தொல்காப்பிய உரைத்தொகை - 18 சொல்லதிகாரம் பேராசிரியம் - 2 பின்னான்கியல் சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1943 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 18 பொருளதிகாரம் - பேராசிரியம் - 2 பின்னான்கியல் முதற்பதிப்பு - 1943 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்)பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+552 = 576 விலை : 900/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 576  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம். அகநானூறு உயிர். உயிர்மயங்கியல் உரு. உருபியல் எச்ச. எச்சவியல் எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலித். கலித்தொகை கிளவி. கிளவியாக்கம் குற். குற்றியலுகரப் புணரியல் குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப்படலம் சிலப். சிலப்பதிகாரம் செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் தொல். தொல்காப்பியம் நாலடி. நாலடியார் நூன். நூன்மரபு பட்டினப். பட்டினப் பாலை பிற். பிற்சேர்க்கை புள்ளி. புள்ளிமயங்கியல் புணர். புணரியல் புறம். புறநானூறு பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மர. மரபியல் மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. (திரு)முருகாற்றுப்படை யா.வி. யாப்பருங்கல விருத்தி உள்ளடக்கம் செய்யுளியல் ....... 3 பொருளதிகாரம் பேராசிரியம்-2 பின்னான்கியல் சி. கணேசையர் - 1943 முதற் பதிப்பு 1943இல் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. செய்யுளியல் மேலுணர்த்தப்பட்ட அகமும் புறமுமாகிய பொருண்மை யெல்லாவற்றிற்கும் இடமாய் விளங்கும் செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையின் இது செய்யுளியலென்னும் பெயர்த்தா யிற்று. எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் உலக வழக்கிற்குஞ் செய்யுள் வழக்கிற்கும் வேண்டும் விதிகளை விரவிக்கூறிப் பொருளதிகாரத்தில் இதுகாறும் பெரும்பாலும் உலக வழக்கிற்கு வேண்டிய விதிகளையே கூறிவந்த ஆசிரியர், அப்பொருள் பற்றிச் செய்யுள் இயலுமாறு கூறக்கருதி, இவ்வதிகாரத்துட் குறிக்கக் தகுந்த செய்யுளிலக்கணமெல்லாம் இவ்வியலில் தொகுத்துணர்த்துகின்றார். எனவே பொருள திகாரத்தின் முன்னுள்ள ஏழியல்களும் உலக வழக்குஞ் செய்யுள் வழக்குமாகிய அவ்விரண்டற்கும் பொது வென்பதும், செய்யுளியலாகிய இது, செய்யுட்கே யுரித்தென்பதும் பெறப்படும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 235-ஆக இளம்பூரணரும், 243-ஆகப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இனி, செய்யுளியலாகிய இதனை யாப்பதிகாரம் என வேறோர் அதிகாரமாக்கிக் கூறுவாருமுளர்.1 அங்ஙனங் கூறின் வழக்கதிகாரம் எனவும் வேறொன்று கூறுதல் வேண்டுமாத லானும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்றதிகார மாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது இயல்களாக ஆசிரியர் நூல்செய்த முறையோடு மாறுகொள்ளுமாதலானும் அது பொருந்தாதென மறுப்பர் பேராசிரியர். மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் எனவரும் யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறும். அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து இயைபு, புலன், இழைபு எனவரும் வனப்பு எட்டுமாக இங்குக் கூறப்பட்ட முப்பத்து நான்கும் நல்லிசைப் புலவர் கூறும் செய்யுளுக்கு உறுப்பாம் என இவ்வியல் முதற்சூத்திரம் கூறும். இதன் கண் மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு இன்றியமையாதனவாய் வரும் உறுப்புக்கள் எனவும், பிற்கூறப்பட்ட அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் தனிநிலைச் செய்யுள் பல தொடர்ந்தமைந்த தொடர்நிலைக்கே பெரும்பான்மையும் உறுப்பாயும் தனி நிலைக்கண் ஒரோவென்றாயும் வருவன எனவும் பேராசிரியர் நச்சினர்க்கினியர் உரைப் பகுதிகளால் நன்குணரலாம். செய்யுளுக்குரிய உறுப்புக்கள் எல்லாவற்றையுந் தொகுத்துக் கூறுவதாகிய இச்சூத்திரத்தில் தளையென்பது தனியுறுப்பாகக் குறிக்கப்படவில்லை. தளையாவது, நின்றசீரின் ஈற்றசையுடன் வருஞ்சீரின் முதலசை ஒன்றியும் ஒன்றாமலும் வர இருசீர்கள் தம்முள் தளைத்து (கட்டப்பட்டு) நிற்றல். சீரது தொழிலாகிய இத்தளையைச் செய்யுளுக்குரிய தனியுறுப்பாகச் கொள்ளாது, சீராலாகிய அடியின் அமைப்பாகவேகொண்டு இலக்கணங் கூறுவர் தொல்காப்பியர். இவ்வாறன்றிச் சிறுகாக்கை பாடினியார் முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். தளையென்பதனைத் தனியுறுப்பாகவே கொண்டனர். இருசீர் இணைந்தது குறளடியாம் என்பது தொல்காப்பியனார்க்கும் பிற்காலத்தில் வாழ்ந்த யாப்பிலக்கண நூலாசிரியர்க்கும் ஒப்ப முடிந்ததாகும். இனி, சீரிரண்டு தளைத்து நிற்றல் தளையென்னுந் தனி யுறுப்பா மெனக் கொள்ளின் இவ்விருசீர் இணைப்பைக் குறளடியென வேறோர் உறுப்பாகக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் தளை பல அடுத்து நடப்பதே அடியெனக் கொள்வார்க்கு அத்தளையால் அடி வகுப்பதன்றிச் சீரால் அடிவகுத்தல் குற்றமாய் முடியும் ஆதலால் சீரது தொழிலாகிய தளையென்பதனைத் தனி வேறு உறுப்பாகக் கொள்ளுதல் கூடாதென்பது பேராசிரியர் முதலியோர் துணிபாகும். இவ்வாசிரியர் (தொல்காப்பியனார்) தளையை உறுப்பாகக் கொள்ளாதது என்னையெனின், - தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஓசையைத் தட்டு (தளைத்து) இருசீர் இணைந்ததாகும். அவ்வாறு இணைந்த இருசீரினையும் ஆசிரியரெல்லாரும் இருசீர்க் குறளடி என அடியாகவே வகுத்துக் கொண்டாராதலின் தளையென வேறோர் உறுப்பின்றாம்; அன்றியும் தளையான் அடிவகுப்பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ள வேண்டுவது? அங்ஙனம் வகுத்துக் கொள்ளாமையின் உறுப்பென்னாது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பதொன்றென்றே கொண்டார். அதனை உறுப்பென்பார்க்குச் சீரான் அடிவகுத்தல் குற்றமாம் எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இதனை வலியுறுத்தல் காண்க. இனி, செய்யுளுக்குரிய முப்பத்துநான்கு உறுப்புக்களையும் பற்றி இவ்வியலிற் கூறப்படும் இலக்கணங்களைச் சுருக்கமாக உணர்ந்துகொள்ளுதல் நலமாகும். 1. மாத்திரை:- எழுத்திற்குச் சொல்லிய மாத்திரைகளைச் செய்யுள் பொருந்தியமைந்த அளவு. மாத்திரையினது அளவு மாத்திரை யெனப்பட்டது. எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய மாத்திரைகள் செய்யுளில் ஓசை நலம் சிதையாதபடி தத்தம் ஓசைகளைப் புலப் படுத்தி அளவுபெற நிற்றலே மாத்திரை யென்னும் உறுப்பாகும். மாத்திரை யளவாகிய இதனாலல்லது செய்யுட்களின் வேறுபாடு உணரலாகாமையின் ஏனை யுறுப்புக்களினும் இதனைச் சிறப்புறுப்பாக முற்கூறினார். 2. எழுத்தியல் வகை:- மேல் எழுத்ததிகாரத்துக் கூறிய எழுத்துக்களைச் செய்யுளுக்கமைய இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு அஃதாவது மேல் எழுத்ததிகாரத்தில் முப்பத்து மூன்றெழுத்துக்களையும் உயிர், குறில், நெடில், மெய், வலி, மெலி, இடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என இயல்பு வகையாற் பத்தும், உயிர்மெய், உயிரளபெடை எனக் கூட்டவகையால் இரண்டும், ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் எனப் போலி வகையால் இரண்டும், யாழ்நூலாகிய இசைநூல் முறையான் வரும் ஒற்றிசை நீளுதல் ஒன்றும் ஆகப் பதினைந்து பெயரவாய்ப் பகுத்துரைத்த வகையாம். இவற்றோடு மகரக் குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்தெனக் கொள்ளுதலும் உண்டு. மாத்திரை யளவும் எழுத்தியல் வகையும் ஆகிய இரண்டும் மேல் எழுத்ததிகாரத்திற் கூறிய இலக்கணத்திற் பிறழாமற் செய்யுளுக்கு உறுப்பாய் வரும் என்பர் ஆசிரியர். 3. அசை வகை:- முற்கூறிய எழுத்தாலாகிய அசைகளின் கூறுபாடு. அவை இயலசையும் உரியசையும் என இரு திறப்படும். இவற்றின் கூறுபாடுகளை இவ்வியலில் 3முதல் 10வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். குறிலும் நெடிலும் தனித்து வந்தாலும் ஒற்றடுத்து வந்தாலும் நேரசை யெனப்படும். குறிலிணையும் குறில் நெடிலும் தனியேவரினும் ஒற்றடுத்துவரினும் நிரையசை யெனப்படும். கோ, ழி, வேந், தன்-என நேரசை நான்கும், வெறி, சுறா, நிறம், குரால் என நிரையசை நான்கும் வந்தன. இரண்டெழுத் தானாகாது ஓரெழுத் தானாதலின் நேரிய அசை நேரசை யென்றாயிற்று. இரண்டெழுத்து நிரைதலின் இணையசை யென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று என நேர், நிரை என்பவற்றின் பெயர்க்காரணங் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வசைகளுக்கு உறுப்பாய் நின்ற குறிலும் நெடிலும், மாத்திரையாகிய ஓசையளவினால் தம்முள் ஒவ்வா வாயினும், எழுத்தாந் தன்மையில் ஒன்றெனவே கொண்டு எண்ணப்படும் தகுதி நோக்கி அவ்விரண்டும் ஒவ்வோரலகு பெறும் என விதிக்கப்பட்டன. மேற்கூறப்பட்ட நேர், நிரை என்னும் இரண்டசையும், குற்றியலுகரம் முற்றியலுகரம் என்பவற்றுள் ஒன்றை இறுதியிற் பெற்றுப் பிளவுபடாது ஒருசொற்றன்மை எய்திவரின், அவை முறையே நேர்பு, நிரைபு என்னும் இருவகை அசைகளாகும். தனிக் குற்றெழுத்தாகிய நேரசையின் பின் இங்ஙனம் இருவகை யுகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை. உதாரணம்: வண்டு, நாகு, பாம்பு, மின்னு, நாணு, தீர்வு என நேரசை மூன்றின் பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசையாயின. வரகு, குரங்கு, மலாடு, பனாட்டு, இரவு, புணர்வு, உலாவு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்று கரமும் நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து நிரை பசையாயின. நேரின்பின் உகரம் வருதலின் நேர்பு; நிரையின் பின் உகரம் வருதலின் நிரைபு என இவையிரண்டும் காரணப் பெயராயின. மேற்கூறிய நால்வகை அசைகளுள் நேர், நிரை என்னும் இரண்டும் இயலசை எனப் பெயர் பெறும். நேர்பு, நிரைபு என்னும் ஏனைய இரண்டும் உரியசை எனப் பெயர்பெறும் என்பர் ஆசிரியர். நேர் நிரை என்பன செயற்கை வகையால் இயற்றிச் சேர்க்கப்படாது இயற்கை வகையால் நின்றாங்குநிற்ப வரும் அசைகளாதலின் அவ்விரண்டும் இயலசையெனப் பட்டன. இயலசையாகிய இவை செய்யும் தொழில் செய்தற்கு உரிய வகையில் அமைந்தவை நேர்பும் நிரைபும் ஆதலின் அவ்விரண்டும் உரியசை எனப்பட்டன. குற்றியலுகரமும் அற்றெனமொழிப (புணரியல்-3) என்ற நூற்பாவில் ஒற்றுப்போன்று புள்ளி பெறுமெனப்பட்ட குற்றுகரம், தன்னால் ஊரப்பட்ட மெய்யும் தானும் அரை மாத்திரைத்தாய் நின்றதேனும் ஒற்றுப்போன்று ஒடுங்கியிசை யாது அகன்றிசைக்கும். அதனால் அதனை ஒற்றெனஅடக்கி அலகுபெறாதென விலக்குதற்கு இயலாது. இனி, குற்றியலுகரம் ஒரு மாத்திரையுடையதாய் அகன்றிசையாமையின் அதனை உயிரிற் குற்றெழுத்தெனக் கொண்டு அலகு கொள்ளுதற்கும் இடமில்லை. இந்நிலையில் இதனை வேறோர் அசையாக்குதலே செய்யத்தகுவது எனத் துணிந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர், இவ்வுகரத்தினைக் கருவியாகக் கொண்டு நேர்பு, நிரைபு என்னும் இருவகை உரியசைகளை வகுத்துரைத்தனர். வண்டு வண்டு வண்டு வண்டு என நின்ற வழிப் பிறந்த அகலலோசை, மின்னு மின்னு மின்னு மின்னு என நின்றவழியும் பெறப்படுதலானும். வெண்பாவின் ஈற்றடி வண்டு எனக் குற்றுகர வீறாக நின்றுழியும் கோலு என முற்றுகர வீறாக நின்றுழியும் ஒத்த ஓசையவாமாதலானும், குற்றுகரம் சார்ந்து தோன்றுமாறுபோல அம்முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதல் ஒப்புமை நோக்கியும் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும் வேண்டி அதனைக் குற்றுகரம்போல நேர்பு, நிரைபு என்னும் அசைக்கு உறுப்பாகக் கொண்டனர். இங்ஙனம் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர் எழுத்தாலாகிய அசைகளின் இயல்புணர்ந்து அவற்றை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நால்வகையாகப் பகுத்துரைத்தனராக, பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் நேர்பு, நிரைபு என்னும் அசைகளின் இறுதிக்கண் நின்ற குற்றுகர முற்றுகரங்களைத் தனியசையாகப் பிரித்து அவற்றை நேரசை யென அடக்கி, நேரும் நிரையும் என இருவகை அசைகளே கொண்டனர். அன்னோர் தாம் ஈரசைச் சீர்களாகக்கொண்ட நேர்பு, நிரைபு என்பவற்றுக்குத் தேமா, புளிமா என்னும் வாய்ப்பாட்டால் ஓசையூட்டின் செப்பலோசை குன்றுமென்றஞ்சி அவற்றுக்கு முறையே காசு, பிறப்பு எனக் குற்றுகரவீற்றால் உதாரணம் காட்டியும், சீரும் தளையும் சிதையவருமிடத்துக் குற்றியலுகரம் அலகுபெறாதென விதித்தும், வெண்பாவீற்றில் சிறுபான்மை முற்றுகரம் வரும் என உடன்பட்டும் இவ்வாறு பல்வேறு வரையறைகளைச் செய்துகொள்வர். அசைக்கு உறுப்பாம் நிலையில் குற்றியலிகரம் ஒற்றெழுத் தின் இயல்பிற்றாம் என்பர் தொல்காப்பியர். எனவே சார்பெழுத் தாகிய அது, ஒற்று நின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலும், ஒற்றுப்போல எழுத்தெண்ணப் படாமையும் ஆகிய இரு நிலைமையும் ஒருங்குடைத்தென்பது பேராசிரியர் கருத்தாகும். குற்றியலிகரம், குழலினி தியாழினி தென்ப (திருக்குறள்-66) என ஒற்றியல்பிற்றாய் நின்று அலகு பெறாமையும், ஏனை உயிரெழுத்தின் இயல்பிற்றாய், மற்றியா னென்னுளேன் கொல்லோ (திருக்குறள்-1206) என அலகு பெறுதலும் என இரு நிலைமையுமுடையதாய் இலக்கியங்களிற் பயிலக்கண்ட நச்சினார்க்கினியர், குற்றியலிகரம் ஒற்றியல்பிற்றாயும் ஒற்றல்லா உயிரெழுத்தின் இயல்பிற்றாயும் வரும் எனப் புதியதோர் விளக்கங் கூறினமை இவண் நினைக்கத் தகுவதாகும். முற்றியலுகரமும் மொழி சிதைந்து நேர்பசை நிரைபசை யென்று உரைக்கப்படாது; அஃது ஈற்றடி மருங்கின் தனியசையாகி நிற்றலும் இல்லை என்பது இவ்வியல் எட்டாம் சூத்திரத்திற் கூறப்பட்ட விதியாகும். அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென என்றவழி அரவு என்பது மொழி சிதையாமையின் நிரைபசை யாயிற்று எனவும், பெருமத் தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி-200) என்றவழிப் பெரு-முத்தரையர் என்ற தொடரைப் பெருமுத்-தரையர் எனப் பிரித்துச் சீராக்கின் மொழி சிதைதலின் நிரைபசை யாகாதாயிற்று எனவும் உதாரணங்காட்டி விளக்குவர் இளம்பூரணர். இருவகை யுகரமோடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபும் ஆம் என்றார் ஆசிரியர். அவற்றுள் முற்றுகரம் ஈறாகி நிற்குஞ்சொல் உலகத்து அரியவாயின ஆதலின் புணர்ச்சி வகையால் ஈற்றின்கண் தோன்றிய உகரமே ஈண்டு நேர்பும் நிரைபும் ஆவன எனவும், அப்புணர்ச்சிக்கண்ணும் நாணு என்றாங்கு வரும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும் விழவு என்றாங்கு வரும் நிலைமொழி யீறுகெட்டு நின்ற உகரமுமே கொள்ளப்படுவன எனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று நாணுத்தளையாக விழவுத் தலைக்கொண்ட என்றாங்கு நேர்பு நிரைபிற்கு உறுப்பாதல் போன்று நாண்+உடையரிவை என்றாங்கு வரும் வருமொழி முதலுகரம் இவ்வசைகட்கு உறுப்பாகாதெனவும், நீர்க்கு நிழற்கு என வரும் வேற்றுமை யுருபு நிலைமொழித் தொழிலாதலால் அவ்வுருபும் நேர்பசை நிரைபசைகட்கு உறுப்பாமென்பது இதனாற் பெறப்படுமெனவும், குற்றுகரமாயின் ஆட்டுத்தாள் சேற்றுக்கால் எய்போற் கிடந்தானென் னேறு வேலாண் முகத்த களிறு என இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபும் ஆம் எனவும் இச்சூத்திர வுரையிற் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு நினைவுகூரத் தக்கதாகும். மேற்கூறிய குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றோடு நிற்கவும் பெறும்; அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாதல் வேண்டும் என்பது விதி. எனவே நடக்கும் எனவும் உண்ணும் எனவும் நிலைமொழி ஒற்றுடையவாயின் தேமாவும் புளிமாவாகவும் ஆவதல்லது அவை நேர்பும் நிரைபும் ஆகா எனவும் சேற்றுக்கா னீலம் உரவுச்சின வேந்தன் என்றாங்கு வருமொழி வல்லெழுத்து மிகின் நேர்பும் நிரைபும் ஆம் எனவும், உம்மை எதிர்மறை யாதலால் இவ்வசைகள் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை எனவும் கருதுவர் பேராசிரியர். அசையையும் சீரையும் ஓசையொடு சேர்த்திப் பாகுபடுத்து உணர்த்துதல் செய்யுளிலக்கணத் துறையில் வல்லவர்களது நெறியாகும் என்பர் ஆசிரியர். எனவே பொருளுக்கேற்பச் சொற்களைப் பிரித்தவழித் தளையும் சீரும் சிதையுமானால் அவ்விடத்து ஓசையை நோக்கி அதன்படி சேர்த்தல் வேண்டு மென்பது கருத்தாயிற்று. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் என்றவழி வாழ்வார் என்பதனைப் பொருள் நோக்கி ஒரு சீராக்கின் ஓசைகெடும். அதன்கண் வாழ் என்பதனைப் பிரித்து முதல் நின்ற சீருடன் இணைத்தவழி ஓசை கெடாதாம். இங்ஙனம் பொருள் நோக்காது ஓசையே நோக்கிச் சீர்வகுக்கும் முறையினைப் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் வகையுளி என வழங்குவர். 4. சீர்:- இரண்டசை கொண்டு புணர்த்தும் மூன்றசை கொண்டு புணர்த்தும் ஓசை பொருந்தித் தாளவறுதிப்பட நிற்பது சீரெனப்படும். சீரியைந் திறுதல் என்பது, வழக்கியல் செய்யுளாமாற்றால் யாப்பினுட் பொருள் பெறப் பகுத்துப் பதமாகியவற்றிற் செல்லுதல். சாத்தன் எனவும் உண்டான் எனவும் இரண்டசை கொண்டு சீராயின. கானப்பேர் எனவும் உண்ணாதன எனவும் மூவசை புணர்ந்து சீராயின. இனிச்செய்யுளுள், தாமரை புரையுங் காமர் சேவடி என்றவழி ஈரசையினாற் சீராகி நான்கு சொல்லாகி ஓசையற்று நின்றவாறும், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை என்றவழி மூன்றசையினாற் சீராகி அவ்வளவினால் ஓசையற்று நின்றவாறும் காணலாம். ஈரசை கொண்டும் மூவசை புணர்த்துஞ் சீரியைந்து இற்றது சீர் என்றமையால், ஒருசீர் பலசொல் தொடர்ந்து வரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டு மென்பதும், எனவே உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவகையானுமன்றி வாரா என்பதும் பெறப்படும். ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றால் வேறு சீராக்கிய வழியும் அச்சீர்வகையான் வேறு சொல்லிலக்கணம் பெறுதும். மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே என்புழி நின்றது என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைப் பிரித்து வேறொரு சீராக்க, முற்றுகரமாகி வேறுபடுதல் காணலாம். சீரெனப்படுமே எனச் சிறப்பித்தவதனால் ஈரசைச் சீரும் மூவகைச் சீரும் ஆகிய இவை சிறப்புடைய என்பதும் ஓரசைச் சீர் இவை போலச் சிறப்பில என்பதும் பெறப்படும். ஈண்டு எனப்படும் என்பதே பற்றி இத்துணைச் சிறப்பிலதாய நாலசைச் சீரும் கொள்ளப்படும் என்ற கருத்தால் நாலசைச்சீர் கொண்டாரும் உளர். அன்னோர் நாலசைச்சீர்க்கு உதாரணமாக வழக்கினுள் காட்டும் உண்ணா நின்றன முதலிய சொற்கள் இரண்டு சொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப்படாமையானும், அவை சீராகவருஞ் செய்யுள் இன்மையானும், நாலசைச் சீர் காட்டல் வேண்டுவோர் வஞ்சிப்பாவினுள் வந்த நேரிழை மகளிருணங்குணக் கவரும் என்ற ஆசிரிய அடியினை இரு சீரடியாக உரைப்பினும் அதற்குத் தூங்கலோசையின்றாகலானும், வஞ்சிச் சீர் அறுபது காட்டுகின்ற வழி நேர்பசை நிரைபசைகள் யாண்டும் அலகு பெறாமையானும் நாலசைச்சீர் கொள்ளுதல் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன் றென மறுப்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கி வந்தன இயற்சீரெனப்படும். உரியசை மயங்கி வந்தன ஆசிரியவுரிச் சீரெனப்படும் என்பர் ஆசிரியர். நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கசைகளையும் ஒன்றோடொன்று கூட்டிப்பெருக்க ஈரசைச்சீர் பதினாறாம். நேர், நிரை என்னும் இயலசை இரண்டினையும் பெருக்கப் பிறந்த ஈரசைச்சீர் நான்கும் இயற் சீரெனப்படும், அவைதேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பன. நேர்பு, நிரைபு என்னும் உரியசை யிரண்டினையும் உறழ வரும் ஈரசைச் சீர் நான்கும் ஆசிரியவுரிச் சீரெனப்படும் அவை ஆற்று நோக்கு ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு என்பனவாம். நேர் பசை நிரைபசையின்பின் நிரையிறுதியும் ஆசிரியவுரிச் சீராம். உதாரணம்; யாற்றுமடை, குளத்துமடை, நேர்பசை நிரை பசையின் பின்னர் நேரசை நிற்பின் இயற்சீராம். (உ-ம்) ஆற்றுக்கால், குளத்துக்கால், இயலசைப் பின்னர் உரியசைவரின் நிரையசை வந்தாற்போல (இயற்சீரென)க் கொள்ளப்படும். (உ-ம்) மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு, கடிகுரங்கு, இத்துணையும் இயற்சீர்பத்தும் உரிச்சீர் ஆறும் ஆகிய ஈரசைச்சீர் பதினாறும் கூறப்பட்டன. உயிரளபெடை அசைநிலையாக நிற்கவும் பெறும் எனவும், ஒற்று அளபெடுத்து வரினும் முற்கூறியவாறு அசை நிலையாகலும் உரித்து எனவும் கூறுவர் ஆசிரியர். உம்மை எதிர்மறையாகலான் சீர்நிலையாதலே வலியுடைத்தென்பது புலனாம். கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே யொற்று என்புழி, கடாஅ என்பது புளிமா என அலகுபெற்றும், உப்போஒ வெனவுரைத்து மீள்வாள் ஓளிமுறுவல் என்புழி அசைநிலையாகி யலகுபெறாதும் உயிரளபெடை வந்தன. அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொதுவாயினவும், செய்யுட்கே யுரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்து கொள்ளப்படுவனவும் என இருவகைய. அவற்றுள் வழக்குக்கும் செய்யுட்கும் பொதுவாகியதனை இயற்கை யளபெடை யென்றும், செய்யுட்குப் புலவர் செய்து கொண்டதனைச் செயற்கை யளபெடையென்றும் பெயரிட்டு வழங்கப்படும். அவ்விரண்டனுள்ளும் ஈண்டு அளபெடை யசைநிலையாகலு முரித்து எனப்பட்டது, இயற்கை யளபெடை யென்று பெயரிட்டு வழங்கப்படும். செயற்கை யளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாறு போல இயற்கை யளபெடை அசைநிலையாகலுஞ் செய்யுட்கே யுரியது என்பர் பேராசிரியர். இனி, ஒற்றளபெடைக்கண் கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும் என்புழிக் கண்ண் என்பது சீர்நிலை யெய்தித் தேமாவாயிற்று தண்ண்ணென என்றவழித் தட்பத்தின் சிறப்புக் கூடுதற்காக இயற்சீர்க்கண் ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்யப்பட்டது. அது, மாசெல்சுரம் என வஞ்சிச் சீராவதனை ஆகற்க; பாதிரி என முன்னின்ற இயற்சீரேயாக என இதனால் வழுவமைத்தாராயிற்று. மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறோடு நன்கசையுங் கூட்டிப்பெருக்க மூவசைச்சீர் அறுபத்து நான்காம் மா, புலி, பாம்பு, களிறு என்பவற்றை முதலிலும்; வாழ, வரு, போகு, வழங்கு என்பவற்றை இறுதியிலும் கூட்டி உறழ மூவகைச்சீர் அறுபத்து நான்காம்.2 இவற்றுள் இயற்சீர் நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீர் எனப்படும். உதாரணம்; மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலிவருகான் என வரும். வெண்பா வுரிச் சீராகிய இவை நான்குமல்லாத ஏனைய மூவசைச்சீர் அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனப்படும். வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினுளல்லது ஏனைய பாவினுள் வரப்பெறா, வஞ்சிப்பாவினுள் ஏனைய சீர்கள் வரப்பெறும். வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும்3 இன்பா நேரடிக்கண்4 ஒருங்கு நிற்றல் இல்லை. கலித்தளை5 வரும்வழி மேற்சொல்லப் பட்ட இருவகைச் சீரும் ஒருங்கு நிற்பவும் பெறும். கலிப்பாவிற் குரிய கலித்தளைக் கண் நேரீற்றியற்சீர்6 நிற்றற்குரித்தன்று. மேற் கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும் இறுதற் றொழில்பட நில்லா7 என இவ்வியல் 20 முதல் 25 முடியவுள்ள நூற்பாக்களில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஓசை நிலைமையால் நிறைந்து நிற்குமாயின், அசையும் சீராந்தன்மை பெற்று நிற்றலை விலக்கார். தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து ஓரசைச் சீரை இயற்சீரே போலக் கொள்க என்பர் ஆசிரியர். ஓரசைச் சீராவன நாள், மலர், காசு, பிறப்பு என்பன. இவை சீராந்தன்மை பெற நிற்குமெனக் கொள்ளாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடியெனக் கொள்ளுதற்கு இடமில்லாது போய்விடும். இவற்றுள் நேர்பு, நிரைபு, என்னும் உரியசையிரண்டும் சீர்வகையான் அசைச்சீர் என வேறாய் நிற்பினும் தளைவகை சிதையாத் தன்மைநோக்கித் தேமா, புளிமா என்னும் இயற்சீர்ப்பாற் படுத்து அடக்கிக் கொள்ளப்படும் எனவும், இவை இயற்சீர்ப்பாற் படுமெனவே இவையும் கலிப்பாவிற்கு விலக்குண்டன எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். வெண்சீரீற்றசை நிரையீறு போலும் என்பர் ஆசிரியர். வெண்சீரீற்றசை தளை வழங்குமிடத்து இயற்சீரிறுதி நிரையசை போலும் என இதற்கு விளக்கங் கூறுவர் இளம்பூரணர். மேல் கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (செய்-23) என்புழி, அவ்வாசிரிய வுரிச்சீராற் கலித்தளையாம் எனக் கூறிய ஆசிரியர், கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் என்பதன் தொடர் பாக. வஞ்சி மருங்கினும் (செய்-25), இசைநிலை நிறைய (செய்-26), இயற் சீர்ப் பாற்படுத்து (செய்-27) என மூன்று சூத்திரத்தால் இடை புகுந்ததனைக் கூறி முடித்து முற்கூறிய கலித்தளை யதிகாரம் பற்றி வெண்சீரீற்றசை நிரையசை யியற்றே (செய்-28) என வரும் இச்சூத்திரத்தாற் கூறுகின்றார் எனவும், வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீருள் ஈற்று நின்றசீரின் முதல்வந்த நேரசை மற்றை நிரை முதல் வெண்சீர் வந்து முன்னைய இரண்டுங் கலித்தளையாயவாறு போல கலித்தளையாம் என்பதே இச்சூத்திரத்தின் பொரு ளெனவும், மேல் நின்ற தளைவகை சிதையாத் தன்மைக்கண் என்பது மீண்டும் கூட்டியுரைக்கப்பட்டதெனவும், எனவே வெண்சீர்ப் பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததென்றும், நேர்வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒரு நிகர்த்தா மென்றும் அவ்வாறாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவ தென்றும் ஆசிரியர் கூறினாரெனவும், கலிப்பாவிற்கு வெண்சீர் ஒன்றாது வருதல் உரிமையுடைய தெனவே வெண்பாவிற்கு ஒன்றிவரி னல்லது ஒன்றாது வருதல் யாண்டுமில்லை யென்பது உடம்படப்பட்ட தெனவும் இச்சூத்திரத்திற்கு விளக்கமுரைப்பர் பேராசிரியர். இனிய ஓசை பொருந்திவருமாயின் ஆசிரியவடிக்கண் வெண்சீரும் வரப்பெறும்.8 வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய வடிக்கண் வரும் என்பர் ஆசிரியர். ஓரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, மூவசைசீர் அறுபத்து நான்கு, ஆகச்சீர் எண்பத்து நான்கில் அசைச்சீர் நான்கெனவும், அது தளைவழங்கும்வழி இயற்சீர் ஒக்கு மெனவும், ஈரசைச்சீர் பதினாறினும் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பி லியற்சீர் ஆறும் எனப் பத்தாமெனவும் ஆசிரியவுரீச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிசீர் நான்கெனவும் ஏனைய அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனவும் இவ்வியல் 11-முதல் 30-வரையுள்ள சூத்திரங்களிற் கூறப்பட்டமை காணலாம். 5. அடி :- மேற்கூறப்பட்ட சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு அடியெனப்படும். இதன் இலக்கணத்தினை இவ்வியலில் 31-முதல் 73-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துரைப்பர். அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற் சீரடியே என்பர் ஆசிரியர். இருசீராலும் முச்சீராலும் ஐஞ்சீராலும் அறுசீர் முதலியவற்றாலும் இயன்றுவரும் அடிகள் பலவுளவாயினும் அவை அத்துணைச் சிறப்பில என்பதும், இவ்வியலில் எழுத்து வகையாற் பகுத்துரைக்கப்படும் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்னும் ஐவகைப் பாகுபாடும் நாற்சீரடிக்கே ஏற்புடையன என்பதும் தொல்காப்பியனார் கருத்தாகும். மேற்கூறிய அடியின்கண் உள்ளனவே தளையும் தொடையும்; அவை நாற்சீரடியின்கண் வருதலன்றி அவ்வடியின் நீங்க வருதலில்லை என்பர் ஆசிரியர். எனவே இவ்வியலில் தளைப்பகுதியாற் கட்டளையடி யெனவைத்து உறழ்ந்து கூறப்படுதலும் அறுநூற்றிருபத்தைந் தென்னும் வரையறையும் நாற்சீரடியாகிய அளவடிக்கேயுரியன வென்பது நன்கு பெறப்படும். அடியின் சிறப்பே பாட்டென்று சொல்லப்படும் என்பர் ஆசிரியர். இங்ஙனங் கூறவே இத்துணை மாத்திரைகொண்டது இன்ன செய்யுளென்றே இத்துணை அசையுஞ் சீருந் தளையுங் கொண்டது இன்ன செய்யுளென்றோ அளவியல் முதலிய ஏனையுறுப்புக்களால் செய்யுட்களை வரையறுத்துரைத்தல் இயலா தென்பதும் அடியென்னும் இவ்வுறுப்பொன்றே கூற இன்ன செய்யுளென்பது நன்கு விளங்குமென்பதும் ஆசிரியர் கருத்தாதல் இனிது புலனாம். அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே என்பதற்கு, அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு என்ற வாறு எனவும், தலை இடை கடைச் சங்கத்தாரும் பிறசான்றோரும் நாற்சீரான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே செய்தார்; வஞ்சிப்பா சிறு வரவிற்றெனக் கொள்க எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத்தகுவதாகும். நாற்சீரடியுள், நான்கெழுத்து முதல் ஆறெழுத்தளவும் அமைந்த மூன்றடியும் குறளடி யென்றும், ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தளவும் வந்த மூன்றடியும் சிந்தடியென்றும், பத் தெழுத்து முதல் பதினான்கெழுத்தளவும் வந்த ஐந்தடியும் நேரடி யென்றும்,9 பதினைந்தெழுத்து முதல் பதினேழெழுத்தளவும் அமைந்த மூன்றடியும், நெடிலடியென்றும், பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்தளவும் உயர்ந்து மூன்றடியும் கழிநெடிலடி யென்றும் எழுத்தளவினாற் பெயர் கூறி10 வழங்குவர் தொல் காப்பியர். இப்பெயர் வழக்கம் தொல்காப்பியனார் காலத்துக்கு முற்பட்ட யாப்பியல் மரபென்பது, இவ்வியலில் 35 முதல் 39 வரையுள்ள நூற்பாக்களில் என்ப, மொழிப என அவ்வாசிரியர் தம் முன்னோர் கூற்றாகக் கொண்டெடுத்து மொழிதலால் இனிது விளங்கும். மேல், எழுத்தெண்ணி வகுத்துரைக்கப்பட்ட கட்டளை யடிக் கண் உள்ள சீரினது நிலைமை ஐந்தெழுத்தின் மேற்பட அமைதல் இல்லையெனவும், நேர் நிரையென்னும் இயலசை களால் இயன்ற வஞ்சிச் சீராயின் ஆறெழுத்தளவினதாய் நிற்றலும் உண்டெனவும் இவ்வியல் 40-ஆம் சூத்திரம் கூறும். வஞ்சிச்சீர் முச்சீரடியாக வல்லது நாற்சீரடியாக வருதல் இலக்கணமன்றாதலின் இருப தெழுத்தின் மிக்க நாற் சீரடிப்பா இல்லையென்பது இச்சூத்திரத்தால் உய்த்துணரப்படும். நாலெழுத்து முதல் இருபதெழுத்தளவும் வகுத்துரைக்கப் பட்ட பதினேழ் நிலத்தினவாகிய ஐவகையடிகளும் ஓரடிக் கோரடி எழுத்தளவு குறைந்தும் மிகுந்தும் வருவனவாயினும், அவ்வடிகளில் அமைந்த சீரது நிலை ஒசையாற் குறைதலும் மிகுதலும் இல்லையென்பர் ஆசிரியர். தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித்தற்றொழிலில்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் சொற்கு உறுப்பாதல் நோக்கி எழுத்தெனக் கொண்டு எண்ணத்தக்கன வாயினும், அவை உயிரெழுத்துக்களைப் போன்று விரிந் திசைத்தலும் தனித்தியங்கும் ஆற்றலும் இல்லாதனவாதலின், மேல் ஐவகையவாகப் பகுத்துரைக்கப்பட்ட கட்டளையடிக்கண் எழுத்தெனக்கொண்டு எண்ணப்படுதல் இல்லை. இந்நுட்பம் உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ, உயிர்த்திறமியக்கம் இன்மையான (செய்-42) எனவரும் சூத்திரத்தால் உணர்த்தப் பட்டமை காண்க. வஞ்சிப்பாவிற்குரிய அடி இரண்டு சீரையுடையதாகும். வஞ்சியுரிச் சீரின் சிறுமை மூன்றெழுத்தென்று கொள்ளப்படும். வஞ்சியடி மூன்று சீராலும் வருதலுண்டு. மேற்குறித்த இருவகை வஞ்சியடியிலும் அசை கூனாகி11 வரும் சீர் முழுதும் கூனாகி வருதல் நேரடியாகிய அளவடிக்குரியதாகும் என இவ்வியல் 43 முதல் 47 வரையுள்ள சூத்திரங்களில் ஆசிரியர் குறித்துள்ளார். நாற் சீரடியை எழுத்தளவு பற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐவகை யடிகளையும் விரித்துணர்த்துங் காலத்து, அசையுஞ் சீரும் தோற்றுதற்கிடமா யமைந்த நாலெழுத்து முதல் இருபதெழுத் தீறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் எழுபது வகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி அறுநூற் றிருபத்தைந்தாகும் என இவ்வியல் 48-ஆம் சூத்திரம் கூறும். இங்கு எழுபதுவகை என்பது, இரண்டு சீர் தம்முட் புணரும் புணர்ச்சியை என்பர் இளம்பூரணர். இது பற்றி அவர் கூறும் விளக்கம் பின் வருமாறு:- மேற்சொல்லப்பட்ட எண்பத்து நான்கு சீரினும் இயற் சீரான் வருவது இயற்சீரடி, ஆசிரியவுரிச் சீரான் வருவது ஆசிரிய வுரிச்சீரடி, இயற்சீர் விகற்பித்து வருவது இயற்சீர் வெள்ளடி, வெண்சீரான் வருவது வெண்சீரடி, நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவது நிரையீற்று வஞ்சியடி, உரியசையீற்றான் வருவது உரியசையீற்று வஞ்சியடி, ஓரசைச் சீரான் வருவது அசைச் சீரடி என வழங்கப்படும். அவற்றுள் இயற்சீரடி நேரீற் றியற்சீரடி யெனவும், நிரை யீற்றியற் சீரடி யெனவும் இருவகைப்படும். நேரீற்றியற் சீரடி, 1. நேரீற்றின் முன் நேர்முதலாகிய இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதலாகிய ஆசிரியவுரிச் சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச் சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச் சீர் 5. ,, ,, நேர்முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய ஐந்து வகைப்படும். இவ்வாறே 1. நிரையீற்றின் முன் நிரை முதலாகிய இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதலாகிய ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச் சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச் சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய நிரையீற் றியற்சீரடியும் ஐந்து வகைப்படும். ஆசிரியவுரிச் சீரடி நேர்பீறும் நிரைபீறும் என இருவகைப் படும். 1. நேர்பீற்றின் முன் நேர்முதல் இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதல் ஆசிரிய வுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பா வுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சி யுரிச்சீர் 5. ,, ,, நேர்முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய நேர்பீற்று ஆசிரிய வுரிச்சீரடி ஐந்து வகைப்படும். இவ்வாறே 1. நிரைபீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரிய வுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பா வுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சி யுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச் சீர் என்பன வந்து பொருந்த நிரைபீற்று ஆசிரியவுரிச் சீரடியும் ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடி நேரீறும் நிரையீறும் என இருவகைப் படும். 1. நேரீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச் சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் என்பன வந்தியைய நேரீற்றியற்சீர் வெள்ளடி ஐந்து வகைப்படும். இவ்வாறே, 1. நிரையீற்றின் முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர் முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் என்பன வந்து பொருந்த நிரையீற்றியற்சீர் வெள்ளடியும் ஐந்து வகைப்படும். வெண்சீர் நேர் முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலும் என இருவகைப்படும். 1. நேரீற்றின் முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர் முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் என நேர் முதலோடு உறழ்தல் ஐந்து வகைப்படும். 1. நேரீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் என நிரைமுதலோடு உறழ்தல் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். 1. நிரை முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் எனவரும் ஐந்தும் ஒன்றுவன. 1. நிரை முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் எனவரும் ஐந்தும் ஒன்றாதன. உரியசை யீற்று வஞ்சியடியும் இவ்வாறே, 1. நிரைபு முன் நிரை முதல் இயற்சீர் 2. ,, ,, நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4. ,, ,, நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. ,, ,, நிரை முதல் ஓரசைச்சீர் 6. ,, ,, நேர் முதல் இயற்சீர் 7. ,, ,, நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 8. ,, ,, நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 9. ,, ,, நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 10 ,, ,, நேர் முதல் ஓரசைச் சீர் என உறழப் பத்து வகைப்படும். 1. நேர் (நேர்பு) முன் நேர் முதல் இயற்சீர் 2. ,, ,, நேர்பு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. ,, ,, நேர் முதல் வெண்சீர் 4. ,, ,, நேர் முதல் வஞ்சிச்சீர் 5. ,, ,, நேர் முதல் ஓரசைச்சீர் 6. நிரை(நிரைபு) முன் நிரை முதல் இயற்சீர் 7. நிரை(நிரைபு) முன் நிரை முதல் ஆசிரியவுரிச் சீர் 8. ,, ,, நிரை முதல் வெண் சீர் 9. ,, ,, நிரை முதல் வஞ்சிச்சீர் 10. ,, ,, நிரை முதல் ஓரசைச் சீர் என இவ்வாறு இயைத்து நோக்க அசைச் சீரடி பத்து வகைப்படும். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரிய வுரிச் சீரும் அதுவேயாம். மூவசைச் சீருள் வெண்பாவுரிச்சீர் ஒழிந்தன வெல்லாம் வஞ்சியுரிச் சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு நேராய் ஒன்றுவது நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன்றாசிரியத் தளையாம்; மா முன் நிரையும் விளமுன் நேரும் என மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளையாம். வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம். நிரைவரிற் கலித்தளையாம். வஞ்சியுரிச் சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித் தளையாம்; ஒன்றாதது ஒன்றாவஞ்சித் தளையாம், இவ்வகையால் தளை ஏழாயின. இனி, அடி, அறுநூற்றிருபத்தைந்தாமாறு; அசைச் சீர், இயற்சீர், ஆசிரியவுரிச் சீர், வெண்சீர், வஞ்சியுரிச் சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி இவ்வைந்து சீரும் வருஞ் சீராக உறழும் வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ்விருபத்தைந்தின்கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந் நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற்றிருபத்தைந்தாம் என்பது இளம்பூரணர் கூறிய விளக்கமாகும். இனி, எழுபது வகையின் வழுவிலவாகி வரும் அறுநூற்றிருபத் தைந்து என்னுந் தொகைக்குப் பேராசிரியர் பின்வருமாறு வகை கூறி விளக்கியுள்ளார் :- ஆசிரியத்துள் இயற்சீர் 19, ஆசிரியவுரிச் சீர் 4 அசைச் சீர் 4 என இருபத்தேழாகி வரும். வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்த சீர் இருபத்துமூன்றும் வெண்சீர் நான்கினொடுந் தலைப்பெய்ய அவையும் அவ்வாறே இருபத்தேழாகி வரும். கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் மூன்றொழித்து ஒழிந்த இயற்சீர் பதினாறும் ஆசிரியவுரிச்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் என இருபத்துநான்காம். இவை மூன்று பகுதியுந் தொகுப்ப எழுபத்தெட்டாயின. அவற்றுள் ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கினையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கினையும் இயற்சீர்ப்பாற்படுத்து அடக்குக என்று ஆண்டுக் கூறினமையின், ஈண்டு அவற்றை இயற்சீர்ப்பாற் படுத்து அடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும் அங்ஙனங் கொள்ளப்பட்ட சீர் ஒன்று ஒன்றனோடு தட்குங்கால் அவ்வெழுபது வகையானுமன்றித் தட்குமாறில்லை. அது நோக்கி எழுபது வகையின் வழுவிலவாகி என்றான். அங்ஙனம் தளைசிதையா அடி, ஆசிரிய அடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றும், கலியடி நூற்றிருபதும் என அறுநூற்றிருபத்தைந்தாம். இவற்றின் விரிவெல்லாம் பேராசிரியருரையிற் கண்டு தெளியத் தக்கனவாகும். இனி இச்சூத்திரத்திலுள்ள எழுபது வகையின் வழுவிலவாகி என்ற தொடர்க்கு எழுபது தளைவழுவின் நீங்கி எனப் பொருள் கொண்டு, எழுபது தளை வழுவாவன: ஆசிரிய நிலம் பதினேழுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழும், கலித்தளை தட்பப் பதினேழுமாய், ஆசிரியப்பாவிற்கு முப்பத்துநான்கு தளைவழுவாம் வெள்ளை நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத் தளைதட்பப் பத்தும், கலித்தளை தட்பப் பத்துமாய், வெண்பாவிற்கு இருபது தளைவழுவாம். கலிநிலம் எட்டினுள்ளும் வெண்டளை தட்ப எட்டும், ஆசிரியத் தளைதட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினாறு தளைவழுவாம். இவை யெல்லாந் தொகுப்ப எழுபது தளைவழுவாம். எனக் கூறுவர் ஒரு சாராசிரியர்.12 அளவடி ஐந்தும் சிந்தடி மூன்றுமாக வெண்பா எட்டு நிலமே பெறும் என்பது, அளவும் சிந்தும் வெள்ளைக்குரிய (செய்-58) எனவரும் சிறப்பு விதியால் எடுத்துரைக்கப்படுதலின், அதற்குமேல் இரண்டு நிலன் ஏற்றி வெள்ளைநிலம் பத்து எனக் கொண்டு கூறும் இவ்வுரை பொருந்தாதென்பது பேராசிரியர் கருத்தாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் இந்நூல் செய்த காலத்தில் இவ்வாறு எழுத்தளவினாலமைந்த கட்டளையடிகளும் சீர் வகையடிகளும் ஆகிய இரு திறமும் அமையச் செய்யுள் இயற்றப்பெற்றன வென்றும் அவர்க்குப் பின் கடைச் சங்க காலத்திற் கட்டளையடிகளாற் செய்யுளியற்றும் பழக்கம் அருகி மறைந்த தென்றும் கருதவேண்டியுளது. இந்நூல் செய்த காலத்தில் தலைச் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் பெறுதும். பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃது அரிதாகலிற் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க என வரும் நச்சினார்க்கினிய ருரைப்பகுதி இங்கு நினைக்கத் தகுவதாகும். அடிகளின் பாகுபாட்டினை நன்குணர்ந்தோர் நாற்சீரடிகளை விரித்தாற் போன்று ஐஞ்சீரடி முதலாக வரும் ஏனையடிகளையும் பெருக்கிக் காணுமிடத்து அவை வரம்பிலவாம் என்பர் தொல்காப்பியர். அஃதாவது நாற்சீரடி அறுநூற்றிருபத்தைந்தொடும் ஐந்தாம் சீராக ஐஞ்சீரையும் உறழ 3125 விகற்பமாம். அவற்றுடன் ஆறாஞ்சீராக ஐஞ்சீரையும் உறழ 15625 விகற்பமாம் அவற்றுடன் ஏழாஞ் சீராக ஐஞ்சீரையும் உறழ 78125 விகற்பமாம். இவ்வகையினால் உறழ வரம்பிலவாய் விரியும். அன்றியும் இச்சொல்லப்பட்ட அடியினை அசையானும் எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம் என்பர் இளம்பூரணர். பதினேழ் நிலத்தனவாக மேல் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற்கு உரியன. அவை தனித்தனி யுரியதாகி வருதலே யன்றி விரவிவரினும் விலக்கப்படுதலில்லை யென்பர் ஆசிரியர். குறளடி பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து 4-6 தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு வீங்கி சிந்தடி நீர்வாய் கொண்டு நீண்ட நீல 7-9 மூர்வா யூதை வீச வூர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நேரடி நன்மணங் கமழும் பன்னெல் லூர 10-14 வமையேர் மென்றோ ளம்பரி நெடுங்க ணிணையீ ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு நெடிலடி லணிநடை யசைஇய வரியமை சிலம்பின் 15-17 மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு கழிநெடிலடி நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநக ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை 18-20 கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழுகுவ தன்றே.1 எனவரும் ஆசிரியப்பாவினுள் பதினேழ் நிலத்து ஐவகையடியும் ஒருங்கு வந்தவாறு காணலாம். தத்தம் சீர்நிலை வகையாலும் தளைநிலை வகையாலும் இனிய ஓசை வேறுப்பாட்டினை யுடையனவாகிய ஐவகை யடியினும் ஏற்றவழி நிலைபெறுதற்குரிய தன் தன் சீர் உள்ளவழித் தளை வேறுபாடு கோடல் வேண்டா13 என்பர் ஆசிரியர். எனவே சீர் தானே ஓசையைத்தரும் என்றவாறாம் எனவும், ஐந்தடியினும் தன் சீர் ஏற்றவழி நிலைபெறுதலாவது, குறளடியாகிய ஐந்தெழுத்தினும் ஆறெழுத்தினும் ஓரசைச்சீரும் ஈரசைச்சீரும் வருதலன்றி மூவகைச் சீர்வாராமை எனவும் விளக்குவர் இளம்பூரணர். சீர்கள் தம்முட் பொருந்தும் வழி நிலைமொழியாகிய இயற்சீரின் ஈற்றசையும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன்றாசிரியத் தளையாம்.14 குறளடி முதலாக அளவடியளவும் வஞ்சியுரிச்சீர் வந்து உறழும் நிலை இல.15 அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரியன; (அவை உரியவாதல்) தளைவகை ஒன்றாத் தன்மைக்கண் என்பர் ஆசிரியர்.16 எனவே ஒன்றுந்தன்மைக்கண் நெடிலடியும் சில வருமென்று கொள்க எனவும். தளைவகை ஒன்றாமை யாவது நிலைமொழியும் வரு மொழியுமாகிய இயற்சீர் நேரா யொன்றுவதும் நிரையா யொன்றுவதுமன்றி மாறுபட வருவது; அவ்வழி நிரையீற்றியற்சீர் நிற்ப நேர்வரினும் நேரீற்றியற்சீர் நிற்ப நிரைவரினும் இயற்சீர் வெண்டளையாம் எனவும், ஒன்றுந் தன்மையாவது வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்டளையாம் எனவும் இவ்விரண்டும் வெண்பா விற்குத் தளையாம் எனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடிலடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின் காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாகும்.17 வெண்பாவுரிச்சீர் நிற்ப நிரை முதல் வெண்சீர் வந்து நிரையாய்த் தளைத்தல் கலியடிக்கு விலக்கத்தக்க தன்றாம்.18 பிறவாகிய தளையும் (ஆசிரியத்தளையும் வெண்டளையும்) நீக்குதலில்லை19 என்பர் ஆசிரியர். இயற்சீர் வெண்டளையானாகிய வெண்பாவடி ஆசிரியப் பாவாவின்கண் நிற்றற்குரிய மரபினால் நிற்பனவும் உள. (இயற்சீர்) வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவனவுள. அறுசீரடி ஆசிரியத்தளை யொடு பொருந்தி (ஆசிரியப்பாவின்கண்) நேரடிக்கு முன்னாக நடை பெற்று வரும். எழுசீரால் வரும் அடி முடுகியற்கண் நடக்கும். மேற்சொல்லப்பட்ட ஐஞ்சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் வாராதென்று விலக்கார் அறிஞர். முடுகியலாகி வரும் மூவகையடியும் ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் நிற்றல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே கலிப்பாவினுள் நிற்கப்பெறும் என்ற வாறாயிற்று. நாற் சீர் கொண்டது அடி (செய். 31) என ஓதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக்கண் உரித்தென ஓதி, ஐஞ்சீரடியும் அறுசீரடியும் எழுசீரடியும் உள என ஓதினமையான், அடியாவது இரண்டு (சீர்) முதலாக வருமெனவும் அவற்றுள் இருசீரடி குறளடி எனவும் முச்சீரடி சிந்தடி எனவும் நாற்சீரடி அளவடி எனவும் ஐஞ்சீரடி நெடிலடி எனவும் அறுசீர் முதலாக வரும் அடியெல்லாம் கழிநெடிலடியாம் எனவும் பிற நூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு (தொல்காப்பியனார்க்கு) உடம்பாடென்று கொள்க. அறுசீர் முதலான அடிகளுள் எழுசீர் எண் சீர் சிறப்புடையன எனவும் எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரியர் உரைப்ப. இவ்வாசிரியரும் அடிக்குச் சீர் வரையறையின்மை ஆங்ஙனம் விரிப்ப அளவிறந்தனவே, பாங்குற் வுணர்ந்தோர் பன்னுங்காலை (செய்யுளியல்-49) என்றதனான் உணர்த்தினார் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அவ்வடியினால் வருதலின் என்று கொள்க எனவரும் உரையாசிரியர் உரைப் பகுதியினைக் கூர்ந்து நோக்குங்கால், ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்தளவு பற்றி வகுக்கப்படும் கட்டளை யடிக்கேயன்றி இக்காலத்திற் பெரு வழக்கின தாயுள்ள சீர்வகை யடிக்கும் இவ்வியலில் இலக்கணங் கூறியுள்ளமை நன்கு புலனாம். ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரடியாக வருதல் உண்டு. மேற்கூறிய முச்சீரடி ஆசிரியப்பாவினிடையிலும் வரப்பெறும். முச்சீரடி கலிப்பாவினுள் நிரம்பவும் நிற்கும். வஞ்சிப்பாவின் இறுதி, ஆசிரியப்பாவின் இறுதி போன்று முடியும் என இவ்வியல் 65 முதல் 68 வரையுள்ள சூத்திரங்களில் விரித்துரைப்பர் ஆசிரியர். வஞ்சிப்பாவின் இறுதிப்பகுதி ஆசிரியப்பாவிற்குரிய சீருந்தளையும் பெற்று அதன் இயல்பினால் முடியும் எனவே அதன் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலும் கொள்ளப்படும். வெண்பாவின் ஈற்றடி மூன்று சீரையுடையதாகும். அதன்கண் இறுதிச்சீர் அசைச் சீராய் வரும். வெண்பாவின் இறுதிச் சீரின் அயற்சீர் நேரீற் றியற்சீராயின் நிரையசையும் நிரைபு அசையும் தண்மையைப் பெற்று முடியும்; ஈற்றயற்சீர் நிரையீற் றியற் சீராயின் நேரசையும் நேர்பு அசையும் சீராந் தன்மை யெய்தி முடியும் என இவ்வியல் 69 முதல் 71 வரையுள்ள சூத்திரங்களாற் குறிப்பிடுவர் ஆசிரியர். வெண்சீரின் இறுதியிலுள்ள நேரசை யானது, இயற்சீரிறுதி நிரையசை போலும்20 என முன்னர்க் கூறினமையால் வெண்பாவுரிச்சீர் ஈற்றயற் சீராய் நிற்ப, அதன் முன் நேரசையும் நேர்பு அசையும் அசைச் சீராய் வந்து முடிதலும் கொள்ளப்படும். ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரிய முடிபே கலிப்பாவிற்கும் முடிபாகும்.21 கலிப்பா, வெண்பாவின் இயல்பினாலும் பண்புற முடிதல் உண்டு22 என்பர் ஆசிரியர். எழுசீரிறுதியாசிரியம் எனவே, ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராகவே வருமென்பதூஉம், வெண்பாவியல் எனவே கட்டளை வெண்பா வானும் சீர்வகை வெண்பாவானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருமென்பதூஉம் பெற்றாம் என்பர் நச்சினார்க்கினியர். 6. யாப்பு:- யாப்பு என்பது மேற்கூறிய அடிதோறும் பொருள் ஏற்று நிற்பச் செய்வதோர் செய்கையாகும். எழுத்து முதலாக அசை சீர் அடி எனத் தொடர்புற்று இயன்ற அடியினால் புலவன் தான் சொல்லக் கருதிய பொருளைச் சொற்கள் மிகாமலும் குறையாமலும் இறுதியளவும் முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பு என்று சொல்லுவர் செய்யுள் செய்யவல்ல புலவர்; அத்தகையயாப்பாவது பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் எனச் சொல்லப்பட்ட எழு நிலத்தினும் வளவிய புகழையுடைய மூவேந்தராகிய சேர சோழ பாண்டியரது ஆட்சியுட்பட்ட குளிர்ந்த தமிழகத்தில் (வடக்கே வேங்கடமும்) தெற்கே குமரியாறும் மேற்கும் கிழக்கும் கடலும் ஆகிய) நான்கு பேரெல்லைக்கு உட்பட்ட நிலப்பகுதியிலே வாழும் தமிழ் மக்கள்23 வழங்கும் தொடர் மொழியமைப்பின்வழி நடைபெறுவ தாகும் என இவ்வியல் 74, 75-ஆம் சூத்திரங்கள் கூறும். 7. மரபு:- மரபு என்பது காலம் இடம் முதலியன பற்றி வழக்கு மாறுபடினும் அத் திரிபுக்கு ஏற்ப வழுப்படாமற் செய்வதோர் செய்கை. மரபாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நாற்சொல்லின் இயற்கையானே யாப்பின் வழிப் பொருந்தி யமைவது என்பர் ஆசிரியர். குறித்த பொருளை முடியச் சொல்தொடுக்குங்கால், பெயர், வினை, இடை, உரி ஆகிய இயற்சொல்லானும், ஏனைத் திரிசொல் திசைச்சொல் வட சொல்லானும் ஏழுவகை வழுவும் படாமற் புணர்ப்பது மரபு எனவும், அவற்றுள் இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தொடு பொருந்துதல். திரிசொல் மரபாவது தமிழ் நாட்டகத்தும் பலவகை நாட்டினும்1 தத்தமக் குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொல் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொல் மரபாவது திரிந்த வகையாகிய சொல்மரபு எனவும் விளக்குவர் இளம்பூரணர். மரபாவது, வழக்கெனவுஞ் செய்யுளெனவும் இடை தெரியாமல் (வேறு பிரித்துணர வொண்ணாதபடி) ஒரு வாய்பாட்டான் வழக்குஞ் செய்யுளுமாகி, ஒரு சொற் றொடரினைச் சொல்லியது போலச் செய்யுள் செய்தல் எனவும், இங்ஙனம் வழக்கியலை யாப்பு வழிப்படுத்தல் மரபாம் எனவே சொல்லும் பொருளும் அவ்வக் காலத்தார் வழங்குமாற்றானே செய்யுள் செய்வது என்பதாயிற்று எனவும், ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய, இனி, பொருளும் இவ்வாறே காலத்தானும் இடத்தானும் வேறுபடுதலுடைய, ஒரு காலத்து அணியும் கோலமும் ஒரு காலத்து வழங்காதனவுள. ஓரிடத்து நிகழும் பொருள் மற்றோரிடத்து நிகழா தனவுமுள. அவ்வக் காலமும் இடனும்பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்ய வேண்டுமென்பது இதனது பயன் எனவும், மற்று, பாட்டுரை நூலே என ஏழுவகை வகுத்த பகுதியையுஞ் செய்யுட்கு மரபென மேற்கூறினான்; அதனானே இவ்வேழு வகையானன்றி ஆரியர்24 வேண்டு மாற்றானும் பிறபாடைமாக்கள் வேண்டுங் கட்டளை யானும் தமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்று எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் நுண்ணுதின் உணர்ந்து கொள்ளத்தக்க சிறப்புடை யதாகும். 8. தூக்கு:- தூக்கென்பது, பாக்களை அடிதோறுந் துணித்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பமாகும். தூக்கு என்னும் இச்சொல், துணித்தல் நிறுத்தல் பாடுதல் என்ற பொருளில் வழங்குவதாகலின், பாக்களை அடிதோறும் துணித்து நிறுத்தி இசைத்தலாகிய ஓசை விகற்பத்தைக் குறிக்கும் பெயராயிற்று. நிறுத்தற்குரிய பொருள்களாகிய பொன், வெள்ளி முதலியவற்றுள் ஒன்றைப் பெற்றாலல்லது, அப்பொருளைத் தொடியும் துலாமும் எனத் துலாக் கோலால் தூக்கி அளந்து அறுதியிடுதல் இயலாது; அதுபோலவே அளக்கப்படு பொருளாகிய பாக்களை யின்றி அவற்றை யளந்து நிறுத்துதலாகிய தூக்கென்னும் ஓசையினை அறுதியிட்டு உணர்த்தலும் இயலாத செயலாம். எனவே பாவொடு புணர்த்தே தூக்கென்னும் ஓசை விகற்பத்தினை ஆசிரியர் ஈண்டு உணர்த்துகின்றார். அகவல் என்று வழங்கப்படும் ஓசை ஆசிரியப்பாவிற்கு உரியதாகும். அகவிக் கூறுதலால் அகவல் எனக் கூறப்பட்டது. ஒருவன் ஒன்றைக் கூறுதலும் அதுகேட்டு மற்றொருவன் அதற்கு மறு மொழி சொல்லுதலுமாகிய இம்முறையிலன்றி, ஒருவன் தான் கருதியன வெல்லாவற்றையும் விடாது தொடர்ந்து சொல்லுத லாகிய உரையாடல் முறையை உலகியலிற் காண்கின்றோம். அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கணெல்லாந் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும் என்பர் பேராசிரியர். வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசை யன்று என்பர் ஆசிரியர். எனவே அகவுதலில்லாத ஓசையாம். இதனைப் பிற நூலாசிரியர் செப்பலோசை என்ப. அகவுதல் என்பது ஒரு தொழில். அத்தொழில் இதன்கண் இல்லாமையின் அஃதன்று என்றார் என இளம்பூரணரும், அழைத்துக் கூறாது ஒருவற்கு ஒருவன் இயல்புவகையான் ஒரு பொருண்மையைக் கட்டுரைக்குங் கால் எழுந்த ஓசை செப்பலோசை யெனப்படும். (அகவலும் செப்பலுமாகிய) அவ்விரண்டு மல்லது வழக்கினுள் (பிறிது) இன்மையின் அதா அன்று என அவைகளின் இலக்கணம் பெறலாயிற்று என நச்சினார்க்கினியரும் கூறும் விளக்கம் அறியத்தக்கனவாகும். துள்ளலோசை கலிப்பாவிற்கு உரியதாகும். துள்ளுதலாவது, ஒழுகு நடையின்றி இடையிடை உயர்ந்து வருதல். செப்பலோசைத் தாகிய வெண்சீர்ப்பின்னும் வெண்டளைக்கேற்ற சொல்லொடு புணராது ஆண்டு எழுந்த ஓசை துள்ளித்துள்ளி வந்தமையால் துள்ளலோசையாயிற்று. தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரியதாகும். அடியிறுதியில் தூங்காது சீர்தொறுந் தூங்கப்படும் ஓசை தூங்கலோசை யெனப்படும் என்ப. துள்ளலும் தூங்கலும் வழக்கினும் செய்யுளினும் ஒப்ப வருவன அல்ல என்பர் பேராசிரியர். மருட்பாவிற்குரிய ஓசை, மேற்கூறிய தூங்கலும் துள்ளலும் ஒழிந்த ஏனைச்செப்பலும் அகவலும் ஆகிய இருகூறுமல்லது, தானாக வேறுபடுத்து இதுவெனக் காட்டும் தனி நிலையில்லை என்பர் ஆசிரியர். அகவல் முதலாகத் தூங்கல் இறுதியாக மேற் கூறப்பட்ட நால்வகை யோசைகளையும் எதிர்சென்று எண்ணுங் கால் தூங்கல், துள்ளல், செப்பல், அகவல் என எண்ணுதல் முறையாதலின், அவற்றுள் பிற்கூறிய தூங்கலும் துள்ளலும் நீங்க ஏனையிருசார் எனக் குறிக்கப்பட்டவை முறையே செப்பலும் அகவலும் ஆதலால், செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவது மருட்பாவாயிற்று என விளக்குவர் பேராசிரியர். மேற்கூறப்பட்ட ஓசைவகையாலல்லது அவ்வோசை யொழித்துச் சீரும் தளையும் அடியும் பெறப் பாடல் செய்யார் அறிஞர் என்பர் ஆசிரியர் எனவே பாவிற்குரிய சீர் தளை அடி முதலிய இலக்கண முடையனவாயினும் பாட்டிற்கு இன்றியமையாதனவாக, மேற்கூறப்பட்ட ஓசையமையாதன நூல் (சூத்திரம்) எனவும் உரையெனவும் கூறப்படுதலன்றிப் பாட்டெனச் சிறப்பித்துரைக்கப்படா என்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். தூக்கென்னும் உறுப்பு இயலும் வகை மேற்சொல்லப் பட்ட நாலுமே எனபர் ஆசிரியர். எனவே இந்நான்கினடங்காத ஓசை விகற்பம் எதுவுமில்லை யென்பது அவர்கருத்தாதல் புலனாம். 9. தொடை:- தொடைவகை யென்பது எழுத்துச் சொற் பொருள்களை எதிரெதிர் நிறுத்தித் தொடுக்கப்படுவன வாகிய தொடைவிகற்பம். இவை பூத்தொடை போலச் செய்யுட்குப் பொலிவு செய்வனவாதலின் தொடை யெனப்பட்டன. தொடைவகையாகிய அவை மோனை, எதுகை, முரண், இயைபு என நான்கு நெறிப்பட்ட மரபினை யுடையனவாம்; அளபெடைத் தொடையொடு கூட ஐந்தெனவும் சொல்லப் படும். பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை என அமைந்தவற்றை ஆராயின் அவையும் தொடைப்பாகுபாடாம். நிரல் நிறுத்தமைத்தலும்25 இரட்டையாப்பும்26 மேற்கூறிய தொடை யியல்பினவாய் முடியும். அடிதொறும் முதலெழுத்து ஒத்துமைவது மோனைத் தொடையாகும். (முதலெழுத்து அளவொத்து நிற்க) இரண்டா மெழுத்து ஒன்றின் எதுகையாகும். மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த எழுத்தே வருதலன்றி வருக்கவெழுத்தும் உரியனவாகும். சொல்லினாலாவது பொருளினாலாவது மாறுபடத் தொடுப்பது முரண்தொடை எனப்படும். ஈற்றெழுத்து ஒன்றிவரின் இயைபுத் தொடையாம். அளபெடை வரத் தொடுப்பது அளபெடைத் தொடையாகும். இவ்வைந்தும் பாட்டின் அடிதொறும் வருதற்குரிய தொடை களாகும். ஒருசீர் இடையிட்டு (முதற்சீரும் மூன்றாஞ்சீரும்) எதுகையாய்வரின்27 அதனைப் பொழிப்புத் தொடையெனக் கூறுவர் புலவர். இரண்டு சீர் இடையிட்டு (முதற் சீரிலும் நான்காஞ்சீரிலும் மோனை முதலாயின வர)த் தொடுப்பது ஒரூஉத் தொடையாம், மேற்சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம்28 என்பர். முற்கூறப்பட்ட தொடையெல்லாம் விரிவகையால் இவ்வளவின எனத் தொகை கூறுவது, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞுற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூ றொன்று மென்ப வுணர்ந்திசி னோரே29 எனவரும் சூத்திரமாகும். வடிவுபெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத்தறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது என்றவாறு என இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறினார் இளம்பூரணர். இதன்கண் ஐயீராயிரத்து ஆறைஞ்ஞூறு என்ற தொடர், பதின்மூவாயிரம் எனப்பொருள் படும். தொண்டு தலையிட்ட-ஒன்பதைத் தலையிலே கொண்ட. பத்துக்குறை எழுநூறு-அறுநூற்றுத்தொண்ணூறு. ஒன்பதைத் தலையிலேகொண்ட அறுநூற்றுத் தொண்ணூறென்றது, அறுநூற்றுத் தொண்ணூற் றென்பது என்றவாறு. ஒன்றும், என்றது, பொருந்தும் என்னும் பொருள்பட வந்த முற்றுவினை. ஐயீராயிரத்தாறைஞ் ஞூற்றொடு (பதின் மூவாயிரத்துடன்) தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூறு (அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது) ஒன்றும் (பொருந்தும்) என இயைத்துப் பொருளுரைக்குமிடத்துத் தொடைவகை பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பதாதல் காண்க. மோனை மொழிமுதல் உயிர் 12 இவை ஒவ்வொன்றிற்கும் கிளையெழுத்துப் பதினொன்றுள வாகலின், பன்னீருயிருடன் கிளையெழுத்துப் பதினொன்றையும் உறழ 132 க, த, ந, ப, ம என்னும் ஐந்தையும் பன்னீருயிரோடு உறழ 60 மேற்கூறிய அறுபதையும் முதற்றெடையாக்கி, அவற்றின் கிளையெழுத்துப் பதினொன்றுடன் உறழ 660 சகரத்தின் முதலாகெழுத்து 9 அவ்வொன்பதை அவற்றின் கிளையெழுத் தெட்டுடன் உறழ 72 வகரத்தின் முதலாகெழுத்து 8 அவற்றை அவைதமக்குக் கிளையாகிய ஏழெழுத்துடன் உறழ 56 யகரத்தின் முதலாகெழுத்து 1 (இதற்குக் கிளை யெழுத்தில்லை) ஞகரத்தின் முதலாகெழுத்து 3 ஒவ்வொன்றிற்கும் கிளையெழுத் திரண்டாக வைத்து உறழ 6 இவ்வகையால் முதலாகெழுத்து 93, ---- கிளையெழுத்து 926 ஆக மோனைத் தொடை 1019 ---- எதுகை உயிரெழுத்து மொழியிடையில் வாராது. உயிர்மெய்யெழுத்து இருநூற்றுப் பதினாறில் ஙவ் வருக்கம் பன்னிரண்டெழுத்தும் ஒழிந்து எதுகையாதற்குரியவை 204 இருநூற்று நாலினையும் கிளையெழுத்துப் பதினொன்றோடு உறழ 2244 ஆய்தம் உள்பட ஒற்று 19 குற்றுகரம் 6 ----- ஆக எதுகைத் தொடை 2473 ----- முரண் சொல் முரண், பொருள் முரண் என இரண்டாம். இயைபு உயிரெழுத்துக்கள் மொழியீற்றில் உயிர்மெய்யாகியே வருதலின் அவை இயைபுத் தொடைக்கு ஆகா. உயிர் மெய் இருநூற்றுப் பதினாறில் இறுதிக்கண் வாராத ஙகர வுயிர் மெய் 12, அகரம் 17, இகரம் 14, உகரம் 2, எகரம் 1, ஒகரம் 1, ஆகிய இவை யொழிந்து நின்ற எழுத்து 165 ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் புள்ளியிறுதி 11 குற்றுகர வீறு 6 ---- ஆக இயைபுத் தொடை 182 ---- அளபெடை மொழி முதலாகும் உயிரளபெடை 7 க, த, ந, ப, ம என்னும் உயிர்மெய் யளபெடை 35, சகர வுயிர்மெய் யளபெடை 5, வகர வுயிர்மெய் யளபெடை 5, யகர வுயிர்மெய் யளபெடை 2, ஆக இவை நாற்பத்தேழையும் முதனிலை இடைநிலை, இறுதிநிலை, என மூன்றாக வைத்து உறழ உயிர்மெய் யளபெடை 141 ஒற்றுக்களுள் வல்லெழுத்தாறும் ரகர ழகரமும் ஒழிந்த பத்தொற்றும் ஆய்தமும் அளபெடுக்க ஒற்றளபெடை 11 ---- ஆக அளபெடைத் தொடை 159 ---- பொழிப்பு பொழிப்புத் தொடையில் கிளையெழுத்து வாராது மோனைப் பொழிப்பு 93 எதுகைப் பொழிப்பு 229 முரண் பொழிப்பு 2 இயைபுப் பொழிப்பு 182 அளபெடையுள் ஒற்றளபெடை பொழிப்பாக வாராமையின் அவை யொழிந்து உயிரளபெடைப் பொழிப்பு 148 ---- ஆகப் பொழிப்புத் தொடை 654 ---- ஒரூஉ மேல் பொழிப்புத் தொடைக்குக் காட்டிய வகைப்படியே ஒரூஉத் தொடையும் அறுநூற்றைம்பத்து நான்காம். செந்தொடை மொழிமுதலாம் எழுத்துத் தொண்ணூற்று மூன்றும் மற்றையடியினும் ஒத்துவருங்கால், அவைமோனையுள் அடங்குதலின், ஒத்தனவாகிய அவற்றை யொழித்து ஒவ்வாதன வாகிய ஏனைய தொண்ணூற்றிரண்டெழுத்தொடும் உறழச் செந்தொடை எண்ணாயிரத் தைந்நூற்றைம்பத்தாறு வகையாம். இவ்வகையினால் தொடை விகற்பம் பதின் மூவாயிரத்தறு நூற்றுத் தொண்ணூற் றொன்பதாம் என அறிக என்பது இளம் பூரணர் கூறிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட 13699 என்ற தொகைக்கு இளம்பூரணர் கூறிய வகையிலன்றி வேறொரு வகையால் விளக்கங் கூறுவதும் உண்டு. நான்கு பாவும் பெற்ற ஐம்பத்தொரு நிலத்தவாகி30 விரிந்த அறுநூற்றிருபத் தைந்தடியும்31 அவற்றொரோவடி இருபத்திரண்டு தொடையும்32 பெறப் பதின்மூவாயிரத்தெழு நூற்றைம்பதாய் வரும். அவற்றுள் ஐம்பத்தொரு நிலமும் களைபப்33 பதின் மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணூற்று றொன்பது தொடையாம் என்பது யாப்பருங்கல விருத்தியாசிரியர் கூறிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற்குத் தொண்டுதலையிட்ட பத்துக் குறையெழுநூற் றொன்பஃது34 எனப் பாடங்கொண்டு பேராசிரியரும் நச்சினார்க்கினியரு வேறுவேறு பொருளுரைப்பர். தொண்டு தலையிட்ட-ஒன்பதுடன் கூடிய பத்துக்குறை யெழுநூற்றொன் பஃது என்றது அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது, ஒன்பதுடன் கூடிய அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது எனவே எழுநூற்றெட்டு என்பது பொருள். ஆகவே தொடைவகை பதின் மூவாயிரத்தெழு நூற்றெட்டு என்பது பேராசிரியர் கொள்கையாகும். தொண்டு தலையிட்ட என்ற தொடர், ஒன்பதாலே பெருக்கின எனப் பொருள்படுமெனவும், பத்துக் குறை யெழு நூற்றொன்பது (அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது) என்ற தொகையை ஒன்பதாலே பெருக்கின், ஆறாயிரத்திருநூற்றுத் தொண்ணூற் றொன்றாம் எனவும், அத்தொகையை முற்கூறிய பதின்மூவாயிரத்துடன் கூட்டத் தொடைவகை பத்தொன் பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற் றொன்றாம் எனவும் கொள்வர் நச்சினார்க்கினியர். இங்ஙனம் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் வெவ்வேறு வகையிற் பொருள் கொண்டு கூறிய தொடைவகை விரிபற்றிய விளக்கங்கள் அனைத்தும் ஈண்டுக் காட்டப்புகின் மிக விரியுமாதலின் அவரவருரைகளிற் கண்டு தெளியத் தக்கனவாம். முற்கூறப்பட்ட தொடையினை ஆராய்ந்து மேலும் விரிப்பின் வரம்பிலவாம் எனவும், தொடைநிலைவகை மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவன எனவும் கூறுவர் ஆசிரியர். மேல், அடியெனச் சிறப்பித்துரைக்கப்பட்ட நாற்சீரடிக்கண் பெருக்கிப் பெற்ற தொடை பதின்மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பதெனப்பட்டன. இவ்வாறே நாற்சீரடி யொழிந்த இருசீரடி முதலாக எண்சீரடி யீறாகக் கிடந்த ஏனை அடிவேறுபாட்டின்கணெல்லாம் இத்தொடைகளைக் கூட்ட வரும் தொடைப் பகுதி வரையறையின்றிப் பலவாம் என்பதும், இங்ஙனம் எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் பலவேறு வகைப்பட விரித்துணர்த்தப்படும் தொடை விகற்பங்கள் யாவும் மேற் சொல்லப்பட்ட பாகுபாட்டின்கண் அடங்குவனவென்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். இனி, மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்பனவற்றின்கண், இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க் கதுவாய், கடை, கடையிணை, பின் கடைக்கூழை, இடைப்புணர் என வேறுபடுத்து உறழ்ந்து, எழுத்தந்தாதி, அசையந்தாதி சீரந்தாதி எனவும், உயிர்மோனை, உயிரெதுகை, நெடில்மோனை நெடிலெதுகை, வருக்கமோனை, வருக்கவெதுகை, இனமோனை இனவெதுகை எனவும், மூன்றாமெழுத்தொன்றெதுகை இடையிட்டெதுகை ஆசெதுகை எனவும் இவ்வாறு வருவன வற்றை மேற் கூறிய வகையினான் எழுத்து வேறுபாட்டினான் உறழவும், நிரனிறையாகிய பொருள்கோள் வகையானும் ஏகபாதம் எழுகூற்றிருக்கை முதலாகிய சித்திரப் பாக்களானும் உறழவும் வரம்பிலவாகி விரியும் என்பர் இளம்பூரணர். 10. நோக்கு:- நோக்காவது, ஒரு செய்யுளைக் கேட்டோர் அதன்கண் மாத்திரை முதலாக அடிநிரம்புந் துணையும் பாடற் பகுதியை மீண்டும் மீண்டும் கூர்ந்து நோக்கி அதனகத் தமைந்த பொருள் நலங்களை உய்த்துணர்தற்குக் கருவியாகியதோர் உறுப்பாகும். இதன் இயல்பினை, மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே (செய்-100) எனவரும் நூற்பாவில் ஆசிரியர் விளங்க அறிவுறுத்தி யுள்ளமை காணலாம். நோக்காவது, யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை எனவும், அடிநிலை காறும் என்றதனால் ஓரடிக்கண்ணும் பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க எனவும், அஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் என மூவகைப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். நாற் சொல்லாலாய உலகியல் வழக்கினைப் பாவின்கண் அமைப்பது மரபென மேற்கூறிய ஆசிரியர், அங்ஙனம் அமைக் குங்கால் வழக்கியல் போன்று வெள்ளைமை கலவாது, அரும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, அப்பொருளை உய்த் துணர்தற்குக் கருவியாகிய நோக்கென்னும் உறுப்புடையதாய் வருவதே செய்யுள் என்பது விளங்க நோக்கென்னும் உறுப்பினை ஈண்டுக் கூறினார் என்பர் பேராசிரியர். இவ்வாறு மாத்திரை முதலாக அடி நிரம்புந் துணையும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் அமைய வந்த நோக்கென்னும் உறுப்பினை முல்லை வைந்நுனை, தோன்ற எனவரும் அகநானூற்றுப் பாடலிற் பேராசிரியர் விளக்கிக் காட்டிய திறம் அறிந்து மகிழத்தக்கதாகும். 11. பா:- பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இஃது இன்ன செய்யு ளென்று உணர்தற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை என்பர் பேராசிரியர். ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியல் 101 முதல் 149 முடியவுள்ள நூற்பாக்களால் பாவின் இலக்கணத்தை விரித்துக் கூறியுள்ளார். பாவினது வகையை விரிக்குங்காலத்து ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நான்கியல்பினை யுடைத்தென்பர். அப்பாக்கள் நான்கும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருட்கும் உரியன மேல் நால் வகையாக விரிந்த பாவினது பகுதியை உண்மைத் தன்மை நோக்கித்35 தொகுத்துரைப்பின் ஆசிரியப்பா, வெண்பா என இரண்டாயடங்கும். அவற்றுள் ஆசிரியத்தின் நடையினை யுடையதாய் வஞ்சிப்பா அடங்கும். வெண்பாவின் நடையினை யுடையதாய்க் கலிப்பா அடங்கும். வாழ்த்தியல் வகை36 மேற்கூறிய நான்கு பாவிற்கும் உரியதாகும் நின்னால் வழிபடப்பெறுந் தெய்வம் நின்னைப் புறங் காப்பக் குற்றந்தீர்ந்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்தும் புறநிலை வாழ்த்து37 கலிப்பா வகையினும் வஞ்சிப்பாவினும் வருதல் இல்லை. வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும் செவியறிவுறுத்தற் பொருளும் கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் வரப்பெறா.38 வாயுறை39 வாழ்த்தாவது வேம்பினையும் கடுவினையும் போன்ற கடுஞ்சொற்களைத் தன்னகத்துக் கொள்ளாது, வருங்காலத்திற் பெரும்பயன் விளைக்குமென்ற நல்ல நோக்கத் துடன் பாதுகாவற் சொல்லால் மெய்யறிவித்தலாகும். அவையடக்கியல்40 என்பது விளங்க அறிவிக்குந் திற மில்லாதனவற்றைச் சொல்லினும் அவற்றை வகைப்படுத்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்வீராக என இவ்வாறு எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறுதல். செவியுறையாவது, பெரியோர் நடுவண் பெருக்கமின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்தலாகும்.41 ஒத்தாழ்ந்த ஓசையும், மண்டலித்துவரும் யாப்பும், (இரு சீரும் முச்சீருமாகிக் குறைந்து வரும்) குட்டமும்42 நாற்சீரடிக்குப் பொருந்தின என்பர். எருத்தடி43 குட்டமாய் (குறைந்து முச்சீராய்) வருதலும் உண்டு. மண்டிலம், குட்டம் என மேற்கூறியவை இரண்டும் ஆசிரியப்பாவின் கண்ணே பயில நடக்குந் தன்மை யனவாம். ஆசிரியப்பாவாவது, பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரியவுரிச் சீரானும் ஆசிரியத் தளையானும் அகவலோசை யானும், நாற் சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானுந் தளையானும் அடியானும் வருவது. ஈற்றயலடி முச்சீரான் வருவது நேரிசையாசிரியம் எனவும், இடையிடை முச்சீர்வரின் இணைக்குறளாசிரியம் எனவும், எல்லாவடியும் நாற்சீரடியாகி ஒத்து வருவது நிலைமண்டில வாசிரியம் எனவும், யாதானும் ஓரடியை முதலும் முடிவுமாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது எல்லாவடியும் ஒத்துவரும் பாட்டினை அடிமறி மண்டிலவாசிரியம் எனவும் அடி நிலையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்பர் இளம்பூரணர். இனி, முச்சீரடி முதலாக அறுசீரடி யீறாக மயங்கிய ஆசிரியத்தினை அடி மயங்காசிரியம் எனவும், வெண்பாவடி மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடி மயங்காசிரியம் எனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி மயங்காசிரியம் எனவும் வழங்கப்படும். இவற்றுக்குரிய இலக்கணமாக இவ்வியல் 59, 60, 61, 104-ஆம் சூத்திரப் பொருள்களைக் கொள்ளலாம் என்பது உரையாசிரியர் கருத்தாகும். நெடுவெண் பாட்டு, குறுவெண் பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுள் எனச் சொல்லப்பட்டவையும் அளவு ஒத்தவையும் எல்லாம் வெண்பா யாப்பின் என்பர் தொல் காப்பியர். வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீரீற்றடியானும் வருவது. இவையெல்லாம் ஓசையான் ஓக்கு மாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார். இவ்வாசிரியர், நான்கினை அளவென்றும், நான்கின் மிக்கவற்றை நெடில் என்றும், குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவராகலின், இவற்றுள் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத வெண்பாக்கள் நெடுவெண் பாட்டும் குறுவெண் பாட்டும் ஒத்தவையும் (சமனிலை வெண் பாட்டும்) என மூவகையாம். நெடுவெண் பாட்டு என்பது, நான்கின் மிக்க அடிகளை யுடையதாய் வரும் வெண்பாவாகிய பாட்டாகும். ஐந்தடி முதல் பன்னிரண்டடி யளவும் வரும் நெடுவெண் பாட்டைப் பிற்காலத் தார் பஃறொடை வெண்பா என வழங்குவர். ஒரூஉத் தொடை பெற்றுவரும் பஃறொடை வெண்பாவினை நேரிசைப் பஃறொடை யெனவும், ஒரூஉத் தொடையின்றிவரும் பஃறொடையினை இன்னிசைப் பஃறொடை யெனவும் வழங்குதல் உண்டு. குறுவெண் பாட்டாவது அளவிற்குறிய பாட்டு, இஃது இரண்டடியாலும் மூன்றடியாலும் வரும். இரண்டடியும் ஒருதொடையான் வருவன குறள்வெண்பா எனவும், விகற்பத் தொடையான் வருவன விகற்பக்குறள் வெண்பா எனவும் கூறுவர். மூன்றடியும் ஒருதொடையான் ஒத்து வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வேறுபட்ட தொடையான் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. கைக்கிளைப் பொருண்மைத்தாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனவும் அங்கதப் பொருண்மைத்தாக வரும் வெண்பா அங்கத வெண்பா எனவும் வழங்கப்படும். பரிபாட்டாவது பரிந்து (பல வடிகளும் ஏற்று) வரும் பாட்டாகும். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பல வுறுப்புக்களோடு தொடர்ந்து முற்றுப்பெறுவது. அங்கதம் என்பது வசை. அங்கதச் செய்யுள் அங்கதமாகிய செய்யுள் எனப் பண்புத் தொகையாம். ஒத்தவை என்பன, அளவாலும் பொருளாலும் இனத் தாலும் வேறுபடுக்கப்படாத சமனிலை வெண்பாக்களாம் அவையாவன நான்கடியால் வருவன. இவை அளவியல் வெண்பா எனவும் வழங்கப்படுவன. ஒரு பொருள் நுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி முடிவது கலிவெண் பாட்டே (செய்யுளியல்-147) என ஆசிரியர் ஓதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதானுமொரு பொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக்கலிக்கு உறுப்பாய்வரின் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய்வரின் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். இனி ஒரு பொருள் நுதலாது திரிந்து வருங் கலிவெண் பாட்டும் ஈண்டுக்கூறிய நெடுவெண் பாட்டோடு ஒரு புடை யொப்புமை யுடைமையின், அக் கலிவெண்பாட்டாக இக் காலத்தார் கூறுகின்ற உலகாச் செய்யுளும் புறப் பறக்கைக் கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ் வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக்கூறுதும். இக்காலத்து அதனை ஓருறுப்பாகச்செய்து செப்பலோசையாகவுங் கூறுவர். அது துள்ளலோசைக்கே ஏற்குமாறுணர்க என வரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இங்கு நோக்கத்தகுவதாகும். கைக்கிளைப் பொருண்மைதான் வெண்பாவாக வருதலே யன்றி, முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரவும் பெறும்.44 பரிபாடல் முற்கூறியவாறே வெண்பா வுறுப்பான் வருதலே யன்றித் தொகை நிலையும் விரியுமாகக்கூறிய பாநான்கனுள் இன்னபா வென்றறியப்படும் இயல்வழியின்றிப் பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரியதாகும் என்பர்.45 மேற்சொல்லப்பட்ட பரிபாடற் பாட்டானது, பொதுவாய் நிற்றலே யன்றிக் கொச்சகமும் அராகமும் சுரிதகமும் எருத்தும் என்று சொல்லப்பட்ட நான்கும் தனக் குறுப்பாகக் காமப்பொருள் குறித்து வரும் நிலையினதாகும்.46 கொச்சகம் என்பது ஐஞ்சீரடுக்கி வருவனவும் ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கலியடி, சொற்சீரடி, முடுகியலடி என்று சொல்லப்பட்ட அறுவகையடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக வுடைத்தாகி வெண்பாவியலாற் புலப்படத் தோன்றுவது எனவும், இதனுட் சொற்சீரடியும் முடுகியலடியும் அப்பா நிலைமைக்குரியவாகும் என வேறு ஓதலின் ஏனை நான்கும் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். கொச்சகம் என்பது ஒப்பினாகிய பெயர்; ஓர் ஆடையுள் ஒரு வழி யடுக்கியது கொச்சகம் எனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். பல கோடுபட அடுக்கி யுடுக்கும் உடையினைக் கொச்சகம்47 என்பவாகலின், அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வருஞ் செய்யுளைக் கொச்சக மென்றார் என்பர் நச்சினார்க்கினியர். அராகம் என்பது, ஈரடியானும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கி வரத்தொடுப்பது என இளம்பூரணரும், குறிலிணை பயின்ற அடி அராக மெனப்படும் எனப் பேராசிரியரும் கூறுப. சுரிதகம் என்பது, ஆசிரிய வியலினாலாவது வெண்பா வியலினாலாவது பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பதாகும். இதனை அடக்கியல் எனவும் வழங்குவர். எருத்தென்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோர் உறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானும், கால் சுரிதகமாதலானும், இடைநிலைப் பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமும் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க என்பர் இளம்பூரணர். எருத்து என்பது தரவு என்பர் பேராசிரியர். சொற்சீரடியும் முடுகியலடியும்49 பரிபாடற்கு உரியவாகும். பாட்டின்றித் தொடுக்கப்படும் கட்டுரைக்கண் சொல்லுமாறு போல எண்ணோடு50 கூடியும் முற்றிய நாற்சீரடியின்றி முச்சீரடி யானும் இருசீரடியானும் குறைவாகிய சீரை யுடைத்தாகியும், ஒழிந்த அசையினை யுடைத்தாகியும், ஒரு சீரின் பின்னே பிறி தொருசீர் வரத் தொடுக்கப்படாது ஓரசை வரத் தொடுத்தும் சொல்தானே சீராந் தன்மையைப் பெற்று நிற்றல் சொற்சீரடியின் இயல்பாகும். அங்கதமாகிய வசைச் செய்யுளைக் குற்றமற ஆராயின் செம்பொருளங்கதமும், பழிகரப்பு அங்கதமும் என இருவகை யினை யுடையதாகும். வாய்காவாது கூறப்படும் செம் பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும். தான் மொழியும் மொழியை மறைத்து மொழியின், அது பழிகரப் பெனப் பெயர்பெறும். ஈண்டு தம்மால் வேண்டப்பட்ட செய்யுள் இரண்டு வகையென்று சொல்லுவர் புலவர். புகழொடும்51 பொருளொடும் புணரவரின் செவியுறைச் செய்யுள் என்று சொல்லுவர். வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப்பெயர் பெறும். இனி, கலிப்பா ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என நான்கு வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலி இரண்டு வகைப்படும். மேற்கூறிய ஒத்தாழிசைக் கலி யிரண்டனுள் ஒன்று,இடை நிலைப் பாட்டு(தாழிசை), தரவு, போக்கு(சுரிதகம்), அடை நிலைக் கிளவி (தனிச்சொல்) என்னும் நான்குறுப்புடையதாகப் பயின்று வரும்.52 அவற்றுள், தரவாவது53 நாலடி இழிபாகப் பன்னிரண்டு அடி உயர்பாக இடைவரும் அடியெல்லாவற்றானும் வரப் பெறும். தாழிசைகள் தரவிற் சுருங்கி வருவன.54 அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல்55 தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்று வரும். போக்கியல் வகையாகிய சுரிதகம் வைப்பு எனவும் வழங்கப்படும்.56 அது தரவோடு ஒத்த அளவினதாகியும்57 அதனிற் குறைந்த அளவினதாகியும்58 குற்றந்தீர்ந்த பாட்டின் இறுதி நிலையை யுரைத்துவரும். ஒத்தாழிசைக் கலிவகை யிரண்டனுள், இரண்டாம் வகையினதாகிய செய்யுள் முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து.59 தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான், வண்ணகம் எனவும் ஒருபோகு எனவும் இரு வகைப்படும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா60 தரவு, தாழிசை, எண் வாரம் எனச் சொல்லப்பட்ட நான்குறுப்பினை யுடையதாகும். அதற்குத் தரவு, நான்கும் ஆறும் எட்டுமாகிய நேரடி61யினால் வரும். அடக்கியல் வாரம்,62 தரவோடு ஒத்த இலக்கணத்தது, எண் என்பது, முதல் தொடுத்த உறுப்புப் பெருகிப் பின் தொடுக்கும் உறுப்புச் சுருங்கிப் பலவாய் வருவது.63 மேற் சொல்லப்பட்ட எண், ஒரோவொன்று இடையொழிந்து வருதல் குற்றமாகாது; சின்னம் என்பதொன்றும் ஒழிந்து நில்லாத பொழுது64 என்பர் ஆசிரியர். ஒரு போகு என்பதன் இயல்பும் இரண்டு வகைப்படும்; கொச்சக வொருபோகு எனவும் அம்போதரங்க வொருபோகு எனவும் இருவகையாகப் பகுத்துணர்தல் வேண்டும்.65 தரவு முதலாயின வுறுப்புக்களுள் தரவின்றித் தாழிசை பெற்றும், தாழிசையின்றித் தரவு முதலியன வுடைத்தாகியும், எண்ணாகிய வுறுப்புக்களை இடையிட்டுச் சின்னம் என்றதோர் உறுப்புக் குறைந்தும், அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவுதானே அடிநிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக் குரிய யாப்பினும் பொருளினும் வேறுபாடுடைத்தாகி வருவது கொச்சக வொரு போகாகும் என்பர் ஆசிரியர்.66 இனி, கொச்சக வொரு போகாகிய இதன் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியர் கருத்தை யொட்டி நச்சினார்க்கினியர் கூறிய விளக்கங்கள் இங்கு நோக்கத் தக்கனவாம். 1. தரவின்றாகித் தாழிசை பெற்றும் என்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசையே பெற்றும் (என்பதாம்). அவை பரணிப்பாட்டாகிய தேவபாணி67 முதலியன. இது தரவொடுபட்ட தொழிசை யிலக்கணமின்றி வேறாய் வரும் என்றற்குத் தரவின்றாகி எனத் தரவை விலக்கினார். எனவே, இவை ஒத்து மூன்றாதலும், தரவிற் சுருங்கி நான்கும் மூன்றும் அடிபெறுதலும், ஒருபொருள்மேல் வருதலும், தாழம்பட்ட ஓசையவேயாதலும் கடப்பாடின்று என்றவாறாம். அங்ஙனங் கூறியவதனானே பரணியுளெல்லாம் ஈரடியானே வருதலும், தாழம்பட்ட வோசையல்லன விராஅய் வருதலும், முடுகி வருதலும், இனித் தாழிசை மூன்றடுக்கித் தனியே வருவழி ஈரடி முதலிய பலவடியான் வருதலும், இனி, பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி ஒரு பொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடியின் ஏறாது வருதலும்,68 அங்ஙனம் வருங்கால் தாழ்ந்தவோசை பெற்றும் பெறாதும் வருதலும், அவை இருசீர்முதல் எண்சீரளவும் வருதலும் என்று இன்னோரன்ன பல பகுதி யெல்லாம் வரையறையின்றித் தழுவப்பட்டன. இவ் வேறுபாடெல்லாம் உளவேனும் தாழம்பட்ட வோசை பெரும்பான்மைய வாதலின் தாழிசை யென்றார். இங்ஙனம் தாழிசைப்பேறு விதந்தோதவே ஒழிந்த வுறுப்பெல்லாம் விலக்குண்டமை பெற்றாம். ஆகி யென்றதனான் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதலும், தேவபாணி யன்றி யாப்பினும் வேறுபட்டு வருவனவற்றின் கூறாய் அங்ஙனம் மூன்றடுக்கி வாராது தொடர்ந்த பொருளாய் நான்குமுதற் பலவும் அடுக்கி வருதலும், தனிச்சொற் பெற்று வருதலும், தாழம்பட்ட வோசையின்றி மூன்றடுக்கி வருதலும். சுட்டியொருவர் பெயர் கொண்டு அவர்களையும் தெய்வ மென்றே பரவலும், அடுக்கி வந்து அடக்கியலான் முடிதலும், பிறவும் கொள்க.... இன்னுஞ் சிலப்பதிகாரத்துள் வரும் வேறுபாடெல்லாம் இவ்விலேசான் முடித்துக் கொள்க. 2. தாழிசை யின்றித் தரவுடைத்தாகியும் என்பது மேற் கூறிய தாழிசையின்றித் தரவே பெற்று வருதலும் என்றவாறு, தர வென்னும் உறுப்பைச் செய்யுளுடைத் தெனவே ஒழிந்த வுறுப்பு விலக்குண்டன. ஆகியும் என்றதனால் தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்றும் பெறாதும் வருதலும், பெரும்பான்மை இரண்டிணைதலுங் கொள்க. அவை தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற தரவுகொச்சகம் தரவிணைக் கொச்சகம் எனப் பெயர் கூறப்படும். 3. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது வண்ணகத்திற்கு ஓதிய எண்ணும் சின்னமும் இன்றி, ஒழிந்த தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் நான்குறுப்புடையதும் கொச்சக வொருபோகாம் என்றவாறு. இதற்கு இல்லாத உறுப்பையே கூறிற்று; உள்ளது நிற்றலை வேண்டி. 4. அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியும் என்பது, அடக்கியல் தனித்து வருதலின்றி அவ்வடக்கியலோடு ஒரு செய்யுளாய் அடிபரந் தொழுகியும்; அடக்குமியல்பு இன்றென்றது முற்கூறிய உறுப்புக்களைத் தனியே வந்து அடக்கி நிற்கும் இலக்கணமின்றியே வரும் என்றவாறு எனவே ஏழுசீரிறுதி யாசிரியங் கலியே (செய்-76) வெண்பா வியலினும் பண்புற முடியும் (செய்-77) என்ற விதியாற் பெற்ற இறுதி ஒரு தொடராய் இற்று நிற்றலும், அடிநிமிரும் என்றதனான் முற்கூறியவற்றின் அடிவரையறையை இகத்தலும், ஒழுகும் என்றதனான் ஏழுசீரிறுதி யல்லாத எல்லா அடியும் கலியேயாய் ஒழுகிவருதலும் பெற்றாம். இக்கருத்தறியாதார், வெண்பா வியலாற் பண்புற முடியும் கலியடி யுடையதனை வெண்கலிப்பா என்பர்.69 யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது என்பது, மேற்கூறியவாறும் இனி வருகின்றவாறும் இன்றியாப்பின் வேறு படுதலும் பொருளின் வேறுபடுதலும் என்றவாறு. அவை, இருசீர் முதல் எண்சீர் காறும் வந்த அடி மேற்கூறியவாறன்றி நந் நான்கே பெற்று வருவனவும். அவற்றுட்பிறவடி விரவி வருவனவும், பலவடி வந்தும் நான்கடி வந்தும் பா மயங்கிவருவனவும், இனி, ஈரடியான் வருவனவற்றுள் ஈற்றடி மிக்கும் குறைந்தும் குறையாதும் வந்து இயலசைச்சீர் பெற்று வருவனவும், ஓசையும் பொருளும் இனிதாகாது வருவனவும் இரண்டடிச் செய்யுள் முடிந்து நிற்கவும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருவனவும், பிறவாறாய் வருவனவும், இனி, மூவடியான் வருவனவற்றுள் ஈற்றடி குறைந்தும் முதலடிமிக்கும் இடையடி குறைந்தும் இறுதியடி மிக்கும் மூன்றடியிற் குறையாதும் பிறவாறாயும் வருவனவும், இம் மூவடி இற்றபின் ஈற்றடி ஒன்றும் இரண்டும் மிக்கு வருவனவும் பிறவாறாய் வருவனவும், இனி நான்கடியாய் வருவனவற்றுள் முதல் இடை கடையிற் குறைந்து வருவனவும், முதல் இடை கடைக்கண்ணே ஓரடியும் ஈரடியும் சீர்மிக்கு வருவனவும் பிறவாறாய் வருவனவும், நான்கடி யிற்றபின் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்மிக்கு வருவனவும், இங்ஙனம்மிக்கு பத்தடுக்கி ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவனவும்.70 அளவியலின் வேறுபடுவனவும் இனி ஐந்து அடியான் வருவன வற்றுள் ஈற்றடி குறைந்து வருவனவும், ஐந்தடியிற்ற பின் ஓரடியும் ஈரடியும் மிக்கு வருவனவும். முச்சீரான் இற்றுச்சீர் சிலமிக்கு வருவனவும், இனி ஆறுமுதலிய அடிகளான் வருவனவும் இவ்விலக்கண மெல்லாம் பெற்று வருதலும்.71 கடவுட்டொடர் நிலைகள் பலதரவும் தாழிசையுமாகி இடைமிடையச் செய்வனவும் அடக்கியலின்றி அடி நிமிர்ந்து அடக்கியல் பெற்று வருதலும் இன்னோரன்ன பல பகுதிகளும் கொள்ளப்படும். இனி, பொருள் வேறுபடுதலாவன தேவரைப் படர்க்கையாக்கிக் கூறலும், சுட்டியொருவர் பெயர் கொளப்படுதலும், புறப் பொருளொடு தொடர்தலும், முற்கூறிய பொருள்கள் பிறவாறு வருதலுமாம் இங்ஙனம் யாப்பினும் பொருளினும் வேறுபட வந்த கொச்சக வகைகளைச் செய்யுளியல் 149-ஆம் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் மேற்கோள்களாக எடுத்துக்காட்டி விளக்கி யிருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். இனி, இவ்வாறு வந்த கொச்சகங்களை யெல்லாம் ஒருவரையறைப் படுத்துத் தாழிசை, துறை, விருத்தம் என மூவகை இனமாக்கி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைச் செய்யுளோடும் உறழ்ந்து காட்டுவர் பின்வந்த யாப்பிலக்கண நூலாசிரியர்கள். ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்துரைத்த செய்யுளிலக்கணத்தினையும் அதன் வழியமைந்த பழந்தமிழ்ச் செய்யுட்களாகிய இலக்கியங்களையும் ஒப்பு நோக்கி புணர்ந்த பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரை யாசிரியர்கள் பாத்தோறும் தாழிசை துறை விருத்தம் எனப் பிற் காலத்தார் பகுத்துரைத்த இப்பகுப்பு முறை பொருந்தாதெனக் காரணங்காட்டி மறுத்துள்ளார்கள். ஒழுகிய ஓசையுடன் ஒத்த அடி இரண்டாய் விழுமிய பொருளினதாய் வரும் செய்யுளை வெண்பாவிற்கு இனமாக்கி வெண் செந்துறையென வழங்குதல் பிற்கால யாப்பியல் மரபாகும். கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோம் யாமே என்பது வெண் செந்துறைக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட செய்யுளாகும். இஃது இரண்டடியாய் வருதலின் அடியளவு நோக்கி வெண்பாவினுள் ஒரு சாரனவற்றிற்கும் கலிப்பாவினுள் ஒரு சாரனவற்றிற்கும் இனமெனப்படும். இனி, சீருந்தளையும் நோக்க ஆசிரியப்பாவிற்கு இனமெனவும் கூறுதல் பொருந்தும். எனவே இதனை மேற்காட்டிய பாக்களுள் ஒன்றற்கு மட்டும் இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. அன்றியும் இவ்வாறு இரண்டடியால் வருவனவற்றுள் ஒழுகிய வோசையின்றிச் சந்தம் சிதைந்தனவும் விழுமிய பொருளின்றி வருவனவும் ஆகியவற்றைத் தாழிசையென வேறோர் இனமாக்கி யுரைப்பர். தாழம்பட்ட ஓசையும் விழுமிய பொருளும் இல்லாதனவாகிய அவற்றுக்குத் தாழிசையெனும் பெயர் கூறின் முற்கூறிய தாழிசைகளும் சந்தஞ் சிதைந்து புன் பொருளவாய் வருவதற்குரியன எனத் தவறாகக் கருத வேண்டிய நிலை யேற்படும். ஆகவே அவற்றுக்குத் தாழிசை யென்னும் பெயர் பொருந்தாது. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப்-ஆய்ச்சியர் குரவை) என இவ்வாறு மூன்றடியாய், ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவனவற்றை ஆசிரியத் தாழிசை யென்றும், இனி இதுவே நான்கடியாய் வரிற் கலிவிருத்த மென்றும் கூறுவர் பின்வந்தோர். கன்று குணிலா என்ற பாடலில் வெண்டளை அமைந்திருத்தலால் இதனை வெண்டாழிசையெனக் கூறுதற்கும் இடமுண்டு எனவே இதனை ஒரு தலையாக ஆசிரியத்திற்கு இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த காமன் அருப்புக் கணையான் அடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை விரும்புகின் றாரே என நான்கடியான் வருவதனைக் கலிவிருத்த மெனின், இதன் கண் வெண்டளை அமைந்திருத்தலால் இதனை வெண்டாழிசை யெனினும் குற்றமாகாது. அன்றியும் கலித்தளையே யில்லாத இப்பாடல் கலிப்பாவிற்கு இனமாதல் பொருந்தாது. இனி, குறளடியானும் சிந்தடியானும் வருவனவற்றைச் சீரளவு பற்றி வஞ்சிப்பாவிற்கு இனமாக்கியுரைப்பர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். அவை சீரளவால் ஒப்பினும்அடி நான்காய் வருதலானும் பா என்னும் ஒசை வேறுபடுதலானும் அவற்றை வஞ்சிப்பாவிற்கு இனமாக்கி யுரைத்தல் பொருந்தாது. அன்றியும் குறளடிச் செய்யுள் மூன்றுவரின் வஞ்சித் தாழிசை யெனவும் சிந்தடிச் செய்யுள் மூன்று வாரா எனவும் கூறின், அங்ஙனம் அவை மூன்றடுக்கி வருதற்கும் வாராமைக்கும் தக்க காரணம் காட்டல் அரிது. பிறவும் இவ்வாறு ஒரு பாவிற்கு இனமென வகுக்கப்பட்டவை மற்றொரு பாவிற்கும் இனமாம் எனக் கொள்ளுமாறு அமைந்திருத்தலால் இவற்றை இன்ன பாவிற்கு இனமாம் என வரையறைப் படுத்துதல் பொருந்தா தெனவும், இங்ஙனம் இனஞ் சேர்த்துதற்கு அரியனவாயினும், இவை பெரும்பான்மையும் கலிப்பாவிற்கு ஏற்ற ஓசையே பெற்று வருவனவாதலின், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனார் இவை யெல்லாவற்றுக்கும் ஒரு பரிகாரங் கொடுத்துக் கொச்சகத்துள் அடக்கினார் எனவும் அதுவே தொன்றுதொட்டு வந்த யாப்பியல் மரபெனவும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள். அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகும் என மேற்சொல்லப்பட்ட கொச்சக வொருபோகு பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும். அம்போதரங்க வொருபோகு அறுபதடி பெருமைக்கு எல்லையாகும். அதன் செம்பாதியிற்பாதி (பதினைந்தடி) சிறுமைக்கு எல்லையாம். அம்போதரங்க வொருபோகாகிய ஆச்செய்யுள் எருத்து, கொச்சகம், அரகம்,72 சிற்றெண்73 அடக்கியல் வாரம்74 என்னும் இவ்வுறுப்புக்களையுடையது75 என்பர் தொல்காப்பியர். ஒரு பொருளைக் குறித்துத் தொடுக்கப்பட்ட வெள்ளடி யியலால் திரிவின்றி முடிவது கலிவெண் பாட்டாகும்76 என்பர் தொல்காப்பியர்: வெள்ளடியால் என்னாது வெள்ளடியியலான் என்றமை யால், வெண்டளையால் வந்து ஈற்றடிமுச்சீராய் வருவனவும், பிறதளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர்.77 ஒரு பொருள் நுதலிய எனவே சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப்படும் பொருளுடைத் தென்பது பெற்றாம். இயல் என்றதனான் வெண்பா விலக்கணஞ் சிதையாத வற்றுக்கே ஒருபொருள் நுதலவேண்டுவ தெனவும், அவ்வாறன்றித் திரிந்து வருவன வெல்லாம் ஒருபொருள் நுதலாக் கலிவெண்பாவாம் எனவும் கூறியவாறு எனப் பேராசிரியரும், இதனான் ஒரு பொருள் நுதலியது கட்டளையாய்த் திரிவின்றி வருமெனவும், ஒரு பொருள் நுதலாதது சீர் வகையாய்த் திரிவுடைத்தாய் வருமெனவும், கூறிற்றாம்... வெண்பாவாயின் குறித்த பொருளை மறைத்துக் கூறாது செப்பிக்கூறல் வேண்டும்; இஃது அன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானும் துள்ளிவரு தலானும் கலிவெண்பாட்டாயிற்று என நச்சினார்க்கினியரும் கூறிய விளக்கங்கள் இங்குக் கருதத்தக்கனவாம். புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவும் கைக்கிளை பெருந்திணை எனவும் சொல்லப்பட்ட பொருள் ஏழனுள்ளும் யாதானும் ஒரு பொருளைக் குறித்து ஏனைக் கலிப் பாக்கள் போலத் தரவும் தொழிசையும் தனித்தனி பொருளாக்கிச் சுரிதகத்தால் தொகுத்து வரும் நிலைமைத்தன்றித் திரிபின்றி முடிவதனைக் கலிவெண்பா எனவும், புறப்பொருட்கண் வரும் வெண்பாக்களைப் பஃறொடை வெண்பா எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாக்களைப் பரிபாடல் எனவும், கொச்சகச் கலிப்பாவிற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாவைக் கொச்சகக் கலிப்பா எனவும் கூறுதல் இவ்வாசிரியர் (தொல்காப்பியனார்) கருத்தென்று கொள்க என இளம்பூரண அடிகள் விளக்குதலால், முற்கூறிய நெடுவெண்பாட் டாகிய பஃறொடை வெண்பாவிற்கும் இக்கலி வெண்பாட்டிற்கும் இடையேயமைந்த வேறுபாடு இனிது புலனாதல் காண்க. தரவாகிய உறுப்பும் சுரிதமாகிய உறுப்பும் இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண் பாவின் இயல்பினாற் புலப்படத் தோன்றும் பா நிலைவகை சொச்சகச் கலிப்பாவாகும். இதன் இயல்பினை, தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும்78 ஐஞ்சீரடுக்கியும்79 ஆறுமெய்80 பெற்றும்81 வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே எனவரும் நுற்பாவில் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். ஒத்தாழிசைக் (கலிக்)குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற்போலக் சொச்சகக் கலிக்கும் வெண்பாவாகிய உறுப்பு மிக்கு வரும் என்று கொள்க என இளம்பூரணர் கூறுதலால், ஒத்தாழிசைக் கலியின் வகையாய்க் கலியோசை தழுவிய கொச்சக வொருபோகும் வெண்பாவியலால் வெளிப்பட முடியும் கொச்சகக் கலியும் தம்முள் வேறெனப் பகுத்துணர்தல் வேண்டும். இனி, இதற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது இதன் முதல் மூன்றடிளும் ஒரு சூத்திரமாகவும் பின்னிரண்டடியும் மற்றொரு சூத்திரமாகவும் கொண்டு, அவற்றுள் முன்னையது, வெளிப்படு பொருளினதாய் விரவுறுப்புடைய வெண்கலியின் இயல்புணர்த்திற்றென்றும், பின்னையது மேலே ஒருபோகெனக் கூறப்பட்ட கொச்சகப்பாநிலைவகையான அகநிலைக் கொச்சகக் கலியின் இயல்புணர்த்திற்றென்றும் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் பகுத்து உரைகூறி விளக்கியுள்ளார்கள். அன்னோர் கருதுமாறு வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என்னும் பயனிலைக்கு வெளிப்படு பொருட்டாகிய வெண்கலிப்பா என்பது எழுவாயாக வந்து இயைதற்கு இடமின்மையானும், பாநிலைவகையே கொச்சகக் கலி என்புழிப் பாநிலைவகை யென்றது, இன்ன பாவினது நிலையும் வகையும் என்பது விளங்கும் வகையில் அத்தொடர்ப் பொருளை அறிந்து கொள்ளுதல் இயலாதாகலானும் இளம்பூரணர் கருதுமாறு இதனை ஒரு சூத்திரமாகக்கொண்டு, கொச்சகக் கலியின் இலக்கணம் உணர்த்திற்றாக உரை கூறுவதே தெல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும். இனி, யாப்பின் வேறுபட்ட கொச்சக வொருபோகு ஒப்பன வற்றுள், இருசீர் நான்கடித் தரவு கொச்சகம், முச்சீர் நான்கடித்தரவு கொச்சகம், நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம் என்பனவும் அடங்குமெனவும், இனி, கோவையாக்கி எழுத்தெண்ணி அளவியற் படுத்துச் செப்பினும் அவையேயாம் எனவும் கூறுவர் பேராசிரியர். முன்னைச் சூத்திரத்தில் ஒரு பொருள் நுதலி வருவது கலி வெண்பாட்டு எனவே, ஒரு பொருள் நுதலாது வெளிப்படத் தோன்றும் கலிப்பாட்டின் உறுப்பொத்துத் தரவும் போக்கும் பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாயும் அவை ஐஞ்சீரும் அறுசீரும் அடுக்கி வருதலும் எல்லாங் கொள்ளப்படும். இவ்வாறு வந்தன வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொருளும் வேறாகலிற் கொச்சக மென்றார் எனவும். இனி பலவடுக்கிப் பொருட்டொடராய் அறம், பொருள், இன்பம், வீடு என்பன விராய்ப் பொருள்வேறுபட வரும் தரவுகொச்சகம் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம் எனவும், திருச்சிற்றம்பலக் கோவையுள் திருவளர் தாமரை, போதோ விசும்போ என்பன பதினேழெழுத்தும் பதினாறெழுத்துமாய் வந்த தரவு கொச்சகம் எனவும், குயிலைச் சிலம்படி காரணி கற்பகம் என வரும் இவை ஒரோவெழுத்து மிக்க தரவுகொச்சகம் எனவும் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். கூற்றும் மாற்றமும் விரவிவந்து சுரிதகமின்றி முடிவது உறழ்கலிப்பா என்பர் தொல்காப்பியர். எனவே ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச்சென்று பின்னர் அவற்றைத் தொகுத்து முடிப்பதோர் சுரிதகமின்றி முடிதல் உறழ் கலியின் இலக்கணம் என்பது இனிது புலனாம். இதனைக் கொச்சகக் கலியின் பின் வைத்தமையான் அக்கொச்சக வுறுப்பின் ஒப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். உறழ்கலியாகிய இது, நாடகச் செய்யுட் போல வேறுவேறு துணிபொருளவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும், இது பொருளதிகார மாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் இதனைக் கொச்சகக் கலியுள் அடக்காது வேறு செய்யுளாகப் பிரித்து இலக்கணங் கூறினார் ஆசிரியர். ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடியாகும்; சுருக்கத்திற்கு எல்லை மூன்றடியாம் என்பர் ஆசிரியர். ஆசிரிய நடைத்தே வஞ்சி என்பதனால் வஞ்சிப்பாவிற்கும் ஆயிரம் அடிபேரெல்லையாகக் கொள்ளப்படும். நெடுவெண் பாட்டிற்கு எல்லை பன்னிரண்டடி. குறு வெண்பாட்டிற்கு அளவு, அளவடியுஞ் சிந்தடியுமாகிய எழுசீராம் என்பர் தொல்காப்பியர். குறுமையும் நெடுமையும் அளவியலொடுபடுத்துக் கொள்ளப் படுமாதலின், அளவியல் வெண்பாட்டும் உளவென்பதும், அதுவே சிறப்புடைய தென்பதும் பெறப்படும். நெடுவெண் பாட்டிற்குப் பேரெல்லை பன்னிரண்டடி யெனவே, அதனிற் பாதியாகிய ஆறடி அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லை யெனவும், நெடுவெண்பாட்டின் சிற்றெல்லை ஏழடியெனவும், அளவியல் வெண்பாவின் சிற்றெல்லை நான்கடியெனவும் கொள்ள வைத்தாராயிற்று. அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாதல் நோக்கிப் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியின் ஏறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோரும். இக்கருத்தினால் அம்மை யென்னும் வனப்புடைய செய்யுளுக்கு நெடுவெண் பாட்டு ஆகாதென விலக்குவார், அம்மை தானே அடி நிமிர் பின்று (செய்-227) என்றார் தொல்காப்பியனார். செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனவும், சிறப்புடைப் பொருளைப் பிற்படக்கிளத்தல் என்பதனால் குறுவெண் பாட்டும் (குறள் வெண்பாவும்) சிறப்புடைமை பெறுதும் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி, பெருமை பன்னிரண்டடி, கலிவெண் பாட்டும் கைக்கிளைப் பொருள்82 பற்றிய பாவும் செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, புறநிலைவாழ்த்து என்ற பொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரையறுக்கப்படா; பொருள் முடியு மளவும் வேண்டிய அடி வரப்பெறும். புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வந்து முடியும் பாவின் கண் வருவதற்குரியன83 என்பர் ஆசிரியர். பரிபாடல் என்னுஞ் செய்யுள், நானூறடி உயர்ந்த எல்லை யாகவும் இருபத்தைந்தடி குறைந்த எல்லையாகவும் வரும். செய்யுட்களின் அளவியல் வகை மேற்கூறிய கூறுபாட்டினதாகும். எழுவகை நிலத்தும்84 தோன்றிய செய்யுளை ஆராயின், அடி வரையறை யில்லாதன ஆறாகும். அவையாவன நூல், உரை, நொடியொடு புணர்ந்த பிசி,85 ஏது நுதலிய முதுமொழி, மறை மொழி கிளந்த மந்திரம், கூற்றிடை வைத்த குறிப்பு என்பனவாம்.86 அவற்றுள், நூல் என்பது, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் தொடக்கம் முதல் முடிவுரை மாறுபடின்றியமையத் தொகுத்தும் வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருளை விரித்துரைத்தற்கேற்ற சொல்லமைப்பொடு பொருந்தி, நுண் பொருள்களை விளக்கும் பண்பினதாகும். அந்நூல்தான் நால் வகைப்படும்; ஒரு பொருளையே நுதலிவரும் சூத்திரமும், ஓரினப் பொருள்களையே தொகுத்துரைப்பதாகிய ஓத்தும், பல பொருட்கும் பொதுவாகிய இலக்கணங் கூறும் படலமும், இம்மூன்று உறுப்பினையும் ஒருசேரத் தன்னகத்தே கொண்ட பிண்டமும் என இந் நால்வகையால்87 நடக்கும் என்பர் ஆசிரியர். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட் குறிப்பினால் வருவனவும்,88 பாட்டின்றி வழக்கின்கண் உரை யளவாய் வருவனவும்,89 பொருள்மரபாகிய உண்மை நிகழ்ச்சி யின்றிப் பொய்யே புனைந்துரைக்குமளவில் வருவனவும்,90 பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டும் நகைப்பொருள் அளவாய் வருவனவும்91 என உரைவகைநடை நான்காகும். அவ்வுரைதானும் மற்றொரு திறத்தால் இரண்டாகப் பகுத்துரைக்கப்படும்.92 அவற்றுள் ஒன்றே செவிலிக்கு உரியது; மற்றொன்று எல்லார்க்கும் உரியதாகும்.93 ஒப்புமைத் தன்மையொடு பொருந்திய உவமப் பொருளும்,94 ஒன்று சொல்ல மற்றொன்று தோன்றுந் துணிவுபடவரும் சொல் நிலையும்95 எனப் பிசி இரு வகைப்படும். அறிவின் நுட்பத்தைப் புலப்படுத்தும் நிலையில் சுருங்கிய சொல்லால் அமைந்த, புகழ் பயக்கும் உயர்ந்த கருத்தினைத் தன்னகத்தே கொண்டு, யாவரும் எளிதில் உணருமாறு கருதிய பொருளை முடித்தற்கு வரும் காரணத்துடன் பொருந்தி விளங்குவது முதுமொழி யென்பர் ஆசிரியர்.96 தாம் சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயன்தரச் சொல்லும் ஆற்றலுடைய நிறைமொழி மாந்தராகிய பெரியோர், இவ்வாறு ஆகுக எனத் தமது ஆணையாற் சொல்லப்பட்டு, அவ்வாற்றலனைத்தையும் தன்கண் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழியே மந்திரம் எனப்படும். இதன் இயல்பினை, நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (செய்-171) என்ற நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். இக்கருத்தே பற்றி ஆசிரியர் திருவள்ளுவனாரும், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்றார். நிறைமொழி யென்பது, அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி என்பர் பரிமேலழகர். நிறைமொழி மாந்தராவார், இருவகைப் பற்றுக் களையும் நீக்கி ஐம்புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் பெரியோர். ஆணையிற் கிளத்தலாவது, இஃது இவ் வாறாகுக எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல்97 மறைமொழி-புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடர் என்பர் பேராசிரியர். இனி, மறைமொழி யென்பதற்கு, நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே மறைத்துக் கொண்டுள்ள மொழி எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும் இங்ஙனம் சான்றோர் எண்ணிய வண்ணம் செயற்படுதற்குரிய ஆற்றல் முழுவதும் தன்கண் வாய்க்கப்பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார், அதனை வாய்மொழி (செய்-75) என்ற பெயரால் முன்னர்க் கூறிப் போந்தார்.98 இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந் தானே பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள,99 அங்கதப் பாட்டு அல்லாத மறைமொழியே மந்திரம் என ஈண்டுச் சிறப்பித்துரைக்கப்படும் என்றற்கும் மறைமொழி தானே எனப் பரிந்துரைத்தார். எனவே சபித்தற் பொருட்டாகிய மந்திரச் செய்யுளை அங்கதப் பாட்டெனவும், வசைப் பொருட்டாகாது உலக நலங்குறித்து வரும் மறை மொழியினையே மந்திரம் எனவும் வழங்குதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு புலனாம். திருமூலநாயனர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர மாலை தொல்காப்பியனார் கூறிய இவ்விலக்கணத்தின்படி அமைந்த தமிழ் மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகும். எழுத்தின் இயல்பினாலும் சொல்லின் தொடர்ச்சியாலும் புலப்படாது, சொல்லினால் உணரப்படும் பொருட்குப் புறத்தே பொருளுடைத்தாய் நிற்பது குறிப்புமொழி என்பார்.100 கவியாற் பொருள் தோன்றாது, பின்னர் இன்னது இது எனக் குறிப்பினால் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின், இது குறிப்பு மொழியெனப் பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக் கொண்டு உணரினல்லது இக்குறிப்புப் புலனாகாதென்பார், இதனைக் கூற்றிடை வைத்த குறிப்பு (செய்யுளியல்-158) என்றார் தொல்காப்பியனார். இதனைப் பொருளிசை யென வழங்குவர் ஒருசார் ஆசிரியர். குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கினராகும் எனவரும் இதனுள் குடமே தலையாகப் பிறந்தார் எனவும், கொம் பெழுந்த வாயினர் எனவும், கையுட் கொண்ட மூக்கினர் எனவும் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல்பில வாதலும் குறிப்பினான் அதனைக் குஞ்சரம் எனக் கொண்டவாறும் கண்டுகொள்க எனப் பேராசிரியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கனவாகும். இது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலும் ஆகாது; குறித்த பொருளை நாட்டி நாற்சொல் லியலான் யாப்புவழிப் படாமையின் மரபழிந்து பிறவும் குறைதலிற் பாட்டெனவும் படாதாயிற்று. அதனால் இது அடி வரையறை யின்றாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். அடிவரையறை யில்லாதனவாகிய அறுவகைச் செய்யுட் களின் இயல்பினை விரித்துரைத்த தொல்காப்பியனார், இவ்வியல் 173 முதல் 175 முடியவுள்ள சூத்திரங்களால் இசைநூலின் பாவினமாகிய பண்ணத்தி யென்பதன் இயல்பு கூறி, 176-ஆம் சூத்திரத்தால் அளவியல் பற்றி முற்கூறிய இலக்கணங்களைத் தொகுத்து முடிக்கின்றார்.101 பாட்டின்கண் கலந்த பொருளை யுடையனவாகிப் பாட்டுக்களின் இயல்பை யுடையன பண்ணத்தி யெனப்படும் என்பது, பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டினியல பண்ணத் திய்யே (செய்-173) எனவரும் நூற்பாவால் இனிது விளங்கும். பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி யென்றார்; அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஓதப்படுவன என்பர் இளம்பூரணர். பாட்டிடைக் கலந்த பொருளவாகி என ஆசிரியர் கூறுதலால் இயற்றமிழ்ப் பாடல் களுக்கு உரியனவாகச் சொல்லப்பட்ட பொருள்களே பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுளாகிய இவ்விசைப் பாடல்களுக்கும் உரியன என்பதும், பாட்டு எனக் கூறாது பாட்டின் இயல் என்றமையால் இயற்றமிழ்ப் பாடல்களுக்கு உரியனவாக முற் கூறப்பட்ட நோக்கு முதலிய செய்யுளுறுப்புக்கள் சிலவற்றை இவ் விசைப்பாடல்கள் பெற்றே வருதல் வேண்டுமென்னும் நியதியில்லை யென்பதும் நன்கு விளங்கும். மேற் சொல்லப்பட்ட பண்ணத்தி பிசியோடு ஒத்த இயல் பினது என்பர் தொல்காப்பியர். பிசி யென்பது இரண்டடி யளவின்கண்ணே வருவதாதலின் இதுவும் இரண்டடியான் வரு மென்று கொள்ளப்படும் எனவும், கொன்றை வேய்ந்த செல்வ னடியை என்று மேத்தித் தொழுவோம் யாமே என்பது, பிசியோடு ஒத்த அளவினதாகிப் பாலையா ழென்னும் பண்ணிற்கு இலக்கணப் பாட்டாகி வந்தமையிற் பண்ணத்தி யாயிற்று எனவும் இளம்பூரண அடிகள் கூறிய விளக்கம் இங்கு நோக்கத் தகுவதாகும். பண்ணத்தியென்னும் இவ் விசைப்பாடல்களின் அடியளவு பன்னிரண்டடி பேரெல்லை யென்பதும், இவற்றிலுள்ள அடிகள் நாற்சீர் கொண்டது அடியெனப்படும் என்னும் அவ்வரையறை யின் இகந்து நாற்சீரின்மிக்கும் குறைந்தும் வரினும் நீக்கப்படா என்பதும், அடிநிமிர் கிளவி யீரா றாகும் அடியிகந்து வரினுங் கடிவரையின்றே (செய்-175) எனவரும் சூத்திரத்தால் தெளிவாக உணர்த்தப்பட்டன. இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது, நாற் சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவும் கொள்ளப்படும் எனப் பொருள் கொண்டு, இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லா அடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறு எனவும். பன்னிரண்டாவன: ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி எனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடும் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம் எனவும், இவையெல்லாம் உரையிற் கோடல் என்பதனாலும் பிறநூல் முடிந்தது தானுடம்படுதல் என்பதனாலும் கொள்க எனவும் விளக்கங் கூறுவர் இளம்பூரணர். அவ்வாசிரியர், அடியிகந்து (நாற்சீரடியின்மிக்கு) வருவனவாகக் கூறிய பாவினங்கள் பன்னிரண்டனுள், வெள்ளொத் தாழிசை, கலித்தாழிசை என்பன பெரும்பாலும் நாற்சீரடியால் இயன்று வருதலாலும், கலிவிருத்தம் யாண்டும் நாற்சீரடியேயாய் வருதலாலும், அவை அவர் கருத்துப்படி அடி நிமிர்கிளவி யெனப்படா ஆதலாலும், நான்கு பாவினோடும் தாழிசை துறை, விருத்தம் என்பவற்றை உறழ்ந்து காணப் பாவினம் பன்னிரண்டாம் என்ற குறிப்பு இச் சூத்திரத்தில் இடம் பெறாமையாலும், இம் மூன்றனுள் தாழிசையென்பதொன்றே கலியுறுப்புக்களுள் ஒன்றாக வைத்துரைக்கப்படுவதன்றித் துறை, விருத்தம் என்பன செய்யுள் வகையாகத் தொல்காப்பியத்தில் குறிக்கப்படாமையாலும் இச்சூத்திர வுரையுள் இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டிய பாவினப்பாகுபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. 13. திணை:- செய்யுளிற் கூறப்படும் ஒழுகலாறுகளை அகத்திணையும் புறத்திணையும் என இவ்வாறு பாகுபடுத்து அறிதற்குரிய கருவி திணை யெனப்படும். கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்னும் ஏழு திணைகளும் முறையே மேற்சொல்லப் பட்டன என்பர் ஆசிரியர். முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண் பாட்டினைக் கைக்கிளைப் புறமெனவும், வஞ்சியை முல்லைப்புற மெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற்புற மெனவும், காஞ்சியைப் பெருந்திணைப் புறமெனவும் ஓதியநெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகியடங்குமாயின என்பர் இளம்பூரணர். 14. கைகோள்:- அவ்வத் திணையொழுக்க விகற்பமாகிய களவும் கற்பும் என்னும் இப்பாகுபாடுகளை அறியச் செய்தல் கைகோள் எனப்படும். காமப்புணர்ச்சி (இயற்கைப் புணர்ச்சி), இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் எனச் சொல்லப்பட்ட அந் நான்கு வகையாலும் அவற்றைச் சார்ந்து வருகிற கிளவியாலும் வருவன களவென்னும் கைகோளாகும். காமப் புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந் தலைப்பாடு நிகழா தெனவும், அவ் இடந்தலைப்பாடு பிற்பயத்தலரிதென்பது அவள் ஆயத்தொடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன், பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலும், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானாகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறை முடித்துக் கோடலும் என இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கம் என்பர் பேராசிரியர். மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு வெளிப்படு தாலும், தலைவியின் சுற்றத்தார் கொடுப்பக் கரணவகையாற் பெறுதலும் என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் தப்பாது மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவற்றோடு கூடிவருவது கற்பென்னும் கைகோளாகும். மறைவெளிப்படுதலும் தமரிற்பெறுதலும் என முற்கூறிய இரண்டும் ஆசான் முதலியோர் செய்வித்தலின், பிறரொடு பட்ட ஒழுகலாறெனப்படும், மலிவு முதலிய ஐந்தும் கைகோளின்பாற் சார்த்தித் தலைவனும் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். மலிதல் என்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாய வற்றால் மகிழ்தல். புலவி என்பது, புணர்ச்சியால் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங் கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழி யாலன்றிக் கூற்றுமொழியால் உரைப்பது. உணர்வு என்பது, அங்ஙனம் ஊடல் நிகழ்ந்தவழி அதற்கு ஏதுவாகிய பொருளின்மை உணர்வித்தல், இல்லாததனை உண்டோவென ஐயுற்ற மயக்கந்தீர உணர்த்துதலால் உணர்த்துதல் எனவும், அதனை உணர்தலால் உணர்வு எனவும் இது வழங்கப்படும். புலவியாயின் குளிர்ப்பக்கூறலும் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின் அதற்கு உணர்த்துதல் வேண்டா என்பர். பிரிவு என்பது, இவை நான்கினொடும் வேறுபடுதலின் பிற்கூறினார். இதனை ஊடலொடு வைக்கவே ஊடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற்படுமென்பதும் கொள்ளப்படும். துனித்தல் என்பது வெறுத்தல், அது, காட்டக்காணாது கரந்து மாறு மியல்பினதென்பர். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும். மேற் சொல்லப்பட்ட களவு கற்பு என்னும் இருவகையே கைகோளாவன என்பர் ஆசிரியர். எனவே அகத்திற்குப் புறனாயினும், புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறுவகைப் படக் கூறப்படா, பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாகி அடங்கும் என்பர் பேராசிரியர். 15. கூற்று:- செய்யுள் கேட்டாரை இது கூறுகின்றார் இன்னார் என உணர்வித்தல் கூற்று எனப்படும். இதன் கூறுபாடு இவ்வியல் 181-முதல் 187-முடியவுள்ள சூத்திரங்களால் விரித்துரைக்கப் பெறுகின்றது. பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி எனச் சொல்லப்பட்ட கலந்தொழுகும் மரபினையுடைய அறுவகையோரும் களவென்னும் ஒழுகலாற்றிற் கூற்று நிகழ்த்தற்கு உரியராவர். நன்றுந்தீதும் ஆராய்ந்து தலைமகற்கு உறுதிகூறுவான் பார்ப்பான் எனவும், அவ்வாறன்றித் தலைமகன்வழி ஒழுகுவான் பாங்கன் எனவும் கூறுவர் பேராசிரியர். பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் என்னும் அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பான் முதலிய அறுவரும் ஆக இப்பன்னிருவரும் கற்பின்கண் கூற்று நிகர்த்தற்கு உரியவராவர். தலைமகள் வாழும் ஒரே ஊரில் உள்ளவர்கள், அவளது அயல்மனையில் உள்ளார், சேரியில் உள்ளார், அவளது நோயின் கூறுபாட்டினைக் குறிப்பினால் அறிவோர், தந்தை, தமையன் ஆகிய இன்னோர் கூற்றாகப் பிறர் கொண்டு கூறினல்லது இவர் தாமே கூறினாராகச் செய்யுள் செய்தல் இல்லை. தலைவனொடும் தலைவியொடும் (அவளைப் பெற்ற) நற்றாய் கூறியதாகக் கூறும் வழக்கமில்லை. எனவே நற்றாய் ஏனையோரை நோக்கியே கூறுவாள் என்பது பெறப்படும். நற்றாய், செவிலி, தோழி என்னும் இவர்களோடும் தலைவ னொடும் தலைவியொடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியலிற்கண்ட வழக்கமாகும். தலைவியை உடன் கொண்டுபோகும் இடைச் சுரத்தின் கண்ணே தலைமகன் உலகியல் நெறியை உளங்கொண்டு தனது ஆற்றல் தோன்ற ஆணை மொழியினை எடுத்துரைத்தற்கும் உரியன் என்பர் ஆசிரியர். எனவே, மெல்லிய காமம் நிகழுமிடத்து வன்மொழியாகிய ஆணையினைத் தலைமகளிடம் கூறுதல் பொருந்தாதாயினும் உலகியல் கருதி அவ்விடத்துக் கூறுதல் தவறாகாது என அறிவுறுத்தாராயிற்று. தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைப் பதின்மரும் தலைமகனும் தலைமகளுமாகிய இருவரோடும் மேற்கூறிப் போந்த மரபினால் இடமும் காலமும் கருதி உரை நிகழ்த்துதற்கு உரியராவர். 16. கேட்போர்:- இன்னார்க்குச் சொல்லுகின்றது இது எனத் தெரிவித்தல் கேட்போர் என்பதாம். தலைவியும் தலைவனும் கூறக் கேட்போர் மேற் சொல்லப் பட்ட பதின்மருமே.102 பார்ப்பார், அறிவர் என்னும் இருவர் கூற்றும் எல்லோரும் கேட்கப் பெறுவர்.103 பரத்தையும் வாயில் களும் என்னும் ஈரிடத்தும் நிகழும் கூற்றுக்கள், தலைமகள் கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்கால் பயன்படுவன அல்ல.104 வாயில்கள் தம்முள் உசாவுமிடத்துத் தலைமகளை நோக்காது தமக்குள்ளும் உசாவுதலுரித்து105 ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், தனிமை யுணர்வை மிகுதிப்படுத்தும் பொழுது, பறவை, நெஞ்சம் எனச் சொல்லப்பட்ட பதினொன்றும் ஒன்றைக் கூறுதலும் கேட்டலும் இல்லாத அவை போல்வன பிறவும் தாம் கருதிய நெறியினால் ஒன்றைச் சொல்லுவனபோலவும் கேட்பன போலவும் சொல்லி அமையப்பெறும் என்பர் அறிஞர். 17. இடம்:- ஒரு செய்யுளைக் கேட்டால் இதன்கண் கூறப்படும் பொருள் நிகழ்ச்சி இன்ன இடத்து நிகழ்ந்தது என அறிதற்கு ஏதுவாகியதோர் உறுப்பு இடம் எனப்படும். ஒரு நெறிப்பட்டு ஓரியல்பாக முடியுங் கரும நிகழ்ச்சி இடமெனப்படும் என்பர் தொல்காப்பியர். ஒரு நெறிப்படுத லாவது, அகமாயினும் புறமாயினும் ஒரு பொருள்மேல் வருதல். ஓரியல் முடிதலாவது, அகத்தின்கண் களவு, கற்பு என்பவற்றுள் ஒன்றைப்பற்றியோ அல்லது அவற்றின் வரியாகிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு முதலியவற்றுள் ஒன்றைப் பற்றியோ, புறத்தின்கண் நிரைகோடல், மீட்டல், மேற்சேறல் முதலியவற்றுள் ஒன்றைப்பற்றியோ வருதல். கரும நிகழ்ச்சியாவது, மேற்கூறிய அகமும் புறமுமாகிய பொருட் பகுதிகளுள் யாதாயினும் ஒன்றைப் பற்றி நிகழும் வினை நிகழ்ச்சி. இது வினைசெய்யிடம் எனப்படும். காடுறையுலகம் முதலாக மேற்சொல்லப்பட்ட நிலப்பகுதிகள், முன்னர்த் திணையென அடக்கப்பட்டன வாதலால், ஈண்டு இடமென்றது வினை செய்யிடத்தையே யென்பது நன்குபுலனாம். கரும நிகழ்ச்சியென்றதனால் அந் நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய தன்மை, முன்னிலை, படர்க்கை யென்பனவும் இடமெனக் கொள்ளப்படும். 18. காலம்:- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஆராய்ந்துணரு மாறு செய்யுளுள் தோன்றச் செய்யின் அதுகாலம் என்னும் உறுப்பாகும். பெரும் பொழுதும் சிறு பொழுதும் முதல், கரு, உரிப் பொருள் என்பவற்றோடு கூடித் திணையென அடங்குமாதலின் அவற்றின் வேறாகிய பொருள் நிகழ்ச்சியை ஈண்டுக் காலம் என்றார். 19. பயன்:- சொல்லிய சொல்லாற் பிறிதொன்று பயப்பச் செய்தல் பயன் என்னும் உறுப்பாகும். யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி இதனாற்போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணரவைத்தல் பயன் எனப்படும் என்பர் ஆசிரியர். இவ்வகையினால் யாதானுமொரு செய்யுளாயினும் பயன் படக் கூறல் வேண்டும் என்பது கருதிப் பயன் என ஒரு பொருள் கூறினார் என்பர் இளம்பூரணர். 