தொல்காப்பிய உரைத்தொகை - 16 பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் -3 முன்னைந்தியல் சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் – 1948 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 16 பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம் - 3 முன்னைந்தியல் முதற்பதிப்பு - 1948 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+408 = 432 விலை : 675/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 432  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசார. ஆசாரக் கோவை ஆய்ச்சி. ஆய்ச்சியர் குரவை ஊர்சூழ். ஊர்சூழ்வரி எச்ச. எச்சவியல் எழு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது கானல். கானல்வரி குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப் படலம் சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் திருச்சிற். திருச்சிற்றம்பலக் கோவையார் துறவு. துறவுச் சுருக்கம் துன்ப. துன்ப மாலை தொல். தொல்காப்பியம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் நான்மணி. நாண்மணிக்கடிகை நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப் பாலை பதிற். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப்படை வேட்டு. வேட்டுவரி உள்ளடக்கம் கற்பியல் ....... 3 பொருளியல் ....... 188 பின்னிணைப்புகள் ....... 285 1. சிறுபொழுதாராய்ச்சி ....... 287 2. சிறுபொழுது ....... 321 3. இயற்கைநவிற்சியும் செயற்கைப்புனைவும் ....... 333 உதாரணச் செய்யுட் குறிப்புரை ....... 340 - நூற்பா நிரல் ....... 383 - அரும்பத (அருஞ்சொல்) விளக்கம் முதலியன ....... 387 பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்-3 முன்னைந்தியல் சி. கணேசையர் - 1948 முதற் பதிப்பு 1948இல் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. கற்பியல் கற்பினது இலக்கணம் உணர்த்தினமையால் இது கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. அன்புரிமை பூண்ட தலைமகன் தன்பால் அன்புடைய தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்துரைக்கப் பெறுவதாகும். முன் களவியலிற் கூறியவாறு ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடியொழுகின ராயினும் தலைமகனுடைய பெற்றோர் உடன்பாடின்றி அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ளுதல் இயலாது. ஆகவே ஒருவரையொருவர் பிரியாது வாழ்தற்குரிய உள்ளத் துறுதியை உலகத்தாரறிய வெளிப்படுத்தும் நியதியாகியவதுவைச் சடங்குடன் தலைவன் தலைமகளை மணந்துகொள்ளுதல் மனைவாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சி யாயிற்று. உள்ளப் புணர்ச்சியளவில் உரிமை பூண்டொழுகிய தலைவனும் தலைவியும் உலகத்தாரறிய மனையறம் நிகழ்த்துதற்கு உரிமை செய்தளிக்குஞ் செயல் முறையே பண்டைத் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்காகும். இதனைக் கரணம் என்ற சொல்லால் வழங்குவர் தொல்காப்பியனார். கணவனிற் சிறந்த தெய்வம் இல்லையெனவும் அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும் தலைமகளுக்குப் பெற்றோர் கற்பித்தலானும், அந்தணர் சான்றோர் அருந்தவத் தோர் விருந்தினர் முதலியோர்பால் இன்னவாறு நடந்து கொள்ளுதல் வேண்டுமெனத் தலைமகன் தலைமகளுக்குக் கற்பித்தலானும், நின் மனைவியை இவ்வாறு பாதுகாப்பாயாக எனத் தலைவனுக்கும் நின் கணவனுக்கு இவ்வாறு பணி செய்தொழுகுவாயாக எனத் தலைவிக்கும் சான்றோர் கற்பித்தலானும் இவ்வதுவைச் சடங்காகிய கரணமும் கற்பெனப்படுவதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். தலைவன் தலைவி யிருவரும் ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் மணந்து வாழுங்கால் தலை மகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலைமையாகிய திண்மையே கற்பெனப்படும். கற்பென்னுந்திண்மை என்றார் திருவள்ளுவர். இத்தகைய மனவுறுதியை உலகத்தாரறியப் புலப்படுத்துவது திருமணச் சடங்காகிய கரணமேயாகும். காதலர் இருவரும் பிரிவின்றி யியைந்த நட்புடையார் என்பதனை வலியுறுத்துவது வதுவைச் சடங்காகிய இக்கரணமே யாதலின் இந்நியதி பிழைபடுமேல் அவ்விருவரது வாழ்க்கையில் சாதலையொத்த பெருந் துன்பம் நேருமென்பது திண்ணம். கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும் என நம் நாட்டில் வழங்கும் பழமொழி இதனை வலியுறுத்தல் காணலாம். தலைவன், தலைமகளைப் பெற்றோரறியாது உடன் போக்கில் அழைத்துச் சென்றவழி, அவளுடைய பெற்றோரது உடன்பாடின்றியும் கரணம் நிகழ்தலுண்டென்பர் ஆசிரியர். எனவே மகட்கொடைக்குரிய பெற்றோரது இசைவில்லாது போயினும் காதலரிருவரது உள்ளத்துறுதியைப் புலப்படுத்து வதாகிய திருமணச் சடங்கு உலகத்தாரறிய நிகழ்தல் இன்றியமையாததென்பது நன்கு புலனாம். இத்திருமணச் சடங்கு மிகப்பழைய காலத்தில் நாட்டில் எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டிலது. படைப்புக் காலந்தொட்டு நிலைபெற்று வரும் மூவேந்தர் குடும்பத்திற்கே முதன் முதல் வகுக்கப்பட்டிருந்தது. அரசியலாட்சியில் பட்டத்தரசி முதன்மை பெறுதல் காரண மாகவே இவ்வரையறை விதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். வண்புகழ் மூவராகிய மேலோர் மூவர்க்கும் வகுத்த கரணம் அவர்கீழ் வாழும் குடிமக்களுக்கும் உரியதாயிற்று. இச்செய்தி, மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம், கீழோர்க்காகிய காலமும் உண்டே எனவரும் இவ்வியற் சூத்திரத்தால் நன்கு விளங்கும். ஒருவன், ஒருத்தியை அன்பினாற் கூடியொழுகிப் பின்னர் அவளை யறியேன் எனப் பொய் கூறுதலும், நின்னைப் பிரியேன் எனத் தெய்வத்தின் முன்னிலையில் உறுதிகூறிப் பின் அதனை வழுவிக் கடைப்பிடியின்றி யொழுகுதலுமாகிய தீய வழக்கங்கள் இந்நாட்டில் தோன்றிய பின்னரே சான்றோராகிய குடும்பத் தலைவர்கள், கணவனும் மனைவியும் பிரிவின்றி வாழ்தற்குரிய மணச் சடங்காகிய கரணத்தை வகுத்தமைத்தார்கள். இச் செய்தி, பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது விளங்கும். பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல், கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று என்பர் இளம்பூரணர். ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித்தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை ஆர்ய என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். என்னைமுன் னில்லன்மின் தெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர் (திருக்குறள்-771) எனவும், என்னைபுற்கை யுண்டும் பெருந்தோளன்னே (புறம்-84) எனவும் வரும் தொடர்களின் என்-ஐ என்பது என் தலைவன் என்ற பொருளில் வழங்கக் காண்கின்றோம். ஐ என்பதன் அடியாகப் பிறந்தததே ஐயர் என்னுந் தமிழ்ச் சொல்லாகும். ஐ வியப்பாகும் (உரி-88) என்பது தொல்காப்பியம். தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறி வுடைமையாற் பலரும் வியந்து பாராட்டத் தக்க தலைமைச் சிறப்புடையாரை ஐயர் என வழங்கும் மரபுண்மை இதனாற் புலனாகும். புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் (கற்-5) என்புழித்தலைவன், புதல்வனைப் பயந்து வாலாமை நீங்கிய தலைவியைக் கருதி, அறனாற்றி மூத்த அறிவுடையோர்களாகிய தன் குல முதல்வரைத் துணையாகக் கொண்டும் அமரகத்தஞ்சா மறவர்களாய்த் துறக்கம் புக்க வீரர்களை எண்ணியுஞ் சிறப்புச் செய்தலுண்டென்பதனை ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆசறு காட்சியையர் (குறிஞ்சிப்-17) எனக் கபிலரும், விண்செலன் மரபின் ஐயர் (திருமுரு-107) என நக்கீரரும் முற்றத்துறந்த தவச்செல்வர்களை ஐயர் என வழங்கியுள்ளார்கள். சமணரில் இல்லறத்தாராகிய உலக நோன்பிகளைப் பெரும் பெயர் ஐயர் என்பர் இளங்கோவடிகள். தமையன்மார்களை ஐயர் என வழங்குதலும் உண்டு. அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட, என் ஐயர்க்குய்த்துரைத்தாள் யாய் என்பது குறிஞ்சிக்கலி. இளமா வெயிற்றி இவைகாண் நின்ஐயர், தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆனிரைகள் என்பது சிலப்பதிகாரம். திருநாளைப்போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய தலைமைப் பண்புடைய பெரியோர்களை ஐயர் என்ற சொல்லாற் சிறப்பு முறையிற் சேக்கிழாரடிகள் வழங்குதலால் இச்சொல் இக்காலத்திற்போல முற்காலத்திற் சாதிப்பெயராக வழங்கிய தில்லையென்பது நன்கு துணியப்படும். பலநூறாண்டு கட்கு முற்பட்ட தமிழ் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் ஐயரென்னும் இச்சொல் சாதிப்பெயராக வழங்கப்பெற்றிலது. அங்ஙனமாகவும் மிகப் பழைய தமிழ் நூலாசிய தொல்காப்பியத்தில் வழங்கிய ஐயரென்னுஞ் சொல்லுக்கு இக் காலச் சாதிப்பெயர் வழக்கத்தை யுளத்துட் கொண்டு ஆரியமேலோர் எனப் பொருள் கூறுதல் வரலாற்று முறைக்கு ஒவ்வாத பிழையுரையாதல் திண்ணம். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தன ரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்திய தென்பதும் அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ஐயர் யாத்தனர் கரணம் என்ப எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் விதிக்கப்பட்ட தென்பதும் நன்கு துணியப்படும். முன் பொய்யும் வழுவுந் தோன்றாத களவு மணத்தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன், ஒருவரும் அறியாத படி தலைமகளை உடன்போக்கில் அழைத்துச் செல்லுங்கால், அவளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திடை யெய்தி அவ்விருவரையுந் தடுத்து நிறுத்த முயலுவர். அவரது வருகையைக் கண்டு அஞ்சிய தலைமகள், தன்னுயிரினுஞ் சிறந்த தலைவனைப் பிரிதற்கு மனமின்றி நிற்பள். இந்நிலையினை இடைச்சுர மருங்கின் அவள் தமரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை என்பர் ஆசிரியர். தலைவியின் கற்பு நிலையைக் கண்ட சுற்றத்தார் அவ்விருவரும் மணந்து வாழும் நெறிமுறையினை வகுத்தமைப்பர். மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு பலரறிய வெளிப் படுதலும் பின்னர் தலைவியின்சுற்றத்தார் கொடுப்பத் தலை மகளைத் தலைவன் மணந்து கொள்ளுதலுமாகிய இவை முதலாகிய வழக்கு நெறியில் மாறுபடாது, மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவ்வைந் தியல்களோடுங்கூடி நிகழ்வது கற்பென்னும் ஒழுகலாறாகும் என்பர் ஆசிரியர். இல்வாழ்க்கையும் புணர்ச்சியும் முதலியவற்றால் தலைவன் தலைவி யென்னும் இருவருள்ளத்துந் தோன்றும் மகிழ்ச்சியே மலிவெனப்படும். புணர்ச்சியாலுண்டாகிய மகிழ்ச்சி குறைபடாமல் காலங் கருதியிருக்கும் உள்ள நிகழச்சியே புலவியாகும். அங்ஙனம் உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பினாலன்றிச் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை ஊடல் எனப்படும். அவ்வாறு தலைவிக்கு ஊடல் நிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய செயல் என்பால் நிகழவில்லையேயெனத் தலைவனும் அவன்சார்பாக வாயில்களும் தலைமகளுக்கு உணர்த்துதலே உணர்வெனப்படும். பொருளீட்டுதலும் போர்மேற் சேறலும் கலை பயிலுதலும் முதலிய இன்றியமையாத உலகியற் கடமை கருதித் தலைவன் தன் மனையாளைப் பிரிந்துசேறல் பற்றிய நிகழ்ச்சி பிரிவெனப்படும். தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணங்கள் இவை யென்பது தம் காலத்தில் வாழ்ந்த எல்லோர்க்கும் நன்கு தெரியுமாதலால் அவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலில் வரித்துக் கூறவில்லை. தொன்று தொட்டுத் தமிழ்மக்கள் கொண்டொழுகிய திருமணச் சடங்குகள் சிலவற்றை அகநானூற்றில் -66, 86-ஆம் பாடல்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். வேள்வியாசான் காட்டியமுறையே அங்கி சான்றாக நிகழும் சடங்குமுறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் கூறப்படாமையால் ஆரியர் மேற்கொண்ட அவ்விவாக முறைக்கும் தமிழர் கொண் டொழுகிய திருமணச் சடங்குமுறைக்கும் பெரிதும் வேறுபாடுண்டெனத் தெளியலாம். கலித்தொகையில் ஓத்துடையந்தணன் எரிவலங் கொள்வான்போல் எனவரும் தொடரில் புரிநூலந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப்படு கின்றது. இத்தொடர்ப் பொருளை ஊன்றிநோக்குங்கால் இங்ஙனம் எரிவலம் வருதல் ஓத்துடையந்தணராலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற் கொள்ளப்படாத சடங்கென்பது நன்கு புலனாம். இனி, இக்கற்பியலிற் கூறப்படும் ஏனைய பொருள்களை நோக்குவோம். தலைவன் தலைவி ஆகிய இருவரும் உலகத் தாரறிய மணம் புரிந்து வாழும் கற்பியல் வாழ்விலே தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தியர், அகம்புகல் மரபின் வாயில்கள், செவிலி, அறிவர், பாணர், கூத்தர், இளையோர், பார்ப்பார் என்போர் உரையாடுதற்குரிய இடங்களையும் பொருள்வகை யினையும் அவர்தம் செயல் முறைகளையும் இவ்வியல் 5-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களாலும், 24-முதல் 30-வரையுள்ள சூத்திரங்களாலும், 36-ம் சூத்திரத்தாலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். தலைவன் தேற்றத் தெளியும் எல்லையினைத் தலைவி கடந் தனளாயினும் களவின்கண் தலைவி செய்த குறியைத் தப்பினாலும் தலைவன், மனம் சிறிது வேறுபட்டுப் புலத்தலும் அவ்வேறுபாடு நிலைத்து நிற்ப ஊடுதலும் உண்டு. அங்ஙனம் தலைவன் புலந்து ஊடிய நிலையில் அவனுள்ளம் அமைதி யடைதற்குரிய பணிந்த மொழிகளைத் தோழி கூறுவாள். பரத்தையரை விரும்பியொழுகும் தலைவனது புறத் தொழுக்கத்தை நீக்குதல் கருதியும் தலைவி மடனென்னுங் குணத்தால் அடங்கியொழுகும் எளிமையுடை யளாதல் கருதியும் தலைவனை நோக்கி அன்பிலை கொடியை யெனத் தோழி இடித்துரைத்தற்கும் உரியள். தலைவனது உள்ளக் குறிப்பை யறிதல் வேண்டியும் தன்மனத்து ஊடல் நீங்குமிடத்தும் தலைவனொடு உறவல்லாதாள்போன்று தலைவி வேறுபடப் பேசுதற்கு உரியள். கணவனை எஞ்ஞான்றும் வழிபட்டொழுகுதல் மனைவிக்கு இயல்பாகலால். காமவுணர்வு மிக்குத் தோன்றிய நிலையில் தலைவியைத் தலைவன் பணிந்து கூறுதல் தவறாகாது. பிறர் துன்பங்கண்டு உளமிரங்கும் அருளுணர்வைத் தோற்றுவித்த அன்பு பொதிந்த சொற்களை மெய்யே கூறுதல் தலைவிக்குரிய இயல்பாகும். முற்கூறிய களவொழுக்கத்தினும் அது வெளிப்பட்ட கற்பியல் வாழ்வினும் அலர் தோன்றும். அவ்வலர் மொழியால் தலைவன் தலைவி யிருவருள்ளத்துங் காமவுணர்வு மிக்குத் தோன்றும். இவ்வாறே தலைவனது விளையாட்டும் காமவுணர்வை மிகுதிப்படுத்தும். கணவனும் மனைவியும் சிறிது மனம் வேறுபட்டு ஊடிய காலத்து அவர்தம் பிணக்கத்தைத் தீர்த்து வைத்தற்குரியவர்கள் வாயில்கள் எனப்படுவர். பாணர், கூத்தர் முதலியோர் தலை மகனை எக்காலும் அகலாது நின்று தலைவியினது பிணக்கத்தைத் தீர்க்கும் வாயில்களாக மனைக்கண் பலகாலும் வந்து பழகும் இயல்பினராகலின், இவர்களை அகம்புகல் மரபின் வாயில்கள் என்பர் ஆசிரியர். இவ்வாயில்கள் முன்னிலைப் புறமொழியாகப் பேசுதலும் உண்டு. பின்முறை வதுவையாக மற்றொருத்தியை மணந்த காலத்தும் தன் புதல்வனை வாயிலாகக் கொண்டு செல்லினும் தான் பரத்தமை செய்து ஒழுகியதை நினைந்து தலைவன் நிலைகுலைந்து கலங்குதலும் உரியன். தலைவனைக் கூடிமகிழுங் காலத்தில் தாயைப்போன்று அவனை இடித்துரைத்துத் திருத்தி அவனது மனக் கவலையை மாற்றுதலும் மனைவிக்குரிய கடமையாகும். தலைவனது ஒழுக்கத்திற் சோர்வு பிறவாமற் காத்தல் தலைவியின் கடமையாக நூல்களிற் சொல்லப்படுதலால், மகனைப் பெற்ற தாயாகிய தலைவி இங்ஙனம் இடித்துரைக்கும் உயர்வுடை யளாதலும் தலைவனது உயர்வாகவே கருதப்படும். எல்லாச் செல்வங்களுக்கும் உரிய தலைவன் இவ்வாறு அன்புடையார் கண் பணிந்தொழுகுதல் இயல்பேயாகும். போர் செய்து பகைவரை வெல்லுதற்குரிய வழி துறைகளை ஆராய்தற்கு இடமாகிய பாசறையின்கண் மகளிரொடு உடனுறைதல் கூடாது. போர்த்தொழிலுதவியிற் பழகிப் புண்பட்ட வீரரை யுபசரித்தலும், இசைபாடி மகிழ்வித்தலும் முதலிய புறத்தொழில் புரியும் புறப்பெண்டி ராயின் பாசறையில் இருத்தல் பொருந்துவதாகும். மனைவாழ்க்கைக்கண் கணவன் மனைவி ஆகிய இருவர்க்கு மிடையே பழகும் எல்லா வாயில்களும் அவ்விருவர் பாலும் அமைதற்குரிய மகிழ்ச்சி நிலையைப் பொருளாகக் கொண்டே உரையாடுதற்குரியர், அவ்விருவரிடத்தும் அன்பு நீங்கிய கடுஞ் சொற்களைக் கூறவேண்டிய செவ்வி நேர்ந்தால் நேர் நின்று கூறாது சிறைப்புறமாக ஒதுங்கி நின்று கூறுதல் வேண்டும். தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலும் தெளித்தலும் என்னும் இரண்டிடமுமல்லாத ஏனையிடங்களில் தலைவன் முன்னர்த் தலைவி தன்னைப் புகழ்தல் கூடாது. தலைவன் வினைவயிற் பிரியுங்கால் தலைவி முன்னர்த் தன்னைப் புகழ்ந்துரைத்தல் பொருந்தும். தலைவன் கூற்றினை எதிர்த்துக் கூறும் உரிமை பாங்கனுக்கு உண்டு. இங்ஙனம் எதிர்த்துக்கூறும் சொல் எல்லாக் காலத்திலும் நிகழ்வதில்லை; அருகியே நிகழும். துன்பக்காலத்தும் தலைவியை வற்புறுத்தியல்லது தலைவன் பிரிந்து செல்லுதல் இல்லை. வினைமேற்செல்லுங் காலத்துத் தலைவி தன் பிரிவினைப் பொறுத்திருக்கமாட்டாள் என்ற நிலையில் தனது பயணத்தை நீங்குதல் இல்லை; அவளை வற்புறுத்தல் கருதிச் சிறிதுபொழுது தாமதித்துச் செல்வன். தலைவன் வினை மேற்கொண்டு சென்ற இடத்தில் அவன்பாற் சென்று தலைவியின் ஆற்றாத்தன்மையை யாவரும் சொல்வதில்லை. தலைவன் தான் மேற்கொண்ட வினையில் வெற்றிபெற்ற நிலையிலேதான் தலைவியைப்பற்றிய நினைவு அவனுள்ளத்தே விளங்கித் தோன்றும். தலைவிக்குப் பூப்புத்தோன்றி மூன்றுநாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் கருத்தோன்றுங் காலமாதலின், தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்துப் பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் தலைவினைப் பிரிந்துறைதல் கூடாதென்பர் ஆசிரியர். யாவராலும் விரும்பத்தக்க கல்வி கருதிப் பிரியுங்காலம் மூன்றண்டுகளுக்கு மேற்படாது. பகை தணிவினையாகிய வேந்தற்குற்றுழிப் பிரியும் பிரிவும், அதனைச்சார்ந்த தூது, காவல் என்பனவும், ஒழிந்த பொருள்வயிற் பிரிவும் ஓராண்டிற் குட்பட்ட காலவெல்லையினையுடையன. யாறு குளங்களிலும் சோலைகளிலும் விளையாடி உறைபதியைக் கடந்துபோய் நுகர்ச்சி யெய்துதல் தலைவன் தலைவி யிருவர்க்கும் உரியதாகும். இங்ஙனம் காமநுகர்ச்சி யெல்லாம் நுகர்ந்தமைந்த பிற்காலத்தே, பாதுகாவலமைந்த பிள்ளைகளுடனே நெருங்கி, அறத்தினை விரும்பும் சுற்றத் தாருடனே தலைவனும் தலைவியும், வீடுபேறாகிய சிறப்பினை யருளும் முழுமுதற்பொருளை இடைவிடாது எண்ணிப் போற்றும் நன்னெறியிற் பழகுதல், மேற்கூறிய மனை வாழ்க்கையின் முடிந்த பயனாகும். தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய இப் பன்னிருவரும் மனைவாழ்க்கையின்கண்ணே கணவன் மனைவி யென்போரிடையேயுளதாம் பிணக்கத் தினைத் தீர்த்து வைக்கும் நிறைந்த சிறப்பினையுடைய வாயில்களாவர். வினைகருதிப் பிரிந்த தலைமகன், தன் உள்ளம்போன்று உற்றுழியுதவும் பறவையின் வேகத்தையுடைய குதிரையை யுடையனாதலின், தான் வினைமுற்றி மீளுங் காலத்து இடைவழியிற் றங்காது விரைந்து வருதலையுடையனாவன் என அவன் தலைவியின்பால் வைத்த பெருவிருப்பினைப் புலப்படுத்துவர் ஆசிரியர். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 273-281 நான்காவது கற்பியல் (கற்பாவது இதுவெனல்) 142. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. என்பது சூத்திரம். இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோளி ரண்டனுட் கற்புணர்த்தினமையிற் கற்பியலென்னும் பெயர்த்தா யிற்று. கற்பியல் கற்பினது இயலென விரிக்க. இயல், இலக்கணம். 1அஃது ஆகுபெயரான் ஓத்திற்குப் பெயராயிற்று. அது 2கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெ னவும், அவனை இன்ன வாறே வழிபடுகவெனவும் 3இருமுதுகுரவர் கற்பித்த லானும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்த லானுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின் கண் 4ஓரையும் நாளுந் 5தீதென்று அதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது 6ஓத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று. களவு வெளிப்பட்ட பின்னராயினும் அது வெளிப்படா மையாயினும் உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்த வழியாயினும் வரைதல் அக் களவின் வழியாதலின் மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் கற்பிற்கெல்லாம் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) கற்பு எனப்படுவது - கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது; கரணமொடு புணர - வேள்விச் சடங்கோடே கூட; கொளற்கு உரி மரபிற் கிழவன் - ஒத்த குலத்தோனும் மிக்க குலத்தோனுமாகிக் கொள்ளுதற்குரிய முறைமையினையுடைய தலைவன்; கிழத்தியை - ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளு மாகிய தலைவியை; கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப - கொடுத்தற்குரிய முறைமையினையுடைய இருமுது குரவர் முதலாயினார் கொடுப்ப; கொள்வது - கோடற்றொழில் என்றவாறு. எனப்படுவது என்னும் பெயர் 7கொள்வது என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது; 8இது சிறப்புணர்த்துதல் அவ்வச் சொல்லிற்கு (தொல். சொல். இடை. 47) என்னுஞ் சூத்திரத்துட் கூறினாம். 9கொடுப்போரின்றியும் (தொல். பொ. 143) என மேல் வருகின்றதாகலின் இக் கற்புச் சிறத்தலிற் சிறந்ததென்றார். 10இஃது என என்கின்ற எச்சமாதலிற் சொல்லளவே எஞ்சிநின்றது. 11இதனாற் கரணம் பிழைக்கில் மரணம் பயக்குமென்றார். 12அத் தொழிலின் நிகழுங்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பா யெனவும், இவற்கு இன்ன வாறே நீ குற்றேவல் செய்தொழு கெனவும் அங்கியங்கடவுள் 13அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத் தொழிலைக் கற்பென்றார். தலைவன் பாதுகாவாது பரத்தைமை செய்து ஒழுகினும் பின்னர் அது கைவிட்டு இல்லறமே நிகழ்த்தித் துறவறத்தே செல்வனென் றுணர்க. இக் கற்புக் காரணமாகவே 14பின்னர் நிகழ்ந்த ஒழுகலா றெல்லாம் நிகழ வேண்டுதலின் அவற்றையுங் கற்பென்று அடக்கினார். இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவலன்பால் உரிமை செய்து ஒழுகலிற் 15கிழவனுங் கிழத்தியும் என்றார். 16தாயொடு பிறந்தாருந் தன்னையருந் தாயத்தாரும் ஆசானும் முதலியோர் கொடைக்குரியர் என்றற்கு மரபினோர் என்றார். உதாரணம்: 17உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப் பெருஞ்சோற் றமலை நிற்ப நிலைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக் கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென வுச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவு முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலை யவ்வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த வீரித ழலரி பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர வோரிற் கூடிய வுடன்புணர் கங்குற் கொடும்புறம் வலைஇக் கோடிக் கலிங்கத் தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப வஞ்சின ளுயிர்த்த காலை யாழநின் னெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற் செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர வகமலி யுவகைய ளாகி முகனிகுத் தொய்யென விளைஞ்சி யோளே மாவின் மடங்கொண் மதைஇய நோக்கி னொடுங்கீ ரோதி மாஅ யோளே. (அகம். 86) இதனுள், வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானுந் தமர் அறிய மணவறைச் சேறலானுங் களவாற் சுருங்கிநின்ற 18நாண் சிறந்தமையான் பின்னர்த் தலைவன் வினாவ அவள் மறுமொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறு காண்க. இதனானே 19இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று. (1) (உடன் போகிய காலத்துக் கொடுப்போ ரின்றியுங் கரண நிகழுமெனல்) 143. கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ - ள்.) கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே - முற்கூறிய கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கோடலின்றி யுங் கரணம் உண்டாகும்; புணர்ந்து உடன் போகிய காலையான - புணர்ந்து உடன் போகிய காலத்திடத்து என்றவாறு. இது, புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக் கொடுப்போ ரின்றியும் வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப் பூண்டு வருவதும் ஆமென்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உளதேல் அது மேற்கூறிய தன்கண் அடங்கும். இனிப் போய வழிக் கற்புப் பூண்டலே கரணம் என்பாருமுளர். 20எனவே கற்பிற்குக் கரணம் ஒருதலையாயிற்று. 21பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கேசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் செயலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந். 15) இதனுள் வாயாகின்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறின மையானும் விடலைனெப் பாலை நிலத்துத் தலைவன் பெயர் கூறினமையானும் இது கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது. அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோள் குறுமகள் (அகம். 195) என்பதும் அது. (2) (அந்தணர் முதலிய மூவர்க்கும் புணர்த்த கரணம் வேளாளர்க்குரியவான காலமுமுண்டெனல்) 144. 22மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க் காகிய காலமு முண்டே. இது, முதலூழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - வேதநூல் தான் அந்தணர் அரசர் வணிகரென்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம்; கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு - அந்தணர் முதலியோர்க்கும் மகட் கொடைக்குரிய வேளாண் மாந்தர்க்குந் தந்திர மந்திர வகையான் உரித்ததாகிய காலமும் உண்டு என்றவாறு. எனவே, முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்பதூஉந் தலைச்சங்கத் தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉங் கூறியவாறாயிற்று. உதாரணம் இக் காலத்து இன்று. (3) (பொய்யும் வழுவுந் தோன்றியபின் கரணங் கட்டப்பட்டதெனல்) 145. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன ரையர் யாத்தனர் கரண மென்ப. இது, வேதத்திற் கரணம் ஓழிய ஆரிடமாகிய கரணம் பிறந்தவாறும் அதற்குக் காரணமுங் கூறுகின்றது. (இ - ள்.) பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் - ஆதி ஊழி கழிந்த முறையே அக்காலத்தந்தந் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற்காலத்தே; ஐயர் யாத்தனர் கரணம் என்ப - இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் காட்டினாரென்று கூறுவர் என்றவாறு. ஈண்டு என்ப (249) என்றது முதனூலாசிரியரையன்று, வட நூலோரைக் கருதியது. பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலே னென்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகருந் தத்தம் வகையாற் செய்யத்தகுவன செய்யாது சடங்கொப்புமை கருதித் தாமும் அந்தணரொடு தலைமை செய்தொழுகுதலுங் கள வொழுக்கத்தின் இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ப் பொய்யும் வழுவுந் தோன்றி வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு இருடிகள் மேலோர் மூவர்க்கும் வேறு வேறு சடங்கினைக் கட்டிக் கீழோர்க்குங் களவின்றியும் கற்பு நிகழுமெனவுஞ் சடங்கு வேறு வேறு கட்டினார். எனவே, ஒருவர் கட்டாமல் தாமே தோன்றிய கரணம் வேதநூற்கே உளதென்பது பெற்றாம். 23ஆயின் கந்தருவ வழக்கத்திற்குச் சிறந்த களவு விலக்குண்டதன்றோ எனின், ஒருவனையும் ஒருத்தியையும் எதிர்நிறீஇ இவளைக் கொள்ள இயைதியோ நீ எனவும், இவற்குக் கொடுப்ப இயைதியோ நீ எனவும் இருமுதுகுரவர் கேட்டவழி அவர் கரந்த உள்ளத்தான் இயைந்தவழிக் கொடுப்ப வாகலின் அது தானே ஒருவகையாற் கந்தருவ வழக்கமாம். களவொழுக்கம் நிகழா தாயினும் என்பது, கரணம் யாத்தோர் கருத்தென்பது பெற்றாம். இதனானே இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறு புணர்ச்சியையும் உள்ளப் புணர்ச்சியென்று கூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்ததென்றுங் கூறவும்படும். இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்தபின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித்தாம் நூல்செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும்பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார், அக் களவின்வழி நிகழ்ந்த கற்புங் கோடற்கென்று உணர்க. உதாரணம்: 24மைப்பறம் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி யங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் வேண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையோர் நோக்குபு மறைய மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகைத் தழங்குரல் வானந் தலைப்பெயற் கீன்ற மண்ணு மணியன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித் தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழைபட் டன்ன மணன்மலி பந்த ரிழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித் தமர்நமக் கீந்த தலைநா ளிரவி னுவர்நீங்கு கற்பினெ முயிருடம் படுவி முருங்காக் கலிங்க முழுவதும் வளைஇப் பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவிய ருறுவளி யாற்றச் சிறுவரை திறவென வார்வ நெஞ்சமொடு போர்வை வௌவலி னுறைகழி வாளி னுருவுபெயர்ந் திமைப்ப மறைதிற னறியா ளாகி யொய்யென நாணின ளிறைஞ்சி யோளே பேணிப் பரூஉப்பகை யாம்பற் குரூஉத்தொடை நீவிச் சுரும்பிமி ராய்மலர் வேய்ந்த விரும்பல் கூந்த லிருண்மறை யொளித்தே (அகம். 136) என வரும். (4) (கற்பின்கண் தலைவன் கூற்றுகள் நிகழுமிட மிவையெனல்) 146. கரணத்தி னமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணு மெஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்து மஞ்ச வந்த வுரிமைக் கண்ணு நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினு நாமக் காலத் துண்டெனத் தோழி யேமுறு கடவு ளேத்திய மருங்கினு 10 மல்ல றீர வார்வமொ டளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென வேனது சுவைப்பினு நீகை தொட்டது வானோ ரமிழ்தம் புரையுமா லெமக்கென வடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணு மந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்து மந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினு மொழுக்கங் காட்டிய குறிப்பினு மொழுக்கத்துக் களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி யலமர லுள்ளமொ டளவிய விடத்து 20 மந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலு மழிய லஞ்சலென் றாயிரு பொருளினுந் தானலட் பிழைத்த பருவத் தானு நோன்மையும் பெருமையு மெய்கொள வருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னி னாகிய தகுதிக் கண்ணும் புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதி னெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி யையர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் 30 செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணை புல்லிய புல்லா துயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினு முறலருங் குண்மையி னூடன்மிகுத் தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் பிரிவி னெச்சத்துப் புலம்பிய விருவரைப் பிரிவி னீக்கிய பகுதிக் கண்ணு நின்றுநனி பிரிவி னஞ்சிய பையுளுஞ் 40 சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடி னச்சமுந் தானவட் பிழைத்த நிலையின் கண்ணு முடன்சேறல் செய்கையொ டன்னவை பிறவு மடம்பட வந்த தோழிக் கண்ணும் வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானு மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணு மவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங் காமக் கிழத்தி மனையோ ளென்றிவ 50 ரேமுறு கிளவி சொல்லிய வெதிருஞ் சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி யின்றிச் சென்ற தந்நிலை கிளப்பினு மருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணு மாலை யேந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணு மேனை வாயி லெதிரொடு தொகைஇப் பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்று 59 மெண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன. இது, பார்ப்பார் முதலிய பன்னிருவருங் (501 -2) கற்பிடத்துக் கூற்றிற்கு உரியராயினும் அவருள் தலைவன் சிறந்தமையின் அவன் கூற்றெல்லாந் தொகுத்துக் களவிற் கூறியாங்கு முற் கூறுகின்றது. (இ - ள்.) கரணத்தின் அமைந்து முடிந்த காலை - ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமுமென்னும் இருவகைச் சடங் கானும் ஒரு குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் 25இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளிசெய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்தகாலத்து: ஆன்றோராவார், மதியுங் கந்தருவரும் அங்கியும். (பக். 576) நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் - 26களவிற் புணர்ச்சி போலக் கற்பினும் மூன்று நாளுங் கூட்டமின்மை யானும் நிகழ்ந்த மனக்குறை தீரக்கூடிய கூட்டத்தின் கண்ணும். அது, நாலாம் நாளை யிரவின்கண்ணதாம். உதாரணம்: 27விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமு மரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடு மிரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கட் பொன்போன் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் டோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. (குறுந். 101) இது, நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி. முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே. (அகம். 86) என முற்காட்டியது கரணத்தின் அமைந்து முடிந்தது. எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் - அதன் பின்னர் ஒழியாத மகிழ்ச்சி பலவேறு வகையவாகிய 28நுகர்ச்சிக்கட் புதிதாக வந்த காலத்தினிடத்தும்: உதாரணம்: அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (குறள். 1110) என்றது பொருள்களை உண்மையாக உணர்ந்த இன்பத்தை அறியுந் தோறும் அவற்றை முன்னர் இவ்வாறு விளங்க உணராத அறிவின்மையை வேறுபடுத்துக் கண்டாற் போலுஞ் சேயிழை மாட்டுச் செறியுந்தொறுந் தலைத்தலை சிறப்பப்பெறுகின்ற காமத்தை முன்னர் அறியப்பெற்றிலே மென்று வேறுபடுத்த லென்றவாறு. அஞ்சவந்த உரிமைக்கண்ணும் - தலைவனும் பிறரும் அஞ்சும்படி தலைவிக்கட் டோன்றிய உரிமைகளிடத்தும்: அவை இல்லறம் நிகழ்த்துமாறு தன் மனத்தாற் பலவகை யாகக் காணலும் பிறர்க்குத் தான் கொடுத்தலுங் கற்புச் சிறத்தலு மாம். உதாரணம்: 29உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்க ணொண்பொரு - டெள்ளிய வாண்மகன் கையி லயில்வா ளனைத்தரோ நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி. 386) இதனுள் நலமென்றது 30இம்மூன்றினையும். தலைவி இல்லறப் பகுதியை நிகழ்த்துமாறு பலவகையாகக் காணும் தன்மை உணர்வுடையோன் ஓதிய நூல் விரியுமாறுபோல விரியாநின்ற தெனவும், இவள் கொடைநலம் வள்ளன்மை பூண்டான் பொருளனைத்தெனவும், இவளது கற்புச் சிறப்புப் பிறர்க்கு அச்சஞ்செய்தலின் வாளனைத்தெனவுந், தலைவன் அவளுரிமைகளை வியந்து கூறியவாறு காண்க. நன்னெறிப் படரும் தொல் நலப் பொருளினும் - இல்லத்திற்கு ஓதிய நெறியின்கண் தலைவி கல்லாமற் பாகம்பட ஒழுகுந் (பழ. 6: 4) தொன்னலஞ் சான்ற பொருளின் கண்ணும்: பொருள்வருவாய் இல்லாத காலமும் இல்லறம் நிகழ்த்துதல் இயல்பாயிருத்தற்குத் தொன்னலமென்றார். உதாரணம்: 31குடநீரட் டுண்ணு மிடுக்கட் பொழுதும் கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினுங் கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி மாதர் மனைமாட்சி யாள். (நாலடி. 382) இஃது, ஒரு குடம் நீராற் சோறமைத்து உண்ணுமாறு மிடிப்பட்ட காலத்தும் மனைக்கு மாட்சிமையுடையாள் கடல் நீரை வற்ற உண்ணுங் கேளிர் வரினும் இல்லற நிகழ்த்துதலைக் கைக்கு நெறியாகக் கொள்ளுமெனத் தலைவன் வியந்து கூறினான். பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ்சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் - தலைவி அங்ஙனம் உரிமை சான்ற இடத்து அவளைப் பெருமையின்கண்ணே நிறுத்திக் குற்றமமைந்த களவொழுக்கத்தை வழுவியமைந்த பொருளாகக் கேளிர்க்காயினும் பிறர்க்காயினும் உரைப்பினும்: அது களவொழுக்கத்தையுந் தீய ஓரையுள்ளுந் துறவாது ஒழுகிய குற்றத்தையும் உட்கொண்டும் அதனைத் 32தீதென்னா மற் கூறுதலாம். உதாரணம்: 33நாலாறு மாறாய் நனிசிறிதா யெப்புறனு மேலாறு மேலுறை சோரினு - மேலாய வல்லளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பி னில்லா ளமைந்ததே யில். (நாலடி. 383) இதனுள் மனைவி அமைந்துநின்ற இல்நிலையே இல்லற மாவதெனவே யாம் முன்னரொழுகிய ஒழுக்கமும் இத்துணை நன்மையாயிற்று என்றானாயிற்று. இது குறிப்பெச்சம். நாமக்காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் (தோழி 34நாமக்காலத்து ஏமுறு கடவுள் உண்டென ஏத்திய மருங்கினும்) - தோழி இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக்காலத்தே யாம் வருந்தாதிருத்தற்குக் காரணமாயதோர் கடவுள் உண்டு எனக்கூறி அதனைப் பெரிதும் ஏத்திய இடத்துத் தலைவன் வதுவைகாறும் ஏதமின்றாகக் காத்த தெய்வம் இன்னும்காக்குமென்று ஏத்துதலும்: அது, 35குனிகா யெருக்கின் குவிமுகிழ்............ தாமரை முகத்தியைத் தந்த பாலே. என்னும் 36குணநாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலாது, 37நேரிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வ முவப்ப வுவந்து குரவை தழீஇயா மாடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண். (கலி. 39) எனத் தான் பராய தெய்வத்தினைத் தோழி கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுத்தற்கு ஏத்தியவழித் தலைவனும் ஏத்துத லாம். உதாரணம்: 38அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த பஃறே னிறாஅ லல்குநர்க் குதவு நுந்தைநன் னாட்டு வெந்திறன் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் றோழி யென்வயி னோக்கலிற் போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் றிருந்திழைப் பணைத்தோள் புணரதுவந் ததுவே. தேன் இறாலை அல்குநர்க்கு உதவும் நாடாதலின் நின் நோய்க்கு இயற்றிய வெறி நுமர்க்குப் பயன்படாது எமக்குப் பயன்றருமென்றோன் என்வயின் நோக்கலின் என்றது, எனக்குப் பயன் கொடுக்க வேண்டுமென்று பராவுதலிற் றோளைப் புணர்ந்து உவந்தது என்றான். இது கற்புக்காலத்துப் பரவுக்கடன் கொடுக்கின்ற காலத்துத் தலைவன் கூறியது. அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் - வரைந்த காலத்து மூன்றுநாட் கூட்ட மின்மைக்குக் காரணமென்னென்று தலைவி மனத்து நிகழாநின்ற வருத்தந் தீரும்படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும்: தலைவன் விரித்து விளங்கக் கூறும்: அது முதனாள் 39தண்கதிர்க் செல்வதற்கும், இடைநாள் கந்தருவர்க்கும், பின்னாள் அடங்கியங் கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகர வேண்டிற்று, அங்ஙனம் வேதங் கூறுதலான் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று. 40சொல்லென ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும் - அமுதிற்கு மாறாகிய நஞ்சை நுகரினும் நீ கையான் தீண்டின பொருள் எமக்கு உறுதியைத்தருதலின் தேவர்களுடைய அமிர்தத்தை ஒக்கும் எமக்கெனப் புனைந் துரைத்து இதற்குக் காரணங் கூறென்று அடிசிலும் பூவுந் தலைவி தொடுதலிடத்தும்: கூற்று நிகழும். உவமை - இழிவு சிறப்பு. வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் 41கட்டி யென்றனிர் (குறுந். 196) எனத் தலைவன் கூற்றினைத் தோழிகொண்டு கூறியவாறு காண்க. அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங்காட்டிய குறிப்பினும் - வேட்பித்த ஆசிரியனுங் கற்பித்த ஆசிரியனுமாகிய பார்ப்பார் கண்ணும், முற்ற உணர்ந்து ஐம்பொறியையும் அடக்கியோர் கண்ணும், முடிவில்லாச் சிறப்பினையுடைய தேவர்கள் கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினைத் தான் தொழுதுகாட்டிய குறிப்பின் கண்ணும்: பிறர்பிறர் என்றார் தேவர் மூவரென்பதுபற்றி, தன்னை யன்றித் தெய்வந் தொழாநாளை இத் தன்மையோரைத் தொழல் வேண்டுமென்று தொழுது காட்டினான். 42குறிக்கொளுங் கூற் றால் உரைத்தலிற் குறிப்பினும் என்றார். உதாரணம் வந்துழிக் காண்க. ஒழுக்கத்துள் களவினுள்நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரல் உள்ளமோடு அளவிய இடத்தும் - வணக்கஞ்செய்தும் 43எதிர்மொழியாது வினாயவழிப் பிறராற் கூற்று நிகழ்த்தியும் எதிர்ப்பட்டுழி எழுந்தொடுக்கி யுந்தான் 44அக்காலத்து ஒழுகும் ஒழுக்கத்திடத்து முன்னர்க் களவுக் காலத்து நிகழ்ந்த கூட்டத் தருமையைத் தனித்துச் சுழலுதலையுடைய உள்ளத்தோடே உசாவிய இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும். உதாரணம் வந்துழிக் காண்க. கவவுக் கடுங்குரையள் (குறுந். 132) என்பது காட்டுவாரும் உளர். அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்; வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழிகெட ஒழுகுதலும் - களவுக்காலத்து உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய எழுத்து வழிகெடுமாறு போல வழிகெடும் படி பிராயச்சித்தஞ் செய்து ஒழுகுதற்கண்ணும்: அது 45முன்புபோலக் குற்றஞ்சான்ற பொருளை வழுவ மைத்துக் கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம். 46பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தால். (கலி. 15: 14 - 5) என்றவழி மையற்ற படிவம் எனத் தலைவன் கூறியதனைத் தோழி கூறியவாறு காண்க. அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் - வந்த குற்றம் நினக்கு உளதென்று அழியலெனவும் எனக்குளதென்று அஞ்சலெனவுஞ் சொல்லப்படும் அவ்விருபொருண்மைக் கண்ணும்: இவை, இரண்டாகக் கொள்ளின் முப்பத்துநான்கா மாதலின் இருவர் குற்றமுங் குற்றமென ஒன்றாக்கியது. தெய்வத்தினாதலின் ஏதம்பயவாதென்றான். 47யாயு ஞாயும் யாரா கியரோ வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதுஞ் செம்புலப் பெய்ந்நீர் போல வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந். 40) இது, நம்மானன்றி நெஞ்சந்தம்மில் தாங் கலத்தலின் தெய்வத்தான் ஆயிற்றெனத் தெருட்டியது. தான் அவட்பிழைத்த பருவத்தானும் - அங்ஙனந் தெய்வத்தினான் ஆயிற்றேனுங் குற்றமேயன்றோ என உட் கொண்ட அவட்கு யான் காதன் மிகுதியாற் புணர்ச்சிவேண்ட என் குறிப்பிற் கேற்ப ஒழுகினையாகலின் நினக்கொரு குற்றமின் றென்று தான் பிழைத்த பருவமுணர்த்தும் இடத்தும்: கூற்று நிகழும். உதாரணம்: நகைநீ கேளாய் தோழி தகைபெற நன்னாட் படராத் தொன்னிலை முயக்கமொடு நாணிழுக் குற்றமை யறிகுநர் போல நாங்கண் டனையநங் கேள்வர் தாங்கண் டனைய நாமென் றோரே. இதனுள் நன்னாள் வேண்டுமென்னாது கூடிய கூட்டத்துள் தங்கி நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாரா யினார்போல நாங் குறித்துழி வந்தொழுகிய தலைவர் தாங் குறித்தனவே செய்தனமென நமக்குத் தவறின்மை கூறினாரெனத் தோழிக்குத் தலைவி கூறியவழித் தலைவன் தன் 48பிழைப்புக் கூறியவாறு காண்க. நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும் தன்னின் ஆகிய நோன்மையும் பெருமையும் மெய்கொள - தலைவனான் உளதாகிய பொறையையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே கொள்கையினானே; 49பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக் கண்ணும் - வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரொடு கூடி இருந்து 50அதற்குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப்பாட்டின் கண்ணும்: தன்னினாகிய மெய் - கருப்பம். அவிப்பலிகொள்ளும் அங்கியங் கடவுட்கும் அது கொடுக்குந் தலைவர்க்கும் இடையே நின்று கொடுப்பித்தலின் அந்தணரை வாயிலென்றார். 51ஆற்றல் சான்ற தாமே யன்றியு நோற்றோர் மன்றநங் கேளிரவர் தகைமை வட்டிகைப் படூஉந் திட்ட மேய்ப்ப வரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி மறைநவி லொழுக்கஞ் செய்து மென்றனர் துனிதீர் கிளவிநந் தவத்தினு நனிவாய்த் தனவான் முனிவர்தஞ் சொல்லே. இதனுள் நந்தலைவரேயன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பந் தங்கிய நினது வயிற்றைக்கண்டு 52உவந்தெனவும், அதற்கேற்ற சடங்கு செய்து மென்றா ரெனவும், முற்காலத்து நாங்கேட்ப நமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற் றெனவுங் கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க. புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் - அங்ஙனஞ் சிறப் பெய்திய புதல்வனைப் பெற்ற ஈன்றணுமை சேர்ந்த காலத்தே: நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி - சுற்றக் குழாத் துடனே 53வாலாமை வரைதலின்றி எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவியை முகமனாகக் கூறுதலைக் குறித்து: ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்: அமரர்ச் சுட்டியும் - தேவர்கள் புதல்வனைப் பாது காத்தலைக் கருதியும்: செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் - அக்காலத்துச் செய்யும் பெரிய சிறப்புக்களைக் குறித்த மனத்தோடே சென்று சார்தற் கண்ணும்: சிறப்பாவன:- பிறந்த புதல்வன் முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும் பெயரிடுதலும் முதலியனவும், எல்லா முனிவர்க்குந் தேவர்க்கும் அந்தணர்க்குங் கொடுத்தலும். சேர்தல் கூறவே, கருப்பம் முதிர்ந்த காலத்துத் தலைவன் பிறரொடு கூட்ட முண்மையுங் கூறிற்றாம். ஆண்டுத் தோழி கூறுவனவும் ஒன்றென முடித்தலாற் கொள்க. 54வாராய் பாண நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூ னங்குடிக் குதவி நெய்யோ டிமைக்கு மையவித் திரள்காழ் விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வனை யீன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் திதலை யல்குன் முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் லஞ்சி லோதியெனப் பன்மா ணகட்டிற் குவளை யொற்றி யுள்ளினெ னுள்ளுறை யெற்கண்டு மெல்ல முகைநாண் முறுவ லொன்றித் தகைமல ருண்கண் கைபுதைத் ததுவே. (நற். 370) இது, நெய்யணி மயக்கம்பற்றித் தலைவன் கூறியது. நெடுநா வொண்மணி கடிமனை யிரட்டக் குரையிலை போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டென வொருசார் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த வறுவை மெல்லணைப் புனிறுநாறு செவிலியொடு புதல்வன் றுஞ்ச வையவி யணிந்த நெய்யாட் டீரணிப் பசிநோய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை யுரிமை பொருந்த நள்ளென் கங்குற் கள்வன் போல வகன்றுறை யூரனும் வந்தனன் சிறந்தோன் பெயரால் பிறந்த மாறே. (நற்றிணை. 40) இது, முன் வருங்காலத்து வாராது சிறந்தோன் பெயரன் பிறத்தலான் வந்தானெனத் தோழி கூறினாள். குவளை மேய்ந்த குறுந்தா ளெருமை குடநிறை தீம்பால் படூஉ மூர புதல்வனை யீன்றிவ ணெய்யா டினளே. இதுவுமது. பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கு என முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் - தலைவி தனது ஆற்றாமை மிகுதியான் தழுவி ஆற்றுதற்குக் குளிர்ந்த பயன் கொடுத்தல் பொருந்திய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெறாதே வருந்திக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத்தற்கண்ணும்: இதனானே மகப்பெறுதற்கு முன்னர் அத்துணை யாற்றாமை எய்திற்றலளென்றார். இப்பிரிவு காரணத்தான் தலைவனும் நிறையழிவ னென்றார். அகன்றுறை யணிபெற என்னும் மருதக்கலி (73) யுள், 55என்னைநீ செய்யினு முணர்ந்தீவா ரில்வழி முன்னடிப் பணிந்தெம்மை யுணர்த்திய வருதிமன் னிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால் என இதனுட் சீறடிப் புல்லிய இரவினைத் தலைவி கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க. உறலருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும் - தலைவற்குச் 56சாந்தழி வேருங் குறி பெற்றார் கூந்தல் துகளும் உண்மையின் அவனைக் கூடுதல் அருமையினானே ஊடன் மிகுந்த தலைவியைப் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும்: என்றது, உலகத்துத் தலைவரொடு கூடுந் தலைவியர் மனையறத்து இவ்வாறொழுகுவரென அவர் ஒழுக்கம் காட்டி அறத்துறைப்படுத்தலாம். மறைவெளிப்படுத்தலுந் தமரிற்பெறு தலும் மலிவும் முறையே கூறிப் பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய் மிகுதலின் ஊடல்மிகுத் தோள் என்றார், இரத்தற் பாலினும் பெண்பால் காட்டிப் 57பெயர்த்தலிற் பிறபிற பெண்டிர் என்றார். புனம்வளர் பூங்கொடி என்னும் மருதக்கலி (92) யுள், 58ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் றண்டா ரகலம் புகும். எனக்கூறி, அனவகை யால்யான் கண்ட கனவுத்தா னனவாக் காண்டை நறுநுதால் பன்மாணுங் கூடிப் புணர்ந்தீர் பிரியன்மி னீடிப் பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல வரும்பவிழ் பூஞ்சினை தோறு மிருங்குயி லானா தகவும் பொழுதினான் மேவர நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந் தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமா ரானா விருப்போ டணியயர்பு காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு. (கலி. 92) எனவே, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன்மிகுதி தோன்றுவித்து மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின் றார் நாமும் அது செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க. பிரிவின் எச்சத்துப் 59புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக் கண்ணும் - பரத்தையிற் பிரிவினது தவிர்ச்சிக்கண்ணே தனிமை யுற்றிருந்த தலைமகனையுந் தலைமகளையுந் தனதருளி னானே தானும் பிரிவினெச்சத்துப் புலம்பி நின்றான் ஒருவன் தலைவிதனைக் கண்டருளுதற்கு அப்பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்ணும்: பிரிந்து வந்துழியல்லது புலத்தல் பிறவாமையின் 60எச்சத்து என்றார். உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம். நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் - முன்னில்லா 61தொரு சிறைப் போய் நின்று நீட்டித்துப் பிரிவினான் தலைவன் அஞ்சிய நோயின்கண்ணும்: இது 62துனி. மையற விளங்கிய என்னும் மருதக்கலி (81) யுள், 63ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் னாணை கடக்கிற்பார் யார். எனச் 64சேய்நின்றென்றதனால் துனித்து நின்றவாறும், சினவ லென்றதனாற் பிரிவு நீட்டித்தவாறும், நின்னாணை கடக்கிற் பார் யாரென அஞ்சியவாறு கூறியவாறுங் காண்க. பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி. (கலி. 95) என்பதும் அச்சமாதலின் இதன்கண் அடங்கும். சென்று கை இகந்து பெயர்த்து உள்ளிய வழியும் சென்று - தலைவன் ஆற்றானாய்த் துனியைத் தீர்த்தற்கு அவளை அணுகச் சென்று; 65கையிகந்து - அவன் மெய்க்கட் கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கி நிறுத்தலானே; பெயர்த்து - அவன் ஒருவாற்றான் அவளாற் றாமையைச் சிறிது மீட்கையினாலே; உள்ளிய வழியும் - அவள் கூடக்கருதிய விடத்தும்: தலைவன் கூற்று நிகழும். இதுவுந் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று. உதாரணம் முற்கூறிய (கலி. 81) பாட்டுள், 66அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன் முதிர்பூண் முலைபொருத வேதிலான் முச்சி யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப வெதிர்வளி நின்றாய்நீ செல்; இனி எல்லாயாந், தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லு மாபோற் படர்தக நாம். எனத் தலைவன் கூறியவாறு காண்க. காமத்தின் வலியும் - அவள் 67துனித்து நீங்கியவழி முற்கூறிய வாறன்றிக் காமஞ் சிறத்தலின் ஆற்றாமைவாயிலாகச் சென்று 68வலித்துப் புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும்: தலைவன் கூற்று நிகழும். இதுவுந் துனி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று. உதாரணம்: யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத் தெம்மனை வாரனீ வந்தாங்கே மாறு (கலி. 89) என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி, ஏஎ யிவை, ஓருயிர்ப் புள்ளி னிருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றாப் புலவனீ கூறியென் னாருயிர் நிற்குமா றியாது. (கலி. 89) என ஆற்றாமை மிகுதியாற் சென்றமை கூறியவாறு காண்க. கைவிடின் அச்சமும் - தலைவி தான் உணர்த்தவும் உணராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியில் தான் அவளை நீங்கு தற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும்: தலைவற்குக் கூற்று நிகழும். அஃது, உணர்ப்புவயின் வாரா வூடலாம். 69எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றிணைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. (குறுந். 19) இதனுள் அவளையின்றி வருந்துகின்ற நெஞ்சே அவள் நமக்கு யாரெனப் புலத்தலன்றி ஆண்டுநின்றும் பெயர்தல் கூறாமையிற் கைவிடின் அச்சமாயிற்று. தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும் - தலைவன் தலைவியைப் பிழைத்த பிரிவின்கண்ணும்: பிழைத்த வென்றார் ஆசிரியர், இயற்கைப் புணர்ச்சி தொடங்கிப் பலகாலும் பிரியேனெனத் தெளிவித்ததனைத் தப்பலின். உதாரணம்: 70அன்பு மடனுஞ் சாயலு மியல்பும் மென்பு நெகிழ்க்குங் கிளவியும் பிறவு மொன்றுபடு கொள்கையோ டொராங்கு முயங்கி யின்றே யிவண மாகி நாளைப் புதலிவ ராடமைத் தும்பி குயின்ற வகலா வந்துளை கோடை முகத்தலி னீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோ லாயக்குழற் பாணியி னைதுவந் திசைக்குந் தேக்கமழ் சோலைக் கடறோங் கருஞ்சுரத் தியாத்த தூணித் தலைதிறந் தவைபோற் பூத்த விருப்பைக் குழைபொதி குவியிணர் கழறுளை மூத்திற் செந்நிலத் துதிர மழைதுளி மறந்த பைங்குடிச் சீறூர்ச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனைப் புயலென வொலிவருந் தாழிருங் கூந்தற் செறிதொடி முன்கைநங் காதலி யறிவஞர் நோக்கமும் புலவியு நினைந்தே. (அகம். 225) இது, நெஞ்சினாற் பிரியக் கருதி வருந்திக் கூறியது. வயங்கு மணிபொருத (அகம். 167) என்பதும் அது. உடன்சேறல் செய்கையொடு அன்ன பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும் அன்னவும் பிற - நீ களவில் தேற்றிய 71தெளிவகப் படுத்தலுந் தீராத் தேற்றமும் பொய்யாம்; செய்கையொடு உடன்சேறல் - அவை பொய்யாகாதபடி செய்கைகளோடே இவளை உடன்கொண்டு செல்க; மடம்பட வந்த தோழிக்கண்ணும் - என்று தன்னறியாமை தோன்றக் கூறிவந்த தோழிக்கண்ணும்: கூற்று நிகழும். உடன் கொண்டுபோதன் முறைமையன்றென்று அறியாமற் கூறலின் மடம்பட வென்றார். செய்கைகளாவன தலைவன் 72கைபுனை வல்வில் நாண் ஊர்ந்தவழி இவள் மையில் வாண்முகம் பசப்பூர்தலும் அவன் புனைமாண் மரீஇய அம்பு தெரிந்தவழி இவள் இன்னநோக்குண்கண்ணீர் நில்லாமையும் பிறவுமாம். பாஅலஞ்செவி என்னும் பாலைக்கலி (5) யுள், ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ ................ ................... ................. ................... .................... அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே. என, உடன்கொண்டு சென்மினெனத் தோழி கூறியது கேட்ட தலைவன் இவளை உடன்கொண்டு போதல் எவ்வாற்றானும் முறைமை யன்றென்று தோழிக்குக் கூறுவனவும் நெஞ்சிற்குக் கூறவனவும் பிறவுங் கொள்க. 73வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த வழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇய வருகதில் லம்ம தானே யளியளோ வளியளென் னெஞ்சமர்ந் தோளே. (குறுந். 56) இது, தோழி கேட்பது கூறியது. 74நாணகை யுடைய நெஞ்சே கடுந்திறல் வேனி னீடிய வானுயர் வழிநாள் வறுமை கூறிய மன்னீர்ச் சிறுகுளத் தொடுகுழி மருங்கிற் றுவ்வாக் கலங்கல் கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச் சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச் சொறிபுற முரிஞிய நெறியயன் மராஅத் தல்குறு வரிநிழ லசைஇ நம்மொடு தான்வரு மென்ப தடமென் றோளி யுறுகணை மழவ ருள்கீண் டிட்ட வாறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடைக் கன்மிசைக் கடுவளி யெடுத்தலிற் றுணைசெத்து வெருளேறு பயிரு மாங்கட் கருமுக முசுவின் கானத் தானே. (அகம். 121) இது, நெஞ்சிற்குக் கூறியது. வேற்று நாட்டு அகல் வயின் விழுமத்தானும் - அங்ஙனம் வேற்று நாட்டிற் பிரியுங் காலத்துத் தானுறும் இடும்பையிடத்து: தலைவற்குக் கூற்று நிகழும். விழுமமாவன: பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக்கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியுமென்றலும், பிரியுங் கொலென்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்குதலும் பிறவுமாம். நெஞ்ச நடுக்குற என்னும் பாலைக்கலி (கலி. 24) யுள் கனவிற் கூறியவாறு காண்க. 75உண்ணா மையி னுங்கிய மருங்கி னாடாப் படிவத் தான்றோர் போல வரைசேர் சிறுநெறி நிரைபுடன் செல்லுங் கான யானை கவினழி குன்ற மிறந்துபொரு டருதலு மாற்றாய் சிறந்த சில்லைங் கூந்த னல்லகம் பொருந்தி யொழியின் வறுமை யஞ்சுதி யழிதக வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவே லெஃகி னிமைக்கு மழைமருள் பஃறோன் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை யிறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. (அகம். 123) இது, போவேமோ தவிர்வேமோ என்றது. அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத் தாளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப் பூம்பொறி யுழுவை தொலைச்சிய வைந்நுதி யேந்துவெண் கோட்டு வயக்களி றிழுக்குந் துன்னருங் கான மென்னாய் நீயே 76குவளை யுண்க ணிவளீண் டொழிய வாள்வினைக் ககறி யாயி னின்னொடு போயின்று கொல்லோ தானே படப்பைக் கொடுமு ளீங்கை நெடுமா வந்தளிர் நீர்மலி கதழ்பெய றலைஇய வாய்நிறம் புரையுமிவண் மாமைக் கவினே. (நற். 205) இஃது, இவள் நலனழியுமென்று செலவழுங்கியது. 77தேர்செல வழுங்கத் திருவிற் கோலி யார்கலி யெழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழத்தொழி லொழிய யான்றொடங் கினனா னிற்புறந் தரவே. (ஐங்குறு. 428) இஃது, ஐயந் தீர்த்தது. 78ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே. (குறுந். 63) இது, தலைவியை வருகின்றாளன்றே எனக் கூறிச் செல வழுங்கியது. மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும் - பிரிந்த தலைவன் இடைச் சுரத்து உருவு வெளிப்பட்டுழியும் மனம் வேறுபட்டுழி யும் மீண்டு வருதலை ஆராய்ந்த கூறுபாட்டின் கண்ணும்: 79உழையணந் துண்ட விறைவாங் குயர்சினைப் புல்லரை யிரத்திப் பசுங்காய் பொற்பக் கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம் பெருங்கா டிறந்து மெய்தவந் தனவா வருஞ்செயற் பொருட்பிணி முன்னி யாமே சேறு மடந்தை யென்றலிற் றான்ற னெய்த லுண்கண் பைதல் கூரப் பின்னிருங் கூந்தலின் மறையினள் பெரிதழிந் துதியன் மண்டிய வொலிதலை ஞாட்பி னிம்மென் பெருங்களத் தியவ ரூது மாம்பலங் குழலி னேங்கிக் கலங்கஞ ருறுவோள் புலம்புகொ ணோக்கே. (நற். 113) இஃது, உருவு வெளிப்பட்டுக் கூறியது. 80ஒன்றுதெரிந் துரைத்திசி னெஞ்சே புன்காற் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பிற் களிறுநின் றிறந்த நீர வீரத்துப் பால்வீ தோன்முலை யகடுநிலஞ் சேர்த்திப் பசியட முடங்கிய பைதற் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபிற் பிணவுநினைந் திரங்கும் விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே யாள்வினைக் ககல்வா மெனினு மீள்வா மெனினு நீதுணிந் ததுவே. (நற்றிணை. 103) இது, வேறுபட்டு 81மீட்டுவரவு ஆய்ந்தது. 82ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை யருஞ்சுர நீந்தி நம்மொடு மறுதரு வதுகொ றானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக வொழிந்தோள் கொண்டவெ னுரங்கெழு நெஞ்சே. (ஐங்குறு. 329) இது, மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன் உழையர்க்கு உரைத்தது. 83நெடுங்கழை முளிய வேனி னீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யினியே யொண்ணுத லரிவையை யுள்ளுதொறுந் தண்ணிய வாயின சுரத்திடை யாறே. (ஐங்குறு. 322) இஃது, இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது. இன்னும் இரட்டுறமொழிதல் என்பதனாற் செய் வினை முற்றி மீண்டு வருங்கால் வருந்தி நெஞ்சொடு கூறுவனவும் பிறவுங் கொள்க. அது, 84என்றுகொ லெய்து ஞான்றே சென்ற வளமலை நாடன் மடமக ளிளமுலை யாகத் தின்னுயிர்ப் புணர்ப்பே 85கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்கிப் பெய்த வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா யுழுதுகாண் டுளைய வாகி யார்கழல் பாலி வாளிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட் டியவி னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளி ரோக்கிய தொடிமா ணுலக்கைக் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையொ டிரட்டுங் குன்றுபி னொழியப் போகியுரந் துரந்து ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவி னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மா ணோங்கிய நல்லி லொருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின வாணுத லந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறநசைஇச் சென்றவெ னெஞ்சே. (அகம். 9) என வரும். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. அவ்வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும் - பிரிந்தவிடத்துத் தான் 86பெற்ற, பெருக்கம் எய்திய சிறப்பின்கண்ணும் மனமகிழ்ந்து கூறும். சிறப்பாவன: பகைவென்று திறை முதலியன கோடலும் பொருண் முடித்தலுந் 87துறைபோகிய ஒத்தும் பிறவுமாம். உ-ம்: கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவும் (அகம். 93) எனவும், தாழிருள் துமிய (குறுந். 270) என்பதனுட் செய்வினை முடித்த செம்மலுள்ளமொடு எனவும், மனமகிழ்ந்து கூறியவாறு காண்க. முன்னியது முடித்தனமாயின் என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க. பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் - அச்சிறப்புக்களை எய்திய தலைவன் பெரிய புகழையுடைத்தாகிய தேரையுடைய பாகரிடத்தும்: கூற்று நிகழ்த்தும். 88அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார். 89இருந்த வேந்த னருந்தொழின் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் யானு மேறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ விலனே தாஅய் முயற்பற ழுகளு முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூ ராங்கண் மெல்லிய லரிவை யில்வயி னீறீஇ யிழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ மானுரு வாகநின் மனம்பூட் டினையோ வுரைமதி வாழியோ வலவ வெனத்தன் வரைமருண் மார்பி னளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்கன னெடுந்தகை விருந்தே பெற்றன டிருந்திழை யோளே. (அகம். 384) இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க. 90மறத்தற் கரிதாற் பாக பன்னாள் வறத்தொடு வருந்திய வல்குதொழிற் கொளீஇய பழமழை பொழிந்த புதுநீ ரவல்வர நாநவில் பல்கிளை கறங்கு மாண்வினை மணியொலி கேளாள் வாணுத லதனா லேகுமி னென்ற விளையர் வல்லே யில்புக் கறியுந ராக மெல்லென மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குர லழுத்திய வுந்நிலைப் புகுதலின் மெய்வருத் துறாஅ யவிழ்பூ முடியிள் கவைஇய மடமா வரிவை மகிழ்ந்தயர் நிலையே. (நற்றிணை. 42) இது, தானுற்ற இன்பத்தினைப் பாகற்குக் கூறியது. ஊர்க பாக வொருவினை கழிய. (அகம். 44)) செல்க தேரே நல்வலம் பெறுந. (அகம் 34; 374) எனவும் வரும். தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ .................. ................... .................. ............................... தாள்வளம் படவென்ற தகைநன்மா மேல்கொண்டு. (கலி. 31) என வருவன தலைவி கூற்றாதலின் தலைவன் மீண்டு வருங்காற் பாகற்கே கூறுவனென்றார். காமக்கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் காமக்கிழத்தி மனையோளென்றிவர் சொல்லிய ஏமுறு கிளவி எதிரும் - இற்பரத்தை தலைவியென்று கூறிய இருவர் சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத்தும்: கூற்று நிகழ்த்தும். 91அவை அருஞ்சுரத்து வருத்தம் உற்றீரே எனவும் எம்மை மறந்தீரே எனவுங் கூறுவனவும் பிறவுமாம். 92எரிகவர்ந்த துண்ட வென்றூழ் நீளிடை யரிய வாயினு மெளிய வன்றே யவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக் கடுமான் றிண்டேர் கடைஇ நெடுமா னோக்கிநின் னுள்ளியாம் வரவே. (ஐங். 360) இது, வருத்தம் உற்றீரே என்பதற்குக் கூறியது. 93தொடங்குவினை தவிரா வசைவி னோன்றாட் கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த தாவி லுள்ளந் தலைத்தலைச் சிறப்பச் செய்வினைக் ககன்ற காலை யெஃகுற் றிருவே றாகிய தெரிதகு வனப்பின் மாவி னறுவடி போலக் காண்டொறு மேவ றண்டா மகிழ்நோக் குண்க ணினையாது கழிந்த வைக லெனையதூஉம் வாழலென் யானெனத் தேற்றிப் பன்மான் டாழக் கூறிய தகைசா னன்மொழி மறந்தனிர் போறி ரெம்மெனச் சிறந்தநின் னெயிறுகெழு துவர்வா யின்னகை யழுங்க வினவ லானாப் புனையிழை கேளினி வெம்மை தண்டா வெரியுகு பறந்தலைக் கொம்மை வாடிய வியவுள் யானை நீர்மருங் கறியாது தேர்மருங் கோடி. யறுநீ ரம்பியி னெறிமுத லுணங்கு முள்ளுநர்ப் பனிக்கு மூக்கருங் கடத்திடை யெள்ள னோனாப் பொருடரல் விருப்பொடு நாணுத்தளை யாக வைகி மாண்வினைக் குடம்பாண் டொழிந்தமை யல்லதை மடங்கெழு நெஞ்ச நின்னுழை யதுவே. (அகம். 29) இது, மறந்தீர்போலும் என்றதற்குக் கூறியது. 94உள்ளினெ னல்லெனோ யானே உள்ளி நினைந்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே நீடிய மராஅத்த தோடுதோய் மலிநிறை யிறைத்துணச் சென்றற் றாஅங் கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே. (குறுந். 99) பிறவும் என்றதனான் இத்தன்மையனவுங் கொள்க. இவை 95இருவர்க்கும் பொது. இவற்றைக் காமக்கிழத்தி விரைந்து கூறுமென்றற்கு அவளை முற்கூறினார். சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி இன்றிச் சென்ற தம் நிலை கிளப்பினும் - அங்ஙனம் கூறிய இருவர்க்குந் தான் சென்ற தேயத்தில் நேர்ந்த வருத்தத்தை மிகவும் விளங்கக்கூறி 96நனவினாற் சேறலின்றிக் கனவினாற் கடத்திடைச் சென்ற தம்முடைய நிலையைத் தலைவன் கூறினும்: உதாரணம்: 97ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந் துள்ளியு மறிதிரோ வெம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின் னாய்நலம் மறப்பெனோமற்றே சேணிகந்து தொலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாஅக் காடுகவர் பெருந்தீ யோடுவயி னோடலின் னதற்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத் தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி யருஞ்செல வாற்றாஆரிடை ஞெரேரெனப் பரந்துபடு பாயல் நவ்வி பட்டென விலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினைநின்ற நிற்கண்டு டின்னகை இனையம் ஆகவும் எம் வயின் னூடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுத னீவி நறுங்கதுப் புளரிய நன்னர் அமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் னேற்றேக் கற்ற வுலமரல் போற்றா யாகலிற் புலத்தியா லெம்மே. (அகம். 39) இதனுள் வறுங்கை காட்டியவாயல் கனவினென நன வின்றிச் சென்றவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க. இதுவும் இருவர்க்குமாம். அருந்தொழின் முடித்த 98செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் - செயற்கு அரிதாகிய வினையை முடித்த தலைமையை எய்திய காலத்தே தலைவி விருந்தெதிர் கோடலோடே நீராடிக் கோலஞ்செய்தல் முதலியவற்றைக் காண்டல் வேண்டிய இடத்தும்: தலைவன் கூற்று நிகழ்த்தும். உதாரணம்: 99முரம்புதலை மணந்த நிரம்பா வியவி னோங்கித் தோன்று முமண்பொலி சிறுகுடிக் களரிற் புளியிற் காய்பசி பெயர்ப்ப வுச்சிக் கொண்ட வோங்குகுடை வம்பலீர் முற்றையு முடையமோ மற்றே பிற்றை வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல் னீர்வார் புள்ளி யாக நனைப்ப விருந்தயர் விருப்பினள் வருந்துந் திருந்திழை யரிவைத் தேமொழி நிலையே. (நற்றிணை. 374) என இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு நல்லவை வேட்டுக் கூறியவாறு காண்க. மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் - வினைமுற்றிப் புகுந்த தலைமகனை எதிரேற்றுக் கொள்ளும் மங்கலமரபினர் மாலையேந்திய பெண்டிரும் புதல்வருங் கேளிரும் ஆகலான் அக்கேளிர் செய்யும் எதிர்கோட லொழுக்கத்துக் கண்ணும்: தலைமகன் உள்ளமகிழ்ந் துரைக்கும். 100உம்மை விரிக்க. பெண்டிரும் மக்களுமாகிய கேளிரென்றுமாம். உதாரணம்: 101திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பி னாணுடை அரிவை மாண்நகர் நெடுந்தேர் ரெய்தவந் தன்றாற் பாக நல்வரவு விளைய ரிசைத்தலிற் கிளையோ ரெல்லாஞ் சேயுயர் நெடுங்கடைத் துவன்றின ரெதிர்மார் தாயரும் புதல்வருந் தம்முன் பறியாக் கழிபே ருவகை வழிவழி சிறப்ப வறம்புரி யொழுக்கங் காண்கம் வருந்தின காண்கநின் றிருந்துநடை மாவே. 102ஏனை வாயில் எதிரொடு தொகைஇ - சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில்கட்கு எதிரே கூறுங் கூற்றோடே முற் கூறிய வற்றைத் தொகுத்து: உதாரணம்: 103நகுகம் வாராய் பாண பகுவாய் யரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் றேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சந் துரப்ப யாம்தன் முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப் பிறைவனப் புற்ற மாசில் திருநுதல் னாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து வெரூஉ மான்பிணையி னொரீஇ யாரை யோவென் றிகந்துநின் றதுவே. (நற்றிணை. 250) இஃது, ஏனை வாயிலாகிய பாணற்கு உரைத்தது. பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும் - ஓதப்பட்ட இவையே இடமாக நல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறு வேறாகச் செய்யுள் செய்து கோடற்கு அமைந்துநின்ற கூறு பாட்டை உடையவாகிய முப்பத்துமூன்று துறையும்: எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன - களவுபோல இழிதொழிலின்றி ஆராய்தற்கரிய சிறப்பொடு கூடிய தலைவன் கண்ண என்றவாறு. சிறப்பாவன: வந்தகுற்றம் வழிகெட ஒழுகலும், இல்லறம் நிகழ்த்தலும், பிரிவாற்றுதலும், பிறவுமாம். இன்னவிடத்தும் இன்னவிடத்தும் நிகழுங் கூற்றுக்களை வாயிலெதிர் கூறுங் கூற்றோடே தொகுத்துப் பண்ணுதற்கமைந்த பகுதி யுடையவாகிய முப்பத்துமூன்று கிளவியுந் தலைவன்கண் நிகழ்வன என்று முடிக்க. எடுத்துரைப்பினுந் தந்நிலை கிளப்பினும் அக்கூற்றுக்களையும் வாயிலெதிரொடு தொகைஇ யென முடிக்க. இவற்றுட் 104பண்ணிக் கொள்ளும் பகுதியாவன, யாம் மறைந்து சென்று இவனைக் கண்ணைப் புதைத்தால் தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவனென்று உட்கொண்டு காமக்கிழத்தி யாதல் தலைவியாதல் சென்று கண்புதைத்துழித் தலைவன் கூறுவனவும், பள்ளியிடத்து வந்திருந்து கூறுவனவும், இவள் ஊடற்குக் காரணம் என்னென்று தோழி வினாயவழிக் கூறுவனவும், பிரிந்தகாலத்து இவளை மறந்தவா றென்னென்ற தோழிக்குக் கூறுவனவும், பிறவுமாம். உதாரணம்: 105சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன நலம்பெறு கையினெங் கண்புதைத் தோயே பாய லின்றுணை யாகிய பணைத்தோட் டோகை மாட்சிய மடந்தை நீயல துளரோவென் நெஞ்சமர்ந் தோரே. (ஐங். 293) 106தாழியரு டுமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமொ டிவளின்மேவலம் ஆகிக் குவளைக் குறுந்தா ணாண்மலர் நாறு நறுமென கூந்தன் மெல்லணை யேமே. (குறுந். 270) 107இம்மைப் பிறப்பில் பிரியல மென்றேனாக் கண்ணிறை நீர்கொண்ட னள். (குறள். 1315) 108தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர் ரிந்நீர ராகுதி ரென்று. (குறள். 1319) 109எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற நள்ளென் கங்கு னளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கின் றேம்பாய் கூந்தன் மாஅ யோளே. (ஐங்குறு. 324) எனவும் வரும். இன்னும் அதனானே ஊடலை விரும்பிக் கூறு வனவுங் கொள்க. 110ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று (குறள். 1307) 110ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ விரா (குறள். 1329) என வரும். இன்னும் கற்பியற்கண் தலைவன்கூற்றாய் வேறுபட வருஞ் சான்றோர் செய்யுட்களெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. (5) (கற்பின்கண் தலைவி கூற்றுக்கள் நிகழுமிடங்கள் இவை எனல்) 147. அவனறி வாற்ற வறியு மாகலி னேற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் முரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுங் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலி னலமரல் பெருகிய காமத்து மிகுதியு மின்பமு மிடும்பையு மாகிய விடத்துங் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சுபுண்ணுறீஇ 10 நளியி னீக்கிய விளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி யியன்ற நெஞ்சந் தலைப்பெயத் தருக்கி யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினுந் தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி யெங்கையர்க் குரையென விரத்தற் கண்ணுஞ் செல்லாக் காலைச் செல்கென விடுத்தலுங் காமக் கிழத்தி தன்மகத் தழீஇ யேமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் 20 சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி யறம்புரி யுள்ளமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந் தந்தைய ரொப்பர் மக்களென் பதனா லந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலுங் கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணுங் கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் 30 காத லெங்கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்ணுந் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிய வழியுந் தன்வயிற் சிறைப்பினு மவன்வயிற் பிரிப்பினு மின்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணுங் காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங் கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் 40 காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலு மாவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப. இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறுகின்றது. (இ - ள்.) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையின் திரியா, அன்பின்கண்ணும் அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் - வேதத்தையுந் தரும் நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத தலைவி மிக அறியுமாதலின்; ஏற்றற் கண்ணும் - அந்தணர் முதலிய மூவருந் தத்தமக்குரிய வேள்வி செய்யுங்கால் தம் மனைவியர் பலருள்ளுந் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும் - தத்தங் குலத்திற் கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் - அவர் குலத்திற்கேற்ற உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து; பெருமையில் திரியா அன்பின் கண்ணும் - தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும் நீங்காத அன்பு செய்து ஒழுகுதற்கண்ணும்: அறியுமாகலின் அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக. என்றது, அந்தணர்க்கு நால்வரும், அரசர்க்கு மூவரும், வணிகர்க்கு இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர்; ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம் அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்றவகை யின் உரிமை கொடுப்பரென்பதூஉம் 111அவர்களும் இது 112கருமமே செய்தானென்று அன்பில் திரியாரென்பதூஉங் கூறியவாறு. உதாரணம்: 113நின்ற சொல்லி னீடுதோ றினிய ரென்று மென்றோள் பிரிபறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்த லஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே. (நற்றிணை. 1) இதனுள், 114தாமரைத் தாதையும் ஊதிச் சந்தனத்தாதையும் ஊதி வைத்த தேன்போலப் புரைய என்றதனான் ஏற்றற்கண் தலைவி கூறினாள். பிரிவறியல ரென்றதும் அன்னதோர் குணக் குறையில ரென்பதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழி வாம். 115நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. (குறுந். 3) இது, நிறுத்தற்கட் கூறியது. கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - அறமும் பொருளுஞ் செய்வதனாற் புறத்துறைதலில் தலைவனைத் தலைவி நீங்குங் காலம் பெரிதாக லின் அதற்குச் சுழற்சிமிக்க வேட்கைமிகுதி நிகழ்ந்த விடத்தும்: உதாரணம்: 116காமந் தாங்குமதி யென்போர் தாமஃது தறியலர் கொல்லோ வனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே. (குறுந். 290) இது, தெருட்டுந் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது. இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் - அங்ஙனம் அலமரல் பெருகியவழித் தலைவனை எதிர்ப்பட்டஞான்று இன்பமுந், தனிப்பட்ட ஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும்: உதாரணம்: 117வாரன் மென்றினைப் புலவுக்குரன் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளியெறி வயிரிற் கிளிவிளி பயிற்றும் நளியிருஞ் சிலம்பி னன்மலை நாடன் புணரிற் புணருமா ரெழிலே பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயவெ னணிநலஞ் சிதைக்குமார் பசலை யதனா லசுணங் கொல்பவர் கைபோ னன்று மின்பமுந் துன்பமு முடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. (நற்றிணை. 304) 118இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு. (குறள். 1152) 119கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் - யானைக் கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தை யுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவனை நெஞ்சை வருத்தித் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக் கண்ணும்: 120தன்னை அவமதித்தானென்றற்கு இளிவரு நிலை யென்றார். 121கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வனை யீன்றவெம் மேனி முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே. (ஐங்குறு. 65) இது, புதல்வற் பயந்தகாலத்துப் பிரிவுபற்றிக் கூறியது. புகன்ற உள்ளமொடு ..............................................................nghy¤ j‹K‹d®¥ bgŒJ bfh©L thÆš kW¤jjdh‹ njh‰¿a eaDil ik¡ f©Q«: ...W. ...f. . ....u¥ã ....§»‰ ....fh‰ ....§»‰ ....Æil ....§f¥ ....d¤J ....bP© ....aay ....Ÿs‰ ....Jj‹ .... _u ....fho ....ijï ....ȪJ ....if¡ ....L¤j ....gh‰ ....aªJ ....iwa ....Kf¤ ....s§» ....šÿœ ....UFò ...‰w ....nk. . . ... .......bfhŸf. ....H‹w ....ky® ....T£L ....id¥ ....šf‰ ....U¥ã ....th» ....Uªâ ....a§» ....hk‰ ....snt . ....lï¤ ....Kiy ....fy« ....dnk ....dnu .....eil¢ ....h¡» ....njh செல்வற் கொத்தனெம் யாமென மெல்லவென் மகன்வயிற பெயர்தந் தேனே யதுகண் டியாமுங் காதலெ மவற்கெனச் சாஅய்ச் சிறுபுறங் கவையின னாக வுறுபெயற் றண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய் மண்போன் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய வறிவி னேற்கே. (அகம். 26) இதனுள் ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப் பொதுவாகக் கூறியவாறும் வேண்டினமெனப் 125புலம்பு காட்டிக் கலுழ்ந்ததென 126ஈரங் கூறியவாறுங் காண்க. தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற்கண்ணும் - பரத்தையர்மாட்டுத் தங்கிய 127செவ்வியை மறையாத ஒழுக்கத்தோடே வந்த தலைவனை நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்துகோடற்கண்ணு: உதாரணம்: அகன்றுறை யணிபெற என்னும் மருதக்கலி (73) யுள் 128நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி யிளையவ ரிடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால். என்பன கூறி, 129மண்டுநீ ராரா மலிகடல் போலுநின் றண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனிற் றோலாமோ நின்பொய் மருண்டு. எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க. செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் - தலைவன் செல்லா னென்பது இடமுங் காலமும்பற்றி அறிந்தகாலத்து ஊடலுள்ளத்தாற் கூடப்பெறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்றுதற்கண்ணும்: உதாரணம்; புள்ளிமி ழகல்வயல் என்னும் மருதக்கலி ... ....h£o ....yhâ ....¥gh ...J. ....huh ....ǪJ ....Ü¡» ....ÅÇa ....kiu .... _u ....hU‰ ....ªj‰ ....jªJ ....ah§ ....We® .... üW ....Êa‹ ....bt« ...œf ....uh. . . ..........................uzkhd Éisah£o‹ KoÉ‹ f©Q«: .............ah£L’ v‹wh®. .........¡ TWjÈ‹. உதாரணம்: 133நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதி னல்லி யயலிதழ் புரையு மாசி லங்கை மணிமரு ளவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே கூரெயிற் றரிவை குறுகினள் யாவருங் காணுந ரின்மையிற் செத்தனள் பேணிப் பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை வருக மாளவென் னுயிரெனப் பெரிதுவந்து கொண்டனள் நின்றோட் கண்டுநிலைச் செல்லேன் மாசில் குறுமக ளெவன்பே துற்றனை நீயுந் தாயை யிவற்கென யான்றற் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா நாணி னின்றோ ணிலைகண் டியானும் பேணினெ னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் னோணின் மகன்றா யாதல் புரைவதாங் கெனவே. (அகம். 16) என வரும். சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும் சிறந்த செய்கை அவ்வழித்தோன்றி - காமக் கிழத்தியது ஏமுறும் விளையாட்டுப் போலாது தலைவி தன் புதல் வனைத் தழீஇ விளையாட்டை யுடைய இல்லிடத்தே தலைவன் தோன்றி; அறம்புரி உள்ளமொடு தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து - அவ் விளையாட்டு மகிழ்ச்சியாகிய மனையறத் தினைக் காண விரும்பிய நெஞ்சோடே தன் வரவினைத் தலைவி அறியாமல் அவள் பின்னே நிற்றலைச் செய்து; பெயர்தல் வேண்டு இடத்தானும் - தலைவியது 134துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தும்: தன்வரவறியாமை என்றதற்குத் தன்னைக் கண்டால் தலைவி யுழை நின்றார் தனக்குச் செய்யும் 135ஆசாரங்களையும் அவர் செய்யாமற் கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று கொள்க. உதாரணம்: 136மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை உருள்கலன் நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர வுருவெஞ் சாதிடை காட்டும் உடைகழல் அந்துகில் அரிபொலி கிண்கிணி ஆர்ப்போவா தடிதட்பப் பாலோடு அலர்ந்த முலைமறந்து முற்றத்துக் கால்தேர் கையி னியக்கி நடைபயிற்றா வாலமர் செல்வ னணிசால் பெருவிறல் போல வருமென் னுயிர்; பெரும, விருந்தொடு கைதூவா வெம்மையு முள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்கள்யாங் கேட்ப மருந்தோவா நெஞ்சிற் கமிழ்தயின் றற்றாப் பெருந்தகாய் கூறு சில; எல்லிழாய், சேய்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி யேனாதிப் பாடிய மென்றற்றா நேர்யநாந் தணிக்கு மருந்தெனப் பாராட்ட ஓவாது அடுத்தடுத்து அத்தத்தாவென் பான்மாண வேய்மென்றோள் வேய்த்திறஞ் சேர்த்தலு மற்றிவன் வாயுள்ளிற் போகா னரோ; உள்ளி யுழையே யொருங்கு படைவிடக் கள்ளர் படர்தந் ததுபோலத் தாமெம்மை யொள்ளுமார் வந்தாரே யீங்கு; ஏதப்பா டெள்ளிப் புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்நின் னாணை கடக்கிற்பார் யார்: அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல் முதிர்பூண் முலைபொருத வேதிலாண் முச்சி யுதிர்துக ளுக்கநின் னாடை யொலிப்ப வெதிர்வளி நின்றாய்நீ செல்; இனியெல்லா யாம், தீதிலே மென்று தெறிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந் தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும் மாபோற் படர்தக நாம். (கலி. 81) தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான் அந்தமில் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும் - அங்ஙனம் விளையாடுகின்ற காலத்து மக்கள் தந்தையரை ஒப்பரென்னும் வேதவிதிபற்றி முடிவில்லாத சிறப்பினை யுடைய மகனைப் பழித்து வெகுளுதற் கண்ணும்: மகனுக்கும் 137இது படுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் பழித்தென்னாது மகப்பழித் தென்றார். மைபடு சென்னி என்னும் மருதக்கலி (86) யுள், 138செம்மால்! வனப்பெலா நுந்தையை யொப்பினு நுந்தை நிலைப்பாலுள் ஒத்த குறியென்வாய்க் கேட்டொத்தி கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி யொன்றினேம் யாமென்று றுணர்ந்தாரை நுந்தைபோல் மென்றோ ணெகிழ விடல் என அவனைக் கொண்டு விளையாடியவழி அவன் தலைவன்மேல் வீழ்தலின், தந்தை வியன்மார்பிற் பாய்ந்தா னறனில்லா வன்பிலி பெற்ற மகன். எனத் தன் திறந்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு காண்க. 139கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்: கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ - கொடியோரென்றது பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலியோரை; கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறுதற்கு விரும்பினோர் பரத்தையர்க்கு வாயிலாய் வந்து கூறிய சொல்லோடே தானும் அவரிடத்தே சேர்ந்து; பகுதியி னீங்கிய கொடுமை - காவற்பாங்கிற் பக்கமும் ஆங்கோர் பக்கமுமாகிய பகுதி (41) காத்தலினின்று நீங்கிய பரத்தையரைக் கூடிய கொடுமை; சுடுமென ஒடியாது தகுதிக் கண்ணும் - நெஞ்சைச் சுடுமென்று கூறி அவன் தவற்றைக் கூறுதலைக் தவிராமற் கூறுதற்குத் தக்க தகுதியிடத்தும்; 140இன், நீக்கப்பொருட்டு; பகுதி - கூறுபாடு, ஆகுபெயர்; பகுதிகளைக் காத்தற்குப் பிரிவேனெனக் கூறிப் பிரிந்து பாணர் முதலியோர் புதிதிற் கூட்டிய பரத்தையரிடத்தே ஒழுகிய மெய் வேறுபாட்டொடு வந்தானைக் கண்டு அப்பகுதிகளைப் பரத்தை யராகக் கூறுவாளாயிற்று. அது, இணைபட நிவந்த என்னும் மருதக்கலி (72) யுள், 141கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும் யாமழப் பண்ணினாற் களிப்பிக்கும் பாணன்காட் டொன்றானோ பேணானென்றுடன்றவர் உகிர்செய்த வடுவினான் மேனாணின் தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த விதழினை; நாடிநின் றூதாடித் துறைச்செல்லா ளூரவ ராடைகொண் டொலிக்குநின் புலைத்திகாட் டென்றாளோ கூடியார்ப் புனலாடப் புணையாய மார்பினில் லூடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை; வெறிதுநின் புகழ்களை வேண்டாரி னெடுத்தேத்து மறிவுடை அந்தணன் அவளைக்காட் டென்றானோ களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல் குறிபெற்றார் குரற்கூந்தற் கோடுளர்ந்த துகளினை என்பவற்றார் பாணர் முதலியோர் வாயிலாயவாறு காண்க. 142ஏந்தெழின் மார்ப வெதிரல்ல நின்வாய்ச்சொற் பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை சாந்தழி வேரை சுவற்றாழ்ந்த கண்ணியை யாங்குச் சென்றீங்குவந் தீத்தந்தாய்; கேளினி ஏந்தி, எதிரிதழ் நீலம் பணைந்தன்ன கண்ணாய் குதிரை வழங்கிவரு வல்; அறிந்தேன் குதிரை தான் பால்பிரியாஐங்கூந்தல் பன்மயிர்க் கொய்சுவல் மேல்விரித்து யாத்த சிகழிகைச் செவ்வுளை நீல மணிக்கடிகை வல்லிசை யாப்பின்கீழ் ஞாலியன் மென்காதிற் புல்லிகைச் சாமரை மத்திகைக் கண்ணுறை யாகக் கவின்பெற்ற வித்தி யெருகாழ்நூலுத்தரியத் திண்பிடி நேர்மணி நேர்முக்காழ்ப் பல்பல கண்டிகைத் தார்மணி பூண்ட தமனிய மேகலை நூபுரப் புட்டி லடியொட மைத்தியாத்த வார்பொலங் கிண்கிணி யார்ப்ப வியற்றிநீ காதலித் தூர்ந்தநின் காமக் குதிரையை யாய்சுதை மாடத் தணிநிலா முற்றத்துள் னாதிக் கொளீஇ வசையினை யாகுவை வாதுவன் வாழியநீ; சேகா, கதிர்விரி வைகலிற் கைவாரூஉக் கொண்ட மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட் குதிரையோ வீறியது; கூருகிர் மாண்ட குளும்பி னதுவன்றே கோரமே வாழிகுதி ரை; வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக் குதிரை யுடலணி போலநின் மெய்க்கட் குதிரையோ கவ்வி யது; சீத்தை, பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே வியமமே வாழிகுதி ரை; மிக நன், றினியறிந்தே னின்றுநீ யூர்ந்த குதிரை பெருமணம் பண்ணி யறத்தினிற் கொண்ட பருமக் குதிரையோ வன்று; பெருமநின், ஏதில் பெரும்பாணன் தூதாட வாங்கேயோர் வாதத்தான் வந்த வளிக்குதிரை ஆதி உருவழிக்கும் அக்குதிரை யூரல்நீ ஊரில் பரத்தை பரியாக வாதுவனாய் என்று மற்றச்சார்த் திரிகுதிரை யேறிய செல். (கலி. 96) இதனுட் பாணன் தூதாட வாதத்தான் வந்த குதிரையென்ப தனான் அவன் கூட்டிய புதிய பரத்தையர் என்பதூஉம் அவன் பகுதியினின்று நீங்கியவாறுங் குதிரையோ வீறியதென்பது முதலியவற்றாற் கொடுமை நெஞ்சைச் சுடுகின்றவாறும் 143அதனை நீக்கிய பரத்தையரைக் குதிரையாகக் கூறித் தான் அதற்குத் தக்குநின்றவாறுங் காண்க. 144கடவுட்பாட்டு ஆங்கோர் பக்கமும் யானைப் பாட்டுக் காவற் பாங்கின் பக்க முமாம். கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி - அங்ஙனம் பகுதியி னீங்கிப் பரத்தையர்மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த ஒழுக்கத்தைத் தலைவி பொறுத்தலை வேண்டி; அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - தன் அடிமேல் வீழ்ந்து வணங்கிய தலைவனை 145அதனின்மீது துனிமிக்குக் கழறி; காதல் எங்கையர் காணின் நன்றென - நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இவை நன்றெனக் கொள்வரெனக் கூறி; மாதர் சான்ற வகையின் கண்ணும் - காதல் அமைந்து மாறிய வேறுபாட்டின் கண்ணும்: பொறாதாரைக் கொள்ளா ரென்பவாகலிற் 146கோடல் பொறுத்த லாயிற்று, காதலெங்கையர் மாதர் சான்ற என்பன வற்றான் துனிகூறினார். எனவே, யாங்கண்டதனாற் பயனின் றென்றார். உதாரணம்: நில்லாங்கு நில் என்னும் பூழ்ப்பாட்டி (கலி. 95) னுள், 147மெய்யைப் பொய்யென்று மயங்கிய கையொன் றறிகல்லாய் போறிகா ணீ; நல்லாய், பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தே னருளினி; அருளுகம் யாம்யாரே மெல்லா தெருள வளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்துநின் பாணனோ டாடி யளித்தி விடலைநீ நீத்தலி னோய்பெரி தேய்க்கு நடலைப்பட் டெல்லாநின் பூழ். இதனுள் அருளினி யென அடிமேல் வீழ்ந்தவாறும் அருளுகம் யாம் யார் எனக் காதல் அமைந்தவாறும் விளித்தளித்தி யென இப்பணிவை நின் பெண்டிர் கொள்வ ரெனவுங் கூறியவாறுங் காண்க. 148நினக்கே யன்றஃதெமக்குமா ரினிதே நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை வேண்டிய குறிப்பினையாகி யீண்டுநீ யருளா தாண்டுறை தல்லே. (ஐங்குறு. 46) இதுவும் அது. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் - பரத்தையர் கருதி அணிந்த நன்றாகிய அணி களையுடைய புதல்வனை மாயப் 149பரத்தைமையைக் குறித்த விடத்தும்: அவருள் துனியாலே வருந்திய பரத்தையர் தம் வருத்தத்தினை உணர்த்தியும் தலைநின்றொழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குக் கண்ணிய என்றார். பரத்தையர் சேரி சென்று அணியணிந்ததற்கு வெகுண்டு கூறலிற் பொய்யாகிய பரத்தை யென்றார். எனவே தலைவன் பரத்தமை கருதினானாயிற்று. உதாரணம்: 150உறுவளி தூக்கு முயர்சினை மாவி னறுவடி யாரிற் றவைபோல் அழியக் கரந்தியா னரக்கவுங் கைந்நில்லா வீங்கிச் சுரந்தவென் மென்முலைப் பால்பழு தாகநீ நல்வாயிற் போத்தந்த பொழுதினா னெல்லா கடவுட் கடிநகர் தோறு மிவனை வலங்கொளீஇ வாவெனச் சென்றாய் விலங்கினை யீர மிலாத விவன்றந்தை பெண்டிருள் யாரிற் றதவிர்ந்தனை கூறு; நீருள், அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ இவன்மன்ற யான்நோவ உள்ளங்கொண் டுள்ளா மகனல்லான் பெற்ற மகனென்று அகனகர் வாயில் வரையிறந்து போத்தந்து தாயர் தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் தத்தங் கலங்களுட்கையுறை என்றிவற் கொத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன்பெண்டிர் ஈத்தவை கொள்வானாம் இஃதொத்தன் சீத்தை செறுத்தக்கான் மன்ற பெரிது; சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை யெள்ளுபு நீதொட்ட மோதிரம் யாவோயாங் காண்கு; அவற்றுள், நாறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச் சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள் குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ் செறியாப் பரத்தை யிவன்றந்தை மார்பிற் பொறியொற்றிக் கொண்டாள்வ லென்பது தன்னை யறீஇய செய்த வினை; அன்னையோ விஃதொன்று, முந்தைய கண்டும் எழுகல்லா தென்முன்னர் வெந்தபுண் வேலெறிந் தற்றா விஃதொன்று தந்தை யிறைத்தொடீஇ மற்றிவன் றன்கைக்கட் டந்தா ரியாரெல்லாஅ விது; இஃதொன்று, என்னொத்துக் காண்க பிறரும் இவற் கென்னுந் தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை யிதுதொடுக கென்றவர் யார்; அஞ்சாதி; நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த பூவெழி லுண்க ணவளுந் தவறிலள் வேனிற் புனலன்ன நுந்தையை நோவார் யார் மேனின்று மெள்ளி யிதுவிவன் கைத்தந்தா டான்யாரோ வென்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடை யேன். (கலி. 84) தன்வயிற் 151சிறைப்பினும் - தலைவனின் தான் புதல்வற்குச் சிறந்தாளாகி அத்தலைவன் மாட்டும் அவன் காதலித்த பரத்தையர் மாட்டுஞ் செல்லாமற் புதல்வனைத் தன்பாற் சிறை செய்தற் கண்ணும்: உதாரணம்: 152புள்ளிமி ழகல்வயல் என்னும் மருத்தக்கலி (79) யுள், அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதால் றோய்ந்தாரை அறிகுவென் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவ ளல்லளோ; புல்லலெம் புதல்வனைப் புகலக னின்மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பின் பூணினாற் குறிகொண்டாள் புலக்குவ ளல்லளோ; கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானால் நண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ; எனவாங்கு, பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி யாங்கே யவர்வயிற் சென்றீ யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து. (கலி. 79) இது, தலைவனிடத்தினின்றும் புதல்வனைச் சிறைத்தது. ஞாலம் வறந்தீர என்னும் மருதக்கலி (82) யுள், 153அவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர் புலத்தகைப் புத்தேளில் புக்கான்அலைக்கொரு கோறா நினக்கவள் யாராகும் எல்லா வருந்தியா நோய்கூர நுந்தையை என்றும் பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங் கொண்டாங்கே தொடியு முகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பின் சிறுகண்ணு முட்காள் வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி யன்ன பிறவும் பெருமான் அவள்வயின் றுன்னுத லோம்பித் திறவதின் முன்னிநீ மையமில் லாதவ ரில்லொழிய வெம்போலக் கையா றுடையவ ரில்லல்லாற் செல்ல லமைந்த தினிநின் றொழில். இது, காதற்பரத்தையர்பாற் புதல்வன் செல்லாமற் சிறைத்தது. அவன்வயிற் பிரிப்பினும் - தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவனொடு சார்த்துதற் கண்ணும். என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம். உதாரணம்: மைபடுசென்னி என்னும் மருதக்கலி (86) யுள், 154மறைநின்று, தாமன்ற வந்தீத் தனர்; ஆயிழாய், தாவாத வெற்குத் தவறுண்டோ காவாதீங் கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங் கன்றி யதனைக் கடியவுங் கைந்நீவிக் குன்ற விறுவரை கோண்மா விவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தா னறனில்லா வன்பிலி பெற்ற மகன். என்புழி அறனில்லா அன்பிலி பெற்ற மகன் எனவும், நின்மகன் றாயாதல் புரைவா லெனவே (அகம். 16) என்புழி நின்மகன் எனவும் 155பிரித்தவாறு காண்க. இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்ணும் - இன்னாங்குப் பயக்குஞ் சூளுறவினைத் தலைவன் 156சூளுறுவலெனக் கூறு மிடத்தும்: தலைவன் வந்தகுற்றம் வழிகெட ஒழுகிக், களவிற் சூளுற வான் வந்த ஏதம் நீக்கி, இக்காலத்துக் கடவுளரையும் புதல்வனை யுஞ் சூளுறுதலின் இன்னாத சூள் என்றார். அது களவுபோலச் சூளுறுதலின் தொல்சூள் என்றார். உதாரணம்: ஒரூ உக் கொடியிய னல்லார் என்னும் மருதக்கலி (88) யுள், 157வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு: இனித் தேற்றேம்யாம், தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீயுறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு. எனத் தலைவி எம்மேலே இப் பொய்ச்சூளுன் வருங்கேடு வருமென மறுத்தவாறு காண்க. காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய 158தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் - நலம் பாராட்டிய காமக்கிழத்தியர் தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னான் நலம் பாராட்டப்படட இற்பரத்தையர் மேல் தீமையுறுவரென முடித்துக்கூறும் பொருளின் கண்ணும்: உதாரணம்: 159மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே தன்னொடு நிகரா வென்னொடு நிகரிப் பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலர்நீ யோதி யொண்ணுதல் பசப்பித் தோரே. (ஐங்குறு. 67) இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்ததாக வரைந்து கொண்ட பரத்தை தன்னோடு இளமைச் செவ்வி ஒவ்வா என்னையுந் தன்னோடொப்பித்துத் தன் பெரிய நலத்தாலே மாறுபடுமென்பவென அவள் நலத்தைப் பாராட்டியவாறும். நீ பசப்பித்தோர் வண்டு தாது உண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறுங் காண்க. அணிற்பல் லன்ன (குறுந்.49) என்னும் பாட்டுக் கற்பாகலின் இதன்பாற்படும். கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை - பரத்தையிற் பிரிவும் ஏனைப் பிரிவு களும் ஆகித் தலைவன்கண் நிகழுங் கொடுமை யொழுக்கத்தில் தோழி கூறுதற்கு உரியளென மேற்கூறுகின்றவற்றைக் கேட்டவழி; வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமை - எஞ்ஞான்றுங் குற்றமின்றி வருகின்ற பிறப்பு முதலிய சிறப்பிடத்துங் கற்பிடத்துங் திரிவு படாதபடி; காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் நிலையினும் - தோழி கூற்றினை வெகுளலும் மகிழ்தலும் அவளைப் பிரித்தலும் பின்னும் அவள் கூற்றினைக் கேட்டற்கு விரும்புதலுமாகிய நிலையின் கண்ணும்; ஆவயின் வரூஉம் நிலையினும் - அத் தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலுமாய் வரும் நிலையின் கண்ணும்; பல்வேறு நிலை யினும் - இக்கூறியவாறன்றிப் பிறவாற்றாய்ப் பலவேறுபட்டு வரும் நிலையின்கண்ணும்: அவள்வயி னென்னாது 160ஆவயின் என்றார், தோழியும் பொருளென்பது பற்றி. 161இதுமற் றெவனோ தோழி துனியிடை யின்ன ரென்னு மின்னாக் கிளவி யிருமருப் பெருமை யீன்றணிக் காரா னுழவன் யாத்த குழவியி னகலாது பாற்பெய் பைம்பயி ராரு மூரன் றிருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே. (குறுந். 181) இது, தோழி இன்னாக்கிளவி கூறியதனை இதுபொழுது கூறிப் பயந்த தென்னெனக் காய்ந்து கூறினாள். 162பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட் டுடும்படைந் தன்ன நெடும்பொரி விளவி னாட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச் சேறு நாமெனச் சொல்லச் சேயிழை நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே செயல்படு மனத்தர் செய்பொருட் ககல்வ ராடவ ரதுவதன் பண்பே. (நற். 24) இது, செய்தனையெனத் தலைவி உவந்து கூறியது. 163வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே. (குறுந். 21) இது, கானங் காரெனக் கூறவும் 164வாராரென்றவழி அது கூறினும் யானோ தேறேனெனப் பிரிநிலை ஓகாரத்தாற் பிரிந்தது. 165யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பி னுரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமயத் திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப் பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் தயங்க விருந்து புலம்பக் கூஉ மருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. (குறுந். 154) இது, வல்லுவோர் என்னும் பெயர்கூறித் தோழி கொடுமை கூறியவழி, அவளையே பிரிதல்வன்மை யாங்கறிந்தன ரெனத் தலைவி வினவுதலின் அது பின்னுங் கேட்டற்கு அவாவியதாம். இனித் தோழியிடத்துத் தலைவனைக் காய்தல் முதலியன வருமாறு: 166நன்னலந் தொலைய நலமிகச் சாஅ யின்னுயிர் கழியினு முரைய லவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ தோழி புலவிய தெவனோ வன்பிலங் கடையே. (குறுந். 93) இது, காய்தல் 167வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய வோதமொடு பெயருந் துறைவற்குப் பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே. (ஐங்குறு. 155) இது, பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு உரிய காலங்கழிய ஒழுகா நின்றாயென நெருங்கிய தோழிக்கு யான் களவின் கண் மகப்பெற்றேனெனக் காய்ந்து கூறியது. 168கொடிப்பூ வேழந் தீண்டி யயல வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கு மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சா யற்றே. (ஐங்குறு. 14) இஃது, உவத்தல். 169புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகிற் றோன்று மூரன் புதுவோர் மேவல னாகலின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.. (ஐங்குறு. 17) இது, பிரித்தல், 170நாமவர் திருந்தெயி றுண்ணவு மவர்நம தேந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவுங் கண்சுடு பரத்தையின் வந்தோர்க் கண்டு மூடுதல் பெருந்திரு வுறுகெனப் பீடுபெற லருமையின்முயங்கி யோனே. இது, பெட்டது. நீரார் செறுவின் என்னும் மருதக்கலி (75) யும் அது. இனிப் பல்வேறு நிலை யாவன, தோழி பிரிவுணர்த்திய வழிச் செலவழுங்கக் கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்துழி வழியருமை பிறர் கூறக் கேட்டுக் கூறுவனவுந், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே கூறுவனவுந், தூதுவிடக் கருதிக் கூறுவனவும், நெஞ்சினையும் பாணனையும் தூதுவிட்டுக் கூறுவனவும், வழியிடத்துப் புட்களை நொந்து கூறுவனவும், பிரிவிடையாற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலெனக் கூறுவனவும், அவன் வரவு தோழி கூறியவழி விரும்பிக் கூறுவனவுங் கூறிய பருவத்தின் வாராது பின்னர் வந்தவனொடு கூடியிருந்து முன்னர்த் தன்னை வருத்திய சூழலை மாலையிற் கேட்டுத் தோழிக்குக் கூறுவனவுந், தலைவன் தவறில னெனக் கூறுவனவும்,புதல்வனை நீங்காதொழுகிய தலைவன் நீங்கியவழிக் கூறுவனவுங், காமஞ்சாலா விளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேனெனக் கூறுவனவும், இவற்றின் வேறுபட வருவன பிறவுமாம். 171அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயி னுரவோ ருரவோ ராக மடவ மாக மடந்தை நாமே. (குறுந். 20) இது, செலவழுங்கக் கூறியது. 172வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் மலையுடை யருஞ்சுர மென்பநம் முலையிடை முனிநர் சென்ற வாறே. (குறுந். 39) 173எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்குங் கவலைத் தென்பவவர் தேர்சென்ற வாறே யதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கலுழுறுமிவ் வழுங்க லூரே. (குறுந்.12) இவை, வழியருமை கேட்டவழிக் கூறியன. 174நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென் னொண்ணுத னீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும். (கலி. 4) இது, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறியது கொண்டு கூறிற்று. 175பலர்புகழ் சிறப்பினுங் குரிசி லுள்ளிச் செலவுநீ நயந்தனை யாயின் மன்ற இன்னா வரும்பட ரெம்வயிற் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாண்வெம் மறவா தீமே. (ஐங்குறு. 473) இது, தூதுவிடக் கருதிக் கூறியது. 176சூழ்கம் வம்மோ தோழிபாழ் பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட் டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்ச மீட்டிய பொருளே. (ஐங்குறு. 317) இது, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது. 177மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதழ்பரி நெடுந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவ லென்னு நன்றா லம்ம பாணன தறிவே. (ஐங்குறு. 474) இது, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது. 178புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியின் தோன்று நாடன் றீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் நயந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாமணந் தனையமென விடுகந் தூதே. (குறுந். 106) இது, தூதுகண்டு கூறியது. 179ஆம்பற் பூவின் சாம்ப லன்ன கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ முன்றி லுணங்கன் மாந்தி மன்றத் தெருவின் நுண்டாது குடைவன ஆடி இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பு மின்றுகொ றோழியவர் சென்ற நாட்டே. (குறுந். 46) இது, சென்ற நாட்டு இவை இன்று கொலென்றது. 180வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழிநீர நீலப் பைம்போதுளரிப் புதல பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிவரும் வாடையொ டென்னா யினள்கொ லென்னா தோரே. (குறுந். 110) இது, பருவங்கண் டழிந்து கூறியது. 181உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ நேர்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினந் தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளத் தீங்குர லகவக் கேட்டும் நீங்கிய ஏதிலாள ரிவண்வரிற் போதிற் பொம்ம லோதியும் புனைய லெம்முந் தொடாஅ லென்குவ மன்னே. (குறுந். 191) இது, 182காய்ந்து கூறியது. 183முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான்வந் தன்றே மெழு கான் றுதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு மாலை நனிவிருந் தயர்மார் தேர்வரு மென்முன் முரைவா ராதே. (குறுந். 155) இது, பொழுதோ தான் வந்தன்றெனப் பொழுதுகண்டு மகிழ்ந்து கூறினாள். 184அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்படச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற பல்லித ழுண்க ணழப்பிரிந் தோரே. (ஐங்குறு. 334) இது, வன்புறை எதிரழிந்து கூறியது. 185அம்ம வாழிதோழி யாவதும் வல்லா கொல்லோதாமே யவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு டியாஅந் துணைபுணர்ந் துறைதும் யாங்குப் பிரிந்துறைதி யென்னு மாறே. (ஐங்குறு. 333) இது, புள்ளை நொந்து கூறியது. 186காதல ருழைய ராகப் பெரிதுவந்து சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணிலாடு முன்றிற் புலப்பில் போலப் புல்லென் றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே. (குறுந். 41) இஃது, ஆற்றுவலெனக் கூறியது. 187நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ வொன்று தெளிய நசையின மொழிமோ வெண்கோட் டியானை சோனைபடியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. (குறுந். 75) இது, தலைவன் வரவை விரும்பிக் கூறியது. 188இம்மையாற் செய்ததை யிம்மையே யாம்போலு மும்மையா மென்பவ ரோரார்கா - ணம்மை யெளிய ரெனநினைந்த வின்குழலா ரேடி தெளியச் சுடப்பட்ட வாறு. (திணை. நூற். 123) இது, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறியது. 189பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந்துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்குந் துறைவனொ டியாத்தேம் யாத்த ன்று நட்பே யவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. (குறுந். 313) இது, தலைவன் தவறில னென்று கூறியது. 190உடலினே னல்லேன் பொய்யா துரைமோ யாரவள் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின் வளமனை வருதலும் வௌவி யோளே. (ஐங்குறு. 66) இது, புதல்வனை நீங்கியவழிக் கூறியது. 191கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே பலரொடு பெருந்துறை மலரொடு வந்த தண்புனல் வண்ட லுய்த்தென வுண்கண் சிவப்ப வழுதுநின் றோளே. (ஐங்குறு. 69) இது, காமஞ்சாலா விளமையோளைக் களவின் மணந்தமை அறிந்தே னென்றது. வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ - வாயில்தன் ஏதுவாகத் தலைவிக்கு வருங் கூற்றுவகையோடு கூட்டி: வாயில்களாவார் செய்யுளியலுட் (512) கூறும் பாணன் முதலியோர். வகை யென்றதனான் ஆற்றாமையும் புதல்வனும் ஆடைகழுவு வாளும் பிறவும் வாயிலாதல் கொள்க. 192கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின் கூம்புநிலை யன்ன முகைய வாம்பல் தூங்குநீர்க் குட்டத்துத் துடுமென வீழுந் தண்டுறை யூரன்தண்டாப் பரத்தமை புலவா யென்றி தோழி புலவேன் பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந் துடைக்குந் தொன்றுமுதிர் வேளிர் குன்றூ ரன்னவென் நன்மனை நனிவிருந் தயருங் கைதூ வின்மையி னெய்தா மாறே. (நற்றிணை. 280) இந் நற்றிணை, தலைவனொடு புலவாமை நினக்கு இயல்போ வென்ற தோழிக்கு விருந்தாற் கைதூவாமையின் அவனை எதிர்ப்படப் பெற்றிலே னல்லது புலவேனோ எ-று. 193அன்னா யிவனோ ரிளமா ணாக்கன் றன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ விரந்தூ ணிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே. (குறுந். 33) இது, பாணன் சொல்வன்மைக்குத் தோற்று வாயில் நேர்ந்த தலைவி தோழிக்கு உரைத்தது. 194காண்மதி பாணநீ யுரைத்தற் குரியை துறைகெழு கொண்கன் பிரிந்தென விறைகே ழெல்வளை நீங்கிய நிலையே. (ஐங்குறு. 140) இது, பரத்தையிற் பிரிந்துழி இவன் நின் வார்த்தையே கேட்ப னென்பது தோன்றப் பாணற்குத் தலைவி கூறியது. 195ஆடியல் விழவி னழுங்கன் மூதூ ருடையோர் பான்மையிற் பெருங்கை தூவா வறனில் புலைத்தி யெல்லி தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வரவோடிப் பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ணாயம் ஊக்க வூங்காள் அழுதனள் பெயரு மஞ்சி லோதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் ஊச லுறுதொழிற் பூசற் கூட்டா நயனின் மாக்களொடு குழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே. (நற்றிணை. 90) இது, பாணனைக் குறித்துக் கூறியது. 196நெய்யுங் குய்யு மாடி மெய்யொடு மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறுநாறும்மே வாலிழை மகளிர் சேரித் தோன்றுந் தேரோற் கொத்தனெ மல்லே மதனாற் பொன்புரை நரம்பி னின்குரற் சீறியாழ் எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல் *புரையோ ரன்ன புரையு நட்பி னிளையோர் கூம்புகை மருள வோராங் கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூரனைப் பாடுனைப் பாடல் கூடாது நீடுநிலைப் புரவியும் பூணிலை முனிகுவ விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே. (நற்றிணை. 380) இது, பாணனுக்கு வாயின் மறுத்தது. 197புல்லேன் மகிழ்ந புலத்தலு மிலனே கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை யள்ளலங் கழனி யுள்வாயோடிப் பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவி னணைமுதற் புரளும் வாணன் சிறுகுடி யன்னவென் கோனே ரெல்வளை நெகிழ்த்த நும்மே. (நற்றிணை. 340) இஃது, ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தலைவி கூறியது. 198வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலை யிருந்து மாலைச் சேக்குந் தண்கடற் சேர்ப்பனொடு வாரான் றான்வந் தனனெங் காத லோனே. (ஐங்குறு. 157) இது, வாயில் வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது. கூன்முண் முள்ளி என்னும் (26) அகப்பாட்டு ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித் தடையின்றிக் கூறியவாறு. மாறாப் புண்போன் மாற்றச் சீற்றங் கனற்றப் 199பின்னும் புலவி கூர்ந்து தலைவன் கேட்ப முன்னிலைப் புறமொழியாக யான் நோமென்னவும் ஒல்லாரென வலிதிற் கூறியவாறு காண்க. பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி (கலி. 79:20) எனப் புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றவாறு காண்க. 200நாடிநின் றூதாடித் துறைச்செல்லா ளுரவ ராடைகொண் டொலிக்குநின் புலத்திகாட் டென்றாளோ கூடியார் புனலாடப் புணையாய மார்பினி லூடியா ரெறிதர வொளிவிட்ட வரக்கினை. (கலி. 72: 13 - 6) இஃது, ஆடை கழுவுவாளை வாயிலென்றது. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனாற் கொள்க. கிழவோள் செப்பல் கிழவது என்ப - இப்பத்தொன்பதுங் கிழவோளுக்கு உரிமையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர், என்றவாறு. முன்னர் நின்ற ஏழனுருபுகளைத் தொகுத்து இன்னதன் கண்ணும் இன்னதன்கண்ணுந் தலைவி செப்புதலை வாயிலின் வகையோடே கூட்டிக் கிழவோள் செப்பல் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ என மாறுக. (6) (தலைவி கூற்றின்கட்படுவதோ ரிலக்கணமுணர்த்தல்) 148. புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந் திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி யன்புறு தக்க கிளத்த றானே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும். இது, தலைவி கூற்றின்கட் படுவதோர் இலக்கணங் கூறு கின்றது. (இ - ள்.) புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து - களவுக் காலத்துப் புணர்ந்து உடன் போகிய தலைவி கற்புக் காலத்து இல்லின்கண் இருந்து; இடைச்சுரத்து இறைச்சியும் அன்புறுதக்க வினையுஞ் சுட்டிக் கிளத்தல் தானே - தான் போகிய காலத்துக் காட்டின்கட் கண்ட கருப் பொருள்களையுந் தலைவன் தன்மேல் அன்பு செய்தற்குத்தக்க கருப் பொருளின் தொழில்களையும் கருதிக் கூறுதல்தானே; கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகும் - தலைவன் எடுத்துக்கொண்ட காரியத்திற்கு முடித்தலாற்றான்கொலென்று அஞ்சும் அச்சமாம் என்றவாறு. எனவே, அருத்தாபத்தியாற் புணர்ந்து உடன் போகாத தலைவி மனைக்கணிருந்து 201தலைவன் கூறக்கேட்டு அக்கருப் பொருள்கள் தம்மேல் அன்புறுதக்க வினைகளைக் கூறுதல் தலைவன் செய்வினைக்கு அச்சமாகாது வருவரெனத் துணிந்து கூறுதலாமென்றாராயிற்று. 202கான யானை தோனயந் துண்ட பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை யலங்க லுலவை யேறி யொய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரு மத்த நண்ணிய அங்குடிச் சீறூர்ச் சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லோ மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே. (குறுந். 79) புலம்புதரு குரலவாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் வருத்தங் கண்டு வினைமுடியாமல் வருவரோவென அஞ்சிய வாறு காண்க. அரிதாய வறனெய்தி என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் 203அன்புறுதக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனை நலம் வாட்டுநர் அல்லரென வரவு கருதிக் கூறியவாறு காண்க. 204இதனுள் ஆற்றுவிக்குந் தோழி வருவர் கொல்லென ஐயுற்றுக் கூறலின்மையின் தோழி கூற்றன்மையும் உணர்க. புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன (கலி. 3) என்றாற் போல்வன தலைவி கூற்றாய் வருவன உளவாயின் இதன் கண் அடக்குக. (7) (தோழி முதலிய வாயில்கட்கு எய்தாததெய்துவித்தல்) 149. தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினு மாவயி னிகழு மென்மனார் புலவர். இது, தோழி முதலிய வாயில்கட்கு எய்தாத தெய்துவித்தது. (இ - ள்.) தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும் - தலை வனது செலவுக் குறிப்பு அறிந்து அவனைச் செலவழுங்கு வித்தற்குத் தோழி யுள்ளிட்ட வாயில்களைத் தலைவி போக விட்ட அக்காலத்து அவர் மேலன போலக் கூறும் கூற்றுக்களும்; ஆவயின் நிகழும் என்மனார் புலவர் - தலைவி அஞ்சினாற் போல அவ்வச்சத்தின் கண்ணே நிகழு மென்று கூறுவர் புலவர் என்றவாறு. அறனின்றி யயறூற்றும் (கலி. 3) என்னும் பாலைக் கலியுள் இறைச்சியும் வினையுமாகிய பூ முதலியன கூறிய வாற்றான் தலைவிக் கிரங்கி நீர் செலவழுங்குமெனக் கூறுவாள் யாமிரப்பவு மெமகொள்ளா யாயினை எனப் பிற வாயில் களையுங் கூட்டி 205உரைத்தவாறு காண்க. (8) (கற்பின்கண் தோழிக்குரிய கூற்றுக்கள் நிகழுமிடமிவையெனல்) 150. பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு மற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினு மடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி யிழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் 10 வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியுஞ் சிறந்த புதல்வனை நேராது புலம்பினு மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ் சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வயி னுறுதகை யில்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள்பா னின்று கெடுத்தற் கண்ணு 20 முணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன்பா னின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணு மருமைக் காலத்துப் பெருமை காட்டிய வெண்மைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்னின்று பெயர்ப்பினும் பிரியுங் காலை யெதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் 32 தோழிக் குரிய வென்மனார் புலவர். இது, முறையானே தோழிக்குரிய கூற்றுக் கூறுகின்றது. (இ - ள்.) பெறற்கு அரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் பெறற்கு அரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த - தலைவனுந் தலைவியுந் தோழியும் பெறுதற்கரிதென நினைத்த பெரிய பொருளாகிய வதுவை வேள்விச் சடங்கான் முடிந்தபின்பு தோன்றிய; தெறற்கு அரும் மரபிற் சிறப்பின் கண்ணும் - தனது தெறுதற்கரிய மரபுகாரணத்தான் தலைவன் தன்னைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும்; தோழி கூற்று நிகழும். தலைவியையுந் தலைவனையும் வழிபாடாற்றுதலின் தெறற்கரு மரபின் என்றார். தெறுதல் - அழன்று நோக்குதல். சிறப்பு, இவளை நீ ஆற்றுவித்தலின் எம் உயிர் தாங்கினேம் என்றாற் போல்வன. அவை எம்பெருமானே அரிதாற்றிய தல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானும் நின் அருளான் இவள் ஆற்றியதல்லது யான் ஆற்றுவித்தது உண்டோ வென்றானுங் கூறுவனவாம். 206அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலரத் தூம்புடைத் திரடா ளாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவ ளிடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையின் தோன்றி யாம்நுமக் கரியே மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே. (குறுந். 178) இதனுண் முலையிடைக் கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீரென யான் நோவா நின்றேன். இங்ஙனம் அருமை செய்தலான் தேற்றுதற்கு உரியோ னாகிய என்னைச் சிறப்பித்துக் கூறல் ஆகாது என்றவாறு காண்க. 207பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப் புன்கா னாவற் பொதிப்புற விருங்கனி கிளைசெத்து மொய்த்ததும்பி பழஞ்செத்துப் பல்கா லலவன் கொண்டகோட் கூர்ந்து கொள்ளா நரம்பி னிமிரும் பூச லிரைதேர் நாரையெய்திய விடுக்குந் துறைகெழு மாந்தை யன்ன விவள்நலம் பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய வுழையிற் போகாதளிப்பினுஞ் சிறிய நெகிழ்ந்த கவினலங் கொல்லோ மகிழ்ந்தோர் கட்கழி செருக்கத் தன்ன காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே. (நற்றிணை. 35) இதனுள் தலைவி கனியாகவும், தும்பி தோழியாகவும் அலவன் தன்மேல் தவறிழைக்குந் தமராகவுந் தலைவன் இரைதேர் நாரையாகவும் உள்ளுறை யுவமங் கொள்வுழித் தலைவி பொருட்டு யாய்க்கு அஞ்சி யொழுகினேனை நீ காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத் தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி கூறியவாறு காண்க. பண்டும் இற்றே என்றது பண்டையில் மிகவும் வருந்தினாளென்றாள். இவள் கண் நீண்டு பசந்தது, களவின்கண் நீங்காது அளியாநிற்கவுஞ் சிறிது கெட்ட அழகின் மிகுதியோ, கள்ளுண்டார்க்குக் கள்அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு போங் காம வேறு பாடோ, அவ்விரண்டும் அல்லவே, இஃது ஓர் அமளிக்கண் துயிலப்பெற்றும் வேதவிதி பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்றோ? இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறென்னை என்றாளென்க. அற்றம் அழிவு உரைப்பினும் - களவுக்காலத்துட்பட்ட வருத்தம் நீங்கினமை கூறினும்: 208எக்கர் ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை வீயினிது கமழுந் துறைவனை நீயினிது முயங்குமதி காத லோயே. (ஐங்குறு. 148) 209எரிமருள் வேங்கை யிருந்த தோகை யிழையணிமடந்தையிற் றோன்று நாட வினிதுசெய் தனையா னுந்தை வாழியர் நன்மனை வதுவை யயரவிவள் பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே. (ஐங்குறு. 294) 210அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் - களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின் அப்பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும்: உதாரணம்: 211நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுவது தீர்க்க வெம் மககெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே. கிழவோற் சுட்டிய தெய்வக்கடம் என்று பாடம் ஓதி 212வாழி யாதன் வாழி யவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக வெனவேட் டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை யூரன் வரைக வெந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே. (ஐங்குறு. 6) என்று உதாரணம் காட்டுவாருமுளர். சீருடைப் 213பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் - தலைமையுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்த காலத்துத் தலைவன் அறஞ்செயற்கும் பொருள் செயற்கும் இசையுங் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்குந் தலைவியை மறந்து ஒழுகினும்: உதாரணம்: 214கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறுந் தேர்வண் கோமான் தேனூ ரன்னவிவ ணல்லணி நயந்துநீ துறத்தலிற் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே (ஐங்குறு. 55) இதனுள், துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள் அற முதலியவற்றைக் கருதுதலின். 215அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும் - புறத்து ஒழுக்கத்தை உடையனாகிய தலைவன்மாட்டு மனம் வேறுபட்ட தலைவி யைப் புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையரென அவ்வேறுபாடு நீங்க நெருங்கிக் கூறுதலையுடைத்தாகிய பொருளின்கண்ணும்: உதாரணம்: 216செந்நெற் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லு மூரற் கெல்வளை ஞெகிழச் சாஅ யல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய். (ஐங்குறு. 27) இதன் உள்ளுறையாற் பொருளுணர்க. பிழைத்து வந்த இருந்த கிழவனை நெருங்கி 217இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும் - பரத்தையர் மனைக்கண் தங்கி வந்து அகனகர் புகுதாது புறத்திருந்த தலைவனை மிகக் கழறிச், சில மொழிகளைக் கூறி, இதனானே தலைவி மனத்தின் கண் ஊடல்நீங்குந் தன்மை உளதாக்கிக் கூட்டும் இடத்தும்: உதாரணம்: 218நகைநன் றமம் தானே யிறைமிசை மாரிச் சுதையி னீர்ம்புறத் தன்ன கூரற் கொக்கின் குறும்பறைச் சேவல் வெள்ளி வெண்டோ டன்ன கயல் குறித்துக் கள்ளா ருவகைக் கலிமகி ழுழவர் காஞ்சியங் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை மென்கழைக் கரும்பி னன்பல மிடைந்து பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி வருத்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை மீதழி கடுநீர் நோக்கிப் பைப்பயப் பார்வ லிருக்கும் பயங்கே ழூர யாமது பேணின்றோ விலமே நீநின் பண்ணமை நல்யாழ்ப் பாணனொடு விசிபிணி மண்ணார் முழவின் கண்ணதிர்ந் தியம்ப மகிழ்துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி யெம்மனை வாரா யாகி முன்னா ணும்மனைச் சேர்ந்த ஞான்றை யம்மனைக் குறுந்தொடி மடந்தை யுவந்தன ணெடுந்தே ரிழையணி யானைப் பழையன் மாறன் மாடமலி மறுகிற் கூட லாங்கண் வெள்ளத் தானையொடு வேறுபுலத் திறுத்த கிள்ளி வளவ னல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வௌவி யேதின் மன்ன ரூர்கொளக் கோதை மார்ப னுவகையிற் பெரிதே (அகம். 346) 219கேட்டிசின் வாழியோ மகிழ்ந வாற்றுற மைய னெஞ்சிற் கெவ்வந் தீர நினக்குமருந் தாகிய யானினி யிவட்குமருந் தன்மை நோமெ னெஞ்சே (ஐங்குறு. 59) வணங்கியன் மொழியான் வணங்கற்கண்ணும்- தாழும் இயல்பினையுடைய சொற்களால் தோழி தாழ்ந்து நிற்கும் நிலைமைக்கண்ணும்: உதாரணம்: 220உண்டுறைப் பொய்கை வராஅ லினமிரியுந் தண்டுறை யூர தகுவகொ - லொண்டொடியைப் பாராய் மனைத்துறைந் தச்சேரிச் செல்வதனை யூராண்மை யாக்கிக் கொளல். (ஐந். எழு. 54) என வரும். 221பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயி னாம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன விவணலம் புலம்பப் பிரிய வனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே.. (ஐங்குறு. 57) இதுவும் அதன்பாற் படும். புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தை யரிடத்தே உண்டாம் விளையாட்டினைத் தலைவன் பொருந்திய மன மகிழ்ச்சிக் கண்ணும்: விளையாட்டாவது: யாறுங் குளனுங் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலாம். 222பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி யாம்பன் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந் தரில்படு வள்ளை யாய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறடு கதச்சேப் போல மதமிக்கு நாட்கய முழக்கும் பூக்கே ழூர வருபுனல் வையை வார்மண லகன்றுறைத் திருமரு தோங்கிய விரிமலர்க் காவி னறும்பல் கூந்தற் குறந்தொடி மடந்தையொடு வதுவை யயர்ந்தனை யென்ப வலரே கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழிய னாலங் கானத் தகன்றலை சிவப்பச் சேரல் செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் லியானைப் பொலம்பூ ணெழினி நாரரி நறவி னெருமை யூரன் தேங்கம ழகலத்துப் புலர்ந்த சாந்தி னிருங்கோ வேண்மா னியறேர்ப் பொருநனென் றெழுவர் நல்வல மடங்க வொருபகன் முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை வென்றிகொள் வீர ரார்ப்பினும் பெரிதே. (அகம். 36) இதனுள் கொள்வா ரார்ப்பினும் பெரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க. சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் - யாரினும் சிறந்த புதல்வனை வாயிலாகக் கொண்டு சென்றுழி அவற்குந் தலைவி வாயில் நேராமையான்தலைவன் வருந்தினும்: உதாரணம்: 223பொன்னொடு குயின்ற பன்மணித் தாலித் தன்மார்பு நனைப் பதன்றலையு மிஃதோ மணித்தகைச் செவ்வாய் மழலையங் கிளவி புலர்த்தகைச் சாந்தம் புலர்தொறு நனைப்பக் காணா யாகலோ கொடிதே கடிமனைச் சேணிகந் தொதுங்கு மாணிழை யரிவை நீயிவ ணேரா வாயிற்கு நாணுந் தந்தையொடு வருவோன் போல மைந்தனொடு புகுந்த மகிழ்நன் மார்பே. மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும் - இவள் இழந்த மாட்சிமைப்பட்ட நலத்தைத் தந்து இகப்பினும் இகப்பாயெனத் தலைவனை வேறு படுத்தற்கண்ணும்: உதாரணம்: 224யாரை யெலுவ யாரே நீயமெக் கியாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பின் கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன வோங்கற் புணரி பாய்ந்தாடு மகளி ரணைந்திடு பல்பூ மரீஇ யார்ந்த வாபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மாந்தை யன்னவெம் வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே. (நற்றிணை. 395) என வரும். 225நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து. (ஐந். எழு. 66) இதுவும் அதன் பாற்படும். பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும் - பரத்தை தலைவியைப் பேணாது ஒழுகிய ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின் கண்ணும்: தலைவற்குத் தோழி கூற்று நிகழ்த்தும். உதாரணம்: 226பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து வாளை நாளிரை தேரு மூர நாணினென் பெரும யானே பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி யெதிர்தலைக் கொண்ட வாரியப் பொருந னிறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க் கணைய னாணியாங்கு மறையினள் மெல்ல வந்து நல்ல கூறி மையீ ரோதி மடவோ யானுநின் சேரி யேனே யயலி லாட்டியே னுங்கை யாகுவெ னினக்கெனத் தன்கைத் தொடு மணி மெல்விர றண்ணெனத் தைவர நுதலுங்கூந்தலு நீவிப் பகல்வந்து பெயர்ந்த வாறுதற் கண்டே. (அகம். 386) இதனுள், யான் நினக்குத் தோழியாவேனெனப் பரத்தை நீவிய 227பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணியது கண்டு தான் நாணினேனென்று தலைவற்குத் தோழி கூறியவாறு காண்க. இன்னுந் தலைவனது பேணா ஒழுக்கத்திற்குத் தலைவி நாணிய பொருளின்கண்ணுமெனவுங் கூறுக. 228யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பொய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்த லினமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு ணாணிக் கரப்பா டும்மே. (குறுந். 9) என வரும். இவை இரண்டும் பொருள். சூள் நயத் திறத்தாற் சோர்வு கண்டு அழியினும் நயத்திறத் தாற் சூள் சோர்வுகண்டு அழியினும் - கூடுதல் வேட்கைக் கூறு பாட்டான் தான் சூளுறக்கருதிய சூளுறவினது பொய்ம்மை யைக் கருதித் தலைவி வருந்தினும்: தோழிக்குக் கூற்று நிகழும். உதாரணம்: 229பகல்கொள் விளக்கோ டிராநா ளறியா வென்சேற் சோழ ராமூ ரன்னவிவள் ணலம்பெறு சுடர்நுத றேம்ப லெவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே. (ஐங்குறு. 56) இதனுள் இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் லெனவே சோர்வுகண்டு அழிந்தாளென்பது உணர்ந்தும் இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தருமெனத் தோழி தலை வனை நோக்கிக் கூறியவாறு காண்க. கோடுற நிவந்த (அகம். 266) என்னும் மணிமிடை பவளத்தைத் தோழி கூற்றாகக் காட்டுவாரும் உளர். பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பினும்; பெரியோர் பெறுதகை இல்லாக் கிளந்து - நன்மக்கள் பெறுந்தகைமை இல்லறமாயிருக்கு மென்றுஞ் சொல்லி; பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பிழைப்பினும் - நன்மக்கள் ஒழுகும் ஒழுக்கம் பெரிதாயிருக்கு மென்றுஞ் சொல்லித் 230தான் தலைவனை வழிபாடு தப்பினும்: தோழிக்குக் கூற்று நிகழும். பெரியோரையுங் கிளந்தென்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக. உதாரணம்: 231வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயி னுடங்க மீன்சினை யன்ன வெண்மணற் குவைஇக் காஞ்சி நீழற் றமர்வளம் பாடி யூர்க்குறு மகளிர் குறுவழி விறந்த வராஅ லருந்திய சிறுசிரன் மருதின் றாழ்சினை யுறங்கும் தண்டுறை யூர விழையா வுள்ளம் விழைவ தாயினு மென்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வாழமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்த லனைய பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்த் தேருங் காலை நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோவிவ் வுலகத் தானே. (அகம். 286) இதனுள் அறன் என்றது இல்லறத்தை; தற்றகவுடைமை நோக்கி யென்றது தன்னான் அவ்வறனும் பொருளுந் தகுதிப் பாடுடையவாந் தன்மையைநோக்கி என்றவாறாம்; முன்னிய தென்றது புறத்தொழுக்கத்தை; பெரியோரொழுக்கமனைய வென்றது பெரியோர் ஒழுக்கம் பெரிய வென்றவாறு. இது, முன்னர் நிகழ்ந்த பொய்ச்சூள்பற்றி நும்மனோர் மாட்டும் இன்ன பொய்ச்சூள் பிறக்குமாயின் இவ்வுலகத்து மெய்ச்சூள் இனி இன்றாம். அதனாற் பெரியோரைத் தமது ஒழுக்கத்தைத் தேருங்காலை அரியவாயிந்தன வெனத் தலைவனை நோக்கித் தோழி கூறலின் அவனை வழிபாடு தப்பினாளாயிற்று. உள்ளுறையுவமம் இதற்கு ஏற்குமா றுணர்க. அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுண் மூழ்கிய கிழவோள் பால் நின்று கெடுத்தற்கண்ணும் - தலைவன் அங்ஙனம் பிறழ்ந்த இடத்து அவன் சென்று சேருந் தகைமை இல்லாமைக்குக் காரணமாகிய புலவியின்கண் அழுந்திய தலைவிபக்கத்தாளாய் நின்று அவள் புலவியைத் தீர்த்தற் கண்ணும்: உதாரணம்: 232மானோக்கி நீயழ நீத்தவ னானாது நாணில னாயி னலிதந் தவன்வயி னூடுத லென்னோ வினி. (கலி. 87: 11-3) 233உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல். (குறள். 1302) 234காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர் மரீஇய சென்ற மல்ல லூர னெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் றாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. (குறுந். 45) உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும் உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின் - தலைவன் தெளிவிக்கப்படுந் தன்மைக் கணில்லாத ஊடல் மிகுத்தோளிடத்து: உணர்ப்புப் புணர்ப்புப் போல் நின்றது. உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று - ஊடல் தீர்த்தலை விரும்பிய தலைவன் வயத்தாளாய் நின்று; தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும் - தான் தவியைக் கழறி அவள் சற்றும் போந்தன்மை உண்டாக்கிய தகுதிக்கண்ணும்: உதாரணம்: 235துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை யரிமல ராம்பன; மேய்ந்த நெறிமருப் பீர்ந்த ணெருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்குசேற் றள்ளற் றுஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து பரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்செறி மள்ளரிற் புகுதரு மூரன் றேர்தர வந்த தெரியிழை ஞெகிழ்தோ ளூர்கொள் கல்லா மகளிர்த் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீ புலத்த லோம்புமதி மனைகெழு மடந்தை யதுபுலந் துறைதல் வல்லி யோரே செய்யோ ணீங்கச் சிலபதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்பா வைகுந ராகுத லறிந்து தறியா ரம்மவஃ துடலு மோரே. (அகம். 316) இது, தோழி தலைவியை வெகுண்டு ஆக்கியவாறு காண்க. 236அருமைக்காலத்துப் பெருமை காட்டிய எண்மை காலத்து இரக்கதானும் எண்மைக்காலத்து - தாம் எளியராகிய கற்புக்காலத்திலே; அருமைக் காலத்துப் பெருமை காட்டிய இரக்கத்தானும் - களவுக்காலத்துத் தமது பெருமையை உணர்த்திய வருத்தத்தின் கண்ணும்: உதாரணம்: 237வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனி ரினியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கட் டண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றனி ரைய வற்றா லன்பின் பாலே. (குறுந். 196) பாணர் கூத்தர் விறலியர் என்று - பாணருங் கூத்தரும் விறலியரு மென்று சொல்லுகின்ற இம் மூவரும்; பேணிச் சொல்லிய குறைவினை எதிரும் - விரும்பிக்கூறிய குறையுறும் வினைக்கு எதிராகவும்: கூற்று நிகழும். எதிரு மென்றது அவர் வாயில்வேண்டிய வழித் தோழி அவர்க்கு மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலுங் கூறியதாம். உதாரணம்: 238புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல்பாண செல்லினிப் பரியல் பகலெஞ் சேரி காணி னகல்வய லூர னாணவும் பெறுமே. இது பாணர்க்கு வாயின் மறுத்தது. 239விளக்கி னன்ன சுடர்விடு தாமரைக் களிற்றுச் செவி யன்ன பாசடை தயங்க வுண்டுறை மகளி ரிரியக் குண்டு நீர் வாளை யுகளு மூரற்கு நாளை மகட்கொடை யெதிர்ந்த மறங்கெழு பெண்டே தொலைந்த நாவி னுலைந்த குறுமொழி யுடன்பட் டோராத் தாயரோ டழிபுடன் சொல்லலை கொல்லோநீயே வல்லைக் கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல வுள்யாது மில்லதோர் போர்வையஞ் சொல்லே. (நற்றிணை. 310) இது, விறலிக்கு வாயின் மறுத்தது. மறுப்பாள்போல் நேர்வ வந்துழிக் காண்க. நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் நீத்த கிழவனை - பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை; நிகழுமாறு படீஇ - தானொழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டி; காத்த தன்மையின் - புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினானே; கண் இன்று பெயர்ப்பினும் - கண்ணோட்ட மின்றி நீக்கினும்: உதாரணம்: 240மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின் மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன்குழீஇப் பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கு மம்பலொடு வாரால் வாழிய ரையவெந் தெருவே. (குறுந். 139) இதனுள் அம்பலொடு வாரல் எனவே பன்னாள் நீத்தமை யுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் 241தாயர் மகளிரைத் தழிஇக் கொண்டா ரென்றலிற் புறம்போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று. பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய - தலைவன் கற்பிடத்துப் பிரியுங்கால் தெய்வத் தன்மையின்றி முன்னின்று வெளிப்படக் கூறிய; மரபுடை எதிரும் உளப்படப் பிறவும் - முறையுடைத்தாகிய எதிர்காலமும் இறந்தகாலமும் உட்படப் பிறவற்றுக்கண்ணும்: 242எதிரும் என்ற உம்மை, எச்சவும்மை. பிற ஆவன - தலைவன் வரவுமலிந்து கூறுவனவும் வந்தபின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும், வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவுந் தூது கண்டு கூறுவனவுந், தூது விடுவன வுஞட சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தங்காட்டிக் கூறுவனவும், உடன் சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம். பாஅலஞ்செவி என்னும் பாலைக்கலி (5) யுள், 243பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வ தந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே. இதனுட், புரிந்தனை என இறப்பும் இறக்குமென எதிரும் மரபில் தப்பாமல் வந்தவாறு காண்க. 244வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து செலவயர்தந் தனையா னீயே நன்று நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன் முறுவல் காண்டலி னினிதோ விறுவரை நாட நீ விரைந்துசெய் பொருளே. (ஐங்குறு. 309) இஃது, எதிரது நோக்கிற்று. 245புறவணி நாடன் காதன் மடமக ளொன்ணுதல் பசப்ப நீசெலிற் றெண்ணீர்ப் போதவிழ் தாமரை யன்னநின் காதலம் புதல்வ னழுமினி முலைக்கே. (ஐங்குறு. 424) இதுவும் அது. இனிப் பிற வருமாறு: 246பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ நெடுங்காற் கணந்துள் புலம்புகொ டெள்விளி சுரஞ்செல் கோடியர் கமுமென விசைக்கு நரம்பொடு கொள்ளு மத்தத் தாங்கட் கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர் நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின் வந்தனர்வாழி தோழி கையதை செம்பொற் கழறொடி நோக்கி மாமகன் கவவுக்கொ ளின்குரல் கேட்டொறும் வயவுக்கொண் மனத்தே மாகிய நமக்கே. (நற்றிணை. 212) இது, தலைவிக்கு வரவு மலிந்தது. 247நீலத் தன்ன நீர்பொதி கருவி னமர்விசும் பதிர முழங்கி யாலியி னிலந்தண் ணென்று கானங் குழைப்ப வினந்தே ருழவ ரின்குர லியம்ப மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற் றிரிமருப் பிரலை பைம்பயி ருகள வார்பெய லுதவிய கார்செய் காலை நூனெறி நுணங்கிய கானவில் புரவி கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன் வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தே ரீர்ம்புற வியங்குவழி யறுப்பத் தீந்தொடைப் பையு ணல்யாழ் செவ்வழி பிறப்ப விந்நிலை வாரா ராயிற் றந்நிலை யெவன்கொல் பாண வுரைத்திசிற் சிறிதெனக் கடவுட் கற்பின் மடவோள் கூறச் செய்வினை யழிந்த மைய நெஞ்சிற் றுனிகொள் பருவர றீர அந்தோய் யினிதுசெய் தனையால் வாழ்கநின் கண்ணி வேலி சுற்றிய வால்வீ முல்லைப் பொருதார் கமழும் விரிந்தொலி கது னின்னகை யிளையோள் கவவ மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே. (அகம். 314) இது, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறுந் தலைவற்குக் கூறியது. 248மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. (குறுந். 66) இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது. 249என நீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே. (கலி. 26) இது, தூது வந்தமை தலைவிக்குக் கூறியது. 250கைவல் சீறியாழ்ப் பாண நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே யெம்மி னுணரா ராயினுந் தம்வயிற் பொய்படு கிளவி நாணலு மெய்யா ராகுத னோகோ யானே. (ஐங்குறு. 472) இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. தூதுவிட்டது வந்துழிக் காண்க. 251பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலைச் சிறுகண் யானை யுறுபகை நினையா தியாங்குவந் தனையோ பூந்தார் மார்ப வருள்புரி நெஞ்ச முய்த்தர விருள்பொர நின்ற விரவி னானே. (ஐங்குறு. 362) இது, சேணிடைப்பிரிந்து இரவின் வந்துழிக் கூறியது. 252ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை யேமாண் சிலையார்க் கினமா விரிந்தோடுந் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும். (கைந்நிலை. 18) இது, நிமித்தங் காட்டிக் கூறியது. இன்னும் அதனானே நமர் பொருள்வேண்டு மென்றார் அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. 253கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்ன ரமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று. இன்னுந் தோழி கூற்றாய்ப் பிறவாற்றான் வருவன வெல்லாம் இதனான் அமைக்க. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்ப் பலர்மடி பொழுதி னலமிகச் சாஅய் நள்ளென வந்த வியறேர்ச் செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே. (ஐங்குறு. 104) இது, புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக்கட் சென்ற செவிலிக்கு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது. வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார் புலவர் - தோழி கூற்றாய்த் தலைவி கூற்றினுள் அடங்குவதன்றித் தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாகவந்த கிளவி களெல்லாந் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் என்றவாறு. இச்சூத்திரத்துக்கண் ஏழனுருபும் அவ்வுருபு தொக்கு நின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரிய வென்னுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்ன விடத்தும் இன்ன விடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. (9) (காமக்கிழத்தியர் கூற்று நிகழுமிட மிவை எனல்) 151. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணு மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினு மறையின் வந்து மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற் றழீஇக் கழறியம் மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணு மின்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து 10 பின்னர் வந்த வாயிற் கண்ணு மனையோ ளொத்தலிற் றன்னோ ரன்னோர் மிகைப்படக் குறித்த கொள்கைக் கண்ணு மெண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவுங் 14 கண்ணிய காமக் கிழத்தியர் மேன. இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறு கின்றது; காமக்கிழத்தியராவார் 254கடனறியும் வாழ்க்கையுடை யராகிக் காமக் கிழமைபூண்டு இல்லற நிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற் பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப்பருவத்திற் கூடி முதிர்ந்தோரும், அவன் தலைநின்று ஒழுகப்படும் இளமைப்பருவத்தோரும் இடைநிலைப் பருவத் தோருங், காமஞ்சாலா இளமையோருமெனப் பல பகுதியராம். இவரைக் கண்ணிய காமக்கிழத்திய ரெனவே கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடைய ராகிவருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம். இனிக் காமக் கிழத்தியரைப், பார்ப்பார்க்குப் பார்ப்பனியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தரல்லாதோரும், வரைந்து கொள்ளும் பரத்தையரு மென்று பொருளுரைப்பாரு முளர். அவர் அறியார்: என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக்கிழத்திய ரென்று ஆசிரியர் சூத்திரஞ் செய்யின் மயங்கக் கூறுலென்னுங் குற்றந் தங்குமாதலின். அன்றியுஞ் சான்றோர் பலருங் காமக்கிழத்தி யரைப் பரத்தையராகத் தோற்றுவாய் செய்து கூறுமாறும் உணர்க. (இ - ள்.) புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் - தலைவன் தனது முயக்கத்தைத் தலைவியிடத்துந் தம்மிடத்தும் இடை விட்டு மயக்குதலான் தலைவிக்கண் தோன்றிய புலவியிடத்தும்; காமக் கிழத்தியர் புலந்து கூறுப. உதாரணம்: 255மண்கணை முழவொடு மகிழ்மிகத் தூங்கத் தண்டுறை யூரனெஞ் சேரி வந்தென வின்கடுங் கள்ளி னகுதை களிற்றொடு நன்கல னீயு நாண்மகி ழிருக்கை யவைபுகு பொருநர் பறையி னானாது கழறுப வென்பவவன் பெண்டி ரந்திற் கச்சினன் கழலினன் றேந்தார் மார்பினன் வகையமை பொலிந்த வனப்பமை தெரியற் சுரியலம் பொருநனைக் காணி ரோவென வாதி மந்தி பேதுற் றினையச் சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுகு மந்தண் காவிரி போலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே. (அகம். 76) இதனுள், எஞ்சேரி வந்தெனக் கழறுபவென்ப அவன் பெண்டிரென முன்னைஞான்று புல்லுதன் மயக்குதலான் தலைவி புலந்தவாறும் அதுகண்டு காமக்கிழத்தி கொண்டு கைவலிப்ப லெனப் 256பெருமிதம் உரைத்தவாறுங் காண்க. இது, பெருமிதங் கூறலின் இளமைப்பருவத்தாள் கூற்றா யிற்று. ஒண்டொடி யாயத் துள்ளுநீ நயந்து கொண்டனை யென்பவோர் குறுமகள். (அகம். 96) எனக் காமஞ்சாலா இளமையோளைக் கூறிற்று. இரட்டுற மொழித லென்பதனாற் பரத்தையரிடத்துப் புலப்பட ஒழுகாது அவர் புல்லுதலை மறைத்தொழுகுதலாற் காமக்கிழத்தியர்க்குப் பிறக்கும் புலவிக்கண்ணும் அவர்க்குக் கூற்று நிகழுமெனவும் பொருள் கூறுக. உதாரணம்: கண்டேனின் மாயங் களவாதல் பொய்ந்நகா என்னும் மருதக்கலி (90) யுட் காண்க. இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் - இல்லிடத் திருந்த தலைவனுந் தலைவியும் ஊடியும் உணர்த்தியுஞ் செய்த தொழிலைக் கேட்டு இகழும் இகழ்ச்சிக்கண்ணும்: உதாரணம்: 257கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூர னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூங்கு மாடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே. (குறுந். 8) 258நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடிப் பன்னா ளரித்த கோயுடை வைப்பின் மயங்குழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும் பழம்ப னெல்லின் வேளூர் வாயி னறுவிரை தெளித்த நாறிணர் மாலை பொறிவரி யினவண் டூதல கழியு முயர்பலி பெறூஉ முருகெழு தெய்வம் புனையிருங் கதுப்பி னீவெய் யோள்வயி னனையே னாயி னணங்குக வென்னென மனையோட் டேற்று மகிழ்ந னாயின் யார்கொல் வாழி தோழி நெருநை தார்பூண் களிற்றிற் றலைப்புணை தழீஇ வதுவை யீரணிப் பொலிந்த நம்மொடு புதுவது வந்த காவிரித் தோடுதோய் மலிர்நிறை யாடி யோரே. (அகம். 166) என வருமிவையும் 259இளையோர் கூற்று. பிறவும் அன்ன. பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் - வெவ்வே றாகிய புதல்வரைக் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும்: வேறுபல புதல்வ ரென்றார் முறையாற்கொண்ட மனைவியர் பலரும் உளராதலின், ஞாலம் வறந்தீர என்னும் மருதக்கலி (82) யுள், 260அடக்கமில் போதின்கட் டந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்காற் கவளு மருப்புப்பூண் கையுறை யாக வணிந்து பெருமா னகைமுகங் காட்டென்பாள் கண்ணீர் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன. இது, முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது. 261மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற் கவளு மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினள் முத்தின ணோக்கி நினைந்தே நினைக்கியாம் யாரே மாகுது மென்று வனப்புறக் கொள்வன நாடி யணிந்தனள். (கலி. 82) இதனுள் நோய்தாங்கினளென இளமைப்பருவத்து மகிழ்ச்சியும் முதிர்ந்த பருவத்து மறவியுந் தோன்றக் கூறாமையினானும் வழி முறைத்தா யென்றமையானும் இஃது இடை நிலைப் பருவத் தாள் கூற்று. 262அவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர் புலத்தகைப் புத்தேளில் புக்கான். (கலி. 82) என்றவழிப் புத்தேள் என்றதுவும் தலைநின்றொழுகும் இளை யோளைக் கூறியது. 263தந்தை யிறைத்தொடீஇ மற்றிவன் றன்கைக்கட் டந்தா ரியா ரெல்லாஅ விது இஃதொன்று. (கலி. 84) என்றாற்போல அவள் கொடுப்பக் கொள்வனவுங் கொள்க. மறையின் வந்த மனையோள் செய்வினைப் பொறை யின்று பெருகிய பருவரற்கண்ணும் மறையின் வந்த - தலைவற்கு வேறொரு தலைவியொடு களவொழுக்கம் நிகழ்தலின் அவன் செய்திகளின் வேறுபாட்டான் தமக்குப் புலப்பட வந்த; மனை யோள் செய்வினை - மனையோளாதற் குரியவள் தமர் பணித்தலில் தைந் நீராடலும் ஆறாடலும் முதலிய தொழில்களைச் செய்யுமிடத்து; பொறை இன்று பெருகிய பருவரற் கண்ணும் - இவள் தோற்றப்பொலிவான் தலைவன் கடிதின் வரைவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத்தின் கண்ணும்: உதாரணம்: 264வாளை வாளிற் பிறழ நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயி லேற்குங் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல்வெள் ளாம்ப லுருவ நெறித்தழை யைதக லல்கு லணிபெறத் ததைஇ விழவிற் செலீஇயர் வேண்டு மன்னோ யாண ரூரன் காணுந னாயின் வரையா மையோ வரிதே வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையு நற்றோ ளளிய தோழி தொலையுந பலவே. (நற்றிணை. 390) இதனுள், விழவிற் செல்கின்ற தலைவியைக் கண்டு காமக் கிழத்தி இவள் தோற்றப் பொலிவொடு புறம்போதரக் காணின் வரைவனெனவும், அதனான் இல்லுறை மகளிர் பலருந் தோள் நெகிழ்பவெனவும் பொறாது கூறியவாறு காண்க. காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையில் தாய்போல் தழீஇக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும் காதற் சோர்வில் - தானுங் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலானும்: 265கடப் பாட்டாண்மையின் சோர்வில் - அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மை யானும்; தாய்போல் தழீஇக் கழறி - தலைவியைச் செவிலிபோல உடன் படுத்திக் கொண்டு தலைவனைக் கழறி; அம்மனைவியைக் காய் வின்று அவன் வயிற் பொருத்தற்கண்ணும் - அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும்: இது, 266துனிநிகழ்ந்துழிக் தலைவனது தலைவளரிள மைக்கு ஒரு துணையாகி முதிர்ந்த காமக்கிழத்தி இங்ஙனங் கூட்டு மென்றார். உதாரணம்: 267வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சி லோய்நடை பக டாரு மூரன் றொடர்புநீ வெஃகினை யாயி னென்சொற் கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே, நீயே, பெருநலத் தையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமல ரூதும் வண்டென மொழிப மகனென் னாரே. (நற்றிணை. 290) இதனுள், நீ இளமைச் செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற் பயந்த 268பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின்றாற் போலப் பிறர் அவனை நுகர்ந்தமை நினக்கு இழுக்கன்றெனவும், அவ னொடு கூட்டம் நெடுங்காலம் நிகழ்த்தவேண்டும் நீ அவள் அவ னொடு கட்டில்வரை எய்தியிருக்கின்றா ளென்று ஊரார் கூறு கின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே; கொள்வது நின் இளமைக்கும் எழிற்கும் ஏலாதெனவும், அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலின் அவன் கடப்பாட் டாண்மை அதுவென்றுங் கூறினாள். இனி, என்சொற் கொள்ளன்மாதோ (நற். 290) 269என்பதற்கு என்வார்த்தையைக் கேட்டல் நினக்கு விருப்பமோ? விருப்பமாகில் யான் கூறுகின்றதனைக் கொள்க. 270ஈண்டுபெருந் தெய்வத் தியாண்டுபல கழிந்தெனப் பார்த்துறைப் புணரி யலைத்தலிற் புடைகொண்டு மூத்துவினை போகிய மூரிவா யம்பி னல்லெருது நடைவளம் வைத்தென வுழவர் புல்லுடைக் காவிற் றொழில்விட் டாங்கு நறுவிரை நன்புகைக் கொடார் சிறுவீ ஞாழலொடு கெழீஇய புன்னையங் கொழுநிழன் முழவுமுதற் பிணிக்குந் துறைவ நன்றும் விழுமிதிற் கொண்ட கேண்மை நொவ்விதிற் தவறுநற் கறியா யாயி னெம்போன் ஞெகிழ்தோட் கலுழ்ந்த கண்ணர் மலர்தீய்ந் தனையர் நின்னயந் தோரே. (நற்றிணை. 315) இதனுள் மூத்துவினை போகிய அம்பிபோலப் பருவஞ் சென்ற பிணிக்கப்பட்ட எம்மைப்போலாது இவள் இப் பருவத்தே இனைய ளாகற்பாலளோ மலர்ந்த செவ்வியான் முறை வீயாய்க் கழியாது இடையே எரிந்து கரிவுற்ற 271பூவினைப் போலவெனத் தலைவனுக்குக் காமக்கிழத்தி கூறியவாறு காண்க. இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து பின்னர் வந்த வாயிற் கண்ணும் இன்நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து - கண்டோர்க்கெல்லாம் இன்பத்தைப் பயக்கும் புதல் வனை எடுத்துப் 272பொலங்கலத்தாற் புனைந்துகொண்டு; பின்னர் வந்த வாயிற்கண்ணும் - பல வாயில்களையும் மறுத்த பின்னர் வாயிலாகக் கொண்டு புகுந்த வாயிலின் கண்ணும்: உதாரணம்: 273 என்குறித் தனன்கொல் பாணநின் கேளே வன்புறை வாயி லாகத் தந்த பகைவரு நகூஉம் புதல்வனை நகுவது கண்டு நகூஉ மோரே. இதனுள், வன்புறை வாயிலாகிய புதல்வனைக் கண்டு 274நகு வாரைத் தனக்கு நகுவாரைப் போல நகாநின்றானெனக் காமக் கிழத்தி கூறி வாயில்நேர்ந்தவாறு காண்க. பகைவரும் நகூஉ மெனவேதான் புலக்கத்தகுந் தலைவியர் புதல்வ னென்றாளா யிற்று. மனையோள் ஒத்தலில் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும் மனையோள் ஒத்தலில் - தானும் உரிமை பூண்டமைபற்றி மனையோளொடு தானும் ஒத்தாளாகக் கருதுதலின்: தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்ணும் - தன்னை ஒக்கும் ஏனை மகளிரின் தன்னை விசேடமுண்டாகக் குறித்துக்கொண்ட கோட் பாட்டின்கண்ணும்: உதாரணம்: 275புழற்காற் சேம்பின் கொழுமட லகலிலைப் பாசிப் பரப்பிற் பறழொடும் வதிந்த வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய் வாளையொ டுழப்பத் துறைகலுழ்ந் தமையிற் றெண்கட் டேறன் மாந்திய மகளிர் நுண்செய லங்குட மிரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தை பாடி யவிழிணர்க் காஞ்சி நீழற் குரவை யயருந் தீம்பெரும் பொய்கைத் துறைகே ழூரன் றேர்தர வந்த நேரிழை மகளி ரேசுப வென்பவென் னலனே யதுவே பாக னெடிதுயிர் வாழ்தல் காய்சினக் கொல்களிற் றியானை நல்கன் மாறே தாமும் பிறரு முளர்போற் சேறன் முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின் யானவண் வாரா மாறே வரினே சுடரொடு திரிதரு நெருஞ்சி போல வென்னொடு திரியே னாயின் வென்வேன் மாரி யம்பின் மழைத்தோற் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை யாரியர் படையி னுடைகவென் னேரிறை முன்கை வீங்கிய வளையே. (அகம். 336) இதனுள் யானவண் வாரா மாறே எனத் தான் மனை யோளைப் போல் இல்லுறைதல் கூறி யாண்டுச் 276செல்லிற் சுடரொடு திரியும் நெருஞ்சி போல என மகளிரை யான் செல்வுழிச் செல்லுஞ் சேடியர்போலத் திரியும்படி பண்ணிக் கொள்வலெனக் கூறியவாறு காண்க. எண்ணிய 277பண்ணை - தலைவற்குத் தகுமென்று ஆய்ந்த யாறுங் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்வனபோல் வனவற்றுக்கண் தாமும் விளையாடுதற்கண்ணும்: உதாரணம்: 278கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே.. (குறுந். 80) இதனுள் யாமஃதயர்கஞ்சேறும் என விளையாட்டுக் கூறினாள். என்றிவற்றொடு பிறவும் - இக்கூறியவற்றின் கண்ணும், புதல்வற் கண்டு நனியு வப்பினுங் கூற்று நிகழுமென்று கூறப் பட்ட இவ்வெட்டோடே பிற கூற்றுக்களும்; கண்ணிய காமக் கிழத்தியர் மேன - இக்கருதப்பட்ட காமக்கிழத்தியரிடத்தன என்றவாறு. கூற்றென்பது 279அதிகாரத்தான் வருவிக்க; ஒடுவென்றது உருபை; கண்ணுதல் - ஒரு மனைத் தெருவின்கண் உரிமை பூண்டு இல்லற நிகழ்த்துவரென்று சிறப்புக்கருதுதல். பிறவு மென்றத னான் தலைவனை என்னலந் தாவெனத் தொடுத்துக் கூறுவன வும், நின் பரத்தைமை யெல்லாம் நின் றலைவிக்கு உரைப்ப லெனக் கூறுவனவுஞ், சேரிப் பரத்தையொட புலந்துரைப்பன வுந், தலைவி கூற்றோடொத்து வருவனவும் பிறவாறு வருவன வுங் கொள்க. 280தொடுத்தென மகிழ்ந செல்லல் கொடித்தேர்ப் பொலம்பூ ணன்னன் புனைடு கடிந்தென யாழிசை மறுகிற் பாழி யாங்க ணஞ்ச லென்ற வாஅ யெயின னிகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது தெறலருங் கடவுண் முன்னர்த் தேற்றி மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந் தார்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்பநின் மார்புதரு கல்லாய்ப் பிறனா யினையே யினியான் விடுக்குவெ னல்லேன் மந்தி பனிவார் கண்ணள் பலபுலந் துறையக் கடுந்திற லத்தி யாடணி நசைஇ நெடுநீர்க் காவிரி கொண்டொளித் தாங்குநின் மனையோள் வௌவலு மஞ்சுவல் சினைஇ யாரிய ரலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவிற் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி யன்னவென் னலந்தந்து சென்மே. (அகம். 396) இது, காமக்கிழத்தி என்னலந்தாவென்றது. 281உள்ளுதொறு நகுவ றோழி வள்ளுகிர் மாரிக் கொக்கின் கூரல கன்ன குண்டுநீ ராம்பற் றண்டுறை யூரன் றேங்கம ழைம்பால் பற்றி யெம்வயின் வான்கோ லெல்வளை வௌவிய பூசற் சினவிய முகத்தஞ் சினவாது சென்றுநின் மனையோட் குரைப்ப லென்றலின் முனையூர்ப் பல்லா நெடுநெறி வில்லி னொய்யுந் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின் மண்ணார் கண்ணி னதிரு நன்ன ராள னடுங்கஞர் நிலையே. (நற்றிணை. 100) இது, மனையோட்கு உரைப்பலென்றலின் நடுங்கினானென்றது. கண்டேனின் மாயம் என்னும் மருதக்கலி (90) யுள், 282ஆராக் கவவி னொருத்திவந் தல்கற்றன் சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின் போரார் கதவ மிதித்த தமையுமோ வாயிழை யார்க்கு மொலிகேளா வவ்வெதிர் தாழா தெழுந்துநீ சென்ற தமையுமோ மாறாள் சினைஇ யவளாங்கே நின்மார்பி னாறிணர்ப் பைந்தார் பறிந்த தமையுமோ தேறிநீ தீயே னலேனென்று மற்றவள் சீறடி தோயா விறுத்த தமையுமோ. எனச், சேரிப் பரத்தையராற் புலந்து தலைவனொடு கூறியவாறு காண்க. இன்னும் இதனானே, 283நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த வாளை வெண்போத் துணீஇய நாரைதன் னடியறி வுறுத லஞ்சிப் பைப்பயக் கடியிலம் புகூஉங் கள்வன் போலச் சாஅ யொதுங்குந் துறைகே ழூரனோ டொல்கா தாக வினிநா ணுண்டோ வருகதி லம்மவெஞ் சேரி சேர வரிவே யுண்கணவன் பெண்டிர் காணத் தாருந் தானையும் பற்றி யாரியர் பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத் தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்தவன் மார்புகடி கொள்ளே னாயி னார்வுற் றிரந்தோர்க் கீயா தீட்டியோன் பொருள்போற் பரந்து வெளிப்படா தாகி வருந்துக தில்லயா யோம்பிய நலனே. (அகம். 276) இதனுட் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என்னலம் என்றமையிற் சேரிப்பரத்தையைப் புலந்து கூறுதன் முதலியனவுங் கொள்க. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன் கண் அடக்குக. (10) (அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று இவை எனல்) 152. கற்புங் காமமு நற்பா லொழுக்கமு மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகண் முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்த லகம்புகன் மரபின் வாயில்கட் குரிய. இது, விருந்து முதலிய வாயில்கள்போலாது 284அகநகர்க் கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது. (இ - ள்.) கற்பும் - கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கமும்; காமமும் - அன்பும்; நற்பால் ஒழுக்கமும் - எவ்வாற்றானுந் தங் குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும்; மெல் இயற்பொறையும் - வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் 285அவனைப் போலாது ஒரு தலையாக மெல்லென்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறையும்; நிறையும் - மறை புலப்படாமை நிறுக்கும் நெஞ்சுடைமையும்; வல்லிதின் விருந்து புறந்தருதலும் - வறுமையுஞ் செல்வமுங் குறியாது வல்ல வாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ்வித்தலும்; சுற்றம் ஓம்பலும் - கொண்டோன் புரக்கும் நண்புடை மாந்தருஞ் சுற்றத்தாருங் குஞ்சர முதலிய காலேசங்களம் பல படை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்ட பின் உண்டலும்; அன்னபிறவும் கிழவோள் மாண்புகள் - அவை போல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை; முகம்புகன் முறைமையிற் கிழவோற்கு உரைத்தல் - அவன் 286முகம் புகுதும் முறைமை காரணத்தான் தலைவற்குக் கூறுதல்; அகம்புகன் மரபின் வாயில் கட்கு உரிய - அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமை யினையுடைய வாயில்களுக்குரிய, என்றவாறு. அன்னபிறவாவன: அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக் கேற்ற வகையான் தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ் வுறுத்தலுங், காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு மதிக்கப் படுதலும் போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு முகம்புகன் முறைமையின்மையின். உதாரணம்: 287கடல்பா டவிந்து தோணி நீங்கி நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் வெவ்வாய்ப் பெண்டிர் கெளவை தூற்றினு மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப் பகலு நம்வயி னகலா னாகிப் பயின்றுவரு மன்னே பனிநீர்ச் சேர்ப்ப னினியே, மணப்பருங் காமந் தணப்ப நீங்கி வாரா தோர்நமக் கியாஅரென் னாது மல்லன் மூதூர் மறையினை சென்று சொல்லி னெவனோ பாண வெல்லி மனைசேர் பெண்ணை மடல்வா யன்றி றுணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொண்டு கரக்கு மொண்ணுத லரிவையா ளென்செய்ய கோ வெனவே. (அகம். 50) இதனுட் காமமிகுதியாற் கண் தாமே அழவுங் கற்பிற் கரக்குமெனத் தலைவி பொறையும் நிறையுந் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. 288இனி என்றதனாற் கற்புப் பெற்றாம். தலைவற்குக் கூறுவன வந்துழிக் காண்க. வாயி லுசாவே தம்முள முரிய (512) என்பதனால் தலைவற்கு உரையாமல் தம்முட் டாமே உசாவுவனவும் ஈண்டே கொள்க. 289அணிநிற வெருமை யாடிய வள்ளன் மணிநிற நெய்த லாம்பலொடு கலிக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வூரன் பாயலின் றுணையே. (ஐங்குறு. 96) இது, கற்புக் கூறியது. முளிதயிர் பிசைந்த (குறுந். 167) என்பது அடிசிற் றொழிலின்கண் மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது. 290கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ பழமை பயனோக்கிக் கொல்லோ - கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்றாரிற் கேளா வடிநாயேன் பெற்ற வருள். (திணை. நூற். 134) பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமை தோழிக்கு விறலி கூறியது. (11) (செவிலி கூற்று இவை எனல்) 153. கழிவினும் வரவினு நிகழ்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலு மல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப. இது, செவிலிகூற்று உணர்த்துகின்றது. (இ - ள்.) கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள - மூன்றுகாலத்துந் தத்தங் குலத்திற்கு ஏற்கும்படியாக; நல்லவை உரைத்தலும் - முற்கூறிய கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும்; அல்லவை கடிதலும் - காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத் தீயவற்றைக் கடிதலும்; செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித் தாய்க்கு உரியவாகு மென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: 291கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவா ளுட்குடையா ளூரா ணியல்பினா - ளுட்கி யிடனறிந் தூடி யினிதி னுணரு மடமொழி மாதராள் பெண். (நாலடி. 384) கட்கினியாள், இது காமம்; வகைபுனைவாள், இது கற்பு; உட்குடையாள், இஃது ஒழுக்கம்; ஊராண்மை, இது சுற்றமோம் பல்; ஊடியுணர்தல், அல்லவை கடிதல். நாலாறு மாறாய் நனிசிறிதா யெப்புறனு மேலாறு மேலுரை சோரினு - மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழு மாண்கற்பி னில்லா ளமர்ந்ததே யில். (நாலடி. 383) என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல் கூறியதுமாம். இனி ஆகும் என்றதனானே, செவிலி நற்றாய்க்கு உவந் துரைப்பனவுங் கொள்க. 292கானங் கோழிக் கவர்குரற் சேவ னுண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செல்லினுஞ் சேந்துவர லறியாது செம்ம றேரே. (குறுந். 242) 293மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வ னடுவண னாக நன்று மினிது மன்றவவர் கிடக்கை முனிவின்றி நீனிற வியலகங் கவைஇய வீனு மும்பரும் பெறலருங் குரைத்தே. (ஐங்குறு. 401) 294வாணுத லரிவை மகன்முலை யூட்டத் தானவள் சிறுபுறங் கவையின னன்று நறும்பூந் தண்புற வணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. (ஐங்குறு. 404) இவை உவந்து கூறியன. 295பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ லுண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிந் தொழியப் பந்த ரோடி யேவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி யறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோ றுள்ளா ளொழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. (நற். 110) இது, மனையறங்கண்டு மருண்டு உவந்து கூறியது. 296அடிசிற் கினியாளை யன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை - யடிவருடிப் பின்றூங்கி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தா லென்றூங்குங் கண்க ளெனக்கு என்னும் பாட்டுச் செவிலி கூற்றன்றாயினுந் தலைவன் மனையறங் கண்டு கூறியதன்பாற்படுமெனக் கொள்க. (12) (அறிவர்க்குரிய கூற்று இவை எனல்) 154. சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய இஃது, அறிவரது கூற்றுக் கூறுகின்றது. (இ - ள்.) முற்கூறிய நல்லவை யுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்குமுரிய என்றவாறு. என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம்பொரு ளின்பங்களாற் கூறிய 297புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம். உதாரணம்: தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (குறள். 55) தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (குறள். 56) மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (குறள். 51) இவை, நல்லவை உணர்த்தல். 298எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை யட்டிற் புகாதா ளரும்பிணி - யட்டதனை யுண்டி யுதவாதா ளில்வாழ்பே யிம்மூவர் கொண்டானைக் கொல்லும் . (நாலடி. 363) 299தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான்பிறரிற் சேற னிலைமையி றீப்பெண்டீர்ச் சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்ட னோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியு மாறு. (அறநெறி. 94) இவை, அல்லவை கடிதல். இவை அறிவர் கூற்றாதலிற் புறப்புறப் பொருளாயிற்றென உணர்ந்துகொள்க. (13) (அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி) 155. இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங் கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். இஃது, அறிவர்க்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. (இ - ள்.) கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் - தலைவனுந் தலைவியும் அவ்வறிவரது ஏவலைச்செய்து நிற்பராதலின்: இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் - அவரைக் கழறி ஓரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் என்றவாறு. அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப. 300உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதோ வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகன் வந்தனெ வினிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. (குறுந். 295) இது, தலைவனைக் கழறியது. 301மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். (குறள். 52) இது, தலைவியைக் கழறியது. (14) (தலைவற்குப் புலவியு மூடலு நிகழுமிடம் இவை எனல்) 156. உணர்ப்புவரை யிறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும் புலத்தலு மூடலுங் கிழவோற் குரிய. இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது. (இ - ள்.) உணர்ப்புவரை இறப்பினும் - கற்பிடத்துத் தலைவி ஊடியவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனளா யினும்; செய்குறி பிழைப்பினும் - களவின்கட் டலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்; புலத்தலும் ஊடலுங் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சிறிது வேறுபடுதலும் அவ்வேறுபாடு மிக்கு நீடுநின்று தேற்றியக்கால் அது நீங்குதலுந் தலைவற்குரிய என்றவாறு. எனவே, கற்பிற்கும் களவிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய வென்றார். புலவியும் ஊடலுங் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ்தலிற் கற்பிற்கு அவை உரிய 302வென்கின்றார், அவை களவிற்குஞ் சிறுபான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோக்கி. 303எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர். (குறுந். 19) இது கற்பிற் புலந்தது. 304தீதிலே மென்று தெளிப்பவுங் கைந்நீவி யாதொன்று மெங்கண் மறுத்தர வில்லாயின் (கலி. 81) என்பது ஊடல். பிறவிடத்தும் ஊடுதலறிந்து கொள்க. 305கலந்தநோய் கைம்மிகக் கண்படா வென்வயிற் புலந்தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை. (கலி. 46) என்பது குறி பிழைத்துழிப் புலந்தது. குணகடற் றிரையது பறைதபு நாரை. (குறுந். 128) என்பதனுள், நாரை தெய்வங் காக்கும் அயிரை இரையை வேட் டாற்போல் நமக்கு அரியளாயினாளை நீ வேட்டா யென்பதனாற் குறி பிழைத்துழி ஊடினமை கூறிற்று. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து கொள்க. (15) (தலைவன் புலக்குமிடத்துத் தோழிகூற்று நிகழ்த்துமெனல்) 157. புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ் சொலத்தகு கிளவி தோழிக் குரிய இது, முன்னர்த், தலைவன் புலக்குமென்றார், அவ்விடத்துந் தோழியே கூற்றுநிகழ்த்துதற்கு உரியளென்கிறது. (இ - ள்.) புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் - தலைவன் தலைவியையுந் தோழியையும் அச்சுறுத்தற் செய்கையாகச் செய்து கொண்டு புலத்தலும் அது நீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்திய வழியும்; சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய - சொல்லத்தகும் பணிமொழி தோழிக்கு உரிய என்றவாறு. எனவே, தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெறாளென்றவாறு. எனவே 306பாடாண்டி ணைக் கைக்கிளை யாயின் தலைவி கூறவும் பெறுமென்று கொள்க. உம்மை - சிறப்பும்மை. உதாரணம்: 307தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவ னரிதின்று பரிக்கு மூர யாவது மன்புமுத லுறுத்த காத லின்றெவன் பெற்றனை பைந்தொடி திறத்தே. 308அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். (குறள். 1303) இவை கற்பில் தலைவி குறிப்பினான் தோழிகூற்று வந்தன. புலந்தாயு நீயாகிற் பொய்யானே வெல்குவை. (கலி. 46) என்று களவில் தோழி கூறினாள், தலைவி குறிப்பினால். 309கனைபெய னடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅன் புனையிழா யென்பழி நினக்குரைக்குந் தானென்ப துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன் னளிநசைஇ யார்வுற்ற வன்பினேன் யானாக. (கலி. 46) எனத் தோழி சொல்லெடுப்பதற்குத் தலைவி சிறுபான்மை கூறுதலும் ஈண்டு உரிய என்பதனாற் கொள்க. 310யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டதற்பின் றானூட யானுணர்த்தத் தானுணரான் - றேனூறுங் கொய்தார் வழுதிக் குளிர்சாந் தணியகல மெய்தா திராக்கழிந்த வாறு. (முத்தொள்ளாயிரம். 