தொல்காப்பிய உரைத்தொகை - 8- சொல்லதிகாரம் கல்லாடம் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை (பதிப்பு - 1971) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 8 சொல்லதிகாரம் - கல்லாடம் முதற்பதிப்பு (1971) தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+336 =368 விலை : 575/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. .: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் :368  கட்டமைபு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. எனப்படும் இவர். சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 08.01.1901இல் பொன்னுசாமி என்பார் மகனாராகத் தோன்றியவர். இப் பொன்னுசாமி, பெரும் பேராசிரியராக விளங்கியவர் ஆகிய மீனாட்சி சுந்தரனார் மாணவர்வழி மாணவர் ஆதலால் இப்பெயர் சூட்டினார் தம்மகனார்க்கு! `தெ’ என்பது இவர்தம் முன்னோர் வாழ்ந்த `தென்பட்டினம்’ என்னும் பெயர் குறிப்பதாகும். அது செங்கற்பட்டு மாவட்டத்தது. 1922இல் சட்டப்படிப்பு முடித்து, 1924 இல் வரலாற்றுத் துறையில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஓ.எல். பட்டமும் பெற்றார். நாட்டுத் தொண்டிலும் கல்வித் தொண்டிலும் ஈடுபட்ட இவர் அத்தொண்டுகளில் நகராட்சி, பள்ளிகள் நிறுவுதல் ஆகியவற்றில் பெரும் பொறுப்புகளை ஏற்றுச் சிறப்புறச் செய்தார். பலப்பல மாநாடுகளில் பங்கு கொண்டார். தமிழ்ப புலமையொடு, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழி, இந்தி, பிரெஞ்சு, செருமன் ஆகிய பன்மொழி பயின்றவராகவும் வண்ணனை மொழிநூல் வல்லாராகவும் விளங்கினார். படிப்பார்வம் மிக்கவராய் நூலகம் நூலகம் எனச் சென்று, தாமே நூலகமாகத் திகழும் திறனுற்றார். இவர் உடன் பிறந்தாராகிய கிருட்டிணசாமிப் பாவலர் நாடகத் துறை வல்லாராய் விளங்கி, இங்கிலாந்து சென்றும் நாடகம் நடத்தியவராவர். 1958 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்துறைத் தலைவராய் விளங்கி மொழியியல் துறையை வளம்படச் செய்தார். 1961 இல் அமெரிக்கச் சிகாகோப் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணி செய்தார். மதுரையில் 1966இல் பல்கலைக் கழகம் தோன்றியதும் முதல் துணை வேந்தராக அமர்ந்து அதன் பல்வேறு துறை வளர்ச்சிக்கு அடித்தள மிட்டவராவர். `பல்கலைச் செல்வர்’, `பன்மொழிப் புலவர்’ என்னும் விருதுகளும் டி.லிட். பட்டங்களும் பெற்ற இவர் சிலப்பதிகாரத்தை `மக்கள் காவியம்’ என முழங்கி, கானல் வரி முதலாயவற்றில் அரிய ஆய்வுகளை வழங்கினார். தொல்காப்பியக் கல்லாடப் பதிப்பு - சொல்லதிகாரம் இவர் பதிப்புத் தொண்டின் சிறப்புச் சான்றாகும். இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் தொல்காப்பியம் ....... 1 இயலமைதி ....... 27 வாழ்வியல் விளக்கம் ....... 31 கல்லாடர் ....... 64 தெ.பொ. மீனாட்சிசுந்தரம் ....... 71 தொல்காப்பியனார் காலம் ....... 93 தொல்காப்பியம் நுதலிய பொருள் ...... 94 1. கிளவியாக்கம் ....... 96 2. வேற்றுமையியல் ....... 210 3. வேற்றுமை மயங்கியல் ....... 260 4. விளிமரபு ....... 309 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண் டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதி யாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரை பசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமையால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மை யால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவா ராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்கு வதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்துவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப `ஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத் திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங் கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப் பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்று களும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபிய லிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமையுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத் தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல் போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை அஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணை யாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப் படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர்திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக்காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவுதற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவே விடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக் கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பன வெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும் வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமை யானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மைவேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப்பட் டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஒளவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஒளவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமை யாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப் படும் திருமண அழைப்பிதழ்களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படுவதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்றதாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண்மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண் பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்குவனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத் தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தி யிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப் படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்து படுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்த வில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகி விட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக் கொண்டு பரப்பாளரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கண மே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதியாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச்சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச்சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக்கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சான்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல்காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலையிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் - நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஒளவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப்படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப் பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றினர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப் பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக்கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்துகளை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங்களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டுகிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் - கல்லாடனார் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் -(1971) தமிழ்நாட்டு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் வழியாக இந்நூல் 1971 இல் வெளிவந்துள்ளது. இதனை மூலமாகக் கொண்டு இப்பதிப்பை வெளியிடுகின்றோம். (தெ.பொ. மீனாட்சிசுந்தரம்) காலம் - இங்கே பதிப்பிக்கப் பெறுவது தொல்காப்பியத்தின் இரண்டாம் பகுதியாகிய சொல்லதிகாரத்திற்குக் கல்லாடர் எழுதிய உரையேயாகும். தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியமே இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கண நூல்களில் மிகப் பழையது. தொல்காப்பியம் எழுந்த காலத்தைப் பற்றிக் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஒரு சிலர் அதில் உள்ள சில குறிப்புக்களைக் கொண்டு அது கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் எழுந்தது என்பர். இதன் காலத்தை அறுதியிட்டு இப்படிக் கூறுவது அருமையேயாகும். சங்க நூல்களோடு ஒப்பிட்டு இதன் காலத்தை அவற்றிற்கு முந்தியதென்றோ பிந்தியது என்றோ கூறமுடியும். சங்க காலத்திற்குப் பின் எழுந்த சில இலக்கணங்கள் இன்று நாம் காணும் தொல்காப்பியத்தில் இருப்பதால் அது சங்க காலத்திற்குப் பிந்தியது என்று ஒரு சிலர் கூறுவர். ‘கள்’ என்ற விகுதி வருதல், ஆற்றுப்படையின் இலக்கணம், பத்துப் பாட்டில் வரும் சில ஆற்றுப் படைகளை எண்ணுவது போன்று தோன்றுதல் முதலியவற்றை இங்கே குறிப்பிடலாம். ஆனால் சங்க நூல்களையும் தொல்காப்பியத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஆராய்ந்த பழைய உரையாசிரியர்களும், இக்காலத்து அறிஞரில் பலரும் சங்க காலத்திற்கு முந்தியதே தொல்காப்பியம் என்று கருதி வருகிறார்கள். வியங்கோள் வழக்கு, உவமவுருபின் வரையறை, செல், வா, கொடு, தா என்பவை வரும் இடம், ‘பேன்’ முதலிய சொற்களின் வழக்கு, அன்றாட வழக்கத்திலுள்ள சொற்களாகத் தொல்காப்பியர் சுட்டுவன - இவற்றை எல்லாம் பார்த்தே தொல்காப்பியர் சங்க காலத்திற்கு முந்தியவர் என்று அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். கருத்து வேறுபாடு. - இந்தக் கருத்து வேறுபாட்டில் எதனைக் கொள்ளுவது? எதனைத் தள்ளுவது? தொல்காப்பியத்தில் ஒரு சில பகுதிகளேனும் சங்க காலத்திற்கு முந்தியவையே என்று கொள்ளவேண்டும். சங்க காலத்திற்குப் பிந்தியது என்று விளக்கும் கொள்கையை என்னுடைய “சமணத்தமிழ் இலக்கிய வரலாற்றில்” ஒரு சிறிது ஆராய்ந் துள்ளேன். ஆதலால் அதை இங்கே கூறவில்லை. அன்றியும் பிற்காலக் கருத்துக்களைக் குறிக்கும் சூத்திரங்கள் எல்லாம் பின்னே செருகியவை என்று விளக்கிக் கருத்து வேற்றுமையை நீக்கிவிடலாம். முன்னரே செய்யுளியலில் கூறிய சூத்திரக் கருத்துக்கள் மரபியலில் திரும்பவும் வரும்போது அவற்றைப் பிற்செருகல் என்று பெரும்பான்மையோர் தள்ளிவிடக் காண்கிறோம். இப்படி இன்னும் பல பிற்காலத்தே உள்ளே நுழைந்தவை என்று எண்ண இடம் உண்டு. தொல்காப்பியர் எழுதிய வடிவிலேயே தொல்காப்பியம் நமக்குக் கிட்டியுள்ளது என்று சொல்வதற்கில்லை. தொல்காப்பியத் திற்குக் கிடைக்கின்ற உரைகளில் மிகப் பழைய உரைகாரரான இளம்பூரணர் பொருளதிகாரம் சூத்திரம் 45-இன் உரையில் கூறுவதொன்று இதனை வற்புறுத்துகிறது. தலைவன் கூற்றுக்களைத் தொகுத்துக் கூறும் சூத்திரம்போலத் தலைவியின் கூற்றுகளைத் தொகுத்துக் கூறும் சூத்திரம் ஒன்று இருந்திருக்க வேண்டுமென்றும் ஏடு பெயர்த்து எழுதுவோர் விட்டு விட்டார்கள் போலும் என்றும் அவர் அங்கே குறிக்கின்றார். மேலும் பல சூத்திரங்கள் விடுபட்டிருக்கலாம். எழுத்துக்கள் கூடி மொழியாகும் நிலையைக் கூறும்போது ஞகரத்தைப் பற்றிய சூத்திரம் ஒன்று இல்லாமையைக் காண்கிறோம். மேலும் எழுத்ததிகாரத்திலேயே சில சூத்திரங் களின் போக்கு வேறுபல சூத்திரங்களின் போக்குக்கு மாறாகி நிற்பதையும் அதனால் அவற்றிற் சிலவற்றை இடைச் செருகல் எனக் கொள்ள இடமுண்டு என்றும் நான் வேறிடத்தில் குறித்திருக்கின்றேன். பிற்செருகல்களா? - இந்த வேறுபாடுகள் ஏன் எழுந்தன? வியங்கோளைப் பற்றிய விதி பழையதுபோலத் தோன்றுகிறது. ஆனால் ‘கள்’ என்ற விகுதியைப் பற்றிக் கூறும் சூத்திரம் அதே நேரத்தில் புதியது போலத் தோன்றுகிறது. இப்படியே இன்னும் பலவற்றை எடுத்துக்காட்டலாம். மொழியின் பழைய நிலைமையை விளக்கவந்ததே தொல்காப்பியம். அது மிகப் பழங்காலத்திலிருந்து இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களுக்கு எல்லாம் முன்னதாகத் தோன்றியிருத்தல் வேண்டும். ஆனால் நாளடைவில் மொழிநிலை மாறியபோது பழைய நூல்கள் என்று கருதியவற்றிலும் பழந்தொல்காப்பியத்தில் கண்டதற்கு வேறாக மொழியமைப்புகள் வளர்ந்ததைக் காணும்போது இந்தப் பிந்திய நிலைக்கும் ஏற்ற பகுதிகளைப் பின்வந்தோர் கண்டு எழுதியிருக்கக்கூடும். இவற்றைப் பக்கக் குறிப்புக்களாகவோ அடிக்குறிப்புக்களாகவோ தொல்காப்பிய மாணவர்களும் இலக்கண ஆசிரியர்களும் தொல்காப்பியர் பிரதியிலேயே எழுதியிருக்கக்கூடும். இந்த வழியாகத் தொல்காப்பியத்திற் குள்ளேயே நாளடைவில் இவை புகுந்துவிட்டன. தொல்காப்பியக்குடி - வேறு ஒரு விளக்கமும் கூறலாமெனத் தோன்றுகிறது. மனுஸ்மிருதி முதலியவற்றை ஓராசிரியரே எழுதினார் என்று இப்போது ஆராய்ச்சியாளர் கொள்வதில்லை. மனு என்ற குடியில் அப்போதப்போது தோன்றிய ஆசிரியர்கள் எழுதியவை எல்லாம் அதற்குள்ளே தோன்றுகின்றன என்று இப்போது விளங்குகிறது. இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் எழுதிய உரை அவர் நேரே எழுதிய உரையன்று. அவர் மாணவர் பரம்பரை அந்த உரையை செவி வழியாகக் கேட்டு வாய்வழியாக மேலும் மேலும் வளர்த்திருக்கவேண்டும். பல தலைமுறை களுக்குப் பின்னரே நீலகண்ட ஆசிரியர் காலத்தில், அது இப்பொழுதிருக்கின்ற வடிவை அடைந்தது என்று அந்த உரையே நமக்குக் கூறுகிறது. தொல்காப்பியர் என்ற பெயரே தொல்காப்பியக் குடியில் வந்தவர் என்பதைக் குறிக்குமென்பது மரபு. அப்படியானால் தொல்காப்பியமும் கூட அந்தக் குடியில் வந்த பல தலைமுறை ஆசிரியர்கள் அப்போதப்போது வேண்டிய சொல்லதிகாரத்திற்கும் சில கொள்கைகளில் வேற்றுமை உண்டு. சேனாவரையரே இதனை எடுத்துக்காட்டுகிறார். நீவிர், நும் என்று திரிந்ததா நும், நீவிர் என்று திரிந்ததா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாட்டை அவரே குறிக்கின்றார். எழுத்ததிகாரத்தை விடச் சொல்லதிகாரம் பிந்தியது என்றும் அதைவிடப் பொருளதிகாரம் பிந்தியதென்றும் அங்கங்கே வரும் சொல் வடிவங்களையும் பிறவற்றையும் கொண்டு கூறலாமெனத் தோன்றுகிறது. ஆனால் இவற்றை எல்லாம் பின்னெழ வேண்டிய ஆராய்ச்சியின் வழியாகத்தான் முடிவு கூறமுடியும். வேறுமரபு - வடமொழியின் செல்வாக்கு மிகுந்தபோது அங்கு வழங்கிய இலக்கண முறையை ஒட்டி வேறு ஓர் இலக்கண மரபு தோன்றியிருத்தல் வேண்டும். அதுவே அவிநயனாரது மரபு என்று கொள்ள இடமுண்டு. இந்த மரபு மேலோங்கியபோது, தொல்காப்பியத்தைக் கற்பவர்களே இல்லாது போகும் நிலையும் ஏற்படும்போது அதனைக் கற்றுப்பரப்புகின்ற ஓர் எழுச்சி தோன்றியதுபோலும். யாப்பருங்கல விருத்தியும் காரிகை உரையும் தொல்காப்பியத்தின் மறுமலர்ச்சியைக் குறிக்கின்றன எனலாம். ஆனாலும் நாளடைவில் செய்யுள்நடை தொல்காப்பியர் காலத்தில் இருந்தும் பெரிதும் மாறிவிட்டமையால் அவருடைய கொள்கையை அவையும் முழுவதும் பின்பற்ற முடியவில்லை. பல்லவதரையர் போன்ற அரசியல் தலைவர்களும் அவிநய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்கு உரையெழுதினார்கள் என்று மயிலைநாதர் நமக்குக் கூறுகிறார். தொல்காப்பிய மறுமலர்ச்சி - இந்த நிலையில் தொல்காப்பியத்தை மறையவிடாமல் காத்த பெருமை இளம்பூரண அடிகளுக்கு உண்டு. பல சூத்திரங்களுக்கு உறுதியாக உரை கூறமுடியாமல் ஐயத்தோடும் அவர் எழுதுகின்ற நிலையைக் காண்கிறோம். இவற்றை எல்லாம் பார்க்கும்போது இந்த மறுமலர்ச்சியில் தொல்காப்பியத்திற்கு முதன்முதலில் உரையெழுத முயன்றவர் இளம்பூரணர் எனலாம். இதற்கு முன்னும் தொல்காப்பியத்திற்கு வேண்டிய உரையாராய்ச்சி நடந்திருக்க வேண்டுமென்பதை இவர் உரையிலிருந்தே நாம் அறிகிறோம். ஆனால் அவற்றை வாய்வழியாகவே அவர் அறிந்தார் போலும். இந்த வகையில் இளம்பூரணர் செய்த முதல் முயற்சியை மனத்தில் கொண்டு பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் எல்லாம் உரையாசிரியர் என்று அவரைப் போற்றினார்கள். இளம்பூரணர் தொல்காப்பியரின் சிறப்பியல்பைப் பல இடங்களில் காட்டினாலும் அவர் காலத்தில் வழங்கிய பிற இலக்கணங்களுக்கு ஒத்தாற் போலவே தொல்காப்பியத்தை விளக்கிப் புறப்பொருள் வெண்பாமாலை யாப்பருங்கலம், யாப்பருங்கலக்கரிகை முதலியவற்றில் இருந்து மேற்கோள் கொடுத்து அவற்றிற்கொப்ப விளக்கிப் போகின்றார். சேனாவரையர் வடமொழி அறிவுகொண்டு தொல்காப்பிய ருடைய கொள்கைகளின் சிறப்பினை மிகமிக உயர்த்திவிட்டார். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல்காப்பியரைத் தலைசிறந்த முதல் நூல் எழுதியவராகக் கொண்டுதயாய வேத ரிஷிகளோடு ஒன்றாக்கி விடுகிறார்கள். வியாசர் வேதத்தை இன்றுள்ள நிலைமையில் பிரிப்பதற்கு முன்னரே தொல்காப்பியம் எழுந்தது. என்றுகூட நச்சினார்க்கினியர் எழுதுகின்றார். தொல்காப்பியரின் பெருமை வளர்ந்த வரலாறு இது. 2. தொல்காப்பிய ஆராய்ச்சி வரலாறு தொல்காப்பியப் பிரிவுகளும் உரைகளும் - தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளது. முதலாவது எழுத்ததிகாரம். இதனைப் பொதுவாகப் பேசவோ இயல் என்று கூறலாம். இரண்டாவது சொல்லதிகாரம். இது சொல்லுறுப்பு இயலும், சொற்றொடர் இயலுமாக அமைந்துள்ளது. மூன்றாவது பொருளதிகாரம். செய்யுள் அல்லது இலக்கியத்தில் வரும் பொருளைப் பற்றிக் கூறுவது இது. இலக்கிய இயலும் செய்யுள் இயலும் கொண்டது பொதுவாகப் பலரும் ஏறக்குறைய மாறாது இருக்கும் இலக்கண அமைப்பை விளக்கும் சொல்லதிகாரத்தையே படித்து வந்திருக்கிறார்கள், பலரும் பல உரைகள் எழுதியுள்ளார்கள். உரைகள் உரையாசிரியர்கள் போக்கு - இளம்பூரணருக்குப் பின்னும் பல உரையாசிரியர்கள் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டுள்ளார்கள். அவர்களுடைய கண்ணுக்கு எந்தக் காலத் தமிழ் அமைப்பும் தொல்காப்பிய வழக்கிற்குள்ளே அடங்கிவிடுவ தாகவே தொல்காப்பியம் காட்சி அளிக்கிறது. சங்க காலத்திற்கு உள்ளாகவே தமிழ் அமைப்பு தொல்காப்பியம் காட்சி அளிக்கிறது. சங்க காலத்திற்கு உள்ளாகவே தமிழ் அமைப்பு தொல்காப்பியர் காலத்திலிருந்து சிறிது மாறுதல் அடைந்துதான் இருந்தது. பிற்கால மாறுதல்களைத் தொல்காப்பியர் “கடிசொல் இல்லை காலத்துப் படினே” என்று கூறியதற்கு ஏற்பக் காலத்தின் போக்கால் பின் எழுந்த மாறுதல்கள் என்று உரையாசிரியர்கள் கொள்கின்றார்கள். என்றாலும் சங்ககால வழக்கென்று அவர்கள் கருதியவற்றைத் தொல்காப்பியர் வழக்கிற்கு உள்ளாகவே அடக்கிவிடுவதற்கு மிக மிக முயன்றார்கள். உத்திகள் முதலிய பொருள்கோள் மரபுகள் அவர்களுக்கு இப்படி உரைகாணுதற்குத் துணை ஆயின. எனவே இந்த உரையாசிரியர்களை நாம் மறக்க முடியாது. அவர்கள் உதவியை ஒதுக்கித் தள்ளவும் முடியாது. தொல்காப்பியத்தில் வரும் சொற்களுக்கும் சொற்றொடர் களுக்கும் பெரும்பாலும் அவர்கள் துணைகொண்டே நாம் பொருள் காணமுடியும். தொல்காப்பியத்தை அறிவதற்குத் துணையாவதோடு தமிழ் மொழியின் வரலாற்றை அறிவதற்கு, அவர்களுக்கும் தெரிந்திராத வகையில், அவர்கள் நமக்குத் துணை செய்கின்றார்கள். அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினாலும்கூட, தொல்காப்பியர் காலத்திலிருந்து மாறிவிட்ட தங்கள் தங்கள் காலத் தமிழுக்கும் அவர்கள் மேலே கூறியபடி தம்மையும் அறியாது இலக்கணம் எழுதுகிறார்கள். அவர்கள் உரையை ஊன்றிப் படிப்போமானால் தொல்காப்பியச் சூத்திரத்தின் போக்கு என்ன என்றும் அவர்காலத்தில் இருந்து தங்கள் காலம்வரை எழுந்து வந்த மாறுதல்கள் என்ன என்றும் ஒருவாறு ஆராய்ந்து முடிவுசெய்ய இடம் உண்டு. தமிழ் மொழியின் வரலாற்றை எழுதுவதற்கு இந்த முறையில் இந்த உரையாசிரியர்கள் மிகப்பெரிதும் உதவுகிறார்கள். இங்கே கூறிவரும் முடிவுகளை விளக்க இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் குற்றியலுகரத்தைப் பற்றிக் கூறும் இருவேறு கொள்கைகளை எடுத்துக் காட்டலாம். குற்றியலுகரம் பெரும்பான்மையும் வாக்கிய முடிவிலேயே வரும் என்று கூறும் இளம்பூரணர் கொள்கை பழங்கால மொழியமைப்பை விளக்குவது. சொல்லின் ஈற்றிலும் குற்றியலுகரம் வழங்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுவது அவர் காலத்திற்கு உள்ளாக எழுந்த மாறுதலைக் குறிக்கிறது. நன்னூலையும் காண்க. இதற்கேற்ற பாடபேதமும் தொல்காப்பியப் பிரதிகளில் ஏற்பட்டுவிட்டது. உரையாசிரியர்கள் - இப்போது கிடைக்கும் உரைகளைக் கொண்டு உரையாசிரியர்கள் தங்கள் உரைகளை இன்ன ஆண்டில்தான் எழுதினார்கள் என்று வரையறுக்க முடியாமற் போனாலும் இவர்களை முன்பின்னாகவேனும் அவரவர்கள் வாழ்ந்த காலத்தையொட்டி வரிசைப்படுத்தலாம். இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினயர் என்ற வரிசை. இவர்கள் உரையிலே முன்னைய உரையாசிரியர்களைக் குறிப்ப தாலேயே விளங்கிவிடுகிறது. கல்லாடரும் தெய்வச்சிலையாரும் ஒருவர் பெயரையும் குறிப்பதில்லை. இருந்தாலும் இவர்கள் எழுதிய உரைகள் மேலே கூறிய உரையாசிரியர்களுக்குப் பிந்தியே எழுந்தன எனலாம். இன்றுவரை - இந்த உரையாசிரியர்களுக்குப் பின்னே தொல்காப்பியத்திற்குத் தொடர்ந்து உரை எழுத யாரும் முயலவில்லை. இக்காலத்தில் எழுந்த விளக்க உரைகள், மொழி பெயர்ப்புகள் முதலியவற்றை இங்கே எடுத்துக் கொள்ளவில்லை. நம் காலத்துக்கு முன்னிருந்த இலக்கணப் புலவர்கள் தம்முடைய தொல்காப்பிய ஆராய்ச்சியின் முடிவுகளை மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர். இராமானுஜ கவிராயர் முதலியவர்களைப் போலத் தாங்கள் நன்னூலை எல்லோரும் விரும்பிப் படித்ததுதான். வேறு சிலர், இலக்கண விளக்கம். இலக்கணக் கொத்து, தொன்னூல், முத்து வீரியம், பிரயோக விவேகம் முதலிய புதிய இலக்கண நூல்களை எழுதினார்கள்; இவர்களில் பலர் பழைய மேற்கோள்களுடன் தாங்களே எழுதி அவற்றிற்குத் தாங்கள் எழுதிய உரைகளில் தங்கள் ஆராய்ச்சியை விளக்கினார்கள். சிவஞானசுவாமிகள் தொல்காப்பியப் பாயிரத்திற்கும், தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் உள்ள முதல் சூத்திரத்திற்கும் விரிவுரை எழுதுவதுபோலத் தொடங்கித் தாம் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் அங்கே குறித்து வைத்துள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவிலே இந்திய நாட்டிலே பிறந்தவர்கள் நூல்களை அச்சடிக்கக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் தடுத்ததால் அந்தத் தடை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நீங்கும்வரை தமிழ்க் கல்விக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் முட்டுக்கட்டை போட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்குப் பல பதிப்புக்கள் தோன்றின. மகாலிங்கையர், தாமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், சீனிவாசராகவர் முதலியோர் முயற்சியால் அவை வெளிவந்தன. தொல்காப்பியத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும், மொழி பெயர்ப்புகளும், விளக்கங்களும், குறிப்புக்களும், பலபதிப்புக்களும் இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அரசஞ்சண்முகனார், இலக்கணச்சாமிகள், மறைமலை அடிகள், பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரிகள், மன்னார்குடி சோமசுந்தரம் பிள்ளை, வெங்கடராஜலு ரெட்டியார், வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், வையாபுரிப் பிள்ளை, மகாவித்துவான் கணேசையர், ரா. ராகவையங்கார், மு. இராகவையங்கார் முதலிய பல ஆராய்ச்சி யாளர்கள் இத்தகைய தொண்டில் ஈடுபடக் காண்கிறோம். தொல்காப்பியம், வித்துவான், புலவர் முதலிய பட்டங்களுக்கும் எம்.