20. மெய்ப்பாடு:- யாதானும் ஒன்றைக் கூறியவழி அதனை ஆராய்ந்துணர்தலின்றிச் செய்யுளிடத்து வந்து அப் பொருள் தானே வெளிப்பட்டுத் தோன்றினாற் போன்று கண்ணீரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்ப்பாடு தோன்றுமாற்றால் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாகும் அது, நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டு நெறியினையும் பிழையாதாகி, மேல் மெய்ப்பாட்டியலிற் சொல்லப்பட்ட இலக்கணத்தை யுடையதாம் என்பர் ஆசிரியர். கவிப்பொருள் உணர்ந்தால், அதனானே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடு என்றான். அது, தேவருலகம் கூறினும் அதனைக்கண்டாங்கு அறியச்செய்தல் செய்யுளுறுப்பாம் ....neh¡FW¥ghšஉணர்ந்jபொரு£பிழம்பினை¡காட்டுவJமெய்ப்பாடென்பJஇத‹கருத்து. இக்கருத்திற் கவி கண்காட்டும் எனவுஞ் சொல்லுப எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் அறிந்து மகிழத்தக்கதாகும். 21. எச்சம்:- கூற்றினாலும் குறிப்பினாலும் எஞ்சி நின்று பின் கொணர்ந்து முடிக்கப்படும் இலக்கணத்தொடு பொருந்தியது எச்சமென்னும் உறுப்பாகும். எனவே கூற்றெச்சம், குறிப்பெச்சம் என எச்சம் இரு வகைப்படும் என்பதாயிற்று. செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானை கழறொடிச் சேஎய் குன்றம் கருதிப் பூவின் குலைக்காந் தட்டே (குறுந்-1) எனச் செய்யுள் முடிந்தவழியும், இவற்றான் யாம் குறையுடையே மல்லேம் என்று தலைவற்குச் சொன்னாளேல் அது கூற்றெச் சமாம்; என்னை? அவ்வாறு கூறவும் சிதைந்ததின்மையின். தலை மகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? அது காண்பாயாகிற் காண் எனத் தலைமகளை இடத்துய்த்து நீங்கிய குறிப்பினளாகி அதுதான் கூறாளாகலின். எனப் பேராசிரியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் இவண் நோக்கத் தக்கனவாகும். 22. முன்னம்:- செய்யுளைக் கேட்போன், இவ்விடத்துத் தோன்றிய இம்மொழியைச் சொல்லுதற்குரி யாரும் கேட்டற் குரியாரும் இன்னார் என்று அறியுமாற்றால் அங்ஙனம் அறிதற்கு ஓர் இடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்ற உரை செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் என்ற உறுப்பாம் என்பர் ஆசிரியர். யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலித்-89) என்றக்கால், இது கூறுகின்றாள் தலைவியென்பதும் இங்ஙனம் கூறப்பட்டான் தலைவன் என்பதும் குறிப்பினால் அறிய வைத்தலின் இது முன்னம் என்ற உறுப்பாயிற்று. 23. பொருள்வகை:- பொருள் என்றது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மையை. இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும் எனப்பட்ட இவை வழுவாத நெறியால் இத்திணைக்கு இது பொருள் என ஓதிய உரிப்பொருளன்றி எல்லா உரிப் பொருட்கும் ஏற்பப் (புலவனால் புதுவதாகத் தோற்றிக் கொள்ளப்பட்டுப்) பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகை யென்பர் ஆசிரியர். கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டிக் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறல்நசைஇச் சென்றவென் னெஞ்சே (அகம்-9) என்றாற் போன்று, செய்யுள்செய்து புலவன் தன் புலமைத் திறத்தால் தானே வகுத்துரைக்கும் பொருட்கூறு அனைத்தும் பொருள்வகை யென்னும் இவ் வுறுப்பின் பாற்பட்டு அடங்கும் என்பர் பேராசிரியர். 24. துறை:- முதலும் கருவும் முறைபிறழ வந்தாலும் இஃது இதன் பாற்படும் என்று ஒரு துறைப்பட வகுத்தற்கு ஏதுவாகிய தோர் கருவி அச் செய்யுட்கு உளதாக அமைத்தல் துறையெனப்படும். ஐவகை நிலத்திற்கும் உரிய வெனப்படும் பல்வேறு வகைப் பட்ட மக்களும் விலங்கும் பறவை முதலிய பிறவும் தம்மில் மயங்கிவரினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமல் ஒரு துறையின் பாற்படச் செய்தல் துறையென்னும் உறுப்பாம் என்பர் ஆசிரியர். 25. மாட்டு:- செய்யுளிடத்தே அகன்றும் அணுகியும் கிடந்த பொருள்களைக் கொண்டுவந்து ஒரு தொடராகக் கூட்டி முடித்தல் மாட்டெனப்படும். மாட்டுதலாவது, தனித்து நிற்பதனைப் கொண்டுவந்து கூட்டி முடித்தல். செய்யுளிடத்தே கூறப்படும் பொருள் சேய்மைக் கண்ணே கிடப்பினும் அன்றி அணுகிய நிலையில் நிற்பினும் ஒரு தொடர்புபட அமைந்து பொருள் முடியும்படி கொண்டுவந்து இயைத்துணர்த்துதல் மாட்டென்னும் உறுப்பென்று சொல்வர் செய்யுள் வழக்குணர்ந்த அறிஞர். இது, பலபொருட் டொடராற் பலவடியான் வரும் ஒரு செய்யுட் கண்ணும், பல செய்யுளைப் பல பொருட்டொடரால் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும் எனவும், அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்த சொல் தொடர்ந்து பொருள் தருவதோர் இன்பம் நோக்கிச் சான்றோர் இம் மாட்டிலக்கண மேயாண்டும் பெரும்பான்மை வரச் செய்யுள் செய்தலின், பின் தொடர்நிலைச் செய்யுள் செய்தவர்களும் இம் மாட்டிலக்கணமே யாண்டும் வரச் செய்யுள் செய்தார் எனவும் கூறுவர் நச்சினார்க் கினியர் மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் பொருள் தொடர்ந்தவாறே அமைய வெளிப்படச் செய்யுள் செய்தலும் அமையும் என்பர் ஆசிரியர். எனவே, மாட்டும் எச்சமும் ஆகிய இவ்வுறுப்புக்கள் மேற்கூறியவை போன்று அத்துணை இன்றியமையாதன அல்ல என்பது பெறப்படும். 26. வண்ணம்:- பாவின் கண்ணே நிகழும் ஒசை விகற்ப மாகிய சந்தவேறுபாடு வண்ணம் எனப்படும். வண்ணமாவன, பாஅ வண்ணம் முதல் முடுகு வண்ணம் ஈறாக இருபது வகைப்படும் என்பர். அவற்றுள், பாஅ வண்ணம் என்பது, சொற்சீரடியினை யுடையதாகி நூலின்கண் பயின்றுவரும் நூற்பாவினது ஓசை விகற்பமாகும். தாஅ வண்ணம் என்பது எதுகை இடையிட்டமையத் தொடுக்கப்படுவதாம். வல்லெழுத்துப் பயின்று வருவது, வல்லிசை வண்ணம் எனப்படும். மெல்லெழுத்துப் பயின்று வருவது மெல்லிசை வண்ணம். இடையெழுத்துப் பயின்று வருவது இயைபு வண்ணமாகும். அளபெடை பயின்று வருவது அளபெடை வண்ணமாகும். நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் எனப்படும். குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணமாம். நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விரவி வருவது சித்திர வண்ணம் எனப்படும். ஆய்தம் பயின்று வருவது நலிபு வண்ணமாகும். அகப்பாட்டு வண்ணம் என்பது, முடியாத தன்மையின் முடிந்ததன் மேலது.106 புறப்பாட்டு வண்ணமாவது, முடிந்ததுபோன்று முடியாதாகி வருவது107. ஒழுகிய ஓசையால் இயன்றது ஒழுகு வண்ணமெனப்படும். நீங்கின தொடையாகி அமைந்தது ஒரூஉ வண்ணமாகும்.108 எண் பயின்று வருவது எண்ணு வண்ணமாகும். அறுத்தறுத்தொழுகும்109 ஓசையினதாய் வருவது அகைப்பு வண்ணம் எனப்படும். தூங்கலோசைத்தாய் வருவது தூங்கல் வண்ணமெனப்படும். சொல்லிய சொல்லினாலே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது எந்தல் வண்ணமாகும்.110 அராகந்தொடுப்பது உருட்டு வண்ண மெனப்படும்.111 நாற்சீரடியின் மிக்கு ஓடி உருட்டு வண்ணத்தை யொத்து அராகந்தொடுத்து வருவது முடுகுவண்ண மெனப்படும். வண்ணங்களாவன இவையேயாம்112 என்பர் தொல்காப்பியர். குறில், நெடில், வல்லினம், மெல்லினம் இடையினம் என நிறுத்து, அகவல், ஒழுகிசை, வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனோடும் உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்பனவற்றோடு உறழ நூறாம் அவற்றைக் குறி லகவற்றூங்கிசை வண்ணம் நெடி லகவற் றூங்கிசை வண்ணம் என ஒருசார் ஆசிரியர் பெயரிட்டுவழங்குப என இளம்பூரணர் கூறும் விளக்கம் பிற்கால யாப்பிலக்கண மரபை அடியொற்றியமைந்ததாகும்.113 நான்கு பாவினோடும் இவற்றை வைத்து உறழவும், அவை மயங்கிய பொதுப்பா இரண்டினோடு உறழவும் நூற்றிருப தாகலும் உயிர்மெய் வருக்கம் எல்லாவற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிய பிறவாற்றாற் சில பெயர் நிறீஇ அவற்றால் உறழ்ந்து பெருக்க வரையறை யிலவாகலும் உடையவாயினும் இவ் இருபது வகையானல்லது சந்தவேற்றுமை விளங்காதென்பது கருத்து எனப் பேராசிரியர் கூறிய விளக்கமே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தினை நன்கு புலப்படுத்து வதாகும். எண்வகை வனப்பு:- செய்யுளுறுப்புக்கள் பலவும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகினை ஈண்டு வனப்பு என்றார். அஃது அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எண்வகைப்படும். செய்யுட்கள் பலவுந் திரண்டவழி அவற்றின்கண் அமைந்த சொற்பொருள் அழகினை இவ் எட்டுறுப்பும் பற்றி வகுத்துணர்த்துதல் மரபாதலின் இவை வனப்பெனப்பட்டன. மாத்திரை முதல் வண்ணம் ஈறாக முற்கூறப்பட்ட இருபத்தாறும் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் இன்றியமையாத உறுப்புக்களாகும். அம்மை முதலிய எட்டும் செய்யுட்கள் பலவாய்த் தொடர்ந்து பெருகிய தொடர்நிலைச் செய்யுட்கே பெரும்பான்மையும் வருவன சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வழகு கொள்ள வேண்டும். இங்ஙனம் வகுப்பவே, தனிநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யுள் இரண்டாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். 27. அம்மை:- சிலவாய் மெல்லியவாய் சொற்களால் தொடுக்கப்பட்ட அடிநிமிர்வு இல்லாத செய்யுள் அம்மை என்னும் வனப்புடையதாகும். சின்மென் மொழியாற் றாயபனுவலோ டம்மை தானே அடிநிமிர் பின்றே என்றார் தொல்காப்பியனார். அம்மை என்பது குணப்பெயர் அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையென்றாயிற்று என்பர் பேராசிரியர். அடிநிமிராமை-ஆறடியின் மேற்படாமை. சிலவாதல் சுருங்கிய எண்ணினவாகிய சில சொற்களால் இயன்று வருதல். மெல்லியவாதல், சிலவாகிய அச்சொற்களும் பல எழுத்துக்களாலியன்று விரிந்தனவாகாமல் சிலவெழுத்துக்களாலமைந்து சுருங்கி நிற்றல். அறம், பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணங் கூறுவன போன்றும் அன்றாகியும் இடையிட்டு நிற்கும் இயல்பினது என்பார், தாயபனுவல் என்றார். தாவுதல்-இடையிடுதல். அம்மை என்னும் இவ்வனப்பிற்கு, அறிவினா னாகுவ துண்டோ பிறதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை (315) எனத் திருக்குறளை உதாரணமாகக் காட்டினார் இளம்பூரணர் அங்ஙனம் வந்தது பதினெண்கீழ்க்கணக்கு. அதனுள் இரண்டடி யாயினும் ஐந்தடியாயினும் சிறுபான்மை ஆறடியாயினும் ஒரோ செய்யுள் வந்தவாறும் அவை சின்மென் மொழியால் வந்தவாறும் அறம் பொருளின்பத்திலக்கணங் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார்நாற்பது, களவழி நாற்பது முதலியன வந்தவாறும் காண்க என நச்சினார்க்கினியர் விளக்குதலால், நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் அம்மையென்னும் வனப்பமைந்த இலக்கியங்க ளென்பது நன்கு புலனாம். 28. அழகு:- செய்யுளுட் பயின்றுவரும் சிறந்தசொற் களால் ஓசை யினிதாகச் சீர்பெற யாக்கப்படும் அவ்வகைச் செய்யுள் அழகெனப்படும். இவ் விலக்கணத்தால் அமைந்தவை, அகநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களாகும். 29. தொன்மை:- உரையொடு புணர்ந்த பழமை பொருளாக வருவது தொன்மை யென்னும் வனப்பாகும். உரையொடு புணர்தல் நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வழங்கி வருதல்.114 பழமை-பழங்கதை. பழமைத்தாகிய பொருள்மேல் வருவன, இராம சரிதை பாண்டவ சரிதை முதலாயினவற்றின்மேல் வருஞ் செய்யுள் என்பர் இளம்பூரணர். இனி, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையொடு புணர்ந்த என்ற தொடர்க்கு உரை நடையுடன் விரவிய எனப் பொருள்கொண்டு, பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல அமைந்த உரையிடையிட்ட செய்யுட்களைக் தொன்மை என்னும் வனப்புக்கு உதாரணமாகக் குறித்துள்ளார்கள். 30. தோல்:- இழுமென்னும் ஓசையையுடைய மெல் லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடி நிமிர்ந்துவரத் தொடுப்பினும் தோல் என்னுஞ் செய்யுளாம். எனவே, தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்ப தாயிற்று. பாயிரும் பரப்பகம் என்ற முதற் குறிப்புடைய செய்யுள்115 இழுமென்மொழியால் விழுமியது நுவன்றது எனவும், திருமழைதலைஇய விருணிறவிசும்பின் என்னும் கூத்தராற்றுப் படை116 பரந்த மொழியால் அடி நிமிர்ந்து வந்தது எனவும் உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது எனப்பட்ட கொச்சகத்தால் இயன்ற சீவக சிந்தாமணி போன்ற தொடர் நிலைச் செய்யுட்கள் இழுமென்மொழியால் விழுமியது நுவன்ற தோல் என்னும் வகையைச் சார்ந்தன எனவும், ஆசிரியப்பாட்டால் ஒருகதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் பரந்த மொழியால் அடி நிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வகையின்பாற் படுவன எனவும் நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் கூறிய விளக்கம் இங்கு நோக்கற்பாலனவாம். செய்யுளியலின்கண்ணே ஆசிரியர் பாவும் இனமும் என நான்கினீக்கிய பாவினைத் தொகை வரையறையான் இரண்டென அடக்கியும், விரிவரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கண மென்று கூறியவர், இழுமென் மொழியான் விழுமியது நுவனினும், பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகினும் (செய்-230) என்பதனால், குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் விழுமியபொருள் பயப்ப ஒருகதைமேற் கொச்சகத் தானும் ஆசிரியத்தானும் வெண்பா வெண் கலிப்பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத்தொடர் நிலைச் செய்யுள் அங்ஙனங் கூறிய தொடர்நிலை எனச் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே அடியார்க்கு நல்லார் கூறியவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், தொல்காப்பியனார் கூறிய தோல் என்னும் வனப்பினது இருவகையியல்பும் ஒருசேரப் பெற்றது சிலப்பதிகாரம் என்பது நன்கு புலனாம். 31. விருந்து:- விருந்தென்பன்பது, புதிதாகச் சொன்ன யாப்பின் மேலதாம். புதிதாகப் புனைதலாவது, ஒருவன் சொன்ன நிழல்வழி யன்றித் தானே தோற்றுவித்தல் என்பர் இளம்பூரணர். புதுவதுகிளந்த யாப்பின்மேற்று என்றது - புதிதாகத் தாம் வேண்டிய வாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப என விளக்குவர் பேராசிரியர். முற்கூறிய தோல் என்பது, பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், ஈண்டுக் கூறிய விருந்தென்பது பழையதும் புதியது மாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர் நிலைச் செய்யுள் செய்வதென்றும் இவ்விரண்டற்கு முள்ள வேறுபாட்டினை விளக்குவர் நச்சினார்க்கினியர். 32. இயைபு:- ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை இறுதியாகக் கொண்டு முடியுஞ்செய்யுள் இயைபு எனப்படும். இயைபு என்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்துவரும் என்பது கருத்து. சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்குவேளிராற் செய்யப் பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன அவை னகார வீற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. பரந்தமொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்பன பெரும்பான்மையும் உயிரீற்றவாய் வருதலும் இயைபு ஈண்டுக் கூறிய மெய்யீற்றதாய் வருதலும் தம்முள் வேற்றுமை. சொற்றொடர் என்பன அந்தாதி. எனப்படுவது என்றதனால் இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற்றொடருங் கொள்க என்பர் நச்சினார்க் கினியர். 33. புலன்:- பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக் குறித்த பொருள் இது வென ஆராய வேண்டாமல் தானே விளங்கத் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம். 34. இழைபு:- ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் குறளடி முதல்ஐந்தடியினையும் ஒப்பித்து ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்வது இழைபு என்னும் வனப்பாகும் என்பர் ஆசிரியர். நாலெழுத்து முதல் இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலத்தின் ஐவகையடியும் முறையானே வரத் தொடுக்கப்பட்ட போந்து போந்து என்ற முதற் குறிப்புடைய ஆசிரியப்பாவினை இழைபென்னும் வனப்புக்கு இலக்கியமாகக் காட்டினர் இளம்பூரணர். இழைபாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட் டாகிய செந்துறை மார்க்கத்தன எனவும், இவை தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும் என்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி எனவும் பேராசிரியர் கூறிய விளக்கம் கூர்ந்து நோக்கத் தக்கதாகும். செய்யுளிடத்துப் பொருள் பெற ஆராய்ந்து நுண்ணிதின் வகுத்துரைக்கப்பட்ட இலக்கணத்தின் வழுவியன போன்று தோன்றுவன உளவாயின் அவற்றையும் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு மாறுபடாமல் முடித்துக்கொள்ளுதல் தெளிந்த அறிஞர்களது கடனாகும் என ஆசிரியர் இவ்வியலுக்குப் புறனடை கூறி முடித்துள்ளார். இதனைக்கூர்ந்து நோக்குங்கால் இவ்வியலிற் கூறப்பட்டு உள்ள செய்யுளிலக்கண நுட்பங்கள் காலந்தோறும் புதியனவாகத் தோன்றக் கூடிய செய்யுள்வகை யனைத்திற்கும் அடிப்படையா யமையும் வண்ணம் தொல்காப்பியனாரால் நுண்ணிதின் ஆராய்ந்து வகுத்துணர்த்தப்பட்டனவாதல் நன்குபுலனாம். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 322-403 வெள்ளைவாரணார் அடிக்குறிப்புகள் 1. எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பப்பட்டிலேம் என்றும் வந்தார் (இறையனார் களவியல் பாயிரவுரைப் பகுதி) என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். 2. மா, புலி, பாம்பு, களிறு என்பவற்றை முதலிலும்; சேர், வரு, போகு, வழங்கு என்பவற்றை இடையிலும்; வாய், சுரம், காடு, கடறு என்பவற்றை இறுதியிலும் வைத்து உறழ்ந்து அறுபத்து நான்கு மூவசைச் சீர்க்கு வாய்ப்பாடு கூறுதலும் உண்டு. 3. ஈண்டு உரியசை மயக்கத்தினையே ஆசிரியவுரிச்சீரென்றார் என்பர் பேராசிரியர். 4. இன்பா நேரடி என்றது வெண்பாவினது நேரடியை என இளம்பூரணரும், ஆசிரிய அடியாகிய கட்டளையடியினை எனப் பேராசிரியரும் கூறுவர். வெண்பாவின்கண் ஆசிரியவுரிச் சீரேயன்றிப் பிறசீர்களும் மயங்குதல் கூடாதென்பது மரபாதலால் ஈண்டு இன்பா நேரடி என்றது ஆசிரிய அடியினை எனக் கொள்ளுதலே பொருத்த முடையதாகும் வெண்சீரும் ஆசிரியவுரிச் சீரும் கட்டளை யாசிரியப்பாவில் வரும் அளவடிக்குப் பொருந்தி நிற்றல் இல்லை. எனவே நீடுகொடி. உரறுபுலி என முன்னிரை யீற்ற (நிரையீற்று ஆசிரியவுரிச்சீர்) இரண்டும் உறழும் என்பது ஈண்டுக் கொள்க வென்றும் கட்டளையடி இங்ஙனம் வருமெனவே சீர்வகை யடிக்கு வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் பொருந்த வருமென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். கட்டளையடியாவது எழுத்தெண்ணிச் சீர்வகுத்துரைக்கப்படும் அடி. எழுத்தெண்ணாது சீர் வகையாற் கொள்ளப்படும் அடி சீர் வகையடி எனப்படும். 5. தளை என்று ஓதுவன வெல்லாம் கட்டளையடியே நோக்கும் என்பர் பேராசிரியர். 6. நேரீற்றியற் சீராவன தேமா, புளிமா என்னும் இரண்டும். 7. இறுதற்றொழில்பட நில்லா எனவே தூங்கலோசைப்பட வஞ்சிப்பாவின் முதற்கண் வாராஎனக் கருத்துரைப்பர் பேராசிரியர் நேரீற்றியற்சீர் வஞ்சிப்பாவின் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யென்பது, மண்டிணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும் (புறம்-2) என ஓரே செய்யுட்கண் பல வந்தமையால் இனிது புலனாம். இரு சீரான் வருமியல்புடைய நேர்நிலை வஞ்சிப் பகுதிக்கே இவ்வரையறை கொள்ளப்படுமென்பதும்; முச்சீரான் வருமியல் புடைய வியநிலை வஞ்சிக்கு இவ்வரையறை இன்றென்பதும் பேராசிரியர் கருத்தாகும். 8. முன்னர் வெண்சீரினை இன்பா நேரடிக்கு ஒருங்கு நிலையில், (செய்யுளியல்-22) என விலக்கியது கட்டளையடிக்கென்பதும், இங்கு (செய்யுளியல்-29) வெண்சீர் வருமென்றது கட்டளையடிக்கு அன்றென்பதும் பேராசிரியர் கருத்தாகும். 9. நேரடியை அளவடியென வழங்குவர் உரையாசிரியர். 10. மக்களுள் தீரக் குறியானைக் குறளனென்றும், அவனின் நெடியானைக் சிந்தனென்றும், ஒப்பமைந்தானை அளவிற் பட்டானென்றும், அவனின் நெடியானை நெடியானென்றும், அவனின் நெடியானைக் கழியநெடியானென்றுஞ் சொல்லுப. அவைபோல் இப்பெயர்களைக் கொள்க எனக் குறளடி முதலிய இப்பெயர்கள் காரணப் பெயர்களாதலைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். 11. அடிமுதற்கண் பாவினது பொருளைத் தழுவித் தனியே நிற்கும் அசையும் சீரும் கூன் எனப்படும். 12. யாப்பருங்கல விருத்தி (பவானந்தர் பதிப்பு) பக்கம் 430, 431. 13. தொல்-செய்யுள் 36, 40. ஆம் சூத்திரவுரைப் பகுதியில் பேராசிரியர் காட்டிய உதாரணச் செய்யுள். 14. தொல்-செய்யுள் 52-ஆம் சூத்திரம். இதனைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இரண்டு சூத்திரங்களாகப் பிரித்து வேறு பொருள் கூறுவர். 15. தொல்-செய்யுள்-53. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா என்னும் மூவகைப் பாக்களுக்கும் உரிய நாற்சீரடியின்கண்ணேயே ஐவகையடியும் வந்து உறழக் கட்டளை கூறியது கண்ட மாணவன். நாற்சீரடி பெறாத வஞ்சிப்பாவிற்குரிய குறளடி சிந்தடி என்பவற்றிலும் இவ்வாறு எழுத்தளவு பற்றிச் சீர்களை உறழ்ந்து காணுதலுண்டோ என வினவினாற்கு, அவை அங்ஙனம் உறழும் நிலையில் என இச்சூத்திரத்தால் ஐயமகற்றினார் ஆசிரியர் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 16. தொல்-செய்யுள்-54 17. தொல்-செய்யுள்-55 18. தொல்-செய்யுள்-56 19. தொல்-செய்யுள்-57 20. தொல்-செய்யுள்-58 21. செய்யுளியல் 28-ஆம் சூத்திரம். 22. ஆசிரியவீறும் வெண்பாவீறுமாகிக் கலிப்பாவினை முடிக்க வரும் இவ்வுறுப்பினை முறையே ஆசிரியச் சுரிதகம் எனவும் வெள்ளைச் சுரிதகம் எனவும் வழங்குதல் மரபு. 23. நாற் பெயரெல்லை யகத்தவர் என்ற தொடர்க்கு மலை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் நான்கு பெயரையுடைய தமிழ் நாட்டார் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் தமிழகம் சேர சோழ பாண்டியராகிய வண்புகழ் மூவரது ஆட்சிக்கே உட்பட்டிருந்ததென்பது வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு எனவரும் இச்சூத்திரத் தொடரால் நன்கு புலனாமாதலானும், தொண்டை மண்டலம் என்ற பிரிவு சோழருடைய கிளையினராய்த் தொண்டையர் என்பார் தோன்றிய கடைச்சங்க காலத்திலே ஏற்பட்டதாதலானும் இத்தொடர்க்கு நச்சினார்க்கினியர் கொண்ட பொருள் பொருத்தமுடையதெனக் கருதுதற்கில்லை. 24. தமிழ் நாட்டெல்லையுள் அடங்கிய பலவகை உள்நாடுகளிலும் என்பது இத்தொடரில் பொருளாகும். 25. அச்சிடப்பெற்று வழங்கும் பேராசிரியர் உரைப் புத்தகத்தில் இச்சொல் ஆசிரியர் என்றிருத்தல் பிழையென்பதும், இஃது ஆரியர் என்றே இருத்தல் வேண்டுமென்பதும், இனித் தமிழ் நூற்கண் வழுவமைத்தவாறன்றி ஆரியரும் பிற பாடைமாக்களும் வேண்டுமாற்றாற் றமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்றென் றுணர்க எனவரும் நச்சினார்க்கினியர் உரைப் பகுதியால் நன்கு விளங்கும். 26. நிரனிறைத் தொடையாவது, பொருளை நிரலே நிறுத்தி அம்முறையே பயனையுஞ் சேர நிறுத்துதல். 27. இரட்டைத் தொடையாவது, ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது. 28. எதுகையென ஓதினாராயினும் வந்ததுகொண்டு வாராதது முடித்தல் என்பதனால் மோனை இயைபு முரண் அளபெடை என்பனவும் பொழிப்புத் தொடையாமென்று கொள்க என இளம்பூரணரும், இங்ஙனம் எதுகையைப் புலப்பட வைத்து ஏனைய அருத்தா பத்தியாற் கூறியது, எல்லாவற்றினும் எதுகை சிறந்து தோன்றுதல் பற்றி என நச்சினார்க்கினியரும் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கனவாம். 29. செயற்கை வகையானன்றி இயற்கையிலே பூந்துணராற் பொலிந்து தோன்றும் கொன்றையும் கடம்பும் போல நின்றவாறே நின்று இயற்கை வகையால் தொடைப்பொலிவு செய்தல்பற்றிச் செந்தொடை யென்னும் பெயர்த்தாயிற் றென்பது பேராசிரியர் உரையால் நன்கு புலனாம். 30. தொல்-செய்யுளியல்-97, 31. ஐம்பத்தொரு நிலமாவன : நாற்சீரடியுள், ஏழெழுத்து முதல் பதினாறெழுத்து முடியவுள்ள வெள்ளைநிலம் 10; நாலெழுத்து முதல் இருபதெழுத்து முடியவுள்ள ஆசிரிய நிலம் 17, பதின்மூன்றெழுத்து முதல் இருபதெழுத்து முடியக் கலிநிலம் 8; நாலெழுத்து முதல் பதினேழெழுத்து முடிய வஞ்சிநிலம் 10; அளவடியல்லாதனவாகிய இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறு சீரடி, எழுசீரடி, எண்சீரடி ஆகிய சீர்வகையடி நிலங்கள் 6; ஆக 51. (யா-வி-ப-177.) 32. ஆசிரியவடி 261. வெண்பாவடி 232, கலியடி 313, ஆக 625 அடியாம். (யா-வி-ப. 176) 33. மோனை 2, எதுகை 8, முரண் 5, இயைபு 1. பொழிப்பு. ஒரூஉ, செந்தொடை, இரட்டை, நிரனிறை என்பன 5, குறிப்புத் தொடை 1, ஆகத்தொடை 22. (யா-வி-ப 176) 34. அடியிரண்டு இயைந்தவழித் தொடையாமென்பதாகலின் (அவ்வாறு இரண்டாகத் தொடுக்கப்படாது ஓரடியாகவுள்ள) ஐம்பத்தொரு நிலம் களையப்பட்டன. (யா-வி-ப 175.) 35. தொல்காப்பிய வுரையாசிரிய ரெல்லார்க்கும் முற்பட்டவராகிய இளம்பூரண ருரையிலும் அவர் காலத்தை யொட்டியமைந்த யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரத்திற்கு எழு நூற்றொன்பஃது என்ற பாடம் கொள்ளபடவில்லை. எனவே இப்பாடம் பேராசிரியர் கூறுமாறு பழம்பாடம் எனத் துணிந்துரைத்தற்கு இடமில்லை. அன்றியும் எழுநூற்றெட்டு எனச் சொல்ல வேண்டிய தொகையினைத் தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற்றொன் பஃது என இவ்வாறு அரிதும் பெரிதுமாகச் சூத்திரஞ் செய்யவேண்டிய இன்றியாமையும் இல்லை. ஆசிரியர் தொல்காப்பியனார். எழுத்துக்கள் முப்பத்து மூன்று என்று பொருள் பட மூன்று தலையிட்ட முப்பத்திற்றெழுத்தின் எனவும் மொழி முதலாம் எழுத்துக்கள் இருபத்திரண்டு என்ற பொருள்பட இரண்டு தலையிட்ட முதலாகிருபஃது எனவும் புணரியல் முதற் சூத்திரத்திற் கூறிய தொடர்களைக் கூர்ந்து நோக்குங்கால். தொண்டு தலையிட்ட எனவரும் இத்தொடர், ஒன்பது என்னும் எண்ணினை முடியும் எண்ணாகவுடைய என்ற பொருளிலேயே இங்கு ஆளப்பட்டிருத்தல் வேண்டுமென்பதும் பேராசிரியர் கருதுமாறு ஒன்பதுடன் கூட்டிய என்ற பொருளிலோ நச்சினார்க்கினியர் கருதுமாறு ஒன்பதாலே பெருக்கின என்ற பொருளிலோ இங்கு ஆளப்பட்டதன்று என்பதும் நன்கு புலனாம். 36. பண்புற என்றதனால் ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும் ஒழிந்தன விகாரமெனவும் கொள்க என்பர் பேராசிரியர். 37. வாழ்த்தியல் வகையென்றது, தேவரை வாழ்த்துதலும் முனிவரை வாழ்த்துதலும் ஏனையோரை வாழ்த்துதலும் ஆகிய பாகுபாட்டினைக் குறிக்கும் என்பர் இளம்பூரணர். வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலும் என இரு வகையான வாழ்த்து மென்பதூஉம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் என இரு வகைப்படு மென்பதூஉம் எல்லாங் கொள்க. அங்ஙனம் வாழ்த்தப்படும் பொருளாவன :- கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் நாடும் மழையும் என்பன. அவற்றுள் கடவுளை வாழ்த்துஞ் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும். ஒழிந்த பொருள்களை வாழ்த்திய செய்யுள் அறுவகை வாழ்த்தெனப் படுமென்பது, வாழ்த்தியல் என்றதனான், இயற்கை வாழ்த்தெனப்படுவன இவையெனவும், இனி வரும் புறநிலை வாழ்த்து முதலிய ஒரு வகையான் வாழ்த்தின்பாற் சார்த்தி யுணரப்படுதலல்லது இயற்கை வாழ்த்தெனப் படா எனவுங் கொள்க என்பர் பேராசிரியர். 38. தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்துதலின் புறநிலை வாழ்த்தாயிற்று. புதல்வரொடும் சுற்றத்தார் நண்பர் முதலியவர்களோடும் கூட்டி வாழ்த்துதல் மரபென்றற்கு நிற்புறங் காப்ப என ஒருமை கூறிப் பொலிமின் எனப் பன்மை கூறினார். 39. எனவே வெண்பாவிலும் ஆசிரியப்பாவிலும் வரப்பெறும் என்பதாம். 40. வாய்-வாய்மொழி, உறை-மருந்து; வாயுறை யென்பது சொன் மருந்து (சொல்லாகிய மருந்து) எனப் பண்புத் தொகையாம் இனி, வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம். மருந்து போறலின் மருந்தாயிற்று. 41. அவையடக்கியல்-அவையை வாழ்த்துதல். அவையடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக்கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதலாயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது அவையத்தார்.. .ml§Fkh‰whšஅவரை¥புகழ்தšஎன்ப®பேராசிரியர். 42. செவியறிவுறுஉ-செவிக்கண் அறிவுறுத்துவது. இது செவியுறை எனவும் கூறப்படும். செவியுறை-செவி மருந்து; இஃது ஒப்பினாகிய பெயர். செவியறி வுறுத்த வண்ணம் அடங்கி யொழுகுவோர் புகழொடும் நெடுங்காலம் நிலைபெற்று வாழ்தல் இயல்பாதலின் இது வாழ்த்தின் பாற்பட்டது. 43. குட்டம் என்பதற்குத் தரவு எனப் பொருள் கொண்டார் இளம்பூரணர். இருசீரடியும் முச்சீரடியுமாய்க் குறைந்து வருவன வற்றையே குட்டம் என வழங்குதல் ஆசிரியர் கருத்தாமென்பது பின்வரும் சூத்திரங்களால் இனிது விளங்கும். 44. ஈண்டு, எருத்து என்றது தரவை; அஃது எருத்தே கொச்சகம் (செய்.146) என்பதனானுணர்க என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் எருத்து என்னாது எருத்தடி யெனக் கூறுதலால் ஈற்றயலடி எனப் பொருள் கொள்ளுதலே ஏற்புடையதாகும். 45. இவ்வாறு வருவதனை மருட்பா என்ப. இக்கருத்தினானே மேல் மருட்பாவேனை யிருசாரல்லது, தானிது வென்னுந் தன்மையின்றே (செய்-81) என ஓதினாரென்று கொள்க. 46. பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றலாவது, ஆசிரியம், வஞ்சி வெண்பா, கலி, மருட்பா என்றோதப்பட்ட எல்லாப்பாவின் உறுப்பும் உடையதாதல். 47. காமப் பொருள் குறித்து வருவது பரிபாடல் எனவே அறத்தினும் பொருளினும் அத்துணைப் பயின்று வாராதென்பது கருத்தாயிற்று. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே எனச் சிறப்பு விதியோதினமையால், நான்கு பாவினும் பரிபாடல் வெண்பா யாப்பிற்றாதலின், கடவுள் வாழ்த்தாகியும் வரப்பெறும் என்பர் இளம்பூரணர். 48. இக்காலத்து இது மகளிர்க் குரியதாய்க் கொய்சகம் என்று வழங்குவதாயிற்று. 49. முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானும் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது என்பர் இளம்பூரணர். முடுகியலடி யென்பது, முடுகியலோடு விராஅய்த் தொடர்ந் தொன்றாகிய வெண்பாவடி யென்பர் பேராசிரியர். 50. எண்ணெண்பது, ஈரடியாற் பலவாகியும் ஓரடியாற் பலவாகியும் வருதல் என இளம்பூரணரும், எண்ணுதற் பொருள் எனப் பேராசிரியரும் கொள்வர். 51. புகழொடும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். துகளொடும் எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டனர். துகள்-குற்றம். துகளொடு புணர்ந்தது செவியுறைச் செய்யுளாகாமை தெளிக. 52. இங்குச் சிறப்புடைமை கருதித் தாழிசையை முற்கூறினாரேனும், தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம் என இம்முறையால் வருதலே ஒத்தாழிசைக் கலியின் அமைப்பென அறிக. 53. பாட்டின் முகத்துத் தரப்படுதலின் தரவு என்பது பெயராயிற்று. இதனை எருத்து என வழங்குவதும் உண்டு. முகத்திற் படுந்தரவினை முகம் எனவும், இடை நிற்பனவற்றை இடைநிலை யெனவும், இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரிநிலை யெனவும் வழங்குவர் கூத்த நூலார். 54. தாழிசை தரவகப்பட்ட மரபின என்றதனால், தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியின் மிகாது என்பதும், மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும் என்பதும், ஒத்து மூன்றாகும் ஒத்தாழிசையே எனப் பின்னர்க் கூறுதலானும் இப்பாவினை இத்தாழிசைக் கலியெனக் கூறுதலானும் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் என்பதும் கொள்க என்பர் இளம்பூரணர். 55. அடைநிலை யென்பது, முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை அடைந்தன்றி வாராது; அது தனி நின்று சீராதலின் தனிச்சொல் லெனவும்படும். 56. சுரிதகமாவது, உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையான் அடக்கிக் கூறுதலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலின் போக்கு எனவும், அவை யெல்லாம் போதந்து வைத்தலின் வைப்பு எனவும், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம் எனவும் வழங்கப்படும். 57. தரவியலொத்தலாவது சிறுமை நான்கடி பெருமை பன்னிரண்டடியாகி வருதல். 58. அதனகப் படுதலாவது, சிறுமை மூன்றடியானும் இரண்டடியானும் வருதல். 59. எனவே, இஃது அகநிலைச் செய்யுள் ஆகாதென்றான்; இதனானே முன்னையது அகநிலை யொத்தாழிசை யெனப்படும் என்பர் பேராசிரியர். தேவரைப் பரவுதலாகிய இது, முன்னிலைக் கண் வருமெனவே, முன் வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே என்ற வாழ்த்தியல் நான்கு கலிக்கும் எய்திற்றேனும் அவை தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டன அன்மையின் தேவபாணி ஆகாவாயின. யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வம் என்று தன்னைத்தான் புகழ்ந்து கூறி, நின்னைக் காப்பேன்; நீ வாழிய எனத் தெய்வம் சொல்லியதாகச் செய்யுள் செய்தலும் ஆகாது. தெய்வம் படர்க்கையாயவழிப் புற நிலை வாழ்த்தாவதன்றித் தேவர்ப் பராயிற்றாகாது. இங்ஙனம் கூறவே அகநிலை யொத்தாழிசைக்கலி யல்லாத ஒழிந்தஒத் தாழிசைக்கலி முன்னிலைக்கண் வருவதாயின் தேவரைப் பரவுதலாகிய பொருளிலேயே வரும் என்பது நன்கு பெறப்படும். 60. வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும்; என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப்பின்னர் அத் தெய்வத்தினை தாழிசையாலே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின். ஒழிந்த வுறுப்பான் வண்ணிப்பினும் சிறந்த வுறுப்பு இதுவென்க... எண்ணுறுப்புத் தான் நீர்த்திரை போல வரவரச் சுருங்கி வருதலின் அமபோதரங்க மெனவும் அமையுமாதலின் அதனை அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா எனவுஞ் சொல்லுப. இனி, வண்ணகமென்பது, அராகமென உரைத்து அவ்வுறுப்புடையன வண்ணக ஒத்தாழிசை எனவுஞ் சொல்வாருமுளர். எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு இது முதனூலாதலின் இவரோடு மாறுபடுதல் மரபன்றென மறுக்க... மற்றிதற்குத் தனிச்சொல் ஒதியதில்லையாலெனின் அதனை அதிகாரத்தாற் கொள்க என்பர் பேராசிரியர். 61. நேரடி பற்றிய நிலைமைத்தாகும் என்பதற்கு, அளவடியால் வரும் எனப் பொருளுரைத்தார் இளம்பூரணர்; சமநிலையானன்றி வியனிலையான் வாராது எனப் பொருள் கொண்டார் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். எனவே வண்ணக ஒத்தாழிசைக்குரிய தரவு. நான்கும் ஆறும் எட்டும் ஆக இவ்வாறு இரட்டைபட்ட அடிகளால் வருதலன்றி, ஐந்தும் ஏழும் ஒன்பதும் ஆக இவ்வாறு ஒற்றைப்பட்ட அடிகளால் வாராதென்பது பேராசிரியர் முதலியோர் கருத்தாகும். 62. அடக்கும் இயல்பிற்றாகிய வாரம்; என்றது, சுரிதகத்தினை. முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியல் எனவும், தெய்வக் கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாகலின் வாரம் எனவும் சுரிதகத்திற்குப் பெயர் கூறினார் என்பர் பேராசிரியர். 63. எனவே இரண்டடி யிரண்டும், ஓரடி நான்கும், இருசீர் எட்டும், ஒருசீர் பதினாறும் ஆகி எண்பல்கும் என்பது. இருசீர் குறளடியுமாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும்; ஆகவே, ஒழிந்த எண் மூன்றும் தலையெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணும் என மூன்றுங் கூடியே எண்ணென்றற்குரியவாயின. இது நோக்கிப் போலும், எண்ணென்று அடக்காது, சின்னம் அல்லாக்காலை என ஒரு சீரினை (சின்னம் என்று) வேறுபடுத்து மேற்கூறுகின்றது என்பது. இனி அளவடியினை நாட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்கும் என்றமையின் அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்னமெனப்படும் என்பர் பேராசிரியர். இனி, ஈரடி யிரண்டினைப் பேரெண் எனவும், ஓரடி அதனிற் குறைதலின் சிற்றெண் எனவும் இவற்றிற்கும் பின்வரும் சின்னத்திற்கும் இடையே நிற்றலின் இருசீரை இடையெண் எனவும் பெயர் கூறினும் அமையும் என்பர் நச்சினார்க்கினியர். 64. சின்னம் என்பதனைத் தனிச் சொல் எனக் கொண்டார் இளம்பூரணர்; சிற்றெண் எனக் கொண்டனர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். எண்ணொழிதல் என்னாது எண் இடை யொழிதல் என்றதனால், தலையெண்ணும் இடையெண்ணும் அல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியும் குறைந்து வருமென்பதும் கொள்க. மூவகையெண்ணும் சின்னமும்பெற்று வருதல் சிறப்புடைமை ஏதமின்று என்றதனாற் பெறுதும் எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் அறியத்தக்கதாகும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில் எண் என்ற உறுப்பினையடுத்துச் சின்னம் என்ப தோருறுப்பு இல்லா தொழியின் வண்ணக வொத்தாழிசையெனப் படாதென்பதும். எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றியும் எனப் பின்னர்க்கூறுமாறு அஃது ஒருபோகு எனப் பெயர் பெறுமென்பதும் இதனாற் புலனாதல் காண்க. 65. மேல் , ஒத்தாழிசைக் கலியிரண்டனுள் ஒன்றாய், ஏனையொன்று எனச்சொல்லப்பட்ட தேவபாணிச் செய்யுள், வண்ணகம் ஒருபோகு என இருவகையாகக் கூறப்பட்டது. அவற்றுள் ஒன்றாகிய ஒருபோகு என்பதும்; கொச்சக வொருபோகு, அம்போதரங்க வொருபோகு என இருவகைப்படும் என்பதாம். ஒருபோகு என்ற தொடர், ஓர் உறுப்புப் போகியது (இழந்தது) எனப் பொருள் படுவதாகும். ஒத்தாழிசைக் கலிக்கு ஓதிய உறுப்புக்களுள் ஒருறுப்பு இழந்தமையால் ஒருபோகு எனப் பெயராயிற்று. ஓருறுப்பு இழத்தலின் ஒரு போகாதல் ஒக்குமாயினும் எனப் பேராசிரியர் கூறுதலால் இப்பெயர்க் காரணம் ஒருவாறு புலனாதல் காணலாம். கொச்சகம் ஒருவழி வாராதது கொச்சக வொருபோகு எனவும். வண்ணகப் பகுதிக்குரிய எண்ணுறுப்பு (அம்போதரங்கம்) ஒருவழி யில்லாதது அம்போதரங்க வொருபோகு எனவும் பெயர் எய்தின. கொச்சக வுடைபோலப் பெரும்பான்மையும் திரண்டு வருவது கொச்சக மெனவும், பலவுறுப்புக்களும் முறையே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்க மெனவும் கூறினார் என நச்சினார்க்கினியர் கூறுதலால் கொச்சகம், அம்போதரங்கம் என்பவற்றின் பெயர்க் காரணம் இனிது புலனாதல் காண்க. 66. எனவே, ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொருபோகெனப் பெயர் பெறுமென்று கொள்க என்பர் இளம்பூரணர். இனி, ஒருபோகு என்றது குறித்து யாப்பருங்கல விருத்தி யாசிரியர் பின்வருமாறு கூறுவர்: இனி ஒரு சார் கொச்சகங்களை ஒருபோகு என்று வழங்கு வாருமுளர். மயேச்சுவராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவபாணியுந் திரிந்து, தரவொழித்து அல்லாவுறுப்புப் பெறினும், தாழிசை யொழித்து அல்லாவுறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப்பட்டமூவகை யெண்ணும் நீங்கினும், வண்ணகத்துக்கு ஓதப்பட்ட இருவகை யெண்ணும் நீங்கினும், நீங்கிய வுறுப்பொழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ஒருபோகு எனப்படும். அவை, அம்போதரங்க வுறுப்புத் தழீஇயின அம்போதரங்க வொருபோகு எனவும், வண்ணக வுறுப்புத் தழீஇயின வண்ணக வொருபோகு எனவும்படும். என்னை? கூறிய வுறுப்பிற் குறைபாடின்றித் தேறிய விரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை யொழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப வுணர்ந்திசி னோரே என்றார் மயோச்சுவரர். 67. பரணியாவது, காடுகெழு செல்விக்கு (காளிக்கு)ப் பரணி நாட்கூழுந் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றியது; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராஅயிற்றேனும் தேவபாணியேயாம் என்பது பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலிய பண்டை யுரையாசிரியர்களது துணிபாகும். 68. பதிகப் பாட்டிற்கு ஈண்டுக் கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற சொச்சக வொருபோகுகளிற் காண்க. அவை உலக வழக்கன்மையிற் காட்டா மாயினாம் என நச்சினார்க்கினியர் குறிப்பிடுதலால், இறைவனருள் பெற்ற பெரியோர்கள் அருளிச்செய்த திருப்பாடல்களாகிய அவை, தொல்காப்பிய இலக்கணத்தின்படி கொச்சக வொருபோ கென்னும் பாவின்பாற்படுவன என்பதும் அங்ஙனமாயினும் திருப்பாடல் களாகிய அவற்றை ஏனைச் செய்யுட்களைப் போல இங்கு யாப்பியலமைதிக்கு உதாரணமாக எடுத்துக்காட்டுதல் மரபன்றென்பதும் நன்கு தெளியப்படும். 69. தன்றளையோசை தழுவிநின் றீற்றிடி வெண்பா வியலது கலிவெண் பாவே (யாப்பருங்கலம்-செய்-85) எனவும், வெண்டளை தன்றளை யென்றிரு தண்மையின் வெண்பா வியலது வெண் கலியாகும் (யாப்-செய்-85-மேற்கோள்) எனவும் வருவன இங்கு நினைக்கத் தக்கன. 70. பத்தடுக்கி ஒரு பொருள்மேற் பதிகப் பாட்டாய் வரும் தேவாரம் திவ்வியப் பிரபந்தம் ஆகிய அருள் நூல்களில் அமைந்த திருப்பாடல்கள் இவ்வகையில் அடங்குவனவாம். 71. திருவெம்பாவைப் பாடல்கள் எட்டடியான் வந்து இவ்வாறு முடிந்தன. 72. ஈண்டு, எருத்து என்பது தரவு, என்பர் இளம்பூரணர். 73. அராகம் என்பது அறாது (இடையறவு படாது) கடுகிச் செல்லுதல். மாத்திரை நீண்டும் இடையறவு பட்டும் வராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுவது அராகம் என்னும் உறுப்பாகும். 74. அம்போதரங்கச் செய்யுளுக்குரிய நால்வகை எண்ணுறுப்புக்களுள் இறுதி யெண்ணாய்ச் சிறுகிவரும் எண் சிற்றெண் எனப்படும். இது சின்னம், எனவும் கூறப்படும். 75. அடக்கியல் வாரம் என்பது, தரவு முதலாகச் சொல்லப்பட்ட வுறுப்புக்களில் விரித்துக் கூறிய பொருளை அடக்கும் (முடித்துக் கூறும்) இயல்பினதாகிய சுரிதகம் என்னும் உறுப்பாகும். சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடைநிலைப் பாட்டினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது என்பர் இளம்பூரணர். 76. எருத்து முதலாகச் சொல்லப்பட்ட இவ்வுறுப்புக்களே பரிபாடற்கும் உறுப்பா மாயினும், இவை இம்முறையேவரின் அம்போதரங்க வொரு போகாம் எனவும், அறுபதடியிற் குறைந்து முறை பிறழ்ந்து வருவனவும், ஒத்து அறுபதடியின் மிக்கு வருவனவும் பரிபாடல் எனக் கொள்ளத் தக்கனவாம் எனவும் இவற்றிடையேயமைந்த வேறுபாட்டினை உரையாசிரியர் நன்கு விளக்கியுள்ளார். 77. செப்பலோசையிற் சிதையாது ஒரு பொருள்மேல் வெள்ளடியால் வெண்பா முடியுமாறு முடிவன கலிவெண்பா என்னும் சிறப்புடையன என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். (யா. வி. பக். 310) இனி, கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிக் கடையடி வெண்பா முடியுமாறு போல முச்சீரடியால் முடிவது கலிவெண்பா என்பர் யாப்பருங்கல ஆசிரியர் தன்றளை யோசை தழுவிநின் றீற்றடி வெண்பா வியலது கலிவெண் பாவே என்பது யாப்பருங்கலம் (செய்யுளியல் 85-ம் சூத்திரம்). 78. இவற்றுள் வெண்டளையால் வந்த செய்யுள் வெண்கலிப்பா எனவும், அயற்றளையால் வந்த செய்யுள் கலிவெண்பா எனவும் இளம்பூரணர் உரையிற் குறிப்பிடப் பெற்றுள்ளன. கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி முச்சீரான் முடிவதனை வெண் கலிப்பா எனவும், வெண்டளை தட்டு வெள்ளோசை தழுவி ஒரு பொருள்மேல் வருவதனைக் கலிவெண்பா எனவும் பெயரிட்டு வழங்குவர் குணசாகரர். (யா-காரிகை. 32-ம் செய்யுளுரை). வெள்ளோசையினால் வருவதனைக் கலிவெண்பா வென்றும் பிறவாற்றால் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறுபடுத்துச் சொல்வாரும் உளர் என்பர் யாப்பருங்கல விருத்தி யாசிரியர் இவ்வுரைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் வெண்டளையில் வந்ததனைக் கலிவெண்பா எனவும் பிறதளையால் வந்ததனை வெண் கலிப்பா எனவும் வழங்கும் பெயர் வழக்கே பொருத்தமுடைய தெனத் தெரிகிறது. 79. பாட்டை மிடைந்தும் என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம், மிடைந்தும் என்ற உம்மையால் தரவும் சுரிதகமும் இயற்கை வழாமல் முதலும் முடிவும் வருதலும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 80. ஐஞ்சீரடுக்குதல் என்றது, ஐஞ்சீரடி பல வருதல் எனவும், ஆறுமெய் பெறுதல் என்றது, தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம், சொற்சீரடி, முடுகியலடி அல்லது அராகம் என்னும் ஆறு உறுப்பினையும் பெற்று வருதல் எனவும் கூறுவர் இளம்பூரணர். இனி, ஐங்சீரடுக்குதல் என்றது, வேறு நின்ற தொரு சீரினை அளவடியுடன் அடுக்கிச் சொல்ல ஐஞ்சீராகி வருதல் என்றும், ஆறுமெய் பெறுதல் என்றது, அளவடியுடன் இருசீர் அடுக்க ஆறுசீர்பெற்று வருதல் என்றும், மேல் கூன் எனவும் சொற்சீர் எனவும் கூறப்பட்டனவே ஈண்டு ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வந்தன வென்றும் கொள்வர் பேராசிரியர். 81. பெற்றும் என்ற உம்மையால் பெறாது வருதலும் கொள்க என்பர் இளம்பூரணர். 82. கைக்கிளைச் செய்யுள் என்பது, கைக்கிளைப் பொருட்கு உரித்தாய் வரும் மருட்பா என்றவாறு. 83. எனவே மருட்பா மேற்குறித்த நான்கு பொருளினல்லது வரப்பெறாதாயிற்று. 84. எழுநிலமாவன: பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன என்பர் இளம்பூரணர்; அகமும் புறமுமாகிய எழுவகைத் திணைகள் என்பர் பேராசிரியர். 85. இத்தொடர்க்கு நொடிதல் மாத்திரையாகிய பிசி எனப் பொருள் கொள்வர் பேராசிரியர், நொடியாவது, புனைந்துரை வகையாற் படைத்துக் கூறப்படுவதாகும். நொடியொடு புணர்ந்த பிசியெனவே பிசிக்கு நிலைக்களம் நொடியென்பது பெறப்படும். 86. பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்பும் என நான்கும் வழக்கு மொழியாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் ஈண்டு அவற்றுட் செய்யுளையே கோடற்கு அவற்றுக்கு அளவில் என்றார். 87. சூத்திரம் என்னும் ஒருறுப்படக்கிய பிண்டம் இறையனார் களவியல்; சூத்திரமும் ஓத்தும் என்னும் இரண்டு உறுப்படக்கிய பிண்டம் பன்னிருபடலம்; சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்று உறுப்படக்கிய பிண்டம் தொல்காப்பியம். இவை முறையே சிறு நூல், இடைநூல், பெருநூல் எனப்படும். இவை முறையே சிறு நூல், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று உறுப்பினையும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினை யடக்கிய வேறோர் பிண்டம் என்பர் நச்சினார்க்கினியர். 88. உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் இடையிடையே வரும் உரைநடை இவ்வகையைச் சார்ந்தாகும். 89. உலக வழக்கில் பாட்டின்றித் தனியே வழங்கும் வசனனடை பாவின் றெழுந்த கிளவி எனப்படும். 90. யானையும் குருவியும் தம்முள் நண்புகொண்டு இன்னவிடத்தில் இன்னவாறு செய்தன என்றாங்கு அவற்றின் இயல்புக்கு ஒவ்வாத வகையில் இயைத்துரைக்கப்பட்டுக் கதையளவாய் வழங்கும் உரைநடை பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யெனப்படும். 91. முழுவதும் பொய்யென்று தள்ளப்படும் நிலையிலமையாது உலகியலாகிய உண்மை நிலையை ஒருவாற்றான் அறிவுறுத்துவன வாய்க் கேட்போர்க்கு நகைச்சுவையை விளக்கும் பஞ்ச தந்திரக் கதை போலும் உரைநடை பொருளோடு புணர்ந்த நகைமொழி எனப்படும். 92. அவையாவன : மைந்தர்க்கு உரைப்பன, மகளிர்க்கு உரைப்பன என்னும் இருவகையாம் என்பர் இளம்பூரணர்.இனி முற்கூறிய உரைவகை நடை நான்கினுள், பாட்டிடை வைத்த குறிப்பு, பாவின் றெழுந்த கிளவி என்னும் முன்னைய இரண்டும் ஒரு தொகுதியாகவும், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி என்னும் பின்னைய இரண்டும் மற்றொரு தொகுதியாகவும் கொள்வர் பேராசிரியர் முதலியோர். 93. அவற்றுள், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழியும் பொருளொடு புணர்ந்த நகைமொழியும் ஆகிய பிற்கூறு செவிலிக்கு உரியதெனவும். பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும் ஆகிய முற்கூறு வரையறையின்றி எல்லார்க்கும் உரித்தெனவும் கொள்ளுதல்வேண்டும். இங்ஙனம் கொள்ளவே, தலை மகளை வளர்க்குஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய ரென்பது நன்கு புலனாம். இக்கருத்தினால், செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி (நெடுநல்-153-4) என நக்கீரனாரும், செம்முது செவிலியர்............................... தன்னிணையாம் பன்னொடிபகர (பெருங்-1-54-25-32) எனக் கொங்குவேளும் இவ் வுரைவகையினைச் செவிலிக்கு உரியனவாக இயைத் துரைத்துள்ளமை காணலாம். 94. யானை செல்லும் என வெளிப்படச் சொல்லாது, பிறை கல்வி மலை நடக்கும் என உவமானத்தாற் குறிப்பிற் புலப்பட வைத்தல், ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகையாம். 95. நீராடான் பார்ப்பான் நிறஞ் செய்யான் நீராடின் ஊராடும் நீரிற் காக்கை என்பது நெருப்பு என்னும் பொருள் குறிப்பில் தோன்ற அமைந்த சொற்றொடர் நிலையாகும். இது தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசி வகைக்கு உதாரணமாகும். மேற்குறித்த பிசி வகையாகிய இவற்றை இக்காலத்தார் பிதிர் (புதிர்) எனவும் விடுகதை யெனவும் வழங்குவர். 96. முதுசொல், முதுமொழி, மூதுரை, பழமொழி என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். சென்ற காலத்திற் புகழுடன் வாழ்ந்த பெருமக்களிடத்தமைந்த நுண்ணறிவு, சொல்வன்மை, உயர்ந்த நோக்கம், நல்வாழ்க்கை முறையில் அன்னோர் பெற்றிருந்த சிறந்த அனுபவங்கள் ஆகிய இவை யெல்லாவற்றையுந் திரட்டித் தருதல் இம் முதுமொழியின் இயல்பென்பது, முதுமொழி யென்னும் செய்யுள் வகைபற்றிய இவ்விலக்கணத்தால் இனிது விளங்கும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி நானூறு முதுசொல் என்னும் இச் செய்யுள் வகையின் பாற்படும். 97. இறைவன் திருவருள் பெற்ற திருஞான சம்பந்தப் பிள்ளையார். எந்தை நனியள்ளியுள்க வினைகெடுதல் ஆணை நமதே (2-84-11) எனவும், ஆனசொன் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே (2-85-11) எனவும் தம் மேல் ஆணையிட்டும், செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் (1-116-1) என இறைவனது திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டும் ஓதிய திருப்பதிகங்கள், நிறைமொழி மாந்தரது ஆணையின் ஆற்றலை நன்கு புலப்படுத்தி நிற்றல் காணலாம். 98. திருவாய்மொழி திருமொழி என்ற பெயர்கள், வாய்மொழி என்னும் இப்பெயர் வழக்கத்தை அடியொற்றி அமைந்தனவாகும். 99. ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையாற் செந்தமிழே தீர்க்க சுவா எனவும், முரணில் பொதியின் முதற்புத்தோள் வாழி பரண கபிலரும் வாழி-யரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடயன் ஆனந்தஞ் சேர்க சுவா எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் (ஒருவன்) சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின எனப் பேராசிரியர் காட்டிய அங்கதப் பாடல்கள் ஆணையிற் கிளந்த மறைமொழியின் பாற்படுவன. 100. மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி என்றதனான் இச்சொல் வசை குறித்து வருமென்று கொள்க என்பர் இளம்பூரணர். 101. அளவியல் வகையே யனைவகை படுமே (செய்யு-156) என்னும் சூத்திரம், பாவிற்கு அடி வரையறுத்துக் கூறப்பட்டது. இது (செய்யுள்-176-ம் சூத்திரம்) செய்யுள் இனைத்தென வரையறுத்துணர்த்திற்று என்பர் இளம்பூரணர். 102. தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் கூறுவன, தம் கூற்றே யாதலின் தாம் கேட்டல் விதந்து கூறவேண்டுவதில்லை 103. அகத்திணையோர், புறத்திணையோர் ஆகிய யாவரும் கேட்கப் பெறுவர் என்பதாம். 104. எனவே, தலைமகள் பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையும் என்பதாயிற்று. 105. உம்மை எதிர்மறையாகலான் தம்முள் தாம்கேட்டல் சிறுபான்மை எனக் கொள்க. 106. பாட்டினது முடிபினை விளக்கிவரும் ஈற்றசை யேகாரம் முதலியவற்றால் முடியாது, இடையடிகள் போன்று முடியாத தன்மையால் முடிந்து நிற்பது அகப்பாட்டு வண்ணமாகும். 107. பாட்டின் முடிபினை யுணர்த்தும் இறுதியடி புறத்தே நிற்கவும் அதற்குமுன் உள்ள இடையடி முடிந்தது போன்று நிற்பது புறப்பாட்டு வண்ணமாகும். 108. யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறி தொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒருஉ வண்ணம், எனப் பொருள் கொள்வர் பேராசிரியர். 109. அறுத்தறுத் தொழுகுதலாவது, விட்டுவிட்டுச்செல்லுதல். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் வருதல் இதன் இயல்பாகும். 110. ஏந்தல்-மிகுதல்-ஒருசொல்லே மிக்கு வருதலின் எந்தல் வண்ணம் எனப்பட்டது. 111. நெகிழாது உருண்ட வோசையாகலிற், குறுஞ்சீர் வண்ண மெனப்படாது உருட்டு வண்ணம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். 112. வண்ணம் என்பன சந்தஓசையாதலால் அவ்வோசை வேற்றுமை செய்வன மேற்கூறிய வண்ணங்கள் இருபதுமேயன்றி வேறு இல்லை என்பதாம். 113. தூங்கேந் தடுக்கல் பிரிதல் மயங்கிசை வைத்துப் பின்னும் ஆங்கே யகவ லொழுகிசை வன்மையு மென்மையுமா ஆங்கே குறில் நெடில் வல்லிசை மெல்லிசையோ டிடையும் தாங்கா துறழ்தரத் தாம்வண்ணம் நூறுந் தலைப்படுமே எனவரும் யாப்பருங்கலக் காரிகையும், தூங்கிசை வண்ணம் ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம் மயங்கிசை வண்ணம், என இவ் வைந்தினையும்; அகவல் வண்ணம், ஒழுகல் வண்ணம் வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், என்று இந் நான்கினையும்; குற்றெழுத்து வண்ணம், நெட்டெழுத்து வண்ணம், வல்லெழுத்து வண்ணம், மெல்லெழுத்து வண்ணம், இடையெழுத்து வண்ணம் என இவ் வைந்தினையுங்கூட்டிக் குறிலகவற்றூங்கிசை வண்ணம், நெடிலகவற்றூங்கிசை வண்ணம், வலியகவற்றூங்கிசை வண்ணம், மெலியகவற்றூங்கிசை வண்ணம். இடையகவற்றூங்கிசை வண்ணம், என்று இவ்வாறெல்லாம் உறழ்ந்துகொள்ள நூறு வண்ண விகற்பமாம் என வரும் யாப்பருங்கல விருந்தியுரையும் இங்கு நோக்கத் தக்கனவாம். 114. தொன்றுபட வரூஉந் தொன்மைத்தாதலின் (சிலப்-ஊர்காண்-45) எனவும், நீ யறிந்திலையோ நெடுமொழியன்றோ (சிலப்- ஊர்காண்-49) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களும் தொன்றுபட வரூஉத் தொன்மைத்து-அடிப்பற்றி வருகின்ற பழமைத்து எனவும், நெடுமொழி-பெருவார்த்தை. பழைதாகப் போதுகின்ற வார்த்தை என்றுமாம் எனவரும் அரும் பதவுரையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. 115. மார்க்கண்டேயனார் காஞ்சி. 116. மலைபடுகடாம். எட்டாவது செய்யுளியல் (செய்யுட்குஉறுப்பாவன இவை யெனல்) 313. மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ யாத்த சீரே யடியாப்பு பெனாஅ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே யளவிய லெனாஅத் திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅக் கேட்போர் களனே காலவகை யெனாஅப் பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ முன்னம் பொருளே துறைவகை யெனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையி னாறு தலையிட்ட வந்நா லைந்து மம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இவ்1வோத்து என்ன 2பெயர்த்தோவெனின், செய்யுளிய லென்னும் பெயர்த்து; செய்யுளிலக்கணம் உணர்த்தினமையான் அப் பெயர்த்தாயிற்று. எனவே ஓத்து நுதலியதூஉஞ் செய்யுளிலக்கண முணர்த்தலென்பது பெற்றாம். மேற்பாயிரத்துள், வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளும் (பாயிரம்) 3ஆராய்தலென்று புகுந்தமையான், 4எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன 5விராய்க்கூறிப், பொருளதிகாரத்துள்ளும் இது காறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறிவந்தான். 6அப் பொருள் பற்றிச் செய்யுள் 7கூறுமாதலின் இவ்வதிகாரத்துட் செய்யுளிலக்கண மெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது இவ்வோத்தென்பது. எனவே, முற் கூறிய எழுவகையோத்தும் வழக்கிற்குஞ் செய்யுட் கும் பொது வென்பதூஉம் 8இது செய்யுட்கே உரித்தென்பதூஉம் பெற்றாம். மற்றிதனை யாப்பதிகாரமென வேறோரதிகாரமாக்கி 9உரைப்பாருமுளர்; அங்ஙனங் கூறின் வழக்கதிகாரமெனவும் வேறு வேண்டுமென மறுக்க. அல்லதூஉம் எழுத்துஞ் சொல்லும் பொருளு10மென மூன்றற்கும் மூன்றதிகாரமாக்கி அதிகார மொன்றற்கு ஒன்பதோத்தாகத் 11தந்திரஞ் செய்தத னொடு மாறு கொளலாம், இதனை வேறோர் அதிகார மென்பார்க்கென்பது. மற்று, 12ஓத்து நுதலியதெல்லாம் நுதலுவதன்றே ஓத்தினுள் வைத்த சூத்திரம்; அதனான், இதன் முதற் சூத்திரம் என்னுதலிற் றோவெனின், இவ்வோத்தினு ளுணர்த்தப் படுகின்ற செய்யுட் குறுப்பாவன இவையெனவே, அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இக்கூறப்பட்ட முப்பத்துநான்கும் பேரிசைப் புலவரான் செய்யப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென அவ்வாறு செய்தல் வன்மையான் வகுத்துக் கூறினர் புலவர் என்றவாறு. அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை. தொகை ஆறுதலையிட்ட அந்நாலைந்து மெனவும், எட்டெனவும் இருவகை யான் தோன்றக் கூறியது, ஏனைய போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு 13ஒரோவொன்றே யும் வருமென்பதறி வித்தற்கும், 14அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்தவழியே பெரும்பான்மையும் உறுப்பாமென்ப தறிவித்தற்கும் அவ்வாறு கூறினார் என்க. எனவே, ஒழிந்த உறுப்பிருபத்தாறும் 15ஒன்றொன்றனை இன்றியமையா வென்பது பெற்றாம். இனி, மாத்திரை யென்பது, எழுத்திற்கோதிய மாத்திரை களுள் 16செய்யுளில் விராய்க் கிடக்கும் அளவை யென்றவாறு. 17மாத்திரையது மாத்திரையினை ஈண்டு மாத்திரையென்றான். அது மாத்திரையளவும் (314) என்றதனாற் பெற்றாம். எழுத்தியல் வகையென்பது, 18மேற்கூறிய எழுத்துக்களை 19இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு. அசைவகை யென்பது, அசைக் கூறுபாடு; அவை இயலசையும் உரியசையுமென இரண்டாம். யாத்தசீரென்பது, (360) பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரென்றவாறு; எனவே, அசைபல தொடர்ந்து சீராங்கால் அவ்வசையுந் தத்தம் 20வகையாற் பொருள்பெற்று, நிற்றலும், அவ்வாறன்றிச் சீர்முழுதும் ஒரு சொல்லாங்கால் அவ்வசை பொருள் பெறாது நிற்றலும் அடங்கின. தேமா என்று அசை பொருள் வேறுபெற்றன; சாத்தன் எனப் பொருள் வேறு பெறாது நின்ற அசையாற் சீர்யாத்து நின்றது. பொருள்பெற நின்ற எழுத்தும் அசையுஞ் சிறப்புடைய வென்பாருமுளர்; அற்றன்று, பொருள் பெற நிற்பன எழுத்து யாண்டு மின்மை யானும், பொருள் பெறநின்ற அசையானாகிய தேமாவென்னுஞ் சீரும் அவ்வசைச் சிறப்பினாற் சிறப்புடைச் சீரெனப்படாமை யானுஞ் சாத்தனெனத் தன்பொருளொடு தான் 21துணிந்து நின்றவழி அதுவுஞ் சிறப்புடைச் சீரெனவும் படுமாதலானு மென்பது. அடியென்பது, அச்சீர் இரண்டும் பலவுந் தொடர்ந்தாவ தோர் உறுப்பு. யாப்பென்பது, 22அவ்வடிதொறும் பொருள் பெறச் செய்வதொரு செய்கை. மரபென்பது, காலமுமிடனும் பற்றி வழக்குத் திரிந்தக் காலுந் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமைச் செய்வதொரு முறைமை. மற்றுச் சொல்லோத்தினுட் கூறிய மரபிற்கும் மரபியலுள் உரைப்பனவற்றுக்கும் இதற்கும் வேற்றுமை யென்னையெனின், இது செய்யுட்கே உரித்து, அவை வழக்கிற்குஞ் செய்யுட்கும்பொது வென்பது. அல்லதூஉம், அவற்றது வேறுபாடு முன்னர் அகத்திணையியலுள் கூறிவந்தாம். தூக்கென்பது, 23பாக்களைத் துணித்து நிறுத்தல். தொடைவகை யென்பது, தொடைப்பகுதி பலவு மென்ற வாறு: அவை வரையறை யுடையனவும் வரையறையில்லனவு மென இருவகைய. 24இப்பகுதியெல்லாம் அடியாற் கோடலின் அடிக்கும் இஃ தொக்கும். நோக்கென்பது, மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட் டோர்க்கு நோக்குப்படச் செய்தல். பா என்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேது வாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை. அளவியலென்பது, 25அப் பாவரையறை. திணை யென்பது, அகம் புறமென்று அறியச் செய்தல். கைகோளென்பது, அவ்வத்திணை யொழுக்க விகற்பம் அறியச் செய்தல்; அது களவுங் கற்பும். கூற்றுவகையென்பது, அச்செய்யுள் கேட்டாரை இது சொல்லுகின்றார் இன்னாரென உணர்வித்தல். 26கூற்றிவை யென்பது பாடமாயின், எண்ணிய மூன்றனையுந் தொகுத்த வாறே, பிறிதில்லை. கேட்போரென்பது இன்னார்க்குச் சொல்லுகின்ற திதுவெனத் தெரித்தல். களனென்பது, முல்லை குறிஞ்சி முதலாயினவும் இரவுக்குறி பகற்குறி முதலாயினவும் உணரச்செய்தல். மற்றுத் தன்மை முன்னிலை படர்க்கையுமாம். 27கால வகையென்பது, சிறுபொழுது பெரும்பொழுதென் னுங் காலப்பகுதி முதலாயின. பயனென்பது, 28சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல். மெய்ப்பா டென்பது சொற் கேட்டோர்க்குப் பொருள் 29கண்கூடாதல். எச்சவகையென்பது, (518) சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக் கொள்ளச் செய்தல்; அது 30கூற்றினுங் குறிப்பினும் வருதலின் வகையென்றான். 31முன்னமென்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோருந் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுவதற்குக் கருத்துப்படச் செய்தல். பொருளென்பது, புலவன் தான் 32தோற்றிக்கொண்டு செய்யப் படுவதொரு பொருண்மை. துறைவகை யென்பது, முதலுங் கருவும் முறை பிறழ வந்தாலும் இஃது இதன்பாற் படுமென்று ஒரு துறைப்படுத்தற் கேதுவாகியதொரு கருவி அச்செய்யுட் குளதாகச் செய்தல்; அவையும் பலவாதலின் வகையென்றானென்பது. 33மாட்டென்பது, பல்வேறு பொருட் பரப்பிற்றாயினும் அன்றாயினும் 34நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தல். வண்ணமென்பது, ஒருபாவின்கண் நிகழும் ஓசைவிகற்பம். எனாவென்பன, எண்ணிடைச் சொல். யாப்பியல்வகையின் ஆறு தலையிட்ட அந்நாலைந்து மென்பது, யாப்பிலக்கணப் பகுதியாகிய இருபத்தாறு மென்ற வாறு. இவை யாப்பிற்கு இன்றியமையாத இலக்கணப் பகுதிய வென விதந்தோதவே, இனிக் கூறும் உறுப்பெட்டும் இன்றியமை யாமை இல்லை யென்றவாறு. அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியைபே புலனே யிழைபெனாஅப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ யென்பது, இக்கூறப்பட்ட எண்வகை வனப்பொடு முன்னர்க் கூறிய இருபத்தாறுந் தொகுப்ப, முப்பத்து நான்குறுப்பா மென்றவாறு. மற்றிவற்றை வனப்பென்று கூறற்குக் காரணம் அவற்றைக் கூறும்வழிச் (547) சொல்லுதும். நல்லிசைப் புலவர் செய்யுளென்பது, இவ்வுறுப்பனைத்துங் குறையாமற் செய்யப்படுவன நல்லிசைப் புலவர் செய்யுஞ் செய்யுளெனப்படு மென்றவாறு. நல்லிசைப்புலவர் செய்யுள் எனவே, 35எழுநிலத்தெழுந்த (476, 477) செய்யுளுள்ளும் 36அடிவரையறை யுடையவற்றுக்கே இவ்விலக்கண மென்பதூ உந், திணையே கைகோளெனக் கூறும் உறுப்பு முதலாயினவெல் லாம் 37ஏனை அறுவகைச் செய்யுட்கும் (476-477) உறுப்பாகா வென்பதூஉம், அவை 38யொழிந்த உறுப்பினுள் ஏற்பன பெறுமாயினும் ஆண்டு வரையறை யின்மையிற் கூறானென்பதூ உம், அவை செய்தாரெல்லாம் அவற்றானே நல்லிசைப் புலவ ரெனப் படாரென்பதூஉம், பெற்றாம். இனி நூலும் உரையுஞ் செய்தார் நல்லிசையுடைய ரென்பது அவற்றை 39நூலினான உரையினான என இதற்கு இடையின்றி வைத்தமையிற் பெறுதுமென்பது. வல்லிதிற் கூறி வகுத்து ரைத்தனர் என்பது 40இங்ஙனம் கூறிய அந்நல்லாசிரியர் இலக்கணமே கூறியொழிந்தா ரல்லர், வல்லவற்றான் எல்லாமமையச் செய்யுஞ் சுவடுடையராகி வகுத் துரைத்தார் அவ்வத்துறை போயினார்தாமும் என்றவாறு; எனவே, இவ் வுறுப்பமையச் செய்தனவே செய்யுளெனப்படுவன வென்று சிறப்பித்த வாறு. மற்றுக், கூறியெனவும் உரைத்தனரெனவும் இருகாற் சொல்லிய தென்னை யெனின், 41அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தா ரென்றவாறு; என்றார்க்குச் செய்யுட்குற்றம் ஈண்டோதாரோவெனின், 42ஓதல் வேண்டுமே? இவ்விலக்கணத்துப் பிறழ்ந்துங் குன்றியும் வருவனவெல்லாம் வழுவென்பதறிய வைத்தா43னல்லனே ஆசிரியனென்பது. மற்றுச் செய்யுளுறுப்பு ஈண்டோதினார்; செய்யுள் யாண் டோதுப வெனின், அறியாது கடாயினாய்; உறுப்பென்பன உறுப்புடைப் பொருளின் வேறெனப்படா; பொருள் எனப்படுவன உறுப்பே, அவற்ற தீட்டத்தினை முதலென வழங்குபவாகலான் உறுப்பினையே சொல்லியொழிந்தார்; முதற் பொருளதிலக்கண மென உறுப்பிலக்கணத்தினையே வேறுபடுத்துக் 44கூறலாவதின் மையானும், உறுப்புரைப்பவே 45அவ்வுறுப்புடைய பொருள் வழக்கியலாற் பெறலாமாகலானு மென்பது. மற்று, யாத்த சீரேயடியாப்பென்றதென்னை? தளை யென்பதோர் உறுப்புப் 46பிறர் வேண்டுபவாலெனின், 47இவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப; தளைத்தலிற் றளையாத லானும் வேறு 48பொருளென வேண்டா ரென்பது. 49என்றார்க்கு அசையின்றிச் சீருமில்லை;, சீரின்றி அடியு மில்லையாம் பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல 50அவை கொள்ளப்படும். தளையென வேறொன் றின்மையிற் கொள்ளான். என்னை? அது குறளடியென வேறுறுப் பாயினமையின் என்பது; தளையென்றிதனைக் கோடுமேல் அதனைக் குறளடி யெனலாகா தென்பது. அல்லதூஉம், ஈரசை கூடி ஒருசீராயினவாறு போல இருசீர் கூடியவழி அவ்விரண்ட னையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, 51நாற்சீரடி யினை இடைதுணித்துச் சொல்லுவதன்றி நான்கு பகுதியா னெய்திக் 52கண்டம்படச் சொல்லுமாறில்லை யென்க. யாத்த சீர் என்றதனானே, அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம், அச்சீரான் அடியானவழி சீரியைந் திற்றது சீரெனவே படு (323) மென்றதனாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படு மென்பதூஉங் கூறினான் இவ்வாசிரிய னென்பது. அற்றன்றியும், அவ்வாறு தளைகொள்வார் சீரானடி வகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறிய தென்னை? அடியிரண்டு தொடுத்தற் றொழிலல்ல தின்மையி னெனின், அற்றன்று, தொடுத்தற் றொழின் மாத்திரையானே தொடை யென்றானல்லன், அவ்வடிக் கண் நின்ற எழுத்துஞ் சொல்லும் 53பிறபொருளாகலான் அவற்றானே தொடை கொண்டமையின் வேறுறுப் பென்றா னென்பது. அஃதேற், சீருஞ் சீரும் இயைந்தவழி அவை யிடமாக நின்ற அசையான் தளைகொள் ளாமோவெனின், கோடுமன்றே, அதனை அடி யென்னாமாயின் என முற்கூறியவாறே கூறிமறுக்க. அல்லதூஉம் அவ்விரண்டசையுங் 54கூடின் சீராமன்றோ என்பது. மற்று நாற்சீரடியுள் இருசீ ரியைந்தவழிக் குறளடி யென்னா மாகலின் அதனைத் தளை யென்னாமோ வெனின், அங்ஙனங் கொள்ளின் இருசீரடிக்கண் தளைவேண்டாதானாம்; ஆகவே, 55ஒருவழிக் கொண்டு ஒருவழிக் கொள்ளாமை (663) மயங்கக் கூறல் என்னுங் குற்றமாமென்பது. அல்லதூஉம், 56அங்ஙனமன்றி வருமாயின் அடிக்கெல்லாம் பொதுவகையான் தளையுறுப் பெனப்படாது. எழுத்தும் அசையும்போல 57யாண்டும் வருவன வெல்லாம் உறுப்பெனப்படுவன வென்றற்கு, இணை நூன் முடிபு தன்னூன் மேற்றே என்பதனாற் காக்கைபாடினியார் ஓதிய தளையிலக்கணம் 58ஈண் டுங் கோடல் வேண்டுமெனின், அதுவே கருத்தாயின் 59அவர்க்கும் 60இவர் முடிவே பற்றித் 61தளை களையல் வேண்டும். அல்லதூஉம், இவற்கு 62இளையாரான காக்கை பாடினியார் தளைகொண்டில ரென்பது 63இதனாற் பெற்றாம். தளை வேண்டினார் பிற்காலத்து ஓராசிரியரென்பது. என்னை? வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதி னுண்மை வாலிதின் விரிப்பின் எனக் கூறி, வடவேங்கடந் தென்குமரியெனப் பனம்பாரனார் கூறியவாற்றானே எல்லைகொண்டார் காக்கைபாடினியார். ஒழிந்த காக்கை பாடினியத்து, வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் (650) எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான் அவர் குமரி யாறுள்ள காலத்தாரல்லரென்பதூஉங், 64குறும் பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவதன்றென்பதூஉம் பெற்றாம். பெறவே, 65அவர் இவரோடு ஒரு சாலை மாணாக்கரல்ல ரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டு மென்பது. மற்றிது முறையாயவாறென்னை யெனின், மாத்திரை எழுத்தினது குணமாதலானும் அசையுஞ் சீரும் அடியுந் தூக்கும் பாவும் வண்ணங்களு மென்று இன்னோரன்னவெல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன வாதலானும் அது முன் (314) வைத்தான். அக்குணத்திற்குரிய எழுத்தினை அதன்பின் வைத்தான். அவ்வெழுத்தான் அசையும், (315) அசையாற் சீருஞ் (324) சீரான் அடியும், (346) அவ்வடி பெற்றவழி அதனை ஆக்குமாறறியக் கூறும் யாப்பும் (390) அவ்வடியகத்தன சொல்லும் பொருளுமாகலான் அதன்பின் மரபும் (392) வைத்தான். அவ்வடியிரண்டனைத் தொடுக்குங்கால் அவற்றை ஓரடியென ஒரு தொடர்ப்படாமைத் துணிப்பது தூக்காகலான் (399) அதனைத் தொடைக்குமுன் (400) வைத்தான். அவ்வடி யிரண்டு தொடுத்த வழியுங் கொள்ளப்படும் நோக்கென்பதறி வித்தற்கு (416) அதனைத் தொடைப்பின் வைத்தான். அவ்வடி இரண்டும் பலவுந் தொடர்ந்தவழி முழுவதுங் கிடப்பது பாவாகலான் அதனை அதன்பின் (417) வைத்தான். அப்பாத் 66துணித்த 67துணிவினை (501) 68எண்ணுதலான் அளவினை (496) அதன்பின் வைத்தான். திணையுந் திணைக்குறுப் பாகிய (497) ஒழுகலாறும் அவ்வொழுக்கத்த வாகிய கூற்றும் (506) அதன்பின் வைத்தான். கேட்போருங் (508) கேட்கும் இடனும் (510) அதுபோலப் புலப்படாத காலமும் (514) இவற்றாற் பயனும் (515) பயனது 69பரத்து வரும் மெய்ப்பாடும் (516) இவற்றி னெல்லாம் ஒழிந்து நின்ற எச்சமும் (518) அவ்வெச்சத்தொடுங் கூட்டி யுணரப்படும் முன்னமும் (519) அம்முறைமையான் அதன்பின் வைத்தான். அவற்றிற்கெல்லாம் பொதுவாகிய பொருளை (520) அதன்பின் வைத்தான். அப் பொருட் பிறழ்ச்சியை ஒருப்படுக்குந் துறையை அதன்பின் (521) வைத்தான். மேல் (523) எச்சமும் மாட்டு மின்றியும் வரூஉ மென்பவாகலான் மாட்டினைத் துறைவகையின் பின் வைத்தான். அவற்றுள் எச்சத்தினை முன் ஓதினான் அது செய்யுட்க70ணின்றி வருஞ் சிறுபான்மை யாதலானென்பது. வண்ணம் பாவினது பகுதியுறுப்பாதலான் அதனை அவற்றுப் பின் (524) வைத்தான். வனப்பினை (525) எல்லாவற்றுக்கும் பின் (547) வைத்தான், அவற்றை ஒன்றொன்றாக நோக்குங்கால் அவ்வெட்டு மின்றியுஞ் செய்யுள் செய்ப வாகலினென்பது. மற்றிவ்வுறுப்பினையெல்லாம் ஆசிரியன் 71குறியென்றுமோ உலகு குறியென்றுமோ வெனின், அவ் விருதிறத்தானும் ஏற்பன வறிந்து கொள்ளப்படுமென்றொழிக. இவற்றை 72உயிருடையத னுறுப்புப் போலக் கொளின் உயிர் வேறு கூறல் வேண்டுவதாம்; அவ்வாறு கூறாமையிற் கலவை யுறுப்புப் போலக் கொள்க. (1) (மாத்திரையளவும் எழுத்தியல்வகையும் உணர்த்துதல்) 314. அவற்றுண், மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இது, நிறுத்த முறையானே முதற்கணின்ற மாத்திரையும் எழுத்தியலு முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மாத்திரைகள் பல தொடர்ந்து செய்யுட்கண் விராய் நிற்கும் அளவையும், எழுத்துக்க ளியற்றப்பட்டு எழுத்ததிகாரத் தின் வேறுபட்ட தொகையுமென இரண்டினமும் மேல் எழுத் தோத்தினுட் கூறப்படாதன வல்ல; அவையே; அவற்றை ஈண்டு வேண்டுமாற்றாற் கொள்க என்பான் மேற்கிளந்த வகையிற் பிறழாமற் கொள்க என்றானென்பது. 73அன்ன வெனவே, 74இம் மாத்திரையளவும் எழுத்தியல் வகையும் வேறென்பதூஉம், வேறாயினும் ஆண்டுக் கூறியவற் றொடு வேறுபடாமைக் கொள்க வென்பதூஉம் உரைத்தானாம். எனவே, எல்லா வழியும் 75வரையாது எய்தற்பாலவாகிய மாத்திரைகள் ஒரோவழி வரையப்படு மாயினும் அவை முற்கூறாத வேறு சில மாத்திரையுமல்ல; ஈண்டுப் பதினைந்து எழுத்தென்று கூறிப் 76பயங்கொள்ளு மாயினும் ஆண்டை முப்பத்து மூன்றெழுத்தின் வேறுபடப் பிறந்தன சில வெழுத்து மல்லவென்பான் மேற்கிளந்தன்ன வென்றா னென்பது. மாத்திரையென் றொழியாது மாத்திரையளவென்றதனான் அம்மாத்திரையை விராய்ச் செய்யும் அளவை ஈண்டுக் கூறினா னென்பது கருத்து. மற்று, எழுத்தியல் வகையினை மாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வதன்றிப் பதினைந்தென்று கொள்ளுமா றென்னை யெனின், எழுத்தோத்தினுட் குறிலுநெடிலும் உயிரு மெய்யும் 77இனமூன்றுஞ் சார்பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்புவகையான் 78ஆண்டுப் பகுத்தோதினான்; உயிர்மெய்யும் உயிரளபெடையுந் தத்தம் வகையாற் கூடுமாறும், ஐகாரம் ஔகாரம் போலிவகையாற் கூடுமாறும், யாழ்நூலகத்து ஒற்றிசை நீளுமாறும், ஆண்டுத் 79தோற்றுவாய் செய்தான். செய்யவே, அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோ டொக்குமென்று உய்த்து உணர்ந்து கொள்ள வைத்தா னென்பது. இவற்றொடு மகரக் குறுக்கமுங் கூட்டிப் பதினா றெழுத்து என்பாருமுளர். அதனாற் பயனென்னையெனின், பாட்டுடைத்தலைவன் கேட்டுக் காரணமாமென்பர். மற்று 80உயிர்மெய் தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென்றில னாகலான் ஈண்டு எழுத்தியல் வகையுள் எழுத்தாக்கி அடக்குமா றென்னை யெனின், ஈண்டு அன்ன வெனவே, ஆண்டு 81இரண்டெழுத்தின் கூட்ட மெனவும் 82மொழி யெனவும் 83போலியெனவுங் கூறினானாயினும், அவற்றை 84எழுத்தியல் வகையெனப் பெயர் கொடுப்பவே, 85ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத்தெனப்படு மென்பதாயிற்று. இதன் கருத்து, இயலென்றதனான் இயற்றிக்கொள்ளும் வகையான் எழுத்து இனைய என்றானாம். வகை யென்பத னான் முப்பத்து மூன்றனைக் குறிலும் நெடிலுமென்றற் றொடக்கத்துப் பெயர் வேறுபாட்டாற் பத்து வகைப்பட இயற்றுதலுங், 86கூட்ட வகையா னிரண்டும் 87போலிவகையா னிரண்டும் 88யாழ் நூல் வேண்டும் வகையா னொன்றுமென ஐந்துவகையானியற்றுதலுமென, இருவகையுங் கொள்ளப் படும். அல்லதூஉஞ் செய்யுள்கள் அவ்வெழுத்து வகையான் இன்னோசையவாக விராய்ச் செய்தலுங் கொள்க. மற்றள பெடையை மேல் மொழியென்றான், ஈண்டெழுத் தென்றா னாகலின், இதனை 89ஓரெழுத்தென்று கோடுமோ இரண் டெழுத்தென்று கோடுமோ வெனின், நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல். எழுத். 41) என்று கூறியவாற்றான் ஆண்டிரண்டெழுத்தெனக் கொள்ளக் கிடந்ததாயினும், 90முன்னர்ப் போக்கி, அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (326) என்றவழி எழுத்து நிலைமையும் எய்துவிக்கு மாகலான், எதிரது நோக்கி ஈண்டு ஓரெழுத்தென்று கோடுமென்பது. இனி அவற்றுட் குறிலும் நெடிலுங் குற்றுகரமும் அசைக்குறுப்பாம். மற்று, ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி (315) என்பதனான், ஒற்றும் அசைக்குறுப்பாகாவோவெனின், 91அச் சூத்திரத் தானன்றே, 92அவை குறிலும் நெடிலும் அடுத்து வந்தும் வேறுபடாது 93நேர் நிரையாதலெய்தியது நோக்கி, அவை அசைக் குறுப்பாகா வென்றதென்க. மற்றிடைநின்று நிரை யாதலை விலக்காவோவெனின், 94அன்னதொரு விதியுண்டா யினன்றே, இவை இடைபுகுந்து விலக்கவேண்டுவதென மறுக்க. நெடிலும் அளபெடையிரண்டும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஐகாரக்குறுக்கமும் ஔகாரக் குறுக்கமுமெனப் பத்துந் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடை யிரண்டும் இனம் மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ஙனமே வேறுபட வந்த பயனோக்கி எழுத்தினை இயற்றிக்கோடலின் எழுத்தியல் வகை யென்றானென்பது, அஃதேல், ஒற்றுங் குற்றிகரமும் ஈண்டோதிய தென்னையெனின், ஒற்றளபெடையான் அசை நிலையுஞ் சீர் நிலையுங் கோடலின் ஈண்டு ஒற்றுக் கூறினான். குற்றியலிகரமும் உயிராயினும், ஒற்றுப்போல, எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் எண்ணப்படா தென்றற்குக் கூறினா னென்பது. அஃதேல், ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (320) என்பவாகலின், அதை ஈண்டுத் தழாஅற்கவெனின், அக் கருத்தி னான், அவ்வாறும் அமையுமென்பது. அற்றன்று, இதனை மேற் புள்ளி பெறு மென்றிலனாதலான் புள்ளிபெறு மென்றற்கும் ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (320) என்றானென்பது. இனி, ஒருசாரார் மாத்திரையென்றது 95எடுத்தல் ஓசை யாகிய குறிப்பிசை கொண்டானென்பர். அக்குறிப்பிசை உறுப் பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாவாயினாம். சிறுபான்மை ஒரோவழி வரினும் அத் துணையானே அஃது இன்றியமையாத உறுப்போடு எண்ணப்படாதென மறுக்க. உறுப்பன்று என்றார்க்குக் குறிப்பிசை யாண்டுப் பெறுதுமெனின், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323) என்புழிப் பெறுதுமென்பது. இனி, எழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன வென்பதனையும் எழுத்திலக்கணத்திற் றிரியாமற் செய்யுள் செய்க வென்றவாறென்ப வெனின், அஃதே கருத்தாயிற் சொல் லோத்தினுள்ளும் எழுத்திலக்கணமாகிய 96மயக்கமும் 97நிலையும் முதலாகிய இலக்கணம் திரியாமற் சொல் லாராய்தல் வேண்டு மெனவும், இவ்வதிகாரத்துள்ளும் எழுத்தியல் வகையுஞ் சொல்லியல் வகையும் மேற்கிளந்தன்ன வெனவுஞ் சூத்திரஞ் செய்வான்மன் ஆசிரியனென மறுக்க. மற்று, மாத்திரை யளவைக்கும் இலக்கணங் கூறுமின் எனின், அதுவும், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323) என்புழி, வல்லோராறெனப் பாவொடு பொருந்தக் கொளக் கூறு மென்பது. அல்லதூஉம், மாத்திரையினை அளவைப்பட நிறுத்துக என்பதோ ரிலக்கண மாதலின் இங்ஙனம் வரையறை யுடைத்தாக நோக்கிச் செய்யு ளுறுப்பென்றானா மென்பது. மற்று, மாத்திரையினை அளவைப்பட நிறுத்தாக்காற் படுங் குற்றம் என்னையெனின், அற்றன்று; வரகு வரகு வரகு வரகு என்னும் அடியினைப் 98பனாட்டுப் பனாட்டுப் பனாட்டுப் பனாட்டு என நிறுத்தின் அது மாத்திரைவகையாற் சிதைவுபட்டதாம். அம்ம வாழி கேளாய் தோழீ என்றாற், பின்னர்நின்ற இருசீரும் நெடிலாதல் இன்னா தென்றுந் தோழியெனப் பின்னர் நின்ற சீரைக் குறுக்கினவழி இன்னோ சைத்தாமென்றும் அவ்வாறே செய்யுள் செய்ப. பிறவுங் கொச்சகக் கலியுள்ளும் ஒழிந்தன வற்றுள்ளும் இவ்வாறே கண்டு கொள்க. (2) (அசைவகை யிவையெனல்) 315. குறிலே நெடிலே குறிலிணை குறினெடி லொற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரு நிரையு மென்றிசிற் பெயரே. இது, நிறுத்த முறையானே அசைவகை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: குறிலும் நெடிலுந் தனித்து வந்துங், குறில் இரண்டு இணைந்து வந்துங் குறிற்பின்னர் நெடில் இணைந்து வந்தும், அவை ஒற்றடுத்தும், முறையானே நேர்நிரையாகையானே நேரசையும் நிரையசையு மென்றாம் என்றவாறு. குறிலே நெடிலே யொற்றொடு வருதலொடு எனவும், குறிலிணை குறினெடி லொற்றொடு வருதலொடு எனவும், வேறு நிரனிறீஇப் பொருளுரைக்க. மெய்ப்பட நாடி யென்பது பொருள்பெற ஆராய்ந்து; எனவே, இப்பெயர் ஆட்சி காரணமே யன்றிக் குணங் காரணமாகலு முடைய வென்றவாறு. உயிரில் எழுத்தல்லாதன (356) தனித்து நிற்றலின், இயலசை யென்னும் பொருள்பட நேரசை யென்றாயிற்று. அவை இரண்டும் நிரைதலின் இணையசையென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று. அல்லதூஉம், மெய்ப்பட நாடி என்றதனான் அவ்வாய்பாடே அவற்றுக்குக் காரண மென்பதூஉங் கொள்க. 99உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனான் உதாரணமுங் கூறியவாறு. அவை நேர்நிரையெனச் சொல்லிக் கண்டுகொள்க; அ ஆ எனவும், அல் ஆல் எனவும், பல பலா எனவும், புகர் புகார் எனவும், பிறவும் இவ்வாறு வருவன வெல்லாங் கொள்க. மற்றுக் குறினெடிலென எழுத்தாக ஓதியதென்னை? சொல்லாயவழி அசையாகாவோ வெனின், அவை ஒற்றொடு வருதலென்றதனானே, சொல்லாதலும் நேர்ந்தானாகவே அவை இருவாற்றானும் 100அசையா மென்பது 101சீரின்றன்மைக்கண் வந்தது. உள் ளார் தோ ழி என நேரசை நான்கும் வந்தன. வரி வரால் கலா வலின் என நிரையசை நான்கும் வந்தன. (3) (இதுவுமது) 316. இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பு நிரைபு மாகு மென்ப. இது, சொல்லாத அசைக்கூறுஞ் சொல்லுகின்றது. இ-ள்: இருவகை யுகர மென்பன குற்றுகர முற்றுகரங்கள்; அவற்றொடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒரு சொல் விழுக்காடுபட இயைந்துவரின், நிறுத்தமுறையானே நேரசை யோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றி வந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; நிரையசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோ டொன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் என்றவாறு. இயைந்து என்றான், இருவகை உகரமும் 102இரு பிளவு படாது ஒன்றாகி வரல்வேண்டும், அங்ஙனம் அசையாங்கா லென்றற்கு இருவகை உகரமும் ஒரு காலத்து ஒன்றன்பின் வாரா; வேறு வேறு வருமென்பது. இருவகை 103உகரமும் இறுதிக்கண் நின்று அசையாக்குமென்ப தென்னை பெறுமாறெனின், குற்று கரம் ஈற்றுக்கணல்லது வாராமையானும், நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும் (321) என்பதனானும் பெறுதுமென்பது. அல்லதூஉம், நுந்தை யென்னும் முதற்கட் குற்றுகரம் 104இறுதிக்கண் நேரசையல்லது நிரையசை அடுத்து வருதலின்மை யானும் அது பெறுது மென்பது. முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசை கூறி அவற்றுப் பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்றவேனும், அவற்றுட் 105குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசை யாகாதென்பது, குறிலிணை யுகர மல்வழி யான (தொல். செய். 5) என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்குமாயின. உதாரணம் : வண்டு, நாகு, காம்பு எனவும், வரகு, குரங்கு; மலாடு, மலாட்டு எனவும், இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு. இனி, முற்றுகரம் இரண்டசைப்பின்னும் வருங்காற் குறி லொற்றின் பின்னும் நெடிற் பின்னுமென நேரசைக்கு இரண்டல்ல தாகாது. நிரையசைக் கண்ணுங் குறிலிணைப் பின்னுங் குறினெடிற் பின்னுமல்லதாகாது. உதாரணம் : 106மின்னு நாணு எனவும், உருமு குலாவு எனவும் வரும். வாழ்வு, தாழ்வு என நெடிலொற்றின் பின்னும் முற்றுகரம் வந்ததாலெனின், அவை ஆகாவென்பதூஉம் இக்காட்டிய நான்குமே ஆவனவென்பதூஉம் முன்னர், நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும் (321) என்புழிச் சொல்லுதும். இனி, ஒருசாரார் நேர்பசை நிரைபசை யென்பன வேண்டா வென்ப. என்னை? குற்றுகர முற்றுகரங்களை வேறாக்கி அலகிட அமையாதே? 107ஞாயிறு எனக் குற்றுகரங் குறிலிணையாய் அலகு பெறுமேயெனக் குற்றங் கூறுப. 108முற்றுகரமுந் தேமா வென நேரசையாயிற்று மின்னு என்றவழி வேறலகுபெற அமையு மென்பது. அற்றன்று; 109குற்றுகரத்தினைக் குற்றெழுத் தென்ப, வேறு குற்றுகரம் வேண்டாதாரும் என்றார்க்கு 110வேண்டினானையுங் குற்றங் கூறுவரவர்; என்னை? குற்றியலுகரம் அரை மாத்திரைத் தாகலின் 111ஒற்றுப்போல ஓரசையுள் ஒடுக்கி அலகிடப்படும். அற்றன்றேற் குற்றெழுத்தாக்கி அலகு வைக்கவே அமையு மென்பதாம் அவர் கருத்து. அதற்கு விடை: குற்றுகரம் ஒற்றுப் போன்று ஒடுங்கி நில்லாது; என்னை? தன்னான் ஊரப்பட்ட ஒற்றுந் தானுமாகி அரை மாத்திரைத்தாகியும் ஒடுங்கி இசை யாது அகன்று இசைக்கும்; அதனான் ஒற்றென்றலுமாகாது; பின்னும் ஒரு மாத்திரைத் தாகாமையிற் குற்றெழுத் தெனலு மாகாது; மற்று அதனான் அதனை ஒற்றென 112அடக்கார்; குற்றெழுத்தென ஏற்று அலகு 113கொள்ளார்; இனி அதனைச் செயற்பாலதோர் அசை யாக்குத லென்பது நோக்கி நேர்பசை நிரைபசையென வேண்டினா னென்பது. அவை வண்டு தொண்டி என ஓசை யொவ்வாமை செவி கருவியாக உணர்ந்து கொள்க. அஃதேல், ஞாயிறு வலியது என்றவழிக் குறிலிணை யுகரமெனக் குற்றெழுத் தாக்குவது எற்றுக்கெனின், அளபெடையை ஓசையிற் சிதையாது 114நிலப் படையுள் 115அலகு சிதைத்தாற் போலக் குற்றுகரத்தைக் குற்றெழுத்துப் போல அலகுபெறு மென்பது இலக்கணமில்ல தொரு வழுவமைதி தானாயதனை இலக்கணமாக ஒத்துக் கொண்டு இலக்கண வகையாற் குற்றுகர மாதலை விலக்குவாரும் உளரோ வென மறுக்க. அஃதாக, 116முற்றுகரம் ஒரு மாத்திரை யாதலிற் குற்றெழுத்தாக்கி நேரும் நிரையுமாகப் பெறாவோ வெனிற் பெறா; என்னை? வண்டு வண்டு வண்டு வண்டு என நின்றவழிப் பிறந்த அகவலோசை, மின்னு மின்னு மின்னு மின்னு என நின்ற வழியும் பெறப்படுமாதலின், 117அதுவும் அது பட்டதே பட்டு அவ்வசையே பெறுமென்றா னென்பது. அல்லதூஉம் வெண்பாட்டீற்றடி வண்டு எனக் குற்றுகரவீற்றான் இற்றவழியும் கொல்லு என முற்றுகர வீற்றான் இறுமாயினும் ஒத்த வோசை யாம். இனி, உகர வீறல்லாத தேமாவென்பதனான் வெண்பா 118முடியா வென்பர்; அதனானுங் குற்றுகரத்தின் செய்கை முற்று கரத்திற்கும் வேண்டி நேர்பு நிரைபு கொண்டானென்பது. அற்றன்றியுங் குற்றுகரஞ் சார்ந்து தோன்றுமாறு போல 119இம் முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுத லொப்புமை நோக்கியும் அதனைக் குற்றுகரம்போல ஓரசைக்கு உறுப்பாம் என்றானென்பது. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (355 என்பதனான் அவை அவ்வாறாதல் அறிந்துகொள்க. இவையும் 120ஆட்சியுங் குணமுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி, நிரையவ ணிற்பி னேரு நேர்பும் (387) எனவும், நேரீற் றியற்சீர் நிரையு நிரைபும் (326) எனவும், வருமென்பது. இருவகை யுகரமும் அடைந்து வந்த 121இயல சையிரண்டும் நேர்பும் நிரைபு மென்றாலும், நேரும் நிரையு மென்னும் பொருண்மையவே யாகலான் அவற்றது பெயரான் இவற்றையும் பெயர் கொடுத்தான் 122ஆகுபெயராக்கி யென்பது. எனவே, நேர்நிரையின் பின் உகரம் வருதலின் நேர்பு நிரைபு எனக் குணங் காரணமாகவும் பெற்றாம். (4) (குற்றுகரம் இவ்விடத்து நேர்பசையாகாவெனல்) 317. குறிலிணை யுகர மல்வழி யான. இஃது, எய்திய தொருமருங்கு மறுத்ததாம்; எய்தாத தெய்துவித்ததூஉமாம்; வழுவமைத்த தெனினும் அமையும். தனிக்குறிலானாகிய நேரசைப் பின்னும் இருவகையுகரம் வந்து நேர்பசை யாதலை விலக்கினமையின் எய்திய தொருமருங்கு மறுத்ததாம். குற்றுகரங் குற்றெழுத்துப் போன்று அலகுபெறு மென்றமையின் எய்தாதெய்துவித்து வழுவமைத்ததாம். இ-ள்: இருவகை உகரமும் இரு குறிலாகி இணைந்த வழி நேர்பசையாகாது என்றவாறு. கரு மழு என முற்றுகரம் நேர்பசையாகாது நிரையசை யாயிற்று. என்றார்க்குக், 123குற்றுகரம் விலக்கியதென்னை? குறிலி ணைந்தவழிக் குற்றுகரமாகாதென்பது. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே (தொல். எழுத். 36) என்றதனாற் பெறுதும் பிறவெனின், அது நோக்கிக் கூறினானல் லன்; ஏற்புழிக்கோடல் என்பதனான், ஞாயிறு வலியது என ஓரசைப் பின்னர் வந்தவழி இது குற்றுகரமேயா மன்றே? ஆண்டும் அது குறிலிணை யுகர மெனவே படுமென்பது. பட்டக் கண்ணுங் குற்றுகரமேயென வழுவமைத்தவாறு. குறிலிணை யெனக் குற்றுகரத்தையும் உடம்பொடு புணர்த்தல் (665) என்பதனாற் குற்றெழுத்தென வேண்டினானென்பது பெற்றாம். இங்ஙனம் குற்றுகரங் குறிலிணையாகியுங் குற்றுகரமாகி எழுத்தள 124வெஞ் சினும் அமையுமெனவே 125நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரமுங் குற்றெழுத்துப் போன்று அலகுபெறும், எழுத்தள வெஞ்சினு மென்பது கொள்க. இஃது ஒன்றினமுடித்த றன்னின முடித்தல் (665) என்னு முத்திவகை. (5) (அசைகளின் பெயர் உணர்த்துதல்) 318. இயலசை முதலிரண் டேனைய வுரியசை. இது, மேற்கூறிய அசை நான்கனையும் இரு கூறுசெய்து அவற்றுக்கு எய்தாதது எய்துவிக்கின்றது. இனி, ஆட்சியுங் குண னுங் காரணமாக வேறுவேறு பெயர் கொடுக்கின்றது இச்சூத்திர மெனவும் அமையும். இ-ள்: முதற்கணின்ற நேரும் நிரையும் இயற்றிக் கொள்ளப் படாது, இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைப்பன வாம். ஒழிந்தன விரண்டும் இயற்றிக்கொள்ளப்பட்டு இயலசை யாதற்கு உரியவாம் என்றவாறு. எனவே, எய்தாத தெய்துவித்தது; இயலசை உரியசை யென்று ஆளுமாகலானும், இயற்கையான் இயறலின் இயலசை யெனவும், 126அவை செய்யுந் தொழில் செய்தற்கு உரியவாகலான் உரியசையெனவும், ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெய ரெய்துவித்ததூஉ மாயிற்று. அங்ஙனம் இயற்றிக் கொள்ளுமாறு சீர்கூறும்வழிக் கூறுதும். (6) (தனிக்குறில் முதலில் அசையாவது இவ்விடத்தெனல்) 319. தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது. இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்த னுதலிற்று; உகிரி மயிரி என நின்றவழிக் குறிலிணையே யன்றி மூன்றெழுத்து 127நிறைந்தமையின் 128நிரையசையாகா, தனித்தனி நேரசை யாகலும் மூன்று குற்றெழுத்தினுள் இரண்டு குறிலிணையாக ஒன்று நேரசை யாவதும் அது முதற்கண்ணே கொல்லோ வெனவும் ஐயம் எய்தியதனை விலக்கி விட்டிசைத்தவழித் தனிக்குறில் நேரசையாமென்பது எய்துவித்தமையின். இ-ள்: தனிக்குறிலானாகிய நேரசை முதற்கண் மொழி சிதைத்துச் செய்யப்படாது என்றவாறு. இங்ஙனம் முதற்கண் வரையறுப்பவே, இடையும் இறுதியும் மேலோதியவாற்றான் நேரசையாமென்பது. மொழி சிதைத்த லென்பது விட்டிசையாத மொழியை விட்டிசைத்து மொழிதல்; எனவே, 129விட்டிசைத்த மொழியாயின் அது மொழி சிதைத்த தெனப்படாது இயல்பா மென்பது பெற்றாம். கரு மழு என முதற்கண் மொழி சிதைத்து நேரசை யாகாமையுங் குறிலிணை யெனப்பட்டு நிரையசை யாயினவாறுங் கண்டு கொள்க. அ ஆ விழந்தான் (நாலடி. 9) எனவும், அ உ வறியா வறிவி லிடைமகனே நொ அலைய னின்னாட்டை நீ. எனவும், இவை விட்டிசைத்தலின் மொழி சிதையாது தனிக்குறில் முதற்கண் நேரசையாயினவாறும் அவை குறினெ டிலுங் குறிலிணையு மெனப்பட்டு நிரையசை யாகாதவாறுங் கண்டு கொள்க. இனி விட்டு இசைக்கும் இடந்தான் மூன்றென்பது உரையிற் கொள்க. அவை, அ ஆ விழந்தான் எனக் குறிப்பின்கண் வருதலும் அ உ வறியா எனச் சுட்டின்கண் வருதலும் நொ அலையல் என ஏவற்கண் வருதலுமென விட்டிசைக்குமிடந்தான் மூன்றெனப்பட்டது. முதலசை யென்பது நேரசை யென்பாரு முளர். 130அது விதந்தோதல் வேண்டா, தனிக்குறிலான் அசையா மெனப் பட்டது நேரசையேயென்பது பெறுது மாகலான். மற்றும், இ உக் குறுக்கம் என்றவழி, 131விட்டிசைத்து மொழி சிதையாதாகலான் அவ் விரண் டெழுத்துங் கூட்டி நேர்பசை யென்னாமோ வெனின், அவை பிளவுபட நிற்றலின் இயைந்திலவென மறுக்க. (7) (குற்றியலுகரம் அலகு பெறாதெனல்) 320. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். இஃது, எய்தாத தெய்துவித்து ஐயம் அறுத்தது. இ-ள்: மேற்கூறிய எழுத்திலக்கண வகையானும் ஈண்டோ தும் அசைக்குறுப்பாமாற்றானும் எல்லாங் குற்றியலிகரம் ஒற்றெழுத்தியற்றே யாம் என்றவாறு. 132தேற்றேகாரம் அடுத்துக் கூறியவாறு. எனவே எழுத்தோத்தினுள், மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (தொல். எழு. 104) எனக் கூறிக், குற்றிய லுகரமு மற்றென மொழிப (தொ. எழு. 105) எனக் குற்றுகரத்திற்குப் புள்ளிபெறுதலுங் கூறினான்; அதுபோலக் குற்றிகரமும் புள்ளிபெற்று நிற்றல் உடைத் தெனவும், ஈண்டுக் குற்றுகரம் நேர்பும் நிரைபுமாகியவாறு போலத் தானும் ஓர் அசையாகுங் கொல்லென்று ஐயுறுவது வேண்டா, ஒற்று நின் றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலுற ஒற்றுப்போல எழுத்தெண்ணப்படாமையு முடைத்து அது என்ற வாறுமாயிற்று. எனவே, ஒற்றெழுத்தியற்றாயினுங் குற்றுகரம் இகரக் குறுக்கம் போலாது செய்யுட்கு உபகாரப்பட்டதோர் அசை வேறுபாடு தோன்ற நிற்கு மென்றவாறாயிற்று. மற்று எண்ணப் படாதென்றது ஈண்டுக் கூறல் வேண்டுமே? உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ (354) என்புழிப் பெறுதுமாலெனின், அது குற்றுகரத்திற்கே கூறிய தென்பது ஆண்டுச் சொல்லுதும். உதாரணம்: 133மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும் (தொ. சொல். 276) எனவும், அருளல்ல தியாதெனிற் கொல்லாமை (குறள். 254) எனவும் இவற்றில் இயலசை சார்ந்து ஒற்றியற்றாகிக் குற்றிகரம் வந்தவாறு. 134நாகியாது வரகியாது எனக் குற்றிகரம் உரியசை சார்ந்து ஒற்றியற்றாகி வந்தவாறு. அது நிரையும் நிரைபுஞ் சார்ந்து ஒற்றியற்றாமாறு இல்லை போலும். இவற்றை யெல்லாம் ஒற்றெழுத் தியற்றே யென்பதனாற் புள்ளியிட் டெழுதுக. இது சொல்லிய காரணங், குற்றுகரம் அரைமாத்திரைத் தாகியும் ஒற்றியற்றாகாது நேர்பும் நிரைபும் ஆகியவாறு போல, அதற்கு இனமாகிய குற்றிகரமும் அரை மாத்திரைத்தாகி வேறோ ரசையாகுங் கொல்லென்று ஐயுறாமற் காத்தவாறு. மற்று ஆய்தத் தினையும் ஒற்றியற்றென்னாமோ வெனின், அஃது எழுத்தோத்தினுள், எழுத்தோ ரன்ன (தொ. எழு. 141) என்பதனாற் பெற்றாமென்பது. மற்று, முந்தியாய் பெய்த வளை கழலும் (யா. வி. ப. 43) எனவும், நினக்கியான் சொல்லிய தின்ன தின்று எனவும் இவை ஒற்றியற்றாகாது எழுத்தியற்றாயினவென்று காட்டுவாரு முளர். 135முந்தியாய் என்பது இகரவீறுமாமாகலின் அது காட்டல் நிரம்பாது. அல்லதூஉம் அவை சான்றோர் செய்யுளல்லவென மறுக்க. 136இனி, ஒற்றும் எழுத்துமென உம்மை யோடெண்ணலுமாகாது; இவ்வோத்தினுள், உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ (354) என ஒற்றினையும் எழுத்தென்றானாகலின். (8) (நேர்பும் நிரைபுங் கொள்ளுங்கால் வருமொழியைச் சிதைத்து இருவகை யுகரமும் கோடலாகாதெனல்) 321. முற்றிய லுகரமு மொழிசிதைத்துக் கொளாஅ நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும். இதுவும், ஐயம் அறுத்தது; இருவகை யுகரமொடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரைபுமாமென்றான், அவற்றுள் முற்றுகரம் ஈறாகி நிற்குஞ் சொல் உலகத்து அரிய வாயினவாதலிற் 137புணர்ச்சிக்கண் வந்த உகரமே ஈண்டு நேர்பும் நிரைபுமாவனவெனவும், புணர்ச்சிக்கண்ணும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும், 138நிலைமொழி யீறுகெட்டு நின்ற உகரமுமே கொள்ளப்படுவன வெனவும், 139வருமொழித் தொழிலாகிய ஒற்று நிலைமொழியாகிய நேர்பு நிரைபிற்கு உறுப்பாவன கண்டு வருமொழி யுகரம் ஈண்டும் அதுபோல அவற்றிற்குறுப்பாங்கொல்லென்று ஐயுற்றானை ஐயுறற்க வெனவுங் கூறினமையின். இ-ள்: முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ-இரு வகையுகரமு மியைந்தவை வருங்கால் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்று வாங்கிக் கொடுக்கப்படா; நிற்றலின்றே 140யீற்றடி மருங்கினும்- அங்ஙனம் வாங்கிக் கொடுக்கப்படா வாயின், நேரசை நிரையசைப்பின்னர் முற்றுகரம் ஈறாகி வருஞ் சொல்லும் உலகத்தரியவாயின், முற்றுகரத்தான் நேர்பும் நிரைபும் ஆமாறென்னை யென் றார்க்கு, அடியிறுதிக்கணல்லது முற்றுகரம் புணர்ச்சிவகை யான் 141இடைநில்லாதன வாயின கண்டாயென்ப துணர்த்திய வாறு. இன்று என ஒருமை கூறினமையின் எடுத்தோதிய முற்று கரமே கொண்டு 142இலேசினாற் றழீஇய குற்றுகரங் கொள்ளற்க. மற்றிதனை இலேசினாற் கொண்டதென்னை யெனின், நுந்தை யென்னும் ஒருமொழிக்கணன்றி வாராமையின், அதன் சிறுவரவு நோக்கி உம்மையாற் கொண்டானென்பது. முற்றுகரம் மொழி சிதைத்துக்கொளாவெனவே, ஒற்றூர்ந்து வரினுந் தனித்து வரினும் உடன்விலக்குண்ணு மென்பது. நாணுடை யரிவை (அகம். 34) என்றவழி, நாண் என்னும் நேரசைப் பின்னர், உடையரிவை யெனத் தனித்துவந்த உகரம் நேர்பசையாகாது. 143வார்முரசு என்றவழி, வாரென்னும் நேரசைப்பின்னர் முரசென மகரம் ஊர்ந்துவந்த உகரமும் நேர்பசையாகாது. வற்றுறுசெய்தி எனவும், பரன்முரம்பு எனவும் வந்தவழி, வற்றெனவும் பரலெனவும் நின்ற நேரசை நிரையசைப் பின்னர் உறுசெய்தி யெனவும் முரம்பெனவும் வந்த உகரங்களும் நேர்பசை நிரைபசையாகா. 144சின்னுந்தை இராநுந்தை எனக் குற்றுகரம் வந்தவழியும் நேர்பசை நிரைபசையாகா வென்ற வாறு, 145நாணுத் தளையாக வைகி (அகம். 29) என்றவழி ணகாரவீறு புணர்ச்சிவகையாற் பெற்ற உகரம் நிலை மொழித் தொழிலாகலான் அது நாகு என்னுங் குற்றுகரம்போல் ஒற்றுமைப்பட்டு நேர்பசையாயிற்று. 146விழவுத் தலைக்கொண்ட என்றக்காலும் அவ்வாறே ஆகாரவீறும் உகரம்பெற்று நிரைபசை யாயிற்று. மின்னு மிளிர்ந்தன்ன கனங்குழை (அகம். 158) எனவும், முழவு முகம் புலரா (அகம். 206. நற். 220) எனவும் வருவனவும் அவை. நாணுத்தளை என்றாற்போல வரும் ஒற்றுப்பேறு முன்னர்ச் 147சொல்லுதும். நீர்க்கு நிழற்கு என்ற உருபும் நிலைமொழித் தொழிலாதலான் அவையும் நேர்பசை நிரைபசையாமென்பது இதனாற் பெற்றாம். நிற்ற லின்று என ஒருமைகூறி முற்றுகரமே கொண்டமையிற், குற்றுகரமாயின் இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரைபுமாம் என்றவாறாம். அவை, ஆட்டுத்தாள் சேற்றுக்கால் எனவும், எய்போற் கிடந்தானென் னேறு (பு. வெ. வாகை. 22) எனவும் இடையும் இறுதியுங் குற்றுகரம் நேர்பசையாயிற்று. களிற்றுத்தாள் எனவும், வேலாண் முகத்த களிறு (குறள். 500) எனவும், இடையும் இறுதியுங் குற்றுகரம் நிரைபசையாயின வாறு. மருங்கினும் என்ற உம்மையான் அடியீற்றேயன்றி மொழி யீற்றும் அவற்றிறுதி கெட நின்ற மொழிக்கண் இடை நின்ற உகரம் இறுதியாகி உரியசையாகுவனவும் உளவென்பது கொள்க. அவை, 148மேவுசீர் எனவும், கோலுகடல் எனவும், உலவுகடல் எனவும், விரவுகொடி எனவும், கலனளவு நலனளவு எனவும், சுரும்புலவு நறுந்தொடையலள் எனவும் வரும். இவை, ஈற்றுநின்ற மகரங்கெட்டு உகரவீறாயின. இவற்றுள் நிரைபசை யுகரங்களை ஆகாரவீற்றுப்புணர்ச்சி யுகர மென்னா மோவெனின், என்னா மன்றே; வருமொழியொற்று மிகாமையி னென்பது. உலவுக்கடல் விரவுத்தளை யெனின், 149அவ்வாறே யமையுமென்பது. மருங்கென்றதனான் ஈற்றடிக் கண்ணும் இறுதிக் கண்ணே முற்றுகரம் விலக்குண்டதெனக் கொள்க. என்றார்க்குப், புனைமலர்த் தாரகலம் புல்லு (யா, வி. ப. 58.) எனவும், கண்ணாரக் காணக் கதவு (முத்தொள். 42) எனவும் வருமாலெனின் அவை 150மரூஉ வழக்கென்க. (9) (குற்றியலுகர முற்றியலுகரங்கள் தம்முன் தோன்றிய ஒற்றோடு நிற்பினும் நேர்பு நிரைபுமேயாமெனல்) 322. குற்றிய லுகரமு முற்றிய லுகரமு மெற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. இஃது, எய்தாதது எய்துவித்தது; இயலசைகளை, ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி (தொல். செய். 3) என்றான், உரியசைக்கு அது கூறாதான் ஈண்டுக் கூறுகின்றமை யின். இ-ள்: மேற்கூறி வருகின்ற குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு நிற்கவும் பெறும், அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாயின் என்றவாறு. எனவே, அவை நிலைமொழி ஒற்றுடையவாயின் நேர்பும் நிரைபு மாகா, வருமொழி வல்லெழுத்து மிகினே யாவதென்ற வாறு. அஃதென்னை பெறுமாறெனின், வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி (தொல்.எழுத். 406) 151என்றதனான், 152முன்னர் நிலைமொழித் தொழிலாகிய முற்றுகரம் வருமெனக் கூறிய அதிகாரத்தானே ஒற்றுத் தோன்றி னென்றானாகலானும் பெறுதும்; நிலைமொழி யுகரம்பெற்று வருமொழி ஒற்றெய்துவது கண்டானாகலானென்பது. உதாரணம் : சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேல் (யா. வி. ப. 234) எனவும், நாணுத் தளையாக வைகி (அகம். 29) எனவும், நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை (புறம். 125) எனவும், கனவுக்கொ னீகண்டது (கலி. 90) என இவை இருவகையுகரமும் ஒற்றடுத்து உரியசையாயினவாறு. உம்மை, எதிர்மறையாகலான் ஒற்றின்றி வருதலே பெரும் பான்மை. இங்ஙனம் வருமொழி யொற்று மிகின் அவை கொண்டு நேர்பும் நிரைபுமா மெனவே உண்ணும் எனவும், நடக்கும் எனவும், நிலைமொழி ஒற்று நின்றவழித் தேமாவும் புளிமாவுமாவதல்லது நேர்பசையும் நிரைபசையுமாகா தென்பதாம். விக்குள், கடவுள் என்பனவும் அவை. (10) (அசையுஞ் சீரையும் ஓசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துக எனல்) 323. அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே. இது, மேற்கூறப்பட்டனவற்றுக்கும் இனிவருஞ் சீர்க்கு மெல்லாம் புறனடை. இ-ள்: அசைகளையுஞ் சீர்களையும் ஓசையொடு சேர்த்தி வேறுபடுத்து உணர்த்துவித்தலும் அச்செய்யுளிலக்கணத்துறை போயினாரது நெறி என்றவாறு. மேல் (313) மாத்திரை யென்பதோர் உறுப்புரைத்தான்; அதனான் அசை சீர்களது ஓசையை அளந்து கூறுபடுத்து இன்னோசையும் இன்னா வோசையு முணர்த்துக. 153எழுத்தியல் வகைக்கும் இஃதொக்கும். குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு (யா. வி. பா. 33 - 181) எனின், வெண்பாவீற்றடி இன்னோசைத்தன்றாம். கருப்புக் கொழுந்து கவர்ந்து என முடிக்கின் இன்னோசைத்தாய் 154வெறுத்திசையின்றா மென்பது. நிலமிசை நீடுவாழ் வார் (குறள். 3) இதனுள், வாழ்வார் என்னும் மொழியை வகுத்து, வாரென நேரசைச் சீராக்கி வகுப்பவே அசையினை இசையொடு சேர்த்திற்றாம். இனி, 155நீடு கொடி என்பதனை மாவருவாய் என்று அசை யுஞ்சீரும் இசையிற் சேர்த்துக வென்பாருமுளர். இவற்றைப் பிற நூலார் 156வகையுளி யென்ப. இச்சூத்திரத்துள், வகுத்தன ருணர்த்தல் என்றமையின், இனி, வெண்பாவினுள் வெண்சீரொன்றி வந்தவழியும் வேற்றுத் தளை விரவும் இடனுடைய. அவையும் இசையொடு சேர்த்தி வேறுபாடுணர்த்துக. மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என்பது, பன்னிரண்டெழுத்தடி; மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய் என்பது, பதின்மூன்றெழுத்தடி; மாசேர்வாய் மாவருவாய் மாசேர்வாய் மாவருவாய் என்பது, பதினான்கெழுத்தடி; இவை மூன்றும், அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய (380) என வெண்பாவிற்கு ஓதிய அளவடியேயாயினும் 157இக்காட்டிய அலகிடுகையாற் கலித்தளை தட்டுத் துள்ளலோசையும் பிறக்கும். மாசேர்வாய் மாசேர்வாய் பாதிரி பாதிரி எனவும், மாசேர்வாய் பாதிரி பாதிரி காருருமு எனவும், மாசேர்வாய் பாதிரி காருருமு காருருமு எனவும், முன்காட்டிய மூன்றனையுமே இவ்வாறு அலகிட்டு ஒசையூட்டக் கலித்தளை தட்டாது வெண்பாவடியேயாம். இவ் விருகூறும் ஒசையொடு சேர்த்துணர்த்துக. பதினான் கெழுத்தின் இறந்த பதினைந்து நிலனும் பதினாறு நிலனும் பதினேழு நிலனு மென இம்மூன்றும் வெண்சீர் வந்தொன்றியக்காலும் இயற்சீர்வந் தொன்றாக்காலும் ஒரு ஞான்றுஞ் செப்பலோசை பிறவா; அவையும் ஓசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துக; அவை வருமாறு: புலிவருவாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய் எனவும், மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் எனவும், புலிவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் எனவும், இவை வெண்சீரொன்றியுங் கலித்தளை தட்டின. இனி இவற்றை இயற்சீர்கொடுத்துச் சொல்லுங்காலுஞ் செப்ப லோசை சிதையும் ; என்னை? 158காருருமு காருருமு காருருமு 159பாதிரி எனவும், காருருமு காருருமு காருருமு காருருமு எனவும், 160நரையுருமு காருருமு காருருமு காருருமு எனவும், இவை இயற்சீரான் வந்தும் வேறொரு சந்தப்பட்டுச் செப்பலோசை சிதைய நிற்குமென்பது. அசையுஞ் சீரும் இசை யொடு சேர்த்தி வகுத்துணர்த்துக. இன்னோரன்ன பிறவும் பெரிதும் எஃகுசெவியும் நுண்ணுணர்வும் உடையார்க்கன்றி உணரலாகா. ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய் என்றக்கால், ஞாயிறு புலிவருவாயென இயற்சீரின்பின்னர் நிரையசை வந்து, சீரியை மருங்கி னோரசை யொப்பி னாசிரியத் தளையென் றறியல் வேண்டும் (368) என்பதனான், ஆசிரியத்தளையாயினும் அஃது ஆண்டுக் கலித்தளைப்பாற் படுமென்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி என்பதனான் உணரப்படும். இனி, 161ஞாயிறு புலிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய் என்புழிப், புலிசேர்வாய் 162மாசேர்வாயென நேரொன்றிய தேனும் அது கலித்தளையென்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி என்பதனான் உணரப்படும். இன்னோரன்ன பலவுமுள; அவை யெல்லாம் வரையறுத்து இலக்கணங் கூறப்படா; அவற்றை அவ்வாறு வேறுபடுத் துணர்த்துதல் அவ்வத்துறை போயினார் கடனென அடங்கக் கூறல் வேண்டி, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே என்றானென்பது. உம்மையான், அடியினை வகுத்துணர்த்துதலுங் கொள்க. அது, நுதல திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே (அகம். கடவுள்) என்புழி, இகலட்டு என்னுஞ் 163சீர் எழுத்து முதலாக வீண்டிய வடிவிற், குறித்த பொருளை முடிய 164நாட்டும் யாப் பென்னும் உறுப்பினுள் அடங்காது இகலட்டுக் கையதென மேலடியோடு பொருள் கூடியும், இசையொடு சேர்த்தி வகுத்துணர்த்தியதே யாம். இன்னும் இவ்விலேசானே 165எடுத்தல் ஓசையும் அசை யொடுஞ் சீரொடுஞ் சேர்த்தி வகுத்துணர்த்தலுங் கொள்க. அவை, 166சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை என்றாற் போல்வன. இனி, 167அகவலோசை மூன்றெனவுஞ் செப்பலோசை மூன் றெனவும் அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தியென 168வகுத் துணர்த்துவாருமுளர். அவை இயலசை மயங்கிய இயற்சீரும் உரியசைமயங்கிய இயற்சீரும் வெண்சீரும்பற்றி ஓசை வேறு பட்டுத் 169தோன்றுமென்க. அங்ஙனமாயினும் அவை மும்மூன் றாக்கி வரையறுக்கப்படாமையின் ஈண்டவை கூறானென்பது. இனி, ஒருசாரார் அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்துணர்த்த லென்பதனை இவ்வாறு முரைப்ப: என்னை? ஒரு செய்யுளுட் கிடந்த அசை சீர்களை ஈண்டுக் காட்டிய தேமா புளிமா வென்பன முதலாகிய 170உதாரணங்களோடு சேர்த்தி அவ்விரண்டனையும் ஒக்கும் வகையான் ஓசையூட்டிக் காட்டுப. அற்றன்று, இவ்வுதாரணஞ் சீரென்று வலித்திருந்தார்க்காம், அது செய்துகாட்டல் வேண்டுவது. 171எல்லாச் சொல்லிற்கும் ஏற்றவாற்றான் அசையுஞ்சீரும் இசையொடெனப் பொது வகையாற் கூறினமையின் அதுகாட்டல் நிரம்பாதென்பது. இனிக், கடியாறு கடியாறு கடியாறு கடியாறு என்பதனைத் துள்ளலாகச் சொல்லிக் கலியடியெனவுங், கடியாறு என்பது நேர்பீறாமென்பதாயினும், அது வெண்சீரே ஈற்றசை நிரையியற்றாய் நின்றதெனச் சொல்லி அதற்கு இலக்கணம். வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (341) எனப் பொருளுரைத்து, மற்றதனைக் கலித்தளையெனவுங் காட்டுப. அற்றன்று; 172கடியாறு என்னுஞ் சீரின் உறழ்ந்த ஆசிரிய வடியும் அதுவே வாய்பாடாக 173வருமாகலின். மற்றதன் கண் துள்ளலோசை பிறந்ததாலெனின், அவற்றுக்கண் 174ஒரோ மாத்திரை கொடுப்பத் துள்ளலோசை பிறந்ததாயினும், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்திச் சொல்லுக வெனவே அங்ஙனம் மாத்திரை நீட்டிச்சொல்லாது அகவலோசைப்படச் சொல்லுகவென்பது இதனாற் பெற்றாமாகலின் அது பொருளன்றென்பது. (11) (சீராமாறும் அதன் வகையும்) 324. ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே. இது, முறையானே அசையுணர்த்திச் சீராமா றுணர்த் துவான் தொடங்கி அவை இத்துணைப் பகுதியவென்பதூஉம் அவற்றுப் பொதுவிலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இரண்டசையானும் மூன்றசையானும் ஓரொரு சொற்கண் சீரியைந்திறுவன சீரென்று சொல்லப்படும் என்றவாறு. சீரியைந் திறுதல்என்பது வழக்கியல் செய்யுளாமாற் றான், 175யாப்பினும் பொருள் பெறப் 176பகுத்துப் பதமாகிய வற்றுச் சேறல். உதாரணம் : சாத்தன் கொற்றன்எனவும்,உண்டான் தின்றான் எனவும், இரண்டசை கொண்டு சீராயின. கானப்பேர் சாய்க் கானம் கூதாளி எனவும், உண்ணாதன தின்னாதன எனவும், இவை மூவசை புணர்ந்து சீராயின. இவை செய்யுளுள் வருமாறு : உலக முவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு (முருகு. 1, 3 என ஈரசைச்சீர் வந்தன. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணர்ந்தான் (முத்தொள். 104) எனவும், வசையில்புகழ் வயங்கு வெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினும் (பட்டின. 1, 2) எனவும் இவை மூவசைச்சீர் வந்தன; பிறவுமன்ன. மற்றுச் சீரென்ற தென்னையெனின், 177பாணிபோன்று 178இலயம் பட நிற்றலான் அது 179சீரெனத் தொழிற்பெயராம். என்னை? சொற்சீர்த் திறுதல் (435) என்புழித் 180தொழிற்படுத்தோதினமையின். இனி, இயைதல் என்பது அசைவகை ஒன்றொன்றனொடு தொடர்ந்தவழி யல்லாற் சீர்க்கு 181அலகுபெறலாகா தென்றவாறு; எனவே, அவ்வாறு இலயம்பட நின்றனவாயினும் புணர்ச்சி யெய்து மென்பதாம். மற்று, இற்றது என்ற தென்னை? சீரென்பது தொழிற் பெயராகலான் 182அது, சீரியைந்து எனவே பெறுது மெனின், அங்ஙனங் கொள்ளிற் சீரியைந்த தொட ரெல்லாங் கூடி ஒரு சீராவான் செல்லுமாகலின் இடையிடை இற்றுவரல் வேண்டு மென்றற்கு அங்ஙனங் கூறினானென்பது ; 183இதனானே ஒரோவழிப் புணர்ச்சி விகாரம் எய்தாமையுங் கூறினானாம். வண்டுபடத் ததைந்த கண்ணி (அகம். 1) என்புழி, வல்லெழுத்து மிக்க புணர்ச்சிவகையானே சீரியைந்தன. பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து என்றவழி ஒன்றோடொன்று தொடர்ந்ததேனும், இற்றதென்பத னான் இறுதிபட நின்றமையின், 184எல்லா விறுதியும் முகர நிறையும் (தொல். எழுத். 408) என்றதனாற் குற்றுகர முற்றுகரமாகாது நாலெழுத்தடியாயிற்று. இதனை 185எழுத்தடியென்றதே வலியுடைத்து; வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தான் நாலெழுத்தடி 186வேறுண்மை யின். ஈரசை கொண்டும் எனவும், மூவசை புணர்ந்தும் எனவும், கூறினமையான் ஒருசீர் பலசொல் தொடர்ந்துவரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டுமென்றவாறாம். எனவே, உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானுமன்றி வாரா வென்பது பெற்றாம். இதனானே ஒருசொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றான் வேறு சீராக்கியவழியும் அச்சீர்வகையானே வேறு சொல்லிலக்கணம் பெறுமென்பதுங் கொள்க. அது, மம்மர் நெஞ்சினேன் 187றொழுதுநின் றதுவே (அகம். 56) என்புழி, நின்றது என்னுஞ் சீர் குற்றுகரவீற்றுச் சொல்லன்றே? அதனைப் பிரித்து அதுவேயென வேறு சீராக்கவே, அது முற்றுகரமாகி வேறுபடுதல் கண்கூடாக் கண்டுகொள்க. என்றார்க்கு, எனப்படுமென்ற தென்னை யெனின், 188ஓரசையே சீர்நிலை பெறு மென்றுமாயினும் அவை சீரென ஓதப்படா வென்றற் கென்பது. மற்று 189நாலசையானும் ஐந்தசையானும் உண்ணாநின்றன, அலங்கரியாநின்றானெனச் சொல் வருவன உளவாவெனின், அங்ஙனம் வருஞ் சொற்கள் சிலவாகலானும் அவைதாமும் இரண்டுசொல் விழுக்காடாய்ப் பிளவுபட்டு நிற்றலின் ஒரு சீரெனப் படாமையானும் அவை சீராக வருஞ் செய்யுளின்மையானும் என மறுக்க. இனி 190வஞ்சிப்பாவினுள் வந்த ஆசிரிய அடியினை நாலசைச்சீர் காட்டல்வேண்டுவார் இருசீரடியாக உரைப்பினும் அவை தூங்கலோசை யிலவாகலானும் அவை சீரியைந்திறுத லின்மையானுங் கொள்ளா னென்பது. ஈண்டு எனப்படு மென்பதே பற்றி 191நாலசைச்சீர் கொண்டாரும் உளர். ஐயசைச் சீர் கொண்டாரைக் கண்டிலமென்க. (12) (ஈரசைச்சீர் இவையெனல்) 325. இயலசை மயக்க மியற்சீ ரேனை யுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர். இது, நிறுத்தமுறையானே இயலசையும் உரியசையும் வேறுவேறு தம்முள் மயங்கிவரும் ஈரசைச்சீருணர்த்துகின்றது. இ-ள்: 1நேர்நேர் 2நிரைநேர் 3நிரைநிரை 4நேர்நிரை என்பன நான்கும் இயற்சீர் ; 1நேர்புநேர்பு 2நிரைபுநேர்பு 3நிரைபுநிரைபு 4நேர்புநிரைபு என்பன நான்கும் ஆசிரியவுரிச்சீர் என்றவாறு. இவற்றுள் இயற்சீரைத் தேமா புளிமா கணவிரி பாதிரி எனவும், வாய்க்கால் வாய்த்தலை தலைவாய் துலைமுகம் எனவும் (யா.வி) பிறவும் இன்னோரன்ன வேறு வேறு காட்டுப. இனி, வருவனவற்றிற்கும் இஃதொக்கும். ஆசிரியவுரிச்சீரை வீடுபேறு வரகுசோறு தடவுமருது பாறுகுருகு எனவுங் காட்டுப: அவற்றுக்குச் செய்யுள்: அவரே, 192கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே (குறுந். 216) என்புழிக் கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை என நான்கு இயற்சீரும் வந்தன. வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப (புறம். 35) எனவும், வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் (முருகு. 106) எனவும், பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன் எனவும், நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து (அகம். 96) எனவும் வரும். இவற்றுள் 193வீற்று வீற்று எனவும், வசிந்து வாங்கு எனவும், பூண்டுகிடந்து எனவும், இறவுக்கலித்து எனவும் நான்காசிரியவுரிச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க. பிறவு மன்ன. இஃது, 194ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி, இயற்சீ ரிறுதிமு னேரவ ணிற்பின் (331) எனவும் பிறாண்டும் ஆளுப. குணம், இயற்சீராகலானும் நான்கு பாவிற்கும் இயன்று வருதலானுங் குணங் காரணமாயிற்று. இயல்பு வகையான் 195ஒரோ ஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும்பான்மையாகலானும், நான்கு பாவிற்கும் பொதுவாகி இயன்று வருதலானும், 196இயலசையான் வரும் ஈரசைச்சீராக லானும், இவற்றை ஒருபாவிற்குரிமை கூறுதல் 197அரிதாகலானும், இவற்றை இயற்சீரென்றான். எனவே, 198சொல்லின் முடியும் இலக்கணத்தான் நான்குபாவிற்கும் 199உரிய வென்பதூஉம் ஈண்டுப் பெற்றாம். அல்லதூஉம், அவற்றைத் தளைகூறும்வழி 200மூன்று பாவிற்கும் உரிமைகூறிக் கலிப்பாவிற்கும் வஞ்சிப்பாவிற்கும் நேரீற்றியற்சீர் வாராவென, 201ஒழிந்தசீர் வருமென்ப துடன்பட்ட மையானும் நான்கு பாவிற்கும் இயன்றுவருமென்பது பெற்றாம். ஆசிரியவுரிச்சீர் என்றதூஉம் அவ்வாறே ஆட்சியும் குணனும் நோக்கிய பெயர். ஆட்சி, வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் (335) எனவும் பிறாண்டும் ஆளுப. உரியசை மயக்கமாகலானும் ஆசிரியத்திற் குரிமையானும் இக்குறி குணங் காரணமாயிற்று. மற்றிவை இயற்சீர்போல 202ஓரோர் சொல்லாய் யாண்டும் நிற்ற லில்லை பிறவெனின், அற்றன்று; தோன்றுவாக்கு இரங்கு வாக்கு என்றாற் போல்வன உளவென்பது. 203இனி, இவ்வியற்சீர் தாமும் இரண்டுசொற் கூடியும் ஒன்றாகியவழியே சீரெனப் படும்; அது போல 204இவையும், எல்லாத் தொகையு மொருசொன் னடைய (தொல். சொல். 420) என்பதனான் ஒரு சொல்லாயினவெனினும் அமையும். மற்று 205ஒழிந்த இயற்சீருங் கூறாது ஆசிரியவுரிச்சீர் ஈண்டுவைத்த தென்னையெனின், இவ்விரு பகுதியவற்றை இயற்சீரென்றும் (331) ஆசிரியவுரிச்சீரென்றும் (335) 206ஆளுமாகலின் என்ற வாறு. (13) (உரியசைப்பின் நிரையசை வரும் சீரும் உரிச்சீராமெனல்) 326. முன்னிரை யுறினு மன்ன வாகும். இஃது, இயலசையும் உரியசையும் மயங்கி யாவனவற்றுள் இரண்டுசீர் கூறுகின்றது. இ-ள்: உரியசை மயக்கம் ஆசிரிய வுரிச்சீர் (தொல். செய். 13) என மேனின்ற அதிகாரத்தான் அவ்வுரியசைப் பின்னர் நிரையசையுறினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச் சீராம் என்றவாறு. அவை, நேர்பு நிரை, நிரைபு நிரை என வரும். இவற்றை நீடுகொடி, நாணுத்தளை, குளிறுபுலி, விரவுக்கொடி எனவும் பிறவாற்றானுங் காட்டுப. அவையெல்லாம் அறிந்து கொள்க. மற்று, இயலசையும் உரியசையும் விரவி இயற்சீராவன இலவோ வெனின், உள; அவையன்றே மேற்சொல்கின்றன வென்பது. அஃதேல், இவ்விரண்டும் இயற்சீராகாவோவெனின், அன்ன வென்று, மாட்டெறிந்த கருத்தினான் அதுவும் அமையுமென்பது. என்றார்க்கு, இவற்றை ஆசிரியவுரிச்சீ ரென்றல் குற்றமாம் பிறவெனின், பெரும்பான்மையும் ஆசிரியத்திற்கும் அதற்கின மாகிய வஞ்சிக்கும் உரியவாகலானும், ஒழிந்த இரண்டு பாவின் கண்ணுஞ் சிறு வரவினவாகலானும், வெண் பாவினுட் கட்டளை யடிக்கண் வாரா வென்பது, கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (336) என வரைந்தமையாற் பெறுதுமாகலானும் இவற்றை ஆசிரியவுரிச் சீரென்றலே வலியுடைத்தென்பது. 207அன்னவென்பதனை இயற்சீரொடு மாட்டுங்கால், ஈற்றது அதிகாரம்பட இறுதி நின்ற நிரையீற்றியற்சீரிரண்ட னொடுங் கொள்ளப்படும்; கொள்ளவே, அம் முறையானே நீடுகொடி என்பதனைப் பாதிரி போலவுங் குளிறுபுலி என்பதனைக் கணவிரி போலவுந் தளைகொள்ளப் படு மென்பதாம். அவை செய்யுளுள் வருமாறு: 208ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ (புறம். 55) எனவும், 209உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறம். 3) எனவும், ஓங்குதிரை வியன்பரப்பின் (மதுரைக். 1) எனவும், நிலவுமணல் வியன்கானல் (புறம். 17) எனவும் இவை 210ஆசிரியத்துள்ளும் வஞ்சியுள்ளும் வந்தவாறு. தூங்குசிறை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டே எனவும், ஏடுகொடி யாக வெழுதுகோ (முத்தொள். 50) எனவும் இவை வெண்பாவினுட் கட்டளையடி யல்லாதவழிச் சிறுபான்மையான் வந்தன. மற்றிவையுங் கட்டளையடி யென்னாமோ வெனின், அற்றன்று; அது தளைவகை கொள் ளுந்211துணை இன்னோசைத்தன் றென்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323) என்பதனானுணர்க. 212இப்பகுதி யறியாதார் அடி யுறழ்ந்ததனாற் பயனென்னை யென்றிகழ்ப. (14) (உரியசைப்பின் நேரசைவருஞ் சீர் இயற்சீராமெனல்) 327. நேரவ ணிற்பி னியற்சீர்ப் பால. இஃது, இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண் டியற்சீர் உணர்த்துகின்றது. இ-ள்: முன்னர் உரியசைப் பின்னர் நிரையசைவரின் ஆசிரியவுரிச் சீராமென்றான். அவ்வதிகாரத்தான் உரியசை யிரண்டன் பின்னும் நேரசை வரின் அவையிரண்டும் ஆசிரியப் பாலவாம் என்றவாறு. அவை நேர்புநேர் நிரைபுநேர் என வரும். உதாரணம் : 1சேற்றுக்கால் 2வேணுக்கோல் 3களிற்றுத்தாள் 4முழவுத் தாள்என வரும். 1நீத்துநீர் 2குளத்துநீர் 3போதுபூ 4விறகுதீ எனவும் காட்டுப. பிறவுமன்ன. இவை இயற்சீர் நான்கனுள்ளும் எப்பாற் படுமெனின் 213அதிகாரத்தான் நீடுகொடி குளிறுபுலி என்பன போல இறுதியினின்ற பாதிரி கணவிரிப்பாற் படும் முறையா னென்பது. எனவே, போதுபூ பாதிரியாகவும் விறகுதீ கணவிரியாகவும் இயற்றப்படு மென்பது. இவ்வாறு கூறவே, இவை பாதிரி 214கணவிரி போல 215அசை திரிந்து நிரையாமென்பது கொள்ளற்க. நேர்பு நிரைபு முதலாக நிரையீறாகிய சீர் தளைகொண்டாங்குக் கொள்ளப்படும் இவையு மென்பதாம். தளைகோளொக்கும் எனவே, 216ஏழு தளையுள்ளும் இவற்றை ஒன்றொன்றனுள் அடங்குமென்று அடக்கற்க. என்னை? 217இவை வேறுவேறு பட்ட அசையான் வேறு வேறு சீராயினமையினென்பது. அசைச்சீர்க்கு உரிச் சீரிலக்கணமின்மையின் இதற்கு இஃதொப்ப வாராதென்று ணர்க. 218நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர் என்புழிப் போதுபூவும் விறகுதீயும் வந்தவாறு கண்டுகொள்க. இவற்றை 219ஆசிரியவுரிச்சீர்ப்பின் வைத்ததென்னையெனின் இவையும் அவை போல ஈண்டொருங்கியைதல் பெரும் பான்மை யென்பது அறிவித்தற்கெனவுணர்க. (15) (இயலசைப்பின் உரியசை வருஞ் சீரும் இயற்சீராமெனல்) 328. இயலசை யீற்றுமு னுரியசை வரினே நிரையசை யியல வாகு மென்ப. இது, மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் இயலசை உரியசை மயக்கத்துள் ஒழிந்து நின்ற நான்கு இயற்சீரு முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: 220இயலசை இரண்டன்பின்னும் உரியசை இரண் டும் ஒன்று இரண்டு செய்து மயங்கி நான்காகுங்கால், அவ்விரண்டுரி யசையும் இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்கனுள் நிரை யீற்ற பாதிரியுங் கணவிரியும் போல வருஞ் சீரொடு தட்கும் என்றவாறு. அவை நேர்நேர்பு நேர்நிரைபு நிரைநேர்பு நிரை நிரைபு என வரும். வருங்கால் நேர்முதற்சீர் இரண்டும் பாதிரிபோலவும், நிரைமுதற்சீர் இரண்டுங் கணவிரிபோலவுங் கொள்ளப்படு மென்றவாறு. எனவே, இச்சூத்திரமுஞ் சீராமாறேயன்றிச் சீர் தளைக்குமாறுங் கூறியவாறாயிற்று. 221இவற்றைப் போரேறு பூமருது கடியாறு மழகளிறு எனினும் இழுக்காது. (16) (உயிரளபெடை சீர்நிலையாதலன்றி அசைநிலையுமாமெனல்) 329. அளபெடை யசைநிலை யாகலு முரித்தே. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி; மேல் எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட அளபெடையை ஆண்டு மொழியெனக் கூறினான், அவ்வாற்றானே அவை பெரும்பான்மையும் ஈண்டும் ஈரசைச் சீராகலின் ஈண்டுச் சீர்கூறியவாற்றான் எய்திநின்றனவற்றை எழுத்து நிலைமைப்படுத்து அசைநிலையும் வேண்டினமையின். இ-ள்: அளபெடை மேற்கூறிய இயற்சீர் நிலைமையே யன்றி ஓரசையாய் நிற்றலும் உரித்து என்றவாறு. உம்மையாற் 222சீர்நிலையெய்தலே வலியுடைத்து. நிலை யென்றதனான் 223எழுத்து நிலைமையும் நேர்ந்தானாம்; என்னை? அசையது நிலையைக் குறிலும் நெடிலுங் குறிலிணையு மென எழுத்தான் வகுத்தமையின். அவை மேற்கூறிய 224ஈரசைச்சீர் பதினாறனுள்ளும் என்ன சீர்ப்பாற் பட்டன வெனின், ஆசிரிய வுரிச்சீராறும் போதுபூ, விறகுதீ என்னும் இரண்டியற்சீரும் ஒழித்து ஒழிந்தவியற்சீர் எட்டுமாம். அங்ஙன மாதல் ஒருமொழி யகத்தே உடையவென்பது. ஆ அ எனத் தேமாவாயிற்று. கடாஅ (குறள். 585) எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறாம். என்னை? 