்யும் நற்றிறமை ஒற்றர்கள், பாண்டிய மன்னன் படைவந்த நோக்கறிந்து தாண்டி விரைந்தோடித் தங்கள் தயாநிதி மன்னன் சபையடைந்து மாற்றங் குளறினராய், என்ன மொழிவதென எண்ணித் திகைப்படைந்தார்! வேந்தே ஒருசெய்தி! வெற்றி யுடன் வாழ்க! பாய்ந்தோடி வந்தனம் பார்த்தவுடன் நும்மிடமே; போர்செய்யச் சேனையுடன் போந்தான் பிரதாபன் தாரணிந்த மன்னவனே என்று தலைவணங்கித் தூதுவர்கள் தீப்பொறியைத் தூற்றியது போல்மொழிய, ஏதினிநாம் செய்வதென எண்ணித் திகைத்தான்மன்; மந்திரிகள் எல்லோரும் மாற்றம் மறந்தவராய்ச் சிந்தைக் குழப்பமுடன் சித்திரங்க ளாயிருந்தார்; அஞ்சாத சுந்தரன் அங்கே எழுந்திருந்தான் கொஞ்சமும் அஞ்சேல் எம் கோவே! நமதுநகர்ச் சிங்கத் திரள்போன்ற சேனை வலிகொண்டே இங்கு நமையெதிர்த்து வந்த மதயானைக் கூட்டம் கலைந்தோடக் கொல்லுவேன்! அம்மன்னன் வாட்டமுறச் செய்வேன்! வேந்தேயுன் வாய்மொழியின் கட்டளையை வேண்டினேன் என்றான், கடிதினிலே இட்டம்போற் செய்க! வெனக்கூறினான் இறைவன் தஞ்சையைக்கொள்ளையிட வந்த பிரதாபன் நெஞ்சச் செருக்கதனை நிர்மூலம் செய்திடுவோம் ஓவாப் பெரும்படையும் உள்ளத் துணிவுமுள சேவகரே நம்மையெலாம் சிந்தித்தான் பேடியென! சும்மா விடலாமோ? சூழ்வோம், அவன்படையை! அம்மா வெனவலறி யோடப் புடைத்திடுவோம் பண்டைத் தமிழ் மறவர் போர்க்குப் புறங்காட்டல் உண்டோ? விரைந்தெழுவீர் ஓட்டுவோம் மாற்றாரை! நாட்டைப் பிறர்கவர நாவுக் கினியசுவை வீட்டுக்குள் உண்டுறங்கும் வீணரோ நாமெல்லாம்! கொண்ட மனைவிதனைக் கூசாமல் மற்றொருவன் பெண்டாளப் பார்த்திருக்கும் பேதையரோ நாமெல்லாம்! பெற்றெடுத்த தாயைப் பிறனொருவன் கோல்கொண்டே ஏற்றுவதைக் கண்டிருக்கும் ஈனரோ நாமெல்லாம்! என்று படைத்தலைவன் இவ்வாறு கர்ச்சித்தான் நன்று புறப்பட்டோம் நாங்களினிப் பின்வாங்கோம்! ” என்றிரைந்து கூவி எழுந்தபெரும் சேனைகளை, ‘வென்று வருக! வென வேந்தன் விடைதந்தான் வாழ்கவே நம்மரசு! வாழ்கவே தஞ்சைநகர்! வாழ்க பழம்பெருமை! வாழ்கவே நம்நாடு! வாழ்கவே செந்தமிழ்த்தாய் வாழ்க நமதுகலை! வீழ்க பகைவருரம்! வீழ்க! வெனமுழங்கி, வீரத் துடனோடி வேந்தன் பிரதாபன் தீரப் படைச்செருக்குத் தீர்ந்து தலைகவிழ்ந்து திக்குமுக் காடித் திரும்பாமல் பின்னடைந்தே எக்காலும் போர்செய்ய வெண்ணோம் என் றோடவே தஞ்சை நகர்வீரர் தாவிச் செருச்செய்தார்; அஞ்சிப் பகைவர் அதிசயக்கப் போர்செய்தார் வீசும் பெருங்காற்றால் விண்செறிந்த மேகங்கள் ஓசைமழை பெய்யாமல் ஓடிச் சிதைவதுபோல் சுந்தர நாதனவன் சூரன் பெரும்போரால் அங்கெதிர்ந்த சேனை அழிந்த நிலைகண்டோர், வாழ்கவே சுந்தர நாதன் புகழ்வாழ்க! வாழ்க நமதரசன்! வாழ்க! வென வாழ்த்தினார். சுந்தரநாதன் வெற்றி கேட்டு மன்னன் மகிழ்தல் சென்றார் சிலர்வேந்தன் சிந்தை களிகூர, நன்றுன் புகழ்வாக! மன்னா நமதுபடை வெற்றி சிறந்து விளங்கிற்றே! இப்போரில் முற்று நம் சேனைக்கே வெற்றி! முழுவெற்றி! என்று பெருங்கொற்றம் கூறி இருக்குங்கால், வென்று புகழ்மணந்த வீரன் படையுடனே வந்தான்; அடிபணிந்தான்; வாழ்த்தினான் மன்னவனை; அந்தச் சபைமுழுதும் துள்ளிற் றவன்வீரம்! தாங்காக் களிப்புத் தலைவந்த மன்னவன்றான் ஆங்கே யிருந்தோர் அகத்தில் பெருமகிழ்வு பாய்ந்து நிரம்பப் பரிவோடு மக்களெலாம் ஆய்ந்து நலமாகும் என்ன அறைகின்றான்; இந் நகரைத் தாக்கவே எண்ணிப் படையெடுத்த மன்னன் பிரதாபன் மாபெரும் சேனைகளை வென்றான் படைத்தலைவன்! வீரன்! பெருந்திறலன்! இன்றேல் நமதுநகர் இந்நேரம் மாற்றாரின் கையில் அகப்பட்டுக் கண்கலங்கு வார்மக்கள்; குய்யோ முறையோ ! எனக்கதறிக் கூவுவார்; பாழாகும் இந்நகரைப் பாதுகாத் திட்டார்க்குத் தாழாமல் இன்றே தருவேன் பரிசொன்று. மன்னன், தன்மகளைச் சுந்தரநாதனுக்கு மணமுடிக்கத் தீர்மானித்தல் மண்ணாளும் வேந்தர் பலரும் மணம்பேசி என்னைப் பகைக்கின்றார்; ஏந்திழையாள் என்மகளை வீரனிவ னுக்கே விவாகம் புரிவிப்பேன் ! ஆரும் மறுத்துரையீர் ! ஆதரிப்பீர் என்மொழியை ! வன்ன மயிலிவன்மேல் வைத்தாள் பெருங்காதல் இன்னவ னுக்குவமள்மேல் இச்சை மிகவுண்டு முற்றும் இதை உணர்வேன் ! முன்னோர் முறை நினைந்தால் சற்றும் பிழையன்று; சான்றுண்டு நூல்களிலே; என்றான் தயாநிதி ! எல்லோரும் துள்ளினார்; நன்றே பரிசு ! நடந்தால் நலம்பெருகும் ! எல்லோர்க்கும் சம்மதமே! என்று மொழிந்தார்கள். கள்வன் - இளவரசி திருமணமும் மக்கள் கருத்தும் நல்லதோர் நாளில் மணமுடிக்க நிச்சயித்தார்; அஞ்சாத சுந்தரர்க்கும் மன்னன் அரும்புதல்வி கொஞ்சும் மழலைமொழிக் கோமள வல்லிக்கும் காதல் திருமணமாம்! காணுவோம் நாமெல்லாம்! சாதி மதம்பார்த்துச் சதிபதிகள் சேர்ப்பவர்கள் அன்பின் நிலையுணரார்;ஆடுமா டென்றெண்ணிப் பெண்களை விற்பதுபோல் பேசி மணப்புரிவார்; நம்மரசன் செய்கையிது நல்ல பழங்கொள்கை ! இம்மா நிலமுழுதும் இன்பமுறும் இச்செயலால் என்று பலர்பேசி இருந்தார்; சிலமுதியோர் நன்றோ அரசுமுறை ! நாசம் நமக்கென்றார் ! கள்வன், கொலைகாரன், கட்குடியன் ஓர்மகனைச் செல்வம் பலதந்து சேனை யதிபதியாய் வைத்தான்; மகள் தந்து வாழ்விக்க எண்ணினான்; முத்தை உணராமல் முட்புதருள் வீசுதல்போல் பச்சைக் கிளியொன்றைப் பார்த்திருந்தும் பூனை கையில் வைச்சுக் கொடுப்பவர்போல், வற்றாமல் தேன் சிற்தும் நல்ல மலர்மாலை நாசமுறத் தாவுமொரு பொல்லாக் குரங்கினிடம் போடுவது போல்மகளை இன்னலுறச் செய்யவே எண்ணினான்; மந்திரிமார் மன்னவற்கு வந்த மதிகேட்டை மாற்றாமல் என்னதான் செய்கின்றார்? ஏதிந்த நல்லாட்சி இன்னும் சிலநாளில் இல்லா தழிந்துவிடும்! என்றிந்த வாறெண்ணி ஏக்கம் அடைந்திருந்தார். மன்றல் குறித்தநாள் வந்தவுடன் மாநகரை மண்ணுலகில் முன்னாள் மறைந்த வனப்பெல்லாம் கன்னி இளவரசி காதல் மணங்காண எண்ணிக் குடியேறி எங்கும் நிறைந்தாற்போல் வண்ணமுற வீதியெலாம் வாய்ப்பாய் அலங்கரித்தார். அங்குறையும் மக்கள் அகமகிழ்ச்சி தாங்காமல் எங்கெங்கும் இந்தமணம் பற்றியே எல்லோரும் தங்கள் மனம்போலப் பேசினார்; தாமவர்கள் மங்கலமாய் ஆடையணி பூண்டு, மணங்காண மன்னன் அரண்மனையின் மண்டபத்தில் சூழ்ந்திருந்தார் இன்னிசையே பெண்ணுருவை ஏற்று வளர்ந்த தெனும் வீர குமாரி விரிந்தமுகத் தாமரையாள், கோமள வல்லி குவியா மலர்முகத்தாள், பூமியிலே வீரனெனப் போற்றும் ஒருமகனை சூரனை அஞ்சாத சிங்கனாம் சூரியனை ஆரம் புனைந்தாள்; அவனும் அதுசெய்தான் நாரியரும், ஆடவரும் நல்வாழ்த்துக் கூறினார்; காதலர்கள் நீடுழி வாழ்ந்து களிப்புறுக ! ஏதும் குறைவின்றி இன்பக் கடல்படிக ! மக்கட் பெரும்பேற்றை எய்தி மகிழ்வுடனே எக்காலும் வாழ்க! வென எல்லோரும் வாழ்த்தினார்; ஊராருக் கெல்லாம் உணவளித் தானரசன்; தாராள மாய்ப்பரிசு தந்து களிப்பித்தான்; சுந்தரனும் கோமள வல்லியும் செந்தமிழில் பொங்கும் கவிச்சுவைபோல் புத்தம் புதுவாழ்வாம் தேனை நுகந்தார் தெவிட்டாமல் தங்களிரு ஊனும் உயிருமிங் கொன்றெனவே நீங்காமல் வாழ்ந்து மதுவுண்ட வண்டினமாய் இன்பத்தில் ஆழ்ந்தார் பலநாளும் ஆங்கு. 7. குற்றமுள்ள நெஞ்சு (கலிவெண்பா) தண்மை குடியிருக்கும்; வெம்பித் தளர்ந்தோரைத் திண்மைபெறத் தென்றல்மேல் வீசிநறுந் தேனருத்தும்; எங்கும் தளிர்மரங்கள்; ஏந்தி மதுக்கிண்ணம் தங்கும் மலர்க்கொடிகள், தங்கப்பூச் செய்தே தொடுத்துக் கிடந்ததெனத் தோன்று மொளிர் கொன்றை அடுத்தடுத்து நிற்க அவற்றின் இடைநடுவே முத்தும் பவழமும் மூண்டு கிடந்ததென மெத்த மலர்சிந்தி மேலே மிகவரும்பி எத்திசையும் வீசி இனிய நறுமணத்தைப் பத்தியாய் நிற்கும் பவழமல்லி கைமரங்கள் நீண்ட மரகதத்தில் நீலமணி கள்பதித்துத் தூண்டா விளக்கேற்றித் தோன்ற நிறைத்ததுபோல் காற்றில் அசைந்தாடிக் கண்கவரும் ரோசாக்கள்; தூற்றும் மகரந்தம் தோடவிழ்ந்த சம்பங்கி; பல்லை யிளித்தனராய்ப் பாவையர்கள் நிற்பதுபோல் முல்லைக் கொடிகள் முகையவிழ்ந்து காட்சிதரும்; இந்த மலர்ச்சோலை யிடையே மதுவுண்டு சிந்தை களித்துச் சிறைவண்டு பண்பாடிச் சேமமுடன் வாழும் செந்தா மரைபூத்த தாமரைப் பொய்கையொன் றுண்டதன் தண்கரைமேல் கண்கவரும் கைவேலைக் காரர்கள் கட்டியதோர் பொன்மண் டபமுண்டு; போட்டிருக் கும்நடுவில் உட்கார்ந் திருக்க வுரியதோர் மேடைதான்; தட்பமே தூணாய்த் தரையாய் இருக்குமதில். இந்த விடத்தில் இளவரசி சிங்கனுடன் வந்திருந்து பேசி விளையாடு வாளென்றும் சிங்கன் தனித்திருத்தல் பொன்னாடை யையிந்தப் பூதலத்தி லேவிரித்து மின்னிச் சுடர்வீசி மேற்கே கதிர்நிற்கும் மாலைப் பொழுதொன்றில் சிங்கன் மகிழ்வுடனே சேலைப் பழித்தவிழிச் செல்வி வருமுன்னர் அந்தமணி மண்டபத்தில் வந்தான் அமர்ந்திந்தான்; சிந்தையினில் தன்பழைய சின்னத் தனமெல்லாம் எண்ணினான்; இப்போ திருக்கும் நிலைநினைந்தான்; தன்னந் தனியுறைவோர் தாராள மாய்ப்பலவும் சிந்திப்பார்; இஃதியல்பே! அய்யம் சிறிதுமிலை; முந்தியதன் வாழ்வை நினைத்தான்; முகங்கவிழ்ந்தான்; கள்ள வினைபுரிந்து காலம் கழித்ததையும், பிள்ளை மொழியுடையாள் பேரன்பில் மூழ்கியதால் சேனைத் தலைவனாய்ச் சீர்பெற்று வாழ்வதையும் தானே மனங்கருதித் தாழ்குழலாள் நல்வரவை வெய்யிலிலே தொண்டியற்றி மேனி வெதும்புவோன் மையெழுந்து வெங்கதிரை மாற்றவெதிர் பார்ப்பது போல் எண்ணிமனம் குன்றி இருக்கின்ற வேளையிலே இளவரசி வருதல் - இருவரும் மகிழ்தல் மண்ணில் அழகெல்லாம் மாதைச் சரணடைந்த தென்னும் படிவிளங்கும் இன்பத்தின் ஊற்றான கன்னி மலர்க்கொம்பர் கற்கண்டு போல்மொழியாள், வேந்தன் மகள்வந்தாள்; வேட்கையுடன் சோர்ந்திருக்கும் காந்தன் நிலைகண்டாள்;கண்ணைச் சிமிட்டாமல் காலோசை காட்டாமல், காற்றால் படபடக்கும் சேலை மடக்கி அவள் சேர்ந்தாள் அவன்பின்னே; கல்லிழைத்த பொன்வளையில் ஓசைக் கலகலப்பை மெல்ல நிறுத்தினாள்; மேல்வீழ்ந்து கண்புதைத்தாள்; காந்தள் மலரிரண்டு கண்களை மூடியதும் சோர்ந்திருந்த சிங்கள் சுகக்கடலின் உள்வீழ்தான். மேகஞ்சுமந்துவந்த மெல்லியதோர் பூங்காற்றே தேகமெனத் தேன்சுவையைக் கொண்டவென் தேவியே! கண்டறிந்தேன் உன்னைநான் கைம்மலரைத் தூக்கியென் அண்டையிலே வந்துறைவாய் ஆரமுதே! என்றுரைத்தான்; புள்ளிமான் போல்நின்ற பொற்கொடியும் விர்ரென்று துள்ளிக் குதித்தோடித் தோள்மேல் கரமழுத்தி கொல்லென்று பற்காட்டிக் கொட்டிவிட்டாள் சிரிப்பை வல்லான் அருகணைத்து வாய்முத்துப் பார்த்திருந்தான்; இந்த இருவோரும் இன்பக் கதைநினைத்தே அந்த இடத்தில் அகமகிழ்ந்து சேர்ந்திருக்கும் நேரத்தில் அங்கே நிகழ்ந்தபல காட்சியெலாம் ஆருக்கும் இன்பம் அளிக்குமது கேட்டறிவீர் ! இயற்கைக் காட்சியால் இருவரும் இன்புறுதுல் பச்சைக் கிளிகள் பழச்சாறு தேனருந்திக் கொச்சை மொழிபேசிக் கூடிக் களித்திருக்கும்; கன்னங் கரியகுயில் காதல் தலையெடுக்கப் பன்னிப் பலபாடும்; பார்த்த கருங்காக்கை தானு மதுவாகப் பாவித்துத் தன்னுடைய ஈனக் குரல்காட்டிக் காகா வெனக்கரையும்; பச்சைக் கடலே பறவையுருக் கொண்டதென உச்சியிற் கொண்டையோ டுள்ள மயிற்குலங்கள் தோகை விரித்தாடும்; தோன்றுமக் காட்சிகளால் ஓகை உறாதார் உலகத்தில் யாருள்ளார்? இத்தகைய காட்சிகளால் இன்புற்ற காதலர்கள் முத்தம் பரிமாறி முன்னே பளிங்கனைய நன்னீர்த் தடத்தில் நடந்து குளிர்ந்துவரும் தென்னன் பொதியமலைத் தென்றல் நுகர்ந்திருந்தார்; அந்தநறுந் தென்றல் வழியே பறந்தணைந்த சந்தச் சிறைவண்டு சாற்றும் இசைக்குரலால், நெஞ்சத்தில் நீங்கள் நினைக்கும் நினைவையெலாம் கொஞ்சமும் வாய்விட்டுக் கூறா திருக்கின்றீர்! உள்ளத்தில் தோன்றும் நினைவை உரைக்காமல் கள்ளத் தனஞ்செய்தல் காதலர்க் கேற்றதல என்றரிய செய்தி எடுத்துரைக்கச் சிங்கனும் தன்கொடியின் வாயிதழில் தந்தான் பலமுத்தம். இளவரசியைப் புகழ்தல் மாறாப் பெருஞ்சுகமே! மாமயிலே! கொம்புத்தேன் ஆறாப் பெருக்கெடுக்கும் அன்பே! அழகுருவே! மன்னர் மதிக்கவுயர் வாழ்வளித்த மாமருந்தே! நீலவிழி வீசியெனை நித்தம் சுகவாழ்வில் காலம் கழித்திருக்கச் செய்யும் கடலமுதே! என்னுயிரை வாங்கி யெறிந்துவிட் டெங்கேயோ உன்னுயிரை என்னுடலின் உள்வைத்தாய் ஓவியமே! கண்ணே! உனது நலம் காட்டிக் கவிபுனையும் வண்ணந் தமிழ்ப்புலமை வாய்த்திலேன் என்றுரைத்தான். இளவரசி சிங்கனைப் புகழ்தல் சிங்கன் பொழிந்தமது சிந்தைக்குள் பாய்ந்தோடி அங்கவளைப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்திவிட, சந்திரனை மார்பகத்தில் சார்த்திக் கயல்மீனை அந்தரமாய் வீசிஅவன்முகத்தில் துள்ளிவிழ மாவின் தளிர்க்கரங்கள் மார்பிற் கிடக்க சுவைப் பாவைப் பிழிந்தெடுத்துப் பண்ணியதீங்குரலால், தோட்டமயில் நானாவேன் தோன்றி அதைக்களிப்பால் ஆட்டிவைக்கும் கார்மேகம் ஆனாய்! மதுச் சிந்தும் மல்லிகைப் பூ நானாவேன்! மாதர் மனங்கவரும் நல்லமணம் நீயாவாய்! நாதம் பிறக்குமொரு வீணைநான் ஆவேன்! விளையுமிசை யாவாய் நீ காணுங்கண் நானாவேன்! அக் கரு மணி நீ! செந்தமிழ்த் தேனூற்றும் செஞ்சொற் கவியான அந்தச் சிலப்பதி காரம் அளிக்கின்ற ஆரா வமுதே! அகப்பொருட் செல்வமெலாம் தாராள மாய்வளர்ந்து தங்கும் கலித்தொகையே! சிந்தா மணியே! சிறந்தமணி மேகலையே! முந்தைத் தமிழ்மறவர் போர்வீரம் முற்றும் இறவாமல் மெய்ப்புலவர் இன்சொல்லாற் செய்த புறநானூ றே! புகழ்ப திற்றுப்பத் தேஎன் அகநானூ றே!நற் றிணையே! யருஞ்சொற் புகலும் குறுந்தொகையே! ஐங்குறு னூறே! நல் பரிபாட லே! தமிழர் பண்டை நாள் மாண்பும் அரியதமிழ் நாட்டில் அமைந்த நிலவளமும் முத்துமுத் தாக முழுதுந் தொடுத்துரைக்கும் பத்துப்பாட் டே! என் பழந்தமிழின் தேன்பெருக்கே! எல்லாப் பொருளும் இதன்பாலுள விதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று புகழ் பொய்யா மொழியார் புகன்ற திருக்குறளின் மெய்யான முப் பொருளே! முத்தமிழின் மெல்லொலியே! உன்னாலே யன்றோ உயிர்வாழ்வேன் நானுலகில் மன்னவனே! என்றன் மனம்பறித்த மாருதுமே! என்று பலமொழிந்தாள் இன்பக் கொடிஅவளும், அன்பாக ஓர் பாடல் பாடின் அகமகிழ்வேன்! பாடுவையோ நீ யென்றாள்; பாட்டிது கேள் நீ யென்றே பாடினான் ஏதோ பரிந்து. சிங்கன் பாடுதல் (சிந்து) வீதி வழிதனிலே - என்னை வெஞ்சினக் காவலர் கொண்டு வருங்கால், தாதி மாருடனே - மாடி தன்னிலே வந்துநீ நின்றது கண்டேன் ! ஏதும் அறிந்திலனே - உடன் இன்பவொளி யொன்று வந்ததென் உள்ளே ! சீத மலர் விழியால் - என்றன் சிந்தை குழைந்து மயங்கினன் தேனே! துள்ளும் மான்விழியால் - மனத் துன்பம் விடுத்தனென் தூய்மை யடைந்தேன்! வெள்ளை மனத்தினளே! - முன் செய் வெந்தொழில் யாவையும் வீழ்த்தினை நீதான்! கொள்ளைச் சிரிப்பினையே - உள்ளம் கொண்டெதிர் நின்று வழக்குரைத் தேநான்! கிள்ளை உனதழகே - இந்தக் கேடற்ற வாழ்வினில் வைத்தது காணீ! சந்த மிகுதமிழால் - நெஞ்சச் சஞ்சலம் தீர்ந்து களிப்பது போலே கொந்து மலர்க்குழலே ! - என்றும் கொஞ்சும் இசைமொழி குயிற் குரலாளே! தந்துமதி யெனக்கே - கொடுந் தன்மைக் கடல் கடந்தேறும் புணையாய் நந்தும் மலர்க்கொடியே! - இந்த நாட்டினில் மாட்சி யெனக்க ளித்தாயே! உன்னைப்போல் தமிழால் - தேன் ஊற்றுந் தமிழ்க்கவி கூறவுணரேன்! நின்னை அணைந்ததனால் - நன்மை நேர்ந்தது;போற்றினர் வீரன் எனவென்னை! கன்னல் கரும்புறாவே! - படை காக்கும் தலைவனாய்ச் செய்தெனை வைத்தாய்! என்ன வினியுரைப்பேன்! - நான் ஏதும் அறிந்திலேன் என்னுயிர்த்தேவி! கோமளவல்லி கூறுதல் ( ஆசிரியப்பா ) என்று பாடினன் சிங்கனும் இதனால் துன்று மலர்க்குழல் தோகை மகிழ்ந்தாள்; புதுமலர்த் தேனுகர் கொறி வண்டானாள்; மதுவருந் தினள்போல் மனமயக் குற்றாள்; சிங்கன் உரைத்த சிறந்தநற் கவிகளால் அங்கம் புளகித்து அடங்காக் களிப்புடன், காதல! நின்கவிக் கனியேன் மனத்தை ஓதிடற் கரிய உவப்பில் இழுத்தது; பூவின் தேறல் பொங்கி வழிந்தே நாவிடைப் புகுந்து சுவையினை நல்கி, ஊக்கமும் உணர்ச்சியும் உளத்தில் ஊற, ஆக்குதல் போலுன் அகமலர்த் தோன்றிய செந்தமிழ்ப் பாட்டென் செவிவழிப் புகுந்தே சிந்தையிற் கிளர்ச்சி செழிப்புறச் செய்ததால்! அன்பினாற் பற்பல அறைந்தனை கவியில் என்பெலாம் உருகிட இன்பத் தாழ்ந்தனென்! என்னுயிர்க் குயிராய் இருந்தெனைக் காக்கும் மன்னவர் போற்றும் மணியே! ஆயினும் உண்மை நீ உரத்திலை; ஒளித்தனை! திண்மை உடையோய்! கூறுவென் தெரிந்தே. இனவரசியின் காதற் பாட்டு (ஆசிரிய விருத்தம் ) என்காதல்பெறவிரும்பி வேந்தர்குலக் குமரர் பலர் ஏங்கி நின்றார் ! அன்பாகத் தமிழ்க் கவிதை பலவெழுதி அனுப்பி யெனை வேண்டி னார்கள் ! முன்பே யென் மனங்கவர அவர்களிலே ஒருவருக்கும் முடிந்த தில்லை; இன்பே ! என் எழிலுருவே ! என்னெஞ்சு ழுவதையும் கவர்ந்த தேனே ! இனிய தமிழ்க் கவிதவிர எனதகத்தைத் தனதாக இழுப்ப தற்கோர் மனிதரிலை எனக் கருதி இறுமாந்து தமிழ் பழகி இருந்தேன்; உன்னை நனிவருத்தி விலங்கோடு வீதிதனில் நடத்திவரும் பொழுது கண்டேன்! கனிவு பெற மனமுருகி அன்புகொண்டு காதலெனும் குழியில் வீழ்ந்தேன்! அப்பொழுதே ஒருவருக்கும் தெரியாதென் அகத்துள்ளே விரைந்து போந்தாய்! எப்படியோ உயிர்கொண்டாய்! மனம் பறித்தாய்! உணர்ச்சியையும் கவர்ந்து நின்றாய்! இப்பொழுதும் எனதுருவை மறைவாய் நீ மனத்தினிலே இருத்தி வைத்தாய்! செப்பினை நீ பொய்யுரைதான்! பழையதொழில் மறவாதே செய்து வாழ்வாய்! நிலையாயென் னுட்புகுந்தாய்! நின்னுருவை ஒருநிமிடம் காணேன் ஆயின், கொலையாள னாயென்றன் உயிர் குலைய உளங்குமுறக் கொடிதே செய்வாய்! கலையாத தண்முகிலே! எனை மறந்த கண்ணொளியே! இன்ப வூற்றே! குலையாத முழுமதியே! என்காதல் கொடிபடர வளர்ந்த கொம்பே! சிங்கன் சினங் கொள்ளல் (கலிவெண்பா) செந்தமிழ் சோலையிலே சென்று கனிநுகர்ந்து அந்தச் சுவைமதுவில் ஆழ்ந்த மதியுடையாள் உள்ளத் தெழுந்த உணர்ச்சிதனைச் செய்யுளால் அள்ளித் தெளிக்கின்ற ஆற்றல் மிகவுடையாள் எண்பொருள வாகச் செலச்சொல்லித் தாம்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறி வென்னும் நுண்மொழியைக் காமங் கரைகடந்து விட்டதோர் காரணத்தால் கோமள வல்லி மறந்தளாய்க் கூறிவிட்டாள். பாவின் பொருளும் பழம்பிழிந்த சாற்றினைப்போல் தாவும் சுவைநயமும் தானுணர மாட்டாத சோரன் மனத்தில் சுருக்கென் றிவைதைக்க நாரிமுகம் பார்த்தான்; நகர்ந்தான் சிறிதளவு; முன்னாளில் நாம்புரிந்த மூடச்செயல் மறவாள் என்னைக் கொலைகாரன், கள்வன் எனவிழிவாய் உள்ளத்தில் வைத்தாள்; ஒருசிறிதும் காட்டாமல் கள்ளத் தனமுடனே காதலிபோல் வாழ்கின்றாள்; இன்றே நான்கண்டேன் ! இவள்வாய் மொழிவழியே. என்றே பலநினைந்தான் இன்பத்தின் போக்கறியான்; குற்றமுளார் நெஞ்சு குறுகுறுக்கு மாமென்று முற்றும் உணர்ந்தோர் மொழிவதுபொய் யாமோதான் ! ஆதலால் மங்கை யறைந்த மொழியந்தப் பாதகன் நெஞ்சிற் பகைத்தீயை மூட்டியதால்; ஏதேதோ சிந்தித் திருந்த நயவஞ்சன் தீதொன்று செய்வதற்குத் தீர்மானம் கொண்டான் தன் எண்ணம் சிறிதேனும் ஏந்திழைக்குக் காட்டாமல் அன்னத்தைக் கையால் அணைத்தான்; அருகிருக்கும் கிச்சிலியின் தோலைக் கிழித்திரண்டு பக்கத்தும் வைச்சதெனும் கன்னங்கள் வாடப் பலமுத்தம் பொய்யாகத் தந்தான்; புகழ்ந்தான் பலமொழியால்; மெய்யே எனக்கருதி மெல்லிடையாள் மகிழ்ந்தாள்; என்ணும் எழுத்தும் இலக்கியமும் கற்றாலும் பெண்ணின் அறிவென்றும் பின்னறிவாம் என்றுரைத்த முந்தையோர் சொல்லை முழுதும் பிழையென்பார் சிந்தைமலர் வாடச் செய்தாள் ஒளிர்முகத்தாள்; பின்னும் சிலபொழுது பேசி மகிழ்ந்தவர்கள் வன்னப் பறவையெலாம் வாயடங்கித் தம்முடைய கூட்டுக்குள் வாழக் குறுகுமிருட் போதினிலே வீட்டுக்குச் சென்றார் விரைந்து. 8. கசந்த வாழ்வு (கலிவெண்பா) அஞ்சாத சிங்கன் அரசன் மகளுடனே கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த சோலையிலே அன்னமனத் தாமரையில் ஆர்ந்திருந்த காதற்றேன், பண்ணமைந்த செந்தமிழிற் பாவுருவாய்ச் சிந்தியதை வீரன் உணராமல் வீணே சினமூண்டான்; ஈரமிலான் நெஞ்சத்தில் ஏதோதோ எண்ணிவிட்டான்; அன்று முதலாக அகத்தே மகிழ்வின்றிக் கன்றியே வாழ்ந்தான்; கலகலப்பை விட்டொழித்தான்; காமாலைக் கண்ணனுக்குக் கண்டவெலாம் மஞ்சணிறம் ஆமாறுபோல் தன்னைப் பார்ப்போர் அனைவோரும் கள்வன் எனக்கருதிக் காண்பதுபோல் எண்ணியவன் வெள்கித் தலைகுனிந்தான்; வெம்பினான்; ஏவலர்கள் பற்பலரும் தன்னுடைய பண்டை நிலைகருதி அற்பனிவன் என்றே அவமதிப் பாயொழுகி எள்ளிப் பழிக்கின்றார்; என்னுமொரு தீநினைப்பே கள்ளன் மனத்தைக் கருகிவிடச் செய்ததுவே சோலையிலே சென்றாலும் சுற்றிப் பறவையினம் சாலப் பழிதெரிந்து சாற்றுவதாய் எண்ணுவான்; நீலக் கருங்குயில்கள் நின்று வசைமொழிந்து காலனைப் போற்கூவக் கண்டு துடிதுடிப்பான்; முன்பவனுக் கின்பமாய்மூண்டிருந்த காட்சியெலாம் துன்பமாய்த் தோன்றித் துயர்வளர்த்த விந்நாளில்; சிந்தையிலே ஊக்கம் சிறந்து வளர்ந்திருந்தால் இந்த வுலகத்தில் எல்லாம் மனமகிழ்ச்சி தந்து துணைசெய்யும்; தன்னெஞ்சு குற்றமுறின் எந்தப் பெருநலமும் இன்னல் தருஞ்செயலாய்த் தோன்றி நிலைநிற்கும் துக்கமே எத்திசையும் ஊன்றியது போற்காணும் உண்மை யிதுவன்றோ! கள்வனுக்கும் அவ்வின்ப வாழ்வு கசந்ததுவே; செல்வப் பெருவாழ்வால் சிந்தைக் களிப்பிழந்தான்; முன்னிருந்த வாழ்வினிலே முற்றும் மனம்பதித்தான்; என்னை யிகழ்ந்த இளவரசி வாழ்வைப் பழிவாங்கி யின்று பழிப்பவர்கள் எல்லாம் அழுதேங்கச் செய்வேன்! அகல்வேன் அதன்பின்னே! என்னும் கொடுஞ்செய்கை எண்ணி மறைத்தவனும் கன்னிமேல் எல்லையிலாக் கதாலுடை யான்போல் இருக்கின்ற போதில் எழுந்த கடுங்கோடை வருத்தியதைக் கூற நினைத்தாலே வாய்வேகும்; கோடைக் கொடுமை குட்டைகுளம் எல்லாம் வறண்டு கொதிப்பேறிப் பட்டை பட்டை யாய்வெடித்துப் பார்ப்பவர் கண்கலக்கும்; வீட்டுக்குள் வாழ்பவர்கள் வெம்பி உடல்கருகித் தோட்டங்கள் தேடிப்போய்த் துன்பம் தணிவார்கள்; பூமியிலே சூடேறிப் புற்கள் கருகினவே; தீமையினாற் பழுத்துத் தீய்ந்து பசுந்தழைகள் தோடுமலர் எல்லாம் தொலைந்த பெருமரங்கள் ஆடையணி யிழந்த பெண்கள் அழகின்றி நெஞ்சத் துயரால் நிலையழிய மெய்யொளியை மஞ்சு படர்ந்து மறைத்ததுபோல் நிற்பனவே; மொட்டை மரம்பார்த்து மொய்த்தவரி வண்டெல்லாம் இட்டதேன் இன்றி யிரங்கும் பசிப்பிணியால் பூங்கா வனத்தில் பொருந்தும் பறவைகளும் ஏங்கிச் சுடுகதிரால், இன்னீர்ச் சுனைதேடி ஓடிப்போய் விட்டதனால் ஓசை அவிந்திருக்கும்; கூடிப் புதுமணத்தார் கொஞ்ச முடிவதிலை; இத்தகைய கோடையிலே இன்ப வடிவாளும் மெத்த துயருழந்தாள்; மேலெல்லாம் கொப்புளங்கள்! முத்துப் பதித்தவென மூண்டெழுந்து துன்பத்தில் வைத்தவளை ஆட்டிவிட வாடினாள் பூங்கொடிதான். சிங்கனும் இளவரசியும் மலைக்குச் செல்லுதல் சிங்கன் பலநாளாய்ச் சிந்தித்த தன்நினைவை அங்குநிறை வேற்றிவிட ஆவல் மனங்கொண்டான்; கன்னி அரசிமுகம் காதலனைப் போல்நோக்கி, என்னுயிரே! மானே! இனியமலைத் தேனூற்றே! கோடையிலே நம்மைக் கொடுமையுறச் செய்கின்ற சூடுதணிந்தே சுகமான வாழ்வு பெற நீலமலை மேற்சென்று நிற்போம்; நிலைத்தவெயிற் காலம் கழியும் வரை; கண்ணே! உடன்பாடோ? என்றே அவன்கேட்க, ஏதும் தடையின்றி நன்றே யுளம்நிறைந்த நங்கையிவை புகல்வாள்; ஆசைப் பசுங்கடலே! அன்பாவோ! நின்னுடைய வாசகத்தை என்றேனும் வாயால் மறுத்தேனோ! எண்ணம் சிதைய எதிர்மறுத்துச் செய்தேனோ! மன்னவனே! என்றன் மனப்பாங் கறியாயோ! இப்பொழுதே நீலமலை ஏறப்புறப்படுவோம்! வெப்பத்தின் வேதனைகள் நீங்குவோம் என்றுரைத்தாள்; தன்னுடைய தோழியர்க்கும், தாய்க்கும், முடியணிந்த மன்னவற்கும் சொல்லியோர் மாலைப் பொழுதினிலே அஞ்சாப் பழியனுடன் ஆநந்தமாய்க் கூடி கொஞ்சு மொழிப்பாவை, கோதையரும் ஏவலரும் சுற்றிவரக் கிளம்பிச் சுகவாழ்வு வாழ்வதற்கே முற்றும் நினைந்தவராய் முன்வண்டி யேறினார்; நான்கு வகைப்படைகள் நானிலத்தின் தூசெழுப்பி கான்று சுடுகின்ற கதிரவனைத் தன்னிழலால் வானத்தின் மீதே வளைத்து மறைத்ததென மேனிரைத்துச் சூழ்ந்து மிக்க வழிநடந்து தண்ணீரும் சோலையும் உள்ள இடங்களிலே நண்ணி மகிழ்ச்சியுடன் நன்கு களைப்பாறி உண்டு களிப்போ டுறங்கி யெழுந்து பலம் கொண்டு வழிநடந்து கொஞ்ச தினங்கழித்துக் கோடைக் கொடியவன் செய்யும் கொடுமைகளை ஓடத் துரத்தற்கே ஓங்கி வளர்ந்திருக்கும் நீல மலைகண்டு நீணெறியைக் கடந்த சாலத் துயரமெலாம் சாய்ந்துவிழ மேற்சென்றார்; மன்னன் மகட்காக வைத்திருந்த மாளிகையில் அன்னவர்கள் சென்றார்கள் ஆநந்தம் எய்தினார். மலைக்காட்சி அங்குசில நாட்கள் அவர்கள் மகிழ்ந்திருந்தார்; பொங்கிவரும் அருவி பொன்கொழித்து வீழுங்கால், வெய்யோன் ஒளியால் விளங்கும் பலநிறங்கள்; செய்ய பசுங்குன்றம் சிறக்கப் புனைந்திடவே வாசமலர் பற்பலவும் வைத்துத் தொடுத்ததொரு தேசுடைய மாலையாய்த் தென்படுமே அவ்வருவி; வானைப்பிளந்து வளர்ந்த மரங்களிலே கானப்பறவை கலந்திருந்து வந்தவர்க்கு நல்வரவு கூறி நறுந்தேன் மலர்தூவிப் பல்வகைய பாடல்கள் பாடிக் களித்திருக்கும்; நீருண்ட மேகங்கள் நின்று மிகமுழங்கிச் சேறாகப் பாறை சிதறமழை பெய்வனவே; சூரியனே மண்ணைச் சுடுகின்ற உன்னுடைய காரியத்தை எம்மிடம் காட்டாதே போவென்று கையசைத்துச் சொல்லுதல்போல் காற்றால் தளிர்மரங்கள் பையக் கிளையசைத்துப் பார்த்துச் சிரிப்பனவே; காட்டானைக் கூட்டங்கள் கண்ணயர்ந்து தூங்குதல்போல் மேட்டினிலும் பள்ளத்தும் மிக்ககரும் பாறைகள் குண்டு குண்டாகக் கொழுகொழுத்து நிற்பனவே; அண்டாத நீர்ச்சுனைகள் ஆழ்ந்த படுபள்ளம் கொண்டலை மேலே தடுக்கும் கொடுமுடிகள் கண்டவர்கள் நெஞ்சில் கலக்கம் விளைப்பவே! வற்றாத நீரோடை வாய்ந்த கொடிப்புதர்கள் முற்றும் அவர்கண்டு மூழ்கினார் இன்பத்தே; செல்வர், வறியோர், சிறந்த அறிவுடையார், நல்வினைகள் செய்வோர், நடத்துவோர் தீச்செயல்கள் வல்லார் எளியரெனும் வாழ்க்கை முறையொழிந்து கல்லார் அறிஞர் எனும் வேற்றுமையும் காணாமல் எல்லோரும் ஓர்குலமாய் இன்ப நெறியுணர்ந்தே பொல்லாத காரியங்கள் போக்கி மகிழ்ச்சியுறும் பேரரசுக் கொள்கைபோல் குன்றம் பிறங்கிடுமே; சீறும் அரவம், விலங்கு, சிறைப்பறவை, கற்றறிந்த நூற்புலவர், கள்வர், கொலைகாரர், உற்றமதி யற்றோர் உறைவோர் அனைவோர்க்கும் பேதமிலா வாறு பெருங்குளிர்ச்சி தந்தவரை ஆதரிக்கும் தம்மை அறியாதார் ஆருளரோ? சிங்கனும் மங்கையும் சிகரத்தையடைதல் அக்காலந் தன்னில் அழிந்தநிலாப் போதுவரக் கொக்காகக் காலங் குறித்திருந்த வஞ்சனகம் மாலைச் சிறுபோதில் மாளாத அன்பினன்போல் கோல மயிலின் கரம்பற்றிக் கொண்டேகி வானத்தை முட்ட வளர்ந்த முகடேறினான்; தேனொத்த சொற்கள் தெளித்தார் இருவோரும்; அந்தப் பெருங்குவட்டின் ஓரத்தில் அவ்விருவோர் குந்தி யிருந்தவிடம் கொல்லும் கொலைகளமாம்; அங்கிருந்து கீழ்நோக்கின் ஆண்மை படைத்தோரும் தங்கள் உடல்நடுங்கிச் சோர்ந்து தரைவீழ்வார்; கொஞ்சந் தடுமாறிற் போதும் கொலைமுடிவே; அஞ்சொல் எழிலாள் அறியாள் இதுசெய்தி; கள்வன்பால் வைத்ததொரு காமமே இந்நிலையைத் தெள்ளமுது தேராமற் செய்து மறைத்ததுவே; கள்வன் கடுநெஞ்சம் கண்டவனைப் போற்பாதி மெள்ள மறைந்தான் மேற்றிசையில்; ஆனாலும் உள்ளக் கொதிப்பை உலகத்தார் கண்டறிய அள்ளி அறைந்ததுபோல் காட்டினான் அந்திதனை; கையெழுத்தைக் கண்கொண்டு காணமுடியாமல் மையிருளும் சூழ்ந்து மறைத்ததே கண்ணொளியை இளவரசி கூறுதல் சிங்கன் முகநோக்கிச் செல்வப் பெருந்துரையே! இங்குநாம் இன்னும் இருப்பதனால் என்னபயன்? மால்கொண்ட யானை மனிதர் மனநடுங்கக் கால்கொண்டு மண்ணில் உதைத்துக் கதறுதல்போல் காரும் முழங்கும்; கறுத்தவிருள் சூழ்ந்ததிதோ! ஆரும் துணைவரிலை; ஆபத்து வாழுமிடம். இவ்விடம் விட்டிறங்கி இப்போதே நம்முடைய அவ்விடம் சேர்வோம்; அனைவோரும் தேடுவார்! என்றே அமுதத்தை ஏந்திழையாள் மொண்டூற்ற, ஒன்றும் அவனுரையான், உட்கார்ந்தான் பேசாமல்; கொஞ்ச நேரத்தில குலைந்தான் அவன்பொறுமை; அஞ்சத் தெளித்தான் அனல். சிங்கன் சினமொழி மன்னனது மகளாகப் பிறந்துள்ளோம்! மாநிலத்திற் கரசி யாவோம்! இன்னியல்சேர் தமிழ்நூல்கள் தேர்ந்துள்ளோம்! இனியவிசை பாட வல்லோம்! என்னுமொரு செருக்கினிலே எந்நாளும் மனம்போக்கி இருக்கும் மாதே! என்னையும் நீ திருடெனனக் கொலைஞனென இழிவாகப் பேசி விட்டாய்! அன்றந்தச் சோலையிலே நீ மொழிந்த வார்த்தையினை மறந்தேன் அல்லேன்! என்றுநான் பழிவாங்க ஏற்றவொரு காலம்வரும் எனவே காத்து நின்றிருந்தேன்! இந்நாளும் சரியான சமயமிது நேர்ந்த தாலே இன்றிங்கே உனதுடலும் மனச்செருக்கும் இல்லாதே ஒழிய மாய்ப்பேன்! அக்காலத் துனதுவிழி விடுத்தாயென் அகமுழுதும் கலக்கி நின்றாய்; எக்காலும் வணங்கிநீ வழிபாடு செய்யுமொரு தேவின் பாதம் முக்காலும் பணிந்தேத்தி வரம் வேண்டி முடிப்பதற்குப் பொழுது தந்தேன்! இக்காலை அதுசெய்து தாழாமல் எதிர்நிற்பாய்! நேரம் போக்கேல். கோமளவல்லியின் வீரச்செயல் (கலிவெண்பா) என்ற மொழிகேட்டாள், ஏதொன்றும் சொல்லாமல் நின்றாள் கணநேரம்; நெஞ்சில் துணிவுற்றாள் நல்ல மணியை நடுக்கடலில் விட்டதுபோல் பொல்லான் இவனழகில்போட்டேன் என்தறிவை; நம்மையிவன்கொன்றிந்த நாட்டினிலே வாழ்வானேல் அம்மாவோ ! முன்னையினும் ஆற்றுவான் தீமைபல; ஆதலால் இக்கள்வன் ஆருயிரை நான்போக்கிப் பூதலத்தார் என்னைப் புகழும்படி செய்வேன்! கள்வனைக் காதலித்தாள் காவலன்பெண் என்றுபழி சொல்வதையும் போக்குவேன்! என்றுறுதி சூழ்ந்தவளாய், வேந்தன் மகள் தான் வெருண்டவளைப் போல்நடித்துச் சாந்தம் முகங்கொண்டு சாற்றினாள் இவ்வுரைகள்; காதலால் என்னைக் களிப்பித்த நல்வாழ்வே! தீதற்ற கற்பகமே! தேனே! பெருங்குன்றே! சாதற்கு யானஞ்சேன்! சத்தியமே! உன்னாணை! பூதலத்தில் நீயல்லால் வேறு புகலறியேன்! உன்னை மணம்புரிந்த நாள் முதலாய் உள்ளத்தில் பின்னை ஒருதெய்வம் பேணி அறியேன்நான்! தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை யென்ற மெய்ப்புலவன் பொய்யா மொழியே புலங்கொண் டுனைவணங்கி வையத்தில் இன்புற்று வாழ்ந்தேன்; இதுவுண்மை! உன்னை வலஞ்சூழ்வேன்! உள்ளத்தாற் போற்றுவேன் இன்னே எழுந்தெதிரில் நின்றருள்வாய்! என்றுரைத்தாள். அஞ்சாத சிங்கனவன் ஆழ்ந்த கருத்தறியான் வஞ்சகத்தைச் சிந்தையிலே வைத்திருக்கும் பெண்மக்கள் அஞ்சினவர் போல்நடிப்பார்; ஆணுலகை ஏய்ப்பரிதை நெஞ்சினிலே காணான் எழுந்திருந்து நின்றுவிட்டான்; பூங்கொடியும் அந்தப் புலங்கெட்ட பாதகனைத் தாங்காத சோர்வோடும் சுற்றித் தலைவணங்கி வந்தவளும் காணாமல் வஞ்சகனைப் பொத்தென்றே அந்தப் படுகுழியில் அஞ்சாமல் தள்ளிவிட்டாள்; பார்ப்பதற்குக் கூடாத பாதலத்தி லேவீழ்ந்தான் ஆர்ப்பரித்த கள்வனவன் அப்போதே மாண்டொழிந்தான். தீரச் செயல் புரிந்த தேவி திகில்கொண்டு நேரே இறங்கி வருகின்றாள் நெஞ்சினிலே ஆராத துக்கம் அடைக்கவே வாய்விட்டுச் சோரனே! என்மனத்தைச் சோதிக்கச் சொன்னாயோ! உண்மையோ! ஒன்றும் உணரேன்! உனைக்கொன்றேன்! பெண்மை ஒழிந்தேன்! பெரும்பாவத் தீவீழ்ந்தேன்! அந்தோ! வென்வாழ்க்கை அழிந்ததே என்செய்வேன்! நொந்தேன்! தனித்தேன்! நொடிப்பொழுதும் வாழ்ந்திரேன்! என்றரசி வாய்விட் டிறங்கி வருகையிலே மன்றல் மலர்க்குழலை மாந்தர் பலர்தேடி எத்திசையும் சுற்றி அலைந்தார்; இவள்வருந்திக் கத்தியபே ரோசையால் கண்டு வழியறிந்து வந்திவளைச் சூழ்ந்தார் வரலாற்றைக் கேட்டறிந்தார்; சிந்தை வருந்தினார்; சிற்றிடையைத் தேற்றினார்; தங்கும் இடத்திற்குத் தாழமல் வந்தார்கள்; அங்கே இரவெல்லாம் ஆழ்ந்தார் துயர்க்கடலில்; கள்ளன் கருத்தனைய காரிருள்போய் மாண்டதன்பின் மெள்ளப் பகலோனும் மெய்யறியாள் நெஞ்சத்தே உள்ள இருள்மாய்க்க உன்னிக் குணதிசையில் துள்ளப் பறவையினம், தோன்றினான் சோதியுடன்; இளவரசி தஞ்சையடைதல் வீரச் செயல்புரிந்து வெந்துயரில் வீழ்ந்திருக்கும் காரிகையைச் சூழ்ந்திருந்த காவலரும், தோழியரும், ஆர்கலிதன் ஓசை அடங்கி வருவதுபோல் ஓர்முழக்கம் இல்லாமல் ஊருக் கெழுந்தார்கள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் காட்சி விருந்தளிக்க எண்ணி விழாக்காணும் இச்சையுடன் கல்லுபல தாண்டியது கண்டு தளர்ந்து தமதூர்க்கு மீண்டு நடந்துவரும் மிக்க பெருங்கூட்டம் இந்தக் குழுவென்று கண்டோர் இசைக்கவே மந்தநடை கொண்டு மாநகரை யண்மினார். நீலமலை சென்ற நேரிழையின் செய்திமலர் மூலமாய் முன்னறிந்த முத்தழிழ்த் தஞ்சைநகர் கோலா கலமாகிக் கோதை செயல்குறித்தும் ஏலாத செய்கவென ஏந்திழைக் கிடங்கொடுத்த மன்னவனைப் பற்றியும் பேசி மதிப்பற்ற சின்னத் தனமெல்லாம் சேர்ந்து பிறந்ததெனும் சிங்கன் கொடுமைகளைச் சிந்தித்தும், எல்லோரும் அங்கம் குலைந்தார்கள் ஆங்கு. 9 ஊர் வாய்க்கு மூடியில்லை (கலிவெண்பா) இந்த ஒழுங்கின்மை எங்கும் நடந்ததிலை அந்தநா ளேநாம் அரசன் முடிவினையும், கற்றும் அறிவில்லாக் காரிகையின் காதலையும் முற்றும் வெறுத்தோம்! மூண்டதுவே தீதென்றோம்! வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனவெண்ணிச் செல்லும் அறிவற்றோர் மன்னன் சிறுசெயலைத் தக்கவினை அன்றென்று தட்டி மொழியவிலை! எக்காலும் நிற்கும் இழிவரசன் ஆற்றினான்; குற்றம் புரிகின்ற காலத்திற் கோபமுடன் கொற்றவற்கு நீதி கொளுத்தும் அமைச்சில்லா நாடு வறங்கூறும்; நலிவராம் குடிமக்கள் பாடு பெறாதரசு; பார்த்திபனும் கெட்டழிவான் என்னும் மொழிக்கே இலக்காகி இவ்வரசு சின்ன மடைந்து சிதைந்ததே! ஐயையோ! தங்கள் வினைக்குத் தகுந்த பலன்பெறுவார் இங்கே எனற்கிதுதான் காட்டாய் இருப்பதுவே; நாயைக் குளிப்பாட்டி நல்லிடத்தில் வைத்தாலும் வாலைக் குழைத்தோடி வாய்வைக்கும் பவ்வீயில்; என்னதான் சொன்னாலும் ஏதமே செய்தவர்கள் சின்னத் தனமறந்து சீர்பெறுதல் இல்லைகாண்! காக்கை நிறங்கருதிக் கானக் குயிலுடனே நீக்கமற வைத்து வளர்த்தால் குயிற்குரலைக் கன்னங் கருங்காக்கை கற்றுவிடக் கூடுமோ! என்ன கொடுமையிது! இப்படியா நம்மரசன் ஒப்பிலாச் செல்விக்குத் துன்பம் உறவேண்டும்? தப்பிதத்தால் வந்ததிது வென்றே தளர்வடைந்து மக்கள் பலமொழிந்தார் மன்னவனும் தேவியும் துக்கக் கணைபாயத் துன்பவலை வீழ்ந்தார்; ஊரெல்லாம் துக்கம் உறைபனியாய் மூடியதால்; யாரும் முகம்சோர்ந்தார்; எச்செயலும் விட்டிருந்தார்; தள்ளாத வயதால் தளர்ந்த குலோத்துங்கன் உள்ளக் கலக்கமுடன் ஒன்றும் உணராமல் கோட்டு மலர்பறித்துக் கோடையிலே போட்டதுபோல் வாட்ட முடன் சோர்ந்து வந்தான் சபைநோக்கி. மந்திரிமார் வீற்றிருந்தார்; மக்கள் திரண்டிருந்தார்; வந்திருந்தாள் தன்மகளும்; வாய்திறந்து சொல்கின்றான்; ஆட்சியினை நன்றாய் அமைதி யுடன்நடத்தி மாட்சிநான் எய்த மதியுரைத்த மந்திரிகாள்! ஊர்வாழ் தலைவரே! ஒன்று புகல்கின்றேன்! சோர்ந்தேன் வயதாலும், சோரன் செயலாலும்; எண்ணற்ற செல்வம் செலவழித் திவ்வுலகில் கண்ணுறுவோர் கண்கள் பெயராமல் நின்றுவிட, அல்லும் பகலும் அசைவின்றி யோடோடிக் கல்லால் மிகவலிவாய்க் கட்டியதோர் மாளிகைதான் பொத்தென்று,பூமி நடுக்கால், இருந்தவிடம் இத்தரையி லின்றி இடிந்தால், அதற்குரியான் கொள்ளுமனத் துன்பம் குறித்துரைக்க ஒண்ணுமோ! உள்ளம் கவரும் உருவுடைய என்புதல்வி! ஆருயிர்ச் செல்வி அரசுரிமை கைக்கொண்டு பாருக்கு நன்மை புரிவாள்; பலசுகமும் நன்றாய் அவள்துய்த்து, நான்களிக்க வாழ்ந்திருப்பாள்; என்றமனக் கோட்டை இடிந்ததால் துன்புற்றேன்; இன்னும் அரசாள என்னால் இயலாதே! பின்னிருந் தாள்வதற்கோ பிள்ளை ஒருவனில்லை; சோரனால் என் கிளியும் சோர்ந்தாள், சிறையிழந்தாள்; ஆராத் துயரத்தால் அங்கம் மெலிந்து விட்டாள் என்செய்ய லாம்நீங்கள் எல்லோரும் ஆராய்மின்! அன்பாக ஓர் வழியைக் காட்டுங்கள் ஆற்றுவேன்! என்றுரைத்தான் மன்னன்; எழுந்து முதலைமச்சன், ஒன்றுங் குறைவில்லை; உள்ளங் கலங்காதீர்! கண்தெரியாக் காமத்தால் கள்வனழ கில்மயங்கி மண்மேல் பழிவிதைத்த மங்கை இளவரசி அந்தப் பெருந்திருடன் ஆவி சிதைத்தனால் முந்தைப் பழி முடித்தாள்; மூவாப் புகழ் பெற்றாள்; ஆட்சி அவள்புரிந்தால் ஆரும் முணுமுணுக்கார்; மாட்சி பெறுமரசை மங்கை கரத்தளிப்பாய்! நீதி முறையறிவாள் நாட்டின் நிலையுணர்வாள்; சாதிமத பேதம் தவிர்ப்பாள்; சமவுரிமை மாந்தர் குலமெல்லாம் பெற்று மகிழ்வடையச் சேந்த வரிவிழியாள் செய்வாள் பலதிருத்தம் மங்கையிவள் போன்ற மதியுடையார் நாடாள எங்கே கிடைப்பார்கள்? இல்லை உலகினிலே! என்றவுடன் எல்லோரும் ஏற்றார் கரம்புடைத்தார்; நன்றே அமைச்சருரை நாங்களிதை ஒப்புகிறோம்; எங்கள் அரசாய் இருந்தினிது காப்பதற்கே இங்கே இதுவன்றி வேறுவழி ஏதென்றார்; கோமள வல்லிதனைக் கூப்பிட்டு அருகிருத்தி பூமியினை நோக்கிப் புலம்பு முகம்நோக்கி, என்னார் உயிரே இளந்தளிரே! கண்மணியே! பொன்னே! மணமிழந்த பூவே! புகன்றிடுவாய்! இப்போ தமைச்சர் எடுத்துரைத்த யோசைனையை ஒப்புகின் றாயோநீ! ஊராளச் சம்மதமோ! நாட்டைப் புரப்பதற்கு நல்ல அரசின்றேல் ஓட்டுவோன் இல்லாமல் ஓடித் திசைமாறும் கப்பலைப் போலிந்தக் காசினி துன்பமுறும்; எப்படியுன் எண்ணந்தான் என்றான் குலோத்துங்கன் சிங்கனுயிர் கொன்றழித்த நாள்முதல் சிந்தையிலே தங்கும் களிப்பின்றித் தள்ளாடி வாழ்ந்திருந்த மங்கை பலநினைந்தாள்; மாறா முடிவுகொண்டாள்; அங்கண் மொழிந்தாள் அவள். கோமள வல்லி கூறுதுல் (ஆசிரிய விருத்தம்) தீதுடைய செயல்யாவும் நிலைநில் லாமல் தெய்வீகக் காதல்முன் மடியு மென்றே காதலிலே தெய்வீகம் இருக்கு மென்று கட்டுரைத்தார் பொய்யுரையைக் கருத்தில் வைத்தேன்! பூதலமே பழிசொல்லும் கொலைஞன் தன்னைப் புருடனென வெண்ணியே மணந்து கொண்டேன்! ஆதலினால் என்னைப்போல் மூடரில்லை அறிவின்மைக் கேற்றதொரு வசையுங் கொண்டேன்! இப்புவியில் காதலிலே தெய்வத் தன்மை இருக்குமேல் காதலருள் ஒருவர் மாண்டால் அப்பொழுதே மற்றோரும் மாள வேண்டும்; அவ்விதமாய் உலக மெலாம் நடப்பதில்லை; செப்பினார் ஈருயிர்கள் ஒன்றே யாகிச் சேர்ந்துவிடும் காதலினால் என்று பொய்யே தப்பிதமே அறிவில்லார் காதல் கொள்ளல்; தரணியிலே இவ்வுண்மை நானே கண்டேன். பெற்றோர்கள் அப்பொழுதே வருந்தி நின்றார்; பெருந்துயர மோடுபல நீதி சொன்னார்; சற்றேனும் அவர்மொழிகள் மனத்திற் கொள்ளேன்! சாற்றினேன்! காதலோ காதல்! என்றே; முற்றாத அறிவுடைய திருடன் அந்த மூர்க்கனைநான்மாற்றிவிட முயன்ற வெல்லாம் வற்றாத நீர்பாய்ச்சி விழலை இங்கே வளமைபெற வளர்த்தல் போல் ஆயிற்றன்றே? பாறையிலும் கால்களினாற் சீத்துச் சீத்துப் பார்த்திரையைக் கொத்தியுணும் கோழி தன்மை மாறுவதே இலை; யுண்மை மனித ருள்ளும் மடமையால் இளமைமுதல் தீமை செய்தோர் தேறுவரோ? ஒருபொழுதும இல்லை! இல்லை! தெரியாதார் அவர்செயலைத் திருத்தநிற்பார்! வேறுமொழி ஒன்றுமிலை; விளம்பு தற்கே; வீணானேன் வாழ்க்கையில் வெறுப்பும் கொண்டேன். எனதுயிரைக் கவர்தற்கு நினைத்த கள்வன் இவ்வுலகில் வாழ்வதனால் பயன்தான் என்னே! மனதினிலே ஈவிரக்கம் இல்லா திந்த மாநகரை மறுபடியும் நடுங்கச் செய்வான்! கனமான பெரும்பாவம் என்னைச் சூழ்ந்து கவிந்தாலும் அவனுயிரை மாய்ப்ப தென்றே மனதார நினைத்தேநான் வீரங்கொண்டேன்! மற்றவனைப் பாதலத்தே தள்ளிக் கொன்றேன். என்கொலையால் கடுவெயிலில் திரிந்த மக்கள் எல்லோர்க்கும் தண்ணிழலே வாய்த்த தாகும்; தின்மையிலை; என்றாலும் உலகில் வாழ்வோர் தினந்தேறும் என்செயலை எடுத்துக் கூறி நன்மையிலாள் என்றுபல பழிகள் பேசி நாயகனைக் கொலைசெய்தாள் என்று சொல்வார் வன்மையுடன் உலைவாயை மூடி னாலும் ஊர்வாயை அடைத்தற்கு வழியும் உண்டோ! ஆதலினால் இவ்வரசு வாழ்வு வேண்டேன்! அடியாளும் குடிகளுக்குள் ஒருத்தி யாகித் தீதுலகில் நிலவாமல் மறைந்தே போகத் தினம் பணிகள் புரிவதற்கே நினைத்து நின்றேன்! ஓதுகிறேன் ஒருவழியை உளத்திற் கொள்வீர்! உங்களிலே அறிவுடையான் ஒருவன்தன்னை நீதிசெயத் தலைவனாய்த் தேர்ந்து கொள்வீர்! நீங்களெலாம் அவற்குதவி யாகி நிற்பீர்! எல்லோரும் பணிபுரிந்தேசெல்வம் ஈட்டி இன்பமுற விழைகின்றீர்! நீங்கள் கூடி நல்லானைத் தன்னலத்தை விரும்பா தானை நாட்டுக்குத் தலைவனெனத் தேர்ந்து கொண்டால், இல்லாமை வீழ்ந்தழியும்; செல்வம் ஊறும்; எழுந்துவளர் சுதந்திரமும் நிலையாய் நிற்கும்; பொல்லாமை அடிசாயும்; தொழில்கள் பல்கும்; புலவர்புகழ் நீதிமுறை ஓங்கும் நன்றே. (கலிவெண்பா) வேர்த்து வினைசெய்யும் வீணன் பழையநிலை பார்த்து நடவாமற் படுகுழியில் போய்வீழ்ந்தேன், அணைந்த விளக்கானேன்! ஆரிருளால் சூழ்ந்தேன்; மணந்தேன் சுடுநெருப்பை, மாண்ட துரும்பானேன்; நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்றென்று வள்ளுவர்தன் சொன்மாலை யுள்ளே சொருகியது கண்டுணரேன்; பொன்மாலை யன்பாய்ப் புனைந்தேன் கயவனையே! காதலெனும் நஞ்சாற் கலங்கி அறிவிழந்தேன்! தீதுக் குறைவிடமாய்த் தீர்ந்தேன் உலகத்தில்; சோகவலை யென்னைச் சூழ்ந்து பிணைத்ததுவே! ஆகையால் என்னால் அரசியற்றல் ஆகாதே! என்ன மொழிந்தாள் இளவரசி; சொற்கேட்டான் மன்னவனும் மந்திரிகள் மற்றுள்ளோர் எல்லோரும் செந்தமிழைக் கற்றறிந்த செல்வி புகன்றமொழி இந்த நிலத்தோர் எவருக்கும் நல்லமுதாம்; மன்னர் உரிமைதனை மாந்தர்பெறுவதற்கே இந்நிலத்தில் போர்செய்ய எங்கும் பலவியக்கம் தோன்றிப் பலநாள் தொடர்ந்து பணிபுரிந்தே ஊன்றி யிருந்தும் உரிமை கிடைப்பதிலை; ஆளும் குலத்தார் அடக்கு முறைகாட்டி நாளும் பொதுமக்கள் எண்ணத்தை நாசமுறச் செய்வதையும் காண்கின்றோம்! சீற்றத்துடன்மக்கள் நையும் அடிமையெனும் நாளை அறுத்தெறியப் போர்ப்படைகள் கொண்டு பொறாதே அரசியலைத் தீர்த்துத் தலைமுழுகித் தீதீல் குடியரசை நாட்டி நலம்பெற்ற செய்திகள் நாமின்றும் கேட்டிடுவோம்! ஆதலாற் கீழ்மையுற மாட்டோம்! பூதலத்தில் யார்தான் சுதந்தரத்தைப் போற்றாதார்? மாது மொழிந்தவுரை மாற்றாமற் கைக்கொள்வோம்! என்றுரைத்து நின்றார்; எழுந்தான் குலோத்துங்கன் இன்றே குடிமக்காள்! என்னரசு தந்துவிட்டேன்! உங்கள் மனம்போல் ஒருவனைத் தேர்ந்தெடுப்பீர்; பொங்கும் களிப்புடனே போற்றுவீர் நாடுதனை! நானுமினி உங்கள்நகரில் ஒரு குடியாய் ஆன வரையிலும் ஆட்சிக் குதவுவேன்; மன்னர் குலத்திற் பிறந்தோர்க்கும், மற்றவர்க்கும் இந்நிலத்தே பேதம் எதுவும் இலையென்னும் உண்மையினை யிந்த உலகோர் உணர்தற்காம் தன்மையுடன் வாழ்வேன்! தகுந்த வினைபுரிவேன்! மெய்யா லுழைக்காமல் மேதினியில் ஏழைகளை நையப் புடைத்தவர்கள் நல்லுழைப்புக் கொள்ளை கொளல் தூவென்று தள்ளித் தொலைக்கத் தகுஞ்செய்கை ஆவதெனக் காட்டி அறிந்த தொழில் செய்வேன்! என்று முடித்தான்; எழுந்தாள் இளவரசி, மன்றில் உறைவீர்! மதியுடையீர் கேண்மினோ! இன்று முதலாக யானும் இனியதமிழ்த் தென்றல் வளர்ந்தோங்கத் தெள்ளமுதம் நாடெல்லாம் ஓடுறவே செய்வேன்! உலகெல்லாம் செந்தமிழை நாடும் படிசெய்வேன்! நாளும் இதற்குழைப்பேன்! நம்மைத் தமிழ்மொழியின் செந்தேன் பிழிந்தெடுத்து மக்கள் இனத்தின் மனவயலிற் பாய்ச்சியே எக்காலும் மாறாத இன்பப்பயிர் விளைப்பேன்! மெய்யே இதுசெய்வேன்! உலகினிலே வெய்யிற் புழுப்போல வேதனையில் ஆழ்ந்திருப்போர் இன்பமுடன் வாழவே ஏற்ற பணிசெய்வேன்! அன்புடனே உங்கள் அரசுக்கும் கீழ்ப்படிவேன்! பாழான பண்டைச் சமுதாய வாழ்க்கைதனைத் தாழாமல் மாற்றித் தகுந்த புதுவுலகம் காணவே நீங்களெலாம் கங்கணம் கட்டுங்கள்! வீணான சோம்பேறி மக்கள் விளைநிலங்கள் தங்கள் உரிமையெனும் கொள்கை தகர்த்திடுவீர்! நஞ்சையிலும் புஞ்சையிலும் நாளும் உடல்வருந்திப் பஞ்சும் பருத்தியும் பல்வகையாம் தானியங்கள் உற்பத்தி செய்பவரே உண்மை நிலக்கிழவர்; கற்பனை அல்லவிது; காண்பீர் பகுத்தறிந்தே! இந்தநிலை வந்துவிட்டால் பஞ்சப்பேய் என்றுமிலை; எந்தப் பெரும்பிணியும் சண்டையும் இல்லையால் தங்கள் நலங்கருதி எந்தத் தனிமனிதர் இங்கு தொழில் நடத்தல் கூடாதெனும் முறையை நீதியாய்ச் செய்துவிடின் நில்லாது வஞ்சகப் பூதமுத லாளித்துவம் போயொழியும் மண்ணாகி! உள்ளவர்கள் இல்லார்கள் இல்லா ஒருசமுகம் துள்ளிமெள்ள வளரும்வகை செய்வீர் துரிதமுடன்! இத்தகைய மாற்றங்கள், ஏற்பட்டால் இவ்வுலகம் புத்துலக மாகிப் புகழ்பெற்று வாழுமே! யானும்இதற் காகவே, என்மனப் பூர்வமாய் ஆன வரைமுயல்வேன்; ஆக்குவேன் புத்துலகம்! போலிமுத லாளித்வம் போச்சு புரையோடி! வேலியென விருந்த வேத புராணமதச் சூதனைத்தும் கண்டு பகுத்தறிவால் சுட்டெரித்தார். ஆதலால், இன்னுமதைக் காக்க அறிவுடையோர் எண்ணார் உண்மையிது; இஃதுண ரார்எதிர்ப்பின் திண்ணம் அவர்தோற்றல்; தீரமுடன் உழைப்பீர்! என்ன மொழிந்தாள் இளவரசி; எல்லோரும் மன்னன் மகள் வாழ்க! வாழ்க மதிமன்னன்! மாநகரம் வாழ்கவே! மாந்தர்குலம் வாழ்க! தேனான எம்மன்னைத்தெய்வத்தமிழ் வாழ்க! வாழ்க! தமிழ்வீரம்! வாழ்க தமிழ்க்கலைகள்! வாழ்க தமிழ்நாடே! என்றுபல வாழ்த்தினார்; தஞ்சை நகர்மக்கள் கூடித் தமக்குள்ளே அஞ்சாமை ஊக்கம் அறிவுள்ளார் தங்களை ஆட்சிக் குரியசபை அங்கத்தார் ஆக்கினார்; காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லாத நன்னூல்கள் கற்றுணர்ந்த நாவலன் ஆனவனை மன்னுஞ் சபைக்குத் தலைவனாய் மன்றத்தார் தேர்ந்தெடுத்துக் கொண்டு திறமாகத் தம்முரிமை ஓர்ந்து நடத்தற் குரியபல சட்டங்கள் செய்துபின் பற்றிச் சிறந்த குடியரசை எய்தி மகிழ்ந்தார்கள் இங்கு. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் (1900 - 1961) தி. வ. மெய்கண்டார் தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை. சாமி. சிதம்பரனார் யார்? அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்ப தாண்டு காலத்தைத் தமிழனுக்கும், தமிழுககும் அர்ப்பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர்கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாக சமுதாயச் சீர்திருத்தம், சாதிஒழிப்பு, கலப்புமணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணிகளிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர் பிற்காலத்தில் பொது உடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர்; தமிழ் மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும் கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய பொருளா தாரத்துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். சாமி. சிதம்பரனார் யார் ? 1920 முதல் 1951 வரையுள்ள இடைப்பட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட புனைபெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொணடாற்றியவர்.இவர் பகுத்தறிவு புரட்சி, குடியரசு திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோப காரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு கால கட்டங் களில் பணியாற்றியவர்; பத்திரிகைத் துறையில் நாட்டம் கொண்டு அறிவுக் கொடி என்னும் பத்திரிகையை 1936 கும்கோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தி மகிழ்ந்தவர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். சாமி சிதம்பரனார் யார்? பண்டைத் தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடி வாழை யென வந்த தமிழ்ப் புலவர் கூட்டத்தின் வழித்தோன்றல்; பழமைக்கும் புதுமைக்கும் பால மாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆயந்தவர்; தமிழிலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும், முற்போக்குக் கண்ணோட்டத்துடனும், விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் சமதர்ம உணர்வு தழுவத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆரய்ச்சியாளர்; சங்க இலக்கியங் களைச் சாதரணமானவர்களும் அறியும் படி செய்த தமிழ் அறிஞர் தமது படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல் - ஆரவாரத்தை நீக்கி, அடக்கமாக வாழ்ந்து - மக்களுக்காக எழுதவேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சி காலத்திற்கு ஏற்பத் தம்மைப் பொருத்திக் கொண்டவர் தொல்காப்பியர் காலத் தமிழன் முதல் பாரதி - பாரதி தாசன் காலத் தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த - கடகம் என்னும் அழகிய சிற்றூரில், வீரபத்திரமலையமான் என்னும் சைவப் பெருநிலக் கிழாரின் பேரனாகவும் - திரு. சாமிநாத மலையமான் - கமலாம்பாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின்செல்வனாக - சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளில் (01.12.1900) சாமி. சிதம்பரனர் தோன்றினார் கிராமப் பள்ளியிலும், மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். பள்ளி மாணவனாக இருக்கும்போது - 12 வயதிலேயே - தன் பாடப் புத்தகங்களில் செத்தமிழ் செல்வி துணை என்று எழுதி வைத்துள்ள சாமி. சிதம்பரனாருக்குத் தமிழ் கற்று வித்துவானாக ஆக வேண்டும் என்பதிலே விருப்பமிருந்தது; தந்தையார் ஊக்கப்படுத்தினார். தஞ்சையில் தமிழில் பெரும் புலவராக விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர். வெங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் ஓராண்டு மாணவராக இருந்து கல்வி கற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார் எளிதில் கற்றுணரும் இவரது ஆற்றலும் துறுதுறு வென இருக்கும் தன்மையும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமலை ஐயங்காரைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை அப்படியே கேட்டுக்கொள்ளும் சுபாவம் இவருக் கில்லை; குறுக்கு கேள்விகள் கேட்பார்; மாற்றுவிளக்கங்கள் தந்து பேசுவார். இது சில ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை.எனினும் தலைமை ஆசிரியரின் அன்பும் ஆதரவும் நிரம்பிய தலை யீட்டினால் தடையேதுமின்றி முன்னேற்றம் பெற்றார். முறையாகப் பயின்று 1923ஆம் ஆண்டில் பண்டிதர்ப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத்தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார் ஓராண்டு காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு ) உயர் நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப் பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர் பாபநாசம், பட்டுக் கோட்டை உட்பட - எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் தமிழ் ஐயாக்களுக்கு நன்மதிப்புக் கிடைப்பது அரிது ஆனால் சிதம்பரனாரோ மாணவர்களுக்கு நூல்கள் பல எழுதியும் புதுமுறையில் அவர்களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நம்மதிப்புக் கிலக்காகினார் இலக்கணத்தை எளிய இனிய முறையில் கற்பித்தார். சீர்திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார் நாத்திகராக விளங்கிப் பள்ளியில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரேயாவார். அக்காலத்தில் பள்ளித்தமிழாசிரியர், கல்லூரித் தமிழாசிரியர் யாவரும் பஞ்ச கச்சம் வேட்டி கட்டிக்கொண்டு தலையில் துணிக்குல்லாய் (டர்ப்பன்) அணிந்து கொண்டுதான் செல்வர். இதற்கு மாறாக சூட் அணிந்து, கோட், பூட், நெக்டை கூடிய மேல்நாட்டுடையில் முதன் முதல் கல்லூரிக்குச் சென்றுவந்த தமிழ்ப் பேரசிரியர் காலஞ்சென்ற கா. நமசிவாய முதலியார் என்றால், முதல் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் சாமி. சிதம்பரனாரேயாவார். மாணவர்க்கு உவப்பும் உல்லாசமும் ஏற்படுமாறு கற்பித்த புத்துணர் வும், புதுமைக் கருத்தும், புரட்சி வேகமும் உடைய புதிய இளைஞரான தமிழாசிரியரை மாணவருலகம் விரும்பி வரவேற்றதால், வியப்பில்லை யல்லவா? சாமி. சிதம்பரனார் கட்டுப்பாடும், கடமையுணர்ச்சியும், ஒழுக்கமும் பண்பாடும் உடைய தமிழ்க் களஞ்சியமாவார் 1923 முதல் 1940 வரை தமிழாசிரியராக இவர் அலுவல் பார்த்தார். தஞ்சையில் வாழ்ந்தபோது தமிழவேள் திரு. த.வே. உமாமகேசுவரன் பிள்ளை, சர், ஏ. டி.பன்னீர்செல்வம், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைமை ஆசிரியர் திரு.சிவ. குப்புசாமிப்பிள்ளை, கவியரசு ஆர். வெங்கடாசலம் பிள்ளை. சி. வேதாசலம் பி.ஏ.பி. எல். சூப்ரவைசர் இரத்தினசாமிப்பிள்ளை ஆகியோரை நெருக்கமான நண்பர்களாகப் பெற்றிருந்தார். நீதிக்கட்சி (ஜடி கட்சியில் ) ஆர்வம் காட்டிய சாமி. சிதம்பரனார் அதிதீவிர சுயமரியாதைக்காரராகவும். பகுத்தறி வாளராகவும் விளங்கினார்.பெரியார் ஈ, வெ, ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டார் குடியரசு எழுத்தாளரானார் பெரியார் முதன் மதலாக மலாயா சென்றபோது சாமி. சிதம்பரனார் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப்பட்ட அக் காலத்தில் - சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமி. சிதம்பரனார் - கும்பகோணத்தில் பிரபல நீதிக்கட்சிக்காரராக விளங்கிய திரு. ஏ. குப்புசாமிப் பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை சமூகத்தையும் சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சீர்திருத்தத் திருமணமாகவும் கலப்புத் திருமணமாகவும் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் இதுவே. இத் திருமணம் அன்னை நாகம்மையாரின் தலைமையில் பெரியாரின் முன்னிலையில் நடைபெற்றது.