ஏ., முதலிய கல்வித்தர நிறைவுகளுக்கும் பாடமாக அமைந்துள்ளது. எனவே, தொல்காப்பியப் படிப்பு இன்று மிகப் பரவியிருக்கின்றது என்றே கூறவேண்டும். 3. பதிப்புக்கள் சொல்லதிகாரப் பதிப்புக்கள் - தொல்காப்பியப் பதிப்புக்களில் சொல்லதிகாரத்தைப் பொறுத்தமட்டில் இங்கே குறிப்பிடவேண்டும். சேனாவரையரது உரையுடன் இதனை ஆறுமுக நாவலர் சென்ற நூற்றாண்டில் வெளியிட்டார். அதனுடைய மறுபதிப்புக்கள் நாவலர் அச்சகத்தில் இன்றும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய சீனிவாச ராகவர் அந்த நூற்றாண்டிலேயே மற்றோர் பதிப்பினை வெளியிட்டார். வ.உ.சி. இந்த நூற்றாண்டில் எழுத்ததிகாரத்தை வெளியிட்டதோடு பிற அதிகாரங்களையும் வெளியிடத் திரு. வையாபுரிப் பிள்ளையை வேண்டிக்கொண்டதற்கு இணங்கப் பொருளதிகார உரை வெளியிடப்பட்டது. ஆனாலும் சொல்லதிகார இளம்பூரணர் உரை வாவிள வெங்கடேஸ்வாலு சாஸ்திரியாரின் முயற்சியால் அச்சுக்கோக்கப் பெற்றிருந்தும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் திருவாளர் கா. நமச்சிவாய முதலியார் சொல்லதிகார இளம்பூரணர் உரையை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தொல்காப்பியத்தின் நச்சினார்க்கினியரின் உரையை வெளியிட்டபோது அவ்வுரையாசிரியரின் சொல்லதிகார உரையையும் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் வெளியிட்டனர். இந்த நூற்றாண்டில் பவானந்தர் கழகத்தின் சார்பில் திருவாளர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்கள் இந்த நச்சினார்க்கினியர் உரையைத் திருத்தங்களுடன் பதிப்பித்தார். மகாவித்துவான் யாழ்ப்பாணம் கணேசையர் அவர்கள் தொல்காப்பியம் முழுவதனையும் சில பழைய உரைகளோடும் பாட பேதங்களோடும், அடிக்குறிப்புக்களோடும், ஆராய்ச்சிக் கட்டுரைகளோடும் பதிப்பித்த வகையில் தனி நூலாகச் சொல்லதிகாரத்தைச் சேனாவரையர் உரையோடு சுன்னாகம் பொன்னையா அவர்களின் உதவியால் வெளியிட்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியராக விளங்கிய கந்தசாமியார் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வழியே சேனாவரையர் உரையைத் தம் அடிக்குறிப்புக்களோடும் பதிப்பித்தார். (1928) பின்னர் அந்தப் பல்கலைக் கழகத்து ஆசிரியராக இருந்த திரு. பூவராகம் பிள்ளையினது விளக்கக் குறிப்புக்களைப் பிற்சேர்க்கையாகக் கொண்டு இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் தலைமையில் தமிழ்த் தொண்டு ஆற்றிவந்த கரந்தைத் தமிழ்ச்சங்கம் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் தெய்வச்சிலையார் எழுதிய உரையை வெளியிட்டது. கல்லாடரது ஆதீனத்தின் திங்கள் இதழான “ஞானசம்பந்த”த்தில் தம்முடைய திருத்தங்களோடும் வெளியிட்டு வந்தார். அதற்கு முன்னதாகவே இந்த உரையைத் திரு.கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் புத்தக வடிவில் பல பக்கங்கள் அச்சடித்தார்கள். ஆனால் முடிவு பெறவில்லை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தனது 1008 ஆவது நூலை வெளியிட்டபோது அமைத்த கண்காட்சியில் சில அச்சிட்ட பக்கங்களைப் பலர் காண முடிந்தது. மொழிபெயர்ப்பு - சொல்லதிகாரத்திற்கு ஓர் ஆங்கில மொழி பெயர்ப்பு நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவனாக இருந்தபோது வெளியாயிற்று: இதன் மொழி பெயர்ப்பாசிரியர் திரு. பி. சா. சுப்ரமணிய சாஸ்திரி. 4. ஆலோசனைக் குழு இந்தப் பதிப்பு பத்தொன்பதாவது நூற்றாண்டில் தொல்காப்பிய நன்னூல் என்ற நூல் சொல்லதிகாரத்தின் பாகுபாடுகளை ஆங்கிலத்தில் விளக்கியது. சென்னைத் துரைத்தனக் கீழ்க்கலைக் கையெழுத்துச் சுவடி நூல் நிலையம் ஒன்று இருப்பது யாவரும் அறிந்ததே. இந்திய நாடு விடுதலை பெற்றதும் சுவடியாக இருக்கும் இப்பழம் பெருஞ் செல்வங்களைப் பாதுகாப்பதோடு அச்சிலும் வெளியிட வேண்டும் என்று நடுவிடத் துரைத்தனமும் சென்னைத் துரைத்தனமும் கருதின. பதிப்பிக்கத்தக்க நூல்களை முடிவு செய்ய ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தொல்காப்பியச் சொல்லதிகாரத் திற்குக் கல்லாடர் எழுதிய உரையைப் பதிப்பிக்கவேண்டும் என முடிவு செய்து பதிப்பிக்கும் தொண்டினை எனக்கு அருளிச் செய்தது. ஏடு தேடு படலம் - மேலே கண்ட சுவடி நிலையம், நூல் நிலையத்துள்ள ஒரு சுவடியை நன்றாகப் பெயர்த்து எழுதி அதனை அச்சுக்கு அனுப்புமாறு என்னை வேண்டிக் கொண்டது. அவர்கள் பெயர்த்து எழுதிய பிரதி சரியான பிரதியே என்று நிலையத் தலைவர்கள் உறுதி கூறியதை ஒட்டி அப்படியே அச்சிடுவது மட்டுந்தான் பதிப்பாசிரியனுடைய தொண்டு என நான் கருதவில்லை. ஆகையால் கல்லாடர் உரைக்கு உரைச் சுவடிகள் வேறு கிடைக்குமா எனத் தேடத் தொடங்கினேன். மேற்படி நூல் நிலையத்திலேயே வேறு பிரதியும் இருந்தது. மதுரைத் தமிழ்ச் சங்க நூல் நிலையத்தில் இருந்து பிரதி ஒன்றை மேற்படி சுவடி நிலையமே எனக்கு வரவழைத்துத் தந்தது. சென்னை அடையாற்றில் உள்ள கலாnக்ஷத்திர நூல் நிலையம் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களின் கையெழுத்துச் சுவடிகளை வைத்திருப்பது அறிந்தேன். ஐயரவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்தும், படைத்த கல்லாடர் உரைப்பிரதி அங்கே உண்டென அறிந்தேன். அதனை வெளியே எடுத்துச் செல்லக் கூடாதாகையால் சாந்தி சாதனத்தை ஏற்படுத்திய திரு.எஸ். ராஜம் அவர்களின் பேருதவியால் என்னுடைய நண்பர் திரு. சிவப்பிரகாசம் பிள்ளை எங்களிடம் இருந்த பிரதியோடு கலாnக்ஷத்திரப் பிரதியை ஒப்பு நோக்கிப் பாட பேதங்களைக் குறித்துவர முடிந்தது. பவானந்தம் பிள்ளையவர்கள் தேடிச் சேர்த்த கல்லாடனார் ஒரு பகுதியும் துரைத்தன கையெழுத்து சுவடி நிலையத்தில் வந்து சேர்ந்தது. திரு நமச்சிவாய முதலியார் அவர்களுடைய பிரதி அப்போது கிடைக்கவில்லை. திரு முதலியார் அவர்கள் அச்சுக்கு அனுப்பிய திருத்தப் பிரதியைப் பார்த்து எழுதிய தம் பிரதியைத் திரு. வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் எனக்கு அன்புடன் உதவினார்கள். “ஞானசம்பந்தத்தில்” வந்த கல்லாடர் உரைப்பகுதிகளையும் தனியாகக் கட்டிவைத்திருந்ததையும் அவர் எனக்குத் தந்தார். என்னுடைய பதிப்பு முடிந்த பின்னர் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொண்டாற்ற வந்தபோது திரு. ரா. ராகவையங்கார் வழியாக அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையத்திற்குக் கிடைத்த கல்லாடர் உரைப்பிரதியும் எனக்குக் கிட்டியது. இது காலந்தாழ்த்துக் கிட்டியதால் இதில் கண்ட படபேதங்களை இந்தப் பதிப்புரையிலேயே குறித்திருக்கின்றேன். சென்னைக் கையெழுத்துச் சுவடி நிலையத்திலிருந்த நான் பெயர்த்து எழுதித் திருத்தி வைத்திருந்த சுவடியும் என்னிடம் இருந்தது. அந்த நிலையத்தில் பழைய பிரதி ஒன்று இருந்தது. அதிலிருந்து பெயர்த்து எழுதிய மற்றோர் பிரதியும் இருந்தது. இந்த இரண்டாவது பிரதியில் ஒரு பகுதி பல திருத்தங்களுடன் விளங்கியது. இந்தத் திருத்தங்கள் அச்சில் வெளிவந்த சேனாவரையர் உரையையும் நச்சினார்க்கினியர் உரையையும் பின்பற்றி எழுந்தவை என அந்தப் பிரதியே குறிப்பிடுகிறது. பிரதிகளைப் பற்றி விளக்கம் - இந்தக் கையெழுத்துப் பிரதிகளும் அச்சிட்ட பிரதிகளும் எளிதே குறிப்பிடப்படுவதற் காக ரோமன் எண்களால் கீழே சுட்டியுள்ளேன். அதனைக் கீழே அறியலாம். (i) என்ற எண்ணுள்ள சுவடி சென்னை அரசாங்கக் கையெழுத்துச் சுவடியே ஆகும். காகிதத்தில் எழுதிய பிரதி இது. சில இடங்களில் காகிதம் நொறுங்கிக் கொண்டே வருகிறது. (ii) என்பது இதனைப் பார்த்துப் பெயர்த்து எழுதிய காகிதச் சுவடி. முன்னே நான் குறிப்பிட்டபடி இதன் முதற்பகுதியில் திருத்தங்கள் உள்ளன. ஆனால் இந்தத் திருத்தங்கள் வேறு கல்லாடர் உரைப்பிரதியைப் பார்த்து எழுதப்படவில்லை. சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகள் அச்சிற்கு வந்தனவற்றை ஒட்டித் திருத்தப் பெற்றவை. இந்தப் பிரதி நல்ல நிலையில் காப்பாற்றப் பெற்றுள்ளது. கையெழுத்தும் முன்னைய பிரதியைவிட நன்றாக இருக்கிறது. இதைப் பெயர்த்து எழுதித்தான் நூல் நிலையத்தார் அச்சிடவேண்டுமென எனக்கு அனுப்பினார்கள். இதனைப் பெயர்த்து எழுதியவர் சரியான பிரதி என்று உறுதி கூறியது ஒன்றை மட்டும் கொண்டு இதனை அடிப்படைப் பிரதியாகக் கொள்வதற்கில்லை. இதில் உள்ள திருத்தங்கள் சிலபோது கொள்ளத் தக்கன என்று தோன்றினாலும் அந்தத் திருத்தங்களை அடிப்படையாகக் கொள்வதற்கு இல்லை. மூலத்தையே அடிப்படையாகக் கொள்வதுதான் பதிப்பாசிரியனது கடமை. எனவே (i) என்ற எண்ணுள்ள பிரதியையே இந்தப் பதிப்புக்கு அடிப்படையாகக் கொள்ளுதல் வேண்டும். இந்த உரைப்பிரதிகள் 254 ஆவது சூத்திரத்தின் உரைப்பகுதியோடு சிதைந்து முடிகின்றன. அங்கே (ii) ஆம் பிரதி, அதற்கு மேல் உரை அகப்படவில்லை என்று குறிக்கின்றது. இருந்தாலும் பின்னேயும் சில வரிகளில் அகப்பட்டுள்ள சொற்றொடர்களை (i) என்ற பிரதியை ஒட்டி எழுதியுள்ளது. (iii) என்பது பவானந்தர் கழகத்திலிருந்து சென்னை அரசாங்கக் கையெழுத்துச் சுவடி நிலையத்திற்கு வந்த காகிதப் பிரதி. இங்கே இந்த உரையின் இரண்டாவது பாகம் கிடைக்கவில்லை. முதல் பாகம் 225-ஆவது சூத்திரத்தின் உரையோடு முடிகிறது. அதாவது இந்தப் பதிப்பில் 300-ஆவது பக்கத்தில் 12-ஆம் வரியோடு நின்றுவிடுகிறது. அங்கே 27-ஆம் எண்ணுள்ள அடிக்குறிப்பைப் பார்க்கலாம். இந்த முதற்பகுதி நல்ல நிலையில் கிடைத்துள்ளது. கையெழுத்தும் தெளிவாகவும், அழகாகவும் இருக்கக் காண்கிறோம். (iஎ) என்பது மதுரைத் தமிழ்ச்சங்க நூல் நிலையத்திலிருந்து வந்த பிரதி. இது (ii) என்பதைப் பார்த்துப் பிரதி செய்தது அல்ல. (i) ஆம் பிரதியைப் பார்த்தே எழுதியது. (ii) ஆம் பிரதியை எழுதுவதற்கு முன்னரே இந்தப் பிரதி எழுந்திருத்தல் வேண்டும். அதனால் இங்கே ஒன்றும் திருத்தங்கள் இல்லை. இது சரியாகப் பார்த்து எழுதிய பிரதி அல்ல. மூலப் பிரதியில் உள்ள பலவரிகள் இத்தில் விடப்பட்டு உள்ளன. (i) ஆம் பிரதி இப்போது நொறுங்கியுள்ள இடங்களில் இந்தப் பிரதி மூலவடிவத்தைக் காணத் துணை செய்கிறது. (எ) என்பது வெங்கடராஜுலு ரெட்டியார் தயாரித்த பிரதி. அவருடைய அழகிய கையெழுத்திலேயே இது அமைந்துள்ளது. அவருக்குத் தோன்றிய திருத்தங்களை அவர் செய்துள்ளார். ஆனால் அத்திருத்தங்களை வேறுபிரித்து அறியக் கூடும். இந்தப் பதிப்பின் கீழ்க் குறிப்புக்களில் இத்திருத்தங்களை வேறுபிரித்துக் காட்டியிருக்கக் காணலாம். இந்தப் பிரதியோடு (iii) பெரிதும் ஒத்துள்ளது. எனவே லு என்று பின்குறிக்கப்படும் பிரதியிலிருந்து (iii) உம் இதன் மூலமும் பிரதி செய்யப்பட்டவை போலும். (எ) ஆம் பிரதியும் 254-ஆவது சூத்திர உரைப் பகுதியோடு முடிவடைகிறது. ஏறக்குறைய எல்லாப் பிரதிகளும் இந்த இடத்தோடேயே முடிவடைவதால் இவை எல்லாம் இவ்வாறு சிதைந்து முடிவடைந்த பிரதியில் (இதனை ஒ என்று குறிப்பிடலாம்) இருந்து வெவ்வேறு பிரதி செய்யப்பட்டவையே என்றே தோன்றுகிறது. பாடபேதங்கள் பல இருப்பது கொண்டு அந்தச் சிதைந்த மூலப் பிரதி நீண்ட காலத்திற்கு முன்னதாகவே எழுந்தது எனக் கொள்ளலாம். (எi) என்பது ‘ஞானசம்பந்தம்’ என்ற திங்கள் இதழில் திரு. தண்டபாணி தேசிகர் பதிப்பித்த பிரதி. திருத்தவேண்டும் என்று அவர் கருதிய இடத்தில் எல்லாம் அவர் திருத்தி உள்ளார். பொருள் விளங்குவதற்கு இத்திருத்தங்கள் வேண்டுமென அவர் கருதினார் எனத் தெரிகிறது. இது (ii) ஆம் பிரதியை ஒட்டியது. (எii) என்பது இந்தப் பதிப்பாசிரியர் (ii) ஆம் பிரதியைப் பார்த்து எழுதி வைத்துக் கொண்டது. இங்கேயும் திருத்தங்கள் உள்ளன. 254-ஆவது சூத்திரத்தோடு இது முடிகிறது. (எiii) என்பது டாக்டர் உ.வே. சாமிநாதையர் தேடிப் பெற்றது. இப்போது கலாnக்ஷத்திரத்தில் இருக்கிறது. பிற பிரதிகளில் கிடைக்காத பகுதிகள் ஒரு சிறிது இப்பிரதியில் கிடைத்துள்ளன. இந்தப் பிரதியின் மேலுள்ள ஒரு குறிப்பில் “யாழ்ப்பாணத்துச் சதாசிவம் பிள்ளை அவர்களின் பிரதி” என்ற குறிப்பு உண்டு. இவர் ஆறுமுக நாவலரின் சீடர். இப்பிரதியும் 254 ஆவது சூத்திர உரையோடு முடிகிறது. (iஒ) என்பது அண்ணாமலைப் பல்கலைக கழகத்து நூல் நிலையத்தில் உள்ளது. இதில் கல்லாடர் உரையின் பிற்பகுதியே கிடைக்கிறது. 107 ஆவது சூத்திரத்தோடு இந்த உரைப்பகுதி தொடங்குகிறது. எளிதில் சிதையாத நல்ல காகிதத்தில் இது அமைந்துள்ளது. இந்தப் பதிப்பினை அச்சிட்டு வரும்போது இந்தப் பிரதி கிடைக்கவில்லை. ஆகையினாலே அந்த உரையில் கிடைத்த பாடபேதங்களை இந்த முகவுரையின் பின்னேயே விளக்கியுள்ளேன். இந்த உரைப் பகுதி இந்தப் பதிப்பில் 344-ஆம் பக்கத்தில் கண்ட முதல் வரியோடு நின்றுவிடுகிறது. (ஒ) என்பது காலஞ்சென்ற கா. நமச்சிவாய முதலியார் அச்சிட்ட உரைப் பிரதி. இது முழுதும் கிடைக்கவில்லை. சில பக்கங்கள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அமைத்த காட்சியில் கண்டதை முன்னரே கூறினோம். (ஒi) என்பது மேற்கூறிய (ஒ) என்பதற்கு மூலமாக அமைந்த கையெழுத்துப் பிரதி. இதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் மேற்கூறியபடி (எ) என்பது இதனைப் பார்த்துப் பெயர்த்து எழுதிய பிரதியே ஆகும். பிரதிகளின் குடிவழி - இந்தப் பிரதிகளை மேல்வாரியாக ஆராய்ந்ததின் பயனாக எனக்குத் தோன்றியபடி அவற்றின் குடிவழியைக் கீழே குறிக்கின்றேன். மேலே விளக்கிய காரணங்களால் இந்தக் குடிவழியின்படி மூலப் பிரதியை ஊகித்து முடிவு செய்வதற்கு இடமில்லாமற் போய்விட்டது. எனவே அத்தகைய ஆராய்ச்சியினைப் பின்னேதான் செய்தல் வேண்டும். வேண்டுகோள் - எனக்குத் தெரிந்தவரைக்கும் இந்தப் பிரதிகள் தாம் அகப்பட்டன. வேறு பிரதிகள் இருக்கலாம். ஆனால் என் கெட்ட காலம் அவை எனக்குக் கிடைக்கவில்லை. வேறு பிரதிகள் எவரிடத்தேனும் இருக்குமானால் அவற்றை எனக்கு அனுப்பினால் இரண்டாவது பதிப்பில் அவற்றில் காணும் பாடபேதங்களைப் பதிப்பிப்பதோடு அவர்களுக்கும் நன்றி செலுத்துவேன். பாடபேதம் கொண்ட முறை - அடிப்படைப் பிரதிகளில் இல்லாத பாடங்கள் இந்தப் பதிப்பில் இல்லவே இல்லை. ஐஐ, ஏஐ, ஏஐஐ என்ற அத்தகைய அடிப்படை மூலங்கள் அல்ல. அவை ஐ அல்லது ஐஐ-ஐம் பெயர்த்து எழுதியவை ஐ, ஐஐஐ, ஏ, ஏஐஐஐ இவையே இந்தப் பதிப்பிற்கு அடிப்படை. இவற்றில் கண்ட பாடங்களில் பொருத்தமெனத் தோன்றியவற்றைத்தான் கொண்டுள்ளேன். அப்படி பொருத்தமான பாடம் கிடைக்காதபோது பாடத்தை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டுள்ளேன். ஆனால் அடிக்குறிப்பிலே பெயர்த்து எழுதி யார் திருத்தி எழுதியவை உட்பட எல்லாப் பாடபேதங்களையும் குறித்துள்ளேன். இவற்றில் சில பாடபேதங்கள் பொருத்தமாகலாம் என இங்கேதான் குறிப்பிட்டுள்ளேன். எடுத்துக்காட்டுகளையும்கூட இப்படித்தான் பதிப்பித்துள்ளேன். இப்போது வெளிவந்துள்ள நூல்களின் பதிப்புக்களில் வேறுதக்க பாடம் இருந்தாலும் நான் மாற்றத் துணியவில்லை. தவறு என்று தெரிந்தபோதும்கூட மாற்றவில்லை. படிக்கின்ற அறிஞர்கள் இவற்றைத் திருத்திக்கொள்ளக்கூடும். தவறு என்று எனக்குத் தோன்றியவை அவர்கட்கு வேறு நல்ல அமைந்த எழுத்து வடிவங்களை மயங்கக்கொள்வதாலே சுவடி பெயர்த்து எழுதுவோர் கொண்ட பாடவேறுபாடுகள் தோன்றியிருக்கக்கூடும் என்பதனையும் அடிக்குறிப்பில் குறித்துள்ளேன். அவ்வாறு எழக்கூடிய மயக்க நிலையையும் விளக்கியுள்ளேன். பழைய வடிவெழுத்தை ஆராயும் பண்டை எழுத்தியலைப் பற்றி நூல் எழுத இவ்விளக்கங்கள் பயன்படலாம். இப்பதிப்பிற்கு உதவிய எழுத்துச் சுவடிகளில் இருந்து எடுத்துக் காட்டுக்களாக ஒரு பிரதிக்கு ஒரு போனமைக்கு வருந்துகிறேன். உளறல்கள் என்று தோன்றும் பாடபேதங்களையும் இந்தப் பதிப்பில் கொடுக்க நான் பின்வாங்கவில்லை. இன்றுள்ள நிலையில் பின்னெழக்கூடிய ஆராய்ச்சிக்கு இவற்றில் எவை ஒரு பயனும் தராது போய்விடும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது ஒரு காரணம். ஷேக்ஸ்பியருடைய நூல்களை அச்சிட்டோர் முன்னோர் உளறல்கள் என்று கொண்ட பாடங்களையும் இப்போது பொருளாழம் உள்ளவைஎனக் கொண்டு பெயர்த்து எழுத வந்தவர்கள் தமிழை உச்சரித்த வழக்கத்தையும் அவர்கள் காலத்தில் வழங்கிய கையெழுத்து முறையினையும் அறிய முடிகின்றது என்பது இரண்டாவது காரணம். பொதுமக்கள் பேசிய பேச்சு மொழியின் வரலாற்றையும் தமிழ் வடிவெழுத்தின் வரலாற்றையும் எழுத வருவோர்க்கு இது பெரிதும் உதவும் என்று கருதுகின்றேன். 