தொல்காப்பிய உரைத்தொகை - 15 பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் -2 முன்னைந்தியல் சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் – 1948 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 15 பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம் - 2 முன்னைந்தியல் முதற்பதிப்பு - 1948 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+520 = 544 விலை : 850/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 456  f£lik¥ò : இயல்பு  படிகள் :544   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் “வாழிய வாழியவே” 1. வாழிய வாழியவே வாழிய வாழியவே எங்கள் இன்னுயிர் ஈழத் தமிழகம் - வாழிய 2. சூழும் கடலகம் வாழும் வளநிலம் ஈழத் தமிழகம் இன்னுயிர்த் தாயகம்-வாழிய 3. ஏழெழு நாடுகள் ஆழியுள் தாழினும் ஊழையும் வென்றஎம் ஈழத் தமிழகம் - வாழிய 4. இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தவள் மன்னுயிர் காத்துள மாண்புலிச் செவ்வியர் - வாழிய 5. செங்களம் செல்வதைப் பொங்கலாய்க் கொண்டெமைக் காந்தளம் பூவெனக் காக்கும் பெருமையர் - வாழிய 6. கொள்ளை கொள்ளையாய்த் துள்ளும் இயற்கையை அள்ளிக் கொழித்துயர் வள்ளல் தாயவள் - வாழிய 7. ஞாலப் பழமொழி சாலத் திகழ்மொழி மேனலத் தமிழ்மொழி மூலப் புகழ்நிலம் - வாழிய - இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசார. ஆசாரக் கோவை ஆய்ச்சி. ஆய்ச்சியர் குரவை ஊர்சூழ். ஊர்சூழ்வரி எச்ச. எச்சவியல் எழு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது கானல். கானல்வரி குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப் படலம் சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் திருச்சிற். திருச்சிற்றம்பலக் கோவையார் துறவு. துறவுச் சுருக்கம் துன்ப. துன்ப மாலை தொல். தொல்காப்பியம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் நான்மணி. நாண்மணிக்கடிகை நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப் பாலை பதிற். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப்படை வேட்டு. வேட்டுவரி உள்ளடக்கம் புறத்திணையியல் ....... 3 களவியல் ....... 250 பொருளதிகாரம் நச்சினார்க்கினியர்-2 முன்னைந்தியல் கணேசையர் – 1948 முதற் பதிப்பு 1948இல் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. புறத்திணையியல் புறப்பொருளுணர்த்துதலால் புறத்திணை யியலென்னும் பெயர்த்தாயிற்று புறமாவது அகம்போல ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லாராலும் உய்த்துணரப்படுவதும் இஃது இவ் வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுவதுமாகிய ஓழுகலாறாம். அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கத்தைப் புற மென்றது ஆகுபெயர். அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றை எழுதிணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழிப்பட்டனவாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழுஞ் செயல் முறைகளையும் எழுதிணையாகப் பகுத்துரைத்தல் பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் இவ்வேழும் புறத்திணைகளாம். இவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என வரும் அகத்திணையேழிற்கும் புறமாவன. அகத்திணை யொழுகலாறுகள் தத்தம் நலத்திற்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சி முல்லை முதலிய பூக்களாற் பெயர் பெற்றாற் போன்று, அவற்றின் புறத்தவாகிய புறத்திணை யொழுகலாறுகளும் அவற்றை மேற்கொள்வோர் அடையாள மாகச் சூடுதற்குரிய வெட்சி, வஞ்சி முதலிய பூக்களாற் பெயர்பெறு வனவாயின. அகத்திணைகளின் இயல் புணர்ந்தார்க்கன்றி அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகளும் அவற்றின் துறை வகைகளும் இனிது விளங்காவாதலின் அகத்திணைகளின் பொது விலக்கண முணர்த்திய பின்னர்ப் புறத்திணையிலக்கணம் உணர்த்துகின்றார். அதனால் இஃது அகத்திணையியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை முப்பதாக இளம்பூரணரும் முப்பத்தாறாக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். பகைவரது நாட்டின்மேற் படையொடு சென்று போர் செய்யக் கருதிய வேந்தன், அந்நாட்டில் வாழும் அறவோராகிய அந்தணர், மகளிர், பிணியாளர் முதலிய தீங்கு செய்யத் தகாத மக்களைப் போரால் விளையுந் துன்பங்களினின்றும் விலக்கி உய்வித்தல் வேண்டி, யாம் போர் கருதி நுமது நாட்டிற் புகுகின்றோம், நீவிர் நுமக்குப் பாதுகாவலான இடங்களை நாடிச் செல்லுமின் என இவ்வாறு அவர்களுக்கு அறிவித்தலும், அவ்வறிவிப்பினை யுணர்ந்து வெளிச்செல்லும் பகுத்துணர் வில்லாத பசுக்கூட்டங்களை ஒருவரும் அறியாதபடி நள்ளிரவில் தன் படை வீரார்களையனுப்பிக் களவிற் கவர்ந்து வரச்செய்து பாதுகாத்தலும் அறநெறி வழாது மேற்கொள்ளுதற்குரிய பண்டைத் தமிழர் போர்முறையாகும். அம்முறைப்படி வேந்தனால் அனுப்பப்பட்ட படை மறவர்கள், பகைவர் நாட்டிற் புகுந்து அங்குள்ள ஆனிரைகளைக் களவிற் கவர்ந்து வந்து பாதுகாக்குஞ் செயல் வெட்சியென்னும் புறத்திணை யாகும். ஆனிரைகளைக் கவர்தலை மேற்கொண்ட வீரர் தமது போர் முறையைப் பகை வேந்தர்க்கு அறிவிக்கும் அடையாளமாக வெட்சிப்பூவைச் சூடிச்செல்லுதல் மரபு. அதனால் இச்செயல் வெட்சியெனப் பெயர் பெறுவதாயிற்று. வெட்சித்திணை குறிஞ்சியென்னும் அகத்திணைக்குப் புறனாகும். “bt£áகுறிஞ்சி¡குப்புறனாaதுஎவ்வாbறனின்,நிரைfடல்குறிஞ்சி¡குரியமலைநிyத்தன்கண்நிகழ்த லானும்,அந்நில¤தில்மக்களhயின்பிறநா£டுஆனிரைiயக்களவிற்nகாடல்ஒருபுlகுறிஞ்சி¡குரித்தாகியகளவேhடுஒத்தலhனும்அதற்கு அதுபுwனாÆற்றென்க.சூடும்óî« அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம் என இளம்பூரணரும், களவொழுக்கமும் கங்குற்காலமும் காவலர் கடுகினுந் தாம் bசய்யக்fருதியbபாருளைïரவின்கண்Kடித்துÛடலும்nபால்வனxத்தலின்bவட்சிFறிஞ்சிக்குப்òறனென்றார்vனeச்சினார்க்கினியரும்bவட்சிFறிஞ்சிக்குப்òறனாதற்குரியïயைபினைÉளக்கினர்.Ãiu கவர்தலாகிய வெட்சியொழுக்கம் வேந்தனது ஆணை வழியே நிகழ்தற்குரியதென்பதும, அரசனது, ஆணை யின்றி அவனுடைய படைவீரர் முதலியோர் தனித்துச் செய்தற்குரிய தன்றென்பதும் வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்தோம்பல் என ஆசிரியர் கூறுதலாற் புலனாம். வேந்துறு தொழிலாய் நிகழ்தற்குரிய நிரைகவர்தலை வேந்தன் ஆணை யின்றிப் படைவீரர் தன்னுறு தொழிலாய் நிகழ்த்துதற்கும் உரியர் என்பது பன்னிரு படல நூற்கருத்தாகும். தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்னவிருவகைத்தே வெட்சி யென்பது பன்னிரு படலம். அரசனது ஆணையின்றிப் படைவீரர் தாமே தன்னாட்டிலும் பிறநாட்டிலும் ஆனிரைகளைக் கவர்ந்து கொள்ளுதற்குரியர் என அரசியல் நெறிக்கு மாறுபட்ட கருத்தினைக் கூறுவது பன்னிரு படலமாதலின் பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது என்றார் இளம்பூரணர். நிரைகோடல் கருதிப் படைகள் புறப்படும் ஆரவாரமும், புறப்பட்ட படைவீரர் ஊர்ப்புறத்தே நற்சொற் கேட்டலும், பகைவர் பக்கத்து ஒற்றர் முதலியோர் அறியாதபடி போதலும், பகைவரறியாதபடி அவர் நாட்டின் நிலைமைகளை ஒற்றரால் ஆராய்ந்தறிதலும், பின்னர்ப் பகைவரது ஊர்ப் புறத்தே சூழ்ந்து தங்குதலும் தம்மை வளைத்துக்கொண்ட மறவர்களைக் கொல்லுதலும், அங்குள்ள ஆனிரையைக் கைப்பற்றிக் கொள்ளுதலும், அந்நிரையை மீட்டற்கு வந்தவர்கள் செய்யும் போர்த் தொழிலை விலக்கி மீளுதலும், தாம் கவர்ந்த பசு நிரையை வருந்தாமற் செலுத்துதலும், வழியிடையே எதிர்பார்த்து நிற்கும் தம்மவர் உளமகிழத் தோன்றுதலும், பசுக்களைத் தம்மூரிற் கொண்டு நிறுத்துதலும், அவற்றைக் கொணர்தலில் ஈடுபட்ட வீரர்களுக்குப் பகுத்திடுதலும் வினைமுடிந்த மகிழ்ச்சியாற் கள்ளுண்டு களித்தலும், இரவலர்க்குரிய பரிசிலாகப் பசுக்களைக் கொடுத்தலும் என வெட்சித்திணை பதினான்கு துறைகளை யுடையதாகும். இப்பதினான்கிற்கும் நிரை கோடல் நிரை மீட்டல் என்னும் இரண்டிற்கும் பொருந்தப் பொருள் கொண்டு இருபத்தெட்டுத் துறைகளாக விரிப்பர் நச்சினார்க்கினியர். மறத்தொழிலை முடிக்கவல்ல வீரக்குடியிற் பிறந்தாரது நிலைமையைக் கூறுதலும்1, அவர்களது தறுகண்மையினை வளர்க்குந் தெய்வமாகிய வெற்றி வேற்றடக்கைக் கொற்றவையின் அருள் நிலையைக் கூறுதலும் ஆகிய இவை மேற்கூறிய குறிஞ்சித் திணையின் புறனாகிய வெட்சித் திணையின் பாற்படும். தெய்வத்திற்குச் செய்யும் வெறியென்னும் வழிபாட்டினை யறிந்த வேலனென்பான் தன் வேந்தற்கு வெற்றி வேண்டித் தெய்வத்தைப் பரவிய காந்தளும், மாறுகொண்டு பொரும் போர்க்களத்திலே பகைவேந்தர் இன்னவேந்தன் படையாளர் இவர் எனத் தம்மை அடையாளந் தெரிந்து பொருதற்கு வாய்ப்பாகப் படைவீரர் சூடுதற்குரிய அடையாளப் பூவாகிய சேரரதுபனை, பாண்டியரது வேம்பு, சோழரது ஆத்தி யென்னும் உயர்ந்த புகழினையுடைய மூவகைப் பூக்களும், தம் நாட்டில் வெற்றி வேண்டி மகளிர் முருகனைப் பரவியாடும் வள்ளிக் கூத்தும், புற முதுகிட்டு ஓடாமைக்குக் காரணமாக வீரர் அணியும் கழலின் சிறப்பும், பின்னிடாது போர் செய்யவல்ல சினமிக்க வேந்தனது வெற்றியை யுளத்தெண்ணி நன்மையுந் தீமையுங் காட்டுமியல்புடைய உன்னம் என்னும் மரத்தோடு நிமித்தங் கொள்ளுதலும், காயாம்பூ மலர்ச்சியைக் கண்டோர் பூவைப்பூ மேனியானாகிய மாயோனைப்போன்று தம் நாட்டினைக் காக்கவல்ல மன்னனது பெருஞ் சிறப்பினைப் புகழ்ந்து போற்றுதலும், நிரைகவர்ந்த படை மறவரைப் போரிற் புறங்கொடுத்தோடச் செய்தலும், அவராற் கொள்ளப்பட்ட பசுக்களை மீட்டுத் தன்னாட்டிற் கொண்டு வந்து தருதலும், இவ்வாறு மீட்டுக் கொணர்தற்குரிய தறுகண்மையாலுளவாம் புகழமைந்த தம் வேந்தனது சிறப்பைப் படைமறவர் எடுத்துரைத்துப் பாராட்டுதலும், தன்பாலமைந்த தறு கண்மையினாலே தன்னோடு சார்த்தி வஞ்சினங் கூறுதலும், நிரைமீட்டலை மேற்கொள்வோர் போர்ப்பூவாக அணிதற்குரிய கரந்தையின் சிறப்புரைத்தலும், எதிர்த்துவரும் படையின் முன்னணியைத் தானொருவனுமே தனித்து நின்று தடுத்தலும் பகைவரது வாளாற்பட்டு வீழ்தலும் ஆகப் பின்விளைவறியாது மேற் கொள்ளும் போர்ச் செயல்களாகிய இருவகைப்பட்ட பிள்ளை நிலையும், வாளாற் பொருது பகைவரைவென்று திரும்பிய இளைஞனை அந்நாட்டவர் கண்டு மகிழ்ந்து முரசு முழங்க அவனுக்கு நாட்டைப் பரிசிலாக வழங்கும் பிள்ளை யாட்டும், போர்க்களத்து இறந்த வீரரைக் கல்லில் நிறுத்தி வழிபடுதற் பொருட்டு அதற்குரிய கல்லைக் காணுதலும், அக்கல்லினைக் கைக்கொள்ளுதலும், அங்ஙனம் எடுத்த கல்லினை நீர்ப்படுத்தித் தூய்மை செய்தலும், அதனை நடுதலும், அங்ஙனம் நட்ட கல்லிற்குக் கோயிலெடுத்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்துதலும் என்று சொல்லப்பட்ட கற்கோள் நிலை ஆறும் ஆக இங்குச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைகளும் போர்த் தொடக்கமாகிய வெட்சித்திணையுள் அடங்குவனவாம். தனது நாட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தன் படைமறவர் களவிற் கவர்ந்து சென்றதையறிந்த மன்னன், தன் படைவீரர்களையனுப்பி அப்பசுக்களை மீட்டுவருதற்குரிய செயல் முறைகள் வெட்சித்திணையின் இடையே நிகழ்வன வாதலின், அவற்றை வேறுதிணை யாக்காமல் வெட்சித் திணைக்குரிய துறைகளாகவே கொண்டார் தொல் காப்பியனார். நிரை மீட்டலைக் கருதிய வீரர்கள் தமது செயலுக்கு அடையாளமாகக் கரந்தைப் பூவினைச் சூடிச்செல்லும் வழக்கமுண்டென்பது அனைக்குரிமரபினது கரந்தை எனவரும் தொல்காப்பியத் தொடராலும், நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து (புறநா-261) என வரும் புறப்பாட்டடிகளாலும் நன்கு விளங்கும். குறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலு மாகிய வேறுபாடு குறித்து வெட்சியெனவும் கரந்தையெனவும் இரண்டு குறிபெறுமென்றும் வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் புறத்திணையியற் சூத்திரம் வெட்சித்திணைக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துகின்றதென்றும் அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வதாதலின் வெட்சிப்பாற்பட்டுச் குறிஞ்சிப் புறனாயிற் றென்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை வறிய அதிகாரத்தானே புறத்திணைக்கொல்லாம் பொதுவாகிய வழுவேழுமுணர்த்துவது இச்சூத்திரமெனக் கொண்டு அக்கருத்திற்கேற்ப வலிந்தும் நலிந்தும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மண்ணாசையால் பிறரது சோர்வு நோக்கியிருக்கும் வேந்த னொருவன் தன்மேற் படையெடுத்து வருதற்கு முன்பே தான் அவனை வெல்லுதற்கேற்ற காலம், இடம், வலி முதலியவற்றை யெண்ணி அவனது நாட்டின்மேற் போர் கருதிப் புறப்பட்டுச் சேறல் நாடாள் வேந்தனது கடமையாகும். இக்கடமையினை உளத்துட்கொண்டு, ஒழியாத மண்ணாசையுடைய பகை வேந்தனைப் பொருதழித்தல் கருதி அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சேறல் வஞ்சித்திணையாகும். அது முல்லையாகிய அகத்திணைக்கும் புறனாகும். காடுறையுலகாகிய முல்லை நிலமும் கார் காலமும் ஆகிய முதற்பொருளும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், வேந்தன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்திருத்தலும் தலைவி அவனைப் பிரிந்திருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒத்தலால் வஞ்சி யென்னும் புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறனாயிற்று. முல்லைப்புறம் மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விரு பெருவேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சி என ஒரு குறிபெறும் என இளம்பூரணரும், ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென்றுணர்க என நச்சினார்க்கினியரும் கூறுங் கொள்கை தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்ற வில்லை. வஞ்சித்திணைக்கு ஆசிரியர் கூறிய இலக்கணத்தினை நோக்குங்கால் இருபெருவேந்தருள் ஒருவனே மேற்சேறற்குரியா னென்பது நன்கு விளங்கும். வஞ்சித்திணையை இயங்குபடையரவம் முதலாகத் தழிஞ்சியீறாகப் பதின்மூன்று துறைகளாக விரித்துரைப்பர் ஆசிரியர். படையெடுத்துவந்த வேந்தன் பகைவனது அரணைச்சுற்றி வளைத்துக்கொள்ளுதலும் உள்ளேயிருந்த வேந்தன் அவ் வரணை நெகிழவிடாது பாதுகாத்துலுமாகிய அவ்வியல் பினையுடையது உழிஞைத்திணையாம். இது மருதமென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இருபெருவேந்தர் தம்முள் மாறுகொண்டவழி எதிர்த்துச் செல்லும் ஆற்றலின்றி மதிலகத்தே அடைத்துக் கொண்டிருந்த அரசனது அரண் பெரும்பாலும் மருதநிலத்தில் அமைந்திருப்பதாதலாலும் அம்மதிலை வளைத்துக் கொள்ளுதற்கு வந்த வேந்தனும் அந்நிலத்தில் இருத்தலாலும், தலைவன் வாயில் வேண்டத் தலைவி அதற்குடம் பாடது கதவடைத்துக்கொண்டு வீட்டினுள்ளே யிருத்தலாகிய மருதத்திணை யொழுகலாற்றைப் போன்று புறத்தே மதிலை வளைத்துக்கொண்ட வேந்தன் அரணுள் நுழைதலை விரும்ப உள்ளிருந்த வேந்தன் அதற்குடம்படாது அரண் கதவினையடைத் திருத்தலாலும், மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரை வின்மையாலும், அதற்குரிய விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலாலும், புலத்தலும் ஊடலும் மருதத்திணையாதல் போல அரணை முற்றியும் விடாது பற்றியும் அகப்புறப்படைகள் தம்முட் பொருதலே உழிஞைத் திணையாதலாலும் உழிஞை மருதமாகிய அகத்திணைக்குப் புறனாயிற்று. மருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமென்னும் வேறுபாடு குறித்து உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறும் என்பர் இளம்பூரணர். உழிஞைத்துறை வகைகளுள் அகத்தோன் வீழ்ந்த நொச்சியையும் ஒரு துறையாகத் தொல் காப்பியர் அடக்கிக் கூறுதலால், நொச்சியைத் தனித்ததொரு திணையாகக்கொள்ளுதல் அவர் கருத்தன்றென்பது நன்கு விளங்கும். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங்கொள்க... இக் கருத்தானே நொச்சி வேலித்தித்தன் உறந்தை (அகநா-122) என்றார் சான்றோரும் எனவரும் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு இங்கு நினைக்கத்தகுவதாம். உழிஞைத்திணைக்குரிய செயல்முறைகள் எட்டுவகைப் படும். அவையாவன: பகைவரது தேயத்தைத் தான் கொள்வதற்கு முன்னமேயே தான் விரும்பிய வண்ணம் வேண்டியவர்களுக்குக் கொடுத்தலையெண்ணிய வெற்றித்திறமும், அங்ஙனம் தான் நினைத்தது முடிக்கவல்ல வேந்தனது வலியின் சிறப்பும், அழிவில்லாத மதில்மேலேறிப் போர் செய்தலும், மாற்றார் எய்யும் அம்புகளைத் தடுத்தற்குரிய தோற்படையின் மிகுதியும், அரணகத்துள்ள வேந்தனது செல்வமிகுதியும், அம்மிகுதியால் தன்னொடு மாறுபட்ட புறத்தோனைப் பொருதுவருத்திய கூறுபாடும், வலி மிக்குத்தானொருவனுமேயாகிப் புறத்தே போந்து போர் செய்யும் குற்றுழிஞையும், வெகுண்டு வரும் புறத்தோரது படையினைப் பொருட்படுத்தாது இகழ்ந்திருத்தற் கேற்ற அரிய மதிலின் வன்மையும் ஆகிய இவையாம். இவற்றுள் முன்னைய நான்கும் மதிலை வளைத்துக்கொண்ட வேந்தனாகிய புறத்தோனுக்குரியன; பின்னுள்ள நான்கும் மதிலழியாமற் காக்கும் அகத்தோனுக்குரிய செயல் முறைகளாம். குடைநாட்கோள் முதல் தொகை நிலையீறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டும் உழிஞைத்திணைக்குரிய துறைகளாகும். தனது வலியினை உலகம் உயர்த்துப் புகழ்தலையே பொருளாகக்கருதிப் போர்மேற்கொண்டுவந்த வேந்தனை மாற்று வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் நிலையில் அவ்விருபெருவேந்தரும் ஒரு களத்துப் போர்செய்தல் தும்பைத்திணை யெனப்படும். தும்பையென்னும் இத்திணை நெய்தலென்னும் அகத்திணைக்குப் புறனாகும். தும்பையென்பது சூடும் பூவினாற்பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமணலுலகம்போலக் காடும் மலையும் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமும் தலைமகட்கே பெரும்பான்மை யுளதாயவாறுபோலக் கணவனையிழந்தார்க் கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக் குறிப்பின் அருள்பற்றி ஒருவரையொருவர் நோக்கிப் போரின்கண் இரங்குபவாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குபவாகலானும், பிற காரணங்களாலும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். போர் வீரரது உளத்திண்மையைப் பலரும் அறிய விளக்குஞ் சிறப்புடையது இத்தும்பைத்திணையாம். பலரும் ஒரு வீரனை நெருங்கிப் பொருதற்கு அஞ்சிச் சேய்மையின் நின்று அம்பினால் எய்தும் வேலால் எறிந்தும் போர்செய்ய, அவர்கள் செலுத்தும் அம்பும் வேலும் அவ்வீரனது உடம்பில் செறிவாகத் தைத்தமையால் உயிர் நீங்கிய அவனது உடம்பு, நிலத்திற் சாயாது நேர் நிற்றலும், வாள்முதலியவற்றால் வெட்டுண்டு வீழும் அவ்வீரனது தறுகண்மை விளங்கும் தலையேயாயினும் உடலேயாயினும் நிலத்தைத் தீண்டாது எழுந்து ஆடுதலும் ஆக இவ்வாறு வியந்து போற்றுதற்குரிய இருவகைப்பட்ட சிறப்பியல்பினையுடையது தும்பைத்திணையென இதன் சிறப்பினை விரித்துரைப்பர் ஆசிரியர். இத்தும்பைத்திணைக் குரியனவாகத் தானைநிலை முதலாக நூழில் ஈறாகப் பன்னிரண்டு துறைகள் கூறப்பட்டுள்ளன. இத்துறைகள் யாவும் ஒரு களத்துப் பொருது நிற்கும் இருதிறத்துப் படையாளர்க்கும் பொதுவாக அமைந்தவை. குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு, ஆண்மை, பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினும் வேறுபட மிகுத்து மேம்படுதல் வாகைத் திணையாகிய ஒழுகலாறாம். வாகைத்திணை பாலை யென்னும் அகத்திணைக்குப் புறனாகும். பாலையாவது தனக்கென ஒரு நிலனுமின்றி எல்லா நிலத்தினும் காலம்பற்றிப் பிறப்பதுபோல, இதுவும் எல்லா நிலத்தினும் எல்லாக் குலத்தினுங் காலம்பற்றி நிகழ்வதாதலினாலும், ஒத்தார் இருவர் புணர்ச்சியினின்றும் புகழ்ச்சி காரணமாகப் பிரியுமாறு போலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங்கிப் புகழ்ப்படுதலானும் பாலைக்கு வாகை புறனாயிற்று என்பர் இளம்பூரணர். அவரவர்க்குரிய துறையில் ஒப்புடைய பிறரோடு உறழ்ந்து மேம்படுதலும், தமக்குரிய துறையில் எதிர்ப்பின்றி இயல்பாக மேம்பட்டு விளங்குதலும் ஆகிய இரு திறமும் வாகைத்திணை யேயாம். இவற்றுள் உறழ்ச்சி வகையாற்பெற்ற வென்றியை வாகை யெனவும் இயல்பாகப்பெற்ற வென்றியை முல்லை யெனவும் வேறுபடுத்து வழங்குதல் பிற்கால வழக்காகும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழிலுடையோராகிய பார்ப்பார்க் குரிய பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐவகைத் தொழிலினராகிய அரசர் பகுதியும், ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல் என்னும் அறுவகைத் தொழிலினராகிய ஏனை நிலமக்கள் பகுதியும், குற்றமற்ற ஒழுகலாற்றினை இறப்பு நிகழ்வு எதிர் வென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியாலமைந்த முழுதுணர் வுடைய அறிவர் பகுதியும், நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவு கோடல், கடவுள் வழிபாடு, விருந்தோம்பால் என எட்டு வகைப்பட்ட தவஞ்செய்வார் கூறுபாடும், முன்னர்ப் பல கூறுபாடுகளாகப் பகுத்துரைத்த போர்த் துறைகளை யறிந்த பொருநராகிய வீரர்க்குரிய கூறுபாடும், அத்தன்மைத்தாகிய நிலைமையை யுடைய பிறதொழில் வகையானுளவாகும் வென்றிவகையுடன் சேர்த்து வாகைத் திணையை எழுவகையாகப் பகுத்துரைப்பர் ஆசிரியர். இவ்வெழுவகையுள் இறுதியிற் கூறப்பட்ட அனைநிலை வகையென்பது, முற்கூறிய ஆறுவகையினும் அடங்காத எவ்வகை வென்றியையும் உள்ளடக்கிய தொகுப்பாகும். ஈண்டு இரு மூன்று மரபின் ஏனோர் எனக் குறிக்கப்பட்டோர் இச்சூத்திரத்து விதந் துரைக்கப்பட்ட பார்ப்பாரும் அரசரும் அறிவரும் தாபதரும் பொருநரும் அல்லாத ஏனை நிலமக்களாவர். இத்தொடரிற் குறிக்கப்பட்ட ஏனோராவார் வணிகரும் வேளாளரும் என இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரை கூறியுள்ளார்கள். நால்வகை வருணப் பிரிவு ஆரியர்களிடையிலன்றிப் பண்டைத் தமிழ் மக்களிடையே தோன்றியதில்லை. வண்புகழ் மூவர் தண்பொழிலிடையே வழங்குந் தமிழ் வழக்கே நுதலிய தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பிற்காலத்தாரால் மேற் கொள்ளப்பட்ட வடநூல் மரபினைத் தழுவிப் பொருள் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தாது. உரையாசிரியர்கள் கருதுமாறு வணிகரையும் வேளாளரையும் ஏனேரென அடக்குதல் ஆசிரியர் கருத்தாயின், அவ்விரு திறத்தார்க்கும் இங்குச் சொல்லப்பட்ட அறுவகைத் தொழில்களும் ஒப்புவுரியவாதலின்றி அவ்விருவ ரிடையே அவ்வாறாய் வேறுபடுதற்கு இடமில்லை. மேற்கூறிய வாகைத்திணை கூதிர்ப்பாசறை முதல் காமம் நீத்தபால் ஈறாகப் பதினெட்டுத் துறைகளையுடையதாகும். அவற்றுள் முன்னர்க் கூறப்பட்ட ஒன்பது துறைகளும் மறத்துறை பற்றியும் பிற்கூறிய ஒன்பதும் அறத்துறை பற்றியும் நிகழ்வன என்பார், இருபாற்பட்ட ஒன்பதின்றுறைத்தே என்றார் ஆசிரியர். காஞ்சித்திணையாவது, தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல்வம் என்பவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக் கொண்டு அதனால் உளவாம் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாறாம். நில்லாதவற்றால் நிலையுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித்திணை யென்பது தொல்காப்பியனார் கருத்தாகும். காஞ்சியென்னும் திணை பெருந்திணையென்னும் அகத் திணைக்குப் புறனாகும். ஏறியமடற்றிறம் முதலாகிய நோந்திறக் காமப்பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறுபோல, இக் காஞ்சித் திணையும் பல்வேறு நிலையாமையாகிய நோந்திறம் பற்றி வருதலால் அதற்கு இது புறனாயிற்றென்பர் இளம்பூரணர். உலகியலில் நேரும் பலவகைத் துன்பங்களையும் எதிர்த்து நிற்றல் காஞ்சி என்னும் இக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே எதிரூன்றல் காஞ்சி யென்னுங் கொள்கையும் பிற்காலத்து உருப்பெறுவதாயிற்று. எல்லாப் பொருளினுஞ் சிறந்த சிறப் பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் வேண்டி நில்லாத உலகியல்பில் நேரும் பல்வகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றல் காஞ்சித்திணை யாதல்போல, ஒன்றாவுலகத்துயர்ந்த புகழைப்பெற விரும்பிப் பலவகையின்னல்களுக்கிடையே பகைவர் சேனையைத் தடுத்து நிறுத்தலாகிய போர்ச் செயலும் காஞ்சித்திணையெனவே கொள்ளத் தக்கதாகும். இவ்வாறு வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறுபட்ட இருவேறு போர்ச் செயல்களாகப் பண்டைநாளிற் கொள்ளப்பட்ட செய்தி வஞ்சியுங் காஞ்சியுந் தம்முள் மாறே எனவரும் பன்னிரு படலச் சூத்திரத்தாலும் தென்றிசை யென்றன்வஞ்சியொடு வடதிசை, நின்றெதிரூன்றிய நீள்பெருங்காஞ்சியும் எனச் செங்குட்டுவன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுந் தொடராலும் இனிது விளங்கும். இங்ஙனமாகவும் காஞ்சித்திணையென்பதற்குப் பல்வேறு நிலையாமையினைக் கூறுங் குறிப்பு எனத் தொல்காப்பிய வுரையாசிரியர்கள் கூறும் விளக்கம், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்திற்கும் அவர்க்குப் பின்வந்த இளங்கோவடிகள் முதலியோர் கருத்திற்கும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையென்னும் பெருங் காஞ்சி முதலாகக் கொண்டோன் தலையொடு முடிந்தநிலை யென்பதீறாகவுள்ள பத்துத் துறைகளும் பாங்கருஞ் சிறப்பினைப் பெறுதல் வேண்டுமென்னும் விருப்பத்தைப் புலப்படுத்துவன. மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்தென்பதீறாகச் சொல்லப்பட்ட பத்துத் துறைகளும் நில்லாத வுலகியல்பைப் பல்லாற்றானும் பற்றியொழுகும் துன்பியலைப் புலப்படுத்துவன. இங்ஙனம் காஞ்சித்திணைத் துறைகள் இருவகை நிலைகளைக் குறித்தலால் நிறையருஞ் சிறப்பிற்றுறையிரண்டுடைத்து என்றார் ஆசிரியர். இவற்றுள் முற்கூறிய பத்தும் ஆண்பாற்றுறை. பிற்கூறிய பத்தும் பெண்பாற்றுறை எனப் பகுத்துரைத்தார் நச்சினார்க்கினியர். இவ்விருவகைத் துறைகளையும் விழுப்பவகை யெனவும் விழுமவகை யெனவும் இருதிறமாகப் பகுத்துரைப்பாருமுளர். புறத்திணையுள் ஏழாவதாகச் சொல்லப்படும் பாடாண் என்பது, புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவராற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற்றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னுஞ் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினை யுணர்த்திற்றென்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். பாடாண் திணைப்பகுதி கைக்கிளை யென்னும் அகத் திணைக்குப் புறனாகும். ஒருநிலத்திற்குரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளையாகிய அகத்திணை. அதுபோல ஒருபாற் குரித்தன்றி ஒருவனையொருவன் யாதானுமோர் பயன் கருதியவழி மொழிந்து நிற்பது பாடாண். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாத செந்திறத்தால் வருதலும் இரண்டற்கும் ஒக்கும். தலைவன், பரவலும் புகழ்ச்சியும் வேண்டப், புலவன் பரிசில் வேண்டுதலின், ஒருதலைக் காமமாகிய கைக்கிளையொடொத்தலால் பாடாண்திணை க்கிளைக்குப் புறனாயிற்று. குடும்ப வாழ்விலே மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக்கமும் அரசியல் வாழ்விலே மேற் கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்னும் அறுவகைப் புறவொழுக்கங்களும் ஆகிய இவ் வொழுக்கங்களை யடிப்படையாகக்கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை யொழுகாலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத் துணர்வுகளும் பாட்டுடைத் தலைவன்பால் நிகழ்வன. பாடாண் திணையிலோபாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகிய குணஞ் செயல்கள் பாட்டுடைத் தலைவன்பாலும் நிகழ்வனவாம். வெட்சி முதலிய ஆறும் தலைமகனுக்குரிய பண்புகளை நிலைக்களனாகக்கொண்டு தோன்றும் தனிநிலைத் திணைகள். பாடாண்திணையோ தலைமகன்பால் நிகழும் மேற்கூறியதிணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களன் களாகக்கொண்டு தோற்றும் சார்பு நிலைத்திணையாம். எனவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத்திணைகளிலும் குற்றமற்ற மனை வாழ்க்கை யாகிய அகத்திணையிலும் அமைந்த செயல்களாய்த் தலை மக்களுக்குரிய கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற் கமைந்த ஒழுகலாறு பாடாண்திணை யென்பது பெறப்படும். பாடாணல்லாத பிறவும் புலவராற் பாடப்படுவன வாயினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டு மென்னும் மனக்குறிப்பின்றி ஒருவன்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச் செயல் முதலியவற்றைத் தெரிவிக்கும் வகையால் அவை வெட்சி முதலிய திணைகளின்பாற்படுவனவென்றும், அச்செயல்களைக் கருவாகக் கொண்டு புலவன் பாடும்போது அவற்றாலுளவாம் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவன்பால் தோற்றும் உயர்ந்த உள்ளக் குறிப்பு பாடாண் திணை யென்றும் பகுத்துணர்தல் வேண்டும். நல்லறிவுடைய புலமைச் செல்வர் பலரும் உரையினாலும் பாட்டினாலும் உயர்த்துப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின்மிக்க மனை வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்புடைமையே பாடாண்திணை யெனப்படும். அமரகத்து அஞ்சாது போர்புரியும் வீரர்களின் தொழிலாய்ப் பொருந்தும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி யென்பவற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அறுவகைப் பகுதிகளும், குற்றமற்ற அகத்திணை யொழுகலாற்றைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் காமப்பகுதியும் உலகியலிற் பல்வேறு செயல்வகையினை யுளத்துட்கொண்டு ஒருவரைப் படர்க்கைக்கண் புகழ்தலும் முன்னிலைக்கண் பரவிப் போற்றுதலும் முன்னோர் தம் உள்ளத்தே சிந்தித்துணர்த்திய நற்பொருள்களை யறிவுறுத்தலும் என இங்ஙனம் இயல்பு வகையாற் பாடப்பெறும் செந்துறை வண்ணப்பகுதியும் ஆகிய இவையெட்டும் பாடாண்திணையின் வகைகளாம். கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கல வகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படை வகை, பரிசிற்றுறை வகை, கைக்கிளை வகை, வசை வகை எனவரும் எட்டும் பாடாண்டிணை வகையென இளம்பூரணரும், பாடாண் திணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவுங் கூட்டி ஒன்றும் நிரை கவர்தல் நிரை மீட்டல் என்னும் வெட்சி வகை இரண்டும், பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பனவும் ஆக இவ்வெட்டும் பாடாண்திணை வகையென நச்சினார்க்கினியரும் வேறுவேறு வகுத்துக் காட்டியுள்ளார்கள். இனிப் புறத்திணை ஆறும் அன்பினைந்திணை கைக்கிளை யாகிய அகத்திணை இரண்டும் ஆக இவ்வெட்டும் பாடாண் டிணை யின் வகையென்பாருமுளர். அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போர்செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாம். இச்சொல்லுக்குத் தேவர் எனப் பொருள்கொண்டு, அமரர்கண் முடியும் அறுவகையாவன: கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை புகழ்தல், பரவல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை நூலாசிரியராகிய ஐயனாரிதனாரும் இளம்பூரணரும், பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய முனிவர், பார்ப்பார், ஆநிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு என்னும் பொருள் பற்றிய அறுமுறை வாழ்த்தென நச்சினார்க்கினியரும், வானவர், அந்தணர், ஆனினம் மழை, அரசன், உலகம் என்னும் இவ்வாறு பொருளையும் வாழ்த்துதல் எனப் பிறரும் விளக்கங் கூறுவர். போர்மறவர்பாற் சென்றமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சியீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை யெனப்பட்டன என்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார். இக்கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத் தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடுதற்குரிய காமப் பகுதியினைக் கடவுளைப் பொருளாகக்கொண்டு பாடினும் நீக்காது ஏற்றுக்கொள்வர். கடவுளை ஏனைமக்கள் விரும்பிய தாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது. இவ்விரு வகையினையும் முறையே கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்தபக்கம் எனவும் கடவுள் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்தபக்கம் எனவும் வழங்குவர் இளம்பூரணர். இவற்றுடன் கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் அமைத்துக் கொள்வர் நச்சினார்க்கினியர். மக்கள் குழந்தைகளாக வளரும் பருவத்தும் அவர்களைக் காமுற்றதாகச் செய்யுள் செய்தலும் உண்டு. இப்பாடாண்திணையில் உலகியல் வழக்கத்தை யொட்டித் தலைமக்களுடைய ஊரும் உயர்குடிப் பிறப்பும் இயற்பெயரும் குறித்துப் பாராட்டப் பெறுதலுண்டு. வேந்தரது கொடியின் வெற்றியைப் பாராட்டிப் போற்றும் கொடிநிலையும், பகைவேந்தர்க்குப் பற்றுக்கோடாயுள்ள அரணையழித்தலாகிய கந்தழியும், வேந்தற்கு, வெற்றிவேண்டி யாடும் வள்ளிக்கூத்தும் எனப் போர்த்துறையிலே முதலிற் சொல்லத்தக்க குற்றமற்ற சிறப்பினையுடைய இம்மூன்று செயல்களும் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தி வருங்காலத்து முன்னர்க் குறித்த செந்துறை வண்ணப் பகுதியாகிய கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருமென்பர் ஆசிரியர். கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் எனத் தொல்காப் பியனார் கூறியது கொண்டு, அரி, அயன், அரன் என்னும் முத்தேவர் கொடிகளுள் ஒன்றோடு உவமித்து அரசன் கொடியைப் புகழ்வது கொடிநிலை யெனவும், திருமால் சோவென்னும் அரணத்தையழித்த வெற்றியைச் சிறப்பித்தது கந்தழியெனவும், மகளிர் முருகனை வழிபட்டு வெறியாடுவது வள்ளியெனவும் துறை விளக்கங்கூறினார் ஐயனாரிதனார். இம்மூன்றனுள் முதலிரண்டு துறைகளுக்கும் அவர் பாடிய வெண்பாமாலைப் பாடல்களை உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர். கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலமாகிய ஞாயிறென்றும், கந்தழியென்பது ஒரு பற்றுக்கோடுமின்றித் தானே நிற்குந்தத்துவங்கடந்த பொருளென்றும், வள்ளி யென்பது தேவர்க்கு அமிர்தம் வழங்கும் தண்கதிர் மண்டிலமாகிய திங்களென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இம்மூன்றனுள் கந்தழியென்பதற்கு அவர்கூறும் இலக்கணம் கடவுளுக்கேயுரிய சிறப்புடையதாதலால் அது கடவுள் வாழ்த்தாவதன்றிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் வேறொரு துறையெனக் கொள்ளுதற்கில்லை. ஞாயிறுந் திங்களுமே ஆசிரியரது கருத்தாயின் அவற்றை ஞாயிறு திங்கள் என எல்லார்க்கும் விளங்கும் இயற்சொல்லால் வழங்குவதன்றிக் கொடிநிலை, வள்ளியென வருஞ்சொற்களால் மறைத்துக் கூறமாட்டார். நச்சினார்க்கினியர் பொருள் கூறிய முறையினை யொட்டிக் கொடிநிலை யென்பது கீழ்த்திசைக்கண்ணே நிலைபெறு தலுடைய மேகத்தையுணர்த்து மென்றும் கந்தழி யென்பது பற்றழிந்தாராகிய நீத்தார் தன்மையைக் குறிக்கு மென்றும் வள்ளி யென்பது வண்மைபற்றி நிகழும் அறத்தைக் குறிக்குமென்னும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் மூன்றும் திருக்குறளில் கடவுள் வாழ்த்தையடுத்து வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என வரும் மூன்றதிகாரங்களில் முறையே கூறப்பட்டுள்ளன. வென்றும் விளக்கங் கூறுவாரும், கொடிநிலை யென்பது ஞாயிறு; கந்தழியென்பது தீ; வள்ளியென்பது திங்கள்; இம்முத்தீ வழிபாடு கடவுள்வாழ்த்தொடு பொருந்தி வருமெனக் கூறுவாரும், கந்தழியென்னுஞ்சொல் இத்தொல்காப்பியத்தில் கொடிநிலை வள்ளியென்பவற்றையடுத்து முதலில் கூறப்படாமை யாலும் இச்சொல் வேறு பழைய தமிழ் நூல்களில் யாண்டும் குறிக்கப்படாமையாலும், வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என ஆசிரியர் முன்னர் வெட்சித் திணையிற் குறித்த காந்தள் என்னும் சொல்லே ஏடெழுது வோரால் கந்தழியெனத் தவறாகத் திரித்தெழுதப் பட்டதென் பாரும் எனப் பல திறத்தர் உரைகொள்வோர். இங்கெடுத்துக் காட்டிய விளக்கங்கள் அவரவரது அறிவின் திறத்தால் நலிந்தும் வலிந்தும் திரித்துங் கூறப்பட்டனவாதலின் இவை தொல்காப் பியனார் கருதிய பொருளை விளக்குவனவெனக் கொள்ளுதற் கில்லை. குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை யென முன் வஞ்சித் திணைக் குரியதாகச் சொல்லப்பட்ட கொற்றவள்ளை யென்னுந் துறையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திப் பாடாண்பாட்டாய் வருதலுண்டு. கொடுப்போரேத்திக் கொடார்ப்பழித்தல் முதலாக வேலை நோக்கிய விளக்குநிலை யீறாகச் சொல்லப்பட்டனவும், வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து கைக்கிளைவகை என்பனவும் துயிலெடை நிலை முதலாகப் பரிசில்விடையீறாகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட உலக வழக்கின்கண்ணே மூன்றுகாலமும் பற்றி வருவனவும் பாடாண்திணைக்குரிய துறைகளாமென இவ்வியல் 29, 30-ஆம் சூத்திரங்களில் தொகுத்துரைத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். இங்ஙனம் அகத்திணையேழற்கும் புறமாய் நிகழும் புறத்திணைகள் வெட்சி முதல் பாடாண் இறுதியாக ஏழெனக் கூறியிருக்கவும், பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களையியற்றிய பிற்காலத்து ஆசிரியர்கள் பகைவருடைய பசுக்களைக் கவர்தல் வெட்சி, அங்ஙனம் கவரப்பட்ட பசுக்களை மீட்டல் கரந்தை, பகைவர் நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, அங்ஙனம் தம்நாட்டை நோக்கிவரும் படையை எதிர் சென்று தடுத்து நிறுத்துதல் காஞ்சி, தம்முடைய மதிலைக் காத்தல் நொச்சி, பகைவருடைய மதிலைவளைத்தல் உழிஞை, பகைவரொடு பொருதல் தும்பை, பகைவரை வெல்லுதல் வாகை, ஒருவனுடைய புகழ், கொடை, தண்ணளி முதலியவற்றைப் புகழ்ந்து பாடுதல் பாடாண், மேற்கூறிய புறத்திணைக் கெல்லாம் பொதுவாயுள்ள செயல் முறைகள் பொதுவியல், ஒருதலைக் காமம் கைக்கிளை, ஒவ்வாக் காமம் பெருந்திணை எனப் பன்னிரண்டு திணைகளாகப் பகுத்தும், இவற்றுள் முதலன ஏழும் புறம் எனவும் இறுதியிலுள்ள கைக்கிளை பெருந்திணை அகப்புற மெனவும் இடையிலுள்ள மூன்றும் புறப்புறமெனவும் வகைப்படுத்தியும், இலக்கணங் கூறியுள்ளார்கள். இப்பகுப்பு முறையினைத் தொல்காப்பிய வுரையாசிரியர்களாகிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலுரைப் பகுதிகளில் ஆங்காங்கே மறுத்துள் ளார்கள். எனினும் இத்தகைய வேறுபாடுகளை முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்தலும் திரிபு வேறுடைத்தாதலும் என இருவேறு வகைப்பட நிகழும் வழிநூல் சார்பு நூல்களில் மரபு நிலை திரியாது விரவும் பொருள்களாக அமைத்துக் கொள்ளுதலே முறையாகும். அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப்பகுத்தலும்,வெட்சித்திணை,உழிஞைத்திணைகளின்மறுதலைவினையைவீற்றுவினையாதலும்வேற்றுப்பூச்சூடுதலுமாகியவேறுபாடுபற்றிவேறுதிணையாகவைத்தெண்ணுதலும்இன்னோரன்னவைபிறவும்திரிபுடையவாயினும்மரபுநிலைதிரியாதனஎனவும்இவ்வுண்மையுணராதார்பன்னிருபடலமுதலியநூல்களைவழீஇயினவென்றிகழ்ந்து....jம¡F . கூறுப எனவும் வரும்áவஞானKனிவர் கூற்றுஇ¡கருத்âid¥ புலப்படுத்துவதhகும். ஆசிரியர்தொšfh¥ãadh® கைக்கிளை முதலாகப் பெருந்திணையிறுதியாகவுள்ள எழுதிணைகளையும் அகமெனக் கொண்டாராயினும் அவற்றுள் அகமெனச் சிறப்பித்தற்குரியன நடுவே எண்ணப்பட்ட ஐந்திணைகளுமே எனவும், அவ்வைந்தின் முன்னும் பின்னுமாக அடுத்தெண்ணப் பட்ட கைக்கிளை பெருந்திணையென்பன ஒருவாற்றான் அவற்றின் புறத்தவாகக் கொள்ளதக்கன எனவுங் கருதினா ரென்பதற்கு, மக்கள் நுதலிய அகனைந்திணையுஞ், சுட்டியொருவர் பெயர் கொளப்பெறார், புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதலிலவே எனவரும் அகத்திணையியற் சூத்திரங்களே சான்றாதலின் அவ்விருதிணைகளையும் அகப்புறமெனப் ãன்னுள்ளோர்gகுத்தமைbதால்லாசிரியர்fருத்துக்குKரணாகாமைfண்க.- வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 239-257 இரண்டாவது புறத்திணையியல் (வெட்சித்திணை குறிஞ்சிக்குப் புறனெனலும் அது பதினான்கு துறைத்தெனலும்) 56. அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே யுட்குவரத் தோன்று மீரெழ் துறைத்தே. இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணை யிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையிய லென்னும் பெயர்த்தாயிற்று. புறமாகிய திணையெனப் பண்புத் தொகையாம். அதனை முற்படக் கிளந்த (தொல். பொ. அகத். 1) 1என்புழிப் பிற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றின் இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களான் திறப்படக் கூறுவல் என்றலின், 2மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் முற்கூறிய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதூஉம், அதுதான் இப்பகுதித் தென்ப தூஉம் உணர்த்துத னுதலிற்று. (இ - ள்.) அகத்திணை மருங்கின் அரிதல்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணை யென்னும் பொருட்கட் 3பிணக்கற அறிந்தோர் கூறிய புறத் திணையது இலக்கணத்தைக் கூறுபட ஆராந்து கூறின்; வெட்சி தானே குறிஞ்சியது புறனே - வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம், உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே - அதுதான் 4அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து என்றவாறு. அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு 5ஒருபுடை யொப்புமை பற்றிச் சார்புடையவாதலும், நிலமில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை யென்பன வற்றிற்கு வாகையுங் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமை பற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு அரில்தப வுணர்ந்தோ ரென்றார். 6ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச் சூத்திரங்களுட் கூறுதும். தானே யென்றார், புறத்திணை பலவற்றுள் 7ஒன்றை வாங்குதலின் பாடாண்டிணை ஒழிந்தனவற் றிற்கும் இஃதொக்கும். களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுந் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். வெட்சித் திணை யாவது களவின்கண் நிரைகொள்ளும் ஒழுக்கம். இதற்கு அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி 8அரண் சேர்வதோர் உபாய மாதலின் உட்கு வரத் தோன்றுமென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந்துறை போலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குத லாகு 9மார்க்கமாதலிற் றுறையென்றார், எல்லாவழியு மென்ப தனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே, திணையுந் துறையுங் கொண்டா ராயிற்று. 10அகத் திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் (313) துறை யென்பது உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட் பகுதியும் உடைய வென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும் ஒரு செய்யுளுட் பலபொருள் விராஅய்வரினும், ஒரு துறையாயினாற் போலப் புறத்திணைக்கும் அவ்வப் பொருட் பகுதியும் ஒரு துறை யாதலும், ஒரு செய்யுளுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு துறைப் படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத் திணைக்குங் கொள்க. (1) (வெட்சித் திணையின் பொதுவிலக்கண மிதுவெனல்) 57. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவி னாதந் தோம்பன் மேவற் றாகும். இது, வெட்சியெனக் கூறிய புறத்திணைக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) வேந்து விடு முனைஞர் - வேந்தனால் விடப்பட்டு 11முனைப்புலங் காத்திருந்த 12தண்டத் தலைவர்; வேற்றுப் புலக் களவின் - பகைநிலத்தே சென்று களவினானே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும் - ஆநிரையைக் கொண்டுபோந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்தாகும் வெட்சித் திணை என்றவாறு. களவு நிகழ்கின்ற குறிஞ்சிப்பொருளாகிய கந்தருவமணம் வேதவிதியானே இல்லாறமாயினாற்போல, இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டுநின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினாற் றாமே கொண்டுவந்து பாதுகாத்தலுந் தீதெனப்படா அறமே யாம் என்றற்கு ஆதந்தோம்பலென்றார். அது. ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரு மெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென வுறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின் (புறம். 9) எனச் சான்றோர் கூறியவாற்றானுணர்க. மன்னுயிர்காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் 13அறமே நிகழும் என்றற்கு 14மேவற்றாகுமென்றார். அகநாட்டன்றிப் 15புறஞ் சிறைப் பாடியில் ஆநிரை காக்குங் காவலரைக் கொன்றே நிறைகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையுங் கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர் தாமே சென்று நிரைகோடலுங், குறுநிலமன்னர் நிரைகோடலும், ஏனை 16மறவர் முதலியோர் நிரைகோடலு மாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (தொல். பொ. புறத். 1) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவுகூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை யேழற்குங் களவு நிகழுங்கொ லென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் 17களவினென்று இத் திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான், இருபெருவேந்தருந் தண்டத் தலைவரை ஏவி விடுவரென்றும், ஆ தந்தோம்பும் என்றதனாற் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்பலென்றும், பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின், இருபெரு வேந்தர் தண்டத்தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினர்; ஆகவே இருவர்க்குங் கோடற் றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் 18மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை 19வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. களவி னென்பதற்கு களவினானெனவுங் களவின்க ணெனவும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டு ணர்த லென்னும் உத்தியாம். புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத் தொடங்கி, ஈண்டு 20அறத்தாற் பொருளீட்டு மாறுங் கூறினார். (2) (வெட்சித்திணை பதினான்கு மிருபத்தெட்டாமெனல்) 58. படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட வொற்றி னாகிய வேயே வேய்ப்புற முற்றி னாகிய புறத்திறை முற்றிய வூர்கொலை யாகோள் பூசன் மாற்றே நோயின் றுய்த்த னுவலுழித் தோற்றந் தந்துநிறை பாதீ டுண்டாட்டுக் கொடையென வந்த வீரேழ் வகையிற் றாகும். இது, முன் ஈரேழாமென்ற துறை, இருவகைப்பட்டு இருபத் தெட்டாமென்கின்றது. (இ - ள்.) படை இயங்கு 21அரவம் - நிரைகோடற்கு எழுந்த படை பாடிப் புறத்துப் பொருந்தும் அரவமும், நிரை மீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்; உதாரணம்: வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு மார்க்குங் கழலொழி யாங்கட் 22படா அலியரோ போர்க்குந் துடியோடு புக்கு (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 752) அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் 23கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர் வலம் (மேற்படி 763) இவை கண்டோர் கூற்று. பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர் 24போந்து விட்ட பாக்கத்துக் கங்குலில் நல் 25வாய்ப்புட்கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்; உதாரணம் : திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - னிரையன்றி யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால் வல்லை நீர் சென்மின் வழி (பெ. பொ. விளக்கம்: புறத்திரட்டு. 756) வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் 26பறவாப்பு - ளுய்ந்த நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண் இவை விரிச்சியை வியந்தன. 27புடைகெடப்போகிய செலவே - நிரைகோடற்கு எழுந் தோர் ஆண்டு நின்று மீண்டுபோய்ப் 28பற்றார் புலத்து ஒற்றல் உணராமற் பிற்றைஞான்று சேறலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற்சேறலும்; உதாரணம்: 29பிறர்புல மென்னார் தமர்புல மென்னார் விறல்வெய்யோர் வீங்கிருட்கட் சென்றார் - நிரையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப் படாஅ முகம்படுத் தாங்கு (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு. 757) 30கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார் - தங்கிளைக்கண் மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப வேதோன்றுங் கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு. (ஷ. 764) இவை கண்டோர் கூற்று. புடைகெட ஒற்றின் ஆகிய 31வேயே - நிரைகோடற்கு எழுந் தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ் வொற்று வகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரை மீட்டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச் சொல்லும்; உதாரணம்: ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு. நெடுநிலை 32யாயத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் 33வயவேந்த னென்று நினைக்குரிய வாக நிரை. இவை கண்டோர் கூற்று. வேய்ப்புறம் முன்றின் ஆகிய புறத் திணை - நிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புக்கள் முடிந்த பின்னர் உளதாகிய நிரைப்புறத்து 34ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரைவொழிந்து இருக்கின்ற இருக்கையும்; உதாரணம்: கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் 35பதிந்தா -ரரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி யெரிந்தவியும் போலுமிவ் வூர். இது கண்டோர் கூற்று. இருநில மருங்கி னெப்பிறப் பாயினு 36மருவின் மாலையோ வினிதே யிரவி னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி 37யோர்த்தன சென்றுபடு நிரையே. (தகடூர் யாத்திரை; புறத்திரட்டு 765) இது மறவர் கூற்று. முற்றிய ஊர்கொலை - நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுநின்ற நிரை காவலரைக் கொன்று பகையறுத்தலும், நிரைமீட்டற்கு எழுந் தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக் கோறலும்; உதாரணம்: அரவூர் மதியிற் கரிதூர வீம விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் 38றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் 39தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு. இவை கண்டோர் கூற்று. ஆகோள் - நிரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இலராக நிரையகப்படுத்தி மீட்டலும், நிறைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை 40அற்றமின்றி மீட்டலும்; உதாரணம் : கொடுவரி கூடிக் குழுஉக்கொண் டனைத்தா னொடுவரை நீள்வேய் நரலு - நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை (பு. வெ. 1. 9) 41கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர்க் கருதார் குழாஅந் துரந்து நிரைமீட்ட தோள். (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 767) இவை கண்டோர் கூற்று. தொடலைக் கரந்தை யெனக் கரந்தை சூடினமை கூறினார். 42தன்னுறு தொழிலான் நிரைமீட்டலின். இது பொதுவியற் கரந்தையிற் (60) கூறுதும். பூசல் மாற்று - நிரைகொண்டுபோகின்றார் தம்பின்னே 43உளைத்தற் குரலோடு தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலைமாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றார் தம் பின்னர்வந்து போர் செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்; உதாரணம்: 44ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில் 45இரவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த வெட்சி மறவர் வீழவு முட்காது கயிறியல் பாவை போல வயிறிரித் துளைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல முற்படு பூசன் கேட்டனர் பிற்பட நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண் மாக்கட னெருப்புப் போல நோக்குபு வெஞ்சிலை விடலை வீழ்ந்தன னஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே. இது கண்டோர் கூற்று. வெட்சி மறவர் வீழ்ந்தமை கேட்டு விடாது பின்வந்தோன் பாடு கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று. நோய் இன்று உய்த்தல் - நிரைகொண்டோர் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டு போதலும், மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்புறுத்திக்கொண்டு போதலும்; உதாரணம்: 46புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழ னிரை. (பு.வெ.1, 11) 47கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத் தெள்ளறற் கான்யாற்றுந் தீநீர் பருகவு மள்ளர் நடவா வகை. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 768) இவை கண்டோர் கூற்று. 48நுவலுழித் தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத் தற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்; உதாரணம்: 49மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு மையணற் காளை மகிழ்துடி - கையணல் வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட வுய்த்தன் றுவகை யொருங்கு. (பு. வெ.1, 12) 50காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா மீட்ட மகனை வினவுறா - 51னோட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு மென்னெதிர்ப் பட்டாயோ வென்று. (பெ.பொ. விளக்கம்; புறத்திரட்டு 769) இது கண்டோர் கூற்று. 52தந்து நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் ஊர்ப்புறத்துத் தந்து நிறுத்தலும், நிரைமீட்டோர் மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும்; உதாரணம் : 53குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம். 54கழுவொடு 55பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து. இது கண்டோர் கூற்று. பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் 56பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று; வேந்தனேவலால் தாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், மீட்டொருந் தத்தநிரையைப் பகுத்துக் கோடலும், நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்; உதாரணம்: 57ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற் கூறிட்டார் கொண்ட நிரை (பு.வெ.1,14) யாமே பகுத்திடல் வேண்டா வினநிரை தாமே தமரை யறிந்தனகொ - லேமுற வன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 770) இவற்றுள் முன்னையது கண்டோர் கூற்று; ஏனையது மறவர் கூற்று. உண்டாட்டு - நிரைகொண்டார் தாங்கொண்ட நிரையைப் பார்த்துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரை மீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும்; உதாரணம் : 58நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட பைங்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மி னொன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வருவ மென்னைக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே (புறம். 262) 59பகைவர் கொண்ட படுமணி யாய மீட்டிவட் டந்த வாட்டிறற் குரிசின் முழவுத் துயின்மறந்த மூதூ ராங்கண் விழவுத்தலைக்கொண்ட விளையாட் டாயத் தூன்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர் மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே கைவல் கம்மியர் பலகூட் டாரமொடு நெய்பிழி நறுவிரை நிலம்பரந் தன்றே காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப் பூவிலை மகளிர் புலம்படர்ந் தனரே சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய வாடுறு நறவின் சாடி தோறுங் கொள்வினை மாற்றாக் கொடையொடு கள்விலை யாட்டியுங் கைதூ வாளே. இவை கண்டோர் கூற்று. கொடை - தாங்கொண்ட நிரையை இரவலர்க்கு வரை யாது கொடுத்து மனமகிழ்தலும், நிரைமீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும்; உதாரணம் : இளமா வெயிற்றி யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள் 60கொல்லன் றுடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன. (சிலப். வேட்டுவவரி) கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு 61வரம்பில னென்றே மருண்டா னிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு. இவை கண்டோர் கூற்று. என ஈரேழ் வந்த வகையிற்றாகும் - என்று கூறப்பட்ட பதி னான்கும் மீட்டுமொருகால் விதந்த இரு கூற்றை யுடைத்தாகும் வெட்சித்திணை யென்றவாறு. எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று. இனித் துறையென முற்கூறினமையின், 62இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவே படும். அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் 63பூக்கோளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருக வென்றலும், அவர் வேந்தற்கு உரைத்தலும், அவர் படை யைக் கூஉய் அறிவித்தலும், படைச்செருக்கும், அதனைக் கண் டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும் பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங்கூறினார், அவர் பாக்கத்தே தங்கி விரிச்சி பெற்றுப் போதலின். அவற்றுட் சில வருமாறு:- கடிமனைச் சீறூர்க் கருங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லோட்டா 64னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை. இது படைத்தலைவர் படையாளரைக் கூறினது. வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலாற் றாள்வ லிளையவர் தாஞ்செல்லி - னாளைக் கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா னனைவது போலுநம் மூர். (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 753) இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது. 65வந்த நிரையி னிருப்பு மணியுட னெந்தலை நின்றலை யாந்தருது - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 754) இது தெய்வத்திற்குப் 66பராஅயது. பிறவும் வருவனவெல்லாம் இதனான் அடக்குக. இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன; பாக்கத் துச் சென்றுழி இருப்பு வகுத்தலும், பண்டத்தொடு 67வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விரிச்சி வேண்டாமென விலக்கிய வீரக் குறிப்பும், விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும் பிறவுமாம். உதாரணம் : 68நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ டெங்கோ னேயின னாதாலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. (தகடூர் யாத்திரை; புறத்திரட்டு 755) இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு. பிறவும் வந்துழிக் காண்க. அரசன் ஏவலாற்போந்தோரும் விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு. இனி வேய்க்குக் காரணங்களாவன: வேய்கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன. உதாரணம் : 69மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற் புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வே யுரைத்தார்க்கு நாம். என வரும். இனி, ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற்படுவன வந்துழிக் காண்க. 70இங்ஙனம் புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலினன்றே பாடல் சான்ற புலனெறி வழக்கம் (53) என்று அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும். இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க. (3) (இவையும் வெட்சித்திணையெனல்) 59. மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையு மத்திணைப் புறனே. இவையும் வெட்சித்திணையா மென்கின்றது. (இ - ள்.) மறங்கடைக்கூட்டிய துடிநிலை - போர்க்களத்து மறவரது மறத்தினைக் 71கடைக்கூட்டிய துடிநிலையும்; சிறந்த கொற்றவை நிலையும் - அத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அத்திணைப்புறனே - அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையா மென்றவாறு. 72நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலகமு மொத்திலங்க மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு. இஃது, இருவகை வெட்சிக்கும் பொது; நிரைகொண் டோர்க்கும் மீட்டோர்க்கும் துடிகொட்டிச் சேறலொத்தலின். அருமைத் தலைத்தரு மானிரையு ளையை யெருமைப் பலிகோ ளியைந்தா - ளரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று. இதனானே வருகின்ற வஞ்சித்திணைக்குங் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்கு கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடு வராதலின். இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:- நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில்கூர் 73வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின்வாய் வீழ்த்தான் றலை. இஃது உயிர்ப்பலி. இது பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை 74பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த தாளுழலை யாடுவோன் றான். இது, 75குருதிப்பலி. இது பொதுவகையான் 76இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. (4) (புறத்திணை வழுவேழு மிவையெனல்) 60. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளு முறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉ மாபெருந் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவ ரேத்திய வோடாக் கழனிலை யுளப்பட வோடா வுடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையு மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையு மாரம ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந் தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலு மனைக்குரி மரபினது கரந்தை யன்றியும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென் றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங் காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே. இது, முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்கு தற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக் கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை, வேத்தியலின் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும், புறத்திற் கெல்லாம் பொதுவாய் வருவனவு மாதலிற் பொதுவியலுமாயின. (இ - ள்.) வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன் - உயிர்க் கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையனாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்; செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலனென் றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறின மையிற் 77கணிக்காரியையுங் கொள். காந்தளை யுடைமையானும் பனந்தோடு உடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும் பான்மை; ஒழிந்தோர்ஆடுதல் சிறுபான்மை என்றுணர்க. உதாரணம் : 78அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடுங் - குமரன் முன் கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா ரேர்க்காடுங் காளை யிவன். இது, சிறப்பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று. வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது. உதாரணம் : அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங் கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்ல லிதுவென வறியா மறுவரற் பொழுதிற் 79படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவ ளிவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய்க் கூறக் களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா ளார நாற வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத் தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப வின்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனோ யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் 80குலந்தமை கண்டே. (அகம். 22) பனிவரை நிவந்த என்னும் அகப்பாட்டும் (98) அது. இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய காந்தள் அகத்திற்கு வந்தது, இது வேத்தியற் கூத்தன்றிக் 81கருங்கூத்தாதலின் வழுவுமாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாதலிற் பொதுவியலு மாயிற்று. வேலன் றைஇய வெறியயர் களனும் என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானேயாடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க. மாவரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர் - மாமுதலியன வற்றான் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்; உறு பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை வேம்பே ஆர் என மலைந்த பூவும் - அப்புகழ்தான் உறும்பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின பூவும்; இதன் கருத்து, 82ஏழகத்தரும் யானையும் நாயும் கோழியும் 83பூழும் 84வட்டும் 85வல்லுஞ் 86சொல்லும் முதலியவற்றான் தமக்கு வரும் வெற்றிப் புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் படைத்தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர் வென்றாரென்றதற்கு அவரவர் பூச் சூடி ஆடுவர் என்பதூஉம், அக்கூத்தும் வேத்தியற் கூத்தின் வழீஇயின கருங்கூத் தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்ப தூஉம் உணர்த்தியதாம். இதனை இங்ஙனந் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக் கூத்திற்கும் இடையே இதனை வைத்தது 87இக்கருத்தானே யென்றுணர்க. உ-ம் : 88ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுந் தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ போந்தையங் கண்ணி புனைந்து. இது, போந்தை மலைந்தாடியது. 89குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத லிறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று. இது, வேம்பு தலைமலைந்தாடியது. 90ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறைகெழு வாரணப்போர் செய்து. இஃது ஆர்மலைந்தாடியது இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க. வாடா வள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக் கூத்தும்; அஃது இழிந்தோர் காணுங் கூத்து. உதாரணம் : மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப் பிறமக ணோற்றாள் பெரிது இது, பெண்பாற்குப் பெருவரலிற்று. இதனைப் பிற் கூறினார், வெறியறி சிறப்பன்மையும் ஆண்பாற்கும் பெண் பாற்கும் பொதுவாதல்லது அகத்திணைக்கண் வந்து பொது வாகாமையும் பற்றி. வயவர் ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட - முன்பு கழல் கால் யாத்த வீரர் இளமைப் பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் கூத்து. ஓடாமையாற் கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல், இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத் துறைப் பகுதியாம். உதாரணம் : 91மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின் வாளாடு கூத்திவந் தாடினாள் - வாளாட்டின் மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப் பெண்ணாடின் யாதாம் பிற ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும் - 92பிறக்கடி யிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப் பட்ட உன்னநிலையும்; என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன், வேந்தற்கு நீ வென்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு 93பொதுளுக எனவும் பகைவேந்தற்கு ஆக்கம் உளதெனில் அக் கோடு படுவதாக எனவும் நிமித்தங் கோடலும், என 94விருவகைத் தெய்வத்தன்மை; அஃதுடை மையான் அடுக்கிய உன்ன நிலையுமென்றார். உதாரணம் : 95துயிலின் கூந்தற் றோளிணைப் பேதை வெயினிழ லொழிய வெஞ்சுரம் படர்ந்து செய்பொருட் டிறவீ ராகிய நும்வயி னெனக்கொன்று மொழியின ளாகத் தனக்கே யருநகை தோன்றிய வழுகுரற் கிளவியள் கலுழ்கண் கரந்தன டானே யினியே மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇத் தலைசாய்த் திருந்த சிலைவலம் போற்றி வேந்துவழக் கறுத்த கான நீந்த லொல்லுமோ பூந்தொடி யொழிந்தே. இதனுள், மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇ என்றது, வேந்தனைப் பரவுக்கடனாக அடுக்கிய உன்னநிலை. முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன் றுன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்று களங் கொள்ளுமேல் வேத்து. இவை மறவர் செய்தலின் தன்னுறு தொழிலாம். பொன்னன்ன பூவிற் சிறிய விலைப்புன்கா லுன்னத் தகையனெங் கோ. (பதிற்றுப்பத்து.61) என்பதும் அது. 96இரண்டுநிலையாற் பொதுவுமாயிற்று. மன்னவன் வெற் றியே கருதாது இங்ஙனம் 97இருநிலைமையுங் கருதலின் வழுவு மாயிற்று. 98மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவைநிலையு மென்றது; மாயோன் விழுப்புகழ் - மாயனுடைய காத்தற் புகழையும், மேயபெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் - ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தலென்னும் புகழ்களையும்; மன்பூவை நிலையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலையும்; என்றது ஒன்றனை ஒன்றுபோற் கூறுந்துறை. மன் எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனான் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க. உதாரணம் : 99ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங் கடல்வளர் புரிவளை புரையு மேனி யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளுங் கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுந ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலி னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு மரியவு முளவோ நினக்கே. என்பதன்கண் அங்ஙனம் உவமித்தவாறு காண்க. 100குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய் - மரம்பெறாப் போரிற் குருகுறங்கும் பூம்புன னீர்நாட மாற்பிற் கிடந்த மறு இது சோழனை மாயோனாகக் கூறிற்று. 101ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாரே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா மாற்றல்சால் வானவன் கண் (முத்தொள்ளாயிரம்) இது சேரனை அரனாகக் கூறிற்று. 102இந்திர னென்னி னிரண்டேக ணேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று இது சேரனைப் 103பல தேவராகக் கூறிற்று. கோவா மலையாரங் கோத்த.... (சில 17. உள் வரி) முந்நீ ருள்புக்கு மூவாக்........ (சில 17. உள்வரி) பொன்னிமையக் கோட்டுப் புலி... (சில 17. உள்வரி) என்பனவும் அவை. தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை ...... சிறுகுடி யோரே (கலி. 52) இஃது, உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று. தாவா என்றதனானே அரசர்புகழைக் காட்டு வாழ் வோர்க்குக் கூறுதலும், அவரை அரசர்பெயராற் கூறுதலுங் கொள்க. 104வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி னாங்க ணோக்கா தாங்கு நீபோ யரசு நுகம் பூண்ட பின்னர் நின்னிலை முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே யஃதான், றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே யதனா னதளுங் கோடு முதலிய கூட்டுண் டிகலி னிசைமேஎந் தோன்றிப் பலவா கியநில நீபெறு நாளே இது, முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக் கூறியும் புகழ்மிகுத்தது. பல்லிதழ் மென்மலர் என்னும் அகப்பாட்டினுள் (109) 105அறனில் வேந்த னாளும் வறனுறு குன்றம் பலவிலங் கினவே எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார். ஆர் அமர் ஓட்டலும் - குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங் காண்டலும்; உதாரணம் : 106பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம் வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே வேந்துடன் றெறிந்த வேலே யென்னை சாந்தா ரகல முளங்கழிந் தன்றே யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற லோச்சினன் றுரந்த காலை மற்றவன் புன்றலை மடப்பிடி நாணக் குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே (புறம். 308) இது சீறூர்மன்னன் வேந்தனைப் புறங்கண்டது. 107கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றி னாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே! யவனெம் மிறைவன் யாமவன் பாணர் நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் னிரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக் கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண் டீவதி லாள னென்னாது நீயும் வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக் கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச் சென்றுவாய் சிவந்துமேல் வருக சிறுகண் யானை வேந்துவிழு முறவே (புறம். 316) இது, மறவன் ஆரமரோட்டல் கூறியது. இவை தன்னுறுதொழில் கூறியன. ஆரமரோட்டலென்பது பொதுப்படக் கூறவே, வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க. உதாரணம் : 108வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப் புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை யுடையின் கரையிடை வாண்முள் ளுக நுண்கோற் செறித்த வம்பின் வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலந் தழீஇய வங்குடி சீறூர்க் குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த வெண்காழ் தாய வண்காற் பந்த ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப் பாணரொ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தற் குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே (புறம். 324) இது வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது. 109இணைப்படைத் தானை யரசோ டுறினுங் கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர் (கலி. 15) எனக் கலியகத்தும் வந்தது. வயங்குமணி பொருத என்னும் அகப்பாட்டினுள், 110சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந் ததர்கூட் டுண்ணு மணங்குடைப் பகழிக் கொடுவி லாடவர். (அகம். 167) எனச் சாத்தெறிதலும் அது - இங்ஙனம் பொதுவாதலிற் பொது வியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று. ஆ பெயர்த்துத் தருதலும். வெட்சிமறவர் கொண்ட நிரை யைக் குறுநிலமன்னராயினுங் காட்டகத்து வாழும் மறவ ராயினும் மீட்டுத் தருதலும்; உதாரணம் : 111ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே (புறம். 259) இது, குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது. 112வளரத் தொடினும் வவ்வுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோ ளுளருங் கூந்த னோக்கிக் களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண கேண்மதி யாணரது நிலையே புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந் தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டுங் கையுள போலுங் கடிதண் மையவே முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர் நெடுவெறி தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணை யாக வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லா னிரையொடு வந்த வுரைய னாகி யுரிகளை யரவின் மானத் தானே யரிதுசெ லுலகிற் சென்றன னுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கி விலக்கம் போல வம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே யுயரிசை வெறுப்பத் தோன்றிப் பெயரே மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி யிடம்பிறர் கொள்ளாச் சிறுநெறிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே (புறம். 260) இதனுள் தன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப் பட்ட நிலையைப் பாணர் 113கையற்றுக் கூறியது. இனிக் கண்டோரும் மறவரும் கூத்தரும் பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாம் கையற்றுக் கூறினும், அத்துறைப்பாற்படும். 114பெருங்களிற் றடியிற் றோன்று மொருக ணிரும்பறை யிரவல சேறி யாயிற் றொழாதனை கழிதலோம்புமதி வழாஅது வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புணற் சிறையின் விலங்கியோன் கல்லே (புறம். 263) இது, கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. விசும்புற நிவந்த என்னும் அகப்பாட்டும் (131) அது. இதனுள் மறவர் நாளா வுய்த்த என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற் கரந்தைக்கண்ணே கொள்க; இஃது 115ஏழற்கும் பொதுவாகலின். தருதல் என்ற மிகையானே நிலையல்லாத கோடலும் அத்துறைப்பாற்படும். வலஞ்சுரி மராஅத்து (83) என்னுங் களிற்றியானை நிரையுள், 116கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் றொழித்த வுவகையர் கலிசிறந்து கருங்கான் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணா ரழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர் நறவுநொடை நல்லிற் புதவுமுதற் பிணிக்குங் கல்லா விளையர் பெருமகன் புல்லி என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க. இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க. வேந்தன் சீர்சால் சிறப்பு எடுத்து உரைத்தலும். வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவர்க்கு உரியவாக அவன்றன் படையாளரும் பிறருங் கூறலும்; இதுவும் வழு; வேந்தர்க்குரிய புகழைப் பிறர்க்குக் கூறின மையின். 117அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக் காணிய சென்ற விரவன் மாக்கள் களிற்றொடு நெடுந்தேர் வேண்டினுங் கடல வுப்பொய் சாகாட் டுமணர் காட்டக் கழிமுரி குன்றத் தற்றே யெள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே (புறம். 313) இது படையாளர் கூற்று. இதற்கு முடியுடை வேந்தன் சிறப்பெடுத்துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகாதென்றுணர்க. தலைத்தாள் 118நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் - தன்னிடத் துளதாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்; உதாரணம் : 119தானால் விலங்காற் றனித்தாற் பிறன்வரைத்தால் யானை யெறித லிளிவரவால் - யானை யொருகை யுடைய தெறிவலோ யானு மிருகை சுமந்துவாழ் வேன் என வரும். 120பெருநீர் மேவற் றண்ணடை யெருமை யிருமருப் புறழு நெடுமா நெற்றின் பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக் கன்றுடை மரையா துஞ்சுஞ் சீறூர்க் கோளிவண் வேண்டேம் புரவே நாரரி நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறைநனி கெழீஇக் கம்பு ளீனுந் தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம். 297) மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன் னொடு புணர்த்தவாறு காண்க. சீறூர் புரவாகக் கொள்ளேன்; தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான். 121இதுவும் பொது - புறம். வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப்பட்ட 122பிள்ளைநிலையும். தன்மேல் வருங் கொடிப் படையினைத் தானே தாங்குதல், வாட்டொழிலிற் பொய்த்த லின்றி மாற்றோரைக் கொன்று தானும் வீழ்தலென இரண்டு கூறுபட்ட - போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண்மையும்; வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவரு மாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலிற் கரந்தை யாம்; தும்பையாகாதென்று உணர்க. உதாரணம் : 123ஏற்றெறிந்தார் தார்தாங்கி வேல்வருகென் றேவினாள் கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு காணா விளமையாற் கண்டிவனோ நின்றிலனேன் மாணாருள் யார்பிழைப்பார் மற்று இது வருதார் தாங்கல். 124ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல் வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே கேளா வழுதார் கிடந்து இது வாள்வாய்த்துக் கவிழ்தல். கெடுக சிந்தை கடிதிவ டுணிவே என்னும் (279) புறப் பாட்டும் இதன்பாற்படும். இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு. வாண்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளாற் பொருது உயர்ந்த அரசிளங்குமரனை அந்நாட்டிலுள்ளார் கொண்டு வந்து பறை தூங்கிசையாக ஒலிக்கும்படி அவற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும். இதுவும் நாட்டிலுள்ளார் கொடுத்தலிற் றன்னுறுதொழி லாய் வழுவுமாயிற்று. உதாரணம் : 125வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர என வரும். இதனைப் 126பிள்ளைத் தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு மென்ப. அனைக்குரி மரபிற் கரந்தையும் - ஆரமரோட்டல் முதலிய ஏழுதுறைக்கும் உரிய மரபினையுடைய கரந்தையும்; கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணைபோல ஒழுக்கமன்று. அந்தோ வெந்தை என்னும் புறப்பாட்டினுள், நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை விரகறி யாளர் மரபிற் சூட்டி நிரையிவட்டந்து (புறம். 261) என்றவாறு காண்க. அது அன்றி - அக்கரந்தையே அன்றி; காட்சி - கல்கெழு சுரத்திற்சென்று கற்காண்டலும், அது கொணர்ந்து செய்வன செய்து 127நாட்டிப், பின்னர்க் கற் காண்டலும் என இருவகையாம். உதாரணம் : தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை - யாழிசூழ் மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனெ னின் மாட்டோர் கல் இது கல் ஆராய்கின்றார் காட்சி. ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை யோங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீ போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் கல்லா யினையே கடுமான் றோன்றல் வானேறு புரையுநின் றாணிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க் கடும்பகட் டியானை வேந்த ரொடுங்கா வென்றியு நின்னொடு செலவே (புறம். 265) இது கோவலர் படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது. கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த வல்லான் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாந் தொட என்பதும் அது. 128கால்கோள் - கல்லுறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும், நாட்டிய பின்னர் அவன் 129ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இரு வகையாம்; உதாரணம் : வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் 130வரையறை செய்யிய வம்மோ - வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கு மோராற்றாற் செய்வ துடைத்து இது, வரையறை செய்யிய வம்மே என ஒருவனைத் தெய்வமாக நிறுத்துதற்கு இடங்கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக் 131கால்கோடலானுங் கால்கோள். 132காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி னாளை வரக்கடவ நாள் இது நட்டுக் கால் கொண்டது. 133இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லி னாட்பலி யூட்டி நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற் றரவுறை புற்றத் தற்றே நாளும் புரவலர் புன்க ணோக்கா திரவலர்க் கருகா தீயும் வண்மை யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே (புறம். 329) இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க. நீர்ப்படை - கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழி நீராட்டுதலு மென இருவகையாம்; உதாரணம் : 134வாளமர் வீழ்ந்த மறவோன்கல் லீர்த்தொழுக்கிக் கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்லேறு போலக் கழலோன்க னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று இது நீர்ப்படை. 135பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணீ ரருவியுங் கழீ இத் தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே. இது நாட்டி நீராட்டியது. நடுதல் - கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலு மென இருவகையாம்; உதாரணம் : 136சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து. இது கல் நாட்டியது. 137கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டு மகிழ்ந்து. இது மறவனை 138நாட்டியது. சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்படி பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாகி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம். உதாரணம் : 139கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது. இது பெயர் முதலியன பொறித்தது. அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்றுகொள் பல்லா னினமெல்லாங் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ 140பீடம் வகுத்து. இஃது, அதற்குச் சிறப்புப் படைத்தது. வாழ்த்தல் - கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வ மாக்கி வாழ்த்தலுமென இருவகையாம். உதாரணம் : ஆவாழ் குழுக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுக - லோவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று. இது கல்வாழ்த்து பெருங்களிற் றடியில் என்னும் (263) புறப்பாட்டில் தொழாதனை கழித லோம்புமதி என வாழ்த்தியவாறு காண்க. என்றிரு மூன்றுவகையிற் கல்லொடு புணர - என்று முன்னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற்கூடச் சொல்லப்பட்ட - இக்கூறப்பட்ட பொதுவியல்; எழு மூன்று துறைத்து. இருபத்தொரு துறையினையுடைத்து என்றவாறு. ஆரமரோட்டல் முதலிய எழுதுறைக்குரிய மரபினை யுடைய கரந்தையும், அக் கரந்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங் கூடக் காந்தளும் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்னநிலையும் பூவைநிலையும் உளப்பட இச்சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்தெனக் கூட்டுக. 141மாயோனிறம்போலும் பூவைப் பூ நிற 142மென்று பொருவுதல் பூவை நிலையென்றால், ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல் வேண்டும்; ஆசிரியர் அவை கூறாமையின், அது புலனெறிவழக்க மன்மை யுணர்க. இதனுட் கரந்தைப் பகுதி ஏழும் வேறு கூறினார், காட்டகத்து மறவர்க்குங் குறுநில மன்னர்க்கும் அரசன் படை யாளர் தாமே செய்தற்கும் உரிமையின். கற்பகுதி வேத்தியற் புறத் திணைக்கும் பொதுவாகலின் வேறு கூறினார். ஏனைய அகத் திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறு கூறினார். இனித் துறை யென்றதனான் ஒன்று பலவாம். அவை, கற்காணச் சேறலும், இடைப்புலத்துச் சொல்லுவனவுங், கண்டுழி யிரங்குவனவும், கையறுநிலையும், பாணர் கூத்தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர் தமக்குரைப்பனவும், போல்வன கற் காண்டலின் பகுதியாய் அடங்கும். கால் கொள்ளுங் காலத்து, மாலையும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும், அனையோற்கு இனைய கல்தகு மென்றலுந், தமர்பரிந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும். நீர்ப்படுக்குங்கால் 143ஈர்த்துக் கொண்டொழுக்கலும், ஏற்றிய 144சகடத்தினின்று இழிந்தவழி ஆர்த்தலும், அவர் தாயங் கூறலும், முதலியன நீர்ப்படையாய் அடங்கும். நடுதற்கண், மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித் தொடையலும் மாலையும் நாற்றிப் பல்லியம் இயம்ப விழவுச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும். பெயரும் பீடும் எழுதுங்காலும் இப்பகுதிகள் கொள்க. நாட்டப்படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச்சிறப்புக்களும் படைத்தல் பெரும் படைப்பகுதியாய் அடங்கும். வாழ்த்தற்கண்ணும் இதுதான் நெடிது வாழ்க வெனவும், இதன்கண்ணே அவனின்று நிலாவுக வெனவும், பிறவும் கூறுவனவு மெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும். ஏனைய வற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க. இனிப் பரலுடை மருங்கிற் பதுக்கை என்னும் (264) புறப்பாட்டினுள், அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித் தினிநட் டனரே கல்லும் (புறம். 264) எனக் கல்நாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக் கூறிற்றா லெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டுநாட்டோர் முறைமை யென்பது சீர்த்தகு சிறப்பின என்பதனாற் கொள்க. பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம். 131) என அகத்திற்கும் வருதலிற் பொதுவியலாயிற்று. இவை, ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின்கண் வருதலுஞ், சுட்டி யொருவர் பெயர் கோடலுங், கொள்ளாமையும் உடையவென்று உணர்க. இப்பொதுவியலின்பின் வஞ்சிவைத்தார், வஞ்சிக் கண்ணும் பொதுவியல் வருவனவுள என்றற்கு. அது வேந்து வினை முடித்தனன் என்னும் (104) அகப்பாட்டினுட் சுட்டியொருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (5) (வஞ்சி இன்னதன் புறமெனல்) 61. வஞ்சி தானே முல்லையது புறனே. இது, தம்முள் மாறுபாடு கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றோ னொருவன் ஒருவன் மேற்செல்லும் வஞ்சித்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனா மென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர் மேலொருவர் சேறலை. அதற்கு வஞ்சி சூடிச் சேறலும் உலகியல். (இ - ள்.) வஞ்சி தானே வஞ்சியெனப்பட்ட புறத்திணை; முல்லையது புறனே - முல்லை யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு. ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.. 145பாடாண்டிணைக்குப் பிரிதலின்மையிற் 145பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடுறையுலகமுங், கார் காலமும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக் கட்டலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்துமனைவயினிருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல் பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றொடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம் முதல் கருவுரியும் வந்தனவாம். முல்லைப் பாட்டினுள், 146கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட வீடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி. (முல்லை. 24- 28) என்பதனானுணர்க. (6) (வஞ்சித்திணை இன்ன பொருட்டெனல்) 62. எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்த னஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்திணை இன்ன பொருட்டென்கின்றது. (இ - ள்.) எஞ்சா மண் நசை - இருபெருவேந்தர்க்கும் 147இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலை சென்று - ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந் நாட்டிடத்தே சென்று; வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று - ஒரு வேந்தனை ஒருவேந்தன் கொற்றங்கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை என்றவாறு. ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம் மண்ணழியாமற் காத்தலுக்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சி வேந்த ராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பரா லெனின், காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் 148பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க. ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம். இங்ஙனம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறும் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலா மென்றுணர்க. (7) (வஞ்சி பதின்மூன்று துறைத்தெனல்) 63. இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானும் மடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானு மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் றாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையு மழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. இது, முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று துறைத் தென்கிறது. (இ - ள்.) இயங்கு படை அரவம் - இயங்குகின்ற இருபடை யெழுச்சியின் 149ஆர்ப்பரவமும்; உதாரணம் : 150விண்ணசைஇச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்த - னெண்ண மொருபாற் படர்தரக்கண் டொன்னார்த முள்ள மிருபாற் படுவ தெவன். (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு 774) சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் என்னும் புறப் பாட்டும் (31) அது. 151இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாட் கடிமரத்தாற் களிறணைத்து நெடுநீர துறைகலங்க மூழ்த்திறுத்த வியன்றானை யொடு புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற் செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் காரிடி யுருமி னுரறுபு முரசிற் கால்வழங் காரெயில் கருதிற் போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே. (பதிற்றுப் .33) இப் பதிற்றுப்பத்தும் அது. 152போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ பார்ப்புர வெண்ணான் கொல் பார்வேந்த - னூர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிய நீளிடைப் புல்லார்மேற் செல்லும் பொழுது. இஃது, எதிர்செல்வோன் படையரவம். எரிபரந்து எடுத்தல் - இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்; இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க. உதாரணம் : 153வினைமாட்சிய விரைபுரவியொடு மழையுருவின தோல்பரப்பி முனைமுருங்கத் தலைச் சென்றவர் விளைவயல் கவர் பூட்டி மனைமரம் விறகாகச் கடிதுறைநீர்க் களிறுபடீஇ யெல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பி றானை. (புறம். 16) எனவும், களிறு கடை இயதாட் கழலுரீ இய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையால் கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து (புறம். 7) என்னும் புறப்பாட்டினுள், எல்லையு மிரவு மெண்ணாய் பகைவ 154ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ள மேவலை யாகலின் எனவும் வரும். இவை 155கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட் பகுதி பலவுந்த துறையாய் வருதலின், எரிபரந்தெடுத்தற்கும் உதாரணமாயின. வயங்க லெய்திய பெருமையானும் - ஒருவர் ஒருவர் மேற்செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாய வழி அவர் விளக்கமுற்ற பெருமையும்; உ-ம் : மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பரிசினா - னாற்கடல்சூழ் மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோன் மேம்பட்டான் வேந்து என வரும். இஃது, இருவருக்கும் பொது. கொடுத்தல் எய்திய கொடைமையானும் - மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத்தலும், 156பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத் தொழிலும்; உதாரணம் : 157வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந் தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ - பாத்தி யுடைக்கலி மான்றே ருடனீந்தா னீந்த படைக்கலத்திற் சாலப் பல. என வரும். 158சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி யிரும்புட் பூச லோம்புமின் யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவெ னெம்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை சூட்டி யவன்றலை யொருகாழ் மாலை தான்மலைந் தனனே. (புறம்.291) என்பதும் அது. அடுத்து 159ஊர்ந்து அட்ட கொற்றத்தானும் - எடுத்துச் சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி அந்நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றமும்; உதாரணம் : நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் தோள்சுமந்த திருத்த லாற்றா ராள்வினைக் 160கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே என வரும். யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம் பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புலில்லை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின் பகைவர் நாடுங் கண்டுவந் திசினே கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர் (பதிற்று. 15) என்னும், பதிற்றுப்பத்தும் 161அழிவுகூறிய இடம் அப்பாற்படும். 162மாராயம் பெற்ற 163நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப்பெய்திய அதனாற் றானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக் கூற்றுச் சொல்லும்; சிறப்பாவன: ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படை வேண்டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது. உதாரணம் : 164போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றே - போர்க்கெல்லாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன். இது பிறர்கூறிய நெடுமொழி. 165துடி யெறியும் புலைய வெறிகோல் கொள்ளு மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கொண்டையின் வேல்பிறழினும் பொலம்புனை யோடை யண்ணல் யானை யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு மோடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மன்ற னன்று முயர்நிலை யுலகத்து நுகர்ப் வதனால் வம்ப வேந்தன் றானை யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே. (புறம் 287) இது, தண்ணடை பெறுகின்றது சிறிது; சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது. போர்க்களம் புக்கு நொடு மொழி கூறுலும் ஈண்டு அடக்குக. பொருளின்று உய்த்து பேராண் பக்கமும்- பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின 166பேராண்மை செய்யும் பகுதியும்; உதாரணம் : 167மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேறிரித் திட்டு நகுதலு நகுமே. (தகடூர் யாத்திரை) இஃது 168அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில் கிழார் கூறியது. 169பல்சான் றீரே பல்சான் றீரே குமரி மகளிர் கூந்தல் புரைய வமரி னிட்ட வருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே முரசுமுழங்க தானைநும் மரசு மோம்புமி னொளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமி னெனைநாட் டாங்குநும் போரே யனைநா ளெறியா ரெறிதல் யாவண தெறிந்தோ ரெதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனா லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே பலமென் றிகழ்த லோம்புமி னுதுக்கா ணிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி வெல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே. (புறம். 301) இதுவுமது. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும் - தன்படை நிலையற்றாது பெயர்ந்தவழி விசையொடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற் போலத் தன்மேல்வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்; உதாரணம் : 170கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித் தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யாடுப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கி - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும். (தகடூர்யாத்திரை. புறத்திரட்டு 881) இது பொன்முடியார் ஆங்கவனைக்கண்டு கூறியது. 171வேந்துடைத் தானை முனைகெட நெரிதர வேந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கிலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே (புறம். 330) என்பதும் அது. வருகதில் வல்லே என்னும் புறப்பாட்டும் (287) அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க. பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலையும் - வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்றுதானே போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதொரு முகமன் செய்தற்குப் 172பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின் பெருஞ்சோற்று நிலையும்; உதாரணம் : 173இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினை குருகிறை கொள்ளு மல்குறு கானலோங் கிருமண லடைகரைத் தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல விலங்குகதிர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற் படப்பை மென்பா லனவுங் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா னூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்குங் குன்றுதலை மணந்த புன்புல வைப்புங் கால மன்றியுங் கரும்பறுத் தொழியா தரிகா லவித்துப் பல்பூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாய முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப் பாலு மேன லுழவர் வரகுமீ திட்ட காண்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி யரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதக் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட்பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ குருமுநில னதிர்க்கங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்தேநின் றழங்குகுரன் முரசே (பதிற்று. 30) என வரும். துறை யெனவே கள்ளும் 174பாகும் முதலியனவும் அப்பாற் படும். 175வெள்ளைவெள் யாட்டுச் செச்சை போலத் தன்னோ ரன்ன விளைய ரிருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே. (புறம். 286) 176உண்டியின் முந்தா துடனுண்பான் றண்டேறன் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறமிக் குளிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடா தோர்ந்து என்பன கொள்க. வென்றோர் விளக்கமும் - அங்ஙனம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகைகண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியால் திறை கொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறலும்; உதாரணம் : 177அறாஅ யாண ரகன்கட் செறுவி னருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த செழுஞ்செந் நெல்லி னன்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தேற் றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகா அரி னுலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே யூரெரி கவர வுருத்தெழுந் துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த் தோன்ற லீயாத தம்பழி யூக்குநர் குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி லாரெயிற் றோட்டி வௌவினை யேற்றொடு கன்றுடை யாயந் தரீஇப்புகல் சிறந்து புலவுவி லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி றடா வைகற்பொழுது நினையூஉ வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கவப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற் பொருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி யுரவரு மடவரு மறிவு தெரிந் தெண்ணி யறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே (பதிற்று. 