225கடாஅ என்புழி, அளபெடை யதாகாரம் பிரித்துக் குறினெடி லாயினாற்போல, 226ஆகாரத்துப் பின்னின்ற அகரமுங் குற்றுகரமுங் குறிலிணை யெனப் பட்டமையின் என்பது.. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். ஆ அழி என்பது மூவெழுத்துப் பாதிரியாம். 227வடா அ என மூவெழுத்துப் புளிமாவாம். படா அகை என நாலெழுத்துக் கணவிரியாம். ஆஅங்கு என ஈரெழுத்துப் போரேறாம். ஆஅவது என மூவெழுத்துப் பூமருது. புகா அர்த்து என்பது கடியாறு. விராஅயது என்பது மழகளிறு. இவை ஒரோர் சொல்லாகி நின்று எட்டியற் சீரானும் அளபெடை வந்தவாறு. 228தேஎந் தேரும் பூஉம் புறவிற் போஒரி துள்ளுஞ் சோஒரி நண்ணிக் குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவல ரடாஅரின் வைத்த கானெறிச் சென்றனர் கொல்லோ மேனெறிச் சென்று பொருள்படைப் போரே என இதனுள், இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்குமாகி அளபெடை வந்தன. ஒழிந்த இயற்சீரும் மேல் நான்கனுள் அடங்குமாகலின் அளபெடை நான்கென்பாருமுளர். 229அவை தனிநிலை முதனிலை இடைநிலை இறுதி நிலை எனப்படு மென்ப. ஒழிந்த இயற்சீரான் அளபெடைவந்த செய்யுளுங் கண்டுகொள்க. வாஅழ்க என மூவசைச்சீரான் வரும் அளபெடை மொழியுமுள. மற்றுப் படாஅகை யெனவும் ஆஅழியெனவும் இவை மூவசைச் சீராகா வோவெனின், ஆகா; தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது (319) என்புழி, முதற்கணல்லது விட்டிசைத்தல் நேர்ந்திலனாகலானுங், குறிலிணைந்தனவும் குறினெடிலிணைந்தனவும் நிரையா மென்றா னாகலானுமென்பது. என்றார்க்குத், தூஉமணி கெழூஉமணி என, நேர்நிரைப்பின் முற்றுகரம் வந்து நேர்பும் நிரைபுமாமா கலின் அவற்றையும் ஆசிரியவுரிச்சீரென்னாமோவெனின், என்னாதவாறு: அங்ஙனம் அளபெடையான் நேர்பசை நிரை பசை கொள்வாரும் அளபெழுந்த குற்றெழுத்து வருமெழுத் தொடு கூட்டி, 230முதனிலை யளபெடை நேர்நே ரியற்றே 231யிடைநிலை யளபெடை நிரைநே ரியற்றே என்பவாகலின், அளபெழுந்த மொழி நேர்பும் நிரைபுமாகா வென்பது. அவ்வாறாயினும் 232ஓரொருகால் அளபெடை யுகரத் தைக்கூட்டி நேர்பும் நிரைபு மென்னாமோ, காசு பிறப் பென்பன தேமா புளிமா வாயினவாறு போல வெனின், 233அவை தேமா புளிமா வாகாமையுந் தளைவகை யொக்குமத் துணை யென்பதூ உம் மேற்கூறப்பட்டதாகலின், அவைபோல இவையும் நேர் பசை நிரைபசையாகாவென்பது. அல்லதூஉம், நீட்டம் வேண்டி னவ்வள புடைய (தொல். எழுத். 6) எனப்பட்டது அளபெடையாகலானும், 234நாணுத்தளை (அகம். 29) என்பது போலாது இயல்பாக வந்து இயைந்த எழுத்தாகலானும், அவைபோல அளபெடை 235இருவகை யுகரமொ டியைந்தவை வந்தன (316) வெனப்படாமையானும், நேர்பசை நிரைபசை யாகாவென்பது. அற்றன்றியும், அவை நேர்பசை நிரைபசையாதல் ஒருவகையான் நேர்ந்தானெனினும் அவை நாணுத்தளை விரவுக்கொடி யென் னுஞ் 236சீராதற்கு இழுக்கென்னை யெனவும், நிரையிறு காலையு மாசிரிய வுரிச்சீர் என ஓதி, ஆசிரியவுரிச்சீரெட்டென்பான் போல விதந்தோதிப் பயந்த தென்னை யெனவுங் கூறி மறுக்க. இனி ஓருரை: 237தூஉமணி கெழூஉமணி என்பன, அளபெடை அசைநிலையாகியும் ஆகாதும் வருதலின் வெண் சீர்க்கும் இருநிலைமை கோடற்கென்ப. அது நீடுகொடி குளிறுபுலி என்பனவற்றிற்கும் 238ஒக்குமாதலானும், அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்துங்கால் அங்ஙனம் அசையாகாமை யானும் அது பொருந்தாதென்பது. இங்ஙனஞ் சீர்நிலை யெய்தி நின்ற அளபெடைகளெல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வாயினவுஞ் செய்யுட்கே உரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்துகொள்ளப் படுவனவுமென இருவகைய. அவ்விரு திறத்தவும், நீட்டம் வேண்டி னவ்வள புடைய (தொல். எழு. 6) என்னும் இலக்கணத்துட்பட்டு அடங்கின. இனி, அவற்றுள் வழக்குக்குஞ் செய்யுட்கும் பொதுவாகி யதனை இயற்கையளபெடை யென்றுஞ் செய்யுட்குப் புலவர் செய்துகொண்டதனைச் செயற்கையளபெடையென்றும் பெயரிட்டு வழங்கப்படும். 239அவ்விரண்ட னுள்ளும் ஈண்டு, அள பெடை அசைநிலையாகலும் உரித்து எனப்பட்டது இயற்கை யளபெடையென்று பெயரிட்டு 240வழங்கப்படும். செயற்கை யளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாறு போல இயற்கையளபெடை அசைநிலையாகலுஞ் செய்யுட்கே யுரியதென்பது. ஆகலுமுரித்தென்ற உம்மையான், 241அவையிரண்டானும் எவ்வாற் றானும் அசைநிலையாகப்படாது புணர்ச்சிவகையான் வந்த அளபெடைக் கண்ணும் பொருள் புலப்பாட்டிற்கு உரிய வாகச் செய்யுள் செய்யுமிடத்தும் அவ்வாறசைநிலையாகப் படுவ தென்றவாறு. உதாரணம் : 242பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன் எனப் பலாஅக்கோ டென்புழிக், குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு மறியத் தோன்று மகரக் கிளவி (தொல். எழு. உயிர். 224) எனப்பெற்ற அகரமுண்டன்றே? அதுவும் அளபெடை யெனப் படும். அதனைப் பலாஅ வென்புழிப் புளிமா வென்னுஞ் சீராக அலகு வையாது நிரையசை நிலைமைத்தேயாக வைக்கப்படு மென்பது. நிலம்பா அய்ப்பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோட் கலம்போ ஒய்ப்போஒய்க் கெளவை தரும் (யா. வி. ப. 45 - 347 - 417.) என்புழிப், 243போஒய்ப் போஒயெனச் 244சேய்மைக் குறிப்புப்படச் செய்யுள் செய்தவழியும் அளபெடை அசைநிலையாயிற்று. இனி, 245இவற்றை விளியும் பண்ட மாற்றும் 246நாவல் கூற்றும் முதலாயவற்றுள் வருமென்பாருமுளர். அங்ஙனம் வந்தது பிற் காலத்துச் செய்யுளென்ப. அல்லதூஉம் அங்ஙனம் வரையறைப் படாமையானும், நாம் 247முன்னர்க் காட்டினவை ஆண்டு அவற்றுள் அடங்காமையானும் அவ்வாறும் 248இகந்து கூறா னென்பதூஉம் படும். உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவல் (யா. வி. க. 42)) எனப் பண்டமாற்றின்கண் வந்ததெனக் காட்டுப. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து அசைநிலைப்பாற்படுக்க என்றார்க்கு, 249இவை செய்யுளுள் தம் மோசை சிதையாவாயின் 250அலகிருக்கையுள் அழித்துப் பயந்ததென்னை யெனின், அஃதன்றே இதனை 251எழுத்துநிலைப்படுமென்றற்குக் காரண மென்பது. அஃதேற், செய்யுளின் ஓசையை அழிக்கவமையும் பிறவெனின், அற்றன்று; அவ்வோசையைச் செய்யுட்கண்ணே அழிப்பது 252சந்தியிலக்கணத்தின் வழீஇயிற்றாம். இனிப் 253பிறவற்றுக்கண்ணும் அளபெடையைச் சிதைத்துச் சொல்லின் அச்செய்யுளுட் கருதிய பொருண்மை விளங்காதாம். அது நோக்கிச் செய்யுளின்பத்தைச் சிதையாது ஈண்டு நாம் வேண்டப் பட்ட அலகிருக்கைக்கட் சிதைத்துக் கொள்க என்றா மென்பது. (17) (ஒற்றளபெடையும் சீர்நிலையாதலன்றி அசைநிலையுமாமெனல்) 330. ஒற்றள பெடுப்பினு மற்றென மொழிப. இஃது, ஒற்றளபெடையும் உயிரளபெடைபோலச் சீர்நிலை யாதலேயன்றி அசைநிலையாதலும் உரித்தென மாட்டெறிந் தமையின் எய்தாத தெய்துவித்தது. இதனை அசைப்படுத்து எழுத்து நிலையும் வேண்டு கின்றமையின் வழுவமைத்ததூஉமாம். இ-ள்: ஒற்றளபெடுத்தாலும் உயிரளபெடைபோலச் சீர்நிலை யெய்தலும் ஓரசையாய் நிற்றலும் உரித்து என்றவாறு. ஒற்றள பெடுப்பினும் எனவே, ஒற்றுகள் அளபெடுத்து நிற்றற்கு உரியன, உரியவழி எல்லாம் 254வரையாது கொள்ளப் படும். அவை வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் 255இருவாற்றான் ஒரு சொற்கு உறுப்பாய் நின்ற ஒற்றே 256அளபெழினும் பின் 257தோற்றிக் கொள்ளப்பட்ட ஒற்றள பெழினுமென இருவகைப் படும். அஃதிவ னுவலா தெழுந்துபுறத் திசைக்கும் (தொ. எழு. 102) என்பது சொற்258குறுப்பாய் நின்றது. ஆனா நோயொடு கான லஃதே (குறுந். 97) என்பது பின்றோன்றிக்கொண்ட புள்ளியெனப்படும். அற்றென மொழிப என்றதனான், ஒற்றளபெடையும் உயிரள பெடை போலத் தானுந் தன்னை யொற்றிய எழுத்துங் கூடி அளபெடை மொழியாகிச் சீர்நிலையெய்தல் பெரும்பான்மை 259யாகலானும், அவை இயற்கை யளபெடையாகியவழி அசை யாதல் சிறுபான்மை யென்பதூஉம், உயிரளபெடை முதற் கணின்ற நெட்டெழுத்துப் போல ஒற்றள பெடை முதற்கணின்ற 260குற்றெழுத்தும், தனிக்குறின் முதலசை மொழிசிதைந் தாகாது (319) என்பதனான் விலக்குண்ணாது விட்டிசையாது முதற்கணின்று நேரசையா மென்பதூஉங் கூறியவாறு. வல்லெழுத்தாறும் ரகார ழகாரமும் ஒழித் தொழிந்த பதினோரொற்றுங் குறிற்கீழுங் குறிலிணைக்கீழும் அளபெய்தி நிற்கும்வழிச் சீர்நிலையாத லேயன்றி அசைநிலையாகலு முரித்துச் சிறுபான்மை யென்றவாறு. அவை, கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு. 352) என்றவழிக், கண்ண் என்பது சீர்நிலையாகித் தேமாவாயிற்று. 261தண்ண்ணென என்ற வழித் தட்பத்துச் சிறப்பு உரைத்தற்கு ணகரவொற்றினை அளபேற்றிச் செய்யுள் செய்தான். ஆண்டு அது மாசெல்சுர மென்னும் வஞ்சியுரிச் சீராவதனைப் பாதிரி யென்னுஞ் சீரேயாமென வழுவமைத்தவாறு. குற்றுகரங் குறி லொடு கூடி நிரையாவதனைக் குறிலிணையெனக் 262குற்றெ ழுத்தாக்கி ஓதினான். அதுபோல ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை யாவதனைக் குற்றெழுத்தென் றோதானோவெனின், அங்ஙனம் ஓதின் அவ்வளபெடை குறிலாகித் தன்முன் வந்த குறிலோடும் பின்வந்த குறிலோடும் நெடிலோடுங் கூடி நிரையசை 263யாகுவதாவான் செல்லுமென மறுக்க. மற்று, அரங்கம் என்புழிப் புலிசெய்வாயென மூவசைச் சீருமாமாகலின் 264இதனை மூவசைச் சீரின்பின் வைக்கவெனின், அற்றன்று; அவ் விரண்டற்கும் பொதுவகையாக இடைவைத்தா னென்பது. அல்லதூஉம் ஈரசைச் சீராதலே பெரும்பான் மயாதலின் ஈண்டு ஈரசைச் சீர்ப்பின் வைத்தான், இவ்விரண்டள பெடை யினையு மென்பது. மற்று, வழக்கினுள் வரும் இயற்கையளபெடையன்றே அசைநிலை யாவன? ஒற்றளபெடை வழக்கினுள் வருமோ வெனின், அவையுஞ் சிறுபான்மை வழக்கினுள் வருமென்பது. அவை, சுள்ள்ளென்றது புள்ள்ளென்றது கள்ள்ளென்றது துண்ண்ணென்றது, திண்ண்ணென்றது என வரும். பிறவு மன்ன. இவை, செய்யுளகத்தல்லது 265பரவைவழக்கினுள் வாரா வென்பாரு முளர். அவரறியார்; செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட அளபெடை, பின்னர் அசைநிலையாதற்கு என்னை காரணமென மறுக்க. மற்று, அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (329) என வரையாது கூறவே, இச்சூத்திரமும்அடங்குமாகலின், இது மிகையாம் பிறவெனின், அற்றன்று; 266எழுத்தோத்தினுள் ஒற்றள பெடுக்குமென்பது கூறாமையின் வேறு கூறினான். அல்லதூஉம் உயிரளபெடையின் வேறு பட்டதோர் இலக்கணமுடைமை யின் இதனை வேறு கூறினா னென்பது. என்னை? பனாஅட்டு என்ற வழி, உயிரளபெடை கடியாறு என்னுஞ் சீராயவாறு போலாகாது, கொங்ங்கு குரங்ங்கு எஃஃகு மின்ன்னு என அளபெழுந்த 267இருவகையுகரவீற்றுச் சொற்கள், போரேறு கடியாறு என்னுஞ் சீரானும் ஞாயிறு வலியது என்னுஞ் சீரானுமாகாது, இருவகை உகரமொடு இயைபின்றி வருத லானும், அவை வண்டு வரகு எனவும் உரியசைச் சீர்ப்பாற்பட்டு அசையாகுமாதலானும், இருவகை யுகரமோடியை யாதவழிக், கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு. 352) எனவுங், கஃஃ றென்னுங் கல்லதர் எனவுஞ் சீர்நிலை பெறுதலானு மென்பது. எனவே, இயற்கை யுயிரளபெடை போலச் செயற்கை யொற்றளபெடையும் ஒரோவழி 268ஓசை சிதைக்கப்படா தாயிற்று. இதனானே, உயிரளபெடை போல ஒற்றள பெடை 269வருகின்ற எழுத்தொடு கூடி அசையாகாதென்பதாம். ஈர்க்கு பீர்க்கு என 270ஈரொற்று நின்றவழி வேறோரசை யாகாதவாறுபோல, ஒற்றள பெடையும் ஒரோவழி அசைநிலை பெறாதென்பதூஉங் கூறினானாம். ïÅ, ïa‰if bah‰wsbgil áWgh‹ik tUkh jÈ‹, 271ï~J mirÃiyahjny bgU«gh‹ikahj ndh¡» kh£bl¿ªjh‹ vdî« mikíbkd¡ bfhŸf.(18) (வெண்பா உரிச்சீர் இதுவெனல்) 331. இயற்சீ ரிறுதிமு னேரவ ணிற்பி னுரிச்சீர் வெண்பா வாகு மென்ப. இது, நிறுத்த முறையானே ஈரசைகொண்டு சீரியைந் திறுவன உணர்த்தி இனி மூவசைகொண்டு முடிவன உணர்த்து வா னெழுந்தான். அவற்றுள் இது வெண்பாவுரிச்சீருணர்த்து கின்றது. இ-ள்: மேனின்ற அதிகாரத்து இயலசையானாகிய இயற் சீரிறுதிக் கண் நேரசை பெறுவன நான்கும் வெண்பாவுரிச் சீரா மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உரிச்சீர் வெண்பா, வெண்பா வுரிச்சீராமென மொழி மாற்றியுரைக்க. உ-ம்: நேர்நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நிரைநிரைநேர் என வரும். இவற்றை, மாசெல்வாய் புலிசெல்வாய் மாவருவாய் புலிவருவாய். எனவும், 1தேமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் எனவும் வேறு வேறுதாரணங் காட்டுப. பிறவும் அவ்வாறு வருவன அறிந்து கொள்க. அவற்றுக்குச் செய்யுள்: 272காமன்கா ணென்று 273கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை வருவானை-யாமு 274மிருகுடங்கை 275யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண் (சிலப். மேற்) இதனுட் காமன் காண் எனவும், கருவூரார் எனவும், இரு குடங்கை எனவும், யானெதிரே எனவும் நான்கு வெண் சீரும் வந்தன. இதுவும் ஆட்சியுங் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். வெண்பாவிற்கும் அதன் பகுதியாகிய கலிப்பாவிற்கும் உரிமை யாதலிற் குணங் காரணமாயிற்று. ஆட்சி, வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே (332) எனவும் பிறாண்டும் ஆளுமென்பது. மற்று இயற்சீரென்றவழிப் பத்து இயற்சீருங் கொள்ளாமோவெனின், அதற்கு விடை முன்னர், இயலசை மயக்கம் (325) என்புழிச் சொல்லிப்போந்தாம். இயற்சீர் எனப் பொதுவகை யான் ஓதியவழி இயற்சீர் பத்துங் கொள்ளாது 276இயலசை மயக்க மாகிய நான்கனையுங் கோடலும் ஆசிரியவுரிச்சீரென்று பொதுவகையான் ஓதியவழி ஆறனையுங் கொள்ளாது 277உரியசை மயக்க மாகிய நான்கனையுமே கோடலும் வேண்டி னானென்பது. அஃது இச்சூத்திரத்தானும், வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் (335) என்பதனானும் பெறுதும். (19) (வஞ்சிச்சீர் இதுவெனல்) 332. வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை யான. இஃது, ஒழிந்த மூவகைச்சீ ருணர்த்துகின்றது. இ-ள்: வஞ்சிச்சீரெனக் கூறுபடுக்கப்பட்டன மேற்கூறிய வெண் சீரல்லா மூவசைச்சீரெல்லாம் என்றவாறு. 278நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கனையும் மூன்று படியான் இழியவைத்து, முதற்கணின்ற நான்கசையும் இடை நின்ற நான்கனோடும் ஒரோவொன்று நான்காகக் கூட்டி, 279இறுதி நின்ற நான்கசையோடும் ஒரோ வொன்றற்குப் பதினாறாக நாற்காலுறழ அறுபத்து நான்கு மூவசைச்சீர் பிறக் கும். அவற்றுள், இயலசைமருங்கின் 280நேரிறுவன நான்குசீருள. அவை முன்னர் (331) வெண்சீர் நான்கெனக் கூறப்பட்டன. ஒழிந்த மூவசைச் சீர்களெல்லாம் வஞ்சியுரிச்சீரெனப்படும் என்றவாறு. அவை அறுபது வகைப்படும். உதாரணம்: நேர்நேர்நேர்; நேர்நிரைநேர்; நேர்நேர்புநேர்; நேர்நிரைபுநேர் எனவும், நிரைநேர்நேர்; நிரைநிரைநேர்; நிரை நேர்புநேர்; நிரைநிரைபுநேர் எனவும், நேர்புநேர்நேர்; நேர்புநிரைநேர்; நேர்புநேர்புநேர்; நேர்புநிரைபுநேர் எனவும், நிரைபுநேர்நேர்; நிரைபுநிரைநேர்; நிரைபுநேர்புநேர்; நிரைபுநிரைபுநேர் எனவும் இவை நேரீற்று மூவசைச்சீர் பதினாறு. இவற்றுள் வெண்சீரென மேற்காட்டிய நான்கும் ஒழித்து ஒழிந்த பன்னிரண்டும் வஞ்சியுரிச்சீர். இனி நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வருமாறு: நேர்நேர்நிரை; நேர்நிரைநிரை; நேர்நேர்புநிரை; நேர்நிரைபுநிரை எனவும், நிரைநேர்நிரை; நிரைநிரைநிரை; நிரைநேர்புநிரை; நிரைநிரைபுநிரை எனவும், நேர்புநேர்நிரை; நேர்புநிரை நிரை; நேர்புநேர்புநிரை; நேர்புநிரைபு நிரை எனவும், நிரைபுநேர்நிரை; நிரைபுநிரைநிரை; நிரைபுநேர்புநிரை; நிரைபுநிரைபு நிரை எனவும் நிரையீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நேர்பு; நேர்நிரைநேர்பு; நேர்நேர்புநேர்பு; நேர்நிரைபுநேர்பு எனவும், நிரைநேர்நேர்பு; நிரைநிரைநேர்பு; நிரைநேர்புநேர்பு; நிரை நிரைபுநேர்பு எனவும், நேர்புநேர்நேர்பு; நேர்புநிரைநேர்பு; நேர்புநேர்புநேர்பு; நேர்புநிரைபுநேர்பு எனவும், நிறைபுநேர்நேர்பு; நிரைபுநிரைநேர்பு; நிரைபு நேர்புநேர்பு; நிரைபுநிரைபுநேர்பு எனவும் இவை நேர்பீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேர்நேர்நிரைபு; நேர்நிரைநிரைபு; நேர்நேர்புநிரைபு; நேர் நிரைபுநிரைபு எனவும், நிரைநேர்நிரைபு; நிரைநிரைநிரைபு; நிரைநேர்புநிரைபு; நிரைநிரைபுநிரைபு எனவும், நேர்பு நேர்நிரைபு; நேர்புநிரைநிரைபு; நேர்புநேர்புநிரைபு; நேர்பு நிரைபுநிரைபு எனவும், நிரைபுநேர்நிரைபு; நிரைபுநிரைநிரைபு; நிரைபுநேர்புநிரைபு; நிரைபுநிரைபுநிரைபு எனவும் இவை நிரைபீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேரீற்று வஞ்சியுரிச்சீர் பன்னிரண்டும், நிரையீற்றுவஞ்சி யுரிச்சீர் பதினாறும், நேர்பீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறுமாக வஞ்சியுரிச்சீர் அறுபதும் வந்தன; அவற்றுக்குச் செய்யுள்: 281மேற்கோட்டுநீர் கீழ்ப்பரந்துதன் விழுக்கோட்டுமெய் வியல்விசும்புதோய்ந் தோங்குமுன்னர்க் காம்புகழியப் பாய்ந்துசென்றுசென் றாங்குநலிபுநின் றெதிர்த்துமீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுச்செய் தூர்திரைக்காவிரி பரக்குந்தண்டலை மூதூரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துவதெவனோ நிரம்பாவாழ்க்கைப் பாணர்கடும்பே. இதனுள், நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள்ளும் வெண்பா வுரிச்சீர் நான்கு மொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச் சீரும் முறையானே வந்தன. 282தண்டண்டலைத் தாதுறைத்தலின் வண்டோட்டுவயல் வாய்புகைபுகரந் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந் தோங்குசென்னிலை வாங்குகதிர்தரீஇப் போதுதூங்குசிலை மீதுபுகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர்நன்னா டென்னாகுவகொல் பொன்னிநன்னாட்டுப் பொருநனெங்கோன் றாடோய் தடக்கைமல்ல னாடுகெழுதிருவிற் பீடுகெழுவேந்தே. இதனுள் நிரையீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் வந்தன. 283வான்பொய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபோந்து கால்சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிறைவளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்துதிர்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர்நீண்டு வித்துநாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்புநீங்குமஞ்சு துயின்றுபெயர்ந்துபோந்து வாழையோங்கிய கோழிலைபரக்குந் தண்டாயாணர்த் தென்பவென்றும் படுவதுகூட்டுண்டு கடவதுநோக்கிக் குடிபுறந் தரூஉம்வேந்த னெடுநிலைத்தண்குடை நிழற்றுநாடே இதனுள் நேர்பசையிறுதியாகிய பதினாறு வஞ்சியுரிச்சீரும் முறையானே வந்தன. 284சீற்றம்மிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவு பொலங்கொடியெடுத்துப் புகலேற்றுமலைந்து பகையரசுதொலைத்து வேந்துமீதணிபு போந்துபடத்தொடுத்து வீற்றுவீற்றுப்புணர்ந்து வேற்றுச்சுரும்புகிளர்ந்து களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரிந்துதூங்குகடாத்து விரைந்துமலைந்துதொலைந்து மணங்கமழாரமொடு தயங்கச்சூடிய வென்வேற்சென்னி பொன்னியற்புனைகழல் பாடுபெறு பாணினும்பலவே பாடாதோடிய நாடுகெழுவேந்தே இதனுள், நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. (20) (வஞ்சிச்சீர் ஏனைப்பாவுள் பெரும்பாலும் வராவெனல்) 333. தன்பா வல்வழித் தானடை யின்றே. இஃது, அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. இ-ள்: இவ்வறுபது வஞ்சியுரிச்சீருந் தன்பாவினு ளல்லாத ஆசிரியம் வெண்பாக் கலியினுள் வாரா என்றவாறு. சிறுபான்மையா னாவன முன்னர்ச் சொல்லுதும். 285இவை, ஆசிரிய வுரிச்சீர் தூங்கலோசையா னாகுமாறு போல, ஆசிரிய வோசையும் ஆக்குங் கொல்லெனின் ஆக்காவென்பது இதனது பயன். (21) (ஆசிரிய உரிச்சீரும் வெண்பா உரிச்சீரும் வஞ்சிப்பாவையாக்குமெனல்) 334. 286வஞ்சி மருங்கி 287னெஞ்சிய வுரிய. இது, மற்றைச்சீர் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வஞ்சியுரிச்சீர் பிற பாக்களை ஆக்காதவாறு போலாது, ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் இவ்வஞ்சிப் பாவினை யாக்கும் எ-று. உரிச்சீர் மேலதிகாரமாகலான், எஞ்சிய வென இவ்விரண் டனையுமே கொண்டாமென்பது. வஞ்சியது பாவினை வஞ்சி யென்றான் ஆகுபெயரான். மற்றுச் சீர்கூறும்வழிப் பாக்கூறுவ தென்னையெனின், அப்பாவினை யாக்குவன சீராகலிற் 288சீரிலக் கணம் எய்துமென்பது. அவையாமாறு. வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவின் (பட்டினப். 1-3) எனத் 289தன்சீர் வரத் தூங்கலோசை பிறந்தது. தாழ்தாழைத் தண்டண்டலை (பொருந. 181) என்பதும், புட்டேம்பப் புயன்மாறி (பட்டினப். 4) என்பதும் வெண்பாவுரிச்சீரான் தூங்கலோசை பிறந்தது. புட்டேம்பப் புயன்மாறி என்புழி, வசையில்புகழ் வயங்குவெண்மீன் எனத் தனது சீரானே தூங்கலோசை பிறந்தாங்குப் பிறந்தது. 290திசைதிரிந்து தெற்கேகினும் என இயற்சீர்நிற்பத் தன்சீரானே தூங்கலோசை பிறந்தது. 291புள்ளுந்துயின்று புலம்புகூர்ந்து என ஆசிரியவுரிச்சீரான் வஞ்சித்தூக்காயிற்று. பிறவும் அன்ன. (22) (கட்டளையடிக்கண் ஆசிரியப்பாவுள் வாராத சீர்கள் இவையெனல்) 335. வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே. இது, கட்டளையாசிரியப்பாவினுள் அடி யுறழப்படாத சீர் இவையென்கின்றது. இ-ள்: வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவிற்கு ஒப்ப வரும் நிலை இல என்றவாறு. இன்பா நேரடி யென்பது ஆசிரியவடி யென்றவாறு. ஒருங்கு என்றதனான் இயற்சீராகிய தன்சீரே போல வெண்சீரும் வாராதென்பதாம். இயலசை மயங்கினவே இயற் சீரெனப்படுவன எனவும், உரியசை மயங்கினவே ஆசிரியவுரிச்சீ ரெனப்படுவன எனவும் 292முன்னர்ச் (325-328) சொல்லிப் போந்தானாகலின், ஈண்டு உரியசை மயக்கத்தினையே ஆசிரிய வுரிச்சீரென்றான். 293எனவே, நீடுகொடி குளிறுபுலி என்னும் இரண்டாசிரிய வுரிச் சீரும் ஆசிரியத்து வந்து அடியுறழு மென்பது ஈண்டுக் கொள்ளப் படும். முன்னிரை யுறினு மன்ன வாகும் என்ற மாட்டேற்றான் 294இயற்சீர்த்தன்மை சிறுபான்மைவகையான் எய்துவித்ததூஉம் இப்பயன் நோக்கியாயிற்று. இக்கருத்து நோக்கிப்போலும், கலித்தளை மருங்கிற் கடியவும்படா என்ற உம்மை 295இறந்தது தழீஇயிற்றுமாமென்பது. இனி ஒருசாரார் வெண் சீரும் ஆசிரியப்பாவினுள் வருங்கால் இயற்சீரிடை யிட்டன்றி உடனியைந்து வாரா என்ப. அங்ஙனங் கொள்ளிற் கட்டளை யடிக்கண்ணும் ஆசிரியவடியுள் வெண்சீரும் வந்து உறழப்பெறு மென்றானாம். அல்லாத அடிக்காயின் அது 296போக்கி, இன்சீ ரியைய வருவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய வடிக்கே என்புழிக் கூறப்படுமென்பது. ஈண்டு 297நேரடிக்கென்பது கட்டளை யடிக் கென்றவாறு. (23) (நிரையீற்றாசிரியவுரிச்சீர் கலியுள்ளும் மயங்குமெனல்) 336. கலித்தளை மருங்கிற் கடியவும் படா. இது, கலிப்பாவிற் சீர்மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேல் ஆசிரியவடி யுறழ்தற்கண் விலக்கப்படாத நிரையீற் றாசிரியவுரிச்சீர் இரண்டுங் கலிப்பாவின் அடங்குங் காற் கடிதலுமுடைய கொல்லெனின் ஈண்டும் அவை விலக்கப்படா என்றவாறு. எனவே, நிரையீற்றாசிரியவுரிச்சீர் இரண்டும் கலியடி யுறழ்வன வாயின. கடியவும்படா வென்பது இறந்ததுதழீஇய எச்சவும்மை, ஆசிரியத்திற் கடியப்படாவாதலேயன்றி ஈண்டுக் கடிதலும் படாவென் றமையின் 298கலித்தளை மருங்கின் என்பது வினைசெய்யிடத்துக்கண் ஏழாவது வந்தது, தளைத்தல் என்பது சீர்த்தொழிலாகலின். 299அல்லாக்கால் இருசீரானாகிய தொரு தளையிடனாகப் பிறிதொருசீர் ஆண்டு வரல் வேண்டுமென மறுக்க. மற்றுக் கலித்தளை மருங்கின் வெண்சீர் வருக வென்னா னோவெனின், அது சொல்ல வேண்டு மோ? ஆசிரியத்துத் தன்சீர் வாராதன கூறுவதன்றி வருமென்பது கூறான்; வெண்பாவிற்கும் அவ்வாறே வெண்சீர் வருமென விதந்தோதான்; அதுபோல 300அதனியற்றாகிய கலிப்பாவிற்கும் வெண்சீர் வருமென விதந்தோதல் வேண்டுவதன்று, வஞ்சிப்பா விற்குப் போல வேறு சீரின்மையி னென்பது. அஃதேல், வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய என வஞ்சிப்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் வருமென்று கூறல் வேண்டாவெனின், வேண்டுமன்றே; வெண்சீர்வருமென விதந்தோதுவான், ஆசிரியவுரிச்சீர் ஆண்டு 301விலக்குண்ணுமாகலி னென்பது. 302அவற்றுக்குச் செய்யுள்: 303ஓங்குவரை யடுக்கத்துப்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள் எனவும், 304விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி எனவும், நிரையீற் றாசிரியவுரிச்சீர் கலிப்பாவினுள் வந்தன. வஞ்சியேன்; என்றவன்ற னூருரைத்தான் யானவனை எனவும், அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் எனவும் 305இவையிரண்டும் வெண்சீரெனத் தொகுக்கப்படுத லின் வெண் சீரென்னுஞ் சொல்லின் முடியு மிலக்கணத்தான் 306விதந் தோதாமேயும் 307அவ்விரு பாவிற்கும் உரியவாயின. மற்றுக் கலி மருங்கி னென்னாது, தளை மருங்கினென்ற தென்னை யெனின், இவ்வாராய்ச்சியுடையன கட்டளை யடி யென்ற தென்பது. எனவே, தளையென்று ஓதுவனவெல்லாங் கட்டளை யடியே நோக்குமென்பது பெற்றாம். இங்ஙனம் வரையறை யுடையன கட்டளையடி யெனவே, 308அல்லாத அடிக்கண் 309ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வருமென்பது பெறுதுமென்பது. மற்றுக் கட்டளையடி யல்லாத ஆசிரிய வடியுள் உரியசை மயங்கிய ஆசிரியவுரிச்சீரும் வருமென்பதூ உங் கூறுக வெனின், அவை விலக்குண்டது கட்டளையடிக்காத லின் விலக்காதவழித் தன்சீர் வருதல் விதந்தோத வேண்டா வென்பது முற்கூறியவாறே கொள்க. (24) (நேரீற்றியற்சீர் கலிப்பாவின்கண் கட்டளையடியுள் வாராவெனல்) 337. கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே. இதுவும் கட்டளையடிக்கெண்ணப்பட்டதோர் சீர் வரையறை. இ-ள்: கலித்தளையடிவயின் - கலிப்பாவினது கட்டளை யடிக்கண்; நேரீற்றியற்சீர் நிலைக்கு உரித்தன்று - தேமா புளிமா என்னும் இரண்டியற் சீரும் வரப்பெறா; தெரியுமோர்க்கே- துள்ள லோசையைத் தெளிவார்க்கு என்றவாறு. ஆகாவென்றவற்றைக் காட்டலாவதில்லை, ஆகா வென்பதல்லது. கட்டளையடிக்கண் வரைந்தோதவே, அல்லனவற்றுக் கண் வருமென்பதாம். அவை: பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மானிரை எனவும், உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை எனவும், காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் எனவுங் கலியடியுள் வந்தன. 310இயற்சீர் பத்துள்ளும் இவை யிரண் னையுங் கலிக்கண் வாராவெனவே, ஒழிந்த ஆசிரியத் துள்ளும் வெண்பாவுள்ளும் பத்தியற்சீரும் 311வேறுவேறு வந்து அடியுறழு மென்பதூஉம், இதற்காயின் 312எட்டியற்சீர் அடியுறழு மென்பதுஉங் கூறினானாம். எனவே ஆசிரியம், இயற்சீர்பத்தும் ஆசிரியஉரிச் சீரிரண்டுமெனப் பன்னிரண்டுசீர் பெறுவ தாயிற்று. வெண்பாவும் இயற்சீர்பத்தும் வெண்சீர் நான்கு மெனப் பதினான்கு சீர் பெறுவ தாயிற்று. கலிப்பா 313அடி இயற்சீரெட்டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீரிரண்டு மெனப் பதினான்குசீர் பெறுவதாயிற்று. அசைச் சீருளாவன முன்னர்ச் (339) சொல்லுதும். இனி, வஞ்சிப்பாவிற்கும். வஞ்சி மருங்கி னெஞ்சிய உரிய (தொல். செய். 22) என முற்கூறியவாற்றான் 314ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்து நான்குமென எண்பதுசீருங் கட்டளை யடி யல்வழி உரியவென எய்துவித்ததாம். அவற்றுள் தேமா புளிமாவென்னும் இரண்டுசீரும் ஆகாத இடம் இனிச் சொல்லுகின்றான். (25) (நேரீற்றியற்சீர் வஞ்சிப்பாவினும் அடிமுதற்கண் தூங்கலோசைப்பட்டு நில்லா எனல்) 338. வஞ்சி மருங்கினு மிறுதி நில்லா. இது, வஞ்சிப்பாவினுள் வாரா இயற்சீர் கூறுகின்றது. இ-ள்: வஞ்சி மருங்கினும்- மேற்கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப் பாவினும்; இறுதி நில்லா- 315ஈற்றில் நிலைமைப் படா என்றவாறு. வஞ்சித்தளை மருங்கி னென்னாது வஞ்சி மருங்கினென வாளாது கூறினான், அது கட்டளையடிக் கல்லாமையின். வஞ்சிப் பாவினுட் சீர் வருங்கால் ஒழிந்த பாவிற்குப்போலச் சீரியைந்திறு தன் மாத்திரையன்றிச் சீர்தோறுந் தம்முள் வேறுபாடு தோன்றத் தூங்கப்படும். அவ்வாறு தூங்க லோசைப்பட நில்லா, தேமா புளி மாவென்னும் இரண்டு சீருமென்ற வாறாம். உம்மை இறந்தது தழீஇயிற்று. இறுதி நில்லா வென்பது இறுதலொடு நில்லா வென்றவாறு; என்னை? இருசீரினுள் வருஞ்சீரொடு தொடருங் கால் இறுதற்றொழில் பெறுவது நின்ற சீராகலினென்பது. இதனானே ஒழிந்த இயற்சீரின் தூங்கலோசைப்பட நிற்குமென்ற வாறாம். கொற்றக் கொடி யுயரிய எனவும், களிறுங் கதவெறிந்தன எனவும் நேரீற்றறியற்சீர் முதற்கண் தூங்காவாயின. அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானல் என ஒழிந்த இயற்சீர் தூங்கினவென்பது. இவையுங் கட்டளை யல்லவென்பது. அசையுஞ் சீரும் (தொல். செய். 11) என்பதனான் அறிக. 316இறுதிக்கண் விலக்காமையின், மண்டிணிந்த நிலனு நிலனேந்திய விசும்பும் என நேரீற்றியற்சீர் வந்தன. இனி, ஈற்றுக்கண் வருதல் சிறுபான்மை யென்பாரும், யாண்டும் இறுதிக்கண் வாராவென்பாரும் இச்சூத்திரத்தை யுரைக்குமாறு: வஞ்சியடி யிறுதிக்கண் இவை வாராவெனப் பெரும்பான்மை பற்றி ஓதினானெனவும், இஃதொருதலையாக விலக்கி னானெனவுஞ் சொல்லுப. அவ்வாறு கூறின் முதற்கண் அவ்விரு சீரும் வருதல் பெரும்பான்மையாதல் வேண்டுமென மறுக்க. என்றார்க்குத், தன்பால் வெங்கள்ளி னொலிவே லிலங்குதடக்கை எனவும், புன்காற் புணர்மருதின் போதப்பிய புனற்றாமரை எனவும், தேன்றாட் டீங்கரும்பின் எனவும் வந்தனவாலெனின், அங்ஙனம் நலிந்து காட்டினவை அளபெடை வெண்சீராம்; அது செவிகருவியாக உணர்க. என்னை? கொற்றக் கொடி யுயரிய என அளபெழாதவழித் தூங்காமையின். அல்லதூஉம், நேரீற் றியற் சீர் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்; மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும் எனவும், ஆழ்ந்துபட்ட கிடங்கி னுயர்ந் தோங்கிய வாயில் எனவும், ஒரோ செய்யுட்கண்ணே பல வந்தமையினென்பது. மருங்கென்றதனானே 317நேர்நிலைவஞ்சிப்பகுதிக்கே இவ் வரையறை கொள்ளப்படும். கொள்ளவே, 318வியனிலை வஞ்சிக்கு (358) இவ்வரையறை யின்றென்பது. மற்று, மண்டிணிந்த நிலனும் என்பது நேர்நிலைவஞ்சியாகலின் அடி நிலையோடு அடிக் கூட்டத்துக்கண் அதற்குத் தூங்கலோசை கொள்ளுமா 319றென்னை யெனின், அஃது இலக்கண அடி யன்மையின் ஈண்டா ராய்ச்சியின் றென்பது. நேர்நிலை வஞ்சியுள் இலக்கண அடிக்கண் இயற்சீ ரெல்லாம் வாரா வென்பது, குறளடி முதலா வளவடி காறும் என்புழிச் சொல்லு தும். (26) (அசையுஞ் சீராமெனல்) 339. இசைநிலை நிறைய நிற்குவ வாயி னசைநிலை வரையார் சீர்நிலை பெறலே. இது, 320நான்கசையுஞ் சீராகும் இடனுமுடைய என்கின்றது. (இ-ள்.) ஓசைநிலை நிறையாமையாற் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப் பட்ட சொற்களை யெல்லாஞ் சீர்நிலை பெறுதற்கண் வரையார் என்றவாறு. கழறொழா மன்னர்தங் கை என்று நேரசை சீராயிற்று. புனனாடன் பேரே வரும் என நிரையசை சீராயிற்று. எய்போற் கிடந்தானென் னேறு என நேர்பசை சீராயிற்று. மேவாரை யட்ட களத்து என நிரைபசை சீராயிற்று. பிறவுமன்ன. இவற்றை உண்மை வகையாற் சீராமென்றான் அல்லன்; தொடர்மொழி யெல்லா 321நெட்டெழுத் தியல (தொ. எழு. 50) என்றாற்போலக் கூறினான் என்பது. இவை இன்ன பாவினுள் வருமென்பது முன்னர்ச் சொல்லுதும். இங்ஙனம் கூறாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடி என்னுமாறு இல்லை என்பது. (27) (உரியசைச்சீரிரண்டும் இயற்சீருள் அடக்கித் தளை கொள்ளப்படுமெனல்) 340. இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான. இஃது, எய்திய தொருமருங்கு மறுத்தல் நுதலிற்று, இயலசையிரண்டுஞ் சீர்நிலை பெறினுந் தளைகொள்ளப்படா வென்றமையின். இனி, எய்தாத தெய்துவித்ததூஉமாம்; என்னை? உரியசையான் தளைகொள்ளு மாறுணர்த் தினமையின். இ-ள்: இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து இயற்றப்படும், அவை தளைவகை சிதையாத் தன்மைக்கண் என்றவாறு. பாற்படுத்தெனவே 322அதிகாரத்தான் இறுதி நின்ற உரியசை யிரண்டும் பகுத்துக் கொள்ளப்படும். நான்கியற்சீருள் இன்ன இயற்சீர்ப்பாற் படுமென்னானோ வெனின், கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர் (337) என அதிகாரம் வருகின்றமையின், தேமா புளிமாவென்னுஞ் சீர்போல 323இரண்டசையுந் தளைகொள்ளுமென்றமையின் இயற்றுக வென்றானென்பது. தானாக 324இயல்வதன்மையின் இயற்றுக வெனப்பட்டது. தளைவகை சிதையாத் தன்மை யான வென்று இடம் நியமித்ததென்னையெனின், சீர்வகை யான் 325அசைச்சீரென வேறாய் நிற்றலுடைய, தளைவகை சிதையாத் தன்மை நோக்கியே இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுக வென அடங்கக் கூறிற்றென அறிவித்தற் கெனவுணர்க. எனவே என் சொல்லப்பட்டதாம்? இவ்வுரியசை யிரண்டுஞ் சீர்வகையான் வேறுவேறு எண்ணித் தொகை பெற்றுத் தமக்கு ஓதிய அடியுறழு மெனவும், 326அஃதெண்ணப் பட்ட தளைவகை நோக்குங்கால் வேறு வேறெண்ணுத் தொகை 327பெற்றும் இயற் சீரெனவே யடங்குமெனவுங், கூறப்பட்டதாம். இன்னுந் தளை வகைக்கண் ணெனவே, கட்டளையடிக் கண்ணதே இவ்வரையறை யென்பதூஉம், அல்லாதவழி 328இந் நான்கசையும் வரையறை யின்மையின் தளை கொள்ளப்படா வென்பதூஉங் கூறப்பட்டதாம். அஃது 329ஓரசைச்சீரல்லாத சீராயின் கட்டளையடியல் வழியுந் தளைகொள்பவோவெனிற், றளை கொள்ளிற் கட்டளையடி யெனப்படுமாதலின் அல்லாத வழி வந்த சீர்தளைகொண்டன வென்றல் பயனில் கூற்றாமென மறுக்க. உலக முவப்ப வலனேர்பு திரிதரு (முருகு. 1) என்றவழி, ஆசிரியத்துட் பிறதளை வந்ததென்று இலக்கணங் கூறி வழுவமைக்கல் வேண்டா. என்னை? அது பெருவரவிற் றாகலின்; அதனான், வருஞ் 330சீர்வகையான் வந்ததென்று ஒழிதலே அமையும்; வரையறை இல்லனவற்றுக்கு வரையறை கூறல் குற்றமாகலி னென்பது. மற்று இவ்வுரியசைச் சீரிரண்டும் வரையாது கூறினமையின் மூன்று பாவிற்குஞ் செல்லும் பிறவெனின், கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர், நிலைக்குரித் தன்று (337) எனக்கூறி, ஈண்டு இவற்றை இயற்சீர்ப்பாற்படுமென்றமையின் இவையும் கலிப்பாவிற்கு விலக்குண்டனவென்பது. எனவே, ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் உரியசைச்சீரிரண்டும் உரிய வாயின. ஆசிரியத்திற்கு மேற் கூறிய (337) சீர்பன்னிரண்டும் இவையிரண்டுமென அடியுறழுஞ்சீர் பதினான்காயின. வெண்பாவிற்கு முன்னரெய்தியசீர் பதினான்கும் இவை யிரண்டுமாக அடியுற ழுஞ்சீர் பதினாறாயின. கலிப்பாவிற்கும் மேற்கூறியசீர் பதினான்கு மேயாயின. இங்ஙனம் வகுக்கப்பட்ட சீர் நாற்பத்து நான்கினையும் சீர்வகையான் உண்மை நோக்கித் தொகுப்ப இயற்சீர்பத்தும் ஆசிரிய வுரிச்சீரண்டும் வெண்சீர் நான்கும் அசைச் சீரிரண்டு மெனப் பதினெட்டாம். மேல் (362) ஐவகை அடியெனப்பட்ட அறுநூற்றிருபத் தைந்தடியும் இச்சீர் பதினெட்டானுந் தோற்றிக் கொள்ளப்படும். இப்பதினெட்டுச் சீரும் இருநிலைமை யெய்துவனவும் எய்தாதனவுமாகி முப்பத்தொன்றாகி விரியுமாறு முன்னர், எழுத்தள வெஞ்சினும் (355) என்புழிச் சொல்லுதும். (28) (கலிப்பாவிற் கட்டளையடிக்கண் ஓரடியுள் இறுதியில் நிற்கும் வெண்சீரின் முதலசை நேராயினும் நிரையாகக் கொள்ளப்படும் எனல்) 341. வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே. இது, வெண்சீராற் கலித்தளையாமாறுணர்த்துதல் நுதலிற்று. கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (334) என்புழி, அவ்வாசிரியவுரிச்சீராற் கலித்தளையா மென்றான்; அவ்வதிகாரம் இடையறாது நின்றமையின் இதுவுங் கலித் தளைக்கே இலக்கணமாயிற்று. என்றார்க்கு, வஞ்சி மருங்கினும் (338) எனவும், இசைநிலை நிறைய (339) எனவும், இயற்சீர்ப் பாற்படுத்து (340) எனவும், இம்மூன்று சூத்திரம் இடையிட்டனவாலெனின், அற் றன்று; கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் அதிகாரம் பற்றி இடைபுகுந்த அல்லது 331கலித்தளையதிகாரம் விலக்கின வல்லவென்பது. இ-ள்: வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி, அவ் வெண்சீருள் ஈற்று நின்ற சீரின் முதல்வந்த நேரசை மற்றை நிரைமுதல் வெண்சீர்வந்து முன்னைய இரண்டுங் கலித்தளையாயவாறு போலக் கலித்தளையாம் என்றவாறு. மேனின்ற அதிகாரத்தால், தளைவகை சிதையாத் தன்மைக் கண்என்பது கூட்டியுரைக்க. எனவே, வெண் சீர்ப் பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததென்பதூஉம், 332நேர்வந்து தோன்றினும் அவ்வோசையே பயந்து ஒரு நிகர்த்தா மென்பதூஉங்கூறி, அவ்வாறாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவ தெனவுங் கூறினானாம். 333இது, மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியாத தனை முட்டின்றி முடித்தல்(665) என்னும் உத்திவகை. 334வெண் சீரிறுதி, யென்பது ஏழாவதன் தொகை; என்னை? ஈறெனப் பட்டது சீராகலின், வெண்சீருள் ஈற்றுச்சீரெனவே வெண்சீர் பலவுந் தொடர்ந்து நிரை முதல் வந்தவழியன்றி இறுதிச்சீ ரொன்றியது நிரையசை யியற்றாகா தென்பதாம். இதனான் நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்குங் கால் 335இயற்சீர் அடிமுதற்கண் வருமென்பதூஉங் கூறப்பட்டதாம். மற்று, ஈறென்றது ஈற்றுச் சீரினையாயின் 336அச்சீரினிடையும் இறுதியும் நின்ற அசையினை நிரையசையியற்றென்று கொள்வ னெனின், நின்ற சீரின் ஈற்றசை வருஞ் சீரின் முதலசையொடு தட்டில் தளையாவதன்றி 337ஒன்றிடை யிட்ட அசையுஞ் சீரும் பற்றித் தளைகொள்வாரின்மையின் அது கடாவன் றென்பது. இனி, 338வெண்சீரென்பது அஃறிணை யியற்பெயராகலானும், 339பன்மை வினைகொண்டு பால் அறிய வந்ததன்றாயினும் அதனை, 340யானைக்கோடு, என்றாற்போல இறுதி யென்றமை யானும் பன்மைப்பாற் பட உணர்க; என்னை? 341பின்னோன் முன்னோன், என்றவழி, அவர்க்கு முன்னும் பின்னும் வேறு சிலருளரென்பது உணர்த்துமாகலின். என்றார்க்கு, வெண் சீரிறுதி 342நீடுகொடி குளிறுபுலி வந்தவழி அவற்று முன்னின்ற நேர்பசை நிரை பசைகளைக் கலிப்பாவினுள் கலித்தளை யாக்குதற்கு நிரையசையியற்று, என்றா னென்னா மோ வெனின், அற்றன்று; 343வெண்சீர்களின் இறுதி யெனவே மூன்றாஞ்சீரும் நான்காஞ் சீரும் வெண் சீராகல் கூறி, நிரைமுதல் வெண்சீர் வந்து 344நிரை தட்டல் (372) எனவே இரண்டாஞ்சீரும் வெண்சீர் வரல் வேண்டு மெனக் கூறி, நிரைதட்டுமெனவே இயற் சீரானும் 345ஆசிரிய வுரிச்சீரானும் நிரையீறாயினவெல்லாம் முதற்கண் நிற்குமெனவுங் கூறினான். கூறவே, ஆசிரியவுரிச்சீர் இடைநில்லா வென்பதூஉம், அங்ஙனம் நிற்பிற் கலியோசை யழியு மென்பதூஉ மாம் ஆசிரியன் கருத்தென்பது. அல்லதூஉம் 346வெண்சீர்க்கு உரியசை யின்மையானும் அற்றன்றென்பது. எனவே, ஈற்றுச்சீர் நிரைமுத லியற்சீர் வரினும் ஆண்டுத் துள்ளலோசை 347ஒடுங்குமென்பதாம். 348அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும். (கலி. 11) என்பது, வெண்சீரிறுதி நிரையொடு தட்ட கலித்தளை. 349அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையான். என்பது, வெண்சீர்கள் பகைத்துவந்து ஈற்றுச்சீரின் முதற் கணின்ற நேரசை நிரையசைபோலக் கலியோசை கொண்டமை யின் அது கலித்தளை யெனப் பட்டது. இனி, வெண்சீர் நான்கும் ஒன்றி வரினுங் கலித்தளையாகுமேனும், அது வெண்பாவடி யெனவும் பட்டுத் திரிவுபடுதலின் அதனைக் கட்டளை யடியென்னாது இறுதிக்கண் ஒரோவழி ஒருசீர் ஒன்றி வரினும் அதன் முதற்கட் பல வெண்சீர் வந்து பகைத்தலிற் கலியோசையே காட்டுமென்றானென்பது. அஃதேற், பண்டரங்க மாடுங் காற் பணையெழி லணை மென்றோள்(கலி.கடவுள் வாழ்த்து.) என்றவழி, 350இடை நின்ற சீரின் நேரசை நிரையசையியற் றென்னாமோவெனின், அது கட்டளை351யடி அன்று என்பது, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல். செய். 11) என்பதனான் அறியப்படும். 352அல்லாதாரும் அவை செவிகருவி யாக உணர்தற் கருமை நோக்கி அடியறியுந் தன்மை அரிதென்று சொல்லுப. இனி, இயற் சீரானன்றித் தளை 353கொள்ளாமோ வென்பார், 354தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா (367) என்பதனான், வெண்சீர்க்குத் தளை விலக்கல் வேண்டி அவ் வெண் சீரினையும் இயற்சீராக இயற்றிக் கொள்ளப்படு மென்றற்கு ஒரு வெண்சீரின் ஈற்றசை நிரையசையியற் றென்றா னெனக் கூறி, 355ஞாயிறென்னும் இயற்சீரினை மாசெல்வா யெனப் பின்னுமொருகால் திரிந்ததனையே திரியாமல் நிறுத்தி நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டினுங் கலியாமெனக் காட்டுப. அது ஞாயிறு புலிசெல்வாய் மாசெல்வாய் எனவரும். இவ்வாறே, கலித்தளை மருங்கிற் கடியவும் படா என்று, வரும் ஆசிரியவுரிச்சீர்க்குந் திரிபு கூறாரோவெனின், அது நினைந்திலர் போலு மென்று இகழ்ந்துரைப்பாராவர். மற்று, 356வெண்சீரிறுதி நிரை வந்தாற் கலித்தளையாமென்பதற்கு ஓத்து வேறுண்டாயினன்றே, நேரும் நிரையுந் தட்டதனை நேரும் நிரையும் பகைத்ததெனவும், வேண்டுவ தெனவும் அங்ஙனம் பொருளுரைப்பார்க்கு எவ்வாற்றானும் இச்சூத்திரம் ஏலா தெனவும், தன்சீர் வகையினும் தளைநிலை வகையினும் என்றவழித் 357தன்சீரானுந் தளைகொள்ளுமாகலானும் அது பொருந்தாதென மறுக்க. 358இனி, வெண்சீரின் ஈற்றசை யொன்றே யாகலான் இயற்றென்று ஒருமை கூறினான். இடை நின்ற நேரும் நிரையுங் கோடு மென்னாமையின் இங்ஙனந் திரிந்த நிலைமை வஞ்சியுரிச்சீரெனப்படும். இனி, வெண்சீ ரென்பது 359எழுவாயாயின் ஈற்றசை நிரையென்பது இயற்சீரின் பெயராதல் வேண்டும். அங்ஙனங் கருதினும் அசை யென்பதனை ஒருகாற் சொல்லி ஈற்றசை நிரையசையென லாகாதென்பது. அல்லதூஉம் 360வெண் சீரினை இயற்சீராக்கி அவ்வியற்சீரினை வெண்சீராக்குதல் வினை யிலுழப்பாகி வரம்பின்றாமென மறுக்க. 361என்றார்க்குத் தன் சீருள்வழித் தளைவகை வேண்டா னெனல், அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் என்பதூஉங் கலித்தளையன்றாகிச் செல்லுமென்பது. கலிப்பா விற்கு ஒன்றாது வருத லுரிமையுடைய வெண்சீரெனவே, வெண்பாவிற்கு ஒன்றாது வருதல் யாண்டுமில்லை, ஒன்றிவரி னல்லதென்பது உடம்படப்பட்டது. (29) (வெண்சீர் கட்டளையடியல்லாதவழி ஆசிரியவடிவினுள் வருமெனல்) 342. இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையா ராசிரிய வடிக்கே. இது, கட்டளையடி யல்லாதவழிச் சீர் மயங்குமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இன்னோசைத்தாகிய துணிவிற்றாகிவரின் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும் என்றவாறு. இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறம். 19) எனத் தலையாலம் என்றவழி ஆசிரியவடியுள் இன்சீரியைய வெண்சீர் வந்தது. முன்னர் வெண்சீரினை, இன்பா நேரடிக் கொருங்கு நிலையில என விலக்கி, ஈண்டு வரையாரென்றமையின் 362அது கட்டளையடிக் கென்பதூஉம் 363இது கட்டளையடிக்கன் றென்ப தூஉம் பெற்றாம். வருகுவ தாயினென்று ஒருமை கூறினமை யானும், இயைய வென்றதனானும் ஓரடிக்கண் ஒன்றே யாண்டும் வருவதெனக் கொள்க. (30) (வஞ்சிச்சீரும் கட்டளையடியல்லாவழி ஆசிரியத்துள் வருமெனல்) 343. அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீ ரொன்றுத லுடைய வோரோர் வழியே. இது, வஞ்சியுரிச்சீர் ஆசிரிய அடியுள் மயங்குமாறுணர்த் திற்று. இ-ள்: கட்டளையடி யல்லாதவழி இன்சீரியைய வருகு வதாயின் வஞ்சியுரிச்சீர்களும் ஓரொருவழி ஆசிரியத்துள் வரப் பெறும் என்றவாறு. ஒருவழி யென்னாது ஓரொருவழியென்ற தென்னை யெனின், அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் பத்துச்சீரே வருமென்ப தூஉம், அவை வருங்காலும் பயின்றுவாரா வென்பதூஉம் அறிவித்தற்கென்பது. அவை: மாசேர் சுரம், புலிசேர்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு, மாசெல் கடறு, புலிசெல்கடறு, பாம்புசேர்வாய், பாம்புவருவாய். களிறு சேர்வாய், களிறு வருவாய் என்பன. அவற்றுக்குச் செய்யுள் : மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன் என மாசேர்சுரம் புலிசேர்சுரம் என்பன அடிமுதற்கண் வந்தன. முன்றிலாடு மஞ்ஞை மூதிலை கொறிக்கும் என மாசெல்காடு வந்தது. அலரிநாறு துவர்வாய் மாத்தா ணோக்கின் எனப் புலிசெல்காடு வந்தது. கண்போன் மலர்ந்த வண்டுமயங்கு தாமரை என மாசெல்கடறு வந்தது. கரடிவழங்கு குன்றுகண்டு போகி எனப் புலிசெல்கடறு வந்தது. காடுதேரா வழிதரு கடுங்கண் யானை எனப் பாம்புசேர்வாய் வந்தது. செந்து சிதையாச் செங்குரற் சிறுதினை எனப் பாம்புவருவாய் வந்தது. மருந்துநாடாத் திருந்து சிலம்பிற் கைக்கும் எனக் களிறுசேர்வாய் வந்தது. கடறுகவரா விழிந்து கண்யாறு வரிப்ப எனக் களிறுவருவாய் வந்தது. பிறவுமன்ன. 364நேர்நிரையாகியும் நேர்புநிரையாகியும் 365ஈறு முதல் பெறச் சீர் வந்தது. (31) (அடியாவது இதுவெனல்) 344. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. இது, முதற்சூத்திரத்துள் யாத்த சீரே யடியாப் பெனாஅ என நிறுத்த முறையானே சீருணர்த்தி அடியுணர்த்திய வெழுந்தான்; அவற்றுள் இது நாற்சீரடி யுணர்த்திற்று. இ-ள்: அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன நாற்சீரடி என்றவாறு. எனவே, இருசீரானும், முச்சீரானும், ஐஞ்சீரானும், அறு சீர் முதலியவற்றானும் வருமாயினும் அவை சிறப்பில வென்ற வாறாம். இருசீரான் வருவதனை என்ன அடியென்னுமோ வெனின், அடிக்கெல்லாம் 366எழுத்து வகையானே மேற்பெயர் கூறும். அவ்வாறே சீர்வகையானுங் கொள்ளப்படு மென்பது. சுருங்கிய எழுத்தான் வருவன குறளடியென்றும், அவற்றின் ஏறிய எழுத்தான் வருவன சிந்தடியென்றும், இடைநின்றன அளவடி யென்றும், அவற்றின் நெடியன நெடிலடியென்றும், அவற்றினும் நெடியன கழிநெடிலடியென்றுங் கூறுமாகலான், அவ்வாறே இருசீரடி குறளடியென்றும், முச்சீரடி - சிந்தடி யென்றும், நாற்சீரடி - அளவடியென்றும், ஐஞ்சீரடி - நெடிலடி யென்றும், அறுசீர் முதலியன கழிநெடிலடி யென்றுங் கொள்ளும் என்பது. இவற்றினெல்லாம் நாற்சீரடி சிறந்ததென்ற தென்னையெனின், அளவிற் பட்டமைந்தமையானும் அது பயின்று வருதலானு மென்பது. உதாரணம் : திருமழை தலைஇய விருணிற விசும்பின் (மலைபடு. 1) எனவும், அறுசுவை யுண்டி அமர்ந்தில்லா ளூட்ட (நாலடி.1:1) எனவும், அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) எனவும் இவை 367மூன்று பாவினும் அளவடி வந்தவாறு. 368இவற் றது விகற்பமெல்லாம் முன்னர்ச் சொல்லுதும். (32) (நாற்சீரான் வரும் ஓரடிக்கண்ணே தளையுந் தொடையுங் கொள்ளப்படுமெனல்) 345. அடியுள் ளனவே தளையொடு தொடையே. இதுவுமது. நாற்சீரடியது சிறப்புணர்த்துதல் நுதலிற்று. எதிரது நோக்கியதொரு கருவியெனினும் அமையும். இ-ள்: முன்னர்க்கூறிய நாற்சீரடியுள் உள்ளனவே தளையுந் தொடையும் என்றவாறு. மற்று, மாத்திரையும் எழுத்தும் அசையுஞ் சீரும் அவ்வடி யுள்ளன அல்லவோவெனின், அற்றன்று; அவ்வடிக்க ணுள்ளன வெல்லாங் கூறுகின்றா னல்லன் இதுவென்பது. என்னை? நாம் தளைப்பகுதியாற் கட்டளையடி யென 369உறழ்வதூஉம், அறு நூற்றி ருபத்தைந்தடியென வரையறை கூறுவதூஉம், அவ்வள வடியே என்றற்கு 370நாற்சீர்க்கண்ணது தளை யென்றா னென்பது. முன்னுஞ் சீர்வகையான் வகுக்கும் அடியன்றிக் கட்டளையடி யெல்லாந் தளைவகை யுடையவென விதந்தோதி வந்ததனானே, நாம் தளை கொள்வது நாற்சீரடிக்கணென்பான் அடியுள்ளது தளை யென்றானென்பது. 371மற்றை யடிக் கட்டளை கொள்ளின், அது வரையறையின் 372றென்னுமாகலின் ஈண்டு வரைந் தோதினா னென்பது. அது தக்கது; மற்றுப் பொழிப்பும் ஒரூஉவும் போலாத மோனை முதலிய தொடை யெல்லாம் 373அடியிரண்டியையத் தொடுக்கல் வேண்டுமன்றே? அவற்றை அடியுள்ளனவே தொடையும் என்ற தென்னை யெனின், அற்றன்று; நாம் 374தொடையுறழச் சீர்கொள்வதூஉம் இவ்வளவடிக்க ணென்பது கூறினான், ஆண்டுத் தொடை கூறும்வழி 375வரையாது கூறுமாகலி னென்பது. எனவே, கட்டளைப் படுப்பதூஉந் தொடையுறழ்தற்கு இடனா வதூஉம் நேரடியே யெனச் சிறப்பித்தவாறு. (33) (நாற்சீர் கொண்ட ஓரடியைக் கடந்து தளையுந் தொடையும் வாரா எனல்) 346. அடியிறந்து வருத லில்லென மொழிப. இதுவும், கட்டளைப்பாட்டிற்குந் தொடைக்கும் ஆவ தோர் கருவியுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அறுநூற்றிருபத்தைந்து அடியுள்ளும் ஓரடியின் இறந்து வாரா, மேற்கூறிய தளையுந் தொடையும் என்றவாறு. என்றது, மேற்கூறிய தளைவகையே யன்றி அடியோடு அடிக் கூட்டத்துத் தளை கொள்ளுங்காலும் ஓரடிக்கண்ணே வழுவாமற் கோடல் வேண்டு மெனவும், அங்ஙனமே தொடை கொள்ளுங் காலும் வந்த வந்த அடியே வரப்பெறுவதெனவுங் கூறியவாறு. எனவே, தேமா தேமா தேமா தேமா வென்னும் அடிக்கண் தொடை கொள்ளுங்கால், வாமா னேறி வந்தான் மன்ற என முன் வந்த அடியே வரல்வேண்டுமென்பதூஉம், அன்றித் தேமாஞ் சோலைத் தீந்தே னுண்ட காமர் தும்பி யாதல் 376கண்டது எனவரில் தளை வழுவாகிப் பதின்மூவாயிரத்தெழு நூற்றெட் டெனப்பட்ட தொடைப்பகுதியுட் படாவென்பதூஉம் பெற்றாம். இனி வெண்பாவினுள் அவை வருமாறு : சென்றே யெறிப வொருகாற் சிறுவரை நின்றே யெறிப பறையினை - நன்றேகாண் (நாலடி. 24) எனப் பன்னிரண்டெழுத்தடி ஒன்றனையும் இருகாற் சொல்லிக் கூட்டி எதுகைத்தொடை கொள்ளுங்கால் அடியோடு அடிக் கூட்டத்துத் தளை வகை சிதையாது வந்தமையின் அத்தொடை பதின்மூவாயிரத் தெழுநூற் றெட்டென வரையறைப்பட்ட தொடையுட்பட்டது. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான் - றேனூறு (முத்தொள்ளாயிரம் 104) என்றவழிப் பதினான்கெழுத்தடியே தொடுத்தமையின் அடி யிறந்து வந்ததன்றாயினுந் 377தளைவகை ஒன்றாமையான் இது பதின்மூவாயிரத்தெழு நூற்றெட்டினுட் படாதாயிற்று. வண்டு வரகு வரகு வரகு என்கின்ற அடியினை மீட்டுந் தந்து தொடைகொள்ளுங்கால், வண்டு வரகு வரகு வரகு என்றது 378நேரொன்றாசிரியத்தளை தட்கு மாதலான், இது வழுவெனப்படுமென்பது. கலிப்பாவிற்கு 379அன்னதொரு வரையறை இல்லை. 380இருவாற்றானும் வருமென்பது, என்னை? வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (341) என்றாராகலின், மேலைச்சூத்திரத்தானே தளைவகை சிதையாமல் அறுநூற்றிருபத்தைந்து வகைப்படுவது நாற்சீரடி யே என்பதூஉங் கூறி, அந்நாற்சீரடியே நாம் முன்னர் வேண்டுந் தொடை விகற்பத்திற்குரியவென்பதூஉங் கூறினான். இச் சூத்திரத்தானே அத்தொடை கொள்வது தம்மின் வேறாகாத இரண்டடிக்கண் என்பதூஉம், அறுநூற்றிருபத்தைந் தடியுள் ஒன்றனை இருகாற் சொல்லித் தொடை கொள்ளப்படு மென்பதூஉம், அங்ஙனந் தொடுக்குங் காலும் அடியோடு அடிக் கூட்டத்தின் கண்ணுந் தளைவகை சிதையாமல் தொடுக்க வேண்டுமென்பதூஉங் கூறியவாறாயிற்று. இவற் றானெல்லாம் நாற்சீரடியே சிறப்புடைத் தென்பது பெற்றாம். 381இன்னும் 382அதன் சிறப்புடைமையே 383கூறுகின்றான். (34) (நாற்சீர்அடிகள் இரண்டும் பலவும் அடுத்துவந்த தொடையே பாட்டெனல்) 347. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. இது, நாற்சீரடியை விசேடித்துக் கூறி, அதனது இடத் தானே பாட்டென்பதொரு முதற்பொருள் தோன்றுமென்ப துணர்த்தியவாறு. எனப்படும் என்றதனான் இவ்வடிகளான் வந்த செய்யுளே சிறப்புடையன வென்பதூஉஞ் சொல்லியவாறு, மாத்திரை முதலிய 384வற்றை உறுப்புக்களான் இத்துணை மாத்திரை கொண்டது செய்யுளென்றானும், இத்துணை அசையுஞ் சீருந் தொடையுங் கொண்டது செய்யுளென்றானும், அளவியல் 385கூறி அவ்வுறுப்புக்களான் வரையறுக்கப்படா. அடியளவே கூறச் செய்யுட் புலப்பாடாமென்பது. எனப்படும் என்றதனான், 386ஒழிந்த அடிகளானும் அவ்வாறு வருமாயினும் அவை சிறப்பில வென்பது. இ-ள்: அடியின் சிறப்பென்பதுஅடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு என்றவாறு. தலையிடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற் சீரடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும் பான்மையுஞ் செய்தார்; வஞ்சிப்பாச் சிறுவரவிற்றெனக் கொள்க மாயோன் மார்பி லாரம் போல மணிவரை யிழிதரு மணிகிள ரருவி நன்பொன் வரன்று நாட னன்புபெரி துடைய னின்சொல் லினனே (தொல். 390; 469. பேர்) என நாற்சீரடியான் ஆசிரியம் வந்தவாறு. மலைமிசைத் தோன்று மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் (நாலடி. 2:1) என அளவடியானே வெண்பா வந்தவாறு. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) எனக் கலிப்பா அளவடியான் வந்தது. பிறவு மன்ன. (35) (நாற்சீர்டியின் பகுப்பும் அவற்றின் பெயரும் முறையுந் தொகையும் இவையெனல்) 348. நாலெழுத் தாதி யாக வாறெழுத் தேறிய நிலத்தே குறளடி யென்ப. (36) 349. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே யீரெழுத் தேற்ற 387மல்வழி யான. (37) 350. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே யொத்த நாலெழுத் தேற்றலங் கடையே. (38) 351. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே யீரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப. (39) 352. மூவா றெழுத்தே கழிநெடிற் களவே யீரெழுத்து மிகுதலு மிவட்பெறு மென்ப. (40) இவை ஐந்து சூத்திரமும் உரையியைபு நோக்கி உட னெழுதப் பட்டன. நாற்சீரடி இத்துணைப் பகுதிப்படுமென அவற்றது பெயரும் முறையுந் தொகையு முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நாலெழுத்து முதலாக ஆறெழுத்தளவும் வந்த நில மூன்றுங் குறளடி யெனவும், ஏழெழுத்து முதன் மூன்று நிலனுஞ் சிந்தடியெனவும், பத்தெழுத்து முதல் ஐந்துநிலனும் அளவடி யெனவும், பதினைந்தெழுத்து முதன் மூன்றுநிலனும் நெடிலடி யெனவும் பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்து வரை மூன்று நிலனுங் கழிநெடிலடியெனவுஞ் சொல்லுப ஆசிரியர் என்றவாறு. குறளடி நிலங்களை 388வகுத்தொழியாது, 389ஒழிந்தனவும் வகுத்துரைத்தான்; அவை முதல் இடை கடையென மூன்று கூற் றான். ஒன்றொன்றனிற் 390சிறப்பு இழிபுடையன வென்று கொள் ளினுங் 391கொள்ளலாமென்பது. அவற்றுக்குச் செய்யுள் ; பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து குறளடி தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு வீங்கி நீர்வாய் கொண்டு நீண்ட நீல சிந்தடி மூர்வா யூதை வீச வூர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர வமையேர் மென்றோ ளம்பரி நெடுங்க நேரடி ணிணையீ ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு லணிநடை யசைஇய வரியமைச் சிலம்பின் நெடிலடி மணிமருள் வணர்குரல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு 392முழங்கிய வணிநிலவு மணிநக கழிநெடில் ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு 393நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்பி னொழிகுவ தன்றே என இதனுட் பதினேழ்நிலத்து ஐவகையடியும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடியென நாற்சீரடிதானே ஐவகைப்படுமென்று அவற்றது பெயரும் முறையுந் தொகையுங் கூறினான். தொகை பதினேழ்நிலத்து ஐவகையடியென்பது எண்ணிப்பார்க்க. இப் பெயரெல்லாங் காரணப்பெயர். மக்களுள் தீரக் குறியானைக் குறளனென்றும், அவனினெடியானைச் சிந்தனென்றும், ஒப்ப மைந்தானை அளவிற்பட்டானென்றும், அவனி னெடியானை நெடியானென்றும், அவனி னெடியானைக் கழியநெடியா னென்றுஞ் சொல்லுப. அவைபோற் கொள்க இப்பெய ரென்பது. (36- 40) (சீர்கள் ஐந்தெழுத்தின் மிக்கு வாராவெனல்) 353. சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது. இது, மேலெழுத்தெண்ணி அடி வகுக்கப்பட்ட ஐவகை யடிக்குஞ் சீரும் எழுத்தெண்ணியே வகுக்கின்றது. இ-ள்: சீரது நிலைமைதான் ஐந்தெழுத்து இறந்து வாராது எ-று. பெருமைக்கெல்லை கூறி வரையறுக்கவே சிறுமைக் கெல்லை வரையறைப்படாது ஒன்று முதலாக வருமென்பதாம். சீர்நிலை தானே யென்பது பிரிநிலையேகாரம். அதனை அசை நிலையிற் பிரித்துக் கூறியவாறு. அதனை அவ்வாறு பிரித்துக் கூறவே, 394அசை சீராயவழி ஐந்தெழுத் திறவாமை 395அவற்றுக் கில்லை யென்பது கொள்ளப்படும். அஃதேல் அவற்றுக் கெல்லை கூறானோவெனின், அவை மூன்றெழுத்தி னிறவா வென்பது 396உரையிற் கொள்க. தானென்பதனை 397இலேசுப் படுத்துக் கொள்ளினும் அமையும். மற்றிவற்றையுஞ் சீர்நிலை பெறுமென்ப வாதலாற் சீரென அடக்கானோவெனின், அடக்கானன்றே, 398அவை. சீர்நிலை யெய்தியவழியும் அசை யிரண்டாகாமையி னென்பது. இயற்சீர் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான (தொல். பொ. 340) என்று ஆண்டு 399வரைந்தமையின் அதனைச் சீர்நிலையென வாளாது பொதுவகையானோதான். 400அதுவே கருத்தாயின். அவற்றை நேர்பசை நிரைபசையெனக் கூறியதனானும், அவற்றை ஈரசை கொண்டு மூவசை புணர்ந்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே (தொல்.பொ. 321) என்றதனானும் பயந்ததென்னையென மறுக்க. அல்லதூஉம், இயற்சீர்ப் பாற்படுத் தியற்றுக வெனவே, இவைதா மியற் சீரல்ல, 401அவற்றது செய்கை இவற்றானுங் கொள்கவென்ற துணையே ஆண்டுக் கூறிய தென்பது. அல்லதூஉந் தேவரும் நரகரும் மக்கட் பாற்படுத்துத் (588) திணை கொள்ளப் படும் என்ற துணையானே, பிறப்பானும் 402பெற்றியானும் மக்களென வழங்கார். அதுபோல, அசைநிலைத் தளையுஞ் சீர்நிலைத் தளையும் ஒக்குமென்ற துணை யானே, அவை அசைச்சீரெனவே, அடையடுத்தே சொல்ல வேண்டுவனவற்றையும் வாளாதே சீரெனப்படுவன வற்றையும் ஒருவகையானே சீர்நிலையென மயங்கக் கூறல் (663) குற்றமா மென்பது. மயங்கக்கூறல் குற்றமன் றென்பார் உளராயின், அவர் கருத்தினான் அதுவும் அமையு மென்பது. ஒரு சாதியல்லன வற்றைச் 403சாதியொன்றெனவும் புகலார்; அதுபோலச் சீரிலக்கண முடைய இயற்சீர் உரிச்சீர் களைச் சீரெனக் கூறி அவ்வினத்த வல்லாத அசைச்சீரை இலேசினாற் 404கொண்டா னென்பது. ஓரெழுத்துச்சீர் நுந்தையென ஒன்றேயாம்; இதனோடு வண்டு என்னும் அசைச்சீர் கூட்ட இரண்டாம். ஈரெழுத்துச்சீர் நான்கு; அவை: தேமா ஞாயிறு போதுபூ போரேறு என வரும். மின்னு வரகு என்னும் அசைச்சீர் இரண்ட னொடுங் கூட்ட ஆறாம். மூவெழுத்துச்சீர் பத்து; அவை: புளிமா பாதிரி வலியது மேவுசீர் நன்னாணு பூமருது கடியாறு விறகுதீ மாசெல்வாய் நீடுகொடி எனவிவை. அரவு என்னும் உரியசைச்சீரோடுங் கூட்டப் பதினொன்றாம். நாலெழுத்துச்சீர் ஒன்பது: அவை: கணவிரி காருருமு பெருநாணு உருமுத்தீ மழகளிறு மாவருவாய் புலிசெல்வாய் நாணுவரை உரறுபுலி எனவிவை. ஐந்தெழுத்துச்சீர் மூன்று; அவை: நரையுருமு புலிவரு வாய் விரவு கொடி எனவரும். இக்கூறுபட்டன வெல்லாம் ஈண்டுக் காட்டுவாமாயிற்று, எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (தொல். பொ. 355) என வருகின்ற சூத்திரத்தினை நோக்கி யென்பது, முடவுமருது என்பதனைக் குற்றுகரங் களைந்து ஐந்தெழுத்தென்று காட்டுவாரு முளர். அஃது உரியசைமயக்கமாகிய ஆசிரிய வுரிச்சீ405ராகலின் இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே (335) என்பதனான் விலக்கப்பட்டதென்பது. இனி, 406நுந்தையென் பதனை ஈரெழுத்துச்சீரென்பாருமுளர். அங்ஙனங் கூறின், இரண்டு தலையிட்ட முதலா கிருபஃது (தொல். எழு. 103) என்னும் எழுத்தோத்தினொடு மாறுகொள்ளுமென்பது. அது வழக்கிற்குக் கூறியது, செய்யுட்காயினவாறு கொள்ளாமோ வெனின், கொள்ளாம்; செய்யுட்கண்ணு மதனை 407வேறெழுத் தென்று வேண்டுமாகலின். என்னை? முற்றிய லுகர மொழிசிதைத்துக் கொளாஅல் (321) எனக் குற்றியலுகரமும் வருமொழியைச் சிதைத்துக் கொள்ளப் படாவென்பது கூறினானாகலினென்பது. (41) (சமநிலை வஞ்சிக்கு ஆறெழுத்தானுஞ் சீர் வருமெனல்) 354. நேர்நிலை வஞ்சிக் காறு மாகும். இஃது, ஒழிந்த வஞ்சிப்பாவினுள் வருஞ்சீர் இத்துணை யெழுத் திறவா தென்கின்றது. நேர்நிலை வஞ்சியென்பது சமநிலை வஞ்சி. அஃது இருசீரான் வருதலிற் சமநிலை வஞ்சி யெனப் பட்டது, முச்சீரான் வருவதனை வியநிலைவஞ்சி (338) யென்பவாகலின். இ-ள்: இருசீரடி வஞ்சியுள் ஒருசீர் ஆறெழுத்துமாகப் பெறும் எ-று. இதற்கு, மேனின்ற அதிகாரத்தாற் பெருக்கத்திற் கெல்லை கூறினான், சுருக்கத்திற்கு வரையறையுடைமையின் அது முன்னர்ச் (358) 408சொல்லும். எனவே, அறுபது வஞ்சியுரிச் சீருள்ளும் ஆறெ ழுத்தான் வருஞ் சீரும் கட்டளையடியாய் வரப்பெறு மென்றவாறு. 409உம்மை இறந்தது தழீஇயிற்று. தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே (358) என்றதனான் ஒன்றும் இரண்டும் எழுத்தாய் வருதலொழித்து, ஒழிந்த எழுத்தான் ஆறெழுத்தளவும் வஞ்சியுரிச்சீர் வரு மென்பது கொள்ளப்படும். இதனை எச்சவும்மை யென்பார் ஏழெழுத் தானும் வஞ்சியுரிச்சீர் வருமென்ப. அங்ஙனங் கொள்ளின் இரண்டுசீராற் 410பதினான்கெழுத் துளவாகியே செல்லும்; செல்லவே, குறளடி முதலா வளவடி காறு முறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப (369) என்பதனொடு மாறுகொள்ளு மென்பது. தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே (358) என்புழி இவற்றிற்கு உதாரணங் காட்டுதும். (42) (ஒருசீர் பல நிலைமை அடைதலால், எழுத்தளவு மிகினும் குறையினும் ஓசையால் தம்முள் ஒக்குமெனல்) 355. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப. இது/ மேற்கூறிய சீரெல்லாவற்றிற்கும் பொதுவிதி. இ-ள்: ஒருசீர் இரண்டு முதல் 411பதினெட்டீறாகப் பல நிலைமைப் பட்டும் பல சீராகிச் செய்யுளுள் வருமாற்றாற் றத்த மெழுத்துக் குறைந்தும் மிகுந்தும் அளவிறப்பினும், அவ்வச் சீரெனப்பட்டுச் செய்யுளுள் 412ஒத்த ஓசையவாய் 413இருவகையும் 414ஒரு தன்மையவேயாகச் சுருங்கிற்றும் பெருகிற்றுமில்லை என்றவாறு. எனவே, அவை எழுத்தெண்ணி அடிவகுக்குமாற்றான் இரு நிலைமையும், இரண்டிறந்த பலநிலைமையும் படுவன படும். அவ்விடத்து எழுத்திற்கல்லது சுருக்கப் பெருக்கமில்லை யென்பதூஉங் கூறியவாறாயிற்று. தான் என மிகுத்துச் சொல்லியவதனான் 415அசைச்சீர்க்கும் அவ்வாறே கொள்ளப் படும். தளை வகைக்குரியவென மேலோதிவந்த சீர் பதினாறும் அசைச் சீரிரண்டுமெனப் 416பதினெட்டனுள்ளும் 417இயற்சீர் பத்தனுட் புளிமாவும் வெண்சீர்நான்குமென ஐந்தும் ஒரு நிலைமையவேயாம். ஒழிந்த சீர் பதின்மூன்றும் இரு நிலைமையெய்தி இருபத்தாறாம். ஆகச் சீர் முப்பத்தொன்றா மென்பது. அவற்றுக்குதாரணம் : நுந்தை, தேமா; ஞாயிறு, பாதிரி; வலியது, கணவிரி; போதுபூ, மேவுசீர்; போரேறு, நன்னாணு; பூமருது காருருமு; கடியாறு, பெருநாணு; விறகுதீ, உருமுத்தீ; மழகளிறு, நரையுருமு; என ஒன்பதியற்சீரும் இருநிலைமையாற் பதினெட் டாயின. புளிமா வென்னும் இயற்சீர் ஒருநிலைமைத்தேயாம். 418அல்லாதார் 419வரகு என்பதனுட் குற்றுகரங் களைந்து புளிமா விற்கு இரு நிலைமை காட்டுப; அங்ஙனங் காட்டின், வரகென்பது போலப் புளிமாவும் ஓரசையாகலானும் புளிமா வென்பதுபோல வரகு என்பது இரண்டசையாகலானும் கோடல்வேண்டும். கொள்ளவே, இச்சூத்திரத்தினொடு மாறு கோளாமென்பது; என்னை? எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (355) என்றானாகலின் என்பது. நீடுகொடி நாணுத்தளை எனவும், உரறுபுலி விரவுகொடி எனவும், நிரையீற் றாசிரியவுரிச்சீரிரண்டும் இவ்விரண்டாகி இரு நிலைமை யெய்தியவாறு. இனி, வெண்சீர் நான்கும் ஒரு நிலைமையவேயாம். வண்டு, மின்னு; வரகு, அரவு; என அசைச்சீரிரண்டும் நான்காய் இருநிலைமையவேயாம். இவ்வாற்றான் இவையெல்லாந் தொகுப்ப. இயற்சீர் பத்தொன்பதும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் என முப்பத்தொன்றாயின. என்றார்க்கு. மாவருவாய், புலிவருவாய் என்பவற்றையும் 420ஞாயிறுகொல், வலியதுகொல் எனக் குற்றுகரம் பெய்து இருநிலைமை கொள்ளாமோ வெனிற், கொள்ளாம். அவை, எல்லா விறுதியு முகர நிறையும் (தொ. எழு. 408) என்பதனான் முற்றுகரமேயாமென்பது. இனி, 421முதற்கணின்ற குற்றுகரமுங் கொண்டு இருநிலைமை கொள்ளாம். என்னை? நுந்தையென்பது ஈரசை யாகலானும் அதனை நீநுந்தையென வேறொரு சொற்பெய்து வெண் சீரெனக் காட்டின், அது வந்து நின்றது என்றதுபோலச் சீர்வகையான் வேறொரு சொல்லா மாகவே அது முற்றுகரமாகலானுமென விடுக்க. என்றார்க்குப் 422போதுபூ என்பதூஉம் இருநிலைமைத் தாகாதாம் பிறவெனின், அற்றன்று; சேற்றுக்கால், யாட்டுத்தாள், வட்டுப்போர் எனப் பலவும் வருமாகலின் அஃதிருநிலைமைத்தேயாமென்பது. இனி, வஞ்சியுரிச்சீர்க்கும் 423இடைநின்ற குற்றுகரங்களை வன்றொ டராக வருவித்துக்கொள்க. இனிச், 424சீரிறுதிக் குற்றுகரங்கள் நிறையாது நிற்றலும் உடையவென்பது, சீரியைந் திற்றது சீரெனப் படுமே (324) என்றவழிக் கூறியவாற்றா னறிக. இனிச் சூத்திரம் வரையாது கூறினமையின் 425அறுபது வஞ்சியுரிச் சீருள்ளும் இருபத்துநான்குசீர் இருநிலைமை யாகவும், இருபத்தெட்டுச்சீர் நான்கு நிலைமையாகவும், எட்டுச்சீர் எட்டு நிலைமையாகவுங் கொள்ளப்படும். அவற்றுள், இரு நிலைமைப்படுவன: 426நேரீற்றுச் சீரெட்டு, நிரை யீற்றுச்சீரெட்டு, நேர்பீற்றுச்சீர்நான்கு, நிரைபீற்றுச்சீர் நான்கு என இருபத்துநான்கு வஞ்சியுரிச்சீராம். அவை. மாபோகுவாய், மாவழங்குவாய், பாம்புசேர்வாய், பாம்புவருவாய், புலிபோகுவாய், புலிவருவாய், களிறு சேர்வாய், களிறு வருவாய் எனவும்; 427மாசேர்சுரம், மாவருசுரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம்; புலிசேர்சுரம், புலிவருசுரம், புலிபோகுசுரம். புலிவழங்குசுரம் எனவும்; 428மாசேர்காடு, மாவருகாடு, புலிசேர்காடு, புலிவருகாடு எனவும்; 429மாசேர்கடறு, மாவருகடறு, புலிசேர்கடறு, புலிவருகடறு எனவும் வரும். இவ் விருபத்துநான்கும் 430இருநிலைமையான் நாற்பத் தெட்டா மென்பது. இனி, நான்கு நிலைமைப்படுஞ் சீர் இருபத்தெட்டு வருமாறு; பாம்பு போகுவாய், பாம்புவழங்குவாய், களிறுபோகுவாய், களிறுவருவாய், எனவும், பாம்புசேர்சுரம், பாம்புவருசுரம், பாம்புபோகுசுரம், பாம்பு வழங்குசுரம் எனவும், களிறு சேர்சுரம், களிறுவருசுரம், களிறுபோகு சுரம், களிறு வழங்குசுரம் எனவும்; மாபோகுகாடு, மாவழங்குகாடு, புலி போகு காடு, புலிவழங்கு காடு எனவும்; பாம்புசேர்காடு, பாம்பு வரு காடு, களிறுசேர்காடு, களிறுவருகாடு எனவும்; மாபோகு கடறு, மாவழங்குகடறு, புலிபோகுகடறு, புலிவழங்குகடறு எனவும் ; பாம்புசேர்கடறு, பாம்பு வருகடறு, களிறுசேர்கடறு, களிறுவருகடறு எனவும் வரும். இவற்றைப் பாம்புபோகுவாய், பாம்புமன்னுவாய், மின்னுப்போகுவாய், மின்னுக்கோலுவாய் என ஒன்று நான்காக வாய்பாடுகொடுத்து ஒட்டியுணர்க. இவற்றுள், உரியசை முதற்கணின்ற நிரையீற்று நான்கனை யும் ஒன்று நான்குசெய்யுங்கால் பாம்புசேர்சுரம், பாம்புசேர்வது, மின்னுச்சேர்சுரம், மின்னுச்சேர்வது என்றாற்போல வெவ்வேறு வாய்பாடு கொடுத்துரைக்க. இவை யிருபத்தெட்டும் விரிப்ப, நூற்றொருபத்திரண்டு வஞ்சியுரிச் சீராம். இனி, எட்டுநிலைமைப்படுஞ்சீர் எட்டுமாவன: பாம்புபோகு காடு, பாம்புவழங்குகாடு, களிறுபோகுகாடு, களிறுவழங்கு காடு எனவும்; பாம்புபோகுகடறு, பாம்புவழங்குகடறு, களிறுபோகு கடறு, களிறு வழங்கு கடறு எனவும் வரும். இவை மும்மூன்று உரியசையுடைமையின் முதற்கணின்ற உரியசை யிரண்டும் நான்குநிலைமை எய்தும். பின்னர் நின்ற உரியசை யொன்றனை இருநிலைமையாக்கி அவற்றொடு முன்னர் நின்ற நான்கனையும் வேறு வேறுகூட்ட எட்டா மென்பது. உதாரணம் ; பாம்புபோகுகாடு, மின்னுப் போகு காடு, பாம்பு மன்னுகாடு, மின்னுமன்னுகாடு, பாம்புபோகு காவு, மின்னு போகுகாவு, பாம்புமன்னுகாவு, மின்னுமன்னு காவு எனவரும். இவ்வாறே ஒழிந்தசீர் ஏழனையும் வெவ்வேறு வாய்பாடு கொடுத்துரைக்க அறுபத்துநான்கு வஞ்சியுரிச்சீராம். இவ்வாற்றான் இருநிலைமையும் நான்கு நிலைமையும் எட்டு நிலைமையும்பட்ட சீரெல்லாந் தொகுப்ப வஞ்சியுரிச்சீர் இருநூற்றிருபத்து நான்கெனப்படும். இவற்றுள் ஏழெழுத்தும் எட்டெழுத்தும் ஒன்பதெழுத்தும் பெற்றசீர், இருபத்து மூன்றுள. அவை நேர்நிலை வஞ்சிக்காகா வென்பது, உறழ்நிலை யிலவே வஞ்சிக்கு (369) என்புழிச் சொல்லுதும். இனி, 431ஆசிரியவுரிச்சீர் நான்கும் ஒன்று நான்கு நிலைமைப் படுமென்பதூஉம் 432ஈண்டடங்கும். நீடுகொடி குளிறுபுலி என்பன இரு நிலைமைப்படும். அது மேற்கூறினாம். என்றார்க்கு அவற்றை இரு நிலைமை யென்பதென்னை? நீடுகொடி நீடுவது எனவும் நாணுத்தளை நாணுவது எனவும் ஒன்று நான்காம் பிறவெனின், அற்றன்று; நீடுவது (213) என்பதனை அலகு வைக்குங்கால், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323 என்பதனான், அவ்வச்சீராய் இசையாவாகலிற் பூமருது (257) என்னுஞ் சீராக வைக்கப்படுமாகலானென்பது. (43) (எழுத்தெண்ணிச் சீர் வகுக்குங்கால் ஒற்றுங் குற்றுகரமும் ஆய்தமும் எண்ணப்படா எனல்) 356. உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ வுயிர்த்திற மியக்க மின்மை யான. இது, மேல் எழுத்தெண்ணிச் சீர்வகுத்த முறையானே ஒற்றும் ஆய்தமுங் குற்றுகரமும் ஒருங்கெண்ணப்படுத லெய்தின வற்றை விலக்கினவாறு. இ-ள்: உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ-தத்தம் ஓசை இனிது 433விளங்கத் தக்க தன்மையான் ஒலித்தற்றொழி லில்லாத எழுத்துக்கள் ஈண்டெண்ணப்படா; உயிர்த்திறம் இயக்கம் இன்மையான-அங்ஙனம் எண்ணப்படாதவும் எழுத்தெனப் படுதலிற் சிறிது நாப்புடை பெயருந் துணையான் ஒலித்தலும் மொழி சார்ந்து ஒலித்தலும் உடையவன்றே? அங்ஙனம் ஒருவாற்றான் உயிர்க்குந் திறமுடையவாயினும் அவ்வுயிர்க்குந் திறம் ஈண்டுச் செய்யுட்பாற் படுங்கால் உபகாரப்பட இயங்கு மாறில வாகலின் எண்ணப்படா எ-று. மேற் சீர்தளை இருநிலைமைப்படுத்த அதிகாரத்தான் ஒற்றுங் குற்றுகரமுமே ஈண்டு விலக்கினானென்பது இச் சூத்திரம் வலித்ததாயிற்று, ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (320) எனவும் மேற்கூறினானாதலினென்பது. பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து என ஒற்றுங் குற்றுகரமும் ஒழித் 434தெண்ணப்பட்டமையினான் நாலெழுத்தடி யாயிற்று. பிறவும் அன்ன. (44) (சமநிலை வஞ்சியடி இருசீரான் வருமெனல்) 357. வஞ்சி யடியே யிருசீர்த் தாகும். இது, நேர்நிலை வஞ்சிக் காறு மாகும் (335) எனவும், தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே (358) எனவும், எழுத்தெண்ணி வரையறுக்கப்பட்ட சீரிரண்டு கொண்டது வஞ்சியடி யென்பதுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: குறளடியே வரையறையுடைய வஞ்சியடி யெனப் படுவது என்றவாறு. ஏகாரம் பிரிநிலை. என்னை? சிறப்புடை வஞ்சியடியைப் பிரித்து வாங்கிக் கொண்டமையின். எனவே, மூச்சீரான் வரும் வஞ்சியடியும் உள; அவை கட்டளையடியல்ல வென்றானா யிற்று. இங்ஙனம் கூறவே, வஞ்சி யடியும் ஒருவாற்றான் உறழ்ந்து கொள்ள வழிகாட்டியவாறு. இவ்வாறு கூறாக்கால் மூன்றுபா விற்குங் கூறினான் இதற்குக் கூறியதிலனெனக் குன்றக் கூற (665) லென்னுங் குற்றமாமென்பது. இதனை மேல், குறளடி முதலா வளவடி காறு முறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப (369) என 435உறழ்நிலை ஒருவாற்றானே 436கூறுமென்பது. அச்சூத்திரத் தான் முச்சீரும் உறழ்ப வென்று கொள்ப வெனின், அஃதே கருத்தாயின் 437இருசீரும் 438முச்சீரும் வஞ்சிக்கென்ப வென்று உடனோதுவான்மன் ஆசிரியனென மறுக்க. (45) (தேர்நிலை வஞ்சிப்பாவிற்கு வருஞ்சீர் மூன்றெழுத்திற் சுருங்கி வாராதெனல்) 358. தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே. இது, மேற்கூறிய வஞ்சியடிக்கண் வரும் இருசீர்க்கும் பெருமைக் கெல்லை, நேர்நிலை வஞ்சிக் காறு மாகும் (354) என்று கூறினான்; ஈண்டு அவை மூன்றெழுத்திற் சுருங்காவெனச் சுருக்கத்திற் கெல்லை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வஞ்சியடிச்சீர் மூன்றெழுத்துச் சிறுமை பெறும் என்றவாறு. சிறுமைக் கெல்லை வஞ்சிச்சீர்க்கல்லது இன்மையின் இதனை வஞ்சி யடியே யிருசீர்த் தாகும் (357 என்றதன்பின் வைத்தானென்பது. இது முச்சீர்க்குரித் தன்மை யானும் மூன்றெழுத்தி னிழிந்து வரும் வஞ்சியுரிச்சீர் பெரும் பான்மையும் முச் சீரடிக்கு உரிமையானும் இதன்பின், முச்சீ ரானும் வருமிட னுடைத்து (359) என்றானென்பது. கொன்றுகோடுநீடு கொலைக்களிறுகடாம் (யா.வி.ப.41) என்புழி, இருசீரடி முதற்கண் மூவெழுத்தான் வஞ்சியுரிச்சீர் வந்தது. பிறவும் அன்ன, நுந்தைகாடு என ஈரெழுத்தானும் வஞ்சியுரிச்சீர் வந்தவாறு. (46) (வியநிலை வஞ்சியடி முச்சீரான் வருமெனல்) 359 முச்சீ ரானும் வருமிட னுடைத்தே. இஃது ஒழிந்த வியநிலை வஞ்சி கூறுகின்றது. இ-ள்: வஞ்சியடி முச்சீரானும் வரப்பெறும் என்றவாறு. இடனுடைத்து என்றதனான் இஃது உறழும் அடிக் கண்ணதன்று என்றவாறு. மற்று இருசீரடி வஞ்சிக்கும் இத்துணையென அடிவிரியுமாறு கூறியதிலனாகலின், இதற்கே வரையறை யின்றென்றது என்னையெனின், இருசீரடிக்காயின் ஒருவாற்றான் உறழ்ச்சி கூறி வரையறுப்பதோ ராறு கூறினான் ; இதற்கு அன்னதூஉம் இன்றென்பது. மற்று உறழுமடி இல்வழி வஞ்சியடி இருசீர்த்தாகப்பெறாதோ வெனின், அதற்கன்றே முச்சீரானும், வருமென்று உம்மை கூறி 439இருசீரடியுந் தழீஇக் கொண்டு இடனுடைத்து என வேறுபடுப்பானாயிற் றென்பது. இவ்விரண் டனையும் வஞ்சியடியென வரையாது கூறவே, அவற்றான் வேறுவேறு வருதலும் அவை மயங்கி வருதலு முடைத்து வஞ்சிப்பாட்டென்பதும் பெறுதும். இக்கருத்தானே அவற்றைக் குறளடி வஞ்சி யெனவுஞ் சிந்தடி வஞ்சியெனவும் மயக்கடி வஞ்சி யெனவுஞ் சொல்லுப. சிந்தடியான் வருதல் சிறுபான்மையெனக் கொள்க. (47) (வஞ்சியடியுள் அசை கூனாகி வருமெனல்) 360. அசைகூ னாகு மவ்வயி னான. இதுவும், அதற்கெய்தியதொரு விதி. இ-ள்: மேற்கூறிய வஞ்சியடி இரண்டன்கண்ணும் நான் கசையுங் கூனாகி வரப்பெறும் என்றவாறு. எனவே, அடியெனப்பட்ட இருசீர்க்கும் முச்சீர்க்கும் அசை கூட்டிக் கொண்டு சொல்லப்படா வென்றவாறு. அவை, வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப் போன்றன (புறம். 4) எனவும், அடி, அதர்சேர்தலி னகஞ்சிவந்தன எனவும். வண்டு, மலர்சேர்ந்து வரிபாடின எனவும், களிறு, கதவெறியாச் சிவந்துராய் நுதிமழுங்கிய வெண்கோட்டா னுயிருண்ணுங் கூற்றுப் போன்றன (புறம்.4) எனவும் முறையே நான்கசையுங் கூனாயின. இனி, இடையும் இறுதியுங் கூனா மென்பாருமுளர். அது 440வஞ்சித் தூக்கு இரண்டு கொள்ள வருமாயின் அமையுமென் பது என்றார்க்கு. வாள் வலந்தர என்பதனை, ஒரு சீராகக் கோடு மெனின், - யாத்தசீர் என்றதனான், வலந்தருதல் வாள் மேற் சென்று, வருகின்ற 441பயனிலை நின்று வற்றுமென்பது. (48) (சீர் கூனாகுமிட மிதுவெனல்) 361. சீர்கூ னாத னேரடிக் குரித்தே. இஃது, எய்தாத தெய்துவித்தது. இ-ள்: தளைவகையானுஞ் சீர்வகையானும் நின்ற நேரடிக் காயின் அசை கூனாகாது சீர் கூனாகும் என்றவாறு. அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே (குறுந். 216) எனவும், உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவர்ணமாப் பூதன் எனவும், அவனுந்தா, னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் (கலி. 39) எனவும் இவை மூன்று பாவினும் அளவடிக்கட் சீர் கூனாயின வாறு. என்றார்க்கு, நேர்பசை நிரைபசைகளையுஞ் சீர்நிலை பெறு மென்றானாகலின் அவற்றையுஞ், சீர் கூனாத னேரடிக் குரித்தே என்றதனானே கொள்வலெனின், அசைச்சீரினை வாளாது சீரென்னா னென்பது, சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது (தொல். செய். 41) என்றவழிக் கூறியவதனான் அறிக. அசைச்சீரினை வாளாது சீரென்னாமைக்கு மேலைச்சூத்திரமும் இச்சூத்திரமுந்தாமே 442கரியாயின வென்பது. என்றார்க்கு, இவற்றையும் முதற் கண்ணே காட்டிய தென்னை? சூத்திரத்துள் அவ்வாறு வைத்துரைத்த தில்லையா லெனின், 443ஏற்புழிக் கோடலென்பத னான் முதற்கணின்று என்பது கொள்ளப்படும். இக்கருத் தானே வஞ்சிப்பாவிற்கும் அவ்வாறே கொள்க. (49) (ஐவகையடியும் விரிக்குங்கால் அறுநூற்றிருபத்தைந்தடியாகுமெனல்) 362. ஐவகை யடியும் விரிக்குங் காலை மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்த வெழுபது வகைமையின் வழுவில வாகி யறுநூற் றிருபத் தைந்தா கும்மே. இது, முன்னர்ச் சிறப்புடைத்தென வேண்டிய நாற்சீரடி யினைக் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி யென வகுத்தமையாமாறு கூறினான் (தொல்.செய். 36,37,38,39,40), இனி அறுநூற்றிருபத்தைந்தென 444அவை பட்ட விகற்பமுங் கூறியவாறு. இ-ள்: மேற்கூறிய ஐவகை யடியினையும் விரிக்குங்காலைப் பொருள் வகை யமைந்த பதினேழ்நிலத்து எழுபதுவகைக் குற்ற நீங்கி அறுநூற் றிருபத்தைந்தாம் என்றவாறு. எனவே, பதினேழ்நிலத் தேறினும், எழுபதுவகைக் குற்றம் விரவச் செயினும் அறுநூற்றிருபத்தைந் தெனப்படா வென்ப தாம். பதினேழ் நிலனும் ஆசிரியம் பெறுமென்பதூஉம், வெண் பாவுங் கலிப்பாவும் ஒரோவொன்று எட்டுநிலம் பெறுமென்ப தூஉம் முன்னர்ச் சொல்லுதும். அவை மூன்றுந் தொகுப்ப முப்பத்து மூன்று நிலனாயின. 445வெள்ளை நிலம் பத்தென்பார்க்கு முப்பத்தைந்து நிலனாம். எழுபது கூற்று வழுவெனப்பட்டன தளைவழு. தளைவழுவாவன ஆசிரியநிலம் பதினேழனுள் வெண்டளையுங் கலித்தளையுமாகி வேற்றுத்தளை தட்ப 446முப்பத்துநான்கு தளை வழுவாம். வெள்ளை நிலம் பத்தினும் ஆசிரியத் தளை பத்துங் கலித்தளை பத்துந் தட்ப இருபது தளைவழுவாம். இனிக் கலிநில மெட்டனுள் ஆசிரியத் தளை எட்டுங் கலித்தளை எட்டுந் தட்பப் பதினாறு தளை வழுவாம். இவையெல்லாந் தொகுப்ப முப்பத்தைந்து நிலத்தும் ஒன்றிரண்டுசெய்து, எழுபது தளைவழுவாயினவாறு. இது வெள்ளை நிலம் பத்தென்பா ருரை. அது பொருந்தாது. என்னை? ஆசிரியத்து நாலெழுத்தடி யுள் 447இரண்டு தளைவழுவுங் காட்டுகவெனின் அவர்க்கு அவை காட்டலரிய. 448குறிப்பிசை செய்து காட்டின் அது கூறப்பட்ட உறுப்பினுளின் றென்றவாறு. எடுத்தோதிய எழுத்து முதல் உறுப்பினான் வந்த அடிக்கண்ணே காட்டா தொழிதலின் அது நூன்மாறுகோளாம். அல்லதூஉம், அவ்வாறு தளை கொள்ளின் முழுவதுங் குறிப்பிசையானே வரும் அடியும், ஓரெழுத்தடி முதன் மூன்றுநிலனுங் கொள்ளல் வேண்டும். கொள்ளவே, நிலம் இருபத்தொன்றாகலுங், காட்டுந் தளைவழுத் தொண்ணூற்று நான்காகலும் பெற்று, 449ஞாயிறு வரகுவண்டு வண்டு வண்டு என்பது கலித்தளை தட்ப ஆசிரியவடி அன்றாவான் செல்லு மெனவுங் கூறி மறுக்க. இனி, ஆசிரியத்துட் கலித்தளை தட்குங்கால் அவர்தாந் தளை வேண்டுமாற்றான் வெண்சீர், நிற்ப இறுதி நிரை வரவேண்டு மாகலானுங், 450கட்டளையடிக்கண் வெண்சீர் வருமென்றிலனாகலானும், வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (341) என்பதனான் 451இயற்சீரை வெண்சீராக்கிக்கொள்ளினும் அச் சூத்திரத்துக்கு அவ்வாறு பொருளுரைப்பிற் 452படுங் குற்றம் ஆண்டுக் கூறினாமாகலானும், அது நிரம்பாதென்பது. அற்றன்றி யும், ஓரெழுத்து முதலிய நிலங்கள் ஒரோநிலத்து இரண்டும் மூன்றுந் தளைவழுக் காட்டலாமாகலின் எழுபது வகையின வழு வெனலுமாகாது என்பது, இனி, அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய (370) என்றும் 453எடுத்தோத்துக் கிடப்ப, இலேசினுள் இரண்டு நிலன் ஏற்றி வெள்ளை நிலம் பத்து என்றும் ஆகாது; என்னை? 454அளவடி மிகுதி உளப்படத் தோன்றி யிரு நெடி லடியும் கலியிற் குரிய (371) என ஓதினான், இதனினுஞ் சிறந்த வெண்பாவிற்கும் அங்ஙனம் ஓதுவான்மன் ஆசிரியன், அதுவே கருத்தாயினென்பது. அல்லதூஉங், கலிப்பாவினுள் வெண்சீரொன்றினுங் கலியோ சை பிறக்குமென்று பதினேழெழுத்தடியான் வந்த வெண்பா வடியினைத் 455தாமுங் களைபவாகலானும் அது கூறி நிரம்பா தென்பது. மற்றென்னை தளைகொள்ளுமாறெனின், ஆசிரியத்துள் இயற்சீர் பத்தொன்பதும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்குமென இருபத்தேழாகி, எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே . குன்றலு மிகுதலும் (355) இன்றி வரும். வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்தசீர் இருபத்து மூன்றும் வெண்சீர் நான்கனொடுந் தலைப் பெய்ய அவையும் அவ்வாறே இருபத்தேழாம். கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் மூன்றொழித்து ஒழிந்த இயற் சீர் பதினாறும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், வெண்சீர் நான்கும் என இருபத்து நான்காம். இவை மூன்று பகுதியுந் தொகுப்ப எழுபத் தெட்டாயின. அவற்றுள், ஆசிரியத்துள் வந்த அசைச்சீர் நான்கனையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கனையும் ஈண்டுத் தளைகொள்ளுங்கால், இயற்சீர்ப் பாற்படுத்து அடக்குக வென்று ஆண்டுக் (340) கூறினமையின், ஈண்டு அவற்றை இயற் சீர்ப்பாற் படுத்தடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும். அங்ஙனங் கொள்ளப்பட்ட சீர் ஒன்றொன்றனோடு தட்குங்கால் அவ் வெழுபது வகையானு மன்றித் தட்குமாறில்லை. அது நோக்கி, எழுபது வகைமையின் வழுவிலவாகி யென்றா னென்பது. அவை தட்குமாறு முன்னர்ச் சொல்லுதும். அங்ஙனந் தளை சிதையா அடி அறுநூற்றிருபத்தைந்தும் மூன்று பாவிற்கும் 456உரிய பகுதியவாம். யாங்ஙனம்? ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும், வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றும், கலியடி நூற் றிருபது மென அறுநூற்றிருபத்தைந் தாம். மெய்வகை யமைந்த என்றதனான் நான்கு சீருள்ளும் உறழ்கின்ற சீரினை அடி முதற்கண்ணே வெளிப்பட வைத்து அச்சீரின் அடியாக்கி உறழப்படுமென்பது கொள்க. அல்லாக் கால் 457இடையும் இறுதியும் வைத்து 458உறழின் முதற்கணின்ற தொரு சீர் இரண்டான் அடியாகியும் அவ்வடி மயங்குமாகலான் அது மயங்கக் கூறலென்னுங் குற்றமாமென மறுக்க. 459எள்ளற்ற முந்நூற் றிருபத்து நான்ககவல் வெள்ளைக்கு நூற்றெண்பத் தொன்றாகுந் - துள்ள னவையறு நூற்றிருப தாமடி நாடின் அவையறு நூற்றிருபத் தைந்து ஆசிரியத்துள் வருமெனப்பட்ட சீர் இருபத்தேழும் ஒரோ வொன்று பன்னிரண்டாயுறழ அகவலடி முந்நூற்றிருபத்து நான்காம். இது 460பயனில் வெளி. 461நால்வே றுரியசைச்சீர் நால்வே 462றகவற்சீர் பால்வேறு பட்டியற்சீர் பத்தொன்ப தாக விருபஃதேழ் சீரகவற் கீரிரண் டாதி யிருப தெழுத்தளவு மேற்று. 463ஆசிரியப் பாவினான் கைந்தாறே ழெட்டொன்ப தாதி நிலமாறா மைஞ்சீரா னீறு நிரையாஞ்சீர் நேரசைச் சீர்க்கொன்றொன் றேற்ற வரையாதொன் றேறிற்றே வந்து. 464ஒரெழுத்துச்சீரும் ஒரெழுத்தசைச்சீருஞ் சுருக்கத்திற் கெல்லை யாகிய சீராகலான் அவை சுருக்கத்திற்கு எல்லையாகிய 465நாலெழுத்தடி முதற் பதினைந்தெழுத்தடி யளவும் உயரும். அவை 466`நுந்தை வண்டு வண்டு வண்டு எனவும், நுந்தை காருருமு நனிமுழவு நனிமுழவு எனவும், ஒரெழுத்துத் தேமாவடி பன்னிரண்டற்கும் முதலடியும் முடிந்த வடியுங் கண்டுகொள்க. வண்டு வண்டு வண்டு வண்டு எனவும், வண்டு காருருமு நனி முழவு நனிமுழவு எனவும், இவை வண்டு முதலும் முடிவுங் காட்டிய அடி. இனி, நேரீற்று ஈரெழுத்துச்சீர் ஒன்றும் ஐந்தெழுத்தடி முதலாகவும், பதினாறெழுத்தடி யிறுதியாகவும் வரும். அது 1தேமா, வண்டு, வண்டு, வண்டு- எனவும், தேமா, காருருமு, நனி முழவு, நனிமுழவு எனவும் வரும்.மின்னு வரகு என்னும் ஈரெ ழுத்தசைச் சீரிரண்டும் அவ்வாறே யுறழும். நிரையீற் றீரெ ழுத்துச்சீர் மூன்றும் ஆறெழுத்தடி முதற் பதினேழெழுத்தடியள வும் உயரும். அவை, ஞாயிறு, போதுபூ, போரேறு என்பவற்றை முதனிறீஇ வரகு வண்டு வண்டு எனவும், நனிமுழவு நனிமுழவு நனிமுழவு எனவும் தந்து இங்ஙனமாயினவாறு கண்டு கொள்க. இனி, மூன்றெழுத்தான் வருவன ஒன்பது சீரும் அசைச்சீரு மெனப் பத்து. அவை, புளிமா, பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, நீடுகொடி, அரவு என்பன. இவற்றுட் புளிமாவும் அரவும் ஆறெழுத்தடி முதலாகப் பதினேழெழுத்தடி யளவும் உறழ்ந்து ஓரொன்று பன்னிரண்டு நிலம்பெறும். ஒழிந்தசீர் எட்டும் நிரையீறாகலின் ஏழெழுத்தாதி பதினெட் டெழுத் தடியளவும் உறழும்; அவை புளிமா, வண்டு, வண்டு, வண்டு எனவும், புளிமா, காருருமு, நனிமுழவு, நனிமுழவு எனவும், பாதிரி, வரகு, வண்டு, வண்டு எனவும், பாதிரி, நனிமுழவு, நனிமுழவு, நனிமுழவு எனவும், உறழ்ந்த வழிப் புளிமா ஆறெழுத்து முதற் பதினேழன்காறும் உயர்ந்த வாறும் பாதிரி ஏழெழுத்து முதற் பதினெட்டன்காறும் உயர்ந்த வாறுங் கண்டு கொள்க. ஒழிந்தனவும் அன்ன. இனி, நாலெழுத்துச் சீர் எழுவகைய. அவை கணவிரி, காருருமு, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, நாணுத்தளை உரறுபுலி என்பன. இவையெல்லாம் எட்டெழுத்தடி முதற் பத்தொன்ப தளவும் உயர்ந்தே ஒரோவொன்று பன்னிரண்டடி பெறும். அவை கணவிரி, வரகு, வண்டு, வண்டு எனவும் கணவிரி, நரையுருமு, நரையுருமு, நரையுருமு எனவும் வரும். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. ஐந்தெழுத்துச்சீர், நரையுருமு, விரவுகொடி என இரண்டு. இவை ஒன்பது முதல் இருபதின்காறும் உயரும். அவை நரையுருமு, வரகு, வண்டு, வண்டு எனவும்,467கலனளவு கலனளவு கலனளவு கலனளவு எனவும் வரும். விரவுகொடிக்கும் இஃதொக்கும். இவ்வாற்றான் ஒரெழுத்துச் சீரிரண்டும், ஈரெழுத்துச் சீர் ஆறும், மூவெழுத்துச் சீர் பத்தும், நாலெழுத்துச் சீர் ஏழும், ஐயெழுத்துச் சீர் இரண்டு மாகச் சீர் இருபத்தேழினையும் பன்னிரண்டிற் பெருக்கிப் பெற்ற ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும் 468பாட்டினுந் 469தொகையினும் வருமாறு கண்டுகொள்க. இனி, வெண்பாவடி நூற்றெண்பத்தொன்றும் உறழுங் கால் 470ஏழெழுத்தடியும் எட்டெழுத்தடியும் ஒன்பதெழுத்தடி யும் பத்தெழுத் தடியும் முதலாய் நிற்பப் பதினான்கெழுத்தடி யளவும் ஏறி ஒரோசீர் எட்டடி பெறுவனவும் ஏழடி பெறுவனவும் ஆறடி பெறுவனவும் ஐந்தடி பெறுவன வுமாகி முறையானே வருமென்பது. 471இயற்சீ ரசைச்சீ ரிருபத்து மூன்றோ டுரிச்சீர்நான் கேற்றச்சீ ரொன்பதிற்று மூன்று மயக்கறு வெள்ளைக்க ணேழே தொடங்கி யுயர்ச்சி பன்னான்கென் றொட்டு. 472நாலெழுத்துச் சீரெல்லா மேழெழுத்தா னாசிரியத் தாதிபெறா தொன்றேறிற் றாங்கதுபோ - னாலெழுத்தான் வந்தசீர் வெண்பாவிற் பத்தெழுத்தான் வாராவா யைஞ்சீர்க்கு நான்கா முதல். நுந்தை, வண்டு, ஞாயிறு, போதுபூ, போரேறு என ஐந்தும் ஏழெழுத்தடி முதற் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து ஒரோ வொன்று எட்டடி யுறழப் பெற்ற அடி நாற்பதாம். ஞாயிறு போதுபூ போரேறு நுந்தைவண் டேழாதி யெட்டா மடி தேமா, மின்னு, வரகு, பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய் எனப் பதினொன்றும் எட்டெழுத்தடி முதற் பதினான்கெழுத்தடி யளவும் ஓரொன்று ஏழடி யுறழப்பெற்ற அடி எழுபத்தேழாம். மின்னு வரகு வலியது மேவுசீர் நன்னாணு பாதிரிப் பூமருதே 473யாறுதீ மன்னாத மாசெல்வாய் தேமா வெனப்பதினோ ரெண்ணாகு 474மெட்டாதி யேழ். புளிமா, அரவு, கணவிரி, காருருமு, பெருவேணு, உரு முத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய் என இவை ஒன்பது சீரும் ஒன்பதெழுத்தடி முதற் பதினான்கெழுத்தடியளவும் உயர்ந்து ஒரோவொன்று ஆறடி யுறழப்பெற்ற அடி ஐம்பத்து நான்காம். அரவு புளிமா கணவிரி 475வேணு புலிசெல்வாய் காருருமுப் பேருருமுத் 476தீயே மழகளிறு மாவருவா யொன்பது 477மொன்ப தெழுவா யிருமூன் றெனல் நனிமுழவு, புலிவருவாய் என்னும் இரண்டுசீரும் பத்தெ ழுத்தடி முதற் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து ஒரோ வொன்று ஐந்தடி யுறழப் பெற்ற அடி பத்தாயின. புலிவரு வாயு நனிமுழவு மென்னுமிவை 478யீரைந்தீ ரேழுற்றீ ரைந்து இவையெல்லாந் தொகுப்ப 479வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றாயின. அவற்றுட் சில வருமாறு: நுந்தை வரகு வரகு வரகு எனவும், நுந்தை நனிமுழவு காருருமு காருருமு எனவும், இவை ஏழெழுத்தடி முதற் பதினான்கெழுத்தளவும் நுந்தை வந்தவாறு. வண்டென்பதற்கும் இஃதொக்கும். ஞாயிறு வண்டு வரகு வரகு எனவும், ஞாயிறு காருருமு மாவருவாய் 4காருருமு எனவும், இவை ஏழெழுத்தடியும் பதினான்கெழுத்தடியு மாயினவாறு. 1போதுபூ 2போரேறு என்பனவற்றிற்கும் இஃதொக்கும். தேமா வரகு வரகு வரகு எனவும், தேமா நனிமுழவு காருருமு பாதிரி எனவும், எட்டெழுத்தடி முதலாகப் பதினான் கெழுத்தடி யளவும் உயர்ந்து தேமா ஏழடிபெற்றது. ஒழிந்த பத்துச்சீர்க்கும் இஃதொக்கும். புளிமா வரகு வரகு வரகு எனவும், புளிமா புலிவருவாய் காருருமு தேமா எனவும், இவை ஒன்பதெழுத்தடி முதலாகப் பதினான்கெழுத்தடி யளவும் உயர்ந்து ஆறடிபெற்றவாறு. ஒழிந்த எட்டுச்சீர்க்கும் இஃதொக்கும். நனிமுழவு வண்டு வரகு வரகு எனவும், நனிமுழவு காருருமு பாதிரி தேமா எனவும், இவை பத்தெழுத்தடி முதற் பதினான் கெழுத்தளவும் ஏறி ஐயெழுத்து நனிமுழவு ஐந்தடி பெற்றது. புலிவருவாய்க்கும் இஃதொக்கும். இவற்றுக்கெல்லாம் பதினான்கெழுத்தின் ஏறியக்காற் செப்பலோசை திரிபுடையதென்பது வல்லார்வாய்க் கேட்டு உணர்க; என்னை? அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே (323) என்றமையின். அடியி னுட்ப 480மறிவருங் குரைத்தே எனப் 481பிறருஞ் சொல்லுப. இனிக் கலியடிக்குரிய சீர் இருபத்துநான்கும் ஒரோ வொன்று ஐந்தடி யுறழ அதன் அடித்தொகை நூற்றிருபதாம். அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி யிருநெடி லடியுங் கலியிற் குரிய (371) என்பதனான், பதின்மூன்றெழுத்தும் பதினான்கெழுத்தும் பதி னைந்தெழுத்தும் பதினாறெழுத்தும் முதலாக ஒரோ வொன்று ஐந்தடி உறழ்ந்து கலியடியளவு பதினேழெழுத்து முதல் இருபதின்காறும் உயருமென்பது. 482நிரையீற் றியற்சீர் பதினாறு மேனை நிரையீற் றகவற்சீர் நான்கு மொருநான்கு வெண்சீருந் துள்ளற்கு வெவ்வே றொருசீரா னைந்தா முறழ்ந்த வடி. 483ஈரெழுத்துச் சீர்பதின்மூன் றாதி யிருபதின்கா றோதியசீர் நான்கற் குயர்வு. ஞாயிறு, போதுபூ, போரேறு என்னும் ஈரெழுத்துச்சீர் மூன்றும், பதின்மூன்றெழுத்து முதற் பதினேழெழுத்து வரை ஒரோவொன்று ஐந்தடி யுறழும். பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு , பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய், நீடு கொடி என மூவெழுத்துச்சீர் ஒன்பதும் பதினான்கெழுத்து முதல் பதினெட்டளவும் ஒரோ வொன்று ஐந்தடி யுறழும். கணவிரி, காருருமு, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய், நாணுவளை, உரறுபுலி என நாலெழுத் துச்சீர் ஒன்பதும் பதினைந்தெழுத்து முதற் பத்தொன்ப தளவும் ஒரோவொன்று ஐந்தடி யுறழும். நரையுருமு, புலிவருவாய், விரவு கொடி என்னும் ஐந்தெழுத்துச்சீர் மூன்றும் பதினாறெழுத்தடி முதல் இருபதெழுத் தடியளவும் உயர்ந்து ஒரோ வொன்று ஐந்தடி பெறும். இவ்வாற்றாற் கட்டளைக் கலியடி 484நூற்றிருபதா மென்பது. அவற்றுட் சில வருமாறு ; ஞாயிறு, புலிசெல்வாய் புலிசெல்வாய் 485மா செல்வாய் எனவும், ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் புலிவருவாய் எனவும் முதலும் முடிவும் பதின் மூன்றும் பதினேழுமாகி ஈரெழுத்துப் பாதிரி ஐந்தடி யுறழ்ந்தவாறு. 1ஞாயிறு 2புலி வருவாய் என முதற்கண் ஆசிரியத் தளை தட்டதென்னாமோ வெனின், என்னாம்; நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்டல் வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப (372) என்புழி அதனைக் கலித்தளை யென்னுமாகலின்.. 3புலி செல்வாய் 4மாசெல் வாய் என ஈற்றுக்கண் வெண்டளை வந்த தென்னாமோ வெனின், என்னாம்; வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (341) என்றானாகலின். ஒழிந்த மூவெழுத்துச்சீரும், நாலெழுத்துச்சீரும், ஐயெ ழுத்துச்சீரும் அவ்வாறே உறழ்ந்துகொள்க. (50) (நாற்சீரடி போல ஏனைய அடிகள் விரிக்கப்படா எனல்) 363. ஆங்கனம் விரிப்பி னளவிறந் தனவே பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை. இஃது ஒழிந்த அடி இந்நாற்சீரடி போல உறழ்க வென் றார்க்கு அவை யுறழாவென உறழாமைக்குக் காரணங் கூறு கின்றது. இ-ள்: அந்நாற்சீரடிபோல் மற்றையடிகளையும் விரிப்பின், அஃது இலக்கணக் கட்டளையின் இகந்துபட்டதாம், அப்பகுதி யெல்லாம் அறிந்தோர் விரிக்குங் காலத்து என்றவாறு. அளவிறந்தன - எண்ணிறந்தன. அஃது இலக்கணங் கூறு மாறன் றென்றவாறு. அஃதெற்றாற் பெறுதுமெனின், முதனூல் செய்த 486ஆசிரியர் அகத்தியனார் சொல்லுமாற்றாற் பெறுது மென்றவாறு. எனவே, என் சொல்லப்பட்டதாம், அங்ஙனம் 487வரை யாது சிறப்புடையனவற்றுக்குஞ் சிறப்பில்லன வற்றுக்கும் ஒருங்கு இலக்கணங் கூறின்? அவையெல்லாம் எடுத்தோதப் பெறாத இலக்கணத்தவாம்; அதனால் வரையறை யுடையன வற்றுக்கன்றி, வாளாதே 488பரந்துபட்ட வகையான் இலக்கணங் கூறல் பயனில் கூற்றாமெனவும், அது கருதி இதன் முதனூல் செய்த ஆசிரியருங் கூறிற்றிலரெனவுங் கூறியவாறு வடநூலாசிரியர் 489ஆறுவகைப் பிரத்தியங்களான் எழுத்துக்களைக் குருவும் இலகுவுமென இருகூறு செய்து உறழ்ந்து பெருக்கிக் காட்டுவதோ ராறுமுண்டு. அவரும் இருபத்தா றெழுத் தளவும் உறழ்ந்து காட்டி, ஒழிந்தன ஞெகிழ்ந்து போவர். அவ்வாறே சீர்களையுங் குருவும் இலகுவும் போல இருசீரடி இத் துணையெனப் பெருக்கவும் ஒழிந்தனவும் இவ்வாறே பெருக்கவுஞ் 490சிதைந்ததில்லை. அங்ஙனம் பெருக்குங் காலும் ஓரடிக்குரிய சீர் பத்தும் நூறும் ஆயிரமுமாக வைத்து உறழ்ந்தக்காலும் வருவதொன் றில்லை. அங்ஙனம் உறழினும், இத்துணைச் சீரான் வந்த அடிக்கே உறழ்ச்சி கூறுவ தென்று ஓரெல்லை கூறிக் கொள்ளல் வேண்டும். கொள்ளவே, எத்துணையிடஞ் சென்றக்காலும், இத்துணையென வரை யறைப்பாடு உடையனவல்ல. அவ் வரையறை இன்மையின் அதனை அளவில வென்பதற்கொரு காரணங் கூறல்வேண்டு மாதலான் அது நோக்கி நாற்சீரடி சிறப்புடைத் தென 491வேறுபல காரணங்கூறி, அதற்கே வரையறைகூறி அல்லன வற்றுக்கட் சொல்லப்படா தென்றான் இச்சூத்திரத்தா னென்பது. அஃதேல், அவை சிறப்புடைய வாயினமைக்குக் காரணங் கூறிய வாற்றாற் சான்றோர் செய்யுளுட் பயின்று வரல் வேண்டும் பிறவெனின், இந்நூல் செய்த காலத்துத் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத் தாரும் அவ்வாறு கட்டளையடியாற் பயின்றுவரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்க ளாற் பெறுதுமென்பது. இதன் முதனூல் செய்த ஆசிரியனாற் செய்யப்பட்ட 492யாழ் நூலுள்ளுஞ் சாதியும் உவமத் துருவுந் திருவிரியிசையு மெனக் கூறப்பட்டவற்றுட் 493கட்டளைப் பாட்டுச் சிறப்புடையன சாதிப் பாட்டுக்களே. அவை இக்காலத்துப் பயின்றிலவெனினும் மற்றையவற்றோடு ஒக்குமெனப்படா வென்பது. அல்லதூஉம், உலகத்து மக்கட்பிறவி பலவாயினும் நால்வகை வருணமென்றே கூறுப, அவர் வரையறை யிலக்கணத் தாராகலி னென்பது. இனி, அவருள்ளும் அந்தணரும் வேளா ளரும் போல இடையிருவகையோரும் பயின்றிலரெனினும் சிறப்பிலராகாரென்பதுமது. இனிக் கடைச்சங்கத்தார் அறுநூற்றிருபத்தைந்தடியும் பயின்றுவரச் செய்யுள் செய்திலராலெனின், கட்டளையடியாற் செய்தவல்லன வேண்டா வென்பதோர் ஆணையுடையரல்லர். உடையவரும் இவ்வாசிரியனாற் சிறப்புடைத்தென்று சொல்லப் பட்ட 494அளவடியாற் செய்யுள் செய்தா ரென்பது. இனிப், 495பிற் காலத்தார் அளவடியாற் பயின்றுவரச் செய்யுள் செய்திலர் என்று, கடைச்சங்கத்தார் செய்யுள் 496செய்த அடியுஞ் சிறப்பில வாமோ வென்பது. வஞ்சியடிக்கும் இங்ஙனம் வரையறை யின்மைய தொக்கும். அது முன்னர்ச் சொல்லுதும். (51) (குறளடி முதலிய ஐந்தும் ஆசிரியத்துக்குரியவெனல்) 364. ஐவகை யடியு மாசிரியக் குரிய. இஃது, எய்தாததெய்துவித்தது; மேல் வகுக்கப்பட்ட அடி யினை இன்ன பாவிற்குரிய அடி இவை யென்று கூறாதான் அது கூறினமையின். இ-ள்: நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலனும் ஆசிரியத்திற்குரிய எ-று. மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்த . . . . . அறுநூற் றிருபத் தைந்தாகும். (362) என்றான், அதனை ஈண்டுப் 497போத்தந்து ஆசிரியத்திற்கு எய்துவித்தவாறு. அவற்றுக்குச் செய்யுள் ஐந்தடியுங் கூறியவழிக் காட்டப்பட்டது. மற்று. மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும் (362) எனவே இதுவும் அடங்காதோவெனின், அடங்காது; பாத் தோன்றும் அந் நிலங்கள் பகுத்துக்கொள்ளப் பொதுவகையான் ஆண்டோதினா னென்பது. மற்றும் ஐவகையடியும் ஓராசிரியத் துக்கண் வரல்வேண்டுமோ வெனின், அன்னதொரு வரையறை யுண்டே? வரையாது கூறினமையின் அவையெல்லா வற்றானும் வருக; வருங்கால் ஐந்தும் ஆசிரியத்துக்கு உரிய வென்பதே கருத்து. ஒழிந்த பாவிற்கும் நிலங் கூறானோவெனின், ஆசிரியம் பதினேழ் நிலனுமுடைமையின் அக்கூறிய பதினேழ்நிலனுந் தளை விரவு தலின் தளை அதற்குப் பின் கூறித் தளையதிகாரம் பட்டமையின் அவற்றின் பின் ஒழிந்த பாவிற்கு நிலனுங் கூறுமென்பது. மற்று, ஆசிரியமென்பது மகரவீறாதலின், மஃகான் புள்ளிமுன் னத்தே சாரியை (தொ. எழு. 185) என்பதனான் அத்துச்சாரியை பெறல் வேண்டுமெனின், அது செய்யுள் விகார மென்பாருமுளர். அற்றன்று, ஆண்டு நின்றது நான்காமுருபாயினன்றே அது கடாவாவது? அதனை ஏழாவதன் பொருண்மைக்கண் 498அக்குச்சாரியை ஈறு திரியாது வந்ததென்று கொள்ளப்படும். (52) (ஆசிரியத்துள் கட்டளையடியல்லாதவடிக்கண் தளை விரவிவரினும் நீக்கப்படா எனல்) 365. விராஅய் வரினு மொரூஉநிலை யிலவே. இஃது, எய்திய திகந்துபடாமைக் காக்கின்றது. மெய்வகை யமைந்த பதினேழ் நிலமெனவும், எழுபது வகையின் வழுவெ னவும், மேனிறுத்த (362) முறையானே ஆசிரியத்திற்குப் பதினேழ் நிலமாமாறு கூறினான். இனி, எழுபது வகையின் வழுவாயின், அப்பதினேழ் நிலத்து யாண்டு மாகாதென்பது பட்டதனை இகந்துபடாமைக் கூறினமையின். இ-ள்: தளை விரவி வரினும் ஒருவப்படா எ-று. மற்று, இதனைத் தளை விரவி வரினுங் கட்டளையடியா மெனப் புறனடுத்தானென்று கோடுமோ, தளைவிரவிற் கட்டளை யடியாகா தென்று 499கோடுமோவெனின், தளை மயங்கா தனவே தளைவகையடியெனவும் அல்லன கட்டளை யடி யாகாவெனவும் கோடுமென்பது. அஃதேல் தளை மயங்கின அடிக்கும் பதினேழ் நிலனுங் கோடுமோ வெனின், கோடு மன்றே? விராய்வரினும் என்ற 500உம்மை இறந்தது தழீஇ யிற்றாகலி னென்பது. (53) (ஆசிரியத்துள் உரிச்சீராறும் இயற்சீரோடு கூடி கட்டளையல்லாத ஐந்தடிக்குமுரியவெனலும் அவற்றுள் நிரையீற்று உரிச்சீரிரண்டுந் தளைத்து வருமெனலும்) 366. தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினு மின்சீர் வகையி னைந்தடிக்கு முரிய. இஃது, எய்தாத தெய்துவித்தது; என்னை? இயற்சீராற் கட்டளை யடியா மாறெல்லாம், ஐவகை யடியு மாசிரியக் குரிய (364) என்னுந் துணையும் கூறிப் பின்னும், விராய் வரினு மொரூஉநிலை யிலவே (365) எனக் கட்டளையடியன்றியும் அளவடி வருமெனவும் அவை பதினேழ் நிலத்த வெனவுங் கூறி, இனி உரிச்சீரானுஞ் சீர் வரையறையடி உளவென் பதூஉம், அவ்வுரிச்சீரான் தளை வகையடி உளவென்பதூஉம் அவை பதினேழ் நிலத்தின் இகந்து வாரா வென்பதூஉங் கூறுகின்றமையின். இ-ள்: தன்சீர்வகையினும்- ஆசிரிய வுரிச்சீரானும்; அதனை 501அதிகாரத்தாற் கொள்ளப்படும்; தளைநிலைவகையினும் - அவ்வாசிரிய வுரிச்சீரானாகிய தளைநிலைமைப் பகுதியானும்; இன்சீர் வகையினும் -இன்சீர்ப் பகுதியானும்; ஐந்தடிக்குமுரிய- அவையும் மேற்கூறிய ஐவகை யடிக்கும் உரியவாம் என்றவாறு. ஐந்தடிக்கு முரியவெனவே, பதினேழ் நிலத்தின் இகந்து வாரா வென்பதாம். தன்சீரென்னாது வகை யென்றது, முன்னிரை யுறினு மன்ன வாகும் (326) என்பதை வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் என்புழி, 502உடன்கூறாது இரு பகுதியாகக் கூறிய வேறுபாடு நோக்கியென்க. அதனது பயம், வருகின்ற தளைவகைக்காயின் ஆசிரியவுரிச்சீராறுந் தளை கொள்ளப்படா, முன்னிரையீற்ற இரண்டுமல்ல தென்றவாறு. தளைநிலை வகை சிறப்புடை மையின் அது முற்கூறுகவெனின், அங்ஙனமாயினும் அறு வகைச் சீரானுஞ் சீர்வகையடி வருதல் பெரும்பான்மை யாகலானும், அவற்றுள்ளும் நீடுகொடி குளிறுபுலி என்னும் இரண்டுமே பற்றித் தளை கோடல் சிறுபான்மை நோக்கியுந் தன்சீர்வகை முற்கூறப் பட்டது. அல்லதூஉந், தளை நிலைவகை முற்கூறின் அவ்வியற் சீர்த்தளை மேற் செல்லும்; அவ்வா றன்றித் 503தன் சீர்த்தளையே கோடற்கும் அது பிற் கூறினானென்பது, மற்றுத் தன் சீரானாவதனை இன்சீர்வகையொடு ஐந்தடிக்கு முரித்தென்ற தென்னை யெனின், ஆசிரியவுரிச்சீர் நான்கும் நிரலே நின்றுழி அகவலோசை பிறவா தென்பது அறிவித்தற் கென்பது. எனவே, ஒன்றிடையிட்டும் இரண்டிடை யிட்டும் இன்சீர் வரல் வேண்டுவதாம். இன்சீர்வகையின் என, இயற்சீர்களான் உரிச்சீர்களை வகுத்து நிறீஇக் கொள்ளப்படும். உதாரணம் : ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி எனவும், நிவந்துதோன்று களிற்றி னிலங்குகோடு புரைய எனவும், இவை இயற்சீரொன்று இடையிட்ட ஆசிரியவுரிச் சீரான் வந்த நேரடி. பாம்புமணி யுமிழும் பானா ளீங்குவரல் என்பது இயற்சீரிரண்டு இடையிட்டு வந்தது. இதுவும் அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323) என்பதனான் அகவலோசை வழுவினவா றறிந்துகொள்க. இனித் தன்சீரால் தளைநிலையடி வருமாறு: 504ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ (புற. 55) எனவும், 505உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை (புறம். 3) எனவும் வரும். தளைவகை யென்னாது நிலை யென்றதனான், அவற்றுள் இரண்டு ஆசிரிய வுரிச்சீரும் அடிமுதற்கணின்று சீராவதன்றி இடை வாரா வென்பது கொள்க. தளைநிலை யென்னாது வகை யென்ற தென்னையெனின், உரிச்சீரான் தளை வழங்கின் ஓரடிக்கண் இரண்டு வரின் ஓசையுண்ணா தென்பதுணர்வித்தற் கென் பது. இவையும் இன்சீர் வகையொடு வருமெனவே 506தன்சீர் இயற்சீரொடு தட்குமென்பதாம், அஃதேல், தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா (367) என வருகின்ற சூத்திரத்தானே தன்சீர் பெறுதுமாகலின் ஈண்டுத் தளை நிலைவகையே கூறுகவெனின், இஃது ஆசிரியத்திற்குக் கூறினான்; அது வெண்பாவிற்குக் கூறினான். அல்லாக்கால், அது மிகையாமென்பது. எனவே, தன்சீர் வகை 507நாலெழுத்திற் குரித் தன்றென்பதூஉம், 508தளைவகை யடிக் குறளடி முதன் மூன்று நிலத்திற்கும் உரித்தென்பதூஉம் உரையிற் கொள்க. ஓங்கு கோட்டுமீது பாய்ந்து பாய்ந்து முசுக்கலை யாடு நாடற் குரைப்பதை யெவன்கொனந் தோளே தோழீஇ என்பது ஐந்தெழுத்தால் தன்சீரடி வந்தது. ஆடுகொடி நுடங்கு காடு போந்து விளங்கிழை நகர்வயிற் சேர்ந்தன முழங்குக வானந் தழங்குரல் சிறந்தே என்பது ஏழெழுத்தால் 509தளைநிலையடி வந்தது. பிறவும் அன்ன. இன்சீரென்னாது வகை யென்றதனான் இயற்சீர்ப்பாற் படுத்து இயற்றிக் கொள்ளப்பட்ட 510அசைச்சீரும் (340) இன் சீரேயாம்; தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இடை யிட்டு வந்ததென்பது. இவை மேற்காட்டியவற்றுள் காணப் படும். (54) (வெண்சீர்முன் வெண்சீர்வந்து ஒன்றிய வெண்டளை வெண்பாவில் கட்டளையடிக்கண் வாராவெனல்) 367. 511தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா. இது, மேல் ஆசிரியத்திற்குத் தன்சீர் வகையுந் தன்றளை வகையுங் கூறிய வழியானே வெண்பாவிற்குச் சீர்வகையுந் தளை வகையுங் கூறுகின்றது. இ-ள்: தன்சீர்- வெண்சீர்; உள்வழி- வெண்சீரே வருஞ் சீராகியும் வந்த வழி; என்னை? தளைவகைக்கு இரண்டுசீர் வேண்டுதலானுந் தளை வகை வேண்டாத நிலம் இது வென்கின் றானாகலானுமென்பது; தளை வகை வேண்டா - தளைவகை நிலைமை கொள்ளப்படா மற்று அவ்வடிக் கண் என்றவாறு. எனவே, வெண்சீர்நிற்ப இயற்சீர்வந்தொன்றின் வெண்ட ளையா மென்பதே கருத்தாயிற்று. இஃது உய்த்துக் கொண்டு ணர்தலென்னும் உத்தி வகை (665). இதனானே வெண்சீர்க்கு வெண்சீர்வந்தொன்றுவது கட்டளை யடியெனப்படாது சீர்வகை யடியாமென்பது பெற்றாம். வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல் வெண்சீ ரொன்றினும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான என்றார் காக்கைபாடினியாரும். வெண்சீ ரொன்றியது வெண்டளை யாகா தென்றற்குக் காரண மென்னையெனின், அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான (370) என்புழி, அளவுஞ் சிந்தும் அல்லாத 512ஏறிய நிலமெல்லாம் வெண் பாவுங் கலிப்பாவுந் தம்மில் தளைவகை யொக்கு மென்றானாகலி னென்பது. எனவே, வெண்சீர் நான்கும் ஒன்றிவரின் அது கலிப் பாவிற்குஞ் சீர்வகை யடியா வதாயிற்று. மற்றும் வஞ்சியுரிச்சீருந் தன்சீராகலின் இன்னவாறு தளைகொள்ளு மென்னானோ வெனின், அவை தன்சீருள்வழி ஒன்றினும் ஒன்றாவாயினும், பிறசீர் வந்துழி ஒன்றினும் ஒன்றாவாயினும், வஞ்சித்தளையாகி வரையறை யின்மை யானும் வஞ்சியடி அறுநூற்றிருபத்தைந்தடியுட் படாமை யானும் அவை கூறானாயி னான் ஆசிரியனென்பது. (55) (இயற்சீர் ஆசிரியத்துக் கட்டளையடிக்கண் தட்குமாறு இவ்வாறெனல்) 368. சீரியை மருங்கி னோரசை யொப்பி னாசிரியத் தளையென் றறியல் வேண்டும். இது, கட்டளையடிக்கண் இயற்சீர் தட்குமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: 513இயற்சீர் பத்தும் பிறிதொன்றனோடு இயையுங் கால் அவை தத்தம் ஈற்றசை ஒன்றி, வருஞ்சீரின் முதலசையோ டொப்ப நிற்பின், ஆசிரிய வடிக்குத் தட்கும் முறைமை யென்ற றியப்படும் என்றவாறு. ஒப்பின் ஆசிரியத்தளை யெனவே, ஒவ்வாதொழியின் வெண்டளை யென்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். என்னை? எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே (தொ. சொ. 61) என்றமையின். அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி (பெரும்பாண். 1) என்றவழி நேரும் நிரையும் சீரியை மருங்கின் ஓரசை ஒன்றி ஆசிரியத் தளையாயின. மல்லர்க் கடந்தா னிறம்போ லிருண்டெழுந்து (ஐந் ஐம். 1) என்புழி முதலடி இயற்சீர் ஒன்றாது வெண்டளையாயிற்று. மற்றுச் சீரியை மருங்கின் ஓரசையே வரினென்னாது ஒப்பின் என்ற தென்னையெனின், 514உரியசை முதலும் ஈறுமா கியவழி அவை 515இயலசை யோடு ஒப்புமை நோக்கித் தளை கொள்ளினல்லது தம்மொடு தாம் ஒன்றுதல் கொள்ளாரென்றற் கென்பது இதனானும் பெற்றாம். போதுபூ என்பது வருஞ்சீராய வழிப் போரேறு என்பது ஓரசை யொன்றிற்றென்று ஆசிரியத் தளை யென்னாமையென்பது. இஃது, 516அவை நின்ற சீராயவழி நிரையீ றாதல் அறியல்வேண்டு மென்னும் மிகையானுங் கொள்க. இனி, ஈரசை யொப்பி னென்பது பாடமாக உரைப்பின் நேரும்நிரையும் 517ஒன்றி னென்றவாறுமா மெனக் கொள்க. (56) (வஞ்சியடி உறழுமாறு இவையெனல்) 369. குறளடி முதலா வளவடி காறு முறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப. இது, வஞ்சியடி யுறழுமாறும் அது பெறும் நிலனும் உணர்த்துதல் நுதலிற்று, இ-ள்: நாலெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் உறழும் நிலையில வஞ்சியடிக்கு என்றவாறு. இனி, முதலும் ஈறும் யாவெனப்படுமோ வெனின், 518தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே (358) என்றதனான் ஆறெழுத்தடி முதலாகவும், 519நேர்நிலை வஞ்சிக் காறு மாகும் (354) என்றதனாற் பன்னிரண்டெழுத்தடி யீறாகவும் உறழுமென்ற வாறு. எனவே, வஞ்சியடிக்கு நிலன் ஏழென்பது சொல்லிய வாறு. 520அதுவே கருத்தெனின், இச் சூத்திரம் மிகையாம் பிறவெனின், அற்றன்று; வஞ்சியுரிச்சீர் மூன்றெழுத்திற் சுருங்கா, ஆறெழுத்தின் ஏறாவெனவே, நேர்நிலைவஞ்சிக்கு மூவெழுத்துச் சீர் இரண்டு வந்த இருசீரடிக்கு ஆறெழுத்து முதலாமென்ப தூஉம், ஆறெழுத்துச் சீர் இரண்டு வரிற் பன்னிரண்டெழுத்தடி ஈறாமென்பதூஉம், பெறுதுமால் அவ்வச் சூத்திரங்களானே யெனின், ஆண்டு வஞ்சியுரிச் சீர்க்கு எழுத்து வரையறை கூறினான்; அவ்வடி இத்துணை நிலம் பெறு மென்றற்கு இது கூறல்வேண்டுமென்பது. அல்லதூஉம், அங்ஙனம் கொள்ளின் உய்த்துணர்ச்சியாம். இஃது 521எடுத்தோத்தாகலின் எடுத் தோத்துக் களைந்து உய்த்துணராரென்பது. இனி, இது கூறாக் காற் கட்டளையடிக் கண் இயற்சீர் வாராவென்பதூஉம் பெறலாகாதாம். ஆகவே, ஞாயிறு புலிசெல்சுரம் என்பது கட்டளையடியாகியே செல்லும். வஞ்சித் தூக்கின் அது கொள்ளாமையின் அது விலக்கல் வேண்டி இது கூறினான்; என்னை? 522இயற்சீர் கொள்ளின் ஓரெழுத்தானாகிய இயற்சீரும் ஆண்டே கோடல் வேண்டும்; அது கொள்ளின் இச்சூத்திரத் திற்கு ஏலாமையி னென்பது. இனி, வஞ்சியுரிச்சீர் அறுபதும் இருநிலைமைப்படுவன இருபத்து நான்கும், நான்கு நிலைமைப்படுவன இருபத் தெட்டும், எட்டுநிலைமைப் படுவன எட்டுச்சீருமாகி இருநூற்றிருபத்து நான்காய் விரியும். 523இரண்டுநான் கெட்டு நிலைமைய வாகித் திரண்ட நிலைவஞ்சிச் சீர்க - ளொருங்கே யிருபத்து நான்கிருபத் தெட்டுட னெட்டா யிருநூற் றிருபத்து நான்கு. அவ்வஞ்சியுரிச்சீர் இருநூற்றிருபத்து நான்கனுள்ளும் ஒன்ப தெழுத்துச் சீரொன்றும், எட்டெழுத்துச்சீரொன்பதும் ஏழெழுத்துச்சீர் முப்பத்து மூன்றுமாக நாற்பத்து மூன்று வகையான் உறழும் நிலம் இல, இச்சூத்திரத்தான் ஓதிய வாற்றா னென்பது. 524நாலாதி யீற்றன நான்கு பதினாற னாதிய வெண்சீ ரகப்பட்ட மூவைந்து பொய்ப்பினவ் வஞ்சி யடியுறழா மோனை மூவைந்து மூன்றுமூன் றென்று. 525இரண்டெட்டு மூவெட்டு நாலேழா றைந்தொன் றகன்றநாற் பஃதுநான் காறேழைம் பத்திரண்டு நான்கைந்தெட் டொன்பா 526னறுபஃ தொன்றுநான் காறேழு பெற்றனமூ வைத்து 527நாலெட்டே யேழெட் டறுபத் திரண்டிவற்றா னேழெழுத்தா றெட்டெழு பத்துமூன் றேழா மேழெழு மும்மூன்றா யெட்டெழுத்தா னோரொன்றா மாறெட் டறுபஃது மூன்று எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை யொக்கு மசைக்கு வரையறை யின்மை யான 528வஞ்சி யுரிச்சீர் நிரையுரி யுறழ்ந்து மெல்லாங் குறைத்து மிகுத்துக் கொளாஅல் எனவே, இவ்வாற்றான் வஞ்சியுரிச்சீர் ஏழெழுத்தும் எட்டெ ழுத்தும் ஒன்பதெழுத்துமாகி வருமவை யறிந்து மாற்றுக. அவையாவன: 1. களிறுபோகுவாய், 9. களிறுவருகாடு. 2. களிறுவழங்குவாய் 10. களிறுபோகுகாடு 3. புலிவழங்குசுரம், 11. மாவழங்குகடறு 4. மாவழங்குசுரம் 12. புலிபோகுகடறு 5. களிறுவருசுரம், 13. பாம்புவருகடறு 6. களிறுபோகுசுரம், 14. பாம்புபோகுகடறு 7. புலிவழங்குகாடு, 15. களிறுசெல்கடறு 8. பாம்புவழங்குகாடு, என இவை பதினைந்தும் ஏழெழுத்தாங்கால் உறழ்நிலை இல வெனப்படும். களிறு வழங்குவா யென்பது அரவுவிரவுவாயென ஏழெழுத்துச் சீராம். ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இவை பதினைந்தும் ஏழெழுத்தின் இகவாதன. இனி, ஏழெழுத்துச் சீரின் இவ்விரண்டும் எட்டெழுத்துச் சீர் ஒரோ வொன்றுமாகி வருவன மூன்று சீர் உள; அவை 1 களிறுவழங்குசுரம், 2 புலிவழங்குகடறு, 3 களிறுவருகடறு என்பன. இவற்றைக் களிறுவிரவுசுரம், அரவுவழங்குசுரம், அரவு விரவுசுரம் என்றாற் போல வாய்பாடு படுத்தொட்டிக் காணவே, ஏழெழுத்துச் சீராறும் எட்டெழுத்துச் சீர் மூன்றுமென ஒன்பதாம். களிறுவழங்குகாடு, பாம்புவழங்குகடறு, களிறுபோகு கடறு என இவை மூன்று சீரும் ஒரோவொன்று ஏழெழுத்துச்சீர் மூன்றும் எட்டெழுத்துச் சீரொன்றுமாக முந்நான்கு பன்னிரண்டும் உறழ்நிலையில எனப்படும். அவை; களிறுவிரவுகாவு, களிறுவழங்குகுரவு, அரவுவிரவுகாடு, அரவுவிரவு காவு என ஏழெழுத்துச்சீர் மூன்றும் எட்டெழுத்துச் சீரொன்றுமாயினவாறு கண்டுகொள்க. ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இனிக், களிறுவழங்குகடறு என்பது ஆறெழுத்துச்சீர் ஒன்றும், ஏழெழுத்துச்சீர் மூன்றும், எட்டெழுத்துச்சீர் மூன்றும், ஒன்பதெழுத்துச் சீரொன்றுமென அதுவும் எட்டுநிலைமைத் தாம். அவற்றுள் ஆறெழுத்துச் சீரொன்றும் ஒழித்து, ஒழிந்த வஞ்சியுரிச்சீரேழும் உறழ்நிலையில் வஞ்சிக் கெனப்பட்டன. அவை; களிறுவழங்குகுரவு, களிறுவிரவுகடறு, அரவுவழங்கு கடறு என மூன்றும் ஏழெழுத்துச்சீர்; களிறுவிரவுகுரவு, அரவுவழங்குகுரவு, அரவுவிரவுகடறு என மூன்றும் எட்டெழுத்துச்சீர்; அரவுவிரவுகுரவு என்பது ஒன்பதெழுத்துச்சீர். இவை யெல்லாந் தொகுப்ப, 529ஏழெழுத்துச்சீர் முப்பத்து மூன்றும், 530எட்டெழுத்துச்சீரொன்பதும், 531ஒன்பதெழுத்துச்சீரொன் றும் ஒழித்து, ஒழிந்த 532வஞ்சியுரிச்சீர் நூற்றெண்பத் தொன்றும் உறழ்நிலையுடைய வெனக் கொள்க. ஏழெழுத்துச் சீரும் எட்டெழுத்துச் சீரும் ஒன்பதெழுத்துச் சீரும் அடியுறழ்வன வாக்கி மேன்மூன்று சீரானும் மூன்று நில னேற்றிப் பதினைந்தெழுத்தடி யளவும் உறழும் வஞ்சியடி என்பாருமுளர். அங்ஙனம் ஒன்பதெழுத்துச் சீர் இரண்டு வந்த குறளடி பதினெட்டெனப்படுதலின், வஞ்சிநிலம் பதின் மூன்றாதல் வேண்டும், ஓசை நோக்காது சீர்நோக்கி உறழ்ச்சி கொள்ளினென மறுக்க. அவை அளவடியோடு ஒத்த சிறப்பின வன்மையானும், அவற்றுக்குத் தளைவகை யின்மையானும் எடுத்தோதித் தொகை கூறிற்றிலனாயினும், நாம் அவற்றை எண்ணி உணர்ந்து கூறுங் கால் 533ஒரு சீர்க்கு அடி நான்காக வஞ்சியடி எழுநூற்றிருபத்து நான்கா மெனக் கொள்க. அவை யுறழுங்கால் மூன்றெழுத்துச்சீர் ஆறாதி ஒன்பது எழுத்து உயர்வும், நாலெழுத்துச்சீர் ஏழாதி பத்தெழுத் துயர்வும், ஐயெழுத்துச்சீர் எட்டாதி பதினொன் றெழுத்து உயர் வும், ஆறெழுத்துச்சீர் ஒன்பதுமுதல் பன்னிரண் டெழுத்து உயர்வும் பெற்று நின்ற சீரொடு மூன்றெழுத்துச் சீரும் நாலெழுத்துச் சீரும் ஐயெழுத்துச் சீரும் ஆறெழுத்துச் சீருந் தந்துறழ்க வென்பது, அவை: கால்காய்ந்தது காம்புநீடி என்பது ஆறெழுத்தடி. நல்கூர்ந்தது வில்லோர்சுரம் என்பது ஏழெழுத்தடி. வான்பெய்தது மண்குளிர்ப்புற என்பது எட்டெழுத்தடி. தேன்பெய்தது செழுநகர்தொறும் என்பது ஒன்பதெழுத்தடி. இவை மூவெழுத்து மாசெல்காடு நின்றுறழ்ந்த நான்கடி யும் வந்தவாறு. ஒழிந்தனவும் அன்ன. மண்மாய்ந்தென வுள்வீழ்ந்தது என்பது ஏழெழுத்தடி விண்பாய்ந்தென மேற்றெடுத்தது என்பது எட்டெழுத்தடி. காடோங்கிய கல்கெழுசுரம் என்பது ஒன்பதெழுத்தடி. கோடோங்கிய குறும்பொறைமருங்கு என்பது பத்தெழுத்தடி. இவை நான்கடியும் நாலெழுத்து மாசெல்சுரம் நின்றுறழ்ந்த அடி. மழைபெய்தென வான்வெள்ளென்று என்பது எட்டெழுத்தடி. தழைபச்செனுந் தண்ணென் காவு என்பது ஒன்பதெழுத்தடி. கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும் இது பத்தெழுத்தடி. இமிழ்தூங்கிசை யிசைசுரும்புவர என்பது பதினோரெழுத்தடி. இவை நான்கும் ஐயெழுத்துப் புலிசெல்சுரம் நின்றுறழ்ந்த அடி. இனி, 534ஆறெழுத்துப் புலிவருசுரம் ஒன்பதெழுத்து முதற் பன்னிரண்டளவும் உயர மற்றையன போல நான்கடிபெறும். அமைவிடுகொடி யஞ்சியோர்ந்து என்பது ஒன்பதெழுத்தடி. கனைகுரலன கானத்தளகு என்பது பத்தெழுத்தடி. தினைப்புனத்தித ணயற்பிரியாது என்பது பதினோரெழுத்தடி. மனைக்குறமகள் கடைப்புறந்தரும் என்பது பன்னிரண்டெழுத்தடி. இவ்வாறே ஒழிந்தனவும் உறழ்ந்துகொள்க. மூன்றுபாவின்றுணைச் சிறப்பின்மையின் வஞ்சியடி ஈண்டுப் போதந்து கூறினானென்பது. ஒழிந்த 535முச்சீரடி சிறுவர விற்றாகலின் அதற்குக் கூறியதில னென்பது. (57) (வெண்பாவுக்குரிய நிலம் இவையெனல்) 370. அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான. இஃது, ஆசிரியவடிக்கும் அதன் நடைத்தாகிய வஞ்சி யடிக்கும் உரிய நிலங்கூறி வெண்பாவிற்குரிய நிலங் கூறுகின்றது. இ-ள்: அளவடி ஐந்துஞ் சிந்தடி மூன்றுமென எட்டுநிலம் பெறுந் தளை விரவாதவாற்றான் வெண்பாவடி என்றவாறு. அளவடி முற்கூறிய தென்னையெனின், 536மேல் நிறுத்த முறையாற் கொள்ளாது 537ஈண்டுச் சொல்லும் முறைமையாற் கூறினானென்பது. நின்று நினைந்து நெடிது பெயர்ந்து என்பது ஏழெழுத்தடி. அறிவறிந்தார்த் தேறியக்கா லஞ்சுவ தில்லை என்பது பதினான்கெழுத்தடி. 538இதனும்பர் நெடிலடியானும் வெண்பாவடி வருவன உள. அவை கட்டளையடி யெனப்படா, 539செப்பிக் கூறும் பாவாகாது செய்கை தோன்றியே நிற்குமாகலினென்பது. பிறிது காரணம் உண்டாயினும் அறிந்து கொள்க. தளை வகை ஒன்றாமையென்பது வெண்பாவும் வெண்பா நடைத்தாகிய கலிப்பாவும் மயங்காமை காரணத்தானென்றவாறு, கலியோசை மயங்கி வருவனவும் வெண்பா வடியுளுள. அவை 540நெடிலடி மூன்றானும் வருமெனக் கொள்க. ஒரோவடியே வெண்பா வடியுமாய்த், துள்ளிக் கலியடி யுமாகித் தளை வகை ஒன்றுமாக லான் அம்மயக்கந் தீராதென, அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய என்றானென்பது. மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் என்றக்கால், இதனை அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (323 என்றதனாற் கலியோசை பிறப்பவுஞ் சொல்லிக் கண்டுகொள்க. மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் தேமா வரகு என்றிதனையே ஓசையூட்ட வெண்பாவாயிற்று. இது, மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாற்றினரே எனக் கலியோசை யாயினவா றறிக. (58) (கலிப்பாவிற்குரிய நிலம் இவை எனல்) 371. அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி யிருநெடி லடியுங் கலியிற் குரிய இது, முறையானே கலிக்குரிய நிலமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஐவகையடியினும் அளவடி மிகுதியாகிய பதின் மூன்றெழுத்தும் பதினான்கெழுத்தும், நெடிலடியுங் கழிநெடி லடியுங் கலியடிக்குரிய என்றவாறு. எனவே, அதுவுந் தன் முதற்கட் பாவாகிய வெண்பாப் போல எட்டு நிலம் பெறுவதாயிற்று. ஒழிந்த அடி மூன்ற னோடும் ஒவ்வாது மிக்க நிலம் இரண்டனையும் மிகுதியென்றா னென்பது. இனி; ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே (தொல். செய். 350) என்பதே கொண்டு பதினோரெழுத்து அடி முதல் நான்கு நிலனும் அளவடி மிகுதியெனப்படும் எனவும், அவை கலிக் குரிய எனவுங் கொள்வாருமுளர். அங்ஙனங் கொள்வார்க்கு, 541ஞாயிறு கடியாறு கடியாறு கடியாறு என்றதனைப் பதினோரெழுத்தடியென்று காட்டல் வேண்டும். அஃது ஆசிரியவடியாம். ஆகலான் அற்றன்றென்பது. இனி, ஞாயிறு மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என்பதோவெனின், அது கலிப்பாவொடு தளைவகை ஒன்றிய வெண்பாவடி யாகலானும், நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை தட்பினன்றி ஞாயிறு என நின்ற நிரையீற் றியற்சீர்ப் பின்னர் நேர் வந்தாற் கலித்தளையாகாது வெண்டளை யாமாகலானுங் கட்ட ளையடிக்கு அவ்வாறுகோடல் குற்ற மென்பது. அல்லதூஉங் கலிப்பாவிற்குப் பத்து நிலங் கொள்ளிற் கட்டளையடி அறுநூற் றிருபத்தைந் தன்றிப் பல்குமென்பது. (59) (நிரையீற்றுஇயற்சீர்முன்னும் நிரையீற்றாசிரியவுரிச்சீர் முன்னும் நிரைமுதல் வெண்சீர் வந்து தட்கினும் கலித்தளையாமெனல்) 372. நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்பினும் வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப. இதுவுங், கலித்தளை விகற்பங் கூறுகின்றது. இ-ள்: நிரையீற்றியற்சீரும் நிரையீற்றாசிரியவுரிச்சீரும் நிற்ப நிரை முதல் வெண்சீர் வந்து நிரை யொன்றியக்காலுங் கலித்தளையாம். என்றவாறு. மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால் என்புழித் திருமார்பின் என நிரைமுதல் வெண்சீர்வந்து மணி புரை யென்னுஞ்சீர் இறுதி நிரையொடு தட்டுக் கலித்தளை யாயிற்று. எனவே, நிரை முதலியற்சீர் வந்து நிரைதட்பினும் நேர்முதல் வெண்சீர் வந்து ஒன்றா தொழியினும் அது கட்டளை வகையாற் கலியடியாகா தென்றவாறு; என்னை? துள்ளாத இயற் சீர்ப்பின் நிரைமுதல் வெண்சீர் வந்து துள்ளு விக்கல் வேண்டு மாதலானும் ஞாயிறு மாசேர்வாயென்பது வெண்பாவடி யுமாம் ஆகலானு மென்பது. அடிக்கென்ப என்றதனான் 542இதுவுங் கட்டளை யடிக்கே யென்பது கொள்க. மற்று நிரைமுதல் வெண்சீர் வருவது முதனின்ற இயற்சீர்ப்பின்னர் இடைநின்ற இயற்சீர்ப்பின்ன ரென்ப தறியுமா றென்னை யெனின், அங்ஙனம் வரையாது கூறினமையின் முதற் கண்ணதே இவ்விதி யென்ப தாம். அல்லதூஉம் அவ்வாறு இயற்சீரினை இடையும் வருமென்று கொள்ளிற் பதின்மூன்றெழுத்திற் சுருங்கிய நிலனும் அது பெறுவான் செல்லும். செல்லவே கலியோசை இனிது பெறலாகாதென மறுக்க, என்றார்க்குப் பின்வருஞ்சீர் மூன்றும் நிரைமுதல்வெண்சீர் வருவதென்றிலனாதலின் மூன்றாஞ்சீர் நேர்முதல் வெண்சீர் 543வந்தும், வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (341) என்றதனானும் 544இடைநிற்பன வெண்சீரென்பது பெறுது மாக லானும் அது கட்டளையடியன்றென்பது. இனி முதனின்றது நிரை யீற்றியற்சீராகலான் துள்ளலோசை பிறவாமையின் அவற் றோசை குறை தீரக் கலித்தளை பலவாகி வரல் வேண்டு மென்பது. இவ்வாற்றான் ஓசைச்சுருக்கம் பெருக்கம் உணர்தற்கு அருமை நோக்கி, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே (323 என்பானாயிற்றென வுணர்க. இக்கருத்தினானன்றே நிரைமுதல் வெண்சீர் வருகவெனவும் நிரையீற்றியற்சீர்ப் பின்னர் மாசெல் வாய் மூன்று வரினுஞ் சிறிது கலியோசை பிறக்குமாயினும் அதனைக் கட்டளையடியென நேரானாயிற்றுமென்பது. (60) (சீர்வகையான் வருங் கலியடி தளை விரவியும் வருமெனல்) 373. விராஅய தளையு மொரூஉநிலை யின்றே . இது, சீர்வகையான் வருங் கலியடிதளை விரவினுங் கடியப் படாதென்கின்றது; யாதனொடு விரவியோவெனின், 545வெண்பா வினொடு விராய்த் தட்பினுமென்றவாறு; என்னை? தளைவகை யொன்றாத் தன்மை யான (370) என வெண்பாவிற்குங் கூறினமையின். இ-ள்: வெண்சீர் ஒன்றிவருதலுங் கடியப்படா கலிக்கு என்றவாறு. சீர்வகையடிக்கண் என்பது என்னை பெறுமாறெனின், - விராஅய தளை என்றமையிற் பெறுதுமென்பது; உதாரணம்: தளைவகை யொன்றாத் தன்மை யான (370) என்புழிக் காட்டப்பட்டது. (61) (கட்டளையடியல்லாதவழி ஆசிரியப்பாவினுள் இயற்சீர் வெள்ளடியும் வருமெனல்) 374. இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கி னிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே. இது, வெண்சீரொன்றிவரும் அடி கலிப்பாவிற்கும் உரித் தென்ற முறையானே, இயற்சீர் வெள்ளடியான் வரும் ஆசிரியத் திற்கு மயங்கியல் வகையான் நிலைக்குரித்தாகி நிற்கவும் பெறு மென்கின்றது. இ-ள்: அம்மயங்கியல்வகைதான் அப்பாவிற்கு உரிமை பூண்டு நிற்கும், ஆசிரிய அடியொடு கூடிய கூட்டத்துக்கண் என்றவாறு. வெண்பாவினுளாயின் ஆசிரியவடி முழுவதுந் தன்றளை யொடு வாராது; என்னை? தூஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல் பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொன் மாஅ மிசையான்கொ னன்ன னறுநுதலார் மாஅமை யெல்லாம் பசப்பு (மலைபடுகடாம்.) என்பதன் முதலடியுள்ளே 546தூஉத் தீம்புகையென ஓர் ஆசிரியத் தளை வர, மற்றையன வெண்டளையாகி வந்தமையின். அற்றன்றி, முழுவதூஉம் ஆசிரியத்தளை வரின் வெண்பா சிதையு மாகலின், இதனையே 547சொல்லின் முடிவிலக்கணத்தான் வெண்பா வென்றான். எனவே, 548வேறோசை விராய வழித் தன்னோசை அழிதல் இதற்குப் பெரும்பான்மையாயிற்று. ஆசிரியமாயின் அவ்வாறு அழியாதென்பது கருத்து. v‹nghy nthbtÅ‹.