104) இதனுள், யானுணர்த்தத் தானுணரானெனப் பாடாண் திணைக் கைக்கிளையுள் தலைவி கூறியது காண்க. (16) (தோழி இடித்துக்கூறற்கு முரியளெனல்) 158. பரத்தைமை மறுத்தல் வேண்டியுங் கிழத்தி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலை கொடியை யென்றலு முரியள். இது, சொல்லத்தகுங் கிளவியேயன்றிச் சொல்லத்தகாக் கிளவியுந் தோழி கூறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்துகின்றது. (இ-ள்.) பரத்தைமை மறுத்தல் வேண்டியும் - தலைவன் படிற்றுள்ளத்தாற் புறத்து ஒழுகும் ஒழுக்கத்தைப் போக்குதல் விரும்பியும்; கிழத்தி மடத்தகு கிழமை உடைமையானும் - தலைவி அவன் பரத்தைமை அறிந்தேயும் அவன் கூறியவற்றை மெய்யெனக் கொண்டு சீற்றங்கொள்ளாது ஒழுகும் மடனென்னுங் குணத்திற்கு ஏற்றன அறிந்தொழுகும் உரிமை யுடையளாகிய எண்மையானும்; அன்பிலை கொடியை என்றலும் உரியள் - தலைவனை அன்பிலை யென்றலுங் கொடியை யென்றதலு முரியள் தோழி என்றவாறு. கொடுமை கடையாயினார் குணம். களவினுள் தன்வயி னுரிமையும் அவன்வயிற் பரத்தைமையுங் கோடலின் இதற்குப் பரத்தைமை மறுத்தல் கொள்க. உதாரணம்: 311கண்டவ ரில்லென வுலகத்து ளுணராதார் தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளு ணெஞ்சறிந்த கொடியவை மறைப்பினு மறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை யாகலின் வண்பரி நவின்ற வயமான் செல்வ நன்கதை யறியினு நயனில்லா நாட்டத்தா லன்பிலை யெனவந்து கழறுவ லையகேள்; மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூ ழிளமுலை முகிழ்செய முள்கிய தொடர்பவ ளுண்க ணவிழ்பனி யுறைப்பவு நல்காது விடுவா யிமிழ்திரைக் கொண்க கொடியை காணீ; இலங்கே ரெல்வளை யேர்தழை தைஇ நலஞ்செல நல்கிய தொடர்பவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவா யிலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காணீ; ....................... ........................ ..................... ...................... எனவாங், கனையளென் றளிமதி பெரும நின்னின் றிறைவரை நில்லா வளைய ளிவட்கினிப் பிறையேர் சுடர்நுதற் பசலை மறையச் செல்லும்நீ மணந்தனை விடினே. (கலி. 125) என்னும் நெய்தற்கலி 312கைகோள் இரண்டற்குங் கொள்க. (17) (தலைவி தலைவனொடு அயன்மைகூறவும் பெறுவளெனல்) 159. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிளவி யகன்மலி யூட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது, தலைவிக்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்து கின்றது. (இ - ள்.) அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் - தோழி அன்பிலை கொடியையெனக் கேட்ட தலைவன் முனிந்த உள்ளத்தனாங் கொல்லோ வென ஐயுற்று அவனது குறிப்பை அறிதல் வேண்டியும்; அகன்மலி ஊடல் அகற்சிக் கண்ணும் - தனது நெஞ்சில் நிறைந்துநிறை ஊடல் கையிகந்து துனியாகிய வழி இஃது அவற்கு எவனாங்கொல்லென அஞ்சிய வழியும்; கிழவி வேற்றுமைக்கிளவி தோற்றவும் பெறும் - தலைவி தலைவ னொடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும் என்றவாறு. உதாரணம்: 313நன்னலந் தொலைய நலமிகச் சாஅ யின்னுயிர் கழியினு முரைய லவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ தோழி புல்லிய தெவனோ வன்பிலங் கடையே. (குறுந். 93) இதனுள் அவரை அன்பிலை கொடியையொன்னாதி, அன்பில் வழி நின் புலவி அவரை என்செய்யும் அவர் நமக்கு இன்றியமையாத எமரல்லரோவென 314இருவகையானும் அயன்மை கூறியவாறுங் காண்க. (18) (தலைவன் தலைவிகண் பணிந்த கிளவி கூறுமிடமிதுவெனல்) 160. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது, தலைவி வேற்றுமைக் கிளவி தோற்றிய பின்னர்த் தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) காமக் கடப்பினுட் பணிந்த கிளவி - அங்ஙனத் தலைவி கண்ணுந் தோழிகண்ணும் வேறுபாடு கண்டுழித் தனக்குக் காமங் கையிகந்துழித் தாழ்ந்துகூறுங் கூற்று; காணுங் காலை கிழவோற்கு உரித்தே - ஆராயும் காலத்துத் தலைவற்கு உரித்து; வழிபடு கிழமை அவட்கு இயலான - அவனை எஞ்ஞான்றும் வழிபட்டொழுகுதல் தலைவிக்கு இல்லறத்தொடு பட்ட இயல்பாகலான் என்றவாறு. உதாரணம்: 315ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா வென்க ணெவனோ தவறு (கலி. 88) கடியர்தமக், கியார்சொல்லத் தக்கார் மாற்று. (கலி. 88) நின், னாணை கடக்கிற்பா ரியார். (கலி. 81) என்றாற்போல்வன கொள்க. காணுங்காலை என்றதனால் தலைவன் தலைவியெதிர் புலப்பது தன்றவறு சிறிதாகிய இடத்தெனவும், இங்ஙனம் பணிவது தன்றவறு பெரிதாகிய இடத்தெனவுங் கொள்க. (19) (தலைவன்கண் தலைவியும் பணிந்து கூறுமெனல்) 161. அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கு முரித்தே. இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறுமென்கின்றது. (இ - ள்.) அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி - பிறர் அவலங் கண்டு அவலிக்கும்அருள் முன் தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக் கரந்து சொல்லுங் கிளவி; பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே - பணிந்தமொழி தோற்றாது வேறொரு பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து என்றவாறு. வேறு பொருளாவது: தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையுங் கை கடந்து அவன் ஏவலைச் செய்ததென்றாற்போலக் கூறுதலுமாம். இது, தன்வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலும் எனப் பொருளியலுள் (205) வழுவமைத்தற்கு இலக்கணம். இணையிரண்டு என்னும் மருதக்கலி (77)யுள், 316மாசற மண்ணுற்ற மணியேசு மிருங்கூந்தல் வீசேர்ந்து வண்டார்க்குங் கவின்பெறல் வேண்டேன்மன் நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்லினாய் வாராமற் பெறுகற்பின். எனக் கூறிய தலைவி, 317கடைஇய நின்மார்பு தோயல மென்னு மிடையு நிறையு மெளிதோநிற் காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னுந் தம்மோ டுடன்வாழ் பகையுடை யார்க்கு. என்புழி நிற்காணிற் கடவுபு கைத்தங்கா நெஞ்செனவே அவன் ஆற்றாமை கண்டருளி நெஞ்சு ஏவல்செய்ததென வேறொரு பொருள் பயப்பக் கூறித் தன் அன்பினைக் கரந்தவாறு காண்க. கூர்முண்முள்ளி (அகம். 26) என்பதனுட் சிறுபுறங் கவையினன் என அவன் வருந்தியது ஏதுவாகத் தான் மண்போன் ஞெகிழ்ந்தேன் என அருண் முந்துறுத்தவாறும், இவை பாராட்டிய பருவமும் உள என அன்பு பொதிந்து கூறியவாறும், ஆண்டும் பணிந்தமொழி வெளிப்படாமல் நெஞ்சறைபோகிய அறிவினேற்கெனத் தன் அறிவினை வேறாக்கி அதன்மேலிட்டுக் கூறியவாறுங் காண்க. (20) (தலைவியுந் தோழியு மலரெழுகின்றதெனக் கூறற்கு முரியரெனல்) 162. களவுங் கற்பு மலர்வரை வின்றே. இதுவுந் தலைவிக்குந் தோழிக்கும் உரிய கூற்றுக் கூறு கின்றது. (இ - ள்.) களவின்கண்ணுங் கற்பின்கண்ணும் அலரெழு கின்றதென்று கூறுதல் தலைவிக்குந் தோழிக்கும் நீக்குநிலைமை யின்று என்றவாறு. வரைவின்று எனப் பொதுப்படக் கூறினமையான் இரு வரையுங் கொண்டாம். தலைவன் ஆங்குக் கூறுவனாயிற் களவிற் கூட்ட மின்மையுங் கற்பிற் பிரிவின்மையும் பிறக்கும். ஒப்பக்கூற (666) லென்னும் உத்திபற்றிக் களவும் உடனோதினார் சூத்திரஞ் சுருங்குதற்கு. களவலராயினும் (115) எனவும், அம்பலு மலரும் (தொல். கள. 139) எனவுங் களவிற் கூறியவை 318அலராய் நிகழ்ந்தவழி வேறுசில பொருண்மை பற்றிக் கூறுதற்கு வந்தன. அவை அலர்கூறப் பெறுப என்றற்கு வந்தன வல்லன உணர்க. உதாரணம்: 319கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று. (குறள். 1146) இது, களவு 320வேதின வெரிநி னோதி முதுபோத் தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருத்துஞ் சுரனே சென்றனர் காதல ருரனழிந் தீங்கியான் றாங்கிய வெவ்வம் யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. (குறுந். 140) இது, கற்பு. 321கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிறுந் தேர்வண் கோமான் றேனூ ரன்னவிவ ணல்லணி நயந்துநீ துறத்தலிற் பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே. (ஐங்குறு. 55) இது, தோழி அலர் கூறியது. (21) (அலராற்றோன்றும் பயனிதுவெனல்) 163. அலரிற் றோன்றுங் காமத்து மிகுதி. இஃது அலர் கூறியதனாற் பயன் இஃது என்கின்றது. (இ - ள்.) அலரிற் றோன்றுங் காமத்து மிகுதி - இருவகைக் கைகோளினும் பிறந்த அலரான் தலைவற்குந் தலைவிக்குங் காமக்கிடத்து மிகுதிதோன்றும் எ-று. என்றது, களவு அலராகியவழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க்குங் காமஞ்சிறத்தலுங் கற்பினுட் பரத்தை மையான் அலர்தோன்றிய வழிக் காமஞ்சிறத்தலுந் தலைவன் பிரிவின்கட் டலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். உதாரணம்: 322ஊரவர் கெளவை யெருவாக வன்னைசொன் னீராக நீளுமிந் நோய். (குறள். 1147) 323நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கெளவையாற் காம நுதுப்பே மெனல் (குறள். 1148) என்றாற்போல்வன கொள்க. (22) (இதுவுமது) 164. கிழவோன் விளையாட் டாங்கு மற்றே. இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது. (இ - ள்.) கிழவோன் விளையாட்டு - தலைவன் பரத்தையர் சேரியுள் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டும் அவருடன் யாறு முதலியன ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும், ஆங்கும் அற்று - அப்பரத்தையரிடத்தும் 324அலரான் தோன்றுங் காமச் சிறப்பு என்றவாறு. ஆங்கும் என்ற உம்மையான் 325ஈங்கும் அற்றெனக் கொள்க. தம்மொடு தலைவன் ஆடியது பலரறியாதவழி யென்றுமாம். பலரறிந்தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப் படுதலின் அவர் காமச்சிறப்புடையராம். தலைவன் அவரொடு விளையாடி அலர் கேட்குந்தோறுந் தலைவிக்குப் புலத்தலும் ஊடலும் பிறந்து காமச் சிறப்பெய்தும். ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவரிடத்துந் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குங் காமச் சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்தியரல்லாத பரத்தையரொடு விளையாடிய பகுதியாகலின் வேறு கூறினார். காமக் கிழத்தியர் ஊடலும் விளையாடலுந் தலைவி ஊடலும் விளையாடலும் யாறுங் குளனும் (தொல். பொ. 191) என்புழிக் கூறுப. அஃது அலரெனப் படாமையின் விளையாட்டுக் கண்ணென விரித்த உருபு வினைசெய்யிடத்து வந்தது. உதாரணம்: 326எஃகுடை யெழினலத் தொருத்தியொடு நெருநை வைகுபுன லயர்ந்தனை யென்ப வதுவே பொய்புறம் பொதிந்தயாங் கரப்பவுங் கையிகந் தலரா கின்றாற் றானே. (அகம். 116) 327கோடுதோய் மலிர்நிறை யாடி யோரே. (அகம். 166) எனத் தலைவியும் பரத்தையும் பிறர் அலர்கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுந் தலைவன் காமச்சிறப்புக் காண்க. (23) (வாயில்கள் தலைவிமுன் கிழவோன் கொடுமை கூறாரெனல்) 165. மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை. இது, வாயில்கட்கு உரிய இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) மனைவி தாட்டலை - தலைவி எத்திறத்தானும் புலந்த வழி அவளிடத்து; கிழவோன் கொடுமை - தலைவன் கொடுந் தொழில்களை; தம் உள ஆதல் - தம் உரைக்கண் உளவாக்கி உரைத்தல்; வாயில்கட்கு இல்லை - தோழி முதலிய வாயில்களுக்கில்லை என்றவாறு. 328தாட்டலையென மாறுக. அது பாதத்திடத்தென்னுந் தகுதிச் சொல். அது வாயில்கள் கூற்றாய் வந்தது. உதாரணம் வந்துழிக் காண்க. (24) (வாயில்கட்கு எய்தியதிகந்துபடாமைக் காத்தல்) 166. மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே. இஃது, எய்தியது இகந்துபடாமைக் காத்தது, இன்னுழி யாயிற் பெறுமென்றலின். (இ-ள்.) மனைவி முன்னர்க் கையறு கிளவி - தலைவி முன்னர்த் தலைவன் காமக்கடப்பினாற் பணியுந்துணையன்றி நம்மைக் கையிகந்தா னெனக் கையற்றுக் கூறுங்கூற்று; மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே - புலந்துவருந் தலைவிக்கு மருந்தாய் அவன் கூடுவதோர் ஆற்றான் உறுதி பயக்குமாயின் அவ்வாயில் கட்கு உளதாம் என்றவாறு. உதாரணம்: 329அறியா மையி னன்னை யஞ்சிக் குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை நொதும லாளன்கது மெனத் தாக்கலிற் கேட்போ ருளர்கொ லில்லைகொல் போற்றென யாண்டைய பசலை யென்றன னதனெதிர் நாணிலை யெலுவ வென்றுவந் திசினே செறுநரும் விழையுஞ் செம்ம லோனென நறுநுத லரிவை போற்றேன் சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே. (நற்றிணை. 50) 330இதனுள், என்னறியாமையாலே அன்னாய் நின்னை யஞ்சி யாங் கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப் படுப்பேமாகச் செல்லா நிற்க, அவன் குழை முதலியவற்றை உடையனாய்த் தெருவுமுடிந்த இடத்தே எதிர்ப்பட்டானாக, அவ்வருளாமையின் யாணது என்கட் பசலை யென்றானாக, அவனெதிரே எஞ்சிறுமை பெரிதாகலான் ஆராயாதே துணிந்து நாணிலை எலுவ என்று வந்தேனெனத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந்துரைத்தவாறு காண்க. ஏனைய வாயில்கள் கூற்று வந்துழிக் காண்க. இங்ஙனந் தலைவன் சிறைப்புறமாகக் கூறுவன அன்பு தலைப் பிரிந்த கிளவி தோன்றின (179) என்புழிக் கூறுதும். (25) (வாயில்கட்கு முன்னிலைப் புறமொழி பின்னிலைக்கணுரித்தெனல்) 167. முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர். இது, வாயில்கட்கு உரியதோர் பகுதி கூறுகின்றது. (இ - ள்.) முன்னிலைப் புறமொழி - முன்னிலையாய் நிற் கின்ற தலைவனை நோக்கிப் பிறரைக் கூறுமாறுபோலக் கூறுதல்; எல்லா வாயிற்கும் - பன்னிரண்டு வாயில்களுக்கும்: பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர் - குறைவேண்டி முயலுங்கால் தோன்றுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: 331உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே புலனுடை மாந்திர் தாயுயிர் பெய்த பாவை போல நலனுடை யார்மொழிக்கட் டாவார்தாந் தந்நலந் தாதுதேர் பறவையி னருந்திறல் கொடுக்குங்கா லேதிலார் கூறுவ தெவனோநின் பொருள்வேட்கை (கலி. 22) எனத் தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழியாகக் கூறிற்று. (26) (கூத்தர் கிளவி இவையெனல்) 168. தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேற்றலும் பல்லாற் றானு மூடலிற் றணித்தலு முறுதி காட்டலு மறிவுமெய் நிறுத்தலு மேதுவி னுணர்த்தலுந் துணிவு காட்டலு மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன. இது, கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ - ள்.) தொல்லவை உரைத்தலும் - முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும்; நுகர்ச்சி ஏற்றலும் - நுமது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும்; பல் ஆற்றானும் ஊடலின் தணித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென்றாயினும் இஃது அன்பின்மையாமென்றா யினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும்; உறுதி காட்டலும் - இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பநுகர்தலே நினக்குப் பொருளென்றலும்; இனிக் கூறுவன தலைவற்குரிய: அறிவு மெய் நிறுத்தலும் - புறத்தொழுக்கம்மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின்கண்ணே நிறுத்தலும்; ஏதுவின் உணர்த்தலும் - இக் கழிகாமத்தான் இழிவு தலைவருமென்றதற்குக் காரணங் கூறலும்; துணிவு காட்டலும்; அதற்கேற்பக் கழிகாமத்தாற் கெட்டாரை எடுத்துக்காட்டலும்; அணிநிலை உரைத்தலும் - முலையினுந் தோளினும் முகத்தினும் எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இது வெனக் கூறலும்; கூத்தர் மேன - இவ்வெட்டுங் கூத்தரிடத்தன. எ-று. கூத்தர், நாடகசாலையர், தொன்றுபட்ட நன்றுந் தீதுங் கற்றறிந்தவற்றை அவைக்கெல்லாம் அறியக்காட்டுதற்கு உரிய ராகலிற் கூத்தர் இவையும் கூறுபவென்றார். இலக்கியம் இக்காலத் திறந்தன. 332பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர். (குறள். 914) இஃது, அறிவு மெய்ந்நிறுத்தது. (27) (கூத்தர்க்கும் பாணர்க்கு முரிய கிளவிகூறல்) 169. நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய. இஃது, அதிகாரப்பட்ட கூத்தரொடு பாணர்க்கும் உரிய தோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை உரைத்தல்- தலைவன் சேட்புலத்துப் பிரிந்துறைதலைத் தலைவிக்காக 333வரைந்து மீளும் நிலைமை கூறுதல்; கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய - கூத்தர்க்கும் பாணர்க்கும் 334யாப்பமைந்தன உரிய என்றவாறு. யாப்பமைதலாவது:- தோழியைப்போலச் செலவழுங் குவித்தல் முதலியன பெறாராகலின், யாழெழீஇக் கடவுள் வாழ்த்தி அவளது ஆற்றாமை தோன்றும்வகையான் 335எண் வகைக் குறிப்பும்பட நன்னயப்படுத்துத் தலைவற்குக் காட்டல் போல்வன. உதாரணம்: 336அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக் காயாஞ் சென்ம றாஅய்ப் பலவுட னீயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய வங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத் திரிமருப் பிரலை புல்லருந் துகள முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கி னறும்பூ வயரப் பதவுமேய லருந்து மதவுநடை நல்லான் வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக் கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவங்கொல் பாண வென்ற மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே விடுவிசைப் புரவி வீங்குபரி முடுகக் கல்பொரு திரங்கும் பல்வாய் நேமிக் கார்மழை முழக்கிசை கடுக்கும் முனைநல் லூரன் புனைநெடுந் தேரே. (அகம். 14) இதனுள், தலைவி இரக்கந் தோன்றக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர் மீள நினையாநின்றேனாக அவர் மீட்சி கண்டே னெனப் பாணன் கூறியவாறு காண்க. கூத்தர் கூற்று வந்துழிக் காண்க. (28) (இளையோர்க்குரிய கிளவி இதுவெனல்) 170. ஆற்றது பண்புங் கருமத்து விளைவு மேவன் முடிவும் வினாவுஞ் செப்பு மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு மிளையோர்க் குரிய கிளவி யென்க. இஃது, உழைக்குறுந் தொழிற்குங் காப்பிற்கும் (171) உரியராகிய இளையோர்க்குரிய இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனா யினுந் தானே யாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பால ராகிய இளையோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும்; கருமத்து விளைவும் - 337ஒன்றாகச் சென்றுவந்து செய்பொருண் முடிக்குமாறு அறிந்து கூறுதலும்; ஏவல் முடிவும் - இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்துவந்தமை கூறலும்; வினாவும் - தலைவன் ஏவலைத் தாங் கேட்டலும்; செப்பும் - தலைவன் வினாவாத வழியும் தலைவிக்காக வாயினுஞ் செப்பத் தகுவன தலைவற்கு அறிவு கூறுதலும்; ஆற்றிடைக் கண்ட பொருளும் - செல் சுரத்துக் கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவர்க்குந் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறலும்; இறைச்சியும் - ஆண்டு மாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவனவற்றை அவ்விருவர்க்கு மாயினுந் தலைவற்கே யாயினுங் காட்டியும் ஊறு செய்யுங் 338கோண்மாக்களை அகற்றியுங் கூறுவனவும்; தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் - அங்ஙனம் அவற்குத் தோற்றுவித்தற் கமைந்த அவைபோல்வன பிற கூற்றுகளும்; இளையோர்க்கு உரிய கிளவி என்ப - இளையோர்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிற பொருளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர்கண் அடங்கும். ஏவன் முடிவிற்கும் இஃதொக்கும். சான்ற என்றதனான் ஆற்றது பண்பு கூறுங்கால் இது பொழுது இவ்வழிச்சேறல் அமையாதென விலக்கலுங் கருமங்கூறுங்காற் சந்துசெய்தல் அமையுமெனக் கூறுதலும் போல்வன அமையாவாம், அவர் அவை கூறப்பெறா ராகலின். பிறவாவன, தலைவன் வருவனெனத் தலைவி மாட்டுத் தூதாய்வருதலும், அறிந்து சென்ற தலைவற்குத் தலைவி நிலை கூறுதலும், மீளுங்கால் விருந்து பெறுகுவள் கொல்லெனத் தலைவி நிலையுரைத்தலும் போல்வன. இலக்கியம் வந்துழிக் காண்க. 339விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத் தடமென் பணைத்தோண் மடமொழி யரிவை தளிரியற் கிள்ளை யினிதினி னெடுத்த வளராப் பிள்ளைத் தூவி யன்ன வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்கண் ணன்னநிறைச்சுனை தோறுந் துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத் தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த வண்டு ணறுவீ துமித்த நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு ணிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லு நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புக லாய்ந்தே. (அகம். 324) 340அவர்கள் தங்களுக்கு வளராப்பிள்ளையென்றலுமாம். இது பெறுவளென்றது. ஆற்றதுபண்பும், ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சி யும் உடன்போக்கிலுங் கற்பிலுங் கூறுவனவாதலின் இச் சூத்திரங் கைகோள் இரண்டற்கும் பொதுவிதி. (29) (இது இளையோர்க்குரிய இயல்புகூறல்) 171. உழைக்குறுந் தொழிலுங் காப்புமுயர்ந் தோர்க்கு நடக்கை யெல்லா மவர்கட் படுமே. இது, முற்கூறியவற்றிற்கு உரியார் இங்ஙனஞ் சிறந்தாரென மேலதற்கோர் புறனடை. (இ - ள்.) உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்க்கு நடக்கை எல்லாம் - அவரிடத்து நின்று கூறிய தொழில் செய்தலும் போற்றீடு முதலிய பாதுகாவலும் பிறவும் உயர்ந்தோர்க்குச் செய்யுந் தொழிற்பகுதி யெல்லாம்; அவர்கட் படும் - முற்கூறிய இளையோரிடத்து உண்டாம் என்றவாறு. என இவ்விரண்டற்குமுரியர் அல்லாத 341புறத்திணையர் முற்கூறியவை கூறப்பெறாரென்பது பொருளாயிற்று. (30) (தலைவன் பரத்தைமை நீங்குமிடமிவை எனல்) 172. பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினு மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினுங் கிழவோ னிறந்தது நினைஇ யாங்கட் கலங்கலு முரிய னென்மனார் புலவர். இது, மேல் அதிகாரப்பட்ட வாயில் பரத்தையிற் பிரிவொடும் பட்டதாகலின் அதுகூறி இனித் தலைவன் பரத்தைமை நீங்குமிடங் கூறுகின்றது. (இ - ள்.) பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை - மூவகை வருணத்தாரும் முன்னர்த் தத்தம் வருணத்தெய்திய வதுவை மனைவியர்க்குப் பின்னர் முறையாற் செய்து கொள்ளப் பட்ட பெரிய பொருளாகிய வதுவை மனைவியரை; தொன் முறை மனைவி எதிர்ப்பாடாயினும் - பழைதாகிய முறைமை யினை யுடைய மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக்கோடற் சிறப்பினும்; இன் இழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் - இனிய பூண்களை யணிந்து தொன்முறை மனைவி புதல்வனைக் கோலங்காட்டிய செல்வான் போலப் பின்முறை வதுவையரிடத்து வாயிலாகக் கொண்டு செல்லினும்; கிழவோன் இறந்தது நினைஇ - தலைவன் இங்ஙனம் செய்கையுடைய இருவகைத் தலைவியரையுங் கைவிட்டுப் பரத்தைமை செய்து ஒழுகியவற்றை நினைந்து; ஆங்கட் கலங்கலும் உரியன் என்மனார் புலவர் - அப்பரத்தையர் கண் நிகழ்கின்ற காதல் நிலைகுலைந்து மீளுதலும் உரியன் எனக் கூறுவர் புலவர் என்றவாறு. உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று; என்னை; இளமைப் பருவங் கழியாத காலத்து அக்காதன் மீளா தாகலின். பெரும்பொரு ளென்றார், வேதநூல் அந்தணர்க்குப் பின் முறை வதுவை மூன்றும் அரசர்க் கிண்டும் வணிகர்க் கொன்றும் நிகழ்தல் வேண்டு மெனக் கூறிற்றென்பது உணர்த்துதற்கு. இனி, மகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்று மாம். ஆக்கிய வென்றதனானே ....Ÿf. ............u‹gJ T¿dh®. ........................... ba‹W« gu¤ijik Ú§Ftbd‹wh®. .....wh«. ......fh©f. .....j.huz«: ....hl¡ ....dnd ...Y« ....nd. . . .....hŸf. . ....jš) . ....fhl ....hÊg ....hd. ....... »‹wJ. . -.) ..........................மன§கோlல்;ஆய்kdக்கிழத்தி¡கும்உரித் தெனமெhழிப-ஆரhய்ந்தமனைaறம்நிfழ்த்துங்கிHத்திக்கும் உரித்தென்று கூWப;fவவொடுமய§கியகாiலயான-அவன் Ka¡f¤jh‹ ka§»a fhy¤J v-W. என்றது, தலைவன் தவற்றிற்கு உடம்பட்டுக் கலங்கினமை கண்ட தலைவி அதற்கு ஆற்றாது தன் மனத்துப் புலவியெல்லாம் மாற்றி இதற்கொண்டும் இனையை யாகலெனத் தழீஇக் கொண்டமை கூறிற்று. தலைவன் தன் குணத்தினும் இவள் குணம் மிகுதிகண்டு மகிழவே தலைவி தன்னைப் புகழ்ந்த குறிப்பு உடையளென்பதூஉங் கொள்க. (32) (தலைவி குணச்சிறப்புரைத்தல்) 174. அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் மகன்றா யுயர்புந் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான. இதுவுந் தலைவி குணச் சிறப்புக் கூறுகின்றது. (இ - ள்.) அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் - தான் நிகழ்த்துகின்ற இல்லறத்தான் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலான், மகன்தாய் உயர்பும் தன் உயர்பும் ஆகும் - மகன் தாயாகிய மாற்றாளைத் தன்னின் இழிந்தாளாகக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்டொழுகுதல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான - தலைவன் இவ்வா றொழுகுகவென்று தமக்குப் பணித்த மொழி நூலிலக்கணத்தான் ஆன மொழியாகலான் என்றவாறு. ஈண்டு மகன்றாய் என்றது பின்முறையாக்கிய வதுவை யாளை. இன்னும் அவன் சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்படுதலானே முன்முறையாக்கிய வதுவையாளைத் தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் ........d‹wthW. ............u©L« bghUŸ. .......ikg‰¿. ....®f. . ....dš) . ....h®. .............ajid Éy¡fÈ‹. . -.) ....................H¡f§ brŒah® v‹wthW. .......a‹wh®. ....sh‹ ...j‹ ....ny. . . -.) . ....Uif ....d.šiy. . -.) .....h©f. ......iu¡f. . ....wš) . ....‹g. ....jJ. . -.) ............தாயின்;புரைவJஎன்ப-அtரைப்பெ©ணொடுòணர்த்துப் புலனெறி வழக்கஞ்செŒதல்bபாருந்Jவதுஎன்Wகூறுவர்ஆáÇa® v‹wthW. இப்பாசறைப் பிரிவை வரையறுப்பவே ஏனைப் பிரிவு களுக்குப் புணர்த்தலும் புணராமையும் புறத்தோர்க்கு 349வரைவின்றாயிற்று. (35) (பார்ப்பார்க்குரிய கூற்று இவையெனல்) 177. காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலு மாவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செல்வழுங்கு கிளவியு மன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய. இது, பார்ப்பார்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ - ள்.) காமநிலை உரைத்தலும் - தலைவனது காமமிகுதி கண்டு இதன்நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவும்; தேர்நிலை உரைத்தலும் - அங்ஙனங் கூறி அவன் தேருறு 350ஏதுவும் எடுத்துக்காட்டுங் கூறலும்; கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் - தலைவன் தாழ்ந்தொழுகிய வற்றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும்; ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும் - வேள்விக்கபிலை பாற்பயங் குன்றுதலானுங், குன்றாது கலநிறையப் பொழிதலானும் உளதாய நிமித்தம் பற்றித் தலைவற்கு வரும் நன்மை தீமை கூறுதலும்; செலவுறு கிளவியும் - அவன் பிரியுங்கால் நன்னிமித்தம்பற்றிச் செலவு நன்றென்று கூறுதலும்; செலவு அழுங்கு கிளவியும் - தீயநிமித்தம்பற்றிச் செலவைத் தவிர்த்துக் கூறுதலும்; அன்ன பிறவும் - அவைபோல்வன பிறவும்; பார்ப்பார்க்கு உரிய - அந்தணர்க்கு உரிய என்றவாறு. தேர்நிலை என்றதனால் தேர்ந்து பின்னும் கலங்கினுங் கலங்காமல் தெளிவுநிலை காட்டலுங் கொள்க. அன்னபிறவும் என்றதனான். அறிவர் இடித்துக் கூறியாங்குத்தாமும் இடித்துக் கூறுவனவும், வாயிலாகச் சென்று கூறுவனவுந், தூதுசென்று கூறுவனவுங் கொள்க. மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல் (666) என்பதனாற் களவியலிற் கூறாதனவும் ஈண்டே கூறினார். அஃது இப்பேரறிவு உடையையாயின் இனையை யாகற்பாலை யல்லையெனக் காமநிலை யுரைத்தலுங் கற்பினுள் இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழென (சிற்றெட்டகம்) தலைவன் நினையு மாற்றாற் காமநிலை யுரைத்தலும் அடங்கிற்று. ஏனைய வற்றிற்கும் இருவகைக் கைகோளிற்கும் ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. பார்ப்பான் பாங்கன் என உடன் கூறினமையிற் பாங்கற்கும் ஏற்பனவுங் கொள்க. இவையெல்லாந் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் செய்த பாடலுட் பயின்றபோலும். இக்காலத்தில் இலக்கியமின்று. பாங்கன் கூறுவன நோய்மருங் கறிநருள் அடக்கிக்கொண்டு எடுத்து, மொழியப்படுதலன்றிக் கூற்று அவண் இன்மை உணர்க. அது, 351வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும் நீட்டித்தா யென்று கடாங்கடுந் திண்டேர் பூட்டு விடாஅ நிறுத்து. (கலி. 66) எனவும் வரும். இன்னும் சான்றோர் கூறிய செய்யுட்களில் இதுபோல வருவன பிற அனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க. (36) (வாயில்கட்குரியதோர் இலக்கணங் கூறல்) 178. எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப. இது, வாயில்களின் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) எல்லாவாயிலும் - பார்ப்பான் முதலிய வாயில் களெல்லாம்; இருவர் தேஎத்தும் புல்லிய - தலைவன் கண்ணுந் தலைவிகண்ணும் பொருந்திய; மகிழ்ச்சிப் பொருள என்ப - மன மகிழ்ச்சிப் பொருளினை 352நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாகவுடையர் என்றவாறு. எனவே, மகிழ்ச்சி கூறப்பெறாராயிற்று. புல்லிய என்ற தனானே விருந்தும் புதல்வரு ஆற்றாமையும் வாயிலாகுப என்று கொள்க. வாயில்கள் தோழி தாயே (193) என்பதனுட் கூறுப. உதாரணம் வந்துழிக் காண்க. (37) (வாயில்கட்கு எய்தியதிகந்துபடாமற் காத்தல்) 179. அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். இது, மகிழ்ச்சிப் பொருளன்றி வாயில்கள் இவ்வாறுகூறப் பெறுவர் என்றலின் எய்திய திகந்துபடாமற் காத்தது. (இ - ள்.) அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின் - அன்பு இருவரிடத்தும் நீங்கிய கடுஞ்சொல் அவ்வாயில்களிடத்துத் தோன்றுமாகில்; சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர் - ஒருவர்க்கொருவர் சிறைப்புறத்தாராகக் கூறல்வேண்டுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. தோன்றி னென்பது படைத்துக்கொண்டு கூறுவ ரென்பதா மாகலின், 353குறித்தன்று என்பது போயின்று என்பது போல றகரம் ஊர்ந்த குற்றியலுகரம். அறியாமையின் என்னும் (50) நற்றிணைப் பாட்டும் உதாரணமாம், அது சிறைப் புறமாகவுங் கொள்ளக் கிடந்தமையின். (38) (தலைவி தலைவன்கட் தற்புகழ் கிளவி முற்கூறிய இரண்டிடத்தல்லது கூறாள் எனல்) 180. தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்த லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த விரண்டலங் கடையே. இது, தலைவியிலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல் - தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல்; எத்திறத் தானுங் கிழத்திக்கு இல்லை - நனிமிகு சீற்றத்துனியினும் தலைவிக்கு இல்லை; முற்பட வகுத்த இரண்டலங்கடையே - முன்பு கூறுபடுத்தோதிய தாய்போற் கழறித் தழீஇக் கோடலும் (173) அவன் சோர்புகாத்தற்கு மகன்றா யுயர்பு தன்னுயர் பாதலும் (174) அல்லாதவிடத்து என்றவாறு. கிழத்திக்கில்லையென முடிக்க. அவ்விரண்டிடத்துந் தனது குணச்சிறப்பைக் குறிப்பான் தலைவன்முன்னே புகழ்வாள்போல ஒழுகினாளென் றுணர்க. இனி முற்படவகுத்த இரண்டு என்பதற்கு இரத்தலுந் தெளித்தலும் (41) என அகத்திணையியலுட் கூறியனவென்று மாம். தலைவன்முன்னர் இல்லையெனவே அவன் முன்னரல் லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக்கிழத்தியரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம். உதாரணம்: பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் மென்னொடு புரையுந ளல்ல டன்னொடு புரையுநர்த் தானறி குநளே. எனப் 354*பதிற்றுப்பத்தில் வந்தது. (39) (தலைவன் தன்னைப் புகழுமிட மிதுவெனல்) 181. கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயி னுரிய வென்ப. இது, தலைவன் தன்னைப் புகழ்ந்துரைக்கும் இடம் இன்னுழி என்கின்றது. (இ - ள்.) கிழவி முன்னர்க் கிழவோன் தற்புகழ் கிளவி - தலைவி முன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங் கூற்று; வினைவயின் உரிய என்ப - காரியங்களை நிகழ்த்துங் காரணத்திடத்து உரியவென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு. அக்காரணமாவன:- கல்வியுங், கொடையும், பொருள் செயலும், 355முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்துவலெனக் கூறுவன. இவ் வாள்வினைச் சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே அதுபற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று. இல்லென விரந்தோர்க்கொன் றீயாமை யிளிவென (கலி. 2) என்றவழி, யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானேயெனக் கூறியவாறு காண்க. ஏனையவும் வந்துழிக் காண்க. (40) (பாங்கற்கு எய்திய தொருமருங்கு மறுத்தல்) 182. மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. இது, மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்குமா மென எய்து வித்ததனை 356ஒருமருங்கு மறுக்கின்றது. (இ - ள்.) மொழியெதிர் மொழிதல் - பார்ப்பானைப் போலக் காமநிலையுரைத்தல் போல்வன கூறுங்கால் தலைவன் கூறிய மொழிக்கு எதிர்கூறல்; பாங்கற்கு உரித்து - பாங்கனுக்கு உரித்து என்றவாறு. இது, களவிற்கும்பொது: அது பாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவன் புகாமற் கூறுவன வந்துழிக் காண்க. உரித் தென்றதனான் தலைவன் இடுக்கண் கண்டுழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க. (41) (இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணங் கூறல்) 183. குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும். இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) குறித்து எதிர்மொழிதல் - தலைவன் குறிப்பினை அவன் கூறாமல் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல், அஃகித் தோன்றும் - சுருங்கித் தோன்றும் என்றவாறு. அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே காமநிலை யுரைத்தல் (தொல். பொ.177) என்னுஞ் சூத்திரத்தின் கட் கூறிய ஆவொடு பட்ட நிமித்தம் ஆயின் 357பார்ப்பான் கூறக்கேட்டுத் தான் கூறவும் பெறுமெனவும்; ஏனையவுங் கிழவன் கூறாமல் தானே கூறவும் பெறுமெனவுங் கூறியவாறா யிற்று. (42) (தலைவன் வற்புறுத்திப் பிரிவனெனல்) 184. துன்புறு பொழுதினு மெல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேற லில்லை. இது, முன்னர்க் கிழவிமுன்னர் (தொல். பொ. 181) என்பதனாற் குறிப்பினான் ஆற்றுவித்துப் பிரிதல் அதிகாரப் பட்டதனை ஈண்டு விளங்கக் கூறி வற்புறுத்துமென்கின்றது. (இ - ள்.) துன்பு உறு பொழுதினும் - உணர்த்தாது பிரியத் தலைவி துன்பம் மிக்க பொழுதினும்; உம்மையான் உணர்த்திப் பிரியத் துன்பம் மிகாத பொழுதினும்; எல்லாம் - சுற்றமுந் தோழி யும் ஆயமுந் தலைமகள் குணமாகிய அச்சமும் நாணமும் மடனு மாகிய வற்றையெல்லாம்; கிழவன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லை - தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் என்றவாறு. எனவே, இவற்றை முன்னர் நிலைபெறுத்திப் பின்னர்ப் பிரியுமாயிற்று. சொல்லாது பிரியுங்கால், போழ்திடைப் படாமன் முயங்கியும் அதன்றலைத் தாழ்கதுப் பணிந்து முளைஎயிற் றமிழ்தூறும் தீ நீரைக் கள்ளினு மகிழ்செய்யு மெனவுரைத்தும் (கலி. 4) இவை முதலிய தலையளிசெய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்துவன ஆயின. இனி, உலகத்தார் பிரிதலும் ஆற்றியிருத்தலுமுடையரென உலகியலாற் கூறலும் பிரிவுணர்த்திற்றேயாம். இனிப் பிரிவினை விளங்கக்கூறி ஆற்றியிருவென்றலும் அவற்றை வற்புறுத்தலாம். யாந்தமக், கொல்லே மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே. (குறுந். 79) இது, சொல்லாது பிரிதல். அரிதாய வறனெய்தி (கலி. 11) ïJ brhšÈ¥ãÇjš.(43) (தலைவன் செலவிடையழுங்கல் இன்னதன்பொருட்டெனல்) 185. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும். இது, செலவழுங்கலும்பாலையா மென்கின்றது. (இ - ள்.) செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே - தலைவன் கருதிய போக்கினை இடையிலே தவிர்ந்திருத்தல் பிரிந்துபோதல் 358ஆற்றாமைக் கன்று; வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும் - தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சி யாகும் என்றவாறு. செலவழுங்கி ஆற்றுவிக்க அவள் ஆற்றியிருத்தல் இப் பிரிவிற்கு நிமித்தமாதலிற் பாலையாயிற்று. 359மணியுரு விழந்த வணியிழை தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி யுழைய மாகவு மினைவோள் பிழையலண் மாதோ பிரிதும்நா மெனினே. (அகம். 5) 360களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர லிழந்த நாடுதந் தன்ன வளம்பெரிது பெறினும் வாரலெ னியானே. (அகம். 199) இவை, வன்புறை குறித்துச் செலவழுங்குதலிற் பாலையாயிற்று. (44) (பாசறைப்புலம்பல் இன்னுழியாகாதெனலும் இன்னுழியாமெனலும்) 186. கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும். இஃது, அகத்திணையியலுட் பாசறைப் புலம்பலும் (41) என்றார் ஆண்டைப் புலம்பல் இன்னுழியாகாது இன்னுழியா மென வரையறை கூறுகின்றது. (இ - ள்.) கிழவி நிலையே வினையிடத்து உரையார் - தலைவியது தன்மையை வினை செய்யா நிற்ற லாகியவிடத்து நினைந்து கூறினானாகச் செய்யுள் செய்யப் பெறார்; வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் - வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூதுகண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றிற்றாகச் செய்யுள் செய்ப என்றவாறு. உரையார் எனவே நினைத்தலுள தென்பதூஉம், அது போர்த் திறம்புரியும் உள்ளத்தாற் கதுமென மாயுமென்பதூஉங் கொள்க. வினையிடம் - வினைசெய்யிடம். காலத்து மென்னும் எச்சவும்மை தொக்கு நின்றது. அன்றி அங்ஙனம் பாடங்கூறலும் ஒன்று. உதாரணம்: 361வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கழுத்தி னன்ன தளைபிணி யவிழாச் சுரிமுகிழ்ப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ நின்ற தண்பெயற் கடைநாள் வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குன் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமிய ணீந்தித் தம்மூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலிற் றோடிபிளந்து நுதிமுக மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுநா வொண்மணி கழிப்பிணிக் கறைத்தோற் பொழிகணை யுதைப்பத் தழங்குரன் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித்துறை செறியா வாளுடை யெறுழ்த்தோ ளிரவித்துயின் மடிந்த தானை யுரவுச்சின வேந்தன் பாசறை யேமே. (அகம். 24) இதனுட் கணையுதைப்ப முரசமொடு மயங்கும் யாமத்துத் துயின் மடிந்து வாளுறைசெறியாத் தானையையுடைய வேந்த னெனவே வென்றிக்காலங் கூறியவாறுங் தம்மூரோளே பாசறையேமே என கிழவிநிலை உரைத்தவாறுங் காண்க. பருவங்கண்டும் தூதுகண்டும் கூறியவை பாசறைப் புலம்பலும் (41) என்புழிக் காட்டினாம். (45) (பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்கும் தலைவிக்குமாவதோ ரிலக்கணமுரைத்தல்) 187. பூப்பின் புறப்பா டீராறு நாளு நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. இது, பரத்தையிற் பிரிவின்கண் தலைவற்குந் தலைவிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) பரத்தையிற் பிரிந்த காலை யான - பரத்தையிற் பிரிந்த காலத்தின்கணுண்டான; பூப்பின் நீத்து - இருதுக் காலத்தின்கட் சொற்கேட்கும் அணுமைக்கண் நீங்கியிருந்து; புறப்பாடு ஈராறு நாளும் அகன்றுறையா என்மனார் புலவர் - அவ் விருதுக் காலத்தின் புறக்கூறாகிய பன்னிரண்டு நாளும் இருவரும் பிரிந் துறையாரென்று கூறுவர் புலவர் என்றவாறு. என்றது, பூப்புத்தோன்றிய மூன்றுநாளுங் கூட்டமின்றி அணுக விருந்து அதன் பின்னர்ப் பன்னிரண்டு நாளுங் கூடியுறைப என்றதாம். தலைவியுந் தலைவனுந் 362துனித்தும் இருத்தலிற் பிரிந்துறையா ரெனப் பன்மையாற் கூறினார். இனிப், பூப்பின் முன்னாறுநாளும் பின்னாறு நாளு மென்றும், பூப்புத் தோன்றிய நாள் முதலாகப் பன்னிரண்டு நாளு மென்றும், நீத்தல் தலைவன் மேல் ஏற்றியும் அகறலைத் தலைவி மேல் ஏற்றியும் உரைப்பாருமுளர். பரத்தையிற் பிரிந்த காலத் துண்டான பூப்பெனவே, தலைவி சேடியர் செய்ய கோலங் கொண்டு பரத்தையர் மனைக்கட் சென்று தலைவற்குப் பூப்புணர்த்துதலுங் கொள்க. இது, 363அரத்த முடீஇ யணிபழுப்புப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் சூட்டிப் - பரத்தை நினைநோக்கிக் கூறினு நீமொழிய லென்று மனைநோக்கி மாண விடும். (திணை. நூற். 144) தோழி செவ்வணியணிந்து விட்டமை தலைவன் பாங்காயி னார் கூறியது. இக்காலத்தின்கண் வேறுபாடாக வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. பூப்புப்புறப்பட்ட ஞான்றும் மற்றைநாளுங் கருத்தங்கின் அது வயிற்றில் அழிதலும், முன்றாநாள் தங்கின் அது சில் வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளுங் கூட்டமின்றென்றார். கூட்டமின்றியும் நீங்காதிருத்தலிற் பரத்தையிற் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக்கொண்ட வருத்தலும் அகலும். அகல வாய்க்குங் கரு மாட்சிமைப்படுமாயிற்று. இது மகப்பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை கூறிற்று. இதனாற் பரத்தையிற் பிரியுநாள் ஒரு திங்களிற் பதினைந்தென்றாராயிற்று. உதாரணம் வந்துழிக் காண்க. குக்கூ (குறுந். 157) என்பதனைக் காட்டுவாரு முளர். (46) (ஓதற்பிரிவிற்குக் காலவரையறை யிதுவெனல்) 188. வேண்டிய கல்வி யாண்டுமூன் றிறவாது. இஃது, ஓதலுந் தூதும் (26) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவிற்குக் காலவரையறையின்றென்பதூஉம் அவ்வோத்து இது வென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ - ள்.) 364கல்வி வேண்டிய யாண்டு இறவாது - துறவறத் தினைக் கூறும் வேதாந்த முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது; மூன்று இறவாது - அக்கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது என்றவாறு. இறவாது என்பதை இரண்டிடத்துங் கூட்டுக. மூன்று பதமாவன அதுவென்றும் நீயென்றும் ஆனாயென்றுங் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டும் ஒன்றாதலும் ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங் களைக்கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்துகொள்க. இது மூன்று வருணத்தார்க்குங் கூறினார். ஏனைய வேளாளரும் ஆகமங்களானும் அப் பொருளைக் கூறிய தமிழானும் உணர்தல் உயர்ந்தோர்க் குரிய (31) என்பதனான் உணர்க. இஃது இல்லறம் நிகழ்த்தினார் துறவறம் நிகழ்த்துங் கருத்தினராக வேண்டுதலின் காலவரையறை கூறாராயினார். முன்னர்க் காட்டிய அரம்போ ழவ்வளை (அகம். 125) என்னும் பாட்டினுட் 365பானாட் கங்குலின் முனிய வலைத்தி கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரி னோடுவை என்றது இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளென்று உணர்க. (47) (பகைவயிற்பிரிவிற்குக் காலவரையறை இதுவெனல்) 189. வேந்துறு தொழிலே யாண்டின தகமே. இது, வரையறையுடைமையிற் பகைவயிற் பிரிவிற்கு வரை யறை கூறுகின்றது. (இ - ள்.) வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்தருறும் பிரிவும், அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரிவும்; யாண்டினது அகமே - ஓர் யாண்டினுட்பட்டதாம் என்றவாறு. வேந்துறு தொழில் என்பதனை இரட்டுற மொழிதல் என்பதனான் வேந்தனுக்குகு மண்டிலமாக்களுந் தண்டலத் தலைவரு முதலியோர் உறும் பிரிவும் யாண்டின தகமெனவும் பொருளுரைக்க. தொழி லென்றது அதிகாரத்தாற் பிரிந்து மீளும் எல்லையை. அது, நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு (தொல். அகத். 9) என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற் கணின்ற சித்திரை தொடங்கித் தையீறாகக் கிடந்த பத்துத் திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென்றதனாற், பின்பனி தானும் (தொல். அகத். 10) என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசி தொடங்கித் தையீறாக யாண்டுமுழுவதூஉங் கொள்ளக் கிடந்த தேனும் அதுவும் பன்னிரு திங்களுங்கழிந்த தன்மையின் யாண்டின தகமாமா றுணர்க. இதற்கு இழிந்த எல்லை வரை வின்மையிற் கூறாராயினார்: அது, இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக (குறுந். 189) எனச் சான்றோர் 366கூறலின். 367நிலநாவிற் றிரிதரூஉ நீண்மாடக் கூடலார் புலநாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்காற் சுடர்நுதா னமக்கவர் வருதுமென் றுரைத்ததை. (கலி. 35) இது, பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித் தலின் இரு திங்கள் இடையிட்டது. 368கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே. (அகம். 139) இது, கார் குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடை யிட்டது. வேளர்ப் பார்ப்பான் (அகம். 24) என்பது தைஇ நின்ற தண்பெயற் கடைநாட் - பனியிருங் கங்குல் என்றலின் யாண் டென்பதூஉம், அது கழிந்ததன்மையின் அஃது அகமெனவும் பட்ட தென்பதூஉம் தலைவன் வருதுமென்று காலங் குறித்ததற் கொத்த வழக்கென்றுணர்க, காவற்பிரிவும் வேந்துறு தொழி லெனவே அடங்கிற்று, தான்கொண்ட நாட்டிற்குப் பின்னும் பகையுளதாங்கொலென்று உட்கொண்டு காத்தலின். (48) (ஏனைப்பிரிவுகளுக்குக் காலவரையறை இதுவெனல்) 190. ஏனைப் பிரிவு மவ்வயி னிலையும் இஃது, எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது. (இ - ள்.) ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் - கழிந்த நின்ற தூதிற்கும் பொருளிற்கும் பிரிந்து மீளும் எல்லையும் யாண்டினதகம் என்றவாறு. உதாரணம்: 369மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல் பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி புதன்மிசைத் தளவி னிதன்முட் செந்நனை நெடுங்குலப் பிடவமொ டொருங்குபிணி யவிழக் காடே கம்மென் றன்றே யவல கோடுடைந் தன்ன கோடற் பைம்பயிர்ப் பதவின் பாவை முனைஇ மதவுநடை யண்ண னல்லே றமர்பிணை தழீஇத் தண்ணறல் பருகித் தாழ்ந்துபட் டன்றே யனையகொல் வாழி தோழி மனைய தாழ்வி னொச்சி சூழ்வன மலரும் மௌவன் மாச்சினை காட்டி யவ்வள வென்றோ ராண்டுச்செய் பொருளே. (அகம். 23) இது, பொருட்பிரிவின்கட் கார் குறித்து ஆறு திங்கள் இடை யிட்டது. நெஞ்சு நடுக்குற என்னும் பாலைக்கலி (கலி. 24) யுள், நடுநின்று, செய்பொருண் முற்றுமள வென்றார்: என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப் பேரெல்லை வந்த செய்யுள் வந்துழிக் காண்க. (49) (தலைவன் முதலியோர்க்குரிய மரபு கூறல்) 191. யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப இது, தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரியதொரு மரபு கூறுகின்றது. (இ - ள்.) யாறும்குளனும் காவும் ஆடி - காவிரியுந் தண்பொருனையும் ஆன்பொருனையும் வையையும் போலும் யாற்றிலும், இருகாமத்திணையேரி (பட்டினப். 39) போலுங் குளங்களிலுந், திருமருதத் துறைக் காவே (கலி. 25) போலுங் காக்களிலும் விளையாடி; பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப - உறைபதியைக் கடந்துபோய் நுகர்ச்சியெய்துதலுந் தலைவற்குங் காமக்கிழத்தியர்க்குந் தலைவியர்க்கும் உரிய என்றவாறு. ஏற்புழிக்கோடலால், தலைவியர்க்குச் சிறுபான்மையென் றுணர்க. 370கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையிற் கதழ்வுநெரி தந்த சிறையழி புதுப்புன லாடுக மெம்மொடுங் கொண்மோவெந் தோள்புரை புணையே. (ஐங்குறு. 78) இது, காமக்கிழத்தி நின்மனைவியோடன்றி எம்மொடு புணைகொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந் தாள்போல மறுத்தது. 371வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத் திதலை யல்குற் றுயல்வருங் கூந்தற் குவளை யுண்க ணேஎர் மெல்லியன் மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துணை யாயின ளெமக்கே. (ஐங்குறு. 72) இது, தலைவி புலவிநீங்கித் தன்னொடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக் குரைத்தது. வண்ண வொண்டழை (ஐங்குறு. 73) விசும்பிழி தோகை (ஐங்குறு. 74) இவையும் அது, புனவளர் பூங்கொடி என்னும் மருதக்கலி (92) யுள், 372அன்ன வகையால்யான் கண்ட கனவுதா னன்வாயாக் காண்டை நறுநுதால் பன்மாணுங் கூடிப் புணர்ந்தீர் பிரியன்மி னீடிப் பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல வரும்பவிழ் பூஞ்சினை தோறு மிருங்குயி லானா தகவும் பொழுதினான் மேவர நான்மாடக் கூடன் மகளிரு மைந்தருந் தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமா ரானா விருப்போ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு. என்னுஞ் சுரிதகத்துக் காவிற் புணர்ந்திருந்தாட நீயுங் கருதெனத் தலைவன் தலைவிக்குக் கூறியவாறு காண்க. (50) (தலைவனும் தலைவியும் இல்லறம் நிகழ்த்தியபின் துறவறமும் நிகழ்த்துவர் எனல்) 192. காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே. இது, முன்னர் இல்லற நிகழ்த்திய தலைவனுந் தலைவியும் பின்னர்த் துறவறம் நிகழ்த்தி வீடுபெறுப என்கின்றது. (இ - ள்.) கிழவனும் கிழத்தியும் - தலைவனுந் தலைவியும்; சுற்றமொடு துவன்றி அறம்புரி மக்களொடு - உரிமைச் சுற்றத் தோடே கூடிநின்று இல்லறஞ்செய்தலை விரும்பிய மக்க ளோடே; சான்ற காமங் கடைக்கோட் காலை - தமக்கு முன்ன ரமைந்த காமத்தினையுந் தீதாக உட்கொண்ட காலத்திலே; சிறந்தது ஏமஞ் சான்ற பயிற்றல் - அறம்பொருளின்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்தல்; இறந்ததன் பயனே - யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு. சான்றகாமம் என்றார் நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத்தற்குக் கடை யென்றார். ஏமஞ்சான்றவாவன, வானப் பிரத்தமுஞ் சன்னியாசமும்; எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீடுபெறுப என்றார். இவ்வீடு பேற்றினை இன்றியமையாது இவ்வில்லற மென்பது இதன் பயன். இது காஞ்சியாகாதோ வெனின் ஆகாது; (தங் குறிப்பினானன்றி நிலையாமை தானே வருவதுதான், சிறந்து நிலைபெற்று நிற்குமெனச் சான்றோர் கூறுதலும், அது தானே வந்து நிற்றலுங் காஞ்சி; இஃது அனதன்றிச் சிறந்த வீட்டின்ப வேட்கையான் தாமே எல்லாவற்றையும் பற்றறத் துறத்தலின் அகப்பொருட் பகுதியாம்) இதனானே, இவ் வோத்தினுட் பலவழியுங் கூறிய 373காமம், நிலையின்மை யின்மேல் இன்பத்தை விளைத்தே வருதலிற் காஞ்சியாகாமை யுணர்க. உதாரணம்: அரும்பெறற் கற்பி னயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப் பெறுநசையாற் பின்னிற்பா ரின்மையே பேணு நறுநுதலார் நன்மைத் துணை. (நாலடி. 381) இதனுள், 374அருந்ததியைப்போலுந் தமக்குப் பெரும் பொருள்களை நச்சுதலாலே இரப்பாரது வறுமையே விரும்பிப் பாதுகாத்து, அவர்க்கு வேண்டுவன கொடுக்கும் மகளிர், நாஞ் செல்கின்ற வானப்பிரத்த காருகத்திற்குத் துணையாவரெனத் தலைவன் கூறவே தலைவியும் பொருள்களிற் பற்றற்றாளாய் யாமுந் துறவறத்தின்மேற் செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க. (51) (வாயில்களாவார் இவர் எனல்) 193. தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலிய ரறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. இது, வாயில்களைத் தொகுத்து அவருந் துறவிற்கு உரிய ராவர் என்கின்றது. (இ - ள்.) தோழி - அன்பாற் சிறந்த தோழியும்; தாய் - அவளே போலுஞ் செவிலியும்; பார்ப்பான் - அவரின் ஆற்ற லுடைய பார்ப்பானும்; பாங்கன் - அவரேபோலும் பாங்கனும்; பாணன் - பாங்குபட்டொழுகும் பாணனும்; 375பாடினி - தலைவி மாட்டுப் பாங்காயொழுகும் பாடினியும்; இளையர் - என்றும் பிரியா இளையரும்; விருந்தினர் - இருவரும் அன்பு செய்யும் விருந்தினரும்; கூத்தர் - தலைவற்கு இன்றியமையாக் கூத்தரும்; விறலியர் - தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலியரும்; அறிவர் - முன்னே துறவுள்ளத்தராகிய அறிவரும்; கண்டோர் - அவர் துறவு கண்டு கருணைசெய்யுங் கண்டோரும்; யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப - இந்தத் தலைவனுந் தலைவியும் பெற்ற துறவின்கண்ணே மனம் பிணிப்புடை சிறப்பினையுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. என்றது, இவர் அத்துறவிக்கு இடையூறாகாது முன்செல்வர், தாமும் அவரைப் பிரிவாற்றாமையி னென்பதாம். இதனைக் கற்புங் காமமும் என்னும் (152) சூத்திரத்து முன்னாக வாயில்களைத் தொகுத்துக் கூறிய சூத்திரமாக வைத்தல் பொருத்த முடைத்தேனும் யாத்த சிறப்பினென்று துறவு நோக்குதலின் இதன்பின் வைத்தார். இதற்குக் கோப்பெருஞ் சோழன் துறந்துழிப் 376பிசிராந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் என்றவாறு. (52) (வினைவயிற்பிரிந்துமீளுந் தலைவற்குரியதோ ரிலக்கணமுணர்த்தல்) 194. வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருங் காலை யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை யுள்ளம் போல வுற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுடைமை யான. இதுபிரிந்து மீளுங்காற் செய்யத் தகுவதோர் இயல்பு கூறு கின்றது. (இ - ள்.) வினைவயின் பிரிந்தோன் மீண்டு வருகாலை - யாதானுமோர் செய்வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டுவருங்காலத்து; இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை - எத்துணைக்காதம் இடையிட்ட தாயினும் அவ்விடையின் கணுண்டாகிய வருவழியிடத்துத் தங்கிவருதலில்லை; உள்ளம் போல உற்றுழி உதவும் - உள்ளஞ் சேட் புலத்தை ஒருகணத்திற் செல்லுமாறுபோலத் தலைவன் மனஞ் சென்றுற்ற விடத்தே ஒரு கணத்திற் சென்று உதவிசெய்யும்; புள்இயல் கலிமா உடைமையான - புட்போல நிலந்தீண்டாத செலவினை யுடைய 377கலித்த குதிரையுடையனாதலான் என்றவாறு. தேருங் குதிரையாலல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார். இஃது இடையில் தங்காது, இரவும் பகலுமாக வருதல் கூறிற்று. இதனை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின்பின் வையாது, ஈண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து அதன்மேல் இன்பமெய்துகின்ற நிலையாமை நோக்கியும், மேலும் இன்பப் பகுதியாகிய பொருள் கூறுகின்றதற்கு அதிகாரப்படுத்தற்கு மென்றுணர்க. உதாரணம்: 378வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந் தினவண் டார்க்குந் தண்ணறும் புறவின் வென்வே லிளைய ரின்புற வலவன் வள்புவலித் தூரி னல்லதை முள்ளுறின் முந்நீர் மண்டில மாதி யாற்றா நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் வாங்குசினை பொலிய வேறிப் புதல பூங்கொடி யவரைப் பொய்யத ளன்ன வுள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய புன்றலைச் சிறாரோ டுகளி மன்றுழைக் கவையிலை யாரி னிளங்குழை கறிக்குஞ் சீறூர் பல்பிறக் கொழிய மாலை யினிதுசெய் தனையா லெந்தை வாழிய பனிவார் கண்ணள் பலபுலந் துறையு மாய்தொடி யரிவை கூந்தற் போதுகுர லணிய வேய்தந் தோயே. (அகம். 104) இதனுள், வினைமுடித்தகாலைத் தேரிளையர் செலவிற் கேற்ப ஊராது கோலூன்றின் 379உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத்தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக் காலத்து வந்து பூச்சூட்டினை இனிதுசெய்தனை எந்தை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க. இருந்த வேந்த னருந்தொழின் முடித்தென என்னும் அகப்பாட்டி (384) னுள். 380புரிந்த காதலொடு பெருந்தேர் யானு மேறிய தல்லது வந்த வாறு நனியறிந் தன்றோ விலனே இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளியூட் டினையோ மானுரு வாகநின் மனம்பூட் டினையோ வுரைமதி வாழியோ வலவ. என உள்ளம்போல உற்றுழி உதவிற்று எனத் தலைவன் கூறிய வாறு காண்க. (53). கற்பியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. அஃது ஆகுபெயரான் ஓத்துக்குப் பெயராயிற்று என்றது இலக்கணம் என்பது இலக்கணத்தையுணர்த்தும் பகுதிக்குப் பெயராயிற்று என்றபடி. காரிய ஆகுபெயர்; தானியாகுபெயர் எனினுமாம். 2. கொண்டான் - கொண்டவன் (-நாயகன்). 3. இரு முதுகுரவர் என்றது தாய் தந்தையரை. 4. ஓரை - இராசி. நாள் - நட்சத்திரம். 5. தீதென்று அதனை என்பது தீதென்றதனை என ஒருசொல்லாக ஏட்டுப்பிரதியிற் காணப்படலின் அவ்வாறிருப்பதே பொருத்தம். தீதென்றதனை - தீதென்று நூல் கூறிய விதியை. துறந்து - கைவிட்டு. 6. ஓத்து - வேதம். கரணம் - சடங்கு (கிரியை). 7. கொள்வது - தொழிற்பெயர். 8. இது என்றது எனப்படுவது என்றதனை. 9. கொடுப்போரின்றியும் கரணமுண்டே என்றதனால் கற்பிற்குக் கரணம் நிச்சயமாக வேண்டப்படும் என்பது பெறுதும். அதனாற் கரணமொடு புணர்தலிற் கற்புச் சிறந்தது என்றபடி. 10. இஃது என்றது, எனப்படுவது என்றதனை. அச்சொல்லில் என என்பது, என்றுசொல்ல எனப் பொருடரலின் சொல் என்னுஞ் சொல் எஞ்சிநின்ற தென்க. இது நச்சினார்க்கினியர் கருத்து. சொல்லெ னெச்சம்... சொல்லள வல்ல தெஞ்சுதலின்றே என்பது (சொல். எச். 44ஆஞ் சூத்திரம்) 11. இதனால் - எனப்படுவதென்று விதந்துகூறிய இதனால். 12. அத்தொழிலென்றது - கரணத்தொழிலை. 13. அறிகரி - அறியும்சான்று. 14. பின்னர் நிகழ்ந்த ஒழுகலாறுஎல்லாம் என்றது - பரத்தைமை செய்தொழுகன் முதலியவற்றை. 15. கிழவன் - உரியோன். கிழத்தி - உரியோள். 16. தாயொடு பிறந்தார் - மாமன்மார். தன்னையர் - தமையன்மார். தாயத்தார் - சுற்றத்தார். 17. தலைப்பெய்த - கூட்டிய. களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம். கும்மாயம் என்பது புழுக்கிய பச்சைப் பயற்றோடு சருக்கரை முதலியன கூட்டி ஆக்கப்படுஞ் சிற்றண்டி. (பெரும்பாண். 114ஆம் அடியுரை). அமலை - ஆரவாரம். ஞெமிரி - பரப்பி. கோள்கால் - அசுபக் கிரகங்களினிடம். கொடு - சகடம் (-உரோகணி). கொடுவெண்டிங்கள்நாள் என்றது - உரோகணியோடு சந்திரன் கூடியநாளை. மண்டை - நீர்கொள்ளும் பாத்திரம். முன்ன - முற்படக் கொடுப்பன. பின்ன - பிற்படக் கொடுப்பன. பெற்றோற்பெட்கும் - கொண்டானை விரும்பும். பிணையை - பேணுதலையுடையை. பிணைதலையுடையை எனினுமாம். இனிப் பிணாப்பெண்ணுக்குப் பெயராதலின், பிணை என்பதும் அப்பொருளில் வந்ததெனினுமாம். வதுவை - குளிப்பாட்டுக் கல்யாணம். 18. நாண்சிறந்தமையை - நாண் சிறந்தமையால் என்றிருப்பது நலம். 19. இது இச்செய்யுளிற் கூறிய கற்பு. 20. எனவே என்பது சூத்திரப்பொருளை அநுவதித்து நின்றது. 21. பறை - முரசு. பணிலம் - சங்கு. இறைகொள்பு - தங்கி. நட்புவாயா கின்று - நண்பு உண்மையாகியது. செயலை - அசோகம்பூ; விடலைக் கடை. சேயிலை எனவும் பாடம். இப்பாடம் நன்று. 22. இச்சூத்திரத்திற்கு இவர் கூறிய பொருளும் அடுத்த சூத்திரப் பொருளும் பொருத்தமோ என்பது ஆராயத்தக்கது. வருஞ் சூத்திரத்து என்ப என்பதற்கு வடநூலாரைக் கூறுவதும் பொருத்த மின்று. இச்சூத்திரத்தில் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு என்பதனால் முன்கீழோர்க்குக் கரணமில்லை என்று கொண்டு பொருள்கூறலே பொருத்தமாம். அடுத்த சூத்திரத்திற்குக் கீழோர்க்குப் பொய்யும்வழுவுந் தோன்றியபின் கரணம் யாக்கப்பட்டது என்பது கருத்தாகக் கோடலே பொருத்தமாம். இக்கருத்துப் பொருத்தமாதலை இளம்பூரணர் விரிவுரை நோக்கியறிக. 23. இக்கருத்துப் பொருத்தமில்லை. 24. மைப்புறப்புழுக்கின் - ஆட்டின்தசைப்புழுக்கினோடு கூடிய; மைப்பற எனவும் பாடம். மைப்பு அற - குற்றமற. சோறு - சோற்றை. வரையா - வரைவு படுத்த. வண்மை - கொடை. புரையோர்ப் பேணி - உயர்ந்தோரைப்பேணி. பேணி - வழிபட்டு (உபசரித்து). புள் - புள்நிமித்தம். திங்கள் - சந்திரன். சகடம் - உரோகணி. கூட்டத்து - கூடிய முகூர்த்தத்தில். பணை - முரசு. இமிழ - ஒலிப்ப. வதுவை மண்ணிய - வதுவைக்கோலம் செய்த. விதுப்புற்று - விரைவுற்று. இமையார் - இமைத்தலிலராய். பயம்பு - குழி; பள்ளம். மாயிதழ் - கரியஇதழ். பெயற்கு ஈன்ற இதழையுடைய அறுகின் பாவை என இயைக்க. பாவை - கிழங்கு; ஆகுபெயர். கிழங்கின் முகை எனவும் முகையோடு சேரக்கட்டிய நூல் எனவும் இயைக்க. தலைநாள் - முதனாள். உவர் - உவர்ப்பு; வெறுப்பு. உயிர்உடம்பு அடுவி - உயிர்க்கு உடம்பாக அடுத்தவள்; வியர் - வேர்வை. போர்வை - மூடியவதிரம். கூந்தல் இருண்மறை ஒளித்து இறைஞ்சியோள் என முடிக்க. கூந்தலாகிய இருளில் மறைந்து ஒளித்துத் தலை வணங்கினாள் என்பது கருத்து. மறை - மறைக்கும் உறுப்புமாம். 25. இன்றிப் பள்ளிசெய்து ஒழுகி என இயைக்க. 26. களவிற் புணர்ச்சியிற்போல என்றிருத்தல்வேண்டும். களவிற் புணர்ச்சியுள் மூன்றுநாள் கூட்டமின்மை. பூப்பின்புறப்பாட்டானே வந்தது. 122ஞ் சூத்திர நோக்கியறிக. உம்மை வேண்டியதின்று. 27. கடல்வளைஇய உலகம் - பூவுலகம். புத்தேணாடு - தேவருலகம். இரண்டும் வைகலொடு தூக்கின் சீர்சாலா எனக் கூட்டுக. 28. நுகர்ச்சி என்பது இன்ப நுகர்ச்சியை. பல்வேறுவகை நுகர்ச்சி என்றார்; ஐம்புலன்களானுமாரத்துய்த்தல்பற்றி. கண்டுகேட்டுண்டு யிர்த் துற்றறியு மைம்புலனு - மொண்டொடி கண்ணேயுள என்பதனானு மறிக. (குறள் - 1101) 29. உணர்வுடையான் ஓதிய நூற்பொருள் அவனறிவால் விரியுமாறு போல இவள் நலமும் விரியும் எனப் பொருள் கொள்க. நூலாற்று என்பதில் அற்றைப் பிரித்துப் பொருளோடுகூட்டி நலம் பொருளற்று எனப் பொருளுரைத்துக் கொள்க. 30. இம்மூன்று என்றது முன் வாக்கியத்திற் கூறிய மூன்றையும். இடுக்கட் பொழுது - வறுமைக்காலம். 31. கடன்நீர்மை - இல்லறம் நிகழ்த்துந்தன்மை. 32. தீதென்னாமற் கூறல் - வழுவியமைந்ததாகக் கூறல். 33. நூல் ஆறும் ஆறாய் - நான்குபக்கமும் வழியாய்; நனிசிறிதாய் - மிகச் சிறிய இல்லாய். மேல் ஆறு - மேற்பக்கம். மேல் உறை சோரினும் - மேலாக மழை சொரியினும். மேலாய - மேன்மையான செயல்கள். ஆறாய்ச் சிறிதாய்ச் சோரினும் அமைந்தது இல் என்க. 34. நாமக்காலம் - அஞ்சுதலையுடைய காலம். நாம் - அச்சம். அது, வேறு சொல்லோடுகூடி வருங்கால் அகரம் பெற்றே வரும். அதற்கு அஃது இயல்பாதலைப் பழைய இலக்கியச் செய்யுட் கணோக்கியறிக. 35. பால் - தெய்வம் (ஊழ்) 36. குணநாற்பது ஒரு நூல். 37. தெரியிழாய் என்றும் பாடம். கேளும் - கணவனும். உவப்ப - உவக்கும்படி. உவப்ப ஆட என இயையும். கொண்டு நிலை - ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுவது. 38. தேன் இறால் - தேன்கூடு. அல்குநர் - தங்குநர். நாட்டு இயற்றிய வெறி என்க. இது தலைவன் கூறியதற்குதாரணம். 39. தண்கதிர்ச்செல்வன் - திங்கள் (சந்திரன்). 40. சொல்லென என்பது எமக்கென என்பதன்பின் மாற்றி வைத்துப் பொருளுரைக்கப்பட்டுளது. இவ்வாறு மாற்றிப் பொருளுரைக்கு மிடத்து அமுதம் என்பது பின்வரலின் ஏனது என்பதற்கு அமிழ்திற்கு மாறாயது (நஞ்சு) என்று பொருளுரைக்கப்பட்டுளது. இதனை உற்றுநோக்காமையாற் போலும் சொல் - நெல் என்றும் அஃது ஆகுபெயராய் அமிழ்தை யுணர்த்திற்று என்றும் பவானந்தம்பிள்ளை பதிப்பிலும். கனகசபாபதிப் பிள்ளை பதிப்பிலும் கீழ்க் குறிப்பு எழுதப்பட்டுளது. சொல்லென என்பதை மாற்றாமலே தலைவி, தலைவனை நோக்கி நஞ்சும் அமிழ்தாமென்பதைச் சூளொடு கூறென அவன், அமிர்தம் புரையும் எமக்கெனக் கூறி அடிசிலும் பூவுந் தொடுதற்கண்ணும் என்று நேரேயும் பொருளுரைக்கலாம். தலைவன் தொடுதற்கண்ணும் அவனுக்குக் கூற்றுநிகழுமென்றபடி. முன் உரைக்குப் புனைந்துரைத்து என்றது புனைந்துரைத்துழி என்றிருத்தல் வேண்டும். 41. கட்டி - வெல்லக்கட்டி. கண்டசருக்கரையுமாம். 42. குறிக்கொளும் கருத்தால் என்றது தலைவி குறித்துக்கொள்ளுங் கருத்தால் என்றபடி. 43. எதிர்மொழியாது - எதிர் கூறாது; இது நிகழ்த்தியது என்பதனோடு முடியும். 44. அக்காலம் - கற்புக்காலம். 45. முன்புபோல - களவிற்போல 46. பொய்யற்றகேள்வி - மெய்ந்நூற் கேள்வி. புரையோர் - உயர்ந்தோர். மையற்றபடிவம் - மாசற்றவிரதம். இது தோழிகூற்றாயினும், தலைவன் கூறியதைக் கொண்டுகூறலின் அவன் கூற்றிற்கும் உதாரணமாம் என்றபடி. 47. யாய் - என்றாய் (என் தாய்). ஞாய் - நின்றாய் (நின் தாய்) இவை இப்பொருள் பயத்தலை. (தொல். எச். 14) தெய்வச்சிலை யாருரையாலறிக. 48. பிழைப்பு - தன்பிழைப்பு. 49. பன்னல் - நூல் (வேதம்). வாயில் - வழி. 50. அதற்கு - அம்மகவிற்கு; 51. எழுதுகோலாற் சித்திரித்த வரையறையை. ஒப்ப வரியாக மயிரொழுகிய வயிறு. வட்டிகை - எழுதுகோல். திட்டம் - அளவு; வரையறை. எழுதுகோலால் (சித்திரிக்குங்கோலால்) வரையறை செய்து எழுதிவிட்டாற் போன்ற மயிரொழுங்கு என்பது கருத்து. அரிமயிரெனக்கொண்டு ஐதாகிய மயிரெனினுமாம். சொல் நனிவாய்த்தன என இயைக்க. 52. உவந்ததெனவும் - உவந்தனரெனவும் என்றிருத்தல் வேண்டும். 53. வாலாமை - தூய்மை யில்லாமை (தீட்டு). வரைதல் - நீக்குதல் நியமமுமாம். 54. கடும்புடைக்கடுஞ்சூல் - எனது சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சிறந்த கருப்பம். இமைக்கும் - விளங்கும். காழ் - விதை. காழ் விளங்கக் கிடந்தோள் என்க. நெய்யணி மயக்கம்பற்றி விளங்கக் கிடந்தோள் என்றார். பெயர்பெயர்த்து என்றது இளம்பெண்டு என்னும் பெயரை ஒழித்து என்றபடி. பெயர்பெயர்த்து முதுபெண்டாகி என்க. அகடு - வயிறு. குவளை - குவளைப்பூ. புதைத்தது நகுகம் என மாற்றிக் கூட்டுக. 55. முன்னடி - அடிமுன். எம்மை உணர்த்திய - எம்மை ஊடலுணர்த்துதற்கு. துணங்கை - ஒருவகைக்கூத்து. தலைக்கொள - நின்னிடத்தே கொள்ளுதலால். காழகம் - நீலஆடை. 56. சாந்தழி பெருங்குறி பெற்றார் கூந்தற்றுகளும் என்பது சாந்தழிவேரும் குறிபெற்றார். கூந்தல் துகளும் என்றிருக்கலா மென்பது எமது கருத்து. சாந்தழி பெரும் என்பதிலேதான் பிழையுளது. கலி 96ஞ் செய்யுளில் வரும் சாந்தழிவேரை என்பதையும் கலி. 72ஞ் செய்யுளில் வரும் குறிபெற்றார் குரற் கூந்தற் கோடுளர்ந்த துகளினை என்பதிலே சில நீக்கிக் குறி பெற்றார் கூந்தற் றுகளினை என்பதையுஞ் சேர்த்தே சாந்தழிவேருங் குறிபெற்றார் கூந்தற் றுகளும் என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ளார் என்பது எமது கருத்து. சிறிது வேறுபட்டிருப்பினுங் கொள்க. அன்றேல் சாந்தழிபெருங்குறியும் குறிபெற்றார் கூந்தற் றுகளும் என்றிருத்தல் வேண்டும். 57. பெயர்த்தல் - நீக்கல். 58. புலவி - புலத்தல். புல்லாது - கணவனைத் தழுவாது. ஆர்ப்ப - ஆரவாரித்தலால். இடைவிட்டு - அப்புலவியை நடுவே விட்டு. நன்வாயா - நன்றாகிய உண்மையாக. ஆனாது அகவும்பொழுது - அமையாது பெடையை அழைக்கும் இளவேனிற்பொழுது. ஆடுமார் - விளையாட வேண்டி. அணி அயர்ப - அணிகளை அணிவார். அயர்பு என்னும் பாடத்திற்கு - அயர்ந்து என்று பொருள் கொண்டு அதனை ஆடுமார் என்பதனோடு முடித்து அதனை முற்றாக்குக. 59. புலம்பு - தனிமை. 60. எச்சம் ஈண்டுப் பிரிவின் முடிவைக் கருதிற்று. 61. ஒருசிறை - ஒருபக்கம். 62. துனி - ஊடலின் மிக்கது. துனியும் புலவியு மில்லாயின் (குறள். 1306) 63. புரிசை - மதில். வியலுள்ளோர் - ஊரிற் காவலாளர். காணாது - காணாமலிருக்கவும். ஆணை - கட்டளை. 64. சேய் - தூரம். 65. கைஇகந்து - கைகடந்து; (நீக்கி நிறுத்தலான் என்பது தாற்பரியம்). 66. அதிர்வில் - நடுக்கமில்லாது. படிறு - வஞ்சனை. எருக்கி - வருத்தி; போக்கி என்றுமாம். மகன்மேல் வந்து என இயைக்க. வளிஎதிர் - காற்றெதிர். எல்லா - ஏடி? கைந்நீவி - கைகடந்து. படர்தக - நம்பாற் படரும்படி. 67. அவள் அது நித்து என்பது முற்பாடம். அஃது, அவள் துனித்து என்றிருத்தல் வேண்டும். அது பின், இதுவுந் துனிதீர்ப்பதோர் முறைமை கூறிற்று என்பதனால் அறியப்படும். 68. வலிந்துபுகல் - வலோற்காரமாகப் புகுதல். 69. எவ்வி - ஒருவள்ளல். பூ - பொற்பூ. புல்லென - பொலிவிழந்து. இனை - வருந்துதி. யாரள் - எத்தன்மையாள். 70. மடன் - மடம். அஃதாவது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. சாயல் - மென்மை. கிளவி - சொல். முயங்கி இன்று இவ்விடத்தேமாகி நாளைச் சேக்குவங்கொல் என இயைக்க. தூணி - அம்புக்கூடு. நினைந்து சேக்குவங்கொல் எனவும் இயைக்க. அமை - மூங்கில். நிரை - ஆனிரை. வார்கோல் - நீண்ட வேய்ங்கோல். இது ஆயர்க்கடை. இனிக் குழலுக்காயின், நீண்டநரம்பாம். ஆய் - ஆயர். குழல் - வங்கியம். பாணி - இசை. மூங்கிலில் தும்பி குயின்ற துளை என்க. துளையில் கோடை முகத்தலின் பாணியினைது வந்திசைக்கும் கடறு என்க; கடறு - காடு. தூணித்தலைதிறந்தவை போல் - மொட்டம்புகளைப் பெய்த தூணித் தலைகள், மூடிதிறக்கப் பட்டவைகள் போலப் பூத்த என்க. இணர் உதிர மழைமறந்த சீறூர் என்க. 71. தெளிவகப்படுத்தல் - தொல். பொரு. 101ஆம் சூத்திரம் தீராத்தோற்றம் - 102ஆம் சூத்திரம். 72. கலி. 7ஆஞ் செய்யுள் நோக்கியறிக. 73. கிளைத்து ஊண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியநீர். குளவி - காட்டு மல்லிகை. அளியள் - இரங்கத்தக்காள். 74. நாள்நகையுடையம் - நாளும் நகையுடையேம். நாம் நகையுடையேம் எனவும் பாடம். தோளிவருமென்ப; அதற்கு நகையுடையேம் என்க. கயந்தலைமண்ணி - மெல்லிய தலையைக் கழுவி. ஆடிய வேறுபாடு களிறு - ஆடுதலால் வேறுபட்ட களிறு. தீண்டி உரிஞிய மராஅம் என இயைக்க. அசைஇ - தங்கி; இளைப்பாறி. (கானத்தான் -) கானத்தின்கண் வருமென்ப என இயைக்க. உள்கீண் டிட்ட - உள்ளே கிழித்த (குடை என்க). உறுகண் மழவர் உருள்கீண்டிட்ட எனவும் பாடம் அதற்குவண்டி உருள்செல்லும்படி உடைத்த (ஆறு என்க) என்பது பொருள். குடை - பனையோலைப் பிழா. பிழாவை (வளி -) காற்று எடுத்துச் செல்லலினால். (துணைசெத்து-) துணையென்று கருதி. துணை பெண்மான். வெருள்ஏறு - மயங்கிய கலைமான். பயிரும் - அழைக்கும் குடை, மானின் முகம் போறலின். அதனைப் பெண்மானென்று மயங்கி ஏறுபயிரும் என்க. இதற்கு ஒலியால் துணையென்று கருதி என்று பொருள்கோடல் பொருந்தாமை. 194ஆம் செய்யுள் நோக்கியறிக. பிழாவின் புறவடிவு மான்முக வடிவுபோலிருக்கும். 75. உண்ணாமை - விரதத்தால் பசியிருத்தல். ஆடாப்படிவம் - அசையாத விரத வடிவம். யானை கவினழிகுன்றம் -சினைவினை முதன்மேல் நின்றது. நெஞ்சே! ஆற்றாய்; அஞ்சுதி; (அழிதகவுடைமதி -) அழியுந் தகைமையுடையை. மதி - முன்னிலையசை. ஒன்றிற்கொள்ளாய் - போதல் தவிர்தல் என்னு மிரண்டில் ஒன்றில் நிலைபெறாய். 76. ஆளி - சிங்கத்தின் பேதம். வேட்டு - இரையை விரும்பி. ஆளி உழுவை கொன்ற களிற்றை இழுக்கும் கானம் என இயைக்க. மாமைக்கவின் போகின்றுகொல் என முடிக்க. 77. திருவில் - இந்திரவில். சோர்தொடங்கின்று - சொரிதலைத் தொடங்கிற்று. புறந்தரல் - பாதுகாத்தல். 78. துய்த்தல் - அனுபவித்தல். இல்லோர் - பொருளில்லாதோர். அரிவை - பெண். 79. உழை - மான். அணந்து - நிமிர்ந்து. இறைவாங்கு - சிறிது வளைந்த. இரத்தி - ஒருமரம். நோக்கு எய்த வந்தன என இயைக்க. இறந்தும் - கடந்தும். பைதல்கூர - வருத்தமிக. ஏங்கி - வாய்விட்டழுது. அஞர் - துன்பம். 80. பெரிய கொன்று - பெரிய கிளைகளை முறித்து. முன்பு - வலி. இறந்த - பெய்தகன்ற. நீரல்வீரம் - மூத்திரவீரம்; இஃது இடக்க ரடக்கல். செந்நாய்ப் பிணவின் கணவன் அதனை நினைந்து இரங்கும் காடு என இயைக்க. 81. மீட்டுவரவு - மீண்டுவருதல் (திரும்பிவருதல்). 82. ஆள் வழக்கற்ற - ஆள் வழங்குதலற்ற. வழக்கறுதல் - போக்கு வரவு இல்லாமை. நனந்தலை - அகன்ற இடம். நெஞ்சுமறுகுவது - நெஞ்சு சுழலாநின்றது. 83. முளிய - உலர. கல்பக - மலைபிளக்க. தெறுதல் - சுடுதல். இனி - இப்பொழுது. ஆறு - வழி. 84. புணர்ப்பு என்றுகொல் எய்தும் என இயைக்க. ஞான்று சென்ற - நாட்கள் சென்றன. 85. கொல்வினை - கொற்றொழில். புழுகு - மொட்டு. புழுகின் அம்பு என இயைக்க. அப்பு - வலித்தல்விகாரம். செப்புஅடர் - செப்புத்தகடு. இழுது - வெண்ணெய். புழல - துளை. துய்வாய் - துய்போலும் வாயையுடையது (பூ); ஆகுபெயர். துய் - பஞ்சு. உழுதுகாண்டல் - தாள்நீக்கிக்காண்டல். ஆர்கழல்பு - ஆர்க்கினின்றும் கழன்று. வான் ஆலியில் என மாற்றுக. ஆவி - பெருந்துளி. காலொடு - காற்றால். துப்பு - பவளம். கோடு - மேடு. இயவு - வழி. நெய்த்தோர் - இரத்தம். உரற்பாணி - வள்ளைப்பாட்டு. குடிஞை - ஆந்தை. கைகவியா - தடுக்கப்படாது. பின்னகம் - பின்னிமுடித்த மயிர். 86. பெற்ற சிறப்பு என இயைக்க. 87. துறைபோதல் - முடிவுபோக அறிதல். 88. அவர் என்றது - பாகரை. 89. வேந்தன் அருந்தொழில் - வேந்தற்குரிய முற்றுதற்கரிய தொழில். அறிந்தன்றல்லது - அறிந்ததல்லது. அறிந்தன்றோஇலன் - அறிந்திலன். பறழ் - குட்டி. உகளும் - துள்ளிவிளையாடும். நீறீஇ - நிறுத்தி. இழிமின் - இறங்குதிர். மொழிமருண்டிசின் - மொழிக்கு மயங்கினேன் (-அதிசயமுற்றேன்). வளி - காற்று. அளிப்பனன் முயங்கி - அன்பு செய்தவ னாய்த் தழுவி; அருளியவனாய்த் தழுவி எனினுமா ணம். நளிப்பனன் எனக் கண்ணழித்து இறுகத் தழுவி என்றுமாம். 90. வறத்தொடு - வறட்சியோடு. உலகு - உலகிலுள்ள உயிர்கள். அவல் - பள்ளம். நாநவில் பல்கிளை - நாவாலொலிக்கின்ற பல கூட்டமான தவளைகள். கறங்க - ஒலித்தலால். அறியுநர் - அறிவிக்கின்றவர்; விவ்விகுதிதொக்கது. சில்போது - சிலபூ. மெய்வருத்துறாஅ - மெய் துவளவந்து. சுவைஇய - அணைத்துக் கொண்ட. மகிழ்ந்து அயர்நிலை - மகிழ்ந்துகொண்டாடுநிலை. அயர்நிலை மறத்தற் கரிது என முடிக்க. 91. அவை என்றது, காமக்கிழத்தியுந் தலைவியுங் கூறுவனவற்றை. 92. என்றூழ் - வெயில். நீளிடை - நீண்டவழி. அரியவாயினும் - வருதற்கரியவாயினும். அவவுஉறு - ஆசைபொருந்திய. அவா, அவ என நின்று உகரம்பெற்றது. (கலி. 14ஞ் செய்யுளுரை நோக்குக) கவவு - அகத்தீடு (- தழுவுதல்) கடைஇ - செலுத்தி வர எளிய வன்றே என இயைக்க. 93. தவிரா - தவிராத. நோன்றாட் புலி என இயையும். நோன்தாள் - வலிய முயற்சி. இடம்படின் - இடப்பக்கம் வீழின். எஃகு உற்று - கத்தியால் வெட்டப்பட்டு. மாவின்நறவடி - மாவினது நறிய பிஞ்சு. மேவல் தண்டா - பொருந்துதலமையாத. எம்மென - எம்மிடத்தென்று. கொம்மை - பெருமை. இயவுள் - வழி. அம்பி - தோணி. நோனா (பொறாத) விருப்பு என இயையும். நாண் - மானம். 94. பள்ளி - படுக்கை. ஈண்டுகடைக்கொள - இங்கே யான் வருதலால் முடிவடையும்படி. சென்று. அற்றாங்கு - சென்று வற்றிக் குறைந்தாற் போல. அனைப்பெருங்காமம் - அவ்வளவு பெருங்காமம். அற்றாங்குகடைக் கொள என இயைக்க. 95. இருவர் - காமக்கிழத்தியுந் தலைவியும். 96. நனவினாற் சேறலின்றிக் கனவினாற்சேறல் என்றது நனவின் கண் நின்கண் சேறலின்றிக் கனவின்கண் நின்கண் செல்லல் என்றபடி. இது இருவர்க்கும் பொது. சேறல் என்பதற்கு நிகழ்தலென்றுமாம். 97. ஒழித்தது - பெண்களைப் பிரிதல் கூடாதென்று முன்னோர் விலக்கியது. பழித்த - அவ்விதியை இகழ்ந்த. அழுங்க - குறைய. முந்துறுத்து - தோற்றுவித்து. நொதுமல் - அயன்மை. மொழியல் - சொல்லற்க. ஞெலி - கடைந்த; பிசைதலால் கடைந்தபொறி என்க. பிசைதல் - தேய்த்தல். ஞெமல் - சருகு. பொத்தி - பொத்தலால்; (-மூடலால்). அதர் - வழி. சாத்து - வாணிகத்திரள். சாத்தொடு கண்படுபாயல் எனக் கூட்டுக. படுதல் - கண்படுதல் (துயிலல்). ஞான்று - தாழ்ந்து. மான்றுபட்டென - மயங்கிப்பட்டதாக. நவ்விபட்டென - நவ்வியை எதிர்ப்பட்டாலொப்ப. நவ்வி - மான். வாயல் - உண்மையல்லாத. 98. செம்மல் - தலைமை. 99. முரம்பு - பரல் முரம்பு தலை மணந்த இயவு என்றது பரற்கற்கள் மேலிடத்தே பொருந்தியவழி என்றபடி. முரம்பு - பாழ் நிலமுமாம். உமண் - உமண்சாதி; (உப்பமைப்போர்). களரி - களர்நிலம். பெயர்ப்ப - போக்குதலால். தேமொழிநிலை முன்னையு முடையமோ? பிற்றை - பின்னே (இப்பொழுதுதான்). 100. உம்மை என்றது கேளிரும் என்றதிலும்மையை. 101. பெரும்பெயர்க்கற்பு - பெரிய புகழமைந்த கற்பு. எய்தவந்தன்று - சமீபமாக வந்தது. எதிர்மார் - எதிர்கொள்வார். தாயரு என்றது தன் கீழ்க்குல மகளிர்க்குள் தன்னால் மணக்கப்பட்டாரையுங் கருதிப் போலும். மாவருந்தின காண்கம் என்றது விரைந்து செலுத்துவாய் என்றபடி. 102. ஏனை - தோழியல்லாத. 103. பகுவாய் - பிளந்தவாய். அரி - பரல். கிண்கிணி - சதங்கை. செவ்வாய் - சிவந்தவாய்நீர். வேறுணர்ந்து - (சாந்தழிகுறியை) வேறாகக்கருதி. யாரை - யாவனாந்தன்மையையுடையை. இகந்து - நீங்கி. இகந்துநின்றதை நகுகம் வாராய் என இயைக்க. 104. பண்ணிக்கொள்ளும் பகுதியாவன் என்றது சூத்திர அடியுள் பண்ணமைபகுதி எனக் கூறியதை. 105. சிலம்பு - மலை அன்ன கையிற் கண்புதைத்தோயே என்க. பாயல் - படுக்கை. தோகை - மயில். இது கண்புதைத்துழிக் கூறியது. 106. துமிய - அழிய. உறை - துளி. ஊழ் - முறை. கடிப்பு - குறுந்தடி. செம்மல் - தலைமை; நிறைவு. இவளின் - இவளோடு. கூந்தல் அணையேம் - கூந்தலாகிய அணையிடத்தேம். அணை - படுக்கை (சயனம்). இது பள்ளியிடத்து வந்திருந்து கூறியது. 107. நிறைநீர் - நிறைந்தநீர். இது ஊடற்குக் காரணங் கூறியது. 108. உணர்த்தல் - தெளிவித்தல். காயும் - வெகுளாநிற்கும். இதுவும் ஊடற்குக் காரணங்கூறியது. 109. என்றூழ் - வெயில். மாஅயோளைக் காண்குவென் என இயைக்க. வேங்கை - வேங்கைப்பூ. சுணங்கு - தேமல். இது மறக்கவில்லை என்று கூறியது. 110. இவை ஊடலை விரும்பிக் கூறியன. 111. அவர்களும் என்றது மனைவியர்களை. 112. கருமம் - செய்யத்தகுந்தது. 113. புரைய - உயர்ச்சியையுடையன (மேதக்கன). புரையோர் கேண்மை - மேதக்கோராகிய தலைவரது நட்பு. உறுபவோ - உறுவாரோ. அஞ்சிச் செய்தலறியாராய்ச் சிறுமையுறுபவோ என இயைக்க. 114. தாமரைத்தாதும் சந்தனத்தாதும் உயர்வு தாழ்வு கருதிநின்றன என்பது நச்சினார்க்கினியர் கருத்துப்போலும். இதற்கு வேறு கருத்துக் கூறுவர் நற்றிணையுரையாசிரியர். 115. நிலம் - நட்பின் அகலத்திற்கும், வான் - உயர்ச்சிக்கும், நீர் - ஆழத்திற்கும் ஒப்பாயின. இவை உறழ்ச்சிப்பொருளில் வந்தன. இழைத்தல் - செய்தல். 116. தாங்கு - பொறுப்பாய். அனை - அத்துணை. மதுகை - வலி. துனி - துயர். இல்லாகுதும் - இல்லையாவேம். இது சாக்காடு குறித்தது. 117. வாரல் - வாருதல் (...bfhŸi ளயிடுதற்குரிய);நீட்சியுமாம். வயிர் - கொம்பு வாச்சியம். விளி - ஒலி புணரின் எழில் புணரும்; பிரியின். மாமைசாயப் பசலை அணிநலஞ்சிதைக்கும் எனவும் அதனால் மார்பு உடைத்து எனவும் இயைக்க அசுணம்கொல்பவர்கை அசுணத்திற்கு முதல் யாழை வாசித்து இன்பஞ் செய்து அழைத்துப் பின் பறையை அடித்துக் கொல்வதுபோல மார்பும் எனக்கு முன் இன்பஞ்செய்து பின் துன்பஞ்செய்கின்றது என்பது கருத்து. பறை யொலி அசுணங் கோறலை பறைபடவாழா அசுணமா என்பதனானறிக. 118. பார்வல் - பார்வை. புணர்வு புன்கணுடைத்து என்க. புன்கண் - துன்பம். ஈண்டு அச்சத்தின்மேற்று. 119. கயந்தலை - யானைக்கன்று. 120. தன்னை என்றது ஈண்டுத் தலைவியை. 121. கலித்த - தழைத்த. கரும்பு - வண்டு. களையும் - நீக்கும். முயங்கல் - முயங்கற்க. அது மார்பு சிதைப்பதுவாம். சிதைத்தல் - கெடுத்தல். பால்படுதன் முதலியவற்றால் கெடுப்பதுவாம் என்றபடி. 122. அருகல் - கருங்கல். 123. பக - பிளக்க. வீழ்ந்த கிழங்கு என்க. கழை - மூங்கில். கால் - தண்டு. கழு - கழுக்கோல். முறுவன்முகம் - மகளிரது நகையோடு கூடிய முகம் என்றது உவகையுற்ற முகத்தை. மகளிர் என்னுஞ் சொல் வருவிக்க. கிழங்கினையும் காலையும் உடைய தாமரை எனவும். இலையின் மருங்கே முகையின் இடையிடையே மலர்தயங்கப் பூத்த தாமரை எனவும் இயைக்க. இமிழ்தல் - ஒலித்தல். பழனம் - வயனிலம். நனை - அரும்பு. ஞெண்டு அஞ்சி ஓடிச் செறியும் ஊர எனக் கூட்டுக. பகன்றை - சிவதை. வயலைக்கொடி என இயையும். தைஇ - உடுத்து. தழுவணி - தழூஉ ஆடும் அழகு. தழூஉ - கைகோத்தாடல். குறுந்தொடி - குறியவளையினை யுடையாள். துடக்கிய - பிணித்த. தொடர் - பிணிப்பு காதலி என்றது ஒருத்தியை. என்ன கடத்தள் - என்ன கடப்பாடுடையள். தித்தி - தேமல். பல்லூழ் - பலமறை. தித்தியையும், விரலையும். எயிற்றையும் உடையளாய் நின்னை நுவலும் காணியசெல் என இயைக்க. 124. கழன்ற மலர் என முடியும். கால் - காம்பு. விழவணிக் கூட்டும் - (மலரை) விழவிற்கு அணியாகக்கூட்டும். கூட்டும் வயல் என்க. அல்கல் - இரவு, தொடி - பூண். தொடியின் எரவாகி - தொடியின் அழகையுடையவாகி. மாக்கண் - கரியமுலைக்கண். இவை முயங்கல் விடாஅல் என - இவற்றைத் தழுவுதலை விடாதொழிக என்று சொல்ல. ஓம் என்னவும் - ஒழியும் என்று சொல்லவும். ஒல்லார் - இயையார். பருவம் - காலம். இனி - இப்பொழுது. கவவுக்கை - அகத்திட்டகை (தழுவியகை). போற்றி - கருதி. நல்லோர்க்கு - அழகுடைய பரத்தையர்க்கு. இஃதுசெல்வன் - இந்தச் செல்வன் (என்றது புதல்வனை) சிறுபுறம் - முதுகு. பிடருமாம். அறிவினேற்கு புலத்தல் கூடுமோ என இயைக்க. அறைபோதல் - கீழறல். 125. புலம்பு - தனிமை. புலம்பு... ... காட்டி என்றது வேண்டினம் என்பதனால் தனித்தன்மை தோன்றினமையின். 126. ஈரம் - அன்பு. 127. செவ்வி - கோலம். 128. நோதக்காய் - வெறுக்கத்தக்க பரத்தமையையுடைய. நொந்தீவார் - வெறுப்பார். தேற்றிய - தெளிவிக்க (ஊடலுணர்த்த). இளையவர் - இளைய பரத்தையர். தாதுசோர்ந்து - தாதுகள் உதிர்ந்து. கண்ணி - மாலை. 129. ஆரா - நிறையாத. தண்டாப்பரத்தை - அமையாத பரத்தைமை. புலத்தகைப் பெண்டிரை - புலக்குந் தகைமையுடைய பெண்டிரை. தேற்றி - தெளிவிப்பாய். தோலாமோ - தோலா திருப்பேமோ; தோற்பேமன்றோ. 130. இகவாய் - பரத்தையர் குறிக்கொண்ட நிலையைக் கடவாயாய். நில்லாதி - நில்லாதேகொள். சென்றீ - செல்வாய். ஈ - முன்னிலையசை, நின்றால் அறிசிதைப்பான் ஆதலால் தந்துசெல் என்றாள். 131. முனைஇய - வெறுத்த. காரான் - எருமை. மடி - துயின்ற. நோன்தளை - வலியகட்டு. பரிந்து - அறுத்து; அந்தூம்புவள்ளை அழகிய உட்டுளையை யுடைய வள்ளைக்கொடி. ஆரூம் - உண்ணும். யாரோ - என்ன உறவினை? ஐ - சாரியை இடைச்சொல். நிற்புலக்கேம் - நின்னை வெறுப்பேம். வாருற்று - நீண்டு. இறந்து - மழை வீழ்ச்சியைக் கடந்து. பிறளும்ஒருத்தியை - வேறும் ஒருத்தியை. பிறரும் என்றும் பாடம். வதுவையயர்தல் - மணம்புரிதல். தகைக்குநர் - தடுப்போர். 132. ஏமுறல் - இன்பமுறல்; பாதுகாவலுமாம். 133. நாய் - நீர்நாய். கலித்த - முளைத்த. அயலிதழ் - புறவிதழ். மணி - பவளமணி. நவிலா - பயிலாத. நகைபடு - நகையையுண்டாக்குஞ் (சொல்). தேர் - சிறுதேர். தமியோற்கண்டு - தனித்தனவாய்க் கண்டு. அரிவை என்றது காமக்கிழத்தியை. செத்தல் - கருதல்; ஒப்புமாம். பொலங்கலம் - பொன்னாபரணம். முலைக் கொண்டனள் நின்றோன் எனக் கூட்டுக. நிலைச்செல்லேன் - நின்றநிலையிற் பெயரேனாய். குறுமகள் - இளமகளே! எவன் பேதுற்றனை - என்ன மயக்கமுற்றாய். கரைய - குறைகூற. கவைஇ - தழுவி. உடம்படுதல் - இயைதல்; ஒப்புக்கொள்ளல். பேணல் - விரும்பல். வானத்து அணங்கு - அருங்கடவுள் என்றது அருந்ததியை. புரையும் - தகும். எனப் பேணினெனல்லனோ என இயைக்க. 134. துனி - வெறுப்பு உணர்த்தவுணராவூடல். 135. ஆசாரம் - ஒழுக்கம் என்றது மரியாதையை. 136. மை - குற்றம். மணி - பவளமணி. அவ்வாய் - அழகியவாய். தன்மெய் - தன் எழுத்து வடிவு. மழலையின் - மழலைச்சொல்லைக் கூறுதலாற் பிறந்த வாய் நீரால். பொலம்பிறை - பொன்னாற்செய்த பிறையென்னுமணி. உருள்கலன் - உருண்டசுட்டி. நகை - ஒளி. துயல்வர - அசைய. உரு - நிறம். இடை காட்டும் - நடுவே தோற்றுவிக்கும். உடைகழல் - உடுத்தல் கழன்ற. கால்வல்தேர் - உருளையோடுதல்வல்ல தேர். ஆலமர்செல்வன் - சிவன். (அவனுடைய) அணிசால் பெருவிறல் - முருகன். விருந்தொடு கைதூவா - விருந்து வருதலாற் கையொழியாத. ஞாயர் - நின்தாய்மார். பயிற்ற - கற்பிக்க. மருந்துஓவா - இனிமைமாறாத. எல்இழாய் - ஒளியை யுடைத்தாகிய பூணினையுடையாய். நாம்கொணர்ந்த பாணன் - நாம் பழக்கங்கொண்டு போந்த பாணன். (எவ்விடத்தாய் என்று யாம் வினாவ) சேய்நின்று - தூரநின்று. வாய் சிதைந்து - வாயிற்கூறும் மொழிசிதைந்து. ஓடி - பரத்தையர் கூற்றிலே மனந்தங்கி. ஏனாகிப் பாடியம் என்றற்றா - யாம் ஏனாதிப்பாடியிடத்தேமென்ற தன்மைத்தாக. அத்தத்தா - அத்தா அத்தா. வேய்த்திறம் - ஏற்றிக்கொள்ளுமிடம். வாயுள்ளில் - வாயினின்றும் போகான் என்றது தலைவனை. அத்தத்தா என்று பின்னங் கூறுகின்றான் என்றபடி. உள்ளி - கள்வரை நினைத்து. உழையே படைவிட - அவரிடத்தே படைக்கலங்களை விடும்படி. படர்தந்ததுபோல - வந்ததுபோல. ஏதப்பாடு - கள்வரால் வருங் குற்றம். புரிசைவியலுளோர் - மதிலையுடைய ஊரிற் காவலாளர். படிறு - வஞ்சனை. எருக்கி - வருத்தி. முச்சி - மயிர்முடி. ஒலிப்ப - விளக்க. எதிர்வளி - காற்றெதிர். எல்லா - ஏடி. எந்தை பெயரெனன்றது புதல்வனை. அக்காலத்துத் தந்தைபெயரே மைந்தற்கிடுவது வழக்கு. அதுபற்றி எந்தை பெயரனென்றான். 137. இது - இக்குணம். படும் - உண்டாம்; பொருந்தும். 138. வனப்பு - அழகு. நுந்தைநிலைப்பாலுள் - நுந்தைநிற்கின்ற நிலைகளின் கூற்றில். ஒத்த - உனக்கொத்த. குறி - குறிக்கப்படுங் குணம். கன்றி - மாறுபாட்டிபட்ட களங்கொள்ளும்வென்றி - களத்திற் கொள்ளும்வென்றி. கடம் என்று பாடமோதி - திறை என்று பொருள்கொள்வது நின்று. நெகிழவிடல் ஒவ்வாதி - மெலியவிட லாகிய பரத்தைமையை ஒவ்வாதேகொள். 139. பாணர் முதலியோரைக் கொடியரென்றது. பரத்தையர்க்கு வாயிலாதல் பற்றி. 140. இன் என்பது - பகுதியின் என்பதிலின்னை. பகுதியை ஆகுபெய ரென்றார்; பகுதியான காவற்பாங்கையும் ஆங்கோர்பக்கத்தையும் உணர்த்தலின். 141. கண்ணி - கருதி. கடிகொண்டார் - காவல்கொண்ட பரத்தையர். கனை தொறும் - செறியுந்தோறும். பாணன் இதழினை எனக்குக் காட்டென்றானோ என இயைக்க. நகை - எயிற்றுக்குறி. புணை - தெப்பம். அரக்கு - சாதிலிங்கம். அவளை - அவட்கு; உருபுமயக்கம். கயம் - மென்மை. கோடுளார்ந்த துகள் - முடியைவகிர்ந்து கைசெய்து முடித்தலால் வீழ்ந்துகிடந்த துகள். 142. எதிரல்ல - மாறல்ல. சொல் மாறல்ல என மாற்றுக. பாய்ந்து - பரந்து (-மடி விரிந்து). பரிந்து ஆய்ந்ததானை - கரையற்று முசிந்த புடைவை. பரிந்து என்பது மாற்றிப் பொருளுரைக்கப்பட்ட தென்பதை உரை நோக்கியறிக. ஆனா - அமையாத. பரிந்து - விரும்பப்பட்டு என்று பொருளுரைத்து நேரேமுடிக்கலாம். வேரை - வேர்வையை யுடையை. சுவல் - தோட்கட்டு; பிடர் வந்தீத் தந்தாய் - வந்தாய். குதிரைவழங்கி - குதிரையேறி. பால் - ஐம்பாற்பகுதி. கூந்தலாகிய கொய்சுவலென விரிக்க. சுவல் - பிடரிமயிர். சிகழிகை செவ்வுளை - சிகழிகையாகிய சிவந்த தலையாட்டம். சிகழிகை - மயிர்முடி. உரையுள் துஞ்சு என்பது. குஞ்சி என்றும் பாடம். நீலமணிக் கடிகையாகிய யாப்பின் வல்லிகையெனக் கூட்டுக. யாத்தல் - கட்டுதல். கீழ்காலும் - கீழே தூங்கும். புல்லிகையாகிய சாமரை என விரிக்க. புல்லிகை - காதிலிடும் ஓரணி. மத்திகை - சம்மட்டி. கண்ணுறை - கண்ணுக்குக் காண இட்டுவைத்தது. கண்ணுறையாகக் கவின்பெற்ற மத்திகை என மாற்றுக. உத்தி - தெய்வவுத்தி. மேகலையாகிய பூண்ட தார்மணி என மாற்றுக. ஒருகாழ் - ஒருவடம். பிடி - குசை. நூபுரம் - சிலம்பு. புட்டில் - கெச்சை. கிண்கிணி - சதங்கை. காமம் - விருப்பம்; காமமுமாம். ஆதி - நேரோடற்கதி. அசையினை - இளைத்தனை. வாதுவன் ஆகுவை என மாற்றுக. சேவகா! சேகா எனத் திரிந்துநின்றது; விகார மெனினுமாம். வீறியது - கீறியது. குதிரை கோரமே - குதிரை கொடியதே. வெதிர் - மூங்கில். உழக்குநாழி என்பன அவ்வளவு கருவிக் காயின. சேதிகை - ஒருவகையான ஓவியக்கோலம். வியம் - வியப்பு. வாதம் - மாறுபாடு. ஆதியுரு - பழையவடிவு. அச்சார் - அக்கூறு. திரி - திரிவாய். இதன்பொருளை இன்னும் உரைகொண்டறிக. 143. அதனை - அச்சுடுதலை; அக்கொடுமையை எனினுமாம். நீக்கிய - நீக்கும்படி. 