71) என வரும். இருங்கண் யானையோ டருங்கலந் தெறுத்துப் பணிந்துகுறை மொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே. (பதிற்று) இதுவும் அது. இவை பதிற்றுப்பத்து. தோற்றோர் தேய்வும் - அங்ஙனந் திறைகொடுத்தோரது 178குறைபாடு கூறுதலும்; உதாரணம் : 179வாஅன் மருப்பிற் களிற்றியானை நிரை மாமலையிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடிதுமுழங்கச் சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமுன்கைப் புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ வனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசை தொலையாக் கற்பநின் றெம்முனை யானே (பதிற்று. 80) என வரும். 180குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளையும் - வேந்தனது குறை யாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டும்; வள்ளை - உரற்பாட்டு - கொற்றவள்ளை தோற்ற கொற்றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர். உதாரணம் : 181வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத் தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமா னகையிலைவேல் காய்ந்தினார் நாடு (முத்தொள்ளாயிரம்: புறத்திரட்டு798) அழிபடை 182தட்டோர் 183தழிஞ்சியொடு தொகைஇ - அங்ஙனம் வென்றுந் தோற்றும் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்ட ழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியுந் தழுவிக்கோடலுடனே முற் கூறியவற்றைத் தொகுத்து; படைதட் டழிவோர் என்று மாறுக. தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று. பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின் என்றாற் போல. உதாரணம் : 184தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். (பெரும்பொருள் விளக்கம்; புறத்திரட்டு. 793) என வரும். 185வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமா யுருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப் புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ வாட்டோட் கொத்த வன்கட் காளை சுவன்மிசை யசைத்த கையன் முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாழ்துளி மறைப்ப நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரு வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே (நெடுநல்வாடை 176 - 188) இதுவுமது. கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே - மிகப் பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் என்றவாறு. வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தன வெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பென்றார். இனி, இயங்குபடையரவ மெனவே இயங்காத வின் 186ஞாணொலி முதலியனவும் கொள்க. 187இத்திணைக்கும் பொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப் படுத்தலுங் கொள்க. அவை: - கொற்றவை நிலையுங், குடைநாட் கொளும், வாணாட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரைகொண்டோர்க்கும் நிரை கொள்ளப் பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுதலிற் குடைநாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறாராயினார். அவை உழிஞைக்குக் கூறுப, அதற்கு இன்றியமையாமையின். இனித் துணைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய பாசறை நிலை கூறலும், 188அவர் வேற்றுப்புலத்திருத்தலின் ஆண்டு வாழ்வோர் பூசலிழைத்து இரிந்தோடப் புக்கிருந்த நல்லிசை வஞ்சி முதலியனவும் வயங்கலெய்திய பெருமைப் பாற்படும். துணைவேண்டாச் செருவென்றி (புறம். 160) நாடக வழக்கும்; துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும் (46) என்னும் புறப்பாட்டும் வள்ளியோர்ப் படர்ந்து (47) என்னும் புறப்பாட்டும் முதலியன துணைவஞ்சி 189என்பார்க்கு அவை மேற்செலவின் கண் அடங்காமையிற் பாடாண்டிணை யெனப்படுமென் றுரைக்க. இனி, மேற்செல்வான் மீண்டுவந்து பரிசில் தருமென்றல் வேத்தியலன்றாகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற்றொடு கூறினார். இனிக் 190கடிமரந் தடிதலும் களிறும் மாவும் துறைப் படிவன வற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின்பாற்படும். அவை கருவூரிடைச் சேரமான் யானையை யெறிந்தாற் போல்வன. இனிப் புண்பட்டோரை முன்னர்ச்செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வன போல்வனவுந் தழிஞ்சிப் பாற்படும். இதனை முதுமொழிவஞ்சி என்பர். ஆண்டுக் கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை அழிகுநர் புறக்கொடை அயில்வா ளோச்சாக் கழிதறு கண்மை (பு. வெ. வஞ்சி. 20) எனின், அஃது ஒருவன்றாங்கிய பெருமைப்பாற்படு மென் றுணர்க. இச் சூத்திரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். 191இது செவ் வெண் உம்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது. இனி, ஏனையவற்றிற்கும் ஆன் உருபு கொடுத்து அதற்கேற் பப் பொருள் கூறலும் ஒன்று. (8) (உழிஞை இன்னதன் புறமெனல்) 64. உழிஞை தானே மருதத்துப் புறனே. இஃது உழிஞைத்திணை அகத்திணையுள் மருதத்திற்குப் புறனாமென்கின்றது. (இ - ள்.) உழிஞை தானே - உழிஞை யென்று கூறப்பட்ட புறத் திணை; மருதத்துப்புறனே - மருதமென்று கூறப்பட்ட அகத் திணைக்குப் புறனாம் என்றவாறு. இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர் செலற் காற்றாது போய் மதிலகத் திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்த தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானுஞ், சிறுபொழு தினும் விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. மருதநிலத்து மதிலாதல், அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி (மதுரைக் காஞ்சி 149) யெனப் பாட்டிற் கூறியவாற்றானும், பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற் றுணங்குல னாழியிற் றோன்று மோரெயின் மன்னன் (புறம் 338) என்றதனானும், கொளற் கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார் நிலைக்கெளிதா நீர தரண் (திருக்குறள்: அரண். 5) என்றதனானு முணர்க. மற்று எதிர்சென்றானை வஞ்சி வேந்தன் என்னுமெனின், 192அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றிறுப்ப ரென்றலின் வஞ்சியாகாதாயிற்று. (9) (உழிஞையின் பொது இலக்கணம் இதுவெனல்) 65. முழுமுத லரண முற்றலுங் கோடலு மனைநெறி மரபிற் றாகு மென்ப. இது, மேற்கூறிய உழிஞைத் திணையது பொது விலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) முழுமுதல் அரணம் - வேற்றுவேந்தன் குலத்துக் கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, முற்றலும் கோடலும் - சென்ற வேந்தன் வளைத்தலும், இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப - இரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ் வுழிஞைத் திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு. முழு அரணாவது: மலையுங் காடும் நீருமல்லாத 193அகநாட்டுச் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு புறஞ் சூழ்ந்து அதனுள்ளே 194இடங்கர் முதலியன உள்ளுடைத்தா கிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, 195யவனர் இயற்றிய பல 196பொறிகளும் ஏனைய பொறிகளும் 197பதணமும் 198ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, 199எழுவுஞ் சீப்பும் முதலியவற்றான் வழுவின்ற மைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம். இனி, மலையரணும் நிலவரணுஞ், சென்று சூழ்ந்து நேர்த லில்லாத 200ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல் 201அடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவாம். இனிக் காட்டர ணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன யாவும் 202அமைந்தன வாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந்தழித்தலும் கலியூழிதோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இது வஞ்சமுடைத்தாயிற்று. சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடிபிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படையிழந் தோனையும் ஒத்த படை யெடாதோனையும் பிறவும் இத்தன்மை யுடை யோரையுங் கொல்லாது விடுதலுங், 203கூறிப் பொருதலும் முதலியனவாம். இனி, ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10) (உழிஞை எட்டுத் துறைத்தெனல்) 66. அதுவே தானு மிருநால் வகைத்தே. இது, முற்கூறிய முற்றலுங் கோடலும் 204ஒருவன் தொழிலன் றென்பதூஉம், முற்கூறியதுபோல ஒருதுறை இருவர்க்கு முரியவா காது, 205ஒருவர்க்கு நான்கு நான்காக எட்டா மென்பதூஉங் கூறுகின்றது. (இ - ள்.) அதுவே தானும் - அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால்வகைத்து. மதில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத்தோன்கூறு நான்குமென எட்டு வகைத்து என்றவாறு அது மேற்கூறுப. (11) (உழிஞையின் எட்டுத்துறையு மிவையெனல்) 67. 206கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும் அகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ ணணங்கிய பக்கமுந் திறப்பட வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர் வருபகை பேணா ராரெயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. இது முற்கூறிய நாலிரு துறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ - ள்.) கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் - பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும் தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள்ளாரென்ப. உதாரணம் : 207மாற்றுப் புலந்தோறு மண்டில மாக்கள்செல வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லொன்னா ருடையன தாம்பெற் றுவந்து. (பெரும்பொருள் விளக்கம்; புறத்திரட்டு 791) கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டினுள், ........... ........... .......... ......... ஒன்னா ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய் (புறம் 203) என்பதும் அது. ஆனாவீகை யடுபோர் (42) என்னும் புறப்பாட்டும் அது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் - அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும் வேற் வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலும்; உதாரணம் : 208மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந் தெழுவாளா னேற்றுண்ட தெல்லா - மிழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட மிகை. (தகடூர்யாத்திரை; புறத்திரட்டு - எயில்காத்தல்) என வரும். மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலின் (பட்டின. 271 - 273) என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக்கூறலின். அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்ல னரஞ்செய் யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழுந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங் கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப வாங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே (புறம். 36) இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன் சிறப்பு எடுத் துரைத்தது. 209வயலைக் கொடியின் வாடிய மருங்கு லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா னெல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே யேணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனவே (புறம். 305) இது, தூதருரை கேட்ட அகத்துழிஞையோன்திறங் கண் டோர் கூறியது. தொல் எயிற்கு இவர்தலும் - ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்; உதாரணம் : 210இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப் பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா - லெற்றாங்கொ லாறாத வெம்பசித்தீ யாற வுயிர்பருகி மாறா மறலி வயிறு (புறத்திரட்டு 847) என வரும். 211மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகர்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை யிரும்பொறை பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே. (தகடூர் யாத்திரை) இப் பொன்முடியார் பாட்டும் அது. 212இதனாற் பூச்சுடுதல் பெற்றாம். தோலின் பெருக்கமும் - அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் 213கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டு சேறலும்; உதாரணம் : 214இருசுட ரியங்காப் பெருமூ திலங்கை நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை யெண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற் பச்சை போர்த்த பல்புறத் தண்டை யெச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற் கடல்சூ ழரணம் போன்ற துடல்சின வேந்தன் முற்றிய வூரே (ஆசிரியமாலை: புறத்திரட்டு 852) என வரும். நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி யின்று நாம் வைக லிழிவாகும் - வென்றொளிரும் 215பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து (பு. வெ. உழிஞை. 12) அரணத்தோர் 216தத்தம் பதணத்து நிற்றலிற் றோல் கூறிற்றிலர். இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க. அகத்தோன் செல்வமும் - அகத்து உழிஞையோன் குறை வில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்; அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் 217ஏமப் பொருள் மேம்படு பண்டங்களும் முதலியனவாம். உதாரணம் : பொருசின மாறாப் புலிப்போத் துறையு மருவரை கண்டார்போ லஞ்சி - யொருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் றேர்வேந்த னெல்லார்க்கு மெல்லாங் கொடுத்து (தகடூர்யாத்திரை: புறத்திரட்டு 857) என வரும். அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினு முழவரு ழாதன நான்குபய னுடைத்தே யொன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே, நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றதன் மலையே வானத்து மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவனது கொள்ளு மாறே சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்பட வாடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே (புறம். 109) என்னும் புறப்பாட்டும் அது. 218அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - மாறு பட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த்தொழிலான் வருத்திய 219கூற்றும்; உதாரணம் : கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னா ளினியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்க ணாடவ குருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே யுருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சியங்க வூர்கொள் குவமே. (தகடூர்யாத்திரை) இது சேரமான், 220பொன்முடியாரையும் அரிசில் கிழாரை யும் நோக்கித் தன்படைபட்ட தன்மைகூறக் கேட்டோற்கு, அவர் கூறியது. திறப்பட ஒரு தான் மண்டிய 221குறுமையும் - அகத்திருந் தோன் தன்னரணரழிவு தோன்றிய வழிப் புறத்துப் போர் செய்யுஞ் சிறுமையும்; உதாரணம் : வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலிற் றமியன் வந்த மூதி லாள னருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த வொருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக் கிரிந்(தே) தானை பெயர்புற நகுமே (புறம். 284) என வரும். உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட - புறத்தோன் அகத்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத லகப்பட; உதாரணம் : மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யி னுராஅய்ப் பகைவர் பைந்தலை யுரைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்ட றகாது வேந்துறை யரனே. (தகடூர்யாத்திரை) இஃது, அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் 222செல்வத்துள் அடங்காதாயிற்று. இது, பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது. சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே - 223மேலிரு நால்வகைத் தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத் திணை என்றவாறு. முற்கூறிய தொகையேயன்றி ஈண்டுந் தொகை கூறினார். அந்நாலிரண்டுமேயன்றி அவைபோல்வனவும் நாலிரண்டு துறைதோன்று மென்றற்கு. அவை புறத்து வேந்தன் தன் துணை யாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையா யினும் ஏவி அகத்து வேந்தர்த் துணையாகிய அரசனது முழு முதலரண் முற்றலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்த விடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம். உதாரணம் முற்காட்டியவே; வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்கரவ (புறம். 8) முதலியன வும் அதிகாரத்தாற் கொள்க. அது, 224இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்விட் டனவே முரசங்கண் ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப நெடுமதி னிரைஞாயிற் கடிமிளைக் குண்டு கிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ யொல்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே (பதிற்றுப்பத்து) என வரும். இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் 225பலவுங் கூறுவாருளராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டிவாறு செய்வன வாகலின் தமிழ் கூறு நல்லுலகத் தன (தொல். பாயிரம்) அல்லவென மறுக்க. இனி முரசழிஞை 226வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டு மென மறுக்க. இனி, 227ஆரெயிலுழிஞை முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும். இனி, இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற் படுத்திக் கொள்க. (12) (உழிஞை வேந்த ரிருவர்க்கும் பொதுவான துறைகள் இவையெனல்) 68. குடையும் வாளு நாள்கோ ளன்றி மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றம ரொழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானு நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன் றூர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனு மகமிசைக் கிவர்ந்தோன் பக்கமு மிகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும் வென்ற வாளின் மண்ணோ டொன்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. இஃது, எய்தாத தெய்துவித்தது; உழிஞைத்திணையுள் இரு பெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின். (இ - ள்.) குடையும் வாளும் நாள்கோள் அன்றி - தன் ஆக்கங் கருதி குடிபுறங்காத்து ஓம்பற்கெடுத்த குடைநாட் கொள்ளுதலும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட் கொள்ளுதலும் அன்றி; புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளு மென்க, தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையெனப் படாதாகலின். அகத்தோனும் முற்று விடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித் தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாள்கொளலாவது 228நாளும் ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக் காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு 229இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னர்ச் செல்லவிடுதல். உதாரணம் : பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி யிகலரணத் துள்ளவ ரெல்லா - மகநலிய 230விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண். (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - எயில்கோடல்) இது, புறத்தோன் குடை நாட்கோள். குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - 231வொன்றார் விளங்குருவப் பல்குடை விண்மீன்போற் றோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து (தகடூர்யாத்திரை. புறத்திரட்டு - எயில்காத்தல்) இஃது, அகத்தோன் குடை நாட்கோள். 232தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி யழுது விழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைந்து (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - எயில்கோடல்) இது, புறத்தோன் வாணாட்கோள். முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - புற்றிழிந்த நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - எயில்கோடல்) இஃது, அகத்தோன்வாணாட்கோள். மடையமை ஏணிமிசை மயக்கம் - மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத் தோரும் போர் செய்தலும்; உதாரணம் : சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு மேணி தவிரப்பாய்ந் தேறவும் - 233பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு இது, புறத்தோர் ஏணிமயக்கம். 234இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயி லெவனாங்கொன் மற்று இஃது, அகத்தோர் ஏணிமயக்கம். இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க. உதாரணம் : பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரு மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும் (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - எயில்கோடல்) 235கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் - புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புற மதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன் படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு, உள்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும்; அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாகப், புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினை முதிர்ச்சியும்; உதாரணம் : 236கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான் மூதூர் வரைப்பு இது புறத்தோன் முற்றிய முதிர்வு. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன 237கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து இஃது, அகத்தோன் முற்றிய முதிர்வு. அன்றி முற்றிய அகத்தோன் 238வீழ்ந்த நொச்சியும். புற மதிலிலன்றி உள்மதிற்கட் புறத்தோனான் முற்றப்பட்ட அகத் தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திலிருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்; நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க: அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்கு மாயிற்று. இக்கருத்தானே 239நொச்சி வேலித்தித்த னுறந்தை (அகம். 122) என்றார் சான்றோரும். உதாரணம் : இருகன்றி னொன்றிழந்த வீற்றாப்போற் சீறி யொருதன் பதிகற் றொழியப் புரிசையின் 240வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று இஃது, அகத்துழிஞையோன் எயிற்காத்த நொச்சி. தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் 241விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - எயில்கோடல்) இது, புறத்தோன் 242மனங்காத்த நொச்சி. 243மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சி போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த காத னன்மர நீமற் றிசினே கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த தொடியணி மகளி ரல்குலுங் கிடத்திக் காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலி னூர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே (புறம். 272) இது, சூடின நொச்சியைப் புகழ்ந்தது. மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடை மதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கொண்ட புதுக் கொளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ் விடத்தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக் கொண்ட புதுக்கோளும்; பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர் கூறினார். உதாரணம் : வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா லஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின 244வான்றோ ரடக்கம்போ லாங்கு (பெ. பொ. விளக்கம்: புறத்திரட்டு - எயில்கோடல்) இது, புறத்தோன் வீழ்ந்த புதுமை. 245தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத் தூக்க முடையோ ரொடுங்கியுங் - கார்க்க ணிடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா ரடிபிறக் கீடு மரிது (தகடூர்யாத்திரை; புறத்திரட்டு - எயில்காத்தல்) இஃது, அகத்தோன் வீழ்ந்த புதுமை. நீர்ச் 246செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத்தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும்; பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி யென்றார். உதாரணம் : 247பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று இஃது, இருவருக்கும் ஒக்கும். வேறு வேறு வருமெனினுங் காண்க. அதா அன்று ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும். பாசி யென்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். உதாரணம் : மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு இது, புறத்தோன் பாசிமறம். 248தாந்தங் கடை தொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு மதுக்கமழுந் தார்மன்னற் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று இஃது, அகத்தோன் பாசிமறம். அகமிசைக்கு 249இவர்ந்தோன் பக்கமும் - புறஞ்சேரி மதிலும் ஊரமர் மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறி நின்று போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்; உதாரணம் : வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் 250கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து இது, புறத்தோன் அகமிசைக் கிவர்தல். புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவ னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் 251கூடாத போரெயின்மேல் வாழவுணர் போன்று இஃது, அகத்தோன் அகமிசைக்கிவர்தல். இகன் 252மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் - அங்ஙனம் இகல் செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்; உதாரணம் : மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் 253கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து இது, புறத்தோன் மண்ணு மங்கலம். வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர் இஃது, அகத்தோன் மண்ணு மங்கலம். வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்றவாளி னைக் கொற்றவை மேனிறுத்தி நீராட்டுதலோடே கூட. உதாரணம் : 254செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொன்-முற்றியோன் பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு இது, புறத்தோன் வாண்மங்கலம். 255வருபெரு வேந்தற்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூ ரீந்தா - ளொருவன்வா ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா ளவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு இஃது, அகத்தோன் வாண்மங்கலம். ஒன்றென முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண்ணுதல் கொள்க. 256பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே யிரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூட்டி யின்குர லிரும்பை யாழெடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லு மாஅங், கிருங்கடற் றாணை வேந்தர் பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே (புறம். 332) தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ - அவ் வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக் கடற்கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையொடு முற் கூறியவற்றைத் தொகுத்து; உதாரணம் : 257கதிர்குருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர்சுருக்கி யேந்தெயில்ப ழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு இது, புறத்தோன் தொகை நிலை. 258தலைவன் மதில் சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா னுண்டற்ற சோற்றா ரொழிந்து இஃது, அகத்தோன் தொகைநிலை. வகைநால் மூன்றே துறை என மொழிப - அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்த பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முற்றலையுங் கோடலையும் இருவகையென்றார். துறை யென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும் அத்துறைப் பாற் படுத்துக. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும், அவர் அரசர்க்கு உரைப்பனவுங் குடைச்சிறப்புக் கூறுவனவும், முரசு முதலியன நாட்கோடலும், பிறவுங் குடைநாட் கோடாலாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொது வாகலின் முற்கூறி, மேற் வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற் கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார். எயிலுட் பொருதலும், புட்போல உட்பாய்தலும், ஆண்டுப் பட்டோர் 259துறக்கம் புகுதலும், பிறவும் பாசிமறத்தின்பாற் படும். 260ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற் படும். 261படிவம் முதலியன கோடல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின் பாற்படும். புறத்தோன் இருப்பிற் றொகைநிலைப் பாற்படும். துறையென மொழிப என எல்லாவற்றையுந் துறை யென்று கூறுகின்றவர் தொகைநிலை யென்னுந் துறையெனத் தொகைநிலையை விதந்தோதினார். அது பலவாகாது இரண்டு துறைப்பட்டு வேறு வேறு துறையாம் என்றற்கு. அது தும்பைத் தொகைநிலைபோல் இருபெரு வேந்தரும் உடன் வீழ்தலுஞ் சிறுபான்மை உளதாமென் றுணர்க. எதிர்செல்லா தடைத்திருந்தோன் புறப்பட்டுப் படுதல் சிறு பான்மையாதலின், இதனையும் வேறொரு துறையாக்கிப் பதின் மூன்றென்னராயினார். உதாரணம் : 262அறத்துறைபோ லாரெயில் வேட்டவரசர் மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க ளொன்றி வரப்பகல்வா யொக்க வொறிதேய்த்தாங் கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து இது, வேறு வேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதனானே புறத்தோன் 263கவடிவித்துதலுந் தொகை நிலைப் பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க. அது, மதியேர் வெண்குடை என்னும் (392) புறப்பாட்டி னுள், வெள்ளை வரகுங் கொள்ளும் விந்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா ளின்றென னாக என வரும். ஒன்ற வென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறுபான்மை என்று கொள்க. இனி, மகண்மறுத்தோன் மதிலை முற்றுதன் மகட்பாற் காஞ்சிக்கண் அடங்கும். யானையுங் குதிரையுங் மதிற்போர்க்குச் சிறந்தன அன்மையிற் கொள்ளராயினர். 264ஈ ரடி யிகந்து பிறக்கடி யிடுதலுங்கேடு என்று உணர்க. (13) (தும்பை இன்னதன் புறமெனல்) 69. தும்பை தானே நெய்தலது புறனே. இது, தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. இதுவும் 265மைந்து பொருளாகப் பொருத லின் மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிலிடை யீடாகப் பொரும் உழிஞைக்கும்பிற் கூறினார். (இ - ள்.) தும்பைதானே நெய்தலது புறனே - தும்பை யென்னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாகும் என்றவாறு. தும்பையென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற் குரிய பெருமணலுலகம் போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத 266களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், 267ஏற்பாடு போர்த் தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறுபோலக் கணவனை இழந்தார்க் கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப வாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குப வாகலானும் பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று. (14) (தும்பையின் பொது இலக்கண மிதுவெனல்) 70. மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. இஃது, அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) மைந்து பொருளாக வந்த வேந்தனை - தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை; சென்று தலையழிக்குஞ் சிறப்பிற் றென்ப - அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தே தான் பெறு பொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க் குஞ் சிறப்பினை யுடைத்து அத் தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. 268வரல் செலவாதல் செலவினும் வரவினும் (தொல். சொல். கிளவி. 28) என்பதன் பொதுவிதியாற் கொள்க. மைந்து பொரு ளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக. அஃது இருவர்க்கும் ஒத்தலின்; எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று. இது, வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் 269ஏனை யோர்க்குங் கொள்க. அவரும் அதற்குரியராதலின். இதனைச் சிறப்பிற்றென்றதனான் அறத்திற்றிரிந்து வஞ்சனையாற் கொல்வனவும் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவும், கடையூழிக் கட்டோன்றிய ஆதலிற் சிறப்பில வாம். அவையுஞ் சிறுபான்மை கொள்க. (15) (தும்பைக்குரிய சிறப்புவிதி இதுவெனல்) 71. கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற் சென்ற வுயிரி னின்ற யாக்கை யிருநிலந் தீண்டா வருநிலை வகையோ டிருபாற் பட்ட வொருசிறப் பின்றே. இது, தும்பைக்காகவதோர் இலக்கணங் கூறுதலின் எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ - ள்.) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் - பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பானெய்தும் வேல்கொண்டேறிந்தும் போர்செய்ய, அவ் வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின்; சென்ற உயிரின் நின்ற யாக்கை. சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருநிலந் தீண்டா யாக்கை அருநிலை வகையோடு - வாளுந் திகிரியு முதலியவற்றான் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரு நிலையுடைத் தாகிய கூறுபாட்டோடே கூடி; இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று. இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத்திணை என்றவாறு. எனவே, முற்கூறிய மைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினார். இது திணைச் சிறப்புக் கூறியது. மொய்த்தலி னென்றது. யாக்கை யற்றாட வேண்டுதலிற், கணையும் வேலுமன்றி வாள் முதலியனவும் ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறு போல், அலீகன்இற அற்றுழியும் உடம் பாடுதலின், அட்டையாட லெனவும் இதனைக் கூறுப. இனி, மேற்றுறை கூறுகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே எண்றுணர்க. நிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரைகொண்டானுங் களங் குறித்துப் போர் செய்தலும் வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சி யுள்ளும் 270விழுப்புண் பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். முற்றப் பட்டோனை முற்று விடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி. அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன் களங்குறித் துழிப் புறத்தோனும் களங் குறித்துப் போர்செய்யக் கருதுதலும் உழிஞைப் புறத்துத் தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோட லுமின்றி மைந்து பொருளாகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று. மேற்காட்டுந் துறைகளெல்லாம் 271இச்சூத்திரத்துக்கூறிய இரண்டற்கு மன்றி, பொருளாயதற்கேயா மென்றுணர்க உதாரணம்:- 272நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம். 297) எய்போற் கிடந்தா னென்னேறு (பு. வெ. 176) என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன. கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கை யாயிற்று. 273வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற்பல. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - அமர்) இது, வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை. பருதிவேன் மள்ளர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணெமதோ மண்ணெமதோ வென்று. இஃது, உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை. 274இது, 275திணைக்கெல்லாம் பொதுவன்மையிற் றிணை யெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் துறை யெனவும்படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதா மென்றுணர்க. (16) (தும்பைத் துறை இத்துணைத் தெனல்) 72. தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையும் வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி யொருவன் தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியு மிருவர் தலைவர் தபுதிப் பக்கமு மொருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய வெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளு மேமத் தானுங் களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் வாள்வாய்த் திருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமு மொருவரு மொழியாத் தொகைநிலைக் கண்ணுஞ் செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ யொருவன் மண்டிய நல்லிசை நிலையும் பல்படை யொருவற் குடைதலின் மற்றவ னொள்வாள் வீசிய நூழிலு முளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. இது, மைந்து பொருளாகிய தும்பைத் திணைக்குத் துறை இனைத்தென்கிறது. (இ - ள்.) தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும் - தானைநிலை யானைநிலை குதிரை நிலை என்று சொல்லப்பட்ட போர்செய்தற்கு ஆற்றா அரசர் தலை பனிக்கும் மூன்று கூறுபாட்டின்கண்ணும்; 276நோனார் உட்குவரெனவே 277நோன்றார் உட்காது நிற்பாராயிற்று. 278அவர் போர்கண்டு சிறப்புச் செய்யுந் தேவரும் பிணந்தின் பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவி யருங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரும் என்று கொள்க. துறக்கம்புகு வேட்கையுடைமையிற் காலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைக் கூறி, மதஞ்சிறவாமையிற் கதஞ்சிறவாத குதிரையை அதன்பிறகு கூறினார். குதிரையானன்றித் தேர் தானே செல்லாமை யிற் றேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார். நிலையென்னாது வகை என்றதனான் அம் மூன்று நிலை யுந் தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனேவலிற் றானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரே வலிற் பொருதலும், படையாளர் ஒருவரொருவர் நிலை கூறலும் அவர்க்கு உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க. இனி, இவை தாமே கறுவுகொண்டு பொருவுழித் தானை மறம் யானைமறங் குதிரைமறமென்று வெவ்வேறு பெயர்பெறு மெனக் கொள்க. இனித் தாயர் கூறுவன 279மூதின் முல்லையாம்; மனைவியர் கூறுவன இல்லாண்முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண் முல்லையாம்; பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க. இவை கூறி ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார். மனஞெகிழ்ந்து 280போவாரு முளர். அவை ஓரொரு துறையாக முதனூற்கண் வழங்காமையானும் அவற்றிற்கு வரையறை யின்மையானும். இவர்தானை நிலையென அடக்கினார். இச் சிறப்பான் 281இதனை முற்கூறினார். அத் தானை சூடிய பூக்கூறலும், அதனெ ழுச்சியும், அரவமும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக் கண்டு இடை நின்றோர் போரை விலக்கலும் அவர் அதற்குடம் படாமைப் போர் துணிதலும், அத்தானையுள் ஒன்றற் கிரங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் சுற்றத்தாரையுந் துணை வந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் எனை நாட்டு என்றலும், இருபெரு வேந்தரும் இன்னவாறு பொருதுமென்று கையறிதலும் போல்வனவெல்லாம் இத்துறைப் பாற்படும். உதாரணம் : 282கார்கருதி நின்றதிருங் கெளவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான் றுகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து (பு. வெ. தும்பை. 1) இது, பூக் கூறியது. இதனைத் திணைப்பாட்டுமென்ப. 283வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண் ணடையுங் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு. (பு. வெ. தும்பை. 2) இது சிறப்புச் செய்தது, 284வயிர்மேல் வளைநரல வைவேலும் வாளுஞ் செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - யுயிர்மேற் பலகழியு மேனும் பரிமான்றேர் மன்னர்க் குலகழியு மோர்த்துச் செயின் (பு. வெ. தும்பை. 4) இது, விலக்கவும் போர் துணிந்தது. 285மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி - னென்னாங்கொ லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப் பாழித்தோண் மன்னர் படை (பு. வெ. தும்பை. 5) இஃது, இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது. 286கங்கை சிறுவனுங் காய்கதிரோன் செம்மலு மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம். இது, பெருந்தேவனார் பாட்டு. (பாரதம் புறத்திரட்டு. அமர் 10) குருக்கள் தமக்குப் படைத்தலைவரை வகுத்தது. இனிப் போர்த்தொழிலாற் றானைநிலை வருமாறு : 287குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம் விழாக்களம் போல மெய்ம்மலி யுவகைய ராண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலி னழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரு நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத் தாக்கிய விசையிற் சிதர்ந்துநிலம் படுநருந் தகருந் தகருந் தாக்கிய தாக்கின் முகமுகஞ் சிதர முட்டு வோரு முட்டியின் முறைமுறை குத்து வோருங் கட்டிய கையொடு காறட் குநருங் கிட்டினர் கையிற் றொட்டுநிற் போருஞ் சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ் சக்கரம் கோலச் சங்குவிட் டெறிநருஞ் சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரு மல்லிற் பிடித்தும் வில்லி னெற்றியு மூக்கியு முரப்பியு நோக்கியு நுவன்றும் போக்கியும் புழுங்கியு நாக்கடை கல்வியு மெயிறுடன் றிருகியுங் கயிறுபல வீசியு மினைய செய்தியின் முனைமயங் குநரும் பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையு மரசறி பெருமையு முரைசெல் லாண்மையு முடையோ ராகிய படைகொண் மாக்கள் சென்றுபுகு முலக மொன்றே யாதலி னொன்றுபடு மனத்தொடு கொன்றுகொன் றுவப்பச் செஞ்சோற்று விலையுந் தீர்ந்துதம் மனைவியர் தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும் புதுவது வந்த மகளிர்க்கு வதுவை 288சூட்டிய வான்படர்ந் தோரே. (புறத்திரட்டு. அமர். 10) சென்ற வுயிர்போலத் தோன்றா துடல்சிதைந்தோ னின்ற வடி289பெயரா நின்றவை - மன்ற லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த 290மரவடியே போன்றன வந்து 291வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக் கண்கூடி றுத்த கடன்மருள் பாசறைக் குமரிப் படைதழீஇக் கூற்றுவினை யாடவர் தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத் திறையும் பெயருந் தோற்றி நுமரு ணாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப் போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரு மரவுமிழ் மணியிற் குறுகார் நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே. (புறம். 294) கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (குறள். படைச். 4) 292நறுவிரை துறந்த நரைவெண் கூந்த லிரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறா அன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே. (புறம். 276) 293தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துதவினா னாகுமாற் பிற்பிற் பலர்புகழ் செல்வந் தருமாற் பலர்தொழ வானக வாழ்க்கையு மீயுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ தானேயும் போகு முயிர்க்கு. (தகடூர்யாத்திரை புறத்திரட்டு - படைச்செருக்கு. 9) 294கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலு மொத்தன்று மாதோ விவற்கே செற்றிய திணைநிலை யலறக் கூவை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி யோம்புமி னோம்புமி னிவணென வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தெதிர் ந்ததன் றோழற்கு வருமே. (புறம். 275) இஃது உதவியது. இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதி யாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத் தலைவர் மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலுங், களிற்றின் மேலுந் தேரின் மேலுங் குதிரைசேறலுந், தன்மேலிருந்து பட்டோருடலை மோந்து நிற்றலும் பிறவுமாம். உதாரணம் : மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற் காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந் தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேன் மலையுறையுந் தெய்வம்போல் வந்து. (பெ. பொ. விளக்கம் புறத்திரட்டு யானை மறம். 14) 295கையது கையோ டொருதுணி கோட்டது மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை - பைய வுயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன் வயவெம்போர் மாறன் களிறு இவை - யானைநிலை. 296பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் றொல்லை யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்து புரண்டு 297மாவா ராதே மாவா ராதே எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே யிருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம் போல வுலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே (புறம். 273) 298பருத்தி வேலிச் சீறூர் மன்ன னுழுத்தத ருண்ட வோய்நடைப் புரவி கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மிதி யருந்திய கொள்சுவ லெருத்திற் றண்ணடை மன்னர் தாருடைக் கலிமா வணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் னிகழ்ந்துநின் றவ்வே. (புறம். 299) இவை - குதிரைநிலை. நிலம்பிறக் கிடுவது போல என்னும் (303) புறப்பாட்டுமது. இவை, தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர் யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண் டெறிந்த தார்நிலை - தன்படை போர்செய்கின்றமை கண்டு தானும் படையாளர்க்கு முன்னே சென்று வேலாற் போர்செய்து வென்றிமிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி, அதுகண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன்றானைத்தலைவனாயினும் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனோடு பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்; 299தார் என்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது தார் நிலையாயிற்று. உதாரணம் : 300வெய்யோ னெழாமுன்னம் வீங்கிருள் கையகலச் செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் றார்தாங்கி நின்ற தகை. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - தானைமறம். 4) நிரப்பாது கொடுக்கும் என்னும் (180) புறப்பாட்டினுள் இறையுறு விழுமந் தாங்கி என்பதும் அது. 301இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போ ரினக்களிற் றியானை யியறேர்க் குரிசி னுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை யெடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்ச னடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனு முறைப்புழி யோலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. (புறம். 290) இதுவும் அதன்பாற்படும். அன்றியும் இருவர் தலைவர் தபுதிப்பக்கமும் - இருபெரு வேந்தர் தானைத் தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார்தாங் குதலேயன்றி அத் தலைவரிருவருந் தம்மிற் பொருது வீழ்தற் கண்ணும்; பக்கம்என்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க. 302ஆதி சான்ற மேதகு வேட்கையி னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின் மதியமு ஞாயிறும் பொருவன போல வொருத்தி வேட்கையி னுடன்வயிற் றிருவர் செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு மரவணி கொடி யோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் 303வீமற் கிளையோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந் தும்பியடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு கொடிகொடி பிணங்கி வீழ்வன போல வொருவயின் வீழ்ந்தடு காலை யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே. இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க. இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன் பாற் படுத்துக. உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழை தாங்கிய 304எருமையும் - தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ஙனங் கெடுத்த மாற்று வேந்தன் படைத்தலைவனை அவன் எதிர் கொண்டு நின்ற பின்னணி யோடே தாங்கின கடாப்போலச் 305சிறக்கணித்து நிற்கு நிலைமைக் கண்ணும்; ஒருவனொருவனைத் தாங்கின எருமையென முடிக்க. உதாரணம் : சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கா லேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடை வருங்காற் பின்வருவார் யார் படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும் - கைப் படையைப் போக்கி மெய்யாற் போர்ச்செய்யும் மயக்கத்தின் கண்ணும். பாழி, வலி; இஃது ஆகுபெயர். உதாரணம் : கொல்லேறு பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் 306மாமனைப் புல்லிக்கொண் டாறாத போர்மலைந்தா னாங்கரசர் கண்டார்த்தார் 307ரேறாட லாய ரென (பாரதம்) நீலக் கச்சைப் பூந்துவ ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேறுரத் தினியே தன்னுந் துரக்குவன் போலு மொன்னல ரெஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே (புறம். 274) என்பதும் அது. களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும் - மாற்று வேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானுங் 308கடுக்கொண் டெறிந்தானும் விலக்கி அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக்கண்ணும்; உதாரணம் : இடியா னிருண்முகிலு மேற்றுண்ணு மென்னும் படியாற் 309பகடொன்று மீட்டு - வடிவே லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு. 310வானவர் போரிற் றானவர்க் கடந்த மான வேந்தன் யானையிற் தனாஅது பல்படை நெரிவ தொல்லான் வீமன் பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன் பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே. இப் பாரதப்பாட்டும் இதன்பாற்படும். இது, களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானை நிலையுள் அடங்காதாயிற்று. களிற்றொடுபட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும். அங்ஙனம் நின்று களிற்றொடு பட்ட வேந்தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோ னைச் சூழ்ந்து நின்று ஆடுந் திரட்சிக் கண்ணும்; அமலுதல் நெருங்குதலாதலின், அமலையென்பதூஉம் அப்பொருட்டாயிற்று; உதாரணம் : ஆனுங் குரிசி லுவகைக் களவென்னாங் கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து. 311நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந் திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச் சூர்மருங் கறுத்த நெடுவேள் போல மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய வாளுகு களத்து வாள்பல வீசி யொன்னா மன்னரு மாடினர் துவன்றி யின்னா வின்ப மெய்தித் தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே. இப் பாரதப்பாட்டும் அது. வாள் வாய்த்து இருபெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும் - இருபெரு வேந்தர் தாமும், அவர்க்குத் துணையாகிய வேந்தரும் தானைத் தலைவருந் தானையும் வாட்டொழின் முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகை நிலைக்கண்ணும்; 312வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண் டொழிந்த மைந்தர்புண் டொட்டுக் குருதிச் செங்கைக் கூந்த றீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டி ரெடுத்தெறி யனந்தர்ப் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து மறத்தின் மண்டிய விறற்போர் வேந்தர் தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே யுரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர வுடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற வரும்பெற லுலக நிறைய விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே (புறம். 62) செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் - போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத் தாற் பட்டானாகச் சினங்கொண்ட மனத்தனாய்ப் பெரும் படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப்பெற்ற நிலைமைக்கண்ணும்; அது குருகுல வேந்தனைக் 313குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்களைவரையுங் கொன்று வென்றி கொண்ட அசுவத்தாமாவின் போர்த் தொழில் போல்வன. தன்னரசன் அறப்போரிடத்துப் படாது 314வஞ்சனை யாற் படுதலின், அவனுக்குச் சினஞ் சிறந்தது. இச்சிறப்பில்லாத தும்பையும் இக்கலியூழிக்கா மென்பது சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று (தொல். பொருள். புற. 15) என்புழிக் கூறிற்று. உதாரணம் : 315மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்த விசும்பி னியன்றலை யுலகமு மறிந்ததா லதுவே இப் பாரதப் பாட்டினுள் அவ்வாறாதல் காண்க. ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - அங்ஙனம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற் கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின் அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று குவித்தற் கண்ணும்; வஞ்சத்தான் தன் வேந்தனைக் கொன்றமைபற்றித் தனக்குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப் பெற்றோனென்றார். நூழிலாவது கொன்று குவித்தல், வள்ளை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழி லாட்டு (மதுரை. 255 - 257) என்றாற் போல, உதாரணம் : அறத்திற் பிறழ வரசெயியுந் தானை மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. பொருந்தித் தோன்றும் பன்னிரு துறையினை யுடைத்துத் தும்பைத்திணை என்றவாறு. இன்னும், உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டின் கண்ணும் முற்கூறிய வெட்சித்திணை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள் கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங் கால், ஏனைத் திணைக்கட் கூறினாற் போல, ஒன்று நிகழ்ந்தபின் ஒன்று நிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத் திணை நிகழுமென்றற்குப் புல்லித் தோன்றும் என்றார். பல் பெருங் காதமாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் உலகம் துறையென்பது போல 316இச் சூத்திரத்துத் துறையைத் 317தொகுதியுடன் 318அறுதி காட்டிற்றென்றுணர்க. இவ்விலக்கணம் மேல் வருகின்ற திணைகட்கும் ஒக்கும். (17) (வாகை இன்னதன் புறமெனல்) 73. வாகை தானே பாலையது புறனே. இவ் வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத் திணைக்குப் புறனாமென்கின்றது. (இ - ள்.) வாகை தானே - இனிக் கூறாதுநின்ற. புறத் திணையுள் வாகையெனப்பட்டது தானே; பாலையது புறனே. பாலை யென்னும் அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு. என்னை? பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி, இல்லறம் நிகழ்த்திப் புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத் தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம் பெருங் கருத்தினாற் சேறலானும், வாயினுந் 319தாளினும் நிறையினும் பொறையினும் வேன்றி யெய்துவோரும் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுள தாயிற்று. பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகழுமாறு போல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத் திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ் என 320ஆள்வினைச் சிறப்புக் கூறிப் பிரியுமாறு போல, இதற்குப் துறக்கமே எய்தும் ஆள்வினைச்சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை பெருவர விற்றாய்த் 321தொகைகளுள் வருமாறு போல வாகையுங் பெருவரவிற்றாய் வருதலும் கொள்க. (18) (வாகையின் பொது இலக்கண மிதுவெனல்) 74. தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறு கின்றது. (இ - ள்.) தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை - வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு, வருணத் தோரும் அறிவரும் தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடு களை; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப - இருவகைப்பட மிகுதிப் படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. இருவகையாவன, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் பிறர் 322மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் 323உறழ்ச்சி யாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்த லெனப் பிறவினையாற் கூறினார். அவர் தம்மினுறழாத வழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோர் இவரென் றுரைத்தலும் வாகை யென்றற்கு ஒன்றனோடு ஒப்பு 324ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடமையும் அது. தாவில் கொள்கை யெனவே இரணி யனைப் போல வலியினாலும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று. (19) (வகையின் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறல்) 75. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமு மைவகை மரபி னரசர் பக்கமு மிருமூன்று மரபி னேனோர் பக்கமு மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய வறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணு மனைநிலை வகையோ டாங்கெழு வகையிற் றொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் இது, வாகைத் திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார். இன்னும் அதற்கேயாவதோர் சிறப்பிலக்கணம் பொதுவகை யாற் கூறுகின்றது; மேற்கூறி வருகின்றாற்போலத் துறைப் படுத்திக் கூறுதற்கேலாத பரப்புடைச் செய்கை பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின். (இ - ள்.) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு கூற்றினுட்பட்ட பார்ப்பியற் கூறும். ஆறு பார்ப்பியலென்னாது வகை யென்றதனான், அவை தலை இடை கடை யென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஒத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந்தரும நூலும் இடையாய ஒத்து; அதர்வம் வேள்வி முதலிய ஒழுக்கங் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ் சூழும் மந்திரங்கள் பயிறலின் அவற்றொடு கூறப்படாதாயிற்று. ஆறங்கமாவன: உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும் உடனா ராயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சி யாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம். தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனுமுதலிய பதினெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி, இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும் அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஒத்து. எழுத்துஞ்சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப் பயன் தருதலின் அகத்தியம் தொல் காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஒத்தா மென்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச்செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்திய னாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாருங் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையுங், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம், ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பையுஞ் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம். இனி, ஓதுவிப்பனவும் இவையேயாகலின் அவைகட்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்வோ னுணர்வு வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன்றன் மையும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்றுபற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத் தோன்ற அவிமுதலிய வற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி. வேளாண்மைபற்றி வேள்வி யாயிற்று. வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்கோதிய இலக்கணமெல்லாம் உடையனாய், மாணாக்கற்கு அவன் செய்த வேள்விகளாற் பெரும் பயனைத் தலைப்படுவித்தலை வல்ல னாதல்; இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம் முதலிய வற்றானுணர்க. கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத் துணையாயினாரும் ஆண்டு வந்தோரும் இன்புறு மாற்றான் 325வேளாண்மையைச் செய்தல். கோடலாவது, கொள்ளத் தரும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகு கொடுப்பினும் 326ஊண் கொடுப்பினும் ஒப்ப நிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்வி பற்றியுங் கொடுக்கின்றான் உவகைப்பற்றியுங், கொள் பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலைஇடை கடை யென்பனவுங் கொள்க. இனி, வேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற் கோடலுங் கொடுப்பித்துக் கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் 327தாயமின்றி இறந்தோர் பொருள் கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந்துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம். பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே, பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பாற்கட்டோன்றின வருணத்தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற் கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க. உதாரணம் : ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகு மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி (பதிற்று. 24) இஃது அந்தணர்க்குக் கூறிய பொது. 328முறையோதி னன்றி முளரியோ னல்லன் மறையோதி னானிதுவே வாய்மை - யறிமினோ 329வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினான் சாள்றான் மகனொருவன் றான் இஃது, ஓதல். இனி, ஓதற்சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க. இம்மை பயக்குமா லீயக் குறைவின்றாற் றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோன் மம்ம ரறுக்கு மருந்து (நாலடி. 14 - 2) ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாதலா 330லாற்றுணா வேண்டுவ தில் ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு நித்திய மாக நிரம்பிற்றே - யெத்திசையுந் தாவாத வந்தணர் தாம்பயிற்றக் காவிரிநாட் டோவாத 331வோத்தி னொலி இஃது, ஓதுவித்தல். எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு (குறள் - அறிவுடைமை. 4) இஃது, ஓதுவித்தற் சிறப்பு. 332நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டி னாறுணர்ந்த வொருமுதுநூ லிகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய வுரைசால் சிறப்பி னுரவோர் மருக வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சைச் சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த வருங்கற்பி னறம்புகழ்ந்த வலைசூடிச் சிறுநுதற்பே ரகலல்குற் சிலசொல்லிற் பலகூந்த னினக்கொத்தநின் றுணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் காடென்றா நாடென்றாங் கீரேழி னிடமுட்டா அது நீர்நாண நெய்வழங்கியு மெண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ்பரப்பியு மருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை யென்றுங், காண்கதில் யாமே குடாஅது பொன்படுநெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனற் படப்பை யெம்மூ ராங்க ணுண்டுந் தின்று மூர்ந்து மாடுகஞ் செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல நிலீஇய ரத்தை நீ நிலமிசை யானே (புறம் 166) இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க. ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீந்த 333மழுவா ணெடியோன் வயக்கஞ்சால் வென்றி வழுவாமற் காட்டிய வாறு. இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு. நளிகட லிருங்குட்டத்து என்னும் (26) புறப்பாட்டினுள் அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தன. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள (குறள் - ஈகை.3) இஃது ஈதல் ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்கண் ணவர் (குறள் - ஈகை.8) இஃது ஈதற் சிறப்பு. 334நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவா யவிசொரியத் தீவிளங்கு மாறுபோற் றாவா தொளிசிறந்த தாம் (பெ.பொ. விளக்கம்: புறத்திரட்டு - குடிமரபு.) இஃது ஏற்றல். 335தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்துவிடும் (நாலடி 48) இஃது ஏற்றற் சிறப்பு. ஓதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய. ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ் செய்தல் என்னும் ஐவகையிலக்கணத்தை யுடைய அரசியற் கூறும். வகை என்றதனான் 336முற்கூறிய மூன்றும் பொதுவும், பிற்கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க. பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்வி களுள் 337இராசசூயமுந் துரங்க வேள்வியும் போல்வன அரசர்க் குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிந்த புனிற்றாநிரையுங், 338கனகமும் கமுகும் அன்ன முதலியனவும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையுந், 339தண்ணடையுங், கன்னியரும், பிறவுங் கொடுத்தலும், மழுவா ணெடியோ னொப்ப 340உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களானும் நாற்படையானுங் கொடைத் தொழிலானும் பிறவாற்றானும் அறத்தின் வழாமல் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனம் காக்கப்படும் உயிர்க்கு 341ஏதஞ் செய்யும் மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தை யாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியான் தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும். வகை என்றதனானே களவு செய்தோர் இருக்கையிற் பொருள் கோடலும், ஆறிலென்று கோடலுஞ், 342சுங்கங் கோடலும், அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத் துணைப் பொருள் நும்மிடத்து யான் கொள்வலெனக் கூறிக் கொண்டு அது கோடலும், மறம்பொருளாகப் பகைவர்நாடு கோடலுந், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன் 343றாயங் கோடலும், பொருளில் வழி வாணிகஞ் செய்துகோடலும், அறத்திற்றிரிந் தாரைத் தண்டத்திற் றகுமாறு பொருள் கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்கமென்றதனான் அரசர் ஏனைவருணத்தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றி வருணத்துப் பகுதியோருஞ் சில தொழிற்குரியரென்று கொள்க. உதாரணம் : 344சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவைதுணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விருப்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி (பதிற்று. 21) 345கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம் பந்தர்ப்பயந்த பலர்புகழ் முத்தம் வரையக நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக் கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற் புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைத் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளை கட்டி யெஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன் சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோ ளொடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் காவற் கமைந்த வரசு துறை போகிய வீறுசால் புதல்வர்ப் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப வன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை வண்மையு மாண்பும் வளனு மெச்சமுந் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபல நனந்தலை பெயரக் கூறினை பெருமநின் படிமை யோனே (பதிற்று. 74) என வருவனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங் காண்க. 346ஒருமழுவாள் வேந்த னொருமூ வெழுகா லரசடு வென்றி யளவோ - வுரைசான்ற வீட்டமாம் பல்பெருந்தூ ணெங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை இதுவும் வேட்டல். விசையந்தப்பிய என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் இது, காவல் கூறிற்று. கடுங்கண்ண கொல்களிற்றான் என்னும் (14) புறப்பாட்டுப் படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க. 347தொறுத்தவய லாரல்விறழ்நவு மேறு பொருதசெறு வுழாது வித்துநவுங் கரும்பின் பாத்திப் பூத்த நெய்த லிருங்க ணெருமையி னிரைதடுக் குநவுங் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா வாம்ப லார்நவு மொலிதெங்கி னிமிழ் மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பி னாடுகவி னழிய 348நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் 349விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத் துள்ள மழிய வூக்குநர் மிடறபுத் துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே காடே கடவுண் மேன புறவே யொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருநர் பார மோம்பி யழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே (பதிற்று. 13) இதனுண், மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும் அறத்திற் றிரிந்த வேந்தனையழித்து அவன் நாட்டைக் குடி யோம்பிக் காத்தவாறும் கூறிற்று. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். (குறள் - செங்.10) இது, தண்டம். இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஓதலும் வேட்ட லும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறு வகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும்; வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் 350வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தை யுடைய வேளாளர் பக்கமும்; வாணிகரையும் வேளாளரையும் வேறுகூறாது இருமூன்று மரபி னேனோர் எனக் கூடவோதினார், வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்கு மொத்தலின். இனி, வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண் கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாரு முளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்ட லைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழி பாடு உரித்தென்பர். பக்கம் என்பதனான் வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தா ராகிய குலத்தோர்க்குந் தொழில்வரையறை அவர்நிலைகளான் வேறுவேறு படுதல்பற்றி அவர்தொழில் கூறாது இங்ஙனம் பக்கமென்பதனான் அடக்கினார். 351இவை ஆண்பால் பற்றி உயர்ச்சி கொண்டன. உதாரணம் : 352ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - குடிமரபு) இது - வாணிகரீகை. 353உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளு மூத்தோன் வருக வென்னா தவரு ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே (புறம். 183) இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்கண் ணவர் (குறள் - ஈகை.8) இஃது, இருவர்க்கும் ஈதற்சிறப்புக் கூறிற்று. போர்வாகை வாய்ந்த புரவலரின் மேதக்கா 354ரேர்வாழ்ந ரென்பதற் கேதுவாஞ் - சீர்சா லுரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்த நிரைகாத்துத் தந்த நிதி இது, வேளாளர் நிரைகாத்தது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் - உழவு. 3) இஃது, உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின். (குறள் - நடுவு. 10) இது, வாணிகச் சிறப்பு இருவர்க்குங் கூறியது. 355இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாகக் கொண்டார் கயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று. (நாலடி - குடி. 3) இது, வழிபாடு கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற் றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத் தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடை யோன் பக்கமும்; 356தேயத்தைக் கிழவோ டேஎத்து (இறையனார். 8) என்றாற்போலக் கொள்க. உதாரணம் : 357வாய்மை வாழ்ந மூதறி வாள நீயே யொருதனித் தோன்ற லுறைபதி யாருமி லொருசிறை யானே தேரி னவ்வழி வந்தநின் னுணர்வுமுதற் றங்குந் தொன்னெறி மரபின மூவகை நின்றன காலமு நின்னொடு வேறென யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு மருளின் றீந்தே னுரைத்துநனி ஞெகிழ்ந்து மலரினு மெல்லி தென்ப வதனைக் காமர் செவ்வி 358மாரன் மகளிர் நெடுமா மழைக்கண் விலங்கிநிமிர்ந் தெடுத்த வாளும் போழ்ந்தில வாயின் யாதோ மற்றது மெல்லிய ளவாறே இதுவுமது. 359கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவ ரென்றுணர்க. நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் - அவ்வறிவர் கூறிய ஆகமத்தின்வழி நின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியுங் கூறும்; வழக்கு என்றதனான் அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந், தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று கொள்க. அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன. ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும். இவற்றிற்கு, உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீ நாப்பணும் நீர்நிலை யினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத் திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந், துறந்தக் காற் றொட்டும் வாய்வாளாமையும் பொரு ளென்றுணர்க. இனி, யோகஞ்செய்வார்க்குரியன. இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என்னும் எட்டும் ஆம். இவற்றை, பொய்கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம். பெற்றதற் குவத்தல் 360பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய 361மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே 362நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமமே முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும் 363உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை பொறியுணர் வெல்லாம் 364புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி என்னும் உரைச்சூத்திரங்களா னுணர்க. பக்கம்என்றதனான், முட்டின்றி முடிப்போர் முயல் வோர் என்பனவும், நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி (பு.வெ. வாகை 14) என்பனவுங் கொள்க. ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி ரிழைநிலை நெகிழ்த்த 365மள்ளற் கண்டிகுங் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ மாட்டிப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே (புறம் 251) 366வைததனை யின்சொலாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானு - மூறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார் (திரிகடுகம். 48) ஒருமையு ளாமைபோ 367லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து (குறள் - அடக்க.6) ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே 368பேரா வியற்கை தரும் (குறள் - அவா.10) நீஇ ராட னிலக்கிடை கோட றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப லூரடை யாமை யுறுசடை புனைதல் காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல்பென மொழிப எனவரும். ஏனைய வந்துழிக் காண்க. அறிமரபிற் பொருநர்கட் பாலும் - தாந்தாம் அறியும் இலக்கணங்களானே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்; அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் வேறலாம். உதாரணம் : விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள் - சொல்வன். 8) இது, சொல்வென்றி. வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக் 369கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா ழந்நரம்பு மச்சுவையு மாய்ந்து (பு. வெ. ஒழிபு. 18) இது, பாடல்வென்றி. 370கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந் தொடுகழன் மன்னன் றுடி. (பு. வெ. ஒழிபு. 17) இஃது, ஆடல்வென்றி 371இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி யொருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினுந் நல்காஅ னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல விருதலை யொசிய வெற்றிக் களம்புகு மல்லர்க் கடந்தடு நிலையே (புறம். 80) இது, மல்வென்றி. 372கழகத் தியலுங் கவற்றி னிலையு மழகத் திருநுதலா ளாய்ந்து - புழகத்துப் பாய வகையாற் பணிதம் பலவென்றா னாய வகையு மறிந்து (பு. வெ. ஒழிபு. 16) இது, சூதுவென்றி, அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையின் தொகை நிலை பெற்றது என்மனார் புலவர். அக்கூறுபட்ட ஆறு பகுதியும் நிலைக்களமாக அவற்றுக்கண் தோன்றி வேறுபட்ட கூறுபாட் டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றான் துறை பல திரண்ட தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர் என்றவாறு. அனையென்றது - சுட்டு. நிலை - நிலைக்களம். நிலையது வகை. ஆங்கென்றதனை அனைநிலைவகையோ டென்ப தன்கண் வகைக்கு முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச் சொல்லாதலின் முன் னெண்ணியவற்றோடு கூட்டி ஏழாயிற்று. இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித் தோன்றி னானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற் கண்ணும் இவ்வாறே தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந் தொழில்வகையாற் பாகுபட மிகுதிப் படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண் பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனைநிலைவகைப் பாற்படும். யோசிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகை யோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனை நிலைவகையாம். ஒரு வரையறைப்படாது பலதுறைப்படுவனவற்றை யெல்லாந் தொகைநிலையெனத் தொகுத்து ஒரோவொன் றாக்கிக் கூறினார்; தொகுத்துக் கூறலென்னும் உத்திவகையான். 373பார்ப்பன வாகை அரச வாகையென் றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற்குன்றக் கூறலாமாதலின் இங்ஙன மோதி னார். காட்டாதனவற்றிற்கு உதாரணங்கள் வந்துழி வந்துழிக் காண்க. (20) (மறத்துறை ஒன்பதும் அறத்துறை யொன்பதுமாக வாகைக் குரிய துறை பதினெட்டெனல்) 76. கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய மரபினு மேரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையு மொன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானு மரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமு மொல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானு மொல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமுங் கட்டி னீத்த பாலி னானு மெட்டுவகை நுதலிய வவையத் தானுங் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானு மிடையில் வண்புகழ்க் கொடைமை யானு பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானு மருளொடு புணர்ந்த வகற்சி யானுங் காம நீத்த பாலி னானுமென் றிருபாற் பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே. இது, மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங்காதவற்றிற்கு முற்கூறிய துறைகளே போலத் தொடர் நிலைப்படுத்தாது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப்படுத்துத் துறை கூறுகின்றது. (இ - ள்.) கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்; 374கூதிர், வேனில் ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றி ருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமை பெற்றக் காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல். இக்காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றி யாயிற்று. தலைவி மேற் காதலின்றிப் போரின்மேற் காதலின் சேறலின் ஒன்றியென்றார். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினாரேனும் 375ஓர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்றுவழித் தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்குமென்பது ஆசிரியர் கருத்தா யிற்று. வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே (அகம். 84) எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம். அகத்திற்கு வழுவன்றென்றற்கு மரபென்றார். ஏனைய காலங்களாற் பாசறைப் பெயர் இன்றைன்றற்கு இரண்டானும் பெயர் கூறினார். இங்ஙனங் கூறவே முற்கூறிய துறைபோலத் தொடர் நிலைப்படுத்தலின்றாய் இதனானே பலவாகி ஒருதுறைப் படுத்தலும் இன்றாயிற்று. இனி, இருத்தற்பொருண் முல்லையென்பதே பற்றிப் பாசறைக் கண் இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறுவாரும் உளர். உதாரணம் : 376மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய மாதர்பாற் பெற்ற வலியளவோ - கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலா னைங்கணை தோற்ற வழிவு. (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - பாசறை. 4) 377கவலை மறுகிற் கடுங்கண் மறவ ருவலைசெய் கூறை யொடுங்கத் - துவலைசெய் கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான் மூதின் மடவாண் முயக்கு (பு. வெ. வாகை 15) ஏரோர் களவழி (த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித் தேரோர் தோன்றிய வென்றியும் - வேளாண்மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்று வித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் 378அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல, அரசனும் நாற் படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்மடல் ஓச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற் றொடு உதிரப் பேருலைக் கண் ஏற்றி ஈனாவேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப் பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாம். உதாரணம் : இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் படைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்பறு வல்வில் வீங்குநா ணுகைத்த 379கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர் கான நரியோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன வோடை நுதல வொல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே (புறம். 369) நளிகட லிருங்குட்டத்து என்னும் (26) புறப்பாட்டுப் பலி கொடுத்தது. 380களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது. 381ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்ட நாண் மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து (களவழி. 36 - 40) தேரோர்வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் - தேரின் கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப் பானே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரொடு கை பிணைத்தாடுங் குரவையானும்; உதாரணம் : சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க வாடிய கூத்தரின்வேந் தாடினான் - வீடிக் 382குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த 383விறையாட வாடாதார் யார் 384விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட் கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே. (பதிற்று. 56) ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும் தேரோரைவென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே, தேரின்பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடுங்குரவையானும்; உதாரணம் : 385வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - களம்.12). என வரும், 386களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தலை துயல்வரச் சூடிப் புணர்த்தின மானாப் பெருவளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலவென வுருகெழு பேஎய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே (புறம். 371) என்பதும் அது. பெரும்பகை தாங்கும் வேலினாலும் - போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை 387அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித் துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்; காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கட வுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாத லானுஞ் சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும் பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப் படைகளெல்லாம், மொழிந்த பொருளோ டென்ற வவ்வயின், மொழியா ததனையு முட்டின்றி முடித்தல் (666) என்னும் உத்தியாற் பெற வைத்தார். உதாரணம் : 388குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந் தன்று திருநெடுமா லாடினா - னென்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ டினிச்சென் றமர்பொரா யென்று இது பாரதம். 389இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னா ரருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே நல்லரா வுறையும் புற்றம் போலவுங் கொல்லேறு திரிதரு மன்றம் போலவு மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை யுளனென வரூஉ மோரொளி வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே (புறம். 309) என்பதும் அது. இவ்வே, பீலியணிந்து என்னும் (95) புறப்பாட்டும் அது. அரும்பகை தாங்கும் ஆற்றலானும் - வெலற்கரும் பகைவர் 390மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதி யானும்; உதாரணம் : 391எருது காலுறா திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலி னொக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னீர்க்கு நெடுந்தகை யரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே (புறம். 327) களம்புக லோம்புமின் என்னும் (87) புறப்பாட்டும் அது. வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர் வாழ்க்கை யைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்: பக்கம் என்றதனாற் றாபதப்பக்கமல்லாத போர்த் தொழி லாகிய வல்லாண்மையே கொள்க. உதாரணம் : 392கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிகடழ் சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணகலாப் போர்க்களத்துப் 393பூண்டு (புறத்திரட்டு. அமர் - 3) இப் பாரதத்துள் அது காண்க. ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடுபுணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும். பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதியிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகி வருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப் பலியானும். நாணுதலாவது: நம்மை அவன் 394செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையான் வென்றமை யான் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல். உதாரணம் : 395எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல் வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான்-றம்பி புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா னறவோன் மறமிருந்த வாறு இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க. 396இழைத்த திகவாமற் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர் (குறள் - படைச். 9) இதுவும் அது. ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கினும் - பகைவராயினும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண்டியக்கால் அவர்க்கு அவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தலானும்; உதாரணம் : 397இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி மைந்தனை வெல்வான் வரங்கொண்டான் - றந்தநா ளேந்திலைவேன் மன்னனே யன்றி யிதற்குவந்த வேந்தனும் பெற்றான் மிகை இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவச குண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று. இத்துணையு மறத்திற்குக் கூறியன. பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் - எருதும் எருமையுமாகிய பகட்டினானும் யானையுங் குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினீங்குஞ் சிறப்பினான் அமைந்தோரது கூறுபாட்டானும்; இவற்றான் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினார். பக்கமென்றதனாற் புனிற்றாவுங் காலாளுந் தேருங் கொள்க. உதாரணம் : 398யானை நிரையுடைய தோரோ ரினுஞ்சிறந்தோ ரேனை நிரையுடைய வேர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - குடிமரபு. 9) 399எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய னென்றனி ராயி னாறுசெல் வம்பலிர் மன்பதை மருள வரசுகளத் தவியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை மீபிணத் துருண்ட தேயா வாழிப் பண்ணமை தேரு மாவு மாக்களு மெண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி யுகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்க ராபரந் தன்ன செலவிற்பல் யானை காண்பலவன் றானை யானே (பதிற்று. 77) என்பதுமது. 400கட்டில் நீத்த பாலினானும் - அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதியானும்; அது 401பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி. உதாரணம் : கடலு மலையுந் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன னெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை 402யிராமன் றம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடி பொறை யாற்றலன் படிபொறை குறித்தே. இஃது அரசுகட்டினீத்தபால். 403பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே (புறம். 358) என்பதும் அது. எட்டுவகை நுதலிய அவையத்தானும் - எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்; அவை குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு நிலைமை அழுக்காறின்மை அவாவின்மை என விவையுடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல். உதாரணம் : 404குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை யுடன்மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுகதில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே (ஆசிரியமாலை; புறத்திரட்டு - அவையறிதல்) என இதனுள் எட்டும் வந்தன. கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும் - வேத முதலிய வற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சி யானும்; கண்ணது தன்மை கண்மையெனப்படுதலின் அதனைக் கண்ணுமையென உகரங் கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பன எளுமை வலுமை வல்லுவோர் என்றாற் போல. இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினையும் வென்று தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃ காமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை முதலியனவாம். உதாரணம் : ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து (குறள் - அடக்க. 6) ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும் (குறள் - ஒழுக்கம். 1) சமன்செய்து சீர்தூக்கும் 405கோல்போ லமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி (குறள் - நடுவு. 8) பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு (குறள் - பிறனில். 8) 406படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் (குறள் - வெஃகாமை. 2) அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது (குறள் - புறங். 1) தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு (குறள் - தீவினை. 1) ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு (குறள் - அழுக்க. 1) 407மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல் (குறள் - பொறை. 8) பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க. 408விழையா வுள்ளம் விழையு மாயினும் என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னிய முடித்த லினைய பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்த் தேருங் காலை (அகம். 286:8 - 13) என இது தொகுத்துக் கூறியது. இடையில் வண்புகழ்க் கொடைமையானும் - இடையீ டில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும். உலகமுழுதும் பிறர்புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின் இடையிலென்றார். வண்புகழ் - வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக்கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக் காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம். உதாரணம் : 409மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வ ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற் றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத லாடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் னாடிழந் ததனினு நனியின் னாதென வாடந் தனனே தலையெமக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையி 410னாடுமலி யுவகையொடு வருகுவ லோடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே (புறம். 165) பிழைத்தோர்த் தாங்குங் காவலானும் - தம்மைப் பிழைத் தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும்; காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு ஏதம் வாராமற் காத்தலாதலால், இஃது ஏனையோரின் வெற்றியா யிற்று. உதாரணம் : 411தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா - லும்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன் (நாலடி 58) 412அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள் - பொறை 1) பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் - அரசர்க்குரிய வாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துட்பட்ட வாகைப் பகுதியானும்; பக்கமென்றதனான் மெய்ப்பொரு ளுணர்த்துதலுங் கொள்க. உதாரணம் : படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு (குறள் - இறை. 1) நாடு அரண் முதலாகக் கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற் காண்க. 413படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணு முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி யிட்டுந் தொட்டுங் கல்வியுந் துழந்து நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே (புறம். 188) கேள்வி கேட்டுப் படிவ மொடியது என்னும் (74) பதிற்றுப்பத்தும் அது. 414ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு (குறள் - மெய்யு. 4) என வரும். அருளொடு புணர்ந்த 415அகற்சியானும் - அருளுடைமை யொடு பொருந்திய துறவறத்தானும்; அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர் வந்துழித் தன்னுயிரையும் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தந் தனதாக எண்ணி வருந்துதலும், பொய்யாமை கள்ளாமை முதலியனவு மாம். இக்கருத்து நிகழ்ந்தபின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று. உதாரணம் : 416புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாது மூலைமறாக் குழவி வாங்கி வாய்மடுத் திரையெனக் கவர்வுற நோக்கி யாங்க வளரிளங் குழவியின் முன்சென்று தானக் கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய வாளெயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப் பாசிலைப் போதி மேவிய பெருந்தகை யாருயிர் காவல் பூண்ட பேரருட் புணர்ச்சியி னகலு மாறே. தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் (குறள் - இன்னா. 8) வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல் (குறள் - வாய்மை. 1) 417களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில் (குறள் - கள்ளாமை. 7) யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன் (குறள் - துறவு 1) ஏனையவும் இதன்கண் அடக்குக. காமம் நீத்த பாலினானும் - அங்ஙனம் பிறந்த பின்னர் எப் பொருள்களினும் பற்றற்ற பகுதியானும்; உதாரணம் : 418காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி னாமங் கெடக்கெடு நோய் (குறள் - மெய்யு. 10) பாலென்றதனால் 419உலகியலுணின்றே காமத்தினைக் கைவிட்ட பகுதியுங் கொள்க. 420இளையர் முதியரென விருபால் பற்றி விளையு மறிவென்ன வேண்டா - விளையனாத் தன்றாதை காமம் நுகர்தற்குத் தான்காம மொன்றாது நீத்தா னுளன். (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - அறிவுடைமை.15) என்று இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே. முன்னர் ஒன் பானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒன்பதாகிய பதினெட்டுத் துறையினையுடைத்து வாகை எ-று. இதனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது 421விரித்தவாற் றான் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க. (21) (காஞ்சி இன்னதன் புறமெனல்) 77. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி, இஃது உரிப்பொருளில்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது. இதனை வாகைக்குப் பின்வைத்தார், 422வீரக் குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (இ - ள்.) காஞ்சிதானே பெருந்திணைப் புறனே - எழுதிணையுட் காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந் திணைக்குப் புறனாம் என்றவாறு. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்கு மணம்பெற்ற பெருந்திணை போல இக் காஞ்சியும் அற முதலாகியமும் முதற்பொருளும் அவற்றது நிலையின்மையு மாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (தொல். களவியல் 14) என்ற நான்குஞ் சான்றோர் இகழ்ந்தாற்போல அறம் முதலிய வற்றது நிலையின்மை யுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், ஏறிய மடற்றிறம் (தொல். அகத். 51) முதலிய நான்குந் தீய காம மாயினவாறு போல உலகிய னோக்கி நிலையாமையும் நற்பொரு ளன்றாகலானும், உரிப்பொருளிடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல அறம் பொருளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமையென்ப தொரு பொருளின்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். அகத். 1) ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்கு இது புறனாவதன்றிப் 423புறப் புறமென்ல் ஆகாமை யுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (22) (காஞ்சியின் பொதுவிலக்கணம் இதுவெனல்) 78. பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானு நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. இது, முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறு கின்றது. (இ-ள்.) பாங்கருஞ் சிறப்பின் - தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும். அறம் பொருள் இன்ப மாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலிய வற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து - நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறி யினையுடைத்துக் காஞ்சி என்றவாறு. எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையா மையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்கு. துணை. உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட் பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்மையிற் பல்லாற்றானுமென்று 424ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் 425கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந் தோறுங் கெடுவனவுமா மென்றற்கு நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றானுமென்றதனாற் சில்லாற்றானும் வீடேதுவாகலன்றி 426நிலையாமைக் குறிப்பு ஏதுவாகலுங் கொள்க. இஃது அறிவன்தேயமுந் தாபதப்பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம். உதாரணம் : மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாத்துப் பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப் பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் விலைநலம் பெண்டிரிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா ணிலமக ளழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே (புறம். 365) இதனுள் உண்டென உரைப்பரால் உணர்ந்தோரென்ற லின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார்க்கு நில்லா உலகம் புல்லியதாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த 427மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம். (23) (நிலையின்மைப் பொருளிவையென வகுத்துக்கூறல்) 79. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியு மறத்தி னானு மேமச் சுற்ற மின்றிப் புண்ணோற் பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமு மின்னனென் றிரங்கிய மன்னை யானு மின்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானு மின்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியு நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி யாஞ்சி யானு நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானு முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் றலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ யீரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசன் மயக்கத் தானுந் தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமு நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையுங் கழிந்தோர் தேஎத் தழிபட ருறீஇ யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங் காதலி யிழந்த தபுதார நிலையும் காதல னிழந்த தாபத நிலையு நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையு மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையு மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் டுடைத்தே. இது, முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறையோடும் படாது நிலையின்மைப் பொருளை வகுத்தோதிய சூத்திர மென்றுணர்க. (இ - ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் - பிறராற்றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சியானும்; 428கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத் தினைப் பொருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள். அதனைப் பேரூர்க் கூற்றம் போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மையிற் காலம் உலகம் என (தொல். சொல். கிளவி. 58) முன்னே கூறினார். உதாரணம் : பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினு மல்லது செய்த லோம்புமி னதுதா னெல்லாரு முவப்ப தன்றியு நல்லாற் றுப்படூஉ நெறியுமா ரதுவே (புறம். 195) இது, வீடேதுவாகவன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது. இருங்கடலுடுத்த என்னும் (369) புறப்பாட்டும் அது. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமைத்தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவில்மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்; முதுமை மூப்பாதலான் 429அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம். உதாரணம் : இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்யுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையென லறியா மாயமி லாயமொ டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த நீர்நணிப் படுகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர 430நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்து மணற்கொண்ட கல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே (புறம். 243) இது, வீடுபெறுதற்கு வழி கூறியது. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் - நன்றாகிய குணம் உறுநிலையாகப் பெறுகின்ற பகுதியை யாராந்து பெறுதற்குப் பட்ட 431விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்; இஃது, யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறு தல் குறித்தது. இதனை வாகைத்திணைப் பின்னர் வைத்தார்; இக் காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல் பற்றி. உதாரணம்: 432பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே இது, போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புற வருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று. ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் - கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக் குழாமின் மையின் அருகுவந்து புண்பட்டோனைப் 433பேய்தானே காத்த பேய்க் காஞ்சியானும்; பேய்காத்த தென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று. ஏமம் - காப்புமாம். ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம். இது, சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வ நிலையாமை யாயிற்று. பக்கமென்றதனாற் பெண்டிர் போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க. உதாரணம்: 434புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு முறையோரி யுட்க வுணர்வொடுசா யாத விளையோன் கிடந்த விடத்து ஏனைய வந்துழிக் காண்க. இன்னன் என்று இரங்கிய 435மன்னையானும் - ஒருவன் இறந்துழி அவன் இத்தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய கழிவு பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்; இது, பலவற்றின் நிலையாமை கூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறு பெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற் பற்றியே வருமென்றற்கு மன் கூறினார். இது மன்னையெனத் திரிந்து காஞ்சி யென்பதனோ டடுத்து நின்றது. இஃது உடம்பொடு புணர்த்தல். 436சிறியகட் பேறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற்றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற்றானு நனிபல கலத்தன் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே யம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே என இப் (235) புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருடந்தது. 437பாடுநர்க் கீத்த பல்புக ழினனே யாடுநர்க் கீத்த பேரன் பினனே யறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கி லனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பைத லொக்கற் றழீஇ யதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கெடுவி னல்லிசை சூடி நடுக லாயினன் புரவல னெனவே (புறம் 221) இது, மன் அடாது அப்பொருடந்தது. செற்றன்றாயினும் என்னும் (222) புறப்பாட்டு முதலியன வும் அன்ன. இதனை 438ஆண்பாற் கையறுநிலையெனினும் அமையும். இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப் பின் வஞ்சினத்தானும் - இத்தன்மையதொன்றினைச் செய்த லாற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக் காஞ்சியானும்; அது தான்செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வருங் குற்றத்தான் உயிர்முதலியன துறப்பே னென்றல். சிறப்பு-வீடு பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு. உதாரணம் : 439மெல்ல வந்தெ னல்லடி பொருந்தி யீயென விரக்குவ ராயிற் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்ச மின்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்திலத் தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென் னுள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல வுய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட வன்றிணி நீண்முளை போலச் சென்றவண் வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தன் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே (புறம். 78) நகுதக் கனரே நாடுமீக் கூறுநர், மடங்கலிற் சினைஇ என்னும் (72, 71) புறப்பாட்டுக்கள் உயிருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நினையாது வஞ்சினஞ் செய்தன. இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடந்த தொடாஅக் காஞ்சியும் - இனிதாகிய நகையினையுடைய மனைவி தன் கணவன் புண்ணுற்றோனைப் பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சியானும்; என்றது, 440நகையாடுங் காதலுடையாள், அவனைக் காத்து விடிவளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் நிலையாமையை எய்தினானென்றவாறு. இதுவும் ஆண்பாற் காஞ்சியாம். இக் காஞ்சியென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. 441தீங்கனி யிரவமொடு வேம்பு மனைச்செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி யையவி சிதறி யாம்ப லூதி யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே (புறம். 281) நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சி யானும் - உயிர்நீத்த கணவன் தன்னுறவை நீக்கின வேல்வடு வாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்; எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற் புண்பட்ட அச்சம் நிகழ்தலின், யாக்கை நிலை யாமை கூறியதாம். 442பேஎத்த என்பது உரிச்சொன் முதனிலை யாகப் பிறந்த பெயரெச்சம். 443அஞ்சின, ஆஞ்சியென நின்றது. 444இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு - தன்கணவ னல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே புல்லார்வேன் மெய்சிதைத்த புண் (தகடூர்யாத்திரை. புறத்திரட்டு - மூதின்மறம். 8) இனி, வேலிற் பெயர்த்த மனைவி யென்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப் போக்கின மனைவியென்றுகூறி, அதற்கு, 445கெளவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ - னவ்வேலே யம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று. (பு. வெ. காஞ்சி. 23) என்பது காட்டுப. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் - பெண்கோளொழுக்கத்தி னொத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்துகோடற்கு எடுத்துவந்த, அரசனொடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்; வேந்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலையின்மை நோக்கி, அவரோடொத்து மகளிரைப் படுத்தற் கஞ்சி மறுப்பாராதலின் அஞ்சியவென்றும், மேல்வந்த வென்றுங் கூறினார். அம்முதுகுடிகள் தாம் பொருது படக் கருதுதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சியாயிற்று. பாலென்றதனான் முதுகுடிகளேயன்றி 446அனைநிலைவகை (75) யெனப்பட்டார்கண்ணும் இத்துறை நிகழ்தல் கொள்க. உதாரணம் : 447நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையு நெடிய வல்லது பணிந்து மொழியலனே யிஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல வணங்கா யினடான் பிறந்த வூர்க்கே (புறம். 349) 448களிறணைப்பக் கலங்கின, காஅ தேரோடத் துகள்கெழுமின, தெருவு மாமறுகலின் மயக்குற்றன, வழி கலங்கழாஅலிற், றுறை, கலக்குற்றன தெறன்மறவ ரிறைகூர்தலிற் 449பொறைமலிந்து நிலனெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பி னோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக் கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை மைய னோக்கிற் றையலை நயந்தோ ரளியர் தாமேயிவ டன்னை மாரே செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழாஅங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலைய கருங்கடை நெடுவே லின்ன மறவர்த் தாயினு மன்னோ வென்னா வதுகொ றானே பன்னல் வேலியிப் பணைநல் லூரே (புறம். 345) இதனுள் 450நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென என்ற லின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர்பாற்பட்டது. முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகுமென்ப - தன் கணவன் தலையைத் தன் முகத்தினும் முலையினுஞ் சேர்த்திக் கொண்டு, அத்தலையான் மனைவியிறந்த நிலைமையானுந் தொகைபெற்றுக் காஞ்சி பத்து வகைப்படுமென்று கூறுவாராசிரியர் என்றவாறு. தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினைமுதலா யிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒரு துறையாமென்றற்கும்இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறொரு தொகை கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலை யின்மை யெய்தலின், 451இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும் அதனாலெய்துதலின் மேல்வருகின்ற பெண்பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற்கியைபு படத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக்காஞ்சியும் பெண்பாலொடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன் வைத்தார். இவை ஒருவகையாற் பெண்பாற் கண்ணும் நிலையின்மையுடைய வாயினும் இரண்டி டத்தும் ஓதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய ஆண்மகற்கே ஓதிப் பெண்பாற் பகுதியுந் தழீஇயினா ரென்றுணர்க. இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈரைத் தென்பதனைக் கூட்டி முடிக்க. உதாரணம் : 452நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன் தலையொழிய மெய்பெறாள் சாய்ந்தா - டலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றத லுண்ணின்ற தன்றோ வுயிர் பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் - பெரும்புகழுடையனாகி மாய்ந்தானொரு வனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு மயக்கத் தானும்; என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசை யை. 453ஆய்தவென்பது உள்ளத னுணுக்கம். மாய்ந்த பூசன் மயக்க மென்று பாடமாயிற், சுற்றம் ஒருங்கு மாய்ந்தவழிப் பிறரழுத பூசன் மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த மகனெற்தூஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே; ஆண்பாலும் உடன்கூறியதன்று. மேலனவற்றிற்கும் இஃ தொக்கும். உதாரணம் : 454இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்காத் தோற்கண்ண போலுந் துடி (தகடூர்யாத்திரை; புறத்திரட்டு - இரங்கல் 2) மீனுண் கொக்கின் றூவி யன்ன என்னும் (277) புறப் பாட்டும் அது. தாமே ஏங்கிய தாங்கரும் 455பையுளும் - அச்சுற்றத்தாரு மின்றி மனைவியர் தாமே தத்தங் கொழுநரைத் தழீஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்; தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவருக்குத் தலைவியர் பலரென்றற்கு. ஏகாரம் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை. இது, செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது. 456மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப் புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை யிருள்புக்குத் துணிந்த வெண்குவரற் கல்லளை யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக லெழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை யவரின்று நிகழ்தரு முறவே யதனா லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச் சேணிடை யகன்ற துயிலே யதுவினி யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள் வாரா தாயினும் யாதாங் கொல்லோ மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் னாருயிர் நிலையே. கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப என்னும் (349) புறப் பாட்டும் அது. தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார்தாமே தனித் திருந்ததென்று கூறிக், 457குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினு மாளன் றென்று வாளிற் றப்பார் தொடர்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபத மதுகை யின்றி வயிற்றுத் தீத்தணியத் தாமிரந் துண்ணு மளவை யீன்ம ரோவிவ் வுலகத் தானே. என்னும் (74) புறப்பாட்டுக் 458காட்டுவாரும் உளர். கணவனொடு முடிந்த 459படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் - மனைவி தன் கணவன் முடிந்த பொழுதே உடன் முடிந்து போகிய செலவு நினைந்து கண்டோர் பிறர்க் குணர்த்திய மூதானந்தத் தானும்; ஆனந்தம் - சாக்காடு. முதுமை கூறினார், உழுவலம்பு பற்றி. இப்படி யிறத்தலின் இது யாக்கை நிலையின்மை. உதாரணம் : 460ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார் - போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கு முடனே யுலந்த துயிர் (பு.வெ.சிறப்பிற்பொது . 9) நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும். மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின 461முதுபாலையானும்; புலம்பிய வெனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று. பாலையென்பது பிரிவாகலின், இது பெரும்பிறிதாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். நனிமிகு குரமென்று இருகால் அதனருமை கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்த தன்றாயிற்று. இதுவும் இன்பமும் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று. 462இளையரு முதியரும் வேறுபுலம் படர வெடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த வளையில் வறுங்கை யோச்சிக் கிளையு ளின்ன னாயின னிளையோ னென்று நின்னுரை செல்லு மாயின் மற்று முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப் புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன் வளனுஞ் செம்மலு மெமக்கென நாளு மானாது புகழு மன்னை யாங்கா குவள்கொ லளிய டானே (புறம். 254) கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் - கணவனொடு மனைவியர் கழிந்துழி அவர்கட் பட்ட அழிவு பொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடா தொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியருந் தனிப் 463படருழந்த செயலறு நிலைமை யானும்; ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும் அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோ ரென்ற பன்மையான் ஆண்பாலுந் தழீஇயினார், கையறுநிலை அவரையின்றி அமையாமையின். ஆண்பாற் கையறுநிலை மன்னைக்காஞ்சியுள் அடங்கும். அழிவாவன புனல்விளை யாட்டும், பொழில் விளையாட்டுந், தலைவன்வென்றியும் போல்வன. 464தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ வலகற்ற கற்பி னவள் (பாரதம்) காதலி இழந்த தபுதார நிலையும் - தன் மனைவியைக் கணவனிழந்த தபுதார நிலையானும்; என்றது தாரமிழந்த நிலை - தன் காதலியை இழந்தபின் வழிமுறைத் தாரம் வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும், எஞ்ஞான்றும் மனைவியல்லாதானுந் தபுதார நிலைக்கு உரிய னாயினும், அது காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், காதலியிழந்த நிலையுமென்றே ஒழியாது, பின்னுந் தபுதார நிலையு மென்றார். தலைவர் வழி முறைத் தாரமும் எய்துவாராதலின் அவர்க்கு நிலையாமை சிறப்பின்மை ஆண்பாற் காஞ்சி யன்றாயிற்று. இஃது, யாக்கையும் இன்பமும் ஒருங்குநிலையின்மையாம். உதாரணம்: 465யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே யுயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை யின்னும் வாழ்வ லென்னிதன் பண்பே (புறம். 245) காதலன் இழந்த தாபத நிலையும் - காதலனையிழந்த மனைவி தவம்புரிந்தொழுகிய நிலைமையானும்; இருவரும் ஒருயிராய்த் திகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம். இதனை இல்லறம் இழத்தலின் அறநிலையின்மை அமையு மென்ப. உதாரணம் : 466அளிய தாமே சிறுவெள் ளாம்ப லிளைய மாகத் தழையா யினவே யினியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் மல்லிப் படூஉம் புல்லா யினவே (புறம் 248) நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலைநிலையும் - கற்புடைய மனைவி தன் கணவன் இறந்து பட அவனோடு எதிரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு நிலையானும்; எல்லா நிலத்தும் உளதாகித் தனக்கு வேறு நிலனின்றி வருதலானும் நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்பு தலானும் 467புறங்காட்டைப் பாலையென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலையென்றார். 468பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்த் திட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடகிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெற் பள்ளிப் பாயின்று வதியு முயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீம நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே (புறம். 246) மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும். பொருகளத்துப் பொருதுமாயும் பெருஞ் சிறப்பிற்றீர்ந்து தன்மகன் புறங்கொடுத்துப் போந்தானாக, அது கேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்டமொன்றானும்; இனி அவன் பிறர்சிறப்பு மாய்தற்குக் காரண மாகிய பெருஞ்சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப் பெயனிலைமை யொன்றானும்; இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி. நிலையென்றதனான் அவள் இறந்துபடாது மீடலுஞ் சிறுபான் மையாம் காஞ்சி யென்று கொள்க. 469அஃது அன்பிற்கு நிலையின்மையாம். உதாரணம் : 470வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோவே னத்தை நின்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃக மதன்முகத் தொழிய நீபோந் தனையே யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை யீன்ற வயிறே (புறத்திரட்டு; மூதின்மறம். 9) இத் தகடூர்யாத்திரை கரியிடை வேலொழியப் போந்த தாற்குத் தாய் தப வந்த 471தலைப்பெயனிலை. 472எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ வென்மக னாத லெற்கண் டறிகோ கண்ணே கணைமூழ் கினவே தலையின் வண்ண மாலையும் வாளிவிடக் குறைந்தன வாயே, பொங்குநுனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித் தாவ நாழிகை யம்புசெறித் தற்றே நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பலசர நிரைத்தன வதணா லவிழ்பூ வப்பணைக் கிடந்தோன் கமழ்பூங் கழற்றீங் காய்போன் றனனே இத் தகடூர்யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங் கேரளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை. 473நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே இப் (278) புறப்பாட்டு மீண்டது. ஈன்று புறந்தருதல் என்னும் (312) புறப்பாட்டும் அது. மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் சொல்லாக் காடு வாழ்த்தொடு - அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிது ணரும்படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ் ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துத லானும்; உதாரணம் : 474உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ டிகனெடுவே லானை யிழந்து (பெ. பொ. விளக்கம்; புறத்திரட்டு - இரங்கல்.19) 475களரி பரந்து கள்ளி போகிப் பகலுங் கூஉங் கூகையொடு பிறழ்பல் ஈம விளக்கிற் பேஎய் மகளிரோ டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதல ரழுத கண்ணீ ரென்புபடு கடலை வெண்ணீ றவிப்ப வெல்லார் புறனுந் தான்கண் டுலகத்து மன்பதைக் கெல்லாந் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே (புறம். 356) இதுவுமது. தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப - தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறப்பிற்றுறை இரண்டு உடைத்தே - ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு. எனவே, முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென் பதுங் கூறினாராயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக் கணுள்ள நிலையாமை காஞ்சிச் சிறப்பன்று என்றுணர்க. (24) (பாடாண்டிணை இன்னதன்புறனென்றலும் இத்துணைப் பொருளுடைத்தென்றலும்) 80. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இது மேற் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் (56) என்புழிக் 476கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதி நின்ற பாடாண்டிணைக்குப் பொதுவிலக்கணம் உணர்த்துவான் அதற்குப் பெயர் இன்னதெனவும், அது கைக்கிளைப் புறனாமெனவும், அஃது இத்துணைப் பொருளுடைத் தெனவுங் கூறுகின்றது. (இ - ள்.) பாடாண்பகுதி கைக்கிளைப்புறனே - பாடா ணெனப்பட்ட புறத்திணையது கூறு கைக்கிளையென்று கூறப் பட்ட அகத்திணைக்குப் புறனாம்; நாடுங்காலை நாலிரண்டு உடைத்து - தன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடாணாகவே நிறுப்ப நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து எ-று. 477பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது. அவனதொழுகலாறாகிய திணை யுணர்த்தினமையின் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஒரு தலைவன் 478பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவை தம்மின் வேறாகிய ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப் புறனாயிற்று. வெட்சி முதலிய திணைகளுஞ் சுட்டி யொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப்படுதலிற் பாடாண்டிணையா யினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர் பெறுபுகழ் பிறரை வேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், அவை கைக்கிளைப்புறன் ஆகாமை உணர்க. இவ் விருகூறுந் தோன்றப் பகுதியென்றார். புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக் கிளைப் புறன் ஆகாவென உணர்க. இதனானே புறத்திணை ஏழற்கும் பெயரு முறையும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. நாலிரண்டாவன இப் பாடாண் டிணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும் இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞையுந் தும்பையும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம். இனி இக்கூறிய ஏழு திணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு காட்டுங்கால் எல்லாத் திணையும் ஒத்தவா யினும், அவை பெரும்பான்மையுஞ் சிறுபான்மையுமாகி வருதலும் அவை இரண்டும் பலவும் ஒருங்கு வருதலும் பாடாண்டிணைக்கு மேற்கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க. உதாரணம் : 479முனைப்புலத்துக் கஃதுடை முன்னரைப் போல்வேந்தூர் முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - யெனைப்புலத்துஞ் சென்றதுநின் சீர்த்தி தேர்வளவ தெவ்வர்போ னன்றுமுண் டாக நமக்கு இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம். 480அவலெறி யுலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யு முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை யிரிய வயிரைக் கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் திவவின வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு மகன்கண் வைப்பி னாடும னளிய விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்று. 29) இதில் இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம் வேண்டினா ரென்பது குறிப்பு வகையாற் கொள்ள 481வைத்தலின் இது வஞ்சிப் பொருள் வந்த பாடாணாயிற்று. இலங்கு தொடிமருப்பின் என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின் துலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று. 482பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்று நிலைதளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட் செருமிகு தானை வெல்போ ரோயே யாடுபெற் றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயு நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி னடையடுப் பறியா வருவீ யாம்ப லாயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே இது, வாகைத்துறைப் பாடாண்பாட்டு. இப் (63) பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்டிணையேயாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க. (25) (ஒன்றன்பகுதியுள் தேவர்பகுதி இவையெனல்) 81. அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினு மொன்றன் பகுதி யொன்று மென்ப. இது, முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடி ஒன்றா மென்ற பாடாண்டினை தேவரும் மக்களுமென இரு திறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர் பகுதி இவையென்ப துணர்த்துகின்றது. (இ - ள்.) அமரர்கண் முடியும் அறுவகையானும் - பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையான் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும் - அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக் கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும் எனப - மேற் பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்கு வருமென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு. அமரர்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென்பதூஉம் அவர்கண்ணே வந்து முடிவன வேறென்ப தூஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர்சாதிப் பாலவென்றல் வேத முடிவு. இதனானே பிறப்பு முறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது 483தந்திரவுத்தி வகையான். வகையென்றதனானே அமரரை வேறு வேறு பெயர் கொடுத்து வாழ்த்தலும் ஏனைப் பொது வகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன் பெறுங் கடவுள்வாழ்த்துப் போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும் பயனாதலின், இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு. புல்லிய வகையாவது, அம்மனக்குறிப்புத் தேவர் கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன் பொருட்டானும் ஆக்கத்துமேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்தலாம். இது ஒன்றனுக்கு பகுதியென்க. இத்துணைப் பகுதியென்று இரண்டிறந்தன கூறாது, வாளாதே பகுதி யென்றமையின் தேவரும் மக்களு மென இரண்டே யாயிற்று, அத்தேவருட் 484பெண் டெய்வங் கொடிநிலை கந்தழி (88) என்புழி அடங்கும். மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற் செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ (புறம். 3) என்றாற் போலச் சிறுபான்மை ஆண்மக்களொடு படுத்துப் பாடுப. வகையென்றதனான் வாழ்த்தின்கண் மக்கட் பொருளும் உடன்தழுவினும் அவை கடவுள் வாழ்த்தாமென்று கொள்க. உதாரணம் : 485எரியெள் ளுவன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றா ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்ந் தாடிய வாடல னீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலனிரண்டுருவா யீரணி பெற்றவெழிற் றகைய னேரு மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேர்க்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே (பதிற்று) இது, கடவுள் வாழ்த்து. 486தொகைகளிலுங் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக. இனி, அறுமுறை வாழ்த்தும் வருமாறு: 487நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள் - நீத். 8) 488கெடுப்பதூஉங் கெட்டாக்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை (குறள் - வான். 5) 489நாகின நந்தி யினம்பொலியும்போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப வாய ரகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்று நெய்பயந்து நல்லமு தன்ன வளையாகு நல்ல புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற் காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது ஏனைய வந்துழிக் காண்க. 490புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தாசுதொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சாய் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின் னறங்கெழு சேவடி காப்ப வுறந்தையோ டூழி யூழி வாழி யாழி மானில மாழியிற் புரந்தே. இது, கடவுள் வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படு வோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்தலின் புரைதீர்காமம் புல்லிய வகையாயிற்று. (26) (ஒன்றன்பகுதியுள் மக்கட்பகுதி இவையெனல்) 82. 491வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. இது, மேல் ஒன்றன்பகுதி (81) என்புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுண் மக்கட் பகுதி கூறுகின்றது. (இ - ள்.) பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினும் - ஒரு தலைவன், தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைத்தலுங் கருதிய பக்கத்தின்கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப் பினும் - அறம்பொருளின் பங்களின் கூறுபாடு தோன்ற முன் னுள்ளோர் கூறிய குறிப்புப் பொருளின்கண்ணும்; செந்துறை நிலைஇ - செவ்வனம் கூறுந்துறைநிலை பெற்று; வழங்கு இயல் மருங்கின். வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப் பகுதி வரைவின்று - அச்செந்துறைக் கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று. என்றவாறு. பரவல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும், பரவலும் புகழ்ச்சியுந் தலைவன் கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப் புறனாயிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கையின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்றார், அறம் பொருள் இன்பம் பயப்பச் செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதி பயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறை யாவது, விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கை வகையான் 492இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டெனப் படும். 493வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா (குறிஞ்சிப். 31) என்பவாகலானும், ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும், வண்ணமென்பது இயற்சொல்; வருண மென்பது வடமொழித் திரிபு. ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப் பகுதியிடத்து வண்ணப்பகுதி 494வரையப்படுமாயிற்று; கைக் கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப் படுத்துக் கூறாதது, அனைநிலை (750) வருணத்துப் படுத்துத் தோன்றக் கூறலின். உதாரணம் : 495நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி ளைப்ப ரியையே நாள்கோ டிங்கள் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை யக்குர னனைய கைவண் மையையே யமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப கூற்று வெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பி னொடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொகுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் முன்றிணை முதல்வர்போல நின்றுநீ கொடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ வியரோவிவ் வுலகமோ டுடனே (பதிற்று. 14) 496பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர். 497வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே நீ. யுடன்று நோக்கும்வா யெரிதவழ நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று ணிலவுவேண்டினும் வெண்டியங்களுள் வெயில்வேண்டினும் வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலி னின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த வெம்மள வெவனோ மற்றே யின்னிலைப் பொலம்பூங் காவி னன்னாட் டோருஞ் செய்வினை மருங்கி னெய்த லல்லதை யுடையோ ரீதலு மில்லோ ரிரத்தலுங் கடவ தன்மையிற் கையற வுடைத்தென வாண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலி னின்னா டுள்ளுவர் பரிசில ரொன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே (புறம். 38) இது, புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. 498இயைபியன்மொழி யென்பதும் அது. 499உண்டா லம்மவிவ் வுலக மிந்திர ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி னுலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்வில ரன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யரானே (புறம். 182) இது, வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இது, முனிவர் கூறுமாறுபோலக் 500கூறிப் பரவலும் புகழ்ச்சியுங்கூறாது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய் பாடாணாயிற்று. 501இவை, செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்குரியவாகி வருமென்பதூஉங் கூறின், அவை ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது 502இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கொரு காரணமின்மையானும் அங்ஙனங் கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சியும் அவ்வப் பொருண்மை கருதினாரைத் தலைவராக வுடைமையானும், ஏனையது அக்குறிப்பிற்றன் றாகலானும், அதற்குப் பாட்டுடைத் தலைவர் பலராயினும் ஒருவராயினும் பெயர்கொடுத்துங் கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க. இத்துணை வேறுபாடு டையதனைப் பரவல் புகழ்ச்சியொடு கூட வைத்தார், 503அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய்வரும் என்றற்கு. இன்னும் அதனானே பாடாண்டிணைப் பொருண்மை 504மயங்கி வரினும் முடிந்த பொருளாற் பெயர் பெறுமென்று கொள்க. நிலமிசை வாழ்நர் என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைது 505ஆறி அது நன்குரைத்தல். அஃது இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு. இன்னும் மயங்கி வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (27) (எய்தியதன்மேற் சிறப்புவிதி) 83. காமப் பகுதிய கடவுளும் வரையா ரேனோர் பாங்கினு மென்மனார் புலவர். இது, முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ - ள்.) காமப்பகுதி - முன்னர்ப் புலைதீர்காம (81) மென்றதனுட் 506பக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார் - கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர் - மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் என்றவாறு. 507பகுதி - ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம். இன்னும் பகுதியென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் காமஞ் சாலா இளமையோள்வயிற் (50) காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க. உதாரணம் : 508நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே லொல்கெனி னுச்சியா ணோமென்னு - மல்கிரு ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை யூட லுணர்த்துவதோ ராறு (பு. வெ. பாடாண். 48) 509பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ 510குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே யிடுமுத்தம் பூத னிருப்பப் - படுமுத்தம் புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையார்க் கென்ன முறைய ளிவள். எ - ம், 511களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை யளியா னளிப்பானே போன்றான் - றெளியாதே செங்காந்தண் மெல்லிரலாற் சேக்கை தடவந்தே னென்காண்பே னென்னலால் யான் (முத்தொள். 63) 512அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப் பணியாயே யெம்பெருமா னென்று - கணியார்வாய்க் கோணலங் கேட்பதூஉங் கொண்கர் பெருமானார் தோணலஞ் சேர்தற் பொருட்டு என வரும். 513அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே யடுதோண் முயங்க லவைநா ணுவலே யென்போற் பெருவிதுப் புறுக வென்று மொருபாற் படாஅ தாகி யிருபாற் பட்டவிம் மைய லூரே (புறம். 83) இது, பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி 514ஒத்த அன்பினாற் காமமுறாத வழியுங் குணச் சிறப்பின்றித் தானே காம முற்றுக் கூறியது, இதனானடக்குக. இன்னும் ஏனோர் பாங்கினும் என்பதனானே 515கிளவித் தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவ னாகக் கூறுவனவுங் கொள்க. உதாரணம் : கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் ளீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன் (கலி.67) 515இது குறிப்பினாற் பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறியது. மீளிவேற் றானையர் புகுதந்தார் நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே (கலி. 31) என்பதும் அது. இவ்வாறு வருவதெல்லாம் இதனானமைக்க. (28) (மக்கட் குழவிக்கண்ணும் புரைதீர்காம முரித்தெனல்) 84. 516குழவி மருங்கினுங் கிழவ தாகும் இது, முன்னிற் சூத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் புரைதீர்காம (81) த்திற்குப் புறனடை கூறுகின்றது. (இ - ள்.) குழவிமருங்கினும் கிழவதாகும் - குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும். என்றவாறு. மருங்கு என்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க; தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டென்றாது வேறு கூறினார், தந்தையரிடத்தன்றி ஒரு திங்களிற் குழவியைப் பற்றிக் 517கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுஞ் தாலுஞ்சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறு பறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது. இப்பகுதிகளெல்லாம் வழக்கொடு சிவணிய (86) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப்பருவத்துக்கு உயர்ந்த வெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாள ராகின்ற பருவமாம். வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமே கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக் காலும் அக்குழவிப் பருவமே கருதிப் பாடுக வென்றதற்குக் கிழவதாகு மென்றார். இதற்குப் பரிசில் வேட்கை அக்குழவிக் கணன்றி அவன் 518தமர்க்கண்ணுமாமென் றுணர்க. உதாரணம் : 519அன்னா யிவனொருவ னந்தரத்தா னானென்றான் முன்ன மொருகான் மொழியினான் - பின்னுங் கலிகெழு கூடலிற் கண்ஞீடி வந்து புலியாய்ப் பொருவான் புகும் அந்தரத்தா னானென்றான் 520அம்புலி வேறாயும் ஒரு காலத்தே விளையாட்டு நிகழ்த்துமென. இது மதுரையிற் பிட்டு வாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது. (29) (ஊர்ப்பொதுமகளிரொடு பொருந்திவரக் கூறலும் பாடாண்டிணைக் குரித்தெனல்) 85. ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப. இது, புரைதீர் காமத்திற்கன்றிப் பக்குநின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது. (இ - ள்.) பக்கு நின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. தோற்றமுமென்றது, அக்காமந் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவ மாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம். 521இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்புமென்று பொருள் கூறின், மரபியற்கண்ணே ஊரும் பெயரும் (629) என்னும் சூத்திரத்து ஊர்பெறுத லானும், முன்னர் வண்ணப்பகுதி (82) என்பதனாற் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது கூறலாமென்றுணர்க. (30) (மேற்கூறிய ஐந்து சூத்திரங்கட்கும் புறனடை) 86. வழக்கொடு சிவணிய வகைமை யான. இஃது அமரர்கண் முடியும் (81) என்னும் சூத்திர முதலிய வற்றுக்கெல்லாம் புறனடை. (இ - ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீறாகக் கிடந்தனவெல்லாஞ் சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக்கண்ணே யான பொருள்களாம் என்றவாறு. எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து. கடவுள் வாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் பாடியவாறன்றி முப்பத்து மூவருட் சிலரை விதந்து வாங்கிப் பாடப்பெறாது. இனி, அறுமுறை வாழ்த்துப் பாடுங்கால் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப் படா. இனிப் புரைதீர்காமம் புல்லிய வகையும் ஒருவன் றொழுங் குல தெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது. இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறிய வாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப் படாது. இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண் டெய்வத்தோடு 522இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகை வசுக்கள் போல்வாரையும் புத்தர், சமணர் முதலியோரையுங் கூறப்படாது. இனி, மக்களுள் ஒருவனைத் தெய்வப் பெண்பால் காதலித்தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக் காதல் கூறுங் காலும் முன்னோர் கூறியவாறன்றிக் கூறப்படாது. இனிக் குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறிய வாறன்றிக் கூறப்படாது. இனி, ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குல மகளிர்க்குக் கூறப்படாது. இன்னுஞ் சிவணிய வகைமை என்றதனானே முற்கூறிய வற்றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவன வெல்லாங் கொள்க. உதாரணம் : 523முற்பற்றி னாரை முறைசெய்யிற் றானென்னைக் கைப்பற்றக் கண்டேன் கனவினு - ளிப்பெற்றித் தன்னைத் தனக்கே முறைப்படி னென்செய்யும் பொன்னம் புனனாட்டார் கோ ஏரியு 524மேற்றத்தி னாலும் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாந் - தேரி னரிதாளின் கீழுகூஉ மந்நெல்லே சாலுங் கரிகாலன் காவிரிசூழ் நாடு (பொருநராற்றுப்படை.) இவை, நாடும் யாறும் அடுத்து வந்தன. 525மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு ளொலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும் இஃது, ஊர் அடுத்து வந்தது. 526மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுந்தோட்டு நீரறன் மருங்குவழிப் படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சரச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்று. 21) இது, மலையடுத்தது. 527ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறம். 14) இது, படையடுத்தது. 528பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல - வோங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி (பு.வெ.பாடாண். 39) இது, கொடியடுத்தது. 529வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமா லெனவே (புறம். 60) இது, குடையடுத்தது. முரசு முழங்குதானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போல (பொருந. 54.5) இது, முரசடுத்தது. 530சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர்நாடன் மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப் பொன்னுரைகற் போன்ற குளம்பு. இது, புரவியடுத்தது. 531அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சால் மன்ன ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிறு (முத்தொள். யானைமறம். 17) இது, களிறடுத்தது. 532நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவு தோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ (புறம். 4) இது, தேரடுத்தது. 533மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப. (புறம். 10) இது, தாரடுத்தது. இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு 534சின்னப்பூ வென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க. (31) (அகத்திணை, புறத்திணைக்குரிய மெய்ப் பெயரினிடமாக வருமெனல்) 87. மெய்ப்பெயர் மருங்கின் 535வைத்தனர் வழியே. இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக் குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென் கின்றது. (இ - ள்.) மெய்ப்பெயர் மருங்கின் - புறத்திணைக்குரிய 536மெய்ப் பெயர்களின் மருங்கே; வழி வைத்தனர் - புறத்திணை தோன்றுதற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர் என்றவாறு. என்றது, எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழி யென்பது ஆகுபெயர். மெய்ப்பெயராவன புறத்திணைக் குரிய பாட்டுடைத் தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம். இதன் கருத்துச் சுட்டியொருவர் பெயர்கௌப் பெறாஅர் (தொல். அகம். 54) என அகத்திணையியலுட் கூறினமையிற், கிளவித் தலைவன் பெயரை மெய்ப்பெயராகக் கொள்ளாது, ஏனைப் புறத்திணையாற் கொண்ட மெய்ப் பெயரிடம் பற்றி, அகத்திணைப் பொருள் நிகழவும் பெறு மென்பதாம். உதாரணம் : அரிபெய் சிலம்பின் என்னும் (6) அகப் பாட்டினுள் (6) தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரியாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க. மருங்கு என்றதனாற் பாட்டுடைத் தலைவன் பெயர் கூறிப் பின்னர் நாடு முதலியன கூறல் மரபென்று கொள்க. அதுவும் அச்செய்யுளாற் பெற்றாம். நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் 537கூடலு முள்ளார்கொல். (கலி. 27) இதனுட் கூடலிடத்துத் தலைவியென்பது கூறினார். கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற 538வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல். (கலி. 27) இதனுள் வென்வேலான் குன்றென மலைகூறினார். திசைதிசை தேனார்க்குந் 539திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர் (கலி. 26) இதனுள் ஆறு கூறினார். புனவளர் பூங்கொடி என்னும் (92) மருதக்கலியும் அது. கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி யரியசூள் பொய்த்தா ரறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையு முத்துங்கண் டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே யெம்மூர் இது முதலிய மூன்றும் (சிலப் - கானல் - 7) 540புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க. இன்னுஞ் சான்றோர் செய்யுட்கள் இங்ஙனம் வருவன வெல்லாம் இதனான் அமைக்க. இக்கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்டலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச் செய்யுள் செய்தாரேனும் தம்மிசை பரந்துலகேத்த 541வேதினாட்டுறைபவர் (கலி. 26) என்று இவை பாடாண்டிணையெனப் பெயர்பெறா என்றற்கு இது கூறினார். (பிறப்பில்லாத் தெய்வங்களும் பாடாண்டிணைக்குரியவெனல்) 88. 542கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இது, தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதியிரண்டுங்கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒரு வழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டி ணைக்கு உரியரென்கிறது. (இ - ள்.) கொடிநிலை - கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் 543வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி - ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி - 544தண்கதிர் மண்டலம்; என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்த்த சிறப்பினை யுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே - முற்கூறிய அமரரோடே கருதுமாற்றான் தோன்றும் என்றவாறு. பொய்தீ ருலக மெடுத்த கொடி மிசை மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள் (கலி. 141) என்றவழிக் 545கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டில மென் றாற் போலக் கொடிநிலை யென்பதூஉம் அப்பொருள் தந்த தோர் ஆகுபெயர். இனி, எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந்நீடனி லைமை பற்றிக் 546கொடிநிலை யென்பாருமுளர். குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே (குறுந்.132) என்றாற்போல. 547வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை? பன்மீன்தொடுத்த உடுத்தொடையைக் கொடியெனப்படுதலின், அத்தொடையினை இடைவிடாதுடைத்தாதலின் அதனை அப் பெயராற் கூறினார்; முத்துக்கொடியெனவும் மேகவள்ளி யெனவுங் கூறுமது போல. கந்தழி அவ்விரண்டற்கும் பொது வாய் நிற்றலின் இடையே வைத்தார். இனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண்பாற் றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள் வாழ்த்தினுட் படுவனவாயின, பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை? 548ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமையானு மென்பது. அல்லதூஉம், வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி யென்பதூஉமாம் என்பது. உதாரணம் : 549மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா னாகத்தா னீமறைய நாட்கதிரே - யோகத்தாற் காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு இது, கொடிநிலை வாழ்த்து. 550சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர் இது, கந்தழி வாழ்த்து. 551பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம் இது, வள்ளி வாழ்த்து. தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை பனிக்கண்ணி சாவு படுத்துப் - பனிக்கணந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென் றியாமுரையா நிற்கு மிடத்து இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து. (33) (எய்தாததெய்துவித்தல்) 89. கொற்ற வள்ளை யோரிடத் தான. இஃது, எய்தாதது எய்துவித்தது. தேவர்க்கும் உரியவாம் ஒருசார் அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின். (இ - ள்.) கொற்றவள்ளை - 552அதிகாரத்தாற் கைக் கிளைக்குப் புறனாய் வெட்சி முதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை; ஓரிடத்தான - மேற்கூறி நின்ற தேவர் பகுதிக் கண்ணதன்றி அவரின் வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது என்றவாறு. எனவே உழிஞைமுதலிய பாடாண் கொற்றவள்ளை நற்றிளைஞருங் கூளிச்சுற்றமும் ஒன்றனை நச்சிப் புகழ்ந்து வாளாதே கூறுதலும், ஈண்டுக் கூறுகின்ற கொற்றவள்ளை புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய ஏழனானும் புகழ்ந்துரைத்தலு மாயிற்றாதலிற் படையியங் கரவம் (58) முதலாக வஞ்சியிற் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளை யீறாகக் கிடந்த பொருட் பகுதியெல்லாம் பாடாண்டிணை யாகப் பாடுங்கால் மக்கட்கே யுரிய என்பதூஉம், உழிஞை முதலியவற்றைப் பாடாண்டிணை யாகப் பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப உரிய வென்பதூஉம் கூறுதலாயிற்று. என்னை? அரசியலாற் போர் குறித்து நிரைகோடலும் மீட்டலும் மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க் கேலாமையா யினும், அவுணரான் முற்றப்பட்ட துறக்கத் தினை அகத்துழிஞை யரணாக்கி மனுவழித் தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல்வனவும் பிறவுந் தேவர்க்குக் கூறுதலான் அவரும் மதில் முற்றியவழிப் போர் தோன்றுதலும் ஆண் வென்றி யெய்துதலும் உடையராதலின் பாடாண் பொருட்கும் உரியாரென நேர்பட்டது. இச்சூத்திரம் மக்கட்கெய்திய பொருண்மையை மீட்டுங் கூறி நியமித்ததாம்; ஆகவே, வெட்சி முதல் வஞ்சியிற் கொற்ற வள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டி ணைக் குரியராகி இடைபுகுந்த தேவர்க் காகாவென விதிவகை யான் விலக்கியதாம். ஆகவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்ற வள்ளை ஆமென்ப தூஉம் கூறினாராயிற்று. கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை 553அதிகாரங்கொண்ட அளவேயாமென்றுணர்க. உதாரணம் : 554மாவாடியபுல னாஞ்சிலாடா கடாஅஞ்சென்னிய கடங்கண்யானை யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி நீ யுடன்றோர் மன்னெயி றோட்டி வையா கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கி னாண்டலை வழங்குங் கானணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய வுருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடா (பதிற்று. 25) இது, புலவன் பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்ற வள்ளை. வல்லா ராயினும் வல்லுந ராயினும், காலனுங் காலம் என்னும் (57,41) புறப்பாட்டுக்களும் அது. (34) (மக்கட் பாடாண்டிணைக்குரியதுறை இவையெனல்) 90. கொடுப்போ ரேத்திக் கொடா அர்ப் பழித்தலு மடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ் சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானுங் கண்படை கண்ணிய கண்படை நிலையுங் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலி னோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉ மாவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. இது, முன்னிற் சூத்திரத்து 555அதிகாரப்பட்டுநின்ற மக்கட் பாடாண்டிணைக்குரிய துறை கூறுகின்றது. (இ - ள்.) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் - பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக் கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக் கூறலும்; சான்றோர்க்குப் பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்க தன்றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர் பயன் படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ் தலை விரும்புவரென்பது பயப்பக் கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க. உதாரணம் : 556தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த வடகின் கண்ணுறை யாக யாஞ்சில வரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி யிருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகொல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே (புறம். 140) இது, கொடுப்போ ரேத்தியது. 557பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே (புறம். 107) என்பதுமது. 558ஒல்லுவ தொல்லு மென்றலு மியாவர்க்கு மொல்லா தில்லென மறுத்தலு மிரண்டு மாள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே யொல்லா தொல்வ தென்றலு மொல்லுவ தில்லென மறுத்தலூ மிரண்டும் வல்லே யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை யனைத்தா யெரினி யிதுவே யெனைத்துஞ் சேய்த்துக் காணாது கண்டன மதனா னோயில ராகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதன் மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை சிறக்கநின் னாளே (புறம். 196) புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன் (குறள் - புகழ்.7) இவை - கொடாஅர்ப் பழித்தல். 559களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப வீகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றேன்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி யுரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே (புறம். 127) இஃது, 560ஆயைப் புகழ்ந்து ஏனைச் செல்வரைப் பழித்தது. 561மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே யளிப்பாரு மக்களா மாறு (பெரும்பொருள் விளக்கம்) இதுவும் அது. 562அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - தலைவனெதிர் சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத் தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன் மொழி வாழ்த்தும்; என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும், அன்னோர்போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும் உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்தலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை உம்மைத் தொகையாக்கி இயன்மொழி யும் வாழ்த்துமென இரண்டாக்கிக் கொள்க. இஃது, ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலானும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று. உதாரணம் : 563மாசற விசித்த வார்புற வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை யறியா தேறிய வென்னைத் தெறுவர விருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை யதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறித லதனொடு மமையா தணுக வந்துநின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென வீசி யோயே வியலிடங் கமழ விவணிசை யுடையோர்க் கல்ல தவண துயர்நிலை யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குருசினீ யீங்கிது செயலே (புறம் 50) இவை போல்வன வெல்லாம் இயன்மொழி. 564மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக் கடல்போ றானைக் கடுங்குரன் முரசம் காலுறு கடலிற் கடிய வுரற வெறிந்து சிதைந்த வா ளிலைதெரிந்த வேல் பாய்ந்தாய்ந்த மா வாய்ந்து தெரிந்த புகன்மறவரொடு படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையா தாண்டோர் மன்றவிம் மண்கெழு ஞால நிலம்பயம் பொழியச் சுடசினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த விலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே (பதிற்று. 69) இது, முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பது படக் கூறிய இயன்மொழி வாழ்த்து. 565முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு மரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் கொல்லி யாண்ட வல்வி லோரியுங் காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரி யீகை மறப்போர் மலையனு மூரா தேந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியு மீர்ந்தண் சிலம்பி னிருடுங்கு நளிமுழை யருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப் பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி மோசி பாடிய வாயு மார்வமுற் றுள்ளி வருந ருலைவுநனி தீரத் தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங் கெழுவர் மாய்ந்த பின்றை யளிவரப் பாடி வருநரும் பிறருங் கூடி யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவ ணுள்ளி வந்தனென் யானே வீசும்புறக் கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி யாசினிக் கவினிய பலவி னார்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் றுய்த்தலை மந்தியைக் கையீடுஉப் பயிரு மதிரா யாணர் முதிரத்துக் கிழவ விவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண விசைமேந் தோன்றி வண்மையொடு பகைமேம் படுகநீ யேந்திய வேலே (புறம். 158) இஃது, இன்னோர்போல எமக்கு ஈயென்ற இயன்மொழி வாழ்த்து. 566இன்று செலினுந் தருமே சிறுவரை நின்று செலினுந் தருமே பின்னு முன்னே தந்தனெ னென்னாது துன்னி வைகலுஞ் செலினும் பொய்யல னாகி யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன் றான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற னினமலி கதச்சேக் களனொடு வேண்டினுங் களமலி நெல்லின் குப்பை வேண்டினு மருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே யன்ன னாகலி னெந்தை யுள்ளடி முள்ளு நோவ வுறாற்க தில்ல வீவோ ரரியவிவ் வுலகத்து வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே (புறம். 171) இது, படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து. 567இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வணிக னாயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென வாங்குப் பட்டன் றவன்கை வண்மையே (புறம். 134) இது, பிறருஞ் சான்றோர் சென்ற நெறி யென்றமையின் 568அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த கடை நிலையானும் - 569சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந் தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக் கூறிக் 570கடைக்கணின்ற கடை நிலையும்; இது, வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ் வருத்தந் தீர்க்கும் 571பாடாண்தலைவனதே துறையென்பது பெற்றாம். இழிந்தோரெல்லாந் தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் (91) என் புழிக் கூறுதலின், இஃது 572உயர்ந்தோர்க்கே கூறியதாம். உதாரணம் : 573வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு மாற்றற்கு வந்தனேம் வாயிலோய் - வேற்றார் திறைமயக்கு முற்றத்துச் சேணோங்கு கோயி லிறைமகற்கெம் மாற்ற மிசை வாயி லோயே வாயி லோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தா முன்னியது முடிக்கு முரனுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க் கடையா வாயி லோயே கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொ லறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யுலகமு மன்றே யதனாற் காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை மரங்கொஃ றச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே (புறம். 206) இது, தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலிற் பரிசில் கடாயதின்றாம். ஆன் - அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்துரைத்தலுமொன்று. 574கண்படை கண்ணி கண்படை நிலையும் - அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில் கோடலைக் கருதிக் கூறிய கண்படை நிலையும்; கண்படை கண்ணிய என்றார், கண்படை முடிபொருளாக இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு. உதாரணம் : வாய்வாட் டானை வயங்கபுகழ்ச் சென்னிநின் னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர் களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப வறிது துயில்கோடல் வேண்டுநின் பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - 575சேதாவினைக் கொடுக்கக் கருதிய கொடை நிலை கூறுதலும்; இது, வரையா ஈகையன்றி இன்னலுற்றாற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறு 576நாட்காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறினார். கண்ணிய என்றதனாற் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுங் கொள்கை. 577பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் - சென்னிதன் மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள் போர்த் தானுலக மண்ணுலகா மன்று வேலின் ஓக்கிய விளக்கு நிலையும் - வேலும் வேற்றலையும் விலங்காதோங்கினவாறு போலக் கோலொடு விளக்கும் ஒன்று பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்கு நிலையும். இனி, உவமப்பொருள். இது கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழும்மேலும் வலமுமிடமுந் திரிபரந்து சுடர்ஓங்கிக் கொழுந்துவிட்டெ ழுந்தென்று அறவோ 578ராக்கங் கூறப்படுவதாம். உதாரணம் : 579மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச் செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள் வேலினுங் கோடாது வேந்தன் மனைவிளங்கக் கோலினுங் கோடா கொழுந்து 580வேலின் வெற்றியை நோக்கி நின்ற விளக்கு நிலையெனப் பெருள் கூறி, 581வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி யொளிசிறந்தாங் கோங்கி வரலா - லளிசிறந்து நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு (பு.வெ. பாடாண். 12) என்பது காட்டுவாருமுளர். அவர் இதனை நித்தம் இடுகின்ற விளக்கென்பர். வாயுறை வாழ்த்தும் - வாயுறை வாழ்த்தே... வேம்புங் கடுவும் என்னும் (111) செய்யுளியற் சூத்திரப்பொருளை உரைக்க. இதற்கு ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி 582மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவுங் கைக்கிளைப் புறனாகிய பாடாணாயிற்று. செவியுறைக்கும் இஃதொக்கும். உதாரணம் : எருமையன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயோ ராகலி னின்னொன்று மொழிவ லருளு மன்பு நீக்கி நீங்கா 583நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே (புறம். 5) இதனுள் நிரயங்கொள்வாரோ டொன்றாது காவலை யோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக்கூறி அவற்கு உறுதி 584பயத்தலின் வாயுறைவாழ்த்தாயிற்று. 585காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகு நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கு மறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்து மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் கற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்க புலம்போலத் தானு முண்ணா னுலகமுங் கெடுமே. என்னும் (184) புறப்பாட்டு மது. 586தத்தம் புது நூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறைகூறி னாரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றுணர்க. செவியுறை தானே (426) என்னுஞ் சூத்திரப் பொருண்மை இவ்வுதாரணங்கட்கு இன்மை யுணர்க. செவியறிவுறூஉவும் - இதற்குச் செவியுறைதானே என்னும் செய்யுளியற் (426) சூத்திரப் பொருளை உரைக்க. ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவும் கூறுமாறு போல, 587உறுவும் உறூஉதலெனவும் உறூஉவெனவுங் கூறப்படும். உதாரணம் : 588அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டன் முறை (பு.வெ. பாடாண். 33) 589வடாஅது. பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு குமரியின் றெற்குங் குணாஅது. கரைபொரு தொடுகடற் குணக்குங் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்குங் கீழது. முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டி னீர்நிலை நிவப்பின் கீழு மேல தானிலை யுலகத் தானு மானா துருவும் புகழு மாகி விரிசீர்த் தெரிகோன் ஞமன் போல வொருதிறம் பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச் சிறுகண் யானை செவ்வதி னேவிப் பாசவற் படப்பை யாரெயில் பலதந் தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே யிறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே வாடுக விறைவநின் கண்ணி யொன்னார் நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே யாங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு போலவு மன்னிய பெருமநீ நிலமிசை யானே (புறம். 6) இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றொடு செவியுறை யுங் கூறினார், செவியுறைப் பொருள் சிறப்புடைத்தென்று அவன் கருதி வாழ்தல் வேண்டி. ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் - தெய்வ வழிபாடு உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டு டைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்; தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாதற்கு ஆவயின் வரூஉம் என்றார். இதற்கு வழிபடு தெய்வம் என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க. இதுவுந் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தான் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார் கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று. உதாரணம் : 590கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி மால்காப்ப வெண்ணிருதோ ளேந்திழையா டான்காப்பப் - பண்ணியனூற் சென்னியர்க் களிக்குந் தெய்வநீ மன்னுக நாளுமிம் மண்மிசை யானே (பெரும்பொருள்விளக்கம் - கடவுள் வாழ்த்து) கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇ - மேற் காமப் பகுதி யென்ற கைக்கிளை யல்லாத கைக்கிளையின் பகுதியோடே வாயுறை வாழ்த்துஞ் செவியறிவுறூஉம் புறநிலை வாழ்த்துங்கூட நான்காகிய தொகைபெற்ற நான்கும்; வாயுறை வாழ்த்து முதலிய மூன்றுந் தத்தம் இலக்கணத்திற் றிரிவுபடா; இக்கைக்கிளை திரிவுபடுமென்றற்கு எண்ணும்மை யான் உடனோதாது உளப்படவென வேறுபடுத்தோதினார். அகத்திணையியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், காமஞ்சாலா இளமையோள்வயிற் (தொல். பொ. அகத் 50) கைக்கிளையும், முன்னைய நான்கும் (தொல். பொ. அகத். 52) என்ற கைக்கிளையும், காமப்பகுதி என்ற கைக்கிளையும், களவியலுண் முன்னைய மூன்றும் (தொல். பொ. கள. 28) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோ ராயினும் பிறராயினுங் கூறுதற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் 591கடைநிலைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனான் துறந்த பெண்பாற் கைக்கிளை யாதலின் ஒருத்தியைத் துறந்ததனான் துறந்த பெண்பாற் கைக்கிளை யாதலின் திரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக் காலத்துத் தான்குறித்தது முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ்செய்து இன்பமின்றி பொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று. உதாரணம் : 592அருளா யாகலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண் கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப வினைத லானா ளாக விளையோய் கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றொழுதனம் வினவக் காந்தண் முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி யெம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேக னொல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே (புறம் 144) 593இது, கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளைவகைப் பாடாண் பாட்டு. கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென வினவ, யாங்கிளையல்லேம் முல்லை வேலி நல்லூர்க்கண்ணே வரு மென்று சொல்வாரெனக் கூறுதலின், அஃது ஏனைக் கைக் கிளைகளின் வேறாயிற்று. கண்முழை யருவி என்னும் (147) புறப்பாட்டும் அது. தொக்க நான்கும் உள என மொழிப - அந்நான்கும் முற் கூறிய அறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக் கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. தொக்க நான்கு என்றதனான் இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉம் கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றோடு உடன்கூறாராயி னார், அவை 594இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (35) (இதுவுமது) 91. தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூத ரேத்திய துயிலெடை நிலையுங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ் சிறந்த நாளணி செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற்பெருமங் கலமுஞ் சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமு நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபு மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமு மன்னெயி லழித்த மண்ணுமங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவள னேத்தி நடைவயிற் றோன்று மிருவகை விடையு மச்சமு முவகையு மெச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே. இதுவுமது. (இ - ள்.) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் - தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக் கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத் 595துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்; கிடந்தோர்க்கு எனப் பன்மைகூறவே, அவர் துயிலெடுப் புத்தொன்றுதொட்டு வருமென்பதூஉஞ், 596சூதர் மாகதர் வேதா ளிகர் வந்திகர் முதலாயினோருத் சூதரே இங்ஙனம் வீரத்தான் துயின்றாரைத் துயிலெடுப்பு வரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையுங் கூறப்படுமென்பதூஉங் கொள்க. அவர் அங்ஙனந் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம் உளதாயிற்று. உதாரணம் : 597கானம் பொருந்திய கயவாய் மகளிரின் யானுறுந் துயர நந்திய பானா ளிமையாக் கண்ணோ டமையாக் காத்தநின் மூதின் முதல்வன் றுயில்கொண் டாங்குப் போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ சேக்கை வளர்ந்தனை பெரும தாக்கிய வண்கை யவுண னுயிர்செல வாங்கவ னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய வாடா வஞ்சி மலைந்த சென்னிப் போரடு தானைப் பொலந்தேர் வளவ நின்றுயி லெழுமதி நீயு மொன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் - ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் 598கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியு மென்னும் நாற் பாலாருந் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறி யோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவை யெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்; கூத்தராயிற் 599பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற் றொழிற்கு உரியோர்களும் 600பாரதி விருத்தியும் விலக்கியற் கூத்துங் கானகக் கூத்துங் கழாய்க் கூத்தும் ஆடுபவராகச் சாதி வரையறை யிலராகலின் அவரை முன் வைத்தார்; பாணரும் பொருநருந் தத்தஞ் சாதியில் 601திரியாது வருதலிற் சேரவைத்தார்; முற்கூறிய முப்பாலோருட் கூத்தாராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட் பட்ட குறிப்புக்களும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவர்; அது விறலாகலின் அவ் விறல்பட ஆடுவாளை விறலி யென்றார். இவளுக்குஞ் சாதிவரையறை யின்மையிற் பின் வைத்தார். பாணரும் - 602இசைப் பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணரு மெனப் பலராம். பொருநரும் - ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதொரு தொழில் வேறுபாடின்றித் தொழி லொன்றாகலின் விறலியென ஒருமையாற் கூறினார். ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் - இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடட் தோன்றுகையினானே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழி யாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்து பெறாதார்க்கு இன்ன விடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும்; பக்கம்என்றதனானே - அச்செய்யுள்களைக் கூத்த ராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, விறலி யாற்றுப் படை, முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றின ருமையும் அவனூர்ப்பண்பு முதலியனவுங் கூறுதலுங் கொள்க. உதாரணம் : 603வான்றோய் வெண்குடை வயமா வளவ ஈன்றோர் தம்மினுந் தோன்ற நல்கினன் சுரஞ்செல் வருத்தமொ டிரங்கி யென்று மிரந்தோ ரறியாப் பெருங்கலஞ் சுரக்குவன் சென்மதி வாழிய நீயே நின்வயி னாடலு மகிழான் பாடலுங் கேளான் வல்லே வருகென விடுப்பி னல்லது நில்லென நிறுக்குவ னல்ல னல்லிசைப் பெருந்தகை வேந்தர் கோலமொடு திருந்தா வாழ்க்கையின் வருந்து வோயே திருமழை தலைஇய விருணிற விசும்பின் (மலைபடு 1) இவை கூத்தராற்றுப்படை 604பாணன் சூடிய பசும்பொற் றாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ யூரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர் யாரீ ரோவென வினவ லானாக் காரெ னொக்கற் கடும்பசி யிரவல வென்வே லண்ணற் காணா வூங்கே நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென்று முடாஅ போரா வாகுத லறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ கடாஅ யானைக் கலிமான் பேக னெத்துணை யாயினு மீத்த னன்றென மறுமைநோக் கின்றோ வன்றே பிறர், வறுமைநோக் கின்றவன் கைவண் மையே (புறம். 141) மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை (சிறுபாண். 1) இவை பாணராற்றுப்படை. 605சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பி னொலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன் வள்ளிய னாதல் வையகம் புகழினு முள்ள மோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை யொருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே னாக வகமலி யுவகையொ டணுகல் வேண்டிக் கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழ நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண் டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந் துன்னரும் பரிசி றருமென வென்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே (புறம். 394) அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாட் (பொருந. 1 - 2) இவை - பெருநராற்றுப்படை. 606சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினு மருவி கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரு நீரினு மினய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே (புறம். 105) 607மெல்லியல் விறலிநீ ..... காணிய சென்மே (புறம். 133) இவை - விறலியாற்றுப்படை. 608கூத்தராற்றுப்படை தடுமாறுதொழிலாகாமற் கூத்தரை ஆற்றுப்படுத்ததென விரிக்க. ஏனையவும் அன்ன. 609முருகாற்றுப்படையுட் புலம்பிரிந் துறையுஞ் சேவடி (62 - 3) யெனக் கந்தழி கூறி, நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்புப் பெறுதி (65 - 6) யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறலரும் பரிசினல்கும் (294 - 5) எனவுங் கூறி, ஆண்டுத் தான்பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓரிரவலனை ஆற்றுப்படுத்த தென்பது பொருளாகக் கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமை யுணர்க. இனி இசைப் புலவர்க்கும் நாடகப் புலவர்க்கும் இங்ஙனங் கூறலமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத் தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின். நாளணி செற்றம் நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெரு மங்கலமும் - நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங் களைக் கைவிட்டுச் 610சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரண மான நாளிடத்து நிகழும் வெள்ளணியும்; அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறை செய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன. சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலையொழிதலும் 611இறைதவிர்த்தலுந் தானஞ்செய்தலும் வேண்டின கொடுத்தலும் பிறவுமாம். மங்கலவண்ணமாகியவெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்ப. ஆகுபெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணி யாயிற்று. உதாரணம் : அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போன் மாண்ட களிறூந்தார் - ரெந்தை யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு (முத்தொள்ளாயிரம். 40) இது, 612சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற் றென்றலின் வெள்ளணியாயிற்று. 613செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக் கொலைச்சிறைதீர் வேந்துக் குழாம் இது சிறைவிடுதல் கூறிற்று. கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமி - னண்ணாதீர் தேர்வேந்தன் றென்னன் றிருவுத் திராடநாட் போர்வேந்தன் பூச லிலன் (முத்தொள்ளாயிரம். 39) இது, செருவொழிந்தது. 614ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதயநா - ளாமாறு காம நகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல் இதனுள், இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கலம் என்றதனானே 615பக்கநாளுந் திங்க டோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப் பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்; இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார், பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென் றற்கு. குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தோடு கூடிய மண்ணுமங்கலமுங் கொள்க. உதாரணம் : 616அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே லந்தரத்துக் கங்கை யனைத்து இதனானே 617யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் நாண் மங்கலமும் பெறுதும். நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும் - உலக வொழுக் கத்தை இறப்ப உயர்த்தப் புகழ்ந்து கூறப்பட்ட குடை நிழல திலக்கணமும்; இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடி புறங்காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின். மரபு என்றதனாற் செங்கோலுந் திகிரியும் போல்வனவற் றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க. உதாரணம் : 618மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமா - வெங்கணு முற்றுநீர் வைய முழுது நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை (முத்தொள்ளாயிரம். 35) 619அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டான் குடை 620ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ (புறம். 35; 17 - 1) திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான் (சிலப். மங்கல.) 621திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி (சிலப். கானல்.) 622ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதுங் காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் (சிலப். மங்கல) இவை - குடையையும் செங்கோலையுங் திகிரியையும் புனைந்தன. மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்; இது பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் வென்ற வாளின் மண் (68) என்பதனின் வேறாயிற்று. புகழ்ச் சிக்கட்பகைவரை இகழ்ந்து புகழ்தலின் மாணார்ச் சுட்டிய என்றார். உதாரணம் : 623ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள் பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காளிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம் என வரும். 624அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாட் பெரும்புலவுஞ் செஞ்சாந்து நாறிச் - சுரும்பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி யுண்டாடும் பக்கமு முண்டு (முத்தொள்ளாயிரம். 38) இது பிறர் கூறியது. இது பரணியிற் பயின்றுவரும். மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் 625கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தி (புறம் 392) மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்; அழித்ததனான் மண்ணு மங்கலம். உதாரணம் : கடுந்தேர் குழித்த 626ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில் (புறம். 15) என எயிலழித்தவாறு கூறி, வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூபநட்ட (புறம். 15: 20 -1) எனவே, 627ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க. குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமை யின் இதனின் வேறாயிற்று. பரிசில் கடை இய நிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் 628கடும்பினது இடும்பை முதலியன கூறித் தான் குறித்த பொருண்மையினைச் செலுத்திக் கடாவின நிலையும்; கடைக்கூட்டு நிலையும் - வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலையும்; இதுவும் இழிந்தோர் கூற்றாயிற்று; இருத்தலே அன்றிக் கடாவுதலின். நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னுங் குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க. உதாரணம் : 629ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நிரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண வென்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைக் கொடுத்தி கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழவின் வயிரிய ரின்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே (புறம். 164) இது, பரிசில் கடாநிலை. 630மதியேர் வெண்கடை யதியர் கோமான் கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் பசலை நிலவின் பனிபடு விடியற் பொருகளிற் றடிவழி யன்ன வென்கை யொருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ வுருகெழு மன்ன ராரெயில் கடந்து நிணம்படு குருதிப் பெரும்பாட் டீரத் தணங்குடை மரபி னிருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைக லுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெ னாக வன்றே யூருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத் தேட்கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ யூண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே (புறம். 392) இது, கடை நிலை. 631நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவைப் பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே (புறம். 64) இது, போகல்வேண்டுங் குறிப்பு. 632ஊனு மூணு முனையி னினிதெனப் பாவிற் பெய்தவும் பாகிற் கொண்டவு மளவுபு கலந்து மெல்லியது பருதி விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச் சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென யாந்தன் னறியுந மாகத் தான்பெரி தன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத் தாங்க ணீயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி யூன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி விரல்விசை தவிர்க்கு மரலைப் பாணியி னிலம்பா டகற்றல் யாவது புலம்பொடு தெருமர லுயக்கமுந் தீர்க்குவோ மதனா லிருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை யாயினு மிவணை யாயினு மிதற்கொண் டறிநை வாழியோ கிணைவ சிறுநனி, யொருவழிப் படர்கென் றோனே யெந்தை யொலிவெள் ளருவி வேங்கட நாட னுறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கு மறத்துறை யம்பியின் மான மறப்பின் றிருங்கோ ளீராப் பூட்கைக் கரும்ப னூரன் காதன் மகனே (புறம். 381) இது, மேலும் இக்காலத்து இங்ஙனந் தருவலென்றா னெனக் கூறினமையின் அவன் பரிசினிலை கூறிற்று. 633குன்று மலையும் பலபின் னொழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென நின்ற வென்னயந் தருளி யீதுகொண் டீங்கனஞ் செல்க தானென வென்னை யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன் காணா தீத்த விப்பொருட் கியானோர் வாணிகப் பரிசில னல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே என்னும் (208) புறப்பாட்டும் அப்பரிசினிலையைக் கூறியது காண்க. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றும் இருவகை விடையும் - அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக்கூறி உலக வழக்கிய லான் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடையும்; இருவகையாவன; தலைவன் தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறி 634விடுத்தலுமாம். உதாரணம் : 635தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பி னற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென் னரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி யெஞ்சா மரபின் வஞ்சி பாட வெமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநருஞ் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரு மரைக்கமை மரபின மிடற்றியாக் குநரு மிடற்றமை மரபின வரைக்கியாக் குநருங் கடுந்தே ரிராம னுடன் புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிந் தாஅங் கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே யிருங்கிளைத் தலைமை யெய்தி யரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே (புறம். 378) இது, 636தானே போலென விடுத்தபின் அவன் கொடுத்த வளனை உயர்த்துக் கூறியது. 637உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக வல்லே யகறி ரோவெம் ஆயம் விட்டெனச் சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையிற் றரத்தர யானு மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மை தீ வந்தனென் (பொருந. 119-29) இது, யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக் கூறியது. நடைவயின் தோன்று மென்றதனாற் சான்றோர் புலனெறி வழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில் பெற்றுவந்து காட்சிப் போகலும், இடைநிலத்துப் பெற்ற பரிசிலை இடை நிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. உதாரணம் : 638ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிது மீத லெளிதே மாவண் டோன்ற லதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறம். 121) இது, சிறிதென்ற விடை. 639இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்ல ரிரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் கடிமரம் வருந்தந் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வல் யானே (புறம். 162) இது, பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை. வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி என்னும் (152) புறப் பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது. 640நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங் கடும்பின் கடும்பசி தீர யாழநின் னெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கு மின்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயு மெல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் றிருந்துவேற் குமண னல்கிய வளனே (புறம். 163) இது - 641மனைக்குக் கூறியது. நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகை யும் எச்சமின்றிக் காலங்கண்ணிய ஓம்படை உளப்பட - நாணி மித்தத் தானும் புண்ணிமித்தத்தானும் பிறவற்றினிமித்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்கண்டு அஞ்சிய அச்ச மும் 642அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவன் முற்கூறியவற்றோடே கூட. ஒருவன் 643பிறந்த நாள்வயின் ஏனைநாள்பற்றிப் பெருந் தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் 644கோண்மீன் கூடிய வழி அவன் நாண்மீனிடைத் தீது பிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய நிமித்தம். புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும் (புறம். 20) பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கண் தோன்றி நிமித்தம்; ஓர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள்ளும் ஓரிக்குர லுள்ளிட்டனவுங், கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளைதோன்றுதலுந் தண் சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம். உவகை - அன்பு. இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஓம்படை கூறுதலின் அது காலங்கண்ணிய ஓம்படையாயிற்று. எஞ்ஞான்றுந்த தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவதற்கு 645இன்னாங்கு வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின் றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினானா மாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று. நெல்லரியு மிருந்தொழுவர் என்னும் (24) புறப் பாட்டினுள் நின்று நிலைஇயர்நின் னாண்மீன் என அவனாளிற்கு முற்கூறிய வாற்றான் ஓரிடையூறு கண்டு அவன் கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது. உதாரணம் : 646ஆடிய வழற்குட்டத் தாரிரு ளரையிரவின் முடப்ப னையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனி உயரழுவத்துத் தனிநாண்மீ னிலைதிரிய நிலைகாண்மீ னதனெதி ரேர்தரத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாசிச் செல்லா தூசி முன்னா தளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி யொருமீன் வீழ்த்தன்றால் விசும்பி னானே யதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னாட்டுப் பொருந னோயில னாயி னன்றுமற் றில்லென வழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப வஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே மைந்துடை யானை கைவைத் துறங்கவுந் திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவுங் காவல் வெண்குடை கால்பரிந் துலறவுங் காலியற் கலிமாக் கதியின்றி வைகவு மேலோ ருலக மெய்தின னாகலி னொண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க் களந்துகொடை யறியா வீகை மணிவரை யன்ன மாஅ யோனே இப் புறப்பாட்டும் (229)அது. இதனுட் பாடாண்டலை வனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமை பற்றிக் கூறியது. 647இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமு, மென்றாங் கவையளந் தறியினு மளத்தற் கரியை யறிவு மீரமும் பெருங்கண் ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் தினறறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே யம்புதுஞ்சுங் கடியரணா லறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை யனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே. (புறம். 20) புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்டதீங்கின் பயன் நின்மேல் வாராமல் விதுப்புற வறியா ஏமக் காப்பினை யாக என்று ஓம்படை கூறியது. அது மேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்ததனான் உணர்க. 648மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரு, மென்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலு மளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பா அல்புளிப்பினும் பகலிருளினு நாஅல்வேத நெறிதிரியினுந் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யந்தி யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே என்னும் (2) புறப்பாட்டுப் பகைநிலத்தரசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்ற நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் ஓம்படை வாழ்த்தாயிற்று காலனுங் காலம் என்னும் (41) புறப்பாட்டும் அது. ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே - உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத்தினானே மூன்று காலத்தொடும் பொருந்தக் கருது மாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டிணை எ-று. என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமை பற்றி வேறு படுமாயின், அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்ப துணர்த்தியவாறு. அவை, பகைவர்நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடால் நிகழினும், அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும், பொருள் வருவாய் பற்றிச் சேறலும், வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு. மாற்றரசன் முற்றியவழி ஆற்றாதோன் அடைத் திருத்தலும் அரசியலாயினும், அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவர வேண்டி யிருத்தலும், ஆற்றலின்றி ஆக்கங் கருதாது காத்தேயிருத்தலும் ஒன்றனி னொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு. இனி, வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற் கேற்ற நிலையாமை கொள்க, உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும் பற்றி. இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத் திணைக்கும் புறனடையாதல் வேண்டி. இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடை கடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக் கோடலும், பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. 649முற்கூறியன வெல்லாம் ஓம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது. (36) புறத்திணையியல் முற்றிற்று. கணேசயர் அடிக்குறிப்புகள்: 1. தோற்றுவாய் - தொடக்கம் 2. மேலதனோடு - மேலையோத்தோடு 3. பிணக்கு - மாறுபாடு. அகத்திணையிலக்கணத்தோடு மாறுபாடற என்பது கருத்து. 4. அஞ்சுதல் - பார்ப்பார் முதலியோர் அஞ்சுதல். அதனைப் பின்வரும் இவருரையானறிக. 5. ஒருபுடையொப்புமை - ஒருபகுதி ஒத்துவரல். அவ்வொப்புமையை அடுத்து வரும் வாக்கியத்தானறிக. 6. ஒன்று - ஓரொழுக்கம் 7. ஒன்றை வாங்கல் - ஒன்றைப் பிரித்தெடுத்தல் 8. அரண் - பாதுகாவலான இடம் 9. மார்க்கம் - வழி. 10. அகத்திணைக்கண் துறையுட்பகுதிகளை விரித்துக் கூறி அவற்றையும் இன்னும் வரம்பிகந்து வருவனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கூறுக என்றற்கு ஆண்டுத் துறையெனக் கூறாது செய்யுளியலிற் றுறையெனக் கூறினார். புறத்திணைக்கண் விரித்துக் கூறாது தொகுத்துத் துறையெனப் பெயர்கொடுத்து அத்துறையுளடங்கும் பகுதிகளையும் விரித்துக் கொள்ள வைத்தார் என்பது கருத்து. 11. முனை - போர்முனை 12. தண்டத்தலைவர் - சேனைத்தலைவர் 13. அறம் - பசுவைக்கொண்டு வந்து பாதுகாத்தல் 14. மேவல் - பொருந்துதல். என்றது அறத்தொடு பொருந்தலை 15. புறஞ்சிறை - புறமதில். பாடி - சேரி 16. மறவர் - பாலைநிலமாக்களு ளொருபகுதியார் 17. களவின் - (நிரைகோடற்கு) களவினான் என்றும், (மீட்டதற்கு) களவின் கண் என்றும் விரியும். 18. பன்னிருபடல நூலார். 19. வெட்சிக்கரந்தையென்பார் இளம்பூரணர். 20. ஆவைக் கவர்ந்து பாதுகாத்தல் அறம். அவ்வாறு பாதுகாத்த ஆ. அறத்தாலீட்டிய பொருளாதலின் அறத்தாற் பொருளீட்டுமாறுங் கூறினார் என்றார். 21. அரவம் - ஒலி. 22. படா அலியர் - போகாதொழிக. மறா அலியரோ வவருடைக் கேண்மை (அகம். 40) என்பதில் மறாஅலியர் என்பதுபோல எதிர்மறையாய் நின்றது. எனவே ஒலி (அரவம்) பாடியிலுள்ளார்க்குக் கேளாதொழிக என்றபடி. 23. கண்ணா எனவும் பாடம். 24. போந்து விட்ட - சென்று இறுத்த 25. வாய்ப்புள் - சொல்நிமித்தம் 26. பறவாய்ப்புள் - வாய்ப்புள். நிரை - ஆனிரை. நீர்சூழ்கிடக்கை - பூமி. மண் - நிலம். 27. புடை - மாற்றார் புலம். அஃது அங்குள்ள ஒற்றரையுணர்த்திற்று. புடை - மாற்றார் பக்கம் என்பர் இளம்பூரணர். 28. பற்றார் - பகைவர். 29. புலம் - இடம். கடாஅம் - மதம். படாஅம் - வதிரம். யானைமுகம் படாஅம் படுத்தாங்கு என இயைக்க. 30. கவலை - கவர்வழி. மன்று - தொழுவம் 31. வேய் - ஒற்றர் ஒற்றி உணர்த்துங் குறளைச் சொல். 32. ஆயம் - பசுக்கூட்டம் 33. வேந்தன் காதலும் நிரையும் என்றும் நினக்குரியவாக என இயைக்க. 34. இறை - ஒடுங்கியிருக்கும் இருப்பு என்பது நச்சினார்க்கினியர் கருத்து. 35. பதிதல் - ஒடுங்கித்தங்குதல். பதிவிருத்தல் என்பதுமிது. 36. மருவின்மாலை - பழகிய நண்பின் இயல்பு. 37. ஓர்த்தல் - ஆராய்ந்தறிதல் (*உற்றுக்கேட்டறிதல்) 38. தொழு - பசுத்தொழுவம். 39. தொடைகொண்டு - ஒருவரோடொருவர் தொடுத்துக் கொண்டு. புறத்து நின்ற மறவர் என்க. அம்பைக் கொண்டுமாம். 40. அற்றம் - சோர்வு 41. கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோடு - திருமாலாகிய பன்றியின் கோடு. 42. தன்னுறுதொழில் - தண்டத்தலைவர் அரசனேவலாலன்றித் தாமே சென்று மீட்டல். 43. உளைத்தல் - ஒருவகை ஒலி. 44. அவிய - இறக்க. நாண் தவிர்ந்தன என இயைக்க. படர - ஏற்றப்படாவாய். பூசல் - போர். நிரைகொள்வான் தாக்கினார் - நிரையை மீட்டுக் கொள்ளும் படி பொருதார். வில் வைத்தகன்றார் என முடிக்க. 45. கயிறு இயல்பாவை - கயிற்றால் இயக்குஞ் சூத்திரப்பாவை. உழை - மான். இழுக்கல் - வழுக்கல். பூசல் - போர். அஞ்சுதக்கன்று - அஞ்சத்தக்கது. 46. அசைஇ - இளைப்பாறி. புணர்ந்து சேர்ந்து அசைஇய (அசைத்த) வைத்த. கழலான்நிலை -செல்க என்னும் என இயைக்க. கடுவரை - செந்தூக்கான மலை. 47. கடை - வாயில். நிரைவிரையும் என மாற்றி முடிக்க. அறல் - மணல். நடவாவகை - நடத்தாதபடி. 48. நுவலுழி - நுவலுதற்கு; உருபுமயக்கம். தோற்றம் - வரவு 49. அணல் - தாடி; வீசை என்பாருமுளர். அணல் - கீழ்க்கதுப்பு. 50. சுரை - முலைமடி. 51. ஒட்டந்து - ஓடிச்சென்று. ஆவைத்தழுவி கலுழும் என்க. 52. தந்துநிறை - தந்து நிறுத்தல். 53. குளிறுதல் - ஒலித்தல். கொட்டல் - அடித்தல். நளி - செறிவு. மணி - ஆவுக்குக் கட்டும் மணி. நிரை இடம்பெறுக என இயைக்க. 54. கழு - பால்கறக்க விடாத பசுக்களுக்குக் கழுத்திலிடுவது. 55. பாகர் - இதுவும் ஆக்களின் கழுத்திற் கட்டுவதொன்று போலும். மேய்ப்போர் என்று கூறுதல் பொருந்துமோ என ஆராய்க. 56. பாத்தல் - பகுத்தல் 57. மலைதல் - பொருதல். புள் - நிமித்தம். விள்வார் - பகைவர். கூறு - பங்கு. 58. நறவு - கள். விடை - ஆட்டுக்கடா. பாசு உவல் - பசிய தழை. உழையோர் - பக்கமறவர். தன்னினும் - அவனினும். சாயல் - இளைப்பு. 59. புகைக்கருங்கொடி - கரிய புகை ஒழுங்கு. உம்பர்மீன் - விண்மீன் - நட்சத்திரம். கம்மியர் - தொழில் செய்வோர். கை தூவாள் - கையொழிவாள். 60. கொல்லனுக்குப் படைகள் செய்து கொடுத்தமை பற்றிக் கொடுத்தன ராதலின், அவன் முன்றிலும் நிறைந்தன என்றார். 61. கோள் - கொள்ளுதல். கண்ணி - மாலை. 62. இது என்ற கட்டு படை இயங்கரவத்தைச் சுட்டி நின்றது. 63. பூக்கோள் ஏவி - பரிசாகக் கொடுக்கும் பொற்பூவைக் கொள்ளும்படி ஏவி. 64. அடிபுனை தோல் - செருப்பு. 65. இருப்புமணி - இரும்பாற் செய்த மணி. நின்றலை - நின்னிடம் கொற்றவை - விளி. 66. பராவல் - நேர்தல். 67. வல்சி - உணவு. 68. நாள் - பிறந்த நாண்மீன். அந்நாள்பற்றி வருந் தீமை முதலியன கேளாமை யையே நாள் கேளான் என்றார். புள் - புதுப்புள் வருதலும் பொழுதின்றிக் கூகை குழறன் முதலியனவும். இவற்றை இவ்வதிகாரம் 91ஆம் சூத்திர நோக்கி யறிக. மறி - ஆடு. மன்று - தொழுவம். விரிச்சி - நற்சொல். 