5. கல்லாடர் பெயர் - இந்தப் பதிப்பிலுள்ள உரையின் ஆசிரியர் கல்லாடர். ஆனால் இவரைப்பற்றி நம்முடைய கெட்டகாலம் ஒன்றுமே தெரியவில்லை. இந்தப் பெயரை உடையவர் சங்க காலத்துப் புலவருள் ஒருவர். பின்னே பதினொராந்திருமுறையில் காணும் கண்ணப்பர் மறத்தைப் பாடிய சைவப் புலவர் மற்றோர்வர். இவருக்கும் பின்னாலே வந்து கல்லாடம் என்ற அகப்பொருள் நூலைப் பாடியவரும் கல்லாடர் என்ற பெயரையே உடையவர். தமிழ் அறிவு படைத்த நான்காவது கல்லாடரே முன்னைய மூவர்கட்கும் பின்னால் வந்து இந்த உரையை எழுதியவர். திருவாசகத்து மாணிக்கவாசகர் “கல்லாடத்துக் கலந்தினிதருளி” என்று பாடுவதால் கல்லாடம் என்பது ஓர்ஊரின் பெயராகும். அந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற பொருளிற் கல்லாடர் என்ற பெயர் வழங்கியிருத்தல் கூடும். காஷ்மீரச் சைவத்தைப்பற்றி வடமொழியில் எழுதிய பேராசிரியர் ஒருவர்க்குக் “கல்லாட” என்ற பெயர் உண்டு. தமிழ்ப் பெயருக்கும் வடமொழிப் பெயருக்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். காலம் - பிரயோக விவேகத்தை உரையுடன் தமிழில் எழுதிய சுப்பிரமணிய தீட்சிதர் ஒருவர்தான் கல்லாடர் உரையை அந்தப் பெயரோடு சுட்டுகிறார். தீட்சிதர் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அந்த நூலை எழுதினார். எனவே, இந்த உரை தீட்சிதர் காலத்திற்குப் பின்னால் உண்டாயிருக்க முடியாது. ஆனால் இன்னும் எவ்வளவு முன்னுக்கு இவருடை காலத்தைக் கொண்டு போகமுடியும்? நச்சினார்க்கினியர் சேனாவரையரையும் இளம்பூரணரையும் சுட்டுகின்றார்; ஆனால் கல்லாடரைச் சுட்டவே இல்லை. ஆனால் நச்சினார்க்கினியர் தாம் மறுக்கும் கொள்கையைக் கூறியவர்கள் அத்தனை பெயர்களையும் சுட்டுகின்றார் என்று கூறமுடியாது. நன்லூல் என்ற பெயரையோ பவணந்தி என்ற பெயரையோ அவர் அறிந்திருந்தும் சுட்டவே இல்லை. இருந்தாலும் நன்னூலை அறிந்திருந்தார். குறிப்பாக நடவாமடிகை என்பதை அறிந்திருந்தார் என்பதில் ஐயமில்லை. எனவே கல்லாடரையும் அறிந்திருக்கலாம். இருந்தாலும் இன்று நமக்குக் கிடைத்துள்ள கல்லாடர் உரையில் பல உரைப்பகுதிகள் இளம்பூரணர் உரையிலிருந்தும் சேனாவரையர் உரையிலிருந்தும், நச்சினார்க்கினியர் உரையிலிருந்தும் எடுத்துக்கொள்ளப் பட்டவை போலத் தோன்றுகின்றன. மொழி நடையைப் பார்த்தாலும் நச்சினார்க்கினியர் காலத்திற்கு முந்தியது என்று கல்லாடர் உரையைக் கொள்வதற்கில்லை. கருத்தும் எழுத்தும் - ஆனால் ஓர் உண்மையை இங்கே விளக்குதல் வேண்டும். ஒரு நூலின் உரையாக ஓர் ஆசிரியர் காலத்தில் எழுந்தது செவிவழியாகவே தலைமுறை தலைமுறை யாக வழங்கி வரலாம் என்பதை இறையனார் அகப்பொருள் உரையைப் படித்தவர்கள் நன்கு அறிவார்கள். அத்தகைய இடங்களில் இந்த உரைகள் பின்னே எழுதப் பெற்று வழங்க வரும்போது முதலில் உரை கண்டவர் கூறிய சொற்றொடர் களாகவே அமைந்து வரும் என்று கொள்வதற்கு இல்லை. அங்கு எல்லாம் பொதுவான கருத்து மட்டுமே பழையது என்று கூறமுடியும். அந்தக் கருத்துக்கள் எல்லாமுமே பழையன என்றும் கொள்ளமுடியாது. அடிப்படைக் கருத்தைப் பின்வந்தோர் விளக்கியும் திருத்தியும் புதுக்கியும் மாற்றிக்கொண்டே வந்திருக்கலாம். அங்கே எல்லாம் கிடைக்கும் உரை ஒரு ஆசிரியரது என்று கொள்வதற்கு இல்லை. ஒரு ஆசிரியப் பரம்பரையின் மரபானது முடிவாகக்கொண்ட வடிவம் என்றே அந்த உரையைக் கூறமுடியும். இந்தக் கண்கொண்டு பார்ப்போ மானால் இந்த உரையை அத்தகைய கல்லாட ஆசிரியர் பரம்பரைக்கு உரியது எழுத்து வடிவில் வந்த உரையைத்தான் எனலாம். இந்தப் பரம்பரையில் வந்த ஆசிரியர்கள் தங்கள் கருத்திற்கு உகந்தாற்போலப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களை அப்படியே பெயர்த்து எழுதியிருக்கலாம். அப்படிக்கொள்ளும்போதும் இந்த உரை எழுத்து வடிவில் வந்த காலம் நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பிந்தியது எனலாம். கல்லாடர் பரம்பரை முந்தியதே ஆனாலும் எழுத்து வடிவில் அது அமைந்தது 16 அல்லது 18-ஆவது நூற்றாண்டிலே தான் என்று கூறவேண்டும். சொற்றொடர் வேறுபாடுகள் - இந்த உரையிலுள்ள முதற்சூத்திரத்தின் விருத்தியுரை இறையனார் அகப்பொருளின் உரையின் முதற்பகுதியைப் பின்பற்றியது என்பது வெளிப்படை. இந்த மரபு எவ்வளவு முந்தியது என்பதனை இப்போது நாம் முடிவு கூறுவதற்கு இல்லை. இந்த உரையின் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலும் உரையில் வரும் சொற்றொடர் களையோ சொற்களையோ அப்படியே பாதுகாக்கவேண்டும் என்னும் எண்ணம் இருந்ததாகத் தோன்றவில்லை. சூத்திரங்களுக்கு முன்னுரையாக வரும் பகுதிகளிலே எளிதில் இந்த வேற்றுமையைக் காணலாம். “என்பது சூத்திரம்” என்று ஓர் இடத்தில் எழுதுகின்ற பிரதி “இச்சூத்திரம் என்நுதலிற்றோ எனின் . . . . உணர்த்துதல் நுதலிற்று” என்று மற்றோரிடத்தில் எழுதும். வேறு சில இடங்களில் “இதன் பொருள் . . . என்றவாறு” என்று எழுதும். ஏ என்ற பிரதி முதற்பகுதியில் “இதன் பொருள்” என்றும் இரண்டாம் பகுதியில் “உரை” என்றும் குறித்துவிட்டுப் பொருள் எழுதத் துவங்கும். 6. உரையாசிரியர் - உரையாசிரியர் என்றால் இளம்பூரணர் என்றே கொள்கின்ற மரபு சேனாவரையர் உரையிலிருந்து நமக்குத் தெளிவாக விளங்குகிறது. ஆனால் சேனாவரையர் உரையாசிரியர் கொள்கை என்று சுட்டுகின்ற பகுதி இன்று நமக்குக் கிடைத்துள்ள இளம்பூரணர் பிரதிகளில் காணக் கிடைக்கவில்லை. ஆனால் கல்லாடர் உரையில் இவற்றில் சில நமக்குக் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாகச் சூத்திரம் நான்காவதன் உரையைப் பக்கம் 17 வரிகள் 4-11-இல் காண்க. இதுகொண்டு கல்லாடரைத்தான் உரையாசிரியர் எனச் சேனாவரையர் குறிக்கின்றார் என்று முடிவுகட்ட முடியாது. இளம்பூரணர் உரை இன்று நமக்கு வந்துள்ள வடிவில் அப்பகுதிகள் மறைந்து போயிருத்தல் வேண்டும். கல்லாடர் உரை எழுத்து வடிவில் அமைந்தபோது இளம்பூரணரது அந்த உரைப் பகுதிகள் வழங்கி இருந்தமையால் இந்த உரையில் இடம்பெற்று விளங்குகின்றன. இப்படி நமக்கு இன்று கிடைக்காத உரைப்பகுதிகள் கல்லாடர் உரையில் மேலும்பல இருக்கலாம். ஒப்புமைப் பகுதிகள் - பிற உரையாசிரியர்களின் உரைப் பகுதிகளின் எதிரொலிகள் இங்கே கேட்கின்றன என்று மேலே கூறினோம். அத்தகைய இடங்களைக் கீழே சுட்டுகின்றோம். கல்லாடர் உரையில் பிற உரையாசிரியர்களுடைய உரைப்பகுதிகள். இந்தப் பதிப்பில் எந்தெந்தப் பக்கங்களில் எந்தெந்த வரிகளில் கேட்கலாம் என்பதை ஆங்கில முகவுரையில் ஏ என்று கண்ட தலைப்பின்கீழ்த் தமிழிலேயே தந்துள்ளமையால் அதனைப் பெயர்த்தும் இங்கே எழுதிய பக்கத்தை வளர்க்க விருப்பம் இல்லை. அங்கே வேண்டிய குறிப்புக்களையும் கொடுத்துள்ளேன். இங்கே ஒன்றை மனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். கல்லாடர் ஓரிடத்திலாவது இந்த உரையாசிரியர்கள் ஒருவர் பெயரையும் சுட்டவில்லை. இது அவர்கொண்ட மரபு. பின் கிடைத்த பாட பேதங்கள் - இப்படியே ஏஐ எனக் கண்ட ஆங்கில முகவுரைப் பகுதியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஏட்டில் கண்ட பாட பேதங்களை இந்தப் பதிப்பிற் கண்ட பாடபேதங்களோடு ஒப்புநோக்கிக் காட்டியுள்ளேன். இங்கே மூன்று வகை அடையாளங்களைக் காணலாம். ஒ என்பது இந்தப் பதிப்பில் விடுபட்ட பகுதிகள் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன. + சில வேறு பாடத்தையும் இங்கே காணலாம். ச மிகச் சிறிய மாறுதல்களே. ஆனால் பொருள் மிகப் பெரிதும் சில இடங்களில் வேறுபடும். இவையெல்லாம் ஆங்கில முன்னுரையில் தமிழிலேயே உள்ளன. 7. விளக்கங்கள் - என் மாணவர்கள் சில இடங்களைப் பற்றிக் கேட்டவற்றிற்கு நான் தந்த விளக்கங்களையும் திருத்தங்களையும் பிறருக்கும் பயன்படும் என்று கருதி ஆங்கில முன்னுரைப் பகுதியில் தமிழிலேயே தந்துள்ளேன். இந்த விளக்கங்களும் திருத்தங்களும் எந்தெந்த இடங்கட்கு உரியன என்பதை இந்தப் பதிப்பின் பக்கமும் வரியும் கொடுத்தே விளக்கியுள்ளேன். 8. பிழை திருத்தங்கள் - ஆங்கில முன்னுரையில் ஏஐஐஐ என்ற பகுதியில் பிழை திருத்தங்களைத் தமிழிலேயே தந்துள்ளேன். இன்று நம்முடைய அச்சகங்கள் தவறே இல்லாமல் பதிப்பிக்கும் நிலைக்கு உயரவில்லை. இது வருந்துதற்கு உரியதே. ஆனாலும் இதன் காரணங்களை நாம் அறிவோம். இந்தப் பதிப்பை ஓத வருவோர் திருத்திக்கொள்ள வேண்டிய இடங்களை இங்கே சுட்டியுள்ளேன். இன்றியமையாத சில திருத்தங்களும் விளக்கங்களும் மட்டுமே இங்கு வந்துள்ளன. 9. நன்றி - என்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வாய்ப்புப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளுகிறேன். இதைப் பதிப்பிக்கும் தொண்டினை எனக்கு அளித்த ஆலோசனைக் குழுவிற்கும், இதைப் பதிப்பிக்கும்போது நூல்நிலையத் தலைவர்களாய் இருந்து வேண்டிய உதவி எல்லாம் செய்த சென்னை அரசாங்கக் கையெழுத்துச் சுவடி நிலையத் தலைவர்களுக்கும், பேரறிஞர் உ. வே. சாமிநாதையரவர்களுடைய பிரதி கலாnக்ஷத்திரத்தில் இருந்ததை ஒப்புநோக்கல் முதலியன செய்ய ஏற்பாடு செய்து தந்த எனது நண்பர் திரு. எஸ். இராஜம் அவர்கட்கும், இவ்வாறு ஒப்புநோக்க உரிமை தந்த சாமிநாதையர் நூல்நிலையத்தவர்க்கும், தம்முடைய கைப்பிரதியையும் “ஞானசம்பந்தத்தில்” வெளியான அச்சுப்பிரதிகளையும் எனக்கு அன்புடன் உதவிய காலஞ்சென்ற திரு. வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்களுக்கும், அச்சான பகுதியிற்கண்ட பிழைகளைத் திருத்தி உதவிய திரு.க.ஆறுமுகம் (டெல்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர்) அவர்களுக்கும், சொல்லதிகார உரைகளில் கல்லாடர் உரையோடு ஒத்த பகுதிகளாய் வருவனவற்றைத் தேடி வரிசைப்படுத்தித் தந்த திரு. ப. அருணாசலம் (விரிவுரையாளர் மலேயாப் பல்கலைக் கழகம்), இ.அண்ணாமலை, கோ. விஜயவேணுகோபால் (மொழியியல் விரைவுரையாளர்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) ஆகியோருக்கும், அண்ணாமலைப் பல்கலைக் கழக எட்டுப் பிரதியோடு இப்பதிப்பினை ஒப்பு நோக்கிப் பாடபேதங்களைக் குறித்துத் தந்த திருமதி. க. பரமேசுவரிக்கும், குமாரி என். இராஜலெட்சுமிக்கும் (இந்தியப் பல்கலைக் கழக மானியக் குழுவின் மொழியியல் ஆராய்ச்சியாளர்கள்) மேற்படி எட்டுச் சுவடியை ஒப்புநோக்க உரிமை தந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும் என்னுடைய மனங்கலந்த நன்றி உரியதாகும். உலகத்தில் எதுவுமே துன்பம் கலவாத இன்பமாக நிகழ்வது இல்லை. சென்னை அரசாங்கக் கையெழுத்துச் சுவடி நிலையத்தில் ஏடுபெயர்த்து எழுதுவோராகத் தொண்டாற்றிய என் நண்பர் திரு.சிவப்பிரகாசம் பிள்ளையவர்கள் ஏடுகளை ஒத்துப்பார்த்துப் பிரதியை அமைத்தும் அச்சகத்தில் எழுத்துக்களைத் திருத்தியும் அன்போடும் ஊக்கத்தோடும் உதவி வந்தார்கள். ஆனால் இந்த நூல் முடிவான வடிவில் வெளிவருவதைக் காண்பதற்கு முன்னகவே காலமாயினார். திரு. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்களும் இப்போது நம்முடன் இல்லை. அவர்களுக்கு என்னுடைய கடப்பாட்டினை வழிபாடாகச் செலுத்திக் கொள்கிறேன். அறிஞர் உலகத்தில் அவர்கள் மிக மிக விரும்பிய இந்த நூல் இப்போது வழங்கி வருவதை உணர்ந்து அவர்கள் ஆன்மசாந்தி பெறுவதோடு இந்தப் பதிப்பையும் வாழ்த்துவார்கள் என வேண்டிக்கொண்டு இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். - தெ. பொ. மீனாட்சிசுந்தரன் முன்னாள் துணை வேந்தர், மதுரைப் பல்கலைக்கழகம் தொல்காப்பியம் இயற்றப் பெறுதற்குரிய காரணம் தம் காலத்தில் நிகழ்ந்த கடல்கோளால் தமிழகத்தின் தென் பாலமைந்த பெரு நிலப்பரப்பும் தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்ட பேரிழப்பினையுணர்ந்து மனங்கவன்ற ஆசிரியர் தொல் காப்பியனார், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியிற் கருத்துடைய ராய்த் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்ய எண்ணினார். குமரிநாட்டின் தென்பால் தென்மதுரைத் தலைச் சங்கத்திற் சான்றோர் பலரும் போற்றி வளர்த்த தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளர்ச்சிபெற்றுத் திகழ்ந்தது. முத்தமிழ்த் துறையிலும் விரிந்த பல இலக்கியங்கள் தோன்றவே அவற்றின் அமைதியை விளக்கும் இலக்கண நூல்கள் பல தோன்றுவனவாயின. இங்ஙனம் விரிந்து பரந்த தமிழ் நூற்பரப்பின் அமைதியைக் குமரிநாடு கடல் வாய்ப்பட்ட பின்னர் வாழ்ந்த மக்கள் அறியும் ஆற்றலற்றவராயினர். வடநாட்டினராற் பேசப்படும் ஆரிய மொழியும் தமிழ் நாட்டில் சிறிது சிறிதாக இடம்பெறுவதாயிற்று. இரு மொழிகளுக்குமுரிய இயல்புகளுள் ஒன்று மற்றொன்றனோடு விரவும் வகையில் தென்தமிழ் மக்களும் வடவரும் அளவளாவும் நிலையேற்பட்டது. முத்தமிழுள் ஒன்றற் குரிய இயல்புகள் ஏனையவற்றுடன் இயைத்துரைக்கப்படுவன வாயின. பொதுமக்கள் தம் மொழித் திறத்தையும் பொருட்டிறத்தையும் பகுத்துணரும் ஆற்றலற்ற வராயினர். இந்நிலையில் தமிழ் மொழியின் சிறப்பில்பினை எல்லார்க்கும் விளங்க எடுத்துரைக்கும் இயற்றமிழிலக்கண நூலொன்று இன்றியமையாததாயிற்று. 1-6-1928 - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 44-45 தொல்காப்பியனார் காலம் இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிற்கும் மிகமிகத் தொன்மை வாய்ந்தது. தொல்காப்பியமாகும். எட்டுத் தொகை நூல்களுளொன்றாகிய புறநானூற்றிற் காலத்தால் மிகப் பழைய பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொற் பொருளமைதியினை ஆராயுங்கால் இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் சங்கத் தொகை நூல்களெல்லாவற்றிற்கும் காலத்தால் முற்பட்டதென்பது நன்கு புலனாம். கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவர்களுள் முதற்கயவாகுவின் காலம் கி. பி. 171 - 193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. செங்குட்டுவ னென்னும் சேரமன்னன், கண்ணகியார்க்குத் திருவுருவமைத்துக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலஞ் செய்த நாளில், இலங்கை வேந்தனாகிய கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியாரை வழிபட்டு வரம்பெற்றுச் சென்றான் எனச் செங்குட்டுவற்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்திற் குறிப்பிட்டுள்ளார். எனவே இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது தெளிவாதல் காணலாம்.1 இளங்கோவடிகளும், அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களும் தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அவ்வாறே எடுத்தாண்டுள்ளார்கள். ஆகவே திருக்குறளாசிரியர் திருவள்ளுவனார் காலம் கி. மு. முதல் நூற்றாண்டெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை - 10, பக். 87-88 தொல்காப்பியம் நுதலிய பொருள் வண்புகழ்மூவர் தண்பொழில் வரைப்பிலே வழங்கும் செந்தமிழ்மொழியின் உலகவழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக்கொண்டு எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகையிலக்கணங்களையும் முறைப்பட ஆராய்ந்து இவற்றின் இயல்புகளையெல்லாம் தொல்காப்பியனார் தாம் இயற்றிய தொல்காப்பிய நூலின் கண்ணே தொகுத்துக் கூறியுள்ளார். இந்நூல் சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக் களைஉடைய பிண்டமாக அமைந்துளது. ஆசிரியப்பாவைப் போன்ற யாப்பிலமைந்த நூற்பா சூத்திரம் எனப்படும். ஆசிரியப்பாவுக்கு அடிவரையறையுண்டு. இந்நூற்பாவுக்கு அடிவரையறையில்லை. அடிவரையறை இல்லாத செய்யுள்வகை ஆறு என்பர் தொல்காப்பியர். அவற்றுள் நூற்பாவும் ஒன்று. கண்ணாடியினகத்தே எதிர்ப்பட்ட பொருள் இனிது விளங்குமாறு போன்று படித்த அளவிலேயே ஆராயாமற் பொருள் எளிதில் விளங்க இயற்றப்படுவதே நூற்பாவாகிய சூத்திரமாகும். அவற்றுள், சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே(162) எனவரும் செய்யுளியற் சூத்திரம் சூத்திரத்தியல்பினை நன்கு விளக்குதல் காண்க. ஒத்த இனத்தனவாகிய மணிகளை ஒரு மாலையாகக் கோத்தமைப்பதுபோன்று ஒரினமாக வரும் பொருள்களை ஒருசேர இயைத்துரைத்தற்கு இடமாக அமைவது ஓத்து எனப்படும். இதனை இயல் என்ற பெயராலும் வழங்குதலுண்டு. பல்வேறு வகைப்படவரும் பொருளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக்கணங் கூறுவதாய் அவையெல்லாவற்றையும் தன்னுள்ளே யடக்கி நிற்பது படலம் எனப்படும். சூத்திரம், ஓத்து, படலம் என்னும் இம் மூன்றுறுப் பினையும் அடக்கி நிற்பது பிண்டம் எனப்படும். இவ்வாறு மூன்றுறுப்படக்கிய பிண்டமாக அமைந்ததே இத்தொல் காப்பியமாகும். இதன்கண்ணுள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலம் என்னும் உறுப்புக்களாம். படலத்தின் உள்ளுறுப்பாக அமைந்தவை ஓத்துக்கள். ஓத்தின் உள்ளுறுப்பாக விளங்குவன சூத்திரங்கள், சூத்திரமாகிய உறுப்பொன்றே உடையநூல் இறையனார்களவியல். சூத்திரம், ஓத்து ஆகிய இரண்டுறுப்புடைய நூல் பன்னிருபடலம், சூத்திரம், ஓத்து, படலம் ஆகிய மூன்றுறுப்பும் ஒருங்குடையநூல் தொல்காப்பியம். இம்மூவகை நூல்களையும் முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் எனவும் வழங்குதலுண்டு. (தொல்-செய்-இளம் - 165) தொல்காப்பியம் என்னும் இந்நூல் எழுத்து, சொல் பொருள் ஆகிய மூன்றதிகாரங்களை உடையதாய் ஒவ்வோ ரதிகாரங்களுக்கும் ஒன்பதொன்பது இயல்களாக இருபத் தேழியல்களால் இயன்றது. இந்நூற் சூத்திரங்கள் 1595-என இளம்பூரணரும், 1611-என நச்சினார்க்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளார்கள். கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக் கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும். இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணைஎன்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாஎன்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாஎன்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலி என்னும் வடிவு வேற்றுமை உடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன் மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னாது மக்கட் சுட்டென்றாஎன்றும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில் லனவும், அஃறிணையாமென்பதறிவித்தற்கு அவரல பிற என்ற என்றும் கூறுவர் தெய்வச்சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீறாகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகரமெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகரமெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத் துக்களுள் ஒன்றையிறுதியாகப் பெற்றசொல் ஒன்றன்பாற் சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப் பெற்றது பலவின் பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் இப்பதினோ ரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே “இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில்நின்று இசைக்கும் பதினோரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே” என்றார் தொல்காப்பியனார். இதனால் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச் சொல்லொடு முடிவது திணைவழு, ஒருதிணையுள் ஒருபாற்சொல் அத்திணையிலுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்றோர் பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்ஙனம் திணை, பால், இடம், காலம், செப்பு, வினா, மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தல் எனப்படும். வழுவற்கவென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவமைத்தலாகும். இவ்வியலின் 11-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 191-194 முதலாவது கிளவியாக்கம் 1. உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார்2 அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்கு3மன சொல்லே. 4என்பது சூத்திரம். இவ் அதிகாரம் என்நுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ எனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே விளங்கும். 5இவ் அதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் சொல்லதி காரம் என்னும் பெயர்த்து. 6அஃது இடுகுறியோ காரணக்குறியோ எனின், காரணக் குறி. 7என்னை காரணம் எனின், சொல்உணர்த்தினமை காரணத் தின் என்பது. என்னை? கிளவியாக்கம் 8எழுவாயாக, எச்சவியல் இறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளுஞ் சொல்லின்கண் கிடந்த விகற்பம் எல்லாம் 9ஆராய்ந்தார் எனக் கொள்க. அதிகாரம் 10என்றதன் பொருண்மை என்னைஎனின் முறைமை. அவ்ஓத்துக்களுள்ளும் எனைத்துவகையான் உணர்த்தி னாரோஎனின் எட்டு வகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த் தினார் என்பது. அவைஉணரச் சொல்உணர்ந்தானாம். அவை யாவைஎனின் இரண்டு திணைவகுத்து, அத்தி ணைக்கண் ஐந்து பால் வகுத்து, ஏழுவழு வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, ஆறு தொகை வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து, இரண்டிடத்தான் 11ஆராய்ந்தா ரான் என எட்டாவன. இவற்றுள் வழு என்பது அமையாச் சொல்லிற்கு இலக்கணம் ஆமாறு என்னையோ எனின் 12இன்மை முகத் தான் 13இலக் கணமாம் என்று உணர்க. அவற்றுள் இரண்டு திணையாவன: உயர்திணையும் 14அஃறிணையும் என இவை. ஐந்து பாலாவன:- ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, 15பல. ஏழு வழுவாவன:- திணைவழூஉ, பால்வழூஉ, இடவழூஉ, காலவழூஉ, மரபுவழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவை. வேற்றுமை எட்டாவன:- எழுவாய் வேற்றுமை முதலாக விளி வேற்றுமைஈறாகக் கிடந்தன. தொகை ஆறாவன:- வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத் தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன் மொழித் 18தொகை. மூன்று இடமாவன:- தன்மை, முன்னிலை, 19படர்க்கை. மூன்றுகாலமாவன:- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்20காலம். இரண்டு 21இடமாவன:- வழக்கும் செய்யுளுமாகிய இவை. இவ்வாறு 22சொல்லிலக்கணங்கள் எட்டு என்றதற்கு விதி உரையிற் கோடல் என உணர்க. இனிப் பிற இலக்கணம் உண்டு எனினும் 23இவை 24பெரும் பான்மைய என்னுதல். அவையும் இவற்றுள் அடங்கும். மற்றுச் சொல் 25என்ற பொருண்மை ஓசை என்றவாறு. ஆனால் கடலொலியும், 26காரொலியும், விண்ணொலியும் சொல்லாம் பிற எனின், அற்றன்று. ஓசை எனினும், அரவம் எனினும், இசை எனினும், ஒலி எனினும், எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல்லோசைக்கும் பொது. 