நாகம்மையாரும் பெரியாரும் இத் தம்பதிகளைத் தம் செல்வ மக்களாவே கருதி இத்தம்பதிகள் 28-5-1930 -ல் திருவாரூரில் புதுக் குடித்தனம் வைத்தபோது உடன் சென்று சில நாட்கள் தங்கிய தோடல்லாமல், ஈரோட்டில் தம்மில்லத்தில் பள்ளி விடுமுறை காலங்களில் எல்லாம் உடன் வைத்திருந்து மகிழ்ந்தனர். சாமி. சிதம்பரனார் இளமையிலேயே - பள்ளி மாணவராக விளங்கிய காலத்திலேயே - எதையும் புரிந்துகொண்டு எளிமை யாக விளக்கி எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார் 1921 - ஆம் ஆண்டிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல் வடிவத்தில் வெளிவராமல், எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிதநயம் வாய்ந்தவை. 1923 முதல் அவர் இதழ்களுக்கு - பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார் அவரது படைப்புகள் சமுதாயச் சீர்திருத்தம், முற்போக்கு எண்ணங்களை உருவாக்குதல் பகுத்தறிவைப் பரப்புதல்,மூட நம்பிக்கைகளை நீக்குதல், சாதியை ஒழித்தல், விதவா விவாகத்தை வலியுறுத்துதல் கலப்பு மணத்தை ஆதரித்தல், கடவுள் மறுப்புப்பற்றியே அமைந்திருந்தன. அவைகள் அனைத்தும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் சொற்பொழிவுகளாகவும் அமைந்துள்ளன. பொதுமக்கள் நம்மைக்காக எழுதுகிறோம், நம்முடைய எழுத்துக்களைப் படிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், சமுதாயத் துறையிலே, அரசில் துறையிலே நம்முடன் சேர்ந்து வருகின்றார் கள். மக்களை இவ்வாறு முன்னேற்றம் அடையச் செய்வது நமது கடமை எனறு எண்ணியே எழுதினார். 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சேரும் பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார் அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாட புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன் பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக் கழகம் 1934,35,36, ஆகிய ஆண்டு களில் பாடப்புத்தகமாக வைத்தது. பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக - மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும் அவர் வேலையை விட்டுவிட்டார், முழுநேரமும் எழுத்துத்துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால். பொதுத் தொண்டில் ஆர்வம் காட்டிய சாமி. சிதம்பரனார் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் நேர்முக அரசியல் வாதியாக விளம்பரத்துடன் விளங்கியதில்லை. இளமை முதலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் நாட்டம் உடையவராக விளங்கிய சிதம்பரனார் அக்கட்சித் தலைவர்களின் முதலாளித்துவப் போக்கில் அதிருப்தி கொண்டு சுயமரியாதை இயக்கம் உருவானபோது அதில் தம்மையும் இணைத்துக் கொண்டார் சுயமரியாதைக் கட்சியின் நிறுவனர் களில் ஒருவராய்த்திகழ்ந்தார். சாதி ஒழிப்பு, புரோகிதமறுப்பு கலப்புமணம் சீர்திருத்தத் திருமணம் முதலியவற்றில் ஆர்வம் உடையவராகி அக்கருத்துக் களை மக்களிடம் வலியுறுத்தி எண்ணற்ற கூட்டங்களில் இவர் பேசித் தொண்டாற்றினார். 1930 இல் விடுதலை தினசரி இதழ் சென்னையில் (பாலகிருட்டிண பிள்ளைத் தெரு, எண். 2. சிந்தாதிரிபேட்டை ) ஆரம்பிக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா, அ. பொன்னம் பலனார் ஆகியோருடன்ஆசிரியர் குழுவில் உடன் அமர்ந்து பணிபுரிந்தார் இக் காலத்தில சிதம்பரனார் அறிஞர் அண்ணா அவர்களுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமிப்பிள்ளைத் தெருவில் ஒரே இல்லத்தில் குடி இருந்தார். சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சியை ஆதரித்த காலத்தில் அவ்விதம் ஆதரிக்கக்கூடாது என்று பெரியாருடன் வாதாடி வந்தவர்களுக்கு தக்க முறையில் சாமி. சிதம்பரனார் மறுப்புக்கூறி பெரியருக்கு உறுதுணையாக இருந்தார் இக்காலத்தில் பகுத்தறிவுக் கிளர்ச்சிகளையும். சுயமரியாதை ஏடுகளையும் எழுதிச் செழுமை செய்தார். முற்போக்கு எழுத்தாளர்களில் பெருமைக்குரிய இடம் பெற்றார் சாமி. சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர் முதலில் தமிழ்ப் பண்டிதர். நீதிக்கட்சிக்காரர் தீவிர சுயமரியாதைக் காரர்; திராவிடகழகக்காரர்; அதன் பின்னர் காங்கிரகாரர்; சமதர்மவாதி; 1949, 50-ல் பொது உடமை இயக்கம் நெருப்புக் குளியலுக்கு ஆளான போது அதனிடம் நட்புக் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர்; அதன் பின்னர் இலக்கிய ஆய்வாளர்; விட்ட இடத்தில் தொடுவதைப் போல, தமிழ்ப் புலவராக வாழ்க்கையைத் தொடங்கிய சாமி. சிதம்பரனார் தமது இறுதிக் காலத்தில் - சில ஆண்டுகள், பண்டைக் தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணேட்டத்துடன் விளக்கும் திருப்பணியிலீடுபட்டார் தமது அரசியல் ஈடுபாட்டைப்பற்றிச் சிதம்பரனார் தாமே எழுதியுள்ளார் அரசியல் துறையில் ஈடுபட வேண்டும் என்பதில் எனக்கு ஆசை அதிகம். ஆனால் என்னிடம் உள்ள சில குணங்கள் - அவை நல்ல குணங்களோ கெட்ட குணங்களோ நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - என்னை எந்த அரசியல் கட்சியிலும் நிலைக்க விடவில்லை. ஆரம்பத்தில் ஜடி கட்சிக்காரன்; அதன்பின் தீவிர சுய மாரியாதைக்காரன். சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டவுடன் நான் காங்கிரகாரனானேன் 1942 இயக்கத்தை ஆதரித்தேன். அதன் பின் காங்கிர பதவிக்கு வந்த பின் அதிலும் எனக்கு அதிருப்தி நேர்மையாக நடக்கவேண்டும்; தப்புத் தண்டா செய்யக் கூடாது; சொன்னபடி செய்ய வேண்டும் மக்களிடையே சாதி வேற்றுமை இனவேற்றுமை மொழி வேற்றுமை பாராட்டக்கூடாது; மக்களனைவரும், கல்வி பொருளாதாரம் இவைகளில் சமநிலை அடைய வேண்டும் - வர்க்க பேதமற்ற சமுதாயம் அடைய வேண்டும் - இவை போன்ற முற்போக்குக் கொள்கைகளே என்னுடைய அரசியல் கருத்துக்கள். ஆகையால் நான் எந்த இயக்கத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கும் குணமும் என்னிடம் இல்லை என்னை எந்த அரசியல் கட்சிக்காரன்தான் ஏற்றுக் கொள்வான்? சாமி. சிதம்பரனார் தொடக்க காலத்தில் பல கட்சிகளில் பணி யாற்றியவராக இருப்பினும் பிற்காலத்தில் எந்தக் கட்சியிலும் அவர் சேர மறுத்துவிட்டார் இலக்கியம், சமுதாயம்,அரசியல் ஆகிய துறைகளில் சாமி சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தம் இறுதிக் காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன-இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஒய், எம், சி, ஏ, பட்டிமன்றம் ஆகியவற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் தொடக்ககால முதலே குறிப்பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார் சென்னை மாகாணசபை சங்கத் தலைவராக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப் பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலைவாரக விளங்கினார். அரசியல் விடுதலைக் கிளர்ச்சியில் பாரதியாரும், தனித் தமிழ் இயக்கத்தில் மறை மலையடிகளும், உரிமை வேட்டலில் திரு.வி.கவும், தமிழ் உரிமை வேட்கையில் பாரதிதாசனும் முன்னின்று தொண்டாற்றியது போல், தமிழ்ப் பெருப்புலவர் சாமி. சிதம்பரனாரும் பெரியாரின் வழி நின்று சுயமரியாதை இயக்கத்தில் பெருந்தொண்டாற்றினார் எனப் புகழ்ந்து போற்றிப் பாரட்டுகிறார் இவரது மாணவரான டாக்டர் சி. இலக்குவனார். நீதிக்கட்சி, சுயமரியாதைக் கட்சியில் ஈடுபட்டபோது, பெரியார் அவர்களுடனும்,அறிஞர் அண்ணா அவர்களுடனும், திரு.எ. இராம நாதன், திரு, எ. குருசாமி, திரு. கைவல்யம் சாமியார், திரு. க ஜனகசங்கர கண்ணப்பர். திரு. காளியப்பன் திரு. சி.நடராசன், திரு. எ. வி. லிங்கம், திரு.சொ. முருகப்பா, திரு.அ.ராகவன், திரு. ப.ஜீவானந்தன், பட்டுக் கோட்டை. ஏ.அழகிரிசாமி மற்றும் நண்பர்களுடனும் சகோதர அன்புடன் பழகி வந்தார். அகன்ற பரந்த நெற்றி; தூக்கி வாரி விடப்பட்ட தலைமுடி; அன்புடன் நோக்கும் கண்கள்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் உதடுகள்; மன உறுதியைக் காட்டும் மோவாய்; அம்மை வடுக்கள் லேசாகத் தென்படும் தெளிவான முகம்; உயரமுமில்லாத, குட்டையுமில்லாத நடுத்தர உயரம்; இடுப்பில் நான்கு முழ வெள்ளை வேட்டி; மேனியில் ஜிப்பா பொன்ற வெள்ளைச் சட்டை; மேலே ஒரு வெள்ளைத்துண்டு - நீதிக்கட்சியிலிருந்ததால் வெள்ளை உடையில் பெருவிருப்பம் அவருக்கு - எப்போதும் இலங்கும் கறுப்பு நிற பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி; என்றும் புன்னகை சிந்தி நிற்கும் மாநிறத் திருமுகம்; வெளியில் செல்லும் போதெல்லாம் கையில் ஒரு குடை - இதுவே சாமி. சிதம்பரனாரின் தோற்றம். அவருக்கு வயது அறுபது என்பது அவருடன் நெருங்கிப் பழகியவருக்கே புலனாகும். சாமி. சிதம்பரனார் பழுத்த தமிழ்ப புலவர்; தமிழ் நாட்டு முன்வரிசை முற்போக்கு எழுத்தாளர்; தமிழால் தமக்கும் தம்மால் தமிழுக்கும் பெருமை ஏற்பட வாழ்ந்த பேரறிஞர்; தமிழ் இலக்கியச் செல்வத்தைத் தமிழர்களுக்கு வாரிவாரித் தந்த தமிழ் வள்ளல். சாமி. சிதம்பரனார் முறையாகத் தமிழ்ப் படித்த பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்தவர் தாம்; ஆனால் தமிழ் பண்டிதர் களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். பழமையில் புதுமை கண்டு பழமையையும் புதுமையையும் இணைத்துக் காட்டியவர். தாம் தமிழ்ப்புலமை பெற்றவர் என்ற செருக்கற்றவர்; அதேநேரத்தில் தமிழ்ப்புலவர்களிடமுள்ள தாழ்வு மனப்பான் மையை விலக்கியவர்; எப் பொருளையும் பற்றி விவாதிப்பார். கருத்து வேற்றுமையை வரவேற்பவர். அதே நேரத்தில் தம் கருத்தை அழுத்தம் திருத்தமாக வலியுருத்திப் பிறர் மனங் கொள்ள எடுத்துச் சொல்வார். இளைஞர்களை இன்முகத்துடன் வரவேற்றுச் சமமாகக் கருதப் பழகுவதிலே இன்பம் காண்பவர்; மேலைநாடுகள் கீழைநாடுகள் போல தமிழ் மக்களும் மேம்பாடடைய வேண்டும் என்னும் மேலான ஆர்வம் உடையவர். அவர் உயர்ந்த மனிதர் என்ற சொல்லுக்கு இலக்கண மாகத் திகழ்ந்தவர்; நேர்மை, நாணயம், தூயசிந்தனை, அன்புள்ளம் இவைகளின் உருவமாக விளங்கினார். உள்ளும் புறமும் ஒத்தவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்; இவர் யாருடனும் இன் முகத்துடன் இங்கிதமாகப் பழகுவார் அதே சமயத்தில் சிறுமைக் குணம் படைத்த தீயோரைக் கண்டால் தூற்றாமல் தூர விலகிப் போய்விடுவார். மன்னிக்கும் மனம் உடைய மாமனிதர்; சினத்தைச் சினந்து ஒதுக்கியவர்; பொய் என்றால் என்னவென்றே அறியாதவர் அடங்கி அடங்கியே வாழ்ந்தவர்; ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் அறவே நீக்கியவர் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றிய உத்தமர். பணம் சம்பாதிப்பது என்னும் குறிக்கோள் இல்லாதவர்; செலவு செய்வதிலே சிக்கனமானவர்; நல்ல காரியம் என்று தோன்றினால் தாராளமாக உதவுவார்; விளம்பரத்தை ஒரு நாளும் விரும்பியவரல்லர்; ஏழை மாணவர்களுக்கு இரண்டாம் பேருக்குத் தெரியாமல் உதவுததிலே ஆர்வம் காட்டியவர் ஒரு பதவியில் அமரும் வரையிலும் கூட இவரிடம் உதவி பெற்றவர் களும் உண்டு தமக்குச் செய்த சிறிய உதவியையும் பெரிதாக மதித்து நன்றி பாராட்டக்கூடியவர் காலத்தை ஒரு சிறிதும் வீணாக்காதவர் குறிப்பிட்ட வேலையைக் குறித் காலத்தில் ஒழுங்காகச் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர். எழுதும் பேனாவில் இங்க்தானே உற்பத்தியாகக் கூடாதா, வற்றாமல் என்று வருத்தப்பட்டவர் எழுதுவதற்கு மேஜை நாற்காலி எதையும் வேண்டார். ஒரு பெட்டி முன்னால் பேப்பர் கட்டுகளை வைத்துக் கொள்ள இடமிருந்தால் போதும். பெட்டி உயரமாக இருந்தால் இரண்டு மூன்று தலையணை களைப் போட்டு உட்கார்ந்து கொண்டு எழுத ஆரம்பித்து விடுவார். அல்லது ஒரு சாய்வு நாற்காலி இருந்தால் போதும்; படிப்பு ஆராய்ச்சி, எழுத்துவேலை எல்லாம் தொடங்கி விடும். இனிய குரலில் தமிழ்ப்பாடல்களை மிக அழகாகப் பாடுவார். சாமி. சிதம்பரனார் எழுதிய நூல்களை விட எழுத நினைத்த நூல்கள் ஏராளம். திரு. சாமி. சிதம்பரனார் அவர்கள் 20 வயதிலிருந்தே நாட்குறிப்பு எழுதும் வழக்கமுடையவர்; ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்ச்சிகளையும் முறையாகக் குறித்து வைத்துள்ளார். இளமை முதலே பத்திரிகைத்துறையில் ஆர்வம் காட்டிய சிதம்பரனார் 1934-35 பள்ளி ஆசிரியராக விளங்கிய காலத்தில், மாயவரத்தி லிருந்து வெளிவந்த வெற்றிமுரசு என்னும் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றினார் 1936-ல் சொந்தத்தில் அச்சகம் நிறுவி, தம்முடைய துணைவியார் சிவகாமி அம்மையாரை ஆசிரியராக அமர்த்தி அறிவுக்கொடி என்னும் இதழைக் கும்பகோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தினார் பிற்காலத்தில். 1948-ல் பரலி.சு. நெல்லையப்பரிட மிருந்து லோகோபகாரி இதழின் உரிமையை வாங்கித் திரு. வேணுகோபால நாயகர் நடத்தியபோது ஓராண்டுகாலம் ஆசிரியராக அமர்ந்து திறம்பட நடத்தினார். 1938லும் 1952லும் முறையே ஓராண்டு காலம் விடுதலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவையன்றி, தமிழரசி, (சென்னை) தாருல் இலாம் (சென்னை), சாந்தி, தொழிலரசு (திருச்சி) தமிழ்பபொழில் (கரந்தை), செந்தாமரை (சென்னை), சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு (சிங்கப்பூர்), பொன்னி (புதுக்கோட்டை) செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி (சுடர்), புதுஉலகம் (பட்டுக்கோட்டை), கவிதா மண்டலம் (புதுவை வாரஇதழ்) புதுவை முரசு, நகர தூதன் (திருச்சி), சண்டமாருதம் (புதுவை வாரஇதழ்), பார்க்கவகுல மித்திரன் (திருவண்ணாமலை) சுயமரியாதை போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். இவ்விதழ்களில், மெய்கண்டான், கதைக்காதலன் குருலூ, s.c. பரன், மிடர் திங்கர், சாமி, இடிமுழக்கம், காலக்கவி, வாமிஜீ, வம்பன் அரட்டை சிகாமணி, நாதிகன், பொறுப்புள்ளவன் என்னும் பதிம்மூன்றுக்கும் மேற்பட்ட புனை பெயர்களில் எழுதினார். இலக்கிய சம்பந்தமான கட்டுரைகள் அனேகமாக இவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகும். பத்திரிகைத் தொழிலில் ஈடுபடுவதில் அவருக்கு மட்டற்ற ஆசை இருந்தது. (பத்திரிகையில் எழுத வேண்டும் என்னும் வெறி மிகுந்த போதெல்லாம் ) தமிழாசிரியர் பணியிலிருந்து விடுமுறை பெற்றுப் பத்திரிகை நிலையங்களில் வேலை செய்தார். இவ்விதம் அவர் எழுத்தாள ராகவும், ஆசிரியராகவும் இருந்து பணியாற்றிய பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்கவை, குடியரசு, புரட்சி, பகுத் தறிவு. திராவிடன், விடுதலை, லோகோபகாரி ஆகியவைகள். நான் என்றும் என்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள விரும்பியதில்லை. ஆனால் 1923 முதல் எழுதிக் கொண்டே வருகிறேன் 1948 வரையிலும் நான் எழுதி வந்த எழுத்துக்கள் எல்லாம் பயனற்றவை என்றே இன்று நினைக் கிறேன் வ. விஜயபாகரனை ஆசிரியராகக் கொண்ட 10.12.1958 சரசுவதி இதழில் ) என்று சாமி. சிதம்பரனார் கூறியுள்ளார். அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளிலேயிருந்து அறவே ஒதுங்கி நின்று இலக்கியத் துறையில் ஈடுபட்டு உழைத்து, மனநிறைவும், மனமகிழ்ச்சியும் எய்திய பிற்காலத்திலேயே இந்தக் கருததை அவர் வழங்கியுள்ளார். இக்காலம் வரையில் அவர் தன்னிடம் மறைந்திருந்த இலக்கிய ஆராய்ச்சித் திறனை உணராமலேயே இருந்திருந்தார். ஆயினும் சாமி. சிதம்பானார் அவர்கள் கூறியுள்ளதை போல் 1948 வரை அவர் ஆற்றியுள்ளஇலக்கியப்பணிகள் அனைத்தும் பயனற்றவை என்று ஒதுக்கிவிடுவதற்கில்லை இந்தக்காலத்திலேதான் அவர் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் எழுதினார் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் எழுதினார். ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதினார்; நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார்; அவற்றுள் பல இன்றும் நூல் வடிவிலே வெளிவரவில்லை. இந்தக் காலத்திலேதான் (1939-ல்) பிற்காலத்தில் இலக்கிய, வரலாற்று ஆசிரியர்களால் பாரட்டப்படவிருக்கிற ஈ. வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலாகிய தமிழர் தலைவர் என்னும் நூலை எழுதினார் இதனை வெல்லக் கூடிய - தந்தை பெரியாரின் வாழ்க்கையைச் சித்திரிக்க கூடிய வேறு நூல் இன்னும் வெளிவரவில்லை என்பதே இந்நூலின் பெருமைக்குத் தக்கதோர் சான்றாகும். நாவலர் சோமசுந்தர பாரதியார், சிதம்பரனார் எழுதும் எதுவும் நடைநலமும் உணர்ச்சி வளமும் உடையதாகும் உண்மையில் உயர்ந்த சால்பு நிறைந்த பெருந்தகையார் வரலாறே பொருளாகக் கொண்டு அவர் எழுதிய இப்புத்தகம் கற்பவருக்கு இனிமையும்,உணர்வும், மடிமையில் வெறுப்பும் அறவலி மதிப்பும் ஊட்டி, நாட்டுநலம் பெருக்குமென நம்புகிறேன் எனக் கூறிப் பாராட்டியுள்ளார்; திரு.வி.கவும் இந்நூலைப் பெரிதும் பாராட்டியுள்ளார். எனவே இக்காலத்தில் சிதம்பரனார் ஆற்றிய பல்வேறு பட்ட இலக்கியப் பணிகளிலே, சிறப்பாகக் குறிப்பிடத் தக்க வைகள் உண்டு. சாமி சிதம்பரனார் 1948 லிருந்து 1961 வரை உள்ள இடைக்காலத்தில் இலக்கியத் துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. அரசியல், சமுதாயம் சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு உருவாக ஒன்றும் செய்யாமல் வீண்காலம் போக்கிக் கொண்டிருந்த என்னை இலக்கிய உலகத்திவ் நுழையச் செய்தவர் சீங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் நண்பர் கோ.சாரங்காபாணி அவர்கள்தான் அந்த இலக்கிய உலகத்தில் உறுதியாக நிலைத்து நிற்கச் செய்தவர் தோழர் கண முத்தையா அவர்கள் என்று மனமகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் இந்தக் துறையில் ஊக்கமளித்த டார் பிரசுரம் கண. இராம நாதனையும் நன்றியுடன் குறிப்பிட அவர் மறக்கவில்லை. இலக்கியங்களை விருப்பு வெறுப்புக்கு இடம் தராமல் வரலாற்றுக் கண் கொண்டு, மக்கள் நலக் கண்ணோட்டத்துடன் விமர்சித்து விளக்கும் பெறுமுயற்சியை சாமி. சிதம்பரனார் மேற்கொண்டார். பாரதி உச்சிமேல் வைத்து மெச்சியகம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பொரும் புலவர்களின் படையல்களையும், சங்க இலக்கியங்க ளான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுக்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு ஆகியவற்றையும், சீத்தலைச் சாத்தனாரின் செந்தமிழ்க் காப்பிய மான மணிமே கலையையும், சைவ, வைணவ அடியார்களது பாடல்களை யும், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவத்தையும், வடலூரார் வாய் மொழியையும், இக்கால இலக்கியங்களையும் தமிழ்ப் பெருமக்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் அரும் பணியில் சிதம்பரனார் இறங்கினார். இவரியற்றிய தொல்காப்பியத் தமிழர். பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், பழந்தமிழர் அரசியல் என்னும் நூல்கள் பண்டைத் தமிழரின் பண்பாட்டினையும், சிறப்பினையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுவன வாகும். சங்க இலக்யிம் பற்றிப் பேசும் பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும், பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் என்னும் நூல்கள் பழந்தமிழரின் நிலைமையினையும், பெருமை யினையும் உள்ளவாறு உணர்த்து வனவாகும். வள்ளுவர் வாழ்ந்த தமிழகமும், சிலப்பதிகாரத் தமிழகமும், மணிமேகலை காட்டும் மனித வாழ்வும் கம்பன் கண்ட தமிழகமும், வடலூரார் வாய்மொழியும் ஆராய்ச்சியாளர்க்கு அமுதசுரபியாக விளங்கும் தன்மை உடையனவாம் அருள் நெறித் தொடர் வரிசை நூல்களான ஆழ்வார்கள் அருள் நெறி, தேவரதத் திருமொழிகள், சங்கப்புலவர் சன் மார்க்கம், மாணிக்க வாசகர் - மூலர் மணிமொழிகள், அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள், பட்டினத் தார் - தாயுமானார் பாடல் பெருமை ஆகிய ஆறுநூல்களும் புலவர்களிடத் திலிருந்தும் இறையன் பர்களான அடியர் களிடத்திலிருந்தும் நாம் ஏற்றுக் கொள்ளத்தக்கன இவை இவை என்பதனை எடுத்துக்காட்டு வனவாகும். இலக்கியம் என்றால் என்ன? என்னும் நூல் இலக்கியத்தில் பிரசாரம், பழமையான இலக்கியங்களைக் காண வேண்டிய கண்ணோட்டம், புதுமையான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டிய அடிப்படை ஆகியவை பற்றி விளக்குவதாகும். இவரது, அறிவு என்னும் கவிதை நூலும்,உமர்கய்யாம் (மொழி பெயர்ப்பு) என்னும் கவிதைநூலும் கற்போர்க்கு இன்பம் பயப்பனவாம். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை ழுதியுள்ளார். இவற்றில் முப்பத்துக்கும் மேற்பட்ட நூல்களே வெளி வந்துள்ளன. இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும் உணர்ந்து கற்றுப்பயன் பெறத்தக்க வகையில் - தமக்கே உரிய எளிய இனிய நடையில் - அவற்றின் அடிப் படையை ஆய்ந்து அறிவித்துள்ளார், சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்துள்ளனர். பொதுவுடமை இயக்கத்தலைவர் தலைவர் ப. ஜீவானந்தம் வழங்கிய புகழுரைகள் இவை. விருப்பு வெறுப்பின்றித் தமிழரின் முதற்பெரும் நூலாம் தொல்காப்பியத்தைச் சாதாரணத் தமிழர் ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்ளும் எளிய தமிழில், தமிழரின் அன்றைய நாகரிகம் எது என்பதை ஆராய்ந்து தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். தோழர் சாமி.சிதம்பரனார். இந்த அரிய ஆராய்ச்சிக்குத் தமிழகம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. சிதம்பரனாரின் மிகச் சிறந்த சாதனை நூல் இது திருக்குறளைப் பற்றிய பலவேறு அம்சங்களையும் சராசரித் தமிழ்மகன் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த நூலில் எளிமை படச் சொல்கிறார். மனக்கோட்டமில்லாமல் வள்ளுவத்தைக் கற்க இதில் வழி காட்டுகிறார். திருக்குறளைப் பற்றிப் பரவி நிற்கும் - பரப்பப்படும் குறுகிய மொழி, இன வெறிக் கொள்கைகளை வரலாற்று நோக்கோடும், தெளிந்த இலக்கிய அறிவோடும் பிட்டுப் பிட்டுக் காட்டி அம்பலப் படுத்துகிறார் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் - என்ற தமிழ் மொழியின் ஆகச் சிறந்த இலக்கியங் களைச் சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு ஆய்ந்து, சிறந்த நூல்களை வரிசையாகத் தீட்டித்தந்தது சாதனையாகும் இந்தச் சாதனை இது வரை யாரும் சாதிக்காத பெரும் சாதனை இதைப்போகப் போகத்தான் தமிழன் உணர்வான் என்பதில் ஐயமில்லை எழுத்து (பிப்ரவரி 1961) இலக்கிய மாத இதழில் திறனாய்வாளர் சி.சு. செல்லப்பா வழங்கிய புகழுரைகள் இவை இதுதான் ஆங்கிலத்தில் சோஷியாலஜிகல் என்று கூறப்படும். இலக்கிய சம்பந்தமாக சமுதாயப் பார்வை பார்த்து தகவல்களை வெளிக் கொணரும் ஒரு விமர்சன முறை வழிஆகும். சரித்திர பண்பாட்டு ரீதியான பார் வகள் கலந்தும் கூட, சங்க காலக் கவிதைகள் முதல் பாரதி வரை அநேகமாக எல்லா பழைய இலக்கியங்களையும் அவர் இந்த நோக்கில் பார்த்து, ஆராய்ந்து, ரசமான, இன்பமான உபயோகமான பல தகவல்களை அறிவித் திருக்கிறார்- இலக்கியம் மூலம் தெரியவரும் ஒரு நாகரீக பண்பாட்டு வாழ்வு பற்றிய பார்வையை மட்டும் ஆழ்ந்து செலுத்தி, உயர்ந்த அளவு தகவல்களை ஒவ்வொரு நூலிலும் வெளிக்காட்டி இருப்பவர் சாமி.சிதம்பரனார். இலங்கை எழுத்தாளர் எச்.எம்.பி.முகைதீன் வழங்கிய புகழுரைகள் இவை; சிதம்பரனாரின் தமிழ்ப்பணி பலதரப்பட்டவை என்றாலும் அவரது தமிழ்த் தொண்டின் இமயசிகரமாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பது அவரது பண்டைய தமிழ் இலக்கியத் திறனாய் வாகும். இந்தத் துறையில் அமரர் சிதம்பரனாரின் அருந்தமிழ்த் தொண்டு பேரறிஞர்கள் உ.வே. சாமிநாத ஐயரினதும் எ. வையாயுரிப் பிள்ளையினதும் தமிழ்ப் பணியுடன் நிகர் நிற்கக் கூடியது. என்றாலும் இவ்விரு தமிழ் நாட்டின் தலைசிறந்த இலக்கியத் திறனாய்வுத் திலகங்களையும் சில அம்சங்களில் சாமி. சிதம்பரனார் மிஞ்சி விட்டிருந்தார். சிதம்பரனாரின் திறனாய்விலே ஒரு புதுக் கண்ணோட்டம் மனிதனை வாழ வைக்கும் கண்ணோட்டம் மனிதனுக்கு நல் வாழ்வு துவஜத்தை தூக்கிப்பிடித்து வெற்றிநடை போட ஆதர்சம் நல்கும் கண்ணோட்டம் பல்கிப் பரவி இருந்தது. இந்த உலகப் பார்வை சிதம்பரனாரை அவருக்கு முன்னால் பண்டைய தமிழ் இலக்கியங்களைத் திறனாய்வு நடத்தி தமிழுக்கு அரும் பெரும் தொண்டாற்றிய அறிஞர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன், தமிழ் இலக்கியத் துறையிலே அவர்களுக்கு இல்லாத ஒரு தனிப்பெரும் தானத்தைச் சிதம்பரனாருக்குப் பெற்றுத்தந்தது சாமி. சிதம்பரனாரின் சில கருத்துக்கள் ஆராய்ச்சி அறிஞர் வையாபுரிப் பிள்ளையை அடியொற்றிச் செல்வன. திறனாய்வால் சிதம்பரனார் கண்டு சொல்லும் கருத்துக்கள் சிலவற்றை பிற அறிஞர்கள் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும், அவை அவர்களுடைய சிந்தனையைக் கிண்டிக் கிளறி விடும் வண்ணம் விளங்குகின்றன என்பதில் துளியும்ஐயமில்லை. தமிழறிஞர்களான டாக்டர் மு. வரதராசனார் கி.வா, ஜெகந்நாதன் ஆகியோரும் சங்க இலக்கியத்தைச் சாதாரண மானவர்களும் படித்துணரத்தக்க வகையில், இலக்கிய நயத்துடன், மிக எளிய நடையில் விளக்க நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளனர், சாமி. சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள், இவர்களினின்றும் முற்றிலும் மாறுபட்டு, ஆய்வுக் கண்ணேட்டம் உடையனவாய் விளங்குகின்றன. பேராசிரியர் சாமி.சிதம்பரனார் வாழையடி வாழையென வந்துள்ள தமிழ்ப் புலவர் மரபின் வழித்தோன்றல்; தமிழ் நூல்களை முறையாகக் கற்றுப் புலமை பெற்றவர்களின் தொகை அருகி வரும் இந்நாளில் அந்தச் சிலரில் ஒருவராகச் சிறந்து விளங்கிய மூதறிஞர் சமுதாய மாறுதலுக்காக இயக்கங்களுடன் இணைந்து நின்று பழையன கழித்துப் புதியன புகுத்திப் பண் பாட்டினைச் செம்மை செய்யத் தொண்டாற்றிய தமிழ்பெரியார் சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர் களே சிறந்த நூல்களை ஆக்க முடியும். அத்தகைய நேரமும். வசதியும் சிதம்பரனார் தன் வாழ்நாளில் பெற்றிருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கிய சுவையில் முற்றிலுந் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள்நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்குமேல் எழுதி வெளியிட்டுள்ளார்கள் அது தவிர மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பதினாயிரம் பாடல் களுடைய கம்பராமாயணத்திலிருந்து, இலக்கியத்தரம் அதிகம் வாய்ந்த 3949 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கம்பனிடமுள்ள ஈடுபாட்டையும் அவரே விவரிக்கிறார். கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே என்பது ஒரு பழந்தமிழ்ப் புலவர் பாட்டு. கம்பன் கவியைப் படித்தவர்கே அதன் அருமை தெரியும். தமிழின் அருமையை அறிந்தவர் இனிமையை உணர்ந்தவர், கம்பன் கவிதையிலே ஈடுபட்டால் கவலைகளையெல்லாம் மறந்து விடுவர் களிப்புக் கடலிலே நீந்தி விளையாடுவர்; உள்ளத்திலே கவிச்சுவையைப் பாய்ச்சி களிப்பூட்டுவதிலே கம்பன் கவிக்குநிகர் கம்பன் கவியேதான். மேலே காட்டிய பழந்தமிழ்ப் பாட்டின் பகுதி இவ்வுண்மையை உணர்த்தும்! (கம்பன் பெருமை, கம்பன் கண்ட தமிழகம் 1955) இதுபோன்றே ஆழ்வார்களின் பாடலில் உள்ளம்தோய்ந்த சிதம்பரனார் ஆழ்வார்கள் கண்ட அருள்நெறி என்னும் நூலின் முன்னுரையில் கூறுகிறார். சிறப்பாக, ஆழ்வார்களின் அருந்தமிழ்ப் பாடல்கள் படிப்போர் உள்ளத்தைக் கவரும் பண்புடையவை கருத்தில் மட்டும் அன்று; தமிழ் நடையிலும் சிறந்தவை; இனிய தமிழில் அமைந்தவை; பக்தி என்பது மூட நம்பிக்கை என்று கூறு வோரும் ஆழ்வார்கனின் பாடல்களைப் படிக்கும் போது, அப்பாடல்களின் இனிமையை அனுபவிக்காமல் இருக்க மாட்டார்கள் ஆனால் சிறிதளவாவது தமிழறிவும் தமிழ்ப் பற்றும் வேண்டும் இவை உள்ளவர்களால்தான் எந்தத் தமிழ்ப் பாடலையும் சுவைக்க முடியும் இளமைக் காலத்திலிருந்தே நாத்திகராகவும், பகுத் தறிவாளராகவும் விளங்கி, சுயமரியாதை இயக்கத்திலும்; திராவிடர் கழகத்திலும் ஈடுபாடு கொண்ட தமிழ்ப் பெரும் புலவர் பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் கம்பனிடத்திலும், ஆழ்வார்களிடத்திலும் கொண்டுள்ள ஈடுபாடு முரண்பாடாகப் பலருக்குத் தோன்றக் கூடும். அதையும் சாமி. சிதம்பரனார். ஆழ்வார்கள் கண்ட அருள்நெறி என்னும் நூலின் முன்னுரையில் விளக்குகிறார். நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவன் அல்லன்; மத பக்தனும் அல்லன்; நான் எந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று எனக்கேத் தெரியாது. ஆனால் உண்மை அன்பு ஒழுக்கம் அறிவு சமத்துவம் இவற்றை விரும்புகிறேன் யாரிடத்திலும் எத்தகைய பேதமும் பாரட்டாமல் எல்லோரும் ஒன்றுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருப்போர் பாடலைப் போற்றுகிறேன்; படிக்கிறேன்; சுவைக்கிறேன். இதற்குக் காரணம் என் கொள்கையை ஒட்டிய கருத்துக்களை அப்பாடலிலே காண்கின்றேன். இதே கருத்தை சாமி. சிதம்பரனார் வேறோரு இடத்திலும் வலியுறுத்திக் கூறியுள்ளார். என்னை ஒரு வைதீகன்; மதவாதி; ஆதிகன் என்று சொன்னால் அதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். என்னை ஒரு நாதிகன் மத நம்பிக்கையில்லாதவன் என்று சொன்னால் வெட்கப்பட மாட்டேன்; மறுக்கமாட்டேன் (முன்னுரை. வள்ளுவர் காட்டிய வைதிகம் 1960) 1924 முதல் 1940 வரை, பதினாறு ஆண்டுகள், தமிழாசிரி யாராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும் 1924 முதல் 1948 வரை இருபத்து நான்காண்டுகள் அரசியல் சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவு களிலும் பணியாற்றியும் வந்த சாமி. சிதம்பரனார். 1948க்குப் பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர் தமிழ் முரசு இதழின் மூன்று பகுதிகளுக்கு இக்கால முழுவதும் வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடை யறாமல் எழுதி அனுப்பினார். பாராட்டு தல்கள் குவிந்தன் இவரது புகழும் பெருமையும் பரவின இதனால் இன்பமும் மன நிறைவும் பெற்று மெய் மறந்து உழைத்தார். இப்பணிதான் தனக்குப் பிற்காலத்தில் நிலையான புகழைத்தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர்என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். 1961 சனவரி மாதத்தில் பொங்கல் சமயத்தில் திடீரென்று வந்து தாக்கிய பக்கவாத நோயால் ஆறு நாட்கள் அல்லலுற்று, 17.01.1961-ல் இயற்கை எய்தினார். சீர்திருத்தச் செம்மல் சாமி. சிதம்பரனாருக்குக் கால்வழிச் சேய்கள் இல்லை என்பது உண்மை; ஆனால் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்வழிச் சேய்கள் உள்ளன. அவை அவரது புகழ்மிக்க பெருமையைத் தமிழுலகில் நிலைக்கச் செய்யும் என்பது உறுதி. தமிழ்ப் பேராசிரியர் தமிழ்ப்பெரும்புலவர் தமிழ் ஆராய்ச்சியாளர், தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் தமிழ்ப் பாட நூலாசிரியர் தமிழ்ப் பாவலர் சாமி. சிதம்பரனாரின் திருப்புகழ் வாழ்க! உலகெலாம் போற்றும் உயர்சோழ நாட்டில் நிலவிய சீர்கரந்தை நீள்நகர வீதியிலே செங்கதிரோன் தோன்றிச் சிவந்த கதிர்பரப்பி எங்குவிழி வைத்தாலும் எப்பொருளும் பொன்மயமாய்க் காணச்செய் காலையில் காரிகையார் கண்விழித்து பூண்திருத்தி வேலைகளைச் செய்கின்ற போதில் நடந்த நிகழ்ச்சியிது; --நாட்பலவாய் மக்கள் உடம்போ டுயிர்நடுங்கி உறங்காமல் வாழ்ந்த கொடுந்துயர்க்குக் காரணமாய் வாழ்ந்த கொலைஞன் பிடிபட்ட தால்மகிழ்ந்தே பேசினார் இவைகளையே வாழ்த்துரை டாக்டர் கலைஞர் மாண்புமிகு மு.கருணாநிதி தமிழக முதல்வர். தமிழறிஞர் கவிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூலாசிய அணைந்த விளக்கு பெயரளவில் அணைந்த விளக்காக இருந்தாலும், உண்மையில் இது அணையா விளக்கு என்பதை இதனைப் படிக்கின்ற அனைவரும் நன்கு உணர்வார்கள். இன்றைய தலைமுறையினர்க்குச் சாமி.சிதம் பரனார் அவர்களின் பெயர் அவ்வளவாக அறிமுகமாகியிருக்க நியாயமில்லை. தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அந்தக் காலத்திலேயே அருமையான ஒரு வரலாற்று நூலை தமிழர் தலைவர் என்ற தலைப்பில் அரிய இலக்கியமாக ஆக்கியவர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் ஆவார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய முதல் கவிதை நூல் வெளிவந்தபோது, அதற்கு அணிந்துரை வழங்கிப் புரட்சிக் கவிஞரையே அறிமுகப்படுத்தியவர் கவிஞர் சிதம்பரனார் ஆவார். அவரும் அவர்தம் துணைவியார் திருமதி சிவகாமி சிதம்பரனாரும், கலப்புத் திருமணம் புரிந்து, அந்தக் காலத்தி லேயே புரட்சிகரமான இலட்சியத் தம்பதிகளாக பகுத்தறிவுப் பாசறையில் விளங்கியவர்கள். சங்க இலக்கியத்திற்கு நிகரான இந்தப் புதுமை இலக்கியத்தை இன்றையத் தமிழுலகம் நல்லாதரவு நல்கி வரவேற்கும் என்று திடமாக நம்புகின்றேன். ஆய்வுரை மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை ஆசிரியர் சாமி.சிதம்பரனார் கலைதேருள்ளம் வாய்ந்தவர். தம் நுண்ணறிவால் நூல் பல ஆய்ந்து சில நூல்களுக்கு உரை யெழுதியதுடன் நல்ல கருத்துகளடங்கிய நூல் சிலவற்றைத் தாமே இயற்றியும் வெளியிட்டவர். அவர்தம் புலமை போற்று தற்குரியது. அவர் எழுதி வைத்துச் சென்ற நூல்களுள் இதுகாறும் அச்சேறாக நூல்களுள் அணைந்த விளக்கு என்னும் இச் செய்யுள் நூலும் ஒன்று. இதனை அவர் தம் இல்லத்தரசியார் திருவாட்டியார் சிவகாமியம்மையார் ஒல்லும் வகை முயன்று வெளியிட்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்க செயலாகும். நூலின் செய்யுள் நடை கற்பார்க்கு இன்பம் பயத்தற்குரிய தாய் அமைந்துள்ளது. ஆசிரியரே இந்நூலைப் பதிப்பித்திருந் தால், நூல் பின்னும் பெருஞ்சிறப்பெய்தியிருக்கும்; பதிப்பு முறை மேலும் செப்பமுற்றிருக்கும். இச்சிறு காப்பியத்திற்குக் கருவாயமைந்த கதை, ஐம் பெருங்காப்பியங்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து மறைந்த குண்டல கேசியின் கதையாகும். மறைந்த நூலுக்கு மறு வாழ்வளிக்க விழைந்து ஆசிரியர் மேற்கொண்ட நன் முயற்சியின் பயனே இந்நூல். செய்ந்நன்றி மறவாச் செந்தமிழ்ச் செம்மக்கள் இதனை ஒல்லும் வகை உதவிப் பரவச்செய்வதைத் தம் கடனாகக் கொள்வார்களாயின், அடுத்து வரும் பதிப்பு பின்னும் சிறப் செய்துவதுடன், மறைந்த கருந்தனத்தை மீண்டும் பெற்று மகிழ்வது போன்ற இன்பத்தை இந்நூல் வாயிலாகத் தமிழகம் பெறும் என்பது உறுதி. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் புகழை இச்சிறுகாப்பியம் குன்றின் மீதிட்ட விளக்குப் போலக் குலவச் செய்யும் என்பது எனது கருத்து. வாழ்க சிதம்பரனார் தம் வளர்புக ழென வாழ்த்து கின்றேன்! அணிந்துரை உயர்திரு நெ.து.சுந்தரவடிவேலு M.A.,L.T. அவர்கள் துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம் எளிய இனிய தமிழ் உரைநடை நூல்கள் பல இயற்றி அழியாப்புகழ் அடைந்தவர் சாமி சிதம்பரனார். இவர்களுடைய கவிதை நூல்களுள் ஒன்றாகிய அணைந்த விளக்கு இப்போழுது மீண்டும் சுடர்விடும் பேறு பெற்றிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரிய தேயாகும். பழைய குண்டலகேசி காப்பியத்தைத் தழுவிய கதைச் செய்யுளாய் அமைந்தது அணைந்த விளக்கு. ஆசிரியர் 1. சிந்திய கண்மலர்; 2. கருகிய கஞ்சம்; 3. ஆச்சரியப் பேரிருள்; 4. பாலைவன மழை; 5. சொன்னதே சட்டம்; 6. பூனை கையிற் கிளி; 7. குற்றமுள்ள நெஞ்சு; 8. கசந்த வாழ்வு; 9. ஊர் வாய்க்கு மூடியில்லை என்னும் ஒன்பது தலைப்புகளில் கலிவெண்பா, ஆசிரிய விருத்தம், சிந்து, பஃறொடை வெண்பா; ஆசிரியப்பா முதலிய பல பாவகைகளாலும் இந்நூலை யாத்துள்ளார். சாமி சிதம்பரனார் எளிய இனிய உரைநடையில் மட்டுமே வல்லவர்கள் என்று எண்ணிவந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாய் விளங்குவது இந்நூல். சாமி சிதம்பரனார் தமது வண்ணத் தமிழ் புலமையால் இனிய தமிழ்க்கவிகள் தரவல்லவர் என்பதற்கு அணையா விளக்கம் அணைந்த விளக்கு. அணைந்த விளக்கின் பெருஞ்சிறப்பு முடியரசு தொலைந்து குடியரசு அமைவதேயாகும். அதனினும் பெருஞ் சிறப்பு கள்ளனைக் காதலித்து கணவனாகக் கொண்ட இளவரசி அவனைக் கொன்றபின் அக்குடியரசையும் பொதுவுடைமை அரசாக மாற்ற முனைவதேயாகும். சாமி சிதம்பரனார். செந்தமிழ்ப் பற்றில் சிறந்தவர் என்ப தற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு காதல் மொழியிலும் வரும் கன்னித்தமிழின் புகழேயாகும். எடுத்துக்காட்டு: செந்தமிழ்த் தேனூற்றும் செஞ்சொற் கவியான அந்தச் சிலப்பதிகாரம் அளிக்கின்ற சிந்தாமணியே! சிறந்தமணி மேகலையே! முந்தைத் தமிழ்மறவர் போர்வீரம் முற்றும் இறவாமல் மெய்ப்புலவர் இன்சொல்லாற் செய்த புறநானூறே! புகழ் பதிற்ப்பத்தே என் அகநானூறே! நற்றிணையே! யருஞ்சொற் புகலும் குறுந்தொகையே! ஐங்குறு நூறே! நல் பரிபாடலே! தமிழர் பண்டைநாள் மாண்பும் அரியதமிழ் நாட்டின் அமைந்த நில வளமும் முத்துமுத்தாக முழுதுந் தொடுத்துரைக்கும் பத்துப்பாட்டே! என் பழந்தமிழின் தேன்பெருக்கே! எல்லாப் பொருளும் இதன்பாலுள் விதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று புகல் பொய்யா மொழியார் புகன்ற திருக்குறளின் மெய்யான முப்பொருளே! முத்தமிழின் மெல்லொலியே உன்னாலே யன்றோ உயிர்வாழ்வேன் நானுலகில் மன்னவனே! என்றன் மனம்பறித்த மாருதமே! அணைந்த விளக்கின் ஆசிரியர் தம்முடைய நூலின் தலைவியை இளவரசியை நூல் பலவும் கற்றறிந்தாள். நுட்ப மதியுடையாள் என்று போற்றுகிறார். அப்படிப்பட்டவள் ஆராயாமல் ஒரு கள்ளனைக் காதலிப்பது ஏனோ? நூல் பல கற்றாலும் நுண்ணறிவு பெற்றாலும் காமத்திற்குக் கண் இல்லை போலும்! அதன் விளைவாகப் பட்டறிந்தே பகுத்தறிவாளியும் பயன்பெற வேண்டும் போலும். எளிய இனிய தமிழ்ச்செய்யுள் இயற்றுதலிலும் வல்லவ ராய் விளங்கும் சாமி சிதரம்பரனார் புதிய உவமைகளைப் புகல் வதிலும் காலத்தை எதிரொலி செய்கிறார் என்பது தெளிவு. ஓர் எடுத்துக்காட்டு : கையால் திருகியதும் கட்டுண்ட தண்ணீரைப் பெய்யும் குழாய்போலப் பெண்ணமுது தன்கையைக் கண்களிலே வைத்துக் கசக்கியதும் தாரையாய் மண்மீது நீர்சிந்த நின்று மனங்குழைந்தாள். மறைந்த சாமி.சிதம்பரனார் மறையாத தமிழ்ப் புகழுக்கு எப்பொழுதும் உரியவர். இந்த அணைந்த விளக்கு. அதற்கு ஓர் அணையா விளக்கு ஆவதாக! சிறப்புரை டாக்டர்சி.பாலசுப்பிரமணியன், எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி., தமிழ்த்துணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம். தமிழறிஞர் திரு.சாமி சிதம்பரனார் தமிழிற்கு நிலையான தொண்டுசெய்து மறைந்தவர்; தாம் இயற்றிய தகுதி வாய்ந்த நூற்களின் வாயிலாக இறந்தும் இறவாது வாழ்பவர். பகுத்தறிவுக் கொள்கையுடன், சிறந்த குறிக்கோளோடு தமிழ் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்தவர். அவருடைய எழுதுகோல் தமிழின் பல துறைகளையும் பற்றி நின்றது; பயனுற எழுதியது. அவர்தம் படைப்புக்களில் அவர்தம் அரிய உழைப்பு முயற்சியினையும், உயரிய உண்மையான ஆராய்ச்சிப் போக்கினையும் ஒருங்கே காணலாம். சங்க இலக்யி மாயினும் சரி, இடைக்கால பக்தி இலக்கியமாயினும் சரி பிற்கால இலக்கியமாயினும் சரி, அவர்தம் எழுதுகோல் நடுவு நிலைமையுடன் உண்மைகளை ஆராய்ந்து கண்டது. சிறந்த இலக்கிய ஆசிரியரிடம் குடி கொண்டிருக்க வேண்டிய பண்புகள் அனைத்தும் அவர்கள்பால் குறைவற நிரம்பியிருந்தன. அவர்தம் உயரிய உழைப்பும் விழுமிய தொண்டும் தமிழிளைஞர் போற்றி மேற்கொள்ளத் தக்கவையாகும். அறிஞர் திரு. சாமி சிரம்பரனார் அவர்கள் இயற்றி, இது வரை வெளிவராத அணைந்த விளக்கு என்னும் கதைச் செய்யுள் இப்போது வெளிவருகின்றது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் கதையினை அப்படியே எடுத்துக்கொண்டு, பெரும்பாலும் கலிவெண்பாவிலும், சிறுபான்மை சிந்து அசிரிய விருத்தம் ஆசிரியப்பஃறொடை வெண்பா முதலிய யாப்பு நடைகளிலும் ஆசிரியர் இக் கவிதை நூலினை யாத்துள்ளார். நூல், சிந்திய கண்மலர், கருகிய கஞ்சம், ஆச்சரியப் பேரிருள், பாலைவன மழை, சொன்னதே சட்டம், பூனை கையிற் கிளி, குற்றமுள்ள நெஞ்சு, கசந்த வாழ்வு, ஊர் வாய்க்கு மூடி யில்லை என்று ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது இந் நூலினுட் சென்று நயங்கண்டு தெளிவோம். கவிமணி அவர்கள், உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை என்று குயிப்பிட்டிருப்பதற்கேற்ப ஆசிரியர் கவிதை, நூலின் பலவிடங்களிலும் உள்ளத்து உணர்ச்சிகளைத் தெள்ளத் தெளியக் கொண்டு தெளிந்த நீரோட்டம் போல் செல்கின்றது. உணர்ச்சி வேகமும். கற்பனை நயமும், கருத்துவளமும், வடிவச் சிறப்புங்கொண்டு கவிதை வீறார்ந்து நிற்கின்றது. ஆசிரியரின் வருணனைத் திறம், உச்சியிலே கார்மேகம் வாழ உடம்பினிலே பச்சைச் சிவப்பு மயில மஞ்சணிறப் பட்டுடுத்திக் காதிலே தோடணிந்து கையில் வளைதரித்து வீதி விளக்கேபோல் வீசும் பணி பூண்டு மின்னல் கொடிபலவும் மேதினியில் வந்துலவிக் கன்னல் மொழிபெய்து காதற் பயிர் வளர்த்து நின்று நடப்பவென, நேரிழையார் பற்பலரும் ஒன்று குழுமினார். (ப.61) என்று பெண்களை வருணிக்கும் பகுதியால் வெளிப்படு கின்றது. உவமை யழகு, விண்மீன் புடைசூழ வெள்ளை நிலாவீசித் தண்மதியம் ஒன்று தவம்புகுந்து நிற்பதுபோல் காரிகையாள் நின்றுதன் கண்மலர்கள் வீசுவதை வீரனுந் தான்கண்டான் (ப:64) வெப்பத்திற் பட்டுருகும் வெண்ணெயைப் போலுள்ளம் இப்படி நைந்துருகச் செய்தாள், எழிலரசி (ப:66) நீர்புகுந்து பாலுள்ளே நின்று மறைந்ததுபோல் வீரனவன் என்னுள் விரைவாய்க் கலந்துவிட்டான் (ப:89) முதலிய பகுதிகளில் விளக்கமுறுகின்றது. மணமக்களை வாழ்த்தும் மக்கள், காதலர்கள் நீடுழி வாழ்ந்து களிப்புறுக! ஏதும் குறைவின்றி இன்பக் கடல்படிக! மக்கட் பெரும்பேற்றை எய்தி மகிழ்வுடனே எக்காலும் வாழ்க (ப:116) என வாழ்த்துகின்றனர். வாழ்த்தியலில் கவிஞர் மரபைப் போற்றக் காணலாம். இளவரசி சுந்தரனைப் புகழும்போது தமிழ்ப்பெரு நூல்களோடு உவமித்துப் பேசுதல் ஆசிரியர்தம் தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். (ப. 121, 122) பழமொழிகளை ஆசிரியர் இடையிடையே கையாளும்திறம் குற்றமுளார் நெஞ்சு குறுகுறுக்குமாமற்று (ப:126) காமாலைக் கண்ணனுக்குக் கண்டவெலாம் மஞ்சணிறம் (ப:128) என்ற அடிகளால் விளங்கும். திருக்குறளைப் பல விடங்களில் அப்படியே அகழ்ந்தெடுத்து அழகுறக் கையாளுகின்றார் (64, 136) இறுதியில் இளவரசி, மன்றில் உறைவீர்! மதியுடையீர் கேண்மினோ! இன்று முதலாக யானும் இனிய தமிழ்த் தென்றல் வளர்ந்தோங்கத் தெள்ளமுதம் நாடெல்லாம் ஓடுறவே செய்வேன்! உலகெல்லாம் செந்தமிழை நாடும்படிசெய்வேன்! நாளும் இதற்குழைப்பேன்! (ப:146) என்று கூறுவது, ஆசிரியர் கொண்டுள்ள உள்ளக் கிடக்கை யாகும். கவிதை வளம் நிறைந்த எழில் நூல் அணைந்த விளக்கு இதனை வெளியிடும் அன்னையாம் திருமதி சிவகாமி சிதம்பரனார் அவர்கள் தம் ஆருயிர்க் கணவர் நினைவு போற்றி, பண்பு போற்றி, தொண்டுபோற்றி வாழ்பவர். அன்னார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து இடையறாது இயற்றிவருபவர். அவர் தூய பணி வாழ்க, வெல்க என வாழ்த்துவன். தமிழ் கூறு நல்லுலகம் இவ்வினிய கவிதை நூலை வாழ்த்தி வரவேற்று இலக்கியப் பயன் துய்க்குமாக! தமிழகம் சி.பாலசுப்பிரமணியன் சென்னை 29 8.10.1973 முன்னுரை கதைத் தோற்றம் நீண்ட நாளாக எனக்கோர் ஆவல் உண்டு. ஒரு கதைச் செய்யுள் எழுதவேண்டும் என்பதே அது. அந்த ஆவலின் எழுச்சியே அணைந்த விளக்கு, இந்தக் கதை முழுவதும் எனது கற்பனையன்று. பழங்கதையும், எனது கற்பனையும் கலந்துள்ள கதையே இது. இக் கதைக்கு அடிப்படை குண்டலகேசி; அது பழங்கதை. ஐம்பெரும் காப்பியங்கள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பவை. இவற்றுள் குண்டல கேசியும் ஒரு காப்பியம். ஆனால் இத் தமிழ்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை இத் தமிழ்க் காப்பியத்தின் உண்மைக் கதையும் இன்ன தென்று உணரமுடியவில்லை. பாளி மொழியில் உள்ள தேரி காதை என்னும் நூலிலும். தம்ம பாதா; அங்குத்தரநியாகா என்னும் நூல்களிலும் குண்டல கேசியின் கதை கூறப்பட்டிருப்பதாக மொழிகின்றனர். சமணசமய நூலாகிய நீலாகேசி என்னும் நூலில் 286 ஆம் செய்யுளின் உரையிலும் குண்டலகேசியின் கதை கூறப் பட்டிருக்கிறது இராசகிருகத்து மன்னனது அமைச்சனுக்கு ஒரு மகள். அவள் பெயர் பத்திரை. அவள் தக்க பருவமுற்றாள். ஒரு நாள் தன் மாளிகையின் மாடியின் மேல் உலவிக்கொண்டிருந்தாள். அரசனது கொலையாளிகள் ஒரு கட்டழகனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்றனர். அதை அவள் கண்டாள். அவன் மீது காதலுற்றாள். அவன் வழிப்பறி செய்த குற்றத்திற்காக மன்னனால் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவன்; அரசனுடைய புரோகிதன் மகன். அவனையே மணக்கவேண்டும் என்று பத்திரை பிடிவாதம் செய்தாள். அமைச்சன், கொலையாளிகளுக்குக் கைக்கூலி கொடுத்தான், திருடனை உயிர் பிழைக்கச் செய்தான். கள்வனுக்குப் பத்திரையை மணமுடித்துக் கொடுத்தான் திருடனும் பத்திரையும் பலநாள் இன்புற்று வாழ்ந்தனர். ஒருநாள் ஊடலின் போது, பத்திரை, முன்பு நீ கள்வன் அன்றோ என்று கூறினாள். அவன் அவள் தன்னை இகழ்ந்ததாக எண்ணிச் சினங்கொண்டான். ஆயினும் அப்பொழுது அவன் சினத்தை வெளியிடாது மறைத்து வாழ்ந்திருந்தான். ஒருநாள் அவன், பத்திரையிடம் என் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வணங்க, அண்மையிலிருக்கும் மலைமுகட்டிற்குச் செல்கிறேன். நீயும்வருக என்றான் அவளும் உடன்பட்டாள். இருவரும் மலையுச்சியை அடைந்தனர். அடைந்ததும் திருடன், நீ என்னைக் கள்வனென்று இகழ்ந்தாய் அன்றோ! ஆதலால் இன்று உண்னைக் கொல்லப் போகிறேன் உன் வழிபடு தெய்வத்தை வணங்கிகொள் என்றான். அவள் திடுக்குற்றாள். தற்கொல்லியை முற்கொல்ல வேண்டும் என்பதை உள்ளத்தில் எண்ணினாள். அவன் ஆணையை ஏற்றவள் போல் நடித்தாள். உன்னையன்றி எனக்குத் தெய்வ மில்லை; உன்னையே வலம் வந்து வணங்குவேன் என்றாள். அவனை வலம் வருபவள் போல் பின்புறமாக வந்து, அவனைக் கீழே தள்ளிக் கொன்றாள். பின்னர் அவள் உலகை வெறுத்துச் சமண மதத் திற்சேர்ந்து துறவு பூண்டாள். துறவியானவுடன் தலை மயிர் களையப் பட்டது. ஆயினும் மீண்டும் தலைமயிர் முளைத்துச் சுருண்டு காணப்பட்டது. ஆதலால் இவளுக்குக் குண்டலகேசி என்ற பெயர் வழங்கிற்று. குண்டலகேசி யென்றால் சுருண்ட மயிரினை யுடையவள் என்பது பொருள். இதுவே நீலகேசியிற் காணும் கதையாகும். இக்கதையினை, இந் நூலின் கதை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும், முதலிலிருந்து இறுதிவரையிற் பல மாறுதல்களையுடையது. இதன் கதைச் சுருக்கத்தையும் கீழே தருகிறோம். தஞ்சை நகர் அரசன் மகள் கோமளவல்லி. அவளே பட்டத்திளவரசி தமிழ்க் கல்வி நிறைந்தவள். சுந்தரநாதன் என்னும் திருடனைக் கண்டாள்; அவன் மேல் காதல் கொண்டாள். திருடனை அரசன் விசாரித்துக் கொலைத் தண்டனை தந்தான்; கோமளவல்லி அவனையே மணக்கப் பிடிவாதம் செய்தாள்; அரசன் அவனுடைய தண்டனையை மாற்றினான். அவனைச் சேனைத் தலைவன் ஆக்கினான். மதுரை மன்னன் பிரதாபன். அவன் கோமளவல்லியின் பொருட்டு, தஞ்சை நகர் மீது படையெடுத்து வந்தான். சுந்தரநாதன் அவனை எதிர்த்துத் தோல்வியுறச் செய்தான். இவனுடைய வெற்றிக்குப் பரிசாக கேமளவல்லியை மணம் செய்து கொடுத்தான் மன்னன். கள்வனும் இளவரசியும் ஒருநாள் தோட்டத்தில் காதல் மொழிபேசிக் களித்திருந்தனர். இருவரும் தங்கள் காதல் வெளிப் படப் பாடிக்கொண்டிந்தனர், கோமளவல்லி, தன் காதல் மிகுதியால், நீ இன்னும் உன் திருட்டையும், கொலையையும் மறந்துவிடவில்லை என்று பாடினாள், கள்வன் கடுஞ் சினமுற்று, அதை மறைத்துக் கொண்டு, பொய்யன்பு காட்டி வாழ்ந்து வந்தான். கோடை நாள் வந்தது. வெய்யிலின் கொடுமையால் கோமளவல்லி துன்புறுவது கண்டு, பழிதீர்க்க அதுவே பருவம் என்று திருடன் கருதினான். அவளுடன் நீல மலைக்குச் சென்று தங்கினான் ஒருநான் மறைமதி நாளில் இருவரும் ஒரு மலைச் சிகரத்தை அடைந்து உரையாடிக் கொண்டிருந்தனர். பொழுது போயிற்று. கோமளவல்லி கள்வனை உறைவிடத்திற்கு அழைத் தாள். அவன் தன் உள்ளத்தை வெளியிட்டு, உன் வழிபடு தெய்வத்தை வணங்கிக் கொள் என்றான். அவள் நீயே வழிபடு தெய்வம் என்று வலம் வந்தாள். காலம் பார்த்து அவனைப் படுகுழியில் தள்ளினாள் - கள்வன் மாண்டான். பின்னர் இளவரசி ஊர் வந்து சேர்ந்தாள். அரசன் வயது முதிர்ந்த காரணத்தால் அரசாட்சியிலிருந்து விலக முடிவு செய்தான். யாரிடம் அரசை ஒப்புவிப்பது என்று அவை யினரை வினவ, கோமளவல்லியே அரசுக்குரியவள் என்றனர். கோமளவல்லி அரசேற்க மறுத்தாள். குடி அரசே சிறந்த தென்று அவையினருக்குக் கூறினாள். அனைவரும் ஒப்பினர் அரசன் விலகினான். குடிகளுள் ஒருவனானான் கோமளவல்லியும் குடிகளுள் ஒருத்தியானாள் அரசு குடியரசாயிற்று. இதுவே அணைந்த விளக்கின் கதைச் சுருக்கம். இதனையும், குண்டலகேசியின் கதையினையும் ஒப்பு நோக்கின், வேறுபாடு விளங்கும். இக்கதை இந்நூலில் ஒன்பது பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒப்வொரு பிரிவின் சிறந்த கருத்தை விளக்கும் அடிகளில் உள்ள சொற்களையே அப்பிரிவுகளுக்குத் தலைப் பெயராக அமைக்கப் பட்டுள்ளன. கதைப்பகுதிச் சுருக்கம் என்னும் தலைப்பின் கீழ், ஒவ்வொரு பகுதியின் கதையையும் சுருக்கமாக எழுதியுள்ளேன். அதைப் படித்த பின் நூலைப் படித்தால், உய்த்துணர்வின்றிக் கதையை அறிந்து படிக்கலாம். பெயர்க்காரணம் அணைந்த விளக்கு இந்நூலுக்கு பொருத்தமான பெயராக இருக்குமென்று கருதியே அப்பெயர் கொடுத்தேன். வெண்பாவின், நெடு வெண்பாட்டு, அல்லது பஃறொடை வெண்பாவே நான்கிற்கு மேற்பட்ட அடிகளையுடையது. தொல் காப்பியத்தில், நெடு வெண்பாட்டுக்கு 12 அடிகள் எல்லை கூறப்பட்டுள்ளது. நெடு வெண்பாட்டே முந்நாலடித்தே என்பது தொல் காப்பியம். (தொல், செய். 470) பிற்கால நூலாகிய யாப்பருங்கலக் காரிகையில், நெடு வெண் பாட்டையே பஃறொடை வெண்பா வெனக் கூறினர். பிற்கால இலக்கண நூலார் பலரும் இப் பெயரையே கூறினர். காரிகையில் பஃறொடை வெண்பாவுக்கு, அடி வரை யறை கூறப் படவில்லை. பல அடிகளையுடையது பஃறொடை வெண்பா வென்றே கூறப்பட்டுள்ளது. அடி பலவாய்ச், சென்று நிகழ்வ பஃறொடையாம் என்பது காரிகை. தொல்காப்பியத்தில் அடிவரையறை கூறிய பாவுக்குப் பிற்காலத்தார் அடிவரையறை கூறாமல் விட்ட காரணம், புதியன புகுதல் ஆகுமென்றே கருது கின்றனர் சிலர். இவ்வாறு அடி பலவுடைய வெண்பாவுக்கு இலக்கியம் கிடைக்கவில்லை. ஆதலின் இதனை வெண்பா வகையிற் சேர்த்தல் பொருந்தாது. வெண்பாத்தளை விரவிய மற்றோர் பாட்டு கலி வெண்பாவாகும். கலிவெண்பாவைத் தொல்காப்பியர் கலிவெண்பாட்டெனக் குறிப்பர். கலிவெண்பாட்டு என்பதற்குத் தொல்காப்பியத்திற் கூறப்படும் இலக்கணம் :- ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலாற் றிரிபின்றி வருவது கலிவெண்பாட்டே என்பது. சிலப்பதிகாரத்தில் உள்ள கனாத்திறம் உரைத்த காதை யென்பது, இத்தகைய வெண்பாத்தளை பெற்ற பாட்டால் ஆகியது. அக் காதையின் இறுதியில் அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அப்பாடலைக் கலிவெண்பாட்டு என்றே குறிப்பிடுகின்றார். இது கனவென்னும் பொருளையே கருதாது. மாலதி கதையையும், தேவந்தி கதையையும் கலந்து கூறிற்றேனும், உறுப்பழிவின்றி நடந்ததேனும், முந் நான்கடியினிறந்து வருதலான் நெடுவெண் பாட்டாகாது கலிவெண்பாட்டாத லுணர்க! என்பது அடியார்க்கு நல்லார் உரை ஆதலால் நாம் வெண்பாத்தளை பிறழாமல் வருகின்ற 12 அடிகளுக்கு மேற் பட்ட பாடலை கலிவெண்பாட்டு என்றே அழைப்போம். ஆதலால் இந் நூலின் பெரும்பாலான பாட்டுக்கள் கலிவெண் பாட்டுக்கள் ஆகும். இன்னும், விருத்தப்பா, ஆசிரியப்பா, புதிய வகையில் உள்ள சில பாடல்களும் இதில் கலந்துள்ளன. எளிய நடையும், இனிய சந்தமும், புதிய பொருளும் உடைய பாக்கள் பல தோன்றவேண்டும் என்பது என் கருத்து. அறிஞர்களும், இது தமிழன்னைக்குப் புதுப் பணி என்று கருது கின்றனர். இந் நூலும், இந் நூற் பாடல்களும், இந் நூற் கருத்தும், செந்தமிழன்னைக்கு ஒரு புதுப் பூணாக இருக்கலாகாதா? என்ற ஆவலுடனேயே யானும் இந்நூலை எழுதினேன். இந்நூல் சிறிதளவாவது தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாயின். அதுவே என் கருத்துக்குச் சிறந்த பரிசு கிடைத்ததாகக் கொண்டு மகிழ்வேன். அன்பன், சாமி.