- பளிங்குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையான், பளிங்கு வேறுபடினல்லது பஞ்சி வேறுபடாததுபோல வென்பது. இதனானே வெள்ளையென்பது ஒப்பினான் ஆகிய பெயரென்பதூஉம் பெற்றாம். எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்க லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் (குறுந்.12) இவ்வாசிரியத்துள் எல்லாவடியும் பாவேறுபட்டு இசையாமையின் முதற்கணின்ற இயற்சீர் வெள்ளடி நிலைக்குரி மரபின் நின்றதாயிற்று. கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்த புகர்முக யானை நுதன்மீ தழுத்திய செங்கோற் கொடுங்கணை போலு மெனாஅது நெஞ்சங் கவர்ந்தோ ணிரையிதழ்க் கண்ணே என்பது, செய்யுள் முழுவதும் இயற்சீர் வெள்ளடியான் வந்தது. மற்று இயற்சீர்வெள்ளடியல்லது பிறவடி ஆசிரியத்துள் மயங்கப் பெறாதோவெனின், அது 549நிலைக்குரிமரபின் நில்லாமையின் உம்மையான் தழீஇக்கொள்ளப்படுஞ் சிறுபான்மையென்பது. 550பாஅல் புளிப்பினும் பகலிருளினும் (புறம். 2.) என்றாற்போல்வன. மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது (யா. வி. மேற்.) என்னும் ஆசிரியவடியினைக் கலிப்பா மயங்கிற்று என்பாரும் உளர். அது துள்ளச் சொல்லுங்கால் 551அளபெடுக்க வேண்டு மெனக் கூறி மறுக்க. (62) (கலிப்பாவினுள் ஐஞ்சீரடியும் வருமெனல்) 375. வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு மைஞ்சீ ரடியு முளவென மொழிப. இஃது, ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது. இ-ள்: மேனின்ற அதிகாரத்தாற் கலிப்பாவிற்கு ஐஞ்சீரடி யும் உள என்றவாறு. வெண்டளை விரவியு மாசிரியம் விரவியும் என்றது என்னையெனின், அவ்வைஞ்சீரடி வெண்பாவொடு விராயும் ஆசிரியப்பாவொடு விராயும் வருமென்றவாறு. ஈண்டுத் தளை யென்றது அப்552பாக்களையாதலான் அப்பாக்களொடு விரவு மெனவே, அப்பாக்களை உறுப்பாகக் கொண்டு வரும் 553பிற செய்யுட்கண்ணும் அவ்வைஞ்சீரடி வருமென்பது பெற் றாம். வெண்டளையொடு விரவுமெனவே ஐஞ்சீரடி 554அவற் றுக்கு உரிய வல்ல வென்பதாம். எனவே, கலிப்பாவின்கண் வரும் ஐஞ்சீரடி யாயின் அக்கலியோசைக்கு உரிமையுடைத்தென்ப தாம். உளவெனவே, ஐஞ்சீரடி கலியினுட் பயின்று வருமென்பதூஉம் அல்லனவற்றுட் பயிலாவெனவுங் கொள்க. 555விராய தளையு மொரூஉநிலை யின்று (373 எனப்பட்ட கலிப்பாவினோடு இயைபுபட்ட வெண்பாவடியும் அதனோடு இயைபுபட்ட ஆசிரியவடியுங் கூறி, அம்மூன்றனை யும் உடன் கூறினானா யினும், ஆண்டுச் சிறந்தவாறே ஈண்டும் அவ்வதி காரத்ததாக நாட்டி, ஐஞ்சீரடியும் உளவென்று ஆண்டு நின்ற கலிக்குக் 556கூறி, அவ்வடி வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவி யும் வருமெனப் பிறவற்றுக்குங் கூறினானென்பது. 557ஐஞ்சீரடியும் என்பதனை அளவடி மூன்றுபாவிற்கும் உரித்தென்றால் அள வடியை அவ்வப்பாவிற்கு வேறுவேறாகக் கொண்டாற் போல, ஐஞ்சீரடியையும் பாத்தோறும் வேறுபடுத்துக்கொள்க. உதாரணம்: தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக எனக் கலிப்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது. அரவணிந்த கொடிவெய்யோ னகம்புக்கா னராசவையன் றகற்றியே எனக் கலியடி வெண்சீரான் வந்தது. கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க வொண்செங் குருதியி னாஒ கிடப்பதே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னா ளழுதகண் ணீர்துடைத்த கை (யா. வி. 93.) என்னும் வெண்பாவினுள் இரண்டாமடி ஐஞ்சீரான் வந்தது. சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே (புறம். 235) என்பன ஐஞ்சீரான் வந்த ஆசிரியவடி. ஆசிரியத்துள் இவ்வாறு இரண்டடி ஒருங்கு நிற்குமென்பது அறிவித்தற்கு ஐஞ்சீரடிக்குச் சிறந்த கலிப்பாவொடு வைத்தான் அதனை முறை பிறழ வென்பது. எனவே, வெண்பாவிற்கு ஐஞ்சீரடி ஒன்றல்லது வாராதாயிற்று. இக் கருத்தே பற்றி, ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல என்றார் பிறருமென்க. உம்மையான் இருசீரடியும் கலியடியாம். மன்று பார்த்து, நின்று தாயைக் கன்று பார்க்கு மின்றும் வாரா எனக் கொச்சகக்கலியுள் இருசீர் வந்தது. மூன்று பாவிற்கும் முச்சீரடி உரித்தென்பது முன்னர்ச் 558சொல்லும். வரையாது கூறினமையின் கலிப்பாவிற்காயின் ஐஞ்சீரடி வருங்கால் தளைவிரவியும் விரவாதும் வேண்டிய வாறு வரப்பெறுமென்பது. (63) (கலிப்பாவினுள் அறுசீரடியும் வருமெனல்) 376. அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே. இது, முறையானே அறுசீரடியுங் கலிப்பாவிற்கு உரித் தென்கின்றது. இ-ள்: நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடியும் வருதலு முண்டு. அன்னது வருங்கால் 559தனக்குரிய வெண்டளை யேயன்றி ஆசிரியத் தளையொடும் வழக்குப் பெற்று நடக்குங் கலிப்பாவினுள் என்றவாறு. நெறிபெற்றுவரூம் என்றதனாற் சிறுபான்மை நேரடி இடையிட்டன்றி ஒரு செய்யுள் முழுவதூஉந் தானே வருதலுங் கொள்க. ஆசிரியத் தளையொடும் என்ற உம்மையாற் கலி தனக்குரிய வெண்டளையான் வருதலும் மயங்கிவருதலும் உரியவாம். முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப்பேர வன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப்பேருந் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம் புன்னை யரும்பென்னப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர் என்பது, மூன்றாம் அடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீர் வந்தது. பிறவுமன்ன. கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயி னரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவே லஞ்சுக நும்மை வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வாரலையோ என்பதன் முதலடியுள் வருதிராயின் என்பது ஆசிரியத்தளை; ஒழிந்தன வெண்டளை. முன் னென்றதனான் இடமுன்னுங் கால முன்னுங் கொள்ளப்படும். தொக்குத் துறைபடியுந் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோண்மேற் பெய்வான் கைக்கொண்ட நீருட் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி மெய்க்கெண்ணும் பெய்கலார் மீண்டுகரைக் கேசொரிந்து மிளிர்வ காணா ரெக்கர் மணற்கிளைக்கு மேழை மகளிர்க்கே யெறிநீர்க் கொற்கை எனச் செய்யுள் முழுவதும் அறுசீரடியே வந்தது. வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதல் பொருட்டு வந்தோய் என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. மற்றுத் தளையென் றோதுவது கட்டளையடிக் கென்றீ ரால், 560ஈண்டுத் தளையென்றதென்னை யெனின், அவ்வரை யறை ஒருவன் சொல்லுவது; அறுசீரடி வருங்கான் முதற்கண் 561நேரடி தூக்கிப் பின் இரு சீரொடு தொடுத்தல் வேண்டும் என்னும். அஃது 562இச்சூத்திரத்திற்கேலாது, நேரடி முன் அறுசீர் வரி னென்பது பதின்சீரடியாமாகலின். அல்லதூஉங், 563குறளடி தூங்கியுஞ் சிந்தடி தூங்கியும் அறுசீரடி வருதலின் அஃது அமையா தென்பது. என்னை, வாராது நீத்தகன்றார், வருமாறு பார்த்திருந்தார், வடிக்கண் போல என்றவழி இருசீரான் யாத்தமைப்பின் அது தூக்கெனப்படாது; 564செங்காந்தள் கைகாட்டுங் காலஞ், சேட்சென்றார் வாரார்கொல் பாவம் என மூச்சீரான் யாத்தமைப்பின் அதுவுந் தூக்கெனப்படாது. அறுசீரடியே தூக்கெனக் கொண்டமையின், நேரடிமுன் இருசீரடி வந்ததென்றதூஉம் பிழைக்கு மென்பது. (64) (கலிப்பாவினுள் முடுகியல்பெற்று எழுசீரடியும் வருமெனல்) 377. எழுசீ ரடியே முடுகிய னடக்கும். இஃது, எழுசீரான் வரும் அடி கூறுகின்றது. இ-ள்: எழுசீரான் 565வருவனவும் அடியுள; அவை பயின்று நடப்பது முடுகியற்கண் என்றவாறு. எனவே, முடுகாதவழி அத்துணை நடையாட்டம் இல எழு சீரடி என்பதாம். பாவென்னும் உறுப்பு இடனாகும். ஏகாரம் பிரி நிலை. எழு சீரடிக்கு தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில் எனவும், கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட எனவும், எழுசீரடி முடுகிவந்தது. இவை பரிபாடலுள்ளுங் கலியுள்ளுங் காணப்படும். முடுகாது வரும் எழுசீரடி வந்தவழிக் கண்டுகொள்க. (65) (கலிக்கண் வருமென முற்கூறிய ஐஞ்சீரடியும் அறுசீரடியும் முடுகியல்பெற்றும் வருமெனல்) 378. முடுகியல் வரையார் முதலீ ரடிக்கும். இஃது, எய்தாத தெய்துவித்தது, எழுசீரடியேயன்றி ஐஞ்சீரடியும் அறுசீரடியும் 566அராகந் தொடுக்குமென்றமையின். இ-ள்: எழுசீரடிக்கு முன்னர் இடைநின்ற ஐஞ்சீரடியும் அறு சீரடியும் முடுகியல் நீக்கார் என்றவாறு. அவற்றுக்குச் செய்யுள்: காரெதிர் கலியொலி கடியிடி யுருமி னியங்கறங்க நேரிதழ் நிரைநிரை நெறிவெறிக் கோதைய ரணிநிற்ப (கலி. 105) என்பது ஐஞ்சீரடி முடுகி வந்தன. மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ (கலி. 102) என்பன அறுசீரடி முடுகிற்று. முதல் ஈரடிக்கும் என்ற உம்மை, எச்சவும்மை. அவ் வும்மையால் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகு மென்பது. புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின வேறு (கலி. 103) என வரும். இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை யிஃதொன்று (கலி. 104) என்பதனுள் முடுகியலடி இரண்டு வந்தன. மற்றிவற்றை அராகமென்னாமோவெனின், - அதனைப் பரிபாடற்கு உறுப்பென்றமையாற் 567பிறவடியொடு தொடரா துற்று வர வேண்டும்; இஃது அன்ன தன்றென்பது. எழுசீரடியிற் சிறுவரவினவாகலான் ஐஞ்சீரடியினையும் அறுசீரடியினையும் வரையாரென்றான். அவற்றினுஞ் சிறுவரவிற்றாகலின் 568இதனை உம்மையாற் கொண்டான். முற்றும்மையாகாதோ வெனின் 569அதுவும் எச்சப்படுதலின் அமையுமென்பது. அல்லதூஉம் முதலடி 570யிரண்டே அன்மையின் முற்றாகா தென்பது. (66) (முற்கூறிய நாற்சீரடி முதலிய மூவடியும் முடுகியல்பெற்று ஆசிரியத்தும் வெண்பாவினும் வாரா எனல்) 379. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினு மூவகை யடியு முன்னுத லீலவே. இது, முடுகியல் இன்ன பாவிற்கு உரித்தென்கின்றது; எய்திய திகந்து படாமற் காக்கின்றதூஉமாம்: என்னை? நாற்சீரடி முதன் மூன்றும் அகவ லோசைக்குஞ் செப்பலோசைக்கும் உரிய வெனவே, அவை முடுகி ஆண்டுஞ் சேறலெய்தியதனைக் கலிப்பா விற்கல்லது ஆகாதென்றமையின். இ-ள்: ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டு பாவினும் முடுகியலடி மூன்றும் புகா என்றவாறு. உம்மை -. முற்றும்மை. மற்றை முச்சீரடியொடு நான் கென்னானோ வெனில், அஃது இவற்றுக்கு ஈண்டு ஒவ்வாது. முடுகி வருதல் பெரும் பான்மைத்தாகலின் மூவகையடியென அடையடுத்துக் கூறினானென்பது. 571அல்லதூஉம் எழுசீரடி விலக்கானன்றே, 572அதனை ஆசிரியமருங்கினும் வெண்பா மருங்கினும் மயங்குமென்ப தின்மையினென்பது. இனி, அறுசீரடி ஆசிரியத்தளையொடும் வருமென்றது (376) அகவலோசைக்கு உரித்தென்றமையானும், வெண்டளை விரவியு மாசிரியம் விரவியும் ஐஞ்சீரடியும் வரும் (375) என்றமையானும் அவற்றை அளவடியுடன் எடுத்தோதி விலக்கி னான். மூவகை அடியுமென்றது 573ஐஞ்சீரடிமுதன் மூன்று மெனப் படுமென்பார், அளவடி முடுகுதல் ஆசிரியத்திற்கும் உரிமையின் அது வரையறையின் றென்றலும் ஒன்று. அது, திருமழை தலைஇய விருணிற விசும்பின் (.மலைபடு. 1) என வரும். அதற்கு முடுகியற்றன்மை 574இன்றென்றது கருத்து. வஞ்சிப்பாவிற்குக் குறளுஞ் சிந்தும் அல்லது இன்மையின் இவ் வாராய்ச்சி இன்றென்பது. எனவே, ஆசிரியத்தளையொடு முடுகிய வடியினைக் கலியடியென்பதுஉம், முடுகாத அறுசீரடி ஆசிரியத்தளை யொடு நெறிபெற்று 575வருதற்கு கலிப்பாவிற்குச் சிறுபான்மை யான் வருமென்பதூஉஞ் சொல்லப்பட்டன. அல்லாதார் ஐஞ்சீரடி முதலிய மூன்றுங் கலிக்குரிய, பிறபாவிற்கு உரியவல்ல என்றற்கு வந்தது இச்சூத்திர மென்ப. அற்றன்று; அங்ஙனம் கூறின் தாம் வேண்டும் ஐஞ்சீரடி ஆசிரியத்துள்ளும் புகாதென்று மறுக்க. முன்னுதலில வென்றது யாண்டுமாகா தென்றவாறு. இவ் விலக்கணமெல்லாம் மேற்காட்டிய செய்யுளுட் கண்டு கொள்க. (67) (ஆசிரியப்பாவினுள் ஈற்றயலடியும் இடையடியும் முச்சீரானும் வருமெனல்) 380. ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப. (18) 381. இடையும் வரையார் தொடையுணர் வோரே. (16) இவை இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடனெ ழுதப் பட்டன. இவை ஆசிரியத்துட் சிந்தடிவருமென்றமையின் எய்தாத தெய்துவித்தனவாம். இ-ள்: ஆசிரியத்துள் 576எருத்தடியொன்றும் இடையடி யிரண்டுமாகி முச்சீரடி வரும் என்றவாறு. முச்சீர்த் தென்று ஒருமை கூறினமையின் அஃது ஒன்றாக லும், தொடையுணர்வோ ரென்றமையின் இடைவருவன இரண்டாகலுங் கூறினா னென்பது. இடையும் வரையார் என்ற மையான் ஈற்றயல் முச்சீர்த்தாதல் பெரும்பான்மை. உதாரணம் : கண்ணி கார்நறுங் கொன்றை காமர் . . . . . . . . . . . . நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே (புறம். 1) என அப்பாட்டினை முழுவதூஉங் கொள்ள ஈற்றயலடி முச்சீர்த் தாயிற்று. நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல்லாதே (யா. வி. 257.) என்பதனுள், சார னாடன் கேண்மை எனவுஞ் சாரச் சாரச் சார்ந்து எனவும் முச்சீரடி இரண்டு வந்தன. ஏகாரம் பிரிநிலை. மற்று, நரந்த நாறுந் தன்கையாற் புலவுநாறு மென்றலை தைவரு மன்னே (புறம். 235) என முச்சீரடி இடையும் ஒன்று வந்ததாலெனின், தோற்ற மென்றதனான் எருத்தடி முச்சீராய காலத்துக் 577குட்டம்பட்டு இனிது விளங்கும். இடை யிடை ஒன்று வருதலும் உண்டா யினும் 578அத்துணை இனிதன்று அது வென்பது கொள்க. பெரியகட் பெறினே (புறம். 235) என இருசீரடி வந்ததாலெனின், அதனைச் சொற்சீரடி யென்று களைக. உப்பிலாஅ வவிப்புழுக்கல். கைக்கொண்டு 579பிறக்குநோக்காது (புறம்.363) எனவுங் காட்டுப. இவை வஞ்சியடி யெனப்படுமென்பது. வெண் சீரான் வஞ்சியடிவருமோவெனின், வாரா, வஞ்சிச்சீர் விரவினல்ல தென்பது. உப்பிலாஅ வவிப்புழுக்கல் என்பதோவெனின், அது மற்றை இருசீரடியொடு 580கூட்டத்துக் காட்டலானும் வஞ்சியடி போன்றது. (68, 69) (கலிப்பாவிற்கு முச்சீரடியும் உரித்தெனல்) 382. முச்சீர் 581முரற்கையு ணிறையவு நிற்கும். இது, கலிப்பாவிற்கு அளவடியும் நெடிலடியும் அதனி னிறந்த அடியும் உரிமை கூறி, இனிச் சிந்தடியும் உரித்தென் கின்றது. இ-ள்: கலிப்பாவினுள் முச்சீரடி நிரம்பவும் நிற்கும் என்றவாறு. நிறைய நிற்றல் என்பது அச்செய்யுள் முழுவதும் அவ் வடியே வருதலாம். உம்மையான், ஒரு செய்யுள்நிறைய வாராது ஒன்றும் இரண்டும் பலவுமாகி அம்முச்சீரடி வருதல் பெருவர விற்றென்பது. 582தாங் குறைந்த அடியாதலிற் கலிப்பாவிற்கு உறுப்பாகிய 583சின்னத்திற் குறைய நிற்கும் இயல்பினவாயினும், நிறைய நிற்றலு டைய கொச்சகத்துளென்றவாறு. செய்தானக் கள்வன் மகன் (கலி. 51) எனவே வெண்கலியுள் இறுதிக்கணல்லது வாராது. நின்கண்ணாற் காண்பென்மன் யான் (கலி. 39) என்பது இடைவந்தது. 584எண் உறுப்பின்கண் இரண்டும் நான் கும் வருமாறு கண்டு கொள்க. நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக் கார்வரக் கண்டனங் காதலர் தேர்வரக் கண்டில மன்னோ பீர்வரக் கண்டனந் தோளே என முச்சீரடி ஒரு செய்யுள் நிறையவும் வந்தவாறு. (70) (வஞ்சிப்பாவினிறுதி ஆசிரியவடியான் முடியுமெனல்) 383. வஞ்சித் 585தூக்கே 586செந்தூக் கியற்றே. இது, முறையானே அடியுரிமை கூறியவாற்றான் வஞ்சிப்பா விற்குக் கூறியதிலன்; ஈண்டுக் கூறினன். எற்றுக்கு? அது, வஞ்சி யடியே யிருசீர்த் தாகும் (357) எனவும், முச்சீ ரானும் வருமிட னுடைத்து (359) எனவும் மேற் கூறப்பட்டமையின். அது நோக்கி அடியுரிமை கூறப் படாத வஞ்சிப்பாவிற்கு வஞ்சியினது ஈற்றடியும் அவ்விரு சீரடியும் முச்சீரடியு மாவான் சென்றதனை விலக்கி இன்ன அடியான் முடியு மென்கின்றது. இ-ள்: வஞ்சிப்பாவினது இறுதியடி ஆசிரியவடி இறுதி போன்று இறுக என்றவாறு. எனவே, ஆசிரியத்திற்கு ஓதிய சீரானுந் தளையானும் இறு மென்றவாறு. மாக்கட னிவந்தெழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ வனையை யாகன்மாறே தாயிறூவாக் குழவிபோல வோவாது கூஉநின் னுடற்றியோர் நாடே (புறம். 4) என 587மண்டிலவாசிரியத்தா னிற்றது. செந்தூக் கியற்றே யென்ற மாட்டேற்றானே, ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப. (தொல். செய். 98) எனவும், இடையும் வரையார் தொடையுணர் வோரே (தொல். செய். 69) எனவும் எய்திய விதி 588ஈண்டும் எய்துவிக்க. அனையை யாகன் மாறே (புறம். 4) என முச்சீரடி இடை வந்தது. இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே எனவாங் கொள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே (புறம். 11) இஃது, ஈற்றயலடி முச்சீர்த்தாகி வந்த செந்தூக்கியற்றாகி இற்ற வஞ்சிப்பா. பிறவும் அன்ன. ஈண்டுத் தனிச்சொல் வேண்டு மென்று பிற்காலத்து 589நூல் செய்தாரும் உளர். அது சான்றோர் செய்யுள் எல்லாவற்றொடும் பொருந்தாமையானும், பிற்காலத்தில் செய்த நூல்பற்றி முற்காலத்துச் செய்யுட் கெல்லாம் இலக்கணஞ் சேர்த்துதல் பயமின்றாதலானும், அஃதமையா தென்பது. வஞ்சிப்பாவின் ஈற்றடி வரைந்தோதவே, இடையாயின எல்லா அடியும் வரப்பெறுமென்பதாம். நேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை (பட்டின. 234) என ஆசிரியவடியும் 590வெண்பாவடியும் இடைவந்தன. (71) (வெண்பாவினிறுதியடி முச்சீரான் வருமெனல்) 384. வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும். இது, வெண்பாவிற்கு ஈறு உணர்த்துகின்றது. ஆசிரியத்துக் கோவெனின், - தனக்கோதிய அளவடியானே இறுதலின் வேறு பாடு கூற வேண்டா. 591எருத்தடியும் இடையடியும் முச்சீரான் வருமென வேறுபட்ட வழிக் கூறி, அல்லாதன அளவடியாதல். கொள்ளவைத்தானென்பது. இ-ள்: வெண்பாவின் இறுதியடி ஒன்றும் முச்சீரான் அன்றி வாராது என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும். அஃதேல், அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலு நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும் (மூதுரை. 4) என முச்சீரடி இடையும் வந்ததால் வெண்பாவினுளெனின், முச் சீர்த்தென்னாது ஆகும் என்று ஆக்கங் கொடுத்துக் 592கூறின மையான், அத்துணை ஆக்கமின்றி இடையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க. 593அல்லாதார் அதனை வெண்பா வன்றென்ப. (72) (வெண்பாவினிறுதிவரும் முச்சீரடியின் ஈறு அசைச்சீரான் வருமெனல்) 385. அசைச்சீர்த் தாகு மவ்வயி னான. இது, மேலதற்கு எய்தியதோர் விதி. இ-ள்: வெண்பாவின் இறுதி வரும் முச்சீரடியின் ஈற்றுச்சீர் வரப்பெறாது, அசைச்சீரல்லாது என்றவாறு. மேல், அசைநிலை வரையார் சீர்நிலை பெறல் (தொல். செய். 27) என்றான், அவற்றுள் உரியசைச்சீர் முதலும் இடையும் இறுதி யும் வருமென்பான், இயற்சீர்ப் பாற்படுத்து (தொல். செய். 28) இயற்றுக என்றான். அவ்வாறே 594இயலசைச்சீரும் முச்சீரடி இறுதி வருமென்பது ஈண்டுக் கூறியவாறு. (73) (வெண்பாவி னிறுதியடியின் இரண்டாஞ்சீர் நேரீறாய் வரின் அதனோடு நிரையும் நிரைபும் இறுதிச் சீராகி வந்து தளைக்குமெனல்) 386. நேரீற் றியற்சீர் நிரையு நிரைபுஞ் சீரேற் றிறூஉ மியற்கைய வென்ப. இது, மேற்கூறப்பட்ட இயற்சீர் நான்கும் வருங்கால் இன்னுழி நின்று இன்னவாறு கொள்ளப்படுமென்ப துணர்த்து தல் நுதலிற்று. இ-ள்: 595நேரிறுதி வந்த நிரையும் நிரைபுமே இறுதிச் சீராய் நிற்பன என்றவாறு. எனவே, 596தனிவந்த நிரையும் நிரைபும் நிரைமுதற்சீர் போலத் தளை கொள்ளப்படு மென்பதாம். ஏற்றிறூஉம் என்ற இலேசினான் 597இடைவந்த நிரைபசையும் அவ்வாறு கொள்க. அஃது, இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே (தொல். செய். 28) என்பதனான் அடங்காதோவெனின் அடங்காது. என்னை? 598அசைச்சீர்தான் அடங்குமாற்றுக்கு ஆண்டுக் கூறினான், அது பிறிதுசீர் அசைச்சீரொடு தட்குமாற்றுக்குங் கூறல்வேண்டு மென்பது. அல்லதூஉம், ஆண்டு அளவடிக்குக் கூறினான், இது சிந்தடிக்கென்பது. வரலாறு: வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோ லேரிய வாயினு மென்செய்வ - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை (முத்தொள்ளாயிரம். 71) எனவும், அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாழித்தேர் குத்தி யெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்செய்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கோதை களிறு. (முத்தொள்ளாயிரம். 17) எனவும் இவற்றினுட் கொள்ளா எனவும் கோதை எனவும் நின்ற நேரீற்றியற்சீர் முன்னர் முலையெனவுங் களிறெனவும் நிரை யும் நிரைபுஞ் சீரேற்றவாறும் வெண்பாட்டீற்றடி முச்சீர்த் தாய வாறும் ஆண்டு அசைச்சீர் வந்தவாறுங் கண்டுகொள்க. 599என்றார்க்கு, முச்சீரடியின் முதற்சீர்க்குத் தளை கூறாரோ வெனின், ஆண்டுத் தளைவகையின்றியும் வருதலின், அதனை வரைந்து கூறா ரென்பது; 600என்னை? கோட்டுமண் கொள்ளா முலை (முத். 71) எனவுங் காய்சினவேற் கோதை களிறு (முத். 17) எனவுந் தளைவகையான் வந்தன. உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் 601செறாஅய் வாழியென் னெஞ்சு (குறள். 1200) எனவும், கலாஅற் கிளிகடியுங் கானக நாட 602விலாஅர்க் கில்லை தமர் (நாலடி. 29.3) எனவும் தளைவகையின்றி வந்தன. (74) (வெண்பாவி றுதியடியி னிரண்டாஞ்சீரிறுதி நிரையாய் வரின் அதனொடு நேரும் நேர்பும்வந்து தளைத்து முடியுமெனல்) 387. நிரையவ ணிற்பி னேரு நேர்பும் வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர். இஃது, ஒழிந்த அசைச்சீர் நிரையீற்றுப் பின்னன்றி வாரா வென்கின்றது. இ-ள்: நேரீற்றியற்சீர் நின்றவழி நிரையீற்றியற்சீர் நிற்பி னென்பான் நிரையவண் நிற்பின் என்றான். ஆண்டு நிரையும் நிரைபும் வரின் தளை வழுவாமாதலான் நேரும் நேர்புமே வந்து சீரேற்று முடிதல் வரைவின்று என்றவாறு. கொழுநனை மைந்தன் கொணர்ந்ததற் காக முழுமுலை பாய்ந்தன பால் எனவும், வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு (முத்தொள். 97) எனவும் இவற்றுட் பாய்ந்தனவெனவும் பட்டினமெனவும் வந்த நிரை யீற்றியற்சீர்ப் பின்னர் நேரும் நேர்பும் வந்தன. முன்னர், நேரீற் றியற்சீர் நிரையு நிரைபும் (தொல். செய். 74) எனக் கூறி, ஈண்டு நிரையவண் நிற்பினெனச் சுட்டிக் கூறியவத னானே, அதுவும் நிரையீற்றியற்சீரென்பதூஉம் அஃதிரண்டாஞ் சீரென்பதூஉங் கொள்க. 603அல்லாதார், அதனை வெண்சீர்க்கும் பொதுவெனக் கூறி, வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே (தொல். செய். 29) என்றதனான் வெண்சீரிறுதி நிரையாக இயற்றி அதன் அடிப்பின் நேர்பசை கொடுப்ப; எய்போற் கிடந்தானென் னேறு (பு. வெ. வாகை. 22) என்புழிக் கிடந்தானென் என நின்ற புலிசெல்வா யினைக் கணிவிரி யாக இயற்றி, நிரையவ ணிற்பின் நேரும் நேர்பும். என்றதனான் ஏறு என்னும் நேர்பசை கொடுப்பர். அஃது ஈண்டு ஆராய்ச்சி யின்றென்பது; என்னை? 604இது கட்டளையடி யன்மையின். (75) (கலிப்பாவினிறுதி ஆசிரியப்பாவானும் வெண்பாவானும் முடியுமெனல்) 388. எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே, (79) 389. வெண்பா வியலினும் பண்புற முடியும். (77) இவை இரண்டு சூத்திரமும் முறையானே கலிப்பாவிற்கு அன்னதோர் அடி அதற்கு வகுத்திலாமையின் வகுக்கின்றன. என்றார்க்கு, முதலது நேரடியும் ஈற்றது சிந்தடியுமாகக் கொள்ளல் 605அவ்வெழு நிலையுமெனின், அங்ஙனங் கொள்ளா மைக்கன்றே, ஈற்றய லடியே யாசிரிய மருங்கிற் றோற்ற முச்சீர்த் தாகு மென்ப (தொல். செய். 68) எனவும். இடையும் வரையார் தொடையுணர் வோரே எனவுங் கூறிற்றென்பது. எழுசீரிறுதி யாசிரியம் (122) எனவே ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராக வருமென்பது கொள்க. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் என்னும் கலிப்பாவினுள், இனைநல முடைய கானஞ் சென்றோர் என்பது ஈற்றயன் முச்சீரிறுதி ஆசிரியத்தாற் கலிப்பா இற்றது. மணிநிற மலர்ப்பொய்கை என்னும் கலிப்பாவினுள், மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோ லெல்லாந் துயிலோ வெடுப்புக நின்பெண்டி ரில்லி னெழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால் (கலி. 70) என வெண்பாவியலினானும் பண்புற வந்தவாறு. பண்புறவென்பது, விசேடம்; மிக முடியுமென்றவாறு. எனவே 606ஈண்டுக் கூறாத 607இருசீரடியானும் நாற்சீரான் வந்த கலிப்பாவடியானும் ஐஞ்சீரடி யானும் முடிவன கொச்சகக் கலி யுள்; அவை இத்துணை விசேடமிலவென்றவாறு. ஈண்டு விதந்து ஓதியவெல்லாம் பெரும்பான்மையும் ஒத்தாழிசைக் கலிக்கென வுணர்க. இயல் என்றதனாற் கட்டளை வெண்பாவே வரல் வேண்டுவதில்லை எனக் கொள்க. பண்புற என்றதனான் மூன்ற டியின் இழியிற் பண்புபட வாரா வெள்ளைச்சுரிதக மெனவுங் கொள்க. (76, 77) (யாப்பினிலக்கணம் இதுவெனல்) 390. எழுத்து முதலா வீண்டிய வடியிற் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிப யாப்பறி புலவர். இஃது, யாத்த சீரே யடியாப் பெனாஅ (தொல். செய். 1) என நிறுத்த முறையானே அடி யுணர்த்தி யாப்புணர்த்துகின்றது. இ-ள்: எழுத்து முதலா ஈண்டிய அடியிற் குறித்த பொருள்களை முடிய யாத்தல் யாப்பாவதென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. அடிக்கண்ணே முடியுமெனவே, இருசீரு முச்சீருங் கிடப்ப முடிய நாட்டினும் நாற்சீர் கொண்டு முடிய நாட்டினும் அமையுமென்பது. மாத்திரை முதலாக வென்னாது எழுத்து என்ற தென்னையெனின், எழுத்தும் அசையுஞ் சீருங் கொண்டியன்ற ஒரோவடிக்கண்ணே இன்பஞ் செய்யும் 608அது; 609பொருட்காய் இன்றியமையாமையின் எழுத்து முதலா வென்றா னென்பது. ஈண்டிய வடியென்பது 610அவை மூன்றும் ஒன்றாகத் தொடர்ந்து ஈண்டிய அடியென்றவாறு. எனவே, 611இவற்றைப் 612பொருளின்றி வேறுவேறு செய்யாது, பொருட்டொடர்பு படச் செய்யவேண்டு மென்பதூஉங் 613கூறி, ஓரடிக்கட் பொருளாற் செய்யாது, ஒழிந்த அடிக்கண் ஒரு சொல்லினைப் பகுத்து வாங்கிக்கொண்டு போய் 614வைத்தலா மென்பதூஉங் கூறியவாறாயிற்று. குறித்த பொருளென்றது அவ்வடியில் தான் வைக்கக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியுங்கொண்டு கூட்டாது 615அமைந்துமாறச் செய்தல்: யாப்பறி புலவர் என்பது அவ்வாறு செய்தல் வல்ல புலவர் அது கூறினா ரென்றவாறு. அஃது, 616இதுபோலச் சீரும் பொருண்முடிய நிற்றலின், யாத்தசீரென்றா னென்பது. மாயோன் மார்பி லாரம் போல மணிவரை யிழிதரு மணிகிள ரருவி நன்பொன் வரன்று நாட னன்புபெரி துடைய னின்சொல் லினனே என இது குறித்த பொருளை நாற்சீரடிதோறும் முடிய நாட்டின வாறு. 617மண்டில மழுங்க மறுநிறங் கிளர வண்டின மலர்பாய்ந் தூத மீமிசைக் கண்டற் கானற் குருகின மொலிப்ப (அகம். 260) என்றவழி, இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானுங் குறித்த பொருளை முடிய நாட்டினவாறு கண்டுகொள்க. முச்சீரான் முடிய நாட்டுவன ஒருசார் வெண்பாட்டினுட் பயின்று வருமென வுணர்க. முயற்கோடு சீவி முதுவிசும்பு போழ்த்தான் என்றவழி எழுத்தும் அசையுஞ் சீரும் பொருளிலவாகி வந்தமை யின் அஃதமையாது; யாப்பெனப்படாது, சொல்லிலக்க ணத்தாற் சொற்றொறும் பொருளுடையவாயினு மென்பது. 618மணிவெண் ணகைவன முலைமதி முகமலர் விழியிணைச் செவ்வாய் மென்னடைப் பேதை என்றவழியும், முதலடிக்கட் பொருட்டொடர்பினை அறுத்துங் குறைத்துஞ் செய்தமையின் அதுவும் யாப்பறிபுலவரான் யாப் பெனப்படா தென்றவாறு. (78) (யாப்பின் பகுதி இவையெனல்) 391. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே யங்கத முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி னாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர். இச்சூத்திரம் அரிமாநோக்கு, மேற்கூறிய யாப்பிற்கும் வருகின்ற மரபிற்கும் அப்பகுதி யுரிமை கூறினமையின். இ-ள்: பாட்டும், உரையும், (485) நூலும், (478) வாய் மொழியும், (491) பிசியும், (488) அங்கதமும், (436) முதுசொல்லு (489) மென்று சொல்லப் பட்ட அவ்வேழ்நிலத்தும் வடவேங்கடந் தென்குமரி யாயிடை (பாயிரம்) நாட்டார் நடாத்துகின்ற செய்யுளின் பெயரே தனக்குப் பெய ராகவு முடைத்து மேற்கூறிய யாப்பு என்றவாறு. எனவே, மேற்குறித்த பொருளை அடிக்கண் முடிய நாட்டல் யாப்பென்றான், அதுவேயன்றி இப்பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப்பே யென்றானாம். இவ்வேழு வகை யானுஞ் செய்தல் மரபென எதிரது நோக்கிற்று. பாட்டு உரை நூல் என்பவற்றிலக்கணம் முன்னர்ச் சொல்லும். யாப்பின் வழியதென்பது இவ்வேழ் வகைப்பட்ட யாப்பின் பெயரது மர பாகும் யாப்பாகிய உறுப்பென்றவாறு. இதனை நூல் 619யாப்புப் போற் கொள்க. இப் பகுதிதாம் தமிழ்நாட்டு மர பாகலின் மரபென்னும் உறுப்பு மரபென எதிரது நோக்கிற்று. வண்புகழ்மூவர் என்பது வளன் உடைமையான் புகழ் பெற்றார் என்றவாறு. அஃதாவது கொடுத்துப் பெறும் புகழெனக் கொள்க. மூவரெனப்படுவார் தமிழ்நாட்டு 620மூவேந்தருமாயி னார். தண்பொழில் வரைப் பென்பது நிலத் துக்கு நிழல் செய்யும் 621நாவலம் பொழிலுள் வரைந்து கொள்ளப் படும் வரைப்பினை யுடைய வென்றவாறு. தண்பொழில் உடைமையின் நாவலந் தண்பொழி லெனப்பட்டது. நாற்பெய ரெல்லை யகமென்பது தமிழ்நாடென்றவாறு. வட வேங்கடந் தென்குமரி யன்றிக் கிழக்கும் மேற்கும் கடலெல்லை கூறினானோவெனின், அறி யாது கடாயினாய். வரையறையில வென்று கூறாதன வெல்லாங் களைந்துகொள்ளப்படுவன வல்ல. வகைக் கூறாமையுந் 622தழீஇக்கொள்ளப்படுங் கண்டாய். அவர் வழங்கும் யாப்பின் வழியதென்பது அந்நாட்டார் வழங்கும் 623யாப்பின் மரபுப்பகுதி அவை என்றவாறு. தமிழ்நாட்டார் வழங்கும் 624மரபுப் பகுதி அவையெனவே, யாப்பும் மரபுங் கருதியதாயிற்று இச்சூத்திர மென்பது இதனாற் பெற்றாம். 625வடவேங்கடந் தென்குமரி யாயிடை என்புழி நான்கெல்லையுங் கூறினானென்பது. (79) (மரபாவது இதுவெனல்) 392. மரபே தானு நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன. இது, நிறுத்தமுறையானே மரபினை விளங்கக் கூறுகின்றது. இ-ள்: மரபேதானும்- 626அங்ஙனங் கூறப்பட்ட மரபு தானும்; ஏகாரம் பிரிநிலை; உம்மை இறந்தது தழீஇயிற்று. மேல் எழுவகையான் யாக்கப் படுதன் மரபென்றமையின், மரபேதானு மென்றானென்பது. நாற்சொல்- பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்; இயற்சொல் திரிசொல் திசைச் சொல் வடசொல்லெனினும் அமையும். இயலான்- நாற் சொல்லினையும் உலகத்தார் வழங்குகின்ற வழக்கு வடிவினான்; யாப்புவழிப் பட்டன- மேற்பகுத்த யாப்புவழிப் பொருத்த முடைத்தாகிக் கிடப்பது என்றவாறு. 627அஃதாவது, வழக்கெனவுஞ் செய்யுளெனவும் 628இடை தெரியாமல், ஒரு வாய்பாட்டான் வழக்குஞ் செய்யுளுமாகி ஒரு சொற்றொடரினைச் சொல்லியது போலச் செய்யுள் செய்த லென்றவாறு. சாத்த னுண்டான் கொற்ற னுண்டான் எனவும், சாத்த னுறங்கினான் கொற்ற னுறங்கினான் எனவும், சாத்தனை யறியாதார் ஒருவரையு மறியாதார் எனவும், சாத்தனிற் கொற்றன் போமே எனவும் நின்ற வழக்கியலை முறையானே ஆசிரியமும் வெண்பாவுங் கலியும் வஞ்சியுமாகப் 629பரப்பப்பட்ட யாப்பு வழிப்படுத்துக் கண்டுகொள்க. ஓதியு மோதா ருணர்விலார் (நாலடி. 270) என்னுஞ் செய்யுள் வழக்கிற்றாகவுஞ் சொல்லப்படும். வழக்கு வடிவினா னெனவே சொன்மரபும் பொருண்மரபும் அடங்கக் கூறினான். என்னை? பொருளின்றி நாற்சொல்லையும் வழங்கா ராகலின்; எனவே, சொல்லும்பொருளும் அவ்வக்காலத்தார் வழங்கு மாற்றானே செய்யுள் செய்க என்பதாயிற்று. இதனது பயன், ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒருகாலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய. 630அதோளி இதோளி உதோளி (கலி. 116) எனவுங் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்துளவாகி இக்காலத்திலவாயின. இவை முற்காலத் துள வென்பதேகொண்டு வீழ்ந்த காலத்துஞ் செய்யுள் செய்யப்படா. அவை ஆசிரியன் நூல் செய்த காலத்துளவா யினுங் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் 631பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர், அவற்றுக்கு இது மரபிலக்கண மாகலி னென்பது. இனிப், பாட்டினுந் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக்கு உரித்தன்றிப் 632போயின் முற்காலத்துள வென்பதேகொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுள் செய்யப் பெறா என்பது. இனிப், பொருளும் இவ்வாறே காலத்தானும் இடத் தானும் வேறுபடுதலுடைய. ஒருகாலத்து அணியுங் கோலமும் ஒரு காலத்து வழங்காதனவுள. ஓரிடத்து நிகழும் பொருள் மற்றோ ரிடத்து நிகழாதனவு முள. அவ்வக்காலமும் இடனும் பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்ய வேண்டுமென்பது. ஒருகாலத்துக் 633குழை பெய்தாரென்றும் ஒருகாலத்துக் 634குழல் பட முடித்தா ரென்றும் ஆண்மக்களை, ஒழிந்த காலத்தும் அது கூறார். பதினெண்பாடைத் 635தேசிகமாக்கள் அணியினையுங் கோலத் தினையும் விரவிக் கூறாது அவ்வந் நாட்டார் பூணுமாற்றானும் புனையுமாற்றானும் ஏற்பச் சொல்லுதல் மரபு. இனி, நான்கு நிலத்தினும் ஓரிடத்துப் பொருளை ஓரிடத்த வாகச் சொல்லுதலும் உலகொடு மலைதலுஞ் சமயங்களொடு மலைதலுங் கலையொடு மலைதலும் பிறவும் இன்னோரன்ன வும் பொருண்மரபின் பாற்பட் டடங்கும். 636இவை நாடக வழக்கின் ஆமென்பது முன்னர் அகத்திணையியலுட் கூறினாம். புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி யொலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல் (அகம். 7) என்பது 637பருவத்துக்கேற்ற அணிகூறியது. 638கொல்வினைப் பொலித்த கூர்ங்குறும் 639புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பை செப்பட ரன்ன செங்குழை யகந்தோ 5 றிழுதி னன்ன தீம்புழற் 640றுய்வா 641உழுதுகாண் டுளைய வாகி யார்கழல் பாலி வானிற் 642காலொடு பாறித் 643துப்பி னன்ன 644செங்கோட் டியவி 645னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு 10 மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோக்கின் மகளி ரோச்சிய தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையொ டிரட்டுங் குன்றுபி னொழியப் போகி யுரத்துரத்து 15 ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவி னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மா ணோங்குயர் நல்லி லொருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் 20 கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணுடை மிடைந்த கற்பின் வாணுத 25 லந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறனசைஇச் சென்றவெ னெஞ்சே (அகம். 9) என்றவழிக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தம் மரபினவாய் வந்தன பலவுங் கண்டுகொள்க. மற்றும் நாற்சொல்லியலென்பது வழக்காயின் அது செய்யுட்குரிய 646திரிசொற்கும் ஏற்றவாறென்னையெனின், அவையுஞ் சான்றோர் வழங்கின வாறன்றி வேறுபட நாட்டப் படா வென்றற்கும், அவற்றுள்ளுங் காலம் பற்றித் திரிந்தனவும் உளவாயினும் அவை தவிர்த்துச் செய்யுள் செய்யப்படு மென்றற்கும் நாற்சொல்லியலான் என அடங்கக் கூறினா னென்பது. மலை யென்றதனைப் பிறங்கலென்றாரென்று இக்காலத்துச் செய்யுள் செய்யுங்கால், அப்பொருண்மையானே உயரென்று செப்பவோ வெனின் அது மரபன்று. இனிக் குடவாயிலென்பதனைக், கொற்றச் சோழர் குடந்தை வைத்த (அகம். 60) எனவும், உறையூரென்பதனைப், பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கி (புறம். 69) எனவும் மேலையார் திரித்த வகையானே இக்காலத்துந் திரித்துக் கொள்ளப் படுவன உள. அவை 647களந்தை என்றற் றொடக்கத் தன. பிறவும் இவ்வாறு வருவனவும் அறிந்துகொள்க. 648கடையாயார் நட்பிற் கமுகனையர் (நாலடி. 216) என இதனுள் ஓரினத்தவாகிய புல்லே கூறி ஒழிந்த மரங்க ளொப்பன உளவாயினும் உடன்கூறாராயினார். இன்னோ ரன்னவுஞ் செய்யுட்கு மரபெனப்படுமென்பது. மற்றுப், பாட்டுரை நூலேயென ஏழுவகை வகுத்த பகுதியையுஞ் செய்யுட்கு மரபென மேற்கூறினான்; அதனானே இவ்வேழுவகையானன்றி, 649ஆரியர் வேண்டுமாற்றானும் பிற பாடை மாக்கள் வேண்டுங் கட்டளை யானுந் தமிழ்ச்செய்யுள் செய்தல் மரபன்றென்றவாறு. (80) (இன்னவோசை ஆசிரியப்பாவெனல்) 393. அகவ லென்ப தாசிரி யம்மே. இது, நிறுத்த முறையானே தூக்கு உணர்த்துவா 650னெழுந் தான், அஃதாவது பாவினைத் துணிக்கப்படுவதாகலான் அப்பா வினை உணர்த்து கின்றானென்பது. நிறுக்கப்படுபொருள் பொன் 651னானும் வெள்ளியானும் ஒன்று பெற்றவழியன்றிக் கழஞ்சுந் தொடியுந் துலாமு மெனத் துலைக் கோலால் தூக்கி அளக்கு மாறில்லை. அதுபோலப் 652பாவின்றித் தூக்கி யளக்கப் படும் பொருள் இன்மையானும், பாவினை எழுநிலத்தெழுந்த 653செய் யுளடி(391) வரையறையுடைய பாட்டிற்கு இன்னவாறு வந்த தென்றறி விப்பது தூக்காகலானும், எல்லாப் பாவினுக்குந் தூக்குப் பொதுவாகலானும், பாவொடு புணர்த்தேதூக்கு ணர்த்தப் பட்டது. இ-ள்: அகவல் என்பது ஆசிரியம்மே- வழக்கினுள் அகவலென்று வழங்கப்படும் பாவினை ஆசிரியத்திற்குரிய பாவென்ப என்றவாறு. 654அகவிக் கூறுதலான் அகவலெனக் கூறப்பட்டது, அஃ தாவது, 655கூற்றும் மாற்றமுமாகி ஒருவன்கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங்கருதியவாறெல்லாம் வரையாது சொல்லுவதோராறும் உண்டு. அதனை வழக்கினுள்ளார் 656அழைத்தலென்றுஞ் சொல்லுப. அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாந் தொடர்ந்துகிடந்த ஓசை அகவ லெனப்படும். அவை தச்சுவினைமாக்கள் கண்ணும், 657களம் பாடும் வினைஞர் கண்ணும், கட்டுங்கழங்கு மிட்டு உரைப்பார் கண்ணும், தம்மில் 658உறழ்ந் துரைப்பார் கண்ணும், 659பூசலிசைப் பார் கண்ணுங் கேட்கப்படும். கழங்கிட் டுரைப்பார் அங்ஙனமே வழக்கினுள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா வெனப்படு மென்றவாறு. (81) (இன்னவோசை வெண்பாவெனல்) 394. அஃதான் றென்ப வெண்பா யாப்பே. இது, வெண்பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற் கூறிய அகவலோசையன்றிச் செப்பிக் கூறும் ஓசை யெல்லாம் வெண்பா வெனப்படும் என்றவாறு. யாப்பென்றதனான் அப்பாக்கள் செய்யுண்முழுதும் ஒருங்கு தழீஇக் கிடக்குமென்பது கொள்க. அகவிக் கூறாது ஒருவற் கொருவன் இயல்புவகை யானே ஒரு பொருண்மை கட்டுரைக்குங் கால் எழும் ஓசை செப்பலோசை யெனப்படும். இவ்விரண்டு மல்லது வழக்கினுள் இன்மையான் அஃதான் றெனவே 660அதனிலக்கணம் 661போல்வதாயிற்று. (82) (இன்னவோசை கலிப்பாவெனல்) 395. துள்ள லோசை கலியென மொழிப. இனித், துள்ளலுந் தூங்கலும் செய்யுட்கணன்றி, வழக்கி னுஞ் செய்யுளினும் ஒப்பவருவனவல்ல; அவற்றுள், துள்ள லோசை உணர்த்துகின்றது. இ-ள்: துள்ளல் ஓசை என்பது, வழக்கியலான் சொல்லாது 662முரற்கைப் படுமாற்றான் துள்ளச் சொல்லும் ஓசை; அது கலிப்பா எனப்படும் என்றவாறு. (83) (இன்னவோசை வஞ்சிப்பாவெனல்) 396. தூங்க லோசை வஞ்சி யாகும் இது தூங்கல் ஓசை உணர்த்துதல் நுதலிற்று இ-ள்: அடியிற்றூங்காது சீர்தொறுந் தூங்குமோசை தூங்கலோசை யெனப்படும். அது 663போலும் வஞ்சிப்பா வாவது என்றவாறு. (84) (மருட்பா இவ்வாறு வருமெனல்) 397. மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே. இது, மருட்பாவிற்கு வேறுபாடு இல்லை என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மருட்பாவிற்கு உறுப்பாவது ஒழிந்த இரு கூறு மல்லது, தானாக வேறுபடுத்து இதுவெனக் காட்டுந் தனிநிலை யின்று என்றவாறு. எனவே, இரண்டன் கூட்டத்துக்கண்ணது மருட்பாவாவ தென்றவாறு. பரிபாடற்கு 664இருசார் இன்மையின் ஈண்டுக் கூறிற்றிலர்; அது மேற்கூறுப. ஏனை இருசார் என்ற தென்னை யெனின், இச்சூத்திரத்து முன்னர் அதிகாரப்பட்டு நின்ற துள்ள லோசையுந் தூங்கலோசையு 665மல்லது, அங்ஙனஞ் செய்யுட்கு உரியவன்றி வழக்கிற்கும் வருவனவாகி ஒழிந்துநின்ற செப்பலும் அகவலுமேயென்றற்கு 666அவ்வாறு கூறினானென்பது. அவை இரண்டுங் கொள்ளுங்கால் நிறுத்தமுறையாற் கொள்ளாது, எதிர்சென்று கொள்ளப்படும். கொள்ளவே, செப்பல் முன்னாகவும் அகவல் பின்னாகவும் வருவதாயிற்று மருட்பா. இனி நிறுத்த முறையானே கொள்வார், வெண்பா முதல் அகவல் பின்னாக வருவது மருட்பாவன்றெனவும், வெண்பா வொழித்து ஒழிந்த பாத் தம்முள் மயங்குவனவே மருட்பா வெனவுங் கூறுப. கலிப்பாவும் வஞ்சிப்பாவும் 667ஆசிரியத்தொடும் வெண்பா வொடும் மயங்கியிறினும் அவை மருட்பாவெனப்படாமையின் அது பிழைக்கு மென்பது. (85) (அப் பாக்களானேயே பாட்டு வருமெனல்) 398. அவ்விய லல்லது பாட்டாங்குக் கிளவார். இது, மேலவற்றிற்கு ஒரு வரையறை கூறுகின்றது. இ-ள்: மேற்கூறிய நான்குபா விலக்கணத்தானல்லது பாட்டின்கண் வேறுபாக் கூறப்படாது என்றவாறு. இது கூறிப் பயந்த தென்னையெனின், மேற்கூறிய பாக் களாற் பெயர் கூறாத செய்யுள்களும் 668அவை பாவாக வரினல்லது வேறு தமக்குப் பாவில வென்பதூஉம், மருட்பா வேளை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்று (397) எனவே அவ்விரண்டன் கூட்டத்தின்கண்ணும் வேறொரு பாப் பிறக்கு மென்று கொள்ளினுங் கொள்ளற்கவென்பதூஉம், பிற்காலத்து நூல் செய்யும் ஆசிரியர் பிறவகையாற் பாவுறுப் பினை மயக்கம்பட வேண்டுவா ருளராயின் அவரை விலக்கியுங் கூறியவாறு. அல்லதூஉம், மாணாக்கன் இதன் 669முதனூல்செய்த ஆசிரியன் பண்ணுந் திறனும் பகுத்தானைக் கண்டு இவற்றையும் பாவும் இனமுமாகப் பகுத்தான்கொலென்று ஐயுறாமை விலக்கி, 670இயனூலுள் அவ்வாறு கூறிற்றிலனெனச் சொல்லினா னென்பது. நான்கு பாவினையும் நோக்கி ஆங்கென்றான்; 671ஐந்து செய்யுளை நோக்கி அவ்வியலென்றானென்பது. (86) (தூக்காவது இதுவெனலும் அது நடக்குமிடம் இவைஎனலும்) 399. தூக்கியல் வகையே யாங்கென மொழிப. இது, தூக்காமா றுணர்த்துகின்றது. இ-ள்: தூக்கெனப்பட்ட உறுப்பு நடக்கும் இடவகை அச் சொல்லப்பட்ட நான்கிடமுமாம் என்றவாறு. ஆங்கென்றது அப்பெற்றித்து என்றவாறாகக் கொள்ளற்க. அவ்விடம் தூக்கு இயலும் இடப்பகுதியென்றவாறு; என்றார்க் குத் தூக்கினது இலக்கணம் ஈண்டுக் கூறியதிலனா லெனின், தூக் கென்பது சொல்லின் முடியு மிலக்கணத் 672திற்றது. தூக்கென் பது நிறுத்தலும் அறுத்தலும் 673பாடலு மென்று இன்னோ ரன்னவற்றுமேல் நிற்கும்; ஈண்டும் அவ்வாறே பாவினை இத் துணையடியென நிறுத்திக் 674கூறுபாடறிதலும், அவ்வத்தூக் குள் வழிச் சொல்லுவாரது உறுப்பு விகாரப்பட்டு 675ஓதுவது போன்று அசையுமாறுங் கண்டுகொள்க. இனி, அதுதான் இன்ன பொருளை அறுத்து நிற்கு மென்பான் பாக்கூறி, அப்பாவின் கண்ணது 676இவ்வறுதி யென்றான்; எனவே, இனிக் கூறாது நின்றதில்லை தூக்கிற்கு வேண்டும் இலக்கணமென்பது. இக்கருத்தினானே தூக்கினைப் பாவெனினும் அமையும். பாவென மொழியினுந் தூக்கினது பெயரே எனப் பிறருஞ் சொல்லுப. அகவலோசைக்கண் தூக்கு வருங்கால் இருசீர் முதலா எண் சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க் கண்ணே துணித்துக் கொள்ள, அஃது ஆசிரியத்தூக்கா மென்ற வாறு. இரு சீரான் துணிப்ப ஆசிரியவோசை யாகாது; முச் சீரான் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தா மெனவும், இடையும் வரையாரெனவுங் கூறினமை யின். அஃதேல், அடிவகையானே அறுதி யுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யும் எனின், அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்த லாகாது; என்னை? இருசீர் முதலாப் பலசீர் தொடர்ந்த வழித் 677தூக்கு அறுப்புக் கொண்டன்றி இத்துணைச்சீர் கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூ உம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்து பாச் சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க; அல்லாக்கால், உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் (ஐங்குறு.) என்றவழி, உள்ளார் முள்ளுடை என்பன அடியெதுகையாக முச் சீரடியும் ஐஞ்சீரடியுமெனக் கொண்டு மயக்கமாமென்பது. நரந்த நாறுந் தன்கையாற் 678புலவுநாறு மென்றலை தைவரு மன்னே (புறம். 235) என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது. தூங்கலோசை அவைபோல நாற்சீரடிக்கணன்றி இருசீர்க் கண்ணுஞ் சிறுபான்மை முச்சீர்க்கண்ணுந் தூக்குக் கொள்ளப் படும். அங்ஙனங் கொள்ளாக்கால் இருசீரெனவும் முச்சீரெனவுந் தூக்கின்றி 679இடை தெரியப்படா வென்பது. (87) (தொடைவகை இவை எனல்) 400. மோனை யெதுகை முரணே யியைபென நானெறி மரபின தொடைவகை யென்ப. இது, மரபே தூக்கே தொடைவகை எனாஅ (313) என நிறுத்தமுறையானே, தூக்குணர்த்தித் தொடைவகை உணர்த்துவா னெழுந்தான். அவைதாம் இவையெனப் பெயரும் முறையுந் தொகையு முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மோனைத்தொடையும் எதுகைத்தொடையும் முரண் டொடையும் இயைபுத்தொடையுமென நான்கு வகைப்படும் தொடை என்றவாறு. நெறிமரபு என்பது நெறிப்பட்ட தொடையிலக்கணம் இது வென்றவாறு; எனவே, அளபெடை தலைப்பெய வைந்து மாகும் (401) என்றவழி, இதுபோலச் சிறந்ததன்று அளபெடைத்தொடை என்பதாம்; என்னை? அதுவும் வழுவமைத்துக்கொண்ட எழுத்தாகலானென்பது. தொடைவகையென்பது தொடைப் பகுதி பலவுமென்றவாறு. அவை மேற்கூறுமாற்றான் மோனை நான்கும், எதுகை பதினைந்தும், முரண் ஐந்தும், இயைபு இரண்டு மென்று இவ்வகைப்படுதலும், இனி ஈண்டு எண்ணப் பட்ட தொடைப்பகுதிகளும் அறுநூற்றிருபத் தைந்தடியினை யும் ஒரோவொன்றாகத் தம்மொடு தம்மைத் தொடுப்பனவும், அவை 680தம்மொடு பிற வந்து தொடுப்பனவும், 681ஓரடிக் கண்ணே தொடுப்பனவும், அவற்றைக் கட்டளையடி யல்லனவற்றும் 682ஈறாய் விராய்த் தொடுப்பனவும், கட்டளை யடி யல்லனவற்றைத் தம்மொடு தம்மைத் தொடுப்பனவும், தம்மொடு 683பிறவற்றைத் தொடுப்பனவு மென இன்னோரன்ன பலவுமுள. அப்பகுதி யெல்லாம் அறிவித்தற்குத் தொடைவகை யென்றானென்பது. (88) (அளபெடையோடு தொடை யைந்துவகை எனல்) 401. அளபெடை தலைப்பெய வைந்து மாகும். இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி. இ-ள்: அந்நான்கேயன்றித் தொடைவகை ஐந்தெனவும் படும். அளபெடைத்தொடையொடு தலைப்பெய்ய என்றவாறு. அளபெடை எழுத்தோத்தினுள் 684வேறு எழுத்தெனப் படாமைச் சிறப்பின்மைநோக்கி, ஈண்டுமதனை வேறு போதந்து கூறினானென்பது. என்றார்க்கு, மேலைச் சூத்திரத்து நானெறி மரபினவெனத் தொகை கூறினமையின், ஈண்டு அளபெடையுந் தொடையாமென அமையும்; நான்கின்மேல் ஒன்றேறியக்கால் ஐந்தாமென்பது ஈண்டுச் சொல்ல வேண்டுவதன்று பிற வெனின், அற்றன்று; நான்கினோடு ஒன்றனையே சொல்லுகின்றானாயின் அது கடாவாவது; ஐந்தெனவும் ஆறெனவும் படுமென்றதற்கு இது கூறினான்; உயிரளபெடையும் ஒற்றள பெடையுமென அள பெடை இரண்டாதலி னென்பது, அஃதே கருத்தாயின், ஆறு மாகு 685மென்னு மெனின், அங்ஙனங் கூறின் உயிரளபெடை யோடு ஒத்த சிறப்பிற் றாவான் செல்லும் ஒற்றளபெடையென மறுக்க. உயிரின்பின்னது ஒற்றாகலான் எடுத்தோத்துப் பெறுவது உயிரளபெடை யெனவும், உம்மையாற் பெறுவது ஒற்றளபெடை யெனவுங் கொள்க. 686உம்மை எச்சவும்மை. ஒற்றளபெடை மூன்று பாவினுஞ் செல்லாது, கலிப்பாவினுள் துள்ளலோசை யான் 687நில்லாமையினென்பது. (89) (வேறுந் தொடையுள எனல்) 402. பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபு மமைத்தனர் தெரியி னவையுமா ருளவே. இதுவுமது. இ-ள்: மேற்கூறிய ஐந்துமேயன்றிப் பொழிப்புத் தொடை யும், ஒரூஉத்தொடையும், செந்தொடையுமென இவையுமுள என்றவாறு. செந்தொடை மரபென்பது செந்தொடை யிலக்கணம் என்றவாறு. அமைத்தனர் தெரியின் என்றதனான் அமையுமாற்றான் அமைத்துக் கொள்ளப்படும். யாங்ஙனம்? பொழிப்பும் ஒரூஉவும் ஓரடி யுள்ளே வருமெனவும், செந்தொடை ஓரடியுள் வரினும் இரண்டடி யானன்றி அறிய வாராதெனவுங் கொள்க. இக்கருத்து நோக்கி இவை ஈண்டுப் போதந்து கூறினானென்பது. அவையுமா ருளவே யென்ற உம்மையான், 688இவை போல ஓரடிக்கண்ணேவரும் முற்றெதுகையும், கிளைமுற்றெது கையும் 689இரண்டந்தாதியும் இருவகை விட்டிசைத்தொடையுங் கொள்ளப்படும். (90) (இவையுந் தொடையுள எனலும் இவை முற்கூறிய தொடைகளுள் அடங்கு மெனலும்) 403. நிரனிறுத் தமைத்தலு மிரட்டை யாப்பு மொழிந்தவற் றியலான் முற்று மென்ப. இது, நிரனிறைத் தொடையும் இரட்டைத்தொடையு மென இரண்டு தொடை கூறி, அவை முற்கூறிய தொடைப்பாற் படு மென்று அடங்கக் கூறுகின்றது. இ-ள்: நிரனிறைப் பொருள்வகையான் தொடுக்குந் தொடையும், வந்த சீரே நாற்கால் தொடுக்குந் தொடையும் முன்னைத் தொடைப் பாற்பட்டு அடங்கும். என்றவாறு. யாத்த வெனினும் தொடுத்த வெனினும் ஒன்று. அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே யுடலு மிரிந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந் தடமதிய மாமென்று தாம். என்றவழி 690உடலுங் கடலுமென நிரனிறைத்தொடைமேற் கூறுமாற்றான் எதுகைத் தொடையாய் அடங்கும். பரவை மாக்கடற் றொகுதிரை 691பரவும் பண்டைச் செய்தி யின்றிவள் வரவும் என இவ்வாறு நிரனிறுத்தலும் ஒன்று; அஃது இயைபின் பாற்படு மென்ப. ஒழிந்தனவும் அன்ன. இரட்டைத்தொடை யென்பது ஒரு சொல்லே நான்கு சீருமாகி வருமென்பது. அஃது, ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும். (யா. வி. ப.180.) என வரும். இது குறையீற்றிரட்டை; இயைபுத்தொடையாய் அடங்கும். பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ பாவீற் றிருந்த புலவிர்காள் பாடுகோ (யா. வி. ப.121.) என்பது நிறையீற்றிரட்டை; இதுவும் இயைபாய் அடங்கிற்று. 692செந்தொடையாய் அடங்குவன உளவேற் கண்டு கொள்க. மற்று இவை இவ்வாறு அடங்குவனவற்றை விதந்தோது வது என்னையெனின், - இவையுந் 693தொடைப்பாடு கண்டு ஐயுற்றானை ஐயமறுத்தா னென்பது. எனவே, 694ஒழிந்த பொருள் கோள் தாமே நின்று தொடைப்பாடு காட்டி ஐயஞ் செய்யாமை யின் அவை கூறானாயினா னென்பது. நிரனிறை யாயின் 695இனைத்தென் றெண்ணி நிறுத்த பொருட்கேற்ப எதிர் பொருளும் எண்ணி நிறுத்துச் செய்யப்படுதலின், அது வேறு தொடையாங் கொ லென்று ஐயஞ்செல்லுமென்பது. மொழிந்தவற் றியலான் எனவே, தனக்கு 696வேறியல் பில்லாத செந்தொடை நீக்கப்பட்டது. பொழிப்பும் ஒரூஉவும் போல ஓரடியுள் நின்றுந் தொடைமை செய்யினும் அவை முற்றாய் அடங்கும். ஈரடிக் கூட்டத்துத் 697தத்தம் வகையான் தொடைமை செய்யாவென்பது. (91) (மோனைத்தொடை இதுவெனல்) 404. அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை. இது, நிறுத்த முறையானே மோனைத்தொடையாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அடிதொறும் முதற்கண் ஓரெழுத்தே வரத் தொடுப்பது மோனைத்தொடையாம் என்றவாறு. கண்டற் கானற் குருகின மொலிப்பத் .............................................................................. கரையா டலவ னளைவயிற் செறிய (அகம். 260) என்பது அடிதொறும் முதலெழுத்தொன்றி மோனைத்தொடை வந்தவாறு. கோதை மார்பிற் கோதை யானுங் கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும் (புறம். 48) என்பதும் அது. இனிவருந் தொடையும் இதுவுமெல்லாம் அறுநூற்றிருபத் தைந்தடிக்கு உரியவாகியும், 698பிறவடிக்கு உரியவாகியும், வஞ்சி யடிக் குரியவாகியும், குறளடி சிந்தடி நெடிலடி கழிநெடிலடி யெனும் நால்வகை யடிக்கும் உரியவாகியும் வருமெனக் கொள்க. 699அற்றன்று, அறுநூற்றிருபத்தைந் தடிக்கும் மோனைத் தொடை ஒன்றொன்றாகச் சென்று பெருகி அறுநூற்றிருபத் தைந்து தொடையா மென்பது. மற்று அடியிரண்டியைந்த வழியன்றே தொடையாவது? இவை அறுநூற்றிருபத்தைந்து தொடையாங் கால் 700இஃது ஓரடிக்கண்ணே வரல்வேண்டும்; வேண்டவே, அடிதொறுந் தலையெழுத்தொப்பது மோனை யென்றதனொடு மாறுகொள்ளும் பிறவெனின், இது நோக்கி யன்றே, அடியுள் ளனவே, தளையொடு தொடையே (தொ. செ. 33) எனக் கூறி, அடியிறந்து வருதலில் (தொ. செ. 34) என்பானாயிற்று. எனவே, அறுநூற்றிருபத்தைந்தடியுள் ஒன்றனை யே இரட்டித்துத் தொடைகொள்கவென்பது பெற்றாமன்றே, ஈண்டு 701அடிதொறுமெனப் பன்மைகூறவே, அவற்றையே இரட்டித்தலும் பிற அடிவந்து தொடுத்தலும் எல்லாம் அடங்கக் கூறினான் ஈண்டென்பது. மெய்பெறு மரபிற் றொடைவகை (தொ. செ. 101) என மேல் வரையறுக்கப்படுந் தொகை பதின்மூவாயிரத்தெழு நூற்றெட்ட னுள்ளும், மோனைத்தொடை வருங்கான் 702மூன்று பாவிற்கும் ஓதிய எழுபத்தெட்டுச் சீரினும் வரப்பெறும்; அவ்வாறு வருங்கால், அடியுள் ளனவே தளையொடு தொடையே (தொ. செ. 33) என்ற தளையிலக்கணமும், அடியிறந்து வருதலில் (தொ. செ. 34) எனப்படுமாகலான், அவ்வடி இரண்டன் கூட்டத்துத் தளை வழுக் களையல் வேண்டும். களையுங்கால் ஆசிரியத்து நாற்பத் தொன்றும், வெள்ளை யடியுட் பதினெட்டும் ஆக ஐம்பத் தொன்பது நிலங் களையப்படும். கலிப்பாவிற்கு அவ்வாறு களைய வேண்டுவ தில்லையென்பது. ஆசிரியத்து நாற்பத்தொரு நிலமாவன: தனக்கு ஓதிய இருபத்தேழு சீரும் பதினான்கு நேராதியும் பதின்மூன்று நிரையாதியு மாதலான், அவற்றுள் 703நேராதி பதினான்கும் ஒரோவொன்று பன்னிரண்டடி உறழுங்காற் பெருகிய நிலத்தின் இவ்விரண்டடியாக இருபத்தெட்டடியும், இனி நிரையாதி பதின்மூன்றற்குஞ் சுருங்கிய நிலத்தின் ஒரோ வொன்றாகப் பதின்மூன்றடியுமென நாற்பத்தோரடியுந் தம்மொடு தாம் வந் திரட்டிக்குங் கால்தளை வழுப்படுதலின், அவை தொடுக்கப் படா வென்பது. இனி, வெண்பாவடி உறழுஞ் சீர் இருபத்தேழனுள்ளும் 704நேராதிச்சீர் பதினான்குஞ் சுருங்கிய நிலத்துள் ஓரொன்றாகப் பதினான்கடியும், நிரையாதிச்சீர் பதின்மூன்றனுள் ஒன்ப தொழித்து ஒழிந்த நான்கு சீரும் நின்றுறழ்ந்த அடியுட் பதினான் கெழுத்தடி 705பெருகிய நிலத்துள் நான்குமாகப் பதினெட்டடியுந் தம்மொடு தம்மை இரட்டித்துத் தொடுப்பத் தளை வழுவுமாகலிற் களையப்படுமென்பது. நிரையாதிச்சீர் நான்குமாவன: வரகு, வலியது, கடியாறு, விறகுதீ என்பன. ஒழிந்த நிரையாதி ஒன்பது சீரும் நின்று உறழ்ந்த அடி எஞ்ஞான்றுங் களையப்படாது தொடைப்படுமென்பது. அவை ஒன்பதுமாவன: அரவு, புளிமா, கணவிரி, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, நரையுருமு, 706புலிவருவாய், குலிறுபுலி எனவிவை. 707வரகு, நிரையுருமு, காருருமு, பாதிரி எனவும், வலியது, கடியாறு, காருருமு, பாதிரி எனவும், கடியாறு, தேமா, நரையுருமு, காருருமு எனவும், விறகுதீ தேமா, புலிவருவாய், காருருமு எனவும். இப்பதினான்கெழுத்தடி நான்குந் தொடுக்குமாறில்லை. ஒழிந்த நேராதியும் இவ்வாறே சுருங்கின நிலத்து உறழ்ந்த வடி தொடுக்கு மாறில்லை யென்பதூஉங் கண்டுகொள்க. இனிக், களையப்படாத நிரைமுதற்சீர் ஒன்பானுள்ளுஞ் சுருங்கிய எழுத்துச்சீர் 708ஒன்பது. பெருகிய எழுத்துச்சீர் நரையுருமு, புலிவருவா யென்பன. அரவு, வரகு. வரகு, வரகு எனவும், அரவு, புலிவருவாய், காருருமு, தேமா எனவும் இவை முதலும் முடிவுங்காட்டிய அடிக்கண் அவை தம்மொடு தம்மைத் தொடுக்கப்படுதலிற் களையுநில மிலவாயின. நரையுருமு, வண்டு, வரகு, வரகு எனவும், நரையுருமு, காருருமு, பாதிரி, தேமா எனவும் ஐயெழுத்துச்சீர் முதலும் முடிவுங் காட்டிய அடி களையப்படாது தொடைப்படு மென்பது. புலிவருவாய்க்கும் இஃதொக்கும். ஒழிந்தனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. இவ்வாற்றான் 709அறுநூற்றிருபத்தைந்தடியுள் ஐம்பத் தொன்பது நிலங் களைந்து ஒழிந்த அடி ஐஞ்ஞூற்றறுபத்தா றானும் பெற்ற மோனைத் தொடை ஐஞ்ஞூற்றறுபத்தாறெனப் படும். இவ்வாறே தலையாகெதுகை, அடியெதுகை, எழுத்தடி யியைபு, சொல்லடியியைபு என்னும் நான்கு தொடைக்குங் களைவன களைந்து தொகை கூட்டிக்கொள்க. இவற்றுள், ஆசிரியப்பாவினுள்வரும் அடிமோனைத் தொடை இருநூற்றெண்பத்துமூன்றும், வெண்டொடை நூற்றறுபத்து மூன்றும், கலிப்பாவிற்குரிய தொடை நூற்றிருபது மாகி மூன்று பாவிற்குந் தொகுப்பத் தொடை ஐஞ்ஞூற்றறு பத்தாறாம். ஒழிந்த நான்கற்கும் இவ்வாறே கொள்க. கொள்ளவே, இத்தொடை ஐந்தனானும் பெற்ற தொடை இரண்டாயிரத் தெண்ணூற்று முப்பதாம், இவற்றுள் அகவற் றொடை ஆயிரத்து நானூற் றொருபத்தைந்து; வெண்டொடை எண்ணூற்றொருபத் தைந்து; கலித் தொடை அறுநூறெனக் கொள்க. அடியெதுகை மோனை தலையா கெதுகை 710யடியியைபு தாமிரண்டென் றைந்துங்-கடியப் படுநில மைம்பது மொன்பது மென்ப வெழுபத்தெண் சீரடிக்கு மேற்று எனவும், 711ஓழிந்த நிலத்து நிரைபதின்மூன் றொல்லா தொழிந்த வுயர்ந்துழி யொன்றாக் - கழிந்த நிரையொன்றாய் நேரிரண்டாய் நாற்பத்தொன் றாகு மவையகவற் காகா தன எனவும், 712வரகு வலியது வான்கடி யாறு விறகுதீ வெள்ளைக்கு மேனிலத்து ளொன்றா 713வழிவழி நேர்முதற்சீ ரேழிரண்டு மாக வவையைம்பத் தொன்பா னகற்று. எனவும், 714ஐம்பத்தொன் பானன்றி யைஞ்ஞூற் றறுபத்தா றொன்றற் குரியவா றொட்டு எனவும், 715ஐந்து தொடையா னகவற் றொடையிருநூற் றெண்பத்து மூன்றா மெனமொழிப வொன்றொன்றொ வெள்ளைத் தொடைநூற் றறுபத்து மூன்றாகுந் துள்ளற்கு நூற்றிருப தாம் எனவும், 716சொல்லி னவைதன் றொடையிரண் டாயிரத் தெண்ணூற்று முப்பஃ தெனல் எனவும், இவ்வாறே விரித்துரைத்துக்கொள்க. (92) (எதுகைத்தொடை இதுவெனல்) 405. அஃதொழித் தொன்றி னெதுகை யாகும். இஃது, இரண்டாமெண்ணு முறைமைக்கணின்ற எதுகைத் தொடையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இரண்டடியினும் முதனின்ற சீர் முதலெழுத்திரண் டும் ஒழிய அல்லனவெல்லாம் ஒன்றிவருதலும் ஒரோவெ ழுத்தே ஒன்றிவருதலுமென இங்ஙனங் கூறியவற்றுள், 717அஃ தொழித்து அச்சீர் முழுதொன்றின் தலையா கெதுகை யென்றும், இரண்டா மெழுத்தொன்றின் அடியாகெதுகை யென்றும் வழங்கப்படும். அயலெழுத்தொன்றினென்னாது 718முதலெழுத் தினைச் சுட்டிக் கூறுதலென்னையெனின், இவ்வாறு எதுகையாங்கால் முதலெ ழுத்துக்களின் மாத்திரை தம்மின் 719ஒத்துவரல் வேண்டுமென் றற்குக் கூறினானென்பது. உதாரணம்: மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். அகத். 5.) என்பது தலையாகெதுகை. அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி (பெரும்பாண். 12.) என்பது அடியெதுகை. இதனை இடையாகெதுகை யெனவும் அமையும். ஒழிந்தன கடையாகெதுகை யெனப்படும். பிறவும் அன்ன. அஃதேல், தலையாகெதுகை யென்றதுபோலத் தலையாகு மோனை யுங் கொள்ளாமோவெனின், அற்றன்று; ஆசிரியன், அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை (404) என்றானாகலின், அடிமோனையே கொண்டாமென்பது. என்றார்க்கு, வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார் (நாலடி. 39.) என்றவழி, அடிதோறும் ஒருசொல்லே வந்து தொடையாயிற் றன்றோ வெனின், அஃது இரண்டடிக்கண்ணே வந்ததன்று, செய்யுண்முழுவதும் பயின்றுவந்து சுவைமைப்படாதாகலின் வழி மோனைப்பாற் பட்டடங்கும் என்க. இச்சூத்திரத்துக் காட்டப் பட்ட 720தொடை இரண்டும் மூன்று பாவிற்கும் ஓதிய அறுநூற்றிருபத்தைந்து அடியோடுங் கூட்டுத்தொகை சொல்லு மாறு மேலைச்சூத்திரத் துரைக்கப்பட்டது. (93) (மோனைஎதுகைத்தொடைகளுக்குக் கிளை எழுத்துக்களும் உரியவாமெனல்) 406. ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. இது, மேற்கூறிய தொடைப்பாற்பட்டு வருவன வேறுபல தொடை கண்டு அவை கூறுகின்றது. இ-ள்: ஆயிரு தொடையென்பன மோனையும் எதுகையும்; இவை இரண்டற்கும் கிளையெழுத்துக்களும் ஒன்றிவரப் பெறும் என்றவாறு. இதன்கருத்து: அங்ஙனங் கிளையாகி வந்த வேறு பாட்டான் எல்லாத்தொடையும் வேறு பலவாமென்றவாறு. கிளையெழுத் தென்பன வருக்கமும் நெடிலும் 721அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் உயிருமெனவிவை. இவையெல்லாம் ஒரோகிளைமை யுடைமையிற் கிளையெனப் பட்டன. இனி, ஆசெதுகையும் மூன்றாமெழுத்தொன்றெதுகையும், அடியெதுகைக் குரித்தாகிய 722இரண்டாமெழுத்தின் முன்னும் பின்னுந் தொடர்ந்துநிற்றலின், அவையுங் கிளை யெனினும் அமையும்; அற்றன்று; அடிமோனையுந் தலையாகெதுகையும் அடியெதுகையும் வந்து நுந்தை யென்னுஞ் சீர்க்கண் 723மூன்றா மெழுத்தொன்றிவருதல், மெய்பெறு மரபிற் றொடை (தொ. செ. 101) எனப்படாமையின், ஆண்டு அது கிளையாகாது; மெய்த்தல் ஒத்த லென்ற வழியன்றி, ஈதல் காய்த லென்றவழி நெடின் மோனையாய்த் திரிபுபடுதலின் ஆசிடையெதுகையுங் கிளை யாகாது. உரிய வென்றதனானே 724இவை அத்துணை யுரிய வலவா மெனக் கொள்க. மற்று 725நுந்தை நுந்தை யென்றவழி, ஆண்டு முதனின்ற மோனை சிறந்ததென்னாமோவெனின், என்னாமன்றே, 726இரண்டாய 727ஈரெழுத்துத் தேமாவாகவே பெரும்பான்மை யாகலின். இதனானே, இது தலையாகுமோனை யெனத் தலைமை கூறப் படாததூஉமாயிற்று; என்னை? தொடை யென்பன பூத்தொடை போலச் செய்யுட்குப் பொலிவு செய்ய வேண்டுமாகலின். இக்கருத்தினானன்றே சொல்லடி யியை பினைத் தலையாகியைபெனத் தலைமை கூறாராயிற் றென்பது. அடியெதுகையாயின் தலையாகெதுகை போலச் சிறந்துகாட்டு மென்பது. செந்தொடையுஞ் செய்யுட் பொலிவு செய்யுங்காற் 728கொன்றையுங் கடம்பும்போல நின்றவாறே நின்று தொடைப் பொலிவு செய்யுமென்பதாம். 729அனுவுங் கிளையெனப் படுமோவெனின், அதுவுங் கிளைமை பற்றியல்லது அனுவாகா தென்றற்கு இவற்றொடுங் கூறினா மென்பது. ஈண்டு ஓதிய கிளை உயிரும் ஒற்றுமென இரண்டாகலின் அவ்விரு வாற்றானுங் கிளைமை பற்றி அனுக்கொள்ளப்படும். என்னை? அஆ வாயிரண் டங்காந் தியலும் (தொ. எழு. பிற. 3) என அகர ஆகாரங் கிளையாயின. ஐகார ஔகாரம் போலி வகை யான் 730அவையெனப்படும். இ ஈ எ ஏ என்பனவும் உ ஊ ஒ ஓ என்பனவும் உடன் பிறப்பினவாகலான் அவையுங் கிளை யெனப்படும். ஒற்றுக்கிளை யென்பன தம்முன்னர்த் தாம் வருதலும் பிற வருதலுமென இரண்டு. அவற்றுள் தம்முன்னர்த் தாம் வருங்கால் வந்த உயிரே வாரா. அவ் 731அனுவிற்கு ஓதிய உயிரே வேறுபடவரு மென்பது. இனி, ஓரடிக்கண்ணாயின் ஐஞ் சீரானும் அறுசீரானும் வந்தவழியினும் அனுவெனப்படு மென் பது. இனித் தம் முன்னாகப் 732பிற வருங்கால் வந்த உயிரே வரவும் பெறுமெனக்கொள்க. பிற வருங்கால் ஞகர நகரங்களும் மகர வகரங்களுஞ் சகர தகரங்களும் இனம் பற்றிக் கிளையா மென்பது. அவற்றுள் மகரவகரங்கள் இதழ்பற்றிப் பிறத்தலிற் கிளை யாயின. இவ்வாறே இ ஈ எ ஏ என்பனவும் யகரமும் மிடற்றுவளி யாற் பிறத்தலானும் இயல் பொப்புமையானுங் கிளையா மென் பது. ஒற்றும், உயிரும், உயிர்மெய்யும் என மூன்றுவகையாற் கிளைமை கூறி மெய்ம்மோனை உயிர்மோனை உயிர்மெய் மோனையெனவுங் கொள்ளாமோவெனின்,அவை, மெய்பெறு மரபிற் றொடைவகை (தொ. செ. 101) அன்மையிற் கொள்ளாமென்பது. அல்லதூஉம் அவை யெல்லாங் கொள்ளிற் செந்தொடை 733இழவுபடுமென மறுக்க. எதுகைக்கும் இஃதொக்கு மாறு கண்டுகொள்க. இங்ஙனம், கிளையெனக் கூறியவற்றுள், ஏற்புழிக் கோடல் (665) என்பதனான் வருக்கமென்பது மோனைக்கும் எதுகைக்கும் உரிமையான், வருக்கமோனை வருக்கவெதுகை யென்று இரு வகைப்படும். நெடிலும் அனுவும் மோனைக்குரிய; உயிரும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஆசிடை யிடுதலும் மூன்றாமெழுத்தொன்றுதலுமென்ற ஆறும் எதுகைக் கே உரியவாம். இவை பத்துத்தொடையுள்ளும் மோனை மூன்றும் வருமாறு; 734வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி (அகம். 24) என்பது வகரவருக்கம் முதற்கண் வந்தமையின் வருக்கமோனை யாயிற்று. கலக்கொண்டன கள்ளென்கோ காழ்கோத்தன சூட்டென்கோ (யா. வி. ப.346) என்பதும் அது. இவை ஒருமெய்யின் வருக்கமாகலான் வருக்க மெனப் பட்டன. அஃதேல், 735உயிர்வருக்கமும் வருக்கமெனப் படாதோ வெனின், அங்ஙனங்கொள்ளின் நெடிலும் அனுவும் விரவும் வருக்கமும் வருக்க மெனப்படுமென மறுக்க; அல்லதூ உம் 736நெடிலுங் குறிலும் ஊர்ந்த மெய்யிரண்டு இயைந்தவழித் தொடை யாகல் வேண்டுமன்றோ வென்பது. என்றார்க்கு, முதற் கண் உயிர்வந்ததனையே 737இன்னதொடை என்னுமோ வெனின், அவை அனுவாகி வருவன வழிமோனை யெனவும் அல்லாக்காற் 738செந்தொடை யெனவுங் கூறுபவென்பது. இஃது, ஓர் அடிக்கண் வரினும் ஒக்குமென்ப துய்த்துணர்க. மடவரன் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து (நெடுநல். 39, 40) என்றவழிச் செந்தொடையாவதன்றி மோனைத்தொடைப்பா டின்றென்பது. இவ்வாறே குறிலும் நெடிலும் எதுகையாகாமை யின் அவையும் வேண்டிய திலரென்பது. 739வெள்ளி வள்ளி விளங்கிறைப் பணைத்தோண் மெத்தென் சாயன் முத்துறழ் முறுவல் (நெடுநல். 36, 37) என்பது வழிமோனை. ஓங்குதிரை வியன்பரப்பி னொலிமுந்நீர் வரம்பாக (மதுரை. 1-2) என்பதும் அது. இவற்றை அனுமோனையெனினும் அமையும். 740அவை விகற்பங் கொள்ளாமோ வெனிற் கொள்ளாம்; முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப்பேர வன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப்பேரும் என்னும் அறுசீரடியினும், எழுசீரடியினும் எண்சீரடியினும் நாற்சீரடி யினும் ஒப்பவருதலானும், 741எண்சீரடியுள் ஒருநான்கு சீர் அற்றவழி ஒழிந்த நான்கனுள் முதற்கண்ணும் இடைக் கண்ணும் 742இனம் வந்தால் அவை வந்தவழியெல்லாந் தொடை யாகாமை யானுமென்பது.பிறவும் அன்ன. எதுகைக்குப் போல யினமோனை கொள்ளா, தனிமெய் மொழிக்கு முதலாகாமையி னென்பது. கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே (குறுந். 216.) என்பது, வருக்கவெதுகை. அத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி (அகம். 7) என்பது, வல்லினவெதுகை. நும்மில் புலம்பினு முள்ளுதொறு நலியுந் தண்வர லசைஇய பண்பில் வாடை (அகம். 58. ) என்பது, மெல்லினவெதுகை. மள்ளர் மள்ள மறவர் மறவ செல்வர் செல்வ செருமேம் படுந (பெரும்பாண். 455) என்பது, இடையினவெதுகை. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம் (தொ. எழு. 202) என்பதும் அது. 743இமிழ்கண் முழவி னின்சீர் வாமனைப் பயிரவன போலவந் திசைப்பவுந் தவிரான் என்பது உயிரெதுகை; இஃது ஒற்றூர்ந்த உயிர் ஒன்றினமையின் உயிரெதுகையாயிற்று. நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு மத்த நண்ணிய வங்குடிச் சீறூர் (அகம். 6) என்பது யகரவொற்றிடையிட்டு வந்த ஆசிடை யெதுகை. பிற ஒற்றிடை யிடினும், மெய்பெறு மரபிற் றொடை (தொ. செய். 101) யாவன கொள்க. 744உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற (புறம். 3) என்பது மூன்றாமெழுத்தொன்றெதுகை. இவையும், மேற்கூறப்பட்டனவும், இனிக் கூறுவனவு மெல் லாம் நான்குபாவினும் வருமாறு கண்டுகொள்க. இனி, மூன்று பாவினும் அறுநூற்றிருபத்தைந்தடியோடும் இவற்றைப் பெருக்கி உணருங்கால் 745இவை பத்துத்தொடை யானும் பெற்ற தொடை மூவாயிரத்தெண்ணூற்றறுபத்தேழு. இவற்றுள், வருக்க மோனையும், வழிமோனையும், உயி ரெதுகையு மென இவை மூன்றும் நுந்தை யென்னுஞ் சீர்க்கு ஏலாமையின் அச்சீர் முதற்பா இரண்டினும் உறழ்ந்த அடி இருபதும் ஒழித்து, ஒழிந்த சீர் எல்லாவற்றானு முறழ்ந்த அடி அறுநூற்றைந்தனுள் ஐம்பத்தாறு நிலங் களைய ஒரோ வொன்றற்குப் பெற்ற தொடை ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதாம். இவ்விலக்கணமெல்லாம் இனிக் கூறும் முரணைந்தற்கும் ஒக்கும். அவற்றை அகவற்றொடை இருநூற்றெழுபத்து மூன்றென வும், வெண்டொடை நூற்றைம்பத்தாறெனவும், கலியிற் களைவன இன்மையின் அவை நூற்றிருபஃதெனவும் பகுத்துக் காணப்படும். இம்மூன்று தொடையும், முரண் ஐந்துந் தொகுப்பப் பெற்ற தொடை நாலாயிரத்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு. இவை பிற அடிக்கண் வருங்கால் அவ்வரையறையாற் பயிலாவென உணர்க. பிறவும் அன்ன. 746வழிவருக்க மோனை யுயிர்முரணைந் தெட்டு மொழிகின்ற நுந்தை யொழிய - வழுநில மைம்பதின்மே லாறகற்ற வைஞ்ஞூற்று நாற்பதின்மே லொன்பதென் றோதப் படும் எனவும், இருநூற் றெழுபத்து மூன்றகவல் வெள்ளைக் கொருநூற்றைம் பத்தா றுரிய - வொருநூற் றிருபதாந் துள்ளற் கெனல் எனவும், நாலா யிரத்துமுந் நூற்றுத்தொண் ணூற்றிரண்டி- 747னாலீ ரிடத்து நவிற்று எனவும், 748பதின்மூன்று பாற்றொடை யேழா யிரத்தோ டிருநூற் றிருபத் திரண்டு எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க. இனி, மூன்றாமெழுத்தொன்றெதுகைக்கு, வண்டு, மின்னு, நுந்தை, சேற்றுக்கால், நீடுகொடி என்னும் ஐந்துசீரானும் உறழ்ந்த அடி அறுபஃதொழித்து, ஒழிந்தசீர் இருபத்திரண்டானும் பெற்ற அடி இருநூற்றறுபத்து நான்கனுள்ளும், ஒன்பது நேர்முதற்சீராற் பதினெட்டும், பதின் மூன்று நிரைமுதற்சீராற் பதின்மூன்றுமாக முப்பத்தொரு நிலங் களைந்து கொள்ளப்பெற்ற ஆசிரியத்தொடை இருநூற்று முப்பத்துமூன்று. இனி, வெண்பாவினுள் நீடுகொடி வாராமையின், 1 வண்டு, 2 மின்னு, 3 நுந்தை, 4 சேற்றுக்கால் என்னும் நான்கு சீரும் உறழ்ந்த அடி முப்பத்தொன்றொழித்து, ஒழிந்த சீர் இருபத்து மூன்றானும் பெற்ற அடி நூற்றைம்பதாகலின், அவற்றுள்ளும் நேர்முதற்சீர்பத்தும், வரகு, வலியது, கடியாறு, விறகுதீ என்னும் நான்கும் ஆகப் பதினான்கு சீரானும், பதினாலு நிலங் களைந்து பெற்ற வெண்டொடை நூற்று முப்பத்தாறாம். இவ்வாற்றான் இரண்டு பாவிற்குங் களையும் நிலம் நாற்பத்தைந்து. கலிப்பாவினுள்ளுஞ் சேற்றுக்கால் நீடுகொடி என்னும் இரண்டும், மூன்றாமெழுத்தெதுகைக்கு ஏலாமையின், ஒழிந்தசீர் இருபத்திரண்ட னானும் பெற்ற தொடை நூற்றொருபதாம். இவ்வாற்றான் இவை மூன்றுபாவின் தொடையுந் தொகுப்ப நானூற்றெழுபத்தொன்பதாம். இம் மூன்றாமெழுத்து ஒன்றுங் கால் இரண்டாமெழுத்து ஒன்றாது வரல்வேண்டும், அல்லாக்கால் தலையா கெதுகையா மாகலினென்பது. 749வண்டுமின்னி ரண்டுநுந்தை சேற்றுக்கா னீடுகொடி யென்றிரண்டு மூன்றா மெழுத்தியையா - நின்ற வறுபத்தேழ் சீரா னடித்தொடை நானூற் றெழுபத்தொன் பானு மியற்று எனவும், 750வந்த பதினான்கு மேழா யிரத்தெழுநூற் றொன்றென் றுரைக்கப் படும் எனவும், 751நேர்முத லொன்பா னிரட்டி நிரைபதின்மூன் றாசிரியப் பாமுப்பத் தொன்றகற்றி - நேர்முதற்சீர் பத்தொடு நான்குவெண் பாவகற்ற வாங்கதற் கற்றன நாற்பத்தைந் தாம் எனவும், 752இருநூற்று முப்பத்து மூன்றகவல் வெள்ளைக் கொருநூற்று முப்பத்தா றாகு - மொரு நூற் றொருபதாந் துள்ள லொருங்கிவை மூன்றா மெதுகையாற் பெற்றனவா மீண்டு எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, வருக்கவெதுகை ஆசிரியத்துள் எழுசீர்க்கும், வெண்பாவினுள் ஐந்துசீர்க்கும் கலிப்பாவினுள் நான்குசீர்க்கும் ஏலாது. அவை, வண்டு, மின்னு, போதுபூ, மேவுசீர், நீடுகொடி, நாணுத்தளை, நுந்தை என இவை யேழும் ஆசிரியத்துள் ஆகாதன. இவற்றுள் நீடுகொடி நாணுத்தளை இரண்டும் ஒழித்து ஒழிந்த சீர் ஐந்தும் வெண்பாவிற்கேலா. அவ்வேழனுள்ளும் வண்டு, மின்னு, நுந்தை ஒழித்து ஒழிந்த நான்குங் கலிப்பாவிற் காகா வென வுணர்க. இனி ஆசிரியத்துள் நேர்முதற் சீர் ஏழும், பதின்மூன்று நிரைமுதற்சீரும் உறழ்ந்த அடி இருநூற்று நாற்பதாம். இவற்றுட் களையும் நிலம் 753இருபத்தே ழாம். ஆகவே, அகவற்றொடை இருநூற்றொருபத்து மூன்றாயின. 754வெண்பாவின் ஐந்துசீரானும் முப்பத்தெட்டடி யொழித்து, ஒழிந்த அடி நூற்று நாற்பத்து மூன்றானும் நேர் முதற்சீரொன்பதும், நிரைமுதற்சீர் நான்குமெனப் பதின்மூன்றா னுங்களையும் நிலம் பதின்மூன்ற கற்றிப் பெற்ற வெண்டொடை நூற்றுமுப்பதாம். கலிப்பாவிற் களைந்த சீர் நான்கொழித்து ஒழிந்த சீரான் அடி நூறெனப்படும். அம்மூன்றுந் தொகுப்ப வருக்க வெதுகை (443) நானூற்று நாற்பத்து மூன்றாயின. 755நேர்பிரண்டு நேர்பு முதனான்கு நுந்தையுமென் றாகாச்சீ ரேழைந்து நான்காக- வாகாத நாற்பதும்போய் நானூற்று நாற்பத்து மூன்றாகித் தோற்றும் வருக்கத் தொடை எனவும், 756முறையா னிருநூற் றொருபத்து மூன்றோ டொருநூற்று முப்பதுநூ றொட்டு எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, 757நெடின்மோனையும், மெல்லினவெதுகையும், இடையினவெதுகையும், ஆசிடை யெதுகையுமென நான்கற்கும், நிரைமுதற்சீரும் நுந்தையுமெனப் பதினாற்சீர் ஏலாமையின், ஒழிந்த நேராதிச்சீர் பதின்மூன்றனான் ஆசிரியத்து ஓரோர்சீர்க்கு இரண்டு நிலங் களைந்து பெற்ற தொடை நூற்றுமுப்பதாம். வெண்பாவினுள் நேர்முதற்சீர் பதின்மூன்றும் உறழ்ந்த அடி தொண்ணூற்று மூன்றனுள் ஒருசீர்க்கு ஒருநிலமாகப் பதின்மூன்று நிலங் களைந்து பெற்ற வெண்டொடை எண்பஃதாம். கலிப்பாவிற்கு நேர்முதற்சீர் பன்னிரண்டதனாற் பெற்ற தொடை அறுபஃதாம். ஆக, மூன்று பாவிற்குந் தொடை ஒரோ வொன்றற்கு இருநூற் றெழுபதாக நான்கனானும் பெற்ற தொடை ஆயிரத்தெண்பதாம். 758இடையின மெல்லின மாசெதுகை யேனை நெடின்மோனை நான்காகி நின்ற - தொடைதா மிருநூற் றெழுபஃ தொரோவொன்றற் கெய்து நிரைமுதலு நுந்தையு நீத்து எனவும், 759பதின்மூன் றிரட்டித் தகவலினே ராதி பதின்மூன்றே வெண்பாவிற் பாற்றி யவைதொகுப்ப மூவகை மூன்று தலையிட்ட முப்பஃது நால்வகையா னிற்க நவிற்று. எனவும், 760மூவகைப் பாவின் மொழிந்த தொடைத்தொகை யாயிரத்து மேலெண்ப தாகுமாம் - பாவின முன்னூற்று முப்பதா மெண்பதாம் வெண்பாக் கடைய கலிக்கறுபஃ தாம் எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. இனி, வல்லின வெதுகைக்கு நிரைமுதற்சீர் பதின்மூன்றும், மின்னு, நுந்தை, மேவுசீர், நாணுத்தளை யென நான்குமாகப் பதினேழ்சீர் தொடைகொள்ளாமையின், ஒழிந்த நேராதிச்சீர் பத்தனானுங் களைவன களைந்து பெற்ற அகவற்றொடை நூறாகவும், வெண்பாவிற்கு நாணுத்தளை வாராமையின் அஃதொழிக்கல் வேண்டுவதன்றாயிற்றாகவே, மின்னு, நுந்தை, மேவுசீர் என்னும் மூன்றொழித்து, ஒழிந்த நேராதிச்சீர் பதின்மூன்றனானுங் களைவன களைந்து கொண்ட வெண்டொடை அறுபத்தெட்டாகவும், கலிப்பாவின் நேர் முதற்சீர் பன்னிரண்டனுள் மேவுசீர் நாணுத்தளை ஒழித்து ஒழிந்த பத்தனானும் கலித்தொடை யைம்பதாகவும், மூன்று பாவினானும் வல்லின வெதுகை இருநூற்றொருபத்தெட்டா யினவென்பது. 761முற்றுகர நேர்புநேர் முன்னாகுஞ் சீரிரண்டும் குற்றுகரத் தேமாவுங் கொள்ளாது - மற்றை நிரைமுதலுங் கூட்டாது நேர்முதலான் வல்லொற் றெதுகையிரு நூற்றொருபத் தெட்டு எனவும், 762இருப தகவல்பதி னொன்றுவெள்ளைக் காகா நிலமுப்பத் தொன்றாக நீக்கி - வலியெதுகைக் கீரைம்ப தாமகவல் வெள்ளைக் கறுபத்தெட் டோரைம் பதுதுள்ளற் கொட்டு எனவும் இவற்றை விரித்துரைக்க. இவையெல்லாங் கிழமைபற்றி வந்தமையின் ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய என்றானென்பது. இப் பத்துத் தொடையானு முரணைந்தானும் பெற்றதொடை (6612) ஆறாயிரத்தறு நூற்றொருபத்தி-ரண்டெனப்படும். ஆறாயிரத்தறு நூற்றொருபத்திரண்டும் பெறும், கிளை முரண் ஐந்தும் மேற்கூறிய மோனை எதுகையிரண்டனோடும் இனிக் கூறும் முரணைந்தும் இயைபு இரண்டும் உடன்கூட்டித் 763தொடை கூறினாம், இவற்றோடு இயைந்தமையினென்பது. இத்தொடை யெல்லாந் தொகுப்ப ஒன்பதினாயிரத்து நானூற்று நாற்பத்திரண்டாயினவாறு (9442) கண்டு கொள்க. 764மோனை யெதுகை முரணியைபு நான்கற்கு மானவை யொன்பதி னாயிரத்து - நானூற்று நாற்பத் திரண்டாகு மோரடியே யாயினுங் கூட்டத்துக் கொண்ட குழாம் (94) (முரண்டொடை இதுவெனல்) 407. மொழியினும் பொருளினு முரணுதல் முரணே. இது, முறையானே முரண்தொடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: சொல்லும் பொருளும் பகைத்தல் காரணமாக முரண் டொடை வரும் என்றவாறு. அவை ஐவகைப்படும்; சொல்லுஞ் சொல்லும் முரணுதலுஞ், பொருளும் பொரு ளும் முரணுதலுஞ், சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணுதலுஞ், சொல்லும் பொருளும் பொருளொடு முரணு தலுஞ், சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொரு ளொடும் முரணுதலும் என. 765செவ்வி வாய்த்த செம்பாட் டீரத்து வெள்ளை வெண்மறி மேய்புலத் தொழிய என்புழி, செவ்வி வெள்ளை யென்பன பொருளின்றிச் சொல் லுஞ் சொல்லும் முரணியன. வெள்ளையென்பது சாதிப் பெயர். 766செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின் என்பதும் அது. 767நீரோ ரன்ன சாயற் றீயோ ரன்னவென் னுரனவித் தன்றே (குறுந். 95) என்பது பொருளும் பொருளும் முரணியன. 768தண்ணிய லற்ற தயங்கறற் கானத்து வெந்நீர்ப் பொருணசைஇ முன்னிச் சென்றோர். என்பது சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணியது. 769தீநீர் நஞ்சந் திருமிடற் றொடுக்கிய வுவரி யன்ன வுடைப்பெருஞ் செல்வர் என்பது சொல்லும் பொருளும் பொருளொடு முரணியது. இதனைச் சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணியது போலப் பொய்ப் பொருளொடு முரணுதல் வேண்டுமென்று கொள்ளற்க. 770செவ்வேற் சேஎய் திருமண மறுத்த கருவிற் கானவன் வரிலவ ரிலரே யதுபோல என்புழி, சொல்லும் பொருளுஞ் சொல்லொடும் பொரு ளொடும் முரணியது. பிறவும் அன்ன. இவை ஐந்துதொடையுந் தளைவகை யடிக்கண் வருங்கால் இன்னவாறு வருமென்பது மேற்கூறியவாற்றானே கொள்ளப் படும். இவை விரித்து நோக்கப் பலவாமாறும் விரித்துறழ்ந்து கண்டுகொள்க. (95) (இயைபுத்தொடை இதுவெனல்) 408. இறுவா யொன்ற லியைபின் யாப்பே. இது, முறையானே இயைபிரண்டும் உணர்த்துகின்றது. இ-ள்: இரண்டடியும் ஈறொத்தல் இயைபுத்தொடைக் கிலக்கணம் என்றவாறு. வாளாதே இறுவாயொன்றல் என்றானாயினும் ஆண்டு ஒன்றுவது பொருளியைபின்றி எழுத்துஞ் சொல்லும் ஒன்றி 771யடையின் இயைபா மென்பது. எனவே, எழுத்தடியியைபும் சொல்லடியியைபும் என இத் தொடை இரண்டாயின. அவரோ வாரார் கார்வந் தன்றே கொடிதரு முல்லையுங் கடிதரும் பின்றே (குறுந். 221) என்பது எழுத்தடியியைபு. பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவள் வரவும் (யா. வி. ப. 155) என்பது சொல்லடியியைபு. இவையும் அடி மோனை போல 772எல்லா அடியொடுந் தொடுக்கப்படுமென்பதூஉம் அவற்றது விரியும் எல்லாம், அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை (தொ. செ. 92) என்புழிச் சொல்லியவாற்றானே கொள்ளப்படும். (96) (அளபெடைத்தொடை இதுவெனல்) 409. அளபெழி னவையே யளபெடைத் தொடையே. இது, முறையே அளபெடைத்தொடை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அடிமுதற்கண் எழுத்துகள் அளபெழுந்தன வாயின், அவை அளபெடைத்தொடை எனப்படும் என்றவாறு. அவை யென்றது, உயிரளபெடையும் ஒற்றளபெடையு மென் றிரண் டென்பது கோடற்கு. பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கி (கலி. 5) என்பது உயிரளபெடை. கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச் சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை என்பது ஒற்றளபெடை. இவை கட்டளையடியொடு தொகுக்குங்கால் உயிரள பெடை முந்நூற்று முப்பத்துமூன்றாம். அவை மூன்று பாவினும் வருங்கால் 773உரியசைச்சீர் நான்கும், உரிமுதற்சீர் எட்டும், 774நிரையசையுமெனப் பதின்மூன்றும் ஒழித்து, ஒழிந்தவற்றுள் வரும். அவை ஆசிரியத்துள் நேர்முதற்சீரேழும், நிரைமுதற் சீரே ழும்; 775வெண்பாவினுள் நேர்முதற்சீரொன்பதும், நிரைமுதற்சீ ரொன்பதும்; கலிப்பாவினுள்ளும் உரிமுதற்சீரெட் டொழித்து நேர்முதற்சீரெட்டும், நிரைமுதற்சீரெட்டும் எனப் பதினாறுமாக, நாற்பத்தெட்டுச் சீர்க்கண்ணும் வருமென்பது. அங்ஙனம் வருங்கால் ஆசிரியத்து நூற்று நாற்பத்தேழும், வெண்பாவினுள் நூற்றாறும், கலிப்பாவினுள் எண்பதுமாகி முந்நூற்று முப்பத்து மூன்றாம். அவை, ஆசிரியத்துள் இருபத்தொன்றும், வெண்பா வினுட் பதினொன்றுமாக முப்பத்திரண்டு நிலங் களைந்து பெறப்பட்டன. 776உரியசைச்சீர் நான்கு முரிமுதற்சீ ரெட்டும் மளபெடைக்கு நுந்தையோ டாகா - வொருநாற்பத் தெண்சீரான் முந்நூற்று முப்பத்து மூன்றென்ப ரொண்சீர் பெருமுறையா னுய்த்து எனவும், 777நேரேழ் நிரையேழ் முதற்சீர் முதற்பாவிற் கோரேழான் மூவேழ் நிலமிலவா - னேராதி யொன்ப திரண்டு நிரையாதி வெண்பாவிற் கென்றிவை முப்பத் திரண்டு. எனவும், 778நூறொடு நாற்பத்தே ழாமகவ னூற்றின்மே லாறு தொடைவெள்ளைக் காகுமா - லேறுதுள்ளற் கெண்பதா மீரேழீ ரொன்பஃ தெண்ணிரண் டென்றுமாம் பாமூன் றிடத்து எனவும் இவற்றை விரித்துக்கொள்க. 779ஈரொற்றளபெடை கலிப்பாவினுள் வாராது; என்னை? அது துள்ளலோசை தள்ளி நிற்றலின். அங்ஙனமாதல், அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல். செய். 11) அறிக. இனி, ஆசிரியத்துள் தேமா புளிமா வென்னும் இரண்டும், வெண்பாவினுள் தேமா, புளிமா, மாசெல்வாய், புலிசெல்வா யென்னும் நான்குமாகச் சீராறன்கண்ணும் பெற்ற தொடை நாற்பத்தைந்து. இவை, ஆசிரியத் திருபத்தொன்றும், வெண்பா வினுளிருபத்துநான்கு மெனப்படும். இவை ஆசிரியத்துன் மூன்றும் வெண்பாவினுள் இரண்டுமாக ஐந்துநிலங் களைந்து பெறப்பட்டன. களையும் நிலம் அதனிற் சுருங்குவதில்லை. 780தேமா புளிமாவே மாபுலிசெல் வாயென்றா நானாற்பத் தைந்தொற் றளபாம் - வேறு தனித்தொலி யொன்றா களையுநில மூன்றா முதற்பாவின் வெள்ளைக் கிரண்டு எனவும், எழுமூன்றா மாசிரியத் தெண்மூன்றாம் வெள்ளைக் கழியாத வீரொற் றளவு எனவும் இவற்றை விரித்துரைத்துக்கொள்க. ஆக அளபெடைத் தொடை இரண்டுங் கூட்டிப் பெற்றதொடை முந்நூற்றெழுபத் தெட்டு. ஆக முதற் றொடை இருபத்திரண்டனானும் பெற்ற தொடை ஒன்பதினாயிரத் தெண்ணூற்றிருபஃது. ஒன்பதி னாயிரத் தெண்ணூற் றிருபஃதா மந்தமில் காட்சி 781யளபெடைத்தே 782வந்த விருபத் திரண்டு (97) (பொழிப்பெதுகைத்தொடை இதுவெனல்) 410. ஒருசீ ரிடையிட் டெதுகை யாயிற் பொழிப்பென மொழிதல் புலவ ராறே இது, பொழிப்பெதுகையாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒருசீரிடையிட்டு எதுகையாயிற் பொழிப்பாம் என்றவாறு. இடையிடினெனவே, முதற்சீர் நிற்பதாயிற்று. எதுகை யாயினெ னவே, மூன்றாஞ்சீரொடு தொடுப்பதாயிற்று. 783இவற் றுள் ஆசிரியம் களைவன களையப்பெற்ற தொடை நூற்றுநாற்ப தெனவும், வெண்பா களைவன களையப்பெற்ற தொடை நூற்றுமூன்றெனவுங் கொள்க. 784நிரைமுதற்சீர் பன்னிரண்டுங் கீழ்நிலத்து ளொன்ற வருகலி முந்நூற்றெட் டாம் எனவும், 785மேவுசீர் வெள்ளைக்கொன் றேற்கிளை முற்றே லோரிரு நூற்றுமுப்பத் தெட்டாகு மாக னிருநூறு நானூறொ டேழ்பத்தைந் தாக வருமுற்று மொன்றாம் வகை எனவும் இவை முற்றெதுகைக்கு உரைச்சூத்திரம். இன்னும் புலவராறே என்று மிகுத்துச் சொல்லியதனானே, அமைவன வேறுளவெனத் தழீஇப் புகுந்தவற்றுள் ஈண்டுக் கூறாத அந்தாதித் தொடையும், மற்றை விகற்பத்தொடையாகிய 786ஒரூஉத் தொடையுங் கூறிக்கொள்க. (98) (ஒரூஉவெதுகைத்தொடை இதுவெனல்) 411. இருசீ ரிடையிடி னொரூஉவென மொழிப. இது நிறுத்தமுறையானே ஒருஉத்தொடை உணர்த்து கின்றது. இ-ள்: நாற்சீருள்ளும் இடையிருசீரொழித்து, ஒழிந்த முதற் சீரும் நான்காஞ்சீரும் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பின் அதனை ஒரூஉவென்ப என்றவாறு. அதிகாரத்தான் ஒரூஉவெதுகை யெனப்பட்டது. அதுவும் பொழிப்புப்போல வந்த எழுத்தே வருதலும், கிளையெழுத்து வந்து கிளையொரூஉ எனப்பட்டு இரண்டாதலு முடைத்து. உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை (ஐங்குறு.) என்பது ஒருஉ வெதுகைத்தொடை. 787சூரலங் கடுவளி யெடுப்ப வாருற்று (அகம். 1) என்பது கிளையொரூஉவெதுகை. இவை, இரண்டுதொடையுங் கட்டளை யடிக்கண் வருங்கால் ஒரூஉவெதுகை ஐஞ்ஞூற்றிருபத்தெட்டாம். அவை ஆசிரியத்திற்கு உரிய சீர் இருபத்தேழனுள்ளும் 788நேர்முதற்சீர் பதினான்கும் ஒரோவொன்று உறழ்ந்தஅடி பன்னிரண்டனுள், சுருங்கிய நிலந்தொறும் ஒன்பதொன்பதாக நூற்றிருபத்தாறும், நிரைமுதற்சீர் பதின்மூன்றும் பெருகிய நிலத்து ஒரோவொன்று பத்தாக நூற்றுமுப்பஃது மாக அகவற் றொடை இருநூற்றைம்பத்தாறு. அவற்றுண் மின்னு, மேவுசீர், நாணுத் தளை என்னும் மூன்று சீரானும் மூன்றுநிலம் முதனிலத் தகற்றிப் பெற்ற தொடை இருநூற்றைம்பத்து மூன்று. வெண் டொடை இருபத்தேழு சீருறழ்ந்த அடி அனைத்தினும் பெற்ற தொடைநிலை நூற்றெண்பத்தொன்று; இவற்றுள் மின்னு, மேவுசீர் என்னும் இரண்டனானும் முதனிலத்து இரண்டு நிலங் களைந்து பெற்ற தொடை நூற்றெழுபத் தொன்பதாம். இனி, கலிப்பாவினுள் நேர்முதற்சீர் பன்னிரண்டாகப் பெருகிய நிலத்து ஒரோவொன்று களையப்பெற்ற தொடை நாற்பத்தெட்டும், நிரைமுதற்சீர் பன்னிரண்டும், சுருங்கிய நிலத்து ஒரோவொன்று களையப் பெற்றதொடை நாற்பத் தெட்டுமாகக் கலிப்பாவிற்குரிய தொடை தொண்ணூற்றாறாம். ஆக மூன்று பாவினும் பெற்ற ஒரூஉத்தொடை ஐஞ்ஞூற் றிருபத்தெட்டாம். கிளையொரூஉவும் இவ்வாறே ஐஞ்ஞூற்றிருபத்தெட் டாகவும், அவற்றுமேல் மின்னு, மேவுசீரென்னும் இரண்டும் வெண்பாவினுள் உறழ்ந்த முதனிலை யிரண்டுங் களையாது கொள்ளக் கிளை யொரூஉத் தொடை ஐஞ்ஞூற்றுமுப்பதாம். ஆக வொரூஉத்தொடை இரண்டனானும் பெற்ற தொடை ஆயிரத் தைம்பத் தெட்டாம் (1058). 789நேராதி யாதி நிலத்தொன்ப தொன்பதா மீரைந்தா மாசிரியத் தீற்று - நிரையாதி யாக விருநூற்றைம் பத்துமுன் றாமாதி நேர்புகா மூன்றனையு நீத்து எனவும், 790மேவுசீர் மின்னுக்குண் முன்னைநிலத் தொரோவொன் றாகா வொரூஉவெள்ளைக் காதலா - னாவன நூற்றெழுபத் தொன்பதா நோக்கு எனவும், 791முன்பினே ராதி நிரையாதி துள்ளற்கோ ரொன்றொழியத் தொண்ணூற்றா றாகுங் கிளைவெள்ளைக் கொன்றா யிரண்டா னொரூஉவிரண்டு மாயிரத் தைம்பான்மே லெட்டா மவை எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க மேலைப் பொழிப்பிரண்டும் முற்றிரண்டும் இவை யிரண்டு மென விகற்பத்தொடை ஆறனாலும் பெற்ற தொடை இரண்டா யிரத்தைஞ் ஞூற் 792றிருபத்தொன்று. இவை ஆறு தொடையும் ஓரடிக்கண்ணே வருதலின் தளை வழுவப்பட்டன வென்று களையும் நிலமில வென்பது. இன்னும் புலவராறென்றதனான், தொடையந்தாதியும் விட்டிசையும் ஒரோவொன்று இரண்டாகி, அசையந்தாதியும் சீரந்தாதியும் விட்டிசைத்தொடையுங் குறிப்புவிட்டிசையுமென நான்காம். ஓரடியுள் இறுதிச்சீருள் ஈற்றசையும் மற்றையடியின் முதற் சீரின் முதலசையும் ஒன்றத் தொடுப்பது அசையந்தாதி. அவை தொடுக்குங்காற் கட்டளையடிக்கண் 793உரியசைச்சீரினை அசை யெனக் கொள்ளற்க, இவை பிறசீர்ப்பாற் படுத்துத் தளை கோடலின். அடியிறுதிக்கட் கடியாறு மழகளிறென வந்தவழி யாறு களிறு என்னும் இரண்டு உரியசையும் நிரையசை யாக இயற்றப்பட்டன. ஆயினும் இயற்கை நிரையசையொடு தொடுக்கப்படா, இரண்டசையும் ஒரு சொல்லாயினன்றி அந்தாதி யாகாமையினென்பது. இனி, இறுதிச்சீர் முதற்சீரொடு சேரிற் சீரந்தாதியாம். உதாரணம் : குன்றகச் சாரற் குதித்தன கோண்மா மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண் என்பது அசையந்தாதி. தழைபூஞ் சாரற் பூத்த முல்லை முல்லை சான்ற கற்பி னல்லோள் என்பது சீரந்தாதி. இது கட்டளையடிக்கண் வருங்கால் அசையந்தாதி முந்நூற்றிரு பத்தைந்தாம். அவை ஆசிரியத்துள் 794இரண்டு நேர்பசைச்சீர்க்கும் ஓரெ ழுத்து தேமாவிற்கும் ஏலாமையின் ஒழிந்த நேர்முதற்சீர் பதி னொன்றும் உறழ்ந்த அடி நூற்றுமுப்பத்திரண்டனுள் ஒருசீர்க்கு (முதனிலத்தொன்றும் இறுதிநிலத்தொன்றுமென இவ் விரண் டானும்) முதனிலமிரண்டும் இறுதிநிலமொன்றுமென மும்மூன் றாக முப்பத்து மூன்றகற்றி ஒரோசீர்க்கு ஒன்ப தொன்பதாகப் பெற்ற தொடை தொண்ணூற்றொன்பது. இனி நிரைமுதற்சீருள் நிரைபசைச்சீரிரண்டு ஒழித்து ஒழிந்த பதினொன்றும் உறழ்ந்த அடி நூற்றுமுப்பத்திரண்டனுள் முதனிலத் தொன்றுவன இவ் விரண்டாக இருபத்திரண்டு நிலங் களைய ஒவ்வொன்று பத்தாகப் பெற்ற தொடை நூற்றொருபதாக ஆசிரியத்துள் அசையந்தாதி இருநூற் றொன்ப தாயின. 795வெண்பாவினுள் அசையந்தாதி வருங்கால் நேர்பசைச் சீரிரண்டும், ஓரெழுத்துத் தேமாவும், நிரைமுதற்சீர் பதின்மூன்று மெனப் பதினா றொழித்து ஒழிந்த நேர்முதற்சீர் பதினொன்றும் உறழ்ந்த அடி எழுபத் தெட்டனுள் ஒரோவொரு சீர்க்கு இரண் டாக முதனிலந்தோறுங் களைந்தவழி இருபத்திரண்டொழித் துப் பெற்ற வெண்டொடை ஐம்பத்தாறாம். கலிப்பாவினுள் நிரைமுதற்சீர் ஒழித்து ஒழிந்த நேர்முதற் சீர் பன்னிரண்டனானுந் தொடை அறுபதாம். ஆக மூன்றுபா விற்கும் அசையந்தாதி முந்நூற்றிருபத்தைந் தாயினவாறு கண்டு கொள்க. 796நேர்பசைச்சீர் நுந்தையொழித் தேனைப் பதினொரு நேராதி முன்பினிரண் டொன்றகற்றிச் - சீராக நீங்கியவா றாக நிரைமுதல் பத்தாக வீங்கிரு நூற்றொன்ப தென் எனவும், 797நேர்முத லொன்ப தியற்சீ ருரிவெண்சீர் ராகியினி யிவ்விரண் டாங்கொழிப்ப - நேர்பொடு வெண்பாநேர் நுந்தை நிரைமுதல் வீழ்த்தசை யந்தாதி யைம்பத்தா றாம் எனவும், நேரசை யந்தாதி யன்றிக் கலிக்கியையா வாகலி னாங்கறுப தாம் எனவும், 798அவ்வகை யந்தாதி முந்நூற் றிருபத்தைந் திவ்வகை முப்பாக் கியற்று எனவும் இவ்வுரைச்சூத்திரங்களான் அசையந்தாதி முந்நூற்றிரு பத்தைந்தும் ஆயினவாறு அறிந்துகொள்க. இனிச் சீரந்தாதி நூற்றறுபத்துநான்கு. அவை, ஆசிரியத்து வருங்கால் 799நேர்பசைச்சீரிரண்டுந் தேமா விரண்டுமென நான்க னானுந் தத்தம் முதனிலந் தொடங்கி ஒரோவொன்று அவ்வாறாக நாலா றிருபத்துநான்காம். இனி, நிரைமுதற்சீருள் நிரைபசைச் சீரிரண்டும் புளிமாவு மென மூன்றொழித்து ஒழிந்த பத்துச் சீரானும் வருங்கால் அவை உறழ்ந்த அடி பன்னிரண்ட னுள் முதனிலம் மூன்றும் பெருகிய நிலத் திரண்டுமாக வைந்து ஒழித்து ஒரோவொன்று எவ்வேழாக எழுபதாம். ஆக, அகவற்றொடை தொண்ணூற்று நான்காம். இனி, வெண்பாவினுள் வருங்கால் நேர்பசைச்சீரிரண்டுந் தேமா விரண்டும் நிரைமுதல் வெண்சீரிரண்டும் நிரைமுதல் நிரையீறாகலிற் 800கணவிரி எட்டுமாகச் சீர் பதினான்கும் ஒழித்து ஒழிந்த சீர் பதின்மூன்றனானும் பெற்ற அடி தொண்ணூ றாம். அவற்றுள் வரகும் அரவும் புளிமாவும் என்னும் மூன்றும் பெற்ற அடி 801பத்தொன்பதாகலின், அவற்றுள் வரகிற்குப் பெருகிய நிலத்து மூன்றும், அரவும் புளிமாவுஞ் சுருங்கிய நிலத்தும் பெருகிய நிலத்தும் ஒரோவொன்றாக நான்குமாக ஏழுமொழித்து ஒரோ வொன்று நான்காகப் பெற்ற அடி பன்னிரண்டாம். காருருமு, மாவருவாய் என்னும் இரண்டனா னும் பெற்ற அடி பன்னிரண்டனுள் முதனிலத்து மும்மூன்றாக ஆறொழித்துப் பெற்ற தொடை இருமூன்றாம். 802பாதிரி யேழும் மாசெல்வாயு மென எட்டனானும் பெற்ற அடி ஐம்பத்தொன்ப தாகலின், அவற்றுள் ஈரெழுத்துப் பாதிரி மூன்றுஞ் சுருங்கிய நிலத்து ஒரோ வொன்றும் பெருகிய நிலத்து இவ்விரண்டுமாக மும்மூன் றொன்பதும், ஒழிந்த மூவெழுத்துப் பாதிரி நான்கும், மாசெல்வாயுமென ஐந்துஞ் சுருங்கிய நிலத்து இவ்விரண்டாகப் பத்துமெனப், பத்தொன்பதுங் களைந்து பெற்ற தொடை நாற்பதாமெனக் கொள்க. ஆக, களையும் நிலம் முப்பத்திரண்டு ஒழித்து ஒழிந்த தொடை வெண்பாவிற்கு ஐம்பத்தெட் டாயின. இனிக் கலிப்பாவினுள் வெண்சீர் நான்கனானும் பெற்ற அடி இருபஃதாகலின், அவற்றுண் மாசெல்வாய் உறழ்ந்த அடி ஐந்தினும் ஏறிய நிலத்திரண்டும், புலிவருவாய் உறழ்ந்த அடி ஐந்தினுஞ் சுருங்கிய நிலத் திரண்டும், ஒழிந்த மாவருவாய் புலிசெல்வாய்கள் இரண்டும் முன்னும் பின்னும் ஒரோ வொன்றாக நான்காகும்; ஆக, எட்டுங் களைய ஒரோ வொன்று மும்மூன்றாகப் பெற்ற தொடை பன்னிரண்டாம். ஆக, மூன்று பாவிற்குஞ் 803சீரந்தாதி நூற்றறுபத்து நான்காம். 804வண்டொன்று தேமா விரண்டு வலியதுபன் னொன்றொடச்சீ ரந்தாதிக் கீரேழாம் நேராதி பத்தும் புளிமா வரகிரண்டும் வெள்ளைக்கா மொத்த கலிக்குரிச்சீர் நான்கு எனவும், 805நிரைநிரைபத் தெவ்வேழா மூன்று மிரண்டு முதனில னீக்கிமூன் றாக - வகவலி னேராதி நான்கு மெழுவாய் நிலந்தொடங்கி யாறாகு மந்தாதிச் சீர் எனவும், 806ஆக வகவற்சீ ரந்தாதி (தொண்ணூற்று) நால்வகை யாக நவிற்று எனவும், 807வரகு பெருநிலத்து மூன்றகற்றி மற்றை யரவு புளிமா வருமிரண்டு மாற்றி முதனிலத்துக் காருருமு மாவருவாய் மும்மூன் றெனவுரை யந்தாதிக் கீண்டு எனவும், 808ஈரெழுத்துப் பாதிரிமூன் றீரருகு மோரிரண்டாய் மூவெழுத்துப் பாதிரிக்கு முன்னிரண்டாய் மாசெல்வா யொன்றற்கு மவ்வா றொழித்துரைப்ப நாற்பஃதாம் வெண்டொடைச்சீ ரந்தாதி வேறு எனவும், 809விரித்தசீ ரந்தாதி வெண்டொடை யைம்ப தெனப்படு மெட்டுமே லிட்டு எனவும், 810மாசெல்வா யீற்றும் புலிவருவாய் மற்றிடத்து மேனை யிரண்டு மிரண்டிடத்து மாக விரண்டிரண்டு நீக்கிச்சீ ரந்தாதி துள்ளற் கமைந்த தொடைநான்மூன் றாம் எனவும், 811பாத்தோறும் வந்தசீ ரந்தாதி பாற்படுப்ப நூற்றோ டறுபத்து நான்கு எனவும் இவ்வாற்றானே சீரந்தாதி யாமா றுரைத்துக் கொள்க. 812அந்தாதி யோரிரண்டு மாகத் தொடைநானூற் றெண்பான்மே லொன்பா னெனல் இனி, விட்டிசைத் தொடை கூறுங்கால் எழுத்தினானும் 813எழுத்தல் ஓசையானும் விட்டிசைத்தல் இருவகைப்படும். அ உ வறியா வறிவி லிடைமகனே நொஅலைய னின்னாட்டை நீ (இடைக்காடனார்) என்ப தெழுத்தினானாகியது. 814விட்டிசையின் இறுதியடி வல்லொற்றடுப்பின் விட்டிசை வல்லொற்றெதுகை யென்பாரும் உளர். ஆண்டு வல்லொற் றெதுகை யா(மா)காமையின் அது வேண்டுவதன்று; வேண்டினும் விட்டிசையெனவே அடங்குமென்பது, 815தஎன்று தாமிசைப்ப தாகியே தண்ணுமைகேட் டெஎன் றெழுந்தார் பலர் என்பது குறிப்பு விட்டிசை. இவை கட்டளையடிக்கண் வருங்கால் ஒரோவொன்று நூற்றறு பத்து நான்காகி முந்நூற்றிருபத்தெட்டாம். அவை வருங்கால், 816நேர்பசைச் சீரிரண்டும் ஓரெழுத்துத் தேமாவும் போதுபூவிரண்டும் ஒழித்தொழிந்த தேமாவும் பாதிரி யிரண்டும் போரேறு இரண்டும் 817(ஒன்றிக் கலிப்பாவிற்குத் தொடை நாற்பஃதாகவும் இரண்டு விட்டிசையும் தொகுப்பப்) 818பூமருதிரண்டும் நேர்முதல் வெண்சீரிரண்டுமாக ஒன்பதுசீரும் பற்றி விட்டிசைக்குமெனவுங் கொள்க. அவற்றை அகவற் றொடை ஒரோவொன் றெழுபதாகவும், வெண்டொடை ஒரோவொன் றைம்பத்து நான்காகவும் கலிப்பாவிற்குத் தொடை நாற்பஃதாகவும் இரண்டு விட்டிசையுந் தொகுப்பத் தொடை முந்நூற்றிருபத் தெட்டாயினவாறு கண்டுகொள்க. இவை ஆசிரியத்துப் பதினான்கும் வெண்பாவினு ளொன் பதுமாக இருபத்துமூன்று நிலங் களைந்து பெற்றன. 819நேர்பிரண்டு நேர்பு முதலிய சீர்நான்கு மோரெழுத்துத் தேமாவும் விட்டிசைக் கொன்றாவா மேனை நிரைமுதற் சீர்களு மிவ்வாறே யாகா தனவென் றறி எனவும், 820அகவற்கேழ் நேராதி யொன்பதும்வெண் பாவிற் குளவென் றுரைக்கப் படும் எனவும், 821வெள்ளையு ளொன்ப தகவலி னீரேழாய்க் கொள்ள விருபத்து மூன்றாகுந்-துள்ளலுட் போரேறு பாதிரி பூமருது மாசெல்வாய் மாவருவா யெட்டும் வரும் எனவும், 822அகவற் கெழுபதா மைம்பத்து நான்கா நிகரற்ற வெள்ளைக்குத் துள்ளல்-புகரற்ற நாற்பதாய் விட்டிசை நூற்றறு பத்துநான் கேற்பதா மோரொன் றெனல் எனவும், 823இருவிட் டிசைமுந்நூற் றீரொருபத் தெட்டா வருவித்துக் கோடல் வழக்கு எனவும் இவற்றைப் பதநெகிழ்த்துரைக்க. 824விகற்பமா றந்தாதி விட்டிசைநான் கேற்றி யிசைத்தவீ ரைந்து தொடையாற் றொடைத்தொகை மூவா யிரத்தொடு முந்நூற்று முப்பத்தா றாமா றறிந்து கொளல் 825இருபத் திரண்டு மிவைபத்து மாக வருவித்த முப்பத் திரண்டா-னொருபத்தின் மூவா யிரத்தொரு நூற்றைம்பத் தாறைந்நூற் றோடோரைம் பத்திரண் டேற்று என விவை உரைச் சூத்திரம். ஆகத் தொடை முப்பத்திரண்ட னாற் பெற்றன பதின்மூவாயிரத்தெழுநூற்றெட்டு (13,708). (99) (செந்தொடை இதுவெனல்) 412. சொல்லிய தொடையொடு வேறுபட் டியலிற் சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப. இது, மேற் செந்தொடையாமெனக் கூறிய துணர்த்து கின்றது; எய்தாத தெய்துவித்ததூஉமாம். இ-ள்: மேற்கூறப்பட்ட தொடை எல்லாவற்றொடும் ஒவ்வாது வரின் அதனை இயற்கைச் சொல்லாற் செய்யுள் செய்யும் புலவரது செந்தொடை யென்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. எனவே, விகாரப்படச் செய்யுள் செய்யுஞ் செந்தொடை இன்னா தென்றானாம். அஃது, இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத் தினமீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையு மெல்லம் புலம்ப நெகிழ்ந்தன தோளே (அகம். 270) எனவும், சேயிறா முகந்த நுரைபிதிர்ப் படுதிரை பராரைப் புன்னை வாங்குசினை தோயும் (அகம். 270) எனவும் வரும். பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாட னன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே (யா. வி. ப. 179.) என்பதும் அது. இயலின் என்றதனான், இரண்டடியான் தொடை பெற்று நின்று இரண்டடி யெதுகையாகியவை தம்முள் தொடுக்குங்காற் செவ்வன் தொடுப்பினும் அதனைச் செந் தொடை யென்னாது இரண்டடி யெதுகை யென்றும், இனி ஓரடி இடையிட்டுத் தொடுத்தவழியுந் தொடர்ந்த அடி இரண்டுஞ் செந்தொடையா மாயினும் மூன்றாமடி எதுகைபடத் தொடுத்தன் 826மாத்திரை யானே அதனை இடையிட்டெதுகை யென்றுங் கொள்ளப்படும். என்னை? அவ்வெதுகை ஆண்டுச் சிறந்தமையி னென்பது. அவை முன்னர்க் காட்டுதும். முன்பொழுது முன்செல்லுந் 827தூரியமா மந்நிலையே பின்பொழுது பின்செல்லு நெய்தலா-னன்பிலவே கொல்யானை வேகப்போர்க் கோக்கோதை மாறேற்ற பல்யானை மன்னர் பறை என வரும். இஃது இவ்விரண்டடிகளது கூட்டத்துக்கண்ணன்றி வாராதாயினுங் கட்டளையடிக்கு அகப்பட்ட தொடையொடுங் கூறினார். கட்டளையடிக்கண் வருந் தொடையே சிறந்தன வென்று கொள்ளினுங் கொள்ளற்க வென்பான், 828ஒழிந்த தொடை யுள்ளுமென்று கூட்டித் தொடை கூறினானென்பது. இனி, செந்தொடை கட்டளையடிக்கண் தொடையாங் கால், ஓரெ ழுத்துத் தேமா ஒழித்து ஒழிந்த சீரெல்லாவற்றினும் வருமென்பது. 829இம்மூவகை அடியினானும் பெற்ற தொடை யெல்லாந் தொகுப்பத் தொடை ஐஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாம். அவற்றோடும் இரண்டடி யெதுகை இரண்டும் இடை யீடுங் கூட்டத் தொடை ஐஞ்ஞூற் றைம்பத்திரண்டாம். 830நுந்தையில் செந்தொடை யைஞ்ஞூற்று நாற்பான்மே லொன்பானை யோரிடையிட் டோரிரட்டி வந்த வெதுகை யிரண்டென வைத்தைஞ்ஞூற் றைம்பத் திரண்டென் றறி என்பது உரைச்சூத்திரம். ஆக முப்பத்துமூன்று தொடையும் அறுநூற்றிருபத்தைந்து அடியுட் களைவன களைந்து பெற்ற தொடைவிரி யெல்லாந் தொகுப்பப் பெற்ற தொடை பதின் மூவாயிரத் தெழுநூற்றைந்துடன் இரண்டடி யெதுகை யிரண்டும், இடையீடொன்றும் கூட்டத் தொடை பதின்மூவா யிரத் தெழுநூற்றெட்டாயினவாறு கண்டுகொள்க. 831தொடையின் பகுதி முழுவதூஉஞ் சொன்மற் றடியி னறுனூற் றிருபத்தைந் தாயி னடிய திலக்கண மாமதுவென் றஞ்சிப் பிறதொடைமூன் றேற்றினார் பின் இவ்வாறு தொடை கூறப்பட்ட தொடைப்பகுதியெல் லாம் அவ்வச்சூத்திரங்கடோறும் எடுத்தோதாது கட்டளை யடிக்கும் அல்லா வடிக்கும் பொதுவகையாற் கூறிவந்தா னாசிரியனா யினும், மெய்பெறு மரபிற் றொடைவகை (தொல். செய். 101) என்னுந் தொடைச் 832சூத்திரத்திற் கேற்பதாம். அவற்றை அவ்வச் சூத்திரங்களுட் கூறிவந்தாமென்பது. முற்கூறிய முப்பத்து மூன்று தொடையினையும் அறுநூற்றிருபத்தைந்தடியொடு மாறியக் கால் இருபதினாயிரத் தறுநூற்றிருபத்தைந்து தொடையாகற் பாலன வாம்; அன்னவை 833தொடைக்குந் தளைக்கு மாகாதன களைந்து கொள்ளப் பதின்மூவாயிரத் தெழுநூற்றைந்தாயின வென்பது. ஆயிரத்துத் தொள்ளாயிரத் திருபது நிலங் களையப்பட்டன. இங்ஙனம் இவை களைந்து பெற்ற தொடை யொடும் இரண்டடி யெதுகை இரண்டும், இடையீடொன்றுங் கூட்டத் தொடை பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டாயின. (100) (தொடைகளின் தொகை இதுவெனல்) 413. மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே யையீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே. இது, மேற்கூறிய தொடையுள் 834ஒருசீரான் வரையறை யுடைமையின் அவற்றை அடிக்கட் போலத் தொகுத்தோது கின்றது; விரித்ததூஉந் தொகுத்ததூஉமாம்; என்னை? கட்டளை யடியொடு பட்ட தொடை விகற்பம் முற்கூறிய சூத்திரங்களுட் பெற்றமையானும் அவற்றையும் ஈண்டுத் தொகுத்துக் கூறினமை யானுமென்பது. இ-ள்: மெய்பெறு மரபின் தொடைவகை - கேட்டார்க்குத் தொடைப்பாடு வெளிப்படும் இலக்கணத்தவாகிய தொடைக் கூறுபாடு; தாமே என்பது பிரித்துக் கூறியவாறு; 835ஐயீரா யிரத்து 836ஆறு ஐஞ்ஞூற்றொடு - பதின்மூவாயிரத்தொடு; 837தொண்டு தலை யிட்ட 838பத்துக்குறை எழுநூற் றொன்பஃது - எழுநூற்றெட்டு என்றவாறு. தொடைப்பகுதி பதின்மூவாயிரத் தெழுநூற்றெட் டென்று சொல்லுப ஆசிரியரென்பது இதன் பொழிப்பு. மெய்பெறு மரபின் இவை யெனவே, விளங்கத் தோன்றாதனவுந் தொடையுளுள வென்பதாம். அவை, இணை, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், கடையிணை, கடைக் கூழை, இடைப்புணர்ப்பின எனச் சொல்லுப. பிறவும் வேறு படுத்துக் கூறுவார் கூறுவன வெல்லாம் இதனானே தழீஇக் கொள்ளப்படுமென்பது. தொடைவகை யென்பது கட்டளையடியொடு வரு மெனப் பட்ட முப்பத்துமூன்று தொடையும் பிறவாற்றான் வரு மெனப் பட்ட இடையீட் டெதுகை இரண்டடி எதுகையென இருகூற்றனவு மென்றவாறு. ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு என்பது உம்மைத் தொகை. தொண்டு தலையிட்ட என்பது ஒன்பானை யகப்படும் மொழியாக வுடைய வென்றவாறு. அது செய்தவென்னும் பெயரெச்சமாகலின் எழுநூற்றொன்பதென்னும் பெயர் கொண்டு முடியும். எனவே, எழுநூற் றொருபத்தெட்டா மென்றஞ்சிப் 839பத்துக்குறை எழுநூற்றொன்பது என்றா னென்பது. எனவே, ஆண்டு நின்ற ஒன்பானொடுந் தொண்டு தலையிட்ட ஒன்பானையுங் கூட்ட எழுநூற்றெட்டாயின வென்றவாறு. அஃதே கருத்தெனின், பதின்மூ வாயிரத் தெழுநூற் றெட்டென மொழியப் பட்டன தொடைதெரி வகையே என அமையும்; இவ்வாறு அரிதும் பெரிதுமாகச் சூத்திரஞ் செய்த தென்னையெனின், அங்ஙனமே அதனை 840ஞாபகப்படச் செய்தான் ஆசிரியன் (666) ஒரு காரணம் நோக்கி; என்னை? இத்தொடைகளை அடியொடு மாறுங்காற் குறைக்கப்படுவன உளவென்பதூஉம், அவை 841தொண்டு தலையிட்ட ஐந்துபத் தளவும், ஆறு முதலாகக் களையப்படு மென்பதூஉங் கோடற் கென்பது, ஒன்பது என்று இருகாற் சொல்லிய வதனான் அங்ஙனங் குறைக்கப்படு நிலங்கள் ஒன்பது பகுதியவாமெனக் கொள்க. அவையாவன: 1ஐம்பத்தொன்பது 2ஐம்பத்தாறு 3நாற்பத்தைந்து 4நாற்பது 5முப்பத்தொன்பது 6முப்பத்திரண்டு 7முப்பத்தொன்று 8இருபத்துமூன்று 9ஆறு என ஒன்பது பகுதியாற் குறைவன வாயின. இங்ஙனம் ஐம்பத்தொன்பது நிலத்தின வாகலான் தொண்டு தலையிட்ட பத்து என்றா னெனவும், ஒன்பதுந் தொண்டுமென இருகாற் கூறியவதனான் அங்ஙனங் களையுநிலம் ஒன்பஃதெ னவுங் கொள்ளப்பட்டன. 842பாய பதினா யிரமென் றிலனையீ ராயிர மென்றா னதனானுங்- தூயதன்றிப் பத்துங் குறைத்த பயத்தானு மொன்பதென் றுய்த்துக் கொளற்பாற் றொருங்கு எனவும், 843ஓரொன்ப தேற்றியு மோரொன்ப திட்டுரைத்து மீரொன் பதுமிகுத்தா னீங்கிவற்று - ளோரொன்ப தைம்பான்மே லேறவு மைந்தந்த மாய்க்குறைத லொன்பான் வகைத்தென்று மோர்ந்து எனவும், ஆறென்றான் மூவா யிரமென்னா தாங்கதனா லாறந்த மாங்குறையு மாறு எனவும், 844ஐம்பத்தொன் பானேழெட் டையொன் பதுநாற்பஃ தொன்பா னுடைமுப்பத் தெண்ணான்கு முப்பத்தொன் றென்பா லிருபத்து மூன்றா றெனக்குறைப்ப வொன்பான் பகுதி யுள எனவும், இவ்வுரைச்சூத்திரங்களான் அவை குறைக்கப்படுமா றறிந்து குறைக்க. இவற்றுள் ஒன்பது நிலங் களையப்படும். 845மோனை முதலாயின தொடை ஐந்தற்கும் 846ஓரெழுத்துத் தேமா உரித்தென்றிராயின், அதனை நுந்தை நுந்தையென்று இருகால் தொடுக்கவேண்டும்; தொடுத்தவழி அடிமோ னையுந் தலையா கெதுகையும் அடியெதுகையும் மூன்றாமெழுத் தொன் றெது கையுமென நான்குதொடை பெறப்படுமாகலின். அவற்றுள் அதனை என்ன தொடை யென்றுமோவெனின், செய்யுள் செய்த ஆசிரியன் பல தொடைப் படச் செய்து வைத்தவழி, அவற்றுட் சில களைந்து ஒன்று கோடற்குக் காரணமின்மையினான் அவையனைத்துங் கோடு மென்பது. 847அல்லாதார் முதனின்ற தொடையே கொண்டொழிகவென்ப. அது குற்றம்; என்னை? 848செங்காற் பைந்தினை யிதண மேறிப் பைங்காற் சிறுகிளி கடிவோ டந்தை என்றவழி எதுகையும் முரணும் வந்தவழி இவற்றுள் முதற்கண் இன்ன தொடையென்று துணியலாகாமையின் அது நிரம்பாதா கலான். அது வந்த தொடை யெல்லாவற்றானும் விரித்துத் தொடை கூறுதல் அமையு மென்பது; என்போலவோ வெனின், எழுத்தும் அசையுஞ் சீரும் அடியும் அங்ஙனம் முதல் வந்தத னான் எண்ணுந் தொகையும் பெயருங் கொடுத்து வழங்காத வாறு போல வென்பது. அல்லதூஉந், தொடைக ளெல்லாந் தம்மை யுணரும் மாத்திரையானே தனித்தனி வருதல் இலக்கண மென்ப தூஉம் இல்லையென உணர்க; என்னை? பல உறுப்புக் கொண்டது ஒரு செய்யுளென்றமையின், இனி, 849ஓரெழுத்துத் தேமா முதற்கணிற்ப அடியிறுதிக் கண்ணும் இயைபு வருதலின் அச்சீர் நின்றுறழ்ந்த அடிக்கண் இயைபு வருதற்கு ஆராய்ச்சியின் றென்பது. ஒழிந்த தொடைக் குரியவல்ல வெனப்பட்ட சீருள் 850அவை வாராமையும், உரிய வெனப்பட்ட அவற்றுள் அவை வருமாறும் முறையிற் கொண்டு உதாரணங் கண்டுகொள்க. இனி, இக்காலத்துள்ள ஆசிரியருள் ஒருசாரார், தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற் 851றொன்றும் எனப் பாடந் திரிப்பாரும், இன்னொரு சாரார் எழுநூற் றொன்றும் 852எனப் பாடந் திரிப்பாரும் உளர். 853ஒரு பகுதியார்; ஒன்றும் என்பது முற்று வினையென்ப. மெய்பெறு மரபிற் றொடைவகை... பத்துக்குறை யெழுநூறு என்னும் எண்ணினோடு ஒன்றும் எனக் கூட்டுப. பதின்மூவா யிரத்தறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது என்பது அவர் கருத்து. ஒன்றுமென்பதனை எண்ணுப்பெயர் முற்றும்மைய டுத்த தென்பாரும் அதுவே கூறுப; அவரறியார். அவ்வாறு சூத் திரஞ்செய்வது ஆசிரியர் கருத்தன்று. அல்லதூஉம், ஒன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே என்பது பழம்பாடமாகலானும் அஃதமையா தென்பது. அவ்வாறு கொள்வார்க்குத் தொடை பதின்மூவாயிரத்தறு நூற்றுத் தொண் ணூற் றொன்பதாகலும் பிழைக்குமென மறுக்க; என்னை? mW ü‰¿Ug¤ijª joÆidíª jk¡F¥ bghUªJkh‰wh‹ ïUg¤âu©L bjhil nahL« bgU¡F§fhš mt®¡F« Xuo¡f©nz bjhil nfhlš nt©LkhfyhD«, m§ ‡d§ bfhŸs ïu£il¤bjhil KjyhÆd mWü‰¿U g¤ijª jhfhikahDbk‹gJ.(101) (வரையறையில்லாத தொடைகளுக்கு வரையறை கூறல் முடியாதெனல்) 414. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில பல்கும். இது, மேற்கூறிய தொடைக்காவதொரு புறனடை. இ-ள்: அறுநூற்றிருபத்தைந்து அடியோடு மாறிப்பெற்ற தொடை பதின்மூவாயிரத்தெழுநூற்றெட்டெனப்பட்டன மேல்; இனி, அவ்வடி ஒன்றன்கண்ணேயன்றி 854ஒன்று நிற்ப நின்றவடி அறுநூற்றிருபத்து நான்கனையுந் தந்து தந்து தடுமாற வந்து தோன்றுந் தொடை விகற்பமும் 855இருசீரடி முதலாக எண் சீரடி யீறாகக் கிடந்த அடி வேறுபாட்டின்கணெல்லாம் 856இத் தொடைகளைக் கூட்டவும் 857பிற விகற்பத் தொடைகளைக் கூட்டவும் வருந் தொடைப்பகுதி வரையறை யின்றிப் பலவாம் என்றவாறு. வரையறை உடையனவற்றுக் கன்றி வரையறை கூறுதல் பயமின் றாகலின் ஒழிந்த விகற்பமெல்லாங் கூறிய நிலங் கூறிற்றி லேனென்பதூஉம், மெய்பெறு மரபிற் றொடைவகை (தொல். செய். 101) எனப்பட்டன வரையறையுடைமையின் அதுகூறினே னென்ப தூஉஞ் சொல்லினான் இச்சூத்திரத்தானென்பது. இனி 858ஐந்து தொடை, விகற்பத்தொடை பலவற்றொடுங் கூட்டவும் பிறவாற்றான் விரிப்பவும் வரம்பிலவா மென்பாரு முளர். அவை எவ்வாறு விரிப்பினும் வரம்பிலவல்லனவென மறுக்க. வரம்பில வென்பதற்கு வரையறை கூறப்படாவென மேலுரைத்ததே உரை. (102) (தொடைப்பகுதி இரண்டெனல்) 415. தொடைவகை நிலையே யாங்கென மொழிப. இதுவுமது. மேல் ஒரு சாரன வரையறையுடைமையிற் கூறப்பட்டன வென்புழி, ஒழிந்தன வரையறையின்மையிற் கூறப் படாவெனவுங் கூறினானைக் கண்ட மாணாக்கன், வரம்பில்லன தொடுக்கப்படா கொல்லென ஐயுற்றானை அவையுந் தொடுக்கப்படுங் கண்டாயெனக் கூறியமையின் ஐயம் அறுத்ததெனவும் அமையும். இ-ள் தொடையது பகுதி வழக்கே அவ்விரண்டுமென்ப என்றவாறு. எனவே, அப்பகுதியுளொன்று தெரித்திலமென்பது இதன் கருத்து. ஆங்கு என்றதனான் மேற்பகுத்த 859இரண்டிடமுங் கொள்க. (103) (நோக்காவது இதுவெனல்) 416. மாத்திரை முதலா அடிநிலை காறு நோக்குதற் காரண நோக்கெனப் படுமே. இது, நிறுத்த முறையானே நோக்குணர்த்துகின்றது. நாற் சொல் வழக்கினையும் பாவிற் படுப்பது மரபென்றான். எனவே, ஆண்டு நோக்கி யுணரப்படுவதொன்றின்றிச் செய்யு ளுள்ளும் வழக்கியல்பினவாகி 860வெள்ளைமையாய்க் காட்டுவன வாயின; அவ்வாறன்றி நோக்கென்பதோர் உறுப்புப் பெற்ற வழியே அது செய்யுளாவதாகலான் அது கூறுகின்றா னென்பது. இ-ள்: மாத்திரையும் எழுத்தும் அசைநிலையுஞ் சீரும் முதலாகக் கொண்ட 861அடி நிரம்புந்துணையும் நோக்குடை யவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது என்றவாறு. 862கேட்டார் மறித்து நோக்கிப் பயன்கொள்ளுங் கருவியை நோக்குதற் காரணமென்றானென்பது. அடிநிலைகாறு மென் பது, ஓரடிக்கண்ணே யன்றியுஞ் செய்யுள் வந்த அடி எத் துணை யாயினும் அவை முடிகாறு மென்றவாறு. வரலாறு: முல்லை வைந்நுனை தோன்ற 863வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பர864லவ லடைய விரலை 865தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் 866குரங்குளைப் பொலிந்த கொய்867சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்கு868வள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை 869பேதுற லஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேர னுதுக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே (அகம். 4) என வரும். இப்பாட்டின் ஓசை முதலியன வெல்லாங் 870கேட் டோரை மீட்டுந் தன்னை நோக்கி நோக்கப் பயன்கொள்ள நிற்கும் நிலைமை தெரிந்து கொள்க. இனி, அடி நிலைகாறும் என்றதனாற் செய்யுண் முழுவ தும் எவ்வகை யுறுப்புங் கூட்டி நோக்கி யுணருமாறுங் கூறுதும். முல்லை யென்பது முதலாகக் கானம் என்பதீறாக நாற் சொல்லியலான் யாப்பு வழிப்பட்ட தாயினும் பருவங்காட்டி வற்புறுக்குந் தோழி 871பருவந் தொடங்கிய துணையே காணென்று வற்புறுத்தி னாளென்பது நோக்கி யுணரவைத்தா னென்பது. உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் என்னுந் துணையும் தலைமகனது காதன் மிகுதி கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணரவைத்தான். ஒழிந்த அடிநிலைகாறும் பிரிந்த காலம் அணித்தெனக் கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தா னெனப்படும்; என்னை? முல்லை யென்னாது வைந்நுனையென்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் 872வைந்நுனையாகாது 873மெல்லெனுமாகலின். இல்லமுங் கொன்றையும் மெல்லென்ற பிணியவிழ்ந்தன வென்றாள், முல்லைக்கொடி 874கரிந்த துணை 875அவை முதல் கெடாது முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர்தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பந் தணிந்தில, இரும்பு முறுக்கிவிட்டவழியும் வெப்பம் மாறாது விட்டவாறு போல வெம்பாநின்றன வின்னு மென்றவாறு. பரலவ லடைய விரலை தெறிப்ப எனவே, பரல்படு 876குழிதோறும் தெளிந்து நின்ற நீர்க்கு 877விருந்தினவாகலாற் பலகாலும் நீர்பருகியும் அப்பரல் அவலினது 878அடைகரையை விடாது துள்ளு கின்றனவென அதுவும் பருவந் தொடங்கி னமை கூறியவாறாயிற்று. கருவி வானங் கதழுறை சிதறி என்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்குநின்ற மேகந் தனது வீக்கத்திடைக் காற்றெறியப்படுத லின் விரைந்து துளிசிதறின வென அவற்றையும் புதுமை கூறினாள். எனவே, இவையெல்லாம் பருவந் தொடங்கி யணித் தென்றமையின் வற்புறுத்துதற்கு இனமாயின. குரங்கு ளைப் பொலிந்த கொய்சுவற் புரவி என்பது 879கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலுங் கொய்யவேண்டுதலு முடைய குதிரை யென்றவாறு. எனவே, தனது 880மனப் புகற்சி கூறியவாறு. அத்துணை 881மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக் காது 882மணியொலி விலக்கி வாராநின்றான், அங்ஙனம் மாட்சி மைப் பட்ட மான்றேரனாதலா னென்றவாறு. அதற்கென்னை காரணமெனின், துணையொடு வதியுந் தாதுண் பறவை எனவே பிரிதலஞ்சி யென்றவாறு. மணிநா வொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணிநாவினை இயங்காமை யாப்பித்த மாண்வினைத் தேரனாகி வாராநின்றானென இவையெல்லாந் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தள்: 883தெய்வமலை ஆகலான் அதனு ளமன்ற காந்தளைத் தெய்வப் பூவெனக் கூறி அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணங் கமழ்ந்த நின் கைத்தொடிகள், 884(அவை அலராகி விரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங் குறைபட்ட துணையே காண், அவர் பிரிந்தது சேய்த்து அன்மையினென இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று.) இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடிநிலை காறு மென அடங்கக் கூறி, நோக்குதற்காரணம் நோக்கென்றா னென் பது. மாத்திரை முதலாயினவுந் தத்தம் இலக்கணத்தில் திரியாது வந்தமையின், அவையும் அவ் விலக்கணம் அறிவார்க்கு நோக்கிப் பயன் கொள்ளுதற்கு உரியவாயினவாறு கண்டு கொள்க. எனப்படு மென்றதனான், இவ்வாறு 885முழுவதும் வந்தன நோக்குதற்குச் சிறப்புடைய வெனவும், இவை யிடையிட்டு வந்தன சிறப்பில வெனவுங் கொள்ளப்படும். பிறவும் அன்ன. (104) (பாவகையும் அவற்றின் பெயரும்) 417. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே. நோக்கே பாவே (313) என நிறுத்தமுறையானே நோக்குணர்த்திப் பாவுணர்த்திய வெழுந்தான், அதனை இத் துணைப் பெயர் வேறுபாட்ட தெனவும், பொருட் குரிமையவும் அடிக்குரிமையவு மாமாறுஞ் செய்யுட்கு வரையறை வகையான் உரியவாமாறும் ஒரோ செய்யுட்கண் 886ஒரோவுறுப்புப் பற்றி வருங்கால் அவ்வுறுப்புக்கள் இத்துணையடிய வாகுமெனவும் எல்லாங் கூறுவான் தொடங்கினமையின். அவற்றுள் இது, பெயர்வேறு பாடும் அஃது 887இனைத்தென விரியும் உணர்த்து கின்றது. இவ்வுறுப்பு வேறுபாட்டானே, 888உறுப்பியாகிய செய்யுளும் இவ்வாறு பெயர்கொள்ள வைத்தானென்பது. இ-ள்: ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவுங் கலிப்பாவு மென நாற்கூற்றது, பாக்களவற்று விரி என்றவாறுறு. வகை யென்றதனான் 889உறுப்பி ஆகிய செய்யுளின் வேறுபட நோக்கி உணரப்படும் இவ்வுறுப்பெனவும், இவற்றுள் 890வழக்கிற்குரியன செய்யுட்கு வந்தனவும் 891வழக்கிற்கே யுரியவாகிக் கூறுபடுவனவும், 892ஒன்றொன்றனொடு விராய்ப் பிறக் கும் பகுதியுமெல்லாங் கொள்ளப்படும். பாக்கூற்று விரி நான்கெனவே, பாவினை உறுப்பாகவுடைய செய்யுட்கு வரை யறை கூறிற்றில னென்பது பெற்றாம்; என்னை? 893அவற்றுப் போதுங்கால் அவற்றது பெயர் வேறுபாடும் அச்சூத்திரங் களான் அறிது மென்பது; என்றார்க்கு இவை நான்கேயன்றிப் பாவாமாறு கூறானோ வெனின், இவையின்றித் தூக்குப் பிறவாமையின் இப்பா விலக்கணமும் 894தூக்கோத்தினுட் கூறினானாகலான் ஆண்டோ தியவாறே அமையுமென்பது. இக்கருத்தே பற்றிப், பாவென மொழியினும் தூக்கினது பெயரே என்றார், இந்நூலின் 895வழிநூல் செய்த ஆசிரியருமென்பது. உதாரணம் : உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவள மேய்க்கு மகில்படு கள்ளியங் காடிறந் தோரே (ஐங்குறு.) என்பது, ஆசிரியப்பா உறுப்பாகி வந்த செய்யுள். வசையில்புகழ் வயங்கு வெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினும் (பட்டினப். 1,2) என்பது, வஞ்சிப்பா உறுப்பாகி வந்த செய்யுள். வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோ லேரிய வாயினு மென்செய்வ - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை (முத்தொள். 71) என்பது, வெண்பாவுறுப்பு வந்த செய்யுள். அரிதாய வறனெய்தி (கலி. 11) என்பது, கலிப்பாவுறுப்பு வந்தது. பிறவும் அன்ன. இவை இன்ன அடியான் வந்தன வென்பது என்னை யறியுமாறெனின், அதுவன்றே தூக்குப் பயம்படுகின்ற இட மென்பது. மூன்று பாவினை நாற்சீரானும், வஞ்சிப்பாவினை இரு சீரானும் முச்சீரானுந் தூக்குக்கொண்டு இத்தூக்காமாறு உணர்ந்து கொள்க. ஆசிரியம் வெண்பாக் கலி வஞ்சியெனச் சிறப்புமுறையாற் கூறாத தென்னையெனின் அது, முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே (665) என்பாருமுளர். வஞ்சிப்பா முதற் கூறாமையின் அற்றன் றென்பது. மற்றென்னை கருதியதெனின், ஆசிரியம் வெண்பா வென்று ஓதினவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் உரிமையின், அவையே போறலுஞ் சிறப்புடைய வென்று கொள்வானா யினும், அற்றன்று; இவை செய்யுளிலக்கணமாகலான் அவை நான்கும் ஒத்த இலக்க ணத்த செய்யுளென்றற்கு இம்முறையான் ஓதினா னென்பது. இனி 896ஒருசாரார் இந்நான்கனையும் ஒன்று மூன்றாக விகற்பித்துக் கூறுப; என்னை? ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை என்றாற் போல. அற்றன்று; ஓரெழுத்து முதல் ஐயெழுத்துச் சீரளவும் உயர்ந்த சீரான். வரும் செய்யுட்கு ஒன்று ஒன்றனின் வேறுபட்டொலிக்கும். அவ்வேறு பாடுதோறும் பா வேறுபடா; என்னை ? எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப (355) என்றமையினென மறுக்க அல்லதூஉம் அங்ஙனம் வேறுபாடு கொள்ளின் ஒரோவொன்று ஐந்தாகலுந் தூங்கலோசை ஆறும் ஏழுமாகலுமுடைய வென்பது. (105) (பாக்கள் அறமுதலிய பொருட்கு முரியவெனல்) 418. அந்நிலை மருங்கி னறம்முத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப. இது, பாவினைப் பொருட்குரியவாற்றான் வரையறை கூறுவான் தொடங்கிப் பொருட்குரிமை பொதுவகையான் உணர்த்துகின்றது. இது பொருளதிகாரமாகலின் இங்ஙனங் கூறுகின்றான். இ-ள்: அந்நிலை மருங்கின் - அம் மேலைச்சூத்திரத்துத் தோற்றுவாய் செய்யப்பட்ட செய்யுளினிடத்து; அறமுதலாகிய மும்முதல் - அறம்பொருளின்பமென்பன; அறமுதற் பொரு ளெனவே அவையும் அவற்றது நிலையின்மையும் அடங்கும். பொருட்கும் உரிய வென்ப - அப்பொருட்கெல்லாம் உரிய நான்குபாவும் என்றவாறு. அந்நிலைமருங்கின் எனவே, அவை மும்முதற்பொருட்கு உரிய வாங்காற் செய்யுளிடத்தன்றித் தாமாக உரிமை பூணா வென்பது. வீடென்பது செய்யுளுள் வாராதோவெனின், 897அற முதலென்பது புறப்பாட் டெல்லையாகக் கூறினா னென்பார் நான்குபொருளுந் தழீஇயுரைப்ப. இனி யொருசாரார் மும்முதற் பொருட்கும் உரிய வென்பதனை 898எச்சப்படுத்திக் கொள்ப. அற்றன்று; உலகிற் பொருள் மூன்றனையுங் கூறுவான் அவற்றை மும்முதற் பொருளென்றான்; அவையின்றி வீடு பெறுமாறு வேறின்மை யின் வீடும் ஆண்டுக் கூறினானென்பது. அல்லாதார் வீடென்னும் பொருண்மை செய்யுட்கண் வாராமை யின் அதுகூறானென்ப. அங்ஙனங் கருதின் அறமுதற்பொருளுஞ் செய்யுட்கண் வாராவென மறுக்க. (106) (முதற்பாக்களும் அவற்றுளடங்கும் பாக்களும்) 419. பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பி னாசிரி யப்பா வெண்பா வென்றாங் காயிரு பாவினு ளடங்கு மென்ப. (107) (இன்ன பாவுள் இன்ன பா அடங்குமெனல்) 420. ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. இவை இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடனெழுதப்பட்டன. மேற் பாவினது விரி நான்கென்றமையின் தொகை யுமுண் டென்பது பெற்றாம். அவை தொகுக்குங்கால் இரண்டா கித் தொகுமென்பதூஉம், அங்ஙனம் இரண்டா மிடத்தும், யாதானும் 899ஒன்றடக்கி இரண்டாகா, முதற்பா வென நாட்டப் படுவன இவை யெனவும், 900அவை முதலாகத் தோன்ற ஆண்ட டங்குவன இவை யெனவும் உணர்த்துகின்றது. இ-ள்: மேற் பாக்கண் விரிந்த பகுதியை உண்மைத்தன்மை நோக்கித் தொகுப்பின் ஆசிரியமும் வெண்பாவுமேயாம். அவற்றுள் ஆசிரியத்து விகற்பமாகி வஞ்சிப்பா தூங்கலோசை விரிந் தடங்கும்; வெண்பாவின் விகற்பமாகிக் கலிப்பா விரிந்தடங்கும்; அங்ஙனம் அடங்கி இரண்டாகும் பாவின் றொகை என்றவாறு. வீடுபேறு மிகவிழைந்து, நீடுநினைந்து நெடிதிருந்து என அகவற் சீரான் வஞ்சித்தூக்குப் பிறந்தது. 