69. துப்பு - வலி. வேய் - ஒற்றர் ஒற்றிச்சொல்லும் குறளைச் சொல். நாம் ஈதும் என முடிக்க. 70. இங்ஙனம் - இப்படி; மேற்கூறியபடி என்பது கருத்து. 71. கடைக்கூட்டல் - சேர்த்தல். கடைக்கூட்டல் - ஒருசொல்; முடிவுபோக்கிய எனினுமாம். 72. மெய்பூசல் - நீரில் மூழ்கல்; வாய்பூசல் என்பதுபோல. மெய்ப்பூசி எனவும் பாடம். அதற்கு மெய்யிற் பூச வேண்டியவற்றைப் பூசி என்க. துடியர் - துடிகொட்டுவோர். 73. வாளின் வாயால் (துர்க்கை) தாளில் தலைவீழ்த்தான் எனவும் தலை யொழிந்த மெய்குருதி சாய்ப்ப வீழ்த்தான் எனவும் இயையும். மிச்சில் - சேடம். பகைவர் தீண்டாத மெய் என ஒட்டுக. 74. பாடினி - விறலி. கொற்றவைபாடல் என இயையும். தோளுழலை யாடல் - தோளை வெட்டி இரத்தங் கொடுத்துச் சுழலச் செய்தல் என்று பொருள் கொள்ளலாம். இஃது குருதிப்பலி என்று கூறலால், வேறு பொருளுள வேனுங் கொள்க. 75. குருதி - இரத்தம். 76. இருவகை வெட்சி - நிரைகவர்தலும் மீட்டலும். 77. கணிக்காரிகை - சோதிடஞ்சொல்லும் பெண். 78. அமர் - போர். தமர் - சுற்றம். குமரன் - வேலன். கார்க்காடு - கூந்தல். நாறுங் காரிகையார் என்க. ஏர்க்காடல் - ஏரின் பொருட்டாடல். இவன் ஏரின் மயங்கிய மங்கையர் பொருட்டுக் காரிகையார் களனிழைத்து வெறியாடுவர் என்க. 79. படியோர் - வணங்கார். பிரதியோர் என்னும் வடமொழித் திரிவென்பர் குறிப்பாசிரியர். எதிரானவர் என்பது கருத்து. 80. உலத்தல் - தணிதல். 81. கருங்கூத்து - படையாளர் தம்முறு தொழிலாய் ஆடுவது. கருங்கூத்து - தண்ணியநாடகம் எனக் கலித்தொகையுரையுட் (65) கூறப்பட்டுள்ளது. 82. ஏழகத்தகர் - ஆட்டுக்கடா. 83. பூழ் - காடை 84. வட்டு - உண்டை 85. வல் - சூது 86. சொல் - தருக்கம் 87. இக்கருத்து - தன்னுறுதொழில் என்ற கருத்து. 88. ஏழகம் - ஆட்டுக்கடா. வேழம் - யானை. நாகம் - பாம்பு - சேடன். போந்தை யங்கண்ணி - பனந்தோட்டுமாலை. 89. குறும்பூழ் - காடை. இறும்பூது - அதிசயம். மதிக்குமாறு - மதிக்குந்தன்மை. 90. ஆர் - ஆத்திப்பூமாலை. வாரணம் - யானை. சிறைகெழு வாரணம் - கோழி. 91. வீறல் - வலி. வீரம். வாளாட்டு - வாட்போர். வாளாடு கூத்தி - வாளைப் பிடித்தாடுங் கூத்தி. வண்மை - கொடை. 92. பிறக்கு - பின் 93. பொதுளுதல் - தழைத்தல் 94. இருவகை - பரவலும். நிமித்தங்கோடலும். 95. துயில் இன் கூந்தல் - துயிலுதற்கு இனியகூந்தல். திறவீர் - திறமையை யுடையீர். 96. இரண்டுநிலை - பரவலும் நிமித்தங்கோடலும் 97. இருநிலைமை - வெற்றியும் தோல்வியும் 98. இவ்வுரை - பிற்கால இலக்கியம்நோக்கி வலிந்து கொள்ளப்பட்டது. இளம்பூரணருரை சிறந்தது. 99. ஏறு - இடபம். எரி - அக்கினி. கணிச்சி - மழு. மணிமிடறு - நீலமணி போலும் மிடறு. வளை - சங்கு. நாஞ்சில் - கலப்பை. நாஞ்சிற்கொடியோன் - பலதேவன். மண்ணல் - கழுவல். புள் - கருடன். பிணிமுகம் - முருகனுடைய யானை. பிணிமுகம் - மயிலுமாம். முன்பு - வலி. கூற்று - சங்காரஞ் செய்வோனாகிய அரன். வாலியோன் - பலதேவன். முருகு - முருகன். 100. குருந்து - குருந்தமரம். கரத்தல் - மறைத்தல். போர் - நெற்போர். நீர்நாடன் - சோழன். 101. வானவன் - சேரன். 102. ஏறு - இடபம். கோழியான் - கோழிக்கொடியையுடைய முருகன். கோதை - சேரன். ஆழியான் - திருமால். 103. பலதேவர் - பலராகிய தேவர்கள். 104. பரிதி - சூரியன். அரசுநுகம் - அரசுபாரம். வயிரியர் - கூத்தர். பொருநர் - வைகறை பாடுவோர். ஒருவர் போல வேடம்பூண்டு ஆடுவோர் எனினுமாம். அதள் - மிருகத்தோல். கூட்டுணல் - கவர்தல். 105. இதனுள், வேந்தன் என்றது காட்டுத்தலைவனை நாட்டுத்தலைவன் பெயராற் கூறியது. 106. பொன்வார்ந்தன்ன - பொன் ஒழுகினாற்போன்ற. (பொற் கம்பி போன்ற). புரி - முறுக்கு. பச்சை - தோல். மிஞிறு - வண்டு. சீறூர்மன்னன் என்றது சிற்றூர்க்கரசன் என்றபடி; என்றது குறுநில மன்னனை. உடன்று - பகைத்து. என்னை - எமது இறைவன்; என்றது சீறூர்மன்னனை. உளங்கழி சுடர்ப் படை - மார்பினகத்துச் சென்ற வேற்படை. 107. கள்ளின் வாழ்த்தி - கள்ளினை வாழ்த்தி. சீயா - பெருக்காத (அலகிடாத). நாட்செருக்கு அனந்தர் - விடியலில் கள்ளைக் குடித்தலான் உண்டாய மயக்கம். மயக்கத்தால் முன்றிலில் துஞ்சுவோன் என இயைக்க. காட்டு - செத்தை. (குப்பை என்பது வழக்கு). பணையம் - ஈடு. வள்ளி மருங்குல் - கொடிபோலும் இடையையுடைய விறலி. வாய்சிவந்து - வாய் சிவக்கும்படி பாடி. செறுநர் சிவந்து எனவும் பாடம். 108. வெருக்குவிடை - காட்டுப்பூனையின் ஆண். கயந்தலை - மெல்லிய தலை. அது மகர அரொடுமுடியும். ஊகநுண்கோல் - ஊகம்புல்லின் ஈர்க்கு. வலார் - வளார். கருப்பை - காரெலி. குமிழ் - குமிழம்பழம். வெள்ளை - வெள்ளாடு. காழ் - கொட்டை. தாய - பரந்த. பொத்திய - மூட்டிய. உலக்கும் - இறக்கும். 109. இணைப்படைத்தானை - வந்து கூடுதலையுடைத்தாகிய படைகளை யுடைய படை (சேனை). கணைத்தொடை - அம்பைத் தொடுத்தல். எருத்து - கழுத்து. எறுழ் - வலி. இரலை - ஆண்மான். மறிந்து - முறுக்குண்டு. 110. சேக்குதல் - தங்குதல். சாத்து - வணிகர்திரள். அதர் - வழி. கூட்டுணும் - கவரும். அணங்குதல் - வருத்துதல். 111. ஏறு - ஆனேறு. பெயராது (தாம்) செல்லாது (போகாது). தலைகரந்து - மறைந்து. புனைகழலோய் காணாய் செல்லல் என இயைக்க. முருகு மெய்ப்பட்ட - தெய்வம் மெய்யின் கணேறிய. 112. வளர - ஓசைமிக. தொடினும் - (நரம்பை) எறியினும். விளரி - ஒருபண். தொடை - நரம்புத்தொடை. தலைஇ - தலைப்பட்டு. களர - களர்நிலத் துள்ள. பசிபடுமருங்குலை - பசிதங்கிய வயிற்றை யுடையையாய்; முற்றெச்சம். கசிபு - இரங்கி. யாணரது நிலை - (நமது) செல்வம்பட்ட நிலைமை. புரவு - (எம்மைப்) புரக்கும்படி விட்டன. (இறையிலி நிலம்). தொடுத்து - கைப்பற்றி. இரவு - இரத்தல். எவ்வம் - வருத்தம். முன்ஊர் - ஊர்முன். கோள்விடுத்து - கொண்ட நிரையை மீட்டு. உரி - தோல். கம்பம் - நடுக்கம். இலக்கம் - குறி (இலக்கு). பெயர் கல்லது என இயைக்க. 113. கையறல் - துன்பத்தாற் செயலறல். 114. ஒருகண் இரும்பறை - பெரிய ஒரு கட்பறை. தொழாதனை கழிதல் - தொழாயாய்ப்போதல். ஓம்புமதி - பாதுகாப்பாய். இவ்வறநிலையாறு - இக்கொடிய வழி. கல்லாவிளையர் - போர்த்தொழிலை இயல்பாகவுடைய வீரர்; வேட்டையன்றிப் பிறிதுதொழில் கல்லாத எனினுமாம். கல்தொழா தனை கழிதலோம்பு மதி என முடிக்க. 115. ஏழு - ஏழுதிணை. 116. கறை - உரல். களிற்றுக்கன்று - யானைக்கன்று. கலி - ஒலி. பெரும்பொளி - பெரிதாக உரித்த. நியமம் - கோயில். அங்காடியுமாம். பதவு - வாயில். முதல் - இடம். பெருமகன் - தலைவன். 117. அத்தம் - அரியவழி; காடு. பெருவிறல் - தலைவன். நச்சி - விரும்பி. உப்பொய் - உப்பைக்கொண்டு செலுத்துகின்ற. சாகாடு - பண்டி. ஓய்தல் - செலுத்தல். எள்ளமைவின்று - இகழ்தற்பாலதன்று. 118. நெடுமொழி - வஞ்சினம். 119. தானால் விலங்கால் - தானோ விலங்கு. தனித்தால் பிறன் வரைத்தால் - இனத்தைவிட்டுத் தனிக்குமாயின் பிறன் அளவினது. பிறன் - பாகன். தனித்து - தனிமையுடைத்து என்றுமாம். ஆல்கள் அசைநிலை. வேறுகருத்துளவேனுங் கொள்க. எறிதல் - கொல்லல். இளிவரவு - இகழ்ச்சி. 120. மேவல் - பொருந்தல். தண்ணடை - மருதநிலத்தூர். நெற்று - பயற்றநெற்று. கோள் - கொள்ளுதல். புரவு - இறையிலி நிலம். கம்புள் - நீர்வாழ் பறவையுள் ஒன்று. நிற்கும் - நிற்பேம். 121. பொது என்ற புறத்திணை ஏழற்கும் பொதுவாதலை. புறம் - புறத்திணை. 122. பிள்ளை - இளையோன். 123. ஏற்று - எதிர்ந்து. தார் - தூசிப்படை. காணா - முன் காணாத. இளமையாற் கண்டு - இளமையோடு கண்டும். நின்றிலனேல் - அஞ்சிநில்லாது எதிர்ந்தானேல். காணாக்களிறு கண்டும் இளமையால் நின்றிலனேல் என மாற்றிப் பொருள் கொள்ளினுமமையும். 124. வீடும் - இறந்த. வீடுவோன் வாள் - இறந்தவானகிய சிறுவனது வாள். வீழ்ந்த மறவர் தாயர் கிடந்து அழுதார் என இயைக்க. 125. மன்னன் புதல்வன் என இயைக்க. வான்கெழு நாடு - விண்ணுலகு. 126. அரசு கொடுத்தலிற் பிள்ளைத்தன்மையிற் பெயர்த்தலாயிற்று. 127. நாட்டல் - நிறுத்தல். 128. கால்கோள் - தொடங்கல். (சிலப்பதி. 26-254) 129. ஆண்டு - அக்கல்லில். வருவது - பிரதிட்டை பெறுவது. 130. வரையறை செய்தல் - உருவெழுதல். வரையறை வாரா - எல்லையில்லாத. 131. கால்கோடல் - தொடங்குதல். தொடங்கல் என்னும் பொருள் கால்கோடல் (காலங்கோடல்) என்பதன் தாற்பரியம் போலும். நச்சினாக்கினியர் ஒருவனைத் தெய்வமாக நிறுத்தற்கு இடங் கொள்ளப்பட்டமையானும் அவ்விடத்துக் கால்கொள்ளுதலானுங் கால்கோள் என்றலின் இரண்டு பொருளையும் அது தருகின்றது என்பது அவர் கருத்துப் போலும். 132. காப்பு - காவல். புகை - தூபம். கால்கோடல் - தொடங்கல். வரக்கடவநாள் - வீரன் பிரதிட்டை பெறற்குரிய நாள். * படலை - தழை 133. நெய்ந்நறை - நெய்யாலிட்ட நறும்புகை (தூபம்). முனை இருக்கைத்து - முதன்மை பொருந்திய இருப்பிடத்தையுடையது. மங்குல் - மேகம். ஊர் அரவுறைபுற்றத்தற்று என முடிக்க. புற்றம் - புற்று. 134. ஈர்த்து - இழுத்து. கேளிர் - உறவினர். அடைய - சேர. கார்ப்படுத்த வல்லேறு - மேகத்திலுண்டாக்கிய இடியேறு. கண்ணீரின் - கண்ணீரோடு. 135. நல்வழி - நற்கதி. அது - அந்நீர். 136. சீர்த்ததுகள் - மணப்பொடி; திருநீறுமாம். நிலை - இடம். கடம் - காடு. கடந்து நட்டார் என முடிக்க. 137. கோள் - கொலை. மா - குதிரை. இடைகொளல் - தடை கொளல். 138. நாட்டல் - பிரதிட்டை செய்தல். 139. கைவினைமாக்கள் - எழுதுங் கைத்தொழின்மாக்கள்; சிற்பர். கலுழ - கலங்க. வீந்தோன் பெயர் என்க. பிற - அசைநிலை. 140. பீடம் - ஆசனம். 141. இளம்பூரணருரையை மறுத்த பகுதி இது. 142. பொருவுதல் - ஒப்புக்கூறுதல். 143. ஈர்த்துக்கொண்டு ஒழுக்கல் - இழுத்துக்கொண்டுபோய் நீரிலொழுக்கல். முன் வாளாமர்வீழ்ந்த என்னுஞ் செய்யுளில், ஈர்த்தொழுக்கி என வருதல் காண்க. இச்செய்யுள் முன் நீர்ப்படைக் குதாரணமாக வந்துள்ளது; ஆண்டு நோக்கியறிக. 144. சகடம் - பண்டி 145. பாடாண்டிணை எழுதிணைக்கும் பொதுவாதலிற் பிரிதலில்லை என்றார். 80ஆம் சூத்திரவுரை நோக்கியறிக. 146. புறவு - காடு. சேணாறல் - தூரத்துக்கு மணத்தல். எருக்கி - வெட்டி. வேடு - வேட்டுவச்சாதி. புழை - சிறுவாயில். முள் இடு புரிசை - முள்ளாலிடும் மதில். பாடி - பாசறை. 147. இடையீடு - இடையீடாயுள்ளது - தடை. 148. பொதுவியற்பொருள் - எப்பொருட்கும் நிலையாமை கூறலாகிய பொதுவியற்பொருள். ஆதலின் அப்பொருளை யுணர்த்தும் காஞ்சியென்னும் பெயரால் எதிர்சேறலைக் கூறலாகாமையுணர்க என்றபடி. 149. ஆர்ப்பரவம் - ஆர்த்தலாலுண்டாகுமொலி. 150. விண் - வீரசுவர்க்கம். ஒன்னார் - பகைவர். 151. இறும்பூது - அதிசயம். வடிமணி - வடித்துச் செய்த மணி. பணை - முரசு. கடிமரம் - காவன்மரம். மூழ்த்து - மொய்த்து. புலம் - இடம். வரம்பில் வெள்ளம் - (வரம்பில்லாத) எல்லையில்லாத பேரணிப் பெரும்படை. மிளை - காவற்காடு. செவ்வாய் - எஃகம் - (முனை முகத்திற் செல்லாத) கூர்வேற்கருவிகள். உரறல் - ஒலித்தல். எயில் - அரண். ஒருப - நீங்குப. 152. பொடி - துகள். செல்லும்பொழுது பார் பொடியாய் எழும் என்க. பார்ப்புரப்ப - பாரைப்புரப்ப. பார் - பூமி. 153. வினை - போர். தோல் - பரிசை. முனை - போர்முனை. கவர் பூட்டி - கொள்ளையூட்டி. கடிதுறை - காவற்பொய்கை. எல் - விளக்கம். சுடுதீ விளக்கம் - நாடுகடு நெருப்பினது ஒளி. இது எரிபரந்தெடுத்தல் 154. ஊர்சுடுவிளக்கம் - என்பதும் எரிபரந்தெடுத்தலாகும். அழுவிளிக் கம்பலை - அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரம். மேவலை - விரும்புதலுடையை. 155. கொற்றவள்ளையாவது; தோற்றோனை விளங்கக்கூறும் வள்ளைப்பாட்டு. இது இச்சூத்திரத்துப் பின்வருகின்றது. 156. பரிசிலர் - பரிசில் பெறுவோர். அவர் யாழ்ப் பாணர் முதலியோர். 157. பாத்தி - பகுதி. மருவின்பாத்தி (தொல். எழுத். 172) என்பது நோக்குக. பல ஈந்தான் என முடிக்க. 158. சிறாஅஅர் - சிறுவர்களே! துடியர் - துடியர்களே! பாடுவன் மகாஅஅர் - பாடுதல் வல்ல பாண்மக்களே! புட்பூசல் - பறவைகளின் ஆரவாரம். விளரி - ஒருபண். கடிகுவென் - நீக்குவேன். விதுப்பு - நடுக்கம். கொன்னும் - ஒரு பயனின்றியும். வெய்யோன் - விரும்பினோன். மணிமருண்மாலை - பலவகை மணிமாலை. ஒருகாழ் - ஒற்றைவடம். 159. ஊர்தல் - செல்லல். 160. கொண்டி - கொள்ளை. 161. அழிவு கூறிய இடம் என்றது. தொல்கவினழிந்த கண்ணகன் வைப்பினையும். புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பினையுமுடைய புலஞ்சிதை நாடு என்று நாட்டழிவு கூறிய இடத்தை. 162. மாராயம் - சிறப்பு. 163. நெடுமொழி - மீக்கூற்று (புகழ்ச்சி) வஞ்சினமுமாம். 164. இவன் கரையன்றோ என இயைக்க. 165. எறிகோல் - குறுந்தடி. இழிசின - புலையா. கூட்டுமுதல் - நெற் கூட்டினிடம். தண்ணடை - மருதநிலத்தூர். நாடுமாம். யாவது - எத் தன்மையது. படின் - இறப்பின். உயர்நிலையுலகம் - சுவர்க்கம். 166. பேராண்மை - பெரிய ஆண்டகைமை. 167. எதிர்நின்றோனாகிய இளையோன் சீறின் யானை எறிதலொன்றோ நகுதலு நகும் என இயைக்க. நகுதலும் நகும் - நகுதலும் செய்யும். பாண்டில் - தேர். 168. அதிகமான் - இவன் தகடூரிலிருந்து அரசு செய்வதன் கடையெழு வள்ளலி லொருவன் அதிகமான் நெடுமானஞ்சி எனவும் படுவன். தகடூரிலிருந்து அரசு செய்தவ னென்பதை. சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமானிருந்த தாம் என்று முன் இவ்வுரையாசிரியர் கூறுதலானறிக. இவன் பெயர் அதியமான் என்று புறநானூற்றிலுள்ளது. 169. சான்றோர் - போர்வீரர். அது விளியேற்று நின்றது. சான்றோர் மெய்ம்மறை (பதிற்றுப் 14 - 12) என்பதனுரைநோக்கியறிக. குமரிமகளிர் கூந்தல் ஓராடவராலும் தீண்டப்படாமையின் அஃது பகைவரால் தீண்டப்படாத முள்வேலிக் குவமையாயிற்று. எனைநாள் - எத்தனைநாள். எறியார் - தன்னை எறியாதார். யாவணது - யாண்டுளது; இல்லை என்றபடி. பொருள் - காரியம். பலம் - பலராகவுள்ளேம். எல் - இரவு. ஏந்துவன் போலான் - ஏந்தான். 170. காளை நோக்கி நோக்கி நகும் என இயைக்க. ஏர் - அழகு; எழுச்சி. ஞாட்பு - போர். கிணைவன் - துடிகொட்டுவோன்; துடி - போர்ப்பறை. 171. முனை - சண்டை. நெரிதர - நெரிய. இறந்து - கடந்து. ஆழி - கரை. வாரி - வருவாய். புரவு - இறையிலிநிலம். சுட்டிய - குறித்த. 172. பிண்டித்தல் - குவித்து வைத்தல். 173. இதன்பொருளைப் பதிற்றுப்பத்தில் உரைநோக்கியறிக. விரிவஞ்சி எழுதாது விட்டமை. 174. பாகு - வெல்லப்பாகு. 175. வெள்ளை - வெள்ளாட்டுச் சாதியிலுள்ள. வெள்ளாட்டுச் செச்சை - வெள் ளாட்டுக்கிடாய்; இதில் வெள்ளை என்பது வாளா அடையாய் நின்றது. கிடாய்போல விடாது பொரும் இளையரிருப்ப என்றபடி. போல இருப்ப என இயைக்க. மண்டை போர்ப்பித்திலது என்றது. இவனை இயல்பா லிறவாதபடி பொருது இறக்கச் செய்தது என்றபடி. கால்கழிகடடில் - பாடை. அறுவை - வதிரம். மண்டை - கள்ளுண்ணும் பாத்திரம். 176. உண்டி - உணவு. முந்தாது - முன்னுண்ணாது. உடன் உண்பான் - கூடவைத்து உண்பவனாகிய அரசன். தேறல் - கள். மண்டி வழங்கி - நிறையக் கொடுத்து. மண்டி - தானுண்டு எனினுமாம். வழீஇயதற்கோ - அறிவு வழுவ (மயங்க)ச் செய்ததனாற்போலும். கொண்டி - உயிர்க் கொள்ளை. மறவர் - வீரர். உறவிலராய் உயிர் நேர்ந்தார் என இயைக்க. கண்ணோடாது - இரங்காது. 177. இதன் பொருள் விரிவஞ்சி எழுதாது விடப்பட்டது. உரை நோக்கி யறிக. 178. குறைபாடு - விளக்கக்குறைபாடு. 179. இதன்பொருள் விரிவஞ்சி விடப்பட்டது. பதிற்றுப்பத்து உரைநோக்கியறிக. 180. குன்றல் - குறைதல். 181. பம்பி - நெருங்கி; பரம்பி. முசிறி - ஓரூர். நகை - ஒளி. காய்த்தினார் - கொல்லப்பட்டார். நாடு கிடந்தன என இயைக்க. 182. தட்டல் - தடுத்தல் 183. தழிஞ்சி - தழுவுதல் 184. தழிச்சிய - தழுவிய. பழிச்சல் - புகழ்தல். புண்தீர்ந்தன என இயைக்க. 185. வேம்பு - வேப்பமாலை. தாள் - அடி. பருமம் - பக்கரை (சேணம்). கவல் - தோள். 186. ஞாண் - நாண். 187. இத்திணை என்றது வஞ்சித்திணையை. 188. அவர் - அத்துணை வேந்தர். 189. என்பார் - இளம்பூரணர். மேற்செலவு - வஞ்சி. 190. கடிமரந்தடியுமோசை (புறம் - 36) 191. தொல் - சொல். 290ம் சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியருரைத்த உரைநோக்கியறிக. 192. அஃது வஞ்சியாகாதாயிற்று என இயையும். எல்லை - நாட்டெல்லை. 193. அகநாடு - மருதம். 194. இடங்கர் - முதலை. 195. யவனர் - யவனதேசத்தார் 196. பொறி - இயந்திரப் பொறி. 197. பதணம் - மதிலுளுயர்ந்த மேடை 198. ஏப்புழைஞாயில் - அம்பெய்து மறையுஞ் சூட்டு. 199. எழுவுஞ் சீப்பு - எழுப்பப்படுஞ் சீப்பு - (தாழ்) 200. ஆர்அதர் - அருவழி. 201. அடிச்சிலம்பினரண் - மலையரண். வடிச்சிலம்பினரண் எனவும் பாடம். 202. அமைந்தனவுமாம் என்றிருப்பது நலம். 203. கூறி - வஞ்சினங் (சபதமிட்டு) கூறி. 204. ஒருவன் றொழில் என்பது இளம்பூரணர் கருத்து. இதுவே பொருத்தம். 205. ஒருவர்க்கு - ஒவ்வொருவர்க்கு என்றிருப்பது நலம். 206. கொள்ளார் - கொள்ளப்படாதோர் - பகைவர். 207. மாற்றுப்புலம் - பகைப்புலம். ஒன்னாருடையன - பகைவருடையன. அவை நாடு முதலியன. உவந்து பாண்சாதியினொலி பல்கின்று என இயைக்க. 208. மழு - கோடரி. மிளை - காவற்காடு. எழுவாள் - எழுப்டை. ஏற்றுண்ட தெல்லாம் மிகை என இயையும். ஏற்று - இரந்து. மிகை எச்சம் - சேடம். இப்பாட்டில். எழுவாளோ னேற்றுண்டதெல்லாம் என்பது எழுவாளா னெற்றுண்ட தெல்லாம் என்றிருத்தல் வேண்டும். ஏற்றுணல் - அடிபடல். 209. இதனுள் பார்ப்பான் என்றது தூதாகச் சென்ற பார்ப்பானை. உயவல் - வருந்தல். ஊர்தி - ஊர்ந்து செல்லுநடை. பயல் - சிறுவன். எல்லி - இரவு. சீப்பு - கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தேவிழ இடுமரம். 210. போனகம் - உணவு. உயிர்பருகியும் வயிறு (பசி) மாறா என இயைக்க. 211. ஐயவி - சிறுகடுகு. பொறி - இயந்திரம். புட்டில் - ஒருவகைப் பெட்டி. 212. உதாரணச் செய்யுளில், பூங்கோட்டண்ணுமை கேட்டொறும் என்று வருதலின் இதனாற் பூச்சூடுதல் பெற்றாம் என்றார். 213. கிடுகு கேடகம் என்பன பரிசையின் பேதம். தோல் - கண்ணாடி தைத்த கிடுகுபடை என்பது. புறப்பொருள் வெண்பாமாலையுரை. 214. எண்கு - கரடி.. பச்சை - தோல்; பரிசை. தண்டை - படைவகுப்பு. 215. பாண்டில் நிரைதோல் - கண்ணாடி தைத்த கிடுகுபடை. தோல் - ஆகுபெயர். 216. பதணம் - மதிலுளுயர்ந்த மேடை. 217. ஏமப்பொருள் - இன்பப்பொருள். 218. செல்வத்தான் அன்றி அணங்கிய பக்கமும் என மாற்றிக் கொள்ளப் பட்டது. அன்றி - பகைத்து என்றும் பொருள் கூறலாம். அன்றினார் புரங்கள் செற்றார் என்பது தேவாரம். 219. கூறு - பகுதி. பக்கம். 220. பொன்முடியாரும் அரிசில்கிழாரும் கடைச்சங்கப் புலவர்கள். 221. குறுமை - சிறுமை. 222. செல்வம் என்றது அகத்தோன் செல்வமும் என்று முற்கூறிய துறையை. 223. மேல் - அறுபத்தாறாஞ் சூத்திரத்துள். 224. தொடி - வயிரம்; மருப்பிற்கிடுவது. குஞ்சரம் - யானை. இவுளி - குதிரை. வயிர் - கொம்பு. மிளை - காவற்காடு. குண்டு - ஆழம். 225. கூறுவார் - ஐயனாரிதனார் (வெண்பாமாலை ஆசிரியர்) 226. வேண்டுவார் - ஐயனாரிதனார். 227. இது கூறுவாரும் ஐயனாரிதனார். 228. நாள் - நட்சத்திரம். ஓரை - இலக்கினம். 229. இன்றியமையாதன என்றது - குடை, வாள் முதலியவற்றை. 230. விண்ணிடத்தைத் தனக்காக்குதல் எளிது என்னும்படி விரிந்தகுடை என்க. தஞ்சம் எளிது என்னும் பொருட்டாதலை. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே என்பதனானறிக. (தொல். இடை. 18) சிம்பிளித்தல் - கண்மூடல். கண்கூசலுமாம். இது கம்புளித்தல் எனவும் வழங்கும். சுமந்த நாகமுங் கண்கம் புளித்தவே என்பர் கம்பரும். 231. ஒன்றார் - பகைவர். 232. தொழுது வீழாத குறை நீங்கப்பேணி என்க. முழுதளிப் போன் என்றது புறத்து அரண் முற்றினோனை. நினைந்து பேணி விழாக் கொள்வர் என்க. 233. பாணியா - தாமதியாத. குறும்பு - அரண். 234. எழு - கணையமரம் 235. கடைஇ - செலுத்தி. கடவல் - செலுத்தல். 236. சென்றோர் கொல்ல மறவர் வரைப்பின்கண் அரணுள் தொக்கடைந்தார் என இயையும். புலிபோல் எனவும் பாடம். 237. கடை - கோபுரவாயில் 238. வீழ்தல் - விரும்பல் 239. நொச்சி - காவல். வேலி - மதில். 240. வேற்றரண் என்றது உள்மதிலை. கூற்று - இயமன். 241. விரும்பார் - பகைவர். குறிப்பு பெற்றித்து என இயையும். 242. மனம் - போர் செய்ய விரும்பிய உள்ளம். அதனைக் காத்தலாவது அஞ்சி யொழியாது காத்தல். 243. மணி - நீலமணி. நொச்சி ஈண்டு விளி. அல்குலுங்கிடத்தி என்றது மகளிர்க்குத் தழையுடையாதல்பற்றி. கிழமை - உரிமை. 244. ஆன்றோர் - கல்வி ஒழுக்கங்களா னிறைந்தோர். 245. பேர்தல் - பின்வாங்கல். தகர் - ஆட்டுக்கடா. மாற்றார் - பகைவர் அடிபிறக்கீடு - அடியைப் பின்வைத்தல். 246. செரு - போர் 247. பொலம் - இரும்பு. கருவிப்பொறை - படைப்பொறை. உமிப்பண்ணாய் - உமியினியல்பாகப்பெற்று. உமிப்பண்ணாய்த் திடர்பட்டதின்றாயின் மறவர் நின்று வேந்தோடு அமர் செய்யும் விரகென்னாம் என இயைக்க. 248. புதுக்கை - திட்டை. பகைப்படையை வீரர் சாய்ப்பவும் மேல்வீழ்ந்த புறத்து வேந்தன் அப்படைப்பிணத்து வீழ்தலால், அம்மன்னற்கு அப்பிணமே திட்டையாகி அவனுக்கு நடுகல் அமைத்தற்கு வேறு திட்டை வேண்டாதாயிற்று என்பது கருத்து. பதுக்கை - திட்டை. பற்று - இடம் (புறம். 204 நோக்கியறிக) வீழ்தல் - எதிர்த்தல்; விழுதல். 249. இவர்தல் - ஏறல். 250. கொடுமுடி - சிகரம். 251. கூடாத எயில் - ஒன்றுகூடாத மதில்; என்றது திரிபுரத்தை. இவை ஆகாயத்திற் பறந்து தனித்தனி திரிவன. போர் அவுணர் என இயைக்க. 252. மதிற்குடுமி - மதிற்சிகரம் என்பாரு முளர். 253. கோடியர் - கூத்தர். கூடார் - பகைவர். 254. செற்றவர் - பகைவர். இவை என்றது பின்வரும் பூ முதலியவற்றை. 255. கலையேற்றூர்தியாள் - கொற்றவை. வாளையிடமாகப் பெற்ற கலையூர்தி யாள் என்க. கலையூர்தி - கலைமானூர்தி. 256. பெருந்தகை - தலைமை. நீறு - புழுதி. குரம்பை - சிறுகுடில். படு - மடு. அழுங்க - வருந்த. செலவு ஆனாது - செல்லுதல் தவிராது. 257. கதிர் - கிரணம். காய்கதிர் - ஞாயிறு. உயர்வான் - உயரும்படி. உலகு - பூமி. 258. வலைவன் - வலைஞன் - பரதவன். உண்டற்ற சோற்றார் ஒழிந்து - உண்ட சோற்றுக் கடன்கழிக்கப் போர்செய்து இறந்தோரொழிய. சோறு உண்டு அற்றார் என விகுதி பிரித்துக் கூட்டுக. ஒழித்து எனவும் பாடம். 259. துறக்கம் - சுவர்க்கம். 260. ஏறு - கதவுக்கிடும் ஒரு தடைபோலும். இதனைத் தோட்டிக் கடை யாக்கினு மமையும். தோட்டி - கதவுபூட்டுங் கொளுக்கி; தோட்டி முள்ளுமாம். 261. படிவம் - பிரதிமை. கூறல், கோடல் என்றிருத்தல் வேண்டும். 262. நிறைச்சுடர்கள் - ஒளிநிறைவையுடைய சூரிய சந்திரர்கள். ஒன்றிவர - ஒன்றோடொன்று பொருந்திவர. இது கிரகண காலத்தைக் குறிக்கும் போலும். இதனை இல்பொருளுவமையாகக் கோடலுமாம். 263. சுவடி - வெள்வரகு. 264. பிறக்கு - பின். 265. மைந்து - வலி. 266. களர் - களர்நிலம் 267. எற்பாடு - ஒரு பகலுக்குரிய முப்பது நாழிகையை மூன்று கூறாக்குழிப் பிற்கூறாக வரும் பத்து நாழிகையாகிய காலம். அது ஞாயிறு படும்வரையுமுள்ள காலமாதலின் எற்பாடு எனப்பட்டது. 268. செலவு - படர்க்கைக்குரியது. வரல் தன்மைக்குரியது. ஈண்டு வருதல் செலவுப் பொருட்டாய் நின்றது என்பது கருத்து. சூத்திரப் போக்கை நோக்குமிடத்து வந்த என்பதற்கு இளம்பூரணருரையே பொருத்தம். 269. ஏனையோர் - குறுநிலமன்னர் முதலியோர் (அகத்திணை. 32) 270. விழுப்புண் - முகத்தினும் மார்பினும் பட்ட புண். 271. இச் சூத்திர மென்றது. கணையும் வேலும் என்ற சூத்திரத்தை. 272. மடல் - பனங்கருக்கு மட்டை. போந்தை - பனை. எய் - முட்பன்றி 273. சான்று - சாட்சி. குறை - உடற்குறை. தேர்மேல் பாய்ந்தன என்க. 274. இது - இவ்விலக்கணம். 275. துறைக்கெல்லாம் என்றிருத்தல் வேண்டும். 276. நோனார் - போர் செய்தற்கு ஆற்றாதவர். 277. நோன்றார் - பொறுத்தலையுடையார். எனவே போரை அஞ்சாதவர் என்ற படி. நோன்றல் - பொறுதலாதலின் அதனடியாக (அஃதாவது நோன்மை என்ற அடியாக) நோனார் என்பதும் பிறந்தது நோன்றார் என்பதற்கு மடி அதுவே. 278. அவர் - நோன்றார்; அஞ்சாது போர் பார்ப்பார். 279. மூதின்முல்லையாவது - பழைய மறக்குடியிற் பிறந்த வீரர்க்கன்றி அவர் மகளிர்க்கும் கோபமுண்டாதலை மிகுத்துச் சொல்லல். 280. போவாருமுளர் என்றது வெண்பாமாலையாசிரியரை. 281. இதனை - தானையை. 282. கெளவை - ஆரவாரம். பணை - முரசு. வெப்பு - வெம்மை; கொடுமை. 283. வெல்பொறி - போர் வெல்லும் அடையாளம். தண்ணடை - மருதநிலம். 284. வயிர் - கொம்பு. உலகு - பூமி. ஓர்த்து - ஆராய்ந்து. 285. படை என்னாங்கொல் என இயைக்க. உலாய் நிமிரின் - நிலைபெயர்ந்து நடப்பின். 286. கங்கை சிறுவன் - வீடுமன். காய்கதிரோன் செம்மல் - கன்னன். 287. மொக்குள் - குமிழி. தகர் - ஆட்டுக்கடா. முட்டி - கைப்பொத்து. தொட்டு - பிடித்து. கையறத்தொட்டு நிற்போரும் எனவும் பாடம் கையறல் - செயலறல். சிலைப்பு - ஒலி. சங்கு - ஒருவகைப்படை. 288. சூட்டிய - சூட்டும்படி. 289. பெயரா - அசையாது. 290. மரவடி - மரக்கால். நின்றவை போன்றன என இயைக்க. 291. கண்கூடிறுத்த - சேர்ந்து தங்கின. குமரிப்படை - அழியாதபடை. கூற்று - இயமன். இறை - அரசன். மணியின் - மணியைக் குறுகாதவர் போல. 292. இரங்காழ் - இரமரத்தின் வித்து. சிறா அன் - சிறுவன். 293. ஒற்கம் - வறுமைக்காலம் 294. கோட்டங்கண்ணி - வளைந்தமாலை. தொடர் - சங்கிலி 295. கையோடு ஒருதுணி கையது என மாற்றிக் கூட்டுக. தலைகோட்டது என்க. அவற்றை நீராட்டிச் செல்லும் என்க. 296. கால் -காற்று. பரி - வேகம் காற்றின் வேகம்; என்றபடி. உருவ - ஊடுருவ. உரு - நிறம். புரண்டு உருவிழந்த என இயைக்க. 297. இது போர்க்குச் சென்ற தன் கணவனை வரக்காணாத மனைவி கூறியது. புதல்வற்றந்த செல்வன் என்றது கணவனை. கூடல் - இரண்டாறுங் கூடுமடம். உலர்ந்தன்று - உலர்ந்தது. 298. உழுத்ததர் - உழுத்தஞ் சக்கை. கோட்டம் - கோயில். கவிமா இகழ்ந்து நின்ற என்க. கலம் - பாண்டம். தொடாமகளிர் - தொடுதற்குரிய தூய்மை யில்லாத மகளிர். 299. தார் - இதனைக் கொடிப்படை என்பர். 300. வெய்யோன் - சூரியன். செய்யோன் ஒளி - அக்கினியினொளி என்றது செவ்வொளியை. அச் சூரியனின் ஒளி எனினுமாம். 301. ஞாட்பு - போர். தச்சன் ஆர் தைத்தற்கு அடுத்துத்துளைத்த வண்டியின் குடம் போல. வேல்கள் தைத்த மார்பிற்கு ஆர் தைத்த குறடு உவமை யாதலை. ஆர்சூழ் குறட்டின் வேனிறத் திங்க (புறம். 283) என்பதனானறிக. உறைத்தல் - துளித்தல். ஓலை - குடை. ஆகுபெயர். 302. இருவர் - கந்தோபசுந்தர். அரவணி கொடியோற் கிளையோன் - துச்சாதனன். அவன்மகன் துச்சனி. 303. வீமற்கிளையோன் - அருச்சுனன். அவன் சிறுவன் என்றது அபிமன்னுவை. 304. எருமை - எருமைமறம். அஃதாவது; முதுகிட்ட தன்சேனைக்குப்பின் பகைவர் சேனையை யஞ்சாது மிகுந்த கோபங் கொண்டு தாங்கிப்பின் நிற்றல். எருமைபோலத் தாங்கி நிற்றலின் எருமைமறம் என்றாயிற்று. (பு.வெ. மாலை - தும்பை. 13) 305. சிறங்கணித்தல் - கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். சிறக்கணித்தல் - விகாரம். 306. மாமன் என்றது - சகுனியை. 307. ஏறு - இடபம். ஏறாடல் ஆயர் - ஏறு கோடல் விழவைக் கண்டு மகிழும் ஆயர். 308. கடுக்கொண்டெறிதல் - கோபங்கொண் டடித்தல். வேகங் கொண்டடித்தல் எனினுமமையும். 309. பகடு - களிற்றியானை. மீட்டு - விலக்கி. 310. வானவர்.......... ......... கடந்த வேந்தன் யானை என்றமையால் பகதத்தனது யானை என்று வில்லிபுத்தூரர் பாரதக் கதைப்படி கொள்ளல் வேண்டும். அவன் வானவர்....... தானவர்க் கடந்தானோ என்பது ஆராயத்தக்கது. மானவேந்தன் ஒல்லான் (ஒல்லானாக) என முடித்து. மானவேந்தன் - அர்ச்சுனன் என்பாருமுளர். 311. கான் நவில் - காட்டிற் பயின்ற. மணிநிறப்பாகன் - கண்ணன். ஐவர்க்கிடை யோன் - அருச்சுனன். 312. யாவது - எத்தன்மையது. எறிதல் - அடித்தல். பைஞ்ஞிலம் - மக்கட்பரப்பு. மார்பகம் - தத்தங் கணவர் மார்பகம். அமைதல் - உயிர் அடங்கல். உடன் கிடந்தார் என்பர் புறநானூற்றுரைகாரர். 313. குறங்கறுத்து என்றது - வீமன் தனது தண்டால் தொடையை அடித்து முரித்ததை. 314. வஞ்சனை என்றது - அரைக்குக் கீழடித்த வஞ்சனையை; அரைக்குக்கீழ் முடித்தலாகாது என்பது விதி. 315. மறையாசான் - துரோணாசாரியன். அவன்மகன் - அசுவத்தாமா. துவரைவேந்து - கிருதவன்மன். மாமன் என்றது கிருபனை. தம்பி - சாத்தகி. கரியோன் - கிருஷ்ணன். தந்தையை - தந்தையாகிய துரோணாசாரியனை. துஞ்சிடத்து - துயிலுமிடத்து. பாஞ்சாலன் புதல்வன் - திட்டத்துய்மன். தம்பியர் மூவர் என்றது அவன் தம்பியாகிய உத்தமோசா. உதர்மன், சிகண்டி என்னும் மூவரையும். மருகர் ஐவர் என்றது அவன் மருகராகிய ஐவர் புதல்வரை. 316. இச் சூத்திரத்துத் துறை என்றது - துணிந்துவருந் துறையை. அஃதாவது தொடர்ந்து வாராது தனித்தனி வருந்துறை. 317. தொகுதி என்றது பன்னிரு துறை என்றதை. 318. அறுதி - முடிவு. 319. தாளினும் - தோளினும் என்றிருத்தல் வேண்டும். இளம்பூரணம் 74ஆம் சூத்திர உரைநோக்கி அறிக. 320. ஆள்வினை - முயற்சி. 321. தொகை என்றது தொகை நூல்களை. அவை எட்டு. 322. மீக்கூறுபடுத்தல் - புகழ்ந்து கூறல். 323. உறழ்ச்சி - மாறுபாடு. போர் - மற்போர் முதலியவுமடங்கும். 324. ஒரீஇ - நீக்கி. இயல்பானே நன்றென்றாற் போல என்பது கருத்து. 325. வேளாண்மை - உபகாரம். 326. ஊண் - உணவு. 327. தாயம் - உரிமைக்காரர் 328. முளரியோன் - பிரமன். 329. ஈன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினான் - சுகன. 330. ஆற்றுணா - வழியுணவு (கட்டுச்சோறு) இதனைத் தோட் கோப்பு என்ப. 331. ஒத்து - வேதம். ஒலி எத்திசையும் நிரம்பிற்று என்க. 332. ஆறு - ஆறங்கம். முதுநூல் - வேதம். இகல்கண்டோர் - மாறுபட்ட நூல் களைக் கண்ட (செய்த) புறச்சமயத்தார். மிகல் - மிகுதி; கருவம். சாய்மார் - அழிக்கவேண்டி. மெய்கொளீஇ - உண்மைப்பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி. மூவேழ்துறை - இருபத்தொரு வேள்வித்துறை. புல்வாய்க் கலைப்பச்சை - மான்றோல். பூண்ஞாண் - பூணூல். வலை - சாலகம் என்னு மணியாகப் பத்தினிகள் அணியும் அணிவிசேடம். செல்வல் - செல்வேன். 333. மழுவாள் நெடியோன் - பரசுராமன். 334. நிதி - திரவியம். குலம் பெறு தீங்கு - குலம் அடையுந் தீமை. 335. தான் என்றது கொடுக்கும் பொருளை. 336. முற்கூறிய மூன்று - ஐவகையிலக்கணத்துள் முற்கூறிய மூன்று. பொது - ஏனை வருணத்தோர்க்கும் பொதுவானது. 337. துரங்கவேள்வி - அசுவமேதயாகம். 338. கனகம் - பொன். 339. தண்ணடை - மருதநிலத்தூர். 340. உலகு - பூமி 341. ஏதம் - தீங்கு 342. சுங்கம் - மரக்கலங்களி லேற்றும்பொருட்கும் இறக்கும் பொருட்கும் வேந்தர் வாங்கும் பொருள். 343. தாயம் - உரிமைப்பொருள். 344. சொல் - சொல்லிலக்கண நூல். பெயர் - பொருளிலக்கண நூல். நாட்டம் - சோதிடநூல். கேள்வி - வேதம். நெஞ்சம் - உடங்கிய மனம். காலை - ஞாயிறு. 345. படிவம் - விரதம். உயர்ந்தோர் - தேவர். குறும்பொறை - சிறுமலை. பொறி - புள்ளி. கவலையமருப்பு - கவர்த்த மருப்பு. பாண்டில் என்றது வட்டமாக அறுத்ததோலை. பருதி - வட்டம். கிளை - இனம். வல்லோன் - யாகம் பண்ணுவிக்க வல்லோன். ஈரறிவு - இம்மையறிவு; மறுமையறிவு. பெரிய அறிவுமாம். நரைமூதாளம் - புரோகிதன். எச்சம் - பிள்ளைப்பேறு. 346. மழுவாள்வேந்தன் - பரசுராமன். மிகை - மேம்பாடு. மிகை வென்றி அளவோ என இயைக்க. 347. தொறு - ஆடு. நெய்தல் தடுக்குநவு மென்றது - நெய்தல் தானே போதுமான வுணவாதலாலே வேற்றிரையிற் செல்லாமல் தடுப்பனவு மென்றபடி. புனல்வாயில் - வாய்ந்தலை (வாய்க்கால்) 348. நாம் - அச்சம். நாம என ஈறு திரிந்தது. 349. விடத்தர் - ஒரு மரம். கார் உடை - கருவேல், கவை - பிளவுபட்ட. கழுது - பேய். ஊர்தல் - பரத்தல், பறந்தலை - பிணஞ்சுடும் காட்டிடம். அழல் - அங்காரகன் - செவ்வாய் என்னும் கிரகம். வெள்ளி - சுக்கிரன். நிற்ப - நிலைபெற. 350. வழிபாடு - மேற்குலத்தாரை வழிபடுதல். 351. இவை என்றது - அடக்கப்படுவனவற்றை; அடக்கப்படுவனவும். பெண் இழிந்த வருணமாயினும் ஆண் உயர்ந்த நிலைமைபற்றி ஆண்பால் வருணத்துக்குரிய பக்கத்துள் அடக்கப்பட்டன என்பது கருத்து. 352. இது - ஈகை. சென்னி - சோழன். புகார் - காவிரிப்பூம்பட்டினம். தாமரை - பதுமநிதி. சங்கு - சங்கநிதி. 353. பிற்றைநிலை - தாழ்ந்துநிற்குநிலை - வழிபாட்டுநிலை. ஓரன்ன - ஒருதன்மையாகிய. ஆறு - வழி. அரசு - அரசன். செல்லும் - ஒழுகுவான். 354. ஏர்வாழ்நர் - உழுதுண்டுவாழ்வார். 355. இருக்கை - ஆசனம். 356. தேயம் - இடம் (-பக்கம்) தேஎத்து - இடத்து. 357. ஒருசிறை - ஒரு பக்கம் - ஏகாந்தம். ஆன், ஏ அசைகள். வந்த - தோன்றிய உணர்வு - ஞானம். முதல்தங்கும் - முதன்மையிற் பொருந்தும். மூவகை நின்றன காலம் - மூவகையாக நின்றனவாகிய காலம். 358. மாரன் - மன்மதன். இவன் மகளிர் என்றது - காமம்; மோகம்; பொறை யின்மை என்பவற்றை. மகளிர் கண்களாகிய வாளும் அதனைப் பிளக்க முடியாது போயினவாயின் அதனை மெல்லிது என்று கூறுவது எத்தன்மையது என்பது கருத்து. 359. கலசயோனி - குடத்திற் பிறந்தவன். 360. பிழம்பு - உடம்பு. 361. ஆசான் - குரு. 362. நிற்றல் முதலிய நான்கும் ஆசன விகற்பம். சில ஆசனம் நின்றும் சில ஆசனம் இருந்தும் இப்படிச் செய்யப்படும் என்றபடி. ஒல்கா நிலைமை - வேறு பாடான நிலை. சமமுதலியன என்றது சமாசன முதலியவற்றை. 363. உந்தி - கொப்பூழ். இருவகைவளி - இடை பிங்கலையால் வருங்காற்று - பிராணவாயு. வளிநிலை - பிராணயாமம். 364. புலம் - விடயம். 365. மள்ளன் - வீரன். அவனைக்கண்டேம்; அவன் இப்பொழுது புறந்தாழ் புரிசடை புலர்த்தாநின்றான் என்க. 366. வைதது - ஏசியது. கட்டி - வெல்லக்கட்டி 367. ஐந்து - பஞ்சப்பொறி. 368. பேராவியற்கை - வீடு. 369. கின்னரம் - ஒருபறவை. 370. பாணி - தாளம். நடை - செலவு. தூக்கு - இசை. துடி - துடிக்கூத்து. 371. வருதார் - செய்கின்ற உபாயம். பணை - மூங்கில். 372. கழகம் - சூது. கவறு - சூதாடுங்கருவி. அளகம் - பனிச்சை; எதுகை நோக்கி ழகரமாயிற்று. புழகம் - புகழ்; அகம் எனப் பிரிப்பர் உரைகாரர். ககரந் தொக்கது என்பர். புளகத்தோடு என்றுங் கூறலாம்; எதுகை நோக்கி ழகர மாயிற்று. பணிதம் - ஒட்டப்பொருள். ஆயம் - ஆதாயம். 373. பார்ப்பனவாகை என இவ்வாறு கூறுபவர் புறப்பொருள் வெண்பாமாலை யாசிரியர். இவரும் அவ்வாறு வகுத்துக்கூறினார் என்றபடி. 374. கூதிர், வேனில் என்பன அவ்வக்காலத்துப் பாசறையை உணர்த்தலின் ஆகுபெயரென்றார். கூதிர் - குளிர். வேனில் - வெய்யில். வெப்பம். 375. ஓரியாண்டு - ஓர்யாட்டை என ஐ பெற்று வலிந்துநின்றது. 376. மூதில் - பழையமனை; முதுகுடி. முல்லைசால்கற்பு - இருத்தல் ஒழுக்க மமைந்த கற்பு. வேந்தனுக்கு வேனிலான் தன் ஐங்கணையுந்தோற்ற அழிவு. மாதர்பாற் பெற்ற வலியளவோ அதினுங்கூட என்றபடி. எனவே, பாசறையில் தங்கிய வேந்தனிடம் காமன் தன் செயல்புரியும் வலியின்றி அடைந்த தோல்வியளவு இல்லிடத்தில் வேந்தனைப் பிரிந்து தனித்திருந்த அவன் மனைவியிடம் தன் ஆற்றல் காட்டிப்பெற்ற வெற்றி அளவினுங் கூட என்பது கருத்து. வினைவலியின் மூண்டுநிற்றலாலே தலைவியின் பிரிவு தலைவனை வருத்தவில்லை என்பது இதன் சுருக்கமாகும். 377. கவலை - கவர்த்தவழி. உவலை - தழை. 378. அழித்தல் - குலைத்தல். அதரிதிரித்தல் - எருதுகளைப்பூட்டி வளைத்து நெற்போரை மிதிப்பித்தல். இதனை இக்காலத்துச் சூடு மிதித்தல் என்பர். வாண்மடல்ஓச்சி - வாளாகிய மடலைச் செலுத்தி நெற்போரை மிதிப்பிப் போர் எருதுகளைக் கோலோச்சி மிதிப்பித்தல் வழக்கு; கோலுக்குப் பதிலாக அக்காலத்துப் பனங்கருக்கைக் காட்டிச் செலுத்தி மிதிப்பித்தனர் போலும். மடல் என்பதற்குப் பனங் கருக்கு என்று பொருள் கூறினர். டாக்டர் சாமிநாதஐயரவர்கள். (புறம். 370ஆம் செய்யுட் கீழ்க்குறிப்புரை) - கருக்கைச் சீவிப் பனை மட்டையால் எருதுகளுக்கு அடிப்பது இக்காலத்தும் வழங்குகின்றது. வேறு பொருளுளதேனுங் கொள்க. ஈனா வேண்மா ளிடந்துழந்தட்ட என்பது புறம். 372ஆம் செய்யுளடியினுள் வருகின்றது. வேண்மாள் என்பது வேளாளர் குலத்துப் பிறந்த பெண்ணுக்குப் பெயராய்வருதல். பதிற்றுப்பத்தில் 2ஆம் பதிகச் செய்யுளில் வெளியன் வேண்மா ணல்லினி யீன்றமகள் என வருவதால் அறியலாம். ஈனாத என்பது மகப்பெறாத என்னும் பொருளையுணர்த்தி வேண்மாளை விசேடித்து நின்றது. வதுவை வேண்மாள் எனச் சிலப்பதிகாரத்தினும் வருகின்றது. ஈனாவேண்மாள் என்பது கூழடும் பெண்ணைக் குறித்துக் கூறப்பட்டதுபோலும். 379. கணை - அம்பு. மிளிர்த்தல் - கீழ்மேலாக மறித்தல் (உழுது புரட்டல்). கழுது - பேயில் ஒரு சாதி. பாடுநர்க்கு - பாடி வருபவர்களுக்கு ஈதற் பொருட்டு. தேய்வை வெண்காழ் - சந்தனக்கட்டை. விசிபிணி - விசித்த வார்க்கட்டு. வேய்வை - குற்றம். வந்திசின் - வந்தேன். முகவை - ஏற்றுக் கொள்ளும் பரிசில். 380. களவழிநாற்பது - பதினெண்கீழ்க் கணக்கு நூலுளொன்று. இது போர்க் களத்தைப் பாடியது. களவழி - களத்தினிடம். 381. உறழ்வு - மாறுபாடு. கழுமலம் - சீகாழி. ஆவுதை காளாம்பி - மேயும் ஆக்கள் காலாலிடறிய காளான். காளான் கீழ்மேலாயவாறுபோலக் குடைகளும் கீழ்மேலவாய்க் கிடந்தன என்க. காம்பு மேலாகவுங் குடை கீழாகவுங் கிடந்தன என்றபடி. 382. குறை - உடற்குறை. 383. இறை - அரசன். 384. வியலுள் - அகன்ற ஊர். கோடியர் - கூத்தர். வாழ்ச்சி - வெற்றிச் செல்வம். வாழ்ச்சிக் களமெனக் கூட்டுக. ஆடுங்கோவல்லனல்லன் என இயைக்க. 385. கொற்றவை யளிப்பக் கூழ்உண்டு (குரவை) ஆடும் பேய்கள் போர்க்களத் திலே அரசனளிக்கும் பரிசில் கொண்டு ஆடின குரவைக் கூத்துக்கண்டு உவந்தன என்பது பொருள். இதில் உண்டு ஆடும் என்பதே பேயாடற் குதாரணமாகும். பரிசில் பெறுவோர் வீரரும் பாணர் முதலியோருமாவர். இனி உண்டு கொண்டாடிய பேய்கள் பரிசில் கண்டு உவந்தனவாய்க் குரவைக் கூத்தைத் தொடங்கி ஆடின என்று கூறுவாருமுளர். 386. யானைக்கோடுபோன்ற வெள்ளெயிறு. துயல்வர - அசைய, தலையிற்சூடி என்க. இச்செய்யுளின் முதல் (அகன்றலை வையத்து) என்பது. 387. அத்தொழில் - வேலாலெறியுந் தொழில். வேலைப் புகழ்தல் என்பர் இளம்பூரணர். 388. கணையாலே வேலையெறிந்து மால் ஆடினான் என்க. கதிரோன் சேய் - கன்னன். 389. புற்றம் - புற்று. மன்றம் - பொதுவில் (பொதுவிடம்) ஒளி என்னைக் கண்ணது என்க. என்னை - என்தலைவன். 390. மிகை - மேம்பாடு. 391. கடவர் - கடன்காரர். மிச்சில் - மிச்சவரகு. ஒற்கம் சொலிய - வறுமை நீங்க. கடை - வாயில். தப்பல் - நீங்கல். கடனீர்க்கும் - கடன் வாங்கும். 392. கலிவர லூழி - கலியுகம் 393. போந்து எனவும் பாடம் 394. செய்யாது - வஞ்சனை செய்யாது. 395. எம்மனை - எங்குடி. விளைத்தல் - செய்தல். பாணித்தல் - தாமதப்படல். இச்சரிதம் புலப்படவில்லை. வில்லிபுத்தூரர் பாரதத்தில் அருச்சுனன் சயத்திரதனை விடுவதாகக் கூறிய சபதக் கதையோடு இது ஒத்துவரவில்லை. கதை வேறுபாடோ? அல்லது வேறொருவர் கதையோ? ஆராய்க. 396. இழைத்தது - கூறியவஞ்சினம். 397. இந்திரன் வேட்டு இரந்து வரங்கொண்டனன் என இயைக்க. அவன் மைந்தன் - அருச்சுனன். இரவி மைந்தன் - கன்னன். மன்னன் - கன்னன்; மைந்தன் எனவும் பாடம். வேந்தன் - இந்திரன். மிகை - மேம்பாடு. 398. ஏனைநிரை - எருதும் எருமையும், பயக்கும் - பெயரெச்சம் அது பகட்டே ரோடுமுடியும். 399. பொறையன் - சேரன். ஆறு - வழி. வம்பலிர் - புதியீர். மன்பதை - மக்கட் பரப்பு. ஆழி - உருளை. எண்ணிற்றோலிலன் - எண்ணிற்றிலன். எண்ணின் றோ - மெலித்தல் விகாரம். கந்துகோளீ யாது - கட்டுத்தறியி லடங்காமல். நிழல் சாடி - நிழலைக்குத்தி. காண்பல் - காண்பன். 400. கட்டில் - அரசுகட்டில். அது ஆகுபெயராய் அரசுரிமையை யுணர்த்திற்று. 401. பரதன் - இராமன்தம்பி. பார்த்தன் - அருச்சுனன். 402. இராமன் தம்பி - பரதன். ஆங்கவனடி - இராமனடி. பொறையாற்றல் - பொறுத்தல் (தாங்கல்). படி - பூமி. பூமியைத் தாங்கலைக்குறித்து முடிசூடான் என்றபடி. 403. பரிதி - சூரியன். பகல் - நாள். நிலம் ஒருநாளில் எழுவரைத்தலைவராக எய்திய அத்தன்மையை யுடையது. அரசு நிலையில்லாதது என்றபடி. வையம் - பூமி. ஐயவி - வெண்சிறுகடுகு. விட்டோர் - பற்றுவிட்டோர். திரு - திருமகள். விடாதோர் - பற்று விடாதோர். 404. பனுவல் - நூல். அது ஆகுபெயராய்ப் புலமையை யுணர்த்தி நின்றது. உடன் மரீஇ இருக்கை - உடன் பொருந்தி இருத்தல் (கூட இருத்தல்). கொட்கும் - சுழலும். பிறப்புப் பெறுதில் என இயையும். 405. கோல் - துலாக்கோல் 406. படுபயன் - உண்டாகும் பயன். நடு - நடுநிலைமை. 407. மிகுதி - மனச்செருக்கு. தகுதி - பொறையுடைமை. 408. விழைதல் - விரும்பல். கேட்டவை - கேட்ட நூலறிவு. தோட்டி - களிற்றையடக்குங் கருவி. அறிவு தோட்டியாக உள்ளத்தை மீட்டு என்க. உள்ளமென்னும் யானை என உருவகியாமையின் ஏகதேசவுருவகம். அனைய - அத்தன்மையை. ஓழுக்கம் அரிய என வருவித்து முடிக்க. 409. மாய்தல் - இறத்தல். இன்மை - வறுமை. தொடர்பு - உலகத்தோடு தொடர்ந்து போதல். தோன்றல் - தலைவன்; என்றது குமணனை. இன்னாது - துன்பந்தருவது. 410. வருகுவல் - வந்தேன். பூட்கை - மேற்கோள். நின்கிழமையோன் என்றது நின் தமையனை என்றபடி. 411. வினை - தீவினை. உம்மை - மறுமை, நிரயம் - நரகம். பரிவது - இரங்குவது; வருந்துவது. 412. அகழ்வாரைத் 413. இது - புதல்வரைப் பெறுதற்குதாரணம். 414. இது - மெய்யுணர்விற்குதாரணம். 415. அகற்சி - துறவு. அகலல் - பிரிதல்; நீங்கல். 416. புனிறு - ஈன்றணிமை. ஈன்றணிமையாற் புறம்போக முடியாமை யாலே பசி யுழந்த என்க. தனது குழவியைவாங்கி வாய்மடுத்து இரையாகக் கவர் தலைநோக்கி தான் குழவியினும் முன்சென்று எயிற்றுக்கொள்ளையாற் கதுவ அதன்கண் தங்கினன்; யாரெனின் போதிமேவிய பெருந்தகை என்க. 417. கார் அறிவு - இருண்ட அறிவு. மயக்கவறிவு. அளவு - அளத்தல். என்றது. உயிர்முதலியவற்றை அளந்தறிதல். 418. காமம் - விழைவு - பொருட்பற்று. நாமம் - பெயர். 419. உலகியல் - உலகவொழுக்கம். 420. இருபால் - இருபகுதி. விளைதல் - முதிர்தல். இளையனாய்த் தன்காமம் நீத்தான் என்றது வீடுமனை. பூருவுமாம். பாரதம் நோக்கியறிக. 421. விரித்து அவ்வாற்றான் எனப் பிரிக்க. 422. வீரர்கள் வீரசுவர்க்கம் அடைதற்பொருட்டு யாக்கைநிலையாமை கருதிப் பொருது இறத்தலின், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத் தென்றார். கொடை வீரம் முதலியவும் யாக்கை நிலையாமை பொருள்நிலையாமை பற்றி நிகழ்தலின் அவையும் நிலையாமைக் குறிப்போடு உறவுடையன ஆதல் காண்க. 423. புறப்புறம் என்பார் புறப்பொருள் வெண்பா மாலைக்காரர். 424. ஆன்உருபு ஏதுப்பொருளில் வருவது மூன்றாவதற்காகும்; ஈண்டு ஏதுவைக் காட்டற்கு ஆனுருபு கொடுத்தார். எனவே உலகிற்கு நிலை யாமை கூறுங்கால் அறமுதலிய பல்லாற்றானுமே கூறல் வேண்டு மென்றபடி. 425. கணந்தோறுங் கெடுவன இளமை செல்வம் முதலியன. கற்பம் - ஊழி. ஈண்டு ஒருவனுடைய ஆயுள்முடிவையுங் குறிக்கும். கற்பத்திற் கெடுவன. அறமும் உயிரும் யாக்கையும் முதலியன. சீவத்தன்மை கெடலின் உயிரையுங் கூறினார் போலும். உடம்பு விட்டுச் சேறல் பற்றிக் கூறினார் எனினும் அமையும். 426. நிலையாமைக்குறிப்பு ஏதுவாதலை அடுத்த சூத்திர உரை நோக்கியறிக. 427. மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டுள் ஒன்று. 428. கூறு - கூற்று - கூற்றமென அம் சாரியை பெற்றுநின்ற பெயர்ச்சொல். கூறுபடுத்துவது என்பது பொருள். பேரூர்க் கூற்றம் என்பதிலும் கூறு - கூற்று என்றாய் அம் பெற்று நின்றது; கூறு - பங்கு. கூற்றமுங் காலமும் வேறன்று என்றது காலமுலகமென்ற சூத்திரத்தாலே சொல்லதிகாரத்தில் முன்னே கூறப்பட்டபடி காலம் என்றது காலக்கடவுளையாதலின் காலமும் கூற்றமும் ஒரு பொருளன என்றபடி. 429. அது காட்சிப்பொருளாக - அம்மூப்பே காட்சிப் பொருளாக. இளமை நிலையாமையைக் காட்டுவது முதுமை ஆதலின் அது காட்சிப் பொருளாக என்றார். 430. குட்டம் - ஆழம். இரும் - இருமல். எமக்கு இளமை யாண்டுண்டு கொல்லோ? அதுதான் இரங்கத்தக்கது எனக் கூட்டுக. 431. விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்ட புண். தீர்ந்து - நீங்கி; ஆறி. 432. எஃகம் - வேல். ஓடா - புறங்கொடாத. நோக்கி. நாணி தாங்கி, பெறுக யானென ஆங்குத் தன் புண்வாய் கிழித்தனன் என்க. 433. பேயானே காத்த - பேய்தானே காத்த என்றிருக்கலாம் போலும். பேயானே காக்கப்பட்ட என்று பொருள் கொள்ளினு மமையும். 434. புண்ணனந்தர் - புண் மயக்கம். கண் அனந்தர் - கண்டுயில். உளை - ஊளை - கூவிளி. 435. மன் என்பது கழிவிரக்கப் பொருட்கண் வருவதோ ரிடைச் சொல். அது, கழிவேயாக்க... மன்னைச் சொல்லே (சொல். 254) என்பதனானறிக. மன்மன்னை என ஈறு திரிந்து நின்றது. ஈண்டு மன்னைக்காஞ்சி என்றதனானே அச்செய்யுள் மன் என்னும் இடைச்சொற் பெற்றும் வரும் என்பதை உடம்பொடு புணர்த்துக் கூறினார் என்பார், இது உடம்பொடு புணர்த்தல் என்றார்; உடம்பொடு புணர்த்தல் என்றிருப்பதே பொருத்தம். பின்வரும் உதாரணத்து மன்வருதல் காண்க. 436. கட்பெறின் - கள் + பெறின். கலம் - உண்கலம். தடி - தசை. 437. ஆடுநர் - கூத்தர். சாயல் - மென்மை. மைந்து - வலி. துகள் - குற்றம். புக்கில் - புகலிடம். பைதல் - துன்பம். ஒக்கல் - சுற்றம். அரந்தை - துன்பம். கெடு - கேடு. வாய்மொழிப் புலவீர்! அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிருய்த்தது; அதனால் புரவலன் கல்லாயினான் என ஒக்கலைத் தழீஇ அதனை வைகம் வம்மோ எனக் கூட்டி முடிபு செய்க. வைகம் வைவம் என்றிருப்பது நலம். 438. ஆண்பாற் கையறு நிலையாவது - ஆண்மக னிறந்துழி, அவனைக் குறித்து அவன் சுற்றத்தார் முதலியோர் செயலற்று இரங்கிக் கூறுவது. 439. அரசோதஞ்சம் - (என்) அரசு கொடுத்தலோ எளிது. சிதடன் - குருடன். முளை -மூங்கில் முளை. ஒல்லாமுயக்கு - பொருந்தாத முயக்கம். 440. நகையாடுங் காதலுடையாள் என்றது முன் புணர்ச்சிக் காலத்து அவனோடு நகையாடு காதலுடையாள் என்றபடி. 441. இரவம் - ஒருவகைமரம். மை யிழுது - மை. ஐயவி - வெண் சிறுகடுகு. காஞ்சி - காஞ்சிப்பண். நெடுந்தகை புண்ணை. செரீஇ. இழுகி. சிதறி, ஊதி, எறிந்து. பாடி, புகைஇ. காக்கம். வம்மோ எனக் கூட்டிமுடிக்க. 442. பேஎ - உரிச்சொல். இது அச்சப்பொருட்டு. பேஎநாமுரு மென .......... அச்சப் பொருள் (365) 443. இது. அஞ்சின ஆஞ்சி என முடியும் என்றாதல் அஞ்சி, ஆஞ்சி என நின்றது என்றாதல் இருத்தல்வேண்டும். 444. புண் - கணவனல்லாமையை யுட்கொள்ளும் அச்சத்தைப் பயந்தது என இயைக்க. 445. கெளவை - ஆரவாரம். வெய்யோன் - விரும்பினோன். 446. அனைநிலை வகையோர் என்றது தத்தம் வருணமின்றி. ஏனை வருணத்துப் பெண்பாற்கட் பிறந்த புதல்வரை. 447. படிவம் - விரதம். அரிவை, தீப்போல - பிறந்தவூர்க்கு அணங்காயினள் என இயைத்து முடிக்க. 448. மறுகல் - கழலல். மறவர் - வீரர். இறைகூர்தல் - தங்கியிருத்தல். 449. பொறை - பாரம். வம்பவேந்தர் - புதிய அரசர். செருப்புகல் வேண்டி - போரை விரும்பி. நிரல் - வரிசை. கதுவாய் - வடு. பன்னல் - பருத்தி. 450. நிரலல்லோர்க்கு - கொடுக்கு முறைமையுடைய ரல்லாதார்க்கு. நீரல்லோர்க்கு எனவும் பாடம். அதற்குக் கொடுக்குந் தன்மை யுடையர் அல்லாதார்க்கு என்பது பொருள். நிகரல்லோர்க்கு என்று பாட மோதி ஒத்தகுலமுடையரல்லார்க்கு என்று பொருளுரைப்பது நலம்போலும். புரையரல்லோர் வரையலளிவளென - தந்தையுங் கொடானாயின் என்னும் (புறம் - 323ஆம்) செய்யுள் நோக்கியறிக. முறைமை என்பதற்கு - ஒத்தகுலமுறைமை எனினுமமையும். 451. இது என்றது இறுதியிற் கூறிய இத்துறையை. 452. இதன் கருத்து நன்கு புலப்படவில்லை. படைத்தான் - படைத்தான் என்று பாடமிருக்கலாமோ? 453. ஓய்தல் ஆய்தல்.... ... உள்ளதனுணுக்கம் (சொல். உரி- 230) 454. அடங்காத துடி இசைத்தலன்றியும் பொங்கும் என இயைக்க. போலும் - அசைநிலை. 455. பையுள் - துன்பம் 456. எண்கு - கரடி. அதர் - வழி. கல்லளை - குகை. அது (துயில்) வாராதாயினும் என வியைக்க. உயிர்நிலை யாதாங்கொல் என முடிக்க. 457. இறப்பினும் - இறந்து பிறப்பினும். ஊன்தடி - தசை. ஞமலி - நாய். சிறுபதம் - தண்ணீர். மதுகை - வலி. 458. இளம்பூரணர். 459. படர்ச்சி - கணவனொடு சேரல். 460. இடை தெரியார் - நடுவாராயாதார். நடு - முறை. விடம் -நஞ்சு. அது போலியாய் விடன் என நின்றது. 461. முதுபாலை - பெரும்பிரிவு; என்றது இறப்பை. 462. வேறுபுலம் - வேற்றுநிலம். விளர்த்த - வெளுத்த. யாணர் - புதுவருவாய். அளியள் - இரங்கத்தக்கவள். 463. படர் - துன்பம் 464. தேரோன் மகன் - கன்னன். மடந்தை - அவன் மனைவி. அவனது மெய்யிற்றீராத என்றதனால் அவனுடம்பைத் தழுவிக் கிடந்துயிர் நீத்த அவன் மனைவி என்பது பெறப்பட்டது. வாரா உலகம் - துறக்கம் துறக்கத்தை யடைந்து அவனுடம்பைத் தழுவுதற்கு இவ்வுடம்பைத் தழுவி உயிர் நீத்தாளோ என்பது கருத்து. 465. யாங்கு - எப்படி. எனைத்து - எவ்வளவிற்று. செகுக்கல்லா - போக்கமாட்டாத. மதுகைத்து - வலியையுடைத்து. களரியம் பறந்தலை - களர் நிலத்துள்ள சுடுகாடு. பொத்துதல் - மூட்டல். 466. அளிய - இரங்கத்தக்கன. இனி - இப்பொழுது. புல் - புல்லரிசி. சிறு வெள் ஆம்பல் - நாம் இளையமாயிருந்தபோது தழையாயின; இப்பொழுது உண்ணும் புல்லரிசியாயின; ஆதலின் அவை அளிய என முடிக்க. 467. புறங்காடு - சுடுகாடு. இது முல்லைநிலம். அதுபற்றியே அதனைப் பாலை என்றதற்குக் காரணத்தை நச்சினார்க்கினியர் கூறினார். 468. செல்கெனச் சொல்லாது - நின்கணவனோடு இறப்ப நீ போ என்று கூறாது. ஒழிக என - தவிர்க என்று. அணில்வரிக் கொடுங்காய் - வெள்ளரிக்காய். வாள் - அரிவாள். காழ் - விதை. பிண்டம் - சோற்றுத்திரள். வெந்தை - வேவை. வல்சி - உணவு. உயவல் - வருந்தல் - கைம்மைநோன்பால் வருந்தல். ஈமம் - பிணப்படுக்கை. ஓரற்று - ஒருதன்மைத்து. 469. அஃது - மீடல். 470. வாதுவல் - கிழிப்பேன். எஃகம் - வேல். காளையை - காளையாகிய நின்னை. 471. தலைப்பெயல் -கூடுதல். 472. எற்கண்டு அறிகோ - எதனைக் கண்டு அறிவேனோ? எற்கொண்டு அறிகோ என்று பாடமிருக்கலாம் போலும். ஆவநாழிகை - அம்பறாத் தூணி. குறங்கு - தொடை. அம்பணை - பாணங்களாலாய சயனம். சூழமுட்கள் செறியவுள்ள கழற்காய். அம்புகளால் மொய்க்கப்பட்டுக் கிடக்கும் வீரற்குவமையாதலை. மொய்ப்படுசரங்கள் எனவரும் சீவக.சிந். 2287 செய்யுளாலறிக. 473. சினைஇ - கோபித்து. பெயரா - பெயர்த்து. துழவல் - கையாற்றடவிப் பார்த்தல். படுமகன் - இறந்தமகன். 474. நன்காடு இழந்து என்போற் புலவுங்கொல் என இயைக்க. புலவல் - தனித்தல். உலகு பொதி உருவம் - உலகு முழுவதையும் அடக்கிய வடிவம். பறந்தலை - பாழாகியவிடம்; சுடுகாடு. 475. ஈமவிளக்கு - பிணஞ்சுடும் விறகின் அழலாகிய விளக்கு. முதுகாடு - மயானம். நெஞ்சமர் காதலர் - மனத்திற் பொருந்திய காதலையுடைய மகளிர்; என்றது மனைவியரை. எல்லார் புறனும் - எல்லாருடைய பிற்காலத்தை. தன்புறம் - தன் பிற்காலம். 476. புறத்திணையிலக்கணம் என்றதனானே அகத்திணைக்குப் புறத்திணை என்பதும். திறப்பட என்றதனானே அகத்திணை ஏழற்கும் புறத்திணை ஏழும் முறைப்படப் பகுத்துக் கூறப்படும் என்பதும் பெறப்பட வைத்தமை யானே கிடக்கைமுறை கூறப்பட்டதென்க. 477. பாடாண் என்பது பாடப்படும் ஆண்மகன் ஒழுக்கம் என ஆண்மகன் ஒழுக்கத்தை யுணர்த்தி நின்றமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றார். 478. பரவல் - வாழ்த்தல். 479. அஃது என்றது நிரையை - நிரையைத் தாம் முன் உடையார் போல. பகைவேந்தர் ஊர்முனையிலே புலம்புமுன் அவர்க்கே கவர்ந்து நிரையைக் கொடுத்து. வீசி - வீசுதலால். நின் சீர்த்தி எவ்விடத்துஞ் சென்றது. பகைவர்க்கு அவ்வாறு நன்மை உண்டாதல்போல நமக்கும் நன்மை பெரிதும் உண்டாகுக. 480. அவல்எறி - அவலை இடிக்கும். வள்ளை - வள்ளை இலை. அயிரை - ஒரு சாதி மீன். குழாஅலின் - குழுவுதலின். ஒப்பும் - துரத்தும். திவவு - யாழ். வயிரிய மாக்கள் - பாடுபவர். (யாழ்ப்பாடகர்). மறுகுசிறை - தெருவின் இருபக்க வீடு. வைப்பு - ஊர். அளிய - இரங்கத்தக்கன. பரவாஊங்கு - பரவுதற்குமுன். 481. வைத்தலின் பாடாணாயிற்று என்க. 482. பணிபு - பணிதல். மலர்ப்பு - மலர்த்தல். கொண்டி - கொள்ளை. தமிழ் - தமிழ்ப் படை. செறித்து - இடையறக்கொன்று. ஆடு - வென்றி; பிறரிடம் பெற்ற வென்றி. நீ கண்டனையம் - நின்னாற் படைக்கப்பட்டாற் போலானோம். அருவீ ஆம்பல் - வீயரிய ஆம்பல். என்றது எண்ணாம்பலை. வீ - பூ. அருமை - இன்மை. 483. தந்திரவுத்தி -நூற்புணர்ப்பு. 484. பெண்பாற்றெய்வம் கொடி நிலைகந்தழிவள்ளி என்றவற்றுள் வள்ளி யுளடங்குமென்று இவ்வுரையாசிரியரே (நச்சினார்க்கினியரே) கூறுவதைச் சூத்திர உரையால் அறிக. 485. எரி - அக்கினி. அகலம் - மார்பு. பொன்றார்எயில் - பகைவர் மதில்; என்றது (திரிபுரத்தை) மூவெயிலை. ஆடல் - கூத்து. குறங்கு - தொடை. சிரந்தை - துடி (உடுக்கை) இரண்டுஉரு - அர்த்தநாரீசுரவடிவம். ஈரணி - இரண்டு நிறம். களங்கனி - களம் பழம். மறுமிடறு - நீலகண்டம். காலக்கடவுள் - ஊழித்தேவன்; உருத்திரன். மறைமொழி - மந்திரம். 486. தொகை - எட்டுத்தொகை. 487. இது முனிவரை வாழ்த்தியது. நிறைமொழி - அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடுமொழி. 488. இது மழையை வாழ்த்தியது. 489. இது ஆனை வாழ்த்திய செய்யுள். நாகு - கன்று. இனம் - பசு நிரை. நந்தி - பெருகி. போத்து - ஆனேறு. ஆயர் - இடையர். கரைய - மூங்கிற் குழாயிடத்துள்ள. வாள் உழவர் - படைவாளுழவர். படைவாள் - கலப்பையைக் குறிக்கும். அளை - வெண்ணெய். புனிதமுமெச்சிலும் நீக்கி என்றது. பால் முதலியவற்றில் சுத்தா சுத்தம் உலகு பார்ப்பதில்லை என்றபடி. துனி - வெறுப்பு. பயம் - பிரயோசனம். புதர் - புதல்; பற்றை. மாந்தி - உண்டு. சுரை - முலைமடி எனினும் ஆம். 490. அறை - பாறை. வேங்கை - புலி. எழுபொழில் - ஏழுலகு. ஆழியின் - சக்கரத்தின். புரந்து வாழி என்க. 491. இதற்கு இளம்பூரணர் உரை பொருத்தமாகக் காணப்படுகின்றது. 492. இயன்ற - ஒழுகிய. 493. வண்ணம் குணமென்றும் செந்துறை வண்ணப்பகுதி வரை வின்றாங்கே என்பதனால் வண்ணம் குணமென்றுணர்க என்றும் குறிஞ்சிப்பாட்டுரை யுள் கூறினர் நச்சினார்க்கினியர். வருணம் என்று ஈண்டு உரை கூறுவதனால் வருணத்தைக் குணம் என்பது ஆகுபெயரா யுணர்த்திற்றுப் போலும். 494. வரைதல் - நீக்கல். 495. நாள் - நட்சத்திரம். கோள் - எண்ணப்பட்ட ஞாயிறுந் திங்களும் விளக்க மில்லாத இராகு கேதுக்களு மொழித்தொழிந்த ஐந்தும். ஈரைம்பதின்மர் - நூற்றுவர். துப்பு - வலி. எழுமுடி - ஏழரசர் முடி. மெய்ம்மறை - மெய்யை மறைப்பது - சட்டை. முன்றிணை முதல்வர் - குலமுதல்வர். 496. பரவல் - வாழ்த்தல். 497. வான்துடைக்கும் - வானைத்துடைக்கும். விரவுஉரு - பலநிறம். போல நுடங்கும் கொடி என்க. பொலம்பூங்கா - கற்பகத்தரு. கடவது - செய்யக் கடவது. கையறவு - செயலறவு. ஆண்டு - சுவர்க்கம். நின்னுடைத்து - நின்னை யுடையது. 498. இயைபியன்மொழி - அரசனுக்குப்பொருந்திய இயல்புகளை எடுத்துக் கூறி வாழ்த்துவது. அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும் (புற 35) நோக்கியறிக. 499. உண்மையான் இவ்வுலகம் உண்டன இயைக்க. இயைவதாயினும் - பொருந்துவதாயினும்; தமியர் - தனித்தவராய். முனிவிலர் - வெறுப்பிலர். துஞ்சலுமிலர் - மடிந்திருத்தலுமிலர். அயர்விலர் - மனக்கவற்சியிலர். நோன்தாள் - வலிய முயற்சி. 500. கூறிக் கூறலின் என இயையும் பிறர்க்குறுதிபயத்தலைக் கவிஞன் விரும்பிப் பாடலின் பாடாணாயிற்று. 501. செந்துறை - இசை. 502. இத்திணை - பாடாண்டினை. 503. அவை - பரவலும். புகழ்ச்சியும். 504. மயங்கல் - பரவல் புகழ்ச்சிகளொடு மயங்கல். 505. ஆறி - தணிந்து. அது என்பதில் யாதோ பிழையுளது போலும். ஆறியது என்றுகொண்டு அரசன் பொறுத்தது என்று கொள்ளலுமாம். அரசனை நாடி நன்குரைத்தல் என்றும் பாடம் உளது. 506. பக்குநின்ற - பிரிந்துநின்ற. இது உயர்ந்த காமம் என்பது இவர்க்குக் கருத்துப் போலும். 507. பகுதி - ஈண்டுப் பக்குநின்றதாகிய காமவேட்கைக் காதலின் ஆகுபெயர் என்றார். 508. நல்குக எனின் - அருள்செய்க எனின். ஒல்கு எனின் - வணங்குவே னெனின். இருள் ஆடலமர்ந்தான் - இருளிலே திருக்கூத்தை மேவின இறைவன். உணர்த்தல் - நீக்குதல். இது கடவுண் மாட்டுக் கடவுட்பெண்டிர் நயப்பு. 509. பல்லேற்றபரிகலம் - பிரமகபாலம். வல் - சூதாடுகருவி. இது கடவுளை மானிடப்பெண்டிர் நயந்தது. 510. குடுமிப்பருவம் - இளம்பருவம். புறம்பணையான் - மாசாத்தன் (ஐயனார்). சிலப். 9-13). இதன் கருத்து நன்கு புலப்படவில்லை. 511. களியானைத் 512. பழுக்காய் - பாக்கு. வெள்ளிலை - வெற்றிலை. கணி - சோதிடன் கோள்நலம் - கிரகபலம். 513. மையணல் - கருமைநிறம் பொருந்திய தாடி. கழித்திடுதல் - என்னைக் கைவிடுதல். இம்மையலூர் என்போற் பெருவிதுப்புறுக என இயைக்க. விதுப்பு - நடுக்கம். 514. கந்தபுராணத்து வள்ளியம்மை திருமணப்படலத்தில் பாட்டுடைத் தலைவராகிய கந்தசுவாமியைக் கிளவித்தலைவனாகக் கூறியதுங் காண்க. 515. இச்செய்யுளுரையில், இவரே புனலூரனென்றது பாண்டியனே யாதலிற் பாட்டுடைத்தலைவனையே கிளவித்தலைவனாக் கூறிய அகப்புற மாயிற்று என்று கூறல் காண்க. 516. இதற்கு இளம்பூரணர் வேறு கூறுவர். 517. கடவுள் காக்க என்று கூறியது, பிள்ளைத்தமிழில் வரும் காப்புப் பருவத்தைக் குறிக்கின்றது. செங்கீரை முதலியன அதில் வரும் ஏனைப்பருவங்களாம். 518. உம்மை, குழவிப்பருவங் கழிந்தோரைக் குழவிப்பருவமாக வைத்துப் பாடுங்கால் அவரிடம் பெறுதலும் குழவிக்கண் பெறுதலாக வைத்தலையுங் குறிக்கும். 519. அந்தரத்தான் - வானிலுள்ளவன்; என்றது சந்திரனை, இதன் கதை தெரியாமையால் கருத்து நன்கு புலப்படவில்லை. 520. அம்புலி - சந்திரன் 521. இவ்வாறு கூறுபவர் இளம்பூரணர்; அவர் வண்ணம் என்பதற்கு வேறு பொருள் கொண்டனர். 522. இயல்பு - தகுதி. 523. புனல்நாடு - சோழநாடு. இது நாடு அடுத்துவந்தது. 524. ஏற்றம் - நீரிறைத்தற்குரியது. வாரி - வருவாய் - விளைவு. உகும் - சொரியும். சாலும் - ஒக்கும். காவிரி என ஆறு வந்தது. 525. கச்சி - காஞ்சிபுரம். இது ஊர். படுவ - உண்டாவன. 526. மிதியற் செருப்பு - செருப்பல்லாத செருப்பு; என்றது செருப்பு என்னும் மலையை. மிதியல் என்னும் விசேடணம் வெளிப்படை குறித்து நின்றது. மழவர் - வீரர். மெய்ம்மறை - கவசம். பரிவேட்பு - சூழ்வு. அயிரை - ஒரு மலை. இது மலை யடுத்தது. 527. ஆவம் - அம்புக்கூடு. அம்பும் வில்லும் படைகள். 528. கொடி, கொடி போல ஓங்குக என இயைக்க. பூவைப்பூ மேனியன் - திருமால். பாம்புண்பறவை - கருடன். 529. குடையொக்குமென மதிகண்டு தொழுதமை என மேலடிகளோடு சென்றியையும். உரு - அச்சம். 530. சாலி - நெல். சூடு - போர். மடை - நீர்மடை. கால் - காற்று. மா குளம்பு உதைத்து உழக்கிப் போன்ற என இயைக்க. சினைவினை முதன் மேனின்றது. 531. களிறுகோட்டால் தோன்றும் என இயைக்க. அயிற்கதவம் - இரும்புக் கதவு (பெருந்தொகை விசேடக் குறிப்பு) எயில் - மதில். 532. உளை - தலையாட்டம். பரி - கதி. கவின் - ஒளி. 533. மள்ளர் - வீரர். போதல் - ஒழிதல்; இன்மையாதல். சிலை - இந்திரவில் (வானவில்) பலநிறம்பற்றி மாலைக் குவமையாயிற்று. 534. சின்னப்பூ - ஒரு பிரபந்தம். 535. வைத்தனன் வழியே என்று பாடங்கொள்வர் இளம்பூரணர். 536. மெய்ப்பெயர் - இயற்பெயர். 537. கூடல் - மதுரை 538. வென்வேலான்குன்று - திருப்பரங்குன்று 539. திருமருதமுன்றுறை என்றதனால் ஆறு பெறப்பட்டது. ஏதினாடு - அயனாடு. 540. புகார் - காவிரிப்பூம்பட்டினம். 541. ஏதினாட்டுறைபவர் என்று தலைவி கூறலே. அகப்பொருளைக் கருதிற்று. அதனால் பாடாண்டிணையெனப் பெயர் பெறா என்றார். 542. இளம்பூரணர் வேறுரை கூறுவர். 543. வெஞ்சுடர் மண்டிலம் என்றது சூரிய மண்டிலத்தை. 544. தண்சுடர்மண்டிலம் - சந்திர மண்டிலம். 545. இச்செய்யு ளுரையிலுங் கொடி என்பதற்குக் கீழ்த்திசை என்று பொருள் கூறினர் (கலி. 150). ஆதலின் ஈண்டுக் கொடிநிலை என்பதும் கீழ்த்திசை யிற்றோன்றுஞ் சூரியமண்டிலத்தை ஆகுபெயராயுணர்த்திற்று என்பது அவர் கருத்தாகும். 546. கொடி - நீட்சி. 547. வள்ளி (வல்லி) - கொடி (லகர ளகர ஒற்றுமை) முத்துக் கொடி என்றதில் கொடி என்றது தொடையைப்போலும். மேக வள்ளி - மேகத்தொடை போலும். 548. சோதிடநூலாரும் சூரியனை ஆண்கிரகமாகவும் சந்திரனைப் பெண் கிரகமாகவுங் கூறுவர். பிரயோகவிவேக நூலார். சத்துவ முதலிய குணங்களின் மிகுதி குறையொப்புப்பற்றி ஒரு பொருட்சொல்லே மூன்று லிங்கமுமா மென்பர். ஆராய்க. (திங்ஙு - 9ஆம் செய்யுளுரை நோக்குக.) 549. இமையான் - கண்ணிமைத்தலான் - கண்மூடலால். நாகம் - பாம்பு; கிரகண காலத்தில் பாம்பான் மறைதலை. இது சூரிய மண்டிலத்தை வாழ்த்தியது. 550. சார்பு - பற்றுக்கோடு. மைதீர் சுடர் என்றது பரஞ்சுடர் என்றபடி. இது அருவப் பொருள். கந்தழி - கந்து - பற்றுக்கோடு. அழி - இல்லாதது; தன்னை யெல்லாம் பற்றத் தானொன்றையும் பற்றாது நிற்கும் பொருள் என்றபடி. 551. குறைகாணாது - குறைதல் காணப்படாது; நிறைவுடையதாகி என்றபடி. அதனை யாம் கண்டுகொண்டு ஆய்ந்தது மாயையாம் என முடிக்க. மறைகாணா - மறைந்து. அமாவாசையில் மறையும். 552. அதிகாரத்தால் தேவர் கண்ணதன்றி எனக் கூட்டுக. பின்வரும் விரிவுரை நோக்குக. 553. இச்சூத்திரத்திற்கு அமரரை அதிகாரங்கொண்ட அளவே என்க. 554. மா - குதிரை. புலம் - வயல். நாஞ்சில் - கலப்பை. ஆடா - வழங்கா. மன்றம் - பொது. தோட்டி - காவல். அழல் - காட்டுத்தீ. கான் - காடு. கடுநெறி - கடுவழி. சிறகு அகைப்ப - சிறகை உயர்த்த; பறக்க. என்றது விரைந்து சேறல்பற்றி. 555. ஓரிடத்தான் என்றதனால் அதிகாரப்பட்டுநின்ற மக்கள் என்க. 556. பலவு - பலாமரம். நாஞ்சில் - ஒருமலை. பொருநன் - வேந்தன். மடவன் - அறிவுமெல்லியன். படப்பை - மனைப்பக்கத்திலுள்ள கொல்லை. அடகு - இலை. கண்ணுறை - மேல்தூவுவது. கடறு - காடு; சுரம். தேற்றா ஈகை - தெளியாக் கொடை. போற்றார் - பாதுகாத்துச் செய்யார். கடன் - முறைமை. 557. பாரி - ஒரு குறுநிலமன்னன். மாரி - மேகம். புரப்பது - பாதுகாப்பது. 558. ஒல்வது - இயல்வது. ஒல்லாதது - இயலாதது. ஆள்வினை - முயற்சி. கேண்மை - நட்பு. முனியேன் - வெறேன். மடியேன் - சோர்வுபடேன். வளிமறை - காற்றை மறைப்பதாகிய மனை. 559. களங்கனி - களாப்பழம். பனுவல் - பாட்டு. வெளில் - தறி. சாயின்று - சாய்ந்தது. குய் - தாளிப்பு. 560. ஆய் - ஒரு வள்ளல். 561. தமனியம் - பொன். ஒளிப்பார் - கரப்பார்; உலோபிகள். ஒல்லுவது - கொடுக்க இயன்றது. 562. அடுத்தல் - சமீபத்திற் போதல். எனவே எதிர்சேறலாயிற்று. ஏறல் - முன்னிலையிற் சென்று நிற்கப்பெறுதல். 563. வார்பு - வார்தல். வன்பு - வார். மை - கருமை. மருங்குல் - பக்கம். பொறி - புள்ளி. உழிஞை - கொற்றான். வேட்கை - விருப்பம். மண்ணி - நீராடி. சேக்கை - கட்டில்; முரசுவைக்கும் கட்டில். வீசல் - சாமரங்கொண்டு வீசல். உயர்நிலையுலகம் - சுவர்க்கம். உறையுள் - உறைதல்; பொருந்தல். கேட்டமாறு - கேட்ட பரிசு; கேட்டலால் எனினுமாம். 564. நுடங்கல் - அசைதல். கால் - காற்று. உரற - ஒலிக்க. வாள் - வாள்வீரர். வேல் - வேல்வீரர். மா - குதிரைவீரர். வாள், வேல், மா - ஆகுபெயர். பயங்கெழு ஆநியம் - மழைவளம்பொருந்திய நல்ல நாள். முந்திசினோர் - முன்னோர். 565. கடிப்பு - குறுந்தடி. இகுப்ப - அறைய. அண்ணல் - தலைமை. பறம்பு - ஒருமலை. கொல்லி - கொல்லிமலை. காரி - காரியென்னும் பெயரையுடைய குதிரை. ஊராது ஏந்திய குதிரை - ஊரப்படாது உயர்ந்த குதிரை; என்றது - குதிரை மலையை. கூவிளை - வில்வம். கடவுள் - தெய்வம். மோசி - ஒரு புலவன். கொள்ளார் - பகைவர். கையிடூஉபயிரும் - கையாற்குறிசெய்தழைக்கும். முதிரம் - ஒரு மலை. 566. இன்று - இற்றைநாள். சிறுவரை - சிறிதுநாள். தன்னிறை - தன்னரசன். களம் - தொழு. உறாற்க - உறாதொழியல்வேண்டும். ஆங்கு - அவ்வழி. 567. அறவிலைவணிகன் - அறத்தை விலைக்குவாங்கும் வணிகன் - ஆய் - ஒரு வள்ளல். 568. அயலோர் என்றது பிறரை; என்றது சான்றோரை. 569. ஈண்டுச் சான்றோர் என்றது அறிவானிறைந்த புலவரை. 570. கடை - வாயில் 571. பாடாண் தலைவன் என்றது பாடப்பட்ட தலைவனை. அவனே வழிவரு வருத்தம் தீர்ப்பான். 572. உயர்ந்தோர் என்றது புலவரை. 573. வேற்றுச் சுரத்தின் வழியாக யாம் வந்த வெம்மையையும், வேற்று வேந்தரிடத்துள்ள வெம்மையையும் மாற்றற்கு என்க. வெம்மை - வேற்று வேந்தரிடத்துள்ள பகை. வேற்று வேந்தரோடு சந்து செய்தற்கு வந்தனம் என்றபடி. இனி வேற்று வேந்தர்கண் வெம்மை என்றது தமக்கு ஈயாமை எனினுமாம். 574. கண்படை - கண்டுயில்; நித்திரைகோடல். 575. சேதா - கபிலைப் பசு. கபிலை - கபிலநிறமுடையது. ஆனுலகம் - கோவுலகம். 576. நாட்காலை - விடியற்காலம். 577. கற்றா - கன்றையுடைய பசு. இன்மகிழான் - இனிய மகிழ்ச்சியான். சென்னி - சோழன். ஆனுலகம் - கோவுலகம். சென்னிதொடையால் மண்ணுலகம் கோவுலகமாயிற்று. அக் கோக்களின் துகளால் கோவுலகம் மண்ணுலகமாயிற்று என்பது கருத்து. 578. ஆக்கம் - செல்வ வளர்ச்சி 579. மை - திரியைப் பற்றிய கரி; புகையுமாம். கொழுந்து கோயிலினுங் கோடாது என இயைக்க. 580. இதற்கு வேலின் நோக்கிய எனப் பிரித்தல் வேண்டும். 581. வளி - காற்று. வலந்திரியா - வலமாகச் சுழன்று. 582. மருங்கினான் என்பது மருந்தினான் என்றிருத்தல் வேண்டும். செய்யுளியல் வாயுரை வாழ்த்தே என்னும் 111ஆம் சூத்திர உரை நோக்கியறிக. 583. நிரயம் - நரகம். 584. பயத்தலின் - பயப்பித்தலின் 585. மாநிறைவில்லது - ஒருமாவிற் குறைந்த நிலம்; அது ஆகுபெயராய்க் கதிரையுணர்த்தும். கால் - யானையின் கால். யாத்தல் - ஈட்டிக்கொடுத்தல். பரிவுதப - அன்புகெட. பிண்டம் - பொருட்டொகுதி. 586. இது - புறநானூற்று உரையாசிரியரை மறுத்துக் கூறியதாகும். 587. செவியறிவுறு, செவியறிவுறூஉ என நின்றது என்பது கருத்து. 588. முந்தைவழி - முன்னோர் செய்த வழி. இவர்க்கு வழிநின்று பின்னைக் கேட்டல் முறை என இயைக்க. 589. பனிபடுவரை - இமயம். குமரி - கன்னியாறு. பௌவம் - கடல். முப்புணரடுக்கிய கட்டில் - பூமி ஆகாயம் சுவர்க்கம் என்னும் மூன்றுங் கூடிப் புணர்ச்சியாக அடுக்கிய அடைவும். ஆனிலையுலகம் - கோலோகம். இது கவர்க்கத்தின் மேலுள்ளது. உரு - உட்கு. ஞமன்கோல் - துலாக்கோல். எயில் - மதிலரண். முக்கட் செல்வர் - சிவபெருமான். ஏந்துகை - வாழ்த்தி உயர்த்திய கை. துனி - உணர்ச்சிவயின்வாராஊடல். குடுமி - முதுகுடுமிப் பெருவழுதி. 590. எண்ணிருதோள் - எட்டாகிய பெரிய தோள். எண்டோளாள் - துர்க்கை. சென்னியர்க்களிக்குந் தெய்வமென்றது - சோழவரசனை. 591. கடைநிலைக்காலம் - பிற்காலம். 592. கானம் - காடு. நீல் - நீலநிறம். வார்தல் - வடிதல். அரிப்பனி - இடைவிட்ட துளி. கிளையை - கிளைமையுடையை. நல்லூரின்கண் ஒருத்தி நலம் நயந்து வரும் எனக் கூட்டுக. 593. கண்ணகி - பேகன் பத்தினி. 594. இழிந்தோரென்றது - சூதர், கூத்தர் முதலியோரை. 595. துயிலெடுப்பு - துயிலெழுப்பல். 596. சூதர் - நின்றேத்துவோர். மாகதர் - இருந்தேத்துவோர். வேதாளிகர் - வைதாளியாடுவார். வேதாளி யாடுவார் என்றுங் காணப்படுகின்றது. சூதர் மாகதர் வேதாளிகரொடு (சிலப். இந்திரவிழ. 48) என்னு மடியுரை நோக்கி யறிக. சூத ரேத்த மாகதர் நுவல - வேதா ளியரொடு நாழிகை யிசைப்ப என்னும் (மதுரைக் காஞ்சி 670-71) அடிகளினுரையையு நோக்கியறிக. வந்திகர் - மங்கலப் பாடகர்; புகழ்ந்து பாடுவோர். 597. நந்திய - கெட. பானாள் - இடையாமம். மூதில் - முதுகுடி. சேக்கை - படுக்கை (சயனம்). வளர்தல் - கண்வளர்தல் - துயிலல். ஆங்கவன் - முதுகுடி முதல்வன். அன்று - அந்நாள். உணர் - துயிலுணர்தல். 598. கருவிப்பொருநர் - இசைக்கருவி ஒலிக்கும் பொருநர். 599. பாரசவர் - பிராமணருக்குச் சூத்திரப் பெண் வயிற்றிற் பிறந்தவர். 600. பாரதிவிருத்தி - கூத்திற்குரிய நால்வகை விருத்தியுளொன்று விலக்கினிற் புணர்த்து என்னும் (சிலப். அரங்கே. 13ஆம்) அடியுரை நோக்கியறிக. விலக்கியற்கூத்து - விலக்குறுப்போடு கூடிய கூத்து. இதனையும் மேற்படி அடியுரை நோக்கியறிக. கானகக்கூத்து - இது புலப்படவில்லை. கானகம் - காடு. கழாஅய்க் கூத்து - மூங்கிலிலேறி ஆடுவது. (கம்பங்கூத்து என்பது மிது) திரியாது - வேறுபடாது. 601. எண்வகைச் சுவை - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. விறல் - சத்துவம். 602. இசைப்பாணர் - இசைபாடும் பாணர். மண்டைப்பாணர் - இரக்குங்கலத் தேற்கும் பாணர். யாழ்வாசிப்பவர் - யாழ்ப்பாணர். 603. வருந்துவோய் வளவன் எமக்கு நல்கினன்; நீ செல்; உனக்கும் பெருங்கலம் நிறையத் தருவன்; அவன் நின்வயின் மகிழான் கேளான் வருக என இருப்பினல்லது நிறுத்துவனல்லன் என இயைக்க. 604. அசைஇ - இளைப்பாறி. எம்மை வினவலான என ஒரு சொல் வருவிக்க. புல்லியேம் - வறியேம். உடாஅ - உடுக்கமாட்டா. போரா - போர்க்கமாட்டா. படாஅம் - வதிரம். மஞ்ஞை - மயில். 605. சிலை - வில். குட்டுவன் என்றது சோழியஏனாதி திருக்குட்டுவனை. தெளிர்த்தல் - ஒலித்தல். ஒற்றி - ஒலிப்பித்து. வஞ்சி - பகை மேற்சேறல். பெயர்த்தல் - வேண்டாமெனக்கூறல். அதற்கொண்டு - அதனால். 606. சேயிழை -சிவந்த அணி. தடவுவாய் - பெரிய இடத்தையுடைய சுனை. கலித்தல் - தழைத்தல். சிதர் - துளி. புலத்துழை - புலத்திடை. கால் - வாய்க்கால். கோடு - சிகரம். சாயல் - மென்மை. 607. விறலி - விறல்பட ஆடுபவள். விறல் - சத்துவம். 608. கூத்தராற்றுப்படையை விரிக்க என இயைக்க. தடுமாறு தொழிலாக்கின் மூன்றாம் வேற்றுமையாகவும் விரிக்கலாம். அங்ஙனம் விரியாமல் கூத்தரை ஆற்றுப்படுத்தது என இரண்டாவதாக விரிக்க என்றபடி (சொல் - 578). பாணாற்றுப்படை முதலிய ஏனையவும் அவ்வாறே விரியும். 609. முருகாற்றுப்படை - திருமுருகன்கணாற்றுப்படுத்தல் என விரியும். 610. சிறந்த தொழில்கள் நிகழும் வெள்ளணி என இயைக்க. அன்றிப் பிறத்தற்குக் காரணமான என்பதனோடு முடிக்கில் பிறந்த நாள் என்னும் பொருள் பெறப்படாது என்க. 611. இறை - இறைப்பொருள். 612. சிலம்பி - ஒரு பூச்சி. இது வீடுகளில் தன் வாய்நூலாற் கூடுகட்டுவது. வீடுகளைத் தூய்மைசெய்வோர் தூய்மைசெய்யுங் கருவியால் சிலம்பிக் கூடுகளைக் களைந்து தூய்மை செய்வர்; அதனால் வீடுகள் வெளியாம். 613. களவழிப்பா - களவழி என்னு நூல். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுளொன்று. இதனை இயற்றியவர் பொய்கையார். இவர் இதனைப் பாடி ஒரு அரசனைச் சிறை நீக்கினார். இன்று சிறை நீங்கினார் பலர். இச் சிறை நீக்கம் அவனாற் போந்தரமோ (முடியுமோ) என்பது கருத்து. 614. ஏமம் ஆரும் - இன்பமடையும். 615. பக்கநாள் என்றது - பிறந்தநாளின் பத்தாம் நாளும் அதன் பத்தாம்நாளுமாகிய இரண்டையும் இவற்றோடு பிறந்த நாளையுங் கூட்டிச் சென்மத் திரயம் என்பர். இனிப் பிறந்தநாளின் முன்னும் பின்னுமுள்ள நாளுமாம். 616. அளிமுடியாக்கண் - அருளுதலில் முடிவடையாத கண் - அருட்கண். கண்ணையும் குடையையுமுடையான் என்க. இனி அளி முடியாக்கண் (கண்ணோட்டம்) குடையாக எனினுமாம். ஆகுதி நாள் - ஓமம் வளர்த்து முடிசூட்டு மங்கலநாள். 617. யாண்டு இத்துணைச்சென்றது என்று எழுது மங்கலமென்றது - அரசனுக்கு 50ஆம் ஆண்டு நிறைவு. 60ஆம் ஆண்டு நிறைவு. 80ஆம் ஆண்டு நிறைவு. 100ஆம் ஆண்டு நிறைவு என்று இப்படி எழுதி உலகிற்குத் தெரிவித்துக் கொண்டாடல். 618. திலதம் (திலகம்) - குடைக்காம்பிற்கு இடுங் குமிழ் என்பர் சிலர். திலக வெண்குடை என்னுஞ் சீவகசிந்தா. 83ஆம் செய்யுளுரை யில் திலகம் - மேலாதல் என்று நச்சினார்க்கினியர் கூறலின் நிழல்செய்வதில் திங்களாகிய அதற்கும் (அதனினும்) மேலானதாக என்றும் பொருள் கூறலாம். குவ்வுருபு ஐந்தாவதன் பொருட்டு (சிவக. 246 - 305). 619. அறநீர்மை தாங்கல் - வெண்ணிறமும் தட்பமுங் கோடல். குடை வானப் புறத்தின் தன்மைபோல உலகமுழுவதையும் கவிக்குமென்க. கண்டன் - சோழன். 620. கொண்மு - மேகம். வளவ! நின்குடை குடிமறைப்பதுவே என்க. 621. இது செங்ககோலைப் புனைந்து. 622. இது (திகிரி) ஆஞ்ஞாசக்கரத்தைப் புனைந்தது. 623. ஆளி - சிங்கம். மதுகை - வலி. கூளி - பேய். செங்குருதி - இரத்தம். 624. கோதை - சேரன். நாறி - நாறலால். புலவுஞ் சாந்தும் நாறலால் ஆடும் - பக்கமுமுண்டென்க. ஆடல் - பறத்தல், சூழ்தல். 625. கழுதை ஏர் - கழுதை பூட்டிய கலப்பை. 626. ஞெள்ளல் - விதி. அவர் அரண்களைப் பாழ்செய்தனை என இயைக்க. 627. ஒருவாற்றான் மண்ணியதென்றது. வேள்வியில் நீராடல்பற்றி. 628. கடும்பு - சுற்றம். 629. அடு - ஆடு என நீண்டது. அடு - அடுதல். கோடு - புடை. ஆம்பி - காளான். இல்லி - முலைக்கண். எவ்வம் - துன்பம். 630. அதியர்கோமானாகிய எழினி. கடை - வாயில். பசலை நிலவு - இளநிலவு. அடிவழிஅன்னகண் - அடியினிடத்தையொத்த கண் என்க. வழியின் மிதித்த அடிச்சுவடுபோலும்; வட்டமாகிய கண் எனினுமாம். குருதிப்பெருபாட்டீரம் - இரத்தப்பெருக்காலுளதாகிய ஈரம். கொள் - குடைவேல். பகட்டிலை - பெரிய இலை. சிதாஅர் - கந்தைத்துணி. பிறங்கடை - வழித்தோன்றல். 631. ஆகுளி - சிறுபறை. பதலை - ஒருதலைமாக்கிணை. செல்லாமோ - போவேமல்லேமோ. எருவை - பருந்தின் பேதம்; கழுகுமாம். தடி - ஊன்தடி! நீத்து - கைவிட்டு (உண்டு வெறுத்து) 632. முனையின் - வெறுப்பின். அளவுபுகலந்து - நன்றாகக்கலந்து. விருந்து - புதிது. ஆற்றி - பசிதணித்து. சென்மோ - வருவாயாக. துணரியது - குலைகொண்டது. பகர்வு - கொடுத்தல். அரில் - பற்றை. முதுபாழ் - முதிய பாழ்நிலம். 633. யாங்கு அறிந்தான் - எப்பரிசறிந்தான். தாங்குதல் - தடுத்தல். காணாது - என்னை நேரே பாராது. வாணிகப் பரிசிலன் அல்லன் - ஊதியங் கருதும் பரிசிலன் அல்லன். பேணி - விரும்பி வழிபட்டு. துணையளவு - தகுதியளவு. 634. விடுத்தல் - விடைபெறல் (விடுவித்தல்). 635. மிடல் - வலி. வடவடுகர் - வடநாட்டிலுள்ள வடுக வீரர். கடைஇய - செலுத்திய. வடிம்பு - காலின்விளம்பு. சுதை - சுண்ணச்சாந்து. அரிக்கூடுமாக்கினை - அரித்தெழும் ஓசையையுடைய பெரிய தடாரிப்பறை. வஞ்சி - பகைவர் மேற் செலவு - கலம் - ஆபரணம். வெறுக்கை - செல்வம். ஒக்கல் - சுற்றம். பெற்றிகும் - பெற்றேம். 636. தானே - தலைவன்தானே. 637. உயிர்ப்ப இடம்பெறாது - இளைப்பாற இடம்பொறது. துறை போகிய - முடியப்போன. ஆயம் - திரள் (கூட்டம்). சிரறல் - கோபித்தல். செயிர்த்தல் - குற்றஞ்செய்தல். பெட்டவை - விரும்பியவை. 638. உள்ளி - நினைத்து. வரிசை - தகுதி. அது - வரிசை. பொதுநோக்கு - புலவர் யாரையும் ஒருதரமாக (சமமாக) நோக்கல். 639. புரவலை - பாதுகாப்பாய். புரவலர் - பாதுகாப்போர். கடிமரம் - காவல்மரம். தந்து - கொணர்ந்து. 640. கடும்பு - சுற்றம். குறியெதிர்ப்பை - ஒரு குறித்த அளவு வாங்கிப் பின்வாங்கிய அவ்வளவு எதிர் கொடுத்தல். (குறள். 221). 641. மனை - மனைவி. 642. அது - அவ்வச்சம். 643. நாள் - நட்சத்திரம் 644. கோள்மீன் - கிரகம். அவை வியாழன். சனி போல்வன. பொழுதன்றி - தனக்குரிய காலமன்றி. ஓர்த்தல் - செவிசாய்த்துக் கேட்டல். வாய்ப்புள் - சொல்நிமித்தம். ஓரி - நரி. கழுது - பேய். உடன் - ஒருங்கு. குழீஇய - கூடிய வாய். குரல் பற்றல் - குழறல். கவந்தம் - உடற்குறை போன்றதொரு களங்கம் போலும். 645. இன்னாங்கு - துன்பம். 646. ஆடு - மேடம். அழற்குட்டம் - கார்த்திகைநாள். முடப்பனை - அனுடநாள். வேர் - அடி. கயமாகியகுளம் - புனர்பூசம்; தனிநாண்மீன் என்றது - உத்திரத்தை. நிலைநாண்மீன் என்றது - மூலத்தை. தொன்நாண்மீன் என்றது - மிருகசீரிடத்தை. பாசி - கீழ்த்திசை. ஊசி - வடதிசை. அளக்கர்த்திணை - பூமி. பூமிக்கு விளக்காகத் தீப்பரக்க என்க. 647. முந்நீர் - கடல். குட்டம் - ஆழம். ஞாலம் - உலகம். வளி - காற்று. வறிது நிலைஇய காயம் - வடிவின்றி நிலைபெற்ற ஆகாயம். ஈரம் - அன்பு. கண்ணோட்டம் - இரக்கம். தெறல் - வெம்மை. திருவில் - இந்திரவில். நாஞ்சில் - கலப்பை. செம்மல் - தலைவ. வயவு - வேட்கைநோய். 648. மண் - மண்ணணு. ஏந்திய - உயர்ந்த. வளித்தலைஇய - காற்றோடு கூடிய போற்றார் - பகைவர். சூழ்ச்சி - விசாரிப்பு. தெறல் - அழித்தல். அளி - அருள். யாணர் - புதுவருவாய். வைப்பு - ஊர். சினைஇ - மாறுபட்டு. ஈரைம்பதின்மர் - நூற்றுவர். அடுக்கம் - மலைப்பக்கம்; பாறையுமாம். நவ்விப் பிணை - மான்பிணை போன்று நடுக்கின்றி நிலியர் என முடிக்க. நிலியர் - நிற்பாயாக. 649. முற்கூறியன - முற்கூறிய துறைகள். களவியல் களவொழுக்கம் உணர்த்தினமையால் களவியலென்னும் பெயர்த்தாயிற்று. களவாவது அன்பு, அருள், அறிவு, அழகு, குடிப்பிறப்பு முதலியவற்றால் ஒத்து விளங்குந் தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, உலகத்தாரறியாது மறைந்தொழுகுதல். ஐம்பெரும் பாதகங்களு ளொன்றாகப் பேசப்படுங் களவென்பது பிறர்க்குரிய பொருளை வஞ்சனையாற் கவர்ந்துகொள்ளுதலாகிய குற்றமாகும். இஃது அத்தன்மையதன்றி ஒத்த அன்புடைய கன்னியரை அவர்தம் இசைவறிந்து சுற்றத்தாரறியாது காதலால் உளங்கலந்து பழகும் பெருங்கேண்மை யாதலால் சிறப்புடைய அறமெனவே கொள்ளப்படும். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரும் தமது நெஞ்சக் கலப்பினைப் பிறரறியாதபடி உலகர் முன் முறைந் தொழுகினராகலின், கரந்தவுள்ளத்தராகிய அவ்விருவரது ஒழுகலாறு, களவென்ற சொல்லால் வழங்கப்படு வதாயிற்று. இக்களவினை மறைந்தவொழுக்கம், மறை, அருமறை யென்ற சொற்களால் வழங்குவர் ஆசிரியர். மேல் கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாயாக எழு திணையோதி அவற்றின் புறத்து நிகழும் திணைகளும் ஓதிப்போந் தார். அவ்வெழுதிணையினும் ஒருதலைவேட்கை யாகிய கைக்கிளையும் ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவணைந் திணைக் கண்ணும் புணர்ப்பும், பிரிதலும் இருத்தலும், இரங்கலும், ஊடலுமாகிய உரிப்பொருள், களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின் அவ்விருவகைக் கைக்கோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின்பின் கூறப்பட்டது என முன்னுள்ள இயல்களோடு இவ்வியலுக்குள்ள தொடர்பினை விளக்கினார் இளம்பூரணர். இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணையியலுட் கூறி, அதற்கினமாகிய பொருளும் அறனும் கூறும் புறத் திணையை அதன் புறத்து நிகழ்தலிற் புறத்திணையியலுட்கூறி, ஈண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணம் கூறுதலின், இஃது அகத்திணையியலோடு இயைபுடைத்தாயிற்று என்றார் நச்சினார்க்கினியர். இவ்வியற் சூத்திரங்களை 51-ஆக இளம்பூரணரும் 50-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். அன்பினைந்திணையாகிய இக் களவொழுக்கத்தினைக் காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கொடுதழாஅல், தோழியிற் கூட்டம் என நால்வகையாகப் பகுத்துரைப்பர். அன்புடையார் இருவர் முற்பிறப்பின் நல்வினையால் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் அன்பினால் உளமொத்தலாகிய நெஞ்சக் கலப்பே காமப் புணர்ச்சியாகும். இருவரது உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி நல்வினைப் பயனாகத் தன்னியல்பில் நிகழும் இவ்வுறவினை இயற்கைப் புணர்ச்சி, தெய்வப்புணர்ச்சியென்ற பெயர்களால் வழங்குவர் முன்னையோர். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைநாளும் அவ்விடத்திற் சென்று எதிர்ப்படுதல் இடந்தலைப் பாடாகும். தலைவியோடு தனக்குள்ள உறவினைத் தலைவன் தன் உயிர்தோழனாகிய பாங்கனுக்குச் சொல்லி, நீ எனக்குத் துணையாக வேண்டுமென வேண்ட, அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்ந்து வந்துணர்த்தியபின் சென்று கூடுதல் பாங்கற்கூட்ட மெனப்படும். இக்களவொழுக்கம் நீண்ட நாளைக்குத் தொடர்ந்து நிகழவேண்டுமென விரும்பிய தலைவன். தலைவிக்குச் சிறந்தாளாகிய தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகத் தலைவியைக் கூடல் தோழியிற் கூட்டமாகும். இவை நான்கும் இம்முறையே நிகழும். இனி, இம்முறை நிகழாது இடையீடுபட்டு வருதலும் உண்டு. தலைமகளை யெதிர்ப்பட்ட காலத்து அன்புடையா ரெல்லார்க்கும் இயற்கைப்புணர்ச்சி தடையின்றி நிகழு மென்பதற்கில்லை. தலைமகளை யாதானுமோரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன், அவள் காதற் குறிப்புணர்ந்து கூட்டத்திற்கு இடையீடு உண்டாயவழி அங்கே சென்ற வேட்கை தணியாது வந்து, நேற்றுக் கண்டாற்போல் போல இன்றுங் காணலாகுமோ என எண்ணி அங்கே மறுநாளுஞ் செல்லுதலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையால் அடர்ப்புண்டு அங்கே வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். அங்கே ஆயத்தாராலோ பிறராலோ இடையீடு பட்டவிடத்துத் தலைவன் தன் வருத்தத்தினைப் பாங்கனுக்கு உணர்த்தி, அவன் தலைமகள் நின்ற நிலையறிந்துவந்துகூற அங்கே சென்றும் கூடுவன். அவ் விடத்தும் இடையீடுபடின் தோழிவாயிலாக முயன்றெய்துவன். இனி ஒரு கூட்டமும் நிகழாது அங்குண்டாகிய வேட்கை இருவர்க்குந் தணியாது நின்று மணஞ்செய்த பின்னர்க் கூடுதலும் உரியன். இவ்வகையினால் இக்களவொழுக்கம் மூவகைப் படுமென்றார் இயம்பூரணர். எல்லாவுயிர்க்கும் உரிய இன்பவுணர்வும், அவ் வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும், அப்பொருளினை யீட்டுதற்குரிய வரம்பாகிய அறமும் எனச் சொல்லப்பட்டு அன்பினால் நிகழும் ஐந்திணைக்கண் நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்கால், மறையோரிடத்து ஓதப்பட்ட எண்வகை மணத்துள்ளும் துறையமை நல்யாழத் துணைமை யோராகிய கந்தருவரது ஒழுகலற்றினை யொக்கும் என்பர் ஆசிரியர். கந்தருவராவார் நல்ல யாழமைத்து இசை பாடுதலில் வல்லவரென்றும் அவர்தாம் எக்காலத்தும் ஆணும் பெண்ணுமாக இணைந்தே செல்லும் இயல்பினரென்றும் கூறுபவாதலின், அவர்களைத் துறையமை நல்யாழ்த் துணைமை யோர் என்றார் தொல்காப்பியனார். அவர்காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமை யால் மறையோர்தேஎத்து மணமுறைக்கும் தென்றமிழ்நாட்டு மணமுறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்க வுணர்த்தல் அவரது கடனாயிற்று. ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே யுண்டாகும் கூட்டுறவை ஒருதலைக் கேண்மை யாகிய கைக்கிளை. ஒத்த கேண்மையாகிய அன்பினைந்திணை ஒவ்வாக்கேண்மையாகிய பெருந்திணையென மூவகையாகப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவரும், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டுவகையாகப் பகுத்தல் வடநூல் மரபாகும் நாற்பத்தெட்டாண்டு பிரமசாரியங் காத்த இளைஞனுக்குப் பன்னிரண்டு வயதுடைய கன்னியை அணிகல னணிந்து கொடுப்பது பிரமம். மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறுக்காது கொடுப்பது பிரசாபத்தியம். தகுதியுடையானொருவனுக்குப் பொன்னினாற் பசுவும் எருதுஞ் செய்து அவற்றிடையே பெண்ணை நிறுத்தி அணிகலன் அணிந்து நீங்களும் இவைபோற் பொலிந்து வாழ்மின் என நீர்வார்த்துக் கொடுப்பது ஆரிடம். வேள்வி செய்த ஆசிரியனுக்கு வேள்வித் தீமுன் கன்னியைத் தக்கிணையாகக் கொடுப்பது தெய்வம். கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடினாற் போன்று ஒருவனும் ஒருத்தியும் தாமே யெதிர்ப்பட்டுக் கூடுவது கந்தருவம். கொல்லுமியல்புடைய எருதினை அடக்கியவன் இப்பெண்ணை மணத்தற்குரியன், வில்லேற்றினான் இவளை மணத்தற் குரியவன், இன்னதொரு பொருள் தந்தான் இவளை மணத்தற்குரியன் என இவ்வாறு சொல்லி, சொல்லியவண்ணஞ் செய்தாற்குப் பெண்ணைக் கொடுப்பது அசுரமெனப்படும். தன்னால் விரும்பப்பட்ட பெண்ணை, அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிதிற் கவர்ந்து செல்வது இராக்கதம் எனப்படும். மூத்தாள், துயின்றாள் களித்தாள் ஆகிய மகளிரைக் கூடுதல் பைசாசம் எனப்படும். மறையோர்க்குரிய நூலிற் சொல்லப் பட்ட இவ்வெட்டு மணங்களையும் முறையே அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள் வினைநிலை, இராக்கதம், பேய்நிலை என மொழிபெயர்த்து வழங்குவர் தமிழர். இவையெட்டும் வடமொழியாளர்க்கே யுரியன வென்பார் மறையோர்தேஎத்து மன்றல் எட்டு என்றார் தொல்காப்பியனார். எனவே இவ்வெண்வகை மணமுறைகளும் தமிழர்க்குரியன அல்ல என்பது பெறப்படும். மறையோர்க்குரியவாகச் சொல்லப்பட்ட எண்வகை மணத்தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும், தமிழர் கூறிய கைக்கிளைப்பாற்படுவன வென்றும், பிரமம், பிரசாபத்தயம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்திணையாயடங்குமென்றும், கந்தருவமென்ற ஒன்றும் ஐந்திணையின்பாற்படுமென்றும் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் வகுத்துரைத்துள்ளார்கள். அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம், மறையோர்தேஎத்து மன்றலெட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது இயல்பினை யுடையதெனவே, கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் புணர்வது இக்களவொழுக்கமாகுமெனக் கந்தருவத்திற்கும் களவொழுக் கத்திற்குமிடையே யமைந்த ஒற்றுமையினை நச்சினார்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார். ஒருவனும் ஒருத்தியுமாக எதிர்ப்பட்டார் இருவர், புனலோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தம் நாணமும் நிறையும் இழந்து மெய்யுறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்பே கந்தருவ மணமாகும். இங்ஙனம் கூடினோர் தம் வாழ்நாள் முழுதுங் கூடி வாழ்வரென்னும் நியதியில்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியாற் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற நிலையும் இக் கந்தருவத்திற்கு உண்டு. தமிழர் கூறும் களவொழுக்கமோ இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினால், தான் அவள் என்னும் வேற்றுமை யின்றி இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப் புணர்ச்சியே யாகும். இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரை யொருவர் இன்றியமையா தொழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலைபெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தபின் ஒருவரையொருவர் பிரிவின்றி யொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னுந் திண்மை, தமிழர் ஒழுகலாறாகிய கள வொழுக்கத்தின் முடிந்த பயனாகும். உலகியலில் உளவாகும் பலவகை இடையூறுகளால் ஒருவரை யொருவர் மணந்து கொள்ள இயலாமல் உள்ளப்புணர்ச்சி யளவே கூடி வாழ்ந்து பின்னர் இறந்த காதலரும் இத்தமிழகத்து இருந்தனர். மணிமேகலையிற் கூறப்படும் தருமதத்தன் விசாகை யென்னும் இருவரும் யாழோர் மணமாகிய கந்தருவ முறையிற் பொருந்தியவர்கள் எனத் தம்மை நோக்கி ஊரார் கூறிய பழிமொழியை விலக்கித் தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சியளவில் நின்று உயிர் துறந்த வரலாறு இங்கு நினைத்தற்குரியதாகும். கந்தருவ வழக்கில் மெய்யறு புணர்ச்சி முதற்கண் தோற்றுவது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாகுமளவும் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்றாது தம்மெதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு, என்றும் பிரியா நிலையில் நின்று கடவாது அன்பினாற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் வடநூல் மணமாகிய கந்தருவத்துக்குமுள்ள உயிர் நிலையாய வேறுபாடாகும். அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம் எனத் தொல்காப்பியனாரும் அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே எனப் பிறசான்றோரும் உள்ளப் புணர்ச்சி யொன்றையே களவுக்குரிய சிறப்பியல்பாக விரித்துரைத்துள்ளார்கள். ஆரிய மணமாகிய கந்தருவத்திற்கும் தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்திற்கும் உள்ள வேற்றுமையினையும் தமிழியல் வழக்கமெனச் சிறப்பித் துரைக்கப்படும் களவொழுக்கத்தின் தூய்மையினையும் ஆரிய அரசன் பிரகத்துனுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, கந்தருவத்திற்கும் களவிற்குமுள்ள வேற்றுமையினை இனிது விளக்குவதாகும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்தே கந்தருவர்க்குக் கற்பின்றி யமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என இவ்விரண்டற்கு முள்ள வேற்றுமையினை விளக்கினார் நச்சினார்க்கினியர். மகளிரை அஃறிணைப் பொருளாகிய உடைமைபோலக் கருதிப் பிறர்பாற் கேட்டுப் பெறுதலும் கொடராயின் சுற்றத் தார்க்குத் தெரிந்தோ தெரியாமலோ வன்மையினாற் கவர்ந்து சேறலுமாகிய செயல் முறைகளை மணமெனக் கூறும் வழக்கம் தமிழர்க்கில்லை. ஆகவே இத்தகைய பொருந்தா மண முறை களுக்கு வடநூல்களிற்போலத் தமிழ் நூல்களில் இலக்கியங் காணுதலரிது. அன்பொடு புணர்ந்த ஐந்திணை யெனவே அதன் முன்னும்பின்னுங் கூறப்பட்ட ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யிலும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலும் இருவர்பாலும் ஒத்த அன்பினைக் காணுதலரிதென்பது பெறப்படும். இத்தகைய பொருத்தமில்லாத கூட்டுறவுகள் எந்நாட்டிலும் எக்காலத்தும் காணப்படுவனவேயாம். பொருந்தாத செயல்களைக் குறிப்பாகச் சுட்டி விலக்கியும் பொருத்தமுடைய நற்செயல்களை வெளிப்படையாக எடுத்துரைத்து விளக்கியும் மக்களை நல்வழிப்படுத்துவதே சிறப்புடைய நூலின் மரபாகும். இம்மரபினை யுளத்துட் கொண்டு கைக்கிளை பெருந்திணை களைக் குறிப்பாகவும் அன்பினைந்திணையை விரிவாகவும் கூறுவர் ஆசிரியர். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் மனையறத்தின பயனாக அவ்விருரையும் பிறப்புத்தோறும் சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதுமாகிய இருவகை ஊழினும், இருவருள்ளமும் என்காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லூழின் ஆணையால், ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காண்பர். அன்பு முதலியவற்றால் தலைவன் மிக்கவனாயினுங் குற்றமில்லை. இச்செய்தி, ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே என வரும் களவியற் சூத்திரத்தாலுணரப்படும். இங்ஙனம் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற் காட்சிக்கு நல்லூழின் ஆணையே காரணமென்பார் உயர்ந்த பால தாணையின் என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது அவ்விருவரும் பண்டைப் பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பென்பார் ஒன்றியுயர்ந்த பாலதாணை யென்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமையாதவராகக்காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென்பார், ஒத்தகிழவனுங் கிழத்தியுங்காண்ப வென்றும் கூறினார் தொல்காப்பியனார். தலைவனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன: பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும். இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டஅளவே வேட்கையைத்தூண்டி நிற்றற்கும் அவ்விருவரும் பண்டைப் பிறப்பிற் பயிலியது கெழீஇய நட்பன்றிப் பிறிது காரணமில்லையென்பதே தொல்லாசிரியர் கருத்தாகும். ஓத்த பருவத்தார் ஒருவரை யொருவர் கண்டுழி யெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமை யின் ஒன்றியுயர்ந்த பாலதாணையிற் காண்ப என்றார் ஆசிரியர். ஈண்டுக்காணுதல் என்றது தனக்குச் சிறந்தாராகக் கருதலை. தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றியவழி இவள் மக்களுள்ளாள்கொல்லோ தெய்வமோ எனத் தலைவ னுள்ளத்தே ஐயம் தோன்றும் ஒப்புமையிற் குறைவுடை யளாயின் அவ்விழிபே அவளை இன்னாளெனத் தெளிவிக்கு மாதலின், அந்நிலையில், ஐயந்தோன்றுதற்கிடமில்லை. தலைவி தன்னினும் உயர்ந்த தலைவனை நோக்கி இவன் தெய்வமோ மகனோ என ஐயுற்றால் அவளுள்ளத்தில் அச்சந்தோன்றுமே யன்றிக் காமவுணர்வு தோன்றாது. ஆகவே இங்ஙனம் ஐயப்படுவான் தலைமகனே யென்பர். தலைமகளை நோக்கி இவள் தெய்வமகளோ எனத் தலைவன் ஐயுற்ற காலத்து, அவள் கூந்தலிலணிந்த மாலையிடத்தே மொய்த்த வண்டுகளும் அவளணிந்த அணிகலன்களும் நறுமலரும் அவள் பால் தோன்றும் தடுமாற்றமும் கண்ணிமைப்பும் அச்சமும் அத்தன்மைப் பிறவும் ஐயத்தினைக் களைதற்குரிய கருவியாகும். இங்கெடுத்துக் காட்டிய அடையாளங்களைக் கொண்டு தலைமகளை இன்னாளெனத் துணிந்த தலைமகன், அவளது கருத்தறியாது அவளை யணுகுவானாயின், அச்செயல் பொருந்தா வொழுக்கமாகிய பெருந்திணையாய் முடியும் ஒத்த அன்பினால் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உளக் கருத்தைத் தலைமகன் உணர்ந்து கொள்ளுதலே முதற்கண் வேண்டப்படுவதாகும். அங்கே ஒருவரோடொருவர் உரை யாடுதலும் முறையன்றாம். ஒருவர் வேட்கைபோல மற்றவர்க்கும் வேட்கையுளதாகுங் கொல்லோ என ஐயுற்று நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு அவ்விருவர் கண்களும் வேட்கையினால் ஒருவர் ஒருவர்க்குரைக்குங் காமக்குறிப்புரையாம், கண்ட அளவிலேயே வேட்கைதோன்றி ஒருவரது உள்ளக் குறிப்பினை மற்றவர் ஏற்றுக்கொண்ட நிலையிலேதான் கண்ணினால் வரும் இக்குறிப்பு நிகழும். தன்னைத்தான் கொண்டொழுகும் பெருமையும், சென்ற விடங்களில் மனத்தைச் செல்லவிடாது தீமையின் நீக்கி நன்றின் பாலுய்க்கும் நல்லறிவும் ஆடவரது சிறப்பியல்பாகும். தனது நிறை காவலுக்கு இடையூறு நேருமோ வென்னும் அச்சமும், பெண்ணியல்பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழவிடாமையாகிய மடனும் மகளிரது சிறப்பியல்பாகும். இவ்விரு திறத்தாரும் தம்மைக் காவாது வேட்கை மீதூர்ந்த நிலையிற்புன லோடும் வழிப் புற்சாய்ந்தாற் போலத் தமக்குரிய இக்குணங்களை நெகிழவிடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற்காட்சிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்பாடது உள்ளப் புணர்ச்சி யளவே யொழுகி மணந்து கொண்ட பின்னரே கூடுதல் முறையாகும். ஒருவரையொருவர் பெறல் வேண்டுமென்னும் உள்ள நிகழ்ச்சியும் இடைவிடாது நினைத்தலும் உண்ணாமையாலுள தாம் உடல் மெலிவும், தனக்கு ஆக்கமாவன இவையெனத் தனக் குள்ளே சொல்லிக் கொள்ளுதலும், நாணத்தின் எல்லை கடத்த லும், காண்பனவெல்லாம் அன்புடையார் உருவாகவே தோற்று தலும், தம்மை மறத்தலும், மன மயக்கமுறுதலும், உயிர் நீங்கி னாற்போன்று உயிர்ப் படங்குதலும் ஆகிய இவை யொன்பதும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பாகிய காமவுணர்வினைச் சிறப்பிப் பனவாதலின், இவற்றைக் களவொழுக்கத்திற்குச் சிறந்தனவாகச் கூறுவர் முன்னையோர். வேட்கை முதல் சாக்காடீறாக இங்குச் சொல்லப்பட்டவை நிகழ்ந்த பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழுமென்பர். தனியிடத்தே தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன், தனது பெருமையும் உரனும் நீங்க வேட்கை மீதூர்தலால் மெய்யுறு புணர்ச்சியை விரும்பினானாயினும் தலைமகள்பால் தோன்றும் அச்சமும் நாணும் மடனும் அதற்குத் தடையாய் நிற்பனவாம். அத்தடை நீங்குதற் பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில கூறுதலும், தான் சொல்லும் சொல்லின்வழி அவள் நிற்கும் படி சில கூறுதலும், அவளது, நலத்தினை யெடுத்துரைத்தலும், அது கேட்ட தலைமகள்பால் முறுவற் குறிப்புத் தோன்றி நிற்றலையறிதலும், தன் அகத்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன்னுள்ளத்து வேட்கை மீதூர்தலை நிலைப்படச் சொல்லுதலும், தலைமகள் உள்ளப் பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். பெருமையும் உரனுமுடைய தலைவன், காதல் வெள்ளம் புரண்டோடத் தனக்குச் சிறந்தாளெனத் தெளிந்த தலைவியின் மெய்யைத் தீண்டிப் பழகுதலும், விளையாட்டின்கண் அவள் நலத்தைப் பாராட்டி யுரைத்தலும், அவள் நின்ற இடத்தை நெருங்கி நின்று அன்பொடு தழீஇய சொற்களைச் சொல்லுதலும், தலைவனது ஊற்றுணர்வு என்றும் பயிலாத தன் மெல்லியல் மெய்யிற் பட நாணமுடையளாகிய தலைவி, அங்குள்ள கொம்பும் கொடியுமாகியவற்றைத் தனக்குச் சார்பாகக் கொண்டு மறைந்து ஒல்கி நிற்க, அதுகண்ட தலைவன், இவ்வூற்றின்பத்திற்கு இடையூறாய் நின் மனத்து நிகழ்ந்தவை யாவையென வினவி நிற்றலும், அவளை மெய்யுறுதற்கியலும் காலம் வாய்க்காமையை யெண்ணி வருந்துதலும், பின்னர் அவளை மெய்யுறுதலும், மேற்கூறியவற்றுடன் இன்பந் திளைத்தலையும் விரைவாகப் பெற்றவிடத்து, நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குத் தெளிவுரை பகர்தலும் ஆகிய எட்டுவகைக் கூற்றும், முன்கூட்டம் பெற்ற இடத்தினையே மீண்டுந் தலைப்பட்டுக் கூடி மகிழ்தலும், தலைமகளைப் பிரிந்த வழிக் கலக்கமுறுதலும், என்றும் நிலை நிற்பதாகிய இல்லறத்தை மேற்கொள்ள நினைந்து மேல் நிகழ்வனவற்றை யெடுத்துரைக்கு மிடத்தும் தன்பால் சோர்வு மிகுதியாலும் காதல் மிகுதியாலும் நேர்வுற்ற பழிபாவங்களை யெடுத்துக்காட்டி இடித்துரைக்கும் உயிர்த் தோழனாகிய பாங்கன் தனது களவொழுக்கத்தையேற்று உடன்பட்டவிடத்தும் தலைமகளால் விரும்பப்பட்ட உயிர்த்தோழியை வாயிலாகப் பெற்று அவளை இரந்து பின்னின்று அவள் கூட்டக் கூடுவேன் எனக் கருதி அவ்விரத்தலை மேற்கொள்ளுமிடத்தும் ஊரும் பேரும் தான் இழந்தன பிறவும் ஆகியவற்றை வினவு முகத்தால் தன் மனக் கருத்துப் புலனாகத் தோழியைக் குறையிரந்து நிற்கும் பகுதியும், தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியைக் குறித்ததாக விருந்ததென்று அவள்மேல் சேர்த்தெண்ணும் நிலையிற் சில கூறலும், பலகாலுஞ் சென்று இரத்தலும் மற்றையவழியும் தலைவன் வருந்திக் கூறுகின்ற சொல்லினைத் தலைவியொடு சார்த்திக் கூறுதலின் முன்னுறு புணர்ச்சி முறையேயடைக வெனவும் தலைவி பேதைத் தன்மையள் எனவும் இவ்வாறு ஒழுகுதலாற் கேடுளதாம் எனவும் இவ்வொழுக்கம் நின் பெருமைக்கு ஏலாது எனவும் கூறித் தோழி தலைவனை அவ்விடத்தினின்றும் அஞ்சி நீக்குதலாலுளதாய வருத்த நிலைமையும் நோக்கி மடலேறுவேன் எனக் கூறுதலும் ஆகிய கூற்றுக்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். தலைமகளது இளமைப் பண்பினைத் தோழி எடுத்துக் கூறித் தலைவன் அவ்விடத்திருந்து பெயர்த்த வழியும், வருத்தத்ததினால் மெலிகின்றமை கூறியவிடத்தும், தலைமகன் குறையை மறுக்குந் தோழி அன்புதோன்ற நகைத்த நிலையிலும், அவளது உடம்பாட்டினைப்பெற்று மகிழுமிடத்தும், தான் செல்லும் வழியிடை இடையூறுண்டாயவிடத்தும் எனத் தோழியிற் கூட்டத்திடத்தே தலைவன் கூற்று நிகழ்தல் இயல்பாகும். அன்புற்றாரிருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தமாவன பன்னிரண்டாம். அவையாவன. காட்சி, ஐயம், துணிவு என முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடீறாகச் சொல்லப்பட்ட ஒன்பதுமாகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டத்திற்கு நிமித்தமாவனவாம். இவற்றுள் முற்கூறிய காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும் அன்பினைந் திணைக்குரிய தாதலேயன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குரிய குறிப்புக்களாகவும் அமையும். நோக்குவ வெல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க்கூறிய நான்கு நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும் வழி ஐந்திணை யாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் நிகழும்வழிப் பெருந்திணைக்குரிய பொருந்தா நிலைகளாகவும் கருதப் பெறும். முதல், கரு, உரியென்னுந் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறியினையொத்த காமக்கூட்டம் வேட்கை, ஒருதலை யுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல் என்னும் ஐந்து நிலைகளையுந் தனக்குரிய சிறப்பு நிலைக்களனாகக் கொள்ளும் என்பர் ஆசிரியர். தோழியின் உடம்பாடுபெற்றுத் தலைமகளைக் கூடிய தலைமகன் அவளை மணந்துகொள்ளும்வரையும் கூறும் பொருள்களைத் தொகுத்துக் கூறுவது இருவகைக் குறிபிழைப்பாகியவிடத்தும் எனத் தொடங்கும் இவ்வியற் சூத்திரமாகும். இதனைத் தலைவி கூற்றாகக்கொண்டு பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தலைவியின்பால் நிலைபெற்றுள்ள நாணமும் மடனும் பெண்மைக்கு அங்க மாதலால் காமவொழுக்கத்தின்கண் குறிப்பினாலும் இடத்தினலு மல்லது அவள்பால் வேட்கை புலப்படுதலில்லை. வேட்கை யுரையாத கண்கள் யாண்டுமின்மையால் வேட்கை காரணமாக அச்சம் நீங்கினாலும் நாணமும் மடனுமாகிய இரண்டும் தலைவியிடத்து என்றும் நீங்காதுளவாம். தலைவன் புணர்ச்சி கருதிக் கூறுஞ்சொல்லின் எதிரே இசைவில்லா தாரைப்போன்று கூறுதலே தலைவிக்கு இயல்பாகும். இன்னின்ன இடங்களில் தலைவி உரையாடுதற்குரியள் என்பதை இவ்வியல் 21-ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் இன்ன நாளில் நின்னை மணந்துகொள்வேன் எனச் சொல்லிவிட்டுத் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது நீங்கிய நிலையில், தன்னைக் கண்டு தோழி ஐயுறுதற்கேற்ற குறிப்பு தன்கண் தோன்றாதபடி மறைத்தொழுகிய தலைவி, தலைவன் வருமளவும் ஆற்றாது வருத்த முற்ற நிலையிலும், களவொழுக்கத்தில் வந்தொழுகுந் தலைவன் செவிலித்தாய் முதலியோரை எதிர்ப்பட்ட பொழுதும், இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்குச் சொல்லுக என அவன் தனக்குச் சொல்லிய நிலையிலும் தானே தோழிக்குக் கூறுதலுண்டு. உயிரைக்காட்டிலும் நாணம் சிறந்தது; அத்தகைய நாணத்தினுங் கற்புச் சிறப்புடையது என்னும் முன்னோர் மொழியை யுளத்துட்கொண்டு, தலைவன் உள்ளவிடத்தை யடைய நினைத்தலும் இவ்வாறு குற்றந்தீர்ந்த நற்சொற்களைக் கூறுதலுமாகிய இவை, தலைவி தானேகூறுங் கூற்றினுள் அமைதற்குரிய பொருள்வகையென்பர் ஆசிரியர். களவொழுக்கத்தின்கண் தலைவிக்கு இன்றியமையாத வளாகிய தோழி உரையாடுதற்குரிய பொருள்வகை யெல்லா வற்றையுந் தொகுத்துக் கூறுவது, நாற்றமும் தோற்றமும் (களவு-24) எனத் தொடங்குஞ் சூத்திரமாகும். இதன்கண் தோழி கூறுதற்குரியனவாக முப்பத்திரண்டு பொருண்மைகள் விரித் துரைக்கப்பெற்றுள்ளன. இங்கே தோழி கூறுவனவாக ஆசிரியர் எடுத்தோதிப் பொருட்பகுதிகளை உற்றுநோக்குங்கால், மக்கள் மன நிலையை அவர்தம் தோற்றம் ஒழுக்கமுதலியவற்றால் உய்த் துணரும் மனப்பயிற்சியும் ஒத்த அன்பினராகிய தலைவனையும் தலைவியையும் உலகியல் கூறித் தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் நல்லறிவும், உள்ளக் கருத்தறிதலருமையும், தன் அறிவின் திறத்தைப் பிறரறியாது ஒழுகும் அடக்கமும், மறைபுலப்படாமல் நிறுத்தும் நல்லுள்ளமும், மாசற்ற அறவுணர்ச்சியும், செய்யத் தகுவன அறிந்து கூறலும் ஆகிய பெண்மைக்குணங்கள் முழுவதும் தோழியினிடத்து ஒருங்கமைத்திருத்தல் புலனாம். இவ்வாறு பொறுத்தற்கரிய பெருங் குணங்கள் யாவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவளே தோழியெனப் பாராட்டுதற்குரியவ ளென்பார், தாங்கருஞ்சிறப்பின் தோழி என்றார் தொல்காப்பியனார். தலைவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகிய நிலையில் ஊரார் அலர் கூறிய காலத்தும், தலைவியின் வேட்கை அளவிறந்த நிலையிலும், அவளது வனப்புமிக்குத் தோன்றிய காலத்தும், தலைவனொடு தலைவியை ஒருசேரக் கண்ட காலத்தும் தலைவியின் மெலிவுக்குரிய காரணங்களைக் கட்டுவைப்பித்தும் கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது நோய்தீர வேலனையழைத்து வெறியாடிய பொழுதும், வெறியாடுதலைத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும், காதல் மிகுதியால் தலைவனை நினைந்து தலைவி கனவில் அரற்றிய பொழுதும் செவிலித்தாய் தோழியை வினவுதலுண்டு. இன்னவாறு நிகழ்ந்ததெனத் தோழி கூறியவழி இவ்விருவரது ஒழுகலாற்றினால் குடிக்குப் பழி விளைதலாகாதெனத் தெய்வத்தை வேண்டுதலும் தலைவி தலைவனுடன் போயினா ளென்றறிந்த நிலையில் தோழியொடு ஆராய்ந்து அவ்விருவரை யும் மனையறத்தின்கண் நிறுத்தற்கு முயலுதலும் அவள் செயல். தலைவன் மணந்துகொள்ளாது தலைமகளைப் பிரிந்த காலத்து அவள் கற்புவழிப்பட்டு மனைக்கண் அமைதியாக அடங்கி யிருக்கும் நிலையினை யெண்ணிய நிலையிலும் தலைவனது குடிப்பிறப்பு தம் குடிப்பிறப்பினோடு ஒக்கும் என ஆராய்தற் கண்ணும் இவைபோன்ற பிறவிடங்களிலும் செவிலி உரை யாடுதற்குரியள். செவிலியுணர்வுடன் ஒத்த கருத்துடையளாயின் நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்ட கூற்றுக்கள் உரியனவாம். தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற்றாயும், குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறிவரைப் பணிந்து நின்று இவளது மெலிவு எதனாலாயிற்று என வினவி நிற்பர். அது கேட்ட பெரியோர், முக்கால நிகழ்ச்சி யினையும் தாம் ஒருங்குணரும் நுண்ணுணர்வுடை யோராதலின், தலைவியொடு தலைவனுக்குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும் நிகழ்ந்ததை மறைத்தல் வாய்மைக்கு மாறாதலானும் நும்மகள் தலைமகன் அறியா அறிவினையுடையாள் என ஐயக் கிளவியால் மறுமொழி கூறுவர். எதிர்காலத்தில் தன்னை மணத்தற்குரிய கணவனாலும் அறியப்படாத பேரறிவினை யுடையாள் நும்மகள் என ஒரு பொருளும், தன் கணவனாகி யொழுகும் தலைவனாலும் அறியப்படாத அறிவுரிமைபூண்டு மயங்குகின்றாள். இவள் தன்னறிவிற் சிறிதும் மயக்கமிலள், அவன் பொருட்டு மயங்குகின்றாள் என மற்றொரு பொருளும் தரும் நிலையில் இங்ஙனம் ஐயுறக்கூறிய அறிவரது சொற்பொருளை யுய்த்துணர்ந்து தலைவன் தலைவியாகிய இருவரிடையே யமைந்த தொடர்பினைச் செவிலியும் நற்றாயும் அறிந்துகொள்ளுதலும் உண்டு. வேறு வேறாகத் தம்முள் காதல் செய்தொழுகும் அறிவில்லாதாரைப்போலத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்பு சொல்லுஞ் சொல், தலைவியிடத்து நிகழ்த லில்லை. அங்ஙனம் சொல் நிகழாதொழியினும் தலைவியது வேட்கை புதுக்கலத்துப் பெய்தநீர் புறத்தே பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினை யுடைத்தென்று கூறுவர். இயற்கைப் புணர்ச்சியாகிய களவு, கூட்டிவைப்பார் பிறரின்றித் தனிமையிற் பொலிவது. ஆதலின் தலைவன் தலைவி யிருவரும் தத்தமது உளக்கருத்தைப் புலப்படுத்துந் தூதுவராகத் தாமே நின்று கூடுதலும் உண்டு அந்நிலை மெய்ப்பாட்டியலுள் புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடு பன்னிரண்டானும் நன்கறியப்படும். எனவே தலைவன் பாங்கனது உதவிபெற்றுக் கூடுதலும் தோழியின் உடன்பாடு பெற்றுக் கூடுதலுமாகிய இவை யாவர் மாட்டும் நிகழவேண்டுமென்னும் வரையறை யில்லை யென்பது பெறப்படும். இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவனது சொல்லின் எல்லையைக் கடத்தல் தலைமகளுக்கு அறனன்றாகலானும் தான் செல்லுதற்குரிய இடத்தைத் தானே யுணர்வளாதலானும் தாங்கள் மீண்டும் கண்டு அளவளாவுதற்குரிய ஓரிடத்தை யறிவிக்கும் பொறுப்பு தலைமகளைச் சார்ந்ததாகும். தோழியால் அறிவிக்கப்பட்டுப் பொருந்துமிடமும் உண்டு. களவிற்புணர்ச்சி தோழியின் துணையின்றி மூன்று நாளைக்குமேல் நிகழ்தலில்லை. அம்மூன்று நாளைக்குள்ளும் தோழியின்துணை விலக்கப்படுதலில்லையென்பர் ஆசிரியர். எனவே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்றுநாளெல்லையளவும் தலைவன் தோழியின் உதவியின்றி அவளறியாது தலைமகளைக்கண்டு அளவளாவுதல் கூடுமென்பதும், அம்மூன்று நாளைக்கு மேலாயின் தோழியின் உதவியின்றித் தலைவி எதிர்ப்படுதற்கு அரியளென்பதும், அம்மூன்று நாளைக்குள்ளேயே தோழியின் உடன்பாட்டைப் பெறுதலுமுண்டென்பதும் ஆசிரியர் கருத்தாதல் உய்த்துணரப் படும். பலவகையானும் தலைமகள்பாலுளவாம் நன்மைகளை நாடுவார் பக்கத்தினை ஆராயும் ஆராய்ச்சி தலைவனுக்கு வேண்டு மாதலானும், தாங்கள் மேற்கொண்ட அன்பின் வழிப்பட்ட களவொழுக்கம் ஒன்றிய அன்புடைய துணையாகிய தோழியால் புறத்தாரறியாது நிலைபெற்று நிகழ்தல் வேண்டுமாதலானும், தனக்குத் துணையாவாள் இன்னாளெனத் தலைவனுக்குச் சுட்டிக் கூறுஞ் சொல் தலைவிக்குரியதாகும் என்பர் ஆசிரியர். களவொழுக்கத்தில் நணுகியாராய்ந்தறிதற்கரிய மறைப் பொருளெல்லாவற்றையும் கேட்டற்கும் சொல்லுதற்கும் உரிய தாயாகச் சிறப்பித்துரைக்கப்படுபவள் செவிலியேயாம். தனக்கு இன்றியமையாத உயிர்த்தோழியாகத் தலைவியால் விரும்பப் பட்ட தோழியென்பாள் மேற்கூறிய சிறப்புடைய செவிலியின் மகளாவாள். தலைவியின் களவொழுக்கம்பற்றித் தன் மனத்துள்ளே ஆராய்தலும் தலைவியின் சூழ்ச்சிக்குத் தான் உசாத்துணையாகி நிற்றலுமாகிய பெருங்கேண்மையுடையாள் இத் தோழியே யென்பர். தலைவன் தன்பால்வந்து குறையுற்று நிற்க அவனுள்ளக் கருத்தினை யுணர்தலும், தலைவியின் உள்ளக் குறிப்பினைக் கண்டுணர்தலும், தலைவியும் தானும் ஒருங்கிருந்த நிலையில் தலைவன்வர அந்நிலையில் அவ்விருவரது உள்ளக்கருத்தினை யுணர்தலும் எனத் தோழி, தன் கருத்துடன் அவ்விருவரது கருத்தினையும் வைத்து ஒன்றுபடுத்துணரும் உணர்ச்சி மூவகைப்படும். இவ்வாறு மூவர் மதியினையும் ஒன்றுபடுத் துணர்தலின் இது மதியுடம்படுத்தலென்று பெயராயிற்று. இங்ஙனம் தலைவன் தலைவியென்னும் இருவர்பாலும் ஒத்த அன்புடைமையுணர்ந்தபினல்லது தலைவன் தன்னை இரந்து பின்னிற்கும் முயற்சிக்குத் தோழி இடந்தரமாட்டாள். தன்னை இரந்து பின்னிற்குந் தலைவனது நினைவின்கட்படும் மாசற்ற அன்பின் திறத்தையுணர்ந்து அவனைத் தலைவியோடு கூட்டுவித்தலும் அத்தோழியின் செயலேயாம். தலைவன் தலைவி யிருவரும் பிறரறியாது பகலிலும் இரவிலும் அளவளாவுதற்கெனக் குறிக்கப்பட்ட இடமே குறியென வழங்கப்படும். மனையுனுட்புகாது அங்குள்ளோர் கூறுஞ்சொற்கள் கேட்கும் அணிமைக்கண் அமைவது இரவுக்குறியாகும். ஊரின் மதிற்புறமாய்த் தலைமகள் அறிந்து சேர்தற்குத் தகுதியுடையதாகிய இடம் பகற்குறியாகும். தலைவன் செய்த அடையாளமென மயங்தற்குரியன இயற்கையாக நிகழின் குறியல்லாதவற்றைக் குறியெனக் கொள்ளுதலும் தலைமகளுக் குரிய இயல்பாகும். கற்புடை மகளிர்க்குரிய சிறப்பிற் குன்றாவாறு மேற்கூறிய இருவகைக் குறியிடங்களிலும் பிறரறியாதபடி தலைவனொடுகூடி யொழுகும் ஒழுக்கமும் தலைமகளுக்கு உண்டு. இங்ஙனம் களவொழுக்கத்தில் வந்தொழுகுதல் காரணமாக என்றும் தன் தோழர்களுடன் கலந்துகொள்ளுதற் குரிய விளையாட்டினையும் திருவிழாச் செயல்முறைகளையும் விலகியொழுகும் ஒழுக்கம் தலைவனுக்கில்லை. யாவராலும் விரும்பி நோக்கப்படுந் தலைவன் களவொழுக்கம் காரணமாக இவற்றை விலகியொழுகு வானாயின் அவன் வாரமைபற்றி அவனைப் பலரும் வினவ, அது காரணமாக அவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாமாதலின், இவற்றை நீங்கியொழுகுதல் கூடாதென விலக்குவர் ஆசிரியர். இவ்வாறே வழியருமையும் நெஞ்சழிதலும் அஞ்சுதலும் இடையூறும் ஆகிய இவை தலைவன்பால் நிகழ்தல்கூடாதென்பர். தலைவியின் தந்தையும் தமையன்மாரும் இக்களவொழுக் கத்தைக் குறிப்பினால் உணர்வர். நற்றாய், செவிலியுணரும் முறைமையால் அறிந்துகொள்வாள். இரவினும் பகலினும் அவ்வழி வந்து செல்லுந் தலைமகனையறிந்து அவனது வருகை காரணமாக மகளிர் சிலரும் பலரும் தம்முகக் குறிப்பினாற் புலப்படுத்தும் அம்பலும், இன்னானோடு இன்னாளிடையது நட்பு எனச் சொல்லால் விரித்துரைப்பதாய அலரும் தோன்றிய பின்னரல்லது இம்மறை வெளிப்படாதாதலின், இக்களவு வெளிப்படுதற்குத் தலைவனே காரணமாவன், களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவியை மணந்துகொள்ளுதலும் அது வெளிப்படுதற்கு முன்னரே மணம் செய்துகொள்ளுதலும் என மணந்துகொள்ளும் முறை இருதிறப்படும். களவு வெளிப்பாடே கற்பியல் வாழ்க்கையாகக் கருதப் படுமாயினும் உலகத்தாரறியத் தலைவியை மணந்துகொள்ளாத நிலையில் ஓதல், பகை, தூது என்பன காரணமாகத் தலைவன் நெட்டிடைப் பிரிந்து சேறல் கூடாதென்பர் ஆசிரியர். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 257-273 மூன்றாவது களவியல் (களவொழுக்கம் இவ்வியல்பினதெனல்) 92. இன்பமும் பொருளு மறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட் டுறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே. இவ் வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுட் களவு உணர்த்தினமையிற் களவியலென்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்தென்று இருமுது குரவாற் 1கொடையெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் 2கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை 3மறையிற் கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை 4மறைநூல் என்றாற்போலக் கொள்க. களவெனப் படுவ தியாதென வினவின் வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தன் முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு தனையவிழ் தண்டார்க் காம னன்னோன் விளையாட் டிடமென வேறுமலைச் சாரன் மானினங் குருவியொடு கடிந்துவிளை யாடு மாயமுந் தோழியு மருவிநன் கறியா 5மாயப் புணர்ச்சி யென்மனார் புலவர் இக்களவைக் காமப்புணர்ச்சியும் (தொல். பொ.498) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்திற் கூறிய 6நான்கு வகையானும் மேற்கூறியமாறு உணர்க. இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணை யியலுட் கூறி அதற்கினமாகிய பொருளும் அறங் கூறும் புறத்திணையை, அதன்புறத்து நிகழ்தலிற், புறத்திணையியலுட் கூறி யீண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணங் கூறுதலின், இஃது அகத்திணையியலோடு இயைபுடைத்தாயிற்று. வழக்கு... நாடி என்றலின் இஃது உலகியலெனப்படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின். இச்சூத்திரங் களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப் பொருள் பலவற்றுள்ளும் இன்பம்பற்றித் தோன்றுமெனவும் அஃது இன்னதா மெனவுங் கூறுகின்றது. (இ - ள்): இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு - இன்பமும் பொருளும் அறனுமென்று முற்கூறிய மூவகைப் பொருள்களுள்; அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் - ஒருவனோடு ஒருத்தி யிடைத் தோன்றிய அன்பொடு கூடிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தல் முதலிய ஐவகை ஒழுக்கத்தி னுள்; காமக் கூட்டங் காணுங்காலை - புணர்தலும், புணர்தனி மித்தமு மெனப்பட்ட காமப்புணர்ச்சியை ஆராயுங் காலத்து; மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள் - வேதம் ஓரிடத்துக் கூறிய மண மட்டனுள்; துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு - துறை அமைந்த நல் 7யாழினை யுடைய பிரிவின்மை யோரது தன்மை என்றவாறு. அன்பாவது, 8அடுமரந் துஞ்சுதோ ளாடவரு மாய்ந்த படுமணிப் பைம்பூ ணவருந் - தடுமாறிக் கண்ணெதிர்நோக் கொத்தவன் காரிகையிற் கைகலந் துண்ணெகிழச் சேர்வதா மன்பு. மன்றல் எட்டாவன: பிரமம், பிராசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. அவற்றுட் பிரமமாவது: ஒத்த 9கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது. கயலே ரமருண்கண் கன்னிப்பூப் பெய்தி யயல்பே ரணிகலன்கள் சேர்த்தி - யியலி னிரலொத்த வந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென்னும் பெயர்த்து. பிராசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத் தார் கொடுத்த 10பரிசத்து இரட்டி தம்மகட்கு ஈந்து கொடுப்பது. அரிமத ருண்க ணாயிழை யெய்துதற் குரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி 11திருவின் றந்தை திண்ணிதிற் சேர்த்தி யரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரித லில்லாப் பிராசா பத்தியம். ஆரிடமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற்குளம்பினவாகச் செய்து 12அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது: தனக்கொத்த வொண்பொரு டன்மகளைச் சேர்த்தி மனைக்கொத்த மாண்புடையாற் பேணி - யினக்கொத்த வீரிடத் தாவை நிறீஇயிடை யீவதே யாரிடத்தார் கண்டமண மாம் தெய்வாமது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் 13ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித் தீமுன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது: நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த வேள்வி விளங்கழன் முன்னிறீஇக் - கேள்வியாற் கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே தெய்வ மணத்தார் திறம். ஆசுரமாவது: கொல்லேறுகோடல், திரிபன்றியெய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல். முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் தகைநலங் கருதுந் தருக்கினி ருளரெனி 14 னிவையிவை செய்தாற் கெளியண்மற் றிவளெனத் தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித் தன்னவை யரற்றிய வளவையிற் றயங்க றொன்னிலை யசுரந் துணிந்த வாறே. இராக்கதமாவது: தலைமக டன்னினுந் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது: மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண் டாள்வதே யென்ப - வலிதிற் 15பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ ளிராக்கதத்தார் மன்ற லியல்பு. பைசாசமாவது: மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும், இழிந்தோளை மணஞ்செய்தலும், ஆடைமாறுத லும், பிறவுமாம்: 16எச்சார்க் கெளிய ரியைந்த காவலர் பொச்சாப் பெய்திய பொழுதுகொ ளமையத்து மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பி னுசாவார்க் குதவாக் கேண்மை பிசாசர் பேணிய பெருமைசா லியல்பே. 17இடைமயக்கஞ் செய்யா வியல்பினி னீங்கி யுடைமயக்கி யுட்கறுத்த லென்ப - வுடைய துசாவார்க் குதவாத வூனிலா யாக்கைப் பசாசத்தார் கண்டமணப் பேறு. இனிக் கந்தருவமாவது: கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்ததுபோலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது: 18அதிர்ப்பில்பைம் பூணாரு மாடவருந் தம்மு ளெதிர்ப்பட்டுக் கண்டியைத லென்ப கதிர்ப்பொன்யாழ் முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் கந்திருவர் கண்ட கலப்பு. களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத் தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் (21) உரித்து, மாலை சூட்டுதலும் இதன் பாற்படும். வில்லேற்றுதல் முதலியன பெரும்பான்மை அரசர்க் குரித்து. அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இராக்கதம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து; வலிதிற் பற்றிப் புணர்தலின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடைமையிற் 19சேட்படை முதலியன உளவா மென்றுணர்க. அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளான் இன்ப நுகர்தற் சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற் கூறினார். அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடைவைத்தார். போகமும் வீடுமென இரண்டுஞ் 20சிறத்தலிற் போகம் ஈண்டுக் கூறி வீடு பெறுதற்குக் காரணம் 21முற் கூறினார். 22ஒழிந்த மணங் கைக்கிளையுங் பெருந்திணையு மாய் அடங்குதலின் இதனை அன்பொடு என்றார். பொருளாற் கொள்ளும் மணமும் இருவர் சுற்றமும் இயைந்துழித் தாமும் இயைதலின் கந்தருவப் பாற்படும். ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன்பொடு புணர்தலுங் கொள்ளப் படும். அறத்திற்கே அன்புசார்பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை (குறள். 76) என்றலின். கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற் பின்றிக் களவே அமையாதென்றற்குத் துறையமை என்றார். (1) (காமக் கூட்டத்திற்குரியாரியல்பும் அவரெதிர்ப்பாட்டிற்குரிய காரணமும் இவையெனல்) 93. 23ஒன்றே வேறே யென்றிரு பால்வயி னொன்றி யுயர்ந்த பால தாணையி னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே. இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்ஙனம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது. (இ-ள்.) ஒன்றே வேறே என்ற இரு பால்வயின் - இருவர்க்கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும்; ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒரு காலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய 24பால்வரை தெய்வத்தின் ஆணையாலே, ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தலைவியும் (273) எதிர்ப்படுப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே - அங்ஙனம் எல்லாவாற்றானு ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினுங் கடியப்படாது என்றவாறு. என்றிரு பால்வயிற் காண்ப எனப் 25பால் வன்பால் மென் பால் போல நின்றது. உயர்ந்த பாலை நோய் தீர்ந்த மருந்து போற் கொள்க. ஒரு நிலம் ஆதலை முற்கூறினார். இவ் வொழுக்கத்திற்கு ஓதியது குறிஞ்சி நிலமொன்றுமே ஆதற்சிறப்பு நோக்கி. வேறு நிலம் ஆதலைப் பிற் கூறினார். குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேறாதலுமன்றித் திணை மயக்கத்தான் மருதம் நெய்தலென்னும் நிலப்பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கிவந்து எதிர்ப்படுதல் உளதாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன்கோடற்கு ஒரு நிலத்துக் காமப் புணர்ச்சிப் பருவத்தாளாயி னாளை ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற்குப் பால தாணையிற் காண்ப என்றார். எனவே, வேற்று நிலத்திற்காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ஙனத் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பாலதாணை வேண்டுமாயிற்று. இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவுங் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா தேதில சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியற் றுணைமலர்ப் பிணைய லன்னவிவர் மணமகி ழியற்கை காட்டி யோயே. (குறுந். 229) இஃது, ஓரூரென்றதாம். காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறுந். 2) என்றது - என் நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே சொல் என்றலிற் குறிஞ்சி நிலம் ஒன்றாயிற்று. இலங்கு மருவித் திலங்கு மருவித்தே வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை (கலி. 41) என்புழிப் 26பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்தென வியந்துகூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சி யுள்ளும் மலை வேறாயிற்று. செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கெளவைநோ யுற்றவர் காணாது கடுத்தசொல் லொவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை. (கலி. 76) இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பௌவநீர்ச் சாய்ப்பாவை தந்தான் ஒருவனென நெய்தனிலத்து எதிர்ப்பட்டமை கூறியது. 27ஆணைவிதி. கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும். பாலது ஆணையும் அவ்வாறாம். மிகுதலாவது: குலங் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர், அரசர் முதலிய வருணத்துப் பெண் கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தென்று கொள்க. கடி, மிகுதி. அவர் அங்ஙனம் கோடற்கண் 28ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வா ரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறு தொடங்கி 29இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண் டொன்ப தும் ஒரு பெண்கோடற்கு மூன்று யாண்டாக அந்தணன் உயருங் கந்தருவ மணத்து; ஒழிந்தோ ராயின் அத்துணை உயரார். இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல் பிரம முதலிய வற்றான் உணர்க. வல்லெழுத்து மிகுதல் என்றாற் போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக்கழி வாம். கிழவன் கிழத்தி எனவே பல பிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும் ஒருபாற் கிளவி (தொல். பொ. 222) என்னுஞ் சூத்திரத்தான் நால் வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க. இச்சூத்திரம் முன்னைய நான்கும் (தொல். பொ. 52) எனக்கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென் றுணர்க. உ-ம்: கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா வரும்பிவர் மென்முலை தொத்தாப் - பெரும்பணைத்தோட் பெண்டகைப் பொலிந்த 30பூங்கொடி கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே (பு.வெ. கைக். 1) இக் காட்சிக்கண் தலைவனைப்போல் தலைவி வியந்து கூறுதல் 31புலனெறிவழக்கன்மை உணர்க. (2) (ஐயம் நிகழுமிட மிதுவெனல்) 94. 32சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப விழிந்துழி யிழிபே சுட்ட லான. இஃது எய்தாத தெய்துவித்து எய்தியதை விலக்கிற்று, முன்னைய நான்கும் (52) என்றதனாற் கூறிய ஐயந் தலைவன் கண்ணதே எனவுந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின். (இ - ள்.) சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப - அங்ஙனம் எதிர்ப்பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவர் ஆசிரியர்; இழிந்துழி இழிபே சுட்டலான - அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள்கருதும் ஆதலான் என்றவாறு. தலைவற்குத் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம், நூன் முதலியவற்றான் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடையனாதலானுந், தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் கூறினார். தலைவிக்கு, ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார். உதாரணம்: அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு. (குறள். 1081) . (3) (ஐய நீங்கித் தெளிதற்குரிய காரணம் இவையெனல்) 95. வண்டே யிழையே வள்ளி பூவே கண்ணே யலமர லிமைப்பே யச்சமென் றன்னவை பிறவு மாங்கவ ணிகழ நின்றவை களையுங் கருவி யென்ப. இஃது, ஐயுற்றுத் தெளியுங்கால் 33இடையது ஆராய்ச்சி யாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப. (இ - ள்.) வண்டே - பயின்றதன்மே லல்லது செல்லாத தாது ஊதும் வண்டு; இழையே - ஒருவரான இழைக்கப்பட்ட அணிகலன்கள்; 34வள்ளி - முலையினுந் தோளினும் எழுதுந் தொய்யிற்கொடி; பூவே - கைக் கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ; கண்ணே - வான் கண்ணல்லாத ஊன் கண்; அலமரல் - கண்டறியாத வடிவுகண்ட அச்சத்தாற் பிறந்த தடுமாற்றம்; இமைப்பே - அக்கண்ணின் இதழ் இமைத்தல்; அச்சம் - ஆண் மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம்; என்று அன்னவை பிறவும் - என்று அவ்வெண்வகைப் பொருளும் அவை போல்வன பிறவும்; அவண் நிகழ நின்றவை - அவ் வெதிர்ப் பாட்டின்கண் முன்பு கண்ட வரையர மகள் முதலிய 35பிழம்பு களாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப் பிழம்புகளை; ஆங்குக் களையும் கருவி என்ப - முந்து நூற்கண்ணே அவ்வையம் நீக்குங் கருவியா மென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. எனவே, எனக்கும் அது கருத் தென்றார். இவை யெல்லாம் மக்கட்குரியனவாய் நிகழவே தெய்வப்பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிற்றே யாயிற்று. இனி, அன்னபிற ஆவன கால் நிலந்தோய்தலும் 36நிழலீடும் வியர்த்தலும் முதலியன. 37திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடு மிருநிலஞ் சேவடியுந் தோயு - மரிபரந்த போகித ழுண்கணு மிமைக்கு மாகு மற்றிவ ளகலிடத் தணங்கே (பு. வெ. கைக். 3) இக் காட்சி முதலிய நான்கும் அகனைந்திணைக்குச் சிறப்புடைமையும் இவை கைக்கிளையாமாறும் முன்னைய நான்கும் (52) என்புழிக் கூறினாம். இங்ஙனம் ஐயந்தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. (4) (வழிநிலைக்காட்சி இதுவெனல்) 96. நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். இஃது, அங்ஙனம் மக்களுள்ளாளெனத் துணிந்து நின்ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவி யைக் கூடற்குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்துமென்பதூஉம் அது கண்டு தலைவியும் அக்கண்ணானே தனது வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பதூஉங் கூறுகின்றது; எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக்காட்சி கூறுகின்றதாயிற்று. (இ - ள்.) அறிவு - தலைவன் அங்ஙனம் மக்களுள்ளா ளென்று அறிந்த அறிவானே; உடம்படுத்தற்கு - தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு; நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும் - தன்னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தை சொல்லும்; குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும் - அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறுங் கூற்றுந் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம் என்றவாறு. நாட்டம் இரண்டும் இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரிக்க. இங்ஙனம் இதற்குப் பொருள்கூறல் ஆசிரியர்க்குக் கருத்தாதல் புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தானுணர்க; அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானு முணர்க. ஒன்று ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டமென்றார். 38நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும். உதாரணம்: 39நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள். 1082) இது, புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு கூறியது. (5) (புணர்ச்சியமைதி இவற்றான் நிகழுமெனல்) 97. குறிப்பே குறித்தது கொள்ளு மாயி னாங்கவை நிகழு மென்மனார் புலவர். இது, புணர்ச்சியமைதி கூறுகின்றது. (இ - ள்.) குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கை யையே; குறிப்புக்கொள்ளுமாயின் - தலைவி கருத்துத் திரிவு படாமற் கொள்ளவற்றாயின்; ஆங்கு - அக் குறிப்பைக் கொண்ட காலத்து; அவை நிகழு என்மனார் புலவர் - புகுமுகம் புரிதன் முதலாக இருகையுமெடுத்தல் ஈறாகக் கிடந்த மெய்ப்பாடு பன்னிரண்டனுட் (261 - 263) பொறிநுதல் வியர்த்தல் முதலிய பதினொன்றும் முறையே நிகழுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. அங்கவையும் பாடம். பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையுமெடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. அம் மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் (261-263) ஈண்டுக் கூறியுணர்க. உதாரணம்: கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில. (குறள். 1100) கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்க காமத்திற் 40செம்பாக முன்று பெரிது. (குறள். 1092) இதனை நான்கு வருணம் ஒழிந்தோர்க்குங் கொள்க. உதாரணம்: 41பானலந் தண்கழிப் பாடறிந்து தன்னைமார் நூனல நுண்வலையா னொண்டெடுத்த - கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் ணோக்கங் கடிபொல்லா வென்னையே காப்பு. (திணை. நூற். 32) இனி 42முயங்கி மகிழ்ந்து கூறுவன: 43கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ யைதுதொடை மாண்ட கோதை போல நறிய னல்லோண் மேனி முறியினும் வாயது முயங்கற்கு மினிதே (குறுந். 62) தம்மி லிருந்து தமது44பாத் துண்டற்றா லம்மா வரிவை முயக்கு. (குறள். 1107) உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க. (6) (தலைவன்கண் உள்ளப்புணர்ச்சி மாத்திரை நிகழ்த்தலு முண்டென்றற்குக் காரணங் கூறல்) 98. பெருமையு முரனு மாடூஉ மேன. இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி, இனி உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்ப தூஉம் இவ்விரு வகைப் புணர்ச்சிப் பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிதின் நிகழ்தலுண் டென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ - ள்.) பெருமையும் - அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுத லும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும்; 45உரனும் - கடைப்பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும்; ஆடூஉ மேன - தலைவன் கண்ண என்றவாறு. இதனானே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக்கும் மெய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது வரைந்து கோடலும், உள்ளஞ் சென்றுழி யெல்லாம் நெகிழ்ந்தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும், மெலிந்த உள்ளத்தானாயுந் தோன்றாமல் மறைத்தலுந், தீவினை யாற்றிய பகுதியிற்சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரிய வென்று கொள்க. உதாரணம்: சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு (குறள். 422) பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும்; அவ்வுரனான் மெய்யுறு புணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழாமைக்கும் காரணம் மேற்கூறுப. 46இனி இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப் பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டும் இடையீடு பட்டுழிப் பாங்கனாற் கூடுபவென்றும், உரைப்போரும் உளர்; அவர் அறியா ராயினார்; என்னை? அவ்விரண்டி டத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூடவேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சி யெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க. (7) (தலைவிகண்ணும் அவ்வுள்ளப்புணர்ச்சியளவில் நிகழ்தற்குக் காரணங் கூறல்) 99. அச்சமு நாணு மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப. இது, மேலதே போல்வதொரு விதியை உள்ளப் புணர்ச்சி பற்றித் தலைவிக்குக் கூறுகின்றது. (இ - ள்.) அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும்; நாணும் - காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ள வொடுக்கமும்; மடனும் - செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையும்; முந்துறுத்த இம்மூன்று முதலியன; நிச்சயமும் பெண்பாற்கு உரிய என்ப - எஞ்ஞான்றும் பெண்பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முந்துறுத்த என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு நெஞ்சுண்டாம் நிறையுங் கொள்க. மடன் குடிப் பிறந்தோர் செய்கை யாதலின் அச்சமும் நாணும்போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம். தலைவி இவற்றை உடைய ளெனவே தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கை மீதூரவும் பெறுமாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியளல்லளாமாயினும் இவ் விலக்கணத்தின் திரியாது நின்றேயும் புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னி ரண்டு மெய்ப்பாடுங் கூறினார். இவற்றானே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப் போல ஆற்றுவாளா யிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங் கந்தருவமென்பது வேத முடிபாதலின் இவ் வுள்ளப் புணர்ச்சியுங் கந்தருவமாம் ஆதலான் அதற்கு ஏது வாகிய பெருமையும் உரனும் அச்சமும் நாணும் போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின், இக்கந்தருவம் இக்களவியற்குச் சிறப்பன்று, இனிக் கூறுவன மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்க மாதலின். (8) (களவிற்குரிய பொதுவிலக்கணம் இவையெனல்) 100. வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித லாக்கஞ் செப்ப னாணுவரை யிறத்த னோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புடை மரபினவை களவென மொழிப இது முதலாகக் களவிலக்கணங் கூறுவார். இதனான் இயற்கைப் புணர்ச்சிமுதற் களவு வெளிப்படுந்துணையும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் இவ்வொன்பதுமெனப் பொதுவிலக்கணங் கூறுகின்றார். (இ - ள்.) 47ஒருதலைவேட்கை - புணராதமுன்னும் புணர்ந்த பின்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்தாகி நிலைபெறும் வேட்கை; ஒருதலை உள்ளுதல் - இடைவிடாது ஒருவர் ஒருவரைச் சிந்தியாநிற்றல்; மெலிதல் - அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்பு வாடுதல்; ஆக்கஞ் செப்பல் - யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக நெஞ் சிற்குக் கூறிக் கோடல்; நாணுவரையிறத்தல் - ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன்வரையிறத்தல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றா ரெனத் திரியக்கோடல்; மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்; மயக்கம் - செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றொடு கூறல்; என்று அச்சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத்தான் முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்க மென்று கூறுப எ-று. இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைமையின் வேட்கை முற்கூறினார். 48சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும், இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பென்று கோடலும் போல்வன ஆக்கஞ் செப்பல். தலைவன் பாங்கற்குந் தோழிக்கும் உரைத்தலுந், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன நாணு வரையிறத்தல். களவதிகார மாதலின் 49அவை யென்னுஞ் சுட்டுக் களவை உணர்த்தும். கையுறைபுனைதலும் வேட்டை மேலிட்டுக் 50காட்டுள்திரிதலுந் தலைவற்கு மறத்தல்; கிளியும் பந்தும் முதலியன கொண்டு விளையாடுதலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறத்தல். சாக்காடாவன: 51அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப விம்மை மாறி மறுமை யாயினு நீயா கியரெங் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. (குறுந். 49) 52நிறைந்தோர்த் தேரு நெஞ்சமொடு குறைந்தோர்ப் பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉ நயனின் மாக்கள் போல வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர மையன் மானின் மருளப் பையென வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப வையறி வகற்றுங் கையறு படரோ டகலிரு வான மம்ம மஞ்சினம் பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலைக் காதலற் பிரிந்த புலம்பி னோதக வாரஞ ருறுந ரருநிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரி னலைத்த லானா தெள்ளற வியற்றிய நிழல்காண் மண்டிலத் துள்ளு தாவியிற் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந் திதுகொல் வாழி தோழி யென்னுயிர் விலங்குவெங் கடுவளி யெடுப்பத் துலங்குமரப் புள்ளிற் றுறக்கும் பொழுதே. (அகம். 71) 53இவை, தலைவி சாக்காடாயின. மடலேறுவலெனக் கூறுதல் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடை யவெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் மரபினவை யெனப் பன்மை கூறினார். (9) (இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவன்கண் நிகழ்வன இவையெனல்) 101. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்த னன்னய முரைத்த னகைநனி யுறாஅ தந்நிலை யறிதன் மெலிவுவிளக் குறுத்த றந்நிலை யுரைத்த றெளிவகப் படுத்தலென் றின்னவை நிகழு மென்மனார் புலவர். இஃது, இன்பமும் இன்பநிலையின்மையுமாகிய 54புணர்தல் பிரிதல் கூறிய முறையானே இயற்கைப்புணர்ச்சி முற்கூறி அதன் பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாய் அத்துறைப்படுவன வெல்லாந் தொகுத்துத் தலைவற்கு உரிய வென்கின்றது. (இ - ள்.) முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல்; சொல் வழிப் படுத்தல் - அச் சொல்லாதவற்றைச் சொல்லுவன போலக் கூறுதல்; நன்னயம் உரைத்தல் - அவை சொல்லுவன வாக அவற்றிற்குத் தன் கழிபெருங்காதல் கூறுவானாய்த் தன்னயப் புணர்த்துதல்; நகைநனி உறாஅது அந்நிலை அறிதல் - தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக்கினமாகிய பிரிவு நிலைகூறி அவள் ஆற்றுந்தன்மை அறிதல்; மெலிவு விளக்குறுத்தல் - இப்பிரிவான் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனங்கொள்ளக் கூறுதலுந் தலைவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அது தீரக்கூறுதலும்; தம் நிலை உரைத்தல் - நின்னொடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமது நிலை உரைத்தல்; தெளிவு அகப்படுத்தல் - நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன், பிரியின் அறனல்லது செய்கேனாவலெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதல்; என்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் - என்று இக்கூறிய ஏழும் பயின்றுவரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு என்றவாறு. முற்கூறிய மூன்றும் நயப்பின்கூறு. இஃது அறிவழிந்து கூறாது தலைவி கேட்பது காரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகைபற்றிக் கூறுவது. நன்னயம் எனவே எவரினுந்தான் காதலனாக உணர்த்தும். இதன்பயன் புணர்ச்சியெய்தி நின்றாட்கு இவன் எவ்விடத்தான் கொல்லோ இன்னும் இது கூடுங் கொல்லோ இவன்அன்புடையன் கொல்லோ என நிகழும் ஐயநீங்குதல். இது பிரிதனிமித்தம். இவன் பிரியாவிடின் இவ் வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாம்; ஆண்டு யாம் இறந்து படுதலின் இவனும் இறந்துபடுவனெனக் கருதப், பிரிவென்பதும் ஒன்று உண்டெனத் தலைவன் கூறுதல் அவட்கு மகிழ்ச்சியின் றென்பது தோன்ற நகை நனியுறா தென்றார். புணர்தல் பிரிதல் (14) எனக் கூறிய சூத்திரத்திற் புணர்தலை முற்கூறி ஏனைப் பிரிவை அந்நிலையென்று ஈண்டுச் சுட்டிக் கூறினார். இதனால் தலைவிக்குப் பிரிவு அச்சம் கூறினார். தண்ணீர் வேட்டு அதனை உண்டு உயிர்பெற்றான், இதனான் உயிர் பெற்றே மெனக் கருதி அதன்மாட்டு வேட்கை நீங்காதவாறு போலத் தலைவி மாட்டு வேட்கையெய்தி அவளை அரிதிற் கூடி உயிர் பெற்றானாதலின், இவளான் உயிர்பெற்றே மென்று ணர்ந்து, அவண்மேல் நிகழ்கின்ற அன்புடனே பிரியுமாதலின் தலைவற்கும் பிரிவச்சம் உளதாயிற்று. இங்ஙனம் அன்பு நிகழவும் பிறர் அறியாமற் பிரிகின்றேனென்பதனைத் தலைவிக்கு மனங் கொள்ளக் கூறுமென்றற்கு விளக்குறுத்த லென்றார். இதனானே வற்புறுத்தல் பெற்றாம். அஃது அணித்து எம்மிட மென்றும் பிறவாற்றானும் வற்புறுத்தலாம். மேலனவும் பிரிதனிமித்தம். உதாரணம்: 55கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு முளவோ நீயறியும் பூவே. (குறுந். 2) இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல்; கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல்; கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல்; காமஞ் செப்பாது என்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது; பயிலியது நட்பு என்றது தந்நிலை யுரைத்தல். 56பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமொ டுடனுயிர் போகுக தில்ல கடனறிந் திருவே மாகிய வுலகத் தொருவே மாகிய புன்மைநா முயற்கே (குறுந். 57) முற்பிறப்பில் இருவேகமாய்க் கூடிப் போந்தனம். இவ்வுல கிலே இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாயுற்ற துன்பத் தினின்று நாமே நீங்குதற்கெய்திய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர்போவதாக, இஃதெனக்கு விருப்பமென்றான்; என்பதனால் தந்நிலையுரைத்தலும் பிரிவச்சமுங் கூறிற்று. குவளை நாறுங் குவையிருங் கூந்த லாம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்க் குண்டுநீர்த் தாமரைக் கொங்கி னன்ன 57நுண்பஃ றுத்தி மாஅ யோயே நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்குங் கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல்சூ ழலன்யா னின்னுடை நட்பே. (குறுந். 300) இது, நயப்பும் பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று. 58யாயு ஞாயும் யாரா கியரோ வெந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதுஞ் செம்புலப் பெய்ந்நீர் போல வன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந். 40) இது, பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது. மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே. (குறுந். 137) அறத்தா றன்றென மொழிந்த 59தொன்றுபடுகிளவி யன்ன வாக வென்னுநள் போல. (அகம். 5; 16 -8) இவை, தெளிவகப்படுத்தல். அம்மெல் லோதி விம்முற் றழுங்க 60வெம்மலை வாழ்ந ரிரும்புனம் படுக்கிய வரந்தி னவியத் துறுத்த சாந்தநும் பரந்தேந் தல்குற் றிருந்துதழை யுதவும் பண்பிற் றென்ப வண்மை யதனாற் பல்கால் வந்துநம் பருவர றீர வல்கலும் பொருந்துவ மாகலி னொல்கா வாழ்க்கைத் தாகுமென் னுயிரே. இதுவும் அணிந்து எம்மிடமென ஆற்றுவித்தது. பயின்று எனவே, பயிலாதுவரும் ஆயத்துய்த்தலும், யான் போவலெனக் கூறுதலும் மறைந்து அவட்காண்டலும், கண்டு நின்று அவணிலை கூறுவனவும், அவளருமை யறிந்து கூறுவனவும் போல்வன பிறவுங் கொள்க. யான்றற் காண்டொறும் என்னுஞ் செய்யுளுள், நீயறிந் திலையா னெஞ்சே யானறிந் தேனது 61வாயா குதலே. என மறைந்து அவட்கண்டு நின்று தலைவன் அவளொடு நிகழ்ந் தது நினைஇ நெஞ்சிற்குக் கூறியது. காணா மரபிற் றுயிரென மொழிவோர் நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே சொல்லும் ஆடும் மென்மெல வியலும் கணைக்கால் நுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே. ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறியது. இதன்கண் ஆயத்துய்த்தமையும் பெற்றாம். இனி வேட்கை யொருதலை (100) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சி மேல் நிகழ்த்துதற்கு அவத்தை கூறினாரென்றும் இச்சூத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சி புணருமென்றுங் 62கூறுவாரும் உளர். அவர் அறியார்; என்னை? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் 63ஆண்டுக் கூறிய (261 - 263) மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறாம் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப்பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறுபுணர்ச்சி நடத்தல் பொருந்தாமை யுணர்க. இனித் தலைவியை முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர்ப் புணருமெனின் முன்னர்க் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும் (96) எனக் கண்ணாற் கூறிக் கூடுமென்றலும் இருகையு மெடுத்தல் (263) எனப் பின்பு கூறுதலும் பொருந்தாவாம். அன்றியும், நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறிப் பிரியவேண்டுதலானும் அது பொருந்தாதாம். (10) (இடந்தலைப்பாடு முதலியன உணர்த்தல்) 102. மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்ட லிடம்பெற்றுத் தழாஅ லிடையூறு கிளத்த னீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்ற முளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பி னிருநான்கு கிளவியும் பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலு நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினு மூரும் பேருங் கெடுதியும் பிறவு நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ் சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினு மறிந்தோ ளயர்ப்பி னவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலுந் தோழி நீக்கலி னாகிய நிலைமையு நோக்கி மடன்மா கூறு மிடனுமா ருண்டே. இது, மேல் இயற்கைப் புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன் வழித் தோன்றும் இடந்தலைப்பாடும் அதன்வழித் தோன் றும் பாங்கற் கூட்டமும் அவற்றுவழித் தோன்றுந் தோழியிற் கூட்டமும் நிகழுமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் ஆற்றாமை கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா கூறு மாறுங் கூறுகின்றது. இதனுள் இரு நான்கு கிளவியும் என்னுந் துணையும் இடந்தலைப்பாடும் வாயில் பெட்பினும் என்னுந் துணையும் பாங்கற் கூட்டமும் ஒழிந்தன தோழியிற் கூட்டமுமாம். (இ - ள்.) மெய்தொட்டுப் பயிறல் - தலைவன் தலைவியை மெய்யைத் தீண்டிப் பயிலாநிற்கு நிலைமை: என்றால், இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்ப் பெருநாணின ளாகிய தலைமகள் எதிர்நிற்குமோவெனின் தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின், 64மறையிற் றப்பா மறையோ னொருவனைக் கண்ட மறையிற் றப்பிய மறையோன் போலவும் வேட்கைமிகுதியான் வெய்துண்டு புணர்கூர்ந்தார் போலவும் நெஞ்சும் நிறையுந் தடுமாறி இனிச் செயற்பாலதியாதென்றும், ஆயத்துள்ளே வருவான்கொல் என்னும் அச்சங்கூரவும் வாரான்கொல் என்னும் காதல் கூரவும், புலையன் றீம்பால்போல் மனங் கொள்ளா அனந்தருள்ளம் உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல்லும்; சென்று நின்றாளைத் தலைவன் இவ்வொழுக்கம் புறத்தார் இகழப் புலனாய் வேறுபட்டாள் கொல்லோ எனவும், அங்ஙனம் மறைபுலப்படுதலின் இதனி னூங்கு வரைந்து கொள்ளினன்றி இம்மறைக்கு உடம்படாளோ வெனவுங் கருதுமாறு முன்புபோல் நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப்பறியு மென்றற்குத் தொடுமென்னாது பயிறலென்றார். பொய் பாராட்டல் - அங்ஙனந் தீண்டிநின்றுழித் தலைவி குறிப்பறிந்து அவளை ஓதியும் நுதலும் நீவிப் பொய்செய்யா நின்று புனைந்துரைத்தல்: 65சிதைவின்றேனுஞ் சிதைந்தனபோல் திருத்தலிற் பொய் என்றார். இடம்பெற்றுத்தழாஅல் - அவ்விரண்டனானுந் தலைவியை முகம் பெற்றவன் அவள் நோக்கிய நோக்கினைத் தன்னிடத்திலே சேர்த்துக் கொண்டு கூறல்: இடையூறு கிளத்தல் - அவள் பெருநாணினளாதலின் இங்ஙனங் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகச் சில நிகழ்த்தியவற்றைத் தலைவன் கூறல்: அவை, கண்புதைத்தலுங் கொம்பானுங் கொடியானுஞ் சார்தலுமாம்: நீடுநினைந்திரங்கல் - புணர்ச்சி நிகழாது பொழுது நீண்ட தற்கு இரங்கி இரக்கந் தோன்றக் கூறல். கூடுதல் உறுதல் - நீடித்ததென்று இரங்கினானென்பது அறிந்தோள் இவன் ஆற்றானாகி இறந்துபடுவனெனப் பெரு நாணுக் கடிதுநீங்குதல்: சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி - தலைவன் தான் முற்கூறிய நுகர்ச்சியை விரையப் பெற்றவழி: பெற்றவழி என்பதனைப் 66பெறுதலெனப் பெயர்ப் படுத்தல் அக்கருத்தாற் பெறுதும். தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ - எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணமாகிய சூளுறுதல் அகப்படத் தொகுத்தது: புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகா தென்றற்கு வல்லே பெற்றுழித் தீராத்தேற்ற மென்றார். முன் தெளிவகப் படுத்தபின் நிகழ்ந்த ஆற்றாமை தீர்தற்குத் தெய்வத் தொடு 67சார்த்திச் சூளுறுதலின் இத்தேற்றமும் வேண்டிற்று. பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் - குறையாச் சிறப்பினவாகிய இவ்வெட்டும்: தாமேகூடும் இடந்தலைப்பாடும் பாங்கனாற் குறிதலைப் பெய்யும் இடந்தலைப்பாடும் 68ஒத்த சிறப்பின வாதற்குப் பேராச் சிறப்பி னென்றார். எனவே இடந்தலைப்பாடு இரண்டாயிற்று. தோழியிற் கூட்டம் போலப் பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமை யிற் பாங்கற் கூட்டம் என்றதனைத் தலைமகன் 69பாங்கனைக் கூடுங் கூட்டமென்று கொள்க. உதாரணம்: 70உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள். (குறள். 1106) இஃது என் கைசென்றுறுந்தோறும் இன்னுயிர் தளிர்க்கும் படி யான் தீண்டப்படுதலினெனப் பொருள்கூறவே மெய் தீண்ட லாயிற்று. 71தீண்டலு மியைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த புன்கண் மடா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் ருருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்க ணாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே. (குறுந். 272) கழறிய பாங்கற்குக் கூறுந்தலைவன் இவனான் இக்குறை முடியாது. நெருநல் இடந்தலைப் பாட்டிற் கூடியாங்குக் கூடுவல், அது கூடுங் கொலென்று கூறுவான் அற்றைஞான்று மெய் தொட்டுப் பயின்றதே கூறினான். 72சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின் றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே 73கதவ வல்ல நண்ணா ராண்டலை மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே. (நற்றிணை. 39) இஃது, அங்ஙனம் மெய்தீண்டி நின்றவன் யான் தழீஇக் கொண்டு கூறில் அதனை ஏற்றுக்கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென இடையூறு கிளத்தல் கூறிக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோவென நீடுநினைந்திரங்கல் கூறிப் புலியினைத் தோய்ந்து சிவந்த கோடு போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று. இனித் தனியே வந்தன: 74கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் னைய ருடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் னீயு மிடல்புக் கடங்காத வெம்முலையோ பார மிடர்புக் கிடுகு மிடையிழியல் கண்டாய் (சிலம்பு; கானல். 17) இது, பொய்பாராட்டல். 75கொல்யானை வெண்மருப்புங் கோள்வல் புலியதளு நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தா மோரம்பி னானெய்து போக்குவர்யான் போகாமை யீரம்பி னாலெய்தா யின்று. (திணை. நூற். 150 - 22) இஃது, இடம்பெற்றுத் தழாஅல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி 76முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே புலம்புகொண் மாலை மறைய நலங்கே ழாக நல்குவ ளெனக்கே. (ஐங்குறு. 197) இது, கூடுதலுறதல். 77வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள். (குறள். 1105) இது, நுகர்ச்சிபெற்றது. 78எம்மணங் கினவே மகிழ்ந முன்றி னனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன வெக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரொ டுற்ற சூளே. (குறுந். 53) இதனுள் தீராத்தேற்றத்தைப் பின்னொருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு காண்க. இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்ந்தானாயினுங் காவன்மிகுதியானுங் கரவுள்ளத்தானும் இரண்டாங் கூட்டத்தினும் அவள்நிலை தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன்றாவதாய் மேல் நிகழும் பாங்கற்கூட்டத்தின் பின் நிகழும் இடந்தலைப் பாட்டினும் ஐயுறவு உரித்தென்று மெய் தொட்டுப் பயிறன் முதலியன அதற்குங் கூறினார். அன்றியும் மக்களெல்லாம் முதல் இடை கடையென மூவகைப்படுதலின் அவர்க்கெல்லாம் 79இது பொதுவிதியாகலானும் அமையும். 80எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி யவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென வரிவண் டார்க்கும் வாய்புகு கடாஅத்த வண்ணல் யானை யெண்ணருஞ் சோலை விண்ணுயர் வெற்பினெம் மருளி நின்னி னகலி னகலுமெ னுயிரெனத் தவலி வருந்துய ரவலமொ டணித்தெம் மிடமெனப் பிரிந்துறை வமைந்தவெம் புலம்புநனி நோக்கிக் கவர்வுறு நெஞ்சமொடு கவலுங் கொல்லோ வாய நாப்பண் வருகுவன் கொல்லென வுயவுமென் னுள்ளத் தயர்வுமிக லானே. இது, வருவான்கொ லென்னும் அச்சமும் வாரான்கொ லென்னுங் காதலுங் கூர்ந்து தலைவி கூறியது. இனிச் சொல்லிய என்றதனானே இன்னும் இப் புணர்ச்சி கூடுங்கொலெனக் கூறுவனவும், இன்னும் தெய்வந் தருமெனக் கூறுவனவுந், தலைவியை எதிர்ப்பட்ட இடங் கண்டுழி 81அவளாகக் கூறுவனவுங், காட்சிக்கு நிமித்தமாகிய கிள்ளையை வாழ்த்து வனவுந், தலைவி தனித்த நிலைமை கண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறுவனவும், அணியணிந்து விடுத்தலும், இவைபோல்வன பிறவும் இடந் தலைப் பாட்டிற்குக் கொள்க. உதாரணம்: 82வெள்ள வரம்பி னூழி போகியுங் கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை யிரும்பல் கூந்தற் கொடிச்சி பெருந்தோட் காவல் காட்டி யவ்வே. (ஐங்குறு. 281) இது, கிள்ளை வாழ்த்து. 83நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள். (குறள். 1104) இது, நீங்கியவழிப்பிறந்த வருத்தங் கூறியது. 84அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட் பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற் றிருமணி புரையு மேனி மடவோள் யார்மகள் கொல்லிவ டந்தை வாழியர் துயர முறீஇயின ளெம்மே யகல்வய லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய மதனுடை நோன்றாட் கண்போ னெய்தல் போர்விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் றொண்டி தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே. (நற்றிணை. 8) என்பதும் அது. ஏனையவற்றிற்குச் சான்றோர் செய்யுட்கள் வருவன உளவேற் காண்க. பெற்றவழி மகிழ்ச்சியும் - சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் மனம் மகிழும் மகிழ்ச்சியும்; பேராச் சிறப்பின் என்றதனாற் பாங்கனான் நிகழும் இடந்தலைப்பாட்டிற்கும் இது கொள்க. உதாரணம்: 85ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமக ணறுந்தண் ணீர ளாரணங் கினளே யினைய ளென்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி யணைமெல் லியல்யான் முயங்குங் காலே (குறுந். 70) பிரிந்தவழிக் கலங்கலும் - அங்ஙனம் புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியான் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்தி டையுஞ் சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங் கலும். உதாரணம்: 86குணகடற் றிரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாஅங்குச் சேய ளரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே (குறுந். 128) இல்லோ னின்பங் காமுற் றாஅங் கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி நல்ல ளாகுத லறிந்தாங் கரிய ளாகுத லறியா தோயே (குறுந். 120) வழி என்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத லதற்கன்ன ணீங்கு மிடத்து. (குறள். 1124) 87இது, மூன்றாங் கூட்டத்தினையுங்கருதலின் ஈண்டு வைத்தார். இது முதலாகப் பாங்கற்கூட்டமாம். கலங்கலும் எனவே அக்கலக்கத்தான் நிகழ்வன வெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினாவுவனவும் அதுவே பற்றுக்கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம். உதாரணம்: 88பண்டைய யல்லைநீ யின்று பரிவொன்று கொண்ட மனத்தை யெனவுணர்வல் - கண்டாயா னின்னுற்ற தெல்லா மறிய வுரைத்தியாற் பின்னுற்ற நண்பினாய் பேர்த்து. 89வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த் தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென் - னெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலா ணன்றாயத் தன்றென் வலங்கொண்டாள் கொண்டா ளிடம் (திணை; நூற்.9) 90எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப புலவ தோழ கேளா யத்தை மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே (குறுந். 129) நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நினைஇ உரைப்பினும் நிகழ்பவை உரைப்பினும் என உரைப்பி னென்பதனை முன்னுங் கூட்டுக: அது கேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங் களை அவனை நினைப்பித்துக் 91கழறிக் கூறினும், அக்கழறிய வற்றை மறுத்துத் தன் நெஞ்சின் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறினும்: உதாரணம் : 92குன்ற முருளிற் கொடித்தேரோய் குன்றியு ளொன்று மொழிவ துளதாமோ - நன்றறிந்து தாமுறையே செய்வார் தகவிலவே செய்தக்கால் யார்முறை செய்பவோ மற்று. எனவும், 93தேரோன் றெறுகதிர் மழுங்கினுந் திங்க டீரா வெம்மையொடு திசைநடுக் குறுப்பினும் பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால் குலத்திற் றிரியாக் கொள்கையுங் கொள்கையொடு நலத்திற் றிரியா நாட்டமு முடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம் மண்டிணி கிடக்கை மாநில முண்டெனக் கருதி யுணரலன் யானே எனவும் இவை நிற்பனை நினைஇக் கழறின. 94காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புன் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே. (குறுந். 204) இதுவுமது, 95நயனுந் நண்புந் நாணுநன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலு நும்மினு முடையேன் மன்னே கம்மென வெதிர்த்த தித்தி யேரிள வனமுலை விதிர்த்துவிட் டன்ன வந்நுண் சுணங்கி னைம்பால் வகுத்த கூந்தற் செம்பொற் றிருநுதற் பொலிந்த தேம்பா யோதி முதுநீ ரிலஞ்சி பூத்த குவளை யேதிர்மலர்ப் பிணைய லன்னவிவ ளரிமதர் மழைக்கண் காணா வூங்கே. (நற்றிணை. 160) 96இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே. (குறுந். 58) இவை, நிகழ்பவை உரைத்தன. இப்பன்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் - அங்ஙனந் தலைவற்கு நிகழுங் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன் அவன் ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்பினும்: அது நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத் தன்மைத்து என வினாவும். உதாரணம்: பங்கயமோ துங்கப் பனிதங்கு மால்வரையோ வங்கண் விசும்போ வலைகடலோ - வெங்கோவிச் செவ்வண்ண மால்வரையே போலுந் திருமேனி யிவ்வண்ணஞ் செய்தார்க் கிடம். எனவரும். அதுகேட்டுத் தலைவன் கழியுவகை மீதூர்ந்து இன்ன விடத்து இத்தன்மைத்து என்னும். உதாரணம்: 97கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க வாடுமக ணடந்த கொடும்புரி நோன்கயிற் றதவத் தீங்கனி யன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்க டாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே குழுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத் ததுவேபிறர் விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே. (நற்றிணை. 95) இஃது, இடங்கூறிற்று. 98கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் னெஞ்சு பிணிக்கொண்ட வஞ்சி லோதி பெருநா ணணிந்த சிறுமெல் லாக மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. (குறுந். 280) இது, தன்மை கூறிற்று. மீட்டுங் குற்றங் காட்டிய என்றதனானே இக்கூட்டத்திற் குரிய கூற்றாகிச் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாங் கொள்க. 99காயா வீன்ற கணவீ நாற்ற மாயா முன்றில் வருவளி தூக்கு மாகோள் வாழ்நர் சிறுகுடி யாட்டி வேயேர் மென்றோள் விலக்குநர் யாரோ வாழிநீ யவ்வயிற் செலினே. இது, பாங்கனை நீ யாண்டுச் செல்லவேண்டு மென்றது. என்னுறுநோய் தீர்த்தற் கிருபிறப்பி னான்மறையோன் றன்னுறுநோய் போலத் தளர்கின்றா - னின்னினிய கற்றத்திற் றீர்ந்த சுடரிழையைச் செவ்வியாற் றெற்றெனக் கண்ணுறுங்கொ 100லென்று. (பாரதம்) இது, குறிவழிச்சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங் கொலென்று ஐயுற்றது. 101அளிதோ தானே யருண்மிக வுடைத்தே களிவாய் வண்டினங் கவர்ந்துண் டாடு மொளிதார் மார்பி னோங்கெழிற் குரிசிலைப் பிரியாத் துயரமொடு பேதுறுத் தகன்ற கிளியோர் மழலைக் கேழ்கிளர் மாத ரார்ந்த சுற்றமொடு தமரி னீக்கத் தானே தமியள் காட்டிய வானோர் தெய்வம் வணங்குவல் யானே. இது, குறிவழிச்சென்ற பாங்கன் தலைவியை எளிதிற் காட் டிய தெய்வத்தை வணங்கியது. 102கண்ணென மலருங் குவளையு மடியெனத் தண்ணெனுந் தடமலர் தயங்குதா மரையு முலையென முரணிய கோங்கமும் வகையெழின் மின்னென நுடங்கு மருங்குலு மணியென வயின்வயி னிமைக்கும் பாங்குபல் லுருவிற் காண்டகு கமழ்கொடி போலுமென் ணாண்டகை யண்ணலை யறிவுதொலைத் ததுவே. இஃது, இவள்போலும் இறைவனை வருத்தினாளெனப் பாங்கன் ஐயுற்றது. 103கண்ணே, கண்ணயற் பிறந்த கவுளழி கடாஅத்த வண்ணல் யானை யாரியர்ப் பணித்த விறற்போர் வானவன் கொல்லி மீமிசை யறைக்கான் மாச்சுனை யவிழ்ந்த நீலம் பல்லே, பல்லரண் கடந்த பசும்பூட் பாண்டியன் மல்குநீர் வரைப்பிற் கொற்கை முன்றுறை யூதை யீட்டிய வுயர்மண லடைகரை யோத வெண்டிரை யுதைத்த முத்தம் நிறனே, திறல்விளங் கவுணர் தூங்கெயி லெறிந்த விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழ னலனணி யரங்கிற் போகிய மாவி னுருவ னீள்சினை யொழுகிய தளிரே யென்றவை பயந்தமை யறியார் நன்று மடவர் மன்றவிக் குறவர் மக்க டேம்பொதி கிளவி யிவளை யாம்பயந் தேமெம் மகளென் போரே. இது, தலைவியை வியந்தது. 104பண்ணாது பண்மேற்றேன் பாடுங் கழிக்கான லெண்ணாது கண்டாருக் கேரணங்கா - மெண்ணாது சாவார்சான் றாண்மை திரிந்திலார் மற்றிவளைக் காவார் கயிறுரீஇவிட் டார். (திணைமாலை. நூற். 47) பாங்கன், தலைவனை வியந்தது. 105பூந்த ணிரும்புனத்துப் பூசல் புரியாது பூழி யாடிக் காந்தட் கமழ்குலையாற் காதன் மடப்பிடிதன் கவுள்வண் டோச்ச வேந்தன்போ னின்ற விறற்களிற்றை வில்லினாற் கடிவார் தங்கை யேந்தெழி லாக மியையா தியைந்நோ யியையும் போலும். இது, தலைவற்கு வருத்தந் தருமென அவனை வியந்தது. 106விம்முறு துயரமொடு வெந்நோ யாகிய வெம்முறு துயரந் தீரிய சென்ற நான்மறை நவிற்றிய நூனெறி மார்பன் கண்டனன் கொல்லோ தானே தண்டாது புருவக் கொடுவிற் கோலிப் பூங்கட் செருவப் பகழியிற் சேர்த்தழி வுறீஇ யேத்தொழி றொடங்கி யேமுறுத் தகன்ற மடமா னோக்கிற் றடமென் றோளியைத் தண்டழை ததும்பிய வின்னிழ லொருசிறை யுடனா டாயத்து நீங்கி யிடனா நின்ற வேமுறு நிலையே என்னுஞ் செய்யுளுங் கொள்க. இனிப் பாங்கன் தலைவி தன்மை தலைவற்குக் கூறுவன வும் இடங்காட்டுவனவுஞ் சான்றோர் செய்யுளுள் வரும்வழிக் காண்க. ஆண்டுச் சென்ற தலைவன் இடந்தலைப் பாட்டிற் கூறிய வாற்றானே கூடுதல்கொள்க. அங்ஙனம் கூடி நின்று அவன் மகிழ்ந்து கூறுவனவும் பிறவுங்கொள்க. வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் டோள். (குறள். 1105) 107எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோ ளொண்ணுத லரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே (ஐங்குறு. 175) இது, பாங்கற் கூட்டங்கூடி நீங்குந் தலைவன் நீ வரு மிடத்து நின் தோழியொடும் வரல்வேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது. நெய்வள ரைம்பா னேரிழை மாதரை மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமொ டெய்துத லரிதென் றின்னண மிரங்கிக் கையறு நெஞ்சமொடு கவன்றுநனி பெயர்ந்தவென் பைத லுள்ளம் பரிவு நீக்கித் தெய்வத் தன்ன தெரியிழை மென்றோ ளெய்தத் தந்த வேந்தலொ டெம்மிடை நற்பாற் கேண்மை நாடொறு மெய்த லப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே. அங்ஙனங் கூடிநின்று தலைவன் பாங்கனை உண்மகிழ்ந்து உரைத்தது. இவன் பெரும்பான்மை பார்ப்பானாம். இத் துணையும் பாங்கற் கூட்டம். பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் - அங்ஙனம் அவனைப் புணைபெற்றுநின்ற தலைவன் தலைவிக்கு வாயிலாதற்கு உரியாரை யாராய்ந்து பலருள்ளுந் தலைவியாற் 108பேணப்பட்டாள் தனக்கு வாயிலாந் தன்மையையுடைய தோழியை அவள் குறிப்பினான் வாயிலாகப் பெற்று இவளை இரந்துபின் னிற்பலென வலிப்பினும்: மறைந்து தலைவியைக் கண்டு நின்றான் அவட்கு அவள் இன்றியமையாமை கண்டு அவளை வாயிலெனத் துணியும். உதாரணம்: 109தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளுங் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகி னாண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே. (குறுந். 222) இது, தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளை வாயிலாகத் துணிந்தது. அன்றித் 110தோழி கூற்றெனில் தலைவியை அருமை கூறினன்றி இக்குறை முடிப்பலென ஏற்றுக் கொள்ளாள் தனக்கு 111ஏதமாமென்று அஞ்சி; அன்றியுந்தானே குறையுறு கின்றாற்கு 112இது கூறிப் பயந்ததூஉ மின்று. 113மருந்திற் றீராது மணியி னாகா தருந்தவ முயற்சியி னகறலு மரிதே தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய தேனிமிர் நறவின் றேறல் போல நீதர வந்த நிறையழி துயரநின் னடுகொடி மருங்குனின் னருளி னல்லது பிறிதிற் றீரா தென்பது பின்னின் றறியக் கூறுக மெழுமோ நெஞ்சே நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன் னாடுமழைத் தடக்கை யறுத்துமுறை நிறுத்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பற் பன்மாண் சாயற் பரதவர் மகட்கே என்னுஞ் செய்யுள் இரவு 114வலியுற்றது. ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும் - தோழியை இரந்து பின்னிற்றலை வலித்த தலைவன், தலைவியுந் தோழியும் ஒருங்கு 115தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினுந், தோழி தனித் துழியாயினும், நும்பதியும் பெயரும் யாவை யெனவும் ஈண்டு யான் 116கெடுத்தவை காட்டுமினெனவும், அனையன பிறவற்றை யும் அகத்தெழுந்ததோர் இன்னீர்மை தோன்றும் இக்கூற்று வேறொரு கருத்து உடைத்தென அவள் கருது மாற்றானும் அமையச் சொல்லித், தோழியைத் தன் குறையறிவிக்குங் கூறுபாடும்: வினாவுவான் 117ஏதிலர்போல ஊரினை முன் வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின்வினாய் அவ்விரண்ட னும் 118மாற்றம் பெறாதான் ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர் கண்டார் போலவும் கூறினான். இவன் என்னினாயதொரு 119குறையுடைய னென்று அவள் கருதக் கூறு மென்பார் நிரம்ப வென்றார். கெடுதியாவன: யானை புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன், அவை கண்டீரோ வெனவும் வினாவுவன பலவுமாம். பிறவு மென்றதனான் வழிவனாதலுந் தன்னோடு அவரிடை உறவு தோன்றற்பாலன கூறுதலுங் கொள்க. உதாரணம்: 120அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி யயலது வேய்பயி லிறும்பினா மூறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலு நுமதோ கோடேந் தல்கு னீடோ ளீரே. (நற்றிணை. 213) இஃது, ஊரும் பிறவும் வினாயது. 121கல்லுற்ற நோய்வருத்தக் காலு நடையற்றே னெல்லுற் றியானும் வருந்தினேன் - வில்லுற்ற பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத்தீ ரீங்கிதுவோ நும்முடைய வூர். இஃது, ஊர் வினாயது. செறிகுர லேனற் சிறுகிளி காப்பீ ரறிகுவே னும்மை வினாஅ - யறிபறவை யன்ன நிகர்க்குஞ்சீ ராடமை மென்றோளி ரென்ன பெயரிரோ நீர். இது, பெயர்வினாயது. 122நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ வேமரை போந்தன வீண்டு. (திணை: மாலை - நூற். 1) தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கா லெங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார் - நுங்குறிப்பின் வென்றி படர்நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ வன்றி படர்ந்த வழி. வன்றி - பன்றி. தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை மண்டுபு கவரு மாண்டகிளி மாற்று மொண்டொடிப் பணைத்தோ ளொண்ணுத விளையீர் கண்டனி ராயிற் கரவா துரைமின் கொண்டன குழுவி னீங்கி மண்டிய வுள்ளழி பகழியோ டுயங்கியோர் புள்ளி மான்கலை போகிய நெறியே. இவை கெடுதிவினாயின. மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறகுடித் தங்கின்மற் றெவனோ. (அகம். 110) எனவும், 123இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரிற் றீது முண்டோ மாத ரீரே (அகம் 230) எனவும் வருவன, பிறவும் என்றதனாற் கொள்க. 124குறையுறூஉம் பகுதி, குறையுறுபகுதி எனவுமாம்; எனவே குறை யுறுவார் சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறை யொடு சேறலுங் கொள்க. பகுதியென வரையாது கூறலில் 125தனித்துழிப் பகுதி முதலியனவும் இருவரு முள்வழி இவன் 126தலைப்பெய்தலுடையன் எனத் தோழி உணருமாறும் வினாவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும் இரு வருமுள்வழி அவன் வரவுணர்தலுமாம். முன்னுறவுணர்தல் நாற்றமுந் தோற்றமும் (தொல். பொ. 114) என் புழிக் கூறுப. மதியுடம்பாடு மூவகை யவென மேற் (127) கூறுப. தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக்கூறலும் - தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள் மேலே சேர்த்தி அதனை உண்மையென்றுணரத் தலைவன் கூறுதலும்: உதாரணம்: கருங்கட லுட்கலங்க நுண்வலை வீசி யொருங்குடன் றன்னைமார் தந்த கொழுமீ னுணங்கல்புள் ளோப்பு மொழியிழை மாத 127ரணங்காகு மாற்ற வெமக்கு. (ஐந். ஐம். 47) பண்பும் பாயலுங் கொண்டன டொண்டித் தண்கமழ் புதுமலர் நாறு மொண்டொடி யைதமர்ந் தகன்ற வல்குற் கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. (ஐங்குறு. 176) 128இவை வெளிப்பட்டன. இவற்றின் வேறுபாடு உணர்க. 129குன்ற நாடன்குன்றத்துக் கவாஅற் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையு மஞ்சி லோதி யசையியற் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவ டன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே. (ஐங்குறு.299) இஃது, இருவரும் உள்வழிவந்த தலைவன் தலைவிதன்மை கூறவே இவள்கண்ணது இவன் வேட்கையென்று தோழி குறிப்பான் உணரக் கூறியது. குன்றநாடன் - முருகன்; அவள் தந்தையுமாம். 130உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகி லார நாறு மறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே. (குறுந். 286) இதுவும் அது. இது முதலியவற்றைத் தலைவன் கூற்றாகவே கூறாது தோழி கூறினாளாகக்கூறி அவ்விடத்துத் தலைவன் மடன்மா கூறுமென்று பொருள் கூறின். நாற்றமுந் தோற்றமும் (114) என்னுஞ் சூத்திரத்துத் தோழி இவற்றையே கூறினாளென்றல் வேண்டாவாம். அது கூறியது கூறலாமாகலின். தண்டாது இரப்பினும் - இடந்தலைப்பாடு முதலிய கூட்டங்களான் அமையாது பின்னும் பகற்குறியையும் இரவுக் குறியையும் வேண்டினும்: உ தாரணம்: கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம் வகைசே ரைம்பா றகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ணாய முவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கு நிலவுமணன் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி யருளினு மருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉ மருந்துய ரவலந் தீர்க்கும் மருந்துபிறி தில்லையா னுற்ற நோய்க்கே. (நற்றிணை. 140) இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க. 131கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங் கொடுங்கழி மருங்கி னடும்புமலர் கொய்துங் கைதை தூக்கியு நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல வுணர்ந்த நெஞ்சமொடு வைகலு மினைய மாகவுஞ் செய்தார்ப் பசும்பூண் வேந்த ரழிந்த பாசறை யொளிறுவே லழுவத்துக் களிறுபடப் பொருத பெரும்புண் ணுறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை முனியா நம்வயி னென்னென நினையுங்கொல் பரதவர் மகளே. (நற்றிணை. 349) 132தோழி நம்வயிற் பரதவர்மகளை யென்னென நினையுங் கொலென்க. 133பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த வைவனங் காப்பாள்கண் - வேலொத்தென் னெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ வஞ்சாயற் கேநோவல் யான். (திணை: மாலை - நூற். 18) இவை பகற்குறி இரந்தன. 134எல்லு மெல்லின் றசைவுபெரி துடையன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண வொருவன் (அகம். 110:11-2) எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறிய வாறு காண்க. இன்னும் இரட்டுற மொழிதல் என்பதனால், தண்டாது என்பதற்குத் தவிராது இரப்பினுமெனப் பொருள் கூறிக், கையுறை கொண்டுவந்து கூறுவனவும், நீரேவுவன யான் செய்வேனெனக் கூறுவனவும், தோழி நின்னாற் கருதப்படு வாளை அறியேனென்றுழி அவன் அறியக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. உதாரணம்: 135கவளக் களியியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோற் - பவளக் கடிகை யிடைமுத்தங் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு. (திணை: மாலை - நூற். 42) நின் வாயிதழையும் எயிற்றையுங் காணுந்தோறும் நில்லா என்கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க. 136நறவுக்கம ழலரி நறவு வாய்விரிந் திறந்கிதழ் கமழு மிணைவாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி யொண்கணங் கிளமுலை யொருஞான்று புணரி னுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக் கைதை வேலி யிவ்வூர்ச் செய்தூட் டேனோ செறிதொடி யானே 137அறிகவளை யைய விடைமடவா யாயச் சிறிதவள்செல் லாளிறுமென் றஞ்சிச் - சிறிதவ ணல்கும்வாய் காணாது நைந்துருகி யென்னெஞ்ச மொல்கும்வா யொல்க லுறும் (திணை: மாலை - நூற். 17) மற்றைய வழியும் - குறியெதிர்ப்பட்டுங் கையுறை மறுக்கப் பட்டுங் கொடுக்கப்பெற்றும் இரந்து பின்னின்றான். அங்ஙனங் குறியெதிர்ப்பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை 138மாறுமவ்விடத்தும்: உதாரணம்: 139நின்செயல் செத்து நீபல வுள்ளிப் பெரும்புன் பைதலை வருந்த லன்றியு மலைமிசைத் தொடுத்த மலிந்துசெ னீத்தந் தலைநாண் மாமலர் தண்டுறை தயங்கக் கடல்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற் றகல்வாய் நெடுங்கயத் தருநிலை கலங்க மாலிரு ணடுநாட் போகித் தன்னையர் காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக் கவ்வாலங் குந்தி யஞ்சொற் பாண்மக ணெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகிற் பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள் கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி நயம்புரி நன்மொழி யடக்கவு மடங்கான் பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருத வன்னி போல விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச் சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரிய கயலென வமர்த்த வுண்கட் புயலெனப் புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பான் மின்னேர் மருங்குற் குறுமகள் பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே (அகம். 126) மாய்கதில் வாழிய நெஞ்சே நாளு மல்லியற் குறுமக ணல்லக நசைஇ யரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி யிரவெ னெய்தியும் பெறாஅ யருள்வரப் புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத் துள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாகக் காமம் கைம்மிக வுறுதர வானா வரும்படர் தலைத்தந் தோயே (அகம். 258) எனவும் வருவன, தன்னெஞ்சினை 140இரவு விலக்கியன. சொல்லவற் சார்த்தலிற் புல்லிய வகையினும் - தான் வருந் திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனங் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடியபகுதியினும்: 141களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் (தொல்.பொருள்.120) என்பதனால் தலைவியாற் 142குறிபெற்றுந் தோழியை இரக்கும். உதாரணம்: 143அயத்துவளர் பைஞ்சாய் முருந்தி னன்ன நகைப்பொலிந் திலங்கு மெயிறுகெழு துவர்வா யாகத் தரும்பிய முலையள் பணைத்தோண் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயு மறியா மறையமை புணர்ச்சி பூசற் றுடியிர் புணர்வுபிரிந் திசைப்பக் கரந்த கரப்பொடு நாடுஞ்செலற் கருமையிற் கடும்புனன் மலிந்த காவிரிப் பேர்யாற்று நெடுஞ்சுழி நீத்த மண்ணுநள் போல நடுங்கஞர் பெதிர முயங்கி நெருந லாக மடைதந் தோளே வென்வேற் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி யொளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக் கடவு ளெழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅ யோளே (அகம். 62) 144அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கின ணுணங்கிடைப் பொங்கரி பரந்த வுண்க ணங்கலிழ் மேனி யசைஇய வெமக்கே (ஐங்குறு. 174) வகை என்றதனானே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க. 145தளிர்சேர் தண்டழை தைஇ நுந்தை குளிர்வாய் வியன்புனத் தெற்பட வருகோ குறுஞ்சுனைக் குவளை யடைச்சிநாம் புணரிய நறுந்தண் சார லாடுகம் வருகோ வின்சொன் மேவலைப் பட்டவெ னெஞ்சுணக் கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து தான்செய் குறிநிலை யினிய கூறி யேறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட் டுறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயருங் கொடிச்சி செல்புற நோக்கி விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே. (நற்றிணை. 204) 146இரண்டறி கள்வியநங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நண்ணுற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312) அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும் - மதியுடம்பட்ட தோழி நீர் கூறிய குறையை யான் மறந்தேனெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையான் தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றி யிருந்த பெருமையையும் கூறுதலும்: 147ஒள்ளிழை மகளிரொ டோரையு மாடாய் வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புனையாய் விரிபூங் கான லொருசிறை நின்றோ யாரை யோநிற் றொழுதனம் வினவுதுங் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ விருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ சொல்லினி மடந்தை யென்றனெ னதனெதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன பல்லித ழுண்கணும் பரந்தவாற் பனியே (நற்றிணை. 155) 148தண்டழை செரீஇயுந் தண்ணென வுயிர்த்துங் கண்கலுழ் முத்தங் கதிர்முலை யுறைந்து மாற்றின ளென்பது கேட்டன மாற்றா வென்னினு மவளினு மிகந்த வின்னா மாக்கட்டிந் நன்ன ரூரே. தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் றொண்டி யன்னவெற் கண்டு நயந்துநீ நல்காக் காலே. (ஐங்குறு. 178) எனவரும். 149அயர்த்தது அவள் அருமை தோன்றுதற்கு. தோழி 150நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி - தோழி இவ்விடத்துக்காவலர் 151கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து: 152உம்மை - சிறப்பு. இதுவே மடன்மா கூறுதற்கு ஏதுவா யிற்று. 153நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப் பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல வுள்ளந் தாங்கா வெள்ள நீந்தி யரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு மகவுடை மந்தி போல வகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. (குறுந். 29) 154பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்தும் மற்றிவ ளுருத்தெழு வனமுலை யொளிபெற வெழுதிய தொய்யில் காப்போ ரறிதலு மறியார் முறையுடை யரசன் செங்கோல் வையத் தியான்றற் கடலின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற வளிதோ தானேயிவ் வழுங்க லூரே. (குறுந். 276) 155உரைத்தசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோ டுறப்ப வென்றி யிறீஇயரென் னுயிரே (சிற்றட்டகம்) மடன்மாகூறும் இடனுமாருண்டே - அச்சேட்படையான் மடலேறுவலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு. நோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வரைபாய்வ லெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு. உதாரணம்: 156விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி யொருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிங்கவி ரசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. (குறுந். 182) இது, நெஞ்சொடு கிளத்தல். 157நாணாக நாறு நனைகுழலா ணல்கித்தன் பூணாக நேர்வளவும் போகாது - பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமே னின்றேன் மறுகிடையே நேர்ந்து. (திணை. நூற். 16) இது, தோழிக்குக் கூறியது. இவை 158சாக்காடு குறித்தன. மாவென மடலு மூர்ப் பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே. (குறுந். 17) இதனுட் பிறிதுமாகுப என்றது வரைபாய்தலை. இடன் என்றதனால் தோழி பெரியோர்க்குத் தகா தென்ற வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவுங் கொள்க. நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் காமுற்றா ரேறு மடல் (குறள். 1133) இனி இடனும் என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இரு நான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு; உரைப்பினும் பெட்பினு முவப்பினு மிரப்பினும் வகையினும் கூறும் இடனும் உண்டு; பகுதிக்கண்ணும் மற்றைய வழிக்கண்ணுங் கூறும் இடனும் உண்டு. மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க. (11) (இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமிடம் இவை எனல்) 103. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினு மன்புற்று நகினு மவட்பெற்று மலியினு மாற்றிடை யுறுதலு மவ்வினைக் கியல்பே. இதுவும் இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ - ள்.) பண்பிற் பெயர்ப்பினும் - தோழி தலைவியது இளமை முதலிய பண்புகூறி அவ்வேட்கையை மீட்பினும்: உதாரணம்: குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு 159மாரணங் கினளே. (ஐங்குறு. 256) இஃது இளையளெனப் 160பெயர்த்துழித் தலைவன் கூறியது. பரிவுற்று மெலியினும் - 161இருவகைக் குறியிடத்துந் தலை வியை எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப் படா நின்ற ஞான்றும் பலவாயவழி அவன் 162பரிந்த உள்ளத்த னாய் மெலியினும்: உதாரணம்: 163ஆனா நோயோ டழிபடர் கலங்கிக் காமம் கைமிகக் கையறு துயரங் காணவு நல்கா யாயிற் பாணர் பரிசில் பெற்ற விரியுளை நன்மான் கவிகுளம்பு பொருத கன்மிசைச் சிறுநெறி யிரவலர் மெலியா தேறும் பொறைய னுரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயி னகலிலைக் காந்த ளலங்குகுலைப் பாய்ந்து பறவை யிழைத்த பல்க ணிறாஅற் றேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய வினைமாண் பாவை யன்னோள் கொலைசூழ்ந் தனளா னோகோ யானே. (நற்றிணை. 185) இது, பகற்குறியிற் பரிவுற்றது. 164ஓதமு மொலியோ வின்றே யூதையுந் தாதுளர் கானற் றவ்வென் றன்றே மணன்மலி மூதூ ரகனெடுந் தெருவிற் கூகைச் சேவல் குராலோ டேறி யாரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறு மணங்குகால் கிளரு மயங்கிரு ணடுநாட் பாவை யன்ன பலராய் வனப்பிற் றடமென் பணைத்தோண் மடமிகு குறுமகள் சுணங்கணி வனமுலை முயங்க லுள்ளி மீன்கண் டுஞ்சும் பொழுதும் யான்கண் டுஞ்சின் யாதுகொ னிலையே. (நற்றிணை. 319) இஃது, இரவுக்குறியில் பரிவுற்றது. 165மழைவர வறியா மஞ்ஞை யாலு மடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாந்த னுள்ளுபு மறந்தறி யேமே (ஐங்குறு. 298) 166களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது (குறள். 1145) இன்னும் பரிவுற்று மெலியினும் என்றதனானே புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது கூறுவனவும், வறும் புனங் கண்டு கூறுவனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறுவனவும், தோழி இற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇக் கூறுவனவும், இரவுக் குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் 167பாங்கற்குக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதன்கண் அமைக்க. 168என்று மினிய ளாயினும் பிரித லென்று மின்னா ளன்றே நெஞ்சம் பனிமருந்து விளைக்கும் பரூஉக்க ணிளமுலைப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன்பெருமட மகளே. 169கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை யாடா வடகினுளுங் காணேன்போர் - வாடாக் கருங்கொல்வேன் மன்னர் கலம்புக்க கொல்லோ மருங்குல்கொம் பன்னாண் மயிர் (திணை: நூற். 4) 170பெறுவ தியையா தாயினு முறுவதொன் றுண்டுமன்வாழிய நெஞ்சே திண்டேர்க் கைவள ரோரி கானந் தீண்டி யெறிவளி கமழு நெறிபடு கூந்தன் மையீ ரோதி மாஅ யோள்வயி னின்றை யன்ன நட்பி னிந்நோ யிறுமுறை யெனவொன் றின்றி மறுமை யுலகத்து மன்னுதல் பெறினே. (குறுந். 199) 171நோயு மகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய்வனப் புற்ற தோளை நீயே யென்னுள் வருதியோ வெழினடைக் கொடிச்சி முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போலநின் னுருவுக்கண் ணெறிப்ப நோக்கலாற் றலனே போகிய நாகப் போக்கருங் கவலை சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தல் சேறா டிரும்புற நீறொடு சிவண வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்புழீஇக் கோணாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்கஞ் சிறுகுடி யானே (நற்றிணை. 82) 172மயில்கொன் மடவாள்கொன் மாநீர்த் திரையுட் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர் - குயில்பயிலுங் கன்னி யிளஞாழற் பூம்பொழி னோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு. (திணை. ஐம். 49) அன்பு உற்று நகினும் - 173தோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்: உதாரணம்: நயனின் மையிற் பயனிது வென்னாது பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகாஅ துரைமதி யுடையுமென் னுள்ளஞ் சாரற் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த மாயிதழ் மழைக்க ணுறாஅ நோக்க முற்றவென் பைத னெஞ்ச முய்யு மாறே. (நற்றிணை. 75) இஃது, அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது. அவட் பெற்று மலியினும் - தோழி உடம்பாடுபெற்று மனம் மகிழினும்: உதாரணம்: எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோ ளொண்ணுத லரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ 174மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே. (ஐங்குறு. 175) இஃது, அவட்பெற்று மலிந்து தலைவன் கூறியது. இன்னும், அவட் பெற்று மலியினும் என்றதற்கு இரட் டுற மொழிதல் என்றதனாற், தலைவியைப் பகற்குறியினும் இரவுக்குறியினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க. நன்றே செய்த வுதவி நன்றுதெரிந் தியாமெவன் செய்குவ நெஞ்சே காமர் மெல்லியற் கொடிச்சி காப்பப் பல்குர லேனற் பாத்தருங் கிளியே. (ஐங்குறு. 288) இது, பகற்குறிக்கட் கிளி புனத்தின்கட் படிகின்றதென்று தலைவியைக் காக்க 175ஏவியதனை அறிந்த தலைவன், அவளைப் பெற்றேமென மகிழ்ந்து கூறியது. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு மாணிழை கண்ணொவ்வே மென்று. (குறள். 1114) இஃது, இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது. 176கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி யரைநாள் யாமத்து விழுமழை கரந்து கார்விரை கமழுங் கூந்தற் றூவினை நுண்ணூ லாகம் பொருந்தினள் வெற்பி னிளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூ லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோ ளான்ற கற்பிற் சான்ற பெரிய வம்மா வரிவையோ வல்ல டெனாஅ தாஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅ னேர்மலர் நிறைசுனை யுறையுஞ் சூர்மகண் மாதோ வென்னுமென் னெஞ்சே. (அகம். 198) 177விண்ணகம் விளக்கல் வேண்டி நம்மிற் பிரியினும் பிரியுமோ பெருந்தோட் கொடிச்சி வானஞ் சூடிய திலகம் போல வோங்கிரு விசும்பினுங் காண்டு மீங்குங் காண்டு மிவள்சிறு நுதலே. இதுவுமது. ஆற்றிடை உறுதலும் - தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூறு தோன்றின இடத்தும்: என்றது, தலைவியுந் தோழியும் வருவழியருமை கூறிய வழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு. உதாரணம்: 178குருதி வேட்கை யுருகெழு வயமான் வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கு மரம்பயில் சோலை மலியப் பூழிய ருருவத் துருவி னாண்மேயலாரும் மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதன ளுறையு மம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்னநின் மாணல முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே. (நற்றிணை. 132) எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது. இரட்டுறமொழிதல் என்பதனான் 179ஆற்றிடை யுறுதற்கு வரைவிடை வைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்த முற்றுக் கூறுவனவுங் கொள்க. அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் 180பாங்கற்குக் கூறுவனவுமாம். 181ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையின மாரு முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. (குறுந். 235) 182கவலை கெண்டிய வகல்வாய்ச் சிறுகுழி கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் பொன்செய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோற் குறுந்தொடித் தந்தை யூரே. (குறுந். 233) அவ்வினைக்கு இயல்பே - அத் தோழியிற் கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம் என்றவாறு. (12) (உலகியலாற் புணர்க்கும் பாங்கனிமித்தம் இத்துணையவெனல்) 104. பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப. இது, மேற் பாங்கிநிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கனி மித்தங் கூறுகின்றார். 183வாயில் பெட்பினும் (102) என்ற பாங்கனிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. என்னை? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து தலைவற்கு உரைத்தலன்றிக், காளையரொடு கன்னியரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குந் துணையே யாகலின். (இ - ள்.) அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிரு பகுதியவாம் என்றவாறு. எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இரு வகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்த மாதலின் அவை அவன்கண்ண வெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டெனவே காரியமும் பன்னிரண்டாம்; அவை எண் வகை மணனுமாதலின் அவற்றைக் கைக்கிளை முதலிய ஏழு திணைக்கும் இன்னவாறு உரியவென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்கக் கூறுப. அவ்வாற்றானே பிரமம் பிசாபத்தியம் ஆரிடந் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனவும், ஆசுரம் இராக்கதம் பேய் எனவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமசரியங் காத்தானெனவும், இவன் இன்ன கோத்திரத்தான் ஆகலின் இவட்கு உரியனெனவும், இவளை இன்னவாற்றாற் கொடுக்கத் தகுமெனவும், இன்னோனை ஆசாரியனாகக்கொண்டு வேள்வி செய்து மற்றிக் கன்னியைக் கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்கு மென்பது. இனி, யாழோர் கூட்டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப்பொருள் வரையறைபற்றி முறை சிறந்து வருதலும் பெயர்கொளப் பெறாமையும் உடையவன்றே, அவ்வாறன்றி, ஈண்டுக் கொள்கின்ற யாழோர் கூட்டத்து ஐந்திணையுமாயின் அவ்வந் நிலத்தியல் பானும் 184பிறபாடை யொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டி யொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள் வழி அவ்வந் நிமித்தங்களும் வேறு வேறாகி வரும் பாங்கன் நிமித்தங்களை யுடைய எனப்பட்டன. இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட 185இருவகைக் கைகோளும் போலா இவை யென்பதூஉம், அவ்வந்நிலத்தின் மக்கட்குத் தக்க மன்றலும் வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உள ரென்பதூஉம், இவ்வாற்றான் எண் வகை மணனும் உடனோதவே இவையும் 186ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென்பதூஉங் கொள்க. இனி, அசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப்பர் நீயுஞ் சேறியென்று ஒருவன் பாங்குபடக் கூறலும், இவனை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடைநின்று கூறலும் உண்மையின், அதுவும் பாங்கனிமித்த முடைத்து. இராக்கதத்திற்கும் இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக்கேட்டு ஒருவன் வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்தமுடைத்து. பேய்க்கும் பொருந்துவது அறியாதான் இடைநின்று புணர்ப் பின் அதற்கும் அது நிமித்தமாம். இப் பன்னிரண்டுந் தொன்மையுந் தோலு (550-1) மென்ற வனப்பினுள் வருவன. (13) (பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழும் இன்னதிணைப் பாற்படுமெனல்) 105. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழனை எழுதிணையுள் இன்னதிணைப்பாற்படும் என்கின்றது. (இ - ள்.) முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே - இதற்கு 187முன் நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும்; பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே - பின்னர் நின்ற பிரமம் பிராசாபத்தியம் ஆரிடந் தெய்வ மென்னும் நான்கனையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும் என்றவாறு. மன்றல் எட்டு என்ற வரலாற்று முறையானே வாளாது பன்னிரண்டென்றார் என்பதே பற்றி, ஈண்டும் அம்முறை யானே இடவகை யான் முன்னைய மூன்றும் பின்னர் நான்கு மென்றார். எனவே, இனிக் கூறும் யாழோர் மேன (106) ஐந்தும் ஒன்றாக அவ்விரண்டற்கும் இடைய தெனப்படுவதாயிற்று. வில்லேற்றியாயினுங் கொல் லேறு தரீஇயாயினுங் கொள்வ லென்னும் உள்ளத்தனா வான் தலைவனே யாதலின், அதனை முற்படப்பிறந்த அன்பு முறைபற்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யென்றார். இராக்கதம் வலிதின் மணஞ் செய்தலாதலின் அதுவும் 188அப்பாற்படும்; பேயும் அப்பாற்படும். இவை முன்னைய மூன்றுங் கைக் கிளையாயவாறு. காமஞ்சாலா இளமையோள் வயிற் (50) கைக்கிளை சிறப்புடைத் தென்றற்குப் புல்லித் தோன்றும் (50) எனக் கூறி, இதனை வாளாது குறிப்பென்றார். 189ஆண்டுப் பிற்காலத்தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும் வழிக் கூறாது அகத்திணையியலுட் கூறினார். ஏறிய மடன் மா முதலிய வற்றைப் பெருந்திணைக் குறிப்பே (51) எனக் கூறி, ஈண்டுப் பெருந்திணை பெறுமே யென்றார், அவை சிறப்பில இவை சிறப்புடைய வென்றற்கு. இந் நான்கும் ஒருதலைக் காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனோ டொருத்தியை எதிர்நிறீஇ அவருடம்பாட்டோடு புணர்க்குங் கந்தருவமன்மையானும் அவற்றின் வேறாகிய பெருந்திணையாம். (14) (பன்னிரண்டனுள் இடையதாய ஐந்தும் இவையெனல்) 106. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே. இஃது, அப்பன்னிரண்டனுள் இடையதாய் ஒழிந்த ஐந்துங் கூறுகின்றது. (இ - ள்.) முதலொடு புணர்ந்த யாழோர் மேன - மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றொடு பொருந்தி வருங் கந்தருவமார்க்கம் ஐந்தும்; தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே - கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை ஐந்தெனப்படும் என்றவாறு. எனவே, 190முதற்கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றொடு பொருத்தமுடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத் தினார். இவை அப் பன்னிரண்டனுட் கூறாநின்ற ஐந்தும், முத லொடு புணர்ந்தவென்றே ஒழியாது பின்னும் யாழோர் மேன வென்றார், இவையுங் கந்தருவமே என்றற்கு. இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர் நின்று உடம்படுத்த லொப்புமை யுடைய. கெடலருஞ் சிறப்பெனவே முதல் கரு உரிப் பொருளானுங் களவென்னுங் கைகோளானும் பாங்கி புணர்த்தலின்மை யானும் இலக்கணங் குறைப்பட்டவேனுஞ், சுட்டியொருவர் பெயர் கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல்வாழ்க்கையும் பெற்றுவருதற் சிறப்புடைய இவையும், ஐந்நிலம் 191பெறுதலே யன்றி யென்றானாம். இது புலநெறியன்றி உலகியலாகலின், உலகியலாற் பாலை நிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளவாகலிற் பாலையுங் கூறினார். எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமுஞ் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின்றென்றார். (15) (தலைவிக்குரிய கிளவிகள் இவையெனல்) 107. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்துங் காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினுந் தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளா ணெதிரும் விருந்தின்கண்ணும் வாளா ணெதிரும் பிரிவி னானு நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய வெதிரும் வரைவுடன் படுதலு மாங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோண் மேன வென்மனார் புலவர். இது, மேற்றலைவற்குரிய கிளவி கூறிப், பாங்கனிமித்தம் அவன் கண் நிகழும் பகுதியுங் கூறி, அம்முறையானே தலைவிக் குரிய கிளவி கூறுகின்றது. (இ - ள்.) இருவகைக்குறி பிழைப்பு ஆகிய இடத்தும் - இரவுக் குறியும் பகற்குறியும் பிழைத்தவிடத்தும்: உதாரணம்: 192முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக் கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் வயவுப்பெடை யகவும் பானாட் கங்குன் மன்றம் போழு மினமணி நெடுந்தேர் வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே (குறுந். 301) 193கொன்னூர் துஞ்சினு மியாந்துஞ் சலமே யெம்மி லயல தேழி லும்பர் மயிலடி யிலைய மாக்குர னொச்சி யணிமிகு மென்கொம் பூழ்த்த மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே (குறுந். 138) 194ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன் மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக. (கலி. 46) 195இருள்வீ நெய்த லிதழகம் பொருந்திக் கழுதுகண் படுக்கும் பானாட் கங்கு லெம்மினு முயவுதி செந்தலை யன்றில் கானலஞ் சேர்ப்பன் போலநின் பூநெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே. இது, தன்னுட் 196கையாறெய்திடு கிளவி. புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோற் றுன்ப முழுவாய் துயிலப் பெறுதியா லின்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ (சிலம்பு:. கானம். 33) எனவும் இவை குறிபிழைத்துழித் தன்வயி னுரிமையும் அவன் வயிற் 197பரத்தைமையும் படக் கூறியனவாம். குறிபிழைத்தலாவது: புனலொலிப்படுத்தலும் புள்ளெடுப் புதலும் முதலியன. குறியெனக் குறித்தவழி, அவனானன்றி அவை வேறொரு காரணத்தான் நிகழ்ந்துழி, அதனைக் குறியென நினைந்துசென்று அவை அவன்குறியன்மையின் 198அகன்று மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க. காணா வகையிற் பொழுது நனி இகப்பினும் - குறிவழிச் செல்லுந் தலைவனை இற்றை ஞான்றிற் காண்டல் அரிதென்று கையறுவ தோராற்றாற் பொழுது 199சேட்கழியினும்: என்றது, தாய்துஞ்சாமை, ஊர்துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவுவெளிப்படுதல், நாய்துஞ்சாமை போல்வன வற்றான் தலைவன் குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம். உதாரணம்: 200இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர் விழவின் றாயினுந் துஞ்சா தாகு மல்ல லாவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள் பிணிகோ ளருஞ்சிறை யன்னை துஞ்சிற் றுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவ ரிலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழு மரவவாய் ஞமலி குரையாது மடியிற் பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பி னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே திங்கள்கல் சேர்பு கனையிருண் மடியி னில்லெலி வல்சி வல்லாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் வளைக்கட் சேவல் வாளாது மடியின் மனைச்செறி கோழி மாண்குர லியம்பு மெல்லா மடிந்த காலத் தொருநா ணில்லா நெஞ்சத் தவர்வா ரலரே யதனால், அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந் தாதி போகிய பாய்பரி நன்மா நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றாற் றோழிநங் களவே (அகம். 122) 201கருங்கால் வேங்கை வீயுகு துறுக லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை யெல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே (குறுந். 47) 202வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி லெழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தி லெழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழிவெண்டிங்காள். (யா.வி.ப. 330) தானகம் புகாஅன் பெயர்தலின்மையிற் காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் - அங்ஙனங் காணாவகையிற் பொழுது நனியிகந்து தலைவி குறிதப்பியக் காலுந் தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரா னென்பது தான் அறியுமாதலின், ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறிதற்கு ஒரு குறி செய்தன்றி வாளாது பெயரா னன்றே? அக் குறிகாணுங் காட்சி விருப்பினாற் றலைவி பிற்றை ஞான்று விடியலிற்சென்று ஆண்டைக் குறிகண்டு கலங்கி, அவனை எதிர்ப்படுதல் வேட்கையளாகிச் செய்வது அறியாது மயக்கத்தோடு அவள் கையறவு எய்தும்பொழுதின் கண்ணும்: தான் என்றது தலைவனை. இரவுக்குறியினை அகமென் றார், இரவுக்குறி எயிலகத்தது என்பதனான். குறியிற்சென்று நீங்குவ னெனவே காட்சி அவன்மேற்றன்றிக் குறிமேற்றாம். குறி: மோதிரம் மாலை முத்தம் முதலியன 203கோட்டினுங் கொடி யினும் இட்டு வைத்தனவாம்; இவை வருத்தத்திற்கு ஏதுவாம். இது விடியல் நிகழுமென்றற்குப் பொழுதென்றார்; எனவே காண்பன விடியலிற் காணுமென்றார். மயங்கும் என்றதனான் தோழியும் உடன்மயங்கும். அது, 204இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்றஃ திம்முகையிற் கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ - புக்குச் செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண் டறிந்ததொன் றன்ன துடைத்து. 205புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் 206பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும் - உண்டிக்காலத்துத் தலைவியில்லத் துத் தலைவன் புக்கெதிர்ப்பட்டவழி, நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக்கொள்ளும் பகுதிக்கண்ணும்: எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால் இஃதொன் றுடைத்தெனத் தேராது தாய் அவனை 207விருந்தேற்று நீக்கி நிறுத்தற் பகுதியுந் தழீஇயி னவாறாயிற்று. புகாக்காலமாதலிற் பகாவிருந்தென்றான். விடியற்கால மாயிற் றலைவன் புகானெனவும், புகாக்காலத்துப் புக்க 208ஞான்றாயின் அவர் விருந்தேற்றுக் கோடல் 209ஒருதலை யென்று புகும் என்றுங் கொள்க. தலைவி காட்சியாசையிற் கலங்கியதற்கேற்பத் தலைவர்க்குங் காட்சியாசை கூறிற்று. அது, 210சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நா ளன்னையும் யானு மிருந்தேமா வில்லிரே யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை யடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழா யுண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானுந் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னா யிவனொருவன் செய்ததுகா ணென்றேனா வன்னை யலறிப் படர்தரத் தன்னையா னுண்ணுநீர் விக்கினா னென்றேனா வன்னையுந் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன். (கலி. 51) இது, புகாக்காலத்துப் புக்கானை விருந்தேற்றுக் கொண்டமை இன்னொருகாலத்துத் தலைவி தோழிக்குக் கூறிய வாறு காண்க. 211அன்னைவாழ்க பலவே தெண்ணீ ரிருங்கடல் வேட்ட மெந்தை புக்கெனத் தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோ ரெல்லமை விருந்தின னென்ற மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே. இது தோழிகூற்றுமாம். ஒன்றிய தோழியென்றதனால் தோழிகூற்று வந்துழிக் காண்க. 212மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற் கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரயத்துச் செலீஇயரோ வன்னை யொருநா, ணகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே. (குறுந். 292) இது, புகாக்காலத்துத் தலைமைமிக்க தலைவன் புக்கதற்கு விருந்தேலாது செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது. வேளாண் எதிரும் விருந்தின்கண்ணும் - அங்ஙனம் விருந் தாதலேயன்றித் தலைவி 213வேளாண்மைசெய்ய எதிர்கொள்ளக் கருதுதல் காரணத்தால் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்: என்றது, தலைவி அவற்கு உபகாரஞ்செய்யக் கருதி அதனைக் குறிப்பாற் கூறத் தோழி அவனை விருந்தாய்த் தங்கென்னும். உதாரணம்: 214நாள்வலை முகந்த கோள்வல் பரதவர் நுணங்குமண லாங்க ணுணங்கப் பெய்ம்மார் பறிகொள் கொள்ளையர் மறுக வுக்க மீனார் குருகின் கானலம் பெருந்துறை யெல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர் தேர்பூட் டயர வேஎய் வார்கோற் செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்லினி மடந்தைநின் றோழியொடு மனையெனச் சொல்லிய வளவை தான்பெரிது கலிழ்ந்து தீங்கா யினளிவ ளாயிற் றாங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன் றாகலு மஞ்சுவ லதனாற் சேணின் வருநர் போலப் பேணா யிருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின் வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் துறையு மான்றின்று பொழுதே சுறவு மோத மல்க கடலின் மாறாயினவே யெல்லின்று தோன்றல் செல்லா தீமென வெமர்குறை கூறத் தங்கி யேமுற விளையரும் புரவியு மின்புற நீயு மில்லுறை நல்விருந் தயர்த லொல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே. (அகம். 