சிதம்பனார். சாமி. சிதப்பரனாரின் அணைந்த விளக்கு கதைப் பகுதிச் சுருக்கம் 1 சுந்தரநாதன் ஒரு பெருங் கள்வன்; அவன் அடிக்கடி தஞ்சை நகரைக் கொள்ளையிட்டு வந்தான். தஞ்சை நகர் மன்னன் தயாநிதி. அவன் மனைவி தண் கோதை தேவி. அவர்களுக்கு ஒரே பெண். அவள் பெயர் கோமளவல்லி. அழகிற் சிறந்தவள்; தமிழ்க் கல்வியிற் தேர்ந்தவள். அவளே பட்டத்திளவரசி. கள்வனைப் பிடிக்கக் காவலர்கள் பல நாட்கள் முயன்றனர். இறுதியில் பிடிபட்டான். தஞ்சை நகர்ப்புறத்தில் ஒரு பெரிய ஏரி. அதன் கரையில் ஒரு தாழங்காடு. அதில் ஒளிந்திருந்தான் சுந்தரநாதன். காவலர் தலைவர்களுள் ஒருவன் இருளப்பன். இவன் கள்வனைப் பிடித்தான். காவலர்கள் கள்வனுக்கு விலங் கிட்டனர். தஞ்சை நகரின் தெருக்களின் வழியே இழுத்து வந்தனர். பொதுமக்கள் அக் காட்சியைக் கண்டனர். கள்வனைப் பற்றிப் பலப் பல பகர்ந்தனர்,. அவனுடைய தோழர்கள் பலர் அவனை மீட்க வழியின்றி வருந்திச் சென்றனர். அரண்மனை மாடியில் மேல் இளவரசி, தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அபபொழுது, கள்வனை, அரண்மனை வீதி வழியாக அழைத்து வந்தனர். இளவரசி தெருவில் எழுந்த முழக்கத்தைக் கேட்டாள். வியைட்டை விட்டு ஓடி வந்து தெருவை நோக்கினாள். கட்டழகுடைய சுந்தரநாதனைக் கண்டாள்; காதல் கொண்டாள்; கள்வனும் அண்ணாந்து பார்த்தான்; அரசகுமாரியைக் கண்டான்; இருவர் கண்களும் ஒன்றுபட்டன. காவலர் தலைவன், அரசன் முன் கள்வனைக் கொண்டு சென்றான். அரசன் இன்று இரவு சிறையில் வைத்திருப்பீர். நாளை நமது சபைக்குக் கொண்டு வருக என்று பணித்தான். கள்வனைப் பிடித்த இருளப்னுக்குப் பரிசு பல வழங்கினான். கள்வனை அன்றிரவு சிறையில் வைத்தனர்; காவலர் காத்து நின்றனர். 2 சிறைக்குள்ளிருந்த சுந்தரநாதனுக்கு உறக்கம் வரவில்லை. அரச குமாரியின் தோற்றம் அவன் நெஞ்சை விட்டு அகல வில்லை; அவள் உருவெளித் தோற்றங் கண்டு உள்ளங் குழைந் தான்; உண்மையாக அவளே வந்து விட்டதாக எண்ணினான்; எழுந்தான்; நடந்தான்; ஆடினான்; பாடினான்; பதறினான். காவலர் அவனைப் பித்தனென்று இகழ்ந்தனர். கள்வனுடைய கடுநெஞ்சம் காரிகையின் நோக்கால் கனிவடைந்தது. அரச குமாரியும், அரண்மனையில் காதலால் கலங்கி நின்றாள். கள்வனுருவைக் கருத்திற் பதித்தாள் அவனை மணப்ப தெவ்வாறு என்று கருதிச் சோர்ந்தாள். தோழியர் அவள் நோய் கண்டு வருந்தி நின்றனர். அவள் நோயை நீக்கப் பலவித பணி விடைகள் செய்து நின்றனர். 3 பொழுதும் புலர்ந்தது. கள்வன் வழக்கைப் பார்க்கும் பொருட்டு ஊரார் திரண்டனர்; அரசனுடைய அவைக் களத்தை அடைந்தனர். அமைச்சர்களும் அரசவை வந்து அமர்ந்தனர். தயாநிதி அன்று நடைபெறப் போகும், கள்வன் வழக்கைப் பற்றிக் கோமளவல்லிக்கு விளம்பினான். அவளையும் அழைத்துக் கொண்டு சபைக்கு வந்தான்; அரியாசனத்தில் அமர்ந்தான். இளவரசியும், ஒரு புறத்தில் உட்கார்ந்தாள். காவலர்கள் கள்வனைக் கொண்டு வந்து அரசன்முன் நிறுத்தினர். அரசன் கள்வனுடைய குற்றங்களை எடுத்துக் காட்டினான். கள்வன் அரசனை எதிர்த்து, நீயும் என் போன்ற திருடன்; கொலைகாரன்; நம்மிருவள் வேற்றுமையில்லை என்றான். அரசன் சீற்றங் கொண்டு அவனை வெட்டுதற்கு வாளெடுத்தான். ஆய்மதியன் என்பவன் முதல் அமைச்சன். அவன் விரைந் தெழுந்து மன்னன் கையைப் பிடித்துக் கொண்டான். திருடன் மொழியின் கருத்தை நன்றாக உணர்ந்து கொள்ளு வோம்; பிறகு தண்டனை கொடுப்போம் என்றான். மன்னனும் சினந்தணிந்து உட்கார்ந்தான். ஆய்மதியன் கள்வனை நோக்கி. அரசனும் உன் போன்றவன் என்பது எவ்வாறு? விளங்கச் சொல் என்றான். கள்வன் நான் திருடுகின்றேன்; என்னைப் பிடிக்க வருவோரைக் கொல்லுகின்றேன். செல்வர் பொருளையே கொள்ளை கொள்வேன்; தற்காப்புக்காகவே கொலை செய்வேன். அரசன் உழைப்பாளர் பொருளை வரியின் வழியாகக் கொள்ளை கொள்ளு கின்றான்;போர் புரிவதன் மூலம் கொலை செய்கின்றான். இது கொலையன்றோ? என்றான். அமைச்சன் அரசன் செயல், நாட்டு நலங் கருதியது; ஆன்றோரால் ஒப்புக்கொள்ளப்பட்டது; நூலாதரவுள்ளது; வெளிப்படையாகச் செய்யப்படுவது. உன் செயல் எல்லோராலும் இகழப்படுவது என்றான். கள்வன் இதற்கு மறுமொழி கூறாமல் நின்றான். அரசன், கள்வனுக்குத் தண்டனை யாது? என்று அவை யினரைக் கேட்டான். கொலைத் தண்டனையே தக்கது எனறு எல்லேரும் கூறினர். வெற்றிநாதன் என்னும் அமைச்சன் இவன் இளைஞன் அஞ்சா நெஞ்சன்; பகுத்தறிவாளன்; ஆதலாற் கொல்ல வேண்டாம். இவனைச் சீர்திருத்தி நல்லோனாக்கி நாட்டுத் தொண்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றான். அவையினர் இவ்வமைச்சன் மொழியை யிகழ்ந்தனர்.அரசனும் அவமதித்தான் கள்வனுக்கு மரண தண்டனை என்று முடிவு கூறினான் மன்னன். மரண தண்டனை என்ற முடிவு கேட்டதும் கள்வன் திகைத்தான்; இளவரசி திடுக்கிட்டாள்; அவையோர் மகிழ்ந்தனர். இளவரசியின் கண்களும், கள்வன் கண்களும் சந்கித்தன. கள்வன் சோர்வுற்றுக் கீழே விழுந்தான். இளவரசியும் பேச்சு மூச்சற்றாள்; சோர்ந்தாள்; சாய்ந்து விட்டாள். அவையோர் இக்காட்சி கண்டனர்; வியந்தனர் இளவரசியை அரண்மனைக்கு எடுத்துச் சென்றனர். அவை கலைந்தது. 4 கள்வன் பெற்ற கடுந்தண்டனையால் இளவரசி ஆவி துடித்தாள்; சோர்ந்து கிடந்தாள். அன்று பகலும், இரவும் அரசனும், அரசியும் தோழியரும் அவள் பக்கத்திலிருந்து வருந்தினர்; துயரம் தணியப் பணி விடைகள் பல புரிந்தனர்; மருத்துவர்கள் பலர் மருந்தளித்தனர். அவள் துன்பம் மாற வில்லை. மறு நாள் பொழுது விடிந்தது. அன்றுதான் கள்வனைக் கொலை செய்யும் நாள். இளவரசி, தான் கள்வன் மீது கொண்டிருக்கும் காதலை மெல்ல வெளியிட்டாள். அது கேட்ட அனைவரும் திகைத்தனர். அரசன் நீ திருடன் மீது வைத்த ஆசை காதல் அல்ல; காமமே; அதை மறந்து விடு என்றான் தண்கோதை தேவியும் எவ்வளவோ கூறினள். கோமளவல்லி காதல் வேறன்று; காமம் வேறன்று; இரண்டும் ஒன்றே; கட்டழகனை மணக்காவிடில் உயிர் வாழேன் என்று முடிவாகக் கூறிவிட்டாள். தண்கோதை தேவியும், கள்வனுடைய கொலைத் தண்டனையை மாற்றுமாறு அரசனை வேண்டினள். அரசனும் மனமிரங்கினான். சுந்தரநாதனுடைய கொலைத் தண்டனையை மாற்றி விட்டதாக ஒரு ஓலை யெழுதினான். அதை ஒரு தோழியின் கையிற் கொடுத்தான்; கொலைக் களத்தில் உள்ள அதிகாரியின் கையிற் சேர்க்கும் படி பணித்தான். தோழியும், அவ்வோலையை வாங்கிக் கொண்டு விரைந் தோடினாள். 5 நல்ல நடுப்பகல். கொலைக் களத்தில் கள்வன் ஒரு மேடையின் மேல் நிறுத்தப்பட்டுள்ளான். பல மக்கள் குழுமியிருக்கின்றனர். சிலர் அவன் மாளப் போவது கருதி இரங்குகின்றனர், பலர் அவன் மாளப் போவது கருதி மகிழ்ச்சியடைகின்றனர். இச் சமயத்தில், கொலைத் தண்டனையை நிறைவேற்றும் அதிகாரி திருடன் தலையைத் துணிக்கு மாறு கொலையாளிகளுக்கு அறிவித்தான். ஒரு கொலைஞன் கள்வன் கழுத்திற்கு நேரக வாளை ஓங்கினான்.ஆனால் வெட்டு விழுமாறு வீசவில்லை. இச்சமயத்தில் கொல்லாதே! நில்லு! கொலைத் தண்டணையை மாற்றினான் மன்னவன் என்று கூவிக் கொண்டு ஓடி வந்தாள் ஒரு பெண். அவள் அரசன் கட்டளையை அதிகாரி யின் கையிற் கொடுத்தாள். அதிகாரி கொலைத் தண்டனையை நிறுத்தினான்.கள்வனை அரசவைக்குக் கொண்டு போயினர். இது கண்டு பொது மக்கள் வியப்புற்றுப் பற்பல மொழிந்தனர். அரசவை கூடியிருந்தது. பலரும் சூழ்ந்திருந்தனர். அரசன் நேற்று வெற்றிநாதன் கூறிய மொழிகள் என் மனத்திற் பதிந்தன. ஆதலால் கொலைத் தண்டனையை மாற்றினேன்; இக் கட்டிளைஞனைச் சீர்திருத்தலாமென்று கருதுகின்றேன். உங்கள் எண்ணம் யாது? உரைமின் என்றான் வெற்றிநாதன் மன்னன் செய்கையை ஆதரித்தான். இவ்வீரனை நமது சேனைத் தலைவனாக்குதல் நலம் என்றான். ஆய்மதியன் இவன் நல் வழியில் நடப்பதாக உறுதி கூறினால் அவ்வாறே செய்யலாம் என்றான். மன்னன் கள்வனை நோக்கி, உன் எண்ணம் என்ன வென்றான். கள்வன் நான் வறுமையால் கொடுமை செய் தேன். இனி ஒழுங்காக நடப்பேன். எனக்குக் கொடுக்கும் வேலையைத் திறம்படச் செய்வேன் என்றான். அரசன் அப்போதே கள்வனைச் சேனைத் தலைவனாக் கினான்; வரிசை பல தந்தான். இம்முடிவைச் சிலர் வெறுத்தனர்; சிலர் புகழ்ந்தனர். அவை கலைந்தபின் அரசன் இளவரசியிடம் சென்றான். இந்நிகழ்ச்சிகளை அறிவித்தான்; அவள் துன்பம் நீங்கி யின்ப முற்றாள். 6 மதுரை நகர் மன்னன் பிரதாபன்; மணமாகாதவன். அவனுக்குப் பலர் பெண் கொடுக்க முன்வந்ததும், மணம் புரிய மறுத்திருந்தான். அவன் ஒரு நாள் தனியாக அரண்மனைத் தோட்டத்திற்குச் சென்றான். அங்கே ஒரு மேடையில் உட்கார்ந் தான். பக்கத்து மரக்கிளையில் இரு குயில்கள் இருந்தன. அவை காதல் மொழி பெசிக் களித்தன. அது கண்ட மன்னன் ஒரு புத்துணர்ச்சி பெற்றான் அன்று முதல் அவன் மனதில் கவலை குடி கொண்டது. அக் கவலை முகத்தில் வெளிப்பட்டிருந்தது. அமைச்சர்கள் அவனுடைய முகச் சோர்வு கண்டனர். அவனுக்கு மணமுடிப்பதே அவன் கவலை தீர்வதற்கு வழி யென்று முடிவு கண்டனர். அரசனை யடைந்தனர். நீங்களனை வரும் வந்தது என் கருதி? உரைமின்! என்றான் மன்னன். முதலைமைச்சன் சுகுணன், கோமள வல்லியின் அழகையும், அறிவையும் எடுத்துக் கூறி. அவளே உனக்கேற்ற பெண் அவளை மணந்தால் நீ மகிழ்ச்சியடைவாய் என்றான் மன்னனும் மணம் புரிந்துகெள்ள ஒப்பினான். பிரதாபனுக்குப் பெண் கொடுக்குமாறு தயாநிதிக்கு அமைச்சர்கள் கடிதம் விடுத்தனர். பல நாட்கள் கடந்த பின், தயாநிதியினுடைய மறுமொழி கிடைத்தது; பிரதாபனுக்குப் பெண் கொடுக்க மறுத்தான். உடனே பிரதாபன் சினங் கொண்டான். அமைச்சர்கள் சூழ்ச்சியின்படி, பிரதாபன் படை திரட்டிச் சென்று தஞ்சை நகரை முற்றுகை யிட்டான். இச்சமயம், தயாநிதி அரச மன்றத்திலிருந்தான் அமைச்சர் களும். பிறரும் சூழ்ந்திருந்தனர். ஒற்றர்கள் ஓடிவந்து பிரதாபன் படையெடுத்து வந்திருக்கும் செய்தியைக் கூறினர். அது கேட்டு அரசன் திகைத்தான்; அமைச்சர்கள் விழித்தனர். சுந்தரநாதன் எழுந்தான். நான் சென்று பிரதாபனையும், அவனுடைய படைகளையும் முறியடித்து வருகிறேன் என்றான். அரசனும் மகிழ்ந்து விடை தந்தான். சுந்தரநாதன், தன் சேனை களுடன் நகர்ப்புறத்தை யடைந்தான் பிரதாபன் படையுடன் போர் தொடுத்தான் பிரதாபனும், அவன் படை வீரர்களும் தோற்றுப் புறமுதுகிட்டனர். சுந்தரநாதனின் வெற்றியைக் கேட்டு மன்னவனும் மக்களும் மிகிழ்ந்தனர். மன்னவன் சுந்தரநாகன் பெற்ற வெற்றிக்குப் பரிசாக கோமளவல்லியை மணஞ் செய்து கொடுக்கப் போகிறேன். அவளும் இவன் மேல் ஆராத காதல் கொண்டாள் என்றான் பலரும் நன்றே யென்றனர்; சிலர் இஃதென்ன விபரீதம்! என்று வெறுத்தனர். திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. தமிழ் முறைப்படி சுந்தர நாதனுக்கும் இளவரசிக்கும் கடிமணம் நிகழ்ந்தது மன்னன் மகிழ்ந்து பரிசு பல வழங்கினான் மக்களும் மகிழ்ந்தனர். கள்வனும் இளவரசியும் கலந்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர். 7 அரண்மனைச் சோலை. அதில் ஒரு தாமரை பூத்த தடாகம்; அதன் கரையில் ஒரு மண்டபம்; அம்மண்டபத்தில் ஓர்மேடை; அம் மேடையில் சுந்தரநானும் இளவரசியும் வீற்றிருந்தனர். காதல்மொழி பல பேசிக் களித்தனர் காவின் வளங்களைக் கண்டுமகிழ்ந்தனர். ஒருவரை ஒரவர் பாராட்டிப் புகழ்ந்தனர். சுந்தரநாதனை ஒரு பாடல் பாடவேண்டினள். கள்வன் இளவரசியின் காதலே தன்னை நல்வழிப்படுத்திற்று என்னும் கருத்துப் படப் பாடினான். பிறகு அவளும் தன் காதலை வெளியிட்டுப் பாடினாள் அவள் தனது பாட்டில் நீ என்னை உன்மனத்தில் திருடி வைத்திருக்கின்றாய்! நீ சிறிது நேரம் என்னை விட்டுப் பிரிந்திருந்தாலும், அப்பிரிவு என்னைக் கொல்லுகிறது ஆதலால் உன் பழந்தொழிலை இன்னும் நீ விடவில்லை என்ற கருத்தை வெளியிட்டாள். திருடன் அவள் காதற் கருத்தை உணர முடியாமல் சினமுற்றான். அவன் தன் சினத்தை வெளியிடாமல் மறைத்துக் கொண்டான். பின்னும் சிறிது நேரம் அவர்கள் அங்கே யிருந்துவிட்டுப் பொழுது பட்டதும் அரண்மனைக்குப் போயினர். 8 அன்று முதல் கள்வன் கலக்கமுற்றான். அவனுடைய பழய செயல்களைப் பற்றிய நினைவுகள் வந்துவிட்டன. பிறர் தன்னை நோக்கும் போதெல்லாம். கள்வனென்று கருதி நோக்குவதாகவே நினைத்தான் பிறர் பார்க்கும் போதெல்லாம் நாணித் தலை கவிழ்ந்தான். அவனுக்கு அரச வாழ்வு புளித்துவிட்டது; கோமள வல்லியின் மேல் வெறுப்புற்றான்; அவளைப் பழிவாங்குதற்குக் காலங்கருதிநின்றான். கோடை நாள் பிறந்தது. வெய்யிற் கொடுமை தாங்க முடியவில்லை வெப்பத்தின் மிகுதியால் இளவரசியின் உடம்பில் கொப்புளங்கள் எழுந்தன இதுவே அவளை பழிவாங்கச் சமயம் என்று கருதினான். சுந்தரநாதன் இளவரசியை நோக்கி கோடைக் கொடுமை நீங்க, நீலகிரிக்குச் செல்வோம் என்றான் அவளும் உடன்பட்டாள் இருவரும் போதிய ஏவலர் களுடன் நீலமலையை அடைந்தனர். அங்கோர் மாளிகையில் தங்கினர். பலநாட்கள் நீலகிரியில் வாழ்ந்தனர். ஒரு அமாவாசைநாள் அன்று மாலை சுந்தரநாதனும் இளவரிசியும் ஒரு குவட்டை யடைந்தனர். கீழே கிடுகிடு பள்ளம். அவ்விடத்தில் உட் கார்ந்து இருவரும் காதல் மொழி பேசினர் இருள் சூழ்ந்தது அது கண்டு இளவரசி நேரமாயிற்று விடுதிக்குச் செல்வோம் என்றாள் சுந்தரநாதன் நீ என்னைக் கள்வன் கொலைகாரன் என்று செருக்கால் இகழ்ந்தாய்! ஆதலால் உன்னைக் கொன்று என் வெஞ்சினத்தைத் தீர்த்துக்கொள்ளப் போகிறேன். இப்பொழுதே உனது வழிபடு தெய்வத்தை வணங்கிக்கொள் என்றான். இளவரசி, என்னைக் கொல்ல நினைக்கும் இவ் வஞ்ச கனை நான் கொல்வேன் என்று முடிவு செய்து கொண்டாள். கள்வனை நோக்கி,நீயே என் வழிபடு தெய்வம்! உன்னை யன்றி வேறு தெய்வமறியேன்! எழுந்து நில்; வலம் வந்து வணங்கு கிறேன் என்றாள். திருடனும் எழுந்து நின்றான். அவள் அவனைச் சுற்றி வரும்போது, தக்க சமயம் பார்த்துப் படுகுழியில் தள்ளி விட்டாள் அவனும் ஆவென்றலறி வீழ்ந்து மாண்டான். இது நிகழ்ந்த பின் இளவரசி தாங்கா-த் துயருற்றாள் வாய் விட்டு அரற்றினாள். அரற்றிக் கொண்டே, அவ்விடத்தை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்தாள். இதந்குள் ஏவலர்கள் அவளை யும் சுந்தரநாதனையும் தேடி வந்தனர். அவர்கள். இளவரசியின் அழுகுரல் கேட்டு அவளை யடைந்து, அழைத்துச் சென்றனர். நடந்த நிகழ்சசியை ஏவலர்களும் அறிந்து துன்புற்றனர். அனை வரும் அன்றிரவு நடந்து தஞ்சை யடைந்தனர். இளவரசியின் செய்தி தஞ்சைநகர் முழுவதும் பரவிட்டது. 9 தஞ்சை நகர் முழுவதும் இளவரசியை பற்றியே பேச்சு; அரசனைப் பற்றியும், கள்வனைப் பற்றியும் பலர் பேசினர் அரசனும், அரசியும், இளவரசியின் நிலைகுறித்து வருந்தினர் வயது முதிர்ந்த மன்னன் ஆட்சியில் வெறுப்புற்றான்; அரச வையைக் கூட்டினான். அவையினரை நோக்கிநான் தள்ளாத பருவமுற்றேன். கோமளவல்லி கள்வனை மணந்து கடும் பழிக்கு ஆளாயினள். இனி அரசாளுவது யார்? உங்கள் விருப்பம் என்ன? என்றான். முதல் மந்திரி கோமளவல்லியே அரசாளலாம் அவள் கள்வனைக் கொன்றது வீரச் செயலே அதனால் பழியொன்று மில்லை. என்றான் எல்லோரும் அமைச்சன் மொழியை ஆதரித்தனர். மன்னன் கோமளவல்லியின் முகத்தை நோக்கினான். அவள் நான் காதலை நம்பிக் கெட்டேன். உலைவாய்க்கு மூடியுண்டு; ஊர் வாய்க்கு மூடியில்லை அழியாப் பழிபூண்ட நான் அரசியாக விரும்பவில்லை. குடிகளே தாங்கள் விரும்பும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆட்சி புரியலாம். குடி அரசு சிறந்த அரசு என்றாள். அவள் மொழியை அரசனும் அமைச்சர்களும், பொது மக்களும் ஒப்புக் கொண்டனர். உடனே அரசன், நீங்களே அரசாளுங்கள்! நான் உங்களுள் ஒருவனாயிருந்து அரசாட்சிக்கு உதவி செய்கிறேன் என்று கூற, கோமள வல்லியும் இன்றுமுதல் நானும் குடிகளுள் ஒருத்தியாய் இருப்பேன். தமிழ் மொழிக்கும் தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கும் உழைப்பேன். அரசுக்கும் உதவுவேன் என்றாள். மக்களும், தங்களுட் சிலரை ஒரு குழுவாகத் தேர்ந் தெடுத்தனர். அக்குழுவினருள் ஒருவனைத் தலைவனாக்கினர் குடி அரசுக்கு வேண்டிய சட்ட திட்டங்களமைத்தனர். குடியரசாகி இன்புற்று வாழ்ந்து வந்தனர். Foreword by the Authour to “Anaintha Vilaku” (Transl ation) It was my ambition to create a good story in mellodious verse. அணைந்த விளக்கு (Blown out lamp) is the out- come of it. This is not my pure imaginary creation. It is a subtle mixture of an ancient story and mine own stuff. The basis of this story is adapted from Kundalakesi, an epic. Kundalakesi is one among the five celebrated great Tamil epic Poems, the four other being, Silapathikaram, Chintamani, Manimekalai and Valayapathi. The Story proper of Kundalakesi, as narrated in that great epic is not at available anywhere in the world, as the Poem is a lost treasure. Still, the outline and synopsis of the story are said to contain in Theri Kaathai, Dhamma Patha and Angutharaniyaka which are of Pali literature. Besides, in the commentary of verse 286 in Nilakesi, a Jainist Philosophy, the following summary of Kundalakesi is manifested. The Prime-minister of the kingdom of Raja Graham had a beautiful grown-up daughter named Baddhirai. One day as The was strolling on the balcony of her mansion she beheld a handsome youth led away by gaolers to the gallows. Instantly she fell in love with him. That unhappy fellow who was the target of this “Love at first sight” had been the son of the king’s Priest. the Criminal was condemned to death for High way Robbery. As Badhirai expressed her desire to marry this condemned man above as her spouse. and admently stated that she would never marry anyone else, the minister greased the palms of the gaolers and saved the dacoit from the halter. Later the prime - minister gave Baddhirai in marriage to that thief. They lived happily for many days. But as illuck would have it, one night in a lighter vein she remarked that after all he was a Robber! Though he pretended to have swallowed the insult, he never forgot or forgave that humiliation. Later, one day he invited his wife to accompany him to a hillock, where he was proceeding, he claimed, to offer his grateful and thank-giving prayers to the deity that saved him from death. As she readily consented and went with him to the top of the hillock he shouted at her and cried, “Now fall in worship to any deity that you hold sacred, as you are going to meet with your end at my own hands in a few minutes. “How adacious had you been to call me a Robber at my own face!” She was much too shocked at this unexpected outburst. However, wise, clever and intelligent that she was, she decided to outwit him. “Whoever be a greater god than a husband to a chaste wife?” asked she and cajoled him, “Pray, permit me to circumambulate you, my Lord, and offer my humble prayers at your feet” As he nodded in consenm, she went round him, and kicked him down into the steep valley to his death. Thus the rogue met with the poetic justice. As Baddirai felt disgusted with the way of this mundane world, she embraced jainism, became a Sanyasini, and had her head completely tonsured according to Jain tradition and rites. But lo! Her hairlock again grew lustily in all magestic waves and curls. She was hence called “Kundalakesi”, a term which denotes curly hairlocks. This is the story which Nilakesi offers us. Our story in this book is broadly based upon it. But there is a vast difference throughout. Synopsis of our story that follows is as here under: the crown princess Komalavalli is the only issue of the king of Thanjavur, She is a scholer in Tamil. She met with Sundaranathan, a thief, and fell in love with him. As the king condenned him to death for his crime, the princess intervened to express her desire that she would ever remain a spinster if he is executed, as she had already given room in her bosom as her only husband. The king remmitted the sentence, and made him the chief of the Army. Prathapan, the king of Madurai, in his lust towards Komalavalli invaded on Thanjavur, sundaranathan met him on the battle-field and won his victory. The king, immensely pleased at this valour of his army- chief, gave his daughter in marriage to him. One day as the thief and the princess were mutually adoring each other in amorous speech and verse, Komalavalli expressed that he has not yet given up robbery nor murders. He was highly incensed. But he never showed his mind out. As summer came, Komalavalli was found suffering from the agonies of summer - heat. He thought it was the proper moment for him to avenge himself. He took her to some hill resort. On a moonless night as the couple were spending happy moments on the top of a hill, the robber burst out his anger and ordered her to offer her last prayers to her deity. She went round him with folded hands calling him as the only deity and at the right moment pushed him down the precipice to his doom. Later as she arrived home, her old father due to advance in age offered to abdicate his throne in favour of his daughter. But she refused the crown. she favoured only the Republican form of government, which was readily accepted by all. the king after his abdication had himself become an ordinary citizen, so also his daughter, and the kingdom became a Republic. This is the summary of the story of this book. A comparison would reveal the difference between this story and that of Kundalakesi. This story is divided into nine parts in this book. This heading of each part is named in the every words that are employed in the verses of the climax of such parts. Under the heading of Synopses of story proper in each part I have given the outlines of the narration. If the book is read in the footsteps of such synopses, the whole story will reel in easy flow. The Title I have chosen the title “Blown out lamp” in earnest and hope this would justify the cause. Corresponding verse to denote this title is found in the ninth part of this book. Komalavalli’s lamentation - “I am indeed a blown out lamp!” is called out from there to adorn the title of this book. Komalavalli was indeed a flame of glory in the fields of culture, knowledge, wisdom, and beauty. Her lusture diminished as she married a thief. The flame of her happy days was after all blown out. This is subtly expressed in her lamentation. Hence, the title of this book is shaped from the heroine’s tragie life proper. The book Some cheif aims of this book are: 1. If there is no good political system of govement, no country, no citizen can ever live in peace. Therefore it is that there are constitutions framed in each land. 2. The reason why citizens resort to robbery, larceny. murder etc. is poverty and unemployment. Therefore, it is the duty of the govt. to erase them out. 3. It is a mistake to call love ‘divine’, and lust “beast-like” Love is a common phenomenon, whereas lust is a unique feature. The essence of love is lust. Lust, in general, means happiness. Hence, it is not proper to praise one and condemn the other totally. 4. However much a lady is lettered and learned she is disappointed in her love or lust. Men can easily dupe them or cheat them. Women-flolk are seldom equipped with clairvoyance. 5. It is the duty of the government, of a state to convert the criminals into law-abiding citizens. 6. Those who are indulged habitually in criminal dealings since their childhood cannot be easily corrected. Bad habits never get erased quickly. 7. Republican form of government is by far better than one-man rule. These ideas are specially conveyed in this book- Besides, some ideals and imaginary description of natural events also find their place. Poems The verses of this book generally follow the pattern set by Post Bharathi in his “Kuyil Paatu” and Bharathi Dasan in his “Sanjeevi Parvatham” Following verse are composed in the metrics of “Venba” Generally a Venba contains four lines only, but those exceeding four and reaching 12 lines are called “Nedu Ven Paattu” or “Pahrodai Venba” நெடு வெண் பாட்டே முந்நாலடித்தே (தொல், செய், 470) The Tholkappiam sets 12 lines as maximum limit of such lyrics. Yapparungalak Kaarikai calls “Nedu Ven Paattu” as “Pahrodai Venba” Later grammarians also follow this rule. The Kaarikai does not prescibe the maximum number of lines of a Pahrodai Venba, though it mentions that such Venbas contain more number of lines or verses: அடி பலவாய்ச் சென்று நிகழ்வ பஃறொடையாம் (காரிகை) Whereas Tholkappiam prescribed the maximum limit, later grammarians conveniently omitted the same to accommodate the later innovations of succeeding generations. Hence it is permissible, they claim. There are no literature available to show Venba of many lines. Therefore, it is not right to include the same in Venba series. But there is a lyric called “Kali Venba” which qualifies the qualities of Venbas. Tholkappiar calls Kali Venba as Kaliven Paattu”. 1. Definition given in Tholkappiam for Kaliven Paattu” is as follows: ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலாற் றிரிபின்றி வருவது கலிவெண் பாட்டே. 2. There is a sub story under the title கனாத்திறம் உரைத்த காதை in Silappathikaram composed in Venba lyrics. Towards the end of that story Adiyarkku Nallar (a commentator) writers of say that poem is “Kaliven Paattu”. He says: - இது கனவென்னும் பொருளையே கருதாது, மாலதி கதையையும், தேவந்தி கதை யையும் கலந்து கூறிற்றேனும், உறுப்பழிவின்றி நடந்ததேனும் முந் நான்கடியி னிறந்து வருதலான் நெடு வெண்பாட்டாகாது கலி வெண் பாட்டாத லுணர்க. 3. This is Adiyarkku Nallar’s commentary. Hence, we call any stanza containing more than 12 lines, but composed in the metrics of Venba, as a Kali Venba. Many lyrics and verse of this book are of Kaliven Paattu metrics. Besides, Viruthappa, Aasiriyappa, and modern verses also are employed here. That easy style, sweet melody and modern meanings should adorn any poem is my dictum. Learned authors also consider such poems as new service to the Mother Tamil. How I hope that this book of mine containing such poems and ideals will be a new jewel in the crest of sweet Tamil. I wrote this only with such a cherised desire. If this book in its own humble way assists the growth of Tamil, I shall be highly elated and delighted as the one who gained the great prize. Anban SAMI. CHIDAMBARANAR STORY OF “ANAINTHA VILAKU” By Sami. Chidambaranar Sundaranathan was a great robber. He was often plundering the city of Tanjore. Dayanidhi was the king of Tanjore. His wife was Thankothai Devi. They had an only daughter - Komalavalli. She was of great beauty and was well educated in Tamil method of studies. She was the crown princess. The king’s men took great efforts for many days to catch the theif. At last their efforts fructified. On the outskirts of the city of Tanjore ran a big river, on the banks of which had grown great forest, dark with bushes and trees. There Sundaranathan was hiding himself. At last Irulappan one of the armdty chiefs of the king traced the thief and arrested him. The arrested robber was manacled adtnd dragged through the wide streets of the great city of Tanjore. People witnessing the scense spoke a thousand trivial things about the thief. His companions could not liberate him. Unable as they were they returned to the forest with grief. On the terrace of the palace the princess was playing with her friends. Attracted by the noise of the people she left her play and came running to the street. There she saw the handsome Sundaranathan; he saw her; their eyes met; that one moment of ecstacy! Oh! love had born at first sight. The army chief brought the thief before the king. The king ordered him to be put behind the bars that night and to be brought before him the next day. Irulappan was given great many rewards. Sundaranathan was locked in the prison; Vigilant soldiers were placed to watch him. II Sundaranathan was sleepless in the prison; the beautious form of the princess occupied his mind and eyes; he felt as if she hereself was present there; he sung with all the fanciful and mad delight of a lover; the soldiers laughed at his mad behaviour. His heartlessness left him because he had given his heart to a beautiful graceful damsel whom he loved with all frenzy. The princess, state in the palace was none the better. She dreamt of the thief. She was disturbed and dissipatted by the thought of her marriage with him may remain a dream for ever. Her friends were all in great sympathy of her state and strived hard to alluviate her grief. But instead it grew. III The next day dawned beautifully but it was a painfull beauty to the lovers. Immense throngs were pouring in at the kings court to witness the trial. The king came with his entourage and occudtpied the torone. He was sorrounded by wise ministers. Komalavalli was also present there because the king had told her about the trial and had taken her to the court. The thief was produced before the king. The king levelled many charges against him. But the robber unafraid retorted “Oh king! you are also a thief; murderer. There is no difference between us” he said. The king infuriated took his sword to behead the thief. But Aaimathiyan. the chief minister of the king stopped the king; and admonished, “Oh king; let us know what the robber implies and then punish him.” His rage alluviated the king settled in his royal seat. “Oh thief” interrogated Aaimathiyan “how there come no difference between the king and you? tell me” Replies the robber. “Yes. Your majesty! I commit thievery; and I kill those who try to trap me. Moreover I rob only the rich and I kill only in self defence. But the king, What he does? He robs the toiling peasants and labourers in the name of taxes; he commits homicide in wars. Is it not robbery? Is it not murder?” The learned counsellor said “But oh thief! the king’s acts are aimed at the country’s welfare. It is accepted by the wise and admired by many a man. It is done in public. But your act is despised by all. The thief could not answer; he remained silent. Terible wave of silence reigned at the moments that glided away. At last the king consulted the counsellors as to what punishment is to be given. It was agreed that he should be beheaded. But vetrinathan, a learned counsellor of the court interfered and said “your majesty! this man is young and brave; moreover he is wise. Kill him not. Reform him and make him usefull to the country’s service”. But the people rediculed the learned words of Vetrinathan. The king also turned deaf ears of his words. The death Sentence was confirmed. On the pro nonuncement of the death sentence the robber was bewildered but the courtiers were happy. The eyes of the thief and the princess met. The thief fell down in great grief. The princess was also deeply grieved and she swooned. The courtiers wondered at the happenings. The court was dispersed and the princess was taken to the palace. IV The punishment pronounced upon the thief plunged the princess in great sorrow. Her heart throbbed at the thought; She swooned. Everybody in the palace including the king and Queen attended her. They tried their best to heal her ailment but it did not. The next day’s sun rose above the rough mountains and the vast seas. That day had been fixed for the beheading of the robber. The princess, encouraged by her pure love, exhibidtted it to her parents. They were greatly bewildered. “Your love on the robber is not love” said the king. “But it is mere lust. Forget it” Thankothai Devi also persuaded her. But Komalavalli would not give up. She argued that love and lust are the same and ultimately said that she would not live if she was not married to her hand some lover. Then the Queen also persuaded the king to change the death sentence. The king took great pity at the lover of his beautiful daughter. He sent a signed message, altering the death sentence. A girl of the palace hurried to the execution place. V It was noon. The scorching sun was at the zenith. The robber was standing on a raised place. A great mob was around him excited. Some people pitied him and others were happy that the robber is going to die. The king’s officer has given the command. The killer raised the sword over the thieves neck. All of a sudden a cry stopped him. A girl was running towards the killer shouting “Stop! kill him not! The king has altered the sentence!” The message was handed over to the official. The execution was stopped. The robber was taken to the king’s court. The people were astonished by the happenings of the day. In the court. the king declared. “I am impressed by Vetrinathan’s words. Hence only we stopped the execution. We think it befitting that this young man may be reformed. What do you opine? Vetrinathan approved of the king’s action and suggested that Sundaranathan may be made the chief of the army. Aaimathiyan approved of the king’s action and suggested that Sundaranathan may be made the chief of the army. Aaimathiyan also said that he would accept the same provided the robber promises that he behave in a good manner. Then the king questioned the robber as to his intention. The robber replied “Your majestry, it was my poverty which compelled me to commit robbery. From now onword I would be a different man; and I would do unto perfection whatever you command” At once the robber was made the commander of the king’s force. The king gave him fabulous prizes. Some of the courtiers hated the king’s decision but some others appreciated it. The king went to the princess and told her about the happenings; her sorrow vanished like snow before the sun. VI Madurai - it was an adjacent territory to Tanjore and its king was Prathabhan. Many a king was ready to marry their daughters to him. But he did not assent to many. One fine evening he went to the garden in his palace. He sat on one of the many beautiful benches in the park. In a nearby treebranch were perched two lovebirds. They were wooing. On seeing the love of the birds, a sudden flash of a feeling had come into him. Henceforward he became sorrowful. The ministers in his court found that the only penance to his newborn sorrow is marying a beautiful girl to him. They approached the king and Sugunan, the Chief minister told him about the beauty and intelligence of Komalavalli. The king accepted to marry her. Message was sent to Dayanidhi. After waiting for many days they got the reply from Dayanidhi declining the offer. Prathabhan got enraged. He invaded the city of Tanjore with his forces. Dayanidhi convened the court immediately. The spies of the king informed him of the unpending invasion. He was astonished. Even the ministers could not utter a syllable. But Sundaranathan rose up. “I shall go with my forces and vanquish the proud alien king.” he swore. The king also happily granted permission. The armies faced each other on the battle field in the outskirts of the city. Prathabhan wad defeated and his forces were driven away. The king and the people were filled with joy on hearing about the great victory. He was given a grand welcome in the court. The king declared “I give my daughter Komalavalli in marriage to Sundaranathan as a trophy of his great victory. She also is in deep love with him.” Many a man appreciated the decision; a few people hated this. The royal wedding was celebrated in a grand manner on the fixed day. The king confered many boons upon the people. The united lovers revelled in great pleasure VII There was a pleasant park behind the palace. In the park was there a beautiful pool/ with blooming lotuses. The lovers were there, speaking about their love, their dreams and so on. The princess requested him to sing a song. He sang a song in which he said that the pure love of the princedts alone did make him a reformed man. Then Komalavalli also sang a song. She sang “Oh my dear! you’ve robbed my heart. I cannot bear even a little while of parting. So you’ve n’t left your old profession of robbery” But the old robber could not catch the meaning. He got his feelings lacerated. He got offended. But he did not show out his anger. Then they left the park and went to the palace. VIII From then onwards the robber got perplexed in mind. thoughts of his old guilt tormented him. He found suspicion in the eyes of the others whenever they locked at him. He was haunted by an ever-growing sense of guilt. The royal life became sour to him. He began to hate Komalavalli. He awaited a chance to take vengence upon her. The Summer season also had come. The princess got inflammation of skin owing to excessive heat of the climate. Nathan thought that apt chance had come to execute his vengence. He proposed that they may go to Nilgiris where it would be pleasant to be in the summer season. She also accepted. They reached Nilgiri with their attendants. They settled in a palace. Many days glided by. It was a newmoon day. On that evening they reached a mount. Below the mount was a deep canyon. It became dark. The princess proposed that they may go to the palace. But the thief said “you humiliated me. You called me a thief your vanity. I am going to kill you. You now itself pray your god.” The princess thought in her mind that she would kill the trecherous robber. So she said to the thief, “you are my Deity. I do not pray any god but you. Please stand up. I will come around you thrice and pray you.” The robber also stood up. She came behind as on the pretence of prayer and pushed him from behind. He was thrown into the deep canyon and was elimenated for ever. But the princess could not bear the sorrow of it. She began to cry. The attendants found her in that state. They took her to the palace. The next day they left for Tanjore. The city was plunged in grief. The people were all in sympathy for the pitiful plight of the princess. The aged king also became fed up with his kingly status. He convened the court and declared “My dear citizens! I have grown old! The Princess became the most pitiable woman because she married a robber who is to rule this country. We shall like to know your opinion.” The chief minister argued “Komalavalli may ascend the throne. Her act of killing the thief was an act of courage. It is no sin.” All the courtiers accepted the view. The king stared interrogatively at her face. She spoke “I am doomed because I did belive in false love. “The mouth of a furnace can be sealed but one cannot shut the mouth of the gossipping world. Moreover, people’s government is the best government. People can rule themselves in a better way than we rule. So let this land become a peoples land, a republic.” The king and other accepted her words. The king expressed his wish that he would be one of the citizens; helping the rule of the poeples republic. Komalavalli also nodded her assent to be a citizen helping the republic to thrive, the republic of the great Tamils. The people formed in a great republic; elected a repreentative assemply, made one among them the chief and lived very happily thence forward. சிந்திய கண்மலர் (கலிவெண்பா) வாருங்கள்! எல்லோரும் ! வாருங்கள் ! எல்லோரும் ! பாருங்கள் ! இந்தப் பழிவளர்க்கும் பாதகனை பொல்லாத கள்வன்! பிடிபட்டான்! போக்கிரி! நல்லோர்கள் கண்டஞ்சும் நஞ்சனையான்! நற்செயல்கள் என்றும்தன் நெஞ்சத்தில் எண்ணாத தீச்சிலந்தி! கொன்று குவிக்கும் கொடுந்தொழிலே கொள்கையான் நீருள்ளே மூழ்கி நெடுநாள் கிடந்தாலும் ஊறாக் கருங்கல்லை ஒத்தவலி நெஞ்சுடையான்! மாறாகச் சினத்தையே மனமாகப் பெற்றுள்ளான்! ஏறுபோல் செல்கின்றான்! என்னே இவன் ஆண்மை! வானம் பளபளக்க வாழ்கின்ற மீன்தொகையைக் காணக் கணக்கெடுத்துக் காட்டிடினும், மக்கள் உடலம் வருந்தவெழும் நோய்கணக் கிட்டாலும், கடலில் வருந்திரையைக் கண்டு பதிந்தாலும், ஆற்றின் மணலையெலாம் அக்கக்காய் எண்ணிடினும், காற்றின் பரப்பை அளவிட்டுக் காட்டிடினும், தீயன் இவன்செய்த தீமை தொகைகுறிக்கச் சாயுமோ என்றுபல சாற்றிப் பொதுமக்கள் ஓவென் றிரைத்தெழுந்தார் ஓசைப் பெருங்கடலாய்; காவலர்கள் அந்தக் கடுமறவன் கைகளிலும் தாள்களிலும் தக்க தளைபூட்டி விட்டார்கள் வாள்கொண்டார் சுற்றிவர வாய்த்த மிகப்பெரிய சிங்கத் தையிழுத்துச் செல்வதே போல்கரந்தை எங்கும் பரபரப்பு ஏற்படவே அஞ்சாத சுந்தர நாதன்எனும் சோரனை வீதிவழி வந்தவர்கள் காண நடத்தி வருகையிலே இந்தவிதம் எல்லாம் இயம்பிப் பொதுமக்கள் கூடினார்; ஓடினார்;கூச்சல் கடல்குடைந்தார்; பாடினார் தம்மனம் போல்; பாய்ந்து குதித்தார்கள். காவலர்கள் கூறுவது இக்கொடிய கள்வன் இருக்கும் இடங்காணத் திக்கொல்லாம் சென்றார்; பல ஆண்டு தேடி மலைகளும், காடுகளும், மக்கள்வாழ் நாடும், அலைகடல்சூழ் தீவுகளும், ஆற்றுப் பெரும்புதரும் எத்தனையோ வீரர் இராப்பகலாய்ச் சுற்றினார் அத்தனைக்கும் தண்டாமல் வாழ்ந்திருந்தான் ஆண்மையுளான். இன்னவனை இன்றே பிடித்தான் இருளப்பன். மன்னன் மனமகிழ்வான்; மாணப் பரிசளிப்பான்; காவலரில் முன்னவனாய்க் காணும் படிவைப்பான்; யாவரும் போற்றிப் புகழ்வார் இவன்திறத்தை இப்பெருமை எங்கட்கு வாய்த்திலதே! எம்மீது தப்பில்லை; யாம்செய் தவக்குறைவே! என்னப் பொறாமை மனத்தெழுந்த வீரர் புகன்றார்கள் அறாத துயருடனே சென்றார்கள் அங்கொருபால். விளையாட்டுப் பிள்ளைகள் விளம்புவது தங்கத்தாற் செய்த பதுமை தரையுருண்டு பொங்கும் புழுதி உடல்பூசி நிற்பதுபோல் அங்கம் முழுதும் அழுக்கால் ஒளிகுறைந்தார்; தங்காமல் ஓரிடத்தும் தாண்டிக் குதித்தெழுந்தார். ஓடி விளையாடி ஓய்வின்றிச் சண்டையிட்டுக் கூடிக் குலாவும் குழந்தைகள்; கூட்டமாய் கூரையிலும், மாடியிலும், கோட்டு மரங்களிலும், ஏறிக் குரங்கினம் போல்இருந்து நோக்கினார்; அப்பாவோ! இத்திருடன் இன்றே அகப்பட்டான் எப்போதும் இந்நகரம் பேசும் இவன்பேச்சே! ஆழக்கண் வாய்க்கரையில் ஆரும் புகமுடியாத் தாழம் புதர்நடுவே தங்கி மறைந்தானாம்! இச்செய்தி கண்டான்; இருளப்பன் நம்வீரன்; அச்சம் சிறிதறியான் அக்காட்டின் உட்புகுந்தான்; கட்டிக் கொணர்ந்துவிட்டான்; காண்பீர் அவன்முகத்தை துட்டத் தனமெல்லாம் துள்ளிக் குதிப்பனவே! கெட்ட பயலிவன்பேர்க் கேட்டதும் நம்மரசன் வெட்டித் தலைவீழ்த்த ஆணை விரைந்தளிப்பான்; விட்டுவிட மாட்டான்; விருப்பமுடன் நாமினிமேல் வெட்ட வெளிச்சத்தும், வெண்ணிலாப் போதினிலும், அப்பக்கம் சென்றுநாம் ஆடிவிளை யாடலாம் எப்பொழுதும் என்றார் இனிது. சான்றோர் கண்டு வருந்தல் வாடும் பயிர்க்கு மழையைப் போல் - கெட்ட வறுமை அரக்கனால் துன்புறும் - மக்கள் நாடும் சுகங்கள் பெறும்படி - இந்த நாட்டில் பணிசெய் துவாழ்ந்திலன் - இவன் கேடு மனங்கொண்டு செய்ததால் - இந்தக் கீழ் நிலைக்காளா கிவிட்டனன் - என்று கேடும் அறிவுடை மாந்தர்கள் - அந்தத் தீரனைக் கண்டு மொழிந்தனர். நம்மை மனத்தில் நாடுவோர் - அதை நாளும் புரிந்து மகிழுவார் - எந்தத் தின்மை யவரைச் சூழினும் - சற்றும் தீரம் குறைந்திடல் இல்லைகாண் - பெருந் தம்மை இவன்கை விடுத்தனன் - வெறுந் தறுதலை யாகித் திரிந்திட்டான்- இவன் தன்மை யழகும் பயனின்றி - வீழ்ந்து வாடிய பூவினைப் போன்றவே. முள்ளுப் புதர்நிறை காட்டுள்ளே - ஒரு முதிர்ந்த கனிமரம் நின்றிட்டால் - அதைக் கொள்ளக் குறுகுவர் யார்உள்ளார் - இந்தக் கோபக் குறிகொண்ட வாலிபன் - துட்டக் குள்ள மனிதர்கள் சேர்க்கையால் - நல்ல கூட்டம் பெறக் கெட்டனன் - இதில் எள்ளளவும் ஐயம் இல்லைகாண் - என்று இயம்பி நின்றனர் வருந்தியே. இந்நிலத்தில் வாழ்வின்றி என்றும் பெரும்துயரில் மன்னுவோர் துன்பமெலாம் மாண்டு மறைந்தொழிய நல்லறங்கள் செய்திருந்தால், நாள்பலவாய்ச் சூரியன்றன் பொல்லாக் கடுவெயிலால் பொன்றும் நிலையடைந்த நெல்லின் பயிரும் நிலையழிந்த புற்பூண்டும் சில்லென்று மேகம் செறிந்து மழைபொழியத் தங்கள் துயரம் தவிர்ந்து தலைநிமிர்ந்தே எங்கும் பசுமை எழில்விளங்க நிற்பதுபோல் ஆனந்த மாகி அனைவோரும் வாழ்த்துவார். ஈனன் எனக்கூறி எள்ளுவார் யாருமிலர்; ஏழைக் குடிமக்கள் இன்பம் பெறவுரைத்தல் பாழுடம்பை நல்லுடம்பாய்ப் பண்ணும் வழி, இந்த உண்மையைக் காணான், உலகோர் பழிமொழியத் திண்மை உடையான் திருடன் கொலைஞனாய் வாழ்ந்தான்; அறத்தின் வழியறியான்; என்று துயர் ஆழ்ந்து பலசொல்லி நின்றார் அறிவுடையோர். பெண்கள் பேச்சு உச்சியிலே கார்மேகம் வாழ உடம்பினிலே பச்சைச் சிவப்புமயில் மஞ்சணிறப் பட்டுடுத்திக் காதிலே தோடணிந்து கையில் வளைதரித்து வீதி விளக்கேபோல் வீசும் பணிபூண்டு மின்னல் கொடிபலவும் மேதினியில் வந்துலவிக் கன்னல் மொழிபெய்து காதற் பயிர்வளர்த்து நின்று நடப்பவென, நேரிழையார் பற்பலரும் ஒன்று குழுமினார்; ஒண்புருவ வில்லினிலே கண்ணம்பு பூட்டிக் கடிதெறிந்தார்; வஞ்சனுடல் வண்ணத்தைக் கண்டு வளைகோத்த கைகளைத்தம் கன்னத்தில் ஊன்றினார்; கண்ணிமைப்பு நீக்கினார்; என்னடி! ஆயி ! இவனுமொரு கள்வனோ! சித்திரத்தும் காணச் சிறந்த வடிவழகன்! இத்கைய வீரன் இழிதொழிலைச் செய்வானோ! பூரணச் சந்திரனைப் போன்ற முகமுடையான்! மாரனும் மண்டியிட்டு மன்றாடும் பேரழகன்! பால்போல் வெளுத்த பல்லழகுக் காரனிவன்! சேல்போல் விழியுடையார் சிந்தை குடிபுகுவான்! என்று பலர்பேச இளையாள் ஒருமங்கை நன்று புகன்றீர்நீர் நாட்டு நடப்பறியீர்! தெய்வபத்திக் கான திருவேடம் கொண்டவர்கள் வையகத்தில் பாதகராய் வாழுவதைக் காணீரோ! நாட்டின் நலத்துக்கே நாங்கள் உழைக்கின்றோம்! கேட்டை அழிக்குமுன் கீழ்ப்படியோம் ! யார்க்குமெனக் கூட்டத்தில் நின்று குதித்துப் பலபேசி வீட்டுக்குள் வேறுபல செய்திருக்கும் வீணரைநீர்! கண்டும் அறியீரோ! கேட்டும் உணரீரோ! உண்டோ உமதகத்தில் உண்மை தெரியுமொளி? நல்ல மரகதம்போல் கண்கவரும் நஞ்சினிலே கொல்லும் கொடுமை குடியிருத்தல் காணீரோ! கண்ணாடி போலக் கவிழ்ந்து முகம்பார்க்க ஒண்ணும் தெளிநீரின் உள்ளே பலநஞ்சுப் பூச்சிகளும் வாழ்ந்து புசிப்போரை மாய்க்கின்ற ஆச்சிரியம் நீங்கள் அறியீரோ! தங்ககைள்! தங்க விலைமதிப்பைத் தாழ்வாகச் செய்யுலகம் அங்கதனிற் சேர்ந்திருக்கும் செய்தி அறியீரோ! வாச மலர்ச்சோலை வாழ்ந்துவரும் தென்றலுடன் நாச விடக்காற்றுச் சேர்ந்து நலியாதோ! ஆதலால் நீங்கள் அழகால் மயங்காதீர்! மாதரீர்! சொன்ன மடமை மொழிமறப்பீர்! என்னக் குயிற்குலத்தார் உண்மையிவள் சொல்லென்றே பன்னி மெதுவாகப் பாவையரும் சென்றார்கள். தோழர்கள் செய்கை கூட்டாளிக் கள்வர் குழுவின் நடுவினிலே காட்டாமல் தம்முருவைக் கண்கலங்கிச் சென்றார்கள்; தங்கள் தலைவனைத் தப்பிவிக்கச் சிந்தித்தார் எங்கெங்கும் காவலர்கள் எச்சரிக்கை யாய்ச்சூழ்ந்து செல்லுவதனா லொன்றும் செய்ய வழியின்றி மெல்ல நழுவிவிட்டார் மிக்க துயருடனே. இளவரசியும் கள்வனும் ஒருவரையொருவர் காணுதல் இந்த வகையாக எல்லாலோரும் சூழ்ந்துவர அந்தப் பெருவீரன் தன்னை அரண்மனையின் வீதி வழியாக விரைந்திழுத்து வந்தார்கள்; ஓதும் பெருவிழாவில் ஓங்கும் ஒலிபோன்ற மக்கள் குரலோசை மன்னன் மகள்கேட்டாள்; எக்கா ரணமிந்த ஓசைக்கு எனநினைந்தாள்; சேடியர் கூட்டமுடன் சேர்ந்துவிளை யாடியவள் ஓடியே வந்துற்றாள் உப்பரிகை மீதினிலே கூட்டத்தை நோக்கினாள் கோமள வல்லியவள் வாட்டமிலாத் தோற்றம்! வளர்ந்தபிறை போன்றமுகம், ஆர்வப் பயிர்வளர ஆண்மை மழைபொழியும் மார்பம் உடையான்! மனக்கினிய னாய்நின்றான்! குன்றனைய தோள்கள் ! குறையாக்கெம் பீரநடை அன்றலர்ந்த தாமரையே அன்ன திருக்கண்கள்! உள்ளான் இக்கட்டழகன்! ஊர்க்கா வலர்கூடிக் கள்ளனைப்போல் கட்டி இழுக்கின்றார் ஏனோதான்? என்று பலவெண்ணி இமையாமற் கண்மலரைச் சென்று முகங்குளிரச் சிந்தினாள்; சுந்தரனும் அண்ணாந்து பார்க்க அரண்மனையின் மாடியிலே தண்ணாரம் பூண்டிருந்த தையல் ஒருத்திபல விண்மீன் புடைசூழ வெள்ளை நிலாவீசித் தண்மதியம் ஒன்று தவம்புரிந்து நிற்பதுபோல் காரிகையாள் நின்றுதன் கண்மலர்கள் வீசுவதை வீரனுந் தான்கண்டான் விட்டெறிந்தான் தாமரையைச் செந்தா மரையோடி செவ்வரிசூழ் வண்டுகளைப் பைந்தேன் அருத்துதற்குப் பற்றுமொரு செய்கைபோல் அன்னத்தின் கண்களுடன் அன்பாற் கலந்துவிட மின்னல் இடையாளும், மெய்மறந்து நின்று விட்டாள் நன்றாய் அவனுருவை நாட்டிவிட்டு நெஞ்சினிலே அன்றே அவன்மார்பில் அன்பைப் பதித்துவிட்டாள்; காதல் பெருநோக்கால் கட்டழகன் ஆண்மைதனை மோதி அழித்தவளும் மோக வலைவீழ்ந்தாள்; கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல வென்று வள்ளுவர் சொன்ன மொழிபலிக்கச் சுந்தரனும் அப்பொழுதே தேங்கிப் பெருமூச்சு விட்டான்; திகைப்புற்றாள்; பாங்கிருந்த தோழியரும் பார்த்தார் அவள்நிலையை; கூட்டம் மறையுமட்டும் கண்ணிமைகள் கொட்டாமல் தீட்டாத சித்திரமாய் நின்றாள் தெருநோக்கி; மாந்தர் திரள்மறைந்த பின்னர், மதிமுகத்துச் சாந்தணிந்த கூந்தலைச் சலிப்புற்ற பார்வையாளின் வாடி மனம்சோர் வடிவமதைத் தோழியர்கள் வேடிக்கை பேசி விளையாடக் கொண்டணைந்தார். கள்வனை அரசன்முன் கொணர்தல் பெற்றோரை யன்றிப் பிறபொருள்கள் வேண்டுவன முற்றாக வாங்க முடியும் கடைத்தெருவும் வானகத்தே யாம் பெற்ற வாழ்வுளவோ என்றறிய ஆனவரை யோங்கி அழகிருக்கும் மாடங்கள் மீதே முகிலிருந்து மிக்ககுளீர் காட்டுகின்ற வீதி களும்கடந்து வீரம் நிறைந்தபெரும் அஞ்சாத சுந்தர நாதன் அவன் தன்னைக் கொஞ்ச நேரத்திற்குள் கொண்டணைந்தார் மன்னன்முன் மன்னன் தயாநிதி மகிழ்வடைந்தான் அப்போது; கன்னெஞ்சச் சுந்தரனைக் கட்டிக் கொணர்ந்தவர்க்குத் தக்க பரிசளித்தான்; தாழாமல் நீரிவனை இக்கணமே கொண்டு சிறைக்குள் இருத்திடுவீர்! நாளைப் பகற்போதில் நம்முடைய மன்றத்தில் நீள விசரித்து நீதிமுறை செய்வோம்! என்ன மொழிந்தன்பின் எல்லோரும் போய்விட்டார். மண்ணுளோர் நெஞ்சம் கலங்கி மயக்கமுறப் பண்ணும் பெருநோயைப் பற்றிப் பிணித்தாற்போல் அன்னவ னைச்சிறையில் தள்ளி அடைத்தார்; இரவு விடியுமட்டும் காவலர்கள் எல்லாம் உறங்காமல் காத்தார் ஒருங்கு. கருகிய கஞ்சம் அஞ்சுகத்தை மன்னன் அளித்த சுடர்விளக்கை நெஞ்ச வலைப்படுத்தி நின்றதொரு சுந்தரனும் தூங்கான் விழித்திருந்தான்; துக்கக் கடல்படிந்தான்; ஆங்கே தான்பார்த்த அழகான பெண்மயிலை எண்ணியெண்ணி இன்புறுவான்; ஏங்குவான் நெஞ்சாகும் கண்ணினாற் கண்டு கலங்குவான்; சிந்திப்பான்; கள்வன் மனக்காதல் பாருலகிகல் நான்கண்ட பாவையர்கள் பற்பலபேர் ஆருமென் நெஞ்சினிலே அஞ்சாமல் வந்ததிலை; எத்தனையோ மங்கைமார் என்னை மணப்பதற்குச் சித்தத்தில் எண்ணியெனைச் சேர்ந்துரைத்த காலமெலாம் சற்றும் உமைவிரும்பேன் ! நான்மணக்கச் சம்மதியேன் முற்றும் வெறுக்கின்றேன்! மொய்குழலீர்! என்றுரைத்தேன்! வெப்பத்திற் பட்டுருகும் வெண்ணெய்யைப் போலுள்ளம் இப்படி நைந்துருகச் செய்தாள், எழிலரசி! உப்பரிகை மேல்நின் றொருபூங் கொடியென்மேல் ஒப்பரிய நீல மலரை உதிர்த்துவிட்டாள்! அந்நீலப் பூவைநான் ஆவலாய்க் கண்வழியே என்னெஞ்சின் உள்வைத்தேன்! இன்புற்றேன்! என்செய்வேன்! கொல்லும்விலங்கு குடியிருக்கும் காடுகளில் செல்லும் பொழுதும்நான் சிந்தை அழிந்ததிலை; நின்றுகீழ் நோக்கின் நிலைகலங்கச் செய்கின்ற குன்றின்மேல் ஏறிக் குதித்தபோ தும் அஞ்சேன்! வெள்ளங் கரைபுரண்டு வீழப் பலமரங்கள் தள்ளி அணையுடைத்துத் தாங்காமல் ஓடும் நதிகளைத் தாண்டுதற்கும் நான் சிறிதும் அஞ்சேன் புதியவழி முட்புதர்க்குள் போவேன் துணிவுடனே! கண்கொண்டு பார்த்தால் கலக்கமுறும் காரிருளில் மண்முழுதும் சுற்றி மகிழ்வேன்! மனங்கலங்கேன்! சிங்கம் புலிகளெனைச் சீறி எதிர்த்தாலும் அங்கே தடுப்பேன்! அழிப்பேன் அவைமாள! வீராதி வீரரெலாம் வீழ்ந்தே தரைபுரளத் தீரமுடன் போர்செய்வேன்! தீர்ப்பேன் அவருடலை! உள்ளமும் பேச்சும் ஒருதன்மை யில்லாமல் கள்ளத் தனஞ்செய் கயவரைக் கண்டாலும் எள்ளத் தனைகூட அஞ்சா(து) எதிர்த்தவரைப் பள்ளத்தில் வீழும் படிவெற்றி பெற்றிடுவேன் எக்காலும் சோராத தன்மையுள என்னெஞ்சம் இக்காலம் வாடி இருக்கும் திறமறியேன்! கன்னிகையின் வேல்விழியும் கட்டழகும் சேர்ந்தென்னை இந்நிலையில் வைத்தனவே ஆஆ! இதுவியப்பே! ஆ! வென் மதியிருந்த வாறென்? அறிவில்லேன்! பாவி அவளிவ்வூர்ப் பார்த்திபன் செல்விதான்! எட்டாத மாங்கனியை எய்த ஒருசிறுவன் கொட்டாவி போக்கல்போல் ஆனேன்! கொடியனேன்! வானத் திளம்பிறையை வாவென் றழைத்தழுது கானல் குரல்காட்டும் கைக்குழந்தை போலானேன்! பஞ்சவர் ணக்கிளியைப் பார்ப்பதற்குக் கண்ணில்லான் கொஞ்சிக் கொடுவென்று கேட்பதால் என்னபயன்? வாயில்லா மங்கை வளர்கீதம் கற்பதனால் ஆய பலன்என்ன? அங்கோர் மலைமுகட்டில் செந்தேன் அடைபிளந்து சிந்த அதைவிரும்பி நொந்துதன் நாநீட்டும் நொண்டி பெறும்பயன்என்? இந்த விதமெல்லாம் எண்ணி அவனிமைப்பில் சிந்தை பறிபோகச் செய்திருந்த நேரத்தே! மானேர் விழிக்குமரி மங்கை மலரணிந்து தானே அவனெதிரில் புன்முறுவல் தந்திருக்க, மன்னன் மகள்வந்தாள் என்று மருண்டவனாய்ச் சொன்னான் பலமொழிகள் சோர்ந்து கள்வன் கூறுதல் சிந்து நெஞ்சில் குடிபுகுந்தாய் - நிலை நின்று கண்காட்டி மயக்கினை மானே! அஞ்சும் வினைபுரிந்தேன்! - இனி அத்தொழில் செய்திலேன்! விட்டனென் ஆணை! நஞ்சாய் எனை வருத்தேல் !