144. இவை கலியிலுள்ள பாட்டுகள். 145. அதனின் மீது - அவ்வடிமேல் வீழ்தலின் மீது. 146. கோடல் என்றது கொடுமை ஒழுக்கங் கோடல் என்பதிற் கோடலை. 147. மெய்யைப் பொய்யென்று மயங்கிய நீ என இயைக்க. கை - உலக வொழுக்கம். போறி - போலே இருந்தாய். ஏற்றி - ஏறத்தெளிவித்து. தலையிட்டு - என்தலையிலேயிட்டு (சுமத்தி). கையொடு கண்டாய் - யான் செய்தனவற்றைக் கையொடு பிடித்துக் கொண்டாய். யாம்யார் - (அங்ஙனம் அருளுதற்கு) யாம் யாராகுந்தன்மை யுடையேம். எல்லா - ஏடா! அளித்து - அருள் செய்து. விடலை - விடலாய். நடலை - நடிப்பு. பட்டு - அகப்பட்டு. பூழ் - காடை. பாணனோடு - பாணனால். விளித்து - அழைத்து. ஏய்க்கும் - பொருந்தும். 148. அரிவை வேண்டிய குறிப்பினையாகி ஆண்டு உறைதல் நினக்கு மாத்திரமினிதன்று; அஃது எமக்குமினிது என மாற்றி இயைக்க. ஈண்டு - இவ்விடம். 149. பரத்தைமை என்றது, தலைவன் பரத்தைமையை. 150. இதன் பொருளை உரைநோக்கி யறிந்துகொள்க. விரியுமென்று விடுத்துள்ளாம். 151. சிறைத்தல் - தடுத்துக்கொள்ளல். 152. அணியொடு (பரத்தையரிடத்து அணிந்த) அணியோடு. கொள்ளாதி - எடாதேகொள் (தூக்காதே). செவ்வாய் - சிவந்த வாய்நீர். நனைப்பது - நனைக்கப்படுவதொன்றாயிரா நின்றது. இதற்கு எழுவாய் அகலம். ஆல் - அசை. (அங்ஙனம் நனைப்பதாற்) சாய்குவாளல்லளோ என ஏது வருவித்து முடிக்க. சாய்தல் - வருந்தல். குறி - குறித்தல்; கருதல். பரிவான் - அறுப்பான். புலத்தல் - ஊடல். நண்ணியார் - கூடினார். காய்தல் - கோபித்தல். 153. அவட்கு - அங்ஙனம் கூறினவளுக்கு. இனிதாகி - இனிதா யிருக்கும்படி. விடுத்த னன்போகி - சில மறுமொழிகளைக் கூறிப்போய். தலைக்கொண்டு - தலைமைப் பாடுகொண்டு (பெருமிதங்கொண்டு). ஈதுபுலத்த கைப்புத்தேள்இல் - இந்தப் புலக்குந் தகைமையையுடைய புதியவள் இல். புக்கான் என்றவரையும் சேடி கூற்று. அப்பால் தலைவிகூற்று. அலைக்கு ஒரு கோல்தா - இவனை அடித்தற்கு ஒரு கோல்தா. எல்லா - ஏடா! எறிதல் - எடுத்தல். சிறுகண்ணும் - சிறிய இடங்களிலும். செய்யும் - செய்வாள். விடு - அழுகையைவிடு. பெருமானவள் - பெருமானுடைய அவள். என்றது அவன் தந்தையுடைய காதற் பரத்தை என்றபடி. திறவது - (நீ போதற்குத்) தக்க இல். ஐயமில்லாதவர் இல் - நீங்கானென்று துணிந்தவரில்லிலும். ஒழிய - நின்செலவொழிந்துகிடக்க. செல்லல் - செல்லற்க. அமைந்தது - முடிந்தது. 154. மறைநின்று - மறையநின்று. வந்தீத்தனர் - வந்தனர். தாவாத - வருத்தமில்லாத. தவறு - தப்பு. யாம் இவனைக் கோடற்கு காவாது ஈங்கு ஈத்தை என இயைக்க. ஈத்தை - தருவாய். சீத்தை - கைவிடப்படுமவன். கன்றி - மனங்கன்றி. அதனை - அவள் மார்பிற் பாய்தலை. கடிதல் - விலக்கல். கோண்மா - சிங்கம். 155. பிரித்தல் - தன்னினின்றும் பிரித்துத் தலைவன்பாற் சார்த்தி அவன் புதல்வனாகக் கூறல். 156. சூளுறல் - சத்தியஞ்செய்தல். 157. வேற்றுமை - மெய்வேறுபாடு. தேற்ற - தெளிவிக்க. தெளிக்கு - தெளிவிப்பேன். தேற்றேம் - எம் நெஞ்சைத் தெளிவியேம். தார்மயங்கிவந்த - (பரத்தையரது) தாரை நின் தாராக மயங்கி அணிந்துவந்த. தவறு - தப்பு. போர் - ஊடற்போர். சூள் - சத்தியம். அணங்கு - வருத்தம். விளிதல் - கெடுதல். 158. தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும் என்பது இங்கே மீளவும் வரவேண்டும். 159. இனி... இப்பொழுது. கொண்டோள் மிகமடவள் என்க. யாதனாலெனின் பசப்பித்தோர் பலரென்பதையறியாளாதலின் என்க. 160. ஆவயின் - அவ்விடம் தோழியைப் பொருளாக வைத்து ஆவயின் என்று சுட்டினார் என்பார். பொருள் என்பதுபற்றி என்றார். 161. இருமருப்பு - கரியகொம்பு; எருமையாகிய காரான் என்க. எருமையையும் ஆ என்றல் மரபு. ஈன்றணிக்காரான் என்றமையால் பெண் எருமை என்பது பெறப்படும். யாத்த - கட்டிய. பால் - பக்கம். பெய் - பெய்த - விதைத்து முளைத்த. பாஅற்பைம்பயிர் எனவும் பாடம். மனை - இல்; ஈண்டு அறத்தின் மேலாயது. கடம் - கடமை. துனியிடை - புலவிக்காலத்து. இன்னாக்கிளவியாகிய இதனால். எவன் - யாதுபயன்? இன்னர் - இத்தகையர். 162. பார்பக - நிலம்பிளக்க. வீழ்தல் - கீழ்ச்சேறல். உடும்படைந்தன்ன - உடும்பு செறிந்தாற்போன்ற. பொரி - பொரிந்த செதிள். ஆட்டு - விளையாட்டு கோடு - கிளை. கம்பலத்துஅன்ன - கம்பலத்தை விரித்தாற்போன்ற. பந்தின் தாஅம் - பந்துபோலப் பரவிக்கிடக்கும். வெள்ளில் - விளாம்பழம். வல்சி - உணவு. ஆரிடை - அரியவழி. புரிந்தனை - விரும்பிக்கூறினை. நன்று - நன்மை. 163. கொடியிணர் - நீண்ட பூங்கொத்து. இடையிடுபு தோன்றும் கொன்றை என்க. கதுப்பு - கூந்தல். கார் - கார்காலம். கொன்றை மலர்வது கார்காலம். 164. வாரார் என்றது தோழி. 165. பாம்பின்உரி - பாம்பின் (கழற்றிய) தோல். நிமிர்ந்தன்ன உருப்பு என்க. உருப்பு - கானல். உருப்பவிர்மையம் - நண்பகற்காலம். உள்ளிப்பேடை கூஉம் என இயைக்க. பொரிகால் - வெப்பத்தாற் பொரிந்த அடி. கவடு - கிளை. புலம்பக்கூஉம் - தனிமைதோன்றக் கூவும். சுரம் - வழி. பிரிந்த - கடந்து வல்லுவோர் அவ்வன்மையை யாங்கறிந்தனர் என முடிக்க. 166. நன்னலம் - நல்ல பெண்மைநலம். சாஅய் - மெலிந்து. உரையல் - (அவர்பாற் பரிவுகூர்ந்த சொற்களைச்) சொல்லாதே. எவன்? - எதன்பொருட்டு. அன்பில்லாதவர்பால் யான் புலக்கவில்லை என்பது கருத்து. 167. செத்தென - இறந்ததாக. பதைப்ப - அசைய; ஏதுப் பொருட்டு. கழிய - மிக. கழியநெய்தல் என மாற்றியும் பொருள் கொள்ளலாம். நெய்தல் ஓதமொடு பெயரும்துறை என்க. பைஞ்சாய்ப்பாவை - தண்டான் கோரையிதழிற் செய்த பாவை. 168. கொடிப்பூ - நீண்டபூ. தீண்ட - தீண்டலால். வடு - பிஞ்சு. மா - மாமரம். பனித்துயில் - இனியதுயில். சாயல் - மென்மை. 169. புதல் - செடி. நுடங்கும் - அசையும். விசும்பாடுகுருகு - விசும்பில் நின்றசையும் குருகு. புதுவோர்மேவலன் - புதிதான பரத்தையரொடு மேவுதலுளனாகலின். 170. கண்படுதல் - துயிலல். கண்கடுபரத்தையின் - கோபிக்கின்ற பரத்தையினின்றும். 171. துணை - துணைவி. உரவோர் - அறிவுடையோர். மடவமாக - அறிவிலேமாக. 172. கடுவளி - கடுங்காற்று. பொங்கர் - மரக்கிளை. போந்தென - வீசியதாக. போந்தென நெற்றுவிளை வற்றல் ஆர்க்கும் அருஞ்சுரம் என்க. நெற்றுவிளைவற்றல் - நெற்றின் முற்றியவற்றல். ஆர்க்கும் - ஒலிக்கும். உழிஞ்சில் - வாகை. 173. எறும்பியளை - எறும்புப்புற்று. சுனைகளையுடைய பாறை என்க. உலைக்கலன்னபாறை - கொல்லனுலையிற் பட்டடைக்கல்லை யொத்த வெப்பமுடைய பாறை. மாய்க்கும் - தீட்டும். கவலை - கவர்த்தவழி. அது அவலம் கொள்ளாது - அதற்குத் துன்பங் கொள்ளாது. நொதுமல் - அயன்மை. 174. ஆகம் - மார்பு. தொடுத்தென - தொடுத்தது என (வைத்துக்) கட்டினது என்று கூறும்படி. அமையார் - வேட்கை தணியாராய். 175. நுங்குரிசில் - நுந் தலைவன். உள்ளி - நினைத்து. நயந்தனையாயின் மறவாதீமே என இயைக்க. இன்னா - துன்பம். படர் - நோய். 176. தோழி - விளி. ஈட்டிய பொருளினைச் சூழ்கம் என இயைக்க. நீடிய பொருள் எனவும் பாடம். நீடியபொருள் - நீட்டித்த காரியம். 177. கறுத்தோர் - தன்னொடு வெகுண்ட பகைவர். அரண் - மதில். கதழ் - விரைவு. அதர் - வழி. கடைஇ - செலுத்தி. என்னும் - என்பான். விளங்கத் தருகுவலென்னும் என இயைக்க. 178. புல்வீழ் - புல்லிய விழுது. கல்இவர் வெள்வேர் - மலைக்கற்களிற் படர்ந்த வெள்ளியவேர். வேர் அருவியிற்றோன்றும் நாடன் என்க. கிளவி நயந்தன்று - சொல்நயக்கத்தக்கதாக வந்தது; என்றது தூதினால் தலைவர் கிளவி நயக்கத்தக்கதாக வந்தது என்றபடி. வந்தன்று எனவும் பாடம். அதற்கு கிளவியைக் கூறும் தூது வந்தது எனப் பொருள் கொள்க. தீயின் - தீயின் கிளர்ச்சி போன்ற கிளர்ச்சியோடு (குதூகலத்தோடு). மணந்தனையம் - மணந்த காலத்தைப் போன்றுள்ளேம் (அன்புடையோம்) 179. சாம்பல் - வாடிய பழம்பூ. உணங்கல் - உலருந் தானியம். இல்லிறைப் பள்ளி - வீட்டிலிறப்பாகிய பள்ளி. பள்ளி - தங்குமிடம். புலம்பு - தனிமை. 180. யாராகியர் - எத்தகைய உறவினராவர். உளரி - மலரச் செய்து. புதல - புதரிற் படர்ந்துள்ள. பீலி - மயீற்பீலி. ஆட்டி - அசைத்து. கருவிளைப்பூ மயிற் பீலிக்கண் போன்றது. என்னாதோர் - என்று கருதாதோர். 181. இது என் மொழிகோ - இதனை என்னென்று சொல்லுவேன். தோடு - திரள் (கூட்டம்). பிரிந்தோர் உள்ளா - பிரிந்தோருடைய துன்பத்தை நினையாதனவாய். அகவ - கூவ. போதிற் புனையல் என இயைக்க. என்குவம்? அது (அதனை) உதுக்காண் (-உவ்விடத்துப் காண்பாயாக) என மாற்றிக் கூட்டிப் பொருள்கொள்க. 182. காய்தல் - வெகுளல். 183. முதைப்புனங்கொன்ற - பழங் கொல்லையை உழுத. விதைக் குறுவட்டி - விதையை எடுத்துச்சென்ற சிறுபெட்டி. மெழுகு ஆன்று - அரக்காற்செய்த கருவில் அமைத்து. இறும்பு - குறுங்காடு. கரன் - அருவழி. 184. நீடிய - மிக்க. காய்தல் - சுடுதல். கடம் - சுரம். பிரிந்தோராய்ச் சென்றோர் வலியர் என இயைக்க. 185. அவணநாடு - தலைவர் சென்றுறையும் அவ்விடத்துள்ள நாடு. தோடு - திரள். (தலைவரை நோக்கி) யாம் எனது துணையைப் புணர்ந்திருக் கின்றேம்; நீ எப்படி உன் துணைவியைப் பிரிந்துறைகின்றாய் என்னுமாறு சிறிதும் வல்லாகொல் என இயைத்துப்பொருள் கொள்க. வல்லாகொல் - மாட்டாகொல். 186. சாறுகொள் ஊரின் - விழாக்கொண்டாடி ஊர் மகிழ்தல் போல். புகல்வேன் - விரும்பி மகிழ்வேன். மக்கள் போகிய - வசிக்கும் மக்கள் விட்டுப்போன. புலம்புஇல் - தனிமையான வீடு. அலப்பேன் - வருந்துவேன். 187. கண்டார் - கண்டவரிடத்தில். ஒன்றுதெளிய - உண்மையான ஒன்றை அறிய. சோணை - ஓராறு. பெறீஇயர் - பெறுவாயாக. 188. இம்மையான் - இம்மைக்கண். செய்ததை - ஐ - சாரியை. போலும் - அசை. உம்மை - மறுமை. குழல் - வேய்ங்குழல். ஆர் விகுதி உயர்த்தற்கண்வந்து இழிவுப் பொருள் தந்து நின்றது. சுடப் படுமுன்னேயே அதற்குப் பிறரை நலிதற்குணமுண்மயின். நினைந்து குழலார் சுடப்பட்டவாறு என்றாள். 189. நீத்துநீர் - வெள்ளநீர். பொதும்பர் - மரச்சோலை. நட்புயாத்தேம்; அந் நட்பு (நன்றாக) யாத்தது. யாத்தல் - கட்டுதல். அது - (அக்கட்டிய நட்பு) அவிழ்த்தற்கரிதாக முடிந்தமைந்தது என இயைத்துப் பொருள் கொள்க. 190. உடலினேனல்லேன் - பகைத்தேனல்லேன். தேரோடு புதல்வனை உள்ளி நின்மனைக்கு நீ வருதலும். (வௌவியோள் -) நின் வருகையைத் தடுத்தவள் அவண் யார் (எவள்) பொய்யாது உரை என இயைக்க. 191. (அவள்) தண்புனல் வண்டலைச் சிதைத்துக்கொண்டு போனதாகக் கண்சிவக்க அழுதுநின்றாள் என இயைக்க. 192. கொக்கினுக்கு ஒழிந்த - கொக்குப்பறவை இருத்தலால் கிளையசைந்து வீழ்ந்த (பழம்). கூம்புநிலை - ஒடுங்கியிருக்கு நிலை. தகைய - தன்மையான கரும்புகளையுடைய. தண்டா - அமையாத; ஒழியாத. யாமைப் பாசறைப்புறத்து - யாமையின் பசிய பாறைக்கற்போன்ற முதுகில். நந்து - நத்தை. கைதூவின்மையின் - கை யொழியாமையின். எய்தாமாறு - எதிர்ப்படப்பெறாமை. 193. சொல்வன்மைபற்றி இளமாணாக்கன் என்றாள். மன்றம் - பொதுவிடம். என்னன் - எத்தகையன். நிரம்பா - முற்றவளராத. ஊரும் - செல்லும். செம்மல் - தலைமை. 194. பாண! நீ வளைநீங்கிய நிலைகாண். (மதி - முன்னிலையசை.) அதனை நீ துறைவற்கு உரைத்தற்குரியை என்க. இறை - முன்கை. 195. ஆடுஇயல் விழாவின் அழங்கன் மூதூர் - கூத்தாடுகின்ற விழாவினொலியை யுடைய பழைய ஊர். உடை ஓர் பான்மையின் - ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையினாலே. கைதூவா - கையொழியாத. புலைத்தி என்றது வண்ணாத்தியை. எல்லி - இரா. புகாப் புகர் - சோற்றின் கஞ்சி. கலிங்கம் - ஆடை. வாடாமாலை - பொன்னரிமாலை. பனம்பிணையல் - பனைநார்க் கயிறு. ஊக்காள் - ஆடாள். நல்கூர்பெண்டு - குறைவுபட்ட பெண்டன்மை (பெண்டன்மையிற் குறைவுபட்ட). பூசல் - ஆரவாரம். கூட்டல் - பொருத்தல்; பொருந்துவதுசெய்தல். நயனின் மக்கள் என்றது பாணன் முதலாயினோரை. 196. குய் - நறும்புகை. கலிங்கம் - ஆடை. புனிறுநாறும் - ஈன்றணிமையானாய முடைநாற்றம்வீசும். சேரி - சேரியினின்றும். எழாஅல் - யாழ்நரம்பினின்றும் எழும் ஓசை; என்றது ஓசையை எழுப்பிப்பாடலை. தொழாஅல் - எம்மைத் தொழாதே. பாடு மனைப் பாடல் கூடாது - சிறந்த எமது மனைக்கண்நின்று பாடுதலைச் செய்யாது. பாடல் கூடாது ஊரனைக் கொண்டுசெல் என இயைக்க. பண்ணிலை - பிணித்திருக்குநிலைமை. முனிகுவ - வெறுக்கின்றன. விரகிலமொழியல் - பயனில்லாதவற்றைச் சொல்லாதே. *இதுமுதல் மூன்று அடியும் உரைப் புத்தகத்தில் இல்லை. புரையுநட்பு - உயர்ந்த நட்பு. இளையோர் கூம்புகை மருள ஓராம் - இளைய பரத்தையர் கூம்புதலோடு மயங்கயாம் சிந்தியேம். கண்தங்காது - இவ்விடந் தங்காது. ஆங்கு - இளையரிடம். அமைத்து - அமையச்செய்து என்று பொருள் கொள்க. 197. நும்மைப்புல்லேன் புலத்தலுமிலன் என இயைக்க. கல்லா - பாகன்மொழிக் குறிப்பன்றிப் பிறகல்லாத. படை - படைத்த; செய்த. மடை - அடைப்பு. அடைப்பைத் திறந்துகொண்டு நீர் பெருகியதாக என இயைக்க. கால் - கால்வாய். எதிரிய - திருமிய (திரும்பிய). உள்வாய் - உள்ளிடம். சேறு உதைத்தபுள்ளி - சேற்றை மிதித்தலாற் றெறித்த சேற்றுப்புள்ளி. புறத்து - முதுகிலே. உடம்பின்புறத்தே எனினுமாம். கோல்புடைமதரி - கோலால் அடித்தற்கும் அஞ்சாது செருக்குற்று. பிறழும் - புரளும்; அதுவும் பாடம். 198. செத்தென - இறந்ததாக. சேக்கும் - துயிலும். எங்காதலோன் சேர்ப்ப னொடு வாரானாய்த் தானே தனித்து வந்தனன் என இயைத்துப் பொருள் கொள்க. தடையின்றிக் கூடியவாறு என்றிருத்தல் வேண்டும். ஆய்க. 199. பின்னும் - புலவி நீங்கிக் கூடியிருந்த பின்னும். ஓம் எனவும் - ஒழியு மென்னவும். ஒல்லார் - விடார்; உடன்படார். வலிதின் - கடுஞ்சொல்லான். 200. புலைத்தி என்றது வண்ணாத்தியை. கூடியார் - நின்னொடு புணர்ந்த பரத்தையர். புணை - தெப்பம். நின் புலைத்தி அரக்கினை (எனக்குக்) காட்டென்றாளோ என இயைக்க. அரக்கு - சாதிலிங்கம். 201. தலைவன் கூறக்கேட்டு என்றது. பிரிதற்குமுன் தலைவன் அன்புறுதக்கன வாகிய கருப்பொருள்களைக் கூறத் தான்கேட்டு என்றபடி. 202. பொரி - வெப்பாற் பொரிந்த; பொருக்குமாம். அலங்கல் - அசைதல். உலவை - வற்றற்கொம்பு. புறவு பெடை பயிரும் - புறவுச்சேவல் தன் பெடையை அழைக்கும். ஒல்லேம் - பொருந்தேம் (உடன்படேம்). தப்பல் - தவறு. அகறல்வல்லுவோர் சேர்ந்தனர்கொல் என இயைக்க. 203. அன்புறுத்தக்கன என்றது. அன்புறுதகந என்னுஞ் சூத்திரத்தைக் குறித்துநின்றது. (பொருளியல் - 37). 204. இப்பாட்டு. தோழிகூற்றன்று என்பதற்குக் காரணம் வருவர்கொல் என ஐயுற்றுக் கூறலே என்பது கருத்து. 205. உரைத்தது தோழி. 206. அயிரை - ஒரு மீன். தூம்பு - உட்டுளை. தாள் - காம்பு. பழமை - பொய்கை. குறுநர் - பறிப்போர். நடுக்கம் - வேட்கை விரைவுபற்றி உண்டான நடுக்கம். அரியமாகிய காலை என்றது களவுக்காலத்தை. நோன்றல் - பொறுத்தல். நோகு - நோவேன். 207. புன்கால் - புல்லிய காம்பு. காம்பையுடைய கனி என்க. புகர்ப்புறம் - புகர் நிறம்பொருந்திய புறம். கனிகிளைசெத்து - கனியைத் தம் கிளையாகக் கருதி. பழஞ்செத்து - பழமாகக்கருதி. அலவன் கொண்ட கோட்கு ஊர்ந்து கொள்ளா - நண்டுகொண்ட கோட்பாட்டினின்றுந் தாம் விலக்கிக் கொள்ளப் படாதனவாய். பூசல் - ஆரவாரம். எய்தியவிடுக்கும் - (நாரை) வர விடுத்துச் செல்லும். மகிழ்ந்தார் - கள்ளுண்டார். கட்கழிசெருக்கு - கள்ளூறுஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு. பூசலை விடுக்கும் என்க. 208. எக்கர் - மணற்குவியல். இகந்துபடுசினை - உயர்ந்து வளரும் சினை. 209. தோகை - மயில். இழை - ஆபரணம். இனிது - இனிதான காரியம். 210. அற்றம் - சோர்வு; எனவே களவைப் பிறர் அறிய ஒழுகல் என்றபடி. இல்லா எனவே அவ்வாறொழுகலில்லாத என்றபடி. 211. கடுத்து - வெகுண்டு. தெறுவது - வருத்துவது. பல இறைஞ்சினம் - பலமுறை வணங்கினேம். அதன்பயன்பெற்றனம் - அவ்வணக்கத்தின் பயனை இப்பொழுது பெற்றேம். 212. யாய் என்றது தலைவியை. நந்துக - பெருகுக. தண்டுறை யூரன் வரைக எந்தையுங் கொடுக்க என்றது கிழவோற் சுட்டியன. 213. பெரும்பொருள் என்றது இல்லறத்தை. 214. கரும்பின் எந்திரம் - கரும்பை நெரிக்கும் ஆலை. கோமான் என்றது பாண்டியனை. 215. அடங்கல் - அமைதல். அமையாத ஒழுக்கம் - புறத்தொழுக்கம். 216. செறு - வயல். கள்வன் - நண்டு. அளை - புற்று. சாஅய் - மெலிந்து. 217. இழைத்தல் - தானே தொடுத்துக்கூறல். 218. இறைமிசை - சிறையின்மேலிடம். மாரிச்சுதையின் ஈர்ம்புறத்தன்ன - மழைக்காலத்துச் சுண்ணச்சாந்தின் ஈரிய புறத்தையொத்த; மழையாற் கழுவப்பட்ட சுண்ணச்சாந்து தூய வெண்ணிற முடையதாதல்பற்றி இங்ஙனங் கூறினார். இறை என்பது சிறைக்குப் பெயராதலை. முடங்கலிறைய தூங்கணங்குரீஇ என்னுங் குறுந்தொகைச் செய்யுளா னறிக. (குறுந். 374). இறை - இறப்பு என்றும், புறம் - மேலிடம் என்றும் உரை கூறுவாருமுளர். பொருத்தம் நோக்கிக் கொள்க. கதையின் புறம் என்பதற்கு சுண்ணச்சாந்து பூசிய சுவர்ப்புறம் எனினுமமையும். சிறகின்மேலிடம் அதிவெண்ணிற முடைமை பற்றி மாரிச் சுதையை உவமை கூறினார். கூரற்கொக்கு அவ்விறகையுடைய கொக்கு. கூரல் என்பற்கு (க் குளிர்ச்சியால்) நடுங்குதல் எனினுமாம். சேவல் கயல் குறித்து நோக்கிப் பார்வலிருக்கும் ஊர் என இயைக்க. சிறை மிசை அதன்மீது வழியு நீரைப் பார்த்திருக்கும் எனச் சிறை (அணை)யை அது இருத்தற்கு இடமாகக் கொள்க. உழவர் குத்தி மிடைந்து பொத்திக் கொண்ட அணை என இயையும். செய்யாகிய நெற்பயிரையுடைய விளைநிலங்களை மறைத்து என்க. வல்வாய் - வலிய இடம். ஊர! நீ பாணனொடுமாந்தி வாராயாகி நும்மனைச் சேர்ந்தஞான்று நும்மனை மடந்தை உவகையிற் பெரிது உவந்தனள் யாமது பேணின்றோவிலம் எனக் கூட்டி முடிக்க. அது - அவ்வுவகை, பேணின்றிலம் - பேணிற்றிலம். யாமது பேணா தொழியவும் நீ அதனை மறைப்பது பெரிதும் நகையாடற்கிடமாய தென்பாள் நகை நன்றம்ம என்றாள். பழையன் மாறனது கூடற்கண் பகைப்புலத்தே இறுத்த கிள்ளிவளவன் அம்மாறனை அமரிற் சாய்த்து வவ்வி ஊர்கொள அதனைக் கண்டு உவந்த கோதைமார்பன் என்னுஞ் சேரன் உவகையின் எனவும் கூட்டி முடிக்க. மட்டு - கள். சாஅய் - சாய்த்து, உவகையிற் பெரிது உவந்தனள் என மாற்றிக் கூட்டுக. 219. எவ்வந்தீர ஆற்றுற - துபைந்தீர ஆற்றுதற்கு என நெஞ்சு நேரும் என இயைக்க. 220. உண்துறை - நீருண்ணுந்துறை. கொளல் தகுவகொல் என இயைக்க. அச்சேரி என்றது பரத்தையர்சேரியை. ஊராண்மை - உபகாரியாந்தன்மை. 221. பல்கதிர்த்தீ - பல ஒளியையுடைய வேள்வித்தீ. தீயினையும் செறுவினையு முடைய தேனூர் என்பது உரைகாரர் கருத்து. தீபோலச் செவ்வாம்பற்பூ விளங்கும். செறுவென்றுமாம். புலம்ப - தனிப்ப; கெட. அனை நலம் - அத்துணை நலம். 222. வராற்போத்து - ஆண்வரால். கொடுவாயிரும்பு - தூண்டில். துற்றி - உண்டு. அடை - இலை. அரில்படு - பின்னிய. போத்துதுற்றி, பாய்ந்தெழுந்து. மயக்கி, வாராது மதமிக்கு உழக்கும் ஊர என முடிக்க. அலர் ஆர்ப்பினும் பெரிது என மாற்றி இயைக்க. அலர் - செழியன் அகப்படுத்துக் கொன்று களவேள்வி வேட்ட ஞான்றை ஆர்ப்பினும் பெரிது பரந்தது என்பது கருத்து. 223. பொன்னொடு குயின்ற - பொன்னாற் செய்த. தாலி - ஐம்படைத்தாலி (பஞ்சாயுதம்) தாலியையுடைய மார்பை நனைப்பதன் றலையும் என விரித்து இயக்க. நனைப்பதன்றலையும் - நனைப்பதன் மேலும். மணி - பவளமணி. மழலை - எழுத்து நிரம்பாதது. இஃது செவ்வாய் மழலைவயங் கிளவி - இந்தச் செவ்வாயினின்றுந் தோன்று மழலைச்சொல்லோடு கூடிய நீர். நீர்நனைப் பதன்றலையும் நனைப்பப் புகுந்த மகிழ்நன்மார்பு காணாயாதல் கொடிது எனக் கூட்டுக. தந்தை - தன்தந்தை. போலப் புகுந்த என இயைக்க. 224. எலுவ - நண்பனே; யாரை - யாரை (நட்பாகவுடையை). யார் - என்னவுற வினை. நொதுமலாளனை - அயலானாயினை. எம்மிடை நினைப்பில் அனைத்து - எம்மிடத்து நடந்துகொள்ளும் இயல்பை ஆராயின் அஃது அத்தகைமைத்தே. அதிர்ந்தன்ன ஓங்கற்புணரி - அதிர்ந்தாற்போன்ற ஒலியோடு உயர்ந்து வருகின்ற திரையை யுடைய கடல். மரீஇயார்ந்த ஆ - மருவியுண்ட பசு. புலம் - தானடையுமிடம். மாந்தை அன்னஎம் - மாந்தை நகர்போன்ற எம்மை. நலம் தந்துசெல் - நின்னாலிழந்த நலனைத் தந்துவிட்டு அப்பாற் போவாயாக. 225. ஞாண் - கயிறு. போத்தந்த - கொண்டுவந்த. உணங்கல் - வற்றல். துறைவனை என்கம் என இயையும். தொடுத்து - இடைநிலை. தொடுத்தல் - இடைவிடாமை. 226. நாய்ப்போத்து இரைதேருமூர என இயைக்க. பாணனது மார்பின் வலியுற வருந்தி ஆரியப்பொருநன் தோள் அவன் கையகத்து ஒழிந்த கிடக்கை நோக்கி கணையன் நாணியாங்கு வாணுதற்கண்டுயான் நாணினன் என முடிக்க. எதிர்தலைக்கொண்ட - எதிர்ந்த. 227. பேணா - வழிபாடில்லாத; மதியாத. 228. மாஅயோள் - மாமை நிறமுடைய தலைவி. மடை - மூட்டு வாய். தமிய - சூடாமையால் தனித்தவையாய். மெய்சாயினள் - உடம்பு மெலிந்தாள். கணைக்கால் - திரண்டகாம்பு. ஓதம் மல்குதொறும் - வெள்ளம் அதிகரிக்குந் தோறும். கயம் - குளம். நம்முன்நாணி - நமக்குமுன் செல்ல நாணி. கரப்பு ஆடும் - மறைத்தலையுடைய சொற்களைச் சொல்லுவாள். (அதனால் அவள்) யாயாகியளே - கற்புக்கடம்பூண்டவளே. 229. பகல்கொள் விளக்கொடு - பகலைச்செய்யும் விளக்கால். தேற்றிய மொழி எவன் பயஞ்செய்யும் என மாற்றிக் கூட்டுக. 230. தான் என்றது தோழியை. 231. வெள்ளித்தொடி - வெள்ளிப்பூண். அதனையுடைய கரும்பாகிய உலக்கை என்க. வள்ளி - கொடி. குறுமகளிர் - சிறுமகளிர். குறுவழி - குற்றுமிடத்து. உலக்கையாற் பாடிக் குறுவழி உறங்கும் நாட என முடிக்க. விறந்த - செறிந்த கேட்டவை - கேட்ட நூலறிவு. உள்ளமாகிய யானையை மீட்டு என உரைக்க. அனைய - அத்தன்மைய (-பெரிய). தேருங்கால். அவ் ஒழுக்கம் அரியவாயிருந்தன என வருவித்து முடிக்க. 232. மானோக்கி - மான்போலும் நோக்கமுடையவளே! ஆனாது - அமையாது. நலிதந்து - வருத்தி. என் - என்ன பயன்தரும். 233. புலவி உப்பமைந்தற்று - புலவி இன்பஞ்செய்தற்கு வேண்டுமள விற்றா தல் உப்புத்துய்ப்பனவற்றிற்கு வேண்டுமள விற்றாக அமைந்தாற்போலும். அது - அவ்வுப்பு. 234. பண்ணல் - ஏறுதற்கேற்ப அமைத்தல். மரீஇய - மருவும் பொருட்டு. எல்லினன் - விளக்கத்தினையுடையவன்; விளக்கம் பரத்தையரை மருவலால் உண்டாயது. மறுவரும் - மனஞ்சுழலும். இத்திணை - இக்குடி. 235. ஆம்பல் மேய்ந்த எருமை (முதுபோத்து) ஆண் அள்ளற்றுஞ்சிப் பொழுதுபட (பொழுதுதோன்ற) வரால் குறையப் பெயர்ந்து (மீண்டுவந்து) பகன்றை சூடி மள்ளரிற் புகுருமூரன் எனக் கூட்டி முடிக்க. போர்ச்செறி மள்ளர் - போரிற் சென்று பொருது வெற்றிபெற்றுவரும் வீரர். வீரர் பூச்சூடிப் பெருமிதத்தொடு வருதல்போல வந்தது என்பது கருத்து. குறைய - காலான் மிதி பட்டு உடல்துணிய. ஊரன் தேர்தரவந்த மகளிர்தரத்தரப்பரத்தைமையைத் தாங்கலாற்றாதவனாகவுள்ளான் என்று கூறி வறிது நீ புலத்தல் என இயைக்க. ஊர்கொள் கல்லாமகளிர் - ஊரிற் பொருந்திய தமக்கென்று ஒருவனை வரித்தலறியாத மகளிர். ஊர் (கொள்கல்லா) தாங்காத மகளிர் என்றுரைப்பாருமுளர். தாங்கலோவிலன் என்பதனைத் தாங்கல் ஓவிலன் எனக் கண்ணழித்து - தாங்கலை ஒழிகின்றிலன் என்றும் பொருள்கொள்ளலாம். வல்லியோர் வைகுதல் அறிந்தும் உடலுமோர் அறியார் என முடிக்க. இனித் தெரியிழை என்பதை ஆகுபெயராக்கி. தெரிந்த இழையை யுடையாளது ஞெகிழ் தோளை (ப் புணர்ந்தமையை) ஊரிற் பொருந்திய (பழிகூறலன்றிப் பிறிது) கல்லாத மகளிர் (ஊர்மகளிர்) கொண்டுவந்து சொல்லச் சொல்ல, பரத்தமை என்னாற் பொறுக்கப்படுதல் இலனாகின்றான் என்று புலத்தல் கூடுமோ என்று உரைப்பினுமமையும். 236. அருமைக்காலம் - தலைவனை அரிதாகப்பெறும் காலம். என்றது களவுக் காலத்தை. தாம் தலைவற்கு அரியராகிய காலம் எனினுமாம். 237. தேம்பூங்கட்டி - இனிய பொலிவான வெல்லக்கட்டி. இனி - இப்பொழுது வெய்ய உவர்க்கும் - வெப்பமுடையனவாய் உவர்ப்புச் சுவையைத் தரும். அன்பின்பால் அற்று - நுமது அன்பின்பகுதி அத்தன்மைத்து. ஐய! விளி. 238. புலைமகன் - புலைத்தொழிலையுடைய மகன்; கீழ்மகன். நின்வாய்மொழி பொய் என மாற்றுக. நில்லல் - எம்மனையில் நில்லற்க. பரியல் - வருந்தற்க. ஊரன் எம்சேரிகாணின் நாணவும்பெறும் என இயைக்க. 239. சுடர்விடுதாமரை - ஒளியைக் காலும் பூவைத் தோற்றுவிக்குந் தாமரை. பாசடை - பசிய இலை. உண்துறைமகளிர் இரிய - நீருண்ணுந் துறையின் கண் நீராடுமகளிர் அஞ்சி ஓட. வாளைபிறழும் - வாளைமீன் உகளும் (வெடிபாயும்) பெண்டு என்றது விறலியை. தொலைந்த நா - மென்மையைக் கல்லாத நா. உலைந்த - நிலைகுலைந்த. ஓரா - ஆராயாத. ஒழிபு - ஒருசாரெய்தி. போர்வையஞ்சொல் சொல்லலை கொல்லோ என இயைக்க. உள்யாதுமில்லது - உள்ளே ஒரு பொருளுமில்லாததாகிய. 240. கோழிப்பேடை பயிர்ந்தாங்கு என்க. வெருசினம் - காட்டுப் பூனைக் கூட்டம். உடன்குழீஇய - தன்னுடன் கூடும்படியாக. பிள்ளை - குஞ்சு. பயிர்தல் - அழைத்தல். இன்னாது இசைக்கும் - துன்பத்தைத் தருவதாகிக் கூறப்படும். அம்பல் - பழிமொழி. வாரல் - வராதொழிக. 241. தாயர் என்றது பரத்தையரது தாயரை. புறம்போயும் என்றது இல்லின் புறத்தே போயும் (பரத்தையர் பற்றி போயும்) என்றபடி. இது இறைச்சி யாற்போந்த பொருள். 242. எதிரும் என்பதற்கு இளம்பூரணர் கொண்ட பொருள் பொருத்தமாகும். 243. பொய்நல்கல் - பொய்யான அருளுதல். புறந்தரல் - பாதுகாத்தல். அந்நாள் இவள் உயிரைக் கொண்டிறக்கும் என இயைக்க. 244. செலவுஅயர்ந்தனை - செல்லவிரும்பினாய். நின்நயந்துறைவி - நின்னை விரும்பியுறைபவள். கடுஞ்சூற்சிறுவன் - முதற்சூலிற்பெற்ற புதல்வன். காண்டலின் பொருள் இனிதோ என இயைக்க. 245. புறவு - காடு; முல்லைநிலம். முலைக்கு அழும் என்றதன் கருத்து. நீபிரிந்து செலின் அவள் இறப்பாள்; அதனாற் புதல்வன் முலைக்கு அழும் என்றபடி. 246. படுவலை - அகப்படுத்த அமைத்த வலை. வெரீ இ - அஞ்சி. கணந்துள் - ஓர்புள். நரம்பொடு கொள்ளும் - யாழோசையோடு ஒத்து ஒலிக்கும். அத்தம் - அருநெறி. (தலைவர்) குன்றம் நீந்தி வந்தனர் என வருவித்து முடிக்க. கழல் தொடி - இப்போது கழலுகின்ற வளையல். கவவுக்கொள் - அணைத்துக் கொள்ளுகின்ற; மகனது என மாற்றி முடிக்க. அவா - ஆசை. நமக்கு (மகிழ்ச்சியுண்டாக) வந்தனர் என இயைக்க. 247. நீலம் - நீலமணி. கருவினான் முழங்கி என்க. இன், ஏதுப்பொருட்டு. நூல் - அசுவநூல். நூன்முறை - நூலிணக்கம். நுணங்கிய - நுட்பமாயமைந்த. கால்நவில் - காற்றை ஒப்புச் சொல்லும். கால்பழகிய எனினுமாம். வல்லோன் - செலுத்தலின் வல்ல பாகன். வாய் - இடம். வணக்கிய - வசப்படுத்திய. தாப்பரி - செல்லும் வேகம். தேர்வழிஅறுப்பப் பிறப்ப வாராராயின் என இயைக்க. தந்நிலை - அவர்தம்நிலை. வால்வீ - வெண்பூ. சவவ - தழுவ. 248. கொன்றை வம்பமாரியைக் காரென மதித்துஇணர் ஊழ்த்த: ஆதலால் மடவமன்ற என இயைத்துப் பொருள் கொள்க. வாரா அளவை - வாராதகாலத்து (-வருதற்குமுன்பே). 249. யானையர் - யானைப்படையையுடையராய். போர் மலைந்து எழுந்தவர் - போர்மலைந்து எழுந்தவராகிய பகைவர். வரும் - வருவார். 250. நுமர் என்றது தலைவனை. எம்மின் - எம் போல. நாணலும் எய்யார் ஆகுதற்கு யான் நோகு - நாணலையும் அறியாராதற்கு யான் நோவேன். 251. பதுக்கைத்துஆய - பதுக்கையையுடைத்து ஆய. பதுக்கை - கற்குவியல். ஒதுங்கு அரும் கவலை - செல்லற்கரிய கவர்த்த வழி. ஒதுங்கு, ஒதுக்கு என வலிந்து நின்றது; ஒதுக்கிடமரிதாய எனினுமாம். யானையுறுபகை - புலி. உய்த்தர - செலுத்த. இரவினான் - இரவின்கண். 252. ஆமா - காட்டுப்பசு. சிலைக்கும் - ஒலிக்கும். ஆரிடை - அரியவழி. ஏ - அம்பு. சிலையார் - வில்லையுடையராகிய வேடர். இனமா - இனமான விலங்குகள் கண்டு, அறிந்து. வாய்மாண்ட பல்லி - இடம் நல்ல பல்லி. படும் - சொல்லும். 253. கடிநாள் - மணநாள். என்னை - என்ன காரணம் (நமர்) பொருணி னைந்தார் என வருவித்து இயைக்க. அஞ்சாராய் நமர் ஏற்றுக்கொள்ளாத ஞான்று அமர் எற்றுக்கொள்ளுமென்றஞ்சினேன் என்க. 254. கடன் - முறைமை. 255. மண்கணை முழவு - மார்ச்சனைமைந்த முழவு. மகிழ் - மகிழ்ச்சி. தூங்க - கூத்தாட. அகுதை - ஒருவள்ளல் இருக்கை - ஒலக்கம். இருக்கையையுடைய அவை. பெண்டிர் கழறுப என்ப என மாற்றுக. ஆட்டனத்தி. காண்டிரோ - காண்டீரோ. சிறை - அணை. மறைந்து - உடைத்து. கொண்டு - சூட்கொண்டு (-வஞ்சினங்கூறி) என்னிடத்தே கொண்டு எனினுமாம். கைவலித்தல் - கையால் பற்றிக் கோடல். 256. பெருமிதம் - மேன்மை. 257. மாஅத்து - மாமரத்தினது. விளைந்து - முற்றி (பழுத்து). கதூஉம் - கதுவும் - கவ்வி உண்ணும். ஆடி - கண்ணாடி. பாவை - கண்ணாடியிற்றோன்றும் ஒருவனது உருவச்சாயை. தூக்குதல் - மேலெடுத்தல் (உயர்த்தல்). மேவன - விரும்பியன. 258. மரங்குழீஇய - மரங்களில் குழுமவைத்த. நனை - அரும்பு; கள்ளுமாம். மரங்களில் ஒருசேரவைத்த கட்சாடி என்க. பூவரும்புகளிலும் கள்வடிப்பதுண்டு. அரித்த - வடித்த. கோய் - கள் - முகக்கும் பாத்திரம் - கோயினது உடைப்பினால். (துவலையின்-) துவலை போல. (பனிக்கும்-) துளிக்கும் வேளூர் என்க. கள் முதிர் மரங்களில் வைத்தல் அக்கால வழக்குப்போலும். மரங்களை வைத்து அதன் மேல் வைத்த எனினுமாம். ஊதலகழியும் - தெய்வத்தினாணையால் ஊதலவாய்க்கழியும். உரு - அச்சம். நீவெய்யோள் - நின்னால் விரும்பப் பட்டவள். அணங்குக - வருத்துக. தெய்வம் அணங்குக என்று மனையோளைத் தெளித்த என இயைக்க. யார் - எவர். நெருநை - முதனாள். ஈர் அணி - புனலாடற்கணிந்த அணி. வதுவை நம்மொடு - கூட்டத்திற்குறிய நம்மொடு. மலிர் நிறை - வெள்ளப் பெருக்கு. ஆடியோர் யார்? என முடிக்க. 259. இளையோர் - இளமைப்பருவமுடைய பரத்தையர். இளையோள் என்றிருப்பது நலம். 260. அடக்கமில்போழ்து - வேண்டியவாறு ஒழுகுங்காலம். காமுற்ற - விரும்பிய. தொடக்கத்துத் தாய் - (தந்தை) பரத்தைமை தொடங்குங் காலத்துள்ளாகிய தாய். மருப்புப்பூண் - இடபஇலச்சினை. கையுறையாக - கைக்கணியாக. நகை - சிரிப்பு. காழ் - முத்துவடம். சோர்தல் - அற்றுச்சொரிதல். தொடக்கத்துத்தாய் என்றதனால் முதிர்ந் தாளாயிற்று. பரத்தமை - பரத்தையர்பாற் சென்று ஒழுகுந் தன்மை. 261. மயங்குநோய் - மயங்குதற்குக் காரணமான காமநோய். தாங்கி - பொறுத்து. முயங்கினள் - தழுவினளாய். முத்தினள் - முத்த மிட்டாளாய். இவை முற்றெச்சம். யாரேம் - என்ன முறையேம். கொள்வன - (இவன் வடிவு) தாங்குவன. 262. விடுத்தனன் - சில மறுமொழி கூறி தலைக் கொண்டு - தலைமை கொண்டு (பெருமிதங்கொண்டு). காயும் - வெகுளும். புலத்தகை - புலக்குந்தகைமை. புத்தேள் - புதியவள். 263. இறை - முன்கை. தொடி - வளை. தந்தார் - அணிந்தார். எல்லா - ஏடா. 264. வைகுதுயிலேற்கும் - தங்கிய துயிலைப் பொருந்தாநிற்கும். தங்கிய துயில் - நீண்ட துயில். வெண்ணி - ஓராறு. உருவநெறித்தழை - அழகையுடைய நெறிப்பையுடைய தழை. ததைஇ - உடுத்து. காணுநனாயின் - இவ்விள மகளைக் காண்பானாயின். வரைவேய் - மலையிலுள்ள மூங்கில். தோள் தொலையுநபல அளிய என மாற்றிப் பொருள்கொள்க. அளிய - (அவை) இரங்கத்தக்கன. 265. கடப்பாடு - ஒப்புரவு. 266. துனி - உணர்ப்புவயின்வாரா ஊடல். துணையாகிக் கூட்டுமென்றார் என இயைக்க. 267. ஆம்பற்பூ எனக் கூட்டுக. சூடுதரு புதுப்பூ - (கதிரோடு அறுபட்டு) சூட்டோடு களத்திற் கொண்டுவந்து போடப்பட்ட புதிய பூ. மிச்சில் - மிஞ்சியது. தொடர்பு - நீளநிகழ்த்துங்கூட்டம் - கொள்ளல் - ஏற்றுக் கொள்வாயாக. பெருநலம் - பெரிய இளமை. 268. பின்னர் நுகர்ந்தமை என இயையும். 269. என்பதற்கு, என்பதற்கு முடிபின்மையின் எனவும் பொருளுரைக் கலாம் என்னுஞ் சொற்கள் விடப்பட்டிருத்தல் வேண்டும். 270. தெய்வத்துயாண்டு - தெய்வத்தன்மையையுடையதாகிய யாண்டு பார் - கரை. புடைகொண்டு - மோதப்பட்டு. வைத்தென - நீங்கியதாக. அம்பியப்புகை கைகொடார் பிணிக்கும் துறைவ என இயைக்க. அம்பி - தோணி. நன்றும் - பெரிதும். கேண்மை - நட்பு. 271. பூவினைப்போல இனையளாகற்பாலளோ என இயைக்க. 272. பொலங்கலம் - பொன்னாபரணம். 273. நின்கேள் - நின் நண்பன். என்குறித்தனன்கொல் - யாது கருதினான் கொல் (அதனை அறியேம்). நகூஉம் - நகுவான். ஓர், ஏ அசைகள். 274. நகுவாரை என்று தன்னைப் படர்க்கையாகக் கூறினாள் எனக் கொள்க. 275. புழற்கால் - உட்டுளைபொருந்திய தண்டு. மடல்அகலிலை - மடலிலுள்ள அகன்ற இலை. இலையுடன் கூடிய பாசிப்பரப்பு என்க. பறழ் - குட்டி. உயக்கம் சொலிய - வருத்தத்தை நீக்குதற்கு. நாள் - விடியற்காலை. வாளை யொடு உழப்ப - வாளை மீனைப்பற்றிப் பொருதலால். கலுழ்தல் - கலங்கல் நுண்செயல் அம்குடம் இரீஇ - நுண்ணிய தொழிலமைந்த அழகிய குடத்தை வைத்துவிட்டு. பரத்தைமை - பரத்தையரைப் புணருந் தன்மை; அயன்மை. மகளிர் ஏசுப என்ப அது நல்கன்மாறுபோலும் என இயைக்க. தூங்கும் - ஆடும். வாராமாறுஏ - வாராமையாலேயே. வரின் நெருஞ்சி போலத் திரியேனாயின் என் முன்கைவளை உடைக என முடிக்க. சுடரொடு திரிதல் - ஞாயிறு செல்லும்பக்கத்துத் தானும் சேறல். மிளை - காவற்காடு. 276. செல்லில் என்பது செல்லும் என்றிருத்தல் நலம். 277. பண்ணை - விளையாட்டு. 278. முழுநெறி - புறவிதழொடியாத முழுப்பூ. அடைச்சி - செருகி. பெரும்புனல் - வெள்ளநீர். அஃது - அவ்விளையாட்டு. அயர்தல் - செய்தல். நுகம்பட - நடுநிலையுண்டாக; வலியுண்டாக எனினுமாம். எழினி நிரையைக்காத்த வாறுபோல மார்பு காக்க என முடிக்க. 279. அதிகாரம் - முற்சூத்திரங்களிற் கூற்றுக் கூறிய அதிகாரம். 280. தொடுத்து ஏன்? - யான் பலதொடுத்துச் சொல்லியாவதென்? இனி, தொடுத்தென் - பற்றினேன் என்பாருமுளர். மகிழ்ந - கணவ. செல்லல் - செல்லாதேகொள். இனி யான் விடுக்குவனல்லன் என் நலந்தந்துசெல் என இயைக்க. நன்னன் - ஒரு சிற்றரசன். கடிந்தென - கடிந்தானாக. ஆஅய் எயினன் - ஒரு சிற்றரசன். சொல்லியதமையாது உயிர்கொடுத்தனன் என மாற்றிக்கூட்டுக. கற்பு - கல்வி; பயிற்சியுமாம். மந்தி - ஆதிமந்தி. அத்தி - ஆட்டனத்தி. ஆடுஅணிநசைஇ - நீர்விளையாட்டணியை விரும்புதலால். வடவரை விற்பொறித்தோன் - சேரன். 281. உள்ளுதொறும் - நினைக்குந்தோறும். அலகு - மூக்கு; அன்ன ஆம்பற்பூ என்க. ஆம்பல் - ஆகுபெயர். வௌவியபூசல் - கழற்றுதலாலுண்டான பூசல். பூசல் - கலாம். பூசலாலே சினவிய என்க. ஒய்யும் - செலுத்தும். மண்ணார் - மார்ச்சனையமைந்த. நடுங்கியநிலையை உள்ளுதொறும் நகுவேன் என மேலே கூட்டுக. 282. ஆராக்கவவு - நிறைவுபெறாத முயக்கம். அல்கல் - தங்கல். போரார் - (பலகை) பொருத. மிதித்தது - பாய்ந்தது; உதைத்தது. சினம் மாறாளாய் மீளவுங் கோபித்துப் பறித்தது என இயைக்க. காய்தல் - கோபித்தல். 283. பொய்கை - தடாகம் (குளம்). இரைவேட்டெழுந்த வாளை வெண் போத்தை உண்ணும்படி நாரை தான் அடிபெயர்த்து வைக்கும் ஓலியைக்கேட்கின் அஃது ஓடிவிடும் என்றஞ்சிப் பைப்பயசாஅய் ஒதுங்குந் துறை என இயைக்க. சாஅய் - தளர்ந்து. ஒதுங்கும் - நடக்கும். கடி இல்லம் - காவல்பொருந்திய மனை. அவன் வருக என வருவித்துரைக்க. அவனை அவன் பெண்டிர்காணப் பற்றிப் பிணித்து மார்பைக் கடிகொள்ளேனாயின் (-சிறைசெய்யோனாயின்) என்நலன் பரந்து வெளிப்படாதாகி வருந்துக என முடிக்க. தானை - ஆடை. மார்புவதிரமுமாம். ஆரியர்பிடி - ஆரியர் பழக்கிவைத்த பிடி. பிடி பயின்று தருங் களிறு என்க. களிற்றைக் கந்திற் பிணித்து கடிகொள்ளுதல் போல என உவமையை விரித்துரைத்துக்கொள்க. ஆய் - செவிலித்தாய். நலன் - அழகு. 284. அகநகர் - உள்நகர்; என்றது தலைவியிருக்கும் அந்தப்புரத்தை அவ் வாயில்களாவன; அறிவர், பார்ப்பார், தோழி, விறலி, பாணன் முதலியோர். 285. அவனை - தலைவனை. தலைவன் என்னுமொழி பின்வரலின் அவனை என்று சுட்டியொழிந்தார். இவ்வாறு உரையினும் சுட்டு முன்வர எழுதுவது நச்சினார்க்கினியர் வழக்கு. அதனை இச்சூத்திர உரையில் அவன் முகம் புகுதுமுறைமை என வருமுரையானும் புறத்திணையியல் 76-ஞ் சூத்திரத்து வரும் பெரும்பகைதாங்கும் வேலினானும் என்பதனுரை யானும், கற்பியல் 146-ஞ் சூத்திரத்துவரும் பேரிசையூர்திப் பாகர் பாங்கினும் என்பதன் விசேடவுரையானும், அகத்திணையியல் 27-ஞ் சூத்திர உரையானும் அறிந்து கொள்க. S. கனகசபாபதிப் பிள்ளை பதிப்பில் மாத்திரம் அவனை என்பது ஆனை என்று காணப்படுகின்றது. ஆனைக்கும் தலைவிக்கும் ஓரியைபு ஆண்டுக்காணப்படாமையின். அப்பாடம் பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது. காதல் முதலிய வற்றைத் தலைவி மெலிதாகப் பொறுத்து (அடக்கி)க் கொள்வாள். தலைவன் வலிதாகப் பொறுத்து (அடக்கி)க் கொள்வான் என்பது இவ்வுரைக் கருத்து. 286. முகம்புகுதல் - (தாஞ்சொல்வதை) முகங்கொடுத்துக் கேட்டல் ( விரும்பிக் கேட்டல்). புகலுதல் எனின் மகிழ்தல் என்றாம். 287. பாடு - ஒலி. நீங்கி - போதலொழிந்து. கலித்தல் - செருக்கித் திரிதல். கெளவை - அலர். பாணிநிற்ப - தாமதித்துநிற்ப. அகலானாகி - பிரியானாகி. பயின்று - பழகி. மணப்பு அருங்காமம் தணப்ப - (களவுக்காலத்து) கூடுதற்கரிய வேட்கை ஒழிய. யாரென்னாது - என்ன உறவினரென்று கருதாது. மறையினை சென்று - மறைந்தாயாய்ச்சென்று. எல்லி - இரா (இரவில்). பெண்ணை - பனை. கரக்கும் - தன்னாற்றாமையை மறைக்கும். அரிவை - தலைவி. அரிவை கரக்கும்; இதற்கு யான் என்செய்கோ எனச் சென்று செப்பின் எவனோ எனக்கூட்டி முடிக்க. எவன் - என்ன தவறாம்? 288. இனி என்பது பாட்டில் வந்த சொல். இனி - இப்பொழுது. 289. ஆடிய - உழக்கிய. அள்ளல் - சேறு. கலிக்கும் - தழைக்கும். பாயல் - படுக்கை. இன்துணை - இனியதுணையாம். 290. பெற்றாரின் - பெற்றவரைப்போல பெற்றாரிற்பெற்ற அருள். உரிமை கேடில்லாமையாலோ? பழமையின் பயனோக்கியோ (அறியேன்) என இயைக்க. கேள் - கேளாக (உறவாக). கிழமை - உரிமை. 291. கட்கினியாள் - கண்ணுக்கினிய உருவமுடையவள். காதல் வகைபுனைவாள் - காதற்படி தன்னை அணிவாள். உட்கு - அச்சம். ஊராண் இயல்பு - உபகார இயல்பு. இனிதினுணரும் - இன்ப முண்டாக ஊடல் தீரும். 292. பொறி - புள்ளி. எருத்தில் - கழுத்தினிடத்து. சிதர் - துளி. உறைப்ப - துளிப்ப. 293. மறி - குட்டி. இடைப்படுத்த - நடுவிலே படுத்த. மான்பிணை - மானும் பிணையும். பிணை - பெண்மான். நன்றும் - பெரிதும். கிடக்கை இனிது என்க. கிடக்கை - படுக்கை. சுவைஇய - சூழ்ந்த. ஈன் - இப்பூமி. உம்பர் - மேலுலகம். 294. மகன்முலையூட்ட - மகனுக்கு முலையூட்ட. சிறுபுறம் கவையினன் - பிடரைத் தழுவிச்சூழ்ந்தான். புறவு - காடு. பொறைய - பொறைக் கற்களையுடைய. 295. பிரசம் - தேன். புடைப்பிற்சுற்றும் - புடைப்பாகச்சுற்றிய. ஓக்குபு - ஓச்சி. தத்துற்று - பாய்ந்து. ஓடி. மறுக்கும் சிறுவிளையாட்டி என இயைக்க. பரி - பரிந்து. பொழுது மறுத்து உண்ணும் - ஒருபொழுதின்றி ஒருபொழுதுண்டி ருக்கும். மதுகை - வலி. 296. அடிசில் - உணவு. படுசொற்பழி - உண்டாகுஞ்சொற்பழி. உணர்தல் - துயிலொழிதல். 297. புறப்புறச்செய்யுள் என்றது. புறப்பொருட்செய்யுளல்லாதவற்றை. அஃதாவன; முன்னுள்ளோர் கூறிய நீதிவாக்கியங்களமைந்த செய்யுட்களை. 298. எறி - அடி. சிறுகாலை - உதயம். அட்டில் - அடப்படும் வீடு. 299. தலைமகனிற்றீர்ந்து - கணவனினின்றும்நீங்கி. பிறரில் - பிறர்வீடு. நிலைமையில் - மனம்ஒருப்படாத. நோன்பு - விரதம். கோள் - கொள்கை (கற்பு). 300. தழையணிப்பொலிந்த - தழையை அணிதலாற் பொலிந்த. விழவு - நீர்விழாச் செய்ததனாலாய அடையாளம். ஓரான்வல்சி - ஓராவால் நிகழ்த்திய உணவு. சீறில்வாழ்க்கை - சிறிய இல்லின் வாழ்க்கை. சீரில்வாழ்க்கை எனவும் பாடம். ஊர், வாழ்க்கை வந்தென விழவாயிற்று என்னும் என்க. 301. மனை - இல்லறம். மாட்சி - நற்குணநற்செயல்கள். எனை - எத்துணை. இல் - (மாட்சி) இல்லை (உடையதன்று). 302. என்கின்றார் - வினைப்பெயர்; என்கின்றவர் என்பது கருத்து. 303. எவ்வி - ஒருவள்ளல். 304. தெளித்தல் - சூளுறல். கைந்நீவி - கைகடந்து. மறுத்தரவில்லாயின் - (துனித்த நிலைமை) மீட்சியில்லையாயின். இது தலைவன தூடல். 305. (இவளைக்) கலந்த - கூடிய. கைம்மிக - (இவள்) ஒழுக்கத்தை மிகுக்கை யினாலே. கண்படா - (அதுகண்டு) துயிலாக இது தோழிகூற்று. 306. பாடாண்டிணைக் கைக்கிளை புறப்பொருட்குரியது. 307. வேண்டா - விரும்பாத (கேளாத). அலவன் - நண்டு. நரிதின்று பரிக்கும் - நரிதின்று உயிர்பரிக்கும் (தாங்கும்). காதல் திறத்து எவன்பெற்றனை - காதலை எத்திறத்து எவ்வாறு பெற்றாய். யாவதும் - சிறிதாயினும். 308. அலந்தாரை - துன்பமுற்றாரை. அல்லல்நோய் - அல்லலாகிய நோய் (மிக்க துன்பம்). செய்தற்று - செய்தாற்போலும். புலந்தார் - ஊடினார். புல்லல் - தழுவல். 309. கனைபெயல்நடுநாள் - மிக்க மழையையுடைய இடையாமம். கண்மாற - இடமாற. மிசைபாடும்புள் - வானம்பாடி; அளி - அருள். நசைஇ - விரும்பி ஆர்வுற்ற - நிறைவுற்ற. தான் என்றது தலைவனை. என்ப - அசைநிலை. 310. உணர்த்தல் - தெளிவித்தல். வழுதி அகலம் எய்தாது என இயைக்க. எய்தாது - கூடப்பெறாது. 311. தங்காது - இதுசெய்யலாகாதென்று மீளாது. தகைவின்றி - தடுப்பாரு மின்றி. அறிபவர் - தாஞ்செய்தமையை அறிந்திருக்கின்றவர்கள். கரி - சான்று. அதை - கழறவேண்டாமையை. நாட்டத்தால் - ஆராய்ச்சியால்; அறியினுங் கழறுவல் என ஒட்டுக. முள்கிய - கூடிய. தொடர்பு - தொடர்பினை. தொடர்பினை விடுவாய் என இயைக்க. தைஇ - உடுத்து. செல - வளர்ந்துசெல்ல. சாஅய் - மெலிந்து. இறைவரை - இறையினெல்லை. இறை - முன்கை. மறையச்செல்லும் - ஒருகாலமும் வராமல் மறையும்படி போம். 312. கைகோள் இரண்டிற்கும் என்றது களவுங் கற்புமாகிய இரண்டற்கு மென்றபடி. 313. நலம் - பெண்ணலம். நலமிகச்சாய் - அழகுமிகக்குறைந்து. புலவியஃது எவன்? - புலவியாகிய அஃது என்ன பயனுடைத்து? அன்பில்லாதவிடத்து புலவியாற் பயனில்லை என்றபடி. 314. இருவகை என்றது. சூத்திரத்துட் கூறிய இருவகையையும். இரு வகைக்கும் இஃது உதாரணமாகும். 315. நின்கண் - நின்கண்ணினருணோக்கு. தவறு - தப்பு. மாற்று - மாற்றம்; மறுமொழி. 316. மண்ணுதல் - கழுவல். மணி - நீலமணி. ஏசும் - பழிக்கும். இருங்கூந்தல் - கருங்கூந்தல். நோய் சேர்ந்ததிறம் - நோவு சேர்ந்த திறம் (நோதிறம் என்னும் பண்). 317. கடைஇய - (நின்மேல்) வீழ்வித்த. தோயலம் - கூடக் கூடவே மல்லேம். இடையும் என்பதை நெஞ்சுக்கு விசேடணமாக்குக என்பர் நச்சினார்க்கினியர். இடையும் என்று நிறைக்கு விசேடணமாக்கி வருந்தும் நிறை என்றுகூறல் நன்று. கடவுபு - செலுத்தி. 318. அலராய் - (களவு) அலராய். 319. காதலரைக் கண்டது ஒருநாள் எனவும். அலர்பாம்புகொண்டற்று எனவுமியைக்க. மன் என்பதும் உம் என்பதும் - அசைகள். 320. வேதினம் - கருக்கரிவாள். வெரிந் - முதுகு. ஓதி - ஓந்தி. போத்து - ஆண். புட்கொள - நிமித்தங்கொள. தாங்கிய - பொறுத்த. அழுங்கல் - ஆரவாரம். 321. எந்திரம் என்றது ஆலையை. கோமான் என்றது பாண்டியனை. நல்லணி - நல்ல அழகு. நயந்து - விரும்பி. பசந்தன்று - பசப்புற்றது. நுதல்பசந்தது என இயைக்க. 322. கெளவை - அலர் (பழிமொழி). நீளும் - வளரும். நோயாகிய பயிர் வளரும் என்க. 323. எரி - நெருப்பு. நுதுப்பல் - அளித்தல் (தணித்தல்). வளர்ப்பதால் தணித்தல் - கூடாது என்றபடி. 324. காமச்சிறப்புத் தோன்றும் என முடிக்க. 325. ஈங்கும் என்றது தலைவியிடத்தும் என்றவாறு. 326. நெருநை - முன்னைநாள். அயர்தல் - ஆடல். 327. கோடு - கரை. மலிர்நிறை - வெள்ளம். 328. மனைவிமுன் என்பதை மனைவிதலைத்தாள் என்றது தகுதிச்சொல் என்றபடி. தலைத்தாள் என்பது தாட்டலை அடியின் கண் என மாற்றிப் பொருள் கொள்ளப்படும். தாட்டலை என்பது முன் என்னும் பொருள் படலை. பொருளியல் 41-ஞ் சூத்திரப் பொருள் நோக்கி யறிக. தகுதிச்சொல் இதுவென்பதை. தொல். சொல். கிளவி 17-ஞ் சூத்திர உரைநோக்கியறிக. 329. அன்னை - அன்னாய்! அஞ்சி - நின்னை அஞ்சி. தழூஉகம் - அகப்படுப்பேமாகி. கைபுகுகொடுமிடை - வேறொருவழிவந்து புகுந்த வளைந்தவிடத்தே. தாக்கலின் - எதிர்ப்படலின். போற்றென - அறிந்துகொள் என்று யான்கூற. யாண்டைய பசலை என்றானாக. யாணது பசலை என்றானாக என்னும் பாடத்திற்கு என்கட்பசலை அழகுடைத்து என்றானாக எனப் பொருளுரைக்க. சிறுமை பெருமையின் - என்சிறுமை பெரிதாகலான். காணாது - ஆராயாது துணிந்து நாணிலை எலுவ! என்றனன் என இயைக்க. 330. இவ்வாக்கியத்தில் எதிர்ப்பட்டனாக என்பதன்பின்னே கேட்போர்... போற்றென என்பதன் பொருளும் எலுவ என்று என்பதில் என்று என்பதும் விடப்பட்டன. 331. உண்கடன் - தானுண்ணுதற்குரிய கடன். வழிமொழிந்து - வழிபாடாகச் சொல்லி. முகம்வேறாதல் - முகமலர்தல். கொண்டது - முன் கடனாக வாங்கியபொருள். முகம்வேறாதல் - முகம் மலர்ச்சியின்றியிருத்தல். புலன் - அறிவு. தாய் என்றது சித்திரக்காரனை. உயிர்பெய்த - உயிர்ப்புக்கொடுத்த. தாவார் - கெடார். அருந்து - அருந்திய. இறல் - கேடு (அழிவு). நின்பொருள் வேட்கையிடத்து ஏதிலார் கூறுவதெவன்? என மாற்றுக. 332. பொருட்பொருளார் - பொருளையே பொருளாகக் கொள்வோர் (-பரத்தையர்). பொருள் - பயன். பொருளாகிய பொருள் என்பர் பரிமேலழகர். அருட்பொருள் ஆயும் - அருளையே பொருளாகத் துணியும். அருளாகிய பொருளுமாம். தோயார் - விரும்பார். 333. வரைதல் - நீக்கல். 334. யாப்பு - நியமம். 335. எண்வகைக்குறிப்பு - எண்வகை மெய்ப்பாடு. 336. அரக்கு - செவ்வரக்கு. செம்மல் - வாடியபூ (பழம்பூ). தாஅய் - பரந்து. ஈயன் மூதாய் - தம்பலப்பூச்சி. வரிப்ப - வரி வரியாக ஊர்ந்துசெல்ல. மணி - நீலமணி. இது காயாம்செம்மலுக்கு உவமை. கவைஇய - சூழ்ந்த. திரிமருப்பு - முறுகிய கொம்பு. உகள - குதிப்ப (துள்ளிச் செல்ல). குறும் பொறை - சிறுகுன்று. அயர - மாலையாகக் கட்ட. அறவு - அறுகம்புல். மேயல் - உணவு. செருத்தல் - முலைமடி. பயிர்தல் - அழைத்தல். பையுள் - துன்பம். செல்வேன் தேர் கண்டனன் என இயைக்க. 337. ஒன்றாக - துணிவாக; இது அறிந்து என்பதனோடு முடியும். 338. கோண்மாக்கள் - கொலைசெய்யும் விலங்குகள்; அவை புலி, யானை, கரடி முதலியன. 339. அரிவை விருந்தும் பெறுகுநள்பேலும் என மாற்றியுரைக்க. எடுத்த - வளர்த்த. வளராப்பிள்ளை - இளம்பிள்ளை. தூவியன்ன பைம்பயிர் என இயையும். வார்பெயல் - பெய்தமழை. புறவு - காடு. மொக்குள் - குமிழி. தொளிபொரு பொகுட்டு தோன்றுவனமாய - சேற்றின்கண் பொருதலால் குமிழிகள் தோன்றுவனவாய் மறைய. மாய நேமிபோழ்ந்த வழி என இயைக்க. வளி - காற்று. தாஅய் - பரந்து. அறல் - மணல். வரித்த - கோலஞ் செய்த. வழியுள் நீர்முடுக. ஆய்ந்து தேர்செல்லும். ஆதலால் அரிவை இன்று விருந்தும் பெறுகுநள்போலும் என முடிக்க. 340. அவர்கள் தங்களுக்கு என்பது அவைகள் தங்களுக்கு என்றிருத்தல் வேண்டும். தாமோதரம்பிள்ளை பதிப்பில் வளரிளம்பிள்ளை என்று பாடங் காணப்படலின், அதுநோக்கி அவைகள் தங்களுக்கு வளராப்பிள்ளை என்றலுமாம் என்று பொருளுந்தோன்றப் பாடபேதங் கூறியிருக்கலாமென்பது எமது கருத்து. வளராப்பிள்ளை - இளம்பிள்ளை. அல்லது அவ்வாக்கியத்தில் வேறு சிதைவுமிருக்கலாம். அவைகள் தங்களுக்கு - அவைகளுக்கு. 341. புறத்திணையா - புறவொழுக்கத்தினர். இது புறத்தினர் என்றுமிருந்திருக்க லாம். 342. மாதருண்கண் - அழகிய மையுண்டகண். சிறுவருக்கும் மையூட்டல் இக் காலத்தும் வழக்கிலுள்ளது. கண்ணை யுடையாளாகிய தலைவி என்று கூறினுமாம். பிரசம் - வண்டு. 343. கடும்பு - சுற்றம். என்றது தலைவியரை. இது நச்சினார்க்கினியர் கருத்து. 344. மாறாமை - ஒழியாமை. 345. நள்ளென்யாமம் - நடுயாமம். பள்ளிகொள்ளான் - துயிலான். முரணுதல் - மாறுபடல். 346. பள்ளிஒற்றி - பள்ளிமேல்வைத்து. ஒருகையிற் கடகத்தை மூடியொடு சேர்த்து என மாற்றி உரைக்க. 347. உஞற்று - முயலுதல். 348. எண்ணும் என்றது, எண்ணரும் என்பதில் எண் என்றதை. அதற்குக் காவற் பிரிவிற்கேற்ப இவ்வாறு பொருளுரைக்க என்றபடி. 349. வரைவு - நியமம். 350. ஏது - காரணம். எடுத்துக்காட்டு - உதாரணம். 351. வேட்டோர் - (நீ) விரும்பினோர். விரும்பிய - நீசெல்லுதலை விரும்பிய. நீட்டித்தாய் என்று - காலந்தாழ்த்தாயென்று. பூட்டு விடாததேர்கடாம் என மாற்றுக. கடாம் - அது நிற்குமிடத்துச் செலுத்தும். நிறுத்து - அவ்வன்பை நிறுத்துவாயாக. 352. நிகழ்த்தல் - உண்டாக்கல். 353. குறித்தன்று - குறித்தது. போயின்று - போயது. 354. பதிற்றுப்பத்து என்பது ஆராயத்தக்கது; இச்செய்யுள் அகப்பொருளை யுணர்த்துதலின். 355. முற்றுதல் - மதிலை (அரணை) வளைத்தல். அதிலகப்பட்டோன். மதிலகத் தோன் என்க. 356. ஒருமருங்குமறுத்தல் - பார்ப்பார்க்குரித்தன்றென மறுத்தல். 357. தான் அறியமாட்டாமையிற் பார்ப்பான் கூறக்கேட்டு என்றார். 358. ஆற்றாமை - செய்யாமை. 359. மணி - பவளமணி. உரு - நிறம். உழை - பக்கம்; அணிமை. இனைதல் - வருந்தல். எனின் பிழையலள் என இயைக்க. 360. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்பதற்குக் களங்காயாற் செய்த கண்ணியையும் நாராற்செய்த முடியையுமுடைய சேரல் என்பது பொருள். நெஞ்சே வாரலன் என இயையும். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இவ்வடி பதிற்றுப்பத்தில் நாலாம்பத்து 38ஆம் செய்யுளிலும் பதிகத்திலும் வருகின்றது; ஆண்டு நோக்கியறிக. 361. வேளாப் பார்ப்பான் - யாகம்பண்ணாத ஊர்ப் பார்ப்பான். வாளரந்துமித்த - வாளரத்தால் அறுத்தெடுத்த. வளை - வளைகள். ஒழிந்த கழுத்து - எஞ்சிய சங்கின் தலை. அன்ன - பகன்றை அரும்பு என்க. தென்புலம் - தென்றிசை. சேட்புலம் எனவும் பாடம். தமியள் - தனித்தவளாய். நீந்தி - கடந்து. தொடி - கிம்புரி. மண்ணை - மழுமொட்டை. மணி - மணியோசை. தோல் - பரிசை. பரிசையில் கணைதைப்ப அதனால் உண்டான ஓசையும் என்க. யாம் பாசறையேம் என இயைக்க. 362. துனி - உணர்ப்புவயின்வாரா ஊடல். 363. அரத்தம் - செந்நிற வதிரம். பழுப்பு - அரிதாரம்; அதன் சாந்துபூசி என்றபடி. சிரத்தை - அன்பு. மனை - பரத்தைவீடு. 364. இப்பொருள் நேர்பொருளன்று; வலிந்து கோடலாம். 365. முனிய அலைத்தி - வெறுப்ப அலைப்பாய். கடவுள் சான்ற செய்வினை - கடவுட்டன்மை அமைந்த செய்வினை என்றது ஓதலை. வல்வரின் - விரைந்துவரின். இது வாடையை விளித்துக் கூறியது. 366. கூறலின் கூறாராயினர் என்க. 367. நிலம் - நிலத்திலுள்ளார். திரிதரும் - வழங்கும். இது மாடக்கூடலுக்கு விசேடணம். மாடக்கூடல் - மதுரைமாநகர். புலநாவிற் பிறந்த சொல் - அறிவுடையோர் நாவிற் பிறந்த சொல்லாலாகிய கவி. பொழுது - இளவேனில். உரைத்தது பொழுதன்றோ என மாற்றிக் கூட்டுக. விடுத்தக்கால் - விடுக்க. 368. இரீஇய - தன்னிடத்தே ஓடச்செய்த; அமரச்செய்த என்றுமாம். பருவ மன்று - பருவமன்றுபோலும். வருதுமென்றது பருவமன்று போலும் என இயைக்க. 369. மண்கண் - மண்ணிடம். பாடுஉலந்தன்று - ஒலிஅடங்கிற்று. பறை - முரசு. தளவு - முல்லை. இதல்முடசெந்நனை - சிவல்முட்போலும் சிவந்த அரும்பு. அவல - பள்ளங்களிலுள்ளன. கோடு - சங்கு. கோடல் - வெண்காந்தள். பதவின்பாவை - அறுகங்கிழங்கு. முனைஇ - வெறுத்து. அனையகொல் - அவ்வளவிற்றோ? மௌவல் - முல்லை. அவ்வளவு - அது மலருங் காலமளவு. 370. கடுமான்கிள்ளி - சோழன் ஒருவன் பெயர். இன் - உவமஉருபு. கதழ் - விரைந்து. நெரிதந்தசிறை - நெரிந்தசிறை. சிறை - கரை. எந்தோள் புரைபுணை என்றது - மூங்கிற்புணையை. 371. கயில் - மூட்டுவாய். கயில் அமை - பூட்டு அமைந்தது. எனவே ஆபரணம் என்றாயிற்று. தழைக்கு விசேடணமாக்கினுமமையும். ஏர் - அழகு. மலிர் நிறை - வெள்ளப்பெருக்கு. 372. நன்வாயா - நல்ல உண்மையாக. காண்டை - காண்பாய். ஆனாது - அமையாது. அகவும் - பெடையை அழைக்கும். பொழுது - இளவேனில். அணி அயர்ப - அணிகளை அணிவார். எதிர்கொண்டு அணி அயர்ப என இயைக்க. 373. காமம் விளைத்தே வருதலின் என இயைக்க. 374. அருந்ததியைப்போலும் என்பது அயிராணியியைப்போலும் என்று பாட்டின்படி இருத்தல்வேண்டும். அயிராணியைப்போலும் என்று பாடங்கொள்ளின், இங்கே நச்சினார்க்கினியர் கூறிய பொருள் பொருந்தாது. இப்பாட்டின்படி பொருள் கூறுங்கால், பெரும் பெயர் - பெரும்பொருள்கள் என்று கொள்ளப்படும். அவ்வாறே நச்சினார்க்கினியருங் கூறியுள்ளார். போலும் என்பது மகளிரொடு முடியும். பின்னிற்பார் - இரப்போர்; வறியவர். நன்மை - வானப் பிரத்த காருகம். காருகம் - ஊழியம் (-தொண்டு). எனவே வானப்பிரத்த நெறியில் நிற்பார்க்குச் செய்யத்தகுவதான தொண்டிற்குத் துணையாவார் என்பது கருத்தாம். 375. பாடினி - யாழ்ப்பாடினி. 376. பிசிராந்தையாரும் பொத்தியாரும் கோப்பெருஞ்சோழனோடு நண்பு பூண்டிருந்த இரு புலவர்கள். அவன் துறந்தபொழுது இவர்களும் துறந்தமையை - புறநானூற்றுள்வரும் 212, 216, 217, 218, 220, 223ஆம் செய்யுட்களாலறியலாம். 377. கலித்த - செருக்கின. 378. வேந்து வினைமுடித்தகாலை - வேந்தனது வினையை முடித்தபோது. புறவு - காடு (-முல்லைநிலம்). வலவன் - பாகன். வள்பு - வார் (-கடிவாளம்). முள் - தாற்றுக்கோல். ஆதி - ஒருகதி. நால்கு - நான்கு. பரி - வேகம்; குதிரையுமாம். உள்இல் - உள்ளீடில்லாத. வெள்ளை வெண்மறி - வெள்ளாட்டுக்குட்டி. வெள் - வெண்மை; வாளாபெயரெனினுமமையும். உகளி - துள்ளிவிளையாடி. ஆர் - ஆத்தி. பிறக்கு - பின். வேய்ந்தோய் - பூச்சூடினே. எந்தை - எந்தலைவனே. 379. உலகிறந்தன பற்றாத என இயையும். பற்றாத - போதாத. 380. ஏறியதல்லது வந்தவாறு அறிந்தன்றோவிலன் - அறிந்ததோவிலன் (அறிந்திலன்). இழிமின் - இறங்குமின். மொழிமருண்டிசின் - மொழிகேட்டு மயங்கினேன் (அதிசயித்தேன்). வளி - காற்று. மான் - குதிரை. வலவஉரைமதி - வலவஉரைப்பாய். மதி - முன்னிலையசை. பொருளியல் மேற்சொல்லப்பட்ட இயல்களிலும் இனிச் சொல்லும் இயல்களிலும் வரும் பொருளினது தன்மையினை யுணர்த்துதலின் இது பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. அகப்பொருள், புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மை யினும் எஞ்சி நின்றன கூறினமையின் இதனை ஒழிபிய லென்னினுங் குற்றமில்லை யென்பர் இளம்பூரணர். சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாமைத் திரிபில் சொல் என்ப ராதலின் அவை ஈண்டுத் தம்பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப்பொருளதிகாரத்து முன்னர்க் கூறிய பொருளிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச், சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி யுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென்றார் என்பர் நச்சினார்க்கினியர். இவ்வியலிற் கூறப்பட்டன யாவும் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இரு பகுதிப்படுமென்பதும், புறத்திணையியலுட் புறத்திணைவழுக் கூறி அகப்பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்பதும் அவர் கருத்து. அகப்பொருள் ஒழுகலாற்றில் தலைவன், தலைவி, தோழி முதலியோர் உரையாடுதற்குரிய சொல்லமைதியினையும் அவர் தம் கூற்றில் அமைத்தற்குரிய பொருள் வகையினையும் சிறப்பு முறையிற் கூறுவது இப்பொருளியலாகும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 52-ஆக இளம்பூரணரும், 54-ஆக நச்சினார்க்கினி யரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும், சொல்லக் கருதிய பொருள் இயைபு பெறப் புலப்படும். அவ்வழிச் சொற்களுக்கு அங்கமாகிய அசைச் சொற்கள் மாறி நிற்றலில்லை. உலகியலில் எல்லோர்க்கும் உரியதாய்ப் பயின்றதாகாது ஒரு திறத்தார்க்கே யுரியதாய்ப் பயிலும் சொல்வகையினைப் பாற்கிளவி என வழங்குவர் ஆசிரியர். பால்-பக்கம். பாற்கிளவி-ஒரு திறத்தார்க்கே உரியதாய்ப் பயிலும் சொல். துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் கருதிய இயல்பு புலனாக எண்வகை மெய்பாடும் விளங்கப் பொருந்திய உறுப்புடையதுபோலவும், உணர்வுடையது போலவும், தனது கூற்றினை மறுத்துரைப்பது போலவும், நெஞ்சொடு சேர்த்துக் கூறியும், பேசும் ஆற்றலில்லாத பறவை, விலங்கு முதலியவற்றோடு பொருந்தி அவை செய்யாதன வற்றைச் செய்தனவாகக் கூறியும், பிறருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும், அறிவையும் அறிதற்கு வாயிலாகிய பொறி புலன்களையும் வேறுபட நிறுத்தி உவமைப் பெயரும், உவமிக்கும் பெயரும், தொழிலும் பண்பும் பயனுமாகிய மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாக உவமம் பொருந்து மிடத்து உவமங் கூறுதலும், தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் உரிய ஒரு கூற்றுச் சொல்லாம். காமம் இடையீடுபட்ட காலத்து கனாக்கண்டு கூறுதலும் அவ்விருவர்க்கும் உரியதாகும். அவ்விருவரும் உடன்போகிய காலத்துத் தாய் கனாக்கண்டு கூறுதலும் உண்டு. தம்முள் அன்புடையராய்ப் பழகும் இன்ப நிலையில்லாத ஏனைத் துன்பக் காலத்துத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வர்க்கும் மேற்கூறியவாறு அறிவும் புலனும் வேறுபடக் கூறும் ஒரு கூற்றுச் சொல் உரியதாகும். அன்பொருமையும் உயிரினுஞ் சிறந்த நாணமும் மடனும், குற்றமற்ற சிறப்பினையுடைய பெண்பாலார் நால்வர்க்கும் உரியவாகும். எனவே இவர் நால்வரும் இக்குணங்களுக்கு இழுக்கு நேராவண்ணம் உரையாடுதல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். தலைமகள், தனது உடல் வனப்பு வேறுபட்டுத் தனிமை யுறுங்கால் தலைமகனது பிரிவைத் தன் அவயங்கள் முன்னமே உணர்ந்தனபோலப் பொருந்திய வகையாற் கூறுதலும் உண்டு. j‹ cl«ò« cÆU« bkȪj ÃiyÆY« ‘ïit v‹d tU¤j K‰wd? எனத் தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறுவதல்லது, தலைவனைத் தானே சென்று சேர்தல் தலைமகளின் இயல்பன்றாம். தன் நெஞ்சுடன் தனித்து ஆராயுங் காலத்துத் தலைமகன் இருக்குமிடத்தை யடைதல் வேண்டுமெனத் தலைவி கூறுதலும் உண்டு. தலைவன் புறத்தொழுக்கத்தை மறைக்கு மிடனும் தான் அவன்பால் பெரு விருப்புற்ற நிலையும் அல்லாத ஏனையிடங்களிலெல்லாம் மடன் நீங்காதபடி நிற்றல் தலைவியின் கடனாகும். தலைவன் தலைவி என்னும் இருவரும் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் காட்சியில் ஒருவரையொருவர் சந்தித்த முறைமை தூய அன்பொடு பொருந்திய அறத்தின் வழிப்பட்ட நற்செயலே யென்பதனை அறிவுறுத்துதல் களவு வெளிப் படுத்தலின் கருத்தாகும். ஆதலால் அங்ஙனம் வெளிப்படுத்தும் முறையினை அறத்தொடு நிற்றல் என்பர் ஆசிரியர். தலைவி தலைவனொடு தனக்குண்டாகிய தொடர்பினைத் தம் பெற்றோர்க்கு அறிவித்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் முறைமையிலள். அங்ஙனம் அறத்தொடு நிற்குங்கால் தலைவியின் குடிப் பிறப்பிற்கும் செவிலியின் அறிவிற்கும் தலைவியின் நாணம், கற்பு முதலிய பெருமைக்கும் தனது காவலுக்கும் தலைவனுக்குரிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடியென்னும் பெருந்தன்மைக்கும் தவறு நேராதபடி இக்களவொழுக்கம் நிகழ்ந்த முறையினை முரண்பாடில்லா மொழிகளால் தோழி செவிலிக்கு அறிவுறுத்தல் மரபாகும் என்பர் களவியலுரையாசிரியர். செவிலிக்குத்தோழி அறத்தொடு நிற்குங்கால், தன்னிகரற்ற தலைவன் இளையோராகிய எங்கள்பால் எளியனாக நடந்து கொண்டான் என்று கூறுதலும், இத்தகைய அருளும் சிறப்பு முடையான் அத்தோன்றல் எனத் தலைவனை உயர்த்திப் புகழ்தலும், தலைவன் தலைவியென்னும் இருவரும் அன்பினால் நிரம்பிய வேட்கையுடையாரெனக் கூறுதலும், அத்தகைய தலைவனுக்கே நம் தலைவியை மணஞ்செய்து கொடுத்தல் வேண்டுமென்னும் குறிப்புத் தோன்றக்கூறுதலும், தலைவி யினது நோயினைத் தணித்தல் வேண்டி வேலன் முதலியோரைக் கொண்டு வெறியாடல் முதலியன நிகழ்த்தியபொழுது அவை தலைவியின் நோயைத் தணித்தற்குரியன அல்ல எனத் தெரிவித்துத் தடுக்குமுகமாக அவர்கள்பால் சிலவற்றை வினாவுதலும், தலைவன் யாதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு வருங்கால் தன் கருத்தின்றித் தலைமகளை எதிர்ப்பட்டானெனக் கூறுதலும், தலைமகனும் தலைமகளும் ஒருவரை யொருவர் சந்தித்தபொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிகழ்ந்த முறையே உண்மையாக எடுத்துரைத்தலும் என இவ்வேழு வகையாலும் களவொழுக்கத்தை வெளிப்படுத்தல் முறையென்பர் தொல்காப்பியர். காமவுணர்வு மிக்குத்தோன்றிய காலத்தல்லது சொல் நிகழ்ச்சி யில்லாமையால் தலைமகளது வேட்கையை அவளது தோற்ற முதலியவற்றைக்கொண்டு செவிலி முதலியோர் குறிப் பினால் உணர்வர். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல்வன்மை, தீதொரீஇ நன்றின்பாலுய்க்கும் நல்லறிவு, பிறர்பாற் காணுதற்கரிய அருமை என்பன பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகும். ஆகவே மேற்சொல்லிய அறத்தொடு நிலைவகையும் இனிக்கூறும் வரைவுகடாதற் பகுதியும் ஆகியவற்றை உண்மைவகையானும் புனைந்துரை வகையானும் கூறும் ஆற்றல் தோழி முதலிய பெண்பாலார்க்குண்மை இனிது புலனாம். தலைமகன் வரும் காலமும் வழியும் ஊரிடையுளதாங் காவலும் ஆகியவற்றைத் தப்பியொழுகுதலால் உளவாம் தீமைகளை எடுத்துக்காட்டலும், தான் நெஞ்சழிந்து கூறுதலும், தலைமகனுக்குளவாம் இடையூறு கூறுதலும், அவனைப் பகற்குறி விலக்கி இரவில் வருகவென்றலும், இரவும் பகலும் இங்கு வாராதொழிக வெனக் கூறுதலும், நன்மையாகவும் தீமையாகவும் பிறபொருளையெடுத்துக் காட்டலும், பிறவுமாக இங்ஙனம் தலைவனது உயர்ச்சி கெடத் தோழி கூறுஞ் சொற்கள்யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்ப மின்மையாற் கூறப்பட்டன அல்ல; தலைமகளை அவன் விரைவில் மணந்துகொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கை யினைப் பொருளாகவுடைய சொற்களாம். தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தொழுகிய நிலையில் இவ்வாறு குறிப்பாகச் சொல்லாது வெளிப்படையாக மறுத்துரைத்தலும் உண்டு. களவொழுக்கத்தில் தலைவன் தனியே வந்து போவதன்றித் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து செல்லுதலும் இயல்பேயாகும். உண்ணுதற்றொழிதலை நிகழ்த்துதற்குரியன அல்லாத உணர்வற்ற பொருள்களை அத்தொழிலை நிகழ்த்தினவாக ஏறிட்டுக் கூறுதலும் இவ்வகத்திணைக்கண் வழங்கும் மரபாகும். தலைமகளைப் புறத்தே செல்லவொட்டாது காக்கும் காவல் மிகுதியான நிலையில், எங்கள் சுற்றத்தார் தலைமகளைக் கொடுக்க இசையாமைக்குக் காரணம் பரிசப்பொருளை வேண்டி நிற்றலே எனத் தோழி தலைமகனை நோக்கிக் கூறுதலும் விலக்கத்தக்கதன்று. காவல் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் நேர்ந்தபொழுது, தலைவன்பால் உளவாம் அன்பும், அன்பின் வழிப்பட்ட மனை யறமும், மனையறத்தின்கண் இருந்து நுகர்தற்குரிய இன்பமும், பெண்ணியல்பாகிய நாணமும் ஆகிய இவற்றிற் கருத்தின்றி அடங்கியொழுகும் நிலை, பழியுடையதன்றாதலால் இற்செறிக் கப்பட்ட காலத்தில் இவற்றைப்பற்றி எண்ணுதற்கு இடமில்லை என்பர் ஆசிரியர். பொருளீட்டுதல் கருதிப் பிரிந்து செல்லுந் தலைமகன், தன்னோடு உடன்வரக் கருதிய தலைமகளுக்கு யான் போகும் வழி வெம்மைமிக்க பாலை நிலைமாம் எனக் கூறி விலக்குதலும் தவறாகாது. முன்னைய நூல்களில் அகப்பொருளாகவும் புறப் பொருளாகவும் எடுத்தோதப்பட்டனவன்றித் தம் காலத்து வாழும் சான்றோர் தமது அநுபவத்தால் தெளிந்து கூறுவனவும் உயர்ந்தோர் வழக்கென ஏற்றுக்கொள்ளத் தக்கனவாதலின், உயர்ந்தோர் வழக்கொடு பொருத்தி வருவனவெல்லாம் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்கப்படும். உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் அகப்பொருளொழுக லாற்றிற்குப் பயனுடையனவாக வருமாயின், அவற்றை வழக்கென்றே புலனெறி வழக்கஞ் செய்தலும் பழியுடையதன்றாம். அவ்வாறு உலக வழக்கினைக் கடந்து வருவனவாகிய பொருட்பகுதிகளைச் செய்யுளில் அமைத்துக் கூறுங்கால், நாணம் நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறிப்படுத்துக் கூறுதல் வேண்டும். முறைப்பெயரிடத்து இருபாலுக்கும் பொருந்தின தகுதி யுடைய எல்லா என்னும் பொதுச் சொல், ஆண்பால் பெண் பால் ஆகிய அவ்விரண்டற்கும் ஒப்ப வுரியதாய் வழங்கும். தந்தைக்குரிய பொருள்களாய் மக்கள் எய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய், அறமும் புகழுங் கருதி ஒருவர் கொடுப்ப மற்றையோர்பாற் செல்லாதனவுமாய், உழவு முதலிய தொழில் முயற்சியால் வாராதனவுமாய், வேறுபட்ட பிறரால் வலிந்து கொள்ளப்படாதனவுமாய் வரும் பொருளுரிமை முறை, இவ்வகப்பொருள் ஒழுகலாற்றிற் பொருந்தி வருதல் உண்டு என்பர் ஆசிரியர். சங்கத்தொகை நூல்களில் தலைவியின் அங்கங்களைத் தோழி தன்னுடையனவாக உரிமை பாராட்டிக் கூறுவனவாக அமைந்த கூற்றுக்கள்யாவும் இத்தகைய உரிமை முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கிழவன், கிழத்தி என்பன முதலாக இவ்வாறு ஆணொரு மையும் பெண்ணொருமையும் உணர்த்தி நிற்கும் ஒருமைச் சொற்கள், நானிலத்துத் தலைவரையும் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண்ணே நின்று பன்மைப் பொருளையுணர்த்தும் முறை, உலக வழக்கில் நிலைபெற்றது என்பர் அறிஞர். இன்பம் என்று சொல்லப்படும் உணர்வானது எல்லாவுயிர்களுக்கும் மனத்தொடு பொருந்திவரும் விருப்பத்தை அடிப்படை யாகக்கொண்டு தோற்றுவது என்பர் ஆசிரியர். எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர்மாட்டும் இன்பம் உளதாமெனவும் மனம் பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றா மெனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். எல்லாவுயிர்க்கும் இன்பம் பொது எனவே ஒழிந்த அறனும் பொருளும் எல்லாவுயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வரும் எனக் கருத்துரைப்பர் நச்சினார்க்கினியர். பரத்தையிற் பிரிவு காரணமாகப் பாணர் முதலியோரை ஊடல் தீர்க்கும் வாயிலாக அனுப்புதல், மருதநிலத் தலைவர்க்கே சிறப்புரிமையுடையதாயினும் நானிலத்தலைவர்க்கும் பொதுவாக உரியதாகும். அவ்வழிப் பிரியும் பிரிவு தம் ஊரைக் கடந்து நிகழ்வதில்லை. இடைவிடாது இன்பம் நுகர்தலோடு மனையறம் நிகழ்த்தும் உரிமையை உறுதியாக விரும்புதலானும், வினை செய்தலில் விருப்புடைய ஆண்மக்கள் பிரிவர் எனக்கருதி அஞ்சும் அச்சம் மகளிர்க்கு இயல்பாதலானும், கள வொழுக்கத்தைப் புறத்தார்க்கு வெளிப்படுத்துமென்று அஞ்சும்படி தோன்றிய அம்பலும் அலரும் ஆகிய இருவகைக் குறிப்பினாலும், தலைமகனது வரவினை எதிர் நோக்கியிருந்த நிலையில் வந்த அவனுடன் அளவளாவுதற்கு இயலாதபடி இடையூறு நேர்தலானும் தலைவனோடு உடன்போதற்குறிப்பும் ‘ஏன் இன்னும் மணஞ்செய்து கொள்ளவில்லை? என அவனை வினவுங் குறிப்பும் தலைமகளிடத்தே தோன்றும். வருத்த மிகுதியைக் குறித்த நிலையில் மனைவாழ்க்கையில் இரக்கம் தோன்றுதலும் உரித்தாம். தலைவன் பணிந்துழி அச்சமும் நாணமுமின்றித் தலைவி அப்பணிவினை யேற்றுக் கொள்ளுதலும், தலைவன் தன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும் புலவிக்காலத்து உரியனவாம். களவுக்காலத்துத் தலைவியின் நலம் பாராட்டிய தலைவன், கற்புக்காலத்தும் அவளது எழில் நலம் பாராட்டுதற்கு உரியன். வெளிப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கிய குறிப்புப் பொருளை இறைச்சியென வழங்குவது தமிழ்மரபு, இறைச்சிப் பொருள் என்பது உரிப் பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள். அஃதாவது கருப்பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது என்பர் இளம் பூரணர். இத்தகைய இறைச்சிப்பொருள் பெரும்பான்மையும் அகப்பொரு ளொழுகலாற்றில் தலைவனது கொடுமைகூறும் வழிப் பிறப்பதென்றும், கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அப்பொருட்கு உபகாரப்படும் பொருட்டன்மையினை யுடையதென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இறைச்சிதானே யுரிப்புறத்துவே என இளம்பூரணரும், இறைச்சிதானே பொருட்புறத்ததுவே என நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டனர். இறைச்சிப் பொருளாகிய இதன் கூறுபாட்டினை ஆழ்ந்து உணரவல்லார்க்கு வெளிப்படக் கூறப்படும் பொருளின் புறத்த தாகி வரும் அவ்விறைச்சியினுள்ளே உட்பொருளாகத் தோன்றும் வேறுபொருள்களும் உள என்பர் ஆசிரியர். எனவே இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள்கொளக் கிடப்பனவும் கிடவாதனவும் என இருவகைப்படும் என்பர் இளம்பூரணர். கருப் பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலே யன்றி, அக்கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; அஃது உள்ளுறை யுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து, அவ்வுள்ளுறையுவமம் அன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு என இறைச்சிப் பொருளின் கூறுபாட்டினைச் சிறிது விரித்து விளக்குவர் நச்சினார்க்கினியர்.1 தலைவி, தலைவனது பிரிவாற்றாது வருந்தியகாலத்து, பிரிந்து சென்ற தலைவனால் வழியிடைக் காணப்பட்ட கருப்பொருள்களுள் அவன் தலைவியை நினைந்து அன்பு செய்தற்குத் தகுவனவாக அமைந்த சிலவற்றின் நிகழ்ச்சிகளைச் சுட்டி இறைச்சிப் பொருள் படத் தோழி கூறுதலும் தலைவியை வற்புறுத்தும் குறிப்பினதாகும். தலைவியை நோக்கித் தலைவன் பாராட்டிய பாராட்டானது, யான் செய்யக் கருதிய பொருளுக்கு இவள் இடையூறாவாள் கொல்லோ எனத் தலைவன் தன் மனத்திற் கொண்ட அச்சத்தையும் தான் பொருள் ஈட்டுதற் பொருட்டுப் பிரிகின்ற செய்தியினையும் தலைவிக்கு உறுதியாகப் புலப்படுத்துவதாகும். கற்பின் வழிப்பட்ட தலைமகள் பரத்தையைப் புகழ்ந்து பாராட்டினாளாயினும், அவள் மனத்தகத்தே தலைவனோடு ஊடினதன்மை யுண்டென்பர் நுண்ணுணர்வினோர். மற்றொருத் தியைக் குறித்து இவள் இத்தன்மையள் எனத் தலைவனுக்குச் சொல்லி, அவளிடத்தில் இவன் எத்தன்மை யனாயிருக்கின்றான் என அவனது உள்ளக் குறிப்பினை யுணர்தலும் தலைவிக்குரிய இயல்பாகும். தலைவனால் தாம் அடைந்த துன்பத்தினைப் பரத்தையர் தனக்குக் கூறிய வழியும், தான் அவரது துன்பத்தினை உள்ளவாறு உணர்ந்த நிலையிலும் தலைவியானவள், மகிழ்ச்சியும் புலவியுமாகிய காலத்தன்றி ஏனைக்காலத்துத் தலைவனது முன்னிலையில் நின்று இடித்துரைத்தல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே தலைவனுடன் மகிழ்ந்து அளவளாவும் நேரத்தில் அம்மகிழ்ச்சியொடு கூட்டி அவனை இடித் துரைத்தலும், தலைவன்பால் தவறுகண்டு புலக்குங் காலத்து அத்தவறுகளோடு கூட்டி இடித்துரைத்தலும் நுண்ணுணர் வுடைய தலைமகளின் இயல்புகளாம் என ஆசிரியர் அறிவுறுத்தினாராயிற்று. மகிழ்ச்சியும் புலவியும் என இவ்விரு நிலையும் அல்லாத ஏனைக் காலங்களில் தலைவனைக் கழறுதல், தசைசான்ற சொற்காக்குந் தலைவியின் கடமைக்கு ஊறு விளைப்ப தாகலின் அங்ஙனம் இடித்துரைத்தல் கூடாதெனத் தொல்காப்பியனார் விலக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். தலைவன் யாதேனும் ஒரு பருவத்தை யெல்லையாகக் குறித்துப் பிரிந்தானாக, இருதிங்களை யெல்லையாகவுடைய அப்பருவம் தோன்றிய பொழுதே, அப் பருவம் கழிந்தது போலத் தலைவி கூறுதலும் உண்டு. அவ்வாறு கூறுதல், அறியாமை யாலாவது வருத்தத்தினாலாவது மயக்கத்தாலாவது அப் பருவத்திற்குரிய பொருள்கள் மிகுந்து காணப்படுத லாலாவது என இந்நான்கு காரணங்களாலும் நிகழும் என்பர் ஆசிரியர். எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதல்ல என இதற்கு விளக்கந்தருவர் இளம்பூரணர். தோழி, தன்னை இரந்து குறைவேண்டிய தலைமகனைச் சேட்படுத்து விலக்கிநிறுத்துதலேயன்றி, மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகையுடைய நயவுரைகளைக் கூறுதலும் என இவ்வாறு பலவகையாலும் படைத்து மொழிதலுண்டு. ஒருவரை யொருவர் உயர்த்துச் சொல்லுதற்குரிய சொல், தலைவன் தலைவியாகிய இருவர்க்கும் ஒக்கும். ஐயுற்றுக் கூறுஞ் சொல் தலைமகனுக்கே யுரியதாகும். தலைமகளுக்கு உற்ற துன்பத்தைத் துடைத்தல், அவளோடு ஓன்றித்தோன்றும் பேரன்பினளாகிய தோழியின் இயல் பாதலின், எதிரதாக் காக்கும் அறிவாகிய உள்ளத்திண்மை அவள்பால் நன்கு அமைத்திருத்தல் வேண்டும். தலைவியையும் தலைவனையும் உயர்த்துக் கூறும் கூற்றும் தோழியாகிய அவளுக்கே ஒப்பவுரிய தாகும். அகப்பொருள் ஒழுகலாற்றில் உரையாடுதற்குரிய வாயில் களாகிய பாணர் கூத்தர் முதலியோர், தாம் தாம் சொல்லத் தகுவனவற்றைத் தவறின்றி வெளிப்படையாகக் கூறுதல் வேண்டும் என இவ்வியல் 45-ம் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். ஆகவே மேற்குறித்த வாயில்கள் அல்லாத தலைமகளும் நற்றாயும் தாம் கூறக் கருதியவற்றை மறைத்துச் சொல்லப் பெறுவர் எனவும், வருகின்ற (46-ம் சூத்திரம் மறைத்துச் சொல்லுதலாகிய உள்ளுறை கூறுவதாதலின், அத்தகைய உள்ளுறை பாணர் கூத்தர் முதலிய வாயில்களுக்கு இல்லையென இச்சூத்திரத்தால் விலக்கப்பட்ட தெனவும், வாயில்களாவார் குற்றேவல் முறையினராதலானும், தலை மக்களாகிய கேட்போர் பெரியோராதலானும், வெளிப்படக் கூறக்கால் பொருள் விளங்காமையானும், பொருள் விளங்காதாயின் இவர்களது கூற்றிற்குப் பயனின்மையானும் வாயில்களாவார் மறைத்துக் கூறாது வெளிப்படவே கூறுதல் வேண்டுமெனவும் உரையாசிரியர் கூறிய விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என உள்ளுறை ஐந்து வகைப்படும் என்பர் ஆசிரியர். உடனுறையாவது உடை னுறைவதொன்றைச் சொல்ல அதனானே பிறிதொரு பொருள் விளங்குவது. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக் கப்படும் பொருள் தோன்றுவது. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட்படுதல். நகையாவது நகையினாற் பிறிதொரு பொருள் உணர நிற்றல். சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இதுவெனக் கூறுவதனானே பிறிதோர் பொருள் கொளக்கிடப்பது என விளக்கங்கூறுவர் இளம்பூரணர். உடனுறையாவது, நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத்துடன் உறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சி. உவமமாவது அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும் ஏனையுவமமும். நகையும் சிறப்பும் பற்றாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும், அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டி வருவனவும் சுட்டெனப்படும். நகையாவது ஒன்று நினைந்து ஒன்று கூறுதல். ஏனையுவமம் நின்று, உள்ளுறையுவமத்தைத் தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நிற்பது சிறப்பு என்னும் உள்ளுறையாம். இவை ஐந்தும் ஒன்றனை உள்ளுறுத்தி அதனை வெளிப்படாமற் கூறுதலின் உள்ளுறை யெனப்பட்டன என்பர் நச்சினார்க் கினியர். முடிவில்லாத சிறப்பினையுடைய அகப்பொருள் ஒழுகலாற்றால் ஆகிய இன்பமனைத்தும் இத்தகைய உள்ளுறைப் பொருண்மையிலே விளங்கித் தோன்றும்படி செய்த சிறப்பும் முன்னைச் சான்றோர் வகுத்துரைத்த பண்புடைய சொல்லாடல் முறையால் விளைந்ததே என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். தலைவன் தன்தன்மை யென்பதொன்றின்றி நந்தன்மை யெனக் கருதுதலின், யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் அச்சொற்களைக் கேட்டு வெகுளாது இன்பமெனக் கொள்வன் என்ற கருத்தால் தலைவியும் தோழியும் அவனுடைய குறைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித்துரைக்கும் நிலையிற் கூறிய உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்ட தலைவன் இவை இன்பந்தரும் என்றே ஏற்றுக் கொள்வானாதலால்1 இத்தகைய உள்ளுறைப் பொருண்மை யால் தலைமக்களது இன்பவுணர்வு வளர்ந்து சிறத்தல் காணலாம். மங்கலத்தாற் கூறுஞ் சொல்லும், இடக்கரடக்கிக் கூறுஞ் சொல்லும், குற்றமற்ற ஆண்மை காரணமாகச் சொல்லிய மொழியும் ஆகிய இவையெல்லாம் சொல்லாற் பொருள் படாமையால் முற்கூறிய உள்ளுறையின்கண் அடங்கும் என்பர் ஆசிரியர். தலைமக்களுக்கு ஆகாதனவென்று மெய்ப்பாட்டியலில் விலக்கப்படும் சினம், பேதைமை, பொறாமை, வறுமை ஆகிய நான்கும் யாதானு மொரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக அவர்பாற் சார்த்தியுரைக்கப்படும். அன்னை என்ற சொல்லால் தோழி தலைவியையும் தலைவி தோழியையும் அழைத்தலும், என்னை என்ற சொல்லால் அவ்விருவரும் தலைவனை அழைத்தலும் உள. இச்சொல் வழக்குகள் சொல்லினாலும் அதற்குறுப்பாகிய எழுத்தினாலும் பொருள் தோன்றாத மரபினையுடையன என்பர் ஆசிரியர். ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என இங்ஙனம் வரும் சொல் லெல்லாம், நாட்டில் வழங்குகின்ற வழக்கியல் மரபினாலே பொருளை மனத்தினால் உணரினல்லது இதனது வடிவம் இதுவெனப் பொறிகளால் தானும் உணர்ந்து பிறர்க்கும் தெரியக் காட்ட முடியாதனவாகிய பிழம்பில்பொருள்களை உணர்த்துவன வாகும். இமையாக் கண்களையுடைய தேவருலகிலும் கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்திலும் மேற்குறித்தனவாகிய அப் பொருள்கள் இல்லாத காலம் என்பது இல்லாமையால் (எக்காலத்தும் உள்ளமையால்) ஒப்பு முதல் நுகர்வு ஈறாகச் சொல்லப்பட்ட அவை யாவும் கட்புலனாகிய வடிவ மில்லாதனவாயினும் என்றும் உள்பொருள்களெனவே கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரால் ஒப்பு முதலாக எடுத்துரைக்கப்பட்ட இப்பொருள்களை உண்மை மாத்திர முணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதன என்ற பகுப்பினுள் இறையனார் களவியலுரையாசிரியர் அடக்கிக் காட்டினமை இங்கு நினைக்கத் தகுவதாகும். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 281-293 ஐந்தாவது பொருளியல் (வழுவமைதி இருவகையவெனல்) 195. இசைதிரிந் திசைப்பினு மியையுமன் பொருளே யசைதிரிந் தியலா வென்மனார் புலவர். இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொருளிய லென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஒத்துக்களும் பொருளதிலக்கண மன்றே உணர்த்தின, இதற்கிது பெயராயவா றென்னை யெனின்; சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் 1இருதிணை ஐம்பாலியனெறி வழாமைத் திரிபல் சொல்லென்பாராதலின் அவை ஈண்டுத் தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப்பொருளதி காரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளா மெனவும் அமைத்துச், சொல்லுணர்த்தும் பொருளுந் தொடர் மொழியுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளிய லென்றார். இச் சூத்திரம் இவ்வோத்தின்கண் அமைக்கின்ற வழுவமைதிகளெல்லாஞ் சொற்பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியுமென இருவகைய என்கின்றது. (இ - ள்.) 2இசை திரிந்து இசைப்பினும் - சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது வேறுபட்டிசைப்பினும்; அசை திரிந்து இயலா இசைப்பினும் - இவ்வதிகாரத்துள் யாத்த பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்குமாகிய புலனெறி வழக்கிற் றிரிந்து இயன்றிசைப்பினும்; மன் பொருள் இயையும் என்மனார் புலவர் - அவை மிகவும் பொருளேயாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர் என்றவாறு. அதனால் யானும் அவ்வாறு கூறுவலென்றார். சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறி வுறுக்கும் ஓசையாதலின் அதனை இசையென்றார்; இஃது 3ஆகுபெயர். அசைக்கப்பட்டது - அசையென்பதும் ஆகுபெயர். நோயுமின்பமும் (தொல் பொ. 196) என்பதனுள் இருபெயர் மூன்று முரியவாக என்பதனான் திணை மயங்குமென்றும், உண்டற்குரிய வல்லாப் பொருளை (தொல்.பொ. 213) என்றும் பிறாண்டுஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப்பொருண் முதலியன நாடக வழக்கின் வழீஇயவாறுந், தேரும் யானையும் (தொல். பொ. 212) அறக் கழிவுடையன (தொல். பொ. 218) தாயத்தி னடையா (தொ. பொ. 221) என்னுஞ் சூத்திர முதலியன உலகியல்வழக்கின் வழீஇயவாறுங் கூறி, அவ்வழு அமைக்கின்றவாறு மேலே காண்க. புறத்திணை யியலுட் புறத்திணை வழுக்கூறி அகப் பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்றுணர்க. இயலா என்றதனான் 4என்செய்வா மென்றவழிப் பொன் செய்வா மென்றாற்போல வினாவிற் பயவாது இறை பயந்தாற் போல நிற்பனவுங் கொள்க. இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் தொடர்பொருளாற் பொருள் வேறுபட இசைத்தலுங்கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்றா னுணர்க. (1) (முற்கூறிய இருவகையானும் பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு கூறல்) 196. நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியு மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு மறிவும் புலனும் வேறுபட நிறீஇ யிருபெயர் மூன்று முரிய வாக வுவம வாயிற் படுத்தலு முவம மொன்றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி. இது, முற்கூறிய இருவகையானும் பொருள்வேறுபட்டு வழீஇ யமையுமாறு கூறுகின்றது. (இ - ள்.) நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய - துன்பமும் இன்பமுமாகிய இரண்டு நிலைக் களத்துங் காமங் கருதின வரலாற்று முறைமையிடம் விளங்க; எட்டன் பகுதியும் விளங்க - நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடுந் தோன்ற; அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இரு பெயர் மூன்றும் உரியவாக - மனவறிவும் பொறியறிவும் வேறுபட நிறுத்தி அஃறிணை யிருபாற்கண்ணும் உயர்திணை மூன்றுபொருளு முரியவாக; அவரவர் ஒட்டிய உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் - கூறுகின்ற அவரவர் தமக்குப் பொருந்திய உறுப்பெல்லாம் அதுவுடையது போலவும் உணர்வு உடையது போலவும் மறுமாற்றம் தருவது போலவும் தந்நெஞ்சொடு புணர்த்துச் சொல்லியும்; சொல்லா மரபின வற்றொடு கெழீஇச் செய்யாமரபிற் றொழிற்படுத்து அடக்கியும் - வார்த்தை சொல்லா முறைமை யுடையன வாகிய புள்ளும் மாவும் முதலியனவற்றோடே அவை வார்த்தை கூறுவனவாகப் பொருந்தி அவை செய்த லாற்றாத முறைமையினை யுடைய தொழிலினை அவற்றின் மேலே ஏற்றியும்; உறுபிணி தமபோலச் சேர்த்தியும் - அச்சொல்லா மரபினவை உற்ற பிணிகளைத் தம் பிணிக்கு வருந்தின போலச் சார்த்திக்கூறியும்; உவமம் ஒன்றிடத்து உவம வாயிற் படுத்தலும் - அம்மூவகைப் பொருளை உவமஞ் செய்தற்குப் பொருந்து மிடத்து உவமத்தின் வழியிலே சார்த்திக் கூறுதலும்; இருவர்க்கும் உரிய பாற் கிளவி - அத்தலைவர்க்குந் தலைவி யர்க்கு முரிய இலக்கணத்திற் பக்கச்சொல் என்றவாறு. தெரிய விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப் படுத்தலும் இவ்விருவர்க்குமுரிய பாற் கிளவியென முடிக்க. அவரவ ரென்கின்றார் 5அகத்திணை யியலுட் பலராகக் கூறிய தலைவரையுந் தலைவியரையும். 6இருவ ரென்றதும் அவரென்னுஞ் சுட்டு. நெஞ்சென்னும் அஃறிணை யொருமையைத் தெரியவிளங்கத் தலைவன் கூறும்வழி உயர்திணையாண்பாலாகவுந் தலைவி கூறும்வழி உயர்திணைப் பெண்பாலாகவும் பன்மையாற் கூறும்வழிப் பன்மைப்பாலாகவுங் கொள்க. என்றுஞ்சொல்லா மரபின வற்றையும் உயர்திணைப் பாலாக்கியும் அவற்றைத் தமபோலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர்திணை முப்பாலாக்கியுங் கூறுபவென வழுவமைத்தார். இருவகை நிலைக்களத்து 7எட்டனையுஞ் சேர்க்கப் பதினா றாம். அவற்றை நெஞ்சொடு சேர்க்கப்பலவா மென்றுணர்க. உண்ணாமையின் என்னும் அகப்பாட்டி (123) னுள், இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. என்றவழி அழிதக வுடைமதி வாழிய நெஞ்சே என்றதனான் நிலையின்றாகுதியென நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறி நன்குரைத்தவாறும் 8ஓதத்தையும் நெஞ்சையும் உயர் திணையாக்கி உவமவாயிற்படுத்தவாறுங் காண்க. கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்த்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுத லந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறனசைஇச் சென்றவென் நெஞ்சே. (அகம். 9) இஃது, உறுப்புடையதுபோல் 9உவந்துரைத்தது. அன்றவ ணொழிந்தன்று மிலையே என்னும் அகப் பாட்டி (19) னுள், வருந்தினை வாழியென் னெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை யுருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்குங் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்ற மெம்மொ டிறத்தலுஞ் செல்லாய் பின்னின் றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம். (அகம். 19) என அறிவுடையதுபோல் அழுகைபற்றிக் கூறிற்று. பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே. (குறுந். 19) என்றது உணர்வுடையதுபோல் வெகுளிபற்றிக் கூறிற்று. உள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் செல்ல றீர்கஞ் செல்வா மெனினுஞ் செய்வினை முடியா தெவ்வஞ் செய்த லெய்யா மையோ டிளிவுதலைத் தருமென வுறுதி தூக்காத் தூங்கி யறிவே சிறிதுநனி விரைய லென்னு மாயிடை யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே. (நற். 284) இஃது, உணர்வுடையதுபோல இளிவரல் பற்றிக் கூறியது. ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே. (குறுந். 63) இது, மறுத்துரைப்பார்போல நெஞ்சினை இளிவரல் பற்றிக் கூறியது. பின்னின்று துரக்கு நெஞ்ச நின்வாய் வாய்போற் பொய்மொழி யெவ்வமென் களைமா. (அகம். 3 என்பதும் அது. விசும்புற நிவந்த என்பதனுள், வருக வென்னுதி யாயின் வாரே னெஞ்சம் வாய்க்கநின் வினையே. (அகம். 131) என்பது, மறுத்துரைப்பதுபோல் தறுகண்மைபற்றிய பெருமிதங் கூறிற்று. ஏனை அச்சமும் மருட்கையும் பற்றியன தலைவன் கூற்று வந்துழிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன. மன்று பாடவிந்து (அகம். 128) என்பதனுள், நெஞ்ச, மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானக நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானத் தலைஇ நீர்வார் பிட்டருங் கண்ண படுகுழி யியவி னிருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. என்பது உறுப்புடையது போல் அழுகைபற்றிக் கூறியது. குறுநிலைக்குரவின் (நற்றிணை. 56) என்பது உறுப்பு முணர்வுமுடையது போல இளிவரல்பற்றிக் கூறியது. அறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே. (கலி. 123) இஃது, உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது. கோடெழி லகலல்குற் கொடியன்னார் முலைமூழ்கிப் பாடழி சாந்தினன் பண்பின்றி வரினெல்லா வூடுவே னென்பென்ம னந்நிலையே யவற்காணிற் கூடுவே னென்னுமிக் கொள்கையி னெஞ்சே. (கலி. 67) இது, மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது. (குறள். 1291) இஃது, இளிவரல்பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. 10இவை துன்பமும் இன்பமும் நிலைக்களமாகக் காமங் கண்ணிய மரபிடைத் தெரிய வந்தன. கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியா தொருநீ யல்லது பிறிதுயாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற் கமழிதழ் நாற்ற மமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைவ தளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா ரலவ. (அகம். 170) .............. ..................... ........................ ........................ இது, சொல்லாமரபின சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது. இவை உயர்திணையுமாயின. கொங்குதேர் வாழ்க்கை... (குறுந். 2) என்பது உவகைபற்றிக் கூறியது. போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போ லாரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ. (கலி. 120) இது, செய்கையில்லாத மாலைப்பொழுதினைச் செய்யா மரபில் தொழிற்படுத்தடக்கி உவமவாயிற்படுத்தது. தொல்லூழி தடுமாறி (கலி. 