27கிளவி எனினும், மாற்றம் எனினும், மொழி எனினும் இவை எல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசை28மேல் நிற்கும். எனவே, எழுத்தொடு புணராது பொருளறி வுறுக்கும் 29ஓசையும் உளவோ எனின், உள; அவை, முற்கும், 30வீளையும் இலதையும் எனனும் தொடக்கத்தன. அவை சொல்எனப்படா. பொருளறிவுறுக்கும் எழுத்தொடு புணரா ஓசை மேல31தன்று ஆராய்ச்சி. எனவே (1) எழுத்தல் ஓசையும், (2) எழுத்தொடு புணராது பொரு32ள் அறிவிக்கும் ஓசையும், 33(3)எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவிக்கும் ஓசையும், (4) எழுத்தொடு புணர்ந்34தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி என்றாற் போல்வரும் ஓசையும் என ஓசை நான்கு வகைப்படும். அந்நான்கனுள் பின் நின்றுற விரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படுகின்ற35து. மேலதிகாரத்தோடு 36இவ்வதிகாரத்திடை இயைபு என்னையோ எனின், மேற்பாயிரத்துள் எழுத்துஞ் சொல்லும் பொருளும் என நிறுத்தா37ன். நிறுத்த முறையானே எழுத்து ணர்த்திச் சொல்லுணர்த்திய எடுத்துக் கொண்டான்38 என்பது. 39எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை என்னை எனின், தன்னை 40உணர்த்தி நின்றவழி எழுத்து எனப்படும்; தான் இடை நின்று பொருளுணர்த்தியவழிச் சொல் எனப்படும். இம் முதலோத்து என்நுதலி யெடுத்துக் கொள்ளப் பட்டதோ எனின், ஓத்து 41நுதலியதூஉம் ஓத்தினது பெயரு ரைப்பவே விளங்கும். இவ் ஓத்து என்ன பெயர்த்தோ? எனின், 42கிளவியாக்கம் என்னும் பெயர்த்து. கிளவி என்பது சொல்; ஆக்கம் என்பது சொற்கள் பொருள்43கண் மேலாமாறு. சொற்கள் பொருள் கண் மேலாமாறு44 உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்று பெயர் பெற்றது. ஒருவன் மேலாமாறு இது, 45ஒருத்தி மேலாமாறு இது, பலர் மேலாமாறு இது, ஒன்றன் மேலாமாறு இது, பலவற்றின் மேலாமாறு இது, வழுவாமாறு இது, வழுவமையுமாறு இது எனப் பொருள்கண் மேலாமாறு46 உணர்த்தினமையின் கிளவியாக்கம் எனப் பெயர் ஆயிற்று. மற்று, ஏனை ஓத்துக்களுள்ளும் பொருள்கண் மேலாமாறே அன்றோ47 உணர்த்தினது? பொருளல்லவற்றின் மேலாமாறு உணத்தியதில்லை எனின், ஏனை ஓத்துக்களுள் பொருள்கண் மேலாயும் 48நின்றவற்று இலக்கணம் உணர்த்தினா49ன்; ஈண்டு அவை தம்மை ஆமாறுணர்த்தினான் என்பது. மற்றுப் பெயர்ச் சொல்லும், வினைச்சொல்லும், இடைச் சொல்லும், உரிச்சொல்லுமெனச் சொல்லும் நான்கே ஆதலான், ஓத்தும் நான்கே ஆதற்பால. எனின், ஆகா. என்னை? நான்கு வகைப்பட்ட சொல்லிற்குப் பொதுவிலக்கணம் இவ் ஓத் தினுள் உணர்த்தினா50ன். அவற்றுள் முதற்கண்ணது பெயர்ச்சொல்லாதற்கு இலக் கணம் வேற்றுமை ஓத்துள்ளும், வேற்றுமை மயங்கியலுள்ளும், விளிமரபினுள்ளும், உணர்த்தினா51ன். உணர்த்திய இலக்கணமுடைய பெயரைப் பெயரியலுள் உணர்த்தினா52ன். உணர்த்தி, அதன் பின்னே 53கிடந்த வினையை வினையியலுள் உணர்த்தினா54ன். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த இடைச்சொல்லை இடைச் சொல் ஓத்தினுள் உணர்த்தினா55ன். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த உரிச்சொல்லை உரிச்சொல் 56ஓத்தினுள் உணர்த்தினா57ன். பின்னை எல்லா ஓத்தினுள்ளும் எஞ்சி நின்ற சொற்களை எச்சவியலுள் உணர்த்தினா57ன். இவ்வகையான் எல்லாம் உணர்த்தினா58ன் ஆகலின் இவ்வோத் தெல்லாம் வேண்டியதூஉம், இம்முறையே கிடந்ததூஉம் ஆயிற்று. 59இதன் முதற் சூத்திரம் என்நுதலிற்றோ எனின், சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துதல் 60நுதலிற்று. இதன் பொருள்:- உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே 61என்பது உயர்திணை என்று சொல்லுப ஆசிரியர், மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருளை 62என்றவாறு. அஃறிணை யென்மனார் அவரல பிறவே என்பது அஃறிணை என்று சொல்லுப ஆசிரியர், அவரின் நீங்கிய அல்லவாகிய பிறபொருளை என்றவாறு. ஆயிரு திணையின் 63இசைக்குமன சொல்லே என்பது அவ் இரண்டு 64பொருளையும் உரைக்கும் சொற்கள் என்றவாறு. எனவே உயர்திணைச் சொல்லும் உயர்திணைப் பொருளும், அஃறிணைச் சொல்லும் அஃறிணைப் பொருளும் எனச் சொல்லும் பொருளும் அடங்கின. உயர் என்னுஞ் சொல்லின் முன்னர்த் திணை என்னுஞ் சொல்வந்து இயைந்தவாறு யாதோ எனின், ஒருசொல்முன் ஒருசொல் வருங்கால் தொகைநிலை வகையான் வருதலும், எண்ணுநிலை வகையான் வருதலும், பயனிலை வகையான் வருதலும் என, இம் மூன்று 65வகையல்லது இல்லை. இதற்கு விதி உரையிற் கோடல் என்னும் தந்திர உத்தி. அவற்றுள்:- தொகைநிலை வகையான் வந்தது - யானைக்கோடு என்பது. 66எண்ணுநிலை வகையான் வந்தது - நிலனுநீரும் என்பது. பயனிலை வகையான் வந்தது - சாத்தன் உண்டான் என்பது. மற்று, எச்சவகை அடுக்குவகை பொருள்கோள் வகை, ஆக்கவகை, இடைச் சொல்வகை, உரிச்சொல் வகை என்றாற் போலப் பிறவும் வகையுள எனின், நால்வகைச் சொல்லினும் சிறப்புடைய 67பெயரினையும், வினையிற் சிறப்புடைய முற்றுச் சொல்லினையும் பற்றி, வழக்கிடத்துப் பெரும்பான்மையும் வருவன. அவையே ஆகலின், 68அம்மூன்றல்லதில்லை என்றா69ன் போலும். அவையாவன:- எச்சவகை - உண்டுவந்தான், உண்டசாத்தன் என்றாற்போல்வன. அடுக்கு வகை - 70பாடுகோ, பாடுகோ, பாடுகோ, பாடுகோ என்பன. பொருள்கோள் வகை - சுரை யாழ அம்மி மிதப்ப என்பன. ஆக்கவகை - சாத்தன் தலைவன் ஆயினான் என்பன. இடைச்சொல் வகை - ‘யானோ தஞ்சம் பெரும’ என்பன. உரிச்சொல்வகை - ‘செய்யார் தேஎந்71 தெருமரல் கலிப்ப’ என்பன. அவற்றுள் இது தொகைநிலை வகையான் 73வந்த தொகை நிலை; தொலை நிலை வகை ஆறனுள்ளும் வினைத்தொகை; வினைத்தொகை மூன்றனுள்ளும் இறந்தகால வினைத்தொகை. என்மனார் என்றது என்ப என்னும் முற்றுச்சொல்லினைக் ‘குறைக்கும் வழி குறைத்தல்’ என்பதனால் பகரங் குறைத்து, ‘விரிக்கும் வழி விரித்தல்’ என்பதனான் 74மன்னும் ஆரும் என்பன இரண்டிடைச் சொற்பெய்து விரித்து என்மனார் என்றாயிற்று. இம் முற்றுச் சொற்குப் பெயராகிய ஆசிரியரென்பது செய்யுள் விகாரத்தால் தொக்கது; இஃ து எச்சவகை. என்றார் என்றற்பாலதனைக் கால மயக்கத்தால் 75என்ப என்றான் என உணர்க. இனி, உயர்திணை 76என்பதற்குமுன் என்ப என்னுஞ் சொல் முதனூலாசிரியனது கூற்றினைப் பின், தான் கூறுகிற மக்கட் சுட்டு என்பதனோடு இயைவித்தற்குக் கொண்டுகூறு நிலைமைக் கண் வந்ததாகலின், உயர்திணை என்னுஞ் சொல்லும், என்ப என்னுஞ் சொல்லும், பின் வருகிற “மக்கட் சுட்டு” என்னுஞ் சொல்லினோடு வேற்றுமைத் தொகையுள் இறுதியுருபு தொகை நிலை வகையான் 77வந்தது எனப் பொருள் இயைபு கூறுவதல்லது தம்முள் சொல் இயைபு இல என உணர்க. மக்கட் சுட்டு என்பது 78மக்களாகிய சுட்டு: இருபெய ரொட்டுப் பண்புத் தொகை. சுட்டு என்பதன் பொருள் நன்கு மதிப்பு. அஃது ஆகுபெயரான் மக்கண்மேல் நின்றது. மக்கள் என்னாது சுட்டு என்றது, தான் உயர்திணை என இடுகின்ற குறியீட்டிற்குக் காரணம் இது என்பது 79விளக்கல் வேண்டிப் போலும். இனி, ஆசிரியர் என்பதனோடு மக்கட்சுட்டு என்பதூஉம் பொருள் இயைபு அல்லது சொல் இயைபு 80இன்று என உணர்க. ஏ என்பது ஈற்றசை. அஃறிணை என்பது அல்லதாகிய திணை எனக் குணப் பண்புபற்றி வந்த பண்புத்தொகை. உயர்திணை அல்லதாகிய என மேல் நின்ற உயர்திணை என்னுஞ்சொல் வருவித்துக் கொள்க. உயர்திணை என்பதற்கு ஏற்ப 81இழிதிணை என்றிலனேனும் பொருள் நோக்கும் என உணர்க. முன் நின்ற சுட்டு என்பதன் முன் அஃறிணை என வந்த சொல்லும் சூத்திரத்துள் பொருட்படை என்னும் வினை முடிவின் இறுதிக்கண் வந்ததாகலின், பொருள் இயைபு அல்லது சொல் இயைபு இன்று என உணர்க. ஈண்டும் என்மனார் என்82றது மேற்சொல்லியவாறே நின்றது என உணர்க. அவரல என்பது நீக்கப்பொருண்மைக்83கண் தொக்க ஐந்தாம் வேற்றுமைத் தொகை. அல்ல பிற என்பது அல்லவாகிய பிற என இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என உணர்க. பிறவற்றை என்னும் இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கு நின்றது. அவரல என்னாது பிற என்றது, அஃறிணை உயிருடையவும் உயிரில்லனவும் என இருகூறாய், அவ் இரு கூறும் தத்தம் வகையானும் வேறுபட்டு நின்றமை 84விளக்கிய என்பது. ஏ என்பது ஈற்றசை. 85அ என்னுஞ் சுட்டு “நீட வருதல் செய்யுளுள் உரித்தே” என என்பதனான் நீண்டு, பிறவும் வேண்டும் செய்கைப்பட்டு, ஆயிருதிணை என நின்றது. இருதிணை என்பதனோடு அ என்பது பெயர்பற்றி 87வந்த தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச் சொல் என்பதல்லது மூவகையுள் சொல் இயைபு கூறப்படாது. இருதிணை என்பது இரண்டாகிய திணை என இருபெய ரொட்டுப் பண்புத்தொகை. பிற என்பதனோடு ஆயிருதிணை யென்பதூஉம் பொருட் படையாகிய வினைமுடிவின்கண் வந்ததாகலிற் சொல் இயைபு இன்று என்பது. திணை88 என்பதனோடு இசைக்கும் என்பது 89தொகை நிலை வகையான் வந்தது. தொகையுள் இரண்டாம் வேற்றுமைத் 90தொகைப் பொருள் நிற்ப உருபு தொகுதலின் உருபுதொகை எனப்படும். இனி ‘பெயருந் தொழிலும்’ என்று எழுந்த பொதுவிதியை இரண்டாவதற்கு விலக்கிச் ‘சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலும்’ என்று சிறப்புவிதி ஓதுதலின் செய்யுள் விகாரத்தாற் சாரியை நிற்ப, உருபு தொக்கது போலும். 91ஆயிருதிணையையும் என்னும் 92முற்றும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கது. இசைக்கும் என்பது செய்யும் என்னும் முற்றுச்சொல். அது 93பின்நின்ற சொல் என்பதனொடு பயனிலை வகையான் வந்தது. “இசைப்பிசையாகும்” என்பதனான் இசைக்கும் என்பதன் பொருள் ஒலிக்கும் என்பதே ஆயினும், சொல்லிற்குப் பொருள் உணர்த்தும் வழியல்லது ஒலித்தல் கூடாமையின், `உணர்த்தும்’ என்னும் தொழிலை `இசைக்கு’ என்னும் தொழிலாற் கூறியவாறாகக் கொள்க. இதுவும் ஓர் மரபு வழுவமைதி போலும். பொருளை உணர்த்தவான் ஒரு சாத்தனே எனினும் 94அவற்கு அது கருவியாக அல்லது உணர்த்தல் ஆகாமையின், அக்கருவிமேல் 95தொழில் ஏற்றிச் சொல் உணர்த்தும் என்று கருவிக் கருத்தாவாகச் சொல்லிற்றாக உணர்க. ‘மன’ என்பதூஉம் வினை பற்றிய 96அசைநிலை இடைச் சொல் ஆகலின் அதனோடு ஈயைபு கூறப்பட்டது. 97மன் எனப் பாடம் ஓதுவாரும் உளர். இச் சூத்திரத்தாற் சொல்லிய பொருள்: 98இவ்வதிகாரத்துச் சொல்லுகிற சொல்லது தொகை வரையறையும், அதனை வரையறுக்குங்காற், பொருளான் அல்லது வரையறை இன்மையின் அப்பொருளது 99தொகை வரையறையும், அப் பொருட்கு 100நூலகத்து ஆட்சி பெற்ற குறியீடும் உணர்த்தின வாறு ஆயிற்று. (1) அடிக்குறிப்புகள் 1-1 i ‘ஸ்ரீ’ எனத் தொடங்கும். (இவ்வாறு பாடபேதங்கள் குறிக்கப்பெறும். i. ‘ஸ்ரீ’ என்றால் முதற் பிரதியில் இந்தப் பாடபேதம் உண்டு என்பதாம். இவ்வாறே பின்னும் கண்டுகொள்க. முதலில் உள்ளது சூத்திரத்தின் எண். அடுத்து உள்ள எண், கீழ்க்குறிப்புக்களைத் தொடர்ச்சியாகக் காட்டும் எண். பின்னர் உரோமன் எண்களால் குறிக்கப் பெறுவன பிரதிகளின் எண்கள். இப்பதிப்புக்குக் கிடைத்த பிரதிகள் ஒன்பது. அவற்றைப் பற்றிய குறிப்புக்களை முன்னுரையிற் காண்க.) ii. பிள்ளையார் சுழியோடு தொடங்கும். iii. பிள்ளையார் சுழியோடும் பின் ‘திருச்சிற்றம்பலம்’ என்பதோடும் தொடங்கும். எi. பிள்ளையார் சுழியோடும் ‘சிவமயம்’ என்பதோடும் தொடங்கும். எiii பிள்ளையார் சுழியோடும் ‘ஹரி ஓம்’ என்பதோடும் தொடங்கும். பின்னர்: i-ii “தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை - முதலாவது கிளவியாக்கம்” என்று தொடங்கும். எi மேலேகண்டபடியே. ஆனால், ‘முதலாவது கிளவியாக்கம்’ என்பது ‘க. கிளவியாக்கம்’ என்றுள்ளது. iii ‘தொல்காப்பியம் கல்லாடனார் சொல்லதிகாரவுரை - கிளவியாக்கம்’ என்று தொடங்குகிறது. எiii ‘கல்லாடனார் சொல்லதிகாரம் கிளவியாக்கம்’ என்று தொடங்குகிறது. 1-2 iஎ “அவ் வல” (பொருள் விளங்கவில்லை). 1-3 iii “மன்” iஎ “மென்” (விளங்கவில்லை) 1-4 iii-எ “என்பது சூத்திரம்” இல்லை. (பின்னும் இப்படியே ஆம்.) 1-5 iii-எ (உரையைப் பத்தி பத்தியாகப் பிரித்து எழுதுகின்றன.) i (பத்திகளாகப் பிரிக்காமற் போனாலும் பிரிய வேண்டிய இடத்தில் கிளவியாக்கத்துக்கு மட்டும் பின் எழுதிய திருத்தமாகப் பகர வளைவு இட்டிருக்கக் காண்கிறோம். சில பத்திகளை ஒன்றாகச் சேர்ப்பது சிறக்கலாம். ஆனாலும் மேற்கண்ட பிரதிகளை இப்பதிப்புப் பின்பற்றுகிறது.) 1-6 iஎ “அஃதிது” (தி-தவறாகலாம்) 1-7 ii-எii “என்ன” (ஒருமையில் ‘என்னை’ என்பதும் பன்மையில் என்ன என்பதும் வருதல் பழைய வழக்கு. பின்னர் இவ்வேறுபாடு பாராட்டப் பெறவில்லை. 1-8 i-ii “எழுவாக.” 1-9 i-ii நீங்க மற்றவற்றில் “ஆராய்ந்தார்” (ஆசிரியரைக் குறிக்கும் பல இடங்களில் னகர ஈறும் சில இடங்களில் ரகர ஈறும் வருதலால் இப்பதிப்பு எங்கும் னகர ஈறே கொள்கிறது. ரகர ஈறு பாட பேதமாகக் காட்டப்பெறும்.) 1-10 i-ii-iii-iஎ-எii “என்ற” 1-11 iii “ஆராய்ந்தானாம் என்பது. இவற்றுள்” எiii “ஆராய்ந்தான். சொல்லிற் கிலக்கணம்” iஎ “ஆராய்ந்தான் என எட்டாவன. இவற்றுள் வழு என்பதுடை சொல்லிற்கு...” (புள்ளியிட்ட இடங்கள் சிதிலம் என்பதைக் குறிக்கும்.) i-ii “ஆராய்ந்தான் என எட்டாவன. இவற்றுள் வழுஎன்பதுமை . . . சொல்லிற்கு” 1-12 எi “இன்மை முகத்தானும் அமைந்த இலக்கணமாம் என்று உணர்க.” 1-13 iii-எ “இலக்கணமாம். அவற்றுள்” 1-14 எi “அஃறிணையும் என இவை ஐந்து” (பேதமுள்ள பாடத்திற்குப் பின் வரும் சொல்லோடு பாடபேதம் காட்டப்படும். இடையே விடப்பட்ட சொற்களைக் கண்டுகொள்க. பின் வரும் சில சொற்றொடர்கள் “என இவை” என முடிந்தாலும், பல இடங்களில் இத்தகைய முடிவின்றி அமையக் காண்கிறோம். 1-15 ii-எii “பல என இவை ஏழு” (ii-ல் ‘என இவை’ என்பது பிறை வளைவுக்குள் பின் எழுதப்பெற்ற திருத்தமாம்.) 1-16 எi “கிடந்த இவை . . . தொகை ஆறாவன. வேற்றுமைத் தொகை, உவமத்தொகை” எiii “கிடந்தன . . . தொகை, உவமத்தொகை” 1-17 iii “இரு பெயரொட்டுப் பண்புத்தொகை உவமத் தொகை” 1-18 எi “தொகை என இவை” எiii “தொகை . . . .” 1-19 எi “படர்க்கை என இவை” 1-20 எi “காலம் என இவை” 1-21 i-எஎ-iஎ-எiii-எii “இடமாவன . . . று” எi “இடமாவன வழக்கும் செய்யுளுமாகிய இவை இவ்வாறு” 1-22 ii-எi நீங்கியவற்றில் “சொல்லிலக்கணங்களுள் எட்டு.” 1-23 iii “அவை (‘அ’ பின் திருத்தம்) 1-24 i-ii-iஎ-எii-எiii “பெரும்பான்மைய வென்றாதல் அவையும் இவற்றுள் அடங்கு . . . ற்றுச் சொல்.” iii “பெரும்பான்மைய வன்றாதலால் அவையும் இவற்றுள் அடங்கும். மற்றுச் சொல்” (“வ” பின் சேர்க்கப்பட்டுள்ளது.) எi “பெரும்பான்மைய என்றாதல் அவையும் இவற்றுள் அடங்கும் என்றாதல் கொள்ளப்படும் என்க. மற்று” 1-25 i-ii-iஎ-எii-எiii “என்ற பொரு... என்ற வாறு.” எi “என்றதற்குப் பொருண்மை என்ன எனில் ஒசை என்றவாறு” 1-26 iii-எiii “காவோலை ஒலியும்” எ காய் வோலை ஒலியும். (“ய்” என்பது இரு பகர வளைவுக்குள் எழுதப் பெற்றுள்ள பின்னைய திருத்தம்.) 1-27 iii-எ “சொல் எனினும் கிளவி எனினும்” 1-28 எ நீங்கிய பிரதிகள் “மேனிற்கும்” (பிரதிகளில் பிரித்து எழுதி இராத இடங்களிலும் சொற்களைப் பெரும்பான்மையும் இப்பதிப்புப் பிரித்தே தருகிறது. இதனை எங்கும் கண்டு-கொள்க.) 1-29 iii “ஓசை யுளவோ” 1-30 i-ii-iஎ-எii-எiii “வீளையும்... தொடக்கத்தன” எi “வீளையும் இலதையும் அனுகரணமும் என்றித் தொடக்கத்தன” 1-31 i-ii-iஎ-எii “தை” 1-32 i-ii-iஎ-எi-எiii “ளை” 1-33 (1) (2) முதலியன விளக்கங்கருதிப் பதிப்பிக்கப் பெற்றன. i-ii-iஎ-எii (3) (4) இவற்றிற்கிடையேயுள்ள பகுதி இல்லை. எiii சிதிலம். 1-34 i-ii-iஎ “த” 1-35 ii-எ-எi “ன்” (ii-எ-ல் “து” என்பது “ன” எனத் திருத்தப் பட்டுள்ளது. தொகுதி ஒருமையாகக் கொண்டு வரும் வழக்கு இவ்வுரையிற் பெரும்பான்மைய தாம்.) 1-36 iஎ “இவ்வதிகாரத்திடை என்னையோ எனின்” 1-37 எல்லாப் பிரதிகளிலும் “ர்” 1-38 மேற்படி 1-39 i-iஎ-எiii “எழுத்தொ... ன்னை எனின்” iii-எ எழுத் தோத்தினுள் உணர்த்தியது என்னை (கோடிட்ட பகுதி எ-இல் பின் எழுந்த திருத்தம்.) 1-40 i-ii “உணர நின்ற வழி” (திருத்தம்.) 1-41 i-iஎ-எii-எiii நுதலியதூஉ... விளங்கும். 1-42 iஎ “கிளவி யாக்கம் என்பது பேர் பெற்றது” எiii “கிளவியாக்கம் என்று பெயர் பெற்றது” 1-43 i-ii “ட்” (பின்னும் இவ்வாறே பிரித்துள்ளமை கண்டு கொள்க.) 1-44 i “உணர்த்தி னமையின் கிளவியாக்கம் என்று” (கோடிட்டவை திருத்தம்.) 1-45 எi “ஒருத்தி மேலாமாறிது, பலவற்றின் மேலாமாறிது, வழு அமையுமாறிது எனப் பொருட்கண் மேலாமாறு.” 1-46 எ “உணர்த்தினமையின் ஆக்கம் எனப் பெயராயிற்று.” எi “கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று.” 1-47 எi “உணர்த்தினது, மாறுணர்த்தியது இல்லை” 1-48 ii “நின்றவற்றி னிலக்கணம்” (னி-திருத்தம்) 1-49 எல்லாப் பிரதிகளிலும் “ர்” 1-50 மேற்படி 1-51 மேற்படி 1-52 மேற்படி 1-53 iஎ “கிடந்தவினைச் சொல்லை வினையியலுள்” 1-54 “ர்” 1-55 மேற்படி 1-56 ii “ஓத்தினுள்ளே உணர்த்தினார் என்பது” 1-57 “ர்” 1-58 மேற்படி 1-59 iii-எ “இம் முதல் சூத்திரம் என் நுதலிற்றோ எனின்” iஎ “இதன் முதற் சூத்திரம் எண்ணுதலிற்றோ எனின்” (“என்நுதலிற்றோ எனின்” என்பது “எ- னின்” என்று i பிரதியிலும் “எ - என் அல்லது என்பது என்நுதலிற்றோ எனின்,” என எi பிரதியிலும் குறுகி வரும்.) 1-60 i-எi-iஎ-எiii “நுதலிற்று இதன் பொருள்” எ “நுதலிற்று உரை” (iii-ல் “இதன் பொருள்” என்பதில்லை. “இதன் பொருள்” என்று எழுதுவது பழைய வழக்கென இறையனார் அகப்பொருள் உரையால் விளங்குகிறது.) 1-61 i “எ-து” (“என்பது” இவ்வாறு குறுகிவரும். “என்பது” என்பதற்குமுன் உள்ளது சூத்திரப் பகுதி. தலைகீழாக வரும் காற்புள்ளிகளிடை (inஎநசவநன உடிஅஅயள) அச்சிடுவதற்குப் பதிலாக தடித்த எழுத்தில் பதிப்பித்துள்ளமை காண்க. பின்னும் இப்படியே வரும்.) 1-62 “என்றவாறு” (“என்றவாறு” என்பது பல இடங்களில் இப்படிக் குறுக்கப்பெறும்.) 1-63 i-iஎ “இசைக்கு முன சொல்லே” 1-64 i-எiii “பொருளையு முன சொற்கள்” iஎ “பொருளையுமுன் சேர்த்துஞ் சொற்கள்” ii-எi-எii “பொருளையும் உணர்த்தஞ் சொற்கள்” 1-65 iii “வகைய வல்லதில்லை” (இதில் “வ” என்பதனை “ல” என்று படித்தலும் ஆம்). 1-66 i-ii-எii “எண்ணுநிலை வகையான் நிலனும் நீரும். 1-67 i-iஎ-எ-எiii “பேரினையும்” (‘பெயர்’ என்பது ‘பேர்’ எனப் பல இடத்தும் வருவது எழுதியவர் கால வழக்காகலாம்; ஆதலின் ‘பெயர்’ என்றே இப்பதிப்புப் பாடம் கொள்கின்றது. முன் சென்ற பகுதியிலும் காண்க.) 1-68 iஎ “அம் மூன்றல்ல தல்ல” 1-69 ii-எ-எi-எii-எiii “ர்” 1-70 iஎ “பாடுகோ, பாடுகோ, பாடுகோ என்பன” 1-71 iஎ-எ “தே எ மரல் கலிப்ப.” i-எi-எiii “தோ மரல் கலிப்ப” (“தெருமரல்” எனத் “தேமரல்” என்பதன் திருத்தம் எ-ல் உண்டு). 1-72 எi “என்றாற் போல்வன” (இப்பத்தியில் வரும் “என்பன” எல்லாம் “என்றாற் போல்வன” என்றே எi-ல் உள்ளன.) 1-73 ii-எi-எii “வந்தது” 1-74 ii-iii “மன் (உ-ம்) ஆர் (உ-ம்)” 1-75 iii-எ “என்ப எனப் படுவர் என உணர்க” எiii “என்ப என உணர்க” எi “என்மனார் என உணர்க” 1-76 எi “என்பதற்கு முன்” 1-77 ii-எi-எii “வந்தது என்ப. பொருளியைபு” (புள்ளியிட்ட குழப்பம்.) 1-78 எi “மக்களாகிய சுட்டென்பதன் பொருள் நன்கு மதிப்பு” (எழுதும்போது இடை நின்ற சொற்கள் விடப்பட்டன என்பது தெளிவு.) 1-79 iஎ “விளக்கவேண்டி” 1-80 ii “அன்று” 1-81 i-ii “இழி திணை என்னின் என்னும் பொருள் நோக்கும்” iஎ “இழி திணை என்னும் பொருள் நோக்கும்” எiii-எ “இழிதிணை என்றில னேனும் பொருணோக்கும்” (எ-ல் “ணோ” என்பது “ளொ” எனத் திருத்தப்பட்டுள்ளது. ளகர ணகர மாறாட்டம் கையெழுத்தில் உண்டு. நெடில் குறில் வேறுபாடு இல்லை.) எi “இழிதிணை யென்று இல் என்னும் பொருள் நோக்கம்” எii “இழிதிணை என்பது அல் என்பதன் பொருள் நோக்கம் என்பது” 1-82 i-எi-எiii “ப” 1-83 “கட் டொக்க” (இப் பதிப்பு இதனைப் பிரித்துள்ளது. இவ்வாறே பதிப்பில் உடம்படு மெய்வாரா இடமும் பிற புணர்ச்சிவாரா இடமும் கண்டுகொள்க.) 1-84 iii-எ “அறிய என்பது” 1-85 i “ஆ” 1-86 i “செய்யுளிளுரைத்தே” எiii “செய்யுளுள் உரைத்தே” (“ரை” i-ல் “ரி” எனப் பின் திருத்தப்பெற்றுள்ளது). 1-87 iii “வந்து பிற பொருள் செய்யும் இடைச் சொல்” 1-88 i “என்ப னோடு” (“த” இடையே விட்டது கைப் பிழையாம்.) 1-89 i-ii-iஎ-எi-எii “தொகை நிலையான் வந்தது” 1-90 i-ii “தொகை பொருள்” 1-91 எi “ஆயிரு திணையையும்” 1-92 iஎ “முற்றையும்” 1-93 iii “பின்பு நின்ற” iஎ-எii சிதிலம். 1-94 i “அவர்க்கது” (ரகர றகர மாறாட்டம் பிரதிகளில் பயின்று வருகிறது.) எ “அவனுக்கு” 1-95 ii-எii “தொழிலை யேற்றி” 1-96 iஎ “அசைநிலை இடைச்சொல்லாகின்” 1-97 ii-எii “இனி மன் என்று பாடம்” i-iஎ-எ-எi “மன் என்று பாடம்” 1-98 (இவ்வதிகாரம் என்பதனை இவ் அதிகாரம் எனப் பிரித்துள்ளது காண்க. இவ் என்பதற்கு இவை எனப் பொருள் கொள்ளலாகாது. வ் புணர்ச்சியால் வந்தது. பிரிப்பதால் இத்தகைய இடர்ப்பாடு எழுகிறது. பிரியாதிருப்பது தமிழ் மொழியின் இயல்பிற்கு ஏற்றதாம். இருந்தாலும் தொன்னூற் கஞ்சித் தடுமாறும் உள்ளம் எழாதபடி, யாவரும் இந்த நூலை ஓத வருவதற்கு ஒரு வழியாகவே பிரித்துப் பதிப்பிப்பதாயிற்று. பிரித்ததனைக் கண்டால் எளிது போன்ற மருட்சி பொது மக்களுக்கு எழுகிறது. அது வரவேற்க வேண்டியதே ஆம்.) 