1 மாசேர்வாய் 2 மாசேர்வாய் 3 மாசேர்வாய் 4 மாசேர்வாய் என வெண்பாவினுட் கலிப்பா பிறந்தது. பிறவும் அன்ன. இனி, ஒரு சாரார் வஞ்சிப்பாவினுங் கலிப்பா பிறக்குமாத லின் அதுகூறி நிரம்பாதென்ப (யா. வி.ப.209) என்னை? விளங்குமணிப் பசும்பொன்னின் விசித்தமைத்துக் கதிர்கான்று (யா. வி. ப.298.) என்னும் இரண்டு வஞ்சியடியும் ஒரு கலியடியாகச் சொல்லப்படு மென்பது அவர் கருத்து. அற்றன்று; அவை 901யிரண்டு மாதற் கொரு கட்டளையிலவாம். 902கட்டளை யழிந்த கலிப்பாவே யெனினும், வஞ்சியடியாதற்கு ஒரு காரணம் இல்லை, தலை குலுக்கி 903வலியச் சொல்லினுந் தன் சீரின்மை யினென மறுக்க. அல்லதூஉம் ஒன்று ஒன்றனோடு ஒக்குங்காற் பிறப்பித்ததனொடு, பிறந்ததொப்ப வேண்டுமென மறுக்க. வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும் (பட்டினப். 64,65) என்றக்காற் கலிப்பாவாகச் சொல்லியவழியும் அத்தூங்க லோசையோடு ஒத்தல் வேண்டும், அதனின் அது பிறந்ததாயி னென மறுக்க. அல்லதூஉம் 904அவ்விரண்டடியுங் கூட்டியவழி அகவலோசை யாதலே வலிது; என்னை? 905தன்றளை விராய் வந்தமையின். பண்புறவென்றதனான் ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும், ஒழிந்தன விகாரமெனவுங் கொள்க. 906vdnt bt©gh bt‹wjdh‹ _‹WghÉDª JŸËa fÈnahirí« xUtifah‹ 907bt©ghbe¿¤njah«, ïy¡fz¡ fÈnahir a‹whÆDbk‹gJ bfhŸf.(107, 108) (வாழ்த்துப் பொருள் நான்கு பாவிற்கும் உரித்தெனல்) 421. வாழ்த்தியல் வகையே 908நாற்பாக்கு முரித்தே. இது, மேற்கூறிய மும்முதற் பொருட்கண் (தொல். செய். 106) ஒரு சாரனவற்றை வாழ்த்துதல் என்பதோராறும் உண்மையின், அப்பகுதி நான்கு பாவிற்கும் உரித்தென்கின்றது. நால்வகைப்பட்டது பாவாகலின் அப்பாவினை நான் கென்றான். வாழ்த்தியலென்னாது வகை யென்றதனான் மேற் கூறிய 909மும்முதற் 910பொருளின்கண் வரும் அறுவகையும் பெரும்பான்மை யெனப்படு மென்பதூஉம், அங்ஙனம் வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலுமென இருவகையான் வாழ்த்து மென்பதூஉம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கை யாக வாழ்த்துதலும் என இருவகைப்படு மென்பதூ உம் எல்லாங் கொள்க. அங்ஙனம் வாழ்த்தப்படும் பொருளாவன: கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடுமென்பன. அவற்றுட் கடவுளை வாழ்த்துஞ் செய்யுள் கடவுள்வாழ்த்தெனப்படும். ஒழிந்த பொருள்களை வாழ்த்திய செய்யுள் அறுவகை வாழ்த் தெனப்படு மென்பது. மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைஞரல் பௌவ முடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே (நற்றி. கடவுள்.) என்பது தெய்வவாழ்த்து, கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் னுண்ஞா ணுதல திமையா நாட்ட மிகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலு முண்டத் தோலா தோற்கே யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே செவ்வா னன்ன மேனி யவ்வா னிலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற் றெரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா வமரரு முனிவரும் பிறரும் யாவரு மறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமா னுரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே (அகம். கடவுள்.) என்பதும் அது. முன்னையது தனக்குப் பயன்பட வாழ்த்தியது, பின்னையது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது. பிறபாவினும் மருட்பாவினும் பிற பொருட்கண் வந்த வாழ்த்து வந்துழிக் கண்டு கொள்க. வாழ்த்தென்பது அறமாகலின், அறமுதலாகிய மும்முதற் பொருள்கள் (தொல். செய். 106) என்புழி அடங்கும்பிற, இச் சூத்திரம் மிகையாலெனின், அற்றன்று; 911புறநிலை வாழ்த்து முதலியன உள; அவை நீக்குதற்கு இது விதந்தோதினானென்பது. வாழ்த்தியல் என்றதனான், இயற்கை வாழ்த்தெனப்படுவன இவை யெனவும், இனி வரும் புறநிலை வாழ்த்து முதலியன இயற்கைவாழ்த்தெனப்படா, ஒருவகையான் 912வாழ்த்தின்பாற் சார்த்தி யுணரப்படுவதல்லதெனவுங் கொள்க. (109) (புறநிலை வாழ்த்து இன்ன பாவிற்குரியவெனல்) 422. வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. இது, நாற்பாக்கும் உரித்தன்றி வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு உணர்த்துகின்றது. இ-ள்: நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறம்காப்ப, இல்லறம் முதலிய செல்வத்தாற் பழியின்றிப் பூத்த செல்வமொடு புதல்வர்ப் பயந்து, புதல்வரும் இப்பெற்றியராக, எல்லீரும் நீடுவாழ்வீராமினென்று தெய்வத்தைப் புறநிறுத்தி வாழ்த்துவது புறநிலைவாழ்த்து. அங்ஙனம் வாழ்த்திய அச் செய்யுள் கலிப்பா உறுப்பாகவும் வஞ்சிப்பாவினும் வருதலில்லை என்றவாறு. தெய்வத்தைப் புறம்நிறுத்தி வாழ்த்துதலிற் புறநிலை வாழ்த்தாயிற்று. வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப என்றோதினமையின் வழிபடுதெய்வம் உள்வழியே புறநிலை வாழ்த்தெனப் படுவ தென்பது. எடுத்துக்கொண்ட காரியத்துக்கு ஏதுவாகிய கடவுள் நிற்ப, அக்கடவுளாற் பயன்பெற நின்றா னொரு சாத்தனை முன்னிலையாக்கி அவற்குக் காரியங் கூறுதலின் இது புறநிலையாயிற்று. கலிநிலை வகை யென்றத னாற் கலிவகைத்தாகிய பரிபாடற்கும் இஃதொக்கும். 913இனிக் கடவுளாற் காக்கப்படச் சாத்தன் வாழ்த்தப்படா னெனவுஞ் சொல்லுப; அற்றன்று, கடவுள் வாழ்த்தென்றால் அவ்வாறு பொருள் படாமையி னென்பது. இவற்றுக்குச் செய்யுள்: இமையா முக்க ணிலங்குசுடர் வாய்ந்த வுமையொரு பாகத் தொருவன் காப்பநின் பல்கிளைச் சுற்றமொடு நல்லிதி னந்தி நீபல வாழிய வாய்வாட் சென்னிநின் னெருகுடை வரைப்பி னீழல் பெற்றுக் கிடந்த வெழுகட னாப்ப சாகலிரு விசும்பின் மீனினும் பலவே எனவும், திங்க ளிளங்கதிர்போற் றென்றிங்க ளூர்த்தேவ மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து-திங்கட் கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ எனவும் வரும். இனி, கலிப்பாவினுள் வருங்காற் கடவுள் முன்னிலையாக வரும்; என்னை? தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே (450) என்றமையின். அது வாழ்த்தியல் வகை யென மேலே யடங் கிற்று. வஞ்சிப்பாவிற்கும் 914அவ்வாறு கொள்ளப்படும். இச்சூத்திரம் பாவென்னும் உறுப்பிற்குப் பொருள் வரை யறுத்தது. மற்று நிற்புறங் காப்ப வென ஒருமை கூறிப் பொலி மின் எனப் பன்மை கூறிய தென்னையெனின், வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப வென்றமையிற் புதல்வரொடுங் கூட்டிப் பாட அமையு மென்றற்கு அவ்வாறு கூறினானென்பது. (110) (வாயுறைவாழ்த்து முதலியவும் இன்ன பாவிற்குரியவெனல்) 423. வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே செவியறி வுறூஉவென வவையு மன்ன. இதுவும் பாக்களை மூன்றாக வரையறுக்கின்றது. வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவியறிவுறூஉ வும் என மூன்றும், மேலைப் புறநிலைவாழ்த்துப் போல் வாழ்த்துப்பகுதிய வாகலுங் கலிநிலைவகையும் வஞ்சியும் பெறாமையு முடைய வென மாட்டெறிந்தவாறு. அவையா மாறு முன்னர்ச் சொல்லுதும். இ-ள்: வாய் - வாய்மொழி; உறை-மருந்து; 915வாயுறை யென்பது, சொன்மருந்தெனப் பண்புத்தொகையாம். இனி வாய்க்கட் டோன்றிய மருந்தென வேற்றுமைத் தொகையு மாம்; மருந்து போறலின், மருந்தாயிற்று. 916அவன் சிறப்புக் கூறி வழுத்தி ஒரு சாத்தற்குப் பயன்படச் சொல்லினமையின் வாயுறைவாழ்த் தெனப்படு மென்பது. மற்று, நிற்புறங் காப்ப வெனப் புறநிலை வாழ்த்திற்கு இடம் நியமித்தாங்கு இதற்கும் இடநியமங் கூறாரோ வெனின், அது மாட்டேற்றானே அடங்குமென்பது. அவையடக்கியல் - அவையை வாழ்த்துதல், அவை யடக்குத லென்பது இரண்டாம் வேற்றுமைத்தொகை; அடக்கிய லென்பது, வினைத்தொகை. தானடங்குதலாயின் அடங்கிய லெனல் வேண்டும். அஃதாவது, அவையத்தாரடங்கு மாற்றான் இனிய வாகச் சொல்லி அவரைப் புகழ்தல். செவியறிவுறூஉ - ஒரு சாத்தற்குச் செவியறிவுபடுத்து அவனை வாழ்த்துதல்; என அவையும் அன்ன - என்ற இம்மூன்றும் அத்தன்மைய வேயாம் என்றவாறு. தெய்வத்தொடு பட்டமையிற் புறநிலை வாழ்த்து முற்கூறி இவை பிற்கூறினான். இவற்றுள் வாயுறை வாழ்த்து முன்னிலைக் குரிமையின் அதன்பின் வைத்தான்; முன்னிலைக்கே உரித்தா யினுஞ் செவியறிவுறூஉ வினை ஈற்றுக்கண் வைத்தான், பயம் பெறுவானையே நீ 917இன்ன குணத்தை யாவா யென்று புகழ்பட வாழ்த்திச் சொல்லப்படுதல் வேறுபாடுடைமையி னென்பது. இங்ஙனம் வரையறுக்கின்றது நால்வகைப்பாவாகிய உறுப் பினை நோக்கியாகலின், அவற்றுள் இவ்வுறுப்புடைய நால் வகைச் செய்யுட்கும் 918இவ்வுறுப்பினதிலக்கணம் எய்துவித்துக் கொள்ளப் படும்; கொள்ளவே, ஆசிரியப்பாட்டும் வெண் பாட் டும் மருட்பாவும் எல்லா வாழ்த்திற்கும் உரியவென்பதூஉங் கலிப் பாட்டும் வஞ்சிப்பாட்டும் புறநிலை முதலிய நால்வகைப் பொருட்கும் உரியவல்ல வென்பதூஉம் பெற்றாம்; என்னை? மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே (தொ. செய். 85) என்றமையின். (111) (வாயுறை வாழ்த்தாவது இதுவெனல்) 424. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொற் 919றாங்குத லின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. இது, முறையானே வாயுறை வாழ்த்துணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்புங் கடுவும் போல 920வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்குங் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்தெனப் படும் என்றவாறு. வாயுறை யென்பது மருந்தாகலான் 921வேம்புங் கடுவும் போல என்றானென்பது. அதற்குச் செய்யுள்: இருங்கட லுடுத்த பெருங்கண் மாநில முடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவல யிடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடு பதியாகப் போகித் தத்த நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே யதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்க ணுப்பிலாஅ வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விளங்குபலி மிசையு மின்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே (புறம். 363) பிறவும் அன்ன. (112) (அவையடக்காவது இதுவெனல்) 425. அவையடக் கியலே யரிறதபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. இது, முறையானே அவையடக்கிய லுணர்த்துகின்றது. இ-ள்: 922வல்லாதன சொல்லினும் அவற்றை ஆராய்ந்து கொண்மி னென அவையகத்தாரெல்லார்க்கும் வழிபடு கிளவி சொல்லுதல் அவை யடக்கு என்றவாறு. வல்லுத லென்பது ஒன்று வல்லனாதல்; ஒருவன் வல்லன வற்றை வல்ல வென்பவாகலான் வல்லாதனவற்றை 923வல்லா வென்றானென்பது. அதற்குச் செய்யுள்; திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போ லுரைத்த வுரைபோகக் கேட்டு - முரைத்த பயன்றவா செய்வார் சிலரேதந் நெஞ்சத் தியன்றவா செய்வார் பலர் இது. பூதத்தார் அவையடக்கு. அரில்தபத் தெரியின் என்றத னானே, யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைய கொச்சக வொரு போகினும் அவையடக்கியல் சிறுபான்மை 924தொடர் நிலைக்கண் வருமெனக் கொள்க. (113) (செவியுறையாவது இதுவெனல்) 426. செவியுறை தானே, பொங்குத லின்றிப் புரையோர் நாப்ப ணவிதல் கடனெனச் 925செவியுறுத் தன்றே. இஃது, இறுதி நின்ற செவியுறை யுணர்த்துகின்றது. இ-ள்: செவியுறை - செவிமருந்து. அதுவும் ஒப்பினாகிய பெயர்; தானேயென நின்ற ஏகாரம் பிரிநிலை. பொங்குதலின்றி - பெருக்கமின்றி; புரையோர் நாப்பண் அவிதல் கடன் எனச் செவி யுறுத்தன்றே - பெரியோர் நடுவண் அடங்கி வாழ்தல் கடப் பாடெனச் சொல்லிச் செவிக்கணறி வுறுத்துவது செவி யறிவுறூஉ என்றவாறு. அஃது அடங்கி வாழ்வார்க்குப் புகழாதலான் வாழ்த்தின் பாற் பட்டது. அதற்குச் செய்யுள்: வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் (புறம். 6) என்பதனுள், பணியிய ரத்தைநின் குடையே முனைவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே யிறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே எனவும், என்று, மின்சொல் 926லெண்பதத்தை யாகுமதி பெரும (புறம். 40) எனவும், பணிவுடைய னின்சொல்ல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற (குறள். 10:5) எனவும் வரும். இத்துணையும் பாவினது பெயரும் முறையும் எண்ணும் பொருட்கு 927உரியவற்றுக்கண் வரையறையுங் கூறியவாறு. (114) (குட்டம் இன்ன பாவுள் இவ்வாறு வருமெனல்) 427. 928ஒத்தா ழிசையு மண்டில யாப்புங் குட்டமு நேரடிக் கொட்டின வென்ப. இதுவும், மேனின்ற அதிகாரத்தாற் பாவிலக்கணமே கூறுகின்றது. இ-ள்: ஒத்தாழிசைக் கலியின் கண்ணும் மண்டில யாப்பின் கண்ணும் குட்டம் வருங்கால அளவடிக்குப் பொருந்திவருந் தத்தம் பாக்கள் என்றவாறு பாவென்பது 929அதிகாரத்தாற் கொள்ளப்படும். ஒத்தாழி சைக் கலி அளவடியுஞ் சிந்தடியும் குறளடியும் விராய் நிற்குமா யினும், 930அளவல்லா வடியேனும் அளவடிக்குப் பொருந்துமாற் றாற் பாக் கொளுத்தப்படு மென்பது. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) என அளவடிக்கண் துள்ளலோசை வந்தது; போரவுணர்க் கடந்தோய்நீ புணர்மருதம் பிளந்தோய்நீ (விளக்கத்தனார் பாடல்) எனக் குறளடிக்கண்ணும் அவ்வாறே துள்ளலோசை வந்தவாறு கண்டுகொள்க. நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே என இஃது இடையடி குறைந்தமையிற் குட்டமெனப்பட்டது. நாற்சீரடி யாத்து வருவன மண்டிலயாப் பெனப்படும். அவை போலக் குட்டமும் நேரடிக்குப் 931பாப் பொருந்தின என்றவாறு. ஈற்றின் மண்டில மோதிய தென்னையெனின், அது சொல் லாக்காற் குட்டமே நேரடிக்கு ஒட்டுவதாவான் செல்லு மாகலி னென்பது. மண்டில மென்பன, மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே (யா. வி. ப.399.) என்றற்றொடக்கத்தன. ஒத்தாழிசையை முன் வைத்ததென்னையெனின், மண்டிலம் போல் வனவுங் குட்டம் போல்வனவுங் கலிப்பாவி னுட் சிறு பான்மைய என்றற் கென்பது, அவை அளவடிக் குரிமை யாண்டுப் பெறுதுமெனின், 932அவை தம்மை உறழுங்கால் 933ஓதிய நிலவகை யானும், இன்சீர் வகையி னைந்தடிக்கு முரிய (தொ. செ. 54) என்னுஞ் 934சீர்வகையானும் பெறுதுமென்பது. இதனது பயம், 935குறளடி, வஞ்சிப்பாப் போலப் பா வேறுபடா வென்பது. ஒட்டியென்றதனான், இத்துணை போகாது சிறுவரவிற்றாய் வரும் வெண்பாக்கண்ணு மென்பது கொள்க. (115) (குட்டம் ஆசிரியத்துள் ஈற்றடிக்கண்ணும் வருமெனல்) 428. குட்ட மெருத்தடி யுடைத்து மாகும். இது குட்டத்திற்கோர் சிறப்புவிதி. இ-ள்: குட்டம் 936எருத்தடியின்கண்ணும் வரும் என்றவாறு. மேல் ஆராய்ச்சிப்பட்ட குட்டம் இடைவருதலன்றி ஒரு பாட்டின் ஈற்றயலடிக்கண்ணே வந்தொழிதலும் உண்டன்றே? அதுவும் பாவிற் கேற்பக் குறைக்கப்படு மென்பான், குட்ட மெருத்தடி யுடைத்து மாகும் என்றான், குறைத்தற்குக் கூறினானல்ல னென்பது, இதனை இவ்வாறு கூறவே மேற்கூறிய குட்டம் ஒத்தாழிசைக்கட்போல இடையிடை வருமென்பது பெற்றாம். உடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் கடல்போற் றோன்றல காடிறந் தோரே (அகம். 2) என, ஈற்றயலடி முச்சீரான் வந்தது. பிறவும் அன்ன. (116) (மண்டிலமும் குட்டமும் வருமிட மிதுவெனல்) 429. மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டுஞ் 937செந்தூக் கியல வென்மனார் புலவர். இது, மண்டிலமுங் குட்டமும் வருமிட னுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்; மேற்கூறிய மூன்றனையும் இன்ன பாவென்பது உணர்த்தினான்; அவற்றுள், இறுதி நின்ற மண்டிலமுங் குட்ட மும் ஆசிரியப்பா வினை உறுப்பாகவுடைய என்றவாறு. எனவே, ஒத்தாழிசையாகிற் கலிப்பாவினை உறுப்பாக வுடைத் தென்பது பெறுதும்; என்னை? ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே (தொ. செ. 130) என்ப வாதலான். மேற்கூறிய மண்டிலவாசிரியத்தினை, நிலைமண்டில மெனவும் அடிமறிமண்டிலமெனவும் பெயரிட்டு வழங்கு வாரும் உளர் (யா. வி. சூ.73,4). நின்றவாறு நிற்றலும், அடி மறித்துக் கொள்ளினும் பொருள் திரியாது நிற்றலுமுடைய வென்பது போலும் அவர் கருத்து. அடிமறித்தல் பொருள்கோட் பகுதியாக லான் அஃதமையும்; அங்ஙனங் கொள்ளின் நிரனிறை முதலிய பொருள் கோட்பகுதியானுஞ் செய்யுள் வேறுபடுமென மறுக்க. இனிக், குட்டமும் இருவகைத் தென்ப, இணைக் குறளாசிரி யப்பா நேரிசையாசிரியப்பாவென. அவை அவ்வாறு கொள்ளின் (யா. வி. சூ. 71,2) 938இழுக்கென்னை? குட்ட மெருத்தடி யுடைத்து மாகும் (தொ. செ. 116) என்று 939இருவகையாற் கூறினமையி னென்றலுமொன்று. இனி ஒன்றாக வழங்குதலே வலியுடைத்து. குட்ட மெருத்தடி யுடைத்து மாகும் என ஒருமை கூறியவதனான் 940ஒழிந்தவழி இரட்டித்துக் குறைய வேண்டுமென்பது கொள்க. மற்று, ஒத்தாழிசையு மண்டிலயாப்பும் (427) என்றவழிக் கலிப்பா முற்கூறியதென்னையெனின், குட்டம் ஆண்டுப் பயின்று வருதலின் ஆசிரியத்திற்கும் அதனை முற்கூறி னான்; இனி, முறையானே வெண்பாக் கூறுமென்பது. குட்டமென்பது 941வழக்குச்சொல்லாற் செய்த செய்யு ளென்பாரு முளர். நாற்சொல்லானு மன்றிச் செய்யுள் செய்யப் படாமையின், அது குட்டமென்றல் நிரம்பாது. ஒத்தாழிசை யென்பது எல்லாச் செய்யுள் மேலுஞ் செல்லுமெனவும் உரைப்ப. பாவும் இனமுமெனப் பகுத்துரைப் பார்க்காம் அது பொருளாவ தென மறுக்க; அல்லதூஉம், 942ஒரோவொன்றே வருவது ஒத்தாழிசை யெனப்படா வென்பது. செந்தூக்கென்பது ஆசிரியப்பா வென்றவாறு. பாவினைத் தூக்கெனவுஞ் சொல்லுப (305). இயல வென்பது அப்பாவானே நடக்கு மென்றவாறு. இதுவும் இன்ன செய்யுட்கு உரித்தெனப் பாவினை வரையறுத்த தேயாம். (117) (வெண்பா யாப்பான் வருஞ் செய்யுள் இதுவெனல்) 430. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோ டொத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின. இது, வெண்பாவென்னும் உறுப்பினை இன்னுழிப் பாவா மெனப் பொருளுஞ் செய்யுளும் பற்றி வரையறுக்கின்றது. இ-ள்: நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக் கிளையும் பரிபாடலும் அங்கதச் செய்யுளுமென ஐந்துந் தம்மின் ஒத்து வெண்பா வென்னும் உறுப்பினானே வகுக்கப்படும் என்றவாறு. நெடுவெண்பாட்டென்பன: தாமுடைய பன்னீரடி உயர்பு, இழிபு ஏழடியாக வருவனவென்பது; எனவே, நாற்சீர், அளவடியா யினாற் போல நாலடியான் வருதலே அளவிற்பட்ட தாகலான் ஐந்தடி முதலாக வருவன வெல்லாம் நெடுவெண் பாட்டென்றலே வலியுடைத்து. குறுவெண்பாட் டென்பன: இரண்டடியான் மூன்றடியான் வருவன. குறள்வெண்பா சிந்தியல்வெண்பா வெனப்படலும் ஒன்று. எனவே நான்கடி யான் வருவன அளவியல் வெண்பா வெனப்படும். கைக்கிளைப் பொருண்மைத்தாகலின் மருட்பாவினையுங் கைக்கிளை யென்றான். பரிபாடலென்பது பரிந்து வருவது; அஃதாவது கலியுறுப்புப்போலாது பலவடியும் ஏற்று வருவது. அங்கத மென்பது, 943முகவிலக்கு முதலாகிய விலக்குறுப்பாகியும் பிறவாற்றானும் 944அவை பொருளாக வருவது. ஒத்து என்பது இலக்கணத்தின் திரியாதென்றவாறு. இதனது பயம்: கைக்கிளை வெண்பாவினான் வரினுங் 945கலிப் பாவின்பாற் படுமென்பது. பரிபாடலுஞ் சிற்றுறுப்பு வகையான் ஒப்புமை யுடையவென் பது கொள்க. அல்லதூஉங் குறுவெண் பாட்டும் நெடு வெண் பாட்டும் பலவாகியும் ஒன்றாய் அடங்கு மென்பதூஉமாம். இனி, 946அல்லாதார் வெண்பாவினை ஐந்தெனவுஞ் சொல்லுப. அவை தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருமென வும் 947அவ்வாறு வருங்கால் ஈற்றடி ஒழித்து எல்லாந் தனிச்சொற் பெறுதலும் அவற்றை ஒன்றொன்ற னொடு பரிமாற்றித் தனிச் சொற் கொடுத்து உறழ்வனவுமாகிப் பலவா மென்பது. அங்கதச்செய்யுளென்பது பண்புத்தொகை. உம்மைத் தொகை யென்பார், செய்யுளென்பதும் வேறென்ப; அதற்கு விடை முன்னர்ச் சொல்லுதும்(439). 948எல்லாம் வெண்பா யாப்பின என்பதனை, செயற் படுத்து அவற்றுள் அங்கதமுங் கைக்கிளையும் மற்றைப் பாக்களும் உறுப்பாக வருமென்பது படும். (118) (கைக்கிளைச் செய்யுள் இவ்வாறு வருமெனல்) 431. கைக்கிளை தானே வெண்பா வாகி யாசிரிய வியலான் முடியவும் பெறுமே. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: வெண்பா உறுப்பாகி வருமென்றான், அற்றன்றி வெண்பாவினோடு ஆசிரியப்பாவும் உறுப்பாகக் கைக் கிளைக்கு வரும் என்றவாறு. அங்ஙனம் வருவது மருட்பாவாகலாற் கைக்கிளைப் பொருளே மருட்பாவிற் குரித்தென்பது பெற்றாம்: பெறவே, கலிநிலை வகையும் வஞ்சியும் பெறா (தொ. செ. 110) என்புழி விலக்கப்படாத ஆசிரியப்பாவும் வெண்பாவும் உறுப்பாக வருதலின், 949வாழ்த்தியல் வகையும் புறநிலைவாழ்த்து முதலாயின வாழ்த்துங் 950கைக்கிளையும் பொருளாக வரும் மருட் பாவென்பது பெற்றாம். கைக்கிளையதிகாரப்பட்டது கண்டு அதனை ஈண்டுக் கூறினான். ஒழிந்த புறநிலை வாயுறை செவி யறிவுறூஉக்களும் பொருளாக மருட்பா வருமென்பது முன்னர் அளவியலுள் (472) சொல்லும். இவற்றுக்கெல்லாஞ் செய்யுள் ஆண்டுக் காட்டுதும். (119) (பரிபாடல் இவ்வாறு வருமெனல்) 432. பரிபா டல்லே தொகைநிலை விரியி னிதுபா வென்னு மியனெறி யின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப. இது, பரிபாடற் காவதொரு புறனடையுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: பரிபாடல் 951வெண்பாவுறுப்பாக வரினும், இன்னபா வென்ப துணரப்படாமைப் பொதுப்பட நிற்றற்கும் உரித்து என்றவாறு. மண்ணார்ந் திசைத்த முழவொடு கொண்டதோள் 952கண்ணா துடன்விழூஉங் காரிகை கண்டார்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு (கடவுள் வாழ்த்து) எனப் பரிபாடல் வெண்பா உறுப்பாக வந்தது. ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலைத் தீயுமிழ் திறலொடு முடிமிசை யணவர (பரி. 1) என்பது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ள லோசைபடச் சொல்லவும்படுதலின், இதுபா வென்னும் இயனெறி யின்றிப் பொதுவாய் நின்றது எனப்படும். உம்மை இறந்தது தழீஇயிற்று. மற்று இது கலிப்பாட்டிற்கும் ஒக்கும் பிறவெனின், 953ஒவ்வாதாகாதே, ஆசிரியன் இவ்வாறு கூறினமையினென்பது. அல்லதூஉங் கலிக்கு ஓதிய இலக்கண மின்மையானும் பரிபாடலெனவே படும் பெரும்பான்மையுமென்பது. தொகுத்து விரித்தபா நான்க னுள்ளும் அடங்காது வேறாங்கால் அது வெண்பாவினான் யாக்கப்படாது பொதுவகையான் யாக்கப்படும் என்றவாறு. (120) (பரிபாடற்குரிய உறுப்பும் பொருளுமுணர்த்தல்) 433. கொச்சக மராகஞ் சுரிதக மெருத்தொடு செப்பிய நான்குந் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். இது, மேற்கூறிய வகையாற் பரிபாடற் கேற்ற பாவுறுப் பினை யெடுத்து விரி கூறி இத்துணை உள்ளுறுப்புடைத் தென் கின்றது. உள்ளுறுப்பென முப்பத்துநான் 954குறுப்பான் எண்ணப் படாவோ வெனின், அவை எல்லாச் செய்யுட்கும் பொதுவாகலான் அவற்றோ டெண்ணாது, இவற்றை இப்பாவிற் குறுப்பாகக் கூறினா னென்பது. மேல் வருகின்ற கலியுறுப்பிற்கும் இஃ தொக்கும். இ-ள்: செப்பிய நான்குறுப்புங் கலிக்குறுப்பாகச் சொல்லப்பட்ட வகையானே வரும் அவை ஈண்டும் என்றவாறு. தனக்கு என்றதனான் அவையல்லா உறுப்புளவென்பது முன்னர்ச் சொல்லுதும்; சொற்சீரடியும் (தொ. செ. 122) என்புழிக் காண்க. கொச்சகமென்பது ஒப்பினாகிய பெயர். ஓராடையுள் ஒரு வழியடுக்கியது கொச்சகமெனப்படும்; அதுபோல ஒரு செய்யுளுட் பல குறள் அடுக்கப்படுவது கொச்சகமெனப் பட்டது. குறிலிணை பயின்ற அடி அராகமெனப்படும். சுரிதகமென்பது அடக்கியலெனப்படும். எருத் தென்பது தரவு. இவை நான் குறுப்பாக வருவது பரிபாடலென்றவாறு. பெரும்பான்மையும் கொச்சகவுறுப்புப் பயின்று வருதலின் அதனை முன் வைத்தான். 955அராகம் எழுவாயாகாமையின் அதனை இடை வைத்தான். சுரிதகமென்பது எஞ்ஞான்றும் ஈற்றதாகலான் அதனை அதன்பின் வைத்தான். எருத்தினை ஈற்றுக்கண் வைத்தான் அதனை யின்றியும் வரும் பரிபாடலென்றற்கும் 956அஃது இடையும் வருமென்றற்கு மென்பது. உதாரணம்: வானா ரெழிலி மழைவள நந்தத் தேனார் சிமைய மலையி னிழிதந்து நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா மருந்தாகுந் தீநீர் மலிதுறை மேய விருந்தையூ ரமர்ந்த செல்வநின் றிருந்தடி தலையுறப் பரவுதுந் தொழுதே (இது தரவு) ஒருசார், அணிமலர் வேங்கை மராஅ மகிழம் பிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர் போங்கி மணிநிறங் கொண்ட மலை; ஒருசார், தண்ணறுந் தாமரைப் பூவி னிடையிடை வண்ண மரையிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப விண்வீற் றிருக்குங் கயமீன் விரிதகையிற் கண்வீற் றிருக்குங் கயல் ஒருசார், சாறுகொ ளோதத் திசையொடு மாறுற் றுழவி னோதை பயின்றறி விழந்து திரிநரு மார்த்து நடுநரு மீண்டித் திருநயத் தக்க வயல். ஒருசார், அறத்தொடு வேதம் புணர்தவ முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்திற் றிரிவில்லா வந்தண ரீண்டி யறத்திற் றிரியா பதி (இவை நான்குங் கொச்சகம்) ஆங்கொருசார், உண்ணுவ பூசுவ பூண்ப வுடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் புனைமறு கொருசார். விளைவதை வினையெவன் மென்புல வன்புலக் களம ருழவர் கடிமறுகு பிறசார் ஆங்க, அனையவை நல்ல நனிகூடு மின்ப மியல்கொள நண்ணி யவை (இது கொண்டுநிலை.) வண்டு பொரேரென வெழ வண்டு பொரேரென வெழுங் கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டிக் கடிப்பிகு காதிற் கனங்குழை தொடர மிளிர்மின் வாய்த்த விளங்கொளி நுதலா ரூர்களிற் றன்ன செம்ம லோரும் வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத் தொளியிழை யோங்கிய வொண்ணுத லோரும் புலத்தோ டளைஇப் புகழணிந் தோரு நலத்தோ டளவிய நாணணிந் தோரும் விடையோ டிகலிய விறனடை யோரு நடைமட மேவிய நாணணிந் தோருங் சுடனிரை திரையிற் கருநரை யோருஞ் சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரு மடையர் குடையர் புகையர்பூ வேந்தி யிடையொழி வின்றி யடியுறையா ரீண்டி விளைந்தார் விளைவின் விழுப்பயன் றுய்க்குந் துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையு மிருகே ழுத்தி யணிந்த வெருத்தின் நனைகெழு செல்வ னகர். வண்டொடு தும்பியும் வண்டொடையா ழார்ப்ப விண்ட கடகரி மேகமொ டதிரத் தண்டா வருவியோ டிருமுழ வார்ப்ப வரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப் புரிவுண்ட பாடலோ டாடலுந் தோன்றக் கூடு நறவொடு காமமகிழ் விரியக் கூடா நறவொடு காமம் விரும்ப வினைய பிறவு மிவைபோல் வனவு மனையவை யெல்லா மியையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர் (இவையும் கொச்சகம்) மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி யவிர்நிமிர் புகழ்கூந்தற் பிணிநெகிழ் துணையிணை தெளியொளி திகழ்ஞெகிழ் தெரியரி மதுமகிழ் பரிமலர் மகிழுண்கண் வாணுதலோர் மணிமயிற் றொழிலெழி லிகன்மலி திகழ்பிறி திகழ்கடுங் கடாக்களிற் றண்ண லவரோ டணிமிக வந்திறைஞ்ச வல்லலிகப்பப் பிணிநீங்க நல்லவை யெல்லா மியைதருந் தொல்சீர் வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவா யமர்ந்தா னகர். (இது முடுகியல்) திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத் திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தேற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கு மமிழ்ந்து கடைய விருவயி னாணாகி மிகாஅ விருவட மாழியான் வாங்க வுகாஅ வலியி னொருதோழங் கால மறாஅ தணிந்தாருந் தாம். மிகாஅ மறலிய மேவலி யெல்லாம் புகாஅ வெதிர் பூண்டாருந் தாம். மணிபுரை மாமலை ஞாறிய ஞால மணிபோற் பொறுத்தாருந் தாம்; பணிவில்சீர்க் செல்விடைப் பாகன் றிரிபுரஞ் செற்றுழிக் கல்லுயர் சென்னி யிமயவி னாணாகித் தொல்புகழ் தந்தாருந் தாம் (இவையும் கொச்சகம்) அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி நல்லடி யேத்திநிற் பரவுது மெல்லேம் பிரியற்வெஞ் சுற்றமொ டொருங்கே (என்பது ஆசிரியச் சுரிதகம்.) அறவோ ருள்ளா ரருமறை காப்ப என்னும் பரிபாடலுள், செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறுமுறை யானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு. இது, வெள்ளைச்சுரிதகத்தான் இற்றது. காமங் கண்ணிய நிலைமைத் தாகும் என்பது, காமப்பொருள் குறித்து வருமென்றவாறு. கண்ணிய வென்ற அதனானே, 957முப்பொருளுமன்றிக் கடவுள் வாழ்த்தி னும் மலைவிளையாட்டினும் புனல் விளையாட்டினும் பிறவு மெல்லாங் காமங் கண்ணியே வருமென்பது; என்னை? எல்லேம் 958பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே எனத் துணைபிரியாமை காரணமாகத் தொழுதே மென்றலின். காமரு சுற்றமொ டொருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென வேமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் றாணிழ றொழுதே (பரி. 1: 62 - 5) என்பதும் அது. இனிச் செப்பிய நான்கு என்றது, 959எண்ணப்பட்ட நான் கனையு மன்று; அன்னவற்றொடு மேற்கூறிய நான்கு பாவும் இடை வந்து விரவு மென்பது. அதுவும் நோக்கிப்போலும் பரிபாடல் என்றது. எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமிர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றெரிமணி விளங்கும் பூணினை மால்வரை யெரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை ............................................................................................. நாவ லந்தண ரருமறைப் பொருளே (பரி. 1: 6 - 13) என ஆசிரியம் வந்தது. நின்னொக்கும் புகழ்நிழலவை (பரி. 4. 55) என்பது வஞ்சித்தூக்கு. பிறவும் அன்ன காட்டுப. அது பொது வாய் நிற்றலும் உரித்தென்றதனான் அடங்கும். இனிச், செப்பிய நான்கென்றதனான் அராகமின்றி வருத லும், கொச்சகம் ஈற்றடி குறைந்து வருதலும், அவ்வழி அசை சீராகி இறுதலும் மேற்கலிப்பாவிற்குச் செப்பிய சுரிதகமாதலுங் கொள்க. (121) (சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்குறுப்பாமெனல்) 434. சொற்சீ ரடியு முடுகிய லடியு மப்பா நிலைமைக் குரிய வாகும். இதுவும் பரிபாடலுறுப்பு உணர்த்துகின்றது. இ-ள்: எண்ணப்பட்ட இரண்டும் பரிபாடற்குள்ள உறுப்பாய் வரும் என்றவாறு. சொற்சீரும் முடுகியலுமென்னாது அடியென்றதனான் 960மேற்கூறிய அடியொடு தொடர்ந்தல்லது வாராவென்பதாம். சொற்சீரடியாமாறு முன்னர்ச் சொல்லுதும். முடுகியலடி யென்பது முடுகியலொடு விராய்த் 961தொடர்ந்தொன்றாகிய வெண்பாவடி. அராகமென்பது தாமே வேறு சில அடியாகி வருவன. இவையன்றிக் குறிலிணை பயில்வன முடுகியலெனவுங் குறிலிணை விரவி வருவன அராகமெனவுஞ் சொல்லுவாரும் 962உளர். முடுகு வண்ண மடியிறந் தோடி யதனோ ரற்றே (தொ. செ. 234) என்பவாகலின் மேலதேயுரை. உரிய என்றதனான், இத்துணை பயின்றுவாரா. இவ் விரண்டுங் கலிப்பாவினுளென்பது கொள்க. எனவே, அராகவு றுப்புத் 963தேவபாணிக்கல்லது அக் கலிக்கண் யாண்டும் வாராதாயிற்று. (122) (சொற்சீரடியாமாறும் அதன் வகையும்) 435. கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்து முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியு மொழியசை யாகியும் வழியசை புணர்ந்துஞ் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே. மேலெண்ணப்பட்ட சொற்சீரடியாமா றுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: சொற்சீரடி இக்கூறிய நான்கு வகையானும் வந்து பயிலும் என்றவாறு. 964கட்டுரைவகையான் எண்ணொடு புணர்ந்தது: வடவேங்கடந் தென்குமரி, யாயிடை (பாயிரம்) எனவும், அஇஉ, எஒ என்னு மப்பா லைந்தும் (தொ. எழு. 3) எனவும், இவை கட்டுரைக்கட் சொல்லுமாறு போல எண்ணின மையிற் கட்டுரைவகையான் எண்ணொடுபுணர்ந்தன. இனி, 965முட்டடியின்றிக் குறைவுசீர்த்தாகும் இயல்பாய் வருமாறு: நின்னொக்கும் புகழ்நிழலவை (பரி. 1: 55) எனவும், கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையினவை எனவும் வரும். முட்டடியின்றி என்ற இவை 966தூக்குப்பட்டு முடியுமடி யல்ல என்றவாறு. மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள், ஒருசார் என்பது 967ஒழியசை; என்னை? அது சீராகலின் அதனொடு சில அசை கூடியன்றி அசையெனப் படாமையின். ஆங்கு என வருந் தனிச் சொல் 968வழியசை யெனப்பட்டது; என்னை? அஃது, அசை யாய் நின்று சொற்சீரடியாகலின். மற்றுச் 969சொற்சீரடியினை அசை யென்றதென்னையெனின், இயலசை தானேயும் ஒழியசை யாய் நிற்குமென்றற்கென்பது. ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்றா தவர் (கலி. 88) என்புழி ஒரூஉ வெனநின்ற இயலசைதானே ஒழியசையாய் நின்றது. உகுவது போலுமென் னெஞ்சு; 970எள்ளித் தொகுபுட னாடுவ போலு மயில் (கலி. 33) என்பது, வழியசைபுணர்ந்த சொற்சீரடி; என்னை? எள்ளி என நின்ற சீரின்வழித் தொகுபு என வந்த அசை உகுவது போலு மென்னுந் தொடையொடு பொருந்தி, உகுவது போலுமென் னெஞ்செள்ளித் தொகுபுடன் எனப் புணர்ந்து நின்றாற்போல்வதோர் சுவைமை செய்து நின் றமையின். கொச்சகம் 971இடைநிலைப் பாட்டெனப்படாமை யின், தொகுபுட னாடுவ போலு மயில் என நாற்சீரடியானும் வருவதாயிற்று, வரையறையின்மையின். இங்ஙனம் வந்தமையின் சொற்சீரடி மேல் 972எண்ணவும்படும். இவை 973கலிக்கண் வருங்கால் ஒத்தாழிசைக்கண் முடுகியலடி வாரா தென்பதூஉம், சொற்சீரடி வருஞான்றுத் தனிச்சொல் லாகியன்றி வாராதென்பதூஉம், உறழ்கலிக்கண்ணும் முடுகிய லடி உரித்தன்றென்பதூஉங் கொள்க. சொற்சீர்த்திறுதலென்பது:- ஓரெழுத்தொருமொழி முத லிய சொற்களெல்லாம் தாமே சீராய் அடியிறுதிக்கண் அடிப் பட முடிந்து அடியாதலிலக்கணத்த அவையென்றவாறு. இனி, ஒழியசையினையும் வழியசையினையுங் 974கூ(றினா) னென்னாமோவெனின், - சீர்கூ னாத னேரடிக் குரித்து (தொ. செ. 49) என்றமையின் ஈண்டு அசை கூனாகாது; அல்லதூஉம் ஆண்டுக் கூனெனப் பட்டதும் ஈண்டுச் சொற்சீரடி யெனப்பட்டு அடங்கு 975மென்பது. இவை யெல்லாம் பரிபாடற் கண்ணவே கூறினானா யினும் ஒழிந்த பாவினுட் சொற்சீரடி வருமென விதந்தவழி, 976இதுவே இலக்கணமாக வரும் ஆண்டு மென்பது. இயல்பு என்றதனானே யாண்டு வரினும் அஃதிலக்கணமென்பது பெற்றாம்; அல்லதூஉந், தொகைநிலை விரி (தொ. செ. 120) என்ற மிகையாற் பரிபாடற்கு உரியவாகக் கண்டுகொள்க. அவை யாவை யோவெனின், 977முடுகியலடிக்கு மேற்காட்டிய பரிபாடலுள், மணிமருடகை (ப. 1140) என்பது முதலாகக் குளவா யமர்ந்தா னகர் என்பதீறாகக் கண்டுகொள்க. (123) (அங்கதச் செய்யுளின் வகை) 436. அங்கதந் தானே யரிறபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. இது, முறையானே அங்கதச் செய்யுளுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: அது செம்பொருள் கரந்தது என்று இரு வகைத்தாம் என்றவாறு. அங்கதமென்பது வசை; அதனை இருவாற்றாற் கூறுக வென்பான் இது கூறினான். அவையாமாறு முன்னர்ச் சொல்லு தும். அரிறப வென்ற தென்னையெனின், அவை புகழ் போன்று வசையாதலும் பட்டுத் தோன்றும் மயக்கமுடைய வாதலின் மயக்கமறத் தெரியினென்றவாறு. நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான் (கலி. 52) என்பது புகழ் போன்று வசையாயிற்று; என்னை? கொன்றானா யினுங் 978குறங்கினகத்துத் தண்டுகொண்டு எற்றுதல் குற்றமாத லின் என்பதறிக. கொடைமடங் கூறுதல் வசை போன்று புக ழெனப்படும். அஃது அங்கத மாகாதென்பான் அரிறப வென்றானென்பது. பிறவும் அன்ன (124) (செம்பொருளங்கதம் இதுவெனல்) 437. செம்பொரு ளாயின் வசையெனப் படுமே. இது, முறையானே செம்பொரு ளங்கதமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம் பொருளங்கத மெனப்படும் என்றவாறு. அஃது, இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்ற-மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள என்பது 979ஏழிற்கோவை, அவ்வை முனிந்து பாடியது. எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே யெம்மிக ழாதவர் தம்மிக ழாரே தம்புக ழிகழ்வோ ரெம்புக ழிகழ்வோர் பாரி யோரி நள்ளி யெழினி யாஅய் பேகன் பெருந்தோன் மலையனென் றெழுவரு ளொருவனு மல்லை யதனா னின்னை நோவ தெவனோ யட்டார்க் குதவாக் 980கட்டி போல நீயு முளையே நின்னன் னோர்க்கே யானு முளனே தீம்பா லோர்க்கே குருகினும் வெளியோய் 981தேஎத்துப் பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே எனவும் வரும். கலிப்பாட்டினான் வருவன 982வசைக்கூத்தினுட் கண்டு கொள்க. அறச்சுவையிலன் வையெயிற்றினன் மயிர்மெய்யினன் மாசுடையினன் பொய்வாயாற் புகழ்மேவலன் மைகூர்ந்த மயலறிவினன் மேவருஞ் சிறப்பி னஞ்சி யாவரும் வெரூஉ மாவிக் கோவே. என்பது, வஞ்சிப்பாட்டு. இது, வெண்பாவினான் வருதலே பெரும்பான்மை. (125) (பழிகரப்பங்கதம் இதுவெனல்) 438. மொழிகரந்து சொல்லினது பழிகரப் பாகும். இது, பழிகரப்பங்கதம் உணர்த்துகின்றது. இ-ள்: வசைப்பொருளினைச் செம்பொருள் படாமல் 983இசைப்பது பழிகரப்பங்கதம் என்றவாறு. மாற்றரசனையும் அவனிளங்கோவினையும் வசைகூறு மாறு போலாது, தங்கோனையும் அவனிளங்கோனையும் வசைகூறுங்கால் 984தாங்கி யுரைப்பர்; 985அவை போலப் பழிப்பன வென்ற வாறு; அது, நன்றாய்ந்த செங்கோலாய் நாடிய நின்னிளங்கோக் குன்றெறிந்த சேந்த னெனமதியா- வன்றிறத்து நின்றொலிக்குந் தானையோ டெல்லா நிகர்த்தார்மேல் வென்றெறியும் வேலே விடும் என வந்த 986வெண்டொடைச் செய்யுளுட் கண்டுகொள்க. இதனுள், வென்றெறியும் வேலே விடும் என்பது, 987முனையகத்துப் படையோடு மென வசைகூறுவான் 988குன்றெறிந்த சேந்தனைப் போல எறிந்தானெனப் புகழ்ந்தான் போலக் கூறினானென்பது. இன்றுள னாயி னன்றும னென்றநின் னாடுகொள் வரிசைக் கேற்பப் பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே (புறம். 53.) என்பதும் அது. (126) (அங்கதச் செய்யுள் இவ்வகையானும் வகுக்கப்படுமெனல்) 439. செய்யுட் டாமே யிரண்டென மொழிப. மேற்கூறிய இரண்டனையும் இவ்வகையானும் வகுக்கப்படு மென்கின்றது. இ-ள்: செம்பொருட்செவியுறை, செம்பொருளங்கதம், பழி கரப்புச் செவியுறை, பழிகரப்பங்கதமென நான்கு கூறுபடும் மேற்கூறிய அங்கத மிரண்டும் என்றவாறு. பாய்த்துள், விக்குள் என்றாற்போலச் செய்யுள் என்பதூஉந் தொழிற்பெயர். அவையாமாறும் அவற்றது வேறுபாடும் முன்னர்ச் சொல்லுதும். இனி, ஒருவனுரை: இவற்றுள் தொகைச்சூத்திரத்துட், கைக்கிளை பரிபாட் டங்கதஞ் செய்யுள் (தொ. செ. 118) என்று ஓதிச் செம்பொருளங்கதமுஞ் செய்யுளுமென இரண்டாக நிறுத்தான்; நிறுத்தமுறையானே அங்கத முணர்த்திச் செய்யுளுணர்த்திய விதந்தானென்பது; அற்றன்று, எல்லாப் பாட்டுஞ் செய்யுளெனப்படுதலின் ஒன்றனையே செய்யுளென லாகாது; அல்லதூஉம், அங்கதச் செய்யு ளென்மனார் புலவர் (தொ. செ. 129) என வருகின்ற சூத்திரத்து ஓதுமாதலான் இவையும் அங்கதச் செய்யுளே. 989மேலைச் சூத்திரத்துள்ளும் (430) அங்கதச் செய்யு ளென்பதே பாடமென்ப தூஉம் அதனாற் பெறுதுமென்பது. 990அல்லாத பாடம் ஓதினும் அங்கதச் செய்யுள் செய்கைமே லென அதனைத் 991தாய்க்கொலையென்றது போல் இரண் டாவதன் பொருண்மைப்படுத்துக் கொள்க. (127) (செவியுறையங்கதம் இதுவெனல்) 440. துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற் செவியுறைச் செய்யு ளதுவென மொழிப. இது, மேற்கூறிய அங்கதச்செய்யுட்பகுதி இரண்டனுள் ஒன்று கூறுகின்றது. இ-ள்: மேற் செம்பொருளும் பழிகரப்புமெனப்பட்ட இரண்டும் அங்கதச்செய்யு ளெனப்படுதலேயன்றி, அதனானே அரசர்க்குப் பொருள் வருவாயாகச் செய்தானேயெனினும் அது செவியுறையங்கத மெனவும்படும் என்றவாறு. துகளாவது : படை குடி கூழமைச்சு நட்பரணாறும் என்னும் இவற்றைப் பாதுகாவாதிருத்தல். 992அரசியல் என்பன வற்றானே தங்கோன் அறியாமல் வகுத்தவை வருமாயின், அவற்றை உள்ளவா றுரைத்தலு மொன்று. மாற்றரசன் நமரது ஊரடுகின்ற நாட்டவர் யாதிவை நுதலியன வேதுவாகப் போய்ச் சார்ந்து அவற்கு நாட்டழிவு கூறுதலு மொன்று. அன்ன பிறவும் அவற்கு உறுவகை யாகலான், அவற்றை உள்ளவாறு உணர்த்திப் பொருள்செய அவர்க்குப் பொருள்செயல்வகை கூறினமையின், அது செவி யுறைப்பாற்படு மென்பது. அஃது அறவை யாயி னினதெனத் திறத்தன் மறவை யாயிற் போரொடு திறத்த லறவையு மறவையு மல்லை யாகத் திறவரி தடைத்த திண்ணிலைக் கதவி னீண்மதி லொருசிறை யொடுங்குத னாணுத்தக வுடைத்திது காணுங் காலே (புறம். 44) என இது செம்பொருட்செவியுறை. பிறவும் அன்ன. இவை 993முகவிலக்கி னுட் பயின்று வருமென்பது. இனி, மொழி கரந்து சொல்லினும் இஃதொக் கும். இனிப், 994புகழொடும் பொருளொடும் என்பதூஉம் பாடமாக உரைப்ப. புகழும் பொருளும் புணர்ப்பது அங்கதமாயின் அஃதமையும்; அற் 995றன்றாயின் ஈண்டாராய்ச்சி யின் றென்பது; என்னை? வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயி னங்கதச் செய்யுள் (தொ. செ. 129) என மேலோதுமாதலின் இவனென்பது. (128) (ஏனை அங்கதம் இதுவெனல்) 441. வசையொடு நசையொடும் புணர்ந்தன் றாயி னங்கதச் செய்யு ளென்மனார் புலவர். இஃது, ஒழிந்த அங்கதச்செய்யு ளுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற்கூறிய அங்கதச்செய்யுள் வசையே யன்றி அவ்வசை யானே 996நகைதோன்றச் செய்வது செவியறிவுறை யெனப்படாது அங்கதச் செய்யுளெனவே படும் என்றவாறு. எனவே, இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாகச் செய் யினும் அங்கதச் செய்யுளெனப்படும் என்றவாறு, அவை, விலக்கி யற்செய்யுளுட் கண்டுகொள்க, இதுவுஞ் செம்பொரு ளாகியும் பழிகரப்பாகியும் வருமென வுணர்க. எனவே, கூறப் பட்டனவெல்லாம் வெகுளியும் பொருளும் நகையும் பயப்பன வாயின. (129) (கலிப்பாவின் வகை) 442. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே. இது, கலிப்பா வெனப்பட்ட உறுப்பினை இத்துணைப் பகுதியான் வருமென்பது வருஞ்செய்யுள்பற்றி விரி கூறுகின்றது. இ-ள்: ஒத்தாழிசை - ஒத்தாழிசையென்னும் உறுப்புடைச் செய்யுள். 997ஒத்து ஆழ் இசையை ஒத்தாழிசையென்றான்; அது வினைத்தொகை யாகலின் 998மருவிய வகையான் முடியு மென்பது. 999தாழிசை யென்பது தானுடைய துள்ளலோசைத் தாம். இது 1000முறைமையிற் பெற்ற பெயர்; எனவே, தரவுவேறு படினும் வேறு படா தென்பதூஉங், கொச்சகக்கலி போல்வன வற்றுள் வரும் இடைநிலைப்பாட்டுக்கள் அவ்வாறு தாழ முடையவன்றியும் வருமென்பதூஉங் கொள்க. இது பன்மை பற்றிப் பெற்ற பெயர், தாழிசையின்றியும் ஒத்தாழிசை சிறுபான்மை வருதலின். இனி, ஒழிந்த உறுப்புநோக்கத் தாழிசை சிறந்தமையின் தலைமையாற் பெற்ற பெயரெனவும் அமையும். வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தைய ரற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்ப தறிந்தன ளென்றோழி (கலி. 4) என்பது தாழ்ந்த ஓசைத்தன்றி ஒத்தாழிசைக் கலியுள் தரவு வந்தது. எனவே, இவ்வேறுபாடு கட்டளைக்கலி அல்லாதவழி யென்பது பெற்றாம். 1001அதுவன்றே, இதன் றாழிசையுள்ளும் நேரீற்றியற் சீரும் வந்ததென்பது; என்னை? காழ்விரி கவையார மீவரு மிளமுலை போழ்திடைப் படாஅமன் முயங்கியு மமையாரென் றாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர் சூழ்வதை யெவன்கொ லறியே னென்னும் (கலி. 4) என்புழி அறியே னென்னும் என ஆண்டைத் தாழிசை தோறும் இரண்டு நேரீற்றியற்சீரும் வந்தன. பிறவும் அன்ன. நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே; இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ லினைநோக் குண்க ணீர்நில் லாவே (கலி. 7) எனக் கொச்சகக்கலியுள் இடைநிலைப்பாட்டுத் தாழிசையின்றி வந்தது. பிறவும் அன்ன. இனிக், கலிவெண்பாட்டுகலிப்பாவாகிய வெண்பாட்டு. இது பண்புத்தொகையானே 1002முன்மொழிப் பொருட்டா யிற்று. 1003கொச்சக மென்பதும் உறுப்பினாற் பெற்ற பெயர். 1004உறழ்கலி யென்பது பொருள்பற்றி வந்த பெயர். ஒத்தாழிசை யென்பது தம்மினொத்துவருதற் 1005கட்டளை யுடைமையானுங் கலிப்பாவிற்குச் சிறந்து வருமாகலானும் முன்வைத்தான். என்னை இது கலிப்பாவிற்குச் சிறந்தவாறெனின், நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசை அறுபத்தெட்டு வந்தனவாகலின் அது பெருவர விற்று எனப்பட்டுச் சிறப்புடைத்தாயிற்று. அது நோக்கி முன்வைத் தான், 1006இதுபா வென்னும் உறுப்பிலக்கணங் கூறுகின்ற இடமாக லின். கலிவெண்பாட்டினை ஒத்தாழிசைக்குங் கொச்சகத்திற்கும் இடைவைத்தான். 1007அதுபோல உறுப்புடைத்தாகியும் வருமென்றற்கு அதன்பின் கொச்சகப்பா வைத்தான், அது தரவும் போக்குஞ் சிறுபான்மை யின்றியும் வருதலின். எல்லாவற்றுப் பின்னும் உறழ் கலி வைத்தான், அவை போலாது சுரிதகமின்றி வருதலே பெரும் பான்மையாகலானென்பது. அஃதேல், உறழ்கலியுங் கொச்சகக் கலி யுள் அடங்காதே? அதுவும் அடக்கியலின்றியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடைத்தாய் வருமாலெனின்,அற்றன்று; அடக்கியலின்றி வரின், அடி நிமிர்தலும் ஒழுகிசைத் தாகலும் வேண்டும்; உறழ்கலியாயின் அடிநிமிராதும் ஒழுகிசை யின்றியும் வருமென்பது. அத்துணையான் இதனை வேறென்ப தென்னை? ஒன்றாக ஓதுக வெனின்,அற்றன்று; மேற்கூறி வருகின்ற செய்யுளெல்லாஞ் சீரும் அடியும் பாவும் பொருளு மெனச் சிலவுறுப்பு வகையான் வேறுபடுகின்ற தன்றிப் பிறி தின்மையின், அவ்வேறுபாடுஞ் சிலவாக நோக்கி 1008ஒன்றென் னானாகலின் அது கடாவன் றென்பது. அல்லதூஉம், நூல் செய்யுங்கான் மரபென்பது வேண்டும்; என்னை? மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை யியல (தொ. மர. 93) என்பதனான், முதனூற்காயினும் மரபுவேண்டுதலின். 1009அது வன்றே நிலம் நீர் தீ வளி விசும்பென்னும் ஐம்பெரும் பூதங்களும் அவற்ற தியைபாகிய பொருள்களும் அஃறிணையான் வழங்கி னும், பொருளின் இயைபாகிய மக்களுந் (644) தேவரும் முதலாயி னாரை உயர்திணைவாய்பாட்டான் வேறுபடுத்து வழங்குகின்ற தென்பது. மற்று உறழ்கலி யென்னும் வழக் குண்டா யினன்றே மரபொடு மாறுபடுவதெனின், - மரபென 1010ஆசிரியர் வழக்கும் அடங்குமாகலின் அது கூறினான்; அல்லாக்கால் ஒழிந்த செய்யுளும் வேறுபாடிலவாமன்றோவென்பது. இனிப், பரிபாடலுங் கலிப்பாவினுள் அடங்கு மென்பாரும் உளர். கலியும் பரிபாடலுமென எட்டுத் தொகையுள் இரண்டு தொகை தம்மின் வேறாதலின் அவ்வாறு கூறுவார் செய்யுள் அறியாதாரென்பது. அல்லதூஉம், 1011அராக வுறுப்பில்லாத முடுகியலடியுங் கொச்சகக்கலி யல்லாத கலிப்பாவினுள் 1012உண்டாவதாகலுங் கொச்சகக்கலி யுறழ்ந்து வருதலும் உடைய வாம், அவ்வாறு கூறினால் என மறுக்க. (130) (ஒத்தாழிசைக்கலியின் வகை) 443. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும். இது, முறையானே ஒத்தாழிசைக்கலி யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒத்தாழிசைக்கலி இரண்டு கூற்றதாம் என்றவாறு. இதனது பயம்:-அவை இரண்டுந் தம்முட் பகுதியுடைய வென்பது; அவையாமாறு முன்னர்ச் சொல்லும். (131) (அகநிலை ஒத்தாழிசைக் கலியினுறுப்புகள் இவை எனல்) 444. இடைநிலைப் பாட்டொடு தரவுபோக் கடையென 1013நடைநவின் றொழுகு மொன்றென மொழிப. இ-ள்: மேற்கூறிய ஒத்தாழிசை இரண்டனுள் ஒன்று தாழிசையுந் தரவுஞ் சுரிதகமுந் தனிச்சொலுமென நான்கு உறுப்பாகப் பயின்றுவரும் என்றவாறு. பயின்று வரும் எனவே இவ்வாறன்றிப் பயிலாது வருவனவும் இதன் பகுதி1014யாயடங்குவன உள வென்பது. அவை தாழிசைப் பின்னர் 1015எண்ணுறுப்பு வருங்கால் ஐந்துறுப்புப் பெறுதலும், அவற்றிடை அராகம் பெறின் ஆறுறுப்பு வருதலு மென இவை 1016யென்ப; அற்றன்று, நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலியின் அராகவுறுப்பும் அம்போத ரங்கவு றுப்பும் பெற்று வருவன இன்மையின் அவை பொருளல்ல என்பது. மற்று நடைநவின்றொழுகு மென்ற தென்னையெனின் இத்துணை பயின்றுவாராது 1017ஏனை யொன்றும் என்றற் கென்பது. தாழிசையினை இடைநிலைப்பாட்டென்பவோ வெனின்,அவ்வாறுஞ் சொல்லுப, அச்செய்யுள் இடைநிற்றலா னென்பது. இனி இடைநிலைப் பாட்டென்பது தாழிசையினை நோக்காது; என்னை? தாழம்பட்ட வோசையல்லாதனவும் இடைநிலைப் பாட்டாய் வருமாதலினென்பது. அது. காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே (கலி. 123) என்பது; தாழிசையெனவும் இடைநிலைப்பாட்டெனவும் படும். இன்மணிச் சிலம்பிற் சின்மொழி யைம்பாற் பின்னொடு கெழீஇய தடவர லல்கு லுண்வரி வாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ தகாஅய் காணீ (கலி. 125) என்றாற்போல்வன தாழிசை யல்லாத இடைநிலைப்பாட்டு. இவ்விரு பகுதியுங் கூட்டித் தாழிசை யென்னாது இடைநிலைப் பாட்டென்பது 1018இங்ஙனந் தம்முட் பகுதியுடைமையானு மாயிற்று. ஒத்தாழிசைக்கலி இருவகைத் 1019தென்றதற்குப் 1020பயனாந் தோற்றுவாய் செய்து 1021போந்தது இஃது என்பது. தரவு என்றதன் பொருண்மை என்னையெனின், முகத்துத் தரப்படுவ தென்ப; அதனை எருத்தெனவுஞ் சொல்லுப; என்னை? உடம்புந் தலையுமென வேறுபடுத்து வழங்கும் வழக்கு வகையான், உடம்பிற்கு முதல் எருத்தென்பதாகலின். இனி, இசைநூலாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம் நிலை கொச்சகம் முரியென வேண்டுப. கூத்தநூலார் கொச்சக முள்வழி அதனை நிலையென அடக்கி முகம் நிலை முரியென மூன்றாக வேண்டுப. அவரும் இக்கருத்திற்கேற்ப முகத்திற்படுந் தரவினை முகமெனவும், இடை நிற்பனவற்றை இடைநிலை யெனவும் இறுதிக்கண் முரிந்து மாறுஞ் சுரிதகத்தினை முரியெனவுங் கூறினாரென்பது. செந்துறைச் செய்யுள் 1022அடைநிலை பயப்ப தின்மையின் அது சிறந்த தன்றென்று அடக்கி மொழிப. உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகை யான் அடக்கு மியல்பிற்றாகலின் 1023அடக்கிய லெனவுங், குறித்த பொருளை முடித்துப் போக்குதலிற் போக் கெனவும், அவை யெல்லாம் போதந்து வைத்தலின் வைப்பெனவுங், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் 1024வார மெனவும் எல்லாம் ஒன்றொன்றனை ஒத்தே பெயராயின. அடை நிலையென்பது முன்னும் பின்னும் பிறவுறுப்புகளை அடைந் தன்றி வாராது; அது, தனி நின்று சீராதலின் தனிச் சொல் லெனவும்படும். 1025இடைநிலை யுறுப்பென்னாது பாட்டென்ற தென்னையெனின், அவை தாமே 1026பாட்டாயும் வருமிடனு டைய; வருங்கால் அவை ஒன்றும் இரண்டும் 1027பலவுமாய் வருமென்பது. இடைநிலைப் பாட்டினைத் தரவிற்கு முற்கூறி னான், 1028அது பெயர் பெறுதலின். எனவே தரவு முன்வைத்தலே மரபாயிற்று. ஒத்தாழிசை கூறிய முறையானே தரவு தாழிசை போக்கென்னும் மூன்றுறுப் பானுஞ் சிறுபான்மை வந்து தனிச்சொலின்றி வருதலின் தனிச்சொல்லினை இறுதிக்கண் வைத்தானென்பது. இவை போக்கிச் சொல்லுதும். (132) (தரவின் அடியளவு கூறல்) 445. தரவே தானு நாலடி யிழிபா யாறிரண் டுயர்பென் 1029றேறவும் பெறுமே. இது, தரவின் அடியள வுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற்கூறப்பட்ட தரவுதானும் நான்கடிமுதலாய்ப் பன்னிரண் டடிகாறும் வரப்பெறும் என்றவாறு. எனவே, ஒன்பது நிலம் பெறுந் தரவென்றவாறாயிற்று. உயர்பென் றேறவும் பெறும் என்றதனாற் பன்னிரண்டடியின் இகந்து வரவும் பெறும் சிறு பான்மை யெனக் கொள்க. இதனை எடுத்தோதாது இலேசினாற் கொண்டான், பன்னிரண்டடியின் இகந்தன துள்ளலோசை யான் வாராமையின். அது நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொண்மார் (கலி. 75) v‹D« kUj¤âiz¡ fÈ¥gh£oD£ f©LbfhŸf.(133) (தாழிசையின் அடியளவு கூறல்) 446. இடைநிலைப் பாட்டே, தரவகப் பட்ட மரபின தென்ப. இது, தரவிற்குச் சுருங்கியன்றித் தாழிசை வாராதென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தரவின் அகப்பட்டது தாழிசை என்றவாறு. 1030அகப்படுதல் என்பது அகம் புறமென் றிருகூறு செய்த வழி முற்கூற்றினுட் படுதல். முன்னென இடவகையுங் காலவகை யும் பற்றிய இருகூற்றினுள் 1031யாதானுமொன்று கொள்க. எனவே பதினோரடி முதல் இரண்டடிகாறும் இழிந்து வரப் பெறும் என்றவாறாயிற்று; அது, சுருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறும் சுரும்பார்க்குங் குரலினோ டிருந்தும்பி யியைபூத வொருங்குட னிம்மென விமிர்தலிற் பாடலோ டரும்பொருண் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போற் பெருங்கட றுயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்; காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே; கொல்லேற்றுச் சுறவினங் கடிகொண்ட மருண்மாலை யல்லனோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மடநெஞ்சே; பொறிகொண்ட புள்ளினம் வதிசேரும் பொழுதினாற் செறிவளை நெகிழ்த்தான்கட் சென்றாய்மற் றவனைநீ யறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே; எனவாங்கு; எல்லையு மிரவுந் துயிறுறந்து பல்லூ ழரும்பட ரவலநோய் செய்தான்கட் பெறனசைஇ யிருங்கழி யோதம்போற் றடுமாறி வருந்தினை யளியவென் மடங்கெழு நெஞ்சே (கலி. 123) என இது தரவகப்பட்ட மரபிற்றாகித் தாழிசை வந்தது. தரவிற் சுருங்கு மென்னாது அகப்படுமென்றான், தர வோடு ஒத்து வரும் தாழிசை யென்பதூஉங் கோடற்கு; என்னை? 1032மக்களகத்துப் பிறந்தா னென்றவழி அச்சாதியோடொக்கப் பிறந்தானென்பது படுமாகலின் என்பது. ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய நீலநீ ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; ஊரல ரெடுத்தரற்ற வுள்ளாய்நீ துறத்தலிற் கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்; இணைபிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலிற் புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாண்மற் றுணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்தினி யணிவனப் பிழந்ததன் னணைமென்றோ ளல்லாக்கால்; இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல மிழந்தினி நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால்; அதனால், பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தக்கா லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப் புரியுளைக் கலிமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே (கலி.124) எனவரும். பன்னிரண்டியின் இகந்த தரவிற்கும் இவ்வாறே தாழிசை கொள்ளப்படும். மற்று 1033மேற்கூறிய வரையறையின் தாழிசை கூறுக வெனின், 1034ஆண்டு முறை பிறழ வைத்ததற்குக் காரணங் கூறிப் போந்தாமென விடுக்க. இனி வருஞ் சூத்திரத்திற்கும் இதுவே விடை. மரபின வென்றதனான் மேலைக்கொண்டும் 1035அடிப்பட வந்த மரபினாற் சுருங்குமென்பது. எனவே, நான்கடியின் உயர வாராவென்பது கொள்க. இன்னும் மரபி னென்றதனாற் சிறு பான்மை ஐந்தடியானும் வருவனவும் உள. அரிதே தோழி நாணிறுப்பா மென்றுணர்தல் (கலி.137) என்னும் நெய்தற்றிணைக் கலிப்பாட்டினுள், நகைமுத லாக நட்பினு ளெழுந்த தகைமையி னலிவ தல்லதவர் நம்மை வகைமையி னெழுந்த தோண்முத லாகப் பகைமையி னலிதலோ விலனா மாயிழை பகைமையிற் கடிதவர் தகையி னலியுநோய் என ஐந்தடியான் தாழிசை வந்தது. 1036ஆறடியின் வருவன வந்த வழிக் கண்டுகொள்க. மற்று நான்கடியின் 1037இழிந்தோரடியானுந் தாழிசைவருமாலெனின் வாராதன்றே, இடை நிலைப் பாட்டே என்றாராகலின்; என்னை? பாட்டெனப்படுவன ஓரடியான் வாராமையின். (134) (தனிச்சொல்லாவது இதுவெனல்) 447. அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி. இஃது, ஆங்கென்னுஞ் சொல் தனிச்சொல்லெனப்படு மென்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தாழிசைப் பின்னர் ஆங்கு, தனிச்சொல்லாய் நின்று பயிலும் என்றவாறு. ஆங்கென்னுஞ் சொல்லினை எடுத்தோதினான், அது 1038நடைநவின் றொழுகுமாகலின். ஆங்கென்னுஞ் சொல் பயின்று வருமெனவே அல்லாதனவும் உள, இத்துணைப் 1039பயிலாதன வென்பது கொள்க. ஆங்க என்பது ஏழாம் வேற்றுமை இடப் பொருள் தோன்ற நின்ற சொல்லாகலின் அஃ தெல்லாச் செய்யுட் கண்ணுந் 1040தன் பொருண்மைக் கேற்பச் 1041செய்யல் வேண்டும்பிற வெனின், அற்றன்று; அதனை அசைநிலையாகக் கொள்க; அல்லதூஉம், எல்லாச் செய்யுளும் இதன் பொருண்மைக் கேற்பச் செய்யல் வேண்டு 1042மென்றான் மிகை கூறிப் பயந்ததின்மையா னென்பது. அசைநிலை பெய்து செய்யுள் செய்தன் மரபாகலின் அஃதமையுமென்பது. நடைநவி லாதன பொருள்பெற வருமென்பது. அவை முன்னர்க் காட்டுதும். (135) (சுரிதகமாவது இதுவெனல்) 448. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே. இஃது, ஒழிந்த சுரிதகம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: போக்கின திலக்கணப்பகுதி வைப்பென்று சொல்லப்படும் என்றவாறு. 1043இங்ஙனங் கூறப்பட்ட உறுப்பினை அடக்கியலெனவும் வாரமென வுஞ் சொல்லுப. அடக்கியல் வாரந் தரவோடு ஒக்கச் சொல்லப்படு மென்றவாறு. என்றதென்னோக்கி யெனின்,போக்குதலும் வைத்தலு மென்னும் இரண் டிலக்கணமுடைத்து; வாரமெனச் சொல்லின் முடியுமிலக்கணமே கூறுவான் போலப் போக்கி னிலக்கணப்பகுதி வைப்பென்றதனைச் சுட்டிக் கூறப்படுமாகலின். (136) (என்றதென்னோக்கியெனின், போக்குதலும் வைத்தலு மென்னும் இரண்டிலக்கணமுடைத்து எனச் சொல்லின் முடியு மிலக்கணமே கூறுவான்போலப், போக்கினிலக்கணப்பகுதி வைப்பென்று அதனைச் சுட்டிக் கூறியவாறு, இங்ஙனங் கூறப்பட்ட உறுப்பினை அடக்கியலெனவும் வாரமெனவுஞ் சொல்லுப. அடக்கியல் வாரந் தரவோ டொக்கும் என்பவாக லின்.) (134) (சுரிதகத்தின் அடியளவும் அதன் பொருள்வைப்பு முணர்த்தல்) 449. தரவிய லொத்து மதனகப் படுமே புரைதீ ரிறுதி நிலையுரைத் தன்றே. இதுவுஞ் சுரிதக முணர்த்துகின்றது. இ-ள்: 1044தரவியலொத்தும் அதனகப்படும் - சிறுபான்மை தரவுகளோ டொத்து, உம்மையான் ஏறி வருமாயினும் பெரும் பான்மை தரவின்பாகம் பெறுதலை இலக்கணமாக வுடைத்து மேற்கூறிய சுரிதகம்; புரைதீர் இறுதிநிலை உரைத்தன்றே - இடை நிலைப்பாட்டுப் பொருளினை முடிபு நாட்டி நிற்கும் அதுதான் என்றவாறு. 1045அகப்படும் என்று அதற்கும் உம்மை கொடுத்தமை யின் அஃதிலக் கணமாயிற்று; ஆகவே, அவ்விலக்கணத்திற்கேற்ற தரவின்கண்ணே ஒத்தலும் உயர்தலும் கொள்க. 1046சுருங்கிய வெல்லை, ஆசிரியத்திற்கு இழிந்த வெல்லையாகிய மூன்றடிச் சிறுமையிற் கூறாமையிற் (அதிற்) சுருங்காது வருவதாயிற்று. ஈண்டும் அகப்படுமெனவே பன்னீரடித்தரவின் பாகமாகிய ஆறடியே சுரிதகத்திற்கு உயர்விற்கு எல்லை என்பதூஉம், இழிந்த வெல்லை கூறாமையின் பன்னீரடித் 1047தரவிற்காயின் ஈற்று மூன்றடிச் சுரிதகம் வருதலும் 1048ஒழிந்த கலி நாலிற்கும் அவ்வாறே வருதலுங் கூறினானென்பது, இனி, வெள்ளைச் சுரிதகத்துக்கும் இஃதெல்லா மொக்கும். 1049புரைதீர் இறுதிநிலை உரைத்தன்றே எனபது. இடை நிலைப் பாட்டுப் பொருளினை முடிபுகாட்டியே நிற்கும் அது தான் என்றவாறு. இனித் 1050தரவியலொத்தல் ஈற்றயலடி முச்சீராகாது மண்டிலமாகி வருதலுஞ் சிறுபான்மையெனக் கொள்க. 1051இறுதி நிலை யென்பதனை நுனிவிரல் என்றாற் போலக் கொள்க. நிலையெனப்பட்டது இடை நிலைப்பாட்டு. அதனிறுதியைக் கூறுமெனவே அவற்றுப் பொருளினை முடித்துவிடுக்கு மென்பதாம். போக்கியல் வகையே வைப்பெனப் படும் (448) என்றவழி உள்ளுறுப்பின் பொருளினைத் தன்கண் வைக்கப்படு வது சுரிதகமென்றதன்றி இன்ன உறுப்பின் பொருள் வைக்கப்படு மென்றிலாதான் 1052முற்கூறியது பொதுவிதி மாத்திரை யேயன்றி இடைநிலைப்பாட்டின் பொருளே பெரும் பான்மையும் வைக்கப்படுமென்பதூஉம் பொது விதியாற் சிறுபான்மை தரவின் பொருண்மை வைத்தலு முடைத்தென்ப தூஉங் கூறினான். தரவியல் என்றதனான் தரவோடொத்த பொருட் கேற்றனவுங் கொள்க. நச்சல் கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல் (கலி.8) என்பது, தாழிசைப்பொருண்முடிவு தன்பால் வைக்கப்படுத லின் இறுதி யுரைத்தது. புரைதீ ரிறுதி யென்றதனான் அத் தாழிசைப் பொருளையன்றி 1053அவற்றொடு போக்கியற் பொருள் வந்தக்கால் அவ்விரண்டனையும் புரைபடாமற் பொருந்தச் செய்கவென்பது. அது, தன்னகர் விழையக் கூடின் (கலி.8) எனப் போக்கியற் பொருளொடு புரை தீர்ந்திற்றது; பிறவும் அன்ன. இமையவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தணன் (கலி. 38) என்னுங் குறிஞ்சித்திணைப் பாட்டினுட் கோடுபுய்க் கல்லா துழக்கு நாடன் என்று உள்ளுறையுவமத்தான் தலைவியது விழுமங் கூறினமை யின் அதனையு முட்கொண்டு போந்து, சுரிதகத்து, நின்னுறு விழுமங் கூறக் கேட்டு வருமே தோழி நன்மலை நாடன் என வைத்தமையின் அது தரவியலொத்ததாயிற்று; இனி, ஞாலமூன் றடித்தாய (கலி. 124) என்னும் நெய்தற்றிணைக் கலிப்பாட்டு 1054அளவியலாற் சுரிதக மொத்தது. கருங்கோட்டு நறும்புன்னை (கலி. 123) என்பது, தரவிற்கு அடியைந்தாகச் சுரிதகம் நான்கடியாய்ச் சுருங்கி வந்தது. அஃதேல் 1055தரவகப்பட்டதெனச் சுருங்குதலன்றி ஒத்தற் பொருளும் படுமாயின் தரவகப்படும் போக்கென்னாது தரவிய லொத்தும் என்ற தென்னை யெனின், 1056தரவுமென்ற உம்மையாற் சிறுபான்மை மிக்கு வரவும்பெறும் போக்கென்பது கொள்க. பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான் (கலி. 16) என்னும் பாலைப்பாட்டுத் தரவுந் தாழிசையும் நான்கடியாகி ஒத்தவழிச், செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன தெய்வத்துத் திறநோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையத்து வான்றருங் கற்பினா ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே (கலி. 16) எனச் சுரிதகம் ஐந்தடியாயிற்று. (137) (ஏனை ஒத்தாழிசைக்கலி இப்பொருட்கண் வருமெனல்) 450. ஏனை யொன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே. இஃது, ஒழிந்த ஒத்தாழிசை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அது முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து என்றவாறு. எனவே, இஃது அகநிலைச் செய்யுளாகா தென்றான். இதனானே முன்னையது அகநிலை யொத்தாழிசை யெனப் படும். மற்றிது, வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே (தொ.செ.109) என்றவழிச் சொல்லப்பட்டதாமெனின், அஃது உறழ்கலிக்கும் வெண்கலிக்குங் கொச்சகக்கலிக்கும் பொதுவாகலின் அவற்றுக்குத் தேவபாணி விலக்கினானென்பது. மற்று முன்னிலைக்கணென்ற தென்னையெனின்,தெய்வத் தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டனவன்றி அல்லன தேவபாணியெனத் தகாவென்பது; என்னை? யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வமென்று தன்னைத் தான் புகழ்ந்து கூறி நின்னைக் காப்பேன்; நீ வாழியவெனத் தெய்வஞ் சொல்லிற்றாகச் செய்யுள் செய்தலும் ஆகாது, 1057வழக்கினுள் அவ்வாறுண்டாயினென்பது. இதனானே படர்க்கையும் விலக்கினானாம். ஆகவே, தெய்வம் படர்க்கையாயவழிப் (புறம். 35) புற நிலைவாழ்த்தாவதன்றித் தேவர்ப் பராயிற்றாகாது, பாட்டுடைத் தலைவனொடு கூட்டிச் சொல்லினு மென்றானாம். இங்ஙனங் கூறவே, பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாக்காலுந் தேவர்ப் பராயிற்றேயாம், முன்னிலையாயி னென்பது பெற்றாம். 1058மற்றிவை பாடல் சான்ற 1059புலனெறி வழக்கிற் கன்றித் தேவர்ப் பராயதற்கும் உரியவோவெனின்,1060ஆண்டு 1061அகப்பொருட் குரிமை யுடையன கலியும் பரி பாடலுமென்றத னானே, 1062அத்துணை யன்றிக் கடவுள் வாழ்த்துப் பொருள்படவும் வரு மென்பது ஈண்டுக் கூறினானா மென்பது. அதுவன்றே 1063ஏனையது எனச் சிறுமை தோன்றப் பிற்கூறியதென்பது. (138) (ஏனையொத்தாழிசை இருவகைப்படுமெனல்) 451. அதுவே, வண்ணக மொருபோ கெனவிரு வகைத்தே. இஃது, அதன் வகையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஏனையொன்று எனப்பட்ட ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசையெனவும் ஒருபோகெனவும் இரண்டாம் என்றவாறு. இதன் பயன்:ஒத்தாழிசை யெனப்படாது இவற்றுளொன் றென்பது அறிவித்தவாறாயிற்று. அஃதென்னை பெறுமா றெனின், மேல் ஒத்தாழிசைக் கலி இருவகைத்தாகுமென்றான்; பின்னர் அவ்விரண்டனுள் ஒன்றற்கு வண்ணகம் ஒருபோகென வேறு பெயர் கூறவே, 1064முன்னரதே ஒருதலையாக ஒத்தாழிசைச் கலி யெனப்படுவதென உய்த்துணர வைத்தமையானும், ஏனை யொன்றென வேறுபடுத்தமையானும், 1065அப்பெயரும் உடன் கூறாது 1066போத்தந்து வைத்தமையானும், அதனோடு ஓரினத்த வல்லவென்பது பலவாற்றானுங் கொள்ளவைத்தானென்பது. அஃதேல், வண்ணகமும் ஒத்தாழிசை யெனப்படாதாம் பிற வெனின்,அது மாற்றுதற்கன்றே வண்ணகம் முற்கூறி 1067அதிகாரம் பட வைப்பானாயிற்றென்பது. இக்காலத்தார் ஒருபோகினையும் ஒத்தாழிசையென்று தாழிசைபெய்து காட்டுப. எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண் ணடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே (தொ. செ. 153) v‹òʤ jhÊiríW¥ò XjhikÆ‹ mJ bghUªjhJ.(139) (வண்ணக ஒத்தாழிசையின் உறுப்புகள்) 452. வண்ணகந் தானே, தரவே தாழிசை யெண்ணே வாரமென் றந்நால் வகையிற் றோன்று மென்ப. இது, முறையானே வண்ணக வொத்தாழிசை யுணர்த்து கின்றது. (இ-ள்.) தரவுந் தாழிசையும் எண்ணும் வாரமுமென்னும் உறுப்பு முறையானே வருவது வண்ணக வொத்தாழிசையாம் என்றவாறு. 1068அது, முதற்றொடை பெருகிச் சுருங்குமன் னெண்ணே (தொ. செ. 145) என்றவழிக் காட்டுதும். 1069வண்ணித்துப் புகழ்தலின் வண்ணக மெனப்படும். என்னை? தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர்த் தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்ற தாகலின். ஒழிந்த உறுப்பான் வண்ணிப்பினுஞ் சிறந்த உறுப்பு இதுவென்க. எனவே, 1070அகநிலைச் செய்யுட்டாழிசை வண்ணித்து வாரா வென்பதாம். எண்ணுறுப்பாமாறு முன்னர்ச் சொல்லும். அவ் வெண்ணுறுப்புத் தான் நீர்த்திரைபோல வரவரச் சுருங்கிவருதலின் அம்போதரங்கமெனவும் அமையுமாகலின் அதனை 1071அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பாவெனவுஞ் சொல்லுப. இனி வண்ணகமென்பது, அராகமென உரைத்து அவ் வுறுப் புடையன வண்ணகவொத்தாழிசை யெனவுஞ் சொல்லு வாரும் (யா.வி. செய்.சூ. 31) உளர். எல்லா ஆசிரியருஞ் செய்த வழிநூற்கு 1072இது முன்னூலாதலின் இவரொடு மாறுபடுதன் மரபன்றென மறுக்க. இசை நூலுள்ளும் மாறுபடின் அஃது 1073அவர்க்கும் மரபன்றென்பது. மற்று இதற்குத் தனிச்சொல் ஓதியதில்லையா லெனின் அதனை அதிகாரத்தாற் கொள்க. (140) (வண்ணகஒத்தாழிசைத் தரவுக்கு அடியளவு கூறல்) 453. தரவே தானு, நான்கு மாறு மெட்டு மென்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். இஃது, ஒத்தாழிசையுள் ஏனையொன்றற்குத் தரவு வேறு பட்ட இலக்கணத்திற்றாகலான் அது கூறுகின்றது. இ-ள்: இது நான்கு முதல் பன்னிரண்டடி யீறாக வாராது; தேவபாணிக்காயின் எட்டும் ஆறும் நான்குந் தரவடியாம் என்றவாறு. இதனானே தலையளவும் இடையளவுங் கடையளவு மென்பன கூறினானாம். இங்ஙனங் கூறவே, ஒழிந்தவுறுப்பிற்குந் தலையிடை கடையென்பது கொள்ளப்படும். நேரடி பற்றிய நிலைமைத் தாகும் என்பதனை 1074அளவடியான் வருமென்றற்குக் கூறினானென்பாரு முளர். அற்றன்று; பிற அடி மயங்குவனவும் அளவடியுரிய வென்பதும் முன்னர்க் கூறப்பட்டமையின். மற்றென்னை கருதியதெனின்,1075சமநிலையின்றி வியநிலை வாராவென்பது. இனிப் பற்றிய வென்ற மிகையானே, முற்கூறிய தரவுந் தாழிசையும் 1076அளவடியான் வருதலில்லையென்பது கொள்க. வருகின்ற ஒத்தாழிசைக்கும் பேரெண்ணிற்குஞ் சிற்றெண்ணிற் கும் 1077இஃதொக்கும். (141) (வண்ணகத்திற்கு ஒத்தாழிசை இவ்வாறு வருமெனல்) 454. ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே. இது, முறையானே ஒத்தாழிசை உணர்த்துகின்றது. இ-ள்: தம்மின் ஒத்த அளவினவாகலும் ஒத்த பொருள வாகலு1078முடைய தேவபாணிக்கண் மூன்றாக வரும் ஒத்தாழிசை என்றவாறு. இவை பொருள் ஒக்குமெனவே, முன்னை அகநிலை யொத் தாழிசைக்கண் வரும் இடைநிலைப்பாட்டிற் பொருள் ஒவ்வாது வருதலுஞ் சிறுபான்மையுண்டெனவறிக; அவை, கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ (கலி. 5) என இடத்தியல் பொருளொழிய இடப்பொருளோடு உவமங் 1079கூறினான். ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ (கலி. 5) என இடப்பொருளொழிய 1080இடத்தியல் பொருளோடு உவமங் கூறினமையின் 1081வேறுபட்டன. ஒத்து வருவன முன்னர்க் காட்டினாம். (142) (வண்ணகத்திற்குரிய ஒத்தாழிசையின் அடியளவுகூறல்) 455. தரவிற் சுருங்கித் தோன்று மென்ப. இஃது, ஐயம் அறுத்தது; அகநிலை 1082யொத்தாழிசை கட்குப் போலத் தரவோடொத்து வருங்கொலென்றையுறாமைத் தரவிற் சுருங்கித் தோன்று மென்றமையின். இ-ள்: 1083மூவகை வண்ணத்தின் தாழிசையுஞ் சமநிலைத் தரவிற் சுருங்கித் தோன்றும் எ-று. வாளாதே தரவென்றமையின் இடையளவின்மேற் செல்லும் அடியென்றவழி, அளவடிமேற்றாயது போல வென் பது. தோன்றுமென்ப தனான் 1084இடைநிலையாகிய நான்கடி யானும் மூன்றடியானுமன்றி ஐந்தடியானாகாதென்பது கொள்க. 1085எண்ணொடு தொடர்தலின் இரண்டடி யானாகா தென்பது பெற்றாம். இடையளவு தரவிற் சுருங்குமெனவே கடை யளவு தரவினுந் தாழிசை சுருங்குமென்பது உய்த்துணரப்படும். தோன்று மென்றதனாற் கடையளவினை ஒழித்து மற்றைத் தரவிரண்டள வாகக் கொள்வாமெனக் கொள்க. 1086இங்ஙனம் கூறாக்கால் ஓரடி முதலாகத் தாழிசைகோடல் வேண்டுமஃதன் றோ வென்பது. தோன்றும் என்றதனாற் கடையளவினை ஒழித்து மற்றைத் 1087தரவு இரண்டளவாகக் கொள்வாமெனக் கொள்க. (143) (வண்ணகத்திற்குரிய சுரிதகம் இவ்வாறு வருமெனல்) 456. அடக்கியல் வாரந் தரவோ டொக்கும். இது, சுரிதகவிலக்கணங் கூறுகின்றது. இ-ள்: தரவோடு ஒத்து வரும் அடக்கியல் வாரம் எ-று. அடக்கியல் வாரமென்பது அடக்கும் இயல்பிற்றாகிய வாரமென்றவாறு. நிறுத்த முறையானே எண்ணுறுப் புணர்த் தாது மயங்கக் கூறியத னானே தனிச்சொல் 1088வருஞான்று எண்ணீற்றினுஞ் சுரிதகத்து முன்னும் புணர்க்க. அடக்கியலென் றான், முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத் தடக்கி நிற்றலின். 1089வாரமென்றான், தெய்வக் கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாகலினென்பது. (144) (அம்போதரங்கம் இவ்வாறு வருமெனல்) 457. முதற்றொடை பெருகிச் சுருங்குமன் னெண்ணே. இஃது, 1090எண்ணுறுப்பாமா றுணர்த்துகின்றது. இ-ள்: முதல் பெருகியவழி முதலெண் என்றவாறு. தொடையென்றதனான் தலையெண் இரண்டு அளவடி யான் ஒரு தொடையாகி வருமெனவும், பெருகி யென்றதனான் இரண்டடியான் இரண்டனை நாட்ட, அதுவே பற்றி முதல் பெருகிய வென்றதனான் ஒழிந்த எண்ணுத்தொடை பெறுதலும் நேர்ந்தானாம். இதனை முதலெனவே, வழிமுறை வருவனவும் எண்ணளவென்பது பெற்றாம். அவை இத்துணை யென்பது அறியுமா 1091றென்பதென்னை? முதற்றொடை பெருகியென்றத னான் இரண்டடியான் இரண்டனை நாட்டி, அதுவே பற்றிச் சுருங்குமென் றமையின் ஈரடியிற் சுருங்கி ஓரடியாதலும், ஓரடி யிற் சுருங்கி இருசீராதலும், இருசீரிற் சுருங்கி ஒருசீராதலும் கொள்ளப்படும். முதலடி இன்னதென்றில னாயினும், அளவடியே கொள்ளப்படும், நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (தொ. செ. 32) என்றானாகலின். ஆகவே, இருசீரெனப்பட்டது குறளடியா யினும் இவை இரண்டு தொடர்ந்தன்றி எதுகையாய் அமையா மையிற் குறளடி யென்னா னாயினா னென்பது. ஒருசீர்க்கும் அளவடிப் படுத்துத் தொடைகோட லொக்கும்; என்னை? போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழும் படையோய்நீ எனவும், ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ; ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ எனவும் அளவடிப்படுத்தே தொடை கொள்பவாகலின். அஃதேல், ஒருசீரினுஞ் சுருங்கப்பெறாதோவெனின், 1092கந்தருவ நூலின்கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாராவாகலின் 1093இவனும், பிறநூன் முடிந்தது தானுடம் படுதல் (665) என்னும் உத்திவகையான் ஒருசீரிற் சுருங்குதல் 1094நேரா னென்பது. மற்று, வழிமுறையாற் பாகஞ் சுருங்குதல் பெறுமா றென்னை யெனின், வகார மிசையு மகாரங் குறுகும் (தொ. எழு. புள். 35) என்றாற்போல மேலைக்கொண்டும் வருகின்றவாற்றாற் 1095பாகமே சுருங்குதல் பெறலாமென்பது. மன்னென்பது, ஆக்கத்தின் கண்ணும் வந்ததாகலிற் சுருங்கிப் பலவாமென்பது கொள்க. எனவே, இரண்டடி யிரண்டும், ஓரடி நான்கும், இரு சீரெட்டும், ஒருசீர் பதினாறுமாகி எண் பல்குமென்பது. இருசீர் குறளடியு மாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும். ஆகவே, ஒழிந்த எண் மூன்றும் தலையெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணுமென மூன்றுங் கூட்டி எண்ணி நிற்றற்குரிய வாயின. இது நோக்கிப் போலும் எண் ணென்று அடக்காது, சின்ன மல்லாக் காலை (தொ. செ. 146) என ஒருசீரினை வேறுபடுத்து மேற்கூறுகின்றதென்பது. இனி, அளவடி யினை நாட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்கு மென்றமையின், அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்னமெனப்படும். இனி, 1096அல்லாதார் ஈரடி யிரண்டினைப் பேரெண்ணெனவும், ஓரடி நான்கினைச் சிற்றெண் ணெனவும், கடையெண்ணினை இடையெண்ணெனவும், ஒரு சீரான் வருவனவற்றை அளவெண்ணெனவுஞ் சொல்லுப. அளவடியாக நோக்கிப் பேரெண் சிற்றெண்ணென்ற லுஞ், சின்னம்பட்டவழி இடை நின்றது இடையெண்ணாத லும், எல்லையளவைத்தாகிய சின்னம் அளவெண்ணாதலும் அமையும். அவற்றுள் இருசீரினை 1097முச்சீராகவும், ஒருசீரினை இருசீராகவும் அலகுவைப்பினும் அதனை, அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொ.செ.11) என்பதனான் மறுக்க. இதற்குச் செய்யுண் முன்னர்க் காட்டுதும். (145) (அம்போதரங்க உறுப்பிற்குப் புறனடை) 458. எண்ணிடை யொழித லேத மின்றே சின்ன மல்லாக் காலை யான. இது, மேலதற்கொரு புறனடை. இ-ள் முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு 1098ஏத மின்று; சின்னவெண்ணொன்று மொழிந்து நில்லாவிடத்து என்றவாறு. எனவே, 1099சின்னவெண் ணொழியாது மூவகை யெண் ணும் 1100ஒழிதலினும், சின்னவெண்ணொழிய மூவகை யெண் ணும் பெறுதல் பெரிதும் சுவையுடைத்தென்றவாறாயிற்று. இதனானே எண்ணொழிதல் என்னாது, இடை யென்ற தனான் தலையெண்ணும் இடையெண்ணு மல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியுங் குறைந்து வருமென்பதுங் கொள்க. மூவகை யெண்ணுஞ் சின்னமும் பெற்று வருதல் சிறப்புடைமை, ஏதமின்றென்றதனாற் பெறுதும். அவை வருமாறு: உதாரணம் : மணிவிளங்கு திருமார்பின் மாமலராள் வீற்றிருப்பப் பணிதயங்கு நேமியும் பானிறத்த சுரிசங்கு மிருசுடர்போ லிருகரத்தி லேந்தியமர் மாயோனும் பங்கயத்தி லுறைவோனும் பாகத்தோர் பசுங்கொடிசேர் செந்தழற்கண் ணுதலோனுந் தேருங்கா னீயென்பார்க் கவரவர்த முள்ளத்து ளவ்வுருவா யல்லாத பிறவுருவு நீயென்னிற் பிறவுருவு நீயேயா யளப்பரிய நான்மறையா னுணர்த்துதற் கரியோனே (எட்டடித்தரவு) எவ்வுயிர்க்கு முயிரேயா யியங்குதனின் றொழிலாகி யவ்வுயிர்க்க ணடங்கியே யருளாது நிற்றலினால் வெவ்வினைசெய் தவையிழந்து வெம்பிறவிக் கடலழுந்த வவ்வினையை யகற்றாம னிற்பதுநின் னருளன்றே; பல்லுயிரும் படைப்பதுநின் பண்பன்றே பகலினால் வல்வினையின் வலைப்பட்டு வருத்தங்கூ ருயிர்தம்மை நல்வினையே பயில்வித்து நடுக்கஞ்செய் தவைநீக்கி யல்லல்வா யழுந்தாம லகற்றுவது மருளன்றே; அழிப்பதுநின் றொழிலன்றே யறைந்தாலு முயிரெல்லா மொழித்தவற்றுள் ளுணர்வுகளை யொருவாம லுடனிருத்தி பழிப்பின்றிப் பலகாலு மிப்பரிசே பயிற்றுதலி னழிப்பதுவு மில்லையா லாங்கதுவு மருளன்றே (தாழிசை) வேள்வி யாற்றி விதிவழி யொழுகிய தாழ்வி லந்தணர் தம்வினை யாயினை; வினையி னீங்கி விழுத்தவஞ் செய்யு முனைவர் தமக்கு முத்தி யாயினை (ஈரடியிரண்டு) இலனென விகழ்ந்தோர்க் கிலையு மாயினை; உளனென வுணர்ந்தோர்க் குளையு மாயினை; யருவுரு வென்போர்க் கவையு மாயினை; பொருவற விளங்கிய போத மாயினை. (ஓரடி நான்கு) பானிற வண்ணனீ; பனிமதிக் கடவுணீ; நீனிற வுருவுநீ; நிறமிகு கனலிநீ; அறுமுக வொருவனீ; ஆனிழற் கடவுணீ; பெறுதிரு வுருவுநீ ; பெட்பன வுருவுநீ; (இருசீரெட்டு) மண்ணுநீ ; விண்ணுநீ ; மலையுநீ ; கடலுநீ ; எண்ணுநீ ; எழுத்துநீ ; இரவுநீ ; பகலுநீ ; பண்ணுநீ ; பாவுநீ ; பாட்டுநீ ; தொடருநீ ; அண்ணனீ ; அமலனீ ; அருளுநீ ; பொருளுநீ (ஒருசீர்பதினாறு) ஆங்க (தனிச்சொல்) இனியை யாகிய விறைவநின் னடியிணை சென்னியின் வாங்கிப் பன்னாள் பரவுது மலர்தலை யுலகின் மன்னுயிர்க் கெல்லா நிலவிய பிறவியை நீத்தல் வேண்டி முற்றிய பற்றொடு செற்ற நீக்கி முனிமை யாக்கிய மூவா முத்தியை மயலற வளித்தநின் மலரடி யரிய வென்னா யுரிதினிற் பெறவே (சுரிதகம்) இஃது, எட்டடித்தரவும், 1101தரவின் பாகம் பற்றிய நான்கடித் தாழிசை மூன்றும், ஈரடியிரண்டும், ஓரடிநான்கும், இருசீரெட்டும், ஒருசீர் பதினாறுமாகிய நால்வகையெண்ணுந், தனிச் சொல்லும், எட்டடிச் சுரிதகமும் பெற்ற தலையளவு வண்ணகப் பெருந் 1102தேவபாணி பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்திப் புலியுரிமேற் பைத்தலைதாழ் பூங்கச்சை விரித்தமைத்துக் கண்கவருந் திருமேனி வெண்ணூலின் கவின்பகைப்பத் தண்கமழ்பூந் தாரிதழி தலைமலைந்து பிறைதயங்க மொழிவலத்தான் மயங்காதே முறுவலாற் றோலாதே விழிவலத்தா னுருவழிந்தோன் வேடங்கண் டுணர்வழியக் கலிகெழு கடற்கச்சிக் கமழிளந் தேமாவி னொலிதளிரு முலைச்சுவடு முடன்சிறப்ப வுலவுங்கால் (தரவு) நீரேறுந் திருமேனி நெடும்பகலே நிலாவெறிப்ப வேறேறிக் கடைதோறு மிடுபலிக்கு வருதிரால் ஏறேறி யிடுபலிக்கு வரும்பொழுது மிடைபிரியாக் கூறேறும் பசும்பாகங் கொள்ளுமோ கொள்ளாதோ; நாணாக மடந்தையர்பாற் பலிக்கென்று நடந்தக்காற் பூணாகந் தழீஇக்கொளினும் பொங்காது போலுமாற் பூணாகந் தழீஇக்கொளினும் புகையுயிர்த்துப் பொங்காத கோணாகம் யாந்தருபால் குடிக்குமோ குடியாதோ; பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமறுக நீர்வருங்காற் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ (தாழிசை மூன்று) எரிகல னிமைக்கு மிடவயிற் றொடிக்கை பரிகல மேந்தும் பரிசிறந் ததுகொல்; உமையவள் விலக்கவு மொலிகட னஞ்ச மிமையவர் தம்மை யிரந்துகொண் டதுகொல் (ஈரடி இரண்டு) இடையெழு பொழில்கட்கு மிமைப்பளவிற் கொல்லேறே; கடைதொறு மவைநிற்பக் கற்பித்த வாறென்கொல் இரப்புநீர் வேட்டதுகேட் டிமையவரென் பட்டனரே; பரப்புநீர்க் கங்கையே படர்சடையிற் கரந்ததோ; (ஓரடி நான்கு) பூண்டன வென்பு ; புனைவது தும்பை ; ஆண்டன பூதம் ; அறைவன வேதம் ; இசைப்பன பல்பேய் ; எழீஇயது வீணை ; அசைப்பன வேணி ; அதிர்வன பொற்கழல். (இருசீரெட்டு) என வாங்கு (தனிச்சொல்) எல்வளை மகளி ரிடுபலி நசைஇப் பல்கடை திரிதருஉஞ் செல்வநிற் பரவுதுங் கொடியணி யேனம் பொடியணிந்து கிடப்ப வடதிசை வாகை சூடித் தென்றிசை வென்றி வாய்த்த வன்றாள் வளவ னிமிழிசை வேங்கடம் போலத் தமிழகத்து நாவலொடு பெயரிய ஞாலங் காவல் போற்றி வாழிய நெடிதே. (சுரிதகம்) இஃது எட்டடித் தரவுந், தரவிற் சுருங்கிய ஒத்தாழிசை மூன்றுஞ், சின்னமல்லா மூவகை எண்ணுந், தனிச்சொல்லுந், தரவோடொத்த அடக்கியல் வாரமும் பெற்று வந்தது. ஆயிரங் கதிராழி வொருபுறந்தோன் றகலத்தான் மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த மனக்கமல மலரினையு மலர்த்துவான் றானாத லினக்கமல முணர்த்துவன்போன் றெவ்வாயும் வாய்திறப்பக் குடதிசையின் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக் கடவுளர்த முறங்காத கண்மலரே கரிபோக வாரிருளும் புலப்படுப்பா னவனேயென் றுலகறியப் பாரலகத் திருள்பருகும் பருதியஞ் செல்வகேள் (தரவு) மண்டலத்தி னிடைநின்றும் வாங்குவார் வைப்பாராய் விண்டலத்திற் கடவுளரை வெவ்வேறு வழிபடுவா ராங்குலக முழுதுபோர்த் திருவுருவி னொன்றாக்கி யாங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்; மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய் நின்னுருவத் தொடுங்குதலா னெடுவிசும்பிற் காணாதா ரெம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவா யம்மீனை வெளிப்படுப்பாய் நீயேயென் றறியாரால் ; தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைக டலைத்தேய்ந் துவாமதிய நின்னொடுவந் தொன்றாகு மென்றுணரார் தண்மதியி னின்னொளிபுக் கிருளகற்றாத் தவற்றாற்கொ லம்மதியம் படைத்தாயு நீயேயென் றறியாரால் ; (தாழிசை) நீராகி நிலம்படைத்தனை ; நெருப்பாகி நீர்பயந்தனை ; ஊழியிற் காற்றெழுவினை ; ஒளிகாட்டி வெளிகாட்டினை (இருசீர்நான்கு) கருவாயினை; விடராயினை; கதியாயினை; விதியாயினை; உருவாயினை; அருவாயினை; ஒன்றாயினை; பலவாயினை; (ஒருசீரெட்டு) என வாங்கு (தனிச்சொல்) விரிதிரைப் பெருங்கட லமிழ்தத் தன்ன வொருமுதற் கடவுணிற் பரவுதுந் திருவொடு சுற்றந் தழீஇக் குற்ற நீக்கித் துன்பந் தொடரா வின்ப மெய்திக் கூற்றுத்தலை பனிக்கு மாற்றல் சான்று கழிபெருஞ் சிறப்பின் வழிவழி பெருகி நன்றறி புலவர் நாப்பண் வென்றியொடு விளங்கி மிகுகம்யா மெனவே. (சுரிதகம்) என்பது, எட்டடித்தரவுந் தாழிசையும் 1103இருவகைச் சின்னமுந் தனிச் சொல்லுந் தரவொடொத்த சுரிதகமும் பெற்று வந்த தலை யளவு வண்ணகப் பெருந்தேவபாணி. சின்னமெனவே இருசீரெட்டும் ஒருசீர் பதினாறும் அடங்கு மென்றாராகலின், இது 1104சின்னமல்லாக்கால் எண்ணிடை யிட்டு வந்த வண்ணகவொத்தாழிசையாயிற்று. இனி, இருசீருமன்றி ஒருசீர் பதினாறாகிய சின்னவெண் பெற்று வரும். அது வருமாறு: உறைபதியி னுடனயனை யுந்தியாற் படைத்தோயு மறைகடல்சூழ் நிலமுதலா யனைத்துலகும் புரப்போயுந் திருநிறமே கரிபோகத் திருமேகம் பயந்தோயு மொருநிறமே நிறமாக வொள்ளெரியை யுயிர்த்தோயு மறுவத்து மார்பென்ன மலர்மகளை வைத்தோயு நிறத்தோடு நெஞ்சத்த நிலமடந்தை கணவனுநீ (தரவு) பின்னமா யொன்றாகும் பெருமாயை யியற்றுவா யின்னமா யந்தெளிய வெமக்கருளி யிமையவர்க்கு மன்னமாய் முன்னொருகா லறம்பயந்த வரனுநீ; குறியாதும் பிழையாத குறிமறைய மதன்மயக்கி வெறியாதி மலரோற்கு வெளிப்படுத்து வேறுபடுத் தறியாத மறையெமக்கு மறிவித்த வறிவனீ மாணாத மதிகொடுத்து வானவரை மயக்கியுங் கோணாத மதிவாங்கிக் கொடுத்தருளி யிமையவர்க்குக் காணாத மதிகாட்டுங் கருணைகூர் காட்சியைநீ; (தாழிசை) வானுநீ ; நிலனுநீ ; மதியுநீ ; விதியுநீ ; தேனுநீ ; அமிழ்துநீ ; திருவுநீ ; அருவுநீ ; அன்புநீ ; அருளுநீ ; ஆதிநீ ; அந்தநீ ; இன்பநீ ; துன்பநீ ; இன்மைநீ ; உண்மைநீ, (ஒருசீர்ச்சின்னம்) எனவாங்கு, (தனிச்சொல்) நால்வகை யுருவிற் பால்வே றாகிய கால முதல்வநிற் பரவுது ஞாலத்து நல்லவை யல்லவை யெல்லா நினாஅது செல்வ நோக்கி னெய்தி வல்லிதிற் றுயரொடு தொல்வினை நீங்கிப் பெயராச் சுற்றம் பெறுகம்யா மெனவே (சுரிதகம்) எனவரும், இதனுள் தரவுந் தாழிசையும் ஒருசீர்ச்சின்னமுந் தனிச் சொல்லுஞ் சுரிதகமும் வந்தவாறு கண்டுகொள்க. கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய வழல்வளை சுழல்செங்கண் ணரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய் (தரவு) முரசதிர வியன்மதுலர முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ ; கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோவு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலக்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ ; படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்த்துநிறம் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ. (தாழிசை) இலங்கொளி மரகத மெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம் ; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும் பொருகளி றட்டோய் புரையு நின்னுடை; (ஈரடியிரண்டு) கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை; தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை; யொலியிய லுவண மோங்கிய கொடியினை வலிமிகு சகட மாற்றிய வடியினை (ஓரடிநான்கு) போரவுணர்க் கடந்தோய்நீ; புணர்மருதம் பிளந்தோய்நீ; நீரகல மளந்தோய்நீ; நிழறிகழும் படையோய்நீ; (இருசீர் நான்கு) ஊழிநீ; உலகுநீ; உருவுநீ; அருவுநீ; ஆழிநீ; அருளுநீ; அறமுநீ; மறமுநீ; (ஒருசீரெட்டு) எனவாங்கு. (தனிச்சொல்) அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வே லச்சுதன் றொன்றுமுதிர்கட லுலக முழுதுட னொன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே. (சுரிதகம் - விளக்கத்தனார் பாடல்) இது நால்வகை எண்ணினுள் 1105இறுதி நின்ற எண்ணி ரண்டுஞ் சுருங்கி வந்தது. பிறவும் அன்ன. (146) (ஒருபோகின் வகை) 459. ஒருபோ கியற்கையு மிருவகைத் தாகும். இஃது, ஒத்தாழிசை இரண்டனுள், ஏனை யொன்றனை வண்ணக வொத்தாழிசை ஒருபோகென இருவகைத் தென்றான்; அவற்றுள் ஒருபோகின் வகை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒருபோகும் இருவகைத்தாகும் என்றவாறு. உம்மை, இறந்ததுதழீஇய எச்சவும்மை. இதனது பயம்: ஓருறுப்பு இழத்தலின் 1106ஒருபோகாதல் ஒக்குமாயினும் நிகழ்கின்ற உறுப்புத் 1107தம்மின் வேறாதல் அறிவித்தலென்பது. அது முன்னர்ச் சொல்லுதும். (147) (ஒருபோகின் வகைக்குப் பெயரும் முறையு முணர்த்தல்) 460. கொச்சக வொருபோ கம்போ தரங்கவென் றொப்ப நாடி யுணர்தல் வேண்டும். இது, மேல்வகுக்கப்பட்ட இரண்டற்கும் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. இ-ள் கொச்சகவொருபோகும் அம்போதரங்கவொரு போகுமென இரண்டாக உணரப்படும் அவை என்றவாறு. 1108கொச்சகம் இழத்தலிற் கொச்சக வொருபோகாயிற்று. வண்ணகமொருபோகு என்றவழி (451) ஒன்றேயாகி நின்ற கொச்சகம் ஒருவழி வாராமையின், அது கொச்சகவொரு போகாம். 1109இனி, ஏனையொன்றெனப்பட்ட 1110ஒன்றனுள் வண்ண கப்பகுதிக்குரிய எண்ணுறுப்பு ஒருவழியின்றியெனப் பிறந்த அன்மொழித்தொகை. அம்போதரங்கவொருபோகு என்பது மது. ஒரு போகென்பது, பண்புத்தொகை. இடை யீடில்லாத நிலத்தினை ஒருபோகென்பவாகலின், அஃது ஒப்பினாகிய பெயர். ஒருபோகென்பதனைத் திரி கோட்டவேணி என்றது போலக் கொள்க. (இனி ஏனையொன்றெனப்படட ஒன்றனுள் வண்ணகப் பகுதிக்குரிய 1111எண்ணுறுப்பு ஒருவழியின்றி வருவது, அம் போதரங்க வொருபோகு. ஒருபோகென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இடையீடில்லாத நிலத்தினை ஒருபோகென்பவாகலின் அஃது ஒப்பினாகிய பெயர். ஒருபோகென்பதனைத் 1112 திரிகோட்டவேணி என்பது போலக் கொள்க.) (148) (கொச்சக ஒருபோகு இவ்வாறு வருமெனல்) 461. தரவின் றாகித் தாழிசை பெற்றுந் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியு மெண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியு மடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகு மென்ப. இது, முறையானே கொச்சகவொருபோ குணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எண்ணிய இந்நாற்பகுதியான் வந்தும் அமையாது, பின்னரும் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைத்தாகி வருவது கொச்சக வொருபோகாம் என்றவாறு. தரவின் றாகித் தாழிசை பெற்றும் என்பது - தனக்கு இனமாகிய வண்ணத்திற்கு ஓதிய தரவின்றித் தாழிசைபெற்று மென்றவாறு. அவை பரணிப் பாட்டாகிய தேவபாணி முதலா யின எனக் கொள்க. என்றார்க்கு, அவை தாழிசையாயன்றி வாராமையின் தாழிசையாயு மென்றெழுஞ் சூத்திரமெனின், அங்ஙனங் கூறில் தரவொடு வருந் தாழிசையிலக்கணத்த வாம் இவையு மென்றஞ்சித் தரவொடுபட்ட தாழிசையன்றிப் புறத் துள்ளன என்றற்கு அது விலக்கினானென்பது; எனவே, இவை ஒத்து மூன்றாதலும் ஒருபொருள்மேல் வருதலுந் தாழம்பட்ட ஓசையவேயாதலும் பயிலு மென்பதூஉஞ் சொல்லினானா யிற்று. அங்ஙனஞ் சொல்லியவதனானே பரணியுளெல்லாம் இரண்டடியானே தாழம்பட்ட ஓசை அல்லன விராய் வருதலும் முடுகி வருதலும் பெறுதும். இனித் தாழிசை மூன்றாகியவழி மூன்றடியானும் நான்கடி யானும் வரும். இனிப், 1113பத்தும் பன்னிரண்டுமாகி ஒருபொருள் மேல் வரும் பதினொன்றும் அகப்பட்டு 1114நான்கடியின் ஏறாது வருதலும், அங்ஙனம் வருங்கால் தாழ்ந்த ஓசை பெற்றும் பெறாதும் வருதலும், அவையும் இருசீர் முதலாக எண்சீரளவும் வருதலு மென்றி னோரன்ன பகுதியெல்லாம் அவ்வரையறை யின்றித் தழுவப்பட்டன. அஃதேல், அவற்றைத் தாழிசை யென்ற தென்னையெனின், பெரும்பாலும் தாழம்பட்ட ஓசையவாகலி னென்பது. என்றார்க்குத் தரவு விலக்கியதனான் எண்ணுஞ் சுரிதகமும் விலக்குண்ணாவாம்பிற வெனின்,அற்றன்று; தாழி சைப் பேறு விதந் தோதவே, ஒழிந்தன விலக்குண்ணு மென்பது. மற்றுத் தாழிசை பெறுவதி யாதோவெனின்,1115கொச்சக வொருபோ கெனப் பொதுவகையாநின்ற செய்யுளெனக் கொள்க. அது நோக்கிப் போலும் பலவுமெண்ணி, யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது என்று ஒருமை கூறுவானாயிற்றென்றுணர்க. அஃதேல், இரண்ட டியான் வருந் தாழிசை பேரெண்ணாகாவோவெனின், 1116அதுவன்றே முதற்றொடை பெருகினன்றி எண்ணென லாகாமையினென்பது. இவை வருமாறு: உளையாழி யோரேழு மொருசெலுவி னொடுங்குதலான் விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே. என்றாற்போலப் பரணிச் செய்யுளுட் பயின்றுவருமென்பது. இவ்வாறு பல தாழிசை தொடர் பொருளவாகலின், அவற்றைப் பல அடுக்கி வரினுந் தாழிசையாமெனவே, இதற்கு வாரா வெனப்பட்ட கொச்சகந் 1117தாழிசையின்றி வெண்பாவாகி வருமென்பது உய்த்துணரப்படும். என்னை? வெண்பாவினான் 1118வஞ்சி பரிபாடலுட் கொச்சகம் வருமென்றமையின். 1119பல அடுக்கி வருவதைப் பஃறாழிசைக் கொச்சகமெனவும் அமையும். அவை சில வருவன சிஃறாழிசைக் கொச்சக மெனப்படும். பிறவும் அன்ன. மற்றுப் பரணியுட் புறத்திணை பலவும் விராய் வருதலின், அது தேவபாணியா மென்ற தென்னையெனின், அவையெல் லாங் காடுகெழு செல்விக்குப் பரணிநாட்கூழுந் துணங்கையுங் கொடுத்து வழிபடுவ தொரு வழக்குப் பற்றி அதனுட் பாட்டுடைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன வாதலான் அவை யெல்லாவாற்றானுந் தேவபாணியேயா மென் பது. என்றார்க்கு, ஒரு தாழிசையோ பல தொடர்ந்த வழியோ கொச்சக வொரு போகாவதெனின், வரையறை யின்மையின் இருவாற் றானுமா மென்பது. இனித் தாழிசை மூன்றடுக்கியவழி மூன்றடியான் வருமாறு: கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவ னெல்லிநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப். ஆய்ச்சியர் குரவை) என வரும், இனி, நான்கடியான் வருதல் சிறுபான்மை. அவை வந்தவழிக் கண்டுகொள்க. தாழிசை யின்றித் தரவுடைத்தாயும் (461) என்பது - மேற் கூறிய தாழிசையின்றித் தரவே பெற்று வருதலுமென்ற வாறு, பொதுவகையானின்ற கொச்சக வொருபோகு இரண்டு தரவுடைத்தெனப்பட்டது. மேல் தரவின்றாகி யென்றது போல ஈண்டுந் தாழிசையின்றி யென்றதனான், தாழிசையொடு பட்ட தரவிலக்கணத்தின் 1120திரிந்து வரும் இத்தரவெனக் கொள்க. அது தரவுகொச்சகமுந் தரவிணைக்கொச்சகமு மென இரண்டாய் 1121வருதலும் நான்கும் ஆறும் எட்டுமாய் வருதல் 1122கடப்பாடின் றென்பதூஉங் கொள்க. உடைத்தெனப்பட்டது தரவெனவே, ஒழிந்த உறுப்பு விலக் குண்டன. ஆகியு மென்ற மிகையான், இரண்டு வருதலே பெரும்பான்மை யெனவுந், தரவோடொக்கு மெனப்பட்ட சுரிதகம் பெரும்பான்மையும் பெறுஞான்று பெறுவது அதுவே யெனவுங் கொள்க. சுரிதகம் பெறுவன சுரிதகத் தரவிணை யென்று வழங்குப. மேல் தனிச்சொற்கு வரையறை யின்மையின் அது பெற்றும் பெறாதும் வருமென்பது. மற்றுத் தரவிலக்க ணம் இழந்ததாயின் அதனைத் தரவென்று பயந்த தென்னையெனின், தாழம்பட்ட ஓசையின்றி அது வருதல் பெரும் பான்மை யென்றற்கென்பது. எனவே, யாண்டுந் தரவென்பது தாழம்பட்ட ஓசைக்கு ஒரு 1123தலைமையின்றி வருமென்பது நேர்ந்தவாறா யிற்று; அது, நீறணிந்த திருமேனி நெருப்புருவங் கிளைத்ததுபோற் கூறணிந்த குங்குமங்கொண் டொருமுலையோ குறிசெய்ய வேறணிந்த சுவடெறிப்ப வேனிலாற் கெரிவிழித்த வேறணிந்த வெல்கொடியோ யெவ்வுயிர்நிற் றவிர்ந்தனவே. என்பது தரவு கொச்சகம். பூணாக வென்பணிந்தான் பூதத்தான் வேதத்தான் கோணாகக் கச்சையான் கோடேந்து கொல்லேற்றான் மாணாக வெண்ணூலான் வாணுதலாள் பாகத்தா னூணாரும் பிச்சையா னுண்ணாத நஞ்சுண்டான் வானாறு தோய்ந்த சடையான் மழுவலத்தான் யானார்வஞ் செய்யு மிறை; எனவாங்குப் பாடி யிறைஞ்சுவோர்க் கெல்லாம் வினைமாசு தீரும் விளக்காகுந் தோற்றத் தனையோய் மறலிக்கு மச்சம் பயந்த புனைபூங் கழற்கான்மேற் பூவொடு நீர்தூஉ மனைமாண்ட பாக முளப்பட வாழ்த்தி யெனைநாளு மேத்துது மெந்தையே நின்னை நினையா தொழியற்க நெஞ்சு என்பது தரவிணைக் கொச்சகம். இது சுரிதகம் பெற்று வருவன வுந் தனிச்சொற் பெற்று வருவனவும், வந்தவழிக் கண்டுகொள்க. மற்றுத் தேவபாணியல்லாத 1124தொடர்பொருட் செய்யுட் கண் தரவின்றித் தாழிசை வந்ததென்றுமோ தாழிசையின்றித் தரவுடைத்தாய தென்றுமோவெனின்,அவை, யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது (461) என்றதனானே 1125ஒன்றற்கொன்று தரவெனப்பட்டுத் தரவு கொச்சகமா மென்பது; என்னை? ஆறும் எட்டுமெனப்பட்டு வாராமையானும், மூன்றடித் தாழிசையாய் வாராமையானுந் தாழிசை யெனப்படாமையின். அவை 1126தம்பொருளொடு தாம் முடியாமையின் தரவுகொச்சகமாயின. இனி, 1127அத்தொடர்நிலையின் முதற்கண் நின்ற 1128தேவ பாணி தன்பொருளொடு தான்முடிதலின் அது விதந்தோதிய தரவு கொச்சகமாம். என்னை? 1129எருத்தென்பது உடம்பிற்கு முதலா கலினென்பது. எண் இடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது - வண்ணகத்திற்கு ஓதிய எண்ணுஞ் சின்னமுமின்றி ஒழிந்ததாம். தரவு தாழிசை தனிச்சொற் சுரிதகமென்னும் நான்கு உறுப்புடையதுங் கொச்சகவொரு போகாமென்றவாறு. இதற்கு இல்லாத உறுப்பே கூறி, உள்ளது கூறிலன், அல்லாத உறுப்பினையெல்லாம் அவற்றானே நிற்றலை வேண்டி யென்பது; உதாரணம் :- ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி; படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குல் கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ; மண்டமர் பலகடத்து மதுகையா னீறணிந்து பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள் வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ; கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத் தலையங்கை கொண்டுநீ காபால மாடுங்கான் முலையணிந்த முறுவலாண் முற்பாணி தருவாளோ; எனவாங்கு; பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை மாணிழை யரிவை காப்ப வாணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி (கலி. கடவுள் ) என வரும். 1130இது, ஏனையொன்று எனப்பட்ட தேவபாணி ஒத்தாழிசையாகலான் உறுப்பொன்றியும் 1131முதனிலை யொத் தாழிசையாகாது, 1132ஏனை ஒத்தாழிசையின் உறுப்பிழத்தன் பற்றி, ஒப்ப நாடி யுணர்தல் வேண்டும் (தொ. செ. 460) என்பதனாற், சின்ன எண் நிற்பவும் எண் இழந்ததெனப்பட்ட அம்போதரங்க வொருபோகு போலக், கொச்சகமேயன்றி 1133எண்ணுறுப்பு இழந்ததூஉங் கொச்சகவொருபோ கெனப்பட்ட ஒருபோகாமென்றா னென்பது. அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும்என்பது - 1134அடக்கும் இயல்பிற்றல்லாத ஈற்றதாகி 1135ஒரு தொடையான் அடிநிமிர்ந்தொழுகியும் என்றவாறு. ஒழுகும் எனவே 1136அற்று வாராது ஒன்றேயாகி வருமென்பது. அடி நிமிருமென்றதனான் மேல் அடிவரை யறுத்துச் சொல்லப்பட்ட தரவு தாழிசை முதலிய உறுப்பு இதற்கில்லையென்றவாறாம். அடக்கியல் வாரத்தினை அடக்கும் இயல்பின்றெனவே, இதற்கு வாரம் நேர்ந்தானா மாகலின், ஒழுகுமென்றதனொடு மாறுகொள்ளும் பிறவெனின், - அங்ஙனம் படுமாயினும், ஒருகாரணம் நோக்கி அவ்வாறு நேர்ந்தா னென்பது; என்னை? அடி நிமிர்ந்தொழுகுங் கால் எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே எனவும், வெண்பா வியலினும் பண்புற முடியும் எனவும் ஓதியவாற்றானே 1137இறுதி நிற்ப ஏனையடியெல்லாங் கலியடியாகி ஒழுகி வாரம்பட்டு நிற்குமென்று கோடற் கென்பது. ஈதறியாதார், வெண்பா வியலாற் பண்புற முடிந்த கலியடி யுடைய தனை வெண்கலியென்ப. வெண்கலியாமாறு முன்னர்ச் சொல்லுதும், உதாரணம்: மழைதுளைத்துப் புறப்பட்ட மதியமு ஞாயிறும்போ லுழைமுழங்கு வலம்புரியுந் திகிரியு மொளிசிறப்பப் பச்சென்ன வானிட்ட வில்லேபோற் பசுந்துழாய் கச்சென்னக் கனல்கின்ற கதிர்முலைமேற் கவின்செய்ய வம்மேகத் திடைப்பிறந்த நரையுருமே றதிசயிப்ப மைம்மேனி மருங்கதிர நகத்தரியே வால்புடைப்ப விண்டோயு மணிநீல வெற்பினிடை வேய்மிடைந்தாங் கெண்டோளு மிடுநீழ லிளங்கிளிகள் களிகூரக் கொதியாது கொதித்தெறிந்த கோடெருமைத் தலையின்மிசை மிதியாத சீறடி மிதித்தன போற்றோன்றத் தாங்கிய புகர்வாளுங் கேடகமுந் தனித்தனி வாங்கிய கோளரவு மதியமும் போன்றிலங்க மைதொடுத்த கடற்புறஞ்சூழ் மலையென்ன மணியல்குல் கொய்துடுத்த பொற்றுகிலின் கொழுஞ்சோதி கொழுந்தோட்ட நீனின்ற படிவத்தா னெடியோனை முதற்பயந்த தாயென்று முதுமறை பரவினும் யாயென் றல்ல தியாந்துணி யலமே என வரும். வெண்பாவினான் முடியுங் கொச்சகவொருபோகு தேவபாணியாய் வந்தன கண்டுகொள்க. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது எனவே, யாப்பின் வேறுபடுவனவும், பொருளின் வேறுபடுவனவு மென இரண்டாம். அவற்றுள், யாப்பின் வேறுபடுதலென்பது மேற் சொல்லின வாறும், இனி வருகின்றவாறு மின்றி யாப்பிலக் கணத்தின் வேறுபடுதல். அவை இருசீர்முதலாக எண்சீர்காறும் வந்த அடி மேற்கூறியவாறன்றி நந்நான்கே பெற்று வருதலும், அவற்றுட் பிற அடி விராய் வருதலும் பா மயங்கி வருதலும், இரண்டும் மூன்றும் நான்கும் ஆகிய அடியுள் ஈற்றடி குறைத லுங், குறையாதவழி இயலசைச்சீர் வருதலும், மூன்றடியாயிற் குறையாது வருதலும், நான்கடிச் செய்யுள் முடியவும் அடியிரண்டு மிகுதலும், 1138இனவியலின் வேறுபடுதலுங், கடவுட்டொடர்நிலைகள் பல தரவுந் தாழிசையுமாகி இடை யிடைச் செய்வனவும், அடக்கிய லின்றி 1139அடி நிமிர்ந்தொழுகு மெனப்1140பட்டன அடக்கியலு டைத்தாகலு மென்று இன்னோ ரன்ன பல பகுதியுங் கொள்ளப் படும். இப்பகுதியெல்லாம் பொருள் வேறுபட்டவழியும் நிகழு மென்பது, இரண்டனையும் உடன்வைத் தோதியதனாற் கொள்ளப்படும். என்றார்க்கு, வரையறை யின்மையிற் களம் பாடு பொருநர் கட்டுரையுந் தச்சுவினை மாக்கள் சொற்றொடரும் ஏற்று இக்காலத்து உரை நிகழ்ந்தனவும், ஓலைப்1141பாசுரமும் முதலாயின வெல்லாங் கொச்சகமாகற்கு இழுக்கென்னை யெனின்,அவையே 1142அடி வரையறையில்லன ஆறென்றவழி உரையெனப் பகுத்தோதார்க் கன்றே அது கடாவாவ தென மறுக்க. இவ்வாறு வந்த கொச்சகங்களை ஒருவரையறைப் படுத்துப் பாத்தோறும் இனஞ்1143சேர்த்தலும் பண்ணிற்குத் 1144திறம் போலப் பன்னிரு பகுதியவா மென்பார் உரைக்குமாறு: விருத்தந் துறை தாழிசையென மூன்றனையும் நான்கு செய்யு ளோடும் உறழ்ந்து ரைப்பப் பன்னிரண்டா மென்பது. மருட்பா வும் பரிபாடலு மோ வெனின், அவற்றுக்கு அஃதாராய்ச்சியன் றெனவும் 1145அவற்றை ஒப்பன வெல்லாம் ஒப்பென மொழிய அடங்குமென்பதூஉம் அவர் கருத்து. இனி, நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலு மெனச் சங்கத்தார் தொகுத்த வற்றுள் 1146ஒன்றனை யில்லை யென்றார். அஃதிக்காலத்தினும் வீழ்ந்ததின்மையின் அவரிலக்க ணத்தினை வழுப்படுத்த தென்பது. இனி, விருத்தமுந் துறையுந் தாழிசையுமன்றி ஒப்புந் திறனு மென்றாற் போல்வன சிலகூட்டி அறுவகைச் செய்யுளோடுறழ முப்பதாம்; இனி, அவற்றை விகற்பித்து நோக்க எண்ணிறந்த பகுதியவாம்; என்னை? சீரும் அடியுந் தொடையும் பாவும் முதலாயவற்றொடு குறளடி முதலாயவற்றை வைத்துறழவும் அவ்வடி தம்மொடு தம்மைப் 1147பரிமாற்றவுந் தம்மொடு பிறவற்றை மயக்கவும் பல்குமாகலின். கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே (கொன்றைவேந்தன்) என்பது இரண்டடியாகலின் 1148வெண்பாவினுள் ஒரு சாரன வற்றுக்குங் கலியுள் ஒரு சாரனவற்றுக்கும் இனமென்பது படும். இனிச் சீருந் தளையும் நோக்க ஆசிரியத்திற் கினமெனப்படும். இங்ஙனம் பலவற்றுக் கினமாயினும் இரண்டடியானே ஒரு செய்யுள் வருவது வெண்பாவென்பது நோக்கி அதற்கினமாக்கி வெண்செந்துறை யென்ப. இரண்டடியும் ஒத்து வருதலானும், 1149ஒழிந்த காரணங்களான் 1150நேர்ந்த பாக்கட்கினமாகலை விலக்குதல் அரிதாகலானும், அங்ஙனம் இனஞ் சேர்த்துதற்கு வரையறை யின்றென்பது. இனிச், 1151சந்தஞ் சிதைந்தனவும் புன்பொருளவாய் வருவனவுஞ் செய்யுளென்பார் அவற்றைத் தாழிசை யென்ப; அதற்குக் காரணமின்றென்பது. அல்லதூஉந் தாழ்ந்த ஓசையல்லா ஒன்றைத் தாழிசையெனில் தரவு தாழிசைகளுள் தாழிசையுஞ் சந்தம் அழியல் வேண்டுமென்பது. இனி விழுமிய பொருளல்லாத னவற்றைத் தாழிசை யென்றற்கு என்னை காரணமெனவும் மறுக்க; அல்லதூஉங், கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவ னின்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப். ஆய்ச்சி) என மூன்றும் மூன்றடியான் முடிந்ததனை ஆசிரியத்தாழிசை யெனின், - அதனுட் கிடந்த வெண்டளை அதற்கொன்றா 1152தென்னுமென்பது. இனி, இதுவே நான்காகிவரிற் கலிவிருத்த மென்ப. அது, நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த மார னருப்புக் கணையா னடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை விரும்புகின் றாரே என்றவழி, இது நான்கடியாசிரியத்திற்குத் தாழிசையாங்கால் இழுக்கென்னை யெனவும், வெண்டளைதட்டு வெண்டா ழிசையாதற்கு இழுக்கென்னை யெனவுங், கலித்தளை யில்லது கலிப்பாவிற் கினமாயவா றென்னையெனவுங் கூறி மறுக்க. இனிக், குறளடியானுஞ் சிந்தடியானும் வருவனவற்றை வஞ்சிப்பாவிற்கு இனமாமென்ப. சீரளவொப்பினும் அடி நான்காதலானும், வருஞ்சீர் இயற்சீராதலானும், பா வேறுபடுதலானும் அதற்கிவை இனமாகாவென்பது. இனிக் குறளடிச் செய்யுள் மூன்றுவரின் தாழிசையெனவுஞ் சிந்தடிச் செய்யுள் மூன்று வாராவெனவுங் கூறின் அதற்கும் ஒரு காரணங் கூறல் அரிதென்க. ஒழிந்தனவும் இவ்வாறே இனஞ்சேர்த்தின் பிறிதொரு காரணத்தாற் பிற பாவிற்கும் அவையே இனமாதல் 1153கூட்டி மறுக்க. என்றார்க்கு, இங்ஙனம் ஒன்றற்கு இனஞ் சேர்த்தல் அரியனவற்றைக் கலிப்பா வென்ற தென்னையெனின், பெரும்பான்மையுங் கலிப்பாவிற் கேற்ற ஓசைய வாகலின் அவையெல்லாவற்றுக்கும் ஒரு 1154பரிகாரங் கொடுத்துச் சூத்திரத்தினுள் அடக்கினான் இவ்வாசிரியன், முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (பாயிரம்) என்பது. இது மேலைக்கொண்டும் அடிப்பட வந்த மரபு. இவை யெல்லாம் நான்கடியுள் வருதலே பெரும்பான்மையெனக் கொள்க. எனவே, சிறுபான்மை 1155பாவைப்பாட்டும் அம்மனைப் பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவன வாயின. இனி, அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகியது. ஒழித்து, ஒழிந்த கொச்சக வொருபோகு முப்பகுதியுந் தம்முறுப்பு வகை யானே அளவை கொள்ளப்படும். இப்பகுதி பலவாயினும் மரபு பட்டு வந்த வகையானே செய்யுள் செய்யப்படும். இனி, யவற்றுட் சில வருமாறு: நெய்யொடு தீயொக்கச் செய்யானைச் சேர்வார்க்குப் பொய்யாத வுள்ளமே மெய்யாகல் வேண்டுமே எனக் குறளடி நான்காக வந்தது. இது குட்டம்பட்டு வாரா தென்பது மேற் கூறப்பட்டது. மையணி கண்டனை வானோ ரையனை யாயிரம் பேழ்வாய்ப் பையர வம்பல பூணு மெய்யனை மேயது வீடே என்பது முச்சீரடியான் வந்த கொச்சகம். இஃது இயலசைச் சீராகி 1156வந்தவழியுங் கண்டுகொள்க. பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடு மென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே (யா. வி. ப. 331.) என்பது, சிறுபான்மை மூன்றடியான்வந்து இடையடி குட்டம் பட்டது. இது 1157கந்தருவமார்க்கத்தான் இடைமடக்கி நான்கடி யாதலும் ஈற்றடி ஒருசீர் மிகுதலுமுடைத்தென்பது. ஒரு வான்யா றொடுச டாடவிப் பெரு நாகமே பூணும் பெருமா னரு வாயினா னாயினு மன்பர்க் குரு வாயினா னுள்ளத்தி னுள்ளே. என்பது நிரையசைச்சீர் முதற்கண் வந்த அளவடி நான்கான் வந்தது. அசைச்சீரின்றி அளவடி நான்கான் வருவதுந் தாழிசை யின்றித் தரவுடைத்தாகியு மென்றவழித் தரவுகொச்சகமா யடங்கு மென்பது. வண்டணி கொண்ட மதுமலர்க் கொன்றை யினமாலை கொண்டணி செஞ்சடைக் கோட்டிளந் திங்கள்போற் பண்டணி யாகப் பலர்தொழுங் கங்கைநீர் வைத்தா னுண்டணி கொண்டநஞ் சுண்பார்க் கமிழ்தாமே என நாற்சீரடியிரண்டும் ஐஞ்சீரடியிரண்டுமாய் வந்தது. இனி, அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே 1158என்றதுபோல வரும் இலக்கணங்கள் கொச்சக வொரு போகிற்கே உரியவாகவும் இன்னும் வேறுபட்டவாகவும் வரும்; அது, கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கல்வித் துறைபயந்த காமர்காட்சி நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை யெல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாதார்க் கெல்லாந் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர். என வரும். இவ்வாறே ஒழிந்தன வெல்லாம் 1159பரிமாற்றுப் படுப்பப் பலவாகி வரும்; அவை வந்தவழிக் கண்டுகொள்க. இனி, நான்கடியும் ஒத்தவழி மயங்கி வருமாறு; தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு படந்தாழ் கச்சைப் பாம்பொடு தழீஇ வென்றாடு திருத்தாதை வியந்துகை துடிகொட்ட நின்றாடு மழகளிற்றை நினைவாரே வினையிலரே என வரும். புனைமலர்க் கடம்பின் பூந்தார்ச் சேந்த னிணையடி பரவுதும் யாம் என்பது இரண்டடியான் ஈற்றடி குறைந்து வந்தது. கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே என்பது, இரண்டடியுள் ஈற்றடி குறையாது அடிதோறும் மயங்கச் சீர் இயலசையான் வந்தது. ஒழிந்த மூன்றடியும் நான்கடியும் 1160ஈற்றடி குறைதலுங் குறையாதவழி இயலசைச் சீராதலுங் வந்த வழிக் 1161கண்டுகொள்க. வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் னிறைகழ றொழுதனம் (யா. வி. ப. 264.) என்பது, மூன்றடியான் தரவு வாராமையின் யாப்பு வேறுபட்ட கொச்சக மாயிற்று. கடாமுங் குருதியுங் கால்வீழ்ந்த பச்சைப் படாமும் புலித்தோலுஞ் சாத்தும் பரம னிடாமுண்ட நெற்றியா னெஞ்ஞான்றுங் கங்கை விடாமுண்ட வார்சடையான் வெண்ணீ றணிந்தோன் மெய்யுறு நோயில்லை வேறோர் பிறப்பில்லை யையுறு நெஞ்சில்லை யாகாத தொன்றில்லை என நான்கடியும் முடிந்தவழி இரண்டடி வேறு வந்த கொச்சகம். ஒழிந்தனவும் பிற வேறுபாட்டான் வருவனவுமெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. இச் சொல்லப்பட்டன வெல்லாந் தரவு கொச்சகத்தின்பாற் சார்த்திக் கொள்ளப்படுவன வென்ப. வேறும் உள; அவையும் அவ்வாறாத லறிந்துகொள்க. மற்று அங்ஙனங் கூறின் இரண்டடியான் வருவன தாழிசை யாகலின், கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே எனவும், ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழி) எனவும். வருவன தாழிசையாம்பிற வெனின், தாழிசை இலக் கணஞ் சிதைய வரினுந் தாழிசைக்கொச்சகமெனவே படுமன்றே, தரவிலக்கணம் அழிந்து தரவிரட்டித்துச் சுரிதகம் பெற்றதூஉந் தரவு கொச்சகமாயிற்றுப் போல வென்பது. அல்லதூஉம், ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை என்பது, இரண்டடியின்றி முதுமொழியாகலானும், ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் என்பது, 1162பலவற்றுக்கும் பொதுவாகலானும் அஃது இரண்டடி வரையறையுடைய பாட்டெனப்படாது. கொன்றை வேய்ந்த செல்வ னடி என்பது, கந்தருவ மார்க்கமாதலின் ஈண்டையிலக்கண மெல்லாம் பெறுதல் சிறுபான்மையெனக் கொள்க. இனிப், பொருளினும் வேற்றுமையென்பது - 1163முற்கூறிய வகையானும், யாப்பு வேற்றுமையானும் ஏற்ற வகையான் வந்து பொருள் வேறுபடுதல்; அஃதாவது, தேவரை முன்னிலையாக்கி நிறீஇச் சொல்லாது 1164படர்க்கையாகச் சொல்லுதலும், மக்களை நாட்டி வெட்சிமுதற் பாடாண் டிணை இறுதியாகிய புறப் பொருளான் வந்து அதனுக்குரித் தென்று கூறப்பட்ட 1165பொருளின் வேறுபடுதலுமெனக் கொள்க. ஏற்ற வகையாற் பொருள் வேறுபாடு கொள்க வெனவே, 1166முன்னிலை படர்க்கையான் வரும் பொருள்வேறுபாடே இஃது ஓதிய நான்குமாமாறு. வேறுபட்டவற்றுக்குமெல்லாம் பொது வொழிந்த வெட்சி முதற் பாடாண்டிணை இறுதியாகிய பொருள் வேறுபாடு வரையறை யுடைய வென்பது; என்னை? எடுத்தோதிய நான்கனுள், எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் வரும் பகுதி யொழிந்து 1167வருமாகலின். இப்பொருள் வேறுபாடு பரணிச் செய்யுளுள் இடையிடை விரவி வரினல்லது வேறு வாரா தெனக் கொள்க. இவ்வாற்றாற் கொச்சகக்கலிப்பாவினை வரைந் தோதவே ஆசிரியப்பாவும் வெண்பாவும் ஒருபொருண் மேற் பல தொடர்ந்தவழி 1168மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதுமாகி வருதலும் பிறவாற்றான்வருதலும் வரையறையில வாயின. 1169தேவபாணி யல்லாத தொடர்நிலைச் செய்யுளெல்லாம் யாப்பு வேறுபாட் டொடு பொருள்வேறுபாடுமுடைய எனக் கொள்க. அவை யெல்லாம் 1170அவ்வச்செய்யுளுட் காணப்படும். புகலிரும் பனிச்சோலைப் பொன்மலைபோற் பொலிந்திலங்கி யகல்விசும்பிற் சுடர்மாட்டி யைம்பூத மகத்தடக்கி மண்ணக மிருணீங்க மன்னுயிர் படைத்தக்கா லண்ணலேற் றெழிலூர்தி யருமறை முதல்வனுந் தண்ணறுங் கமழ்துழாய்த் தாமரைக் கண்ணனும் வண்ணம்வே றுடம்பொன்றாய் வானவில் லனையரே எனப் படர்க்கையவாய்த் தெய்வம் பராஅதலிற் பொருள் வேறுபட்டது. வெண்பலிச் சாந்த முழுமெய்யு மேற்பூசி யுண்பலிக் கூரூர் திரிவது மேலிட்டுக் கண்பலிக் கென்று புகுந்த கபாலிமுன் னெண்பலித் தாளிவள் யாதுவாய் வாளே என்பது, காமப் பகுதி கடவுளும் வரையார் எனப்பட்ட பாடாண்டிணையாகலிற் பொருள் வேறுபட்டது. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் என்பதோவெனின், அது முல்லை நிலத்துக்குத் தெய்வ மாகலானும், முல்லை நிலத்தார் தந்தெய்வத்தினை அவ்வாறு அன்பு செய்து முன்னிலைப் புறமொழியாகக் கூறுதலானும் அது கைக்கிளை யெனப்படாதென்பது; ஒழிந்தனவும் இவ்வாறு வருவன வந்தவழிக் கண்டுகொள்க. மற்று இவற்றையெல்லாங் கொச்சக வொருபோகென்ற தென்னை? மற்றையுறுப்புப் பல விழந்தனவாலெனின்,அங்ஙனமாயினுங் கொச்சக வொருபோகென்னும் பொதுவிதி விலக்குண் ணாமையின், இது பொது வகையா னெய்திய 1171பெயரெல்லாவற்றுக்கு மாகுமென்று எய்துவித்தா னென்பது. இனிக், கொச்சகவொருபோகென்னாது ஆகு மென்றதனான் ஒருபோகென்னாது கொச்சகமென்றே வழங்கினும் அமையுஞ் சிறுபான்மையென்பது கொள்க. (149) (கொச்சகவொருபோகின் அளவு இவையெனல்) 462. ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பே. இஃது, அதிகாரத்தான் மேல்நின்ற நான்கனுள் (461) இறுதிநின்ற கொச்சகவொருபோகிற்கு அளவுணர்த்துகின்றது; ஒழிந்தவற்றுக்கெல்லாம் உள்ளுறுப்புப் பற்றி 1172இரண்டளவை கூறி அங்ஙனங் கூறப்படாததற்கும் அவற்றோடு இனம் பற்றி ஈண்டை அளவு கூறினமையின். இ-ள்: பத்தடியிற் சுருங்காது இருபதடியினேறாது வரும், அடக்கியலின்றி அடிநிமிர்ந்தொழுகுமெனப்பட்ட கொச்சக வொரு போகு என்றவாறு. முன்னர் நால்வகையாற் பகுத்து நிறீஇ, அதற்கிடையின்றி அது வென்று ஒருமையாற் சுட்டிக்கூறினமையானும், மேல் நிமிர்ந்தொழுகும் என்றக்கால் அடி எத்துணையும் பலவா மென்று ஐயுறுதலை விலக்கல் வேண்டுவதாகலானும் ஏற்புழிக் கோடல் என்பதனானுமெல்லாம் அதுவே கொள்ளப்பட்டது. அவற்றுக்குச் செய்யுள்: தடங்கடற் பூத்த தாமரை மலராகி யடங்காத முரற்சியா னருமறை வண்டிசைப்ப வாயிர வாராழி யவிரிதழின் வெளிப்பட்ட சேயித ழெனத்தோன்றுஞ் செழும்பகலி னிரவகற்றிப் 5 படுபனிப் பகைநீங்கப் பருவத்து மழையானே விடுமழை மறுத்திடினு மென்மலரின் மதுமழையா னெடுநிலங் குளிர்கூர நீர்மைசா னிழனாறி யண்டங்கள் பலபயந்த வயன்முதலா மிமையோரைக் கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாகலி 10 னோங்குயர் பருதியஞ் செல்வநின் னீங்கா வுள்ள நீங்கன்மா ரெமக்கே என்பது, பத்தடியிற் சுருங்காது இருபதடியி னேறாது வரும். அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகும் (தொ. செ. 149) எனப்பட்ட கொச்சகவொருபோகென்றவாறு. இருபதடியான் வருவது வந்தவழிக் கண்டுகொள்க. (150) (அம்போதரங்க வொருபோகின் அளவு இவையெனல்) 463. அம்போ தரங்க மறுபதிற் றடித்தே 1173செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை. மேனின்ற அதிகாரத்தான் இதுவுங் கடவுள் வாழ்த்துப் பொருட்டாகிய அம்போதரங்க வொருபோகிற்கு அடிவரை யறை கூறுகின்றது. இ-ள்: அம்போதரங்கவொருபோகுந் தன் உறுப்பெல்லாங் கூடி அறுபதடித்தாகியும், அதன் 1174செம்பாலாகிய முப்பதடித் தாகியும், 1175அதன் வாரமாகிய பதினைந்தடித்தாகியுஞ் சிற்றெல்லை பெறும். என்றவாறு. எனவே, இது தலையள வம்போதரங்கவொருபோகும் இடையள வம்போதரங்க வொருபோகுங் கடையள வம்போ தரங்க வொருபோகுமென மூன்றற்குஞ் சிற்றெல்லை கூறியவாறா யிற்று. அவற்றுக்குப் பேரெல்லை கூறுமா றென்னையெனின், அறுபதிற் றடித்தெனத் தலையளவிற்கு வேறு கூறி அவ்வளவைப் பற்றி அதன் செம்பாலும் அதன் வாரமுமெனப் பாகஞ்செய்து வந்தானாகலாற் கடையள வம்பேதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாம். கடையள வம்போதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்தாகியவழிப் பேரெல்லை முப்பதின்காறும் உயரு மெனவும், இடையளவிற்குச் சிற்றெல்லை முப்பதாகியவழிப் பேரெல்லை அறுபதின்காறும் உயருமெனவும், தலையள விற்குச் சிற்றெல்லை அறுபதாகியவழி அதனையும் இவ்வாறே இரட்டிப்ப அதன் பேரெல்லை நூற்றிருபதாமெனவும் கொள்ளவைத்தானென்பது. அங்ஙனம் நூற்றிருபதாங்கான் மேனின்ற அதிகாரத்தான் தரவிற்கெல்லை இருபஃதாகவும் அதனோடொப்ப வருத லிலக்கணத்த தாகிய 1176அடக்கியல் இருபதடியாகவும் நாற்பதடி பெறப்படும். இனிச், சிற்றெண் பதினாறும் அராகவடி நான்குமாக இருபதடி பெறப்படுங் கொச்சகம் 1177இருமூன்றாகிய பத்தடியின் இகவாது அறுபது அடிபெறுமென்றவாறாயிற்று. இனிப், 1178பதினைந்தாங்கால் தரவு இரண்டடியும், கொச்சகம் மூன்றாகி ஆறடியும், அராகவடி ஒன்றும், சிற்றெண் நான்கும், அடக்கியல் இரண்டுமெனப் பதினைந்தடியாம். ஒழிந்த 1179இடையளவிற்குந் தலையளவிற்கும் இவ்வாறே வருமென்றறிந்துகொள்க. இவ் வுறுப்புக்கள் மேற்கூறுகின்றானாகலின் ஈண்டு அளவை கூறினா னென்பது. கலிப்பாவின் உள்ளுறுப்பிற்கெல்லாம் ஈண்டே வேறுவே றளவை கூறி வருகின்றானாகலின் இவற்றுக்கும் அவ்வாறே ஈண்டளவை கூறினான் 1180அளவியலுட் கூறா தென்பது. சூத்திரத் துப்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே (தொ. மர. 103) என்பதனான் இதனுள்ளுறுப்பிற்கு அடி வரையறை உய்த் துணர்ந்து 1181காட்டினாமென்பது. (151) (அம்போதரங்க வொருபோகின் உறுப்புகள் இவை எனல்) 464. எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெ ணடக்கியல் வாரமொ டந்நிலைக் குரித்தே. இது, முன்னர்க் கூறிய அம்போதரங்கவுறுப்பு இவை ஐந்துமெனக் கூறியவாறு. இ-ள்: தரவும், கொச்சகமும், அராகமும், சிற்றெண்ணும், அடக்கியல்வாரமுமென ஐந்துறுப்புடையது அம்போதரங்க வொருபோகு என்றவாறு. தரவெனினும் எருத்தெனினு மொக்கும். இனிக், கொச்சகமென்பது ஒப்பினாகிய பெயர்; என்னை? பல1182கோடு பட அடுக்கி யுடுக்கும் உடையினைக் கொச்சக மென்ப; அது போலச் சிறியவும் பெரியவும் விராயடுக்கியுந் தம்முளொப்ப அடுக்கியுஞ் செய்யப்படும் பாட்டுக்களைக் கொச்சகமென்றா னாகலினென்பது. இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியுங் கொய்சகமென்று சிதைத்தும் வழங்குப. இவை வெண்பாவாகல் பெரும்பான்மை. வழி முறை 1183சுருங்கி வரையறை யெண்ணுப் பெறும் 1184எண் போலாது பாவினுந் தளையினும் வேறுபட்டுப் பலவாகியும் வருங் கொச்சக மென்பது. அராகமென்பது அறாது கடுகிச்சேறல். 1185பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டுந்துணைச் 1186செய்வதாகிய பொன்னினை 1187அராகித்த தென்ப வாகலின், அதுவும் ஒப்பினாகிய பெயரா யிற்று; என்னை? மாத்திரை நீண்டுந் துணிந்தும் வாராது குற்றெ ழுத்துப் பயின்று வந்து நடைபெறுதலின். சிற்றெண் என்பது நால்வகை யெண்ணினும் இறுதி யெண்ணான மையின் அப்பெயர்த்தாயிற்று. அவ்வுறுப்புகளிற் கூறிய பொருளை அடக்குமியல் பிற்று வாரமாகலின் அதனை அடக்கியல் வாரம் என்றான்; அதற்குச் செய்யுள்: செஞ்சுடர் வடமேரு விருமருங்குந் திரிகின்ற வெஞ்சுடரு மதியமும்போல் வேலொடுகே டகஞ்சுழல மாயிரு மணிப்பீலி மயிலெருத்திற் றோன்றுங்காற் சேயொளி கடற்பிறந்த செந்தீயிற் சிறந்தெறிப்ப 5 மறுவருந்தம் மனத்துவகைக் கலுழ்ச்சியான் வளர்த்தெடுத்த வறுவருந்தம் முலைசுரந் தகடிருந்தூ றமுதூட்ட வாருருவத் தெயின்மூன்று மொருங்கவித்தோன் வியப்பெய்த வீருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய் (தரவு) 10 ஆங்க, வினையொழி காலத்து வெவ்வெயிற் கோலத் தனைவரும் தத்த மறம்புரிந் தாங்கு முனையடு கொற்றத்து முந்நான் குருவிற் கனைகடல் சுட்டன கண்; தேவரு மக்களுஞ் சீற்றத்தா னஞ்சாமைக் காவல் புரியுங் கதிர்மதி போலுமே 15 மூவிரு தோன்றன் முகம்; மடமகள் வள்ளி மணிக்கம் பலம்போல விடையிடை சுற்றுத லின்றுந் தவிரா தொடையமை தார்க்கடம்பன் றோள்; அவ்வழி, அடியிணை சேரா தவுணர் நுங்கிப் 20 பொடிபொடி யாகிய போர்ப்பொடு மாய விடியுமிழ் வானத் திடைநின்றுங் கூஉங் கொடியணி கோழிக் குரல். விழுச்சீ ரமரர் விசும்பிடைத் தோன்றிப் பழிச்சிநின் றார்த்தார் பலர்; (தாழிசை) 25 உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்; பெருகள வருமறை பெறுநெடு மொழியொடு பொருகள வழியிசை புகல்வன சிலகுறள்; (அராகம்) சிவந்தன திசை ஆர்த்தனமறை 30 சிலம்பின மலை ஆடினர்பலர் நிவந்தன தலை போர்த்தனதுகள் நிரம்பினகுறை பொழிந்தனமலர்; (சிற்றெண்) ஆங்கனந் தோற்றிய வடுபோர் வென்றியின் வீங்கிருந் தொடித்தோள் விடலை நினக்கே 35 யாமறி யளவையிற் றமிழ்புனைந் தேத்துக நின்னீ தக்க தாயினு நின்னெதிர் நாணில மாகல் வேண்டும் யாணர்க் கடம்புங் களிமயிற் பீலியுந் தடஞ்சுனை நீரொடு நின்வயீ னமர்ந்த 40 வாராப் புலமை வருகமா ரெமக்கே (அடக்கியல்) என்பது இடையள வம்போதரங்கவொருபோகு. இவ்வுறுப்புக்களின் அளவு வேறு வேறு கூறானாயினும், அவற்றுக்கு ஏற்றவாறறிந்து செய்யப்படும். இது, நாற்பத்து நான்கடியான் வந்தது. ஒழிந்தனவும் இவ்வாறே வரும். இவையெல்லாம் இக்காலத்து வீழ்ந்தன போலும். மற்றுக் கொச்சகவொருபோகினை முற்கூறி அதற்கு அளவை பிற்கூறினான், இதற்காயின் அளவை முற்கூறிய தென்னை யெனின்,அங்ஙனம் அளவை பெற்ற அம்போதரங்க வொரு போகின் அளவை இனிக் 1188கூறாநின்ற கலிப்பா 1189மூன்றற்கும் அளவென்ப தறிவித்தற்கென்பது. அஃதேல் 1190இதனையும் அம்போ தரங்கத்திற் களவென வரைந்தோதிய தென்னை யெனின்,அது தலை இடை கடையென மூன்றளவுபெறு மென்றற் கென்பது. இவ்வதிகாரத்தான் வருகின்றவற்றோடு இதற்கு வேற்றுமையிலக்கணம் ஒப்பன அறிந்துகொள்க. 1191வருகின்ற கலிவெண்பாட்டிற்கு, வெள்ளடி யியலாற் றிரிபின்றி வரும் என்றமையின் அதற்கு இவ்வளவை ஒவ்வாதென்பது. (152) (கலிவெண் பாட்டாவது இதுவெனல்) 465. ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலாற் றிரிபின்றி வருவது கலிவெண் பாட்டே. இது, நிறுத்தமுறையானே கலிவெண்பா வாமா றுணர்த்து தல் நுதலிற்று. இ-ள்: ஒரு பொருளைக்கருதி மற்றொரு பொருள்படவுஞ் சொற் றொடர்ந்து கிடப்பத் தொடுக்கப்பட்ட வெள்ளையடி யான் திரிபின்றி வருவது கலிவெண்பாட்டாம் என்றவாறு. இயல் என்றதனான் வெண்பாவிலக்கணஞ் சிதையாத வற்றுக்கே ஒருபொருள் நுதலவேண்டுவதெனவும் அவ்வா றன்றித் திரிந்து வருவன வெல்லாம் 1192ஒருபொருள் நுதலா வென்னுங் கலிவெண்பாவாமெனவுங் கூறியவாறு. வெண்பா விலக்கண மென்பது கட்டளையாகி வருதலுந் தளைவகை யொன்றி வருதலும் பன்னிரண்டடியின் இகந்து வாராமையு மென இவை யென்பது மேற்கூறினாம். அவ்வாறன்றித் திரிந்துவருங்கால் வாளாதே அசையுஞ் சீருமிசையொடு சேராதன (323) பாவகை சிதைந்து கலித்தளையோசை எனப் படும். அற்றன்றியும் தனக் கோதிய சீருந் தளையுஞ் சிதைந்த வழியும் பன்னிரண்டடியின் இகந்தவழியுங் கலிவெண்பாவா தற்கு வரைந்து கூறல் வேண்டுவ தன்றென்பதூஉம் அவை ஒரு பொருள் நுதலாது வரினுங் கலிவெண்பாட்டா மெனவுங் கூறினானாம் என்னை? ஒரு பொருள் நுதலியதனைத் திரிபின்றி முடிந்த கலிவெண்பாட் டெனவே, 1193ஒருபொருள் நுதலாது 1194ஈண்டுக் கூறிய வேறுபாட்டான் வருவன வெல்லாந் 1195திரிபின்றி முடியாத கலிவெண்பாட்டென்பது கொள்ள வைத்தமை யினென்பது. இன்னுந் திரிபின்றி முடியும் என்றதனானே ஒரு பொரு ளன்றிப் பலவுறுப்புடைத்தாகித் திரிபுடையதூஉங் கலிவெண் பாட்டுளதென்று கொள்ளவைத்தானாம். அது 1196முன்னர்ச் சொல்லுதும். உதாரணம் : அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் 5 சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை 10 யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தரற்கு (கலி. 18) என்பது, பன்னிரண்டடியான் வந்து 1197பல பொருணுதலி வந்தமைதலிற் கலிவெண்பாட்டாயிற்று. ஒரு பொருள் நுதலிய எனவே, சொல்லப்படும் பொருளின் வேறாகிக் கருதியுணரப் படும் பொருளுடைத் தென்பதூஉம் பெற்றாம். என்னை? இப் பாட்டி னுட் பெண்டன்மைக் கேலாத நுண்பொருளினைத் தலைமக னெதிர்நின்று உணர்த்துவாள், 1198செவ்வனஞ் சொல்லாது தலைமகன் பண்டு கூறியன சிலவற்றை வாங்கிக் கொண்டு சொல்லி, அவன் 1199மறந்தானென்பது உணர்த்துகின்ற பொருண்மை கருதி உணரவைத்தமையின் அவ்வாறாயிற்று. 1200ஒழிந்த பாக்களும் அவ்வாறு ஒரு பொருணுதலுமாயினும், அங்ஙனம் 1201நுதலிய பொருள்பற்றிச் செய்யுள் வேறுபடாமை யின், ஆண்டாராய்ச்சி யின்றென்பது. வெண்பாவிற் குறித்த பொருளினை மறைத்துச் சொல்லாது 1202செப்பிக்கூறல் வேண்டுமாகலானும், இஃது அன்னதன்றி ஒருபொருணுதலித் துள்ளினமையானுங் கலிவெண் பாட் டெனப்பட்ட தென்பது. மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் 5 தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு 10 துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு (கலி. 6) என்பது, பதினோரடியான் ஒருபொருணுதலிவந்த கலிவெண் பாட்டு. நூற்றைம்பது கலியுள்ளுங் கலிவெண்பாட்டு எட்டா கலின் அவற்றுள் ஒரு பொருணுதலி வருவன பிறவும் உள. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. இனிப், பன்னிரண்டடியின் இகந்து ஒருபொருணுதலாது வருமாறு: தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் 5 புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ 10 பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்றதிலை மற்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தற் றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் 15 பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்யுற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன் (கலி. 111) என வரும். பிறவும் அன்ன. இனிப் பாவகை சிதைந்தனவுந் தளைவகை சிதைந்தனவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவையெல்லாங் காமப்பொருண் மேலனவாம். எனவே, கட்டளை வகையானுந், தளைவகை யொன்றியும் வரும் வெண்பாவாயிற் காமத்திற்கே உரியவெனப் படாவாயின. பிறவும் அன்ன. இனி, அம்போதரங்கவொருபோகிற்கு இடையின்றிக் கலி வெண்பாட்டு வைத்தமையான், வானூர் மதியம் போலும் ஒருசார்த் தேவபாணியுங் கலிவெண்பாட்டேயாம், ஒருபொருணுதலி 1203வருதலின் என்பது; 1204இதனுள், ஆட்சிய னாக வென்கோ என்பது வியங்கோளாயினும், அரசன் வாழ்க்கையும் அரங்கிற் கும் ஆடற்கும் இடையூறின்மையுஞ் சொல்லுவாயாக வென்று தெய்வத்தினை வினாஅய் 1205வாய்ப்புள் வேண்டி நின்றமையின் அது குறித்துணரப்பட்டு ஒருபொரு ணுதலியதாயிற்று. 1206கந்திருவ மார்க்கத்து 1207வரியுஞ் சிற்றிசையும் பேரிசையும் முதலாயின போலச் 1208செந்துறைப்பகுதிக்கே உரியவாகி வருவனவுங், கூத்த நூலுள் வெண்டுறையும் அராகத்திற்கே யுரியவாகி வருவனவும் ஈண்டுக் கூறிய செய்யுள்போல 1209வேறு பாடப்பெறும் வழக்கியல என்பது கருத்து. இக்கருத்தானே அவற்றை இப்பொழுதும் இசைப்பா வென வேறுபெயர் கொடுத்து வழங்குப. இனி, யாப்பிலக்கணத்திற் கொப்பவே இசைநூலுட் சொல்லப் பட்ட செய்யுளும் உள; என்னை? வெண்பா வியலான் விரவுறுப் பின்றித் தன்பா வகையொடு பொருந்திய பொருளே யொன்றுவிளைந் திற்ற விறுதித் தாகும் என்றவழி, விரவுறுப்பின்றியென வேண்டா கூறி விரவுறுப்பு டையது பொருளொன்று விளையாதெனவும், விரவுறுப் பில்லது பொருளொன்று விளைந்திற்ற இறுதித் தாகு மெனவுங் கூறினமையின். எனவே, ஈண்டு ஒரு பொருணுதலி வருமெனப் பட்ட கலிவெண்பாட்டுப் பொருள் வெளிப்படா தெனவும், விரவுறுப்புடையது வெண்பாவியலான் வெளிப்படத் தோன்றும் பொருட்டெனவும் நேர்ந்தானாம். அது நோக்கி யன்றே வருகின்ற சூத்திரத்து வெண்பா வியலான் வெளிப்படத் தோன்று (466) மெனக் கலிவெண்பாட்டினையே கருதி ஓதுவானாயிற்று மென்பது. (153) (விரவுறுப்புடைய கலிவெண்பாட்டு இவ்வாறு வருமெனல்) 466. தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து மைஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும். இது, மேல் வெளிப்படு பொருட் டெனப்பட்ட வெண்கலி விரவுறுப்புடைமையின் அதனை வேறு கூறுகின்றது. இ-ள்: தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் - தரவிற் கும் போக்கிற்கும் 1210இடையன பாட்டாகிப் பயின்று வருதலும்; எனவே, தரவும் போக்கும் முன்னர் ஓதிய வகையானே முன்னும் பின்னும் நிற்குமென்பதூஉஞ், சுரிதகமாயின் வெள்ளையும் அகவலுமாய்ப் பாவொடு வந்துழிப் போலத் தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருமென்பதூஉங் கொள்க. தரவும் போக்கு மெனப் பாட்டிறுதி நின்ற போக்கினை முன்வைத் தான், அவை ஓரினத்த வாகலின்; என்னை? தரவிறுதி, சீரான் இறுமாறு போல வெள்ளைச்சுரிதகவிறுதியும் ஒரோவழிச் சீரானே இறுதலின். அது, தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய கோதை பரிபாடக் காண்கும் (கலி. 80) என நான்கசையானுமின்றித் தேமாவானிற்றது. இனிப், பாட்டினைப் போக்கின் பின் வைத்ததனான், போக்குப் போல நாற்சீரான் இறுவனவும் அப்பாட்டுள் சிறு பான்மை யென்பது. அது, கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு (கலி. 141) என்றாற்போல வரும். இங்ஙனம் வைப்பவே, வருகின்ற ஐஞ்சீரடுக் கலும் ஆறுமெய் பெறுதலும் (466) அவற்றுக்கன்றி ஏலாவாயின. அல்லதூஉம், இதனை இறுதி வைத்தான் இதனோ டொக்குமென முற்கூறப்படுங் கொச்சகம், தரவும் போக்கு மின்றிப் பாட்டு மிடைந்தே வருமென்பது இவ்வதிகாரத்தாற் கோடற்கென்பது. அது முன்னர்க் காட்டுதும். ஐஞ்சீரடுக்கியும் -வேறுநின்றதொரு சீரினை அளவடி யுடன் அடுக்கிச் சொல்ல ஐஞ்சீராகியும்; ஆறு மெய்பெற்றும்- அவ்வாறே இருசீரடுக்க ஆறுசீர்பெற்றும்; மெய் யென்றதனான் அடுக்குஞ்சீர் முதலும் இறுதியும் வருமென்பது கொள்க; வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்- வெண்பா வென் னும் உறுப்பினியற்கை சிதையாமற் பொருள் புலப்படத் தோன் றும் என்றவாறு. இயற்கை சிதையாமல் தோன்றுமெனவே, கட்டளையும் கட்டளை யல்லதும் எனப்பட்ட வெண்பாவிலக்கணம் இரண் டுஞ் சிதையாமை வருமென்றானாம். தரவும் போக்குமென நின்ற உம்மை எண்ணும்மை. பாட்டிடை மிடைந் தென்பது முத லாக வந்த உம்மை மூன்றும் இறந்தது தழீஇய எச்சவும்மை; என்னை? மேற்கூறிய தனிநிலை வெண்பாட்டேயன்றித் 1211தரவு றுப்பாகப் பாட்டிடை மிடைந்தும் என்றமையின். இவ்வாறன்றி, 1212அவ்வனைத்தும் எண்ணும்மை கொள்ளின் உறுப்பினையே எண்ணல் வேண்டும்; அல்லாக்கால், வினையொடு பெய ரெண்ணின் அதன் உறுப்பினையே 1213எண்ணினானல்லனா கலானென்பது. அல்லதூஉந், தரவும் போக்கும் 1214முதல் வந்தும் இறுதிவந்துமென அவையும் தம் வினையான் எண்ணவும் படுமன்றோவென மறுக்க. அவற்றுக்குச் செய்யுள் கூறுங்கால், தரவும் போக்கும் பாட்டிடை 1215மிடைந்து தோன்றும்; அதுவே ஐஞ்சீரடுக்குப் பெற்ற 1216தொன்றும், அறு சீரடுக்குப் பெற்ற தொன்றும், அவையிரண்டும் உடன்பெற்ற தொன்றுமென்றும் இங்ஙனம் விகற்பித்துக் கூறப்படுமென்பது. 1217அவை கட்டளை வெண்பாவான் வருதலும் ஒழிந்த வெண்பாவான் வருதலுமென விகற்பிக்கப்படாவோவெனின்,அவ்விகற்பம் அடிக்கல்லது பாவிற்கின்மையானும் ஈண்டுப் பா வேறு படாமையானும் அங்ஙனம் பகுத்ததனாற் பயந்ததென்னையென மறுக்க. வரலாறு: சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீ ருமக்கொன் றறிவுறுப்பேன் மான்ற 5 துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப 10 வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவேன் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப 15 மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா; 20 காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன தானையால் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம 25 மெழினுத லீத்தவிம் மா. அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா னுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; 30 அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை, அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ 35 ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே (கலி. 139) என்பது, தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண் பாட்டு ஆசிரியச்சுரிதகத்தான் வந்தது. இனி, வெள்ளைச்சுரிதகத்தான் வந்தனவும் கண்டுகொள்க. கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே பண்டறியா தீர்போல நோக்குவீர் கொண்டது மாவென் றுணர்மின் மடலன்று மற்றிவை பூவல்ல பூளை வுழிஞையோ டியாத்த 5 புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி யடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி நெடியோன் மகனயந்து தந்தாங் கனைய வடிய வடிந்த வனப்பினென் னெஞ்ச 10 மிடிய விடைக்கொள்ளுஞ் சாய லொருத்திக் கடியுறை காட்டிய செல்வேன் மடியன்மி னன்னே னொருவனேன் யான்; என்னானும், பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ 15 வென்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக நன்னுத லீத்தவிம் மா; திங்க ளரவுறிற் றீர்க்கலா ராயினுந் தங்காதல் காட்டுவர் சான்றவ ரின்சாய லொண்டொடி நோய்நோக்கிற் பட்டவென் னெஞ்சநோய் 20 கண்டுங்கண் ணோடாதிவ் வூர்; தாங்காச் சினத்தொடு காட்டி யுயிர்செகுக்கும் பாம்பு மவைப்படி லுய்யுமாம் - பூங்கண் வணர்ந்தொலி யைம்பாலாள் செய்தவிக் காம முணர்ந்து முணராதிவ் வூர்; 25 வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றா ரஞ்சலென் றாலு முயிர்ப்புண்டா - மஞ்சீர்ச் செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காம மறிந்து மறியாதிவ் வூர்; ஆங்க, 30 என்க ணிடும்பை யறீஇயினெ னுங்கட் டெருளுற நோக்கித் தெரியுங்கா லின்ன மருளுறு நோயொடு மம்ம ரகல விருளுறு கூந்தலா ளென்னை யருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே (கலி. 140) என்பது, தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண் பாட்டு ஆசிரியச்சுரிதகத்தா லிற்றதாகலின், இதனுள், என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே என்னும் அடி ஐஞ்சீரடுக்கியும் வந்தது; என்னை? பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ என்னும் அளவடியிரண்டும் எதுகையாய் அமைந்தவழி, என்னா னும் என வேறு நின்ற சீரொடுங்கூடி ஐஞ்சீரடுக்கின மையின். இதனுள் ஆங்க வெனத் தனிச்சொல் வந்தது. காராரப் பெய்த (கலி. 109) என்னும் முல்லைப்பாட்டு ஐஞ்சீரடுக்கி வெள்ளைச்சுரிதகத்தா னிற்றது. அரிதினிற் றோன்றிய யாக்கை புரிபுதாம் வேட்டவை செய்தாங்குக் காட்டிமற் றாங்கே யறம்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றன் றிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன் 5 றணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி யணிநலம் பாடி வரற்கு; ஓரொருகா லுள்வழிய ளாகி நிறைமதி நீரு ணிழற்போற் கொளற்கரியள் போரு ளடன்மாமே லாற்றுவே னென்னை மடன்மாமேன் 10 மன்றம் படர்வித் தவள்; வாழி சான்றீர், பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள்; 15 அம்ம சான்றீர், கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு; இடியுமிழ் வானத் திரவிருள் போழுங் கொடிமின்னுக் கொள்வேனென் றன்னள் வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க் 20 கல்லாமை காட்டி யவள்; வாழி சான்றீர்; என்றாங்கே; வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாடத் திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை போலக் கொடுத்தார் தமர் (கலி. 141) என்பதனுள், வாழி சான்றீர் அம்ம சான்றீர் என ஐஞ்சீரடுக்கி யாங்கு அடுக்கிச் சொல்ல அறுசீராயின. இதற்கும் ஐஞ்சீர் அடுக்கி யுமென்றது போல அறுசீரடுக்கியு மென்று 1218அடுக்குதற் றொழில் கொள்ளப்படும், ஈண்டு இரண்டளவடி தொடைப் படச் செய்த மையினென்க. இதனுள்ளும் என்றாங்கே என்பது தனிச்சொல். புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது (கலி. 142) என்பதனுள், இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள் என, இயற்சீர் நிரையொன்றியும் பா வேறுபடாமையின் இதுவும் கலிவெண்பாட்டாயிற் றென்பது கொள்க. இங்ஙனம் பா வேறுபடாமையினன்றே, உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் 1219செறாஅய் வாழியெ நெஞ்சு (குறள். 1200) என்பதனை வெண்பா என்பாமாயிற்றென்பது. இனி, எல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல (கலி. 142) என வெள்ளைச் சுரிதகத்துள் ஐஞ்சீரடியும் வந்தது. வெண்பா விற்கு முன்னர், வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு மைஞ்சீ ரடியு முள (375) என்றானாகலின், மேற்கூனெனவுஞ் சொற்சீரெனவுங் கூறப் பட்டனவே ஈண்டு ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றுங் கூறப் பட்டன என வுணர்க. இதற்கு ஐஞ்சீரும் அறுசீரும் விதந்தோத வே, மேற் சிறுபான்மை பொது வகையாற் கலிக்கு நேரப்பட்ட சொற் சீரடி ஒத்தாழிசைக்கும் முற்கூறிய கலிவெண் பாட்டிற்கு மாயின் எஞ்ஞான்றும் வாராதென்பதூஉம், அதுதானும் இதற்கு வருங் கால் இருசீரின் இகந்துவாரா தென்பதூஉங் கூறினானாம். இங்ஙனஞ் சொற்சீரடி விலக்கவே அதற்கினமாகிய முடுகியலும் ஒத்தாழிசைக்கு வாராதென்பதாம். அது வெண்கலிக்கோ வெனின், வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் (466) எனவே விலக்குண்டதன்றோ வென்க. இனித், தரவிற்கும் போக்கிற்கும் பாட்டிற்கும் இவ்வள வைத் தென்பது அம்போதரங்கத்திற்கு ஓதிய வகையாற் கோடு மென்றமையின், அதற்கேற்ற வகையான் வருவதன்றி வேறுவேறு வரையறை யிலவென்க. பாட்டிடை மிடையின் என்றமையின் ஈண்டுப் பாட்டென்றது கொச்சகத்திற்கே யுரித்தென்பது. மற்று, வெண்டளை 1220தன்றளை யியற்றளை விரவியும் வெண்பா வுடையது வெண்கலி யாகும் எனத் தளை விரவியும் வெண்பாச் சிதையாதவழிக் கலிவெண் பாட் டாமென்று ஓர் 1221சூத்திரஞ் செய்யாரோ பலவுறுப்பு வந்த வழியும் இது புறனடையாகவெனின்,அற்றன்று; வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் (466) எனவே, இவையெல்லாம் அடங்குதலின் அது வேறு கூறா னென்பது. இனிப் பலவுறுப்பின்றி 1222அவ்வாறு ஒரு பாட்டே வரின் அதனை வெண்கலி யென்பாரும் உளர். நூற்றைம்பது கலி யுள்ளும் அன்னதொரு கலிவெண் பாட்டின்மையின் அது சான் றோர் செய்யுளொடு மாறுகோளாமென மறுக்க. மற்றுப், பாட்டிடை மிடைந் தென்றவழிப் பாட்டெனப் பட்டது, இடைநிலைப்பாட்டென்றுமோ கொச்சகமென்று மோவெனின்,எஞ்ஞான்றுந் தாழம்பட வாராமையின் இடை நிலைப் பாட்டென்னாம். துள்ளலுஞ் செப்பலு மென்னும் இருவகைக் கொச்சகமும் ஒருங்கு வாராமையிற் கொச்சக மென்னாம். கொச்சக மென்னும் பொதுப் பெயரான் அது கூறாராயினும், வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என்றதனான் வெள்ளைக் கொச்சக மெனப்படும் அவை யென்பது. அஃதேற் கொச்சகமென்று ஓதுகவெனின்,அங்ஙனம் ஓதின் 1223இது கொச்சகக்கலியாமென்று கருதினுங் கருதற்க வென்பான் வாளாதே பாட்டு என்றான். இதனாலும் பெற்றாம், இது கொச்சகக்கலி யல்லாமை. (154) (கொச்சகக் கலிப்பாவி னிலக்கணம் இதுவெனல்) 467. பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே. இது, நிறுத்தமுறையானே அகநிலைக் கொச்சகக்கலி யுணர்த்துகின்றது. பாநிலை வகையென்பது உம்மைத்தொகை; பாநிலையும் வகையுமென விரியும். பாநிலை யென்பது ஆறாம் வேற்றுமைத்தொகை. இ-ள்: மேற் 1224பாவினின்ற வகையானே கொச்சகக்கலியா மென்று நூலாசிரியர் கூறித் துணித்தனர் என்றவாறு. அறைதலெனினுந் துணித்தலெனினும் ஒக்கும். என்னை? துணித்த கரும்பினை, அறைக்கரும்பு (பொருந. 193) என்பவாகலின். பாநிலை என்றது, யாதனை நோக்கியெனின், - இது கொச்சகமாதலான் அதுவும் மேலே ஒருபோகெனக் கூறப்பட்ட கொச்சகப் பாநிலையெனக் கொள்க. அதனைத் துணித்தன ரென்றதனான், தரவின் றாகித் தாழிசை பெற்று (461) வருமென்ற கொச்சகத்தினை இதற்கு இயைபின்றாக முன் வைத்துச் சேட்படுத்தமையின் அஃதொன்றனையுந் துணித்து மாற்றி அல்லாத 1225கொச்சகப்பாவினின்ற வகையான் 1226இவ்வக நிலைக் கொச்சகம் வரும். பரணிப் 1227பாட்டுப் போல அக நிலைக் கொச்சகம் வாரா வென்றானாம். வகை யென்றதனான் அதிகாரத்தானின்ற வெண்கலிப்பாவினது பாநிலையுங் கொள்ளப்படும். அஃதேல், அதனைப் பாநிலை யென்னாது வகை யென்ப தெற்றுக்கெனின்,வெண்கலிப்பாத், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து . . . . . . . . . . . . . . . வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் (தொல்.செய்.154) என்றதனான் 1228வெண்பாவியலிற் சிதையாது வருமென்று 1229உறுத்துக் கூறினானென்பது. எனவே, 1230பாவொழிந்த உறுப் பெல்லாம் பொருணுதலாது 1231வெளிப்படத் தோன்றுங் கலி வெண்பாட்டின் உறுப்பு வகையான் வருதலும் 1232உடைத் தென்றவாறு. அங்ஙனம் வருங்கால் இடைநின்ற கொச்சகங் களை, ஐஞ்சீ ரடுக்கலும் என்ற கலிவெண்பாவிற்கு ஓதியவாறே கொள்க. மற்று நூலறி புலவர் என வேண்டியதென்னையெனின், தரவு இணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒரு தரவே கொச்சகமாதலுந், தரவிணைந்தவழிச் சுரிதகம் பெறுதலும், அவை தனிச்சொல்லுஞ் சுரிதகமும் உடன்பெறுதலுமெல்லாம், யாப்பின் வேறுபட்டன வென்றலும், ஒத்தாழிசை மூன்றடுக்கி னும் அவற்றின் வேறுபாடறிந்து கொச்சக மெனக் கோடலுந், தேவபாணியாகாதவழிக் 1233காமப்பொருளே பற்றி வாராது. அறம்பொருளின்பம் வீடென்னும் நான்கும் பற்றிப் பொருள் வேறுபட வருதலும், பா வேறுபட வருதலும் 1234(பற்றிக்) கொச்சகக்கலி யென்று உணர்வோர் நூலறி புலவரெனவும் 1235அல்லாதார்க்கு அது புலனாகா தெனவும் எல்லாம் அறிவித்தற்கு, நூலறி புலவர் நுவன்றறைந் தனர் என்றானென்பது. கொச்சகக்கலியுள் ஒருசாரனவற்றை 1236இனமென்று வேண்டுவராயின் 1237அவை அவ்வப்பாவின் இனங்கட்கு இவ்வகையே 1238கொச்சகமென வேறுபடு மென்ற வாறாயிற்று. உதாரணம் : செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு . . . . . . . . . . . . . . . மகனல்லை மன்ற வினி (கலி. 19) எனவும், செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி . . . . . . . . . . . . . . . அவலம் படுதலு முண்டு (கலி. 19) எனவுந், தரவிரண்டு அடுக்குதலின் தரவிணைக் கொச்சக மெனப்படும். இது நூற்றைம்பது கலியுளொன்றாகலின் வெண்பாவாகியுந் தனித்து வரும். வருங்காற் கலிவெண்பாட் டென்றாயிற்று. ஒரு பொருணுதலி இவ்வாறு வரினும் இஃதொக்கும். இது தாழிசையோடு 1239கோடாத் தரவாகலின் வெண்பாவாகியும் வந்தது. மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் . . . . . . . . . . . . . . . சென்றனை களைமோ பூண்கநின் றேரே (கலி. 133) என்பது தனிச்சொல் இன்றி ஆசிரியச்சுரிதகம்பெற்ற தரவிணைக் கொச்சகம். மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோல் . . . . . . . . . . . . . . . யேழைத் தன்மையோ வில்லை தோழி (கலி. 55) இது, தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும் பெற்ற தரவி ணைக் கொச்சகம். இனிப், பல 1240அடுக்கிப் பொருட் டொடராய் வருந் தரவுகொச்சகங்களும் 1241பொருட்டொடர் நிலையுள் அறம் பொருளின்பம் விராய் வருந் தரவுகொச்ச கங்களும் வந்தவழிக் கண்டுகொள்க. வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தான் (கலி. 118) இது, தரவுந் தாழிசையும் போக்கும் முறையானே வந்ததாயினும், அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி என்னும் இலக்கணஞ் சிதையத் தாழிசைகடோறுஞ் சொற்சீர் பல வருதலான் ஒத்தாழிசையெனப்படாது அதன் வகைத்தாய் 1242எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றிய கொச்சகமென்பதூஉ மாயிற்று. அருடீர்ந்த காட்சியா னறநோக்கா னயஞ்சேய்யான் (கலி. 120) நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் (கலி. 130) என அடக்கியலின்றி அடி நிமிர்ந்தொழுகியது போலுங் கொச்சகம் வருங்கால் ஒத்தாழிசையும் வண்ணகமும்போலத் தனிச்சொற்பெற்றும் பெறாதும் வரும். 1243நெய்தற்றிணைப் பாட்டுக்கும் (119) இஃதொக்கும். அது வருமாறு: கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதை (கலி. 54) என்னுங் கலியுள் அதனா னெனத் தனிச்சொற்பெற்று அடக்கிய லில்லாச் சுரிதகத்தோடு அடிநிமிர்ந்தோடிற்று. பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி . . . . . . . . . . . . . . . அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே (கலி. 21) என்னுங் கலிப்பாட்டுத் தனிச்சொல்லும் அடக்கியலு மின்றி அடிநிமிர்ந் தொழுகிற்று. எஃகிடை தொட்டகார்க் கவின்பெற்ற வைம்பால்போல் (கலி. 32) என்னும் பாலைப்பாட்டும், அகன்ஞாலம் விளக்குந்தன் பல்கதிர் வாயாக (கலி. 119) என்னும் நெய்தற்றிணைப் பாட்டும் அங்ஙனமாமாறு கண்டு கொள்க. இனி, 1244யாப்பின் வேறுபட்ட கொச்சகவொருபோகோ டொப்பன வற்றுட் சில வருமாறு: மன்று பார்த்து, நின்று தாயைக் கன்று பார்க்கு, மின்றும் வாரார் என்பது , 1245இருசீர் நான்கடித் தரவு கொச்சகம். தஞ்சொல் வாய்மை தேற்றி யஞ்ச லோம்பென் றகன்ற வஞ்சர் வாரா ராயி னெஞ்ச நில்லா தேதான் என்பது 1246முச்சீர் நான்கடித் தரவு கொச்சகம். 1247நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல் வாரல ராகி யவரோ வலித்தமைந்தா ராரலார் நாரைகா ளன்றில்கா ளன்னங்கா ளுரலர் தூற்றயா னுள்ள முகுவேனோ என்பது, நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம். 1248கன்னி ஞாழற் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றோ ரில்லை போலுமான் மன்னன் காக்கு மண்மேற் கூற்றம் வரவஞ்சி யின்ன தொன்று படைத்த தாயி னெவன்செய்கோ. இஃது, ஐஞ்சீர் நான்கடித் தரவு கொச்சகம் இனி, கோவையாக்கி 1249எழுத்தெண்ணி அளவியற்படுத் துச் செப்பினும் அவையேயாம். 1250காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவா நிற்ப நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவா நிற்ப வாண்பான்மை குன்றா வயிவே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன் றன்றே என்பது, அறுசீர் நாலடித் தரவுகொச்சகம். பிறவும் அன்ன. 1251இலங்கொளி வெண்மருப்பி னிட்டகை தூங்கவோ ரேந்தல் யானை கலங்கஞ ரெய்திக் கதூஉங் கவளங் கடைவாய் சோரச் சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய் இஃது, அறுசீர் மூன்றடித் தரவுகொச்சகம். 1252தண்ணந் துறைவன் றார்மேற் போன வண்ண வண்டு வாரா தற்றே வண்ண வண்டு வாரா தாயிற் கண்ணீர் நில்லா தேகாண் என்பது, நான்காசிரிய வடியுள் இறுதியடி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டது. 1253நிணங்கொள் புலாலுணங்க னின்றுபுள் ளோப்புத றலைக்கீ டாகக் கணங்கொள் வண்டார்த் துலாங்கன்னி நறுஞாழல் கையி னேந்தி மணங்கமழ் பூங்கானன் மன்னிமற் றாண்டோ ரணங்குறையு மென்ப தறியே னறிவேனே லடையேன் மன்னோ (சிலப். கானல். 9) என்பது இடையடி குறைந்து வந்தது. இஃது, அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே (374) என்றோதப்பட்டதாயினும் 1254பாமயங்கி வரும் பகுதிபற்றி வேறு காட்டப்பட்டது. 1255புன்னை நீழ னின்றார் யார்கொ லன்னை காணின் வாழாள் தோழி எனவும், 1256மல்ல லூர விவ்வி லன்றாற் பல்பூங் கோதை யில் எனவும், இவை இரண்டடியான் ஈற்றடி குறையாதுங் குறைந்தும் வந்தன. இன்னும் மேற்கூறிய கொச்சக வொருபோகின் பகுதியுள் ஒழிந்தனவும் இவ்வாற்றான் வருவன வெல்லாம் வந்தவழிக் கண்டுகொள்க. இனி, வகை யென்றதனான் வெண்கலியுறுப்பு நிலை ஒத்துப் பா வேறுபடுங் கொச்சகம் வருமாறு: ஒன்று, இரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் . . . . . . . . . . . . . . . மற்றவன் மேஎவழி மேவாய் நெஞ்சே (கலி. 47) என்பது, தரவுகொச்சகமுஞ் சுரிதகமும் முறையானே வந்து ஆசிரியச் சுரிதகத்தான் இற்றது. இதனுள் ஒன்று எனவும் அவனை எனவுஞ் சொற்சீருந் தனிச்சொல்லும் வந்தன. இப் பாட்டு மூன்றனுளொன்று ஓரடிமிக்கு மற்றைய நான்கடியாயே வருதலின் மூன்றும் ஒரு பொருண்மேல் வரினும் நூலறிபுலவ ரான் ஒத்தாழிசை யெனப்படாக் கொச்சகமாயிற்று. பிறவும் இன்னோ ரன்னவற்றாற் ஒத்தாழிசைக் கலியோடு இதனிடை வேறுபாடு தெரிந்து உணரப்படும், அஃதறியாதார்க்கு ஒன்றுபோலக் காட்டினு மென்பது. வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு . . . . . . . . . . . . . . . முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே (கலி. 7) என்னும் பாட்டுத், தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து ஐஞ்சீரடுக்கி வந்தது. இதனுள் தரவடி நான்கும் வெண்பாவா யினும் அச்செய்யுள் முழுதும் வெண்பாவன்மையிற் கொச்சக மாயிற்று. இனி, அறுசீரான் வருவனவும் வந்தவழிக் கண்டு கொள்க. காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் (கலி. 39) என்னுங் கொச்சகக் கலியுள், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன் என இடைநின்ற கொச்சகம் ஈற்றடி குறைந்தது. புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ எனக் கொச்சகம் ஈற்றடி குறையாது வந்தது. இவை யிரண்டும் வெண்பா. இதனுள் ஒழிந்த1257பா மயங்கியவாறு கண்டுகொள்க. கொடுமிட னாஞ்சிலான் றார்போன் மராத்து (கலி. 36) என்னும் பாட்டினுள், பாஅய்ப் பாஅய் பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் என முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாகிய சொற்சீரடி வந்தது. மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் (கலி. 104) என்னும் முல்லைப்பாட்டினுள், இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை எனவும், தாளெழு துணிபிணி யிசைதவிர் பின்றித் தலைசென்று எனவும் முடுகியலடி வந்தது. இவற்றுளெல்லாஞ் சொற்சீரடி வந்தன. ஒழிந்த கொச்சகப் பகுதியும் இவ்வாறே வந்தவழிக் கண்டுகொள்க. இனித், தரவும் போக்குமின்றிக் கொச்சகம் பல தொடர்ந் திற்றது வருமாறு; காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு (கலி. 85) என்னும் மருதக்கலி 1258உறழ்பொருட்டு அன்மையிற் கொச்சகக் கலியாயிற்று. இவையெல்லாம் பாநிலையெனப்பட்ட கொச்ச கமாமெனின்,அற்றன்று; அம்போ தரங்க மறுபதிற் றடித்து (463) என்றவழி, அளவை முதற் கூறிய மயக்கினான் இனியெல்லாந் தன்னள வெனப்படுமென்று புகுந்தமையின். இதற்குக் கொச்சக வொருபோகின் அளவை கொள்ளப்படாது, பாநிலைவகைத் தென்னாமையின். பிறவும் அன்ன. இனிக், கலிவெண்பாட்டெனக் கூறிய உறுப்புடைக் கலி வெண் பாட்டும் ஈண்டுப் பாநிலை யெனப்பட்ட கொச்சகப் பகுதியுமென இரண்டுங் கொச்சகவுறுப் புடைமையிற் கொச்சகக் கலியென ஒன்றேயா மென மேலைச் சூத்திரத்தோடு இதனை 1259ஒன்றாக வகுப்ப. அற்றன்று; மேல் ஒரு பொருள் கரவாது வெளிப்படத் தோன்றின், ஒரு பொருணுதலியது போலக், 1260கலிவெண்பாட்டாதற்கும் வாளாது கலிப்பாவாகா மைக்குங் காரண மென்னையெனின்,பிறிது மொருபொருள் கூறுவது கலிவெண் பாட்டென்றதற்கு இடையின்றியே, வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் 1261கரந்தபொருட்டன்று 1262இது என்றமையின் இதுவும் வெண் கலியாம்; அல்லதூஉம், வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் என 1263வேறொரு பாவினை உறுப்பாகக் கூறுதல் 1264மற்றொரு பாவிற் கேதுவாகக் கூறுதலாமோவென மறுக்க. ஒரு பொருணுதலிய வெண்பாட் 1265டாயின், ஒத்தாழிசைக்கலி கலிவெண் பாட்டென 1266மற்றையவற்றோ டொத்த பரப்புடையது போல உடனோதானாகலின், 1267இதுவும் அவ்வாறு 1268பரப்புடைத்தாகல் வேண்டுமாகலானும் அஃதமையா தென்பது. இங்ஙனம் மயங்குவாரை நோக்கியன்றே நூனவின்றோர்க்கே இவ்வேறுபாடு உணரலாவ தென்று ஆசிரியன் ஓதுவானாயிற்றென்பது. மற்று இதற்கு அளவைகொள்ளுமாறென்னை? மேற் கொச்சக வொருபோகின் அளவு இன்னதென்றிலனாலெனின்,அற்றன்று; வண்ணகத்திற்கு ஓதிய உறுப்பு அமைய வாராமை யின் 1269அது கொச்சகமே யாமெனவும் எண்ணுஞ் சின்னமும் இழந்ததே பற்றி 1270அதுவும் ஒருபோகே யாமென வும், அடக்கிய லின்றி அடிநிமிர்ந் தோடியது வெண்பாவும் ஆசிரியமுமாகி இறுதலின் அடக்கியலில்லாச் சுரிதகம் பெற்றுத் தரவுபோல வருமெனவும், இவ்வாறன்றி 1271ஒப்பழிய வருமெனவும் மேற்கூறினானன்றே? அங்ஙனங் கூறவே அவ்வுறுப்புக்கள் 1272அவ்வவ்வளவின வென்பதூஉம், அவற்றிற் சிறிய வேறுபட்டு வருமென்பதூஉம் அங்ஙனம் வேறுபடுங்கால் அடிநிமிர்ந்தொழுகியதன் இழிந்த வெல்லையின் ஒன்றிற் றென்பதூஉந் தெரித்தானாம்; என்னை? அடிநிமிர்ந் தொழுகிய தற்கு இழிந்த எல்லை பத்து அடியென்றமையின். இனி, அடிநிமிர்ந்தொழுகிய தொவ்வாமையின் அதற் களவை இத்துணையென்று, ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பு (462) என விதந்தோதினான். இங்ஙனம் பல்வேறு வகைப்பட்ட அளவின் வேறுபட்டவற்றையும் யாப்பின் வேறுபட்டு வருமென்றான். எனவே ஈரடியானே தாழிசைக் கொச்சகம் வருமெனவும் அடிநிமிர்ந் தொழுகியதன் சிற்றெல்லையாகிய பத்தடியளவும் 1273பாவைப்பாடலும் 1274அம்மனைப்பாடலும் போலுந் தரவு கொச்சகம் வருமெனவும், அவையும் இரண்டடி யின் இழியா வெனவும், எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியது (461) வேறுபட்டு ஏழடியும் ஐந்தடியுமாகித் தரவு வரினும் வருமென வும், எட்டடிப் பாகமாகிய நான்கடியின் உயரா தாழிசையென வும், எல்லாம் ஆண்டே கொள்ளப்படுமாகலின் அவற்றுக்கு அளவை கூறியதிலனென்று கடாவருவதென்னையென மறுக்க. அஃதேல், தாழிசைக் கொச்சகமாகிய பரணிச்செய்யுளும் தரவு கொச்சகமாகிய தொடர்நிலைச் செய்யுளும் முழுவதும் ஒன்றாக நோக்கியக்கால் உயர்ந்த எல்லை கூறானோவெனின்,அஃது அடி1275வரையறையின் 1276ஒரு செய்யுளாக்கியே அளவை கூறினான், அவை கொச்சகமாயினுந் தரவுகொச்சகமெனப் பெயர் 1277பெறுதலா யினமையி னென்பது. அஃதேல் 1278அக நிலைக் கொச்சகத்திற்கும் அவையே அளவாம்பிற வெனின்,அற்றன்று; அம்போ தரங்க மறுபதிற் றடித்து என்றவழி, அளவை முற்கூறிய மயக்கினான் இனிக் கூறும் உறுப்புடைக் கலிப்பாவிற்கெல்லாம் 1279அதனள வெனப்படு மென்று புகுந்தமையின் இதற்குக் கொச்சக வொருபோகின் அளவை கொள்ளப்படாது; 1280பாநிலை வகைத் தென்னாமை யின் இவற்றைத் 1281தொகு நிலையளவின் அடியுடைய வென்பது, தொகுநிலை யளவி னடியில (472) என்புழிச் சொல்லுதும். அஃதேல், பாநிலைவகையே கொச்சகக் கலி யென்றவழிக் கொச்சகவொருபோகோடு ஒப்பது அள வொழித்தே யென்பதும் வரைந்தோதுக வெனின்,ஒருவழி யொப்பனவும் உளவாகலின் அங்ஙனங் கூறினானென்பது. அவை இரண்டடி முதலாகப் பத்தடியளவும் வருவன தரவு கொச்சகமென மேற்காட்டிய செய்யுளுட் காணப்படும். (155) (உறழ்கலியினிலக்கணம் இதுவெனல்) 468. கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்தும் போக்கின் றாக லுறழ்கலிக் கியல்பே. இது, முறையானே உறழ்கலி யுணர்த்துதல் நுதலிற்று, இ-ள்: ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் நின்றது உறழ்கலி என்றவாறு. போக்கின்று எனவே தரவுபெறுதலும் பாட்டிடை மிடைதலும், ஐஞ்சீரடுக்கலும், ஆறு மெய்பெறுதலும், ஒழிந்த சொற்சீரடி பெறுதலும், பா மயங்கி வருதலும், அம்போதரங்கத் திற் கோதிய அளவை பெறுதலுமெல்லாம் வெண்கலிப் பாட்டிற்குப் போல மேனின்ற அதிகாரத்தாற் பெறப்படுவதா யிற்று. போக்கின்றாகல் இயல்பு எனவே இயல்பின்றி விகார வகையாற் சில போக்குடையவுமா மென்றானாம்; அதுவும், பல்பொருட் கேற்பி னல்லது கோடல் (665) என்பதனான் வெள்ளைச்சுரிதகம் ஒழித்து ஆசிரியச்சுரிதகமே கொள்ளப்படும்; என்னை? வெள்ளைக் கொச்சகம் பல வந்தவழி ஒன்றனைச் சுரிதகமென லாகாமையானும், அச்சுரிதகம் இரண்டும், போக்கியல் வகையே வைப்பெனப் படும் (448) எனக் கூறப்பட்ட 1282இலக்கணத்த அல்லவாயினும், எழுசீ ரிறுதி யாசிரியங் கலியென (388) நின்றவழி அப்பாட்டு முடிந்து காட்டி நிற்றலானும், அதுவே கொண்டாஞ் சிறுபான்மை யென்பது. மற்றுத் தரவின்றி வருவனவும் உளவாலெனின், இதற்குத் தரவு முதலாயின உறுப்பு விதந்தோதிய திலனாகலின் அஃது ஆராய்ச்சியின் றென்பது. அற்றன்று; தரவும் போக்கும் உடன் கூறியதனாற் போக்கும் பாட்டிடை மிடைந்தும் என்னும் அதிகாரம் பற்றி ஈண்டுப் போக்கு விலக்கினமையின் அது பொருந்தாது; மற்றென்னை கருதியதெனின்,இதற்கு அதிகாரம் பட நிறீஇய கலிவெண்பாட்டு ஓதிய சூத்திரத்திற் பாட்டினை 1283இடை கூறாது தரவும் போக்கும் உடன் கூறியதனாற் 1284போக்கின் இலக்கணத்தனவும் பெறுமென்றானாம். அதனா னே ஈண்டு விலக்குண்ட போக்குப் போலச் சிறுபான்மை தரவின்றியும் வருமென்பது. இக்கருத்தினா னன்றே, இதனைப் 1285பாநிலை யோடு கூறாது தரவு வகைப்படுங் 1286கொச்சகத்தின் பின்னர் வைப்பானா யிற்றென்பது. இனிப், போக்குடையன தரவின்றி வாரா, அவை ஓரின மென்று ஓதப்பட்டமையினென்பது. மற்று இதற்குப் போக்கின் மையும் இலக்கண மாகலின் அது பற்றியும் பெயர்கொள்ளா மோவெனின்,போக்கின்மை சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரிமையின் 1287அவ்வகை யுரியதோர் இலக்கணம் பற்றிப் பெயர் கூறானென்பது. மற்றிதனையுங் கொச்சக மென்றக்கால் இழுக் கென்னையெனின்,நாடகச் செய்யுட் போல வேறு வேறு துணிபொருளவாகியும் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபா டுடைமை நோக்கியும் இது பொருளதிகாரமாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் வேறுசெய்யு ளென்றா னென்பது. என்னை? மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான எனவும் மரபியலுள் ஓதுகின்றமையினென்பது. 1288அல்லாக்காற் கைக்கிளையுஞ் செவியறிவுறூஉவும் வாயுறையும் புறநிலையு மென்னும் நான்கும் 1289மருட்பா என ஒன்றேயாகியே செல்லு மன்றோவென மறுக்க. அவற்றுக்குச் செய்யுள்: அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம் (கலி. 91) என்னும் பாட்டினுள், தரவும் பாட்டும் உடைத்தாகிய பாட்டுத் தாம் ஐஞ்சீரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வந்து போக்கின்றி நின்று முடிந்தது. என்றார்க்குக், காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல் (கலி. 91) என்பது, வெள்ளைச்சுரிதகமாகாதோவெனின்,ஆகாதன்றே, போக்கியல் வகையே வைப்பெனப் படும் (448) என்ற இலக்கணத்தான் முற்கூறியவற்றையெல்லாந் தொகுத்து இதன்கண் வைத்திலாமையினென்பது; அல்லதூஉம், அவ்வாறு முடிதலேயன்றி இன்னும் ஒரு கொச்சகம் பெய்து சொல்லி உறழ்ந்தவழியும் அஃதேற்பதாக லான் அஃது 1290ஒருதலையாக 1291அமைந்ததெனப்படாது; என்னை? அன்னதே யாயினு மாகமற் றாயிழாய் நின்னகை யுண்க முயங்குவாய் - நின்னெஞ்ச மென்னொடு நின்ற தெனின் என்றாற்போலப் பின்னு 1292மொன்று தலைமகன் உரைத்தற்கு இடம்பட்டு நின்றமையின் அது, போக்கியல் வகைத்தாகிய வைப்பெனப் படாது என்க. இனி, அவ்வாறன்றி ஆசிரியச்சுரிதகம் வந்தவழி அக்கலிப் பாட்டு 1293முடிந்து காட்டுதலின் அதுவும் அடக்கியலன்றா யினும் அதனைச் சிறுபான்மை நேர்ந்தான், இது வழிநூலாகலின் முதனூல்பற்றி யென்பது. நலமிக நந்திய நயவரு தடமென்றோள் (கலி. 113) என்னும் முல்லைக்கலி (113) போக்கிலக்கணமில்லாத ஆசிரியச் சுரிதகம் பெற்று வந்த உறழ்கலியாயிற்று. வாரி நெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த (கலி. 114) என்னும் முல்லைப்பாட்டும், சுணங்கணி வனமுலைச் சுடர்கொண்ட (கலி. 60) என்னும் குறிஞ்சிப்பாட்டும் அது. ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணும் கடை; தெரியிழாய் . . . . . . . பரியானாப் பாடில்கண் பாயல் கொள (கலி. 87) என்பது தரவும் போக்குமின்றி வந்த உறழ்கலி. இவற்றுள் ஐஞ்சீரும் அறுசீரும் வந்தன. ஒழிந்த சொற்சீரடி வந்தன பிறவுங் கண்டு கொள்க. (156) (ஆசிரியப்பாவடியின் உயர்ந்த அளவும் இழிந்த அளவும்) 469. ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை யாயிர மாகு மிழிபுமூன் றடியே. இத்துணையும் பாவுறுப்புக் கூறி, இனி அப்பாவின் உள்ளுறுப்பாகிய அடியளவை கூறுவானெழுந்தான், முறை யானே ஆசிரியப்பாவிற்கு அளவு கூறுகின்றானென்பது. இ-ள்: ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கெல்லை ஆயிரம் அடி; சுருக்கத்திற்கெல்லை மூன்று அடி என்றவாறு. நீல மேனி வாலிழை பாகத் தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.) என்னும் ஆசிரியப்பா மூன்றடியான் வந்தது. மாயோன் மார்பி னாரம் போல என்பது நான்கடியான் வந்தது, வேரல் வேலி வேர்க்கோட் பலவின் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே (குறுந். 18) என்பது, ஐந்தடியான் வந்தது. தாமரை புரையும் காமர் சேவடி ................................................................................. ஏம வைக லெய்தின்றா லுலகே (குறுந். கடவுள்.) என்பது, ஆறடியான் வந்தது. மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பவ்வ முடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே. (நற்றிணை. கடவுள்) என்பது ஏழடியான் வந்தது. பிறவும் அன்ன. ஆயிரம் அடியான் வருவனவும் உளவேற் கண்டுகொள்க. ஆசிரியப் பாட்டி னெல்லை யென்னாது அளவு என்றத னான் அதனியற்றாகிய வஞ்சிப்பாவிற்கும் இவ்வாறே கொள்ளப் படும். இனி, வெண்பா நெறித்தாகிய கலியளவை 1294அதனின் வேறுபடுதலின் அதற்கு வேறு விதந்து 1295கூறுமென்பது. (157) (நெடுவெண்பாட்டின் அடிக்கும் குறுவெண்பாட்டின் அடிக்கும் உரிய அளவு) 470. நெடுவெண் பாட்டே முந்நா லடித்தே குறுவெண் பாட்டி னளவுவெழு சீரே. இது, முறையானே வெண்பாவின் அடியளவு கூறுகின்றது. இ-ள்: வெண்பாவிற்கு இரண்டும் பன்னிரண்டும் இழிபும் ஏற்றமுமாம் என்றவாறு. மற்று இவற்றையும், ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை என்றாற்போலக் கூறாது, குறுவெண்பாட்டும் நெடுவெண் பாட்டு மெனப் பெயர் கொடுத்ததனாற் பயந்ததென்னை யெனின், - குறுமையும் நெடுமையும் அளவியலொடு படுத்துக் கொள்ளப் படுதலின் 1296அளவியல் வெண்பாட்டும் உள வென்றற்கும், அதுவே சிறப்புடையதென்றற்கும் அங்ஙனங் கூறினானென்பது. இனி, அவற்றைத் தத்தம் வகையாற் சுருக்கப் பெருக்கம் உணருங்கால் உய்த்துக்கொண்டுணர்தல் என்பதனான் உணரப்படும். என்னை? நெடுவெண்பாட்டிற்கு உயர்ந்த அளவை பன்னிரண் டடியெனவே, அதன் பாகமாய ஆறு அளவியல் வெண்பாவிற்கு உயர்ந்த எல்லையெனவும், நெடுவெண்பாட்டிற்கு இழிந்தவெல்லை ஏழடியெனவும், அளவியல் வெண்பாவிற்கு இழிந்தவெல்லை நான்கடியெனவுங் கொள்ளவைத்தமையி னென்பது. இங்ஙனம் அளவியல் வெண்பாச் சிறப்புடைத்தாத னோக்கிப் 1297பதினெண்கீழ்க் கணக்கினுள்ளும் 1298முத்தொள்ளா யிரத்துள்ளும் ஆறடியி னேறாமற் செய்யுள் செய்தார் பிற சான்றோருமெனக் கொள்க. இக்கருத்தினானே, அம்மை தானே யடிநிமிர் பின்று (தொ. செ. 235) 1299எனக் 1300கூறி நெடுவெண்பாட்டு நேர்ந்திலன் ஆசிரியன் 1301அதற் கென்பது. அஃதேல், அவ்வளவியல் வெண்பாவுள்ளும் ஆறடி யானும் ஐந்தடியானும் வருதல் சிறுவரவினவாலெனின்,அங்ஙனமே 1302செப்பிக்கூறும் மரபிற்றாகிய வெண்பாவினைப் பரந்து படக்கூறல் இயல்பன்றாகலின் 1303அவற்றுள்ளுஞ் சுருங்கிய நான்கடியே சிறந்ததென்று அதனையே பற்றிப் பெரும்பான்மை யுஞ் செய்யுள் செய்தாராவரென்பது. அஃதேல், குறளடி வெண்பா அதனினுஞ் சிறந்ததாம் பிறவெனின்,-அற்றன்று; செப்பிக்கூறுங் கால் 1304தெரியக்கூறல் வேண்டுமாக லின் அளவியல் வெண்பாவே பயின்ற வென்பது. நெடுவெண் பாட்டுப் போலச் சிறப்பின்றாம் குறுவெண்பாட்டுமெனின், சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல் என்பதனான், அவ்விரண்டினுள்ளும் அதனைப் பிற்கூறியது அச்சிறப்பு நோக்கியன்றோவென்பது. உதாரணம்: அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள். 259) எனவும், அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் - சிறந்தார் செறிந்தமை யாராய்ந்து கொண்டு (யா. வி. ப. 325.) எனவும், இவை குறுவெண்பாட்டு. துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் சகடக்கால் போல வரும் (நாலடி. 1. 2) எனவும், நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து முற்பக லெல்லாங் குழம்பாகிப் - பிற்பகற் றுப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் றப்பியா ரட்ட களத்து (களவழி. 1) எனவும், நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த விடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைத் தூறெறிந் தற்றே யெரிமணிப்பூ ணேந்தெழின் மார்பத் தியறிண்டேர்ச் செம்பியன்றெவ் வேந்தரை யட்ட களத்து. (களவழி. 6) எனவும், இவை அளவியல் வெண்பாட்டு. பன்மாடக் கூடன் மதுரை நெடுந்தெருவி லென்னோடு நின்றா 1305ரிருவ ரவருள்ளும் பொன்னோடை நன்றென்றா ணல்லளே - பொன்னோடைக் கியானைநன் றென்றாளு மந்நிலையள் - யானை யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் றிருத்தார்நன் றென்றேன் றியேன் (யா. வி. ப. 237) என்பதும் அது. நெடுவெண்பாட்டு வந்தவழிக் கண்டுகொள்க. (158) (அங்கதப்பாட்டடிக்குரிய அளவு) 471. அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும். அங்கதப் பாட்டிற்கும் வெண்பாவே உறுப்பாகலான் ஈண்டு வைத்தான். இதுவும் மேற்கூறிய 1306இரண்டெல்லையும் பெறுமென்றவாறு. இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்ற - மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள என்பது, நான்கடியான் வந்த அங்கதம். பிறவும் அன்ன. இது, 1307மந்திரத்தின் வேறுபட்டு அடிவரைத்தாயினமை யின் இதுவும் வெண்பாட்டுப் போன்று அமைந்து வரல்வேண்டு மென்றற்கும், இது 1308வேறு பாட்டெனப்படாமையின் அடிவரை யின்றுகொலென்னும் ஐயந் தீர்த்தற்கும் இதற்கே ஈண்டு அளவை கூறி, அதனோடும், கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுள் (430) என்று ஓதப்பட்ட கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளா யிரத்துட் போலப் பலவாயினும் அவற்றுக்கு அளவையும் வெண்பாவின் அளவேயென்று அடக்கினானென்பது. 1309நூற்பாவாக அடி வரைப்படுவன உளவாயி னவற்றுக்கும் இஃதொக்கு மென்பது மேற் கூறுதும். (159) (கலிவெண்பாட்டு முதலிய ஐந்து செய்யுளும் அடியின் பெருமைக்கு அளவு கூறப்படா எனல்) 472. கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை யென்றிவை தொகுநிலை யளவி னடியில வென்ப. இஃது, எய்தாததெய்துவித்தது, அளவை கூறாதவற்றுக்கு அளவை கூறினமையின். இ-ள்: இவை ஐந்தும் பெருமைக்கெல்லை இத்துணை யெனத் தொகுத்துக் கூறுந் தன்மையுடைய அளவான் வரும் அடியையுடைய அல்ல என்றவாறு. 1310கலிவெண்பாட்டென்பது 1311ஒரு பொருள் நுதலுத லான் திரிபின்றி நடப்பதன்றிப் பன்னிரண்டடியின் இகந்து வந்து, தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து வாராது ஒன்றேயாகி வருவதெனக் கொள்க. கைக்கிளைச் செய்யுளென்பது, கைக்கிளைப் பொருட்கு உரித்தாய்வரும் மருட்பா வென்றவாறு. அஃதேல், ஈண்டோதிய கலிவெண்பாட்டும் ஒழிந்த கைக்கிளைப்பொருள்மேல் வாராவோவெனின்,வருமென்பது, நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் (53) என்புழிக் கொண்டாமென்பது. எனவே, 1312வெண்பாட்டல்லா தன கலிப்பாட்டுக்கள் கைக்கிளைப்பொருள்மேல் வந்தவழியும் அவற்றுக்கு அளவை மேற்கூறியவாற்றானே அடங்குமென்பதா யிற்று. செவியறி, வாயுறை, 1313புறநிலையென்பன மேல், கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ (422) எனவே, ஒழிந்த பாவான் வருமெனப்பட்ட பொருண்மேல் வருஞ் செய்யுள். ஆண்டோதியவற்றிற்கு ஈண்டு அளவை கூறானோ வெனின்,அஃது 1314ஆசிரியமும் வெண்பாவுமாகி வேறு வருதலின் முற்கூறிய வகையானே அடங்குமென்பது. மற்றுக் 1315கொச்சக வொருபோகாகியுந் தொடர்நிலைச் செய்யுட்கண் வருமால் அவையடக்கெனின், அஃது, யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைய (461) கொச்சகவொருபோகென்றொழிக. தொகுநிலை யளவி னடியில (472) என்பது, விரவுறுப்புடைய வெண்கலியுங் கொச்சகக்கலியும் உறழ்கலியு மென்றிவற்றிற்கு மேல் அம்போதரங்கம் பெற்ற அளவினை முதலாக நாட்டிக்கொண்ட தொகுநிலையள வெனப்பட்ட அடிமேல் அடியிகந் தோடா வென்றவாறு. தொகு நிலையள வென்பது, தலையளவு இடை யளவு கடையள வெனப்பட்ட அம்போதரங்கம் மூன்றற்கும் பெருகிய வெல்லை யாகிய அளவின் விரியாது அவற்றுக்குச் சுருங்கிய வெல்லை யாகிய அறுபதும் முப்பதும் பதினைந்து மெனத் தொக்குநிற்கும் அளவினவாகிய அடிமேலேறா வென்றவாறு. தொகுமள வென்னாது தொகுதிநிலையென்றான், மூன்று தொகையினும் முப்பஃதாகிய இடை நிலைத்தொகையே கோடற்கென்பது. இன்னென்னும் ஐந்தாமுருபு நீக்கத்தின்கண் வந்தமையின் முப்பஃதடியின் இகந்துவரும் அடி இலவென்ற வாறு. இனி, அம்முப்பஃதாகிய தொகுநிலை இவ்வைந்தற்கும் நீண்ட வடிக்கெல்லையாதலின், தொகுநிலை யென்னாது அளவு என்றானென்பது, 1316நீண்டதனை அளவுடைத் தென்ப வாகலின். மற்றிங்ஙனம் இவை முப்பஃதடியின்மேல் வாரா வென்று பெருக்கத்திற்கெல்லை கூறவே, சுருக்கத்திற்கெல்லை வரையறையில வென்றானாம்; ஆகவே, இரண்டடியானும் வருமென்றானாம் பிறவெனின், அற்றன்று; ஒரு பொருள் நுதலி வருங் கலிவெண் பாட்டாயிற் பன்னீரடி இகவாதென்பது, திரிபின்றி வருவது கலிவெண் பாட்டு (465) என்றவழிப் போதுமாகலின், ஈண்டு ஓதிய கலிவெண்பாட்டுப் பதின் மூன்றடியிற் சுருங்காதென்பது பெற்றாம். இது கைக் கிளைப் பொருள் மேல் வந்ததாயினும் ஒக்கும். 1317ஒழிந்த நான்கும் மருட் பாவாதலான், வெண்பா வாகி யாசிரிய வியலான் முடியவும்பெறும் என்றானாகலானும், வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் (473) என வருகின்ற சூத்திரத்தானும், அவ்விரண்டு பாவின் கூட்டம் இரண்டடி யான் வாரா வாகலானும், அவையும் 1318நான்கடியிற் சுருங்காவென்பது உய்த்துக்கொண் டுணரவைத்தானென்பது; என்னை? கைக்கிளைப் படலத்துள், போற்றி வெண்பா வாகி மற்றத னிறுதி 1319யைஞ்சீ ராசிரி யம்மே என்றாராகலின். மற்று மூன்றடியிற் சுருங்காது ஆசிரியமாத லானும் இரண்டடியிற் சுருங்காது வெண்பாவாதலானும் இவ் வைந்தடியிற் சுருங்காவென்று கொள்க. இது, பண்புற முடியும் பாவின (473) என மேற்சொல்லும். அவற்றுக்குச் செய்யுள்: நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு 5 மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ 10 விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலேமாயிற் 15 றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்லென் னுயிர் (கலி. 24) என்பது, பதினேழடியான் வந்த கலிவெண்பாட்டு. சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நா 5 னன்னையும் யானு மிகுந்தேமா வில்லிரே யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை யடர்பொற் சிரத்தால் வாக்கிச் சுடரிழா யுண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானுந் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை 10 வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா வன்னை யலறிப் படர்தரத் தன்னையா னுண்ணுநீர் விக்கினா ளென்றேனா வன்னையுத் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் 15 கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன். (கலி. 51) என்பது, ஒரு பொருணுதலிப் பதினாறடியான் வந்தது. திருந்திழாய் கேளாய்தம் மூர்க்கெல்லாஞ் சாலும் பெருநகை யல்க ணிகழ்ந்த தொருநிலையே மன்பதை யெல்லா மடிந்த விருங்கங்கு லந்துகிற் போர்வை யணிபெறத் தைஇதம் 5 மின்சாயன் மார்பன் குறிநின்றேன் யானாகத் தீரத் தறைந்த தலையுந்தன் கம்பலுங் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநஞ் சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானைத் தோழிநீ போற்றுதி யென்றி யவனாங்கே 10 பாராக் குறழாப் பணியாப் பொழுதன்றி யாரிவ ணின்றீ ரெனக்கூறிப் பையென வைகாண் முதுபகட்டிற் பக்கத்திற் போகாது தையா றம்பலந் தின்றியோ வென்றுதன் பக்கழித்துக் கொண்டீ யெனத்தரலும் யாதொன்றும் 15 வாய்வாளே னிற்பக் கடிநகன்று கைமாறிக் கைப்படுக்கப் பட்டாய் சிறுமிநீ மற்றியா னேனைப் பிசாசரு ளென்னை நலிநரி னிவ்வூர்ப் பலிநீ பெறாஅமற் கொள்வே னெனப் பலவுந் தாங்காது வாய்பாடி நிற்ப 20 முதுபார்ப்பா னஞ்சின னாத லறிந்தியா னெஞ்சா தொருகை மணற்கொண்டு மேற்றூவக் கண்டே கடிநரற்றிப் பூச றொடங்கின னாங்கே யொடுங்கா வயத்திற் கொடுங்கேழ்க் கடுங்க ணிரும்புலி கொண்மார் நிறுத்த வலையுளோ 25 ரேதில் குறுநரி பட்டற்றாற் காதலன் காட்சி யழுங்க நம்மூர்க் கெலாஅ மாகுல மாகி விளைந்ததை யென்றுந்தன் வாழ்க்கை யதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து. (கலி. 65) என்பது, இருபத்தொன்பதடியான் வந்த கலிவெண்பாட்டு. ஒழிந்தனவும் அன்ன. நூற்றைம்பது கலியுள்ளுங் கைக்கிளை பற்றி இவ்வாறு வருங் கலிவெண்பாட்டுக் காணாமாயினமையிற் காட்டாமாயினாம். இலக்கண முண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கண்டுகொள்க. 1320கனவினிற் காண்கொடா கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலக்கு நாணு- மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று (முத்தொள். 59) இது, கைக்கிளை பற்றி வந்த கலிவெண் பாட்டென்னா மோ வெனின், என்னாமன்றே, 1321அது பாடாண் டிணைப் புறப்பொரு ளாக லானும் ஒருபொருணுதலுதல் ஐந்திணைக் கண்ணதேயாக லானும் பன்னிரண் டடியின் இகந்ததன்றாக லானும் வெண்பாவே யாமென்பது. 1322இப் பொருட் பகுதி யுணராதாரும் இது மரபென் பதறியாதாரும், நூற்றைம்பது கலியுள்ளும் 1323இவை கோப்புண்டன வென்பது நினையாதாரும் இவற்றுள் ஒரு பொருணுதலியன ஒழிந்தன வெல்லாம் வெண்பாவென்று அடிவரை கூறாதொழிப. அங்ஙனம் மரபழியக் கூறின் ஒரு சாத்தனை நாட்டி அவனைக் காமுற்று 1324இவன் இன்னவாறா யினாளென ஆசிரியத்தானும் வஞ்சியானும் பொருள் வேற்றுமை யுடைய ஒருசார்க் கொச்சக மல்லாத கலிப்பாவி னானுஞ் செய்யுள் செய்தலும், இனி அதனி லையாகிய ஆண்பாற் கைக்கிளை ஆசிரியத்தானும் வஞ்சி யானும் வருதலும் பிறவும் 1325இன்னோ ரன்ன வெல்லாம் புலனெறி வழக்கினுட் காட்டல் வேண்டுமென மறுக்க. என்றார்க்கு வரைவு கடாதற் கண்ணுந் தலைவனை அன்பிலனாகச் சொல்லுவன பாடாண்டிணைக் கைக்கிளையாகாவோ வெனின், - அலைசுட்டி யொருவர் பெயர் கொள்ளாமையின் ஆகாவென்பது. அஃதேல், விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறை (கலி. 45) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள், கால்பொர நுடங்கல கறங்கிசை யருவிநின் மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை எனவும், நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் (கலி. 99) என்னும் மருதப் பாட்டினுள், அறனிழ லெனக்கொண்டா யாய்புடை யக்குடைப் புறநிழற்கீழ்ப் பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை எனவும் இவை சுட்டியொருவர் பெயர் கொள்ளாக் கைக்கிளை வந்தனவா லெனின், - அற்றன்று; தலைமக னன்பின்மையே மெய்யாயினன்றே அன்னதாவது; இவை அன்னஅன்றி வரைவு கடாவலும் ஊடலுங் காரண மாக அன்பிலனென்று இல்லது சொல்லினமையின் அவை 1326ஒருதலையன் பாகா வென்பது. மற்று, என்னை, புற்கை யுண்டும் பொருந்தோ ளன்னே . . . . . . . . . . . . . . . உமணர் வெரூஉந் துறையன் னன்னனே (புறம். 84) v‹D« òweh}‰W¥ gh£L« bg©gh‰ if¡»is ahjÈ‹ mjid MáÇa¤jh‹ thuhbj‹w bj‹id baÅ‹.- ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின (430 என்புழிச், சிறுபான்மை தலைவி கூற்றாகியே வருவன அமையு மென்று போதந்தாமாகலின் அதுவே பெருவிதியாகாதென்பது. இனிக் கைக்கிளை வருமாறு: திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு மிருநிலஞ் சேவடியுந் தோயு- மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கு மாகு மற்றிவ ளகலிடத் தணங்கே (பு. வெ. 11 3) இது, நெஞ்சிற்கு உரைத்தது 1327(எனத்) தலைமகன் சொல்லினது, 1328நற்காமமன்றா மாகலின். 1329இக்கருத்தினானே, இதனைப் புறத்திணையுட் கொண்டாருங் 1330கைக்கிளைப் படலத்து, நெஞ்சிற் குரைத்தலுங் கேட்போ ரின்றி யந்தர மருங்கிற் கூறலு மல்லது சொல்லலுங் கேட்டலு மில்லை யாக வகத்திணை மருங்கி னைவகை யானு 1331மிகத்த லென்ப விவ்வயி னான என்றாரெனக் கொள்க. 1332பாடாண் கைக்கிளைக்கும் ஈண்டே அளவு கூறுக வெனின், கலி வெண்பாட்டினைக் கைக்கிளை யென்னாமா யினன்றே அது கடாவாவது. மருட்பாவிற்குக் கைக்கிளைப்பகுதி 1333வரைந்தோதல் வேண்டுவதின்மையின் அதற்கும் 1334இதுவே அளவாமென்பது. 1335ஒழிந்த மருட்பா மூன்றற்கும் உதாரணம் மேற்காட்டுதும். இக்காலத்தார் ஏறிய 1336மடற்றிற (51) மென் னும் பெருந்திணைப் பொருண்மேலுங் காமஞ்சாலா விளமை யோளை ஒழிந்த மகளிரொடுங் கூட்டி யுரைக்குங் 1337கைக் கிளைப்பொருண்மேலுங் கலிவெண்பாட் டெனப் பெயர் கொடுத்துச் செய்யுள் செய்பவால், அவை அவ்வாறு செய்தற்கும் அவை முப்பதிற்றடியின் இகந்து 1338எத்துணையடி யாயினும் ஏற்குமென்றற்கும் என்னை ஓத்தெனின், அவ்வாறு வருமென் பது இந்நூலுட் பெற்றிலமாயினும் இரு பதின்சீர்க் கழிநெடிலடி யானும் இதுபொழுது செய்யுள் செய்யுமாறு போலக் காட்ட லான் அமையும். அவை புலனெறி வழக்கிற்குச் சிறந்தில வாகலிற் சிறுவரவின வென்றொழிக. (160) (புறனிலை வாழ்த்து முதலிய மூன்று செய்யுளும் மருட்பாவால் வருமெனல்) 473. புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின் வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின வென்ப. இது, கைக்கிளை மருட்பாவல்லாத மருட்பாவும் அதுவே போல வெண்பா முதலாக ஆசிரியம் பின் வந்து முடியுமென்று ஈண்டு அவற்றுக்கு இடம்பட்டது கண்டு கூறியவாறு. என்னை? மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே (367) என்றவழி, ஆசிரியம் முன்னர் நிறீஇப் பின்னர் வெண்பாவினைக் கூறி, வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின (473) என்றமையின், இங்ஙனம் எண்ணப்பட்ட மூன்று பொருட்கும் இலக்கணம் 1339முன்னர்ப் பாவிரியோத்தினுட் கூறினவற்றுக்கு இன்னவாறு செய்யுள் செய்க வென்றற்கு இது கூறினா னென்பது. இ-ள்: இம்மூன்றும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வரும் என்றவாறு. திறநிலை மூன்று என்றான், முற்கூறியனவெல்லாம் அகத்திணை யாகலின் இவை புறத்திணையுளல்லது வாரா வென்றற் கென்பது. திண்ணிதிற் றெரியினென்பது இவை மூன்றுங் கைக்கிளை மருட்பாப் போல் ஆண்பாற் கைக்கிளை யும் பெண்பாற் கைக்கிளையுமாகி அகனும் புறனும் பற்றி வாராது ஒருதலையாகவே புறத்திணையென்று தெரியப் படுவன வென்றவாறு. இதன் பயம்: கைக்கிளை மருட்பாப் புறத்திணை யானும் வருமென்பது. இயல் என இருகாற் சொல்லியவத னான் இயற்சீர் வெள்ளடியான் வெண்பா வருதல் சிறந்ததென வும், அதற்கேற்ற வகையான் ஆசிரியம் இயற்சீரான் வருதல் சிறந்த தெனவுங் கொள்க. பண்புற முடிதல் என்பது மேற் சிறுமைக் கெல்லை கூறாமையின் வெண்பாவிற் கிழிபாகிய எழுசீரன்றி எண்சீரான்வரினும் ஆசிரியத்திற் கிழிபாகிய மூன்றடி வரினும் எருத்தடி குட்டமாகி வரினும் அங்ஙனம் மூன்றடி வந்தவழி வெண்பா நான்கு முதல் பன்னிரண்டளவும் 1340உயரினும் அவையெல்லாம் பண்பெனப் படுவன வெனவும், அல்லன சிறப்பிலவெனவுஞ் சொல்லினவாறு. இக்கருத்தினான் வெண் பாவடி 1341வரையிலவாயினும் ஆசிரியவடி மூன்றிகவா வென்பது 1342கைக்கிளைப்படலத்துள்ளுஞ் சொல்லப்பட்டது; என்னை? முச்சீ ரெருத்திற் றாகிமுட் டின்றி யெச்சீ ரானு மேகாரத் திறுமே (கடியநன்னியார் - யா. வி. ப. 204.) என்றாராகலின். பாவினவென்றதனான் இவ்விரு பகுதியுந் 1343தத்தம் பாக்கள் வேறு வேறு பெற நிகழுமென்பது. எனவே, இயற்சீர் வெள்ளடி யாசிரியந் தொடுக்குங்கால், எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறி (குறுந். 12) எனப் பாவினை ஒன்றாகத் தொடுத்தாற்போலத் தொடுத்தல் 1344ஈண்டு அமையாதென்றானாம். இவை மூன்றற்கும் உதாரணங் காட்டுங்கால் மேற்காட்டாது நின்ற பாடாண்டிணைக் கைக் கிளை மருட்பாவிற்கு உதாரணங் காட்டியே காட்டப்படும். (161) (பரிபாட்டின் அடிக்கு உயர்பும் இழிவும் இவையெனல்) 474. 1345பரிபாட் டெல்லை நாலீ ரைம்ப துயர்படி யாக வையைந் தாகு மிழிபடிக் கெல்லை. இது, பரிபாட்டின்கண் வரும் வெண்பாவிற்கு அளவு கூறு கின்றது. இ-ள்: பரிபாடற்கு உறுப்பாகிய வெண்பாவுக்கு நானூறடி பெருக்கத்திற் கெல்லையாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற் கெல்லையாகவும் பெறும் என்றவாறு. அவை பரிபாடலுட் கண்டுகொள்க. (162) (அளவியலின்வகை மேற் கூறியனவே எனல்) 475. அளவியல் வகையே யனைவகைப் படுமே. இது, மேற்கூறிய அளவினை வரையறுக்கின்றது. இ-ள்: இத்துணையும் அளவியலான் 1346ஒரு கூறே சொல்லப்பட்டது என்றவாறு. 1347எழுநிலத்தெழுந்த செய்யுள்களுள் (476) அடிவரை யறை யுடையனவற்றுக்குக் கூறினான் ஆண்டில்லாதன அடி வரையின்றி வரும் இலக்கணத்த வென்பதூஉம் இனிக் கூறுவ லென்பதூஉம் இதனது பயம். (163) (அடி வரையறையில்லாத செய்யுள் ஆறெனல்) 476. எழுநிலத் தெழுந்த செய்யுட் டெரியி னடிவரை யில்லன வாறென மொழிப. மேலைச் சூத்திரத்தான் அளவியல் வகையை வரையறைப் படுத்தான்; அடிவரையறையின்மையும் அளவியலென்பதுங் 1348குறிப்புக் கருத இலக்கணமாகிய 1349செய்யுள் கூறினான் இச்சூத்திரத் தானென்பது. இ-ள்: அகமும் புறமுமாகிய எழுநிலத்துந் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் 1350இலக்கணத் தளவு ஆறாம் என்றவாறு. இதனானே ஆறென்பதூஉம் ஓரளவியலாயிற்று. (164) (அடி வரையறையில்லாத செய்யுட்கள் ஆறும் இவையெனல்) 477. அவைதாம், நூலி னான வுரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான வேது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. இது மேற்கூறி நிறுத்த ஆறற்கும் பெயரும் முறையு முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: அடிவரையில்லன ஆறெனப்பட்டவை தாம்1 நூலின் கண்ணவும்2 உரையின் கண்ணவும்3 நொடிதல் மாத்திரை யாகிய பிசியின் கண்ணவும்4 ஒரு மொழிக்கேதுவாகி வரும் முதுமொழிக் கண்ணவும்5 மறைத்துச்சொல்லுஞ் சொல்லாற் கிளந்த மந்திரத் தின் கண்ணவுஞ்6 சொல்லுகின்ற பொருளை இடைகரந்து சொல்லுங் குறிப்பின்கண்ணவுமென அறுவகைப்படும் என்றவாறு. அவற்றுக்கிலக்கணம் போக்கிச் 1351சொல்லும். நூலின் கண்ணவு 1352மென்றது சூத்திரச் செய்யுளை நோக்கிக் கூறியவாறு, 1353அதனுள்ளும் 1354அடிவரையுடைய ஆசிரியம் போல் அளவைபெற்று மேலே அடங்கு மென்பது. இனி அச் சூத்திரப் பொருளும் உரையின் கண்ணதாகி வருவதூஉம் ஒரு செய்யுளாம். அதனது விகற்பம் முன்னர்க் கூறுதும். 1நொடியொடுபுணர்ந்த பிசியும், 2ஏது நுதலிய முதுமொழி யும், 3மறைமொழி கிளந்த மந்திரமுங், 4கூற்றிடைவைத்த குறிப்புமென நான்கும் வழக்குமொழியாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் அவற்றுட் செய்யு ளையே கோடற்கு அவற்றுக்கு அளவில வென்றானென்பது. இவை இத்துணையெனவே மேலைச்சூத்திரமும் அளவியலே கூறியவாறாயிற்று. இனி, அவை படும் பகுதி யாவையுங் கூறுகின்றான், நொடியொடு புணர்ந்த வென்ற மிகையான் இதுவன்றி இதுபோல்வது பண்ணத்தி யென்பதும் ஒன்று உண்டென்பது கொள்க. அது முன்னர்ச்(492) சொல்லுதும். (165) (நூலாவது இஃதெனல்) 478. அவற்றுள், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலு முடிவு மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி யுண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே. இது, நூலினது பொதுவிலக்கண முணர்த்துதல் நுதலிற்று இ-ள்: நூலென்று 1355சொல்லப்படுவது முன்னும் பின்னும் மாறுபடாது தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி அடங்கி நின்ற பொருள் விரித்துச் சொல்லப்பட்டுப் பருப்பொருட்டா காது நுண்பொருட்டாகப் பொருள் விளக்கல். அதற்கிலக் கணம் அது என்றவாறு. இதன் அகலம் 1356உரையிற் கொள்க. (166) (நூல் நான்கு பகுதிப்படும் எனல்) 479. அதுவே தானு மீரிரு வகைத்தே. அதன் வகை உணர்த்துகின்றது. இ-ள்: அந்நூற் பகுதி நான்குவகையாம் என்றவாறு. அவை முன்னர்ச் சொல்லுதும். இதனது பயம்: மேல் தொகையி னும் வகையினும் (478) என்றதனானே, தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு (652) என்னும் நால் வகை யாப்பிற்குந், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டுதல் ஒக்குமென 1357அவையிரண்டும் நான்காதலுமுடைய வென்பது. அவை எழுத்து முப்பத்துமூன்றெனத் தொகுத்தவழிக் குறிலும் நெடிலும் மெய்ம் மூவினமுஞ் சார்ந்துவரும் மூன்றுமென வகுத்தலும், இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறு (தொ. எழு. 103) என வகுத்தலு மென்றாற் போல்வன. உயர்திணை அஃறிணை யெனத் தொகுத்து ஐம்பாலென வகுத்தலும் அது. 1358ஒழிந்த மூவகை நூலிற்கும் இவ்வாறே ஒருவழித் தொகுத்தலும் வகுத்த லுங் கொள்க. (167) (நூலின் பகுதி நான்கும் இவை எனல்) 480. ஒருபொரு ணுதலிய சூத்திரத் தானு மினமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானு மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென் றாங்கனை மரபி னியலு மென்ப. இஃது, அந்நான்கனுக்கும் பெயரும் முறையு முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நூலுள் ஒருபொருளையே நுதலிவருவது சூத்திர மெனவும், இனமாகிய பொருளினையே தொகுப்பது ஓத்தென வும், பலபொருட்கும் பொதுவாகிய இலக்கணங் கூறுவது படலமெனவும், மூன்றுறுப்பினையு முடையது பிண்டமென வுங் கூறிய மரபினான் இயலும் நூல் என்றவாறு. (168) (சூத்திரமாவது இஃதெனல்) 481. அவற்றுட், சூத்திரந் தானே யாடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே. இது, முறையானே சூத்திர இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேல் ஓதியவற்றுள் ஒருபொருள்நுதலிய எனப் பட்ட சூத்திரம், பொருள் நுதலுங்கால் ஆடி சிறிதாயினும் அது அகன்றுபட்ட பொருளையும் அறிவித்தல் போலத் 1359தேர்தல் வேண்டாமை அகன்ற பொருள் அடங்குமாற்றான் அச் செய்யு ளுள் தோன்றச் செய்து முடிக்கப்படுவது என்றவாறு. (169) (ஓத்தாவது இஃதெனல்) 482. நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை யொருவழி வைப்ப தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். இஃது ஓத்திலக்கண முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேல், இனமொழி கிளந்த ஓத்து என்றான். அங்ஙனம் இனமொழி கிளக்குங்காற் 1360சிதர்ந்து கிடப்பப் பல ஓத்தாகச் செய்யாது நேரினமணியை நிரலே வைத்தாற்போல ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தாவது என்றவாறு. 1361நேரினமணியெனவே, ஒருசாதியாயினுந் தம்மின் ஒத்தனவே கூறல்வேண்டு மென்பதாம். வேற்றுமையோத்தும் வேற்றுமை மயங்கிய லும் விளிமரபும் என மூன்றன் பொருளும் வேற்றுமையென ஓரின மென்று ஓரோத்தாக வையாது 1362வேறு வேறு வைக்கப்படுமென்பது. உயர் மொழிப் புலவரென்பது, அங்ஙனம் நூல்செய்தல் உயர்ந்தோர் கடனென்ற வாறு. (170) (படலம் இதுவெனல்) 483. ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் 1363பொதுமொழி தொடரி னதுபடல மாகும். இது, மேல் பொதுமொழி கிளந்த படலம் எனப்பட்ட தற்கு இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒரு நெறிய அன்றிப் பல்வேறு வகைப்பட்ட பொரு ளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக்கணங்கூற நுதலின், அவற்றுக்குப் பொதுவாகி வருவது படலம் என்றவாறு. பொதுமொழி கிளந்த படலம்(480) என்றவழி, ஒருநெறிப் பொருட்குப் பொதுவாகப்பட்டதனை விலக்கி, ஈண்டு விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவதே படல மென்றா னென்பது. அவை அதிகாரங்களாமெனக் கொள்க. (171) (பிண்டம் இதுவெனல்) 484. 1364மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயிற் றோன்றுமொழிப் புலவ ரது பிண்ட மென்ப. இது பிண்டங் கூறுகின்றது. வாளாதே மூன்றுறுப்படக் கிய பிண்டம்என்றான் மேல், ஈண்டுச் சூத்திரமும் ஓத்தும் படலமுங் கூறிய அதிகாரத்தானே அம் மூன்றனையும் அடக்கிநிற்பது பிண்டமென்கின்றா னென்பது. இ-ள்: அம்மூன்று உறுப்பினையும் அடக்கி வருவது பிண்டம் என்றவாறு. அம்மூன்றனையும் உறுப்பெனவே, பிண்டமென்பன தாம் 1365உறுப்பின வென்பது பெற்றாம். தொல்காப்பிய மென்பது பிண் டம்; அதனுள், எழுத்ததிகாரஞ் சொல்லதிகாரம் பொருளதி காரமென்பன படலம் எனப்படும்; 1366அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும் 1367ஒழிந்த இருகூறு மெனப்படும். தோன்றுமொழிப் புலவர்அது பிண்ட மென்ப என்றத னாற் பிண்டத்தினையும் அடக்கிநிற்பது வேறு பிண்ட முள தென்பது. அது முதனூலாகிய அகத்தியமேபோலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழென்னு மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். (172) (உரைவகை நான்காம் எனல்) 485. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென் றுரைவகை நடையே நான்கென மொழிப. இஃது, உரையாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உரைப்பகுதி வழக்கு இந்நான்காகு மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. பாட்டிடைவைத்த குறிப்பினானு மென்பது, ஒரு பாட்டு இடை யிடைகொண்டு நிற்குங் 1368குறிப்பினான் வருவன வெனப் படும்; என்னை? பாட்டு வருவது சிறுபான்மையாகலின். அவை தகடூர்யாத்திரை போல்வன. மற்றுப், பிறபாடை விரவியும் வருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின எல்லாம் பாட்டிடைவைத்த குறிப்பு என ஈண்டடங்கும், பிறபாடைக்காயின், ஈண்டு ஆராய்ச்சியின்றென்பது. 1369பாவின் றெழுந்த கிளவி யானும் என்பது, பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப்படாவோ வெனின், படா. பாட்டும் உரையும் நூலுமென (391) வேறோதினமையின். 1370அல்லதூஉம், சூத்திரத்தாற் சொல்லாத பொருளினை உரை யாற் சொல்லித் தொடர்பு படுப்பது பாட்டிடைவைத்த குறிப்பாவது. இஃது அன்னதன்று, வேறொருவன் சூத்திரத்திற் கூறிய பொருளையே மற்றொருவன் கூறுகின்றானாதலா னென்பது. ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே பொருளெழுதின் அஃதொக்கும். அவை பாரதம், பருப்பதம் முதலாயின. பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் என்பது, 1371ஒருபொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்வன. அவை 1372ஓர் யானையுங் குரீஇயுந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்ன வாறு செய்தன வென்று அவற்றுக் கியையாப் பொருள்படத் தொடர் நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்றுமுறையான் வருகின்றன. பொருளொடுபுணர்ந்த நகைமொழியானுமென்பது, பொய் யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கேதுவாகுந் தொடர்நிலை. அதுவும் உரையெனப்படும். அவையாவன சிறுகுரீகியுரையும், தந்திர வாக்கியமும் போல்வனவெனக் கொள்க. இவற்றுட் சொல்லப்படும் பொருள் பொய்யெனப் படாது. 1373உலகியலாகி நகை தோற்றுமென்பது. இவ்வகையான் உரை நான்கெனப்படு மென்றவாறு. உரைநடை யென்னாது வகையென்றதனான் இவ்வுரைப்பகுதி 1374பிறிதும் ஒன்றுண்டு. அது மரபியலுட் பகுத்துச் சொல்லுதும். (173) (அந்நான்கும் இரண்டாம் எனல்) 486. அதுவே தானு மோரிரு வகைத்தே. இஃது அவற்றின் தொகை கூறுகின்றது. இ-ள்: அந்நான்கனுள் முதலான இரண்டும் ஒன்றாகவும், ஏனைய இரண்டும் ஒன்றாகவுந் தொகுக்கப்படும், அவ்வாற்றாற் பயன் கொள்ளுங்கால் என்றவாறு. அவையாவன கூறுகின்றான். (174) (உரைப்பகுதி இரண்டனுள் ஒரு பகுதி இவர்க்குரித்து; ஒருபகுதி இவர்க்குரித்து எனல்) 487. ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே யொன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. இஃது அவற்றது இயல்புணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இதுவும், 1375மேனின்ற அதிகாரத்தான் இறுதி நின்ற இரண்டன் தொகுதியாகிய ஒன்று செவிலிக்கே உரித்து; ஒழிந்த இரண்டானுமாகிய ஒன்று வரைவின்றி எல்லார்க்கும் உரித்து எனவுங் கூறியவாறு. தலைமகளை வற்புறுத்துஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரிய ரென்பது இதன்கருத்து. இக்கருத்தே பற்றிப் பிற சான்றோருஞ், செம்முது செவிலியர் பொய்ந்நொடி பகர என்றாரென்பது. பிறவும் அன்ன. மற்றும் என்றதனான் 1376அவையன்றி வருகின்ற பிசியுஞ் செவிலியர்க்கு உரித்தென்பது கொள்க. இனி, பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின் றெழுந்த கிளவியும் (485) யாருக்கும் வரைவின்றி வருமாறு அவ்வச்செய்யுளுட் காணப்படும். (175) (பிசி இரண்டு வகைப்படும் எனல்) 488. ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந் தோன்றுவது கிளந்த துணிவி னானு மென்றிரு வகைத்தே பிசிவகை நிலையே. இது, முறையானே பிசி இரண்டெனப்படு மென்கின்றது இ-ள்: ஒப்பொடு புணர்ந்த வுவமமென்பது - தன்கட் கிடந்த ஒப்புமைக் குணத்தொடு பொருந்தி வரும் உவமப் பொருளானும் ; மற்று, இனி ஒன்று சொல்ல ஒன்று தோன்றுந் துணிவிற்றாகச் சொல்லுஞ் சொல்லானு மென்று இவ்விருகூற்றதாகும் பிசி கூறுபடும் நிலைமை என்றவாறு. அவை பிறைகவ்வி மலை நடக்கும் என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம். இஃது யானை யென்றாவது. 1377முத்துப்போற் பூத்து முதிரிற் 1378களாவண்ண நெய்த்தோர் குருதி நிறங்கொண்டு - வித்துதிர்த்து என்பதுமது; இது கமுகின் மேற்று. நீராடான் 1379பார்ப்பா 1380னிறஞ்செய்யா 1381னீராடி லூராடு நீரிற்காக் கை என்பது, தோன்றுவது கிளந்த துணிவினான் வந்தது. இது நெருப் பென் றாவது. வகைநிலை யென்ற மிகையான் இவை யுஞ் செவிலிக் குரித்தென்பது கொள்க. (176) (முதுமொழி இதுவெனல்) 489. நுண்மையுஞ் சுருக்கமு 1382மொளியுடை மையு மெண்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉ மேது நுதலிய முதுமொழி யென்ப. இது, முதுமொழி யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: கூரிதாய்ச் சுருங்கி விழுமிதா யெளிதாகி இயற்றப் பட்டுக் குறித்த பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின், அங் ஙனம் 1383வந்ததனைப் பொருள் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது ஆகிய முதுமொழி யென்ப புலவர் என்றவாறு. உழுத வுழுத்தஞ்செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால்-வழுதியைக் 1384கண்டன கண்க ளிருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு (பழமொழி) என்றவழி, மற்று வழுதியைக் கண்ட கண் இருப்பத் தோள் பசந் தன என்றக்கால் 1385ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்த தென்புழிக் குறித்த பொருளியைபின்மை கூறுதலாயிற்று. அதனைச் சொற்றொடர் இனிது விளக்கிற்றன்றாயினும் முற் கூறிய முதுமொழி முடித்ததென்பது; என்னை? அதன் கண்ணே அது முடித்தற் கேது வாகிய இயைபின்மை கிடந்தமையி னென் பது. இது 1386பருப் பொருட்டன்றி நுண்ணிதாகிச் சொற் சுருக்க முடைத்தாய் விழுமிதாகி எளிதிற் பொருடோன்றியவாறு கண்டுகொள்க. எனவே, இதுவும் அந்நாற்பகுதித் தென்றவாறு. (177) (மந்திரம் இதுவெனல்) 490. நிறைமொழி மாந்த ரணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப. இது, மந்திரச் செய்யுளுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நிறைமொழி மாந்தரென்பார், சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் 1387பயக்கச் சொல்லும் ஆற்றலுடைய ராவார்; அவர் ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திரமெனப்படும் என்றவாறு. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. தானேயென்று பிரித் தான் இவை தமிழ்மந்திரமென்றற்கும் பாட்டாகி அங்கத மெனப்படுவனவும் உள, 1388அவை நீக்குதற்குமென உணர்க. அவை, ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்க சுவா எனவும், முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - யரணிய லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட னானந்தஞ் சேர்க சுவா. எனவும், இவை தெற்கண் 1389வாய்திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரன் ஒருவன் வாழவும் 1390(ஒருவன்) சாவவும் பாடிய 1391மந்திரம் அங்கதப்பாட்டாயின. மேற்பாட்டுரை நூல்என்புழி அங்கத மென்றோதினான், இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்னவாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டாகலின் அப்பெயர்த்தாயிற்று. இக்கருத்தே பற்றிப் பிறரும், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். (குறள். 28) என்றாரென்க. அங்கதப்பாட்டாயவழி அவற்றுக்கு அளவை, அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும் (471) என மேற்கூறினானென்பது. (178) (குறிப்புமொழி இதுவெனல்) 491. எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்புமொழி யென்ப. இது, முறையானே கூற்றிடைவைத்த குறிப்புணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொல் தொடர்ந்த வாற்றானும் சொற்படு பொருளானுஞ் செவ்வன் பொருளறிய லாகாமையின், எழுத்தொடுஞ் சொல்லொடும் புணராது பொருட்குப் புறத்தே பொரு ளுடைத்தாய் நிற்பது குறிப்பாவது என்றவாறு. இதனைப் பாட்டுரை நூல் என்றவழி 1392வாய்மொழி என்றோதி னான், கவியாற் பொருள் தோன்றாது பின்னர் இன்னதிதுவெனச் சொல்லி உணர்த்தப்படுதலின். இனி, அதனை இதன் தொகைச்சூத்திரத்துக் கூற்றிடை வைத்த குறிப் பென்று (477) ஓதினான், பாட்டிடைப் படு பொருள் பெரிதாகி அதனிடையே குறித்துக்கொண்டுணரினல் லது 1393மெய்ப்படா தென்றற் கென்பது. பிறர் அவற்றைப் 1394பொருளிசை யென்று சொல்லுப. குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கின ராம். என வரும். இதனுட் குடமே தலையாகப் பிறந்தாரெனவுங் கொம்பெழுந்த வாயினரெனவுங் கையுட்கொண்ட மூக்கின ரெனவுங் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் 1395இயல்பிலவாதலுங் குறிப்பினான் அதனைக் குஞ்சரமென்று கொண்டவாறுங் கண்டுகொள்க. பிறவும் அன்ன. மற்றிது பிசியெனப்படாதோவெனின்,-இது பாட்டு வடிவிற்றாகலின் அற்றன்றென்பது. அஃதேற் பாட்டெனப் படாதோவெனின்,குறித்த பொருண் 1396முடிய நாட்டாமையின் யாப்பழிந்து, நாற்சொல்லியலான் யாப்பு வழிப் படாமையின் மரபும் அழிந்து, பிறவுறுப்புப் பலவுங் 1397கொண்டமையிற் பாட் டெனவும் படாதென்பது, இஃது எழுத்து முதலாக ஈண்டிய அடியெனப்படாமையின் இதனையும் அடிவரை யில்லனவற் றோடு ஓதினா னென்பது. அல்லாதார் குறிப்பிசை வந்த செய்யு ளெல்லாங் குறிப்பெனப் படுமென்ப. அங்ஙனங் கூறிற் 1398குறிப்பிசை யுடையன 1399பாட்டினுள் வாராவாகியே செல்லு மென மறுக்க. (179) (பண்ணத்திச் செய்யுள் இதுவெனல்) 492. பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல் பண்ணத்தி யியல்பே. இது, பண்ணத்தி கூறுகின்றது. இ-ள்: பழம்பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என்றவாறு. 1400மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தி யென்ப. இஃது எழுதும் பயிற்சி யில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச்செய்யு ளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரப்பாட்டுங் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென்னாராயினார், நோக்கு முதலாயின உறுப் பின்மையி னென்பது. அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. (180) (பண்ணத்தி பிசியோடொக்குமெனல்) 493. அதுவே தானும் பிசியொடு மானும். இதுவுமது. இ-ள்: மேற்கூறப்பட்ட பண்ணத்தி பிசியோடொக்கும் என்றவாறு. அதனை ஒத்தலென்பது அதுவுஞ் செவிலிக்குரித்தென்ற வாறு. பிசியொடும் என்ற உம்மையான், பொருளொடு புணராப் பொய்ம்மொழி யோடும் பொருளொடு புணர்ந்த நகையோடும் (485) ஒக்குமென்றுணர்க, தானும் என்ற மிகையாற் பாட்டு மடை வசைக் கூத்திற்கே உரித்தென்பது கொள்க. (181) (பண்ணத்தியின் அடியின் உயர்ந்த எல்லை இதுவெனல்) 494. அடிநிமிர் கிளவி யீரா றாகும். இதுவுமது. இ-ள்: அப்பண்ணத்தியின் அடிப்பெருக்கங் கிளக்குங்காற் 1401பன்னிரண்டாம் என்றவாறு. ஆகும் என்றதனாற் சிறுபான்மை அப்பன்னிரண்டடி யின் ஏறியும் வரப்பெறுமென்பது. ஈராறாகும் என்றதனான் இது நெடுவெண்பாட்டாகி வருமெனவும் அதுபோல ஆறடி யின் இழிந்து வாராதெனவுங் கொள்க. (182) (அது கூறிய அளவின் மிகுந்தும் வருமெனல்) 495. அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே. இதுவுமது. இ-ள்: அது முழுதும் அடியாகி வாராது. இடையிடை ஒரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும் என்றவாறு. அவை, முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையிற் காட்டா மாயினாம். இக்காலத்துள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியங் காணாமாயினும் அமையு மென்பது. (183) (அளவியற் பகுதி இரண்டேயாமெனல்) 496. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியி னளவியல் வகையே யனைவகைப் படுமே. இதுவும் மேலவற்றுக்கெல்லாம் புறனடை. இ-ள்: எடுத்தோதிய வகையாற் சொல்லியன ஆராயின் அளவியற் பகுதி அக்கூற்றதாம் என்றவாறு. எடுத்தோதியவகையா 1402னென்பது, நூலும் உரையும் நந்நான்கெனவும், பிசி இரண்டெனவும், முதுமொழியும் மந்திர முங் கூற்றிடை வைத்த குறிப்பும் ஒரோவொன்றெனவுங் கூறிவந்த வகையான், அவற்றை இனைத் தென்றெண்ணி அளந்த பகுதியும் அளவியலேயாமாகலின் அவ்வளவியல் அடி வரை யறை கூறியவாற்றானும் அடி வரையறை யிலவற்றுக்குக் கூறிய வாற்றானும் இருவகைப்படும் 1403அளவியல் என்றவாறு. (184) (திணையாவது இதுவெனல்) 497. கைக்கிளை முதலா வெழுபெருந் திணையு முற்கிளந் தனவே முறைநெறி வகையின். இது, பதின்மூன்றாம் முறைமைக்கணின்ற திணையுறுப் புணர்த்து (313)கின்றது. இ-ள்: கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் ஏழும் முன்னர்க் கிளக்கப்பட்டன என்றவாறு. முறைநெறி வகையான் என்பது 1404அவற்றுக்கு முறைமை யாற் புறமெனப்பட்ட வெட்சி முதல் பாடாண்பகுதி யீறாகிய எழுபகுதியோடு மென்றவாறு. எனவே, அவற்றுக்குப் பொது வாகிய முறையாற் கரந்தை யுள்ளிட்டுப் பதினைந்து திணையுள் ஒன்று செய்யுட்குறுப்பாகி வரல் வேண்டுமெனவும், முன்னோ தியவாறே கொள்ளப்படுமெனவுஞ் சொல்லினானாம். இது சொல்லாக்கால் அவை வரினும் வரும், வாராதொழியவும் பெறுமென் பதுபடுமென்பது. இது மேல் வருகின்ற கைகோள் முதலியனவற்றுக்கும் ஒக்கும். (185) (கைகோளுட் களவாவது இதுவெனல்) 498. காமப் புணர்ச்சியு மிடந்தலைப் பாடும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென் றாங்கநால் வகையினு மடைந்த சார்பொடு மறையென மொழிதன் மறையோ ராறே. 1405களவு கற்பென்பன காமத்திணையின் ஒழுகலாறு ஆக லான் ஆண்டுப் பரந்துபட்டன வெல்லாந் தொகுத்துக் கூறுகின் றான், அவை செய்யுட் குறுப்பா யடங்கலின். அவற்றுள் இது கள வென்னுங் கைகோளுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: 1406காமப்புணர்ச்சியும், அது நிகழ்ந்த பின்னர் 2இடந்தலைப் பாடும், அதற்குப் பின்னர்ப் 3 பாங்கற்குச் சொல்லி அவனாற் கூடுதலும், அதன் பின்னர்த் 4 தோழியைப் பின்னின்று குறைமுடித்துக் கோடலுமென அந்நாற்பகுதிக்கண்ணும் பொருந்திய சார்பினாற் களவொழுக்கம் இதுவென்று கருதுமாற்றாற் செய்யுள் செய்தல் கந்திருவ வழக்கம் என்றவாறு. கந்திருவவழக்கம் மறையோ ரொழுகிய நெறி யதுவாக லான் மறையோராறு என்றானென்பது. எனவென்பது வினையெச்சம். எனவே, பாங்கனுந் தோழியும் உணர்ந்தவழியும் அது மறையோர் வழித்தென்றவாறு. காமப்புணர்ச்சி நிகழ்ந் தன்றி இடந்தலைப் பாடு நிகழாதெனவும் அவ்விடந்தலைப்பாடு 1407பிற்பயத்த லரிதென்பது அவள் ஆயத்தோடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன் பாங்கனை உணர்த்தி அவனாற் குறை முடித்துக் கோடலுந், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யா னாகலின் அதன்பின்னர்த் தோழியாற் குறை முடித்துக் கோடலுமென இந்நான்கும் முறையான் நிகழுங் களவொழுக்கம் என்றவாறு. வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித லாக்கஞ் செப்ப னாணுவரை யிறத்த னோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை... என்பனவுங் கைகோளாகாவோவெனின், ஆகா; கைகோ ளென்பது ஒழுகலாறாகலான். அவை அவற்றுட் பிறந்த உள்ள நிகழ்ச்சி ஒன்றொன்றனிற் சிறந்து பெருகியக்கால் அவ்வப்பகுதி யாகுமெனக் கொள்க. மற்றுக் களவியலுள், ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயிற் பாங்கி னோரிற் குறிதலைப் பெயலும் பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலும் (இறையனார். 3) எனப் பாங்கற்கூட்டம் முற்கூறியதாலெனின்,இது கைகோள் கூறிய இடமன்மையின் முற்கூறினும் அமையுமென்பது. மற்று, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகனைப் பாங்கன் கண்டு இவ்வேறுபாடு எற்றினானாயிற்றென்று வினாவு மன்றே? அதனாற் பாங்கற்கூட்டம் நிகழ்ந்த பின்னரன்றி இடந் தலைப்பாடு நிகழாதாம் பிறவெனின்,அற்றன்று; யாழோர் கூட்டம் உலகியலாதலான் இல்ல தன்றாமாகவே, உலகத்தார் நிறையுடையாராகி மறை வெளிப்படாமல் ஒழுகுவாரும், மறை வெளிப்படுத்து விளம்பும் பாங்கனையுடையாரும், இல்லாதாரு மெனப் பலவகையராதலின் வினாதல் ஒருதலையன்றென்பது. அல்லதூஉம் இடந்தலைப்பாடு 1408நிகழாதாயினன்றே துணை வேண்டுமென்பது; என்னை? துணையின்றி நிகழுங் களவு சிறப்புடைத்தாகலானும், பாங்கன் கழறுமென்று அஞ்சி அவனை முந்துற மறைத்தொழுகுமாகலானு மென்பது. களவொழுக்க மெல்லாம் இந்நான்கு வகையானும் அடங்கும். அவற்றுக்குச் செய்யுள்: கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே (குறுந். 2) என்னும் பாட்டு இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின் றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல நண்ணா ராண்டலை மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே (நற். 39) என்பது இடந்தலைப்பாடு. இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோண்டுகொளற் கரிதே (குறுந். 58) என்பது பாங்கற் கூட்டத்துக்கண் வந்தது. தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகி னாண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே (குறுந். 222) என்பது தோழியிற் கூட்டம். பிறவும் அன்ன. (186) (கற்பாவது இதுவெனல்) 499. 1409மறைவெளிப் படுதலுந் 1410தமரிற் பெறுதலு மிவைமுத லாகிய வியனெறி திரியாது 1411மலிவும் புலவியு மூடலு 1412முணர்வும் 1413பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. இது, கற்பென்னுங் கைகோளுணர்த்துத னுதலிற்று. இ-ள்: மறைந்தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும், அதன்பின் தமர் கொடுப்பத்தான் அவ்வகையாற் பெறுதலு மென்னும் இவ்விரண்டும் முதலாகிய வழக்குநெறி திரியாது, மகிழ்ச்சியும் புலத்தலும் ஊடலும் 1414உணர்தலுமென்னும் நான்குடன் பிரிவுளப்பட ஐந்தும் புணர்ந்தது கற்பென்னுங் கைகோளாம் என்றவாறு. இவை முதலாகிய வென்றதனான், கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான (143) என்றவழிக் 1415கூடிய வதுவை போல்வன கொள்க. அவைதாம் கற்பெனப்படுவ தல்லது ஒழுகலாறெனப்படா; என்னை? இவ ரொழுக்கமன்றி வேள்வியாசான் முதலாயினார் செய்விக்கும் ஒழுக்கமாகலான். அங்ஙனமாயினும் அவற்றையுங் கைகோளின் பாற் சார்த்தியுணரப்படு மென்றற்கு ஈண்டுக் கூறினானென்பது. 1416இனிக் கூறும் ஐந்துந், தலைவனுந் தலைவியும் ஒழுகும் ஒழுகலா றெனவே படும். 1417முன்னைய இரண்டும் போலப் பிறர் கொடுக்கப்பட்டன அல்ல வென்பது. மலிதலென்பது, இல்லொழுக்கமும் புணர்ச்சியும் முதலாயவற்றான் மகிழ்தல். புலவியென்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடா மற் காலங்கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ளநிகழ்ச்சி. ஊடலென்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழி யானன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது. அங்ஙனம் ஊடனிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய பொரு ளின்மை 1418யுணர்வித்தல் உணர்வெனப்படும். இல்லது கடுத்த மயக்கந் தீர உணர்த்து தலான் உணர்த்துதலெனவும் அதனை உணர்தலான் உணர்வெனவும்படும். புலவிக்காயின் உணர்த்தல் வேண்டா, அது குளிர்ப்பக் கூறலுந் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின். அம்முறையானே கூறி அவற்றுப் பின் பிரிதல் கூறினான். அஃது இவை நான்கனொடும் வேறுபடுத லின். அதனை ஊடலொடு வைக்கவே அவ்வூடலிற் பிறந்த 1419துனியும் பிரிவின் பாற் படுமென்பதூஉங் கொள்க; என்னை? 1420காட்டக் காணாது 1421கரந்துமாறுதலின். இவற்றுக்குச் செய்யுள்: எம்மனை முந்துறத் தருமோ தம்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம். 195) என்பது மறைவெளிப்பாடு. தமர்தர, வோரிற் கூடி யுடன்புணர் கங்குல் (அகம். 86) என்பது தமரிற் பெறுதல். கேள்கே டூன்ற (அகம். 93) என்னும் பாட்டினுள், நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே என்பது மலிதல். நாணுக்கடுங் குரைய ளாகிப் புலவி வெய்யள்யா முயங்குங் காலே என்பது புலவி. நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின் (கலி. 77) என்பது ஊடல். விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி (கலி. 75) என்பது உணர்தல். திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன் (கலி. 86) என்பது துனி. துனித்தலென்பது வெறுத்தல். அறுவகைப்பிரிவும் பிரிவெனவே அடங்கும். அவை 1422மேற்காட்டப்பட்டன. (187) (கைக்கோள்வகை இவை எனல்) 500. மெய்பெறு வகையே கைகோள் வகையே. இது, புறத்திணைக் கைகோளுணர்த்துகின்றது. இ-ள்: பொருள்கள் பெற்ற கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே என்றவாறு. கைகோளென்பது, ஒழுக்கங்கோடல். எனவே, அகத்திற் குப் புறனாயினும் புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக் கூறப்படா; பொதுவகையானே 1423மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடுமென இரண்டாகி அடங்கும் அவையு மென்றவாறு. அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளுங் காட்டப்பட்டன. (188) (களவினிற் கூற்றுக்குரியார் இவர் எனல்) 501. பார்ப்பான் பாங்கன் றோழி செவிலி சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோ டளவியன் மரபி னறுவகை யோருங் களவினிற் கிளவிக் குரிய ரென்ப. இது, கூற்றென்னும் உறுப்புணர்த்துகின்றது. இ-ள்: எண்ணப்பட்ட அறுவருங் களவொழுக்கினுள் (107) நிகழ்ந்தன கூறினாராகவல்லது, ஒழிந்தோர் கூறினாராகச் செய்யுள் செய்யப்பெறார் என்றவாறு. 1பார்ப்பானென்பான், நன்றுந் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவா னெனப்படும்.. 2பாங்கனென்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின் றொழுகி வருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். 3தோழி அவன் போன்றும் பெண்பாலாகலின் அவளைப் பின் வைத்தான். 4செவிலி மாற்றஞ் சிறுவரவிற்றா தலின் அவளை அவளின்பின் வைத்தான். அவரிற் சிறந்தமையிற் சீர்த்தகு சிறப்பிற் 5கிழவனையுங் 6கிழத்தியையும் அவர்பின் வைத்தான். அவ்விருவருள்ளுந் தலைமகளது கூற்றே பெரு வரவின தாகலின் அவளை ஈற்றுக்கண் வைத்தானென்பது. உதாரணம் : சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை . . . . . . . . . . . . . . . தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே (கலி. 9) என்பது, பார்ப்பான் கூற்று. காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் 1424முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புன் 1425மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே (குறுந். 204) என்பது, பாங்கன் கூற்று. ஏனல் காவ லிவளு மல்லள் . . . . . . . . . . . . . . . சொல்லு மாடுப கண்ணி னானே என்பது, தோழி கூற்று. பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தன னென்றனள் . . . . . . . . . . . . . . . ஆம்பல் மலரினும் தான்றண் ணியளே (குறுந். 84) என்பது, செவிலி கூற்று. பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி (அகம். 48) என்பதும் அது. கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் . . . . . . . . . . . . . . . அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே (குறுந். 280) என்பது, கிழவன் கூற்று. விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே (அகம். 58) என்பது, கிழத்தி கூற்று. பிறவும் அன்ன. (189) (கற்பினிற் கூற்றுக்குரியார் இவர் எனல்) 502. பாணன் கூத்தன் விறலி பரத்தை 1426யாணஞ் சான்ற வறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத் தொன்னெறி மரபின் கற்பிற் குரியர். இதுவுமது. இ-ள்: இவ்வெண்ணப்பட்ட எல்லாருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறுங் கற்பினுள் என்றவாறு. முன்னுறக் கிளந்த 1427கிளவி யென்பது, பொருணோக் கிற்று. இசையின் பின்னரது நாடகமாகலிற் பாணன் பின் கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலி யைக் கூத்தன் பின்வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரை அதன் பின் வைத்தும், 1428பொருட்குச் சிறந்தாராகலின் நற்பொருள் உணரும் அறிவரை அவர்பின் வைத்தும், எதிலராகிய கண்டோ ரை அவர்க்குப்பின் வைத்துங் கூறினானென்பது. இவ்வாற்றான் இவரொடு முன்னர்க் களவொழுக்கத்திற் கூறிய அறுவருங் கூறப்பெறுவரென்றவாறு. தொன்னெறி மரபின் என்றதனாற் பாகனுந் தூதனுங் கூறவும் அமையும். அவை புறப்பொருட்குச் சிறந்துவரும். அவற்றுக்குச் செய்யுள்: செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் 1429பையுண் மெய்நிறுத் தவர் திறஞ் செல்வன் கண்டனென் யானே (அகம் . 14) என்பது, பாணன் கூற்று. ஆடலிற் பயின்றனை யென்னா தென்னுரை யூடலிற் றெளிதல் வேண்டும் என்பது, கூத்தன் கூற்று. மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து . . . . . . . . . . . . . . . நறுங்கண் ணியன்கொ னோகோ யானே என்னும் நற்றிணைப் (394) பாட்டு, கண்டோர் கூற்று. விதையர் கொன்ற முதையற் பூமி . . . . . . . . . . . . . . . மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே என்னும் நற்றிணைப் (121) பாட்டுப் பாகன் கூற்று. ஒழிந்தனவுங் கற்பியலுட் கூறியவாற்றான் அறிக. (190) (கூற்றுக்குரியரல்லாதார் இவர் எனல்) 503. ஊரு மயலுஞ் சேரி யோரு நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங் கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும். இ-ள்: இவ்வெண்ணப்பட்ட அறுவகையோருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறார் என்றவாறு. இவை, களவிற்குங் கற்பிற்கும் பொது. கொண்டெடுத்து மொழியப் படுதலல்லதென்பது இவர் கூற்றாகப் பிறர் சொல்லி னல்லது இவர் தாங் கூறாரென்றவாறு. அவை, ஊஉ ரலரெழச் சேரி கல்லென வானா தலைக்கு மறனி லன்னை (குறுந் . 262) எனவும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிச் .................... சாய்த்தார் தலை (கலி . 39) எனவும் வருவன போல்வன. யாப்புறத் தோன்றும் என்றதனான் அகத்திணைக்கண் இவ்வாறு நிலைபெற்றதென்பது; எனவே, புறத்திணைக்கண் அவர் கூறவும் பெறுவரென்பது. 1430இது நோக்கிப்போலுங் 1431கூறா தாரையுங் கூறுவானா யிற்றென்பது. நோய்மருங் கறிநரை இடை வைத்தான் முன்னைய மூன்றும் பெண்பா லெனவும் ஒழிந்தன ஆண்பாலெனவும் அறிவித்தற்கென்பது. எனவே, 1432நோய் மருங்கறிநர் பெண்பாலும் ஆண்பாலுமா யினாரென்பது. (191) (நற்றாய் தலைவனொடுந் தலைவியொடுங் கூறாள் எனல்) 504. கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடு நற்றாய் கூறன் முற்றத் தோன்றாது. இஃது, எய்தாததெய்துவித்தது; விலக்கியல் வகையான் விதித்ததெனவும் அமையும். இ-ள்: கிழவனொடுங் கிழத்தியோடும் இடையிட்டு நற் றாய் கூறுதல் நிரம்பத் தோன்றாது என்றவாறு. நற்றாய் என்று ஒருமை கூறியவதனான் தலைமகள் தாயே கொள்ளப்படும். இதனானே தந்தை தன்னைய ரென்பன போல் வனவற்றுக்கும் இஃதொக்கும். முற்ற வென்றதனான் தானே தலைவனாதலான் தலைவன்தமர் யாவருங் கூறார், 1433முற்கூறப் பட்டார் 1434அல்லதென்பது கொள்க. முற்றா தென்னாது தோன்றாது என்றதனாற் புறத்திணைக்கண் இவை வரைவின்றி வழக்கினொடு பொருந்துமாற்றாற் கொள்ளப்படு மென்பது. கிழவன் றன்னொடும் கிழத்தி தன்னொடும் கூறாள் எனவே, அல்லுழிச் சொல்லப்பெறும் நற்றாயென்பதாம் ; அஃது, எம்வெங் காம மியைவ தாயின் . . . . . . . . . . . . . . . செறிந்த சேரிச் செம்மன் மூதூ ரறிந்த மாக்கட் டாகுக தில்ல . . . . . . . . . . . . . . . மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே (அகம் . 15) எனவரும். (192) (இடைச்சுரத்துத் தலைவன் தலைவியொடு கண்டார் கூறுவர் எனல்) 505. ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இ-ள்: தலைமகனொடும் தலைமகளொடும் இடைச் சுரத்துக் கண்டோர் மொழிதல் அறியப்பட்டது என்றவாறு. 1435ஒண்டொடி மாதர் கிழவன் எனவே அவ்விருவர் கூட்டத்துக் கண்ணுமன்றி அவ்விருவரொடும் தனித்துக் கூற்றில் லையென்றவாறு. கண்டது என்ற மிகையான் இடைச் சுரத்துக் கண்டோர் செவிலிக் குரைப்பனவுங் கொள்க. அவை, இளையண் மெல்லியண் மடந்தை யரிய சேய பெருங்காண் யாறே (சிற்றட்டகம்) எனவும், அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேர்ந்தனை சென்மே எனவும் வரும். இதனுள், ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந் தோன்றக் கூறியது 1436தலைமகனையாதலின், வில்லோன் காலன கழலே தொடியோண் மெல்லடி மேலன சிலம்பே (குறுந் . 7) என்பது, செவிலிக்குக் கண்டோர் கூறியது. (193) (இடைச்சுரத்துத் தலைவன் நீதிநூல் விதிப்படி தலைவியொடு கூறற்குமுரியன் எனல்) 506. இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன். இதுவும் கூற்றுவிகற்பமே கூறுகின்றது. இ-ள்: இடைச்சுரத்து உடன்போகிய கிழத்தியொடு கிழவன் நீதிநூல் வகையாற் கிளத்தற்கு முரியன் என்றவாறு. நீதிநூல் வகையாற் கிளத்தலென்பது கிழத்திதன் தமர் இடைச் சுரத்துக் கண்ணுறின் அவர் கேட்பத் தலைவிக்குச் சொல்லுவானாய் 1437வழக்கியல் கூறுதலு முரிய னென்பது. வழக்கிய லாணை யென்றதனான் நீதிநூல் விதி 1438பிறழக்கூறின் அஃது இராக்கதம் போன்று காட்டுமென்பது. உம்மையாற் கிழத்தியொடு வழக்கியலாணையானன்றி மருட்டிக் கூறவும் பெறுமென்பது. அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் 5 பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே 10 மாநனை கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே (நற்றி . 9) என்பதனுள், வருந்தா தேகுமதி யெனவே, வழிபடு தெய்வங் கட்கண்டால் விடுவார் இல்லாதது போல, நின்னை விடுதல் எனக்கு அறனன்றெனக் கூறி மெல்லெனச் செல்கவென மருட்டிக் கூறியவாறு காண்க. (194) (கண்டோரும் வழக்கியலாணையிற் கிளப்பரெனல்) 1439507. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முன்னத்தி னெடுத்தே. இதுவுங் கண்டோர் கூற்று. இ-ள்: மேலைச்சூத்திரத்துக் கூறிய தலைமகனையுந் தலை மகளையும் ஒழித்து ஒழிந்தோரெனப்படுவார் கண்டோரெனப் படுப. அவர் கூற்றுங் கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு வழக்கியலாணை (506)யிற் கிளத்தற்கும் உரியர் என்பான் முன்னத்தி னெடுத்துக் கூறுப என்றானென்பது. முன்னத்தினெடுத்த லென்பது அதிகாரத்தான் அறநூற்குத் தக ஓத்தினா னெடுத்துரைப்ப வென்றவாறு ; அவை, பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையனே (கலி . 9) என்றாற் போல்வன. இவ்வாறு வழக்கியலாணையாற் கிளவாது வாளாதே அவரைக் கண்டனமெனவும் அவரின்னுழிப் புகுவரெனவுஞ் சொல்லுவன, கண்டோர் மொழிதல் கண்ட தென்ப (505) என்புழிக் கூறினாம். (195) (கேட்போர் இவரெனல்) 508. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு நினையுங் காலைக் கேட்குந ரவரே. இது, கேட்போரென்னும் உறுப்புணர்த்துகின்றது. இ-ள்: முன்னர்க் கூற்றிற்குரிய ரெனப்பட்ட பன்னிருவருட் கேட்டற்குரியார் தலைமகனுந் தலைமகளும் ஒழித்து ஒழிந்த பதின்மரும் என்றவாறு. 1440அவர் கேட்பனவும் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் 1441தத்தங்கிளவி கேளாரெனவுங் கூறியவாறு. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு மென்பதனை மேற்போயின கூற்றிற்குங் கூட்டியுரைக்க. உரைக்கவே கூறுவனவுங் கேட்பனவு மெல்லாம் அவ்விருவர் கிளவியுமே யெனவுந் தத்தங்கிளவி கூறவுங் கேட்கவும் பெறாரெனவுங் கூறியவாறாயிற்று. இங்ஙனம் விலக்கப்பட்டன வற்றுள் வேறுபட வருவனவும் 1442மேற்கூறு கின்றான். 1443மற்றுக் கூற்றுக்கு உரியரெனப்படுவார் கூற, அவ்வயின் தலைவியுந் தலைவனுங் கேளாரோவெனின், அவை 1444தங் கிளவியாகலின் தாங்கேட்டல் விதந்தோத வேண்டுவதன் றென்பது. நினையுங்காலை யென்றதனான் தலைமகள் சொல்லக் கேட் போருந் தலைமகன் சொல்லக் கேட்போருந் தலைவனுந் தலைவியுந் தம்முட் கேட்டனவற்றுக்குரியனவும் ஆராய்ந்து கொள்ளப்படும் 1445மேற் கூறிய வகையானென்பது. எனவே, தலை மகன் கூறப் பரத்தை கேட்டலுந் தலைமகள் கூறப் பரத்தை கேட் டலும், முதலாயின 1446புலனெறி வழக்கிற் கெய்தாதன விலக்கப் பட்டன. ஒழிந்தனவற்றுட் சில வருமாறு : விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே (அகம் . 58) என்னுந் தலைமகள் கூற்றுத் தலைமகன் கேட்டது. வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே (நற் . 9 ) என்பது, தலைமகன் கூற்று, தலைமகள் கேட்டது. 1447நின்கேள், புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி (கலி . 24) எனவும், 1448மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவங்கொல் பாண (அகம் . 14) எனவும், 1449உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ (அகம். 17) எனவும், 1450ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே (குறுந். 362) எனவும், 1451 எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ (கலி . 142) எனவும் இன்னோரன்னவெல்லாந் தோழியும் பாணனுஞ் செவிலியுங் கண்டோரும் அறிவருங் கேட்பத் தலைமகள் கூற்று வந்தன. பிறவும் அன்ன. 1452இடிக்குங் கேளிர் நுங்குறை யாக . . . . . . . .. . . பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே (குறுந். 58) எனவும், 1453எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப . . . . . . . .. . . புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே (குறுந். 129) எனவும் 1454ஊர்க பாக வொருவினை கழிய (அகம். 44) எனவும், 1455பேரமர் மழைக்கணின் றோழி யுறீஇய வாரஞ ரெவ்வங் களையா யோவென எனவும், 1456சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் (கலி. 139) எனவும் இவை பார்ப்பானும் பாங்கனும் பாகனுந் தோழியுங் கண்டோரும் கேட்போராகத் தலைமகன் கூற்று நிகழ்ந்தன. பிறவும் அன்ன. இனி, ஒன்றித் தோன்றுந் தோழி (39) என்றமையின், தோழி கூற்றுந் தலைமகள் (225) கூற்றேயா மென்பது. (196) (பார்ப்பார் கூற்றும் அறிவர் கூற்றும் யாவருங் கேட்பரெனல்) 509. பார்ப்பா ரறிவ ரென்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. இதுவுமது. இ-ள்: இது மேற்கூறிய பார்ப்பாரும் அறிவரும் கூறிய கூற்றுக் கேட்போரை இன்னாரென்று வரையப்படாது என்றவாறு. என்றவழி, யார்க்கும் என்றது அகத்திணையோர்க்கும் புறத்திணை யோர்க்கு மென்றவாறு. யார்க்கும் வரையா ரென்றதனை, எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படுமென்பது கொள்க. என்னை? பார்ப்பார் கூற்று, தலைமகனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்லது, பிறர் கேட்டற்கேலா. அறிவர் கூற்று, தலைமகளுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டற் குரியர். புறத்திணைக்கண்ணும் 1457பொதுவியற் கரந்தையோர்க் கும் பார்ப்பார் கிளவி ஏலாவெனவும், அறிவர் கிளவி ஏற்கு மெனவும், பிறவு மின்னோ ரன்ன கொள்க. யாப்பொடு புணர்ந்து என்பது அகப்பொருளும் புறப் பொருளுமாக யாக்கப்படுஞ் செய்யுளெல்லாவற்றொடும் பொருந்துமென்றவாறு. இவர் கிளவி வரையப்படாதெனவே, இவர் வாயிலாகியவழித் தலைமகள் வாயில் மறுத்தலில ளென்ப தூஉம், புறத்திணைத் தலைவர்க்கும் அவ்வாறே 1458வழிநிற்றல் வேண்டுமென்பதூஉங் கூறியவாறாயிற்று; என்னை? அறிவ ரெனப்படுவார் மூன்றுகாலமுந் தோன்ற நன்குணர்ந் தோரும் புலனன் குணர்ந்த புலமையோரு மாகலானும், இனிப் பார்ப் பாரும் அவ்வாறே சிறப்புடையராகலானும், அவர்வழி நிற்றல் அவர்க்குக் கடனாகலானு மென்பது. (197) (பரத்தையும் வாயில்களுந் தலைவி கேட்பச் சொல்லல்வேண்டுமெனல்) 510. பரத்தை வாயி னெனவிரு கூற்றுங் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய மிலவே. இது, பயனில்கூற்றுணர்த்துதல் நுதலிற்று, இ-ள்: பரத்தையும் வாயில்களு மென்னும் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் எழுந்த கிளவி கிழத்தி கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்காற் பயனில என்றவாறு. கிழத்தியைச் சுட்டுதலெனவே, 1459பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையுமென்பதாயிற்று. செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதவ ணுலமந்து வருகஞ் சென்மோ தோழி (அகம். 106) 1460என்றக்கால், இது பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பக் கூறல் வேண்டுமென்பது. வாயில்களுந் தலைமகளை ஊடல் காப்பஅல்லது சொல்லாராகலான் தலைமகள் கேட்பாளாகச் சொல்ல வேண்டுமென்பது. சுட்டாக் கிளப்புப் பயனில வென்றதனான் வாயில்கள் கூறுவனவுங் கிழத்திக்குப் பாங்காயின 1461தோழி கேட்பச் சொல்லினும் அமையும். அவற்றுக்குச் செய்யுள் : ஓருயிர் மாத ராகலி னிவளுந் தேரா துடன்றனண் மன்னே என்பது கிழத்தி கேட்ப வாயில்கள் கூறியது; தோழி கேட்பச் சொல்லியதூஉமாம். (198) (தலைமகளைச் சுட்டி வாயில்கள் ஒருவர்க்கொருவர் கூறவும்பெறுவர் எனல்) 511. வாயி லுசாவே தம்முளு முரிய. இதுவுமது, இ-ள்: மேனின்ற அதிகாரத்தால் தலைமகளைச் சுட்டி ஒருவரொருவர்க்குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும், அவையுந் தலைமகள் கேட்பன என்றவாறு. அதற்குச் செய்யுள் : தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் 1462காப்பா டும்மே (குறுந். 9) என்பது, பாடினி பாணர்க்குரைத்தது. தம்முளும் உம்மை எதிர்மறை யாகலான், 1463கேட்குநள் அவளெனப்பட்டவாறன் றித் தம்முள் தாங் கேட்டல் சிறுபான்மையெனக் கொள்க. (199) (கூறாதன கூறுவனவாகவும் கேளாதன கேட்பனவாகவும் கூறவும்படும் எனல்) 512. ஞாயிறு திங்க ளறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே யவையல பிறவு நுவலிய நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர். இது, கேளாதன சில பொருள், கேட்பனவாகப் பொருளிய லுள் (196) வழுவமைக்கப்பட்டனவற்றை இலக்கணவகையாற் கூறுவனவுங் கேட்குநவும் ஆகற்கண்ணும் ஆய்கின்றானென்பது. இ-ள்: ஞாயிறும் திங்களும் அறிவும் நாணுங் கடலுங் கானலும் விலங்கும் மரனும் பொழுதும் புள்ளும் நெஞ்சும் இன்னோரன்ன பிறவும் மேற் பொருளியலுள், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் (196) என்று பொதுவகையாற் கூறியவாற்றான், அவைதாம் சொல்லு வன போலவுங் கேட்பன போலவுஞ் சொல்ல அமையும் எனறவாறு. ஈண்டுக் கூற்றும் உடன் கூறினான், 1464மேலிவற்றை வரை யறுத்துக் கூற்றிற்கு உரிய வென்றிலனாகலின். புலம்புறு பொழு தென்பது மாலையும் யாமமும் எற்பாடும் காரும் கூதிரும் பனியும் இளவேனிலும் போல்வன. பிறவுமென்றதனான் புல் புதல் முதலியன கொள்க. அவற்றுட் சிலவருமாறு: கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ (கலி . 142) என்றாற் போல்வன கண்டுகொள்க. (200) (இடம் இதுவெனல்) 513. ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப. இது, களனெனப்பட்ட உறுப்புணர்த்துகின்றது. இ-ள்: பலவும் ஒருவழிப்பட்டு ஓரிலக்கணத்தான் முடியுங் கருமநிகழ்ச்சியை இடமென்று கூறுப என்றவாறு. இடமெனினுங் களமெனினும் ஒக்கும். ஒரு செய்யுள் கேட்டால் இஃது இன்னவிடத்து நிகழ்ந்ததென்று அறிதற் கேதுவாகியதோர் உறுப்பினை இடமென்றானென்பது. ஒரு நெறிப்படுதலென்பது, ஒருவழிப் பலவுந் தொகுதல்; ஓரிய லென்பது அவற்றுக்கெல்லாம் இலக்கணமொன்றாதல். அஃ தாவது, காட்சியும் ஐயமுந் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுமென்று இன்னோரன்ன எல்லாம் ஒருநெறிப் பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஓரிலக்கணத் தான் முடியுமென்பது. கருமநிகழ்ச்சி யென்பது காமப்புணர்ச்சி யென்னுஞ் செயப்படுபொரு ணிகழ்ச்சி. அஃது இடமெனப் பட்டது. இது 1465வினைசெய்யிடம். 1466நிலமாயின முன்னர்த் திணை யெனப்பட்டன. காலம் முன்னர்ச் சொல்லுதும். எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப (குறுந். 129) என்னும் பாட்டும், கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சில் லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாக மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே (குறுந். 280) என்னும் பாட்டும் பாங்கற்கூட்டமே இடனாக ஒருவழிப் பட்டன. என்னை? நின் வேறுபாடு எற்றினா னாயிற்றென்று வினவிய பாங்கற்கு, இதனினா னாயிற்றென்று உரைத்ததூஉம், அதற்குப் பாங்கன் கழறினானை எதிர் மறுத்ததூஉமென இரண்டும் பாங்கற் கூட்டத்துப் பட்டு ஓரியலான் முடிந்தன. அவை மேற்கூறிய வகையானே கண்டுகொள்க. (201) (காலம் இதுவெனல்) 514. இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந் திறத்தியன் மருங்கிற் தெரிந்தன ருள்ளப் பொருணிகழ் வுரைப்பது கால மாகும். இது, காலமுணர்த்துகின்றது. இ-ள்: மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச் செய்யுளுட் டோன்றச் செய்யிற் காலமென்னும் உறுப்பாம் என்றவாறு. பொருணிகழ்ச்சியைக் காலமென்றதென்னை? காலமென வேறு பொருள் இல்லது போல வெனின், அஃது ஈண்டாராய்ச்சி யின்று; நியாய நூலாராய்ச்சி யென்க. வில்லோன் காலன கழலே தொடியோண் . . . . . . . .. . . வேய்பயி லழுவ முன்னி யோரே (குறுந் . 7) என்னும் பாட்டினுள் வில்லோனுந் தொடியோளும் பொரு ளெனப்படும்; வேய்பயி லழுவ முன்னி யோரே என்பது அப்பொருணிகழ்ச்சியான் இறந்தகால மெனப்படும். அப் பாட்டிற்குச் சிறந்தார் அவராகலின் அவரே பொருளா யினாரென்பது. 1467மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே யரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே (குறுந் . 71) என்பது நிகழ்காலம். பகலும் பெறுவையிவ டடமென் றோளே (கலி . 49) என்பது எதிர்காலம். புறத்திற்கும் இவ்வாறே இன்றியமையாதென்பது. பெரும் பொழுது சிறுபொழுதென்பன ஈண்டுத் திணையெனப்பட் டடங்கின; என்னை ? முதலும் கருவும் உரிப்பொருளுங் கூட்டித் திணையாகலின். (202) (பயன் இதுவெனல்) 515. இதுநனி பயக்கு மிதனா னென்னுந் தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே. இது, முறையானே பயனென்னும் உறுப்புணர்த்துகின்றது. இ-ள்: இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயனென்னும் உறுப்பாம் என்றவாறு. மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே என்னும் பாட்டு, தோழியைத் 1468தூதுவிடுவாளாதற் பயன்பட வந்தது. இவ்வா றெல்லாப் பாட்டும் பயனுறுப்பாகவன்றி வாரா வென்க. இவை புறத்திற்கும் ஒக்கும். (203) (மெய்ப்பாடாவது இதுவெனல்) 516. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். இது, மெய்ப்பாட்டுறுப் புணர்த்துகின்றது. இ-ள்: உய்த்துணர்ச்சியின்றிச் செய்யுளிடத்துச் சொல்லப் படும் 1469பொருள் தானே வெளிப்பட்டாங்குக் கண்ணீரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலாகிய 1470சத்துவம் படுமாற்றான் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றவாறு. கவிப்பொருளுணர்ந்தால் அதனானே சொல்லப்படு பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடென் றான். அது தேவருலகங் கூறினும் அதனைக் கண்டாங் கறியச் செய்தல் செய்யுளுறுப்பாம் என்றவாறு. அவை, மையற விளங்கிய மணிமரு 1471ளவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தர (கலி . 81) என்றாற்போல வருவன. தலைவரு பொருளானெனவே, நோக்குறுப்பான் உணர்ந்த பொருட்1472பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பா டென்பது இதன் கருத்து. இக்கருத்தினாற் கவி 1473கண்காட்டும் எனவுஞ் சொல்லுப. (204) (இம் மெய்ப்பாடு முற்கூறப்பட்ட மெய்ப்பாடே வேறன்று எனல்) 517. எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே. இஃது, எய்தியது இகந்துபடாமைக் காத்தது. இ-ள்: மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே இது; இதுவும் பிறி திலக்கணத்தனவென்று கொள்ளற்க என்றவாறு. எனவே, நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை (251) 1474என அவை நந்நான்காமெனவும் மெய்ப்பாட்டியலுட் கூறிய வாறெல்லாம் பிறவாற்றான் வேறுபடுவனவுங் கொள்ளப்படு மென்றவாறு. (205) (எச்சம் இதுவெனல்) 518. சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்ச மாகும். இஃது, எச்சங் கூறுகின்றது, இ-ள்: கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தொடு பொருந்திய கிளவி, எச்சமென்னும் உறுப்பாம் என்றவாறு. முடிவுகொள் இயற்கை யெனவே, செய்யுளின் கண்ண தன்றிப் பின் கொணர்ந்து முடிக்கப்படு மென்பது பெற்றாம். உதாரணம் : செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்கரந் தட்டே (குறுந் . 1) எனச் செய்யுண் முடிந்தவழியும், 1475இவற்றான் யாங்குறை யுடையம் அல்லே மென்று தலைவற்குச் சொன்னாளேல் 1476அது கூற்றெச்ச மாம்; என்னை? அவ்வாறு கூறவுஞ் 1477சிதைந்ததின் மையின். தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? 1478அது காண்பாயாகிற் காண் எனத் தலைமகளை இடத் துய்த்து நீக்கிய குறிப்பினளாகி 1479அது தான் கூறாளாகலி னென்பது. (206) (முன்னம் (குறிப்பு) இதுவெனல்) 519. இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியவென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம். இது, முன்னமென்று கூறப்பட்ட உறுப்புக் கூறுகின்றது. இ-ள்: யாதோரிடத்தானும் யாதானுமொரு மொழி தோன் றியக்கால், இம்மொழி சொல்லுதற்குரியாரும் கேட்டற்குரி யாரும் இன்னாரென்று அறியுமாற்றான் அங்ஙனம் அறிதற்கு ஓரிடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்குங் கேட்பார்க்கு 1480மேற்றவுரை செய்யுட்கு 1481ஈடாகச் சொல்லுவது முன்னம் என்றவாறு. இவரிவர்க்குரியவென்று அறிவான், செய்யுட் கேட்டா னெனவும், அவ்விடத்தவரவர்க் குரைக்க வென்றான் ஆசிரிய னெனவுங் கொள்க. என்றென்பது எனவென்பதுபோலச் 1482சொல்லினெச்சமாதலும் வினை யெச்சமாதலும் உடைமை யின் இஃது, எனவெ னெச்சம் வினையொடு முடிமே (தொ. சொ. 438) என்பதொரு வினையெஞ்சி நிற்கும். அவ்வினைதான் எச்சமாக லான் உரைப்பதென்னும் வினைகொண்டு முடியுமென்பது. யாரிவ னெங்கூந்தற் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து (கலி. 89) என்றக்கால் இம்1483மாற்றஞ் சொல்லுகின்றாள் தலைவி யெனவுஞ் சொல்லப் பட்டான் தலைமகனெனவும் முன்னத் தான் அறியப் படுத்தலின், இது முன்னவுறுப்பாயிற்று. ஒழிந்தன வற்றிற்கும் இஃதொக்கும். இவையெல்லாம், அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகக் கூறுகின்றானென்பது. (207) (பொருள்வகை இதுவெனல்) 520. இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவு மொழுக்கமு மென்றீவை யிழுக்குநெறி யின்றி யிதுவா கித்திணைக் குரிப்பொரு ளென்னாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. இது, பொருள்வகை கூறுகின்றது. (இ-ள்.) இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமுமெனப்பட்ட இவை இழுக்காதவாற்றான் இத் திணைக்கு இது பொருளென்று ஆசிரிய னோதிய உரிப் பொரு ளன்றி அவற்றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப் படுவது பொருட் கூறெனப்படும் எ-று. வகைஎன்றதனாற் புலவன் றான் 1484வகைந்ததே பொரு ளென்று கொள்க. அஃதன்றிச் செய்யுள் செய்தலாகா தென்பது இதன் கருத்து. அவை, கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுத லந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே (அகம். 9) என்றாற் போலச் செய்யுள் செய்தவன் 1485தானே வகுப்பன வெல் லாங் கோடல். இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும், முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாமென்பது. பொதுமை என்பது எல்லா வுரிப்பொருட்கும் ஏற்கப் பலவேறு வகையாற் செய்தல். (208) (துறை இதுவெனல்) 521. அவ்வம் மக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினுந் திறவதி னாடித் தத்த மியலின் மரபொடு முடியி னத்திறந் தானே துறையெனப் படுமே. இது, துறையென்னு முறுப்புணர்த்துகின்றது. இ-ள்: ஐவகை நிலத்திற்கும் உரியன வெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஓதிவந்தவாறன்றிப் படைத்துச் செயினும் அவ்வத்திணைக்கேற்ற இலக்கணமும் வர லாற்று முறைமையும் பிறழாமைச் செய்யின் அது மார்க்க மெனப்படும் என்றவாறு. மார்க்கமெனினும் துறையெனினும் ஒக்கும். ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்கால் (கலி. 56) என்னுங் கலியினுள், கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை என, நெய்தற்றலைமகள் போலக் கூறி, அவளை மருதநிலத்துக் கண்டான் போல ஊர்க்கா னிவந்த பொதும்பருள் எனவுஞ் சொல்லிப் பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தலுரிப் பொருளான் முடித்தான். இவ்வாறு மயங்கச்செய்யினுங் குறிஞ்சித் துறைப்பாற்படச் செய்தமையின் அத்துறையுறுப் பான் வந்த தென்பது. இதுவும் மேலைப் பொருள்வகை போலப் புலவராற் செய்து கொள்ளப்படுவதாகலான் அதற்குப் பின் வைத்தா னென்பது. மற்று, எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் (தொ. அகத். 19) என்றதனான் இது முடியாதோவெனின், அது கருப்பொருண் மயங்குதற்குக் கூறினான்; இது மக்களே யன்றித் தலைவனுந் தலைவியும் மயங்குமாறும் நான்கு திணையும் ஒன்றொன்ற னொடு மயங்குமாறுங் கூறி அது புலவராற் செய்துகொள்ளுவ தோர் உறுப்பெனவும், ஓதிவந்த இலக்கணத்த தன்றாயினும் அது பெறுமெனவும், கூறினானென்பது. (209) (மாட்டாவது இதுவெனல்) 522. அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு மியன்றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தன் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின். இது, 1486மாட்டென்னும் உறுப்புணர்த்துகின்றது. இ-ள்: பொருள் கொள்ளுங்கால், அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக் கிடப்பச் செய்யினும், இருவகை யானுஞ் சென்று பொருள் முடியுமாற்றான் கொணர்ந்துரைப் பச் செய்தலை மாட்டென்னும் உறுப்பென்று சொல்லுவர், செய்யுள் வழக்கின் என்றவாறு. இதுவும் நால்வகைப் பொருள்கோளன்றிப் புலவரது வேறு செய்கை. அது; முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே (பட்டின. 218 - 20) என நின்றது, பின்னர், வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே (பட்டின. 300,) எனச் 1487சேய்த்தாகச் சென்று பொருள்கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருண் முடியத் தந்து உரைத்ததாம். 1488திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாத ரிறந்துபடிற் பெரிதா மேதம்- உறந்தையர்கோன் தன்னார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு (முத்தொ. 42) என்பது, அணுகிய நிலை யெனப்படும். பிறவும் அன்ன. மாட்டுத லென்பது கொண்டுவந்து கொளுத்துதல் . (210) (மாட்டும் எச்சமுமின்றியும் செய்யுள் செய்யப்படும் எனல்) 523. மாட்டு மெச்சமு நாட்ட லின்றி 1489யுடனிலை மொழியினுந் தொடர்நிலை பெறுமே. இது, மேற்கூறியவற்றுள் ஒரு சாரனவற்றுக்குப் புறனடை.. இ-ள்: மேற்கூறிய எச்சமும் மாட்டும் இன்றியும் அச்செய் யுளுட் கிடந்தவாறே அமையச் செய்யவும்பெறுஞ் செய்யுள் என்றவாறு. எச்சமும் மாட்டும் என்னாது மாட்டு முற்கூறியதென்னை யெனின் 1490எச்சம் முதலாகிய ஐந்து உறுப்பும் இவ்விதி பெறு மென்று எதிர்சென்று தழீஇயினானென்பது. உதாரணம் : வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிதரும் வாடையொ டென்னா யினள்கொ லென்னா தோரே (குறுந்.110) என்பது, எச்சமின்றி வந்தது. தாமரை புரையுங் காமர் சேவடி (குறுந். கடவுள்) என்பது, முன்னமின்றி வந்தது. மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே (குறு . 71) என்பது, பொருளின்றி வந்தது. ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகம் 8) என்பது, துறைவகையின்றி வந்தது. யானே யீண்டை யேனே (குறுந். 54) என்பது, மாட்டின்றி வந்தது. இடைநின்ற மூன்றனை இலேசினாற் கொண்டு இரண்டனை எடுத்தோதினான். இவை இரண்டும் அவற்றது 1491துணை இன்றியமையாச் சிறப்பினவல்ல என்றற் கென்பது. (211) (வண்ணம் இத்துணைத்து எனல்) 524. வண்ணந் தாமே நாலைந் தென்ப. இது, முறையானே ஈற்று நின்ற வண்ணம் இத்துணைப் பகுதித்து என்கின்றது. இ-ள்: வண்ணம் இருபது வகைப்படும் என்றவாறு. வண்ணமென்பது, சந்தவேறுபாடு. üW« gyîkh» ntWgoD« mit <©ll§Fbk‹göc«., அவ் வேறுபா டெல்லாஞ் சந்த வேற்றுமை செய்யாவென்பதூஉங் கூறியவாறு. அது நுண்ணுணர் வுடையார்க்குப் புலனாமென்பது. (212) (வண்ணங்களின் பெயர் இவை எனல்) 525. அவைதாம், பாஅ வண்ணம் தாஅ வண்ணம் வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண மியைபு வண்ண மளபெடை வண்ண நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ் சித்திர வண்ணம் நலிபு வண்ண மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண மொழுகு வண்ணம் மொரூஉ வண்ண மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந் தூங்கல் வண்ண மேந்தல் வண்ண முருட்டு வண்ண முடுகு வண்ணமென் றாங்கன மொழிப வறிந்திசி னோரே. இது, மேற்கூறப்பட்ட வண்ணங்களது பெயர் வேறுபாடு கூறுகின்றது. இ-ள்: மேற்சொல்லிய நாலைந்து வண்ணமும் இவ் விருபது பெயர் வேறுபாட்டின வென்று சொல்லுப, அவற்றை உணர்ந்த ஆசிரியர் என்றவாறு. இது, முறையாயினவாறென்னையெனின், இது வரலாற்று முறைமை யென்றற்கு ஆங்ஙனம் மொழிப அறிந்திசினோ ரென்றா னென்பது. அவை யாமாறு சொல்லுகின்றான். (213) (பாவண்ணம் இதுவெனல்) 526. அவற்றுள், பாஅ வண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும். இது, நிறுத்தமுறையானே பாஅவண்ண முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: பாஅவண்ணமென்பது, 1492நூற்பாவண்ணம் என்றவாறு. எற்றுக்கு? நூற்பாற் பயிலு மென்றமையின். இது சொற் சீரடித்தாகி வருமென்பது. இதனுட் பயிலு மெனவே அந்நூற் பாவினுளல்லது அகவலுள் இத்துணைப் பயிலாதென்பது. இது வடவேங்கடந் தென்குமரி (பாயிரம்) எனவும், எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப (தொ. எழு. 1) எனவும், அவற்றுள், அஇஉ, எஒ வென்னு மப்பா லைந்தும் (தொ. எழு. 3) எனவும் பயின்று வரும். பெரியகட் பெறினே (புறம். 235) என்பது சொற்சீராகி அகவலுட் பயிலாது வந்தது. சொற்சீரடி யென்னாது சொற்சீர் என்றான் அடியொடு தொடராதுஞ் சொற்சீர் வருமாதலி னென்பது. அவை, 1493நன்றுபெரி தாகும் (தொ. சொல். 