- ஒரு நன்மொழி தந்துயிர் காத்தருள் வாய்நீ! வஞ்சி யிணைவிழியால் - மன வல்லமை தீர்ந்து மறைந்தது மாதே! பட்டினி வாதையினால் - இந்தப் பாரினில் துன்பம் பிணிகொண்டு தவிப்பார் கிட்டிய நல்லுணவால் - நெஞ்சம் கிளர்ந்து மகிழ்ந்து களிப்புறல் போலே கட்டிக் கரும்புனையே - நான் கண்டதும் காதல் கொண்டு மகிழ்ந்தேன்; மட்டித் தனமதனால் - இந்த மாநில மீதினி தீதுகள் செய்யேன்; காதல் தனையிதுநாள் - வரைக் கண்டறியேன்; சொல்லக் கேட்டதேயன்றிக், கோதை மார்பலரால் - மனம் கொள்ளை கொள்ளாமற் பிழைத்தனென்! இந்நாள், மாதே! உனதழகால் -இன்று மனங்கவர் காதல் இதுவென்று கண்டேன்! ஏதோ இதுவறியேன்! நீ என்உள்ளம் கொண்டனை ! வீழ்ந்தனென் உன்பால்! மன்னன் மடமகளே! - ஒளிர் மதிமுகங் கொண்டென் மனத்துள் நுழைந்தே என்னைப் புதுமையிலே - நீ இருத்தினை பித்தன்போல் ஆயினென் நின்றேன் உன்னால் குறையறிந்தேன் - இனி ஒருவகைத் தீமையும் செய்திட மாட்டேன்! கண்ணே! இனி வருத்தேல்! - என்றன் கையில் அணைந்தருள்! கண்கவர் தேவி! (கலிவெண்பா) கள்ளனிவ் வாறுரைத்துக் காரிகையைக் கைப்பிடிக்க மெள்ள வெழுத்திருந்தான்; மின்னற் கொடிமறைந்தாள்; உள்ளத்தே உண்மை உணராத தால்அவனும் துள்ளிக் குதித்தான்; துழாவினான் அங்கெல்லாம்; உள்ளத்தால் எண்ணும் உருவம் கனவினிலே மெள்ள வெளிப்படும்; மெய்மை அவனறியான் அன்னான் மனத்துள்ளே வாழ்ந்த அவளுருவே கண்ணின் எதிர்தோன்றிக் காட்சி அளித்ததெனக் கண்டறி யாமல் கதைகள் பலசொல்லித் திண்டாடி நின்றாள் திருடன்; அதுகாலை, காவலர் கடிதல் காவலர்கள் அன்னவனைக் கண்டு வியப்புற்றார்; ஆவா! இதுவென் ! அறியோம்! உளறல்! சிறையுள் இருக்குமிவன் சிந்தை கலங்கி அறைவான்! ஏதேதோ; ஐயமிலை பைத்தியமே! என்றவர்கள் பேசி ஏண்டா உளறுகிறாய்! நன்றறியாக் கள்வா! பிதற்றாதே! நன்றாய் உறங்குவாய் ! நாளை உயிர்கவர் வான்மன்னன் மறைந்து விடும்உன்றன் மனத்துயரம் என்றார்கள் கள்வன் விடை மன்னவன் பெண்பால் மனத்தை அடகுவைத்த அன்னவன்,பேதைகாள்! ஆய்ந்தென் நிலையறியீர்! பித்தனென் றேதேதோ பேசி இராமுழுதும் அந்தச் சிறைக்குள் இருந்தார்கள். அவ்விரவில் நெஞ்சம் பறிகொடுத்த நேரிழையாள் பட்டதுயர் கொஞ்சம்அல வெல்லாம் கூறுவதற் கார்வல்லார்? அரசகுமாரியின் துன்பம் நீலத் துகில்விரித்து நித்திலங்கள் மேள்பரப்பிக் கோலஞ்செய் வெள்ளிக் குடமொன்று வைத்ததுபோல் ஊடலிலே சோர்ந்திருந்த காதலர்கள் உள்ளமலர் கூடலிலே செல்லக் குமுதம் இதழ்விரிய, வெள்ளை நிலாச்சிந்தி, வெங்கதிரால் துன்புற்றோர் உள்ளமகிழ் வெய்த உதித்தான் மதிவானில்; வந்த மதிகண்டு வாழ்த்தினார் காதலர்கள்; இந்த நிலவமுதை எல்லோரும் உண்டிருந்தார்; கள்வனிடம் நெஞ்சு பறிபோன காரிகைதான் ஒள்வளைகள் சோர, உடம்பெல்லாம் தீச்சூழ, நாட்டியம் செய்பதுமை நாணற்று வீழ்ந்ததென ஆட்ட மெலாம்விட்டாள்; அமளியின் மேற்கிடந்தாள்; காய்க்குமொரு மாங்கன்றைக் கத்தியினால் வெட்டிச் சாய்த்த தெனக்கிடந்தாள்; சாம்பினாள்; தேம்பினாள்; நல்ல மலர்க்கொடியை நாசமுற வேரோடு கல்லிக் கடுவெயிலிற் காய விடுத்ததென முல்லை முறுவலாள் சோர்ந்தாள் முகமலர்தான்; கொல்லைமான் நெஞ்சம் குமுறினாள்; வாடினாள்; கஞ்ச மலர்ஒன்று கருகிக் கிடந்ததெனப் பஞ்சணையில் வீழ்ந்து படுத்திருந்தாள்; பாவைநிலை கண்டதுணைத் தோழிமார் கண்மலர்கள்; மூடவிலை; உண்டாளோ போதை! உணர்ச்சி மறந்ததென்? ஏதோ மயக்குற்றாள்; சொல்லாள் எமக்கொன்றும்; தீதோ இவளுடற்கே! தேறோம்! எனப்புலம்பிக் கொல்லனுலைக்காற்றேபோல் கோதைமார் மூச்சுயிர்த்தார்; அல்லி மலர்க்கொடியை ஆற்றாத வெய்யிலிலே கிள்ளி யெறியக் கிடந்து துவள்வதுபோல் கொள்ளைச் சிரிப்புடைய கொவ்வை யிதழாளும் சேர்ந்த படுக்கையிலே சிந்தை கலங்கிமுகம் சோர்ந்து கிடந்தாள் சுழன்று. ஆச்சிரியப் பேரிருள் ( கலிவெண்பா) நீலநிறக் கம்பளியை நீணிலத்தின் மேல்விரித்துக் கோலப் பசும்பொன் குடம்நிறுத்தி வைத்ததுபோல் காலைக் கதிரோன் கடல்முகத்தில் தோன்றுமுன், சோலைப் பறவையெலாம் சோர்வின்றிக் கொக்கரித்துக் கூடிக் களித்துக் குதூகல மாயிருப்பப் பாடும் பறவையினம் பாடி மகிழ்ந்திருக்க, வன்னச் சிறைக்குலங்கள் வாரிப் புசிப்பதற்கே அன்னத்தை யெங்கும் அள்ளி யிறைத்தாற்போல் முல்லை மலரும் முறுக்கவிழ்ந்த மல்லிகையும் எல்லையிலா வாசனையோ டெங்கும் மலர்ந்திருக்க, கொண்டான் கொதிப்டைந்து கூறும் மொழித்தீயால் சுண்டும் மனைவிமுகம் போலவே சோர்வாகி அல்லி மலர்குவிய; அன்பாய்ப் பலபேசிப் புல்ல வரும்கொழுநன் புன்னகையால் நெஞ்சினிலே துள்ளும் மகிழ்ச்சிமுகம் தோன்றுவது போல்மனத்தை அள்ளும் தடந்தோறும் தாமரைகள் வாயவிழப்; பள்ளிச் சிறுவரெலாம் பாடம் படிப்பதற்குத் துள்ளி யெழுந்திருந் துட்கார்ந்து தூங்கிவிழ வேலைக்குச் செல்வோர் விரைந்தெழுந்து தத்தமது காலைக் கடன்கள் கடிதாகச் செய்திருப்பத் தூக்கம் விழித்தெழுந்து தோகையர்கள் எல்லோரும் ஊக்கத்தை ஆடவரும் கூட்டும் முகந்திருத்தி இல்லத்து வேலைகளைச் செய்திருக்கும் எல்லையிலே, எல்லோரும் காண இளம்பரிதி தோன்றினான். பொங்கும் நெருப்பாய்ப் பொலிகின்ற சூரியனும் எங்கெங்கும் தன்னொளியை ஏறப் பரப்பினான். அவ்வொளியின் வெள்ளத்தில் ஆழ்ந்த பொருளெல்லாம் செவ்வையாய்ப் பொன்சால்வை போர்த்திச் சிறந்தனவே! தோட்ட மலர்கள் தொடையவிழ்ந்து வண்டுகளின் கூட்டங் களைக்கூவித் தேனருத்திக் கொண்டிருக்கும்; இந்நேரப் போதில்அவ் வூரில் இருப்பவர்கள் முன்னாள் நிகழ்ச்சி முதலில் நினைத்தார்கள்; அஞ்சாத சிங்கன் வழக்கை நமதரசன் சுந்தர நாதனெனும் சோரன் பெருவழக்கை இந்தநாள் நம்மரசன் கேட்பான், கொலைசெய்வான் இஞ்ஞான்று கேட்பான்; இடுவான் கொலைத்தண்டம்; நாமுன்னே சென்றந்த நன்னிகழ்ச்சி காணுவோம்! போமென்று யார்நம்மைத் தள்ளினும் போகோம்! எனப்பேசி மாந்தரெல்லாம் ஏராள மாக வனப்பான மன்னன் சபைநோக்கி வந்திருந்தார். கள்வன் வழக்கு கரந்தைநகர் வேந்தன் கலங்காத நெஞ்சன் அறந்தவறா மல்நெறியில் ஆளும் அறிவுடையோன் அன்னான் ஒருசெல்வம் ஆட்சிக் குரியமகள் பொன்னே எனக்கண்டார் போற்றும் எழிற்கொழுந்து கோமள வல்லியெனக் கூறும் பெயருடையாள், காமத்தைப் பாய்ச்சும் கண்ணுடையாள், செவ்விதழாள்; நீரில் நிமிர்ந்து நிற்கும் மலர்முகத்தாள்; பாரப் பெருஞ்சுவைசேர் பைந்தமிழின் சேமநிதி; நூல்பலவும் கற்றறிந்தாள்; நுட்ப மதியுடையாள்; பால்போன்ற வெண்மனத்தாள்; பாவின் சுவை நுகர்வாள்; நீதிநூற் கொள்கை யெலாம் நன்கறிவாள், நீள்குழலாள்; ஓதுவதிற் காலத்தை ஓயாமற் போக்குவாள். அன்னவள் பாலரசன் ஆரா விருப்புடையன்; என்னசெய லேனும் இவளிடத்திற் சொல்லாமல் செய்வதிலை ஆதாலால், செந்தமிழ்க் கன்னியவள் வைகும் இடந்தேடி வந்து முடிமன்னன், மாதர் குலக்கொழுந்தே! நாளைநம் மாசபையில் தீதுபல ஓருருவாய்த் திரண்டெழுந் தாற்போன்றோன் சூதிலே வல்லவன் சுந்தர நாதனெனும் காதகன் கள்வன் கடுஞ்சிந்தை யாளன்மேல் வழக்கு நடக்கும் வகைகாண நீயும் பழக்க முளதோழி யுடன்வந்து பார்த்திருப்பாய்! பட்டத் திளவரசி யாதலாற் பாராளும் சட்டதிட் டங்கள் சரியாகக் கண்டுணர்வாய்! என்றுரைத்தான். மன்னவனும் ஏற்ற உடைபூண்டு மன்றம் புகுந்தான்; மதியமைச்சர் போற்றினார்; ஊரார்கள் எல்லோரும் உள்ளக் களிப்புடனே பாராளும் வேந்தனை வாழ்த்திப் பணிந்தார்கள்; ஆரா அமுதனையாள் அங்கோர் புறத்தமர்ந்து மாரனுக் கோலை செலவிட்டு மகிழ்ந்திருந்தாள். காவலர்கள் அவ்விய கள்வனைக் கட்டுடனே, ஆவலுடன் மக்கள் அனைவோரும் பார்க்க நெருங்கி யிடித்து விழிபிதுங்கி நிற்கக், கருங்கல் மனக்கள்வன் தன்னைக், கலைமன்னன் மன்றத்தே யீர்த்துக் கொணர்ந்து, மனஞ்சலியா தென்றும் பணிபுரிவோர் வைத்தார், எதிர்நிறுத்தி. அப்பொழுது மன்னன் அவன்முன் புரிந்தபல தப்பிதங்கள் காட்டுவான் தான். அரசன் கூறுதுல் (ஆசிரிய விருத்தம்) ஊராரின் மனம்பதைக்கத் தீமை செய்தாய்! ஒருவருக்கும் தெரியமல் ஒளிந்தி ருந்தாய்! ஏராள மாயுழைத்து வருந்தி நாளும் இன்புறவே மக்களெலாம் செல்வம் சேர்ப்பார்; ஓராமல் அவைகளைநீ திருடிச் சென்றே உன்சுகத்தைப் பேணுதலோர் குற்றம் அன்றே? சீரான நன்னெறிகள் கடைப்பி டித்தே சிறந்தவனாய் வாழுமறி வுனக்கேன் இல்லை? பாடுபட்டிங் குழைப்பதற்கே காலுங் கையும் பலமான கட்டுடலும் பெற்றி ருப்பாய்! நாடுவிட்டு நாடோடிப் பலரு ழைத்தே நல்வாழ்வு நடத்துவதும் கண்டு நின்றாய் ! காடுதனில் விறகொடித்து விற்று வாழின் கண்டவர்கள் உனையிகழார் அன்றோ சொல்க! தேடுதற்கு முடியாத மானந் தன்னைத் திருடனெனும் பழிபூண்டு விட்டு விட்டாய்! பொதுமக்கள் மதிக்குமொரு தொழிலைச் செய்து புகழாக வாழ்வதற்காம் அறிவே யின்றிப் பதிதர்களின் கூட்டத்தைத் துணையாக் கொண்டாய்! பாலர்களும் மாதர்களும் நடுக்கம் கொள்ள அதிகொடிய செயல்களிலே ஈடு பட்டாய்! அழகியவுன் கட்டிளமை அழித்து விட்டாய்! மதுவருந்தி மதிகெட்டுத் திரிந்து நின்றாய்! மனிதனென உனையிங்கு மதிப்பார் உண்டோ! கள்ளவினைத் தொழில்புரிந்து வாழ்ந்து வந்தாய் கயவனே! இவ்வளவோ உனது குற்றம் ! மெள்ளஎவர் சொன்னாலும் அச்சொல் கேட்பின் மேனியெலாம் விதிர்விதிர்த்து வேர்வை யாகி உள்ளமெலாம் சோர்வடையும் கொலையைச் செய்ய ஒருபொழுதும் அஞ்சாத வலிய நெஞ்சா! கொள்ளையுயிர் கொன்றுலக கால னாகிக் கொலைப்புதரின் உள்வாழ்ந்த கொடிய தீயா! பிடித்துன்னைக் கொண்டுவரக் காவல் வீரர் பிரிந்துபல திசைகளிலும் தேடிப் பார்த்தார்; தடித்தனத்தால் அவர்கையில் அகப்படாமல் தப்பித்து மறைவாகத் திரிந்து வாழ்ந்தாய்! குடித்தனத்தார் பலருன்னால் துன்பம் எய்த கொடுங்கோல்கொள் மன்னவனாய்க் குறும்பு செய்தாய்! அடித்திங்கு விரட்டிவிட மாட்டேன் உன்றன் அடாதபழிக் கேற்றவொரு தண்டம் செய்வேன்! கள்வன் வேண்டுகோளும் அரசன் விடையும் (பஃறொடை வெண்பா) வேந்தன் உரைகேட்டு வீற்றிருந்த மந்திரிமார், மாந்தர் பலருமொரு மாற்றமுரையா திருந்தார். அஞ்சாத சிங்கன் அரசன்முக நோக்கிக் சோரா முகமுடைய சுந்தரநாதன் அவன் நேரே நிமிர்ந்தங்கு நின்று மொழிந்திட்டான்; கொஞ்சமும் சோர்விலான் கூறத் தொடங்கினான்; பூமண் டலமாளும் வேந்தே! புகழுடையோய்! யாமுமொரு விண்ணப்பம் செய்வோம்! எமக்குநீ உத்தரவு தந்தால் உரைக்கின்றோம் இச்சபையின் மத்தியிலே என்றவன் மாற்றுமொழி கூறினான்; எவ்வுரைகள் கூறநீ எண்ணிடினும் இப்பொழுதே அவ்வுரைகள் சொல்லலாம் அஞ்சாமல் என்றந்த மன்னன் விடைதந்தான்; மாவீரன் சுந்தரனும் சொன்னான் பலமொழிகள் சூழ்ந்து. கள்வன் மொழி என்னையொரு திருடனென முடிவு செய்தாய், இழிவாகப் பலமொழிகள் பேசி விட்டாய்! அன்னையினுந் தயவுடையான் நீயென் றெண்ணி அறியாதார் உன்பாதம் தாங்கி நின்றார்! உன்னையும்நான் திருடனெனக் கூறு கின்றேன்! உண்மை யென்றே மெய்ப்பிப்பேன் உறுதியாக! மன்னிப்பாய் என்னுரையை அரசர் ஏறே! மடமையினால் அழிவழக்குச் சொன்னேன் அல்லேன்! கொலைகாரன் எனவென்னை இகழ்ந்து மாந்தர் கூட்டமெலாம் பரிகசிக்க வசைமொ ழிந்தாய்! நிலையாக எனதாவி காப்ப தற்கே நின்றெனையார் எதிர்தாலும் அழித்தி ருப்பேன்! அலைசூழும் கடலுலகில் மன்னர் தம்மால் ஆருயிர்கள் அழிவதற்கோர் அளவும் உண்டோ! மலையாமல் என்மொழியை எண்ணிப் பார்நீ! மன்னவனே கொலைஞன்நான் ஒருவன் தானோ? அரசன் சினம் இவ்வுரைகள் சுந்தர நாதன் இயம்பியபின் கொவ்வையெனக் கண்சிவந்து கோபம் குடிகொள்ள மீசை துடிதுடிக்க, மேலுந்தன் மார்பினிலே வீசியபல் கூரம்பு பாய்ந்தால் எனவெகுண்டு, வேந்தன் எழுந்திருந்து விண்ணதிரக் கூவினான்; சாந்தத்தை மாய்த்தான்; சடசடடெனப் பெசுகின்றான்; ஏடா! கொலைக்கள்வா! உன்னாண்மை எவ்வளவு? தேடாப் பெரும்பழிக்குன் தேகம் பறிகொடுத்தாய்! நாட்டுக்கு மன்னவனை நாக்குப் புரளுமட்டும் கேட்டுக்குள் ஆனமொழி பேசினாய் கீழ்மகனே! தேசக் குடிமக்கள் தேம்பித் திரியாமல் வாசம் புரிவதற்கே வாழும் அரசனிடம் நேசத்தைக் காட்டாமல் நீதான் பழித்தாய் ! உன் மோசத்தை ஊரார் முழுதும் அறிவார் கள் ! என்னையுமுன் தோழனெனக் கூறி எதிர்மொழிந்தாய் உன்னைத் தலைவீழ்த்தி ஓட்டுகிறேன் பார்! என்று மன்னன் கடுகடுத்தான்; மன்றத்தார் அச்சமுறத் தன்னுடைய வாட்படையைக் கைக்கொண்டு தாண்டினான்; மன்றத்தார் எல்லோரும் மண்பதுமை யானார்கள்; சென்றோடி னான்மன்னன்; செங்கரத்து வாள்பற்றி, மந்திரி ஆய்மதியன் மன்றாடிக் கூறுகின்றான், செந்தமிழ் வல்லனே! சீற்றம் தணிந்திடுவாய்! இப்போ திவன்கூறும் ஈனப் பொருள்மொழிகள் எப்படித்தான் ஒக்குமெனக் கேட்போம் இவனையே! என்று மொழிந்தவுடன் வாள்கொண்ட ஏந்தலுந்தான் நின்றான் சினந்தணிந்து, நீர்விட்ட தீயாகி; ஆண்டிருந்த கள்வன் அஞ்சாமுகம் நோக்கி, ஏண்டா! தலைக்கிறுக்கா! இப்போது நீசொன்ன வீண்மொழியை நன்றாய் விளக்கி உரைத்தாற்பின் காண்கின்றேன் உன்னுடைய கைவரிசை யாவு மென மன்னன் சினந்திந்த மாற்றம் புகன்றவுடன், கன்னெஞ்சன் சொல்வான் கடிந்து. கள்வன் உரை தேசத்தார் துயர்களைய வாழ்வேன் என்று தெரிவித்த மலர்மார்பின் மன்னா கேள்நீ ! மாசற்ற மனமுடையார் ஏழை மக்கள் மாநிலத்தை வளப்படுத்தி விளைய வைப்பார்! வாசமலர்ப் பூஞ்சோலை வளர்த்து வைப்பார்! வாய்க்கால்கள் ஆறுகளும் அகழ்ந்து வைப்பார்! நேசத்தால் நீநலங்கள் செய்வா யென்று நினைத்திருந்தார் அறியாத தன்மை யாலே! இரத்தமழை வேர்வையென நிலத்தே சிந்தி எந்நாளும் பாடுபடும் மக்க ளாலே பெருத்தபல நகரங்கள், தெருக்கள், வீடு, பிழைத்திருந்து வாழ்வதற்காம் உணவுப் பண்டம் துரைத்தனத்தை நடத்துதற்குச் செல்வ மெல்லாம் தோன்றிவரும் உண்மையிது மறுக்க லாமோ! வருத்தியவர் தமைச்சுரண்டு வோரை நீங்கள் வாழ்விக்க ! விருக்கின்றீர் பயனும் உண்டோ! பகலிரவு பாராமல் உடலை வாட்டிப் பலதொழிலும் புரிந்துலகில் வாழும் மக்கள் மிகவருந்தி இடமில்லா துணவும் இன்றி மெலிந்தழிந்தே பதைக்கின்றார்; உதவி யில்லை; சகமெல்லாம் பஞ்சமெனும் கொடும்பேய் சூழ்ந்து சலிப்டைய மக்கள் தமைக் கசக்கினாலும் தகவின்றி வரிவாங்கி அரசு செய்தல் தருமமோ! நீதிவழி நடப்ப தாமோ! எந்நாளும் வரிகளின்மேல் வரிகள் போட்டே ஏழைகளின் விழிகலங்கக் கொடுமை செய்தல் மன்னாநற் செய்கையோ! நீதி தானோ! மதியுள்ளார் செயல்முயற்றும் அறமே தாமோ! உன்னாணை உரைக்கின்றேன், ஆய்ந்து பார் நீ ! ஒருவிதத்தும் பேதமிலை நானும் நீயும்! சொன்னால்நீ பகற்கொள்ளை அடித்து நிற்பாய்! சோரன் இராக் காலத்தில் திருடி நின்றேன்! கொலைகாரன் என்றென்னை இகழ்ந்தே சொன்னாய்! கூறுகிறேன் உன்கொலை யைக்குறித்துக் கேள்நீ! நிலையாயிம் மண்ணுலகை ஆளும் காதல் நினைப்போடு படைகள் பல சேர்ந்து வைத்தாய்! சலியாமல் போர்செய்து தலைகள் சாய்ப்பாய்! சளசளென இரத்தநதி ஓடச் செய்வாய்! உலையாத வீரனெனும் பெயரை நாடி உடல்துடிக்க உயிர்கொள்வாய் நீயும் அன்றோ! ஆதலினால் மன்னவனே! நீயும் நானும் ஆற்றுவது வேறுதொழில் என்ன வெண்ணேல்; பேதமிலை இருவருக்குள் எண்ணிப் பார்த்தால்; பித்துடைய மாந்தரிதை உணர மாட்டார்; சாதியிலே உயர்வுரைத்துத் தாழ்வும் சொல்லிச் சதிபுரிந்த தாலிங்கே மயங்கி நின்றாய்! நீதியிலே பகுத்தறிவை வைத்து நோக்கின் நிசந்தெரியும் என்மொழியை நினைத்துப் பார்நீ! அமைச்சன் மொழிதல் (ஆசிரியப்பா) அஞ்சாத சிங்கன் அறைந்த மொழிகள் நெஞ்சிற் புகுந்து நஞ்சாய் கலக்க, மன்னன் சினத்தால் தன்னறி விழந்தான்; என்ன விடைதான்இறுப்பதென் றெண்ணான்; பேரவ மானப் பிலத்துள் வீழ்ந்தான், ஆரவன்? மடப்பயல்! ஈரமில் நெஞ்சன்! உலக நீதி ஒன்றும் உணரான்! பலபல உளறினன் பகுத்தறி வின்றி! மன்னவன் இன்றேல் மானிடச் சோலை தன்னிற் கலகச் சுழல்தான் புகுந்து சாந்தம் குலைக்கும்; சட்டதிட் டங்கள் மாந்தர் அறியார்! மாக்கள் போன்றே வரைதுறை யில்லா வாழ்க்கையிற் சிக்கிக் கரையிலாக் கண்வாய் நீரெனப் போவர்; இந்நிலை நேரா திருக்கும் பொருட்டே மன்னன் வரிகள் வாங்கி வாங்கி அவற்றை ஆளுகைப் புகைரதம் ஆபத் தின்றி நாளும் நன்கு நடைபெற நல்குவன்; அரிய அமைதி முறியும் படியே வெறிநாய் ஆகிக் கலகம் விளைப்போர்ச் சிதற அடிப்பான் சேனைகள் கொண்டே; இதிலென் குற்றம்? இயம்புதி பேதாய்! என்றாய் மதியன் நின்று மொழிந்திட, ஒன்றும் உரையான் அக்கொடுங் கள்வன். நன்று நன்றிம் மந்திரி சூடென மன்றுளோர் மகிழ்ந்துகை கொட்ட, நின்ற கள்வனும் நோக்கினன் நிமிர்ந்தே. கள்வன் விடை மதிநிறைந்த மந்திரியார் பதிலைக் கேட்டீர்! மகிழ்ச்சியுடன் கரங்கொட்டி ஆர்ப்ப ரித்தீர்! புதுமையதில் ஏதுமில்லை; பழைய வார்த்தை; புகல்கின்றேன் நானுமிதோ உண்மை கேளீர்! கதியறியார் பிழைப்பதற்கும், கால மெல்லாம் கலக்கங்கொள் மனிதர்பலர் என்னே டுள்ளார்; அதிவறியர்! பரிதாபர்! அவரைக் காத்தல் அடியேற்கும் கடனாகும் காத்து நின்றேன்! என்னுடைய குடிபடைகள் பிழைப்பதற்கே எப்பொழுதும் செல்வர் பொருள் கொள்ளை கொண்டேன்; மண்ணுலகில் எந்நாளும் வறியர் செல்வம் மனதாரத் திருடினதே இல்லை! இல்லை! கன்னமிடுங் காலென்னைப் பிடித்து யிர்தான் கவரவரு வோரைநான் கொன்ற துண்டு! எண்ணுவேன் திருடல்கொலை குற்றம் என்றே என்னினும் பிறர்க்குதவி கருதிச் செய்வேன்! அமைச்சன் உரைத்தல் (ஆசிரியப்பா) அமைச்சன் இவ்வுரை அறிந்தனன் மனத்தில் இமைப்பில் மறுமொழி இயம்பக் கருதிக் களியனை நோக்கிக் கனைத்துத் தெளிவில் இம்மொழி தெரிவித் தனனே! (ஆசிரிய விருத்தம்) நீமொழிந்த உரைமுழுதும் கிளறிப் பார்த்தால் நிலைநிற்கும் பகுத்தறிவு மன்றந் தன்னில்; ஆமிதிலோர் ஐயமிலை, உண்மை! உண்மை! ஆனாலும் அறிஞர்களால் வகுத்து வைத்துப் பூமிதனில் வழங்கிவரும் கலைகள் ஒன்றும் புகலவிலை உன்தொழிலும் முறைதான்என்று; சேமமிலை உனதுரையால்; பயனு மில்லை; சிறுவயதில் பெருங்குற்றம் செய்து நின்றாய்! அரையனுக்குக் கடமையென விதித்த வற்றை அவன்புரிவ தறமன்றோ! பாவம் ஆமோ! சிறையேனோ! வழக்கேனோ! தண்ட மேனோ! சிந்திப்பாய்! இவையுலக நன்மைக் கன்றோ! குறைசொல்லி அரசுமுறை பழித்து நின்று கொடுவழக்குப் பேசும் நீ துரோகி யாவாய்! தரையிலினி உயிர்வாழத் தகுதி யற்றாய்! தந்திடுவோம் உனக்கின்று மரணத் தீர்ப்பே! அரசனது செயல்முற்றும் நீதி யென்றே அமைந்துள்ள காரணத்தால் அச்ச மின்றி முரசறைந்து பொதுமக்கள் காணும் வண்ணம் மொழிந்துமுறை செய்கின்றான் வெளிப் படையாய்! இரகசியத்தில் வைத்துன்றன் தொழிலை யென்றும் இரவுதனில் மறைவாகச் செய்தி யன்றோ! உரைசெய்வாய் ! இதுவொன்றே உனது செய்கை ஒவ்வாத தென்பதனைக் காட்டும் அன்றோ! அவையோர் கூறல் (கலிவெண்பா) மந்திரியின் பொன்னுரையால் மன்னன் மகிழ்வடைந்தான் அந்தச் சபையோரும் ஆழ்ந்தார் பெருங்களிப்பில் சுந்தர நாதனும் சோர்ந்தான் உரையிழந்தான் எந்த மொழியும் இயம்பா தலைகுனிந்தான் மன்னன் தயாநிதியும் மாசபையை நோக்கினான். இன்னான் வழக்கறித்தீர் தண்டனை தான்என்ன விதிக்கலாம் இப்பெரிய வீணனுக்கு? நீங்கள் கொதிப்பின்றி நன்றாய்க் குறித்தறிந்து கூறுவீர்! என்றவுடன் மன்றத்தார் எல்லோரும் ஓர்குரலாய்க் கொன்றே யழித்திடுவீர்! கொன்றே யழித்திடுவீர்! தக்கதித் தண்டனையே! சற்றுந் தயங்காதீர்! இக்கணமே செய்திடுவீர்! என்று புகன்றார்கள். அந்தவிதத் தண்டனையே ஆற்றத் தகுமென்று மந்திரிமார் எல்லோரும் மன்னனிடம் சொன்னார்கள்; குற்றம் புரிபவர்மேல் கோபப் படுவதுவே முற்றும் பொதுமக்கள் தன்மையாம், மூர்க்கனாய் இத்தரையில் ஏன்சிலர் ஆகின்றார் என்றெண்ணி அத்தகைய காரணங்கள் தம்மை அழித்துவிடின், எல்லோரும் இவ்வுலகில் இன்பம் பலவெய்தி நல்ல சமூகமாய் வாழ்ந்து நலம்பெறலாம் என்ற பகுத்தறிவுத் தன்மையவர்க் கின்மையால் கொன்றுவிட வேண்டுமெனக் கூறிவிட்டார்தீர்ப்பே. வெற்றிநாதன் கூறுதல் வெற்றிநா தன்என்போன் விவேகம் மிகவுடையோன் சற்றும் தளராமல் சாற்றுகிறான் மன்னன்பால்; வேந்தே பலவணக்கம்! வெற்றியோடு வாழ்கநீ! மாந்தரெல் லாமிவனை மாய்த்துவிடக் கூறினார்; குற்றத்திற் கேற்பக் கொடுந்தண்டம் நீ விதித்தல் முற்றும் முறைதான்; மொழிவதற்கும் ஒன்றுமில்லை; ஆயினும் வீரன்; அறிவுள்ள கட்டிளைஞன்! தீயன் இவனைத் திருத்துதற்குத் தக்கதொரு தண்டனையைத் தந்து தவறினிமேற் செய்யாமல் கண்டிப்ப தேநல்ல காரியம் என்றுரைத்தான். கள்வனைத் தண்டித்தல் இச்சொல்லைக் கேட்டவர்கள் எல்லோரும் கைகொட்டிச் சீச்சீ! இவன் பித்தன்! என்று சிரித்தார்கள்; மன்னன் இது சொன்ன மந்திரியின் நன்மொழியை என்னவெனக் கேளான் இகழ்ந்தான்; சினமுடனே, காளைப் பயலிவனைக் காவலில் இன்றுவைத்து நாளை நடுப்பகலில் நம்மூர்க் கொலைக்களத்தில் வைத்து நிறுத்தியே வாளால் இவன்தலையைச் செத்து விழவெட்டிச் சிதைப்பீர்! எனதாணை! இத்தீர்ப்புக் கூறி எழுந்தான் முடி மன்னன். கள்வனும் அரசியும் அத்தீய கள்வன் அமுதமென வீற்றிருந்த ஈரமலர்க் கூந்தல் ஏந்திழையை நோக்கினான்; நாரி வரவேற்றாள்; நாணித் தலைகுனிந்தாள்; கண்ணிருந்து முத்துக் கலகலெனத் சிந்தினாள்; எண்ணமெலாம் பாழாகி ஏங்கிப் பதைபதைத்தாள்; மன்னவனோ இன்று மரணமெனத் தீர்ப்பளித்தான்; என்னவினிச் செய்வோம் என்று நினைக்குமுன், அந்தோநம் வாழ்நாள் அனைத்தும் பயனின்றி இந்தவிதம் ஆயிற்றே என்றெண்ணிக் கள்வனும் மூச்சடங்கிக் கீழே விழுவதற்கு முன்னங்கே பேச்சின்றிப் பார்த்திருந்த பெண்ணரசி ஓலமிட்டு வீழ்ந்தாள்; அது கண்டார் வேந்துமுத லானவர்கள்; ஆழ்ந்தார்கள் அப்பொழுதே ஆச்சிரியப் பேரிருளில். பாங்கிருந்த தாதிமார் பாவையினைத் தாழ்க்காமல் ஆங்கிருந்து தூக்கி அடைந்தார் அரண்மனையை. வேந்தன் பதைத்தான்; விரைந்தெழுந்து போய்விட்டான்; மாந்தரும் சென்றார் மருண்டு. பாலைவன மழை (கலிவெண்பா) அஞ்சாத சுந்தரன் ஆவி பறிக்கவெனத் தஞ்சை நகர்மன்னன் தந்தகொடுந் தண்டனையால் கொஞ்சும் கிளிமொழியாள் கோமள வல்லியவள் நெஞ்சங் கலங்கினாள்; நீரால் நனைந்து விட்டாள்; தாங்காத துன்பம் தலைக்கொண்டாள். தேன்மலரை நீங்காத வண்டினம்போல் நின்றிருந்த தோழிமார், பற்பலவாம் மெய்ப்பணிகள் பாங்கிருந்து செய்தார்கள்; சொற்பமும் நன்மையிலை; சோர்வொன்றே கண்டபலன்! மன்னன் தாயநிதியும் பார்த்தான் மகள்நிலையை; அன்னை தண் கோதையும் கண்டாள்; அகம் உடைந்தாள்! அன்றுபகற் போதும், அடுத்தவிராப் போதினிலும் நன்றறிந்த பண்டிதர்கள் நாடி பிடித்தறிந்தார்; மெத்த வுயர்மருந்து மேன்மேலும் ஊட்டிவிட்டார்; அத்தனையும் வீணே! அவள்நோய் குறையவில்லை. கள்ளனைக் கொன்றுவிடும் காலம் மலர்ந்தவுடன் கொள்ளைச் சிரிப்புடைய கோமகள்தன் நாணழிந்தாள்; உள்ளத்தின் உள்ளே உறைந்திருந்த காதலினை மெள்ள வெளியிட்டாள்; மிக்க துயருற்றாள்; மங்கை மனமறிந்த மன்னவனுந் தேவியும் அங்கிருந்த தோழியரும் ஆவென் றலறிவிட்டார்; சிச்சீ! இளங்குயிலே! சின்னத் தனம்நினைந்தாய்! பச்சைக் குழந்தைபோல் பார்த்து விழிபதித்தாய்! ஊரார் இதையுணர்ந்தால் ஓங்கி நகையாரோ? பாரில்யார் இத்தகைய பள்ளத்தில் வீழ்வார்கள்? தஞ்சை நகர்மன்னன் தந்த குலக்கொழுந்து பஞ்சைத் திருடனைத்தான் பார்த்து மதியிழந்தாள்; காதலித்தாள்! என்றே கதைபேசி எப்போதும் பூதலத்தில் உள்ளோர்உன் புன்செயலை எள்ளாரோ! என்ன செயல்நினைத்தாய்! என்னருமைக் கண்மணியே! மன்னர் வழிவந்த மாமயிலே! இந்நினைப்பை முற்றும் மறந்துவிடு! மோகம் சிதைந்துவிடும்! சற்றும் பழிபடரா தென்றரசன் சாற்றினான். கோமளவல்லி கூறுதல் கையால் திருகியதும் கட்டுண்ட தண்ணீரைப் பெய்யும் குழாய்போலப் பெண்ணழுது தன்கையைக் கண்களிலே வைத்துக் கசக்கியதும் தாரையாய் மண்மீது நீர்சிந்தி நின்று மனங்குழைந்தாள்; வெய்யிற் புழுவாகி வெம்பினாள்; மோகத்தால் நையும் மன முடையாள் நாவடக்கம் விட்டுரைப்பாள்; நீர்புகுந்து பாலுள்ளே நின்று மறைந்ததுபோல் வீரனவன் என்னுள் விரைவாய்க் கலந்துவிட்டான்; வெண்ணிலவில் தண்மைபோல வேறுபா டின்றியென் கண்ணின் வழிப்புகுந்தான் கட்டழகன்; தங்கிவிட்டான். பூத்தமலர் வீசும் புதுமணத்தைப் போலவனைக் கோத்த அழகென்னைக் கொள்ளைகொண்டு விட்டதுவே! பண்டைநூல் கல்லான் பகுத்தறிவுக் காரனைநான் கண்டுவிட்ட போதினிலே காதல் வலைவீழ்ந்தேன்! காரணந்தான் ஏதொன்றும் கண்டறியேன் நானிதற்கே! ஆரென்றன் ஆவிதனைக் காப்பார் அவனன்றி! என்று துடிதுடித்தாள்; ஏங்கினாள்; தேம்பினாள் தன்றனி மாமகட்குத் தார்வேந்தன் சொல்கின்றான்; அரசன் உரை காவியங்கள் கற்றதுவும், கற்பனைகள் கண்டதுவும், பாவியற்று தற்குப் பழகியதும், பண்டையுள நீதிநூல் தேர்ந்ததுவும் நித்தம் தமிழ்க்கலைகள் ஓதியதும், அப்பொருளை உள்ளத்தே வைத்ததுவும், செந்தமிழ்ப் பாக்கனிகள் சேர்த்தென் செவிப்பிழிந்து அந்த நறுந்தேனால் ஆநந்தம் தந்ததுவும், எப்படித்தான் நீமறந்தாய், என்னரசு கொள்பவளே! தப்பிதமேன் செய்தாய்? தகுமோ உனக்கிதுதான்? என்னப் பலகூறி ஏங்கினான் மன்னவனே. அரசியின் மொழி அன்னையவள் தண்கோதை ஆறாத துன்பமுடன், உள்ளத்தைக் கொள்ளைகொளும் ரோசா மலர்சிந்திக் கள்ளிப்பூ வேண்டிக்கை நீட்டுவோர் யாருண்டு? தூசுபடி யாத துணிபலவே வைத்திருந்தும் மாசு படிந்தவுடை மக்கள் அணிவாரோ? மாம்பழச்சா றொத்த மதுரபா னம்சிந்தி வேம்பின் பழச்சாற்றை வேண்டுவரோ நாவுடையார்? தாமரைகள் பூத்த தடநீரில் மூழ்காமல் போமந்தச் சாக்கடையில் போய்விழுவார் யாரோ! பழுத்துமணம் வீசும் பலகனிகள் தள்ளிப் புழுத்தபழம் தேடிப் புசிப்பவர்கள் யார்கொல்லோ? மெத்தென்ற பஞ்சணைகள் கட்டிலின் மேற்கிடக்கப் பொத்தென்று வீழ்ந்தே புழுதியிலே தூங்குவரோ? உன்னறிவை யெங்கே உதிர்த்தாய் எனதுயிரே ! மன்னவர்கள் உன்னை மணக்க நினைத்துள்ளார்; வீரர் பலருன்னை வேண்டித் திரிகின்றார்; சோரனை நீகண்டு சோர்வுற்ற தென்னேடீ! என்று பல நல்லுரைகள் ஈன்றெடுத்த தாயுரைத்தாள் ஒன்றாக வாழ்ந்திருக்கும் தோழியரும் உள்ளத்தே துக்கம் வளர்ந்தெழுந்து தொண்டையிலே தாழ்போட தக்க பலமொழிக்ள் சொல்லித் தவித்தார்கள்; இளவரசி கூறுதல் நீல விழியாளிடத்தே சொன்ன விந் நீதியெலாம் பாலை வனமழையாய்ப் பாழாகிப் போயினவே! ஊமைச் செவிட்டுக்குச் செய்தவுப தேசமாய்க் கோமகளின் நெஞ்சத்தே கொஞ்சமும் தைக்கவிலை; பாவை மடமயிலும் பார்த்து விழிதிறந்து காவலனை நோக்கிக், கசிந்துருகித் தாய்நோக்கி, ஏவல்செய் தோழிமார் எல்லோரை யும்நோக்கி, கோவக் குறிகாட்டி நெஞ்சக் குமுறலுடன் சாவத் துணிந்தவள்போல் சாற்றுவதற் கஞ்சாமல் நாவலரைப் போலுரைப்பாள் நன்கு. ஆசிரிய விருத்தம் என்னெஞ்சைப் பிளந்தாலும், தீயை மூட்டி எரித்தாலும் அவனுருவை மறக்க மாட்டேன்! கன்னெஞ்சக் காவலர்கள் அவனைத் தேடித் திருடனெனக் கதைகூறி யிழுத்து வந்தார்; கொன்னஞ்ச விழிமாதர் அகத்தை யெல்லாம் கொள்ளைகொளும் அழகுள்ளான் கொலைஞன் தானோ? மன்னஞ்ச வழக்குரைத்த நாத னைநான் மணம்புரியேன் எனிலுயிரை விடுவ துண்மை! காதலெனும் உணர்வுக்கே கண்தான் ஏது? கருதுவதற் கறிவேது? கரையும் உண்டோ? சாதிமத பேதங்கள் அடித்து வீழ்த்திச் சாதிரங்கள் சொல்வதையும் தலைகீழ் ஆக்கி, மாதருடன் ஆடவரைப் பிணைத்தே யின்ப மதுக்கடலில் விளையாட வீழ்த்தும் அன்றோ! நீதியிது; தவறென்று தள்ள வேண்டாம்! நினைப்பீரும் பகுத்தறிவால் நிசமாய் நிற்கும். காதலெனும் மழையின்றேல் இனிமை யூட்டும் கலைப்பயிர்கள் உலகத்தே வளர்வ துண்டோ? கீதவொலி கேட்பதிலை; வீணை யில்லைக்; கிழவர்களாய் இளைஞர்களும் தளர்ந்து நிற்பார்! சீதமதி நிலவினுக்கும் வேலை யில்லை; சிந்தித்தால் உலகமொலம் பிணமே யாகி வேதனையை அடையும், நல் வாழ்வே யின்றி வீழ்ந்துவிடும்; நாகரிகம் அழியும் அன்றே மாறாத காதல்வாழ் வுலகி லின்றேல் மனிதர்குல வளங்காட்டும் காவி யங்கள், தீராத சுவைத்தேனை மனத்திற் சிந்தித் திடமளிக்கும் கவிமலர்சேர் சோலை யில்லை; நாறாத நிறம்பெற்ற பூவைப் போலே நங்கையரும் நம்பியரும் வீணே நிற்பார்; வாராது புதுவாழ்வு; மக்கள் கூட்டம் வற்றல்மர மாய்உலகம் சுமக்க வாழ்வார், கரைகடந்த வெள்ளம்போல் தடையின் றோடும் காதலைநீர் தடுப்பதனால் பயனும் உண்டோ? சிறையிழந்த பறவைக்கோர் வாழ்வும் உண்டோ? செப்பிடுவீர், காதலினைக் சிதைக்க லாமோ! குறையாமற் புலவரெலாம் கவிகள் மூலம் குவித்தாரால் காதல்மணம், இன்பம், அன்பே, மறைவாக அவையெல்லாம் படித்துப் பார்த்து மகிழ்வதுதான் மனம்படைத்த மக்கள் வாழ்வோ! அரசியின் அறிவுரை (ஆசிரியப்பா) இவ்வுரை கோமள வல்லி இயம்பச் செவ்விழி கொண்டான்; சினந்தான் மன்னன்; ஒன்றும் கூறா திருந்தான் ஒருபுறம். தன்மகள் முகமாம் தாமரை நோக்கி, நின்னுரை யாவும் நிசமே யாகும் என்னினும் நமக்கறி வில்லையோ? போயும் போயும் புலைத்தொழில் செய்த தீயனைத் தேடி மணப்பதா காதல்? ஒத்தசெல்வமும் ஒத்தகல்வியும் ஒத்த குணமும் ஒத்த மனமும் உடையவர்க் குள்ளே நடைபெறும் மணமே தடையறா தின்பம் தந்து நீடிக்கும் இந்நலம் ஒன்றும் இல்லா அந்தப் பொல்லனை மணக்க விரும்பும் புத்தி காதலே யல்ல; காமமே யாகும்; ஆதலால் மகளே! அடாப்பிடி யாக வல்லிழி வழக்குக் கூறேல்! உறுதி சொல்லினென் உண்மை! சோர்வுறல், நீயே! என்ற தாயை எதிர்த்துத் துன்று மலர்க்குழல் கூறுவள் தொடர்ந்தே இளவரசியின் உரை அன்புவளர் சுகவாழ்வைக் குறிக்கு மாறே அமைத்தார்கள் இருமொழிகள் காதல், காமம்; துன்பமுறீர் காதலது பொதுவில் நிற்கும்; தோன்றியதில் சிறப்பதுவே காம மாகும்; இன்பமுற வழிகாட்டும் காத லாலே எல்லோரும் காமமெனும் சோலை சேர்வார்; என்புகல்வீர், இதற்குநீர், இருமொழிக்கும் பேதமெனப் பொருள் கூறிப் பொருதல் வேண்டாம். இன்பமெனுந் தமிழ்ச்சொல்லை வெறுப்பார் இல்லை; இதைப்பெறவே உலகத்தார் விரும்பி நின்றார்; அன்பெனுமோர் குளந்தன்னில் மலர்ந்து நின்றே அழகுறுசெந் தாமரையே இன்ப மாகும்; பண்பறியார் வடமொழியிற் காம மென்றே பகர்ந்தார்கள் இன்பத்தை இதனைத்தேரீர்! துன்பமுறும் காமத்தால் என்றே சொல்லித் தொலைக்கின்றீர், சுகவாழ்வை! அறிவு தானோ! பொல்லாத மதப்போர்கள், சாதிப் பூசல், பொய்யுரைத்தல், கொலைபுரிதல், திருடி வாழ்தல். நல்லாரைப் பழிகூறல், வறியார் தம்மை நசுக்கிவிடல், பிறவுயிர்மேல் அன்பு சற்றும் இல்லாமல் துன்புறுத்தல், வலிய நெஞ்சம், இவை யெல்லாம் நீர்சொரிந்த நெருப்பே யாகிச் சொல்லாமல் மறைந்தொழியும் காதல் தன்னால் சுகவாழ்வு தழைக்குமிவ் வுலகி னுள்ளே. அருந்துவார் உயிர்பருகும் நஞ்சை நாமே அவுடதமாய்ச் செய்துபிணி தீர்ப்போம் அன்றோ! பொருந்தாத மணநீரில் வாச மான பொருள்கலந்தால் நறுநாற்றம் வீசும் அன்றோ! திருந்தாத தீமையெல்லாம் காதல் தீயால் தீய்ந்துவிடும்; நல்லியல்பு பலவும் தோன்றும்! வருந்தாதீர்! யானவனை மணக்கச் செய்வீர்! வாழ்வுறுவேன்! நீங்கள்பெரும் மகிழ்ச்சி கொள்வீர்! அன்பிலா ஆண்பெண் சேர்ந்து வாழ்ந்தால் அவர்வாழ்வில் ஒற்றுமையாம் மலரே யில்லை! இன்பமெனும் கனிதோன்றல் என்றும் இல்லை! இதையுணரார் சோதிடரால் மணங்கள் செய்வார்; என்பயனோ அச்சில்லாச் சகடத் தாலே! எவரதனை ஊர்ந்துநலம் எய்தல் கூடும்? துன்பமுறீர்! அன்புற்றேன்! நன்கு வாழ்வேன்! துணைவனென அவனைநான் அடையச் செய்வீர்! உண்மையாய்ச் சொல்கின்றேன்! விளையாட்டல்ல! ஒருமகள்நான் உயிர்வாழ விரும்பு வீரேல், கண்மணியாய் என்னுள்ளே கலந்து நின்றான் காதலெனும் தீவளர்ப்பான் மதன னாவன்! அண்மையினில் அழைத்திடுவீர்! கொல்லல் வேண்டாம்! ஆர்பழித்தால் நமக்கென்ன? அச்ச மேனோ! மண்மகள் மேல் ஆணையிட்டேன் சொல்ல வின்னும் மாற்றமிலை; உறுதியே ஆவி காப்பீர்! கள்வனுயிர் காத்தல் (கலிவெண்பா) என்னுமொழி கூறி விழுந்தாள் இளங்கொடிதான் மன்னவனும் பாத்தான்; மனமுருகிச் சோர்வுற்றான்; வேறுவழி என்னவென வேந்தன் நினைக்குமுன் நாறுமலர்க் கூந்தலவள், நாதா இனிக்காலம் தாழ்த்திருத்தல் நன்றல்ல; தக்கணமே வீரனுடல் வீழ்த்துதற்கு முன்னே விரைவிலோர் ஆள்விடுப்பீர்! கொல்லும் படியிட்ட தண்டனை யைக்குறைப்பீர்! நல்லவித மாயின்றோ நம்மன்றத் தேயழைப்பீர்! அஞ்சாத சுந்தரன்தன் ஆண்மைபா ராட்டுவீர் ! வஞ்சமன மில்லான் வணங்காத வீரனை நம் சேனைத் தலைவனாய்ச் செய்துவிட்டு நம்முடைய மானையவ னுக்கு மணம்புரிய வேண்டுவதே செய்யும் கடமையெனச் செப்பினாள்; மன்னவனும் கையிலோர் தாளெடுத்துக் கள்வனது தண்டனையை நீக்கிய தாய்வரைந்தான்; நின்றிருந்த பாங்கியரில் நோக்கி ஒருத்தியிடம் நீயே நொடிப்பொழுதில் நொந்து வருந்துகொடி நோய்நீங்கி வாழ்வதற்கே இந்தநம் கட்டளையை இப்பொழுதே கொண்டு கொலைக்களத்துக் கோடுவாய் கொல்லுமுன்னே அந்த மலைப்புயத்துக் காளையைநம் மன்றத்திற் கூட்டிவா! என்று மொழிவதற்குள் தோழி எழுந்தோடிச் சென்றனளே மான்போல் சிறந்து. சொன்னதே சட்டம் (கலிவெண்பா) நல்ல நடுப்பகலில் நாட்டவரும் ஊரினரும் பொல்லாத கள்வன் தலைகீழ்ப் புரண்டுவிழ கள்ளன் உயிர்பறிக்கும் தண்டனையைக் காண்பதற்கே வெட்டும் கொலைக்களத்தை நோக்கி விரைந்தணைந்தார் கட்டியபல் கட்டுடனே! காவலர்கள் கள்வனையும் இட்டங்கே வந்தார்கள்; எல்லோரும் கண்பதித்தார் சட்டையதி காரியும் சார்ந்துவிட் டான்விரைவில் ஓடையிலே பூத்திருக்கும் ஒண்தா மரைபோன்ற வாடா முகப்பொலிவும், வன்னெஞ்ச மார்பழகும், எங்கு மொளிவீசி எழுந்துயர்ந்த பொன்மலையாய்ப் பொங்கும் புயத்தழகும், பொன்றாத வீரமுடன் ஏறுபோல் நோக்கும்; எழிலொழுகும் தோற்றமும் மாறமற் கண்கவர மக்களெல் லாம்பார்த்தார் நேற்றைப் பொழுதவர்கள் கொண்ட நினைப்பினிலே மாற்ற மடைந்தார்கள்; மனமிளகிச் சொல்வார்கள்; என்ன விருந்தாலும் இவ்விளைஞன் வல்லுடலைச் சின்னமுறக் கொன்று சிதைப்பதால் என்ன பயன்? ஐயைந்தே ஆண்டுடையான் ஆடவனை நல்வழியில் பையப் பழக்குவித்துப் பண்புடையோன் ஆக்கினால் நாட்டுக் குடிகளுக்கு நன்மைசெய் யும்முறையை ஊட்டிவிட்டால் இவனோர் உத்தமனாய் வாழானோ? ஏனிந்தச்சீர்திருத்த எண்ணத்தை நம்மரசன் பேணவிலை இக்கருத்தைப் பேசியதோர் மந்திரியின் சொல்லை மதிக்காமல் சொன்னான் கொலைத்தண்டம்; பொல்லாத காலமிவன் போகின்றான் மாண்டென்று சொல்லிச் சிலர்நின்றார்; சூழ்ந்தோர் பலர்மகிழ்ந்து, எல்லாப் பெரும்பயமும் இன்றோடு விட்டொழித்தோம்! ஆனந்த மாயுறங்கி வாழ்வோம் அனைவோரும்; ஈனன் ஒழிந்துவிட்டான்; ஏக்கமினி நாமெய்தோம்! தான்செய்த தீவினைக்குத் தக்கபல னேபெற்றான்; ஏனின்னும் கொல்லவிலை? என்றுரைத்தார் தோழரெலாம் ஐயையோ! நம்தலைவன் ஆருயிரை மாய்ப்பதற்கே கையினிலே வாள்கொண்டு நின்றார்கள் காவலரே! என்னவினி நாம்செய்வோம்! ஏதும் வழியறியோம்! மன்னன் மனமிரங்கி மன்னிக்க மாட்டானோ! என்றுமனஞ் சோர்ந்தவர்கள் பேசி யிருக்கையிலே கொன்றுவிடக் கள்வனையோர் மேடையிலே கொண்டு நிறுத்தவதி காரிதான் வாள்பிடித்து நின்ற கறுத்த கொலைஞனுக்கு கண்சாடை காட்டினான்; கொல்லுதற்கு வாளோங்கி விட்டான் கொலைஞனும், நில்லப்பா! சற்றேநில்! கொல்லேல் நிறுத்துவாய்! வேந்தன் கொலைமுடிவை வேறாக மாற்றிவிட்டான்; போந்தேன் அதனுடனே! போற்றுவீர் ! மன்னவனை! என்னக் குயில்கூவி ஏங்கிப் பறந்ததுபோல் மின்னொத்த தாதியவள் மேனி தளர்ந்தசைய கொங்கை யெழுந்தாடக், கொண்டை குடைபிடிக்க, அங்கத்தின் ஆடை அவிழ்ந்து தரைபுரள ஓடிப் புகுந்தரசன் உத்தரவைக் தாழாமல் மேடை அருகிருந்த மேலதி காரிகையில் சுந்தர நாதனுயிர் சோராமல் காப்பதற்கே அந்தரத்தில் நின்றோர் மருந்தொன்று வந்ததுபோல் தந்து விழுந்துவிட்டாள் தாதி தரையின்மேல்; அந்தக் கணத்தவளுக் கான உபசாரம் செய்தார்; களைதெளிந்தாள் சேல்கொண்ட தண்மதியாள், கொய்தமலர்க் கூந்தல் கொடிபோல் துவண்டெழுந்தாள். அரசன் உத்தரவைப் படித்தல் நம்முடைய மன்றத்தில் நாவலனைப் போல்நின்றே அம்மா! வெனவறிஞர் ஆச்சரியம் எய்த வழக்குரைத்த நல்லறிஞன்! வாடா விளைஞன், இழுக்ககன்று வாழற் கியன்ற வழிசெய்வோம்; ஆதலாற் கள்வற் களித்தகொலை மாற்றினோம்! தீதியற்றா திங்கே கொணர்வீர் திருடனையே! என்ராசன் கையால் எழுதியவக் கட்டளையை நின்றவதி காரி படித்து நிறுத்தினான்; மன்னன் இவன் கொலையை மாற்றுதற்குக் காரணந்தான் என்னவோ வேறறியோம்! இஃதென் விபரீதம் ? என்று முணுமுணுத்தே ஏதொன்றும் சொல்லாமல், நின்றார் பலபேர் நிலைத்த பெருமரமாய்; கள்வனுயிர் காக்கும் கருத்துடைய தோழர்களும், கொல்வதற்கு நெஞ்சம் குழைந்திருந்த மாந்தரும், கட்டிளைஞன் வாழ்கவே! வாழ்கவே கட்டிளைஞன்! வெட்டுவிழும் நேரத்தே வேந்தால் உயிர்பிழைத்த கட்டிளைஞன் வாழ்கவே! காவலன் கட்டளையைத் தட்டாமற் கொண்டணைந்த தாதிபுகழ் வாழ்க!வென ஆழக் கடலொலிபோல் ஆராவா ரம்புரிந்தே சூழப் பொதுமக்கள், சுந்தரனைக் காவலர்கள் வேந்தன் சபைக்கு விரைந்தழைத்து வந்தார்கள்! ஏந்து செங்கோலான் எதிரே கொணர்ந்தவனை நிற்கவைத்தார் காவலர்கள்; நின்றார் ஒருபுறத்தே; அற்புதத்தைக் கண்டார்போல் ஆச்சிரியம் உற்றமைச்சர், என்னவோ இந்நிகழ்ச்சி ஏதுமறி யோமென்றே மன்னன்வாய் நோக்கி மரப்பதுமை யாயிருந்தார்; பச்சைக் கடல்முழக்கம் ஓயந்திருந்த பான்மைபோல் அச்சபையோர் வீற்றிருத்தார் ஆங்கு. அரசன் அவை நோக்கிக்கூறல் (ஆசிரிய விருத்தம்) நாமிவனுக் களித்தகொலைத் தண்டனையை நடத்தாமல் தடுத்தோம் இந்நாள்; பாமரர்கள் அதிசயிக்கும் செய்கையிது காரணமும் பகரக் கேளீர்! சேமமுடன் மக்களெலாம் வாழ்வடையச் செய்வதுவே அரச நீதி! தீமைபுரி மனிதருக்குச் சிறைகாட்டும் கருத்தவரைத் திருத்தல் அன்றோ! நாட்டினிலே வறியபுதர் வளராமல் பலதொழில்கள் நடத்தல் வேண்டும்; வீட்டினிலே உணவில்லாத் தொழிலாளர் வேதனைகள் தவிர்த்தல் வேண்டும்; தேட்டமுற இளையோர்க்கு நீதிமுறை தேற்றுதல்நம் கடமை யாமே! வாட்டமுறார்; பொய்கொலைகள் வளரமாட்டா; களவுக்கு வழியும் இன்றே; தொட்டவரைத் கொலைபுரியும் மின்சாரம் கொடியதெனத் தொலைப்பார் யாரோ! எட்டாத கனிமரமொன் றறிவின்றி எரிமூட்டிச் சிதைப்பார் தாமோ! வெட்டுவதென் றரிவாளை வெறுத்து வீசி விட்டெறிதல் அறிவு மாமோ? துட்டர்களை நல்வழியில் நடக்க வைத்தே தூயவராய்ச் செய்தல் தீதோ? மதயானை சினந்தணிந்து மடங்கி நின்றால் மனிதருக்கு நலமே யன்றோ! உதவாமற்குறும்புபுரி குதிரைமீதே ஊர்ந்துசெலப் பழக்கல் தீதோ! இதமான வழிதவறும் இளையோர் தம்மை இழுத்தவர்க்கு வேலைதந்தே பதமான வாழ்வடையச் செய்வாதாலே பாரினுக்கு நலமே யன்றோ! கல்லுடனே முள்ளடர்ந்த கரம்பான நிலந்திருத்திக் கால்வாய் தோண்டி நல்லபயிர் பலவளர்த்துத் தானியங்கள் நவநவமாய் விளைய வைத்தால், இல்லையெனும் வறியநிலை பறந்தோடும்; மக்களெலாம் இனிதே உண்பார்; பொல்லனிவன் தனைத்திருத்திப் புதியவழி புகுத்துவதால் நன்மையாமே! உப்புடைய கடல்நீரே உயர்ந்தெழுந்து முகிலாகி, உண்ணும் நீரை இப்புவியில் மழைமூலம் ஏரிகுளம் நதிகளிலே நிரப்பி நின்றே எப்பொழுதும் நலமளிக்கும் இஃதறிவீர்! இவனைஉயிர் வாழ வைத்தால் ஒப்பறுபல் நலங்கிடைக்கும் நலமுயரும் இதுஉண்மை உணரு வீரே! நேற்றுநாம் இவன்வழக்கில் கொலைபுரியத் தீர்ப்பளித்த நேரம் நம்முன் வீற்றிருந்த மந்திரியார் வெற்றிநாதர் விளம்பிய சொல்என் மனத்தே மாற்றமுறச் செய்ததெனை; இரவெல்லாம் மனங்குழம்பி எண்ணி நின்றேன்! ஆற்றலுளன் இவன்திருத்தம் அடைவதற்கு வழியொன்றை அறிந்து சொல்வீர்! என்னுயிராம் ஒருமகளும் இவனுயிரை நீக்குவதற் கிசைய வில்லை; கன்னியர்கள் மனங்கவரும் அழகுடையான்; கவிஞர்மொழி நீதி நூல்கள் சொன்னவழி நடப்பானேல் உலகமெங்கும் சுகம் பெருகி நிறைந்து நிற்கும்; என்னபலன் மாய்ப்பதனால்? இவனுதவி பெருநம்மை அளிக்கும் அன்றோ! அமைச்சர் கூறுதுல் (கலிவெண்பா) மகளுயிரைக் காப்பாற்ற மன்னனிது தேர்ந்து புகன்ற மொழி கேட்டுப் பொருந்துமுரை என்றுபலர் எண்ணியிருக்குங்கால் எழுந்திளைய மந்திரியார் மண்ணுலகில் நின்பெருமை வாழ்கஉயர் மன்னவனே! அஞ்சாத சிங்கன் அறிவுடைய போர்வீரன், நஞ்சாம் எதிரிகளை நாசமுறச் செய்காலன், தீதுபுரி வோரைத் திருத்த வழியறிவான், ஆதலால் நாமவனை அன்பால் வயமாக்கி இந்நகரைக் காக்குமுயர் சேனைத் தலைவனாய் மன்னச் சிறப்பளித்தால், மாந்தர் மறுத்துரையார்; என்று நினைக்கின்றேன்! இறைவவினி யுன்விருப்பம்; மன்றுறையும் பேரறிஞர் மாற்றமும் கேட்க வெனக் கூறி யரசன் குறிப்பை யெதிர்பார்த்தான்; மாறிலா ஆய்மதியான் மன்னவனைப் போற்றியே வெற்றி நாதன் சொன்ன விவேக மொழிகளிலே குற்றமிலை; ஆனால் கொலைதிருட்டுக் காரனிவன் நல்லவழி நிற்க நமக்குறுதி கூறுவனேல் வல்லவனைச் சேனையிலே வைக்கலாம் என்றுரைத்தான் அரசன் வினா - சிங்கன் விடை வேந்தனும் அந்த விறலோன் முகநோக்கி, மாந்தர் மனநடுங்க வாழ்ந்த மதிமுகத்தோய்! மந்திரிமார் இங்குரைத்த மாற்றம் செவிமடுத்தாய்! எந்த வகை உன்கருத்தே? எல்லாம் உரைத்திடுவாய்! என்றவுடன் சுந்தர நாதன் இறைஞ்சினான்; மன்றுள்ளோர் கேட்டிருக்க மன்னனிடம் சொல்கின்றான்; நீரால் அணையாமல் நிற்கும் நெருப்புண்டோ! மாறாத அன்பால் மறையாத மாசுண்டோ! மாதர் விழிநோக்கால் மாறாத வன்னெஞ்சர் பூதலத்தில் இல்லை எனப்புகலல் யொய்யன்றே! இல்லாமைப் பேயதுவே எல்லோரும் தூற்ற வெனைப் பொல்லாத காரியங்கள் செய்யப் புகுத்தியதால்; என்னுடைய வல்லமைக் கேற்றதொரு வேலையினை மன்னவனே! தந்தால் மகிழ்வுடனே செய்வேன்! ஒருவரும் குற்றம் உரைக்காத வண்ணம் சரியாக நான்புரிவேன்; சற்றும் தவறிழையேன்! முதலமைச்சன் மொழி என்ன இளைஞன் எடுத்துரைத்த சொற்கேட்டு, மன்னவன் ஆய்மதிப்பேர் மந்திரியை நோக்கினான் வேந்தே இனியொன்றும் வீண்யோசனை வேண்டாம். மாந்தர் நலம் பெறுவார் மாநகரும் வாழ்வடையும்; சேனைத் தலைவனாயிவ் வீரனைச் செய்துவிட்டால் பூனையைக் கண்டவெலி போற் பதுங்கி நம்பகைவர் ஓடி ஒளித்திடுவார்; ஓங்கும் நமதரசு! ஈடில்லான் வீரத்தால் இன்புற்று நம்முடைய நாடு புகழடையும்; நாள்கழிய நீட்டாமல் பாடு பெறுமிவற்குத் தக்க பரிசுபல தந்து சிறப்பளிப்பாய்! தார்மன்னா! என்றுரைத்தார் மந்திரிமார் ஏற்றார், மகிழ்ந்து தலையசைத்தார். சிலர் வெறுத்தல் இந்நிகழ்ச்சி நோக்கி இருந்தவர்க ளிற்சிலபேர், என்ன ஒழுங்கின்மை! யாரே இதுசெய்வார் ! மன்னன் மொழிக்கு மறுமொழிகள் கூறாமல் சொன்னதே சட்டமெனச் சொல்லினார் மந்திரிமார்; ஓட்டுவோன் பின்புவர ஒன்றன்பின் ஒன்றுபோம் ஆட்டுக் கிடைபோல ஆமாம் எனமொழிந்தார். சின்னமுறச் செய்திவ்வூர்ச்செல்வம் கவர்ந்த கொடும் கன்னக்கோற் காரனே காவல் தலைவனாம் ! நல்லதற்குக் காலமிலை; நாசம் நமக் கென்றே மெல்ல முணுமுணுத்து மிக்க மனங்குழைந்தார். சுந்தரன் சேனைத் தலைவனாதல் காவலனும் சுந்தர நாதனைக் கண்ணோக்கி, வாவென் றருகழைத்தான்; வந்தான்; கழல்பணிந்தான் வீராநீ! இன்றுமுதல் வேந்தன் படைத்தலைவன்! கூரான வாளிதுகொள்! கோல உடைகொள்வாய்! சேனைப் பகுதியிலே சேர்ந்தோரே, நீங்களிவன் ஆணைப் படிநடப்பீர்! என்றே அறிவித்தான்; சேனைத் தலைவனுக்குச் செய்யும் வரிசையெலாம் காணக் கொடுத்தான்; கடிதில் எழுந்திருந்தான்; மண்டபத்தே வீற்றிருந்த மந்திரிகள் மற்றவர்கள் அண்டி யிருந்தோர் அனைவோரும் முன்னெழுந்து, சென்னி வணங்கினார்; சென்றுதான் பெற்றெடுத்த அன்னத் தருகணைந்தான்; அன்று நிகழ்ந்தவெலாம் கூறினான்; அந்தக் குமரியும் தன்துயரம் ஆறிக் களிப்புற்றாள் ஆங்கு. பூனை கையிற் கிளி தங்குபுகழ்ச் செந்தமிழின் தாயாய்ப் பெருநிதியம் பொங்கும் புகழ்மதுரை மன்னன் பிரதாபன், மக்கள் நலம்பேணும் மந்திரிமார் சொல்லின்வழி மிக்க மதியுடனே மேவும் வனப்புடையான், பாண்டி வளநாடும் பாரில் பிறநாடும் நீண்டபுகழ் பேச, நிறைந்த குணமுடையான், காதலெனும் தேனைப் பருகாத கட்டழகன், மாதரை யீன்றெடுத்த மன்னவர்கள் பெண்கொடுக்க எண்ணி மனவோலை எவ்வளவோ பேர்விடுத்தார்; புண்ணியம் இல்லாமற் போயினவே எல்லாம்; பிரதாபன் ஓர்நாள் பெருந்துயரம் நெஞ்சில் உறத்தனியே சென்றோர் தளிர்வனத்தை உற்றவனும் சுற்றி மலர்க்கொம்பர் சூழ்ந்ததொரு மேடைமேல் சற்றேயுட் கார்ந்தான்; சரியுமலர்க் கொடியொன்று பக்கத்துக் கொன்றை மரம்பற்றிப் படருங்கால் தக்ககிளைக் கையால் தழுவி அதைப்பிடித்தே ஆநந்த மாகி அமர்ந்திருக்கும்; அம்மரத்தில் கானக் குயிலிரண்டு கண்சிமிட்டி வாழ்ந்ததிறம் பொன்னாற் பொலிவுபெறச் செய்ததொரு பூந்தட்டில் மின்னுமிரு நீலமணி மேலழுத்தி வைத்ததுபோல் தோன்ற வதுநோக்கித் தொல்புகழ் சேர்தமிழின் ஆன்ற மதியுடையோன் அங்கே மனம்வைத்தான்; ஆசைக் கடிமையாய் அல்லலுறும் மக்களைப் போல் மோசப் புதர்க்குள்ளே வீழாமல் முப்பொழுதும் நெஞ்சத் துயரின்றி வானவெளி நீந்திக்குளிர் மஞ்சு தவழ்சோலை மாநீர்த் தடங்களெலாம் சுற்றி இளைப்பாறிச் சோர்வின்றி இன்புறுவோம் மற்று நமக்கிங்கே மனக்கவலை ஏதென்று காதல் மொழிபேசும் காட்சியது கண்டான்; போதை மதுநுகர்ந்த புண்ணியனைப் போலானான்; தன்னை மறந்தான், தளர்ந்தானோர் புத்துணர்ச்சி மன்னன் மனத்துள்ளே ஓங்க, மலர்க்காவில் இந்தக் கருங்குயில்கள் எங்கிருந்து வந்தனவோ! சிந்தை கலங்கவெனைச் செய்தனவே! ஓகோகோ! பாரேன் இவைமுகத்தைப் பாதகரின் பக்கத்தில் யாரேனும் வாழ்வாரோ! இங்குறையேன் யானென்று பித்த மதிமன்னன் பேசித் திடீரென்று சத்தம் புரியாமல் சார்ந்தான் அரண்மனையை; அமைச்சர் அரசன் நிலையறிதல் அன்றுமுத லாக அவன்மனத்தில் ஊக்கமெலாம் குன்றி யிருந்தான் குறியறிந்தார் மந்திரிமார்; மன்னன் மனத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே பன்னும் கலைகள் பலவறிந்த பண்புடையாள் மாதொருத் தியைநாம் மணமுடித்து வைத்துவிட்டால் காதலலை யின்பக் கடலில் விளையாடி ஆட்சிக் குரியசெயல் எல்லாம் அவள்துணையால் மாட்சி புறப்புரிவான்; மாநகரும் மேன்மைபெறும் என்று முடிவுகட்டி ஏந்த லிடம்சென்று நின்றார்கள்; மன்னன் நிமிர்ந்து முகம் நோக்கி, இன்றுநீர் எல்லேரும் என்னருகி லெய்தியதேன்? நன்றுதீ தேதேனும் நாட்டில் நடந்ததோ? சொல்லுவீர் என்றான்; சுகுணன் முதலமைச்சன் மெல்ல மொழிகின்றான்; மன்னா! மிக வணக்கம்! தஞ்சைநகர் வேந்தன் தயாநிதி பேரறிஞன் கொஞ்சு மகளொருத்தி! கோமள வல்லியென்பாள், கல்வியிலே ஈடில்லாள்! கட்டழகைக் கண்டுவிட்டால் எல்லாந் துறந்தவரும் எண்ணம் பறிகொடுப்பார்; கற்ற கலைஞர் கவிவாணர் என்போரும் முற்றும் நிலையழிவார்; மொய்குழலாள் தன்வனப்பை உண்டு களிப்புறுவார்; ஓயாக் கவிமழையை மண்டலத்திற் சிந்தி மயங்கித் திரிவார்கள்; அந்த நறும்பூவை அணிந்தாலுன் மார்பினிலே சிந்தை தெளிவாய்! சிறப்புறுவோம் யா மென்றார் மன்னவனும் அந்த மடமாதின் இயல்பெல்லாம் முன்னே சிலர்மொழியக் கேட்டான், முதலமைச்சன் கூற்றும் மனம்பாய்ந்து செய்த குதூகலத்தால், மாற்றமெதிர் கூறான், மனம்போல்ச் செய்ம்மினென்றான். அறவீரன் மகட்கொடை மறுத்தல் மந்திரிமார் சூழ்ந்தார் தயாநிதி மன்னன்பால் சிந்தை களிக்கமணம் செய்யவென் வேந்தனுக்கே அன்னம் மிதிப்ப அலர்வழியும் தேறல்போய் செந்நெல் விளைக்கும் செழித்தவயல் சூழ்தஞ்சை மன்னவநின் மாதை மகிழ்ந்தளிப்பாய்! என்றோலை பன்னி வரைந்தனுப்பிப் பார்த்தார் பதில்நிருபம். நாள் கடந்த பின்னர் தயாநிதி நல்லடிமை ஆள்வந் தணைந்தான் அவன்தந்த ஓலையுடன்; காவலனைப் பார்த்துக் கடிதம் கொடுத்தொதுங்கிப் பாவையென நின்றான் பணிவோடும் ஓர்புறத்தே; அவ்வோலை வாங்கி அரசன் பிரித்ததனைச் செவ்வை யுறப்படித்துக் கண்சிவந்து சீற்றமுடன் ஏடா! மடப்பயலே! ஓடுநீ என்னுறவை நாடாத மன்னன் நறுமலரை நான்மார்பில் சூடாமல் விட்டுவிடேன்; சொன்னேன் உறுதியிது; நீடாமல் நீபோய் நிகழ்த்துவாய் என்றுரைத்தான். பிரதாபன் போருக்கெழுதல் தூதுவனுன் ஓடினான்; தோன்றல் பிரதாபன் ஏதுமறி யாமல் இருக்கின்ற போதமைச்சர், இச்செய்தி யால்நீ இறையும் கலக்கமுறேல்! அச்சமுற நாமும் அவன்மேல் படையெடுத்து நிச்சயமாய் வெல்வோம்! நிறுத்துவோம் நம்வீரம்! பச்சைக் கிளியமுதைப் பாய்ந்தோடும் மான்பிணையை பட்டத் தரசியாய்ப் பார்புகழ வைத்தநீ மட்டற்ற இன்பமுடன் வாழலாம் மன்னவேன! என்ன இளமன்னன், எல்லையிலாக் கோபமுடன், இன் னே நமதுபடை எல்லாம் திரட்டுவீர் ! அந்நகரின் பக்கம் அடைவீர்! அறிவில்லான் தன்னைப் பிணித்துத் தலைகுனியச் செய்வோம் நாம் ! வீரத்தை நாட்டுவோம் ! வேந்தர் மனங்குழைத்த காரொத்த கூந்தல் கவித்தேனை நானுகர்வேன்! இன்றே நமதுபடை எல்லாம் திரண்டெழுந்து குன்றாத வளங்கள் குலவுகின்ற சோணாட்டின் தஞ்சை நகரடைக! என்றான்; தலைவர்கள் அஞ்சோம் புறப்பட்டோம்! ஆணை எனக்கூறி அன்றே படைதிரட்டி ஆண்மையுட னெழுந்தார் இரண்டு தமிழ்மன்னர் பொரில் எதிர்நின்றால் இரண்டு பேர்க்கும் வெற்றி கிடைப்பதெங்கிருந்து? நிச்சயமாய் ஒருவர் தோற்பார்; இதுகேட்கின், இச்சகம் தமிழரசன் தோற்றான் எனக்கூறும்; இந்த அவமானம் இருவர்க்கும் என்றெண்ணான் வந்தனனே போர்செய்ய, பேதைஎன வாடினான் நின்ற பெருமலைகள் நீர்சுரக்கும் மாநதிகள் நீண்ட புதர்க்காடு நிறைந்த வழிகளெல்லாம் தாண்டிப் பெருஞ்சேனை தஞ்சை நகர்க்கருகே வந்தொரு சோலையினில் தங்கி வழிநடந்து நொந்த களைப்பாற்றிக் கொண்டார்கள்; நோக்கினார் அந்தப் பெருஞ்சோலை ஆர்ந்த வளங்களெலாம் எந்தப் புறத்தும் இளந்தளிர் சூழ்மரங்கள் அம்மரங்கள் மேலே அணைந்து படர்ந்திருக்கும் செம்மைக் கொடிமலர்கள் சேர்த்த சுவைத்தேனை உண்ட வரிவண்டுக் கூட்டங்கள் ஓவென்று கண்டார் வியப்படையக் கானம் எனஒலித்தல் பாண்டி மறவரைப் பார்த்தந்த வண்டுகள் வேண்டாம்வீண் சண்டை விரைந்துநும் ஊர்திரும்பும் என்று மொழிவதாய் எண்ணினார் அன்னவர்கள்; நின்றுவான் நோக்கி வளர்ந்த நெடுமரங்கள் நாற்றிசையுங் கைந்நீட்டி நாங்கள் உமைக் காக்கின்றோம் ஏற்ற கனியளிப்போம் எம்மிடம் வம்மின்என ஆரையும் கூவி அழைப்பது போல்வளர்ந்த வாரக் கிளைகளிலே வாழ்ந்த பறவையினம், செந்தமிழ் வாழ்மதுரைச் சேவகரை நோக்கி, இந்தப் படைதிரட்டி ஏன்வந்தீர்! தோற்றிடுவீர்! உங்களுக்கு வெற்றியிலை ஓடுங்கள் உம் மூர்க்கே; தங்காதீர்! என்றவைகள் தாவிச் சிறையடித்தே கூவிக் குதூகலித்தும் குக்குக்கூ வென்றிரைந்தும் கானகத்தில் எப்பாங்கும் கத்துவதைப் பார்த்தார்கள் ஆயினும் அவ்வீரர் உண்மை அறியாராய், போயந்தச் சோழனுடன் போர்செய்து வெற்றி கொள்வோம் கோமள வல்லியெனும் கோதையைப் பாண்டியன் காமத் தீத்தணியக் காதலியாச் சேர்ப்போம்என்று இவ்விதமாய் எண்ணி இருந்தார்கள்; அவ்வேளை எவ்விடத்தும் சுற்றி அரசுக் கெதிராகச் செய்யும் சதியறிந்து செப்பிச் சதிகளெலாம் நையும் படிசெய்யும் நற்றிறமை ஒற்றர்கள், பாண்டிய மன்னன் படைவந்த நோக்கறிந்து தாண்டி விரைந்தோடித் தங்கள் தயாநிதி மன்னன் சபையடைந்து மாற்றங் குளறினராய், என்ன மொழிவதென எண்ணித் திகைப்படைந்தார்! வேந்தே ஒருசெய்தி! வெற்றி யுடன் வாழ்க! பாய்ந்தோடி வந்தனம் பார்த்தவுடன் நும்மிடமே; போர்செய்யச் சேனையுடன் போந்தான் பிரதாபன் தாரணிந்த மன்னவனே என்று தலைவணங்கித் தூதுவர்கள் தீப்பொறியைத் தூற்றியது போல்மொழிய, ஏதினிநாம் செய்வதென எண்ணித் திகைத்தான்மன்; மந்திரிகள் எல்லோரும் மாற்றம் மறந்தவராய்ச் சிந்தைக் குழப்பமுடன் சித்திரங்க ளாயிருந்தார்; அஞ்சாத சுந்தரன் அங்கே எழுந்திருந்தான் கொஞ்சமும் அஞ்சேல் எம் கோவே! நமதுநகர்ச் சிங்கத் திரள்போன்ற சேனை வலிகொண்டே இங்கு நமையெதிர்த்து வந்த மதயானைக் கூட்டம் கலைந்தோடக் கொல்லுவேன்! அம்மன்னன் வாட்டமுறச் செய்வேன்! வேந்தேயுன் வாய்மொழியின் கட்டளையை வேண்டினேன் என்றான், கடிதினிலே இட்டம்போற் செய்க! வெனக்கூறினான் இறைவன் தஞ்சையைக்கொள்ளையிட வந்த பிரதாபன் நெஞ்சச் செருக்கதனை நிர்மூலம் செய்திடுவோம் ஓவாப் பெரும்படையும் உள்ளத் துணிவுமுள சேவகரே நம்மையெலாம் சிந்தித்தான் பேடியென! சும்மா விடலாமோ? சூழ்வோம், அவன்படையை! அம்மா வெனவலறி யோடப் புடைத்திடுவோம் பண்டைத் தமிழ் மறவர் போர்க்குப் புறங்காட்டல் உண்டோ? விரைந்தெழுவீர் ஓட்டுவோம் மாற்றாரை! நாட்டைப் பிறர்கவர நாவுக் கினியசுவை வீட்டுக்குள் உண்டுறங்கும் வீணரோ நாமெல்லாம்! கொண்ட மனைவிதனைக் கூசாமல் மற்றொருவன் பெண்டாளப் பார்த்திருக்கும் பேதையரோ நாமெல்லாம்! பெற்றெடுத்த தாயைப் பிறனொருவன் கோல்கொண்டே ஏற்றுவதைக் கண்டிருக்கும் ஈனரோ நாமெல்லாம்! என்று படைத்தலைவன் இவ்வாறு கர்ச்சித்தான் நன்று புறப்பட்டோம் நாங்களினிப் பின்வாங்கோம்! ” என்றிரைந்து கூவி எழுந்தபெரும் சேனைகளை, ‘வென்று வருக! வென வேந்தன் விடைதந்தான் வாழ்கவே நம்மரசு! வாழ்கவே தஞ்சைநகர்! வாழ்க பழம்பெருமை! வாழ்கவே நம்நாடு! வாழ்கவே செந்தமிழ்த்தாய் வாழ்க நமதுகலை! வீழ்க பகைவருரம்! வீழ்க! வெனமுழங்கி, வீரத் துடனோடி வேந்தன் பிரதாபன் தீரப் படைச்செருக்குத் தீர்ந்து தலைகவிழ்ந்து திக்குமுக் காடித் திரும்பாமல் பின்னடைந்தே எக்காலும் போர்செய்ய வெண்ணோம் என் றோடவே தஞ்சை நகர்வீரர் தாவிச் செருச்செய்தார்; அஞ்சிப் பகைவர் அதிசயக்கப் போர்செய்தார் வீசும் பெருங்காற்றால் விண்செறிந்த மேகங்கள் ஓசைமழை பெய்யாமல் ஓடிச் சிதைவதுபோல் சுந்தர நாதனவன் சூரன் பெரும்போரால் அங்கெதிர்ந்த சேனை அழிந்த நிலைகண்டோர், வாழ்கவே சுந்தர நாதன் புகழ்வாழ்க! வாழ்க நமதரசன்! வாழ்க! வென வாழ்த்தினார். சுந்தரநாதன் வெற்றி கேட்டு மன்னன் மகிழ்தல் சென்றார் சிலர்வேந்தன் சிந்தை களிகூர, நன்றுன் புகழ்வாக! மன்னா நமதுபடை வெற்றி சிறந்து விளங்கிற்றே! இப்போரில் முற்று நம் சேனைக்கே வெற்றி! முழுவெற்றி! என்று பெருங்கொற்றம் கூறி இருக்குங்கால், வென்று புகழ்மணந்த வீரன் படையுடனே வந்தான்; அடிபணிந்தான்; வாழ்த்தினான் மன்னவனை; அந்தச் சபைமுழுதும் துள்ளிற் றவன்வீரம்! தாங்காக் களிப்புத் தலைவந்த மன்னவன்றான் ஆங்கே யிருந்தோர் அகத்தில் பெருமகிழ்வு பாய்ந்து நிரம்பப் பரிவோடு மக்களெலாம் ஆய்ந்து நலமாகும் என்ன அறைகின்றான்; இந் நகரைத் தாக்கவே எண்ணிப் படையெடுத்த மன்னன் பிரதாபன் மாபெரும் சேனைகளை வென்றான் படைத்தலைவன்! வீரன்! பெருந்திறலன்! இன்றேல் நமதுநகர் இந்நேரம் மாற்றாரின் கையில் அகப்பட்டுக் கண்கலங்கு வார்மக்கள்; குய்யோ முறையோ ! எனக்கதறிக் கூவுவார்; பாழாகும் இந்நகரைப் பாதுகாத் திட்டார்க்குத் தாழாமல் இன்றே தருவேன் பரிசொன்று. மன்னன், தன்மகளைச் சுந்தரநாதனுக்கு மணமுடிக்கத் தீர்மானித்தல் மண்ணாளும் வேந்தர் பலரும் மணம்பேசி என்னைப் பகைக்கின்றார்; ஏந்திழையாள் என்மகளை வீரனிவ னுக்கே விவாகம் புரிவிப்பேன் ! ஆரும் மறுத்துரையீர் ! ஆதரிப்பீர் என்மொழியை ! வன்ன மயிலிவன்மேல் வைத்தாள் பெருங்காதல் இன்னவ னுக்குவமள்மேல் இச்சை மிகவுண்டு முற்றும் இதை உணர்வேன் ! முன்னோர் முறை நினைந்தால் சற்றும் பிழையன்று; சான்றுண்டு நூல்களிலே; என்றான் தயாநிதி ! எல்லோரும் துள்ளினார்; நன்றே பரிசு ! நடந்தால் நலம்பெருகும் ! எல்லோர்க்கும் சம்மதமே! என்று மொழிந்தார்கள். கள்வன் - இளவரசி திருமணமும் மக்கள் கருத்தும் நல்லதோர் நாளில் மணமுடிக்க நிச்சயித்தார்; அஞ்சாத சுந்தரர்க்கும் மன்னன் அரும்புதல்வி கொஞ்சும் மழலைமொழிக் கோமள வல்லிக்கும் காதல் திருமணமாம்! காணுவோம் நாமெல்லாம்! சாதி மதம்பார்த்துச் சதிபதிகள் சேர்ப்பவர்கள் அன்பின் நிலையுணரார்;ஆடுமா டென்றெண்ணிப் பெண்களை விற்பதுபோல் பேசி மணப்புரிவார்; நம்மரசன் செய்கையிது நல்ல பழங்கொள்கை ! இம்மா நிலமுழுதும் இன்பமுறும் இச்செயலால் என்று பலர்பேசி இருந்தார்; சிலமுதியோர் நன்றோ அரசுமுறை ! நாசம் நமக்கென்றார் ! கள்வன், கொலைகாரன், கட்குடியன் ஓர்மகனைச் செல்வம் பலதந்து சேனை யதிபதியாய் வைத்தான்; மகள் தந்து வாழ்விக்க எண்ணினான்; முத்தை உணராமல் முட்புதருள் வீசுதல்போல் பச்சைக் கிளியொன்றைப் பார்த்திருந்தும் பூனை கையில் வைச்சுக் கொடுப்பவர்போல், வற்றாமல் தேன் சிற்தும் நல்ல மலர்மாலை நாசமுறத் தாவுமொரு பொல்லாக் குரங்கினிடம் போடுவது போல்மகளை இன்னலுறச் செய்யவே எண்ணினான்; மந்திரிமார் மன்னவற்கு வந்த மதிகேட்டை மாற்றாமல் என்னதான் செய்கின்றார்? ஏதிந்த நல்லாட்சி இன்னும் சிலநாளில் இல்லா தழிந்துவிடும்! என்றிந்த வாறெண்ணி ஏக்கம் அடைந்திருந்தார். மன்றல் குறித்தநாள் வந்தவுடன் மாநகரை மண்ணுலகில் முன்னாள் மறைந்த வனப்பெல்லாம் கன்னி இளவரசி காதல் மணங்காண எண்ணிக் குடியேறி எங்கும் நிறைந்தாற்போல் வண்ணமுற வீதியெலாம் வாய்ப்பாய் அலங்கரித்தார். அங்குறையும் மக்கள் அகமகிழ்ச்சி தாங்காமல் எங்கெங்கும் இந்தமணம் பற்றியே எல்லோரும் தங்கள் மனம்போலப் பேசினார்; தாமவர்கள் மங்கலமாய் ஆடையணி பூண்டு, மணங்காண மன்னன் அரண்மனையின் மண்டபத்தில் சூழ்ந்திருந்தார் இன்னிசையே பெண்ணுருவை ஏற்று வளர்ந்த தெனும் வீர குமாரி விரிந்தமுகத் தாமரையாள், கோமள வல்லி குவியா மலர்முகத்தாள், பூமியிலே வீரனெனப் போற்றும் ஒருமகனை சூரனை அஞ்சாத சிங்கனாம் சூரியனை ஆரம் புனைந்தாள்; அவனும் அதுசெய்தான் நாரியரும், ஆடவரும் நல்வாழ்த்துக் கூறினார்; காதலர்கள் நீடுழி வாழ்ந்து களிப்புறுக ! ஏதும் குறைவின்றி இன்பக் கடல்படிக ! மக்கட் பெரும்பேற்றை எய்தி மகிழ்வுடனே எக்காலும் வாழ்க! வென எல்லோரும் வாழ்த்தினார்; ஊராருக் கெல்லாம் உணவளித் தானரசன்; தாராள மாய்ப்பரிசு தந்து களிப்பித்தான்; சுந்தரனும் கோமள வல்லியும் செந்தமிழில் பொங்கும் கவிச்சுவைபோல் புத்தம் புதுவாழ்வாம் தேனை நுகந்தார் தெவிட்டாமல் தங்களிரு ஊனும் உயிருமிங் கொன்றெனவே நீங்காமல் வாழ்ந்து மதுவுண்ட வண்டினமாய் இன்பத்தில் ஆழ்ந்தார் பலநாளும் ஆங்கு. குற்றமுள்ள நெஞ்சு (கலிவெண்பா) தண்மை குடியிருக்கும்; வெம்பித் தளர்ந்தோரைத் திண்மைபெறத் தென்றல்மேல் வீசிநறுந் தேனருத்தும்; எங்கும் தளிர்மரங்கள்; ஏந்தி மதுக்கிண்ணம் தங்கும் மலர்க்கொடிகள், தங்கப்பூச் செய்தே தொடுத்துக் கிடந்ததெனத் தோன்று மொளிர் கொன்றை அடுத்தடுத்து நிற்க அவற்றின் இடைநடுவே முத்தும் பவழமும் மூண்டு கிடந்ததென மெத்த மலர்சிந்தி மேலே மிகவரும்பி எத்திசையும் வீசி இனிய நறுமணத்தைப் பத்தியாய் நிற்கும் பவழமல்லி கைமரங்கள் நீண்ட மரகதத்தில் நீலமணி கள்பதித்துத் தூண்டா விளக்கேற்றித் தோன்ற நிறைத்ததுபோல் காற்றில் அசைந்தாடிக் கண்கவரும் ரோசாக்கள்; தூற்றும் மகரந்தம் தோடவிழ்ந்த சம்பங்கி; பல்லை யிளித்தனராய்ப் பாவையர்கள் நிற்பதுபோல் முல்லைக் கொடிகள் முகையவிழ்ந்து காட்சிதரும்; இந்த மலர்ச்சோலை யிடையே மதுவுண்டு சிந்தை களித்துச் சிறைவண்டு பண்பாடிச் சேமமுடன் வாழும் செந்தா மரைபூத்த தாமரைப் பொய்கையொன் றுண்டதன் தண்கரைமேல் கண்கவரும் கைவேலைக் காரர்கள் கட்டியதோர் பொன்மண் டபமுண்டு; போட்டிருக் கும்நடுவில் உட்கார்ந் திருக்க வுரியதோர் மேடைதான்; தட்பமே தூணாய்த் தரையாய் இருக்குமதில். இந்த விடத்தில் இளவரசி சிங்கனுடன் வந்திருந்து பேசி விளையாடு வாளென்றும் சிங்கன் தனித்திருத்தல் பொன்னாடை யையிந்தப் பூதலத்தி லேவிரித்து மின்னிச் சுடர்வீசி மேற்கே கதிர்நிற்கும் மாலைப் பொழுதொன்றில் சிங்கன் மகிழ்வுடனே சேலைப் பழித்தவிழிச் செல்வி வருமுன்னர் அந்தமணி மண்டபத்தில் வந்தான் அமர்ந்திந்தான்; சிந்தையினில் தன்பழைய சின்னத் தனமெல்லாம் எண்ணினான்; இப்போ திருக்கும் நிலைநினைந்தான்; தன்னந் தனியுறைவோர் தாராள மாய்ப்பலவும் சிந்திப்பார்; இஃதியல்பே! அய்யம் சிறிதுமிலை; முந்தியதன் வாழ்வை நினைத்தான்; முகங்கவிழ்ந்தான்; கள்ள வினைபுரிந்து காலம் கழித்ததையும், பிள்ளை மொழியுடையாள் பேரன்பில் மூழ்கியதால் சேனைத் தலைவனாய்ச் சீர்பெற்று வாழ்வதையும் தானே மனங்கருதித் தாழ்குழலாள் நல்வரவை வெய்யிலிலே தொண்டியற்றி மேனி வெதும்புவோன் மையெழுந்து வெங்கதிரை மாற்றவெதிர் பார்ப்பது போல் எண்ணிமனம் குன்றி இருக்கின்ற வேளையிலே இளவரசி வருதல் - இருவரும் மகிழ்தல் மண்ணில் அழகெல்லாம் மாதைச் சரணடைந்த தென்னும் படிவிளங்கும் இன்பத்தின் ஊற்றான கன்னி மலர்க்கொம்பர் கற்கண்டு போல்மொழியாள், வேந்தன் மகள்வந்தாள்; வேட்கையுடன் சோர்ந்திருக்கும் காந்தன் நிலைகண்டாள்;கண்ணைச் சிமிட்டாமல் காலோசை காட்டாமல், காற்றால் படபடக்கும் சேலை மடக்கி அவள் சேர்ந்தாள் அவன்பின்னே; கல்லிழைத்த பொன்வளையில் ஓசைக் கலகலப்பை மெல்ல நிறுத்தினாள்; மேல்வீழ்ந்து கண்புதைத்தாள்; காந்தள் மலரிரண்டு கண்களை மூடியதும் சோர்ந்திருந்த சிங்கள் சுகக்கடலின் உள்வீழ்தான். மேகஞ்சுமந்துவந்த மெல்லியதோர் பூங்காற்றே தேகமெனத் தேன்சுவையைக் கொண்டவென் தேவியே! கண்டறிந்தேன் உன்னைநான் கைம்மலரைத் தூக்கியென் அண்டையிலே வந்துறைவாய் ஆரமுதே! என்றுரைத்தான்; புள்ளிமான் போல்நின்ற பொற்கொடியும் விர்ரென்று துள்ளிக் குதித்தோடித் தோள்மேல் கரமழுத்தி கொல்லென்று பற்காட்டிக் கொட்டிவிட்டாள் சிரிப்பை வல்லான் அருகணைத்து வாய்முத்துப் பார்த்திருந்தான்; இந்த இருவோரும் இன்பக் கதைநினைத்தே அந்த இடத்தில் அகமகிழ்ந்து சேர்ந்திருக்கும் நேரத்தில் அங்கே நிகழ்ந்தபல காட்சியெலாம் ஆருக்கும் இன்பம் அளிக்குமது கேட்டறிவீர் ! இயற்கைக் காட்சியால் இருவரும் இன்புறுதுல் பச்சைக் கிளிகள் பழச்சாறு தேனருந்திக் கொச்சை மொழிபேசிக் கூடிக் களித்திருக்கும்; கன்னங் கரியகுயில் காதல் தலையெடுக்கப் பன்னிப் பலபாடும்; பார்த்த கருங்காக்கை தானு மதுவாகப் பாவித்துத் தன்னுடைய ஈனக் குரல்காட்டிக் காகா வெனக்கரையும்; பச்சைக் கடலே பறவையுருக் கொண்டதென உச்சியிற் கொண்டையோ டுள்ள மயிற்குலங்கள் தோகை விரித்தாடும்; தோன்றுமக் காட்சிகளால் ஓகை உறாதார் உலகத்தில் யாருள்ளார்? இத்தகைய காட்சிகளால் இன்புற்ற காதலர்கள் முத்தம் பரிமாறி முன்னே பளிங்கனைய நன்னீர்த் தடத்தில் நடந்து குளிர்ந்துவரும் தென்னன் பொதியமலைத் தென்றல் நுகர்ந்திருந்தார்; அந்தநறுந் தென்றல் வழியே பறந்தணைந்த சந்தச் சிறைவண்டு சாற்றும் இசைக்குரலால், நெஞ்சத்தில் நீங்கள் நினைக்கும் நினைவையெலாம் கொஞ்சமும் வாய்விட்டுக் கூறா திருக்கின்றீர்! உள்ளத்தில் தோன்றும் நினைவை உரைக்காமல் கள்ளத் தனஞ்செய்தல் காதலர்க் கேற்றதல என்றரிய செய்தி எடுத்துரைக்கச் சிங்கனும் தன்கொடியின் வாயிதழில் தந்தான் பலமுத்தம். இளவரசியைப் புகழ்தல் மாறாப் பெருஞ்சுகமே! மாமயிலே! கொம்புத்தேன் ஆறாப் பெருக்கெடுக்கும் அன்பே! அழகுருவே! மன்னர் மதிக்கவுயர் வாழ்வளித்த மாமருந்தே! நீலவிழி வீசியெனை நித்தம் சுகவாழ்வில் காலம் கழித்திருக்கச் செய்யும் கடலமுதே! என்னுயிரை வாங்கி யெறிந்துவிட் டெங்கேயோ உன்னுயிரை என்னுடலின் உள்வைத்தாய் ஓவியமே! கண்ணே! உனது நலம் காட்டிக் கவிபுனையும் வண்ணந் தமிழ்ப்புலமை வாய்த்திலேன் என்றுரைத்தான். இளவரசி சிங்கனைப் புகழ்தல் சிங்கன் பொழிந்தமது சிந்தைக்குள் பாய்ந்தோடி அங்கவளைப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்திவிட, சந்திரனை மார்பகத்தில் சார்த்திக் கயல்மீனை அந்தரமாய் வீசிஅவன்முகத்தில் துள்ளிவிழ மாவின் தளிர்க்கரங்கள் மார்பிற் கிடக்க சுவைப் பாவைப் பிழிந்தெடுத்துப் பண்ணியதீங்குரலால், தோட்டமயில் நானாவேன் தோன்றி அதைக்களிப்பால் ஆட்டிவைக்கும் கார்மேகம் ஆனாய்! மதுச் சிந்தும் மல்லிகைப் பூ நானாவேன்! மாதர் மனங்கவரும் நல்லமணம் நீயாவாய்! நாதம் பிறக்குமொரு வீணைநான் ஆவேன்! விளையுமிசை யாவாய் நீ காணுங்கண் நானாவேன்! அக் கரு மணி நீ! செந்தமிழ்த் தேனூற்றும் செஞ்சொற் கவியான அந்தச் சிலப்பதி காரம் அளிக்கின்ற ஆரா வமுதே! அகப்பொருட் செல்வமெலாம் தாராள மாய்வளர்ந்து தங்கும் கலித்தொகையே! சிந்தா மணியே! சிறந்தமணி மேகலையே! முந்தைத் தமிழ்மறவர் போர்வீரம் முற்றும் இறவாமல் மெய்ப்புலவர் இன்சொல்லாற் செய்த புறநானூ றே! புகழ்ப திற்றுப்பத் தேஎன் அகநானூ றே!நற் றிணையே! யருஞ்சொற் புகலும் குறுந்தொகையே! ஐங்குறு னூறே! நல் பரிபாட லே! தமிழர் பண்டை நாள் மாண்பும் அரியதமிழ் நாட்டில் அமைந்த நிலவளமும் முத்துமுத் தாக முழுதுந் தொடுத்துரைக்கும் பத்துப்பாட் டே! என் பழந்தமிழின் தேன்பெருக்கே! எல்லாப் பொருளும் இதன்பாலுள விதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று புகழ் பொய்யா மொழியார் புகன்ற திருக்குறளின் மெய்யான முப் பொருளே! முத்தமிழின் மெல்லொலியே! உன்னாலே யன்றோ உயிர்வாழ்வேன் நானுலகில் மன்னவனே! என்றன் மனம்பறித்த மாருதுமே! என்று பலமொழிந்தாள் இன்பக் கொடிஅவளும், அன்பாக ஓர் பாடல் பாடின் அகமகிழ்வேன்! பாடுவையோ நீ யென்றாள்; பாட்டிது கேள் நீ யென்றே பாடினான் ஏதோ பரிந்து. சிங்கன் பாடுதல் (சிந்து) வீதி வழிதனிலே - என்னை வெஞ்சினக் காவலர் கொண்டு வருங்கால், தாதி மாருடனே - மாடி தன்னிலே வந்துநீ நின்றது கண்டேன் ! ஏதும் அறிந்திலனே - உடன் இன்பவொளி யொன்று வந்ததென் உள்ளே ! சீத மலர் விழியால் - என்றன் சிந்தை குழைந்து மயங்கினன் தேனே! துள்ளும் மான்விழியால் - மனத் துன்பம் விடுத்தனென் தூய்மை யடைந்தேன்! வெள்ளை மனத்தினளே! - முன் செய் வெந்தொழில் யாவையும் வீழ்த்தினை நீதான்! கொள்ளைச் சிரிப்பினையே - உள்ளம் கொண்டெதிர் நின்று வழக்குரைத் தேநான்! கிள்ளை உனதழகே - இந்தக் கேடற்ற வாழ்வினில் வைத்தது காணீ! சந்த மிகுதமிழால் - நெஞ்சச் சஞ்சலம் தீர்ந்து களிப்பது போலே கொந்து மலர்க்குழலே ! - என்றும் கொஞ்சும் இசைமொழி குயிற் குரலாளே! தந்துமதி யெனக்கே - கொடுந் தன்மைக் கடல் கடந்தேறும் புணையாய் நந்தும் மலர்க்கொடியே! - இந்த நாட்டினில் மாட்சி யெனக்க ளித்தாயே! உன்னைப்போல் தமிழால் - தேன் ஊற்றுந் தமிழ்க்கவி கூறவுணரேன்! நின்னை அணைந்ததனால் - நன்மை நேர்ந்தது;போற்றினர் வீரன் எனவென்னை! கன்னல் கரும்புறாவே! - படை காக்கும் தலைவனாய்ச் செய்தெனை வைத்தாய்! என்ன வினியுரைப்பேன்! - நான் ஏதும் அறிந்திலேன் என்னுயிர்த்தேவி! கோமளவல்லி கூறுதல் ( ஆசிரியப்பா ) என்று பாடினன் சிங்கனும் இதனால் துன்று மலர்க்குழல் தோகை மகிழ்ந்தாள்; புதுமலர்த் தேனுகர் கொறி வண்டானாள்; மதுவருந் தினள்போல் மனமயக் குற்றாள்; சிங்கன் உரைத்த சிறந்தநற் கவிகளால் அங்கம் புளகித்து அடங்காக் களிப்புடன், காதல! நின்கவிக் கனியேன் மனத்தை ஓதிடற் கரிய உவப்பில் இழுத்தது; பூவின் தேறல் பொங்கி வழிந்தே நாவிடைப் புகுந்து சுவையினை நல்கி, ஊக்கமும் உணர்ச்சியும் உளத்தில் ஊற, ஆக்குதல் போலுன் அகமலர்த் தோன்றிய செந்தமிழ்ப் பாட்டென் செவிவழிப் புகுந்தே சிந்தையிற் கிளர்ச்சி செழிப்புறச் செய்ததால்! அன்பினாற் பற்பல அறைந்தனை கவியில் என்பெலாம் உருகிட இன்பத் தாழ்ந்தனென்! என்னுயிர்க் குயிராய் இருந்தெனைக் காக்கும் மன்னவர் போற்றும் மணியே! ஆயினும் உண்மை நீ உரத்திலை; ஒளித்தனை! திண்மை உடையோய்! கூறுவென் தெரிந்தே. இனவரசியின் காதற் பாட்டு (ஆசிரிய விருத்தம் ) என்காதல்பெறவிரும்பி வேந்தர்குலக் குமரர் பலர் ஏங்கி நின்றார் ! அன்பாகத் தமிழ்க் கவிதை பலவெழுதி அனுப்பி யெனை வேண்டி னார்கள் ! முன்பே யென் மனங்கவர அவர்களிலே ஒருவருக்கும் முடிந்த தில்லை; இன்பே ! என் எழிலுருவே ! என்னெஞ்சு ழுவதையும் கவர்ந்த தேனே ! இனிய தமிழ்க் கவிதவிர எனதகத்தைத் தனதாக இழுப்ப தற்கோர் மனிதரிலை எனக் கருதி இறுமாந்து தமிழ் பழகி இருந்தேன்; உன்னை நனிவருத்தி விலங்கோடு வீதிதனில் நடத்திவரும் பொழுது கண்டேன்! கனிவு பெற மனமுருகி அன்புகொண்டு காதலெனும் குழியில் வீழ்ந்தேன்! அப்பொழுதே ஒருவருக்கும் தெரியாதென் அகத்துள்ளே விரைந்து போந்தாய்! எப்படியோ உயிர்கொண்டாய்! மனம் பறித்தாய்! உணர்ச்சியையும் கவர்ந்து நின்றாய்! இப்பொழுதும் எனதுருவை மறைவாய் நீ மனத்தினிலே இருத்தி வைத்தாய்! செப்பினை நீ பொய்யுரைதான்! பழையதொழில் மறவாதே செய்து வாழ்வாய்! நிலையாயென் னுட்புகுந்தாய்! நின்னுருவை ஒருநிமிடம் காணேன் ஆயின், கொலையாள னாயென்றன் உயிர் குலைய உளங்குமுறக் கொடிதே செய்வாய்! கலையாத தண்முகிலே! எனை மறந்த கண்ணொளியே! இன்ப வூற்றே! குலையாத முழுமதியே! என்காதல் கொடிபடர வளர்ந்த கொம்பே! சிங்கன் சினங் கொள்ளல் (கலிவெண்பா) செந்தமிழ் சோலையிலே சென்று கனிநுகர்ந்து அந்தச் சுவைமதுவில் ஆழ்ந்த மதியுடையாள் உள்ளத் தெழுந்த உணர்ச்சிதனைச் செய்யுளால் அள்ளித் தெளிக்கின்ற ஆற்றல் மிகவுடையாள் எண்பொருள வாகச் செலச்சொல்லித் தாம்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறி வென்னும் நுண்மொழியைக் காமங் கரைகடந்து விட்டதோர் காரணத்தால் கோமள வல்லி மறந்தளாய்க் கூறிவிட்டாள். பாவின் பொருளும் பழம்பிழிந்த சாற்றினைப்போல் தாவும் சுவைநயமும் தானுணர மாட்டாத சோரன் மனத்தில் சுருக்கென் றிவைதைக்க நாரிமுகம் பார்த்தான்; நகர்ந்தான் சிறிதளவு; முன்னாளில் நாம்புரிந்த மூடச்செயல் மறவாள் என்னைக் கொலைகாரன், கள்வன் எனவிழிவாய் உள்ளத்தில் வைத்தாள்; ஒருசிறிதும் காட்டாமல் கள்ளத் தனமுடனே காதலிபோல் வாழ்கின்றாள்; இன்றே நான்கண்டேன் ! இவள்வாய் மொழிவழியே. என்றே பலநினைந்தான் இன்பத்தின் போக்கறியான்; குற்றமுளார் நெஞ்சு குறுகுறுக்கு மாமென்று முற்றும் உணர்ந்தோர் மொழிவதுபொய் யாமோதான் ! ஆதலால் மங்கை யறைந்த மொழியந்தப் பாதகன் நெஞ்சிற் பகைத்தீயை மூட்டியதால்; ஏதேதோ சிந்தித் திருந்த நயவஞ்சன் தீதொன்று செய்வதற்குத் தீர்மானம் கொண்டான் தன் எண்ணம் சிறிதேனும் ஏந்திழைக்குக் காட்டாமல் அன்னத்தைக் கையால் அணைத்தான்; அருகிருக்கும் கிச்சிலியின் தோலைக் கிழித்திரண்டு பக்கத்தும் வைச்சதெனும் கன்னங்கள் வாடப் பலமுத்தம் பொய்யாகத் தந்தான்; புகழ்ந்தான் பலமொழியால்; மெய்யே எனக்கருதி மெல்லிடையாள் மகிழ்ந்தாள்; என்ணும் எழுத்தும் இலக்கியமும் கற்றாலும் பெண்ணின் அறிவென்றும் பின்னறிவாம் என்றுரைத்த முந்தையோர் சொல்லை முழுதும் பிழையென்பார் சிந்தைமலர் வாடச் செய்தாள் ஒளிர்முகத்தாள்; பின்னும் சிலபொழுது பேசி மகிழ்ந்தவர்கள் வன்னப் பறவையெலாம் வாயடங்கித் தம்முடைய கூட்டுக்குள் வாழக் குறுகுமிருட் போதினிலே வீட்டுக்குச் சென்றார் விரைந்து. கசந்த வாழ்வு (கலிவெண்பா) அஞ்சாத சிங்கன் அரசன் மகளுடனே கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த சோலையிலே அன்னமனத் தாமரையில் ஆர்ந்திருந்த காதற்றேன், பண்ணமைந்த செந்தமிழிற் பாவுருவாய்ச் சிந்தியதை வீரன் உணராமல் வீணே சினமூண்டான்; ஈரமிலான் நெஞ்சத்தில் ஏதோதோ எண்ணிவிட்டான்; அன்று முதலாக அகத்தே மகிழ்வின்றிக் கன்றியே வாழ்ந்தான்; கலகலப்பை விட்டொழித்தான்; காமாலைக் கண்ணனுக்குக் கண்டவெலாம் மஞ்சணிறம் ஆமாறுபோல் தன்னைப் பார்ப்போர் அனைவோரும் கள்வன் எனக்கருதிக் காண்பதுபோல் எண்ணியவன் வெள்கித் தலைகுனிந்தான்; வெம்பினான்; ஏவலர்கள் பற்பலரும் தன்னுடைய பண்டை நிலைகருதி அற்பனிவன் என்றே அவமதிப் பாயொழுகி எள்ளிப் பழிக்கின்றார்; என்னுமொரு தீநினைப்பே கள்ளன் மனத்தைக் கருகிவிடச் செய்ததுவே சோலையிலே சென்றாலும் சுற்றிப் பறவையினம் சாலப் பழிதெரிந்து சாற்றுவதாய் எண்ணுவான்; நீலக் கருங்குயில்கள் நின்று வசைமொழிந்து காலனைப் போற்கூவக் கண்டு துடிதுடிப்பான்; முன்பவனுக் கின்பமாய்மூண்டிருந்த காட்சியெலாம் துன்பமாய்த் தோன்றித் துயர்வளர்த்த விந்நாளில்; சிந்தையிலே ஊக்கம் சிறந்து வளர்ந்திருந்தால் இந்த வுலகத்தில் எல்லாம் மனமகிழ்ச்சி தந்து துணைசெய்யும்; தன்னெஞ்சு குற்றமுறின் எந்தப் பெருநலமும் இன்னல் தருஞ்செயலாய்த் தோன்றி நிலைநிற்கும் துக்கமே எத்திசையும் ஊன்றியது போற்காணும் உண்மை யிதுவன்றோ! கள்வனுக்கும் அவ்வின்ப வாழ்வு கசந்ததுவே; செல்வப் பெருவாழ்வால் சிந்தைக் களிப்பிழந்தான்; முன்னிருந்த வாழ்வினிலே முற்றும் மனம்பதித்தான்; என்னை யிகழ்ந்த இளவரசி வாழ்வைப் பழிவாங்கி யின்று பழிப்பவர்கள் எல்லாம் அழுதேங்கச் செய்வேன்! அகல்வேன் அதன்பின்னே! என்னும் கொடுஞ்செய்கை எண்ணி மறைத்தவனும் கன்னிமேல் எல்லையிலாக் கதாலுடை யான்போல் இருக்கின்ற போதில் எழுந்த கடுங்கோடை வருத்தியதைக் கூற நினைத்தாலே வாய்வேகும்; கோடைக் கொடுமை குட்டைகுளம் எல்லாம் வறண்டு கொதிப்பேறிப் பட்டை பட்டை யாய்வெடித்துப் பார்ப்பவர் கண்கலக்கும்; வீட்டுக்குள் வாழ்பவர்கள் வெம்பி உடல்கருகித் தோட்டங்கள் தேடிப்போய்த் துன்பம் தணிவார்கள்; பூமியிலே சூடேறிப் புற்கள் கருகினவே; தீமையினாற் பழுத்துத் தீய்ந்து பசுந்தழைகள் தோடுமலர் எல்லாம் தொலைந்த பெருமரங்கள் ஆடையணி யிழந்த பெண்கள் அழகின்றி நெஞ்சத் துயரால் நிலையழிய மெய்யொளியை மஞ்சு படர்ந்து மறைத்ததுபோல் நிற்பனவே; மொட்டை மரம்பார்த்து மொய்த்தவரி வண்டெல்லாம் இட்டதேன் இன்றி யிரங்கும் பசிப்பிணியால் பூங்கா வனத்தில் பொருந்தும் பறவைகளும் ஏங்கிச் சுடுகதிரால், இன்னீர்ச் சுனைதேடி ஓடிப்போய் விட்டதனால் ஓசை அவிந்திருக்கும்; கூடிப் புதுமணத்தார் கொஞ்ச முடிவதிலை; இத்தகைய கோடையிலே இன்ப வடிவாளும் மெத்த துயருழந்தாள்; மேலெல்லாம் கொப்புளங்கள்! முத்துப் பதித்தவென மூண்டெழுந்து துன்பத்தில் வைத்தவளை ஆட்டிவிட வாடினாள் பூங்கொடிதான். சிங்கனும் இளவரசியும் மலைக்குச் செல்லுதல் சிங்கன் பலநாளாய்ச் சிந்தித்த தன்நினைவை அங்குநிறை வேற்றிவிட ஆவல் மனங்கொண்டான்; கன்னி அரசிமுகம் காதலனைப் போல்நோக்கி, என்னுயிரே! மானே! இனியமலைத் தேனூற்றே! கோடையிலே நம்மைக் கொடுமையுறச் செய்கின்ற சூடுதணிந்தே சுகமான வாழ்வு பெற நீலமலை மேற்சென்று நிற்போம்; நிலைத்தவெயிற் காலம் கழியும் வரை; கண்ணே! உடன்பாடோ? என்றே அவன்கேட்க, ஏதும் தடையின்றி நன்றே யுளம்நிறைந்த நங்கையிவை புகல்வாள்; ஆசைப் பசுங்கடலே! அன்பாவோ! நின்னுடைய வாசகத்தை என்றேனும் வாயால் மறுத்தேனோ! எண்ணம் சிதைய எதிர்மறுத்துச் செய்தேனோ! மன்னவனே! என்றன் மனப்பாங் கறியாயோ! இப்பொழுதே நீலமலை ஏறப்புறப்படுவோம்! வெப்பத்தின் வேதனைகள் நீங்குவோம் என்றுரைத்தாள்; தன்னுடைய தோழியர்க்கும், தாய்க்கும், முடியணிந்த மன்னவற்கும் சொல்லியோர் மாலைப் பொழுதினிலே அஞ்சாப் பழியனுடன் ஆநந்தமாய்க் கூடி கொஞ்சு மொழிப்பாவை, கோதையரும் ஏவலரும் சுற்றிவரக் கிளம்பிச் சுகவாழ்வு வாழ்வதற்கே முற்றும் நினைந்தவராய் முன்வண்டி யேறினார்; நான்கு வகைப்படைகள் நானிலத்தின் தூசெழுப்பி கான்று சுடுகின்ற கதிரவனைத் தன்னிழலால் வானத்தின் மீதே வளைத்து மறைத்ததென மேனிரைத்துச் சூழ்ந்து மிக்க வழிநடந்து தண்ணீரும் சோலையும் உள்ள இடங்களிலே நண்ணி மகிழ்ச்சியுடன் நன்கு களைப்பாறி உண்டு களிப்போ டுறங்கி யெழுந்து பலம் கொண்டு வழிநடந்து கொஞ்ச தினங்கழித்துக் கோடைக் கொடியவன் செய்யும் கொடுமைகளை ஓடத் துரத்தற்கே ஓங்கி வளர்ந்திருக்கும் நீல மலைகண்டு நீணெறியைக் கடந்த சாலத் துயரமெலாம் சாய்ந்துவிழ மேற்சென்றார்; மன்னன் மகட்காக வைத்திருந்த மாளிகையில் அன்னவர்கள் சென்றார்கள் ஆநந்தம் எய்தினார். மலைக்காட்சி அங்குசில நாட்கள் அவர்கள் மகிழ்ந்திருந்தார்; பொங்கிவரும் அருவி பொன்கொழித்து வீழுங்கால், வெய்யோன் ஒளியால் விளங்கும் பலநிறங்கள்; செய்ய பசுங்குன்றம் சிறக்கப் புனைந்திடவே வாசமலர் பற்பலவும் வைத்துத் தொடுத்ததொரு தேசுடைய மாலையாய்த் தென்படுமே அவ்வருவி; வானைப்பிளந்து வளர்ந்த மரங்களிலே கானப்பறவை கலந்திருந்து வந்தவர்க்கு நல்வரவு கூறி நறுந்தேன் மலர்தூவிப் பல்வகைய பாடல்கள் பாடிக் களித்திருக்கும்; நீருண்ட மேகங்கள் நின்று மிகமுழங்கிச் சேறாகப் பாறை சிதறமழை பெய்வனவே; சூரியனே மண்ணைச் சுடுகின்ற உன்னுடைய காரியத்தை எம்மிடம் காட்டாதே போவென்று கையசைத்துச் சொல்லுதல்போல் காற்றால் தளிர்மரங்கள் பையக் கிளையசைத்துப் பார்த்துச் சிரிப்பனவே; காட்டானைக் கூட்டங்கள் கண்ணயர்ந்து தூங்குதல்போல் மேட்டினிலும் பள்ளத்தும் மிக்ககரும் பாறைகள் குண்டு குண்டாகக் கொழுகொழுத்து நிற்பனவே; அண்டாத நீர்ச்சுனைகள் ஆழ்ந்த படுபள்ளம் கொண்டலை மேலே தடுக்கும் கொடுமுடிகள் கண்டவர்கள் நெஞ்சில் கலக்கம் விளைப்பவே! வற்றாத நீரோடை வாய்ந்த கொடிப்புதர்கள் முற்றும் அவர்கண்டு மூழ்கினார் இன்பத்தே; செல்வர், வறியோர், சிறந்த அறிவுடையார், நல்வினைகள் செய்வோர், நடத்துவோர் தீச்செயல்கள் வல்லார் எளியரெனும் வாழ்க்கை முறையொழிந்து கல்லார் அறிஞர் எனும் வேற்றுமையும் காணாமல் எல்லோரும் ஓர்குலமாய் இன்ப நெறியுணர்ந்தே பொல்லாத காரியங்கள் போக்கி மகிழ்ச்சியுறும் பேரரசுக் கொள்கைபோல் குன்றம் பிறங்கிடுமே; சீறும் அரவம், விலங்கு, சிறைப்பறவை, கற்றறிந்த நூற்புலவர், கள்வர், கொலைகாரர், உற்றமதி யற்றோர் உறைவோர் அனைவோர்க்கும் பேதமிலா வாறு பெருங்குளிர்ச்சி தந்தவரை ஆதரிக்கும் தம்மை அறியாதார் ஆருளரோ? சிங்கனும் மங்கையும் சிகரத்தையடைதல் அக்காலந் தன்னில் அழிந்தநிலாப் போதுவரக் கொக்காகக் காலங் குறித்திருந்த வஞ்சனகம் மாலைச் சிறுபோதில் மாளாத அன்பினன்போல் கோல மயிலின் கரம்பற்றிக் கொண்டேகி வானத்தை முட்ட வளர்ந்த முகடேறினான்; தேனொத்த சொற்கள் தெளித்தார் இருவோரும்; அந்தப் பெருங்குவட்டின் ஓரத்தில் அவ்விருவோர் குந்தி யிருந்தவிடம் கொல்லும் கொலைகளமாம்; அங்கிருந்து கீழ்நோக்கின் ஆண்மை படைத்தோரும் தங்கள் உடல்நடுங்கிச் சோர்ந்து தரைவீழ்வார்; கொஞ்சந் தடுமாறிற் போதும் கொலைமுடிவே; அஞ்சொல் எழிலாள் அறியாள் இதுசெய்தி; கள்வன்பால் வைத்ததொரு காமமே இந்நிலையைத் தெள்ளமுது தேராமற் செய்து மறைத்ததுவே; கள்வன் கடுநெஞ்சம் கண்டவனைப் போற்பாதி மெள்ள மறைந்தான் மேற்றிசையில்; ஆனாலும் உள்ளக் கொதிப்பை உலகத்தார் கண்டறிய அள்ளி அறைந்ததுபோல் காட்டினான் அந்திதனை; கையெழுத்தைக் கண்கொண்டு காணமுடியாமல் மையிருளும் சூழ்ந்து மறைத்ததே கண்ணொளியை இளவரசி கூறுதல் சிங்கன் முகநோக்கிச் செல்வப் பெருந்துரையே! இங்குநாம் இன்னும் இருப்பதனால் என்னபயன்? மால்கொண்ட யானை மனிதர் மனநடுங்கக் கால்கொண்டு மண்ணில் உதைத்துக் கதறுதல்போல் காரும் முழங்கும்; கறுத்தவிருள் சூழ்ந்ததிதோ! ஆரும் துணைவரிலை; ஆபத்து வாழுமிடம். இவ்விடம் விட்டிறங்கி இப்போதே நம்முடைய அவ்விடம் சேர்வோம்; அனைவோரும் தேடுவார்! என்றே அமுதத்தை ஏந்திழையாள் மொண்டூற்ற, ஒன்றும் அவனுரையான், உட்கார்ந்தான் பேசாமல்; கொஞ்ச நேரத்தில குலைந்தான் அவன்பொறுமை; அஞ்சத் தெளித்தான் அனல். சிங்கன் சினமொழி மன்னனது மகளாகப் பிறந்துள்ளோம்! மாநிலத்திற் கரசி யாவோம்! இன்னியல்சேர் தமிழ்நூல்கள் தேர்ந்துள்ளோம்! இனியவிசை பாட வல்லோம்! என்னுமொரு செருக்கினிலே எந்நாளும் மனம்போக்கி இருக்கும் மாதே! என்னையும் நீ திருடெனனக் கொலைஞனென இழிவாகப் பேசி விட்டாய்! அன்றந்தச் சோலையிலே நீ மொழிந்த வார்த்தையினை மறந்தேன் அல்லேன்! என்றுநான் பழிவாங்க ஏற்றவொரு காலம்வரும் எனவே காத்து நின்றிருந்தேன்! இந்நாளும் சரியான சமயமிது நேர்ந்த தாலே இன்றிங்கே உனதுடலும் மனச்செருக்கும் இல்லாதே ஒழிய மாய்ப்பேன்! அக்காலத் துனதுவிழி விடுத்தாயென் அகமுழுதும் கலக்கி நின்றாய்; எக்காலும் வணங்கிநீ வழிபாடு செய்யுமொரு தேவின் பாதம் முக்காலும் பணிந்தேத்தி வரம் வேண்டி முடிப்பதற்குப் பொழுது தந்தேன்! இக்காலை அதுசெய்து தாழாமல் எதிர்நிற்பாய்! நேரம் போக்கேல். கோமளவல்லியின் வீரச்செயல் (கலிவெண்பா) என்ற மொழிகேட்டாள், ஏதொன்றும் சொல்லாமல் நின்றாள் கணநேரம்; நெஞ்சில் துணிவுற்றாள் நல்ல மணியை நடுக்கடலில் விட்டதுபோல் பொல்லான் இவனழகில்போட்டேன் என்தறிவை; நம்மையிவன்கொன்றிந்த நாட்டினிலே வாழ்வானேல் அம்மாவோ ! முன்னையினும் ஆற்றுவான் தீமைபல; ஆதலால் இக்கள்வன் ஆருயிரை நான்போக்கிப் பூதலத்தார் என்னைப் புகழும்படி செய்வேன்! கள்வனைக் காதலித்தாள் காவலன்பெண் என்றுபழி சொல்வதையும் போக்குவேன்! என்றுறுதி சூழ்ந்தவளாய், வேந்தன் மகள் தான் வெருண்டவளைப் போல்நடித்துச் சாந்தம் முகங்கொண்டு சாற்றினாள் இவ்வுரைகள்; காதலால் என்னைக் களிப்பித்த நல்வாழ்வே! தீதற்ற கற்பகமே! தேனே! பெருங்குன்றே! சாதற்கு யானஞ்சேன்! சத்தியமே! உன்னாணை! பூதலத்தில் நீயல்லால் வேறு புகலறியேன்! உன்னை மணம்புரிந்த நாள் முதலாய் உள்ளத்தில் பின்னை ஒருதெய்வம் பேணி அறியேன்நான்! தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை யென்ற மெய்ப்புலவன் பொய்யா மொழியே புலங்கொண் டுனைவணங்கி வையத்தில் இன்புற்று வாழ்ந்தேன்; இதுவுண்மை! உன்னை வலஞ்சூழ்வேன்! உள்ளத்தாற் போற்றுவேன் இன்னே எழுந்தெதிரில் நின்றருள்வாய்! என்றுரைத்தாள். அஞ்சாத சிங்கனவன் ஆழ்ந்த கருத்தறியான் வஞ்சகத்தைச் சிந்தையிலே வைத்திருக்கும் பெண்மக்கள் அஞ்சினவர் போல்நடிப்பார்; ஆணுலகை ஏய்ப்பரிதை நெஞ்சினிலே காணான் எழுந்திருந்து நின்றுவிட்டான்; பூங்கொடியும் அந்தப் புலங்கெட்ட பாதகனைத் தாங்காத சோர்வோடும் சுற்றித் தலைவணங்கி வந்தவளும் காணாமல் வஞ்சகனைப் பொத்தென்றே அந்தப் படுகுழியில் அஞ்சாமல் தள்ளிவிட்டாள்; பார்ப்பதற்குக் கூடாத பாதலத்தி லேவீழ்ந்தான் ஆர்ப்பரித்த கள்வனவன் அப்போதே மாண்டொழிந்தான். தீரச் செயல் புரிந்த தேவி திகில்கொண்டு நேரே இறங்கி வருகின்றாள் நெஞ்சினிலே ஆராத துக்கம் அடைக்கவே வாய்விட்டுச் சோரனே! என்மனத்தைச் சோதிக்கச் சொன்னாயோ! உண்மையோ! ஒன்றும் உணரேன்! உனைக்கொன்றேன்! பெண்மை ஒழிந்தேன்! பெரும்பாவத் தீவீழ்ந்தேன்! அந்தோ! வென்வாழ்க்கை அழிந்ததே என்செய்வேன்! நொந்தேன்! தனித்தேன்! நொடிப்பொழுதும் வாழ்ந்திரேன்! என்றரசி வாய்விட் டிறங்கி வருகையிலே மன்றல் மலர்க்குழலை மாந்தர் பலர்தேடி எத்திசையும் சுற்றி அலைந்தார்; இவள்வருந்திக் கத்தியபே ரோசையால் கண்டு வழியறிந்து வந்திவளைச் சூழ்ந்தார் வரலாற்றைக் கேட்டறிந்தார்; சிந்தை வருந்தினார்; சிற்றிடையைத் தேற்றினார்; தங்கும் இடத்திற்குத் தாழமல் வந்தார்கள்; அங்கே இரவெல்லாம் ஆழ்ந்தார் துயர்க்கடலில்; கள்ளன் கருத்தனைய காரிருள்போய் மாண்டதன்பின் மெள்ளப் பகலோனும் மெய்யறியாள் நெஞ்சத்தே உள்ள இருள்மாய்க்க உன்னிக் குணதிசையில் துள்ளப் பறவையினம், தோன்றினான் சோதியுடன்; இளவரசி தஞ்சையடைதல் வீரச் செயல்புரிந்து வெந்துயரில் வீழ்ந்திருக்கும் காரிகையைச் சூழ்ந்திருந்த காவலரும், தோழியரும், ஆர்கலிதன் ஓசை அடங்கி வருவதுபோல் ஓர்முழக்கம் இல்லாமல் ஊருக் கெழுந்தார்கள் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் காட்சி விருந்தளிக்க எண்ணி விழாக்காணும் இச்சையுடன் கல்லுபல தாண்டியது கண்டு தளர்ந்து தமதூர்க்கு மீண்டு நடந்துவரும் மிக்க பெருங்கூட்டம் இந்தக் குழுவென்று கண்டோர் இசைக்கவே மந்தநடை கொண்டு மாநகரை யண்மினார். நீலமலை சென்ற நேரிழையின் செய்திமலர் மூலமாய் முன்னறிந்த முத்தழிழ்த் தஞ்சைநகர் கோலா கலமாகிக் கோதை செயல்குறித்தும் ஏலாத செய்கவென ஏந்திழைக் கிடங்கொடுத்த மன்னவனைப் பற்றியும் பேசி மதிப்பற்ற சின்னத் தனமெல்லாம் சேர்ந்து பிறந்ததெனும் சிங்கன் கொடுமைகளைச் சிந்தித்தும், எல்லோரும் அங்கம் குலைந்தார்கள் ஆங்கு. ஊர் வாய்க்கு மூடியில்லை (கலிவெண்பா) இந்த ஒழுங்கின்மை எங்கும் நடந்ததிலை அந்தநா ளேநாம் அரசன் முடிவினையும், கற்றும் அறிவில்லாக் காரிகையின் காதலையும் முற்றும் வெறுத்தோம்! மூண்டதுவே தீதென்றோம்! வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனவெண்ணிச் செல்லும் அறிவற்றோர் மன்னன் சிறுசெயலைத் தக்கவினை அன்றென்று தட்டி மொழியவிலை! எக்காலும் நிற்கும் இழிவரசன் ஆற்றினான்; குற்றம் புரிகின்ற காலத்திற் கோபமுடன் கொற்றவற்கு நீதி கொளுத்தும் அமைச்சில்லா நாடு வறங்கூறும்; நலிவராம் குடிமக்கள் பாடு பெறாதரசு; பார்த்திபனும் கெட்டழிவான் என்னும் மொழிக்கே இலக்காகி இவ்வரசு சின்ன மடைந்து சிதைந்ததே! ஐயையோ! தங்கள் வினைக்குத் தகுந்த பலன்பெறுவார் இங்கே எனற்கிதுதான் காட்டாய் இருப்பதுவே; நாயைக் குளிப்பாட்டி நல்லிடத்தில் வைத்தாலும் வாலைக் குழைத்தோடி வாய்வைக்கும் பவ்வீயில்; என்னதான் சொன்னாலும் ஏதமே செய்தவர்கள் சின்னத் தனமறந்து சீர்பெறுதல் இல்லைகாண்! காக்கை நிறங்கருதிக் கானக் குயிலுடனே நீக்கமற வைத்து வளர்த்தால் குயிற்குரலைக் கன்னங் கருங்காக்கை கற்றுவிடக் கூடுமோ! என்ன கொடுமையிது! இப்படியா நம்மரசன் ஒப்பிலாச் செல்விக்குத் துன்பம் உறவேண்டும்? தப்பிதத்தால் வந்ததிது வென்றே தளர்வடைந்து மக்கள் பலமொழிந்தார் மன்னவனும் தேவியும் துக்கக் கணைபாயத் துன்பவலை வீழ்ந்தார்; ஊரெல்லாம் துக்கம் உறைபனியாய் மூடியதால்; யாரும் முகம்சோர்ந்தார்; எச்செயலும் விட்டிருந்தார்; தள்ளாத வயதால் தளர்ந்த குலோத்துங்கன் உள்ளக் கலக்கமுடன் ஒன்றும் உணராமல் கோட்டு மலர்பறித்துக் கோடையிலே போட்டதுபோல் வாட்ட முடன் சோர்ந்து வந்தான் சபைநோக்கி. மந்திரிமார் வீற்றிருந்தார்; மக்கள் திரண்டிருந்தார்; வந்திருந்தாள் தன்மகளும்; வாய்திறந்து சொல்கின்றான்; ஆட்சியினை நன்றாய் அமைதி யுடன்நடத்தி மாட்சிநான் எய்த மதியுரைத்த மந்திரிகாள்! ஊர்வாழ் தலைவரே! ஒன்று புகல்கின்றேன்! சோர்ந்தேன் வயதாலும், சோரன் செயலாலும்; எண்ணற்ற செல்வம் செலவழித் திவ்வுலகில் கண்ணுறுவோர் கண்கள் பெயராமல் நின்றுவிட, அல்லும் பகலும் அசைவின்றி யோடோடிக் கல்லால் மிகவலிவாய்க் கட்டியதோர் மாளிகைதான் பொத்தென்று,பூமி நடுக்கால், இருந்தவிடம் இத்தரையி லின்றி இடிந்தால், அதற்குரியான் கொள்ளுமனத் துன்பம் குறித்துரைக்க ஒண்ணுமோ! உள்ளம் கவரும் உருவுடைய என்புதல்வி! ஆருயிர்ச் செல்வி அரசுரிமை கைக்கொண்டு பாருக்கு நன்மை புரிவாள்; பலசுகமும் நன்றாய் அவள்துய்த்து, நான்களிக்க வாழ்ந்திருப்பாள்; என்றமனக் கோட்டை இடிந்ததால் துன்புற்றேன்; இன்னும் அரசாள என்னால் இயலாதே! பின்னிருந் தாள்வதற்கோ பிள்ளை ஒருவனில்லை; சோரனால் என் கிளியும் சோர்ந்தாள், சிறையிழந்தாள்; ஆராத் துயரத்தால் அங்கம் மெலிந்து விட்டாள் என்செய்ய லாம்நீங்கள் எல்லோரும் ஆராய்மின்! அன்பாக ஓர் வழியைக் காட்டுங்கள் ஆற்றுவேன்! என்றுரைத்தான் மன்னன்; எழுந்து முதலைமச்சன், ஒன்றுங் குறைவில்லை; உள்ளங் கலங்காதீர்! கண்தெரியாக் காமத்தால் கள்வனழ கில்மயங்கி மண்மேல் பழிவிதைத்த மங்கை இளவரசி அந்தப் பெருந்திருடன் ஆவி சிதைத்தனால் முந்தைப் பழி முடித்தாள்; மூவாப் புகழ் பெற்றாள்; ஆட்சி அவள்புரிந்தால் ஆரும் முணுமுணுக்கார்; மாட்சி பெறுமரசை மங்கை கரத்தளிப்பாய்! நீதி முறையறிவாள் நாட்டின் நிலையுணர்வாள்; சாதிமத பேதம் தவிர்ப்பாள்; சமவுரிமை மாந்தர் குலமெல்லாம் பெற்று மகிழ்வடையச் சேந்த வரிவிழியாள் செய்வாள் பலதிருத்தம் மங்கையிவள் போன்ற மதியுடையார் நாடாள எங்கே கிடைப்பார்கள்? இல்லை உலகினிலே! என்றவுடன் எல்லோரும் ஏற்றார் கரம்புடைத்தார்; நன்றே அமைச்சருரை நாங்களிதை ஒப்புகிறோம்; எங்கள் அரசாய் இருந்தினிது காப்பதற்கே இங்கே இதுவன்றி வேறுவழி ஏதென்றார்; கோமள வல்லிதனைக் கூப்பிட்டு அருகிருத்தி பூமியினை நோக்கிப் புலம்பு முகம்நோக்கி, என்னார் உயிரே இளந்தளிரே! கண்மணியே! பொன்னே! மணமிழந்த பூவே! புகன்றிடுவாய்! இப்போ தமைச்சர் எடுத்துரைத்த யோசைனையை ஒப்புகின் றாயோநீ! ஊராளச் சம்மதமோ! நாட்டைப் புரப்பதற்கு நல்ல அரசின்றேல் ஓட்டுவோன் இல்லாமல் ஓடித் திசைமாறும் கப்பலைப் போலிந்தக் காசினி துன்பமுறும்; எப்படியுன் எண்ணந்தான் என்றான் குலோத்துங்கன் சிங்கனுயிர் கொன்றழித்த நாள்முதல் சிந்தையிலே தங்கும் களிப்பின்றித் தள்ளாடி வாழ்ந்திருந்த மங்கை பலநினைந்தாள்; மாறா முடிவுகொண்டாள்; அங்கண் மொழிந்தாள் அவள். கோமள வல்லி கூறுதுல் (ஆசிரிய விருத்தம்) தீதுடைய செயல்யாவும் நிலைநில் லாமல் தெய்வீகக் காதல்முன் மடியு மென்றே காதலிலே தெய்வீகம் இருக்கு மென்று கட்டுரைத்தார் பொய்யுரையைக் கருத்தில் வைத்தேன்! பூதலமே பழிசொல்லும் கொலைஞன் தன்னைப் புருடனென வெண்ணியே மணந்து கொண்டேன்! ஆதலினால் என்னைப்போல் மூடரில்லை அறிவின்மைக் கேற்றதொரு வசையுங் கொண்டேன்! இப்புவியில் காதலிலே தெய்வத் தன்மை இருக்குமேல் காதலருள் ஒருவர் மாண்டால் அப்பொழுதே மற்றோரும் மாள வேண்டும்; அவ்விதமாய் உலக மெலாம் நடப்பதில்லை; செப்பினார் ஈருயிர்கள் ஒன்றே யாகிச் சேர்ந்துவிடும் காதலினால் என்று பொய்யே தப்பிதமே அறிவில்லார் காதல் கொள்ளல்; தரணியிலே இவ்வுண்மை நானே கண்டேன். பெற்றோர்கள் அப்பொழுதே வருந்தி நின்றார்; பெருந்துயர மோடுபல நீதி சொன்னார்; சற்றேனும் அவர்மொழிகள் மனத்திற் கொள்ளேன்! சாற்றினேன்! காதலோ காதல்! என்றே; முற்றாத அறிவுடைய திருடன் அந்த மூர்க்கனைநான்மாற்றிவிட முயன்ற வெல்லாம் வற்றாத நீர்பாய்ச்சி விழலை இங்கே வளமைபெற வளர்த்தல் போல் ஆயிற்றன்றே? பாறையிலும் கால்களினாற் சீத்துச் சீத்துப் பார்த்திரையைக் கொத்தியுணும் கோழி தன்மை மாறுவதே இலை; யுண்மை மனித ருள்ளும் மடமையால் இளமைமுதல் தீமை செய்தோர் தேறுவரோ? ஒருபொழுதும இல்லை! இல்லை! தெரியாதார் அவர்செயலைத் திருத்தநிற்பார்! வேறுமொழி ஒன்றுமிலை; விளம்பு தற்கே; வீணானேன் வாழ்க்கையில் வெறுப்பும் கொண்டேன். எனதுயிரைக் கவர்தற்கு நினைத்த கள்வன் இவ்வுலகில் வாழ்வதனால் பயன்தான் என்னே! மனதினிலே ஈவிரக்கம் இல்லா திந்த மாநகரை மறுபடியும் நடுங்கச் செய்வான்! கனமான பெரும்பாவம் என்னைச் சூழ்ந்து கவிந்தாலும் அவனுயிரை மாய்ப்ப தென்றே மனதார நினைத்தேநான் வீரங்கொண்டேன்! மற்றவனைப் பாதலத்தே தள்ளிக் கொன்றேன். என்கொலையால் கடுவெயிலில் திரிந்த மக்கள் எல்லோர்க்கும் தண்ணிழலே வாய்த்த தாகும்; தின்மையிலை; என்றாலும் உலகில் வாழ்வோர் தினந்தேறும் என்செயலை எடுத்துக் கூறி நன்மையிலாள் என்றுபல பழிகள் பேசி நாயகனைக் கொலைசெய்தாள் என்று சொல்வார் வன்மையுடன் உலைவாயை மூடி னாலும் ஊர்வாயை அடைத்தற்கு வழியும் உண்டோ! ஆதலினால் இவ்வரசு வாழ்வு வேண்டேன்! அடியாளும் குடிகளுக்குள் ஒருத்தி யாகித் தீதுலகில் நிலவாமல் மறைந்தே போகத் தினம் பணிகள் புரிவதற்கே நினைத்து நின்றேன்! ஓதுகிறேன் ஒருவழியை உளத்திற் கொள்வீர்! உங்களிலே அறிவுடையான் ஒருவன்தன்னை நீதிசெயத் தலைவனாய்த் தேர்ந்து கொள்வீர்! நீங்களெலாம் அவற்குதவி யாகி நிற்பீர்! எல்லோரும் பணிபுரிந்தேசெல்வம் ஈட்டி இன்பமுற விழைகின்றீர்! நீங்கள் கூடி நல்லானைத் தன்னலத்தை விரும்பா தானை நாட்டுக்குத் தலைவனெனத் தேர்ந்து கொண்டால், இல்லாமை வீழ்ந்தழியும்; செல்வம் ஊறும்; எழுந்துவளர் சுதந்திரமும் நிலையாய் நிற்கும்; பொல்லாமை அடிசாயும்; தொழில்கள் பல்கும்; புலவர்புகழ் நீதிமுறை ஓங்கும் நன்றே. (கலிவெண்பா) வேர்த்து வினைசெய்யும் வீணன் பழையநிலை பார்த்து நடவாமற் படுகுழியில் போய்வீழ்ந்தேன், அணைந்த விளக்கானேன்! ஆரிருளால் சூழ்ந்தேன்; மணந்தேன் சுடுநெருப்பை, மாண்ட துரும்பானேன்; நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்றென்று வள்ளுவர்தன் சொன்மாலை யுள்ளே சொருகியது கண்டுணரேன்; பொன்மாலை யன்பாய்ப் புனைந்தேன் கயவனையே! காதலெனும் நஞ்சாற் கலங்கி அறிவிழந்தேன்! தீதுக் குறைவிடமாய்த் தீர்ந்தேன் உலகத்தில்; சோகவலை யென்னைச் சூழ்ந்து பிணைத்ததுவே! ஆகையால் என்னால் அரசியற்றல் ஆகாதே! என்ன மொழிந்தாள் இளவரசி; சொற்கேட்டான் மன்னவனும் மந்திரிகள் மற்றுள்ளோர் எல்லோரும் செந்தமிழைக் கற்றறிந்த செல்வி புகன்றமொழி இந்த நிலத்தோர் எவருக்கும் நல்லமுதாம்; மன்னர் உரிமைதனை மாந்தர்பெறுவதற்கே இந்நிலத்தில் போர்செய்ய எங்கும் பலவியக்கம் தோன்றிப் பலநாள் தொடர்ந்து பணிபுரிந்தே ஊன்றி யிருந்தும் உரிமை கிடைப்பதிலை; ஆளும் குலத்தார் அடக்கு முறைகாட்டி நாளும் பொதுமக்கள் எண்ணத்தை நாசமுறச் செய்வதையும் காண்கின்றோம்! சீற்றத்துடன்மக்கள் நையும் அடிமையெனும் நாளை அறுத்தெறியப் போர்ப்படைகள் கொண்டு பொறாதே அரசியலைத் தீர்த்துத் தலைமுழுகித் தீதீல் குடியரசை நாட்டி நலம்பெற்ற செய்திகள் நாமின்றும் கேட்டிடுவோம்! ஆதலாற் கீழ்மையுற மாட்டோம்! பூதலத்தில் யார்தான் சுதந்தரத்தைப் போற்றாதார்? மாது மொழிந்தவுரை மாற்றாமற் கைக்கொள்வோம்! என்றுரைத்து நின்றார்; எழுந்தான் குலோத்துங்கன் இன்றே குடிமக்காள்! என்னரசு தந்துவிட்டேன்! உங்கள் மனம்போல் ஒருவனைத் தேர்ந்தெடுப்பீர்; பொங்கும் களிப்புடனே போற்றுவீர் நாடுதனை! நானுமினி உங்கள்நகரில் ஒரு குடியாய் ஆன வரையிலும் ஆட்சிக் குதவுவேன்; மன்னர் குலத்திற் பிறந்தோர்க்கும், மற்றவர்க்கும் இந்நிலத்தே பேதம் எதுவும் இலையென்னும் உண்மையினை யிந்த உலகோர் உணர்தற்காம் தன்மையுடன் வாழ்வேன்! தகுந்த வினைபுரிவேன்! மெய்யா லுழைக்காமல் மேதினியில் ஏழைகளை நையப் புடைத்தவர்கள் நல்லுழைப்புக் கொள்ளை கொளல் தூவென்று தள்ளித் தொலைக்கத் தகுஞ்செய்கை ஆவதெனக் காட்டி அறிந்த தொழில் செய்வேன்! என்று முடித்தான்; எழுந்தாள் இளவரசி, மன்றில் உறைவீர்! மதியுடையீர் கேண்மினோ! இன்று முதலாக யானும் இனியதமிழ்த் தென்றல் வளர்ந்தோங்கத் தெள்ளமுதம் நாடெல்லாம் ஓடுறவே செய்வேன்! உலகெல்லாம் செந்தமிழை நாடும் படிசெய்வேன்! நாளும் இதற்குழைப்பேன்! நம்மைத் தமிழ்மொழியின் செந்தேன் பிழிந்தெடுத்து மக்கள் இனத்தின் மனவயலிற் பாய்ச்சியே எக்காலும் மாறாத இன்பப்பயிர் விளைப்பேன்! மெய்யே இதுசெய்வேன்! உலகினிலே வெய்யிற் புழுப்போல வேதனையில் ஆழ்ந்திருப்போர் இன்பமுடன் வாழவே ஏற்ற பணிசெய்வேன்! அன்புடனே உங்கள் அரசுக்கும் கீழ்ப்படிவேன்! பாழான பண்டைச் சமுதாய வாழ்க்கைதனைத் தாழாமல் மாற்றித் தகுந்த புதுவுலகம் காணவே நீங்களெலாம் கங்கணம் கட்டுங்கள்! வீணான சோம்பேறி மக்கள் விளைநிலங்கள் தங்கள் உரிமையெனும் கொள்கை தகர்த்திடுவீர்! நஞ்சையிலும் புஞ்சையிலும் நாளும் உடல்வருந்திப் பஞ்சும் பருத்தியும் பல்வகையாம் தானியங்கள் உற்பத்தி செய்பவரே உண்மை நிலக்கிழவர்; கற்பனை அல்லவிது; காண்பீர் பகுத்தறிந்தே! இந்தநிலை வந்துவிட்டால் பஞ்சப்பேய் என்றுமிலை; எந்தப் பெரும்பிணியும் சண்டையும் இல்லையால் தங்கள் நலங்கருதி எந்தத் தனிமனிதர் இங்கு தொழில் நடத்தல் கூடாதெனும் முறையை நீதியாய்ச் செய்துவிடின் நில்லாது வஞ்சகப் பூதமுத லாளித்துவம் போயொழியும் மண்ணாகி! உள்ளவர்கள் இல்லார்கள் இல்லா ஒருசமுகம் துள்ளிமெள்ள வளரும்வகை செய்வீர் துரிதமுடன்! இத்தகைய மாற்றங்கள், ஏற்பட்டால் இவ்வுலகம் புத்துலக மாகிப் புகழ்பெற்று வாழுமே! யானும்இதற் காகவே, என்மனப் பூர்வமாய் ஆன வரைமுயல்வேன்; ஆக்குவேன் புத்துலகம்! போலிமுத லாளித்வம் போச்சு புரையோடி! வேலியென விருந்த வேத புராணமதச் சூதனைத்தும் கண்டு பகுத்தறிவால் சுட்டெரித்தார். ஆதலால், இன்னுமதைக் காக்க அறிவுடையோர் எண்ணார் உண்மையிது; இஃதுண ரார்எதிர்ப்பின் திண்ணம் அவர்தோற்றல்; தீரமுடன் உழைப்பீர்! என்ன மொழிந்தாள் இளவரசி; எல்லோரும் மன்னன் மகள் வாழ்க! வாழ்க மதிமன்னன்! மாநகரம் வாழ்கவே! மாந்தர்குலம் வாழ்க! தேனான எம்மன்னைத்தெய்வத்தமிழ் வாழ்க! வாழ்க! தமிழ்வீரம்! வாழ்க தமிழ்க்கலைகள்! வாழ்க தமிழ்நாடே! என்றுபல வாழ்த்தினார்; தஞ்சை நகர்மக்கள் கூடித் தமக்குள்ளே அஞ்சாமை ஊக்கம் அறிவுள்ளார் தங்களை ஆட்சிக் குரியசபை அங்கத்தார் ஆக்கினார்; காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லாத நன்னூல்கள் கற்றுணர்ந்த நாவலன் ஆனவனை மன்னுஞ் சபைக்குத் தலைவனாய் மன்றத்தார் தேர்ந்தெடுத்துக் கொண்டு திறமாகத் தம்முரிமை ஓர்ந்து நடத்தற் குரியபல சட்டங்கள் செய்துபின் பற்றிச் சிறந்த குடியரசை எய்தி மகிழ்ந்தார்கள் இங்கு. தமிழறிஞர் சாமி சிதம்பரனார் (1900 - 1961) தி. வ. மெய்கண்டார் தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை. சாமி. சிதம்பரனார் யார்? அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்ப தாண்டு காலத்தைத் தமிழனுக்கும், தமிழுககும் அர்ப்பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர்கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாக சமுதாயச் சீர்திருத்தம், சாதிஒழிப்பு, கலப்புமணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணிகளிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர் பிற்காலத்தில் பொது உடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர்; தமிழ் மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும் கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய பொருளா தாரத்துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். சாமி. சிதம்பரனார் யார் ? 1920 முதல் 1951 வரையுள்ள இடைப்பட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட புனைபெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொணடாற்றியவர்.இவர் பகுத்தறிவு புரட்சி, குடியரசு திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோப காரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பல்வேறு கால கட்டங் களில் பணியாற்றியவர்; பத்திரிகைத் துறையில் நாட்டம் கொண்டு அறிவுக் கொடி என்னும் பத்திரிகையை 1936 கும்கோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தி மகிழ்ந்தவர்; தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். சாமி சிதம்பரனார் யார்? பண்டைத் தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடி வாழை யென வந்த தமிழ்ப் புலவர் கூட்டத்தின் வழித்தோன்றல்; பழமைக்கும் புதுமைக்கும் பால மாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆயந்தவர்; தமிழிலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும், முற்போக்குக் கண்ணோட்டத்துடனும், விருப்பு வெறுப்புக்கு இடம் கொடாமல் சமதர்ம உணர்வு தழுவத் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஆரய்ச்சியாளர்; சங்க இலக்கியங் களைச் சாதரணமானவர்களும் அறியும் படி செய்த தமிழ் அறிஞர் தமது படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல் - ஆரவாரத்தை நீக்கி, அடக்கமாக வாழ்ந்து - மக்களுக்காக எழுதவேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சி காலத்திற்கு ஏற்பத் தம்மைப் பொருத்திக் கொண்டவர் தொல்காப்பியர் காலத் தமிழன் முதல் பாரதி - பாரதி தாசன் காலத் தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த - கடகம் என்னும் அழகிய சிற்றூரில், வீரபத்திரமலையமான் என்னும் சைவப் பெருநிலக் கிழாரின் பேரனாகவும் - திரு. சாமிநாத மலையமான் - கமலாம்பாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின்செல்வனாக - சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளில் (01.12.1900) சாமி. சிதம்பரனர் தோன்றினார் கிராமப் பள்ளியிலும், மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். பள்ளி மாணவனாக இருக்கும்போது - 12 வயதிலேயே - தன் பாடப் புத்தகங்களில் செத்தமிழ் செல்வி துணை என்று எழுதி வைத்துள்ள சாமி. சிதம்பரனாருக்குத் தமிழ் கற்று வித்துவானாக ஆக வேண்டும் என்பதிலே விருப்பமிருந்தது; தந்தையார் ஊக்கப்படுத்தினார். தஞ்சையில் தமிழில் பெரும் புலவராக விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர். வெங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் ஓராண்டு மாணவராக இருந்து கல்வி கற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினார் எளிதில் கற்றுணரும் இவரது ஆற்றலும் துறுதுறு வென இருக்கும் தன்மையும் மதுரைத் தமிழ்ச் சங்கப் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமலை ஐயங்காரைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை அப்படியே கேட்டுக்கொள்ளும் சுபாவம் இவருக் கில்லை; குறுக்கு கேள்விகள் கேட்பார்; மாற்றுவிளக்கங்கள் தந்து பேசுவார். இது சில ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை.எனினும் தலைமை ஆசிரியரின் அன்பும் ஆதரவும் நிரம்பிய தலை யீட்டினால் தடையேதுமின்றி முன்னேற்றம் பெற்றார். முறையாகப் பயின்று 1923ஆம் ஆண்டில் பண்டிதர்ப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத்தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார் ஓராண்டு காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு ) உயர் நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப் பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர் பாபநாசம், பட்டுக் கோட்டை உட்பட - எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் தமிழ் ஐயாக்களுக்கு நன்மதிப்புக் கிடைப்பது அரிது ஆனால் சிதம்பரனாரோ மாணவர்களுக்கு நூல்கள் பல எழுதியும் புதுமுறையில் அவர்களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நம்மதிப்புக் கிலக்காகினார் இலக்கணத்தை எளிய இனிய முறையில் கற்பித்தார். சீர்திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார் நாத்திகராக விளங்கிப் பள்ளியில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரேயாவார். அக்காலத்தில் பள்ளித்தமிழாசிரியர், கல்லூரித் தமிழாசிரியர் யாவரும் பஞ்ச கச்சம் வேட்டி கட்டிக்கொண்டு தலையில் துணிக்குல்லாய் (டர்ப்பன்) அணிந்து கொண்டுதான் செல்வர். இதற்கு மாறாக சூட் அணிந்து, கோட், பூட், நெக்டை கூடிய மேல்நாட்டுடையில் முதன் முதல் கல்லூரிக்குச் சென்றுவந்த தமிழ்ப் பேரசிரியர் காலஞ்சென்ற கா. நமசிவாய முதலியார் என்றால், முதல் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் சாமி. சிதம்பரனாரேயாவார். மாணவர்க்கு உவப்பும் உல்லாசமும் ஏற்படுமாறு கற்பித்த புத்துணர் வும், புதுமைக் கருத்தும், புரட்சி வேகமும் உடைய புதிய இளைஞரான தமிழாசிரியரை மாணவருலகம் விரும்பி வரவேற்றதால், வியப்பில்லை யல்லவா? சாமி. சிதம்பரனார் கட்டுப்பாடும், கடமையுணர்ச்சியும், ஒழுக்கமும் பண்பாடும் உடைய தமிழ்க் களஞ்சியமாவார் 1923 முதல் 1940 வரை தமிழாசிரியராக இவர் அலுவல் பார்த்தார். தஞ்சையில் வாழ்ந்தபோது தமிழவேள் திரு. த.