1-99 எ-எiii நீங்கியவை “தொகை வகை யறையும் பொருட்டு” 1-100 iii “நூலதத்தாட்சி” iஎ “நூற்கத்தட்சாத்தி” 2. 1ஆடூஉ - அறிசொல் மகடூஉ - அறிசொல் பல்லோர் - அறியும் - சொல்லொடு சிவணி அம்முப் - பாற்சொல் உயர்திணை - யவ்வே. என்பது 2என்நுதலிற்றோ எனின், மேல்திணை கூறு செய்தான்; இனி அத் திணைக்கண் பால்3 கூறு செய்தல் நுதலிற்று. 4இதன் பொருள்:- உயர்திணை என்பது ஆண்மகனை அறியும் சொல்லும், மகளிரை அறியும் சொல்லும், பலரை அறியும் சொல்லொடு கூடி அம் மூன்று பாலினை உணர்த்தும் சொல்லும் 5உயர்திணையன என்றவாறு. அறிசொல் என்புழிச் 6சொல்லிற்கு அறிதல் கூடாமையின், 7ஒரு சாத்தன் அறியும் சொல் என ஒரு பெயர் வருவித்துக் கொள்க. ஏ ஈற்றசை. அவ்வே என வகரம் செய்யுள் விகாரத்தான் வந்தது. ‘சிவணி’ என்பது பல்லோர் அறியும் சொல்லொடு கூட என ஒரு தொகைப்பொருண்மை தோன்ற நின்றதோர் சொல் என்று சொல்லுக. இவ்வாறன்றிச் சிவணி 8என்பது செய்து என்னும் 9வினையெச்சமாகி “உயர்திணைய” என்னும் ஆறாம் வேற்றுமை 10ஒரு வினைக்குறிப்பு நீர்மையும் உடைமையின் அதனோடு முடிந்தது 11என முடிப்பாரும் உளர். இதனாற் சொல்லியது, மேற்கூறிய 12உயர்திணை என்பது, 13விரி வரையான், ஆண்பால் பெண்பால் பன்மைப்பால் என மூன்று 14கூறுபடும் என்பதூஉம், அப்பொருள் 15மூன்று கூறுபடும் எனவே தந்திரவுத்தி வகையான் மேற்கூறிய 16உயர்திணைச் சொல் என்பதும் விரிவரையறையான், ஆண்பாற் சொல், பெண்பாற் சொல், பன்மைப்பாற் சொல் என மூன்று கூறுபடும் என்பதூஉம் கூறியவாறு ஆயிற்று. (2) அடிக்குறிப்புகள் 2-1 iஎ “ஆடு வறி சொல்” (சூத்திரத்தில் இடையே இடையே கோடிடப்பட்டுள்ளது. அதன் இருபுறமுள்ளவற்றை ஒரு சொல் நீர்மைத்தாகக் கொள்ள வேண்டும் எனக் குறிக்கவே ஆம்.) 2 i-எiii “எனின்” (சூத்திரத்தின் எண், அதன் குறிப்புக்களில் முதல் வருவதற்கு மட்டும் இனித் தரப்படும்.) iii “எ-னின்” எi “என்பது என்நுதலிற்றோ எனின்,” (“என் நுதலிற்றோ என்பதன் குறுக்கமாகும்” “என்பது சூத்திரம் என்றுதலிற்றோ எனின்” அல்லது “என்பது என் நுதலிற்றோ எனின்” என்பதன் குறுக்கமுமாம். (இவ்வாறே சூத்திரம் தோறும் கண்டுகொள்க.) 3. i-iii-iஎ “கூறு செய்தனு - ற்று” எiii “கூறு செய்தற்று.” (“கூறு செய்தல் நுதலிற்று” என்பதன் குறுக்கம். பின் எங்கும் இவ்வாறே ஆம்.) 4 iii-எ-எiii “உயர்திணை என்பது ஆண்மகனை அறியும் சொல்லும்” ii-எi-எii “இ-ள். ஆண் மகனை அறியும் சொல்லும்” iஎ “ஆண் மகனை அறியுஞ் சொல்லும்” (“இ-ள்” என்பது “இதன் பொருள்” என்பதன் குறுக்கம். பின் எங்கும் இவ்வாறே கொள்க. i-ல் “இ-ள்” என்பது பின்னர்ச் சிவப்பு மையில் எழுதப்பெற்றுள்ளது. iஎ-பிரதி இதனைப் பார்த்து எழுதியபின் செய்த திருத்தம் என்பது தெளிவு.) 5 iii “உயர்திணையின” 6 iஎ “சொற்கு” 7 எi “சாத்தன் அறியும் சொல்” 2-8 எi “என்பதைச் செய்து” 9 i-ii-iஎ-எi-எii-எiii “வினையெச்ச மாக்கி” 10 i-ii-iஎ-எii “ஒரு வினைக்குறிப்பினீர்மையும்” 11 எi “எனக் கூறுவாரும் உளர்.” 12 i-iஎ “உயிர்” 13 i-iஎ “விரிவரையான்” எi “விரிவகையான்” 14 iஎ “கூறப்படும்” 15 iஎ “மூன்று கூறப்படும்” எi “முக்கூறுபடும்” 16 i “உயர்திணை சொல் என்பதூ உம்” ii-iஎ-எii-எiii “உயர்திணைச் சொல் என்பதூ உம்” எi “உயர்திணைச் சொல் என்பது” 3. ஒன்றறி - சொல்லே பலஅறி - சொல்என் றாயிரு பாற்சொல் அஃறிணை - யவ்வே. என்பது என்நுதலிற்றோ எனின், எனின், மேல் அஃறிணை 1என்றான்; அதனை இனைத்துப் பால்படும் என்று, அது படும் பால் விரித்தலை நுதலிற்று. இதன் பொருள்:- 2ஒன்றனை அறியும் சொல்லும், பலவற்றை அறியும் சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ் இரண்டு பாலினையும் 3உணர்த்தும் சொல் அஃறிணையன என்றவாறு. இதனாற் சொல்லியது, மேற்கூறிநின்ற அஃறிணைப் பொருளினையும், அஃறிணைச் சொல்லினையும் 4விரிவரை யறையான், ஒருமை பன்மை எனவும், ஒருமைச்சொல் பன்மைச்சொல் எனவும் இரண்டு கூறுபடும் என்பதூஉம் கூறியவாறு ஆயிற்று. (3) அடிக்குறிப்புகள் 3-1 i-iஎ-எi “என்றார்” 2 iஎ “ஒற்றினை” எi “ஒன்றனை” (பழையவடிவம் இது.) 3 iஎ “உணர்த்துஞ் சொல் அஃறிணைப் பொருளினையும்” ii-எii “உணர்த்துஞ் சொல் அஃறிணையன. என்றவாறு. இதனாற் சொல்லியது: மேற்கூறிநின்ற அஃறிணைப் பொருளினையும்” i “உணர்த்துஞ் சொல் அஃறிணையன வென்-று, இதனாற் சொல்லியது: மேற்கூறி நின்ற அஃறிணைப் பொருளினையும்” (எi-ல் வரி விடப்பட்டுள்ளது. “என்றவாறு” என்று பொழிப்புரை முடிவது வழக்கு. இது “என்றவாறு” என்றும் “என்று” என்றும் குறுக்கப் பெறும். பின்னும் இவ்வாறே கண்டு கொள்க.) 4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்என அறியும் அந்தம் தமக்கிலவே உயர்திணை மருங்கின் பால்பிரிந் - திசைக்கும். என்பது என்நுதலிற்றோ எனின், 1ஐயம் அறுத்தல் நுதலிற்று. என்னை? மேல் தொகையுள், ஒழிந்த தேவரும், நரகரும், 2வகையுள் ஒழிந்த பேடியும் `எவ்வாறாம் கொல்’ என்று ஐயுற்றார்க்கு அவையும் இவ்வாறாம் 3என்கின்றமையின். இதன் பொருள்:- உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மையை எய்த வேண்டி, ஆண்மைத் தன்மையின் நீங்கிய பேடி என்னும் 4பொருளும், தெய்வத் தன்மையைக் கருதின தெய்வம் என்னும் பொருளும் இவை இரண்டும், இவை எனத் தம்மை வேறு பால் அறிவிக்கும் ஈற்றெழுத்தினை உடைய 5சொற்களைஉடைய அல்ல; மேற்கூறிய மக்கள் என்னும் உயர்திணையிடத்து முப்பாலினையும் உணர்த்தும்சொற்கள் அவ்விடத்தின் நின்று நீங்கிவந்து தம்மை உணர்த்தும் என்றவாறு. 6அதற்கு உ-ம்: - பேடி வந்தாள், பேடியர் 7வந்தார். வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்து மூவரும் வந்தார், சந்திராதித்தர் வந்தார் எனினும் அமையும். அந்தந் தமக்கிலவே என்றதனான், மக்களும் தேவரும் அல்லாத 8நிரையப்பாலரும் மக்களை உணர்த்தும் முப்பாற் சொல்லானும் சொல்லப்படுவர் என்பது கொள்க. 9(உ-ம்.) நரகன் வந்தான், நரகி வந்தாள்; நரகர் வந்தார் என வரும். முன் நின்ற 10சுட்டிய என்பது 11செய்யிய என்னும் வினை யெச்சம், அதற்கு வினை ‘திரிந்த’ என்னும் பெயரெச்சம், பின் நின்ற சுட்டிய என்பது செய்த என்னும் பெயரெச்சம். உயர்திணை மருங்கின் பெண்மை 12சுட்டிய ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும் என மொழிமாற்றாகக் கொள்க. உயர்திணை மருங்கின் என்னும் ஏழாவதற்குப் பெயர் நிலைக் கிளவி என்பதனை 13முடிவாக்கி, இடைநின்ற சொல்லைப் பெயர்நிலைக் கிளவிக்கு அடையாக்கிப் பொருள் உரைத்துக் கொள்க. இரண்டிடத்துப் பெயர்நிலைக்கிளவியும் சொல்லினாற் பொருள் அறியப்படுதலின் பேடியும் தெய்வமும் என்னும் 14பொருட்கு ஆகு பெயராய் 15நின்றது என உணர்க. தெய்வம் என்றது தெய்வத் தன்மையை. இதனாற் சொல்லியது, முன் சொல்லி நின்ற பொருள் வரையறையுள் அடங்காது நின்ற பொருளினையும் ஒருவாற்றான் அடங்கக் கூறியவாறு ஆயிற்று. எனவே உயர்திணைப்பொருள், பொருள்முகத்தான் மக்களும் தேவரும் நரகரும் என மூன்று 16கூறுபடும். சொல் முகத்தான் மக்கள் என்றதன் மேற்பட்டு ஒன்றே ஆம். உயர்திணைப் பாலாயின் பொருண் முகத்தால் ஆண்பால், பெண்பால், ஆண் அலி, பெண் அலி, பேடிப்பால், ஆண்பாற் பன்மை, பெண்பாற் பன்மை, ஆணலிப் பன்மை, பெண்ணலிப் பன்மை, பேடிப்பன்மை, ஆண்பாலொடு பெண்பால் கூடிய பன்மை, பெண்பாலோடு ஆண்பால் கூடிய பன்மை, ஆண்பாற் சிலர், பெண்பாற் சிலர் என 17விகற்பித்து நோக்கப் பலவகைப்படும். இப்பலவகையும் செய்வகை மூன்றல்லது இன்மையின் 18மூன்றே ஆயின. இவ்வாற்றானே தேவர், நரகர் என்பனவற்றது பாகுபாடும் அறிந்து கொள்க. இனி, அஃறிணை உயிருடையதூஉம், 19உயிரில்லதூஉம் என இரண்டாயவற்றுள் உயிருடையது 20ஆணும் பெண்ணும், 21ஆண் சிலவும் பெண் சிலவும், ஆண் 21பன்மையும், பெண் பன்மையும், 23அவ் இரண்டும் தொக்க சிலவும், அவ் இரண்டும் தொக்க பலவும், உயிரல்லவற்றது ஒருமையும் சிலவும் பலவும் என இவ்வாற்றாற் பல 24பகுதிப்படுமேனுஞ் சொல்வகை நோக்க இரண்டல்லது இன்மையின் இரண்டே ஆயின என்பது. இனி மக்கள் முதலியவற்றின் வேறுபாடும் அறிந்து கொள்க. (4) அடிக்குறிப்புகள் 4 i-ii-எii “விரிவரையான்” iஎ “விரிவறையான்” எi “விரிவகையான்” 4-1 ii “இஃது ஐய மறுத்தல்” iii-எ “ஐய மறுத்தலை” 4-2 i “வைகையுள்” ii-எii “ஐவகையுள்” iஎ “அவ்வகையுள்” எi “மன்பதையுள்” 3 iஎ “என் கையின்” 4 iஎ “பொருந்” 5 i “சொற்களைஉடைய சொற்களை உடையவல்ல” (இரட்டிப்பு.) 6 எiii “அதற்குதாரணம்” ii “அதற்குதாகரணம்” (i-ல் உதாகரணம் என்று எழுதிப் பின் “க” அடிக்கப்பட்டுள்ளது. ii சில போது உதாஹரணம் என்றும் தன் வடமொழி அறிவைக் காட்டும். பல பிரதிகளிலும் “உ-ம்” என்றே குறுக்கமாக எழுதப்பட்டுள்ளது. அதனையே இப்பதிப்புப் பின்பற்றுகிறது. விரிப்பதானால் எiii-இன் வழியே விரித்து எழுதிக் கொள்ளலாம்.) iii “அதற்குக் காரணம்” (ககர தகர மாறுபாடு. 12-13 நூற்றாண்டுவரை தகரம் இன்றைய ககரம் போல எழுதப்பட்டு வந்தது. பின்னரே வலப்புறக் கோடு கீழிறங்கி இடம் சென்றது.) 7 i-ii-iஎ-எii வந்தாள்” 4-8 ii-எi “நிரயப் பாலரும் (i-லும் இந்தத் திருத்தம் பின் செய்யப்பட்டுள்ளது.) 9 ii “உதாஹரணம்” 10 i “சூட்டிய” 11 i “செய்யிய என்னும்” (“எ” - “யெ” என ஒலித்தல்.) 12 iஎ “தட்டிய” 13 எ “முடிபாக்கி” 14 i “பொருடதாகு பெயராய்” iஎ “பொருடதாரு பேராய்” (மெய் எழுத்தின்மேல் புள்ளிகுத்தும் வழக்கம் ஓலையில் இல்லை. பெயரைப் பேர் என்றெழுதுவது பிற்கால வழக்கு. ககர தகர மாறுபாடு காண்க.) ii-எii “பொருள தாகு பெயராய்” (இது பின் எழுந்த திருத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.) 15 எi “நின்ற என” 4-16 iஎ “கூறப்படும்” 17 iஎ “விகர்ப்பித்து” (ரகர றகர மாறுபாடு.) 18 i “மூறே யாயின்” iஎ “முறையாயின” (“மூன்றே” என்பதில் னகரம் விளக்கமாக i-ல் எழுதப்படவில்லை. எனவே “முறை” என iஎ பாடம் கொண்டது. புள்ளி இடாது எழுதும் வழக்கம் முன் குறிக்கப் பெற்றது. பெயர்த்து எழுதுவோர் விரும்பியவாறு புள்ளி இடுவதால் “யாயின்” என்று i-பாடம் எழுந்தது. இத்தகைய பிரதிபேதங்கள் இனிக் குறிக்கப்படா.) 19 iஎ “உயிரல்லதூ என” 20 i-iஎ “ஆனும்” (ணகர னகர மாறாட்டம்) 21 i “ஆன சிலவும்” 22 i “பன்மையு பெண்” 23 iஎ “இவ்விரண்டும்” 4-24 i “பகுதி படுமேனும்” 5. 1னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே மேற்கூறிய உயர்திணைச் சொல்லுள் ஆடூஉ அறிசொல் ஆமாறு 2உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆடூஉஅறியும் சொல்லாவது 3னகாரமாகிய ஒற்றினை ஈறாகிய சொல் என்றவாறு. (உ-ம்.) உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; இவை தெரிநிலை வினை. கரியன், செய்யன்: இவை குறிப்புவினை. 4இச் சூத்திரம் ‘னஃகா னொற்றே ஆடூஉ அறிசொல்’ எனப் பொதுப்பட நின்றமையின் புதன், குபேரன், உண்டேன், உண்மின் 5என்பனவும் ஆண்பால் உணர்த்ததற்குச் சென்றனவேனும், பொதுமை விலக்கி மேற்சொல்லுகின்ற விதிகளான் படர்க்கை யிடத்து முற்றுச்சொற்கு ஈறாய் அல்லது வாராது எனக் கொள்க. இது மேற்கூறுவனவற்றிற்கும் ஒக்கும். உண்டான் என்புழி நான்கு எழுத்துக்கூடி ஆண்பால் 6உணர்த்திற்றே எனினும், பிற எழுத்துக்கள் பிறபால் உணர்த்தும் வழியும் வருதலான் னகர ஒற்றையே தலைமைபற்றி 7ஆடூஉ அறிசொல் 8என்றார். (5) அடிக்குறிப்புகள் 5-1 i “4” iஎ “ச” 2 i-iஎ “உணர் கற்று” (க.த. மாறாட்டம்.) எiii “உணர்-ற்று” 3 iii-எ “னகரமாகிய” (கரம், காரம் என்ற இரண்டு சாரியையும் வரும்.) 4 i “ச் சூத்திரம்” ii-எi-எii “சூத்திரம்” 5 ii “என்பன ஆண்பால்” 6 ii-iii-எi-எiii “உணர்த்திற்றே யாயினும்” 5-7 i “ஆடூஉ வரி சொல்” 8 i-எi-எ-iஎ “என்றார்” 6. ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல். என்பது என்நுதலிற்றோ எனின், மகடூஉ அறி1சொல் ஆமாறு உணர்த்துதல் 3நுதலிற்று என்பது. இதன் பொருள்:- மகடூஉவினை அறியுஞ் சொல்லாவது ளகாரமாகிய ஒற்றினை ஈறாக உடைய சொல் என்றவாறு. 3(உ-ம்.) உண்டாள், உண்ணாநின்றாள், 4உண்பாள். கரியள், செய்யள்: 5எனவரும். (6) அடிக்குறிப்புகள் 6-1 i-iஎ “சொல்லாவது உணர் - எது” ii-எii “சொல்லாவதுணர்த்து நுதலிற்று” iii-எ “சொல்லாவதுணர்த்துதல் நுதலிற்று” எi “சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று” எiii “சொல்லாமா றுணர் - ற்று” (சூத்திரம் 5, 7 என்பவற்றில் எi-ல் உள்ளபடியே எல்லாப் பிரதிகளிலும் இருப்பதனால் எi-பாடமே கொள்ளப்பட்டது.) 2 i-iii-iஎ-எ-எi-எiii “நுதலிற்று” 3 ii “உதாஹரணம் வருமாறு” 4 ii-எi-எii “உண்பாள் என்பன. இவை தெரிநிலை வினை” 5 ii-எii “எனவரும் இவை குறிப்புவினை என்று வேறுபாடு அறிந்து கொள்க. இனி முதற் சூத்திரத் துரையில் விரித்தாங்கு “ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல்’ எனச் சூத்திரம் பொதுப்பட நின்றமையின்” என்று தொடங்கி உரைத்தவைகள் எல்லாம் ஈண்டும் விரித்துரைத்துக் கொள்க.” எi (கோடிட்ட சொல்மட்டும் இல்லை. பிற பிரதிகளில் எல்லாம் இல்லாமையால் பதிப்பில் கொள்ளப்பெறவில்லை. பின் வந்தோர் விளக்கமாக்க குறிப்பு எழுதிய பகுதிபோலும்.) 7. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் மாரைக் கிளவி 1உளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், பலரை அறியும் 2சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று என்பது. இதன் பொருள்:- ரஃகானாகிய ஒற்றும், 3பகரமாகிய இறுதியும், மார் என்னும் சொல் உட்பட இம்மூன்றும் நிரம்பத் தோன்றும் பலரை அறியும் 4சொற்கு என்றவாறு. பலரை அறியும் சொல்லாவன: ரகரம், பகரம், மார் என்பனவற்றை ஈறாக உடைய சொற்கள் என்றவாறு. (உ-ம்.) உண்டார், உண்ணாநின்றார், உண்பார், 5கரியர், செய்யர், உண்ப, தின்ப, ஆர்த்தார் கொண்மார், வந்தார், பூக்குழாய் 6என்னையர் கண்இல்லாக தீது எனவரும். ரகார ஒற்று மூன்றுகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதலான் 7முன் வைக்கப்பட்டது. பகரம் எதிர்காலமாகிய ஒருகாலம் பற்றி வருதலான் உயிர்மெய் 8எழுத்தேனும், அதன்பின் வைக்கப்பட்டது. மார் என்பதூஉம் எதிர்காலம் பற்றி வரினும் ஒற்றாய் வருதலானும், பெருவழக்கிற்று அன்று ஆதலானும், பகரத்தின் பின் வைக்கப்பட்டது. நேரத்தோன்றும் என்றதனான், உண்டனம், உண்ணா நின்றனம், உண்குவம், கரியம், செய்யம் என மகர ஈறும் காட்டுவார் உண்மையின், “யானும் என் எஃகமுஞ் சாறும்” என்புழி அம்மகரம் அஃறிணையும்9 உளப்படுத்துத் திரிவுபட நிற்றலின் 10அந்நிகரன திரிபுடைய, இவையே 11திரிபில்லன 12என்பன 13கொள்ளப்பட்டது. சொற்கு என்பது சொல்எனச் செய்யுள் விகாரத்தான் தொக்கஎன உணர்க. நான்காவது 14விரியாது 15நேரத்தோன்றும் பலரறிசொல் மாரைக் கிளவி 16உளப்பட மூன்றும் என எழுவாயும் பயனிலையும் ஆக்கிக் கொள்ளின், நேரத்தோன்றும் பலரறிசொல் இவை என நேரத்தோன்றாதனவும் பலரறிசொல் உள எனக் 17கருத்து அருத்தாபத்திப்பட்டு அவையும் தனக்கு உடன்பாடாய் மேற்கூறு வான் 18போல நிற்பதோர் சொல் நோக்கப்படுதலானும், தோன்றும் என நின்ற செய்யும் என் சொல், முற்றோசைப்பட்டு, பயனிலை வகையாதற்கு இசையாது நிற்றலானும் அவ்வாறு கூறல் ஆகாது என உணர்க. மேல் ‘ஈற்றினின்றிசைக்கும் பதினோரெழுத்தும்’ என்று 19பொதுவாக ஈறு என்று கூறுகின்றான் ஆகலின், ஈண்டுப் பகர 20இறுதி என்றும் கூறியது என்னை எனின், ஆண்டுக் கூறுகின்றது மொழியது ஈறு என்பதன்றே? ஈண்டு 21அகரம் உயர்திணைப் பன்மையை உணர்த்துங்கால் தானே நின்று உணர்த்தாது பகர ஒற்றின்மேல் ஏறி அதன் 22பின் நின்று உணர்த்தும் என்றற்குக் கூறியது என உணர்க. இக்கருத்து மேற்கூறுவனவற்றிற்கும் பொருந்தும். பகர விறுதி என்பன இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அகரம் பகர ஒற்றோடு புணர்ந்து நிற்றலாற் பகரம் எனவும் பட்டது. அவ்வாறு 23நிற்புழி அதன் இறுதி 24நிற்றலின் இறுதி எனவும் பட்டது. (7) அடிக்குறிப்புகள் 7-1 iஎ “உள்பட” 2 i “சொல்ஆமாறுணர் - எது” 7-3 ii-எii “பகார” 4 ii-எii “-சொற்கள்” 5 i “கரியா மாகிய” 6 iஎ “என்னையா ணில்லாக தீது” 7 iஎ “முன் வகைப்பட்டது” 8 எ “எழுத்தெனினும்” 9 iஎ “உளப்படுத்தித்” 7-10 i-iஎ “ந ந கான்” எi-எii “அந் ந கான்” ii-எii “அந் ந காண” எ “அம்மகரம்” “அந் நகரன” “அந் நிகரன” (“அம் மகரம்” என்பதனை அடித்ததன் மேல் இந்த இரு திருத்தங்களும் உள்ளன. னகரத்தின் மேல் உள்ள சுழி தவறாக விடுபட்டமையால் இக் குழப்பம் என்பது தெளிவு.) 11 எல்லாப் பிரதிகளும் “திரிபல்லன” (எ-இல் “பி” பின் “ப” என்று மாற்றப்பட்டுள்ளது. பி என இருப்பது பொருந்தலாம்.) 12 i-ii-எi “என்பன” 13 ii “கொள்ளப்பட்டன” 14 ii “விரியாவது” 15 i “நொ” (காலுக்கும் ரகரத்துக்கும் மாறாட்டம். கொம்பின்மேல் புள்ளியிட்டால் குறிலாம்; புள்ளியிடும் வழக்கம் மறைந்தமையால் வரும் இடர்ப்பாடு இங்குக் காண்க. இத்தகைய திருத்தங்களைக் கீழ்க்குறிப்பில் இனிக் காட்ட வேண்டுவது இல்லை.) 16 i “உள்பட” 17 i-ii-iii-iஎ-எii “கரத்தருத்தா பத்தி” எi “உள என்ற கருத்து அருத்தா பத்தி” எiii “உள என கருத்து அருத்தா பத்தி” 18 iii “போலன நிற்பதோர்” 7-19 i-ii-எii “பொது ஈறு என்று” 20 i “இறு என்றுங்” 21 i “அகர முயர் முயர்” ii “அகரமுயிரும் உயர்திணை” 22 எ “அதன் பின்னர் நின்று” 23 i-ii “நிர்புழி” 24 i-எi “நிற்றலினின் றுதி” 8. ஒன்றறி கிளவி 1தறட ஊர்ந்த குன்றிய லுகரத்து இறுதியாகும். என்பது என்நுதலிற்றோ எனின், உயர்திணைச் சொல்ஆமாறு உணர்த்தி, இனி அஃறிணைச் சொல்லாமாறு உணர்த்துதல் 2நுதலிற்று. இதன் பொருள்:- ஒன்றனை அறியுஞ் சொல்லாவது 3த ற டக்கள் என்கிற ஒற்றுக்களை ஊர்ந்து வருகிற குற்றியலுகரமாகிய எழுத்தினை ஈறாக உடைய சொற்கள் என்றவாறு. (உ-ம்.) உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரியது, 5சேயது என இவை தகரம் ஊர்ந்து வந்த 6குற்றியலுகரம். கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று என இவை றகரம் ஊர்ந்து வந்த 7குற்றியலுகரம். குண்டு கட்டு, கொடுந் தாட்டு என வரும் இவை டகரம் ஊர்ந்து வந்த 8குற்றியலுகரம். மற்று ட த ற என்று எழுத்துக் கிடக்கை 9முறைமையான் கூறாதது என்னை எனின், தகரம் மூன்று காலமும், வினைக் குறிப்பும் கோடலான் முன் 10வைக்கப்பட்டது. றகரம் இறந்த காலம் ஒன்றும், வினைக்குறிப்பும் கோடலான் அதன்பின் வைக்கப்பட்டது. டகரம் வினைக்குறிப்பல்லது கோடல் இன்மையின் 11அதன் பின் வைக்கப்பட்டது. உகரத்திறுதி - உகரமாகிய இறுதி எனப் பண்புத் தொகை. அத்து: அல்வழிச் சந்தி. உகர ஈற்றுச் 12சொல்லிற்கு உகர இறுதி என்பது இரு பெயரொட்டுப் 13பண்புத்தொகை நிலைக்களமாய் நின்றது. (8) அடிக்குறிப்புகள் 8-1 i “த ட ர” ii “த ட ற” iii “த ந ட” 2 i-ii-எ-எi-எii-எiii “நுதலிற்று” 3 i-iஎ “தடரக்கள்” ii “தடரக்கள்” (பின்னர்த் “தறடக்கள்” என்ற திருத்தம். ரகர-றகர மாறுபாடு இச் சூத்திரமுழுதும் வருகிறது.) 8-4 ii “உதாஹரணம்” 5 ii-எi-எiii “செய்து எனவரும் இவை” (“செய்யது” என்று பின் திருத்தம். புள்ளி இடாப் பழக்கத்தால் எழுதும் இடர்ப்பாடு காண்க.”) 6 ii-எii “குற்றியலுகரம் ஈற்றவாம்” எi “குற்றியலுகர ஈற்றமாம்” 7 ii-எii-எi (மேற்குறிப்பிற் கண்டபடி.) 8 ii-எii (மேற்குறிப்பிற் கண்டபடி) 9 எi “முறையான்” 10 iஎ “வகைப்பட்டது” 11 i-ii “இதன்பின்” 12 i “சொல ல லிற்கு” (கோடிட்டது மிகுதி புள்ளியிட்டால் சரியாம்.) 13 i-ii-எii “பண்புத் தொகை . . . டென் . . . நின்றது” iii “பண்புத்தொகை . . . டென . . . யாய் நின்ற” (பின் “பண்புத்தொகை நிலைக்களமாய் நின்றது” என்ற திருத்தம் உள்ளது.) எ “பண்புத் தொகை . . . என . . . hய் நின்றது” எi “பண்புத் தொகை . . . நின்றது” 9. அ ஆ வ என1வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலஅறி சொல்லே. என்பது 2என்நுதலிற்றோ எனின், 3பலஅறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அ, ஆ, வ என்று சொல்ல 4வருகிற இறுதிகளை உடைய அக்கூற்று மூன்று சொல்லும், பலவற்றை அறியும் சொல் என்றவாறு. (உ-ம்.) உண்டன, உண்ணா நின்றன, உண்பன, 5கரிய, 6செய்ய; உண்ணா, 7தின்னா; உண்குவ, 8தின்குவ எனவரும். அகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் கோடலின் முன் 9வைக்கப்பட்டது. 10ஆகாரம் எதிர்காலமாகிய 11ஒரு காலம் கோடலானும், எதிர்மறை வினைக்கண் அல்லது வாராமையானும் அதன்பின் வைக்கப் பட்டது. வகரமும் அகரம் என 12அடங்குமே எனினும் அவ் அகரம் போல மூன்று காலத்தும் வினைக்13குறிப்பினும் வாராது, உண்டல், தின்றல் இவை முதலாகிய 14தொழில்தொறும் உண்குவ, தின்குவ என எதிர்காலம் பற்றி வேறோர் 15வாய்பாடாய் வருதலான், அவ்வகரத்தோடு அடங்கா நிலைமை சிறப்புடைய அகரத்தை முன் கூறி, 16அதனை அதன்பின் 17வைத்தான் என்பது. இக்கடா 18அவற்றிற்கும் ஒக்கும். பலஅறிசொல் என்னும் எழுவாய்க்கு, இறுதி என்பது பயனிலை ஆக்கின் அப்பான் மூன்று என்பது நின்று 19வற்றும் ஆகலின் 20மூன்று என்பதையே பயனிலையாக்கி இறுதி என்பதனை இறுதியை உடைய மூன்று எனப் பயனிலைக்கு அடையாக்கி உரைக்க. (9) அடிக்குறிப்புகள் 9-1 iஎ “வருமிறுதி” 2 ii “இச் சூத்திரம் என் நுதலிற்றோ.” 