300) இதனுள், தான் பெரிது கலிழ்ந்து தீங்காயினள்எனவே அக்குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி கூறினாள். வாளாண் எதிரும் பிரிவினானும் - வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றியவழியும்: ஆண்டுத் தலைவிமேற்றுக் கிளவி. மூவகைப் பிரிவினும் பகை வயிற்பிரிவை 215விதந்தோதி ஓதலும் தூதும் வரைவிடை வைத்துப் பிரிவிற்குச் சிறந்தில என்றாராம். அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள் அவை நிகழப்பெறா; இதுவாயின் வரைவிடை வைத்துப் பிரியவும் பெறும். அரசர்க்கு இன்றியமை யாத பிரிவாகலின் என்பது கருத்து. இப் பிரிவு அரசர்க்கு உரித் தென்பது தானே சேறலும் (தொல். பொ. 27) என்னும் சூத்திரத் தாற் பெறுதும். வாளாண்மைக்கு ஏற்ற பிரிவெனவே, முடியுடை 216வேந்தரேவலிற் பிரியும் அரசர்கண்ணது இப்பிரிவென்க. சிறுபான்மை அவ்வேந்தற்கும் உரித்து, வெளிப்படை தானே (141) என்பதனுள் 217இப்பிரிவில்லை என்பராதலின். அது, பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதழ்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி. (கலி. 31) இதனுள் - 218பனியெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான் வாளாணெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு. இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது. நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும் - தலைவிக்கு இன்றியமையாத நாணுத்தான் அவள் நெஞ்சினை அலைத்த லின் அவள் அந் நாணினைக் கைவிடுத்தற் கண்ணும்; அஃது உடன் போக்கினும் வரைவு கடாவும் வழியும் வேட்கைமீ தூர்ந்து நாண்துறந்துரைத்தல் போல்வன: 219அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கொம்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே. (குறுந். 149) இஃது, உடன்போக்கு வலித்தமையின் நாண்துறந்து கூறியது. வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் - வரைதல் விருப்பினான் தோழி தலைவற்கு வரைவு கடாய்க் கூறிய புரைதீர் கிளவியைத் தலைவி 220பொருந்தி நின்றே இயற்பழித்தற்கு மறுத்தாள்போல் நிற்கும் எதிர் மறையையும்: புரைதீர் கிளவி தலைவனுயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்குங் கிளவி. அது, பாடுகம் வாவாழி தோழி என்னுங் குறிஞ்சிக் (41) கலியுள், 221இலங்கு மருவித் தேலங்கு மருவித்தே வானி னிலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாவ அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதாள், 222பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ வஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றிற் றிங்களுட் டீத்தோன்றி யற்று எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர் மறுத்தவாறு காண்க. 223அருவி வேங்கைப் பெருவரை நாடற் கியானெவன் செய்கோ வென்றி யானது நகையென வுணரே னாயி னென்னா குவைகொ னன்னுத னீயே. (குறுந். 96) இதுவும் இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. வரைவு உடன்படுதலும் - தலைவற்குத் தலைவி தமர் வரை வுடம்பட்டதனைத் தலைவி விரும்புதலையும்: உதாரணம்: 224இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த ளினவண் டிமிரு மலையக நாடனும் வந்தான்மற் றன்னை யலையு மலைபோயிற் றின்று. (ஐந். எழு. 3) 225ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் தமிய ருறங்குங் கெளவை யின்றா யினியது கேட்டின் புறுகவிவ் வூரே முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉங் குட்டுவன் மரந்தை யன்னவெங் குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே. (குறுந். 34) தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகா தென ஆற்றுவிக்குஞ் - சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து இருப்பார் உறக்கம் காரணமாக எழுந்த கெளவை கேளாது வரைந்தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம். ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ - அவன் வரைவு வேண்டினவிடத்து அவ்வரைவு 226புறத்ததாகிய வழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றியது மறுத்தலோடே முற்கூறியவற்றைத் தொகுத்து. அதன்புறம் எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவாயிற்று. தலைவி தன் குடிப்பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறுமென்றற்குப், புரைபட வந்த மறுத்தல் என்றார். 227வாரி நெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த வோரிப் புதல்வ னழுதன னென்பவோ புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால் வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ தோழி யவனுழைச் சென்று; சென்றியா னறிவேன் கூறுக மற்றினி; சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா நினக்கொரூஉ மற்றென் றகலுகலு நீடின்று நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச் சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு; தருமணற் றாழப் பெய் தில்பூவ லூட்டி யெருமைப் பெடையோ டெமரீங் கயரும் பெருமண மெல்லாந் தனித்தே யொழிய வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த திருநுத லாயத்தார் தம்முட் புணர்ந்த வொருமணந் தானறியு மாயி னெனைத்துந் தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த விரிநீ ருடுக்கை யுலகம் பெறினு மருநெறி யாயர் மகளிர்க் கிருமணங் கூடுத லில்லியல் பன்றே (கலி. 114) மள்ளர் குழீஇய விழவி னானும் (குறுந். 31) இச்சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் கிழவோண் மேன என்பதனோடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒரு பெயர் வெளிப்படுத்து முடிக்க. புல்லிய எதிரையும் உடன்படு தலையும் மறுத்தலுடன் 228தொகுத்து. கிழவோள் மேன என்மனார் புலவர் - தலைவியிடத்தன கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு. (16) (காமப்புணர்ச்சிக்கண் நாணுமடனும் குறிப்பினுமிடத்தினும் வருமெனல்) 108. காமத் திணையிற் கண்ணின்று வரூஉ நாணு மடனும் பெண்மைய வாதலிற் குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா வவள்வயி னான. இஃது, உள்ளப்புணர்ச்சிக்கு உரியவாறு மெய்யுறு புணர்ச்சிக் கண்ணும் நிகழுமென்ற நாணும் மடனுங் குறிப்பினும் இடத்தினும் வருமெனக் கூறுதலின், அச்சமு நாணும் (தொல். பொ. 99) என்பதற்குப் புறனடையாயிற்று. இதனை ஈண்டுக் கூறினான், 229இடத்தின்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை 230திரிந்துவருமென்ப தூஉம், 231அது கூற்றின் கண் வருமென்ப தூஉங் கூற்றுநிகழ்கின்ற இவ்விடத்தே கூறவேண்டுதலின். எனவே, இது முதலிய சூத்திரம் மூன்றும் முன்னர்த் தலைவிக்குக் கூற்று நிகழு மென்றற்குக், கூற்றுநிகழுங்கால் நாணும் மடனும் நீங்கக் கூறும் என்று அக்கூற்றிற்கு இலக்கணங் கூறினவேயாயிற்று. (இ - ள்.) அவள்வயின் ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின் - தலைவியிடத்து உளவாகிய நாணும் மடனும் பெண் மைப் பருவத்தே தோன்றுதலையுடையவாதலின்; காமத் திணை யிற் கண்ணின்று குறிப்பினும் வரூஉம் - அப்பருவத்தே தோன்றிய காமவொழுக்கங் காரணமாக அவை கண்ணின்கணின்று குறிப்பி னும் வரும்; வேட்கை நெறிப்பட இடத்தினும் வரூஉம் - அன்றி வேட்கை தன்றன்மை திரியாது வழிப்படுதலானே கரும நிகழ்ச்சிக் கண்ணும் வரும்; அல்லது வாரா - அவ்வீரிடத்து மல்லது அவை வாரா என்றவாறு. இயற்கைப் புணர்ச்சிக்கண் உரியவாகக் கூறும் பன்னிரண்டு மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நாணும் மடனும் நிகழ்ந்த வாறுணர்க. ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப என்னுஞ் செய்யுளியற் (510) சூத்திரத்தான் இடமென்றதனைக் கரும நிகழ்ச்சி என்றுணர்க: அஃதாவது இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலுந் - தோழியிற் புணர்வுமாம். இவற்றின்கண்ணும் நாணும் மடனும் நிகழுமென்றான். இனித் தோழியிற் புணர்வின்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவருமென மேலிற் சூத்திரத்தாற் கூறுகின்றான். (17) (கரும நிகழ்ச்சிக்கண் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்து வருமெனல்) 109. காமஞ் சொல்லா நாட்ட மின்மையி னேமுற விரண்டு முளவென மொழிப. 232இது கரும நிகழ்ச்சிக்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்து வருமென்கின்றது. (இ - ள்.) சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின் கணின்மை யின்; இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப - முற்கூறிய நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் என்றவாறு. என்றது, தோழியிற் கூட்டத்துத் தலைவி கூற்று நிகழ்த்துவ ளென்பதூஉம், நிகழுங்கால் நாணும் மடனும் பெரும்பான்மை கெட்டு அக்கூற்று நிகழுமென்பதூஉம், அங்ஙனங் கெடுதலை யும் முந்துநூற்கண் ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று. 233தேரே முற்றன்று நின்னினும் பெரிதே (கலி. 74) 234பேரேமுற் றாப்போல முன்னின்று விலக்குவாய் (கலி.113) என்றாற் போல 235மயக்கம் உணர்த்திற்று. இனி நாணும் மடனுங்கெட்ட கூற்றுத் தோழியை நோக்கிக் கூறுமென மேற்கூறுகின்றான். (18) (நாணு மடணும் பெரும்பாலும் நிகழாத கூற்றுத் தலைவி தோழிக்குக் கூறுமெனல்) 110. சொல்லெதிர் மொழித லருமைத் தாகலி னல்ல கூற்றுமொழி யவள்வயி னான. இது, நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது. (இ - ள்.) எதிர் சொல் - அங்ஙனங் நாணும் மடனும் நீங்கிய சொல்லை; அவள் வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின் - தோழி யிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்ல வாகையினானே; கூற்றுமொழி ஆன - குறிப்பானன்றிக் கூற்றாற் கூறும் மொழி தலைவிக்குப் பொருந்தின எ-று. எதிர்தல் - தன்றன்மை மாறுபடுதல். ஒன்றிய தோழி யொடு (41) என அகத்திணையிற் கூறுதலானுந் தாயத்தி னடையா (221) எனப் பொருளியலிற் கூறுதலானும், அவள் வயின் நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்துமென்றான்; அவை முற்காட்டிய உதாரணங்களுள், கூடுதல் வேட்கையாற் குறி பார்த்து (கலி. 46) எ - ம். வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு (கலி. 51) எ - ம், காம நெரிதரக் கைந்நில் லாதே (குறுந். 149) எ - ம் கூறியவாற்றானும், மேற்கூறுகின்ற உதாரணங்களானும், நாணும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாறுணர்க. சூத்திரத்துட்பொருளன்றியும்....gLnk’(658)என்பதனான். இவ்விலக்கணம் பெறுதற்கு, இம்மூன்று சூத்திரத்திற்கும் மாட்டுறுப்புப்படப் பொருள் கூறினாம். இனிக் கூற்று நிகழுங்கால், நாணும் மடனும் பெண்மைய வாதலிற், குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள் 236கூறிற், காட்டிய உதாரணங்கட்கு மாறுபாடாகலானுஞ், சான்றோர் செய்யுட்களெல்லாங் குறிப்பும் இடனுமன்றிப் பெரும்பான்மை கூற்றாய் வருத லானும், ஆசிரியர் தலைவன் கூற்றுந் தலைவி கூற்றுந் தோழி கூற்றுஞ் செவிலி கூற்றுமெனக் கூற்றுஞ் சேர்த்து நூல் bசய்தலானும்mதுbபாருளன்மையுணர்க. (19) (இதுவுந் தலைவிகூற்று நிகழுமாறு கூறல்) 111. மறைந்தவற் காண்ட றற்காட் டுறுத னிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தன் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினு நாணுமிக வரினு மீட்டுப்பிரி விரங்கினு மருமைசெய் தயர்ப்பினும் வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினு நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கருமை வாயில் கூறினுங் கூறிய வாயில் கொள்ளாக் காலையு மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலு முயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல வேற்றுவரைவு வரினது மாற்றதற் கண்ணு நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி யொருமைக் கேண்மையி னுறகுறை தெளிந்தோ ளருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற வியல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்ணுங் கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணுங் குறியி னொப்புமை மருடற் கண்ணும் வரைவுதலை வரினுங் களவறி வுறினுந் தமர்தற் காத்த காரண மருங்கினுந் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன்பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும் பொழுது மாறும் புரைவ தன்மையி னழிவுதலை வந்த சிந்தைக் கண்ணுங் காமஞ் சிறப்பினு மவனளி சிறப்பினு மேமஞ் சான்ற வுவகைக் கண்ணுந் தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையு மன்னவு முளவே யோரிடத் தான. இதனுள் தலைவிகூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றான். சில கூற்றுகளுள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் பட நிகழ்த்தவும் பெறுமென்கின்றான். அவன்வயின் எனவே தன்னென்றது தலைவியையாம்; உரிமை - களவிலே கற்புக்கடம் பூண்டொழுகல்; எனவே, 237புலவியுள்ளத் தாளாகவும் பெறுங் களவினென்பது கருதிப் பரத்தையுமுள என்றான்; ஊடலும் உணர்த்தலும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப் போலி, பரத்தை - அயன்மை. அவன்கட் பரத்தைமையின்றேனும் காதன் மிகுதியான் அங்ஙனங் கருதுதல் பெண்தன்மை. உம்மை எதிர் மறையாகலின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை. (இ - ள்.) மறைந்து அவற் காண்டல் - தலைவன் புணர்ந்து நீங்குங்கால் தன் காதன்மிகுதியான் அவன் மறையுந்துணையும் நோக்கி நின்று அங்ஙனம் மறைந்தவனைக் காண்டற்கண்ணுந் தோழிக்குக் கூற்றாற் கூறுதலுள: உதாரணம்: 238கழிப்பூக் குற்றுங் கான லல்கியும் வண்டற் பாவை வரிமண லயர்ந்து மின்புறப் புணர்ந்து மிளிவரப் பணிந்துந் தன்றுயர் வெளிப்படத் தவறி நந்துய ரறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னோ மெல்லம் புலம்பன் செல்வோன் பெயர்புறத் திரங்கிமுன் னின்று தகைஇய சென்றவென் னிறையி னெஞ்ச மெய்தின்று கொல்லோ தானே யெய்தியுங் காமஞ் செப்ப நாணின்று கொல்லோ வுதுவ காணவ ரூர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானு மெக்கர்த் தாழை மடல்வயி னானு மாய்கொடிப் பாசடும் பரிய வூர்பிழிபு சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல நிவந்துபடு தோற்றமொ டிகந்துமா யும்மே. (அகம். 330) 239அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு என்பது தன்வயி னுரிமை; இகந்து மாயும் என்பது அவன்வயிற் பரத்தைமை. தற்காட்டுறுதல் - தன்னை அவன் காணாவகை நாணான் மறைந்து ஒழுகினுந் தன் பொலிவழிவினை அவற்குக் காட்டல் வேண்டுதற் கண்ணும்: அது, 240இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே. (குறுந். 93) இன்னளாயினள் என்றது தற்காட்டுறுதல், 241செப்புநர்ப் பெறினே யென்பதனாற் களவாயிற்று; கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின், இதற்கு இரண்டும் உள. நிறைந்த காதலிற் சொல் எதிர்மழுங்கல் - தலைவி காதன் மிகுதியான் தலைவன் பரத்தைமையை எதிர்கூற நினைந்து கூற்றெய்தாது 242குறைபடுதற் கண்ணும். உதாரணம்: 243பிறைவனப் பிழந்த நுதலும் யாழநி னிறைவரை நில்லா வளையு மறையா தூரலர் தூற்றுங் கெளவையு முள்ளி நாணிட் டுரையவற் குரையா மாயினு மிரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு கானலெய் தாது கழனி யொழிந்த கொடுவாய்ப் பேடைக்கு முடமுதிர் நாரை கடன்மீ னொய்யு மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப்பவுங் கரப்பவுங் கைம்மிக் குரைத்த தோழி யுண்க ணீரே. (நற்றிணை. 263) இது யாம் உரையாமாயினுங் கண் உரைத்தன என்றலின் இரண்டுங் கூறினாள். வழிபாடு மறுத்தல் - வருத்தமிகுதியால் தலைவனை வழிபடுதலை மறுத்துக் கூறுமிடத்தும்: உதாரணம்: 244என்ன ராயினு மினிநிலை வொழிக வன்ன வாக வுரைய றோழியா மின்ன மாகநத் துறந்தோர் நட்பெவன் மரனா ருடுக்கை மலையுறை குறவ ரறியா தறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுற் றார முருக்கிப் பையென மரம்வறி தாகச் சோர்ந்துக் காஅங் கறிவு முள்ளமு மவர்வயிற் சென்ற வறிதா லிகுளையென் யாக்கை யினியவர் வரினு நோய்மருந் தல்லர் வாரா தவண ராகுக காதல ரிவணங் காமம் படர்பட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே. (நற்றிணை. 64) 245உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தின் வான்றோய் வற்றே காமஞ் சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே. (குறுந். 102) 246நீயுடம் படுதலின் யான்றர வந்து குறிநின் றனனே குன்ற நாட னின்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலு மோய்வன வொடுங்கி தீயுறு தளிரி னடுங்கி யாவது மில்லையான் செயற்குரி யதுவே. (குறுந். 383) இத்தோழி கூற்றே; சென்றைக்க என்றதனால் தலைவி மறுத்தமை பெற்றாம். மறுத்து எதிர்கோடல் - அங்ஙனம் வழிபாடு மறுத்த தலை வியே அவனை ஏற்றுக்கோடலை விரும்பியக்கண்ணும்: அது, 247கெளவை யஞ்சிற் காம மெய்க்கு மெள்ளற விடினே யுள்ளது நாணே பெருங்களிறு வாங்க முறிந்து நிலம்படாஅ நாளுடைய யொசிய லற்றே கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. (குறுந். 112) இது, நாணேயுள்ளது கற்புப்போம் என்றலின் மறுத் தெதிர் கோடலாம். பழி தீர்முறுவல் சிறிதே தோற்றல் - தன் கற்பிற்குவரும் பழி தீர்ந்த தன்மையான் தன்கண் தோன்றிய மகிழ்ச்சியைச் சிறிதே தோழிக்குத் தோற்றுவித்தற்கண்ணும்: தலைவனால் தோன்றிய நோயும் பசலையும் 248முருகனால் தீர்ந்த தென்று அவன் கேட்பிற் கற்பிற்குப் பழியாமாதலிற் பழி யென்றார். உதாரணம்: 249அணங்குடை நெடுவரை யுச்சியி னிழிதருங் கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்ல லிதுவென வறியா மறுவரற் பொழுதிற் படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவ ளிவளென முதுவாய்ப் பெண்டி ரதுவாய் கூறக் களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா ளார நாற வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப வின்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனோ யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலந்தமை கண்டே. (அகம். 22) இதனுட் பழிதீர அவன் வந்து உயிர்தளிர்ப்ப முயங்கி நக்க நிலையைத் தோழிக்குத் தலைவி கூறியவாறு காண்க: கைப்பட்டுக் கலங்கினும் - தலைவி குறிப்பினன்றி எதிர்ப் பட்ட தலைவன் ஒருவழி அவளை அகப்படுத்தவழிக் 250காட்சி விருப்பினளாயினும் அப்பொழுது அவள் கலங்கினும்: எனவே, காட்சி விருப்பினை மீதூர்ந்த கலக்கம் புலப் பட்டது தலைவன்வயிற் பரத்தைமை கருதி. 251கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாம்பூம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை யரி என்னுங் குறிஞ்சிக் (54) கலியுள் அதனா லல்லல் களைந்தனென் றோழி எனக் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைக் களைந்த னெ னெனத் தலைவி யுரையெனத் தோழிக்கு உரைத்தற்கட் கூறியவாறு காண்க. இவ்வுதாரணம் ஆண்டுக் காட்டுதும். உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த (அகம். 230) என்னும் பாட்டுத் தலைவன் இதனைக் கூறியது. நாணு மிகவரினும் - தலைவனை எதிர்ப்பட்ட தலைவி தன் பெருநாணுடைமை கூறித் தலைவனை ஏற்றுக்கொள்ளாது நிற்பினும்: உதாரணம்: 252விளையா டாயமொடு வெண்மண லழுவத்து மறந்தனந் துறந்த காழ்முளை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்த்து நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது சிறப்பே யம்ம நாணுது நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கி னிறைபடு நீழல் பிறவுமா ருளவே. (நற்றிணை. 172) இதனுள் அம்ம நாணுதும் எனப் புதிது வந்ததோர் நாணு மிகுதி தோன்ற மறுத்துரைத்தலின், தன்வயினுரிமையும் அவன் வயிற் பரத்தைமையுங் கூறினாள். இட்டுப் பிரிவு இரங்கினும் - சேணிடையின்றி 253இட்டி தாகப் பிரிந்துழித் தலைவி இரங்கினும்: 254கற்பினுட் சொல்லாத பிரிதலையும் இட்டுப் பிரிவென்ப, களவு போல நிகழ்பொருள் உணர்த்திப் பிரிதலருமை யின். உதாரணம்: 255-256யானே யீண்டை யேனே யென்னலனே யானா நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகிமன்றத் தஃதே. (குறுந். 97) தம்மூரான் என்றலின் ஓதன் முதலிய பிரிவின்றி அணித் தாய வழிப் பிரிந்தானென அவ்விரண்டும் பயப்பக் கூறியவாறு காண்க. சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் பனிபுலந் துறையும் பல்பூங் கானல் விரிநீர்ச் சேர்ப்ப னீப்பி னொருநம் மின்னுயி ரல்லது பிறிதொன் றெவனோ தோழி நாமிழப் பதுவே. (குறுந். 334) இதுவும் அது. 257இவை களவினுட் புலவிப் போலியாம். அருமை செய்து அயர்ப்பினும் - முற்கூறிய இட்டுப் பிரிவே யன்றித் தலைவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு 258தம்மை மறப்பினும்: அதுதண்டாதிரத்தலை (102) முனிந்த மற்றையவழித் தலவன் தானும் அரியனாய்மறந்தான் போன்று காட்டினும் அவ்விரண்டுங் கூறுதலாம். உதாரணம்: 259தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாமறிந் துணர்க வென்ப மாதோ வழுவப் பிண்ட நாப்ப ணேமுற் றிருவெதி ரீன்ற வெற்றிலைக் கொழுமுளை சூன்முதிர் மடப்பிணை நாண்மேய லாரு மலைகெழு நாடன் கேண்மை பலவின் மாச்சினை துறந்த கோண்முதிர் பெரும்பழம் விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் சேணுஞ் சென்றுக் கன்றே யறியா தேக லடுக்கத் திருண்முகை யிருந்த குறிஞ்சி நல்லூர்ப் பெண்டிரு மின்னு மோவா ரென்றிறத் தலரே. (நற்றிணை. 116) தீங்கு செய்தாரையும் பொறுக்கிற்பார் நம்மைத் துறத்தலின் நாம் அரியேமாகியது பற்றித் தாமும்அரியராயினார் போலுமென அவ்விரண்டுங் கூறினாள். 260நெய்தற் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலிற் கண்டநாட் போலானாற் செய்த குறியும்பொய் யாயினவாற் சேயிழா யையகொ லான்றார் தொடர்பு. (திணை. ஐம். 41) இதுவுமது. வந்தவழி எள்ளினும் - பெரிதாகிய இடையீட்டினுள் அரி தாகத் தலைவன் வந்தஞான்றும் பெறாதஞான்றைத் துன்ப மிகுதியாற் பெற்றதனையுங் கனவுபோன்றுகொண்டு இகழ்ந் திருப்பினும்: உதாரணம்: 261மானடி யன்ன கவட்டிலை யடும்பின் றார்மணி யன்ன வெண்பூக் கொழுதி யொண்டொடி மகளிர் வண்ட லயரும் புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை யுள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே (குறுந். 243) வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை யாரஞ ருற்றனகண். (குறள். 1179) இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாற் புணர்வு. (குறள். 1152) வரிற்றுஞ்சா எனவும் புன்கணுடைத்து எனவும் வரவும் பிரிவும் அஞ்சி இரண்டும் நிகழக்கூறினாள். 262இது முன்னிலைப் புறமொழி. 263கண்டிரண் முத்தம் பயக்கு மிருமுந்நீர்ப் பண்டங்கொ ணாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே னின்ற வுணர்விலா தேன். (ஐந். எழு. 61) இது, முன்பு இன்பந் தருவனென உணர்ந்து நின்ற உணர்வு ஈண்டில்லாத யான் புணர்ச்சி வருத்தந்தருமென்று தெளிந்தே னென்றாளென்க. விட்டு உயிர்த்து அழுங்கினும் - கரந்த மறையினைத் தலைவி தமர்க்கு - உரைத்தற்குத் தோழிக்கு வாய்விட்டுக் கூறி, அக்கூறிய தனையே தமர்கேட்பக் கூறாது தவிரினும்: உயிர்த்தல் - கூர்தல். உதாரணம்: 264வலந்த வள்ளி மரனோங்கு சாரற் கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டி குறமக ளின்னா விசைய பூசல் பயிற்றலி னேக லடுக்கத் திருளளைச் சிலம்பி னாகொள் வயப்புலி யாகுமஃ தெனத்த மலைகெழு சீறூர் புலம்பக் கல்லெனச் சிலையுடை யிடத்தர் போதரு நாட னெஞ்சமர் வியன்மார் புடைத்தென வன்னைக் கறிவிப் பேங்கோ லறியலங் கொல்லென விருபாற் பட்ட சூழ்ச்சி யொருபாற் சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை யின்னுயிர் கழிவ தாயினு நின்மக ளாய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே. (அகம். 52) இது - 265சிறைப்புறம். நொந்து தெளிவு ஒழிப்பினும் - வரைவு நீட்டித்துத் தலை வன் 266சூளுற்றவழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கினும்: உதாரணம்: 267மன்றத் துறுகற் கருங்கண் முகவுகளுங் குன்றக நாடன் றெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி யொன்றுமற் றொன்று மனைத்து (ஐந். எழு.9) எம்மணங்கினவே. (குறுந். 53) என்பது தலைவி கூறக் கேட்டுத் தோழி கூறியது. அதுவும் 268இதனாற் கொள்க. அச்சம் நீடினும் - தெய்வம் அச் சூளுறவிற்கு அவனை வருத்து மென்றுந் தந்தை தன்னையர் அறிகின்றாரோ வென்றுங் கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கு உண்மை கூறுதற்கும் அஞ்சிய அச்சம் நீட்டிப்பினும்: உதாரணம்: 269மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங் கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே (குறுந். 87) 270மென்றினை மேய்ந்த சிறுகட் பன்றி வன்க லடுக்கத்துத் துஞ்சு நாட னெந்தை யறித லஞ்சிக்கொ லதுவே தெய்ய வாரா மையே (ஐங்குறு. 261) 271புனையிழை நோக்கியும் புனலாடப் புறஞ்சூழ்ந்து மணிவரி தைஇயுநம் மில்வந்து வணங்கியு நினையுபு வருந்துமிந் நெடுந்தகை திறத்திவ்வூ ரினையளென் றெடுத்தோதற் கனையையோ நீயென வினவுதி யாயின் விளங்கிழாய் கேளினி; செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கெளவைநோ யுற்றவர் காணாது கடுத்தசொல் லொவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை: ஒடுங்கியாம் புகலொல்லேம் பெயர்தர வவன்கண்டு நெடுங்கய மலர்வாங்கி நெறித்துத்தந் தனைத்தற்கோ விடுந்தவர் விரகின்றி யெடுத்தசொற் பொய்யாகக் கடிந்தது மிலையாய்நீ கழறிய வந்ததை; வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித் தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய் தனைத்தற்கோ புரிபுநம் மாயத்தார் பொய்யாக வெடுத்தசொ லுரிதென வுணராய்நீ யுலமந்தாய் போன்றதை; எனவாங்கு, அரிதினி யாயிழா யதுதேற்றல் புரிபொருங் கன்றுநம் வதுவையு ணமர்செய்வ தின்றீங்கே தானயந் திருந்ததிவ் வூராயி னெவன்கொலோ நாஞ்செயற் பால தினி (கலி. 76) பிரிந்தவழிக் கலங்கினும் - களவு அலராகாமல் யான் பிரிந் துழித் தலைவி கலங்குவளென்று அஞ்சித் தலைவன் பிரியாது உறைதலிற் பிரிவைக் கருதப்பெறாத தலைவி அவ்வாறன்றிப் பிரிந்துழிக் கலங்கினும்: உதாரணம்: 272மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக் கலங்குகடற் றுவலை யாழி நனைப்ப வினிச்சென் றனனேயிடுமணற் சேர்ப்பன் யாங்கறிந் தன்றுகொ றோழியென் றேங்கமழ் திருநுத லூர்தரும் பசப்பே (குறுந். 205) 273குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறூஉங் கவின்பெறு காலை யெல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்ல லுறீஇயர் சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவா யொருங்குவர னசையொடு வருந்துங் கொல்லோ வருளா னாதலி னழிந்திவண் வந்து தொன்னல னிழந்தவென் பொன்னிற நோக்கி யேதி லாட்டி யிவளெனப் போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே (நற்றிணை. 56) 274வருவது கொல்லோ தானே வாரா தவணுறை மேவலி னமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை யிருவி யிருந்த குருவி வெருவுறப் பந்தாடு மகளிரிற் படர்தருங் குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே (ஐங்குறு. 295) 275பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை வரிப்புற வார்மணன்மே லேறித் - தெரிப்புறத் தாழ்கடற் றண்சேர்ப்பன் றாரகல நல்குமே லாழியாற் காணாமோ யாம் (ஐந்: ஐம். 43) பெற்றவழி மலியினும் - தலைவி இடையீடின்றி தலை வனை எதிர்ப்படப் பெற்றஞான்று 276புதுவது மலியினும்: வரைவு நீட்டித்த காலத்துப் பெற்றவழி மலிவை வெளிப் படக் கூறுதலும், வரைவு நீட்டியாதவழிப் பெற்றவழி மலிவை வெளிப்படுத்தாமையும் உணர்க. உதாரணம்: 277இன்னிசை யுருமொடு கனைதுளி தலைஇ மன்னுயிர் மடிந்த பானாட் கங்குற் காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரியதட் படுத்த சேக்கைத் தெரியிழைத் தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை கூதிரிற் செறியுங் குன்ற நாட வனைந்துவர லிளமுலை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே நும்மில் புலம்பினு முள்ளுதொறு நலியுந் தண்வர லசைஇய பண்பில் வாடை பதம்பெறு கல்லா திடம்பார்த்து நீடிய மலைமர மொசிய வொற்றிப் பலர்மடி கங்கு னெடும்புற நிலையே. (அகம். 58) முயக்கம் இனிதென மகிழ்ந்து கூறுவாள் நும்மில் புலம்பால் வாடைக்கு வருந்தினேமென்றலின் இரண்டுங் கூறினாள். 278அம்ம வாழி தோழி நலமிக நல்ல வாயின வளியமென் றோள்கண் மல்ல லிருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன் வந்த மாறே. (ஐங்குறு. 120) 279அம்ம வாழி தோழி பன்மா ணுண்மண லடைகரை நம்மோ டாடிய தண்ணந் துறைவன் மறைஇ யன்னை யருங்கடி வந்துநின் றோனே (ஐங்குறு. 115) இவை, தோழிக்குக்கூறியன. பெற்றவழி மலியினும் எனப் பெறுபொருள் இன்னதெனவும் இன்னார்க்குக் கூறவதெனவும் வரையாது கூறவே, 280பிறர் பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவனவுங் கொள்க. அம்ம வாழி தோழி யன்னைக் குயர்நிலை யுலகமுஞ் சிறிதா லவர்மலை மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு காலை வந்த காந்தண் முழுமுதன் மெல்லிலை குழைய முயங்கலு மில்லுய்ந்து நடுதலுங் கடியா தோட்கே. (குறுந். 361) இது, பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இரண்டுங் கூறினாள். வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் - தலைவன் இடை விடாது வருதற்கு, ஆண்டு நிகழும் ஏதம் பலவாற்றானும் உளதாம் அருமையை, வாயிலாகிய தோழி கூறினுந், தலைவிக்குக் கூற்று நிகழ்தலுள; அது, 281நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று நனந்தலை யுலகமுந் துஞ்சு மோர்யான் மன்ற துஞ்சா தேனே. (குறுந். 6) இதனுட் பொழுது சென்றதில்லையென்றும், மாக்கள் இன்னுந் துயின்றிலரென்றும் அருமையை வாயில் கூறியவழித், தலைவி யாமமும் நள்ளென்றும் மாக்களுந் துயின்றும் வந்திலரென வருந்திக் கூறியவாறு காண்க. நாம் ஏவிய தொழில் ஏற்றுக்கொண்டு வருகின்றவன், ஒரு காரணத்தானன்றி வாராதொழியுமோ வென்று தலைவி 282கொள்ளுமாறு கூறுமென்றற்குத் தொழிலென்றார். கூறிய வாயில் கொள்ளாக் காலையும் - தலைவற்குக் குறைநேர்ந்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறியவழியும் பிறவழி யுந், தோழி கூற்றினைத் தலைவி ஏற்றுக்கொள்ளாத காலத்துக் கண்ணும்: வாயில், தோழி. உதாரணம்: 283தெருவின்கட், காரண மின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரண வாசிப் பதம்பெயர்த லேதில நீநின்மேற் கொள்வ தெவன் (கலி. 60) எனத் தோழிகூற்றினை மறுத்தது. 284தோளே தொடிநெகிழ்ந் தனவே கண்ணே வாளீர் வடியின் வடிவிழந் தனவே நுதலும் பசலை பாயின்று திதலைச் சில்பொறி யணிந்த பல்கா ழல்குன் மணியே ரைம்பான் மாயோட் கென்று வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற நாமுறு துயரஞ் செய்யல ரென்னுங் காமுறு தோழி காதலங் கிளவி யிரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த தோய்மடற் சின்னீர்போல நோய்மலி நெஞ்சிற் கேமமாஞ் சிறிதே. (நற்றிணை. 133) இது, தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினாள். மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் - காப்பு மிகுதிக்கண் மனையகப்பட்டுக் கலங்கி உணர்வு அழிந்தவழித், தலைவி ஆராய்ச்சியுடைத்தாகிய அரு285மறையினைத் தோழிக்குக் கூறுதலும் உள. உதாரணம்: 286கேளா யெல்ல தோழி யல்கல் வேணவா நலிய வெய்ய வுயிரா வேமான் பிணையின் வருந்தினே னாகத் துயர்மருங் கறிந்தனள் போல வன்னை துஞ்சா யோவென் குறுமக ளென்றலிற் சொல்வெளிப் படாமை மெல்லவெ னெஞ்சிற் படுமழை பொழிந்த பாறை மருங்கிற் சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ வென்றிசின் யானே. (நற்றிணை. 61) இதனுள் துஞ்சாயோவெனத் தாய் கூறியவழி, மனைப் பட்டுக் கலங்கியவாறும், படர்ந்தோர்க்கென மறையுயிர்த்த வாறுங், கண் படாக் கொடுமை செய்தானெனப் பரத்தைமை கூறியவாறுங் காண்க. 287பொழுது மெல்லின்று பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப் புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி யன்னா யென்னு மன்னையு மன்னோ வென்மலைந் தனன்கொ றானே தன்மலை யார நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே (குறுந். 161) 288பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவ னெலவென் றிணைபயிரு மேகல்சூழ் வெற்பன் புலவுங்கொ றோழி புணர்வறிந் தன்னை செலவுங் கடிந்தாள் புனத்து. (திணை: ஐம். 10) இவையும் அது. இன்னும் மனைப்பட்டுக் கலங்கி என்றத னாற் காப்புச்சிறைமிக்க கையறுகிளவிகளுங் கொள்க. 289சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே துறைபோ கறுவைத் தூமடி யன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே யெம்மூர் வந்தெ மொண்டுறைத் துழைஇச் சினைக்கெளிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி யனையவன் பினையோ பெருமற வியையோ வாங்கட் டீம்புன லீங்கட் பரக்குங் கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் னிழைநெகிழ் பருவரல் செப்பா தோயே. (நற்றிணை. 70) 290கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த வார விரைகருதி நித்தலும் நிற்றியா னேரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப் பேருண்க ணீர்மல்க நின்றாண்மற் றென்னாயோ. ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய் வண்டூது பூங்கானல் வைகலுஞ் சேறிராற் பெண்டூது வந்தே மெனவுரைத்தெங் காதலரைக் கண்டீர் கழறியக்காற் கானல் கடிபவோ. இவை காப்புச் சிறைமிக்க கையறுகிளவி. உயிராக் காலத்து உயிர்த்தலும் - தலைவனொடு தன்றிறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித், தனதாற்றாமையால், தன்னோடும் அவனோடும் பட்டன சில மாற்றந் தலைவி தானே கூறுதலும் உள: தோழி மறைவெளிப்படுத்துக் கோடற்கு வாளாது இருந்துழித், தலைவன் தன்மேல் தவறிழைத்தவழி, 292இரண்டும் படக் கேட்போ ரின்றியுங் கூறுதலாம். உதாரணம்: 293உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி யானாத் துயரமொடு வருந்திப் பானாட் டுஞ்சா துறைநரொ டுசாவாத் துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே (குறுந். 145) 294தழையணி யல்கு றாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக வம்மெல் லாக நிறைய வீங்கிக் கொம்மை வரிமுலை செப்புட னெதிரின யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னு மவல நெஞ்சமொ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே. (குறுந். 159) 295உயிராதாள் தோழியாயினாள்; அவள் தலைவி கூறுவன கேட்டற்குப் பொய்த்துயில் கொள்ளும். உயிர்த்தலுமெனப் பொதுப்படக் கூறியவதனான் தோழிக்குக் கூறுவனவுங் கொள்க. 296பேணுப பேணார் பெரியோ ரென்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை யுயிரோ ரன்ன செயிர்தீர் நட்பி னினைக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றாற் றானே கொண்கன் யான்யா யஞ்சுவ லெனினுந் தானெற் பிரிதல் சூழான் மன்னே யினியே கான லாய மறியினு மானா தலர்வந் தன்றுகொ லென்னு மதனாற் புலர்வது கொல்லவ னட்பெனா வஞ்சுவ றோழியென் னெஞ்சத் தானே. (நற்றிணை. 72) உயிர்செல வேற்று வரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும் - இறந்துபாடுபயக்குமாற்றால் தன்றிறந்து நொதுமலர் வரையக் கருதியஞான்று அதனை மாற்றுதற்கண்ணும்: உதாரணம்: 297அன்னை வாழிவேண் டன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை யென்னை யென்று மியாமே யிவ்வூர் பிறிதொன் றாகக் கூறு மாங்கு மாக்குமோ வாழிய பாலே. (ஐங்குறு. 110) 298பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் செருவுறு குதிரையிற் பொங்கிச் சார லிருவெதிர் நீடமை தயங்கப் பாயும் பெருவரை யடுக்கத்துக் கிழவோ னென்று மன்றை யன்ன நட்பினன் புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. (குறுந். 385) நெறிபடு 299நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் - தோழி கூட்டமுண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்துக்கண் சிவப் பும் நுதல்வேறுபாடும் முதலிய மெய்வேறுபாடு நிகழ்ந்துழி, அவற்றைத் தோழி அறியாமலுஞ் செவிலி அறியாமலுந் தலைவி தான் மறைப்பினும்: உதாரணம்: 300கண்ணுந் தோளுந் தண்ணறுங் கதுப்பு மொண்டொடி மகளிர் தண்டழை யல்குலுங் காண்டொறுங் கவினை யென்றி யதுமற் றீண்டு மறந்தனையாற் பெரிதே வேண்டாய் நீயெவன் மயங்கினை தோழி யாயினுஞ் சிறந்தன்று நோய்பெரி துழந்தே. காதன் மிகுதியாற் கவினையெனற்பாலாய், வேறு பட்டனையென்று எற்றுக்கு மயங்கினையெனத் தலைவி தன் வருத்தம் மறைத்தாள். 301துறைவன் றுறந்தெனத் துறையிருந் தழுதவென் மம்மர் வாண்முக நோக்கி யன்னைநின் னவல முரையென் றனளே கடலென் பைஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே. இது செவிலிக்கு மறைத்தது. ஒருமைக் கேண்மையின் உறுகுறை - தான் அவளென்னும் வேற்றுமையில்லாத நட்பினானே தோழி தனக்கு வந்து கூறிய குறையை; 302பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந் தோள் - முன்னர்த் தெய்வப் புணர்ச்சி நிகழ்ந்தமை நோக்கி அது காரணத்தான் முடிப்பதாகத் தெளிந்த தலைவி; அருமை சான்ற நால் இரண்டுவகையின் - தான் முன் அருமை அமைந்துநின்ற நிலையான் தலைவன் தன்கண் நிகழ்த்திய மெய் தொட்டுப் பயிறன் முதலிய எட்டினானே; பெருமை சான்ற இயல்பின் கண்ணும் - தனக்கு உளதாம் பெருமை கூறுதற்கு அமைந்ததோர் இயல்பின்கண்ணும்: என்றது, தலைவன் இத்துணை இளிவந்தன செய்யவும் யான் நாணும் மடனும் நீங்கிற்றிலேனென்று தன் பெருமை தோழிக்குக் கூறுதலாம். உதாரணம்: 303மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற் பொன்னகைத் தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதா னினக்கொன்று நவிலுவாங் கேளினி; நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ யைதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலும் மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று; எனவாங்கு அனையன பலபா ராட்டிப் பையென வலைவர் போலச் சோர்பத னொற்றிப் புலையர் போலப் புன்க ணோக்கித் தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன் றொழூஉந் தொடூஉமவன் றன்மை யேழைத் தன்மையோ வில்லை தோழி. (கலி. 55) இதனுட் பாராட்டி எனப் பொய்பாராட்டலும், சோர்பதனொற்றி யென நெஞ்சு நெகிழ்ந்த செவ்வி கூறுதலிற் கூடுதலுறுதலும் புலையர்போல் நோக்கி யென நீடு நினைந் திரங்கலும், தொழலுந்; தொழுதானென இடம்பெற்றுத் தழாஅலுந் தொடலுந் தொட்டானென மெய்தொட்டுப் பயிறலும், அவனிகழ்த்தியவாறுங் கூறி, மதத்தாற் பரிக்கோ லெல்லையில் நில்லாத களிறுபோல், வேட்கை மிகுதியான் அறிவினெல்லையில் நில்லாதவனெனத் தீராத் தேற்றமும் ஒருவாற்றாற் கூறித், தனக்குப் பெருமைசான்ற இயல்பைப் பின்னொருகால் தோழிக்குக் கூறியவாறு காண்க. இனித் தலைவற்குப் பெருமை அமைந்தன எட்டுக்குண மென்று கூறி, அவற்றை, இளமையும் வனப்பு மில்லொடு வரவும் வளமையும் தறுகணும் வரம்பில் கல்வியுந் தேசத் தமைதியும் மாசில் சூழ்ச்சியும் (பெருங். 1 : 36 - 89 - 1) எனப் பொருள் கூறின், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (75) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய எண்கள் அவை கூறிய வட நூல்களில் வேறே எண்ணுதற்கு உரியன சில இல்லாமல் எண்ணினாற்போல, ஈண்டும் இளமை முதலிய எட்டும் ஒழிய வேறெண்ணுதற்கு உரியன எட்டு தலைவற் கிலவாகக் கூறல் வேண்டும்; ஈண்டு அவ்வாறின்றித் தலைவற்கு உரியனவாகப் பலவகைகளான எவ்வெட்டுளவாகக் கூறக் கிடந்தமையின் அங்ஙனம் ஆசிரியர் இலக்கணங் கூறாரென மறுக்க. அன்றியும் எட்டும் எடுத்து ஓதுபவென்றும் உதாரண மின்றென்றும் மறுக்க. இனி முட்டுவயிற்கழறன், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத் தினகறல், அவன் புணர்வு மறுத்தல், தூது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை என்பன எட்டு மென்று (271) அவற்றை ஈண்டுக்கொணர்ந்து பொருள்கூறிற், கூற்றுக் கூறுகின்றவிடத்து மெய்ப்பாடு கூறின் ஏனை மெய்ப் பாடுகளுங் கூற்றுக் கூறுகின்றவிடத்தே கொணர்ந்து கூற்றினுள் அடங்கக் கூறல்வேண்டுமென்று மறுக்க. பொய்தலை அடுத்த மடலின்கண்ணும் - பொய்யினைத் 304தலைக் கீடாகவுடைய மடலின் கண்ணும்: அது மடன்மா கூறியவழி அம்மடலினை மெய்யெனக் கொண்டாள் அதனைப் பொய்யெனக் கோடலாம். உதாரணம்: 305வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே யவையினும் பலவே சிறுகருங் காக்கை யவையினு மவையினும் பலவே குவிமட லோங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே. இது, மடன்மா கொள்ளக் குறித்தோனைப் பறவைக்குழாந் தம்மை மடலூர விடாவென விளையாட்டுவகையாற் பொய் யென்று இகழ்ந்தது. கையறு தோழி கண்ணீர்துடைப்பினும் - தலைவியை ஆற்றுவித்துக் 306கையற்ற தோழி தலைவி கண்ணீரைத் துடைப் பினும்: உதாரணம்: 307யாமெங் காமந் தாங்கவுந் தாந்தங் கெழுதகை மையினா னழுதன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி யேறா திட்ட வேமப் பூசல் விண்டோய் விடரகத் தியம்புங் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. (குறுந். 241) இது, தன் ஆற்றாமைக்கு ஆற்றாத தோழியை ஆற்றுவிக் கின்றாள் அவ்விரண்டுங் கூறியது. வெறியாட்டிடத்து வெருவின்கண்ணும் - தலைவி வேறு பாடு எற்றினானாயிற்றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத்துழித், தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்: அது பண் டேயுந் தன்பரத்தைமையான் நெகிழ்ந்தொழுகுவான், இன்று நம் ஆற்றாமைக்கு 308மருந்து பிறிதுமுண்டென்றறியின், வரைவு நீடுமென்று அஞ்சுதல். உதாரணம்: 309பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅற் றுனியில் கொள்கையொ டவர்நமக் குவந்த வினிய வுள்ள மின்னா வாக முனிதக நிறுத்த நல்க லெவ்வஞ் சூருறை வெற்பன் மார்புறத் தணித லறிந்தன ளல்ல ளன்னை வார்கோற் செறிந்திலங் கெல்வளை ஞெகிழ்பத நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ முருக னாரணங் கென்றலி னதுசெத் தோவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன பலராய் மாண்கவின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பறைஇக் கூடுகொ ளின்னியங் கறங்கக் களனிழைத் தாடணி யயர்ந்த வகன்பெரும் பந்தர் வெண்போழ் கடம்பொடு சூடி யின்சீ ரைதமை பாணி யிரீஇக்கை பெயராச் செல்வன் பெரும்பெய ரேத்தி வேலன் வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையிற் றூங்கல் வேண்டி னென்னாங் கொல்லோ தோழி மயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக வாடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயி னிம்மறை யலரா காமையோ வரிதே யஃதான் றன்றிவ ருறுவிய வல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவே ணல்குவ னெனினே செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்த லதனினு மரிதே. (அகம். 98) இன்னாவாக்கி நிறுத்த எவ்வம் என்பது அவன்பயிற் பரத்தைமை. உயிர் வாழ்தல் அரிது என்பது தன்வயினுரிமை. அவை வெறியஞ்சியவழி நிகழ்ந்தன. குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் - இரவுக்குறிவருந் தலைவன் செய்யுங்குறி பிறிதொன்றனான் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி, அதனை மெய்யாக உணர்ந்து தலைவி மயங்கிய வழியும்: புனலொலிப்படுத்தன் 310முதலிய அவன் செயற்கை யானன்றி இயற்கையான் நிகழ்ந்துழிக் குறியி னொப்புமையாம். உதாரணம்: 311மெய்யோ வாழி தோழி சாரன் மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயாத் தப்ப லேற்ற கோட்டொடு போகி யாங்கு நாடன் றான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனவென் றடமென் றோளே. (குறுந். 121) 312கோடு ஆற்றப் பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறித்த முசுப்போல, நாங் குறிபெறுங் காலத்து வாராது 313புட்டாமே 314வெறித்து இயம்புந்துணையும் நீடித்துப் பின்பு வருதலிற், குறிவாயாத் தப்பு அவன்மேல் ஏற்றி, அதற்குத் தோள் பசந்தனவென்று, பின்னொருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி இவ்வரவு மெய்யோவெனவே, அவ் விரண்டும் பெற்றாம். 315அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமா பூண்ட மணியரவ மென்றெழுந்து போந்தேன் - கணிவிரும்பு புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னொளியிழா யுள்ளுருகு நெஞ்சினேன் யான். (ஐந். ஐம். 50) இதுவுமது. வரைவு தலைவரினும் - களவு வெளிப்பட்ட பின்னரா யினும் வெளிப்படு முன்னராயினும் வரைந்தெய்துற் செய்கை தலைவன்கண் நிகழினும் ஆண்டு முற்காலத்து நிகழ்ந்த ஆற்றாமை பற்றி அவ்விரண்டுங் கூறும்: உதாரணம்: 316நன்னா டலைவரு மெல்லை நமர்மலைத் தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை மூன்றி னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ (கலி. 39) என நாண் தாங்கி ஆற்றுவாரும் உளரோவெனவுங், கனவிற் புணர்ச்சி கடிதுமெனவும் இரண்டுங் கூறினாள். 317கொல்லைப் புனத்த வகில்சுமந்து கற்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாட னயமுடைய னென்பதனா னீப்பினும் வாடன் மறந்தன தோள். (ஐந்: எழு. 2) நயனுடையன் என்பதனால் வரைவு தலைவந்தமையும், நீப்பினும் என்பதனால் அவன்வயிற் பரத்தைமையுங் கூறினாள். களவு அறிவுறினும் - தம் ஒழுகலாறு புறத்தார்க்குப் புல னாகத் தலைவன் ஒழுகினும்; ஆண்டும் அவ்விரண்டுங் கூறும். உதாரணம்: 318நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து மால்கடற் றிரையி னிழிதரு மருவி யகலிருங் கானத் தல்கணி நோக்கித் தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல் போதெழின் மழைக்கண் கலுழ்தலி னன்னை யெவன்செய் தனையோநின் னிலங்கெயி றுண்கென மெல்லிய வினிய கூறலின் வல்விரைந் துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற் காந்த ளுதிய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பி னிமிரும் வான்றோய் வெற்பன் மார்பணங் கெனவே. (நற்றிணை. 17) யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேனாக அதனைக் கண்டு நீ எவன் செய்தனையென வினாய அன்னைக்கு, இம்மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேனெனத் தாய் களவறிவுற்ற வாறு கூறக் கருதி, அவன்வயிற் பரத்தைமை கூறிற்று. தமர் தற்காத்த காரண மருங்கினும் - அங்ஙனங் களவறிவுற்ற அதன்றலைச், செவிலி முதலிய சுற்றத்தார் தலைவியைக் 319காத்தற்கு ஏதுவாகிய காரணப்பகுதிக்கண்ணும்: ஆண்டுந் தமரை நொந்துரையாது அவன்வயிற் பரத்தைமை கூறும். காரணமாவன:- தலைவி தோற்றப்பொலிவும், வருத்தமும் அயலார் கூறும் அலருமாம். உதாரணம்: 320அடும்பி னாய்மலர் விரைஇ நெய்த னெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்த லோரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநா ணக்குவிளை யாடலுங் கடிந்தன் றைதேய் கம்ம மெய்தோய் நட்பே. (குறுந். 401) இது, வேறுபாடு கண்டு இற்செறித்தமை தன்னுள்ளே கூறியது. 321பெருநீ ரழுவத் தெந்தை தந்த கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி யெக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற் றூச றூங்கிக் கொண்ட லிடுமணற் குரவை முனையின் வெண்டலைப் புனரி யாயமொ டாடி மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகைப் பல்பூங் கான லல்கினம் வருதல் கெளவை நல்லணங் குற்ற விவ்வூர்க் கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை கடிகொண் டனளே தோழி பெருந்துறை யெல்லையு மிரவு மென்னாது கல்லென வலவ னாய்ந்த வண்பரி நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே. (அகம். 20) 322பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை களிற்றுச் செவியன்ன பாசடை மயக்கிப் பனிக்கழித் துழவும் பானாட் டனித்தோர் தேர்வந்து பெயரு மென்ப வதற்கொண் டோரு மலைக்கு மன்னை பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளி ரிளையரு முதியரு முளரே யலையாத் தாயரொடு நற்பா லோரே. (குறுந். 246) இவை, பிறர் கூற்றால் தமர் காத்தன. 323முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்டழை யுடையை யலமர லாயமொ டியாங்கணும் படாஅன் மூப்புடைய முதுபதி தாக்கணங் குடைய காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென வொண்சுடர் நல்லி லருங்கடி நீவித் தன் சிதை வறித லஞ்சி யின்சிலை யேறுடை யினத்த நாறுயிர் நவ்வி வலைகாண் பிணையிற் போகி யீங்கோர் தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மக ளிச்சுரம் படர்தந் தோளே யாயிடை யத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி மெய்த்தலைப் படுதல் செய்யே னித்தனை நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி யொலிக்குழைச் செயலை யுடைமா ணல்கு லாய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉங் கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே (அகம். 7) என்றன தோற்றப் பொலிவாற் காத்தன. இதற்கும் அவ்விரண்டும் உள. தன்குறி தள்ளிய தெருளாக்காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும் - தலைவி தன்னாற் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலிய காரணங்களான் இழக்கப்பட்டனவற்றை, இவை இழக்கு மென முந்துறவே உணராத காலத்து, முற்கூறிய குறி யிடமே இடமாக வந்து தலைவன் கூடாது பெயர்தலான், தமக்குப் பயம் படாத வறுங்களத்தை நினைந்து, அதனைத் தலைவற்கு முந்துறவ 324குறிபெயர்த்திடப் பெறாத தவறு தன்மேல் ஏற்றிக் கொண்டு, தோழியையும் அது கூறிற்றில ளெனத் தன்னொடு தழீஇக் கொண்டு, தலைவி தெளிதற் கண்ணும்: ஆகவே அவன் தவற்றைத் தன் தவறு ஆக்கினளாம். தழீஇ - தோழியைத் தழீஇ. அத் தவறு அவன்கட் செல்லாமல் தனதாகத் தேறினாள். உதாரணம்: 325விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தார னஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற் கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி வருதல் வாய்வது வான்றோய் வெற்பன் வந்தன னாயி னந்தளிர்ச் செயலைக் காவி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற் றூசன் மாறிய மருங்கும் பாய்புட னாடா மையிற் கலுழ்பில தேறி நீடிதழ்த் தலைஇய கவின்பெறு நீலங் கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற் குலவுப்பொறை யிறுத்த கோற்றலை யிருவிக் கொய்தொழி புனமு நோக்கி நெடிதுநினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ வைஐதேய் கயவெள் ளருவி சூடிய வுயர்வரைக் கூஉங்க ணஃதெம் மூரென வாங்கதை யறிவுறன் மறந்திசின் யானே. (அகம். 38) இதனுள் ஊசன்மாறுதலும் புனமுந் தன்குறி தள்ளிய இடன்; மறந்திசின் என்றது தெருளாக்காலை, கூஉங்கண்ணது ஊரென உணர்த்தாமையின், இடையீடு படுவதன்றி அவன்கண் தவறுண்டோவெனத் தன் பிழைப்பாகத் தழீஇயினாள். இது சிறைப்புறமாக வரைவு கடாயது. வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும் - வழுப்படுத லின்றி நின்ற இயற்பட மொழிதற் பொருண்மைக் கண்ணும்: வழுவின்றி நிலைஇய என்றதனான் தோழி இயற்பழித் துழியே இயற்பட மொழிவதென்க. தலைவன் வழுவைத் தோழி கூறியதற்குப் பொறாது தான் இயற்பட மொழிந்ததல்லது, தன் மனத்து அவன் பரத்தைமை கருதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம். உதாரணம்: அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயினு மாக லவனே தோழியென் னுயிர்கா வலனே. (ஐங்குறு: ப. 144) தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர் கொடுமை கூறின வாயினுங் கொடுமை நல்வரை நாடற் கில்லை தோழியென் னெஞ்சிற் பிரிந்ததூஉ மிலரே தங்குன்ற நோக்கங் கடிந்ததூஉ மிலரே நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே இஃது, 326அகன்று உயர்ந்து தாழ்ந்தவற்றுட் பெரிதாகிய நட்புடையவன் எனக் கூறியது. ஒருகாலைக்கு ஒருகாற் பெருகு மென்றுங் கூறினாளாயினும், நமது நட்புப்போல் ஒருகாலே பெருத்ததில்லையென இரண்டுங் கூறினாள். பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலை வந்த சிந்தைக்கண்ணும் - தலைவியுந் தோழியும் தலைவன் இரவுக் குறி வருங்காற் பொழுதாயினும் நெறியாயினும் இடையூ றாகிப் பொருந்துதலின்மையின், அழிவு தலைத்தலை சிறப்ப வந்த ஆராய்ச்சிக்கண்ணும்: ஆண்டும் அவ்விரண்டும் நிகழும். உதாரணம்: 327மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே யெவன்கொல் வாழி தோழி மயங்கி யின்ன மாகவு நன்னர் நெஞ்ச மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார் பிட்டருங் கண்ண படுகுழி யியவி னிருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. (அகம். 128) காமங் கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இருவ ரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டுங் கூறினாள். மனைமடிந்தன் றென்பது பொழுது; சிறுநெறி யென்பது ஆற்றின்னாமை. இதனைப் பொருளியலுட் (210) கூறாது தன் வயினுரிமையும் அவன்வயின் பரத்தைமையும் பற்றி ஈண்டுக் கூறினார். 328குறையொன் றுடையேன்மற் றோழி நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே யரவழங்கு நீள்சோலை நாடனை வெற்பி லிரவரா லென்ப துரை. (ஐந்: எழு. 14) வளைவாய்ச் சிறுகிளி என்னுங் (141) குறுந்தொகையும் அது. காமஞ் சிறப்பினும் - தலைவி காமஞ்சிறந்து தோன்றினும்: உதாரணம்: 329ஒலியவிந் தடங்கி யாம நள்ளெனக் கலிகெழு பாக்கந் துயின்மடிந் தன்றே தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுண ரன்றி லுயவுக்குரல் கேட்டொறுந் துஞ்சாக் கண்ண டுயரடச் சாஅய் நம்வயின் வருந்து நன்னுத லென்ப துண்டுகொல் வாழி தோழி தெண்கடல் வன்கைப் பரதவ ரிட்ட செங்கோற் கொடுமுடி யவ்வலை பரியப் போக்கிக் கடுமுர ணெறிசுறா வழங்கு நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே. (நற்றிணை. 303) 330ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த பிள்ளை யுள்வாய்ச் செரீஇய விரைகொண் டவையும் விரையுமாற் செலவே. (குறுந். 92) 331கொடுந்தா ளலவ குறையா மிரப்பே மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப - னெடுந்தேர் கடந்த வழியையெங் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ. (ஐந்: ஐம். 41) 332முடமுதிர் புன்னைப் படுகோட் டிருந்த மடமுடை நாரைக் குரைத்தேன் - கடனறிந்து பாய்திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக்கண்டு நீதகா தென்றே நிறுத்து. (ஐந்.எழு. 69) அவன் அளி சிறப்பினும் - தலைவிக்குக் காமமிக்க கழிபடர் சிறந்தாற்போல்வது தலைவன்கட் சிறந்துழி, அது காரணத்தால் அவன் அளிசிறந்து தோன்றினும்; இவ்வாறு அரிதின் வருகின்றான் வரைகின்றிலனென அவ்விரண்டுந் தோன்றும்: உதாரணம்: 333இருள்கிழிப் பதுபோன் மின்னி வானந் துளிதலைக் கொண்ட நளிபெய னடுநாண் மின்மின மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை யிரும்புசெய் கொல்லெனத் தோன்று மாங்க ணாறே யருமரபி னவே யாறே சுட்டுநர்ப் பனிக்குங் சூருடை முதலைய கழைமாய் நீத்தங் கல்பொரு திரங்க லஞ்சுவந் தமிய மெண்ணாது மஞ்சுமந் தாடுகழை நரலு மணங்குடைக் கவாஅ னீருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய விருங்களி றட்ட பெருஞ்சின வுழுவை நாம நல்லராக் கதிர்பட வுமிழ்ந்த மேய்மணி விளக்கிற் புலாவ வீர்க்கும் வாணடந் தன்ன வழக்கருங் கவலை யுள்ளுந ருட்கும் கல்லடர்ச் சிறுநெறி யருள்புரி னெஞ்சமொ டெஃகு துணை யாக வந்தோன் கொடியனு மல்லன் றந்த நீதவ றுடையையு மல்லை நின்வயி னானா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே. (அகம். 72) வந்தோ னென்பது அவனளி சிறத்தல், தவறுடையே னென்பது தன்வயினுரிமை; கொடியனுமல்ல னென்பது அவன்வயிற் பரத்தைமை. 334சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயி னிமைக்கு மோங்குமலை நாடன் சாதுபுல ரகல முள்ளி னுண்ணோய் மிகுமினிப் புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய். (குறுந். 150) இதுவும் அது. ஏமஞ் சான்ற உவகைக்கண்ணும் - நால்வகைப் புணர்ச்சி யான் நிகழுங் களவின்கண், எஞ்ஞான்றும் இடையீடுபடாமற் றலைவன் வந்து கூடுதல், இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவமையினைத் தலைவி எய்தியக்கண்ணும்: அஃது, எஞ்ஞான்றும் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறுதலாம். உதாரணம்: 335நோயலைக் கலங்கிய மதனழி பொழுதிற் காமஞ் செப்ப லாண்மகற் கமையும் யானென், பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கிக் கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப் புன்னை யரும்பிய புலவுநீர்ச் சேர்ப்ப னென்ன மகன்கொ றோழி தன்வயி னார்வ முடைய ராகிய மார்பணங் குறுநரை யறியா தோனே. (நற்றிணை. 94) மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற் றாங்கிப் பெண்மை தட்பவென மாறிக் கழுவாத பசிய முத்தந் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல், யாமும் புணர்ச்சி யான் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப், பெண்மையாற் றகைத்துக் கொள்ளும்படியாகத், தன் மார்பான் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து கூறினாள். ஆர்வ முடையராக வேண்டி மார்பணங்குறுநரை அறியாதோ னென்க. அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே புலானாற்றத்தையுடைய நீர்தெறித் தரும்பிய சேர்ப்ப னென்றதனான், புன்னையிடத்துத் தோன்றிய புலானாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறுபோல, வரைந்து கொண்டு களவின்கண் வந்த குற்றம் வழிகெட ஒழுகுவ னென்பது உள்ளுறை. இரண்டறி கள்வி (குறுந். 312) என்னும் பாட்டினுள் 336தோற்றப் பொலிவை மறைப்பளெனத் தலைவன் கூறியவாறும் உணர்க. மறைந்தவற் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உருபும் விரித்து, ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க; உம்மை விரிக்க வேண்டுவனவற்றிற்கு உம்மையும், 337இரண்டும் விரிக்க வேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கும் ஏனை வினையெச்சங்கட்கும் கூற்று நிகழ்த்தலுளவென முடிக்க. கூற்று அதிகாரத்தான் வரும். உயிராக் காலத்து உயிர்த்தலு முளவென முடிக்க. ஓரிடத்தான தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் உள-இக்கூற்று முப்பத்தாறனுள் ஒரோவிடங் களிலே தன்னிடத்து அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவுங் கூற்று நிகழ்தலுள: ஆன் ஆனவென ஈறு திரிந்தது. அன்னவும் உள - அவைபோல்வன பிறவும் உள என்றவாறு. அன்னபிற வென்றதனான் இன்னுந் தலவிகூற்றாய் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. 338பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க வணிமலை நாடன் வருவான்கொ றோழி கணிநிற வேங்கை கமழ்ந்துவண் டார்க்கு மணிநிற மாலைப் பொழுது. (திணை. ஐம்.9) இது, தலைவி இரவுக்குறி நயந்து கூறியது. 339பெயல்கான் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலரே யெல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே. (குறுந். 355) இஃது, இரவுக்குறி வந்த தலைவனை நோக்கிக் கூறியது. 340கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி யஞ்ச லோம்பி யார்பதங் கொண்டு நின்குறை முடித்த பின்றை யென்குறை சொல்லல் வேண்டுமாற் கைதொழு திரப்பல் பல்கோட் பலவின் சார லவர்நாட்டு நின்கிளை மருங்கிற் சேறி யாயி னம்மலை கிழவோற் குரைமதி யிம்மலைக் கானக் குறவர் மடமக ளேனல் காவ லாயின ளெனவே. (நற்றிணை. 102) 341ஓங்க லிறுவரைமேற் காந்தன் கடிகவினப் பாம்பென வோடி யுருமிடித்துக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலா வீங்கு நெகிழ்ந்த வளை. (திணை: ஐம். 3) 342மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழ முண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந் தாமா சுரக்கு மணிமலை நாடனை யாமாப் பிரிவ திலம். (ஐந்: எழு.4) 343அவருடை நாட்ட வாயினு மவர்போற் பிரித றேற்றாப் பேரன் பினவே யுவக்கா ணென்று முள்ளுவ போலச் செந்தார்ச் சிறுபெடை தழீஇப் பைங்குர லேனற் படர்தருங் கிளியே. இது, பகற்குறிக்கண் தலைவனீட ஆற்றாது தோழிக்குக் கூறியது. (20) (தலைவிகூற்று இன்னவாறுமாமெனல்) 112. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினு முரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந் தானே கூறுங் காலமு முளவே. இதுவும் அதிகாரத்தான் தலைவிகூற்று இன்னவாறுமாம் என்கின்றது. (இ - ள்.) வரைவிடைவைத்த காலத்து வருந்தினும் - வரைவு மாட்சிமைப் படாநிற்கவும் பொருள்காரணத்தான் அதற்கு இடையீடாகத் தலைவன் நீக்கி வைத்துப் பிரிந்த காலத்துத் தலைவி வருத்தமெய்தினும்: ஆண்டுத் தோழி வினவாமலும்தானே கூறுமென்றான், ஆற்றுவித்துப் பிரிதல் களவிற்குப் பெரும்பான்மை இன்மையின் 344வைத்த வென்றது நீக்கப்பொருட்டு. வருந்துதல் - ஆற்றுவிப்பா ரின்மையின் வருத்தமிகுதலாம். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் - வரையா தொழுகுந் தலைவன் ஒருஞான்று தோழியையானும் ஆயத்தை யானுஞ் செவிலியையானுங் கதுமென எதிர்ப்பினும்: உரையெனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் - நொதுமலர் வரைவிற்கு மணமுரசியம்பியவழியானும் பிறாண்டானுந் தோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்ததெனக் கூறி அதனை நமரறியக் கூறல் வேண்டுமென்றுந் தலைவற்கு நம் வருத்தமறியக் கூறல் வேண்டுமென்றுங் கூறுதற்கண்ணும்; தானே கூறும் காலமும் உளவே - இம்மூன்று பகுதியினுந் தோழி வினாவாமல் தலைவி தானே கூறுங் காலமும் உள என்றவாறு. உம்மையால் தோழி வினவிய இடத்துக் கூறலே வலியு டைத்து. உதாரணம்: 345அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் றகாஅன் போலத் தான்றீது மொழியினுந் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே முத்துநிரை யொத்த முள்ளெயிற் றுவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தை கடுவனு மறியுமக் கொடியோ னையே. (குறுந். 26) 346யாரு மில்லைத் தானே களவன் றானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் காஅல வொழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே. (குறுந். 25) இவற்றுள் துறந்தான்போலவும் மறந்தான் போலவுங் கருதித்தான் தீதுமொழியினுமெனவும் யானெவன் செய்கோ வெனவுந் தோழி வினவாக்காலத்து அவன் தவற்றை வரைவிடை வைத்தலின் ஆற்றாமைக்கு அறிவித்தாள். 347பகலெரி சுடரின் மேனி சாயவும் பாம்பூர் மதியி னுதலொளி கரப்பவு மெனக்குநீ யுரையா யாயி னினக்கியா னுயிர்பகுத் தன்ன மாண்பினே னாகலி னீகண் டிசினால் யானே யென்றுநனி யழுங்க லான்றிசி னாயிழை யொலிகுர லேனல் காவலி னிடையுற் றொருவன் கண்ணியன் கழலன் றாரன் றண்ணெனச் சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டஃதே நினைந்த நெஞ்சமொ டிஃதா கின்றியா னுற்ற நோயே. (நற்றிணை. 128) இது, தோழி வினாவியவழித் தலைவி கூறியது. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் என்பதனைத் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் (666) என்னுந் தந்திரவுத்தியாகக்கொண்டு அதன்கண் வேறுபட வருவனவெல் லாங் கொள்க. 348உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே யருந்துய ருழத்தலு மாற்றா மதன்றலைப் பெரும்பிறி தாக லதனினு மஞ்சுது மன்னோ வின்னு நன்மலை நாடன் பிரியா வன்பி னிருவரு மென்னு மலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் றுஞ்சூர் யாமத் தானுமென் னெஞ்சத் தல்லது வரவறி யானே. (குறுந். 302) இது, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறியது. 349அதுகொ றோழி காம நோயே வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை யுடைதிரைத் துவலை யரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லித ழுண்கண் பாடொல் லாவே. (குறுந். 5) என்னும் பாட்டும் அது. 350தோழி வாழி மேனாட் சாரற் கொடியோர் குன்றம் பனிப்ப நெடிதுநின்று புயறொடங் கின்றே பொய்யா வானக் கனைவர லழிதுளி தலைஇ வெம்முலை யாக நனைக்குமெங் கண்ணே. இது, வரைவிடைப் பருவங் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது. 351பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர் வெருகுப்பல் லுருவின் முல்லையொடு கஞலி வாடை வந்ததன் றலையு நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் கடலாழ் கலத்திற் றோன்றி மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே. (குறுந். 240) இது, பருவங்கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது. 352நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே பொய்யெனச் சிறிதாங் குயிரியர் பையென முன்றிற் கொளினேர் நந்துவள் பெரிதென நிரையே நெஞ்சத்தன்னைக் குய்த்தாண் டுரையினி வாழி தோழி புரையி னுண்ணே ரெல்வளை ஞெகிழ்த்தோன் குன்றந் தண்ண னெடுவரை யாடித் தண்ணென வியலறை முள்கிய வளியென் பசலை யாகந் தீண்டிய சிறிதே. (நற்றிணை. 236) இது, வரைவிடை ஆற்றாமை மிக்குழி அவன்வரையின் முள்கிய காற்று என் மெய்க்கட்படினும் ஆற்றலாமென்றது. 353அம்ம வாழி தோழி யவர்போ னம்முடை வாழ்க்கை மறந்தன்று கொல்லோ மனையெறி யுலக்கையிற் றினைகிளி கடியுங் கான நாடன் பிரிந்தெனத் தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே. இது, வன்புறை யெதிரழிந்தது. 354சிறுபுன்மாலை சிறுபுன் மாலை தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச் செக்கர் கொண்ட சிறுபுன் மாலை வைகலும் வருதியா லெமக்கே யொன்றுஞ் சொல்லாயவர் குன்றகெழு நாட்டே. இது, மாலைப் பொழுது கண்டு வருந்திக் கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. 355கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே. (குறுந். 30) இது, வரைதற்குப் பிரிய வருந்துகின்றது என்னென்றாட்குக் கனவு நலிவுரைத்தது. 356ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் னருவிப் பனிநீ ரின்னிசை தோடமை முழுவின் றுதைகுர லாகக் கணக்கலை யிருக்குங் கடுங்குரற் றூம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக வின்பல் விமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி நல்லவை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில் விழவுக்கள விறலியிற் றோன்று நாட னுருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து செருச்செய் யானை சென்னெறி வினாஅய் புலர்குர லேனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவரு ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி யோரியா னாகுவ தெவன்கொ னீர்வார் கண்ணொடு ஞெகிழ்தோ ளேனே. (அகம். 82) அவனை ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டியவாறும் அவருள் நெகிழ்ந்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங் காண்க. 357தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழைமா னோக்கின் மடமொழி - நூழை நுழையு மடமகன் யார்கொலென் றன்னை புழையு மடைத்தாள் கதவு. (கைந்நிலை. 59) 358நகைநீ கேளாய் தோழி யல்கல் வயநா யெறிந்து வன்பறத் தழீஇ யிளைய ரெய்துதன் மடக்கிளை யோடு நான்முலைப் பிணவல் சொலிய கானொழிந் தரும்புழை முடுக்க ராட்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் றொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலன் முன்பிற்றன் படைசெலச் செல்லா தருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென வெய்யாது பெயருங் குன்ற நாடன் செறியரி னுடக்கலிற் பரீஇப் புரியவிழ்ந் தேந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை யெற்றிமிற் கயிற்றி னெழில்வந்து துயல்வர வில்வந்து நின்றோற் கண்டன ளன்னை வல்லே யென்முக நோக்கி நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே. (அகம்.248) இவை, வந்தோன் செவிலியை எதிர்த்துழிக் கூறியன. 359கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளா யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென்ன நரந்தநா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தன னறாஅவவிழ்ந் தனனவென் மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன் றொய்யி லிளமுலை யினியதை வந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனா, லல்லல் களைந்தனன் றோழி நந்நக ரருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னொடு சூர்வ றோழி நயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே. (கலி. 54) எனக் கைப்பட்டுக் கலங்கிப் புணர்ச்சிநிகழ்ந்தமை கூறி 360அருங்கடி நீவாமை கூறின் நன் றெனத் தமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலைவி கூறினாள். சுரிதகத்து இருகாற்றோழி யென்றாள் நாணுத்தளையாக, 361மறைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனாக. 362எரியகைந் தன்ன செந்தலை யன்றில் பிரியின் வாழா தென்மேபா தெய்ய துறைமேய் வலம்புரி துணைசெத் தோடிக் கருங்கால் வெண்குருகு பயிறரும் பெருங்கடற் படைப்பையெஞ் சிறுநல் லூரே. இஃது, அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென்றது. 363ஐயோ வெனயாம் பையெனக் கூறிற் கேட்குவர் கொல்லோ தாமே மாக்கடற் பரூஉத்திரை தொகுத்த நுண்கண் வெண்மண லின்னுந் தூரா காணவர் பொன்னி னெடுந்தேர் போகிய நெறியே. இஃது, அவர் இன்னும் போவதற்கு முன்னே நம் வருத்தத்தை வெளிப்படக் கூறென்றது. 364என்னைகொ றோழி யவர்கண்ணு நன்கில்லை யன்னை முகனு மதுவாகும் - பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல நில்லென் றுறை (ஐந். எழு. 58) இது தலைவற்குக் கூறென்றது. இவை, தலைவி அறத்தொடு நிற்றற்பகுதி. தோழிக்கே உரைத்தற்குத் 365தோழிக்கென்றார். (21) (தலைவி கூற்றிற் சிறப்பில்லன கூறி அவையும் அகமெனல்) 113. உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள்வழிப் படினுந் தாவி னன்மொழி கிழவி கிளப்பினு மாவகை பிறவுந் தோன்றுமன் பொருளே. இது, தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி அவையும் அகப்பொருளாம் என்கின்றது. (இ - ள்.) உயிரினும் நாண் சிறந்தன்று - எல்லாவற்றினுஞ் சிறந்த உயிரினும் மகளிர்க்கு நாண் சிறந்தது; நாணினுஞ் செயிர்தீர் கற்புக்காட்சி சிறந்தன்று - அந்நாணினுங் குற்றந்தீர்ந்த கற்பினை நன்றென்று மனத்தாற் காணுதல் சிறந்தது; எனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு - என்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய நெஞ்சுடனே; காமக் கிழவன் உள்வழிப் படினும் - தலைவன் இருந்தவிடத்தே தலைவி தானே செல்லினும்; தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் - மனவலி யின்றிச் செல்வாமெனக் கூறும் நன்மொழியினைத் தலைவிதானே கூறினும்; பொருள் தோன்றும் - அவை அகப் பொருளாய்த் தோன்றும்; ஆவகை பிறவும்மன் பொருள் தோன்றும் - அக் கூற்றின் கூறு பாட்டிலே பிற கூற்றுகளும் மிகவும் அகப் பொருளாய்த் தோன்றும் என்றவாறு. என்றது, தலைவி கூற்று. சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக் கற்புச்சிறப்ப நாண் துறந்தாலுங்குற்றம் இன் றென்றற்குச் செயிர்தீரென்றார்; நன்மொழி யென்றார் கற்பிற் றிரியாமையின்; அவை இன்னோரன்னவழி நெஞ்சொடு கிளத்தல் போல்வன. இவள் கூற்றுத் தோழிக்குந் தலைவற்குமே தோன்றுவ தென்க. மன்: ஆக்கம், இழிந்த பொருளும் உயரத்தோன்றலின், 366மள்ளர் குழீஇய விழவி னானு மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமொ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை ஞெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமொ ராடுகள மகனே. (குறுந். 31) யாண்டுங் காணேனென அவனை வழிபட்டுக் கூறினமை யிற் கற்பின்பாலதாய்த் தோழியுந் தலைவனும் பெண்டன்மை யிற்றிரியக் கருதாது நன்கு மதித்தவாறு காண்க. 367அருங்கடி யன்னை காவ னீவிப் பெருங்கடை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி பன்னாட் கருவி வானம் பெய்யா தாயினு மருவி யார்க்குங் கழைபயின னந்தலை வான்றோய் மாமலை நாடனைச் சான்றோ யல்லை யென்றனம் வரற்கே. (நற்றிணை. 365) 368கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி யீங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே யெழுகினி வாழியெ னெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நட்பே. (குறுந். 11) இவை, தோழிக்கும் நெஞ்சிற்கும் கூறியன. 369ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குரம்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்குதோற் றுதிய வள்ளுகிர் கதுவலிற் பாம்புமத னழியும் பானாட் கங்குலு மரிய வல்லம னிகுளை பெரிய கேழ லட்ட பேழ்வா யேற்றை பலாவம லடுக்கம் புலர வீர்க்குங் கழைநரல் சிலம்பி னாங்கண் வழையொடு வாழை யோங்கிய தாழ்கண் ணசும்பிற் படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலியப் பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பு மவர்நாட் டெண்ணரும் பிறங்கன் மானதர் மயங்காது மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத் துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால் சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ நெறிகெட விலங்கிய நீயி ரிச்சுர மறிதலு மறிதிரோ வென்னுநர்ப் பெறினே என்னும் (8) அகப்பாட்டும் அது. இங்ஙனம் வந்துழியுங் கற்புச் சிறந்ததாம். இனிப் பிறவாற் கொள்வன வருமாறு: 370பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலு ணன்மலை நாட னலம்புனைய - மென்முலையாய் போயின சின்னாள் புனத்து மறையினா லேயினா ரின்றி யினிது (ஐந்: ஐம். 11) 371கானலஞ் சிறுகுடிக் கடன்மேம் பரதவர் நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத் தண்பெரும் பரப்பி னொண்பத நோக்கி யங்க ணரில்வலை யுணக்குந் துறைவனொ டலரே யன்னை யறியி னிவணுறை வரிய வாகு நமக்கெனக் கூறிற் கொண்டுஞ் செல்வர்கொ றோழி யுமணர் வெண்க லுப்பின் கொள்ளை சாற்றிக் கணநிரை கிளர்க்கு நெடுநெறிச் சகட மணன்மடுத் துரறு மோசைக் கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉ மிருங்கழிச் சேர்ப்பிற்றம் மிறைவ னூர்க்கே. (நற்றிணை. 4) 372விழுந்தண் மாரிப் பெருந்தண் சாரற் கூதிர்க் கூதளத் தலரி நாறு மாதர் வண்டி னயவருந் தீங்குரன் மணநாறு சிலம்பி னசுண மோர்க்கு முயர்வரை நாடற் குரைத்த லொன்றோ துயர்மருங் கறியா வன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென வுரைத்த லொன்றோ செய்யா யாகலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த செயலை யந்தளி ரன்னவென் மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே. (நற்றிணை. 244) இஃது, அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது; இன்னும் அதனானே தோழியைத் தலைவி ஆற்றவித்தலுங் கொள்க. 373ஞெகிழ்ந்த தோளும் வாடிய வரியுந் தளிர்வனப் பிழந்தநின் றிறனு நோக்கி யாஞ்செய்வ தன்றிவ டுயரென வன்பி னழாஅல் வாழி தோழி வாழைக் கொழுமட லகலிலைத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன் கேண்மை நமக்கே விழும மாக வறியுந ரின்றெனக் கூறுவை மன்னோ நீயே தேறுவென் மன்யா னவருடை நட்பே. (நற்றிணை. 309) என வரும். 374துறுக லயலது மாணை மாக்கொடி துஞ்சுகளி றிவருங் குன்ற நாட னெஞ்சுகள னாக நியலென் யானென நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன் றாவா வஞ்சின முரைத்தது நோயோ தோழி நின்வயி னானே. (குறுந். 36) இதுவும் அது. (22) (தோழிகூற்று நிகழுமிட மிவையெனத் தொகுத்துக் கூறல்) 114. நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ் செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும் புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉ முணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொரு ணாட்டத் தானுங் குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினு மருமையி னகற்சியு மவளறி வுறுத்துப் பின்வர வென்றலும் பேதைமை யூட்டலு முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலு மஞ்சியச் சுறுத்தலு முரைத்துழிக் கூட்டமோ டெஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் புணர்ந்தபி னவன்வயின் வணங்கற் கண்ணுங் குறைந்தவட் படரினு மறைந்தவ ளருகத் தன்னொடு மவளொடு முதன்மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினு நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினு மெண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் புணர்ந்துழி யுணர்ந்த வறிமடச் சிறப்பினு மோம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ் செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினு மென்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ யன்புதலை யெடுத்த வன்புறைக் கண்ணு மாற்றது தீமை யறிவுறு கலக்கமுங் காப்பின் கடுமை கையற வரினுங் களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப் பிறவு நாடு மூரு மில்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பு மிறப்ப நோக்கி யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ யனைநிலை வகையான் வரைதல் வேண்டினு மையச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினு மவன்விலங் குறினுங் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினு முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோற் கடாவல் வேண்டினு மாங்கதன் றன்மையின் வன்புறை யுளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையுந் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன. இது, முறையானே தோழி கூற்று நிகழும் இடம் பலவுந் தொகுத்துக் கூறுகின்றது. (இ - ள்.) நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பும் செலவும் பயில்வும் - தலைவன் 375பெட்ட வாயில் பெற்று இரவுவலியுற்று முன்னுறு புணர்ச்சியை உரைப்பின் இன்னது நிகழுமென்று அறியாது அஞ்சிக் கரந்து 376மதியுடம்படுப்பத் தோழி மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம் நாட்டமாம்; அஃது எட்டாம். அவற்றுள் முன்னுறு புணர்ச்சியை உணர்தற்குக் காரணம் எழுவகைய. அவை நாற்ற முதலிய ஏழும்: நாற்றமாவது: 377ஓதியும் நுதலும் பேதைப் பருவத்துக்குத் தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான்மதச்சர்ந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறுதல். 378தோற்றமாவது: நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை நோக்கின்றி உள்ளொன்று கொள்ள நோக்குங் கண்ணுந், தந்நிலை திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டுந் தோளும் முலையுமென்று இன்னோரன்ன. 379ஒழுக்கமாவது: பண்ணையாயத்தொடு முற்றிலான் மணற் கொழித்துச் சோறமைத்தல் முதலியன முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு ஏற்ப ஒழுகுதல். 380உண்டியாவது: பண்டு பால் முதலிய கொண்டு ஒறுத்து ஊட்ட உண்டு வருகின்றாள், இப்பொழுது ஆசாரமும் நாணுங் காதலும் மீதூர அதன்மேல் உவப்பு ஆண்டு இன்றி மிக ஒறுத்த உள்ளத்தளாதல். செய்வினை மறைத்தலாவது: முன்பு போலாது இக்காலத்து நினைவுஞ் செயலுந் தலைவனொடு பட்டனவே யாகலான் அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்; அஃது ஆயத்தொடு கூடாது இடந்தலைப்பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம். செலவாவது: பண்டுபோல் வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓரிடத்துச் சேறல். பயில்வாவது: செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேறோரிடத்துப் பயிறல். இன்சாரியை. 381புணர்ச்சி எதிர்ப்பாடு - எதிர்ப்பாட்டுப் புணர்ச்சியென மாறுக. அது கொடுப்பாரும் அடுப்பாருமின்றி இருவருந்தமிய ராய் எதிர்ப்பட்டுப் புணரும் புணர்ச்சி. இவ்வொழுக்கம் பாங்கற் கூட்டத்திற்கு ஏதுவாகா. உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை - அப்புணர்ச்சி யெதிர்ப்பாடு நிகழ்ந்ததனைத் தோழி தன்னுள்ளத் துள்ளே வினாவி வருகின்ற ஐயவுணர்வினை அவ்வேழனானுந் தெளிந்து புணர்ச்சி உண்டென்பதனை உணர்ந்த பின்றை: இன்னதும் இன்னதுமாகிய ஏழென்க. அங்ஙனந் துணிந்த பின்னல்லது தலைவிமாட்டுத் தோழி சொன்னிகழ்த்தாளென் றற்குப் பின்றை யென்றார். உதாரணம்: 382காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கணும் வீங்கிள முலையும் வேறுபட் டனவே தாங்கரு நாற்றந் தலைத்தலை சிறந்து பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற் பகலுங் கங்குலு மகலா தொழுகுமே நன்றி யளவைத் தன்றி தெவன்கொன் மற்றிவட் கெய்திய வாறே. இதனுள் நாற்றமுந் தோற்றமுஞ் செலவும் வந்தன. 383கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலு நுண்வியர் பொடித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினள்கொ லென்னுமென் நெஞ்சே. (சிற்றெட்டகம்) 384தெய்வத்தி னாயதுகொல் றெண்ணீர் புடையடுத்த வையத்து மக்களி னாயதுகொ - னைவுற்று வண்டார்பூங் கோதை வரிவளைக்கை வாணுதலாள் பண்டைய ளல்லள் படி. இவையும் அவை. 385ஏனல் காவ லிவளு மல்லண் மான்வழி வருகுவ னிவனு மல்ல னரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே வெம்மு னாணுநர் போலத் தம்முண் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல வுள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுப கண்ணி னானே. இது, புணர்ச்சி உணர்ந்தது. 386இவள்வயிற் செலினே யிவற்குடம்பு வறிதே யிவன்வயிற் செலினே யிவட்கு மற்றே காக்கை யிருகணி னொருமணி போலக் குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கு மொன்றுபோன் மன்னிய சென்றுவா ழுயிரே. இதுவும் அது. மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தானும் - அங்ஙனம் உணர்ந்தபின் தோழி தலைவியுடன் ஆராயுங்காற் றன்மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத்துக் கூறவேண்டுதலில் உண்மைப் பொருளானும் பொய்ப் பொருளானும் விராவிவரினும் அவட்குக் குற்றேவல் செய்யுந் தன்மையின் தப்பாதவற்றான் வேறுபல் கவர்பொருள் படக்கூறி ஆராயும் ஆராய்ச்சிக்கண்ணும்: நாணான் இறந்து படாமற் கூறுதற்கு வழிநிலை பிழையாது என்றார். பிறைதொழுவா மெனவும், கணைகுளித்த புண்கூர் யானை கண்டனெனெனவும், தன் பெருமைக்கு ஏலாத சிறு சொற் கூறிக் குறைவுற்று நிற்கின்றான் ஒருவனுளன் அவனை நீயுங் காண்டல் வேண்டுமெனவும், அவன் என்னைத் தழுவிக் கொண்டு குறைகூறவும் யான் மறுத்து நின்றே னென்றாற் போலவும் மெய்யும் பொய்யும் விராயும் பிறவாறாகவுங் கூறுவன பல்வேறு கவர்பொருளாம். உதாரணம்: 387முன்னுந் தொழுத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே யின்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண் - மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற் பெருகொளியான் மிக்க பிறை. இது, பண்டு கூறியவாறு கூறலின் மெய்யும், பிறை தொழாமை அறிந்து கூறலிற் பொய்யுமாய் வழிநிலை பிழையாத கவர்பொருளாயிற்று. 388பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை யறிவன்மற் - றொண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணா யுதிர முடைத்திதன் கோடு. (சிற்றெட்டகம்) இது, நடுங்க நாட்டம்; இஃது, இறந்துபாடு பயத்தலிற் கந்தரு வத்திற்கு அமையாது. 389தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித் தெய்வங் கமழுமா லைம்பாலு - மையுறுவல் பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க் கென்னை யிதுவந்த வாறு என வழிநிலை பிழையாமற் கவர்பொருளாக நெறிபடு நாட்டம் நிகழ்ந்தவழித் தலைவி சுனையாடினேற்கு இங்ஙனம் ஆயிற்றென் னும். அதுகேட்டுத் தோழியும் யானும் ஆடிக் காண்பல் என்னும். உதாரணம்: 390பையுண் மாலைப் பழுமரம் படரிய நொவ்வுப்பறை வாவ னோன்சிற கேய்க்கு மடிசெவிக் குழவி தழீஇப் பெயர்தந் திடுகுகவுண் மடப்பிடி யெவ்வங் கூர வெந்திற லாளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கே ழுருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங் கடுங்கண் யானை காலுற வொற்றலிற் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை தோளா ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேற் றிகழ்பூண் முருகன் றீம்புன லலைவாய்க் கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த வொண்பொறி மஞ்ஞை போல்வதோர் கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே 391நெருந லெல்லை யேனற் றோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள விரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச் சிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண் குளிர்கொ டட்டை மதனில புடையாச் சூரர மகளிரி னின்ற நீமற் றியாரை யோவெம் மணங்கியோ யுண்கெனச் சிறுபுறங் கவையின னாக வதற்கொண் டிகுபெயன் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென் னுள்ளவ னறித லஞ்சி யுள்ளில் கடிய கூறிக் கைபிணி விடாஅ வெரூஉமான் பிணையி னொரீஇ நின்ற வென்னுரத் தகைமையிற் பெயர்த்துப்பிறி தென்வயிற் சொல்ல வல்லிற்று மிலனே யல்லாந் தினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோ னின்றுந் தோலா வாறிலை தோழிநாஞ் சென்மோ சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே மாசின் றாதலு மறியா னேசற் றென்குறைப் புறனிலை முயலு மண்க ணாளனை நகுகம் யாமே. என்னு மகப்பாட்டும் (32) கொள்க. 392எழாஅ வாகலி னெழினலந் தொலைய வழாஅ தீமோ நொதுமலர் தலையே யேனல் காவலர் மாவீழ்த்துப் பறித்த பகழி யன்ன சேயரி மழைக்க ணல்ல பெருந்தோ ளோயே கொல்ல னெறிபொற் பிதிரிற் சிறுபல தாஅய் வேங்கை வீயுகு மோங்குமலைக் கட்சி மயிலறி பறியா மன்னோ பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே. (நற்றிணை. 13) இது, தலைவி வேறுபாடுகண்டு ஆராயுந் தோழி தனது ஆராய்ச்சியை மறைத்துக் கூறியது. நாட்டத்தானும் என்னும் உம்மை முற்று, நாட்ட மெல்லாந் தழீஇயினமையின் 393ஆனுருபு இடப் பொருட்டாம். அஃது இடமாக 394வருகின்ற எட்டனை யும் இடத்தியல் பொருளாக உரைக்கவே அவளை நாடுகின்ற காலமும் மேல்வருகின்ற எட்டனையுந் தலைவற்கு உரைக்குங் காலமும் ஒருங்கு நிகழுமென்பதாம். இங்ஙனம் நாடி மதியுடம்படுக்குந் துணையுந் தலைவற்கு இக்குறை முடிப்பல் என்னாது ஒழுகும். குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் - இரவுவலியுற்றுக் குறைகூறக் தொடங்கிய தலைவனைத் தோழி தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றினும்: தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி அன்பின்மை ஒருதலையாக உடையளல்லள். உதாரணம்: 395கல்லோங்கு சாரற் கடிபுனங் காத்தோம்பு நல்கூர்ந்தார் மாட்டு நயந்தொழுகித் - தொல்வந்த வான்றோய் குடிக்கு வடுச்செய்த றக்கதோ தேன்றோய்பூங் கண்ணியீர் நீர் 396மறுவொடு பட்டன மாமலை நாட சிறுகுடியோர் செய்வன பேணார் - சிறுகுடிக்கு மூதான் புறத்திட்ட சூடேபோ னில்லாதே தாதாடு மார்ப பழி. 397தகைமாண் சிறப்பிற் சான்றோர்க் கொத்த வகையமை வனப்பினை யாகலி னுலகமொடு பாற்படற் பாலை மன்னோ காப்புடுத் தோங்குய ரடுக்கத்துச் சாந்துவளர் நனந்தலை நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோ ரின்ன ரென்னா தின்பம் வெஃகிப் பின்னிலை முயற்சியின் வருந்தினு நும்மோ ரன்னோர்க்குத் தகுவதோ வன்றே. 398இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்கவுள் புக்கு மீனெறி பரதவர் மகளே நீயே நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி யினப்பு ளோப்பு மெமக்குநல னெவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே. (நற்றிணை. 45) இதுவும் அது. உலகு உரைத்து ஓழிப்பினும் - அவ்வொழுக்கம் அறியாள் போற் 399கரந்த தோழி உலகத்தாரைப்போல் வரைந்து கொள் ளெனக் கூறித் தலைவனை நீக்கினும்: உதாரணம்: 400கோடீ ரெல்வளைக் கொழுமணிக் கூந்த லாய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற் றெண்கழிச் சேயிறாப் படூஉந் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ (ஐங்குறு. 196) 401அருமையின் அகற்சியும் - அவை கேட்டுப் பிற்றை ஞான்றும் வந்தவன்மாட்டுச் சிறிது நெஞ்சுநெகிழ்ந்த தோழி அங்ஙனங் கூறாது இவள் அரியளெனக் 402கூறுதலும்: 403இருவருமுள்வழி யவன்வரவுணர்தலின் இருவருள்ள மும் உணர்ந்து அங்ஙனங் கூறினாள். 404நெருநலு முன்னா ளெல்லையு மொருசிறைப் புதுவை யாகலிற் கிளத்த னாணி நேரிறை வளைத்தோ ணின்றோழி செய்த வாருயிர் வருத்தங் களையா யோவென வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர் கட்காண் கடவு ளல்லளோ பெரும வாய்கோன் மிளகி னமலையங் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புறந் தைவரு மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே. (பொருளியல்) 405தழையொடு தண்கண்ணி தன்மையாற் கட்டி விழையவுங் கூடுமோ வெற்ப - விழையார்ந் திலங்கருவி பொன்கொழிக்கு மீர்ங்குன்ற நாட குலங்குருதி வாழ்வார் மகள். அவள் அறிவுறுத்துப் பின்வர என்றலும் - தலைவனை நோக்கி நீ காதலித்தவட்கு நீயே சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வருகவென்றலும்: அவன் அறிவுறுத்து என்று பாடமோதுவாரும் உளர். உதாரணம்: 406தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கீதுரைப்பி னென்னையு நாணப் படுங்கண்டாய் - மன்னிய வேயேய்மன் றோளிக்கு வேறா யினியொருநா ணீயே யுரைத்து விடு. இது, நீயே யுரையென்றது. 407நாள்வேங்கை பொன்சொரியு நன்மலை நன்னாட கோள்வேங்கை போற்கொடிய ரென்னைமார் - கோள்வேங்கை யன்னையா னீயு மருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது. (திணை: நூற். 20) இது, கையுறைமறுத்துப் பின் வருக என்றது. இவை 408ஒரு கூற்றாக வருவன வுளவேற் காண்க. பேதைமை ஊட்டலும் - அங்ஙனம் பின் வருக என்றுழி முன்வந்தானை அறியாமை ஏற்றிக் கூறலும;, தலைவியையும் அங்ஙனம் அறியாமை யேற்றிக் கூறலும்: உதாரணம்: 409நெடுந்தேர் கடாய்த் தமியராய் நின்று கடுங்களிறு காணிரோ வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனற் கிளிகடிகு வார். 410வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ் சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புனத்திற் போந்தில தைய களிறு. (திணை. ஐம். 8) இவை, தலைவனைப் பேதைமை ஊட்டின. 411நறுந்தண் டகரம் வகுள மிவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி - யெறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு. (திணை. நூற். 24) இது, தலைவியைப் பேதைமை யூட்டியது. இளையள் விளைவிலள் என்பதூஉம் இதன்கண் அடங்கும். உதாரணம்: 412புன்றலை மந்திக் கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய முன்றிற் போகா தெரியகைந் தன்ன வீததை யிணர வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைய தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி யெழுதெழில் சிதைய வழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் மாதயங் கிடங்கி னீரிய மலர்ந்த பெயலுறு நீலம் போன்றன விரலே பாஅ யவ்வயி றலைத்தலி னானா நோடுமழை தவழுங் கோடுயர் பொதியி னோங்கிருஞ் சிலம்பிற் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே (நற்றிணை. 379) முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்து உரைத்தலும் - அங்ஙனம் பேதைமை யூட்டியவழி இவள் இக்குறை முடிப்ப ளென்று இரந்து ஒழுகினேற்கு இவள் புணர்ச்சி யறிந்திலள் போற் கூறினாளென ஆற்றானாயவனை யான் அப்புணர்ச்சி நிகழ்ந்தமை அறிவ லென்று கூறி வருத்தந் தீர்த்தலும். உதாரணம்: 413நறுந்தண் கூந்தற் குறுந்தொடி மடந்தை சிறுமுதுக் குறைவி யாயினள் பெரிதென நின்னெதிர் கிளத்தலு மஞ்சுவ லெனக்கே நின்னுயி ரன்ன ளாயினுந் தன்னுறு விழுமங் கரத்த லானே. நின்னெதிர் கிளத்தல் அஞ்சுவல், நீ அவட்கு உரைத்தி யெனக் கருதியென்றலிற் புணர்ச்சி உணர்ந்தமை கூறினாள். அஞ்சி அச்சு உறுத்தலும் - அங்ஙனம் ஆற்றுவித்தும் கடிது குறை முடியாமையைக் கருதுந் தோழி குரவரைத் தான் அஞ்சித் தலைவியும் அவரை அஞ்சுவளெனக் கூறுலும்: அஞ்சுதல் அச்சென்றாயிற்று. இவ்வச்சம் கூறவே அவன் ஆற்றும். உதாரணம்: 414யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற் கரும்புமருண் முதல பைந்தாட் செந்தினை மடப்பிடித் தடக்கை யன்னபால் வார்பு கரிக்குறட் டிறைஞ்சிய செறிகோற் பெருங்குரற் படுகிளி கடிகஞ் சேறு மடுபோ ரெஃகுவிளங்கு தடக்கை மலயன்கானத் தார நாறு மார்பினை வாரற்க தில்ல வருகுவள் யாயே. (குறுந். 198) இஃது யாயை அஞ்சியது. 415யானை யுழலு மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரே மேனலு ளைய வருதன்மற் றென்னைகொல் காணினுங் காய்வ ரெமர். (திணை. ஐம். 6) இது, தமரை அஞ்சிக் கூறியது. உரைத்துழிக் கூட்டமோடு எஞ்சாது கிளந்த இரு நான்கு கிளவியும் - ஆயத்தினீங்கித் தன்னோடு நின்ற தலைவியை அவ னோடு கூட்ட வேண்டி அவளினீங்கித் தலைவற்கு இன்னுழி எதிர்ப்படுதியென உரைத்த விடத்துக் கூடுங் கூட்டத்தோடே ஒழியாமற் கிளந்த எண்வகைக் கிளவியும்: உதாரணம்: 416நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பினென் நின்குறி வந்தனெ னியல்றேர்க் கொண்க செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலு மார லருந்து வயிற்ற நாரை மிதிக்கு மென்மக ணுதலே. (குறுந். 114) வந்தனென் என்றும், என் மகள் என்றும் ஒருமை கூறிச் செல்கம் என்ற உளப்பாட்டுப் பன்மையான் தலைவி வரவுங்கூறி இடத்துய்த்தவாறு முணர்த்தினாள். செலவியங் கொண்மோ என்றது நீயே அவளைப் போகவிடுவாய் என்றதாம். நாட்டந் தன்மனத்து நிகழாநிற்றலும் அவன் மனத்துக் குறையுணர்த்துதல் நிகழாநிற்றலு மென்னும் இரண்டினையும் எஞ்சாமற்றழீஇநிற்கும் இவ்வெட்டு மென்றற்கு எஞ்சாது என்றார். வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் - தன் முன்னர் வந்து நின்ற தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு நின்றேயும் வாராதான்போல மாயமேற்றி அதனைப் பொறுத்த காரணங் குறிப்பினாற் கொள்ளக் கூறுங்காலைக் கண்ணும்: காரணமாவது நீ 417அரியையாதலின் இவள் ஆற்றாளா மென்று எதிர்கொள்கின்றேமென்றல்; கூட்டம் நிகழ்ந்தபின் தோழி இவ்வாறு கூறுதற்கு உரியளென்று அதன்பின் வைத்தார். இஃது அவன் வரவை விரும்பியது, வரைவு கடாயதன்று. உதாரணம்: 418நெடுங்கயிறு வலந்த குறுங்க ணவ்வலைக் கடல்பா டழிய வினமீன் முகந்து துணைபுண ருவகையர் பரத மாக்க ளிளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி யுப்பொ யுமண ரருந்துறை போக்கு மொழுகை நோன்பக டொப்பக் குழீஇ யயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப் பெருங்களந் தொகுத்த வுழவர் போல விரந்தோர் வறுங்கல மல்க வீசிப் பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறைவ பெருமை யென்பது கெடுமோ வொருநாண் மண்ணா முத்த மரும்பிய புன்னைத் தண்ணறுங் கானல் வந்துநும் வண்ண மெவனோ வென்றனிர் செலினே. (அகம். 30) இதனால் தம்மால் இடையூறெய்தி வருந்துகின்றானை ஒருநாள் வந்திலிரென மாயஞ்செப்பியவாறும், நீர் வாராமை யின் 419வண்ணம் வேறுபடுமென ஏற்றுக்கோடுமெனக் காரணங் கூறியவாறுங் காண்க. தம்மேல் தவறின்றாகக் கூறுங்காலத்து இது கூறுவரென்றற்குக் குறித்தகாலை என்றார். புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும் - அக் கூட் டத்தின் பின் முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந்தொழுகு மிடத்தும்: உதாரணம்: 420இவளே, நின்சொற் கொண்ட வென்சொற் றேறிப் பசுநனை ஞாழற் பல்கிளை யொருசிறைப் புதுநல னிழந்த புலம்புமா ருடைய ளுதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டு நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலுந் தோன்று மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே (குறுந். 81) வாங்கு கோனெல் என்னுங் குறிஞ்சிக்கலி (50) யுள், 421அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த வரவுவின் மேலசைத்த கையை யொராங்கு நிரைவளை முன்கையென் றோழியை நோக்கிப் படிகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டும்... எ-ம், 422கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங் கொடுமையிலை யாவ தறிந்து மடுப்பல் வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் றோழியது கவினே. எனவும் வரும். இத்துணையும் ஓர் கூட்டங் கூறினார். குறைந்து அவட் படரினும் - தலைவன் இரந்து பின்னின் றமை கண்டு தோழி மனம் ஞெகிழ்ந்து தான் 423குறைந்து தலைவி யிடத்தே சென்று குறைகூறினும்: உதாரணம்: 424வளையணி முன்கை வாலெயிற் றின்னகை யிளைய ராடுந் தளையவிழ் கானல் விருந்தென வினவி நின்ற நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே (ஐங்குறு. 198) மறைந்தவள் அருக - நாண் மிகுதியான் தனது வேட்கை மறைந்த தலைவி அக்கூற்றிற்கு உடம்படாது நிற்றலால்; தன்னொடும் அவளொடும் முதன் மூன்று அளைஇ - தலைவ னோடுந் தலைவியோடும் நிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி முதலிய 425மூன்றனையுந் தான் அறிந்தமை குறிப்பான் உணர்த்தி; பின்னிலை பல்வேறு நிகழும் மருங்கினும் - இரந்து பின்னிற்றல் பலவாய் வேறுபட்டு நடக்குமிடத்தும்: அவை பெருந்தன்மையானொருவன் யானை முதலியன வினாயுந் தழையுங் கண்ணியுங் கொண்டும் இப்புனத்து வாரா நின்றானெனவும், அவன் என்மாட்டுப் பெரிதுங் குறையுடைய னெனவும், அவன் குறைமுடியாமையின் வருந்தாநின்றா னெனவும், அத்தழை நீ ஏற்றல் வேண்டுமெனவும், அக்குறை முடித்தற்கு இஃதிடமெனவும், யான் கூறியது கொள்ளாயாயின் நினக்குச் செறிந்தாருடன் உசாவிக் குறை முடிப்பாயெனவும், மறுப்பின் அவன் மடலேறுவனெனவும், வரை பாய்வனெனவும், பிறவாற்றானுங் கூறிக் குறைநயப்பித்தலாம். உதாரணம்: 426புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் சாரற் றினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவ லுற்றதொன் றுண்டு. (ஐந்: ஐம். 14) 427கைதையந் தண்கானற் காலையு மாலையு மெய்த வரினு மிதுவெங் குறையென்னான் செய்தழையுங் கண்ணியுஞ் சேர்ந்துழி வைத்திறந்தா னுய்யலன் கொல்லோ வுணரலனே யென்றியால். 428ஒருநாள் வாரல னிருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென் னன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுல நன்னாட்டுப் பெய்த வேறுடை மழையிற் கவிழுமென் னெஞ்சே. (குறுந். 176) 429புணர்துணையோ டாடும் பொறியலவ னோக்கி யிணர்ததையும் பூங்கான லென்னையு நோக்கி யுணர்வொழியப் போன வொலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரி யைம்பாலாய் வண்ண முணரேனால். (சிலம்பு. கானல்.31) 430ஓரை யாய மறிய வூர னல்கினன் றந்த நறும்பூந் தண்டழை யாறுபடி னெவனோ தோழி வீறுசிறந்து நெடுமொழி விளக்குந் தொல்குடி வடுநாம் படுத்த லஞ்சுது மெனவே. இது, கையுறை ஏற்பத் தலைவிக்குக் கூறியது. 431சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா வலங்குகுலைக் காந்த டீண்டித் தாதுகக் கன்றுதாய் மருளுங் குன்ற நாட னுடுக்குந் தழையீத் தனனே யாமத் துடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற் கேளிடைக் கேடஞ் சுதுமே யாயிடை வாடுப கொல்லோ தாமே யவன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை யடுக்கத்த செயற்கருந் தழையே. (நற்றிணை. 359) இதுவும் அது. 432இலைசூழ்செங் காந்த ளெரிவாய் முகையவிழ்த்த வீர்ந்தண் வாடை கொலைவே னெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற நாட னுலைவுடை வெந்நோ யுழக்குமா லந்தோ முலையிடை நேர்வார்க்கு நேரு மிடமிது மொய்குழலே. 433அவ்வளை வெரிநி னரக்கீர்த் தன்ன செவ்வரி யிதழ சேணாறு பிடவி னறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லி னன்னிறம் பெறூஉம் வளமலி நாட னெருந னம்மொடு கிளைமலி சிறுதினைக் கிளிகடிந் தசைஇச் சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்த தல்ல லன்றது காதலந் தோழி தாதுண் வேட்கையிற் போதுதெரிந் தூதா வண்டோ ரன்னவவன் தண்டாக் காட்சி கண்டுங் கழறொடி வலித்தவென் பண்பில் செய்தி நினைப்பாய் நின்றே. (நற்றிணை. 25) 434மாயோ னன்ன மால்வரைக் கவாஅன் வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி யம்மலைக் கிழவோ னந்நயந் தென்றும் வருந்தின னென்பதோர் வாய்ச்சொற் றேறாய் நீயுங் கண்டு நுமரொடு மெண்ணி யறிவறிந் தளவல் வேண்டு மறுத்தரற் கரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பி னல்லது நட்டு நாடார்தாம் மொட்டியோர் திறத்தே. (நற்றிணை. 32) 435மறவல் வாழி தோழி துறைவர் கடல்புரை பெருங்கிளை நாப்பண் மடல்புனைந் தேறிநிற் பாடும் பொழுதே. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க. நன்னயம் பெற்றுழி நயம்புரியிடத்தினும் - அங்ஙனந் தோழி கூறிய குறையினை அவள் அருளப் பெற்றவழி அதனைத் தலைவற்குக் கூறுதற்கு விரும்புமிடத்தும்: அவை தலைவனாற்றாமை கண்டு தோழி கையுறை யெதிர்தலும், இரவுக்குறியும் பகற்குறியும் நேர்தலுங், குறியிடங் காட்டலும், பிறவுமாம். உதாரணம்: 436பொன்மெலியு மேனியாள் பூஞ்சுணங்கின் மென்முலைக ளென்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றுரைத்தா லுண்கண்ணி வாடா ளுடன்று. (திணை. நூற். 21) இதனுட் கண்கண்ணி - குறுங்கண்ணி. 437நிலாவி னிலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை யூரென வுணராச் சிறுமையொடு நீருடுத் தின்னா வுறையுட் டாயினு மின்ப மொருநா ளுறைந்திசி னோர்க்கும் வழிநாட் டம்பதி மறக்கும் பண்பி னெம்பதி வந்தனை சென்மோ வளைமேய் பரப்ப பொம்மற் படுதிரை கம்மென வுடைதரு மரனோங் கொருசிறைப் பலபா ராட்டி யெல்லை யெம்மொடு கழிப்பி யெல்லுற நற்றேர் பூட்டலு முரியி ரற்றன்று சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமு மெம்வரை யளவையிற் பெட்குவ நும்மொப் பதுவோ மேவரி தெமக்கே (அகம். 200) 438கடும்புலால் புன்னை கடியுந் துறைவ படும்புலாற் புட்கடிவான் புக்க - தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ்பொழி லேழைமா னோக்கி யிடம் (திணை: நூற். 44) எனவரும். இன்னும் நயம்புரி யிடத்தும் என்றதனால் அவன் வரவினைத் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. 439இவர்பரி நெடுந்தேர் மணியு மிசைக்கும் பெயர்பட வியங்கிய விளையரு மொலிப்பர் கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழை திதலை யல்கு னலம்பா ராட்டிய வருமை தோழி வார்மணற் சேர்ப்ப னிறைபட வோங்கிய முழவுமுதற் புன்னை மரவரை மறைகம் வம்மதி பானாட் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணா வல்ல லரும்படர் காண்கநாஞ் சிறிதே. (நற். 307) இது, தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தங் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோ வெனக்கூறியது. எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் - தலைவன் இளிவந் தொழுகுதற்குப் பொறாத தோழி அவன் இளிவரவு உணர்த்துங் கருத்தினளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரியவாய் வரும் ஒன்றல்லாப் பல நகை குறித்த பகுதிக் கண்ணும்: அவை என்னை மறைத்த லெவனாகியர் (இறை சூ. 