129) என்பதனுள், பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கட றூவத் துறந்தனன் றுறைவனென் றவன்றிற நோய்தெற வுழைப்பார்க ணிமிழ்தியோ வெம்போலக் காதல்செய் தகன்றாரை வுடையையோ நீ; மன்றிரும் பெண்ணை மடல்சே ரன்றி னன்றறை கொன்றன ரவரெனக் கலங்கிய வென்றுய ரறிந்தனை நரறியோ வெம்போல வின்றுணைப் பிரிந்தாரை யுடையையோ நீ; பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ லினிவரி னுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல இனியசெய் தகன்றாரை யுடையையோ நீ எனக் கடலும் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம் பிணிக்கு வருந்தினவாகச் சேர்த்தி உயர்திணையாக்கி உவம வாயிற்படுத்தவாறு காண்க. ஒன்றிடத்து என்றார் வேண்டியவாறு உவமங்கோட லாகா தென்றற்கு. பகுதியைப் பால்கெழு கிளவி (199) என மேலும் ஆளுப. காமங்கண்ணிய என்றதனாற் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவுங் கொள்க. சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையு நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்துபின் சென்றவென் னெஞ்சு. (முத்தொள்.) இது, கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவலம் பற்றி நெஞ்சினைக் கூறியது. ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங் காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளு மாந்தளிர்க் கையிற் றடவரு மாமயில் பூம்பொழி னோக்கிப் புகுவனபின் செல்லுந் தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடு நீள்கதுப் பிஃதென நீரற லுட்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென் றாள்வலி மிக்கா னஃதறி கல்லான் என்றாற்போல் உயர்திணையாக உவமவாயிற்படுத்த பெருந் திணையாய் வருவனவுங் காண்க. இஃது அவலம். (2) (முற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணு நிகழுமெனல்) 197. கனவு முரித்தா லவ்விடத் தான. இது, மேற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணும் நிகழு மெனப் பகுதிக்கிளவி கூறுகின்றது. (இ - ள்.) அவ்விடத்தான - முன்னர் வழுவமைத்த நிலைமை யின் கண்ணே வந்தன; கனவும் உரித்தால் - கனவும் உரித்தா யிருந்தது முந்து நூற்கண் என்றவாறு. எனவே, யானுங் கூறுவலென்றார். அலந்தாங் கமையலே னென்றானைப் பற்றியென் னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்ப லோம்பென வளிப்பான் போலவும்; முலையிடைத் துயிலு மறந்தீத் தோயென நிலையழி நெஞ்சத்தே னழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும். (கலி. 128) இவற்றுள், தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்து ரைத்தலுமுடையதாகக் கூறியவாறும், ஆங்கு 11எதிர்பெய்து கொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத் துரைத்தலுமுடையதாகச் செய்யாமரபின் செய்ததாகக் கூறிய வாறும், அவை உயர் திணையாகக் கூறியவாறும், பிறவுமுணர்க. 12இன்னகை யினைய மாகவு மெம்வயி னூடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுத னீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமயத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின். (அகம். 39) என வருவனவுங் கொள்க. (3) (கனவு களவின்கட் செவிலிக்குமுரித்தெனல்) 198. தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். இது முற்கூறிய கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தென வழுவமைக்கின்றது. (இ - ள்.) உடன்போக்குக் கிளப்பின் - உடன்போக்கின் கட் கூறின்; தாய்க்கும் உரித்தால் - அக்கனவு செவிலிக்கும் உரித்தா யிருந்தது முந்து நூற்கண் என்றவாறு. தோழி உடன்பட்டுப்போக்குதலானும் நற்றாய் நற்பாற் பட்டனள் என்று வருதலானுந் தாயெனப்படு வோள் செவிலி யாகும் (124) என்பதனானுஞ் செவிலியைத் தாயென்றார். தலைவி போகாமற் காத்தற்குரியளாதலானும் அவளை என்றும் பிரியாத பயிற்சியானுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று. காய்ந்து செலற்கனலி என்பதனுட் கண்படை பெறேன் கனவ. (அகம். 55) என்றவாறு காண்க. (4) (பக்கச்சொல் தோழி முதலிய நால்வர்க்குமுரித்தெனல்) 199. பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே. இஃது, எய்தாத தெய்துவித்து வழுவமைக்கின்றது. (இ - ள்.) பால்கெழு கிளவி - இலக்கணத்திற் 13பக்கச் சொல்; நால்வர்க்கும் உரித்து - தோழியும் செவிலியும் நற்றாயும் பாங்கனு மென்னும் நால்வர்க்கும் உரித்தாம் என்றவாறு. மேல் இருவர்க்குமுரிய பாற்கிளவி (196) என்றலின் தலை வனையும் தலைவியையும் ஆண்டே கூறலின் ஈண்டு இந்நால் வருமென்றே கொள்க. தருமணற் கிடந்த பாவையென் மருமக ளேயென முயங்கின ளழுமே. (அகம். 165) இது, நற்றாய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் தழீஇக்கொண் டழுதலிற் பால்கெழுகிளவியாயிற்று. தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டா யீதென்று வந்து. (திணை. நூற். 65) என்பது செவிலி குரவை வழிகாட்டென்றலிற் பால்கெழு கிளவி யாயிற்று. ஏனையிரண்டும் மேல்விலக்குப. (5) (இறந்தது காத்தல்) 200. நட்பி னடக்கை யாங்கலங் கடையே. இஃது, இறந்தது காத்தது. (இ - ள்.) ஆங்கு - அந்நால்வரிடத்து; நட்பின் நடக்கை அலங் கடை - நட்பின்கண்ணே ஒழுகுதலல்லாத 14அவ் வீரிடத்தும் பால் கெழு கிளவி உரித்து என்றவாறு. எனவே, நட்புச்செய் தொழுகுந் தோழிக்கும் பாங்கனுக் கும் பால்கெழுகிளவி (199) இன்றென்றாரெனக் கொள்க. (6) (தலைவிக்கு வேறுபாடு தோன்றியவிடத்து அதனைப் பரிகரித்தற்குரியாரிவரெனல்) 201. உயிரு நாணு மடனு மென்றிவை செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு முரிய. இது, தலைவிக்குத் தலைவனாற் பிறப்பதொரு வேறுபாடு தோன்றியவழி அதனைப் பரிகரித்தற் குரியோர் இவரென வழுவமைக்கின்றது. (இ - ள்.) உயிரும் நாணும் மடனும் என்றிவை - உயிரும் நாணும் மடனுமென்று கூறப்பட்ட இவை மூன்றும்; செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய - குற்றந் தீர்ந்த தலைமையினை யுடைய நற்றாய்க்குஞ் செவிலிக்குந் தோழிக்குந் தலைவற்கு முரிய என்றவாறு. உம்மை ஐயமாதலின் தலைவனை யொழிந்த மூவர்க்கு முரிய என்றாராயிற்று. என்றது தலைவன் இவற்றைக் களவிலுங் கற்பிலுங் காத்தலும் வரைவிடைவைத்துப் பிரிந்தும் பரத்தையிற் பிரிந்துங் காவாமையுமுடைய னென்பது கூறிற்று. அவை 15எழுவகையால் (207) தோழி அவற்றைக் காத்து அறத்தொடு நிற்ப, அதனைச் செவிலி உட்கொண்டு அவற்றைக் காத்து நற்றாய்க் கறத்தொடு நிற்ப, அவளும் அவற்றை உட்கொண்டு காத்தற்கு அறத்தொடு நிற்றலும் உடன்போயது அறனென நற்றாய் கோடலுஞ் செவிலி பிறரை வரகின்றானோ வெனத் தோழியை வினவலும் பிறவுமாம். உதாரணம் முன்னர்க் காட்டியவற்றுட் காண்க. இனி, உம்மையை முற்றும்மையாக்கி உயிர் முதலிய தலைவி யுறுப்பினை உறுப்புடைத்தாகவும் மறுத்துரைப்ப தாகவும் 16கூறப் பெறாதென்றார். (7) (தலைவி வருத்தமிக்கவழி இவ்வாறு புணர்க்கவும் பெறுமெனல்) 202. வண்ணம் பசந்து புலம்புறு காலை யுணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே. இது, வருத்தமிக்கவழி இவையுமா மென்கிறது. (இ - ள்.) வண்ணம் பசந்து புலம்பு உறுகாலை - மேனி பசந்து தனிப்படருறுங் காலத்து; கிழவி உறுப்பினை உணர்ந்த போல - தலைவி தனது உறுப்பினை அறிந்தனபோல; புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே - பொருந்தின கூற்றாற் சொல்லவும் பெறும் என்றவாறு. கேளல னமக்கவன் குறுகன்மி னெனமற்றெந் தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம். (கலி. 68) நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு சினைப்பசும் பாம்பின் சூன்முதிர் பன்ன கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ நுண்ணுறை யழிதுளி தலைஇய தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. (குறுந். 35) தணந்தநாள் சால வறிவிப்ப போலு மணந்தநாள் வீங்கிய தோள். (குறள். 1233) காதும் ஓதியும் முதலிய கூறப்பெறா; கண்ணுந் தோளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் புணர்ந்த வகை யென்றார். இதனானே இவற்றைத் தலைவன்பாற் செலவுவர வுடையன போலக் கூறலுங்கொள்க. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று. (குறள். 1244) எனக் கண்ணினைச் செல்வனவாகக் கூறினாள். (8) (தலைவனொடு வேறுபட்டவழித் தலைவி இவ்வாறு கூறுவள் எனல்) 203. உடம்பு முயிரும் வாடியக் காலு மென்னுற் றனகொ லிவையெனி னல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. இது, தலைவனோடு வேறுபட்டுழிப் பிறப்பதோர் வழு வமைதி கூறுகின்றது. (இ - ள்.) உடம்பும் உயிரும் வாடியக்காலும் - தன் உடம்பும் உயிருந்தேய்ந்து கூட்டமினிற் இருந்தகாலத்தும்; இவை என் உற்றனகொல் எனின் அல்லது - இவை என்ன வருத்தமுற்றன கொலென்று தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறினல்லது; கிழத்திக்குக் கிழவோற் சேர்தல் இல்லை - தலைவிக்குத் தலை வனைத் தானேசென்று சேர்தல் இருவகைக் கைக்கோளினு மில்லை என்றவாறு. இது, காதல்கூரவுங் கணவற்சேராது வஞ்சம்போன் றொழுகலின் வழுவாயினும் அமைக்க என்றவாறு. எற்றோ வாழி தோழி முற்றுபு கறிவள ரடுக்கத் திரவின்முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉங் குன்ற நாடன் கேண்மை மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே. (குறுந். 90) என்பதனுட் கேண்மை தோளை மெலிவித்ததாயினும் எனக்கு அமைதியைத் தந்தது; யான் ஆற்றவுந் தாம் மெலிதல் பொருந்தாதது எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. கலைதீண்ட வழுக்கி வீழ்ந்த பழத்தை யருவி பின்னும் பயன்படுத்து நாடன் என்றதனானே அலரால் நஞ்சுற்றத்திற் பிரிந்தேமாயினும் அவன் நம்மை வரைந்து கொண்டு இல்லறஞ் செய்வித்துப் பயன்படுத்துவனென்பதாம். 17கதுமெனத் தாநோக்கித் தாமே கலிழு மிதுநகத் தக்க துடைத்து. (குறள். 1173) இதுவும் அது. 18ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ மிதற்பட் டன. (குறள். 1176) இதுவும் இதன்பாற்படும். 19இனிப்புணர்ந்த வெழினல்லா ரிலங்கெயி றுறாஅலி னனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யா னென்னேன்ம னந்நிலையே யவற்காணிற் றனித்தே தாழுமித் தனியி னெஞ்சே. (கலி. 67) இதனுள், யான் துனித்தல்வல்லேன், என் நெஞ்சிற்குத் தன்றன்மை யென்பதொன்றில்லை, ஈதென்னென்றலின் அவ்வாறு காண்க. (9) (இதுவுமது) 204. ஒருசிறை நெஞ்சமோ டுசாவுங் காலை உரிய தாகலு முண்டென மொழிப. இதுவும் அது. (இ - ள்.) ஒருசிறை - தன் உள்ளத்து நின்ற தலைவனை யொழியப் போந்துநின்றது; நெஞ்சமொடு 20உசாவுங்காலை - தானுந் தன் நெஞ்சமும் வேறாக நின்ற கூட்டத்திற்கு உசாவுங் காலம்; உரியதாகலும் உண்டென மொழிப - தலைவிக்குரிய தாகலும் உண்டென்று கூறுவர் புலவர் என்றவாறு. உம்மையால் தோழியுடன் உசாவுங்காலமும் உண்டு என்று கொள்க. உம்மை எச்சவும்மை. இது தலைவனை வேறுபடுத்துத் தானும் நெஞ்சமும் ஒன்றாய் நின்று உசாவுதலின் வழுவா யமைந்தது. இது யாண்டு நிகழுமெனின் இவனொடு கூடாமையின் இவன் ஆற்றானாவனென்றானும் உணர்ப்பு வயின் வாரா வூடற் கட் (150) புலக்குமென்றானும் பிறவாற்றானு மென்றானும் உசாவும். 21மான மறந்துள்ளா நாணிலிக் கிப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் றப்பினே னென் றடி சேர்தலு முண்டு. (கலி. 89) 22பகலே பலருங் காண நாண்விட் டகல்வயிற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி. (நற்றிணை. 365) இது, தோழியோடு உசாவியது. (10) (மடமை அழியுமிடமிவை எனல்) 205. தன்வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலு மன்ன விடங்க ளல்வழி யெல்லா மடனொடு நிற்றல் கடனென மொழிப. இது, பெண்டிர்க்கியல்பாகிய மடமை யழிவதோர் வழு வமைக்கின்றது. (இ - ள்.) தன்வயிற் கரத்தலும் - தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்க மின்றென்று பொய்கூறலும்: அவன்வயின் வேட் டலும் - அங்ஙனங் கரந்து கூறிய தலைவன்கட் டலைவி விரும் புதலும்; அன்ன இடங்கள் அல்வழி எல்லாம் - ஆகிய அவை போலும் இடங்களல்லாத இடத்தெல்லாம்; மடனொடு நிற்றல் கடன் என மொழிப - தலைவி மடமையுடையளாகி நிற்றல் கடப் பாடென்று கூறுவர் புலவர் என்றவாறு. எனவே, இவ்வீரிடத்தும் மடனழிதலுடையளென வழு வமைத்தார். அது குதிரை வழங்கிவருவல் (கலி. 96) என்று அவன் கரந்தவழி, அதனை மெய்யெனக் கோடலன்றே மடமை, அங்ஙனங்கொள்ளாது அறிந்தேன் குதிரை தானெனப் பரத்தையர் கட்டங்கினாயெனக் கூறுதலின் இது மடனழிந்த வழுவமைதியாயிற்று. 23கவவுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் கொத்தனிர் நீயி ரிஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே. (அகம். 26) என்றவழி, மனத்து நிகழ்ந்த வேட்கையை மறைத்து வன் கண்மை செய்து மாறினமையின் அதுவும் மடனழிந்து வழுவாகி யமைந்தது. அன்னவிடமென்றதனால், 24யாரினுங் காதல மென்றேனா வூடினாள் யாரினும் யாரினு மென்று. (குறள். 1314) என்றாற்போல மடனழிய வருவனவுங் கொள்க. (11) (தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி அறத்தோடு நில்லாள் எனல்) 206. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி யறத்தியன் மரபில டோழி யென்ப. இது, தலைவியால் தோழிக்கு வருவதோர் வழுவமைக் கின்றது. (இ - ள்.) அறத்தொடு நிற்குங் காலத்தன்றி - தலைவி இக் களவினைத் தமர்க்கறிவுறுத்தல் வேண்டுமென்னுங் கருத்தினளா கிய காலத்தன்றி; தோழி அறத்தியன் மரபிலளென்ப - தோழி அறத்தினியல்பாகத் தமர்க்குக்கூறும் முறைமையிலளென்று கூறுவர் புலவர் என்றவாறு. காலமாவன 25நொதுமலர்வரைவும் வெறியாட்டெடுத் தலும் முதலியன. தலைவி களவின்கண்ணே கற்புக்கடம் பூண்டு ஒழுகுகின்றாளை நொதுமலர் வரைவைக் கருதினார் என்பதூஉம், இற்பிறந்தார்க்கேலாத வெறியாட்டுத் தம்மனைக் கண் நிகழ்ந்த தூஉந் தலைவிக் 26கிறந்துபாடு பிறக்குமென்று 27உட்கொண்டு அவை பிறவாமற் போற்றுதல் தோழிக்குக் கடனாதலின் இவை நிகழ்வதற்கு முன்னே தமர்க்கறிவித்தல் வேண்டும்; அங்ஙனம் அறிவியா திருத்தலின் வழுவாயமைந்தது. 28இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் கண்ணகன் றூமணி பெறூஉ நாட னறிவுகாழ்க் கொள்ளு மளவைச் சிறுதொடி யெம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே. (குறுந். 379) இது, நொதுமலர் வரைவுகூறி உசாவி அறத்தொடு நின்றது. கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த. (நற்றிணை. 34) இது, வெறியாட்டெடுத்தவழி அறத்தொடு நின்றது. அகவன் மகளே யகவன் மகளே. (குறுந். 23) இது, 29கட்டுக்காணிய நின்றவிடத்து அறத்தொடு நின்றது. அதுவும் வெறியாட்டின்கண் அடங்கும். தலைவிக்குக் குறிப்பினு மிடத்தினுமல்லது வேட்கை நெறிப்பட வாராமையிற் சின்னாள் கழித்தும் அறத்தொடு நிற்பாளாகலானுஞ் செவிலி யும் நற்றாயுங் கேட்டபொழுதே அறத்தொடு நிற்பராகலானும் ஆண்டு வழுவின்று. (12) (அறத்தொடு நிற்கும்வகை இவையெனல்) 207. எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாத லேதீடு தலைப்பா டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ யவ்வெழு வகைய வென்மனார் புலவர். இது, அவ்வறத்தொடு நிலை இனைத்தென்கின்றது. (இ-ள்.) எளித்தல் - தலைவனை எளியனாகக் கூறுதல்; ஏத்தல் - அவனை உயர்த்துக் கூறல்; வேட்கை உரைத்தல் - அவனது வேட்கை மிகுத்துரைத்துக் கூறல்; கூறுதல் உசாதல் - தலைவியுந் தோழியும் வெறியாட்டிடத்தும் பிறவிடத்துஞ் சில கூறுதற் கண்ணே தாமும் பிறருடனேயும் உசாவுதல்; ஏதீடு - ஒருவன் களிறு புலியும் நாயும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டா னெனவும் பூத்தந்தான் தழைதந்தா னெனவும் இவை முதலிய காரமிட்டுணர்த்தல்; தலைப்பாடு - இருவருந் தாமே எதிர்ப் பட்டார் யான் அறிந்திலேனெனக் கூறுதல்; உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ - என்று அவ்வாறனையும் 30படைத்து மொழியாது பட்டாங்கு கூறுதலென்னுங் கிளவியோடே கூட்டி; அவ் எழுவகைய என்மனார் புலவர் - அத் தன்மைத்தாகிய ஏழு கூற்றையுடைய அறத்தொடு நிற்றலென்று கூறுவர் புலவர் என்றவாறு. அவ்வெழுவகைய என்றதனால் உண்மைசெப்புங்கால் ஏனையாறு பொருளினுட் சில உடன்கூறி உண்மைசெப்பலும் ஏனைய கூறுங்காலுந் தனித்தனி கூறாது இரண்டு மூன்றும் உடனே கூறுதலுங் கொள்க. உதாரணம்: 31எல்லு மெல்லின் றசைவுபெரி துடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்றெவனோ வெனமொழிந் தனனே யொருவன் (அகம். 110) என்பது எளித்தல். 32பகன்மா யந்திப் படுசுட ரமயத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள் (அகம். 48) என்பது ஏத்தல். 33பூணாக முறத்தழீஇப் போதந்தான். (கலி. 39) என்பது வேட்கையுரைத்தல். 34முருகயர்ந்து வந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவ ணறுநுத னீவி வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய விண்டோய் மாமலைச் சிலம்ப னொண்டா ரகலமு முண்ணுமோ பலியே. (குறுந். 362) இது 35வேலனொடு கூறுதலுசாதல். கூறுதற்கண் உசாத லென விரிக்க. 36வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்ப தல்லது - கோடா வெழிலு முலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. (திணை. நூற். 15) இதுவும் உசாதலாய் அடங்கும். 37உரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா மிடும்பைகூர் மனத்தே மருண்ட புலம்படர மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் தாகாண் விடையி னணிபெற வந்தெ மலமர லாயிடை வெருவுத லஞ்சி மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி யசைமென் சாய லவ்வாங் குந்தி மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த கெடுதியு முடையே னென்றனன் (குறிஞ்சிப். 130-142) என நாய் காத்தவாறும், 38கணைவிடு புடையூக் கானங் கல்லென மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக் கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக விரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு மையல் வேழ மடங்கலி னெதிர்தர வுய்விட மறியே மாகி யொய்யெனத் திருந்துகோ லெல்வளை தெளிர்ப்ப நாணுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ லுடுவுறு பகழி வாங்கிக் கடுவிசை யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் திண்ணிலைக் கடம்பின் றிரளரை வளைஇய துணையறை மாலையிற் கைபிணி விடேஎ நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை யருங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை யஞ்சி லோதி யசைய லெனையதூஉ மஞ்ச லோம்புநின் னணிநலங் காக்கென மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந் தென்முக நோக்கி நக்கனன்.... (குறிஞ்சிப். 160-183) எனக் களிறு காத்தவாறும், புனலுள் எடுத்தவாறுங் காண்க. 39புலிபுலி யென்னும் பூச றோன்ற வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித ழூசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்லி னொருகணை தெரிந்துகொண் டியாதோ மற்றிம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே. (அகம். 48) இது, புலிகாத்தற்கு வந்தானென இட்டுரைத்தது. 40அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை தானு மலைந்தா னெமக்குந் தழையாயின பொன்வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே. (ஐங்குறு. 201) இது, தோழி தழைதந்தானென அறத்தொடு நின்றது. 41சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன். (திணை. நூற். 2) இதனுள் அளகத்தின் மேலாய்ந்தெனவே பூத்தந்தமை கூறினாள். 42பிறிதொன் றின்மை யறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி கடுஞ்சூ டருகுவ னினக்கே. (அகம். 110) இது தலைப்பாடு. 43நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட் கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென ஈர நன்மொழி தீரக் கூறித் துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து துஞ்சா முழவின் மூதூர் வாயி லுண்டுறை நிறுத்துப் பெயர்ந்தன னதற்கொண் டன்றை யன்ன விருப்போ டென்று மிரவரன் மாலைய னேவரு தோறுங் காவலர் கடுகினுங் கதனாய் குரைப்பினு நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் றன்னிலை திரிந்தன்று மிலனே. (குறிஞ்சி. 231 - 245) 44அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவண் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய். (ஐங்குறு. 220) என வருவன உண்மைசெப்பல். காமர் கடும்புனல் (கலி. 39) என்பதனுள் 45இரண்டு வந்தன; பிறவு மன்ன. (13) (தோழி அறத்தொடு நிற்றல் தலைவி விருப்பத்தால் நிகழுமெனல்) 208. உற்றுழி யல்லது சொல்ல லின்மையி னப்பொருள் வேட்கைக் கிழவியி னுணர்ப. இது, மேலதற்கோர் புறனடை. (இ - ள்.) உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் - தலைவியர்க்கு ஏதமுற்ற இடத்தன்றித் தோழியா அவ்வாறு மறை புலப்படுத்துக் கூறாராதலின்; அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப - அம்மறை புலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவியர் காரணத்தான் தோழியர் உணர்வர் என்றவாறு. உணர்வர் என்று உயர்திணைப்பன்மையாற் கூறவே தலைவியருந் தோழியரும் பலரென்றார். கிழவி என்றாரேனும் ஒருபாற் கிளவி (222) யென்பதனாற் பன்மையாகக் கொள்க. உயிரினுஞ் சிறந்த நாணுடையாள் (113) இது புலப்படுத்தற்கு உடம்படுதலின் வழுவாயமைந்தது. 46இன்னுயிர் கழிவ தாயினு நின்மக ளாய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே. (அகம். 52) என்றாற் போல்வனவே இலக்கணமென்பது மேலைச் சூத்திரத்தாற் கூறுப. (14) (அறத்தொடு நிற்றல் வழுவென்றதற்குக் காரணங் கூறல்) 209. செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான. இது, மறைபுலப்படாமல் ஒழுகுதல் இலக்கணமென்றற்கும் மறைபுலப்படுத்துதல் வழுவென்றற்குங் காரணம் கூறுகின்றது. (இ - ள்.) செறிவும் - அடக்கமும்; நிறைவும் - மறைபுலப் படாமல் நிறுத்தும் உள்ளமும்; செம்மையும் - மனக் கோட்ட மின்மையும்: செப்பும் - களவின்கட் செய்யத் தகுவன கூறலும்; அறிவும் - நன்மைபயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிவித்த லும்; அருமையும் - உள்ளக்கருத்தறிதலருமையும்; பெண் பாலான - இவையெல்லாம் பெண்பாற்குக் காரணங்கள் என்றவாறு. இவையுடையளெனவே மறைபுலப்படுத்தற்கு உரியளல்ல ளென்பதுஉம் அதனைப் புலப்படுத்தலின் முற்கூறியன வழுவ மைத்தனவுமாயிற்று. இவை வருஞ்சூத்திரத்திற்கும் ஒத்தலிற் சிங்கநோக்கு. (15) (வரைதல் வேட்கைக்குரிய கூற்றுக்கள் இவையெனல்) 210. பொழுது மாறுங் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலுந் தன்னை யழிதலு மவனூ றஞ்சலு மிரவினும் பகலினு நீவர லென்றலுங் கிழவோன் றன்னை வார லென்றலு நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள வென்ப. இதுவும் தோழிக்குந் தலைவிக்கும் உரியனவாகிய வழுவமைக்கின்றது. (இ - ள்.) பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவின் ஆகிய குற்றங்காட்டலும் - இராப்பொழுதும் அக் காலத்து வழியுங் கண்ணுறும் இடத்துள்ள காவலுமென்று கூறப்பட்டவை மூன்றினது பழையமுறையிற் பிறழுதலால் தலைவற்குளதாகிய குற்றத்தை யுணர்த்தலும்: இவை தலைவற்கு அச்சம் உளவாகக் கருதுதலும் அவ னால் நிகழும் இன்பத்தைத் துன்பமாகக் கருதுதலும் உடையன வாயிற்றேனும் அன்புபற்றிக் கூறலின் அமைந்தது. அப்பொழு திற் றலைவனது செலவு வரவு நிகழ்ந்துழியே இக்குற்றங் காட்டுவதென்று கொள்க. 47மன்றுபா டவிந்து....... (அகம். 128) என்பது பொழுதுவழுவுதலிற் குற்றங்காட்டியது. 48ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை சோர்ந்துவீழ் கதுப்பினாள் செய்குறி நீவரி னொளிதிகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறென வார்ப்பவ ரேனல்கா வலரே. (கலி. 52) இது, காப்பினான் வழுவுணர்த்தியது. தன்னை அழிதலும் - அவன் அக்காலத்து அவ்வழியில் தனியே வருதற்கு யான் ஏதுவாயினேன் எனத் தன்னை அழிவு படுத்துரைத்தலும்: 49நீதவ றுடையையு மல்லை நின்வயி னானா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே. (அகம். 72) அவன் வரவினை உவவாது; துன்பங்கூர்தல் வழுவா யினும், அதுவும் அவன்கண் அன்பாதலின் அமைத்தார். அவண் ஊறு அஞ்சலும் - அவ்வழியிடத்துத் தலைவற்கு வரும் ஏதமஞ்சுதலும்: 50அஞ்சுவல் வாழி யைய வாரிருட் கொங்கிய ரீன்ற மைந்தின் வெஞ்சின வுழுவை திரிதருங் காடே.. இஃது, அவனைப் புலிநலியுமென் றஞ்சியது. 51ஒருநாள் விழும முறினும் வழிநாள் வாழ்குவ ளல்லளென் றோழி (அகம். 18) என்பதும் அது. ஆறின்னாமையாவது:- விலங்கு முதலியவற்றான் வரவிற்கு இடையீடு நிகழுமென் றஞ்சுதல். ஏத்தல், 52எளித்தலின் வேறாயிற்று. இது நன்குமதி யாமையின் வழுவாயினும் அன்பு மிகுதியான் அமைத்தார். இரவினும் பகலினும் நீ வரல் என்றலும் - இராப் பொழுதின் கண்ணும் பகற்பொழுதின் கண்ணுந் தலைவனைக் குறியிடத்து வருகவெனத் தோழி கூறலும்: 53வல்வி லிளையரொ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கட் சிறுகுர னெய்தலெம் பெருங்கழி நாட்டே. (அகம். 120) 54பூவேய் புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே. (அகம். 240) களவு அறிவுறுமென்று அஞ்சாது வருகவென்றலின் வழு வேனுந் தலைவி வருத்தம் பற்றிக் கூறலின் அமைத்தார். கிழவோன்றன்னை வாரல் என்றலும் - தோழியுந் தலைவியுந் தலைமை செய்து கொண்டு தலைவனை வாரற்க என்று கூறுதலும்: தலைமை வழுவேனும் அன்பான் அமைத்தார். 55இரவு வார லைய விரவுவீ யகலறை வரிக்குஞ் சாரற் பகலும் பெறுதியிவ டடமேன் றோளே. (கலி. 49) இஃது, இரவுவாரலென்றது. 56பகல்வரிற் கவ்வை யஞ்சுதும் (அகம். 118) என்றது பகல்வாரலென்றது. 57நல்வரை நாட நீவரின் மெல்லிய லோருந் தான்வா ழலளே. (அகம். 12) இஃது, இரவும் பகலும் வாரலென்றது. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும் - பிறிதொரு பொருண்மேல் வைத்து நன்மையுந், தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்: 58கழிபெருங் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉ மின்பம் வெஃகார். (அகம். 112) எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்தின மையின் வழுவாயமைந்தது. பழியொடு வரூஉ மின்பம் வெஃகார் எனவே புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ள வைத்தலின் நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்றாம். புரைபட வந்து அன்னவை பிறவும் - வழுப்படவந்த இவை போல்வன பிறவும்: அவை ஊடற்கணின்றியுந் தலைவனைக் கொடிய னென்றலும் நொதுமலர் வரைகின்றாரென்றலும் அன்னை வெறியெடுக்கின்றாளென்றலும் பிறவுமாம். 59பகையினோய் செய்தான். (கலி. 40) என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது. 60தினையுண் கேழ லிரிய என்னும் நற்றிணை (119) யுள், யாவது, முயங்கல் பெறுகுவ னல்லன் புலவிகொ ளீயர்தன் மலையினும் பெரிதே. இது, நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது. 61கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலு மாடின ளாத னன்றோ நீடு (அகம். 138) என்பது தலைவற்கு வெறியாட்டுணர்த்தியது. வரைதல் வேட்கைப் பொருள என்ப - தலைவன் வரைந்து கோடற்கண் நிகழும் விருப்பத்தைத் தமக்குப் பொருளாக வுடைய வென்றவாறு. என்றது, வழுப்படக் கூறினும் வரைவுகாரணத்தாற் கூறலின் அமைக்க வென்றவாறாம். (16) (கைக்கிளைபெருந்திணைக்கட்படுவதோர் வழுவமைக்கின்றது) 211. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தன் மரீஇய மருங்கி னுரித்தென மொழிப. இது, நடுவணைந்திணையல்லாத கைக்கிளை பெருந் திணைக் கட்படுவதொரு வழுவமைக்கின்றது. (இ - ள்.) வேட்கை மறுத்து - தம் மனத்து வேட்கையை மாற்றி; ஆங்குக் கிளந்து உரைத்தல் - இருவரும் எதிர்ப்பட்ட விடத்துத் தாம் ஆற்றின தன்மையைப் புலப்படக் கூறி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்தல்; மரீஇய மருங்கின் உரித்தென மொழிப - புலனெறி வழக்கஞ்செய்து மருவிப்போந்த கைக்கிளைப் பெருந்திணைக் கண் உரித்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் என அவை இருமருங்கும் நிற்றலின் ஈண்டு மருங்கு என்றார். 62தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று. (கலி. 62) இஃது, அடியோர் தலைவராயவழித் தலைவி வேட்கை மறுத்துணர்த்தியது. 63எறிந்த படைபோன் முடங்கி மடங்கி நெறித்துவிட் டன்ன நிறையேரா லென்னைப் பொறுக்கலா நோய்செய்தாய் பொறீஇ நிறுக்கல்லே னீநல்கி னுண்டென் னுயிர். (கலி. 94) 64உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு. (கலி. 94) இவை, அடியோர் தலைவராக வேட்கைமறுத்துணர்த் தியது. பெருந்திணை. ஏனை வினைவலபாங்கினோர்க்கு வந்துழிக்காண்க. இவை கைகோளிரண்டன் கண்ணும் வழங்குதல் சிறுபான்மை யுரித்தென்று அகத்திணைக்கட் கூறலின் வழுவமைத்தார். ஒன்றென முடித்தலான் மரீஇயவாறு 65ஏனையவற்றிற்குங் கொள்க. 66புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந் தவறாதல் சாலாவோ கூறு. (கலி. 88) குதிரையோ வீறியது. (கலி. 96) எனவும் வருவனவும் பிறவும் இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவன; அவையும் அமைத்துக்கொள்க. (17) (இது களவொழுக்கத்தின்கண் தேர் முதலியவற்றை ஊர்ந்துத் தலைவன் செல்லுவன்எனல்) 212. தேரும் யானையுங் குதிரையும் பிறவு மூர்ந்தன ரியங்கலு முரிய ரென்ப. இது, களவொழுக்கத்துக்கு மறுதலையாயதோர் வழுவ மைக்கின்றது. (இ - ள்.) தேர் முதலியவற்றையும் பிற ஊர்திகளையும் ஏறிச்சென்று கூடுதலையும் உரியர் தலைவரென்று கூறுவர் புலவர் என்றவாறு. பிற ஆவன கோவேறுகழுதையுஞ் சிவிகையும் முதலியன வாம். இது செல்வக் குறைபாடின்மை கூறுதலான் அமைந்தது. 67குறியின்றிப் பன்னாள்நின் கடுந்திண்டேர் வருபதங்கண் டெறிதிரை யிமிழ்கான லெதிர்கொண்டா ளென்பதோ வறிவஞ ருழந்தேங்கி யாய்நலம் வறிதாகச் செறிவளை தோளூர லிவளைநீ துறந்ததை. (கலி. 127) 68நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே. (அகம். 20) கடுமான் பரிய கதழ்பரி கடைஇ நடுநாள் வரூஉம் (நற். 149) 69கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிந் தசைஇ. (அகம். 120) என வரும். ஏனைய வந்துழிக் காண்க. உம்மையான், இளையரோடுவந்து தனித்துக் கூடுதலுங் கொள்க: 70வல்வி லிளையரொ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ. (அகம். 120) என்றாற் போல்வன கொள்க. இதனானே உடன்போக்கிலும், கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறி கோல்வல் வேங்கை மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்கள் நற்றோ ணயந்துபா ராட்டி யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே. (ஐங்குறு. 385) எனத் தேர் முதலிய ஏறிப்போதலுங் கொள்க. (18) (இது ஓர் சொல்வழுவமைத்தல்) 213. உண்டற் குரிய வல்லாப் பொருளை யுண்டன போலக் கூறலு மரபே. இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக் கின்றது. (இ - ள்.) உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற் றொழிலை நிகழ்த்துதற்குரிய அல்லாத பொருளை; உண்டன போலக் கூறலும் மரபே - அத்தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறி வழக்கஞ் செய்தலும் மரபு என்றவாறு. அது, 71பசலையா லுணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால். (கலி. 15) எனவரும். இதன்கட் சொல்வழுவன்றிச் செய்யா மரபிற் றொழிற் படுத்து அடக்கலும் அமைத்தார். இன்னும் உய்த்துக் கொண்டு ணர்தல் (666) என்பதனான் உண்ணப்படுதற்குரிய வல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டதுபோலக் கூறலும் மரபாமென்பது பொருளாகக் கொள்க. அவை, 72தோணல முண்டு துறக்கப் பட்டோர் வேணீ ருண்ட குடையோ ரன்னர்; நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ ரல்குநர் போகிய வூரோ ரன்னர்: கூடினர் புரிந்து குண னுணப் பட்டோர் சூடுந ரிட்ட பூவோ ரன்னர். (கலி. 23) எனவரும். பிறவுங் கொள்க. உம்மையாற் பிறதொழில் பற்றி வருவனவுங் கொள்க. 73கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று. (குறள். 1244) புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி லள்ளிக்கொள் வற்றே பசப்பு. (குறள். 1187) வருத்தின், வான்றோய் வற்றே காமம். (குறுந். 102) என்றாற் போல்வனவுங் கொள்க. (19) (வரைவு நேராமைக்குக் காரணம் பொருள்வேண்டி எனத் தோழி கூறல்) 214. பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே காப்புக் கைமிகுத லுண்மை யான. இது, களவின்கண் தோழிக் குரியதொரு வழுவமைக் கின்றது. (இ - ள்.) பொருள் என மொழிதலும் வரைநிலை இன்றே - எமர் வரைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூறலும் நீக்குநிலைமையின்று, காப்புக் கைம்மிகுதல் உண்மையான - காவன் மிகுதியான் தலைவிக்கு வருத்தம் கைகடத்த லுண்டாகையான் என்றவாறு. உம்மையால், பொருளேயன்றி ஊரும் காடும் மலையும் முதலியன வேண்வரென்றலுங் கொள்க. 74சான்றோர் வருந்திய வருத்தமு நுமது வான்றோய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கி னன்றே யஃதான், றடைபொருள் கருதுவி ராயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோ டுள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே. இதனுள், பொருள் விரும்பியவாறும் குன்றம் விரும்பிய வாறுங் காண்க. அடைபொருள் - இவள் நும்பால் அடைதற்குக் காரணமாகிய பொருளென்க. (20) (மேலதற்கோர் புறனடை) 215. அன்பே யறனே யின்ப நாணொடு துறந்த வொழுக்கம் பழித்தன் றாகலி னொன்றும் வேண்டா காப்பி னுள்ளே. இது, தோழி பொருளென மொழிதற்குத் தலைவியும் உடன்பட்டு நிற்றற்குரியளென்றலின் மேலதற்கோர் புறனடை. (இ - ள்.) காப்பினுள் - காவன் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து; அன்பே அறனே இன்பம் நாணொடு துறந்த ஒழுக்கம் - தலைவன்கண் நிகழும் அன்புங் குடிப் பிறந்தோர் ஒழுகும் அறனுந் தமக்கின்றியமையா இன்பமும் நாணும் அகன்ற ஒழுகலாறு; பழித்தன்று ஆகலின் ஒன்றும் - பழியுடைத்தன்று ஆகையினாலே புலனெறி வழக்கிற்குப் பொருந்தும்; வேண்டா - அவற்றை வழுவாமென்று களையல் வேண்டா என்றவாறு. எனவே, பொருளென மொழிதல் தலைவிக்கும் உடன்பா டென்று அமைத்தாராயிற்று. (21) (தலைவர் பிரியக்கருதின் இவ்வாறுங் கூறுவரெனல்) 216. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே. இது, தோழிக்குந் தலைவிக்கு முரியதொரு வழுவமைக் கின்றது. (இ - ள்.) தலைவன் பிரியக் கருதியவழித் தோழியுந் தலைவியும் நீ போகின்றவிடம் எவ்வாற்றானும் போதற்கரிய நிலமெனக் கூறி விலக்குதலும் நீக்குநிலைமையின்று என்றவாறு. உதாரணம்: 75இடுமு ணெடுவேலி போலக் கொலைவர் கொடுமரந் தேய்ந்தார் பதுக்கை நிரைத்த கடுநவை யாராற் றறுசுனை முற்றி யுடங்குநீர் வேட்ட வுடம்புயங் கியானை கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு வெறிநிரை வேறாகச் சார்ச்சார லோடி நெறிமயக் குற்ற நிரம்பா நீ டத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சு நறுநுத னீத்துப் பொருள்வயிற் செல்வோ யுரனுடை யுள்ளத்தை. (கலி. 12) எனச் சுரமெனக் கூறினாள். தலைவியுந் தோழியாற் கூற்றுநிகழ்த்தும். 76சூத்திரம் பொதுப்படக் கிடத்தலின் தலைவி உடன்போகக் கருதியவழித் தலைவனுஞ் சுரமெனக் கூறுதல் கொள்க. எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மேவந்த சீறடித் தாமரை யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ. (கலி. 13) என வரும். (22) (உலகவழக்குச் செய்யுட்குமாமெனல்) 217. உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுத்தல் செய்யுட்குக் கடனே இது, முன்னர் உலகியல் வழக்கென்றது செய்யுட்கா மென்று அமைக்கின்றது. (இ - ள்.) உயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின் - உயர்ந்த மக்கள் கூறுங்கூற்றும் வேதநெறியொடு கூடுதலின்; வழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே - அவ்வழக்கினது நெறியிலே நடத்தல் செய்யுட்கு முறைமை என்றவாறு. வழக்னெப் படுவது (648) என்னும் மரபியற் சூத்திரத் தான் வழக்கு உயர்ந்தோர் கண்ணதாயிற்று. அவர் அகத்தியனார் முதலியோரென்பது பாயிரத்துட் கூறினாம். அவை சான்றோர் செய்யுளுட் காண்க. இதனை மேலைச் சூத்திரத்திற்கும் எய்துவிக்க. (23) (உலகியலல்லாதனவும் பயன்படவரின் புலனெறிவழக்கிற்கூறல் வழுவன்றெனல்) 218. அறக்கழி வுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப. இஃது, உலகியல் வழக்கன்றிப் பொருள் கூறினும் அமைக வென்றது. (இ - ள்.) அறக்கழிவு உடையன - உலக வழக்கத்திற்குப் பொருத்த மில்லாத கூற்றுக்கள்; பொருட்பயம் படவரின் - அகப் பொருட்குப் பயமுடைத்தாக வருமாயின்; வழக்னெ வழங்கலும் - அவற்றை வழக்கென்றே புலனெறி வழக்கஞ் செய்தலும்; பழித் தன்று என்ப - பழியுடைத்தன்றென்று கூறுவாராசிரியர் என்றவாறு. தலைவன் குறைவுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக் கூறுங்கால் தன்னை அவன் நயந்தான்போலத் தலைவிக்குக்கூறுவனவும், பொய்யாக வீழ்ந்தே னவன் மார்பின் (கலி. 37) எனப் படைத்து மொழிவனவுந், தலைவி காமக் கிழவ னுள்வழிப் படுதலும் தாவினன்மொழி கிழவி கிளப்பினும் (113) போல்வன பிறவும் அறக் கழிவுடை யனவாம். தலைவி தனக்கு மறை புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக் கொண்டே அவளை ஆற்றுவித்தற் பொருட்டு அறக் கழிவுடையன கூறலின் அவை பொருட்குப் பயன்றந் தனவாம். நெருந லெல்லை யேனற் றோன்றி (அகம். 32) என்பதனுள், 77சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் னுள்ளவ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கைபிணி விடாஅ. எனத் தலைவன் தன்னை நயந்தானென இவள் கொண்டாள் கொல்லெனத் தலைவி கருதுமாற்றான் தோழி கூறவே தலைவி மறை புலப்படுத்துவ ளென்பது பயனாயிற்று. கயமல ருண்கண்ணாய்... அங்க ணுடைய னவன், என்பதனுள், மெய்யறியா தேன்போற் கிடந்தேன் (கலி. 37) என்புழி, முன்னர் மெய்யறி 78வழிநிலை பிழையாமனின்று பின்னர்ப் பொய்யாக வழிநிலை பிழைத்துக் கூறியது வழு வேனும் இவளுந் தலைவனும் இவ்வாறே செறிந்தமை யுணர்த்த லின் மறைபுலப்படுத்துங் கருத்தினளாந் தலைவியென்பது பயனாம். 79மள்ளர் குழீஇய விழவி னானும். (குறுந். 31) 80அருங்கடி யன்னை (நற்றிணை. 365) 81பாம்புமத னழியும் பானாட் கங்குலு மரிய வல்லம னிகுளை (அகம். 8) என்பனவற்றுள், தலைவி தேடிச்சென்றதும், செல்வா மென்றதும் சிறைப்புறமாக வரைவுகடாயது. பொருட்பயன் றருதலின் அறக்கழிவுடையவேனும் அமைந்தன. 82இது, பல்வேறு கவர்பொரு ணாட்டத்தான் (114) அறக் கழிவுடையனவுங் கூறப்பெறுமென்றமைப்பது பெரும் பான்மை. இஃது அதிகாரத்தாற் றோழிக்குந் தலைவிக்குங் கொள்க. (24) (மேலதற்கோர் புறனடை) 219. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே. இது, மேல் அறக்கழிவுடைத்தாயினும்அது பொருட் பயம்படு (218) மென்றார், அப்பொருளினை இது வென்றலின் மேலதற்கொரு புறனடை. (இ - ள்.) மிக்க பொருளினுள் - முன்னர் அகப்பொருட்குப் பயம் படவரினென்று வழுவமைத்த பொருளின் கண்ணே; நாணுத்தலைப் பிரியா நல்வழிப் பொருள்வகை படுத்துப் புணர்க்க - தலைவியது நாண் அவளிடத்து நின்று நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறியாகிய பொருட் கூறுபாடுகளை உள்ளடக்கிப் படுத்துக் கூறுக என்றவாறு. நெருந லெல்லை (அகம்.32) என்பதனுள், நெருநல் யான் காக்கின்ற புனத்து வந்து ஒரு தலைவன் தன் பெருமைக்கேலாச் சிறுசொற் சொல்லித் தன்னை யான் வருத்தினேனாகக் கூறி என்னை முயங்கினான்; யான் அதற்கு முன் ஞெகிழ்ந்தே மன நெகிழ்ச்சி அவனறியாமன் மறைத்து வன்சொற்சொல்லி நீங்கினேன், அவ்வழி என் வன்கண்மையாற் பிறிதொன்று கூறவல்லனா யிற்றிலன், அவ்வாறு போனவன் இன்று நமக்குத் தோலாத் தன்மையின்மை யினின்றும் இளிவந்தொழுகுவன், தனக்கே நந்தோள் உரியவாகலும் அறியானாய் என்னைப் பிறநிலை முயலுங் கண்ணோட்டமு முடையவனை நின் ஆயமும் யானும் நீயுங் கண்டு நகுவோமாக, நீ அவன் வருமிடத்தே செல்வாயாக, எனக் கூறியவழி; எம் பெருமானை இவள் 83புறத்தாற்றிற் கொண்டாள் கொல்லோ வெனவும், அவன் தனக்கு இனிய செய்தன வெல்லாம் என் பொருட் டென்று கொள்ளாது பிறழக் கொண்டாள் கொல்லோ வெனவுந் தலைவி கருமாற்றானே கூறினாளெனினும் அதனுள்ளே 84இவளெனக்குச் சிறந்தா ளென்ப துணர்தலின் என் வருத்தந் தீர்க்கின்றில்லை யென்றான் எனவும், அதற்கு முகமனாக இவளைத் தழீஇக் கொண்டதன்றி இவள் பிறழக்கொண்ட தன்மை அவன் கணுளதாயின் இவளைக் குறிப்பறியாது புல்லானெனவும், இவ்வொழுகலாறு சிறிதுணர்தலில் இக்குறை முடித்தற்கு மனஞெகிழந்தாளெனவும், அவனை என்னோடு கூட்டுதற்கு என்னை வேறுநிறுத்தித் தானும் ஆயமும் வேறுநின்று நகுவேமெனக் கூறினாளெனவுந், தலைவி நாண் நீங்காமைக்குக் காரணமாகிய பொருளை உள்ளடக்கிப் புணர்த்துக் கூறியவாறு காண்க. இதனுள் அறக்கழிவான பொருள் புலப்படவும், ஏனைப்பொருள் புலப்படாமலுங் கூறாக்கால் தலைவியது மறையை வெளிப்படுத்தினாளா மாதலின் அதனை மிக்கபொரு ளென்றார். ஏனையவற்றிற்கும் உட்பொருள் புணர்த்தவாறுணர்ந்து பொருளுரைத்துக் கொள்க. (25) (எல்லா என்னுஞ்சொல் இருபாற்குமுரித்தெனல்) 220. முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொ னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே. இது, கிழவன் கிழத்தி பாங்கன் பாங்கியென்னு முறைப் பெயராகிய சொற்பற்றிப் பிறந்ததொரு வழுவமைக்கின்றது; (இ - ள்.) முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச் சொல் - முறைப்பெயரிடத்து இருபாற்கும் பொருந்தின தகுதியை யுடைய எல்லா வென்னுஞ் சொல்; நிலைக்கு உரிமரபின் இரு வீற்றும் உரித்தே - புலனெறிவழக்கிற்குரிய முறைமையினானே வழுவாகாது ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒப்ப உரியதாய் வழங்கும் என்றவாறு. கெழுதகை யென்றதனானே தலைவியுந் தோழியுந் தலைவனைக் கூறியதே பெரும்பான்மையென்றுந் தலைவன் தலைவியையும் பாங்கனையுங் கூறுதல் சிறுபான்மை வழுவமைதி யென்றுங் கொள்க. உதாரணம்: அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன் முதிர்கபுண் முலைபொருத வேதிலான் முச்சி யுதிர்துக ளக்கநின் னாடை யொலிப்ப வெதிர்வளி நின்றாய்நீ செல்; இனி 85யெல்லா. (கலி. 81) எனத் தலைவியைத் தலைவன் விளித்துக் கூறலின் வழுவா யமைந்தது. 86எல்லாநீ, முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவா யென்னீ பெறாததீ தென். (கலி. 61) எனத் தோழி தலைவனை விளித்துக்கூறலின் வழுவாயமைந்தது. 87எல்லா விஃதொத்தன் (கலி. 61) என்பது பெண்பால் மேல் வந்தது. ஏனைய வந்துழிக்காண்க. பொதுச்சொல் என்றதனானே எல்லா எலா எல்ல 88எலுவ எனவும் கொள்க. எலுவ சிறாஅர். (குறுந். 129) என வந்தது. (தலைவன் பாங்கனை விளித்தது) யாரை யெலுவ யாரே (நற்றிணை. 395) எனத் தலைவனைத் தோழி கூறினாள். எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா. (26) (தோழி தலைவியுறுப்பைத் தன்னுறுப்பாகவுங் கருதுவளெனல்) 221. தாயத்தி னடையா வீயச் செல்லா வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற மல்லா வாயினும் புல்லுவ வுளவே. இது, தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென வழுவமைக்கின்றது. (இ - ள்.) தாயத்தின் அடையா - தந்தையுடைய பொருள் களாய் மக்களெய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய்; ஈயச் செல்லா - அறமும் புகழுங் கருதிக்கொடுப்பப் பிறர்பாற் செல்லாதனவுமாய்; வினைவயின் தங்கா - மைந்தரில்லாதார்க்கு மைந்தர் செய்வன செய்து பெறும் பொருளில் தங்காதனவுமாய்; வீற்றுக் கொளப்படா - வேறுபட்டா னொருவன் வலிந்து கொள்ளப்படாதனவுமாய்; எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் - எம்முடையனவென்று தோழி கூறப் புலனெறி வழக்கிற்குப் பொருந்திவரும் உரிமையை யுடைய உறுப்புக்கள்; அல்லாவா யினும் புல்லுவ உளவே - வழுவாயினும் பொருந்து வனவுள என்றவாறு. உறுப்புக் கட்புலனாதலின் தோற்றமென்றார். எனவே, உறுப்பொழிய இந்நான்கும் எம்மெனக் கூறலாகாவென்றார். ஒருநாளென், றோணெகிழ் புற்ற துயராற் றுணிதந்தோர். (கலி. 37) எனவும், என்றோ ளெழுதிய தொய்யிலும். (கலி. 18) எனவும் தலைவிதோளினை என்தோள் என்றாள். 89என்கால் அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைகிய செல்வோள் இவைகாண் தோறும் நோவாம் மாதோ, (நற். 12) நெய்த லிதழுண்க ணின்கண்ணா கென்கண் மன. (கலி. 39) என்பனவும் இதன்கணடங்கும். உள என்றதனாற் சிறுபான்மை தலைவி கூறுவனவுங் கொள்க. அவை, என்னோடு நின்னெடுஞ் சூழாது. (அகம். 128) எனவும், நின்கண்ணாற் காண்பென்மன் யான். (கலி. 39) எனவும் வரும். (27) (பால்வழுவமைத்தல்) 222. 90ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப. இஃது, ஒன்றே வேறே (தொல். பொ. 93) என்னுஞ் சூத்திரத்து ஒத்த கிழவனுங் கிழத்தியும் என்ற ஒருமை பன்மைப் பாலாய் உணர்த்துக வென வழுவமைத்தது. (இ - ள்.) ஒருபாற்கிளவி - ஒத்த கிழவனுங் கிழத்தியும் என்றவழி ஆணொருமையும் பெண்ணொருமையும் உணர்த்தி நின்ற சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாரேனும் அவ் வொருமைச் சொற்கள்; எனைப்பாற்கண்ணும் வருவகைதானே - நால்வகைக் குலத்துத் தலைவரையுந் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச் சொற்கண்ணே நின்று பன்மைப் பொருள் உணர்த்தி வருங் கூறுபாடு தானே; வழக்கென மொழிப - உலக வழக்கென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. இதனாற் பயன்; உலகத்து ஒரூர்க்கண்ணும் ஒரோவொரு குலத்தின் கண்ணுந் தலைவருந் தலைவியரும் பலரேனும் அவர்களை யெல்லாங் கூறுங்காற் கிழவனுங் கிழத்தியுமென்று ஒருமையாற் கூறுவதன்றி வேறொரு வழக்கின்றென்பதுபற்றி முதனூலாசிரியர் அங்ஙனஞ் சூத்திரஞ் செய்தலின், யானும் அவ்வாறே சூத்திரஞ் செய்தேனாயினும், அச்சொற் பலரையும் உணர்த்துமென வழுவமைத்தாராயிற்று. ஒருவனொடு பலர் கூட்டமுங் கோடற்கு ஏனைப்பாலென்று ஒருமையாற் கூறாது எனைப்பாலெனப் பன்மையாற் கூறினார். இதனால் சொல் வழுவும் பொருள் வழுவும் அமைத்தார். ஒத்த கிழவனுங் கிழத்தி யும் (93) என்ற ஒருமையே கொள்ளின் அன்னாரிருவர் இவ்வுலகத் துள்ளாரன்றி வேறாக நாட்டிக் கொள்ளப்பட்டா ரென்பதுபட்டு இஃது உலக வழக்கல்லாததொரு நூலுமாய் வழக்குஞ் செய்யுளும் (தொல்.பாயிரம்) என்பதனொடு மாறுகோடலே யன்றிப் பரத்தை வாயினால்வர்க்கு முரித்தே (224) என்றாற் போல்வன பிற சூத்திரங்களும் வேண்டாவாமென் றுணர்க. (28) (எல்லாவுயிர்க்கும் இன்பமுரித்தெனல்) 223. எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தானமர்ந்து வரூஉ 91மேவற் றாகும். இது, மேலதற்கோர்புறனடை. (இ - ள்.) இன்பம் என்பது தான் - அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான்; எல்லா உயிர்க்கும் அமர்ந்து வரூஉம் - மக்களுந் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின்கண்ணே பொருந்தித் தொழிற் பட வருமாயினும்; மேவற்றாகும் - ஆணும்பெண்ணு மென அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் என்றவாறு. மேவற்றாகும் என்றார்; 92என்பது ஆணும் பெண்ணு மாய்ப் போகநுகர்ந்து வருதலின். ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தா ரெனப்படாது அவ்வின்பம் எல்லாவுயிர்க்கும் பொது வென்பதூஉம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்ந்து மென்பதூஉங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வருமென்றாராயிற்று. (29) (ஊடல் தீர்க்கும் வாயில் நால்வர்க்குமுரித்தெனலும் பரத்தையிற்பிரிவு ஒரே நிலத்தின் கண்ணதெனலும்) 224. 93பரத்தை வாயி னால்வர்க்கு முரித்தே நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர் இது, தலைவற்குரிய தலைவியர் பலருந் தலைவன் பரத்தைமை காரணமாக ஊடற்குரியரென்பதூஉம் அவரிடத்து வாயில் சேறற்குரியர் என்பதூஉங் கூறி வழுவமைக்கின்றது. (இ - ள்.) பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்து - தலைவன் பரத்தைமையால் தலைவிக்குத் தோன்றிய ஊடல் தீர்த்தற்குரிய வாயிலை அவன் பாற்செலுத்தல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து; அஃது நிலத்திரிபு இன்று என்மனார் புலவர் - அவ்வொ ழுக்கம் பெரும்பான்மை மருத நிலத்தினின்றுந் திரிந்து வருதல் இன்றென்று கூறுவர் புலவர் என்றவாறு. 94பரத்தைவாயில் என்றது குதிரைத்தேர்போல நின்றது. இதனாற் பயன் அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் ஊடற்குரியரென்பதூ உம் அவர்பால் தத்தந் தலைவர் ஊடறீர்த்தற்குரிய வாயில் விடுவ ரென்பதுஉம், அவர் வாயின் மறுத்தலும் நேர்தலும் உடைய ரென்பதூஉம், ஏனைப் பரத்தையர்க்கு வாயில் விடுதல் இன்றென்பதூங் கூறியவாறாயிற்று. ஒருபாற் கிளவி (222) என்பதனால் ஒரோவோர்குலத்துத் தலைவருந் தலைவியரும் அடங்கு மாறுணர்க. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. ஒருவனும் ஒருத்தியுமாகி இன்பநுகர்ந்து இல்லற நிகழ்த்துதலே சிறந்ததென்றற்கு இங்ஙனம் பலராதல் வழுவென்று அதனை அமைத்தார். (30) (களவின்கண் தலைவிகண் நிகழும் வழு அமைதி இவை எனல்) 225. ஒருதலை யுரிமை வேண்டியு மகடூஉப் பிரித லச்ச முண்மை யானு மம்பலு மலருங் களவுவெளிப் படுக்குமென் றஞ்ச வந்த வாங்கிரு வகையினு நோக்கொடு வந்த விடையூறு பொருளினும் போக்கும் வரைவு மனைவிகட் டோன்றும். இது, களவின்கட் டலைவியின்கண் நிகழ்வதொரு வழுவ மைக்கின்றது. (இ - ள்.) உரிமை ஒருதலை வேண்டியும் - இடைவிடாது இன்ப நுகர்தலோடு இல்லற நிகழ்த்தும் உரிமையை உறுதியாகப் பெறுதலை விரும்புதலானும்; பிரிதல் அச்சம் மகடூஉ உண்மை யானும் - ஆள்வினைக் குறிப்புடைமையின் ஆண்மக்கள் பிரிவ ரென்று அஞ்சும் அச்சம் மகளிர்க் குண்டாகையினாலும்; ஆங்கு அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று அஞ்சவந்த இருவகையினும் - அக்களவொழுக்கத்திடத்தே அம்பலும் அலரும் இக்களவைப் புலப்படுக்குமென்று அஞ்சும்படி தோன்றிய இருவகைக் குறிப்பானும்; நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் - பிறர் தன்னை அயிர்த்துநோக்கும் நோக்கங் காரணமாக வந்த கூட்டம் இடையூறுற்ற காரியத்தி னாலும்; மனைவிகண் போக்கும் வரைவும் தோன்றும் - தலைவி யிடத்தே உடன்போக்கும் வரையக் கருதுதலுந் தோன்றும் என்றவாறு. வழையம லடுக்கத்து. (அகம். 328) என்பதனுள், 95முகந்து கொண் டடக்குவம் என இடைவிடாது இன்ப நுகர விரும்பியவாறும் உள்ளுறையான் இல்லற நிகழ்த்த விரும்பியவாறு காண்க. உன்னங் கொள்கையொடு (அகம். 65) என்பது 96அம்பலும் அலரும் அஞ்சிப் போக்குடன்பட்டது. 97ஆனா தலைக்கு மறனி லன்னை தானே யிருக்க தன்மனை யானே. (குறுந். 262) இஃது, இடையூறு பொருளின்கட் போக்குடன்பட்டது. ஏனைய முன்னர்க் காட்டியவற்றுட் காண்க. ஒன்றித் தோன்றுந் தோழி மேன (39) என்பதனால் தோழிக்கும் இவையுரிய வென்றுகொள்க. உடன் போக்குக் கருதுதலும் தலைவன் தான் வரையாமல் தலைவி விரும்புதலும் வழுவாய் அமைந்தன. (31) (கற்பினுள் தோழிக்கும் அறிவர்க்குமுரிய வழு அமைதி இவை யெனல்) 226. வருத்த மிகுதி சுட்டுங் காலை யுரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம். இது, கற்புக்காலத்துத் தோழிக்கும் அறிவர்க்கும் உரிய தொரு வழுவமைக்கின்றது. (இ - ள்.) வருத்தமிகுதி சுட்டுங்காலை - தோழியும் அறிவரும் பரத்தையிற் பிரிவான் தலைவர்க்குந் தலைவியர்க்குந் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக் கருதிக் கூற்று நிகழ்த்துங் காலத்து; வாழ்க்கையுள் இரக்கம் உரித்தென மொழிப - அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக் கண்ணே தமக்கு வருத்தந் தோன்றிற் றாகக் கூறுதலும் உரித்தென்று கூறுவ ராசிரியர் என்றவாறு. 98நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கு மார்ந்தோர் வாயிற் றேனும் புளிக்குந் தணந்தனை யாயினெம் மில்லுய்த்துக் கொடுமோ வந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவி னடுங்கஞ ரெவ்வங் களைந்த வெம்மே. (குறுந். 354) இதனுள் இல்லறத்தினை நீ துறந்தாயாயின் எம்மை எம் மூர்க்கண்ணே விடுக வெனத் தனக்கு வருத்தந்தோன்றிற்றாகத் தோழி கூறியவாறு காண்க. உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே யிஃதோ வோரா வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகன் வந்தென வினிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. (குறுந். 295) இதனுள் 99ஒரா வல்சியொடு முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவன் வந்தானாகப் புறத்து விளையாடும் விழவுள தாயிற்றென்று. இவ்வூர் கூறாநிற்குஞ் செல்வம் இவளை ஞெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க. துறைமீன் வழங்கும் (அகம்.316) என்பதனுள், அதுபுலந் துறைதல் வல்லி யோரே. எனப் புலவியால் நின் இல்வாழ்க்கை குறைபடுமெனத் தோழி கூறியவாறு காண்க. இன்னும் உய்த்துக்கொண்டுணர்தல் (666) என்பதனால், 100ஏனைப்பிரிவான் நிகழும் வருத்த மிகுதியைக் குறித்தவிடத்து உயிர் வாழ்க்கையின் இரக்கமுரித்தென மொழிப என்றும் பொருள் கூறிச், 101செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. (குறள். 1151) 102அன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை யென்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோ ரவலம் படுதலு முண்டு. (கலி. 19) என வருவன பிறவுங் கொள்க. (32) (புலவியுள் தலைவற்குந் தலைவிக்குமுரிய நிலைமைகூறல்) 227. மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு நினையுங் காலைப் புலவியு ளுரிய. இது, கற்பினுள் தலைவற்குந் தலைவிக்கும் எய்தியதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) புலவியுள் மனைவி உயர்வும் - புலவிக் காலத்துத் தலைவன் பணிந்துழி 103உட்கும் நாணுமின்றித் தலைவி அதனை ஏற்றுக் கோடலும்: கிழவோன் பணிவும் - தலைவன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும்; நினையுங் காலை உரிய - ஆராயுங்காலை இருவர்க்குமுரிய என்றவாறு. உதாரணம்: 104வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும் கோதை கோலா விறைஞ்சி நின்ற வூதையஞ் சேர்ப்பனை யலைப்பேன் போலவும். (கலி. 128) இது, 105முன்னே தலைவி மனத்து நிகழ்தலுண்மையிற் கனவிலுங் கண்டாளென்றுணர்க. தப்பினே, னென்றடி சேர்தலு முண்டு. (கலி. 89) என்பதும் அது. நினையுங்காலை என்றதனால் தோழியுயர்வும் கிழவோன் பணிமொழி பயிற்றுலுங் கொள்க. 106 ஒன்று, இரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ னல்லார்கட் டோன்று மடக்கமு முடைய னில்லோர் புன்க ணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடைய னன்னா னொருவன்றன் னாண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய் பன்மாணும். (கலி. 47) இதனுள் தலைவன் இரந்துரைத்தவாறுந் தான் அதனை ஏற்றுக் கொண்டவாறுங்காண்க. இச்சூத்திரம் புலவிக்கே கூறி னார். ஊடற்குந் துனிக்குங் காமக்கடப்பின் (160) என்பதனுட் கூறினாரென வுணர்க. (33) (கற்புக்காலத்து வேட்கைமிகுதியால் தலைவனுந் தலைவியும் ஒருவரை ஒருவர் புகழ்வர் எனல்) 228. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. இது, கற்பக்காலத்துத் தலைவற்குந் தலைவிக்கும் உரிய தொரு வழுவமைக்கின்றது: (இ - ள்.) கற்பினுள் - கற்புக்காலத்து; தகைநிகழ் மருங்கின் - ஒருவர்க்கொருவர் காதல் மனத்து நிகழுமிடத்து; வேட்கை மிகுதியிற் புகழ் தகை வரையார் - வேட்கைமிகுதியானே அதனைப் புகழ்ந்துரைக்குந் தகைமையினை ஆசிரியர் இருவருக்கும் நீக்கார் கொள்வர் என்றவாறு. 107ஆக வனமுலை யரும்பிய சுணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் றாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி. (அகம். 6) இது, புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது. 108அணைமரு ளின்றுயி லம்பணைத் தடமென்றோட் டுணைமல ரெழினீலத் தேந்தெழின் மலருண்கண் மணமௌவன் முகையன்ன மாவீழ்வா னிரைவெண்பன் மணநாறு நறுநுதன் மாரிவீ ழிருங்கூந்த லலர்முலை யாகத் தகன்று வல்குல் சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி யினிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப தினியறிந் தேனது துனியா குதலே. (கலி. 14) இது 109போக்கின்கண் தலைவன் புகழ்ந்தது. அரிபெய் சிலம்பின் என்பதனுள், 110ஏந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய என்பது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது. 111நிரைதார் மார்ப நெருந லொருத்தியொடு (அகம். 66) என்பதும் அது, தகை எனப் பொதுவாகக் கூறலிற் குணத்தைக் கூறலுங் கொள்க. நாலாறு மாறாய். (நாலடி. 383) எனவும், 112நின்ற சொல்லி னீடுதோன் றினியர். (நற். 1) எனவும் வரும். குற்றேவனிலையளாகிய தலைவியைத் தலைவன் புகழ்தலாலும் பெருநாணினளாகிய தலைவி கணவனைப் பிற ரெதிர் புகழ்தலானும் வழுவாயிற்று. (34) (இறைச்சிப்பொரு ளிதுவெனல்) 229. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே. இது, தலைவிக்குந் தோழிக்கு முரியதொரு வழுவமைக் கின்றது. இறைச்சியாவது உள்ள பொருள் ஒன்றனுள்ளே கொள்வதொரு பொருளாகலானுஞ் 113செவ்வன் கூறப்படாமை யானுந் தலைவன் கொடுமை கூறும்வழிப் பெரும்பான்மை பிறத்தலானும் வழுவாயிற்று. (இ - ள்.) இறைச்சிதானே - கருப்பொருட்கு 114நேயந்தான்; பொருட் புறத்ததுவே - கூறவேண்டுவதொரு பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மை யுடையதாம் என்றவாறு. இலங்கு மருவித் திலங்கு மருவித்தே வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை. (கலி. 41) 115சூளைப்பொய்த்தா னென்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறத்தே இங்ஙனம் பொய்த்தான் மலையகத்து 116நீர்திகழ் வானென்னென இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க. பிறவுமன்ன. (35) (கருப்பொருளிற் பிறக்கும் பொருளுமுளவெனல்) 230. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே. இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது. (இ-ள்.) இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே - கருப் பொருள் பிறிதொரு பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலே யன்றி அக் கருப்பொருடன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; திறத்து இயல் மருங்கின் - அஃது உள்ளுறையுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து; தெரியுமோர்க்கு - அவ் வுள்ளுறையுவமமன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந் துணரும் நல்லறிவுடை யோர்க்கு என்றவாறு. கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற் றினைபிடி யுண்ணும் பெருங்கன் னாட கெட்டிடத்துவந்த வுதவிக் கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்தனை யாயின் மென்சீர்க் கலிமயிற் கலாவத் தன்னவிவ ளொலிமென் கூந்த லுரியவா நினக்கே.. (குறுந். 225) இதனுள் 117தான் கெட்டவிடத்து உதவின உதவியை அரச வுரிமை யெய்திய மன்னன் மறந்தாற்போல நீ இரந்து துயருற்ற காலத்து யான் தலைவியை நின்னொடு கூட்டிய செய்ந்நன்றியை மறவாது இன்று நீ வரைந்துகொள்வையாயின் இவள் கூந்தல் நினக்குரிய வென்றவழி உவமையும் பொருளும் ஒத்து முடிந்த மையின் முன்னின்ற நாடவென்பது உள்ளுறையுவம மன்றாய் இறைச்சியாம். என்னை? தன் கன்றிற்குப் பயன்பட்டுப் பிறர்க்கு உயிரைக்கொடுக்கின்ற தினையைத் தான் உண்டு அழிவு செய்கின்றாற் போல, நீ நின் கருமங் சிதையாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத் துயருறுத்தி எம்மை இறந்து படுவித்தல் ஆகாதென்று உவமை யெய்திற்றேனும், பின்னர் நின்ற பொருளோடியையாது இவ்வுவமம் உள்ளுறையுற்றுப் பொருள் பயவாது இறைச்சியாகிய நாடென்பதனுள்ளே வேறொரு பொருள் தோற்றுவித்து நின்றதேயாமாதலின். முலை மாந்த என்றது தன் கருமஞ் சிதையாமற் பார்த்தென்னுந் துணையன்றி உள்ளுறையுவமப்பொருளை முற்ற உணர்த்தாமை யுணர்க. 118வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத் தேந்து மருப்பி னினவண் டிமிர்பூதுஞ் சாந்த மரத்தி னியன்ற வுலக்கையா லைவன வெண்ணெ லறையுரலுட் பெய்திருவா மையனை யேத்துவாம் போல வணிபெற்ற மைபடு சென்னிப் பயமலை நாடனைத் தையலாய் பாடுவா நாம். (கலி. 43) இதனுட் புலவுநாறியும் பூநாறியுந் தீதும் நன்றுமாகிய இறைச்சியாகிய உலக்கைகளான் தலைவனைப் பாடும் பாட் டோடே கலந்து கூறத்தகாத தெய்வத்தையும் பாடுவாமென்னும் பொருள் பயப்பச் செய்த இறைச்சியிற் பொருளே பயந்தவாறும் இரண்டுலக்கையானும் பயன் கொண்டாற்போல் ஐயன் பெயர் பாடுதலாற் பயன்கொள்ளாமையின் உள்ளுறையுவமன்மையுங் காண்க. உள்ளுறையுவம மாயின், 119தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப (ஐங்குறு. 41) என்றாற்போலத் தலைவன்கொடுமையுந் தலைவி பேதைமை யும் உடனுவமங் கொள்ளநிற்கும். இதுபற்றித் தெரியு மோர்க்கே யென்றார். உம்மை இறந்தது தழீஇயிற்று. (36) (பிரிவின்கண் இறைச்சியுள் அன்புசெய்தற்குரியவற்றைத் தோழிகூறல் தலைவியை வற்புறுத்தற்கெனல்) 231. அன்புறு தகுந விறைச்சியுட் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே. இஃது, இறைச்சி முற்கூறியவற்றின் வேறுபடவருமென் கின்றது. (இ - ள்.) வருந்திய பொழுதே - பிரிவாற்றாத காலத்து; இறைச்சியுள் அன்புறு தகுந சுட்டலும் - தோழி கருப்பொருள் களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறலும்; வன்புறை ஆகும் - வன்புறுத்தலாகும் என்றவாறு. 120நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழ மென்சினை யாஅம் பொளிக்கு மன்பின தோழியவர் சென்ற வாறே. (குறுந். 37) இதனுள் முன்பே நெஞ்சகத்தன்புடையார் அதன் மேலே களிறு தன்பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலை யுடைய ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்தூட்டும் அன்பினை யுடைய அவர் சென்ற ஆறதனைக் காண்பர்கண் என்று அன்புறுதகுந கூறிப் பிரிவாற்றாதவளை வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவ ளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது. அரிதாயவறன் (கலி. 11) என்பது தோழிகூற்றன்மை உணர்க. (37) (தலைவன் தலைவியைப் பாராட்டியவழி அஃது அவன்பிரிவை யுணர்த்துமெனல்) 232. செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவு மெய்பெற வுணர்த்துங் கிழவிபா ராட்டே. இது, தலைவன் தலைவியைப் பாராட்டியவழி வருவதொரு வழுவமைக்கின்றது. (இ - ள்.) கிழவி பாராட்டே - தலைவன்தலைவியைப் பாராட்டிய பாராட்டு; செய்பொருள் அச்சமும் - யாஞ் செய்யக் கருதிய பொருட்கு இவள் இடையூறாவள் கொலென்று தலைவன் அஞ்சிய அச்சத்தையும்; 121வினைவயின் பிரிவும் - தான் பொருள் செய்ததற்குப் பிரிகின்றதனையும்; மெய்பெற உணர்த்தும் - ஒரு தலையாகத் தலைவிக்கு உணர்த்தும் என்றவாறு. 122அப்பாராட்டுக் கிழவியதாகலிற் கிழவி பாராட் டென்றார். நுண்ணெழின் மாமை. (கலி. 4) என்பதனுட் கழிபெரு நல்கலால் தலைவன் செய்பொருட் கஞ்சியவாறும் அவன் பிரியக்கருதியதுஉந் தலைவியுணர்ந்தாள் அப்பாராட்டினா லென்றுணர்க. அன்பானன்றிப் பொருள் காரணத்தாற் பாராட்டினமை யானும் அதனைச் 123செவ்வனங்கொள்ளாது பிறழக் கோட லானும் இருவர்க்கும் வழுவாமென்றமைத்தார். (38) (தலைவி பரத்தையைப் புகழினும் உள்ளத்தூடல் உண்டெனல்) 233. கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினு முள்ளத் தூட லுண்டென மொழிப. இது, தலைவிக்கட் டோன்றியதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) கற்புவழிப் பட்டவள் - கற்பின்வழிநின்ற தலைவி, பரத்தை ஏத்தினும் - பரத்தையைப் புகழ்ந்து கூறினாளாயினும்; உள்ளத்து ஊடல் உண்டென மொழிப - உள்ளத்துள்ளே ஊடின தன்மை உண்டென்று கூறுவர் புலவர் என்றவாறு. பரத்தையை ஏத்தவே தலைவன்கட் காதலின்மைகாட்டி வழுவாயிற்றேனும் உள்ளத்தூடலுண்மையின் அமைக்க வென்றார். 124நாணி நின்றோ ணிலைகண்டி யானும் பேணினெ னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் னோணின் மகன்றா யாதல் புரைவதாங் கெனவே. (அகம். 16) ஏத்தினும் என்ற உம்மையால் ஏத்தாமற் கூறும்பொழு தெல்லாம் மாறுபடக் கூறலுளதென்பது பெற்றாம். 125என்னொடு புரையுந ளல்ல டன்னொடு புரையுநர்ந் தானறி குநளே. (பதிற்றுப். 39) (கிழவன் குறிப்பை அறியக் கிழவி பிறள்குணத்தைப் புகழ்தலுமுரியள் எனல்) 234. கிழவோள் பிறள்குணம் மிவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள். இஃது, எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது; உள்ளத் தூடலின்றியும் பிறளொருத்தியைத் தலைவி புகழுமென்றலின். (இ - ள்.) கிழவோள் பிறள் குணம் இவையெனக் கூறி - தலைவி வேறொரு தலைவியுடைய குணங்கள் இத்தன்மைய வென்று தலைவற்குக் கூறி; கிழவோன் குறிப்பினை அறிதற்கும் உரியள் - அவள்மாட்டு இவன் எத்தன்மையனா யிருக்கின்றா னென்று தலைவன் குறிப்பினை அறிதற்குமுரியள் என்றவாறு. பரத்தையென்னாது பிறள் என்றதனால் தலைவியே யாயிற்று; அன்றிப் பரத்தையாயின் ஊடலின்மை அறனன் றாகலின் உள்ளத்தூடல் நிகழ்தல் வேண்டும். தோழி கூறுங்கால் தலைவியரைக் கூறப்பெறா ளென்பதூஉம் பரத்தையரைக் கூறின் அவர்க்கு 126முதுக்குறைமை கூறிக் கூறுவளென்பதூஉங் கொள்க. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே. (ஐங்குறு. 122) இது, தலைவன் வரையக்கருதினாளோர் தலைவியை இனையளெனக் கூறி அவள்மாட்டு இவன் எத்தன்மைய னென்று 127விதுப்புற்றுக் கூறியது. இது தலைவன் கூற உணராது தான் வேறொன்று கூறி அவன் குறிப்பு அறியக் கருதுதலின் வழுவாயமைந்தது. இது 128கைக்கிளைப் பொருட்கண் வழுவமைக்கின்றது. (40) (தலைவி மலிதலு மூடலுமல்லாதவிடத்துத் தலைவன்முன் கழற்றுரைகூறாள் எனல்) 235. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு மெய்ம்மை யாக வவர்வயி னுணர்ந்து தலைத்தாட் கழறறம் மெதிர்ப்பொழு தின்றே மலிதலு மூடலு மவையலங் கடையே. இது, பரத்தையர்க்குந் தலைவிக்குந் தலைவற்கும் படுவ தொரு வழுவமைக்கின்றது. (இ - ள்.) தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும் - தலைவ னான் தாம் உற்ற வருத்தத்தைத் தலைவிக்குப் பரத்தையர் கூறினும் ஏனைத் தலைவியர் கூறினும்; அவர்வயின் மெய்ம்மை யாக உணர்ந்து - அவர் கூறியவாற்றானே அவ்வருத்தத்தை அவரிடத்து உண்மையாக உணர்ந்து; தலைத்தாட் கழறல் - தலைவன் முன் நின்று கழறுங் கழற்றுரை: தம் எதிர்ப்பொழுது இன்று - தம்மைப் பரத்தையர் எதிர்ப்பட்ட பொழுதின்கண் இல்லை; மலிதலும் - அவர் துயருறநின்றுழிக் கவலாது நீங்கினா னென மகிழ்தலும்; ஊடலும் - அவன் பிரிவிற்கு இவர் இரங்கினாரென்ற காரணத்தான் ஊடுதலும்; அவை அலங் கடை - அவ்விரண்டும் நிகழா விடத்து எ-று. என்பது வெறுத்த உள்ளத்தளாமென்பது கருத்து. எனவே, மலிதலும் ஊடலும் நிகழுமிடத்தாயின் தலைத்தாட் கழறு மென்பது பெறுதும், 129தலைத்தாள் - தகுதிபற்றி வழக்கு. 130பொன்னெனப் பசந்தகண் போதெழி னலஞ்செலத் தொன்னல மிழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன் னின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைக ளென்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின். (கலி. 77) இது, பரத்தையர் முன்னரன்மையின் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து தலைத்தாட்கழறியது. கழறாது கூறியது வந்துழிக் காண்க. தம்முறுவிழுமத்தைப் பரத்தையர் தலைவிக்குக் கூறுதலாற் பரத்தையர்க்கும், அவர் கூறத்தான் எளிவந்தமையின் தலைவிக்கும், இவரிங்ஙன மொழுகலின் தலைவற்கும் வழுவமைந்தது. உம்மை இறந்தது தழீஇயிற்று. (41) (இது பெருந்திணைக்குரியதொரு வழுவமைக்கின்றது) 236. பொழுது தலைவைத்த கையறு காலை யிறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்த மருட்கை மிகுதியொ டவைநாற் பொருட்க ணிகழு மென்ப. இது பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே, (105) என்ற சிறப்புடைப் பெருந்திணையன்றிப் பெருந்திணைக் குறிப்பாய்க் கந்தருவத்துட்பட்டு வழுவிவரும் ஏறிய மடற்றிறம் (51) முதலிய நான்கினுள் ஒன்றாய் முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர் வழீஇவந்த தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் (51) ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. ஓதலுந் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளா ணெதிரும் பிரிவும் முடியுடை வேந்தர்க்கும் அவரேவலிற் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின், அப்பிரிவிற் பிரிகின்றான் வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும் (185) என்பதனாற் கற்புப்போல நீ இவ்வாறொழுகி யான் வருந்துணையும் ஆற்றியிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கண மன்மையின் வாளாபிரியுமன்றே; அங்ஙனம் பிரிந்துழி அவன் கூறிய கூற்றி னையே கொண்டு ஆற்றுவிக்குந் தோழிக்கும் ஆற்றுவித்தலரி தாகலின், அவட்கு அன்பின்றி நீங்கினானென்று ஆற்றாமை மிக்கு ஆண்டுப் பெருந்திணைப்பகுதி நிகழு மென்றுணர்க். (இ - ள்.) பொழுது - அந்திக்காலத்தே; கையறுகாலை - புறஞ் செயச் சிதைதல் (18) என்னுஞ் சூத்திரத்தின் அதனினூங் கின்று எனக் கூறிய கையறவுரைத்த லென்னும் மெய்ப்பா டெய்திய காலத்தே; தலைவைத்த - அந்த வாற்றாமையின் இகந்தவாக முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; மிகுதியோடு மடனே வருத்தம் மருட்கை நாற்பொருட் கண் நிகழும் - தன் வனப்புமிகுதியுடனே மடப்பமும் ஆற்றாமையும் வியப்புமாகிய நான்குபொருட்கண்ணே நடக்கும்; அவை இறந்த போலக் கிளக்குங்கிளவி என்ப - அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளுங் கூற்றுநிகழுங்கால் தன்னைக் கைகடந்தன போலக் கூறுங் கூற்றாய் நிகழுமென்று கூறுவர் புலவர் எ-று. தலைவைத்த மெய்ப்பாடாவன - 131ஆறாமவதியினும் இகப்பத் தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாகி மன்றத்திருந்த சான்றோரறியத் தன்றுணைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந்தமையுந் தோன்றக் கூறியும் அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு முதலிய வற்றொடு கூறத்தகான கூறலும் பிறவுமாம். உதாரணம்: 132புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கட் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது நயநின்ற பொருள் கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம காம மிவண்மன்னு மொண்ணுத லாயத்தா ரோராங்குத் திளைப்பினு முண்ணுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி யாவருந் தண்குரல் கேட்ப நிரைவெண்பன் மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்னபுகழ்சா லெழிலுண்க ணாயிதழ் மல்க வழும்; ஓஓ, அழிதகப் பாராதே யல்லல் குறுகினங் காண்பாங் கனங்குழை பண்பு என்று, எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற வல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; எல்லாநீ, யுற்ற தெவனோமற் றென்றீரே லெற்சிதை செய்தா னிவனென வுற்ற திதுவென வெய்த வுரைக்கு முரனகத் துண்டாயிற் பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் னெய்தன் மலரன்ன கண்; கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே யாடையான் மூஉ யகப்படுப்பேன் சூடிய காணான் றிரிதருங் கொல்லோ மணிமிடற்று மான்மலர்க் கொன்றை யவன்; தெள்ளியே மென்றுரைத்துத் தேரா தொருநிலையே வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ யுள்ளி வருகுவர் கொல்லோ வளைந்தியா னெள்ளி யிருக்குவேன் மற்கொலோ நல்லிருண் மாந்தர் கடிகொண்ட கங்குற் கனவினாற் றோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான்றன்னைப் பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய கையுளே மாய்ந்தான் கரந்து; கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ; மையில் சுடரே மலைசேர்தி நீயாயிற் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர்சில தாராயென் றொய்யில் சிதைத்தானைத் தேர்கு; சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ வெம்மை நயந்து நலஞ்சிதைத் தான்; மன்றப் பணைமேன் மலைமாந் தளிரேநீ தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ மென்றோ ணெகிழ்த்தான் றகையல்லால் யான்காணே னன்றுதீ தென்று பிற; நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென் னாயித ழுள்ளே கரப் பன் கரந்தாங்கே நோயுறு வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு வேவ தளித்திவ் வுலகு; மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர் நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ் வலிதி னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழும மிரண்டு; எனப்பாடி; இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன ளெல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிவாங் கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா ணல்லெழின் மார்பனைச் சார்ந்து. (கலி. 142) இதனுள் 133அந்திக்காலத்தே கையறவெய்திப் பின்னர்ச் சான்றோரை நோக்கிக் கூறுகின்றவள் 134புல்லாரா மாத்திரை யென அவனோடு புணர்ச்சி நிகழ்ந்தமையும் யாவருங் கேட்ப நக்கழுது அல்லலுறீஇயானெனப் பெயரும் பெற்றியுங் கூறிப், புல்லிப் புணரப்பெறின் ஈதிகழ்ச்சியன்றாமெனக் கூறத்தகாதன கூறலான் மடந்தன்னை இறந்தவாறும், தெள்ளியே மென்றத னானும் எள்ளியிருக்குவேனென்றதனானும் வருத்தமிறந்த வாறும், கோடு வாய்கூடா என்பது முதலாக் கொன்றை யவன் என்னுந் துணையுந் தான்செய்ததனை வியவாமையின் மருட்கை யிறந்தவாறும், நெய்தன்மலரன்ன கண்ணெனத் தன் வனப்புமிகுதி கூறலின் மிகுதி யிறந்தவாறுங் காண்க. எல்லிரா நல்கிய கேள்வனிவனெனவே கந்தருவத்தின் வழுவிப் பெருந்திணை நிகழ்ந்தவாறும் பின்னர் வரைவு நிகழ்ந்தவாறுங் காண்க. இதற்குப் பொருளுரைக்குங்காற், கேட்பீராக இவள் நக்கு, நக்க அப்பொழுதேயழும்; இங்ஙனம் அழுமாறு காமத்தை ஊழானது அகற்றலின் அஃதறுதியாக நரம்பினும் பயனின்றா யிருந்தது. ஓஓ, இதனையுற்ற இவள் அல்லற்பண்பைப் பாராதே அழிதக யாங்குறுகினேம்; குறுகியாம் இதனை முடிவு போகக் காண்பேமென்று வந்து எல்லீரும் என்செய்தீர்? என்னை யிகழ்கின்றீரோ? இவ்வருத்தத்தை எனக்குறுத்தினவனது மாயஞ் செய்த மலர்ந்த மார்பை யான்முயங்கிக் கூடினும் இகழ்ச்சி யன்றாம் என்றற் றொடக்கமாய் வரும். (42) (இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நீக்கி நிறுத்தலன்றிப் படைத்துக் கூறவும் பெறுமெனல்) 237. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. இது, தோழி தலைவனைக் கூறுவனவற்றுள் வழுவமை வன கூறுகின்றது. (இ - ள்.) இரந்து குறையுற்ற கிழவனை - இரந்துகொண்டு தன்காரியத்தினைக் கூறுதலுற்ற தலைவனை; தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றியும் - தோழி அகற்றுற ஏத்துமுறைமையில் தாழ் வின்றாக அகற்றி நிறுத்தலேயன்றியும், வாய்மை கூறலும் - நுமது கூட்டத்தினை யான் முன்னே அறிவலென மெய்யாகக் கூறலையும், பொய்தலைப்பெய்தலும் - அப்புணர்ச்சியில்லை யென்று பொய்த்த துணைத் தலைவன்மேற் பொய்யுரை பெய் துரைத்தலையும் அவன் வரைந்துகோடற்பொருட்டுச் சில பொய்களைக் கூற வேண்டுமிடங்களிலே பெய்துரைத்தலையும், நல்வகையுடைய நயத்திற் கூறியும் - நல்ல கூறுபாடுடைய சொற்களை 135அசதியாடிக் கூறியும், பல்வகையானும் படைக்கவும் பெறுமே - இக்கூறியவாறன்றி வேறுபடப் புனைந்துரைக்கவும் பெறும், என்றவாறு. தோழி நீக்கலன்றியுங் கூறலையுந் தலைப்பெய்தலையும் படைக்கவும்பெறும். பல்வகையானும் படைக்கவும் பெறுமென வினைமுடிக்க. தோழி தலைவனோடு 136நயங்கருதுமாற்றால் அவனை நீக்குதல் ஏனையவற்றோடெண்ணாது அன்றியு மெனப் பகுத்துரைத்தார். 137ஏனைக்குறை முடித்தற்கு இடையூ றின்மை கூறியனவும் வரைவுகடாய்க் கூறியனவுமாம். நெருநலு முன்னா ளெல்லையு... .......... ............. ................ மகளே. (பக்.490,551) இது, 138சேட்படுத்தது. எமக்கிவை யுரையன் மாதோ நுமக்கியான் யாரா கியரோ பெரும வாருயி ரொருவி ரொருவிர்க் காகி முன்னா ளிருவிர் மன்னு மிசைந்தனி ரதனா லயலே னாகிய யாஅன் முயலேன் போல்வனீ மொழிபொருட் டிறத்தே. இது, வாய்மைகூறியது. யாந் 139தன்னை மறைத்தலிற் போலும் இவள் குறைமுடியாளாயதென அவன் கருதக் கூறினாள். 140அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ. (ஐங்குறு. 230) இதுவும் அது, 141நீயே, பொய்வன் மையிற் செய்பொருண் மறைத்து வந்துவழிப் படுகுவை யதனா லெம்மை யெமக்கே விலவலனே(?) தகாது சொல்லப் பலவும் பற்றி(?) யொருநீ வருத னாடொறு முள்ளுடைத் தீர்மா மழைக்கண் கலுழ்க மதனா னல்லோர் கண்ணுமஃ தல்ல தில்லை போலுமிவ் வுலகத் தானே. இது, பொய்தலைப் பெய்தது. திருந்திழை கேளாய்என்னுங் குறிஞ்சிக்கலி (5) யுள் வரைந்து கோடற்குப் பொய்யுரை படைத்தது. 142அன்னையு மறிந்தன ளலரு மாயின்று நன்மனை நெடுநகர் புலம்புகொள வுறுதரு மின்னா வாடையு மலையு நும்மூர்ச் செல்க மெழுமோ தெய்யோ. (ஐங்குறு. 236) இது, நல்வகையுடைய நயத்திற் கூறியது. வீகமழ் சிலம்பின் வேட்டம் போந்து நீயே கூறினு மமையுநின் குறையே. இதுவுமது. அஃதன்றியும் நீயே சென்று கூறென்றலும் அறியாள் போறலுங் குறியாள் கூறலுங் குறிப்புவேறு கூறலும் பிறவும் நயத்திற்கூறும் பகுதியாற் படைத்தது பலவகையாற் படைத்துத் துறைவகையாம். இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனானமைக்க. இவை நாடக வழக்காகவும் உலகியல் வழக்காகவும் புனைந்துரைத்தமையானுந் தோழி தலைவற்குக் கூறத்தகாதன கூறலானும் வழுவமைந்தது. (43) (உறழுங் கிளவி தலைவி முதலியோர்க்கும் ஐயக்கிளவி தலைவற்கு முரித்தெனல்) 238. உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி யையக் கிளவி யாடூஉவிற் குரித்தே. இது, தோழிக்குந் தலைவிக்குமுரியதோர் வழுவமைக் கின்றது. (இ - ள்.) உயர்மொழிக்கு உறழுங் கிளவியும் உரிய - இன்பம் உயர்தற்குக் காரணமான கூற்று நிகழுமிடத்திற்கு எதிர்மொழி யாக மாறுபடக்கூறுங் கிளவி நிகழ்தலுமுரிய, ஐயக்கிளவி ஆடூஉவிற்கு உரித்தே - கூறுவேமோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுஞ்சொல் தலைவற்குரித்து, என்றவாறு. 143உறழுங் கிளவியைப் பொதுப்படக் கூறினார், தோழி உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலும், தலைவன் உயர் மொழி கூறிய வழித் தோழி உறழ்ந்து கூறலும், தலைவன் உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலும், தலைவி உயர் மொழி கூறியவழித்தோழி உறழ்ந்து கூறலுங் கோடற்கு. சுணங்கணி வனமுலை என்னுங் குறிஞ்சிக்கலி (60) யுள், 144என்செய்தான் கொல்லோ விஃதொத்தன் றன்கட் பொருகளி றன்ன தகைசாம்பி யுள்ளு ளுருகுவான் போலு முடைந்து எனத் தோழி கூறியவழித், தெருவின்கட் காரணமின்றிக் கலங்குவார் கண்டு....vt‹ எனவும், 145அலர்முலை யாயிழை நல்லாய் கதுமெனப் பேரம ருண்கணின் றோழி யுறீஇய வாரஞ ரெவ்வ முயிர்வாங்கு மற்றிந்நோய் தீரு மருந்தருளா யொண்டொடீ; நின்முகங் காணு மருந்தினே னென்னுமா னின்முகந் தான்பெறி னல்லது கொன்னே மருந்து பிறிதியாது மில்லேற் றிருந்திழாய் என்செய்வாங் கொல்லினி நாம்; எனத் தோழி கூறியவழிப் 146பொன்செய்வாம் எனவும் தலைவி உறழ்ந்து கூறியவாறு காண்க. இது, தலைவன்வருத்தங்கூற அதனை ஏற்றுக்கொள்ளாது உறழ்தலின் வழுவாய் நாண்மிகுதியாற் கடிதின் உடம்படாமை யின் அமைந்தது. எல்லாவிஃதொத்தன் என்னுங் குறிஞ்சிக்கலி (61) யுள், ஈத லிரந்தார்க்கொன் றாற்றது வாழ்தலிற் சாதலுங் கூடுமா மற்று. எனத் தலைவன் கூறியவழி, இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டி யது. எனவும், 147மண்டப ரட்ட களிறன்னான் றன்னையொரு பெண்டி ரருளக் கிடந்த தெவன்கொலோ. எனவும் தோழி யுறழ்ந்து கூறியவாறு காண்க. இதுவும், அவன் வருத்தத்திற்கு எதிர்கூறத் தகாதன கூறலின் வழுவாய்த் தலைவி கருத்தறிந்து உடம்படவேண்டு மென்று கருதுதலின் அமைந்தது. 148அணிமுக மதியேய்ப்ப வம்மதியை நனியேய்க்கு மணிமுக மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண் விரிநுண்ணூல் சுற்றிய வீரித ழலரி யரவுக்கண் ணணியுற ழாரன்மீன் றகையொப்ப வரும்படர் கண்டாரைச் செய்தாங் கியலும் விரிந்தொலி கூந்தலாய் கண்டை யெமக்குப் பெரும்பொன் படுகுவை பண்டு; ஏஎ! எல்லா, மொழிவது கண்டை யிஃதொத்தன் றொய்யி லெழுதி யிறுத்த பெரும்பொன் படுக முழுவ துடையமோ யாம்; உழுதாய், சுரும்பிமிர் பூங்கோதை யந்நல்லா யானின் றிருந்திழை மென்றோ ளிழைத்தமற் றிஃதோ கரும்பெல்லா நின்னுழ வன்றோ வொருங்கே துகளறு வாண்முக மொப்ப மலர்ந்த குவளையு நின்னுழ வன்றோ விகலி முகைமாறு கொள்ளு மெயிற்றா யிவையல்ல வென்னுழுவாய் நீமற் றினி; எல்லா, நற்றோ ளிழைத்த கரும்புக்கு நீகூறு முற்றெழி னீல மலரென வுற்ற விரும்பீர் வடியன்ன வுண்கட்கு மெல்லாம் பெரும்பொன்னுண் டென்பா யினி; நல்லா யிகுளை கேள், ஈங்கே தலைப்படுவ னுண்டான் றலைப்பெயின் வேந்துகொண் டன்ன பல; ஆங்காக வத்திற மல்லாக்கால் வேங்கைவீ முற்றெழில் கொண்ட சுணங்கணி பூணாகம் பொய்த்தொருகா லெம்மை முயங்கினை சென்றீமோ முத்தேர் முறுவலாய் நீ படும் பொன்னெல்லா முத்தி யெறிந்து விடற்கு. (கலி. 64) இது, தலைவன் உயர்மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறி யது. இது நகையாடிக் கூட்டத்தை விரும்பிக் கூறியமொழிக்கு உறழ்ந்து கூறலின் வழுவாய் அவளும் நகையாடிக் கூறலின் அமைந்தது. மறங்கொளிரும்புலி என்னுங் குறிஞ்சிக் கலி (42) யுள், 149ஆர்வுற்றார் நெஞ்ச மழிய விடுவானோ வோர்வுற் றொருதிற மொல்காத நேர்கோ லறம்புரி நெஞ்சத் தவன். எனத் தலைவி கூறலுந், தண்ணறுங் கோங்க மலர்த்த வரையெல்லாம் பொன்னணி யானைபோற் றோன்றுமே நம்மருளாக் கொன்னாள னாட்டு மலை எனத் தோழி உறழ்ந்து கூறியவாறு காண்க. இதுவுந் தலைவி கூற்றிற்கு மாறாதலின் வழுவாய்ச் சிறைப்புறமாகக் கேட்டு வரைதல் பயனாதலின் அமைந்தது. 150சொல்லின் மறாதீவாண் மன்னோ விவள் (கலி. 61) 151கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது. (அகம். 198) என ஐயக்கிளவி தலைவற்குரியவாய் வந்தன. இனி, ஐயப்பாடு தலைவிக்குமுரித்தென்றாற் சிறந்துழியை யம் (94) என்பதற்கு மாறாம். அவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள். (அகம். 48) என்பதனை ஐயத்துக்கண் தெய்வமென்று துணிந்தாளெனின் அதனைப் பேராசிரியர் தாமே மறுத்தவாறு காண்க. (44) (தோழி அறிவுடையளாகக் கூறலும் அமையுமெனல்) 239. உறுக ணோம்ப றன்னியல் பாகலி னுரிய தாகுந் தோழிகண் ணுரனே. இது, தோழி அறிவுடையாளாகக் கூறலும் அமைகவென் கின்றது. (இ - ள்) உறுகண் ஓம்பல் தன்இயல்பு ஆகலின் - தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின், தோழிகண் உரன் உரியதாகும் - தோழிமாட்டு அறிவுளதாகக் கூறல் உரித்தாகும் என்றவாறு. உதாரணம்: பான்மருண் மருப்பின் என்னும் பாலைக்கலி (21) யுள், 152பொருடான் பழவினை மருங்கின் பெயர்புபெயர் புறையு மன்ன பொருள்வயிற் பிரிவோய். எனத் தோழி அறிவுடையாளாகாக் கூறியவாறு காண்க. 153பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவென் னொண்டொடி ஞெகிழினு நெகிழ்க சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ. (அகம். 46) என்பது உறுகண் காத்தற் பொருட்டாகத் தலைவி வருந்தினும் நீ செல்லென்றாள், தலைவன் செல்லாமை அறிதலின். ஒன்றென முடித்தலான் தலைவி உரனுடையளெனக் கூறலுங் கொள்க. (45) (தோழிக்கு உயர்மொழிக் கிளவியு முரித்தெனல்) 240. உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே. இதுவுந் தோழிக்குரியதோர் வேறுபாடு கூறுகின்றது. (இ - ள்.) அவட்கு - தோழிக்கு; உயர்மொழிக் கிளவியும் உரிய - தலைவியையுந் தலைவனையும் உயர்த்துக் கூறுங்கூற்று முரியவாம் ஒரோவோரிடத்து என்றவாறு. 154மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ யாண ரூரநின் மாணிழை யரிவை காவிரி மலிர்நிறை யன்னநின் மார்புநனி விலக்க றொடங்கி யோளே. (ஐங்குறு. 42) இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமா றென்னையெனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க. காலை யெழுந்து (குறுந். 45) என்பதும் அது. உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் (கலி. 47) 155தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே. (கலி. 52) எனத் தலைவனை உயர்த்துக் கூறியவாறு காண்க. (46) (தலைவியும் தோழியும் வாயில்களோடு கூறுவனவற்றை வெளிப்படக் கிளப்பரெனல்) 241. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்த றாவின் றுரிய தத்தங் கூற்றே. இது, தலைவியுந் தோழியும் வாயிலாகச் சென்றாருடன் கூறுவனவற்றுட் படுவதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) தத்தங் கூற்றே - தோழிக்குந் தலைவிக்குமுரிய கூற் றின்கண்; வாயிற் கிளவி - வாயிலாய் வந்தார்க்கு மறுத்துத் தலை வனது பழிகளைக் கூறுங் கிளவிகளை; வெளிப்படக் கிளத்தல் - மறையாது வெளியாம்படி கூறுதல்; தாவின்று உரிய - இங்ஙனங் கூறுகின்றேமே என்னும் வருத்தம் மனத்து நிகழ்தலின்றியே உரியவாம், என்றவாறு. அவை தலைவிக்குந் தோழிக்குமுரியனவும் தோழிக்கே யுரியனவுந் தலைவிக்கே யுரியனவுமாம். வாயில்களாவார் ஆற் றாமையுந் தோழி முதலியோருமாம். 156நெஞ்சத்த பிறவாக நிறையில ளிவளென வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ. (கலி. 69) இஃது, ஆற்றாமைவாயிலாகத் தலைவன்வந்துழித் தலைவி வெளிப்படக் கூறியது. இது தோழிக்கும் உரித்து. எரியகைந் தன்ன தாமரை யிடையிடை ............. ............. யார்ப்பினும் பெரிதே. (அகம். 116) இதனுள், நாணிலைமன்ற எனத் தோழிகூறி அலராகின் றாளென வெளிப்படக்கிளத்தலின் வழுவாயமைந்தது. 157அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைபவா னினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் றமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே. (கலி. 70) இது, தலைவி கூற்று. உரிய என்றதனால் தோழிவாயிலாகச் சென்றுழித் தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க. அஃது இம்மை யுலகு என்னும் (66) அகப்பாட்டினுட் காண்க. இவை இங்ஙனம் வெளிப்படக்கிளத்தலின் வழுவாய் அமைந்தன. (47) (உள்ளுறை ஐந்துவகைப்படும் எனல்) 242. உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே. இது, மேல் வெளிப்படக் கிளப்பனகூறிப் பின் வெளிப் படாமற் கிளக்கும் உள்ளுறை இனைத்தென்கின்றது. (இ - ள்.) உடனுறை- நான்கு நிலத்தும் உளவாய் அந்நிலத் துடனுறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும், உவமம் - அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும் ஏனையுவமமும், சுட்டு - உடனுறையுவமமுமன்றி 158நகையுஞ் சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும் அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டிவருவனவும், நகை- நகையாடி ஒன்று நினைத்து ஒன்று கூறுதலும்; சிறப்பென - ஏனையுவமம் நின்று உள்ளுறையுவமத்தைத் தத்தங் கருப் பொருட்குச் (50) சிறப்புக் கொடுத்து நிற்றலும் என்று, கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே - கெடுதலரிதாகிய முறைமையினை யுடைய உள்ளுறை ஐந்துவகைப்படும், என்றவாறு. 159ஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை உள்ளுறையாமென்றார். இறைச்சிதானே (229) இறைச்சியிற் பிறக்கும் (230) என்பனவற்றுள் இறைச்சிக்குக் காரணங் காட்டினாம். உவமம் உவமவியலுட் காட்டுதும். 160பெருங்கடன் முகந்த பல்கிளைக் கொண்மூ விருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப் போர்ப்புறு முரசி னிரங்கி முறைபுரிந் தறநெறி பிழையாத் திறனறி மன்ன ரருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்சே யாடவர் கழித்தெறி வாளி னழிப்பன விளங்கு மின்னுடைக் கருவியை யாகி நாளுங் கொன்னே செய்தியோ வரவம் பொன்னென மலர்ந்த வேங்கை மலிதொட ரடைச்சிப் பொலிந்த வாயமொடு கண்டக வியலித் தழலை வாங்கியுந் தட்டை யோப்பியு மழலேர் செயலை யந்தளிர் ததையுங் குறமகள் காக்கு மேனற் புறமுத் தருதியோ வாழிய மழையே. (அகம். 188) இதனுட் கொன்னே செய்தியோ அரவ மென்பதனாற் பயனின்றி அலர்விளைத்தியோ வெனவுங் கூறி ஏனற் புறமுந் தரு தியோ என்பதனால் வரைந்து கொள்வையோ வெனவுங் கூறித் தலைவனை மழைமேல் வைத்துக் கூறலிற் சுட்டாயிற்று. கொன்னே செய்தியோ என்றதனால் வழுவாயினும் வரைதல் வேட்கையாற் கூறினமையின் அமைந்தது. அன்புறுதகுந (231) என்பதனுள் ஏனையதற்குக் காரணங் காட்டினாம். 161விளையா டாயமொடு..... பிறவுமா ருளவே. (நற். 172) இதனுட் புன்னையை அன்னை நுவ்வகையாகு மென்ற தனான் இவளெதிர் நும்மை நகையாடுத லஞ்சுதுமென நகை யாடிப் பகற்குறியெதிரேகொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு காண்க. இதனைச் செவ்வனங் கூறாமையின் அமைத்தார். உள்ளுறை யுவம மேனை யுவமம் (46) என்னுஞ் சூத்திரத்து விரிகதிர் மண்டிலம் என்னும் மருதக்கலி (71) யுட் சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம். அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவுஞ் செவ்வனங் கூறப்படுதலின் இவை கரந்தே கூறப்படுதலிற் கெடலரு மரபின் என்றார். இவை தோழிக்குந் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை நோக்கி யுணர்க. (48). (உள்ளுறை யைந்தானும் தலைவியுந் தோழியுமாக்கிய வின்பம் தலைவன் கண்ணு நிகழ்ந்து இன்பஞ்செய்யுமெனல்) 243. அந்தமில் சிறப்பி னாக்கிய வின்பந் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. இது, முற்கூறிய உள்ளுறைபற்றித் தலைவற்கு வருவதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) ஆக்கிய அந்தமில் சிறப்பின் இன்பம் - முற் கூறிய உள்ளுறை ஐந்தானும் அவர்களுண்டாக்கிய முடிவிலாத சிறப் பினையுடைய இன்பம்; தன்வயின் வருதலும் வகுத்த பண்பு - தலைவன் கண்ணும் நிகழ்ந்து இன்பஞ் செய்தலுங் காமத்துக்கு முதலாசிரியன் வகுத்த இலக்கணம், என்றவாறு. தலைவன்தன்மை என்ப தொன்றின்றி நந்தன்மையெனக் கருதுதலின் யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் முனியாது இன்பமெனக் கொள்வனெனக் கூறியவற்றை, அவன் இவை இன்பந்தருமென்றே கோடலின் வழுவமைக்கப்பட்டன. உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. (49) (எய்தாததெய்துவித்தல்) 244. மங்கல மொழியும் வைஇய மொழியு மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங் கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப. இது, மேன் மூன்றுபொருளும் வழுவாயமைக என்றலின் எய்தாத தெய்துவித்தது. (இ - ள்.) மங்கலமொழியும் - தலைவற்குத் தீங்கு வருமென் றுட்கொண்டு தோழியுந் தலைவியும் அதற்கஞ்சி அவனை வழுத்துதலும், வைஇயமொழியும் - தலைவன் தம்மை வஞ்சித் தானாகத் தலைவியுந் தோழியுங் கூறலும், வைஇயமொழி, தீங்கைவைத்த மொழியுமாம்; மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும் - மாறுபாடில்லாத ஆளுந் தன்மையிடத்தே பழிபடக் கூறிய மொழியும், கூறியன் மருங்கிற் கொள்ளும் என்ப - வழுவமைதியாகக் கூறிய இலக்கணத்திடத்தே கொள்ளுமொழி யென்று கூறுவர் ஆசிரியர், என்றவாறு. 162நோயில ராகநங் காதலர் (அகம். 115, 227) எனவும், 163காந்தளுஞ் செய்வினை முடிக்கத் தோழி எனவுங் கூறுவன நம்மை அறனனறித் துறத்தலின் தீங்கு வரு மென்றஞ்சி வாழ்த்தியது. நம்பொருட்டுத் தீங்கு வருமென நினைத்தலின் வழுவா யமைந்தது. 164வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தலின். (கலி. 134) என்பது வஞ்சித்தமை கூறிற்று. 165இதுவுமோ, ரூராண்மைக் கொத்த படிறுடைத்து (கலி. 89) என்பது ஆண்மையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழீஇ அமைந்தன. (50) (சினம் முதலியன ஒருபொருளைச் சிறப்பித்துவருமாயின் அமைக்கப்படுமெனல்) 245. சினனே பேதைமை நிம்பிரி நல்குர வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. இது, மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைகவென வழுவமைக்கின்றது. இது பொதுவாகக் கூறலின் தலைவிக்குந் தோழிக்குங் கொள்க. (இ - ள்.) சினனே - கோபம் நீடித்தலும், பேதைமை - ஏழைமையும், நிம்பிரி - பொறாமைதோன்றுங் குறிப்பும், நல்குரவு - செல்வமின்மையும், அனைநால்வகையும் - என்ற அத்தன்மை யனவாகிய நாற்கூறும், சிறப்பொடுவருமே - ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறுதல் காரணத்தான் வரும். என்றவாறு. சினத்தை ஆண்டுக் கொடுமையினடக்கினார். நாணு நிறையு நயப்பில் பிறப்பிலி எனவும். (கலி. 60) தொடிய வெமக்குநீ யாரை (கலி. 88) எனவுஞ் சினம்பற்றிவரினும் அவை தன்காதலைச் சிறப்பித்தலின் அமைந்தன. 166செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய வகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி. (கலி. 19) எனக் கழிபெருங் காதலான் நின்னை உள்ளவாறறிந்திலே னெனத் தன் பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அமைந்தது. 167உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின். (கலி. 39) இது, 168நிம்பிரி. அவரோடும் விளையாடுவானெனப் பொறாமை கூறியும் அவன் ஈண்டையானாக வேண்டுமெனக் காதலைச் சிறப்பித்தலின் அமைந்தது. 169பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ லுண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரீஇமெலிந் தொழியப் பந்த ரோடி யேவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி யறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தாதை கொழுஞ்சோ றுள்ளா ளொழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே. (நற்றிணை. 110) இது, குடிவறனுற்றென நல்குரவு கூறியுங் காதலைச் சிறப் பித்தலின் அமைந்தது. இது, மெய்ப்பாட்டியலுள் விலக்காமையின் அதனைச் சார ஈற்றிலே வைத்தார். (51) (முறைப்பெயர்பற்றியும் வழுவமைத்தல்) 246. அன்னை யென்னை யென்றலு முளவே தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந் தோன்றா மரபின வென்மனார் புலவர். இது, முறைப்பெயர் பற்றி வருவதோர் வழுவமைக்கின்றது. (இ - ள்.) சொல்லினும் எழுத்தினுந் தோன்றா மரபின - சொல்லோத்தினும் எழுத்தோத்தினுஞ் சொல்லப்படாத இலக்கணத் தனவாய, தொல் நெறி முறைமை - புலனெறி வழக்கிற்குப் பொருந்திய பழைய நெறி முறைமையானே, அன்னை என்னை என்றலும் உள என்மனார் புலவர் - தோழி தலைவியை அன்னை யென்றலும் தலைவி தோழியை அன்னை யென்றலும் இருவருந் தலைவனை என்னை யென்றலும் உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு. 170அன்னா யிவனோ ரிளமா ணாக்கன். (குறுந். 33) புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய். (குறுந். 150) இவை, தோழியைத் தலைவி அன்னாயென்றன. 171அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட னூர்ந்த மாவே. (ஐங்குறு. 202) 172அன்னாய் வாழிவேண் டன்னை யுவக்காண் மாரிக் குன்றத்துக் காப்பா ளன்னன் றூவலி னனைந்த தொடலை யொள்வாட் பாசி சூழ்ந்த பெருங்கழற் றண்பனி வைகிய வரிக்கச் சினனே. (ஐங்குறு. 206) இவை, தோழி தலைவியை அன்னை யென்றன. எனக்கு மாகா தென்னைக்கு முதவாது (குறுந். 27) ஒரீ இயின னொழுகு மென்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே. (குறுந். 203) இவை, தலைவி தலைவனை என்னை யென்றன. தோழி கூறியது வந்துழிக் காண்க. தலைவன் தலைவியை அன்னையெனக் கூறலும் உளதென்பாருமுளர். எழுத்தினுஞ் சொல்லினுமென்னாத முறையன்றிக் கூற்றானே புறத்திற்கும் இவை கொள்க. என்னை மார்பிற் புண்ணுக்கு, என்னைக் கூரிஃ தன்மை யானு மென்னைக்கு நாடிஃ தன்மை யானும் (புறம். 85) என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர். (குறள். 271) என்னை மார்பிற் புண்ணும் வெய்ய. (புறம். 280) என்பன கொள்க. ஏனைய வந்துழிக் காண்க. இனி, உம்மையாற் 173பிறவுமுள வென்பது பெறுதலின், எந்தைதன் னுள்ளங் குறைபடா வாறு. (கலி. 61) என்றாற்போல் வருவன பிறவுங் கொள்க. (52) (கட்புலனாகக் காட்டலாகாப் பொருளிவையெனல்) 247. ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா கற்பு மேரு மெழிலு மென்றா சாயலு நாணு மடனு மென்றா நோயும் வேட்கையு நுகர்வு மென்றாங் காவயின் வரூஉங் கிளவி யெல்லா நாட்டிய மரபி னெஞ்சுகொளி னல்லது காட்ட லாகாப் பொருள வென்ப. இது, கட்புலனாகக் காணப்படாத பொருண்மேலும் கட்புலனாகக் காணப்பட்டாற்போலப் பொருள்கோடல் வழுவமைக்கின்றது. (இ - ள்.) ஒப்பாவது: ஒத்த கிழவனுங் கிழத்தியு மென்றவழி அவரொப்புமை மனனுணர்வா னுணர்வதன்றிப் மெய் வேறுபாடுபற்றிப் பொறியானுணரலாகா தென்றது; தந்தைய ரொப்பர் மக்களென்பதும் அது. உருவாவது: 174உட்கு; அதுவும் பொறிநுதல் வியர்த்தல் போல்வனவற்றா னன்றிப் பிழம்பு பற்றி உணரலாகாது; வெறுப்பாவது: செறிவு; அதுவும் மக்கட் குணமாய் 175இசையாததோர் மன நிகழ்ச்சியாதலிற் பொறியான் உணர லாகாது; கற்பாவது: தன் கணவனைத் தெய்வமென்று உணர்வ தொரு மேற்கோள்; ஏராவது: 176எழுச்சி; அஃது எழுகின்ற நிலைமையென நிகழ்காலமே குறித்து நிற்கும். எழிலாவது: அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்; 177சாயலாவது: ஐம்பொறியால் நுகரும் மென்மை; நாணாவது: செயத்தகாதனவற்றின்கண் உள்ள மொடுங்குதல்; மடனாவது: கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை; நோயாவது: நோதல்; வேட்கையாவது: பொருள்கண்மேல் தோன்றும் பற்றுள்ளம்; செய்யுண்மருங்கின் வேட்கை (86) என்புழி அவாவிற்கு வேறுபாடு கூறினாம்; நுகர்வாவது: இன்பதுன்பங்களை நுகரும் நுகர்ச்சி. என்றா என்பன எண்ணிடைச்சொல். என்று வருங் கிளவி - ஒப்பு முதல் நுகர்வு ஈறாகப் பன்னி ரண்டென்று அகப்பொருட்கண் வருங் கிளவிகளும். ஆவயின் வருங் கிளவி - அப்பன்னிரண்டின்கண்ணே புறப் பொருட்குரியவாய் அவ்வாசகத்தான் வருங் கிளவிகளும்; ஆங்கு; ஈண்டு உவமவுருபு; அவைபோல்வன கிளவி என்ப தாம். எல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது - ஏனையவும் நாடக வழக்கத்தாற் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே நெஞ்சு உணர்ந்து கொள்ளினன்றி, காட்டலாகாப் பொருள் என்ப - உலகியல் வழக்கான் ஒருவர்க்கொருவர் கட்புலனாகக் காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய என்று கூறவர் புலவர் என்றவாறு. இவை மேல்வரும் மெய்ப்பாடு பற்றி உணர்தலிற் கட்புல னாகாவோவெனின், மெய்ப்பாடாவது மனக்குறிப்பாதலின் அதன் குறிப்பிற்குப் பற்றுக் கோடாகிய பொருளினவை யென்றுணர்க. இனி, இவை புறப்பொருட்கண் வருமாறு: 178வரைபுரையு மழகளிற் றின்மிசை. (புறம். 38) எனவும் 179உருகெழு முரசம் (புறம். 50) எனவும் 180வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன். (புறம். 53) எனவும் 181நிலைகிளர் கூட னீளெரி யூட்டிய பலர்புகழ் பத்தினி (சிலம்பு-பதி. 35-36) எனவும் வரும். இவ்வாறே ஏனையவற்றிற்கும் ஒட்டிக்கொள்க. இனி எல்லாமாவன; ஒளியும் அளியும் காய்தலும் அன்பும் அழுக்காறும் பொறையும் நிறையும் அறிவும் முதலியனவும் பிறவுமாம். ஒளியாவது: 182வெள்ளைமையின்மை. அளியாவது: அன்புகாரணத்தால் தோன்றும் அருள். காய்தலாவது: வெகுளி; அன்பாவது: மனைவியர்கண்ணுந் தாய் தந்தை புதல்வர் முதலிய சுற்றத்தின்கண்ணும் மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப் பித்து நிற்கும் நேயம். அழுக்காறாவது: பிறர் செல்வ முதலியவற்றைப் பொறாமை. பொறையாவது: பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல். நிறையாவது: மறைபிறரறியாமல் ஒழுகுதல். அறிவாவது: நல்லத னலனுந் தீயதன் றீமையும் உள்ளவா றுணர்தல். இவை கண்டிலமென்று கடியப்படா கொள்ளும் பொருளென்றார். இவை ஆசிரியனாணையன்றென்பது மேற் சூத்திரத்தாற் கூறுகின்றான். (53) (காட்டலாகாப் பொருள்களும் உள்பொருளாதலின் பொருளே எனல்) 248. இமையோர் தேஎத்து மெறிகடல் வரைப்பினு மவையில் கால மின்மை யான. இஃது, இவையுங் காட்டலாகப் பொருள்கள் ஆசிரியனாணையாற் கொண்டனவல்லவற்றைப் பொருளெனக் கொள்க என்கின்றது. (இ - ள்.) இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும் - தேவருலகத்தின்கண்ணுந் திரையெறியுங் கடல்சூழ்ந்த நிலத்தின் கண்ணும், அவைஇல் காலம் இன்மையான - அறம் பொருள் இன்பங்களின் நுகர்வு இல்லாததோர் காலம் இன்றாகையால் அவற்றைப் பொருளென்றே கொள்க என்றவாறு. தமிழ் நடக்கும் எல்லை கூறாது தேவருலகையும் மண்ணு லகையும் கூறியமையின் இவை யாண்டும் ஒப்ப முடிந்தனவென வும் அவை உள்ள அளவும் இவை நிகழ்வனவெனவுங் கூறலின் வழுவமைதியாயிற்று. இமையாக் கண்ணராகலின் இமையோர் என்றார். இடையூறில்லாத இன்பச் சிறப்பான் இமையோரை முற்கூறினார். (54) பொருளியல் முற்றிற்று. பருவ ராலுகள் வாவிசூழ் மதுரையம் பதிவாழ் பொருவ ராநச்சி னார்க்கினி யானுரை புணையாங் கருவ ராநெறி யுதவுதொல் காப்பியக் கடற்கே வெருவ ராதுநின் றனமகிழ்ந் தேகுவன் விரைந்தே. தொல்காப்பியனார் திருவடி வாழ்க. கணேசயர் அடிக்குறிப்புகள்: 1. (மரபியல் - 89) நிலந்தீ.... தழா அல் வேண்டும். 2. இசை - சொல். 3. இசை - இசைத்தலுடையது (சொல்) - தொழிலாகுபெயர். அசைத்தல் - யாத்தல் அது யாக்கப்பட்டதாகிய பொருளுக்கு ஆகியதும் தொழிலாகுபெயர். 4. இது குறிஞ்சிக்கலி 24ஞ் செய்யுளடி. இதற்கு நச்சினார்க்கினியர் பொன் செய்வாம் என நகைக்குறிப்புத் தோன்றக் கூறினாள் என்று உரைகூறலின் தனக்கு உடன்பாடன்மை தோன்றத் தோற்றப் பொலிவு செய்வாம் என நகையாடிக் கூறினாள் என்பது கருத்தாகும். இறைபயத்தலாவது; நேர் விடையாகாது குறிப்பாற் றோன்றும் விடையாய் வருவது. வினாவிற்கு நேர் விடையாகாது குறிப்பால் விடை பயப்பது என்பது கருத்து. கலி 64ஆஞ் செய்யுளுள்ளும் பொன்படுகுவை என வருதலும் நோக்குக. 5. அகத்திணையியலுட் பலராகக்கூறிய தலைவர் தலைவியர் என்றது; ஐந்திணைக்குரிய தலைமக்களும் நான்குவருணத்தாரும் முதலாயி னோரையும் அடிமையோரையும் வினைவல பாங்கினோரையும். 6. இருவர். என்றபெயர் ஈண்டு அவர் என்னுஞ் சுட்டுமாத்திரையாய் நின்ற தென்றபடி. 7. எட்டு என்றது மெய்ப்பாடெட்டையும். 8. ஓதம் - கடலின் நீர்ப்பெருக்கு. 9. இதுமுதலாக மெய்ப்பாட்டுக்குரிய உதாரணங் கூறுகின்றார். உவந்து என்பது உவகை என்னு மெய்ப்பாட்டைக் குறித்து நின்றது. ஏனையனவு மன்ன. 10. இச்சூத்திரத்து நோயுமின்பமும் என்பதை விளக்கி இவ்வாக்கியம் எழுதப்பட்டது. 11. எதிர்பெய்துகொண்ட என்றது - தனக்குமுன்னிற்பவனாக இட்டுக் கொண்ட (முன்னிலைப்படுத்திக்கொண்ட) தலைவன் உருவும் - தலைவனுடைய உருவும் என்க. 12. வாயல்கனவு - உண்மையல்லாத கனவு. 13. பக்கச் சொல் - பகுதிச்சொல்; இலக்கணமல்லவாயினும் இலக்கண முடையவாக அமைத்துக்கொள்வது. 14. அவ்வீரிடத்தும் என்றது செவிலியும் நற்றாயுமாகிய இருவரிடத்தும் என்றபடி. 15. எழுவகையால் அறத்தொடு நிற்றலை 207ஞ் சூத்திரநோக்கியறிக. 16. கூற அவ்வுறுப்புப் பெறாது என முடிக்க. 17. கலுழ்தல் - அழுதல். கண்கள் அழும் என்பது இவை என்னுற்றன கொல் என்பதிலடங்கும் என்றபடி. 18. ஓஒ இனிது - மிகவினிது. எமக்குத் துயர்செய்த கண்கள் தாமே துன்பமடைந்தன என்றபடி. இதுவும்தன்பாற்படும். 19. இனி - இப்பொழுது உறா அலின் - அழுந்தலின். எல்லா - ஏடி. தனியில் நெஞ்சு - தனிமையான மனத்தைத் தனக்கு உரித்தாக்கு தலில்லாத நெஞ்சு. தனித்து - என்னைவிட்டு. 20. உசாவல் - வினாவல். 21. மாண - யான் மாட்சிமைப்பட்டிருக்க. மாண உள்ளா எனக் கூட்டுக. இப்போர் - ஊடற்போர். புறஞ்சாய்ந்து - தோற்று. நெஞ்சே காண்பாய் என்க. 22. பலருங்காணச் சென்மோ என இயையும். சென்மோ? - செல்லுவேமோ? வினாவி - மன்றத்துள்ளாரை வினவி. 23. கவவு - அகத்தீடு. கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி - அகத்தீட் டொழுக்கம் நழுவினமைகருதி. எம் புதல்வனைநோக்கி இந்தச் செல்வற்கியைந்தேம் யாமென்று மெல்ல என் மகன் வயின் சென்றேன் என இயைக்க. 24. தன்னால் காதலிக்கப்பட்ட மகளிர் யாரினும் காதல் உடையே னென்றாகக் கருதினமையின் மடனழிய வந்தது என்றார். 25. நொதுமலர் - அயலார். 26. இறந்துபாடு - இறந்துபடுதல். 27. உட்கோடல் - கருதல். சிந்தித்தல். 28. கானவன் - வேட்டுவன். காழ்க்கொள்ளல் - முதிர்தல். இல் - வீடு நீவியோன் - தடவியோன். 29. கட்டுக்காணல் - கட்டுவிச்சியால் கட்டுப் பார்ப்பித்தல். கட்டாவது இன்னது என்பதைக் களவியலில் கட்டினுங் கழங்கினும் என்னுஞ் சூத்திர அடி விளக்கக் குறிப்பாலறிக. 30. படைத்துமொழிதல் - கற்பித்துக்கூறல். பட்டாங்கு - நிகழ்த்தபடி. 31. எல் - பகல். எல்இன்று - ஒளியின்று (இருண்டது). அசைவு - தொழில் செய்தலாலுண்டான மெய்யசைவு. எளிவந்து கூறினானாகக்கூறலின் எளித்தல் என்றார். 32. படுசுடரமையம் - ஞாயிறுபடுங்காலம். தேஎம் - திக்கு. இவன் மகனே என்றனள் - இவன் ஒரு புருஷனே என்று வியந்து கூறினாள். இது தலைவனைப் புகழ்ந்துகூறலின் ஏத்தல் என்றாள். 33. ஆகமுறத்தழுவினான் என்றதனால் அவன் வேட்கை யுரைத்தலாயிற்று. 34. சில்லவிழ்மடை - சில சோற்றோடுகூடிய பலி. மறி - ஆட்டுக்குட்டி. அணங்கிய - தலைவியை வருத்திய; வருத்திய அகலம் என்க. அகலம் - மார்பு. 35. வேலனொடு உசாதல் என இயையும்; வேலன் வெறியாடிக் கூறற்கண் அவனொடுந் தோழி உசாவும் என்றபடி. இளம்பூரணம் நோக்கியறிக. 36. கோடாது - மனங்கோடாது. கோடா - தளராத. பொழில் - உலகு. போந்து - நிரம்பி நிரம்பிவிலையாமோ என இயையும். 37. ஞமலி - நாய். திளையா - இமையாத. வளைகுபுநெரிதர - எம்மை வளைத்துக்கொண்டு நெருங்குகையினாலே. புலம்படர - வேற்றுப் புலத்து ஏறச் செல்லாநிற்ப. புகல்வு - மனச்செருக்கு. விடை - ஆனேறு. அலமரல் - சுழற்சி. வெரூஉதல் - அஞ்சுதல். யாமஞ்சுதற்குத்தானஞ்சி என்க. அவ் வாங்குஉந்தி - அழகிய வளைந்த கொப்பூழ். கெடுதிகள் - கெடுக்கப் பட்டவை - இழந்தவை. அவை; மான். மரை, பன்றி, வேழம் முதலியன. 38. மடிவிடுவீளை - வாயைமடித்துவிடுஞ் சீழ்க்கை. எதிர - எதிர்த்தலினால் - புறத்தினின்றும் ஓட்டுதலினால். வெடி - ஓசை. பிணர் - சருச்சரை. எதிர்தர - எம்மேல் வருகையினாலே. விதுப்பு - நடுக்கம். உடு - நாணைக் கொள்ளுமிடம். பகழி - அம்பு. கடுப்ப - ஒப்ப. களத்திற்குருதியை ஒப்ப என்க. கலுழி - யாற்றின் பெருக்கு. அஞ்சல் ஒம்பு - அஞ்சுதலைப் பாதுகாப்பாய். 39. குறிஞ்சிநிலமகளிர் வேங்கைப்பூக் கொய்யுங்கால் புலி புலி யென்று பூசலிட்டுக் கொய்வது வழக்கு; அப்பூசல் கேட்ப என்றபடி. கண்போலும் கழுநீர்ப்பூ என்க. ஊசி போகிய சூழ்செய்மாலை - ஊசியாற் கோத்துச் சுற்றின மாலை. ஊசிபோலும் அல்லியைக் கழித்துச் சுற்றின மாலையுமாம். செச்சை - வெட்சி. மாபடர்திறம் யாது? - புலியாகிய மா போனவழி யாது? என வினவிநின்றான் என இயைக்க. 40. என்னை (என் ஐ) - என்தலைவன். வீ - பூ. பொன்போலும் பூவும் மணிபோலும் அரும்பும் உடையன. சாரல் - மலைச்சாரலிடத்தன. 41. கள்ளி - நறவு. சோபாலிகை - அடம்பு. செயலை - அசோகு. இதண் - பரண். இதணாற் கடியொடுங்கா பரணாற் காவலமையாத. உதண் - மொட்டம்பு. 42. பிறிதொன்றின்மை - தலைவிவேறுபாட்டிற்கு வேறொருகாரண மின்மை. புகாஅர்த்தெய்வம் - கடற்றெய்வம். கடுஞ்சூள் - கடிய சத்தியம். தலைப்பாடு - தலைப்படல்; இருவருந் தாமே எதிர்ப்படல். 43. துணைபுணர்ஏறு - ஆவைப் புணர்ந்த எறு. இரவரன்மாலையன் - இரவுக்குறியில்வரும் தன்மையன். 44. ஆடுகழை - அசைகின்ற மூங்கில். கலுழும் - அழும். 45. இரண்டு என்றது - ஏதீடும் உண்மை செப்பலுமாகிய இரண்டையும். 46. பசலை - பசப்பு. செப்பாதீமே - சொல்லாதொழிவாய்; இது வினைத்திரி சொல். 47. மன்றுபாடு அவிதல் - ஊர்ப் பொதுமன்றம் ஒளி அடங்கல்; என்றது அங்குள்ளாரும் பொழுதானமையின் அதனை விட்டனர் என்றபடி. மனைமடிந்தன்று என்பது மனையிலுள்ளாரும் துயின்றனர் என்றபடி. எனவே இடையாம மாயிற்று. எனவே இக்காலம் அவர் வருதற்குத் தகுதியில்லை எனக் குற்றங் காட்டியதாயிற்று. 48. ஞெகிழி - குறைக்கொள்ளி. கவணையர் - கல்லெறியும் கவணையுடையர்; ஐ - சாரியை. இது குறவர் காவலால் ஏதம் வருமென்ற தலைவி இரவுக் குறிவரல் விலக்கியது. 49. ஆனாஅரும்படர் - நீங்காத ஆற்றமுடியாத துன்பம். 50. உழுவை - புலி. இருளில் புலி திரிதருங்காட்டை அஞ்சுவல் என இயைக்க. 51. விழுமம் - துன்பம். வழிநாள் - பின்னாள் (-அடுத்தநாள்) 52. எளித்தலின் வேறாயிற்று என்றது - தலைவனுக்கு ஏதம் வருமென்றஞ்சுதல் அறத்தொடு நிற்றிலின்கட் கூறிய எளித்தலின் வேறு என்றபடி. 53. இஃது இரவுக்குறி வேண்டியது. 54. இது பகற்குறி நேர்ந்தது. 55. வீ - பூ. அறைவரிக்கும் - பாறையிற் கோலஞ்செய்யும். இஃது, இரவு வாரல் என்றது. 56. கவ்வை - அலர். 57. ஓரும் - அசை. மெல்லியல்தான் வாழலள் என்க. 58. பிறிது - பிறிதுபொருள். இது சான்றோராகிய பிறிது பொருண்மேல் வைத்துக் கூறியது என்றபடி. பழியொடுவருமின்பம் தீமை. புகழொடு வருமின்பம் நன்மை என்றபடி. 59. பகையில்நோய் - மருந்தில்லாதநோய். இது வரைவுநீட்டித்தமை பற்றிக் கொடியனென்றது. ஆதலின் ஊடற்கணின்றி என்றார். 60. வேற்று வரைவு உள்ளுறை உவமத்தாற் பெறப்பட்டது. நற்றிணையுரை நோக்கியறிக. 61. கடம்பும் களிறும் - முருகவேளின் கடப்பமாலையும் அவனது ஊர்தியாகிய பிணிமுகம் என்னும் யானையும். அன்னை - ஆடினளா தனன்றோ என்பது ஆடுவான் வினையை ஆடுவிப்பாள் மேலேற்றிக் கூறப்பட்டது. 62. இன்னா - துன்பம். வலிதின் என்றதனால் பெருந்திணையாயிற்று. இது தீதாமாதலின் அடியோர் தலைவராயது என்று இக்கவியுரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். ஆயின் அடியோர் என்பது இச் செய்யுளிற் கூறப்படவில்லை. 63. எறித்தபடை - கலப்பையிற்றைத்த படைவாள். நெறித்து விட்டன்ன - முறித்துவிட்டாற்போன்ற. ஏர் - அழகு. பொறீஇ - ஆற்றி. 64. உழுந்து - உழுத்தம்பணியாரம். துவ்வா - அனுபவிக்கப்பட்டு இருக்கின்ற. 65. ஏனைய என்றது ஐந்திணையை. 66. கள்வன் - ஞெண்டு. சேர்பொதுக்கம் - சேர்புஒதுக்கம் எனப் பிரிப்பர் நச்சினார்க்கினியர். ஒதுக்கம் - நடை; அது வடுவுக்காயினது. ஆகுபெயர் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்து. தவறாதல் சாலாவோ - தப்பாதற்கு அமையாவோ. போழ்ந்தன, உற்றன என்பவை வினைப்பெயராய் வழுக்களையுணர்த்திற்று. 67. தேர் இதனுள் வந்தது. 68. இதுவும் தேர் கூறியது. 69. இதனுள், அத்திரி - கோவேறுகழுதை வந்தது. 70. இனையர் - ஏவலிளையர். 71. பசலையின் பரத்தலை உண்ணல் என்றது. சொல்வழு; உண்ண மாட்டாத பசலையை உண்டதாகக் கூறல். செய்யாமரபினவற்றைச் செய்ததாகக் கூறியது. 72. இதில் நலமுண்டு என்றது உண்ணப்படாத பொருளை உண்டதாகக் கூறியது. பிறவுமன்ன. 73. தின்னல் - அள்ளிக்கொளல். வான்றோய்தல் என்பன உண்டலல்லாத பிற தொழில்கள். வருத்தல், செறிதல், மிகுதல் என்பனவற்றை முறையே தின்னல் முதலியவாகக் கூறப்பட்டது. சொல்வழு என்றபடி. 74. குன்றம் - மலை. அடைபொருள் கருதுவிராயின், வஞ்சியும் உறந்தையுஞ் சிறிதாகும் என்க. 75. கொடுமரம் தேய்த்தார் - வில்லாலே கொல்லப்பட்டவர். பதுக்கை - கொல்லப்பட்டவரது உடல்களை மறைத்த இலைக்குவியல். நவை - குற்றம். ஆர் - நிறைந்த. ஆறு - வழி. முற்றி - சூழ்ந்து. கடுமை - வெம்மை. கனைக்கு - அடை. தாம்பதிவு - தாஞ்சேரப்பதிந்து. தெறப்பட்டு - கடப்பட்டு. நெறி - வழி. நிரம்பா - சென்றுமுடியாத (தொலையாத). அத்தம் - காடு. உரன் - வலி. 76. இப்பொருளையே சூத்திரப்பொருளாக இளம்பூரணர் கொண்டனர். இலக்கியங்காண்டலின் நச்சினார்க்கினியருரையுங் கொள்ளற்பாற்று. 77. சிறுபுறங்கவையினனாக - முதுகை அகத்திட்டுத் தழுவினனாக. அதற்கொண்டு - அதனைக்கருதி. அதனால் எனினுமாம். இகுபெயன் மண்ணின் ஞெகிழ்பு - பெய்த மழையால் நெகிழ்ந்த மணல் போல் மனம் நெகிழ்ந்து. அஞர் - வருத்தம்; நோய். பிணி - பிணிப்பு. 78. வழிநிலை பிழையாமல் என்றது தான் குற்றேவன் மகளாதலின் தலைவிக்குத் தான்செய்யும் வழிபாட்டு நிலையிற் பிழையாமல் என்றபடி மெய்யறி என்பது மெய்யின் என்றிருத்தல் வேண்டும். 114ஆம் சூத்திர நோக்கியறிக. 79. இச்செய்யுளில் விழவின்கண்ணும் துணங்கைக்கண்ணும் யாண்டும் காணேன் என்று தலைவி கூறலின் தேடிச்சென்றவாறு காண்க. 80. இச்செய்யுளில் அவனூர் வினவிச் சென்மோ தோழி என்று தலைவி கூறலின் செல்வாம் என்றாயிற்று. 81. இச்செய்யுளில் கங்குலும் (சேறற்கு) அரியவல்ல எனத் தலைவி கூறலின் இதுவும் செல்வாம் என்றது. 82. இது - இச்சூத்திரம். இது நாட்டத்தாற் கூறவும் பெறும் என இயைக்க. 83. புறத்தாறு - புறவொழுக்கம்; என்றது புறவொழுக்கமுடையவனாகக் கருதிக் கொண்டாளோ என்பது கருத்து. 84. இவள் என்றது தோழியைச் சிறந்தாள் என்றது ஆயத்தாருள்ளே நண்பிற் சிறந்தாள் என்றபடி. 85. எல்லா - ஏடி. இது தலைவன். தலைவியை விளித்தது. 86. எல்லா - ஏட. இது தலைவனைத் தோழி விளித்தது. 87. எல்லா - ஏடி. இது தோழி தலைவியை விளித்தது. 88. எலுவ என்பது - பெண்பால் வந்ததற்கு இலக்கியம் உளதோ என்பது ஆராயத்தக்கது. 89. என்கால் என்றது - தலைவி காலைத் தன் காலாகத் தோழிகூறியது. இது நற்றிணைப்பதிப்பில் தன் கால் என்று பாடங்கொள்ளப்பட்டது. 90. இதற்கு வேறு கருத்துக் கூறுவர் இளம்பூரணர். சேனாவரையர் சொல்லதிகாரத்து வேறு கூறுவர். 91. மேவல் - ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போக நுகர்தல் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. எனவே மேவற்று என்பதற்கு ஆணும் பெண்ணுங் கூடி அநுபவித்தலுடையது என்று பொருளாம். இன்ப மென்பது மேவற்று என இயையும். மேவல் - ஒன்றோடொன்று பொருந்தல் (சேர்தல்). 92. என்பது, என்பது வருதலின்பின் வருதல்வேண்டும். வருதலின் என்பதன்பின் முற்றடையாளம் இடுதல் வேண்டும். 93. இளம்பூரணர் வேறு கூறுவர். 94. பரத்தைவாயில் - பரத்தமையால் தோன்றிய ஊடல் தீர்த்தற்குரிய வாயில். குதிரைத்தேர் என்பது குதிரையால் இழுக்கப்படும் தேர் என்றாகும். உருபும் பொருளுந்தொக்கது. 95. இதனுள் சாயன்மார்பு - முகந்து கொண்டு அடக்குவம் என்பதனால் இடைவிடாது இன்பநுகர்தலை விரும்பினாள் என்று பெறப்படும். 96. அம்பல் - வாயைமுகிழ்த்துணர்த்தல்; சிலரறிந்தது. அலர் - வாயைத் திறந்து வெளிப்படக்கூறல். பலரறிந்தது. இவை அரும்பு அலர் என்ற பூவகை போறலின் அப்பெயர்பெற்றன. (109) 97. ஆனாதலைக்கும் அன்னை என்றலின் இடையூறு பொருள் பெறப்படும். ஆனாது அலைத்தல் இடையூறாகும். 98. ஆர்ந்தோர் - பலதரம் நுகர்ந்தோர். தணத்தல் - துறத்தல்; இல்லறத்தைத் துறத்தல். எவ்வங் களைந்த எம்மை எம்மிலுய்த்துக் கொடுமோ என இயைக்க. 99. ஆயம் - பரத்தையர் கூட்டம். ஓராவல்சி - நன்று தீது ஆராயாத உணவு. ஓரான்வல்சி என்று பாடங்கொள்வாருமுளர். 100. இவ்வாறு பொருள் கூறுவர் இளம்பூரணர். 101. வாழ்வார்க்கு - உயிருடன் வாழ்வார்க்கு. 102. மாறி - மனம்வேறுபட்டு. உள்ள - என்னை நினைந்து வருந்தும்படி. யாந் துறந்தவள் பண்பும் - யாம் துறக்கப்பட்டவளுடைய செய்தியும். யாதும் - சிறிதும். வினவல் - வினவாதேகொள். பகலின் - ஞாயிறுபோல். செம்மல் - தலைமை. படுதலும் - பிறத்தலும். 103. உட்கு - அச்சம். 104. கோதை - மாலை. கோலா - அடிக்குங்கோலாக. கோலாக அலைப்பேன் போலவும் என இயைக்க. ஊதை - குளிர்காற்று. சேர்ப்புக்கடை. சேர்ப்பு - கடற்கரை. 105. முன் என்றது கனவுக்குமுன் (நனவில்) என்றபடி. 106. புரப்பான் - பாதுகாப்பான். மதுகை - வலி. வல்லார் - மெய்ப் பொருணூல் வல்லார். நல்லார் - நன்மக்கள். புன்கண் - இழிவு. வண்மை - கொடை. ஆண்தகை - ஆளுந்தகைமை. 107. ஆகம் - மார்பு. சுணங்கு - தேமல். மாயம் - வஞ்சனை. சாயினை பயிற்றி - ஒருபக்கஞ்சார்ந்து (ஓரம்) சொல்லி. பயிறல் - பலகாற்கூறல். 108. அனைமருள் தோள் என்க. இன்துயில் என மாறுக. பணை - மூங்கில். மௌவல் - முல்லை. மாவீழ் - வண்டுகள் விரும்புகின்ற. மாரிவீழ் - மழை விரும்புகின்ற. பாராட்டி - கொண்டாடி. இன்னாங்கு - துன்பம். பெயர்த்தல் - செலுத்தல். இனி - இப்பொழுது. துனி - வெறுப்பு. 109. போக்கு - பிரிந்து போதல். 110. ஏந்தெழிலாகம் என்றது புகழ்ச்சி. 111. நிறைதார்மார்பு - என்றது புகழ்ச்சி. நெருநல் - முன்னை நாள். 112. நின்றசொல்லும். நீடுதோறினிமையும் அவன் குணங்கள். 113. செவ்வன் கூறப்படாமை - வெளிப்படக் கூறப்படாமை. 114. நேயம் - தெரித்துமொழியாற்கூறாமை. 115. சூள் - சத்தியம். 116. நீர்திகழ்வான் என்? - நீர்திகழ்தற்குக் காரணமென்னை? பொய் கூறியவன் மலையில் நீர் திகழமாட்டாது. அங்ஙனமாகத் திகழ்தன் என்னையோ? என்று சிந்திக்கின்றாள் தலைவி. 117. மாந்த - உண்ணற்பொருட்டு. பிடி - பெண்யானை. கெட்டிடத்து - வறுமை யுற்றவிடத்து. உவந்த உதவி - (பிறர் உதவ) மகிழ்ந்த உதவி. கட்டில் - அரசு கட்டில். வீறு - பெருமை. நன்றி மறந்தனையாயின். நன்றியை மறந்தா யாயின் (வரைந்துகொள்ளாயாயின்) 118. வேங்கை - புலி. வெறி - மதமயக்கம். பொறி - புகர்நிறம். இமிர்பு - மொய்த்து. ஐவனம் - மலைநெல். அறைஉரல் - பாறையாகிய உரல். ஐயனை - முருகக் கடவுளை. 119. பார்ப்பு - பிள்ளை. வெண்பூ என்பதனால் தலைவி பேதைமை தோன்றிற்று. 120. நசை - வேட்கை. நல்கலுநல்குவர் - நல்கலுஞ் செய்வர். நல்கல் - அருளல்; தலையளிசெய்தல். யாஅம்பொளிக்கும் - யாமரத்தின் பட்டையை உரிக்கும். 121. வினைவயிற்பிரிவு என்பதற்குப் போர்த்தொழிற்குப் பிரிதல் என்று பொருள் கொள்வது நலம். 122. கிழவி பாராட்டு என்றது - கிழவியது பாராட்டு என உரிமைப்பொருள் பட நிற்றலினாலே ஆறாவதன் பொருட்டாய் நின்றது என்றபடி. ஆறாவதன் பொருட்டாய் நிற்பவும் இரண்டாவதன் உருபும் பொருளும் விரித்தது. அன்ன பிறவுந் தொன்னெறி பிழை யாதுருபினும் பொருளினும் மெய் தடுமாறி என்னும் வேற்றுமை மயங்கியல் 18ஞ் சூத்திர விதிபற்றியென்க. 123. செவ்வனம்கொள்ளாது - மெய்யாகக்கொள்ளாது. 124. நாணிநின்றோள் என்றது பரத்தையை. பேணினன் - விரும்பினேன். அணங்கு அருங்கடவுள் - வருத்தும் அரியதெய்வம். புரைவது - ஒப்பது; தக்கது. 125. புரைதல் - ஒத்தல். 126. முதுக்குறைமை - பேரறிவு. 127. விதுப்பு - வேட்கைமிகுதியானுளதாய விரைவு. 128. தலைவன் பேதைப்பருவப் பெண்ணை விரும்பலின் கைக்கிளை என்றார். பேதைப்பருவத்தாள் என்பதை வெள்ளாங்குருகை வினாவ லாலறிக. 129. தலைத்தாள் - தாட்டலை; அடியிடத்து தலைவன், முன்னின்று கழறலை. அடியிடத்துக் கழறல் என்றது தகுதிபற்றி என்பது கருத்து. கற்பியல் 24ஞ் சூத்திர உரை நோக்குக. கொற்றவன்றலைத்தாள் (பெருங்கதை - உஞ்சை 45-79). 130. நின்னணங்குற்றவர் - நின்னால் வருத்தமுற்றவர். நொந்து - வெறுத்து. 131. ஆறாமவதி என்றது மெய்ப்பாட்டியலிற் கூறும் புறஞ்செயச் சிதைதல்... ஆறென மொழிப என்னுஞ் சூத்திரத்துக் கூறிய மெய்ப்பாடுகளை. அவற்றுள் கையறவுரைத்தல் என்ற மெய்ப் பாட்டின் மேல் களவொழுக்கத்தினுள் மெய்ப்பாடு நிகழா என்றும், அதன் மேல் வருவன கைக்கிளை பெருந்திணைக்கு வருவன என்றும் அச்சூத்திர உரையுள் இவரே கூறுதல் நோக்கி யறிக. 132. இதன் பொருளைக் கலித்தொகை யுரைநோக்கி யறிந்து கொள்க விரிவுபற்றி விடுத்தனம். 133. அந்தி - மாலை. கையறவு - செயலறல். 134. புல்ஆராமாத்திரை - புல்லுதல் நிறையாத அளவு. 135. அசதியாடல் - பரிகாசமாகக்கூறல்; நகையாடல். 136. நயம் - குறையறிதல். 137. ஏனை - ஏனைய என்றிருத்தல் வேண்டும். 138. சேட்படுத்தல் - அகற்றுதல். 139. தன்னை மறைத்தல் - தனக்குமுன்னுறு புணர்ச்சியை மறைத்தல். 140. நின் மார்பு நறியோள் கூந்தல் நாறும். நின்புறத்தொழுக்கத்தை யாம் அறியேம் அல்லேம்; நாறுமதனால் அறிந்தேம் என்பது கருத்து. 141. இச்செய்யுளுட் பிழையிருத்தலினால் பொருளறிய முடியவில்லை. 142. ஆயின்று - ஆயினது. புலம்பு - தனிமை. மலையும் - வருத்தும். நயம் - அசதியாடல். 143. உறழ்தல் - மாறுபடல். 144. இஃதொத்தன் - இவனொருத்தன். தகை - தகைமை; தன்மை. சாம்பி - கெட்டு. உடைந்து - மனமுடைந்து. 145. ஆரஞர் எவ்வம் - பொறுத்தற்கரிய மனக்கவற்சியைச் செய்யும் வருத்தம். உயிர்வாங்கும் - உயிரைக் கவரும். பெறின் - அவன் பெறின் அல்லது மருந்தாவதல்லது. இல்லேல் - இல்லையாயிருக்குமாயின். 146. பொன்செய்வாம் என நகையாடிக் கூறலால் உடன்பாடன்மைக் குறிப்புத் தோன்ற நின்றது. 147. இவ்வடிகள் தோழி தலைவியோடு உசாவியதாகக் கலியுரையிற் கூறியுள்ளார். இங்குத் தலைவனோடுறழ்ந்து கூறியதாகக் கூறுகின்றார். பின்னதே பொருத்தமாகத் தோன்றுகின்றது. 148. நனியேய்க்கும் மாமழை - மிகப் பொருந்தும் கரியமழை. பின் -பின்னுமுடிப்பு. பின்னின்கண் அலரிப் (பூக்கள்). அரவுக்கண் நனியுறழ் ஆரன்மீனின்தகைய யொப்ப என்க. அரவு - கரும்பாம்பு. ஆரன்மீன் - கார்த்திகைமீன். படர் - துன்பம். பொன்படுகுவை - பொன்னுண்டாவை என்றது; தோற்றப் பொலிவெய்தினை என்றபடி. இது எனக்கு நீ பெரிய பொன்கடவை என்பதோர் நகைப்பொருளுந் தோன்ற நின்றது. இறுத்த - ஓரொருகாற்றங்கின. பொன்படுகம் - தோற்றப்பொலிவு உண்டாவேம். உழுவது - உழுதல். இதுவும் நகை யாடிக் கூறியது. முத்தியெறிந்துவிடல் - ஒருகாலமுறாதபடி கழித்துவிடல். 149. ஆர்வுற்றார் - தன்னான் நுகரப்பட்டார். ஒருதிறம்ஒல்காத - ஒருபக்கஞ் சாயாத. நேர்கோல் - நேர்நிற்குந் துலாக்கோல். மலை தோன்றும் என இயைக்க. கொன்ஆளன் - பயனின்மையை ஆளுபவன். 150. சொல்லின் - யான் என்குறையைச் சொல்லின். மறாதீ வாளோ - மறாதிருப் பாளோ? 151. கரந்த - மறைத்த. 152. பழவினைமருங்கின் - பழவினையினாலே. பெயர்பு பெயர்பு உறையும் - (இவர் நமக்கு உரியவரென்று கருதாது பிறரிடத்தே). மீண்டு மீண்டு சென்று தங்கும். பெயர்தல் - ஓரிடத்து நில்லாமை. பெயர்பு பெயர்பு தங்கும் என்றது அறிவுடைமையாற் கூறியதாகும். 153. தொடி - வளையல். நெகிழ்தல் - தளர்தல். தகைக்குநர் - தடுப்போர். 154. யாணர் - வளம் (புதுவருவாய்). மலிர்நிறை - நீர்வெள்ளம். விலக்குமா றென்னே எனத் தலைமைதோன்றக் கூறியதனால் உயர்த்துக் கூறிய தென்றார். 155. குறி - குறியிடம். அணங்கு - தெய்வம். தெய்வம் என்று கருதி என்றதனாற் றலைவனையுயர்த்துக் கூறியவாறு காண்க. 156. வஞ்சத்தான் வந்து என வஞ்சனையுடையனாகக் கூறியது வெளிப்படக் கிளந்ததாம். 157. எமது கண்கள் எம் மெய்ப் புதல்வனைத் தீண்டப்பெறுகையினாலே துயிலவுங்கூடும். அதனை அரவம் வந்து போக்கும் என இயைத்துப் பொருள்கொள்க. 158. நகையும் சிறப்பும் பின்வருகின்றன. 159. ஒன்றனை - ஒருபொருளை. 160. கிளை - கூட்டம். கொண்மூ - மேகமே! விளி. ஏர்பு - எழுந்து. வளைஇ - சூழ்ந்து. முறை - நீதி. சமம் - போர். கழித்துஎறி - உறைகழித்து வெட்டு கின்ற. நளிப்பன - செறிவன. கருவி - தொகுதி. வாளா - பயனின்றி. அரவம் - முழக்கம். அடைச்சி - அணிந்து. தழலை - கவண்; வேறுகூறுவாருமுளர். தட்டை - மூங்கிலை நறுக்கிப் பிளந்து ஒன்றிலே தட்டுவது. புறமுந் தருதியோ - காத்தலைச் செய்வாயோ? உம்மை - அசை. 161. ஆய் - தாய். நுவ்வை - நுந்தங்கை. 162. நோயிலராக என்றதே வாழ்த்தாகும். 163. இது என்னநூலிற் செய்யுளென்பது தெரியவில்லை. 164. வையினர் - இறந்துபட்டு வருந்தந்தீராமல் என்னை வைத்து என்பது கலியுரை. 165. ஊர் ஆண்மை - ஊரையாளுந்தன்மை. படிறு - கொடுமை. 166. தீவிய - இனிய. யாங்குஅறிகோ - எப்படி அறிவேனோ. அலர் - பலரறிந்த பழிமொழி. 167. உறலியாம் - தன்னோடு உறுதற்குரிய யாம். துருத்தி - ஆற்றிடைக்குறை. 168. நிம்பிரி - பொறாமை. 169. பிரசம் - தேன். கலம் - பாத்திரம் (கிண்ணம்). ஒக்கல் - ஓச்சல். பரீஇமெலிந் தொழிய - (செவிலியர் பற்றமுடியாமையால்) வருந்தி மெலிந்தொழியுமாறு. பரீஇ - ஓடியுமாம். யாண்டு - எப்படி. வறன் - வறுமை. உள்ளாள் - நினையாளாய். பொழுதுமறுத்துண்ணல் - ஒருபொழுதின்றி ஒருபொழுதுண்ணல். மதுகை - வன்மை. 170. இது - இச்சூத்திரப்பொருள். 171. மக - பிள்ளை; சிறுவன் அவனுக்குக் குடுமி உச்சியிலிருப்பது போல மாவுக்கும் உச்சியிற் குடுமி உள்ளதாதலின் மா குடுமித்தலைய என்றார். குடுமி - உளை; தலையாட்டம். 172. காப்பாளனனன் - காப்பாளைப்போன்றவனாய். காப்பு ஆள் - காவல் புரியும் ஆள். தூவல் - மழை. தொடலை - தொடுக்கப்பட்டது. தொடுக்கப்பட்டதாகிய வாள் என்க. பனி - குளிர்ச்சி. 173. பிற என்றது என்னை என்றலன்றி எந்தை எனவுங் கூறன் முதலியவற்றை. 174. உட்கு - அச்சம். பொறிநுதல் வியர்த்தல் - ஒரு மெய்ப்பாடு; மெய்ப் பாட்டியல் 12ஆம் சூத்திரநோக்கியறிக. பிழம்பு - வடிவு. 175. இசையாமை - உடன்படாமை. 176. எழுச்சி என்றது வளர்ச்சியைக் குறிக்கின்றதுபோலும். பின் எழில் என்பதில் அங்ஙனம் எனச் சுட்டலின். 177. சாயல் - மென்மை (தொல். உரி. 4). 178. புரை - ஒப்பு. 179. உரு - அச்சம். 180. வெறுத்த - செறிந்த. இது செறிவு. 181. இது கற்பிற்குதாரணம். 182. வெள்ளைமை - அறிவுமுதிராமை. 1. சிறுபொழுதாராய்ச்சி நாம், செந்தமிழ்த் தொகுதி 26, பகுதி 2ல் சிறுபொழுது என்னும் ஒரு விஷயம் எழுதினேம். அதற்கு மறுப்பாகச் செந்தமிழ் தொகுதி 29, பகுதி 5ல் ஸ்ரீமத். சி. வீரபாகுப்பிள்ளையவர்கள் சிறு பொழுதாராய்ச்சி என ஒரு விஷயம் எழுதி வெளிப்படுத்தியிருக் கிறார்கள். அவ்வாராய்ச்சி ஸ்ரீ சிவஞான சுவாமிகள் கருத்தைத் தாபிக்க வந்ததே. எமக்குச் சுவாமிகளிடத்திற் காய்வும். இளம்பூரணர் நச்சினார்க் கினியரிடத்தில் உவப்பும் இல்லை. தமிழுலகிற்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று எம்மால் அவ்விஷயம் எழுதப்பட்டதன்றிப் பொழுது போக்கிற் காக எழுதப்பட்ட தன்று. பிள்ளையவர்களோ, சுவாமிகள்மீது கொண்ட உவப்புக் காரணமாக உண்மையை மறைத்துத் தமது சொல்வன்மை யானே மெய்ம்மைகாட்டி அவ்விஷயத்தை எழுதியுள்ளார்கள். அங்ஙனம் எழுதியுள்ளார்கள் என்பது அவ் விஷயத்தைப் படித்த அறிஞர்க்குணராதே போகாது, எனினும், ஆழ்ந்து நோக்காதார்க்கு அஃதும் உண்மைபோலக் காணப்படு மென்பதுபற்றி, இன்னுமொருமுறை யாம் அதனை ஆராய்ந்து காட்ட வேண்டியதாயிற்று. நிற்க. நாம் எழுதிய சிறுபொழுது என்னும் விஷயத்தையும் பிள்ளையவர்கள் எழுதிய சிறுபொழுதாராய்ச்சி என்னும் விஷயத்தையும் படித்தவர்களுக்கு, விஷயத் தொடக்கம் இன்னது என்பது விளங்குமாதலின், அவ்விஷயத் தொடக்கத்தை யாம் ஈண்டு எடுத்துக்கூறாது. பிள்ளையவர்களின் ஆராய்ச்சியுள் வேண்டியவற்றை மாத்திரம் எடுத்துக்காட்டி மறுத்து உண்மையை நாட்டுதும். பிள்ளையவர்கள் இவ்விதம் ஸ்ரீ சுவாமிகள் இளம்பூரண ரையும் நச்சினார்க்கினியரையும் மறுத்துச் சிறுபொழுதைந்து என்று கூறிவிடவே சிறுபொழுதாறென்பது பழங்கதையாய் விட்டது என்றார்கள். சுவாமிகளிடத்திலுள்ள உவப்போடு நோக்குவார்க்குச் சிறு பொழுதாறென்பது பழங்கதையாவதன்றி, ஏனை அறிஞர்க்கு அது பழங்கதையாகுமா? முன்னோர் கூறிய உண்மை நூல்களைப் பழங்கதை என்று கூறப்புகுந்த இக்காலத்துப் பிள்ளையவர்கள் சிறுபொழுதாறென்பது பழங்கதையாய்விட்டது என்று கூறுவது ஒரு நூதனமன்று. பிள்ளையவர்கள், இளம்பூரணருரைப்பதிப்பில், வைகறை விடியல் என்றிருப்பது, நச்சினார்க்கினியர் காலம் வரையும் வைகுறுவிடியல் என்று தானிருந்திருக்கிறது என்றும், அதற்குக் காரணம் நச்சினார்க்கினியர் தமக்குச் சாதகமாக இருக்கும் வைகறை விடியல் என்னும் பாடத்தை எடுத்துக் கொள்ளா மையே என்றும், பின் வைகறை விடியல் என்னும் பாடம் ஏடு எழுதுவோரால் திருத்தப்பட்டதென்றும் கூறுகிறார்கள். நச்சினார்க்கினியர் வைகறை விடியல் என்னும் பாடத்தை எடுத்துக் கொள்ளாமையால், இளம்பூரணர் கொண்ட பாடமும் வைகுறு விடியல் தான் எனின், நச்சினார்க்கினியர் வைகறை விடியல் எனப் பாடாந்தரம் கொண்டதற்குக் காரணமின்று. ஆகையால் நச்சினார்க் கினியருக்கு முன்னேயே இரண்டு பாடமும் இருந்ததென்பது துணிபேயாம். ஆயின் இளம்பூரணர் வைகுறு விடியல் எனவும் பாடம் என்று கூறவில்லை. ஆதலால் அப்பாடமே ஐயமாகின்றது. அகப்பொருள் விளக்கப் பழைய வுரையிலும், இறையனாரகப்பொருளுரையிலும், வைகறை விடியல் என்றே பிரமாணங் காட்டப்பட்டதனாலும், வைகறை விடியல் என்பதே உண்மைப்பாடமென்பது துணிபாம். பிள்ளை யவர்கள், இறையனாரகப் பொருளிலுள்ள வைகுறு விடியல் என்னும் பாடத்தை, யாம் பட்டதாரிகள் போலத் திருத்தி விட்டேம் எனக் குறை கூறிய துணிபு மிக வியக்கத்தக்கது. ஸ்ரீமான் தாமோதரம்பிள்ளை யவர்களால் சுபானு வருடத்துச் சித்திரை மாதத்திற் பதிப்பித்த பதிப்பைப் பிள்ளையவர்கள் நோக்கியிருப் பார்களாயின், அவ்வாறு குறைகூறமாட்டார்கள். அதுவே முதற் பதிப்புப் போலும். வைகுறு விடியல் எனக் காணப்படும் பாடங்கள், பின் புத்தகம் பதித்தோரால், நச்சினார்க்கினியர் பாடத்தின் படி திருத்தப்பட்டனவேயாம். நச்சினார்க்கினியர், மற்றவர்கள் சொல்வதைவிடத் தாம் புதிதாக ஒன்று சொல்வதில் விருப்பமுடையராதலால், இளம் பூரணருக்கு மாறாக வைகுறு விடியல் என்னும் பாடத்தை எடுத்துக் கூறி விளக்கியிருக்கலாமென்பதே எமது கருத்து. அன்றியும், வைகுறு வைகறை என்னும் இருசொற்களின் பொருளையும் அவர் விளக்கியே சேறலின், சொல்லின் பொருளை விளக்குதற்கு அவ்வாறு கூறினாரென்று கொள்வதன்றி வேறுகோடல் பொருந்தாதென்க. குற்றியலுகரப் புணரியலில், அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் - எல்லா விறுதியு முகர நிறையும் என்று இளம்பூரணர் கொண்ட பாடத்தை, நச்சினார்க்கினியர் நிலையும் என்று பாடங் கொண்டமைபற்றி, நச்சினார்க்கினியர் காலம் வரையும், நிலையும் என்றுதானிருந்தது. பின் நிறையும் என்றும் திருத்தப்பட்டது என்று கொள்ள முடியுமா? ஆதலின் அக்காரணம் பொருந்தாது. ஆகையால் நச்சினார்க்கினியர், வைகுறு விடியல் என்னும் பாடத்தையே தாம் கொண்டு, இளம்பூரணர் பாடத்தைப் பாடாந்தரமாகக் கொண்டார் என்பதே துணிபாம். பிள்ளை யவர்கள், வைகுறு விடியல் என வரும் இலக்கியப் பிரயோ கங்களை நோக்கித் தங்கருத்திற கேற்ப வினைத்தொகையாக்கற்கே வைகுறு விடியல் தான் இளம்பூரணர் பாடமும் என்றதன்றிப் பிறிதொன்றன்று. இனிப் பிள்ளையவர்கள், வைகுறு விடியலை உம்மைத் தொகையாகக் கோடல் பொருந்தாதென்கிறார். பிள்ளை யவர்கள் கூறியவாறு வைகுறுதல் - கழிதல் எனக்கொண்டு கழிதலுறுவது என்னும் பொருளில் வைகறைக்கும் வரும் என்பது துணிபாம். அது, வைகுறுமீன் (அகம். 17) என்பதற்கு, விடிகின்ற காலத்து மீன் என்றே உரைகாரர் பொருள் கூறலானு மறியப்படும். ஒளி குறைந்த இலவம் பூக்களுக்கு விடியற்காலத்து (வைகறை) மீனும் ஒளி குன்றல் பற்றி உவமையாக ஆசிரியர் கூறினார். பெரும்பாணாற்றுப் படையிலே, பொற்குழை ஒளி குறைந்து விளங்கல் பற்றி, வைகுறு மீனிற் பையத் தோன்றும் (318ம் அடி) என, விடிகின்றகாலத்து மீனே யுவமை புணர்க்கப்பட்டது. நச்சினார்க்கினியர் வைகுறு மீன் என்பதற்கு. விடிதற்குக் காரணமாகிய வெள்ளியாகிய மீன் என்று பொருள் கூறுகின்றனர். ஆண்டும் ஒளி குறைதற்கே உவமையாதலின், விடிகின்ற காலத்து மீன் என்றலே பொருத்தமாம். வெள்ளியாகிய மீனென்றல் பையத் தோன்றும் என்பதற்கு அவ்வளவு பொருத்தமுடையதன்று. நற்றிணை உரை யாசிரியரும், வைகுறு மீன்(48) என்பதற்கு விடியற்காலத்து மீன் என்றே பொருள் கூறுகின்றனர். இங்ஙனம் வைகுறு விடியற்கும் பெயராய் வருதலின் வைகுறு விடியல் என நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்திற்கும் வலிந்து கொள்ளாது, இடம் நோக்கி வைகுறுவும் விடியலும் என்று உம்மைத் தொகையாகவும் பொருள் கொள்ளலாமென்பது துணிபு. வைகுறு விடியல் என்பதை வைகறைக்குக் கொள்ளுங்கால் வைகுறுவாகிய விடியல் எனவுங் கொள்ளலாம். இங்ஙனமாக வைகுறு விடியல் என்பதைப் பண்புத் தொகையாகவும் உம்மைத் தொகையாகவுங் கோடல் பொருந்தாதென்பது எவ்வாறு பொருந்தும்? வைகறை விடியல் என்பதும் அங்ஙனம் இடம் நோக்கி இரு தொகையாகவுங் கொள்ளப்படும். இனி, உலகவழக்கிலாகட்டும் செய்யுள் வழக்கிலாகட்டும் இரவு, முதல்யாமம், இரண்டாம் யாமம், நடுயாமம், நான்காம் யாமமென, நான்கு பிரிவாகவே பிரிக்கப்படுகின்றது. மாங்குடி மருதனார் தமது மதுரைக்காஞ்சியிலே இரவை நான்குகூறாகப் பகுத்து வருணித்திருப்பதும், அதனுரையிலே நச்சினார்க்கினியர் இரண்டாம் யாமத்திற்கும் நான்காம் யாமத்திற்கும் நடுவிடத்த தாகிய தெய்வங்களுலாவும் செயலற்ற கங்குல் என்பதும் நாங் கூறியதை உறுதிப்படுத்திவிடும் என்றார்கள். இரவை நான்கு கூறாகப் பிரிப்பது வடமொழி வழக்கு மூன்று கூறாகப் பிரிப்பது தமிழ் வழக்கு. நச்சினார்க் கினியருரைப் படி மாங்குடி மருதனாரும் கருதிப் பாடினார் என்பது உண்மை யாயின் அது வடமொழி வழக்கேயாம். கனாநூல் முதலியவையு மன்னவேயாம். தமிழ் வழக்கு மூன்றே. அது, பொருளிலக்கண நூல்கள் அவ்வாறே கூறுதலானறியப் படும். மாலை யாமம் வைகறை என்று அகப்பொருள் விளக்கமே கூறுகின்றது. அதுவே பிரமாணமாம். அன்றியும், அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலியவற்றிலும் யாமம் ஒன்றாகவே கூறப்படுகின்றது. பானாள் என்றும், அரையிருள் என்றும், நள்ளென் யாமம் என்றும், நடுயாமம் என்றும், இப்படியே வருகின்றன. முதல் யாமத்திற்கு யாம் பிரமாணங் காட்டாமல் விட்டது சிந்திக்கத்தக்கது என்கிறார்கள். இளம்பூரணர், சேனாவரையர் முதலியோரும் உதாரணம் வந்தவழிக் காண்க என்கிறார்கள்; அங்ஙனம் வருதலால் அவர்கூற்றுப் பிழையாகுமா? இலக்கியம் இறந்து பட்டிருக்கலாம். அல்லது பாடாமல் விட்டிருக்கலாம். முதல் யாமத்திற்கு யாம் மேற்கோள் காட்டாமைபற்றி அஃது இல்லை யென்பது கருத்தாகுமா? பகலானது எப்படித் தமிழ் வழக்குப்படி முற்பகல், நடுப்பகல், பிற்பகல் எனப் பிரிக்கப்படுமோ அப்படியே இரவும் முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு எனப் பிரிக்கப்படு மென்பது தானே போதராதா? ஆகையால், சிலப்பதிகாரம் கூறும் அரையிருள்யாமம் என்பதும், பட்டினப்பாலையில் வரும் கடைக் கங்குல் என்பதும் முறையே இடையாமத்தையும் பின்னிரவையும் குறிக்கு மென்பது திடம். வைகறையும் கடைக் கங்குலும் ஒன்றாம். நச்சினார்க்கினியர் கடைக்கங்குல் - விடியல் என்றதும் பின்னிரவாகிய வைகறையையே. சிலப்பதிகாரத்தில் அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ் சார் என்பதற்கு உரைகாரர், நான்குயாமம் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு அரையிருள் யாமம் உம்மைத்தொகை என்றும், அரையிருள் இரண்டாம்யாமமென்றும், பகல் நடுயாம மென்றும், நலிந்து பொருள் கொள்கின்றனர். பழைய உரை யாசிரியரோ, அரையிருள் யாமத்தும் ஒரு மாத்திரைப் பொழுதும் என்றும் பொருள் கூறுகின்றனர்; ஆதலின் பழைய உரைப்படி நடுயாமமாகிய ஒருபொழுதே கொள்ளப்படுதலின், இரவும் மூன்று பிரிவையுடையதென்பது துணியப்படும். இங் ஙனமே மதுரைக்காஞ்சியிலும், நச்சினார்க்கினியரும் அடிகளைப் பிரித்துக் கூட்டி, நலிந்து நான்குயாமம் கொள்கின்றனர். பாட்டின் படி மூன்றுயாமங் கொள்ளலாகும். அதனைக் காலம் வாய்த்துழிக் காட்டுதும். ஈண்டு விரிப்பிற் பெருகும். இனி, நளவெண்பாவிலே, புகழேந்திப்புலவர், மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை யந்திப் பொழுது. என்று மாலை கூறிப் பின், ஊக்கிய சொல்ல ரொலிக்குந் துடிக்குரலர் வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க இடையாமம் காவலர்கள் போந்தா ரிருளின் புடைவா யிருள்புடைத்தாற் போன்று. என்று இடையாமம் கூறிப் பின், பூசுரர்தங் கைம்மலரும் என்னுஞ் செய்யுளில், புலர்ந்ததே யற்றைப் பொழுது என வைகறையுங் கூறுவர்; ஆதலானும் தமிழ் வழக்கின்படி. இரா மூன்று பிரிவுடைய தென்பதே திண்ணம். இனிப் பிள்ளையவர்கள், பூசாகாலங்கள், உழாபூசை, சிறுகாலைச் சந்தி, காலைச்சந்தி, உச்சிக்காலம், சாயரக்ஷை, அர்த்த சாமம் என ஆறாகப் பகுக்கப்படுகின்றன. ஆனால், உழாபூசை முதல் உச்சிக் காலம்வரை நான்குகாலமும் பகற் பன்னிரண்டு மணியோடு முடிகின்றன. மீதம் இரண்டுகாலம் மாலை இரவு என்னும் இரண்டிலும் நடக்கும். இவை ஒரு நாளைப் பப்பத்து நாழிகையாக ஆறுகூறாக்கிச் சிறுபொழுது ஆறு என்று கூறுவதை எவ்வாறு வலியுறுத்தும் என்கின்றனர். நம்மூரிலுள்ள கோவில்களில் பூசாகாலம், உஷாகாலம், காலைச்சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாங்காலம், அத்தசாமம் என்று ஆறாக வழங்குகின்றன. இவற்றுள், உஷா காலம் வைகறையையும், காலைச்சந்தி விடியலையும், உச்சிக் காலம் நடுப்பகலையும், சாயரட்சை எற்பாட்டையும், இரண்டாங் காலம் மாலையையும், அர்த்தசாமம் நள்ளிரவையுங் குறித்து வைக்கப்பட்டனவாகும். இவை இப்படி வழங்குவதை யாழ்ப் பாணம் வண்ணை வயித்தீசுரன்கோவிலில் விசாரித்தறியலாம். பிள்ளையவர்கள் கூறிய சிறுகாலைச்சந்தி, காலைச்சந்தியுள் அடங்குமாதலின், அஃது அதிக பூசையாம். யாம் முற்கூறிய பூசையே தமிழ்க் காலவகுப்போடு ஒத்திருக்கின்றன. இன்னும் பகலைப் பிராதக்காலம், சங்கமகாலம், மத்தியான்ன காலம், அபரான்னகாலம், சாயங்காலம் என ஐந்தாக வகுப்பது முண்டு. இவையெல்லாம் வடமொழி வழக்கேயாம். ஆதலால், ஆறு காலமாகக் கொள்வது தமிழ் வழக்கே என்பது இதனானும் அறியலாம். திருவாரூர், வயித்தீசுவரன்கோவில் முதலிய இடங்களிலும் யாம் கூறியவாறு ஆறுகால பூசையே நடப்பது எனக் கேட்டுள்ளோம். இனிப்பிள்ளையவர்கள், இரவிற் பத்து நாழிகை மாலை; அஃதாவது ஆறுமணி முதற் பத்துமணிவரை மாலைப்பொழுது. இது எவ்விதம் - பொருந்தும்? சூரியாதமனத்துக்கும் இரவுக்கு மிடைப்பட்ட காலமே மாலை என்பதைக் காட்டுகின்றன.... அப்பொழுது செவ்வானமுடைமையும். சிறிது நேரமாதலையும் தெரிவிக்கும் என்கிறார்கள். சூரியாதமனத்தின்மேல் சூரியோதயம் வரையுமுள்ள காலமே இரவு எனப்படும். இவ்விரவின் முற்பகுதியே மாலை. அதனை வருணிக்குங்கால் பெரும்பாலும் சிறப்பு நோக்கி அந்தி மாலையை எடுத்து வருணிப்பதே ஆசிரியர் வழக்கு. அதுபற்றி மாலை சிறிது போதென்றலும் இரவின் வேறென்றலும் பொருந்தாது. இனிப் பிள்ளையவர்கள் இருள்வர மாலை வாள்கொள என்று வருணிக்கப்பட்டதென்றும், மயங்கிரு டலைவர - வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை என்று மாலையின் பின்னந்தியே பகலுக்கு வரவு எனப்பட்டது என்றுங் கூறினார்கள். இக்கூற்று, எவ்வளவு சாதுரியமாக இருக்கின்றது. ஆசிரியர் பகற்கு வரம்பு மாலை என்றது. சூரியாதமனத்தின் பின் மாலையே யாதலின் மாலையின் தொடக்கமே எல்லையென இவர் பின்னந்தி என்கிறார். முன் தாமும் சூரியாதமனத்தின்பின் மாலை எனக் கூறி ஒப்புக் கொண்ட பிள்ளையவர்கள், பின் மாலையின் பின்னந்தி பகற்கு வரம்பு என்பது பொருத்தமுடைத் தன்று. எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருண்மாலை என்பதன் பொருளை நச்சினார்க்கினியர் உரைநோக்கியுந் தெளியலாம். மருண்மாலை என்பதற்கு மயக்கத்தைத் தரும் மாலை என்பது பொருளன்றி வேறன்று. சூரியனதமித்த அந்திமாலையிலேயே இருள் வரத் தொடங்கிவிடும். ஆதலின், இருடலைவர வென்றார். அதுபற்றியே கம்பரும் விரிமலர்த் தென்றலாம் என்னுஞ் செய்யுளில், எரிநிறச் செக்கரு இருளுங் காட்டலால் என்றும் கூறினார். அந்திமாலையின் பின்வரு மிருளெனில் அந்திமாலைக் குவமையாகக் கருநிறத்தைக் கூறுதல் பொருந்தாதாகும். அங்ஙனேல், பகலுக்கு மிரவுக்கு மிடையே யுள்ள அந்தி மாலையைச் சிவனுக்கும் உமைக்கும் நடுவிலிருக்கும் குமரனுக்கு உவமை கூறியது எற்றெனில், செவ்வானந் தோன்றும் அவ்வளவு நேரத்தை நோக்கியேயாம். ஆதலின், அந்திமாலை இரவின் வேறன்று. அதமனந் தொடங்கி முப்பது நாழிகையும் இரவென்பது யாவர்க்குந் தெரிந்த தொன்றே. இதுமட்டா! பிள்ளையவர்கள், மாலைமதியமென்பது மாலையிற்றோன்றிய மதியமென்பதல்லது வேறொன்றல்ல; ஆதலால், மாலை சிறிது நேரமென்பது பெறப்படும் என்னுங் கருத்தோடு உரை விரிக்கின்றார்கள். மாலையிற் றோன்று மதிய மென்பதனால் மாலை சிறிதுபொழுது என்பது எவ்வாறு பெறப்படும்? காலையிற் றோன்றுஞ் சூரியனென்றாற் காலை சிறிது போழ்து என்பது பெறப்படுமா? இரவிற்றோன்றுஞ் சந்திரன் என்றால் இரவு சிறிதுபோழ்து என்பது பெறப்படுமா? இவை போலவே மாலைமதியம் என்பதும் மாலை மதிய மென்றால், மாலையின் முற்பகுதியிற் றோன்றும் சந்திரன் என்பது கருத்தாகுமன்றி, மாலை பின்னில்லை என்பதைக் காட்டாது. பூரணைக் காலத்திலே பொழுதுபட அல்லது பொழுதுபட்ட பின்றோன்றுஞ் சந்திரனுடைய கிரணங்கள், அந்திமாலையிலே சரியாக விளங்கித் தோன்றாது. மாலையின் பிற்பகுதியிலேயே விளங்கித் தோன்றும். அப்பொழுதே நிலவு உண்டாம். இனி, பிறையின் நிலவுப்பயன் கொள்ளவும் சதுர்த்தி அல்லது பஞ்சமி யிலேதான் முடியும். இக்காலத்தை நோக்கியே வினைமுற்றிமீளும் தலைவன், பாகனை நோக்கி (அகம் 54) கடவுக் காண்குவம் பாக மதவு நடை என்னும் செய்யுளில், மாலையிலே - தன் மனைவி சந்திரனை நோக்கி, முகில்நிலாத் திகழ்தரு மூவாத் திங்களே என விளித்து, என் மகனொற்றி, வருகுவையாயிற் றருகுவென் பாலென என்று தன் மனைவி பொய்க்குநிலை கூறுகின்றான். இங்ஙனம் கூறுவது மதியம் தோன்றிய பின்னும் மாலையுள்ள தென்பதைக் காட்டாதா? இன்னும் உதயணன் காதையிலும், இப்படியே அந்திமாலை வருணனையிலே, குடைவீற்றிருந்த குழவிபோலச் செங்கோட்டி ளம்பிறை செக்கர்த்தோன்றி மதர்வையோர்கதிர் மாடத்துப் பயன்றர - பொய்ந்நொடி பகரவும், என்பதும் இதனை வலியுறுத்தும். இனி நளவெண்பாவிலே, கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல் உருவிப் புகுந்ததா லூதை - பருகிக்கார் வண்டுபோ கட்ட மலர்போன் மருண்மாலை உண்டுபோ கட்ட உயிர்க்கு என்னுஞ் செய்யுளில் மருண்மாலை உண்டுபோகட்டவுயிரை, நடுயாமத்தில் ஊதை உருவிப்புக்கது எனக் கூறுமாற்றானும், மாலை 10 மணி வரையுள்ள காலம் என்பது பெறப்படும். இன்னும் பிள்ளையவர்கள் கருத்தின்படி, முதல்யாமம் 7 ½ நாழிகையாகும். அம் முதல் யாமமே மாலை யாமமுமாம். மதுரைக் காஞ்சியிலே, பகலுருவுற்ற இரவுவர - மாலை-நீங்க என்பது, இரவு வரும்படி மாலைநீங்கலால், முந்தையாமம் கழிந்தபின்றை என முடிதலால், மாலையாமமே முந்தையாமமாம். அது மாலை யாமம் என்ற பெயரானும் பெறப்படும். நான்காம் யாமமாகிய வைகறை யாமத்தையும் பிள்ளையவர்கள் 7½ நாழிகையென்று கூறியிருக்கி றார்கள். அங்ஙனமாக இங்கேமாத்திரம் மாலை சிறிதுபொழுது எனக்கூறுவது பொருந்துமா? பிள்ளையவர்கள் கருத்தின்படி மாலையாமம் ஒன்பது மணி வரையாகின்றது. அப்பால் 1 மணி கூட்டிப் பத்துமணியென்றால் பிள்ளை யவர்களுக்குப் பொருந்தாதாம்; பால் கறக்க முடியாது; மின்சார விளக்கு வேண்டும் என்பது அறிஞரை மயக்கமாட்டாது. இனிப் பிள்ளையவர்கள் வைகறையும் விடியலும் ஒன்றெனப் பல உதாரணங்கள் காட்டுகிறார்கள். யாம் வைகறை வேறு; விடியல் வேறு என்று கூறியதன்றி, வைகறைக்கு, விடியல் என்று பெயரில்லையென்று மறுக்கவில்லை. இது, இருள் புலர்காலமாதல் பற்றி, வைகறையையும் ஒரோவழி விடியல் என்று கூறுவதுபற்றி, விடியல், வைகறையாகாதென, யாமே சிறுபொழுது என்னும் அவ் விஷயத்திற் கூறியிருத்தலால் அறியப்படும். வைகறைக்கு விடியல் என்று பெயர் வருவதால், விடியல் என்பது, நாள்வெயிற்காலையன்று என்பது போதராது. இதற்கு, குறிஞ்சிக்கலியுள் வரும், விடியல் வெங்கதிர்காயும் (45) என்பதே தக்க பிரமாணமாம். தாம் பிடித்ததையே சாதிக்கும் பொருட்டு, அவ்வடிக்கு விடியற்பின்னர்த்தாக்கிய வெங்கதிர் எனப் புரட்டிப் பொருள் கூறியதனால் அதனை அறிஞர்கள் ஒப்புவார்களா? சுவாமிகள் கூறிய பொருளை நோக்கும்போது, விடியல் என்னுஞ் சொல் பயனின்றி நின்று வற்றுகின்றதன்றோ? இது, பாடிய புலவனுக்கு அறியாமையை விளைவிப்பதன்றோ? ஏனெனின்; காலை வெங்கதிர் எனப் பாடமுடியாது. விடியற் பின்னர்த்தாகிய வெங்கதிர் என்னும் பொருள்பட, விடியல் வெங்கதிர் எனப் பாடினான் எனப் புலப்படுத்தலின். இங்ஙனம் புரட்டிக் கூறியது சுவாமிகளுடைய சாதிப்பை யுணர்த்துமோ? புலவனுடைய அறியாமையை யுணர்த்துமோ? அறியேம். இதனை, அறிஞர்கள் இதுவரை சிந்தித்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேம். இன்னும், விடியல் என்பது நாள்வெயிற் காலைக்குப் பெயராதலை, அகநானூற்று 63ஆம் செய்யுளில், கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி மூடங்குதா ளுதைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயி லெறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூட் சேவல் சிறுபுன் பெடையொடு குடையு மாங்கண் என்பதில், விடியலில் வெயிலெறிப்பக் குறும்பூழ்ச்சேவல் பேடையொடு பூழியிற் குடையுமாங்கண், என வருதலாற் காண்க. வெயிலெறிப்பக் குடையும் என்றது. மண் இளகுதலின்றிக் காய்ந்து புழுதியானபின் குடையும் என்றபடி முற்கூறிய செய்யுளும் இதுவும் நாள்வெயிற்காலையே விடியல் என்பதை வெள்ளிடை மலைபோலக் காட்டவில்லையா? இங்கும் விடியலின் பின்னர் விரிந்து வெயிலெறிப்ப எனப் புரட்டிவிட்டால் நாம் விழிக்க வேண்டியது தான். வெங்கதிர் தோன்றி விடிந்ததை யன்றே என்பது யாம் முன்னர்க் காட்டியதோர் உதாரணம். அதனைப் பிள்ளையவர்கள் சுவாமிகளிலும் பெரும்புரட்டாகப் புரட்டுகிறார்கள்; வெங்கதிர் தோன்றி விடிந்தது என்பதில் தோன்றி, என்னுஞ் செய்தெனெச்சம் பிறவினையோடு முடியாதாகலின் தோன்றும்படி விடிந்தது என்கிறார்கள். அங்ஙனேல், கதிர்தோன்றல் விடிதற்குக் காரண மன்று. விடிதலே தோன்றுதற்குக் காரணமென்பதாகின்றது. இந்த விநோதத்தை அறிஞர்கள் நன்கு சிந்திப்பார்களாக. பிள்ளை யவர்கள் தோன்றி என்னும் செய்தெனெச்சம் ஏதுப் பொருட்டாய் நின்று தோன்றுதலால் விடிந்தது எனப் பொருள்படும் என்பதை அறிந்தும், தோன்றும்படி விடிந்தது எனப் பொருள் கொண்டதே அவர்கள் முரணுறுதலை நன்கு விளக்கிவிட்டது. ஐங்குறுநூற்றில் கொடிப்பூ வேழந் தீண்டியயல - வடிக்கொண்மாஅத்து வண்டளிர் நுடங்கும் - மணித்துறை யூரன் என்பதில், தீண்டி என்பது தீண்டுதலால் என ஏதுப் பொருட்டாய் நின்று நுடங்கும் என்பதனோடு முடிந்தது போல, இதுவும் முடிந்தது என்க. ஆதலால், நாம் முன்னர்க் காட்டிய அச்செய்யுளிலுள்ள விடிந்தது என்பதும் நாள் வெயிற் காலையையுணர்த்தல் மலை விளக்கேயாம். தொன்னூல் விளக்கத்திலும் வீரமாமுனிவர் விடியலை எற்றோற்றம் என்பர். இன்னும், உதயணன் காதையில் வரும், கடுங்கதிர்க் கனலி கால்சீத் தெழுதர - விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென என்பதுமது. இன்னும், இராமாவதாரத்துச் சூர்ப்பநகைப் படலத்தில் வரும், ஆன்ற காத லஃதுற வெய்துழி மூன்று காலமு மூடு மரக்கராம் ஏன்ற காரிரு ணீக்க விராகவன் தோன்றி னானென வெய்யவன் தோன்றினான். எனக் கூறியபின், விடியல் காண்டலி னீண்டுதன் னுயிர்கண்ட வெய்யாள் எனக் கூறலின் விடியல் என்பது நாள்வெயிற்காலை என்பதைக் கரதலாமலகம் போல விளக்கல் காண்க. இன்னம் இராமாவதாரத்து யுத்த காண்டத்திலே, இரவிற் சென்ற அநுமன் மேருவுக்கப்பாற் சென்றபோது சூரியனைக் கண்டு, உதயமா யிற்று; விடிந்தது என மயங்கினானென்றும் அத்தடங் கிரியை நீங்கி அத்தலை யடைந்த வண்ணல் உத்தர குருவை யுற்றா னொளியவன் கரங்க ளூன்றிச் செற்றிய விருளின் றாக்கி விளங்கிய செயலை நோக்கி வித்தகன் விடிந்த தென்னா முடிந்ததென் வேக மென்றான். என்றும், பின், சூரியன் மேற்றிசையிற்றோன்றுகின்றான்; ஆதலால் விடிந்ததுமன்று. இது மேருவுக்கிப்பால் வந்ததன் காரணமென்று துணிந்தான் என்க. காற்றிசை சுருங்கச் செல்லுங் கடுமையான் கதிரின் செல்வன் மேற்றிசை யெழுவா னல்லன் விடிந்தது மன்று. என்றுங் கூறுதலானும், சூரியோதயமே விடியல் என்பதைப் பிள்ளையவர்கள் சொல்லியவாறு சீமைரசம்பூசிய கண்ணாடி போற் காட்டிவிடுகின்றது. இச் செய்யுளில் அனுமன் சூரியன் மேற்றிசையில் உதிப்பவனல்லன்; ஆதலால் விடியவில்லை, என்பதனால் விடியல் வைகறையன்றென்பதை நன்கு விளக்கி விட்டது. ஆதலால்; விடியல் - சூரியோதயமே என்று முன்னரி னுந் தடித்த எழுத்தில் யாம் எழுதுதற்கும் யாதொரு தடை யின்மையுங் காண்க. இங்ஙனமாகப் பிள்ளையவர்கள், ஐயரவர் கள் விடியல் சூரியோதயமென்று கூறியது காக்கையை வெள்ளை போலு மென்றதும் வியக்கத்தக்கது. இன்னும் பெருந்தேவனார் பாரதத்துள், தாழ்வரை யினுச்சி, வலந்திரிவான் றோன்றினான் வந்து எனக் கூறிப் பின், மால்களிறும் பாய்மாவும் என்னுஞ் செய்யுளில், வெங்களங் கைக் கொண்டார் விடிந்து எனக் கூறியதூஉம். விடியல் - சூரியோதயமே என்பதைச் சிலையிலெழுத்தாக நாட்டுதல் காண்க. சூரியோதயத்தின் பின்னேயே போர்க்குச் செல்வதை, பைய விருளோடிப் பாய்கதிரோன் பொற்கடலில் வெய்ய கதிர்தோன்றி விட்டெறிப்ப - வெய்யமுனைப் போர்வேந்த ராகத்துப் போர்க்களங்கைக் கொண்டார்கள் பார்வேந்த ரெல்லாம் பரந்து. என்பதனால் நன்கு தெளியப்படும். இன்னும், இப்படிப் பல செய்யுள் அந்நூலுள் வருகின்றன. அவற்றையும் நோக்கிக் கொள்க. இராமாவதாரத்தினும், கதிரவனுதயஞ் செய்தான் என்று கூறிப் பின், வளைத்தனர் விடியத் தத்தம் வாயில்க டோறும் வந்து எனக் கூறுதலாலும் காண்க. இனி, வைகறையாமம் என வழங்குவதன்றி, விடியல்யாமம் என வழங்குவதாகவுந் தெரியவில்லை. இங்ஙனமே, விடியல் நாள்வெயிற்காலைக்குப் பெயராதலை நோக்கியே வைகறை விடியல் என்பதற்கு வைகறையும் விடியலும் என இளம்பூரண அடிகளும். வைகுறு விடியல் என்பதற்கு வைகுறுவும் விடியலும் என்று நச்சினார்க் கினியரும் இடம் நோக்கிப் பொருள் கூறினார்கள். செவியறிவுறூஉ, என்பது செவியறிவுறுத்தலை உணர்த்தினாற் போல வைகுறு, வைகுறு தலை யுணர்த்திநின்றது என நச்சினார்க்கினியர் கூறினமையானே வைகுறூஉவிடியல் எனவும் பாடங்கொள்ளலாம். ஒரு, ஒரூஉ எனவும், மரு, மரூஉ எனவும் நின்றாற் போல உறு, உறூஉ எனவும் நிற்கும். மரூஉவும் என்றும், மருவின்பாத்திய என்றும் வருவன வற்றை நோக்குக. வைகறைவிடியல் என்பதற்கு. வைகறை யாகிய விடியல் எனக் கொள்ளில் விடியலோடு சம்பந்தப்படும் ஊடலுக்குப் பொருந்தாதாகலின், அது பொருந்தா தென்க. அன்றியும், மருதத்திற்கு விடியல்கொள்ளும் புறப்பொரு ளோடும் மாறுபடும். ஆதலின், அகத்திணை புறத்திணை என்னும் இரண்டிற்கு மேற்பத் தொல்காப்பியர் கூறிய உண்மைப்பொருளை யுணர்ந்தே உம்மைத் தொகையாக உரைத்தார்கள் என அறிக. இதனை நன்கு ஆராய்ந்துணர்ந்த அறிஞர் புதுப்பொரு ளென்பாரா? ஸ்ரீ சுவாமிகள் கூறியதே புதுப்பொருளாகும். காலநியமங் கூறும் ஒரு சூத்திரத்தின்கண் எடுத்துக் கோடற் கண்ணேயே வைகறை என்றாவது, விடியல் என்றாவது தனித்துக்கூற முடியாமல் வைகறை என்று அடைமொழி புணர்த்தி வைகறை விடியல் என்றார் என்றலும், வைகுறுவென அடைபுணர்த்தி வைகுறு விடியல் என வினைத்தொகையாக்கிக் கூறினாரென்றலும் ஆசிரியர் புலமையை இழிவுபடுத்தலின், உம்மைத்தொகை யென்பதே ஆசிரியர் கருத்தென்பது துணிபாம். ஏனைய பொழுதுகளும் அடையின்றிக் கூறுதலும் நோக்கத் தக்கது. செய்யுளாயின் அடையொடு கூறினாரென்றால் சாலும். இங்ஙனமாகப் பிள்ளையவர்கள் அகப்பொருள் விளக்க நூலாரை இலக்கணவிளக்க நூலார் மறுத்த மறுப்பை மனத்துள் வைத்துக் கொண்டு ஸ்ரீ சுவாமிகள் எழுதிய மறுப்பை மெய் யென்று தாபிக்கப்புகுந்தது பெருந்துக்கமே. இனி, ஊடல் விடியற்காலத்தும் நிகழும் என்பதற்கு நச்சினார்க்கினியர் காட்டிய உதாரணங்கள் இரண்டு. அவை யாவன:- தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின் குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி அணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய. என்பது ஒன்று. இதில் அணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய என்பதற்கு. கமழுமார்பு என்னாது. அணங்குபோற் கமழுமார்பு என்றமையினாலே நாற்றச் செவ்விபெறுதலின். காலை என்றார். நாற்றச் செவ்வி என்றது புதுமணம் என்பதைக் குறித்தது. வைகறையில் விரிந்த புதுப்பூவும் புதுச்சாந்து மணிந்த பரத்தையரைப் புணர்ந்து விடியற்காலத்து வந்தமையின் அங்ஙனங் கூறினாள் என்பது கருத்து. அங்ஙனமாதல் வைகறைக் காலத்து மனைவயிற் செல்லாது இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி அதனினுமமையாது பின்னு மவரைப் புணர்வதற்குச் சூழ்ந்து திரிகின்ற என்னும் இதன்கண்வரும் உள்ளுறையானும் விளங்கும். அங்ஙனேல் மேன் மக்களாதலின் வைகறையில் வருவர் என்பதனோடு மாறுபடாதோ எனின், அது பெரும் பான்மை பற்றிக் கூறியதேயாம். ஆதலின் மாறுபடாதென்பது. அங்ஙனமாகத் தோழி நாற்றத்தால் அறிந்து வைகறையிற் கூறினாளென்றல் பொருந்துமா? அணங்கு போற் கமழும் என்பதில், பச்சைப்படி கூறியது ஒன்றுமில்லை. மற்றொன்று, காலை எழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்க் கழீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் றாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே என்பது. இதன்கண்வரும் காலை என்பது பற்றி நச்சினார்க்கினியர் காலைவந்தது என்று கூறினாரல்லர். யாம் அப்படிக் கூறவில்லை. அங்ஙனமாகப் பிள்ளையவர்கள் வேண்டி யதன்றான பெரிய விரிவுரை நிகழ்த்திக்காட்டுதல் என்னையோ? இதனுள் வரும் எல்லினன்பெரி தென்றமை கொண்டே நச்சினார்க்கினியர் காலையென்றனர். எல்லினன் பெரிதென்ற தற்குப் பொருள் விளக்கமுடையன் பெரிதும் என்று அறியக் கிடந்தது. அவன் வந்த காலையேயாதலின் காலை என்றார். நீராட்டக் கொண்டு போய காலையன்று. எல் - விளக்கம். எல்லே யிலக்கம் என்னுந் தொல்காப்பியத்துச் சூத்திரமும் அதனை வலியுறுத்தும். தலைவன் பரத்தையைப் புணர்ந்து மேனிவிளக்க மின்றி வந்தானாகலின் அங்ஙனங் கூறினாள். இதனை மருதக்கலி 10ஆம் செய்யுளில் வரும் எல்லினை வருதி யெவன் குறித்தனை என்னும் அடியும் அதன் உரையாகிய வதுவையயர்ந்தபின் விளக்கத் தினையுடையை யாய் வாரா நின்றாய் என்பதும் வலியுறுத்தும். இங்ஙனமே களவிற் கூடிவரும் தலைவியைத் தாய் பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென - ஆகத் தரும்பிய கணங்கும் வம்புடைக் - கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி - எல்லினை பெரி தெனக் கூறியதும் இதனை வலியுறுத்தும் என்க. இங்ஙனமாகவும் பிள்ளையவர்கள், எல்லினன் பெரி தென்றதற்குக் குறிப்பாற் சிறுமையுடையன் பெரிதும் எனத் தாமே காலை யென்பதை மறுத்தற்கு, ஒரு புதுப்பொருள் படைத்து மொழிந்து விட்டு ஐயவரவர்கள் புதுக்கருத்தைத் தாபிக்க வந்த தன்று எனப் புதுப்பொருள் கூறலை எம்மேலேற்றுதல் நீதியாகுமா? அறிஞர்கள் இதனைச் சிந்திப்பார்களாக. இன்னும், அகநானூற்று 36ஆம் செய்யுளில், பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி யாம்பன் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்து .................... .................... ...................... ....... நாட்கய முழக்கும் பூக்கே ழூர என்பதன்கண் காலை நிலத்திற் கடையாய் வந்தன்றி, இதன் உள்ளுறையாலும் காலையில் வந்து நாங்கள் நுமது நிறங்கண்டு வருந்த எல்லாருமறியக் கலக்குவான் ஒருவனல்லையோ என அக்காலை நன்கு தோன்றல் காண்க. இனி வைகறைக்கண்ணும், விடியற்கண்ணும் தலைவி ஊடலுற்றுச் சாராதவழிப், பாணன் விறலி முதலியோரை விடுத்து உணர்த்தி, அவ்வளவிலும் உணராதவழி விருந்தொடு புக்கும் உணர்த்துவான் எனப் பொருளிலக்கண நூலுடை யார்கள் கூறலின், ஆண்டும் விடியற்காலம் மருதத்துக்குளதாதல் பெறுது மாதலின், மருதத்துக்குக் காலை யில்லென்றல் எவ்வாறு பொருந்தும். உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது - மிக்கற்றா னீள விடல் என்னும் விதி உடன் உணர்த்த உணருங் காமத்திற்கன்றி, உணர்ப்பு வயின்வாரா ஊடலுக்கன்றாம். உணர்ப்புவயின் வாரா ஊடலும் இருவகைப்படும். ஒன்று விருந்து முதலிய கண்டு தணிவது. மற்றது அதனானுந் தணியாதது. இவை முறையே சிறுதுனி எனவும், பெருந்துனி எனவும்படும். இவற்றுள் முந்திய சிறுதுனி பெருங்கலாம் எனப்பட்டுப் புணர்ச்சிக்கு வேண்டிய தொன்றா கின்றது. இதனையே, வள்ளுவனார், துனியும் புலவியு மில்லாயிற் காமம் - கனியுங் கருக்காயு மற்று என்றதனுள் துனி என்றதூஉம், ஏனைப் பெருந்துனி இன்பந்தாராமையின் அது இன்பத்துக்கு வேண்டப் பட்டதொன்றன்றென்பர் பரிமேலழகர். இதனானே தேவர் கருத்தோடும் மாறுபடாமை யுணர்ந்து கொள்க. காலையில் விருந்து கண்டு ஊடல் ஒளித்தமை கண்ட தலைவன், இன்னும், வருகதில் லம்ம விருந்து என விருந்தினைப் புகழ்ந்து கூறலை, தடமருப் பெருமை மடநடைக் குழவி தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாழை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப் பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய ரந்துகிற் றலையிற் றுடையின ணப்புலந் தட்டி லோளே யம்மா வரிவை யெமக்கே, வருகதில் விருந்தே சிவப்பா னன்று சிறியமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கம்மே. (நற்றி 120) என்பதனானறிக. இது ஒன்றும் காலையில் விருந்தொடுவந்து ஊடல் தணித்தலைக் காட்டாதா? இங்ஙனமே, ஊடல் நீடித்தலும், நீடித்தவழி விருந்து முதலியவற்றாற் றணித்தலும், விடியலில் நிகழ்தல் பற்றியே, இளம்பூரண அடிகளும் தலைவி ஊடலுற்றுச் சாரகில்லாளாம் என்றும் நச்சினார்க்கினியரும் மெய் வேறுபாடு விளங்கக்கண்டு வாயில் புகுத்தலின் என்றுங் கூறினார்கள். கூட்டம் நிகழ்தலின்றோ வெனின், அது இருவருள்ளமும் ஒருப்பட்டவழி, உரியகாலத்தே நிகழும் என்க. இனிப் பிள்ளையவர்கள் நாம், நக்கீரரும், குறுந்தொகை நூலாரும் முறையே, வைகறையுள் விடியலை யடக்கியும், ஏற்பாட்டை மாலையுளடக்கியும் கூறியதாகக் கூறியது தவறு என்றும், சங்கப்புலவர்கள் தாங்கள் பொருள்களை எண்ணிச் செல்லும்போது ஒன்றை ஒன்றுள் அடக்கிக் கூறும் வழக்கில்லை என்றும், அது முரஞ்சியூர் முடிநாகராயர், மண்டிணிந்த நிலனும் - நீரும் எனப் பஞ்சபூதங்களை எண்ணலால் அறியப்படும் என்றும் அதனால் ஒன்றை ஒன்றனுள் அடக்கினாரென்றால் பொருந்தாது என்றுங் கூறினார்கள். அஃதுண்மையே.. நிலமுதலிய ஐந்துந் தனித்தனி பொருளாதலின், அவற்றைச் சொல்லுங்கால் ஒன்றுள் ஒன்றை அடக்கல் முடியாதுதான். காலம் என்பது ஒரு தனிப் பொருளாதலின், அதன் பகுப்புகளுள் ஒன்றை ஒன்றுள் அடக்கிக் கூறலாம். சிலர் குணம் எட்டெனச் சிலர் அவற்றை ஆறுள் அடக்குவர். இந்திரன் வேற்றுமை எட்டெனப் பாணினி விளியைப் பெயருளடக்கி ஏழென்பர். தொல்காப்பியர் தொழின் முதனிலை எட்டென நன்னூலார் ஆறு என்பர். அகத்தியர். ஆலு மானு மொடுவு மோடுவும் சாலு மூன்றாம் வேற்றுமைத் ததுவே செய்வோன் காரணஞ் செயத்தகு கருவி எய்திய தொழின்முத லியைபுட னதன்பொருள் என்று மூன்றாம் வேற்றுமைக்கு நான்கு உருபும், பொருள் ஐந்துங் கூறத் தொல்காப்பியர் மூன்றாகுவதே - ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி - வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே என உருபு ஒன்றும் பொருள் இரண்டுங் கூறுவர். நன்னூலார் பொருளை மூன்றுள் அடக்குவர். ஆதலின் யாமு மங்ஙனே கூறினாம். அங்ஙனமாகப் பிள்ளையவர்கள், ஒன்றை ஒன்றுள் அடக்கல் சங்க நூலார் வழக்கன்று என்பது எவ்வாறு பொருந்தும். இன்னும் பிள்ளையவர்கள், நக்கீரனார், வைகறையாமம் சிறு பொழுது எனக் கூறிவிட்டு, விடியலுமடங்க வைகறை விடியல் என உதாரணங் காட்டினாரென்றல் பொருந்தாதென் கிறார்கள். ஆயின், நக்கீரனாரே ஒன்றெனக் கருதி அதனைக் காட்டினாரென்றலும் பொருந்தாது. அவருரைக்கண் அச் சூத்திரங்கள் பிற்காலத்தாராற் சேர்க்கப்பட்டனவேயாம். அன்றியும், இறையனாரகப்பொருளுரை அவருரையன்றெனச், சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் என்ற நூலிலே மஹாமஹோ பாத்தியாய, உ.வே. சாமிநாதையரவர்களும், தமிழ் வரலாற்றிலே ஸ்ரீ நிவாச பிள்ளையவர்களும் உரைக்கின்றார்கள். ஆதலின் அதன்கண் ஆராய்ச்சி முடிவு போகாதென விடுக்குதும். மேலும், அடியார்க்குநல்லார், பதிக உரையில் எற்பாடும் அமையச் சிறுபொழுது ஆறு என்று கூறினமையின் நெய்தற்கு எற்பாடு கூறினார் என்றாம். அதனைப் பதிக உரையை நன்கு படித்தறிக. பின் சிலப்பதிகாரத்துள் வந்த சிறுபொழுதுகளைக் கூறுமிடத்தே மாலை கூறினார். யாம், எற்பாட்டை மாலையுள் அடக்கிய கருத்துடையராயே சிலப்பதிகார உரையாசிரியர்; முன் நெய்தற்கு எற்பாடு கூறிப், பின் வையமோ கண்புதைப்ப வந்தாய் மருண்மாலை என்பதை எடுத்துக் காட்டினார் என்றாம். இதனை விளங்காது பிள்ளையவர்கள் சிலப்பதிகார உரையா சிரியர் நெய்தற்கு எற்பாடு கூறவுமில்லை, வையமோ கண் புதைப்ப வந்தாய் மருண்மாலை என்னுமடியை உதாரணமாகக் காட்டவுமில்லை என்றல், யாம் எழுதியதை விளங்கிக் கொள்ளாமையே. இனிப் பரிபாடலில் வந்த கிரகநிலை ஆவணிமாதத்துப் பூரணையிலன்று வந்த கிரகண நேரம் கூறியதாகலின், சூரியன் நிற்க என்றதனால் எற்றோற்றம் என்றாம். ஏனெனின், ஆவணி மாசத்திலே சூரியன் சிங்கராசியிலே உதயமாதலின். இதன்கண் நிகழும் ஆட்சேபம் என்னையோ? நிற்க; இனிப் பிள்ளையவர்கள் எற்பாடு என்பதற்கு ஸ்ரீ சுவாமிகள் கூறியவாறு காலை என்பதே பொருத்தம் என்கிறார் கள். அதனுண்மையையு மாராய்வாம். அகப்பொருளிலக்கணஞ் சொன்ன ஆசிரியர்களெல்லாம் நெய்தற்குச் சிறுபொழுது கூறுங்கால் எற்பாடு என்னுஞ் சொல்லையே எடுத்தாண்டனரன்றிக் காலை என்பதை ஒருவராயினும் எடுத்தாளவில்லை. அகப்பொருள் விளக்க நூலாரும், எற்படுகாலை என்றும் வெய்யோன்பாடு என்றுங் கூறினாரன்றிக் காலை என்று கூறிற்றிலர். பிள்ளையவர்களோ எற்படுகாலை என்பதில், காலை என்பது காலையையுணர்த்த, எற்படு என்பது அதற்கு விசேடணமாக வந்தது என்கின்றனர். காலை என்பது ஈண்டுக் காலம் என்னும் பொருளில் வந்ததன்றிக் காலை - என்பது சூரியோதயம் என்னும் பொருளில் வந்ததன்று. அஃது ஆசிரியரே பின்னும் இருள்புலர்காலை எனக் கூறுவதால் அறியலாம். எனவே எற்படுகாலை என்பதற்குப் பொருள் எற்படுகாலம் என்பதே யாம். பழைய உரைகாரரும் ஆதித்தன் படுகிறபொழுது என்றே கூறுதல் காண்க. இங்ஙனமாக, காலை - என்பதற்குச் சூரியனுதிக்குங்காலம் என்று திரிபுபொருள் ஏன் கொள்ளல் வேண்டும். திரித்துப் பொருள்கொண்டு செந்தமிழ் வழக்கைச் சிதைப்பது தருமமா? அந்தோ! இது மிக இரங்கத் தக்கது, நிற்க; எற்படுகாலை என்பதற்கு எற்படுகாலம் என்பதே பொரு ளென்பது மேற்கூறியவாற்றாற் பெற்றாம். இனி எற்படுகாலம் என்பது தான் எப்பொழுதை உணர்த்திவந்ததென்பதே ஆராயத்தக்கது. அகப்பொருள்விளக்கநூலார் எற்படுகாலம் என்பதைக் காலை என்று கருதியிருப்பாராயின், பின்னும் வெய்யோன் றோற்றம் என விளங்கக் கூறியிருப்பார். அங்ஙனம் கூறாமல், பின்னும் வெய்யோண் பாடு என்றே கூறினமையின் இருவகை வழக்கினும் எளிதுணர நின்ற பொழுதுபடுதலையே கூறினார் என்பது துணிபாம். எற்பாடு என்னுஞ் சொல், சூரியோதயத்துக்கும் பெயராய் வருதலின் ஞாயிறு படுதல் என்று எங்ஙனந் துணியப்படுமெனின், அச்சொல் சூரியோதயத்துக்கு, படுதல் - உண்டாதல் என்னும் பொருளில் தாற்பரியமாய் அரிதுணரப்பட்டுச் செய்யுள் வழக்கிற் சிறுபான்மை வருதலானும், பெரும்பான்மையும் பொழுது படுதற்கே வழங்கிவருதலானும், உலக வழக்கில், பொழுது பட்டுப்போயிற்று என்றும், பொழுதுபடுங் காலமாயிற்று என்றும், பொழுதுபட்டு வாயை அடைந்தது என்றும், சூரியன் பட்டுப்போயிற்று என்றும், பொழுதுபட வந்தான் என்றும், இப்படிப் பலவாறு வழங்கக் காண்டலானும், ஆட்சிபற்றி எற்பாடு பொழுதுபடுதலென்று எளிதில் துணியப்படும் என்க. இனிச் சங்க விலக்கியங்களிலே, நெய்தற்கும் முல்லைக்கும் மாலை கூறுங்கால், அதற்குமுன் பொழுதுபடுதலைக் கூறும்பொழுதும் எற்பாடு என்னுஞ் சொல்லானே கூறக் காண்டலானும் தொல்காப்பியர் கருதியது பொழுதுபடுதலென்பதே துணிபாம். இங்ஙனமாகப் பிள்ளை யவர்கள் எற்பாடு காலையையன்றி மாலையையுணர்த்துமா? என்றல் எவ்வாறு பொருந்தும். இனி, எற்பாடேயன்றி மாலை முதலியனவும் நெய்தற்கு வருகின்றதேயெனின், அது மயக்கமாய்வரும். அவற்றுள்ளும் மாலை எற்பாடு சார்ந்து வரும் உரிமைபற்றி நெய்தற்குப் பெரும் பான்மையாயும் ஏனையவை சிறுபான்மையாயும் வருமென்க. அங்ஙனம் வருதல் பற்றி அவை உரியபொழுதாகாவென்க. அன்றியும், இடையாமத்து நிகழும் புணர்ச்சியின் பின்னர், அதனால் நிகழும் ஊடல் வருதல்போல நடுப்பகலில் நிகழும் பிரிவின்பின்னர் அதனால் நிகழும் இரங்கல் வருதலும் முறையே யாமாதலானும் எற்பாடு பொழுதுபடுதலையேயுணர்த்து மென்பது துணிபாம். இனி, எற்பாடு என்னுஞ் சொல் பொழுதுபடுதலையே யுணர்த்திச் சங்கநூல்களில் வருமாற்றை, பொழுதுபடப்பூட்டி (நற். 187) என்றும், படுங்கதிரமையம் (சிலப். புறஞ்சேரி 11) என்றும், படுகாலை (சிலப். ஊர்சூழ் 5ஆம் அடி) என்றும், எற்பட வருதிமில் (அகம். 190) என்றும், எற்படுபொழுதின் (சிலப் - ஊர்காண் 83) என்றும், படுசுடரடைந்து (நற்றிணை. 33) என்றும், படுசுடரமையத்து (அகம்.23) என்றும், எற்பட, அகலங்காடி என்றும், படுசுடர்மாலை (கலி - 130) என்றும், இப்படிப் பலவாக நூல்கடோறும் வருதலானறிக. இவற்றுள், படுகாலை என்பதும், எற்படு பொழுது என்பதும் அகப்பொருள் விளக்கத்துள்வரும் எற்படுகாலை என்பதும் தம்முள் ஒப்பாதலுந் தெளிக. அன்றியும், எற்படக் - கண்போன் மலர்ந்த காமர் கனைமலர் என்பது இடம் பற்றி உதயம் என்று பொருள் கொள்ளப்படும். சந்தர்ப்பம் வேண்டாமலே எற்பாடு என்பது பொழுதுபடுதலை யுணர்த்தும். ஆதலானும், எற்பாடு - பொழுது படுதலேயாம். அங்ஙனமன்று; காலை என்பது தொல்காப்பியத்துக் கூறப்படாமையின் எற்பாடு காலையே யெனின், விடியலெனக் காலை வந்தமையின் அது பொருந்தாது என்பது. இனிக், காமந்தணியுங்காலமன்றிக் காமமிக்கு இரங்குங் காலமன்மையானும் (எற்பாடு) காலையன்றென்பது பெறப் படும். காலை, இரங்குதற்குரிய காலமன்று; காமந்தணியுங் காலமாதலை. சேர்ந்த பள்ளி சேர்புணை யாகி - நீந்தி யன்ன நினைப்பினராகி - முழங்குகடற் பட்டோர் ஆழ்ந்து பின் கண்ட - கரையெனக் காலை தோன்றலின், என்ற உதயணன்கதையில் வருமடிகளும்; விடியல் காண்டலினீண்டுதன் னுயிர்கண்ட வெய்யாள் என்னும் இராமா வதாரச் செய்யுளடியும், கண்டர வந்த காம வொள்ளெரி என்னுங் குறுந்தொகைச் செய்யுளில் குப்பைக் கோழித் தனிப்போர்ப் பொலிவிளி - வாங்கு விளியினல்லது - களவோ ரில்லை யானுற்ற நோயே என வருமடிகளும், ஆக்க மித்திற மடைவுழிப் பத்துநூ றடுத்த நோக்க முற்றவன் சசிபொருட் டுற்றநோ யதனை நீக்கு கின்றனன் யானென நினைந்துளா னென்ன மாக்கள் பூண்டதேர் வெய்யவன் குணதிசை வந்தான் என்றும், ஞாயி றுற்றவவ் வளவையி னனந்தலை யுலகி லேயெ னச்செறி யிருளெலா மறைந்திருந் தென்னச் சேய ரிக்கணி தந்திடுந் தெளிவில்கா மத்து மாயி ருட்டொகை யொடுங்கிய திந்திரன் மனத்துள் என்றும் வரும். கந்தபுராணச் செய்யுள்களும் ஆழியொன்றீரடி என்னுந் திருக்கோவைச் செய்யுளும் வலியுறுத்தும். இன்னும் இப்படிப் பல நூல்களிலும் வருகின்றன. இனி, இரவும் பகலு மிரங்கியதாகவும் வருகின்றதேயெனின் அது காலவரையறை கடந்து வந்த தணியாக் காமமேயாதலின் அதன்கணாசங்கை யின்மை யுணர்க. இனிப், பிள்ளையவர்கள், ஐயரவர்கள் சொல்லியபடி எற்பாடு என்னுங் காலம் பகல் 2 மணி முதல் 6 மணி வரையு முள்ள காலமாம்; இது பின்பகல் எற்பாடல்ல. பின்பகலை எற்பாடு என்ற சொல்லி வருணித்த ஆசிரியர்கள் முன்னுமில்லை. பின்னுமில்லை. உப்பின் குப்பை யேறி எற்பட - வருதிமி லெண்ணுந் துறைவனொடு (அகம். 190) என மாலையில் வந்த திமிலையே எற்பட வருதிமில் என்கிறது. எற்பாடும் மாலையும் ஒரு பொருட் சொற்களே. இதனை, மாலைவந்தன்று (ஐங்குறு. 116) என்பதற்கு அதனுரையாசிரியர் எற்பாடு, என்று பொருள் செய்வதால் அறியலாம் என்றார்கள். ஒரு நாளாகிய காலத்தை, ஆறாகப் பகுத்து, விடியல், நடுப்பகல், எற்பாடு, மாலை, நடுநாள், வைகறை எனப் பப்பத்து நாழிகையாகக் கொண்டாலும் அவ்வக் காலங்களுக்குச் சிறந்த பெயர்க்காரணமான காலங்களையே புலவர்கள் எடுத்துப் பெரும்பாலும் வருணிப்பது வழக்கம். வைகறையெனின் கோழி கூவும் நேரத்தையும் , விடியல் எனின் சூரியோதயத்தையும், நடுப்பகல் எனின் உச்சிக்காலத்தையும், எற்பாடு எனின் பொழுதுபடு நேரத்தையும், மாலை எனின் அந்திமாலையையும், யாமமெனின் பானாளையுமே எடுத்து வருணிப்பர். அதுபற்றியே, புலவர்கள் சூரியாதமனம் வருணித்துப் பின் அந்திமாலையே வருணிப்பதாம். அங்ஙனமாக, பிள்ளையவர்கள் பின்பகலை எற்பாடு என்று சொல்லி வருணித்த ஆசிரியர் முன்னுமில்லை; பின்னுமில்லை என்பது பொருந்துமா? மாலை சூரியாதமனத் துக்கும் இரவுக்கு மிடைப்பட்ட பொழுதே என்ற பிள்ளை யவர்கள் எற்பாடும், மாலையும் ஒன்றென்றல் பொருந்துமா? ஐங்குறுநூற்றில் மாலையை எற்பாடு என்றாரல்லர்; அது மாலைவந்துவிட்டது என்று எற்பாட்டில் கூறி இரங்கியதேயாம். அங்ஙனமாதல் அதன்கண் எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறுத்துநிற்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்று கூறுதலாலு மறியப்படும். இதுபற்றியே எற்பாடு என்பதற்கு, அரும்பதவிளக்க மெழுதி யோரும் மாலை என்று கூறாமல் சூரியாதமனம் என்று கூறியதும், இங்ஙனமே மாலைவருதலை நோக்கி, நினையு மென்னுள்ளம்போல் (140) என்பதனுள், போயவென் னொளியேபோல் ஒருநிலையே பகன்மாயக் காலன் போல் வந்த கலக்கத்தோ டென்றலை மாலையும் வந்தன் றினி என எற்பாட்டிலே, கூறுமாறறிக. இன்னும் இது எற்பாட்டிற் கூறியதென்பது, பின் இருளொடியா னீங்குழப்ப வென்னின்றிப் பட்டாய் அருளிலை வாழி சுடர் எனவரும் சூரியாதமனக்கூற்றால் விளங்கும். ஆதலாலே எற்பாடு வேறு. மாலை வேறு என்பது துணிபாம். எற்பட வருதிமில் என்பதற்குப் பொழுதுபட வருந்திமில் என்பதன்றி, மாலை வருந்திமில் என்பது பொருளன்று; எற்பட என்பது நிகழ்காலமாதலின். மாலை எனின், எற்பட்ட பின் வருதிமில் என்பர். கலியினும், என்னின்றிப்பட்டாய் என்றும், கோவை யினும் பகலோன் கரந்தனன் என்றுங் கூறுமாறறிக. எற்பட வருதிமில் என்பதற்குப் பொழுதுபடுநேரம் வரும் திமில் என்பது பொருளாயினும், அது அதன் முன்னும் வருமென்பதையும் குறிக்கும்; சிலபோது பின்னும் வரும் அதுபற்றி இங்கு ஆராய்ச்சி யின்று. சேனாவரையரும் ஞாயிறுபடவந்தான் என்பது நிகழ்காலமுணர்த்துமென்றும், ஞாயிறுபட்டுவந்தான் என்பது இறந்தகாலமுணர்த்தும் என்றுங் கூறுதல் காண்க. (பட்டு - பட்டபின்.) இனி 2 மணி தொடங்கி 6 மணி வரையுமுள்ள எற்பாடு கூறி வருணித்த ஆசிரியர் முன்னுமில்லை; பின்னுமில்லை என்றார்கள். அக்காலத்துத் தலைவி இரங்கல் கூறுவதன்றி மணித்தியாலங் கூறி வருணிப்பதில்லை. அங்ஙனம் எற்பாட்டில் தலைவி இரங்கல் கூறுவதையுங் காட்டுதும்:- திருக்கோவை யினுள் வரும் ஒரு வழித்தணத்தற் பிரிவிலே, கார்த்தரங் கந்திரை தோணி சுறா என்னுஞ் செய்யுளில், படப்போகின்ற சூரியனைப் பார்த்துத் துறைவர்போக்கும் அவர் சூளுறவும் என்னை வருத்தாநின்றன; அதன் மேலே நீயு மேகா நின்றாய். யான் இனி உய்யுமாறென்னோ? எனப் புலம்புமாற்றை, துறைவர்தம் போக்குமிக்க, தீர்த்தரங் கன்றில்லைப் பல்பூம் பொழிற் செப்பும் வஞ்சினம், மார்த்தரங்கஞ் செய்யு மாலுய்யு மாறென்கொலாழ் சுடரே என்று கூறுதலானும், பின், மாலை வருதலை நோக்கிப் பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத் தகலோன் பயிறில்லைப் பைம்பொழிற் சேக்கைக ணோக்கினவா லகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட வன்னங்களே என்று கூறுதலானும், முறையே எற்பாடும் மாலையுங் கூறப் பட்டன. இங்ஙனம் மாலையினும், பொழுதுபடுதலாகிய எற்பாட்டினும் இரங்கல் கூறிய ஆசிரியர், அதன்முன், கூடலிழைத்து வருந்தலும், அதன்முன், கடலொடுகூறி வருந்தலும், அதன்முன் அன்னமொடாய்தலும், அதன்முன் கடலொடு புலத்தலும், அதன் முன் கடலொடு வரவுகேட்டலும் கூறலின் இவையெல்லாம் பொதுபடுவதற்குமுன் எற்பாட்டிலே தலைவி இரங்கல் கூறுவ தன்றோ! இன்னும், நாலடியாரிலே, செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விர லூழ்தெறியா விம்மித்தன - மெல்விரலின் நாள்வைத்து நங்குற்ற மெண்ணுங்கொ லந்தோதன் றோள்வைத் தனைமேற் கிடந்து என்பதனுள், படப்போகும் ஞாயிற்றைநோக்கித் தலைவி மாலை வரப்போகின்றதேயென்று எற்பாட்டில் வருந்துவாளென்று கூறப்பட்டது. இன்னும், உதயணன் காதையில், உதயணன் எற்பாட்டிலே வருந்தியதாக, வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பிற் சிதர் தொழிற் றும்பியொடு மதர்வண்டு மருட்ட மாத ரிருங்குயின் மணிநிறப் பேடை காதற் சேவலைக் கண்டுகண் களித்துத் தளிர்ப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும் பானிறச் சேவல் பாளையிற் பொதிந்தெனக் கோண்மடற் கமுகின் குறிவயிற் காணாது பவழச் செங்காற் பன்மயி ரெருத்திற் கவர்குர லன்னங் கலங்கல் கண்டும் .............. ..................... .................... ............................... மன்றனா றொருசிறை நின்ற பாணியுட் சென்று சென் றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம் சூடுறு பாண்டிலிற் சுருங்கிய கதிர்த்தாய்க் கோடுய ருச்சிக் குடமலைக் குளிப்ப (மாலைப்புலம்பல் - 27ம் அடிமுதல்) என்று கூறும் இவ்வடிகள் எற்பாட்டு வருணனையும் எற்பாட்டி ரங்கலுமன்றோ? இவற்றுள், சென்றுசென்றினைஞ்சிய என்பது 2- மணித் தொடக்கத்தையும், சினந்தீர் என்பது நச்சினார்க் கினியர் கூறிய வெஞ்சுடர் வெப்பந்தீர என்பதையும், திடமுறக் காட்டவில்லையா? இதனைக் குறுந்தொகையுள் வரும், சுடர் சினந் தணிந்து குன்றஞ் சேர (195) என்பதுங் காட்டும். இனித், தண்ணறுஞ்சோலை தாழ்ந்து நீழற்செய்யவும் என்பதையும் நற்றிணை 187ஆம் செய்யுளில் வரும், நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுகக், கல்சேர் மண்டிலஞ் சிவந்துநிலந் தணியப், பல்பூங் கானலு மல்கின் றன்றே என்பது காட்டும். இது எற்பாட்டு வருணனை; பொழுதுபட என்பது பின் வருதலின், இதன்கண் வரும் விரிவுரையையும் நோக்குக. இங்ஙனமாகவும், நச்சினார்க் கினியர் கூறியவாறு வருணனை தப்பித் தவறியேனும் நெய்தற் றிணைப்பாட்டில் வரவில்லை என்றல் எவ்வாறு பொருந்தும்? இங்ஙனமே நெய்தற்கலியினும், தலைவி எற்பாட்டில் வருந்தியது கூறப்படுகின்றது. அதனையுங் காட்டுதும்; நெய்தற்கலி, புரிவுண்ட புணர்ச்சியுள் என்னும் 142ஆம் செய்யுளில், கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின் அவரை நிறுத்து நினைத்தென்கை நீட்டித் தருகுவை யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர்திரியா மாட்டிய தீ என்றும் மையில் சுடரே மலைசேர்தி யாயின் பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை கைவிளக் காகக் கதிர்சில தாராயயேல் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு என்றும் மன்றப் பனைமேன் மலைமாந் தளிரே (மஞ்சள் வெய்யிலே) என்றும் தலைவி ஞாயிற்றை விளித்துப் புலம்பியதாகக் கூறுதலானும், 143, 145, 146, 147ஆம் செய்யுள்களினும் இவ்வாறே எற்பாட்டிலே ஞாயிற்றை விளித்துப் புலம்பியதாகக் கூறலானும், பொழுதுபடாமுன்னும் எற்பாட்டில் வருதலை, இவை திடமாக உணர்த்தவில்லையா? இவற்றுள், 146ஆம் செய்யுளில், நிரைகதிர்ஞாயிறே எனத் தலைவி விளித்துப் புலம்பியது காலைஞாயிற்றையென்று பிள்ளையவர்கள் காலைவருதற்குக் காட்டியுள்ளார்கள். அது பொருந்தாது. நிரை கதிர் ஞாயிறு என்புழி நிரைகதிர், ஞாயிற்றுக்கு விசேடணம். நிரை கதிர் நித்திலம் (சிந்தாமணி -99) என்புழிப் போல. இச்செய்யுள்கள் ஒரே பொருளில் வருதலானும், முன்பின்னுள்ள செய்யுட்களும் அதேகருத்தில் வருதலானும், உரைகாரரும் அங்ஙனே கருத்துப்படக் கூறலானும் எற்பாட்டு ஞாயிற்றையே விளித்ததாம். இனி இதில், வளாகமெல்லாம் தேடிவா என்றதுபோல், 142ஆம் செய்யுளிலும் அவரை (த்தேடி) நிறுத்து நினைத்து என்கை நீட்டித் தருகுவை என்று கூறுதலானும் எற்பாட்டு ஞாயிறேயாம். இனி, யான் முன் எடுத்துக்காட்டிய, பெருங்கடன் முழங்க - பண்பு மாரன்றே (நற்றி - 117) என்னுஞ் செய்யுளும், நெடுவேண் மார்பி னாரம்போல.... பெருங்கழி நாட்டே (அகம் - 120) என்னுஞ் செய்யுளும், ஞாயிறுஞான்று..... யன்றிற் குரலே என்னும் (நற்றிணை - 28) செய்யுளும் மாலை வருகின்றமையை யும், இரவு வருகின்றமையையும் எற்பாட்டிற் கூறி வருந்தியதே யாம். இதன் கண் வரும் இறந்தகாலங்கள் எதிர்வு பற்றியதேயாம். விரைவுபற்றி இறந்தகாலமாயின. நற்றிணைச் செய்யுள்களுள், 117ஆம் செய்யுட் கொளுவின்கண் இவ்வண்ணமாய் வருகின்ற மாலை என்றும், 218ஆம் செய்யுள் விரிவுரைக்கண், மாலைப்பொழுதானது காம நோயை முற்படவிட்டு வருதலின் அது வருதற்கேதுவாகிய ஞாயிறு படுந்தன்மை கூறினாள் என்றும் அதனுரையாசிரியர் கூறுமாற்றானு முணர்க. இவற்றுள் நற்றிணையுள் வரும் சிவந்து வாங்கு மண்டிலம் என்பதும், ஞாயிறு ஞான்று குடக்கு வாங்கும்மே (398) என்பதும் எற்பாட்டு வருணையைக் காட்டும். நச்சினார்க்கினியரும், சிந்தாமணி, கனகமாலை - 166ஆம் செய்யுளில் நன்றே வந்ததிம்மாலை என்பதில், விரைவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாயிற்று என்றதும் இதனை வலியுறுத்தும். இன்னும் ஐங்குறுநூற்றில் வரும், அம்ம வாழி தோழி நாமழ நின்ற விருங்கழி நீலங் கூம்ப மாலை வந்தன்று மன்ற காலை யன்ன காலைமுந் துறுத்தே என்பதனுள், நாமழ - மாலைவந்தன்று என்பதும், எதிர் காலத்தை இறந்த காலமாகக் கூறியதேயாம். இன்னும், உருகெழு தெய்வமுங் கரந்துறை யின்றே விரிகதிர் ஞாயிறுங் குடக்குவாங் கும்மே நீரலைக் கலைஇய கூழை வடியா சாஅ யவ்வயி றலைப்ப வுடனியைந் தோரை மகளிரு மூரெய் தினரே பன்மலர் நறும்பொழில் பழிச்சி யாமுன் சென்மோ சேயிழை யென்றன மதனெதிர் சொல்லாண் மெல்லியல் சிலவே நல்லகத் தியாண ரிளமுலை நனைய மாணெழின் மலர்க்கண் டெண்பனி கொளவே! என்னும் நற்றிணை 398ஆம் செய்யுளும், முன் எற்பாட்டில் நிகழ்ந்ததை எற்பாட்டிற் கூறியதேயாம். இன்னும் அகநானூற்றில் வரும் 300, 340ஆம் செய்யுள்களும் எற்பாட்டிற் கூறியவேயாம். குறுந்தொகை 118ஆம் செய்யுளும் 123ஆம் செய்யுளும் அதுவே, இவை, யுண்மை யாதலை ஆன்றோர்வாய்க் கேட்டுணர்க. இங்ஙனம் வரும் ஆன்றோர் செய்யுட்களை நன்குணர்ந்த இளம்பூரண அடிகளும், நெய்தற்குப் பெரும்பாலும் இரக்கமே பொருளாதலின் தனிமையுற்று இரங்குவார்க்குப் பகற்பொழு தினும் இராப்பொழுது மிகுமாதலின் அப்பொழுது வருதற்கு ஏதுவாகிய எற்பாடு கண்டார், இனிவருவது மாலையென்று வருத்தமுறுதலின் அது அதற்குச் சிறந்ததென்று கூறினர். அடிகள் கூறியது உண்மையாதல், மேற்காட்டிய செய்யுட்களா னுணரக் கிடத்தலின், எற்பாடு - காலை என்றல் எவ்வாறு பொருந்தும். ஆதலின், எற்பாடு - பொழுதுபடுநேரம் என்பது மலைமேல் விளக்கேயாம். இனிப் பிள்ளையவர்கள், அகத்திணைக்கேயுரிய காலை வரப் பாடினமையோடு நண்பகலும் மாலையும், நடுயாமமும் வரப் பாடியிருக்கின்றார்கள். அப்படியிருக்கவும் நெய் தற்றிணை பாடினாரெல்லாம் ஞாயிறுபடுங் காலமாகவே வைத்துப் பாடி யிருத்தலினாலும் என ஐயரவர்கள் கூறியது முழுப் பூசணிக் காயைச் சோற்றுட் புதைத்தது என்கிறார்கள். நாம் நெய்தற்றிணை பாடினாரெல்லாம் என்றது பெரும் பாலும் எற்பாடே நெய்தற்குரிய பொழுதாக வைத்துப் பாடினமை பற்றிக் கூறியதேயாம். ஏனைப் பொழுதுகள் மயக்கமாக வருதல் பற்றி, அவையுரியவை யாகா. நெய்தற்கு மாலை பெரும்பாலும் வருதல் பற்றி அவையுரிய பொழுதென்றல் கூடுமா? அது போலவே காலைவரினுமாம். எற்பாடே (பொழுது படுதலே) உரியபொழுதென்பது, மேற் காட்டிய திருக்கோவைச் செய்யுள் களானும், நெய்தற்கலிச் செய்யுள்களானும், மற்றுஞ் செய்யுள் களானும் தெற்றென விளங்கக் கிடத்தலின் பிள்ளையவர்கள், அத் திணைக்குக் காலையே உரியபொழுது என்றதுதான் முழுப் பூசணிக்காயைச் சோற்றுட் புதைத்ததாகும். நச்சினார்க்கினியர் மாலைமயக்க மென்றதும் நெய்தற்கு உரியபொழுது எற்பாடு என்பது கருதியே; காலை என்பது கருதியன்று. அஃது, நெய்தற்கலி முதற்பாட்டினுரைக்கீழ், இது முதலிய மூன்றுபாட்டும் மாலைக் காலத்தைக் கூறினமையின், காருமாலையு முல்லை என்னும் பொதுவிதிபற்றி, முல்லையுட் கோத்தல் வேண்டுமெனின், அது பெரும்பான்மை பற்றிக் கூறியது. மாலை எற்பாட்டின்பின் நிகழுங் காலமாதலின் அதற்கியைபு பட்டு நெய்தற்குமுரித்தாயிற்று. அது திணை மயக்குறுதலும் என்னுஞ் சூத்திரத்து, நிலனொருங்கு மயங்குதலின்று என்ற தனால், கால மொருங்கு மயங்குமென்று கொண்டு சான்றோர் பலருஞ் செய்யுள் செய்தார். கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப என்னும் அகப்பாட்டு நெய்தற்கண் மாலை வந்தது. தொல்லூழி தடுமாறி என்னும் நெய்தற் கலியுமது. இந் நிலத்து மாலைவந்த பாட்டுகள் பலவுமுள. பிற சான்றோர் செய்யுட்களுள் கால மயங்குமாறு கண்டுகொள்க. என்றதனால் உணரப்படும். நச்சினார்க்கினியர் மாலை மயக்கமாக வருமென்று கூறினும், உரித்தாயிற்று என்றமையானே, இயைபுபற்றி எற்பாட்டின் வழித் தாய் அதுவும் உரித்தென்பதும் அவர்க்குக் கருத்தாத லுணரப்படும். தொல்காப்பியர் காலத்தின் பின்னே மாலையும் இரங்கல் பற்றியும் இயையுபற்றியும் நெய்தற்குரித்தாகக் கொள்ளப்பட்ட தென்று கருதுவாருமுளர். அது பற்றியே நாமும் இரங்கல் பற்றி எற்பாட்டை மாலையுளடக்கினார், என்றாம். இதன்கண் வரும் வழு என்னையோ? இனிப் பிள்ளையவர்கள், பிற்பொழுது பாட்டிபழங்கதை படித்தலினாலும் விளையாட்டினாலும் கழியும் என்கிறார்கள். தலைவனைப் பிரிந்து தனித்திருப்போர்க்கு விளையாட்டில் மனஞ் செல்லாது; ஒரு போது தன் வருத்தத்தை மறைத்தற் பொருட்டு விளையாடினும் அதன்கண் மனஞ் செல்லாது தலைவன் கண்ணேயே செல்லும் அவற்றை முறையே:- ஒள்ளிழை மகளி ரோரையு மாடாய் வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புனையாய் விரிபூங் கான லொருசிறை நின்றோய் (நற். 