343) என்றாற் போல வேறாகி நிற்பன. கலியுள்ளும் பரிபாடலுள்ளுஞ் சொற்சீர் வருமென மேற்கூறினானாகலின் 1494அவற்றுள்ளுஞ் சந்த வேற்றுமைப் பட்டன பாஅவண்ணமேயா மென்பது. (214) (தாவண்ணம் இதுவெனல்) 527. தாஅ வண்ண மிடையிட்டு வந்த வெதுகைத் தென்ப. இ-ள்: இடையீடுபடத் தொடுப்பது தாஅவண்ணம் என்றவாறு. அவை பொழிப்பும் ஒரூஉவு மாகலின் எதுகையென வரைந்து கூறினானென்பது. அடி யிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவ தல்லது வண்ணவேற்றுமை யாகா தென்பது. ஒருசெய்யுளுட் பலஅடி வந்தால் அவைஎல்லாம் இடையிட்டுத் தொடுத்தல் வேண்டுமோவெனின், வேண்டா; அவை வந்தவழித் தாஅ வண்ணமெனப்படுமென்பது. எனவே, இவ்வண்ண வகைகளெல்லாஞ் செய்யுண் முழுவதுமே பெறுவனவாகக் கொள்ளக் கிடந்தனவல்ல; இவற்றை உறுப் பென்ற தன்மையாற் கந்திருவ நூலார் வண்ணங் கூறியவாறு போல ஒரு செய்யுளுட் பலவும் வரப்பெறு மென்பதாம். அவை. உலக முவப்ப வலனேர்பு திரிதரு (முருகு. 1) எனவும், உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை (ஐங்குறு. ப. 143) எனவும் வரும். பிறவும் அன்ன. (215) (வல்லிசைவண்ணம் இதுவெனல்) 528. வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். இ-ள்: வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயின்றுவரும் என்றவாறு. வல்லெழுத்துப் பயின்று வருதலான் அப்பெயர்த்தாயிற்று. முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் (பட். 218) எனவும், முட்டாட் டாமரைத் துஞ்சி (முருகு. 73) எனவும் வரும். பிறவும் அன்ன. (216) (மெல்லிசை வண்ணம் இதுவெனல்) 529. மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே. இ-ள்: மெல்லெழுத்து மிகுவது மெல்லெழுத்து வண்ணம் என்றவாறு. ஒரு செய்யுண் முழுவதும் ஓரினத்தெழுத்தே பயிலச் செய்தல் இன்னாதாதலின் இவை 1495உறுப்பெனப்பட்டு இடை யிட்டு வருமென்றா னென்பது. 1496அவ்வாறு செய்யின் அவை 1497மிறைக் கவி யெனப்படும். ஒழிந்த எழுத்திற்கும் இஃதொக்கும். பொன்னி னன்ன புன்னைநுண் டாது (யா. வி. ப.382.) என மெல்லெழுத்துப் பயின்றவாறு. (217) (இயைபுவண்ணம் இதுவெனல்) 530. இயைபு வண்ணம் மிடையெழுத்து மிகுமே. இ-ள்: இடையெழுத்து மிகுவது இயைபுவண்ணம் என்றவாறு. அரவி னதிர வுரீஇய வரகுகதிரின் என இடையெழுத்து மிக்குவந்தமையின் இயைபுவண்ணமா யிற்று. மென்மை வன்மைக்கு இடைநிகரவாகிய எழுத்தான் வருதலின் இயைபுவண்ணமென்றான் (218) (அளபெடை வண்ணம் இதுவெனல்) 531. அளபெடை வண்ண மளபெடை பயிலும். இ-ள்: 1498இரண்டளபெடையும் பயிலச் செய்வன அளபெடை வண்ணமாம் என்றவாறு. மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் (அகம். 99) என்பது அளபெடைவண்ணம். கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (மலைபடு. 352) என்பதும் அது. (219) (நெடுஞ்சீர் வண்ணம் இதுவெனல்) 532. நெடுஞ்சீர் வண்ணநெட் டெழுத்துப் பயிலும். இ-ள்: நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் என்றவாறு. அது, மாவா ராதே மாவா ராதே (புறம் . 273) என்பது. நெடிதாய் வருவது நெடுஞ்சீரெனப்பட்டது. (220) (குறுஞ்சீர் வண்ணம் இதுவெனல்) 533. குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். இ-ள்: குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர் வண்ணம் என்றவாறு. குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி (அகம். 4) என வரும். (221) (சித்திரவண்ணம் இதுவெனல்) 534. சித்திர வண்ண நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வருமே. இ-ள்: சித்திரவண்ணம் நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்ப விராஅய்ச் செய்யப்படுவது (என்றவாறு). அது, சார னாட நீவர லாறே என வரும். சித்திரவண்ணமென்பது பலவண்ணம் படச் செய்வதா கலின் அப்பெயர்த்தாயிற்று. (222) (நலிபுவண்ணம் இதுவெனல்) 535. நலிபு வண்ண மாய்தம் பயிலும். இ-ள்: ஆய்தம் பயின்று வருவது நலிபு வண்ணமாம் என்றவாறு. அஃது, அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை (குறள். 178) எனவும், னஃகான் றஃகா னான்க னுருபிற்கு (தொ. எழு. 123) எனவும் வரும். 1499நலிபென்பது ஆய்தம். (223) (அகப்பாட்டு வண்ணம் இதுவெனல்) 536. அகப்பாட்டு வண்ண முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. இ-ள்: அகப்பாட்டு வண்ணமென்பது இறுதியடி இடையடி போன்று நிற்பது என்றவாறு. அவையாவன:- முடித்துக் காட்டும் ஈற்றசை ஏகாரத்தா னன்றி, ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன. அவை :- தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன (560) எனவும், உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய் (ஐங்குறு. 21) எனவும், கோடுயர் வெண்மண லேறி யோடுகல னெண்ணுந் துறைவன் றோழி எனவும், ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி (கலி. கடவுள்) எனவும், சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ (அகம். 46) எனவும், இவை ஆசிரிய ஈற்றன. குளிறு குரலருவிக் குன்றத் திதண்மேற் களிறு வருவது கண்டு- - வெளிலென்ன லாயினான் பின்னை யணங்கிற் குயிரளித்துப் போயினான் யாண்டையான் போன்ம் என இதனுள் இறுதியடி முடியாத் தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. கொடி யுவணத் தவணரோ எனக் கலிப்பாவுள் அரோ வந்து பின் முடியாத் தன்மையின் முடிந்தது. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்பனவற்றான் ஆசிரியம் இறுமென வரையறுப்பா ருண்மையின், அவ்வச்சொல்லானே அவை முடிந்தன வென்று கொள்வலெனின், அங்ஙனம் 1500வரையறை யில வென்பது 1501மேற் காட்டிய உதாரணங்களான் அறிந்தாமா கலின், அக்கடா 1502வரையறுப்பார் மேற்றென விடுக்க. (224) (புறப்பாட்டு வண்ணம் இதுவெனல்) 537. 1503புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியா தாகும். இ-ள்: புறப்பாட்டு வண்ணமென்பது, இறுதி1504யடிப் புறத்த தாகவுந் தான் முடிந்தது போல நிற்றல் என்றவாறு. இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே (புறம். 363) என்புழி, ஈற்றயலடி முன்னிய வினையே யென முடிந்தது போன்று முடியாதாயிற்று. (225) (ஒழுகுவண்ணம் இதுவெனல்) 538. ஒழுகு வண்ண மோசையி னொழுகும். இ-ள்: முற்கூறிய வகையானன்றி 1505ஒழுகிய லோசையாற் செல்வது ஒழுகுவண்ணம் என்றவாறு. ஒழிந்தனவும் ஒழுகுமாயினும் அவை வேறு வேறிலக் கணமுடையன என்பது. அம்ம வாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன்பின்று நலிய வுய்யல ளிவள் (யா. வி. ப. 638) என வரும். (ஒரூஉ வண்ணம் இதுவெனல்) 539. ஒரூஉ வண்ண மொரீஇத் தொடுக்கும். இ-ள்: யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉ வண்ணம் என்றவாறு. ஒரீஇத் தொடுத்த லென்பது எல்லாத் தொடையும் ஓரீஇய செந்தொடையான் தொடுத்தலென்பாரும் உளர். செந்தொடை யுந் தொடையாகலான் அற்றன்றென்பது; அது, யானே யீண்டை யேனே யென்னலனே யானோ நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே (குறுந். 97) என வரும். சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறம். 235) என்பதும் அது. 1506யாப்புப் பொருணோக்கியவாறுபோல இது பொரு ணோக்காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப் பெனப்படாது. (227) (எண்ணு வண்ணம் இதுவெனல்) 540. எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். இ-ள்: எண்ணுப் பயில்வது எண்ணுவண்ணம் என்றவாறு. இஃது, அடியெண்ணுப் பயிறலான் எண்ணுவண்ண மெனக் காரணப்பெயராயிற்று. அவை, நன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி (அகம் . 44) என்றாற் போல்வன. நுதலுந் தோளுந் திதலை யல்குலும் (அகம் . 119) என்பதும் அது. (228) (அகைப்புவண்ணம் இதுவெனல்) 541. அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். இ-ள்: அறுத்தறுத்துப் பயில்வது அகைப்புவண்ணம் என்றவாறு. இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்பு வண்ணமென்னும் பெயர் பெற்றது. வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி (குறுந்.110) என்புழி, ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அறுத்தொழுகிய அகைப்புவண்ணமாம். (229) (தூங்கல் வண்ணம் இதுவெனல்) 1507542. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். இ-ள்: தூங்கல்வண்ணந் தூங்கலோசைத்தாகி வருவது என்றவாறு. வஞ்சி யென்பது வஞ்சித்தூக்குப் போல, இதுவும் அற்றுச் சேறலுடைத்தென்பது. அது. யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான் (முத்தொ. 104) என்ற நின்ற தொடர்நிலைக்கண்ணே அத்தூங்கல் கண்டு கொள்க. இக் கருத்தறியாதார் கலிப்பாவினுள் வஞ்சிப்பாப் பிறக்கு மெனவும் வஞ்சியுட் கலிப்பாப் பிறக்குமெனவும் மயங்குப. (230) (ஏந்தல் வண்ணம் இதுவெனல்) 543. ஏந்தல் வண்ணஞ் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். இ-ள்: சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச்செய்வது ஏந்தல்வண்ண மென்றவாறு. ஏந்தலென்பது, மிகுதல்; ஒரு சொல்லே மிக்கு வருதலின் ஏந்தல் வண்ண மென்றாயிற்று. அது, வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் (நாலடி. 39) எனவரும். (231) (உருட்டு வண்ணம் இதுவெனல்) 544. உருட்டு வண்ண மராகந் தொடுக்கும். இ-ள்: உருட்டிச் சொல்லப்படுவது அராகமாகலின் அராகந் தொடுப்பது உருட்டு வண்ணமாம் என்றவாறு. உருமுரறு கருவிய பெருமழை தலைஇய (அகம். 158) எனவும், எரியுரு வுறழ விலவ மலர (கலி. 33) எனவும் வரும். இது நெகிழாது உருண்ட வோசையாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது உருட்டு வண்ணமெனப்படு மெனப்பட்டது. (232) (முடுகுவண்ணம் இதுவெனல்) 545. முடுகு வண்ண மடியிறந் தோடி யதனோ ரற்றே. இ-ள்: முடுகுவண்ணமென்பது, 1508நாற்சீரடியின் மிக்கு ஓரடி அராகத்தோ blh¡F« என்றவாறு. அது, நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும் (கலி. 39) என வரும். இவற்றைக் கொச்சகம் அராகமெனவுஞ் சொற்சீரடியும் முடுகிய லடியுமெனவும் பரிபாடற்கு வேறுபடுத்தோதினான் 1509இவ்வேறுபாடு நோக்கியென்பது. (233) (வண்ணங்கள் மேற்கூறிய இவையே எனல்) 546. வண்ணந் தாமே இவையென மொழிப. இது புறனடை. இ-ள்: வண்ணமென்பன சந்தமாதலான் அச்சந்த வேற்றுமை செய்வன இவையல்லதில்லை என்றவாறு. எனவே, என் சொல்லப்பட்டதாம்: நான்கு பாவினொடும் இவற்றை வைத்துறழவும், அவை மயங்கிய 1510பொதுப்பா இரண்ட னொடும் உறழவும் நூற்றிருபதாகலும், 1511உயிர்மெய் வருக்க மெல்லா வற்றோடும் உறழ்ந்து பெருக்கின் எத்துணையும் பலவாகலும், இனிப் பிறவாற்றாற் 1512சில பெயர் நிறீஇ அவற் றான் உறழ்ந்து பெருக்க வரையறையிலவாகலும் உடையவாயி னும், இவ்விருபது வகையானல்லது சந்தவேற்றுமை விளங்கா தென்பது கருத்து. (234) (வனப்புள் அம்மை இதுவெனல்) 547. வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே. இது தொகைச் சூத்திரத்துள், ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும் (313) எனக் கூறுசெய்து நிறீஇப், பின்னர் எட்டுறுப்புக் கூறினா னன்றே? இவை அவற்றோடொத்த இலக்கணத்த அன்மையான்; என்னை? அவை ஒரோ செய்யுட்கே ஓதிய உறுப்பாகலானும் இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெண்வகையும் பற்றித் தொடுக்கப் படுமெனக் கூறப்பட்ட தாகலானு மென்பது. இவற்றை வனப் பென்று கூறப்படுமாறென்னை? 1513அச்சூத்திரத் துப் பெற்றிலமாலெனின், - வனப்பென்பது, பெரும்பான்மையும் பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகாகலின் அவ்வாறு கோடும். அதனாற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய 1514தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்பதென்பது. அஃதேல், இவ் வெட்டுந் தனிவருஞ் செய்யுட்கண் வந்தால் அழகு செய்யாவோ வெனின், அவை போல் இவை தனிவரும் செய்யுட்குமாகும் என்றற்கன்றே அவ்விருபத்தா றுறுப்போடும் இவற்றை ஓரினப்படுத்து ஓதியதென்பது. 1515அஃது, இயைபிற் கொப்ப வாராதென்பது முன்னர்ச் (552) சொல்லுதும். இதனானே 1516முன்னை யுறுப்புக்கள் தொடர்நிலைச் செய்யுட்கு வருமென்பதூஉங் கொள்க. அல்லாக்கால், மாத்திரை முதலாகிய 1517ஒரோவுறுப் பான் அழகு பிறவா தாகியே செல்லும், 1518இவற்றையே வனப்பென்று ஒரோ செய்யுட்கே கொள்ளி னென்பது. இங்ஙனம் இருபத்தாறும் எட்டுமென வகுப்பவே அவை 1519அகமென்பன, தனிநிலைச் செய்யுட்கு முற்கூறப்படா, இத்தொடர் நிலைச் செய்யுட்கு முற்1520கூறப்படுமென்பது. இனி, இவற்றைச் சூத்திரத்தான் வனப்பென்னுங் குறி யெய்துவிக்க வேண்டுவானாகச் சூத்திரத்தை, வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலின் (547) என்பது பாடமாக உரைத்தானென்க; அதுவும் 1521அறிந்தவாறே கொள்க. இ-ள்: சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடை யிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லது அம்மையாம் என்றவாறு. அடிநிமிராதெனவே, அம்மை யென்பது முழுவதும் ஒரு செய்யு ளாகல் வேண்டும்; வேண்டவே, அஃது உறுப்பன்றாகியே செல்லும்; அதனை உறுப்பெனல் வேண்டுமாதலான், அடி நிமிரா தெனப்பட்ட செய்யுள் உறுப்பாக அவை பல தொடர்ந்து முடிந்து ஈண்டுச் செய்யுளா மென்பது. சிலவாக வென்பது, 1522எண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல், சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடி நிமிரா தென்றது, ஐந்தடியின் ஏறாதென்றவாறு. தாய பனுவலோடென்றது, அறம்பொருளின்பமென்னும் மூன்றற்கும் இலக்கணஞ் 1523சொல்லுவ (போன்று) வேறிடை யிடை அவையன்றியுந் தாய்ச் செல்வதென்றவாறு, அஃதாவது, பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள், இரண்டடி யானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சில வாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம் பொருளின்ப மென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமா றுங் அவ்வாறன்றிக் 1524கார்நாற்பது, களவழி நாற்பது முதலா யின வந்தவாறுங் கண்டுகொள்க. பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல் (குறள். 675) என்பது இலக்கணங் கூறியதாகலிற் பனுவலோடென்றான். மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று (குறள். 1112) என இஃது இலக்கியமாகலாற் றாய பனுவலெனப்பட்டது. 1525இவை தனித்துவரினும் அவ்வனப்பெனப்படும்; தாவுத லென்பது, இடையிடுதல். இவ்விருவகையுஞ் செய்யுளெனப் படும். அம்மையென்பது, குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையென்றாயிற்று. அதனுள் உறுப்பாகிய பாட்டுக்கடோறும் மாத்திரையுறுப்பு முதலாகிய உறுப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும், இவ்வனப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும் அறிந்துகொள்க. (235) (அழகு இதுவெனல்) 548. செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பி னவ்வகை தானே யழகெனப் படுமே. இஃது, இரண்டா மெண்ணுமுறைமைக்கணின்ற அழகுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: 1526தெரிசொற் பயிலாது செய்யுளுட் பயின்று வரும் மொழிகளாற் சீரறுத்துப் 1527பொலிவுபட யாப்பின், அப் பொருள் அழகு என்றவாறு. அவ்வகை யென்றதனான் அவை வேறுவேறு வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றவாறு. அவையாவன: நெடுந்தொகை முதலாகிய தொகையெட்டு மென்றவாறு. அழகு செய்யுண்மொழி யென்ற தென்னை யெனின், அது பெரும் பான்மையாற் கூறினான். அம்மொழி யானே, இடைச் சங்கத் தாருங் கடைச்சங்கத்தாரும் இவ்விலக்கணத்தாற் செய்யுள் செய்தார். இக்காலத்துச் செய்யினும் விலக்கின்றென்பது. மற்று மூவடிமுப்பது முதலாயின அம்மை யெனப்படுமோ அழகெனப் படுமோவெனின், தாயபனுவலின்மையின் அம்மையெனப்படா வென்பது. இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்றவகையான் வருவன அறிந்துகொள்க. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். (236) (தொன்மை இதுவெனல்) 549. தொன்மை தானே யுரையொடு புணர்ந்த பழைமை மேற்றே. இது, தொன்மையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: தொன்மையென்பது உரைவிராஅய்ப் பழமைய வாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை, பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன. (237) (தோல் இதுவெனல்) 550. இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்மொழிப் புலவர். இது, முறையானே தோலென்னும் வனப்புணர்த்துதல் நுதலிற்று. அஃதிருவகைப்படும்: கொச்சகக்கலியானும் ஆசிரியத் தானுஞ் செய்யப் படுவன. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது. (461) என்றவழித் தேவபாணியும் காமமும் பொருளாகவன்றியுங் கொச்சகக் கலி வருமென்றானாகலான், 1528அவைமேல் வருதல் ஈண்டுக் கொள்ளப்பட்டது. இ-ள்: இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் - மெல் லென்ற சொல்லான் அறம்பொருளின்பம் வீடென்னும் விழுப்பொருள் பயப்பச் செய்வன. அவை செய்த காலத்துள்ளன கண்டிலம்; 1529பிற்காலத்து வந்தன கண்டுகொள்க. பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் - ஆசிரியப் பாட்டான் ஒரு கதைமேல் 1530தொடுக்கப்பட்டன; அவை பொருட் டொடர்நிலை. தோல் என மொழிப தொன்மொழிப் புலவர் - தோலென்று சொல்லுப புலவர் என்றவாறு. தொன்மொழியென்றார், பழைய கதையைச் செய்தல் பற்றி. இது முன்வருஞ் சூத்திரத்தானும் பெறுதும். (238) (விருந்து இதுவெனல்) 551. விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. இ-ள்: விருந்துதானும் புதிதாகப் பாடுந் தொடர்நிலை மேற்று என்றவாறு. தானும் என்ற உம்மையான், முன்னைத் தோலெனப் பட்டதூஉம் பழைய கதையைப் புதியதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒப்புமையின் உம்மையான் இறந்தது தழீஇயினானென்பது. புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்றதென்னை யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்து வரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப. (239) (இயைபு இதுவெனல்) 552. ஞகாரை முதலா ளகாரை யீற்றுப் புள்ளி யிறுதி யியைபெனப் படுமே. இஃது, இயைபுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஞ ண ந ம ன, ய ர ல வ ழ ள வென்னும் பதினொரு புள்ளி யீற்றினுள் ஒன்றனை இறுதியாகச் செய்யுஞ் செய்யுள் பொருட்டொடராகவுஞ், சொற்றொடராகவுஞ் செய்வது இயை பெனப்படும் என்றவாறு. இயைபு என்றதனானே பொருளும் இயைந்து, சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து; சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையுங் 1531கொங்குவேளிராற் செய்யப் பட்ட தொடர்நிலைச்செய்யுளும் போல்வன. அவை னகார ஈற்றான் இற்றன. மற்றையீற்றான் வருவனவற்றுக்கும் ஈண்டி லக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தனபோலும். 1532பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகிய தோலோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அவை உயிரீற்றவா தல் பெரும்பான்மை யாகலான் 1533வேறுபாடுடைய சொற் றொடரான் வருதலுமுடைய வென்பது. சொற்றொடரென்பது, அந்தாதி யெனப்படுவது; என்றதனான், உயிரீற்றுச் சொற் றொடர் சிறுபான்மை யென்பது கொள்க. (240) (புலன் இதுவெனல்) 553. 1534சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. இது, புலனாமாறுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: சேரிமொழி யென்பது 1535பாடிமாற்றங்கள். அவற் றானே செவ்விதாகக் கூறி ஆராய்ந்து காணாமைப் பொருட் டொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் என்றவாறு. அவை 1536விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யு ளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பது கண்டு கொள்க. (241) (இழைபு இதுவெனல்) 554. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா வைந்தடி யொப்பித் தோங்கிய மொழியா னாங்கன மொழுகி னிழைபி னிலக்கண மியைந்த தாகும். இஃது, இறுதி நின்ற இழைபிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது - ஒற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாது; 1537குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து - இருசீரடி முதலாக எழுசீரடியளவும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பித்து; ஒப்பித்த லென்பது, பெரும் பான்மை யான் நாற்சீரடியாகப் பகுக்கப்பட்டென்ற வாறு; ஓங்கிய மொழி யான் - நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப் போல் ஓசை எழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல்லான்; ஆங்ஙனம் ஒழுகின் - இவையும், சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது (553) பொருள் புலப்படச் சென்று நடப்பின். இழைபின் இலக்கணம் இயைந்ததாகும் - இழைபென்று சொல்லப்படும் இலக்கணத்தது என்றவாறு. அவையாவன: கலியும் பரிபாடலும்போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தனவென்பது. இவற்றுக்குக் காரணந் தேர்தல் வேண்டாது, பொருள் இனிது விளங்கல் வேண்டுமென்றது, 1538அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி யென்பது. மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்குமுன் வைப்பி னென்னெனின், இஃதிசைப்பாட்டாகலின் இனி வருகின்றது இசைத் தமிழாகலின் அதற்குபகாரப்பட இதனை இறுதிக்கண் வைத்தானென்பது. (242) (இவ்வோத்தின் புறனடை) 555. செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி யிழைத்த விலக்கணம் பிழைத்தன போல வருவ வுளவெனினும் வந்தவற் றியலாற் றிரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே. இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. இ-ள்: செய்யுளிடத்துப் பொருள் பெற ஆராய்ந்து தந்திரம் செய்யப்பட்ட இலக்கணத்தின் வழீஇயின போன்று பின் தோன்றுவனவுளவேல் முற்கூறப்பட்ட இலக்கணத்தொடு திரியாமல் முடித்துக்கோடல் அறிவுடையோரது கடன் என்றவாறு. அவை எண்சீர் முதலாயின வரிற் கழிநெடிலடிப்பாற் சார்த்திக் கோடலும், ஏது நுதலிய முதுமொழியொடு, பாட்டிற்கு இயைபின்றியுந் தொடர்பு படுப்பனவும் யாப் பென்னும் உறுப்பின்பாற் கோடலும், பிறவும் ஈண்டோதாதன உளவெனின் அவை யுமெல்லாஞ் செய்யுளிலக்கண முடிபாகு மென்றவாறு. (243) செய்யுளியல் முற்றிற்று. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. ஓத்து - இயல். 2. பெயர்த்து - பெயரையுடையது. 3. ஆராய்வல் - ஆராய்வேன். 4. எழுத்தினுஞ் சொல்லினும் - எழுத்ததிகாரத்துஞ் சொல்லதிகாரத்தும். 5. விராய் - கலந்து. 6. அப்பொருள் என்றது தான் சொல்லுமாறு அதிகரித்து எடுத்துக் கொண்ட அப் பொருளை. எழுத்தினுஞ் சொல்லினும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன கூறினான்; பொருளினும் அவ்வாறே பெரும்பாலும் வழக்கிற்கும் சிறுபான்மை செய்யுட்கும் வேண்டுவன கூறி வந்தான். இனிச் செய்யுள் கூறுவதற்கியை பென்னையெனின்? தான் சொல்லுமாறு எடுத்துக்கொண்ட அப் பொருள்பற்றிச் செய்யுள் கூறலின் அதுவும் இயைபுடைத்தாயிற்று என்றபடி. 7. கூறும் - கூறுவான். என்றது ஆசிரியனை. ஆகலின் இவ்வோத்துத் தொகுத்துக் கூறுகின்றது எனவியைக்க. 8. இது - இவ்வோத்து. 9. உரைப்பாருமுளர் என்றது களவியலுரையாசிரியரை. என்னை? முதலாஞ் சூத்திர உரையுள் எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டு என்று அவரே கூறலின். 10. என மூன்றற்கும் என்பது. எனுமூன்றற்கும் என்றே பாடம் இருந்திருத்தல் வேண்டும். அப்படி யிருத்தலே பொருத்தமாகும். 11. தந்திரம் - நூல். 12. ஒத்ததிகாரம் எனவும் பாடம். 13. ஒரோவொன்று - ஒவ்வொன்று. வனப்பெட்டனுள் ஒன்றே ஒரு செய்யுட்கு வருதலும் என்றபடி. வனப்புக் கூறுமிடத்து இளம்பூரணர் காட்டிய உதாரணங்களை நோக்கும்போது அவர்க்கு. பல தொடர்ந்தவற்றிலன்றித் தனிச் செய்யுளிடத்தே வனப்பு வருமென்பது கருத்துப்போலத் தோன்றுகின்றது. பல தொடர்ந்த தொடர்நிலைச் செய்யுளைப் பற்றித் தொல்காப்பியர் ஒன்றுங் கூறாமையின் பிற்காலத்துத் தொடர் நிலைச் செய்யுள்களை உதாரணங் காட்டல் பொருந்துமோ என்பது ஆராயத் தக்கது. 14. அவைதாம் என்றது அவ்வெட்டுந்தாம் என்றபடி. 15. ஒன்றொன்றனை இன்றியமையாமையாவது - மாத்திரையை எழுத்தும் எழுத்தை அசையும் அசையைச் சீரும் என்று இங்ஙனம் ஒன்றையொன்று இன்றியமையாமை. எனவே வனப்பெட்டும் ஒன்றையொன்று இன்றியமையாதனவல்ல என்றபடி. 16. செய்யுள் விராய்க் கிடக்கும் அளவை என்றது - செய்யுள் முழுவதையும் படிக்குமிடத்து அதன்கண் விரவிக் கிடக்கும் ஓசையின் அளவு என்றபடி. நச்சினார்க்கினியர் மாத்திரை என்றது எழுத்துக்குரியதாக எழுத்ததிகாரத் தோதிய மாத்திரைகள் தத்தம் அளவின் இறந்து பாவின் ஓசை வேறுபாடுகளை உணர்த்திவிராய் நிற்கும் ஓசை என்பர். 17. மாத்திரையினது மாத்திரை என்றது - மாத்திரையினளவு என்றபடி. 18. மேற்கூறிய எழுத்து - எழுத்ததிகாரத்துட் கூறிய எழுத்து. 19. இயற்றிக்கொள்ளுதல் என்றது. எழுத்தியலிற் கூறிய முப்பத்துமூன்று எழுத்துக்களையும் செய்யுட் கேற்பப் பதினைந்தாக இயற்றிக் கோடலை. அதனை மாத்திரையளவு மெழுத்தியல் வகையும் என்னும் 2-ம் சூத்திர வுரையுட் காண்க. 20. வகை - அசையின் வகைகள். 21. துணிந்து - துண்டுபட்டு - பிரிந்து. 22. அடிதோறும் என்று பாட்டிற்கியைய உரைகாரர் கூறினும், உரை முதலிய ஏனை அறுவகை நிலங்களிலும் இவ்வியாப்பு அமையும். என்னை? அவையும் யாப்பெனக் கூறப்படலின் 391ம் சூத்திரம் நோக்குக. 23. பாக்கள் என்றது பரந்துபட்டுச் செல்லும் ஓசைகளை. 24. இப்பகுதி என்றது இருவகைத் தொடைப் பகுதியை. அடிக்கும் ஒக்கும் என்றது. தொடைகள் வரும் அடியும் வரையறை யுடையனவும் இல்லனவும் என இரண்டாமென்றபடி. 25. அப்பாவரையறை என்றது அடிவரையறை யுள்ளனவும் இல்லனவும் ஆகிய பாவின் அளவியல் என்றபடி. இது பேராசிரியர் கருத்து. 470-ம் 475-ம் சூத்திர உரை நோக்குக. 26. இவை என்பது பாடமாயின் என்றது. கூற்றிவை என்று பாடமாயின என்றபடி. எண்ணிய மூன்று என்றது திணையும் கைகோளும் கூற்றும் என்ற மூன்றையும். எனவே திணையுங் கைகோளும் கூற்றுமாகிய இவையெனத் தொகுத்துக் கூறியதாகக் கொள்க என்றபடி. தொகுத்ததாம் என்பது தொகுத்தவாறே பிறிதில்லை எனவும் பாடம். 27. காலமென்பது முக்காலத்தும் திணை நிகழ்ச்சிக்கண்ணே பொருள் உணர்ச்சி நிகழக் கூறல் என்பர் நச்சினார்க்கினியர். 28. சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தல் - பாட்டிற் சொல்லப்பட்ட பொருளானே பிறிதொரு பொருள் தோன்றச் செய்தல். 29. கண்கூடு - பிரத்தியக்ஷம். நேரே கண்டதுபோறல். 30. எச்சவகையை 518-ம் சூத்திர உரை நோக்கியுணர்க. 31. முன்னம் என்பது கூறுவோரையும் கூறக்கேட்டோரையும் குறிப்பான் எல்லாருங் கருதும்படி செய்தல் என்பர் நச்சினார்க்கினியர். 32. தோற்றி - உண்டாக்கி. 33. மாட்டென்பது அகன்றும் அணுகியும் கிடந்த பொருள்களைக் கொண்டு வந்து தொடராகக் கூட்டிமுடித்தல் என்பர் நச்சினார்க்கினியர். ஆயினும் அவர் சிலஇடங்களில் தூரமான அடிகளை வலிந்துகொண்டுவந்து கூட்டல் சிறப்பின்று. 34. நின்றதனொடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தல் என்றது. முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே. (பட்டி. 218 - 20) என நின்ற அடிகளோடு. வேலினும் வெய்ய கானமவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே. என வருமடிகளை நெஞ்சே! அவள்தோள் கோலினுந் தண்ணிய வாதலான் வயங்கிழையொழிய வாரேன் என ஒருதொடர் கொளீஇ முடித்துக்கொள்ளச் செய்தலை. 35. எழுநிலத் தெழுந்த செய்யுளாவன - பாட்டு. உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன. வாய்மொழி யென்பதற்குக் குறிப்புமொழி என்பது பேராசிரியர் கருத்து. இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மந்திரம் என்ப. 36. அடிவரையறையுடைய என்றது பாட்டை. 37. ஏனையறுவகைச்செய்யுள் என்றது எழுநிலத்தெழுந்த செய்யுள்களுள் பாட்டொழிந்த உரை முதலிய ஆறையும். 477ம் சூத்திரம் நோக்குக. 38. ஒழிந்தஉறுப்பு என்றது திணையே கைகோள் முதலியனவொழிந்த மாத்திரை முதலிய உறுப்புக்களை. 39. நூலினான் உரையினான் என்பது நூலினான உரையினான என்றிருத்தல் வேண்டும். என்னை? 477-ம் சூத்திரத்தின் தொடக்கமாதலின். இதற்கு - பாட்டிற்கு. இடையின்றி வைத்தல் - அடுத்து வைத்தல். அதனை 476-ம் சூத்திர முடியப் பாட்டிலக்கணமும் அதன்பின் நூலிலக்கணமும் உரையிலக்கணமுங் கூறுதலானுணர்க. 40. இங்ஙனங் கூறிய நல்லாசிரிய ரிலக்கணமே கூறியொழிந்தார் எல்லா வற்றான் எல்லா மமையச் செய்யுஞ் சுவடுடையராகி அவ்வத் துறை போயினார் தாமுமென்றவாறுஎன்பது, இங்ஙனங் கூறி அந் நல்லாசிரி யரிலக்கணமே கூறியொழிந்தாரல்லர் வல்லவாற்றான் எல்லா மமையச் செய்யுஞ் சுவடுடை யராகி வகுத்துரைத்தார் அவ்வத் துறைபோயினார் தாமும் என்றவாறு என்றிருத்தல் வேண்டும். என்னையெனின்? இச் சூத்திரத்துக் கருத்துரையுள் பேராசிரியர் செய்யுட்குறுப்பாமென... அவ்வாறு செய்தல் வன்மையாற் கூறினார் என்று கூறுதலானும். நச்சினார்க்கினியரும் விரிவுரையுள் கூறி வல்லிதின் வகுத்துரைத்தனர் என மாறுக எனக் கூறுதலானும், பதவுரையுள். இம்முப்பத்துநான்கும் நல்லிசைப் புலவர் செய்யப்படுஞ் செய்யுட் குறுப்பா மெனக்கூறி, அங்ஙன மிலக்கணமே கூறிவிடாதே. அவற்றைத் தாஞ் செய்தல் வன்மையி னமைந்து சுவடுபட வகுத்த அவ்வத் துறையெல்லாம் போயினார் என்று கூறுதலானும் என்பது. நச்சினார்க்கினியர் உரைத்த பதவுரையுள்ளும் வகுத்த என்பது வகுத்துரைத்தனர் என்றிருத்தல் வேண்டும். என்னையெனின், வகுத்த என்றிருப்பின் இப்பதவுரைக்குப் பயனிலை யின்றி முடிதலானும், கூறிவல்லிதின் வகுத்துரைத்தனர் என மாறுக என அவரே விரிவுரையுட் கூறலானுமென்க. ஏட்டுப் பிரதி சிலவற்றுள் நல்லாசிரியரிலக்கணமே கூறியொழிந்தாரல்ல ரவற்றானெல்லா மமையச் செய்யும் என்று காணப்படலானும். வல்லிதின் என்பதற்கு இவ்விரிவுரையுள் பொருளின்றி முடிதலானும். கூறிவிடாதே என்று நச்சினார்க் கினியருரையுட் காணப்படலானும். யாம் மேற்கூறியவாறே பதவுரை இருத்தல் வேண்டுமென ஊகிக்கப்பட்டது. எல்லாவாற்றான் என்பது தாமோதரம்பிள்ளை பதிப்பிற்பாடம். அது வல்லவாற்றான் என்று மிருக்கலாம். இங்ஙனமன்றிக் கூறியொழிந்தார் என்பதை முற்றாக்கின். வல்லிதின் என்பதற்குப் பொருளின்றாம். ஆதலிற் பொருத்தநோக்கிக் கொள்க. (இவ்வாறு உரைவாக்கியங்களுள் உண்மையறியமுடியாமற் பிறழ்ந்து கிடப்பன பல. அதற்குக் காரணம் ஏடெழுதுவோர். சிதன்முதலியன தின்று இடையிலற்றுக் கிடக்கும் வாக்கியங்களைப் புள்ளிபோடாமற் பின்சேர்த் தெழுதியதும் தாமுஞ் சில சேர்த்து எழுதியதும் மாறிஎழுதியதுமேயாம்.) 41. அச்செய்யுளானே கூறி அவற்றுப் பொருளுரைத்தார் என்றது நல்லிசைப் புலவர் செய்த செய்யுளானே அதற்குரிய உறுப்புக்கள் கூறி. அவ்வுறுப்புகளின் பொருளும் கூறினார் என்றபடி. பொருள் என்றது ஈண்டு இலக்கணத்தை. 42. ஓதல்வேண்டுமே - ஓதல்வேண்டாம்; ஏ - எதிர்மறை. 43. அல்லனே - என்பதில் ஏகாரம் எதிர்மறை. வைத்தானாம் என்று பொருளாம். அல்லனே என்பது அல்லனேல் என்று பாடமிருந்திருத்தல் வேண்டும். இப்பாடமுடிபிற்கு ஓதல்வேண்டுமே என்பதில் ஏகாரம் தேற்றப்பொருளில் வந்ததாகும். 44. கூறலாவதின்மையானும் - கூறும்வழக்கு இல்லாமையானும். 45. உறுப்புடைப்பொருள் - செய்யுள். 46. தளைவேண்டுவார் சிறுகாக்கைபாடினியார் முதலிய ஒருசாராசிரியர். 47. இவர் - தொல்காப்பியர். தளையாதலானும் என்றதன் உண்மையை நோக்குமிடத்து வேறும் எண்ணப்பட்ட வாக்கியமிருந்து சிதைவுற்றது போலத் தெரிகின்றது. 48. பொருள் - உறுப்பு. 49. என்றார்க்கு என்றது - சீரதுதொழிலே தளையாதலின் தளையென ஓருறுப்பில்லை என்றார்க்கு என்றபடி. சீரியைந்தமையைத் தளை என வேண்டாது தளையில்லையெனின்? அசையியைந்ததே சீராதலின் சீர் என ஓருறுப்பும் வேண்டியதில்லையாகும்; சீரியைந்ததே அடியாதலின் அடியென ஓருறுப்பும் வேண்டிய தில்லையாகும் பிறவெனின்? என்க. 50. அவை - சீரும் அடியும். சீரைப்பிரித்து அசைகொள்ளப்படும். ஆதலால் அசை இயைந்ததைச் சீரென வேண்டினார். அடியைப் பிரித்துச் சீர்கொள்ளப்படும். ஆதலிற் சீரியைந்ததை அடியென வேண்டினார்; உறுப்பியைந்ததை உறுப்புடைச் செய்யுளென வேறுவேண்டினாற்போல என்பது அசையியைந்து சீரனெ வேறொன்று காணப்பட்டாற் போலவும் சீரியைந்து அடியென வேறொன்று காணப்பட்டாற் போலவும், சீரியைந்து தளையென வேறோருறுப்புக் காணப்படாமையின் தளையென வேறொன்று இவர் வேண்டாராயினார் என்றபடி. சீர் கூடிய உறுப்பைத் தளையென்று கொண்டால் அதனை அடியெனலாகாது என்றபடி. 51. நாற்சீரடியினை இடைதுணித்துச் சொல்லுவதன்றி என்றது. முதலிருசீரி யைந்து ஒருதலையாயும். மூன்றாஞ் சீரும் நாலாஞ்சீரு மியைந்து ஒருதளையாயுங் கொள்ளப்படுங்கால். அவ்விரு தளைக்கும் (முதலிரு சீருக்கும் பின்னிரு சீருக்கும்) இடையே துணித்துச் சொல்வதன்றி என்றபடி. நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லை. எனவே நான்கு சீராகத் துணித்துச் சொல்லுமாறில்லை என்பது கருத்தாகும். 52. கண்டம் - துண்டு 53. பிறபொருள் - அவ்வடியைவிட வேறான பொருள். அவற்றான் - எழுத்தானுஞ் சொல்லலானும் எதுகை மோனை முதலியன எழுத்துத் தொடை. முரண் முதலியன சொற்றொடை. 54. கூடிற் சீராமன்றோ என்பதும் பாடம். அதுவே பொருத்தம். 55. நாற்சீரடியுள் இருசீரியைந்ததனைத் தளைஎன்று கொள்ளுதலும், இருசீரடியுள் தளைஎன்று கொள்ளாது குறளடியென்று கொள்ளுதலும் வரையறை யின்றி மயங்கக்கூறலாம் என்பது கருத்து. 56. அங்ஙனமன்றி வருமென்றுகொள்ளின். எல்லாவடிக்கும் பொது விலக்கணமாக உறுப்பெனப்படாமையின் அது பொருந்தாது என்றபடி. 57. யாண்டும் வருவன - எல்லா அடிக்கண்ணும் வருவன. எழுத்தும் அசையும் யாண்டும் உறுப்பாய்க் கோடல்போலத் தளையும் குறளடிக் கண்ணும் அல்லாதவடிக்கண்ணும் வருவனவெல்லாம் உறுப்பென்று கொள்ளற்குத் தம்மோடொத்த நூலாசிரியர் கொண்ட தளைஇலக்கணம் இவருங் கோடல் வேண்டும். கொள்ளின் யாண்டுந்தளையு முறுப்பாகக் கொள்ளலாம் என்றபடி. 58. ஈண்டும் - இந்நூற்கண்ணும். 59. அவர் - காக்கைபாடினியார். 60. இவர் - தொல்காப்பியர் 61. தளைகளைதல் - தளையை நீக்கல். 62. இளையரென்று - ஒருசாலை மாணாக்கராதல் பற்றிப் போலும். 63. இதனால் என்பது பின்வரும் தளைவேண்டினார்... ஓராசிரியர் என்னும் வாக்கியத்தைச் சுட்டிநின்றது. 64. குறும்பனைநாடு - கடல்கோட்குமுன் தென்றிசைக்கண் இருந்ததொரு நாடு. 65. அவர் என்றது பிற்காலத்திருந்த காக்கைபாடினியாரை. 66. துணிந்த - வரையறுத்த. 67. துணிவு - வரையறை. துணியினை என்றிருப்பது நலம். துணி - துண்டு - அடி. 68. எண்ணுதல் - அளவு செய்தல். 69. பரம் - மேல். பயனது பாத்துய்ப்ப வரும் என்றும் பாடம். ஆயின் திருக்கோவையாருரையுள்ளும். பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது என்று வருதலின் முன்னையதே பொருத்தம்போலும். 70. இன்றி - இல்லாமல். வருவிப்பது என்றபடி. 71. குறி - பெயர். 72. உயிருடையது - உயிருடைப் பொருள். உயிர் வேறு கூறாமையின் உயிரில்லாததோர் கலவையுறுப்புப் போலக் கொள்க என்றபடி. உயிர் என்றது செய்யுளைக் குறிப்பால் உணர்த்தி நின்றது. 73. அன்ன என ஒப்புக் கூறியதனானே. 74. இம்மாத்திரையளவு என்றது இச்செய்யுளியலிற் கூறும் மாத்திரையளவு என்றபடி. 75. வரையாது - நீக்கப்படாது. 76. பயம் - பயன். 77. இனமூன்று - வல்லினம், மெல்லினம், இடையினம். 78. ஆண்டு என்றது எழுத்ததிகாரத்தை. 79. தோற்றுவாய் செய்தல் - தோன்றுதற் கிடஞ்செய்தல். தொடக்கஞ் செய்தல். 80. உயிர்மெய்த் தொடக்கத்து ஐந்து. உயிர்மெய், உயிரளபெடை, ஐகார ஔகாரப் போலி, ஒற்றளபெடை. ஆண்டு - எழுத்ததிகாரத்தினுள். 81. இரண்டெழுத்தின் கூட்டம் என்றது. உயிர்மெய்யை. 82. மொழி என்றது அளபெடையை. 83. போலி என்றது ஐகார ஔகாரப் போலியை. 84. எழுத்தியல்வகையெனப் பெயர் கொடுத்தது. இச்சூத்திரத்துள் (2) என்க. 85. ஆண்டு நின்றவகையென்றது எழுத்தன்றி எழுத்தின் வகையாய் நின்ற மையை. 86. கூட்டவகையானிரண்டு என்றது - உயிர் மெய்யையும், உயிரள பெடையையும். 87. போலிவகையானிரண்டு ஐ,ஔ. 88. யாழ் நூல் - இசை நூல். ஒன்று - ஒற்றளபெடை. 89. ஓரெழுத்தென்றும் ஓரிரண்டெழுத்தென்றுங் கோடுமோவெனின் என்பது தாமோதரம்பிள்ளை பதிப்பு. 90. முன்னர் - பின். 91. அச்சூத்திரம் - ஒற்றொடு வருதலென்ற சூத்திரம். அச்சூத்திரத்தா னன்றே எய்தியது நோக்கி ஆகாவென்றதென்க. 92. அவை - மெய். 93. நேர் நிரை - நேரும் நிரையும். 94. அன்னதோர் விதி - ஒற்றிடை நிற்குமென்ற விதி. 95. எழுத்தல் ஓசையாகிய குறிப்பிசையை 323-ம் சூத்திர உரையுட் காண்க. 96. மயக்கம் - இடைநிலை மயக்கம். 97. நிலை - முதனிலை; இறுதிநிலை. 98. பனாட்டுப் .’ என்னும் ஓசை நீண்டு காட்டலின் வழு 99. உடம்பொடு புணர்த்தல் என்பதனை உடம்படு புணர்த்தல் (உடம் படுபு உணர்த்தல்) என்று பாடமிருப்பதாக. டாக்டர் உ.வே. சாமிநாதையர் நன்னூல் சங்கர நமச்சிவாயருரைப் பதிப்புட் கூறியுள்ளார். இங்கே உடம்பொடு புணர்த்தலால் அமைந்து கிடந்ததென்றது நேரு நிரையு மென்று கூறிய அசைப்பெயர்களே அவற்றிற் குதாரணமாயமைந்து கிடக்குமாறு சொன்னமையை. 100. அசையாமென்பது என்பதில் முற்றுத்தரிப்பு இருப்பதே பொருத்தம். பின்வரு முதாரணங்கள் சீரின்கண் அசை வந்ததற்குக் காட்டியனவா தலின். 101. சீரின் றன்மைக்கண் வந்தது என்பதில் யாதோ பிழை இருத்தல் வேண்டும். அவ்வாக்கியம் உதாரணங்களை விளக்க வந்ததாகத் தோன்றுகின்றது. அசையாமென்பது வந்தது என்று முடிக்கில் உதாரணம் என்பது பின்வரல் வேண்டும். 102. இரு பிளவுபடாது என்றது வருஞ்சொல்லோடு சேர்ந்து வேறசையாகாமல் ஒருசொல் விழுக்காடுபட நிற்றலை. உண்டுடுத்து இதில் உண்டு என்பது குற்றுகரமேனும் வருஞ்சொல்லோடு சேர்ந்து வேறசையானமையால் நேர்பன்றானமை காண்க. பிறவாறும் பிளவுபடுவன ஆகா என்க. 103. குற்றியலுகரம் மொழி ஈற்றுக்கண் வருதலானே இறுதிநின்று அசையா மென்பதும், முற்றியலுகரம் நிற்றலின்றே ஈற்றடி மருங்கினும் என்ற விதிப்படி அடியீற்றில் நில்லாதெனவே இடைக்கண் புணர்ச்சி வகையான் நிற்குமாதலின் மொழி இறுதிக்கண் நின்று அசையாமென்பதும் பெறப்படும் என்க. புணர்ச்சி வகையான் வந்ததற்கு உதாரணம். நாணுத்தளை, விழவுத்தலைக் கொண்ட என்பன. இவற்றில் வருமுகரம் புணர்ச்சி பற்றி வந்தன. நாண் உகரம்பெற்று நாணு எனவும். விழா என்பது குறுகி உகரம்பெற்று விழவு எனவும் நின்றன. எழுத்ததிகாரம் நோக்குக. 104. இறுதிக்கண் நேரசையல்லது நிரையசையடுத்து வருதலின்மை யானும் என்பதில் அல்லது என்பதை நீக்கிக்கொள்க. நுந்தை, நேரசை யிறுதிக் கண்ணும் நிரையசை யிறுதிக்கண்ணும் அடுத்துச் சின்னுந்தை. இராநுந்தை என வரும். அப்போது, முறையே நேர்பு நிரைபு ஆகாது. எனவே குற்றுகரம் இறுதிக் கண்ணே வந்து நேர்பு நிரைபு ஆகும் என்றபடி. இதனை 9-ம் சூத்திர உரை நோக்கியறிக. 105. குற்றெழுத்துக்குப்பின் வரும் உகரம் அது என்பது போல்வது இது முற்றுகரமாவதன்றிக் குற்றுகரமாய் நேர்பசை யாகாது. 106. மின்னு - குறிலொற்றின்பின் வந்தது. நாணு - நெடிற்பின் வந்தது. உருமு - குறிலிணைப்பின் வந்தது. குலாவு - குறினெடிற்பின் வந்தது. ஒரு சாரார் என்றது. சிறுகாக்கை பாடினியார் முதலானோரை. அமையாதே - அமையாதா? 107. ஞாயிறு - நேர்நிரை. இதில் யிறு குறிலிணையாக வைக்கப்படும். என - என்னுமென்று மிருக்கலாம். 108. முற்றுகரமும் அமையுமென்பது என முடிக்க. தேமா என என்பது தேமா என்பது என்றிருத்தல் வேண்டும். 109. நேர்பு நிரைபு எனக் குற்றுகரத்தை வேறசையாக வேண்டாதாரும் குற்றுகரத்தைக் குற்றெழுத்தாக வைத்தே அசைகொள்வர். ஆதலின் இவ்வாசிரியரும் ஞாயிறு முதலியவற்றை மாத்திரம் குற்றெழுத்தாக வைத்து அசை கொண்டார். ஆதலின் யாண்டும் அவ்வாறு கோடல் வேண்டுமென்பது நியதியன்று. ஆதலின் அற்றன்று என மேலே கூட்டுக. என்றார்க்குக் கூறுப என இயைக்க. அவர் என்றது குற்றுகரத்தைக் குற்றெழுத்தாகக் கொள்ளும் ஒரு சாராரை. 110. வேண்டினானை என்றது குற்றுகரம் வேண்டினானை என்றபடி. வேண்டினான் - குற்றுகரத்தை (நேர்பு நிரைபு என) வேறசையாக வேண்டினான்; என்றது இந்நூலாசிரியரை. 111. ஒற்றுப்போல ஓரசையுள் ஒடுக்கி அலகிடப்படும் என்றது வரகு என்புழி கு என்பதை ஒற்றாகக்கொண்டு வர என்பதை நிரையசையாகக் கோடலை. அலகு வைத்தல் என்றது கு என்பதையும் குற்றெழுத்தாகக் கொண்டு வருகு என்பதை நிரைநேர் எனக் கோடலை. குற்றுகரம் ஒற்றுந் தானுமாகி அரை மாத்திரை என்றது ஒற்றுக்குரிய அரைமாத்திரை தன்னுள் அடங்கத் தான் தனக்குரிய மாத்திரையோடு நிற்றலை. தனி மெய்யாயின் ஒடுங்கி யிசைக்கும்; மெய்யின் மேல் அரைமாத்திரையான் குற்றுகரமுஞ் சேர்ந்து நிற்றலின் அகன்று இசைக்கும் என்றார். ஒடுங்கியிசைத்தல் முன்னின்ற ஓரசையுள் ஒடுங்கயிசைத்தல். நாள் என்றவழி முன்னின்ற நெட்டெழுத்துள் மெய் ஒடுங்கி இசைத்தலும் நாடு என்றவழி டுகரம் ஒடுங்கி யிசையாமையும் செவி கருவியாகவுணர்ந்து கொள்க. செயற்பாலது ஓரசையாக்குதல் எனக் கண்ணழிக்க. நேர்பு அசை நிரைபுஅசைகளைத் தொல்காப்பியர் கொண்டமைக்கு இளம்பூரணர் கூறுங் காரணத்தையும் ஈண்டுக் காட்டுதும். அது வருமாறு:- அஃதேல் நேர்பசை நிரைபசையெனக் காக்கைபாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை இரண்டசை யாக்கி உரைத்தாராயினும், அதனை முடிய நிறுத்தாது. வெண்பாவீற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற்சீரைத் தேமா புளிமா என்னுமுதாரணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்று மென்றஞ்சி, காசு பிறப்பு என உகர வீற்றா னுதாரணங் காட்டினமையானும், சீருந் தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகுபெறாதென்றமையானும், வெண்பா வீற்றிலும் உகரஞ் சிறுபான்மை வருமென உடன்பட்டமையானும் நேர்பசை நிரைபசை என்று வருதல் வலியுடைத்தென்று கொள்க. என்பதே. 112. அடக்கார் - அடக்கான் என்றிருப்பது நலம். 113. கொள்ளார் - கொள்ளான் என்றிருப்பது நலம். 114. நிலப்படை என்றது ஓசைக்கு இடமாகிய எழுத்தை. 115. அலகு சிதைத்தல் - அசைக்குரிய எழுத்தாகக் கொள்ளாது விடல். 116. முற்றுகரம் ஈற்றில் நின்று நேராதற்கன்றி நிரையாதற்கு உதாரணம் காணப்படவில்லை. ஆதலின், நிரை என்பது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. நேராக்கப் பெறாவோ எனின் என்றிருப்பது நலம். 117. அதுவும் என்றது முற்றுகரத்தை. அது என்றது குற்றுகரத்தை. வண்டு என்று முடியினும் கொல்லு என்று முடியினும் நேர்பசையாகக் கொள்ளப்படும் என்றவாறு. 118. முடியா என்றது வெண்பாட்டீற்றடியை. 119. அம்முற்றுகரம் என்றது மின்னு முதலியவற்றிலுள்ள முற்றுகரங்களை. இவை நிலைமொழிபற்றித் தோன்றுதலை எழுத்ததிகாரம் புள்ளிமயங் கியலிற் காண்க. 120. ஆட்சி என்றது ஆசிரியர் சூத்திரங்களில் ஆளுதலை. 121. இயலசை யிரண்டு - நேர் நிரை. 122. நேரின் பெயரையும் நிரையின் பெயரையும் நேர்புக்கும் நிரைபுக்கும் ஆக்கிக்கொண்டமையின் ஆகுபெயராயிற்று. 123. குறிலிணைந்தவழி, குற்றுகரமாகாதென்பது பெறுதுமென்றது நெட்டெழுத் திம்பர் (எழுத்து - நூன்மரபு) என்றதனால் அது இது எனவரும் தனிக்குறிலின் பின்வரும் உகரம் விலக்கப்பட்டதென்பது பெற்றமையை. இச் சூத்திரத்தையும் முற்சூத்திரத்தையும் ஒன்றாக்குவர் இளம்பூரணர். 124. எஞ்சுதல் - ஈண்டு மாத்திரை குறைதல். ஞாயிறு அரைமாத்திரையான குற்றுகரமேனும் பாதிரிபோலச் சீர்கோடலின் குற்றுகரம் குற்றெழுத்தாகக் கொள்ளப்பட்டது. 125. நுந்தையென்னு முதற்கட் குற்றுகரமும் தேமாப்போலக் கொள்ளப்படும் என்றபடி. 126. அவை - இயலசை. இயலசை செய்யுந் தொழிற்குரியது உரியசை யென்றவாறு. 127. நிரைந்தமையின் என்று மிகுந்திருக்கலாம். 128. நிரையசை ஆகாமல் மூன்றெழுத்தும் தனித்தனி நேரசையாதலும் பின் இரண்டுங் குறிலிணையாக ஒன்று நேரசையாதலும் முதற் கண்ணேயோ எனவும் எய்தியதென்க. ஆகாது என்பதில் விடப்பட்டது. 129. விட்டிசைத்தல் - பிளந்திசைத்தல். 130. அது - நேரசை. முதலசையென விதந்து ஓதல் வேண்டா என்றபடி. 131. விட்டிசைத்து மொழிசிதையாது நிற்றலின் மின்னு என்பதுபோல நேர்பசையாகக் கொண்டாலென்னையெனின்? இஉ என்று பிளவுபட்டி சைத்தலின் நேர்பு என்று கொள்ளலாகாதென்றபடி. 132. இயற்றே என்பதில் ஏகாரம் தேற்றம் என்றபடி. 133. மியாயிக - குற்றியலிகரம் நீக்க நேர் நிரை. தியாதெனில் - நேர் நிரை. 134. நாகியாது - நேர் நேர்பு. வரகியாது - நிரை நேர்பு. 135. முந்தியாய் என்பதை முந்தி என்று இகரவீறாகப் பிரிக்கின் குற்றியலிகர மாகாது. நினக்கியான் என்பது இகரவீறாகப் பிரிக்கமுடியாதாயினும் சான்றோர் செய்யுளல்லவென்றதனால் மறுக்கப்பட்டது. 136. இனி ஒற்றியற்று என்பதற்கு ஒற்றியற்றுமாம் எழுத்தியற்றுமாம் என்று பொருள் கொண்டு ஒற்றாக நீக்கவும்படும்; எழுத்தாகக் கொண்டு அலகிட வும்படும் என்பாருமுளர். அங்ஙனம் உம்மைத் தொகையாகக் கோடற்கு ஒற்றினையும், உயிரிலெழுத்தும் என்ற சூத்திரத்துள் எழுத்தென்றே கூறலின். ஒற்றும் எழுத்தெனப்பட்டு எழுத்தென்றதனுள் அடங்குமாகலின் அங்ஙனம் உம்மைத் தொகையாகக் கோடல் பொருந்தாதென்றபடி. இவற்குப்பின்னுள்ள நச்சினார்க்கினியரும் ஒற்றும் எழுத்தும் என்று பொருள்கொள்வர். 137. புணர்ச்சிக்கண் வந்த உகரம் - மின்னு பன்னு உரிஞு பொருநு முதலியன. 138. நிலைமொழி ஈறுகெட்டுநின்ற உகரம் - மேவுஞ்சீர் - மேவு சீர் எனவும். விரவுங்கொடி - விரவுகொடி எனவும் மகரங்கெட்டு நின்றாற்போல்வன. 322ம் சூத்திர உரை நோக்குக. 139. வருமொழித் தொழிலாகிய ஒற்று உறுப்பாவன என்றது நாணுத்தளை. சேற்றுக்கால் என்பன போல்வனவற்றில் வருவன. நாணுத் சேற்றுக் என்றாலும் ஒற்று உறுப்பாக நேர்பு என்றே கொள்ளப்படும். குற்றியலுகரமு முற்றியலுகரமும் - ஒற்றொடுந் தோன்றி நிற்கவும் பெறுமே என்பது சூத்திரம். வருமொழி யுகரம் நாணுடை அரிவை என்பனபோல்வன வற்றில் வருவன. அவை நாணு எனப் பிரித்து வாங்கி நேர்பசையாக்கப் படா என்றபடி. 140. ஈற்றடி - அடியிறுதி என மாற்றப்பட்டது. அடியிறுதிக் கண் நிற்றலின்று எனவே. இடைநிற்கும் என்றபடி. அடியிறுதிக்கண் நிற்றலில்லை என்றது. அக் காலத்து வழக்குப்போலும். இக்காலத்துச் செய்யுள்களுள் கோலு - வாரு. புல்லு. கதவு. என வழங்குகின்றன. இவ்வழக்கினைப் பேராசிரியர் மரூஉ வழக்கெனப் பின் இச்சூத்திர உரையுள் எடுத்துக்காட்டி மறுப்பர். 141. இடை நில்லாதனவல்ல என்றவாறு எனவும் பாடம். 142. இலேசு - மிகை. ஈண்டு மிகை என்றது முறியலுகரமும் என்பதிலுள்ள உம்மையை. குற்றியலுகரத்துள் நுந்தை ஒன்றே முதற்கண் வரும் குற்றுகரமாய் நின்று வருதலின் அதன் சிறுபான்மை நோக்கி இலேசினாற் கொண்டானென்றபடி. எனவே நுந்தை என்பதும் வருமொழியாய் வருங்கால் வருமொழியைச் சிதைத்து வாங்கி நிலைமொழியோடு சேர்த்து நேர்பு நிரைபு கொள்ளப்படாது என்றபடி. 143. வார்முரசு பரன்முரம்பு என்பன மூவசைச் சீராகக் கொள்ளப்படுமன்றி, வார்மு பரன்மு எனப் பிரித்து நேர்பு நிரைபாகக் கொள்ளப் படுதலின்று என்றபடி. 144. சின்னுந்தை. இராநுந்தை என்பன மூவசையாயன்றி. சின்னுந் - நேர்பு. இராநுந் - நிரைபு என்று கொள்ளப்படா. 145. நாண் - தளை என்பது உகரம்பெற்று நாணுத்தளை எனப் புணர்ந்தது. நிலைமொழித் தொழிலென்றது - நிலைமொழியாகிய நாண் என்னும் மொழியின் ணகரவீறு தகரத்தோடு மயங்கமாட்டாமை பற்றியே உகரம் வந்ததாகலின் வருமொழிபற்றி வந்ததன்றாம். அதனால், நாணு என ஒரு சொல்லாய் நேர்பு என்றாம் என்றபடி. 146. விழா என்னும் ஆகாரவீறு தலை என்பது வருங்கால் ஆகாரம் அகரமாய் உகரம்பெற்று விழவுத்தலை எனப் புணர்ந்த தாகலின் விழவு என்பது நிரைபு என்றாம் என்றபடி. 147. சொல்லுதும் என்பது சொல்லும் என்றிருத்தல்வேண்டும். 148. மேவுஞ்சீர் என்பதில் இறுதிகெட்டு மேவுசீரென நின்ற வழி மேவு என்பது நேர்புஆம். பிறவுமன்ன. 149. அவ்வாறு என்றது ஆகாரஈறாகக் கொள்ளப்படுமென்றபடி. 150. புல்லு, கதவு என்பனவற்றிலுள்ள முற்றுகரம் பிற்காலத்து மருவி வந்தது என்பது கருத்துப்போலும். 151. என்றதனானு மென்றிருத்தல்வேண்டும். 152. முன்னர் என்றது 321-ம் சூத்திரத்தை. அதனுள் ஈற்றுகரம்பற்றி ஒற்றுத் தோன்றுமென்பது உய்த்துணரப்பட்டது. அதனை உணர்த்தற்கே பின் வாக்கியமெழுந்தது. 153. எழுத்தியல் வகைக்கும் இஃதொக்கும் என்றது மாத்திரையைக் கொண்டு எழுத்துக்களையும் இன்னோசைத்தாக்கலுக்கும் இஃதொக்கும் என்றபடி. 154. வெறுத்திசை - வெறுக்கப்படும் இன்னா ஓசை. ஒழுகிசையென்பது வெறுத்திசையின்மை என்னுந் தண்டியலங்காரச் சூத்திரத்துப் பழைய உரை நோக்குக. இவ்வுரையாசிரியரே இன்னோசையும் இன்னா ஓசையுமெனக் கூறுதலானும் வெறுத்திசை இன்னாவோசை என்பதறியப்படும். 155. நீடுகொடி - நேர்பு நிரை. இதனைப் பிறர் வகையுளி செய்து மாவருவாய் ஆக்குவர். 156. வகையுளியாவது நீடுகொடியை மாவருவாய் எனவும், வாழ்வார் என்பதை வாழ்வார் எனவும் பிரித்து வகுத்தல். ஒரசையாய் Ãற்கntண்டியஎGத்தைtறாகப்பிÇத்தும்ஒUrல்லாய்நி‰கவேண்டியஅiசகளைtறாகப்பிÇத்தும்சீ®rய்தலின்வiகயுளியாயிற்று.நீLbfho என்பதனை நேர்பு நிரை என்று கொள்ள வேண்டும். அதனை வகையுளி செய்வோர் நீ எனவும் டுகொ எனவும் டி எனவும் பிரித்து மாவருவாய் ஆக்குவர் என்றபடி. இது எழுத்து வகையுளி. நீடுவாழ்வார் என்புழி வாழ்வார் என்னும் ஒரு சொல்லில் வாழ் என்பதனைப் பிரித்து நீடு என்பதனோடு சேர்த்து நீடுவாழ் எனவும் வார் என்பதை வேறு அசைச்சீராகவும் கோடல் வகையுளியாமென்க. இது சொல் வகையுளி. 157. இக்காட்டிய அலகிடுகை என்றது இங்கே காட்டிய அலகிடுகையை. அஃதாவது, பன்னிரண்டு எழுத்தடி முதலியவற்றிற்கு நான்கு சீர்க்கும் வெண்சீரைக் கொடுத்து அலகிட்டமையை. இவைகளை நீட்டியுச்சரிக்கக் கலித்தளைதட்டுத் துள்ளலோசை பிறக்கும் என்பது பேராசிரியர் கருத்து. அதனை இச்சூத்திர உரை இறுதியில் மற்று அதன்கண் துள்ளலோசை பிறந்ததா வெனின், அவற்றுக்கண் ஒரு மாத்திரை கொடுப்பத் துள்ள லோசை பிறந்ததாயினும் ...... அங்ஙனம் நீட்டிச் சொல்லாது அகவ லோசைப்படச் சொல்லுகவென்பது இதனாற் பெற்றாமாகலின் என்பதனானறிக. இனி இயற்சீர் வெண்டளையன்றி வெண்சீர் வெண்டளை கலிக் கண்வரின் அது அலகிடு முறையாற் கலித்தளையாகக் கொள்ளப்படும் என்பது இதன்கண் பின்வரு முரையாற் பேராசிரியர் காட்டலானும் 383-ம் சூத்திர உரையுள் அளவுஞ் சிந்துமல்லாத ஏறிய நிலமெல்லாம் வெண்பாவுங் கலிப்பாவுந் தம்மில் தளைவகை யொக்குமென்றனாகலின் என்பது என வருதலானும் 373-ம் சூத்திர உரையானும் அறிக. இங்ஙனங் கொள்வது சீர்வகையடிக்கன்றிக் கட்டளையடிக்கன்று என்பது பேராசிரியர் கருத்து. கட்டளை யடிக்காயின் வெண்சீ ரீற்றசை யியற்றே என்னுஞ் சூத்திர விதிப்படி கொள்ளப்படுமென்பது அவர் கருத்து. அலகிடு முறை என்றது பன்னிரண்டு எழுத்தடிக்கு மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் என அலகிட அது கலித்தளையாதலும் அப்பன்னிரண் டெழுத்தடிக்கே மாசேர் வாய் மாசேர்வாய் பாதிரி பாதிரி என அலகிட வெண்பாவடியாதலும் ஆகிய முறையை. (அலகிடல் - எழுத்தெண்ணி அசைசீர் அடிகளை வகுத்தல்.) இதனைப் பின் பேராசிரியர் கூறுமாற்றானு மறிக. இன்னும் இதனை 380-ம் சூத்திர உரை நோக்கியும் அறிந்துகொள்க. 158. காருருமு - நேர் நிரைபு. 159. பாதிரி - நேர் நிரை. 160. நரையுருமு - நிரை நிரைபு. இவை இயற்சீர்கள். 161. ஞாயிறு என்பதில் குற்றியலுகரம் குற்றெழுத்தாகக் கொள்ளப்பட்டு நேர் நிரையாய் நிற்றலின் நிரையின்பின் புலி என்னும் நிரைவந்த ஆசிரியத் தளையாகும். 162. நேரொன்றியது கலித்தளையாதற்கு விதி வெண்சீரீற்றசை நிரையசை யியற்றே (29) என்பதனாற் கொள்ளப்படும். 163. சீர் அடங்காது கூடியும் வகுத்துணர்த்தியது என இயைக்க. 164. நாட்டியும் என்னும் முன் பாடம் பொருந்தாது என்னை? யாப்பென்னும் உறுப்பாவது குறித்த பொருளை நாட்டுவதே என அதனை விளக்கவந்ததாகலின். (8 - ம் சூத்திரம் நோக்குக). ஆதலால் முடிய நாட்டும் யாப்பு என அதற்கடையாய் வந்ததென்க. பவானந்தம்பிள்ளை பதிப்பு நோக்குக. 165. எழுத்தலோசை - குறிப்பிசை. 166. கஃறு என்பது - குறிப்பிசை. இஃது ஒலிக்குறிப்பு. 167. அகவலோசை மூன்றாவன; ஏந்திசையகவல் தூங்கிசையகவல். ஒழுகிசை யகவல் என்பன. ஏந்திசையகவல் நேரும் நேருமொன்று வது. தூங்கிசை யகவல். நிரையும் நிரையுமொன்றுவது ஒழுகிசை யகவல் நேரும் நிரையுங் கலந்து வருவது. செப்பலும் ஏந்திசை தூங்கிசை என மூன்று வகைப்படும். வெண்சீர் வெண்டளையான் வருவதும் இயற்சீர் வெண்டளையான் வருவதும் இரண்டுங் கலந்து வருதலுமென முறையே கூறுவர். இங்ஙனமன்றி வேறுவேறுங் கூறுவர். (யாப்பருங்கல விருத்தி நோக்கு.) 168. வகுத்துணர்த்துவாரென்றது. பிற்காலத்துச் சங்கயாப்பு உடையாரையும் யாப்பருங்கலமுடையாரையும். அதற்குமுன்னமுளர் போலும். 169. தோன்றுமென்க என்பது தோன்றுமாதலின் என்றிருத்தல்வேண்டும். அங்ஙன மாயினும் அவை என்பன வேண்டியதில்லை. சீர்பற்றி ஓசை வேறுபடலின் மும்மூன்றாக வரையறுக்கப்படா என்பர் நச்சினார்க் கினியரும். 170. உதாரணங்களோடு சேர்த்தி ஒக்கும் வகையா னோசை யூட்டல் என்பதை ஒரு செய்யுளில் வைத்து விளக்குங்கால் எக்கர் ஞாழல் செருந்தியோடு கமழும் என்னுமடியுள் வரும் எக்கர் - தேமா, செருந்தியொடு - கருவிளம். கமழும் - புளிமா என்று சேர்த்திக்காட்டி அவைபோல ஓசையுறச் செய்தல். வலித்தல் - நிச்சயித்தல். தேமா புளிமா முதலிய உதாரணங்களைச் சீராகக் கொண்டு செய்யுட் சொற்களோடு சேர்த்தியாம். மேற்கூறியவாறு ஓசையூட்டிக் காட்டுதல் யாப்பருங்கல விருத்தியுட் சீரோத்துட் காண்க. 171. ஆசிரியர் தேமா புளிமா முதலிய சீர்களென்று விதந்து கூறாது செய்யுளில் வரும் எல்லாச் சொல்லுக்கும் பொதுவாகவே அசையுஞ் சீருமென்று கூறினமையானே அவைகளை சீராகக் கொண்டு அவற்றைச் செய்யுளில் வரும் சொற்களோடு சேர்த்தி ஓசையூட்டிக் காட்டல் பொருந்தாது. அங்ஙனங் காட்டுவது அவற்றையே சீர் என்று குறித்தார்க்குப் பொருந்தும் என்றபடி. 172. கடியாறு என்பதை நிரைநேர்பு என்று கொள்ளாது றுகரத்தை நேராகக் கொண்டால் வெண்சீராக்கலாம். ஒருமாத்திரை யகர ஆகாரத்தை நீட்டுவதாற்றான் அங்ஙனங் கொள்கின்றனர்போலும். 173. வருமாகலின் என்பது - ஏது. 174. ஒரு மாத்திரை கொடுத்தல் ஆகாரத்தை ஒரு மாத்திரை நீட்டிச் சொல்லல். 175. யாப்பினும் - யாத்தாலும். 176. பகுத்துப்பதமாகிய அற்றுச் சேறல் - பகுக்கப்பட்டுப் பதமாகும்படி அற்று அற்றுச் சேறல். பதமாகிய - பதமாகும்படி. அறுதல் - இறுதலென்றிருப்பினு மமையும். அது பின் இடையிடையிற்று வரல்வேண்டுமென்பதனானு மறியப்படும். அற்றுச் சேறலுக்கு எழுவாய்ச் சொற்கள். பதமாக்கியவற்றுச் சேறல் என்று மிருந்திருக்கலாம். 177. பாணி - தாளம். 178. இலயம் - தாளவறுதி. 179. சீர் - சீர்த்தல். 180. தொழிற்படுத்தல் - சீர்த்து என்று தொழிற்படுத்தியது. 181. அலகு பெறல் - ஈரசை மூவகை என்று அலகு பெறல். அலகு - எண். 182. அது என்றது இறுதலை. 183. இதனானே - இறுதலென்றதனானே. ஓரோவழிப் புணர்ச்சி விகாரமெய் தாமை என்றது. பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து என்ற உதாரணத்தில் பேர்ந்து என்பதன்கணுள்ள உகரம். எல்லாவிறுதியு முகர நிறையும் என்ற புணர்ச்சி விதியைப் பெறாமையை. பெறுமாயின் முற்றுகரமாகக் கொள்ளப்பட்டு, வருஞ் சீராகிய சென்று என்ற சீரோடு சேர்ந்து பேர்ந்து சென்று என நின்று நேர் நிரைநேர் என முச்சீராகவும் கொள்ளப்படும். இற்று (பிரிந்து) நிற்றலினாலே அவ்விதி பெறாமல் குற்றுகரமாகவே கொள்ளப்பட்டு நாலெழுத்தடியாயிற்று என்றபடி. சார்ந்து என்பதற்கும் இவ்விதி ஒக்கும். 184. எல்லாவிறுதியு முகர நிறையும் எழுத்ததிகாரம் 408-ம் சூத்திரம். நிறையும் என்றதனால் குற்றுகரம் முற்றுகரமாக வைக்கப்படும் என்பது கருத்து. இது ஒரு வழுவமைதி என்பர் பேராசிரியர். (செய். 316-ம் சூத்.) 185. எழுத்தடி - நாலெழுத்தடி என்றிருப்பது நலம். ஓரெழுத்துச்சீர் நான்காய அடி. 186. உண்மையின் வலியுடைத்து என இயைக்க. வல்லொற்றுக் குற்றுகரத்தால் நாலெழுத்தடி வேறுண்மையினென்றது போட்டுப் போட்டுப் போட்டுப் போட்டு என வன்றொடர்க் குற்றுகரத்தான் வரின் டகரவுகரம் அடுத்த சீரோடு முற்றுகரமாக நின்று சேரமுடியாது வல்லொற்றாற் பிளவுபட்டுக் குற்றுகரமாகவே நிற்றல்பற்றி. எனவே பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து என்பது அவ்வாறு பிளவுபட்டிசைத்துக் குற்றுகரலோசையை வன்றொடர் போலத் தாராதாயினும் வன்றொடாக் குற்றுகரம் எப்படி நாலெழுத்தடியாகக் கொள்ளப்படுகின்றதோ அதுபோல இதுவும் இற்றுவருதலாற் கொள்ளப்படும் என்பது கருத்து. 187. தொழுதுநின்றதுவே என்பது தொழுதுநின்றதுவே எனப் பிளவுபட்டு வேறு சீராயவழி முற்றுகரமாகிப் புணர்ச்சி. அதுவே எனப் பிரிந்து உடம்படு மெய் பெற்றது முற்றுகரப் புணர்ச்சி. இவ்விதி சிறுபான்மை. 188. ஓரசை - நேர்பு நிரைபு. இவை சீராயினும் சீரென்றோதப்படா. ஓதில் அசைச்சீர் என விதந்தோதுப. முன் - முன்னர். இது வேண்டியதில்லை. 189. நாலசையானும் ஐந்தசையானும் வருஞ்சீர் என்றது பின்வரும் உண்ணா நின்றான், அலங்கரியாநின்றான் என்பவைகளை. உண்ணாநின்றான் இது நாலசை. அலங்கரியாநின்றான் இது ஐந்தசை. இரண்டுசொல் விழுக்காடுபட நிற்றல் என்பது உண்ணா என்பது ஒரு சொல்லும். நின்றான் என்பது ஒரு சொல்லும். அலங்கரிய என்பது ஒரு சொல்லும். நின்றான் என்பது ஒரு சொல்லுமாகப் பிரிந்து இரண்டுசொல் விழுக்காடுபட நிற்றலை. விழுக்காடு - விழுதல். 190. இரு சீரடியான் வரும் வஞ்சிப்பாவினுள் நாற்சீரானாய ஆசிரியவடி மயங்கி வருதலுமுண்டு. அவ்வாசிரியவடியினை நாலசைச் சீராக்கி இருசீர் வஞ்சியடியாகவுங் காட்டலாம். அங்ஙனங் காட்டின் நாலசையாகப் பிரிக்கப்பட்ட அவ்விருசீரடி யானே வஞ்சிக்குரிய தூங்கலோசை பிறவாமையானும் அந்நாலசைச் சீராகக் காட்டிய இருசீரடி. ஆசிரிய வடியைப் பிரித்துச் சேர்த்தமையினாலே இருசீரியைந்து ஒருசீராமை நில்லாமை யானும் அந்நாற் சீரடியை ஆசிரியன் கொள்ளான் என்றபடி. நாற்சீர் கொண்ட ஆசிரிய வடியினை இருசீரடியாகப் பிரிக்கலாம் என்பதற்கு உதாரணம். அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதன் மட நோக்கி நேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை. என்னும் பட்டினப்பாலை யடிகளுள் பின்வந்த அகவலடியிரண்டும் நாலசை வஞ்சிச்சீராகப் பிரித்தற்கேற்றவாறு காண்க. 191. நாலசைச்சீர் கொண்டார் சிறு காக்கைப்பாடினியார். அமுதசாகரர் இதனைப் பொதுச்சீர் என்பர். 192. கேடில் - நேர்நேர், - தேமா. விழுப்பொருள் - நிரைநிரை, - கணவிரி தருமார் - நிரைநேர், - புளிமா. பாசிலை - நேர்நிரை, - கூவிளம். - இவை இயற்சீர் நான்கு. 193. வீற்றுவீற்று - நேர்புநேர்பு, - வீடுபேறு. வசிந்துவாங்கு - நிரைபுநேர்பு, - வரகுசோறு பூண்டுகிடந்து - நேர்புநிரைபு, - பாறுகுருகு. இறவுக்கலித்து - நிரைபுநிரைபு, - தடவுமருது. - இவை ஆசிரிய உரிச்சீர் நான்கு. 194. ஆட்சி - எடுத்தாளல். குணம் - இயல்பு. 195. ஒரோஒன்று - ஒவ்வொன்று. 196. இயலசை - நேர்நிரை என்பன. 197. அரிது - அருமை; இல்லை. 198. சொல்லின் முடியு மிலக்கணமென்றது இயல் என்ற சொல்லிலேயே அதனிலக்கணமு மமைந்துகிடத்தலின் அதனான் அது முடியும் என்றபடி. எனவே இயல் என்ற சொல்லானே நான்கு பாவிற்கும் இயன்று வரும் என்பது பெறப்படும் என்றதாயிற்று. 199. உரிய என்றதற்கு எழுவாய் - இயற்சீர். 200. மூன்றுபா - அகவல் வெண்பா கலி. 201. வருமென்ப துடன்பட்டமையானும் என்னும் பாடம் S. கனகசபாபதிப் பிள்ளை பதிப்பிலும் பவானந்தம்பிள்ளை பதிப்பிலும் உள்ளது. சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பில் வருமெனப் பட்டமையானும் என்றிருக் கின்றது முந்தியது நலம். 202. ஓரோர் சொல் - தனித்தனிச் சொல். 203. இனி இவ்வியற்சீர்தாமும் இரண்டுசொற் கூடியு மென்றாகியவழியே சீரெனப்படும் என்றது புளி என்ற சொல்லும் மா என்ற சொல்லுமாகிய இரண்டு சொல்லுங் கூடிப் புளிமா என ஒரு சொன்னீர்மைப்பட்டு நின்ற வழியே ஒரு சீரெனப்படுவது என்றபடி. அவ்வியற்சீர் போலவே உரிச்சீரும் இருசொற் கூடி ஒரு சொல்லாய் நின்றவிடத்துச் சீராம் என்க. 204. இவையும் - உரிச்சீரும்; தொகைச் சொல்லெல்லாம் ஒரு சென்னீர்மை யாகக் கொள்ளப்படும் என்றபடி. 205. ஒழிந்த இயற்சீர் என்றது நேர்புநேர், நிரைபுநேர், நேர்புநிரை, நிரைபுநிரை என்பவற்றையும் இவை மாறி வருவனவற்றையும். அடுத்த சூத்திரங்கள் பார்க்க. 206. ஆசிரியன் ஆளுமாகலின் என்க. 207. அன்னவாகும் - இயற்சீர்போலாகும். அதனொடு மாட்டுங்கால் அதன் ஈற்றிலுள்ளதாய் அதிகாரப்பட்டு நின்ற நேர்நிரை. நிரைநிரை என்னு மிரண்டனோடும் மாட்டப்படும் என்றபடி. நேர்நிரை - பாதிரி. நிரைநிரை - கணவிரி. ஈற்றது - ஈற்றிலுள்ள நிரை. 208. ஓங்குமலை - நீடுகொடி - பாதிரி. 209. உவவுமதி - குளிறுபுலி - கணவிரி. 210. முன்னிரு செய்யுளடிகள் ஆசிரியத்துள்ளும் பின்னிரு செய்யுளடிகள் வஞ்சியுள்ளும் வந்தன. 211. துணை - அளவு. 212. இப்பகுதி - கட்டளையடிக்கண் வருதலும். அல்லாத அடிக்கண் வராமையும் என்ற பகுதி. உறழ்தல் - பெருக்கல். கட்டளையடி. அல்லா அடி என்ற வகுத்துணர்தல் ஓசைபற்றி என்பது இதனால் அறியப்படுவது பயன் என்றபடி. 213. அதிகாரத்தால் - இறுதியில் நிரையீறு அதிகாரப்பட்டு நின்ற அதிகாரத்தால். 214. இவை - விறகுதீ போதுபூ முதலிய நேரீற்றுச்சீர்கள். 215. அசைதிரிந்து நிரையாகாதென்றது - போதுபூ என்றவழி குற்றுகர மாகிய துவ்வும் நெடிலாகிய பூவும் இயைந்து நிரையீறாகாது நேர்பு என நின்ற படியே நேரைமாத்திரம் நிரையீறாக வைக்கப்படும் என்பது கருத்து நச்சினார்க்கினியம் நோக்குக. 216. எழுதளை என்றது ஆசிரியத்தளை இரண்டு. வெண்டளை இரண்டு. கலித்தளை ஒன்று, வஞ்சித்தளை இரண்டு. 217. வேறுவேறுபட்ட அசை என்றது இயலசையும் உரியசையும் சேர்ந்து வருதல் பற்றி. அசைச்சீர் என்றது ஈண்டு இயலசைச்சீரை. இயலசைச்சீர் நான்கனுள்ளும் நிரையீற்றுச் சீருள் நேர்பு நிரைபு முதலாகவரும் நிரையீற்றையும் நேரீற்றையும் அடக்கற்க என்றபடி. அசைச்சீர் என்பது இயலசைச்சீர் என்றாயினும் இயற்சீரென்றாயினும் இருத்தல்வேண்டும். முன்னும் பின்னும் இயலசை என்றே உரையுள் ஆளுதல் நோக்குக. இதற்கு - இயலசைச் சீர்க்கு. இஃது உரியசை பெற்று வருஞ்சீர். 218. நீத்துநீர் - போதுபூ. நிவந்துசென் - விறகுதீ. 219. ஆசிரிய உரிச்சீரென்றது - நீடுகொடி. குளிறுபுலி என்னும் நிரையீற்றுச் சீரிரண்டையும். ஒருங்கியைதல் என்றது அவ்வாசிரிய உரிச்சீர் இரண்டும் உரிச்சீரென ஒருங்கியைதல்போல இவ்வியற்சீரிண்டும் இயற்சீரென ஒருங்கியைதலை. 220. இயலசைமுன் உரியசை வந்தன - நேர்நேர்பு. நேர்நிரைபு. நிரைநேர்பு. நிரைநிரைபு என்பன. இவை இரண்டனுள் முன்னிரண்டும் பாதிரி போலவும், பின்னிரண்டும் கணவிரிபோலவும் நிரையீறாக வைத்துத் தளை கொள்ளப்படும். 221. இவற்றை என்றது நேர்நேர்பு முதலிய நான்கையும். நேர்நேர்பு - போரேறு. நேர்நிரைபு - பூமருது. நிரைநேர்பு - கடியாறு. நிரைநிரைபு - மழகளிறு. என்று வாய்பாடு கொள்ளப்படும். 222. சீர்நிலை என்றது ஆ அ என்புழி நேர்நேர் எனச் சீர் கோடலை. 223. எழுத்துநிலை என்றது ஆ அ என்புழி அகரம் அளபெடை எழுத்தாகவே கொள்ளப்பட்டு அலகுபெறாது நிற்றலை. எனவே ஆ அ என்புழி அகரம் ஆகாரத்துள் மெய்போல ஒடுங்கிநிற்ப ஆ என்பதே அசையாகக் கொள்ளப்பட்டு நிற்கும் என்பது கருத்தாயிற்று. அசைநிலையாகல் - ஆ அ என்புழி அகரம் ஆகாரத்தோடு சேர்த்து ஒற்றுப்போல வைக்கப்பட்டு நேரசை யாகவே (கொள்ளப்பட்டு) நிற்றல். 224. ஈரசைச்சீர் பதினாறாவன:- இயற்சீர் நான்கு, உரிச்சீர் நான்கு. உரியசைமுன் இயலசை மயங்கின சீர் நான்கு. இயலசைமுன் உரியசை மயங்கின சீர் நான்கு. 225. கடாஅ - நிரைநேர்; அகரம் தனியே வந்து நேரசையாகும். யாஅது - நேர்நிரை. யா - நேர். அது - நிரையாகக் கொள்ளப்படும். ஞாயிறுபோல. 226. ஆகாரத்துப்பின்னின்ற - யா என்பதிலுள்ள ஆகாரத்துப் பின்னின்ற என்க. 227. வடாஅ என்பது வடாஅது என்றும், புளிமா கணவிரி என்றும் இருத்தல் வேண்டும். 228. தேஎம் - நேர்நேர். போஒரி - நேர்நிரை. குராஅம் - நிரைநேர். குடா அரி - நிரைநிரை. 229. அவை - மேற்கூறிய அளபெடை. தனிநிலை - ஆ அ என்பனபோல வருமளபெடை. 230. முதனிலையளபெடை - தேஎம் - நேர்நேர். தனிநிலை என்றும் பாடம். 231. இடைநிலை என்பது இறுதிநிலை என்று இருத்தல்வேண்டும். அங்ஙனம் பாடங்கொள்வர் யாப்பருங்கல விருத்திகாரர். கடைநிலையென்றுமிருக்கலாம். இங்ஙனங் கோடலின் தூஉ - நேர்பு என்றும், செழூஉ - நிரைபு என்றும் கொள்ளல் முடியாது என்றபடி. 232. ஓரோர்கால் - ஓரோரிடத்து. வேண்டியபோது. 233. அவை - காசு. பிறப்பு என்பன. 234. நாணுத்தளை என்பதில். உகரம் புணர்ச்சிபற்றி வந்தது. அளபெடை எழுத்து இயல்பாக வந்தது என்பது கருத்து. 235. இருவகை யுகரமு மியைந்துவரின் அவை நேர்புநிரைபு ஆகும். இயைந்து வருதல் - ஒரு சொன்னீர்மைப்பட்டு வரல். அளபெடை. ஒரு சொன்னீர்மைப் பட வாராது பிரிந்துவரும். ஆதலால் ஆகா என்க. 236. சீராதற்கு இழுக்கென்னை என்றது அவற்றுளடங்கி உரிச்சீராகுமின்றி இவையும் (அளபெடையும் சீரும்) வேறாகி எட்டென்று விதந்து கூறலாற் பயனில்லை என்றபடி. 237. தூஉமணி - நேர் நிரை நேர். கெழூஉமணி - நிரை நிரை நேர். இவை வெண்சீராம். 238. ஒக்குமென்றது நீடுகொடியையும் குளிறுபுலியையும். அங்ஙனமே முறையே நேர் நிரை நேர், நிரை நிரை நேர் என்று கொள்ளலாம் என்றபடி. இசையோடு சேர்த்துங்கால் தூஉமணி என்பதன் மகரம் பிரிந்து உகரத்தோடு சேராது என்றபடி. 239. அவ்விரண்டு - இயற்கையளபெடை, செயற்கையளபெடை. 240. வழங்கப்படும் என்பது வழங்கப்படுவது என்றாதல். வழங்கப்படும் அளபெடை என்றாதல் இருத்தல்வேண்டும். 241. அவையிரண்டு - இயற்கை, செயற்கை. அவ்வாற்றான் என்றது. வழக்கிற்குஞ் செய்யுட்குமுரியவாற்றான் என்றபடி. எவ்வாற்றானும் எனவும் பாடம். ஆகலும் உரித்து என்பது தொட்டுள்ள வாக்கியத்தில் யாதோ பிழையுளது. 242. பலாஅக்கோடு - புணர்ச்சிவகையான் வந்தது. 243. போஒய்ப் போஒய் என்பது தூரப்பொருளைக் காட்ட வந்தது என்பது கருத்து. 244. செய்கைக் குறிப்பு என்பது ஏட்டிற் கண்ட பாடம். ஒரு தொழில் பலகால் நிகழுஞ் செயலைக் குறித்து வந்ததென்றபடி. சேய்மைக் குறிப்பு என்ற பாடத்திலும் இதுசிறப்பாகத் தோன்றுகின்றது. 245. இவற்றை என்றது அளபெடையை. 246. நாவல் கூற்றை - நாவலோஓ என்றுரைக்கும் நாளோதை என்பதனாலறிக. 247. முன் காட்டினவை - முன் காட்டிய உதாரணங்கள். அவற்றுள் - விளி முதலியவற்றுள். 248. இகந்து - கடந்து - விதியுளடங்காமல். 249. இவை - அளபெடை. 250. அலகிருக்கை - எண்ணிருப்பு. 251. எழுத்து நிலைமைப்படல் - அளபெடை எழுத்தென்று எழுத்து நிலைமையை அடைதல். அங்ஙனங் கொள்வதனாற் புள்ளி எழுத்துக்கள் போல அளபெடை எழுத்தென்று கோடலாம் என்றபடி. அசைநிலை யாதலும் என்றதனானே இதுவும் எழுத்தாகக் கொள்ளப்பட்டது. என்னை? அசை எழுத்தான் வகுத்துக் கோடலின். அதுபற்றி எழுத்து நிலையும் வேண்டினான் என்றார். 252. சந்தியிலக்கணத்தின் வழீஇற்று என்றது பலாஅக்கோடு என்பதுபோலப் புணர்ச்சிபெறும் இலக்கணத்தினின்றும் வழுவுதலை. என்றது புணர்ச்சி பெறுவது இருமொழீ தம்மு ளியைந்து ஓசைபெற்று நிற்றற்கே. ஆதலின் அது வழுப்படும் என்றபடி. சந்தி - புணர்ச்சி. 253. பிறவற்றுக்கண் என்றது பொருள் புலப்பட அளபெடுக்கும் அளபெடை முதலியவற்றை அவை போஒய்ப் போஒய் என்பன போல்வன. 254. வரையாது - நீங்காது. 255. இருவாற்றான் என்பது அவசியமில்லைப்போலும். 256. அளபெழினும் என்பதனை அளபெழுதலும் எனறிருத்தல் வேண்டும். அன்றிச் சில தவறியுமிருக்கலாம். 257. தோன்றிக்கொள்ளப்பட்ட எழுத்து - தோற்றிக்கொள்ளப்பட்ட எழுத்து என்றிருத்தல்வேண்டும். தோற்றுவித்துக் கொள்ளப்பட்ட எழுத்து என்பது பொருள். கானலதே என்பதைக் கான லஃதே என இருசீராக்கற்கு ஆய்தம் விரித்துக் கொள்ளப்பட்டது. 258. உறுப்பான் நின்ற எழுத்து அஃது என்பதிலுள்ள ஆய்தம்போல்வன. 259. ஆகலானும் என்பது என்பதூஉம் என்றிருத்தல் வேண்டும். 260. குற்றெழுத்தும் நேரசையாம் என இயைக்க. 261. தண்ணென என்பது மாசெல்கரம் என நிற்கவேண்டியதை. அளபெடையை அசைநிலையாக்கிப் பாதிரிபோலக் கோடல் வழு; ஆயினும் அமைக்கப்பட்டது என்பது கருத்து. 262. குற்றெழுத்தாக்கியது ஞாயிறுபோல்வது. 263. ஆக்குவது - ஆக்கப்படுவது. 264. இதனை - ஒற்றளபெடையை. 265. பரவை - உலகம். 266. எழுத்தோத்து - எழுத்திகாரம். 267. இருவகையுகரம் - குற்றியலுகரம், முற்றியலுகரம். 268. ஓசை சிதைக்கப்படாதாயிற்று. எனவே எழுத்து அலகு பெறா தென்பதாம். ஓசையுள் எனவும் பாடம். 269. உயிரளபெடை போல வருகின்ற எழுத்தோடு கூடி நிரையசையாய் வாராது என்றது - கொங்ங்கு என்புழி பின்வருங் குற்றுகரத்தோடுகூடி நிரையசையாய் வாராமையை. படாஅகை என்பதில். வருமெழுத்தோடு சேர்ந்து உயிரளபெடை அகரம்நிரையாய் நிற்பதுபோல. இது நில்லாது என்றபடி. 270. ஈர்க்கு பீர்க்கு என்பவற்றில் ஒற்றிரண்டுங் கூடி வேறோரசையாகாதவாறு போல கொங்ங்கு குரங்ங்கு என்னும் ஒற்றளபெடையும் ஒரோவழி வேறோர் அசையாகாது என்பதாம். அசைநிலைபெறாது என்பது வேறோ ரசையாகாது என்றிருத்தல் வேண்டும். பெறும் என்றுமிருக்கலாம். 271. இஃது அசைநிலையாதல் என்றது இஃது சீர்நிலையாதல் என்றிருக்க வேண்டும் தானும் தன்னையொற்றிய எழுத்துங் கூடிச் சீர்நிலையாதலே பெரும்பான்மை என்று இச் சூத்திர உரையுள் முன்னும் வரல் நோக்குக. இஃது - ஒற்றளபெடை. 272. காமன்காண் - நேர்நேர்நேர். 273. கருவூரார் - நிரைநேர்நேர். 274. இருகுடங்கை - நிரைநிரைநேர். குட - வளைவு 275. யானெதிரே - நேர்நிரைநேர். 276. இயலசை மயக்கம் நான்கு - நேர் நேர் நேர் நிரை நிரைநேர் நிரைநிரை என்பன. 277. உரியசை மயக்கம் நான்கு:- நேர்புநேர்பு நேர்புநிரைபு நிரைபுநேர்பு நிரைபுநிரைபு என்பன. 278. நேர்பு முதலிய நான்கையும் மூன்றுபடியான் இழிய வைத்தலாவது:- முதல் (1) இடை(2) கடை(3) 1. நேர் நேர் நேர் 2. நிரை நிரை நிரை 3. நேர்பு நேர்பு நேர்பு என வைத்தல். 4. நிரைபு நிரைபு நிரைபு முதல் இடை முதல் இடை 1. (1) நேர் 1. நேர் 2(2)நிரை 1. நேர் (1) நேர் 2. நிரை (2)நிரை 2. நிரை (1) நேர் 3. நேர்பு (2)நிரை 3. நேர்பு (1) நேர் 4. நிரைபு (2)நிரை 4. நிரைபு முதல் நேரொடு இடை முதல் நிரையொடு இடை நான்குங் கூடின. நான்குங் கூடின. முதல் இடை முதல் இடை 3. (3) நேர்பு 1. ne® 4.(4)Ãiuò 1. நேர் (3) நேர்பு 2.நிரை (4)நிரைபு 2. நிரை (3) நேர்பு 3.நேர்பு (4)நிரைபு 3. நேர்பு (3) நேர்பு 4.நிரைபு (4)நிரைபு 4. நிரைபு முதல் நேர்பொடு இடை முதல் நிரைபொடு இடை நான்குங் கூடின. நான்குங் கூடின. இவை பதினாறாயினவாறு காண்க. 279. இறுதி நின்ற நான்கசையோடும் ஒரோவொன்றற்குப் பதினாறாக நாற்காலுறழ என்றது. முன்கூட்டிய பதினாறு சீரோடும் பின்னிற் நேர் நிரை நேர்பு நிரைபு முதலிய நான்கையும் தனித்தனி கூட்ட 4 x 16 = 64 ஆகும் என்றபடி. அறுபத்துநான்கும் பின் கூறப்படுமாறு காண்க. இறுதி நின்ற நான்கசையோடும் உறழ என்க. 280. நேரீறு நான்காவன:- நேர் நேர் நேர் நேர் நிரை நேர் இவை நான்கும் வெண்சீர். நிரை நேர் நேர் இவை வஞ்சிக்கு வரா. நிரை நிரை நேர் ஒழிந்த அறுபதும் வஞ்சிச்சீர் எனப்படும். அவை பின் வருகின்றன. 281. நேரீறு பன்னிரண்டாவன:- மேற்கோட்டுநீர் - நேர் நேர்பு நேர் 1 நேர் முதல் நேரீறு 2 கீழ்ப்பரந்துதன் - நேர் நிரைபு நேர் 2 விழுக்கோட்டுமெய் - நிரை நேர்பு நேர் 1 நிரை முதல் நேரீறு வியல்விசும்புதோய் - நிரை நிரைபு நேர் 2 2-4 ஓங்குமுன்னர் - நேர்பு நேர் நேர் காம்புகழிய - நேர்பு நிரை நேர் நேர்பு முதல் நேரீறு 4 பாய்ந்துசென்றுசென் நேர்பு நேர்பு நேர் றாங்குநலிபுநின் - நேர்பு நிரைபு நேர் றெதிர்த்துமீண்டாங் - நிரைபு நேர் நேர் கதிர்த்துக்கரைகொன் - நிரைபு நிரை நேர் நிரைபு முதல் நேரீறு 4 றலங்குகோட்டுமுத் - நிரைபு நேர்பு நேர் திலங்குநிலவுச்செய் - நிரைபு நிரைபு நேர் இவை 12ம் நேரீற்று வஞ்சியுரிச்சீர். 282. நிரையீறு பதினாறும் வருமாறு:- தண்டண்டலை - நேர் நேர் நிரை தாதுறைத்தலின் - நேர் நிரை நிரை நேர் முதல் நிரையீறு 4 வாண்டோட்டுவயல் - நேர் நேர்பு நிரை வாய்புகைபுகரந் - நேர் நிரைபு நிரை தயலாலையி - நிரை நேர் நிரை னறைக்கடிகையின் - நிரை நிரை நிரை நிரை முதல் நிரையீறு 4 வழிபோகுவர - நிரை நேர்பு நிரை மறித்துருபுகிளர்ந் - நிரை நிரைபு நிரை தோங்கு சென்னிலை - நேர்பு நேர் நிரை வாங்குகதிர்தரீஇ - நேர்பு நிரை நிரை நேர்பு முதல் நிரையீறு 4 போதுதூங்குசிரை - நேர்பு நேர்பு நிரை மீதுபுகுந்துபுகுந் - நேர்பு நிரைபு நிரை கொடுங்குசெய்தொழில் - நிரைபு நேர் நிரை வழங்குகிளிக்குழாந் - நிரைபு நிரை நிரை நிரைபு முதல் நிரையீறு 4 திருந்துகோட்டுமிசைக் - நிரைபு நேர்பு நிரை குரங்குவிருந்துகொளு - நிரைபு நிரைபு நிரை நேர்பீறு பதினாறும் வருமாறு:- 283. வான்பொய்யாது - நேர் நேர் நேர்பு தீம்பெயல்பெய்ய - நேர் நிரை நேர்பு நேர்முதல் நேர்பீறு 4 மால்யாறுபோந்து - நேர் நேர்பு நேர்பு கால்கரந்துபாய்ந்து - நேர் நிரைபு நேர்பு கரைபொய்யாது - நிரை நேர் நேர்பு நிறைவளஞ்சான்று - நிரை நிரை நேர்பு நிரைமுதல் நேர்பீறு 4 வரையாதுதந்து - நிரை நேர்பு நேர்பு பலாப்பழுத்துதிர்ந்து - நிரை நிரைபு நேர்பு பாம்புகொள்ளாது - நேர்பு நேர் நேர்பு விங்குசுடர்நீண்டு - நேர்பு நிரை நேர்பு நேர்பு முதல் நேர்பீறு 4 வித்துநாறுவாய்த்து - நேர்பு நேர்பு நேர்பு முத்துக்கரும்புபூத்து - நேர்பு நிரைபு நேர்பு வரம்புகொள்ளாது - நிரைபு நேர் நேர்பு நிரம்புபெருங்கூட்டு - நிரைபு நிரை நேர்பு நிரைபு முதல் நேர்பீறு 4 விசும்புநீங்குமஞ்சு - நிரைபு நேர்பு நேர்பு துயின்றுபெயர்ந்துபோந்து - நிரைபு நிரைபு நேர்பு நிரைபீறு பதினாறும் வருமாறு:- 284. சீற்றமிகுபு - நேர் நேர் நிரைபு செல்சினஞ்சிறந்து - நேர் நிரை நிரைபு நேர் முதல் நிரைபீறு 4 கூற்றொத்துவிரைவு - நேர் நேர்பு நிரைபு கோள்குறித்துமுயன்று - நேர் நிரைபு நிரைபு புலிப்போத்துலவு - நிரை நேர் நிரைபு பொலங்கொடியெடுத்து - நிரை நிரை நிரைபு நிரை முதல் நிரையீறு 4 புகலேற்றுமலைந்து - நிரை நேர்பு நிரைபு பகையரசுதொலைத்து - நிரை நிரைபு நிரைபு வேந்துமீதணிபு - நேர்பு நேர் நிரைபு போந்துபடத்தொடுத்து - நேர்பு நிரை நிரைபு நேர்பு முதல் வீற்றுவீற்றுப்புணர்ந்து - நேர்பு நேர்பு நிரைபு நிரையீறு 4 வேற்றுச் சுரும்புகிளர்ந்து - நேர்பு நிரை நிரைபு களிறுகால்கிளர்ந்து - நிரைபு நேர் நிரைபு குளிருகுரல்படைத்து - நிரைபு நிரை நிரைபு நிரைபு முதல் சொரிந்துதூங்குகடாத்து - நிரைபு நேர்பு நிரைபு நிரையீறு 4 விரைந்துமலைந்துதொலைந்து - நிரைபு நிரைபு நிரைபு 285. இவை ஆக்குங்கொல் எனின்? ஆக்கா என இயைக்க. இவ்வஞ்சிக்குரிய அறுபது சீரும் முதலிய ஏனைப் பாக்களில் வாரா என்றபடி. 286. வஞ்சி - வஞ்சிப்பா. 287. எஞ்சிய - வஞ்சி ஒழிந்த வெண்பாவும் ஆசிரியமும். 288. சீரிலக்கணம் எய்தும் என்றது - சீரிலக்கணத்தைப் பாவும் எய்து மென்றபடி. 289. தன்சீர் என்றது - வஞ்சிச்சீரை. 290. திசைதிரிந்து - நிரை நிரைபு. உரியசை மயங்கிய இயற்சீர் இது நின்றசீர். தெற்கேகினும் - வஞ்சிச்சீர். இது வந்தசீர். இது வரலிற்றூங்கலோசை பிறந்த தென்றபடி. 291. புள்ளுந் துயின்று - நேர்பு நிரைபு (ஒற்றொடுந் தோன்றி நின்றது) ஆசிரிய உரிச்சீர். புலம்பு கூர்ந்து - நிரைபு நேர்பு 292. முன்னர் என்றது - 13-ம் சூத்திரத்தை. 293. நேர்புநேர்பு; நேர்புநிரைபு; நிரைபுநேர்பு நிரைபுநிரைபு; என்னும் உரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச்சீர் நான்கையும் விலக்கவே. நிரை யீற்றாசிரிய உரிச்சீரிரண்டும் வருமென்பது பெற்றாம். அவையிரண்டு மாவன நீடுகொடி குளிறுபுலி. 294. இயற்சீர் தன்மை சிறுபான்மை எய்துவித்தது என்றது இயற்சீரோடு மாட்டினமையை. மாட்டினமையால் ஆசிரியத்து வந்து அடியுறழு மென்பது பயனுமாயிற்று. 295. இறந்ததுதழீஇயிற்று என்றது நிலையீற்றாசிரியச் சீரிரண்டும் ஆசிரியத் திலன்றிக் கலித்தளையிலும் நீக்கப்படா எனத் தழீஇ நின்றமையை. வருஞ் சூத்திர உரை நோக்குக. 296. போக்கி - கழித்து - பின்னே என்றபடி. 297. நேரடி - அளவடி என்றது கட்டளை அளவடியை. 298. கலித்தளை மருங்கின் - கலியோசை தோன்றத் தளைத்தற்கண் எனப் பொருள்படும். இது வினை செய்யிடம். ஏழாகுவதே - கண் ..... வினை செய்யிடத்தினிலத்தின் காலத்தின்....... தோன்றுமதுவே என்னும் (சொ. வேற் - 20) சூத்திரம் நோக்குக. 299. அல்லாக்கால் - தளைத்தல் என்று கொள்ளாவிட்டால். 300. அதனியற்று என்றது வெண்பாவினியல்பினது என்றபடி. எனவே வெண்பாவினியல்பினதே கலியுமாதலின் வெண்சீர் வருமென்று விதந்து சொல்ல வேண்டியதில்லை என்பது கருத்து. 301. விலக்குண்ணுமாகலின் ஒதுவான் (ஒதுபவன்) கூறல் வேண்டுமன்றே என இயைக்க. 302. அவற்றுக்கு - நிலையீற்றுரிச்சொல் வருவனவற்றிற்கு. 303. ஒங்குவரை - நேர்புநிரை - நாணுத்தளை. 304. விளங்குமணி - நிரைபுநிரை - குளிறுபுலி. 305. இவை - இவ்வடிகள். வெண்சீர் என்ற சொல்லானே வெண்பாவுக்குரிய சீர் என அதனிலக்கணமும் முடிக்கப்படும். எனவே வெண்சீர் ஒன்றாது வருதலே கலியாதலின் அதற்கும் இவ்விலக்கண மமையும்; விதந்து கூறல் வேண்டாம் என்றபடி. இங்ஙனே சூத்திரவுரையுள் இவ்வுரையாசிரியர் முன்னுங் கூறல் காண்க. 306. விதந்தோதல் - சூத்திரத்தான் விதந்து கூறல். 307. அவ்விருபா - வெண்பா, கலிப்பா. 308. அல்லாத - கட்டளையடியல்லாத. 309. ஒழிந்த - நேர்புநிரையும், நிரைபுநிரையும் அல்லாத ஆசிரியவுரிச்சீர். 310. இயற்சீர் பத்தாவன - தேமா, புளிமா, கணவிரி, பாதிரி (325) சேற்றுக்கால். களிற்றுத்தாள். (327) போரேறு. பூமருது. கடியாறு. மழகளிறு. (328) ஆசிரிய வுரிச்சீரிரண்டு - நீடுகொடி. குளிறுபுலி. இவைகள் வெண்பாவுக்கு முரியன. 311. வேறுவேறு வந்த - தனித்தனி வந்து. 312. கலிக்குரியன தேமா புளிமா ஒழிந்த இயற்சீரெட்டும். 313. அடியின் என்பது வேண்டியதில்லை. 314. ஈரசைச்சீர் பதினாறாவன :- இயற்சீர் 4. உரிச்சீர் 4. நேர்நிரையை முதலாகக் கொண்ட நேர்பு நிரைபு ஈறு 4. நேர்பு நிரைபை முதலாகக் கொண்ட நேர் நிரையீறு 4. ஆக 16. 315. ஈற்றில் என்பது பின் இறுதலோடு நில்லா என்று விளக்கலின் ஈண்டும் இறுதலில் நில்லா என்றானும் இற்று நில்லா என்றானும் இருத்தல் வேண்டும். ஆசிரியர் காலத்து இறுதியில் இவ்விரு சீரும் வந்தில என்பது சூத்திரத்தான் அறியக் கிடக்கின்றது. 316. இறுதி நில்லா என்பதற்கு இறுதலோடு நில்லா என்று பொருள் கோடற்குக் காரணம் கடைச்சங்க நூல்களை நோக்கியதாகலின் அது பொருந்தாது. இந்நூல் செய்த காலத்து இறுதியில் நில்லாதிருத்தல் வேண்டுமென்று கோடலே பொருத்தமாம். அங்ஙனமாயின் கடைச்சங்க நூல்களுக்கு இலக்கணம் இல்லாதொழியுமெனின், வாரா என்னாது நில்லா என்பதனாற் சிறுபான்மை வருமெனக் கொண்டனர்போலும். 317. நேர்நிலை வஞ்சி - இரு சீரான் வருவது. 318. வியனிலை வஞ்சி - முச்சீரான் வருவது. 319. என்னையெனின் - எவ்வாறு எனின். 320. நான்கசையாவன - நேர், நிரை, நேர்பு, நிரைபு 321. நெட்டெழுத்தியல என்பதற்கு நெட்டெழுத்துப்போலக் கொள்ளப்படு மென்பதன்றி நெட்டெழுத்தென்பது கருத்தன்று. அதுபோல இவையுஞ் சீராகக் கொள்ளப்படுமன்றிச் சீரன்று என்றவாறு. 322. அதிகாரம் - இயற்சீரதிகாரம்: உரியசை யிரண்டுமே இயற்சீர்ப்பாற் படுத்தற் குரியவாதலின் அவையிரண்டுமே பகுத்துக் கொள்ளப்படு மென்றார். 323. நேர்பு - தேமா, நிரைபு - புளிமா என்று வைக்கப்படும். 324. இயல்வதன்மை - இயற்சீராகாமை. 325. நேர்பு நிரைபு இரண்டும் பெயரான் அசைச்சீரெனப்படும். தளையால் இயற்சீராக வைத்துத் தளை கொள்ளப்படும் என்றபடி. எனவே இயற்சீருள் அடங்குவதன்றி இயற்சீரெனப் படா என்றபடி. 326. அசைச்சீரிரண்டும் அடியுறழுமிடத்து எண்ணுத்தொகை பெற்றும் இயற்சீருள் அடங்கும் என்றபடி நோக்குங்கால் அடங்கும் என இயைக்க. 327. பெற்று - பெற்றும் என்றிருத்தல் வேண்டும். பெறாது எனினுமாம். இதற்குத் தளைக்கண் எண்ணுத்தொகை பெறாதென்க. 328. நான்கசை என்றது நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நான்கையும். 329. ஓரசைச்சீரல்லாத சீர் என்றது ஈரசையாய் வலனேர்பு என்பதுபோல் வேறிசையோடு வருவனவற்றை. 330. சீர்வகையான் என்றது கட்டளையடியல்லாத சீர்வகையடியான் என்றபடி. வலனேர்வு சீர்வகையான் வந்ததாகலின் வழுவமைக்க வேண்டா; சீர்வகையடி யென்று ஒழியவே அமையும் என்றபடி. 331. கலித்தளை மருங்கிற் கடியவும்படா என்று தொடங்கிய அதிகாரம் விலக்கப்பட்டது அன்று. ஏனெனின்? அடுத்துக் கலித்தளையில் நேரீற்றியற்சீர் வாராஎன இயற்சீர்பற்றிய அதிகாரம் வந்தமையின் அவ்வதிகாரம்பற்றிய முடிபுகளை இடையின் மூன்று சூத்திரத்தாற் கூறி, மீளவுங் கலித்தளையதிகாரமே தொடங்கிஇச் சூத்திரத்தால் அத்தளைக்கே விதி கூறுகின்றாராதலின். 332. நேர்வந்து ஒன்றினும் என்றிருந்திருத்தல்வேண்டும். பின் இறுதிச்சீ ரொன்றினும் என வருதல் காண்க. 333. இறுதிச்சீரின் முதலசை என்பது மொழிந்த ........ மொழியாததனை முட்டின்றி முடித்தல் என்னு முத்திவகை. 334. வெண்சீர் இறுதி - வெண்சீருள் இறுதிச்சீர் என ஏழாவதன் றொகையாக விரிக்க என்றபடி. 335. இயற்சீர் என்றது ஞாயிறு. வலியது, பாதிரி, கணவிரி போல்வனவற்றை நிரைமுதல் வெண்சீரே வருதலின் முதற்கள் இயற்சீர் வரினும் ஓசை பிறழா தென்பது கருத்து. 336. அச்சீர் என்றது ஈற்றினின்று வெண்சீரை. மாசெல்வாய் என்பதுபோல ஈற்றில் வருவனவற்றை. இவற்றி னிடையும் இறுதியு நின்ற அசை என்றது செல்வாய் என்னுமிரண்டையும் இவ்விரண்டையும் சேர்த்து நிரையசையாகக் கொள்வல் எனின் என்பது கருத்து. 337. ஒன்று - முதலசை. 338. வெண்சீர் - அஃறிணை இயற்பெயராதலின். வெண்சீர்கள் எனப் பொருள்படும். 339. பன்மை வினைகொள்ளின் - பன்மை வினையைக் கொண்டுவரின். எனவே கொண்டுவந்தால் வெண்சீர்கள் என்று பொருள் கொள்ளலாம். கொண்டுவராமையிற் பொருள் கொள்ளக்கூடா தென்றபடி. 340. யானைக்கோடு என்பதில் கோடு என்பது. கண்ணுந் தோளும் என்னும் (சொல். 61 -ம்) சூத்திர விதிப்படி கோடுகள் எனப் பன்மை யுணர்த்தும். அதுபோல வெண்சீரும் வெண்சீர்கள் என்றாம் என்றபடி. இறுதி யென்றமையானும் அது பன்மைப் பொருள் உணர்த்தும். ஏனெனில், முதல் இறுதி என்று கூறுவது பல நேர்ந்த நின்றவரியேயாகலின். போலக் கொள்க என இயைக்க. 341. பின்னோன் என்ற சொல்லே முன்னேர் பலருளர் என்பதையும் முன்னோன் என்ற சொல்லே யின்னோர் பலருளர் என்பதையும் காட்டும். அவைபோல இறுதியென்பதும் முன் பலசீர் உள என்பதைக் காட்டும். அதனாலும் வெண்சீர் என்பது பன்மை யுணர்நின்றது என்றபடி. 342. நீடு கொடி குளிறுபுலி என்னும் சீர்களில் மன்னின்ற அசைகள் நேர்பும் நிரைபுமாதலின், இவை வெண்சீரின் பின் வரின் நிரையசையாகக் கொள்ளப்படும் அஃதாவது புலிவருவாய் நீடுகொடி எனவும் புலிவருவாய் குளிறுபுலி எனவும் வரின் நீடு. குளிறு என்பன நிரையாகக் கொள்ளப்படும் என்று பொருள் கொள்வேமோ எனின் என்பது கருத்து. 343. வெண்சீர்களினிறுதி என்றதனான் மூன்றாஞ் சீரும் நான்காஞ் சீரும் வெண் சீரென்பது பெறப்படும் எனற்படி. 344. நிரைதட்டல் என்பதனால் நிரையசை முன்வரும் என்பது பெறப்படும் என்றபடி. 345. ஆசிரியவுரிச்சீர் நீடுகொடி குளிறுபுலி. 346. வெண்சீர்க்கு உரியசை இன்மை என்றது நீடுகொடி. குளிறுபுலி என்பவற்றின் முன்னின்ற நீடு குளிறு என்பவைகள் உரியசையாதலின் அவை வெண்பாவில் வரா என்றபடி. இவை வெண்சீரின் பின் வாரா என்பது இவர் கருத்து. ஏனெனில் வெண்பாவிற் கட்டளையடிக்கு உரியசை முதற்சீர் விலக்கப்பட்டமையின். 326-ம் சூத்திர உரை நோக்குக. உரியசை - உரியசைச்சீர். 347. துள்ளலோசை யொடுங்குதற்குதாரணம் அரிதாய என்ப பின் வருவது. 348. களித்தலும் என்பது நிரை முதலியற்சீர். இறுதியில் அதுவரினும் கலியோசை யழியும் என்றபடி. அருளியோர் என்பதை வெண்சீர் என்றது அருளி என ஓசை பிளந்து நிற்றலிற்போலும். 349. அடிதாங்குமென்று மடியே இச்சூத்திரத்திற்குக் காட்டிய உதாரணம். 350. இடை நிறை சீர் அடுங்கால் என்பது. 351. அடி என்பது அடியன்றென்பது என்றிருக்கவேண்டும். நச்சினார்க் கினியருரை நோக்குக. 352. அல்லாதாரும் - தொல்காப்பியரல்லாதாரும். இவை - இக்கலியடிகள். 353. கொள்ளாமோ - (வெண்பாவிற்குக்) கொள்வேமோ என்பது பொருள். 354. தன்சீர் என்றது வெண்சீரை. தளை விலக்கல் என்றது வெண்சீர் வந்து தளைகோடலை விலக்கலை. இயற்சீர் வெண்டளையே கட்டளையடி பெறும் வெண்பாவிற் குரிய தென்றபடி. 355. ஞாயிறு என்னும் இயற்சீரினை நிறுத்தி; எப்படி நிறுத்தி எனின். திரியாமல் ஞாயிறு என்றே நிறுத்தி என்றபடி. பின்னுமொருகால் திரித்தது என்றது பின் தளைகோடற்கு மாசெல்வாயென வெண்சீராகத் திரித்தது என்றபடி. ஏன் திரித்ததெனின் வெண்சீர்க்குமுன் நிரை வருவதே கலித்தளை எனக் கோடற்கு என்றபடி. ஞாயிறு புலிசெல்வாய் மாசெல்வாய் என்றவழி ஞாயிற்றை மாசெல்வாய் எனத் திரித்துவைத்து வெண்சீரின் முன் புலி என நிரைவந்த கலித்தளையாகக் கொள்ளப்படும் என்பது கருத்து. திரித்தனையே என்னும் பாடமே பொருத்தம். 356. இப்படி ஞாயிறு என்பதை வெண்சீராக்கி நிரைவந்து முடியுங் கலித்தளை என்று காட்டுங்கால். அங்ஙனம் வெண்சீர்முன்நிரைவந்து பகைத்து முடிய வேண்டுமென்று விதிக்குஞ் சூத்திரம் வேறுண்டா யினன்றே நேருநிரையுந் தளைத்ததனை; வெண்சீரீற்றிலுள்ள நேர்முன் வருமொழி முதல் நிரை பகைத்து முடிந்ததென்றும் நேரும் நிரையும் பகைத்தே வரல்வேண்டுவதென்றுங் கொள்ளலாம். அங்ஙனம் விதித்த சூத்திரம் வேறில்லை. இவ்யுலை யானும் அவ்விதி பெறப்படாது; ஆதலானும், தன்சீரானும் தளைனோடு மாகலானும் பொருந்தாதென மறுக்க. தன்சீர் - ஆசிரியவுரிச்சீர் ஞாயிறு என்னும் இயற்சீரும் நிரையீறாதலின் அவ்வாசிரிய வுரிச்சீரான் முடிபுபெறும். தொ. செய். 372-ம் சூத்திர விதி நோக்குக. 357. தன்சீர் - நீடுகொடி. குளிறுபுலி என்னும் ஆசிரிய உரிச்சீர். இதனாற் றளை கோடல் 382-ம் சூத்திர நோக்குக. 358. இனி வெண்சீரி னீற்றசை ஒன்றேயாகலான் இயற்று என்று ஒருமை கூறினா னென்பது வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே என்ற சூத்திரத்திற்கு அவர் கூறும் பொருளை மறுக்க வந்த வாக்கியம். எங்ஙன மெனின்? இயற்று - இயல்பினது என்று ஒருமை கூறிய அதனால் இறுதி நின்ற அசை ஒன்றே கொள்ளப்படுமன்றி அடுத்த அசை கோடற்கு விதி இன்று. அஃதாவது - மாசெல்வாய் என்பதன் இறுதிநின்ற வாய் என்னும் ஈற்றசையொன்றே கோடற் கிடமுண்டன்றி இடைநின் செல்என்னும் அசை கோடற்கிடமின்று. அவ்வாறே மாவருவாய் என்பதிலும் இடை நின்ற வரு என்னு நிரையசை கோடற்கிடமின்று என்பது கருத்து. எனவே மாசெல்வாய் என்பதில்வாய் என்பதனோடு செல் என்பதையும் மாவருவாய் என்பதில்வாய் என்பதனோடு வரு என்பதையும் கூட்டி நிரையசையாக்கற்கு விதியில்லை. இங்ஙனங் திரிந்தநிலைமை என்றது. ஒருமைகூறியவதனால் இடைநின்ற நேரும் நிரையும் விலக்குண்ணலின் ஈற்றசையே திரியவேண்டும். இப்படி ஈற்றசை திரியின் அது வஞ்சியுரிச்சீராம் என்றபடி. 359. இனி இச்சூத்திரத்துள் வரும் வெண்சீர் என்பதை எழுவாயாகக் கொண்டு பொருள் கூறினும் வெண்சீரானது ஈற்றசையை நிரையாகக் கொண்ட இயற்சீர் இயல்பிற்று எனப்பொருள் கொள்ளல்வேண்டும். அங்ஙனங் கொள்ளின் பின்வரும் அசையென்பது மிகையாம். ஆதலின் அக்கருத்துப் பொருந்தாதென்றபடி. ஈற்றசை நிரையிற்று என்று இருப்பின் அவர் கருதியபடி ஒருவாறு பொருள்கொள்ளலாம். அங்ஙனம் சூத்திரமில்லை என்றபடி. 360. மாசெல்வாய் என்னும் வெண்சீரினைத், தளைகோடற்கு ஞாயிறுஎன இயற்சீராக்கியும், ஞாயிற்றைகலியோசை கோடற்கு வெண்சீராக்கியும் கோடல் வினையிலுழப்பாம் என்றபடி. வினையிலுழப்பு தொழிலற்ற முயற்சி (பயனற்ற முயற்சி) என்றபடி. 361. என்றார்க்கு எனல் என இயைக்க. தன்சீருள்வழித்தளைவகை வேண்டா என்பது கொண்டு வெண்பாவிற்கு ஒன்றாத வரல்வேண்டு மெனின் கலியும் வெண்பாவாம். என்னை? கலியும் ஒன்றாது வரலின். ஆதலால், கலி என ஒரு தளையின்றாம். ஆதலின் வெண்சீர் ஒன்றி வருதல் வெண்பாவிற்குரிய தென்றபடி. எனல் என்பது எனில் என்றிருந்திருக்க வேண்டும். அன்றேல் என்றார்க்கு எனல் என முடித்தல்வேண்டும். அது பொருத்தமின்று. என்றார்க்கு என்பது இல்லாமலு மிருக்கலாம். அல்லது சிதைவிருத்தல்வேண்டும். வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே என்னும் இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் கொள்ளும் உரையையும் பிறர் உரைகளை அவர் கடாவிடைகளான் மறுக்குமாற்றையும் விளங்கற் பொருட்டு இங்கே சுருக்கிக் காட்டுகின்றாம். இச் சூத்திரத்திற்குப் பேராசிரியர் கொள்ளுமுரை. ஒரு கலியடியுள் வந்த பலவெண்சீர்களின் ஈற்றிலுள்ள சீரின் முதலி லுள்ள நேரசை நிரையசை யியல்பாகுமென்பது எனவே முன்வந்த வெண்சீர்களின் முதலசைகளெல்லாம் நிரையசையாய் ஒன்றாது வந்தவிடத்திலேயே ஈற்றுச் சீரின் முதலசையாகிய நேர் நிரையாம் என்பது இதனாற் கொள்ளப்படுமென்பதும் பெறப்பட்டது. என்னை? ஈற்றுச்சீரின் முதலிலுள்ள நேரசையை நிரையசையாய்க் கொள்ள வேண்டுமெனவே முன்வந்த சீர்களின் முதலசைகளும் நிரையசை யாயே வரல்வேண்டுமென்பது பெறப்படலின் என்பது அவர் கருத்து. அங்ஙனமாதலை. அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையான் என்னும் உதாரணத்தின் வைத்து அறிந்துகொள்க. இனி இதற்குப்பிற ருரையுளோருரை. வெண்சீரினீற்றில் நீடுகொடி, குளிறு புலி வந்துழி அவற்றின் நேர்பசை நிரைபசைகளை நிரையாகக் கொள்ளுதல் என்பது. அதன் மறுப்பு அங்ஙனங் கொள்ளிற் கலியோசை யழியும் என்பது ஒருநியாயம். மற்றொன்று நீடுகொடி, குளிறுபுலி ஆசிரியவுரிச்சீராதலின் வெண்பாவிற் கட்டளையடிக்கண் அவை வாரா. ஆதலின் அவை வெண்பா வினியற்றாகிய கலிக்கும் வெண்சீர்க்குப் பின்னே வாரா என்பது மேற்காட்டிய ஆசிரியவுரிச் சீரிரண்டும் கலிக்கு வருமெனின். அவை முதலில் வருமன்றி இடையில் வாரா வென்பதும் வரிற் கலியோசை அழியுமென்பதும் இவர் கருத்தாம். வெண்பாவில் ஆசிரியுரிச்சீர் வாராவென்பதனை. வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்தசீர் இருபத்துமூன்றும் 362-ம் சூத்திரவுரையுட் கூறலானும், நீடுகொட குளிறுபுலி வெண்பாவின் கட்டளையடிக்கண் வாரா என்பதனை 326-ம் சூத்திரவுரையுட் கூறலானுமறிக. உரியசை யென்றது உரியசைச்சீரை. அவை சிறுபான்மை கலியின்கண்வரின் முதற்கண் வருமென்பது கருத்து. இனி, பண்டரங் மாடுங்காற் பணையெரி லணைமென்றோள் என இதில் வரும் வெண்சீர் முதலை நிரையசையியற்று என்று கூறாமோவெனின்? அது கட்டளையடியன்றாதலின் அதன்கண் ஆராய்ச்சியின்றென்பது. கட்டளை யடியன்றென்பது அசையுஞ் சீருமிசையொடு சேர்த்தி என்பதனானறியப்படும். இனி, ஒருரை தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா என்ற சூத்திர விதிப்படி வெண்சீரின் ஈற்றசைமுன் நேரசை வருங்கால். வெண்சீர் வெண்டளையாமாகலின் அது கட்டளையடிக் கேலாமையின் அதனை விலக்க வேண்டி மாசெல்வாய் முதலிய வெண்சீரின் ஈற்றசையை நிரையசையாக்கி ஞாயிறு போல வைத்து வெண்பாவில் தளை கொள்ளப்படும் எனவும். மாசெல்வாயின் ஈற்றசைகளை ஞாயிறு என வெண்பாவிற் கொள்வது போல அதனியற்றாகிய கலிக்கு ஞாயிறு மாலியபோன்ற இயற்சீர் முதல்வரின் (அஃதாவது ஞாயிறு புலிசெல்வாய் மாசெல்வாய் என வரின்) ஞாயிறு முதலியவற்றையும் கலித்தளையாக்குதற்கு மாசெல்வாய் என வைத்துக் கொள்ளப்படு மெனவுங் கொண்டு ஞாயிறு என்பதன்முன் புலிவருவய்வரின் அது மாசெல்வாய்முன் நிரைவந்த கலித்தளை யேயாமென்று கொள்வர். இவ்வுரையாலே வெண்சீரின்முன் நிரைவந்தாற் கலித்தளையா மென்பதற்குச் சூத்திரவிதி வேறுவேண்டும்; அவ்விதி இச்சூத்திரத்தாற் பெறப்படாது. ஆதலானும், இயற்சீர்முன் நிரைமுதல் வெண்சீர் வரின் கலித்தளையா மென்பதற்கு விதியிருத்தலின் (372 - ம் சூத்திரம்) இயற்சீரை வெண்சீராக்கல் வேண்டுவதின்மையானும் அது பொருந்தாதென்பது. இன்னும் வெண்சீரீற்றிசை நிரையயியற்றே என்பதில் இயற்று என்று ஒருமை வாய்பாட்டாற் கூறினமையால் மாசெல்வாய், புலி வருவாய் என்பவற்றிலுள்ள ஈற்றசையென்று கொள்ளப்படுமே யன்றி. ஈற்றசையோடு சேர்த்து இடைநின்ற (செல் என்னும்) நேரும். (வரு என்னும்) நிரையுங் கொண்டு இயற்சீராக்க முடியாமையானும் அது பொருந்தா தென்க. மாசெல்வாய் புலிவருவாய் என்பவற்றின் ஈற்றசையை (வாய் என்பதை) நிரையசையாகக் கொள்ளில் அவை வஞ்சியுரிச் சீராமென்பது. ஆதலானும் அவ்வாறு பொருள்கோடல் பொருந்தாதென்பது. இனி வெண்சீரின் ஈற்றசையெனக் கொள்ளாது. வெண்சீரென்பதை எழுவாயாகக் கொண்டு ஈற்றசை நிரை என்பதை, ஈற்றசை நிரையா வுள்ள இயற்சீர் எனக் கொண்டு வெண்சீரானது இயற்சீர் இயற்ற எனப் பொருள் கொள்ளினும், ஈற்றசை நிரை யியற்று என்று சூத்திரமிருக்க வேண்டும். அவ்வாறிராது நிரையசை என்று இன்னுமோர் அசை மிகையா யிருத்தலின் அவ்வாறும் பொருள்கொள்ள முடியாது. அதனானும் வெண்சீரை இயற்சீராக்கல் முடியாது. அன்றியும் வெண்பாவிற்குத் தளைகொள்ள வெண்சீரை இயற்சீராக்கி மீளக் கலிப்பாவிற்கு இயற்சீரை வெண்சீராக்குதல் வினையி லுழப்பாகி முடியுமாதலின் அது பொருந்தா தென்பது. அன்றியும் வெண்பாவிற்கு ஒன்றாதுதான் வரவேண்டு மென்னும் விதி வேண்டியதில்லை. அங்ஙனங் கொள்ளின். வெண்சீரின் முன் நிரைமுதல் வெண்சீர் வருதலும் ஒன்றாது வரலின் அதனையும் (கலித்தளையென்னாது) ஒன்றாது வந்த வெண்டளை யெனலா மாதலின் வெண்பாவிற்கு வெண்சீர் ஒன்றி வருதலே இலக்கணமாம். அது சீர்வகை யடியெனக் கொள்ளப்படுமாதலின் என்பது கருத்து. வினையிலுழப்பு - தொழிலற்ற முயற்சி - பயனில்லாத முயற்சி. 362. அது - அச்சூத்திர விதி 363. இது - இச்சூத்திர விதி 364. நேர்நிரை - உம்மைத்தொகை. நேர்பு நிரைபு என்பதும் உம்மைத் தொகை. 365. ஈறும் முதலும் ஆகிப் பெறச் சீர் வந்தது என இயையும். ஆகி என்பன ஆக எனவுமிருக்கலாம். 366. எழுத்துவகையாற் பெறலை. 36-ம், 37-ம், 38-ம்,39-ம், 40-ம் சூத்திரங்களை நோக்கி அறிக. 367. மூன்று பாவாவன - அகவல், வெண்பா, கலி என்பன. 368. இவற்றது விகற்பம் - இவ்வளவடிகளின் வேறுபாடு. 369. உறழ்தல் - பெருக்கல். 370. நாற்சீர்க்கண்ணது - நாற்சீரடிக்கண்ணது என்றிருப்பது நலம். 371. மற்றையடிக்கண் தளைகொள்ளின் எனக் கண்ணழிக்க மற்றையடி - இருசீரடி. முச்சீரடி, ஐஞ்சீரடி, அறுசீரடி முதலியன. சீர்வகையடியுங் கொள்ளப்படும். 372. என்னும் - என்பான். 373. அடியிரண்டை இயைத்தே மோனை முதலிய தொடை பார்க்கப்படும் என்றபடி. 374. தொடையறழச் சீர் கொள்வது அளவடிக்கணென்பதேயன்றி ஓரடிக்கண் என்றானல்லனென்பது கருத்து. 375. வரையாது - அளவடி என்று வரையாது. 376. கண்டது என்பதை ஞாயிறு என்று கோடலின். மீளவும் அந்த அடியே வருங்கால் தளைவழுவாம். ஆதலின் அடங்காதென்க. 377. தளைவகை ஒன்றல் தன்சீர் வந்தமையான் என்க. தன்சீ ருள்வ தளைவகை வேண்டா என்பது சூத்திரம் தன்சீர் - வெண்சீர். 378. இதுவும் வெண்பாவடி. ஆதலிற் றளைவழு. 379. அன்னதோர் வரையறை என்றது. வெண்பாவிற்குப் போன்ற வரையறையை. 380. இருவாற்றானும் வரும் என்றது. ஒன்றியும் வரும் ஒன்றாதும் வரும் என்றபடி. 381. இன்னு - மேலும். 382. அதன் - அந்நாற்சீரடியின். 383. கூறுகின்றான் என்றது ஆசிரியனை. 384. வற்றை என்பது சேர்த்து எழுதப்பட்டது. அது வேண்டியதில்லை. 385. கூறியவுறுப்புக்களான் என்பது கூறி அவ்வுறுப்புக்களான் என்றிருப்பது நலம். 386. ஒழிந்த அடி - அளவடி அல்லாத அடி. 387. அவ்வழியான் எனவும் பாடம். 388. வகுத்தென்றது - குறளடியை. நாலெழுத்தடி ஐந்தெழுத்தடி ஆறெழுத்தடி என வகுத்தமையை. ஏனையவுமன்ன. 389. ஒழிந்தன - குறளடி ஒழிந்த அடிகள். 390. சிறப்பு இழிபு என்றது நான்கு எழுத்தடியினும் ஐந்து எழுத்தடி இழிபுடையது; அதினும் ஆறெழுத்தடி இழிபுடையது எனவும். ஆறெழுத்தடியினும் ஐந்தெழுத்தடி சிறப்புடையது; அதினும் நான்கெழுத்தடி சிறப்புடையது எனவும் கொள்ளப்படும் என்றபடி. ஏனையவுமன்ன. 391. கொள்ளாமல் என்னும் பாடம் பொருத்தமன்று. 392. முழங்க எனவும் பாடம். 393. கலனளவு கலனளவு எனவும் பாடம். 394. அசை - தனியசை. அவை நேர் நிரை நேர்பு நிரைபு. இவையும் சீராக நிற்கும். அசைச்சீராயவழி எனவும் பாடம். அது சிறப்பின்று. 395. அவற்றுக்கு - அசைச்சீர்களுக்கு. 396. உரையிற் கொள்க - உரையிற் கோடல் என்னுமுத்தியாற் கொள்க. 397. இலேசு - மிகை. 398. அவை - அவ்வசைச்சீர்கள். 399. வரைந்தது என்றது தளை சிதையாமல் இயற்றிக்கொள்க என்று வரைந்தமையை. எனவே அது சீராக இயற்றிக்கொள்ளப்படுமன்றி இயற்கைச் சீராகாது என நியமித்தவாறாயிற்று. 400. அதுவே - சீர் என்பதுவே. 401. அவற்றது - இயற்சீர்களது. செய்கை - தளைத்தற்செய்கை. 402. பெற்றி - இயல்பு. தன்மை. 403. சாதி - குலம். 404. கொண்டாம் என்னும் பாடம் பொருத்தமின்று. இலேசு - சூத்திரத்துள் வரும் தான் என்பது. 405. ஆகலின் விலக்கப்பட்டது எனக் கூட்டுக. 406. நுந்தை என்பதை ஈரெழுத்தாகக் கொள்ளின் முதலில் நிற்குமெழுத்து இருபத்திரண்டு என எழுத்ததிகாரத்து இருபத்திரண்டு என எழுத்ததிகாரத்து விதித்ததனோடு மாறுபடும். எங்ஙனமெனின்? அதுவும் எண்ணப்பட்டு இருபத்துமூன்று ஆதல் வேண்டிவரும். ஆதலின், இதனாலேயே முதலில் எழுத்து இருபத்திரண்டு எனக் கூறப்பட்டது. ஆதலின் ஓரெழுத்துச் சீரெனப்படுமன்றி ஈரெழுத்துச் சீரெனப்படாது என்றபடி. 407. வேறு எழுத்து - முற்றுகரத்தின் வேறாய எழுத்து. என்றது குற்றுகரத்தை. முதலெழுத்தின் வேறாய எழுத்து எனினுமாம். 408. சொல்லுதும் - சொல்லும் என்றிருத்தல் வேண்டும். 409. ஐந்தெழுத்தானன்றி ஆறும் என நின்றமையின் இறந்தது தழீஇயிற்று என்றார். 410. பதினான்கெழுத்து அளவடிக்கு முடிபாயுள்ளது. அது கொள்ளின் அதுவரையும் வஞ்சி யுறழாதென்பதனோடு மாறுபடும். என்னை? இச் சூத்திரத்தால் 12 எழுத்தடியே கூறலின். ஆதலிற் பொருந்தாதென்றபடி. 411. பதினெட்டீறாக என்பது எட்டீறாக என்றிருத்தல் வேண்டும். என்னை? இரண்டு நிலைமுதல் எட்டு நிலையீறாகவே சீர்கள் வேறுபடலின். இதுவே பொருத்தமென்பது வரும் விரிவுரையானறியப்படும். 412. ஒத்தவோசையவாய் என்றிருப்பது நலம். 413. இருவகை - மாத்திரை குறைந்தும் மிகுந்தும் வரு மிரு வகை. முறையே வண்டு மின்னு என வருவனபோல்வன. 414. ஒரு தன்மையவேயாம் என்றிருப்பது நலம். 415. அசைச்சீர் - நேர்பு நிரைபு. 416. பதினெட்டினுள்ளும் என்றது. - இயற்சீர் நான்கு. நிரையீற்று ஆசிரிய உரிச்சீரிரண்டு. நேரீற்று ஆசிரியவுரிச்சீரிரண்டும். நேர்நிரை முதலாயும், நேர்புநிரைபு ஈறாயும் வந்த ஆசிரியவுரிச்சீர் நான்கு. அசைச்சீரிரண்டும், வெண்சீர் நான்கு ஆகப் பதினெட்டு. 417. இயற்சீர் பத்தாவன - இயற்சீர் நான்கும். நேர்பு நிரைபு முதலாக வரும் நேரீற்று ஆசிரிய இயற்சீரிரண்டும், நேர்பும் நிரைபு மீறாகி நேரும் நிரையும் முதலாக வரும் ஆசிரிய இயற்சீர் நான்குமாகப் பத்தாம். 418. அல்லாதார் - பிறர். 419. வரகு என்பதன்கண் குற்றுகரங் களைந்தால் ஒரு நிரையசையாம். புளிமா இரண்டசையாம். ஆதலால் புளிமாவிற்கு வரகு என்பதைக் காட்டி இருநிலைமை கோடல் பொருந்தா தென்பது. அதுபற்றியே வரகுக்கு அரவு இருநிலைமைக்கு உதாரணமாயிற்று. குற்றுகரத்திற்கு முற்றுகரம் ஒத்த ஓசையாதலின் இருநிலைமை கோடற்கு ஏற்குமென்பது கருத்து. 420. ஞாயிறுகொல். வலியதுகொல் என்பனவற்றில் குற்றுகரத்தை முற்றுகர மாகவே கோடலின். அவை மாவருவாய் புலிவருவாய் என்றே கொள்ளப்படும். ஆதலின் இருநிலைமைகோடல் வேண்டியதில்லை என்றபடி. 421. முதற்கணின்ற குற்றுகரம் - நுந்தை. இதுவும் நீ நுந்தை என்ற விடத்து வெண்சீர்க்கு (த்தேமாங்காய்க்கு)ப் பதிலாக வைத்து இருநிலைமை கொள்ளலாம். என்னை? வந்துநின்றது என்பது இரு சொல்லாயினும் சீர்வகையான் ஒரு சொல்லாயினது போலக் குற்றுகரம் முற்றுகரமாக வைக்கப்பட்டு அதுவுந் தேமாங்காய் ஆகவே கொள்ளப்படுதலின் தேமாங்காய்க்குப் பதிலாக வைத்து இருநிலைமை கொள்ளவேண்டிய தில்லை என்றபடி. ஒரு சொல்லாமாகவே என்றிருப்பது நலம். வேறு என்பது வேண்டியதில்லை. 422. போதுபூவையும் நேர் நிரையாக வைக்கின் இருநிலைமை யடையாதா மெனின் சேற்றுக்கால் முதலியன போதுபூப் போலவாராது குற்றுகரம் பிரிந்து வருதலின் நேர்பு நேராகவே கொள்ளப்படுதலின் அவைபோலப் போது பூவும் இருநிலைமை யடையும் என்றபடி. 423. இடைநின்ற குற்றுகரம் என்றது வஞ்சியுரிச்சீரில் மாபோகுவாய் என்பது போல வருவனவற்றிலுள்ள போகு என்பது போல்வன. அவற்றையும் யாட்டுத்தாள் என்பதுபோல வன்றொடராக வருவிப்பின் ஓசை பிளந்து காட்டும் என்றபடி. 424. சீரிறுதிக் குற்றுகரமென்றது சார்ந்து. வரகு என்பன போலும் அசைச்சீராய் வருவனவற்றினிறுதிக் குற்றுகரத்தை. இவை முற்றுகரமாக நில்லாது என்றபடி. 425. அறுபது வஞ்சியுரிச்சீர் என்றது வெண்சீர் நான்கையும் நீக்கி. 426. இவை நேரீற்றுச்சீர் எட்டுக்கும் உதாரணம். 427. இவை நிரையீற்றுச்சீர் எட்டுக்கும் உதாரணம். 428. நேர்பீற்றுச்சீர் நான்கற்கும் உதாரணம். 429. நிரைபீற்றுச்சீர் நான்கற்கும் உதாரணம். 430. இருநிலைமை யடைதற்குக் குற்றுகர அசைகளுக்கு முற்றுகர அசை களைப் பெய்து காண்க; மாபோகுவாய் - மாமன்னுவாய் என்பதுபோல. 431. ஆசிரியவுரிச்சீர் நான்கு நிலைமைப்படல்; பாம்புபோகு. மின்னுப்போகு. பாம்புமன்னு. மின்னுமன்னு எனவும்; பாம்பு வழக்கு. மின்னுவழக்கு. பாம்புவிரவு. மின்னுவிரவு எனவும்; களிறுபோகு. அரவுபோகு. களிறுவிரவு. அரவுவிரவு எனவும்; களிறுவழக்கு. அரவவழக்கு. களிறுவிரவு. அரவுவிரவு எனவும் வரும். 432. ஈண்டு - வஞ்சியுரிச்சீருள். 433. விளங்கத் தத்தந் தன்மையான் என்பது, விளங்கத்தக்க தன்மையான் என்றிருந்திருக்க வேண்டும். தன்மையான் - தன்மையோடு. 434. பட்டமையினா லெழுத்தடியாயிற்று என்பதைப் பட்டமையின் நாலெழுத்தடியாயிற்று என்று கண்ணழிக்க. 435. உறழ்தல் - அடியுறழ்தல். 436. கூறும் என்றது ஆசிரியனை. 437. இருசீர் - சமனிலை வஞ்சிக்குரியது. 438. முச்சீர் - வியனிலை வஞ்சிக்குரியது. 439. இருசீரடி யென்றது ஈண்டு உறழாத இருசீரடியை. 440. வஞ்சித்தூக்கு இரண்டுகொள்ள வரின் என்றது. ஒரு தூக்கைப் பிளந்து இரண்டாகக் கொள்ள வரின் அமையும் என்றபடி. உதாரணம் - கலங்கழா அலிற் - றுறை - கலக்கானாதே இது தூக்கு இரண்டாக இடை வந்தது. மாவழங்கலின் மயக்குற்றன - வழி. இது தூக்கி ரண்டாகக் கடை வந்தது. இதனை நச்சினார்க்கினியருரை நோக்கியறிக. 441. பயனிலை நின்றுவற்றும் என்றது, வாள் என்பது வலந்தர என்பதனோ டியையின் வாளானது வலந்தர என்றாய் மறுப்பட்டன என்பதற்கு எழுவாய் இன்றாம். இன்றாகவே அஃது நின்றும் பயனில்லையாம். ஆதலால் வாள் பிரிந்து கூனாய்நின்றால் மறுப்பட்டன என்பதனோடு முடியும் வலந்தர என்பது இடைப்பிறவரலாகி பொருந்தும் என்றபடி. அவாய்நிலையான் வரும் எழுவாய் வேறு இன்மையின் நின்று வற்று மென்றார். வாள் வலந்தர என்பதை ஒருசீராகக் கொண்டால் பின்வரும் அடியிலுள்ள அடியென்பது இடையிற் கூனாம். என்பது பிறர் கருத்து. அது பொருந்தாதென்பது பேராசிரியர் கருத்து. 442. கரி - சான்று. 443. ஏற்புழிக் கோடல் - சொன்ன விதியை ஏற்ற இடத்திற் கோடல். என்றது செய்யுட்கண் முதலிலேயே சீர் கூனாத்தலின் அவ்விடமே கொள்ள வேண்டும் என்பது கருத்து. 444. வகைப்பட்ட எனவும் பாடம். 445. யாப்பருங்கல விருத்தியுள்ளும் வெள்ளை நிலம் பத்தெனக் கூறப்படு கின்றது. 446. வெண்டளை தட்பப் பதினேழும் கலித்தளை தட்பப் பதினேழும் ஆக முப்பத்துநான்கு தளைவழுவாம். 447. இரண்டுதளை - வெண்டளை. கலித்தளை. 448. குறிப்பசை என்று இவர் கூறியது நன்கு புலப்படவில்லை. ஆயினும் குறிப்பிசை என்று இருக்கலாம் என்பது எமது கருத்து. என்னை? அது கூறப்பட்ட உறுப்பினுள் இன்றென்றவாறு என்று கூறலின். முன்னும் (இரண்டாம் சூத்திரத்தும்) குறிப்பிசை இன்றியமையாத உறுப்போடு எண்ணப்படா தென்று கூறுதல் காண்க. இதிற் கூறிய கணக்கும் நன்கு புலப்படவில்லை. 449. ஞாயிறு என்பதன்முன் வரகுவண்டு என்பது வரின் கலித்தளை என்க. நிரையீற்று இயற்சீர்முன் நிரை வெண்சீர் வரின் கலித்தளை என்பது இவர் கருத்து. அது நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டல் - வரைநிலையின்றே அவ்வடிக்கென்ப என்னுஞ் சூத்திர உரையால் அறிக. (372-ம் சூத்திரம்) 450. கட்டளை அடி என்றது ஆசிரியத்துட் கட்டளையடியை. 451. இயற்சீரை வெண்சீராக்கல் என்றது. ஞாயிறு என்பதை மாசெல்வாய் ஆக்கல். அங்ஙனமாக்கிய மாசெல்வாய்முன் வரகுவண்டு என வருவித்துக் கலித்தளையாக்கல் என்பர் பிறர். 452. படுங்குற்றம் என்றது இயற்சீர்முன் நிரைமுதல் வெண்சீர் வரினும் கலித்தளையாமதலின் இயற்சீரை வெண்சீராக்கல் குற்றம் என்றும் ஈற்றசை நிரையியற்று என்னாது. நிரையசை என்றது மிகையாதலின் குற்றமாமென்றுங் காட்டியவற்றை. 453. எடுத்தோத்து - சூத்திரம். இலேசு - மிகை. 454. அளவடியாவன - பத்தெழுத்தடி முதல பதினான்கெழுத்தடி வரையு முள்ளவடி; அவற்றுள் மிகுதி என்றது பதின்மூன் றெழுத்தடியும் பதினான்கெழுத்தடி யையும். 455. தாமும் என்றது வெள்ளை நிலம் பத்தென்பாரை. 456. முப்பகுதியவாம் எனவும் பாடம். 457. இடையும் இறுதியும் வைத்துறழின் என்றது - தேமா என்னுஞ் சீரினை வண்டுதேமா வண்டுவண்ட என்று இடையினாதல் வண்டு வண்டு வண்டு தேமா என்று ஈற்றினாதல் வைத்துறழ்தலை. இங்ஙனமுறழின் முன்னிரு சீரும் பிரிந்து ஓரடி போலக் காணப்படும் என்றபடி. 458. உறழ்தன் - உறழின் என்றிருப்பது நலம். 459. இகழ்தலில்லாத அகவலடி - 324 ஆகும். வெண்பாவடி - 181 ஆகும். கலியடி - 120 ஆகும். --------- நாடின் அவை மொத்தம் - 625 ஆகும். 460. பயன் - பொருள். 461. நான்கு பகுதி யுரியசைச் சீரும் நான்கு பகுதியான் அசைச்சீரும், பகுதி வேறுபாட்டையுடைய இயற்சீர் பத்தொன்பதுமாக இருபத்தேழு சீரையும் அகவலடிக்கு (ஈரிரண்டு) நாலெழுத்துத் தொடங்கி இருபது எழுத்துவரையும் ஏற்று. ஏற்றும்வகை அடுத்த பாட்டாலறிக. 462. அகவற்சீர் என்பது அசைவருஞ்சீர் என்றிருத்தல் வேண்டும். இயற்சீர் பத்தென்பதெனப் பின் வரலின். 463. அகவற்கண் நான்கெழுத்தடி முதலாக ஒன்பதெழுத்தடி வரையும் ஐவகைச் சீரானும் நிலம் ஆறாம். நேரசைசீரினும் நிரையசைசீர்க்கு ஒவ்வோரெழுத்து முதனிலத்தில் ஏறலால் ஈற்று நிலத்தினும் ஒவ்வோரெழுத்து ஏறிவரும். நான்கு முதல் ஒன்பதுவரையு மெண்ணி ஆறு நிலமாதல் காண்க. 464. ஓரெழுத்துச்சீர் - நுந்தை. 465. நான்கெழுத்து அடிமுதல் பதினைந்து எழுத்தடிவரையும் 12 அடியாதல் எண்ணிக் காண்க. இங்ஙனமே ஏனைய ஐந்தெழுத்து முதலாய அடிகளையும் எண்ணிக் காண்க. அவற்றை இங்கே விளக்கிக் காட்டுதும். 1. நிலம் 4 எழுத்தடி முதல் 15 எழுத்து அடிவரை 12 அடி 2. நிலம் 5 எழுத்தடி முதல் 16 எழுத்து அடிவரை 12 அடி 3. நிலம் 6 எழுத்தடி முதல் 17 எழுத்து அடிவரை 12 அடி 4. நிலம் 7 எழுத்தடி முதல் 18 எழுத்து அடிவரை 12 அடி 5. நிலம் 8 எழுத்தடி முதல் 19 எழுத்து அடிவரை 12 அடி 6. நிலம் 9 எழுத்தடி முதல் 20 எழுத்து அடிவரை 12 அடி 7. உறழும் எனவும் பாடம். 466. நுந்தை பன்னிரண்டடி யுறழுமாறு காட்டுதும். நுந்தை வண்டு வண்டு வண்டு நாலெழுத்தடி நுந்தை தேமா வண்டு வண்டு ஐந்தெழுத்தடி நுந்தை தேமா தேமா வண்டு ஆறழுத்தடி நுந்தை தேமா தேமா தேமா ஏழெழுத்தடி நுந்தை மேவுசீர் புளிமா வண்டு எட்டெழுத்தடி நுந்தை மேவுசீர் புளிமா தேமா ஒன்பதெழுத்தடி நுந்தை பாதிரி கணவிரி வரகு பத்தெழுத்தடி நுந்தை பாதிரி கணவிரி புளிமா பதினோரெழுத்தடி நுந்தை பாதிரி நனிமுழவு புளிமா பன்னிரண்டெழுத்தடி நுந்தை காருருமு நனிமுழவு புளிமா பதின்மூன்றெழுத்தடி நுந்தை காருருமு நனிமுழவு புளிமா பதினான்கெழுத்தடி நுந்தை காருருமு நனிமுழவு புளிமா பதினைந்தெழுத்தடி இதுபோல ஏனைய சீர்களு முறழப்படும். 467. கலனளவு - நரையுருமு என்ற வாய்ப்பாட்டில் வந்தது. 468. பாட்டு - பத்துப்பாட்டு. 469. தொகை - எட்டுத்தொகை. 470. வெண்பா அடி வருமாறு:- 7 எழுத்தடி முதல் 14 எழுத்துவரை 8 அடி 8 எழுத்தடி முதல் 14 எழுத்துவரை 7 அடி 9 எழுத்தடி முதல் 14 எழுத்துவரை 6 அடி 10 எழுத்தடி முதல் 14 எழுத்துவரை 5 அடி நுந்தை வண்டு ஞாயிறு போதுபூ போரேறு என்னும் ஐந்து சீரும் எட்டடி பெறுவன. தேமா முதல் 11 சீர் 7 அடி பெறுவன. புளிமா முதல் 9 சீர் 6 அடி பெறுவன. புலிவருவாய் நனிமுழவு இரண்டும் 5 அடி பெறுவன. 471. இயற்சீர் பத்தொன்பதும் அசைசீர் நான்குமாக 23 சீர் என்க. உரிச்சீர் - உரியசைசீர். ஒன்பதிற்று மூன்று 27. இவை வெண்பாவுக்குரிய சீர். ஓரடி ஏழெழுத்து முதல் பதினான்கு வரையும் உயர்தல் மேலே காட்டப்பட்டது. 472. நாலெழுத்துச் சீரெல்லாம் ஆசிரியத்துக்கு ஏழெழுத்தடி முதலாக உறழாது எட்டெழுத்தடி முதலாக உறழப்பெற்றது. அதுபோல வெண்பாவிற்கும் நான்கு எழுத்துச்சீர்கள் உறழா. அவை ஒன்பதெழுத்தடி முதலாக உறழும். ஓரெழுத்துச்சீர் முதலிய சீர்கள் ஐந்திற்கும் ஏழு முதலாக ஒவ்வோரெழுத்து ஏறி 10 எழுத்துவரையு மேற் நான்கெழுத் தேறும். நாலெழுத்துச் சீரெல்லாம் என்பது மூன்றெழுத்துச் சீரெல்லாம் எனவும் பாடம். 473. ஆறு - கடியாறு. தீ - விறகு தீ. 474. எட்டெழுத்தடி நிலம் தொடங்கிப் பதினான்கெழுத்தடி வரை ஏழுநிலம் பெறும். 475. வேணு - பெருவேணு. 476. தீ - விறகுதீ. 477. ஒன்பதெழுத்து முதல் பதினான்கெழுத்துவரை உறழ ஆறடி பெறும். 478. ஈரைந்து ஈரேழுற்று ஈரைந்து என இசையறுக்க. இரு சீரும் பத்தெழுத்து முதல் பதினான்கு எழுத்துவரை ஐந்தடி உறழ இரண்டற்கும் பத்தடியாம். இவை முறையே தொகுப்ப வெண்பா அடி நாற்பது. எழுபத்தேழு. ஐம்பத்து நான்கு. பத்து ஆக நூற்றெண்பத்தொன்றாகும். 479. வெண்பா அடி உறழுமாறு:- நுந்தை வரகு வரகு வரகு -7 எழுத்தடி நுந்தை வரகு வரகு கடியாறு -8 எழுத்தடி நுந்தை வரகு வரகு கணவிரி -9 எழுத்தடி நுந்தை வரகு புளிமா கணவிரி -10 எழுத்தடி நுந்தை புளிமா புளிமா கணவிரி -11 எழுத்தடி நுந்தை புளிமா கணவிரி காருருமு -12 எழுத்தடி நுந்தை கணவிரி காருருமு நனிமுழவு -13 எழுத்தடி நுந்தை நனிமுழவு காருருமு காருருமு -14 எழுத்தடி இவற்றுள் ஏழெழுத்தடி தன்னொடு தன்னைத் தொடுக்குங்கால் தளைவழுவும் ஆதலின் அது தொடுத்துக்கொள்க. தளைவழுக் களையு மாற்றை மோனைத்தொடை முதலிய சிறப்புச் சூத்திர உரைகளாலறிக. 480. அறிவருங்குரைத்து - அறிவரிது. 481. எந்நூலிலுள்ளது என்பது புலப்படவில்லை. 482. நிரையீற்றியற்சீர் - 16ம் ஏனைய நிரையீற்று ஆசிரிய உரிச்சீர் - 4-ம் வெண்சீர் - 4ம் ஆக 24ம் கலிக்குரிய. ஒருசீரான் உறழ்ந்த அடி ஐந்தாம். எனவே ஒவ்வொரு சீரும் ஐவைந்தடி யுறழும். 483. ஈரெழுத்துச்சீர் முதலாகச் சொல்லப்பட்ட சீர்கள் (2,3,4,5) நான்கற்கும் 13 எழுத்துமுதல் 20 எழுத்துவரை உயரும். அடியைந்தாமாறு:- 2 எழுத்துச்சீர் 13 எழுத்துமுதல் 17 எழுத்துவரையுயர 5 அடியாம் 3 எழுத்துச்சீர் 14 எழுத்துமுதல் 18 எழுத்துவரையுயர 5 அடியாம் 4 எழுத்துச்சீர் 15 எழுத்துமுதல் 19 எழுத்துவரையுயர 5 அடியாம் 5 எழுத்துச்சீர் 16 எழுத்துமுதல் 20 எழுத்துவரையுயர 5 அடியாம் 484. 24 சீரும் ஐந்தடி உறழக் கலி 120 அடி ஆகும் என்க. 485. இதில் மாசெல்வாய் இறுதிச்சீராய் வருதல்வேண்டும். மாறி எழுதப் பட்டது. பின் புலிசெல்வாய் மாசெல்வாய் என ஈற்றுக்கண் எனக் கூறும் வாக்கியத்தானறிக. கலியடி உறழுமாறு:- ஞாயிறு புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் 13 எழுத்து ஞாயிறு புலிசெல்வாய் புலிசெல்வாய் புலிசெல்வாய் 14 எழுத்து ஞாயிறு புலிசெல்வாய் புலிசெல்வாய் புலிவருவாய் 15 எழுத்து ஞாயிறு புலிசெல்வாய் புலிவருவாய் புலிவருவாய் 16 எழுத்து ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் புலிவருவாய் 17 எழுத்து பிறசீர்களையு மிவ்வாறே உறழ்ந்துகொள்க. 486. ஆசிரியனகத்தியன் எனவும் பாடம். 487. வரையாது கூறின் என இயைக்க. வரையாது - வரையறை செய்யாது. 488. பரந்து பற்றனவற்றிற்கும் எனவும் பாடம். இது சிறப்பு. நச்சினார்க் கினியருரை நோக்குக. 489. பிரத்தாரம். நட்டம். உத்திட்டம். குருலகுச்செய்கை. சந்தத்தொகை (எண்). நிலவளவு என்பன ஆறுவகைப் பிரத்தியங்களாம். பிரத்தாரம் - உறழ்ச்சி நட்டம் - கேடு. உத்திட்டம் - நித்திட்டம். (சுட்டு(வீரசோழியம் யாப்பு - 30ம் செய்யுள் உரை நோக்குக.) குருவாவது நெட்டெழுத்தும் நெடி லொற்றும் குறிலொற்றும் வருவதாம். இலகுவாவது - குற்றெழுத்து வருவதாம். இதனை:- உறழ்ச்சிகே டுத்திட்ட மொன்றிரண்டென் றேத்தித் திறப்படுத்த திண்ணிலகுச் செய்கை - சிறப்பித்தாங் கெண்ணி னிலவளவோ டேய்ந்த விருமூன்றே திண்ணியோர் கண்ட தெளிவு. (யாப்பருங்கல. விரு. 495ம் பக்கம்) என்னும் வெண்பாவானும். ஏறிய நெட்டெழுத் தேநெடி லொற்றே யெழில்வடநூற் கூறிய சீர்க்குறி லொற்றே குருவாங் குறிலதுவே வேறியல் செய்கை லகுவென் றாகுரும் வியன்குறிலு மீறிய லிற்பிறி தாமொரு காலென் றியம்புகரே. என்னும் (வீரசோ. யாப்பு 26) கட்டளைக்கலித்துறைச் செய்யுளானும் அறிக. பிரத்தியம் - தெளிவு என்பர் வீரசோழியகாரர். செப்பார் தெளிவுக ளாறையும் என்பதனாலறிக. (யாப்பு - 27). 490. சிதைவு - அழிவு. குற்றம். 491. வேறு பல காரணம் - அளவிற்பட் டமைந்தமையும் பயின்றுவருதலும் தளையமைந்து நிற்றலும் தொடைப்பாடமைந்து நிற்றலும் என்பன. இவற்றை 32 -ம் 33-ம் சூத்திர உரை நோக்கியறிக. 492. யாழ்நூல் - இசை நூல். சாதி முதலிய மூன்றும் இசைப் பாட்டின் பேதங்கள். 493. கட்டளைப்பாட்டு என்பது கட்டளைப்பாட்டு என்றிருப்பது நலம். 494. அளவடி - கட்டளையடியல்லாத நாற்சீரடி. கட்டளையடியாற் செய்திலரா யினும் கட்டளையல்லாத அளவடியாற் செய்தனர் என்பது கருத்து. 495. கடைச்சங்கத்துக்குப் பிற்காலத்தார். 496. செய்த அடி - கட்டளை யல்லாத அளவடி. 497. போத்தந்து - போகத் தந்து - கொண்டுவந்து. 498. ஆசிரியர்க்கு என்பதில் அக்கு. சாரியை என்பது இவ்வுரையாசிரியர் கருத்து. 499. கோடும் - கொள்ளுதும். 500. விராய் வரினும் என்ற உம்மை விரவாது வரினும் என்பதைத் தழுவலின் இறந்தது தழீஇயிற்று. ஆதலின் விரவாது வருவது பதினேழ் நிலக் கண்ணுதலின் விரவுதலும் அதன் கண்ணே என்பது பெறப்படும் என்பது பெறப்படும் என்பது கருத்து. 501. ஆசிரியம் அதிகாரப்பட்டமையின் அதிகாரத்தாற் கொள்க என்றார். 502. உடன் கூறாது என்றது நிரையீற்று ஆசிரியவுரிச்சீரிரண்டையும் உடன் கூறாமை. 503. தன்சீர் - ஆசிரியவுரிச்சீர். 504. ஓங்குமலை - நீடுமதி என்னும் வாய்பாடு. 505. உவவுமதி - குளிறுபுலி என்னும் வாய்பாடு. 506. தன்சீர் - ஆசிரியவுரிச்சீர். 507. நாலெழுத்திற்கு - நாலெழுத்தடிக்கு. எனவே ஐந்தெழுத்தடி முதலாக வரும். 508. தளைவகையடி - நிரையீற் றாசிரியவுரிச்சீரடி. 509. தளைநிலையடி - நிரையீற் றாசிரியவுரிச்சீரடி. 510. அசைச்சீர் - நேர்பும் நிரைபும். 511. வெண்சீர்நிற்ப வெண்சீர்வரின் வெண்பாவிற்குத் தளைகொள்ளப்படா என்பது கருத்து. இயற்சீர்வெண்டளையே கட்டளைக்குரியது. வெண்சீர் முன் வெண்சீர்வந்து தட்பின் அது கட்டளையடியாகா தென்பது கருத்து. 512. ஏறியநிலம் - 12 எழுத்தடிக்கு மேற்பட்ட நிலம் என்பது இவர் கருத்து. 513. இயற்சீர்பத்து:- தேமா, புளிமா, கணவிரி, பாதிரி, (325) சேற்றுக்கால். களிற்றுத்தாள் (327) போரேறு. பூமருது. கடியாறு. மழகளிறு (328) என்பன. 514. உரியசை முதலுமீறுமாகியவழி என்றது. போரேறு போதுபூ என்றவழி. ரேறு என்பதும் போது என்பதும் உரியசையாதலின் அவை நிரையசை யாக வைத்துத் தளைகொண்டு ஆசிரியத்தளை கொள்ளப்படா தென்பது கருத்து. 515. இயலசை - நேர். நிரை. 516. அவை - உரியசை. 517. ஒன்றல் - ஈரசையுந் தம்முளியைதல். என்றது நேரும் நேரும் நிரையும் நிரையுமாக இயைதல். 518. ஒருசீர்க்கு மூன்று எனவே இருசீர்க்கும் ஆறாகும். 519. ஒருசீர்க்கு ஆறு எனவே இருசீர்க்கும் பனிரண்டாம் ஆறுதொடங்கிப் பன்னிரண்டுவரை உறழ நிலம் ஏழாதல்காண்க. 520. பகரக்கோட்டில் வாக்கியம் மாறி எழுதப்பட்டது. அது. அதுவே கருத்தெனின். வஞ்சியுரிச்சீர்... அவ்வச் சூத்திரங்களானே இச் சூத்திர மிகையாம் பிறவெனின். - அற்றன்று.. என்றிருத்தல் வேண்டும். 521. எடுத்தோத்தில் வழி உய்த்துணர்வதென்பர் சொல்லதிகாரத்தினுட் சேனாவரையரும். 522. ஞாயிறு போல்வன ஈரெழுத்து இயற்சீர். இவை விலக்குண்ணுவது. தன் சீரெழுத்தின் சின்மைமூன்றே என்றதனானு உறழ்நிலையில் என இச் சூத்திரத்துட் கூறினமையானும் என்க. 523. இரண்டுநிலை. நான்குநிலை. எட்டுநிலையாகி என்க. நிரனிறையாகப் பின்வருவனவற்றை இயைக்க. 524. நாலசையையும் (நேர் நிரை நேர்பு நிரைபு) முதலிலும் ஈற்றிலும் (நடுவிலும்) வைத்துறழ்தலால் ஆன (நான்கு பதினாறு 64) அறுபத்து நான்கு சீருள் முதற் பதினாறனுள் வரும் வெண்பொய்ப்படுமாயின் இவ்வஞ்சியடி உறழவாம். மோனை - என்றது சீரைப்போலும். இன்னும் வஞ்சியுறழாதன. மேற்கூறிய பதினைந்தும், மூன்றும் மூன்றும் ஒன்றுமாக இருபத்திரண்டாகும் இவற்றின் விரி பிற்காண்க. இச் செய்யுளிற் பிழை உண்டு. ஆயினும் கருத்து நோக்கிப் பொருள் கூறப்பட்டது. 525. இரண்டெட்டு - 16 - ம் சீர் ஐம்பத்திரண்டு - 52 - ம் சீர் மூவெட்டு - 24 -ம் சீர் ஐம்பத்துநான்கு- 54 -ம் சீர் நாலேழ் - 28 -ம் சீர் ஐம்பத்துஐந்து - 55 -ம் சீர் ஆறைந்து - 30 -ம் சீர் ஐம்பத்துஎட்டு - 58 -ம் சீர் ஆறைந்து ஒன்று - 31 -ம் சீர் ஐம்பத்து ஒன்பது -59-ம் சீர் நாற்பது - 40 -ம் சீர் அறுபஃதொன்று - 61 -ம் சீர் நாற்பது நான்கு - 44-ம் சீர் நாற்பது ஆறு - 46 -ம் சீர் இவை பதினைந்தும் வஞ்சியடி நாற்பது ஏழு - 47 -ம் சீர் யுறழாத சீர்கள். 526. அறுபஃதொன்றுநான் கென்பது அறுபத்தொன்றைந்து நான் கென்றிருத்தல் வேண்டும். என்னை? ஐந்தெழுத்துச் சீரும் வருதலின். 527. இப்பாட்டு:- நாலெட்டே யேழெட் டறுபத்தி ரண்டிவற்றா மேழெழுத் தாறாக வெட்டெழுத்து மூன்றேயா மேழெழுத்து மும்மூன்றா யெட்டெழுத்தா னோரொன்றா மாறெட் டறுபஃது மூன்று. இதன்பொருள்:- நாலெட்டு - 32 - ம் சீர். ஏழெட்டு - 56ம் சீர். அறுபத்திரண்டு - 62ம் சீர் இவை மூன்றும் நான்கு நிலைமை பெறலால் ஏழெழுத்துச்சீராறும் எட்டெழுத்துச்சீர் மூன்றுமாகும். இனி, ஆறெட்டு - 48ம் சீர். அறுஃபது. அறுபத்து சீர். (அறுபஃது) மூன்று - 63ம் சீர். இவை மூன்றும். இவை ஏழெழுத்துச்சீர் ஒன்பதும். எட்டெழுத்துச்சீர் மூன்றும் மாறும். எட்டுநிலைமைப் பட்டுஞ் சீர்ப்பாட்டுத் தவறிற்றுப்போலும். 528. வஞ்சியுரிச்சீர் என்ற பாட்டில் வஞ்சியுரிச்சீர்களை முறையே அவ்வவ் வுரிச் சீர்களையுழ்ந்தும் அவற்றுள், குறைப்பன குறைத்தும் சேடமாக்கு வனவற்றை சேடமாக்கியுங் கொள்க. மிகுத்தல் - (குறைந்து) மிகுத்தல் - சேடமாக்கல். எனவே உறழாத சீர்கள் நீக்கி உறழுஞ் சீர்கள் மிகுத்துக் கொள்க என்றபடி. 1. 1. களிறுவழங்குவாய். 2.புலிவழங்குசுரம்.3. பாம்பு வழங்குசுரம். 4. களிறுவருசுரம். 5. களிறுபோகுசுரம். 6. புலிவழங்குகா. 7. பாம்பு வழங்குகாடு.8. களிறுவருகாடு. 9. களிருபோகுகாடு. 10. மா வழங்குகடறு. 11. புலிவருகடறு. 12. புலிபோகுகடறு. 13. பாம்பு வருகடறு. 14. பாம்புபோகுகடறு. 15. களிறுசெல்கடறு என்றிருத்தல்வேண்டும். 2. 1. களிறுவழங்குகரம் 2. புலிவழக்குகடறு 3. களிறுவருகடறு களிறுவிரவுகரம் புலிவிரவுகடறு களிறுவருகுரவு அரவுவழக்குகரம் புலிவழங்குகுரவு அரவுவருகடறு அரவுவிரவுகரம் புலிவிரவுகுரவு அரவுவருகுரவு 3. 1. களிறுவழக்குகாடு 2.