12) என்றலும், அறியாள் போறலுங், 440குறியாள் கூறலும், படைத்துமொழி கிளவியுங், குறிப்பு வேறு கொளலும், பிறவுமாம். உதாரணம்: 441நிறைத்திங்கள் சேர்ந்தோடு நீண்மலை நாட மறைக்கப் படாதேனை மன்னு - மறைத்துக்கொண் டோடினா யாதலா லொண்டொடியா டன்பக்கங் கூடக் கிடந்ததொன் றில். 442மன்னேர்மன் சாய லவருண் மருடீர வின்னார்க ணென்ப தறியேனான் - மின்னூருங் கார்கெழு தோன்றற் கணமலை நன்னாட யார்கண்ண தாகுங் குறை. 443தன்னெவ்வங் கூரினு நீசெய்த வருளின்மை யென்னையு மறைத்தாளென் றோழி யதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூற றானாணி. (கலி. 44) இது, பழி கூறுவேனென்று தலைவி குறியாததொன்றைத் தோழி கூறினது. 444விருந்தின ராதலின் வினவுதி ரதனெதிர் திருந்துமொழி மாற்றந் தருதலு மியல்பெனக் கூறுவ தம்மயா னூறுபல வருமென வஞ்சுவன் வாழி யரைய வெஞ்சா தெண்ணில ரெண்ணியது முடிப்பர் கண்ணிலர் கொடியரிவ டன்னை மாரே. இது, நிகழாது நிகழ்வதாகப் படைத்து மொழிந்தது. 445நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவ னாட்டலு மாட்டாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் செல்கோ. இது, குறிப்பு வேறு கொண்டா ளென்றது. புணர்ச்சி வேண்டினும் - தலைவன் பகற்குறியையும் இரவுக் குறியையும் விரும்பிக் கூறுமிடத்தும்: தோழிமேன கிளவி. அவை பலவகைய. உதாரணம்: 446நன்னலஞ் சிதைய நாடொறும் புலம்பப் பொன்னிணர் வேங்கை துறுகற் றாஅ யிரும்பிடி வெரூஉ நாடற்கோர் பெருங்க ணோட்டஞ் செய்தன்றோ விலமே. இது, தோழி தலைவியைப் பகற்குறி நயப்பித்தது. 447மாயவனுந் தம்முனும் போலே மறிகடலுங் கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ - காண லிடையெலா ஞாழலுந் தாழையு மார்ந்த புடையெலாம் புன்னை புகன்று. (திணை. நூற். 58) 448ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்றே சிறுகான் யாறே யிரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந் துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங் கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறு மாண்டும் வருகுவள் பெரும்பே தையே. (குறுந். 113) இவை, பகற்குறி நேர்ந்து இடங்காட்டின. 449செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. (குறுந். 1) இது, தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது. 450ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே பாடின் னருவி யாடுத லினிதே நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் பஞ்சி வெண்டிரிச் செஞ்சுடர் நல்லிற் பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ யன்னை முயங்கத் துயிலின் னாதே. (குறுந். 354) இஃது, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாகப் பகற் குறி நேர்வாள்போல் இரவுக்காப்புமிகுதி கூறியது. பாடின்னருவி ஆடல் என்றாள் 451அதன்கண் உதவினா னென்பது பற்றி அல்லது களவிற்கு உடன் ஆடுதலின்று. 452செறுவார்க் குவகை யாகத் தெறுவர வீங்கும் வருபவோ தேம்பாய் துறைவ சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக் கடுமா நெடுந்தேர் நேமி போகிய லிருங்கழி நெய்தல் போல வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே. (குறுந். 336) இது, தலைவன் இரவுக்குறி நயந்தவனைத் தோழி மறுத்தது. 453நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப மன்றம் போழு நாடன் றோழி சுனைப்பூங் குவளைத் தொடலை தந்துந் தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியுங் காலை வந்து மாலைப் பொழுதி னல்லக நயந்துதா னுயங்கிச் சொல்லவு மாகா தஃகி யோனே. (குறுந். 346) இது, தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது. 454தண்ணந் துறைவன்கடும்பரி மான்றேர் காலை வந்து மாலை பெயரினும் பெரிது புலம்பின்றே கானல் சிறிது புலம்பினமாற் றோழி நாமே. இது, தலைவியது ஆற்றாமை கண்டு நம் வருத்தந் தீர்தற்கு இரவுக்குறியும் வேண்டுமென்றது. 455ஏன் மிடந்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொ றோழிநம் மேனி பசப்புக் கெட. (திணை. ஐம்.4) இது, தலைவன் வருவனென்றது. 456சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலு மிரவுக்குறிக் கொண்கன் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே. (சிற்றெட்டகம்) இஃது, இரவுக்குறி, தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறியது. 457அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தண்கயத் தமன்ற கூதளங் குழைய வின்னிசை யருவிப் பாடு மென்னதூஉங் கேட்டியோ வாழிவேண் டன்னைநம் படப்பை யூட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை யோங்குசினைத் தொடுத்த வூசல் பாம்பென முழுமுத றுமிய வுருமெறிந் தன்றே யின்னுங் கேட்டியோ வெனவுமஃ தறியா ளன்னையுங் கனைதுயின் மடிந்தன ளதன்றலை மன்னுயிர் மடிந்தன்றாற் பொழுதே காதலர் வருவ ராயிற் பருவ மிஃதெனச் சுடர்ந்திலங் கெல்வளை ஞெகிழ்ந்த நம்வயிற் படர்ந்த வுள்ளம் பழுதின் றாக வந்தனர் வாழி தோழி யந்தரத் திமிழ்பெய றலைஇய வினப்பல் கொண்மூத் தவிர்வில் வெள்ளந் தலைத்தலை சிறப்பக் கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவு மகல்வாய்ப் பாந்தட் படா அர்ப் பகலு மஞ்சும் பனிக்கடுஞ் சுரனே. (அகம். 68) இது, தாயது துயிலுணர்ந்து தலைவன் வந்தமை தோழி தலைவிக்குக் கூறிக் குறிவயிற் சென்றது. 458சேய்விசும் பிவர்ந்த செழுங்கதிர் மண்டில மால்வரை மறையத் துறைபுலம் பின்றே யிறவருந்தி யெழுந்த கருங்கால் வெண்குருகு வெண்குவட் டருஞ்சிறைத் தாஅய்க் கரைய கருங்கோட்டுப் புன்னை யிறைகொண் டனவே கணைக்கான் மாமலர் கரப்ப மல்குகழித் துணைச்சுறா வழங்கலும் வழங்கு மாயிடை யெல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ யெமரும் வேட்டம் புக்கன ரதனாற் றங்கி னெவனோ தெய்ய பொங்கதிர் முழவிசைப் புணரி யெழுதரு முழைகடற் படப்பையெம் முறைவி னூர்க்கே. (நற்றிணை. 67) இஃது, இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது. 459ஆம்ப னுடங்கு மணித்தழையு மாரமுந் தீம்புன லூரன் மகளிவ - ளாய்ந்த தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரை தன்னையர் பூ (திணை. ஐம். 40) இஃது, இரவுக்குறி நேர்ந்த தோழி இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்னபெற்றியான் வருவாயாகவென்றது. 460கடற்கானற் சேர்ப்ப கழியுலாஅய் நீண்ட வடற்கானற் புன்னைதாழ்ந் தாற்ற - மடற்கான லன்றி லகவு மணிநெடும் பெண்ணைத்தே முன்றி லிளமணன்மேன் மொய்த்து (திணை. நூற். 5) இஃது, இரவுக்குறியிடங் காட்டித் தோழி கூறியது. 461எம்மூர் வாயி லொண்டுறைத் தடைஇய கடவுண் முதுமரத் துடனுறை பழகிய தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர் வாய்ப்பறை யசாவும் வலிமுந்து கூகை மையூன் றெரிந்த நெய்வெண் புழுக்க லெலிவான் சூட்டொடு மலியப் பேணுது மெஞ்சாக் கொள்கையெங் காதலர் வரனசைஇத் துஞ்சா தலமரும் போழ்தி னஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே. (நற்றிணை. 83) இஃது, இரவுக்குறிவந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது. 462நிலவு மறைந்தன் றிருளும் பட்டன் றோவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன நிற்புறங் காக்குஞ் சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள் கெடுத்துப்படு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு நன்மார் படைய முயங்கி மேன்மேற் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி கீழு மேலுங் காப்போர் நீத்த வறுந்தலைப் பெருங்களிறு போலத் தமியன் வந்தோன் பனியலை நீயே. (நற்றிணை. 182) இது, தலைவனைக்கண்டு முயங்குகம் வம்மோ என்றது. வேண்டாப் பிரிவினும் - தலைவன்றான் புணர்ச்சியை விரும்பாது பிரிவை விரும்பிய இடத்தும்: அப்பிரிவு தண்டாதிரத்தலை முனிந்த மற்றையவழி இட்டுப் பிரிவும் அருமைசெய் தயர்த்தலு (111) மாம்; ஆண்டுத் தலைவற்குந் தலைவிக்குங் கூறுவன கொள்க. உதாரணம்: 463முத்த மரும்பு முடத்தாண் முதிர்புன்னை தத்துந் திரைதயங்குந் தண்ணங் கடற்சேர்ப்ப சித்திரப் பூங்கொடியே யன்னாட் கருளீயாய் வித்தகப் பைம்பூணின் மார்பு. (திணை. ஐம். 42) 464இறவுப்புறத்தன்ன பிணர்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி விழுவுக்களங் கமழு முரவுநீர்ச் சேர்ப்ப வினமணி நெடுந்தேர் பாக னியக்கச் செலீஇய சேறி யாயி னிவளே வருவை யாகிய சின்னாள் வாழ்வா ளாத லறிந்தனை சென்மே. (நற்றிணை. 19) இது, பிரிவுவேண்டியவழிக் கூறியது. 465சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழ மிருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற் பெருந்தே னிறாலொடு சிதறு நாடன் பேரமர் மழைக்கண் கலுழத்தன் சீரடை நன்னாட்டுச் செல்லு மன்னாய். (ஐங்குறு. 214) எனவும் வரும். வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தும் - தலைவற்குத் தாஞ்சில கொடுத்தலைத் தலைவி வேண்டியவிடத்தும்: அது தலைவி வேளாணெதிரும் விருந்தின்கண் (107) தோழி கூறுவதாம். உதாரணம்: 466பன்னா ளெவ்வந் தீரப் பகல்வந்து புன்னையம் பொதும்ப ரின்னிழற் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண்ணாய்ந்து வலவன் வண்டே ரியக்க நீயுஞ் செலவிருப் புறுத லொழிகதில் லம்ம செல்லா நல்லிசைப் பொலம்பூட் டிரையன் பல்பூங் கானற் பவத்திரி யன்னவிவ ணல்லெழி லிளநலந் தொலைய வொல்லெனக் கழியே யோத மல்கின்று வழியே வள்ளெயிற் றரவொடு வயமீன் கொட்குஞ் சென்றோர் மன்ற மான்றின்று பொழுதென நின்றிறத் தவலம் வீட வின்றிவட் சேப்பி னெவனோ பூக்கேழ் புலம்பப் பசுமீ னொடுத்த வெண்ணென் மாஅத் தயிர்மிதி மிதவைமா வார்குவ நினக்கே வடவர் தந்த வான்கேழ் வட்டங் குடபுல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவந் திண்டிமி லெல்லுந்தொழின் மடுத்த வல்வினைப் பரதவர் கூருளிக் கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை தண்கட லசைவளி யெறிதொறும் வினைவிட்டு முன்றிற் றாழைத் தூங்குந் தெண்டிரைப் பரப்பினெம் முறைவி னூர்க்கே (அகம். 340) இதனுள் 467தனக்கும் புரவிக்குங் கொடுப்பன கூறித்தடுத்த வாறு காண்க. நாள்வலை முகந்த (அகம். 300) என்பதும் அது. புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தகாலத்து அவன் தீங்கு உணராது, அவனை நன்றாக உணர்ந்த அறிவினது மடப்பங்கூறித் தங்காதற்சிறப்பு உரைத்த இடத்தும்: உதாரணம்: 468சுரஞ்செல் லியானைக் கல்லுறு கோட்டிற் றெற்றென விறீஇயரோ வைய மற்றியா நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோ லெமக்கும் பெரும்புல வாகி நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே. (குறுந். 169) இஃது, அவனோடு நகுதற்குத் தோன்றிய உணர்வு இன்றி யமையாமை கூறிக் காதற்சிறப்பு உரைத்தது. ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் - தலைவற்குத் தலைவியைப் பாதுகாத்துக் கொள்ளெனக் கூறுங் கிளவியது பகுதிக்கண்ணும்: தோழிமேன கிளவி பகுதியாவன வரைவிடைப் பிரிவு முதலிய பிரிவிடத்தும் புனத்திடைச் புணர்ச்சியின்றி நீங்குமிடத்தும் பிறவிடத்துங் கூறுவனவாம். உதாரணம்: 469நனைமுதிர் ஞாழற் றினைமரு டிரள்வீ நெய்தன் மாமலர்ப் பெய்த போல வூதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட் டன்னா யென்னுங் குழவி போல வின்னா செயினு மினிதுதலை யளிப்பினு நின்வரைப் பினளென் றோழி தன்னுறு விழுமங் கலைஞரோ விலளே (குறுந். 397) 470பெருநன் றாற்றிற் பேணாரு முளரே யொருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு புலவி தீர வளிமதி யிலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரன் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட நின்னல திலளே (குறுந். 115) 471எறிந்தெமர் தாமுழுத வின்குர லேனன் மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி மாமலை நாட மடமொழி தன்கேண்மை நீமறவ னெஞ்சத்துட் கொண்டு (ஐந். ஐம். 22) 472அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கா லிருவி நீள்புனங் கண்டும் பிரித றேற்றாப் பேரன் பினவே. (ஐங்குறு. 284) இது, தினை அரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள் போற் 473சிறைப்புறமாக ஓம்படுத்தது. இன்னும் ஓம்படைக் கிளவி யென்றதற்கு இவளை நீ பாதுகாத்துக் கொள்ளென்று தலைவன் கூறுங் கிளவியது பகுதிக்கண்ணு மென்றும் பொருள் கூறுக. 474பிணங்கரில் வாடிய பழவிற னனந்தலை யுணங்கூ ணாயத் தோரான் றெண்மணி பைப்பய விசைக்கு மத்தம் வையெயிற் றிவளொடு செலினோ நன்றே குவளை நீர்சூழ் மாமல ரன்ன கண்ணழக் கலையொழிய பிணையிற் கலங்கி மாறி யன்பிலி ரகறி ராயி னென்பர மாகுவ தன்றிவ ளவல நாகத் தணங்குடை யருந்தலை யுடலி வலனேர் பார்கலி நல்லேறு திரிதருங் கார்செய் மாலை வரூஉம் போழ்தே. (நற்றிணை. 37) இது, வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்துக் கொண்டிரு என்றாற்குத் தோழி கூறியது. செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும் - தோழி செவ்வனங் கூறுங் கடுஞ்சொற்களால் தலைவி நெஞ்சு சிதை வுடைத் தாயினும்: ஆண்டுந் தோழிமேன கிளவி. அவை தலைவனை இயற்பழித்தலுந் தலைவியைக் கழறலுமாம். உதாரணம்: 475கெளவையம் பெரும்பழி தூற்ற நலனழிந்து பைதலஞ் சிறுநுதல் பசலை பாய நம்மிதற் படுத்த வவரினு மவர் நாட்டுக் குன்றங் கொடியகொ றோழி யொன்றுந் தோன்றா மழைமறந் தனவே. இது, வரைவிடைப் பருவங்கண்டழிந்த தோழி இயற் பழித்தது. 476மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல் பைத லொருதலை சேக்கு நாட னோய்தந் தனனே தோழி பசலை யார்ந்தன குவளையங் கண்ணே (குறுந். 13) 477கேழ லுழுத கரிப்புனக் கொல்லையுள் வாழை முதுகாய் கடுவன் புதைத்தயருந் தாழருவி நாடன் றெளிகொடுத்தா னென்றோழி நேர்வளை நெஞ்சூன்று கோல். (ஐந்: எழு. 11) இஃது, அவன் சூளுறவு பொய்த்ததென இயற்பழித்தது. 478மகிழ்நன் மார்பே வெய்யை யானீ யழியல் கொன்று நாட்டிற் போக்கிய வொன்றுமொழிக் கோசர்போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. (குறுந். 73) 479மெய்யிற் றீரா மேவரு காமமொ டெய்யா யாயினு முரைப்ப றோழி கொய்யா முன்னுகுங் குரல்வார்பு தினையே யருவி யான்ற பைங்கா றோறு மிருவி தோன்றிய பலவே நீயே முருகு முரண்கொள்ளுந் தேம்பாய் கண்ணிப் பரிபன் னாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலோ டமைந்தனை யாழநின் பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்து கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி யாங்காங் கொழுகா யாயி னன்னை சிறுகிளி கடித றேற்றா ளிவளெனப் பிறர்த்தந்து நிறுக்குவ ளாயி னுறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே. (அகம். 28) என வரும். இதனானே வரையும் பருவமன்றெனக் கூறுதலுங் கொள்க. என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று 480கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும் - என்பு உருகுமாறு தலைவனாற் பிரியப் பட்ட தலைவிக்கு வழிபாடாற்றிச் சென்று தான் கூறும் மொழியை அவள்மனத்தே செலுத்தித் தலைவன் அன்பை அவளிடத்தே சேர்த்துக் கூறிய வற்புறுத்தற் கண்ணும்: அப்பிரிவு வரைந்துகோடற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தர்க்குற்றுழிப் பிரிதலுங், காவற்குப் பிரிதலுமாம். ஆண்டு வற்புறுத்துங்கால் இயற்பழித்தும் இயற்படமொழிந்தும் பிறவாறும் வற்புறுத்தும். முன் செங்கடு மொழியா லென்புழி இயற்பழித்தனவும் வற்புறுத்துதல் பயனாகக் கூறியன வென்றுணர்க. உதாரணம்: 481யாஞ்செய் தொல்வினைக் கென்பே துற்றனை வருந்தல் வாழி தோழி யாஞ்சென் றுரைத்தனம் வருக மெழுமதி புணர்திரைக் கடல்விளை யமிழ்தம் பெயற்கேற் றாஅங் குருகி யல்குத லஞ்சுவ லுதுக்காண் டம்மோன் கொடுமை நம்வயி னேற்றி நயம்பெரி துடைமையிற் றாங்கல் செல்லாது கண்ணீரருவி யாக கலுழுமே தோழியவர் பழமுதிர் குன்றே. (நற்றிணை. 88) இது, பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது. 482தோளுந் தொல்கவின் றொலைந்தன நாளு மன்னையு மருந்துய ருற்றன ளலரே பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமா னெழுவுறழ் திணிதோ ளியறேர்ச் செழிய னேரா வெழுவ ரடிப்படக் கடந்த வாலங் கானத் தார்ப்பினும் பெரிதென வாழல் வாழி தோழி யவரே மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத் தும்ப ரறையிறந் தகன்றன ராயினு நிறையிறந் துள்ளா ராகலோ வரிதே செவ்வேன் முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வி லோரிக் கொன்று சேரலர்க் கீந்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி நிலைபெறு கடவு ளாக்கிய பலர்புகழ் பாவை யன்னநின் னலனே. (அகம். 209) 483அழிய லாயிழை யிழிபுபெரி துடையன் பழியு மஞ்சும் பயமலை நாட னில்லா மையே நிலையிற் றாகலி னல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப் பொருள் போலத் தங்குதற் குரிய தன்றுநின் னங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே. (குறுந். 143) என்னுங் குறுந்தொகையும் (143) கொள்க. 484பெருங்கை யிருங்களி றைவன மாந்திக் கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ் சுரும்பிமிர் சோலை மலைநாடன்கேண்மை பொருந்தினார்க் கேமாப் புடைத்து. (ஐந்: எழு. 12) இவை, இயற்பட மொழிந்து வற்புறுத்தன. இன்னும் அன்புதலையடுத்த வன்புறை என்றதனாற் பிறவுங் கொள்க. 485பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ வீரை வேண்மான் வெளியன் றித்தன் முரசுமுற் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோ டியம்ப நுண்பனி யரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந் தவல நெஞ்சி னஞ்சினம் பெயர வுயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பனோடு நுண்ணுக நுழைத்த மாவே. (நற்றிணை. 58) இது, பகற்குறி வந்து போகின்ற தலைவன் 486புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவி குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தது. 487விளையா டாயமொ டோரை யாடா திளையோ ரில்லிடத் திற்செறிந் திருத்த லறனு மன்றே யாக்கமுந் தேய்ம்மெனக் குறுநுரை சுமந்து நறுமல ருந்திப் பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண வாடுகம் வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே செல்கென விடுநண்மற் கொல்லோ வெல்லுமிழ்ந் துரவுரு முரறு மரையிரு ணடுநாட் கொடி நுடங் கிலங்க மின்னி யாடுமழை யிறுத்தன்றவர் கோடுயர் குன்றே. (நற்றிணை. 68) இது, வரைவுநீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத் தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனங் கூறுவாரைப் பெறினெனக் கூறி வற்புறுத்தது. 488மறுகுபு புகலு நெஞ்ச நோயின் றிறுகப் புல்லி முயங்குகஞ் சிறுபுன் மாலை செயிர்ப்ப நாமே. இது, பிரிவிடையாற்றாத தலைவியைத் தோழி நன்னிமித் தங்கூறி வற்புறுத்தது. ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் - தலைவன் வருகின்ற நெறியினது தீமையைத் தாங்கள் அறிதலுற்றதனானே எய்திய கலக்கத்தின் கண்ணும்: தோழிமேன கிளவி. உதாரணம்: 489கழுதுகால் கிளர வூர்மடிந் தன்றே யுருகெழு மரபிற் குறிஞ்சி பாடிக் கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார் வயக்களிறு பொருத வாள்வரி யுழுவை கன்முகைச் சிலம்பிற் குழுமு மன்னோ மென்றோ ணெகிழ்ந்து நாம் வருந்தினு மின்றவர் வாரா ராயினு நன்றுமற் றில்ல வுயர்வரை யடுக்கத் தொளிறி மின்னிய பெயல்கான் மயங்கிய பொழுதுகழி பானாட் டிருமணி யரவுத்தேர்ந் துழல வுருமுச்சிவந் தெறியு மோங்குவரை யாறே. (நற்றிணை. 255) 490கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு மடிசெவி வேழ மிரீஇ - யடியோசை யஞ்சி யொதுங்கு மதருள்ளி யாரிருட் டுஞ்சா சுடர்த் தொடி கண். (ஐந்: ஐம். 16) இவை, இரவுக்குறிவரவால் தலைவி வருந்துவளென்றது. கரைபொரு கான்யாற்றங் கல்லதர் என்பதும் (யா - வி. 76) அது. கூருகிரெண்கின் என்னும் (112) அகப்பாட்டுங் காண்க. கலக்கம் எனப் பொதுப்படக் கூறியவதானல் ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஒரு 491குறி செய் எனக் கூறுவனவுங் கொள்க. 492கான மானதர் யானையும் வழங்கும் வான மீமிசை யுருமுநனி யுரறு மரவும் புலியு மஞ்சுதக வுடைய விரவழங்கு சிறுநெறி தமியை வருதி வரையிழி யருவிப் பாடொடு பிரச முழவுச்சேர் நரம்பி னிம்மென விமிரும் பழவிற னனந்தலைப் பயமலை நாட மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ வின்றுதலை யாக வாரல் வரினே யேமுறு துயர நாமிவ ணொழிய வெற்கண்டு பெயருங் காலை யாழநின் கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை யூதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய்பயி லழுவத்துப் பிரிந்தநின் னாய்பயிர் குறிநிலை கொண்டே கோடே. என்னும் (அகம். 318) நித்திலக் கோவையுள், வரினே ஏமுறு துயரம் நாமிவ ணொழிய, நின்னாய்பயிர் குறிநிலை கொண்ட 493கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது என்றவாறு காண்க. காப்பின் கடுமை கையற வரினும் - காத்தற் றொழிலால் உண்டாங் கடுஞ்சொற்கள் களவொழுக்கத்திடத்தே எல்லையற வருமிடத்தும்: தோழிமேன கிளவி; அவை பலவகைய. உதாரணம்: 494கடலுட னாடியுங் கான லல்கியுந் தொடலை யாயமொடு தழூஉவணிய யயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே துத்திப் பாந்தட் பைத்தக லல்குற் றிருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்கழைத் தழையினு முழையிற் போகான் றான்றந் தனன்யாய் காத்தோம் பல்லே. (குறுந். 294) இது, பகற்குறிக்கட் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது. 495கணமுகை கையெனக் காந்தள் கவின மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும் விறன்மலை நாட வரவரிதாங் கொல்லோ புனமு மடங்கின காப்பு. (திணை. ஐம். 2) இது, தினை விளைந்தமை கூறிச் செறிப்பறிவுறீ இயது. 496அறையருவி யாடா டினைவனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்றே. இது, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பறிவுறீ இயது. 497சாந்த மெறிந்துழுத சாரற் சிறுதினைச் சாந்த விதண மிசைச் சார்ந்து - சாந்தங் கமழக் கிளிகடியுங் கார்மயி லன்னா ளிமிழக் கிளயெழா வார்த்து. (திணை. நூற். 3) இது, பிறரைக் காத்ததற்கு இடுவரெனச் செறிப்பறிவுறீ இயது. 498பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல் கேளே மல்லேங் கேட்டனெம் பெரும வோரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியா முயங்குதொறு முயங்கு மறனில் யாயே. (குறுந். 244) இஃது, இரவுக்குறிக்காப்பின் கடுமை கூறியது. 499வினைவிளையச் செல்வம் விளைவதுபோ னீடாப் பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய மையார் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு கையார் பிரிவித்தல் காண். (திணை. நூற். 5) இஃது, இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்றெனத் தலைவிக்குக் கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. 500புன்னையம் பூம்பொழிலே போற்றவே பாதுகா வன்னப் பெடையே யறமறவன் - மன்னுங் கடும்புதர்மான் காவலி கானலஞ் செல்லூர் நெடுங்கடலே நீயு நினை. இது, புனங் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தோழி கூறியது. 501பண்டைக்கொ ணல்வினை யில்லேம் பதிப்பெயர்துங் கண்டற் குலங்காள் கழியருகேர் - முண்டகங்கா ணாணி யிராதே நயந்தங் கவர்க்குரைமின் பேணி யவர்செறித்த லான். இது, தலைவற்குக் கூறுமினென்றது. களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி உளப்பட; காதன் மிகுதி உளப்படக் களனும் பொழுதும் வரை நிலை விலக்கி - அவளிடத்துக் காதன் மிகுதி மனத்து நிகழாநிற்க 502இருவகையிடத்தையும் இருவகைக் காலத்தையுந் தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து அவன் வயின் தோன்றிய கிளவி யையும்; பிறவும் - கூறியவாறன்றிப் பிறவாறாக அவன் வயின் தோன்றிய கிளவியையும்; நாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ - அவன் பிறந்த நாடும் அதன் பகுதியாகிய குடியிருப்பும் அவ்வூர்க்கு இருப்பாகிய மனையும் பார்ப்பார் முதலிய நால்வகை வருணமும் அவ்வருணத்துள் இன்னவழி இவனென்றலும் ஒரு வயிற்றுப் பிறந்தோர் பலருள்ளுஞ் சிறப்பித்துக் கூறலும் பிறரின் ஒவ்வா திறந்தனவாதல் நோக்கித் தலைவனிடத்தே தோழி கூறிய கிளவியோடே கூடி; அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும் - அத்தன்மைத் தாகிய நிலைமையின் கூறுபாட்டானே வரைந்து கோடலை விரும்பிய வழியும்; தோழிமேன கிளவி. பகற்புணர் களனே (132) இரவுக் குறியே (131) குறியெனப்படுவது (130) என்னுஞ் சூத்திரங்களாற் களனும் பொழுதும் உணர்க. உதாரணம்: 503புன்னை காத்து மன்ன மோப்பியும் பனியிருங் கானல் யாம்விளை யாட மல்லலம் பேரூர் மறுகின் னல்கலு மோவா தலரா கின்றே. இது - பகற்குறி விலக்கியது. 504நெடுமலை நன்னாட நின்வே றுணையாக் கடுவிசை வாலருவி நீந்தி - நடுவிரு ளின்னா வதர்வர வீர்ங்கோதை மாதரா ளென்னாவா ளென்னுமென் னெஞ்சு. (ஐந்: ஐம். 19) இஃது, இரவுக்குறி விலக்கியது. 505இரவு வாரலை யைய விரவுவீ யகலறை வரிக்குஞ் சாரற் பகலும் பெறுதியிவ டடமென் றோளே. (கலி. 49) இது, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது. 506திரைமேற்போந் தெஞ்சிய தெண்கழிக் கானல் விரைமேவு பாக்கம் விளக்காக் - கரைமேல் விடுவாய்ப் பசும்புற விப்பிகான் முத்தம் படுவா யிருளகற்றும் பாத்து. (திணை. நூற். 48) இதுவும் அது. இவை, வரவுநிலை விலக்கின. 507வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. (குறுந். 18) இது, காதன் மிகுதி கூறியது. பிறவும் என்றதனால், 508கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழ்ந்து பனியா னாவே துன்னரு நெடுவரைத் ததும்பிய வருவி தண்ணென் முழவி னிமிழிசை காட்டு மருங்கிற் கொண்ட பலவிற் பெருங்க னாடநின் னயந்தோள் கண்ணே. (குறுந். 365) இது, யான் வரையுந் துணையும் ஆற்றுவளோ என்றாற்கு ஆற்றாளென்றது. 509நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெரூஉ நாட வல்லைமன் றம்ம பொய்த்தல் வல்லாய் மன்றநீ யல்லது செயலே. (ஐங்குறு. 287) இது, தலைவனைப் பழித்தது. 510கானற் கண்டற் கழன்றுகு பைங்காய் நீனிற விருங்கழி யுட்பட வீழ்ந்தெழ வுறுகா றூக்கத் தூங்கி யாம்பல் சிறுவெண் காக்கை யாவித் தன்ன வெளிய விரியுந் துறைவ வென்று மளிய பெரியோர் கேண்மை நும்போற் சால்பெதிர் கொண்ட செம்மை யொருத்தி தீதி னெஞ்சங் கையறுபு வாடி நீடின்று விரும்பா ராயின் வாழ்தன்மற் றெவனோ தேய்கமா தெளிவே. (நற்றிணை. 345) இஃது, ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேனென்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தோழி தெளிவிடை விலக்கியது. 511குன்றக் குறவன் காதன் மடமகள் மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல பைம்புறப் படுகிளி யோப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. (ஐங்குறு. 260) இது, புனங்காவல் இனியின்று என்றது. 512என்னாங்கொ லீடி லிளவேங்கை நாளுரைப்பப் பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே மருவியா மாலை மலைநாடன் கேண்மை யிருவியா மேன லினி. (திணை. நூற். 18) இது, தினை அரிகின்றமையுஞ் சுற்றத்தார் பொருள் வேட்கையுங் கூறியது. 513வெறிகமழ் வெற்பனென் மெய்ந்நீர்மை கொண்ட தறியாண்மற் றன்னோ வணங்கணங்கிற் றென்று மறியீர்த் துதிரந்தூய் வேலற் றரீஇ வெறியோ டலமரும் யாய். (ஐந். ஐம். 20) இது, வெறியச்சுறுத்தியது. 514இனமீ னிருங்கழி யோத முலாவ மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்க நினை நீர்மை யில்லா வொழிவு. (திணை. ஐம். 44) இஃது, அருளவேண்டும் என்றது. 515மூத்தோ ரன்ன வெண்டலைப் புணரி யிளையோ ராடும் வரிமனை சிதைக்குந் தளையவிழ் தாழைக் கானலம் பெருந்துறைச் சில்செவித் தாகிய புணர்ச்சி யலரெழ வில்வயிற் செறித்தமை யுணராய் பன்னாள் வருமுலை வருத்த வம்பகட்டு மார்பிற் றெருமர லுள்ளமொடு வருந்து நின்வயி னீங்குக வென்றியான் யாங்ஙன மொழிகோ வருந்திறற் கடவுள் செல்லூர்க் குணாஅது பெருங்கடன் முழக்கிற் றாகி யாண ரிரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினு முறுமெனக் கொள்குவ ரல்லர் நறுநுத லரிவை பாசிழை விலையே. (அகம். 90) இது, பொருண்மிகக் கொடுத்தல் வேண்டுமென்றது. இன்னும் வரைவு கடாவுதற் பொருட்டாய் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க. 516கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொ டூழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேற லறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது நறுவீ யடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்குங் குறியா வின்ப மெளிதி னின்மலைப் பல்வேறு விலங்கு மெய்து நாட குறித்த வின்ப நினக்கெவ னரிய வெறுத்த வேஎர் வேய்மருள் பணைத்தோ ணிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட் டிவளு மினைய ளாயிற் றந்தை யருங்கடிக் காவலர் சோர்பத னொற்றிக் கங்குல் வருதலு முரியை பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே. (அகம். 2) விலங்கும் எய்து நாட என்று அந்நாட்டினை இறப்பக் கூறி இந்நாடுடைமையிற் குறித்த இன்பம் நினக்கெவ னரிய என வரைதல் வேண்டியவாறும், வேங்கை விரிந்ததனான் தினை யறுத்தலின் இற்செறிப்புக் கூறியவாறுங், கங்குல் வருதலும் உரியை யெனப் பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள்போற் கூறி நெடுவெண்டிங்களு மூர்கொண்டன்றே யென்று அதனை யும் மறுத்து வரைதற்கு நல்லநாளெனக் கூறி வரைவு கடாயவாறுங் காண்க. 517காமங் கடவ வுள்ள மினைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயி னோங்கித் தோன்று முயர்வரைக் கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. (ஐங்குறு. 237) இஃது, ஊரை 518இறப்பக் கூறியது. துணை புணர்ந் தெழுதரும் என்னும் நெய்தற் கலி (135) யுட், 519கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ் தோளளாத் துறப்பாயான் மற்றுநின் குடிமைக்கட் பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ; ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத் துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ; திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை யிகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ. என இவை ஒழுக்கமும் வாய்மையும் புகழும் 520இறப்பக் கூறியன. குடிப்பிறந்தார்க்கு இம்மூன்றுஞ் சிறப்பக் கூறல் வேண்டும். ஏனைய வந்துழிக் காண்க. இன்னும் அனை நிலைவகை என்றதனானே தலைவி ஆற்றாமை கண்டு வரைவு கடாவவோவென்று தலைவியைக் கேட்டலும் சிறைப்புறமாகவுஞ் சிறைப்புறமன்றாகவுந் தலைவி யாற்றாமை கூறி வரைவு கடாவுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. 521கழிபெருங் கிழமை கூறித் தோழி யொழியா யாயினொன் றுரைக்கோ தெய்ய 522கடவு ணெற்றிய கருங்கால் வேங்கை தடவுநிலைப் பலவொடு தாழ்ந்த பாக்கத்துப் பின்னீ ரோதி யிவடமர்க் குரைப்பதோர் பெண்யாப் பாயினு மாக வொண்ணுத லிலங்குவளை மென்றோட் கிழமை விலங்குமலை நாடநீ வேண்டுதி யெனினே. 523நிலவு மிருளும் போல நெடுங்கடற் கழியுங் கானலு மணந்தன்று நுதலுந் தோளு மணிந்தன்றாற் பசப்பே. எனவரும். ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் - தலைவிக்குக் கூட்டம் உண்டு கொலென்று தாய் ஐயுற்றவழி அவ்வையப்பட்ட செய்கையைத் தாய்க்கு எதிரே நின்று மறுத்து அதனைப் பொய்யெனவே கருதும்படி அவள் மனத்தினின்றும் போக்கிப் மெய்யல்லன சில சொற்களை மெய்வழிப் படுத்து அறிவுகொள்ளக் கொடுப் பினும்: உதாரணம்; 524உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயலான் றவிந்த தூங்கிரு ணடுநாண் மின்னுநிமிர்ந் தன்ன கணங்குழை யிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் வரையிழி மயிலி னொல்குவ ளொதுங்கி மிடையூர் பிழியக் கன்டனெ னிவளென வலையல் வாழிவேண் டன்னை நம் படப்பைச் சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண் டுருவி னணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலு முண்டே யிவடான் சுடரின்று தமியளாய்ப் பனிக்கும் வெருவர மன்ற மராத்த கூகை குழறினும் நெஞ்சழிந் தரணஞ் சேரு மதன்றலைப் புலிக்கணத் தன்ன நாய்த் தொடர் விட்டு முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திற லெந்தையு மில்லா னாக வஞ்சுவ ளல்லளோ விவளிது செயலே. (அகம். 158) இது, 525மிடையை ஏறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது. இது, சிறப்புறமாகக் கூறி வரைவு கடாதலின் அதன் பின் வைத்தார். 526வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும் பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தனவாஞ் சேயரிக்கண் டாம். (ஐந்: ஐம். 15) இதுவும்அது. அவன் விலங்குறினும் - தன்னானுந் தலைவியானும் இடை யீடு படுதலின்றித் தலைவனாற் கூட்டத்திற்கு இடையூறு தோன் றினும்; அது வரைவிடைப் பொருட்பிரிவும், வேந்தற்குற்றுழி யும், காவற்பிரிவுமாம். உதாரணம்: 527செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைஇய வகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி. (கலி. 19) 528நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து. (ஐந். எழு. 16) களம்பெறக் காட்டினும் - காப்புமிகுதியானுங் காதன் மிகுதியானுந் தமர் வரைவு மறுத்ததினானுந் தலைவி ஆற்றா ளாயவழி இஃதெற்றினானாயிற்றெனச் செவிலி 529அறிவரைக் கூஉய் அவர் களத்தைப் பெறா நிற்கத் தலைவியை அவர்க்கு வெளிப்படக் காட்டினும்: களமாவது:- கட்டுங் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட்டிடமுமாம். உதாரணம்: 530பொய்படு பறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயி லாலுநம் மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோ னாண்டகை விறல்வே ளல்லனிவள் பூண்டாங் கிளைமுலை யணங்கி யோனே. (ஐங்குறு. 250) இது, கழங்குபார்த்துழிக் கூறியது. 531கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி யறியா வேலன் வெறியெனக் கூறு மதுமனங் கொள்குவை யனையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. (ஐங்குறு. 243) இது, தாயறியாமை கூறி வெறிவிலக்கியது. 532அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடா னாயி னென்பயஞ் செய்யுமோ வேலற்கு வெறியே. (ஐங். 244) இது, தலைவிக்குக் கூறியது. 533நெய்த னறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழு மார்ப னருந்திறற் கடவு ளல்லன் பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே. (ஐங். 182) இது, வேலற்குக் கூறியது. 534கடவுட் கற்சுனை யடையிற் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பக் குறமக னருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி வேலன் வேண்ட வெறியிடை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே. (நற்றிணை. 34) இது, முருகற்குக் கூறியது. 535அன்னை தந்த தாகுவ தறிவென் பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி முருகென மொழியு மாயின் னருவரை நாடன் பெயர்கொலோ வதுவே. (ஐங்குறு. 247) இது, தமர்கேட்பக் கூறியது. பிறன்வரைவு ஆயினும் - நொதுமலர் வரையக் கருதிய வழித் தலைவி சுற்றத்தார் அவ்வரைவினை ஆராயினும்: தோழி தலைவற்குந் தலைவிக்குங் கூறும். உதாரணம்: 536கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் கொழுமீன் கொள்பவர் பாக்கங் கல்லென நெடுந்தேர் பண்ணி வரலா னாதே குன்றத் தன்ன குவவுமண னீந்தி வந்தனர் பெயர்கொ றாமே யல்க லிளையரு முதியருங் கிளையுடன் குழீஇக் கோட்சுறா வெறிந்தெனச் சுருங்கிய நாட்பின் முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள் வலையுந் தூண்டிலும் பற்றிக் பெருங்காற் றிரையெழு பௌவ முன்னிய கொலைவெஞ் சிறாஅர் பாற்பட் டனளே. (நற்றிணை. 207) இது, நொதுமலர் வரைவு மலிந்தமை தோழி சிறைப்புற மாகக் கூறியது. பாற்பட்டனள் எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினாள். 537இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின் கண்ணகன் றூமணி பெறூஉ நாட னறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி யெம்மில் வருகுவை நீ யெனப் பொம்ம லோதி நீவி யோனே. (குறுந். 379) இது, தாய்கேட்பத் தோழி தலைவிக்குக் கூறியது. அவன் வரைவு மறுப்பினும் - தலைவி சுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழியும்: தோழி அறத்தொடுநிலை யாற் கூறும். உதாரணம்: 538அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவண் மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய். (ஐங்குறு. 220) 539குன்றக் குறவன் காதன் மடமக ளணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயிற் கொடுத்தனெ மாயினோ நன்றே யின்னு மானாது நன்னுத றுயரே (ஐங்குறு. 258) என வரும். தலைவிக்குக் கூறுவனவுங் கொள்க. 540அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்பவ ரிருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னு மாக்களோ டின்றுபெரி தென்னு மாங்கண தவையே. (குறுந். 146) இது, தமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்றாட்குத் தோழி கூறியது. 541நுண்ணேர்புருவத்த கண்ணு மாடு மயிர்வார் முன்கை வளையுஞ் செற்றுங் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி யெழுதரு மழையிற் குழுமும் பெருங்க னாடன் வருங்கொ லன்னாய். (ஐங்குறு. 218) இது, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி, 542தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு கடிதின் வரைவரெனக் கூறியது. முன்னிலை அறன் எனப் படுதல் என்ற இருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் (அறனெனப்படுதல் இருவகைப் புரைதீர் முன்னிலையென்று கிளவி தாயிடைப் புகுப்பினும்) - அறனென்று சொல்லப்படுந் தன்மை இருவர் கண்ணுங் குற்றந் தீர்ந்த எதிர்ப்பாடென்று செவிலியிடத்தே கூறி அக்கிளவியை நற்றாயிடத்துஞ் செலுத்தினும்: என்றது, புனறருபுணர்ச்சியும், பூத்தரு புணர்ச்சியுங், களிறு தருபுணர்ச்சியும் போல்வன செவிலிக்குக் கூறி அவள் நற்றாய்க்குக் கூறுதலை நிகழ்த்துவித்தலாம். எனவே, அவள் தந்தைக்குந் தன்னையர்க்கும் உணர்த்துதலும் அதனை மீண்டு வந்து தலைவிக்கு உணர்த்துதலும் பெற்றாம். அவ்வறத்தொடு நிலை எழுவகைய (207) எனப் பொருளியலுட் கூறுப. உதாரணம்: காமர் கடும்புனல் கலந்தெம்மொ டாடுவாள் என்னுங் குறிஞ்சிக்கலி (39)யுள், தெருமந்து சாய்த்தார் தலை எனப் புனறரு புணர்ச்சியால் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பச் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப அவள் 543ஏனை யோர்க்கு அறத்தொடு நின்றவாறு காண்க. 544வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடா நீர்கொடுப்பி னல்லது - கோடா வெழிலு முலையு மிரண்டற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து. (திணை. நூற். 15) 545சான்றோர் வருந்திய வருத்தமு நுமது வான்றோய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கினோ நன்றே யஃதான், றடைபொருள் கருதுவி ராயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் வஞ்சியோ டுள்ளி விழவி னுறந்தையுஞ் சிறிதே. இவை, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நின்றன. 546அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை தானு மலைந்தா னெமக்குந் தழையாயின பொன்வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே. (ஐங்குறு. 201) இது, தழைதந்தமை கூறிற்று. 547சுள்ளி சுணைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன். (திணை. நூற். 2) இது, களிற்றிடையுதவி கூறிற்று. 548வில்லார் விழவினும் வேலாழி சூழுலகி னல்லார் விழவகத்து நாங்காணே - நல்லா யுவர்க்கத் தெறிதிரைச் சேர்ப்பனோ டொப்பார் சுவர்க்கத் துளராயிற் சூழ். (திணை. நூற். 62) இது, செவிலி தலைவியைக் கோலஞ் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெறவேண்டுமென்றாட்குத் தோழி கூறியது. 549பெருங்கடற் றிரையது சிறுவெண் காக்கை துறைபடி யம்பி யகமனை யீனுந் தண்ணந் துறைவ னல்கி னொண்ணுத லரிவை பாலா ரும்மே. (ஐங்குறு. 168) இது, நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி இதற்குக் காரணமென்னென்ற செவிலிக்குத் தோழி கூறியது. 550எந்தையும் யாயு முணரக் காட்டி யொளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின் மலைகெழு வெற்பன் றலைவந் திரப்ப நன்றுபுரி கொள்கையி னொன்றோ வின்றே முடங்க லிறைய தூங்கணங் குரீஇ நீடிரும் பெண்ணை தொடுத்த கூடினு மயங்கிய மைய லூரே. (குறுந். 374) இஃது, அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறியது. வரைவு உடன்பட்டோற் கடாவல் வேண்டினும் - தலைவி தமர் வரைவுடன் படத்தானும் வரைவுடன் பட்ட தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி இனி நீட்டிக் கற்பாலை யல்லையெனக் கடுஞ்சொற் கூறி வரைவுகடாவ் வேண்டிய இடத்தும். உதாரணம்: 551மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்; ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுத லன்பெனப் படுவது தன்கிளை செறாமை யறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாமை நிறைவெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்; ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத னின்றலை வருந்தியா டுயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் றேரே. (கலி. 133) இது, முற்காலத்து வரைவுகடாவுமாறு போலன்றி வரைவு கடாயது. 552யாரை யெலுவ யாரே நீ யெமக் கியாரையு மல்லை நொதும லாளனை யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பிற் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு மமயத்து முரசதிர்ந் தன்ன வோங்கற் புணரி பாய்ந்தாடு மகளி ரணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த வாபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மரந்தை யன்னவெம் வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே. (நற்றிணை. 395) இது, நலந்தொலைவுரைத்து வரைவுகடாயது. ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட - அங்ஙனங் கடாவியவழி அவ்வரைந்துகோடன் மெய்யாயினமையின் வதுவை முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்துக் கூறுதல் உளப்பட: தன்மை - மெய்ம்மை. எனவே, முன் பொய்ம்மையான வற்புறுத்தலும் பெற்றாம். உதாரணம்: 553நெய்கனி குறும்பூழ் காயமாக வார்பதம் பெறுக தோழி யத்தை பெருங்க னாடன் வரைந்தென வவனெதிர் நன்றோ மகனே யென்றனெ னன்றே போலு மென்றுரைத் தோனே. (குறுந். 389) இது, தலைவன் குற்றேவன் மகனான் வரைவுமலிந்த தோழி தலைவிக்குரைத்தது. 554கூன்முண் முண்டகக் கூனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் வரிக்குந் தூமணற் சேர்ப்பனை யானுங் காதலென் யாயுநனி வெய்ய ளெந்தையுங் கொடீஇயர் வேண்டு மம்ப லூரு மவனொடு மொழிமே. (குறுந். 51) எனவும் வரும். 555கொடிச்சி காக்கு மடுக்கற் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல்வரை யேறி யங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் நிரையணற் கொடுங்கவு ணிறைய முக்கி வான் பெய னனைந்த புறத்த நோன்பியர் தையூ ணிருக்கையிற் றோன்று நாடன் வந்தனன் வாழி தோழி யுலகங் கயங்க ணற்ற பைதறு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு கள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே. (நற்றிணை. 22) இதனுள், தினை விளைகாலம் வதுவைக் காலமாயினும் 556வம்பமாரி இடையிடுதலான அன்றுயான்கூறிய வரைவு பொய்த்தன ரேனும் இன்று மெய்யாகவே வந்தனரென்றாள். 557உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுத லரவுவாள் வாய முள்ளிலைத் தாழை பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும் பல்பூங் கானற் பகற்குறி வந்துநம் மெய்கவின் சிதையப் பெயர்ந்தன னாயினுங் குன்றிற் றோன்றுங் குவவுமண லேறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி தண்டா ரகலம் வண்டிமிர் பூதப் படுமணிக் கலிமா கடைஇ நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே. (நற்றிணை. 235) இது, தலைவன் வரைவொடு வருகின்றமை காண்கம் வம்மோ வென்றது. பாங்குறவந்த நாலெட்டும் - பாங்கியர் பலருள்ளும் பாங் காந்தன்மை சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும்; நாலெட்டு மென உம்மை விரிக்க. வகையும் - இக்கூற்றுக்களிலே வேறுபட வருவனவும்; தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன - பொறுத்தற்கரிய சிறப்பினை யுடைய தோழி யிடத்தன என்றவாறு. எனவே, ஒன்றிய தோழிக்கன்றி ஏனையோர்க்கு இக்கூற்று இன்றென்றான். 558தாய்த்தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும், இருவர் துன்பமுந் தான் உற்றாளாகக் கருதுஞ் சிறப்பும் உடைமையின் தாங்கருஞ் சிறப்பு என்றான். உரைத்துழிக் கூட்டத்தோடே அகற்சியும் என்றலும் ஊட்டலும் உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இருநான்கு கிளவியும் பாங்குற வந்த என்க. நாட்டத்தின் கண்ணும் எஞ்சாமற் கிளந்த என்க. என்றது ஆராய்ச்சியுடனே இவ்வெட்டுங் கூறுமென்றான். பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக் கூட்டத்தோடு எஞ்சாமற் கிளந்த என்க. ஏனைப்பொருள்கள் ஏழனுருபும் வினையெச்சமுமாய் நின்ற வற்றைப் பாங்குறவந்த என்பத னொடு முடித்து அப்பெயரெச்சத் தினை நாலெட்டென்னும் பெயரோடு முடித்து அதனைத் தோழிமேனவென முடிக்க. இனி, வகை யாற்கொள்வன வருமாறு: 559அன்னை வாழிவேண் டன்னை நெய்த னீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவ னெந்தோ டுறந்த காலை யெவன்கொல் பன்னாள் வருமவ னளித்த போழ்தே. (ஐங்குறு. 109) இஃது, அறத்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து நீட்டித் துழி ஐயுற்ற செவிலி அவன் நும்மைத் துறந்தான் போலும் நுங் கட்கு அவன் கூறியதிறம் யாதென்றாட்குத் தோழி கூறியது. 560அன்னை வாழிவேண் டன்னை கழனிய முண்டக மலருந் தண்கடற் சேர்ப்ப னெந்தோ டுறந்தன னாயி னெவன்கொன் மற்றவ னயந்த தோளே. (ஐங்குறு. 108) இஃது, அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங்கொலென்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி அவட்குக் கூறியது. 561அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு ஞாழல் பூக்குந் தண்ணந் துறைவ னிவட்கமைந் தனனாற் றானே தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே. (ஐங்குறு. 103) இது, வதுவைநிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது. 562கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்ன ரமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று. இது, சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்தாரென்றது. 563நொதும லாளர் கொள்ளா ரிவையே யெம்மொடு வந்து கடலாடு மகளிரு நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையா ருடலகங் கொள்வோ ரின்மையிற் றொடலைக் குற்ற சிலபூ வினரே. (ஐங்குறு. 187) இது, கையுறை மறுத்தது. 564அம்ம வாழிதோழி நம்மலை வரையா மிழியக் கோடி னீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியுந் தண்பனி வடந்தை யச்சிர முந்துவந் தனர்நங் காத லோரே. (ஐங்குறு. 223) இது, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்கு முன் வருகின்றமை யறிந்த தோழி தலைவிக்குக் கூறியது. (23) (செவிலி கூற்று நிகழுமாறு கூறல்) 115. களவல ராயினுங் காமமெய்ப் படுப்பினு மளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் மாடிய சென்றுழி யழிவுதலை வரினுங் காதல் கைமிகக் கனவி னரற்றலுந் தோழியை வினவலுந் தெய்வம் வாழ்த்தலும் போக்குட னறிந்தபிற் றோழியொடு கெழீஇக் கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினு மிருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணு மின்ன வகையிற் பதின்மூன்று கிளவியோ டன்னவை பிறவுஞ் செவிலி மேன. இது, செவிலிகூற்று நிகழுமாறு கூறுகின்றது. அக்கூற்றுச் செவிலி தானே கூறப்படுவனவுந், தலைவியுந் தோழியுங் 565கொண்டு கூற்றாகக் கூறப்படுவனவுமென இருவகையவாம்; இக் கூறப்பட்ட பதின்மூன்று கிளவியும் அவைபோல்வன பிறவுஞ் செவிலி தானே கூறப்படுவனவுந் தலைவியுந் தோழியும் அவள் கூற்றாய்க் கொண்டெடுத்து மொழியப் படுவனவுமாய்ச் செவிலிக் குரியவா மென்றவாறு. இன்னவகை யென்றார், தன் கூற்றுங் கொண்டு கூற்றுமாய் நிகழுமென்றற்கு. (இ - ள்.) களவு அலர் ஆயினும் - களவொழுக்கம் புறத் தார்க்குப் புலனாய் 566அலர் தூற்றப்படினும்: உதாரணம்: 567பாவடி யுரல பகுவாய் வள்ளை யேதின்மாக்க ணுவறலு நுவல்ப வழிவ தெவன் கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்னவென் மெல்லியற் குறுமகள் பாடிநள் குறினே. (குறுந். 89) இது, செவிலி தானே கூறியது. 568அம்ம வாழி தோழி நென்ன லோங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற் கூரார் பெண்டென மொழிய வென்னை யதுகேட் டன்னா யென்றன ளன்னை பைபைய வெம்மை யென்றனென் யானே. (ஐங்குறு. 113) இதனுள், பெண்டென்றதனைக் கேட்ட அன்னா யென்றனள் அன்னையென அலர்தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு காண்க. காமம் மெய்ப்படுப்பினும் - தலைவி கரந்தொழுகுங் காமந் தானே அக்களவினை நன்றாயுந் தீதாயும் மெய்க்கண் வெளிப் படுப்பினும்: உதாரணம்: 569மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை யணியிற் றிகழ்வதொன் றுண்டு. (குறள். 1273) இது, காமத்தால் திகழ்ந்த பொலிவினைச் செவிலி தானே கூறியது. அளவு மிகத் தோன்றினும் - கண்ணுந் தோளும் முலையும் பிறவும் புணர்ச்சியாற் 570கதிர்த்துக் காரிகை நீரவாய் அவளிடத்து அளவை மிகக் காட்டினும்: உதாரணம்: 571கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. (குறள். 1272) இது, கதிர்ப்புக்கண்டு செவிலி தானே கூறியது. 572பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென வாகத் தரும்பிய சுணங்கும் வம்புடைக் கண்ணுருத் தெழுதரு முலையு நோக்கி யெல்லினை பெரிதெனப் பன்மாண் கூறிப் பெருந்தோ ளடைய முயங்கி நீடுநினைந் தருங்கடிப் படுத்தனள் .............. .............. .................. தாரார் மார்பநீ தணந்த ஞான்றே. (அகம். 150) இது, தோழி கொண்டு கூறியது. தலைப்பெய்து காணினும் - இருவர்க்குங் கூட்டம் நிகழ்த லானே தலைவனை இவ்விடத்தே வரக் காணினுந் தலைவியைப் புறத்துப் போகக் காணினும்: 573பெய்தென்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கொண்டது. உதாரணம்: 574இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப் புலவுநாறு புகர்நுதல் கழுவக் கங்கு லருவி தந்த வணங்குடை நெடுங்கோட் டஞ்சுவரு விடர்முகை யாரிரு ளகற்றிய மின்னொளி ரெஃகஞ் சென்னெறி விளக்கத் தனியன் வந்து பணியலை முனியா னீரிழி மருங்கி னாரிடத் தமன்ற குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி யசையா நாற்ற மசைவளி பகரத் துறுக னண்ணிய கறியிவர் படப்பைக் குறியிறைக் குரம்பைநம் மனை வயிற் புகுதரு மெய்ம்மலி யுவகைய னந்நிலை கண்டு முருகென வுணர்ந்து முகமன் கூறி யுருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேட் பரவு மன்னை யன்னோ வென்னா வதுகொ றானே பொன்னென மலர்ந்த வேங்கை யலங்குசினை பொலிய மணிநிற மஞ்ஞை யகவு மணிமலை நாடனோ டமைந்தநந் தொடர்பே. இம் மணிமிடைபவளத்துத் (அகம். 272) தலைவனைச் செவிலி கண்டு 575முருகெனப் பராவினமை தோழி கொண்டு கூறினாள். உருமுரறு கருவிய (158) என்னு மகப்பாட்டினுள், 576மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென வலையல் வாழிவேண் டன்னை என்றது, தலைவி புறத்துப்போகக் கண்டு செவிலி கூறிய தனைத் தோழி கொண்டு கூறினாள். தானே கூறுவன வந்துழிக் காண்க. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் - கட்டுவிச்சியும் வேலனுந் தாம் பார்த்த கட்டினானுங் கழங்கினானுந் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்யாக்கால் இம்மையில் தீராதென்று கூறுதலின், அவ் விருவருந் தம்மினொத்த திறம்பற்றிய தனையே செய்யுஞ் செய்தியிடத்தும்: திறம் என்றதனான் அவர் வேறு வேறாகவுங் கூறப்படும். உதாரணம்: 577பெய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி மலைவான் கொண்ட சினைஇய வேலன் கழங்கினா னறிகுவ தென்றா னன்றா லம்ம நின்றவிவ ணலனே. (ஐங்குறு. 248) இது, வேலன் கழங்குபார்த்தமை கூறிற்று. 578அறியா மையின் வெறியென மயங்கி யன்னையு மருந்துய ருழந்தன ளதனா லெய்யாது விடுதலோ கொடிதே நிரையித ழாய்மல ருண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே. (ஐங்குறு. 242) இது, வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று. அணங்குடை நெடுவரை என்னும் (22) அகப் பாட்டினுட் கட்டுக்கண்டு வெறியெடுத்தமை கூறிற்று. பனிவரை நிவந்த என்னும் (98) அகப்பாட்டினுட் பிரப் புளர்பிரீஇ எனக் கட்டுவிச்சியைக் கேட்டவாறும், என் மகட்கு எனச் செவிலிகூற்று நிகழ்ந்தவாறுங் காண்க. இதனுள் 579நெடுவேணல்குவ னெனினே எனத் தலைவி அஞ்ச வேண்டியது, இருவரும் ஒட்டிக்கூறாமல் தெய்வந்தான் அருளு மென்று கோடலின். 580இகுளை கேட்டிசிற் காதலந் தோழி குவளை யுண்கண் டென்பனி மல்க வறிதியான் வருந்திய செல்லற் கன்னை பிறிதொன்று கடுத்தன ளாகி வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி யுடலுநர்க் கடந்த கடலந் தானைத் திருந்திலை நெடுவேற் றென்னவன் பொதியி லருஞ்சிமை யிழிதரு மார்த்துவர லருவியிற் றதும்புசீ ரின்னியங் கறங்கக் கைதொழு துருகெழு சிறப்பின்முருகு மனைத்தரீஇக் கடம்புங் களிறுங் பாடி நுடங்குபு தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலு மாடின ளாத னன்றோ நீடு நின்னொடு தெளித்த நன்மலை நாடன் குறிவர லரைநாட் குன்றத் துச்சி நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூரிருட் டிருமணி யுமிழ்ந்த நாகங் காந்தட் கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி நன்னிற மருளு மருவிட ரின்னா நீளிடை நினையுமெ னெஞ்சே. என்னும் (அகம். 138) மணிமிடைபவளம் விதந்து கூறாமையின் 581இரண்டு ஒருங்கு வந்தது. ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் - அங்ஙனம் வெறி யாடுதல் வேண்டிய தொழின் முடிந்த பின்னுந் தலைவிக்கு வருத்தம் மிகினும்: உதாரணம்: 582வேங்கை யிரும்புனத்து வீழுங் கிளிகடியாள் காந்தண் முகிழ்விரலாற் கண்ணியுங் கைதொடா ளேந்தெழி லல்குற் றழைபுனையா ளெல்லேயென் பூந்தொடி யிட்ட புலம்பு மறிதிரோ. 583புனையிருங் குவளைப் போதுவிரி நாற்றஞ் சுனையர மகளி ரவ்வே சினைய வேங்கை யொள்வீ வெறிகமழ் நாற்றமொடு காந்த ணாறுப கல்லர மகளி ரகிலு மாரமு நாஅ றுபவன்(?) றிறலரு மரபிற் றெய்வ மென்ப வெறிபுனங் காவ லிருந்ததற் றொட்டுத் தீவிய நாறு மென்மக ளறியேன் யானிஃ தஞ்சுதக வுடைத்தே. இவை, ஆற்றாமை கண்டு அஞ்சிச் செவிலி பிறரை வினாயின. 584அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாண் மலிபூஞ் சாரலென் றோழி மாரோ டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலிபுலி யென்னும் பூச றோன்ற வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித ழூசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண் டியாதோ மற்றம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே யவற்கண் டெம்மு ளெம்முண் மெய்ம்மறை பொடுங்கி நாணி நின்றன மாகப் பேணி யைவகை வகுத்த கூந்த லாய்நுதன் மையீ ரோதி மடவீர் நும்வாய்ப் பொய்யு முளவோ வென்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்த்த தேரனெதிர் மறுத்து நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே பகன்மா யந்திப் படுசுட ரமயத் தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றன ளதனள வுண்டுகொன் மதிவல் லோர்க்கே. (அகம். 48) இது, செவிலி கூற்றினைத் தோழி கொண்டு கூறியது. காதல் கைமிகக் கனவின் அரற்றலும் - தலைவியிடத்துக் காதல் கையிகந்து பெருகுதலான் துயிலா நின்றுழியும் ஒன்று கூறி அரற்றுதலும்: கனவு- துயில், துயிலிற் காண்டலைக் கனவிற் காண்ட லென்ப. உதாரணம்: 585பொழுது மெல்லின்று (குறுந். 161) என்பதனுட் புதல்வற் புல்லி யன்னாய் என்று தலைவியை விளித்தது கனவின் அரற்றலாயிற்று. அரற்றல், இன்னதோர் இன்னாக்காலத்து என் செய் கின்றா யெனக் காதல்பற்றி இரங்குதல். தோழியை வினவலும் - நின்றோழிக்கு இவ்வேறுபாடு எற்றினானாயிற் றென்றாற்போலத் தோழியை வினாவுதலும்: உதாரணம்: 586நெடுவே லேந்தி நீயெமக் கியாஅர் தொடுத லோம்பென வரற்றலு மரற்றுங் கடவுள் வேங்கையுங் காந்தளு மலைந்த தொடலைக் கண்ணி பரியலு மென்னும் பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப் பூம்பொறிக் கழற்கா லாஅய்குன் றத்துக் குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச் சிறுதேன் கமழ்ந்த வம்மெல் லாகம் வாழியெம் மகளை யுரைமதி யிம்மலைத் தேம்பொதி கிளவியென் பேதை யாங்கா டினளோ நின்னொடு பகலே. இது செவிலி தோழியை வினாயது. 587ஓங்குமலை நாட வொழிகநின் வாய்மை காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி யுறுபகை பேணா திரவின் வந்திவள் பொறிகிள ராகம் புல்லா தோள்சேர் பறுகாற் பறவை யளவில மொய்த்தலிற் கண்கோ ளாக நோக்கிப் பண்டு மினையை யோவென வினவினள் யாயே யதனெதிர் சொல்லா ளாகி யல்லாந் தென்முக நோக்கி யோளே யன்னா யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த சாந்த ஞெகிழி காட்டி யீங்கா யினவா லென்றிசின் யானே. (நற்றிணை. 55) இது, செவிலி வினாயினமையைத் தோழி கொண்டு கூறினாள். தெய்வம் வாழ்த்தலும் - இன்னதொன்று நிகழ்ந்ததெனத் துணிந்த பின்னர்த் தன் மகளொடு தலைமகனிடை நிகழ்ந்த ஒழுக்கம் நன்னர்த்தாகவெனத் தெய்வத்திற்குப் பராவுதலும்: உதாரணம்: 588பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய செறிமடை யம்பின் வல்விற் கானவன் பொருது தொலை யானை வெண்கோடு கொண்டு நீரகழ் சிலம்பி னன்பொ னகழ்வோன் கண்பொரு திமைக்குந் திருமணி கிளர்ப்ப வைந்துதி வான்மருப் பொடிய வுக்க தெண்ணீ ராலி கடுக்கு முத்தமொடு மூவேறு தாரமு மொருங்குடன் சாற்றிச் சாந்தம் பொறைமர மாக நறைநார் வேங்கைக் கண்ணிய னிழிதரு நாடற் கின்றீம் பலவி னேர்கெழு செல்வத் தெந்தையு மெதிர்ந்தனன் கொடையே யலர்வா யம்ப லூரு மவனொடு மொழியுஞ் சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி யாயு மவனே யென்னும் யாமும் வல்லே வருக வரைந்த நாளென நல்லிறை மெல்விரல் கூப்பி யில்லுறை கடவுட் கோக்குதும் பலியே. (அகம். 282) இதனுள் தோள்பாராட்டி யாயுமவனே என்னும் என்று 589யாய் தெய்வம் பராயினாளென்பதுபடக் கூறி, யாம் அத் தெய்வத்திற்குப் பலிகொடுத்து மென்றவாறு காண்க: போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும் - உடன்போக்கு அறிந்த பின்னர்ச் செவிலி தோழியொடு மதியுடம்பட்டு நின்று, தலைவியது கற்புமிகுதியே கருதி உவந்த உவகைக்கண்ணும்: அது, 590எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே. (அகம். 195) என்றாற் போலக் கற்பினாக்கத்துக் கருத்து நிகழ்தல். உதாரணம்: 591முயங்குகம் வாராய் தோழி தயங்குபு கடல்பெயர்ந் தன்ன கானலங் கல்லெனப் பெயல்கடைக் கொண்ட பெருந்தண் வாடை வருமுலை வெப்பங் கொழுநற் போற்றிய சென்றன ளம்மநின் றோழி யவனோ டென்றினி வரூஉ மென்றனள் வலந்துரை தவிர்ந்தன் றலர்ந்த வூரே. இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது. பிரிவின் எச்சத்தும் - தலைவி உடன்போயவழித் தான் பின் செல்லாதே 592எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும்: உதாரணம்: 593தெறுவ தம்ம நும்மகள் விருப்பே யுறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க, நாடிடை விலங்கிய வெற்பிற் காடிறந் தனணங் காத லோளே. (ஐங்குறு. 313) இது, பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக்கண்ட நற்றாய் கூறியது. இது, நற்றாய் கூற்றாய்ச் செவிலிமேன ஆயிற்று. மகள் நெஞ்சு வலிப்பினும் - உடன்போக்கிற்கு மகள் நெஞ்சு துணியினும்: தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும். உதாரணம்: 594பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றன ளினியறிந் தேனது துனியா குதலே கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே. (குறுந். 84) இருபாற் குடிப்பொருள் இயல்பின்கண்ணும் - தலைவனுந் தலைவியுந் தோன்றிய இருவகைக் குடியும் நிரம்பிவருதல் இயல்பாகப் பெற்றவழியும்: பொருள் என்றார் பிறப்பு முதலிய பத்தையுங் (273) கருதி. காமர் கடும்புனல் என்னும் (39) கலியுள், 595அவனுந்தா, னேன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன்; ............. ................. .................... .................. ................ எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய். எனத் தோழி தான் கூறிய 596இருபாற் குடிப்பொருளைக் கூறிச், செவிலி அறத்தொடு நின்றாளெனக் கொண்டெடுத்து மொழிந் தவாறு காண்க. இன்னவகையிற் பதின்மூன்று கிளவியோடு அன்னவை பிறவும் - இத்தன்மைத்தாகிய கூறுபாட்டையுடைய பதின் மூன்று கிளவியோடே அவைபோல்வன பிறவாய் வருவனவும்; செவிலி மேன - தன் கூற்றாயும் பிறர்கொண்டு கூறுங் கூற்றாயும் கூறுங் கூற்றுச் செவிலிக்கு உரியவாம் என்றவாறு. அன்னபிற என்றதனான், 597பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிப் நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந். 15) இஃது, உடன்போயபின் செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது. இன்னும் அதனானே, வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள் (அகம். 122: 4) சிறுகிளி கடித றேற்றா ளிவள் (அகம். 28: 12) கண்கோ ளாக நோக்கிப் பண்டு, மினையையோ (நற்றிணை. 55:6-7) என்றலும் போல்வன பிறவுங் கொள்க. (24) (நற்றாய்க்குரிய கூற்று உரைத்தல்) 116. தாய்க்கும் வரையா ருணர்வுடன் படினே இது, செவிலிக்கு உரியன கூறி நற்றாய்க்கு உரிய கூற்றுக் கூறுகின்றது. (இ - ள்.) உணர்வு உடம்படின் - அங்ஙனஞ் செவிலி உணர்ந் தாங்கே நற்றாயும் மதியுடம்படில்; தாய்க்கும் வரையார் - நற்றாய்க்கும் முற்கூறிய பதின்மூன்று கிளவியும் பிறவுமாகக் கொண்டு எடுத்து மொழிதல் வரையார் என்றவாறு. 598தாய்க்கும் என்றார், இவட்கு அத்துணை பயின்றுவாரா என்றற்கு. அது நற்றாய் இல்லறம் நிகழ்த்துங் கருத்துவேறு உடைமையின் உற்றுநோக்காள்; செவிலியே தலைவியை உற்று நோக்கி ஒழுகுவாளாதலின். இலக்கண முண்மையின் இலக்கியம் வந்துழிக் காண்க. (25) (நாற்றாய்க்கும் செவிலிக்குமுரியதோர் இலக்கணம் உரைத்தல்) 117. 599கிழவோ னறியா வறிவின ளிவளென மையறு சிறப்பி னுயர்ந்தோர் பாங்கி னையக் கிளவி யறிதலு முரித்தே. இஃது, அங்ஙனங் களவு வெளிப்பட்ட பின்னர் நற்றாய்க்குஞ் செவிலிக்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) கிழவோன் அறியா அறிவினள் இவளென ஐயக் கிளவி - நங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறிவினையுடையள் இவளென்று தம் மனத்தே ஐயமுற்று பிறரோடு உசாவுங் கிளவியை; மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் அறிதலும் உரித்தே - குற்றமற்ற சிறப்பினை யுடைய அந்தணர் முதலியோரிடத்தே கூறி அதுவும் முறைமையென்று அவர்கூற அறிதலும் உரித்து என்றவாறு. என்றது, மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே (சூ.93) என முற் கூறினமையின் தலைவன் தன் குலத்தின் உயர்ந்தமை அறிந்தவிடத்து, இங்ஙனம் கூடுதல் முறையன்றென்று ஐயுற்ற செவிலியும் நற்றாயும், உயர்ந்தோரைக் கேட்டு இதுவும் கூடுமுறைமை என்றுணர்வர் என்பதாம். இலக்கணமுண்மை யின் இலக்கிய மும் அக்காலத்து உள வென் றுணர்க. (26) (தலைவிக்குரியதோ ரிலக்கண முரைத்தல்) 118. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்த லெண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மாக்களி னறிய வாயிடைப் பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப. இது, தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) பிறநீர் மாக்களின் - வேறுவேறாகத் தம்மில் தாம் காதல்செய்து ஒழுகும் அறிவில்லாதாரைப் போல; கிழவன் அறியத் தன்னுறு வேட்கை முற்கிளத்தல் கிழத்திக்கு இல்லை - தலைவன் அறியும்படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை; ஆயிடை - அங்ஙனங் கூற்றில்லாதவிடத்து; எண்ணுங் காலையும் - அவள் வேட்கையை அவன் ஆராயுங் காலையும்; பெய்நீர் போலும் உணர்விற்று என்ப - அவ்வேட்கை புதுக்கலத்துப் பெய்த நீர் புறத்துப் பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினையுடைத் தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. கிழத்திக்கில்லை யெனவே தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறுதலுளதென்பது பெற்றாம். தலைவிக்குக் குறிப்பானன்றித் தலைவன்முன்னின்று கூறும் வேட்கைக் கூற்றின்மை முற்கூறிய செய்யுட்களுட் காண்க. 600எனவே, தோழிமுன்னர்த் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்தல் பெற்றாம். உதாரணம்: சேணோன் மாட்டிய நறும்புகை (குறுந். 150) ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த (அகம். 8) என்பனவும், இவளே நின்சொற் கொண்ட (குறுந். 81) என்றாற் போல் வருவனவும் முன்னர்க் காட்டினாம். 601கடும்புனன் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்த மண்ணுநீர் போல நடுங்கஞர் தீர முயங்கி நெருந லாக மடைதந் தோளே. (அகம். 62, 9-12) என்றாற் போல்வன தலைவி வேட்கையைத் தலைவன் குறிப் பான் உணர்ந்தன. (27) (தலைவனுந் தலைவியும் தாமே தூதுவராதலு முரித்தெனல்) 119. காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலிற் றாமே தூதுவ ராதலு முரித்தே. இஃது, எய்தாது எய்துவித்தது, பாங்கனுந் தோழியும் நிமித்தமாகவன்றித் தாமே தூதாகும் இடமும் உண்டென்றலின். (இ - ள்.) காமக்கூட்டந் தனிமையிற் பொலிதலின் - இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடுங் கூட்டுவாரை யின்றித் தனிமை யாற் பொலிவுபெறுதலின்; தாமே தூதுவர் ஆகலும் உரித்தே - ஒருவருக்கு ஒருவர் தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடுதலும் ஆண்டுரித்து என்றவாறு. அது, மெய்ப்பாட்டினுட் புகுமுகம் புரிதன் (261) முதலிய பன்னிரண்டானும் அறிக. இதன் பயன் இக் கூட்டத்தின் பின்னர் வரைதலும் உண்டென்பதாம். (28) (களங்கூறுதற்குரியாள் தலைவியெனல்) 120. அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையிற் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் தான்செலற்குரிய வழியாக லான. இது, முன்னர்க் களனும் பொழுதும் என்றவற்றுட் களங் கூறுதற்கும் உரியாள் தலைவியென்கின்றது. (இ-ள்.) அவன் வரம்பு இறத்தல் - தலைவன் கூறிய கூற்றின் எல்லையைக் கடத்தல்; தனக்கு அறமின்மையின் - தலைவிக்கு உரித்தெனக் கூறிய தருமநூலின்மையின்; களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும் - தலைமகனை இன்னவிடத்து வருகவென்று ஓரிடத்தைத் தான் கருதிக் கூறுங்கூற்று அவன் குறிப்பு வழி ஓங்குந் தலைவியதாம்; தான் செலற்கு உரியவழி ஆகலான - தான் சென்று கூடுதற்குரிய இடந் தானே உணர்வள் ஆதலான் என்றவாறு. சுட்டுக்கிளவி என்றதன் கருத்துத் தலைவன் இருவகைக் குறியும் வேண்டியவழி அவனை மறலாது தான் அறிந்த விடத்தினைக் கூற்றானன்றிக் குறிப்பானாதல் சிறைப்புறத் தானாதல் தோழி யானாதல் உணர்த்து மென்பதாம், தலைவன் களஞ்சுட்டுமாயின் யாண்டானும் எப்பொழுதானும் அக் கள வொழுக்கம் நிகழ்ந்து பிறர்க்கும் புலனாய்க் குடிப்பிறப்பு முதலிய வற்றிற்குத் தகாதாம். விரியிணர் வேங்கை என்னும் (38) அகப்பாட்டுத் தலைவி களஞ்சுட்டியது: மறந்திசின் யானே என்றலின் இது குறிப்பான் உணர்த்திற்று, பிறவும் வந்துழிக் காண்க. (29) (தோழிக்குங் களஞ்சுட்டுக் கிளவி யுரித்தெனல்) 121. தோழியின் முடியு மிடனுமா ருண்டே. இது,. தோழிக்குங் 602களஞ்சுட்டுக் கிளவி உரித்தென்று எய்தாதது எய்துவித்தது. (இ - ள்.) களஞ்சுட்டுக் கிளவி தலைவி குறிப்பான் தோழி கூறுதலன்றித் தானேயுங் கூறப்பெறும் ஒரோவழி என்றவாறு. தோழி குறித்த இடமுந் தலைவி தான் சேறற்குரிய இடமா மென்பது கருத்து. உதாரணம்: 603செவ்வீ ஞாழற் கருங்கோட் டஞ்சினைத் தனிப்பார்ப் புள்ளிய தண்பறை நாரை மணிப்பூ நெய்தன் மாக்கழி நிவப்ப வினிப்புலம் பின்றே கானலு நளிகடற் நிரைச்சுர முழந்த திண்டிமில் விளக்கிற் பன்மீன் கூட்டம் மென்னையர்க் காட்டிய வெந்தையுஞ் செல்லுமா ரிரவே யந்தி லணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமோ டயரு நீயுந் தேம்பா யோதி திருநுத னீவிக் கோங்குமுகைத் தன்ன குவிமுலை யாகத் தின்றுயி லமர்ந்தனை யாயின் வண்டுபட விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப் பூவேய் புன்னைய தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே. (அகம். 240) எனத் தோழி களஞ்சுட்டியவாறுங் காண்க. (30) (துணையின்று கழியுநா ளித்துணையவெனல்) 122. முந்நா ளல்லது துணையின்று கழியா தந்நா ளத்து மதுவரை வின்றே. இதுவும் அதிகாரத்தால் தலைவிக்கெய்தியதோர் இலக் கணங் கூறுகின்றது. (இ - ள்.) முந்நாள் அல்லது துணையின்று கழியாது - பூப்பெய்திய மூன்றுநாளும் அல்லது கூட்டமின்றி இக் கள வொழுக்கங் கழியாது; அந்நாளகத்தும்அது வரைவு இன்றே - அம்மூன்றுநாளின் அகப்பட்ட நாளாகிய ஒருநாளினும் இரண்டு நாளினுந் துணையின்றிக் கழிதல் நீக்கப்படாது என்றவாறு. அதுஎன்றது துணையின்று கழிதலை. பூப்பினான் துணையின்றிக் கழிதல் பொருந்திற்றாயினும், பூப்பின்றி ஒரு நாளும் இரண்டு நாளுந் துணையின்றிக் கழிதல் வழுவாமெனக் கருதின் அதுவும் புறத்தார்க்குப் புலனாம் என்று அஞ்சுதலாற் கழிதலின் வழுவாகா வென்றற்கு வரை வின்று என்றார். 604இன்னோரன்ன காரணந் தலைவற் கின்மையின் அவனான் துணையின்றிக் கழிதல் இன்றாயிற்று. உதாரணம்: 605குக்கூ வென்றது கோழி யதனெதிர் துட்கென் றற்றென் றூஉ நெஞ்சந் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே. (குறுந். 157) இது, முந்நாளைப் பிரிவாகிய பூப்பிடைப்பிரிவு வந்துழித் தலைவி கூறியது. (இ-ள்.) இனி 606அல்லகுறிப்பிட்டுழி ஒருநாளும் இரண்டுநாளும் இடையீடா மென்றுணர்க. 607பூப்புநிகழாத காலத்துக் களவொழுக்கம் பூப்பு நிகழ்காலம் வரையப்பட்ட தென்று உரைப்பாரும் உளர்; இவ்விதி அந்தணர்க்குக் கூறியதன்று; அரசர் வணிகராதியவர்க்குச் சிறுபான்மை யாகவும், ஏனை வேளாளர் ஆயர் வேட்டுவர் முதலியோர்க்குப் பெரும் பான்மையாகவுங் கூறிய விதியென்றுணர்க. என்னை? பூப்பு நிகழுங் காலத்து வரையாது களவொழுக்கம் நிகழ்த்தினார்க்கு, அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் (146) என்பதனாற் பிராயச்சித்தம் விதிப்பாராதலின். இதனானே அந்தணர் மகளிர்க்கும் பூப்பெய்தியக்கால் 608அறத்தொடு நின்றும் வரைதல் பெறுதும். (31) (தலைவி அறத்தொடு நிற்றல்) 123. பன்னூறு வகையினுந் தன்வயின் வரூஉ நன்னய மருங்கி னாட்டம் வேண்டலிற் துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் துணையோர் கரும மாக லான. இது, தலைவிக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) தன்வயின் வரூஉம் நன்னய மருங்கின் - தலைவி யிடத்தே தோழிக்குஞ் செவிலிக்கும் வருகின்ற அன்பு மிகுதிக் கண் ணே; பல்நூறு வகையினும் நாட்டம் வேண்டலில் - பல நூறாகிய பகுதியானும் ஆக்கமுங் கேடும் ஆராய்தலை அவர் விரும்புத லாலே: துணைச்சுட்டுக் கிளவி கிழவியதாகும் - இவள் ஒரு துணையுடையயென அவர் சுட்டுதலிடத்துக் கிளவிக்குங் கிளவி தலைவியதாம்; துணையோர் கருமம் ஆகலான - அக்கிளவி அத் தோழியானுஞ் செவிலியானும் முடியுங்காரியம் ஆகலான் என்றவாறு. என்றது, தோழி பலவேறு கவர்பொருணாட்டம் (114) உற்றவழியுஞ் செவிலி களவு அலராதல் முதலியவற்றான் (115) நாட்டமுற்ற வழியுந் தலைவி அறத்தொடு நிற்குமென்று அறத்தொடு நிலைக்கு இலக்கணங் கூறியவாறாயிற்று. தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்ப, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்குமென்று உணர்க. இதனானே பாங்கற்கு உற்றதுரைத்த பின்னர்த் தலைவன் உரையாமையும் பெற்றாம். புனையிழை நோக்கியும் என்னும் மருதக் கலி (76) யுள், வினவுதி யாயின் என நாட்டம் நிகழ்ந்தவாறும், அதன் சுரிதகத்துக் கூட்ட முண்மை கூறுதலின் துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாயவாறுங் காண்க. 609கொடியவுங் கோட்டவும் (கலி. 54) என்பதன் சுரிதகத்துச் செவிலிக்கு உரையாயெனக் கூறியவாறுங் காண்க. (32) (களவின் கண் தாயென்று சிறப்பிக்கப்படுவாள் செவிலி எனல்) 124. ஆய்பெருஞ் சிறப்பி னருமறை கிளத்தலிற் றாயெனப் படுவோள் செவிலி யாகும். இது, முற்கூறிய செவிலி சிறப்புக் கூறுகின்றது. (இ - ள்.) ஆய்பெருஞ் சிறப்பின் - 610தாய்த் தாய்க்கொண்டு உயிர் ஒன்றாய் வருகின்றாளென்று ஆராய்ந்து துணியப்பட்ட பெருஞ் சிறப்புக் காரணமாக; அரு 611மறை கிளத்தலின் - கூறுதற்கரிய மறை பொருளெல்லாங் குறிப்பானன்றிக் கூற்றாற் கூறத்தக்காளாதலின்; தாயெனப்படு வோள் செவிலி ஆகும் - தாயென்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள் செவிலியேயாம் என்றவாறு. எனவே, ஈன்ற தாயினுங் களவின்கட் சிறந்தாள் இவளென் றார். கற்பிற்கு இருவரும் ஒப்பாராயிற்று. செவிலி சிறந்தமை சான்றோர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க. (33) (சிறப்புடைத் தோழியாவாள் இவளெனல்) 125. தோழி தானே செவிலி மகளே. இது, தோழியது சிறப்புணர்த்துகின்றது. (இ - ள்.) தோழி தானே - தோழியர் பலருள்ளும் ஒருத்தி யெனப் பிரிக்கப்படுவாள்; செவிலி மகளே - முற்கூறிய செவிலி யுடைய மகள் என்றவாறு. இதற்கும் 612அருமறை கிளத்தல் - 613அதிகாரத்தாற் கொள்க. தாய்த் தாய்க் கொண்டு வருகின்றமையின் (நாலடி. 15) 614உழுவலன்பு போல்வ தோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இதனானே களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று; அது சான்றோர் செய்யுளுட் காண்க. (34) (தோழி சூழ்தற்குமுரியளெனல்) 126. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே. இதுவுந் தோழி சிறப்பினையே கூறுகின்றது. (இ - ள்.) உசாத்துணை நிலைமையின் - தலைமகனுந் தலை மகளும் உசாவுவதற்குத் துணைமைசான்ற நிலைமையினாலே; சூழ்தலும் பொலிமே - புணர்ச்சி யுண்மையை 615ஏழுவகை யானுஞ் சூழ்தற்கண்ணும் பொலிவுபெறும் என்றவாறு. எனவே, 616இம்மூன்று நிலைக்குந் தோழி உரியள் என்றார். உதாரணம் முற்காட்டியவற்றுட் காண்க. (35) (தோழி சூழ்ச்சி இத்துணைப்பகுதியெனல்) 127. குறையுற வுணர்தன் 617முன்னுற வுணர்த லிருவரு முள்வழி யவன்வர வுணர்தலென 618மதியுடம் படுத்த லொருமூ வகைத்தே. இஃது, அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்றது. (இ - ள்.) குறையுற உணர்தல் - தலைவன் தோழியை இரந்து குறையுற்றவழி உணர்தல்; முன் உற உணர்தல். முன்னம் மிக உணர்தல்; இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் - தலைவியுந் தோழியும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வருதலான் தலைவன் குறிப்புந் தலைவி குறிப்புங் கண்டுணர்தல்; என மதியுடம் படுத்தல் ஒரு மூவகைத்தே - என்று இருவர் கருத்தினையுந் தன் கருத்தி னோடு ஒன்றுபடுத்துணர்தல் ஒரு மூன்று கூற்றினை யுடைத்து என்றவாறு. எண்ணுதல் எண்ணென்றாற்போல முன்னுதல் முன் னென நின்றது. உயிர்கலந்தொன்றலிற் குறிப்பின்றியும் பாகமுணர் வாள் குறிப்புப் பெற்றுழி மிகவுணரும் என்று கொள்க. இது மூவர் மதியினையும் ஒன்றுபடுத்துதலின் மதியுடம்படுத்த லென்று பெயராயிற்று. இம்மூன்றுங் கூடிய பின்னரல்லது மதியுடம்படுத்த லின்றென்றற்கு மூவகைத் தென்று ஒருமையாற் கூறினார். முன்னுறவென்ற தனை முந்துற வென்றாலோ வெனின் குறையுறுதலான உணர்தல் அவன் வருதலான் உணர்தலென்று இரண்டற்குக் காரணங் கூறுதலின், இதற்குங் குறிப்பு மிகுதலான் உணர்தலெனக் காரணங் கொடுத்தல் வேண்டு மென்றுணர்க. நாற்றமுந் தோற்றமும் (தொல். பொ. 114) என்பதனுட் கூறிய வாறன்றி முன்னுறவை இடைவைத்தார். அவ் விரண்டினான் உணருங் காலும் இக் குறிப்பான் உணர வேண்டு மென்றற்கு. இம் மூன்றும் முற்கூறினவேனும் ஒரோவொன்றாற் கூட்டமுணரின் தலைவியை நன்குமதித்தி லளாவ ளென்றற்கு இம்மூன்றும் வேண்டுமென்று ஈண்டுக் கூறினார். உதாரணம்: 619கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி. இது கூட்டமுணராதாள் போல நாணிற்கு மாறாகாமற் கூறலின், முன்னுறவுணர்தல். 620நின்னின் விடாஅ நிழற்போற் றிரிதருவா யென்னீபெறாத திதென். (கலி.61) இது, குறையுறவுணர்தல். ஏனல் காவ லிவளு மல்லள் என்பது அவன் வரவுணர்தல். (36) (தோழி மதியுடம்படுத்தபின்னல்லது தலைவனிரந்து பின்னில்லானெனல்) 128. அன்ன வகையா னுணர்ந்தபி னல்லது பின்னிலை முயற்சி பெறானென மொழிப. இது, மதியுடம்பட்ட பின்னல்லது தலைவன் கூற்று நிகழ்த்தப் பெறானென்கிறது. (இ - ள்.) அன்ன வகையான் உணர்ந்தபின் அல்லது - அம் மூவகை யானுந் தோழி மதியுடம்படுத்த பின்னல்லது; 621பின்னிலை - இவன் ஒரு குறையுடையனென்று தோழி உய்த் துணர நிற்கு மிடத்து; முயற்சிபெறான் என மொழிப - கூற்றான் அக்குறை முடித்தல் வேண்டுமென்று 622முடுக்குதல் பெறா னென்று கூறுப ஆசிரியர் என்றவாறு. தோழி 623தன்னை வழிபட்டவாறு கண்டு மதியுடம்பட்ட வாறுணர்ந்து கூற்றான் உணர்த்தும். அது நெருநலு முன்னாள் என்பதனுள் ஆரஞர் வருத்தங் களையாயோ என்றவாறு காண்க. (37) (தோழி தலைவியைக் கூட்டவும் பெறுமெனல்) 129. முயற்சிக் காலத் ததற்பட நாடிப் புணர்த்த லாற்றலு மவள்வயி னான. இது, தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயற்சி பிறக்குமிடங் கூறுகின்றது. (இ - ள்.) முயற்சிக்காலத்து - தலைவன் அங்ஙனங் கூடுதற்கு முயற்சி நிகழ்த்துங்காலத்தே; நாடி அதற்படப் புணர்த்தலும் - தலைவி கூடுதற்கு முயலுங் கருத்தினை ஆராய்ந்து அக்கூட்டத் திடத்தே உள்ளம் படும்படி கூட்டுதலும்; அவள் வயின் ஆன ஆற்றல் - தோழியிடத்து உண்டான கடைப்பிடி என்றவாறு. ஆற்றல் ஒன்றனை முடிவுபோக்கல். உம்மை, எச்சவும்மை. 624மதியுடம்படுத்தலே யன்றிக் கூட்டவும் பெறுமென்க. (38) (குறி இவை எனல்) 130. குறியெனப் படுவ திரவினும் பகலினு மறியத் தோன்று மாற்ற தென்ப. அங்ஙனங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது. (இ - ள்.) குறியெனப் படுவது - குறியென்று சொல்லப் படுவது; இரவினும் பகலினும் - இரவின்கண்ணும் பகலின் கண்ணும்; அறியத் தோன்றும் ஆற்றது என்ப - தலைவனுந் தலைவியுந் தானும் அறியும்படி தோன்றும் நெறியை யுடைய இடம் என்றவாறு. நெறி என்றார் அவன் வருதற்குரிய 625நெறி இட மென்றற்கு, அதுவென்று ஒருமையாற் கூறினார், 626தலைப் பெய்வதோரிட மென்னும் 627பொதுமைபற்றி. இரவு களவிற்குச் சிறத்தலின் முற்கூறினார். அறியத் 628தோன்றுமென்றதனாற் சென்று காட்டல் வேண்டா; நின்று காட்டல் வேண்டுமெனக் கொள்க. (39) (இரவுக்குறியிட மிதுவெனல்) 131. இரவுக் குறியே யில்லகத் துள்ளு மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான. இது, நிறுத்தமுறையானே இரவுக் குறியிடம் உணர்த்து கின்றது. (இ - ள்.) அகமனைப் புகாக் காலை ஆன இரவுக்குறியே - உள்மனையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்து உண்டான இரவுக்குறியே: ஏகாரம் - பிரிநிலை. இல்லகத்துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே - இல்வரைப்பினுள்ளதாகியும் மனையோர் கூறிய கிளவி கேட்கும் புறமனை யிடத்ததாம் என்றவாறு. அல்லகுறிப்பிட்டதனை ஒருவாற்றான் உணர்த்திய காலத்து அவன் அதுகேட்டு ஆற்றுவனென்பது கருதி, மனையோர் கிளவி கேட்கும் வழியது என்றார்; ஏகாரம் ஈற்றசை: என்றது, இரவுக்குறி அம்முயற்சிக்காலத்து 629அச்ச நிகழ்தலின், அகமனைக்கும் புறமதிற்கும் நடுவே புணர்ச்சி நிகழுமென்றதாம். அகமனையிற் புகாக்காலை யெனவே, இரவுக்குறி அங்ஙனஞ் சிலநாள் நிகழ்ந்த பின்னர், அச்சமின்றி உள்மனையிற் சென்று கூடவும் பெறு மென்பதுங் கூறியதாம். உதாரணம்: 630அஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் (அகம். 198) மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென வலையல் வாழிவேண் டன்னை (அகம். 158) அட்டி லோலை தொட்டனை நின்மே. (நற்றிணை. 300) என வருவன பிறவும் மனையோர் கிளவி கேட்கும் வழியது. 631உளைமான் றுப்பி னோங்குதினைப் பெரும்புனத்துக் கழுதிற் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென வுரைத்த சந்தி னூர லிருங்கதுப் பைதுவர லசைவளி யாற்றக் கைபெயரா வொலியல் வார்மயி ருளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம்புகன் மழகளி றுறங்கு நாட னார மார்பி னரிஞிமி றார்ப்பத் தாரன் கண்ணிய னெஃகுடை வலத்தன் காவல ரறித லோம்பிப் பையென வீழாஅக் கதவ மசையினன் புகுதந் துயங்குபட ரகல முயங்கித் தோண்மணந் தின்சொ லளைஇப் பெயர்ந்தனன் றோழி யின்றெவன் கொல்லோ கண்டிகு மற்றவ னல்கா மையி னம்ப லாகி யொருங்குவந் துவக்கும் பண்பி னிருஞ்சூ ழோதி யொண்ணுதற் பசப்பே. (அகம். 102) இது, மனையகம் புக்கது. தலைவி புறத்துப் போகின்றாளெனச் செவிலிக்கு ஓர் ஐயம் நிகழ்ந்தவழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழு மென்றுணர்க. (40) (பகற்குறியிட மிதுவெனல்) 132. பகற்புணர் களனே புறனென மொழிப வவளறி வுணர வருவழி யான. இது, முறையானே பகற்குறி உணர்த்துகின்றது. (இ - ள்.) அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர் களனே - களஞ்சுட்டிய தலைவி அறிந்தவிடந் தலைவன் உணரும் படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறி யிடத்தை; புறன் என மொழிப - மதிற்புறத்தேயென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. அறிவு; ஆகுபெயர். உதாரணம்: புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த மின்னே ரோதியென் றோழிக்கு. பூவே புன்னையந் தண்பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே. (அகம். 240) என வருவன பிறவுங் கொள்க. (41) (அல்லகுறிப்படுதலுந் தோழிக்குரித்தெனல்) 133. அல்லகுறிப் படுதலு மவள்வயி னுரித்தே யவன்குறி மயங்கிய வமைவொடு வரினே. இது, தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றது. இருவகைக் குறி பிழைப்பாகியவிடத்தும் என்புழித் தலைவி அல்ல குறிப்படுதல் கூறிற்று. (இ - ள்.) அவன் குறி - தலைவன் தன்வரவு அறிவிக்குங் கருவிகள்; மயங்கிய அமைவொடு வரின் - அவன் செயற்கை யானன்றி இயற்கை வகையானே நிகழ்ந்து தோழி மயங்கிய அமைதியோடே வருமாயின்; அல்லகுறிப் படுதலும் - குறி யிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்லவாகிய குறியிலே மயங்குதலும்; அவள்வயின் உரித்து - அத் தோழியிடத்து உரித்து என்றவாறு. வெறித்தல் வெறியாயினாற்போலக் குறித்தல் குறியாயிற்று. அக் கருவி 632புனலொலிப்படுத்தல் முதலியன. உதாரணம்: 633கொடுமுண் மடற்றாழைக் கூன்புற வான்பூ விடையு ளிழுதொப்பத் தோன்றிப் - புடையெலாந் தெய்வங் கமழுந் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் றெளியாக் குறி (ஐந்: ஐம். 49) இஃது, அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறியது. 634எறிசுறூ நீள்கட லோத முலாவ நெறியிறாக் கொட்கு நிமிர்கழிச் சேர்ப்ப னறிவுறா வின்சொ லணியிழையாய் நின்னிற் செறிவறா செய்த குறி. (திணை. ஐம். 43) இஃது, அவன்மேற் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறியது. 635இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவ மென்று - கொடுங்குழை புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய ருள்ளரவ நாணுவ ரென்று. (ஐந். எழு. 59) இஃது, இவன் இனி ஆண்டுவரிற் சுற்றத்தார் அறிவ ரென்றது. 636வீழ்பெயற் கங்குனின் விளியோர்த்த வொடுக்கத்தால் வாழுநாள் சிறந்தவள் வருந்துதோட் டவறுண்டோ தான்செறி கடுங்காப்பிற் றாய்முன்னர் நின்சார லூழுறு கோடல்போ லொல்வளை யுகுபவால். (கலி. 48) இது, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது. 637அன்னை வாழியோ வன்னை நம் படப்பை பொம்ம லோதி யம்மென் சாயல் மின்னென நுடங்கிடைக் கின்னிழ லாகிய புன்னை மென்காய் போகுசினை யிரிய வாடுவளி தூக்கிய வசைவிற் கொல்லோ தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென வெண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே. இது, தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது. 638மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற் றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத் துணிமுந்நீர் துஞ்சா தது. (ஐந். எழு. 60) இது, தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது. திங்கள் மேல் வைத்துக் கூறுவனவும் ஓதத்தின் மேல் வைத்துக் கூறுவனவும் பிறவுங் கொள்க. 639அரவளை மென்றோ ளனுங்கத் துறந்து கரவல மென்றாரைக் கண்ட திலையா லிரவெலா நின்றாயா லீர்ங்கதிர்த் திங்காள். புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும் பின்னிருங் கூந்தலென் றோழி நடையொக்கு மன்ன நனையாதி வாழிகட லோதம் என வருவன பிறவுங் கொள்க. 640படுதல் எதிர்ப்படாமையை உணர்த்திற்று. ஆண்டுத் தன்மேல் தவறேற்றாது தலைவன் பொழுதறிந்து வாராமையின் மயங்கிற்றென்று 641அமைவு தோன்றலின் அமைவு என்றார். அது, தான்குறி வாயாத் தப்பற்குத் தாம்பசந் தனவென் றடமென் றோளே. (குறுந். 121) என்றாற் போல வரும். இதன் பயன் தலைவி துன்பந் தனதாகத் துன்புறுத்தலாயிற்று. (42) (தலைவனு மல்லகுறியால் வருந்துவனெனல்) 134. ஆங்காங் கொழுகு மொழுக்கமு முண்டே யோங்கிய சிறப்பி னொருசிறை யான. இது, தலைவனும் அல்லகுறியால் வருந்துவ னென்கின்றது. (இ - ள்.) ஓங்கிய சிறப்பின் - தனது மிக்க தலைமைப் பாட்டி னானே பொழுதறிந்து வாராமையின்; ஒருசிறை ஆன ஆங்கு - தான் குறிசெய்வதோரிடத்தே தன்னானன்றி இயற்கை யான் உண்டான அவ்வல்ல குறியிடத்தே; ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு - தலைவியுந் தோழியுந் துன்புறுமாறு போலத் தலைவனுந் துன்புற்று ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு. முன்னர் நின்ற 642ஆங்கு முன்னிற்சூத்திரத்து அல்ல குறியைச் சுட்டிற்று; பின்னர் நின்ற ஆங்கு உவமவுருபு. உதாரணம்: 643தாவி னன்பொன் றைஇய பாவை விண்டவ ழிளவெயிற் கொண்டு நின் றன்ன மிகுகவி னெய்திய தொகுகுர லைம்பாற் கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் நயவன றைவருஞ் செவ்வழி நல்யா ழிசையோர்த் தன்ன வின்றீங் கிளவி யணங்குசா லரிவையை நசைஇப் பெருங்களிற் றினம்படி நீரிற் கலங்கிய பொழுதிற் பெறலருங் குரைய ளென்னாய் வைகலு மின்னா வருஞ்சுர நீந்தி நீயே யென்னை யின்னற் படுத்தனை மின்னுவசிப் புரவுக்கால் கடுப்ப மறலி மைந்துற்று விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇப் படைநிலா விலங்குங் கடன்மரு டானை மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி யோங்குதிரைப் பௌவ நீங்க வோட்டிய நீர்மா ணெஃக நிறத்துச்சென் றழுந்த கூர்மத னழியரோ நெஞ்சே யானா தெளிய ணல்லோட் கருதி விளியா வெவ்வந் தலைத்தந் தோயே. (அகம். 212) 644வடமலை மிசையோன் கண்ணில் முடவன் றென்றிசை யெல்லை விண்புகு பொதியிற் சூருடை நெடுஞ்சுணை நீர்வேட் டாங்கு வருந்தினை வாழியெ னுள்ளஞ் சாரற் பொருதுபுறங் கண்ட பூநுத லொருத்தல் சிலம்பிழி பொழுதி னத்தம் பெயரிய வல்லிய மடுக்கத் தொடுங்கு நல்வரைக் கல்லக வெற்பன் மடமகண் மெல்லியல் வனமுலைத் துயிலுற் றோயே. இவை, அல்லகுறிப்பிட்டு நீங்குகின்றான் நெஞ்சிற்குக் கூறியன. (43) (தலைவற்குத் தீயஇராசியினும் தீயநாளினும் துறந்த ஒழுக்கமில்லையெனல்) 135. மறைந்த வொழுக்கத் தோரையு நாளுந் துறந்த வொழுக்கங் கிழவோற் கில்லை. இது, தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) ஓரையும் நாளுந் துறந்த ஒழுக்கம் - தீய இராசியின் கண்ணுந் தீய நாளின்கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம்; கிழவோற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை - தலைவற்குக் கள வொழுக்கத் தின்கண் இல்லை; எனவே கற்பின்கணுண்டு எ-று. ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பன தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது 645அவ்விராசி மண்டில முழுவதும். கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென (122) முற் கூறிற்று. 646இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப் பிராயச்சித்தம் அந்தாணர் முதலிய மூவர்க்கும் உண்மை வந்த குற்றம் வழிகெடவொழுகலும் (தொல். பொ. 146) எனக் கற்பியலிற் கூறுப. (44) (தலைவற்கு வழியருமை முதலியன இல்லையெனல்) 136. ஆறின தருமையு மழிவு மச்சமு மூறு முளப்பட வதனோ ரன்ன. இதுவுந் தலைவற்கு இல்லன கூறுகின்றது. (இ - ள்.) உளப்பட - நிலவும் இருளும் பகைவரும் போல் வனப்பற்றிச் செலவழுங்குதல் உளப்பட; ஆறினது அருமையும் - நெறியினது அருமை நினைந்து கூட்ட நிகழ்ந்த வழிக் கூறுதலும்; அழிவும் - குறைந்த மனத்தனாதலும்; அச்சமும் - பாம்பும் விலங்கும் போல்வன நலியுமென்று அஞ்சுதலும்; ஊறும் - அக் கருமத்திற்கு இடையூறு உளவாங்கொலென்று அழுங்குதலும்; அதனோர் அன்ன - கிழவற்கு இல்லை என்றவாறு. கிழவற்கில்லையெனவே கிழத்திக்குந் தோழிக்கும் உளவா யிற்று. அவை முற்காட்டியவற்றுட் காண்க. (45) (களவினைத் தந்தை முதலியோர் இவ்வாறுணர்வரெனல்) 137. தந்தையுந் தன்னையு முன்னத்தி னுணர்ப. இது, தந்தையுந் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறுகின்றது. (இ - ள்.) தந்தையுந் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக்கொண்டுணர்வர் என்றவாறு. நற்றாய் அறத்தொடு நின்ற வழியும், 647இருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை (கலி. 39) என்றலின் முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டு உணர்ந்தாராயிற்று. (46) (நற்றாய் இவ்வாறு அறத்தொடு நிற்பாளெனல்) 138. தாயறி வுறுதல் செவிலியோ டொக்கும். இது, தந்தைதன்னைக்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்துமாறு கூறுகின்றது. (இ - ள்.) தாய் அறிவுறுதல் - நற்றாய் களவொழுக்கம் உண் டென்று அறிந்த அறிவு தந்தைக்குந் தன்னைக்குஞ் சென்று உறுந் தன்மை; செவிலியோடு ஒக்கும் - செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் என்றவாறு. என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல, நற்றாயுந் தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவாறாயிற்று. அது, எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குற்றுரைத்தாள் யாய். (கலி. 39) என்பதனால் உணர்க. 648இனி, இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல் உணருமென்று பொருள்கூறில் தாய்க்கும் வரையார் (116) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம். (47) (களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைவனெனல்) 139. அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலி னங்கதன் முதல்வன் கிழவ னாகும் இது, களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைமக னென்கின்றது. (இ - ள்.) அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் - 649முகிழ்த்தலும் பலரறியச் சொல் நிகழ்த்தலுங் களவொழுக்கத் தினை வெளிப்படுத்தலான்; அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் - அவ்விடத்து அவ்வெளிப்படை நிகழ்த்துதற்கு நிமித்த மாயினான் தலைமகனாம் என்றவாறு. தலைவனை அறிந்தபின் அல்லது முற்கூறிய ஐயம் நிகழாமையின் தலைவிவருத்தம் நிமித்தமாகா: ஆண்டு ஐயம் நிகழ்தலன்றித் துணிவு தோன்றாமையின், வரைவு நீட்டிப் போனுந், தலைவி தமர்க்குக் கூறி வெளிப்படுப்போனுந் தலைவனே என்றுணர்க. அது, 650நீரொலித் தன்ன பேஎ ரலர் நமக் கொழிய வழப்பிரிந் தோரே (அகம். 211) 651நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ (கலி. 39) என்றாற்போல வருவனவும் பிறவும் வெளிப்படையாமாற்றாற் கண்டுணர்க. (48) (வரைவு இருவகைப்படுமெனல்) 140. வெளிப்பட வரைதல் படாமை வரைதலென் றாயிரண் டென்ப வரைத லாறே இது வரையும் பகுதி இனைத்தென்கிறது. (இ - ள்.) வெளிப்பட வரைதல் - முற்கூறியவாற்றானே களவு வெளிப்பட்ட பின்னர் வரைந்து கோடல்; படாமை வரைதல் - அக்களவு வெளிப்படுவதன் முன்னர் வரைந்து கோடல்; என்று ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே - என்று கூறப்பட்ட அவ் விரண்டே என்று கூறுவர் ஆசிரியர் வரைந்து கொள்ளும் வழியை என்றவாறு. சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே. (கலி. 39) இது, வெளிப்பட்டபின் வரைவு நிகழ்ந்தது. 652கொல்லைப் புனத்த வகில்சுமந்து கற்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனா னீப்பினும் வாடன் மறந்தன தோள். (ஐந்: எழு. 2) இது, வெளிப்படாமல் வரைவு நிகழ்ந்தது. எம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே. (அகம். 195) என்றாற்போல்வன வெளிப்படுவதன்முன்னர்க் 653கொண்டு தலைக் கழிந்துழிக் கொடுப்போரின்றியுங் கரணம் நிகழ்ந்தமை யின், அதுவும் வெளிப்படாமல் வரைந்ததாம். (49) (ஓதல், பகை, தூது என்ற மூன்றினும் வரையாது பிரிதல் கிழவோற் கில்லையெனல்) 141. வெளிப்படை தானே கற்பினொ டொப்பினு ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை. இது; முதற்கூறிய வரைவு நிகழ்த்தாது பிரியும் இடம் இதுவெனவும் பிரியலாகா இடம் இதுவெனவுங் கூறுகின்றது. (இ - ள்.) வெளிப்படைதானே கற்பினோடு ஒப்பினும் - முற்கூறிய வெளிப்படைதானே கற்பினுள் தலைவி உரிமை சிறந் தாங்கு அருமை சிறந்து கற்போடொத்தாயினும்; ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக - முற்கூறிய ஓதல் பகை தூதென்ற மூன்றும் (25) நிமித்தமாக; வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை - வரைவிடைவைத்துப் பிரிதல் தலைமகற்கில்லை என்றவாறு. மூன்றுமென முற்றும்மைகொடாது கூறினமையின், ஏனைப் பிரிவுகளின் வரையாது பிரியப்பெறும் என்றவாறா யிற்று. அவை வரைதற்குப் பொருள்வயிற்பிரிதலும், வேந்தற் குற்றுழியுங், காவற்குப் பிரிதலுமென மூன்றுமாம். உதாரணம்: 654பொன்னடர்ந் தன்ன வொள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதைய டிணிமண லடைகரை யலவ னாட்டி யசையின ளிருந்த வாய்தொடிக் குறுமக ணலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயி னறந்தெரிந்து நாமுறை தேஎ மரூஉப்பெயர்ந் தவனோ டிருநீர்ச் சேர்ப்பி னுப்புட னுழதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தன மடுத்தன மிருப்பிற் றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர் தேனிமி ரகன்கரைப் பகுக்குங் கானலம் பெருந்துறைப் பரதவ னமக்கே. (அகம். 280) இதனுள், ஈண்டுள்ள பொருள் கொடுத்தாற் பெறல் அரிய ளாயின் தன்னை வழிபட்டால் தந்தைதருவனோ? அது நமக்கு அரிதாகலின் இன்னும் பொருள் நாம் மிகத் தேடிவந்து வரைது மெனப் பொருள்வயிற் பிரியக் கருதியவாறு காண்க. 655பூங்கொடி மருங்குற் பொலம்பூ ணோயே வேந்து வினைமுடித்து வந்தனர் காந்தண் மெல்விரற் கவையினை நினைமே. (அகம்.) இது, வேந்தற்குற்றுழிப் பிரிந்தான் வரைவு மலிந்தமை தோழி கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. ஓதுதற்கு ஏவுவார் இருமுதுகுரவராதலின், அவர் வரை யாமற் பிரிகவென்றார். பகைவென்று திறைகோடற்குப் பிரியுங்கால் அன்புறு கிழத்தி துன்புற்றிருப்ப வரையாது பிரிதலின்று. இது தூதிற்கும் ஒக்கும். மறைவெளிப்படுதல் கற்பென்று (499) செய்யுளியலுட் கூறுதலின், இதனை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தார். கற்பினோடொப்பினும் பிரிவின்றெனவே, கற்பிற்காயிற் பிரிவு வரை வின்றாயிற்று. (50) களவியல் முற்றிற்று. கணேசயர் அடிக்குறிப்புகள்: 1. கொடையெதிர்ந்த - (கொடை நேர்ந்த) கொடுத்தற்கு நியமித்த. 2. கரந்த - மறைந்த 3. மறையின் - அவர்க்குத் தெரியாமல் 4. மறை - பிறராலறியப்படாத பொருளுடையது. அதுபோலப் பிறரா லறியப்படாது நிகழ்ந்த புணர்ச்சியாதலின் இது களவு என்றாயிற்று என்பது கருத்து. 5. மாயப்புணர்ச்சி - வஞ்சப்புணர்ச்சி (களவுப்புணர்ச்சி) 6. நான்கு வகையாவன:- இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு. பாங்கற் கூட்டம். பாங்கியற்கூட்டம். 7. யாழினையுடைய பிரிவின்மையோர் - கந்தருவசாதி ஆணும் பெண்ணும். 8. அடுமரம் - வில். 9. கோத்திரம் - மரபு. 10. பரிசம் - பெண் வீட்டுக்குக் கொடுக்கும் ஆடை ஆபரணம் முதலிய பொருள்கள். 11. திரு - திருப்போல்வாள் - பெண். கிளை - சுற்றம். 12. அவற்றிடை - அவற்றினடுவே இருவரையும் நிறுத்திப் போலும்; உதாரணச் செய்யுட் கருத்தை நோக்குக. 13. ஒத்த - இயைந்த. விரும்பிய காட்டுமுதாரணத்துக் காமுற்றாங்கு என வருதல் நோக்குக. 14. இவை இவை என்றது - கொல்லேறு தழுவல். திரிபன்றி யெய்தல். வில்லேற்றன் முதலியவற்றை. 15. மால் - மயக்கம். பராக்கு - விளையாட்டாக. அதம் - கொலை. பாழி - பருமை. 16. இதன் கருத்து நன்கு புலப்படவில்லை. 17. உடைமயக்கல் - ஆடை மாறுதல். உட்கு - அச்சம். 18. அதிர்ப்பு - நடுக்கம் - அச்சம். இது பூணாரை விசேடித்தது. 19. சேட்படை - தோழி தலைவனைச் சேட்படுத்தல் 20. போகம் - இன்பம். 21. முன் என்றது - புறத்திணையியலுள் வரும் காஞ்சியானும் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னுஞ் சூத்திரத்தானும் வீட்டுக்கு நிமித்தம் கூறியது. 22. ஒழிந்த - கந்தருவமொழிந்த. 23. இச்சூத்திரத்தின் முதலடிக்கு இளம்பூரணருரை நேரிது. 24. பால் - ஊழ். 25. பால் - இடம். 26. பொய்த்தல் - நின்னைப் பிரியேனென்றுகூறிப் பிரிதல்; அதனாற் பொய்த்தவன் என்றாள். பொய் கூறினவனுடைய மலையில் மழைபெய்து அருவி பெருகல் கூடாதாகவும் பெருகல் வியப்பு என்றபடி. தனது நன்றியை மறந்து பொய்த்தவன் மலை எனவேதான் நன்றியுடையாள் என்று கருதினாளாயிற்று. அது பற்றித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றாள் என்றார். 27. ஆணை - விதி என்றிருத்தல் வேண்டும். இது இவ்வாக்கியத்தின் பின்வருதல் நலம். ஒன்றையும் வேறையும் முதற்கட்கூறலின். அவை (ஒன்றும் வேறும்) கற்பின்காறும் செல்லும் என்பது கருத்தாதலின். செல்லும் என்பதில் முற்றுப் புள்ளியிடுதல் வேண்டும். பாலது என்பது ஆணையோடு சேருதல் வேண்டும். இது (பாலதாணை) சூத்திரத்து வந்த சொல். அவ்வாறாம் என்றது கற்பின் காறுஞ் செல்லும் என்றபடி. 28. ஒத்த - குலத்தாலொத்த 29. இருபத்துநான்கு ஆண்டு உயர்ச்சிகொண்டது பெண்ணுக்குப் பன்னிரண்டு ஆண்டு கொண்டமையின், பெண்ணின் இரட்டி ஆணுக்குக் கொள்ளலாம் என்றபடி. 30. பூங்கொடி - பூங்கொடி போல்வாள். 31. புலனெறிவழக்கு - செய்யுள் வழக்கு 32. இளம்பூரணர் வேறு கூறுவர். 33. இடையது - இடையில் நிகழ்வது 34. வள்ளி - வல்லி - கொடி. லகரமும் ளகரமும் ஒற்றுமை பற்றி மாறிவரும். 35. பிழம்பு - வடிவு 36. நிழலீடு - நிழலிடுதல். மக்களுடம்புக்கு நிழலீடுளதாதலின் தெய்வ யாக்கை அன்றென்பது துணியப்படும். 37. வேர் - வியர்வை. கோதை - மாலை. அரி - செவ்வரி கருவரி. போகு - நீண்ட. அகலிடம் - பூமி. 38. நாட்டுதல் - நிலைநிறுத்தல் - ஊன்றிநோக்கல். அவள் நோக்கின்கண் தன் நோக்கை நிலைநிறுத்தல் எனவே ஊன்றி நோக்குதலாயிற்று. 39. தாக்கு அணங்கு - தானே தாக்கி வருத்துதெய்வம். தானை - படை. 40. செம்பாகம் - சமபாகம். 41. பானல் - நெய்தல். தன்னைமார் - தன் தமையன்மார். நொண்டு - முகந்து. கடிபுஒல்லா - காக்கமாட்டா. என்னையே காப்பு - என்னையே காக்கும் அத்துணை. 42. முயங்கி - புணர்ந்து; தழுவி 43. கோடல் - காந்தள். எதிர்தல் - தோற்றுதல். ஐது - அழகியது. தொடை - தொடுத்தல். முறி - தளிர். வாயது - வாய்த்தலுடையது; சிறந்தது. 44. பாத்து - பகுத்து. தமதுபாத்துஉண்டற்று - தம்பொருளைப் பகுத்துத் தமது கூற்றை உண்டாற்போலும். தமது - தம்முடைய பொருள். 45. உரன் - அறிவின்வலி. கடைப்பிடி - உறுதியாகப்பிடித்தல். 46. இவ்வாறு கூறுபவர் இளம்பூரணர். தொல். களவியல் 1ஆம் சூத்திரத்து விரிவுரையுள் அவர் இவ்வாறு கூறுதல் காண்க. 47. ஒருதலை - நிச்சயம்; உறுதி. 48. சேட்படை - தோழிக்குரியது 49. அவை - நோக்குவவெல்லாம் அவையே போறல் என்பதில் அவை. 50. காட்டு - காட்டுள் என்றிருப்பது நலம். 51. முள் - அணிற் பல்லையொத்தது ஆதலின் அணிற்பல்லன்ன என்றார். கொங்கு - பூந்தாது. முண்டகம் - முள்ளிச்செடி. மணி - நீலமணி. நின்நெஞ்சு நேர்பவள் - நின்மனத்திற்கொத்த காதலி. ஆகியர் - ஆகுக. 52. நிறைந்தோர் - செல்வநிறைந்தோர். ஒரூஉம் - நீங்கும். போலநீ த்துப்படர என இயைக்க. மருள - மயங்க; வருந்த வெந்து - உலையிற் காய்ந்து. அந்தி - செவ்வானம். ஐஅறிவு - வியக்கத்தக்க அறிவு. கையறுபடரொடு - செயலற்ற துன்பத்தோடு. அம்மஞ்சு - அழகிய மேகம். பகலாற்றுப்படுத்த - ஞாயிற்றைப் போக்கிய. பழங்கண் - துன்பம். புலம்பின்நோதக - தனிமையால் வருந்தியிருப்ப. அருநிறம் கட்டி - அரிய மார்பைக்குறித்து. எஃகு - வேல். வருந்த அலைத்தல் அமையது என இயைக்க. நிழல்காண் மண்டிலம் - கண்ணாடி. மதுகை - வலி. என்னுயிர் துறக்கும்பொழுது இதுகொல் என முடிக்க. கடுவளி - சூறாவளி. எடுப்ப - அலைப்ப. 53. இவை தலைவி சாக்காடு என்றது இச்செய்யுள்கள் தலைவி தன் சாக்காடு கூறும் பொருளுடைய என்றபடி. அவ்வாறாதல். இம்மை மாறி மறுமையினும் என்பதனானும். என்னுயிர் - துறக்கும்பொழுது இதுகொல் என்பதனானும் அறிக. 54. புணர்தல் பிரிதல் அகத்திணையியல் 14அம் சூத்திரம். 55. கொங்கு - பூந்தாது. காமம் - விருப்பம். பயிலியது கெழீஇய - பயிலுதல் பொருந்திய, கூந்தலின் - கூந்தலினும்பார்க்க. நறிய - நறுமணமுடையன. 56. மகன்றில் - நீர்வாழ் பறவையுளொன்று. தண்டா - குறையாத. உயற்குப் போகுக என இயைக்க. இதனைத் தலைவி கூற்றாக்குவர். குறுந்தொகைக்குத் துறை வகுத்தோர். ஆயின் நச்சினார்க்கினியர் கருத்துப் பொருத்தமாகும். என்னை? தலைவி தலைவனுயிரையும் கூட்டிக் கூறல் சிறப்பின்றாகலின். குறுந்தொகை யுரையுட் கீழ்க்குறிப்பு நோக்குக. 57. துத்தி - தேமல். மாயோய் - மாமைநிறமுடையோய். அஞ்சல் - பிரிவே னென்று அஞ்சாதேகொள். கூந்தலையும் வாயையும் கூறலினானும் மாயோய் என்றதனானும் நயப்பும். விடல்சூழலன் என்பதனான் பிரிவச்சமும், அஞ்சலை என்பதனான் வன்புறையுங் கூறினான் என்க. 58. யாய் - என்றாய். ஞாய் - நின்றாய். இவை இப்பொருளனவாதலை. (தொல். எச். 14) தெய்வச்சிலையாருரை நோக்கியறிக. 59. தொன்றுபடு கிளவி என்றது இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் பிரியேனென்று சூளுரைத்தமையை. 60. எம்மலைச் சாந்தம் நும் அல்குலுக்குத் தழையுதவும் என்றதனால் அணிமை கூறினான். 61. வாயாகுதல் - உண்மையாதல். 62. கூறுவார் என்றது இளம்பூரணரை. 63. ஆண்டு - மெய்ப்பாட்டியலில் 64. மறையோனை என்பது மறையோனைக் கண்ட என்றிருத்தல் வேண்டும். அச்சொல் தவறியதுபோலும். மறையொழுக்கிற்றவறாத மறையோனை மறையொழுக்கிற்றவறிய மறையோன் கண்டால் நெஞ்சு நிறையுந் தடுமாறுதல்போலவும். காமவேட்கையின் மிகுதியானே வெப்பமடைந்து இழிவுமிக்கார் பிறரைக்கண்டால் நெஞ்சு நிறையுந் தடுமாறுதல்போலவும் தடுமாறி என இயைக்க. இவ்வுவமைகளை நிரனிறையாகக் கொள்ளினுமமையும். புண்கூர்ந்தார் என்னும் பாடத்திற்கு வருத்தமிக்கார் என்று பொருள் கொள்க. நெஞ்சுழுபுண்ணுறீஇ (தொல். பொ. 