155) என்றும், உரையாய் வாழி தோழி என்னும் (நற். 123) செய்யுளுள் செம்பே ரேரிணை யலவற் பார்க்குஞ் சிறுவிளை யாடலு மழுங்க நினக்குப் பொருந்துய ராகிய நோயே. என்றும், தொடிபழி மறைத்தலிற் றோளுய்ந் தனவே வடிக்கொள் கூழை யாயமொ டாடலின் இடிப்பு மெய்யதொன் றுடைத்தே கடிக்கொள அன்னை காக்குந் தொன்னலஞ் சிதையக் காண்டொறுங் கலுழ்த லன்றியு மீண்டுநீர் முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறைச் சிறுபா சடைய செப்பூர் நெய்தற் றெண்ணீர் மலரிற் றொலைந்த கண்ணே காமங் காப்பரி யவ்வே. (நற். 23) என்றும் வருவனவற்றாலுணர்க. இன்னும், பூவை யன்னதோர் மொழியினாள் சிறுகுடிப் புகுந்து கோவில் வைப்பினுட் குறுகியே கொள்கைவே றாகி பாவை யொண்கழங் காடலள் பண்டுபோன் மடவார் ஏவர் தம்மொடும் பேசலள் புலம்வீற் றிருந்தாள். என்னுங் கந்தபுராணச் செய்யுளானு மஃதறியப்படும். இனிப் பிள்ளையவர்கள், நெய்தற்குக் காலைவந்ததாகக் காட்டிய செய்யுட்கள் பலவும், நிலத்துக் கடையாயும் திணை மயக்கமாயும் வந்தனவேயன்றி, அந்நிலத்துக்குரிய இரங்கற் பொருளோடு சம்பந்தப்பட்டு வரவில்லை. அங்ஙனமாதல் காட்டுதும்:- பின்னுவிட் டெறித்த என்னும் (அகநா. 150) செய்யுளில், வாட்சுறா மயங்கும் வளைமேய் பெருந்துறைக் கனைத்த நெய்தற் கண்போன் மாமலர் நனைத்த செருந்திப் போதுவா யவிழ மாலை மணியிதழ் கூம்பக் காலை கண்ணாறு காவியொடு கண்ணென மலரும் கழியுங் கானலுங் காண்டொறும் வாரார் கொல்லெனப் பருவருந் தாரார் மார்பநீ தணந்த ஞான்றே என்பதன்கண், நீ தணந்தஞான்று - கழியுங் கானலுந் காண் டொறும் - பருவரும். எப்படிப்பட்ட கழி எனில், மாலையிற் கூம்பும்படி, காலையில் மலரும் இயல்புடைய கழி எனக் கழிக்கு அடையாய் வந்தது. அங்ஙனமாதல், கானலுங் கழறாது கழியுங் கூறாது (அகம். 170) என்று கானலையுங் கழியையும் நோக்கிப் புலம்பலால் அறியப்படும். கானற்கானும் கழிக்கானுங் கூறி வருந்துமென்றே கழியுங் கானலுங் காண்டொறும்...... பருவரும் என்றார். கழியொடுங் கானலொடுஞ் சார்த்திப் புலம்பல், தலை வனுந் தானும் கூடி விளையாடிய இடமாதலின். இங்கே புலம்பு வது எற்பாட்டிலே. அது, நீ தணந்தஞான்று நோக்கிப் பருவரும் என்பதனானறியப்படும். இது காலையன்று என்பது மாலை மணி யிதழ் கூம்ப என மாலை நிகழ்ச்சியு முடன்வைத்தமையா னறியப்படும். இனி, அகம் 180ஆம் செய்யுளில், குவளை - அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி (குவளை மாலை) சூட்டி என்பது பற்றிக் காலை வந்தது என்கிறார்கள். இது நெய்தற்கண் வந்த களவாதலின், அதற்குரிய மாலை சூட்டிப் பெயர்ந்தமை பற்றிக், காலை வந்ததன்றி நெய்தற்குரிய பொழுது வந்தது அன்று. அன்றியும், இரங்கலொடு வந்ததுமன்றாம். காலம் வேறு என்பது செய்யுள் நோக்கியுணர்க. இன்னும், நெய்தற்கலி, கருங்கோட்டு நறும்புன்னை மலர்சினை மிசைதொறும் என்னும் 123ஆம் பாட்டில், நித்திரையின்றி வருந்தியவள் கடலோய்ந்தமைகண்டு, நெஞ்சை நோக்கிக் கடலுந் துயின்றது, நீயோ துயின்றிலை எனக் கூறி, நெஞ்சொடு வருந்தியதன்றிக் கடலொடு வருந்தியதன்றாம். அன்றியும், முன்னரெல்லாம் ஒலித்து வருத்திய கடல், இப்பொழுது சாந்தமாய்விட்டது என்றதனால், எமக்கு வருத்தந் தாராது கடலுந் துயின்றது என்பது குறிப்பித்தாள். அங்ஙனமாக; இது சுவாமிகள் கருத்தைச் சிலையிலெழுத் தாக்குவது எங்ஙனம்? அன்றியும் இது காலையன்று வைகறையாமம். ஆதலானும் அது பொருந்தாது என்பது. காலையிலோதங்கொட்கும் என்று, அகம் 220ஆம் செய்யுள் கூறுகின்றது. அதனானுமது பொருந்தாது. கடலொலியே வருத்தத்தை மிகுவிப்பது; அது, திங்களுந் திகழ்வா னேர்தரு மின்னீர்ப் பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே ஒலிசிறந் தோதமும் வளரு மலிபுனல் .......... .......... .......... ............ காமமும் பெரிதே களைஞரோ விலரே. (நற்றிணை. 446) என்பதனானறிக. குறுந்தொகை 163ஆம் செய்யுளும் இதனை வலியுறுத்தும். இனி, நெய்தற்கலி 146ஆம் செய்யுள் காலையன்று என்பது முன் காட்டப்பட்டது. குறுந்தொகையில் வரும், யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமியன் வைகிய பொய்யாப் பூணின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் இனமீ னிருங்கழி யோதமல் குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு ணாணிக் காப்பா டும்மே. என்பதன்கண், நெய்தற்பூக்கள் வெள்ளம் நிறையுந்தோறும் அதனுளமிழ்ந்துவதும் விடுவதுமாயிருப்பது கயமூழ்கு மகளிர் கண்ணை யொக்குமென்றால், காலை என்பது எப்படிப் பெறப் படுமோ? இஃது இப்படிப்பட்ட துறை எனத் துறையினியல்பு கூறியதன்றோ? மாலையிற் கூம்பும் வரையும் கண்ணை மானுந் தானே. இதுவுமோர் மருட்டுரை. இன்னும், இரவுப்புறத்தன்ன என்னும் (நற்றி. 19) செய்யு ளில் மாலையில் மலருந் தாழை காலையில் விழவுக்களங் கமழும் சேர்ப்பு எனச் சேர்ப்புக் கடையாய் வந்ததன்றிக் காலை வந்ததன்று. இது பகற்குறி வந்து நீங்குந் தலைவனுக்குத் தோழி சொன்னதாகலின் காலம் எற்பாடு. இன்னும், நற்றிணை - 275ஆம் பாட்டிலே, மென்மெலத் - தெறுகதி ரின்றுயிற் பசுவாய் திறக்கும் - பேதை நெய்தற் பெருநீர்ச் சேர்ப்ப என்பது திணைமயக்க மாதலின், மருதத்திற்குரிய காலைவந்தது. அன்றியுஞ் சேர்ப்புக்கு அடையாயும் வந்தது. இன்னும், நற்றிணை 283ஆம் செய்யுளிலும் நெய்தல்குற்று மனையை யணியுந் துறைவ! என்பதுந் துறைக்கு அடையாய் வந்தது. இன்னும், இதனுள், கடலிற் றோன்றிய சூரியனினும் வாய்மையுடையாய் என்பது வாய்மைக்கு அடையாய் வந்தது. திங்களொடு - ஞாயிற்றை உவமை யுணர்த்திப் பிறருங் கூறுதல் காண்க. இங்ஙனம் உவமையாய் வந்த சூரியனையும் விளங்காது காலை என்கிறார். இப்படிப் பிள்ளையவர்கள் புரட்டிக் கூறும் பகட்டுரைகள் பல. இங்ஙனமே அடையாயும், திணைமயக்கமாயும், வருவனவற்றைக் காட்டி, நெற்தற்குக் காலைவந்ததென்று பிள்ளையவர்கள் கூறுவது வெறும் பகட்டுரையாகுமன்றி உண்மையை நிலை நாட்ட மாட்டாது. சிறுபான்மை இரங்க லோடு காலை வரப் பெறினும் அது மயக்கமேயாம். இதனைப் பிள்ளையவர்களே சிந்திப்பார்களாக. இங்ஙனமே ஊடலோடு சம்பந்தப்படாதனவாய், நிலத் தோடு சம்பந்தப்பட்டனவாக மருதத்துக் காலைவருஞ் செய்யுட் கள் சங்க இலக்கியங்களிலே பல காணப்படுகின்றன. அகநானூற் றிலே, 36, 316, 366, 386ஆம் செய்யுட்களும் நற்றிணையிலே 290, 330, 400ஆம் செய்யுட்களும் மருதத்துக் காலை வந்தனவேயாம்; மற்றை நூல்களிலும் வருகின்றன. அவைகள் ஊடலோடு சம்பந்தப்படாமையின், அவை காட்டிற்றிலம். இனிப் பிள்ளையவர்கள், நெடுங்கயிறுவலந்த....... கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறைவ என்னுஞ் செய்யுள், காலையிற் சென்று மீன் பிடித்ததைக் குறித்த தென்கிறார்கள். இதில், இளைஞரும் முதியரும் கூடி என்றமையால் இஃது கரைவலை போட்டு இழுக்குந் தொழிலைக் குறித்ததேயாம். அக் கரைவலை கடற்பதம் நோக்கிக் காலையிற் போடுவது முண்டு; இரண்டு மணிக்குமேற் போடுவது முண்டு. மணற்றுஞ்சுந் துறை என்ற தனாலே இது எற்பாட்டிலே போட்டதாம். யாம் காலையிற் செல்வதை மறுக்கவில்லை. பெரும்பாலும் எற்பாடென்றே கூறினாம். இன்னும் வழிவலை அல்லது கொடிவலை, என்று சொல்லப்படும் வலைகொண்டு மீன்பிடிப்பது இரவிலேயாம். இவர்கள் இரா உணவுங் கொண்டு 4 மணி, 5 மணி வரையிலுமே புறப்படுவார்களாம். தூரமான இடங்களுக்குப் போகில் 1 மணி 2 மணி வரையிலும் புறப்படுவார்களாம். இவர்கள் தாம் மீன் பிடிக்கக் குறித்த இடத்துக்குப் போனவுடன் வலையை வீசிவிட்டு உணவை அருந்திக் கட்டுமரத்திலே படுத்துவிடுவார்களாம். மற்றை நாட் காலையில் வலையைச் சுருக்கி மீன்களையும் வாரிக் கொண்டு வருவார்களாம். இத்தொழில் பெருங் கடல்களில் நடப்பது. இவ்வலையிற்றான் பெருமீன்களு மகப்படுவது. இவ்வுண்மையைப் பரதவரிடம் கேட்டறிக. எற்பட வருதிமில் என்றது சிறுமீன் வேட்டத்தை. இளம்பூரணவடிகள் புறத்திணை யிலும், தும்பைத்திணை நெய்தற்குரித்தாமாறு கூறுங்கால் நெய்தற்கு ஓதிய எற்பாடு போர்த்தொழிற்கு முடிவாதலானும் என்று கூறுதலானும் மீன் வேட்டையால் வருதலானும் எற்பாடு நெய்தற்கு உரித்தாதல் பெறுதும். இதுகாறுங் கூறியவாற்றானே வைகறைவிடியல் என்பதே இளம்பூரணர் கொண்ட பாடம் என்பதூஉம். நச்சினார்க்கினியராற் கொள்ளப்பட்ட வைகுறு விடியல் என்பதே ஐயமான பாடம் என்பதூஉம், இலக்கியங்களில், வைகுறு என்னுஞ் சொல்லும் வைகறைக்குப் பெயராய் வருகின்றதென்பதூஉம். மூன்றுயாமங் கோடலே தமிழ் வழக்கு என்பதூஉம். ஆறுகால பூசைகொண்டு சிறுபொழுது ஆறு என்பது நன்கு நிச்சயிக்கப் படும் என்பதூஉம், இரவு பத்துமணிவரையும் மாலை என்பது பொருந்தும் என்பதூஉம், தொல்காப்பியர் கூறிய சூத்திரம், வைகறை விடியல் எனினும், வைகுறு விடியல் எனினும் உம்மைத் தொகை என்பதே அவர் கருத்தென்பதூஉம், விடியல் நாள் வெயிற் காலையே என்பதூஉம். மருதத்துக்கு, ஊடல் சம்பந்தப்படுதலால் விடியலும் உரித்தென்பதூஉம், எற்பாடு பொழுதுபடுதலையே உணர்த்தி நெய்தற்குரித்தாமென்பதூஉம், பிற்பகலே எற்பாடு என்பதூஉம், காலை காமந்தணியுங் காலமாதலின் இரங்கற்குரிய தன்றென்பதூஉம், இரங்கின் அது தணியாக் காமமென்பதூஉம், எற்பாடும் மாலையும் ஒன்றன் றென்பதூஉம், எற்பாட்டு வருணனையும் புலம்பலும் நூல்களிலே வருகின்றன என்பதூஉம், பிள்ளையவர்கள் காட்டிய உதாரணங்கள் இரங்கலோடு சம்பந்தப்பட்டு வரவில்லை என்பதூஉம் ஓரோவழி வரினும் அது மயக்கமாகுமன்றி உரித்தாகா தென்பதூஉம். இவற்றானே ஸ்ரீ சிவஞானசுவாமிகள் கருத்தே பொருத்தமெனத் தாபிக்க வந்த பிள்ளையவர்கள் கருத்துப் பொருந்தா தென்பதூஉம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொண்டபடி சிறுபொழுதாறென்றலே துணிபாமென்பதூஉம் நன்கு உணரக்கிடந்தமை காண்க. இங்ஙனம். சி. கணேசையர் செந்தமிழ் - தொகுதி 26, பகுதி 10 இம்மறுப்பின் பின் வீரபாகுப்பிள்ளை அவர்கள் அமைவுற்றனர். இது சிறுபொழுதாறே என்பதை நிச்சயப்படுத்திய ஆராய்ச்சியாகும். சி.க 2. சிறுபொழுது அகப்பொருள்விளக்க நூலாசிரியராகிய நாற்கவிராச நம்பியென்பவர் மாலை யாமம் வைகறை யெற்படு, காலை வெம்பகல் காயுநண் பகலெனக், கைவகைச் சிறுபொழு தைவகைத்தாகும் என்றார். தொல்காப்பிய உரையாசிரியர் களுள் இளம்பூரணரும், நச்சினாக்கினியரும் வைகறை விடியல் மருதம் என்னுஞ் சூத்திரத்திற்கு வைகறையும் விடியலும் எனப் பொருள் கொண்டு சிறுபொழுது ஆறு என்றார்கள். இவ்விருகூற்றுள் எது பொருத்தமுடைத்தென்பதே ஈண்டு நாம் ஆராய்தற்குரியது. பொருளிலக்கணம் பெரும்பாலும் வழக்கியல் தழுவியே செய்யப்பட்டதாகலின் அவ்வழக்கியல் கொண்டு இவ் வழக்கறுப்பதே தகுதியாகும். பெரும்பொழுது எப்படி ஆறாக வகுக்கப்பட்டு வழங்கி வருகின்றதோ அப்படியே சிறு பொழுதும் ஆறாகவகுக்கப்பட்டு வழங்கி வருவது யாவரு மறிந்ததொன்றாம். ஓராண்டின் முற்பாதியாகிய உத்தராயணத்தை மூன்றாகவும் பிற்பாதியாகிய தக்கிணாயணத்தை மூன்றாகவும் வகுத்து வழங்குவது போலவே, ஒருநாளின் முற்பாதியாகிய பகலை மூன்றாகவும், பிற்பாதியாகிய இரவை மூன்றாகவும் வகுத்து வழங்குவர். பகல் முற்பகல், நடுப்பகல், பிற்பகல் என வகுக்கப்படும். இரவு முதல்யாமம், இடையாமம், கடையாமம் என வகுக்கப்படும். அவ்வாறு வழங்குவதை, முற்பகற் செய்யிற் பிற்பகல்விளையும் எனவும், பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற்றாமே வரும் எனவும், நடுப்பகல் மத்தியானம் எனவும், நடுவுநிலைத்திணையே நண்பகல் வேனிலொடு எனவும், இடையிருள் யாமத்திட்டுநீக் கியது (சிலப்) எனவும், நடுவாள்யாம் (கந்தபு) எனவும், கடைக்கங்குல் (பட்டினப்) எனவும் வருவனவற்றான் அறிக. (முதல்யாமம் வந்தவழிக் கண்டு கொள்க.) இதுபற்றியே இளம்பூரணரும், மாலையாவது இராப் பொழுதின் முற்கூறென்றும், வைகறையாவது இராப் பொழுதின் பிற்கூறென்றும், விடியலாவது பகற்பொழுதின் முற்கூறென்றும் எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறென்றும், நண்பகலாவது பகற்பொழுதின் நடுக்கூறென்றும் உரைத்தனர். இன்னுந் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலே பூசைசெய்யுங் காலம் ஆறாக வகுக்கப்பட்டு வழங்குதலானும் அது துணியப்படும். இங்ஙனம் வழக்கியலோடொத்துவருதலின் சிறு பொழுதும் ஆறெனக் கொள்ளலே பொருத்தமாம். இச்சிறுபொழுதாறனுள் ஒவ்வொன்றும், ஒருநாளுக்குரிய அறுபதுநாழிகையுள், பப்பத்து நாழிகையுடையதென்பர் நச்சினார்க்கினியர். அவ்வகுப்பை நாம் உற்றுநோக்கும் போது அதுமிகப் பொருத்தமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் பகற் பத்துநாழிகை தொடங்கி, இருபது நாழிகைவரையும் நடுப்பகலும் இரவு பத்து நாழிகை தொடங்கி இருபது நாழிகைவரையும் இடையாமமும் கொள்ளநிற்றலின்; சிறுபொழு தைந்தெனக் கொள்வார்க்கு இவ்வரையறை பொருந்தாமையு முணர்ந்து கொள்க. இன்னும், பத்து நாழிகைக்குப்பின் வெயின்முதிர்தல் அநுபவத்தானும் உணரக்கிடத்தலின் நடுப்பகல் பத்து நாழிகையின் பின் தொடங்கி இருபது நாழிகைமுடியும்வரையு முள்ளகாலமே என்பது துணிபாதலானும் சிறுபொழுதா றென்றலே பொருத்தமாதல் காண்க. அற்றேல், தொல்காப்பியத்துள் மருதத்திற்கு விதித்த வைகறை விடியல் என்பதை உம்மைத் தொகையாகக் கொள்ளாது பண்புத் தொகையாகக் கொண்டு வைகறையாகிய விடியலென ஒன்றாகக் கொண்டு பொழு தைந்தென்றா லென்னை யெனின், அறியாது கடாயினாய், வைகறையும் வேறு; விடியலும் வேறு; ஆதலி னிழுக்குண்டு என்பது. வேறு என்பது எற்றாற் பெறுதுமெனின், வான்கண் விழியா வைகறை யாமத்து (சிலப்பதிகாரம். நாடு) எனவும், இரவுத்தலை பெயரா வைகறை யாமத்து (நற் - 37) எனவும் கடைக்கங்குல் (பட்டினப் - 115) எனவும். இரவுத்தீரெல்லை (வரி 16 - 9) எனவும் இருள்புலர்காலை (அகப்பொ) எனவும், வருஞ்செய்யுள் களானே வைகறை வேறென்பதூஉம், உடையவாறே நள்ளிரு ளலரி - விரிந்த விடியல் வைகினிர் கழிமின் (மலைபடுகடாம் - 195 - 6) எனவும், விடியல் வெங்கதிர்காயும் எனவும். ஆயிடை - வெஞ்சுடர் தோன்றி விடிந்ததையன்றோ (சிந்தா) எனவும், வான்கண் விரிந்த விடியல் மலைபடு (257) எனவும் வருஞ் செய்யுள்களானே விடியல் வேறு என்பதூஉம் அறியக் கிடத்தலாற் பெறுதுமென்பது. வைகறை - சூரிய உதயத்துக்கு முந்தியகாலம். விடியல் சூரிய உதயம் தொட்டுள்ளகாலம். விடியலைத் தொன்னூல்விளக்க நூலாசிரியர் எற்றோற்ற மென்றனர். பரிபாடலிலும் விடியலங்கியுயர்நிற்க என்பதற்கு, எற்றோற்றமென்னும் பொருளமையச் சிங்கராசியிற் சூரியன் நிற்க எனப் பொருள் கூறுவர் பரிமேலழகரும். அற்றேல், விடியல் என்பதற்கு விடியற் வெங்கதிர் என்பதற்கு விடியற்பின்னர்த்தாகிய வெங்கதிர் என்று பொருள் கொண்டாலென்னையெனின் அங்ஙனம் நலிந்து பொருள் கோடலாற் போந்தபயனின்றாதலானும், முன்னர்க் காட்டிய ஆயிடை - வெஞ்சுடர் தோன்றி விடிந்ததையன்றே என்பது முதலிய செய்யுள்களோடு மாறுபடுதலினாலும், அது பொருந்தாமை தெளியப்படும். அற்றேல், குறுந்தொகையினுள், காலையும் பகலும் கையறு மாலையும், ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்று என விடியலை வைகறை என்றே கூறலின், விடியலை வேறாகக் கோடல் பொருந்தாதன்றோ எனின், இருள்புலருங் காலமாதல் பற்றி வைகறையையும் ஒரோவழி விடியல் என்று கூறுவதன்றி விடியல் வைகறையாகாதென்பது நாம் முன்னர்க்காட்டிய உதாரணங் களானுணர்ந்துகொள்க. இன்னும், பரத்தைவயிற் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் பொழுதுகழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமை மீளுங்கால மதுவாதலானும், தலைவிக்குக் கங்குல்யாமங் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாமைமிகுதலான் ஊடலுணர்த்தற் கெளிதாவதோர் உபகாரமுடையத் தாகலானும் வைகறையும், தலைவி விடியற்காலம் சிறுவரைத் தாதலின் இதனாற் பெறும் பயனின்றெனத் தெளிந்து வாயிலடைத்து ஊடல் நீட்டிப்பவே அவ்வைகறை வழித் தோன்றிய விடியற்கண்ணும் அவன் மெய்வேறுபாடு விளங்கக்கண்டு வாயில் புகுத்தல்பயத்தலின் விடியலும் கூறினார் எனவும் கூறுதலானும் அது பொருந்தாதென்பது. இன்னும் உரையாசிரியரும், இனி மருதத்திற்கிடன் பழனஞ் சார்ந்த விடமாதலான் ஆண்டுறைவார் மேன் மக்களாதலின் அவர் பரத்தைவயிற் பிரிவுழி அம்மனையகத்து உறைந்தமை பிறரறியாமல் மறைத்தல் வேண்டி வைகறைக்கண் தம்மனையகத்துப் பேரும் வழி ஆண்டு மனைவி யூடலுற்றுச் சார்கிலாளாம். ஆதலான் அவை வைகறையும் விடியலும், அந்நிலத்துக்குச் சிறந்தன எனக்கூறுதலானும் இரண்டும் வேறெனக் கோடலே பொருத்தமாம். அற்றேல், நாள்வெயிற்காலையிற் புணர்தன் முறையன்மை யின் ஊடல் செல்லாதன்றோ எனின், இது பரத்தைவயிற் பிரிந்து வந்தமையாலான பெருந்துனியாதலிற் செல்லு மென்பது. இது பெருந்துனியென்பது விளக்குதற்கே நச்சினார்க்கினியரும் வாயிலடைத்து ஊடல் நீட்டிப்பவே எனவும் உரையாசிரியரும் ஊடலுற்றுச் சார்கிலாளாம் என்றுங் கூறியதூஉமென்க. ஆதலின் நாள்வெயிற்காலை யாகிய விடியலும் ஊடலுக்கு வேண்டியதொன்றென்பது துணிபேயா மென்க. அற்றேல், கூடலின் றோவெனின் அவள் ஊடறணிந்து மனமு மொன்றியபின் கூடுவானாதலின் அதன்கணாராய்ச்சி யின்றென்பது. இன்றும், நச்சினார்க்கினியர், வீங்குநீர் என்னும் மருதக்கலியுள், அணைமென்றோள் யாம்வாட வமர்துணைப் புணர்ந்து நீ மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ பொதுக்கொண்ட கெளவையிற் பூவணிப் பொலிந்துநின் வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை என மருதத்துக்கு, வைகறைவந்தது என்றும், விரிகதிர் மண்டிலம் என்னும் மருதக்கலியுள் தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின் குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய என மருதத்துக் காலைவந்தது எனவுங் கூறுமாற்றானும் அவ்விரு பொழுதும் பழையகாலத்து நூல் வழக்கின்கண்ணும் அமைந்திருத்தல் அறியப்படும். பிற்காட்டிய செய்யுளிற் காலை அமைந்தது எப்படியறியப்படுமெனின், அணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய என்றதனானே விடியற் காலத்துகப்பூ முதலிய சூடி அவற்றின் நாற்றச் செவ்விகுலை யாமல் வந்தானென்பது பெறப்படுதலின் என்பது. இதனை விளக்குதற்கே நச்சினார்க்கினியரும், மருதக்கலியுரையிலே இது நாற்றச் செவ்விகுலையாமை வந்தமைகூறலின் மருதத்து விடியற்காலம் கூறிற்று என்றும், இதனால் வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி அதனினும் அமையாது, பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே.... எனக் காமக்கிழத்தி உள்ளுறையுவமங் கூறினாள் என்றும் உரைத்தனர். இன்னும், குறுந்தொகை யினுள்வரும், காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்க் கழீஇய சென்ற மல்ல லூர னெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவர் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே என்னுஞ் செய்யுளும் மருதத்து விடியல்வந்தது. என்னை? தலைவி பெரிதும் விளக்கமுடையன் என அறியக்கிடந்தது விடியலேயாதலின்; எல்லினன் பெரி தென்பது பிறகுறிப் பென்றார் அந்நூலுரையாசிரியர். அதனானு மறிக. அற்றேல், மருதத்துக்கு இருபொழுது கோடன் மிகையன்றோவெனின், முல்லைக்குக் கார்காலம் ஒன்றேகொண்டு ஏனையவற்றிற்கு இரண்டும் ஆறுங்கோடன் மிகையன்றோவென விடுக்கப்படு மாதலின் அதன்கண் ஆராய்ச்சியின்றென்பது. அற்றேல், நக்கீரனார் களவியலுரையுள் வைகறையாமம் என ஒன்றே கூறியது என்னையோ எனின், அங்ஙனங் கூறியது பரத்தை வயிற்பிரிந்தார் தம்மைப் பிறரறியாமற் றம்மில்லிற்கு வருவது பெரும்பாலும் வைகறையேயாதல்பற்றி என்பது. விடியலும் அவர்க்குடன் பாடென்பது. வைகறைவிடியன் மருதம் என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டமையானே அறியப்படும். வைகுறுவிடியல் என்பதைப் பண்புத் தொகையாகக் கொண்டு வைகறையாமம் என்றாரென்றா லென்னை யெனின், அது முன்னர்க்காட்டிய இருவகை வழக்கோடும் மாறுபடுதலின் அவ்வாறு கொள்ளார் என்பது. இனி, வைகுறுவிடியல் என்னும் பாடத்துக்கு, வைகுறு விடியல் என்பதை வினைத்தொகையைகக் கொண்டு, இருள் கழிகின்றவிடியல், (= வைகறை) எனப் பொருள் கொண்டா லென்னையெனின், கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களில் விடியலும் ஓதப்படுதலின் அவ்வாறு கொள்ளார் என்பது, அன்றியும், ஆசிரியர் வைகறை ஒன்றே கொண்டாராயின் வைகுறு விடியல் எனக்கூறாது வைகுறு என விளங்கக் கூறுவார்மன், அங்ஙனங் கூறாமையானும் அங்ஙனங் கொள்ளா ரென்பது. ஆதலின், பரத்தைவயிற்பிரிந்தார் பெரும்பாலும் மீள்வது வைகறையேயாதல் பற்றி அது கூறினார் என்றலே பொருத்தமாம். இங்ஙனமே எற்பாட்டையும் மாலை யுளடக்கினாரு முளர்; பொழுதுபடுதலைச் சார்ந்த மாலைக் காலமே மிகுதியும் இரங்கலைத் தருதலின், அங்ஙன மடக்கினமை பின்னர்க் காட்டுதும். மாலை மயங்கிவந்தது என்பர் நச்சினார்க்கினியர், இலக்கியங்களும், பெரும்பாலும் வருதலின் யாமுரைத்தவாறே கோடலே பொருத்தம்போலும். வைகல் என்பது கழிதல் என்னும் பொருட்டு; அது வைகலும் வைகல் வரக்கண்டும் என்பதனா லறியப்படும். கழிதல் என்பது முற்றாய் நீங்குதலையுணர்த்தாது; ஆதலின் வைகுறு என்றார். வைகுறு கழிதலுறுவது; ஆதலின் விடியல் வேறென்பது நன்கு பெறப்படும். நாற்கவிராசநம்பியும் நக்கீரனார் போலவே விடியலையும் வைகறையுளடக்கிக் கூறினாரென்றலே பொருத்தமாம். இனி எற்பாடு என்பதற்கு ஞாயிறுபடுதலென உரை யாசிரியர் யாவருங் கொள்ளவும் சிவஞானமுனிவர் ஞாயிற்றின் உதயம் என்றனர். நாயகரைப் பிரிந்தோர் வருந்துவது இராக்காலமன்றிப் பகற்காலமன்மையானும், பகற்காலங் காமந்தணியுங்காலமன்றி மிகுங்காலமன்றாத லானும், கந்தபுராணத்தில் இந்திராணியினுடைய அணியைக்கண்டு இராக்காலம் முழுதும் வருந்திய இந்திரன் விடிந்தபின் அக்காமந் தணிந்தானெனக் கூறுப்படுதலானும்; இராமபிரானைக் கண்டு காமமுற்ற சூர்ப்பனகையும் அவ்வாறு தணிந்தாளென இராமாவதாரத்திற் கூறுப்படுதலானும், நெற்தற்றிணை பாடினாரெல்லாம் ஞாயிறுபடுங்காலமாகவே வைத்துப் பாடியிருத்தலானும், ஞாயிறுபடுதல்கண்டு இரங்கிய தலைவி தோழி முதலியோராற்ற ஆறியிருக்கும் மாலைக் காலத்துக்கு முன்னர் இரங்குதற்குரியகாலங் கூறுதலே முறையாதலானும் ஞாயிறுபடுதலென்பதே பொருத்தமாகவும், உதயமென்று முனிவர் கூறிய கருத்துயாதோ அறியேம். உதயமேயெனில் தொல்காப்பியர் வெய்யோன் தோற்றமென விளங்கக் கூறுவாராதலானும் ஞாயிறுபடுதலென்பதே பொருத்தமாம். இன்னும், எற்பாடு பொழுதி லிளநிலா முன்றில் எனவும், படுங்கதிரமயம் பார்த்திருந்தோர்க்கு எனவும், சிலப்பதிகாரம் கூறுமாற்றானும், எற்பாடு - ஞாயிறுபடுதல் என்பது அறியப்படும். அற்றேல், காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சி யாமமும் விடியலும் எனக் கூறியபொழுதினுள் எற்பாடு கூறப்பட்டிலதேயெனின் விடியலை வைகறையுளடக்கி நக்கீரனார் கூறியவாறுபோல எற்பாட்டை மாலையுள் அடக்கிக் கூறினாரென வுணர்க. அங்ஙனமே சிலப்பதிகாரக்காலம். வையமோ கண்புதைக்க வந்தாய் மருண்மாலை என மாலையுளடக்கிக் கூறுமாற்றானும் அறியப்படும். இதுபற்றியே சிலப்பதிகார உரையாசிரியரும், நெய்தற்குச் சிறுபொழுது எற்பாடு எனக்கூறி இவ்வடியை உதாரணமாகக் காட்டினார். இன்னும், நச்சினார்க்கினியர், இனி வெஞ்சுடர்வெப்பத் தீரத்தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நீழற்செய்யவுந் தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாங் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும், புன்னைமுதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும் நெடுந்திரையழுவத்து நிலாக்கதிர்பரப்பவுங் காதல்கைம் மிக்குக் கடற்கானும் கானற்கானும் நிறை கடந்து வேட்கைபுலப்பட உரைத்தலின், ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிறத்தலின் எற்பாடு நெய்தற்குவந்தது எனக் கூறியகருத்திற்கேற்ப முறையே நற்றிணையினும், அகநானூற்றினும், பெருங்கடன் முழங்கக் கானன் மலர விருங்கழி யோத மில்லிறந்து மலிர வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள்ளுடன் கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச் செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம் கல்சேர்பு நண்ணிப் படரடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண்மாலை யன்ன ருன்னார் கழியிற் பன்னாள் வாழலேன் வாழி தோழி யென்கட் பிணிபிறி தாகக் கூறுவர் பழிபிறி தாகல் பண்புமா ரன்றே (நற் - 117) நெடுவேண் மார்பி லாரம் போலச் செவ்வாய் வானந் தீண்டி மீனருந்து பைங்காற் கொக்கின் னிரைபறை யுகப்ப வெல்லை பைப்பையக் கழிப்பிக் குடவயிற் கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழின் மழைக்கண் கலுழ விவளே பெருநா ணணிந்த சிறுமென் சாயன் மாணலஞ் சிதைய வேங்கி யானா தழறொடங் கினளே பெரும வதனாற் கழிச்சுறா வெறித்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிந் தசைஇ வல்வில் லிளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கட் சிறுகுர னெய்தலெம் பெருங்கழி நாட்டே (அக.120) எனக் கூறப்படுதலானும், அவர்கருத்தே ஈண்டுப் பொருத்த மாதல் காண்க. இன்னும், நற்றிணையுள்ளும், ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே யெல்லியும், பூவீ கொடியிற் புலம்படைந் தன்றே வாவலும் வயின்றொறும் பறக்குஞ் சேவலு நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கு மாயாக் காதலொ டதர்ப்படத் தெளித்தோர் கூறிய பருவங் கழிந்தன்று பாரிய பராரை வேம்பின் படுசினை யிருந்த குராஅற் கூகையு மிராஅ விசைக்கு மானா நோயட வருந்தி யின்னுந் தமியேன் கேட்குவன் கொல்லோ பரியரைப் பெண்ணை யன்றிற் குரலே என எற்பாடுவருதலும், பிற பழந்தமிழ் நூல்களிலும் இவ்வாறு வருதலும் நோக்குக. இன்னும், எற்பாடு ஞாயிறு படுதலென்னுங் கருத்துறவே கதிருமெலிந்து கருங்கடல் வீழ்ந்தது என அன்பினைந்திணையியற்றினாரும் நங்கருத்தோடொப்பக் கூறல் காண்க. (செந்தமிழ் 25 - ம் தொகுதி பக்கம் - 278) இன்னும், இவ்வறுவகைப் பொழுதும் ஐவகைநிலத்திற்கும் உரிப்பொருள் பற்றியன்றி, அவ்வந்நிலத்து மக்களின் தொழில் நிகழ்ச்சி பற்றியும் உரியவாதல் காட்டுதும், முல்லைநிலத்து ஆயர்கள் பகலில் மேய்த்த ஆநிரைகளையும் பிறநிரைகளையும் கொண்டு வந்து தொழுவங்களிற் சேர்த்துப் பின் பால் கறத்தன்முதலிய தொழில்களையுஞ் செய்து தத்தமில்லிற்கு மீளுங்காலம் ஞாயிறுபட்ட மாலையே யாதலானும், குறிஞ்சி நிலத்து வேட்டுவரும் தெய்வவணக்கம் வெறியாடன் முதலிய சில தொழில்களைச் செய்யுங்காலம் இடையாமம் ஆதலானும், பாலை நிலத்து எயினரும் வழிச்சென்று வெயின் மிகுதிநோக்கி மரநீழல்களில் ஒதுங்கியிருப்போரை ஆறலைக்குங்காலம் நடுப்பகலேயாதலானும், நெய்தனிலத்துப் பரதவரும் மீன் பிடித்தல், உப்புவிளைத்தல், அவை விற்றன் முதலிய தொழில்களைப் பெரும்பாலும் செய்யுங்காலம் வெயில் வெப்பங் குறையுங்காலமாகிய எற்பாடேயாதலானும் அறுவகைச்சிறு பொழுதும் தொழில்பற்றியும் அவ்வந் நிலத்துக்குரியவாதல் காண்க. ஆயர்கள் தந்தொழில்செய்து மீளுங்காலம் மாலை என்பதை. தலையிறும்பு கதழு நாறுகொடிப் புறவின் வேறு புலம் படர்ந்த வேறுடை யினத்த வளையான் றீம்பான் மிளைசூழ் கோவலர் வளையோ ருவப்பத் தருவனர் சொரிதலிற் பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும் புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர் பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக் கல்லென் கடத்திடைக் கல்லி னிரைக்கும் பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர். (மலைபடுகடாம் - 407- 17) என்பதனாலும், குறிஞ்சிநிலத்து வேட்டுவர், தெய்வவணக்கம், வெறியாடன் முதலியன செய்யுங்காலம் இடையாமம் என்பதனை, அணங்குடை நெடுவரை என்னும் அகப் பாட்டினுள், களனன் கிழைத்துக் கண்ணிசூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் என்பதானும், உழவர்கள் வைகறையிற் றுயிலெழுந்து சென்று வயல்களிற் றொழில் செய்து மீளுங்காலம் விடியல் என்பதை. மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பிற் பெருநெற் பல்கூட் டெருமை யுழவ கண்படை பெறாது தண்புலர் விடியற் கருங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வையொடு புகர்வை யரிசிப் பொம்மற் பெருஞ்சோறு கவர்படு கையை கழும மாந்தி நீருறு செறுவி னாறுமுடி யழுந்தநின் னடுந ரோடு நீ சேறி யாயின்வண் சாயு நெய்தலு மோம்பு மதி (நற்றிணை - 60) என்பதனானும், துளங்குதசும்பு வாக்கும் பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் (மலைபடுகடாம் - 464 -5 ) என்பதனானும், எயினர்கள் வழிச் செல்வோரை யாறலைப்பது நடுப்பகலென்பதை - வானம் பெயல்வளங் கரப்ப என்னும் அகப்பாட்டினுள், நிறைவன விமைக்கு நிரம்பா நீளிடை யெருவை யிருஞ்சிறை யிரீஇய விரியிணர் தாதுண் டும்பி முரலிசை கடுப்பப் பரியின துயிர்க்கு மம்பினர் வெருவர வுவலை சூடிய தலைவர் கவலை யார்த்துட னரும்பொருள் வவ்வலின் யாவதுஞ் சாத்திடை வழங்காச் சேட்சிமை யதர சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்கா யுதிர்வன தா அ மத்தந் தவிர்வின்று புள்ளி யம்பிணை யுணீய வுள்ளி யறுமருப் பொழித்த தலைய தோல்பொதி மறுமருப் பிளங்கோ டதிரக் கூடஞ் சுடர் தெற வருந்திய வருஞ்சுர மிறந்தாங்கு (291) என்பதனானும், (சுடர்தெற என்றதனால் நடுப்பகல் பெறப்படும்.) பரதவர்மீன் வேட்டையாடற்குரியகாலம் பெரும்பாலும் எற்பாடென்பதை, நெடுற்கயிறு வலந்த குறுங்க ணவ்வலைக் கடல்பா டழிய வினமீன் முகந்து துணைபுண ருவகையர் பரத மாக்க ளிளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி யுப்போ யுமண ரருந்துறை போக்கு மொழுகை நோன்பக டொப்பக் குழீஇ யயிர்திணை யடைகரை யொலிப்ப வாங்கிப் பெருங்களந் தொகுத்த வுழவர் போல விரந்தோர் வறுங்கல மல்க வீசிப் பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறை (அகம் - 30) என்பதனானும், நெடுங்கட லலைத்த கொடுந்ததிமிற் பரதவர் கொழுமீன் கொள்கை யழிமணற் குவைஇ மீனெய் யட்டிக் கிளிஞ்சிலிற் பொத்திய சிறுதீ விளக்கிற் றுஞ்சு நறுமலர்ப் புன்னை யோங்கிய துறைவன் (நற்றிணை - 175) என்பதனானும் அறிந்து கொள்க. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், பக்: 38-47 3. இயற்கைநவிற்சியும் செயற்கைப்புனைவும் புலவர்கள் தாம் பாடும் பாட்டுக்களில் ஒரு பொருளை அமைத்து உணர்த்துங்கால் அதனியல்பையெடுத்தோதியும் உணர்த்துவர்; உவமைமுதலிய அலங்காரங்களால் அழகு படுத்தியும் உணர்த்துவர்; அவ்வாறுணர்த்துவனவற்றுள், முன்னையது இயற்கை நவிற்சியெனவும், பின்னையது செயற்கைப் புனைவு எனவும்படும். அவ்விரண்டனுள்ளும், இயற்கைநவிற்சியே பெரிதும் அமையச் செய்யுள் செய்தனர் சங்கச் சான்றோர்கள். செய்கைப் புனைவே பெரிதும் அமையச் செய்யுள் செய்தனர் பிற்காலத்துப் புலவர்கள். இவ்விருபகுதியார் செய்தவற்றுள்ளும் முற்காலத்தார் செய்தவற்றையே பெரிதும் போற்றுவர் ஒருபகுதியார், பிற்காலத்தார் செய்தவற்றையே பெரிதும் போற்றுவர் மற்றொரு பகுதியார், முற்காலத்தார் செய்தவற்றுள் இயற்கைநவிற்சியே பெரிதும் அமைந்திருத்தலானும் அதனை நவிலுதற்கு அத்துணை நுண்ணுணர்வு வேண்டியதின்மை யானும், உவமை முதலிய அலங்காரங்களானே புனைந்து கூறுதற்குப் பெரிதும் நுண்ணுணர்வு வேண்டுமாதலானும் பிற்காலத்தார் செய்யுள்களே சிறந்தனவென்பது அச்செய்யுள் களைப் போற்றுவார் கருத்தாகும். செயற்கைப் புனைவிற்கு எத்துணை நுண்ணுணர்வுவேண்டுமோ அத்துணை நுண்ணுணர்வு இயற்கை நவிற்சிக்கும் வேண்டுமாதலின் இரண்டும் ஒப்பச் சிறந்தன வென்பதை இங்கே சில செய்யுள்களில் வைத்து விளக்கிக் காட்டுதும். ஒரு குழந்தை தன் தந்தை உண்ணக்கண்டால் தானும் உடனிருந்துண்ணும்படி குறுகக்குறுக அடியெடுத்து வைத்து விரைந்து நடந்து வரும். (குறு குறு என்பது அண்மையில் அடியெடுத்து வைத்து விரைந்து சேறலை உணர்த்துவதொரு குறிப்புச் சொல்) வந்து தந்தை உண்ணுங் கலத்தின் பக்கத்தே இருக்கும். இருந்து, தன் சிறுகையை நீட்டி உண்கலத்திலுள்ள சோற்றை அள்ளி நிலத்திலே போடும். (மீளவும் அக்கலத்திலே போடும் எனினுமாம்.) தந்தையுடன் கூடப் பிசைந்து மீள ஒருதரம் அள்ளி வாயிற் கௌவும். மீள் ஒருதரம் அச்சோற்றைத் துழாவும். மீள ஒருதரம் அச்சோற்றை அள்ளி உடம்பிற்படும்படி சிதறும். இப்படிக் குழந்தைகள் பலவகையான பயனற்ற செயல்களைச் செய்து கொண்டு தந்தைமாரோடு கூட இருந்துண்பது இன்று நிகழும் உலகியல்பு. இவ்வியல்பினை ஒரு புலவன்; குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுங் துழந்தும் நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்கள் எனத் தன் செய்யுளிலமைத்து, ஒரு குழந்தை உண்பதை நாம் நேரே கண்டாற் போலக் காணுமாறு படம் பிடித்துக் காட்டுகின்றனான். இத்திறமைக்கு எத்துணை நுண்ணுணர்ச்சி வேண்டுமென்பது நுணுகி நோக்கினார்க்கே புலப்படும் என்க, இன்னும், ஒரு தாய் தன் குழந்தைக்குப் பால் முதலிய உணவையூட்டுங்கால், வீட்டு முற்றத்திலாதல் (செல்வர் வீட்டு முற்றங்கள் மணல்பரப்பப் பட்டிருக்கும்) வீட்டு சாலை களனாதல் அக்குழந்தையை உலாவி விளையாட விட்டு ஊட்டுவாள். செல்வர் வீட்டுப் பிள்ளைகளுக்குச் செவிலியர் ஊட்டுவதும் உண்டு. ஊட்டுங்கால் அக்குழந்தை ஒருதரம் உண்ணும், பின் சென்று விளையாடும். தாய் புறஞ்சென்று அழைக்க மீட்டும் வந்து ஒருதரம் உண்ணும். இப்படி அக்குழந்தை சென்று சென்று விளையாடுமிடந்தோறும் தாயும் புறத்தே சென்று சென்று ஊட்டுவாள். இப்படி ஊட்டும் பொழுது விளையாட்டுச் சிந்தையினால் அக்குழவி வேண்டாது மறுப்பதும் உண்டு. மறுக்கும்போது தாயானவள் என் கண்ணே! மணியே! அரசே! இன்னும் ஒருதரம் உண்ணென்று இன்மொழி கூறியும் உண்பிப்பாள். அம்முறை உண்டு மறுமுறை வேண்டாதாயின் கண்ணே! எனக்காக ஒரு தரம் உண்ணென்று ஊட்டுவாள். இப்படிப் பலரைக் கூறி உண்பிப்பதும் உண்டு. இப்படிக்கூறி உண்பிக்கவும் உண்ணாது மறுக்குமாயின் தாய் சிறிது சினமுடையாள் போலக் காட்டித் தன்கையில் வைத்திருக்கும் (அடித்தால் நோகாதபடி) புடைப்பாகச் சுற்றிய பூவொத்த மெல்லிய தலையையுடைய சிறுகோலான் மெல்லப் புடைத்துப் பயமுறுத்தி உண்பிப்பாள். சில குழந்தைகள் அவ்வடிக்கு அகப்படாது பாய்ந்து ஓடுவதும் உண்டு. ஓடுங்கால் தன்னைப் பற்றும்படி பின்னே தாய் ஓடிவரின் அத்தாய் இளைப்படையும்படி அவள் கைக்கு அகப்படாது சுற்றி ஓடித்திரிவதும் உண்டு. இவ்வியல்புகளையெல்லாம் சங்கச்சான்றோர்கள் தம் செய்யுள்களில் அங்கங்கே அமைத்துப் பாடியுள்ளார்கள். அவற்றின் சுவையை உணரும்படி அச்செய்யுள்களை இங்கே எடுத்துக்காட்டுதும். அவை, தெறுகதிர் ஞாயிறு... ..... தேம்பெய் தளவுறு தீம்பா லலைப்பவு முண்ணாள் இடுமணற் பந்தரு ளியல நெடுமென் பணைத்தோண் மாஅ யோளே (அகம் 89) அகலறை மலர்ந்த... ... தேம்பெய்து மணிசெய் மண்டைத் தீம்பா லேந்தி ஈனாத் தாயர் மடுப்பவு முண்ணாள் நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின் எம்முடைச் செல்வமு முள்ளாள் பொய்ம்மருண்டு (அகம் 105) (மண்டை - உண்கலம், ஈனாத்தாயர் - செவிலியர்) அணங்குடை முந்நீர்..... ...... தேங்கலந் தளைஇய தீம்பா லேந்திக் கூழை யுளர்ந்து மொழிமை கூறவு மறுத்த சொல்ல ளாகி வெறுத்த வுள்ளமோ டுண்ணா தோளே. (அகம் 207) (தேம் - தேன், கண்டசருக்கரையுமாம். கூழை - மயிர்) பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றரிநரைக் கூத்தற் செம்முது செவிலியர் பரீஇமெலிந் தொழியப் பந்த ரோடி யேவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி. (நற்றிணை 183) என்பன. இன்னும் யாதாயினும் ஓருணவு பொருளைத் தன் கையிற் கொண்டு ஒரு குழந்தை வீட்டின் வெளியே வரக்கண்டால் மரத்திலிருக்குங்காக்கை பறந்து வந்த அவ்வுணவுப் பொருளை அக்குழந்தைகளையினின்றும் பறித்துக் கொண்டு போகும். அப்பொழுது அக்குழந்தை கல்லென்று அழுது தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொள்ளும். இது இன்றும் நிகழும் இயல்பு. அதுபோலவே ஒரு வேட்டுவச் சேரியிலே ஒரு சிறு மலையிலுள்ள ஒரு குடிலின் வாழும் ஒரு பெண்குழந்தை உண்ணும்படி பாத்திரத்தோடு தன் கையில் வைத்திருந்த பாலை அவ்வாயின் முற்றத்தை விட்டுப் போகாது ஒரு வேங்கை மரக்கிளையில் மறைந்திருந்த ஒரு வலிய குரங்குக்குட்டி வந்து அப்பாத்திரத்தோடு பறித்துக் கொண்டு போக, அதனால் அக்குழந்தை மழைபோலக் கண்ணீர் பெருக அழுது, தன்கையால் விரல்சிவக்கும்படி பலமுறை அடித்துக் கொண்டது. அவ்வியல்பினை, ஒரு புலவன், புன்றலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய முன்றிற் போகா தெரியகைந் தன்ன வீததை யிணர வேங்கைப் படுசினைப் பொருந்திக் கைய தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி யெழுதெழில் சிதைய அழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் மாரியங் கிடங்கி னீரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅ யவ்வயி றலைத்தலி னானா தாடுமழை தவழுங் கோடுயர் பொதியி னோங்கிருஞ் சிலம்பிப் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே என்று தன் செய்யுளில் அமைத்துக் காட்டுதல் காண்க. இதில் அழுகைமிகுதியையும் வயிற்றில் பலதரம் அடித்துக் கொண்டமையையும் புலப்படுத்திக் கொடிச்சியின் பேதைமை மிகுதியையுணர்த்தும் நோக்கத்தினால் உவமைகள் புணர்த்தப் பட்டனவென்க. இவ்வியற்கைநவிற்சி செயற்கைப் புனைவோடுங் கூடிவந்ததென்க. இனிச் செயற்கைப்புனைவிற்குச் சில செய்யுள் காட்டுதும்; கடலின் கரையிலே நீர் தன்னிலையிலிருந்தோடி வற்றிய அள்ளற் சேற்றிலுள்ள மீன்களையருந்தும்படி ஆயிரக்கணக்கான நாரைகள் அக்கரையிலுள்ள மணன்மேட்டிலே நிரையாக விருக்கும். அவைகள் நிரையாகவிருப்பதை நோக்கும்போது அரசர்களது படைகளின் அணிவகுப்புப் போலக் காணப்படும். இவ்வியல்பினை ஒரு புலவன் தன்செய்யுளில், நீர் பெயர்ந்து மாறிய செறிசேற் றள்ளல் நெய்த்தலைக் கொழுமீன் அருந்த வினக்குருகு குப்பை வெண்மண லேறி யரைசர் ஒண்டைத் தொகுதியி னிலங்கித் தோன்றும் என்றும் படம்பிடித்துக் காட்டுகின்றான். இங்கே குருகுகளின் பன்மையையும் அவைகள் அணியாக விருந்தமையையும் விளக்குதற்கே அரைசரொண்படைத் தொகுதியின் என உவமை புணர்த்தப்பட்டது. குருகுகள் குப்பை வெண்மணலேறித் தோன்றும் இயல்பை உவமையான் விளக்கலின் இது செயற்கைப் புனைவேயாம். இங்கே நாரைகளினிருகை விளக்கற்குப் படைத் தொகுதியை உவமை காட்டிய புலவனின் நுண்மதி மிக வியக்கற்பாலதே யாம். ஆயிரக்கணக்கான நாரைகள் வரிசையாகவிருக்கு மிருப்பு, படையின் அணிவகுப்புப் போலத்தோன்றும். இவ்வியல்பின் உண்மையை இப்பொழுதும் கடற்கரையிற் காணலாம். இன்னும், ஒரு பெண்ணின் கொங்கைகளைத் தாமரையின் பேரரும்பாகவும், அவள் முகத்தைச் சந்திரனாகவும், அம்முகமாகிய சந்திரனின் தோற்றத்தினாலே அவ்வரும்புகள் விரியாமலிருப்பதாகவும் புனைந்து, அப்புனைவைத் தலைவன் கூற்றாகவைத்து, வண்ணமுலைப் பொற்றா மரைமுகுளம் வீறழிந்து கண்ணெகிழா வண்ணங் கருதியோ - தண்மதியை மால்வைத்த மாநிதிவண் கோளூரில் வாணுதாஅல் மேல்வைத்தான் மேனாள் விதி (மாறனலங்காரம்) என்னுஞ் செய்யுளில் ஒரு புலவனமைத்து, அதில் கொங்கை களின் இளமைத்தோற்றத்தையும் வடிவையும் முகத்தினழகை யும் வியப்பதற்காக, அக்கொங்கைகளாகிய தாமரையரும்பு களுக்கு இயல்பாக அமைந்த குவிவை, முகமாகிய சந்திரனால் ஏற்பட்டதாகக் கற்பித்து, உருவகத்தை யங்கமாகக் கொண்ட தற்குறிப்பேற்ற அணியாகக் கூறியதும் மிகச் சுவைபயத்தல் காண்க. இனி இயற்கைநவிற்சியும் செய்கைப்புனைவும் ஒப்பச் சுவை தருமென்பதை உணர்த்துமாறு, இரண்டும் ஒருங்கமைந்த ஒரு செய்யுளை இங்கே உதாரணமாகக் காட்டுதும். அறைகழற்சிலைக் குன்றவ ரகன்புனங் காக்கும் பறையெடுத்தொரு கடுவனின் றடிப்பது பாராய் பிறையையெழுட்டினள் பிடித்திதற் கிதுபிழை யென்னாக் கறைதுடைக்குறு பேதையோர் கொடிச்சியைக் காணாய் (கம்பர்) இச்செய்யுளின் முதலிரண்டடிகளினும், மலைவாணர்கள் தினைப்புனத்தைக் காக்கும்படி, அடிக்கும் பறையை, அவர்கள் இல்லாத சமயம் பார்த்து ஒரு குரங்கு தானும் எடுத்து அடிக்குமியல்பினைக் கூறியும் மற்றையவடிகள் இரண்டிலும் அம்மலையில்வாழும் பேதைமையுடைய ஒரு வேட்டுவமகள் அம்மலையின் மேற்றோன்றுகின்ற பிறையை (தன்னுதலோடு ஒப்புக்காணுமாறு) எட்டிப் பிடித்து அதிலுள்ள கறையை இதற்கு இது இருப்பது பிழையாகுமென்று அதைப் போக்குமாறு துடைத்து நிற்பதாக அம்மலையின் உயர்வைச் சிறப்பிக்குமாறு புனைந்து கூறியும் முறையே இயற்கை நவிற்சியும் செயற்கைப் புனைவுமாகச் சுவைபடச் செய்திருத்தல் காண்க. பிழை - குற்றம். பிந்திய இரண்டடிகளும் உயர்வு நவிற்சி, உவமை மயக்கம் என்னும் அணிகள் தோன்ற அமைக்கப் பட்டுள்ளன. உவமை குறிப்பாற் கொள்ளப்படும். - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், பக்: 126-131 உதாரணச் செய்யுட் குறிப்புரை அகத்திணையியல் 3ஆம் சூத்திரம் 1. கணம் - கூட்டம்; திரட்சி. கான்கெழு நாடு - காட்டிலுள்ள நாடு (முல்லை). குறும்பொறைநாடு - மலைநாடு (குறிஞ்சி). நல் வயலூரன் - நல்ல வயல்பொருந்திய ஊரையுடையவன் (மருதம்). தெண்கடற்சேர்ப்பன் - தெள்ளிய கடற்கரை (ஊரை) யுடையவன் (நெய்தல்) நானிலங்களையு முடையவன் என்றபடி. கையறு மாலை - செயலற்ற மாலையே! விளி. கடும்பகல் - நடுப்பகல் (உச்சிக்காலம்). களைஞர் - நீக்குபவர்; தடுப்பவர். இதனை நச்சினார்க்கினியர் அகத் திணையியலில் 12ம் சூத்திர உரையுள் பருவவரவின்கண் மாலைப் பொழுதுகண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு கூறியதென்று கூறலின் நெய்தற்கண் பாலை வந்ததாகும். இதனாலே பிரிவு பாலைக்குரியதென்பதும், அது நெய்தற்கண் மயங்கி வந்த தென்பதும் பெறப்படும். சேர்ப்பனுக்கு ஏனை நிலங்களை விசேடணமாக்கிக் கூறியதனானும், ஏனை ஒழுக்கங்களுக்குரிய நிலங்களிவையென்பது குறிப்பாற்றோன்ற வைத்தமை யானும் ஐந்திணைக்கும் இடநியமித்ததென்பது பெறப்படும். 2. வைநுனை - கூரிய நுனையையுடைய மொட்டு. இல்லம் - தேற்றா. பிணி - மொட்டு. திரித்தன்ன மருப்பு என இயைக்க. திரித்தல் - முறுக்கல். மருப்பின் இரலை என வொட்டுக. அவல் - பள்ளம். அடைய - ஒருங்கு. தெறிப்ப - துள்ள. புலம்பு - நீர் பெறாத வருத்தம். கருவி - தொகுதி. வானம் - மேகம். உறை - துளி. குரங்கு உளை - வளைந்த தலையாட்டம் (உச்சிமயிர்). வள் - வார். நரம்பு ஆர்ப்பன்ன பறவை என இயைக்க. பறவை - வண்டு. உவக்காண் -விடத்தே. ஒட்டி நின்ற ஒரு சொல். இது பரிமேலழகர் கருத்து. இது பொருத்தமோ என்பது ஆராயத்தக்கது. உங்கேகாண் என்பது நன்று. நாடன் தோன்றுமெனக் கூட்டுக. உறந்தை - உறை யூர். குணாது - கிழக்கின்கணுள்ளது. அரிவை - விளி. (அகம் - 4). 3. கிளை - சுற்றம். பாராட்டும் - விரும்பிப் பாதுகாக்கும். முளை - மூங்கின் முளை. தருபு - தந்து. குளகு - இலையுணவு. உருவு - வடிவு. ஒளிறு - விளங்கிய. உறை - மழை. நவின்று - பயின்று. சிமை - சிகரம். வட்டித்து - சூழ்ந்து. ஏறு - இடியேறு. உரைஇய - பரந்த. காண்புஇன் சாயல் - காண்டற்கினிய சாயல். தடைஇ - வளைந்து. படாஅ - துயிலா. இயவுக்கெடவிலங்கி - வழிதடுமாறலான் விலகி. வழங்குநர் - வழிச்செல்வோர். புலிபார்க்கும் மலையின் பிளப் பினையுடைய இடத்தில் வரவு அரிதென்னாய் என இயைக்க. ஆரம் - சாந்தம். முயங்கல் - தழுவல். சாஅய்தும் - மெலிவேம். அலர் - பலரறிந்த பழிமொழி. அம்பல் - சிலரறிந்த பழிமொழி. தோன்றி - காந்தள். பகல்வந்தீமே - பகற்பொழுதில் வருவாயாக. வினைத் திரிசொல். 4. பட - மொய்த்தலால். ததைந்த - சிதறின; மலர்ந்த கண்ணி - நெற்றிமாலை. உரு - நிறம்; அச்சமுமாம். மழவர் ஒட்டிய - மழவதேசத்தாரை ஓடச்செய்த. ஆவிநெடுவேள் - ஒரு குறுநில மன்னன். அறுகோடு - அறுத்துத் திருத்தின கோடு. பொதினி - ஒருமலை. சிறு காரோடன் - சாணைக்கல் செய்வோன். பயின் - அரக்கு. கல் - சாணைக்கல். காடிறந்தோர் ஆங்கண் (சொல்லிய) சொல் தாம் மறந்தனர்கொல் என இயைக்க. தோழி - விளி. பொலங் கலம் - பொன்னுங்கலமும். வெறுக்கை - செல்வம். தருமார் - தருவார் (தரும்படி). உலறிய - வற்றிய; நேரான. வௌவுநர் - ஆறலைப்பார். மடிய - வாராதொழிய. நவிரல்வான்பூ - பழையதாகிய வெள்ளியபூ. சூரற்கடுவளி - சூறாவளி. ஆர் - ஆர்ப்பு. முன்கடல் - கடல்முன். மரத்த வெம்மைய. ஆற்ற தோன்றலகாடு என இயைக்க. (அகம் -1). 5. முனைஇய - வெறுத்த. காரான் - எருமை. நோன்தளை பரீஇ - வலியகட்டை அறுத்துக்கொண்டு. பழனம் - வயல். உடன் - ஒருங்கு. தூம்பு - மதகு. மயக்கி - காலாலுழக்கி. ஆரும் - உண்ணும். புலக்கேம் - புலப்பேம். யார் - அதற்கு நீ யார்? என்ன உறவினை என்றபடி. வாருற்று - நீட்சியுற்று. உறைஇறந்து - மழைக்கால வீழ்ச்சியைக் கடந்து. சமம்ததையநூறும் - போர் சிதையக் கெடுக்கும். சென்றீ - செல்; ஈ முன்னிலையசை. தகைக்குநர் - தடுப்போர். (அகம் - 46). 6. கானல் - கடற்கரைச்சோலை. பாடு - ஒலி. எழுந்து - மிக்கு. தொகுதி - கூட்டம். குவை - திரட்சி. குடம்பை - கூடு. அல்குறு காலையாகிய மாலை எனக் கூட்டுக. அல்குதல் - (எல்லாம் தம்பதியிற்சென்று) தங்குதல். தளர - ஒல்க. தூங்கி - அசைந்து. தூங்கிவந்த கொண்டல் என இயைக்க. கொண்டல் - கீழ்க்காற்று. கையறுபு - செயலற்று. இனைய - வருந்த. மறாஅலியர் - மறவா தொழிக. கேண்மையை மறவாதொழிக என மாற்றிக்கொள்க. அளி - அளித்தல் (-அருளல்) முனைஇ - வெறுத்து. ததும்பும் - ஒலிக்கும். செறிமடைவயிர் - செறிக்கப்பட்ட மடை (மூட்டுவா) யையுடைய கொம்பு. வயிர் - கொம்புவாச்சியம். பிளிற்றி - ஒலித்து. (அகம் - 40). 7. முல்லை - விளி. நீபெறக் கேண்மை எவன்? என முடிக்க. எவன் - எவ்வியல்பினது. மாஅயோள் - மாமை நிறமுடையோள். 8. கரந்தை - நிரைமீட்டற்குரியது. கண்ணி - மாலை. பரி - குதிரை. கடைஇ - செலுத்தி. 9. நறை - நறுமணம். எறிந்து - வெட்டி. உறை - மழை. ஏனல் - தினை. காணீரோ - கண்டிலீரோ. ஏ மரை - அம்பு தைத்த மரை. ஈண்டுப் போந்தது காணிரோ என இயைக்க. (திணை: நூற் -1). 10. வாரா - வளர்ந்து. முதுக்குறைவு - பேரறிவு. இது தோழி நகையாடிக் கூறியதுபோலும். 11. ஆள்வினை - முயற்சி. கண்பனி - கண்ணீர். 12. எங்கை - என் தங்கை; என்றது பரத்தையை. ஆகி - ஆகியும். 13. பூசல் - ஒலி. ஏதின்மாக்கள் - அயலார். நோவர் - வருந்தவர். என் நலத்துக்கு நோவாரில்லை என இயைக்க. 5ஆம் சூத்திரம் 14. பாடுஇமிழ்பரப்பு - (திரை) முறிதலையுடைத்தாகிய முழங்குகின்ற கடல். அசைஇய - துயின்ற. ஆடுகொள்நேமியான் - வெற்றியைக்கொண்ட சக்கரத்தினையுடையோனாகிய திருமால். 15. மடையடும் - பலியாகச் சமைக்கும். காமன் - மன்மதன். படைமன் இடுவான் - தன் கையிற் படையை மிகவும் (போக விடுவான்) செலுத்துவான். 16. படியோர் - (பிரதியோர்) பகைவர். படியார் என்பதில் ஆ - ஓவாயிற்றாக உரைப்பினுமமையும். தேய்த்த - அழித்த. நெடுவேள் - முருகன். 17. புதுப்புனல் - புதுநீர். தவிர்தல் - ஒழிதல்; தங்கல். தேற்றி - வார்த்தையால் தெளிவித்து. தெய்வத்திற்றெளிப்பேன் - பின், தெய்வத்தாற் தெளிவிப்பேன். (சத்தியஞ் செய்வேன்). 18. மனை - இல்; விடு - அணங்கு - தெய்வம். 19. புகாஅர்த்தெய்வம் - சங்கமுகத்திலுள்ள தெய்வம். சங்க முகம் - கடலில் ஆறுவந்து கலக்குமிடம். 20. அணங்கு - தெய்வம். அயரும் - வழிபாடுசெய்வாள். 21. சினை - மரக்கொம்பு. சினம் - கோபம் (வெப்பம்) தணிந்தீக - தணிக; அகரந் தொக்கது. கனலி - ஞாயிறு. 22. வளி - காற்று. 23. நெய்தல் - இரங்கலொலி. கேளன்மார் - கேளாதொழி வார். 24. வன்புலக்காடு - வன்புலமாகிய காடு; முல்லையுங் குறிஞ்சியும் வன்புலமாதலின் முல்லையை வன்புலக்காடு என்றார். 25. இறும்பு - சிறுகாடு. 26. புலத்தல் - வெறுத்தல். 6ஆம் சூத்திரம் 27. விருந்தின்மன்னர் - புதியமன்னர். கலம் - ஆபரணம். தெறுப்ப - குவிப்ப. வேந்தன் - தான் துணையாகப்போன வேந்தன். பெயல் - மழை. ஆர்கலிதலையின்று - ஆரவாரத்தோடு பெய்தது ஓலத்தன்னநிலம் என்க. ஓவம் - சித்திரம். கோபம் - இந்திரகோபம் (-தம்பலப்பூச்சி). வள்வாய் - செறிவைத்தன் கட்கொண்ட. ஆழி - உருளை. உள்ளுற்று உருள - நிலத்தில் ஆழ்ந்து உருள. உள்ளுறல் - பெயலால் நனைதல் என்பர் குறிப்புரைகாரர். கடவி - செலுத்தி. மதவுநடை - வலியநடை. தாம்பு - கயிறு. அசை - கட்டிய. கரை - முலைமுடி மூடிய - சோர (சொரிய). கனை - கனைக்கின்ற (அழைக்கின்ற). காற்பரிபயிற்றி - காற்செலவைப் பயிலச்செய்து. கொடுமடி - இலை பறித்திடுதற்குக் குழியக்கோலின மடி. பின்றை - (பசு நிரைகளின்) பின். தூங்க - மெத்தென நடக்க. நகுதல் - மலர்தல். சுவையின் - சுவைபோல. தீவிய - இனியவாக. மிழற்றி - மொழிந்து திங்கள் - விளி. தாலி - ஐம்படைத்தாலி. ஒற்றி - நினைந்து. விலங்கு அமர்க்கண்ணள் - ஒருக்கடித்துப்பார்க்குங் கண்ணளாய். விரல் விளிபயிற்றி - விரலால் அழைத்து. பூங்கொடிநிலை காண்குவம் கடவுக என இயைக்க. 28. மன்று - ஊர் அம்பலம். பாடு - ஒலி. அவிதல் - அடங்கல். மனை - இல்லிலுள்ளார். மடிந்தன்று - துயிலுற்றனர். யாமம் - இடையாமம். கொளவரின் - முற்பட்டுவரின்; உயிர்கொளவரின் எனலுமாம். கனைஇ - செறிந்து. உரைஇ - பரந்து. கரைபொழியும் - மிகும்; கரைந்து ஒழியும் என்றுமாம். எவன்கொல் - எத்தன்மையோ! சூழாது - கலந்தாலோசியாது. இறும்பு - சிறுகாடு. சிலம்பு - பக்கமலை. தலைஇ - பெய்து. வார்பு - ஒழுகி. இட்டு அருங்கண்ண - குறுகிய அரிய இடத்திலுள்ள. படுகுழி - யானைப் படுகுழி. இயவு - வழி. நெஞ்சம் சூழாது தாங்கிய சென்றது எவன் கொல்? என இயைக்க. இடுகல் - ஒடுங்கலுமாம். 7ஆம் சூத்திரம் 29. அடூஉநின்ற - வருத்தாநின்ற. தமியோர் - தனித்திருப் போர். மதுகை - வலி. தூக்காய் - ஆராயாய். முனிதல் - வெறுத்தல். முரண் - மாறுபாடு. 8ஆம் சூத்திரம் 30. அணைமென்றோள் - அணைபோலும் மெல்லிய தோள். அமர்துணை - விரும்பிய பரத்தை. வாட புணர்ந்து எனவியைக்க மல்லல் - வளப்பம். கவ்வையிற் பொலிந்த பொதுக்கொண்ட பூவணி வதுவையென மாற்றுக. கவ்வை - ஆரவாரம். பொது - சிறப்பில்லாமை. வதுவை - கலியாணம் வைகறைப்பெற்றது மாண்பன்றோ எனக் கூட்டி முடிக்க. 31. தணத்தல் - நீங்கல். பாராட்டல் - கொண்டாடுதல். வந்தீயான் - வாரான். கதுப்பறல் - அறல் கதுப்பு; என்றது அறலை யுடைய கூந்தலை - காணிய - காண்டற்கு. 32. நெடுவேள் - முருகக்கடவுள். செவ்வாய்வானம் - செவ் வானம். பறைஉகப்ப - சிறையை உயர்த்த; பறப்ப. எல்லை - பகற்காலம். குடவயின்கல் - அத்தகிரி. மதர் எழில் மழைக்கண் - மதர்த்த அழகிய குளிர்ந்த கண். மாண்நலம் - மாண்ட அழகு. ஆனாது - அமையாது. அழல் - அழுதல். அத்திரி - கோவேறு கழுதை. பரிமெலிந்து - செலவு மெலிந்து. எல்லி - இராக்காலம். படப்பை - தோட்டம்; சோலை. பெரும! ஞாயிறு கல்சேர்ந்தன்று; இவள் அழல் தொடங் கினள்; செல்லாது; அசைஇ. சேர்ந்தனை, செலின், சிதைகுவ துண்டோ என வியைக்க. 33. மா - மாமரம். விளைந்து - பழுத்து. கதூஉம் - கவ்வும். ஆடிப்பாவை - கண்ணாடியுள் தோன்றும் சாயை; உருவம். மேவன - விரும்புவன. 34. அரி - உள்ளிடுபரல். அவ்வளை - அழகியவளை. ஐயை - ஐயை என்னும் பெயருடைய பெண். தித்தன் - ஒரு சிற்றரசன். நீவெய்யோள் - நீ விரும்பிய பரத்தை. குழைய - பொலிவுகெட அகம் - மார்பு. வனம் - அழகு. சுணங்கு - தேமல். மாயம் - வஞ்சனை. சாயினை பற்றி - வணங்கிப் பலகாற் சொல்லி. அந்தூம்பு வள்ளை - அழகிய உட்டுளையினையுடைய வள்ளைக்கொடி. அரில் - பிணக்கம்; தூறு. மத்தி - ஒரு குறுநில மன்னன். கழாஅர் - ஓர் ஊர். தொல்லஃது - பழையது. நெருநல் ஆடினை, இன்று வந்து புதல்வன் தாயெனச் சாயினை பயிற்றி எள்ளல்; அஃது அமைகும்; இளமை தொல்லஃது; நின் பொய்ம்மொழி இனிமைசெய்வது எவன் எனக் கூட்டி முடிக்க. 9ஆம் சூத்திரம் 35. ஆறு - வழி. இரும்பொறை - பெரியமலை. உடைத்து ஆகலின் ஆறு நன்று எனக்கூட்டி முடிக்க 36. கையறல் - செயலறுதல். தானை - சேனை. ஆற்றவுமிருத் தல் - மிகவுந் தங்குதல். 37. மா - பெரிய. வீ - பூ. அறை - பாறை. வரித்தல் - கோலஞ் செய்தல். m‹dhŒ!பிரிந்தெனப் பசப்பது எவன்கொல்? எனக் கூட்டுக. 38. எக்கர் - மணற்றிடல். கமழ - மணம்வீச. துவலைத்தண் துளி - துவலையாகிய தண்ணிய துளி. 39. அறல் - நீர். வரி - இசை. துவன்றி - நிறைந்து. விளைக்கும் - உண்டாக்கும். 40. கள்ளியம்காடு - கள்ளிக்காடு. வறன் - வறட்சி. வலங் கடந்து - ஓடும் வெற்றியைக் கடந்து; வலத்தில் வீழவென்று எனினுமாம். புலவுப்புலி - புலால் விருப்புடைய புலி. கலவு - மூட்டுவாய். குறும்பு - காட்டான். நூறி - கொன்று; சிதைத்த. கல் முடுக்கர் - கற்பாறையின் முடுக்கு. திற்றி - தசை. கெண்டும் - அறுத்துத் தின்னும்; அகழ்ந்து தின்னும் எனினுமாம். இறும்பு - சிறுகாடு. கண் - கணு. வயலை - வயலைக் கொடி. புலம்ப - தனிப்ப. ஆழேல் - (துன்பத்தில்) ஆழ்ந்திடாதே அழேல் எனினுமாம். விகாரம் - அற்சிரம் - முன்பனிக்காலம் அகல்யாறு - அகன்ற ஆறு. தொகல் - தொகுதி. மாஅத்து - மாமரத்து. இணர் - கொத்துக்கள். மஞ்சு ஊர - மேகம் தவழ. தோழி! கொடியோர்க்கு அகம்புலம்ப ஆழேல் என்றி; என்? யாற்றடைக்கரைப் பொங்கரில் மஞ்சு ஊரக் குயில் அகவும் குரல் கேட்போர்க்கு கண்பனி நிறுத்தல் எளிதோ எனக் கூட்டி முடிக்க. முடை இறுக்கும் சுரம் என்க. முடை - தசை. 10ஆம் சூத்திரம் 41. பகைவென்று - பகையை வென்று. வகை - கூறுபாடு. செம்மல் - தலைமை. புதல் - சிறுதூறு. பூஅம்கட் பொதிசெய்யா - பூவாய் அழகிய கள்ளைப் பொதிதலைச் செய்யாத. 42. நூல்அறுமுத்து - நூல்அற்ற முத்துமாலை. தண்சிதர் - குளிர்ந்த பனித்துளி. தாளி - தாளியறுகு. நாள் - விடியற்காலம். 11ஆம் சூத்திரம் 43. கிளர்ந்தன்ன - எழுந்துசென்றாலொத்த; அன்னவங்கம் என வியைக்க. உரு - அச்சம். வங்கம் நீர் இடையே பிளக்கும்படி என வியைக்க. எல்லை - பகற்காலம். விரைசெலல் இயற்கை - விரைந்து செல்லுந் தன்மையாக. வங்கூழ் - காற்று. நீகான் - மீகாமன். எரி - தீபம். ஒய்ய - செலுத்த. ஆள்வினைப்பிரிந்த - பொருள்தேடும் முயற்சிபற்றிப் பிரிந்த. அழிபடர் அகல - வருந்துதற்குக் காரணமாகிய துன்பம் நீங்கும் படி. ஆல் - அசை. பெறின் வருவர்மன் என வியைக்க. வைப்பு - மருதநிலத்து ஊர். பகன்றை - கிலுகிலுப்பை; சிவதையுமாம். பலவுக்காய் - பலாக்காய். பாகல் தூங்க எனவியைக்க. பாகல் - பாகற்கொடி. தூங்க - அசைய. ஆனாவாடை - இடைவிடாது வீசுகின்ற வாடைக்காற்று. இழை - ஆபரணம். கவின் - அழகு. 44. துறைகெழுநாட்டின்கண் குன்றம்போலும் வெண்மண லிலே ஏறிநின்று; தோன்றலை இன்னும் காண்கம் எனவியைக்க. தோன்றும் - காணப்படும்; கூம்புங் கலனும் தோன்றும்; அத் தோன்றுதலை என்க. தோன்றும் துறையென முடிப்பினுமமையும். 12ஆம் சூத்திரம் 45. சிறையவண்டினம் - சிறகினையுடைய வண்டுக்கூட்டம். கூந்தல் நாறும் - கூந்தல் நறுமணம் வீசாநிற்கும். தெய்யோ, மாதோ என்பன அசைகள். 46. புலிகொல் - புலியாற்கொல்லப்பட்ட.. குருளை - குட்டி. கேழல் - ஆண்பன்றி. நாடன், நீத்தோன் மறந்தனன் எனக் கூட்டி முடிக்க. 47. வன்கண்மை - தறுகண்மை. மென்சொன் மடமகள் - மெல்லிய சொற்களையுடைய மடமகள். நீத்தல் - நீக்குதல். தவப்பல - மிகப்பல. 48. கண்ணை - கண்ணையுடையாய். கடாவுதி - கடவுதி என நின்றது. கடாவுதி - வினாவுவாய். ஆயின்என் எனப் பிரிக்க. அஃதூஉம் என்பதில் ஆய்தம் விகாரத்தாற் றொக்கது. பயந்த மாறாகிய அஃதூஉம் அறிய வாகுமோ என மாற்றி இயைக்க. 49. முளைநிரைமுறுவல் - முளைபோலும் நிரைந்த பல். நெருநல் - முன்னாள். குறி - குறிப்பிடம்; குறிப்பின் தங்கிவிளை யாடல். அலர் பெரிது என முடிக்க. கெளவை - ஒலி. 50. படலை - மாலை. படலையில் மொய்ப்ப நீ நயந்துறையப் பட்டோள் யாவள் என முடிக்க. எம்மறையாதி - எமக்கு மறையாதி. யாரள் என்ற பாடத்திற்கு எத்தகைய உறவினள் எனப் பொருள் கொள்க. 51. உதுக்காண் - உவ்விடத்தே பார். பாசடும்பு - பசிய அடம் பங்கொடி. பரிய - அற; வருந்த. வந்தன்று - வந்தது. உண்கண் - மையுண்ட கண். மரீஇய - மருவிய; பொருந்திய. தேர் அடும்பு பரிய அதன்மேல் ஊர்ந்திழிந்து நெய்தலை மயக்கி வந்ததென்க. 52. கேள் - உரிமை. அது ஆகுபெயராய் உரிமையுடை யாளை யுணர்த்திற்கு. கண்டிகும் - கண்டேம். 53. உறாஅ வறுமுலை - பால் பொருந்தப்பெறாத வெறு முலை. உண்ணாப்பாவை - உண்ணாவியல்பையுடைய (விளை யாட்டிற்குரிய) பாவை. மடுத்தல் - பொருந்தவைத்தல். 54. ஆனாது - அமையாது. வளைத்தோள் - வளையலணிந்த தோள். புல்லென்றன - பொலிவழிந்தன (வாட்டமடைந்தன). 55. குருகு - கொக்கு. பிள்ளை - பார்ப்பு. நக்க - மலர்ந்த. நேர்கல்லேன் - உடன்படேன். 56. இலங்குவளை தெளிர்ப்ப - விளங்குகின்ற வளையல்கள் ஒலிக்க. அலவன் ஆட்டி - நண்டையலைத்து. முகம்புதை கதுப்பினள் - முகத்தை மறைக்கின்ற கூந்தலையுடையவள். 57. வேப்புநனை - வேம்பினரும்பு. கள்வன் - நண்டு. பூவுறைக்கும் - பூவுதிரும். எவன்கொல் - யாதுகொல். 58. பழனம் - வயல். கம்புள் - சம்பங்கோழி. பயிர் - ஒலிக் குறிப்பு. தந்தை கைவேல் - தந்தை கையின் வேல். 59. நெறிமருப்பு எருமை நீலவிரும்போத்து - திருகிய கொம்பையுடைய நீலநிறத்தையுடைய பெரிய எருமைக்கடா பழனவெதிர் - கரும்பு. 60. புனிற்றா - ஈன்றணிய எருமைஆ. நுந்தை - நுமது தந்தை. 61. புரவிச் சூட்டு மூட்டுறு கவரி - குதிரையின் உச்சியின் மூட்டிற் பொருத்திய சாமரை (தலையாட்டம்). சேயரிப் புனிற்றுக் கதிர் - சிவந்த வரிபொருந்திய இளங்கதிர். மூதா - முதிய ஆன். பாகல் ஆய் - கொடிப் பகன்றையொடு. பரீஇ - பாகற் கொடியையும் நுணுகிய பகன்றைக் கொடியையும் அறுத்து. (அவற்றால்) காஞ்சியினகத்துக் கரும்பருத்தியாக்கும் - காஞ்சிக் குற்றியினிடத்துக் கரிய பருத்தித் தண்டினை வைத்து (வேலியாக)க் கட்டும். கரும்பருகி யாக்கும் என்னும் பாடத்திற்குக் கரும்புத் துண்டுகளை அருகே வைத்துக் கட்டும் எனப் பொருள் கொள்க. பரீஇ யாக்கும் எனக் கூட்டி முடிக்க. ஆம்பல் முழுநெறிப் பகைத்தழை - செவ்வாம்பலின் முழுப்பூவாற் றொடுத்த நிறம் மாறுபட்ட தழை. முழு நெறி - புறவிதழ் ஒடித்த பூ எனப் புறநானூற்றுரைகாரர் (116ஆம் செய்யுள்) கூறுவர். வேறு பூவும் இலையும் விரவத் தொடுத்திருத்தலின் பகைத்தழை என்றார். மிகுதிபற்றி ஆம்பற்றழையாயிற்று. காயா ஞாயிற்று ஆகத்து அலைப்ப - இள ஞாயிறுபோல உடம்பிலே கிடந்து மோத. பொய்தல் - விளையாட்டு. பொலிக என - பொலிக என்று யாய் கூற. வந்து - யாம் வந்து. நின்நகா - நின்னொடு (நக்கு) சிரித்து விளையாடி. நகா - எள்ளாது எனினுமாம். பொன்னிறங்கொளல் பிழைத்த தவறோ என முடிக்க. கையுறை - கையிலுறுவிப்பது. வெள்ளை - வெள்ளாடு. ஓச்சி - செலுத்தி; பலியிட்டு. தணிமருங்கு அறியாள் - நோய் தணியு மிடத்தைக் காணாளாய். காயா ஞாயிற்றுப் பொய்தலாடி எனக் கூட்டி. காயாத ஞாயிற்றுப் போதில் விளையாடி எனப் பொருள் கூறுவாருமுளர். 62. அகல் - நெருங்கிய, வாலிய - வெள்ளியவாக. கோடல் - வெண்காந்தள். பெயல் - மழை. உழந்த - வருந்திய. சேண் - ஆகாயம். ஏர்தரு - எழுந்த. கூதிர்ப்பொழுது நின்றன்று என மாற்றிக் கூட்டுக. பாசறையோராகிய காதலர் என இயைக்க. நம்நிலை - நமது துன்ப நிலை. தந்நிலை - தாமுறுந் துன்பநிலை. யாமிறந்துபடின் அவர் துன்பமடைவார் என்பாள். தந்நிலை அறிந்தனர்கொல் என்றாள். 63. மங்குல் மாமழை - மிக விருண்ட மேகம். துள்ளுப் பெயல் - விழுந்த நீர் துள்ளுதலையுடைய மழை. புகையுற - புகைபோல. புள்ளி நுண்துவலை - புள்ளி வடிவாகிய நுண்ணிய பனித்துளிகள். கருவிளை - காக்கணம்பூ. துய் - பஞ்சிற்றொடர் நுனி. புதல்இவர் - புதல்களிற் படருகின்ற. இருவகிர் ஈருளின் - இரு பிளவான ஈரலைப்போல. ஈரியதுயல்வர - ஈரமுடையன வாய் அசைய. சிதர்சினை தூங்கும் - சிறு நீர்த்துளிகள் சினைகளிற் றொங்கும். தூங்கும் - துளித்துக்கொண்டிருக்கும் எனினுமாம். அற்சிரம் - முன்பனிக்காலம். ஆனாதுஎறிதரும் - அமையாது வீசும். வாடையொடு - வாடையால். நோனேன் - பொறேன். 64. துறுகல் - குண்டுக்கல். புலிக்குருளை - புலிக்குட்டி. எல்லி - இரவு. நல்லை அல்லை - நன்மை தருவாய் அல்லை. 65. துஞ்சுதல் - துயிலல். பக - பிளக்க. ஏறுதல் - மேலெழுதல். பாடு - ஒலி. உரைஇ - உலாவி. சிலைத்து - முழங்கி. ஆம் - நீர். தளி - மழை. ஈன்று - பெய்து. வாலா - தூய்தல்லாத. ஆடும் - அசையும்; உலாவும். புதல் - தூறு. காண்பு இன் காலை - காணுதற்கினிய காலத்து. படு - குழி; குண்டு. பதவு - அறுகு. புறக்கு - முதுகு. அரக்கு - செம்மெழுகு. ஈயன்மூதாய் - தம்பலப்பூச்சி (இந்திரகோபம்). பாஅய் - பரந்து. ஈரணி - இருநிறம் (-நீரொரு நிறமும் இஃதொரு நிறமுமாகத் தோன்றல்). இரீஇய - தன்னுள் அமைத்துக் கொண்ட ஈர்மருங்கில் அணிதிகழ என்று மாற்றி, ஈரமான இடத்தில் அழகுற விளங்க என்று பொருள் கொள்வாருமுளர். 66. வயவுநோய் - கருப்பந் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கை நோய். நலிதல் - வருத்தல். அல்லாந்தார் - அலமந்த சுற்றத்தார். அலவுற - வருந்த. பயம் - உணவு. பசுமை - பயிர்களால் உண்டான பசுமை. புனிறு-ஈன்றணிமை. வண்டல் - வண்டற் பாவை. வடு - பூக்களுதிர்ந்து கிடந்த வடு. ஐம்பால் - மயிர். எக்கர் - இடுமணல். அறல் - நீர். வார - பெருக. மாயவள் - மாமைநிற முடைவள். திதலை - தேமல். ஐய - அழகிய. கொங்கு - தாது. உறைத்தர - உதிர்தலைச்செய்ய. இறுத்தரல்-வந்து தங்கல். சேய் - தூரம். சின்மொழி - விளி. நிறை - நிறுத்தல். நீவி - கைகடப்ப. வைகலான் - நாளின்கண். போழ்து - இளவேனிற்காலம். புரி - புரிதலால் (விரும்பலால்). வாடும் - வாடலுறும். சூழ்பு - சூழ்ந்து. கரத்தல் - மறைத்தல். கதிர் விடுத்த - ஞாயிற்றின் கதிர் அலர்த்திய. உயிர்வலிப்போன் - உயிரை அவரிடம் செல்லாமற் காப்போன். நிலாக்கங்குல் - நிலாவை யுடைய இராக்காலம். திறந்து - (வண்டுகள்) திறந்து. பொருட்பிணி - பொருள் வேட்கை; பொருளில்லாமை யாலுண்டான வருத்தம் எனினுமாம். படர்ந்து - விரும்பி. படர்ந்து வந்தனர் என இயையும். 67. சிறியவிலை - சிறியிலை எனத் தொக்கு நின்றது. உணீஇய - உண்ணும்பொருட்டு. உகக்கும் - உயரப்பறக்கும். நாட்டு இன்று கொல் என இயைக்க. 68. கையறுமாலை - செயலற்ற மாலையே! கடும்பகல் - உச்சிக் காலம். களைஞர் இலர் - நீக்குவார் (தடுப்பார்) இலர். 69. ஊழி - ஊழிக்கண். தடுமாறல் - உயிர்கள் பிறந்திறந்து தடுமாறல். தொகல் - ஒடுங்கல். வேண்டும் - விரும்பும். கண் - தன்கண். பெயர்த்தல் - ஒடுக்கல். எல் - பகல். தன்கதிர்மடக்கி கதிர்மாய என்க. கதிர்மாய - ஞாயிறுபட. அல்லது - நீதி அல்லாதது மலைந்திருந்து - ஏறட்டுக் கொண்டிருந்தது. எல்லைக்கு வரம்பாய - பகற்பொழுதிற் கெல்லையாகிய. பைதல் - வருத்தம். குழல் - விளி. இனி - இக்காலம். உயர்தல் - நீங்கல். இடும்பை - துன்பம். இனைதல் - வருந்தல். 13ஆம் சூத்திரம் 70. ஆய்தூவி - அழகிய சூட்டுமயிர். ஆய் - நுணுகிய எனினு மாம். தூது - கல். மாதர் - காதல். பேதுறூஉம் - மயக்கமுறுத்தும். 71. ஆயர் - இடையர். புல்லல் - தழுவல். உயிர்வளியா அறியா - உயிரை ஒரு காற்றாக உணராதே. நளிவாய் மருப்பு - செறிந்த வாயையுடைய கோடு. 72. முள் எயிறு - கூரிய கோடு. எருத்து அடங்குவான் - கழுத்திலே கிடக்குமவன். அடங்குவான் பெறும் என்க. காரி - கரிய ஏறு. கதம் - கோபம். வைமருப்பு - கூரிய மருப்பு. கொள்வான் துயில்பெறும் என இயைக்க. கொள்வான் - அடக்குபவன்; தழுவுபவன். 73. புணை - தெப்பம். உறீஇய - காமுறச்செய்த. 74. கல்லாப்பொதுவனை - சாதித்தன்மை இயல்பாக அமைந்த இடையனாந் தன்மையுடைய. 75. நடாக்கரும்பு - எழுதியகரும்பு. அமன்ற - நெருங்கிய. 76. வயங்கொளிமண்டிலம் - சூரியமண்டலம். உருப்பு - வெப்பம். 77. மிடல் - வலி. மடங்கல் - சிங்கம். உடவல் - கோபித்தல். கடந்தடுமுன்பு - வஞ்சியாது எதிர்நின்று அடும்வலி. கணிச்சி - மழு. சினவல் - சினந்துகூறல். ஏறுபெற்றுதிர்வன - (முப்புரம்) அழிவுபெற்று உதிர்வன. அழலவிர் ஆரிடை - வெப்பமான அரியவழி. நிலையேகற்பு - நிலை பெற்ற கற்பு. 14ஆம் சூத்திரம் 78. கோடல் - காந்தள். எதிர்முகை - தோற்றிய அரும்பு. இடைப்படவிரைஇ - இடையே கலந்து. மாண்ட - மாட்சிப் பட்டமுறி - தளிர். முயங்கநிற்கும் இனிது - தழுவுதற்கும் இனியது. 79. அல்குபடர் - மிக்க துன்பம் மதர்மழைக்கண் - மதர்த்த குளிர்ச்சியுடைய கண். திருமணி - அழகிய நீலமணி. யார் மகள் - யாவர் புதல்வி. இவடந்தை - இவளது தந்தை. நோன்தாள் - வலியதண்டு. கண்போனெய்தல் - கண்போன்ற நெய்தல். 80. வந்து - போந்து. உயா - வருத்தம். விளி - ஓசை. உருள் - குறுந்தடி உருள்கின்ற. மகுளி - ஓசை. குடிஞை - கோட்டான். ஒழியச் சூழ்ந்தனை - போக்கு ஒழியக் கருதினை. மாஇதழ் - கரிய இதழ். மலிர் - நீர். துறவு - நறவம்பு. உள்அகம் கனல - உள்ளம் கொதித்தலால். பழங்கண் - துன்பம். அறல் - நீர். வெய்ய உகுதர - வெப்பங்கொண்டனவாய்ச் சொரிய. வெரீஇ - அஞ்சி. மெல் இறை முன்கை - மெல்லிய சந்தினையுடைய முன்கை. அடர் - பொற்றகடு. அகல்சுடர் - அகலில்ஏற்றிய விளக்கு. உயங்குசாய் சிறுபுறம் - வருந்தி மெலிந்த பிடர். முயங்கியபின் - தழுவிய பின். 81. விரைசெலல் திகிரி - விரைந்துசெல்லும் ஞாயிறு. கடுங்கதிர் - கடிய கதிர். விடுவாய் - பிளப்பு. தாஅய் - பரக்க. நீர் அற வறந்த - நீர் அற்ற வறட்சியுற்ற. வள்எயிறு - கூரியபல். கள்ளியங் காட்ட - கள்ளிக்காட்டையுடைய. கடம் - சுரம். உள் ஊன் - உள்ளிருக்கும் தசை. சுரிமூக்குநொள்ளை - சுரிந்த மூக்கினை யுடைய சிறுநத்தை. இயவு - வழி. விழுத்தொடை - சிறந்த அம்பு. எழுத்துடை நடுகல் - எழுத்துகளையுடைய நடுகல். அருஞ்சுரக் கவலை - அரிய பாலையிடத்துக் கவர்த்தவழி. கரத்தல் வல்லா நெஞ்சம் - கரத்தல் மாட்டாத நெஞ்சம். என்றி - என்று கூறா நின்றாய். 82. ததைந்த - செறிந்த; மலர்ந்த. கொடியஇணர் - நீண்ட பூங்கொத்து. மகளிர் கதுப்பு - மகளிர் கூந்தல். புதுப்பூங்கொன்றை - புதிய பூக்களையுடைய கொன்றை. கானம் - காடு. யான் தேறேன் - யான் தெளியேன். பொய்வழங்கலர் - பொய்ம்மொழி கூறார். 83. பறியுடைக்கையர் - பறிஓலையுடைய கையினை யுடையர். மறி இனம் - ஆட்டின் திரள். ஆடுடை இடைமகன் - ஆடுகளையுடைய இடையன். சிறுபசுமுகையே - சிறிய செவ்வியையுடைய முல்லை அரும்புகளே. 84. கல்பிறங்கு அத்தம் - கற்கள் விளங்கும் பாலை. வாரா அளவை - வாராக்காலம். வம்பமாரி - பருவமல்லாத பருவத்து மழை. நெரிதர - நெருங்கும்படி. பருவம் வாரா அளவை, வம்பமாரி யைக் கார்என மதித்து, இணர் ஊழ்த்த என முடிக்க. 85. கானல் - கடற்கரைச்சோலை. அலவ! நின்னல்லது பிறிது யாது மிலன் எனக் கூட்டுக. அலவன் - நண்டு. தூதுசேறற்குப் பிறிது யாது மிலன் என்க. நசைஇ - விரும்பி. துறைவனை - துறையை யுடையவனுக்கு. எவ்வம் - துன்பம். அசாவுதல் - தளர்ந்திருத்தல். வேட்டம் - வேட்டை; என்றது இரை கவருதலை. மடிதல் - ஒழிந்திருத்தல். காக்கை கனவும் எனக் கூட்டுக. நீந்துமோ என அலவ! நீயே சொல்லல் வேண்டும் எனக் கூட்டி முடிக்க. 86. கொடுஞ்சிறை - வளைந்த சிறகு. இறைஉற - தாங்குதல் உற. நெறி - வழி. பிள்ளை - குஞ்சு. மராஅம் - கடம்பு. செரீஇய - செருகும் படி. பறவை செலவு, விரையும் எனக் கூட்டுக. 87. நல்கல் - அருளல். பெரும! நின் நல்கல் தருக்கேம் எனக் கூட்டுக. தகவிலசெய்யாது - தகுதியற்றன செய்யாது. வீழ்ந்தார் - (நீ) விரும்பினார். 88. பரி - விரைவு. மான் - குதிரை. உளை - தலையாட்டம். வேழம் - கொறுக்கச்சி. பகரும் - கொடுக்கும் ஊர்துஞ்சுயாமம் என்க. துயில் - நித்திரை. 15ஆம் சூத்திரம் 89. வேனில் - வேனிற்காலம். நாள் - விடியல். அரி - உள்ளிடு பரல். ஓராறு படீஇயர் - ஒருவழியிற் பொருந்தி வரற்கு. பொதுள - செறிய மராஅத்து. அலரி - வெண்கடம்பின் மலர். கூந்தல்குறும் பலமொசிக்கும் - கூந்தற்கண் குறியனவாய்ப் பலவாய் மொய்க்கும். கோல் - திரட்சி. தெளிர்த்தல் - ஒலித்தல். கவலை - கவர்த்த வழி. மரம் - ஏணிமரம். யாஅத்து - யா மரத்தினிடத்து. பொழித்து - உரித்து. கோதுஉடைத்ததரல் - கோதாந்தன்மையையுடைய சக்கைகள். தீமூட்டு ஆகும். தீமூட்டற்கு ஆகின்ற. துன்புறுதகுந - துன்பமுறுதற்குத் தகுந்தவிடமாகிய. கோடு - புற்றின் புடைப்பு. அரில் - சிறுதூறு. இரை - புற்றாஞ்சோறு. 90. பிடவு - ஒருமரம். ஊன்பொதி அவிழா - தசையின்கட்டு விரியாத. துறுகல் - பொற்றைக்கல். அளை - குகை. பிணவு - பெண் புலி. உழுவைஏற்றை - ஆண்புலி. ஓர்க்கும் - கேளாநிற்கும். நெறி - முடக்கம். கவலை - கவர்வழி. நிரம்பாநீள்இடை - சென்றுமுடியாத நீண்டவழி. உண்ணாஉயக்கம் - உண்ணாத வருத்தம். சாஅய் - மெலிந்து. மருந்து பிறிது இன்மையின் - (அவ்விரக்கத்தைப் போக்கும்) மருந்து பிறிது இல்லாமையானே. வினை - செயல். 91. கை கவர் முயக்கம் - கையகத்திட்ட முயக்கம். 92. கூழ் - உணவு. வரைப்பு - மாளிகை. ஊழ் - முறைமை. 93. அல்குபதம் - தங்கும் உணவு. இங்கே நெல்லுணவு குறித்தது என்பது நச்சினார்க்கினியர் கருத்து. 16ஆம் சூத்திரம் 94. அலமரும்தகைய - சுழலுந்தன்மையன. ஏ - அம்பு. தேமொழி - இனியமொழி. பரீஇ - பருத்தி. வித்திய - விதைத்த. குரீஇ - குருவியினம்கண் அலமருந்தகைய நோய்செய்தன எனக் கூட்டி முடிக்க. 19ஆம் சூத்திரம் 95. கண்ணியை - மாலையையுடையாய். சாந்தினை - சந்தனத்தை யுடையையாய் செய்குறி - செய்யப்பட்ட குறியிடம். 96. உடையிவள் - நின்னை உயிராகவுடைய இவள். எம - எம்முடைய வார்த்தைகள். கடைஇயஆறு - நெஞ்சைச் செலுத்திய வழி. அடை - இலை. அணிமலர் - அழகிய மலர்கள். 97. மயில் ஆல - மயில் ஆரவாரித்து ஆடும்படியாக. மறந்தைக்க - மறப்பாராக. மாகொன்ற - மாமரத்தைத் தடிந்த. வென்வேலான் குன்று - திருப்பரங்குன்று. 21ஆம் சூத்திரம் 98. யாய் - தாய். புடைதாழ - பக்கத்தே தாழநிற்க. பாங்கூர் - பாங்கர்க்கொடி. பாட்டங்கால் - முற்றூட்டு. எல்லா - ஏடா. கற்றதிலை - உலகியலிற் கற்றதொன்றும் இல்லை. ஐய - வியக்கத் தக்க. பெயர்ப்ப - மறுப்ப. அல்லாந்தான் - அலமந்தான். மகளிரியல்பு - மகளிரை வரைந்து கொள்ளுமியல்பு. களைகுவை - போக்குவை. 99. காணாமையுண்ட - பிறர்காணாமை யுண்ட மெய்கூர - மெய்யிடத்துத் தோன்றி மிகுகையினாலே. 100. தண்டழைக்கொடிச்சி - தண்ணிய தழையையுடைய கொடிச்சி. வளையள் - வளையையணிந்தவள். முளைவாலெயிறு - முளைபோலும் வெளிய எயிறு. ஆரணங்கினள் - வருத்துந் தன்மையுடையள். 22ஆம் சூத்திரம் 101. சிலைவில் - சிலையாகிய வில். சிலை - ஒருமரம். பகழி - அம்பு. செந்துவராடை - செவ்விய துவராடை அணங்குநெஞ்சு - வருத்துகின்ற நெஞ்சம். சுணங்கு - தேமல். அணங்கு - தெய்வம். 102. முளவுமாவல்சி - முட்பன்றி யூனுணவு. இந்நிலை என்றது - உடன் போக்கை. இரக்குமளவை - இரந்து உடன் படுவித்து வருங்காறும். விரையாதீமே - விரையாதொழிவாய். ஏ - அசை. வென்வேல் - வெற்றி பொருந்திய வேல். விடலை - விளி. 103. மா - விலங்குகள். தன்னையர் - தமையன்மார். படுபுள் - படியும் பறவைகள். நல்நலம் - நல்ல நிறவழகு. நயவரவுடையை - விருப்பம் வருந் தகுதியுடையை. 104. முற்றாமஞ்சள் - இளமஞ்சட்கிழங்கு. பிணர் - சருச்சரை. இறவு - இறாமீன். குப்பை - குவியல். உணங்கல் - காய்தல். பாக்கம் - கடற்கரை ஊர். பாக்கமும் இனிது எனக் கூட்டுக. அளிது - இரங்கத்தக்கது. ஐது - மெல்லியது. காணாஊங்கு நனி இனிது என இயைக்க. ஊங்கு - முன். 105. ஆன்றோர் - அறிவானமைந்தோர். அறிகரி - தாமறிந்த சான்று. இதற்கு இது மாண்டது - இப்பொருட்கு இப்பொருள் ஏற்ற மாட்சிமையுடையது. அதற்பட்டு - அக்கண்வலையிற் பட்டு. மயிற்கண் - மயிலினது பீலிக்கண். பாவை - பாவைபோல்வாள். காவலான் - கடற்கரைச்சோலையின்கண். கானலான் நெஞ்சம் ஒழிந்தன்று; அறிகரிபொய்த்தல் ஆன்றோர்க்கில்லை; குறுகல் ஓம்புமின் என முடிக்க. 23ஆம் சூத்திரம் 106. நகுதற்கு - மகிழ்தற்கு. தொடீஇயர் (யான் நின் மெய்யைத்) தீண்டுதற்கு. உசாவுதல் - ஆராய்தல். கோன் - அரசன். கோயில் - அரசமாளிகை. நகாமை - சிரியாமை. 107. முதுக்குறைமை - முதுமைக்கண்ணுறைகின்ற நிலைமை. போற்றாய் களை - போற்றாது கைவிடு. வேட்டார்க்கு - (தண்ணீரை) விரும்பினார்க்கு. 108. பிற - வேறாக. ஞாயிற்றுப்புத்தேண்மகன் - கன்னன். புகா- உணவு. எந்தை - என் தமையன். இனம் - பசுத்திரள். என்னை - (என் + ஐ) என் பிதா. கலம் - கறவைக்கலம். 109. வழங்காப்பொழுது - வெயில் வெம்மையால் ஒரு வரும் இயங்காத உச்சிக்காலம். வழங்கல் - (நீ) திரிகின்ற தன்மை. 110. அல்கல் அகல் மறை - தங்கும் அகன்ற பாறை. ஆயம் - மகளிர் கூட்டம். முச்சி - மயிர்முடி. அரவு - பாம்பு. உற்று - உறலால். நாமுடன்செலற்கு - நாமுங் கூடிப்போதற்கு (உடன்படுவாயாக). 24ஆம் சூத்திரம் 111. தாமரைக்கண்ணி - தாமரைப் பூவாலாகிய மாலை. கோதை - மாலை. அணங்கு - தெய்வம். 112. முளிதயிர் - முற்றிய தயிர். கழுவுதல் - அழுக்குப்போக்கல். கழாஅது - கழுவாது. தயிர் பிசைந்த விரலைக் கழுவாது என இயைக்க. குயப்புகை - தாளிதப்புகை. துழந்து - துழாவி. தீம் புளிப்பாகர் - இனிய புளிக்குழம்பு. புளிப்பாகர் பதந் தப்பாதபடி. துழாவுவதற்கு அவசிய நிமித்தம் தயிர் பிசைந்த கையைக் கழுவாது குலைந்த ஆடையை உடுத்தாளென்க. இனி - கழுவுறு கலிங்கம் என்பதற்கு விரலைத் துடைத்த ஆடையைத் துவைக்காது உடுத்து என்பர் குறுந்தொகை உரைகாரர் டாக்டர் சாமிநாதையர். இஃது ஆராயத்தக்கது. 113. அரி - செவ்வரி. நீரும்நில்லா - நீரும் தங்கா (விழுகின்ற என்றபடி) வைவாய் வான்முகை - கூரிய முகத்தையுடைய வெள்ளிய மொட்டு. கோதை - மாலை. கதுப்பு - கூந்தல். மாறல் மாறுக - மாறலைச் செய்யினுஞ் செய்க. அந்தில் - அசைநிலை; அவ்விடத்து எனினுமாம். துனி - வெறுப்பு. கேட்கு ஞான்று பெற்றோள்போல உவக்குநள் என முடிக்க. மானடிமருங்கில் பெயர்த்த குருதி - குதிரைகள் அடிவைத்த இடத்திலே வீழ்த்திய இரத்தம் நூறிப் பெயர்த்த குதிரை என இயைக்க. 114. செம்மல் - தலைமை. வனப்பு - அழகு. ஆர - நுகர. 115. தடமருப்பு - வளைந்த மருப்பு. எருமைக்குருவி எனக் கூட்டுக. மடநடை - இளநடை காண்டகுநல்லில் - காட்சி மிக்க நல்ல இல்லம். சிறுதாழ் - சிறிய மோதிரம். சேப்ப சிவப்ப, வாளை யீர்ந்தடி - வாளைமீனின் ஈரியதசை, வாழை எனவும் பாடம். பொருத்த நோக்கிக் கொள்க. வியர் - வேர்வை. அட்டில் - அடிசிற் சாலை. சிவப்பான்று - சிவப்பமைந்து (கோபந்தணிந்து). சிவப்பா ளன்று எனவும் பாடம். காண்கம் - காண்பேம். 116. குலைஇய - வளைந்த. உரு - அச்சம். திருவில் - அழகிய வில். பணை - முரசு. பௌவம் - கடனீர். பெயல் - மழை. மாதிரம் - திக்கு. ஏமுறுகாலை - இன்பமெய்தியகாலத்தே. அயில் - நுண்மணல். படாஅர் - சிறுதூறு. புறம் - முதுகு. புறவு - காடு. அருமுனைஇயவு - அரிய முனை தலையுடையவழி. முனைதல் - ஆறலைப்போராலாயது. எரி - நெருப்பு. யாத்த - கட்டிய. அலங்கல் - அசைதல். தலை - பக்கம். களம் - நெற்களம். மறுகும் - கொண்டு போகும். தண்ணடை - மருதநிலம்; நாடுமாம். எயில் - அரண். பெயர்க்கும் - செலுத்தும். ஒண்ணுதல் சீறூரோள்யாம் பாசறையேம் என்க. 117. ஒருபடை - ஒப்பற்ற படை. பெயர்க்கும் - ஓடச்செய்யும். விறல் நின்றன்று - வெற்றி நின்றது (நிலைபெற்றது). பூக்கோள் - பொற்றாமரைப் பூப்பெறல். கையற்று - செயலற்று. நப்புலந்து - என்னை வெறுத்து. பழங்கண் - துன்பம். யாங்காகுவள் - எவ்வாறாவள். ஊழுறு கிளர்வீ -அலர்ந்த விளக்கம்பொருந்திய பூ. சுணங்கு - தேமல். ஒதுக்கு - நடை.. மாயோள் யாங்காகுவள் கொல் என முடிக்க. மாயோள் - மாமைநிறமுடையாள். 26ஆம் சூத்திரம் 118. அரம்போழ் அவ்வளை - அரத்தாற் போழப்பட்ட அழகிய வளைகள். நிரம்பா வாழ்க்கை - முடிவுபோகாத இல் வாழ்க்கை. நேர்தல் - முற்றுவித்தல். ஈர்ங்காழ் - ஈரியகொட்டை ஆலி - ஆலங்கட்டி. ஓதி - ஓந்தி. மைஅணல் - கரியதாடி - படா - துயிலா. பாவடி - பரந்தஅடி. முரணில்காலை - மாறுபாடில்லாத காலம். தமியோர் மதுகை - தனித்திருப்போர் வலி. தூக்காய் - ஆராயாய். வாடை - வாடையே! தூக்காய் அலைத்தி என இயைக்க. கடவுள் சான்ற செய்வினை மருங்கு - தெய்வத் தன்மையமைந்த செய்யும் வினையாகிய ஓதல் வினையிடத்து. பரி - செலவு. கரிகால் - கரிகாற்சோழன். சூடாவாகை - வாகை யென்னுமூர். சூடாவாகை - என்பதிற் சூடா என்னுமடை வெளிப்படை. குறித்துநின்றது. பறந்தலை - போர்க்களம். ஆடு - வெற்றி. சென்றோர்வல்வரின் எமக்கு ஓடவைமன் என இயக்க. 119. கேள்வி - கல்வி. புரையோர் - மேலோர். மையற்ற படிவம் - மாசற்ற விரதம். மறுத்தரல் - மீட்டல். 120. தூதுநடந்தான் - கண்ணன். 121. மாறு - பகையரசன். தகை - வீரத்தாற் பிறந்த அழகு. 122. புணை - தெப்பம். போராகிய கடலைக் கடத்தற்கு உதவியாகிய தெப்பம். கனங்குழை - கனங்குழையுடையாள். கண்ணோக்கால் - அவளுடைய கட்பார்வையால். 123. கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் - வெற்றி பொருந்திய சோழர் கொங்குநாட்டரசரை யடக்கும்பொருட்டு. போர்கிழவோன் - போரென்னுமூருக்குத் தலைவன். போரென்னு மூர்க்குத் தலைவனாகிய பழையன் என்க. இவன் ஒரு சேனாபதி. பேஎர் எனவும் பாடம். 28ஆம் சூத்திரம் 124. ஒருகுழையொருவன் - ஓர் குண்டலன் (-பல தேவன்). பருதியஞ்செல்வன் - சூரியன். மீனேற்றுக்கொடியோன் - சுறாக் கொடியோன் - மன்மதன். ஏனோன் - மன்மதன் தம்பிசாமன். ஆனேற்றுக்கொடியோன் - சிவன். கவின் - அழகு. நோதக - பிரிந்தார்க்கு வருத்தமுண்டாக. புதிதுண்ணும் பருவம் - இளவேனிற்காலம். ஒல்குபு - அலைவுற்று. நிழல்சேர்ந்தார் - தன்னை நிழலாக வந்தடைந்த குடிமக்கள். விருந்து நாடு - புதுமையான நாடு. முன்றுரை - துறைமுன். இசை - புகழ். ஏதினாடு - அயனாடு. அறல்சாய்பொழுது - நீரற்று ஓடுதல் சுருங்கின இளவேனில். ஊறு - (முன்பு ஆண்ட அரசர் செய்த) வருத்தம். ஆறு - நெறி. அகன்ற - (முன் ஆண்டஅரசர்) நீங்கின. தெருமரல் - சுழற்சியுறற்க. தூதுவந்தன்று என இயைக்க. வந்தன்று - வந்தது. 125. கேள்கேடுஊன்ற - நண்பரைக் கேட்டினின்று தாங்க. கிளைஞர் - உறவினர். கேளல்கேளீர் - அயலவர். எதிரிய - ஒத்த. ஊக்கம் - உள்ளக் கிளர்ச்சி. 126. ஆக்கம் - செல்வம். அணி - பூண் (ஆபரணம்). சென்ற திறம் வரற்கு அன்றோ என இயைக்க. 29ஆம் சூத்திரம் 127. கேட்கும் என்றது இவ்வாலிலே பேயுண்டெனக் கேட்டும் என்றபடி. கடுத்தும் - ஐயுற்றும். அணங்காகும் - வருத்தமாகும். வாய் - உண்மை. மன்ற - அறுதியாக. கேள் - உறவானவர். புதுவது - புதிய தொன்று. இது - இப்பாராட்டு. ஒன்று - ஒருகாரியம். அது தேர - அக்காரியத்தை ஆராயநிற்க. கனவுவார் - கனாக்காண்கின்றவர். கொள்ளாள் - முற்றெச்சம். இடுமருப்பு - குத்துங்கொம்பு. தேர் - பேய்த்தேர் - கானல் நீரென்று கானலைக் கருதி ஓடுகின்ற கரமென்க. முற்றுமளவும் வல்லுவள் கொல்லோ என்றார் என இயைக்க. நொய்யார் - நொய்ய மகளிர். போயின்று - போயிற்று. 128. கலம் - ஆபரணம். நண்ணார் - பகை அரசர். வழி மொழிந்து - வழிபாடுசொல்லி; அவன் சொல்லை அனுவதித்து எனினுமாம். 30ஆம் சூத்திரம் 129. பகடு புறந்தருநர் - பகட்டைப் பாதுகாப்போர். பகடு - எருது; எருமைக்கடா. புறந்தரல் - பாதுகாத்தல். 130. கூலம்பகர்நர் - கூலம்விற்போர். கூலம் - பலபண்டம்; கருஞ் சரக்கு என்பாருமுளர். குடிபுறந்தருநர் - கீழ்க்குடிகளைப் பாதுகாக்கும் மேற்குடிகளாகிய காணியாளர். 131. குறிப்பு - எண்ணம். கலங்கல் - கலங்கற்க. 32ஆம் சூத்திரம் 132. விலங்குதல் - குறுக்கிட்டுக்கிடத்தல். சிமயம் - சிகரம். வேறு பன்மொழி - தமிழல்லாத பலமொழிகள் (பாஷைகள்). தேம் - தேயம். வினை - போர்த்தொழில். நசைஇ - விரும்பி. பரித்தல் - தாங்கல்; செலுத்தல் எஃகம் - வேல். 35ஆம் சூத்திரம் 133. உழந்தும் - வருந்தியும். மடல் - மடன்மா. 134. வஞ்சி - உறையூர். வேட்டமாமேற்கொண்டபோழ்து மடலூர்தல் காட்டுகேன் வம்மின் என இயைக்க. 36ஆம் சூத்திரம் 135. மள்ளர் - வீரர். கொட்டின் - பறை முழக்கினால். ஆலல் - ஆடல். படுமழை - தாழ்ந்தமேகங்கள். தலைஇ - நீரைப்பெய்து. போகியசுரன் - போன அருவழி. சுரம் - பாலைநிலம்; சுரன். சுரம் நனி இனிய வாகுக என முடிக்க. 136. கலிழும் - கலங்கும்; அழும். இடைநின்று - காட்டினி டத்தே நின்று. கனலியர் - வெப்பமடைகுக. அறனில்பால் கனலியர் என முடிக்க. 137. விடலை - காளை. விடலையது தாய் இடும்பை எய்துக என முடிக்க. கோள் - கொலை. பிழைத்த - தப்பிய. கலை - ஆண்மான். வம்பு - புதுமை. 138. மகளை - மகளே; ஐ - சாரியை. வரைப்பு - இடம். புலம்ப - தனிப்ப. நோவேன் - நோகின்றேனல்லேன். நோவல் - (கலுழுமென் நெஞ்சைக் குறித்து) நோகின்றேன் என முடிக்க. முடங்குதாள் - வளைந்த அடி. தார் - மாலை; ஆரம். செம்பூழ் - சிவந்த காடை. புன்கண்ண - பொலிவற்றகண்ணவாய். மன்று - தொழுவம். பைதல் - துன்பம். மறவர் - வெட்சிமறவர். செதுகால் - சோர்ந்த கால். குரம்பை - குடில். சே - ஆனேறு. நோவேன் - நோகேன் என்றிருப்பது நலம். 139. எம்வெங்காமம் - எமது மிக்க விருப்பம். மெய் - உண்மை மொழி. செம்மல் - தலைமை. குடுமி - தலையிலுள்ள ஆர்க்கு. பாகல் - பாகற்பழம். பறைக்கண் - பறைக்கண்போலும் வட்டமான கண். வம்பலர் - புதியோர். அறிந்த - பழகிய. மாக்கட்டு - மாக்களை யுடையது. ஆறு மாக்கட்டு ஆகு என முடிக்க. புலம்ப - தனிப்ப. சூழி - முகபடாம். பாழி - ஓரூர். காப்பு - காவல். அத்தம் - அருவழி; சுரமுமாம். ஆர்கழல் - ஆர்க்கினின்றும் கழன்ற. துய்த்தவாய - உண்ட வாயையுடைய வாய். எண்கு - கரடி. 