3. ii-எi “அஃறிணைக்கட் பலவறி சொல்” 4 i “வருகற” 5 i “குரிய” ii “குரிய” (“கரிய” என்றும் திருத்தம்.) 6 ii-எi-எii “செய்ய என இவைகள் அகர ஈற்றன” 7 எi “தின்னா என இவை ஆகார ஈற்றன.” ii-எii “தின்னா - இவை ஆகார ஈற்றன.” 8 ii-எii தின்குவ - இவை வகர ஈற்றன என்க. எi “தின்குவ என இவை வகர ஈற்றன” 9 iஎ “வகைப்பட்டது” 10 i “அகாரம்” 11 எ “ஒரு காலமே கோடலானும்” 12 iஎ “வழங்குமே.” 13 ii-எi-எii “குறிப்பின் கண்ணும் வாராது.” 9-14 i “தொழிறோற” ii-எii “தொழிறோன்ற” (திருத்தம்.) 15 i-ii-எii “வாய்ப் பாடாய்.” எi “வாய்ப் பாட்டான்.” 16 எi “இதனை” 17 “வைத்தார்.” 18 ii “விற்றிற்கும் ஒக்கும்” எi “ஈற்றிற்கும் ஒக்கும்” (இந்த வாக்கியம் இச்சூத்திர உரையின் கடையில் வருதல் வேண்டும்) 19 i “நின்று வரும் ஆகலின்” (ர-ற மாறாட்டம்.) ii “நின்று விடும் ஆகலின்.” (கோடிட்டது திருத்தம்.) 20 iஎ “முற்று என்பதையே” 10. இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய ஈற்றினின் றிசைக்கும் பதினோர் எழுத்தும் தோற்றம் தாமே வினையொடு வருமே. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் 1பால் உணர்த்தும் என்னப்பட்ட எழுத்து இனைய என்பதூஉம், அவை வினைக்கண் நின்று உணர்த்தும் என்பதூஉம், வினைக்கண்ணும் ஈற்றின்நின்று உணர்த்தும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இரண்டு திணையிடத்தும் உளவாகிய ஐந்து பாலினையும் அறியும்படி மொழியது ஈற்றுக்கண்ணே நின்று 2உணர்த்தும், மேற்சொல்லப்பட்ட 3பதினொருவகை எழுத்தும், அவைதாம் 4பால் உணர்த்துதற்குப் புலப்படும் இடத்து வினைச்சொல்லொடு வந்து புலப்படும் என்றவாறு. 5பதினொரு எழுத்தும் ஆவன:- 6னஃகான் ஒற்றும், ளஃகான் ஒற்றும், 7ரஃகான் ஒற்றும், பகரமும், மாரும், துவ்வும், றுவ்வும், டுவ்வும், அவ்வும், ஆவும், வவ்வும் என இவை. இசைக்கும் என்பது, செய்யும் என்னும் முற்றுச்சொல்; பெயர் எச்சம் 8என்னும் பொருள் படும். மேற்கூறிய திணையினையும், பாலினையும் ஈண்டு வரையறுத்து “இருதிணை மருங்கினைம்பால்” எனக் கூறிய காரணம் என்னை எனின், உயர்திணைப் பொருள் தேவரும், நரகரும் எனவும் உயர்திணைப் பாலுட் பேடியும், அலியும் என விரிந்து நின்றனவும் பொருள்கள் உண்மையின், இப்பொருட் பகுதி எல்லாம் சொற்பகுதி பிற இன்மையின் ஐந்தாய் அடங் கினவே எனினும், 9பொருட் பாகுபாடு பற்றி நூலகத்து வேறு திணையும் பாலுமாக 10வழங்கவுங் 11கூடும் கொல்லோ என்று மாணாக்கன் 12ஐயுறுவான் ஆயினும் என்று ‘இவை அல்லது இல்லை’ என விரித்துத் தொகுத்தல் என்னும் இலக்கணத்தான் வரையறுத்து ‘இருதிணை யைம்பால்’ என்றா13ன் ஆகக் கொள்க. முதற் சூத்திரத்துள் கூறப்பட்ட சொல் இலக்கணம் எட்டினுள்ளும் திணைபால் என்பனவற்றது இலக்கணமே இத்துணையும் கூறியது என உணர்க. முன் நின்ற நான்கு 14சூத்திரமும் திணையும் பாலும் சொல்லும் பொருளும் வரையறை இலக்கணமும் கூறின எனவும், பின் நின்ற ஆறும் 15அத்திணையும் பாலும் உணர்த்தும் 16சொற் களின் இலக்கணம் கூறின எனவும் உணர்க. (10) அடிக்குறிப்புகள் 10-1 iஎ “பாலுணர்த்து மேன்மைப்பட்ட.” 2 iii “உணர்ந்தும்” 3 iஎ “பதினோரு” 10-4 எ “அப்பாலுணர்த்துதற்குப்” 5 எi “பதினோரு எழுத்தும்” (“எழுத்து” என உயிர் முதலாகும் சொல்லின் முன் ‘ஓர்’ என வருவது விதியே ஆனாலும் பிற்காலத்தே இது பிறழ்ந்தது. “ஒரு எழுத்து” என்று பல இடத்தும் காண்கிறோம்.) 6 i “னஃ ணொற்றும் ளஃ ணொற்றும்” iஎ “னஃனொற்றும் ளஃ குனாற்றுமே ரஃ னொற்றும்” 7 i “ரகரம் ஈஃகான்” (ரகரம் பிரதிகளில் சிலபோது இவ்வாறு தோன்றும்.) 8 iii “என்றும்” 9 i-ii-iஎ-எi-எii “அப்பொருட் பாகுபாடு” 10 i-ii-iஎ-எi-எii “விளங்கவும்” எiii “வளங்கவும்” (‘வ’ என்பதனைக் கூட்டெழித்தில் ‘வி’ என்று படித்தலுமாம். ள-ழ மாறாட்டம் காண்க.) 11 எi “கூடுங் கொல்லே என்று” i-எiii-iஎ-எ “கூடுங் கொல்லோ என்ற” 10-12 (“ஐயுறுவானாயினும் இவையல்ல தில்லை” என்பது விளக்க மாகும். ‘என்று’ என்பது இடையில் நுழைந்தது வழக்குப்போலும்.) 13 “ர்” 14 iii “சூத்திரத்தினையும் பாலும்” (இடையே எழுத்துக்கள் விடுபட்டன) 15 i-ii-iii-எii “அத்திணையும் சொல்லும் பாலும்” 16 i “சொற்களில்” 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. 1என்பது என்நுதலிற்றோ எனின், 2வழுக்காத்தல் நுதலிற்று. வழுக்காக்கும் இடத்து வழுவற்க என்று காத்தலும், வழு வமைக என்று காத்தலும் என இரண்டாம். அவற்றுள் இது வழுவற்க என்று 3காத்தல். 4இதன் பொருள்:- வினைச்சொல்லான் அடங்கும் பால்அறியப்படும் பொருளும், 5பெயர்ச்சொல்லான் அடங்கும் பால்அறியப்படும் 6பொருளும் இவ் இரு7வகைப் பொருளும் ஒன்றோடு ஒன்றை மயங்கச் சொல்லுதல் பொருந்தா; தத்தம் இலக்கணத்தானே 8சொல்லுதல் உடைய என்றவாறு. (உ-ம்.) உண்டான் அவன், உண்டாள் அவள், 9உண்டனர் அவர், உண்டது அது, உண்டன அவை. 10இவை வினை. அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார், அது உண்டது, அவை உண்டன. 11இவை பெயர். ‘பாலறி கிளவி’ என்றதனை ஈண்டும் பொருண்மேற் கொள்க. அவ்வாறு பொருண்மேற் கொள்ளவே பொருள் பற்றி நிகழும் வழு எல்லாம் படாமல் கூறுக என்பதாம். அவ்வழுக்களது பெயரும், முறையும், தொகையும் ஓரிடத்தும் 12கூறிற்றிலனே எனினும் உரையிற் கோடல் என்பதனான் 13இச் சூத்திரத்து உரையுட் கொள்ளப் படும். அவையாவன: திணைவழூஉ, பால்வழூஉ, இடவழூஉ, கால வழூஉ, மரபுவழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என 14இவை. இவைஎல்லாம் மரபுவழு என ஒன்றே ஆகற்பால எனின் அவ்வாறு ஒன்றாய் அடங்குமே எனினும் அம்மரபினைப் பகுத்து, 15திணைபற்றிய மரபினைத் திணை என்றும், பால் பற்றிய மரபினைப் பால் என்றும், இடம் பற்றிய மரபினை இடம் என்றும், காலம் பற்றிய மரபினைக் காலம் என்றும், 16செப்புப் பற்றிய மரபினைச் செப்பு என்றும், வினாப் பற்றிய மரபினை வினா என்றும், பகுத்து இவ்வாறு ஒன்றனையும் பற்றாது வருவதனை மரபு என ஒன்றாக்கி இலக்கணமும் வழுவுங் கூறினாரென்பது. அவற்றுள் திணைவழூஉ: உயர்திணைப்பால் மூன்றும் அஃறிணைப் பால் இரண்டனொடு மயங்கி உயர்திணைவழூஉ மூவிரண்டு 19ஆறுஆம்; இனி அஃறிணைப்பால் இரண்டும் உயர்திணைப் பால் மூன்றனோடு மயங்கி அஃறிணைத் திணைவழூஉ இருமூன்று ஆறாம். இவை பெயர்வினை என்னும் இரண்டனோடு 20உறழ இருபத்து நான்கு ஆம். (உ-ம்.) அவன் வந்தது, அவன் வந்தன: என்றாற் போல்வன பெயர் 21பற்றிய உயர்திணைத் திணைவழூஉ. அது வந்தான், அது வந்தாள், அது வந்தார் என்றாற் போல்வன பெயர் பற்றிய அஃறிணைத் திணைவழூஉ. இனி, வந்தானது, வந்தானவை என்றாற்போல்வன வினை பற்றிய உயர்திணைத் திணை22வழூஉ. உண்டது அவன், உண்டது அவள், 23உண்டது அவர் என்றாற் போல்வன வினைபற்றிய அஃறிணைத் திணைவழூஉ. இனிப் பெயரொடு பெயர் பற்றிய திணைவழூஉ. வினை யொடு வினை பற்றிய திணைவழூஉ என விகற்பிக்கப் பலவுமாம். அவன் அது, அவன் அவை என்றாற் போல்வன பெயரொடு பெயர் பற்றிய திணைவழூஉ. 24உண்டான், தின்றான், ஓடினான் பாடினான் என ஒருவன்மேல் பலவினை கூறுகின்றுழி 25உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்றாற் போல்வன வினையொடு வினை பற்றிய திணை வழூஉ. இனிப் பால்வழூஉ: உயர்திணைப்பால் மூன்றும் 26ஒன்று இரண்டினோடு மயங்கி மூவிரண்டு ஆறாம். அஃறிணைப்பால் இரண்டும் 27ஒன்ற னோடு ஒன்று மயங்கி ஓர் இரண்டு ஆயின. ஆகப் பால்வழூஉ எட்டு வகைப்படும். அவை வினை பெயர் என்னும் இரண்டனோடு உறழப் பதினாறு ஆம். (உ-ம்.) அவன் 28உண்டாள், அவன் உண்டார் என்பன உயர்திணைப் பெயர் பற்றிய பால் வழூஉ. அது வந்தன, 29அவை வந்தது என்பன அஃறிணைப் பெயர் பற்றிய பால் வழூஉ. உண்டான் அவள், உண்டான் அவர் என்பன 30உயர்திணை வினை பற்றிய பால் வழூஉ. வந்தது அவை, வந்தன 31அது என்பன அஃறிணை வினை பற்றிய பால் வழூஉ. இனிப் பெயரொடு பெயரும் வினையொடு வினையும் பற்றிய வழுஆவனவும் உள. 32அவன் யாவள், அது யாவை; என இவை பெயரொடு பெயர் பற்றிய பால்வழூஉ. உண்டான், 33தின்றாள், ஓடினான், பாடினாள், சாத்தன் எனவும், உண்டது, தின்றன, வந்தது, கிடந்தன ஓர் எருது எனவும் இவை வினையொடு வினை பற்றிய பால்வழூஉ. இனி இடவழூஉ: தன்மை முன்னிலை படர்க்கைஎன்னும் மூன்றும் 34ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டு ஆறுஆம். (உ-ம்.) யான் உண்டாய், யான் உண்டான் என்பன. பெயர் வினைகளைப்பற்றி வரும் விகற்பம் இவற்றிற்கு ஒக்கும் என உணர்க. காலவழூஉ: இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டு ஆறுஆம். (உ-ம்.) 35செத்தானைச் சாகின்றான் எனவும், சாவான் எனவும் கூறினாற்போல வருவன. இவையிற்றிற்கும் பெயர் வினைகளைப் பற்றி வரும் விகற்பங் கொள்க. மரபுவழூஉ: ஒரு பொருட்கு 36உரிய மரபினை ஒரு பொருட்கு உரித்தாகச் 37சொல்லுதல். (உ-ம்.) 38யானை மேய்ப்பானை இடையன் என்றும், ஆடு 39மேய்ப்பானைப் பாகன் என்றும், யானையுள் பெண்ணை ஆ என்றும், ஆவினுள் பெண்ணைப் பிடி என்றும் கூறினாற் போல்வன. செப்பு வழுவிற்கும் வினாவழுவிற்கும் 40உதாரணம் மேல் வருகின்ற ‘செப்பும் வினாவும்’ என்னுஞ் சூத்திரத்தாற் கொள்ளப்படும். எழுவகை வழுவும் இச்சூத்திரத்துள் ‘மயங்கல்கூடா’ என்றதனாற் பெறுதும் எனின், மேற் ‘செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’ எனச் செப்பு வழுவும், வினாவழுவும் கூறல் அமையாது எனின், இதனுள் அடங்கினவற்றையே உலகத்துச் 41சொல் எல்லாம் உயர்திணைச்சொல் அஃறிணைச் சொல் என 42வரையறையுற்றாற் போல வினா உரையும் செப்புஉரையும் என இரண்டாக வரையறைப்படுத்து ஓர் நிலைமை கண்டு அதனை உணர்த்ததற் பொருட்டு மீட்டும் விளங்கக் கூறினா43ன் என்று சொல்லுப. எழுவகை வழுவிற்கும் இஃது ஓர் பொது விதி கூறியது எனவும், சிறப்பு விதி வேறு கூறிற்று எனவும் உரைக்கப் படும். செப்புவினா ஒழிந்தவற்றிற்குச் சிறப்புவிதி யாதோ எனின், வினையியலுள் கடைக்கண் கால வழுவிற்கு விதி44பெறுதும். மரபு வழுவிற்கு விதி பொருளதிகாரத்து மரபியல் என்னும் 45ஓத்தினுள் பெறுதும்; ஒழிந்த திணைபால் இடங்கட்கு விதி ‘னஃகா னொற்று’ முதலிய சூத்திரங்களாற் கூறிற்று என உணர்க. இவ்வாறு 46நூனயமாதல் இச்சூத்திரத்து 47உரையினுள் கண்டு கொள்க. இவ்அதிகாரத்துக் கூறப்படும் விதி மாணாக்கன் ஒரு பொருளினைக் கூறும் திறன் அறியாது இடர்ப்படுதல் நோக்கி இன்ன பொருளை இன்னவாறு கூறுக என்று அதன் இலக்கணம் கூறுதலும், அதனை அவ்வாறு ஒழியவும் 48கூறுதலும் ஆம் என்று கருதினும் கருதற்க என்று அதனை 49வழுவற்க என்று காத்தலும், அவ்வாறு வழுப்படக் கூறிய வழக்கினுள் சிலவற்றை 50அதன் அகத்து அவ்வாறு கூறுதற்கு ஓர் பொருட் காரணம் 51கண்டாதல், அது அன்றிப் பலரும் பயில வழங்குதல் கண்டாதல், 52அமைதி கூறுதலும் என மூவகை. அவற்றுள் இச்சூத்திரம் வழுவற்க என்னும் விதி கூறிற்றென உணர்க. (11) அடிக்குறிப்புகள் 11-1 iஎ “எ-னின்” (இனி இவ்வேறுபாடுகள் குறிக்கப்படா.) 2 i “வழுக்காத்தலை” 3 i “காத்தது” 4 ii “பொருள்” - வினைச்சொல்லான். i “வினைச்சொல்லான்” எ “வினைச்சொல்லின்” எi “இ-ள். வினைச்சொல்லான்” (இ-இள்; பொருள்: இதன் பொருள். இவற்றைப்பற்றி இனிக் கீழ்க்குறிப்புகள் எழுதப்படா.) 5 எ “பெயர்ச் சொல்லின்” 11-6 எi-ii-எii “பொருளும் என இவ்விரு” 7 i “வகை பொருளும்” (சந்திப் பிழைகள் பிரதிகளில் பல.) 8 iii “சொல்லுதல் உடைத்தாம் என்ற” 9 எi “உண்டார் அவர்” 10 ii-எi-எii “எனவரும் இவை வினை” 11 ii-எi-எii “எனவரும் இவை பெயர்” 12 i-iii-iஎ-எ-எiii “கூறிற்றிலரே எனினும்” எi “கூறிற்றிலரே யாயினும்” ii-எii “கூறிற்றிலனே யாயினும்” 13 எ “இச்சூத்திர உரையுள்” 14 i-எi-எii “இவையாம்” 11-15 ii “திணைப்பற்றிய” 16 i-ii-iஎ-எi-எii-எiii “செப்பு பற்றிய” 17 ii “வழூஉங்” 18 “ர்” 19 எi “ஆறாய்” 20 i “உரழ” 21 i “பற்றி வுயர்திணை” 22 எi “வழூஉ உண்டதவர்” 23 i “உண்டதவர் . . . றிய” 11-24 i “உண்டான நின்ற வொட்டினான் சாத்தன் என ஒருவன்மேல்” எii “உண்டான் றியின்ற ஓடினான் பாடினான் என ஒருவன்மேல்” எi “உண்டான் தின்றான், ஓடினான், சாத்தன் என ஒருவன்மேல்” iii-எ “உண்டான் தின்றான் ஓடினான் என ஒருவன்மேல்” 25 i “உண்டான் நின்ற வொடினான்” எiii “உணடான் றியன்ற ஓடினான்” எ “உண்டான், தின்றது, ஓடினான், பாடினது” (கோடிட்டவை திருத்தம்.) 26. iii “ஒன்றிட ரண்டனுடன்” (‘ட’ பிழை.) 27 iii “ஒன்றினோ டொன்று” ii “ஒன்றணோ - ட் - தொன்று” 28 ii “உண்டான்” 29 iஎ “அவைந்தது” 30 i “உயர்திணை பற்றிவந்த” ii “உயர்திணை வினைபற்றிவந்த” 11-31 i-ii-iii-எi-எii-எiii “அவை” 32 iஎ “அவை யாவர்” 33 ii “நின்றாள் ஓடினாள்” iஎ “றினா ளோடினாள்” 34 ii “ஒன்றொன்றிரண்டனோடு” 35 iஎ “செத்தான் சாகின்றான்” 11-36 ii “உறிய” 37 ii-எi “சொல்லுதலாம்” 38 iஎ “ஆயானை” (பின்வரியில் வரும் “ஆ” இங்குப் படிக்கப்பட்டது போலும்.) 39 i “மெய்பானை பாகன்” 40 ii “உதாகரணம்” 41 i-ii-iii-iஎ-எii “சொல்லாம்” 42 ii-எii “வரையற்றாற் போல” i-iஎ “வரையறையற்றாற் போல” iii “வரையறைத்தாற்போல” 43 “ர்” 11-44 i-iஎ “பெற்றும்” ii “யென்றும்” 45 i “ஓத்தினிட் கண்டுகொள்க” ii-எii “ஓத்தினிடையும் கண்டுகொள்ளப் பெறும்” எi “ஒத்திடைக் கண்டுகொள்ளப் பெறுதும்” 46 iஎ “நுண்ணியமாதல்” 47 எஎ “உரையுள்” 48 i “கூறுதலிம் என்று” ii “கூறுதலும் என்று” 49 i-ii “வழுவாக (காலை ‘ர’ என்று கொண்டு ‘ர்’ என்று படித்தலாம். ர-ற மாறாட்டம்) 50 i “அதனக்க வ்வாறுதற் கோர்.” ii “அதனகத் தவ்வாறு தற்கோர்.” 51 எi “கண்டாதல் அமைதி கூறுதலும்” (இடையில் ஒருவரி விடப்பட்டதுபோலும்.) 52 i “ஆமைதி” 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை அறி1சொற் காகிட னின்றே. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி உணர்த்துதல் நுதலிற்று. மேல் ‘2பெண்மை சுட்டிய’ என்றதனுள் பேடியை முப்பாலா னும் சொல்லுக என்னும் விதியுள் ஒரு கூற்றை விலக்கியது என உணர்க. இதன் பொருள்:- உயர்திணை யிடத்துப் பெண்மையைக் கருத வேண்டி ஆண்மைத் தன்மை நீங்கிய பேடி என்னும் பெயராற் சொல்லப்3படும் பொருண்மை ஆண் மகனை அறியும் சொல்லாற் சொல்லுதற்காம் 4இடன் இல்லை என்றவாறு. எனவே பெண்பா லானும் பன்மைப்பாலானும் சொல்லுக என்றவாறு. (உ-ம்.) பேடி வந்தாள், பேடியர் வந்தார் என இவை. ‘இடன்’ என்ற மிகுதியாற் பேடி வந்தான் 5என்பதூஉம் சிறுபான்மை அமையும் என்பது. அவ்வாறு அமையும் என 6விலக்கிப் பெற்றது என்னை எனின், பெரும்பான்மை சிறுபான்மை உணர்த்துதல் என உணர்க. இதனைப் ‘பெண்மை சுட்டிய’ என்றதன்பின் வையாது, இத்துணையும் போதந்து மேற்கூறப்படுகின்ற வழுவமைதி களோடு 7சாரவைத்த முறையன்றிக் 8கூற்றினான் பெண்ணும் ஆணும் அல்லதனை அவ் அப் பால் சொல்லான் சொல்லுதலும் வழுவமைதி என்பது பெறப்பட்டது. வழுவமைதிகள்தாம் இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதியும், இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதியும் என இருவகைப் படும். அவற்றுள் இஃது இலக்கணம் இல்வழிக் கூறிய வழுவமைதி என உணர்க. இது பால்பற்றிப் பிறந்தொரு மரபு வழுவமைதி என உணர்க. (12) அடிக்குறிப்புகள் 12-1 iஎ “சொற்கிடனின்றே” 2 i “பன்மை சூட்டிய” 3 i “படு . . . ருண்மை” 4 i “இடைனில்லை” 5 i-iஎ-எi “என்பதும்” 6 iii “விலக்கு” 7 i-ii-iஎ-எii “சொல வைத்த” எi-எiii “சொல்லி வைத்த” 8 i “கூறிற்றினார்” iஎ “கூறினார்” 13. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல். என்பது என்நுதலிற்றோ எனின், செப்பு வழுவும், வினாவழுவும் காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- செப்பினையும், வினாவினையும் வழுவாமல் ஓம்புக; 1என்றது பரிகரித்துக் கூறுக என்றவாறு. (உ-ம்.) சாத்தா சோறுண்ணாயோ என்றாற்கு உண்பேன் என்றலும் உண்ணேன் என்றலும் எனக் கொள்க. செப்பு வினா 3என்னும் அவற்றுள், செப்பு, மறுத்தலும், உடம்படுதலும் என இரண்டு வகைப்படும். நும்நாடு யாது? என்றாற்குப் 3பாண்டிநாடு என்றாற் போல்வன இவ்விரண்டனுள் அடங்காது எனினும், ஒருவகையான் அடக்கிக் கொள்ளப்படும். இனி வினா ஐந்து 4வகைப்படும்: அறியான் வினாதல், அறி வொப்புக் காண்டல், ஐயமறுத்தல், அவனறிவு தான்கோடல், மெய்யவற்குக் காட்டலோ டைவகை 5வினாவே என இவை. ‘அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல், ஐயமறுத்தல் அவனறிவு தான்கோடல், மெய் அவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே’ என்பதுங் கண்டுகொள்க. வழாஅல் ஓம்பல் எனவே வழுவுதலும் உண்டு என்பது பெறப்பட்டது. அவற்றுட் செப்புவழூஉ:- வினா எதிர் வினாதலும், ஏவுதலும், உற்றது உரைத்தலும், உறுவது 7கூறலும், சொல் 8தொகுத்து இறுத்தலும், சொல்லாது இறுத்தலும், பிறிது ஒன்று 9கூறலும் என எழுவகைப்படும். உறுகின்றது கூறல் 10என்றும் ஒன்று உண்டேல் 11உற்றது உரைத்தலுள் அடங்கும் எனக் கொள்க. அவற்றுள் பிறிதொன்று கூறல் அமையா வழூஉ எனப்படும். கருவூருக்கு வழியாது? எனப் பருநூல் பன்னிருதொடி 12என்றாற்போல்வன. மற்றைய ஆறும் அமையும் வழு எனப்படும். 13அவற்றுள் வினா எதிர் வினாதல் ‘வினாவுஞ் செப்பே’ என்ற வழிக் கொள்ளப்படும். ஏவலும் உற்றதுரைத்தலும் 14உறுவது கூறலும் என்னும் மூன்றும் ‘செப்பே, வழீஇயினும்’ என்புழிக் கொள்ளப்படும். சொற்றொகுத்திறுத்தல் ‘எப்பொரு ளாயினும்’ என் புழியும், 15‘அப்பொருள் கூறின்’ என்புழியும் கொள்ளப் படும். 16சொல்லாதிறுத்தலாகிய ‘பெருமா உலறினீரால், என்றார்க்கு வாளாதே 17‘உலறினேன்’ என்றாற் போல்வன, 18அதிகாரப் புறனடையாகிய ‘செய்யுண் மருங்கினும்’ என்புழிக் கொள்ளப்படும். வினாவழூஉ:- தான் வினாவுகின்றதனைக் 19கேட்டான் இறுத்தற்கு இடம் படாமல் வினாதல் என ஒன்றே ஆம். (உ-ம்.) ஒரு விரல்காட்டி 20இது நெடிதோ குறிதோ என்றாற் போல்வன. வினாவிற்கு அமையா வழுவல்லது அமையும் 21வழூஉ என்பது ஒன்று இல்லை. 22‘வழாஅல்’ என்பது, வழுவி என்னும் 23செய்து என் எச்சத்து எதிர்மறையாகிய வழாமல் என்னும் சொல் 24குறைக்கும் வழிக் குறைத்தல் என்பதனால் இடைநின்ற மகரம் 25குறைத்து நின்றது என உணர்க. 28செப்பு, முற்கூறிய காரணம், செப்பு, ஆசிரியன் கண்ணதாகலானும், வினாவினை அறிவிப்பது 27செப்பாகலானும், வினா இன்றியும் 28செப்பு நிகழும் ஆகலானும், வழூஉப் பன்மை 29செப்பின் கண்ணதாகலானும் 30முன் கூறப் பட்டது. வினாவுரையும் செப்ப நிகழ்தலின் செப்பு என ஒன்றேயாய் அடங்காதோ எனின் 31அடங்கினும் ஒன்றனை அறியாது கூறல் வினா என்றும், 32ஒன்று அறிவித்தற்குக் கூறல் செப்பு என்றும் இரண்டாகப் பகுத்து ஆராய்ந்தான்33 என உணர்க. (13) அடிக்குறிப்புகள் 13-1 எiii “ஓம்புக என்ற - று பரிகரித்து” (“ஓம்புக என்ற வாறு. ஓம்புக என்றது பரிகரித்துக் கூறுக. என்றவாறு” என்றிருந்தது போலும்.) 2 எi “என்றவற்றுள்” 3 i “பாண்டினாடு” 13-4 iii-iஎ-எi “வகைப்படும். அறியான் வினாதல் அறிவொப்புக் கரண்டல் அவனறிவுதான் கோடல். மெய்யவற்குக் காட்டலும் என ஆங்ஙனம் அறியான்” 5 ii “வினாவே என்பதும் கண்டுகொள்க என இவை” எi மேற்படி (கோடிட்ட பகுதி இல்லை.) 6 i “விழா அலோமைப” 7 iஎ “கூறுதலும்” 8 i “தொகுத்திருத்தல்” (சிறப்பு ஒன்றும் தோன்றாத இந்த “ர” “ற” மாறாட்டம் இனிக் காட்டப் பெறாது.) 9 ii “கூறலும் என்று” எi “கூறுதலும் என” 10 i-ii-iii-iஎ-எ-எi-எiii “என்னும் ஒன்று” 11 i-ii-iஎ-எii “உற்றதுணர்த்தலுள்” (ரை - ணர் மாறாட்டம்.) 12 iii “என்றாற் போல” 13-13 எi “வினாவெதிர் வினாதல்” 14 ii “கூறுவது கூறல் என்னும்” i-iஎ “உறுவது கூறல்” 15 ii-iஎ-எi-எii-எiii “பொருள் கூறில்” எ “பொருள் கூறல்” 16 எii (சொல்லாதிறுத்தல்: பெருமா.) 17 i “உலறி என்றாற் போல்வன.” 18 iii “அதிகார . . . ய” எ மேற்படி (பகர வளைவுக்குள் “ப் புறனடையாகி” என்பது எழுதப்பட்டுள்ளது.) 19 ii “கேட்டவுடன்” i-iஎ “கெட்டான் இருத்தற்கு” 20 i “ஈரு” 21 i “வளூ” (தென்நாட்டு வழக்கு) 13-22 ii “இனி வழால்” 23 i-iஎ “செய்தனெச்சத்” 24 i “குறைக்க வழி குணர்த்தல்” 25 ii “குறைந்து” 26 எi “செப்பு ஆசிரியன் கண்ணதாகலானும்” 27 எi “அது வாகலானும்” 28 எi “அது நிகழும்” 29 எi “அதன் கண்ணதாகலாலும்” 30 ii-எi “முற்கூறப்பட்டது” 31 ii-எi “அங்ஙனம் அடங்குமாயினும் ஒன்றனை” 32 ii-எi-எiii “ஒன்றனை யறிவித்தற்கு” 33 “ர்” 14. வினாவும் செப்பே வினாஎதிர் 1வரினே. என்பது என்நுதலிற்றோ எனின், செப்பு 2வழுவமைதி கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- வினா என்று சொல்லப்படுகின்றதும் ஒரோவழிச் செப்பு என்று 3சொல்லப்படும்; ஒருவன் ஒன்றனை வினாவத் தானும் அதற்கு எதிர் 4ஒன்றனை வினாவி இறைப்பொருள் 5படுத்துமே எனின், என்றவாறு. (உ-ம்.) சாத்தா சோறு உண்ணாயோ? என்றாற்கு, உண் ணேனோ? என்பது. இது வினா எதிர் வினாதல் என்னும் வழுவமைதி அன்றோ 6எனின்? வினாவே எனினும், பிறிதோரு வினா வந்து வினாப்பொருள் பயவாது செப்புப்பொருள் பயப்ப நிற்றலின், செப்பு வழுவமைதி 7என அடக்கினார். (14) அடிக்குறிப்புகள் 14-1 i “வரின்” 2 iஎ “வருவமைதி” 3 iii “சொல்லப்படுகிறது” 14-4 i “ஒன்றனை வி யிறை” 5 iii “பொருள் படுத்து மேலினின் - று” 6 எi “எனின் பிரிதோர் வினா” 7 i “என்று” (“என” எனத்திருத்தம்) 15. செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே 1அப்பொருள் புணர்ந்த கிளவி யான. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் செப்பு வழுவமைதி ஆமாறு உணர்த்துதல் 2நுதலிற்று. இதன் பொருள்:- செப்பு என்று சொல்லப்பட்டது வழுவி வரினும் 3வரைந்து மாற்றப்படாது; எவ் இடத்து எனின், வினாப்பொருண்மையோடு பொருந்திய சொல் இடத்து என்றவாறு. (உ-ம்.) 4உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என, நீ 5செல் என்றல் ஏவுதல். உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என, என்கால் 6முட்குத்திற்று என்றல் உற்றது உரைத்தல். உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என, என் 7கடனுடை யார் வளைப்பர், பகைவர் ரெறிவர் என்றல் உறுவது கூறல். 9செப்பே என்புழி ஏகாரம் பிரிநிலை. அதனைப் பிரித்து வழு வமைதி கூறினமையின், வினாவிற்கு வழுவமைதி இல்லை என்பது பெறப்பட்டது. வழீஇயினும் என்ற உம்மை இழிவு 10சிறப்பு. இம்மூன்று சூத்திரத்துள் 11முன்னையது வழுவற்க என்னும் விதி; பின்னைய இரண்டும் செப்பு வழுவமைதி 12கூறியஎன உணர்க. (15) அடிக்குறிப்புகள் 15-1 எஅப்பொருள் புணர்ந்த . . . “ 2 ii “நுதலிற்று என்பது” 3 iஎ “-வறைந்து” 4 i-ii “உரையூர்க்குச்” 5 i-ii “சொல் என்ப தேவுதல்” எiii “செல் என்பதேவுதல்” எi “செல் என்ற தேவுதல்” 6 ii - “முடங்கிற்று” 15-7 i “கட்முடையார்” ii “கட்முறையார்” 8 i “என்றலுவது கூறல்” 9 i “செய்வை என்புழீ” 10 ii “சிறப்பும்மை” 11 ii “முன்னைய” 12 ii “கூறின” 16. செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக் - கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே. என்பது என்நுதலிற்றோ எனின், செப்புவானொடு வினாவுவானிடைக் கிடந்ததொரு மரபிலக்கணங் கூறுதல் 1நுதலிற்று. இதன் பொருள்:- செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும், 2சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும் அவ்அப் பொருளுக்கு அவ்அப் பொருளேயாம், 3ஒன்றனோடு ஒன்றைப் பொருவிக் கூறும் அளவிற்றாகிய பொருள் என்றவாறு. (உ-ம்.) கொற்றன்மயிர் நல்லவோ சாத்தன்மயிர் நல்லவோ என 4வினாவின இடத்து, 5கொற்றமயிரிற் சாத்தன்மயிர் நல்ல, சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் நல்ல என்று இறுக்க. பிறவும் அன்ன. இது சினைக்கிளவி. கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ? என வினாவின இடத்து, சாத்தனிற் கொற்றன் நல்லன், 6கொற்றனிற் சாத்தன் நல்லன் என இறுக்க. இது முதற்கிளவி. சினை என்பது உறுப்பு; முதல் என்பது அவ்உறுப்பினை உடையது. அப்பொருளாகும் என்றதற்குப் பொருள் சினைக்குச் சினையும், முதற்கு முதலும் என்பதன்றி, அவ்அச்சினைக்கு அவ்வச்சினையும் அவ்அம் முதற்கு அவ்அம் முதலும் என்பது கொள்ளப்படும். சினை 7முற்கூறிய அதனான், அவ் அச்சினைக்கு அவ்அச் 8சினை கூறாது முதலொடு கூறுதலும் 9உள என்பது கொள்ளப்படும். (உ-ம்.) இவள் கண் நல்லவோ 10கயல் நல்லவோ? என வரும். உறழ் பொருள் என்னாது துணை என்ற அதனால் 11உவ மத்துக் கண்ணும் சினை முதல்கள் தம்மின் மயங்காமற் கூறுக என்பது கொள்ளப் படும். இன்னும் அதனானே அச் சினைமுதற் பொருள்களை 12எண்ணும் இடத்தும் இனம் ஒத்தனவே எண்ணுக என்பதூஉம் கொள்ளப்படும். (உ-ம்.) உவமம், வினை பயன் மெய் உரு என நான்கு வகைப்படும். புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தான், மழைவண்கை, 13துடி போலும் நடு, பொன்போலு மேனி எனவரும். இவற்றுள் 14சினை முதல் மயங்கக் கூறினவும் இவ் இலேசான் அமைத்துக் கொள்ளப்படும். இனி 15எண்: முத்தும், மணியும், பவளமும், பொன்னும் 16என எண்ணுக. இதற்கு அமைதி உண்டேலும் கொள்க. இச்சூத்திரத்தான் சொல்லியது: செப்பினையும் வினா வினையும் பற்றிப் பொருவின் கண்ணும், உவமத்தின் கண்ணும், எண்ணின்கண்ணும் பிறக்கும் மரபிலக்கணமும் மரபு வழூஉ அமைதியும் என உணர்க. பொரூஉ என்பது 17ஒன்றை ஒன்றனோடு ஒக்கும் என்பதன்றி அதனின் இது நன்று என மிகுத்துக் 18கூறுவது. உவமம் என்பது 19ஒப்பு உணர்த்தல் என உணர்க. (16) அடிக்குறிப்புகள் 16-1 iஎ “நுதலிற்று என்பது” 2 iஎ “சினைக்கிளவிக்கு முதற்கிளவிக்கு” i “சினைக்கிளவிக்கு முதல் கிளவிக்கும்” 3 iஎ “ஒன்றோடொன்றைப்” 4 iஎ “வினாவின விடந்து” 16-5 i “கொற்றென்” 6 ii “கொத்தனிற் சாற்றன்” (த-ற மாறாட்டம்.) 7 ii “முதற் கூறிய” 8 i “சினைக் கூறாது” 9 i-ii “உள (என்) என்பது” 10 iஎ “கய நல்லவோ” 11 i “உமத்துக்கண்ணு” ii-எii “உவமத்தின்” 12 i-ii-iஎ “யென்னுமிடத்து” 16-13 i-iஎ “துடி பொலியடு” ii “துடி பொலி (யடு) யிடை” எi “துடி போலும் இடை” 14 iஎ “சினைமுன்” 15 iஎ “என்” 16 i “எனவென வெண்ணுக” 17 i-iஎ “ஒன்றனோடு ஒன்றை” 18 i-iii-iஎ “கூறிற்று” 19 i-ii-iஎ-எii “ஒப்புரைத்தல்” 17. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே. என்பது என்நுதலிற்றோ எனின், மரபுவழீஇ அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. 1இதன் பொருள்:- தகுதியினையும் வழக்கினையும் பொருந்தி நடக்கும் இலக்கணத்திற் பக்கச்சொல் நீக்கும் நிலைமை 2உடைய அல்ல என்றவாறு. தகுதி என்பது மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கர் அடக்கிக் கூறுதலும், குழுவின் வந்த கு3றுநில வழக்கும் என மூன்று கூறுபடும். (உ-ம்.) 4செத்தாரைத் துஞ்சினார் என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், மங்கலமரபு. கண்கழீஇ6வருதும்; கான்மேனீர் பெய்து வருதும், 7கைகுறியராய் இருந்தார், பொறையுயிர்த்தார், புலிநின்றிறந்த நீரலீர்த்து, கருமுகமந்தி, செம்பினேற்றை என்பன இடக்கரடக்கிக் கூறல். பொற்கொல்லர் பொன்னைப் 8பறி என்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், 9யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் குழுவின் வந்த 10குறுநில வழக்கு. வழக்காறு இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கும், மரூஉ வழக்கும் என இருவகைப்படும். முன்றில், மீகண் என்பன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கு. அருமருந்தன்னானை 11அருமந்தன் என்றலும், 12நட்டு வியந்தானை நட்டியந்தான் என்றலும், பொதுவில் என்பதனைப் பொதுயில் 13என்றலும், மலயமான் நாட்டை 14மலாடு என்றலும், சோழ நாட்டைச் சோணாடு என்றலும் என இவை மரூஉவழக்கு. இவ்வாறு சொற்சிதையச் சொல்லுவன அன்றிப் 16பொருள் சிதையச் சொல்லுவனவும் மரூஉவழக்கு என்று கொள்ளப்படும். 17அளக்கரிய மயிரினைச் சிறுவெள்வாய் 18என்றும், களமருட் கரியாரை வெண்களமர் என்றும், புலைக்களமருட் செய்யாரைக் கருங்களமர் என்றும், நீரினையும் பாலினையும் ஒரோவழிச் சிலபல என்றும், அடுப்பின் 19கீழ்ப்புடையை மீயடுப்பு என்றுங் கூறுவன. இலக்கணவாய்பாடின்றி மருவிய வாய்பாடுதாமே இலக்கணமாகக் கூறுவன, இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ எனப்படும். இலக்கண வாய்பாடும் 20உள்வழிச் சொற்சிதையவும் வருவன மரூஉ வழக்கு எனப்படும். தகுதி என்பது பட்டாங்குச் சொல்லுதல் நீர்மையின்மை நோக்கி அவ்வாய்பாடு களைந்து இவ்வாறு சொல்லுதும் என்று உடன்பட்டுச் 21சொல்லி வருவது. 22வழக்காறு என்பது மேற்கொண்டு ஒரு காரணம் நோக்காது வாய்பாடு 23பகுத்துப் பயிலச் 24சொல்லி வருவது. இச்சூத்திரத்தாற் சொல்லியது பரந்து பட்ட மரபு 25வழூ உக்களுள் சிலவற்றைப் பொருள் காரணம் பற்றியும், நன் 26மக்கள் தாம் பயில 27வழங்குதலாகிய 28காரண வழக்கம் பற்றியும் வழு 29வமைத்தவாறு என உணர்க. இவற்றுள் தகுதியென்றது பொருள்பற்றி 30அமைந்தது. வழக்காறு வழங்குதல் பற்றி யமைந்தது. யானை, யாறு, யாடு என்னும் இன்னோர் 31அன்னவற்றையும் ஆனை, ஆறு, ஆடு என்னும் இன்னோர் அன்னவாகக் கூறுதலும் 32வழக்காறு என இதனுள் கொள்ளப்படும். பிறவும் அன்ன அவை சான்றோர் சொன்ன செய்யுளும் பெரும்பான்மை காணப்படாமையின் இதனுள் கொள்ளாது ‘கடிசொல்லில்லை 33காலத்துப் படினே’ என்புழிக் கொள்ளப்படும். (17) அடிக்குறிப்புகள் 17-1 ii “பொருள் வருமாறு” 2 i “உடைய யல்லல்” 17-3 i-iஎ “சிதிலம்” ii “கு (அ) (றி) நி (ல) (லை)” iii “குறி நிலை” (‘குழூவுக் குறி’ என்ற பிற்கால வழக்குக் காண்க.) 4 iஎ “செந்தாரை” 5 i “என்னு மரலும்” ii “என்னு மரபும்” 6 iஎ “வரும்” 7 i-ii-iஎ “கைக்குரியராய்” 8 ii “பறி என்றும்” 9 iii “யாணப் பாகர்” (னை - ண மாறாட்டம்) 10 ii “குறி நிலை” (திருத்தம்) 11 ii-எii “அருமந்தன்” (திருத்தம்.) i-iஎ-எii-எi “அருமந்தன்” 12 iii-எ “நட்டு வியத்தானை” (iii “த்” என்பதனை “ந்” எனத் திருத்தி உள்ளது.) 17-13 iii-ii “என்பதும்” எ “என்பதும்” (என்றலும் என்ற திருத்தம் உண்டு.) 14 iii “மலடு” 15 i “சோழனாட்டை” 16 i-ii-iஎ-எi-எii “படுபொருள் சிதைய” 17 i “ஆகை” ii “அளக” (இது திருத்தம்.) எiii “அகை” எ “அளக்கரிய” (“அறக்கரிய” என்றாகலாம்.) 18 i-ii (என்றலும்” எ (என்றலும் என்பது என்றும் எனத் திருத்தல்.) 19 i “கீழ்ப்புடைய” 20 iii “உன்” (ன - ள மாறாட்டம்) 21 iii-எ “சொல்ல” 17-22 எi “வழங்கற்பாடே” iஎ “வழக்கா றென்பதுமோ” 23 i-ii-iii-எ “படுத்தும்” எi-எiii “பகுத்து” 24 எ “சொல்ல” 25 i-ii “வழூஉக்களும்” 26 i-ii “மக்களாம்” iii-எ “மக்களாற்” 27 iii-iஎ “வழத்தங்குதல்” 28 எ “காரணம் பற்றியும்” (‘யும்’ இடுதலைப்பகரத்திற்குள் உள்ளது) ii “ய காரவ (ண) (ழ) க்கம் பற்றியும்” 29 ii “அமைவார்” i “அமைவாறு” (ரு-ர் என று அடித்தல்) 30 iஎ “அமைந்தது, யானை, யாறு, யாடு” 31 எi “அன்னவற்றை யானை” (வ-ம,ர-ற மாறாட்டம்) 32 i “மழைக்காரென” 33 i-ii “காலத்துட் படினே” 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் வழக்கிற்கும் செய்யுட்கும் மரபுவழீஇ அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- தமக்கு இனஞ் சுட்டுதல் இல்லாத பண்பு கொண்டு நின்ற பெயர்ச்சொற்கள் வழக்கின் அகத்து நெறி அல்லாத, செய்யுட்கு நெறியாம் என்றவாறு. உ-ம்:- வழக்காறாவன:- பெருங்கொற்றன், பெருங்கூத்தன் என்றாற் போல்வன. இவை சிறியானொருவனை நோக்கி வந்தனவல்ல; பண்பின்றி உயர்த்திச் சொல்லிய என்பது. இனிச் செய்யுள் ஆறாவன:- ‘மாக்கடனிவந்து 1எழுதரு செஞ் ஞாயிற்றுக் கவினைமாதோ’ எனவும், வெண்கோட்டி 2யானைச் சோணைப் படியும்’ எனவும், ‘நெடுவெண் 3திங்களும் ஊர்கொண் டன்றே’எனவும் வரும். கருஞாயிறும், 4கருங்கோட்டி யானையும் குறுங் கருந் திங்களும் உண்மை கண்டு சொல்லினான் 5அல்லன் என்பது. வழக்கினுள் பண்பு கொள் பெயர் வருங்கால் குணம் இன்றி விழுமிதாகச் சொல்லவந்து நிற்கும்; 6செய்யுளுள் 7வருங்கால் அக்குணம் தன்கண் உடையவாய் வந்து நிற்கும். 8‘இடுகு கவுண் மடப்பிடி’ 9என்றும், ‘நால்வாய் வேழம்’ என்றும், 10‘மறப்புலி’ என்றும், ‘மடப்பிணை’ என்றும், ‘வடவேங் கடந் தென்குமரி’ என்றும் இனன்இல் பண்புகொள் பெயரேயன்றி, இனன்இல் தொழில் கொள் 11பெயரும் 12இனன்இல் பெயர்கொள் பெயருமாய் வருவன வுளவோஎனின் அவ்வாறு வருவனவற்றையும் ஒன்றின முடித்த லென்பதனான் இதன் அகத்துச் செய்யுள் விதியாக அமைக்கப்படும். பண்புப் பெயரென்னாது பண்புகொள் பெயர் என்றா13ன்; கரியது, கரியன எனப் பண்பினைப் பிரியாது வருவன ஒழியப் பண்பினைக் கொண்டு செஞ்ஞாயிறு 14எனவும், பண்பினைக் கொள்ளாது ஞாயிறு எனவும் வருவனவற்றின் மேற்று இவ் வாராய்ச்சி யென்றறிக என்பது. இவ்வாறு பண்புகொள் பெயர் என்று கூறவே, குறுஞ்சூலி, 15குறுந்தகடி, குறுமூக்கி, செம்போத்து என்பன அப்பண்பினைப் பற்றி அச் சூலி, 16தகடி, மூக்கி, போத்து என்று வழங்குதல் இன்மையின் அது வாளாது பெயர் எனப்படும். இதனான் சொல்லியது வழக்கிடத்தும், செய்யுளிடத்தும், பண்பிடனாகப் பிறப்பதோர் வழுவமைதியும், பண்பு பற்றிப் பிறக்கும் இனன்இல் விதப்பும் இனனுடைய விதப்பும் என்னும் இருவகைச் செய்யுள் விகாரமுஞ் சொல்லியஎன உணர்க. செஞ்ஞாயிறு என்புழிச் செம்மை என்னும் பண்பிற்கு, கருமை வெண்மை என இனம் உளவே எனினும் ஞாயிறோடு அடுத்தமையான் இனம் இன்றாய் இனன் இல் விதப்பு ஆயிற்று. ஞாயிறு என்பது 17இனம் இலதேனும் செம்மை என்னும் பண்பு அடுத்தமையின் கரியதும் ஒரு ஞாயிறு உள்ளது போல இனம் உடைத்தாய் இனன் உடை விதப்பு ஆயிற்று. (18) அடிக்குறிப்புகள் 18-1 எi “எழுசெஞ் ஞாயிற்று” 2 எi “யானைச் சேரனைப் பாடியும்” i-எiii “யானை சொனை படியும்” 3 i “திங்கரும் ஊர்க்கொண்டன்றே” எi (நெடுவெண் திங்கள் என்ற அடி வெண்கோட்டு யானை என்பதற்கு முன் தரப்பட்டுள்ளது.) 4 எi “குறுங்கருந் திங்களும் கருங்கோட்டு யானையும் உண்மை” iஎ “கருங்கோட்டி யானையும் குறுங்குந் திங்களும் உண்மை” 5 i-ii “அல்ல என்பது” 6 ii “செய்யுளில்” 7 ii “வருங்கால்க்” எi-எiii “வருங்கால் குணம்” ii “வருங்காற் குணம்” 18-8 i-ii-iஎ “இடுக்கவுள்” (கு-க மாறாட்டம்) 9 i “எ-ம்” (என்றும் என்பதன் குறுக்கம்; பின்னும் இப்படி வருவனவற்றை இனிக் குறிப்பதில்லை) 10 i “மரப்புலி” (ர-ற மாறாட்டம்) 11 i-ii “பேரும்” 12 “இன நிலை (புள்ளியிடா ன-ந மாறாட்டம்; ல-லை மாறாட்டம்) 13 - “ர்” 14 iஎ “எனவும் வருவனவர்றின் பெற்று” (வரி விடுபட்டது) 15 i-ii-iஎ-எi-எiii “தகடி” (ii-ல் குறுந்தடி எனத் திருத்தம்.) எ “தாடி” (தகடி எனத் திருத்தம்.) 16 i-ii-எii “தடி” எ “தாடி” 18-17 எiii நீங்கிய பிற “இனமில வேனும்” 19. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல். என்பது என்நுதலிற்றோ எனின், உலகத்துப் பொருள் எல்லாம் இருவகைப் படும்; இயற்கைப் பொருளும், செயற்கைப் பொருளும் என. அவற்றுள் இயற்கைப் பொருண்மேல் மரபிலக்கணம் வழாமல் சொல் நிகழற் 1பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இயற்கையாகிய பொருளை இத்தன்மைத்து எனச் சொல்லுக என்றவாறு. (உ-ம்.) நிலம் வலிது, நீர் தண்ணிது, 2தீ வெய்யது, வளி உளரும் எனவரும். இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்கிறது அவ் இயற்கை 3செயற்கை என்னும் பண்பினையோ அப் பண்பு அடைந்த பொருளினையோ எனின், பண்பு அடைந்த 4பொருளினை என உணர்க. அஃதே எனின், `இயற்கைப் பொருள் இது’, `செயற்கைப் பொருள் இது’ என வேறுபட நில்லாது, நிலம் வலிது என்ற 5வழக்கத்தானே, கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப் பட்ட இடத்து நீர் நிலமும் சேற்று நிலமும் மிதித்து அவ்வயின் நின்றான் ஒருவன், அந்நிலம் 6அல்லாத நிலம் மிதித்த இடத்து நிலம் வலிதாயிற்று என்றும் வருமால் எனின் ஒரு பொருள் தானே இயற்கையான பண் அடுத்த இடத்து இயற்கை என்றும், செயற்கையான பண்பு அடுத்த இடத்துச் செயற்கை என்றும் பண்பால் வேறுபடுதல் அல்லது பொருளால் வேறு அல்ல என்று உணர்க. 7முன், நீர் நிலம் மிதித்தான் கூறும் 8வழக்கினுள் அப் பொருட்கு உண்மை வகையான் வன்மை இன்றே எனினும், அவன் மனக்குறிப்புப் பற்றி, அதுவும் வன்மை ஆயிற்று என உணர்க. இவ்விலக்கணம் கூறிப் பயந்தது என்னை எனின், மேற் செயற்கைப் பொருளகத்து மரபுவழூஉ அமைத்தற் 9பொருட்டாக உலகத்துப் பொருளை இயற்கை செயற்கை என இரு பாகுபாடு செய்து அவற்றைக் கூறும் மரபிலக்கணம் அறிவித்தா10ன் எனக் கொள்க. (19) அடிக்குறிப்புகள் 19-1 i-ii-iஎ “பாலாமாறு” 2 ii “வெய்து” 3 ii “செய்கை” 4 i “பொருளை” 5 i-ii “வழக்குத்தானே” 19-6 ii “இல்லாத” 7 i-ii “முன்னீர்” 8 iii “வழக்கினுள் ஒரு பொருட்கு” எ “வழக்கினுளப் பொருட்கு” i-ii-எi-எiii “வழக்கினுள் பொருட்கு” (‘ள’ என்பதனைப் புள்ளியிட்டுப் படித்தலால் வரும் மாறுபாடு.) 9 i-ii “பொருட்டா வுலகத்து” எi-எiii “பொருட்டாய் உலகத்து” 10 - “ர்” 20. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். என்பது என்நுதலிற்றோ எனின், செயற்கைப் பொருள்மேல் மரபிலக்கணம் வழாமற் சொல் நிகழற் பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- செயற்கையாகிய பொருளை ஆக்கம் என்னும் வாய்பாட்டோடு சொல்லுக என்றவாறு. (உ-ம்.) மயிர் நல்ல ஆயின, பைங்கூழ் நல்ல ஆயின எனவரும். மேற்கூறிய ‘இற்றெனக் கிளத்தல்’ 1இதற்கும் அதிகாரத் தான் வருவித்துக் கொள்க. (20) அடிக்குறிப்புகள் 20-1 எ நீங்கியவை “இதற்கு அதிகாரத்தான்” 21. ஆக்கந் தானே காரண முதற்றே. என்பது என்நுதலிற்றோ எனின், மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. மேற்கூறிய ஆக்கச் சொல்தானே காரணச் சொல்லை முன்னாக உடைத்து என்றவாறு. (உ-ம்.) கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின. எருப்பெய்து இளங்களை 1கட்டமையான், 2நீர் கால் யாத்தமையாற் பைங்கூழ் நல்ல ஆயின எனவரும். ஆக்கம் முற்கூறிக் காரணம் பிற்கூறியும் வருமால் எனின், பெரும்பான்மையும் முற்கூறிக் கூறப்படுதலின் முதற்று என்றா3ன்போலும். 4முதல் என்பதனைக் காரணமாக்கிக் 5கூறலும் ஒன்று. (21) அடிக்குறிப்புகள் 21-1 எ-எi “கட்டு நீர் கால்” 2 i “நீர்க்கால்” 3 “ர்” 4 எi-எiii “இனி முதல்” 5 எi-எiii “கூறுதலும் ஒன்று” iஎ “கூறுதலம் ஒன்று” 22. ஆக்கக் கிளவி காரணம் இன்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறிய ஆக்கச் சொல்தான் காரணத்தை ஒழியச் சொல்லுதலும் குற்றம் இல்லை என்று சொல்லுப ஆசிரியர் வழக்கினிடத்து என்றவாறு. உம்மை எதிர்மறை ஆகலான் காரணம் கொடுத்துக்கூறல் வலியுடைத்து. (உ-ம்.) 1மயிர் நல்ல ஆயின, பைங்கூழ் நல்ல ஆயின எனவரும். செய்யுள் விதி உள்வழிச் செய்யுள் என்று கூறி, வாளாதே ஓதும் சூத்திரம் எல்லாம் வழக்கே நோக்குதல் நூற்கிடை ஆகலின் ‘2வழக்கினுள்’ என்பது மிகை; அதனான் செயற்கைப் பொருள் காரணம் கொடுத்து ஆக்கம் கொடாதே சொல்லுதலும், காரணமும் ஆக்கமும் இரண்டும் கொடாதே சொல்லுதலும் கொள்ளப்படும். (உ-ம்.) கடுவுங் கைபிழி 3எண்ணெயும் பெற்றமையான் மயிர் 4நல்ல; பைங்கூழ் 5நல்ல எனவரும். எனவே, செயற்கைப் பொருள் காரணமும் ஆக்கமும் கொடுத்தலும், காரணம் ஒழிய ஆக்கம் கொடுத்தலும், ஆக்கம் 6ஒழியக் காரணம் கொடுத்தலும், காரணமும் ஆக்கமும் இரண்டும் கொடாதே சொல்லுதலும் என நான்கு வகைத்து. இவற்றுண் முன்னையவிதி 7ஒன்றும் மரபிலக்கணம்; பின்னைய மூன்றும் மரபுவழுவமைதி. 8இவை அவற்றுள் இச்சூத்திரத்தாற் கூறியது பெரும்பான்மை, 9இலேசினாற் கூறிய இரண்டுஞ் சிறுபான்மை என உணர்க. இவை 10அமைவதற்குக் காரணம் 11உணர்வார் உணர்வுவகை பற்றிப் போலும். (22) அடிக்குறிப்புகள் 22-1 எ “பயிர்” 2 i-ii-iஎ “வழக்கத்தினுள்” 3 i “எண்ணையும்” 4 எi “நல்ல எனவும்” 5 எi “நல்ல எனவும் வரும்” 6 i-ii-iஎ-எii “ஒழியக் காரணமும் ஆக்கமும் இரண்டுங் கொடாதே” 7 எ “ஒன்று” 8 எi “அவற்றுளிச் சூத்திரத்தால்” 9 i “இலைசினால்” (லே - லை மாறுபாடு) 10 எi-எiii “அமைவதற்கு” 11 “உணர்வா ருணர்வா ருணர்வு வகை” 23. பான்மயக் குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். என்பது என்நுதலிற்றோ எனின், இன்னும் 1உலகத்துப் பொருள்தான், ஐயுறும் பொருளும் துணிபொருளும் என இரு வகைத்து. அவற்றுள் ஐயுறும் பொருட்கண் உயர்திணைப்பால் ஐயத்துக்கண் பால்வழீஇ அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2ஒரு சாத்தன் திணையறிந்து பால் 3மயங்கலுற்ற 4ஐயச்சொல் எனப்படும் சொல் தான் அறிந்த உயர்திணைப் பொருளிடத்துப் பன்மையாகக் கூறுக என்றவாறு. (உ-ம்.) ஒருவன்கொல்லோ ஒருத்திகொல்லோ இதோ 6தோன்றுவார் என்பது. இவ் ஐயம், கண்டவிடத்து ஐயமும், காணாவிடத்து 7ஐயமும் என இருவகைத்து. காணாவிடத்து ஐயமும் இவ்வாறு கொள்க. இனிக் 8காணாதவழி ஒருவனோ ஒருத்தியோ என்பதன்றி, ஒருவனோ பலரோ என்று ஐயுறும் பால் மயக்கமும் கொள்க. 9இது தான் அறியான் ஆவது அல்லது அப்பொருள் இருபாலுமாய் நிற்றல் இல்லை 10பிற. மற்று ஒன்றாகிய அப்பொருளைப் பன்மையான் கூறுதல் 11வழூஉமன். 12வழூஉவே எனினும் 13அமைக எனப் பால்வழூஉ அமைத்தவாறு ஆயிற்று இவ் ஐயத்துக்கு இலக்கண வழக்கு என வேறு காணா மையின் இதுதான் இலக்கணம் ஆகற்பாற்று எனின், வேறு வழக்கு 14இல்லையே எனினும், இது பொருள்வகை தொக்க வழூஉ எனப்படும். ஒருவனோ ஒருத்தியோ தோன்றுகின்றார் எனப் பொதுவாகக் கூறல் இலக்கண வழக்காம் பிற எனின், அவ்வாறு கூறுவார் இன்மையானும், `ஆர்’ என்பது 15ஆண்பாற்கு அல்லது ஏலாமையானும் ஆகாது என மறுக்க. (23) அடிக்குறிப்புகள் 23-1 iஎ “இவ்வுலகத்து” 2 எi - “திணையறிந்து பால்” 3 iஎ “மயங்குற்ற” 4 எi “ஐயச் சொல் தான் அறிந்த உயர்திணை” 5 எii “கூறுக என்றவாறு” 6 i-iஎ “தோன்பார்” 7 எi “ஐயமும் என இரு வகைத்து இவ்வாறு கொள்க” ii “ஐயமும் இவ்வாறு கொள்க” 8 எi “காணாதவழி ஒருவனோ பலரோ என்று ஐயுறும்” (இடையில் ஒரு தொடர் விடப்பட்டது.) 9 i “இதான்றி யானாகுவ தல்லது” iஎ “இதன்றி யானாகுவ வது” 10 ii “பிரமற்றோற்றாகிய” 23-11 எ-எi-எiii “வழூஉமன்று” 12 i-ii “வழூஉ எனினும்” 13 i “அமைவெனப் பால் வழூஉ” 14 எi “இல்லை எனினும்” 15 - (அப்பாற் கல்லது = அந்தப் பல பாற்கு அல்லது என்று இருந்திருத்தல் கூடும்.) 