வே. உமாமகேசுவரன் பிள்ளை, சர், ஏ. டி.பன்னீர்செல்வம், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைமை ஆசிரியர் திரு.சிவ. குப்புசாமிப்பிள்ளை, கவியரசு ஆர். வெங்கடாசலம் பிள்ளை. சி. வேதாசலம் பி.ஏ.பி. எல். சூப்ரவைசர் இரத்தினசாமிப்பிள்ளை ஆகியோரை நெருக்கமான நண்பர்களாகப் பெற்றிருந்தார். நீதிக்கட்சி (ஜடி கட்சியில் ) ஆர்வம் காட்டிய சாமி. சிதம்பரனார் அதிதீவிர சுயமரியாதைக்காரராகவும். பகுத்தறி வாளராகவும் விளங்கினார்.பெரியார் ஈ, வெ, ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டார் குடியரசு எழுத்தாளரானார் பெரியார் முதன் மதலாக மலாயா சென்றபோது சாமி. சிதம்பரனார் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப்பட்ட அக் காலத்தில் - சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமி. சிதம்பரனார் - கும்பகோணத்தில் பிரபல நீதிக்கட்சிக்காரராக விளங்கிய திரு. ஏ. குப்புசாமிப் பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை சமூகத்தையும் சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சீர்திருத்தத் திருமணமாகவும் கலப்புத் திருமணமாகவும் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் இதுவே. இத் திருமணம் அன்னை நாகம்மையாரின் தலைமையில் பெரியாரின் முன்னிலையில் நடைபெற்றது.நாகம்மையாரும் பெரியாரும் இத் தம்பதிகளைத் தம் செல்வ மக்களாவே கருதி இத்தம்பதிகள் 28-5-1930 -ல் திருவாரூரில் புதுக் குடித்தனம் வைத்தபோது உடன் சென்று சில நாட்கள் தங்கிய தோடல்லாமல், ஈரோட்டில் தம்மில்லத்தில் பள்ளி விடுமுறை காலங்களில் எல்லாம் உடன் வைத்திருந்து மகிழ்ந்தனர். சாமி. சிதம்பரனார் இளமையிலேயே - பள்ளி மாணவராக விளங்கிய காலத்திலேயே - எதையும் புரிந்துகொண்டு எளிமை யாக விளக்கி எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தார் 1921 - ஆம் ஆண்டிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல் வடிவத்தில் வெளிவராமல், எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிதநயம் வாய்ந்தவை. 1923 முதல் அவர் இதழ்களுக்கு - பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார் அவரது படைப்புகள் சமுதாயச் சீர்திருத்தம், முற்போக்கு எண்ணங்களை உருவாக்குதல் பகுத்தறிவைப் பரப்புதல்,மூட நம்பிக்கைகளை நீக்குதல், சாதியை ஒழித்தல், விதவா விவாகத்தை வலியுறுத்துதல் கலப்பு மணத்தை ஆதரித்தல், கடவுள் மறுப்புப்பற்றியே அமைந்திருந்தன. அவைகள் அனைத்தும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் சொற்பொழிவுகளாகவும் அமைந்துள்ளன. பொதுமக்கள் நம்மைக்காக எழுதுகிறோம், நம்முடைய எழுத்துக்களைப் படிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், சமுதாயத் துறையிலே, அரசில் துறையிலே நம்முடன் சேர்ந்து வருகின்றார் கள். மக்களை இவ்வாறு முன்னேற்றம் அடையச் செய்வது நமது கடமை எனறு எண்ணியே எழுதினார். 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சேரும் பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார் அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாட புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப பள்ளிக் கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன் பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக் கழகம் 1934,35,36, ஆகிய ஆண்டு களில் பாடப்புத்தகமாக வைத்தது. பொதுத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக - மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும் அவர் வேலையை விட்டுவிட்டார், முழுநேரமும் எழுத்துத்துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால். பொதுத் தொண்டில் ஆர்வம் காட்டிய சாமி. சிதம்பரனார் எந்த ஓர் அரசியல் கட்சியிலும் நேர்முக அரசியல் வாதியாக விளம்பரத்துடன் விளங்கியதில்லை. இளமை முதலே தென் இந்திய நல உரிமைச் சங்கத்தில் நாட்டம் உடையவராக விளங்கிய சிதம்பரனார் அக்கட்சித் தலைவர்களின் முதலாளித்துவப் போக்கில் அதிருப்தி கொண்டு சுயமரியாதை இயக்கம் உருவானபோது அதில் தம்மையும் இணைத்துக் கொண்டார் சுயமரியாதைக் கட்சியின் நிறுவனர் களில் ஒருவராய்த்திகழ்ந்தார். சாதி ஒழிப்பு, புரோகிதமறுப்பு கலப்புமணம் சீர்திருத்தத் திருமணம் முதலியவற்றில் ஆர்வம் உடையவராகி அக்கருத்துக் களை மக்களிடம் வலியுறுத்தி எண்ணற்ற கூட்டங்களில் இவர் பேசித் தொண்டாற்றினார். 1930 இல் விடுதலை தினசரி இதழ் சென்னையில் (பாலகிருட்டிண பிள்ளைத் தெரு, எண். 2. சிந்தாதிரிபேட்டை ) ஆரம்பிக்கப்பட்ட போது அறிஞர் அண்ணா, அ. பொன்னம் பலனார் ஆகியோருடன்ஆசிரியர் குழுவில் உடன் அமர்ந்து பணிபுரிந்தார் இக் காலத்தில சிதம்பரனார் அறிஞர் அண்ணா அவர்களுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமிப்பிள்ளைத் தெருவில் ஒரே இல்லத்தில் குடி இருந்தார். சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சியை ஆதரித்த காலத்தில் அவ்விதம் ஆதரிக்கக்கூடாது என்று பெரியாருடன் வாதாடி வந்தவர்களுக்கு தக்க முறையில் சாமி. சிதம்பரனார் மறுப்புக்கூறி பெரியருக்கு உறுதுணையாக இருந்தார் இக்காலத்தில் பகுத்தறிவுக் கிளர்ச்சிகளையும். சுயமரியாதை ஏடுகளையும் எழுதிச் செழுமை செய்தார். முற்போக்கு எழுத்தாளர்களில் பெருமைக்குரிய இடம் பெற்றார் சாமி. சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர் முதலில் தமிழ்ப் பண்டிதர். நீதிக்கட்சிக்காரர் தீவிர சுயமரியாதைக் காரர்; திராவிடகழகக்காரர்; அதன் பின்னர் காங்கிரகாரர்; சமதர்மவாதி; 1949, 50-ல் பொது உடமை இயக்கம் நெருப்புக் குளியலுக்கு ஆளான போது அதனிடம் நட்புக் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர்; அதன் பின்னர் இலக்கிய ஆய்வாளர்; விட்ட இடத்தில் தொடுவதைப் போல, தமிழ்ப் புலவராக வாழ்க்கையைத் தொடங்கிய சாமி. சிதம்பரனார் தமது இறுதிக் காலத்தில் - சில ஆண்டுகள், பண்டைக் தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணேட்டத்துடன் விளக்கும் திருப்பணியிலீடுபட்டார் தமது அரசியல் ஈடுபாட்டைப்பற்றிச் சிதம்பரனார் தாமே எழுதியுள்ளார் அரசியல் துறையில் ஈடுபட வேண்டும் என்பதில் எனக்கு ஆசை அதிகம். ஆனால் என்னிடம் உள்ள சில குணங்கள் - அவை நல்ல குணங்களோ கெட்ட குணங்களோ நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - என்னை எந்த அரசியல் கட்சியிலும் நிலைக்க விடவில்லை. ஆரம்பத்தில் ஜடி கட்சிக்காரன்; அதன்பின் தீவிர சுய மாரியாதைக்காரன். சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும் ஒன்றுதான் என்ற நிலை ஏற்பட்டவுடன் நான் காங்கிரகாரனானேன் 1942 இயக்கத்தை ஆதரித்தேன். அதன் பின் காங்கிர பதவிக்கு வந்த பின் அதிலும் எனக்கு அதிருப்தி நேர்மையாக நடக்கவேண்டும்; தப்புத் தண்டா செய்யக் கூடாது; சொன்னபடி செய்ய வேண்டும் மக்களிடையே சாதி வேற்றுமை இனவேற்றுமை மொழி வேற்றுமை பாராட்டக்கூடாது; மக்களனைவரும், கல்வி பொருளாதாரம் இவைகளில் சமநிலை அடைய வேண்டும் - வர்க்க பேதமற்ற சமுதாயம் அடைய வேண்டும் - இவை போன்ற முற்போக்குக் கொள்கைகளே என்னுடைய அரசியல் கருத்துக்கள். ஆகையால் நான் எந்த இயக்கத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கும் குணமும் என்னிடம் இல்லை என்னை எந்த அரசியல் கட்சிக்காரன்தான் ஏற்றுக் கொள்வான்? சாமி. சிதம்பரனார் தொடக்க காலத்தில் பல கட்சிகளில் பணி யாற்றியவராக இருப்பினும் பிற்காலத்தில் எந்தக் கட்சியிலும் அவர் சேர மறுத்துவிட்டார் இலக்கியம், சமுதாயம்,அரசியல் ஆகிய துறைகளில் சாமி சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தம் இறுதிக் காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன-இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஒய், எம், சி, ஏ, பட்டிமன்றம் ஆகியவற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் தொடக்ககால முதலே குறிப்பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார் சென்னை மாகாணசபை சங்கத் தலைவராக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப் பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலைவாரக விளங்கினார். அரசியல் விடுதலைக் கிளர்ச்சியில் பாரதியாரும், தனித் தமிழ் இயக்கத்தில் மறை மலையடிகளும், உரிமை வேட்டலில் திரு.வி.கவும், தமிழ் உரிமை வேட்கையில் பாரதிதாசனும் முன்னின்று தொண்டாற்றியது போல், தமிழ்ப் பெருப்புலவர் சாமி. சிதம்பரனாரும் பெரியாரின் வழி நின்று சுயமரியாதை இயக்கத்தில் பெருந்தொண்டாற்றினார் எனப் புகழ்ந்து போற்றிப் பாரட்டுகிறார் இவரது மாணவரான டாக்டர் சி. இலக்குவனார். நீதிக்கட்சி, சுயமரியாதைக் கட்சியில் ஈடுபட்டபோது, பெரியார் அவர்களுடனும்,அறிஞர் அண்ணா அவர்களுடனும், திரு.எ. இராம நாதன், திரு, எ. குருசாமி, திரு. கைவல்யம் சாமியார், திரு. க ஜனகசங்கர கண்ணப்பர். திரு. காளியப்பன் திரு. சி.நடராசன், திரு. எ. வி. லிங்கம், திரு.சொ. முருகப்பா, திரு.அ.ராகவன், திரு. ப.ஜீவானந்தன், பட்டுக் கோட்டை. ஏ.அழகிரிசாமி மற்றும் நண்பர்களுடனும் சகோதர அன்புடன் பழகி வந்தார். அகன்ற பரந்த நெற்றி; தூக்கி வாரி விடப்பட்ட தலைமுடி; அன்புடன் நோக்கும் கண்கள்; எடுப்பான மூக்கு; பேசத் துடிக்கும் உதடுகள்; மன உறுதியைக் காட்டும் மோவாய்; அம்மை வடுக்கள் லேசாகத் தென்படும் தெளிவான முகம்; உயரமுமில்லாத, குட்டையுமில்லாத நடுத்தர உயரம்; இடுப்பில் நான்கு முழ வெள்ளை வேட்டி; மேனியில் ஜிப்பா பொன்ற வெள்ளைச் சட்டை; மேலே ஒரு வெள்ளைத்துண்டு - நீதிக்கட்சியிலிருந்ததால் வெள்ளை உடையில் பெருவிருப்பம் அவருக்கு - எப்போதும் இலங்கும் கறுப்பு நிற பிரேமிட்ட மூக்குக் கண்ணாடி; என்றும் புன்னகை சிந்தி நிற்கும் மாநிறத் திருமுகம்; வெளியில் செல்லும் போதெல்லாம் கையில் ஒரு குடை - இதுவே சாமி. சிதம்பரனாரின் தோற்றம். அவருக்கு வயது அறுபது என்பது அவருடன் நெருங்கிப் பழகியவருக்கே புலனாகும். சாமி. சிதம்பரனார் பழுத்த தமிழ்ப புலவர்; தமிழ் நாட்டு முன்வரிசை முற்போக்கு எழுத்தாளர்; தமிழால் தமக்கும் தம்மால் தமிழுக்கும் பெருமை ஏற்பட வாழ்ந்த பேரறிஞர்; தமிழ் இலக்கியச் செல்வத்தைத் தமிழர்களுக்கு வாரிவாரித் தந்த தமிழ் வள்ளல். சாமி. சிதம்பரனார் முறையாகத் தமிழ்ப் படித்த பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்தவர் தாம்; ஆனால் தமிழ் பண்டிதர் களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். பழமையில் புதுமை கண்டு பழமையையும் புதுமையையும் இணைத்துக் காட்டியவர். தாம் தமிழ்ப்புலமை பெற்றவர் என்ற செருக்கற்றவர்; அதேநேரத்தில் தமிழ்ப்புலவர்களிடமுள்ள தாழ்வு மனப்பான் மையை விலக்கியவர்; எப் பொருளையும் பற்றி விவாதிப்பார். கருத்து வேற்றுமையை வரவேற்பவர். அதே நேரத்தில் தம் கருத்தை அழுத்தம் திருத்தமாக வலியுருத்திப் பிறர் மனங் கொள்ள எடுத்துச் சொல்வார். இளைஞர்களை இன்முகத்துடன் வரவேற்றுச் சமமாகக் கருதப் பழகுவதிலே இன்பம் காண்பவர்; மேலைநாடுகள் கீழைநாடுகள் போல தமிழ் மக்களும் மேம்பாடடைய வேண்டும் என்னும் மேலான ஆர்வம் உடையவர். அவர் உயர்ந்த மனிதர் என்ற சொல்லுக்கு இலக்கண மாகத் திகழ்ந்தவர்; நேர்மை, நாணயம், தூயசிந்தனை, அன்புள்ளம் இவைகளின் உருவமாக விளங்கினார். உள்ளும் புறமும் ஒத்தவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்; இவர் யாருடனும் இன் முகத்துடன் இங்கிதமாகப் பழகுவார் அதே சமயத்தில் சிறுமைக் குணம் படைத்த தீயோரைக் கண்டால் தூற்றாமல் தூர விலகிப் போய்விடுவார். மன்னிக்கும் மனம் உடைய மாமனிதர்; சினத்தைச் சினந்து ஒதுக்கியவர்; பொய் என்றால் என்னவென்றே அறியாதவர் அடங்கி அடங்கியே வாழ்ந்தவர்; ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் அறவே நீக்கியவர் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றிய உத்தமர். பணம் சம்பாதிப்பது என்னும் குறிக்கோள் இல்லாதவர்; செலவு செய்வதிலே சிக்கனமானவர்; நல்ல காரியம் என்று தோன்றினால் தாராளமாக உதவுவார்; விளம்பரத்தை ஒரு நாளும் விரும்பியவரல்லர்; ஏழை மாணவர்களுக்கு இரண்டாம் பேருக்குத் தெரியாமல் உதவுததிலே ஆர்வம் காட்டியவர் ஒரு பதவியில் அமரும் வரையிலும் கூட இவரிடம் உதவி பெற்றவர் களும் உண்டு தமக்குச் செய்த சிறிய உதவியையும் பெரிதாக மதித்து நன்றி பாராட்டக்கூடியவர் காலத்தை ஒரு சிறிதும் வீணாக்காதவர் குறிப்பிட்ட வேலையைக் குறித் காலத்தில் ஒழுங்காகச் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர். எழுதும் பேனாவில் இங்க்தானே உற்பத்தியாகக் கூடாதா, வற்றாமல் என்று வருத்தப்பட்டவர் எழுதுவதற்கு மேஜை நாற்காலி எதையும் வேண்டார். ஒரு பெட்டி முன்னால் பேப்பர் கட்டுகளை வைத்துக் கொள்ள இடமிருந்தால் போதும். பெட்டி உயரமாக இருந்தால் இரண்டு மூன்று தலையணை களைப் போட்டு உட்கார்ந்து கொண்டு எழுத ஆரம்பித்து விடுவார். அல்லது ஒரு சாய்வு நாற்காலி இருந்தால் போதும்; படிப்பு ஆராய்ச்சி, எழுத்துவேலை எல்லாம் தொடங்கி விடும். இனிய குரலில் தமிழ்ப்பாடல்களை மிக அழகாகப் பாடுவார். சாமி. சிதம்பரனார் எழுதிய நூல்களை விட எழுத நினைத்த நூல்கள் ஏராளம். திரு. சாமி. சிதம்பரனார் அவர்கள் 20 வயதிலிருந்தே நாட்குறிப்பு எழுதும் வழக்கமுடையவர்; ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்ச்சிகளையும் முறையாகக் குறித்து வைத்துள்ளார். இளமை முதலே பத்திரிகைத்துறையில் ஆர்வம் காட்டிய சிதம்பரனார் 1934-35 பள்ளி ஆசிரியராக விளங்கிய காலத்தில், மாயவரத்தி லிருந்து வெளிவந்த வெற்றிமுரசு என்னும் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றினார் 1936-ல் சொந்தத்தில் அச்சகம் நிறுவி, தம்முடைய துணைவியார் சிவகாமி அம்மையாரை ஆசிரியராக அமர்த்தி அறிவுக்கொடி என்னும் இதழைக் கும்பகோணத்திலிருந்து ஈராண்டு காலம் நடத்தினார் பிற்காலத்தில். 1948-ல் பரலி.சு. நெல்லையப்பரிட மிருந்து லோகோபகாரி இதழின் உரிமையை வாங்கித் திரு. வேணுகோபால நாயகர் நடத்தியபோது ஓராண்டுகாலம் ஆசிரியராக அமர்ந்து திறம்பட நடத்தினார். 1938லும் 1952லும் முறையே ஓராண்டு காலம் விடுதலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவையன்றி, தமிழரசி, (சென்னை) தாருல் இலாம் (சென்னை), சாந்தி, தொழிலரசு (திருச்சி) தமிழ்பபொழில் (கரந்தை), செந்தாமரை (சென்னை), சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு (சிங்கப்பூர்), பொன்னி (புதுக்கோட்டை) செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி (சுடர்), புதுஉலகம் (பட்டுக்கோட்டை), கவிதா மண்டலம் (புதுவை வாரஇதழ்) புதுவை முரசு, நகர தூதன் (திருச்சி), சண்டமாருதம் (புதுவை வாரஇதழ்), பார்க்கவகுல மித்திரன் (திருவண்ணாமலை) சுயமரியாதை போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார். இவ்விதழ்களில், மெய்கண்டான், கதைக்காதலன் குருலூ, s.c. பரன், மிடர் திங்கர், சாமி, இடிமுழக்கம், காலக்கவி, வாமிஜீ, வம்பன் அரட்டை சிகாமணி, நாதிகன், பொறுப்புள்ளவன் என்னும் பதிம்மூன்றுக்கும் மேற்பட்ட புனை பெயர்களில் எழுதினார். இலக்கிய சம்பந்தமான கட்டுரைகள் அனேகமாக இவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகும். பத்திரிகைத் தொழிலில் ஈடுபடுவதில் அவருக்கு மட்டற்ற ஆசை இருந்தது. (பத்திரிகையில் எழுத வேண்டும் என்னும் வெறி மிகுந்த போதெல்லாம் ) தமிழாசிரியர் பணியிலிருந்து விடுமுறை பெற்றுப் பத்திரிகை நிலையங்களில் வேலை செய்தார். இவ்விதம் அவர் எழுத்தாள ராகவும், ஆசிரியராகவும் இருந்து பணியாற்றிய பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்கவை, குடியரசு, புரட்சி, பகுத் தறிவு. திராவிடன், விடுதலை, லோகோபகாரி ஆகியவைகள். நான் என்றும் என்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள விரும்பியதில்லை. ஆனால் 1923 முதல் எழுதிக் கொண்டே வருகிறேன் 1948 வரையிலும் நான் எழுதி வந்த எழுத்துக்கள் எல்லாம் பயனற்றவை என்றே இன்று நினைக் கிறேன் வ. விஜயபாகரனை ஆசிரியராகக் கொண்ட 10.12.1958 சரசுவதி இதழில் ) என்று சாமி. சிதம்பரனார் கூறியுள்ளார். அன்றாட அரசியல் நிகழ்ச்சிகளிலேயிருந்து அறவே ஒதுங்கி நின்று இலக்கியத் துறையில் ஈடுபட்டு உழைத்து, மனநிறைவும், மனமகிழ்ச்சியும் எய்திய பிற்காலத்திலேயே இந்தக் கருததை அவர் வழங்கியுள்ளார். இக்காலம் வரையில் அவர் தன்னிடம் மறைந்திருந்த இலக்கிய ஆராய்ச்சித் திறனை உணராமலேயே இருந்திருந்தார். ஆயினும் சாமி. சிதம்பானார் அவர்கள் கூறியுள்ளதை போல் 1948 வரை அவர் ஆற்றியுள்ளஇலக்கியப்பணிகள் அனைத்தும் பயனற்றவை என்று ஒதுக்கிவிடுவதற்கில்லை இந்தக்காலத்திலேதான் அவர் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் எழுதினார் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் எழுதினார். ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதினார்; நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார்; அவற்றுள் பல இன்றும் நூல் வடிவிலே வெளிவரவில்லை. இந்தக் காலத்திலேதான் (1939-ல்) பிற்காலத்தில் இலக்கிய, வரலாற்று ஆசிரியர்களால் பாரட்டப்படவிருக்கிற ஈ. வெ. ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலாகிய தமிழர் தலைவர் என்னும் நூலை எழுதினார் இதனை வெல்லக் கூடிய - தந்தை பெரியாரின் வாழ்க்கையைச் சித்திரிக்க கூடிய வேறு நூல் இன்னும் வெளிவரவில்லை என்பதே இந்நூலின் பெருமைக்குத் தக்கதோர் சான்றாகும். நாவலர் சோமசுந்தர பாரதியார், சிதம்பரனார் எழுதும் எதுவும் நடைநலமும் உணர்ச்சி வளமும் உடையதாகும் உண்மையில் உயர்ந்த சால்பு நிறைந்த பெருந்தகையார் வரலாறே பொருளாகக் கொண்டு அவர் எழுதிய இப்புத்தகம் கற்பவருக்கு இனிமையும்,உணர்வும், மடிமையில் வெறுப்பும் அறவலி மதிப்பும் ஊட்டி, நாட்டுநலம் பெருக்குமென நம்புகிறேன் எனக் கூறிப் பாராட்டியுள்ளார்; திரு.வி.கவும் இந்நூலைப் பெரிதும் பாராட்டியுள்ளார். எனவே இக்காலத்தில் சிதம்பரனார் ஆற்றிய பல்வேறு பட்ட இலக்கியப் பணிகளிலே, சிறப்பாகக் குறிப்பிடத் தக்க வைகள் உண்டு. சாமி சிதம்பரனார் 1948 லிருந்து 1961 வரை உள்ள இடைக்காலத்தில் இலக்கியத் துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. அரசியல், சமுதாயம் சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு உருவாக ஒன்றும் செய்யாமல் வீண்காலம் போக்கிக் கொண்டிருந்த என்னை இலக்கிய உலகத்திவ் நுழையச் செய்தவர் சீங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் நண்பர் கோ.சாரங்காபாணி அவர்கள்தான் அந்த இலக்கிய உலகத்தில் உறுதியாக நிலைத்து நிற்கச் செய்தவர் தோழர் கண முத்தையா அவர்கள் என்று மனமகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார் இந்தக் துறையில் ஊக்கமளித்த டார் பிரசுரம் கண. இராம நாதனையும் நன்றியுடன் குறிப்பிட அவர் மறக்கவில்லை. இலக்கியங்களை விருப்பு வெறுப்புக்கு இடம் தராமல் வரலாற்றுக் கண் கொண்டு, மக்கள் நலக் கண்ணோட்டத்துடன் விமர்சித்து விளக்கும் பெறுமுயற்சியை சாமி. சிதம்பரனார் மேற்கொண்டார். பாரதி உச்சிமேல் வைத்து மெச்சியகம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பொரும் புலவர்களின் படையல்களையும், சங்க இலக்கியங்க ளான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுக்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு ஆகியவற்றையும், சீத்தலைச் சாத்தனாரின் செந்தமிழ்க் காப்பிய மான மணிமே கலையையும், சைவ, வைணவ அடியார்களது பாடல்களை யும், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவத்தையும், வடலூரார் வாய் மொழியையும், இக்கால இலக்கியங்களையும் தமிழ்ப் பெருமக்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கும் அரும் பணியில் சிதம்பரனார் இறங்கினார். இவரியற்றிய தொல்காப்பியத் தமிழர். பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், பழந்தமிழர் அரசியல் என்னும் நூல்கள் பண்டைத் தமிழரின் பண்பாட்டினையும், சிறப்பினையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுவன வாகும். சங்க இலக்யிம் பற்றிப் பேசும் பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும், பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் என்னும் நூல்கள் பழந்தமிழரின் நிலைமையினையும், பெருமை யினையும் உள்ளவாறு உணர்த்து வனவாகும். வள்ளுவர் வாழ்ந்த தமிழகமும், சிலப்பதிகாரத் தமிழகமும், மணிமேகலை காட்டும் மனித வாழ்வும் கம்பன் கண்ட தமிழகமும், வடலூரார் வாய்மொழியும் ஆராய்ச்சியாளர்க்கு அமுதசுரபியாக விளங்கும் தன்மை உடையனவாம் அருள் நெறித் தொடர் வரிசை நூல்களான ஆழ்வார்கள் அருள் நெறி, தேவரதத் திருமொழிகள், சங்கப்புலவர் சன் மார்க்கம், மாணிக்க வாசகர் - மூலர் மணிமொழிகள், அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள், பட்டினத் தார் - தாயுமானார் பாடல் பெருமை ஆகிய ஆறுநூல்களும் புலவர்களிடத் திலிருந்தும் இறையன் பர்களான அடியர் களிடத்திலிருந்தும் நாம் ஏற்றுக் கொள்ளத்தக்கன இவை இவை என்பதனை எடுத்துக்காட்டு வனவாகும். இலக்கியம் என்றால் என்ன? என்னும் நூல் இலக்கியத்தில் பிரசாரம், பழமையான இலக்கியங்களைக் காண வேண்டிய கண்ணோட்டம், புதுமையான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டிய அடிப்படை ஆகியவை பற்றி விளக்குவதாகும். இவரது, அறிவு என்னும் கவிதை நூலும்,உமர்கய்யாம் (மொழி பெயர்ப்பு) என்னும் கவிதைநூலும் கற்போர்க்கு இன்பம் பயப்பனவாம். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை ழுதியுள்ளார். இவற்றில் முப்பத்துக்கும் மேற்பட்ட நூல்களே வெளி வந்துள்ளன. இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும் உணர்ந்து கற்றுப்பயன் பெறத்தக்க வகையில் - தமக்கே உரிய எளிய இனிய நடையில் - அவற்றின் அடிப் படையை ஆய்ந்து அறிவித்துள்ளார், சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்துள்ளனர். பொதுவுடமை இயக்கத்தலைவர் தலைவர் ப. ஜீவானந்தம் வழங்கிய புகழுரைகள் இவை. விருப்பு வெறுப்பின்றித் தமிழரின் முதற்பெரும் நூலாம் தொல்காப்பியத்தைச் சாதாரணத் தமிழர் ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்ளும் எளிய தமிழில், தமிழரின் அன்றைய நாகரிகம் எது என்பதை ஆராய்ந்து தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். தோழர் சாமி.சிதம்பரனார். இந்த அரிய ஆராய்ச்சிக்குத் தமிழகம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. சிதம்பரனாரின் மிகச் சிறந்த சாதனை நூல் இது திருக்குறளைப் பற்றிய பலவேறு அம்சங்களையும் சராசரித் தமிழ்மகன் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த நூலில் எளிமை படச் சொல்கிறார். மனக்கோட்டமில்லாமல் வள்ளுவத்தைக் கற்க இதில் வழி காட்டுகிறார். திருக்குறளைப் பற்றிப் பரவி நிற்கும் - பரப்பப்படும் குறுகிய மொழி, இன வெறிக் கொள்கைகளை வரலாற்று நோக்கோடும், தெளிந்த இலக்கிய அறிவோடும் பிட்டுப் பிட்டுக் காட்டி அம்பலப் படுத்துகிறார் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் - என்ற தமிழ் மொழியின் ஆகச் சிறந்த இலக்கியங் களைச் சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு ஆய்ந்து, சிறந்த நூல்களை வரிசையாகத் தீட்டித்தந்தது சாதனையாகும் இந்தச் சாதனை இது வரை யாரும் சாதிக்காத பெரும் சாதனை இதைப்போகப் போகத்தான் தமிழன் உணர்வான் என்பதில் ஐயமில்லை எழுத்து (பிப்ரவரி 1961) இலக்கிய மாத இதழில் திறனாய்வாளர் சி.சு. செல்லப்பா வழங்கிய புகழுரைகள் இவை இதுதான் ஆங்கிலத்தில் சோஷியாலஜிகல் என்று கூறப்படும். இலக்கிய சம்பந்தமாக சமுதாயப் பார்வை பார்த்து தகவல்களை வெளிக் கொணரும் ஒரு விமர்சன முறை வழிஆகும். சரித்திர பண்பாட்டு ரீதியான பார் வகள் கலந்தும் கூட, சங்க காலக் கவிதைகள் முதல் பாரதி வரை அநேகமாக எல்லா பழைய இலக்கியங்களையும் அவர் இந்த நோக்கில் பார்த்து, ஆராய்ந்து, ரசமான, இன்பமான உபயோகமான பல தகவல்களை அறிவித் திருக்கிறார்- இலக்கியம் மூலம் தெரியவரும் ஒரு நாகரீக பண்பாட்டு வாழ்வு பற்றிய பார்வையை மட்டும் ஆழ்ந்து செலுத்தி, உயர்ந்த அளவு தகவல்களை ஒவ்வொரு நூலிலும் வெளிக்காட்டி இருப்பவர் சாமி.சிதம்பரனார். இலங்கை எழுத்தாளர் எச்.எம்.பி.முகைதீன் வழங்கிய புகழுரைகள் இவை; சிதம்பரனாரின் தமிழ்ப்பணி பலதரப்பட்டவை என்றாலும் அவரது தமிழ்த் தொண்டின் இமயசிகரமாகச் சுடர் விட்டுப் பிரகாசிப்பது அவரது பண்டைய தமிழ் இலக்கியத் திறனாய் வாகும். இந்தத் துறையில் அமரர் சிதம்பரனாரின் அருந்தமிழ்த் தொண்டு பேரறிஞர்கள் உ.வே. சாமிநாத ஐயரினதும் எ. வையாயுரிப் பிள்ளையினதும் தமிழ்ப் பணியுடன் நிகர் நிற்கக் கூடியது. என்றாலும் இவ்விரு தமிழ் நாட்டின் தலைசிறந்த இலக்கியத் திறனாய்வுத் திலகங்களையும் சில அம்சங்களில் சாமி. சிதம்பரனார் மிஞ்சி விட்டிருந்தார். சிதம்பரனாரின் திறனாய்விலே ஒரு புதுக் கண்ணோட்டம் மனிதனை வாழ வைக்கும் கண்ணோட்டம் மனிதனுக்கு நல் வாழ்வு துவஜத்தை தூக்கிப்பிடித்து வெற்றிநடை போட ஆதர்சம் நல்கும் கண்ணோட்டம் பல்கிப் பரவி இருந்தது. இந்த உலகப் பார்வை சிதம்பரனாரை அவருக்கு முன்னால் பண்டைய தமிழ் இலக்கியங்களைத் திறனாய்வு நடத்தி தமிழுக்கு அரும் பெரும் தொண்டாற்றிய அறிஞர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன், தமிழ் இலக்கியத் துறையிலே அவர்களுக்கு இல்லாத ஒரு தனிப்பெரும் தானத்தைச் சிதம்பரனாருக்குப் பெற்றுத்தந்தது சாமி. சிதம்பரனாரின் சில கருத்துக்கள் ஆராய்ச்சி அறிஞர் வையாபுரிப் பிள்ளையை அடியொற்றிச் செல்வன. திறனாய்வால் சிதம்பரனார் கண்டு சொல்லும் கருத்துக்கள் சிலவற்றை பிற அறிஞர்கள் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும், அவை அவர்களுடைய சிந்தனையைக் கிண்டிக் கிளறி விடும் வண்ணம் விளங்குகின்றன என்பதில் துளியும்ஐயமில்லை. தமிழறிஞர்களான டாக்டர் மு. வரதராசனார் கி.வா, ஜெகந்நாதன் ஆகியோரும் சங்க இலக்கியத்தைச் சாதாரண மானவர்களும் படித்துணரத்தக்க வகையில், இலக்கிய நயத்துடன், மிக எளிய நடையில் விளக்க நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளனர், சாமி. சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள், இவர்களினின்றும் முற்றிலும் மாறுபட்டு, ஆய்வுக் கண்ணேட்டம் உடையனவாய் விளங்குகின்றன. பேராசிரியர் சாமி.சிதம்பரனார் வாழையடி வாழையென வந்துள்ள தமிழ்ப் புலவர் மரபின் வழித்தோன்றல்; தமிழ் நூல்களை முறையாகக் கற்றுப் புலமை பெற்றவர்களின் தொகை அருகி வரும் இந்நாளில் அந்தச் சிலரில் ஒருவராகச் சிறந்து விளங்கிய மூதறிஞர் சமுதாய மாறுதலுக்காக இயக்கங்களுடன் இணைந்து நின்று பழையன கழித்துப் புதியன புகுத்திப் பண் பாட்டினைச் செம்மை செய்யத் தொண்டாற்றிய தமிழ்பெரியார் சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர் களே சிறந்த நூல்களை ஆக்க முடியும். அத்தகைய நேரமும். வசதியும் சிதம்பரனார் தன் வாழ்நாளில் பெற்றிருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கிய சுவையில் முற்றிலுந் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள்நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்குமேல் எழுதி வெளியிட்டுள்ளார்கள் அது தவிர மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பதினாயிரம் பாடல் களுடைய கம்பராமாயணத்திலிருந்து, இலக்கியத்தரம் அதிகம் வாய்ந்த 3949 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கம்பனிடமுள்ள ஈடுபாட்டையும் அவரே விவரிக்கிறார். கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே என்பது ஒரு பழந்தமிழ்ப் புலவர் பாட்டு. கம்பன் கவியைப் படித்தவர்கே அதன் அருமை தெரியும். தமிழின் அருமையை அறிந்தவர் இனிமையை உணர்ந்தவர், கம்பன் கவிதையிலே ஈடுபட்டால் கவலைகளையெல்லாம் மறந்து விடுவர் களிப்புக் கடலிலே நீந்தி விளையாடுவர்; உள்ளத்திலே கவிச்சுவையைப் பாய்ச்சி களிப்பூட்டுவதிலே கம்பன் கவிக்குநிகர் கம்பன் கவியேதான். மேலே காட்டிய பழந்தமிழ்ப் பாட்டின் பகுதி இவ்வுண்மையை உணர்த்தும்! (கம்பன் பெருமை, கம்பன் கண்ட தமிழகம் 1955) இதுபோன்றே ஆழ்வார்களின் பாடலில் உள்ளம்தோய்ந்த சிதம்பரனார் ஆழ்வார்கள் கண்ட அருள்நெறி என்னும் நூலின் முன்னுரையில் கூறுகிறார். சிறப்பாக, ஆழ்வார்களின் அருந்தமிழ்ப் பாடல்கள் படிப்போர் உள்ளத்தைக் கவரும் பண்புடையவை கருத்தில் மட்டும் அன்று; தமிழ் நடையிலும் சிறந்தவை; இனிய தமிழில் அமைந்தவை; பக்தி என்பது மூட நம்பிக்கை என்று கூறு வோரும் ஆழ்வார்கனின் பாடல்களைப் படிக்கும் போது, அப்பாடல்களின் இனிமையை அனுபவிக்காமல் இருக்க மாட்டார்கள் ஆனால் சிறிதளவாவது தமிழறிவும் தமிழ்ப் பற்றும் வேண்டும் இவை உள்ளவர்களால்தான் எந்தத் தமிழ்ப் பாடலையும் சுவைக்க முடியும் இளமைக் காலத்திலிருந்தே நாத்திகராகவும், பகுத் தறிவாளராகவும் விளங்கி, சுயமரியாதை இயக்கத்திலும்; திராவிடர் கழகத்திலும் ஈடுபாடு கொண்ட தமிழ்ப் பெரும் புலவர் பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் கம்பனிடத்திலும், ஆழ்வார்களிடத்திலும் கொண்டுள்ள ஈடுபாடு முரண்பாடாகப் பலருக்குத் தோன்றக் கூடும். அதையும் சாமி. சிதம்பரனார். ஆழ்வார்கள் கண்ட அருள்நெறி என்னும் நூலின் முன்னுரையில் விளக்குகிறார். நான் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டவன் அல்லன்; மத பக்தனும் அல்லன்; நான் எந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று எனக்கேத் தெரியாது. ஆனால் உண்மை அன்பு ஒழுக்கம் அறிவு சமத்துவம் இவற்றை விரும்புகிறேன் யாரிடத்திலும் எத்தகைய பேதமும் பாரட்டாமல் எல்லோரும் ஒன்றுபட்டு, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டிருப்போர் பாடலைப் போற்றுகிறேன்; படிக்கிறேன்; சுவைக்கிறேன். இதற்குக் காரணம் என் கொள்கையை ஒட்டிய கருத்துக்களை அப்பாடலிலே காண்கின்றேன். இதே கருத்தை சாமி. சிதம்பரனார் வேறோரு இடத்திலும் வலியுறுத்திக் கூறியுள்ளார். என்னை ஒரு வைதீகன்; மதவாதி; ஆதிகன் என்று சொன்னால் அதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். என்னை ஒரு நாதிகன் மத நம்பிக்கையில்லாதவன் என்று சொன்னால் வெட்கப்பட மாட்டேன்; மறுக்கமாட்டேன் (முன்னுரை. வள்ளுவர் காட்டிய வைதிகம் 1960) 1924 முதல் 1940 வரை, பதினாறு ஆண்டுகள், தமிழாசிரி யாராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும் 1924 முதல் 1948 வரை இருபத்து நான்காண்டுகள் அரசியல் சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவு களிலும் பணியாற்றியும் வந்த சாமி. சிதம்பரனார். 1948க்குப் பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சிங்கப்பூர் தமிழ் முரசு இதழின் மூன்று பகுதிகளுக்கு இக்கால முழுவதும் வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடை யறாமல் எழுதி அனுப்பினார். பாராட்டு தல்கள் குவிந்தன் இவரது புகழும் பெருமையும் பரவின இதனால் இன்பமும் மன நிறைவும் பெற்று மெய் மறந்து உழைத்தார். இப்பணிதான் தனக்குப் பிற்காலத்தில் நிலையான புகழைத்தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர்என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். 1961 சனவரி மாதத்தில் பொங்கல் சமயத்தில் திடீரென்று வந்து தாக்கிய பக்கவாத நோயால் ஆறு நாட்கள் அல்லலுற்று, 17.01.1961-ல் இயற்கை எய்தினார். சீர்திருத்தச் செம்மல் சாமி. சிதம்பரனாருக்குக் கால்வழிச் சேய்கள் இல்லை என்பது உண்மை; ஆனால் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்வழிச் சேய்கள் உள்ளன. அவை அவரது புகழ்மிக்க பெருமையைத் தமிழுலகில் நிலைக்கச் செய்யும் என்பது உறுதி. தமிழ்ப் பேராசிரியர் தமிழ்ப்பெரும்புலவர் தமிழ் ஆராய்ச்சியாளர், தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் தமிழ்ப் பாட நூலாசிரியர் தமிழ்ப் பாவலர் சாமி. சிதம்பரனாரின் திருப்புகழ் வாழ்க! அணைந்த விளக்கு (அரசியல், சமூக, சீர்திருத்த நாடகம்) (1948) முன்னுரை அணைந்த விளக்கு என்னும் இந் நாடகம் சில கருத்துக் களை அமைத்து எழுதப்பட்டது. அரசியல், பெண்மனம், பழக்கம் விடாது, காதல், கொலைத் தண்டனை. போர்க் கொடுமை இவை பற்றிய கருத்துக்களை இதில் காணலாம். கதை முற்றிலும் புதிதன்று: புதுமையும் பழமையும் பொருந்தியது. குண்டலகேசி என்னும் பழங்காவியக் கதையின் நினைப்பே இக் கதைக்கு அடிப்படை. இதைப் பல ஆண்டுகளுக்கு முன் கவிதையில் காவியமாக எழுதினேன். அது இன்னும் வெளிவரவில்லை. அக்காவியத்தி லிருந்து எழுதப்பட்டது தான் இந் நாடகம். அன்பர்கள் இதனை ஆதரிப்பது, எனக்கு ஊக்கம் அளிப்ப தாகும். நன்றி. சென்னை அன்பன் 01.11.1948 சாமி சிதம்பரனார். அணைந்த விளக்கு கதைச் சுருக்கம் சுந்தர பாலன் ஒரு பெருங்கள்வன். அவன் அடிக்கடி தஞ்சை நகரைக் கொள்ளையிட்டு வந்தான். காவலர்கள் அவனைப் பிடிக்கப் பலநாள் முயன்றனர். இறுதியில் தஞ்சைக்கு மேற்கில் உள்ள ஏரிக்கரைத் தாழங்காட்டில் கண்டு பிடித்தனர். அவனைக் கட்டி விலங்கிட்டுத் தஞ்சை நகரின் தெருக்கள் வழியே இழுத்து வந்தனர். அவனைக்கண்டு பொது மக்களும், பெண்களும், சிறுவர்களும், சந்நியாசிகளும் வெறுத்தும், இரங்கியும் பலவாறு பேசினர். சுந்தரபாலனை அரண்மனை வீதியின் வழியே இழுத்து வரும்போது கோமள வல்லி - அரசன் குலோத்துங்கன் மகள் உப்பரிகை மேல் நின்று கொண்டிருந்தாள். அவளும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் கொண்டனர். இருவரும் அன்றிரவு காதலால் வருந்தினர். அடுத்த நாள் அரசன் கள்வன் வழக்கை விசாரித்தான் அப்போது கோமளவல்லியும் சபையில் இருந்தாள். அவர்களும் கொலைகாரர்கள், திருடர்கள் என்று சுந்தரபாலன் எதிர் வழக்கு ரைத்தான். இறுதியில் சபையினர் கருத்துப்படி கள்வனுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப் பட்டது. அது கண்டு இளவரசி கோமளவல்லி சோர்ந்தாள். கள்வனும் கலக்க மடைந்தான். கோமளவல்லி மனநோயால் வருந்தினாள். குலோத்துங்கன் மருத்துவர் மூலம் அவள் நோயை உணர்ந்தான். அவள் உள்ளக் கருத்தை உரைக்கும் படி கேட்டான். அவளும் கள்வன் மேல் தனக்குள்ள காதலை வெளியிட்டாள். அரசனும் அவன் மனைவி கோப்பெருந்தேவியும், தோழிகளும் கள்வனைக் காதலிக்க வேண்டாம் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டனர். ஒன்றும் பயன்படவில்லை. கள்வனை மணப்பேன். இன் றேல் உயிர் விடுவேன் என்று கோமளவல்லி பிடிவாதம் செய்தாள். குலோத்துங்கள் வேறு வழியின்றிச் சுந்தரபாலன் கொலைத் தண்டனையை மாற்றினான். அவனை அழைத்து இரண்டாவது மந்திரி வெற்றிநாதன், மற்ற மந்திரிகள், கருத்துப் படி அவனுக்குப் படைத்தலைவன் பதவி கொடுத்தான். மதுரை மன்னன் - பாண்டியன் பிரதாபன் கோமள வல்லியை மணக்க விரும்பினான்: கோமளவல்லியும், குலோத் துங்கனும் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் கோமள வல்லியைச் சிறை பிடிக்கப் பாண்டியன் படைகள் தஞ்சையை முற்றுகையிட்டன. படைத்தலைவன் சுந்தரபாலன் சேனை களுடன் சென்று - பாண்டியப் படைகளுடன் போரிட்டுப் புறமுதுகிடச் செய்தான். குலோத்துங்கன், சுந்தரபாலனுடைய வெற்றியைப் பாராட்டி, அவனுக்குக் கோமளவல்லியை மணஞ்செய்து கொடுக்கத் தீர்மானித்தான். அரசகுரு - மந்திரிகள் -சபையினர் எல்லோரும் ஒப்புக் கொண்டனர். உடனே திருமணம் நடை பெற்றது. ஒருநாள் பூங்காவனத்தில், சுந்தரபாலனும், கோமள வல்லியும் சிரித்து விளையாடிக் காதற் பேச்சுப் பேசிக் கொண்டிருந்தனர். கோமளவல்லி, காதல் மிகுதியால் - கள்ளங் கபடில்லாமல் சுந்தரபாலனைப் புகழ்ந்தாள். தன் உள்ளத்தை அவன் கவர்ந்திருப்பதையும் அவன் தன்னைப் பிரிந்தால் - அப் பிரிவு தன்னைக் கொல்லுவதையும் குறித்து நீ! உன்னுடைய பழைய திருட்டையும் கொல்லுவதை யும் மறந்துவிடவில்லை என்று கூறினாள். இது சுந்தரபாலன் நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. மனம் மாறினான்; அவள் அரசன் மகள் என்ற கர்வத்தால் தன்னை அவமதித்தாள் என்று எண்ணினான். அன்று முதல் அவனுக்கு அரச போகத்தில் வெறுப்பு ஏற்பட்டது. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் கோமள வல்லியைப் பழி வாங்கும் பருவத்தை எதிர்பார்த்திருந்தான். கோடைக்காலம் குறுகிற்று. வெப்பத்தினால் கோமள வல்லி வெதும்பினாள். அவள் உடம்பில் கோடைக் கொப்பு ளங்கள் தோன்றி துன்புறுத்தின. தன் வெஞ்சினத்தைத் தீர்த்துக் கொள்ள இதுவே ஏற்ற சமயம் எனக்கருதிய கள்வன் அவளை நீலகிரிக்கு போக அழைத்தான். இருவரும் தோழிகள் ஏவலர் களுடன் நீலகிரி சென்று தங்கியிருந்தனர். ஒருநாள் மாலையில் சுந்தரபாலனும், கோமளவல்லியும் ஒரு உயர்ந்த சிகரத்தின் மேல் சென்று உட்கார்ந்தனர். மலை காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கதிரவன் மறைந்தான். இருட்டும் நேரம்; இனி நாம் இங்கிருக்க வேண்டாம் விடுதிக்கு போவோம் என்றாள் கோமளவல்லி. சுந்தரபாலன் தன் ஆத்திரத்தை வெளியிட்டு உன்னைக் கொல்லப் போகிறேன். உன் வழிபடு தெய்வத்தை வணங்கிக் கொள் என்றான். கள்வன் கருத்தறிந்த காரிகை தான் இறப்பதை விட உலகினர்க்குத் தொல்லை தரும் இவனுடைய உயிரை வாங்குதலே நலம் என்று எண்ணினாள். எனக்கு வழிபடு தெய்வம் நீங்களே என்று சொல்லி அவனை சுற்றி வந்து வணங்கும் போது, அவன் கால்களை வாரிப் பாதாளத்தில் வீழ்த்தினாள். இத்துக்கம் தாங்க மாட்டாமல், தானும் அச்சிகரத்தி லிருந்து குதித்து உயிர் விட எண்ணினாள் கோமளவல்லி. இச்சமயம் அவளைத் தேடிக்கொண்டு தோழிகளும், காவலர்களும் வந்து விட்டனர். அவர்கள், அவளுடைய துக்கமறிந்து, அவளுக்குச் சமாதானம் கூறினர். பிறகு கோமளவல்லியும் பரிவாரங்களும் தஞ்சையை அடைந்தனர்; இவள் நிலையறிந்த நகரத்தினரும், தாய் தந்தையரும் வருந்தினர். ஒரு நாள் குலோத்துங்கன் தன் சபையைக் கூட்டினான். பட்டத்திற்குரிய தனது ஒரே குமாரத்தி கோமளவல்லியின் செய்கையால் தனக்கு நேர்ந்த துக்கத்தைக் கூறி வருந்தினான். இனி என்னால் அரசியற்ற முடியாது; யாரிடம் அரசை ஒப்புவிப்பது என்று சபையினரைக் கேட்டான். சபையினர், கோமளவல்லியிடம் நம்பிக்கை தெரிவித்து, அவளையே அரசி யாக்க வேண்டினர். கோமளவல்லி அரசேற்க மறுத்தாள். இனி முடியரசு வேண்டாம். நமது அரசைக் குடியரசாக்குவோம் என்றாள். அரசன் ஒப்பினான்; முடி துறந்தான். என்லோரும் ஒப்பினர். முடி அரசு குடி அரசாயிற்று. அணிந்துரை பேராசிரியர் நாரண - துரைக்கண்ணன் இன்றுதான் சந்தித்தது போலிருக்கிறது நான் தன்மதிப்பு இயக்க வீரர் சாமி சிதம்பரனாரை. நாற்பதாண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவர் மண்ணுலக வாழ்வை நீத்துச் சென்று கூட 16 ஆண்டுகளாய் விட்டன. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது? ஆனால், நிலை களும் நிகழ்ச்சிகளும் மட்டும் நம் நெஞ்சங்களில் பசுமையாய் நின்று நிலவுகின்றன. நான் சாமி சிதம்பரனாரை முதல் முதல் சந்தித்தது ஈரோட்டில் பெரியார் ஈ.வே.ரா.வின் துணைவியார் நாகம்மை யாரின் தலைமையில் தீவிர சீர்திருத்தத் திருமணஞ் செய்து கொண்டு வந்த சிவகாமி சிதம்பரனாருக்குச் சென்னை மாநகரில் 1934-ம் ஆண்டில் வரவேற்பு அளித்த எழும்பூர் ஓயிட் ஹால் கூட்டத்தில். அன்றிருந்து 1960-ம் ஆண்டு அவர் மறையும் வரை நாங்கள் மனமொத்த நண்பர்களாயிருந்து வந்தோம். அந்த இரண்டு மாமாங்க காலத்தில் நாங்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தக் கழகங்கள், ஐக்கிய முன்னணி சமாதான இயக்கம், இந்தோ சோவியத் நட்புறவு சங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலியவைகளில் ஒன்றாக இருந்து கொண்டு பணிபுரிந்து வந்திருக்கிறோம். சாமி சிதம்பரனார் பருவுடலைத் துறந்து சென்று 16 ஆண்டுகள் கடந்து விட்டாலும், புகழுடம்பில் நம்மிடையே நிலைத்து நிற்கிறார். அவர் புரிந்துள்ள அரும் பெருஞ் செயல் களும், ஆற்றிய அறிவுரைகளும் பலர் நினைத்து போற்றத்தக்கன வாயிருக்கின்றன. அவர் இயற்றியிருக்கும் அறிவு நூல்கள் அவரை என்றென்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் சிதம்பரம் என்ற பெயர் பலருக்கு இருந்தாலும் அப் பெயருடன் ஆர் விகுதி போட்டு வழங்கப்பட்டு வந்தவர்கள் மூவர். அவர்கள் தேசபக்தர் வ. உ. சிதம்பரனார், கவிஞர் துடிசைக் கிழார் சிதம்பரனார், புலவர் சாமி. சிதம்பரனார் ஆகியோராவர். இம் மூவரிலும் ஒரு வகையில் தனித்தன்மை பெற்று வாழ்ந்தவர் சாமி சிதம்பரனார். இவர் தேச பக்தர், சமூக சீர்திருத்தக்காரர், சுய மரியாதை வீரர், புலவர், பள்ளியாசிரியர், கட்டுரையாளர், கவிஞர், பத்திரிகையாளர், பொது நலத் தொண்டர், பேச்சாளர், எழுத்தாளர், நூல் ஆசிரியர் ஆகிய இத்தனை ஆற்றலும் ஒருங்கே பெற்றவர். சாமி சிதம்பரனாருக்குக் கால்வழி சேய் ஒன்றுங்கிடையாது. ஆனால், அவருக்கு நூல் வழி சேய்கள் நிரம்பவுண்டு. அச்சேய் களில் ஒன்று தான் அணைந்த விளக்கு என்ற அற்புதமான நாடகம். இது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி என்ற சமண சமயக்கதை யொன்றை அடிப்படையாகக் கொண்டது. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் நமக்கு முற்றாகக் கிடைத்திருக்கின்றன. ஆனால், வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரு காவியங்கள் மட்டும் கிடைக்கவேயில்லை. உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள், பாடல்கள் வாயிலாகக் தான் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை குறித்துச் சில குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. மும் மொழிப்புலமை சான்ற மறைமலையடிகளாரின் மாணவர்களில் ஒருவரான நாகை சி. கோபால கிருஷ்ணப் பிள்ளை என்பார் உரையாசிரியர்கள் கையாண்டுள்ள மேற் கோள் பாடல்கள், நீலகேசி என்னும் சமண சமய நூல் ஆகிய வைகளில் காணப்பட்ட குறிப்புகளை ஆதாரமாக் கொண்டு குண்டலகேசிக்கு ஒரு நல்ல கதை உருதந்து நூலாக் கினார் அதற்கு அவர் தந்திருக்கும் பெயர், குண்டல கேசி அல்லது தற்கொல்லியை முற் கொன்றவன். என்பதாகும். அதை அடுத்து, சுத்தானந்த பாரதியார் குண்டலகேசி என்ற பெயரிலேயே ஒரு நாடகத்தை ஆக்கி வெளியிட்டிருக்கிறார். சாமி சிதம்பரனார் எழுதியிருக்கும் அணைந்த விளக்கு என்ற இந் நாடகம், குண்டலகேசி காவியக் கதையைக் கருப் பொருளாகக் கொண்டதானாலும், கற்பனை வளம் நிரம்பியது, நாடக நன்னயம் மிகுந்தது. இந் நாடகத்தின் சிறப்புக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டைக் காட்டினால் அமையும் என்று எண்ணுகிறேன். நாடாளும் அமைச்சரொருவருக்கு நன் மகளாகப் பிறந்த பத்திரை என்பவள் திருட்டுக் குற்ற மொன்றுக்காக தண்டனை பெற்ற புரோகித ரொருவரின மகனொருவனைக் கண்டு காதலிக் கிறாள். தந்தை தம் பெண்ணின் விருப்பமறிந்து, கள்வனை விடுவித்து அவளுக்குக் கணவனாக்குகிறார். இல் வாழ்க்கை நடத்தும் இருவரிடையேயும் காலப் போக்கில் பிணக்கு நேருகிறது. மந்திரி குமாரி தன் குடிப்பிறப்பு உயர்வை உள்ளத்தில் கொண்ட மமதையால், கணவனை, என்ன இருந்தாலும் நீ கள்வன் தானே! உன் இழிகுணம் எங்கு போகும்? என்று காதலுணர்ச்சியோடு பேசுகிறாள். இது கேட்டு, கள்வன் சீற்றமுறுகிறான். தன்னைப் பழித்துப் பேசியவளைப் பழிவாங்கத் திட்டமிடுகிறான். தூக்கு தண்டனை யிலிருந்து தன்னைக் காப்பாற்றிய கடவுளை வழிபட நீலமலைக்குப் போவதாகக் கூறி மனைவியையும் உடன் அழைக்கிறான். பத்திரை கணவன் பேச்சை நம்பி மலை முகட்டுக்கு உடன் செல்கிறாள். அங்கு கள்வன் தன் வஞ்சக எண்ணத்தை வெளிப் படுத்தி இறப்பதற்கு முன் இறைவனை நினைத்துக் கொள்ளச் சொல்கிறான். பெண்டிர்க்குக் கணவனே கண்கண்ட கடவுள்; ஆதலால் உம்மை வலம் வருகிறேன் என்று கூறி அவனைச் சுற்றி வருவது போல் வந்து தலை குப்புறத் தள்ளிக் கொன்று விடுகிறாள். பின் அவள் உலக வாழ்வை வெறுத்துச் சமணத் துறவியாய் விடுகிறாள். இது தான் குண்டல கேசியின் கதை. இதிலுள்ள உச்சக் கட்ட காட்சிக்கு, நாடகாசிரியர் சாமி சிதம்பரனார் ஓர் உத்தியைக் கையாண்டு நல்ல திருப்பமொன்றையுண்டாக்கியிருக்கிறார். மூலக் காப்பிய ஆசிரியரும் பின்னால் அதை ஒரு பெருங் கதையாகவும் நாடகமாகவும் ஆக்கியவர்களும் கள்வனை வாழ்க்கை முழுவதும் கள்வனாகவே காட்டியிருக்கின்றனர். அவனுடைய திருட்டுக் குணத்தையும் செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டாமல் மந்திரி குமரி கணவனை அவமதித்து வெறுத்து ஒதுக்குகிறாள்; பழிக்கிறாள். அது அவனைத் தன் தலைவியென்றும் பாராது கொன்று விடும் அளவுக்குக் கோபங் கொள்ளச் செய்கிறது என்று கதை புனைத் திருக்கின்றனர். சாமி சிதம்பரனார் அப்படிச் செய்யாமல் இருவரும் தாங் கள் நடத்தும் இன்ப வாழ்க்கையை மேலும் இனிமையாக்கு வதற்காக ஊடல் கொள்ளுகின்றனர் என்று காட்டியிருக்கிறார். அவ்வித ஊடல் ஒன்றின் போது, அரசகுமாரி கணவனை நோக்கி நீங்கள் ஒரு பெரிய கள்வன். என் உள்ளத்தையே முற்றுங் கவர்ந்து விட்டீர்களே என்று நயமாகக் கூறி நகைமுகம் காட்டுகிறாள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள் அல்லவா! கள்ள மனம் படைத்த கணவன் மனைவியின் நய மொழியை யுணராது கோபத்தால் கொதித்து எழுகிறான். பழிவாங்கத் துடித்து அவன் மனைவியை மயக்கி நீல மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறான். இவனுடைய சதித்திட்டத்தைத் தெரிந்து கொண்ட அரசகுமாரி முந்திக் கொள்கிறாள். அவன் அவளை வீழ்த்துவதற்குமுன் தான் அவனைக் குப்புற தள்ளி விடுகிறாள். என்று கதைப் போக்கின் உச்சக்கட்டத்தை மாற்றியிருக்கிறார். இக் காட்சி இளங்கோ அடிகள் படைத்திருக்கும் சிலப்பதி காரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையில், இந்திர விழா கொண்டாடக் கடற்கரை சென்ற கோவலனும் மாதவியும் கானல் வரிப்பாடல்கள் பாடிக் களித்திருக்கையில் ஏற்பட்ட பிணக்கும் பிரிவுமாகிய ஒரு கட்டத்தை நமக்கு நினைவூட்டுகிறது. கோவலன் மாதவியின் கரத்திலிருந்த வீணையை வாங்கி பல வரிப்பாடல்களை அகப்பொருட்சுவை ததும்பப் பாடினான். மாதவி இவன் பிற பெண்டிர் மீது மோகங் கொண்டிருக்கிறான் எனத் தவறாகக் கருதி விடுகிறாள். ஆகவே, அவள் கோவலனி டமிருந்து வீணையை வாங்கித் தானும் வேற்று ஆடவன் மீது விருப்பமுடையவள் போல அதே அகப் பொருள் துறையில் வரிப்பாடல்களைப் பாடினாள். கோவலன் மாதவியின் உண்மை யான உள்ளக் குறிப்பை உணராது, அவள் பிறனொருவன் மீது நாட்டங்கொண்டு விட்டிருக்கிறாள் எனத் தவறாகக் கருதிக் கோபங் கொண்டு பிரிந்து போய்விடுகிறான். இவ்விரு நிகழ்ச்சிகளிலும் உள்ள ஒற்றுமையும் உயர்வும் இலக்கிய நயம் நன்கு உணர்ந்தவர்களால் தான் உணர முடியும். இப்படி, அணைந்த விளக்கு என்ற நாடகத்தின் நெடுகிலும் சாமி சிதம்பரனாரின் இலக்கியப் புலமையையும் கற்பனைத் திறனையும் நன்கு காணலாம். இவர் குண்டலகேசி கதையை முதலில் சிறு காவியமாகத் தான் கவிதை வடிவில் இயற்றியிருக்கிறார். இதையே நவீனம் ஆசிரியர் திரு. சாமிக்காக 1948-ம் ஆண்டில் நாடகமாக்கித் தந்திருக்கிறார். சாமி சிதம்பரனார் பல துறைகளிலும் வல்லநரானாலும் எழுத்தாளராக வும், பத்திரிகையாளராகவும் இருப்பதில் தான் பெருவிருப்ப முடையவரா யிருந்தார். இதற்காக ஊதியத்தைக் கூட அவர் எதிர்பார்ப்பதில்லை. நெருங்கிப் பழகி வந்ததனால் இவருடைய இப்பேரார்வத்தை நன்குணர்ந் திருந்ததால் தக்க வாய்ப்பு ஏற்படுகையிலெல்லாம் அவ்விரு துறைகளில் அவரை ஈடுபடுத்தி வந்தேன். பரலி. சு. நெல்லையப்பரின் லோகோ பகாரியைத் தமதாக்கிக் கொண்டு வேணு கோபாலசாமி நாயக்கர் என்னிடம் வந்தபோது, சாமி சிதம்பரனாரை அறிமுகப் படுத்திவைத்து அவரை ஆசிரியராக்கிக் கொள்ளச் செய்தேன். அதுபோலவே, சட்டப் புத்தகங்களைப் பைண்டு செய்து தருவதில் வல்லவரான திருவேங்கடசாமி என்ற நண்பர் நவீனம் என்ற பெயரில் மாதப்பத்திரிகை யொன்றை நான் தொடங்கி யிருக்கிறேன். அதற்குக்கதை, கட்டுரை எழுதி உதவுங்கள் என்று வந்து கேட்டசமயம், சாமி சிதம்பரனாரையும் கேளுங்கள்; எழுதித் தருவார் என யோசனை கூறினேன். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் சாமி சிதம்பரனார் தாம் ஏற்கனவே, கவிதையில் ஆக்கியுள்ள அணைந்த விளக்கு காவியத்தை நாடகமாக்கி நவீனத்துக்குத் தந்திருக்கிறார். இப்படி உருவான இனிய இந் நாடகமே ஏறக் குறைய 20 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் பதிப்பாகப் புதுப் பொலிவுடன் வெளிவருவது கண்டு பெருமகிழ்ச்சி யுறுகிறேன். சகோதரி சிவகாமி சிதம்பரனார் தம் பெறலருங்கணவர் பெரிய லட்சியத்தையெல்லாம் பொருட்செலவவைப் பெரிதாக பொருட்படுத்தாமல் அணைந்த விளக்கு போன்ற சிறந்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவருடைய துணிவையும் செயல் திறனையும் கண்டு நான் வியப்புறுகிறேன். அருமைக் கணவருக்கு இறவாப் புகழையுண்டாக்கி வரும் சகோதரி சிவகாமிக்கு என் நல்வாழ்த்து என்றும் உரியதாக. ஜீவோதயம் நாரண. துரைக்கண்ணன் சென்னை - 94 14.05.1976 அணைந்த விளக்கு நாடக மாந்தர் அறிமுகம் 1. கோமளவல்லி (தஞ்சை மன்னன் குலோத்துங்கன் மகள்) 2. சுந்தரபாலன் (கள்வர் தலைவன்) 3. குலோத்துங்கன் (தஞ்சை அரசன்) 4. கோப்பெருந்தேவி (குலோத்துங்கன் மனைவி) 5. அரசகுரு (குலோத்துங்கன் குரு) 6. ஆய்மதியன் (தஞ்சை முதல் மந்திரி) 7. வெற்றி நாதன் (தஞ்சை இரண்டாவது மந்திரி) 8. பிரதாபன் (மதுரை மன்னன் பாண்டியன்) 9. முதல் மந்திரி (பாண்டியன் மந்திரி) 10. மகோதர மகாலிங்க பண்டிதர் (வைத்தியர்) 11. பித்துக்கொள்ளி பெருமாள் பண்டிதர் (வைத்தியர்) 12. இராமசாமி 13. கோவிந்தசாமி (வைத்தியர்களின் மாணவர்கள்) 14. சந்திரசேகர பண்டிதர் (அரண்மனை வைத்தியர்) 15. இருளப்பன் (காவல் தலைவன்) 16. பாண்டிய நாட்டுத்தூதன் 17. கொலையாளிகள் இருவர் 18. அரண்மனை வாயில் காவலர் இருவர் 19. சிறைக் காவலர்கள் இருவர் 20. சிறை அதிகாரி 21. சந்நியாசிகள் இருவர் 22. கோமளவல்லியின் தோழிகள் இருவர் 23. தோழி சகுந்தலா 24. பொது ஜனங்களில் ஒருவரான ஒரு கிழவர் 25. பாண்டியன் சேனாதிபதி மற்றும் காவலர்கள், பெண்கள், சிறுவர்கள், பொதுமக்கள், மாறு வேடங்கள் கொண்ட திருடர்கள், சோழன். தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் எழுதிய அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) தமிழ்ப் பேரறிஞர்களின் பாராட்டுகள் மகாவித்வான். சிந்தாமணிச் செல்வர் மே.வி. வேணுகோபாலப் பிள்ளை ஆசிரியர் நல்லார். சாமி சிதம்பரனார் கலை தேருள்ளம் வாய்ந்தவர். தம் நுண்ணறிவால் நூல் பல ஆய்ந்தும். சில நூல் களுக்கு உரை எழுதியதுடன் நல்ல கருத்துக்கள் அடங்கிய நூல்கள். தாமே இயற்றியும் வெளியிட்டவர். அவர் தம் புலமை போற்றுதற்குரியது. அணைந்த விளக்கு என்னும் இச்செய்யுள் நூல் இச் சிறு காப்பியததிற்குக் கருவாய் அமைந்த கதை. ஐம்பெரும் காப்பி யத்துள் ஒன்றாய்த் திகழ்ந்து மறைந்த குண்டலகேசியின் கதை யாகும். மறைந்த நூலுக்கு மறுவாழ்வு அளிக்க விழைந்து ஆசிரியர் மேற்கொண்ட நன்முயற்சியின் பயனே இந்நூல். தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் புகழை இச்சிறு காப்பியம் குன்றின் மேலிட்ட விளக்குப் போல் குலவச் செய்யும் என்பது எனது கருத்து. மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் கவிதை நூலாகிய அணைந்த விளக்கு பெயரளவில் அணைந்த விளக்காக இருந்தாலும் உண்மையில் இது அணையாவிளக்கு என்பதை இதனைப் படிக்கின்ற அனைவரும் நன்கு உணர்வார்கள். இன்றையச் சங்க இலக்கியத்திற்கு நிகரான இந்தப் புதுமை இலக்கியத்தைத் தமிழுலகம் நல்லாதரவு நல்கி வரவேற்கும் என்று திடமாக நம்புகிறேன். தாமரைத் திரு. நெ.