140. இறந்த - கடந்த. குறுமகள் - சிறியமகள். இஞ்சி - மதில். பூவல் - செம்மண். மனை - வீட்டுமுற்றம். அயரும் - கொண்டாடும். நுகப்பு இவர்ந்து - இடையில் இவரச்செய்து. ஓம்பிய - வளர்த்த (பாதுகாத்த). தில் - அசைநிலை. அறுவை - வதிரம். குடுமி - உச்சி (கோலின் றலை). நாற்றிய - தூக்கிய. ஆகுவது - நிகழ்வது. திட்பம் - உறுதி. படீஇயர் - துயிலும்படி. குறிப்பு எனத் திட்பங் கூறுக என முடிக்க. 141. இல் - மனை. வயலை - ஒருகொடி. ஊழ்த்தல் - நெட்டுவிட்டுச் சொரிதல். செல் - மேகம். அஃகின - மழை பெய்து குறைந்தன. பாவை - விளையாட்டுப் பாவை. ஏதிலாளன் - அயலான். பொய்ப்ப - பொய்கூற. இறந்துபோயினள் என இயைக்க. இறந்து - கடந்து. மான்றமாலை - இருள் மயங்கிய மாலைக்காலம். அகடு - வயிறு. என்றது உள்ளிடத்தை. திங்களங் கடவுள் - திங்கட் கடவுளே! பெயர்த்தரின் - மீட்பின். கொன்றைக் காவலன் - சிவன். குடுமி - சடாமுடி. தந்தையென்றது - யயாதியை. இளமை யீந்தோன் - பூரு. வியலிடம் - அகலிடம் (பூமி). பெயர்த்தரின் குன்றாயாய் வியலிடத்தின்கண் மன்ற விளங்குவை என இயைக்க. 142. தூவி - இறகு. பச்சூன் - பசிய ஊன்கறி. வல்சி - சோறு; காக்கையே! வல்சி தருகுவன் என இயைக்க. கரைந்தீமே - கரைவாய். 143. புறந்தந்த - பாதுகாத்த. உள்ளாள் - நினையாள். இஞ்சி - மதில். புலம்ப - தனிமையுற. தனிமணி இரட்டும் - ஒப்பற்ற மணி மாறி மாறி ஒலிக்கும். தாழ் - தடையாணி. கடிகை - காம்பு. குறும்பு - சிற்றரண். மழவர் - வீரர் (வெட்சியர்). ஆதந்து - ஆவை மீட்டு. முரம் பின் வீழ்த்த - அவ்வெட்சியாரை மேட்டுநிலத்தே கொன்று வீழ்த்திய. மறவர் - கரந்தை வீரர். பதுக்கைக்கண் நடுகல் என இயைக்க. தோப்பிக்கள் - நெல்லில் வடித்த கள். துரூஉ - செம்மறி ஆட்டுக் குட்டி. கவலை - கவர்த்தவழி. உள்ளாள் - பிறளாயினள்; ஆயினும் (துணை-) துணைவன் தன்மார்பு துணையாகத் துயிற்றுக என இயைக்க. கோவல் - திருக்கோவலூர். காரி - ஒரு வள்ளல். 144. நீர்நசை - நீர்வேட்கை. ஊக்கிய - முயன்ற. உயவல் - வருத்தம். இயம் - வாய்ச்சியம். தூம்பு - நெடுவங்கியம். உயிர்க்கும் - நெட்டுயிர்ப்புக்கொள்ளும் (நெடுமூச்சுவிடும்) அத்தம் - அருவழி; காடு. 145. உள்ளுதல் - நினைத்தல். நெஞ்சு உணத் தேற்றிய - நெஞ்சு கொளத் தெளிவித்த. அழுங்கல் - இரங்கல்; வருந்தல். அலர் - பழிமொழி. இறந்த - கடந்த. 146. முயலி - முயன்று. ghma - gu¥ãa.; விரித்த. உகக்கும் - உயரப் பறக்கும். 147. நோவேன் - நோவேனாகிய நான். இவட்கும் நோவ துவே - இவளுக்கும் நோகவேண்டியுள்ளது. அவட்கோ நோவா நின்றேனாகியயான். இவட்கும் நோகவேண்டியுள்ளது. அவட்கு நோவேனோ! இவட்கு நோவேனோ! என்பது கருத்து. ஏர் - எழுச்சி; அழகு. கண்நோவது என முடிப்பாருமுளர். 148. வரி - வரியப்பட்ட வயலை - ஓர்கொடி. நொச்சி யினிலை மயிலடிபோன்றது. ஆதலின், மயிலடியிலைய என்றார். மாக்குரல் - கரிய பூங்கொத்து. காண்வர - காண. தனியே - (அவனின்றித்) தனியே. தெறுவர - என்னை வருத்த. மகளை - மகளே! ஐ - சாரியை. இலையில் - இலையில்லாத. சினை - மரக்கிளை. புறவு - புறா. உருப்பு - வெப்பம். அமையம் - சமையம் - பொழுது. அமர்ப்பனள் - போர்செய்யப் புகுந்தாள் போன்ற கண்களையுடையவளாய். 149. என்பாவை - எனது பாவைபோல்வாள். பாவைக்கு இனிய நன்பாவை - பாவைபோல்வாளுக்கு இனிமையான நல்ல விளையாட்டுப் பாவை. பூவைக்கு - பூவைபோல்வாளுக்கு. பூவை - நாகணவாய். என்று யான் கலங்க நீங்கினாளோ என முடிக்க நோக்கினையும் நுதலையும் உடைய பூங்கணோள் என இயைக்க. பூங்கணோள் என்பது ஈண்டுப் பெண் என்னும் பொருட்டாய் நின்றது. காட்டிற் செல்லும் அச்சத்தாற் சுழலுதல்பற்றி அலம் வரும் என்றார். நோக்கினையும் நுதலினையும் உடையேனாய் யான் கலங்க என்றல் இத்துணைச் சிறப்பின்று. 150. தாங்கல் - பொறுத்தல். அவலம் - துன்பம். ஒல்லுதல் - பொருந்தல்; இயைதல். தெற்றி - திண்ணை. கண்டு உள்ளின் உள்ளம்வேம் என இயைக்க. 151. கயந்தலை - மெல்லிய தலை. பயம்பு - படுகுழி. விளிப் படுத்த - பிளிற்றிய. கம்பலை - ஒலி. வெரீஇ - அஞ்சி. குழவி - கன்று. தாதுஎரு - தாதாகிய எரு. ஆயம் - தோழியர்கூட்டம். அழுங்கின்று - வருந்திற்று. இறீஇயர் - இறுக. அசைஇ - தங்கி. பாவை - பாவையை. தாயும் அழும் என முடிக்க. 152. அறம் - நல்வினை. அருளின்று - அருளிற்று. ஓதியையும் - சிறுநுதலையும் உடைய மகள் என்க. 153. கரீஇ - கழித்து. அயர்தல் - கொண்டாடல். வதுவை நன் மணம் - வதுவைக் கல்யாணம். கழிகென - செய்துமுடிக என்று தாய்க்குச்சொல்லின் எவனோ? என முடிக்க. எவன் - எத் தன்மையது. 37ஆம் சூத்திரம் 154. நம் இவண் ஒழிய - நாம் இங்கு ஒழிந்திருப்ப. நாம். நம் எனக் குறுகிநின்றது. நம்மை இவண் ஒழித்து எனினுமாம் - நிலம் - நிலத்திலுள்ளார். இன்னா - துன்பம்; வெயில் முதலியவற்றால் இன்னாத என்க. நெருநல் - முன்னாள். தகுவி - தகுதியுடையாள்; தகுவியாகிய என்மகள் என்க. தழை - தழையுடைய கூழை - தழைகொய்தலாற் கூழையான கீழதாகிய வண்டல் என இயைக்க. 155. நிலந்தொட்டுப்புகார் - நிலத்தைத் தோண்டிப் புகமாட்டார். வானம் ஏறார் - விண்ணுலகத்தும் ஏறிப் போக மாட்டார். முந்நீர் - கடல். கடலின்மேல் காலால் நடந்து செல்ல மாட்டார். குடிமுறை குடிமுறை தேரின் - முறையே குடிகள் தோறும் ஆராயின் (தேடின்). கெடுநர் - தப்புவார் (காணப்படா தொழிவார்). நம் காதலோர் - நம்மால் காதலிக்கப் பட்டார்; என்றது தலைவனையும் தலைவியையும். 156. ஓர்த்தல் - ஆராய்தல். அமர் - போர். 39ஆம் சூத்திரம் 157. பல்காழ் - பல மணிவடம். அ வரி - அழகிய வரி. விழ வொலி. கூந்தல் - விழவிடம்போல நறுமணம் வீசுந் தழைத்த கூந்தல்; கொண்டாடத்தக்க தழைத்த கூந்தல் எனினுமாம். மாயோள் - மாமை நிறமுடையவள். 158. உன்னங்கொள்கையொடு - நங்கருத்தினை உணர்ந்து கொள்ளுதலோடு. உளங்கரந்து - தாமறிந்தவற்றை மறைத்து உய்கம் - உய்வேம். ஈரம் - அன்பு. கெளவை - அலர். நாடுகண் அகற்றிய - தன்நாட்டை. இடம் விசாலிக்கச்செய்த. உவ - மகிழ் வாய். நம்மொடு ஓராங்குச்செல வயர்ந்தனர் - நம்மொடு உடன் செல்ல விரும்பினர். கழை - மூங்கில். பிசைந்த - ஒன்றோடொன்று உரிஞ்சுதலால். கால் - காற்று. கூரெரி புணரிமிசைக் கண்டாங்கு தோன்றும் நனந்தலை என இயைக்க. நனந்தலை - அகன்ற இடம். வெரிந் - முதுகு. காட்டுமீக்கூறும் - காட்டை மேம்படச் சொல்லும். ஒருத்தல் - களிறு. ஆறுகடிகொள்ளும் - வழியைக் காக்கும். அழுங்கிய செலவு - தாழ்த்திருந்த செலவை. அழுங்கியசெலவு செலவயர்ந்தனர் என முடிக்க. 159. இலங்கு வீங்கு எல்வளை - விளங்குகின்ற செறிந்த ஒளியையுடைய வளையையுடையாய்! ஆய்நுதல் - அழகு குறைந்த நுதல். விலங்கு அரி - குறுக்கிட்ட ரேகை. அனந்தல் குறைநித்திரை. நலம் - அழகு. பசலை - பசப்பு. 160. வேல் - ஒருமரம். வினைஞர் - தொழில்செய்வோர். இயலுதல் - தொழிலிற் புகுதல். தைஇயின - கட்டப்பட்டன. தலைஇ - பெய்து. உலவை - மரக்கொம்பர். பொதுளல் - தழைத்தல். பனி நீங்குவழிநாள் - இளவேனிற்காலம். வந்தன்று - வந்தது. மாலைப் போது தூதாகவந்தது என இயைக்க. உலறுதல் - காய்தல். வணர் - வளைவு. புலிமருள்செம்மல் - புலியும் மருளும் தலைமை. அலமரலல் - சுழலற்க. 161. அண்ணாந்து - நிமிர்ந்து. ஏந்திய - உயர்ந்த மேனியில் தாழ்ந்த எனக் கூட்டுக. மணி - நீலமணி. நீத்தல் ஒம்புமதி - கைவிடலைப் பாதுகாப்பாயாக. பணீஇயர் - அடக்கும்பொருட்டு. இவட்குத் தளரினும் முடிப்பினும் (இவளை) நீத்தலோம்புமதி என முடிக்க. 162. நின்னலதிலள் - நின்னை இன்றியமையாமையாக வுடையள். யாய் - தாய். ஆயிடையேன் - அத்தன்மையினேன். 163. கமஞ்சூற் குழிசி - நிறைந்த பரிய தயிர்த்தாழி. பாசம் - கயிறு. மத்தம் - மத்து. நெய்தெரி இயக்கம் - வெண்ணெய் தோன்றக் கடையுமொலி. வெளின்முதல் - தறியினடி. வைஇய - வைக்க. அயர்தல் - மேற்கொண்டொழுகல்; விரும்பல்; வரைத்தன்றியும் - அளவன்றியும். 164. ஓரை - விளையாட்டு. ஏதிலாளன் - அயலான். என்றது தலைவனை. காதல் - காமவேட்கை. பால் - ஊழ். விழவயர்தல் - மணவிழவு செய்தல். அன்னை - தாயே! யாய் - என்தாய்; என்றது செவிலியை. 165. அன்னை என்றது நற்றாயை. அன்னையாகிய நின்மகள் என இயைக்க. அன்னை யென்னை யென்றலு முளவே... ... புலவர் என்னும் (பொருளியல் - 52) சூத்திர விதிப்படி தலைவியைத் தோழி ஈண்டு அன்னை என்றாள் என்க. யாய் - என்றாய் எனத் தன்மைக்கண் வந்தது. தன் அமர் - தன்னை விரும்பிய. துணை என்றது தலைவனை. முனாது - பழையது. புல்லி - ஒரு குறுநில மன்னன். உழைவயின் - தன்பக்கவிடம். வன்கண் - இரக்கமின்மை. புன்கண் - துன்பம். 166. கல்லா - மரமேறிப் பழகாத. இருவெதிர் - பெரிய மூங்கில். கழை - பெருங்கோல். ஏறி - ஏறலால். அஃது - வரைந்தமை யாய்க்கு உரைத்தனனல்லனோ என மாறிக் கூட்டுக. யாய் - என்றாய். 167. பழுநி - பழுத்து. சுரம் - பாலைநிலம். நம்மூர் நனி புலம்பினது என முடிக்க. கலிழும் - அழும். 168. சேரி - சேரியிலுள்ளார். கல்லென - கல்லென்று ஆரவாரிப்ப. ஆனாது - அமையாது (இடைவிடாது). தன்மனை தானே யிருக்க எனமாறிக் கூட்டுக. நீர் உணலாய்ந்திசின் என முடிக்க. உணல் ஆய்ந்திசின் - உண்ணுதலை நினைந்தேன். ஆல் - அசை. 40ஆம் சூத்திரம் 169. நணித்து - சமீபமாக. வெம்முரண்செல்வன் - வெம்மை யான் மாறுபடுகின்ற சூரியன். வெம்மையான் வலிய சூரியன் எனினுமாம். கதிருமூழ்த்தனன் - கிரணங்களை உதிர்த்தான். (மேல் கடலில் வீழ்த்தினான் என்றபடி. சேர்ந்தனைசெல் - எம்மூரை அடைந்து (விடியலிற்) செல்வாயாக. அரிய - செல்லுதற்கரிய. சேய - தூரமாயுள்ளன. ஆறுஅரிய சேய; ஆதலாற் சேர்ந்தனை செல் என இயைக்க. 170. வதுவை - மணச்சடங்கு. ஈன்றோர் - பெற்றோர் (தாய் தந்தையர்) மீண்டனைசொல் - மீண்டு (எம்மூர்க்கு) வருவாய். 171. பெயர்ந்து - மீண்டு. சுரன் - பாலைநிலம். இறத்தல் - கடத்தல். 172. சங்கம் - சங்கு. பெண்ணை - பனை. அன்றில் - ஒருபறவை. இது பனைமடலுள் வாழ்வது. வாமான் - வாவுங் குதிரை. கோதை - சேரன். கொல்லி - ஒருமலை. கனி - பழம். இவை தோன்றிய பொருட்கு பயன்படாது பிறர்க்குப் பயன்படுவன என்றபடி. 173. அலங்கல் - மாலை. ஆடு எருத்து - அசைகின்ற கழுத்து. குழை - குண்டலம். விலங்கல் - மலை. வேறு - வேறுவேறான உருவம். அலங்கல் - அசைதல். எம் அண்ணல் - எமது இறைவன். என்றது சிவனை விளையாட்டென்றார்; அர்த்த நாரீசுவர வடிவாய் விளையாடலைக் குறித்தது. 174. கனலி - ஞாயிறு. உருப்பு - கொதிப்பு. யாத்து - யாமரத் தினது. அசைஇ - இளைப்பாறி. சிறுவரை - சிறுபோழ்து. சுரன் காண்பை என இயைக்க. முன்னிய - முற்பட்டுச் சென்ற. 175. ஒருசுடருமின்றி - இருசுடருள் ஒரு சுடருமின்றி. இருசுடர் என்றது ஞாயிறுந் திங்களுமாகிய இரண்டையும். 176. அழுந்துபட - ஆழ்ந்துபட; குறுக்கல் விகாரம். (தொல். சொல். 403). வீழ்ந்த - கீழேசென்றுகிடந்த. ஒலிவல் ஈந்து - தழைத்த வலிய ஈத்தமரம். உலவை - காற்று. எறிந்த - தாக்கிய. செம்மறுத்தலைய - (குருதிபடிதலால்). சிவந்த மறுப்பொருந்திய தலையையுடைய. நெய்த்தோர் - இரத்தம். வல்லியக்குருளை - புலிக்குட்டி. மரல் - மரற்செடி. இண்டு - இண்டங்கொடி. ஈங்கை - ஓர் கொடி. ஐயள் - மெல்லியள். எல் - இரா. மிளிர்க்குதல் - புரட்டுதல். 177. தாரம் - மயிர்ச்சாந்து. வார்ந்த - நேரான. சேர்ந்து - திரண்டு. தழைத்தைஇ - தழையை உடுத்து. இவள் என்றது தலைவியை. விறலி என்பது நற்றிணையுரை. இச்செய்யுளுக்கு துறை கொண்டமையில் நச்சினார்க்கினியர் கருத்து வேறு. நற்றிணை உரைகாரர் கொழுநற் காக்க எனப் பாடங்கொள்வர். 178. தொடியோள் - வளையை அணிந்தவள். யார்கொல் - யாவரோ! அளியர் - இரங்கத்தக்கார். பறையினொலிக்கும் என இயைக்க. அழுவம் - காடு. முன்னியோர் - முற்பட்டுச்செல்வோர். முன்னியோர் யார்கொல் என இயைக்க. 179. கல்அளை - கல்லிலுள்ள குண்டு. வெம்பிய - வெயிலால் வெப்பமடைந்த. ஆழியான் - திருமால். குடங்கை - உள்ளங்கை. இவ்வருவார் என்றது செவிலியை. 180. அமர்வில் - அமர்தலில்லாத (-அடக்கமில்லாத). ஓரா அவதியாய் - நீங்காத அவதியையுடையாய். தான்கண்டாள் என்றது தன் பக்கத்து வரும் தன் மனையாளாகிய தலைவியை. களக்கனி வண்ணனையான் கண்டேன் என்றது புணர்ந்துடன் வந்தாரிருவருள் தலைவன் கூற்று. இது தேடிச்சென்ற செவிலியை நோக்கிக் கூறியது. 181. நவின்ற - பயின்ற. ஒண்தொடி - ஒண்தொடியையுடை யாள். இன்துணை - இனிய துணையாகிய தலைவன். மலையிறந் தோள் - (அவள்) மலையைக்கடந்தாள். 182. கதிர் - ஞாயிற்றின்கிரணம். உறித்தாழ்ந்த கரகம் - உறியிலே தங்கின கமண்டலம். முக்கோல் - திரிதண்டம். அவல் அசைஇ - தோளிலே வைத்து. வேறோரா நெஞ்சத்து - அயன், அரி, அரன் என்னும் மூவரையும் ஒருவனாகவல்லது நினையாத நெஞ்சத்தாலே. குறிப்பு ஏவல்செயன் மாலைக்கொளை - ஐம் பொறியும் நுமக்கு ஏவல்செய்தலை இயல்பாகவுடைய கோட் பாடு. நடை - ஒழுக்கம். வெவ்விடை - வெவ்விய காடு. தம்முளே புணர்ந்த - தம்மிலே கூடின. பெரும என்றது அவ்வந்தணருளா சிரியனாகிய பெரியோனை. போறீர் - போலிருந்தீர். படுப்பவர் - மெய்ப் படுப்பவர்; (பூசுவோர்). ஏழ் - ஏழ்நரம்பு. முரல்பவர் - பாடுவார். சூழ்தல் - ஆராய்தல். இறந்த - மிக்க. எவ்வம் - துன்பம். தலைப்பிரியா என்று பாடமிருப்பின் அதுவே நலம். 41ஆம் சூத்திரம் 183. இல்லோர் - பொருளில்லார். செய்வினை - பொருள் செய்தற்குரிய செயல்கள். கைம்மிக - மிக; ஒருசொல். உய்த்தியோ - செலுத்துகின்றாயோ? வெண்டேர் - யானைத்தந்தத்தாற்செய்த வெள்ளிய தேர். முடுக - விரைந்துசெல்ல. நேமி - தேருருளை. கால் - காற்று. பல்மாண்ஆகம் - பலவாக மாட்சிமைப்பட்ட மேனி. 184. வாள்வரி - வாள்போலும் வரி. வயமான் - வலிய புலி. கோள் - கொலைத்தொழில். சிகரல் - சிதறல் (சிதார் எனவும் பாடல்) செம்மல் - பழம்பூ. தாய் - பரந்து. அசைஇ - தங்க; கிடக்க. அதிரல் - புனலி. எதிர்வீ - மாறுபட்ட பூக்கள். பராஅம் அணங்கு - பராவப்படும் தெய்வம். நகன்மணந்தபூவின் - கோயிலின்கண் கூடிக்கிடந்த பூக்களைப் போல. நயவரும் - விரும்பத்தக்கதா கின்றது. தொடி - பூண். குறு நெடுந்துணைய - குறியவும் நெடியவு மாய அளவை யுடைய. வாள் - கொலையுமாம். 185. அவிரறல் - விளங்குகின்ற மணல். தொடலைதைஇய - மாலையைத் தொடுக்கும். கதவ - கோபத்தையுடையன; கதவ என்பதற்கு. வேகமாகத் தாக்குவன என்றும் பொருள் கூறலாம். 186. அழிவில முயலும் - அழிவில்லாத கருமங்களை முயன்று செய்யும். அழிவில்லாத தவமுமாம். பொரிப்பூ நெற் பொரி போலும் பூ. முறி - தளிர். அணங்குகொள - வீற்றுத் தெய்வம் சிறப்படைய. திமிரி - அப்பி. நெடிய - நேரமாக. குறும்பல்ஊர - குறிய (அடுத்தடுத்துள்ள) பல ஊர்களை உடையன. ஆறு உடையன என்க. ஆறு - வழி. 187. இரிந்த - புறமிட்டோடின. செந்நாகு - சிவந்த ஆனின் பெண். காள் - வைகறை. வெரூஉம் - அஞ்சும். தயிர்கடையும் ஒலியைப் புலியின் ஒலியென்று அஞ்சும். ஆநிலைப்பள்ளி - பசுத் தொழுவத்தினிடத்து. 188. வினையமைபாவை - இயந்திரத்தொழிலமைந்த பாவை. இயலி - இயங்காநின்று. தலைநாட்கு எதிரிய - முதற் பெயலைப் பெய்யத்தொடங்கிய. கடுஞ்செம்மூதாய் - விரைந்த செலவினை யுடைய சிவந்த நிறத்தையுடைய தம்பலப்பூச்சி. கொண்டு - பிடித்து. வேங்கை - வேங்கைமரம். அமர் (ஆறலை கள்வர் முதலாயி னோருடைய) - போர். பெயர்க்குவென் - நிலை கெட்டு ஓடச் செய்வேன். 189. ஓர்த்தல் - ஆராய்தல். கலுழ்தல் - அழுதல். 190. அருளியோர் - தமக்கு அருள்செய்யவந்த அந்தணர். தாபதர் முதலியோர். தெறுதல் - கொல்லுதல். புரிவு - மனம் பொருந்தல்; விருப்பம். வலித்தல் - துணிந்துகூறல். 191. காதலி - நம்பாற் காதலையுடையாள் என்றது தலைவியை. கலிழும் - அழும்; கலங்கும். இழைத்தல் - செய்தல். 192. நல்ல - நல்லவற்றை. அருந்தொழில் உதவி - அரிய போர்த்தொழிற்குதவி செய்து. 193. வந்தால் - நீ வந்தால். செல்லாமோ - யாம் போகேமோ. ஆரிடையாய் - அரிய இடையினையுடையாய். அத்தம் - காடு. தந்து - கொண்டணிந்து. ஆர் - நிறையப்பட்ட தகரம் - மயிர்ச் சாந்து. மகரக்குழை - மகரக்குண்டலம். மறித்த - சென்றுமீண்ட. 194. சேய்த்து - தூரத்திலுள்ளது. விடிற்சுடர்நுதல் காண் குவம் என இயைக்க. மண்ணுறு - மண் பூசிய. 195. தழங்குகுரல் - தழுங்குரல் என நின்றது. தழங்குதல் - ஒலித்தல். வன்மருங்கு - வலிஇடம்; என்றது காட்டை. அவன் மருங்கு என்று பிரித்தல் சிறப்பின்று. எதிர்ந்தது - எதிர்கொண்டு சொரிந்தது. அலமரல் - சுழற்சித்துன்பம். 196. தூற்றி - எடுத்துக்கூறி, பிறிதுநினைத்தல் - வாராரென நினைத்தல். யாம் வெங்காதலி - எம்மால் விரும்பப்பட்ட காதலையுடையாள். சாய் - மெலிந்து சொல்லியதை எமக்கு உரைமதி என இயைக்க. மதி - முன்னிலையோசை. 197. பனி - குளிர்ச்சி. பசலை - பசப்பு. துனி - வெறுப்பு. படர் - துன்பம். கையறல் - செயலறல். உயவுத்துணை - வருத்தந் தீர்க்குந் துணை. உயா - வருத்தம் (தொல். சொல். உரி.73) தேர் காண்குவை என முடிக்க. 198. படு - ஒலிக்கின்ற. பணை - முரசு. மின்கூற்றமாகப் பணை - மூங்கில்; பருமையுமாம். 199. ஐயவாயின - வியக்கத்தக்கவாயின. கிளவி ஐயவாயின என இயைக்க. கையற - செயலற. கார்நாள் எமக்கே நோய் நன்கு செய்தன எனக் கூட்டுக. 200. முரம்பு - பருக்கைக் கற்களையுடைய மேட்டுநிலம். திகிரி - உருளை. பணை - பந்தி. முனைஇய - வெறுத்த. வயமா - வெற்றியையுடைய குதிரை. விடிற்காண்குவம் என முடிக்க. 201. ஒரூஉ - (எம்மைவிட்டு) நீங்குவாயாக. குரல் - பெண் மயில். மொய்ம்பு - தோட்கட்டு. தொடிய - தீண்டுதற்கு. மாற்று - பதில். வாயல்லாவெண்மை - உண்மையல்லாத பயனில்லாத சொற்கள். கண் - கண்ணருள். தவறு - தப்பு. எவன் - யாது? இஃதொத்தன் - இவனொருத்தன். கள்வன் - ஞெண்டு. புனல் - நீர்க்கரை. ஒதுக்கம் - நடையாலாய வடு. சேர்பு- சேர்ந்து கிடத்தாற்போல; கிடத்தல் வினைவருவிக்கப்பட்டது. சாலாவோ - அமையாவோ. தேற்ற - தெளிவிக்க. தெளிக்கு - தெளிவிப்போன் (சூளுறுவேன் என்பது கருத்து). தேற்றம் - (நெஞ்சைத்) தெளிவியேம். போர் - ஊடற் போர். அணங்கு - வருத்தம். விளியுமோ - கெடுமோ. 42ஆம் சூத்திரம் 202. அளி - அருள். சாயல் - மென்மை. இறீஇயர் - இறுக. கொடுந்தொடை - வளைந்த கால். கறவை - பாற் பசு. குவவு - திரட்சி. ஆகம் - மார்பு. வறன் - வறந்த. அசைஇ - தங்கி. வான் புலந்து - மேகத்தை வெறுத்து. அசாவினம் - வருந்திய கூட்டம். திரங்கிய - வற்றிய. மரல் - ஒரு செடி. பதம் - சோறு. மெய்ந் நிழல் - அவள் மெய்யின் நிழல்போல அகலேனென முடிக்க. ஓரை - விளையாட்டு. தோடு - திரட்சி. ஆடுவழி - விளையாடுமிடம். 203. அத்தம் - காடு. முகிழ்நகை - அரும்பிய நகை. எடுத்தேன் - எடுத்து வளர்த்தேன். கொடுத்தோர் - அவளைத் தலைவனிடம் கொடுத்தோர். ஆயத்தோர் - தோழியர் கூட்டத்தார். 204. பரிதப்பின் - நடை ஓய்ந்தன. வாள் - ஒளி. பிறர் - தான் கருதி நோக்குவாராகிய தலைவனுந் தலைவியுமல்லாத பிறர். ஆணும் பெண்ணுமாக இணைந்து தூரத்து வருவாரைத் தம் மகளுந் தலைவனுமெனக் கருதிப் பின் அவரல்லாமை கண்டு வெள்கினாளாதலின் பிறர்பலர் என்றாள். 205. கம்பலை - ஒலி. இன்னாத - இனிமையல்லாத - துன்பத்தைத் தரும் இசையினாரா - இசைத்தலைக்கேட்டு. சுடுவினையாளர் - கொடுந் தொழிலைச் செய்யும் ஆறலை கள்வர் முதலியோர். குரவின் பூ பாவை போறலின் பாவை யென்றார். பறித்துக் கோட்பட்டாயோ - பறித்துக் கொள்ளப் பட்டாயோ. பைய - மெல்ல. 206. கோங்கம் - முலை. முலைபோறலின் முலைகொடுப்ப என்றார். பாவை என்றது பாவைபோலும் குரவம்பூவை. மொழி காட்டாயாயினும் (நினக்குச் சொல்லிய) சொல்லைச் சொல்லா யாயினும் வந்து ஈதென்று வழிகாட்டாயென இயைக்க. 207. குடம்புகா - குடம்புகாமல் - (பிறர்) அள்ளாமல்; குடம்புகாத கூவலெனினுமாம். கூவற் சின்னீர் - கூவலிலுள்ள அற்பநீர். இடம்பெறா - குடித்தற்கு இடம்பெறாமையால். மா - விலங்குகள். ஏறா - சென்று முடியாத. உடம்புணர் காதல் - உடன் கூடிச் செல்லுங் காதலால். உவப்ப இறந்த - மகிழ்ந்து சென்ற. 208. பசந்தன்று - பசந்தது. சாய்ஐது ஆகின்றது. நுணுகி மெல்லிதாகின்றது. அவலம் - துன்பம். உயிர்கொடு கடியினல்லது - என்னுயிரைக்கொண்டு செல்லினல்லது. நினையின் எவனோ? - ஆராயுமிடத்து இவை வேறு என்செய்வன. பொரி - பொருக்க. பொகுட்டு - தாமரைப் பொகுட்டுப்போல் அடிமரத்தினி லெழுந்திருப்பது. ஆலி - ஆலங்கட்டி தூம்பு - உட்டுளை. வீ - பூ. எண்கு - கரடி. வீயைக் கவருமென இயைக்க. நிரையப் பெண்டிர் - நரகம் போலும் பெண்கள். கெளவை மேவலராகி - அலர்தூற்று தலை விரும்புதலையுடையோராக. இன்னா - இனிமையல்லாத சொற்கள் புரைய அல்ல - உயர்ச்சியைத் தருவன அல்ல. பரைசி - தெய்வத்தைப் பரவி. ஆறிய - அடங்கிய. இதற்படல்என் - இந்நிலை யிற்படுதல் எவ்வாறாம். 209. நாண் - நாணம், நீடுஉழந்தன்று - நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது. இனி - இப்பொழுது. சிறை - கரை. புனல் நெரிதர - நீர்நெருங்கி அடித்தலால். உக்காங்கு - வீழ்ந்தாற் போல. தாங்கல் - தடுத்தல். நெரிதர - நெரிக்க (மென்மேல் நெருக்க). கைநில்லாது - எம்பால் நில்லாது; போய்விடும். அளிது - அஃது இரங்கத்தக்கது. நாண் நனி நீடுழந்தன்று. இனிக் கைநில்லாது அளிது என முடிக்க. 210. மறுகு - வீதி மறுகிற் பெண்டிர் சிலரும் பலரும் என இயைக்க. அம்பல் - பழிமொழி. வலத்தள் - வலக்கையிற் கொண்டவளாய். வலந்தனள் என்னும் பாடத்திற்குச் சுழற்றின வளாய் என்று கொள்க. அலந்தனன் - துன்பமுடையனாயினேன். சொல்வயர்ந்திசின் - சொல்ல விரும்பினேன். அழுங்கல் - பேரொலி. 211. சேட்புலமுன்னிய - தூரியவிடத்தைச் செல்லக் கருதிய. யாய் - என்றாய். ஆய்நலம் - நுணுகிய அழகு. நலம் - இன்பமுமாம். ஆயத்தோர்க்கு என்மின் என இயைக்க. 212. கவிழ்மயிர் - கவிழ்ந்து தொங்குகின்ற மயிர். செந்நா யேற்றை - செந்நாயேற்றையானது. ஏற்றை - ஆண். குருளைப் பன்றி - பன்றிக்குட்டி. விரைந்த - விரைந்து செல்கின்ற. ஆயத்தோர்க்கு உரைமின் என முடிக்க. 213. வேய் - மூங்கில். வனப்பு - அழகு. ஆய்கவின் - நுணுகிய அழகு. பரியல் - வருந்தற்க. வந்தமாறு - வந்தகாரணம். வந்தமாறு தரூஉம் என இயைக்க. 214. வேண்டு - விரும்பிக் கேட்பாயாக. படப்பைத்தேன் - தோட்டத்தில் வைத்த தேன். மயங்கிய - கலந்த. உவலை - இலை. கீழதாகிய - கலுழிநீர் என இயைக்க. கலுழி - கலங்கல். 215. அறம்சாலியர் - நல்வினை நிறைவதாக. வறனுண் டாயினும் - வறற்காலம் உளதானாலும். எந்தையை - என்றலை வனை. மறைத்த குன்று. அறஞ்சாலியர் எனக் கூட்டுக. கோள் - கொலைத்தொழில். 216. மான் அதர் - மான் செல்லும்வழி. மான் என்பதற்கு விலங்குகள் என்றலுமாம். மயங்கி - கலந்துள்ள. மலைமுதல் - மலையடி. தோளி பரல்வடுக்கொளத் தான்வருமென்ப என இயைக்க. 217. துறந்ததைக்கொண்டு - (நின்னைத்) துறந்ததனால். அட - வருத்த. சாஅய் - மெலிந்து. புலந்து - வெறுத்து. அளைகண் - நீர் அளைந்தகண். எவ்வம் - துன்பம். ஏமம் - இன்பம். முந்துற நின்மகள் - வந்தனள் என முடிக்க. 43ஆம் சூத்திரம் 218. எழில் - அழகு. மாமை - மாந்தளிர்போலும்நிறம். சுணங்கு - தேமல். ஆரம் - மார்பு. தொடுத்தென - எதிராக வைத்துக் கட்டினதென்று சொல்லும்படி அமையார் - வேட்கை தணியார். எண்ணுவது - நினைக்கின்ற காரியம். 219. அளிநிலை - அருளுநிலை. அமரிய - மாறுபட்ட விளிநிலை - அழைக்குந்தன்மை. நிலம்வடுக்கொளா - நிலம் வடுக்கொளச்செய்து; என்றது இதற்குமுன் மெத்தென நடக்குமடி. இப்பொழுது கோபத்தால் நிலம் வடுக்கொள்ளுமாறு (ஊன்றி) நடந்து என்றபடி. வறிது - சிறிது. அகம் - தன்னிடம். வாயல் - உண்மையல்லாத. கண்ணியது. நினைத்த காரியம். வினை தலைப்படுதல் - (ஆள்வினை) தொழிலிற் தலைப்படுதல். செல்லா நினைவுடன் - போகாமற்றடுக்கும் நினைவோடு. முளிந்த - உலர்ந்த. ஓமை - மாமரம். முதையற்காடு - பழங்காடு. அம் - சாரியை. மோடு - உயரம். ஈட்டுதல் - கொண்டுவந்து குவித்தல். காய் உதிர்ந்து கிடக்கு மென இயைக்க. கவான் - மலைப்பக்கம். மாய்த்தபோல - தீட்டி விட்டது போல. மழுகுநுனை - தேய்ந்த கூரிய முனை. பாத்தியன்ன - பரப்பி வைத்தாலொத்த; பகுத்துவைத்தாலொத்த எனினுமாம். குடுமி - முனை; உச்சி. அதர - வழியையுடைய. அதரகானம் என இயையும். முரம்பு - மேட்டுநிலம். இறக்க - கடக்க. அறத்தாறன்றென மொழிந்த தொன்றபடுகிளவி - நின்னிற் பிரியேன், பிரிதல் அறத்தாறன் றெனக் கூறிய இயற்கைப் புணர்ச்சிக் காலத்து வார்த்தை. அன்னவாக - கூறிய அத்துணையாகுக. முன்னம் - குறிப்பு. ஒன்றுநினைந்து ஒற்றி - போக்குடன் படாமையை எண்ணித் துணிந்து. பாவை - கண்மணிப்பாவை. மாய்த்த - மறைத்த. ஆகம் - மார்பு. புன்றலை - மென்மையான தலை. பிணையல் - (செங்கழுநீர்) மாலை உயிர்த்தல் - நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல். மணி - பவளம். காட்சி - தோற்றம். கடிந்தனம் - தவிர்ந்தேம். 220. வேர்பிணிவெதிரத்து - வேர்கள். பிணிப்புண்ட மூங்கி லினிடத்தே. கால் - காற்று. நரலல் - ஒலித்தல். கந்து - தறி. அயர் வுயிர்த்தல் - நெட்டுயிர்ப்புக்கொளல். என்றூழ் - வெயில். அழுவம் - காடு. குன்று - மலை. மதியம் - திங்கள். முள்ளெயிற்றினையும் திருநுதலையுமுடைய நாள் நிரம்பிய மதித் திங்கள் எம்முடை யதுமொன்றுண்டு. அஃது இப்பொழுது மாலையும்பரஃது என உள்ளினனல்லவோ என இயைக்க. 221. உறல்யாம் - தன்னை உறுதற்குரியயாம். உயர்ந்தவன் விழவு - காமன் விழா. விறலிழையவர் என்றது பரத்தையரை. விளையாடல் - நீர்விளையாடல். பொழுது - இளவேனிற்காலம். துருத்தி - ஆற்றிடைக்குறை. அறல்வாரும் - நீர்பெருகும். அற லுண்டாகும்படி ஒழுகும் என்றுமாம். 222. உயவு - வருந்தியுறையும். பொரி - பொருக்கு. புள்ளி நிழல் - புள்ளிபோன்ற நிழல். கட்டளை - கட்டளைக்கல். வட்டரங்கு - வட்டாடற்குரிய அரங்கு. நெல்லிவட்டுஆடும் - நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு ஆடும். ஆடும் சீறூர் என இயைக்க. சுரம் - பாலைவனம். முதல்வந்த - முற்பட்டுவந்த. உரம் - வலி. படர் பொழுதென உள்ளினனல்லனோ என முடிக்க சுடர் - விளக்கு. படர்தல் - வருந்தல். 44ஆம் சூத்திரம் 223. பொருள்வேட்கை - பொருளாசை. துரப்ப - செலுத்த. உறை - உறைதல். சூழாதி - நினையாதேகொள். தொய்யில் - தொய்யிற்கொடி. யாழ - முன்னிலையசை. நின்மார்பிற்சுணங்கு - நின்மார்பு மலைத்தலால் இவள்கணுண்டான தேமல். (இதற்கு நச்சினார்க்கினியர் கருத்து வேறு. அது அத்துணைப் பொருத்த மில்லை). முகப்ப - முகந்துகொண்டு உடனே வர. கிடாவது - ஓரிடத்தே கிடவாது. செல்லார் - ஒழுகார். ஓராங்கு - ஒருசேர. வளமை - செல்வம். விழை தக்கதுண்டோ - விரும்பத்தக்கதாக உளதோ. ஒன்றன்கூறாடை - ஒரு ஆடையின் கூறாகிய ஆடையை. சென்ற இளமை தரற்கு அரிது - கழிந்த இளமை மீண்டு தருதற்கு அரிது. 224. பொய்யற்ற கேள்வி - மெய்ப்பொருளுணர்ச்சி. புரையோர் - மேலோர். படர்ந்து - சென்று; அடைந்து. மையற்றபடிவம் - மாசற்ற விரதம். மறுத்தரல் - மீட்டல். ஒல்வதோ - பொருந்துவதோ. 225. கோளுற - உயிரைக்கொள்ள. பிறர் - பகையரசர். தாள் - முயற்சி. வலம் - வெற்றி. நாள்இழைசுவர் - பிரிந்துசென்ற நாளைக் கீறிவைத்த சுவர். ஆழல் - துன்பத்து ஆழாதே. நறவுநொடைநெல்லின் நாண் மகிழ் அயரும் - (கோடுடன்) நறவை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச்செய்யும். கள்வர் கோமானாகிய புல்லியின் வேங்கடம் பெறினும் நின் ஆகம் பொருந்துதல் மறந்து ஆங்குப் பழகுவராதலரிது என முடிக்க. ஆவீயென்பான் நெடுநகராகிய பொதினி அன்ன ஆகம் என இயைக்க. 226. குறிப்பு - கருத்து. தனித்துப் பிரிவரோ - நின்னைத் தனித்திருக்கவிட்டுப் பிரிவரோ (பிரிந்திரார்). கலங்கல் - ஆதலால், கலங்கற்க. பனி - நீர்த்துளி. வார - வடிய. 227. பொறி - புள்ளி. வானம்வாழ்த்தி - வானம்பாடிப்புள். உறைதுறந்து - துளிபெய்தலைவிட்டு. பறைபுஉடன் - இலையாவும் கெட்டொழிதலோடு. புல்லென்ற - பொலிவழிந்த. முரம்பு - மேட்டுநிலம் வாளியம்பு - அலகம்பு. நிரம்பாநோக்கு - இடுக்கிக் குறிபார்க்கும் பார்வை. நிரயங்கொண்மார் - தம் நிரைகளை மீட்க வேண்டி. அம் - சாரியை. நல்லமர்க் கடந்த - வெட்சியாரின் நல்ல போரை வென்றுபட்ட அதர் - வழி. பீலி - மயிற்பீலி. ஊன்று வேல் பலகை - ஊன்றிய வேலும் அதனோடு சார்த்திய பரிசையும்; நடுகல், வேலையும் பரிசையையும் கொண்டு வேற்றுமுனையை யொக்குமென இயைக்க. வேற்றுமுனை - பகைமுனை. மொழி பெயர் தேம் - வேற்றுமொழி வழங்கும் தேயம். கழிப்பிணிக்கறைத் தோல் - கழி யாற் பிணிக்கப்பட்ட கரிய பரிசை. உவல்இடு பதுக்கை - தழையால் மூடிய கற்குவியல். ஆள்உகுபறந்தலை - ஆட்கள் இறந்துபட்ட பாழ்நிலம். உருஇல் ஊராத பேய்த்தேர் என மாற்றி இயைக்க. சென்ற ஆறு தேரொடு பரல் இமைக்கும் எனக் கூட்டி முடிக்க. நிரயங்கொண்மார் எனவும் பாடம். நிரயம் - நரகம். 228. தந்நிலை - யாமிறந்துபடின் தாமடையும் துன்பநிலை. இதற்கு உரை முன் எழுதப்பட்டுள்ளது. 45ஆம் சூத்திரம் 229. கோடு - சிகரம். இறத்தல் - கடந்துசேறல். கண்நீட விடுமோ? விடாது என்றபடி. மற்று - வினைமாற்று. ஏ - அசை நிலை. உடைத்து - அணையை உடைத்து. நீடு நினைந்து என்பது தலைவன் வினை. அவர் நீடு நினைந்து துடைத்தொறும் வெள் ளத்தைச் சொரிந்த கண்ணியல்பை அவரறிவராதலின் அவரை அது நீடவிடாது என்றபடி. நீட்டித்து வருதலை நினைந்து எனவே பிரிதலைக்கருதி என்பது பெறப்படும். 230. வளை - சங்கு. பகரும் - விலைகூறும். கொண்கன் - நெய்தல் நிலத்தலைவன். படல் - கண்படல். பாயல் - படுக்கை. வௌவுதல் - கவர்தல். இன்பாயற்படல் என மாற்றிக்கொள்க படலை விசேடணமாக்கி பாயலை ஆகுபெயராக்கினு மமையும். 231. கூந்தலையும் உண்கண்களையுமுடைய பிணிக்கொண் டோள் என்க. நெஞ்சமானது அவள் சொல்லைத் தீர்ப்போம் (சொல்லுவாம்) என்று சொல்லும். அறிவானது செய்த வினையை முடிவு போக்காது இடையே இகழ்ந்து விட்டுவிடுதல். அறியாமையோடு, இகழ்ச்சியையும் தருமென்று உறுதிப் பாட்டை ஆராய்கையாலே தாமதித்து; ஏ நெஞ்சமே சிறிது விரையாதேகொள் என்னும். களிறு மாறுபற்றிய - இரு களிறு ஒன்றோடொன்று மாறாகப் பற்றிய. கயிறுபோல என்னுடம்பு வீவதுபோலும் என முடிக்க. 232. கானம் - காடு. கருந்தகடு - கரிய தகடுபோன்ற விதழ். அதிரல் - புனலிப்பூ. காண்வர - அழகுண்டாக. மராம் - கடப்பம்பூ. அடைச்சி - சூடி. தெளிர்ப்ப - ஒலிப்ப. இயலி - நடந்து. சிறுபுறம் - பிடர்; சிறிய முதுகுமாம். சாஅய் - விலகி. அல்கியேம் - தங்கினேம். குழுமும் - முழங்கும். பாணி - ஒலி. 233. 234. அளிது - இரங்கத்தக்கது. ஆள்வினை - முயற்சி. ஓம்பன் மின் - பாதுகாவாதீர். அதாஅன்று - அஃதன்றி. புலம்புறுநிலை - தனிமைநிலை. 235. தலைமணந்த - ஒன்றோடொன்று நெருங்கிய. ஞெமை - ஒருமரம். குடிஞை - பேராந்தை. பொன்செய் கொல்லனின் - பொன்செய்யும் கொல்லன் தொழில் செய்தற்கண். ஒலிபோல தெளிர்ப்ப - ஒலிப்ப. முரம்பு - மேட்டுநிலம். சென்றிசின் - சென்றனன். உரைத்தென - உலாவியதென. நறுந்தண்ணியன் - நறிய குளிர்ச்சியையுடையனாய். வாராநின்றான்; கண்டீர்; (நோகோ) நோவேனோ? மகிழ்வேன் என்றபடி. 236. இனைந்து - வருந்தி. நீடுயிர்த்தல் - நெட்டுயிர்ப்புக் கொள்ளல். எண்ணி இனைந்து நொந்து அழுதனள் என மாற்றிக்கூட்டுக. எல் - விளக்கம். நல்கிய - வரைந்துகொண்ட மணியுட் பரந்த நீர் போல் - மணியும் அதனுட் பரந்த நீரும்போல். துணிபாம் - (வேறல் லரென்று) துணிகுவாம். சிதை இல்லத்துக்காழ் - தேய்த்த காலத்துக் கலங்கலைச் சிதைக்கின்ற தேற்றாம்விதை. கலத்தில் நீரைத் தேற்றத் தெளியுமா போலத் தெளிந்து என விரித்துரைக்க. 237. குரவை - குரவைக்கூத்து. மரபுளிபாடி - முறையாற் பாடி. சுற்றத்தார்கூறு. மரபைப்பாடி என்பது நச்சினார்க்கினியர் கூறிய பொருள். எங்கோ உலகில் வாழியர் என்று யாம் தெய்வம் பரவுதும் என இயைத்து முடிக்க. 238. மரையா மரற்செடியைச் சுவைக்கும்படி. மாரிவறப்ப என்க. ஆரிடை - அரியவழி. சுரை - மூட்டுவாய். சுருங்கி - உடலஞ் சுருங்கி. உள்நீர் - உள்ளே பொருந்திய நீர். துயரத்தைக் கண்ணீர் நனைத்துப்போக்கும் கடுமையையுடைய காடு என விரித்துரைக்க அறியாதீர் போல் - யான் இறந்துபடுதலை அறியாதீர் போல. இன்நீர அல்ல - இக்கூற்று இனிய நீர்மையையுடையனவல்ல. துன்பந் துணையாக நாடின் - துன்பத்திற்குத் துணையாக எம்மையுங் கொண்டுபோக ஆராயின். 239. எல்வளை - ஒளிபொருந்திய வளையையுடையாய்! நீவரின் சீறடி கல்லுறின் தோய்ந்தவைபோலக் கறுக்கு நவல்லவோ என இயைக்க. தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவை போல - தாமரையின் அல்லியைச்சேர்ந்த அழகிய விதழ்கள் இங்குலிகந் தோய்ந்தனபோல. 46ஆம் சூத்திரம் 240. விரிகதிர்மண்டிலம் - சூரியமண்டிலம். ஊர்தர - பரவா நிற்ப. புரிதலை - இதழ்முறுக்குண்ட தலையையுடைய. அங்கள் - அழகியதேன். புணர்ந்து - கூடிநுகர்ந்து. வாய்சூழும் - அவ் விடத்தே சூழ்ந்து திரியும். துனிசிறந்து - துனி மிகுதலாலே. அறல்வார - காமத்தீயால் சுவறி அறுதலையுடைத்தாய் ஒழுக. அளித்தலின் - அருளுதலானே. பனி ஒரு திறம் வார - பனி ஒருகூற்றில் வடியா நிற்ப. தளைவிடூஉம் - அலரும். 241. யான் ஈண்டையேன்; என் நலன் ஆண்டொழிந்தன்று என முடிக்க. சுவனொடு - சுவணால். யானை வெருவிக் கைவிடு பசுங்கழை நிவக்கும் கானககாடு என இயைக்க. நிவக்கும் - நிமிரும்; மேற்சொல்லும். கழை - மூங்கில். 47ஆம் சூத்திரம் 242. ஒன்றல் - பொருந்தல். பொருகளிறு - ஒன்றோடொன்று பொருத களிற்று யானைகள். தாள் - அடி. நின்றுகொய - ஏறாமல் நிலத்தே நின்று கொய்ய. ஒன்று என்றது நொதுமலர் வரைவொடு புகுந்த ஒன்று. 48ஆம் சூத்திரம் 243. வீங்குநீர் - பெருகுநீர். நீலம் - கருங்குவளைப்பூ. பகர்பவர் - விற்போர். வயற்கொண்ட - வயலிடத்தே பறித்துக் கொண்டவை. கொண்ட - வினைப்பெயர். ஞாங்கர்மலர் - தலையிடத்தனவாகிய மலர். நாற்றம் கடாஅம் விருந்தயர - ஊர் புகுந்த வண்டிற்கு. நாற்றத்தையுடைய மதத்தை (அம்மதத்தின்முன் படிந்த வண்டுகள்) விருந்து செய்ய. அல்கி - தங்கி. இறை - முன்கையிலுள்ள வளை; ஆகுபெயர். வீழுநர் - விரும்பிய கணவர்; புணர்ந்தவர். வினைப் பெயர். வண்டு, அல்கி பாய்ந்தூதிப் படர் தீர்ந்து மறந்துளாத புனல் என முடிக்க. 50ஆம் சூத்திரம் 244. வாருறுவணர்ஐம்பால் - கோதுதலுற்ற கடைகுழன்ற ஐம்பால். ஐம்பால் - ஐந்து கூறாக முடிக்கப்படுவது. இறை - முன்கை எழில்பிணை மான் - அழகினையுடைய பெண்மான் மால்நோக்கு எனக் கண்ணழித்து மயங்கிய நோக்கு எனினுமாம். கார் - மழை. கூர்எயிறு - விழுந்தெழுந்த கூரிய எயிறு என்பர் நச்சினார்க்கினியர். அரி - உள்ளிடுமணி. அறிந்தீயாது இறப்பாய்கேள் - அறியாது போகின்றவளே கேள். உளனா - உயிருடனே இருக்க. உயவுநோய் - வருத்தத்தினை யுடைய காமநோய். தவறு - தப்பு. களைநர்இல் - களைபவர் இல்லாத. அறிந்து அணிந்து - அறிந்துவைத்தும் அழகுசெய்து. போத்தந்த - புறப்படவிட்ட. நுமர் - நுமரை. நில்லாது எய்க்கும் இடை - நிற்க மாட்டாது இளைக்கும் இடை. உரு - வடிவு. அல்லல் கூர்ந்து - வருத்தமிக்கு. அணங்காகி - வருத்தஞ் செய்வதாகிய நோய் - காம நோய். ஒறுத்தல் - வருத்துதல்; தண்டித்தல். மறுத்து - வருந்துகின்ற நிலைமையைப்போக்கி. நீபடுபழி - நீ எய்துவதொருபழி. பழிநிறுக்குவன் போல்வல் என மாற்றிக் கூட்டுக. நிறுக்குதல் - நிலைநிறுத்துதல். 245. இவள் தந்தை விழுப்பொருள் யார்க்கும் கொடுக்கும். நீ வேண்டிய பொருள் யாது என்றாள் தோழி. போதாய் - கூற்றின் (சொல்லின்) குறிப்பறியாதவளே! வேண்டும் - இரக்கும். புன் கண்மை - மிடி. ஈண்டு - என்பால். மருளி - மருண்டு. என்னை அருளீயல் - எனக்கு அருள் செய்தலை. வேண்டுவன் - இரப்போன். 51ஆம் சூத்திரம் 246. சான்றவிர் - நற்குணங்களெல்லாமமைந்தீர்! அறிவுறுப் பேன் - தெரியச்செய்வேன். மான்றதுளி - மயங்கிய மழை. உரு என்னைக்காட்டி - தன்வடிவை என்னைக் காணப்பண்ணி (எனக்குக்காட்டி). அளியள் - அளிக்குந்தன்மையளாய். என் நெஞ்சு ஆறுகொண்டாள் - என் நெஞ்சைத் தான்வரும் வழியாகக் கொண்டாள். அதற்கொண்டு - அதனை முதலாகக் கொண்டு. அலங்குதல் - அசைதல். மிலைந்து - சூடி. பெண்ணை மடல் - பனைமடற் குதிரை. எவ்வநோய் - துன்பந்தரும் காம நோய். உயிர்ப்பாக இளைப்பாறுதலாக. மாதர்திறத்து - மாதர் வருத்தின கூற்றிலே ஒரு கூற்றினை. பாய்மாநிறுத்து - அப் பாய்மாவை மனத்தே நிறுத்தி, நிறுத்தி உயிர்ப்பாக மாதர்திறத்துப் படுவேனென இயைக்க. எல்லை - பகல். எவ்வத்திரை - துன்பமாகிய திரைகள். மடல்புனையா - அம்மடன்மா ஒரு தெப்பமாக நீந்துவேன்; அக் கடலை நீந்துவேன். உய்யா - பிழைக்க முடியாத. இம்மாஉயலாகும் - இம்மடன்மா பிழைக்கும்படி செய்வதொன்றா யிருந்தது. ஏரென - அழகால் வந்த நோயென்று யான் கூறும்படியாக காமனதாணையால் வந்த காம நோயாகிய படை என விரித் துரைக்க. படைமுற்றி உடைத்து உள் அழித்தரும் என மாற்றி முடிக்க. ஆணெழின்முற்றி - ஆண்டன்மையின் அழகாகிய மதிலைச் சூழவிட்டிருந்தது. இம்மா ஏமம் - இம்மடன்மா பரிகாரமாயிற்று. தகையால் - அழகால். தலைக்கொண்ட - அவளிடத்தைப் பற்றிக் கொண்ட. நெஞ்சிடத்து எரிகின்ற காமத்தீ அமையாது என்னுள்ளத்தைச் சுடும் என மாற்றிப் பொருள் கொள்க. இதற்குச் சிறிது வேறுபட உரைப்பார் நச்சினார்க்கினியர். அழன்மன்ற.... இம்மா என்பதற்குக் காமமாகிய பொறுத்தற் கரிய நோய் அறுதியாக நெருப்பு; அந் நெருப்பிற்கு இம்மா அறுதியாக ஒரு நிழலாயிருந்தது என்றான் என உரைக்க. ஆன்றோர் - ஆன்றோர்கள் உள்ளிடப்பட்ட அரசனை. இவன் தவஞ்செய்தற்குரியனென்று தவத்துள்ளே கூட்டிக் கொள்ளப்பட்ட அரசனை. துறக்கத்தின் வழீஇ - துறக்கத்திற் சேறலை வழுவுகையினாலே. பெயர்த்து - அவ்வழுவுகை யினின்று மீட்டு. அவர் - அச் சான்றோர். உறீஇயாங்கு - உறுவித்தாற் போல. உறீஇ யாங்குத் தீர்த்தல் நுந்தலைக்கடனே என இயைக்க. நுந்தலைக் கடன் - நும்மிடத்து முறைமையாகும். 247. உக்கம் - தலை. நடு உயர்ந்து - இடை இல்லையாய். வாள் வாய் - வாள்போலும் வாயையுடைய. கொடுமடாய் - வளைந்த மடுப்பையுடையாய். கொக்குரித்தன்னமடுப்பென்றார்; தோல் திரைந்திருத்தலின், அகலம் - மார்பு. ஊன்றும் - அக்கூன் ஊன்றும். புறம் - முதுகு. அக்குளுத்து - அக்குளுக் காட்டுதலால் நச்சினார்க்கினியர் உரையின்படி அக்குளுத்தும் என்று இருக்க வேண்டும். புல்லல் - முயங்கல் (தழுவல்). அருளீமோ - வருவாயாக. 248. உளைத்தவர் - வெறுத்தவர். முளைத்த - தோன்றின முறுவல் - எயிறு. படுகளி - மிக்ககளிப்பு. மூப்பு - முதுமை. மூப்புச் செய்யுமென முடிக்க. 249. அலர் - பூ. நாற்றம் உண்டோ என இயைக்க. விறலி - பாணினியே! பிணங்கல் - பிணங்கற்க. அரும்பு - வண்டு. முயக்கு அமிர்தன்றோ என முடிக்க. முயக்கு - தழுவுதல். 250. இஃதொத்தன் - இவனொருத்தன். மேவேமென்பார் - புணர்ச்சிக் குறிப்பின்றி நிற்பார். மேவினன் - புணர்ச்சிக் குறிப்புடையனாய்; முற்றெச்சம். அமன்ற - நெருங்கிய. மெல் லிணர் செல்லா - மெல்லிய பூங்கொத்து நீங்காத. எல்லா - ஏடா. இன்னா - துன்பம். 52ஆம் சூத்திரம் 251. மனை - இல்லம். வயலை - வயலைக் கொடி. வேழம் - கொறுக்கச்சி; கரும்பென்பாருமுளர். தோள் (நல்லன்) அல்ல னென்னும் என இயைக்க. 252. முளிதயிர் - செறிந்ததயிர். கழுவுறு கலிங்கம் - அழுக்குப் போகத் தோய்த்த வதிரம். கழாஅது - கழுவாது. விரலைக் கழுவாது உடுத்து என இயைக்க. குய்ப்புகை - தாளிதப்புகை துழந்து - துழாவி. புளிப்பாகர் - புளிக்குழம்பு. கழாஅது - தோய்க்காது என்று கூறுவாரு முளர். பொருத்த நோக்கிக் கொள்க. 253. கொளலரிதாக - கொள்ளுதலரிதாக. ஏற்றுக் காரி - ஏறாகிய காரி. காரி - கருநிறமுடையது. கதம் - கோபம். பாய்ந்த - பாய்ந்து தழுவின. ஆர்வுற்று - மகிழ்ச்சி நிறைதலுற்று. உச்சி பதித்து - தலையில் மிதித்து. மிதித்துக் கொடைநேர்ந்தார் என இயையும். உச்சி மிதித்து என்றது - அவர் கூறாமல் அடங்கச் செய்து என்றபடி. 54ஆம் சூத்திரம் 254. முகிழ முகிழ்த்தே வரவாயினும் - அரும்பு போல முகிழ்த்து வருதலுடையதாயினும். வருதல் - முகஞ் செய்தல்; வளர்தல். முலைவர வாயினும் அஞ்சுதக்கன என இயைக்க. அரவெயிறு - பாம்பின் பல்லு. ஒழுக்கம் - வெளிப் போந்தும் வெளி வராமலுமிருத்தல். அணங்குதகு இவள் - வருத்தம் செய்யுந் தகுதியுடைய இவள். தகு - தக்கு என நின்றது. இவள் இளைய ளாயினும். முதுக் குறைந்தனள் (-பேரறிவுற்றாள்) என முடிக்க தாய் நோயிலளாகு என இயைக்க. அணங்கு - அணங்கு போன்ற என்றுமாம். 255. ஆள்வினை - தவமுயற்சி. முனிவன் என்றது விசுவாமித் திரனை. போற்றிய - பாதுகாத்த. எய்திய ஞான்று - எய்திய போது மதியுடம்பட்ட - அவன் கருத்தினைத் தன் நோக்கான் உடன் பட்ட; இதனைக் கண்ணுடன் முடிக்க. ஞாண் - நாண். இடி ஒலி - இடிபோலும் ஒலி. இடியின் ஒலி கேட்ட பாம்பு என, இடியொலியைக் கேட்ட என்பதனோடும் கூட்டுக. 256. பாண்டியன் மகள் - சித்திராங்கதை. விசயன் - அருச்சுனன். (இதன் கருத்து நன்றாகப் புலப்படவில்லை. இச் செய்யுளிற் பிழையுமிருக்கலாம் போலும்). 257. முட்கால் - முட்பொருந்திய தாள் (அடி). காரை தீங் கந்தாரம் - காரை முதுபழம்போல முற்ற விளைந்த இனிய கந்தாரமென்னும் பெயரையுடையதுமது எனப் பொருள் கொள்க. தீங்கட்டாரம் எனவும் பாடம். தாரம் - பண்டம் (பொருள்). ஆயம் - நிரை. தலைச்சென்று - கள் விலைக்கு நேராகக் கொடுத்து. பெருத்த - மிக்க. எச்சில் ஈர்ங்கை - எச்சிலான ஈரியகை. கையை வில்லின் புறத்தே திமிரி என இயைக்க. அணல் - தாடி. தொடுதல் ஓம்பு - தொடுதலைப் பாதுகாப்பாயாக. சாடியைத் தொடுத்தல் ஓம்புமதி என இயைக்க. காய்தல் - விடாய்த்தல். 258. பல்லாளிரை ஓம்பு மென்ப என முடிக்க. வில்லேருழவர் கடந்து கொண்ட பல்லானிரை என இயைக்க. கடந்து - வென்று. வெட்சித்தாயத்து - நிரைகவருமுரிமையை யுடைய. இதனை உழவரொடு முடிக்க. 55ஆம் சூத்திரம் 259. நெடுவேள் ஆவி - ஒருவள்ளல். 260. எவ்வி - ஒரு குறுநில மன்னன். இவன் கொடையிற் சிறந்தவன்; வேலி எனவும் படுவன். புறநானூறு பார்க்க. பூ - பொற்றாமரைப்பூ. புல்லென்று - பொலிவழிந்து. 261. ஏறு - ஆனேறு. பொதுமகளிர் - இடைச்சாதி மகளிர். புணர்குறி - புணர்தற்கு வேண்டும் நிமித்தம். கொண்டு - பெற்று. முற்றிற்று. நூற்பா நிரல் (நூற்பா எண்) அகத்திணை மருங்கின் 56 அச்சமு நாணும் 99 அடியோர் பாங்கினும் 23 அதுவே தானு மிருநால் 66 அந்தமில் சிறப்பின் 243 அம்பலு மலரும் 139 அமரர்கண் முடியும் 81 அய்பெருஞ் சிறப்பின் 124 அயலோ ராயினும் 38 அருண் முந்துறுத்த 161 அலரிற் றேரன்றும் 163 அல்லகுறிப்படுதலும் 133 அவற்றுள், ஓதலுந் 26 அவற்றுள், நடுவ ணைந்திணை 2 அவன் குறிப்பறிதல் 159 அவன்சோர்பு காத்தல் 174 அவன்வரம் பிறத்தல் 120 அவனறி வாற்ற 147 அறக்கழி வுடையன 218 அறத்தொடுநிற்கும் 206 அறுவகைப்பட்ட 75 அன்புதலைப் பிரிந்த 179 அன்புறு தகுந 231 அன்பே யறனே 215 அன்ன வகையான் 128 அன்னை யென்னை 246 ஆங்காங் கெரழுகும் 134 ஆயர் வேட்டுவர் 21 ஆற்றது பண்பும் 170 ஆறின தருமையும் 136 இசைதிரிந் திசைப்பினும் 195 இடித்துவரை நிறுத்தலும் 155 இமையோர் தேஎத்தும் 248 இயங்குபடையரவம் 63 இரந்து குறையுற்ற 237 இரவுக் குறியே 131 இருவகைக் குறி 107 இருவகைப் பிரிவும் 11 இறைச்சி தானே 229 இறைச்சியிற் பிறக்கும் 230 இன்பமும் பொருளும் 92 உடம்பு முயிரும் 203 உடனுறை யுவமம் 242 உண்டற் குரிய 213 உணர்ப்பு வரை 156 உயர்ந்தோர்க் குரிய 31 உயர்ந்தோர்கிளவி 217 உயர்மொழிக் கிளவி 240 உயர்மொழிக் குரிய 238 உயிரினுஞ் சிறந்தன்று 113 உயிரு நாணும் 201 உரிப்பொருளல்லன 13 உழிஞை தானே 64 உழைக்குறுந் தொழிலும் 171 உள்ளுறுத் திதனோடு 48 உள்ளுறை தெய்வம் 47 உள்ளுறை யுவமம் 46 உற்றுழி யல்லது 208 உறுகணோம்பல் 239 ஊரொடு தோற்றமும் 85 எஞ்சா மண்ணசை 62 எஞ்சி யோர்க்கும் 42 எண்ணரும் பாசறை 175 எத்திணை மருங்கினும் 35 எந்நில மருங்கிற் 19 எல்லா வாயிலும் 178 எல்லா வுயிர்க்கும் 223 எளித்த லேத்தல் 207 ஏமப் பேரூர் 37 ஏவன் மரபின் 24 ஏறிய மடற்றிறம் 51 ஏனோர் பாங்கினும் 22 ஏனை உவமம்தானுணர் 49 ஏனைப் பிரிவும் 190 ஒப்பு முருவும் 247 ஒருசிறை நெஞ்சமோடு 204 ஒருதலை யுரிமை 225 ஒருபாற் கிளவி 222 ஒன்றாத் தமரினும் 41 ஒன்றே வேறே 93 ஓதல் பகையே 25 கணையும் வேலும் 71 காணத்தி னமைந்து 146 கலந்த பொழுதும் 16 கழிவினும் வரவினும் 153 களவல ராயினும் 115 களவுங் கற்பும் 162 கற்புங் காமமும் 152 கற்புவழிப் பட்டவள் 233 கற்பெனப் படுவது 142 கனவு முரித்தால் 197 காஞ்சி தானே பெருந்திணை 77 காமக் கடப்பினுள் 160 காமக் கூட்டம் 119 காமஞ் சாலா விளமையோள் 50 காமஞ் சான்ற 192 காமஞ் சொல்லா நாட்டம் 109 காமத் திணையின் 108 காமநிலை யுரைத்தலும் 177 காமப் பகுதி 83 காரு மாலையும் 6 கிழவி நிலையே 186 கிழவி முன்னர்த் தற்புகழ் 181 கிழவோ னறியா அறிவினள் 117 கிழவோள் பிறள் 234 கிழவோன் விளையாட்டு 164 குடையும் வாளும் 68 குழவி மருங்கினும் 84 குறித்தெதிர் மொழிதல் 183 குறிப்பே குறித்தது 97 குறியெனப் படுவது 130 குறையுற வுணர்தல் 127 கூதிர் வேனில் 76 கொடிநிலை கந்தழி 88 கொடுப்போ ரின்றியும் 143 கொடுப்போ ரேத்தி 90 கொண்டுதலைக் கழியினும் 15 கொள்ளார் தேஎம் 67 கெரற்ற வள்ளையும் 89 கைக்கிளை முதலா 1 சிறந்துழியையம் 94 சினனே பேதைமை 245 சுரமென மொழிதலும் 216 சூழ்தலு முசாத்துணை 126 செய்பொரு ளச்சமும் 232 சொல்லிய கிளவி 154 சொல்லெதிர் மொழிதல் 110 செலவிடை யழுங்கல் 185 செறிவு நிறைவும் 209 தந்தையும் தன்னையும் 137 தம்முறு விழுமம் 235 தலைவரு விழுமம் 39 தற்புகழ் கிளவி 180 தன்வயிற் கரத்தலு 205 தன்னு மவனும் 36 தன்னுறு வேட்கை 118 தாய்க்கு முரித்தால் 198 தாய்க்கும் வரையார் 116 தாயத்தி னடையா 221 தாய்போற் கழறி 173 தாயறி வுறுதல் 138 தாவி னல்லிசை 91 தாவில் கொள்கை 74 தானே சேறலும் 27 தானையானை 72 திணைமயங் குறுதலும் 12 தும்பை தானே 69 துன்புறு பொழுதினும் 184 தெய்வம் உணாவே 18 தொல்லவை யுரைத்தல் 168 தோழி தாயே 193 தோழி தானே 125 தோழியின் முடியும் 121 தோழியுள் ளுறுத்த 149 தேரும் யானையும் 212 நட்பி னடக்கை 200 நடுவுநிலைத் திணையே 9 நாடக வழக்கினும் 53 நாட்ட மிரண்டும் 96 நாற்றமுந் தோற்றமும் 114 நிகழ்தகை மருங்கின் 228 நிகழ்ந்தது கூறி 44 நிகழ்ந்தது நினைத்தற்கு 43 நிலம்பெயர்ந்து 169 நோயு மின்பமும் 196 பகற்புணர் களனே 132 படையியங் கரவம் 58 பண்பிற் பெயர்ப்பினும் 103 பரத்தமை மறுத்தல் 158 பரத்தை வாயில் 224 பன்னூறு வகையினும் 123 பனியெதிர் பருவமும் 7 பாங்க னிமித்தம் 104 பாங்கருஞ் சிறப்பின் 78 பாடாண் பகுதி 80 பால்கெழு கிளவி 199 பின்பனி தானும் 10 பின்முறை யாக்கிய 172 புணர்தல் பிரிதல் 14 புணர்ந்துடன் போகிய 148 புலத்தலு மூடலும் 157 புல்லுதன் மயக்கும் 151 புறத்திணை மருங்கின் 55 புறத்தோ ராங்கண் 176 பூப்பின் புறப்பாடு 187 பெயரும் வினையும் என்று 20 பொய்யும் வழுவும் 145 பொருள்வயிற் பிரிதலும் 33 பொருளென மொழிதலும் 214 பொழுது தலைவைத்த 236 பொழுது மாறு முட்கு 40 பொழுது மாறுங் 210 பெருமையும் உரனும் 98 பெறற்கரும் பெரும் பொருள் 150 மக்க ணுதலிய 54 மங்கல மொழியும் 244 மரபுநிலை திரியா 45 மறங்கடைக் கூட்டிய 59 மறைந்த வொழுக்கத்து 135 மறைந்தவற் காண்டல் 111 மன்னர் பாங்கின் 30 மனைவி தலைத்தாள் 165 மனைவி முன்னர் 166 மனைவி யுயர்வும் 227 மாயோன் மேய 5 மாற்றருங் கூற்றம் 79 மிக்க பொருளினுள் 219 முதல்கரு வுரி 3 முதலொடு புணர்ந்த 106 முதலெனப் படுவ தாயிரு 17 முதலெனப் படுவது 4 முந்நாள ல்லது 122 முந்நீர் வழக்கம் 34 முயற்சிக் காலத்து 129 முழுமுத லரணம் 65 முறைப்பெயர் 220 முன்னிலை யாக்கல் 101 முன்னிலைப் புறமொழி 167 முன்னைய நான்கும் 52 முன்னைய மூன்றுங் 105 மெய்தொட்டுப் பயிறல் 102 மெய்ப்பெயர் மருங்கின் 87 மொழியெதிர் மொழிதல் 182 மேலோர் முறைமை 29 மேலோர் மூவர்க்கும் 144 மேவிய சிறப்பின் 28 மைந்து பொருளாக 70 யாறுங் குளனும் 191 வஞ்சி தானே 61 வண்டே யிழையே 95 வண்ணம் பசந்து 202 வருத்த மிகுதி 226 வரைவிடை வைத்த 112 வழக்கொடு சிவணிய 86 வழக்கொடு சிவணிய 86 வழங்கியன் மருங்கின் 82 வாகை தானே 73 வாயிற் கிளவி 241 வினைவயிற் பிரிந்தோன் 194 வெளிப்பட வரைதல் 140 வெளிப்படை தானே 141 வெறியறி சிறப்பின் 60 வேட்கை மறுத்து 211 வேட்கை யொருதலை 100 வேண்டிய கல்வி 188 வேந்துவிடு முனைஞர் 57 வேந்துவினை யியற்கை 32 வேந்துறு தொழிலே 189 வைகுறு விடியல் 8 அரும்பத (அருஞ்சொல்) விளக்கம் முதலியன (நூற்பா எண் - பக்க எண்) அ அகத்திணை - அகத்தே நிகழும் இன்பமாகிய ஒழுக்கம் 1 அகம் - மனம் 1 அகடு - வயிறு 146 அகநாடு - மருதம் 65 அகல் - விளக்குத்தகழி அகலிடம் - பூமி 96 அகற்சி - துறவு 76 அகில் - ஒரு மரம் 140 அகைதல் - கப்புவிடல் 112 அசா - வருத்தம் 115 அசைதல் - இளைத்தல் 147 அஞ்ஞை - தாய் 36 அஞர் - துன்பம் 15,120 அடகு - இலை 90 அடங்காதார் - பகைவர் 13 அடர் - தகடு 146 அடர்தல் - வருத்தல் 50 அடுக்கம் - மலைப்பக்கம் 91 அடும்பு - ஒரு கொடி 111 அடுமரம் - வில் 92 அடை - இலை 19 அண்கணாளன் - கண்ணுக்கு முன்வருவோன் ) 114 அணங்கு - தெய்வம் 8 அணங்கல் - வருத்தம் 114 அணல் - தாடி 50 அலைதாடி, கதுப்பு அணவரல் - தலையை மேலே உயர்த்தல் 102 அண்ணாந்து - தலைநிமிர்ந்து 114 அத்தம் - அருவழி 60,134 அதம் - கொலை 92 அதர் - வழி 114 அதரிதிரித்தல் - எருதுகளை வளைத்து நெற்போரை மிதிப்பித்தல் (சூடுமிதித்தல்) 76 அதவம் - அத்தி 102 அதள் – மிருகத்தோல் 60 அதிகமான் - கடையெழு வள்ளளிலொருவன், தகடூரி லிருந்து அரசு செய்தவன் 63 அதிர்ப்பு - நடுக்கம் 92 அதிரல் - புனலிக்கொடி 41 அந்தி - செவ்வானம் 100 அம்பி - தோணி 114 அம்பு அணை - அம்பாலாகிய சயனம், அப்பு - விகாரம் 79 அம்புலி - திங்கள் (சந்திரன்) 89 அமர் - போர் 60 அமலை - நெருக்கம் - ஆரவாரம் 114,142 அமளி - படுக்கை 112 அமை - மூங்கில் 112 அயம் - நீர் 113 அயிரை - ஒருவகை மீன் 80 - ஒரு மலை 89 அயிற்கதவம் - இரும்புக்கதவு 87 அரக்கு - இங்குலிகம் (சாதிலிங்கம்) அரசு நுகம் - அரசுபாரம் 60 அரண் - கோட்டை 41 - பாதுகாவலான இடம் 56 அரந்தை - துன்பம் 79 அரவம் - ஒலி 58,63,107 அரிசில் கிழார் - கடைச்சங்கப் புலவருளொருவர் 67 அரில் - தூறு, செடி, 91 அரிவை - பெண் அருகல் - சுருங்கல்; குறைதல் 147 அருப்பம் - அரண் 605 அருமை - இன்மை 80 அல்கல் - தங்கல் 45 - இரா அல்லகுறி - குறியல்லாத குறி அலங்கல் - பூமாலை அலவன் - ஞெண்டு 12 அவல் - பள்ளம் 146 அவிதல் - தணிதல் அவை - திரள் (கூட்டம்) அழல் - அங்காரன் (செவ்வாய்) 75 அழற்குட்டம் - கார்த்திகைநாள் அழுக்காறு - பொறாமை 247 அழுங்கல் - வருந்தல் 112 அழுந்து - ஆழம் 39 அழுவம் - காடு; - பரப்பு அளி - அன்பு 42 அற்சிரம் - முன்பனிக்காலம் 12 அற்றம் - சோர்வு அறுகாற்பறவை - வண்டு 115 அறுதி - முடிவு 72 அறுவை - புடைவை 36,111 அறை - பாறை 891 ஆ ஆகம் - மார்பு ஆகுளி - சிறுபறை 91 ஆசாரம் - ஒழுக்கம் 114 ஆசு - பற்றுக்கோடு 147 ஆஞ்சி - (அஞ்சி), அஞ்சுதலுடையது 79 ஆட்டனத்தி - ஆதிமந்திகணவன் 54 ஆடாவடகு - (அடாவட்கு) விளையாட்டு 103 ஆடு - மேடம் 91 ஆதிமந்தி -கரிகாற்சோழன் மகள் 54 ஆநியம் - நாள் 90 ஆம் - நீர் ஆம்பல் - ஒரெண் ஆம்பி - காளான் 91 ஓய் - ஒரு வள்ளல் - தாய் 90,242 ஆய்ச்சியர் - இடைச்சியர் 53 அய்தல் - உள்ளதன் நுணுக்கம் 58 ஆயம் - பசுக்கூட்டம் 58 - ஆதாயம் ஆயர் - இடையர் 53 ஆர் - ஆத்தி 60 ஆர்தல் - உண்ணல் ஆர்பதம் - உணவு 111 ஆரணம் - மறை (வேதம்) 26 ஆரல் - ஒருவகைமீன் ஆவநாழிகை - அம்புக்கூடு 79 ஆவி - ஒருவள்ளல் 44 ஆவித்தல் - கொட்டாவிக் கொள்ளல் 114 ஆழி - கரை 64 -கூடற்கழி 111 ஆழியான் - திருமால் 42,60 ஆள்வினை - முயற்சி 90 ஆளி - சிங்கம் ஆன்றோர் - கல்வியொழுக் கங்களானிறைந்தோர் 68 ஆனாது - அமையாது; இடைவிடாது 39 இ இகுத்தல் - அடித்தல் 90 இஞ்சி - மதில் 36 இட்டுப்பிரிவு - அணிமையிற்பிரிதல்(ஒருவழித்தணத்தல்) 111 இடங்கர் - முதலை 65 இடத்தல் - கிளப்பல் 114 இடுகல் - நுணுகல் 102 இடும்பை - துன்பம் 42 இண்டு - ஒருவகைக்கொடி 40 இதண் - பரண் 114 இமைத்தல் - ஒளிவிடல் 102,114 இயங்குதிணை - இயங்குஞ்சாதி (இயங்குதல் - சஞ்சரித்தல்) 1 இயம் - வாச்சியம் 1 இயலுதல் - நடத்தல் 102 இரங்காழ் - இரவமரத்தின் வித்து 72 இரலை - கலைமான் 12,60 இரவம் - இரவமரம் 79 இருக்கை - ஆசனம் 75 இரும் - இருமல் 79 இருவி - கதிர்முறித்ததாள் 111 இல்லம் - தேற்றாமரம் 3 இல்லோர் - வறியோர் 41 இலக்கம் - குறி 60 இவுளி - குதிரை 67 இழிசினன் - இழிந்தம்மகன் 63 இழுது - வெண்ணெய் 133 இழைத்தல் - செய்தல் 147 இளிவரவு - இழிவு; இகழ்ச்சி 60 இறத்தல் - கடத்தல் 13 இறா - ஓருமீன் 133 இறும்பு 1 சிறுகாடு 6,147 இறும்பூது - அதிசயம் 60 இறை - முன்கை 48 -தங்குமிடம் 58 -அரசன் 76 - சிறை 150 இறைகூர்தல் - தங்கியிருத்தல் 79 இறுவரை - தாழ்வரை = மலைப்பக்கம் 111 இன்னாங்கு - துன்பம் 91 ஈ ஈங்கை - ஒருவகைக்கொடி 40 ஈமம் - பிணப்படுக்கை 79 ஈமவிளக்கு - பிணஞ்சுடும் விறகின் அழலாகிய விளக்கு 79 ஈரம் - அன்பு 91 ஈருயிர்ப்பிணவு - சூற்பிணவு 51 ஈனாவேண்மாள் - மகப்பெறாத வேளாளர் குலத்துப் பெண் 76 உ உக்கம் - தலை 51 உகளுதல் - துள்ளி விளையாடல் உகிர் - நகம் 41 உஞற்றல் - முயலல் 12 உட்கல் - அஞ்சல் 12 உட்கு - அச்சம் 40 உடலல் - மாறுபடல் 114 உடன்று - பகைத்து 60 உடு - நாணைக்கொள்ளுமிடம் உணங்கல் - உலர்தல் 107 உணர்த்தல் - தெளிவித்தல் 146 உதண் - மொட்டம்பு 114 உந்தல் - தள்ளல் 114 உம்பர்மீன் - விண்மீன் 58 உம்மை - மறுமை 76 உமணர் - உப்பமைப்போர் 113 உணவல் - வருந்தல் 67 உரறல் - ஒலித்தல் 63 உரன் - அறிவு 43 உரி - தோல் 60 உருப்பு - வெப்பம் 13 - கானல் 147 உரும் - இடி 43 உருமு - இடி 68 உரைத்த - தேய்த்த 67 உலத்தல் - இறத்தல் 60 - தணிதல் 59,111 உலவை - மரக்கொம்பு 39 உவல் - சருகு 44 உவலை - தழை 42 உழத்தல் - வருந்தல் 104 உழிஞ்சில் - வாகை 147 உழிஞை - கொற்றான் செடி 90 உழுத்ததர் - உழுத்தஞ் சக்கை 72 உழுவை - புலி 15 உழை - மான் 58,146 உள்ளல் - நினைத்தல் 91 உளைத்தல் - வெறுத்தல் 51 - ஒருவகைஒலி 58 உறந்தை - உறையூர் 114 உறழ்தல் - மாறுபடல் 238 உறை -மழை 102 உறைத்தல் - துளித்தல் 72 ஊ ஊகம் - ஒருவகைப் புல் 60 ஊசி - வடதிசை 91 ஊதியம் - பயன் 41 ஊதை - காற்று 102 ஊர்தல் - செல்லல் 63,75 - பரத்தல் 75 ஊர்தி - மெல்லிய நடை 67 எ எஃகம் - வேல் 32,79 எக்கர் - மணன் மேடு 114 எண்கு - கரடி 15 எய் - முட்பன்றி 71 எய்த்தல் - இளைத்தல் 111 எய்யாமை - அறியாமை 115 எயில் - அரண் 63 எரி - நெருப்பு (அக்கிநி) 60 எருக்கி - வெட்டி 61 - வருத்தி 146 எருத்து - பிடர் 42 எருவை - ஒருவகைக் கழுகு எல் - விளக்கம் 63 - இரவு 63 - பகல் 102 எல்ல - எல - ஏடி 111 எல்லே - என்னே 115 எல்லி - இரவு 43,67 எலுவன் - நண்பன் = தோழன் 114 எவ்வி - ஒரு வள்ளல் 55 எழில் - மிகு வளர்ச்சி (அழகுமாம்) 247 எழிலி - மேகம் 41 எழினி - ஒரு வள்ளல் 91 எழு - கணைய மரம் 68 எழுவுஞ்சீப்பு எழுப்பப்படும் சீப்பு (தாழ்) 65 எள்ளல் - இகழ்தல் 111 எற்றம் - நினைவு (ஏற்றம் எனவும் பாடம்) 111 எற்பாடு - நடுப்பகலின் பின்பத்து நாழிகைவரையுள்ள காலம் 8 எறிதல் - கொல்லல் 60 - அடித்தல் 72 என்றூழ் - வெயில் 43 என்னை - எனது இறைவன் ஏ ஏ - அம்பு 102 - பெற்று பெருப்பம்) ஏது - தீங்கு (குற்றம்) 102 ஏதீடு - காரணமிட்டுரைத்தல் 207 ஏமம் - இன்பம் 42 - காவல் 50 ஏமாப்பு - இறுமாப்பு 114 ஏமுறல் - இன்பமுறல் 147 ஏர் - எழுச்சி; வளர்ச்சி ; அழகுமாம் 247 ஏழகத்தார் - ஆட்டுக்கடா 60 ஏழில் - ஒருமலை 107 ஏழை - அறியாமைக்குணம் 111 ஏற்றம் - நீரிறைத்தற்குரியது (ஏத்தம் சிலப்பதிகாரம்) 89 ஏற்றி - நினைந்து (எற்றி எனவும் பாடம்) 114 ஏறு - எருது 53 - கதவுக்கிடு மொரு தடை போலும் 68 ஏனம் - பன்றி 114 ஏனல் - தினை 46 ஐ ஐ - வியப்பு 41 ஐயவி - சிறுகடுகு 67 ஐவனம் - மலை நெல் 102,114 ஒ ஒக்கல் - சுற்றம் 91 ஒசிதல் - முரிதல் 111 ஓய்தல் - கொண்டுசெலுத்தல் 60 ஒருதலை - நிச்சயம், உறுதி 100 ஒருவுதல் - நீங்குதல் 100 ஒல்கல் - தளர்தல் 102 ஒல்கா நிலைமை - சுருங்காத நிலைமை; வேறுபாடான நிலையுமாம் 75 ஒல்வது - இயன்றது 90 ஒழித்தது - விலக்கியது 146 ஒழிதல் - நீங்கல்; வீழ்தல் 147 ஒழுகை - சகடம் (வண்டி) 114 ஒற்கம் - வறுமைக்காலம் 72 ஒற்றி - அறிந்து (மறைந்து நின்றறிந்து) 114 ஒன்றார் - பகைவர் 68 ஒன்னார் - பகைவர் 63 ஓ ஓத்து - மறை (வேதம்) 31 ஓதம் - நீர்ப்பெருக்கு; வெள்ளம் 133 ஓப்புதல் - துரத்தல் 80 ஓம் -(ஓவும்) ஒழியும் ஓம்பல் - பாதுகாத்தல் 45 ஒப்புமதி - பாதுகாப்பாய்; மதி - முன்னிலையசை 60 ஓமை - மாமரம் ஓரி - ஆண்மயிர் 107 - மயிலின் தலைக்கொண்டை (சூட்டு ) ஓரை - மகளிர் விளையாட்டு 39 - இராசி 68,142 க கங்கை சிறுவன் - வீடுமன் 72 கஞற்றல் - நெருங்குதல் 8 கட்டளை - உரைகல் 43 கட்டி - சேரன் சேனாதிபதி 113 - வெல்லக்கட்டி 146 கட்டில் - அரசுகட்டில் (ஆசனம்) 76 கடம் - காடு 60 கடவல் - செலுத்தல் 114 கடிநாள் - மணநாள் 114 கடிப்பு - குறுந்தடி 90 கடிமரம் - காவன்மரம் 93 கடு - கோபம்; வேகம் 72 கடுஞ்சூல் - முதற்கருப்பம் 138 கடும்பு - சுற்றம் 146 கடை- வாயில் 58 - கோபுரவாயில் 68 கண்சுடுதல் - கோபித்தல் 147 கண்டல் - தழை 114 கண்ணகி - பேகன் மனைவி 90 கண்ணல் - கருதல் கண்ணோட்டம் - இரக்கம் 91 கண்ணி - நெற்றிமாலை 111 கண்ணுறை - மேலீடு 90 கண்படை- துயில் ( நித்திரை) 90 கணி - சோதிடன் 83 கணிக்காரிகை - சோதிடஞ் சொல்லும் பெண் 60 கணிச்சி - மழு 60 கணிச்சியோன் - சிவன் 13 கணை - அம்பு 76 கதம் - கோபம் 41 கதழ்தல் - விரைதல் 58,147 கதிரோன் - செம்மல் - கன்னன் 72 கதிர்த்தல் - விளக்கமுறல் 115 - தோற்றமுறல் கதுப்பு - கூந்தல் 8,111 கதுவாய் - வடு (தழும்பு) 79 கந்தழி - தத்துவங் கடந்த அருவப்பொருள் 88 கந்து - கட்டுத்தறி 76 கம்பம் - நடுக்கம் 60 கம்புள் - கோழிச்சாதி 12 - நீர்வாழ் பறவையுளொன்று 60 கயந்தலை - யானைக்கன்று 147 கயம் - குளம் 114 கயமாகியகுளம் - புனர்பூசநாள் 191 கயிறுரீஇவிடல் - கயிறுகழற்றி விடல் (இல்லின்புறம் போகவிடல்) 102 கரணம் - சடங்கு (கிரியை) 142 கரத்தல் - மறைத்தல் 60 கரிகால் - கரிகாற்சோழன் 26 கருங்கூத்து -தண்ணிய நாடகம் (படையாளர் தம்முறு தொழிலாய் ஆடுவது) கருத்துப்பொருள் - கருதலள வையான றியப்படும்பொருள் 1 கருப்பை - காரெலி 60 கருமம் - செய்யத்தக்கது (காரியம்) 147 கரைதல் - சொல்லல் 147 கலசயோனி - அகத்தியமுனி 75 கலம் - பாண்டம் 72 கலாவல் - கலத்தல் 113 கலி - ஒலி 60 கலிங்கம் - ஆடை 24,147 கலிவரலூழி - கலியுகம் 76 கலுழ்தல் - கலங்கல் 36 கலையேறு - ஆண்மான் கலையேற்றூர் தியாள் - துர்க்கை கவந்தம் - உடற்குறைபோன்ற ஒருகளங்கம் போலும் 91 கவடி - வெள்வரகு கவறு - சூதாடுகருவி 75 கவலை - கவர்வழி 58,76 - ஒருகொடி கவான் - பக்கமலை கவிரம் - ஒருமலை கவின் - அழகு 12 கவள் - கதுப்பு 114 கழகம் - சூது. 75 கழறல் - இடித்துக்கூறல் 102 கழு - பால்கறக்கவிடாத ஆக்களின் கழுத்திலிடுவது 58 கழுது - பேய் 75 - பரண் 131 கழுமலம் - சீகாழிப்பதி 76 கழுவுதல் - அழுக்குப்போக்கல் 24 கழை - மூங்கில் 39,46,147 - வேய்ங்குழல் கள்வன் - ஞெண்டு களி - களிப்பு 51 களைஞர் - நீக்குவோர் 3 கறங்கல் - ஒலித்தல் 146 கறி - மிளகு 114 கறை - உரல் கனகம் - பொன் கவல் - நெருப்பு கலை - செறிவு கா காஞ்சி - ஒருபண் 79 காட்சிப்பொருள் - காட்சியளவை யாலுணரப்படும்பொருள் 1 காட்டு - செத்தை (குப்பை) 6 காதலன் - நாயகன் 54 காப்பு - காவல் 60 காம்பு - மூங்கில் 114 காமம் - பொருட்பற்று 76 காமுறல் - விரும்பல் 92 காயம் - ஆகாயம் 91 காரி - ஒருவள்ளல் 36 - கரிய எருத்து 53 - ஒரு குதிரை 90 காரிகை - அழகு 114 கால் - காற்று 41 - தண்டு 147 கால்கழி கட்டில் - பாடை 63 கால்கோள் - தொடங்கல் 60 காலக்கடவுள் - ஊழித்தெய்வம் 79 காலை - ஞாயிறு 75 காழ் - கொட்டை 60,79 - குற்றுக்கோல் 111 காழகம் - நீல ஆடை 146 காளாம்பி - காளான் 76 காளை - ஆடவன் 76 கானல் - கடற்கரைச்சோலை 5 -கழி 111 கி கிடுகு - ஒருவகைப்பரிசை 67 கிண்கிணி - சதங்கை 146 கிணைவன் - துடிகொட்டுவோன் 63 கிழவன் - உரியோன் (தலைவன்) 142 கிழத்தி - உரியோள் (தலைவி) 142 கிளைத்தல் - தோண்டல் 146 கின்னரம் - ஒரு பறவை 75 கு குஞ்சரம் - யானை 67 குட்டம் - ஆழம் 79 குடங்கை - உள்ளங்கை 40 குடச்சூல் - சூற்குடம் - குல்உற்றது போலுங்குடம் குடம் என்றது - பருத்திருக்கும் புடையை 103 குடபுல உறுப்பு - சந்தனக்கட்டை 114 குடிஞை - கோட்டான் (- பேராந்தை ) 44 குடுமி - தலை 36 குடை- பிழா. 146 குண்டு - ஆழம் 67 குதிரை - ஒருமலை 90 குமரன் - வேலன் = வெறியாட்டாளன் 90 குமரி - அழிவின்மை 72 - ஓராறு. 90 குய் - தாளிப்பு 90 குரம்பை - சிறுகுடில் 36 குரல் - கதிர் 102 குராஅல் - கூகைப்பெடை 103 குரீஇ - குருவி பறவை 16 குருதி - இரத்தம் 24 குருந்து - ஒருமரம் 60 குரும்பி - புற்றாஞ்சோறு 111 குவவு - குன்று 111 குழாஅல் - கூடுதல் 80 குழுமல் - முழங்கல் 114 குளிர் - ஒருவகைக்கிளிகடிகருவி 102 குளிறுதல் - ஒலித்தல் 58 குறங்கு - தொடை 79 குறடு - வண்டியின் குடம் 72 - சக்கரத்தின் ஒருவகை உறுப்பு 78 குறி - குறிக்கப்படும் இடம் குறிஞ்சி - ஒருபண் 114 குறித்தல் - நினைத்தல் 114 குறிபெயர்த்திடுதல் - முன் குறித்தவிடத்தை நீக்கி வேறு குறியிடங் கூறல் 111 குறியாள்கூறல் - கருதாதவள் போலப் பிறிதுகூறல் 114 குறுதல் - கொய்தல் 102 குறும்பு - சிற்றரண் 36 - சிறுகுன்று 102 குறும்பூழ் - காடைப்பறவை 60 குறுமை - சிறுமை 67 குறை - இன்றியமையாதகாரியம் 102 கூ கூட்டுணல் - கவர்தல் 60 கூடல் - மதுரைப்பதி 87 கூடார் - பகைவர் 68 கூதாளம் - கூதாளிக்கொடி 113 கூம்புதல் - ஒடுங்குதல் 147 கூரல் - குளிச்சியால் நடுங்கல் 15 கூலம் - பலசரக்கு 30 கூவல் - கிணறு 9 கூவிளை - வில்வமரம் 90 கூழை - கூந்தல் 114 கூளி - பேய் 91 கூற்றம் - இயமன் 41 கூற்று - சங்காரஞ் செய்வோன் 60 (அரன்) - கூறுபடுத்தப்படுவது (பங்கு ) 79 கூன் - வளைவு 133 கெ கெடுதல் - தப்புதல்; இழத்தல் 102 கெடுநர் - அகப்படாமற்றப்புவா 37 கெளிறு - ஒருமீன் 111 கே கேடகம் - ஒருவகைப் பரிசை 67 கேண்மை - நட்பு 90 கேழல் - பன்றி 114 கேள் - உறவினர் 28 கேள்வி - வேதம் 75 கேளல்கேளீர் - அயலார் 28 கை கைக்கிளை - ஒருமருங்குபற்றிய கேண்மை 1 கைதூவாள் - கையொழியாள் 58 கையறல் - செயலறல் 60 கையுறை - கையிலுறுவிப்பது (காணிக்கை) 102 கொ கொங்கு - பூந்தாது 101 கொட்கும் - சுழலும் 24,133 கொட்டல் - அடித்தல் 58 கொடி - ஒழுங்கு 58 - நீட்சி 88197 கொடு - சகடம் (உரோகணி) கொடுமுடி - சிகரம் 68 கொடுவாயிரும்பு - தூண்டில் 150 கொண்டல் - கீழ்காற்று கொண்டி - கொள்ளை 63 கொண்டுதலைக்கழிதல் - உடன்போக்கு 146 கொண்டுநிலை - ஒருவர் கூற்றினை ஒருவர்கொண்டு கூறல் 146 கொண்டு - மேகம் 26,242 கொம்மை - பெருமை 146 கொல்லி - ஒருமலை 90 கொழுதல் - அலர்த்தல் 36,111 கொள் - குடைவேல் 91 கொள்ளைசாற்றல் - விலைகூறல் 114 கொற்கை - ஒருநகர் 102 கோ கோசர் - ஒருவகை வீரர் 114 கோட்டம் - கோயில் - வளைவு 72 கோடல் - காந்தள் 12 கோடியர் - கூத்தர் 68 கோடு - சங்கு 112 - மேடு 146 - மயிர்முடி 147 கோத்திரம் - மரபு 92 கோதை - சேரன் 99 கோல் - துலாக்கோல் 76 - திரட்சி 107 கோவல் - ஓரூர் கோவலர் - இடையர் 12 கோவா ஆரம் - சந்தனமரம் 114 கோழியான் - கோழிக்கொடி யுடையவன் (முருகன்) 60 கோள் - கிரகம் 83 கௌ கௌவை - அலர், பழிமொழி 39 - ஆரவாரம் 79 ச சகடம் - பண்டி 177 சங்கு - ஒருவகைப்படை 72 சடங்கு - கிரியை 142 சதுக்கம் - நாற்சந்தி 103 சமம் - போர் 67 - நீதி 78 சா சாக்காடு - இறப்பு 13 சாகாடு - பண்டி 60 சாத்து - வணிகர்திரள் 60 சாம்பல் - வாடிய பழம்பூ 147 சாயல் - இளைப்பு, 57 சார்பு - பற்றுக்கோடு 88 சாலி - நெல் 86 சாறு - விழா 147 சான்றோர் - போர்வீரர் 63 சி சிகழிகை - மயிர்முடி, 112 சிதரல் - சிதறல் 41 சிதவல் - பழந்துணி; துகில் 114 சிம்புளித்தல் - கண்மூடல்; கண்கூசலுமாம் 81 சிரந்தை - துடி (உடுக்கை ) 81 சிலை - வில் 91 சிலைக்கும் - ஒலிக்கும் 24 சிலைப்பு - ஒலி 72 சிவந்து - கோபித்து 114 சிற்றாளி - சிங்கக்குட்டி 102 சிறக்கணித்தல் - சிறங்கணித்தல் (கண்ணைச்சுருக்கிப்பார்த்தல்) 72 சிறப்பின்று - சிறப்பினது 71 சிறுபதம் - தண்ணிர் 79 சிறுபுறம் - பிடர் 114 சிறை - அணை 42 - மதில் 57,114 சிறைத்தல் - தடுத்தல் 147 சின்னப்பூ - ஒருவகைப்பிரபந்தம் 89 சீ சீத்தல் - பெருக்குதல் (குப்பை கூட்டல்) 5 சீப்பு - கதவுக்குவலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ இடுமரம் 67 சு சுங்கம் - கடற்றீர்வை 75 சுட்டுதல் - குறித்தல் 102 சுடர் - விளக்கு 39 சுதை - சுண்ணச்சாந்து 91 சுணங்கு - தேமல் 22 சுரம் - அருவழி 36 சுரை - முலைமடி 58 - மூங்கிற்குழாய் 87 சுரும்பு! - வண்டு 147 சுவல் - பிடர் 40 - மேட்டுநிலம் 102 - பிடரி மயிர் 147 கள்ளி - நறவு 207 சூ சூடாவாகை - ஓரூர் 86 சூடு - நேற்போர் 86 சூதர் - நின்றேத்துவோர் 91 சூதாரமகளிர் - அஞ்சப்படுந் தெய்வமகளிர் 102 சூழ்ச்சி - ஆராய்ச்சி 102 சூழ்தல் - ஆராய்தல் 126 சூள் - சத்தியம் 42 செ செத்தல் - கருதல் 102 செந்துறை - இசைமார்க்கம் 82 செம்பாகம் - சமபாகம் 97 செம்பாலை - ஒருபாண் செம்பியன் - சோழன் 114 செம்மல் - பழம்பூ 41 செயலை - அசோகு 114 செயிர்த்தல் - குற்றஞ்செய்தல் 91 செரு - போர் 68 செருப்பு - ஒருமலை 66 செல்லல் - துன்பம் 111 செவ்வி - சமயம் 102 செற்றவர் - பகைத்தவர் 68 சென்னி - சோழன் 75 சே சே - எருது (இடபம்) 36 சேக்குதல் - தங்குதல் 60 சேக்கை - கட்டில் - 90 சேட்படை - தூரப்படுத்தல் 92 சேணோன் - மர உச்சியில் கட்டிய பரணிலிருப்பவன் 111 சேதா - கபிலைப்பசு 90 சேதிகை - ஒருவகை ஓவியக் கோலம் 147 சொ சொல் - தருக்கம் 60 சொலிய - நீங்க 76 ஞ ஞமலி - நாய் 79 ஞமன்கோல் - துலாக்கோல் 90 ஞா ஞாண் - நாண் 63 ஞாய் - நின்றாய் 191 ஞாயர் - நின்றாய்மார் 147 ஞாளி - நாய் 107 ஞான்று - பொழுது 107 ஞெ ஞெமல் - சருகு 146 ஞெமிடல் - கயக்கித் தூய்மை செய்தல் 114 ஞெமுங்க - அழுந்த 111 ஞெமை - ஒருமரம் 43 ஞெள்ளல் - வீதி 91 த தகர் - ஆட்டுக்கடா 68 தகரம் - ஒருவகை மயிர்ச்சாந்து 3 - மணமுடைய மரச்சாதி யிலொன்று 114 தகுதி - பொறையுடைமை 76 தஞ்சம் - எளிது 79 தட்டல் - தடுத்தல் 63 தட்டை - கிளிகடிகருவியு ளொன்று 111 தட - வளைவு 111 தடி - தசை 79 தண்ணடை - மருதநிலத்தூர் 60 தண்ணுமை - மிருதங்கம் (மத்தளம்) 36 தண்டம் - சேனை 57 தந்திரவுத்தி - நூற்புணர்ப்பு 81 தப்பல் - நீங்கல் 76 - தவறல் 111 தபுதல் - இறத்தல் 79 தபுதாரநிலை - மனையாளை இழந்த நிலை 1 தம்மோன் - தமது தலைவன் 111 தமனியம் - பொன் 90 தயங்கல் + விளங்கல் 114 தலைப்பெயல் - கூடல் 79 தவலல் - மனமழிதல் 102 தழலை - கவண் 242 தழிஞ்சி - தழுவல் 63 தழை - பூவுந்தளிருங்கொண்டு தொடுத்த உடை 39 தளை - கட்டு 45 தன்னைமார் - தமையன்மார் 97 தா தாங்குதல் - தடுத்தல் 91 -அடக்கல் 111 தாபதநிலை - கணவனை யிழந்தவள் நிலை 1 தாயத்தார் - சுற்றத்தார் 142 தாயம் - உரிமைப் பொருள் 75 தார் - தூசிப்படை 60 - உபாயம் 75 - கழுத்துமாலை 111 தாரம் - பண்டம் 54 தாள் - முயற்சி 43 தி திண்டி - ஓரூர் 114 திணை - ஒழுக்கம் 1 திதலை - தேமல் 111 திமில் - சிறுதோணி 39 திமிரல் - அப்புதல் 41 திருவில் - இந்திரவில் 91 தில்லை - ஒருமரம் 114 தீ தீத்தீண்டுகை - வேங்கை து துஞ்சல் - துயிலல் 111 துடி - போர்ப்பறை 63 துப்பு - துவளம் 146 துமிதல் - அழிதல் 41 துய் - பஞ்சிற்றொடர்நுனி 146 துய்த்தல் - அநுபவித்தல் 41 துயல்வரல் - அசைதல் 147 துயிலெடை - துயிலெழுப்பல் 91 துரங்கம் - குதிரை 75 துரங்கவேள்வி - அசுவமேத யாகம் 75 துரு - செம்மறிக்குட்டி 36 துருத்தி - ஆற்றிடைக்குறை 43 துவர் - செந்நிறம் (சிவப்புநிறம்) 111 துறுகல் - உருண்டைக்கல் (பாறைக்கல் என்றல்நலம்) 111 துறை - பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகும் மார்க்கம் 56 துறைபோதல் - முடிவுபோக அறிதல் தூ தூக்கு - இசை 75 தூம்பு - ஒருவாச்சியம் 36 - மதகு 114 தெ தெரிதல் - ஆராய்தல் 111 தெருமரல் - சுழற்சி 107,137 தெளிர்த்தல் - ஒலித்தல் 45 தெறிப்பு - முற்ற 54 தெறுதல் - வருத்துதல் 115 தே தேஎம் - தேயம் 32 தேய்வை - சந்தனக்குழம்பு 76 தேய்வைவெண்காழ் - சந்தனக்கட்டை 76 தேனிறால் - தேன்கூடு 146 தொ தொடர் - சங்கிலி 72 தொடலை - பூமாலை 102 தொடி - பூண் 41 தொடை - அம்பு 36 தொண்டை - ஓரூர் 54 தொழு- ஆன்றொழுவம் 58 தோ தோப்பி - நெல்லில் வடித்த கள் 36 தோட்டி - கதவு பூட்டுங்கொளுக்கி (தோட்டிமுள்ளுமாம்) 68 - யானையையடக்குங்கருவி காவல் 89 தோடு - தொகுதி தோல் - காண்ணாடிதைத்த கிடுகு படை(பரிசையின் பேதம்) 67 தோற்றுவாய் - தொடக்கம் ந நகை - ஒளி 63, 147 நடலை - நடிப்பு 147 நடுவணது - பாலைத்திணை 1 நந்து - நத்தை 147 நந்துதல் - கெடுதல் 91 நயத்தல் - விரும்பதல் 114 நல்கூர்தல் - வறுமை 114 நலன் - இன்பம் 114 நனி - செறிவு 242 நவ்விப்பிணை - மான்பிணை (பெண்மான்) 91 நறவு - கள் 41 நறை - ஒருவகைக்கொடி 102 நன்னன் - ஒருகுறுநிலமன்னன் 9 நா நாகம் - பாம்பினுள் ஒருசாதி 68 நாகு - இளமை 114 நாஞ்சில் - கலப்பை 60 - ஒருமலை 67 நாஞ்சிற்கொடியோன் - பலதேவன் 60 நாட்காலை - விடியற்காலம் 90 நாட்டல் - நிறுத்தல் 60,96 - பிரதிட்டை செய்தல் 60 நாடகவழக்கு - புனைந்துரை வழக்கு நாம் - அச்சம் 75 நார் - மட்டை 111 நாள் - தினம் 1 - வைகறை 114 நாற்றுதல் - தூங்கக் கட்டுதல் 36 நி நிதி - திரவியம் 75 நிம்பிரி - பொறாமை 245 நியமம் - கோயில் நிரயம் - நரகம் 44 நிரை - ஆனிரை 58 நிலத்தல் - உயர்தல் 111 நிறம் - மார்பகம் 102 நிறை - மறை பிறரறியாமை ஒழுகல் 247 நீ நீ - நீத்தல்; பிரிதல் 114 நீகான் - மீகான் 9 (மரக்கல மோட்டி), நீர்நாடன் - சோழன் 60 நீரல்லீரம் - மூத்திரஈரம் 107 நீவல் - நீங்கல்; விடுத்தல் 107 நீறு - புழுதி 68 நு நுங்கல் - விழுங்கல் 112 நுசுப்பு - இடை 111 நுடங்கல் - அசைதல் 90 நுவ்வை - நுந்தங்கை 242 நூ நூழை - நுழையும் சிறுவாயில் 112 நெ நெடுந்தொகை - அகநானூறு 53 நெடுமொழி - வஞ்சினம் (சபதம்) 60 -புகழ் 114 நெருநல் - நேற்றைத்தினம் 114 நே நேமி - உருளை 41 நொ நொடுத்தல் - விற்றல் நொடை - விலை 44 நொண்டு - முகந்து 97 நொவ்வல் - துன்பம் 111 நொள்ளை - வண்டுச்சாதி 14 நோ நோன்றல் - பொறுத்தல் 67 நோன்றார் - போரை அஞ்சாது பார்ப்பவர் 72 நோனார் - போர்செய்தற்கு ஆற்றாதவர் 72 ப பக்குநிற்றல் - பிரிந்து நிற்றல் 83 பகடு - களிற்றியானை 72 பகர்தல் - விற்றல் 48 பகன்றை - கிலுகிலுப்பை 5,12 பகுதல் - பிளத்தல் 147 பகையில்நோய் - மருந்தில்லாத நோய் 210 பச்சை - தோல் 60,75 பசலை - பசப்புநிறம் 36 பட்டி - நெறியின் றியொழுகு பவன் 107 படப்பை - வீட்டுக்கொல்லை 42,90 படர் - துன்பம் 48,79 படலை - தழை 60 படாஅம் - ஆடை (வஸ்திரம்) 91 படாஅலியர் - போகாதொழிக 58 படி - பூமி 76 - தன்மை 114 படியோர் - பகைவர் 5,60 படிவம் - பிரதிமை 68 - விரதம் 75 படிறு - வஞ்சனை 146 படு - மடு 68 பண்ணை - விளையாட்டு 114 பணிதம் - ஒட்டப்பொருள் 114 பணிலம் - சங்கு 116 பனை - முரசு 41 - மூங்கில் 75 பணைத்தல் - பருத்தல் 114 பணையம் - ஈடு 60 பதம் - உணவு 8 - காலம் 107 பதணம் - மதிலிலுளுயர்ந்த மேடை 65 பதலை - ஒருவறை 91 பதி - ஊர் 40 பதிதல் - ஒடுங்குதல் (பதிவிருத்தல்) 58 பதுக்கை - கற்குவியல் 44 - திட்டை 68 பயம்பு - யானைப்படுகுழி 36 பயல் - சிறுவன் 67 பரதன் - இராமன் றம்பி 76 பரல் - பரற்கல் 43 பரவல் - வாழ்த்தல் 80 பராவல் - நேர்தல் 58 பரி - வேகம் (விரைவு) 72 பரிதல் - வருந்தல் 103 பரிதி - ஞாயிறு 60 பரியல் - வருந்தல் 42 பரிவேட்பு - சூழ்வு 86 பருதி - வட்டம் 75 பலகை -பரிசை 44 பழனவெதிர் - கரும்பு 12 பழங்கண் - துன்பம் 100 பழிச்சல் - புகழ்தல் 63 பழுக்காய் - பாக்கு பழையன் - ஒரு குறுநிலமன்னன் 39 பள்ளி - படுக்கை பற்றார் - பகைவர் 58 பறந்தலை - போர்க்களம் 26 பறம்பு - ஒருமலை 90 பறவாப்புள் - வாய்ப்புள் (சொல் ) நிமித்தம்) 58 பறாஅக்குருகி - கொல்லனுலை மூக்கு 112 பறித்தல் - பிடுங்கல் 102 பறை - சிறகு 102 பன்னல் - பருத்தி 79 பனித்தல் - நடுங்கல் 112 பனுவல் - நூல் 76 - பாட்டு 90 பா பாக்கம் - ஊர்ப்பக்கம் 58 - கடற்கரைப்பட்டினம் 111 பாகர் - ஆவின்கழுத்திலிடுவ தொன்றுபோலும் 58 பாசம் - கயிறு 91 பாசி - கீழ்த்திசை 91 பாடாண்டிணை - பாடப்படும் ஆண்மகனது ஒழுக்கம் 80 பாடி - பாசறை 61 பாடினி - விறலி 59 பாடு - பெருமை 114 - கூறு 114 பாணி - தூங்கலோசை 45 - தாளம் 75 பாணித்தல் - தாமதித்தல் 68 பாத்தல் - பகுத்தல் 58,97 பாத்தி - பகுதி 63 பாந்தட்படாஅர் - பாம்புச்செடி 114 பாம்புண்பறவை - கருடன் பார்த்தன் - அருச்சுனன் 76 பாரசவர் - பிராமணருக்குச் சூத்திரப்பெண்கள் வயிற்றிற் பிறந்தோர் பாரி - ஒரு குறுநிலமன்னன் பால் - ஊழ், இடம் 93 பாழி - வலி 72 பானல் - நெய்தல் 97 பி பிடி - குசை (கடிவாளம்) 147 பிண்டம் - கருப்பம் 147 பிணக்கு - மாறுபாடு பிணர் - சருச்சரை 114 பிணிமுகம் - முருகனுடை யானை; மயிலுமாம். 60 பிரப்பு - பிரப்பரிசி 111 பிழம்பு - உடம்பு 75 - வடிவு 247 பிழி - கள் 107 பிற்றைநிலை - தாழ்ந்து நிற்குநிலை 75 பிறக்கு - பின் பிறங்கடை - வழித்தோன்றல் 91 பிறங்கல் - விளங்கல் 60 பின்னிலை- (இரந்து) பின்னிற்றல் 128 பீ பீடம் - ஆசனம் 60 பீள் - சூல் (கருப்பம்) 114 பு புக்கில் - எஞ்ஞான்றுமிருப்ப தோரில் 79 புகர் - குற்றம் 114 புகலல் - விரும்பல் 114 புகல்வு - மனச்செருக்கு 207 புகா - உணவு 107 புகார் - காவிரிப்பூம்பட்டினம் 75 புட்டில் - சதங்கை 107 - கெச்சை 147 புடை- மாற்றார்புலம் 58 புணை - தெப்பம், தோணி 13 புத்தேணாடு - தேவருலகம் 146 புதல் - பற்றை 112 புதவு - வாயில் 60 புரவலர் - பாதுகாப்போர் 91 புரவி - குதிரை 107 புரவு - இறையிலி நிலம் 60 புரி - முறுக்கு 60 புரிசை - மதில் 61 புரை - ஒப்பு 247 - உயர்ச்சி 102 புல்லார் - பகைவர் 63 புல்லி - ஒருபகாரி 114 புல்வாய்க்கலை - கலைமான் 75 புலம் - வயல் 89 - இடம் - விடயம் 75 புலவல் - தனித்தல் 79 புலனெ வழக்கு - புலவராற்று வழக்கு (செய்யுள் வழக்கு) புழுகு - அம்பின் மொட்டு புழை - சிறுவாயில் - கொல்லைப்புறவாயில் 112 - துளை 146 புறங்காடு - சுடுகாடு 79 புறநிலை 114 புன்கண் - துன்பம் 39 புன்றலை - மெல்லியதலை 114 புனல்வாயில் - வாய்க்கால் 75 புனல்நாடு - சோழநாடு 86 புனறு - ஈன்றணிமை 76 பூ பூசல் - போர் 58 பூட்கை - மேற்கோள் 57 பூண்ஞாண்-- பூணூல் 75 பூவல் - செம்மண் 36,107 பூவாப்பூ - பொற்பூ 112 பூழ் - காடை 36,60 பெ பெட்டல் - விரும்பல் 91,114 பெண்ணை - பனை 40 பெயர் - பொருள் 75 பெயர்த்தல் - மீட்டல் 38,75 - நீக்குதல் 146 பெருந்திணை - பெரிதாகிய தினை (பொருந்தாக் காமம்) 1 பெரும்பிறிது - இறப்பு பே பேஎ - அச்சம் 79 - நுரை 114 பேதுறல் - மயங்கல் 102 பை பைஞ்சாய் - பசியதண்டாங் கோரை 102 பைஞ்ஞிலம் - மக்கட்பரப்பு 72 பைதல் - துன்பம் 79 பையுள் - துன்பம் பொ பொங்கர் - மரக்கிளை 147 பொத்தல் - மூட்டல் 60 பொதி - பொதியமலை 134 பொதும்பு - மரச்சோலை 107 பொதுமகளிர் - இடைச்சியர் 55 பொதுவர் - இடையர் 13 பொதுளல் - தழைத்தல் 39 பொருப்பு - மலை 54 பொருநர் - கூத்தர் 60 பொலம் - பொன் 147 பொலம்பூங்கா - கற்பகதரு 82 பொழில் - உலகு 81 பொளித்தல் - உரித்தல் 15 பொறி - இயந்திரம் 67 -புள்ளி 90 - ஊழ் 111 பொறித்தல் - எழுதல் 60 பொறை - பாரம் 79 பொறையன் - சேரன் 76 பொன்முடியார் - கடைச்சங்கப் புலவருளொருவர் 67 போ போக - அநுபவிக்கும் இன்பம் 92 போந்தை - பனை 60 போஒர் - ஓரூர் 39 சோர்வு - சூடு 14 போனகம் - உணவு 67 ம மகடுஉ - பெண்மகள் 35 மகரவாய் - ஒருவகைத்தலைக் கோலம் 112 மகன்றில் - நீர்வாழ் பறவையு லொன்று 101 மகுளி - ஒருவகை ஓசை 14 மஞ்ஞை - மயில் மடல் - பனைமடல் 35 - பூவிதழ் 114 மடி - சோர்வு 90 மடை - நீர்மடை 86 - மூட்டுவாய் 115 மண்ணல் - கழுவல் 60 - நீராடல் 107 மண்டை - கள்ளுண்ணும் 63 பாத்திரம் ஒருவகை மண்பாத்திரம் 114 மணி - நீலமணி 12 மதியம் - திங்கள் 41 மதியுடம்படுத்தல் - தலைவன் 127 தலைவி என்னுமிருவர் மதியினையும் தன் மதியோடு ஒருங்கு சேர்த்துணர்தல் மதுகை - வலி 147 மந்திப்பறழ் - குரங்குக்குட்டி 102 மரந்தை - ஒருநகர் மரபு - வரலாறு 45 மரல் - ஒருசெடி 45 மரவடி - மரக்கால் 72 மராஅம் - கடம்பு 15 மருங்குல் - பக்கம் 90 - இடை 141 மருவுதல் - கூடிப்பழகல் 58 மரை - ஒருவிலங்கு 45 மலைதல் - வெறியாடல் 115 மலையமாதவன் - அகத்தியன் 32 மலையம் - பொதியமலை 32 மலையன் - ஒருவள்ளல் 40 மழு - கோடரி 67 மழுங்கல் - ஒளிகுறைதல் மழுவாநெடியோன் - பரசு ராமன் 67 மள்ளன் - வீரன் 75 மறவர் - வீரர் 44 மறி - ஆடு 58 மறுகல் - சுழலல் 79 மறுகு - வீதி 42,60 மறுகுசிறை - வீதிகளின் பக்கம் 80 மறை - களவொழுக்கம் 124 மன்ற - தெளிவாக 102 மன்று - ஊர்ப்பொதுவிடம் 6,111 (அம்பலம்) - பசுத்தொழுவம் 58 மா மா - குதிரை மாகதர் - இருந்தேத்துவோர் மாணை - ஒருகொடி 113 மாந்தை - ஒருநகர் 150 மாயம் - வஞ்சம் 92 மாரன் - மன்மதன் 75 மாராயம் - சிறப்பு 63 மாரி - மேகம் 90 மாறும் - ஒழியும் 102 மி மிகுதி - மனச்செருக்கு 76 மிகை - எச்சம் (சேடம்) 67 மிடல் - வலி 51,91 மிடை- பரண் 114 மிதவை - கும்மாயம் (ஒருவகைச் சிற்றுண்டி) 142 மிலைதல் - குடல்; அணிதல் 51 மிளிர்த்தல் - கீழ்மேலாகமறித்தல் (ஊழுதுபுரட்டல்) 76 மிளை - காவற்காடு 67 மிறை - வளைவு 67 மீ மீக்கூறுபடுத்தல் - புகழ்ந்து கூறல் 74 மீட்டல் - மீளச்செய்தல்; விலக்கல் 72 மு முகவை - ஏற்றுக்கொள்ளும் பரிசில் 76 முச்சி - மயிர்முடி 147 முசிறி - ஓரூர் 63 முசு - குரங்கினுளொருசாதி 111 முட்டி - கைப்பொத்து 72 முட்டு - தடை 107 முடப்பனை- அநுடநாள் 91 முண்டகம் - முள்ளி, தாழையு மாம். 111 முதிரம் - ஒரு மலை 90 முதுக்குறைவு - பேரறிவு 114 முதுபாலை - பெரும்பிரிவு 79 முதை - பழங்கொல்லை 102 முதையல் - முதுமை 43 முந்திசினோர் - முன்னோர் 90 முந்நீர் - கடல் 91 முயங்கல் - புணர்தல், தழுவல் 97 முரம்பு - வன்னிலம் 41 - பரற்கற்கள் 146 முருகு - முருகன் 60 முல்லை - இருத்தல் ஒழுக்கம் 76 முழவு - முழா (ஒருவாச்சியம்) 107 முளரியோன் - பிரமன் 75 முளவுமா - முட்பன்றி 22 முளிதல் - காய்தல்; வற்றுதல் 43 - இறுகல் 53 முற்றல் - வளைத்தல் 134 முற்றில் - சுளகு 114 முறி - தளிர் 97 முன்பு - வலி 60 முன்னம் - குறிப்பு 126 முனைதல் - வெறுத்தல் 91 மூ மூதாய் - தம்பலப்பூச்சி 41 மூதில் - முதுகுடி 67 மூய் - மூடி 103 மூழ்த்து - மொய்த்து 63 மெ மெய் -உடம்பு 111 மெய்ப்பெயர் - இயற்பெயர் 87 மெய்ம்மறை - கவசம் (சட்டை) 68 மை மை - ஆடு 114 மைந்து - வலி 87 மொ மொக்குள் - குமிழி 72 மொசித்தல் - மொய்த்தல் 15 மொய்த்தல் - செறிதல் - 71 மோ மோசி - ஒரு புலவன் 90 யா யா - ஒருமரம் 114 யாப்பு - கட்டு 112 யாய் - என்றாய் 101 யானையங்குருகு - ஒருவகைப் பறவை 107 வ வங்கம் - தோணி 11 வசி - ஒளி 134 வஞ்சி - பகைமேற் சேறல் 61 - ஒரு நகரம் (கருவூர்) 114 வட்டம் - சந்தனக்கல் 114 வட்டு - உண்டை 43 வடமலை - மேரு 134 வடி - மாம்வடு 111 வடிம்பு - விளிம்பு 191 வண்ண ம் - நிறம் : அழகு 114 வண்டல் - மணல் விளையாட்டு; விளையாட்டுப் பாவையும்மாம் 37,111 வண்மை - கொடை 60 வணங்குதல் - வளைதல் 50 வணர்தல் - கடைகுழலல் 50 வதிதல் - தங்குதல் 112 வந்திகர் - மங்கலபாடகர் 91 வம்பு - கச்சு வயவு - வேட்கைநோய் 91 வயலை - ஒருகொடி 39 வயிர் - கொம்புவாச்சியம் 67 வயிரியர் - கூத்தர் 60 - பாணர் 80 வரி - தொய்யில் 111 வரிசை - தகுதி 91 வரித்தல் - கோலஞ் செய்தல் 114 வரியதள் - புலித்தோல் 111 வரைதல் - மணத்தல் - நீக்கல் 82 வல் - சூது 60 வல்சி - உணவு 22 வலத்தல் - சுற்றல் 111 - கட்டுதல் 114 வலவன் - பாகன் 114 வலார் - வளார் 60 வலித்தல் - நினைத்தல் 114 வலை - சாலகம் என்னுமணி விசேடம் 75 வழை - சுரபுன்னை 114 வள்பு - வார் 90 வள்ளை - உலக்கைப்பாட்டு 115 வளி - காற்று 43 வளிநிலை - பிராணாயாமம் 75 வளை - பொந்து, முழைஞ்சு 58 சங்கு 60 வா வாண்மடல் - வாளாகியமடல் மடல் - பனங்கருக்கு 76 வாதுவல் - கிழிப்பேன் 79 வாய் - உண்மை 101 வாய்ப்புள் - சொல் நிமித்தம் 58 வார்தல் - நிறைதல் 111 வாரணம் - யானை 60 வாரல் - வாருதல் 147 வாரி - வருவாய் 63 வாலாமை - தூய்மையில்லாமை (தீட்டு ) 146 வாலியோன் - பலதேவன் 60,114 வாளாட்டு - வாட்போர் 60 வானம் வாழ்த்தி - வானம்பாடிப்புள் 43 வி விடத்தர் - ஒருமரம் 75 விடை - ஆட்டுக்கடா 58 விதுப்பு - நடுக்கம் 83 வியலுள் - அகன்ற ஊர் 76 விரிச்சி - நற்சொல் 58 விழுப்புண் -முகத்தினும் மார்பினும் பட்ட புண் 71 விழுமம் - துன்பம் 39,114 விழைத்தல் - விரும்பல் 114 விள்வார் - பகைவர் 58 விளர்த்தல் - வெளுத்தல் 79 விளரி - ஒருபண் 79 விளி -ஒலி 147 விளிதல் - இறத்தல் 44 விறல் - வலி 60 விறலி - விறல்பட ஆடுபவள் 91 வினை - போர்த்தொழில் 63 வீ வீ - பூ 80 வீழ் - விழுது 147 வீழ்தல் - விரும்பல் 68 வீறு - பெருமை 114 வெ வெண்போழ் - வெள்ளிய பனந்தோடு 111 வெண்ணீறு - சாம்பர் 79 வெதிர் - மூங்கில் 111 வெய்யோன் - ஞாயிறு 72 வெருக்கு - காட்டுப்பூனை 60 வெள்ளி - சுக்கிரன் 75 வெள்ளிவீதி - இவர் ஒரு பெண்பாற் புலவர் 54 வெள்ளிலை - வெற்றிலை 83 வெள்ளை - வெள்ளாடு 60 வெளில் - விளாமரம் 39 - யானைகட்டுத்தறி 90 வெறித்தல் - வெருளல் 111 வெறுக்கை - செல்வம் 91 வே வேட்கை - பற்றுள்ளம் 247 வேண்மாள் - வேளாளர் குலப்பெண் 76 வேதாளிகர் - வைதாளியாடுவோர் (வேதாளியாடுவார் எனவுங் காணப்படுகின்றது) 91 வேய் - ஒற்றர் ஒற்றியுணர்த்துங் - குறளைச் சொல் 60 வேய்வை - குற்றம் 76 வேர் - வியர்வை 95 வேரல் - சிறுமூங்கில் 114 வேலி - மதில் 68 வேவை - வெந்தது 76 வேழம் - யானை 60 வேளாண்மை - உபகாரம் 107 வை வைகுறு - வைகறை 8 வைதல் - ஏசல் 75 வையம் - பூமி 76 தொல்காப்பியப் பதிப்புகள் கால வரிசையில் - பொருளதிகாரம் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 2. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 3. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 4. 1917 பொருள். பேரா. ” 5. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 6. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 7. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 8. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 9. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 10. 1934 பொருள். நச்சர் எஸ். கனகசபாபதிப்பிள்ளை 11. 1935 பொருள். பேரா. ” 12. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 13. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எஸ். வை. பிள்ளை 14. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எஸ்.வை. பிள்ளை 15. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 16. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 17. 1942 பொருள் (2) ” 18. 1942 பொருள் (6) ” 19. 1943 பொருள். பேரா. கணேசையர் 20. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 21. 1948 பொருள். நச்சர் கணேசையர் 22. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எஸ். வரதராஜ ஐயர் 23. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 24. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 25. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 26. 1951 பொருள். பேரா. ” 27. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 28. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாஸ்திரியார் 29. 1953 பொருள். இளம். கழகம் 30. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாஸ்திரியார் 31. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 32. 1974 பொருள் (8)* வடலூரனார் 33. 1974 பொருள். செய்யுளியல் விளக்கம் மு. இராமலிங்கனார் 34. 1975 பொருள். முத்துச்சண்முகன் தா.வே. வீராசாமி 35. 1978 பொருள். ச. சாம்பசிவனார் 36. 1980 பொருள். ச. சாம்பசிவனார் 37. 1985 பொருள்.இளம். (செய்யுளியல்) அடிகளாசிரியர் 38. 1985 பொருள். பிற்பகுதி கு. சுந்தரமூர்த்தி 39. 1986 பொருள். தொகுதி 1 கு. சுந்தரமூர்த்தி 40. 1986 பொருள். தொகுதி 2 கு. சுந்தரமூர்த்தி 41. 1989 பொருள். ஆராய்ச்சிக் காண்டிகையுரை ச. பாலசுந்தரம் தாமரை வெளியீட்டகம் 42. 1989 பொருள். ஆராய்ச்சிக் காண்டிகையுரை ச. பாலசுந்தரம் தாமரை வெளியீட்டகம் 43. 1991 பொருள். ஆராய்ச்சிக் காண்டிகையுரை தாமரை வெளியீட்டகம் 44. 1993 பொருள். புறத்திணை விளக்கம் நா. இராமையா பிள்ளை 45. 1994 பொருள். அகத்திணை விளக்கம் நா. இராமையா பிள்ளை 46. 1995 பொருள். இளம். பகுதி 1 1995 பொருள். இளம். பகுதி 2 1996 பொருள். இளம். பகுதி 3 மு. சண்முகம் பிள்ளை முல்லை நிலையம் 47. 1998 பொருள். கருத்துரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் உலகத் தமிழராய்ச்சி அ.அ. மணவாளன் நிறுவனம் 48. 1999 பொருள். எளிய தெளிவுரை நாட விவேகானந்தன் 49. 2003 பொருள். தொகுதி 1 பொருள். தொகுதி 2 பொருள். தொகுதி 3 கருத்துரை விளக்கம் தமிழண்ணல் மணிவாசகர் பதிப்பகம் 50. 2003 பொருள். மாணவர் களுக்கான உரை ஆலந்தூர் நா. கருணாநிதி கோ. மோகனரங்கன் 51. 2003 பொருள். இளம் தி.வே. கோபாலையர், முதல் நான்கு இயல் ந. அரணமுறுவல் 2003 பின்ணைந்து இயல் “ 52. 2003 பொருள். நச்சி.1 “ 2003 பொருள். நச்சி.2 “ 2003 பொருள். நச்சி.3 “ 53. 2003 பொருள். பேரா. 1 “ 2003 பொருள். பேரா. 2 “ 54. 2005 பொருள். இளம். சாரதா பதிப்பகம். உரைவளம் 33. 1983 புறம் வெள்ளைவாரணனார் 34. 1983 களவு ” 35. 1983 கற்பு ” 36. 1983 பொருள் ” 37. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 38. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 39. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 40. 1989 நவ. பொருள் (1, 2) ” 41. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் தமிழ்மண் பதிப்பகம் வெளியீடு செய்துள்ள தொல்காப்பிய உரைத்தொகைப் பட்டியல் எழுத்ததிகாரம்: 1. உரைத்தொகை -1 இளம்பூரணம் - வ.உ. சிதம்பரனார் (1928 2. உரைத்தொகை -2 நச்சினார்க்கினியம்-1 - சி. கணேசையர் (1952) 3. உரைத்தொகை -3 நச்சினார்க்கினியம்-2 - சி. கணேசையர் (1952) சொல்லதிகாரம்: 4. உரைத்தொகை -4 இளம்பூரணம் - க. நமச்சிவாய முதலியார் (1927) 5. உரைத்தொகை -5 நச்சினார்க்கினியம் - சி.வை. தாமோதரம் பிள்ளை (1892) 6. உரைத்தொகை -6 சேனாவரையம்-1 - சி. கணேசயைர் (1966) 7. உரைத்தொகை -7 சேனாவரையம்-2 - சி. கணேசயைர் (1966) 8. உரைத்தொகை -8 கல்லாடம் - 1 - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (1971) 9. உரைத்தொகை -9 கல்லாடம்-2 - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (1971) 10. உரைத்தொகை -10 தெய்வச் சிலையம் - இரா. வேங்கடாசலம் பிள்ளை (1929) பொருளதிகாரம்: 11. உரைத்தொகை -11 இளம்பூரணம்-1 - வ.உ. சிதம்பரனார் (1932, 35) 12. உரைத்தொகை -12 இளம்பூரணம்-2 - வ.உ. சிதம்பரனார் (1932, 35) 13. உரைத்தொகை -13 இளம்பூரணம்-3 - வ.உ. சிதம்பரனார் (1932, 35) 14. உரைத்தொகை -14 நச்சினார்க்கினியம்-1 - சி. கணேசையர் (1948) 15. உரைத்தொகை -15 நச்சினார்க்கினியம்-2 - சி. கணேசையர் (1948) 16. உரைத்தொகை -16 நச்சினார்க்கினியம்-3 - சி. கணேசையர் (1948) 17. உரைத்தொகை -17 பேராசிரியம்-1 - சி. கணோசையர் (1943) 18. உரைத்தொகை -18 பேராசிரியம்-2 - சி. கணோசையர் (1943) 19. உரைத்தொகை -19 பேராசிரியம்-3 - சி. கணோசையர் (1943) 20. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - நக்கீரம் (2018) 