147) என்பதுபோல. புலையன் றீம்பாலிற்போல மனங்கொள்ளா என்க. பால் என்பது பற்றிக் கொள்வேமோ என்ற கருத்தும். புலையன் றீண்டியது என்பதுபற்றி விடுவேமோ என்ற கருத்துமாய் ஒருவர்க்கு அப்பாலின்கண் மனம் ஒருவழிப்படாததுபோல மனம் ஒரு வழிப் படாத என்பது கருத்து. மனங்கொள்ளா - மனம் ஒருவழிப்படாத. அனந்தர் - மயக்கம். தலைவிக்கு மனம் ஒருவழிப்படாமை எதனாலாய தெனின்? வருவானோ என்ற அச்சத்தானும். வராதொழி வானோ என்ற கருத்தானும் ஆயதென்க. ஒருமுறை வரல்வேண்டு மென்று கருதலானும். ஒருமுறை வராதிருத்தல் வேண்டுமென்று நினைத்தலானும் மனம் ஒருவழிப்படவில்லை என்பது கருத்து. புன்கூர்ந்தார் - துன்பமிக்கார் எனினுமாம். 65. ஓதியு நுதலும் சிதைவிலவேனும் அவை சிதைந்தன போலத் திருத்தலின் என்க. 66. பெறுதலையும் உடம்பொடு புணர்த்தலாற் பெறவைத்தார் என்பது கருத்து. எனவே பெறுதலும் தீராத்தேற்றமும் எனக் கிளவி இரண்டாம். 67. சார்த்தி - பொருந்தவைத்து. 68. இப்பொருள் சிறப்பின்று. தானே இடந்தலைப்பட்டுக் கூடுங்கூட்டம் பாங்கற் கூட்டத்தினுஞ் சிறந்ததென்பதனை செய் - 187ஞ் சூத். பேராசிரியருரை நோக்கியறிக. 69. பாங்கனாற் கூடுங் கூட்டம் என்றனலம். என்னை? பாங்கனால் தலைவியை இடந்தலைப்பட்டு கூடலின். செய் 187ஆம் சூத் - பேராசிரியருரை நோக்கியறிக. 70. உறுதல் - முயங்குதல். இயன்றன - செய்யப்பட்டன. 71. கொடிச்சிதோள்தீண்டலு மியைவதுகொல்லோ என முடிக்க. வீளை - சீழ்க்கை. கல் இடுபு எடுத்த - கல்லைவீசி எழுப்பிய. இது மானோடு முடியும். நனந்தலை - அகன்ற இடம். புன் கண் - துன்பம். நேர்பட - நேரே இருப்ப. தன்னையர் - தன் தமையன்மார். சிலைமாண் - சிலைத்தல் மாட்சிமைப் பட்ட. கலை நிறத்து - கலை மானின் மருமத்திலே. பறித்த - பிடுங்கிய. மாறுகொண்டன்ன - தம்முள் மாறுப்பட்டாற் போன்ற. அன்ன கண் என இயையும். 72. இறைஞ்சல் - தாழச் செய்தல்; கவிழச் செய்தல். நாணல் என்றது ஈண்டு நாணத்தால் கண்புதைத்தலை யுணர்த்திற்று. புறம் - முதுகு. புலி நடுங்க அதன் முதுகிலே என்க. தலைமருப்பு - மருப்புன்றலை. கடைமணி - கருமணியின் கடை. கதவ - சினவாநின்றன. அல்ல - அவை மட்டுமல்ல. தோளும் அணங்கு உடைய - தோளும் வருத்தலுடையன. 73. கதவ - கோபமுடையன. 74. நின்னையர் - நின் ஐயன்மார். என்றது தந்தை முதலியோரை. உடல் - உடம்பு. மிடல் - வலி. அடங்காத - கச்சுளடங்காத. இடுகும் - நுணுகும். இழியல் இழுவலுமாம் - முரிதலுறப் பெறாதே கொள். இடை முரியும் என்றது, பொய் பாராட்டல். 75. கோள் - கொலை. கொல்வல் எனவும் பாடம். கூட்டுண்டு செல்வார் - கவர்ந்தொழுகுவார். (பிறர் வருவாரை) ஓரம்பினால் எய்து போக்குவர் என வருவித்துரைக்க. செல்வார் தாம் என்பது செல்வாரை என்று பாடமிருப்பினயம். நீ யான் போகாதபடி என்னை ஒன்றாலன்று ஈரம்பினா லெய்தாய் என்க. 76. கதுப்பு - கூந்தல். ஆகம் - மார்பு 77. வேட்ட பொழுதின் - விரும்பிய பொழுதின் 78. அணங்கின - வருத்தின. புன்கம்பூ நெற்பொரி போன் றிருத்தலின் சிதறியன்ன என்றார். எக்கர் - மணன்மேடு. சூரரமகளிர் - தெய்வமகளிர். சூள் (சத்தியம்) எம் அணங்கின என முடிக்க. 79. இது - இச்சூத்திரவிதி. பொதுவிதி எனவே கடைமக்களுக்குப் பல முறையும் ஐயமுண்டாம் என்று கருதினார் என்பது கருத்தாகும். 80. நுகர்ச்சி பெறுக என எம்மருளித் தவலி என (என்று சொல்ல). அதனால் பிரிந்து உறைதலைப் பொருந்திய எம்புலம்பை நோக்கிக் கவலுங்கொல் எனவும் வருகுவன்கொல் எனவும் வருந்தும் என்னுள்ளத்து அயர்வுமிகலான் எண்ணியது இயைவதாகுங் கொல் என முடிக்க. தவலி - மனமழிந்து. 81. அவளாக - இடத்தை அவளாக. 82. வெள்ள வரம்பினூழி - வெள்ளம் என்னும் அளவினெல்லைத்தாகிய ஊழி. தினைக்காவலைக் காட்டியன. அதனால் கிள்ளைகள் ஊழி பல வாழிய என முடிக்க. 83. நீங்கல் - பிரிதல். குறுகல் - கூடல். 84. அல்குபடர் - மிக்க துன்பம். பகைத்தழை - ஒன்றோ டொன்று மாறுபட்ட தழை; பலவகை நிறமுள்ள பூக்களாலும் தளிர்களாலும் தொடுத்தலின் அவ்வாறு கூறினார். மணி நீலமணி. உறீஇயினள் - உறுவித்தாள். போர்வு - நெற்போர். ஈன்றதாய் பெறுக என முடிக்க. 85. தண்ணியநீரளாயினும் பொறுத்தற்கரிய வருத்தத்தைத் தருபவள் என விரித்துரைக்க. இனையள் - இவ்வியல்பினள். முயங்குங்கால் - தழுவுங்கால். அணை மெல்லியல் - அணை போலும் மென்மைத் தன்மையை யுடையாள். மெல்லியள் எனவும் பாடம். 86. பறைதபு - முதுமையால் சிறகுகள் நீங்கிய. பறத்தல் தவிர்ந்த எனினுமாம். அயிரை - ஒருமீன். அணவந்தாங்கு - தலையை மேலே உயர்த்தினாற் போல. சேயள் - தூரத்திலிருப்பவள். படர்தி - விரும்புகின்றாய். நோய்ப்பாலோய் - நோய்க்குக்காரணமாகிய ஊழினையுடையாய். 87. இது என்றது பிரிந்தவழிக் கலங்கலை. மூன்றாங் கூட்டம் பாங்கற் கூட்டம். 88. பரிவு - துன்பம். நின்னுற்றது - நின் கண் அடைந்த துன்பம் பின்னுதல் - கலத்தல். பேர்த்து - மனத்தினின்றும் பெயர்த்து. 89. வஞ்சம் - மாயம். மா - விலங்கு. தஞ்சம் - எளிமை. வலம் - வலி; வென்றி. கொண்டாள் - கொண்டாளாய். இடங்கொண்டாள் - என்னெஞ்சைத் தனக்கு இடமாக்கிக் கொண்டாள். 90. எலுவ - ஏட. சிறார் - இளையோர். ஏமுறு நண்ப எனவும் பாடம். புலவர் - அறிவுடையோர். எம்மைப் பிணித்தது என மாற்றி இயைக்க. 91. கழறி - இடித்து. 92. குன்றம் - மலை. குன்றி - குன்றிமணி. நன்று - நன்மை தரும் நூல். பெரிது எனினுமாம். முறை - நீதி. தகவில - தகுதியற்றன. செய்ப - செய்வார். 93. மழுங்குதல் - ஒளிகுறைதல். வெம்மை - வெப்பம். பெயரா - நிலைகுலையாத; அசையாத. நாட்டம் - நோக்கம்; எண்ணம். கிடக்கை - கிடத்தல். கலங்குதி எனின் நிலம் உளதென்று கருதேன் யான் என இயைக்க. 94. அணங்கு - பிறர் வருத்த வருந்துவது. பிணி - நோய். முதை - பழங்கொல்லை. கவல் - மேட்டுநிலம். தைவரல் - தடவல் (நாவால் தடவல்). விருந்து - புதிது (புதிதாகத் தோன்றுவது) எனவே நம் மன நினைவாற் றோன்றுவது என்றபடி. 95. தித்தி - வயிற்றிற் றோன்றுந் தேமல். சுணங்கு - முலை முதலியவற்றிற் றோன்றுந் தேமல். காணாவூங்கு - காணாதமுன் முன் உடையேன் எனவே கண்டபின் இலேன் என்பதாம். 96. நொண்டுகொளல் - அள்ளிக்கொளல். நோன்றுகொளற் கரிதே என்பது சாமிநாதையர் பதிப்புப் பாடம். மொண்டு கொளற்கரிதே எனவும் பாடம். 97. கழை - குழல். பாடு - பக்கம். ஆடுமகள் - கழைக்கூத்தி. அதவம் - அத்தி. கயிற்று மந்திப்பறழ் தூங்க. குறக் குறுமக்கள் தாளங்கொட்டும் மலை என்க. துய் - பஞ்சு. பொறை - பாறை. என்னெஞ்சு கையகத்தது என முடிக்க. விடுத்தல் - விடுவித்தல். 98. கேளிர் -நண்பரே, புணரப்புணரின் - புணரக்கூடுமாயின். வாழ்க்கை - உயிர்வாழ்வு. 99. வளி - காற்று. தூக்கும் - எடுக்கும். விலக்குநர் - தடுப்போர். 100. என்று என்பது இன்று என்றிருத்தல் வேண்டும். ஐயுற்றது தலைவனாதலின். 101. பேதுறுத்து - மயக்குதல் செய்து. தெய்வம் அருண் மிக வுடைத்து. ஆதலால் வணங்குவேன் யான் என்க இயைக்க. 102. வயின்வயின் - இடந்தொறும். இமைக்கும் - ஒளிவிடும். அறிவு தொலைத்தது இக்கமழ்கொடி போலும் என முடிக்க. 103. கண் நீலம். பல் முத்தம், நிறம் தளிர். அவை என்றது - நீல முதலியவற்றைத் தோற்றுவித்த இடங்களை. வானவன் - சேரன். கொல்லி - ஒரு மலை. சேரனுக்குரியது. கொற்கை - ஒரு நகர் இது கடற்கரையிலுள்ளது. இதில் முத்துப் பிறப்பது. என்போர்- என்று சொல்வார். ஆதலால் குறவர்மக்கள் மடவர் என மாற்றுக. ஊதை - காற்று. ஈட்டுதல் குவித்துவைத்தல். தூங்கெயில் - ஆகாயத்தில் தூங்குமெயில். தூங்கல் - தொங்கல். அசைதல். நன்று - பெரிது. மன்ற - தெளிவாக. 104. பண்ணாது - யாழினைப்பண்ணாது. தேன் - வண்டு. எண்ணாது கண்டார்க்கு - ஆராயாது வந்து கண்டார்க்கு. ஏரணங்கு - அழகிய தெய்வம். சாவார் - இறந்துபடுவார். சான்றாண்மை சலித்திலார். சான்றாண்மையின்கண் வேறுபாடில்லார். கயிறுரீஇவிடல் - கயிறுருவிவிடல்; கயிறுகழற்றிவிடல். சுட்டி வையாது கழற்றி விட்டார் என்றது இவளை இல்லிற்செறியாது புறம்போக விட்டார் என்றபடி. கயிறுரீஇவிடலைச் சிந்தாமணி இலக்கணை. 80ஞ் செய்யுள் நோக்கியறிக. (நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதரவிட்டநுமருந் தவறிலர்... இறையே தவறுடையான்) என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. தூண்டிவிட்டார் என்றுமாம். 105. இயையாது - புணராமல். 106. நூனெறிமார்பன் - பார்ப்பான். பார்ப்பான் தோளியை ஏமுறுநிலை கண்டனன்கொல் என முடிக்க. 107. அரிவை என்றது காதற்றோழியை. இயலி - நடந்து கொண்டு வந்திசின் என இயைக்க. 108. பேணப்பட்டாள் - விரும்பப்பட்டாளாகிய வாயில். வழி வலித்தல் - துணிதல். 109. புணை - தெப்பம். தளிரன்னோள் ஆண்டும் வருகுவள் போலும் என இயைக்க. 110. தோழி கூற்றாகக் கொள்வோர் களவியலுரைகாரர் 111. ஏதம் - குற்றம் - குற்றேவன்மகளாகிய தன் தகுதிக்கடாதன கூறல் குற்றம். 112. இது - நட்புமிகுதி. பயத்தல் - பயன்படல். நட்பு மிகுதி அறிந்து குறையுறுவானிடம் தனக்கும் தலைவிக்குமுள்ள நட்புமிகுதி கூறல் பயனின்றென்றபடி. 113. மணி - இதுவும் பிணியை நீக்குவதொன்று; நோயை நீக்குவன; மணி மந்திர ஔஷதம் (மருந்து) என்பர் ஆன்றோர். நறவு - கள். தேறல் -தெளிவு. பின்னின்று - இரந்துபின்னின்று. நெஞ்சே எழு என்க. மகட்கு அறியக்கூறுகம் எழு என முடிக்க. 114. வலியுறல் - துணிதல். 115. தலைப்பெய்தல் - கூடல். செவ்வி - சமயம். 116. கெடுத்தவை - இழந்தவை. 117. ஏதிலார் - அயலார். 118. மாற்றம் - வார்த்தை. விடை. 119. குறை - இன்றியமையாத காரியம். 120. மன்றம் - பொதுவில்; மரத்தடி. சேதா - சிவந்த பசு. இறும்பு - சிறுகுன்று. ஆமூறல் - நீரூறல். குரல் - கதிர். 121. எல் - ஞாயிற்றின் வெயில்; ஆகுபெயர். வில்லுற்ற புருவம் என இயைக்க. மதி - திங்கள். 122. நறை - நறைக்கொடி. நாள் - நல்லநாள். உறை - மழை பிறையையேற்றுக் கொண்ட தாமரை; இல்பொருளுவமை. ஏமரை - ஏவுண்டமரை. ஏ - அம்பு. 123. இல்லுடைக்கிழமை - இல்லறத்துக்குரிய உரிமை எனவே மனையாளாம் உரிமை என்றபடி. 124. குறை அறிவித்தாலாகிய பகுதி என்பதன்றிக் குறையுறுகின்ற பகுதி என்றும் பொருளாம். அதனால் கண்ணி முதலியவற்றோடு செல்லும் பகுதியுங் காண்க என்றபடி. கையுறை - கையிலுறுவிப்பது; காணிக்கை. கண்ணி - மாலை. 125. தனித்துழிப்பகுதி - தோழி தனித்திருந்தவிடத்துச் சென்று கூறும் பகுதி. 126. தலைப்பெய்தியுடைமை - (தலைவியோடு) கூட்டமுடைமை. 127. அணங்கு - வருத்துந்தெய்வம். 128. இவை - வெளிப்பட்டன என்றது களவு வெளிப்படக் கூறியன என்றபடி. வேறுபாடு - கருத்து வேறுபாடு. 129. கவான் - மலைப்பக்கம். மஞ்ஞை - மயில். 130. நோக்கு. உள்ளி. காண்பேன் போலும் என முடிக்க. ஆரம் சந்தனம். 131. கைதைதூக்கியும் - தாழம்பூவைப் பறிக்குமாறு இவளைத் தூக்கிநின்றும். குற்றல் - கொய்தல். கொய்து கொடுத்தும் என்பது கருத்து. பேய்போல் - பேய் புண்ணைக் காத்துநின்றாற்போல். இது பேய்க்காஞ்சி என்னுந்துறை (தொல். பொரு. 79) 132. நற்றிணையுரையாசிரியர். தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்வதாகப் பொருள்கொள்வர் அவர் பரதவர் மகள் என்னென நினையுங்கொல் என முடிப்பர். 133. ஐவனம் - மலை நெல். ஒழிவுகாண்பாள் - (என்னுயிரை) ஒழிவு காணுவாள். காண்பானோ காண்கொடா எனவும் பாடம். காண்கொடா - புறம் போகாது அடங்கின. 134. எல் - பகல். எல்லின்று - ஒளியுன்று. 135. சிற்றாளி - சிங்கக்குட்டி. பவளக்கடிகை - பவளத்துண்டம் என்றது அதரத்தை; உவம ஆகுபெயர். அதனிடைமுத்தம் - எயிறு. தொடிகை யிடை முத்தம் என்பதைக் கையிடைத் தொடியின் கணழுத்திய முத்தம் என மாற்றிப்பொருள் கொள்க. இது நயப்பு என்னுந் துறைக்குரிய உரை. நச்சினார்க்கினியருரைப்படி தொடி என்பது கொடி யென்றிருக்கலாம். போலும். 136. இது நீரேவிய செய்வேனென்றது. 137. இது அவளை அறியேனென்றாட் கறியக்கூறியது. அறிகு - அறிவேன். ஆய - வருந்த. செல்லாள் - சொல்லாளாக. நல்கும்வாய் - அருளும்நெறி. ஒல்கும் வாய் - ஒல்கிநடக்குந்தோறும். ஒல்கல் - தளர்தல். 138. மாறுதல் - ஒழிதல். 139. செத்து - கருதி. நின்வாய் செத்து எனவும் பாடம். அதற்கு நின் எண்ணங் களை. உண்மையாகக் கருதி என்பது பொருள். நெஞ்சே நீ பைதலையாய் (துன்பமுடையையாய்) வருந்தலன்றியும். அன்னி போல விளிகுவை கொல் என இயைக்க. அவ்வாங்கு உந்தி - அழகிய வளைந்த கொப்பூழ். வைப்பு - ஊர். பாண் மகள் கொள்ளாள். பெரும் வைப்பு என இயைக்க. 140. இரவு - இரந்து பின்னிற்றல். 141. களம் - இடம். சுட்டுதல் - குறித்தல் 142. குறி - குறிக்கப்படும் இடம். 143. அயம் - நீர் பைஞ்சாய் - தண்டான்கோரை - மருந்து - வேரின் மேற்றண்டு (வெண்குருத்து). நகை - ஒளி. பேயு மறியாமறைமை புணர்ச்சி - பேயுமியங் காது வைகுங்காலத்துப் புணர்ந்த களவுப்புணர்ச்சி. துடியில் - துடிபோல. புணர்வு பிரிந்து இசைப்ப - தங்களிற் கூடியும் பிரிந்தும் அயலார் சொல்லுவன. நீத்தம் மண்ணுநீர் போல முயங்கி - நீத்தத்துக் குளிக்குமிடத்து அந்நீர் குளிருமாறுபோலக் குளிரமுயங்கி. மழைக்கண் மாயோள் - மழைபோலும் கண்கரியோள். மடவதுமாண்ட மாயோள் அடைதந்தாள் என இயைக்க. இது தோழிக்குத் தலைவி, முன்குறி நேர்ந்தமை கூறி இரந்து பின்னின்றது அகத்துள் வேறுதுறை கூறப்பட்டது. 144. நச்சினார்க்கினியர் கருத்தின்படி மேனி (மேனியையுடையாள்) குறி நல்கினள் என இயையும். இது ஐங்குறுநூற்றுள் வேறு துறையாகக் கூறப்பட்டுளது. கூட்டமும் வேறு. 145. தைஇ - உடுத்து. குளிர் - கிளிகடிகருவியுளொன்று. எற்பட பொழுதுபட. அடைச்சி - அணிந்து. ஆடுகம் - விளையாடுவேம். எயிறு உண்கு - நின் எயிற்றைச் சுவைப்பேன். என மொழிதலின் என இயையும். புறம் - பின்புறம். விடுத்த - கைவிட்ட. நெஞ்சம் என்பது விளி. விடல்ஒல்லாது - கைவிடல் ஆகாது. 146. இரண்டறிகள்வி - இரு வேறுபட்ட ஒழுகலாற்றை அறிந்த கள்ளத்தன்மை யையுடையள். முரண் - மாறுபாடு. துப்பு - வலி. நம் ஓரன்னள் - நம்மோடு ஒருதன்மையள் (ஒத்தவள்) ஆயினாள். அமரா - பொருந்தாத; மாறுபடாத. வைகறையான் - விடியற் காலத்தில். தமர் - சுற்றம். 147. ஓரை - விளையாட்டு. தொடலை - மாலை. புனைதல் - அழகு பெறத் தொடுத்தல்; கட்டுதல். கண்டோர்தண்டா - கண்டோராற் கெடாத (திருட்டி தோஷம் உறாத). அணங்கு - தெய்வம். 148. இன்னாமாக்கட்கு - இன்னாதமாக்களையுடையது. தோழியையே முன்னிலைப் புறமொழியாக வைத்துக் கூறியது இச்செய்யுள் என்க. 149. அயர்த்தது - தோழி அயர்த்தது. அவள் - தலைவி. 150. நீக்கல் - நீக்கி நிறுத்தல்; என்றது சேட்படுத்தலை. 151. கடியர் - கொடியர். 152. உம்மை - நிலைமையும் என்பதிலுள்ள உம்மை. 153. புல்லுரை - பயனற்ற உரை. தாஅய் - பரவப்பெற்று. பசுங்கலம் - கடப்படாத கலம். தாங்கா - பொறுக்காத. வெள்ளம் - ஆசைவெள்ளம். அரிது அவா வுற்றனை - பெறுதற்கரியதை அவாவினாய். பூசல் - போராட்டம். பெறின் நன்றும் பெரிது என்க. பெறின் என்றமையாற் கேட்பாரில்லை என்றபடி. இல்லை என்பதனால் சேட்படுத்தாள் என்பது பெறப்படும். 154. தைஇயும் - செய்துகொடுத்தும். தைஇயும் சூழ்ந்தும் எழுதிய தொய்யிலையும் இவளைப் பாதுகாத்து நிற்போரறியார். எனவே தோழி சேட்படுத்தாள் என்பது பெறப்படும். இவ்வழுங்கலூர் யாங்காவதுகொல் என இயைக்க. அறிதலுமறியார் - அறிதலுஞ் செய்யார். அளிது - இரங்கத்தக்கது. 155. அது புரைத்தோ - அது உயர்ச்சியுடையதோ. அது - துறத்தல். 156. தூது தருவதுகொல்லோ என இயையும். தூது என்றது தோழியை. 157. நாகம் - நாகப்பூ. தன் ஆகம் - தன் மார்பு. பூண் ஆகம் போகாது என்றேன் - எலும்பினாற்செய்த பூண் என் மார்பினின்றும் போகாது என்றேன். இரண்டாவது - இரண்டாவது வார்த்தை. 158. சாக்காடு - சாக்காடு என்னு மெய்ப்பாடு. (தொல். பொரு. 100ஞ் சூத்திரம்) 159. ஆரணங்கினள் - நீக்குதற்கரிய வருத்தத்தைச் செய்யு மியல்பினள். 160. பெயர்த்தல் - மீட்குதல். 161. இருவகைக்குறி - பகற்குறியும் இரவுக்குறியும். 162. பரிதல் - வருந்துதல். 163. ஆனா - அமையாத; நீங்காத. படர் - துன்பம். காணவும் - நீ கண்டுவைத்தும். பொறையன் - சேரன். கொல்லிக்குடவயின் - கொல்லிமலையின் மேற்குப் பக்கம். பறவை - வண்டு. தெய்வம் - தெய்வத்தச்சன் என்பர் உரைகாரர். பூதம் புணர்த் புதிதியல் பாவை எனவும் வருகின்றது. (நற். 192.) கொல்லிப் பாவையினியல்பை நற்றிணையுள் இதன் விரிவுரை நோக்கி யறிக. அது நகைத்துக் கொல்வது. 164. ஓதம் - கடல். ஊதை - காற்று. தவ்வென்றன்று - பொலிவழிந்தது. குராஅல் - கூகைப்பேடை. சதுக்கம் - நாற்சந்தி. அணங்கு - பேய். கால்கிளரும் - உலாவும். 165. அறியா - அறிந்து. ஆலும் - ஏங்கும். அடுக்கல் - மலை. 166. வேட்டல் - விரும்பல். வெளிப்படல் - அலராதல். 167. இது, பாகன் என்றிருத்தல்வேண்டும். 168. இது - புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது கூறியது. இன்னாள் - துன்பஞ் செய்தலுடையள். நெஞ்சம் என்பது விளி. படு - பொருந்திய. சிதைய - அழிய. முயங்கல் - தழுவல். 169. வறும்புனங்கண்டு கூறியது. ஆடாவடகு - அடாவடகு; - விளையாட்டு. மன்னர்கலம் - மன்னரது மணிமுடி. எனவே கலம் புக்ககொல் என்பது முடி கூடினகொல் என்றபடி. மயிர்முடி கூடினகொல் என்றதனால். மயிர் முடிக்கும் பருவமுற்றாள்போலும் என்பது கருத்து. எனவே இற்செறிக்கப் பட்டாள் போலும் என்று கருதினான் என்றபடி. 170. இது - தோழி இற்செறிப்பறிவுறுப்பத் தலைவன் ஆற்றாது நெஞ்சிற்குக் கூறியது. 171. இது - தோழியிற் கூட்டத்தின்கண் தன்னிலை கொளீஇக் கூறியது. நற்றிணை யுரை பார்த்தறிக. 172. இது - இரவுக்குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறியது. கேளீர் - நண்பீர். இங்கே தோன்றும் இவ்வுருமயில்கொல் என வருவித்துரைக்க. பயிரும் - பெடையை அழைக்கும். என்னெஞ்சு கண்ணின் வருந்தும் என இயைக்க. 173. தோழி, தான் குறைமறுக்குமிடத்து நகினும் என்பது கருத்து. 174. மடந்தை என்றது - தோழியை. அரிவை - தலைவி. இச் செய்யுளை முன் பாங்கற் கூட்டங் கூடி நீங்குந் தலைவன் தலைவிக்குக் கூறியதாகவுங் கூறியுள்ளார் நச்சினார்க்கினியர். 175. ஏவியது - தந்தை தாயர். 176. கூறுவங்கொல் ..... நன்மொழி என்பதற்கு. (இவட்குக்) கூறுவங்கொல் கூறலங்கொல் என எண்ணிக் கரந்த காமத்தைக் கைநிறுக்கல்லாது (அடக்க முடியாமையால்) நயந்து நாம்விட்ட நன்மொழி என உரைக்க. தூவினை நுண்ணூல் - தூய தொழிற் பாடமைந்த நுண்ணிய நூலாலாய ஆடை. பொருந்தினளாய் வந்து முயங்கினள் பெயர்வோள் அம்மா. அரிவையல்லள்; சூர்மகள் என்னும் என்நெஞ்சு என இயைக்க. என்னெஞ்சு என்னும் என மாற்றி முடிக்க. வில் வகுப்புற்ற - வில்லை வகுத்தாற்போன்ற. நல்வாங்கு குடச்சூல் - நல்ல வளைந்த சூல் உற்றதுபோற் புடை பருத்திருக்கின்ற சிலம்பு குடைசூல் எனச் சிலப்பதிகாரத்து வரலின் அவ்வாறும் பாடங் கொள்ளலாம். சுவிரம் பெயரிய சுவாஅன் - சுவிரம் என்று பெயர்பெற்ற மலைப்பக்கம். 177. விண்ணகம் விளக்கல் வேண்டி - விண்ணிடத்தை விளக்கலை விரும்பி. கொடிச்சி வேண்டிப் பிரியினும் பிரியுமோ (பிரியாள்) என மாற்றிக் கூட்டுக. இவள் சிறுநுதலை விசும்பினுங் காண்டும் (ஆயினம்) ஈங்கும் (இப்பூமியினும்) காண்டும்; ஆதலின் பிரியுமோ பிரியாள் என்பது கருத்து. திலகம் - நெற்றித் திலகம். வானம் சூடிய - விண் அணிந்த. விண் அணிந்த ஒரு நெற்றித் திலகம் போல விண்ணினும் காண்டும் என இயைக்க. இவள் சிறுநுதலை விசும்பினுங் காண்டும் என்றதில், சிறுநுதல் என்றது - இவள் சிறுநுதல் போன்ற பிறையை. விண்ணகம் விளக்கல் வேண்டி என்றது. தன் நுதலாகிய பிறையால் விண்ணிடத்தை விளக்கல்வேண்டி என்றபடி. இவள் நுதலை விசும்பிற் காண்டலால் விண்ணிடம் விளக்கல் வேண்டிப் பிரியினும் என்றான். ஈங்குக் காண்டலால் பிரியுமோ (பிரியாள்) என்றான். உவமையாகிய பிறையினியல்பை நுதலில் ஆரோபித்து (ஏற்றி) விசும்பினுங் காண்டும் என்றான் என்க. 178. குருதி - இரத்தம். உரு - அச்சம். வயமான் - வலிய புலி. வயமான் பார்க்கும் சோலை என இயைக்க. துரு - ஆடு. துருவைப் போல மேயலாரும் (மேய்கின்ற) கரடி என இயைக்க. அரிவை - அரிவையே! நின் ஆய் நலன் உள்ளிவரின் ஆறு (வழி) ஏமமாகும் என முடிக்க. பூதம் புணர்த்த பாவை - கொல்லிப் பாவை. 179. ஆற்றிடை யுறுதற்குக் கொள்க என இயையும். 180. பாங்கற்கு - பாகற்கு என்றிருத்தல்வேண்டும். குறுந்தொகையுரை நோக்கியறிக. 181. வாடை - வாடைக்காற்றே. நல்லோளூர் கல்லுயர் நண்ணியது ஓம்புமதி எனக் கூட்டி முடிக்க. கல் - மலை. உயர் - உயரம் (*உச்சி) தூங்கு தோல் - நால்கின்ற தோல். தூங்குதோல் கடுக்கும் அருவி என இயையும். 182. கவலை - கவலைக்கிழங்கு. கெண்டிய - அகழ்ந்தெடுத்த. தாஅய் - பரவப் பெற்று. மூய் - முடி. கார் எதிர் - கார்காலத்தை ஏற்றுக்கொண்ட, புறவினது - முல்லை நிலத்தின்கண்ணது. ஊர்புறவினது என முடிக்க. சொரிந்த மிச்சில் - சொரிந்து எஞ்சிய பொருள். மிச்சிலையும் சோற்றையுமுடைய ஊர் என முடிக்க. 183. வாயில் பெட்பினும் என்றதனா லுணர்த்தப்படும் பாங்கனிமித்தம் புலனெறிவழக்காற் கூறப்படும் பாங்கனிமித்தம்; இது உலகியலாற் கூறப்படும் பாங்கனிமித்தமாதலின் இது வேறாகும். ஆதலின் இது முற்கூறிய பாங்கனிமித்தத்தை விலக்கி வேறு கூறலின் எய்தியது விலக்கலாயிற்று என்றபடி. 184. பிறபாடை என்றது - ஆரியமுதலியவற்றை 185. இருவகைக் கைகோள் - களவும் கற்பும். 186. ஒழிந்த - காந்தருவம் ஒழிந்த. 187. முன்னின்ற - எண்வகை மணத்துள் முன்னின்ற. 188. அப்பால் - க்கிளைப்பால் 189. ஆண்டு - இளமையோள்வயிற் கைக்கிளைக்கண். 190. முதற் கந்தருவமென்றது - உள்ளதொடு இல்லதும் புணர்க்கும் புலனெறி வழக்காகிய கந்தருவத்தை. 191. பெறுதலேயன்றி யென்றானாம் என்பது. பெறுமென்றானாம் என்றிருத்தல் வேண்டும். 192. முழவு - முழா - ஒரு வாச்சியம். அரை - அடிமரம். பெண்ணை - பனை. மடல் இழைத்த - ஓலையிற்கட்டிய. சிறுகோற் குடம்பை - சிறு சுள்ளிகளா லாகிய கூடு. அகவல் - கூவி அழைத்தல். 193. கொன் - பெருமை. எம் இல் - எம் வீடு. ஏழில் - ஒரு மலை. பாடு - ஒலி ஊர் துஞ்சினும் யாம் பாடு கேட்டுத் துஞ்சலம் என்க. 194. பதம் - காலம். குறிபார்த்து - குறியை நோக்கி. பாடு - ஒலி. பைதல் - துன்பம். 195. கழுது - பேய். பானாட்கங்குல் - இடையாமம். உயவுதி - வருந்துதி. அன்றிலே நின்சேவலுங் குறி பொய்த்ததோ? சொல் என்க. 196. கையறல் - செயலறல் 197. பரத்தைமை - அயன்மை 198. அகன்றுமாறுதல் - அகன்றொழிதல். 199. சேட் கழிதல் - நீட்டித்தல் 200. பிழி - கள். காவலர் - இடையாமத்து ஊர்க் காவலர். இளையர் என்றது காவலரை. தோகை - வால். ஞாளி - நாய். அரவம் - ஒலி. வல்சி - உணவு. கழுது - பேய். புட்டில் - சதங்கை. பரி - வேகம். ஆதி - நாற்கதியுளொன்று. முட்டின்று - முட்டையுடையது. முட்டு - தடை. 201. எல்லி - இரா. 202. எழாஅல் - உதியற்க. திங்காள் எழாதாய்க்கு எயிறு உறாலியர் (எயிறு உறாதொழிக). கேள் - தலைவன். 203. கோடு - மரக்கொம்பு 204. இக்காந்தண் மென்முகைமேல். தொடுபொறிபுக்குச் செறிந்ததுபோல் இதோ தோன்றும். யாம் பண்டு அறிந்தது. அன்னதையே இம்முகை யுடைத்து வண்டு அன்று, என மாற்றிப் பொருள்கொள்க. தொடுபொறி என்றது மோதிரத்தை. 205. புகாஅ - உணவு 206. பகா - நீக்கி நிறுத்தாத - நீக்கப்படாத 207. விருந்தேற்று நீக்கிநிறுத்தல் - விருந்தாக ஏற்றுப் பின் நீக்குதல். நீக்கி நிறுத்தல் - நீக்கி நிறுத்தாத என்றுமிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. 208. ஞான்று - பொழுது. 209. ஒருதலை - நிச்சயம். 210. ஆடும் சிற்றில் சிதையா என்க. சிதையா - சிதைத்து. அடைச்சிய - கூந்தலில் அடைவித்த; அணிந்த. கோதை - மாலை. பரிந்து - அறுத்து. பட்டி - நெறி யின்றி வேண்டியவாறொழுகுபவன். இல்லிரே - விளி. தெருமரல் - கழற்சி. அலறி - கூப்பிட்டு. 211. கடல்வேட்டம் - மீன்பிடித்தல். நீவி - விடுத்து. எல் - பகல். அன்னைதங்கென்றாள் வாழி - இது தலைவி கூற்று; தோழி கூற்றுமாம். 212. மண்ணிய - நீராட; பகங்காய் - பசிய மாங்காய். 213. வேளாண்மை - உபகாரம். 214. நாள் - விடியல். கோள் - கொள்ளுதல். உணங்க - உலா. பறி - மீன்பறி. மறுக - கழிந்ததாக. பூட்டயர - பூட்டலைச்செய்ய. ஏஎய் - (பாகனை) ஏவி. கோல் - திரட்சி. தொடி திருத்தி - வளையலைத்திருத்தி. தான் என்றது - தலைவியை. கலிழ்ந்து - கண்ணீர் சொரிந்து. தங்காது - இங்கே தங்காது (தடைப்படாது). நொதுமலர் - அயலார் - பிறிதொன்றாதல் - தலைவி இறந்துபடல். இளையர் - எவலிளையர். புரவி - குதிரை. ஒல்லுதும் - பொருந்துதும். 215. விதந்தோதியது - இச்சூத்திரத்து இவ்வடியால் என்க. அவை என்றது ஓதலுந் தூதுமாகிய இரண்டையும். இதுவென்றது பகைவயிற்பிரிவை. 216. வேந்த ரேவலிற் பிரிவதெனவே வேந்தற்குற்றுழிப் பிரிவாயிற்று. 217. இப்பிரிவு இல்லையென்பாராதலிற் சிறுபான்மை உரித்தென இயைக்க. 218. பனியெதிர் பருவமு முரித்தென மொழிப அகம் 219. அளிது - இரங்கத்தக்கது. உழந்தன்று - வருந்தியது. இனி - இப்பொழுது சிறுசிறை - சிறியகரை. நெரிதர - நெரித்தலால். கைந்நில்லாது - (நாண்) என்பால் நில்லாது. 220. பொருந்தி - உடன்பட்டு. 221. வானின் - மழைபெய்தலால். சூள் - சத்தியம். 222. பொய்த்தல் - சூள்பொய்த்தல். வாய்மை - மெய்வாக்கு. திங்கள் - சந்திரன். 223. என்றி - என்று கூறுகின்றாய். நகை - விளையாட்டுமொழி. என்ஆகுவை - என்படுவாய். 224. குளவி - காட்டுமல்லிகை; மலைப்பச்சையுமாம். பொதும்பு - மரச்சோலை. இமிரும் - மொய்க்கும். 225. ஒறுப்ப - தமர் ஒறுப்ப. ஓவலர் - நீங்கலர். தேறலர் - தெளியலர். கெளவை - வருத்தம். யானையங்குருகு - ஒரு பறவை. யானைபோல் பிளிற்றொலி செய்வது. தோடு - கூட்டம். அட்ட - பகைவரைக் கொன்ற. மள்ளர் - வீரர். மரந்தை - ஒரு நகர். 226. புறத்தது - வேற்றுவரைவு 227. வாரி - கோதி. ஓரி - மயிர். வதுவை அயர்வாரைக் கண்டும் - நொதுமலர் வரைவுக்குடன்படுவரைக் கண்டு வைத்தும் என்றபடி. ஏழையை - அறியாமையையுடையை. நக்குவந்தீயாய் - சிரித்துவாராய். ஒரூம் - அகலும். வியம்கொள - காரியமென்றே கொள்ள. பூவல் - செம்மண். கைவிட்டிருக்கோ - கைவிட்டிருக்கவோ? இல் - குடிப்பிறப்பு. 228. தொகுத்தது - தொகுத்து என்றிருத்தல் வேண்டும். தொகுத்துக் கிழவோள் மேன என முடியும். 229. இடம் என்றது கரும நிகழ்ச்சியை 230. திரிந்தும் வரும் என்றிருத்தல் வேண்டும். 231. அது என்றது திரிந்து வருதலை. 232. இது நாணும் மடனுந் திரிந்துவருதலும் உள; அங்ஙனந் திரிதலும் வழுவமைதியைக் கொள்ளப்படும் என்பது கருத்து. 233. ஏமுறல் - மயங்கல். பித்தேறல். தேர் ஆகுபெயர்; பாகனை யுணர்த்தலின். 234. பேர் ஏமுற்றாய்போல - பெரிய பித்தேறினாய்போல. இவ்விரண்டு செய்யுளிலும் தலைவி நாணுமடனுந்தணந்து கூறியவாறுகாண்க. 235. மயக்கம் உணர்த்திற்று என்றது. தலைவி நாணும்மடனுந் தன்றன்மை யிற்றிரிதலை உணர்த்தின என்றபடி. போல்....... உணர்த்திற்று என்பதுபோல் வன உணர்த்தின என்று இருத்தல்வேண்டும். 236. இங்ஙனம் பொருள் கூறுபவர் இளம்பூரணர். அவர் காமத்திணையின் (108) என முதலாகவுள்ள மூன்று சூத்திரத்திற்கும் வேறு பொருள் கொள்வர். 237. புலவி - புலத்தல். 238. குறுதல் - கொய்தல். அல்கல் - தங்கல். அயர்தல் - செய்தல். பணிதல் - வழி படல். பெயர்புறத்து - செல்லும்திசையில். தகைஇய - தடுக்க. குவவு - குன்று. அடும்பு - ஓர் கொடி. அரிய - அரிபட. ஊர்பு - ஏறியும். இழிபு - இழிந்தும். தேர் இகந்துமாயும் என்க. 239. இகந்துமாயும் - கடந்துமறையும். என்றதனால் அவனயன்மை பெறப்படும் என்க. 240. அலர்சிலகொண்டு செப்புநர்ப்பெறின் நன்றுமன் என இயைக்க. படப்பை - கொல்லை. 241. செப்புநர்ப்பெறின் என்றாள்; நீ சென்று கூறு என்னுங் கருத்துடையளாய். இதனை முன்னிலைப் புறமொழி என்பர். கற்பிற்குப்போல இதற்குத் தூதுபோக்கும் வேறு வாயில் இல்லை; ஆதலால் களவு என்றபடி. இரண்டும் என்றது தன்வயி னுரிமையையும் அவன்வயின் பரத்தை மையையும். 242. குறைபடுதல் - நாணால் நா எழாமை. 243. இறை - கையிறை. வரை - எல்லை. கெளவை - அலர். ஒய்யும் - கொண்டு போய்க் கொடுக்கும். கரப்ப - மறைப்ப. 244. நத்துறந்தோர் - நம்மைத் துறந்தோர். உடுக்கை - உடை. 245. உள்ளல் - நினைத்தல். வான்தோய்வற்று - வானைத் தோய்ந்தாற் போன்ற பெருக்கத்தையுடைத்து. யாம் மரீஇயோர் - எம்மால் மருவப்பட்ட தலைவர். 246. யான்தர - யான்கூற. சென்றைக்க - கழிக. என்றி - என்றுகூறினாய். 247. கெளவை - பழிமொழி. எயக்கும் - மெலிவடையும். எள்ளற - இகழ்ச்சி யற. நார் - பட்டை. ஒசியல் - ஒசிந்த கொம்பு. 248. முருகன் - முருகக்கடவுள். 249. அணங்கு - தெய்வம். அணங்கிய - வருத்திய. செல்லல் - துன்பம். மறுவரல் - கழலல். படியோர் - எதிர்த்தோர் - பகைவர். நெடுவேள் - முருகன். போல - வழிபட. ஆற்றுப்படுத்த - வழிப்படுத்த. உரு - அச்சம். பார்வலொதுக்கின் - பார்வைக்கு ஒதுங்குதலோடு. ஒதுங்கிய பார்வையோடு எனினுமாம். எய்த்த - இளைத்த. உவந்தமை - நோய் தணிந்தமை. கண்டுநக்கனனல்லனோ என இயைக்க. 250. காட்சி விரும்பினளாயினும் - அவனைக் காண்டலை விரும்பினளாயினும். 251. பூவாப்பூ - பொற்பூ. கைப்பட்டு - தலைவன் கைப்பட்டு. இதனை - தலைவி தன்கைப்பட்டுக் கலங்கியதை. 252. அழுவம் - பரப்பு. காழ் - விதை. முளை அகைய - முளை தோன்ற. நுவ்வை - நுந்தங்கை. 253. இட்டுப்பிரிவு - இரட்டிதாகப்பிரிதல்; அணிமையாகப்பிரிதல். இதனைப் பின்னுள்ளோர் ஒருவழித் தணத்தல் என்ப. கலி. 53ஞ் செய்யுளுரை நோக்கியறிக. 254. பிரிதலருமையின் - பிரிதல்லாமையின். சொல்லாத பிரிதல் என்பது. சொல்லாது பிரிதல் என்று பாடமுள்ளது. சொல்லாது பிரிதல் என்றது. தலைவன் பொருள் முதலியவற்றிற் பிரியுங்கால் சொல்லியும் பிரிவன் சொல்லாதும் பிரிவன்; அவற்றுள் சொல்லாது பிரிதலை என்றபடி. இடுதல் - சொல்லாது விடல். 255-256. இரண்டையும் வரைவிடை வைத்துப் பிரிதல் என்று குறுந்தொகையுட் கூறப்பட்டுளது. 257. புலவிப்போலி என்றார்; ஊடலு முணர்த்தலுமன்றித் தோன்றும் புலவியாதலின். இச் சூத்திர அவதாரிகையுரை நோக்கி இதனையறிக. 258. தம்மை என்றது தோழியையு முளப்படுத்திப்போலும். அல்லது தன்னை என்றுமிருக்கலாம். 259. தாம் அறிந்து - தாமே அறிந்து. பிண்டம் வழுவ - கருப்பம் அழிந்து புறம் போந்து விழ. வெற்றிலைக் கொழுமுளை - இலையில்லாத கொழுத்த முளை. வேற்றலை எனவும் பாடம். ஆரும் - உண்ணும். ஏ - பெருக்கம். 260. படப்பை - கொல்லை. ஆன்று ஆர் தொடர்பு - அமைந்து நிறைந்த நட்பு. ஐய கொல் - செறிந்தன்றாகாதேயிருப்பது. ஐ - வியப்பின்கண் வந்தது. 261. கொழுதி - அலர்த்தி. வண்டல் அயரும் - விளையாட்டைச் செய்யும். படிஇயர் - துயில்க. 262. இது என்றது இச்செய்யுள் என்றபடி. இவை என்றிருத்தல் வேண்டும். முன்னிலைப்புறமொழி - முன்னிலையாக நிற்பப் படர்க்கையாக வைத்து (ப் பிறரைக் கூறுமாறுபோல)க் கூறல். 263. பண்டம் - பொருள்கள். நாவாய் - தோணி. முண்டகம் - முள்ளி தாழையுமாம். கண்டேன் என - கண்டேனாக. கண்டேன்றனைத் தெளிந்தேன் எனவும் பாடம். கண்டேனாக (இன்பந் தருவனென) உணர்ந்துநின்ற உணர்வு இப்பொழுது இலாதேன் அப்புணர்ச்சி துன்பந் தருமென்பது தெளிந்தேன் என்க. வேறு உரை கூறுவாருமுளர். 264. வலந்த - சுற்றிய. வள்ளி - கொடி. இன்னா இசைய பூசல் - புலி புலி என்னும் ஒலி. ஏகல்லடுக்கம் - பெருப்பமான கல்லையுடைய மலைப்பக்கம். சிலையுடை இடத்தர் - இடக்கையில் வில்லைத் தாங்கிய கானவர். போதரும் - செல்லும். உண்கட்பசலை மார்பினைக் காரணமாக உடைத்தென அறிவிப்பெங்கொல் என இயைக்க. 265. சிறைப்புறம் - மதிற்புறம். 266. சூள் - சத்தியம். ஒன்றும் - அவ்வொன்றும். அனைத்து - அத்தன்மையினது. 267. துறுகல் - உருண்டைக்கல். உகளும் - துள்ளி விளையாடும். தெளிவு - சூள் (சத்தியம்). 268. இதனால் - இவ்விதியால். 269. இது தெய்வம் வருத்துமென்று அஞ்சியது. 270. இது தந்தை யறிதற்கு அஞ்சியது. 271. இது தோழிக்கு உண்மைகூறற்கஞ்சியது. நோக்குதல் - பார்த்துத்திருத்தல். வரி - தொய்யில். இனையள் - இத்ததன்மையள்; என்றது களவொழுக்கத்தினள் என்றபடி சேண் சென்றாய் - நெடும் பொழுது நின்று வாங்கினாய். சாய் - தண்டோன்கோரை. கொழுதி - கிழித்து. அனைத்து - அவ்வளவு. நெறித்தல் - புறவிதழை ஒடித்தல். கழறுதல் - இடித்துக் கூறல். வரிதேற்றாய் - தொய்யில் எழுத அறியாய். இறை - முன்கை. தேற்றல் அரிது என்க எவள் - எக்காரியம். 272. கருவி - தொகுதி. பறைநிவந்தாங்கு - பறத்தலில் உயர்ந்தாற்போல. பசப்பு நுதலில் ஊர்தரும் (பரக்கும்) என இயைக்க. 273. வளி - காற்று. ஈய - வீச. உசாவாய் - (சூழ்ச்சி சொல்லும்) உசாத்துணையாகி. ஏதிலாட்டி - அயலிலாட்டி - அயலவள். 274. என் நெஞ்சு வருவதுகொல் வாராது அவணுறைவது கொல் என்க. கொள்ளியின் - கொள்ளியினால். புகுதலில்லாத மயில் என்க. இருவி - கதிர்கொய்தாள். 275. பல்லிச்சினை - பல்லிமுட்டை; இங்கே பூவை உணர்த்திற்று; ஆகுபெயர். அகலம் - மார்பு. ஆழியால் - ஊடற் கழியால். காணாமோ - காண மாட்டேமோ? காண்போம் என்றபடி. 276. புதுவது - புதியமகிழ்ச்சி. 277. தலைஇ - பெய்து. மடிதல் - துயிறல். விளிவிடம்பெறாது - உறங்குமிடம் பெறாது. வரியதள் - புலித்தோல். சேக்கையின் செறியும் என்க. ஞெமுங்க - அழுந்த. பல்லூழ் - பலமுறை. புறநிலை இனிதாகின்று என இயைக்க. புலம்பு - தனிமை. 278. வந்தமாறு - வந்தமையால். தோள்கள் நல்லவாயின என்க. 279. மறைஇ - மறைந்து. கடி - காவலையுடைய இவ்விடம். 280. பிறர் - என்பது பிற என்று இருத்தல் வேண்டும்; தலைவனைப் பெறுதலன்றி அவற்குரிய பொருளைப் பெறுதல் உதாரணச் செய்யுளாற் பெறப்படலின், இச் செய்யுளில் உந்தியொடுவந்த காந்தட் கிழங்கைப் பெற்று மலிந்தமை கூறலினாலே பிற என்றிருத்தல் வேண்டுமென்பது துணிபு. 281. சொல் அவிந்து - பேசுதல் ஒழிந்து. துஞ்சல் - துயிறல். 282. கொள்ளல் - ஏற்றுக்கொள்ளல். 283. வாரண வாசிப்பதம் பெயர்த்தல் என்றது, வாரணவாசியிலுள்ளார் பெறும் அருளுடையமையாகி பதத்தை நீ அவரிற் பெயர்த்து உன்மேலாக்கல் என்றபடி. 284. வாளீர் வடி - வாளாற் பிளந்த மா வடு. திதலை - தித்தி. பொறி - புள்ளி. கிளவி ஏமமாம் என்க. ஏமம் - பாதுகாப்பு. 285. மறை - களவுப் புணர்ச்சி. ஆராய்ச்சி - இவள் கலங்கற்குக் காரணம் யாதென்று பிறராலாராயப்படுதல். கூறுவேமோ விடுவேமோ எனத் தலைவி தன்னுள் ஆராய்தலுமாம். 286. எல - ஏடீ. சிரல் - சிச்சிலிப் பறவை. வாயுற்ற - வாய்போன்ற. அவல் - பள்ளம். மெல்ல என்றிசின் யான் என்க. 287. பொழுது - ஞாயிறு. எல்லின்று - விளக்கமின்று. கழுது - பேய். என் மலைந்தனன்கொல் - எதனைச் செய்ய மேற்கொண்டானோ? 288. எல - ஏடீ. இணை என்றது தனக்கு இணையாகிய மந்தியை. ஏகல் - பெருப்பமான கல். புலவுங்கொல் - புலப்பானோ (ஊடுவானோ). செலவு கடிந்தாள் என்றது. இற் செறிப்பை. 289. அறுவை - ஆடை. மடி; மடிப்பு. துணைஇ - துழாவி. கெளிறு - ஒரு மீன். மறவி - மறதி. செப்பாதோய் - இதுகாறும் சொல்லாதோய். 290. குண்டு - ஆழம். ஆரல் - ஒரு மீன். குருகே - என்னாயோ என்க. 291. கானல் - கடற்கரைச் சோலை. கழிக்கரையுமாம். கடிபவோ - கடிந்து நீக்குபவோ? 292. இரண்டும் - தன்வயினுரிமையும் அவன்மேற் பரத்தைமையும். 293. இத்துறைகெழுசிறுகுடி எனப் பிரிக்க. எற்றி - நினைந்து. துஞ்சாது உறைநரொடு உசாவா - துயிலின்றிஇருப்பவரை ஏனென்று வினாவாத. துயிற்கண் - துயிலுதலையே இயல்பாகவுடைய கண். 294. தழை - தழையுடை. நுசுப்பு - இடை. எவ்வம் - துன்பம். கவலை மாக்கட்டு - கவலையில்லாத மாக்களையுடையது; குறிப்பு மொழி. 295. உயிராக்காலத்து என்றதில் உயிராதாள் தோழி என்றபடி. 296. பேணுப - விரும்பியொழுகவேண்டியன. நாணுத்தக்கன்று - நாணத் தக்கது. யாவது - எத்தன்மையது. அழிதக்கன்று - வருந்தத்தக்கது. ஆனாது அலர்வதன்றுகொல் - நீங்காது அலர்வதுகொல் (-வெளிப்படுவதுகொல்). புலர்வது கொல் - இல்லையாய்விடுமோ. நற்றிணையில் தோழி கூற்றாகவுள்ளது. 297. வேண்டு - விரும்பிக்கேள். யாம் என்னை என்றும் - யாம் எனது தலைவ னென்பேம். பால - ஊழ். ஐங்குறுநூற்றில் தோழி கூற்றாகவுள்ளது. 298. ஆர்தல் - உண்ணல். இனக்கலை - கூட்டமான ஆண் குரங்குகள். தொடை - அம்பு. பொங்கி - மேலெழுந்து. வெதிர் - மூங்கில். அமை - கோல். தயங்க - அசைய. அடுக்கம் - மலைப் பக்கம். அன்றையன்ன - யாம் நட்புக்கொண்ட அந்நாட் போன்ற. புதுவோர்த்து - புதுவோரை யுடைத்து. 299. நாட்டம் - விசாரித்தல்; ஆராய்வு. 300. கதுப்பு - கூந்தல். கவினை - அழகுடையை. 301. துறை - நீர்த்துறை. அவலம் - துன்பம். பைஞ்சாய் - பசிய தண்டான்கோரை. சாய்ப்பாவை - கோரைப்புல்லைக் கிழித்துச் செய்த பாவை. வண்டல் - விளையாட்டு. சிறுமனை - மணலாற் கோலிய சிறுவீடு. கடல் சிதைத்தது என்று வேறு காரணங் கூறி மறைத்தேன். 302. பொறி - ஊழ் - தெய்வம். 303. அறல் - அறுதி (துண்டு). பெயல் - மேகம். பொன் அகை தகை வகிர் - பொன்னைக் கூறுபடுத்தின அழகிய வகிர் - (பிளந்ததுண்டு). போழ் - தாழம்பூவகிர். துவர் - இயல்பான சிவப்பு. ஐ - வியப்பு. வேய் - மூங்கில். அமன்றன்று - நெருங்கிற்று. சோர்பதன் - நெஞ்சழிந்த செவ்வி. புன்கண் நோக்கி - வருத்த முண்டாக நோக்கி. தொழலுந்தொழுதான் - தொழுதலுஞ் செய்தான். காழ் - குத்துக்கோல். ஏழை - அறியாமைக்குணம். 304. தலைக்கீடு - சாட்டு. 305. வெள்ளாங்குருகு - வெண்ணிறக்குருகு. பிள்ளை - குஞ்சு. 306. கையறல் - செயலறல். சினை - முட்டை. 307. தாங்கவும் - பொறுக்கவும். கெழுதகை - உரிமை; நட்பு. ஆற்றுப்படுத்த - வழிப்படுத்த. பதம் - செவ்வி. ஏமம் - காவல். புலி புலி என்று ஆரவாரித்தலின் ஏமப்பூசல் என்றார். பிறர் தங்களைக் காக்கும் பூசல் என்றபடி. பூசல் - ஆரவாரம். கண் அழுதன என இயைக்க. 308. மருந்துபிறிதென்றது - ஆற்றாமையைத் தணிக்கும் வேறு மருந்தை. தனது அருளுதலன்றி இவள் ஆற்றாமையைத் தணித்தற்கு வேறு மருந்தும் உளதென்றறியின் வரைவை நீட்டிப்பான் என்று அஞ்சுதல் என்பது இதன் கருத்து. 309. கவாஅன் - மலைப்பக்கம். துனி - வெறுப்பு. நல்கல் - அருளுதல். எவ்வம் - வருத்தம். கோல் - திரட்சி. பிரப்பு - பிரப்பரிசி. ஆர் அணங்கு - அரிய வருத்தம். அது செத்து - அதனை அறிந்து. ஓவம் - சித்திரம். பரைஇ - பரவி. ஆடணி அயர்ந்த பந்தர் - ஆடுதற்கேற்ற அழகுசெய்த பந்தர். வெண்போழ் - வெள்ளிய பனந்தோடு. பாணி - தாளம். நொவ்வல் - துன்பம். பிறிது - பிறிதுகாரணம். 310. முதலிய - முதலியன. 311. மைப்பட்டன்ன மாமுகம் - மைபட்டாற் போன்ற கரியமுகம். ஆற்ற - (கொம்பு) தாங்க. தப்பல் - தவற்றின்பயன். கோட்டொடு போகியாங்கு - கொம்பினிடத்துச் சென்றாற்போல. பயன் சென்றாற்போல என்க. தோள்பசந்தன என்க. 312. கோடு - மரக்கொம்பு. ஆற்ற - தாங்க. முசு - குரங்குளொருசாதி. 313. புள் - பறவைகள். 314. வெறித்தல் - வெருளல்; அஞ்சுதல். இயம்பல் - ஒலித்தல். 315. மணியரவம் - மணியோசை. கணி - வேங்கை. போந்தேன் பெயர்ந்தேன் என்க. 316. உறைத்தல் - துளித்தல். அறை - பாறை. கடிதும் - நீக்குதும். 317. சுமந்து பாய்ந்து ததும்பக் கவின்பெற்ற நாட்டையுடையோன் நயன் உடையன் என்பதனால் தோள் மறந்தன என்க. வாடல் - வாடுதல். 318. தலைஇய - பெய்துவிட்ட. அல்கு அணி - தங்கியோடும் அழகு. தாங்கவும் - அடக்கவும். தகைவரை - அடக்கமளவு. கலுழுதல் - அழுதல். எணிறுண்கென - நின் எயிற்றை முத்தங்கொள்வேன் என்று. உரைக்கல் உய்ந்தனன் - உரைத்தலிற் பிழைத்தேன். 319. காத்தல் - புறம்போகாவண்ணம் இற்செறித்தல். 320. அடும்பு - ஒரு கொடி. தொடைமாலை. ஓரை - விளையாட்டு. ஈர - ஈரம். பரிக்கும் - ஓடும். ஐது - வியத்தற்குரியது. கம்ம என்பது அக்காலத்து வழங்கியதோர் அசைநிலை யிடைச்சொற்போலும். இதற்குச் சாமிநாதையர். ஏகு - அசைநிலை. அம்ம - வியப்பிடைச் சொல் என்று கூறியுள்ளார். நற்றிணை யுரைகாரர் நற்றிணை 52ஆம் செய்யுளுரையில். ஐது, ஏகு என்று பிரித்து ஐது - மென்மையுடையது என்றும். ஏகு - நெஞ்சே நீயே ஏகுவாய் என்றும் முடித்துப் பொருள் கூறியுள்ளார். 240ஆஞ் செய்யுளுள்ளும் அவ்வாறு பொருள் கூறியுள்ளார். 321. உணங்கல் - உலரவைத்த மீன். அசைஇ - இருந்து. அளை - புற்று. கெண்டி - அகழ்ந்து. தாழைவீழ் கயிற்றூசல் - தாழையிலுந் தொடுத்த தூங்குங் கயிற்றூசல். வீழாகிய கயிறென்றல் சிறப்பின்று. அகம் 20ஆம் செய்யு ணோக்கியறிக. தாழைவீழ் - ஆலம்வீழ் போல நீண்டதன்று. கொண்டல் - மேல்காற்று. முனையின் - வெறப்பின். அல்கினம் - தங்கினேமாய். கெளவை - அலர். அணங்கு - பேய். கொடிதறி பெண்டிர் - கொடிதையே அறியும் பெண்டிர் என்க. 322. பெயரும் - செல்லும். என்ப - என்று சொல்வர். அன்னை - அலைக்கும் என்க. ஓரும் - அசைநிலை. இளையரும் மடவரும் எனவும் பாடம். 323. இலங்கின - விழுந்து முளைத்து விளங்கின. தலைமுடி சான்ற - தலைமயிரும் முடி கூடின. படாஅல் - படாதே - பொருந்தாதே. முதுபதி - பழையநகர். காப்பும் பூண்டிசின் - காவலும் பூண்டாய். கடை - வாயில். எனப்படர்தந்தோள் என இயைக்க. பிற்படு பூசல் - பிற்படச் சென்று மீட்கும் கரந்தையார்பூசல். தலைப்படுதல் - கூடுதல். காழ் - விதை - கொட்டை. 324. குறிபெயர்த்திடுதல் - முன் குறித்த குறியைநீக்கி வேறு குறிகூறல்; அது கூங்கணது ஊரெனக் கூறல். 325. கண்ணி - நெற்றியிலணிவது. தார் - மார்பிலணிவது (கழுத்துமாலை). தெரிந்து - ஆராய்ந்தெடுத்து. துணை - தலைவி. வாய்வது - வாய்ப்புடையது. வீழ்தல் - தாழ்தல். கலுழ்பில - கலங்காதனவாய். தேறி - தெளிந்து. தடக்குரல் - வளைந்த கதிர். பொறை - பாரம். கதிராகிய பாரத்தைக் கெடுத்த இருவி என்க. இருவி - கதிர் முறித்த தாள். பைதல் - துன்பம். 326. அகன்று உயர்ந்து தாழ்ந்தவற்றுள் என்றது நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று - நீரினுமாரளவின்றே... நாடனொடு நட்பே என்னுங் (3) குறுந்தொகைச் செய்யுட் கருத்தை நோக்கிய வாக்கியம். தாழ்ந்தவற்றின் என்றிருப்பது நலம். 327. மன்று - ஊர்ப்பொதுவிடம் (அம்பலம்). பாடு - ஒலி. மனை - மனையிலுள்ளார். மடிதல் - துயிறல். யாமங் கொளவரின் - இடையாமம் முன்வரின். கனைஇ - மிக்கு. உரைஇ - பரந்து புறத்தன்ன சிறுநெறி என்க. கல் - மலை. வார்பு - நிறைந்து. இட்டருங்கண்ண - ஒடுக்கமான சேறற்கரிய இடத்திலுள்ள. இயவு - வழி. மனை மடிந்தது என்றமையான் இடையாமமாயிற்று என்பது கருத்து. 328. குறை - (நின்னால்) இன்றியமையாத காரியம். ஏமம் - காவல் (அரண்). இரவரால் - இரவில்வாரற்க. 329. ஒலிஅவிந்து - ஊரோசை தணிந்து. யாமம் - இரவு. நள்ளென - நடுவாக. பாக்கம் - கடற்கரைப் பட்டினம். மன்றப்பெண்ணை - ஊர்ப் பொது விடத்தில் நிற்கும் பனை. குடம்பை - கூடு. செங்கோல் - சிவந்தநிறம்; செவ்விய கோற்றுண்டுகளுமாம். கொடுமுடி - வலித்துக் கட்டிய முடி. 330. அளிய - இரங்கத்தக்கன. இறைஉற - தங்கும்படி. நெறி - வழி. செலவு விரையும் எனவே மாலை வந்தது என்றபடி. 331. அலவ - நண்டே! இரப்பேம் நீ நடந்து வழியைச் சிதையாதி என இயைக்க. 332. முடம் - வளைவு. தகாது - (வருதல்) தகாது. நிறுத்து - நிறுத்துவாய். 333. நாளிபெயல் - செறிந்த மழை. புற்றம் - புற்று. சுடர - ஒளிவிட. குரும்பி - புற்றாஞ் சோறு. பெருங்கையேற்றை - பெரிய கையையுடைய ஆண் கரடி. வாங்கி - இடந்து. ஈருயிர்ப் பிணவு - சூற்பிணவு. அராவுமிழ்ந்த மணிவிளக்கில் ஈர்க்கும் என்க. வழங்கல் அரும் - செல்லற்கரிய. கவலை - கவர்வழி. எஃகு - வேல். படர் - துன்பம். 334. சேணோன் - மரஉச்சியிற்கட்டிய பரணிலிருப்பவன். ஞெகிழி - நெருப்புக்கொள்ளி. மாய்வது எவன் - இல்லையாதல் என்ன ஆச்சரியம். 335. மதன் - வலி. தாங்கி - பொறுத்து. கழாஅ - கழுவாத. மார்பு அணங்குறுநரை - மார் பால் வருத்தமுறுகின்றோரை. * களவின் எனவும் பாடம். 336. தோற்றப்பொலிவை மறைப்பளென்பதனால். அவள் எமஞ்சான்ற உவகை பெறப்படும் என்பது கருத்து. 337. இரண்டும் என்றது உம்மையும் உருபும் என்றபடி. 338. பிணி - நோய். பிணிநிறம் என்றதனால் பசலை என்பது பெறுதும். கணி - சோதிடஞ்செல்வோன். மணிநிறம் - நீல மணிபோலும் நிறம்; என்றதனால் இருளையுடைய என்பது பெறுதும். 339. பெயல் - மழை. கண் - இடம். எல்லை - ஞாயிறு. நோகு - (அதற்கு) நோவேன். 340. கொடுங்குரல் - வளைந்தகதிர். அஞ்சல்ஓம்பி - அஞ்சுதலைப் பாதுகாத்து. ஆர்பதம் - உணவு. பல்கோள் - பலகாய். 341. இறுவரை - தாழ்வரை - மலைப்பக்கம். உரும் - இடி. போலாது வளை நெகிழ்ந்த என்க. போல எனவும் பாடம். அது பொருத்தமின்று. 342. கன்று அமர்ந்து - கன்றுபோல விரும்பி. நாடனையாமுளேமாகும் வரைக்கும் பிரிந்துவாழ்தலை மேற்கொள்ளேம் என்க. 343. நாட்ட - நாட்டிலுள்ள. உவக்காண் - உங்கேகாண். கிளி அன்பின என்க. 344. வைத்தல் - நீக்கிவைத்தல். 345. மேக்குஎழும் - மேலெழுந்த. தகாஅன்போல - (இவளுக்குரியனாகும்) தகுதியில்லான்போல. தான் என்றது சுட்டுச்சியை. தீது - தெய்வத்தாலாயது என்னுந் தீயவார்த்தை. தந்தையாகிய கடுவனும் என இயைக்க. (அக்கடுவன்) தன்கண்கண்டது பொய்க்குவதன்று என்க. 346. யாருமில்லை - (புணர்ந்தஞான்று) சான்றாவர் வேறொருவருமில்லை. கள்வன் தானே - கள்வனாகிய தலைவன்தானொருவனே இருந்தனன். கால - கால்களையுடைய. குருகும் உண்டு - நாரையும் இருந்தது. 347. சுடர் - விளக்கு. சாய்தல் - ஒளிமழுங்கல். உயிர்பகுத்தன்ன - ஓருயிரை இரண்டும் பிற் பகுத்துவைத்தாற்போன்ற (நட்பின் மாட்சி). அது யானே கண்டிசின் - அதனை யானே அறிந்துள்ளேன். அழுங்கல் ஆன்றிசின் - வருந்தாது அமைவாயாக. 348. புரைத்தோ - உயர்ச்சியுடையதோ? உழத்தல் - வருந்தல். பெரும்பிறிது - இறப்பு. அலர் - பழிமொழி. யாமத்தானும் - யாமத்தின்கண்ணும். நெஞ்சத்து வருதல் - கனாவில் வருதல். 349. வதி - தங்கியிருக்கும். துவலை அரும்பும் - துளிப்பால் அரும்பும். பாடொல்லா - படுதலைப் பொருந்தா - துயிலா. 350. பனிப்ப - (இடியால்) நடுங்க; குளிர எனினுமாம். புயல் (-மேகம்) தொடங்கிற்று. அதனால் எங்கண் ஆகம் நனைக்கும் என்க. பொய்யா வானக் கனைவரல் அழிதுளி தலைஇப் புயல் தொடங்கின்று - பொய்யாத (தவறாத) மழையின் விரைந்துவருதலையுடைய மிக்க துளியைப் பொருந்தி மேகம் பெய்தலைத் தொடங்கியது. 351. புதல் - பற்றை. அவரைப் பன்மலர் என்க. பூனையின் பல் வடிவினவாகிய முல்லைப்பூ என்க. குன்று மறையும் என முடிக்க. 352. மெய்யும்வெய்தாகின்றது - உடம்பும் வெப்பமுடைத்தாகின்றது. நந்துவள் - நோய் நீங்கப்பெறுவள். நிரையநெஞ்சம் - நரகம் போலு மனம். தீண்டிய - தீண்டும்படி. 353. கவின்அவர்போல் மறந்தன்றுகொல் என இயைக்க. மாமை - மாந்தளிர் போலும் நிறம். 354. மாலை - மாலையே! தீப்பனிப்பு - தீயின் அசைவு. செக்கர் - செவ்வானம். நாட்டினின்றும் வருதி என இயைக்க. சொல்லாய் - சொல்லுகின்றிலை. 355. அல்கல் - இராக்காலம். மரீஇ - பொருந்தி. வாய்த்தகை - மெய்போலுந் தன்மை யையுடைய. அமளி - படுக்கை. அளியேன் - அளிக்கத்தக்கேன். 356. அமை - மூங்கில். குயின்ற - செய்யப்பட்ட. கோடை - மேல்காற்று. பாடுஇன் - ஓசை இனிதாகிய. தோடு - திரட்சி. இகுத்தல் - தாழ்த்தல். மந்தி நல்அவை - மந்தியாகிய நல்ல திரள்; மருளல் - ஆச்சரியப்படல். இயலி - உலாவி. விறலி - விறல்பட ஆடுபவள். நெகிழ்தோளேன் யானொருத்தியுமேயாதற்குக் காரணமென்? என இயைக்க. 357. பூவாகிய குருகு. குருகுபோலும் பூவெனினுமாம். நூழை - நுழையுஞ் சிறுவாயில் (பொட்டு என்பது வழக்கு). புழை - கொல்லைப்புற வாயில். 358. நகை - சிரிப்பு; சிரிப்பான நிகழ்ச்சி என்றபடி. எறிந்து - கொன்று. பறழ் - குட்டி. இளையர் எய்து தன்மடக்கிளையோடு - இளையர் போலெய்திய தன்இளங்கிளையோடு. தரீஇக் கிளையோடு பிணவல் சொலிய (நீங்க) என இயைக்க. எறிந்து கானொழிந்து ஆட்குறித்து நின்ற பன்றி என முடிக்க. இளைய ரெய்தன்மடக்கி என்னும் பாடத்திற்கு இளையராகிய வேட்டுவர். நெருங்குதலை விலக்கி என்று பொருள்கொள்க. புழை - வாயில்; முழைஞ்சு. முடுக்கர் - முடக்குவழி. மடை - மடுத்தல். தன்படை செலச் செல்லாது நின்ற எம் பெருவிறல் என இயையும். பன்றியைக் கானவன் எம்பெருவிறல் போலும் இது என்று வியந்து எய்யாது பெயரும் குன்ற நாடு என முடியும். பெருவிறல் என்றது தம் தலைவனைப் போலும். அரில் - சிறுதூறு. துடக்கல் - பற்றி யிழுத்தல். பரீஇ - அற்று. இமில் - முரிப்பு. 359. கொடியவும் - கொடியிலுள்ளனவும். கோட்டவும் - கொம்பிலுள்ளன வுமாக. அழல் - நெருப்பு. நெருப்பாற் பண்ணிய பொற்பூ என்க. பூவாப்பூ - பொற்பூ கோதை - மாலை. யாப்பு - கட்டு. அரி - அழகு. அடியுறை அருளாமை - நின்னடியில் யானுறைதற்கு அருளாமை. நரந்தம் - நாரத்தம்பூ. மகரவாய் - மகரத்தின் அங்காந்த வாயாகப் பண்ணின தலைக்கோலம். நுங்கிய - விழுங்கிய. சிகழிகை - முடி. ஒரு காழ் - ஒருவடம் (ஒருமாலை). நறாஅ - நறுவம்பூ. செறாஅ - செறாத; அருளையுடைய. என் விரற்போதால் தன்கண் மறையவைத்து என்க. பறாஅக்குருகு - கொல்லன் உலை மூக்கு. 360. அருங்கடி நீ வாமை - அரிய மனம் அவனைவிட்டு நீங்காமல். 361. மறை - களவுப்புணர்ச்சி. காத்தல் - மறைத்தல். 362. எரி - நெருப்பு. அகைந்தன்ன - கப்புவிட்டாற்போன்ற. என்மோ - என்று சொல். மோ - முன்னிலையசை. துணைசெத்து - பெடை என்று கருதி. பயிறரும் - அழைக்கும். வலம்புரியைத் துணைசெத்து அழைக்கும் என்க. 363. பையென - மெல்லவாக. நெறி இன்னும் தூரா என இயைக்க. 364. அவர்கண்ணும் - அவரிடத்தும். நன்கிலை - நன்மையில்லை. தக்கதோ - (வரைவு நீட்டிப்பது) தக்கதோ? நின்னல்லதில்லை - நின்னையல்லதிலள். 365. தோழிக்கு என்பது சூத்திரச்சொல். 366. மள்ளர் - வீரர். விழவு - சேரிவிழா. தழீஇய - தழுவி ஆடுகின்ற. தக்கோனை - தகுதியையுடைய தலைவனை. கோடு - சங்கு. ஈர்தல் - அறுத்துச் செய்தல். ஆடுகளமகன் - ஆடுகின்ற களத்துக்குரிய மகன். 367. நீவி - நீங்கி. கடை - வாயில். மன்றம் - பொதுவிடம். செல் - வருவாயாக. அயம் - நீர். என்றனம்வரற்கு - என்றுசொல்லிமீண்டு வரற்கு. வரற்குச் சென்மோ என இயைக்க. 368. பாடுஇல் - துயிலின்றி. கவிழும் - கலங்கி அழும். முனாஅது - பழையது. வடுகர் - வடுகநாட்டார். முனையது - இடத்திலுள்ளது. கட்டி - சேரனுடைய சேனாபதி. உம்பர் - அப்பாலுள்ள. மொழிபெயர்தேம் - வேற்றுமொழிநாடு. 369. ஈர்ம்புறம் - குளிர்ந்தபுறம். குரும்பிவல்சி - குரும்பியுணவு. குரும்பி - புற்றாஞ்சோறு. தோல்துதிய - தோலாகிய உறையிலுள்ள. கேழல் - பன்றி. அமலல் - நெருங்கல். புலர - ஈரம்புலர. பூசல் - ஒலி. விடரகம் - பிளப்பிடம். மானதர் - விலங்குகள் செல்லும் வழி. மான் - மானுமாம். ஒதுங்கி - நடந்து. குரல் - மயிர். விலங்கிய சுரம் என்க. அறிதலும் அறிதிரோ - (சென்று) அறிதலும் செய்துள்ளீரோ. புலாவ எனவும் பாடம். 370. கவினிய - அழகுசெய்த. நலம்புனைய - நலம்செய்ய. மறை - களவு; நலம் புனையக் களவினாற் சின்னாள் இனிது போயின என இயைக்க. ஏயினார் - எதிர்ப்பட்டார். இனி எப்படியாமோ? என்பது எஞ்சிநின்றது. கவினிய என்றதனால் இற்செறிப்பு நிகழும் என்றபடி. 371. கடன்மேம் - கடலிற்செல்லும். அசைஇ - இருந்து. பதம் - காலம். அரில்வலை - முறுகுண்டு கிடந்த வலை.. பின்னிக்கிடந்த வலை எனினுமாம். உமணர் - உப்பு அமைப்போர். கொள்ளைசாற்றி - விலைகூறி. கணநிரைகிளர்க்கும் - கூட்டமாகிய எருத்து நிரையை எழுப்புகின்ற (செலுத்துகின்ற). ஓசையைக் குருகு அஞ்சும் என்க. உறைவின் - உறைதலையுடைய. 372. விழுந்த - பெய்த. மாரி - மழை. கூதளம் - கூதாளி. ஓர்க்கும் - செவி கொடுத்துக் கேட்கும். கண்டும் - கண்டுவைத்தும். கண்டு வைத்துஞ் செய்யாயாதலிற் கொடியை என்க. 373. வரி - இரேகை. தேமலுமாம். நிறன் - மேனிநிறம். செய்தன்று - செய்தது. தளி - தாற்றிலுள்ள நீர். இலையிலே கலாவும் என்க. கலாவல் - கலந்து தங்கல். விழுமம் - துன்பம். 374. துறுகல் - உருண்டைக்கல். மாணை - ஒரு கொடி. துஞ்சல் - துயிறல். இவரும் - படரும்.நீயலன் - பிரியேன். வஞ்சினம் - உறுதிமொழி. நோயோ - வருத்த மாகுமோ? ஆகாது. 375. பெட்டவாயில் - தலைவியாற் பேணப்பட்ட வாயில். பெற்று என்றது - அவ்வாயிலைத் தனக்கு வாயிலாகப் பெற்று என்றபடி. ஈண்டு வாயில் என்றது - வாயிலாக அமைந்த தோழியை. பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுப்பினும் கள. 10ஆம் சூத்திர அடி. 376. மதியுடம்படுத்தலாவது:- கவர்ந்து நின்ற தோழியுணர்வை ஒருப்படுத்தல் (துணிவுபெற வைத்தல்) 377. ஓதி - கூந்தல் 378. நீண்டும் பிறழ்ந்தும் நோக்குங்கண் என்க. வெள்ளைநோக்கு - காதலில்லாத நோக்கு - பணைத்தல் - பருத்தல். 379. பண்ணை - விளையாட்டு. முற்றில் - சுளகு. முனிதல் - வெறுத்தல். 380. ஒறுத்து - தண்டித்து; வருத்தி. ஆசாரம் - ஒழுக்கம். உவப்பு - விருப்பு. ஒறுத்த உள்ளம் - குறைத்த உள்ளம்; வெறுத்த உள்ளம் எனினுமாம். 381. எதிர்ப்பாட்டுப் புணர்ச்சி என்றது இயற்கைப் புணர்ச்சியை. 382. காம்பு இவர் - மூங்கிலையொத்த. மதர் - மதர்ப்பு. வீங்குதல் - பூரித்தல். புகற்சியென - பொலிவென. ஆங்கில் - அவ்விடத்தில். ஒழுகும் - செல்லும். புகற்சியெனச் சிறந்து என மாற்றுக. நன்றி - நன்மை. 383. சேயரி - செவ்வரி. யாங்காயினள் - எத்தன்மையளாயினள். 384. நைவுற்று - மெலிந்து. நைவுற்றுப் பண்டையளல்லள் என இயைக்க. படி - தன்மை. 385. மான்வழி - (வேட்டையாடி மானைத் துரத்தி) மானின்பின். நரந்தங்கண்ணி - நாரத்தம்பூமாலை. கரந்த - மறைந்த. கருதியது - நினைந்தது. மது - கள். கண்ணினால் சொல்லுமாடும் என இயைக்க. 386. வறிது - உயிரில்லாதது போலாகின்றது. இருவர் உயிரும் ஒன்றுபோன் மன்னிய என மாற்றுக. 387. பிறையாகிய ஈது தோன்றிற்று என இயைக்க. பூண் - அணி. 388. ஏனல் - தினை. திண்டி - ஓரூர். பண்டு உதிரமுடைத்தன்று இன்று உடைத்து என்பது கருத்து. இவ்வாறு நடுங்கநாடாள் என்பர் களவிய லுரையாசிரியர். 389. கவின்-தோற்றம். தெய்வம் - தெய்வமணம். ஐம்பால் - கூந்தல். இது - இவ்வேறுபாடு. 390. பையுள்மாலை - பிரிந்தார்க்குத் துயர்தருமாலை. பழுமரம் - பழுத்தமரம்; ஆல மரமுமாம். படரிய - படரும்படி. நொவ்வுப் பறைவாவல் - மென்மையாகப் பறத்தலையுடைய வௌவால். நொப்பறைவாவல் (குறுந்தொகை 172) என்பதும் இப்பொருட்டு. சிறகேய்க்கும் மடிசெவி என்க. சிறகு மடிந்திருத்தல் போல மடிந்திருக்கும் செவி. எவ்வம் - துன்பம். ஆளி - சிங்கம். வெரீஇ - அஞ்சி. சந்து - சந்தனமரம். வான்கேழ் உருவம் - வெண்ணிறமான வடிவம். உயக்கொண்டு - பிழைப்பக் கொண்டு. ஒற்றல் - மிதித்தல். கோவாஆரம் - கோக்காத ஆரம் - சந்தனமரம். வீழ்ந்தென - வீழ்ந்ததாக. பேஎ - நுரை. தெளிர்ப்ப - ஒலிப்ப. அலைவாய் - திருச்சீரலைவாய் (செந்தூர்த்தலம்). புறவில் கலித்த மஞ்ஞை என ஓட்டுக. புறவு - முல்லைநிலம் (- காடு). காரிகை - அழகு. 391. புரவலன் - அரசன். பணிமொழி - தாழ்வைப் புலப்படுத்துமொழி. கடீஇயர் - கடியும்படி (துரத்தும்படி). மதனில - வலியில்லாதன - எடுக்கத்தக்கன. தட்டை - மூங்கிலை நறுக்கிப் பிளந்து ஒன்றிற்றட்டுவது. உண்கென - உண்பேனென. அகப்பாட்டில் உண்ணல் - முத்தமிடல் என்ற கருத்தில் வேறிடத்தும் வருகின்றது. சுவையினனாக - அகத் திட்டானாக. இகுபெயல் - பெய்தமழை. ஞெகிழ்பு - உள்ஞெகிழ்ந்து. பிணி - பிணிப்பு. சாயிறை - வளைந்தசந்து. கிழமை - உரிமை. ஏசற்று - வருத்தமுற்று. என்குறைக்கு - என்னாற்பெறுங் காரியத்திற்கு. புறனிலை - பின்னிலை. அண்கணாளனை - கண் அண்ணாளனை. கண்ணுக்குமுன் வருவோனை. 392. எழாஅய் - கிளிகளைத் துரத்தற்கு எழுந்தாயல்லை. சேயரி - செவ்வரி. பொன்பிதிர் - இரும்பினின்றும் பறக்கும் பொறி. பிதிரின் உகும் என இயையும் காட்சி - கூடு. கிளி மயில்கள் அறிதலைத் தாமறியாவாய்க் கவரும் என்க. 393. இடப்பொருள் ஏழாம் வேற்றுமைக்குரியது. எனவே ஆனுருபு கண்ணுருபின் பொருளில் வந்ததென்றபடி. உருபுமயக்கம். 394. வருகின்ற - இனிக் கூறுகின்ற. 395. நல்கூர்ந்தார் - வறியோர். நயந்து - விரும்பி. வான்றோய்குடி - உயர்ந்தகுடி. பூங்கண்ணியீர் - பூமாலையைத் தரித்தீர்; பூங்கண்ணியை ஏந்திவந்தீர் எனினுமாம். 396. மறுவொடுபட்டான செய்வனபேணார் என இயைக்க. மறு - வடு. மூதான் - முதிய ஆன். பழி நில்லாதோ என ஓட்டுக. 397. ஒத்த - இயைந்த. பாற்படற்பாலை - முறைப்படற்றன்மையை. அடுக்கம் - மலைப்பக்கம். குடிமை சான்றோர் - குடியிலமைந்தோர். இன்னர் என்னாது - இத்தன்மையர் என்று கருதாது; உயர்பிழிவு கருதாது என்றபடி. பின்னிலை - இரந்து பின்னிற்றல். 398. சிறுகுடிப் பரதவர் மகள் என இயையும். அறுத்த உணக்கல் வேண்டி - அறுத்த தசைகளை உலரவைத்தல் வேண்டி. நலன் - இன்பம். எம்மனோரில் - எம்மையொத்த பரதவர் குலத்தில். செம்மல் - தலைமையுடையோர். 399. கரந்த - மறைத்த. 400. கோடு ஈர்வளை - சங்கை அரிந்து செய்த வளை. மடவரலை வேண்டுதி யாயின் வரைந்தனை கொண்மோ என இயைக்க. 401. அருமை - கிட்டுதற்கருமை. 402. கூறுதலும் - கூறி அகற்றலும் என்றிருத்தல் வேண்டும். இளம்பூரணருரை நோக்கியறிக. 403. இருவருமுள்வழி - தோழியுந்தலைவியுந் தலைப்பெய்தவிடத்து. 404. நெருநல் - நேற்றைத்தினம். எற்குறையுறுதிராயின் - என்னைக் குறையுறுதல் செய்திராயின். எம்பதத்து - எம்மளவில். எளியளல்லள் - அரியளென்றபடி. கட்காண்கடவுள் - வெளிப்பட்ட கடவுள். ஆய்கோள் - நுணுகிய காய்க்குலை. அமலை - நெருக்கம். மகள் கடவுளல்லளோ என இயைக்க. 405. கண்ணி - மாலை விழைதல் - விரும்பல். விழையவுங்கூடுமோ - விரும்பத் தகுந்தவளோ? அன்று என்றபடி. அரியள் என்றாள் என்பது இதன் கருத்து. 406. தன்னையுந் தானே நாணுபவள். என்னையு நாணப்படுவாள் என்க. சாயல் - மென்மை. வேய் - மூங்கில். ஏய் - ஒத்த. 407. நாள் - வைகறை. நாளில்சொரியும் என்க. கோள்வேங்கை - புலி. என்னைமார் - என்னையன்மார். அவர் நிற்றலின் நாளைவா என்றாள் என்பது கருத்து. 408. ஒருகூற்றாக - இரண்டுஞ் சேர்ந்து ஒருகூற்றாக. 409. அதர் - வழி. கிளிகடிகுவார் அதருள்ளி நிற்பரோ; நில்லார் என்பது கருத்து. 410. தோளையுடைய மகளிர் என இயைக்க. மகளிரேம் - மகளிராகிய யாம். யாம் குறவர் மகளிரேம் என வருவிக்க. ஒழுகவந்திலது எனவே ஒழுகாமல் வந்தது என அசதியாடினாள் என்க. 411. தகரம் - மணமுடைய மரச்சாதியுளொன்று. வகுளம் - கடம்பு. புதல் - பற்றை. இனைய - வருந்த. தங்கை வல்லளோ - வல்லளல்லள் என்றபடி. பேதைமைத்தொழில்செய்யும் வேட்டுவர் தங்கை யாதலின் அவளும் பேதைமையுடையவள் என்றபடி. 412. புன்றலை - மெல்லியதலை. கல்லா - மரம் ஏறுந் தொழிலை முற்றக் கல்லாத. பறழ - குட்டி. பறழ்போகா பொருந்தி வௌவலின் கொடிச்சி அழுதகண் பெயலுறு நீலம்போன்றன; விரல் காந்தட்கொழுமுகை போன்றது என இயைக்க. இது இளையள் விளைவிலள் என்றது. 413. சிறுமுதுக்குறைவியாயினள் - சிறுபருவத்தே பேரறிவுற்றாள். எனக்குக் கரத்தலான் கிளத்தலும் அஞ்சுவல் என இயைக்க. 414. யா - ஒருமரம். மரஞ்சுட்ட இயலில் - மரங்களைச் சுட்ட வழியில். சுட்ட - அகரந்தொக்கது. முதல - அடியையுடையன. பால்வார்பு - பால்நிரம்பி. கரிக்குறடு இறைஞ்சிய - கொல்லர் முதலியோர் கரியை எடுக்கின்ற குறடுபோல் வளைந்த. கோள் - குலை. குரல் - கதிர். எஃகு - வேல். 415. உழலும் - சூழ்ந்துதிரியும். ஏனல் - தினை. 416. கிடப்பினென் - வளர்த்தினேனாய். கிடப்பி என்னும் பாடத்திற்கு வளர்த்தி விட்டு எனப் பொருள்கொள்க. அல்கலும் - இராவருதலும். என்மகள் என்றது பாவையை. 417. அரியை என்றது அரிதாய் வருதலுடைய என்றபடி. 418. வலத்தல் - சுட்டுதல். பாடு - பெருமை. ஒழுகை - சகடம். பகடு - எருமைக்கடா. பாடு - கூறு. கொள்ளைசாற்றி - கூடுதல் சாற்றி என்பது பழையவுரை; விலைகூறி எனினுமாம். மண்ணா - கழுவாத. முத்தம் - முத்தம்போல. வண்ணம் - அழகு. செலின் - கெடுமோ என இயைக்க. 419. வண்ணம் - நிறம். அழகு. 420. புதுநலன் - தனது புதிய பெண்மை நலன். புலம்பு - தனிமை. மார் - அசை. கானல் - மணல்பரந்த கடற்கரை உவமை எதிர் நிரனிறை. உதுகாண் - அதோபார். உங்கே காண் எனினுமாம். பெண்ணை - பனை. 421. அரவு - பாம்பு. பொறி - அடையாளம் - (தோற்றம்) எனலாம். அணங்கு - வருத்தம் (என்றது. பகைவரை வருத்துதலை). இவை வில்லுக்கடை; நோக்கி மறப்பித்தாய் என இயையும். 422. கோல் - தாற்றுக்கோல். அடுப்பல் - சேர்த்துவேன். வழை - கரபுன்னை. குழவி - மறி (குட்டி). உழையிற்பிரியில் - அவளிடத்தினின்றும் நீ பிரியில். கவின்பிரியும் என இயைக்க. 423. குறைந்து - குறையுற்று. 424. இளையர் - இளைய மகளிர். ஆடும் - விளையாடும். 425. மூன்று - இயற்கைப்புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கற் கூட்டமும். 426. தழையல்குல் - தழையணிந்த அல்குல். தழை - பூவாலும் தளிராலும் கட்டிய உடை. வினை - வேட்டைத்தொழில். மா - கெடுத்த ஒரு விலங்கு. 427. எய்தவரினும் - சமீபமாக வரினும். இறந்தான் - கடந்தான் - போயினான். உய்யலன்கொல் - உயிர்பிழையான்கொல். 428. போகியோனாகிய எந்தை எனக் கூட்டுக. ஆக - பற்றுக்கோடு. எந்தை - எமது தலைவன். ஏறு - இடி. வேற்றுப்புலங்களை யுடைய நாட்டில் பெய்த மழைநீர் கலங்கிவருதல்போல என் நெஞ்சு கலங்கும் என்க. 429. துணை - பெண். அலவன் - ஞெண்டு. அலவனை நோக்கி என்னையு நோக்கி என்க. உணர்வொழிய - அறிவுகெட. உணர்வை இங்கே ஒழித்து எனினுமாம். சேர்ப்பன்வண்ணம் என இயைக்க. வண்ணம் - இயல்பு. 430. ஓரை - விளையாட்டு. ஆறுபடின் - (ஏற்காது) தாமதித்தல் படின். எவனோ? - எத்தன்மையதாகுமோ? வீறு - பெருமை. நெடுமொழி - புகழ். அஞ்சுதும் என்று ஆறுபடின் எவனோ? என இயைக்க. ஆறுபடின் - மாறுபடின் என்றிருக்கலாம் போலும். 431. சேதா - செவ்விய பசு; கபிலையுமாம். தாதுஉக - உடம்பில் தாது உகுதலால். (கன்று அதனைத் தாயென்றறியமாட்டாது மயங்கும் என்க). கேள் என்றது தலைவனை. 432. வாடை உளரும் குன்றநாடன் என இயைக்க. உழக்கும் ஆதலால் நேரு மிடமிது என்க. 433. அவ்வளை - அழகிய சங்கு. அரக்கு - செவ்வரக்கு. ஈர்த்தல் - தீற்றுதல்; இழுத்தல். தும்பி - வண்டு. பசுங்கேழ்ப்பொன்னுரைகல் - பசிய நிறத்தையுடைய பொன்னையுரைத்த கட்டளைக்கல்; தும்பிநிறம் பெறும் என இயைக்க. அசைஇ - தங்கி. சொல் இடம் பெறான் - தன்குறைகூறற்கு. இடம்பெறான். தண்டாக்காட்சி - நீங்காத தோற்றப்பொலிவு. சுழல்தொடி வலித்த - கழன்றதொடியை மீண்டுசெறித்த. நினைப்பாகின்றே எனவும் பாடம். 434. மாயோன் - கண்ணன். வாலியோன் - பலதேவன். நந்நயந்து - நம்மை விரும்பி. நாடி - ஆராய்ந்து. நட்டுநாடார் - நண்புகொண்டு பின் நாடார். ஒட்டியோர் - நண்புகொண்டோர். 435. பாடும்பொழுது மறவல் என இயைக்க. மறவல் - அப்பொழுது மறவாதே; என்றது நீ மறக்கின் மடலேறுவர் என்றபடி. 436. சுணங்கு - தேமல். மெலிவின் என்? - மெலிதற்குக் காரணமென்? கண்கண்ணி- குறுங்கண்ணி; அண்கண்ணி என்றுமிருக்கலாம். உண்கண்ணி - மையுண்ட கண்ணையுடையாள். உடன்றுவாடாள் - மாறுபட்டுத் துன்புறாள் (ஏற்கும்). 437. குரம்பை - சிறுகுடில். உணரா - கருதாத. உறையுள் - உறையுமிடம். வழி நாள் - பின்னாள் (அடுத்தநாள்). கம்மென - விரைய. எல்லை - பகல். கழிப்பி - கழித்து. எல் - இரவு. 438. புலால்படும் புள் என மாற்றுக. புக்கமானோக்கியிடம் தாழ்பொழில் என முடிக்க. தடம்புலாம் தாழை - பெரிய புல்லாகிய தாழை. 439. இவர் பரி நெடுந்தேர் - ஏறும் குதிரைபூண்ட - நெடிய தேர். கவர் பரி எனவும் பாடம். கவர்தல் - விரும்பல். பெயர்பட - பெயர்தல் பட. இளையர் - ஏவலிளையர். பாராட்டிய - பாராட்டும்படி. முழவுமுதல் - முழவு போன்ற வடி. மர அரை - அரைமரம் - அடி மரம். வம்மதி - வருவாயாக. மதி - முன்னிலையசை. நம் - நம்மை. அல்லல் அரும்படர் - அல்லலாகிய அரிய துன்பம். சிறிது காண்கம் - சிறிது காண்போம். 440. குறியாள் கூறல் - தலைவன் கூறுவனவற்றைக் கருதாதவள் போலப் பிறிது கூறல். இது முதலியவற்றை இளையனார் களவியல் 12ஆஞ் சூத்திர உரை நோக்கியறிக. குறியாமை - கருதாமை. 441. நிறைத்திங்கள் - பூரணசந்திரன். மறைக்கப்படாதேனுக்கு மறைத்துக் கொண்டு என இயைக்க; ஆதலால் இல்லையென்க. இது என்னை மறைத்த லெவனாகியர் என்றது. 442. மன்ஏர் - நிலைபெற்ற அழகு. சாயலவருள் - மென்மையையுடைய ஆயத்தாருள். நின்குறை இன்னார்கண் என்பது அறியேன்; ஆகையால் நின்குறை யார் கண்ணது என இயைக்க இது அறியாள் போல். 443. எவ்வம் - துன்பம். என் தோழி என்னையு மறைத்தாள் (அங்ஙன மறைத்தது) யான் பிறர் முன் நின்னைப் பழிகூறல் நாணி என இயைக்க. 444. விருந்தினர் ஆதலின் - புதியீராதலின். கூறுவது - கூறுவதற்கு. ஊறு - இடையூறு. அறைய எஞ்சாது - சொல்லமுடியாது. எண்ணிலர் - அளவிலர். இவள் தன்னைமார் எண்ணிலர்; கொடியர்; எண்ணியது முடிப்பர்; ஆதலால் அஞ்சுவல் என இயைத்து முடிக்க. 445. அலவன் - நண்டு. ஆட்டலு மாட்டாள் - ஆட்டலுஞ் செய்யாள். சிந்தியா நின்றாட்கு - யாதோ ஒன்றைச் சிந்திக்கின்றாளுக்கு. 446. வேங்கைதாய் - வேங்கைப்பூப் பரந்து. பரத்தலால் புலி என்று பிடி வெரூஉம் என்க. கண்ணோட்டம் - இரக்கம்; தண்ணளி செய்தன்று - செய்தது. வேங்கை தாய் என்றதனால் பகற்குறி யாயிற்று. 447. மாயவன் - கண்ணன். தம்முன் - பலதேவன். இவன்நிறம் - வெண்ணிறம். கடலும் கானலும் கண்ணன்போலவும், மணல் பல தேவன்போலவும் விளங்கியவென்க. இது இடங் குறித்தது. 448. சேய்த்துமன்று - தூரத்ததுமன்று. துன்னல்போகின்று - அடைதல் நீங்கியது (அடைதல் இல்லை). கூழை - கூந்தல். கொணர்கம் சேறும் - கொண்டு வருவேமாய்ச் செல்வேம். 449. செங்களம்பட - போர்க்களம் இரத்தத்தால் சிவந்த களமாகும்படி. தேய்த்த - அழித்த. அம்பினையும் யானையையும் கொடியையும் உடைய. சேய் - முருகவேள். குருதிப்பூ - குருதிபோலும் சிவந்தபூ. கழல்தொடி - உழலஇட்ட வீரவளை. அங்கே தலைவனை எதிர்ப்படுவாய் என்பது குறிப்பச்சம். அது தான் கூறாளாதலின் குறிப்பெச்சம் என்பர் பேராசிரியர். (தொல். செய். 206 பேராசிரியர்) இது தலைமகளை இடத்துய்த்து நீங்கியது. 450. கவாஅன் - மலைப்பக்கம். சுடர் - விளக்கு. சிறுபுறம் - பிடர். 451. அதன்கண் உதவல் என்றது நீரோடுபோயவளை மீட்டு உதவியதை. தலைவியுந் தலைவனும் உடன் ஆடல் கற்பின் கண்ணல்லது களவின்கண் இல்லை; ஆதலின் ஆடல் என்றது உதவியதை என்றபடி. 452. செறுவார் - பகைவர். தெறுவர - (யான்) வருந்தவும். ஈங்கு - இவ்விடத்து. வருபவோ - அறிவுடையோர் வருவாரோ? செறுவார்க்கு உவகையாக வருபவோ? என்பதனால் இரவில்வரின் உனக்கு ஏதம் வரும் என்றபடி. 453. நாகு - இளமை. முளை - மூங்கின் முளை. உயங்கி - வருந்தி அஃகியோன் - குறைவுற்றான். 454. புலம்பின்று - தனித்தது; பொலிவழிந்தது. 455. ஏனம் - பன்றி. இடத்தல் - கொம்பாற் குத்திக் கிளப்பல். எல் - இரா. கொண்டு கைகாய்த்தும் என்க. கனல் - அக்கினி. பசப்புக்கெட வருவான்கொல் என இயையும். 456. கழிநீந்தி - கழியைக் கடந்து. குறி - குறியில். 457. வேண்டு - விரும்பிக்கேள். படப்பை - கொல்லை. கயம் - குளம். கூதளம் - கூதாளி. என்னது - யாதேனும் ஊட்டியன்ன - அரக்கை யூட்டினாற்போன்ற செயலை. அசோகு முதல் - அசோகினடி. அதன்றலை - அப்பொழுது. பொழுதே - காலத்தே. சுடர்ந்திலங்கு - விட்டுவிளங்கும். தலைஇய - பெய்த. கன்று - யானைக்கன்று. காலொய்யும் - காலை இழுக்கும். யானை நீத்தம் துழவும் என இயைக்க. விளி - ஒலி. பாந்தட்படாஅர் - பாம்புச்செடி. 458. வெண்குவடு - வெள்ளிய உப்புக்குவியல். அருஞ்சிறைத்தாய் - அரிய சிறகாற் கடந்துசென்று. இறைகொண்டன - தங்கின. எம்முறைவினூர்க்கு - யாமுறைதலையுடைய எமதூர்க்கண். ஊர்க்கண் தங்கின் எவனோ என இயைக்க. 459. நுடங்கும் ஆம்பற்றழை - அசையும் ஆம்பற்பூவாலாயதழை. ஆரம் - சந்தனம். மகளிவள் அணிவள் என ஒருசொல் வருவிக்க. ஆய்ந்த - ஆராய்ந்துகொண்ட பிணையல் - மாலை. 460. அடற்கானல் - மீன் கொலையையுடைய கானல். தாழ்ந்து - தழைத்து. ஆற்ற - மிக மடல் - பூவிதழ். நெடும்பெண்ணைத்து - நெடிய பனையை யுமுடைத்து. முன்றில் - எம்மில்லத்தின்முன். முன்றில் மொய்த்து தாழ்ந்து பெண்ணைத்து என முடிக்க. 461. தடைஇய - பருத்த. கடவுண் முதுமரம் - தெய்வமிருக்கு முதிய மரம். முது மரம் - ஆலமரமுமாம். தெண்கண் - தெளிந்த கண். வாய்ப்பறை அசாவும் - வாயாகிய பறையி னோசையாலே பிறரை வருத்தும். வலிமுந்து - வலிமிக்க. கூகை. இயல்புவிளி, மையூன் - ஆட்டிறைச்சி. வரல்நசைஇ - வரலை விரும்பி. 462. மறைந்தன்று - மறைந்தது. பட்டன்று - உண்டாயது. வரைப்பு - வீடு. கெடுத்துப்படு - இழந்துபட்ட. கலம் - அணி. வறுந்தலை - சிறியதலை. முயங்கி மென்மெல எனவும் பாடம். 463. முத்தம் - முத்துப்போலும் பூ. தத்தும் - வீசும். தயங்கல் - துளங்கல். அருளீயாய் - அருளினாலே நல்காய் மார்பு நல்காய் என இயைக்க. 464. பிணர் - சருச்சரை. தடவுமுதல் - வளைந்த அடி. நன்மானுழையின் வேறு படத்தோன்றி - நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றல்போல வேறாகத் தோன்றி. சேறியாயின் அறிந்தனை சென்மே என இயைக்க. 465. கொழுந்துணர் - கொழுவியகுலை. வீழ்ந்தன தேன்இறாலொடு சிதறும் --வீழ்ந்தனவாய்த் தேனிறாலொடு சிதறும். என்றது தேனிறாலையும் வீழ்த்திக் கொண்டு வீழ்ந்து சிதறும் என்றபடி. இறால் கீறும் எனவும் பாடம். 466. எவ்வம் - துயரம். மால் - இருண்மயக்கம். வலவன் - பாகன். பவத்திரி - ஓரூர். ஓதம் - நீர்ப்பெருக்கு. மான்றின்று - மயங்கிற்று. சேப்பின் - தங்கின். மா - குதிரைகள். ஆர்குவ - உண்பன. வடவர் - வடதேயத்தார். வட்டம் - சந்தனக்கல். குடபுலவுறுப்பு - சந்தனக் கட்டை. கூட்டுபுநிகழ்த்திய - சேர்த்து அரைத்த. கூருளி - கூரிய உளி போன்ற ஆயுதம்; இது மீன் எறிவது. உறைவினூர்க்குச் சேப்பினெவனோ என இயைக்க. உறைவினூர் - உறைதலையுடைய ஊர். நொடுத்தல் - விற்றல். வெண்ணெல் மிதவை என்க. 467. தனக்கும் என்பது தலைவனைக் குறித்து நின்றது. 468. எயிறு கோட்டின் இறுக என இயைக்க. கல்லுறுகோடு - மலையைக் குத்தின கோடு. மண்டை - ஒருவகை மண்பாத்திரம். புலவாகி - வெறுப்பைத் தருவதாகி. இறீஇயர் - இறுக. 469. திணை - தினைக்கதிர். மருள் - ஒத்த. ஊதை - குளிர்காற்று போலத் தூற்றும் என்க. இன்னாசெயினும் - நீ துன்பஞ் செயினும். நின்வரைப் பினள் - நின் எல்லையைக் கடவாள். நின்னையன்றி விழுமம் களைஞரிலள் என்க. விழுமம் - துன்பம். 470. நன்று - நன்மை; உதவி. புரி - விருப்பம். புலவி - புலத்தல். நின் அலது இலள் - நின்னையன்றி வேறு பற்றுக்கோடு இலள். 471. எறிந்து - (மரமுதலியவற்றை) வெட்டி. கேண்மை நெஞ்சத்துக் கொண்டு நீ மறவல் என்க. 472. அளிய - இரங்கத்தக்கன. இருவி - கதிர் கொய்ததாள். கிளிபேரன்பின என இயைக்க. 473. சிறை - மதில்; வேலியுமாம். 474. பிணங்கு - ஒன்றோடொன்று மாறுபடுகின்ற. அரில் - பற்றை. ஊண் உணங்கு ஆயம் - ஊணால் வருந்துகின்ற பசுநிலை. பைப்பய - மெல்ல மெல்ல. இவளவலம் என்பாம் ஆகுவதன்று - இவள் துன்பம் என்னால் பொறுக்கப்படுவதன்று (என்னாலே தாங்கப்படுவதன்று). உடலி - மாறுபட்டு. ஏறு - இடியேறு. திரிதரல் - மேகத்தில் எங்குமோடி முழங்கல். 475. கெளவை - அலர். பைதல் - பசுமை. பசலைபாய - பசப்பூர. இகல் - பகை. ஒன்றுந்தோன்றா - சிறிதுந்தோன்றா, மழை மறைந்தன - மேகத்தில் மறைந்தன. 476. மாசு - புழுதி. உழந்த - பெயலை ஏற்றுக் கழுவுண்ட.. பிணர் - சருச்சரை. துறுகல் - உருண்டைக்கல்; பாறைக்கல் என்றல் நலம். பைதல் -பசுமை. சேக்கும் - தங்கிக்கிடக்கும். 477. கேழல் - பன்றி. கரிப்புனம் - கரிதலையுடைய புனம். புதைத்து - புழுதியிற் புதைத்து. தெளிகொடுத்தான் - சூளுற்றான். நெஞ்சூன்றுகோலாகச் சூள்கொடுத்தான் என்க. 478. வெய்யை - விருப்பமுடையை. மா - காவன்மரமாகிய மாமரம். ஒன்றுமொழி - வஞ்சினம். கோசர் - ஒருவகைவீரர். 479. எய்யாயினும் - அறியாயினும். கால் - கால்வாய். இருவி - கதிர்முரித்த தாள். பரி - வருந்திய. தொடலைநுடங்க - மாலைதூங்க. கிள்ளைத் தெள்விளி - கிள்ளையையோட்டும் தெளிந்த ஒலி. 480. கடைஇ - கடவி - செலுத்தி (புகுத்தி) 481. பேதுற்றனை - வருந்தினை. அமிழ்தம் - உப்பு. பெயல் - மழை. உருகி அல்குதல் அஞ்சுவல் - நீ உள்ளமுருகியொழுகுவதற்கு அஞ்சுவேன். தம்மோன் - தமது தலைவன். ஏற்றி - நினைந்து. நயம் - அன்பு. தாங்கல் செல்லாது - அடக்கமுடியாது. குன்று கலுழும் என்க. 482. அலர் ஆர்ப்பினும் பெரிதென ஆழல் (அழல்) தோழிவாழி எனக் கூட்டுக. எழுவர் - ஏழரசர். புல்லிவேங்கடத்தும்பர் என இயைக்க. புல்லி - ஓருபகாரி (புறம் - 385). அறையிறந்து பாறையைக் கடந்து. மன்னனாகிய காரி ஓரியைக் கொன்று. சேரலர்க் கீந்த கொல்லியிற்பாவை என்க. தெய்வம் ஆக்கிய (புணர்த்த) பாவை எனவுங் கூட்டுக. புணர்த்த - எழுதிய. நலன் உள்ளாராகலரிது என முடிக்க. 483. அழியல் - வருந்தற்க. ஆகலின் வேட்ட என ஒட்டுக. இசை - புகழ். கடப்பாட்டாளன் - ஒப்புரவாளன். நின் பசப்பு தங்கதற்குரியதன்று என முடிக்க. 484. ஐவனம் - மலைநெல். மராம் - கடம்பு. பாசுஅடை - பசிய இலை. ஏமாப்பு - இறுமாப்பு - களிப்பு. 485. பொன்னுடைப்புதல்வர் - பொன்னணிகளையுடைய புதல்வர். பறையின் கண்ணிடத்தெழுதியகுருவி கோலானே அடிக்கப்படுதல் போல. மாக்கோல்கொண்டு அலைப்பப்படுகவென இயைக்க. படீஇயர் - வியங்கோள். வெளியனாகிய தித்தனின் வரிசையாக ஏற்றிய விளக்கைப் போல என்க. முரசின்முன்கொளுத்திய விளக்கைப் போல வந்தபொழுது எனக் கூட்டுக. முரசுமுதற் கொளீஇய என்பது முதலிய மூன்றடிக்கும் நற்றிணையுரைகாரர் முரசுமுதற் கொளீஇய எனப் பாடங்கொண்டு வேறு பொருள் கூறுவர். ஆயின் அது நேர்பொருளன்று. 486. புறக்கிடை (புறக்கிடல்) - புறங்காட்டிப்போதல். இனி புறத்தே கிடப்பது (முதுகு) எனினுமாம். இது புறக்குடை எனப் பெருங் கதையுள் வருகின்றது. பொற்புனை பாவை புறக்குடை நீவி (மகத. 14-44). 487. ஓரை - விளையாட்டு. உந்தி - தள்ளி. சுமந்து உந்தி வருநீர் என்க. அன்னைக்குச் சொல்லுநர்ப்பெறின் ஆடுகம் என இயைக்க. விடுநள்கொல் - விடுவாளோ? எல் - ஒளி. உரறும் - முழங்கும். கொடி நுடங்கு இலங்க மின்னி - கொடி நுடங்கல்போல் விளங்கமின்னி. 488. மறுகுபு - கழன்று. புகலும் - விரும்பும். நெஞ்சநோயின் றாக முயங்குகம் என இயைக்க. நோயின்று நோயில்லாதபடி. செயிர்ப்பம் - கோபிப்பம்; பகைப்பம். நாம் தலைவன் மார்பை இறுகப்புல்லி முயங்குவேம். 489. கழுது - பேய். கால்கிளர - இயங்காநிற்ப. மடிந்தன்று - துயின்றது. குறிஞ்சி - ஓர் பண். களிற்றோடு பொருத வேங்கை (குழுமும்) முழங்கும் மன் என்க. தில்ல - அசைநிலை. பெயல் கால் மயங்கிய - மழை பெய்தல் மயங்கிய தேர்ந்து உழல - காதிற் கேட்டு உழல. மணியைக் கக்கி உழல எனினுமாம். சிவந்து - கோபித்து. 490. கொடுவரி - வளைந்தவரி. வேங்கையாற் கோட்பட்டுப் பிழைத்து என மாற்றுக. கோட்பட்டு - பற்றப்பட்டு. இரீஇ - பின் வாங்கி. வேழம் கோட்பட்டுப் பிழைத்து இரீஇ அஞ்சி ஒதுங்கும் அதர் எனவும். கண்துஞ்சா எனவும் இயைக்க. வெரீஇ எனவும் பாடம். 491. குறி - குறிப்பு. 492. கானம் - காடு. மானதர் - விலங்குகள் செல்லும் வழி. ஆனதர் எனப் பிரித்தலுமாம். அஞ்சுதகவுடைய - அஞ்சுந் தகுதியுடையன. இர - இரவு. முழவு - தண்ணுமை. பிரசம் - தேன். இமிரும் - ஒலிக்கும். மன்றல் - மணம். இன்றுதலையாக - இன்று முதலாக. ஏமுறு - மயங்குகின்ற. பெயருங்காலை - எய்தியபின்றை நின்கோட்டை ஊதல் வேண்டும் என இயைக்க. பயிர்குறி - அழைக்குங் குறிப்பு. 493. கோடு - கொம்பு. ஒருவாய்ச்சியம். 494. அல்கி - தங்கி. தொடலை - மாலை. தழூஉவணிஅயர்ந்தும் - கைகோத்தாடியும். அலர்ந்தன்று - அலருண்டாயிற்று. துத்தி - படப்பொறி. தித்தி எனின் தேமல் என்று பொருள். துயல்வு - அசைதல். கோடு - பக்கம். அசைத்த - கட்டிய. உழை - அணிமை. ஓம்பலைத் தானே தந்தனன் என இயைக்க. 495. கணமுகை - திரண்டமுகை. காந்தள் கணமுகை கவின என்க. மணமுகை - (அதன்) மணத்தையுடைய முகை. புனங்களும் காவல் ஒழிந்தன என்றது. தினை விளைந்தமையால் காவல் ஒழிந்தன என்றபடி. இனி வரவரிது என்றபடி. 496. அறை - பாறை. ஒலிக்கும் எனினுமாம். சிலம்பு - மலை. அன்னை - தலைவி. குன்றே நீர் வாழிய என்க. நீர் - அருவி. மறையற - மறைதலற. 497. சாந்தம் - சந்தனமரம். சாந்தஇதணம் - சந்தனமரத்தாற் செய்த பரண். சாந்தமெறிந்த விதண்மிசை எனவும் பாடம். எறிந்த - வெட்டிச்செய்த. இமிழ - ஆயோவென்றியம்புதலால். ஆர்த்துஎழா - ஆர்த்துப்போகா. 498. பல்லோர் துஞ்சும் - பலருந் துயிலும். கதவுமுயறல் - கதவைத் திறக்க முயலும் ஒலி. ஓரி - தலைக்கொண்டை. அறனில்யாய் முயங்கும் என்க. 499. வினை - நல்வின. பனைவிளைவு - பனையென்னுமளவு போன்ற அளவினையுடைய இன்பவிளைவு. அதற்கு இடையூறாகத் தினை விளைய என்க. தீத்தீண்டுகையார் - வேங்கையார். 500. பாதுகா - பாதுகாப்பாய். அற - மிக. புதர் - பற்றை. மான் - மானே! கா வலி - காத்தலை தினை. 501. கண்டல் - தாழை. முண்டகம் - முள்ளி. ஏர் - எழுந்து. செறித்தலின் - இற்செறித்தலான். நாம் பெயர்வதை உரைமின் என இயைக்க. 502. இருவகையிடம் - பகற்குறி. இரவுக்குறி. இருவகைக்காலம் - பகல். இரா. 503. புன்னைகாத்தும் - புன்னைமரத்தின் கீழிருந்து காத்தும். ஒப்பல் - துரத்தல். விளையாட அலராகின்று - விளையாட அதனால் அலர் உண்டாகின்றது. ஓவாது - நீங்காது (இடைவிடாது) 504. இன்னா அதர் - துன்பத்தை விளைக்கும் வழி. இது ஆற்றின்னாமை கூறி விலக்கியது. என்ஆவாள் - எப்பெற்றியாவாள். என்னும் - என்று தடுமாறாநிற்கும். 505. அறை - பாறை. பெறுதி; ஆதலின் வாரலை என இயைக்க. 506. எஞ்சிய - கரைமேலொழிந்த. விடுவாய் - அகன்றவாய். முத்தம் விளக்கா அகற்றும் என்க. பாத்து - பகுத்து. 507. வேரல் - சிறுமூங்கில். வேர்க்கோள் பலவு - வேரிற் காய்களையுடைய பலாமரம். 508. கோடுஈர்வளை - சங்கையரிந்துசெய்தவளை. பாடு - துயில். கவிழ்ந்து - கலங்கி (-அழுது) பனி - துளி. ஆனா -நீங்கா. கண்கள் பனி ஆனா என இயைக்க. 509. வருடை - மலையாடு. பொய்த்தல் வல்லை என்க. அல்லது செயல் - பொய்யல்லாதவற்றைச் செய்தல். வல்லாய் - மாட்டாய். 510. கண்டல் - தாழை. உட்பட - புதைய. தூங்கி - மோதப்பட்டு. ஆவித்தல் - கோட்டாவிகொள்ளல். தெளிவு - சூள்; சத்தியம்; தெளிவித்தலுமாம். 511. மடமகளாகிய கொடிச்சியை (இனிப்) பெறற்கரிது என்க. ஒப்பலர் - குறவர் ஒப்பவிடமாட்டார். இது ஒப்பலள் என்றாதல், ஒப்பலம் என்றாதல் இருந்திருத்தல் வேண்டும். 512. ஈடில் - தகுதியில்லாத. புரிந்தது - விரும்பியது. விரும்பியது பொன்னாகும் என்க. கேண்மை - நட்பு. என்னாம்கொல் - என்னாய் விளையுங்கொல்லே. என்னே - இரக்கப்பொருட்டு. 513. மெய்ந்நீர்மை - மெய்யின்றன்மை. வெற்பன்கொண்டது யாய் அறியாள் தெய்வம் வருத்திற்றென்று வேலற்றரீஇ ஆட்டுக் குட்டியை வெட்டி இரத்தத்தைப் பலியாகத் தூவி அலமரும் என்க. 514. ஓதம் - நீர்ப்பெருக்கு. நினையும்நீர்மையில்லா ஒழிவு தகுமோ? என இயைக்க. ஒழிதல் - தவிர்ந்திருத்தல். 515. மூத்தோர் - முதியோர் (கிழவர்) புணரி - திரை. சில்செவித்தாகிய - சிலர் அறிந்ததாகிய (அம்பலமாகிய). வருமுலை வருத்தா - வளருமுலையை யுடையவளை வருத்தி. மார்பின் வருத்தா வருந்தும் என இயைக்க. 516. கோள் - காய். ஊழுறுதீங்கனி - ஊழ்த்து வீழ்ந்த தீங்கனி. ஊழ்படு - முறைமைப்பட்ட (சேர்ந்த.) ஏறல்செல்லாது - ஏறமாட்டாது. குறியாஇன்பம் - நினையாதுவருமின்பம். குறித்த இன்பம் - நினைத்துப்பெறும் இன்பம். வெறுத்த - செறிந்த. சோர்பதன் - சோர்வடைந்தசமயம். ஒற்றி - அறிந்து. ஊர்தல் - நிறைதல். வளர்தல். 517. கடவ - செலுத்த. இனைப்ப - வருத்த. யாங்கு - எவ்விடம். 518. இறத்தல் - பிறரின் ஒவ்வாது இறத்தல் என்பர் நச்சினார்க்கினியர். இறத்தல் - மேற்படல். 519. காரிகை - அழகு; பெண்டன்மையுமாம். நின்னைப்புணர்தலினால் அழகு தோற்றாளை என்க. அணிநலம் - அழகின்நலம். திருநலம் - திருவின் நலம்போலும் நலம். புகர் - குற்றம். நச்சினார்க்கினியர் கருத்து இவை. 520. இறத்தல் - மேற்படல். 521. கிழமை - உரிமை. உரைக்கோ - உரைப்பேனோ? இது வரைவு கடாவலோ என்று தலைவியைக் கேட்டல். 522. கடவுள் நெற்றிய - தெய்வத்தை மேற்பக்கத்துடைய. தட - பெருமை. பாக்கம் - கடற்கரைப்பட்டினம். தமர் - சுற்றம். யாப்பு - இயைபு; தொடர்பு. கிழமை வேண்டுதி எனின் ஆக என்க. இச்செய்யுளில் யாதோ பிழையுளது. இது இன்னநூல் என்று தெரியவில்லை. 523. நிலவுபோல மணலால் கழி விளங்குகிறது என்க. கானல் - கடற்கரைச் சோலை. மணந்தன்று - சேர்ந்திருந்தது. பசப்பு அணிந்தது என்க. 524. உரும் - இடி. உரறு - முழங்கும். கருவி - தொகுதி. பெயல் - மழை. ஆன் று - நிறைந்து. அவிந்த - தணிந்த. இமைப்ப - ஒளிசெய்ய. மிடை - பரண். இவ்வாறு கலியுரையில் கூறப்பட்டுள்ளது. நனவின் வாயே போல் - நனவிற்கண்டது போல. மருட்டல் - மயக்கல். சுடர் - விளக்கு. பனிக்கும் - நடுங்குவாள். நெஞ்சு அழிந்து - அஞ்சி. அரணம்சேரும் - பாதுகாவலான இடத்தை அடைவாள். அதன்றலை - அதன்மேலும். தொடர் - சங்கிலி; கட்டு. நாய் தொடர்விட்டு என்றது காவலின் பொருட்டு நாயை இரவிற் கட்டிவிடாது ஒழித்துவிடும் வழக்கினை. இனி நாய் தொடர்தலைவிட்டு என என்பாருமுளர். பொருத்தம் நோக்கிக்கொள்க. பிற்கருத்திற்கு நாய் தொடாவிட்டு என்று பாடம். 525. மிடை - பரண். 526. இஃது ஐயுற்றுக் கண்சிவந்தமைக்குக் காரணங்கேட்ட தாய்க்குத் தோழி கூறியது. சேந்தன - சிவந்தன. சேயரி - செவ்வரி. 527. தீவிய - இனிய. யாங்கு அறிகோ - எப்படி அறிவேன். ஓ - அசை. அலர் - கெளவை (-பழிமொழி) பகல் - ஞாயிறு. சுரமுள்ளல் என்றது பொருட்குப் பிரியக் கருதலை. 528. ஞாண் - கயிறு. போத்தந்த - கொண்டுவந்த. மிகத்தந்த எனினுமாம். கவரும் - (புட்கள்) கவரும். வண்ணம் - நிறம்; அழகு. 529. அறிவர் - கட்டுங் கழங்கும் இட்டுரைப்போரும் வெறியாடுவோரும். 530. கழங்கே - இது விளி. அணங்கியோன் - நங்கானங் கிழவோன். வேளல்லன் இது மெய்யே என்க. அணங்கல் - வருத்தல். 531. அனை - தாயே! கண்புலம்பியநோயை. வெறியெனக் கூறும் அதற்கு மனங்கொள்ளுகின்றாய். அவள் நோய் தலைவனைக் காணாமையாலே கண்துயிலாமையுற்று வருந்திய நோயேயன்றி முருகணங்கன்று; ஆதலால் வெறியாடலாற் பயனில்லை என்றாள் தோழி என்க. 532. நெடுந்தகையின் குன்றம்பாடிற் பயன்செய்யுமன்றிப் பாடானாயின் வேலற்கு வெறியாடலால் பயன் ஏன்? என்பது கருத்து. 533. விரைஇ - விரவி. விரவிக் கமழும் என்க. விரைஇப் புனைந்த எனினுமாம். அணங்கியோன் மார்பன் என்க. 534. அடையிறந்து - இலையைக் கடந்து. உரு - நிறம். அருவி இன்னியம் - அருவி யோசையாகிய இனிய வாய்ச்சியம். அண்ணாந்து - தலைநிமிர்ந்து. முருகே - முருகக்கடவுளே. நீ மன்றமடவை - நீ அறுதியாக மடமையுடையை. 535. அன்னை தந்தது ஆகுவது அறிவென் - தாய் வேலனை வெறியாடத் தந்ததற்கு ஆகுங்காரணத்தை அறிவேன். மொழியுமாயின் - (வேலன்) சொல்லுமாயின். 536. கண்டல் - தாழை; ஒர மரமுமாம். படப்பை - கொல்லை. முண்டகம் - முள்ளி. குறியிறைக் குரம்பை - குறுகிய கூரையையுடைய சிறுகுடில். வரல் ஆனாது - வருதல் நிறுத்தப்படுவதன்று. எறிந்தென - (வலையைக்) கிழித்ததாக. கருங்கியநாட்பின் - குருங்கிய நரம்புகளைக்கொண்டு. முடி - வலையை முடிகின்ற. கிழித்தென முடி என இயைக்க. கால் - காற்று. பற்றி முன்னிய சிறாஅர்ப்பாற் பட்டனள் என்க. படுவள் என்பது பட்டனள் எனத் துணிவுபற்றி இறந்த காலமாயிற்று. வேற்றுவரைவிற் படுத்திற் படுவள் என எச்சச்சொல் வருவிக்க. 537. நீதியோனாகிய நாடன் இன்று யாண்டையனோ? என இயைக்க. காழ்க் கொளும் அளவை - முதிரும்பருவத்தில். கிழங்கொடு தூமணிபெறும் என்பது நாட்டை விசேடித்து நின்றது. 538. ஆடுதல் - அசைதல். அடுக்கம் - தாழ்வரை. கலுழ்தல் - அழுதல். 539. துயர் இன்னும் ஆனாது என இயைக்க. 540. பிரிந்தோர்ப்புணர்ப்பவர் - பிரிந்தோரைக் கூட்டிவைப்பவர். கொல், ஓ - அசைகள். வெண்டலை - நரைத்ததலை. சிதவல் - துகில்; பழந்துணி. அவை - நம்மைச்சார்ந்த குழுவிலுள்ளார். மாக்கள் - தலைவன் மணம்பேசவிட்டோர். கையருந் தலையரும் சிதவலரு மாகிய மாக்கள் என இயைக்க. 541. ஆடும் - இடமாடும். செற்றும் - செறியும் (-நெருங்கும்). களிறுகோட் பிழைத்த - களிற்றைக் கொள்ளுதலிற் பிழைத்த. கதம் - கோபம். அன்னாய் என்றது தலைவியை. குழுமம் - முழங்கும். 542. தீக்குறி - தீநிமித்தம். நற்குறி - நன்னிமித்தம். குழுமும் - முழங்கும். கடிதின் வரைய வருவர் போலும். 543. ஏனையோர் என்றது தந்தை தன்னையரை. 544. கோடாது - மனங் கோடாது. இச்செய்யுட் பொருள் முன்னுரைக்கப் பட்டது. 545. சான்றோர் - மணம்பேசும் சான்றோர். குன்றம் கொண்டு - குன்றை விலையாகப் பெற்று. கழுமலம் - சீகாழி. செம்பியன் - சோழன். உறந்தை - உறையூர். வஞ்சி - கருவூர். 546. என்னை - என் தலைவன். சாரல் - சாரலிடத்திலுள்ளன. 547. இதுவு முன்வந்தது. இதண் - பரண். உதண் - மொட்டம்பு. 548. வில்லார் - வில்வீரர். நல்லார் - பெண்கள். இருவிழவினும் எல்லா மாந்தரும் திரள்வராதலின். அவ்விரண்டினுங் கண்டறியோ மென்றாள். உவர்க்கம் - கடற்கரை. வேலாழி - கடல். 549. சிறுவெண்காக்கை அம்பியினகமாகிய மனையிலீனும் என்க நல்கின் ஆரும் என இயைக்க. அம்பி - தோணி. 550. ஒளித்தசெய்தி - மறைத்து வைத்திருந்த களவெழுக்கம். நன்றுபுரிகொள்கையின் - நமர் நன்மைசெய்யுங் கொள்கையினால். ஊர் ஒன்றாகின்று என்க. கூட்டினும் என்றது கூடினும் என எதுகை நோக்கி நின்றது. கூடு மயங்கி யிருத்தல்போல மயங்கி என்றபடி. கூட்டின்பின்னல் மயக்கம்பற்றிக் கூறினாரோ? உள்ளிடம் இருளா யிருத்தல்பற்றிக் கூறினாரோ? என்பது ஆராயத்தக்கது. உள்ளிருட்சி பற்றிக் கூறினாரென்று கோடல் பொருத்தமாகக் காணப்படுகின்றது. என்னை? மின்மினியை யாதல் மணிகளை யாதல் இருளோட்டக் குரீஇ வைத்தல் இயல்பென்று. காட்டிலெளிதுற்ற கடவுண் மணியைக் கொணர்ந்த - கூட்டிலிருளோட்டக் கருகுய்த்த வாறன்றோ என்றும் மெய்ச் சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை விரகின்மை கொண்ட குருகார் கச்சோதமென்று... மாண்ட கதைபோ லென்றும் கந்தபுராணத்துக் கூறப்படலின். 551. முண்டகம் - முள்ளி. தில்லை - ஒருமரம். எக்கர் - குவியல். சிறப்பினோன் என்றது - தக்கணாமூர்த்தியை. மரம் - ஆலமரம். கரகம் - குண்டிகை. புள் - குருகு. ஆற்றுதல் - இல்லறநடத்தல். அலர்ந்தவர் - மிடியுற்றோர் (வறியார்). பாடு - உலகவொழுக்கம். முறை - அரசநீதி. கொள்கலம் - அதனைக்கொண்ட பாத்திரம். வரைதல் - கவிழ்த்துவிடுதல் (நீக்கிவிடுதல்). 552. எலுவ! - நண்பனே! யார் - எத்தன்மையை. யாரையுமல்லை - நண்புடை யாரையும் போல்வாயல்லை. நொதுமலாளனை - அயலானாயினை. நினைப்பின் - ஆராயின். அன்ன ஒலியையுடைய புணரி என்க. ஓங்கற்புணரி - உயர்ந்த வருதலையுடையதாகிய திரையையுடையதாய கடல் புணரி ஆகுபெயர். ஆர்ந்த ஆ - நிறையத்தின் பசு. புலம் - தான் உறையும் புலம். பேரிசைமாலை (பசுவின்) பெரிய ஒலியையுடைய மாலைப் பொழுது. நலம்தந்துசெல் - நின்னால் இழந்த நலத்தைத் தந்து அப்பாற்செல். 553. குறும்பூம் - காடை; என்றது காடை இறைச்சியை. காயமாக - சம்பாரத்தோடு கூடிய கறியாக. ஆர்பதம் - உண்ணும் உணவு. மகன் என்றது குற்றேவன் மகனை. நன்று - நன்மை. வரைந்தென - வரைவுக்குரிய முயற்சிகளைச் செய்தானாக. 554. கூன்முள் - வளைந்தமுள். முண்டகம் - முள்ளி. காலொடுபாறி - காற்றாற் சிதறி வீழ்ந்து வரித்தல் - கோலஞ் செய்தல். வெய்யள் - விருப்பமுடையள். கொடீஇயர்வேண்டும் - கொடுக்கும்படி விரும்புவான் அவனொடுமொழியும் - அவனோடு நின்னைச் சேர்த்துச் சொல்லும். 555. விரல் - விரலால். குரல் - கதிர். கல்லா - பாயுந்தொழில் அன்றிப் பிறிதுகல்லாத. ஞெமிடிக்கொண்டு - கயக்கித்தூய்மைசெய்து கொண்டு. அணல் - மோவாய். கவுள் - கதுப்பு. முக்கி - அமுக்கி (உண்டு). கையூண் இருக்கையில் - (நோன்பிருந்தோர்) தைப்பிறப்பிலன்று நீராடி நோன்பிருந்து உண்ணுதல்போல். கயம் - குளம். பைதறுகாலை - ஈரமற்றகாலத்து. பீள் - சூல். பொழிந்தாங்கு வந்தனன் என இயைக்க. 556. வம்பமாரி - காலமின்றிப் பெய்த மழை. 557. பிணர் - சருச்சரை. தடவுமுதல் - வளைந்த அடி. அரவுவாள் - அராவுகின்ற வாளரம். கடைஇ - கடலி (செலுத்தி) வருமாறு ஏறிக் கண்டனம் வருகம் செல் என இயைக்க. 558. தாய்த்தாய்க் கொண்டுவரலென்றது. தாய் முறையாகத் தோழித்தன்மை வந்ததென்றபடி. நற்றாய்க்குத் தாய் தோழி; தாயின் தாய் நற்றாயின் தாய்க்குத் தோழி என்ற இம்முறையாக மரபாக வந்தது என்பது கருத்து. 559. தூம்பு - மதகு. நெய்தற்பூக்கெழு துறைவன் எனக் கூட்டுக. அறித்தபோழ்து - பிரியேனென்று எமக்கருள் செய்தகாலத்து அறனல்ல செய்யேனெனச் சொல்லியிருக்க (நுங்களைத் துறந்தானென்பையாயின்) துறந்தகாலை (துறந்தபொழுது) பன்னாள்வரும் எவன் கொல் என இயைக்க. 560. அவன் நயந்ததோள் மற்று எவன்கொல் என மாற்றி இயைக்க. எவன்கொல் - வேறு யாதுகொல் (இல்லை என்றபடி) 561. துறைவன் தான் இவட்கு அமைந்தனன்; இவள் மாமைக்கவின் அலற்கு அமைந்தது; அதனைக் காண் என்றபடி. அமைதல் - பொருந்துதல்; ஒத்தல். 562. கடிநாள் - மணநாள். என்னை - என்ன காரணமோ? எமர் பொருணினைந்தார். எமர் அஞ்சார் வரைவை ஏற்றுக்கொள்ளாத (ஞான்று) பொழுது. அமர் ஏற்றுக்கொள்ளுமென்று அஞ்சினேன் என மாற்றுக. அமர் - போர். ஏற்றுக் கொள்ளும் - தலைவனேற்றுக் கொள்ளுவான். 563. நொதுமலாளர் - அயலார்; என்றது. நீயல்லாத ஏனையோர் என்றபடி. இவை - இத்தழை. பகைத்தழை - ஒன்றுக்கொன்று மாறான பல பூவாலும் தளிராலும் தொடுத்த தழை. பாவை புனையார் - பாவையையும் புனையார். புனைதல் - கோலஞ்செய்தல் உடலகம் கொள்வோரின்மையின் என்பதற்கு அணிபோரின்மையின் என்று பொருள் கொள்ளலாம். தொடலை - மாலை. மாலைதொடுப்போரும் சில பூக்கொண்டொழிவர் என்றபடி. 564. நம்மலை வரை ஆம் இழிய - நம்மலையின் எல்லையை விட்டு நீர் இறங்க; என்றது அருவி பெருக என்றபடி. முன்பனியில் அருவி வெள்ளமாகப் பெருகாதாகலின் இழிய என்றார். ஆம் - நீர். யாம் எனப் பிரித்தல் பொருந்தாது. வடந்தை - வாடை. அச்சிரம் - முன்பனிக் காலம். 565. கொண்டு கூற்றாவது; ஒருவர் சொன்னதைத் தாம் பின் எடுத்துக்கூறல். 566. அலர் - பழிமொழி. 567. பாஅடி - பரந்தஅடி. உரலபகுவாய் - உரலினிடத்துள்ள விரிந்த வாய். வள்ளை - வள்ளைப்பாட்டு. நுவறலும் நுவலப - குறைகூறலுஞ் செய்ப. வள்ளைபாடி நள்குறின் நுவறலும் நுவல்ப என மாற்றிக் கூட்டுக. இது நற்றிணையில் தோழி கூற்று. 568. நென்னல் - நேற்று, என்னை ஊரார் துணைவற்குப் பெண்டென மொழிய அதுகேட்டு என்னை அன்னாய் என்றாள். யான் அது வெம்மை என்றேன் என்பது கருத்து. வெம்மை - விருப்பம். 569. மணி - பளிங்குமணி. ஆணி - புணர்ச்சியாலுண்டான அழகு. 570. கதிர்த்தல் - விளக்கமுறல்; தோற்றமுறல். காரிகை - அழகு; பெண்டன்மையுமாம். அளவுமிகுதல் - அளவிற்கு மேற்படல். 571. காரிகை - அழகு. நீர்மை - மடைமை. 572. சுணங்கு - தேமல். வம்பு - கச்சு. எல் - ஒளி கதிர்ப்பு. கடி - காவல். 573. தலைப்பெய்து என்பது காரணகாரியப் பொருட்டென்றது. தலைப்பெய்து என்பது தலைப்பெய்தலால் எனக் காரணப்பொருளில் நிற்ப. காணல் காரியமாய் வந்தது என்றபடி. காணல் செவிலி வினையாதலால் பிறவினை என்றார். 574. புலவு - புலான்மணம். அணங்கு - தெய்வம். புகர் - புள்ளி. விடர் - பிளப்பு. முகை - குகை. அணங்கு - தெய்வம். விளக்கவந்து பணியலை முனியானாய்ப் புகுதரும் என முடிக்க. பணியல் - வழிபாடு. அமன்ற - செறிந்த. குளவி - காட்டு மல்லிகை. கண்ணி - மாலை. அசையா - நீங்காத. நாற்றம் - நறுமணம். அசைவளி - அசைகின்ற காற்று. பகர - மணப்பிக்க. கறி - மிளகு. குரம்பை - சிறுகுடில். நெடுவேள் - முருகக்கடவுள். தொடர்பு என்னாகுங் கொல் என இயைக்க. 575. முருகு - முருகக்கடவுள். 576. மிடை - பரண். இது கலித்தொகையுரையுட் கண்டது. மலையினொடுக்க மான வழியாயு மிருக்கலாம். 577. கவின் - அழகு. மலைவான் கொண்ட - வெறியாடலை ஏறிட்டுக்கொண்ட சினைஇய - (அதனால்) கோபமுற்ற. மலைவான் கோட்ட என்றும் பாடம். கோட்டம் என்றிருத்தல்வேண்டும். கோட்டம் - கோயில். இது சிறந்த பாடம். இப்பாடத்திற்கு முற்றம் - கோயில் முற்றமாம். 578. எய்யாது - (அவள்) அறியாது. நோய் - பிரிதலாலாய நோய். 579. நல்கல் எவ்வம் - மார்பைநல்குதலால் உண்டான வருத்தம். இருவர் என்றது கட்டுவிச்சியையும் வேலனையும் ஒட்டிக் கூறாமை - இது வெற்பன் அருளுதலால் வந்த துன்பம் என ஒட்டிக்கூறாமை. ஒட்டல் - நிகழ்ச்சியொடு பொருந்தல். சேர்தல். 580. வறிது - சிறிது. பிறிது ஒன்று என்றது தெய்வத்தாலாயது என்று கருதின மையை. உரு - அச்சம். முருகு - வேலன். களிறு - பிணிமுகம் என்னும் யானை. ஆடல் - ஆடுவித்தல் என்னும் பொருட்டு. 581. விதந்து கூறாமையின் என்றது ஆடியவர் இன்னார் என்று எடுத்துச் சொல்லாமையால் என்றபடி. இரண்டும் என்றது கட்டுங் கழங்கும் என்னுமிரண்டையும். 582. வீழும் - கதிரில்வீழும். கடியாள் - துரத்தாள். கண்ணி - மாலை. தழை - தழையுடை. எல்லே - என்னே? வெளியே எனினுமாம். புலம்பு - தனிமை. துயரம். 583. சுனையரமகளிர் - சுனையிலுள்ள நீரர மகளிரிடத்தன. கல்அரமகளிர் - மலையரமகளிர் - அரமகளிர் - தெய்வமகளிர். அகிலுமாரமு நாறுபவன் இவ்வடியில் யாதோ பிழையுளது. தீவிய நாறும் - தெய்வமணம் கமழும். நாறுமவள் என்று பாடமிருந்திருப்பிற் பொருத்தமாகும். 584. இதன்பொருள் முன் விளக்கப்பட்டுளது. 585. எல் - ஒளி. 586. ஏந்தி - ஏந்தியே! யார் - யாராந்தன்மையுடையை. தொடுதல் ஓம்பென - தொடுதலைப் பாதுகாப்பாய் என்று. தொடலைக் கண்ணி - தொடுத்தலைக் கொண்டதாகிய கண்ணி. பரியலம் என்னும் - தாங்கலம் என்பாள்? பாம்புபட நிவந்த - பாம்பை ஒப்ப நீண்ட. இது கைக்கு விசேடணம். ஆய் - ஒருவள்ளல். மகளை - மகளே; ஐ சாரியை. இது தோழியை விளித்தது. யாங்காடினள் உரை என ஒட்டுக. யாங்கு ஆடினள் - எவ்விடத்து விளையாடினாள். 587. தோள்சேர்பு - இவள் தோளைச்சார்ந்து. அறுகாற்பறவை - வண்டு கண்கோளாக நோக்கி - கண்ணாற் கொல்வதுபோல நோக்கி. சாந்த ஞெகிழி - சந்தனவிறகுக் கொள்ளி. ஈங்கு - இவ்விறகிலுள்ள வண்டு. ஆயின - மொய்த்தன. 588. சிலம்பு - மலைப்பக்கம். வேட்டம் - வேட்டை. செறிமடை அம்பு - செறிக்கப்பட்ட மூட்டுவாயையுடைய அம்பு. பொருது தொலை யானை - பொருது இறந்த யானை. அகழ்வோன் - தோண்டுவோன். கிளர்ப்ப - மேலெழுந்து விளங்க. அகழ எனினுமாம். மூவேறுதாரம் - பொன்னும் மணியும் முத்தம் என்னும் மூவகைப் பண்டம். பொறைமரம் - சுமைமரம் (காவுமரம்). கொடை எதிர்ந்தனன் - மகட்கொடைக்கு உடன்பட்டனன். ஒக்குதும் - செலுத்துதும். 589. யாய் - என் தாய். 590. எம்மனை - எம்வீடு. உய்க்குமோ? - கொண்டுபோமோ? குறிப்பு - கருத்து. 591. முயங்குகம் - தழுவுவம். தயங்குபு - தயங்கி - விளங்கி. கானல் - கடற்கரைச் சோலை. கல்லென - கல்லென்றொலிப்ப. அம் - சாரியை. வாடை - வாடைக்கண். கொழுநற் போற்றிய - கணவனைப் பாதுகாக்கும் படி. வலந்துரை தவிர்ந்தன்று. சூழ்ந்து உரைத்தலை நீங்கியது. அலர்ந்தஊர் - பரந்தஊர். அலர்கூறிய ஊர் அவ்அலர் கூறலை நீங்கிற்று எனவுமாம். வலந்து சூழ்ந்து உரைத்தல் என்றது; அலர் கூறலை. 592. எஞ்சுதல் - தளித்தல். மகளைப் போக்கினமையின் எஞ்சுதல் என்றார். 593. தெறுவது - வருத்துவது. நும் மகள் என்று நற்றாய் செவிலியை நோக்கிக் கூறினாள். செல - போக. சாய் - மெலிந்து. மெலிந்து கலங்க என்க. படர் - துன்பம். கலங்கக் காடிறந்தனள் என்க. நம் என்பது நற்றாய் கூற்று. 594. பெயர்த்தனென் முயங்க - மீட்டுந் தழுவ. (ஒருமுறையன்றி மீளவுந் தழுவ என்றபடி). யான் வேர்வையுற்றேன் என்றாள். இனி - இப்பொழுது. துனி - வெறுப்பு. நாறல் - மணத்தைத் தோற்றுவித்தல். தண்ணியள் - குளிர்ச்சியை யுடையவள். ஆய் - ஒரு வள்ளல். 595. ஏனல் இதணம் - தினைப்புனத்துப்பரண். வரை - மலை. ஏணி - கண்ணேணி. இழைத்து - உண்டாக்கி. 596. இருபாற்குடி - தலைவன் தலைவி என்னும் இருபகுதிக்குடி. 597. பட -ஒலிப்ப. பணிலம் - சங்கு. இறைகொள்பு - தங்கி. வாய் - உண்மை. ஆய்கழல் - அழகிய கழல். பொதியில் - பொதுவிடம். நட்பு, இறைகொள்பு, வாயாகின்று என இயைக்க. இறை கொள்பு தோன்றிய எனக் கூட்டுவாருமுளர். 598. இழிவு சிறப்பு உம்மையால் பயின்றுவாராது என்றார். 599. உயர்ந்தோர் - சான்றோர் எனக்கொண்டு. சான்றோரிடத்துக் கிழவோனுடைய குலநலம் விசாரித்து அறிந்தாள் என்று கூறலே பொருத்தம். ஐயம் - தலைவன் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ என்னும் ஐயம். இளம்பூரணர் வேறு கூறுவர். அவர் கூற்றும் பொருத்தமாகக் காணப்படவில்லை. 600. இக்கருத்து முன்வந்திருத்தலின் இவ்வாக்கியம் வேண்டிய தில்லை. 601. நீத்தம் மண்ணுநீர்போல - நீத்தத்திற் குளிக்குமிடத்து அந்நீர் குளிருமாறு போல். போலக் குளிர முயங்கி என்றபடி. அஞர் - துன்பம். ஆகம் - மார்பு. 602. களம் - இரவுக்குறியும் பகற்குறியும். 603. இதில், புன்னையந்தண்பொழில் வா எனத் தோழி களஞ் சுட்டியவாறு காண்க. இது பகற்குறி. உள்ளிய - கருதிய. பறை - சிறை. நிவப்ப - பறப்ப. புலம்பின்று - தனித்தது. கானல் - கடற்கரைச் சோலை. சுரம் - காடு. திமில் - தோணி. காட்டிய - காட்டும்படி. எந்தை - எந்தந்தை. அந்தி - மலை அணங்கு - தெய்வம். யாயும் - எந்தாயும் அயரும் - வழிபடும் ஓதி - ஓதியையுடையான் நீயும் இன்றுயிலமர்ந்தனை யாயின் மணந்தனை செலற்குப் பொழில்வா என இயைக்க. 604. இன்னோரன்ன காரணம் என்றது - பூப்புநிகழ்தல், புறத்தார்க்குப் புலனா மென்றஞ்சுதல் முதலியவற்றை. 605. துட்கென்றற்று - அஞ்சியது. தூஉ - தூய. வைகறை - விடியல். வந்தன்று - வந்தது. என் நெஞ்சம் துட்கென்றற்று என இயைக்க. ஆல் - அசை. 606. அல்லகுறி - தலைவன் குறியல்லாத குறி. அஃதாவது தலைவன் நிகழ்த்துங் குறி பிறிதொன்றால் நிகழ்வது. 607. பூப்பு நிகழாதகாலம் என்றது - பூப்புடையாளாதற்குமுன் என்றபடி. 608. அறத்தொடு நிற்றல் - தலைவி தோழிக்கு அறத்தொடுநிற்றல். 609. சுரிதகத்து கூறின் நன்றென - நின்னொடு சூழ்வல் என வருதலின். செவிலிக்குலையாயெனக் கூறியது என்றார். கூறின என்பதற்குச் செவிலிக்கு அறத்தொடு நின்று கூறின் என்று உரைக்க. 610. தாய்த்தாய்க் கொண்டுவரல் என்றது. தாய் செவிலியானபின், அவள் தாயுஞ் செவிலியாய் மரபுபற்றி வருதலை. 611. மறை - களவொழுக்கம். 612. அருமறை கிளத்தலை இதன் முதற் சூத்திரத்து நோக்கியறிக. 613. அதிகாரம் என்றது - முற்சூத்திரத்து அதிகாரப்பட்டமையை. 614. உழுவலன்பு - எழுமையுந் தொடர்ந்த அன்பு. 615. எழுவகை என்றது நாற்றமும் தோற்றமும் என்ற சூத்திரத்துட் கூறிய எழுவகையையும் (களவியல் 23). 616. இம்மூன்றுநிலை என்றது. அருமறைகிளத்தல். உசாத்துணையாதல். சூழ்தல் என்ற மூன்று நிலையையும். 617. முன்னுறவுணர்தல் என்பதற்குக் களவியலுரைகாரர் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பிற்றைஞான்று தலைவி வேறுபாடு கண்டு கரவு உள்நாடியுணர்தல் என்பர். 618. மதியுடம்படுத்தல் என்பது தலைவன் தலைவி என்னும் இருவர் மதியினையும் தன் மதியொடு ஒருங்குசேர்த்துணர்தல். எனவே இருவர் கண்ணும் களவொழுக்கம உண்டென்பதைத் தன்கருத்தோடு பொருத்தித் துணிதல் என்றாயிற்று. 619. கோல்நேர் எல்வளை எனப் பிரிக்க. தெளிர்ப்ப - ஒலிப்ப; விளங்க. ஆடல் - சுனையாடல். 620. நிழல் - சாயை. நீ பெறாதது ஏன்? - நீ பெறாத குறை யாது? இது என்? - (அதனை) இது என்று கூறு. 621. பின்னிலை - இரந்து பின்னிற்றல். 622. முடுக்குதல் - விரைவுபடுத்தல்; செலுத்தல். 623. தன்னை என்றது தலைவனைச் சுட்டி நின்றது. 624. மதியுடம்படுத்தலேயன்றிக் கூட்டவும் பெறுமென நிற்றலின் எச்சவும்மை என்க. 625. நெறி - முறைமை. நெறி என்பதற்கு இடம் என்றும் பொருள்கொள்ளலாம். அடுத்த சூத்திரத்து வழியது என்பதை நோக்குக. 626. தலைப்பெய்தல் - (தலைவனும் தலைவியும்) கூடுதல். 627. பொது - இருவர்க்கும் பொது. 628. தோன்றும் என்றதனாற்றான் இக்கருத்துப் பெறப்படும் என்றபடி. எனக் கொள்க என்றதனால் தோழி சென்று காட்டாமல் அவ்விடத்தை நின்று காட்டல்வேண்டும் என்பது விதி என்பது பெறுதும். சென்று காட்டின் இவள்கண் ஐயமுண்டாம் என்பது கருத்துப்போலும். 629. அச்சம் - தாய் முதலியோர் அறியவரும் என்னுமச்சம். 630. இம்மூன்றுதாரணமும் இரவுக்குறி மனையோர் கிளவிகேட்கும் வழியது என்பதற்குப் பிரமாணம் காட்டியனவாகும். 631. கழுது - பரண். பிழி - கள். கதுப்பு - முன்பக்கம் மயிர். குறிஞ்சி - குறிஞ்சிப் பண். குரல் - தினைக்கதிர். படாஅ - துயிலாத. வீழாக்கதவம். தாழ்வீழ்க்காத கதவம்; பூட்டாத கதவம். (தலைவன் வருமென்று தாழ்வீழ்க்காது திறந்து வைத்தாள் என்பது கருத்து). இதனால் உண்மனையிற் சென்று கூடினான் என்பது பெறப்படும். 632. புனலொலிப்படுத்தல் முதலியன என்றது. புனலொலிப்படுத்தல் புள்ளெழுப்பன் முதலியவற்றை. 633. கொடுமுள் - கொடியமுள். கூன்புறம் - வளைந்தபுறம். வான்பூ - வெள்ளியபூ கூம்பவிழ்ந்தவொண்பூ எனவும் பாடம். இடையுள் - நடுவேயுள்ள சோறு. சோறு - மகரந்தம். இழுது - வெண்ணெய். தெளியாக்குறி - தெளிந்துகொள்ள முடியாத குறி. 634. ஓதம் - நீர்ப்பெருக்கு. இறா - இறாமீன். கொட்கும் - சுழன்றுதிரியும். சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்காதிருந்த. நின்இல் - (நின் மனைக்கண்) செய்தகுறி செறிவு அறா என மாற்றுக. குறி மேலும் மேலும் செய்கின்றான் என்பது கருத்து. 635. எக்கர் - மணன்மேடு. புள் - பறவை. அரவம் - ஒலி. பெயர்ந்தாள் - குறிச்சென்று மீண்டாள். சிறுகுடியர் - சிறுகுடியிலுள்ள சுற்றத்தார். தான் செல்லும் ஒலியை அறியில் உள நாணுவர் என்று மீண்டாள் என இயைக்க. 636. பெயல் - மழை. விளி - விளித்தல் (அழைத்தல்). நீ குறியால் அழைத்த அழைப்பினை; என்றபடி. ஓர்த்த - செவியால் ஓர்த்த. ஒடுக்கம் - மனஒடுக்கம். தாள் செறிக்குங் காவல் - தாளிட்டு அடைந்தாற்போலும். கடிய காவல். ஊழ் - முறைமை. கோடல் போல் - காந்தட்பூஉகுமாறுபோல. உகுதல் - சொரிதல். 637. அன்னை - தாயே! படப்பை - கொல்லை. புன்னை மென்காய் பொய்கையுள் வீழ்ந்தென எண்ணினை என இயைக்க. போகுசினை - நீண்ட கொம்பர். இரிய - அசைய. ஆடுவளி - அசையுங்காற்று. தூக்குதல் - மேலெழுப்பி அசைத்தல். 638. மணி - நீலமணி. ஓதம் - நீர்ப்பெருக்கு. முந்நீர் - கடல். எம்போல் துஞ்சாதது என்றுகொல் என இயைக்க. 639. அரவளை - வாளரத்தால் அராவப்பட்ட வளை. அனுங்க - வருந்த; மெலிய. கரவலம் - மறைந்திரோம். இது திங்கண்மேல் வைத்துக் கூறியது. புன்னையை நனைப்பினும் என விரிக்க. 640. படுதல் என்பதற்கு மயங்குதல் என்று பொருள் கூறலின் எதிர்ப்படாமையை யுணர்த்திற்று என்றார். 641. அமைவு - மனம் அமைதல். 642. ஆங்கு ஆங்கு - அவ்வல்ல குறியிடத்து (த் தலைவியுந் தோழியுந் துன்புறுமாறு) போல (என்பது நச்சினார்க்கினியர் கருத்து). 643. தைஇய - செய்த. இளவெயிற்கொண்டு - இளவெயிலைத் தன்மேற் கொண்டு. எய்திய புரியை என முடிக்க. நயவன் - யாழ்ப்பாடலில் நன்கு பயின்றோன். தைவரல் - தடவல்; இயக்குதல். ஓர்த்தன்ன - கோட்டாலொத்த. அணங்கு - வருத்துந் தெய்வமகள். நசைஇ - விரும்பி. பெறல் அருங் குரைய ளென்னாய் - பெறுதற்கரியளென்று கருதாயாய். மின்னுவசி - மின்னொளி. மறலிமைந்துற்று - மறலிபோலும் வலியுற்று; மறலி என்பதற்குப் பகைத்து எனினுமாம். முற்றி - வளைத்து. ஒட்டிய - புறங்கொடுக்கச்செய்த. எவ்வம் - துன்பம். 644. வடமலை - மேரு. மிசையோனாகிய முடவர் நீர்வேட்டாங்கு என இயைக்க. பொதியில் - பொதியமலையில். உள்ளம் - உள்ளமே! பயிலுற்றோயாகிய உள்ளம் எனக் கூட்டுக. ஒருத்தல் - களிற்றியானை. அத்தம் - வழி. வல்லியம் - புலி. அடுக்கம் - மலைப்பக்கம். 645. அவ்விராசி - தீயவிராசி. அத் தீய இராசிக்குரியநாள் முழுவதும் தீயநாள் என்பார் முழுதும் என்றார். நாள் - நட்சத்திரம். 646. இதனான் - இச்சூத்திரத்தான். 647. தெருமந்து - அலமந்து (-சுழற்சியுற்றுத்). தலைசாய்த்தார் என மாறுக. 648. இவ்வாறு கூறுவார் இளம்பூரணர். அவர் செவிலிபோலக் கலங்குவ தல்லது வெகுளலிலள் என்பர். இவ்வாறு கூறுவதினும் செவிலி கூற்றானுணர்ந்தாற்போல நற்றாயும் கூற்றானுணரும் என்று கூறல் பொருத்தமாகும். செவிலி தோழி கூற்றானுணரும் அதுபோல நற்றாய் செவிலி கூற்றானுணரும் என்பது கருத்தாகும். செவிலி தோழி கூற்றானுணர்தல். தோழிகூற்றுட் காண்க. 649. முகிழ்த்தல் என்றது - அம்பலை. அரும்பல் - அம்பல் என்றாயிற்று. அஃதாவது இதழ் குவித்துணர்த்தல். இஃது சிலரறிந்தது. 650. பேரலர் - பெரிய அலர். 651. இதில் பசலையும் அம்பலும் - மாய எனப் பின்வருமடியால் அம்பல் கூறப்படுதலறிக. 652. புனத்த அகில் - புனத்திலுள்ள அகில். கற்பாய்ந்து - கற்களைப் பாய்ந்து. வான் - மழை. நயன் - அன்பு. வாடல் - வாடுதல். 653. கொண்டுதலைக்கழிதல் - தலைவியை உடன்கொண்டுபோதல். 654. அடர்தல் - நெருங்கல். வேய்ந்த கோதையள் - அணிந்த கூந்தலள். அலவன் - ஞெண்டு. அசையினளிருந்த - அலவனாட்டியதனால் இளைப்புற்றிருந்த. கலநிறை - கலநிறைய. கலம் - கொள்ளும் பாத்திரம். தேஎம் - தேயம். மரூஉ - மருவி. அவன் என்றது தலைவி தந்தையை. படுத்தனமாய்ப் பணிந்தனமாய் அடுத்தனமாய் இருப்பின் பரதவன் நமக்குத் தருகுவனோ? என இயைக்க. படுத்தல் - உப்பும் மீனும் படுத்தல். அவன்வயமாதல் என்பாருமுளர். பொருந்துவது கொள்க. 655. கொடி மருங்குல் - கொடி போலுமிடை. பொலம்பூண் - பொன்னாற் செய்த பூண். காந்தண்மெல்லிரல் - கை; ஆகுபெயர் - கவைதல் - அகப்படுத்தல்; தழுவல்.