து. சுந்தரவடிவேலு, எம்.ஏ.எல்.டி. அவர்கள் துணைவேந்தர்: சென்னைப் பல்கலைக் கழகம். சாமி சிதம்பரனார் எளிய இனிய உரைநடையில் மட்டுமே வல்லவர்கள் என்று எண்ணி வந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாய் விளங்குவது இந்நூல். சாமி. சிதம்பரனார் தமது வண்ணத் தமிழ் புலமையால் இனிய தமிழ்க் கவிகள் தர வல்லவர் என்பதற்கு அணையா விளக்கம் அணைந்த விளக்கு அணைந்த விளக்கின் பெருஞ் சிறப்பு முடியரசு தொலைந்து குடி அரசு அமைவதே யாகும். எளிய, இனிய தமிழ்ச் செய்யுள் இயற்றுதலிலும் வல்ல வராய் விளங்கும் சாமி. சிதம்பரனார் புதிய உவமைகளைப் புகல்வதிலும் காலத்தை எதிரொலி செய்கிறார் என்பது தெளிவு, ஓர் எடுத்துக்காட்டு கையால் திருகியதும் கட்டுண்ட தண்ணீரைப் பெய்யும் குழாய்போலப் பெண்ணமுது தன்கையைக் கண்களிலே வைத்துக் கசக்கியதும் தாரையாய் மண்மீது நீர்சிந்தி நின்று மனங் குழைந்தாள். மறைந்த சாமி. சிதம்பரனார் மறையாத தமிழ் புகழுக்கு எப்பொழுதும் உரியவர். இந்த அணைந்த விளக்கு அதற்கு ஓர் அணையா விளக்கு ஆவதாக! திருமிகு. டாக்டர். சிபாலசுப்பிரமணியம், எம்.ஏ., பி.எச்.டி. தமிழ்ப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழகம். தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் தமிழுக்கு நிலையான தொண்டு செய்து மறைந்தவர். தாம் இயற்றிய தகுதி வாய்ந்த நூற்களின் வாயிலாக இறந்தும் இறவாது வாழ்பவர். பகுத்தறிவுக் கொள்கையுடன், சிறந்த குறிக்கோளோடு தமிழ் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்தவர். அவருடைய எழுதுகோல் தமிழின் பல துறைகளையும் பற்றி நின்றது; பயனுற எழுதியது. அவர் தம் படைப்புக்களில் அவர் தம் அரிய உழைப்பு முயற்சியினையும், ஒருங்கே காணலாம். சங்க இலக்கியமாயினும் சரி, இடைக்கால பக்தி இலக்கியமாயினும் சரி, பிற்கால இலக்கியமாயினும் அவர் தம் எழுதுகோல் நடுவு நிலைமையுடன் உண்மைகளை ஆராய்ந்து கண்டது. சிறந்த இலக்கிய ஆசிரியரிடம் குடிகொண்டிருக்க வேண்டிய பண்புகள் அனைத்தும் அவர்கள்பால் குறைவற நிரம்பியிருந்தன. அவர் தம் உயரிய உழைப்பும் விழுமிய தொண்டும் தமிழிளைஞர் போற்றி மேற் கொள்ளத் தக்க வையாகும். அறிஞர். திரு. சாமி சிதம்பரனார் அவர்கள் இயற்றி இதுவரை வெளிவராத அணைந்த விளக்கு என்னும் கதைச் செய்யுள் இப்போது வெளிவந்துள்ளது. கவிதை வளம் நிறைந்த எழில்நூல் அணைந்த விளக்கு இதனை வெளியிடும் அன்னையாம் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் தம் ஆருயிர்க் கணவர் நினைவு போற்றி, பண்பு போற்றி, தொண்டு போற்றி வாழ்பவர், அன்னார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து இடையறாது இயற்றி வருபவர். இவர் தூய பணி வாழ்க, வெல்க என வாழ்த்துவன். தமிழ்கூறு நல்லுலகம் இவ்வினிய கவிதை நூலை வாழ்த்தி வரவேற்று இலக்கியப் பயன் துய்க்குமாக! தமிழகம் சி.பாலசுப்ரமணியன் சென்னை-29. 08.10.1973 அணைந்த விளக்கு காட்சி 1 காலம் : காலை நேரம் இடம் : தஞ்சை கீழவீதி நடிகர்கள்: சுந்தரபாலன் (நெடுநாள் பிடிபடாதிருந்த கொள்ளைக் கூட்டத் தலைவன்) காவலர்கள் எண்மர், பொதுமக்கள் நால்வர். சந்நியாசிகள் இருவர். சிறு பிள்ளைகள் நால்வர். பெண்கள் நால்வர். மாறுவேடங் கொண்ட திருடர்கள். இளவரசி கோமளவல்லி. அவள் தோழிகள். சில துப்பாக்கி ஏந்திய காவலர்கள். சுந்தரபாலன்: கால் கைகளில் விலங்கு. அவன் தோள்களில் சங்கிலிகள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. பக்கத்திற்கு நால்வராக எட்டு பேர் இழுத்துச் செல்கின்றனர். சில காவலர்கள் துப்பாக்கியேந்திச் சூழ்ந்து செல்கின்றனர். கூட்டத்தினர் திருடன் அகப்பட்டான் எல்லோரும் வாருங்கள், எல்லோரும் வாருங்கள் என்று கூச்சலிட்டுக் கொண்டு போகின்றனர். பொதுமக்களில் ஒருவன்: அவனைப் பார்! அவன் நெஞ்சத்தில் கொஞ்சமாவது பயமிருக்கிறதா? சிங்கம் மாதிரி அல்லவா கெம்பீரமாகச் சிரித்த முகத்துடன் நடந்து செல்லுகிறான். சிலந்தி பூச்சி போல் கொல்லுவதையே தொழிலாகக் கொண்ட கொடியவன். கருங்கல்லைப் போன்ற கடுமனம் படைத்தவன். வானத்தில் உள்ள நட்சத்திரங்களை யெல்லாம் இத்தனையென்று எண்ணி விடலாம். இந்தக் காலத்தில் மக்களுக்கு வரக்கூடிய நோய்கள் எத்தனை வகை யென்று எண்ணி கூறவும் முடியும். கடலில் வீசும் அலைகளைக்கூட கணக்கிட்டு விடலாம். ஆற்று மணல் முழுவதையும் அக்கக்காக எண்ணி அளந்து விடலாம். ஆனால் இக் கொள்ளைக்காரன் இது வரையிலும் செய்த கெட்ட காரியங்களைக் கணக்கிடவே முடியாது. இக் கொடியவன் இன்று பிடிபட்டது நமது நல்ல காலந்தான். மற்றவர்கள்: ஆம்! ஆம்! சந்தேகமே இல்லை. இவனை விடவே கூடாது. (கைதட்டிக் குதித்து ஆரவாரம் செய்கின்றனர்). துப்பாக்கியேந்திச் செல்லும் ஒரு காவலன்: இவனைப் பிடிப்பதற்காக எத்தனையோ வீரர்கள் இராப்பகலாக எங்கெங்கோ சுற்றித் திரிந்தார்கள். காடு, மேடு, மலைகள், தீவுகள் பலவிடங்களிலும் சுற்றிச் சுற்றிச் சோர்ந்து போய் விட்டனர். நமது இருளப்பன் எப்படியோ இவனை, அந்த ஏரிக்கரை தாழங்காட்டில் கண்டு பிடித்துவிட்டான். இருளப்பனுக்கு நல்ல வேட்டை. இனி அவன்தான் காவலர் தலைவனாவான். அவனுக்கு நல்ல அதிர்ஷ்டந்தான். மற்றொரு காவலன்: ஆம்! ஆம்! பொறாமைப்பட்டு என்ன செய்வது? இருளப்பன் கெட்டிக்காரன். கொடுத்து வைத்தவன். (இச்சமயத்தில் சிறு பிள்ளைகள் நால்வர் ஓடிவருகின்றனர். திருடனைக் கண்டதும் ஏ திருடன் அகப்பட்டான், திருடன் அகப்பட்டான் என்று கூச்சலிட்டு கூத்தாடு கின்றனர்.) ஒரு சிறுவன்: அடே! அப்பா! இன்றைக்குத்தான் இந்தத் திருடன் அகப்பட்டான். எப்போதும் இந்த ஊர் முழுவதும் இவனைப் பற்றித்தான் பேசும். இனி என்றும் நமக்குப் பயமேயில்லை. மற்றொரு சிறுவன்: அடே! நாம் இனிமேல் தாராளமாக ஏரிக்கரைக்குப் போய் விளையாடலாம். காவல்கார இருளப்பன் பெரிய தைரியசாலி. அவன்தான் இந்தத் திருடனை ஏரிகரைத் தாழங்காட்டில் கண்டு பிடித்தானாம். மற்றொரு சிறுவன்: ஏய்! அந்தக் கள்வன் முகத்தைப் பார்! துஷ்டத்தன மெல்லாம் அவன் மூஞ்சியில் துள்ளி விளை யாடுகின்றன. இந்தக் கெட்ட பயலை நம்முடைய அரசர் சும்மா விட்டுவிடமாட்டார். இவன் தலையை வெட்டி விடும்படி உத்தரவு போட்டு விடுவார். மற்றொரு சிறுவன்: ஆமாம்! இனிமேல் நாம் நிலாக் காலத்தில் கூட ஏரிக் கரைக்குப் போய் விளையாடலாம். (சிறுவர்கள் திருடனை தொடர்ந்து செல்கின்றனர். இச் சமயத்தில் இரு சந்நியாசிகள் வருகின்றனர்.) ஒரு சந்நியாசி: பாவம்! நல்ல வாலிபன்! சிறிதும் அறிவில்லாமல் தனது வாழ்நாளைப் பாழாக்கிக் கொண்டான். இந்த நாட்டில் எவ்வளவோ ஏழை மக்கள் வறுமையால் வாடி வதங்குகின்றனர். அவர்களின் துன்பத்தைப் போக்க வேண்டிய வேலைகள் அளவில்லாமல் இருக்கின்றன. இத்தகைய நல்ல பணியில் இவன் ஈடுபட்டிருந்தால் இந்நாட்டினர் இவனைப் போற்றி - புகழ்ந்து கொண்டாடு வார்கள். கெட்டவர்களோடு சேர்ந்து வீணாக கெட்டுப் போய்விட்டான். இவனுடைய அறிவு - அழகு - ஆற்றல் -எல்லாம் - ஐயோ ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டன. நாம் என்ன செய்ய முடியும்? அவன் வந்த வழி! (இச்சமயத்தில் நான்கு பெண்கள் வருகின்றனர். ஒரு பெண், திருடனைப் பார்த்ததும் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சொல்லுகிறாள்.) ஒரு பெண்: என்னடி ஆயி! இவனைப் போய் திருடன் என்று சொல்லுகிறார்களே. இவனைப் போன்ற அழகுள்ளவனை நாம் சித்திரத்தில்கூடப் பார்த்ததில்லையே. அவன் முகத்தைப் பாருங்கள்! எவ்வளவு பிரகாசம்! ஆ ஆ! என்ன அழகு! பூரணச் சந்திரன் போல் விளங்குகிறதே. மன்மதன் பார்த்தால்கூட இவனுடைய அழகிற்கு மண்டியிட்டு வணங்குவான் என்பது நிச்சயம். அவன் பல்லழகைப் பாருங்கள் பால்போல் வெளுத்திருக்கிறது. மற்றொரு பெண்: (முன் வந்து அவளைப் பார்த்து) போடி! ஏமாந்தவளே! நீ சொல்லுவது நன்றாயிருக்கிறது. (மற்ற பெண்களைப் பார்த்து) கிணற்றுத் தவளைகள் தானே நீங்கள். நாட்டு நடப்பு உங்களுக்கு என்ன தெரியும்? தெய்வ பக்தர்கள் மாதிரி திருவேடம் புனைந்தவர்கள் செய்யத் தகாத பாதகங்களையெல்லாம் செய்வது உங்களுக்குத் தெரியுமா? இந்த நாட்டுக்கு உழைப்பதற்காகத்தான் நாங்கள் பிறந்திருக்கிறோம் என்று வாய் வலிக்கத் தொண்டை கம்மச் கூச்சலிடுகிறவர்கள், வீட்டுக்குள் நுழைந்ததும் வேற்று மனிதர்காளக மாறி விடுவது உங்களுக்குத் தெரியுமா? சில தண்ணீர் கண்ணாடி மாதிரி முகம் பார்க்கும்படி அவ்வளவு தெளிவாக இருக்கிறது. ஆனால் அதில் விஷப் பூச்சிகள் நிறைந்திருந்தால் அதை நீங்கள் எப்படி அறிவீர்கள். மலர்ச் சோலைகளின் வழியாக மணத்தை கவர்ந்து வரும் தென்றற் காற்றோடு, நஞ்சுக் காற்று கலந்து வந்தால் அது நம்மைத் துன்பப்படுத்தாமல் விட்டுவிடுமா? ஆதலால் நீங்கள் இவனுடைய அழகைக் கண்டு மயங்காதீர்கள். எந்தப் புற்றில் என்ன பாம்பிருக்கு மோ? யார் கண்டார்! எல்லோரும்: இவள் சொல்லுவது சரிதான். என்ன இருந்தாலும் படித்தவள் அல்லவா? சில திருடர்கள்: (அக் கூடத்தில் மறைந்து சென்றவர்கள் தனியே வந்து) நாம் என்ன செய்வது? நமது தலைவனை இனித் தப்புவிக்க முடியாது. நாம் போக வேண்டியது தான். (போகின்றனர்) (திருடனை அரண்மனை வீதி வழியே இழுத்து வரும் போது இளவரசி கோமளவல்லியும், அவள் தோழிகளும் மாடியின் மேல் நிற்கின்றனர். இளவரசி சுந்தரபாலனைப் பார்க்கின்றாள். அவனும் அவளை அண்ணாந்து பார்க் கின்றான். திரை விழுகிறது.) காட்சி 2 காலம் : பகல் இடம் : அரச சபை, தஞ்சை அரண்மனை நடிகர்கள்: அரசன் குலோத்துங்கன். முதல் மந்திரி ஆய் மதியன். இரண்டாவது மந்திரி வெற்றி நாதன். ராஜகுரு மற்றும் பலர். நடனக் காட்சி நடன முடிவில் சுந்தர பாலனைக் காவ லர்கள் கொண்டு வந்து அரசன் முன் நிறுத்துகின்றனர். காவலன் இருளப்பன்: அரசே! வணக்கம்! இவன்தான் நமது குடிமக்களைத் தொந்தரவு செய்து வந்த சுந்தரபாலன். நமது ஏரிக்கரை தாழங்காட்டிலிருந்து இவனைப் பிடித்தோம். தங்கள் உத்தரவு! அரசன்: (கள்வனை ஏறிட்டுப் பார்த்து) ஆ! ஆ! இவனா சுந்தரபாலன்! பார்த்தால் பசுவைப் போல் காணப்படுகிறான். காவலர்களே உங்கள் திறமையைப் பாராட்டுகிறேன். இப்பொழுது இவனை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள். நாளை நடுப்பகலில் நம்முடைய சபைக்குக் கொண்டு வாருங்கள் தீர விசாரித்துத் தீர்ப்பு செய்கிறேன். (இரண்டாவது மந்திரியை நோக்கி) இவனைப் பிடித்த நமது காவலன் இருளப்பனுக்கும், அவனுடைய தோழர் களுக்கும் வேண்டிய அளவு பரிசு கொடுத்து அனுப்பும். மந்திரி: (எழுந்து தலை வணங்கி) அரசே தங்கள் உத்தரவு. (மந்திரி எழுந்து போகின்றான். காவலர்களும் கள்வனை இழுத்துச் செல்கின்றனர். திரை விழுகிறது. காட்சி 3 காலம் : இரவு இடம் : தஞ்சைமாவட்டம் நடிகர் : சுந்தர பாலன், இரண்டு சிறைக் காவலர்கள் (சிறைக்குள் சுந்தர பாலன் உலவுகிறான். கோமளவல்லியின் (இளவரசி) உருவொளித் தோற்றம் வெளியில் காவலர்கள் உருவிய கத்தியுடன் காத்திருக்கின்றனர்.) சுந்தரபாலன்: (தானே பெருமூச்சுவிட்டு) இதுவரையிலும் எத்தனையோ அழகிய பெண்கள் என்னை மணக்க விரும்பி என்னிடம் வலிய வந்து வார்த்தையாடியிருக்கிறார்கள். நான் அவர்களுடைய மழலை மொழிகளுக்கு மயங்கிய தில்லை. நான் உங்களை மணக்க மாட்டேன் என்று மறுத்திருக் கிறேன். ஆனால் இன்று உப்பரிகை மீது காட்சியளித்த அவள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாள். வெயிலில் பட்ட வெண்ணெய் போல் என் மனம் இளகி விட்டது. கொல்லும் கொடு விலங்குகளைச் சந்தித்த போதுகூட என் உள்ளம் கலங்கிய தில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கயவர்களைக் கண்டபோது கூட நான் நடுங்கவில்லை. கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளங்களைக் கடக்கும் போதும் நான் சோர்வடைந்த தில்லை. எத்தகைய வீராதி வீரர்கள் எதிர்த்தாலும் அஞ்சாமல் அவர்களை அடித்து வீழ்த்துவேன். இத்தகைய உள்ளங்க கலங்காத என்னை அந்தக் கட்டழகியின் கண்கள் கலக்கிவிட்டன. (சற்று யோசித்து) என்ன என் புத்தி! அவள் இவ்வூர் அரசன் மகள். எட்டாத மாங்கனிக்கு கொட்டாவி விடும் சிறுவனைப் போல் ஆனேன். வானத்திலே தோன்றிய அம்புலியை வா-வா-வா எனக் கூவி அழைக்கும் குழந்தை யானேன். பஞ்ச வர்ணக் கிளியைப் பார்க்க ஆசைப்படும் குருடனுக்கும் எனக்கும் கொஞ்சங் கூட வேற்றுமை யில்லை. சீச்சீ எனது ஆசை அவலம்! அவலம்! (சற்று நின்று சுற்றுமுற்றும் பைத்தியம்போல் வெறித்துப் பார்க்கின்றான். இதைக் கண்டு காவலர்கள் கேலி பண்ணு கின்றனர். கோமள வல்லியின் உருவொளித் தோற்றம், நாதன் அதைப் பார்க்கின்றான்.) கண்களால் என்னை மயக்கி என் நெஞ்சத்தில் குடிபுகுந்த கட்டழகி! இந்நாள் வரை நான் எவரும் அஞ்சத்தகுந்த அடாத செயல்கள் செ ய்வதிலே ஈடுபட்டிருந்தேன். உன் மேல் ஆணையாக சொல்லுகிறேன். இனி ஒருக்காலும் நான் அந்த ஈனத் தொழில்களைச் செய்ய இணங்கவே மாட்டேன். என்னை இன்னும் வருந்தச் செய்யாதே. ஒரு ஆறுதல் மொழி கூறி என் ஆருயிரை நிலைக்கச் செய்! நான் இதற்கு முன் காதல் என்ற சொல்லைக் கேட்டதே தவிர, கண்டதே இல்லை, உன்னுடைய கண்பார்வைதான் எனக்கு காதலை அறிவித்தது. ஆ! அரசகுமாரி! எப்படியோ என் மனத்துட் புகுந்து என்னை புதியவனாய் ஆக்கி விட்டாய்! நான் பைத்தியம் பிடித்தவன் போல் ஆனேன். என் கண்ணே! ஆருயிரே! இன்னும் என்னை சோதிக்காதே! வா-வா-வா-என் கையில் வா! (நாலா புறமும் கையை நீட்டிக் கொண்டு தடுமாறித் திரிகின்றான். உருவொளித் தோற்றம் அகப்படவில்லைர. கையில் பிடிபடுவது போல் நின்று மறைகிறது.) முதல் காவலன்: (மற்றவனைப் பார்த்து) ஏன் அண்ணா இவன் இப்படி உளறுகிறான். மூளை கலங்கியவன் மாதிரி என்னென்னவோ பிதற்றுகிறாறோ! இரண்டாம் காவலன்: ஆமாம்! எனக்கும் சந்தேகமாக தான் இருக்கிறது. (சுந்தரபாலனைப் பார்த்துவிட்டு) ஓகோகோ! இவனுக்குப் பைத்தியந்தான் முதல் காவலன்: (பாலனைப் பார்த்து) ஏன் அப்பா! என்னென்ன வோ உளறிக் கொண்டிருக்கிறாய்! நாளைக்கு எல்லாம் சரிப்பட்டுவிடும். இன்றைக்கு தூங்கு நன்றாய்! உயிர் போனால் பிறகு என்ன கஷ்டம். சுந்தரபாலன்: (காவலர்களை முறைத்துப் பார்த்து) ஏ! பேதை களே! என்னுடைய நிலைமையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்! ஏன் வெறி பிடித்துக் கத்துகிறீர்கள். காவலர்கள்: (கைகொட்டிச் சிரித்து) ஓகோகோ! சரியான பைத்தியந்தாண்டா! (திரை விழுகிறது) காட்சி 4 காலம் : இரவு இடம் : தஞ்சை அரண்மனையில் இளவரசி கோமளவல்லியின் கன்னிமாடம். நடிகர்கள்: கோமளவல்லி, நான்கு தோழிகள், அரசன். (கோமளவல்லி ஒரு படுக்கையில் முக்கி முனகிக் கொண்டு படுத்துப் புரண்டு கொண்டிருக்கிறாள். தோழிகள் விசிறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு குவளையில் தண்ணீர் கொடுக் கிறாள். பக்கத்தில் ஒரு மேஜைமேல் தண்ணீர் முதலிய பண்டங்கள் இருக்கின்றன.) ஒரு தோழி: என்னடி! நமது இளவரசிக்குத் திடீரென்று இப்படி நோய் வந்து விட்டது; வியாதி இன்னதென்றே நமக்குப் புரியவில்லையே. இரண்டாவது தோழி: ஆமாண்டி; நமக்கும் புரியவில்லை. நமது இளவரசி யும் இன்னதென்று சொல்லமாட்டேன் என்கிறாள். என்னவோ தானாகவே முணு முணுத்துக் கொள்ளுகிறாள். நமக்கு ஒன்றுமே விளங்கவில்லையே. மூன்றாவது தோழி: (இளவரசியின் மோவாய்க் கட்டையைப் பிடித்து முகத்தை நோக்கி) அம்மா! - அம்மா உடம்புக்கு என்ன, ஏன் பேச மாட்டேன் என்கிறாய்! மகாராணி யிடமும், அரசரிடமும் போய்த் தெரிவிக்கட்டுமா? (அரசன் சாதாரண உடையுடன் அங்கு வருகிறான். எல்லாத் தோழிகளும் எழுந்து நின்று அரசே வணக்கம் என்று சொல்லி வணங்குகின்றனர். கோமள வல்லியும் அவ்வாறே சொல்லி வணங்குகின்றாள். அரசன் அவள் முகத்தைப் பார்க்கின்றாள். அரசன்: ஏன் அம்மா! உன் முகம் சோர்ந்திருக்கிறது. உடம்புக்கு என்ன! எப் பொழுதும் இந்த நேரத்தில் தோழிகளுடன் சிரித்து விளையாடிக் கொண்டி ருப்பாயே! ஏன் படுத் திருந்தாய்! கோமளவல்லி: தந்தையே என் உடம்புக்கு ஒன்றும் இல்லை. சும்மாதான் படுத்திருந்தேன். ஒருதோழி: அரசே! பொய்! பொய்! (கோமளவல்லி அவளைக் கோபத்தோடு பார்க்கிறாள்) மற்றொரு தோழி: எங்கள் அரசியார் - விளையாட்டுக்காக - எங்களுடன் கோபித்துக் கொண்டுபடுத்திருந்தார்கள். வேறொன்றும் இல்லை. மற்றொரு தோழி: போடி! இவைகளையெல்லாம் அரசரிடம் சொல்ல வேண்டுமோ! போதும் வாயை மூடு. அரசன்: (தோழிகளைப் பார்த்து) சரி! நான் போனபிறகு நீங்கள் விளையாட லாம். நான் இப்பொழுது இளவரசியிடம் ஒரு சமாச்சாரம் சொல்லி விட்டுப் போய்விடுகிறேன். (இளவரசியைப் பார்த்து) கோமளவல்லி! நீ சுந்தரபாலன் என்னும் கொள்ளைக்காரனைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா! அவன் பிடிபட்ட செய்தியும் உனக்குத் தெரிந்திருக்கும் நம்முடைய சபையில் நாளைக்கு அவனு டைய வழக்கு நடைபெறும். எனக்குப்பின் இந்த நாட்டை ஆளப் போகும் அரசியல்லவா நீ! சபை நடத்தும் முறை - வழக்குகளை விசாரிக்கும் முறை இவைகளை யெல்லாம் நீ இப்பொழுது முதலே கற்றுக் கொள்வது நல்லது. ஆதலால் நீ உன் அந்தரங்கத் தோழியுடன் நாளைக்கு அரச சபைக்கு வந்து அந்தக் கள்வனுடைய வழக்கை கவனி! இதைச் சொல்லிவிட்டுப் போகத் தான் நான் வந்தேன். கோமளவல்லி: தங்கள் உத்தரவு! கட்டாயம் வருகிறேன். (திரை விழுகிறது) காட்சி 5 காலம் : பகல் இடம் : அரச சபை நடிகர் : அரசன், முதல் மந்திரி, இரண்டாவது மந்திரி, அரச குரு. சுந்தர பாலன், காவலர்கள், பொது மக்கள், கோமளவல்லி (அ.கு) தோழிகள், பாண்டி நாட்டுத் தூதன். (அரசன் சிம்மாசனத்தில் இருக்கிறான். இருபுறங்களிலும் மந்திரி பிரதானிகள் உட்கார்ந்திருக்கின்றனர். இளவரசி அரசன் பக்கத்தில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றாள்.) அரசன்: (முதல் மந்திரியைப் பார்த்து) மந்திரி! இன்று சுந்தர பாலன் வழக்கை விசாரித்து முடிவு செய்ய வேண்டும். வழக்கைத் தொடங்குவதற்கு முன், வேறு முக்கியமான செய்தி ஏதேனும் இருந்தால் சொல்லும். முதல் மந்திரி: (எழுந்து) அரசே! பாண்டி நாட்டு முதல் மந்திரி யிடமிருந்து ஒரு தூதன் வந்திருக்கின்றான். தங்களைப் பேட்டிக் காணக் காத்திருக்கிறான். அரசன்: என்ன செய்தியோ - அவனை அழைத்து வரச் சொல்லுங்கள். (மந்திரி ஒரு காவலனைப் பார்க்கின்றான். அவன் உத்தரவு என்று சொல்லிக் கொண்டு விரைந்து ஓடுகின்றான். பாண்டி நாட்டுத் தூதன் அரசனை வணங்க, அவன் ஒரு ஆசனத்தைக் காட்டி உட்காரும்படி சொல்லுகிறான். தூதனும் அரசனை வணங்கி உட்காருகிறான்.) அரசன்: பாண்டி நாட்டு தூதரே! உமது அரசர் பிரதாபர் சவுக்கியந்தானே! தூதன்: செந்தமிழ் மன்னனுக்கு எந்தக் குறையும் இல்லை சிந்தை மகிழ்ந்து சிறந்து வாழ்கின்றான். அரசன்: நீர் வந்த சேதி என்னவோ! தூதன்: எங்கள் நாட்டு முதன் மந்திரியார் இக்கடிதத்தை தங்களிடம் கொடுத்து - தங்கள் கருத்தைத் தெரிந்து கொண்டு வருமாறு அனுப்பினார் இது ரகயம். (தூதன் எழுந்து அரசனிடம் சென்று கடிதத்தை கொடுக் கிறான். அரசன் அதைப் படித்தபின் கோமளவல்லியிடம் கொடுக்கிறான். அவள் கடிதத்தைப் படித்துவிட்டு முடியாது என்ற அடையாளத் துடன் தலையை அசைக்கிறாள். அரசன் கடிதத்தை வாங்கி மடித்து தூதனிடத்தில் திருப்பிக் கொடுக்கிறான்) அரசன்: (தூதனை நோக்கி) தூதரே, இதற்கும் சம்மதம் இல்லை என்று சொல்லிவிடும் (முதல் மந்திரியை நோக்கி) இவருக்குத் தக்க பரிசுகள் கொடுத்து அனுப்பும். (மந்திரி ஒரு காவலனுக்கு குறிப்புக் காட்ட அவன் தூதனை அழைத்துச் செல்லுகிறான்.) குடிகளில் ஒருவன்: (தன் பக்கத்தில் நிற்பவனைப் பார்த்து) ஓய் என்ன ஒன்றும் விளங்கவில்லையே, பாண்டி நாட்டு தூதர் கடிதத்தை அரசர் படித்தார் - இளவரசியார் கையில் கொடுத்தார் - அவரும் படித்து என்னவோ தலையசைத் தார். கடைசியில் இதற்கு சம்மதிக்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டாரே! என்ன சமாச்சாரமோ! உமக்கு ஏதாவது புரிகிறதா? இரண்டாமவன்: ஏதாவது அரசாங்க ரகசியமாயிருக்கலாம். நாம் ஏன் அதில் தலையிடவேண்டும். முதல் பேசியவன்: போம்! ஓய் போம்! அரசாங்க ரகசிய மாயிருந்தால் மந்திரிகளுடன் யோசிக்காமலா நமது மன்னர் பதில் சொல்லுவார்? அப்படிப்பட்ட சர்வாதிகாரி அல்லவே நமது அரசர். இரண்டாமவன்: நீர் சொல்வது சரிதான். ஒரு சமயம் இளவரசி யின் கல்யாண விஷயமாயிருக்குமோ? முதல் பேசியவன்: (தலையசைத்து) இருக்கலாம் ஓய்! இருக்கலாம்! (இச் சமயத்தில் சுந்தரபாலனைக் காவலர் இழுத்து வந்து அரசன் முன் நிறுத்தினர். எல்லோரும் அவனையே பார்க் கின்றனர். கோமளவல்லியும் சுந்தரபாலனும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலை குனிகின்றனர்.) அரசன்: (சுந்தரபாலனை நோக்கி, சுந்தரபாலா! உன் பெயர் மாத்திரம் வெகு அழகு! உன் செயல்களோ அருவெறுக்கத் தக்க அறிவற்ற செயல்கள் ஊரார் செல்வங்களைத் திருடி - ஒளிந்திருந்து - உன்னுடைய சுகத்தை மாத்திரம் கருதுவது அறிவுடைமையா? நீ நல்ல வாலிபன்! பாடுபட்டு உழைப்ப தற்கேற்ற பலசாலி. காட்டில் புகுந்து விறகு வெட்டிக் கொண்டு - வீதிகளிலே விற்று வாழ்ந்தால் கூட உன்னை யாரும் பழிக்க மாட்டார்கள். திருடன் என்று பேரெடுத்து ஏன் மானங்கெட்டு வாழ்கிறாய்! பொதுமக்கள் மதிக்கும் படி - ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழாமல் ஏன் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்தாய்! குழந்தைகளும் பெண் களும் உன் பெயரைக் கேட்டாலே நடு நடுங்கும் படியான நாச வேலைகளையே செய்தாய். மதுபானம் செய்து - மதி கெட்டு மனிதத் தன்மை இழந்தாய்! நீ செய்த குற்றம் திருட்டுத் தொழில் ஒன்று தானா? கேட்டாலே உள்ளத்தைக் குலையச் செய்யும் கொலைத் தொழிலிலும் ஈடுபட்டாய் உன்னைப் போன்ற கொடியவன் உலகில் வேறு யாரும் இல்லை. உன்னால் கெட்டுப் போன குடும்பங்கள் எத்தனையோ பல. உன்னை நான் சும்மா விடப் போவதில்லை. தக்க தண்டனை விதிக்கத்தான் போகிறேன். ஆயினும் நீ உன்னுடைய குற்றங்களுக்கு என்ன சமாதானம் சொல்லுகிறாய்! (சபையின் மவுனம்) சுந்தரபாலன்: வணங்கி வேந்தே, தாங்கள் என்மீது வெறுப்புக் கொண்டு கூறிய வசை மொழிகளைக் கேட்டேன். ஒரு விண்ணப்பம். உத்திரவு கொடுத்தால் சொல்லுகிறேன். அரசன்: நீ என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிக் கொள்ளலாம். சும்மா பயப்படாமல் சொல்! சுந்தரபாலன்: அரசே! என்னைத் திருடன் என்று ஏதோதோ பேசி இகழ்ந்து விட்டீர்கள்! ஆம்! நான் திருடன் தான். ஆனால் தாங்களும் தங்களைப்பற்றி பதறாமல் யோசிப்பீர் களானால் தாங்களும் என்னைப் போன்றவர் என்பதை அறிவீர்கள். இதை என்னால் மெய்ப்பிக்க முடியும். அறியாதவர்கள் உங்களைத் தாயினும் தயவுடையார் என்றெண்ணி உங்கள் பாதங்களைத் தாங்கித் தரிசிக் கின்றனர். இரண்டாவதாக என்னைக் கொலைகாரன் என்று கூறி இகழ்ந்தீர்கள். நான் என்னுடைய தற்காப்புக்காக என்னை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வேன். ஆனால் தங்களைப் போன்ற அரசர்களால் இவ்வுலகத்தில் மாண்டு மடியும் உயிர்களுக்கு அளவுண்டா? தாங்களே சொல் லுங்கள். இப்பொழுது நான் மட்டுந்தானா கொலை காரன்? தயவுசெய்து கோபமில்லாமல் சிந்தனை செய்து பாருங்கள்! அரசன்: (கோபத்துடன் வாளைக் கையில் உருவிக் கொண்டு எழுந்து) அடே., கொலைகாரத் திருடா! எவ்வளவு தைரியம் உனக்கு, இந்த நாட்டுக்கு மன்னவனைப் பார்த்து உன் நாக்கில் நடுக்கமில்லாமல் வசை கூறுகிறாய். தேசத்தைப் பாதுகாக்கும் மன்னவனிடம் நேசத்தைக் காட்டாமல் பழி சொல்லுகிறாய். என்னையும் உன் தோழர் என்று சொல்லு கிறாய். பார்! உன் தலையை வெட்டி வீழ்த்துகிறேன். (அரசன் திருடன் மேல் பாய்கிறான். முதல் மந்திரி எழுந் தோடி அரசன் கை வாளைப் பிடித்துக் கொள்ளுகின்றான். சபையினர் திகைப்பு) முதல் மந்திரி: அரசே! பொறுங்கள்! பொறுங்கள்! வேண்டாம் கோபம்! வேண்டாம் கோபம்! இப்பொழுது இக் கள்வன் கூறிய பொருந்தாத சொற்களை ஆராய்வோம். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது தெய்வப் புலவர் வாக்கல்லவா? அரசனைக் கூட திருடன் கொலை காரன் என்று கூறுவது எப்படிப் பொருந்தும் என்று கேட்போம். (அரசன் கோபத்தோடு வாளை வீசியெறிந்துவிட்டு மீண்டும் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொள்ளுகிறான். திருடன் கெம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறான்.) அரசன்: ஏண்டா! தலைகிறுக்குப் பிடித்த திருடா! இப்பொழுது நீ சொல்லியதை விளக்கமாகச் சொல்! ஒரு அரசன் எப்படித் திருடனாக இருக்க முடியும்? சொல்? சீக்கிரம். சுந்தரபாலன்: (நிமிர்ந்து உரத்த குரலில்) அரசே! சொல்லு கிறேன் கேளுங்கள்! நீங்கள் இந்த தேசத்தாரின் துன்பத்தை நீக்கவே வாழ்வதாகச் சொல்லு கிறீர்கள். ஆனால் மாசற்ற மனமுடைய மக்கள்தான் இந்த மாநிலத்தை வளப்படுத்திப் பயிர் செய்கின்றனர். வாச மலர்ப் பூஞ்சோலைகளை வளர்த்து வைக்கின்றனர். ஆறுகளும், ஏரிகளும், வாய்க் கால்களும், கிணறுகளும் தோண்டி நிலங்களுக்கு நீர் பாய்ச்சுகின்றனர். தங்கள் இரத்தத்தைச் சிந்தி எந்நாளும் பாடுபடும் மக்கள் தான் இந்த நாட்டிலே பெரிய பெரிய நகரங்களைக் கட்டினர். மாட மாளிகை - கூட கோபுரங்களையும் எழுப்பி னார்கள். இவர்களால்தான் உங்களிடம் அரசு நடத்து வதற்கு வேண்டிய செல்வங்கள் வந்து சேருகின்றன. ஆனால் நீங் களோ இந்த ஏழை மக்களைச் சுரண்டுவோர்களுக்கே பாதுகாப்பு அளிக் கின்றீர்கள். பகல் இரவு என்று பாராமல் தங்கள் உடம்பை வாட்டி வளைத்து உழைக்கும் மக்களுக்கு இந்த நாட்டிலே உண வில்லை, உடையில்லை, இருக்க இடமில்லை. நாட்டிலே எவ்வளவு பஞ்சம் வந்தாலும் நீங்கள் வரி வாங்குவதில் மாத்திரம் தவறுவதே இல்லை. சக்தியற்ற ஏழை மக்களிடமும் - அவர்கள் கண் கலங்கக் கசக்கிப் பிழிந்து வரி வாங்கிவிடுகிறீர்கள். இது என்ன நீதி! நான் இராப் பொழுதில் என் தோழர்களைக் காப்பாற்ற கொள்ளை யடிக்கிறேன். தாங்களோ பலரும் அறிய பகல் பொழுதிலே வரிக் கொள்ளை அடிக்கின்றீர்கள். அரசே! என்னை மாத்திரம் கொலைகாரன் என்று இகழ்ந்தீர்கள்! நாடு பிடிக்கும் ஆசையால் அரசர்கள் செய்யும் கொலைக்கு அளவேது! பாதுகாப்பு - என்னும் பெயரால் படைகளைச் சேர்த்து - அவைகளைப் போர்க் களத்தில் கொண்டுபோய்ப் பலி கொடுக்கின்றீர்கள். பகிங்கரமாகப் பல தலைகளை வெட்டிச் சாய்த்து அவை களை இரத்த ஆற்றில் மிதக்கும்படி செய்வது யார்? இதற்கு பெயர் போர்! இதைச் செய்கின்றவர் வீரர்! இந்தக் கொடுமையைக் கொலை என்றே சொல்லிவிட்டால் அப்பொழுது தங்கள் பெயர் என்ன? தாங்களும் கொலைகாரர் தானே! அரசே! நமக்குள், செய்கையில் சிறிதும் பேதமில்லை. பெயரில்தான் பேதம்! நன்றாக யோசித்துப் பாருங்கள்! உண்மை விளங்கும். (அரசன் பதில் சொல்லாமல் ஆலோ சனையுடன் தலை குனிகின்றான்.) சபையில் உள்ளோர் ஒரு வரை ஒருவர் பார்த்து திருடன் மொழியைப் பாராட்டுவது போல் சைகை செய்து கொள்ளுகின்றனர். முதல் மந்திரி: (எழுந்து) தாங்கள் தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள்! இந்த மடையனுக்கு நான் சொல்லுகிறேன். மறுமொழி! (கள்வனைப் பார்த்து) அடே! உலக நீதியை உணராத மூடா! பகுத்தறிவின்றி உளறுகிறாய்! போதும் வாயை மூடிக்கொள்! நாட்டைப் பாதுகாக்க மன்னவன் இல்லாவிட்டால் - இந்த மனித சமுதாயம் எனும் சோலை யில் - கலகம் என்னும் சுழற்காற்றுப் புகுந்து கலகலக்கச் செய்து விடும். மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க மாட்டார்கள். கரையற்ற ஏரி நீரைப் போல வரை துறையின்றித் திரிவார்கள். இந்த ஆபத்தைத் தடுக்கத்தான் மன்னன் வரி வாங்கி அரசு நடத்துகின்றான். நாட்டில் அராஜகத்தை உண்டாக்கி - அமைதியைக் குலைக்கின்றவர் களை அடக்குவதற்காகவே சேனைகளைச் சேர்த்திருக் கிறான். அமைதிக்கு ஆபத்து வருங்கால் சேனைகளைக் கொண்டு அடக்குகிறான். இதில் என்ன குற்றம்! சபையோர்: பேஷ்! பேஷ்! முதல் மந்திரி மிகவும் கெட்டிக்காரர்! நல்ல சூடு! நல்ல சூடு! (கை கொட்டி ஆரவாரிக்கின்றனர்) சுந்தரபாலன்: (சபையைப் பார்த்து) அறிவுக்கு வேலை கொடுக்காமல் - ஆட்டு மந்தை போல் - அரசனைப் பின்பற்றும் பெரியோர்களே! கொஞ்சம் நிறுத்துங்கள் உங்கள் ஆர்பாட்டத்தை (எல்லோரும் திருடனைப் பார்க்கின்றனர்) மந்திரியார் பதிலைக் கேட்டு கை கொட்டி மகிழ்ந்தீர்கள்! அவர் வார்த்தைகளில் புதுமை ஒன்றுமே யில்லை. பழைய வார்த்தைதான். வயிறு வளர்க்க வழியறியாத ஏழைகள் பலர் என்னுடன் இருக்கின்றனர். அவர்கள்தான் என்னுடைய குடிபடைகள் அவர்களைக் காப்பது என் கடமை அதற் காகவே பொது மக்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்து வைத்திருக்கும் வஞ்சகர்களின் செல்வத்தையே கொள்ளை யடிக்கிறேன். கொள்ளை யிடும் போது - என்னைப் பிடித்து- என்னைக் கொல்ல வருகின்ற வர்களிடம் உயிரையே நான் உறிஞ்சுகின்றேன். என் உயிர் போய் விட்டால் என்னை நம்பி வாழும் ஏழை களின் கதியென்ன? அவர்களைக் காப்பாற்றுவது யார்? ஆகவே என்னுடைய திருட்டும் கொலையும் அநியாய மானவை அல்ல. சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்! முதல் மந்திரி: (கனைத்து எழுந்து) சுந்தரபாலா! நீ சொல்லுவது ஒருக்கால் பகுத்தறிவு மன்றத்தில் நிலை நிற்கலாம். ஆனால்- உலகப் போக்கில் - ஒத்துவராது. உன்னுடைய செய்கைகள்- நியாயமானவை - என்று எந்தக் கலைகளும் - எந்தச் சட்டங்களும் ஒப்புக் கொள்ளவே யில்லை. ஆனால் அரசரோ, நீதி நூல்களிலும், சட்டங்களிலும் கடமை என்று விதிக்கப்பட்டவற்றையே செய்கிறார். சிறைக் கூடம் - நீதிமன்றம் - வழக்கு விசாரணை - தண்டனை இவைகள் எல்லாம் ஏன்? உலக நன்மைக்காகவே தான். ஒரு சிலரைக் கொடுமைப்படுத்துவதற்கல்ல. அரசர் செய்கை நீதியானது. சட்டவரம்புக்கு உட்பட்டது. இதனால் தான் - பொதுமக்கள் எல்லோரும் அறியும் படி - வெளிப்படையாக - காரியங்களை நடத்துகிறார். நீயோ உன் காரியங்களை இரகசியமாக நடத்துகின்றாய்! இதுவே உன் செய்கை வெறுக்கத்தக்கது - கைவிடத் தக்கது - என்பதற்குத் தக்க சாட்சி. அறிவிருந்தும் கொடிய செயல்களைச் செய்த உனக்கு கடுந்தண்டனை விதிக்க வேண்டும். (சபையோர் சபாஷ்! சபாஷ்! என்று ஆரவாரம் செய் கின்றனர். சுந்தரபாலன் ஒருமுறை கோமளவல்லியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுத் தலைகுனி கின்றான்). அரசன்: இப்பொழுது கள்வன் தோல்வியடைந்தான்; நமது மந்திரியாரின் மாற்றங்களுக்கு மறுமொழி கூற முடியாமல் விழிக்கின்றான். அவன் குற்றவாளி என்பதையும் மறுக் காமல் மவுனத்தின் மூலம் ஒப்புக் கொண்டுவிட்டான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், தீர்ப்புக் கூறுங்கள். எல்லோரும்: (ஒரே குரலாய்) கொலைத் தண்டனை! கொலைத் தண்டனை! இரண்டாவது மந்திரி: (எழுந்து) அரசே! எனது வார்த் தைக்கும் சிறிது செவி சாய்க்கும்படி வேண்டிக் கொள்ளு கிறேன். சபையினர் எல்லோரும் இவனுக்குக் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஒரே குரலாகக் கூறி விட்டார்கள். இவனுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை தான் அது. நீதியும் கூட. ஆனால் - இவன் பலசாலியான இளைஞன். அஞ்சாத நெஞ்சன். அழகைப் போலவே அறிவிலும் சிறந்தவன். இவனைத் திருத்தி நல்வழியில் நடக்கச் செய்தால் இவனால் இந் நாடு நலம் பெறக் கூடும். அதனால் இவன் திருந்துவதற்குத் தகுந்த தண்டனை கொடுப்பது நல்லதென்று கருதுகிறேன். பிறகு தங்கள் சித்தம். சபையில் ஒருவர்: இந்த மந்திரி பைத்தியங்கொள்ளி. மற்றொருவர்: இவன் ஒரு முட்டாள் மற்றொருவர்: பாவம்! வஞ்சகன் வார்த்தையில் மயங்கி விட்டான். மற்றொருவர்: இல்லை! இல்லை! அவன் அழகில் சொக்கி விட்டான். மற்றொருவர்: இந்தத் திருடனுக்கும், மந்திரிக்கும் ஏதாவது உறவு இருக்குமோ! மற்றொருவர்: இந்த மந்திரி ஒரு கோழை! அரசன்: வெற்றி நாதரே! உமது சொற்கள் ஆலோசிக்க வேண்டி யவைதாம். ஆனால் உமது வார்த்தையை சபையினர் யாரும் ஒப்புக் கொள்ள வில்லை. ஆதலால் சபையினரின் கருத்துக்கு மாறாக நடப்பதிற் கில்லை. (காவலர்களை நோக்கி, நீங்கள் இவனை இழுத்துச் சென்று சிறையி லிடுங்கள். நாளை நடுப்பகலில் நம்மூர்க் கொலைக் களத்திற்குக் கொண்டுபோய் பகிங்கராமாகச் சிரச்சேதம் செய்துவிடுங்கள். இது எனது உத்தரவு.) (அரசன் ஆசனத்தை விட்டு எழுந்திருக்கிறான். எல்லோரும் எழுந் திருக்கின்றனர். இச்சமயம் இளவரசி ஆ என்று அலறிக் கீழே சாய்கின்றாள். கள்வனும் சோர்ந்து விழுகின்றான்) (திரை விழுகிறது) காட்சி 6 காலம் : காலை இடம் : அரண்மனை வாசல் நடிகர்கள்: வைத்தியர்களான மகோதர மகாலிங்க பண்டிதர். பித்துக் கொள்ளிப் பெருமாள் பண்டிதர் சீடர்களான கோவிந்தன், ராமசாமி, காவலர் இருவர். (மகோதர மகாலிங்க பண்டிதர் தொந்திவயிற்றை ஆட்டிக் கொண்டு அசைந்து அசைந்து நடந்து வருகின்றார். அவர் மாணவன் ராமசாமி மருந்துப் பையைத் தூக்கிக் கொண்டு வருகிறான். எதிரில் பித்துக் கொள்ளிப் பெருமாள் பண்டிதர் தன் மாணவன் கோவிந்தனுடன் தலை நிமிர்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டு வருகிறார். இரு வைத்தியர்களும் முட்டிக் கொள்ளுகின்றனர்.) மகோதர மகாலிங்கப் பண்டிதர்: அட! யாரப்பா, குருடன் (வயிற்றைப் பிடித்துக் கொண்டு) ஆள்வருவது தெரிய வில்லையோ! எருமை மாடு மாதிரி மேலே விழுகிறான். பித்துக்கொள்ளிப் பெருமாள் பண்டிதர்: ஓய்! ஓய் வாயை மூடும்! கூச்சல் போடாதீர்! உமது தொந்திக்கு ஏதாவது ஆபத்தா! பயப்படாதீர். இதோ மருந்து கொடுத்துச் சரிப்படுத்தி விடுகிறேன். நிமிர்ந்து பேசும். மகோதர: (நிமிர்ந்து பார்த்து) ஓகோ! பித்துக்கொள்ளி பெருமாள் ப.ண்டிதரா? மன்னிக்க வேண்டும்! பார்க்காமல் சொல்லிவிட்டேன்! மன்னிக்க வேண்டும்! (இருவரும் இம்மாதிரி சொல்லிக்கொண்டே தோப்புக் கரணம் போடு கின்றனர்.) சிஷ்யர்கள்: போதும்! நிறுத்துங்கள். நீங்கள் இப்படி சர்க்க பழகிக் கொண்டி ருந்தால், அரண்மனைக்கு போவது எப்போது? (வைத்தியர்கள் சும்மா நிற்கின்றனர்.) பித்துக்கொள்ளி: ஓய் இந்த நேரத்தில் எங்கே புறப்பட்டீர்! நான் அரண் மனைக்குப் போகும்போது இப்படி குறுக்கேவந்து சேர்ந்தீரே கழுகு மாதிரி! மகோதர: நீர் போகிற இடத்துக்குத் தான் நானும் புறப் பட்டேன். ஏன்? என்னுடைய மருந்து வேலை செய்யாதா? பித்துக்கொள்ளி: ஓ-கோ - ஓ அரண்மனை வயித்தியதுக்குக் கூட - புறப்பட்டு விட்டீரா? இன்னும்-நீர் அரை வைத்திய ராகக் கூட ஆகவில்லையே, அதற்குள் ஏன் காணும் இந்த ஆசை உமக்கு? மகோதர: போங்காணும்!-உமக்கென்ன தெரியும்? இன்றோடு அரை வைத்தியர் ஆகின்றேன். (மாணவனைப் பார்த்து) அடே! ராமசாமி நம்முடைய கணக்கைப் புரட்டிப் பார்! இன்றோடு எத்தனை ஆத்மாவைத் திருப்தி செய்திருக் கிறோம்! ராமசாமி: (ஒரு பக்கத்தைப் புரட்டி) நமது மருந்தால் இன்று வரையிலும் விடுதலை பெற்றவர்கள் 999 பேர். இன்னும் ஒரு ஆத்மாவுக்கு அமைதி உண்டாக்கினால் போதும் கணக்கு முடிந்துவிடும். மகோதர: ஓய் கேட்டீரா கணக்கை! இன்று அனேகமாக ஆயிரம் முடிந்துவிடும். இன்றுமுதல் நான் அரைவைத்தியன் தான் தெரிந்ததா? நீர் என்ன முழு வைத்தியர் ஆகி விட்டீரோ? பித்துக்கொள்ளி: ஓ! இதிலென்ன சந்தேகம் (மாணவனைப் பார்த்து) அடே கோவிந்தா நமது கணக்கைப் பார். கோவிந்தன்: (ஒரு புத்தகத்தைப் புரட்டி) குருவே, நமது அருமை யான மருந்தால், இதுவரையிலும் 1999 பேர் ஆத்ம சாந்தி அடைந்திருக்கிறார்கள். இன்னும் ஒன்று தான் பாக்கி. பித்துக் கொள்ளி: ஓய் பார்த்தீரா! நமது கீர்த்தியை இன்று முதல் நான் சுத்த முழுசாகி விடுகிறேன். கோவிந்தன்: (ராமசாமியைப் பார்த்து) அடே! என் குரு முழு வைத்தியர். உன் குரு அரை வைத்தியர். அதுவும் இன்னும் ஒருவரைக் கொன்றால்தான் அரை வைத்தியர் ஆவார். ஆயிரம் பேரைக் கொன்றவர்தாண்டா அரை வைத்தியர். ராமசாமி: போடா போ! உன் குரு இன்னும் ஒருவரைக் கொன்றால் தானேடா முழு வைத்தியர். உன் குருவுக்கு இன்னும் ஒரு ஆள் கிடைப்பதற் குள் என் குருவுக்கு எத்தனையோ பேர் கிடைத்து விடுவார்கள். பித்துக் கொள்ளி வைத்தியரை யார்தான் கூப்பிடுவார்கள்? என் குருவின் சக்கரந்தான் இப்பொழுது வேகமாக ஓடுகிறது. ஊரிலும் கொள்ளை நோய் அதிகம்; தெரியுமா? கர்வங் கொள்ளாதே! மகோதர: உங்களுக்குள் என்ன சண்டை! போதும் நிறுத்துங்கள். (வைத்தியரை நோக்கி) என்ன பண்டிதர்வாள் போகலாமா? வாரும் போகலாம். வீணாக நேரம் போக்கி விட்டோம்; நமது வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளு வோம்! (இருவரும் தங்கள் சீடர்களுடன் அரண்மனை வாசலுக்கு வருகின்றனர். காவல்காரன் அவர்களை உள்ளே விட வில்லை. தடுத்து நிறுத்துகின்றனர்) முதல் காவல்காரன்: நீங்கள் யார்? முண்டாசு பலமாக இருக்கிறதே! துணிப் பஞ்சம் தெரியாதோ உங்களுக்கு உத்திரவில்லாமல் உள்ளே போகக் கூடாது. பித்துக்கொள்ளி: என்னைத் தெரியாதா உனக்கு! புது ஆள் போலிருக்கு. நான்தான் பிரபல வைத்தியர் பித்துக்கொள்ளி பெருமாள் பண்டிதர். இளவரசிக்கு வைத்தியம் செய்யப் போகிறேன். இரண்டாம் காவலன்: (சிரித்து) ஓ! பித்துக்கொள்ளிப் பண்டிதரே! நீர் எப்படி வைத்தியம் செய்வீர்! பைத்தியத் திடம் யாராவது வைத்தியம் பண்ணிக் கொள்ளுவார்களா? பித்துக்கொள்ளி: அப்பனே! உனக்கு என் கீர்த்திப் பிரதாபம் தெரியாது! நான் உண்மையான பித்துக்கொள்ளி அல்ல, வைத்தியத்திலேயே எனக்குப் பைத்தியம். யாருக்கேனும் நோய் என்று கேட்டால் போதும் நானே வலியப் போய் வைத்தியம் பண்ணுவது வழக்கம். ஆகையால் தான் என்னைப் பித்துகொள்ளி பெருமாள் பண்டிதர் என்று கூப்பிடுகிறார்கள். முதல் காவலன்: ஓகோ! அப்படியா (மகோதர வைத்தியரைப் பார்த்து) ஐயா! நீங்கள் யார்! நீங்களும் பண்டிதர்தானே! மகோதர: என்னைக்கூடத் தெரியாதா உனக்கு! நான் தான் மகா வைத்தியம் மகோதர மகாலிங்க பண்டிதர். நானும் இளவரசிக்கு வைத்தியம் செய்யத்தான் போகிறேன். இரண்டாங் காவலன்: (சிரித்து) உங்களுக்கு மகோதர வியாதி போல் இருக்கிறதே! உங்கள் நோயை நீங்கள் போக்கிக் கொள்ள முடியவில்லையே, நீங்களா மற்றவர்களின் நோயை நீக்கப் போகிறீர்கள்! மகோதர: உனக்கொன்றும் தெரியாமல் உளறுகிறாய்! எனக்கு வியாதி ஏதும் இல்லை உடம்புக்கு வேலையில்லாமல் சும்மா உட்கார்ந்து கொண்டே நோய்களைப் பற்றியும் மருந்துகளைப்பற்றியும் ஆராய்ச்சி செய்வதே எனது வேலை. இதனால் என் தொந்தி பெருத்து விட்டது. நான் மகோதர வியாதியை நீக்குவதில் மகா நிபுணன். ஆதலால் தான் என்னை மகோதர மகாலிங்க பண்டிதர் என்று கூப்பிடு கிறார்கள் தெரிந்ததா! முதல் காவலன்: (இரண்டாங் காவலனைப் பார்த்து) அண்ணா! இவர்கள் உண்மையாகவே நல்ல வைத்தியர்கள் தான் போலிருக்கிறது. என்ன செய்யலாம்! இவர்களை உள்ளே அனுப்பலாமா? வேண்டாமா? இரண்டாம் காவலன்: தம்பி! நீ சாப்பிடப் போயிருந்த போது தான் உத்தரவு வந்தது, வைத்தியர்கள் யார் வந்தாலும் அவர்களை இளவரசியின் அந்தப்புரத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது உத்தரவு. ஆகையால் அவர்களைத் தடுக்க வேண்டாம் (பண்டிதர்களை நோக்கி) பண்டிதர் களே நீங்கள் போகலாம் உள்ளே. (இரு பண்டிதர்களும் சந்தோஷம்! சந்தோஷம்! என்று சொல்லிக் கொண்டு தங்கள் சீடர்களுடன் உள்ளே போகின்றனர்) (திரை விழுகிறது) காட்சி 7 காலம் : காலை இடம் : கோமளவல்லியின் அந்தப்புரம் நடிகர் : அரசன், அரசன் மனைவி கோப்பெருந்தேவி, தோழிகள் இருவர், வைத்தியர்கள் அவர்கள் சீடர்கள், அரண்மனை வைத்தியர் சந்திரசேகர பண்டிதர், காவலன். (கோமளவல்லி படுத்திருக்கிறாள். அரசனும், அரசியும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கின்றனர். தோழிகள் கோமள வல்லிக்கு உபசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். இரண்டு வைத்தியர்களும் இரண்டு சீடர்களும் ஒருபுறத்தில் உட்கார்ந்திருக்கின்றனர். அரசன்: என்ன பண்டிதர்களே! கோமளவல்லிக்கு என்ன வியாதி; கண்டு பிடித்தீர்களா? மகோதர: மகாராஜா நோய் இன்னதென்று கண்டுபிடித்து விட்டோம் சகல ரோக சண்ட மாருதசெந்தூரம் கொடுத் தால் போதும்? இன்னும் ஒரு முகூர்த்தத்தில் நோய் படிந்து விடும். மகோதர: போங்காணும்!-உமக்கென்ன நோக்கி) அடே இங்கே கொண்டுவா! நமது மருந்துப் பையை. ஒரு காவலன்: (விரைந்துவந்து அரசனை வணங்கி) மகாராஜா! இதோ வந்து விட்டார் நமது அரண்மனை வைத்தியர் சந்திரசேகர பண்டிதர். தங்கள் கட்டளையை எதிர்பார்த்து வாசலில் காத்து நிற்கின்றார். அரசன்: ஓ! நமது சாந்த குணசீலர் சந்திரசேகர பண்டிதரா! அழைத்து வா! (காவலன் போகிறான் பண்டிதர் வருகிறார்) பண்டிதரே! வாரும்! வாரும்!! ஊரில் இல்லையென்று சொன்னார்களே! எப்பொழுது வந்தீர்! உம்மைக் காணாமல் மிகவும் கவலையில் மூழ்கியிருந்தோம். நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தீர்! சந்திரசேகர்: அரசே! நான் இப்பொழுது தான் வந்தேன். வீட்டுக்கு வந்தவுடன் இளவரசிக்கு உடல் நலமில்லை யென்று சொன்னார்கள். உடனே புறப்பட்டு ஓடி வருகின்றேன். அரசன்: (மற்ற இரு பண்டிதர்களையும் பார்த்து) இந்தாருங்கள்! தலைக்குப் பத்து பவுன் (தனித்தனியே வாங்கிக் கொள்ளுகின்றனர்) சரி இனி நீங்கள் இரு வரும் போய்வரலாம். இளவரசியை நமது அரண்மனை வைத்தியர் பார்த்துக் கொள்ளுவார். பண்டிதர்கள்: (ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டு) அரசே! நாங்கள் போய் வருகிறோம். தங்கள் உதவிக்கு வணக்கம்! (போகின்றனர்) சந்திரசேகர்: அரசே! அவர்கள் ஏதேனும் மருந்து கொடுத் தார்களோ! அரசன்: இல்லை மருந்தொன்றும் கொடுக்கவில்லை. சகல ரோக சண்டமாருத செந்தூரம் கொடுக்கப் போவதாகக் கூறினர். அதற்குள் நீரும் வந்துவிட்டீர்! பண்டிதர்: (சிரித்துக்கொண்டே) நல்லவேளை! ஆண்டவன் செயல் (கோமள வல்லியிடம் அணுகி) அம்மா! கொஞ்சம் கையைக் காட்டுங்கள்! (கோமளவல்லி நாணத்துடன் கையை நீட்டுகிறாள். பண்டிதர் கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டு யோசிக்கிறார். பிறகு அவள் முகத்தை உற்றுப் பார்க்கிறார். பண்டிதர் தலையை அசைத்துக் கொண்டு அரசனிடம் கூறுகிறார்.) பண்டிதர்: நோய் நாடி - நோய் முதல் நாடி - அது தணிக்கும் வாய்நாடி - வாய்ப்பச் செயல் என்னும் தெய்வப்புலவர் வாக்கு தங்களுக்குத் தெரியாதது அல்ல. முதலில் நோய் இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டாவது அந்த நோய் வந்ததன் காரணத்தை அறிய வேண்டும். மூன்றாவது அந்த நோயை நீக்குவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். நான்காவது அந்த நோயா ளியின் உடல் நிலைக்குத் தகுந்தபடி வைத்தியம் செய்ய வேண்டும். அரசன்: ஆம்! உண்மைதான்! நோய் இன்னதென்று கண்டறிந் தீரா! என்ன நோய்! மருந்தென்ன! சந்திரசேகர்: நோய் இன்னதென்று தெரிந்துகொண்டேன்! ஆனால் அதைத் தீர்க்க என்னால் முடியாது. அது மருந்தால் தணிக்க முடியாது! அது மருந்தால் தணிக்க முடியாத மனநோய்! தாங்களே இளவரசியின் மனக் குறையைக் கேட்டறியுங்கள்! அறிந்தால் அக்குறையை நீக்கி இளவரசியை இன்பம் உறச் செய்யலாம். அரசன்: அப்படியானால் சரி! நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம். சந்திரசேகர்: அரசே! மகாராணி! வணக்கம்; நான் போய் வருகிறேன் (போகிறார்) அரசன்: (கோமளவல்லியைப் பார்த்து) கோமளவல்லி! இங்கே பார்! (பார்க்கிறாள்) உன் உள்ளத்தில் உண்டான கவலை என்ன? பயப்படாமல் சொல்! அதைத் தீர்த்து வைக்கிறேன். கோமளவல்லி: தந்தையே! கூறினால் கோபிக்கமாட்டீர்களே! கோபிக்க மாட்டேன், குறை தீர்ப்பேன் என்று வாக்களித் தால் சொல்லுகிறேன். அரசன்: இல்லை. கோபிக்கவில்லை. சும்மா சொல். கோமளவல்லி: தந்தையே - நான் - அந்த அழகன் - அறிஞன் - அஞ்சாநெஞ்சன் - ஆண்மையே உருக்கொண்டோன் - கள்வன் என வீண்பழிக்கு ஆளானவர் - மேல் - காதல் ...... எல்லோரும்: (திடுக்கிட்டு) ஆ! ஆ! ஆ! ஆ! என்ன இது! என்ன இது! விந்தை! விந்தை! (காதை பொத்திக் கொள்ளு கின்றனர்). அரசன்: (கோபமில்லாமல்) சீச்சீ - என்ன - பச்சைக் குழந்தையா நீ! இதை ஊரார் உணர்ந்தால் - ஓங்கிச் சிரிக்க மாட்டார் களா? சோழர் குடியில் பிறந்தவள்- ஒரு சோரனைக் காதலித்தாள் - என்று - இந்த உலகம் பழிக்குமே! கண்ணே! இந்த நினைப்பை விட்டுவிடு! வேண்டாம்! வேண்டாம்! வீண் பழிக்கு ஆளாக வேண்டாம்! கோமளவல்லி: (கண்களைக் கசக்கிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது) தந்தையே! நான் என்ன செய்வேன்! பாலோடு கலந்து பரவிய நீர் போல் - அவர் என் மனத்துள் கலந்து விட்டார். அவருடைய அழகு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. அவரைக் கண்டதும் காதல் வலையில் வீழ்ந்துவிட்டேன். அவரைத் தவிர - என் உயிரை - இனி எவராலும் காப்பாற்ற முடியாது! நான் என்ன செய்வேன்! அரசன்: கண்ணே! என்ன பைத்தியமா உனக்கு? நீ பல காவியங் களைக் கற்றவள். பல நீதி நூல்களைப் படித்தறிந் தவள்! கவிகளின் கற்பனைகளைக் கண்டறி யும் நுண்ணறி வுடையவள்! அடிக்கடி இன்பத் தமிழ்க் கவிகளின் இயல்பை - எனக்குக் கூறி - மகிழ்ச்சியளிக்கும் மதியுடையவள்! இத்தகைய நீ - ஏன் - இந்தப் படுகுழியில் வீழ்ந்தாய்! வேண்டாம்! வேண்டாம்! இந்த நாட்டை ஆளவிருக்கும் உனக்கு - இது ஏற்றதல்ல. கோமளவல்லி: தந்தையே என்னை மன்னிக்க வேண்டும். நான் இந்த நானிலத்தில் வாழமாட்டேன். (அரசன் வருத்தத்தோ டிருக்கிறான்.) அரசி: (கோமளவல்லியின் முகத்தைப் பிடித்துக்கொண்டு) கண்ணே! இங்கே பார்! நல் ரோஜாப்பூவை வெறுத்துவிட்டு - வெறும் கள்ளிப் பூவுக்காக யாரேனும் கைநீட்டுவார்களா? வெளுத்த ஆடைகளை வேண்டாம் - என்று வீசிவிட்டு - அழுக்காடைகளை எவராவது அணிவார்களா? மாங் கனியை வெறுத்து வேப்பங்கனியை விரும்புவாருண்டா? பழுத்த வாசனையுள்ள - பழங்களைத் தள்ளிவிட்டு - புழுத்த பழத்தை எடுத்து - புசிப்பார்களா யாராவது? உன்னுடைய அறிவை எங்கே உதிர்த்தாய்! எத்தனையோ மன்னர்கள் உன்னை மணம் புரிந்துகொள்ள - வந்து வந்து அலை கிறார்கள். அவர்களை யெல்லாம் அலட்சியம் செய்து ஒரு திருடனையா தேர்ந்தெடுத்தாய்! ஒரு தோழி: வேண்டாம் அம்மா! அந்தத் திருடனை மறந்துவிடு; அவனை நினைத்தாலே எங்களுக்கும் பயமாயிருக்கிறது. கோமளவல்லி: (தோழிகளையும், தாய் தந்தையரையும் பார்த்து) நீங்கள் எல் லோரும் கூடி என் நெஞ்சைப் பிளந்தாலும் சரி அல்லது தீ மூட்டி எரித்தாலும் சரி - நான் அவரை மறக்க மாட்டேன். அவர் திருடன் அல்ல. அழகின் அணிகலம் - அறிவின் களஞ்சியம் - வீரர்களின் திலகம். காதலுக்கு கண் ஏது! ஆலோசிக்க அறிவுதான் ஏது! அது சாதி-மத-சாத்திரங்களுக்குக் கட்டுப்படாது. எந்த ஆணையும், எந்தப் பெண்ணையும் ஒன்றாக இறுக்கிக் கட்டி- ஆழ்ந்தக் கடலில் மிதக்க விடும் ஆற்றல் படைத்தது. காதல் மழை இம்மா நிலத்தில் பெய்யா விட்டால் கலைப்பயிர் வளராது. காதுக்கினிய கானத்தைக் கேட்க முடியாது. வீணை ஒலியில்லை; விண்ணில் விளங்கும் சந்திரனுக்கும் வேலையில்லை. நாகரிகம் வளராது; கவிகள் இல்லை; காவியங்களும் இல்லை, வாலிபர்களும், மங்கையர்களும் வாசனையற்ற மலர்களாக வாடித் திரிவார்கள். தந்தையே! அன்னையே! எனது காதல் வெள்ளம் கரை கடந்தது. அதை நீங்கள் தடுக்க வேண்டாம். அரசன்: (கோபத்துடன்) கன்னிகைக்கு கல்வி கற்பித்ததன் பலன் இது! காதலாம்! காதல்! அரசி: கண்ணே! கோமளா! நீ சொல்வதில் தவறில்லை; உண்மைதான்! ஆனாலும் நமக்குப் பகுத்தறிவு இல்லையா? மனத்தை அடக்கியாளும் திறமையில்லாதவர்கள் அறிவுடை யவர்களா? போயும் போயும்ஒரு கள்வன் மேலா காதல் கொள்வது? ஒத்த செல்வம் - ஒத்த கல்வி - ஒத்த குணம் - ஒத்த பழக்க வழக்கம் - ஒத்த அறிவு - உள்ளவர்களுக்குள் நடைபெறும் விவாகந்தான் நீடித்து நிற்கும். நீ கொண்டது காதல் அல்ல; காமம்! கோமளவல்லி: அன்னையே! காதல் வேறல்ல; காமம் வேறல்ல; காதலையும் காமத்தையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. காதல் பொது; காமம் சிறப்பு. காதல் என்றால் அன்பு; காமம் என்றால் இன்பம்; அன்பின் பயன் இன்பம் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்பது முன்னோர் மொழி. காமம் என்பது வடமொழிச் சொல். அதற்குத் தமிழ்ச் சொல் இன்பம். காதல் கொண்டவர்கள் அனைவரும் காமத்தை அனு பவித்துத் தான் தீர்வார்கள். காதலால் மதச் சண்டைகள் மாண்டுமடியும், சாதிச் சண்டைகள் சாய்ந்தே போகும். பொய், கொலை, திருட்டுகள் மறைந்தே போகும். காதல் கொண்டவர் ஏழைகளைச் சுரண்டார்; இரக்கமற்ற செயல்கள் செய்யார். காதலால் எந்தக் கடுங்குற்றங் களையும் தவிடு பொடியாக்கி விடலாம். இன்ப வாழ்வு தழைக்கும். எல்லோரும் ஒன்றுபடுவார்கள். நான் உண்மையாகவே சொல்லுகிறேன்; என்னுடைய உயிர் நிலைக்க வேண்டுமானால் என்னை அவருக்கே மணம் புரிந்து கொடுங்கள் ஆர் பழித்தாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. இந்த பூமி தேவியின்மேல் ஆணை யிட்டுக் கூறுகிறேன் (சோர்ந்து விழுகிறாள்; தோழிகள் கையால் தாங்கிப் படுக்கைமேல் படுக்க வைக்கின்றனர்.) அரசி: (அரசனைப் பார்த்து) இனி காலங் கடத்துவதில் பயனில்லை. கள்வனுடைய கொலைத் தண்டனையை மாற்றும்படி - முதலில் கட்டளையிடுங்கள். அரசன்: (ஒரு தாளில் ஏதோ எழுதி மடித்து ஒரு தோழியைப் பார்த்து) சகுந்தலா (அவள் அருகில் வருகிறாள்) இந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டு கொலைக்களத்திற்கு ஓடு இதைத் தலைமை அதிகாரி கையில் கொடு! சீக்கிரம்! (தோழி கடிதத்தை வாங்கிக்கொண்டு ஓடுகிறாள்.) (திரை விழுகிறது) காட்சி 8 காலம் : நடுப்பகல் இடம் : கொலைக்களம் நடிகர்கள்: சுந்தர பாலன், காவலர்கள், ஒரு அதிகாரி, பொது மக்கள் கூட்டம், மாறு வேடம் பூண்ட கள்வர்கள் சிலர், தோழி சகுந்தலா (சுந்தரபாலன் ஒரு மேடை மேல் நிற்கிறான். சுற்றிலும் காவலர்கள் கொலையாளிகள் இருவர் வாளுடன் நிற்கின்றனர். பொது மக்களில் ஒருவர் முன் வந்து ஒரு புறமாக நின்று கள்வன் முகத்தைப் பார்த்துவிட்டுக் கூறுதல்) ஒருவர்: என்னமோ நேற்று இவனைப் பார்த்தபோது கோபமாகத்தான் இருந்தது. என்ன இருந்தாலும் இந்த வாலிபனைக் கொல்லுவது சரியல்ல, கொன்று விடுவதால் என்ன பயன்? நல்ல பலசாலி - வயது இருபத்தைந்துதான் இருக்கலாம் - புத்திசாலி - அழகன் - தைரியசாலி. இவனைத் திருத்தி நல்வழி யிலே நடக்கும்படி செய்தால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மை உண்டாகும். ஏன் இந்தக் காரியத்தை நமது அரசர் செய்திருக்கக்கூடாது? இரண்டாமவர்: என்ன செய்வது? இவன் ஆயுள் இவ்வளவு தான்! நேற்றுச் சபையில் இரண்டாவது மந்திரி வெற்றி நாதர்கூட இதைத்தான் சொன்னார். ஆனால் அதை யார் கேட்டார்கள்? மூன்றாமவர்: (அவர்களைப் பார்த்து) அடாடாடா! உங்களுக்கு எவ்வளவு இரக்கம் ஐயா! தருமர் என்றால் நீங்கள் தான். இவன் தன் அக்கிரமத்துக்குத் தகுந்த தண்டனையை அடைந்தான். இதில் என்ன ஐயா குற்றம்! இவன் தொலைந் தால் இன்றோடு நமது நகரத்தைப் பிடித்த சனியன் தொலைந்தது! நாமும் பயமில்லாமல் வாழலாம். மாறு வேடத் திருடர்களில் ஒருவன்: (ஒரு புறத்தில்) நாம் என்ன செய்வது? இனிமேல் நமது தலைவன் தப்பிக்க வழியில்லை. அரசன் இப்பொழுதாவது மன்னித்தோம் என்று உத்திரவிடமாட்டானா! (சுந்தரபாலன் பக்கத்தில் நின்ற அதிகாரி, கொலைகாரன் ஒருவனுக்குச் சைகை காட்டுகின்றான். அவன் வாளை ஓங்குகிறான். தோழி சகுந்தலா அலங்கோலமாக ஓடி வருகிறாள்) தோழி சகுந்தலா: நில்லப்பா! நில்லு! நில்லு! வெட்டாதே! நில்லு. அரசர் உத்தரவு! கொலைத் தண்டனையை மாற்றி விட்டார்: (கடிதத்தை அதிகாரியின் கையில் கொடுத்துச் சோர்ந்து விழுந்து விடுகிறாள். காவலர் தூக்கி உபசரிக்கின்றனர். அதிகாரி கடிதத்தைப் பிரித்துப் படிக்கின்றான். பிறகு அதை மக்களுக்குப் படித்துக் காட்டுகிறான்) அதிகாரி: (படிக்கும் கடிதம்) மகா ஜனங்களே! நம்முடைய சபையில் எவருக்கும் அஞ்சாமல் எதிர்வழக்காடிய சுந்தர பாலனுடைய தண்டனையை மாற்றி விட்டோம். அவன் இனிக் குற்றம் செய்யாமல் வாழவழி செய்யப் போகின்றோம். ஆதலால் அவனைக் கொல்லாமல் நமது சபைக்கு அழைத்து வருக! இங்ஙனம் சோழன் - குலோத்துங்கன் பொது ஜனங்கள்: சுந்தரபாலன் வாழ்க! அறிவாளி சுந்தர பாலன் வாழ்க! கட்டிளைஞன் வாழ்க! மன்னிப்பளித்த மன்னர் வாழ்க! தோழி சகுந்தலா வாழ்க! அதிகாரி: (காவலர்களை நோக்கி) இவனை இப்படியே ராஜ சபைக்குக் கொண்டு போங்கள்! (திரை விழுதல்) காட்சி 9 காலம் : மாலை இடம் : அரச சபை நடிகர்கள் : அரசன், அரசகுரு, முதல் மந்திரி, இரண்டாவது மந்திரி, சுந்தரபாலன், காவலர்கள், பொது மக்கள் (சபை கூடியிருக்கிறது. காவலர்கள் சுந்தரபாலனைக் கொண்டு வந்து அரசன் முன் நிறுத்துகின்றனர். சபையில் மவுனம் அரசன் காவலர்களைப் பார்த்துக் கூறுகிறான்.) அரசன்: காவலர்காள்! வீரன் கைவிலங்கை நீக்கி விடுதலை செய்யுங்கள். புஜங்களில் பிணித்திருக்கும் சங்கிலியையும் எடுத்துவிடுங்கள்! (அப்படியே செய்கின்றனர், பாலன் தலைகுனிந்து நிற்கின்றான். அரசன் சபையைப் பார்த்து) நாம் இவனுடைய கொலைத் தண்டனையை மாற்றியது பற்றி நீங்கள் ஆச்சரியமடையலாம். நேற்று நமது சமையில் நமது வெற்றி நாதர் விடுத்த வேண்டுகோள் என் மனதைக் கலக்கிவிட்டது. தண்டனை என்பது ஒருவரைத் திருத்து வதற்கேயல்லாமல் அழிப்பதற்கல்ல; வெட்டிப் புண் செய்யும் அரிவாளை நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்து கிறோம். கொல்லக்கூடிய நஞ்சை மருந்தாகவும் செய்து - அருந்தி - நலம் பெறுகிறோம். இடக்குப் பண்ணும் குதிரையை அடக்கி ஓட்டுதல் தான் சாமர்த்தியம். வழி தவறி நடக்கும் இளைஞர்களுக்கு - நல்லறிவு புகட்டி - அவர்களை நேர்மையான வழியில் நடக்கச் செய்வதே அரசாட்சியின் கடமை. இந்த நோக்கத்துடன் தான் கொலைத் தண்டனையை மாற்றினோம். என் செய்கை தவறானால் எடுத்துச் சொல்லுங்கள். அரசகுரு: குலோத்துங்கர்! நீடூழி வாழ்க! நீ கூறியது முற்றும் உண்மை. இந்த நாட்டிலே எவ்வளவோ நிலங்கள் காடும் மேடும் - கரம்புமாகக் கிடக்கின்றன. அவைகளைத் திருத்தி நீர் பாய்ச்சி தான்யங்கள் விளையும்படி செய்தால் இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் தோன்றுமா? உணவுப் பஞ்சம் ஒழிந்தால் திருட்டு பொய் சூது கள்ள வியாபாரம் கொள்ளை லாபங்களுக்கு இடமேது? கடல் நீர் முழுவதும் உப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் மூலந்தான் மழையைப் பெற்று மாநிலம் செழிக்கின்றது; பொல்லா தவர் நல்ல வழியில் நடக்கச் செய்வது நாட்டுக்கு நன்மை தான். உன்னுடைய முடிவு பாராட்டத்தக்கது. எல்லோரும்: ஆம்! ஆம்! அரசன்: சபையோர்களே! எனது கருத்தையும் கேட்டீர்கள்! ராஜ குருவின் உயர்ந்த கருத்தையும் உணர்ந்தீர்கள்! மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறுகின்றேன். கொலைத் தண்டனையை நான் மனப் பூர்வமாக வெறுக் கின்றேன். ஒரு உயிரை உண்டாக்கும் சக்தியற்ற நமக்கு அதை அழிப்பதற்கு உரிமை ஏது? கொலைத் தண்டனை ஒருவன் செய்த குற்றத்திற்குச் சரியான தண்டனையாகாது. குற்றவாளியை - அவன் செய்த குற்றத்தை உணர்ந்து வருந்தும்படி செய்வதே சரியான தண்டனை. கொல்லுவ தால் - அவனுடைய கவலை கஷ்டம் எல்லாம் ஒழிந்து விடுகின்றது. கொல்லப்பட்டவன் பிறகு வருந்துவதற்கு வழியில்லை. உயிரோடு இருந்தால் அல்லவா அவன் திருந்துவான்? மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். குற்றமற்ற ஒருவன் அவனுடைய விரோதிகள் சொல்லும் சாட்சியங் களின் மூலமாகவும், வழக்கைக் கற்பனை செய்யும் அதிகாரிகளின் திறமை காரணமாகவும் சட்டப்படி குற்றவாளி ஆகிவிடுகிறான். அவனுக்கு மரண தண்டனை அளிப்பது நீதியாகுமா? இத்தகைய தவறால் மரண தண்டனைக்கு ஆளான ஒருவன் பின்னொரு காலத்தில் குற்றமற்றவன் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவனை நாம் மீட்டுவர முடியுமா? ஆதலால் இனி நமது அரசாங்கத்தில் மரண தண்டனையே கூடாது என்று தீர்மானித்திருக் கிறேன். இந்தக் காரணங்களால்தான் இவனுடைய மரண தண்டனையை மாற்றி விட்டோம். இளவரசியின் கருத்தும் இதுதான். இதுபற்றி உங்கள் கருத்தைத் தாரளமாக வெளியிடலாம். இரண்டாவது மந்திரி: அரசே! இந்த உலகம் உள்ள வரையிலும் உங்கள் புகழ் மங்காது. ஓங்கி வளரும் இந்தச் சுந்தரபாலன் சிறந்த போர் வீரன். எந்த எதிரிகளையும் புறமுதுகு காட்டி ஓடும்படி எதிர்த்து அடிக்கும் திறமை சாலி. ஆதலால் இவரை நமது சேனைத் தலைவராக்கி விட்டால் நமக்குப் பெருமையுண்டு. இந்த நாட்டுக்கும் நலம் உண்டு; இதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். முதல் மந்திரி: அரசே! வெற்றி நாதர் சொல்லியதும் முற்றும் பொருத்தமானது தான். ஆயினும் - இக்கள்வர் - இனி நல் வழியில் நடப்பதாக - வாக்குறுதி யளித்தால் நாம் இவனை நம்பலாம். அரசன்: மந்திரிமார்களே! உங்கள் கருத்துக்களை ஒப்புக் கொள்ளுகிறேன். சபையில் உள்ள எல்லோருமே ஒப்புக் கொள்ளுவார்கள் என்றே நினைக் கிறேன். எல்லோரும்: ஒப்புக் கொள்ளுகிறோம். அரசன்: சுந்தரபாலா! குருநாதர் கூறியதையும் - மந்திரிமார்கள் சொல்லியதையும் கேட்டாய்! மன்றத்தாரின் கருத்தையும் அறிந்தாய்! நீ என்ன சொல்லுகிறாய்! சுந்தரபாலன்: அரசே! வணக்கம். நீரால் அணையாத நெருப் பில்லை - கருணை யால் - காதலால் - கனியாத கல்நெஞ்சர், யாரும் இருக்க முடியாது. இல்லாமைக் கொடுமையால் எல்லோரும் தூற்றும்படி பொல்லாத காரியங் கள் செய்தேன். இனிக் கனவிலும் அவைகளைக் கருதவே மாட்டேன். தாங்கள்என்மீது சுமத்தும் வேலையை.........................