பாம்புவழக்குகடறு 3. களிறுபோகுகடறு களிறுவிரவுகாவு பாம்புவிரவுகுரவு களிறுமன்னுகுரவு அரவுவழக்குகாவு காவுவிரவுகடறு அரவுமன்னுகடறு அரவுவிரவுகாடு காவுவழங்குகுரவு அரவுபோகுகுரவு அரவுவிரவுகாவு காவுவிரவுகுரவு அரவுமன்னுகுரவு 529. ஏழெழுத்துச்சீர் முப்பத்துமூன்றாவன:- 15 சீருமுறழ்ந்ததனால் வந்த ஏழெழுத்துச்சீர் 15 3 சீருமுறழ்ந்ததனால் வந்த ஏழெழுத்துச்சீர் 6 3 சீருமுறழ்ந்ததனால் வந்த ஏழெழுத்துச்சீர் 9 1 சீருமுறழ்ந்ததனால் வந்த ஏழெழுத்துச்சீர் 3 ------------------------------------------------- ஆக 33 530. எட்டெழுத்துச் சீர் 9 531. ஒன்பதெழுத்துச் சீர் 1 -------------------------------------------------- ஆக 43 இவை அடி உறழாதன. வஞ்சியுரிச்சீர் 224 - 43 கழிக்க 181-ம் உறழ்வானவாம். 532. 12க்கு மேல் 18 எழுத்தடி கொள்ளரின் 6 நிலம் கூடு கூடவே 7 நிலமும் 6 நிலமுமாக 13 நிலம் வரும் என்றபடி. 533. வஞ்சிச்சீரில் அடிக்குரிய 181ஐயும் 4 அடியாற் பெருக்க 724 அடி காண்க. 534. ஆறெழுத்துப் புலிவருகரம் என்பது எழுதுவோரால் விடப்பட்டது போதும். 535. முச்சீரடி வஞ்சிக்குரியது. 536. மேல் நிறுத்துமுறை என்றது 376-ம் 351-ம் சூத்திரங்களில் நிறுத்ததுறையை. 537. ஈண்டுச் சொல்லுமுறை என்றது அளவடிக்கே நிலங்கூறுமுறை. 538. இதனும்பர் - 14 எழுத்தடியின்மேல். 539. செப்பிக் கூறும் பாவாகாது செய்கை தோன்றியே நிற்கும் என்பது வெண்பா வாகாது வெண்பாவின் செய்கை தோன்றிய மாத்திரையே நிற்கும் என்றபடி. 540. நெடிலடி மூன்றாவன - 15 எழுத்தடியும் 16 எழுத்தடியும் என்பன. 541. ஞாயிறு கடியாறு என்னும்படி இயற்சீரான் வந்த ஆசிரியவடி. 542. இதுவும் - இச்சூத்திரமும். 543. வந்ததும் என்றதன்பின் சில சொற்கள் தவறினபோலும். வந்ததும் அது கட்டளையடியன் றென்பது என இயைக்க. ஞாயிறு புலிவருவாய் மாவருவாய் புலிவருவாய் என்பது மூன்றாஞ் சீர் வெண்சீர் வந்ததற்குதாரணம். இது கட்டளையடியன்று. 544. இடைநிற்பன நிலைமுதல் வெண்சீர் என்பது பெறுதுமாகலானும் என்றிருத்தல் வேண்டும். 545. இதற்கு ஆசிரியத்தளையோடும் வெண்டளையோடும் விராய் என்பவர் இளம்பூரணர். நச்சினாக்கினியரும் அவ்வாறே கொள்வர். 546. தூஉத்தீம்புகை என்பதை நேரும் நேருமொன்றிய ஆசிரியத்தளை என்று இவர் கொண்டதற்குக் காரணம் - அளபெடையை ஓரெழுத்து மிகுந்து ஓரளபு கொண்டமையே. தூஉஉ என இன்னுமோரெழுத்து மிகுந்து ஈரளபு கொண்டால் வெண்டளையாம். அவ்வாறு கொள்வர் நச்சினார்க்கினியர். 547. வெண்பாவென்ற சொல்லானே வெள்ளைப்பா என அதனிலக்கணம் போன்று நின்றதென்றபடி. 548. வெண்பாவிற்குரிய செப்பலோசை வேறோசை விராய வழித் தன்னோசை யழியும். ஏனைய ஆசிரியப்பா வெண்பாவோசை விரவினும் தன்னோசை யழியா. என்போல எனின் பளிங்குடன் பஞ்சு சேருங்கால் பளிங்கு வேறுபடும். பஞ்சு வேறுபடாது. அதுபோல என்பது கருத்து. வேற்றோசை எனவும் பாடம். 549. நிலைக்குரி மரபின் என்றது நிற்றற்குரிய மரபினை. என்றது பா வேறுபட்டு இசையாமையை. 550. இது வஞ்சியடி. 551. காட்டு - காஅட்டு எனவும். காணாது என்பது காணாஅது எனவும் அளபெடுக்க வேண்டும் என்றபடி. 552. பா - ஓசை. 553. பிற செய்யுள் - வெண்பாவும் ஆசிரியப்பாவும். 554. அவற்றுக்கு - அவ்வெண்பாக்களுக்கு. 555. விராயதளை (383) என்பதற்கு வெண்பாவோடு விராயதளையொன்று பொருள்கூறி, வெண்சீர் ஒன்றிவருமடியும் கலிப்பாவிற்கு வருமென்று முன்கூறியபடியே ஈண்டுங் கலிப்பாவோடு இயைபுபட்ட வெண்பாவடியும் என்றும், 384-ம் சூத்திரத்து வெண்பாவடி ஆசிரியவடியுள் மயங்கி வருமென்று கூறியபடியே ஈண்டும் அதனோடு (வெண்பாவோடு) இயைபுபட்ட ஆசிரிய வடியுங் கூறி என்றுங் கூறினார். அம்மூன்றனையும் உடன் கூறுதல் என்றது. அவ்விரண்டு சூத்திரத்தையும் உடன்வைத்து கலியையும் வெண்பாவையும் ஆசிரியத்தையும் ஒருங்கு கூறுதலை. ஆண்டுச் சிறந்தவாறு என்றது அச்சூத்திரத்து எப்படிக் கலி சிறந்ததோ அவ்வாறே ஈண்டும் சிறந்ததாகக் கொண்டு என்றபடி. அவ்வதிகாரமென்றது கலியதிகாரப்பட்டு நின்றமையை. 556. கூறிய - கூறி என்றிருக்க வேண்டும். இச்சூத்திரத்தானே கலிக்கும் விதித்தலின். 557. அளவடியை மூன்று பாவிற்கும் அவ்வப்பா வோசையோடு வேறுவேறு கொண்டாற்போல இவ்வடியையும் அவ்வவ்வோசையாற் கொள்க என்றபடி. எனவே, அவ்வத் தளையடியான் வருமென்றவாறு. பின் ஐஞ்சீரடியும் என வருதலின் முன்னுள்ள ஐஞ்சீரடி என்பதனை என்பது வேண்டியதில்லை ஐஞ்சீரடியையும் என்றிருப்பது நலம். 558. சொல்லுதும் - சொல்லும் என்றிருத்தல் வேண்டும். 559. தனக்குரிய வெண்டளை என்றது. - கலித்தளையன்றி வெண்டளையும் கலிப்பாவிற்குரியது என்றதை. ஏனெனில் வெண்சீரானே கலிபிறத்த லின். 560. ஈண்டு - இவ்வாக்கியத்தில் வரும் வினாவிற்கு விடை காணாமையின் சிலவரி தப்பியதோவென்று ஐயம் உண்டாகின்றது. அல்லது ஆசிரியத் தளையானும் தனியே வருமென்று இவர் உதாரணங் காட்டியிருத்தலின் அதுவே விடை யாக உய்த்துணர வைத்து இதனால் பிறர் கருத்தைக் கூறியிருத்தல்வேண்டும். 561. நேரடி நாற்சீரடி. 562. இச்சூத்திரற்கேலாது என்றது. நேரடிமுன் இரு சீரடி என்று சூத்திரஞ் செய்யாது. அறுசீரடியே என்று சூத்திரஞ் செய்தமையின் ஏலாது. அன்றியும் நேரடிமுன் அறுசீரடி வரின் என்று கொள்ளவேண்டும். கொள்ளின் அது பதின்சீரடி யாமாகலின். அதனாலும் பொருந்தாது என்றபடி. 563. இது குறளடி தூங்கியதற்குக் காரணம். 564. இது சிந்தடி தூங்கியதற்குக் காரணம். 565. வருமளவும் - வருவனவும் என்றிருத்தல் வேண்டும். 566. அராகம் என்றது ஈண்டு முடுகியலடியை. 567. பிறவடியோடும் தொடராவுற்று - பிறவடியோடுதொடராதுற்று என்றிருத்தல் வேண்டும். அராகம் பிறவடி யோடு தொடராது தனித்து வருதலின். 634ம் சூத்திரவுரையையும் முடுகு வண்ணச் சூத்திரத்தையும் நோக்குக. நச்சினார்க்கினிய ருரையையு நோக்குக. 568. இதனை - நாற்சீரடியினை. 569. அதுவும் - முற்றும்மையும். முற்றும்மை ஒரோவழி யெச்சமுமாகும் என்பது சூத்திரம். 570. இரண்டன்மையின் என்றது ஐஞ்சீரடி கூறமுன்னர் நாற்சீரடியுங் கூறப்பட்டமையின் மூன்றுள் என்றபடி. 571. அல்லதூஉம் என்றமையின் முன் சிலவரி சிதைந்திருத்தல்வேண்டும். 572. அதனை - எழுசீரடியை. 573. ஐஞ்சீரடி முதன்மூன்று - ஐஞ்சீரடி அறுசீரடி எழுசீரடி என்பன. என்பார் என்பதற்கு முடிபில்லையாதலின். இத்தொடரில் யாதோ பிழையுண்டு. 574. முன் வரையறையின்று என்று கூறுதலானே ஈண்டும் இன்றென்பது வரையறையின்று என்றிருத்தல்வேண்டும். வரையறையின்மை - வருதல் கூடாது என்னும் நியதியின்மை. எனவே வருதலுங்கூடும் என்றபடி. 575. வருமென்பதூஉம் என்றிருப்பது நலம். 576. எருத்தடி - ஈற்றயலடி. 577. குட்டம் - குறைவு. மண்டிலங்குட்டம் என்னும் 422ம் சூத்திரம் நோக்குக. 578. அத்துணை - ஈற்றயலடி முச்சீரடியாக வருதலளவு. 579. பிறக்குநோக்காது என்பது வஞ்சிச்சீர். அது முன்வந்த வெண்சீரோடு விரவி வந்தது. 580. கூட்டம் - வஞ்சியடிக் கூட்டம். என்றது வஞ்சியடியோடு கூடல் என்றபடி. வஞ்சியடிபோன்றது என்றதனால் அன்னதன்று. அதுபோன்று ஓசை தந்து நின்றது என்றபடி. 581. முரற்கை - கலிப்பா. 582. தாம் என்றது முச்சீரை. 583. சின்னம் - எண்ணுறுப்பின் பகுதி. 584. எண்ணுறுப்பு என்றது அம்போதரங்கத்தை. இவர் எண்ணுறுப்புள் (457-ம் சூ) முச்சீரை இருசீர் என்றும் இருசீரை ஒருசீர் என்றுங் கோடலின் அவற்றோடு ஈண்டுங் கூறியன மாறுபடுகின்றன. ஆதலின் இது இடைச்செருகல்போலும். அன்றேல் மறந்து கூறினார் எனலுமாம். அன்றேல் அதுவும் உடன்பாடு போலும். ஆராயத்தக்கது. 585. தூக்கு - தூக்கப்பட்ட (இறுதி) அடி. 586. செந்தூக்கு - ஆசிரியவடி. 587. மண்டிலம் - எல்லாவடியும் நாற்சீரடியான் வருவது. 588. ஈண்டு - வஞ்சிப்பாவினிறுதியில் ஆசிரியவடிவருமிடத்து. 589. நூல்செய்தார் - சிறு காக்கைபாடினியார் முதலியோர் போலும். 590. வெண்பா அடி என்றது - காட்டிய உதாரணத்துள் -2-ம் அடியை. அது முழுவதும் இயற்சீர் வெண்டளையான் வந்தமை காண்க. 591. எருத்தடி - ஈற்றயலடி. 592. கூற என்பது வேண்டியதில்லை. கூறி என்றிருந்திருக்கலாம். 593. அல்லாதார் - இவ்வாசிரியரல்லாதார். அவர் ஆரிடம் என்ப. யாப்பருங் கல விருத்தி நோக்குக. 594. இயலசைச்சீர் - நேரும் நிரையுமாகிய இயலசைச்சீர். 595. நேரிறுதி வந்த என்றது இரண்டாஞ் சீராகிய நேரீற்றியற் சீருக்குப்பின்னே நிரையும் நிரைபும் இறுதிச்சீராய் வந்து தளைத்து முடியும் என்றபடி. 596. தனிவந்த - மூன்றாஞ் சீராகித் தனியே வந்த. 597. இடை - வெண்பாவினிடை. 598. அசைச்சீர் இயற்சீருள் அடங்குமாற்றுக்குக் கூறினான் என்றபடி. 599. என்றார்க்கு... கூறாரோ எனின் என்பது வலிந்து கோடலாம். 600. என்னை என்பது வேண்டியதின்று. 601 - 602. செறா அய் இலா அர் என்பவற்றை இவர் மூன்று மாத்திரையாக்கித் தளைவகையின்றி வந்தன என்றது பொருத்தமின்று. செறாஅஅய் எனவும் இலாஅஅர் எனவும் நான்குமாத்திரை அளபெடையாக்கின் தளைவழுவாது. அங்ஙனங் கொள்வர் நச்சினார்க்கினியர். அவருரை நோக்குக.. 603. அல்லாதார் - தொல்காப்பியரல்லாதார். 604. இது என்றது எய்போகிடந்தானென்னேறு என்ற அடியை. 605. அவ்வெழுநிலை - அந்த எழுசீர்நிலை (388) 606. ஈண்டு - இவ்விரண்டு சூத்திரத்துள்ளும். 607. இருசீரடி - வஞ்சியடி. 608. அது - மாத்திரை. 609. பொருட்காய் இன்றியமையாதது எழுத்து என்க. 610. அவை மூன்று - எழுத்து. அசை, சீர் என்பன. 611. இவற்றை - எழுத்து முதலிய மூன்றையும். 612. பொருளின்றி - பொருள்படாமல். 613. அடைக்கப்பட்டவாக்கியம் ஏட்டில் இல்லை என்பர் பவானந்தம் பிள்ளை. 614. வைத்திலானென்பதூஉம் என்பது S. கனகசபாபதிப் பிள்ளை பதிப்பிலுள்ள பாடம். அது பொருத்தமில்லை. 615. அமைந்து மாறல் - அமைந்து முடிதல். 616. இது - அடி. 617. இது இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானும் முடிய நாட்டியது. 618. இவ்வடி பொருட்டொடர்வினை அறுத்துக் குறைத்துச் செய்தது. முதலடிக் கண் பொருள் முடியாமையின். இனி, மணிகை, வனமுலை, மதிமுகம், மலர் விழியிணை என்று பொருள் தொடராது பிரிந்து நிற்றலின் பொருட்டொடர்பினைச் சீர்க்கண்ணும் அறுத்துக் குறைத்துச் செய்ததாயிற்று. 619. யாப்புப்போற் கொள்க என்றது தொகுத்தல் முதலிய நான்கும் நூல் யாப்பென்று பெயர்பெற்றாற்போல இந்த யாப்புறுப்பும் இவ் வெழு வகைப் பகுதியையு மடக்கி யாப்பு என்று பெயர்பெறுமென்றபடி. 620. மூவேந்தர் - சேர சோழ பாண்டியர். 621. நாவல் - ஒரு மரம். இதுபற்றி நாவலந் தண்பொழில் (சம்புத்தீவு) என்று பெயர் பெற்றது. 622. தமிழ் என்பது தழீஇ என்றிருத்தல் வேண்டும். 623. யாப்பின் மரபுப்பகுதி என்றிருத்தல் வேண்டும். யாப்பின் வழியது என்பதற்கு முன்னுரை விரிவுரை நோக்குக. 624. யாப்பின் மரபுப்பகுதி என்றிருத்தல் வேண்டும். 625. வடவேங்கடம் என்பது தொடங்கியுள்ள வாக்கியம் முன்வரும் வட வேங்கடம் எனத் தொடங்கியுள்ள வாக்கியத்துக்கு முன் வரல் வேண்டும். 626. அங்ஙனங் கூறப்பட்ட - எழுவகையாக முற்கூறப்பட்ட. 627. மரபாவது நாற்சொற்களும் வழக்கின்கண் வழங்குகின்றபடியே செய்யுளின் கண்ணும் யாக்கப்பட்டுக் கிடப்பது. யாத்தல் - இயைத்தல்; வழக்குமரபே செய்யுளாதலின் செய்யுண் மரபு மதுவாகும். 628. இடை - இடம்; வேறுபாடுமாம். 629. பரப்பப்பட்ட - படுக்கப்பட்ட என்றிருப்பது நலம். 630. தொல் - எழுத்ததிகாரத்து. சுட்டு முதலாகிய இகர விறுதியும் என்பதனால் முடிக்கப்பட்ட அதோளி முதலியனவும் குயின் என் கிளவி இயற்கை யாகும் என்பதனால் முடிக்கப்பட்ட குயின் என்கிளவியும் தொல்காப்பியர் காலத்து வழங்கின என்பது பெறப்படும். இவை தொல் - சொல்லதிகாரத்து கடிசொல் லில்லை காலத்துப் படினே என்னுஞ் சூத்திரத்து ஒன்றென முடித்தலாற் கடியப்பட்டன. 631. பாட்டினுந் தொகையினும் என்றது பத்துப் பாட்டினும் எட்டுத்தொகை யினும் என்றபடி. 632. போயின - வினைப்பெயர். 633. குழை - தோடு. 634. குழல் - பெண்கள் மயிர்முடிக்கும் ஐம்பாலுள் ஒன்று. 635. தேசிகம் - தேச சம்பந்தம். 636. இவை - ஓரிடத்துப் பொருளை ஓரிடத்துப் பொருளாகச் சொல்லுதன் முதலியன. 637. பருவம் - வயசுப்பருவம். ஈண்டுப் பேதைப்பருவம். 638. கொல்வினை - கொற்றொழில். 639. புழுகு - அம்பின் மொட்டு. 640. துய்வாய் - பூ; ஆகுபெயர். 641. உழுதுகாணல் - துளைதாள் நீக்கிக்காணல். ஆர் - ஆர்க்கு. 642. காலொடு - காற்றில். 643. துப்பு - பவளம். 644. செங்கோடு - சிவந்தமேடு. 645. நெய்த்தோர் - இரத்தம். 646. திரிசொல்லும் சான்றோர் வழக்காதலின் வழக்கினுள் அடக்கினான் என்றபடி. 647. களந்தை - களத்தூர். 648. கடையாயார் நட்பிற் கழுகனைய ரேனை யிடையாயார் தெங்கி னைனயர் - தலையாயா ரெண்ணரும் பண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை யுடையோர் தொடர்பு. என்னும் (நாலடி. 216) செய்யுளில் கமுகு தெங்கு பனை என்னும் மூன்றும் புறக்காழனவாதலின் புல்லினமென்றார். புறக்கா ழனவே புல்லெனப் படுமே என்பது (தொல்காப்பியம் மரபியல். 85) சூத்திரம். 649. ஆசிரியர் என்னு முற்பாடம் பொருத்தமில்லை. 650. எழுந்தான் - வினையாலணையும் பெயர். அஃதாவது - தூக்காவது. 651. ஆனும் என்பன விகற்பப்பொருளில் வந்தன. 652. பா - ஓசை; செய்யுளை அறிவிப்பது. 653. செய்யுள் என்பது செய்யுளுள் என்றிருத்தல்வேண்டும். 654. அகவல் - அழைத்தல். அகவன் மகளே அகவன் மகளே (குறு. 23) என்னும் பாட்டையும் அதன் உரையையும் நோக்குக. 655. கூற்று - ஒருவர் ஒன்று கூறுவது. ஒருவர் வினாவிற் கூறுவதுமாம். மாற்றம் - அதற்கு மறுமாற்றம் பின் ஒருவர் கூறுவது. விடையாகக் கூறுவதுமாம். ஆகிச் சொல்வது என இயையும். இதனை இக்காலத்தும் கூறுவதுமாம் கழைக்கூத்தர்பாற் காணலாம். கேட்பச் செப்பிக்கூறாது என இயைக்க. ஆகி என்பதனைக் கூறாது என்பதனோடு முடிப்பது சிறப்பன்று. 656. அழைத்தல் - அழைத்தல் கூறல். 657. களம் - போர்க்களம். 658. உறழ்ந்து - மாறுபட்டு. 659. பூசல் - போர். 660. அதன் - வெண்பாவின். 661. போல்வது - பெறுவது என்றிருப்பது நலம். நச்சருரை நோக்குக. 662. முரலல் - துள்ளி ஒலித்தல். 663. போலும் என்பது பெறுவது என்றிருப்பது நலம். 664. இருசார் இன்மையின் என்றிருப்பது நலம். S. கனகசபாபதிப்பிள்ளை பதிப்புப் பொருத்தமின்று. 665. அல்லது என்பது ஒழிந்துநின்ற என்பதோடு முடியும். அல்ல எனினுமாம். 666. அவ்வாறு கூறினான் என்றது. ஏனை இருசார் என்று கூறினார் என்றதை. 667. ஆசிரியவீற்றானும் வெண்பாவீற்றானும் முடியும் கலியும் வஞ்சியும் அவ்விரண்டோடும் மயங்கியும் மருட்பாவென்று சொல்லப்படா மையின் அது பிழைக்கு மென்றபடி. 668. அவை மேற்கூறிய அகவன் முதலிய நான்கும். பா - ஈண்டு ஓசை. 669. முதனூலாசிரியன் - அகத்தியன். 670. இயனூல் - இயற்றமிழ் நூல். இயல் - இலக்கணம். 671. ஐந்து செய்யுளாவன - ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்பன. 672. இற்றது - முடிந்தது. 673. பாடல் - அவ்வரையறை அளவைச் சொல்லல். 674. கூறுபாடறிதல் - வரையறுத்தல். 675. ஓடுவது - ஓதுவது என்றும் பாடம். அதுவே பொருத்தம்போலும். ஓதுதல் - சொல்லுதல். அவ்வத் தூக்கை ஓதுதல். 676. இவ்விறுதி - என்பது இவ்வறுதி என்று காணப்படுகின்றது. அதுவே பொருத்தம். S. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பு நோக்குக. 677. தூக்கு அறுப்பு - தூக்கினது அறுப்பு. 678. புலவு என்பதை முன்னடியோடு சேர்ப்பின் நாற்சீரடியாம். 679. இடை - வேறுபாடு; அளவுமாம். 680. தம்மொடு தம்மை - எடுத்த அடியோடு அந்த அடியை. 681. ஓரடிக்கண்ணே தொடுப்பவன் - முரண், பொழிப்பு, ஒருஉ முதலிய. 682. ஈறய் - ஈற்றில் வைத்து. 683. பிற வந்தது - என்பது பிறவற்றை என்றிருப்பது நலம். 684. வேறு எழுத்து - முப்பத்துமூன்றைவிட வேறான எழுத்து. முப்பத்து நான்கென வேறோரெழுத்தாக வேண்டிற்றிலர் என்றபடி. வேறெழுத் தெனப் படாமையாகிய சிறப்பின்மை என்க. 685. என்மினெனின் - என்னுமெனின் என்றிருப்பது நலம். 686. ஐந்துமென்றதிலுள்ள உம்மை ஆறுமாகுமென்பதை எதிர்தழீஇ நிற்றலின் எச்சவும்மை. 687. நில்லாமையிற் செல்லாது என இயைக்க. 688. இவைபோல - பொழிப்பு முதலிய போல. 689. இரண்டந்தாதி - அசையந்தாதி, சீரந்தாதி. 690. கடல் உடலும். இருள் இரிந்தோடும். ஆம்பல் மலரும். பாம்பு பார்க்கும் என நிரனிறையாம். 691. பரவும் வரவும் என நிரனிறுத்தல் இயைபுத் தொடைப் பாற்படும். பரவும் என்பது வரவும் என கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் காணப்படுகின்றது. 692. நிரனிறையும் இரட்டையுஞ் செந்தொடையாய் என்க. 693. தொடைப்பாடு - தொடைப்படுதல். 694. ஒழிந்த பொருள்கோள் - நிரனிறையொழிந்த பொருள் கோள். 695. இனைத்து - இவ்வளவு. 696. வேறியல்பு - வேறு தொடையா மியல்பு. 697. தத்தம் வகையால் தொடைமை செய்யாவென்றது நிமரனிறைத்தொடை. இரட்டைத்தொடை எனத் தொடைமை செய்யா என்றபடி. எனவே, எதுகையும் இயைபுமெனத் தொடைமை செய்யும் என்றபடி. தொடைமை - தொடைஇயல்பு. 698. பிறவடி - கட்டளையடி யல்லாதன. 699. அற்றன்று என்பது ஏனையடிகளுக்குத் தொகைக்கணக்குக் கோடலை மறுத்து அறு நூற்றிருப்பத்தைந்தடிக்கே தொடைக் கணக்குக் கொள்ளுதலைக் குறிப்பித்து நிற்கின்றது. ஆயின் தொடைகள் ஏனையவடிகளுக்கும் கட்டளை யடிக்குப்போல வருமென்று கோடலின் (அற்றன்று) என்பதன்முன் உள்ள வாக்கியம் சிதைந்திருத்தல் வேண்டும். தொடைகள் ஏனையடிகளுக்கும் வருமென்று பேராசிரியர் கூறலை, பொருள் 414-ம் சூத்திர நோக்கிக் காண்க. 700. இஃது - மோனைத் தொடை. 701. அடிதொறும் என்றதனால் இரண்டடியில் வருதல் பெறப்படுதலின். ஓரடிக்கண் வரல் என்பது மாறுபடும் எனின்? அடியுள்ளன தொடை என்றதனால் முன்வந்த அடியையே மீளவுந் தொடுத்தலின் மாறுபடாது என்க. 702. மூன்று பாவிற்கு முரிய 78ச்சீராவன:- ஆசிரியத்திற்குரிய சீர் 27-ம் வெண்பா விற்குரிய சீர் 27-ம் கலிக்கோதிய சீர் 24-ம் ஆகமொத்தம் எழுபத்தெட்டாம். இவை இன்ன என்பதை. 362-ம் சூத்திர உரை நோக்கி யறிக. 703. நேராதி பதினான்கும் பெருகிய நிலத்தில் இவ்விரண்டு அடிகளை வழுப்படக் களையுநிலம் 28 ஆகும். நிரையாதிபதின் மூன்றும் சுருங்கிய நிலத்தில் ஒவ்வோர் அடி தளைவழுப்பட 13 ஆகும். பெருகியநிலம் என்றது எழுத்துக்கள் எண்ணின் மிகுந்த நிலத்தை. சுருங்கிய நிலம் என்றது எழுத்துக்கள் எண்ணிற் குறைந்த நிலத்தை. மோனைத்தொடை ஆசிரியத்தில் நேராதிச்சீரில் 28ம் நிரையாதியில் 13-ம் ஆக 41 நிலம் வழுப்படும். 704. வெண்பாவில் நேராதிச்சீர் 14-ம் நிரையாதிச்சீர் 4-ம் ஆக பதினெட்டுநிலம் வழுப்படும் ஆகவே வழுப்படு நிலம் இரண்டுபாவினும் 41+18=59 ஆகும். 705. பெருகியநிலத்துள் என்பது முற்பதிப்புக்களில் தவறிற்று. 706. புலிவருவாய் என வருதல் வேண்டும். பின் உறழ்ந்து காட்டுமிடத்துப் புலிவருவாய் என வருதலின். 707. வரகு நரையுருமு காருருமு பாதிரி இது பதினான் கெழுத்து வெண் பாவடி. இதனை மீளவும் வரகு நரையுருமுகாருருமு பாதிரி எனத் தந்து தொடுக்குங் கால் நிரையும் நிரையும் ஒன்றி ஆசிரியத்தளையாகி வழுப்படும். ஆதலால் தொடுக்கு மாறில்லை என்றபடி. வலியது முதலியவற்றாலாய அடியும். இப்படி ஒன்றோடொன்று தொடுக்கப்படா என்றபடி. வலியது கடியாறு என்பது வலியது காருருமு எனத் திருத்தப்படவேண்டும். 708. ஒன்பது ஏழு என்றிருத்தல் வேண்டும். பின் ஒன்பதுள் இரண்டுசீர் சொல்லப்படுதலின். 709. 625 அடியுள் தளைவழு 59ம் களைய மோனைத் தொடை 566 ஆகும் 1 வது மோனைத்தொடை 566 2 வது தலையாகெதுகை 566 3 வது அடியெதுகை 566 4 வது எழுத்தடியியைபு 566 5 வது சொல்லடியியைபு 566 ----------------------------------- ஆக ஐந்தும் 2830 ஆம். 710. (பா) அடி இயைபு இரண்டு: எழுத்தியைபு, சொல்லியைபு. கடியப்படுந் தளை எழுபத்தெட்டுச் சீர்க்கும் ஐம்பத் தொன்பதாகக் கொள்க. ஐந்து தொடைக்கும். ஐம்பத்தொன்பது. ஐம்பத்தொன்பது தளையாகக்கொண்டு களையப்படும் என்பது கருத்து. 711. (பா) ஒழிந்தநிலம் இழிந்தநிலம என்றிருத்தல் வேண்டும். இழிந்தநிலம் - சுருங்கிய நிலம். நிரை பதின்மூன்றுசீரும் இழிந்தநிலத்தொல்லா (பொருந்தா). நிரையொழிந்த நேர் பதினாலும் மேனிலத் தொன்றா. ஒன்றா - பொருந்தா. நிரைக்கு ஒவ்வொரு அடியும், நேருக்கு இவ்விரண்டு அடியுமாக நாற்பத்தொருநிலம் அகவலிற் களையப்படும். உயந்துழி எனப்பின்வருதலின் ஒழிந்த என்றார் என்று கொள்ளாலாமெனினும் அது தெளிவின்றாம். எல்லாம் என்பது ஒல்லா என்று பாடமுள்ளது. ஒழிந்த எல்லாம் என மாற்றினு மமையும். 712. வெண்பாவிற்கு வரகு வலியது கடியாறு விறகுதீ என்னும் நான்கும் பெருகிய நிலத்தொன்றா. வழிவழி -கீழ்நிலம். வழி - பின் - கீழ். நேராதி பதினாலும் சுருங்கிய நிலத்தொன்றா. மேனிலத்து நாலும் கீழ்நிலத்துப் பதினாலுமாகத் தளைவழுப் பதினெட்டாம். இரண்டு பாவிற்கும் ஐம்பத்தொன்பது நிலங் களையப்படும். 713. வழிவழி என்பது இழிவழி என்றிருந்திருக்க வேண்டும். மோனைக்கு மதுவே பொருத்தம். 714. ஐம்பத்தொன்பது நிலங்களைந்து 566 நிலம் மோனைக்குக் கொள்ளப் படும். 715. மோனை முதலிய ஐந்து தொடைக்கண்ணும் தனித்தனி (தொடை 566ம்) அகவற்கு 283ம் வெள்ளைக்கு 163ம் கலிக்கு 120ம் ஆகப் பிரிக்கப்படும். தொடையான் - தொடைக்கண்; வேற்றுமை மயக்கம். ஒடுவுமாம். 716. ஐந்தற்கும் மொத்தம் 2830 ஆகும். 717. அஃதொழித்து - முதலெழுத்தொழித்து. 718. முதலெழுத்தினைச் சுட்டிக் கூறலாவது - அஃதொழித்து எனச் சுட்டிக் கூறியது. 719. ஒருமாத்திரை எழுத்து முதற்கண் வரின் இரண்டாமடிக் கண்ணும் அதுவே வருதலும் இரண்டு மாத்திரை எழுத்துவரின் அதுவே வருதலும் வேண்டும் என்றபடி. 720. தொடையிரண்டு - தலையாகெதுகை, அடியெதுகை. 721. அனு - வழி - ஒத்த எழுத்து. 722. இரண்டாமெழுத்தின் முன்தொடர்ந்து நிற்பது - ஆசெதுகை. இரண்டா மெழுத்தின் பின்தொடர்ந்து நிற்பது - மூன்றாமெழுத் தொன்றெதுகை. 723. மூன்றாமெழுத் தொன்றெதுகையென்று கோடலின் கிளையென்று கொள்ள வேண்டியதில்லை என்றபடி. நுந்தையை, பின் மூன்றாமெழுத் தொன்றெதுகைக்கு வாராதென்று விலக்கலின். ஈண்டு எனப்பட்ட மையின் என்பது எனப்படாமையின் என்றிருப்பது நலம். 724. இவை - ஆசிடை எதுகையும் மூன்றாமெழுத் தொன்றெதுகையும். 725. நுந்தை தந்தை என்பது நுந்தை நுந்தை என்றிருப்பது நலம். என்னை? நுந்தை என முதலடியில் வந்த அடுத்த அடியிலும் நுந்தைவரினே முதனின்றமோனை முதலொன்றி வந்த அடிமோனையாகும். 726. இரண்டாயவழி - இரண்டடியாய வழி. 727. ஓரெழுத்துத்தேமா என்றிருத்தல் வேண்டும். குற்றியலுகரம் எண்ணப்படாமையின் அது சிறந்த அடிமோனை எனப்படாது என்றபடி. அது அடியெதுகை யாகும். 413-ம் சூத்திர உரையுள் நுந்தை என்றும் ஓரெழுத்துத் தேமா என்றுங் கூறப்படல் நோக்குக. 728. கொன்றையுங் கடம்பும் இயற்கையாகவே தொடையாகப் பூத்துப் பொலிவு செய்வன என்றபடி. 729. அனு - வழி - ஒத்த எழுத்து. தாமோதரப்பிள்ளை பதிப்பில். அனு அதுவென்று காணப்படுகிறது. அது பொருந்தாது. 730. அவை - அகர ஆகாரங்களின் கிளை. 731. அனுவிற்கோதிய உயிர் - அ ஆ ஐ ஔ முதலிய உயிர்கள் க கா கை கௌ என வேறுபடவரும் என்றபடி. 732. பிறமெய் வருங்கால் வந்த உயிரே வருதல் - ச த; ந ஞ என வருதல். உம்மையால் ச தா; ந ஞா எனவும் வரும். 733. இழவுபடுதல் - இல்லையாதல். 734. வ - வ வகரவருக்கம். 735. உயிர்வருக்கத்தை ஒன்றாகக்கொள்ளின் அனுமோனை என்பதொன் றின்றாம். ஆ என்னும் நெடில் முதலடியில் வந்து அ இரண்டாமடியில் வரின் அது அனுவாகுமன்றி வருக்கம் எனப்படாது. ஆதலின் அது பொருந்தாது. அனுவாய் வந்தன நெடிலுங் குறிலுமாமாதலின் வருக்க மோனைக்குப் பொருந்தா என்றபடி. 736. கானம் - சனம். என நெடிலுங் குறிலுமூர்ந்த மெய்வரினும் உயிர்பற்றி வருக்கமோனையாகக் கொள்ளவேண்டிவரும். ஆதலானும் அது பொருந்தா தென்க. 737. என்ன தொடை என்றுமிருக்கலாம். 738. மா + செ - இவற்றில் உயிர்கள் அனுவல்ல. ஆதலின் செந்தொடை யாயிற்று. 739. வெ + மெ - வழிமோனை. கிளையெழுத்துப் பின்னும் வருவது வழிமோனை. 740. வழியும் அனுவும் விகற்பங்கொள்ளுமோ எனின் கொள்ளலாம் என்க. ஒன்று என்றபடி. 741. எண்சீரடியுள் என்றது திருவேயென் செல்வமே தேனே வானோர் - செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க என எண்சீர் வருங்கால் முதல் நான்கு சீரினு மிற்றுநின்று பின்னுஞ்செழுஞ்சுடரே என வந்தால் ஆண்டும் வேறாகத் தொடை கொள்ளப்படாமையின் அதுவும் வழியும் ஒன்றென்றபடி. அன்றியும் சீர்தோறும் வருதலானும் வந்தவழி எல்லாம் அது வழிமோனைத் தொடையென்று கொள்ளப்படாமை யானும் இரண்டு மொன்றென்றபடி. 742. இனம் வந்தால் என்புழி. இனம் கிளை உயிரும் கிளை மெய்யும் எனக் கொள்க. 743. இகரத்துக்கு இகரம் உயிரெதுகை. 744. வகர உகரம் 745. இவை பத்துத்தொடை என்றது:- 1. வருக்கமோனை 2. வருக்கவெதுகை 3. நெடின்மோனை 4. வழிமோனை 5. உயிரெதுகை 6. வல்லினவெதுகை 7. மெல்லினவெதுகை 8. இடையினவெதுகை 9. ஆசிடையெதுகை 10. மூன்றாமெழுத்தொன்றெதுகை. இவற்றுள் வருக்கமோனை முதலிய மூன்றையும் வேறாக எடுத்து அவற்றிற்குத் தொடைக் கணக்குக் கூறுகின்றார். வருக்க மோனை முதலிய மூன்றையும் பாவிரண்டினு முறழுங்கால் நுந்தை என்னுஞ் சீர் அதற்கேலாமையின். நுந்தைக்கு ஆசிரியத்துப் பன்னிரண்டடியும் வெண்பாவில் எட்டடியுமாக இருபது அடி. அறுநூற்றிருபத்தைந்து அடியுட் கழிப்ப அறுநூற்றைந்தடி யாகும். . தளைவழு மூன்றையும், ஐம்பத்தொன்பது வழுவிற் கழிக்க இருபத்தாறு சீர்க்கும் ஐம்பத்தாறாகும். முற்கூறிய அறுநூற்றைந் தடியின் தளைவழு ஐம்பத்தாறுங் களைய வருக்க மோனை முதலிய மூன்றற்கும் தனித்தனி தொடை ஐஞ்ஞூற்றுநாற்பத்தொன்பதாம். 746. 6வது வழிமோனை, 7வது வருக்கமோனை, 8வது உயிரெதுகை. இவை மூன்றும் 9 - 10 - 11 - 12 - 13 ஆவதாகும் முரண் ஐந்தும் ஒரு சேர எட்டுத் தொடையாகும். இவற்றிற்கு வாராத நுந்தையொழிய, தளைவழு 56ம் களைய ஒவ்வொன்றற்கும் 549 தொடையாக 4392 ஆகும். 747. நாலீரிடம் - எட்டிடம். 748. பதின்மூன்றுபாற்றொடை - மேற்கூறிய மோனை முதலிய ஐந்தும் இங்கே கூறிய வழிமோனை முதலிய எட்டும் என்றபடி. மோனை முதலிய ஐந்தற்கும் 2830, வழிமோனை முதலிய எட்டற்கும் 4392. இரண்டற்கும் மொத்தம் - 7222. 749. வண்டும் மின்னுவுமாகிய இரண்டும். நுந்தையும் சேற்றுக்காலும் நீடுகொடி யுமாகிய மூன்றும் மூன்றாமெழுத்தொன்றெதுகைக்கு வாரா. ஒழிந்துநின்ற 67 சீர்க்கும் அடித்தொடை 479 ஆகும். 750. மேற்கூறிய 13 தொடைக்கும் 7222. 14வது மூன்றாமெழுத்தொன் றெதுகைக்கு 479. மொத்தம் - 7701. 751. நேர் முதற்சீர் ஒன்பதற்கும் 18ம் நிரை முதற்சீர் பதின் மூன்றற்குப் பதின் மூன்றுமாக ஆசிரியத்திற்குத் தளைவழு 31ம். நேர் முதற்சீர்க்குப் பத்தும் நிரை முதற்சீர்க்கு நான்குமாக 14 தொடை வெண்பாவிற்கு வழுவாம். அவ்விரு பாவிற்கும் தளைவழு 45 ஆகும். 752. அகவற்கு - 233 479ம் 14வது மூன்றா வெண்பாவிற்கு - 136 மெழுத்தொன் றெதுகை கலிக்கு - 110 பெறுந் தொடை. 753. 15வது வருக்க எதுகை. ஆசிரியத்துக் களையுநிலம் நேர் முதலேழற்கும் 14-ம் நிரை பதின்மூன்றற்கும் 13-ம் ஆக 27 நிலம் களையப்படும். 20 சீரும் 12 அடி உறழ 240 ஆகும். தளைவழு 27 களைய 213-ம். 754. வெண்பாவில் நுந்தை. வண்டு, போதபூ மூன்றும் 8 அடி உறழும். மின்னு. மேவுசீர் இரண்டும் ஏழடி உறழும். 3ம் 8 அடி உறழ 24 அடி ஆம். 2ம் 7 அடி உறழ 14 அடி ஆம். தொகுப்ப 38 நிலம். வராதன களைவனவாம். அவற்றோடு வெண்டோடை வழு 13ம் களையவேண்டும். வெண்டொடை 181இல் வராத நிலம் 38ம் வழு 13ம் ஆக 51 நிலங்களைய 130 தொடையாம். 755. நேர்பு 2 - வண்டு. மின்னு. நேர்புமுதல் 4 - போதுபூ. மேவுசீர். நீடுகொடி. நாணுத்தளை. மூன்றற்கும் ஆகாச் சீர்கள் முறையே ஏழும், ஐந்தும், நான்குமாம். இரண்டற்கும் களைநிலம் 40 ஆகும். இரண்டு பகுதி நிலமுங் கழிக்க 15 ஆவது வகுக்க வெதுகை 443 ஆகும். 756. மூன்றற்கும் முறையே வருநிலம்; 213ம் 130ம், 100ம் ஆகும். 757. 16ஆவது நெடின்மோனை, 17வது மெல்லின எதுகை, 18வது இடையின எதுகை, 19ஆவது ஆசிடை எதுகை என்னும் நான்கற்கும் நுந்தையும். நிரை பதின்மூன்றும் ஒழித்து நேராதி பதின்மூன்று சீர் வரும். இவற்றில் நேராதி பதின்மூன்று சீர்க்கும் மேனிலத்து இரண்டிரண்டாக இருபத்தாறு நிலம் வழுக் களையப்படும். வெண்பாவினும் பதின்மூன்று சீர்க்கும் பதின்மூன்று நிலம் வழுக் களையப்படும். 758. இடையினம் முதலிய நான்கற்கும் நுந்தை ஒன்றும், நிரை பதின்மூன்றும் நீக்கி ஒழிந்த 13 சீரானும் தொடை பெறும். பெறுங்கால் வழுக்களைந்து நான்கு தொடையுள் ஒவ்வொன்றும் 270 தொடைபெறும். 759. நேராதி பதின்மூன்றற்கும் அகவற்கு இரட்டித்து 26 நிலங் களையப்படும். வெண்பாவிற்கு 13 ஆகும். இரண்டுந் தொகுத்து 39 தளைவழுக் களையப்படும். இம் முப்பத்தொன்பதும் நான்கு தொடையுள் ஒவ்வொன்றற்கும் கொள்ளப்பெறும். 760. மூவகைப் பாவிற்கும் மொழிந்த தொடை 270 - ஐயும் நான்கற்கும் கொள்ள 1080 ஆகும். ஆசிரியம் 130 பெறும். வெண்பா 80 பெறும். கலிக்கு 60 ஆகும். முன் என்றது முதற்பாவாகிய ஆசிரியத்தை. மூன்றும் தொகுப்ப 270 ஆகும். நான்கு தொடைக்கும் உறழ 1080 ஆகும். 761. 20-வது மெல்லினவெதுகைத்தொடை. முற்றுகரநேர்பு - மின்னு. நேர் - நேர்பு என்றிருத்தல் வேண்டும். நேர்பு முன்னாகுஞ் சீரிரண்டு - மேவுசீர். நாணுத்தளை குற்றுகரத் தேமா - நுந்தை. இவையும் நிரை முதற்சீரும் கூட்டாது. நேர் முதற்சீரான் வந்த வல்லின எதுகை - 218 ஆகும். 762. அகவலுக்குக் களையுநிலம் 20ம் வெள்ளைக்கு 11ம் ஆக 31 நிலங் களையப் படும். அகவல் 100 தொடையும் வெண்பா 68-ம் கலி 50-ம் பெறும். 763. தொடை - தொகை என்றிருப்பது நலம். 764. மேற்றொகுத்த 19 தொடைக்குரிய 9224ன் கனோடும் வல்லினத்துக்குரிய தொடை 218ம் தொகுப்ப 9442 ஆகும். கிளைக்கும் முரணுக்கும் உரியன 6612. மோனை முதலிய ஐந்தற்குமுரியன 2830. இரண்டுந் தொகுப்ப 9442 ஆம் கிளை. மோனையும் எதுகையும் பற்றி வரலின் அவற்றையுமடக்கி மோனை எதுகை என்றார். கூட்டம் - அடிக்கூட்டம். இரண்டடிக் கூட்டத்துத் தொடை கொள்ளப்படும். 765. செவ்வி - காலம் (பருவம்) என்ற பொருளிலும் வெள்ளை - சாதிப் பெயராயும் வந்ததன்றி நிறப்பொருளில் வாராமையின் சொல் முரண் என்பது பேராசிரியர் கருத்து. இவ்வாறே யாப்பருங்கல விருத்திகாரரும் கொள்வர். 766. இதிலும் செவ்வி. கரு, நிறப்பொருளில் வரவில்லை. ஆதலாற் சொன் முரண் ஆயின. 767. நீருந் தீயும் சொல் முரணாது பொருண் முரணியன. 768. இங்கே தண்ணியல் அற்ற கானம் என்பதில். தண் - குளிர்ச்சி என்று பண்புப் பொருள் தரலின் சொல்லும் பொருளும் ஆயிற்று. வெம் என்பது வெப்பத்தை யுணர்த்தாது விருப்பமென்று பொருடந்து அதற்கு எதிர்ப்பொருளாகாமையின் சொல்லாயிற்று. 769. தீ - தீமை. இது சொல்லும் பொருளும். உவரி - பொருள் அதற்கு எதிரா காமையின். 770. செவ்வேல், கருவில் என்பனவற்றில் செவ் கரு என்பன பொருளை விசேடித்து நிறப்பொருளில் வருதலின் சொல்லும் பொருளும் சொல்லோடும் பொருளொடும் முரணியது. 771. அடையின் - வரின். 772. எல்லா அடியோடும் என்றது. குறளடி முதலிய எல்லா அடியோடும் வஞ்சி யடியோடும் கட்டளையடியல்லாத அடியோடும் என்றபடி. 404ம் சூத்திர உரையை நோக்குக. 773. உயிரளபெடைக்கு வாராத சீர்கள்:- உரியசைச்சீர் நான்கு:- வண்டு, மின்னு, வரகு, அரவு. உரிமுதற் சீரெட்டு:- போதுபூ, மேவுசீர், விறகுதீ, உருமுத்தீ, நீடுகொடி, நாணுத்தளை, குளிறுபுலி, விரவுகொடி. 774. நிரையசையுமென்பது ஓரெழுத்துச் சீரும் என்றிருத்தல் வேண்டும். அன்றி நுந்தை என்றும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் பிழை. நுந்தை என்றிருத்தல் வேண்டுமென்பதைப் பின்வரு முரைச் சூத்திர வெண்பாவை நோக்குக. 775. வெண்பாவினுள் நேர்முதற்சீரொன்பதும் நிரைமுதற்சீரொன்பதும் வருமாறு:- ஞாயிறு போரேறு இரண்டு சீர்க்கும் 8 அடியாக 16 அடி தேமா பாதிரி நன்னாணு பூமருது மாசெல்வாய் - ஐந்து சீர்க்கும் 7 அடியாக 35 அடி. மாவருவாய் காருருமு - இரண்டு சீர்க்கும் 6 அடியாக 12 அடி. வலியது கடியாறு - 2 சீர்க்கும் 7 அடியாக 14 அடி புளிமா மழகளிறு கணவிரி புலி செல்வாய் - 5 சீர்க்கும் 6 அடியாக 30 அடி. புலி வருவாய் நனி முரவு - 2 சீர்க்கும் 5 அடியாக 10 அடி. 776. உரியசைச்சீர் நான்கு முதலியன முன் விளக்கப்பட்டன. அளபெடைக்கு வருஞ்சீர் 48 ஆவன:- ஆசிரியத்திற்கு நேர்முதல் ஏழும் நிரைமுதல் ஏழும் வெண்பாவிற்கு நேர்முதல் ஒன்பதும் நிரைமுதல் ஒன்பதும் கலிக்கு நேர்முதல் எட்டும் நிரைமுதல் எட்டும் இந் நாற்பத்தெட்டுச் சீராலும் மூன்று பாவிற்கும் வரும் உயிரளபெடை முந்நூற்றுமுப்பத்து மூன்று. 21-வது உயிரளபெடை 333. 777. நேர்முதற்சீ ரேழற்கும் பெருகிய நிலத்துப் பதினான்கு நிலம் களையப்படும். நிரைமுதற்சீரேழற்கும் சுருங்கியநிலத்து ஏழுநிலம் களையப்படும். ஒருசேர இருபத்தொருநிலம் களையப்படும். வெண்பாவிற்கு நேராதி ஒன்பது சீர்க்கும் ஒன்பதும் நிரையாகி இரண்டு சீர்க்கும் இரண்டும் ஆகப் பதினொரு நிலம் களையப்படும். இரண்டு பாவிற்கும் ஒருசேர முப்பத்திரண்டு நிலம் களையப்படும். 778. அகவலுக்கு நூற்றுநாற்பத்தேழு. வெண்பாவிற்கு நூற்றாறு. கலிக்கு எண்பதுமாக முந்நூற்றுமுப்பத்துமூன்றாகும். பாமூன்றற்கும் வருஞ் சீர்கள் முறையே ஈரேழ் (14) உம். ஈரொன்பதும் (18). எண்ணிரண்டு (16)உம் ஆம். 779. ஈரொற்றளபெடை:- இரண்டொற்றுச் சேர்த்துவரும் ஒற்றளபெடை. இது துள்ளலோசையைப் பிறப்பியாதாகலின் துள்ளலோசையான் வருங் கலிக்கு வாராது. ஆசிரியத்துத் தேமா புளிமா என்னும் இரண்டு சீரினும் வரும். அவை 12 அடி உறழ 24 அடி ஆம். இவற்றுள் தேமாவுக்கு மேனிலத்தொன்றும். புளிமாவுக்கு கீழ்நில (சுருங்கிய நில) த்திரண்டுமாக 3 நிலங்களைய 21 நிலமாம். வெண்பாவுள் தேமா முதலிய நான்கு சீரும் உறழ 26 தொடையாம். இரண்டு நிலங்களைய 24 ஆகும். 2 பாவுக்கு மொத்தம் 45 தொடையாம். 22வது ஒற்றளபெடைக்கு 45 தொடையாம். முற்கூறிய 20 தொடையும் இவை இரண்டும் சேர்ந்து 22 தொடைக்கும் 9820 ஆகும். 780. மாபுலிசெல்வாய் என்பதை மாசெல்வாய். புலிசெல்வாய் எனச் செல்வாய் மாவுக்குங் கூட்டிக்கொள்க. நான்கு - நாற்பத்தைந்து எனப் பிரிக்க. நான்கு - மேற்கூறிய நான்குசீர். முதற்பா - ஆசிரியப்பா. 781. அளபெடை தன்னோடு என்றிருப்பது நலம். 782. இருபத்திரண்டு என்றது அளபெடையோடு 22 தொடை என்றபடி. 783. இவற்றுள் என்பதன்முன் பொழிப்பின் கணக்கு வரலாறு சொன்ன வரிகள் சிதைந்தனபோலும். 23வது பொழிப்பு எதுகைத்தொடை. ஆசிரியம் 140 வெண்பா. 103 கலிக்கு 308 என்ற கணக்குப் பிழைபோலத் தெரிகிறது. ஆசிரியவெண்பாக்களின் கணக்கும் அதனோடு சேர்ந்துள்ளதோ அன்றோ என்பது ஆராயத்தக்கது. கிளைப் பொழிப்பின் கணக்கு வேறுபாடுமில்லை. 784. இப்பாவில் முன்வரிகள் இரண்டுமில்லை. முன்வரவேண்டிய ஆசிரிய முதலியவற்றின் கணக்குப் பாக்களு மில்லை. 785. முற்றுக்கும் கிளை முற்றுக்கும் முன் கூறவேண்டிய கணக்கு வரிகளில்லை. கணக்குக்குரிய உரைச் சூத்திரங்களுமில்லை. இதிற் சொல்லிய கணக்குப் பகுப்பும் விளங்கவில்லை. சரியோ என்பதும் ஆராயத்தக்கது. 23-வது பொழிப்பு 25-வது முற்று 24-வது கிளைப் பொழிப்பு 26-வது கிளைமுற்று. 786. ஒரூஉத்தொடை வருஞ் சூத்திரத்தாற் கூறலின் விட்டிசைத்தொடையும் என்றிருக்கவேண்டும். இவற்றின் கணக்கு வருஞ் சூத்திரத்துள் கூறுகின்றார். 787. ரகரத்திற்கு ருகரம் கிளை. 788. 27-வது ஒரூ உவெதுகை 28-வது கிளையெ ரூஉ - ஆசிரியத்து நேர்முதற்சீர் 14ம் 12 அடி உறழ 168-ம் நிரைமுதற்சீர் 13-ம் 12 அடி உறழ 159ம் ஒருசேர 324-ஆம். இவற்றுள் வராது களையுநிலம் சுருங்கிய நிலத்து நேர் பதின் மூன்றற்கும் 3 நிலமாக 42. பெருகிய நிலத்து நிரை பதின் மூன்றற்கும் 2 நிலமாக 26. ஆகக் களையுநிலம் 68ங் களைய ஆசிரியம் பெற்ற தொடை 256. இவற்றுள்ளும் மின்னு முதலிய மூன்று சீர்க்கு மூன்று நிலம் முதனிலத்து நீக்க 253ஆம் வெண்பாவுக்கு இருபத்தேழு சீரானும் பெற்ற அடி 181. இவற்று இரண்டு சீர்க்கு முதனிலத்திரண்டகற்றிப் பெற்ற தொடை 179ஆம். கலி 24 சீர்க்கும் 120 அடியாம். களையுநிலம் 24 களைய 96 ஆகும். ஒருசேர ஒரூஉ ஐஞ்ஞூற்றிருபத்தெட்டாம். 789. ஆசிரியத்து நேராதிச்சீர் 14ற்கும் முதனிலத்து மூன்று நில நீக்கி ஒன்ப தொன்பதாம். நிரையாதி கீழ்நிலத்து இவ்விரண்டு களைந்து பப்பத்தாம். ஆக 256ஆம் மூன்று சீர்க்கு முதனிலத்து மூன்று நிலம் நீக்க 253ஆம். 790. வெண்பா 27 சீர்க்கு வருந்தொடை 181ல் இரண்டு சீர்க்கும் முதனிலத்து இரண்டுநிலம் வாராமையின் அவ்விரண்டுங் களைய 179ஆம். 791. முன்னின்ற நேராதிச் சீர்க்கு 12ஓ5-60. பின்னின்ற நிரையாதிச் சீர்க்கு 12ஓ5-60 ஆம். ஆக 120 அடியுள் ஒவ்வொரு நிலமாக 24 நிலம் கழித்து 96 ஆகும். கிளையொரூஉவுக்கு வெண்பாவுள் இருசீர்க்கு இருநிலங் களையாது கொள்ள இரண்டு ஒரூஉவுக்குந் தொடை 1058 ஆகும். ‘முன்பி னிரையாதி நேராதி’ என்ற பாடத்திற்கு எதிர் நிரனிறையாகப் பொருள் கொள்ளவேண்டும். 792. 2521 என்பது 2518 என்று இருத்தல் வேண்டும். ஏனெனில்? பின் மொத்தம் 12708க்கு மூன்று கூடுகிறபடியால். பொழிப்புச் சூத்திரத்தில் இப்பிழை வந்திருத்தல் வேண்டும். 793. உரியசைச்சீர் - நேர்புநிரைபு என்னும் உரியசைச்சீர். 29வது அசையந்தாதி. 794. நேர்பசை 2. வண்டு. மின்னு ஓரெழுத்துத் தேமா - நுந்தை. இவை மூன்றும் வாரா. நேர்முதற்சீர் 11. 11 சீரையும் 12 அடி உறழ 132 தொடை. இச்சீருள் வாராத நிலம் 33 களைய 99 தொடையாம். நிரையசையுள் கடியாறு மழகளிறு என்னும் நேர்பசை நிரைபசை யீறு இரண்டும் வாரா. அவை நீக்கி ஒழிந்த 11 சீர்க்கும் 12 அடி உறழ்ந்த 132 தொடையில் வாராத நிலம் 22 களைய 110 ஆகும். இரண்டுஞ் சேர்ந்து ஆசிரியம் 209 ஆகும். 795. வெண்பா அசையந்தாதி நேர்முதற்சீர் 11 உறழ்ந்த அடி 78ஆம். வாராத மேனிலம் 22 களைய வருவன 56 தொடையாம். கலிப்பா நேர்முதல் 12க்கும் 5 அடி உறழ 60 ஆம். அசையந்தாதி மூன்று பாவிற்கும் 209ம் 56ம் 60ம் ஆக 325ஆம். 796. ஆசிரியம் நேர்பசைச்சீர்2 - வண்டு. மின்னு. இரண்டு - இரண்டு நிலம். ஒன்று - ஒருநிலம். அகற்றி - களைந்து. முன் - மேனிலம். பின் - கீழ்நிலம். நிரைமுதல் பத்தாக - நிரைமுதற்சீரில் பப்பத்து நிலம் ஒவ்வொரு சீர்க்குங் கொள்ளப்படும். நீங்கியவாறாக - நீங்கியதன்மைத்தாக. 797. நேர்முதற்சீரில் இயற்சீர் ஒன்பது. வெண்சீர் இரண்டாகப் பதினொரு சீர் வரும். இவ்விரண்டுநிலங் களையப்படும். நேர்பசையிரண்டும் நுந்தையும் நிரைமுதலும் வாரா. அவை நீக்கப்படும். நீ - நேர் என்றிருத்தல் வேண்டும். 798. அசையந்தாதி பா மூன்றற்கும் 325ம். 799. 30வது சீரந்தாதி. நேர்பசைச்சீரிரண்டு - வண்டு. மின்னு. தேமா இரண்டு - ஓரேழுத்துத் தேமாவாகிய நுந்தையும் ஈரெழுத்துத் தேமாவும். இவை நான்கு சீரும் வரும். வருங்கால் நான்கும் 12 அடி உறழ 48 நிலமாம். கீழ்நிலத்து (பெருகிய நிலம்) அவ்வாறாக 24 கழிக்க 24 நிலம் வரும். நிரைபிரண்டு - வரகு. அரவு என்பன. முதனிலம் - சுருங்கிய நிலம். 800. கணவிரி எட்டாவன:- கடியாறு, பெருநாணு, மழகளிறு, நரையுருமு, குளிறுபுலி, விரவுகொடி, விறகுதீ - உருமுத்தீ என்பன. 801. 19ல் 7 கழிக்க 12ஆதல் காண்க. ஓரோவொன்று நான்காக மூன்றற்கும் முந்நான்கும் பன்னிரண்டாம். 802. பாதிரி ஏழாவன:- ஞாயிறு, போதுபூ, மேவுசீர், போரேறு, நன்னாணு, பூமருது, நீடுகொடி என்பன. இவற்றுள் ஈரெழுத்துப் பாதிரி ஞாயிறு போதுபூ போரேறு. ஏனைய மூன்றெழுத்து. 803. சீரந்தாதி மூன்று பாவிற்கும் முறையே 98ம் 58ம் 12ம் ஆக 164 ஆகும். 804. வண்டிரண்டு தேமாவிரண்டு நிரையதொன்பான் என்றிருத்தல் வேண்டும். வண்டிரண்டு - வண்டு. மின்னு. தேமா விரண்டு - நுந்தை, தேமா, நிரை ஒன்பான் ஒன்று - நிரை பத்து அகவற்குப் பதினான்கு சீராம். வரகிரண்டு - வரகு. அரவு, வெண்பாவிற்கு 13 சீர்வரும். கலிக்கு 8 சீர் வரும். 805. அகவலில் நிரைநிரையாகவுள்ள 10 சீரும் உறழுங்கால் மேனிலத்து மூன்றும் கீழ்நிலத்திரண்டுமாக ஐந்துநில நீக்கிக் கொள்ளப்படும். மூன்றுசீர் கொள்ளப்படா. நேராதி நான்கும் முதனிலந் தொடங்கி அவ்வாறு நிலங் கொள்ளப்படும். 806. ‘தொண்ணூற்று’ என்னுஞ் சீர் தவறிற்று. 807. வெண்பாவில் வரகுக்கு மூன்றுநிலம் பெருகிய நிலத்து நீக்கி அரவுக்கும் புளிமாவுக்கும் மேனிலத்தும் கீழ்நிலத்தும் இவ்விரண்டு (4) நிலம் நீக்கி, காருருமு, மாவருவாய் இரண்டற்கும் மேனிலத்து மும்மூன்று 6 நிலம் நீக்கப்படும். 808. பாதிரி ஏழுள் ஈரெழுத்துப் பாதிரி மூன்றும் மேனிலத்தும் கீழ்நிலத்தும் இவ்விரண்டு நிலங் கழிக்கப்படும். மூவெழுத்துப் பாதிரிக்கு மேனிலத் திரண்டும் மாசெல்வாய்க்கும் அவ்வாறே மேனிலத்திரண்டும் நீக்கி வெண்பாவிற் சீரந்தாதி நாற்பது ஆகும். 809. வரகு அரவு புளிமா மூன்றானும் பெற்ற அடி 12ம் காருருமு மாவருவாய் என்னும் மிரண்டானும் பெற்ற அடி 6ம் பாதிரி முதலிய எட்டானும் பெற்ற அடி 40ம் சேர்ந்து 58 ஆயின. 810. ஈறு - கீழ்நிலம். மற்றையிடம் - மேலிடம். ஏனையிரண்டு - மாவருவாய். புலிசெல்வாய். இரண்டிடம் - மேலுங்கீழும். இவ்விரண்டாக நான்கற்கும் 8 நீக்கிக் கலிக்குச் சீரந்தாதி 12 ஆம். 811. மூன்று பாவிற்கும் 164 தொடையாம். 812. அந்தாதிக் தொடை அசையந்தாதியும் சீரந்தாதியும் என்னுமிரண்டுஞ் சேர்ந்து 489-ஆம். 813. எழுத்தல் ஓசையான் வருவது குறிப்பு விட்டிசையாம். 814. 31-வது எழுத்து விட்டிசை. 32-வது குறிப்பு விட்டிசை. 815. த,எ என்பன ஓசைக் குறிப்புக் காட்டி நின்றன. 816. நேர்பு அசை இரண்டு - வண்டு, மின்னு, போதுபூ, இரண்டு - போதுபூ, மேவுசீர், என்பன. இவை ஒழித்து ஒழிந்த தேமா - ஈரெழுத்துத் தேமா. பாதிரி இரண்டு - நீடுகொடி. நாணுத்தளை. போரேறிரண்டு - போரேறு. நன்னாணு. இதில் போ ரேறு விடப்பட்டது. போரேறு வெண்பாவில் கூறப்படுகின்றது. 817. பகரக்கோட்டிலடைத்தன பின்வருதலின் முன் மாறி எழுதப்பட்டது. அது வேண்டியதில்லை. 818. பூமருதிரண்டு - பூமருது, காருருமு. 819. நேர்பு இரண்டு - வண்டு, மின்னு, நேர்பை முதலாகக் கொண்டன; போதுபூ, மேவுசீர், நீடுகொடி, நாணுத்தளை என்பன. ஓரெழுத்துத் தேமா - நுந்தை, நிரைமுதற் சீர்களும் வாரா. 820. நேர் முதற் பத்தில் அகவற்கு 7 சீரும் வெண்பாவிற்கு 9 சீரும் வரும். 821. வெண்பாவிற்கு 9ம் அகவற்கு 14ம் களையுநிலமாம். கலிக்கு வருஞ்சீர் எட்டாம். போரேறு இரண்டு - போரேறு. நன்னாணு, பாதிரி இரண்டு - பாதிரி, ஞாயிறு. பூமருது இரண்டு - பூமருது. காருருமு. 822. அகவற்கு 70 தொடை வெண்பாவிற்கு 54 கலிக்கு 40 --------------------- மொத்தம் 164 823. இரண்டு விட்டிசைக்கும் 328 ஆம். 824. விகற்பத்தொடை ஆறாவன - பொழிப்பு 2ம் முற்று 2ம் ஒரூஉ 2ம் ஆம். அந்தாதி 2ம் விட்டிசைத்தொடை 2ம் ஆகப் பத்துத் தொடையாலும் வந்த தொடைத்தொகை 3336. இத்தொகை 3339 என முன்தொகைகளைக் கூட்ட வருகின்றது. ஆகையால் 3 கூடற்கு முன் கூறிய தனித் தொகைகளுட் பிழையிருத்தல் வேண்டும். 825. முன்வந்த இருபத்திரண்டும் இவை பத்துமாக தொடை 32ஆம். 32 தொடைக்கும் 13156 செந்தொடை 549 பிற 3 ---------------------------- மொத்தம் 13708 410-ம் சூத்திர உரையிற் சொன்ன கணக்கிற் பிழையிருக்கிறபடியால் இத்தொகையினும் மூன்று கூடி வருகிறது. அதனைக் கழிக்க 13708 ஆம் 410-ம் சூத்திர உரை முற்ற இல்லாமையால் அப்பிழை காண முடியவில்லை. 826. மாத்திரை - அளவு 827. தூரியம் - வாச்சியம். போர்ப்பறை, நெய்தல் - இரங்கற்பறை; சாவுக் கடிக்கும் பறை. 828. ஒழிந்ததொடை என்றது கூறப்படா தெஞ்சி நின்றவற்றை. கூட்டிக் கூறினான் என்றது இரண்டடி எதுகையையும் இடையீட் டெதுகையை யும். தொடை - தொகை என்றிருப்பது நலம். 829. கணக்கு வரிகள் இல்லை. 830. நுந்தை என்பது செந்தொடைக்கு வாராது. செந்தொடை 549-ஆம். ஐ - சாரியை. இடையீட்டெதுகை ஒன்றும் இரண்டடி எதுகை இரண்டும் சேர்க்க 552 ஆம் என்க. 831. தொடையின் பகுதி முழுவதும் சொல்லப்பட்ட அறுநூற்றிருபத்தைந் தடிக்காம். ஆயின் அடியினிலக்கணம் அவ்வளவாமென்றஞ்சி பிற தொடை 3 கூட்டினார் என்றபடி. 832. ஏற்ப... அவ்வச் சூத்திரங்களுட் கூறிவந்தாம் என்றிருப்பது நலம். 833. தொடுக்கப்படாத அடிகளும் தளைவழுவும். 834. ஒருசீரான் - ஒவ்வொரு சீரான். 835. ஐயீராயிரம் - பதினாயிரம். 836. ஆறைஞ்ஞூறு - மூவாயிரம். 837. தொண்டு - ஒன்பது. 838. 709ல் 10 குறைக்க 699 ஆம் 699 - ஓடு 9 - ஐக் கூட்ட 708 ஆம். பதின் மூவாயிரத்தொடு 708 - ஐக்கூட்ட 13708 ஆகும் தொடை என்றபடி. 839. பத்துக்குறை எழுநூற்றொன்பது - (709 - 10) 699 அதனோடு ஒன்பது கூட்ட (699 + 9) 708-ஆம். 840. ஞாபகம் - முப்பத்திரண்டு உத்தியுள் ஒன்று. அதனை இந்நூல் 666-ம் சூத்திரத்திற் காண்க. 841. தொண்டு தலையிட்ட ஐந்துபத்து - 59. ஆறு முதல் 59 வரையும் ஒன்பது பகுதி களையப்படும் என்றபடி. 842. சூத்திரத்துள் பதினாயிரமென்று சூத்திரியாது ‘ஐயீராயிரம்’ என்று சூத்திரத்தமையானும் ‘பத்துக் குறை என்று பத்தைக் குறைத்தமை யானும் குறைப்பன. ஒன்பது பகுதி என்று உய்த்துணர்ந்து கொள்ளப் படும் என்பது கருத்து. 843. ஏற்றி - மிகைப்படுத்தி. இட்டுரைத்தல் - சேர்த்துரைத்தல். ஈரொன்பது - இரண்டுதரம் ஒன்பது. இரண்டுதரம் ஒன்பது கூறியது ஐம்பதற்கு மேல் ஒன்பது ஏறி வருமென்பது காட்டவும் ஒன்பது வகை என்பதைக் காட்டவும் என்பது கருத்து. ஐந்தந்தமாய் ஆறந்தமாய் என்றிருப்பது நலம். ஒன்பது ஐம்பான்மே லேறல் 59 ஆதல். 844. ஒன்பான் பகுதியாவன - 59, 56, 45, 40, 36, 32, 31, 23, 6 என்பன. 845. ஐந்து தொடையாவன - மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை. 846. ஓரெழுத்துத் தேமா - நுந்தை. 847. அல்லாதார் - தொல்காப்பியரல்லாதார். அவர் அவிநயினார், காக்கைபாடினியார் முதலியோர். யாப்பருங்கல விருத்தி 53-ம் சூத்திர உரை நோக்குக. 848. செங்கால் - பைங்கால் தலையாகெதுகையும், செம்மை - பசுமை, முரணுமாம். 849. நுந்தை நுந்தை நுந்தை நுந்தை நுந்தை நுந்தை நுந்தை நுந்தை - இதன்கண் இறுதியில் இயைபுவருதல் இயைபுவருதல் காண்க. நுந்தையை முதல் வைத்துப் பிற சீர் ஒன்று தொடுப்பினும் இயைபுவரும். 850. அவை - தொடை. 851. ஒன்றும் என்பவென்று இருப்பது நலம். 852. என்ப என என்றிருப்பது நலம். நச்சினார்க்கினியம் நோக்குக. 853. ஒரு பகுதியாரென்றது இளம்பூரணரை. ஒன்றும் - பொருந்தும் எனப் பொருள் படின் முற்று வினையாம். ஆயின், வையாபுரிப் பிள்ளை அவர்கள் பதித்து வெளியிட்ட இளம்பூரணருரைப் பதிப்பில் ‘ஒன்றும்’ எனப் பாடங் காணப்படவில்லை. 854. ஒன்றி நிற்ப - ஒன்று நிற்ப என்பதே பொருத்தம். ஓரடி நிற்ப என்பது பொருளாதலின். நின்ற - எஞ்சி நின்ற. 855. இருசீரடி - குறளடி. 856. இத்தொடைகள் - மோனை முதலிய ஐந்து தொடைகள். 857. பிறவிகற்பம் - பொழிப்பு முதலிய விகற்பத்தொடை. 858. ஐந்து தொடை - மோனை முதலிய வைந்து தொடை இவர் இளம்பூரணர். 859. இரண்டிடம் - வரையறை யுடையனவும். இல்லனவும். 860. வெள்ளைமை - நுண்ணிதான பொருளில்லாமை. 861. அடி நிரம்புந் தொடையும் என்பது சி.வை. தாமோதரம்பிள்ளை பாடம். அது பொருத்தமில்லை. 862. மறித்து நோக்கல் - மீட்டுந் தன்னை நோக்கல். 863. இல்லம் - தேற்றா. 864. அவல் - பள்ளம். 865. தெறித்தல் - துள்ளல். 866. குரங்குளை - வளைந்த நெற்றி மயிர். 867. கவல் - பிடர்மயிர். 868. வள் - வார்; வாய்க்கயிறு. 869. பேதுறல் - வருந்தல். 870. கேட்டார் மீட்டுந் தன்னை நோக்கிப் பயன் கொள்ள என்றிருப்பது நலம். இது முன்னும் கேட்டார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளுங் கருவியை என்று கூறப்பட்டமை காண்க. நோக்கி நோக்கி என்றுமிருக்கலாம். எல்லாம் நிற்கும் நிலைமை என இயையும். 871. பருவந் தொடங்கிய துணை - பருவந் தொடங்கிய (ஆரம்பித்த) அளவு. 872. வைந்நுனை - கூரியநுனை - மொட்டு. 873. மெல்லெனல் - இளகுதல். 874. கரிந்துணை - இலை முதலியன கருகிய அளவு. 875. அவை - இல்லமுங் கொன்றையும். முதல் - மரம். அவை மலர்ந்தமை யின் என இயைக்க. 876. குழி - பள்ளம். 877. விருந்தினமாகலின் என்பது பழைய பாடம். நீர் வருந்தினதாகலான் என்றிருப்பது நலம். விருந்தினது - புதிது. 878. மான் அடைகரையை விடாதது நீர் வேட்கை பற்றி; அது பின்னும் பின்னும் உண்ணற்பொருட்டுக் கரையை விடாது நின்றது என்க. 879. கொய்யாத உளை - நெற்றி மயிர். கொய்த உளை - பிடர் மயிர். 880. மனப்புகழ்ச்சி - மனச்செருக்கு. மனப்புகற்சி என்றிருப்பது நலம். தனது - அதனது என்றிருந்திருக்கவேண்டும். 881. மிகுதி - செருக்கு. 882. மணி - தேர்மணி. 883. இதன் மீதுள்ள ‘எனவே’ என்ற சொற் சிதைந்திருத்தல்வேண்டும். முன்னுள்ள மற்றை வாக்கியங்களை நோக்குக. 884. பகரக்கோட்டில் அடைத்த இவ்வாக்கியம். (அவை அலராகி விரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங் குறைபட்ட துணையேகாண் அவர் பிரிந்து சேய்த்தன்மையின் என இதுவும் வன்புறைக்கே ஏதுவாயிற்று.) என்றிருப்பதே பொருத்தம். ஏனெனின்? நீ புணர்ந்த காலத்துக் காந்தளின் போது போலப் புதுமணங் கமழ்ந்த தொடிகள் அப்போது நன்றாக அலர்ந்தகாலத்துச் சிறிது. மணங் குறைந்திருத்தல் போல மனஞ் சிறிது குறைந்தவாகவே காணப்படுகின்றன. அவர் பிரிந்து நெடுங்கால மன்மையின் என்று பொருடரலின். போது - சிறிதலர்ந்த பேரரும்பு. நன்றாக விரிந்த காந்தட்பூ - தொடியின் வடிவுக் குவமையாகும். அதுபற்றி ‘வடிவொத்து மணங்குறைந்த துணை’ என்றாள். 885. முழுவதும் வந்தன என்றிருப்பது நலம். 886. ஒரோவுறுப்பு - ஆசிரியப்பா முதலிய பாவுறுப்புள் ஒன்று. 887. இனைத்து - இத்துணையது. 888. உறுப்பாகிய வென்றிருந்திருக்கலாம். 889. உறுப்பாகிய - இப்பாவை உறுப்பாகக் கொண்ட; ‘உறுப்பியாகிய’ என்றிருந்திருக்க வேண்டும். 890. வழக்கிற்குரியன - அகவல், செப்பல். 891. வழக்கிற்கே உரியவாகி என்பது செய்யுட் கேயுரியவாகி என்றிருத்தல் வேண்டும். அவை - வஞ்சியும். கலியும். இவ்வியல் 83-ம் சூத்திர உரை நோக்குக. 892. ஒன்றொன்றனோடு விராய்ப் பிறக்கும் பகுதி - மருட்பா. 893. அவற்றுப் போதுங்கால் - அச் செய்யுட்கண் செல்லுங்கால். 894. நோக்கோத்தினுள் என்பது தூக்கோத்தினுள் என்றிருத்தல் வேண்டும். பின்வரும் எடுத்துக்காட்டுச் சூத்திரத்தானுமறிக. 895. வழிநூல் செய்த ஆசிரியர் என்றது நத்தத்தனாரை. 896. ஒரு சாரார் என்றது சிறுகாக்கைபாடினியார் சங்க யாப்புடையார் யாப்பருங் கலநூலுடையார் முதலியோரைப்போலும். 897. அறத்தைப் புறப்பாட்டெல்லையாகக் கொள்ள மும் முதற் பொருள் பொருளும் இன்பமும் வீடுமென்றாம். 898. எச்சப்படுத்துவது உம்மையை. 899. யாதானும் ஒன்றடக்கி இரண்டாகா என்பது ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என்னும் நான்கனுள் (முறையின்றி) யாதானுமொன்றை ஒன்றுள டக்கி இரண்டாகா என்றபடி. 900. அவை முதலாக - அம் முதற்பாவே முதலாக. முதல் - அடி. 901. இரண்டும் - இரண்டு பாவும். 902. கட்டளை - வரையறை. 903. வலியச் சொல்லினும் - வலிய சொல்லினும் என்றும் பாடமுள்ளது. அதுவே பொருத்தம். வலியச்சொல்லினும் என்பதற்கு வலிந்து கோடலாகச் சொல்லினும் என்று பொருள் கொள்ள வேண்டும். அது தலை குலுக்கி என்பதனோடு இயைந்து தகுதியாகப் பொருடராது. அழியச் சொல்லினும் என்றும் பாடமுள்ளது. தன்சீர் - வஞ்சிச்சீர். 904. அவ்விரண்டடி என்றது “விளங்குமணிப் பசும்பொன்னின், விசித்தத மைத்துக் கதிர்கான்று” என்பதை. இது ஆசிரியவுரிச்சீர் வந்தமையின் அகவலோசை யாதல் வலிது என்க. 905. தன்றளை - ஆசிரியத்தளை. 906. எனவே என்பது ஏனை என்றிருத்தல் வேண்டும். “ஏனை வெண்பா நெறித்தே”என்று சூத்திரத்துள் வருதலின். நச்சினார்க்கினியருரையும் அவ்வாறே கூறுகின்றது. 907. வெண்பா நெறித்தே என்றது வெண்பா நெறித்தான் கலியோசையாம் என்றபடி. 908. நாற்பாக்கும் என்றும் பாடமுள்ளது. 909. மும்முதற் பொருள் - அறம் பொருள் இன்பம். 910. பொருளின் அறுவகை - பொருளின்கண் வரும் அறுவகை. பொருளின் கண் என்றிருப்பது நலம். அறுவகை என்றது அறுவகை வாழ்த்தினை. 911. புறநிலை வாழ்த்து - தெய்வத்தைப் புற நிறுத்தி ஒருமகனை வாழ்த்துவது. 912. வாழ்த்தின்பாற் சார்த்தி யுணரப்படுவதல்லதெனவும் என்பது ளு. கனக சபாபதிப்பிள்ளை பதிப்பு. அது பொருத்தம். 913. இனிக் கடவுளாற் காக்கப்படட சாத்தனை என்பது கடவுளாற் காக்கப் பட்ட சாத்தன் என்றிருப்பது நலம். 914. அவ்வாறு - மேலேயடங்கியதாக. 915. வாயுறை - மெய்ம்மையை (மெய்ப்பொருளை) உறுத்துவது. மெய்யறி வித்தல் என்று உரையாசிரியருங் கூறுவர். 916. அவன் என்றது பின்வருஞ் சாத்தனை. 917. இன்ன வருணத்தையாவாய் என்பது முற் பாடம்; அது இன்ன குணத்தையாவாய் என்று திருத்தப்பட்டது. அங்ஙனம் பாடமுண்மை யின். ருவ்வுக்கும் குவ்வுக்கும் வேறுபாடின்மையின் ருவ்வைக் குவ்வாக் கொண்டு வகர அகரஞ் சேர்க்கப்பட்டது. இதுவே உண்மையாதலை நச்சினார்க்கினியருரை நோக்கித் தெளிக; செவியறிவுறூஉச் செய்யுட் களையு நோக்கியுணர்ந்து கொள்க. ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்புப் பொருத்தம். 918. இவ்வுறுப்பினதிலக்கணமென்றது - நால்வகைப் பாவினிலக்கணத்தை. 919. தாங்குதலின்றி - தடையின்றி. தாங்குதல் - தடுத்தல். 920. வெய்யவாய் இன்சொல்லினை என்பது வெய்யவாயின சொல்லினை என்று பாடம். அதுவே பொருத்தமாகும். இது எழுதுவோரால் இன்சொல் எனப் பிரித்தெழுதப்பட்டது போலும். வெய்யவாய சொல் என்பது ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் கொண்ட பாடம். அதுவும் பொருத்தமே. 921. வேம்புங் கடுவும் போல என்றதனால் வேம்புங் கடுவும் முதற் கைத்தும் பின் உறுதி பயக்கும் மருந்தாயினாற் போல இச்சொல்லும் முன் வெறுப்பைக் கொடுத்துப்பின் உறுதிபயக்கும் மருந்தாகு மென்பதாம். 922. வல்லாதன - வல்லன அல்லாதன. 923. வல்லா - வல்லாதன (- மாட்டாதன). 924. சிந்தாமணி முதலிய தொடர்நிலை நோக்கி இவ்வாறு கூறினர் போலும். 925. செவியுறுத்தற்றே எனவும் பாடம். 926. எண்பதம் - காண்டற்கெளிய செவ்வி. 927. உரிய - உரியவாய பாக்கள். வரையறை - இன்ன பா இன்ன பொருட்குரிய என்னும் வரையறை. 928. மூன்றையும் எழுவாயாகக் கொண்டனர் நச்சினார்க்கினியர். அதுவே சூத்திரப் போக்கிற்குப் பொருத்தம். 929. அதிகாரம் - பாவதிகாரம். 930. அளவல்லாவடி - குறளடி. சிந்தடி. இவையே குட்டம். சிந்தடி கலியில் வாராதென்பது இவர் கருத்தாகலின் அது இடையிற் சேர்க்கப்பட்டது. எண்ணுறுப்புப்பற்றி வரும் இருசீரடியைப் பிறர் முச்சீரடியெனினும். இவர் அதனை மறுத்து (457) இரு சீரடி யென்று கூறலின் அது ஆராயத்தக்கது. 931. பாப்பொருந்தின - பாவாகப்பொருந்தின. பா - ஓசை. 932. அவை - ஒத்தாழிசையும். மண்டிலமும். 933. ஓதிய நிலம் - குறளடி முதலிய நிலம். 934. சீர்வகை - சீர்வகையடி. சீர்வகையடியும் அளவடிக்குரிய என்று கூறலின் அதனானும் அளவடிக்குரிமை கொள்ளப்பட்டது என்பது கருத்து. 935. குறளடி வஞ்சிப்பாப்போல வேறுபடா என்றது குட்டம் குறளடியான் வரினும் ஓசை வேறுபடா. அவ்வப் பாவோசையே பெற்று வரும் என்றபடி. 936. எருத்தடி - ஈற்றயலடி. 937. செந்தூக்கு - ஆசிரியம். 938. இழுக்கே என்பது இழுக்கென்னை என்று ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் காணப்படுகின்றது. அதுவே பொருத்தம். என்றலும் ஒன்று என்று கூறியதை நோக்கும்போது முன்சில வரி தவறியதுபோலக் காணப்படுகின்றது. அன்றேல் அதுவேண்டியதில்லை. 939. இருவகை - குட்டம் இடையிடை வரலும். எருத்தடி பெற்றுவரலும் என்னும் இருவகை. 940. ஒழிந்தவழி - எருத்தடி அல்லாவிடத்து. 941. வழக்குச் சொல்லாற் செய்யுள் என்பது - வழக்குச்சொல்லாற் செய்த செய்யுளென்றிருத்தல் வேண்டும். 942. ஒரோவொன்று - ஒவ்வொன்று. மூன்று பாட்டு ஒத்துவருவதன்றித் தனித்தனி வருவது ஒத்தாழிசையெனப்படாது என்பது கருத்து. 943. முகவிலக்கு முதலாகிய விலக்குறுப்பு என்பன கூத்த நூற்குரியன போலும். 944. அவை என்பது வசை என்றிருத்தல்வேண்டும். நச்சினார்க்கினியருரை நோக்குக. 945. கலிவெண்பாட்டு கைக்கிளைப் பொருளில் வருமென 472-ம் சூத்திர வுரையுட் கூறலின் கலிப்பாவின் பாற்படுமெனக் கூறினர்போலும். ஒப்புமை - கலியோ டொப்புமை. 946. அல்லாதார் - தொல்காப்பியரல்லாதார். அவர் யாவர் என்பது புலப்பட வில்லை. 947. அவ்வாறு - தனிச்சொற் பெற்று. பரிமாறல் - கொடுத்து மாறல். 948. எல்லாம் வெண்பாயாப்பின என்பதனைச் செயற்படுத்து அவற்றுள் எனப் பிரிக்க. செயல் - செய்கை. யாப்பு என்பதைப் பாட்டு என்று கொள்ளாது யாத்தல் என்று பொருள்கொள்க என்பது கருத்து. செய்கை - தொழில். 949. வாழ்த்தியல் வகையும் என்பது வாழ்த்தியல் வகையுள் என்றிருத்தல் நலம். 950. கைக்கிளைப் பொருளாக - கைக்கிளையும் பொருளாக என்றிருத்தல் வேண்டும். பின்வரும் வாக்கியத்தாலறியப்படும். 951. வெண்பா உறுப்பாக என்பது - வெண்பா உறுப்பாக - வருதலேயன்றி என்றிருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் உரை நோக்கு. 952. கண்ணோடுடன் விழூஉம் எனவும் பாடம். 953. ஒவ்வாதாகாதே என்றது ஒவ்வாதல்லவா என்றபடி. ஆகாதே என்ற இடைச்சொல் அல்லவா என்னும் பொருளில் வந்து வழங்குவதை இறையனாரகப் பொருளுரையிற் பரக்கக் காணலாம். 954. உறுப்பான் - உறுப்போடு. 955. எழுவாய் - முதல் வருவது. 956. அஃது என்றும். இடையும் வரும் என்றும் இருத்தல் வேண்டும். 957. முப்பொருள் - அறம் பொருள் இன்பம். 958. பிரியற்க என்றது காமங்கண்ணிற்று. 959. எண்ணப்பட்ட நான்கனையுமன்று - கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்து என்று எண்ணப்பட்ட நான்கனையு மாத்திரமன்று. 960. மேற்கூறிய அடி - வெண்பாவடி. 961. தொடர்ந்ததொன்றாகிய என்பது முற்பதிப்பும் பாடம். அது தொடர்ந் தொன்றாகிய என்று ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் காணப்படு கின்றது. அது, பொருத்தமே. முடுகு வண்ணச் - சூத்திரம் நோக்குக. (தொல். செய். 233). 962. உளர் என்றது - இளம்பூரணரை. 963. தேவபாணி - கடவுள் வாழ்த்துச் செய்யுள். 964. கட்டுரை - பாட்டன்றி அதுபோலத் தொடுத்துச் சொல்லும் வாக்கியம். இது பேச்சு எனப்படும். எண்ணொடு புணர்தல் - எண்ணுதலோடு பொருந்தல். வடவேங்கடந் தென்குமரி என்பது. வடவேங்கடமும் தென்குமரியும் என எண்ணுதற்கண் வந்தது. அ இ உ எ ஒ என்பனவும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் ஒகரமும் என எண்ணுதல் குறித்து வந்தன. 965. முட்டுதல் - நிறைதல். முட்டடி - நிறைந்த அடி. இது முற்றடி எனவும் பாடம். எனினும், குறைவு என்பதற்கு முட்டு என்பது முரணாய் நிற்றலின் அப்பாடமே சிறப்புடையது. காட்டிய உதாரணங்களில் சீர் குறைந்து அடி நிறைவுபெறாமை காண்க. 966. தூக்குப்படுதல் - அவ்வப் பாவுக்குரிய ஓசையைக் காட்டற்கு அடி முட்டத் துணிக்கப்பட்டு நிற்றல். 967. ஒழியசை - தன்னை யசையென்று பகுத்துச் சொல்லற் கேற்ற சீர்கள் வாராமையால் அசைத்தன்மை ஒழிந்து நிற்பது. ஒருசார் என்பதனோடு வேறுஞ் சீர்கள் வந்து அடி நிரம்பிற்றான். அது அசையெனப் பிரிக்கப்படும். அவ்வாறின்மையின் ஒழியசையென்றாயிற்று. 968. வழியசை - தன்னொடு பின்னும் அசை வந்து சேர்தற்குரியதாய் நிற்பது. ஒழியசைபோலத் தனியசையாய் நில்லாதது பின்னும் சில அசையொடு புணர்ந்து வருவது வழியசை என்பர் நச்சினார்க்கினியர் 969. சொற்சீரடியினை அசையென்ற தென்னையெனின் என்னும் வினா ஒழியசை வழியசை என்னும் இரண்டனையும் சேர்த்து வினாவி நின்றது; சீரன்றித் தனியசையும் ஒழியசையாய் நிற்கும் என்றற்கு என்பது அதற்கு விடை. ஒரூஉ என்னும் இயலசையாகிய தனியசை ஒழியசையாக வந்தமை காண்க. 970. எள்ளி என்னும் சீரை சொற்சீரடியாக்காது மேனின்ற முச்சீர் அடியோடு கூட்டி நாற்சீரடியாக்க. உகுவது என்பதற்குத் தொகுபு என்பது எதுகை யாயமைந்து சுவைசெய்து நிற்குமென்றபடி. வழி - பின். 971. இடைநிலைப் பாட்டு - தாழம்பட்ட ஓசையின்றி வரும் தாழிசைப் பாட்டு. 972. எண்ணவும்படும் என்றது அளவியலிற்படுத்து என்னவும்படும் என்றபடி. 973. இவை - சொற்சீரடி. 974. கூறினானென்னாமோ எனின் என்பது கூனென்னாமோ எனின் என்றிருத்தல் வேண்டும். மூன்று பதிப்பிலும் பிழையாய் உள்ளது. 975. என்பதனானுமுடைத்து என்பது - என்பது என்றவரையிலிருந்தால மையும் மேலுள்ளன வேண்டியதின்று. இதில் யாதோ பிழையுளது. 976. அதுவே என்பது இதுவே என்றிருப்பது நலம். இது - இங்கே சொல்லிய சொற்சீர்க்குரிய இலக்கணம். 977. அடிக்கு என்பது முற்பதிப்பிலுள்ள பாடம். இஃது அடிக்கு உதாரணம் என்றிருக்கிற் பொருந்தும். 978. குறங்கினைக் கதத்தண்டு கொண்டு எற்றல் எனவும் பாடம். 979. ஏழிற்கோவை என்று ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலுமுள்ளது. அதுவே பொருத்தம். நச்சினார்க்கினியருரை நோக்குக. 980. கட்டி - ஒரு சேனைத்தலைவன். 981. தேஎம் - இடம். 982. வசைக்கூத்து - ஒரு நாடக நூல்போலும். 983. இசைத்தல் - சொல்லுதல். 984. தாங்கி - பாதுகாத்து. 985. அவை - தாங்கியுரைப்பன. 986. வெண்டொடைச் செய்யுள் - வெண்பா. 987. முனையகத்துப் படையோடும் விடும் என முடித்தல் வேண்டும். தான் தனித்து நின்றுவிடாது படையொடும் விட்டதே வசைபோலும். 988. குன்றெறிந்த சேந்தன் - குமரன். 989. மேலைச் சூத்திரம் என்றது “நெடுவெண் பாட்டே அங்கதச் செய்யுள்” என்ற சூத்திரம். 990. அல்லாத பாடம் அங்கதஞ் செய்யுள் என்பது. அதனை அங்கதச் செய்யுளைச் செய்தல் எனப் பொருள்கொள்க என்றபடி. செய்யுள் - செய்தல். 991. தாய்க்கொலை - தாயைக் கொல்லல். 992. இவ்வாக்கியங்கள் சரியான பிரதி கிடையாமையால் திருத்தமுடிய வில்லை. 993. முகவிலக்கு - ஒரு நாடக நூல் போலும். 994. இங்ஙன முரைப்பவர் இளம்பூரணர். 995. அன்றாயின் - பயவாதாயின். அங்கதம் பயவாதாயின் அதனைக் குறித்து நமக்காராய்ச்சியில்லை என்பது கருத்து. அங்கதம் புகழும் பொருளும் பயவா தென்பதே கருத்து. 996. நசையென்றது விருப்பத்தாற்றாங்கியுரைத்தலிற் போலும். பின், ‘இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாக’ என்றும், ‘வெகுளியும் பொருளும் நகையும்’ என்றும் வருதலின் இது நகையென்று மிருக்குமோ என்பது ஆராயத்தக்கது. ஏனையுரைகளிலும் நசையென்றே காணப்படலின் திருத்தாதொழிந்தனம். நசை என்பதே பாடமாயின் நகை என வருவன நசை என்றிருத்தல் வேண்டும். 997. ஒத்து ஆழிசை - ஆழிசை - வினைத்தொகை. ஆழ்தல் - தாழ்தல். அதுபற்றித் தாழிசை என்றுங் கூறுப. “தந்துமுன்னிற்றவிற் றரவே தாழிசை - ஒத்தாழ்ந்திறுதலின் ஒத்தாழிசையே” என்பது யாப்பருங்கல விருத்திப் பிரமாணச் சூத்திரம். 998. மருவியவகை - தொன்றுதொட்டு வந்தமுறை. 999. தாழிசை - துள்ளலோசை - தாழம்பட வருவது. 1000. முறைமை - இயல்பு. துள்ளிச் செல்லும் இயல்புபற்றி வருதலின் தாழிசை என்று கருத்தாம். தாழ்தல் - துள்ளல். தாழம்பட்ட வோசை என்பதும் இக்கருத்தாம். 1001. அதுவன்றே - கட்டளைக்கலியல்லாமையினன்றே. வருமுதாரணச் செய்யுளுள் ‘அறியேன்’, ‘என்னும்’ என்பன நேரீற்றியற்சீர். 1002. முன்மொழிப் பொருட்டு என்பது முன்மொழியாகிய கலி என்ற மொழிக்கண் பொருள் சிறந்து வந்தது என்பது கருத்து. 1003. உறுப்பு - கொச்சகம் என்னும் உடைஉறுப்புப்போறலினாற் கொச்சகம் எனப்பட்டதாகலின் உறுப்பினாற் பெற்ற பெயர் என்றார். (433). 1004. ஒன்றோடொன்று மாறுபட்ட பொருளையுடைமையான் உறழ்கலி என்று பெயராயிற்று என்றபடி. 1005. கட்டளை - நியமம். 1006. பா - செய்யுட்குரிய முப்பத்து நான்கு உறுப்பினுள் ஒன்று. 1007. அது - ஒத்தாழிசை. 1008. ஒன்றென்னாகலின் - ஒன்றென்னானாகலின் என்றிருத்தல்வேண்டும். பதிப்புக்கள் மூன்றும் பிழை. 1009. அதுவன்றே - மரபு வேண்டுதலினன்றே. 1010. ஆசிரியர் வழக்கு - செய்யுள் வழக்கு. 1011. அராகவுறுப்பில்லாத முடுகியலடி - பரிபாடற்குரியது. “சொற்சீரடியு முடுகியலடியும்” என்னும் 434ம் சூத்திரம் நோக்குக. 1012. உண்டாவதாகல் - வருதல். 1013. நடை பயின்றெனவும் பாடம். 1014. அடங்குவனவும் என்பதி லும்மை இல்லாதிருப்பது நலம். 1015. எண்ணுறுப்பு - அம்போதரங்கம். 1016. என்ப என்றார்; பிறர் கூற்றென்பது அறிவித்தற்கு. 1017. ஏனையொன்று - இச்சூத்திரத்தாற் கூறிய ஒத்தாழிசையல்லாத ஒத்தாழிசை; அது 450-ம் சூத்திரத்தாற் கூறப்படும். 1018. இங்ஙனந் தம்முட் பகுதியுடை மையானும் இடைநிலை என்று பெயராயிற்று என்றது தாழிசையும் ஏனைப் பாட்டுமாகாது இரண்டற்கும் இடைநிலையாய் நிற்பதானும் ஆயிற்று என்றபடி. 1019. என்றற்கு என்றதற்கு என்றிருப்பது நலம். 1020. பயனாந் தோற்றுவாய் - பயனாகிய தொடக்கம். 1021. போந்தது - இது என்க. இவ்வெழுவாய் சிதைந்திருத்தல் வேண்டும். இன்றேல் இது என்பது வெளிப்படாது நின்றதாகக் கொள்ளல் வேண்டும். 1022. அடைநிலை - தனிச்சொல். பயத்தல் - பயன்படல். 1023. அடக்கியல் என்றது சுரிதகத்தை. அடக்கியல் போக்கு வைப்பு வாரம் என்பன சுரிதகத்தையே குறித்து வந்தன. பொருளால் சிறிது சிறிது பேதமுள்ளன. 1024. வாரம் - ஒரு பகுதியைச் சார்ந்து வருவது. ‘வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்’ என்பது சீவகசிந்தாமணி. 1025. இவை நிலை எனவும் பாடம். அது பொருத்தமின்று. 1026. பாட்டு - தாழம்பட்ட ஓசையின்றி வருவது. 1027. பலவாய் எனவும்பாடம். 1028. அது பெயர்பெறுதலின் என்றது இடைநிலைப் பாட்டு என்று அவ்வுறுப்புப் பெயர்பெறுதலின் என்றபடி. இடைநிலைப் பாட்டு என்ற பெயரானேவே இடைவருதல் பெறலின் முன் வைப்பினுமமையு மென்றபடி. 1029. அறையவும் பெறுமே எனவும் பாடம். 1030. அகப்படுதல் - முற்கூறாகிய அகத்துட்படுதல். அகம் - உள். 1031. யாதானும் என்றதனால் இடமுன்னுங் கொள்ளலாம். காலமுன்னும் கொள்ளலாம் என்றபடி. நான்கையும் பன்னிரண்டை யும் இடமுன்னாக வைக்குங்கால் இரண்டுமுதல் நான்கு வரையும் ஐந்து முதல் பன்னிரண்டு வரையும் கொள்ளப்படும். இங்கே இரண்டற்கு நான்கு இடமுன்னாதலும் ஐந்தற்குப்பன்னிரண்டடி இடமுன்னாதலுங் காண்க. இனிக் காலமுன்னாகக் கொள்ளுங்கால். நான்கற்கு முன் எண்ணப்படும். இரண்டும், பன்னிரண்டற்கு முன் எண்ணப்படும் ஐந்தும் காலமுன்னாதல் காண்க. இருமுன்னாக வைத்துப் பார்ப்பினும் பொருள் ஒன்றா மென்றபடி. 1032. மக்கள் என்றது மானுட சாதியை. 1033. மேற்கூறிய வரையறை என்றது இடைநிலைப் பாட்டுத்தரவு போக்கு அடை என வைத்தமுறை வரையறையை. 1034. 444-ம் சூத்திர உரை இறுதி நோக்குக. 1035. ஆன்றோர்களால் பரம்பரையாகக் கொள்ளப்பட்டுவந்த மரபு. 1036. ஆறடியான் வருவன வந்தவழிக் கண்டுகொள்க. என்றதனால் முன் ஐந்தடியானும் ஆறடியானும் என்று கூறியிருத்தல் வேண்டும். அது தப்பிற்றுப் போலும். 1037. இழிந்தது ஓரடியானும் எனக் கண்ணழிக்க. 1038. நடை நவின்றொழுகல் - செய்யுள் வழக்கினுட் பயின்றுறொழுகல். 1039. பயிலாதன ‘எனவிவள்’ (பாலைக்கலி - 1) எனவும், ‘எனநின்’ (பாலை - 7) எனவும் வருவன போல்வன. 1040. தன் என்றது ஆங்கென் கிளவியை. 1041. நிற்றல்வேண்டும் எனவும் பாடம். 1042. என்றானை எனவும் பாடம். இவ்வாக்கியத்தில் யாதோ பிழையுளது. 1043. இங்ஙனங் கூறப்பட்ட என்பதை முதலாகக் கொண்ட வாக்கியம் என்றவாறு என்ற உரைப்பின்னே காணப்படுவது பொருத்தமில்லை. ஒரு பிரதியில். பின் பகரக் கோட்டுள் வருமாறு காணப்படுகிறது. அதுவே பொருத்தமாகும். இரண்டிலக்கணமுடைத்தென்று கூறுவான் போலச் சுட்டிக்கூறியவாறு என்று அவ்வாக்கியம் முடிக்கப்படும் . போக்கு வைப்பு என்னுஞ் சொற்களின் கண்ணேயே அவற்றின் இலக்கணமு மமைந்து கிடக்கின்றனவென்பார் சொல்லின் முடியு மிலக்கண மென்றார் என்க. அதனை என்றது வைப்பைச் சுட்டுதல் - குறித்தல். 1044. தரவியலொத்தும் என்பதன் உரை ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் காணப்படுகிறபடி ஒரு ஏட்டுப் பிரதியிலுங் காணப்படுகிறது. அதுவே பொருத்தம். நச்சினார்க்கினியர் உரையினும் அவ்வாறே காணப் படுகின்றது. 1045. அகப்படுமென்று அதற்கும் உம்மை கொடுத்தமையின் என்றது செய்யும் என்னு முற்றுச்சொல் வாய்பாட்டாற் கூறினமையைக் கருதிப் போலும். அகப்பட்டும் என்று அதற்கும் உம்மை கொடுத்தமையின் என்றும் பாடங் காணப்படுகின்றது. தரவின்கண்ணே ஒத்தலுமுயர்தலு மென்றது நாலடித் தரவிற்கு நாலடிச் சுரிதகம் வரலும் அதின் ஏறி ஐந்தடி வருதலுமாம். 1046. சுருங்கிய எல்லை கூறாமையின் என்பதில், கூறாமையின் என்பது சிறுமையின் என்பதனோடு மாறி எழுதப்பட்டது. 1047. தரவிற்காய் - தரவிற்காயின் என்றிருத்தல் வேண்டும். 1048. ஒழிந்த கலி நான்கு - இவ்வகநிலை ஒத்தாழிசையல்லாத ஏனை ஒன்றெனப்பட்ட ஒத்தாழிசையும் கலிவெண்பாட்டும் கொச்சகமும் உறழ்கலியும். 1049. இவ்வாக்கியம் முன்னும் வருதலின் வேண்டியதில்லை. 1050. தரவியலொத்தல் என்பது தரவியல் ஒத்தல் என்றதனால் என்று இருக்க வேண்டும். மண்டிலம் - ஈற்றயலடியும் நாற்சீராய் வரல். 1051. இறுதிநிலை - நிலை இறுதி. என்றது இடைநிலைப் பாட்டின் முடிபு என்றபடி. 1052. முற் கூறியதென்றது அடக்கியல் வாரம் தரவோ டொக்கும் என்பதை. 1053. அவற்றோடு என்றது - தாழிசைப் பொருளோடு என்றபடி. தாழிசைப் பொருளும் போக்கியற் பொருளும் வந்தால் இவ்விரண்டினையும் மாறுபடாது பொருந்தச்செய்க என்பதாம். புரை - மாறுபாடு. போக்கியற் பொருள் - தான் முடித்துப் போக்குதற்குரிய பொருள். போக்குதல் - விடுத்தல். 1054. அளவியல் - அளவின் இயல்பு. இங்கே தரவினளவை ஒத்தது அளவியல் என்க. 1055. இவ்வாக்கியத்தில் யாதோ பிழையுளது. 1056. தரவியலொத்தும் என்றிருத்தல் வேண்டும். 1057. வழக்கினுள் என்றும் பாடம். அதுவே பொருத்தம். 1058. இவை - ஒத்தாழிசை. இவை எனப் பன்மை கூறியது ஒத்தாழிசையின் பன்மை நோக்கிப்போலும். 454-ஞ் சூத்திரம் நோக்குக. 1059. புலனெறி வழக்கு - செய்யுள் வழக்கு. என்றது அகப் பொருட்குரி மையாய் வரும் வழக்கை. அகத்திணை - 53-ம் சூத்திரம் நோக்குக. 1060. ஆண்டு - அகத்திணை இயலுள். 1061. ‘உரிமை உடைமையின்’, ‘உரிமையுடையன பயன்’ என்ற பாடங்கள் பொருத்த மில்லை. 1062. அத்துணையன்றி - கலிக்கும் பரிபாடலுக்குமுரிய அத்துணையன்றி. 1063. ‘ஏனையொன்று என’ என்றிருத்தல் வேண்டும். 1064. முன்னரது - முன் கூறிய அகநிலையொத்தாழிசை. 1065. பெயரும் உடன் கூறாமை - ‘ஏனையொன்று’ என்னுஞ் சூத்திரத்திலேயே. பெயரையும் உடன் கூறாமை. 1066. போத்தந்து - போகத்தந்து. அங்கே சொல்லாது இங்கே கொண்டுவந்து. 1067. அதிகாரம்பட வைத்தல் - முற்கூறியதிகரித்து நின்ற அகநிலையொத் தாழிசையோடு சேரவைத்தல். 1068. அது என்றது வண்ணக ஒத்தாழிசை இவ்வுறுப்புக் களையுடையதாய் வருவதை. வண்ணக ஒத்தாழிசைக்குரிய உதாரணம். தொ. செ. 146இல் காட்டப்படுகிறது. அது என்றது உதாரணம் என்றுமிருக்கலாம். 1069. வண்ணித்தல் - வருணித்தல், புகழ்தல். 1070. அகநிலைச் செய்யுள் - அகநிலை ஒத்தாழிசைச் செய்யுள். 1071. அம்போதரங்கம் - நீரின்கணுண்டாகும் திரை. 1072. இது - இந்நூல். 1073. அவர்க்கும் - இசைநூலார்க்கும். 1074. அளவடி - நாற்சீரடி. கூறினானாம் என்பதில் ஆம் வேண்டியதில்லை. 1075. சமநிலை - நான்கு ஆறு எட்டு என்று எண்கள் சமமாய் வருவது. வியம் - சமமின்றி வருவது; மூன்று ஐந்து ஏழு என்பனபோல் வருவன. நேரடி - சமஅடி. 1076. அளவடியான் என்பது - நேரடியான் என்றிருத்தல் வேண்டும். நேரடி - சமநிலை அடி. 1077. இஃது என்றது - வருதலின்மையை. 1078. உடையவாய் என்றிருப்பது நலம். 1079. கூறினான் - வினையாலணையும் பெயர். இதிற் தொடரிசையிருத்தல் வேண்டும். 1080. இடம் - பொய்கை. இடத்து நிகழ்பொருள் - மலர். 1081. உவமிக்குங்கால் ஒருதரம் இடமும் ஒருதரம் இடத்து நிகழ் பொருளுங் கூறினமையின் இடைநிலைப்பாட்டின் பொருள் ஒவ்வாதாயிற்று. 1082. ஒத்தாழிசைகட்கு இவைபோலத் தரவோடொத்து என்பது. ஒத்தாழிசை கட்குப்போல இவை தரவோடொத்து என்றிருக்க வேண்டும். 1083. மூவகை வண்ணம் - முதனிலையளவுடையது. இடைநிலை யளவுடையது. கடைநிலையளவுடையது என்னு மூன்றுவகை வண்ணம். 1084. இடைநிலை - தரவு அளவுள். எட்டும் ஆறுமாகிய இவற்றின் இடையான நிலை. 1085. எண் - அம்போதரங்கம். எண் இரண்டடியான் வரலின் இதுவும் இரண்டடியான் வரின் வேறுபாடு தெரியாது மயங்குமாதலின் வாராது என்றபடி. 1086. இவ்வாக்கியம் கொள்க என்பதன்பின் வரல்வேண்டும். நச்சினார்க் கினியருரை நோக்குக. 1087. தரவிரண்டு - முதலனவும் இடையனவும். 1088. வருஞான்று - வரும்பொழுது. 1089. வாரம் என்ற சொல்லின் பொருள். ஒருபகுதியைச் சார்ந்து வரல் என்பது. ‘வாரம் பட்டுழித் தீயவு நல்லவாம்’ என்பதனானுமறிக. வாரம் - ஒருபக்கஞ் சார்ந்த அன்பு. 1090. எண் - அம்போதரங்கம். 1091. என்பது வேண்டியதில்லை. என்னை எனின் என்றிருப்பது நலம். 1092. கந்தருவநூல் - இசைநூல். 1093. இவரும் என்பது இவனும் என்றும். 1094. நேரார் என்பது நேரான் என்றும் ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பில் இருப்பது பொருத்தம். 1095. பாகம் - சரிபாதி. ‘குறுகும்’ என்றால் அரையிற்பாதி கொள்ளல்போல. 1096. அல்லாதார் - தொல்காப்பியரல்லாதார். 1097. முன்னின்ற சீர் எனவும் பாடம். 1098. ஏதம் - குற்றம். 1099. சின்னவெண் - ஒரு சீரடி. 1100. ஒழிதலினும் என்றிருப்பது நலம். அன்றேல் உம்மைக்கு முடிவின்று. 1101. தலையளவு என்றது தரவு எட்டடி பெற்று வருவதை. 1102. தேவபாணி - கடவுள் வாழ்த்துச் செய்யுள். 1103. இருவகைச்சின்னம் - இருசீரெண்ணும் ஒருசீர் எண்ணும். 1104. சின்னமல்லாக்கால் எண்ணிடையிட்டு வந்தது என்றது சின்ன எண் ஒழியாது நிற்ப ஏனை எண் ஒழிந்து வந்ததென்றபடி. சூத்திர நோக்குக. சின்னம் என்பதில் ஒருசீரன்றி இருசீரும் சிறுபான்மையடங்கும். 1105. இறுதி நின்ற எண் இருசீரெட்டும் ஒருசீர் பதினாறும். இவை நான்கும் எட்டுமாகச் சுருங்கி வந்தன. 1106. ஒருபோகு - வண்ணக ஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புள். யாதானும் ஒன்று இல்லாமல் வருவது. இது பெரும்பான்மை. 1107. தம்மின் வேறாதல் - இரண்டு பிரிவாதல். 1108. கொச்சகம் ஒரோவிடத்து வாராமையின் கொச்சக ஒரு போகாயிற்று என்றபடி. கொச்சகம் இன்னதென்பதை 464-ம் சூத்திர நோக்குக. 1109. இவ்வாக்கியம் பின் பகரக்கோட்டில் அடைத்தவாறிருத்தல் வேண்டும். இதுவே பொருத்தமாதல் நச்சினார்க்கினியருரை நோக்கியறிக. 1110. ஒன்று - வண்ணகமொரு போகெனப் பட்டவொன்று. 1111. வருவது என்னுஞ்சொல் சிதைந்து போயிற்று. எண்ணுறுப்பு - அம்போதரங்கம். அது இழந்து வருதலின் அம்போதரங்க வொருபோகு என்று பெயராயிற்று. ஒருபோகு - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை என்றமையின் ஒன்றாகிய போகியதையுடையது என விரியும். எனவே போகிய ஒன்றையுடையது என்பது கருத்தாம். 1112. திரிகோட்டவேணி - இதன் பொருள் நன்கு புலப்பட வில்லை. ஆயினும், கோடுபோலத் திரிந்ததாகிய வேணியையுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். கோடு - கொம்பு. வேணி வேணியையுடையவனை உணர்த்தியது போலப், போகு - போகியதையுடையதை உணர்த்தியதற்கும் சொன் மாறியதற்கும் காட்டப்பட்டதுபோலும். வேறு கருத்துளவேனுங் கொள்க. திரிகோட்டவெளி என்றும் திரிதோட்டவெளி என்றும் பாடம். வெளி என்பது வெளிநிலத்தையுணர்த்தும். 1113. பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி வருவன பதிகம் என்றும், அவை திருவாசகம், திருப்பாட்டு, திருவாய்மொழி முதலியவற்றிற் காண்க என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 1114. நான்கடியின் ஏறாது என்பது நான்கடியின் ஒன்றாது எனவும் பாடம். அது சிறப்பின்று. நச்சினார்க்கினியரும் நான்கடியின் ஏறாது என்றே கூறுதல் காண்க. பதினான்கடியின் ஏறாது வருதலும் என்பது ளு. கனக சபாபதிப்பிள்ளை பதிப்புப் பாடம். இதில் நான்கடியின் ஏறாது என்பதற்கு முன்னுள்ள பதினொன்று மகப்பட்டு என்பதில் பதினொழிய ஏனைய சிதலரிக்க அப் பதினென்பதையும் நான்கையும் எழுதுவோர் சேர்த்து எழுதியிருத்தல் வேண்டும். அன்றேல், எழுதுவோரால் விடப்பட்டிருத்தல் வேண்டும். 1115. கொச்சகவொரு போகெனப் பொதுவகையாற் செய்யுள் என்பது கொச்சக வொரு போகெனப் பொதுவகையா நின்ற செய்யுள் என்றிருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியரும் இவ்வாறே கூறுவர். பெறுவது செய்யுள் என முடிக்க. 1116. அதுவன்றே என்றது ஆகாதன்றே என்றிருத்தல் வேண்டும். முதற்றொடை - எண்ணுள்வரு முதற்றொடை (பேரெண்). இத்தாழிசை தனிவருதலின் எணணுறுப்பாகாதென்றபடி. 1117. தாழிசையின்றி - தாழம்பட்ட வோசையின்றி. 1118. வஞ்சி - கலி என்றிருத்தல் வேண்டும். வெண்பாவினாலே கொச்சகம் கலியில் வருமென்பது கலிவெண்பாவுக்குக் கொச்சகமும் உறுப்பாக வருமென்று கோடலானும். கொச்சகக்கலி கலிவெண்பாவின் உறுப்பு வகையான் வரும் என்று கோடலானும் பிறவாற்றானும் பெறப்படும். 1119. பல அடுக்கிவருவதை என்னுந் தொடர் முற்பதிப்பில் விடுபட்டது. 1120. திரிதல் - வேறுபடல். 1121. வருதலும், என்பதூஉம் கொள்க. என இயையும். 1122. கடப்பாடு - முறைமை, நிச்சயம். 1123. தலைமை - முதன்மை. இன்றிவருமெனவே தாழம்பட்ட வோசைபெற்று வருதலை முதன்மையாகக் கொள்ளாதென்றபடி. ஒரு தலைமையின்றி என்பது ஒருதலையின்றி என்றிருப்பினும் பொருந்தும். ஒருதலை - நிச்சயம். 1124. தொடர் பொருட் செய்யுள் - சூளாமணி, சிந்தாமணி முதலியன. 1125. ஒன்றற்கொன்று - தரவுந் தாழிசையும் ஒன்றற்கொன்று. தரவை நோக்கத் தாழிசை தரவாயும். தாழிசையை நோக்கத் தரவு தாழிசையாயும் வரும் என்றபடி. 1126. பொருள் தொடர்ந்து வருதல் பற்றித் தம்பொருளொடு தாம் முடியாமையின் என்றார். 1127. தொடர்நிலை - தொடர்நிலைச் செய்யுள். சூளாமணி, சிந்தாமணி முதலியன. 1128. தேவபாணி - கடவுள் வாழ்த்து. 1129. எருத்து - தரவு. 1130. இது என்பது புத்தகப் பிரதிகளில் இல்லை. தவறிற்றுப் போலும். இது என்றது. எண் இடையிட்டுச் சின்னங் குன்றியதை. உறுப்பொன்றல் - அகநிலைக்குரிய நான்கு உறுப்பும் பெறல். 1131. முதனிலை யொத்தாழிசை என்றது அகநிலை யொத்தாழிசையை (444ஆஞ் சூத்.) 1132. ஏனை ஒத்தாழிசையின் - வண்ணக ஒத்தாழிசையினது. நச்சர் உரை நோக்குக. 1133. எண்ணுறுப்பு - அம்போதரங்க உறுப்பு. 1134. அடக்குமியல் பிற்றல்லாத எனவே, தரவு தாழிசைப் பொருள்களை அடக்குமியல்பிற்றல்லாத சுரிதகம் வருமென்பதாம். 1135. ஒருதொடையான் - ஒரு தொடையாக. 1136. அற்று - முடிந்து. 1137. இறுதி - முடிவு. இற்று நிற்ப என்று பாடங்கொள்ளினுமமையும். 1138. இனவியல் - இன்னவியல்பு. 1139. அடிப்பட - அடி என்றிருப்பது நலம். 1140. பட்ட - பட்டன. 1141. பாயிரம் - பாசுரம் என்றிருப்பது நலம். 1142. அடிவரையறையில்லன ஆறு - நூல், உரை, வாய்மொழி, பிசி, அங்கதம். முதுசொல். கடா - வினா, ஓலைப்பாகர முதலியன உரையுளடங்கு மென்றபடி. 1143. சேர்த்தலும் - சேர்த்தி என்றிருப்பது நலம். உம்மையால் வேறுதொடர் சிதைந்திருத்தல்வேண்டும், என்றும் கருதத்தக்கது. 1144. திறம்போல என்றதனோடு சேர்ந்த வாக்கியம் விடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 1145. அவற்றை ஒப்பன - அந்நான்கு பாவையு மொப்பன. பரிபாடலும் கலிப்பாவும் ஒப்புளடங்குமென்பது அவர் கருத்து. 1146. ஒன்றனை என்றது - பரிபாடலைப்போலும். 441-ஆஞ் சூத்திரவுரையுள் பரிபாடலும் கலிப்பாவினுள் அடங்குமென்பாருமுளர் என வருதல் நோக்குக. 1147. கொடுத்துமாறல். 1148. ஒருசாரன - குறள்வெண்பா. 1149. ஒழிந்த காரணம் - சீருந் தளையு முதலான காரணம். 1150. நேர்ந்த - இயைந்த. இது ஒழிந்த என்று பாடமிருப்பது நலம். 1151. “அந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவும் - சந்தழி குறளுந் தாழிசைக் குறளே” என்பது யாப்பருங்கலம். (செய்யுளி. 64). 1152. என்னும் என்பது என்றுமென்றிருப்பது நலம். இல்லாமலிருப்பதும் நலம். 1153. கூட்டி - காட்டி என்றிருப்பது நலம். 1154. பரிகாரம் என்றது - பெரும்பான்மையுங் கலியோசை பெற்று வருதலின். ‘யாப்பின் வேற்றுமை யுடையதென்று பரிகாரங் கொடுத்தமையை’ பரிகாரம் - பாதுகாப்பு. 1155. பாவை - திருவெம்பாவை. அம்மனை - திருவம்மானை இவை யிரண்டும் திருவாசகத்திலுள்ளன. 1156. வந்தவழியும் என்பது வந்தவாறும் எனக் காணப்படுகின்றது. அதுவே பொருத்தமாதல் மேற்காட்டிய செய்யுள் நோக்கி உணர்க. 1157. கந்தருவமார்க்கம் - இசை நூன்மார்க்கம். 1158. என்றதுபோல இலக்கணங்கள் - என்றதுபோல வரும் இலக்கணங்கள் என்றிருந்திருத்தல் வேண்டும். 1159. பரிமாறல் - ஒரு அடியோடு வேறடியைக் கொடுத்து மாறிச்சொல்லல். நான்கோடு ஐந்து சீரடியையும் ஐந்து சீரடியோடு ஆறுசீரடியையுங் கொடுத்து மாறல். 1160. உம்மை வேண்டியதில்லை. 1161. வந்தவழிக் கண்டுகொள்க என்றிருப்பது நலம். 1162. பலவற்றிற்கும் என்றது அந்நூலின் பின்வரும் முதுமொழிகள் பலவற்றிற்கும் என்றபடி. 1163. முற்கூறியவகையென்றது தரவின்றாகித் தாழிசைபெறுதன் முதலிய நான்குவகையானும் என்றபடி. மரபு வேற்றுமையானும் என்பது யாப்பு வேற்றுமையானு மென்றிருத்தல் வேண்டும். அதுவே பொருத்தமாதல் பின் எடுத்தோதிய நான்கற்கும் யாப்பு வேறுபட்டவற்றுக்கும் என வருதலானறிக. 1164. படர்க்கையெனச் சொல்லுதலும் என்பது முற்பாடம். அப்பாடத்தினும் படர்க்கையாகச் சொல்லுதலும் என்ற பாடமே பொருத்தமாதல் காண்க. 1165. பொருளின் வேறுபடுதலினாலும் என்னும் பாடம் பொருத்தமில்லை. பொருளின் வேறுபடுதலும் என்றிருத்தலே பொருத்தம். அவ்வாறு பவானந்தம் பிள்ளை பதிப்பிலும் காணப்படுகின்றது. அதனுக்கு - கலிக்கு. காமப்பொருளின் எனவும் பாடம். 1166. ‘முன்னிலை... என்பது.’ என்பது. முன்னிலை படர்க்கையான்வரும் பொருள் வேறுபாடே எடுத்தோதிய நான்கற்கும் யாப்பு வேறுபட்ட வற்றுக்கு மெல்லாம் பொது. இஃதொழிந்தவெட்சிமுதற் பாடாண்டிணை இறுதியாகிய பொருள் வேறுபாடு வரையறை யுடையதென்பது என்று இருக்கவேண்டும். பொருள் வேறுபாடு எழுவாய். உடையது - பயனிலை. நச்சினார்க்கினியம் நோக்குக. 1167. வருமாகலின் வரையறையுடையதென்பது என முடிக்க. 1168. இவற்றை ஐங்குறுநூறு. முத்தொள்ளாயிரம் கீழ்க்கணக்கு முதலியற்றிற் காண்க என்பர் நச்சினார்க்கினியர். 1169. தேவபாணி - கடவுள் வாழ்த்து. 1170. அவ்வச்செய்யுள் - அவ்வத் தொடர்நிலைச் செய்யுள். 1171. எல்லாம் அவற்றுக்கு என்பது எல்லாவற்றுக்கும் என்றிருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியருரை நோக்குக. பெயர் எல்லாவற்றுக்கும் எனப் பிரிக்க. 1172. இரண்டு - உயர்பும் இழிபும். ஈண்டளவை கூறி என்றுமிருக்கலாம். 1173. செம்பால்வாரம் - உம்மைத்தொகை. 1174. செம்பாகம் - சரிபாதி. 1175. அதன்வாரம் - அதன்பாகம். 1176. அடக்கியல் - சுரிதகம். 1177. இருமூன்று - ஆறு. இருமூன்றாகிய பத்து - அறுபது. 1178. பதினைந்து சிற்றெல்லையளவு. இதுமுதலாகச் சிற்றெல்லைக்கு அளவு கூறுகின்றாரென்க. இனிச் சிற்றெல்லை என்றிருத்தல் வேண்டும். 1179. இடையளவிற்குந் தலையளவிற்கும் இவ்வாறே வரும் என்பது அவற்றின் சிற்றெல்லையைக் குறித்தது. அவை முப்பதும் அறுபதும். அவற்றிற்கும் இவ்வளவைப்படி ஏற்றிக் கொடுக்கப்படும் என்றபடி. 1180. அளவியல் - அளவிலக்கணம். 1181. காட்டினானாமென்பது. முற்பாடம். அதுபிழை; ஆசிரியன் மேற்றாகு மாதலின் காட்டினாம் நாம் எனவும் பாடம். 1182. கோடு - வளைவு. இவ்வுடை ஆடவர்க்குரியது. முன் ஆடவர் முற்பக்கத்திற் கோடுபடக் கொய்து உடுப்பது வழக்கு. இக்காலத்தும் அஃது அருகி வழங்குகின்றது. 1183. உம்மை வேண்டியதில்லை. 1184. எண் - அம்போதரங்கம். 1185. பிறிதொன்று - பொடி. 1186. செய்வது - உருக்குவது. 1187. அராகித்தது என்றது பொடியிட்டு ஆற்றத்தக்கதாயுருகியது என்றபடி. 1188. கூறாது நின்ற - கூறாநின்ற என்றிருத்தல்வேண்டும். 1189. மூன்று என்றது கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி என்னு மூன்றையும். 1190. இதனை - இவ்வளவினை. 1191. வருகின்ற கலிவெண்பாட்டென்றது - ஒரு பொருணுதலிய கலிவெண் பாட்டினை. எனவே ஏனை ஒரு பொருணுதலாது வரும் உறுப்புடைக் கலிவெண்பாட்டே கொச்சகக்கலி. உறழ்கலியோடு ஒருங்களவை பெறுமென்றது. 1192. ஒரு பொருள் - வேறும் ஒரு பொருள். இது பேராசிரியர் கருத்து. 1193. ஒரு பொருணுதலாது வருவது என்று நச்சினார்க்கினியருங் கூறலின் நுதலியும் என்பது வேண்டியதில்லை. 1194. ஈண்டுக் கூறிய வேறுபாடென்றது. இசையொடு சேராமையும், சீருந் தளையுங் சிதைதலும், பன்னீரடியி னிகத்தலும். 1195. திரிபின்றி முடியாதாகலின் வெண்பாட்டென்பது திரிபின்றி முடியாத கலிவெண்பாட்டென்பது என்றிருத்தல் வேண்டும். 1196. முன்னர் என்றது வருஞ் சூத்திரத்தை. 1197. பல என்பது ஒரு என்றிருத்தல்வேண்டும். நச்சினார்க்கினியரும் அவ்வாறே கூறுவர். ஒன்றல்லாதது பற்றிப் பல என்றா ரெனினுமாம். வந்தமையின் என்றுமிருக்கலாம். 1198. செவ்வனம் - நேர்மை. சொல்லி உணரவைத்தமையின் என முடிக்க. 1199. மறந்தது என்றது தலைவன் தான் பண்டு கூறியதை. 1200. ஒழிந்த பா - கலிவெண்பாட்டல்லாத வெண்பா. 1201. நுதலிய - கருதிய. 1202. செப்பி - வெளிப்படச் சொல்லி. செப்பு உத்தரமாதலின் வெளிப்படக் கூறல் வேண்டுமென்க. 1203. வரினென்பது வருதலின் என்பது என்றிருத்தல் வேண்டும். 1204. இதனுள் - வானூர்மதியம் என்னுமிச் செய்யுளுள். 1205. வாய்ப்புள் - சொல் நிமித்தம். 1206. கந்திருவம் - இசைநூல். 1207. வரி முதலியன இசைப் பாட்டின் வகைகள். போல உரியனவாகி வருவனவு மென இயைக்க. 1208. செந்துறை இசை நூற்குரிய பாட்டு. “செந்துறை என்பது ஒலி குறித்தன்றே வெண்டுறை என்பது கூத்தின் மேற்றே.” என்பது ஒருசாரார் கூற்று. நாற்பெரும்பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவையெல்லாஞ் செந்துறை. மேற்புறம் பதினொரு ஆடலும் என்றிவை யெல்லாம் வெண்டுறை என்பது வாய்ப்பியம் என்பர் யாப்பருங்கல விருத்தி நூலார். 1209. வேறுபடப் பெறூஉம் என்றிருக்கலாம் போலும். விரவுறுப்புடையது. இல்லது என இசைநூலுள் வருவதாகப் பிற்கூறப்படுதல் நோக்குக. ஈண்டுக் கூறிய செய்யுள் கலிவெண்பாட்டு. 1210. இடையின்றி என்பது இடையன என்று எட்டுப்பிரதியிற் காணப்படு கின்றது. அதுவே பொருத்தமாகும். நச்சினாhக்கினியரும் இடையன என்றே கூறுதல் காண்க. 1211. தரவுறுப்பாகப் பாட்டிடைமிடைந்தும் என்றிருப்பது நலம். தரவுறுப்பாக வென்றுமிருக்கலாம். அல்லது இறந்தது தழீஇய எச்ச உம்மைக்கு விளக்க மின்றாம். 1212. அவ்வனைத்தும் என்றது தரவும் போக்கும் என்பவற்றிலுள்ள உம்மை களையுஞ் சேர்த்து எண்ணும்மை கொள்ளின் என்றபடி. 1213. எண்ணினானாகலான் என்பது எண்ணினானல்லனாகலான் என்று இருத்தல் வேண்டும். என்னை? மறுத்துக் கூறலின். பெயரும் பெயரு மெண்ணினன்றிப் பெயரும் வினையு மெண்ணின் அப்பாவின் உறுப்பினை எண்ணினானல்லனாய் முடியுமென்றபடி. 1214. தரவு முதல் வந்தும் போக்கு இறுதி வந்தும் பாட்டு இடைமிடைந்தும் என்று வினைகொடுத்து ஆசிரியர் சூத்திரிக்கலாம் என்றபடி. 1215. மிடைந்து தோன்றும் என்பது மிடைந்ததென்றும் என்றிருப்பதுவே பொருத்தம். மேல் உதாரணம் நோக்கித் தெளிக. 1216. ‘தோன்றுமென்றும்’ என்பது ‘தொன்றும் என்று’ என்றிருத்தல் வேண்டும். முன்னுள்ள ஒன்றும் என்பன என்றும் என்று மிருக்கலாம். பவானந்தம் பிள்ளை பதிப்பில் ஒன்றும் என்பன என்றும், தோன்றும் என்பது தோன்றுவதென்றுங் காணப்படுகின்றது. அப்படியுமிருக்கலாம். 1217. அவை என்றது மேற்கூறிய உறுப்பான் வருவன நான்கையும். 1218. அடுக்கல் - நாற்சீரோடு அடுக்குதல். அடுக்குதல் என்றதனால் அது வேறாய் நிற்கும் என்பது வெறாய் நிற்கும் என்பது பெறப்படும். 1219. செறாஅஅய் என இருமாத்திரை நீண்ட அளபெடையாகக் கொள்வர் நச்சினார்க்கினியர். அங்ஙனங் கொள்ளின் வழுப்படாது. ஆதலின் பேராசிரியர் கூற்று ஆராயத்தக்கது. வாழியென் னெஞ்சு எனவும் பாடம். 1220. தன்றளை - கலித்தளை. 1221. ஒருஉத்தரம் என்பது. சி.வை. தாமோதரம்பிள்ளை பாடம். அது பொருத்தமில்லை. ஒரு சூத்திரமென்று இருக்கவேண்டும். 1222. அவ்வாறு - தளைவிரவி. 1223. வருஞ் சூத்திரத்தை வேறு பிரித்தற்காக இங்ஙனங்கூறினார் பேராசிரியர். இளம்பூரணர் வருஞ் சூத்திரத்தையும் இதனையும் ஒன்றாக்குவர். அதுவே பொருத்தமாம். 1224. பாவிநின்ற என்ற பாடம் பொருத்தமில்லை. பாவினின்ற என்ற பாடமே பொருத்தம். பாநிலை - ஆறாம் வேற்றுமைத் தொகை என்றலின். மேற்பா என்றது கொச்சக ஒரு போகை. சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்புப் பொருத்தம். பாநிலை வகை - உம்மைத் தொகையென்று கூறியதற்கேற்பப் பதஉரை கூறப்படவில்லை. பாவினின்ற நிலைவகை என்றிருப்பது நலம் நச்சினார்க்கினியம் நோக்குக. 1225. கொச்சகப்பாவினின்ற என்ற பாடமே பொருத்தம். பவானந்தம்பிள்ளை பதிப்பு நோக்குக. 1226. இவ்வகநிலை என்பது இவ்வகநிலைக் கொச்சகம் வரும் என்றிருத்தல் வேண்டும். 1227. பாட்டுப்போல என்பது பரணிப்பாட்டுபோல என்றிருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியருரை நோக்குக. பரணிதரவின்றாகித் தாழிசையான் வருவது. அது துணிக்கப்பட்டது. 1228. வெண்பாவியலின் என்றிருப்பது நலம். 1229. உறுத்தல் - வலியுறுத்தல். 1230. பா - கொச்சகப்பா. 1231. வெளிப்பட - பொருள் வெளிப்பட. 1232. உடைத்து என்பதற் கெழுவாய் கொச்சகக்கலி. 1233. காமம் - இச்சை. 1234. பற்றி என்பது வேண்டியதில்லை. முன் வந்த பற்றி மீட்டுஞ் சேர்க்கப் பட்டது. 1235. ‘அல்லாதது’- ‘அல்லாதார்க்கு அது’ என்றிருத்தல் வேண்டும். 1236. பாவினம். 1237. அவை - அவர் இனமாக வேண்டுவன. அவ்வப்பா என்பது இனஞ் சார்த்தும் வெண்பா முதலிய அவ்வப் பாக்களை. 1238. நச்சினார்க்கினியரும் கொச்சகம் எனல்வேண்டும். ஆதலின் அது பொருந்தாது என்பர். 1239. கோடா - கொள்ளாத. 1240. அடுக்கி என்றிருத்தல்வேண்டும். 1241. பொருட்டொடர் நிலையுள் - அப்பொருட்டொடர் நிலையுள் என்றிருத் தல் வேண்டும். அவை சிந்தாமணிபோல்வன. நச்சினார்க்கினியம் நோக்கு. 1242. எண் - அம்போதரங்கம். சின்னம் - ஒரு சீராய் வரும் அம்போதரங்க உறுப்பு. 1243. நெய்தற்றிணைப்பாட்டு என்றது நெய்தற்கலியை. 1244. யாப்பு - செய்யுள். 1245. இருசீர் நான்கடி முதலியவற்றை இனமென்பர் யாப்பருங்கல நூலார். அவர் இதனை வஞ்சித்துறை என்பர். 1246. வஞ்சி விருத்தம் என்பர் யாப்பருங்கல நூலார். 1247. கலிவிருத்தம். 1248. கலித்துறை. 1249. இது கட்டளைக் கலித்துறை. 1250. ஆசிரியவிருத்தம். 1251. ஆசிரியத் தாழிசை. 1252. ஆசிரிய இணைக்குறட்டுறை. 1253. ஆரியத்துறை. 1254. பா - ஓசை. 1255. வெண்செந்துறை. 1256. குறட்டாழிசை. 1257. ஒழிந்தபா - ஆசிரியம் முதலியன. 1258. உறழ்பொருட்டு அன்மையின் எனப் பிரிக்க. 1259. ஒன்றாகவகுப்பவர் - இளம்பூரணர். அதுவே பொருத்தம். 1260. கலிவெண்பாட்டாதற்கும் வாளாது கலிப்பாவாகாமைக்கும் என்றிருத்தல் வேண்டும். என்னை? பின்வரும் விடைக்கியை யாமையின். அல்லது சிலவரி என்னையெனின் என்பதன்பின் விடுபட்டிருத்தல்வேண்டும். 1261. கரந்த - மறைந்த. 1262. இது - வெளிப்படத் தோன்றும் என்ற இது. 1263. வேறொருபா - வெண்பா. 1264. மற்றொருபா - கலிப்பா. 1265. ஆயின் ஓதான் என இயைக்க. 1266. மற்றைய என்றது அச் சூத்திரத்தோதிய ஏனைய கலிகளை. 1267. இது என்றது கலிவெண்பாட்டை. உறுப்புடைக் கலிவெண்பாட்டாயின் ஒத்தாழிசைக்கலி முதலிய மற்றையவற்றோடு ஒத்த பரப்புடைத்தாம் என்பது கருத்தாகும். 1268. யாப்பு என்ற முற்பாடம் பொருத்தமில்லை. 1269. கொச்சகமென்றது - கொச்கவொருபோகை. அமைய வாராததென்றது ‘தரவின்றாகித் தாழிசை பெறுதலும் தாழிசையின்றித் தரவுடைத் தாத லும்’ முதலியன பெற்று அமையவாராமையை. இவை வண்ணகத்துக் குரிய உறுப்பிழத்தலின் கொச்சக வொரு போகாயின. 1270. அது - எண்ணுஞ் சின்னமு மிழந்தது. 1271. ஒப்பழிய வருவன என்றது. யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடை யனவற்றை. 1272. அவ்வவ்வளவு - வண்ணகத்திற் கோதிய அந்த உறுப்பளவு. 1273. பாவை - திருவெம்பாவை. 1274. அம்மனை - அம்மானை. 1275. வரையறையின் - வரையறையின் கண். வரையறையினால் எனினுமாம். 1276. ஒரு செய்யுள் ஆக்கி - ஒவ்வொரு செய்யுளாக வைத்தே. ஏனெனின் தரவு என்னும் உறுப்புப்பற்றி தரவுக்குரிய அளவு பற்றி ஒவ்வொரு செய்யுளாகவே கூறுவர் என்றபடி. ஒரு என்பது ஒவ்வொரு என்றிருந்திருத்தல் வேண்டும். 1277. பெறுதலாயின் என்பது ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிற் பாடம். அது பொருத்தமில்லை. 1278. அகநிலைக் கொச்சகம் என்றது. இச்சூத்திரத்தாற் சொல்லிய கொச்சகத்தை. 1279. அதனளவு - அம்போதரங்கத்தினளவு. 1280. பாநிலைவகைத்து என்று கூறின். ஒருபோகின் அளவை கொள்ளப்படும். அன்றிப் ‘பாநிலைவகையே’ என்றமையின் கொள்ளப்படாது என்றபடி. 1281. தொகுநிலை என்றிருத்தல் நலம். 1282. இலக்கணத்த அல்ல என்றது இவ்வுறழ்கலிக்கு வரும் போக்கின் வேறுபாடு நோக்கி. 1283. இடை - தரவிற்கும் போக்கிற்குமிடை. 1284. போக்கின் இலக்கணம் பெறுதல் என்றது தரவும் போக்கினிலக்கணத் தைப் பெறலை. எனவே போக்கை விலக்கவே உடனெண்ணிய தரவும் விலக்குண்ணும் என்றபடி. 1285. பாநிலை - கொச்சக ஒருபோகு. 1286. கொச்சகம் - கொச்சகக்கலி. 1287. அவ்வகை உரியது - வேறொன்றற்கும் உரியது. 1288. அல்லாக்கால் - பொருள் வேறுபாடும் மரபும் நோக்காக்கால். 1289. மருட்பாவென என்றிருத்தல் வேண்டும். 1290. ஒருதலை - நிச்சயம். 1291. அமைந்தது - முடிந்தது. 1292. ஒன்று - ஒருபாட்டு. 1293. முடிந்து காட்டலின் நேர்ந்தான் என இயைக்க. 1294. அதனுள் என்னும் முற்பாடஞ் சிறப்பின்று. 1295. கூறுமென்றது - ஆசிரியனை. 1296. அளவியல் - நெடுவெண்பாட்டின் பாகம் பெறுவது. பாகம் - ஆறடி. 1297. பதினெண்கீழ்க் கணக்கு இவை என்பதை. “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் - பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் - இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே - கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு” என்பதனாலறிக. இன்னிலைய - மெய்ந்நிலைய எனவும் பாடம். 1298. முத்தொள்ளாயிரம் - ஒரு நூல். 1299. என - என்று. 1300. கூறிய நெடுவெண்பாட்டு எனப் பிரிக்க. கூறிய - இங்கே கூறிய. கூறியிந் நெடுவெண்பாட்டு என்றிருப்பது நலம். 1301. அதற்கு - அவ்வம்மைக்கு. 1302 செப்பு - விடையாதலின் சுருங்கச் சொல்லல் என்பது கருத்துப்போலும். 1303. அவற்றுள்ளும் - அவ்வெண்பா அடியுள்ளும். 1304. தெரிய - புலப்பட - பொருள் விளங்க. 1305. இருவர் என்றது - மகளிரிருவரை. அவர்கள் என்னைப் போலத் தாரை விரும்பாமையின் நல்லராயினார். யான் தாரை விரும்பி அது பெறாமையின் தீயேனாயினேன் என்றாள் என்க. ஓடை - யானையின் முகத்திலணியும் படாம். தியேன் - குறுக்கல் விகாரம். 1306. இரண்டெல்லை - நெடுமை. குறுமை. 1307. மந்திரம் - மந்திரச் செய்யுள். 1308. இது - அங்கதம். வேறுபாட்டெனப் படாமையின் என்பது வேறுபாட் டெனப் பட்டமையின் என்றிருத்தல் வேண்டும். வேறுபாட்டாதல் - அங்கதப் பாட்டெனப்படுதல். 1309. நூற்பா - சூத்திரப்பா. ஈண்டுச் சூத்திர வெண்பா. நேமிநாதம் சூத்திர வெண்பாவாலாயது. நாற்பா எனவும் பாடம். 1310. இக் கலிவெண்பாட்டு பன்னிரண்டடியின் இகந்து ஒரு பொருணுதலாது உறுப்புமின்றி வருவது. இவ்வுரையாசிரியர் கருத்துப்படி. இது இரண்டாவது பிரிவு. விரவுறுப்புடையது மூன்றாவது பிரிவு. 1311. பன்னிரண்டடியின் இகவாது ஒருபொருணுதலித் திரிபின்றி வருவதை 154ஆம் சூத்திரத்தாலறிக. 1312. வெண்பாட்டல்லாதனவாகிய கலிப்பாட்டுக்கள் என்க. 1313. புறநிலை என்பன செய்யுள் என முடிக்க. 1314. 423-ம் சூத்திரம் நோக்குக. 1315. கொச்சகவொரு போகால் அவையடக்கு வருதல் தொடர்நிலைச் செய்யுளாகிய சிந்தாமணி முதலியவற்றா லறியப்படும். 1316. நீண்டதனையளவுடைத்து என்றது அதிகம் நெடிதல்லாதது என்ற கருத் தினாற்போலும். அளவு என்றது எல்லையை உணர்த்தக் கூறினார் என்றபடி. 1317. ஒழிந்த நான்கு - கைக்கிளை, செவியறிவுறூஉ, வாயுறை, புறநிலை. 1318. ஐந்தடியிற் சுருங்கா என்று பின் வருதலின் இங்கு நான்கடி என்றது நான்கடியானும் வருதலிற்போலும். 1319. ஐஞ்சீர் - அஞ்சீர் என்று இருத்தல்வேண்டும். 1320. கண்ணுங் காண்கொடா; நாணும் விலக்கும்; செங்கோல் சென்று வடுப்படுத்தலால் என்க. 1321. அது - இது என்றிருத்தல்வேண்டும். இது என்றது வெண்பாவை. 1322. இப் பொருட்பகுதி என்றது பாடாண்டிணைப் பொருள் இதற்குரியது ஐந்திணைப் பொருள் இதற்குரியது. என்னும் பகுதியை. 1323. இவை - கலிவெண்பாட்டுக்கள். 1324. இவன் என்பது இவள் என்றும், ஆயினான் என்பது ஆயினாள் என்றுமிருத்தல் வேண்டும்; இது பெண்பாற் கைக்கிளை யாகலின். 1325. இன்னோரன்ன - இவைபோன்றன. என்றது அகத்திணைக் கைக்கிளையில் இவைபோலுஞ் செய்யுள்கள் வருதலை. 1326. ஒருதலையன்பு - ஒருபக்கத்தன்பு. என்றது ஒருதலைக் காமமாகிய கைக்கிளையை. 1327. என என்பது சில பிரதிகளிலில்லை. அதுவே பொருத்தம். 1328. நற்காமம் - அன்புடைக் காமம். 1329. இக்கருத்தினானே என்பது வேண்டியதில்லை. 1330. இப்படலம் பன்னிரு படலத்திலுள்ளதோ வேறு நூலிலுள்ளதோ என்பது தெரியவில்லை. 1331. இவ்வடி சரியோ பிழையோ என்பது ஆராயத்தக்கது. 1332. பாடாண் கைக்கிளை கலிவெண்பாட்டில் வரின் அதனளவே அளவென்றபடி. 1333. கைக்கிளை மருட்பாவுக்குரிய தென்பது முன் கூறப்பட்டுள்ளது. 1334. இது - ஒருதலைக்காமக் கைக்கிளை. (அகப்புறக் கைக்கிளை.) 1335. ஒழிந்த மருட்பா மூன்று - செவியறிவுறூஉ. வாயுறை, புறநிலை. 1336. மடற்செய்யுள். 1337. உலாச்செய்யுள். 1338. எத்துணையடியாயினும் என்றிருத்தல் வேண்டும். 1339. முன்னர்க் கூறியதை 422-ம் சூத்திரமுதல் 426-ம் சூத்திரவரையு நோக்குக. 1340. உயரினும் அவையெல்லாம் எனவும் பாடம் பவானந்தம்பிள்ளை பதிப்பு நோக்குக. 1341. வரையறையிலவாயினும் என்பதே சிறப்பாம். 1342. புறப்பொருள் வெண்பாமாலையிற் காணப்படாமையால் வேறு நூல்போலும். 1343. தத்தம் பாக்கள் வேறுபெற நிகழுமென்பது வெண்பா வேறுபெறவும் ஆசிரியம் வேறுபெறவுந் நிகழும் என்றபடி. என்றதுபின் “எறும்பி யளையிற் குறும்பல கனைய” எனக் காட்டுமாறு. இரண்டடியுங் கலந்துநிற்கத் தொடுக்கப்படாதென்றபடி. “எறும்பி.... கனைய” என்பது இயற்சீற் வெள்ளடி ஏனையது ஆசிரியவடி. 1344. ஈண்டு - மருட்பாவிற்கு. 1345. பரிபாடல்லே எனவும் பாடம். 1346. ஒருகூறு - அடிவரையறையுடையது அது பாட்டு. 1347. எழுநிலத்தெழுந்த செய்யுள்களுள் (476) அடிவரையறை உடைய வற்றிற்குக் கூறினாம். அல்லாதன அடி வரையறையின்றிவரும் இலக்கணத்தன என்பதூஉம் இனிக் கூறுதும் என்பதூஉம் இதனதுபயம் என்றும் பாடங் காணப்படுகின்றது. அது சிறப்புடையதாதல் காண்க. 1348. குறிப்புக்கருதா குறிப்புக்கருத என்றிருத்தல் வேண்டும். இவ்வாக்கியத் தில் சில சொல் விடப்பட்டிருத்தல் வேண்டும். 1349. செய்யுள் கூறினான் செய்யுளாறெனக்கூறினான் எனவும் பாடம். 1350. இலக்கணத்தளவு - இலக்கணத்தன என்றிருத்தல் வேண்டும். அதுவே சூத்திரத்திற்கியைபாம். நச்சினார்க்கினியருரை நோக்குக. 1351. சொல்லும் என்றிருத்தல்வேண்டும். ஆசிரியனைக்குறித்ததாதலின். 1352. என்ற சூத்திரம் செய்யுளை நோக்கிக் கூறியவாறு எனவும் பாடம். அது பொருத்தமில்லை. 1353. அதனுள் - சூத்திரச்செய்யுளுள். 1354. வரையறையின்றி ஓரடியானும் வருதலின் அடிவரையுடையன என்றார் போலும். 1355. சொல்லப்பட்டவற்று-சொலலப்படுவது என்றிருத்தல் வேண்டும். (சூத்திரம் நோக்குக) அன்றேல் முடிபு இயைபின்றாம். விளக்கல் - விளக்கலுடையது. 1356. உரை - சொல். அவ்வச் சொல்லாற் கொள்க என்றபடி. 1357. அவை என்றது தொகையையும் வகையையும். 1358. ஒழிந்த மூவகை நூல் - தொகை ஒழிந்த வகை முதலியன. நூல் நான்காவன: தொகுத்துச் செய்தது. வகுத்துச் செய்தது. தொகுத்தும் வகுத்துச் செய்தலுஞ் செய்தது. மொழிபெயர்த்துச் செய்தது என்பன. 1359. தேர்தல் வேண்டாமை - ஆராய்ந்து பொருள் காணாமல். 1360. சிதர்ந்துகிடப்ப - சிதறிக்கிடப்ப. 1361. நேர் - ஒப்பு. தம்மின் ஒத்த என்றபடி. 1362. வேறுவேறு வைத்தது தம்மின் ஒவ்வாமைபற்றி என்றபடி. 1363. பொதுமொழி தொடரின் - பொதுவான மொழியாய் நின்றுதொடர்ந்து வரின். தொடர்தல் - தொடர்புபடுதல். இவ்வாறு உரைப்பர் இளம் பூரணரும். பொருளதிகார மென்புழிப் பொருள் என்பது அகத்திணை முதலிய ஒன்பதியற்கும் பொதுவாய் அவ்வவ்வியற்பொருள்களுக் கெல்லாந் தொடர்பாய் நிற்றல் காண்க. ஏனைய அதிகாரங்களுமனைய. 1364. சூத்திரமென்னும் ஓருறுப்பு அடக்கிய பிண்டம் இறையனார் களவியல். சூத்திரமும் ஒத்தும் என்னும் இரண்டுறுப்பும் அடக்கிய பிண்டம் பன்னிரு படலம். மூன்று உறுப்பும் அடக்கிய பிண்டம் தொல்காப்பியம் என்பர் நச்சினார்க்கினியர். 1365. உறுப்பின - உறுப்பையுடையன. 1366. அவற்றுள் - அவ்வதிகாரங்களுள். 1367. ஒழிந்த - படல மொழிந்த, ஒத்துஞ் சூத்திரமும் படும் என இயைக்க. 1368. குறிப்பு - நூல் செய்வோனதுகுறிப்பு. குறிப்பு - எண்ணம்; கருத்து. 1369. பாவின்றெழுந்த கிளவியானும் என்பதற்கு பாக்களை யொழியத் தோற்றிய சொல்வகையானும் என்பது இளம்பூரணருரை. இது பொருத்தம்; முன்னாளிலும் தமிழில் வசன நூல்களிருந்தன என்பது இவ்வுரையாலறியக் கிடத்தலின். பின் அவர் கூறும் விரிவுரைகளானே இதனை நன்கு அறியலாம். மற்றையோருரை பின்னால் எழுந்த நூல்கள் நோக்கிக் கூறப்பட்டனவாதலின் அவை பொருந்தா. 1370. அல்லாத - அல்லதூஉம் என்றிருப்பது நலம். நச்சினார்க்கினியரும் அன்றியும் என்பர். 1371. பொருள் - உண்மை. 1372. யானையுங் குதிரையும் என்பர் நச்சினார்க்கினியர். அவற்றுக்கு இயையாப் பொருள் என்றது. அஃறிணைப் பொருளாகிய அவை களுக்குப் பொருந்தாத பொருள். நட்பாடலும் செய்தலும் அவற்றுக் கியையாத பொருள். 1373. உலகியலாகிய - உலகியலாகி என்றிருப்பது நலம். 1374. பிறிது என்றது அகலவுரையை. 1375. மேனின்ற அதிகாரத்தான் என்றது. மேல் நான்கனுள் இறுதி நின்ற இரண்டுமே இச்சூத்திரத்தோடு தொடர்புபட்டு அதிகரித்து நின்றமை யான் என்றபடி. 1376. அவையன்றி - பொய்ம்மொழியும் நகைமொழியுமாகிய அவை இரண்டுமன்றி. 1377. முத்துப்போலப் பூத்துக் காய்முதிரிற் களாவின்காய் நிறத்தையும் கனியாய் முதிரின் இரத்தநிறத்தையுங் கொண்டு. முகிழிற் கிளிவண்ணம் எனவும் பாடம். முகிழ் - மூழ் என வழங்கும். காய் முதிரும் பொழுது மூழ் நீலமும் ஏனைப்பகுதி சிவப்புமாய் இருக்கும் என்பது கருத்து. 1378. களா - களாவின்காய். 1379. பார்ப்பான் - பிராமணன். 1380. நிறஞ் செய்யான் - நிறஞ்சிவந்தவன். 1381. நீராடின் காக்கை போல்வான் என்க. இது நெருப்பு. 1382. ஒளியு முடைமையு மென்மையும் எனவும் பாடம். அது பொருளுக் கியை புடைத்தன்று. ஆதலிற் பொருந்தாது. 1383. வந்ததனை முதுமொழியென்ப என இயைக்க. கருதுவது முதுமொழி கருதுவதாகிய முதுமொழியென்றியையும். கருதுவதாகிய என்றிருப்பது நலம். நச்சினார்க்கினியரும் இப்பொருள்படக் கூறுமாறறிக. 1384. கண்டநங் கருங்கண்ணீ ருகுப்ப எனவும் பாடம். நச்சினார்க்கினியருரை நோக்குக. 1385. ஒன்று - கண். ஒன்று - தோள். கண் அனுபவிக்கவேண்டிய பயனைத் தோள் நுகர்ந்தது பொருத்தமின்மையாகும். அப்பொருத்தமில்லாமையை. உழுத்தஞ் செய்யைக் கன்று மேய அதன் செவியையரியாமல் கழுதை செவியை யரிந்ததுபோலும்’ என்னும் முதுமொழி விளக்கி முடித்துநிற்றலின் முதுமொழி முடித்தது என்றார். 1386. பருப்பொருள் - தூலப்பொருள். நுண்ணிதல்லாதது. 1387. பயக்க - பயன்பட. 1388. அவை - அவ்வங்கதம். 1389. வாயில் திறவாகப் பட்டிமண்டபம் என்றும் பாடம். அது பொருத்த மில்லை. வாயில் திறவாத என்பது நச்சினார்க்கினியருரையினும் உள்ளது. பட்டிமண்டபம் - கல்வி பயிலு மண்டபம். 1390. ஒருவன் என்பது மீளவும் எழுதப்பட்டது. ஒருவன் கெடவும் வாழவும் என்பது நச்சினார்க்கினியருரை. நாடகத்துக்குயக் கொண்டானைச் சாகப் பாடிய அங்கதவெண்பா என்று முன்னதற்கும், குயக்கொண்டான் பிழைக்கப் பாடிய அங்கதவெண்பா என்று பின்னதற்கும் தலைக் குறிப்புகளும். ‘குயக்கோடன்’ குயக் கொண்டான் என மூலபாடமும் தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுகின்றன. 1391. சுவாகாங் எனவும் பாடம். இது வடமொழி மந்திரங்களிறுதியினும் வருகின்றது. இது சத்தகோடி மந்திரங்களுளொன்று. 1392. வாய்மொழி - குறித்த பொருள் பாட்டாற்றோன்றாது வாயாற் சொல்லி உணர்த்தப்படுவது. 1393. மெய்ப்படாமை - தோன்றாமை. 1394. பொருளிசை - சொற்பொருளால் வேறொரு பொருள் தோன்றுவது போலும். பிறரென்றது யாரையென்பது புலப்படவில்லை. 1395. இயல்பின்மை - பொருந்துதலின்மை. இயல்பு - இயலல். இயைபின்மை என்று மிருந்திருக்கலாம். 1396. முடிய நாட்டாமை என்றார். பாட்டாற் பொருள் தோன்றாமை பற்றி. 1397. அழிந்து கொண்டமையிற் பாட்டெனப்படாவாயிற்று என இயைக்க. பிறவுங் குறைதலின் என்று நச்சினார்க்கினியர் கூறலானே இவ்வாக்கியத்திற் பிழையுண்டோ என்பது ஆராயத்தக்கது. 1398. குறிப்பிசையுடைய குறிப்பிசையுடைய செய்யுட்கள். 1399. பாட்டு என்றது “பாட்டுரை நூலே” என்ற சூத்திரத்து முதலிற் கூறிய - பாட்டை. பாட்டிற் குறிப்பிசையும் அருகிவருமென்பதை 314-ம் சூத்திர உரையுட் காண்க. பாட்டு அடிவரையறையுடையன. குறிப்புமொழி அடிவரையுட்படாதன. ஆதலிற் குறிப்பிசை யுடையன பாட்டினுள் வாரா என்றாகும்படி கருத்துச் செல்லும் என்றபடி. 1400. மெய்வழக்கல்லாதனவற்றைப் பண்ணத்தி என்று வழங்கல்போல இதனையும் பண்ணத்தி என்று வழங்குவர் என்பது கருத்து. 1401. இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் பன்னிரண்டடியின் மிக்கு வரினும் என்பர். அது கொள்ளத்தக்கது இலக்கியங் காணாமற் பேராசிரியர் இவ்வாறு பொருளுரைத்தது பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. 1402. என்பது. என்றவாறு என முடியும். 1403. அளவியல் என்றது வேண்டியதில்லை; மிகையாதலின். 1404. அவற்றுக்குப்பொது - அகத்திணைக்கும் புறத்திணைக்கும் கரந்தை பொதுவாகலிற் பொதுவியற்கரந்தை எனப்படும். நச்சரும் இவ்வாறு கூறல் காண்க. தொல் - புறத்திணையியல் 5-ம் சூத்திரஉரை நோக்குக. 1405. களவு கற்பென்பனவாகிய காம ஒழுக்கத்தின்கண் ஒழுகலான் என்க. களவு கற்பென்பன காமத்திணையின் ஒழுகலாறாகலான் என்றிருத்தல் வேண்டும். இது சிதைத்து எழுதப்பட்டது. 1406. காமப்புணர்ச்சி - இயற்கைப் புணர்ச்சி. 1407. பிறர் பயத்தல் என்பது முற்பாடம். அது பிற்பயத்தல் என்று காணப்படு கின்றது. அதுவே பொருத்தம். ஏனெனின்? ஆயத்தோடுகூடி நிற்றலின். அவளை இடந்தலைப்பட்டுக் கூடல் பின் அரி தென்றுணர்ந்தானாதலின். ளு. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலும் அவ்வாறு உள்ளது. 1408. நிகழுமதானே - நிகழாதாயினே என்றிருத்தல்வேண்டும். என்னை துணை வேண்டற்குக் காரணமதுவாதலின். நச்சினார்க்கினியருரை நோக்குக. 1409. மறை வெளிப்படுதல் - களவு வெளிப்படுதல். 1410. தமரிற் பெறுதல் - வரைவு. 1411. மலிவு - மகிழ்ச்சி. 1412. உணர்வு - உணர்தல். என்றது ஊடறணிதலை. உணர்த்தல் என்று பொருள் கூறல் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. இளம்பூரணம் நோக்குக. 1413. பிரிவு - ஓதற்பிரிவு முதலியன. 1414. உணர்த்தல் - உணர்தல் என்றிருத்தல் வேண்டும். விரிவுரை நோக்குக. உதாரணமும் நோக்குக. 1415. கூடிய - நிகழ்ந்த. 1416. இனி - மேல்; என்றது மனிதன் முதலாகக் கூறுவனவற்றை. 1417. முன்னைய இரண்டென்றது - மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும். 1418. உணர்வித்தல் - உணர்தல் என்றிருத்தல் வேண்டும். அல்லது உணர்வு - உணர்த்தல் என்றிருத்தல் வேண்டும். 1419. துனி - ஊடலின் மிக்கது. ‘துனியும் புலவியு மில்லாயின்’ என்னுந் தேவர் குறளுரை நோக்குக. 1420. காட்டக்காணாது - உணர்த்த உணராது. 1421. கரந்துமாறல் - உள்ளங்கரந்து வேறுபடல். மாறுதல் - வேறுபடல், ஒழிதல். 1422. மேற்காட்டப்பட்டன என்பதை. தொல் - அகத்திணையியல் 25-ம் சூத்திர முதலியன நோக்கி அறிக. 1423. மறைந்த ஒழுக்கம் - வெட்சிக்கண் நிரைகாவலர் அறியாமற் சென்று கவர்தல். வெளிப்பாடு - கவர்ந்தமை பின் வெளிப்படல். ஒழிந்த திணை - வஞ்சி முதலியன. 1424. முதைச்சுவல் கலித்த - பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்தே தழைத்த. 1425. மூதா - முதிய பசு. 1426. ஆணம் - அன்பு. 1427. கிளவி - ஈண்டுப்பொருள் நோக்கிற்று என்றபடி. 1428. பொருட்குச் சிறந்தார் என்றது. பொருள் பெறுதற்குச் சிறந்தவர் பரத்தைய ரென்றபடி. அறிவரும் பொருட்குச் சிறந்தாரகலின் அப்பொருட்குச் சிறந்த பரத்தையர்க்குப்பின் அவரை வைத்தாரென்பது கருத்து. அறிவரை நற்பொருளுணரும் அறிவர் என்றமையின் பரத்தையர் தீப்பொருளுணர்வோ ரென்பது பெறப்படும். எனினும் இருவரும் பொருள் என்ற அளவில் இயைபுடையார் என்றபடி. 1429. பையுள் - துன்பம். 1430. இது - புறத்திணைக்கட் கூறல். 1431. கூறாதார் - கூற்று நிகழ்த்தப் பெறாதார். அவர் இச்சூத்திரத்தாற் கூறியவர். கூறுவானாயிற்று என்றிருப்பது நலம் ஆசிரியனை ஆதலின். 1432. நோய்மருங்கறிநர் - தலைவியின் நோயின் பகுதியைக் குறிப்பாலறி பவர். இளம்பூரணம் நோக்குக. 1433. தலைவி தாய் முதலியோர். 1434. அல்லரென்பது அல்லதென்பது என்று இருத்தல் வேண்டும். 1435. மாதர்க்குக் கிழவன் என்பது இவர் கருத்து. கிழவன் - உரியோன். மாதர் என்பது கிழவனை விசேடித்து நின்றதென்பது இவர் கருத்து. மாதர் - கிழத்தி. மாதர் என்பதற்குச் செவிலி என்று பொருள்கொள்வர் நச்சினார்க்கினியர். நற்றாய் - தோழி செவிலி என்பர் இளம்பூரணர். 1436. தலைமகனையாதலின் என்பதன்பின் சில வாக்கியம் இருந்திருத்தல் வேண்டும். என்னை? தொடர்பின்றியிருத்தலின். 1437. வழக்கியலாற் கூறல் - நின் தமர்வரின் அவரைக் கொல்வேன் என்றல். உதாரணம் - “வினையமையாவையினியல்”... என்னுந் நற்றிணை 362 - ஆஞ் செய்யுளில். “நுமர்வரின் மறைகுவன் மாஅயோளே” என்னுமடி யானும். “நுமர்வரி னோர்ப்பினல்ல தமர்வரின் - முந்நீர் மண்டில முழுவது மாற்றா - தெரிகணை விடுதலோ விலனே - யரிதமர் மழைக்கண் கலுழ்வகை யெவனே.” என்னுஞ் செய்யுளானுமறிக. 1438. பிறழக் கூறின் என்றது அவரைக் கொல்வேன் எனக் கூறலை. கொன்று கோடலும் இராக்கமாதலின் கொல்வேனென்றலு மிராக்கதமாயிற்று. 1439. இளம்பூரணருரையே பொருத்தம்; வருஞ் சூத்திரத்து அவர் என்பது ஒழிந்தோரையே சுட்டலின். இளம்பூரணருரை வருமாறு:- தலைவனையும் தலைவியையும் ஒழிந்த பதின்மரும் அத்தலைவனோடும் தலைவியோடும் சொல்லிப் போந்த மரபாற் சொல்லப்பெறுவர். இடமுங் காலமுங் குறித்து என்றவாறு. சொல்லிப்போந்த மரபாவது: இவ்வாறு சொல்லுவரெனக் கற்பியலிற் சொல்லிப் போந்த மரபு. கண்டோர் கூற்று முன் வந்துள்ளது. அன்றியும் கண்டோர் எனச் சூத்திரியாமையானும் கண்டோர் கூற்றாகப் பொருள் கூறல் பொருந்தாதென்க. 1440. அவர் அப்பதின்மரும். 1441. தத்தங் கிளவி - தமதுதமது கிளவி. என்றது அவ்வவர்க்குரிய கிளவியை. 1442. மேற் கூறுகின்றார் என்றிருத்தல்வேண்டும். நச்சினார்க்கினியம் நோக்குக. 1443. மற்றுக் கூற்றுக்குரியரெனப்படுவார் அவ்வயின் தலைவனுந் தலைவி யுங் கூறக் கேளாரோவெனின்? என்பது. மற்றுக் கூற்றுக்குரியார் கூறத் தலைவனுந் தலைவியுங் கேளாரோவெனின்? என்றிருத்தல்வேண்டும். என்னை? சூத்திரத்தால் தலைவனுந் தலைவியுங் கூறக் கேட்போரையே சொல்லப்பட்டதாதலானும். பின்வரும் விடை வினாவிற்குப் பொருத்த மின்றாதலானுமென்க. நச்சினார்க்கினியருரை நோக்குக. 1444. தங்கிளவி - தமக்குரிய கிளவி. என்றது இருவர்க்கும் ஒவ்வொருவர்க்கு முரிய கிளவி என்றபடி. 1445. மேற்கூறிய வகை - கற்பியலிற் கூறிய வகை. 1446. புலனெறி வழக்கு - செய்யுள் வழக்கு. ஏலாதென்றமையான் ஏற்பன கொள்ளப்படும். 1447. தோழி கேட்டது. 1448. பாணன் கேட்டது. 1449. செவிலி கேட்டது. 1450. கண்டோர் கேட்டது. 1451. அறிவர் கேட்டது. 1452. பார்ப்பான் கேட்டது. 1453. பாங்கன் கேட்டது. 1454. பாகன் கேட்டது. 1455. தோழி கேட்டது. 1456. கண்டோர் கேட்டது. 1457. பொதுவியற் கரந்தை - அகம் புறம் இரண்டற்கும் பொதுவான கரந்தைத் திணை. 1458. வழி என்பது அவர்வழி என்றிருப்பது நலம். 1459. பாங்காயினார் - கிழத்திக்குப் பாங்காயினார். 1460. இது தலைவிக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது என்றிருப்பது நலம். 1461. தோழி கேட்பினும் தலைவி கேட்ட தேயாமென்க. அவளின் வேறின்றாகலின் என்க. இனி இவள் அத்தலைவிக்கு அறிவிப்பாளுமாம். 1462. காப்பாடும் - காத்தல் செய்வேம். கரப்பாடுமே எனவும் பாடம். கரத்தல் மறைத்தல். 1463. கேட்குநர் அவர் எனவும் பாடம். அது சிறப்பின்று. 1464. இவற்றை என்றிலனாகலின் என இயைக்க. இவற்றை என்றது ஞாயிறு முதலியவற்றை. 1465. வினைசெய்யிடம் - தொழில் செய்யிடம்; என்றது. புணர்ச்சியாகிய தொழில் நிகழுமிடம் என்றபடி. 1466. நிலம் - இடமன்று என்றபடி. நிலமென்பது திணை. களம் என்பது வினை செய்யிடம். ஆதலால் இது வேறு என்றபடி. 1467. எனின் - என்று கருதின். இது நிகழ்வின் எதிர்வு. என்னை? கருதுதலாகிய தொழில் நிகழும் பொழுது இவ்வாறு கூறலின். 1468. இச் செய்யுள் தூதுவிடுதலைக் குறிப்பாலுணர்த்திற்று. 1469. ‘பொருளானே கண்ணீரரும்பல் சத்துவம்படுமாற்றான்’ என்று நச்சினார்க்கினியர் கூறலின் கூறலின் இவ்வாக்கியத்தில் பிழையுளது போலும். 1470. சத்துவம் - உண்மையை வெளிப்படுத்துவது; விறல். 1471. குழவியின் வாய் நீரொழுகுமாற்றை நேரே கண்டாங்குப் பொருள் தோன்ற இவ்வடிகள் செய்யப்பட்டன. 1472. பிழம்பு - வடிவு. 1473. கண்காட்டல் - குறிப்பால் தானே தோற்றுவித்தல். 1474. எனவும் என்றிருப்பது நலம். 1475. இவற்றான் - இக் காந்தள்மலர்களான். 1476. இவற்றான் யாங் குறையுடையமல்லேம் என்றது கூற்றெச்சம்; இக்கூற்று எஞ்சிநின்றதாகலின். இவ்வாறு எஞ்சுவன் இசையெச்சமென்று சொல்லப் படும். 1477. சிதைந்தது இன்மையின் என்றது பொருள் சிதைந்ததின்மையின் என்றபடி. சிதைதல் - வழுப்படல். 1478. அது என்றது காந்தளை. 1479. அது - அக்குறிப்பு. அங்கே சென்று தலைவனைக் கூடு என்னுங் குறிப்பு. 1480. ஏற்ற செய்யுட்களாகச் சொல்லுவது எனவும்பாடம். 1481. ஈடு - பொருத்தம். 1482. சொல்லினெச்சம் - சொல்லெச்சம். எனவென்பதுபோல என்று என்பதும் சொல்லெச்சமாயு நிற்கும்; வினையெச்சமாயு நிற்கும். ஈண்டு வினை யெச்சமாய் நின்று உரைப்பது என்னும் வினைகொண்டு முடிந்ததென்றபடி. 1483. மாற்றம் - சொல். 1484. வகைதல் - வகுத்தல். 1485. தானே வகுப்பதென்றது நெஞ்சிற்குத் தீண்டல், தைவரல், தோய்தல் முதலிய தொழிலைச் செய்தல் இல்லையாயினும் உள்ளதுபோல வகுத்துக் கூறுதல் போல்வன. இப்பொருள் போல்வன எல்லாத் திணைக்கும் பொதுவாதலின் ஏனைத் திணைகட்கும் இப்பொருள் போல்வன அமைத்துச் செய்யுள் செய்யலாம் என்றபடி. 1486. மாட்டுதல் - கொளுவுதல். என்றது சொற்களைக் கூட்டி முடிக்குமாறு பொருள் ஒன்றையொன்று அவாவிநிற்கச் செய்தலை. 1487. வாரேன் என்றதற்கு. அவ்விரண்டடியானுங் கூறிய பொருள்கள் காரணமாதலின் சேய்த்தாக நின்ற அவ்விரண்டடியும் ஈண்டுக் கொண்டுவந்து மாட்டி ஏதுவாக்கிப் பொருள் கொள்ளப்படும் என்றபடி. 1488. கதவு திறந்திடுமின் என அணுகிநின்ற எழுவாயைக் கொண்டுவந்து கூட்டி முடிக்கப்படலின் அணுகியமாட்டென்றார். 1489. உடனிலை - உடனிற்றல். சொற்கிடந்தவாறே கிடைப்பப் பொருள் பெறச் செய்தல். 1490. எச்ச முதலிய ஐந்தாவன; எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு என்பன. 1491. துணை - அளவு. இன்றியமையாச் சிறப்பினவல்ல எனப் பிரிக்க. 1492. நூல் - இலக்கண நூல். 1493. இது அடியோடு தொடராது தனிவந்தது. 1494. அவற்றுள்ளும் - கலி பரிபாடலுள்ளும். 1495. உறுப்பு - அங்கம். அஃதாவது மெல்லெழுத்து மிகுதியும் வந்து சொற்கு உறுப்பாதல். எனவே வேறெழுத்தும் அவற்றோடு கூடிவரும் என்க. 1496. அவ்வாறு பயிலச் செய்தல் - ஓரினமே பயிலச் செய்தல். 1497. மிறைக்கவி - சித்திரகவி. 1498. இரண்டு - உயிர், மெய். 1499. நலிபு - நலிந்துச்சரிப்பது. 1500. ஆசிரியவீறு அங்ஙனம் வரையறையில வென்பது என்க. 1501. மேற்காட்டிய உதாரணமென்றது “தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன” என்பது முதலாக தாங்காட்டிய உதாரணங்களை. அவற்றில் வேறீறுகளும் வருகின்றன. என்றபடி. 1502. வரையறுப்பார் என்றது இறுதிநிற்கும் எழுத்துகளை வரையறுப்பார் மேற்று என்க. வண்ணமென என்பது இடையிற் சேர்த்து எழுதப்பட்டது போலும். அன்றேல் ஆசிரியன் மேற்றாகும். அவ்வாறு கொள்ளின் ஆசிரியற் கிழுக்காம். 1503. இதனுரை தெளிவில்லை. இளம்பூரணருரை சிறப்பாகும். 1504. இறுதியடிப்புறம் - இறுதி அடியின் புறமாக. என்றது ஈற்றலடியை. ஏகாரம் வந்தமை குறித்து இவ்வாறு கூறினார். இறுதியடி புறத்ததாகவும் என்று மிருந்திருக்கலாம். 1505. ஒழுகியவோசையாற் செய்வது என்பது நச்சினார்க்கினியருரை. 1506. யாப்பு என்னும் உறுப்பிற்கும் இவ்வண்ணத்திற்கும் வேறுபாடு யாதெனின். அது பொருணோக்கியது இது ஓசை நோக்கியது. அன்றியும். அது அடியிறந்து பொருள் கொள்ளாதது இது அடியிறந்து பொருள் கொள்வது என்றபடி. 1507. இதற்கு இளம்பூரணருரை பொருத்தமானது. 1508. அராகந் தொடுத்த வடியோடு பிறவடி தொடர்ந்தோடுவது எனவும் பாடம். 1509. இவ்வேறுபாடு என்றது அராகத்திற்கும் முடுகுக்குமுள்ள வேறுபாடு. 1510. பொதுப்பா இரண்டு - மருட்பா. பரிபாடல். 1511. உயிர்வருக்கம் மெய்வருக்கம் என்க. 1512. பிறவாற்றாற் சிலபெயர் என்றது தூங்கிசை ஏந்திசை முதலிய பெயரை. இது அவிநயனார் கொள்கை. அதனை; “தூங்கேந் தடுக்கல் பிரிதன் மயங்கிசை” என்னும் யாப்பருங்கலப் பாவாலறிக. 1513. அச்சூத்திரம் - 1-ம் சூத்திரம். 1514. தொடர்நிலையதே - தொடர்நிலைச் செய்யுளதே. தொடர்நிலைச் செய்யுளிலக்கணந் தொல்காப்பியர் கூறிற்றிலராதலின் இது பொருந்து மோ என்பது ஆராயத்தக்கது. 1515. அஃது - தனிச் செய்யுளில் வருவது. 1516. முன்னையுறுப்புக்கள் - மாத்திரை முதலியன. 1517. ஒரோ எனப் பின்வருவது இங்குஞ் சேர்க்கப்பட்டது. அது வேண்டியதில்லை. 1518. இவற்றை - அம்மை முதலியவற்றை. 1519. அகம் - உள்ளுறுப்பு. 1520. கூறும் - கூறப்படும் என்றிருத்தல் வேண்டும். அல்லாக் கால் - தொடர் நிலைக்கென்று கொள்ளாக்கால். இதனை நீக்கியும் விடலாம். 1521. கொள்க என்றது சிலர் அப்பாடம் கொள்ளாமையின். 1522. எண்ணுச் சுருங்கல் என்றது சில சொற்களால் செய்யுள் ஆக்கப்படுதலை. 1523. சொல்லுவ என்றிருத்தல் வேண்டும்போலும். 1524. இவ்வாக்கியத்தில் யாதோ தவறியிருத்தல் வேண்டும். 1525. இலக்கண இலக்கியம். 1526. திரிசொல் என்பது தெரிசொல் என்றிருத்தல் வேண்டும். என்னை? செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் என்றமையின். நச்சினார்க் கினியர் வழக்குச் சொற்பயிலாதென்று கூறுதல் நோக்குக. அங்ஙனம் பாடமுள்ளது. 1527. பொலிவுபட யாப்பின் என்றிருந்திருக்கலாம். பொருள் என்பதிற் சிதைவிருக்கிறது. 1528. அவைமேல் - தேவபாணியுங் காமமும் அல்லாதவற்றின் மேல். 1529. பிற்காலத்து வந்தன சிந்தாமணி முதலியன என்பர் நச்சினார்க்கினியர். 1530. தேசிகப்பா என்பர் நச்சர். கூத்தராற்றுப்படை என்பர் இளம்பூரணர். 1531. கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுள் என்றது உதயணன் காதையை. இது பெருங்கதை எனவும் கொங்குவேண் மாக்கதை எனவும் படும். கொங்கவேளாராற் செய்யப்பட்ட எனவும் பாடம். இதுவும் பொருந்துமே லாராய்ந்து கொள்க. 1532. இயைபாகிய இதுவும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகலானே உரையாசிரியர் இரண்டற்கும் வேறுபாடு கூறினார் என்க. 1533. இதனிடைச் சில சொற்றவறியிருத்தல் வேண்டும். 1534. தெரிந்த மொழியான் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். 1535. பாடி எனினும் சேரி எனினுமொக்கும். மாற்றம் - மொழி. 1536. விளக்கத்தார் என்பவர் கூத்தநூலாசிரியரு ளொருவர் போலும். இவர் பெயர் யாப்பருங்கல விருத்தியுள்ளும் வருகின்றது. 1537. குறளடி முதலா வைந்தடி என்பதற்குத் தொல்காப்பியர் எழுத்தெண்ணி வகுத்த அடிகளையே கொள்வர் இளம்பூரணர். அது பொருத்தமாதல் காண்க. 1538. அவிநயம் - பாவகம்; கூத்து.