என்னால் முடிந்தவரை யில் குற்றங் குறையின்றிச் செய்வேன். இது உறுதி! உறுதி! பொது மக்களில் ஒருவர்: (தனியாக) இது என்ன அநியாயம்! கன்னக் கோல்காரன் சேனைக்கு காவலனாம். மன்னன் சொல்லை யார் மறுப்பது? அவன் சொன்னது தான் சட்டம் (மூஞ்சியை நீட்டி, உதட்டைப் பிதுக்குகிறார்.) முதல் மந்திரி: அரசே! இனி யோசனை வேண்டாம்! இவரைச் சேனாதிபதி யாக்கிவிடலாம். இவருடைய உறுதி மொழியை நம்பலாம்! அறிஞர்களும் கோழைகளும்தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவார்கள்; நடப்பார்கள்; இளை ஞர்களும் உரம் கொண்ட நெஞ்சினரும் எப்பொழுதும் உறுதிமொழி தவறமாட்டார்கள். எல்லோரும்: அதுவே சரி! அதுவே சரி! அரசன்: (சுந்தரபாலனைப் பார்த்து) சுந்தரபாலா! என் அருகில் வா! (வந்து வணங்கிச் சபையை நோக்கி நிற்கிறான்) வீரனே! இன்று முதல் நீ! எனது சேனாதிபதி. இதோ! சேனாதி பதிக்குரிய விருதுகள்! (அரசன் ஒரு காவலனிட மிருந்து சேனாதிபதிக்குரிய உடைகளையும் வாளையும் வாங்கிக் கொடுக்கச் சுந்தரபாலன் தலை வணங்கிக் கொள் கின்றான்) இதை அணிந்து கொண்டு அந்த ஆசனத்தில் அமர்வாய்! (சுந்தரபாலன் ஒரு புறத்தில் நின்று உடையணிந்து சபை யோரை வணங்கிச் சேனாதிபதியாக உட்காருகிறான்) வீரர்களே! உங்கள் படைத்தலைவன் சுந்தரபாலன்! இனி நீங்கள் அவன் ஆணைக்கு அடங்கி நடக்க வேண்டும். எல்லோரும்: சேனாதிபதி வாழ்க! சுந்தரபாலன் வாழ்க! மன்னர் வாழ்க! இளவரசியார் வாழ்கு! கொலைத் தண்டனை ஒழிக! தமிழ்நாடு வாழ்க! (திரை விழுதல்) காட்சி 10 காலம் : மாலை இடம் : மதுரை நகர் அரண்மனைத் தோட்டம் நடிகர்கள் : பாண்டியன் பிரதாபன், அவனுடைய முதல் மந்திரி, மற்றும் இருவர், ஒரு தூதன். (ஒரு மரக் கிளையில் இரு குயில்கள் சல்லாபாஞ் செய்து கொண்டு உட்கார்ந் திருக்கின்றன. பாண்டியன் மெதுவாக உலவுகிறான் அக் குயில்களைக் கண்டு நிற்கிறான்.) பாண்டியன்: ஆ! ஆ! இந்தக் கருங்குயில்கள் எங்கேயிருந்து வந்தன! என் மனத்தில் என்றுமில்லாத ஒரு கலக்கத்தை உண்டாக்கி விட்டனவே. தனித் திருப்பதில் விருப்பமுடைய எனக்கு இன்று தனிமையில் வெறுப்பை விளைவித்து விட்டன. சீச்சீ! இனி இக் குயில்களை பார்க்கவே மாட்டேன். (மெதுவாக நடந்து சென்று வேறொரு மரத்தடியில் கிடந்த ஆசனத்தில் உட்காருகிறான். பக்கத்திலிருந்த மலரைப் பறித்து முகர்ந்து கொண்டு கவலையோடிருக் கிறான். இச்சமயம் முதல் மந்திரி இன்னும் இருவருடன் வருகிறான். அரசனைப் பார்த்துப் பேசுகிறான்.) முதல் மந்திரி: அரசே! வணக்கம்! ஏன் சோர்வாக உட்கார்ந் திருக்கிறீர்கள்! தங்கள் உள்ளத்தில் ஏதோ கவலை புகுந்தி ருப்பது போல் காணப்படுகிறதே! ஏன் ஆழ்ந்த யோசனை! என்ன நேர்ந்தது! பாண்டியன்: தனித்திருந்ததால் ஏதோதோ எண்ணித் தத் தளித்துக் கொண்டிருந் தேன். நீங்கள் இருக்கும் போது எனக் கென்ன கவலை. இப்பொழுது நீங்கள் என்னைத் தேடி வந்த காரணம் என்ன? நாட்டில் ஏதேனும் விசேஷம் உண்டோ? முதல் மந்திரி: அரசே! ஒன்றும் விசேஷம் இல்லை. தங்களைத் தனியாகப் பார்த்து பேசவேண்டும். என்னும் ஆவலுடன் தான் வந்தோம். நாம் பேச வேண்டியது தங்கள் சொந்தச் செய்தி! மங்களகரமான காரியம்! சம்மதமானால் சொல்லு கிறோம். பாண்டியன்: அதென்ன! மங்களகரமான காரியம்! சும்மா சொல்லுங்கள்! முதல் மந்திரி: அரசே தங்களை மாப்பிள்ளைக் கோலத்தில் காணவேண்டும் என்பது எங்கள் ஆசை. தஞ்சை அரசர் குமாரி...... மிகவும் அழகான பெண். தமிழ்க்கல்வியில் சிறந்தவர். அரசாளுந்திறமை படைத்தவர். அந்த மங்கையை நமது நாட்டு மகாராணியாக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. பாண்டியன்: அவள் பெயர் கோமளவல்லிதானே! முதல் மந்திரி: எங்கள் மகாராணியைப் பற்றி உங்களுக்கு முன்பே தெரியும் போல் இருக்கிறதே! (அரசன் வெட்க மடைகிறான்) ஆம்! அவள் பெயர் கோமளவல்லிதான். பாண்டிய மன்னருக்குப் பெண் கொடுக்க சம்மதமா?.......... என்று குலோத்துங்க சோழருக்கு.... தங்களைக் கேட்காமலே எழுதியிருக் கிறேன். (இச்சமயம் தூதன் வருகிறான். அரசனையும் மந்திரியையும் வணங்கி மந்திரி கையில் ஒரு கடிதம் கொடுக்கிறான்.) தூதன்: (மந்திரியை நோக்கி) சோழ மன்னர், முடியாது என்று சொல்லும்படி கூறினார். பாண்டியன்: (கோபமான குரலில்) அவன் என் உறவை மறுத்து விட்டான்! இருக்கட்டும்! கோமளவல்லியைச் சிறை பிடித்துக் கொண்டு வந்தாவது மணக்காமல் விடுவதில்லை (சிறிது மவுனம்) முதல் மந்திரி: அரசே! நீங்கள் சிறிதும் சிந்தை கலங்க வேண்டாம்! இப் பொழுதே நமது படைகளை அனுப்பித் தஞ்சையை முற்றுகையிடச் செய்கிறேன். குலோத்துங்கன் கர்வத்தைக் குலைத்து - கோமள வல்லியைச் சிறை செய்து - கொண்டு வரச் செய்கிறேன். வேந்தர்கள் தாங்கள் விரும்பிய பெண்ணை மணப்பதில் வீரத்தைக் காட்டுவது தவறல்ல. அம்மங்கையைத் தங்கள் பட்டத்தரசியாக்காமல் விடுவ தில்லை. பாண்டியன்: சரி! தாமதம் வேண்டாம்! இப்பொழுதே நமது படைகள் புறப் படட்டும். சோழநாட்டை அடைந்து தஞ்சை நகரை முற்றுகை யிடட்டும்! சேனாதிபதிக்கு சீக்கிரம் உத்தரவிடுங்கள்! (திரை விழுதல்) காட்சி 11 காலம் : காலை இடம் : சோழன் அலுவலகம் நடிகர் : தூதன், முதல் மந்திரி, சுந்தரபாலன், அரசன். (அரசன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.) தூதன்: மன்னர் மன்னா! வணக்கம். பாண்டிய நாட்டுப் படை நமது நகரத்தை முற்றுகையிட வந்திருக்கிறது. அரசன்: பாண்டியன் படையா! என்ன தொல்லை! சரி நீ ஓடிப்போய் நமது சேனாதிபதியையும், முதல் மந்திரியை யும் கையோடு அழைத்து வா! (உத்தரவு என்று சொல்லி விட்டு தூதன் போகின்றான். அரசன் தனியாக) என்ன முட்டாள் தனம்! ஒரு பெண் தன்னை மணக்கச் சம்மதிக்கா விட்டால் அவளைச் சிறைபிடித்துச் சென்று மணக்க முயல்வது தமிழர் நீதியா! இப்படிச் செய்வது மணமாகுமா! பாண்டியரின் பண்டைப் பெருமைக்குப் பங்கங் தேடி விட்டான் பிரதாபன்! தான் ஒரு தமிழன் என்பதையும் மறந்துவிட்டான். இருவர் சண்டையிட்டால் ஒருவர்தான் வெற்றி பெறமுடியும். மற்றொருவர் பக்கம் தோல்விதான். இருவரும் வெற்றி பெறுவது இயல்பல்ல. இரண்டு தமிழரசர்கள் சண்டையிட்டு ஒருவர் தோற்றால் உலகம் என்ன சொல்லும்? தமிழன் தோற்றான் என்றுதானே சொல்லும்! இதை மறந்தான் பாண்டியன்! என்ன செய்வது. (இச்சமயம், முதல் மந்திரியும். சேனைத் தலைவன் சுந்தர பாலனும் வந்து அரசனை வணங்குகின்றனர். அவர்களை நோக்கி) அரசன்: மந்திரியாரே! சேனைத் தலைவரே! வாருங்கள்! பாண்டியன் படை வந்திருக்கும் செய்தி தெரியுமல்லவா? இருவர் காதல் கொண்டு இணைந்து வாழ்வதை அறிவிப்பது. அகப் பொருள் இலக்கணம். அதற்கு மாறாக நடக்கத் துணிந்தான் பாண்டியன். இருவரும்: ஆம். தெரியும். கவலை வேண்டாம். முதல் மந்திரி: அரசே! ஏன் மனக்கலக்கம்! நமது படைத்தலைவர் இருக்கும் போது நமக்கென்ன பயம்! சேனாதிபதி: அரசே! இதோ ஒரு நொடியில் பாண்டியர் சேனையைப் பஞ்சாகப் பறக்கும்படி செய்து வருகிறேன். நமது படைவீரர் எப்பொழுதும் போருக்குத் தயாராக இருக்கின்றனர். பிரதாபன் நம்மைப் பேடி என்று நினைத்தான் போலும். நமது வீரர்கள் போருக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டமாட்டார்கள் பாண்டியன் படையை ஓட ஓட விரட்டியடிக்கப் போகின்றனர். ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்! உத்தரவு கொடுங்கள்! இதோ வெற்றியுடன் திரும்புகின்றேன். (வணங்குதல்) அரசன்: படைத் தலைவரே! உமது வீரத்தில் நமக்கு நம்பிக்கை உண்டு! வெற்றியுடன் திரும்புங்கள்! (சேனாதிபதி போகின்றான் மந்திரியை நோக்கி) மந்திரி! நமது சபையைக் கூட்டுங்கள்! இதோ நானும் வந்துவிடுகிறேன். (மந்திரி போகிறான்) (திரை விழுதல்) காட்சி 12 காலம் : பகல் இடம் : போர்க்களம் நடிகர் : சோழன் படைகள்,சுந்தரபாலன், பாண்டியன் படைகள் பாண்டியன், சேனாதிபதி. (பாண்டியன் படைகளும் சோழன் படைகளும் எதிர் எதிராக நிற்கின்றன. சுந்தரபாலன் பாண்டியன் படைத் தலைவனை நோக்கிக் கூறுகிறான்.) சுந்தரபாலன்: பாண்டியர் படைத் தலைவரே! ஏன் வீணாக நிரபராதிகளைப் பலி கொடுக்கிறீர்! நீர் கருதி வந்த காரியம் கைகூடாது. சமாதான மாகவே திரும்பிப் போய்விடும்! இது என் எச்சரிக்கை! பாண்டியர் படைத்தலைவன்: படைத் தலைவரே! போர்க் களத்தில் புகுந்து விட்டோம்! இனிச் சமாதானம் என்ன! பாண்டியர் சேனை பயந் தோடாது! சோழன் மகளைச் சிறைப்பிடித்துச் செல்லவே வந்திருக் கின்றோம். அம்மங் கையை எங்கள் மன்னனுக்கு மணம் செய்து கொடுப்பதாக உறுதி கூறினால் - நாங்கள் சோழ மன்னருடன் சமாதானம் செய்து கொள்ளுவோம்! இன்றேல் போர்தான்! சேனாதிபதி சுந்தரபாலன்: இதற்காகவா உங்கள் சண்டை! நல்ல ஒழுங்கு! புதுமண உறவு கொண்டாடப் போர்க் களத்தையா தேர்ந்தெடுக் கிறீர்கள்! சிங்கத்திற்காக வைத்தி ருக்கின்ற இரையை, நாய் கவர்ந்து கொள்ள ஆசைப் படுவது போல்தான் இது! ஒருக்காலும் உங்கள் எண்ணம் நடக்காது! காட்டுங்கள் உங்கள் போர் வரிசையை. (படைத் தலைவர்களுக்குள் சண்டை - சேனைகளும் கை கலந்து போர் செய்கின்றன. பாண்டியன் படைத் தலைவன் வீழ்கின்றான், அவன் சேனை அலங்கோலமாய் ஓடுகின்றது.) சோழன் சேனைகள்: சேனாதிபதி சுந்தரபாலன் வாழ்க! குலோத்துங்க மன்னர் வாழ்க! சோழநாடு வாழ்க! தமிழ் நாடு வாழ்க! இளவரசி வாழ்க! சுந்தரபாலன்: (சேனைகளை நோக்கி) வீரர்களே! இன்று நமக்குக் கிடைத்த வெற்றி சோழநாட்டின் வெற்றி நமது மன்னர் பிரான் வெற்றி! நமது தாய் நாட்டின் வெற்றி! நம்மை ஊட்டி வளர்த்து - நமக்கு உரத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் நமது தாய்த் தமிழ் நாட்டை வணங்குங்கள்! எல்லோரும்: தாய் நாடு வாழ்க! தமிழ் நாடு வாழ்க! வாழ்க தமிழகம் வாழ்க! வாழ்க! வாழ்கவே! (திரை விழுதல்) காட்சி 13 காலம் : மாலை இடம் : தஞ்சை அரச சபை நடிகர்கள் : அரசன், அரசி, கோமளவல்லி, தோழிகள், ராஜ குரு, முதல் மந்திரி, பொது ஜனங்கள், சுந்தர பாலன், சேனைகள், ஒரு தூதன். (சபையில் மவுனம். அரசன் முதல் மந்திரியைப் பார்த்துப் பேசுகிறான்). அரசன்: மந்திரி! போர்க்களச் செய்தி தெரியுமா; அங்கிருந்து யாரும் வரவில்லையே! மந்திரி: அரசே! தங்களுக்குச் சந்தேகம் ஏன்? வெற்றி நமது பக்கந்தான் இந்த நேரம் பாண்டியன் படைகள் பறந்தி ருக்கும் நமது சுந்தரபாலன் போர்க்களத்திற்குப் போயிருக்கும்போது - நாம் ஏன் கவலைப்பட வேண்டும் (சிறிது கவனித்து) இதோ! நமது வெற்றிச் சங்கின் ஒலி! கவனியுங்கள்! (எலலோரும் கவனிக்கின்றனர்; சங்கு முழக்கம் கேட்கிறது) எல்லோரும்: ஆம்! ஆம்! நமது வெற்றிச் சங்குதான்! வெற்றி நமதே! வெற்றி நமதே! (இச்சமயத்தில் போர்க்களத்திலிருந்து ஒரு வீரன் ஓடி வருகிறான்; அரசனை வணங்குகிறான்). வீரன்: மன்னர் மன்னா! ஓங்குக தங்கள் அரசு! உயர்க தாங்கள் கீர்த்தி! வெற்றி நமதே! நமது படை முன் பாண்டியன் படை அரை நாழி கூட எதிர்த்து நிற்க முடியவில்லை. சுந்தரபாலன் சிங்கமாக ஆண்மையுடன் போரிட்டார். தப்பித்தோம், என்று எதிரிகள் எல்லோரும் புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர். வெற்றி முழக்கத்துடன் நமது வீரச் சேனாதிபதி வந்து கொண்டிருக்கிறார். (சேனாதிபதி வாழ்க! சோழ மன்னர் வாழ்க! சோழ நாடு வாழ்க! காவிரி நாடு வாழ்க! இளவரசி வாழ்க! என்ற முழக்கம் கேட்கிறது. சபையில் மவுனம். சுந்தரபாலன் சேனைகளுடன் கம்பீரமாக நடந்து வந்து அரசனை வணங்குகிறான்). சுந்தரபாலன்: அரசே! வாழ்க! நமது படைகள் வீரப் போர் புரிந்து எதிரிகளை விரட்டியடித்துவிட்டன. சோழ நாட்டுப் படைகள் தங்கள் பழந்தமிழ் வீரத்தை நிலை நாட்டி விட்டன. அரசன்: சேனைத்தலைவரே! உமது வீரத்தைப் பாராட்டு கிறேன். இன்று எதிரிகள் நமது நகரில் புகுந்திருந்தால் நமது நகர் அலங்கோலமாகி யிருக்கும். பலர் வீடுகளை இழந்திருப்பார்கள்; பல மக்கள் மாண்டிருப்பார்கள். பல குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் பறி கொடுத்துப் பதறுவார்கள். பெண்கள் பலர் தங்கள் கணவரை இழந்து கதறு வார்கள். மக்கள் பலநாள் பாடுபட்டு உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் உணவுப் பண்டங்கள் பல பாழாகியிருக்கும். மக்கள் பல துறைகளில் ஈடுபட்டு முயன்று ஈட்டிய செல்வங்கள் கொள்ளை போயிருக்கும். நமது நகரமே பாழாகியிருக்கும். இந்த அலங் கோலத்திற்கு இடந்தராமல் காப்பாற்றிய உம்மைப் பாராட்டுகிறேன். உமது வீரத்தையும், ஆண்மையையும் புகழ்கின்றேன். எல்லோரும்: வாழ்க படைத் தலைவர்! வாழ்க சுந்தரபாலர். அரசன்: சபையோர்களே! நமது நகரத்தையும் மக்களையும் காப்பாற்றிய நமது படைத்தலைவருக்கு நான் ஒரு பரிசளிக்க நினைக்கிறேன். அதற்கு உங்கள் உடன்பாடும் ஒத்துழைப்பும் வேண்டும். முதல் மந்திரி: அரசே! தாங்கள் இவருக்கு - எந்தப் பரிசளித் தாலும் எங்களுக்குச் சம்மதந்தான். அரசன்: சபையோர்களே! நான் இவருக்குக் கொடுக்கும் பரிசு நமது கோமளவல்லி. அவளுக்கும் இவரை மணப்பதில் பூரண சம்மதம். சுந்தரபாலனுக்கும் இதில் தடையிராது என்றே நினைக்கிறேன். முதல் மந்திரி: அரசே தங்கள் முடிவு சிறந்த முடிவு, இவர் சிறந்த வீரர்! இளவரசியோ மிகுந்த அறிவு படைத்த பண்டிதை. இருவரும் தம்பதிகளானால் இந்நாடு இன்பமுறும். நமது அரசு உயரும். நமது குடிகள் குதூகலம் அடைவார்கள். பொருத்தமான திருமணம். ராஜகுரு: அரசே! உன் முடிவு உயர்ந்தது. வீரர்கள் எக்குலத்தில் பிறந்தாலென்ன? அவர்கள் உயர்ந்தவர்கள். வீரர்களுக்குப் பெருமை யளிப்பது வேந்தன் கடமை. தமிழ்நாட்டினர் வீரர்கள் உயிரோ டிருக்கும் போதும் பாராட்டினர். இறந்த பிறகும் அவர்களுக்குக் கல் நாட்டி - கடவுளாக வைத்து வணங்கினர்; இது தமிழர் மரபு. அரசே! இப்பொழுது நல்ல முகூர்த்தம்; வெற்றி மாலை சூடிய நமது படைத் தலைவர் இப்பொழுதே மண மாலையும் சூடட்டும். எல்லோரும்: ஆம்! செய்யலாம்!! அரசன்: (ஒரு காவலனைப் பார்த்து) காவலா! இப்பொழுதே போய் - நமது இளவரசி - மகாராணி - தோழிமார்கள் - எல்லோரையும் அழைத்து வா! கோமளவல்லிக்கும் - படைத் தலைவருக்கும் திருமணம் என்பதையும் அவர் களுக்கு தெரிவி. (காவலன் போகின்றான்) விரைவில் வா! ஒரு கிழவர்: (ஒரு பக்கத்தில் நின்றவர் முன் வந்து) காலம் கலி காலம் அதனால்தான் இந்த விபரீதம்! என்ன இருந்தாலும் திருடன் திருடன்தான். கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது போல - கோமளவல்லியைக் கள்வனுக்கு மணம் செய்து கொடுக்கின்றனர். காவலன் குமாரிக்கும் இந்தக் கள்வன் மேல் காதலாம். (அரச சபையைப் பார்க்காமல் திரும்பி நின்று) இதைத் தடுப்பவர்கள் யாரும் இல்லையா! இந்த ஏகாதிபத்திய அரசுக்கு என்ன கேடு காலமோ! யார் அறிவார்! இந்தச் சபையில் உள்ளவர்கள் எல்லோரும் தலையாட்டித் தம்பிரான்கள். அரசன் சொல்வதற்கெல்லாம் ஆம் ஆம் என்று தலையை ஆட்டு கிறார்கள். நான் என்ன செய்வது. கிழவன் - ஏழை - இந்த ஏழைப் பேச்சு அம்பலம் ஏறுமா! எப்படியாவது போகட்டும்! நமக்கென்ன! இந்தக் கல்யாணத்தை கண்ணால் பார்ப்பது கூட மகா பாவம்! நான் போகிறேன். (போகிறான்) (கோமளவல்லி, அரசி கோப்பெருந்தேவி, தோழிகள் வருகின்றனர். அரசி அரசன் அருகில் அமர்கிறாள். தோழிகள் ஒரு புறம் ஒதுங்கி நிற்கின்றனர். கோமளவல்லி அரசனை வணங்குகிறாள்) அரசன்: கோமளவல்லி! எல்லாம் உன் எண்ணம் போல் முடிந்தன. உன்னை நமது சேனாதிபதிக்கு பரிசாக கொடுத்து விட்டேன். இது உனக்குச் சம்மதந்தானே. (கோமளவல்லி புன்சிரிப்புடன், தலை குனிந்து சுந்தர பாலனைப் பார்க்கின்றாள். அவனும் அவ்வாறே செய்கின்றான். அரசன் சுந்தரபாலனைப் பார்த்து) சேனாதிபதியே! கோமள வல்லியை ஏற்றுக்கொள்ள உமக்கு சம்மதந்தானே! (சுந்தர பாலன் எழுந்து புன்சிரிப்புடன் தலைகுனிந்து கோமள வல்லியைப் பார்த்து நிற்கின்றான்) (அரசன், குருவை நோக்கி) குருவே! இருவரும் தங்கள் மவுனத்தின் மூலமும் - புன் மகிழ்ச்சியினாலும் தங்கள் சம்மதத்தை தெரிவித்து விட்டனர். அவர்களை அனைவரும் அறியத் தம்பதி களாக்கி வைப்பது தங்கள் கடமை. (குரு இருவர் கைகளிலும் மாலைகளைக் கொடுக்கிறார். இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். எல்லோரும் அவர்கள் மேல் மலர்களைத் தூவுகின்றனர்) எல்லோரும்: வாழ்க! மணமக்கள்! வாழ்க சுந்தர பாலன்! வாழ்க கோமளவல்லி! (திரை விழுதல்) காட்சி 14 காலம் : மாலை இடம் : தஞ்சை அரண்மனைத்தோட்டம் நடிகர்: சுந்தரபாலன், கோமளவல்லி (மண்டபத்தில், ஒரு ஆசனத்தில் குளத்தைப் பார்த்துக் கொண்டு சுந்தர பாலன் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். கோமளவல்லி பின்புறமாகப் பாடிக் கொண்டு வந்து அவன் கண்களைப் பொத்துகிறாள்.) சுந்தர பாலன்: தெரியும்! தெரியும்! என் கண்களை மூடிய காந்தள் மலர்கள் யாருடையவை என்று தெரியும்! தேனின் சுவையே தேகமாகப் பெற்ற என் தேவி தான் நீ! உன் மலர்க் கரங்களை எடுத்துவிட்டு என் அருகில் வந்து உட்காரு! (சிறிது பாடி விளையாடுகின்றனர்) கோமளவல்லி: நாதா! அதோ பாருங்கள்! அந்தப் பச்சைக் கிளிகளை; அவைகள் நம்மைப் பார்த்து என்ன என்னவோ பேசுகின்றன! அந்த மயில்கள் ஏன் நம்மைப் பார்த்தவுடன் அவ்வளவு ஆனந்தமாக ஆடுகின்றன? நம்மைப் பரிகாசம் பண்ணுகின்றனவோ! சுந்தரபாலன்: தேவி! அவைகள் நம்மைக் கண்டு இம்மாதிரி செய்ய வில்லை. நாம் இந்த இளந் தென்றலால் எவ்வளவு இன்பம் அடைகின்றோம்! இந்தத் தென்றற் காற்று செய்யும் வேலையைப் பார்! நமது தடாகத்தின் மேல் மெதுவாக நடந்து குளிர்ச்சியடைகின்றது. நமது பூங்காவனத்தில் மலர்ந்திருக்கும் மலர்களின் நறுமணத்தையும் அள்ளிக் கொள்ளுகிறது. அந்தக் குளிர்ச்சியையும், மணத்தையும் நம்மீது தடவுகின்றது, இந்த ஆனந்தத்தைத்தான் அந்தக் கிளிகளும், மயில்களும் அனுபவிக்கின்றன. (சற்று யோசிக்கின்றான்) கோமளவல்லி: நாதா என்ன ஆழ்ந்த யோசனை! இப்பொழுது ஒருவரும் படை திரட்டிக் கொண்டு வரவில்லை. இனி யாரும் நமது நாட்டின் மேல் படையெடுக்கமாட்டார்கள். நமது பகைவர்கள் எல்லாம் உங்கள் பெயரைக் கேட்டாலே போதும்! நடுநடுங்குகிறார்கள். வீணாக யோசனை வேண்டாம். எடுத்தால் அந்த மன்மதன் தான் உங்கள் மேல் படையெடுக்கவேண்டும்! சுந்தரபாலன்: (முத்தமிட்டு) கண்ணே அந்த மன்மதனுக்கும் அஞ்ச மாட்டேன். அவனையும் ஓட ஓட விரட்டியடிப்பேன். உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகின்றேன்! இன்று நான் இந்தச் சோழநாட்டின் சேனாதிபதியாக விளங்குகின்றேன். இதற்குக் காரணம் உன் கண்களின் கருணை நோக்கந்தான். அன்று என்னைக் காவலர்கள் கட்டி இழுத்துவந்தபோது நீ அந்த உப்பரிகை மேல் நின்று என் முகத்தில் வீசிய கண்மலர்கள் தாம் என்னைப் புனிதன் ஆக்கின. என்னுடைய பழைய காரியங்களையெல்லாம் மறக்கச் செய்தன. நானும் மக்கள் மதிக்கும்படியான மாண்பு பெற்றேன். இன்று நான் உயிர் வாழ்வதற்கு அந்தப் பார்வைதான் அமுதம் அளித்தது (கட்டி அணைத்து) என்ன செய்வேன். உன்னைப் போல் எனக்குத் தமிழ்ப் புலமையிருந்தால் என் காதலை கவிகளாகப் பொழிந் திருப்பேன். கோமளவல்லி: (சுந்தரபாலன் மார்பில் சாய்ந்து கொண்டு) நாதா எனக்குத் தாங்களை எப்படிப் புகழ்வதுதென்றே தெரியவில்லை. நான் கவியரசியாயிருந்து என்ன பயன்! என் கருத்தை கவர்ந்து விட்டீர்கள்! நீங்கள் இன்றேல் நான் உயிர் வாழேன். சுந்தரபாலன்: அன்பே! நீ என் அழகிய மயில். கோமளவல்லி: நான் மயிலானால் என்னை அழகாக ஆடச் செய்யும் காளமேகம் நீங்கள்! சுந்தரபாலன்: நீ என் மனதை மகிழ்விக்கும் மல்லிகைப் பூ கோமளவல்லி: நீங்கள் மல்லிகைப்பூவின் நறுமணம் சுந்தரபாலன்: நீ நல்ல வீணை கோமளவல்லி: தாங்கள் இந்த வீணையின் நாதம் சுந்தரபாலன்: நீ என் கண்களே! தான்! கோமளவல்லி: நீங்கள் என் கண்களில் உள்ள மணிகளே தான்! சுந்தரபாலன்: வேறு உன்னை எப்படித்தான் புகழ்வேன்! கோமளவல்லி: என் உள்ளங் கவர்ந்த உயிரே! நீங்கள் தான் எனக்கு செந்தமிழ்ச் சிலப்பதிகாரத்தின் சுவைத்தேன். கலித்தொகை காட்டும் காதல் இன்பம், சிந்தாமணி தரும் செந்தமிழ்ச் சுவை! புற நானூற்றின் புகழ்! அக நானூற்றின் அமுதம்! பத்துப் பாட்டின் பழந்தமிழ் இன்பம்! கம்பன் கவிதையில் கனியும் இன்பத்தேன்! திருக்குறளின் தெளிந்த அறிவு! தாங்கள் அன்பாக ஒரு பாட்டு பாடினால் என் அகம் குளிரும்! எங்கே ஒரு பாட்டு (அவன் முகத்தைப் பிடித்துக் கொஞ்சுகிறாள். பாடுகிறான்) சுந்தரபாலன்: கண்ணே! நான் உன்னால் புதிய மனிதன் ஆனேன்! எனது பழைய செய்கையை நினைப்பு எல்லாம்--எங்கேயோ மறைந்து போய்விட்டன. உனது பார்வையின் பெருமையே பெருமை! கோமளவல்லி: அன்பே! தாங்கள் மிகவும் சமர்த்தர். முன்பு--தமிழ்க் கவிதைகள் தாம் என் உள்ளத்தைக் கவர முடியும்! வேறு யாராலும் கவர முடியவில்லை. தாங்கள் அன்று அண்ணாந்து பார்த்த ஒரே பார்வையில்--என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர்கள். இன்னும் - அதை-நீங்கள்-திருப்பித் தரவில்லை. ஒரு வினாடி என்னை நீங்கள் பிரிந்திருக்கும் சமயம் பார்த்து-அந்தக் கோழை மன்மதன் என்னைக் கொல்ல வழி தேடுகின்றான். நீங்கள் கை தேர்ந்தவர்கள். என்னிடம் மாத்திரம்-தங்கள் பழைய வேலையை - வெகு திறமையாகச் செய்து வருகிறீர்கள் இல்லையா! (அவன் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறாள்). (சுந்தரபாலன் திடீரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கோபத்துடன் பல்லைக் கடிக்கின்றான். உடனே முக பாவத்தை மாற்றிக் கொண்டு கோமளவல்லியை முத்தமிடு கிறான்.) சுந்தரபாலன்: கண்ணே! கோமளவல்லி! உன் உள்ளத்தை இன்றுதான் நன்றாக உணர்ந்தேன். இத்தனை நாள் உன் அன்பின் எல்லையை அறியாமல் உன் அழகில் மட்டும் ஈடுபட்டிருந்தேன். போதும் இன்றைய விளையாட்டு. இருட்டி விட்டது. உனது தோழிமார்கள் தேடுவார்கள். வா! நாம் போவோம். (இருவரும் கை கோத்துக் கொண்டு போகின்றனர்.) (திரை விழுகிறது) காட்சி 15 காலம் : மாலை இடம் : கோமளவல்லியின் அந்தப்புரம். நடிகர் : சுந்தரபாலன், கோமளவல்லி, தோழிகள். (சுந்தரபாலன் தனியாக கோமளவல்லியின் அந்தப்புரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.) சுந்தரபாலன்: இருக்கட்டும்! அரசகுமாரி என்ற அகங்காரத் தால் அவள்-அன்றைய தினம்-அப்படிப் பேசி விட்டாள். நம்மைப் பற்றிய-இழிவான எண்ணம்-அவள் நெஞ்சத்தை விட்டு இன்னும் நீங்கவில்லை! இன்னும்-அவள் நம்மைக் கள்வன் என்றும்-கொலைகாரன் என்றுமே கருதியிருக் கிறாள். அவள் நம்மிடம் காட்டும் காதல் அவ்வளவும் வெறும் நடிப்பு! வஞ்சகம்! மோசம்! உள்ளத்தின் உணர்ச் சியை ஒளித்துக் கொண்டு-கள்ளத்தனமாக நடப்பதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள். இனி-நான்-இந்த-மானங் கெட்ட வாழ்வை விரும்ப மாட்டேன். (சற்று நிறுத்தி) நான் நன்றி கெட்டவன். வேண்டும் எனக்கு இந்தத் தண்டனை. அரச வாழ்வு கிடைத்தவுடன் - என் பழைய அன்புடைய தோழர்களையெல்லாம் மறந்தேன். அரச செல்வம் என் கண்களைக் குருடாக்கி விட்டது. என் அறிவைக் குலைத்தது. அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்! என்ன பேசியிருப்பார்கள்! (சற்று நின்று) என்னைத் தோழிமார்கள் பார்க்கும் போதெல்லாம்-திருடன் என்ற நினைப்போடுதான் பார்க்கிறார்கள். வேலைக்காரர்கள் எல்லாம் என்னைக் கள்வன் என்று வெறுப்புடன் நோக்குகின்றனர். எனக்கு இந்த அரண்மனை வாழ்வு புளித்துப் போய்விட்டது. (சிறிது யோசித்து) ஆம்! நாம் பழிக்குப் பழி வாங்காமல் போகக் கூடாது. அவள் ஆணவத்தை அழிக்க வேண்டும். (கோமளவல்லியின் அந்தப்புரம். அவள் படுத்திருக்கின்றாள். தோழிகள் விசிறுகின்றனர். சுந்தரபாலன் வருகின்றான். கோமளவல்லி எழுந்து உட்காருகிறாள். தோழிகள் ஒரு புறத்தில் நிற்கின்றனர்.) கோமளவல்லி: நாதா! வாருங்கள்! நமகாரம்! (எழுந்து அவன் கையைப் பிடித்து தன் படுக்கையில் உட்கார வைக்கிறாள்.) சுந்தரபாலன்: (அவள் முதுகைத் தடவிக் கொண்டு) நாயகி! என்ன உடம்புக்கு! ஏன் சோர்வடைந்திருக்கிறாய்! கோமளவல்லி: ஒன்றுமில்லை. கோடையின் கொடுமை தாங்க முடியவில்லை. உடம்பெல்லாம் கொப்புளங்கள்! சுந்தரபாலன்: (அவள் கையைப் பிடித்துப் பார்த்து, சிறிது யோசித்து, தலையை அசைத்துக் கொண்டு) ஆம்! கடும் கோடை! வெப்பம் அதிகம். எனக்குக் கூட தொல்லை யாகத் தான் இருக்கிறது. எங்காவது குளிர்ச்சியான இடத்திற்குப் போனால் நலம். (அவள் முகத்தைப் பார்த்து) நாம் நீலகிரிக்குப் போகலாமே! அங்கே போய்விட்டால் இந்தக் கோடைக் கொடுமை நம்மை ஒன்றும் செய்யாது. சரிதானா? கோமளவல்லி: நாதா! தங்கள் எண்ணம் போல் செய்வதில் எனக்குப் பூரண சம்மதம். என்றேனும் - நான் - தங்கள் சொல்லைத் - தடுத்துக் கூறியதுண்டா? நீங்கள் செல்லும் வழியில் தானே உங்கள் நிழலும் ஓடி வரும். உங்கள் நிழல் தானே நான். சுந்தரபாலன்: சரி! நாளைக்கே நீலமலைக்குப் புறப்படுவோம்! நான் இன்று மன்னரிடம் விடை பெற்றுக் கொள்ளு கின்றேன். புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து முடிக்கின்றேன். நீயும் மன்னரிடமும் மகாராணியிடமும் சொல்லிக் கொண்டு புறப்படுவதற்குத் தயாராயிரு. உனக்கு வேண்டிய தோழிகளையும் அழைத்து வா! கோமளவல்லி: தங்கள் விருப்பப்படியே செய்கிறேன். சுந்தரபாலன்: ஒரு அவசர காரியமாகப் போய் வர வேண்டும். விரைவில் வந்து விடுகிறேன். (தோழிகளை நோக்கி) தோழி களே! இளவரசியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (போகிறான். எல்லோரும் வணங்கி வழி விடுகின்றனர்.) (திரை விழுதல்) காட்சி 16 காலம் : மாலை இடம் : நீலகிரியில் ஒரு உயர்ந்த சிகரம் நடிகர்கள்: கோமளவல்லி, சுந்தரபாலன், தோழிகள், காவலர்கள். (சிகரத்தின் உச்சியில் கோமளவல்லியும், சுந்தரபாலனும் உட்கார்ந் திருக் கின்றனர்.) சுந்தரபாலன்: அதோ பார்! அந்த அருவியை! நீ தான் ஒரு கவி ஆயிற்றே! அந்த அருவி எப்படி இருக்கிறது! சொல் பார்க்கலாம். கோமளவல்லி: அந்த அருவி நீரில் சூரிய வெளிச்சம் படுவதைப் பாருங்கள்! சூரிய வெளிச்சத்தால் அந்த அருவி நீர் பல நிறங்களோடு காட்சி தருகிறது. அந்தக் காட்சி இந்தக் குன்றம் கதம்ப மலர் மாலை அணிந்திருப்பது போல் இருக்கிறது. சுந்தரபாலன்: பொருத்தமான கற்பனை! (மரங்களைக் காட்டி) இந்த உயர்ந்த மரங்களில் உள்ள பறவைகள் ஏன் இப்படி உரத்து உரத்துக் கூவுகின்றன! கோமளவல்லி: அவைகளா! சேனாதிபதியின் வரவைக் கண்டு சிந்தைக் களித்துக் கூவிக் குதூகலத்துடன் வரவேற்கின்றன! சுந்தரபாலன்: இந்த மரக் கிளைகள் ஏன் இப்படி அசைகின்றன! கோமளவல்லி: இவைகளா! இந்த மரங்கள் சூரியனைப் பார்த்து, ஏ! கதிரவனே! உன்னுடைய கடுஞ்சினத்தை இந்தக் காதலர் களிடம் காட்டாதே - போ - என்று கைகளை ஆட்டிக் கூறுகின்றன. சுந்தரபாலன்: நல்ல கற்பனை! இதோ குண்டு குண்டாக கிடக்கும் கற்பாறைகளைப் பார்! கோமளவல்லி: ஆம் அவைகள் காட்டானைகளும், காட்டெரு மைகளும் படுத்துக் கிடப்பதைப் போல் இருக்கின்றன. சுந்தரபாலன்: ஆ! ஆ! இந்தக் கற்பனை மிகவும் நன்றா யிருக்கிறது! கோமளவல்லி: (சுற்றிலும் பார்த்து) என் உள்ளங் கவர்ந்த கள்வரே! (திடுக்கிட்டு) என் உள்ளங் கவர்ந்த உத்தமரே! இது மிக நல்ல இடம். இந்த மலையில் உள்ள எல்லா காட்சிகளும் நன்றாகத் தெரிகின்றன. இத்தனை நாளாக-ஏன்-என்னை-இந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு வரவில்லை. இந்த இடத்தை மறந்து விட்டீர்களோ! சுந்தரபாலன்: பெண்ணே, ஏன் அழைத்து வரவில்லை என்பதை நீயே தெரிந்து கொள்ளலாம்! கொஞ்சம் கீழே குனிந்து பார்! கோமளவல்லி: (ஒரு ஓரத்தில் வந்து கீழே குனிந்து பார்த்து) ஓகோகோ! இது ஆபத்தான இடம்! கொஞ்சம் தவறினால் மரணந்தான்! இப்பொழுது தெரிந்து கொண்டேன், நாதா! இந்த இடத்தைக் கண்டு-சூரியன் கூட-பயந்து மேற்கே மறைந்து விட்டான். நாமும் போவோம்! இனி இங்கே இருக்க வேண்டாம். சுந்தரபாலன்: (கோபத்துடன்) பெண்ணே! இன்றோடு உன் ஆயுள் முடிந்தது! உன்னுடைய உள்ளத்தை நான் உணர மாட்டேன் என்றா நினைத்துக் கொண்டாய்! அன்று-அந்தச் சோலையில்-மாலைப் போதில்-மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்த போது-உன் வாய் மொழியே உன் வஞ்சத்தை வெளிப்படுத்தி விட்டது. நீ மகா நயவஞ்சகி! கல்வி கற்றவள் என்ற கர்வம் படைத்தவள்! அரசகுமாரி என்ற அகங்காரம் வேறு! இதனால் தான்-அன்று-என்னைத் திருடன்-கொலைக்காரன்-என்று கூசாமல் கூறிவிட்டாய்! கோமளவல்லி: (திகைத்து) நாதா! என்ன-இது கூட ஒரு விளையாட்டா! இந்த மாதிரி நீங்கள் எப்பொழுதும் விளையாடியதில்லையே! என்னைச் சோதிக்க இம்மாதிரி பேசுகிறீர்களா! எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! சுந்தரபாலன்: (கோபத்துடன்) விளங்கவில்லையா? இப்பொழுது விளங்கப் போகிறது பார்! அடிவஞ்சகி! இனி நீ தப்பிப் போக முடியாது! நீ காவியங்கள் பல கற்ற காரிகை. உன்னோடு வாதமிட என்னால் முடியாது. அன்று உன் பார்வையால் மயங்கினேன். பிறகு உன் பேச்சில் மயங்கிக் கிடந்தேன். இனி என்னை எவ்வகையாலும் மயக்க முடியாது. இதுதான் நான் கடைசியாகக் கூறுவது; உன்னை இந்தப் படு பாதாளத்தில் தள்ளிக் கொல்லப் போகின்றேன். உன் வழிபடு தெய்வத்தை வணங்கிக் கொள்! உம்! சீக்கிரம்! கோமளவல்லி: (சிறிது யோசித்து, முக மலர்ச்சியுடன்) நாதா! நீங்கள் என்னை எது செய்தாலும் சரி! அது என் பாக்கியம். கற்புடைய பெண்ணுக்கு கணவனே தெய்வம்! என் உள்ளத்தில் குடி கொண்ட ஒரே தெய்வம் நீங்கள் தான். எனக்குத் தங்களைத் தவிர வழிபடு தெய்வம் வேறில்லை. உங்களை வணங்க உத்தரவு கொடுங்கள்! சுந்தரபாலன்: (கர்வத்தோடு தலை நிமிர்ந்து நின்று) நீ சொல்வது வெறும் வேஷம்! ஏமாற்றும் ஏளனச் சொல்! வஞ்சக வார்த்தை! ஆனாலும் வணங்கிக் கொள்! (கோமளவல்லி! கும்பிட்டுக் கொண்டு மவுனமாக அவனைச் சுற்றிச்சுற்றி வருகிறாள். மூன்றாம் சுற்றில் அவன் எதிரில் நின்று நமகரிப்பது போல் பாவனை செய்து அவன் காலை வாரி விடுகின்றாள். அவன் ஓவென்று அலறிக் கொண்டு பாதாளத்தில் விழுகின்றான்) கோமளவல்லி: (அவன் விழுவதைப் பார்த்துத் திகைத்து நின்று) ஐயோ! என்ன காரியம் செய்தேன்! அவர் உண்மையாகத் தான் கூறினாரோ! அல்லது என் உள்ளத்தைத் சோதிக்கத் தான் உரைத்தாரோ! இதற்குள் அவசரப்பட்டு அவரைக் கொன்று விட்டேனே! நான் மகா பாதகி! கொலைகாரி! என்னைப் போன்ற பெண் எவளும் இருக்க மாட்டாள். இனி யாரேனும் என்னை அரசகுமாரி என்று அழைப் பார்களா? கோமளவல்லி என்றுதான் கூப்பிடுவார்களா? மாட்டார்கள், கொலைகாரி என்று தான் கூப்பிடுவார்கள். இதோ நானும் இங்கேயே விழுந்து இறக்கின்றேன். (சிறிது நகர்ந்து நின்று சுற்றிலும் பார்க்கிறாள். தோழிகள் காவலர்கள் எல்லோரும் மலையுச்சிக்கு வருகின்றனர். ஒரு தோழி ஓடி வந்து கோமளவல்லியின் கையைப் பிடித்துக் கொண்டு சொல்லுகிறாள்.) ஒரு தோழி: அம்மா! ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள் தங்கள் கணவர் எங்கே! அவருக்கு என்ன ஆபத்து! (கோமளவல்லி ஒன்றும் பேசவில்லை. கண்ணீர் சிந்துகின்றாள். தோழி அவள் கையைப் பிடித்துக் கீழே அழைத்து வருகிறாள். மற்ற தோழிகளும் காவலர்களும் சந்திக்கின்றனர்.) கோமளவல்லி: அன்புக்குரிய தோழிகளே! என் வாழ்க்கை அவ்வளவும் பாழாகி விட்டது. அன்று உங்கள் சொற் களை அலட்சியம் செய்தேன். பெற்றோர்கள் சொற்களையும் சற்றும் போற்றாமல் புறக்கணித்தேன். எனக்கு இந்தத் தண்டனை ஏற்றது தான். இரண்டாவது தோழி: (திகைத்து) அம்மா! உங்கள் சொற்கள் ஒன்றும் விளங்கவில்லை. ஏன் இந்த துக்கம். சேனாதிபதி எங்கே! காட்டில் எங்கேனும் வழி தவறிப் போய் மறைந்து விட்டாரா? இதோ நாங்கள் தேடி அழைத்து வருகிறோம்! கோமளவல்லி: தோழி, இல்லை! அவர் மறையவில்லை. இந்த மகா பாதகியால் அவர் மாண்டு போனார். என்னைப் போன்ற அபாக்கியவதி இந்த உலகில் இதுவரையில் ஒருத்தியும் இருக்கவே மாட்டாள். ஒரு நாள் நான் காதல் மயக்கத்தால் விளையாட்டாகக் கூறிய சொல்லை விநயமாக எடுத்துக் கொண்டான் அவன். (கோபத்துடன்) அன்று முதல் அவன் என்னைப் பழி தீர்க்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தான். என்னை இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்து பாதாளத்தில் தள்ளிக் கொன்று விட முயன்றான். அப்பொழுது என் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி பிறந்தது. நான் இருந்தாலும் இறந்தாலும் ஒன்று தான். ஆனால் இந்தத் திருடன் கொலைகாரன் உயிரோடி ருந்தால் பலருடைய உடமைகளுக்கு ஆபத்து. உயிர் களுக்கும் ஆபத்து இதுவே அப்பொழுது என் நெஞ்சத்தில் எழுந்த உணர்ச்சி. ஆதலால் அவனை நானே பாதாளத்தில் வீழ்த்தினேன்! இனி நான் உயிரோடிருந்து என்ன பயன் நான் ஒரு நடைப் பிணம்! ஒரு காவலன்: (முன் வந்து) அம்மா வருந்தாதீர்கள். தங்கள் செய்கை தவறான தன்று. வீரச் செயல். நாட்டினர் புகழக் கூடிய நல்ல காரியம்! அந்தக் கொலைகாரனை உயிரோடு விட்டிருந்தால் இத்தனை நாழி எங்கள் கதி அதோகதிதான்! தங்கள் துணிகரமான செய்கையை உலகம் ஒரு நாளும் பழிக்காது. உங்களை எல்லோரும் வீரப் பெண்மணி என்று போற்றுவார்கள். வருந்தாமல் எங்களுடன் வாருங்கள்! நமது விடுதிக்கு போகலாம். ஒரு தோழி: ஆம் அம்மா! இக்காவலர் சொல்வது சரி தான்! நீங்கள் ஒரு வஞ்சகன் உயிரைத்தான் வாங்கினீர்கள்! இது வருந்தத்தக்க செய்கை அல்ல! ஆனந்திக்க வேண்டிய அரிய செயல்! கோமளவல்லி: (சிறிது யோசித்து) ஆம்! உண்மைதான். மற்ற பெண்களுக்கு என் கதை ஒரு படிப்பினையாக இருக் கட்டும்! ஆண்களின் வீண் ஆடம்பரத்திலும் அழகிலும்-பேச்சிலும்-மயங்கி விடாமல்-உண்மையான நன்னடத்தை உடையவர்களையே-பெண்கள்-மணம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு என் செய்கை-வழி காட்டுவதாக இருக்கட்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். உண்மை! அந்தத் திருடனுடைய நீண்டநாள் பழக்கத்தை என்னால் மாற்ற முடியவில்லை. எண்ணறக் கற்று-எழுத்தறப் படித்தாலும் பெண் புத்தி பின் புத்தி! இதற்கு நானே உதாரணம்! பேதமை என்பது மாதர்க்கு அணிகலம் என்பதை உண்மையாக்கி விட்டேன்! இரண்டாவது தோழி: அம்மா! என்ன செய்வது! நடந்தது நடந்து விட்டது! இனி எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திப்போம்! நம் விடுதிக்குப் போவோம்! (தோழிகள் கையைப் பிடித்து அழைத்துச் செல்கின்றனர்). (திரை விழுதல்) காட்சி 17 காலம் : பகல் இடம் : தஞ்சை அரச சபை. நடிகர்கள் : குலோத்துங்கன், கோப்பெருந்தேவி கோமளவல்லி, ராஜகுரு, முதல் மந்திரி, இரண்டாவது மந்திரி, ஒரு பெரியவர், தோழிகள், காவலர்கள், பொது மக்கள். அரசன்: சபையோர்களே! என் உள்ளத்தில் ஊக்கம் இல்லை! வயதும் ஆகிவிட்டது. இனி என்னால் இந்த அரச சுமையைத் தாங்க முடியாது, என் ஆருயிர்ப் புதல்வி-எனக்குப் பின் அரசுரிமையை ஏற்று இந்த நாட்டுக்கு நலம் புரிவாள்-என்று மனக்கோட்டை கட்டியிருந்தேன். என் மனக்கோட்டை இடிந்து மண்ணோடு மண்ணாயிற்று. அவளும் கள்வனுடைய - கடுஞ் செயலால்-வாழ்க்கையின் இன்பத்தை இழந்து - வாடி வதங்குகிறாள். நாட்டினரின் பழிப்புக்கும் - நகைப்புக்கும் பாத்திரமானாள். இனி நான் என்ன செய்வது! நீங்கள் தான் ஆலோசனை கூற வேண்டும். ஒரு கிழவர்: (முன் வந்து) அன்றே நான் நினைத்தேன்! அந்தக் கள்வனுக்கு-நமது இளவரசியைக் கல்யாணம் செய்து கொடுக்க - நமது மன்னர் இசைந்த போது-அதை மறுத்து ரைக்க - இந்த மகாசபையில் ஒருவரும் முன் வரவில்லை! நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்-அது வாலைக் குழைத்துக் கொண்டு எதையோ சாப்பிடத்தான் போகும். பல நாட்கள் - பாதகத் தொழில் செய்து பழகி யவன் - ஒரு நாளில் அதை விட்டொழித்துப் பரம சாதுவாக மாறிவிட மாட்டான். அன்று அரசர் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். நான் அப்பொழுதே நினைத்தேன். அரசர் செய்யப் போகும் காரியம் - விபரீதமானது என்று. ஆனால் - அரச குரு - மந்திரிமார்கள் - எல்லோரும் மன்னர் மொழிக்கு - மறுமொழி கூறாமல் - ஆமோதித்த பிறகு-இந்த ஏழைப் பேச்சு அம்பலம் ஏறாது என்று சும்மா இருந்து விட்டேன். அதன் பலனை இன்று நாம் அனுபவிக் கின்றோம். அரசகுரு: பெரியவரே! நீங்கள் சொல்வது சரிதான்! ஏதோ நடந்தது நடந்து விட்டது; போனதைப் பற்றிப் புலம்புவதில் என்ன பயன்? இனி ஆக வேண்டியதைப் பற்றி ஆலோசிப் போம் (அரசனை நோக்கி) அரசே; வருந்த வேண்டாம்! இளவரசி ஒன்றும் தவறு செய்து விடவில்லை. அன்று அவள் செய்த தவறுக்கு-அவளே-பரிகாரம் தேடி விட்டாள். கணவனை அவள் கொன்றது நகைப்புக்கு இடமல்ல; பழிப்புக்கும் இடமல்ல; புகழ்ச்சிக்கே இட மாகும். முன்னறிவோடும் வீரத்தோடும்; நடந்து கொண்ட அவள் செயலை - இந்த உலகம் என்றும் பாராட்டும். ஆதலால்-அவளே அரசியாக இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றலாம். இதற்கு எவரும் இணங்காமல் இருக்க மாட்டார்கள். முதல் மந்திரி: அரசே! குருதேவரின் கருத்தே இந்தக் கூட்டத் தாரின் கருத்தும், இளவரசியின் ஆட்சியை எல்லோரும் வரவேற்பார்கள். நமது இளவரசியார் இந்த நாட்டின் நிலையறிந்து - நீதி முறை செய்வதில் - நிபுணத்துவம் படைத்தவர். அவர் - ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் - இந்த நாட்டிலே - சாதிச் சண்டைகள் - மதச் சண்டைகள் - தலை காட்டாமல் சாய்ந்து விடும். நாட்டு மக்கள் அனைவரும்-சம உரிமை பெற்று - வாழும் முறைகளை - வகுப்பதில் நிகரற்றவர். அவருடைய அறிவால்-திறமையால் - மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இன்பம் அடைவார்கள். ஆதலால் இளவரசி யாரையே அரசியாகக் கொள்ளுகிறோம். எல்லோரும்: எங்களுக்கெல்லாம் சம்மதம்! சம்மதம்! அரசன்: சரி! உங்கள் கருத்து இதுவானால் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இளவரசியின் கருத்து எப்படியோ! (இளவரசியைப் பார்த்து) கோமளவல்லி சபையோர் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டாய். இவர்களுடைய எண்ணத்தின்படி நீ - இந்த அரசாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். ஓட்டுவோன் இல்லாமல் - வண்டி-நேர்வழியில் ஓடாது. அரசின்றி-நாடு நலம் பெறாது. இது உனக்குத் தெரியாததல்ல. கோமளவல்லி: (எழுந்து அரசரை வணங்கி) தந்தையே! தயவு செய்து-எனது வேண்டுகோளுக்கும் சிறிது செவி சாய்க்க வேண்டும்: சபையோர்களே! நீங்களும் சிறிது செவிசாய்த்து கேட்க வேண்டும். நான் எவ்வளவு படித்திருந்தும் பேதை யானேன்! இந்த நாடெல்லாம் பழித்த - ஒரு கள்வனை - கொலைகாரனை - கணவனாகக் கொண்டேன். கடும்பழிக்கு ஆளானேன்! .!காதல்! காதல்! என்ற மயக்கத்தால் மதியிழந்தேன்! காதல் தெய்வத் தன்மையாம்! காதலிலே தெய்வத் தன்மையிருக்குமானால்-காதலருள் கணவன் இறந்தால் மனைவியும் இறக்க வேண்டும். மனைவி இறந்தால் - கணவனும் இறக்க வேண்டும். இம்மாதிரி நடப்பதில்லை. காதல் என்றால் அன்பு என்றே பொருள். சுயநலத்தால் உண்டாகிற-ஆசையைக் கூட-அன்பு-காதல்-என்று சொல்லி அதற்குத் தெய்வீக மெருகு கொடுக் கின்றனர். இது புலவர் புரட்டு! வெறும் கற்பனை! கட்டுக் கதை (தந்தையை நோககி) தந்தையே! அப்பொழுதே தாங்களும்-அன்னையும்-எனக்கு எவ்வளவோ அறிவுரை கூறினீர்கள்! காதல்! காதல்! என்று சொல்லி-உங்கள் மொழிகளை-உதறித் தள்ளினேன். இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றேன். நான் துக்கத்தில் வாழவே பிறந்தேன்! எனக்கு அரசு புரியும் ஆற்றல் இல்லை! அறிவும் மங்கி விட்டது. ஆதலால் என்னை மன்னிக்க வேண்டும். முதல் மந்திரி: இளவரசியாரே! நீங்கள் மனச் சோர்வால் அரசை ஏற்றுக் கொள்ள தயங்குகிறீர்கள்! அரச காரியங் களில் அறிவைச் செலுத்துவீர்களானால்-தங்கள் மனத் திற்கும் ஆறுதல் ஏற்படும். இந்த நாட்டிற்கும் நன்மையுண்டாகும். தயவுசெய்து எங்கள் வேண்டுகோளை மறுக்க வேண்டாம். கோமளவல்லி: சபையோர்களே! என்னைக் கொல்ல முடிவு செய்த அந்தப் பாதகனை நான் பாதாளத்தில் தள்ளிக் கொன்றேன். என் செயல் இந்த நாட்டுக்கு நன்மையானது தான் - அவன் - உயிரோடு இருந்தால்-மீண்டும் கொள்ளைக் காரர்களுக்குத் தலைவனாகி - இந்த நாட்டை நாசம் செய்வான். ஆனாலும்-மக்கள் என்னைப் பற்றிப் பேசும் போது -திருடனைக் கொன்ற வீராங்கனை-என்று புகழ மாட்டார்கள். நாயகனைக் கொன்ற நாசகாரி-என்றுதான் பழிப்பார்கள். உலை வாய்க்கு மூடி உண்டு. ஊர் வாய்க்கு மூடியில்லை. நான் அணைந்த விளக்கு-மறைந்த வெளிச்சம் - உதிர்ந்த மலர். இனி என்னால் யாருக்கு நன்மை! அன்பு கூர்ந்து - என்மேல் - அரசியல் பாரத்தைச் சுமத்தா தீர்கள்! இரண்டாவது மந்திரி: இளவரசியாரே! நீங்கள் இப்படிப் பிடிவாதம் பிடித்தால் நாங்கள் என்னதான் செய்வோம்; இந்த நாட்டின் அரசியலை எப்படி நடத்துவது; நீங்களே இதற்கொரு வழி சொல்லுங்கள்! கோமளவல்லி: தந்தையே, சபையோர்களே! நான் ஒரு ஆலோசனை கூறுகின்றேன். அது உங்களுக்குப் பிடித்த மாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இன்றோல்-விட்டு விடலாம். இந்த உலகில் இப்பொழுது முடியரசுகள் எல்லாம் - திடீர் - திடீர் என்று தலை சாய்ந்து வருவது உங்களுக்குத் தெரியும். இனி உலகில் சர்வாதிகார முடியரசுகளுக்கு வேலையேயில்லை. ஏகாதிபத்தியம் ஓங்கி நிற்கும். ஒவ்வொரு நாட்டிலும்-பொதுமக்கள்-குடி அரசுக் காகப் போராடி வருகிறார்கள். சர்வாதிகார மற்ற - ஜன நாயக-சமதர்மக்குடி அரசைத்தான் இக்கால மக்கள் விரும்புகின்றனர். ஆதலால்-இந்த நாட்டைக்-குடி அரசு நாடாக்கி விடலாம். பொது மக்களே- தங்களுக்கு விருப்ப மானவர்களை - குடிகள் சபை அங்கத்தினர்களாகத் தேர்ந் தெடுத்துக் கொண்டு அவர்கள் மூலம் இந்த நாட்டை ஆளலாம். இதுவே என்னுடைய கருத்து. அரசன்: (எழுந்து) சபையோர்களே! கோமளவல்லியின் கருத்தை நான் ஒத்துக் கொள்ளுகிறேன். அரச குலத்தில் பிறந்தவர்கள் தான் ஆளவேண்டுமென்பது செல்லரித்துப் போன நீதி. இந்நாளிலும் அவ்வாறு கூறுவது அறிவீனம். பழைய பிதற்றல். ஆண்டான்-அடிமை என்பது இனி வேண்டாம், எல்லா மக்களுக்கும் நாட்டின் நன்மை தீமைகளில் பங்கு இருக்க வேண்டும். மக்கள் ஆட்சி தான் இதை அளிக்க முடியும்; நான் இது வரையிலும் அரசனாக இருந்தாலும்-குடி தழீஇக்கோல் ஓச்சும் மாநில மன்னன்-அடிதழீஇ நிற்கும் உலகு - என்ற தமிழர் அரசியல் முறையைப் பின்பற்றியே நடந்து வந்திருக்கிறேன். நான் குடிமக்கள் கருத்திற்கு மாறாக எச் செயலும் செய்ததில்லை. உங்களு டைய அறிவும்-உழைப்புமே - இந்த அரசை நடத்தி வந்தன. நான் ஒரு அலங்காரப் பதுமையாகவே இருந்து - ஆசனத்தில் அமர்ந்து வந்தேன். இன்று முதல் - இந்த வீண் பெருமை எனக்கு வேண்டாம். இனி நானும் உங்களில் ஒருவன், நீங்களே இந்த அரசியலை ஏற்றுக் கொள்ளுங்கள். (கிரீடத்தைச் சிம்மாசனத்தில் எடுத்து வைத்து விட்டுக் கீழே இறங்கி வந்து மற்றவர்களுடன் உட்காருகிறான்.) கோமளவல்லி: (எழுந்து) நானும் உங்களிலே ஒருத்தி! இந்த நாட்டில் - வயது வந்த - ஆண் பெண் - அனைவருக்கும் வாக்குரிமை அளிப்போம்! அவர்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அங்கத்தினர்களைக் கொண்ட-மக்கள் சபையை அமைப்போம். அந்த சபையினர்-அறிவும் ஆற்றலும்-நன்னடத்தையும் - உள்ளவர்களை நிர்வாகத் தலைவர் களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். அந்தச் சபையின் மூலம் நாட்டை வளம்படுத்தக்கூடிய சட்ட திட்டங்களை அமைப்போம். இந்நாட்டில்-இனி-ஏழை என்றும்-அடிமை யென்றும்-எவரும் இல்லை இழிவு கொண்ட மனிதர் என்பவர்கள் யாருமே இல்லை. எல்லோர்க்கும் கல்வி யுண்டு; எல்லோர்க்கும் செல்வம் உண்டு; எல்லோர்க்கும் இன்பம் உண்டு; என்று விளம்பரம் செய்வோம். இன்று முதல் நான் நமது இன்பத் தமிழ் வளர உழைப்பேன். செந்தமிழ்க் கலைகளைச்-சிறப்புற வளர்ப்பேன்! தமிழரின் உயர்வுக்குப் பாடுபடுவேன்! தமிழ் நாட்டை - தமிழ் மக்களை - கல்வியிலும் - கைத் தொழிலும்-செல்வத்திலும்-செழிக்கச் செய்து - உலகத்தாருடன் ஒன்று படுத்துவேன்! இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்! முதல் மந்திரி: சபையோர்களே! கோமளவல்லியார் கூறியபடியே இனி நடந்து கொள்ளுவோம்! எல்லோரும் ஒன்றுபட்டு உயர்வடைவோம்! ஒற்றுமையே நமது உயிர்! ஒற்றுமையே நமது செல்வம்! ஒன்றுபட்டால்உண்டுவாழ்வே - நம்முள் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே! நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தால்பின் நமக்கு எது வேண்டும் இதை மறவாதீர்கள்! எல்லோரும்: வாழ்க குடியரசு! வாழ்க ஜனநாயகம்! வாழ்க பாட்டாளி மக்கள்! வாழ்க தமிழ் நாடு! வாழ்க தமிழ்! வாழ்க சுதந்திரம்!  சாமி.சிதம்பரனார் படைப்புகள் தொகுதி - 1 1. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற்பாகம் 1929 2. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் 1929 3. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் 1931 4. தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் 1938 தொகுதி - 2 1. தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1939 தொகுதி - 3 1. அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) 1944 2. அணைந்த விளக்கு (அரசியல் சமூக சீர்திருத்த நாடகம்) 1948 தொகுதி - 4 1. திருக்குறள் பொருள் விளக்கம் 1959 தொகுதி - 5 1. நாலடியார் பாட்டும் உரையும் 1959 2. நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) 1960 தொகுதி - 6 1. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் 1956 2. எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் 1957 தொகுதி - 7 1. கம்பன் கண்ட தமிழகம் 1955 2. பதிணென்கீழ்க் கணக்கும் தமிழர் வாழ்வும் 1957 தொகுதி - 8 1. சிலப்பதிகாரத் தமிழகம் 1958 2. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு 1960 தொகுதி - 9 1. இலக்கியச் சோலை (புறநானூறு) 1958 2. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1967 தொகுதி - 10 1. வள்ளுவர் காட்டிய வைதீகம் 1949 2. வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் 1956 தொகுதி - 11 1. பெண்மக்கள் பெருமை (அ) மாதர் சுதந்திரம் 1929 2. காரல் ஹென்றி மார்க் 1937 3. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் 1940 4. முன்சீப் வேதநாயகம் பிள்ளை 1955 தொகுதி - 12 1. சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல்கள் 1929 2. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு 1935 3. உமர்கய்யாம் 1946 4. சிந்தனைச் செய்யுள் 1956 5. சாமி சிதம்பரனார் புதுக்குறள் 1960 6. அறிவு (கவிதை) 1964 தொகுதி - 13 1. தேவாரத் திருமொழிகள் 1959 2. ஆழ்வார்கள் அருள்மொழி 1959 தொகுதி - 14 1. வடலூரார் வாய்மொழி 1959 2. சங்கப் புலவர் சன்மார்க்கம் 1960 3. பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை 1963 தொகுதி - 15 1. அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் 1960 2. மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் 1961 தொகுதி - 16 1. புதிய தமிழகம் 1952 2. வளரும் தமிழ் 1954 3. தொல்காப்பியத் தமிழர் 1956 தொகுதி - 17 1. பழந்தமிழர் அரசியல் 1959 2. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் 1960 3. தமிழர் வீரம் 1964 தொகுதி - 18 1. சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் 1960 2. இலக்கியம் என்றால் என்ன? 1, 2 1963 3. சிறுகதைச் சோலை (தொகுப்பு) 1964 தொகுதி - 19 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 20 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 21 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955 தொகுதி - 22 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955