24. உரு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை. என்பது என்நுதலிற்றோ எனின், திணை ஐயத்துக்கண்ணும், அஃறிணைப்பால் ஐயத்துக்கண்ணும் வழீஇ அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- உரு எனச் சொல்லும் இடத்தும் அஃறிணைப் பிரிப்பின் கண்ணும், இவ்இரண்டு கூற்றின் கண்ணும், ஐயம் உரித்துக் கருதும் காலத்து என்றவாறு. என்றது திணை ஐயம் தோன்றியவழி 1உரு என்று சொல்லுக. அஃறிணைப்பால் ஐயம் தோன்றியவழி அஃறிணை இயற்பெயராகிய 2பொதுப்பெயராற் சொல்லுக என்றவாறு. ஒருமையும் பன்மையும் வினையாற் பிரிக்கப்படுதலின், ஆகு3பெயரான் அஃறிணை இயற்பெயர் பிரிப்பு எனப்பட்டது. 4ஐயம் என்பது அதிகாரத்தான் வருவிக்க. ‘திணை ஐயம் அஃறிணைப்பால் ஐயம்’ 5என்பது சூத்திரத்துள் இல்லை ஆயினும், உரு என்றும், அஃறிணைப்பிரிப்பு என்றும் கூறிய வாய்பாட்டான் உய்த்து உணர்ந்து கொள்ளப்படும். (உ-ம்.) குற்றிகொல்லோ மகன் கொல்லோ இதோ 6தோன்றுகின்ற உரு என்பது. 7ஒன்றென முடித்தல் என்பதனான் உருவே அன்றி வடிவு, 8பிழம்பு, பிண்டம் என்பனவற்றானும் சொல்லுக. இதற்கும் காணாத இடத்து ஐயமும் கொள்க. இனி, அஃறிணைப்பால் ஐயம், ஒன்று கொல்லோ பல கொல்லோ செய்புக்க பெற்றம் என்பது. இதற்குக் கண்ட இடத்து ஐயம் என்பது இல்லை. இதனுள், திணை ஐயத்துக் கூறிய 9உரு என்னும் வழக்கு உடல் உயிர் கூட்டப் 10பொருண்மையாகிய மகன் என்னும் நிலை மைக்கு ஏலாது அவன் உடலைப் பிரியநின்று 11உணர்த்தினமை யான் அதுவும் ஓர் திணைவழு அமைதி எனப்படும். அஃறிணைப்பால் ஐயத்துக்கூறிய இயற்பெயர் பொது 12எனினும் மேற்சொல்லுதற்கண் ஒருபால்மேல் 13நிற்கற்பாலது அவ்வாறு நில்லாது இருபால் மேலும் நின்றமையின் இதுவும் ஓர் மரபு வழூஉ அமைதி எனக் கொள்க. (24) அடிக்குறிப்புகள் 24-1 i-ii-எi “உருவு” 2 i “பொது பொதுப் பெயரால்” 3 i-iஎ “பேரான்” 24-4 i “ஐம் என” 5 எi “என்பன” 6 i “தோன்றுகிற” 7 ii-எi-எiii “ஒன்றின முடித்தல்” 8 எ “பிளம்பு பிடிப்பு” 9 ii-எi-எiii “உருவு” i-எ “உருபு” 10 iii “பொதுமையாகிய” 11 எ “உணர்த்தினமையின்” 12 i-iஎ “எனினு மொச்” (ர - ற மாறாட்டம்) ii “எனினுமோர்” எi “ எனினும் சொல்லுதற் கண்” எ எனினு “மொரு சொல்லுதற்கண்” 13 எi “நிகழற் பாலது” 25. 1தன்மை சுட்டலும் உரித்தன மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. என்பது என்நுதலிற்றோ எனின், துணிபொருட்கண் மரபிலக்கணம் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- தனது தன்மையாகிய அன்மைத் தன்மையைச் சொல்லுதலும் உரித்து என்று சொல்லுப ஆசிரியர், 2அது அன்மைப் பொருள் எவ்விடத்து எனின் ஐயத்துக்கு மறுதலையாகிய 3துணிவிடத்து என்றவாறு. 4தன்மை சுட்டல் என்புழி 5இன்னதன்மை என்பது இன்றேனும், மேல் அன்மைக்கிளவி என்றதனான் அன்மைத் தன்மை என்பது 6ஓர்ப்பிற் கொள்க. கிளவி என்பது பொருள். (உ-ம்.) பெண்டாட்டி யல்லன் 7ஆண்மகன், ஆண்மகனல்லள் பெண்டாட்டி; குற்றியல்லன் மகன்; மகன் அன்று குற்றி; 8பல அன்று ஒன்று; ஒன்று அல்ல பல என்பன. பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் என்புழி ஆண்மகன் என்னும் பெயர் எழுவாயாய், அல்லன் என்னும் வினைக் குறிப்பினைப் ‘பண்புகொள வருதல்’ என்னும் பயனிலையாக முன்னே கொண்டு நின்றமையின், பெண்டாட்டி என்னும் பெயர்க்கு 9முடிவு இல்லை எனின், அதற்கு உருபு தொகையாக்கி நீக்கப் பொருட்கண் 10ஐந்தாவதனைப் பெண்டாட்டியின் அல்லன் என விரித்து முடிபு கொள்க. இதனாற் சொல்லியது என்னை எனின், இருபொருள் ஐயுற்றுத் துணியும்வழி, அவ்ஐயுற்ற பொருள்தன்மை இத்துணி பொருள் இடத்து இன்மையும், துணிபொருட்கண் தன்மை அவ் ஐயப் பொருட்கண் இன்மையும் காணும் அன்றே; கண்டுழி, `இஃது அன்மை’ அதற்கும், `அஃது அன்மை’ இதற்கும், 11அன்மை யாதானும் ஒன்றன்மேல் அன்மை கொடுப்பினும் அமையும் என்று கருதற்க. `இஃது அன்மை’ அதற்கும் உண்டே எனினும் துணிந்தவழி உள்பொருளாய் நின்று காணப்பட்டது. `அஃது அன்மை’ ஆதலின் “இதன் 12மேலிறுக்க” என மரபிலக்கணம் கூறியவாறு ஆயிற்று. (25) அடிக்குறிப்புகள் 25-1 i “தன்மைச் சுட்டலும்” 2 எi “அன்மைப் பொருள்” 3 எi “துணிபிடத்து” 4 i “தன்மைச் சுட்டல்” 5 i “இன்னத் தன்மை” 6 எ “ஒப்பில் கொள்க” 7 iஎ “ஆண் மகன் - மகன் அன்று குற்றி.” (இடையே ஒரு வரி விடப்பட்டுள்ளது.) 8 i “பலன் என்று” 25-9 ii “முடியவில்லை” எi “முடிவு இல்லை” 10 எi “பெண்டாட்டியின் அல்லன் என ஐத்தாவதனை விரித்து முடிபு கொள்க” 11 ii “அமையாதானும்” 12 i “மேலிருக்க” எ-எi-எii-எiii “மேலிருக்க” 26. அடைசினை முதல்என முறைமூன்றும் மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். என்பது என்நுதலிற்றோ எனின், 1வண்ணச் சொல்லதோர் மரபு கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- பண்பினை உணர்த்தும் சொல் 2முன்னது; 3பண்பினை உடைய சினைப்பொருளை உணர்த்தும் சொல் 4அதன்பின்னது; அச்சினையை உடைய முதற்பொருளை உணர்த்தும் சொல் 5அதன் பின்னது என்று கேட்டான் அடைவு கருதும்படி அம்மூன்றும் அம்முறைமையின் மயங்காமல் வழக்குப்பெற்று 6நடக்கும் யாது அது வண்ணச் சினைச்சொல் என்றவாறு. (உ-ம்.) பெருந்தலைச் சாத்தன்; செங்கால் நாரை என வரும். பெரும்பலாக்கோடு, பெருவழுதுணங்காய் என மயங்கியும் வருமாலோ 7எனின், அவை சொல்லுவான் கருத்து வேறு; பெரும்பலா, பெருவழுதுணை எனப் பெருமை 8முதன்மேலே நோக்கி நின்றமையின். பெருந்தலைப்புல்லாநல்லேறு எனவும், 9நெட்டிலை விளைவின் கட்டெங்கு எனவும் மயங்கியும் 10வருமாலோ எனின், அவ்வாறு மயங்கிக் கூறுவன கண்டன்றே இவ் இலக்கணம் எழுந்தது. இதனால் அதனை அழிவழக்கு என்று மறுக்க. 11பெருந்தலையினை உடையதும் வேறு; புல்லா நல்லேறும் வேறு; பொருள் கொண்டு இயையுமால் அதுவும் எனின்; அவ்வாறு பொருள் கோடல் செய்யுட்கு அல்லது இன்று என்று மறுக்க. ‘முறை’ 12என்றதனானே ஒரு 13முதற் பொருட்கண் இரண்டு பண்பு அடுத்து வருவனவும் வழக்கினுள் உள என்று அமைத்துக் கொள்ளப் படும். (உ-ம்.) இளம்பெருங் கூத்தன்; சிறுகருஞ் 14சாத்தன் என வரும். 15இளமை என்னும் சொல் பெருமை என்பதனோடு இயைபு இன்றாய்க் கூத்தன் என்பதனோடு இயைபு கோடல் மரபு இன்மையின் அமைக்கப்பட்டது. இன்னும் இவ் 16இலேசானே சினைப்பொருட்கண் இரண்டு பண்பு அடுத்து வருவனவும், செய்யுளுள் உள 17என்றும் அமைக்கப் படும். (உ-ம்.) 18சிறுபைந்தூவி, செங்காற்பேடை’ என வரும். ‘நடைபெற்று’ என்றதனான் அவ்அடைசினை 19முதல்கள் செய்யுட்கண் முறைமை மயங்கியும் வரப்பெறும் என்பது கொள்ளப்படும். (உ-ம்.) ‘பெருந்தோட் 20சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை’ என வரும். அடைசினை முதல் 21என்ற பின்பும், வண்ணச் சினைச் சொல் என்றது என்னை எனின், முற்கூறியது இலக்கண வாய்பாடு ஆகலான் அவ் இலக்கண முடையது இது என வேண்டுதலின், அவ் இலக்கணத்தான் அவ் இலக்கணமுடைய பொருட்குக் குறியிட்டா22ன் என உணர்க. இதனாற் சொல்லியது என்னை எனின் அடைசினை முதற் பொருள்களைக் கூறுங்கால் இன்னவாறு கூறுக என்று அவற்றது மரபிலக்கணமும் அவ்வழி மரபுவழுஉ அமைதியும் கூறியவாறு ஆயிற்று. (26) அடிக்குறிப்புகள் 26-1 எi-எiii “வண்ணஞ் சொல்வதோர் மரபு” 2 i-ii-iஎ-எi-எiii “முன்னர்” 3 iii-எ “அப்பண்பினை உடைய” 4 எi “அதற் பின்” ii “அதற்பின் (த) (அ)” 26-5 எi “அதன் பின் என்று” 6 எi “நடக்கும் வண்ணச் சினைச் சொல்” 7 எi “எனின் அவ்வாறு மயங்கிக் கூறுவன கண்டன்றே இவ்விலக்கணம் எழுந்தது.” (4 வரிகள் விடப்பட்டன.) 8 i-ii-எi “முதன்மேனோக்கி” 9 i-ii “நெட்டிலை விளவின் கட் தெங்கு” எ “நெட்டிலை விள . . . இன்கட் தெங்கு” 10 எi-எiii “வருமால் எனின்” 11 i “பெருந்தலையி னுடையதும் வெறும்” எi “பெருந்தலை யானைஉடையதும் வெறும் புல்லா நல்லேறும் வேறு பொருள்” 12 எ “என்றதனான்” 13 எ “முதற்கண்” 26-14 i “சுரத்தன்” 15 எi “இளயென்னுஞ்” 16 i “இலைசானே” எ “இலேசினானே” 17 எ “என” 18 எi “சிறுவைந்தூவி” 19 ii “முதல் கண்” 20 எi “சிறு சுப்பின்” 21 iஎ-எi “என்று i-ii “என்றும்” 22 “ர்” 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. என்பது என்நுதலிற்றோ எனின், உயர்திணைப் பால் 1வழுஉ அமைதியும், அஃறிணைத்திணை 2வழுஉ அமைதியும் உடன் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- உயர்திணையிடத்து, ஆண்பாலினையும் பெண் பாலினையும் அத்திணைப் பன்மைப்பாலாற் சொல்லும் சொல்லும், அஃறிணை யொன்றனை உயர்திணைப் பன்மைப் பாலாற் சொல்லும் சொல்லும், இவை இரண்டும் வழக்கின் கண்ணே உளவாகிய உயர்த்துச் சொல்லுதற் பொருண்மைக் கண் வரும் 3சொல் இலக்கணத்திடத்துச் சொல்லும் நெறி அல்ல என்றவாறு. (உ-ம்.) தாம் வந்தார் என்பது. இலக்கண மருங்கிற் சொல்லாறு அல்ல என்ற மிகையாற் காதன் மிகுதியான், உயர்திணை அஃறிணை ஆகவும், அஃறிணை உயர்திணை ஆகவும் கூறுவனவும் அமைத்துக் கொள்க. (உ-ம்.) என் பாவை வந்தது, போயிற்று; என் யானை வந்தது, போயிற்று என இவை உயர்திணை அஃறிணையாயின. இனி ஓர் ஆவினை எம் அன்னை வந்தாள் - போயினாள் 5எனவும்; ஓர் எருத்தினை எந்தை வந்தான் - போயினான் எனவும் கூறுவன அஃறிணை உயர்திணையான் வந்தன. மற்று, இவை ஆகுபெயர் அன்றோ எனின்: -ஒப்பு உள்வழிச் சொல்லுவது ஆகுபெயர்; இது காதல் உள்வழிக் கூறுவது என உணர்க. இதனுள் உயர்திணை அஃறிணையான் வந்தன, ‘குடிமை யாண்மை’ 6என்புழிச் சிறப்பு என்புழிப்பட்டு 7அடங்குமால் எனின், அவை காதல் இன்றிச் சிறப்பித்துச் சொல்லுவன என வேற்றுமையுணர்க. ‘வழக்கினாகிய’ என்றஅதனான் பிறவும் உயர்திணைப் பெயர்களை அஃறிணைமேல் வைத்துச் சொல்லுவனவும் செய்யுட்கண் அமைத்துக் கொள்க. (உ-ம்.) 8கன்னி நறுஞாழல்; கன்னி எயில்; 9கதிர் மூக்கு ஆரல்; 10கரிவனாகம் என்பன போல்வன. இதனாற் சொல்லியது, வழக்கின் கண்ணும் செய்யுட் கண்ணும் 11ஒரோர் காரணங்களைப் பற்றிப் பாலினையும் திணையினையும் மயங்கக் கூறுவன கண்டு அவற்றிற்கு அமைதி கூறியவாறு ஆயிற்று. (27) அடிக்குறிப்புகள் 27-1 எi “வழு வமைதியும்” 2 எi மேற்படி 3 ii-எi “சொல்லாம் இலக்கணத்திடத்து” 4 i-ii-iஎ “ஆன” 27-5 i-ii-எ “என்றும் (கீழே எனவும் எனவருதல் காண்க.) 6 எi “என்பதுட் சிறப்பு” 7 எi “அடங்கு மாலோ எனின்” 8 i “கன்னி நது ஞாழல்” iஎ “கண்ணிய யெயில்” 9 ii “கதிர் முக்கால்” 10 i “கரிவனாக” (பொருள் விளங்கவில்லை) 11 எi “ஓரோ ஓர்” 28. செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூ விடத்தும் உரிய என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், இடம்பற்றி நிகழுஞ் சொற்களுட் சிலவற்றிற்கு இலக்கணங் கூறுவான், அச்சொற்களின் இடங்களதும் 1பெயரும் முறையுங் கூறியமுகத்தான் அவற்றிற்குப் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2செலவுப் பொருண்மைக்கண்ணும், 3வரவுப் பொருண்மைக்கண்ணும், 4தரவுப் பொருண்மைக் கண்ணும், கொடைப் பொருண்மைக்கண்ணும், நிலைபெற்றுத் தோன்றுகின்ற செலவு வரவு தரவு கொடை 5என்னும் அந்நான்கு சொல்லும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்று சொல்லப்பட்ட அம்மூன்று இடத்திற்கும் பொதுவகையான் உரிய என்றவாறு. (உ-ம்.) சிறப்பு வகையாற் கூறும்வழிக் காட்டுதும். (28) அடிக்குறிப்புகள் 28-1 எi “பெயர் முறையும்” 2 i-ii “செலவு பொருண்மை” 3 i-ii “வரவு பொருண்மை” 4 i-ii “தரவு பொருண்மை” 5 i-ii “என்னும் நான்கு” எi “என்ற நான்கு” 29. அவற்றுள், தருசொல் வருசொல் 1ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்கூறிய சொற்களுள் சிலவற்றிற்குச் சிறப்பு வகையான் இட இலக்கணம் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2மேற்கூறப்பட்ட நான்கு சொல் உள்ளும், தரும் வரும் என்னும் சொல் இரண்டும் தன்மை முன்னிலைக்கும் ஆம்; படர்க்கைக்கு ஆகாது என்றவாறு. (உ-ம்.) எனக்குத் தருங் 3காணம், எனக்குவருங் 4காணம்; நினக்குத்தருங் காணம்; நினக்கு வருங் காணம் என வரும். அடிக்குறிப்புகள் 29-1 i “ஆலிரு கிளவி” 2 iஎ “மேற்கூறிய 3 எi “காணம் நினக்கு வருங்காணம்” 4 iஎ “காணம் என வரும் (ஒரு வரி விடப்பட்டது.) 30. ஏனை 1இரண்டும் ஏனை இடத்த. என்பது என்நுதலிற்றோ எனின், இதற்கும் விதி 2ஒக்கும். இதன் பொருள்:- ஒழிந்த செல்லும், கொடுக்கும் என்னும் சொல் இரண்டும், 3ஒழிந்த 4படர்க்கை இடத்திற்கு உரிய; தன்மைக்கும் முன்னிலைக்கும் 5ஆகா என்றவாறு. (உ-ம்.) அவர்க்குச் செல்லுங் காணம், அவர்க்குக் கொடுக்குங் காணம் எனவரும். பொதுச் 6சூத்திரத்துள் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய தரவினையும் வரவினையும் தரவு வரவு என்று ஓதாது வரவினைச் செலவினோடு இயைபு 7படுத்திக் கூறியும் படர்க்கைக்கு உரிய கொடுக்கும் என்பதனொடு செல்லும் என்பதைக் கூறாது தர என்பதனை 8இயையவைத்துக் கூறிய முறைமையன்றிக் கூற்றினாற் கொடைப் பொருட்கண் கொடுக்கும் என்பதனைத் தரும் என்றும், செல்லும் என்பதனை வரும் என்றும் கூறுவனவற்றை இடவழு ஆக்கி அமைத்துக் கொள்ளப்படும். செலவு வரவு என்பன கொடைக்கண் நிகழுமாறு என்னை எனின், அக் கொடுக்கப்படுகின்ற பொருட் செலவு வரவினை மேலிட்டு அக் கொடையைக் கூறும் கருத்தினன் ஆகலிற் கொள்ளப்படும் என்பது. வரவு தரவு என்பன தம்முள் இயைபுபட நின்றவால் எனின் தம்முள் இயைபுடைய எனினும் முன்கூறிய செலவினொடும் வரவு பொருளான் இயைபுபடுதலின் இத்தரவினொடு இயைபு இன்று ஆயிற்று என உணர்க. 10புனறரு பசுங்காய்தின்ற தன்தப்பற்கு; 11அவற்கு வருங்காணம் என்றாற் போல்வன கொடைத் தொழிலிடை மயக்க மாகக் கொள்க. இன்னும் வரவினொடு செலவு கூறிய முறையன்றிக் கூற்றால் அக் கொடைத்தொழில் அல்லாச் செலவு வரவின் கண்ணும் 12இடமயக்கம் கூறுவன அமைத்துக் கொள்ளப்படும். (உ-ம்.) ‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ யானெய்த அம்பு 13நின்மேற் 14செல்லும்.’ 15அரிமலர்ந் தன்னகண் ணம்மா கடைசி திருமுகமும் திங்களும் 16செத்துத் - தெருமந்து வையத்தும் வானத்தும் செல்லா தணங்காகி 17ஐயத்து நின்ற 18தரா’ இந்நிகரன எல்லாம் கொள்க. இந்நான்கு சொல்லுமே இடமயக்கமாய் ஆராய்ந்தது என்னை? எல்லாப் 19பெயர்களும் வினைகளும் இடத்தொடு பட்டால் வருவது எனின், வேற்றுமை உண்டு. அவ்வாறு தத்தம் இடங்கண்மேல் நின்ற சொற்கள் ஒன்றனோடு ஒன்று சேரும் இயல்பு கூறுதல் இந்நான்கிற்கும் அல்லது இன்மையின் இவற்றையே கூறினா20ன் என்பது. செலவு முதலிய சொல் நான்கும் படர்க்கையே எனினும், வரும் தரும் என்னும் இரண்டு படர்க்கையும் தன்மை முன்னிலை களோடு 21இயைபுபட்டும், செல்லும் கொடுக்கும் என்னும் இரண்டும் 22தமக்கு ஏற்ற படர்க்கையோடு 23இயைபு பட்டும் நின்ற வாறு கண்டுகொள்க. இவற்றாற் சொல்லியது, ஓரிடத்துச் சொல் ஓரிடத்துச் சேரும் இடத்துப் பிறக்கும் இட இலக்கணமும் இடவழு 24அமைதியும் என்பது .(30) அடிக்குறிப்புகள் 30-1 i “இரண்டு மனையிடத்த” (கொம்பு விடப்பட்டது) 2 எi “ஒக்கும் என்றவாறு.” (மேற்கூறிய சொற்களுட் சிலவற்றிற்குச் சிறப்புவகையான் இடை இலக்கணம் கூறுதல் நுதலிற்று என்று நுதலியது இதற்கும் ஒக்கும்’ என்று பொருள் போலும்.) 3 i “ஒழிந்து” 4 எ “படர்க்கைக்கு உரிய” 5 i-iஎ-எ “ஆகாது” 6 i “சூத்திரத்து” 7 எi “படுத்தியும் படர்க்கை” 8 i “இயை வைத்துக் கூறிய முறையன்றிக் கூறினார்” எi-எiii “இயைய வைத்தும் கூறிய முறையன்றிக் கூறினாற்” iii-எ “இயைய வைத்துக் கூறியும் நின்றமுறையன்றிக் கூற்றினாற்” 9 எi “கொள்ளப்படும் என்பது வரவு தரவு” (இடையே நான்கு வரிகள் விடப்பட்டன.) 30-10 எiii “புனல்தரு பசுங்காய் தின்றதப்பல” எi “புனல்தரு பசுங்காய் தின்று” ii “பு (னர) (னற) ரு பசுங்காய் தின்றதப்பல” 11 i “அவர்கு” (ர - ற மாறாட்டம்). 12 ii “இடைமயக்கம்” 13 i“நினைமேற்” (ன் - னை மாறாட்டம்) 14 i “சொல்லும்” 15 iii-எiii “அரிமலராய்ந்தகணமா” 16 ii “சேத்துத்” 17 iii “வைய்த்து” 18 i “தார்” (ர-ரமாறாட்டம்: புள்ளி வேண்டா இடத்துப் புள்ளியிடும் குழப்பம்) 30-19 எ “பெயர்வினைகளும் இடத்தொடு” 20 ii “ர்” 21 i “இயைவு” 22 i “தனக்கு” 23 i “இயைவு” 24 i-ii “அமைதியையும்” 31. யாதெவ னென்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். என்பது என்நுதலிற்றோ எனின், உலகத்துப் பொருள்தான் அறிந்த பொருள் என்றும், அறியாப் பொருள் என்றும் இரண்டு வகைத்து; அவற்றுள், அறியாப் பொருண்மேல் நிகழும் சொல்லது இலக்கணங் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- யாது எவன் என்று சொல்லப்படும் அவ் இரண்டு சொல்லும் தன்னான் அறியப்படாத பொருளிடத்து 2வினாச் சொல்லாய் யாப்புறத் தோன்றும் என்றவாறு. (உ-ம்.) 3நுந்நாடியாது; இப்பண்டி உள்ளது எவன் என வரும். இவற்றுள் எவன் என்பது இக்காலத்து ‘என்’ என்றும், ‘என்னை’ என்றும் மருவிற்று. 4‘செறிய’ என்றதனாற் பிறவும் அவ்வினாப் பொருளிடத்து வருவன கொள்ளப்படும். (உ-ம்.) யாவன், யாவள், யாவர், யார், யாவை, யா, எப்பொருள் என இவை. எவன் என்பது அஃறிணை 5இருபாற்கும் உரிய வினாவே எனினும் ஒருமைப் பால்மேல் 6வருதல் பெரும்பான்மை என்பது உரையிற் கோடல் என்பதனாற் கொள்ளப்படும். (31) அடிக்குறிப்புகள் 31-1 i “சொல்லது கூறுதல்” ii-எi-எiii-iஎ “சொல்லது இலக்கணம் கூறுதல்” 2 i “வினச் சொல்லா யாப்புற” (ன-னா) 31-3 எi “நுந்நாடு யாது” 4 iii-எ-எiii “யாப்புற என்றதனால” (செறிய என்பதன் பொருள் “யாப்புற”) ii “யாப்புற” (செறிய) எi இருபாற்கும் உரிய இதனானே 5 i “இருபாற்குமரிய வினாவே” (ம-மு) 6 iii-எ “வரும், பெரும் பான்மை” எi-எiii “வருவதே பெரும்பான்மை” 32. அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் அறியாப் பொருண்மேல் நிகழும் என்று மரபிலக்கணம் கூறிய சொற்களுள் ஒன்றற்குச் 1சிறிது அறிந்தவழியும் வரும் மரபும் உண்டு என்றுஅறிந்து அது காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் வினாவப்பட்ட இரண்டனுள்ளும், யாது என்று சொல்ல வருகின்ற வினாப்பொருளை 2உணர நின்ற சொல், அறிந்த பொருளிடத்து உண்டாகிய ஐயம் தீர்தற்கு ஆராய்ந்த 3சொல் ஆகலும் உரித்து என்றவாறு. (உ-ம்.) ஒருவன் ஐந்து எருது உடையான், 4காப்பக் கொடுப்ப, அவற்றுள் ஒன்று கெட்டது என்று 5காப்பான் நடுச்சொல்லின இடத்து, எருது உடையான் வெள்ளை, காரி என்னும் ஐயம் தீர்தற்பொருட்டு அவற்றுள் யாது? என்று வினாதல் என்பது. மேற் சூத்திரத்துப் பின்தொடர்புடையது என்பதனைப் பின் வைக்கற்பாற்று என்பதனான் 6இதனோடு இயைபுடைய யாது என்பதனை எவனின் பின்வையாது, முன்வைத்த முறைமையன்றிக் 7கூற்றினான், அச்சூத்திரத்து எடுத்தோத்தானும், 8இலேசானும் அறியாப் 9பொருள் இடத்து வந்தன எல்லாம் அறிந்த பொருள் இடத்து ஐயம் 10தீர்த்தற்கும் வரும் எனக் கொள்க. (உ-ம்.) நமருள் யாவன் போயினான்; அவற்றுள் எவ்வெருது கோட்பட்டது என்றாற்போல்வன. இச் சூத்திரத்தாற் கூறியது வழுவமைதி அன்றோ எனின், முன்பு அறியாப் பொருள் என்றதும் ஒருவகையானும் அறியாமை என்பது இன்மையின், அதனைப் பார்க்க இது சிறுபான்மை என்பது அல்லது வழுஎனல் ஆகாது என உணர்க. இவற்றாற் சொல்லியது, வினாப் பொருண்மேல் நிகழும் சொற்களது பெரும்பான்மை சிறுபான்மை மரபிலக்கணம் 11என உணர்க. (32) அடிக்குறிப்புகள் 32-1 i “சிரதரி ந்த வழுவரு மரபும்” (ர-ற, ர-ரி-ழி-மு) 2 i “உணர் நின்ற” 32-3 எi “சொல்லாகா வாகலானும்” எiii “சொல்லாகலாலும்” 4 iஎ “காப்பக . . . தென்று காப்பன்” iii-எi-எiii “காப்பக் கொடுப்பவற்றுள்” ii “கொடு (க்கப்) ப்ப (ட்ட) வற்றுள்” 5 எi-எiii “காப்பானிடைச் சொல்லிய இடத்து” எ “காப்பான் சொல்லிய இடத்து” ii “காப்ப (னடு) (னிடை)ச்” “காப்பான் எருது உடையானிடைச் சொல்லின இடத்து (?)” 6 ii-எi “இத்தோ டியைபுடைய இஃதோ டியை புடைய” 7 i “கூறினான்” 8 i “இலைசாம்” 9 எi “பொருளிடத்து ஐயந் தீர்த்தற்கும்” 10 i-ii-iஎ-எiii “தீர்த்த ற்கும்” 32-11 எ “எனவும்” 33. இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். என்பது என்நுதலிற்றோ எனின், இன்னும் உலகத்துப் பொருள்தான் வரையறை 1உள்ளதும் இல்லதும் என இருவகைத்து; அவற்றுள் 2வரையறை உடையது 3தொகை பெறும்வழிப் படுவதோர் மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- இத்துணை என்று வரையறுக்கப்பட்ட சினைக்கிளவியும், முதற்கிளவியும் தம்மை மேலொரு வினையொடு படுத்துச் சொல்லுவதாக அதற்குத் 4தொகை கொடுத்துக் கூறும் இடத்து அத் தொகைச் சொல் இறுதிக்கண் 5உம்மை கொடுத்துச் சொல்லுதலை வேண்டும் என்றவாறு. (உ-ம்.) நம்பி கண்ணிரண்டும் நொந்தன, நங்கை முலை யிரண்டும் வீங்கின; இது சினைக்கிளவி. தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார், முப்பத்து மூவரும் வந்தார்; 6என்பன முதற்கிளவி. ‘வினைப்படு தொகுதி’ என்றமையான் தொகை கொடாத வினைப் பாட்டின்கண் உம்மையின்றி, 7நம்பி கண்ணொந்தது, நொந்தன எனவரும். ‘இரு தோடோழர்பற்ற’ எனவும் ‘ஒண்குழை ஒன்றொல்கி’ எனவும், உம்மையின்றி வந்தனவும் உளவால் எனின் அவை 8செய்யுள்; தொகுக்கும்வழித் தொகுத்தல் என்பதனாற் தொக்கு நின்றன. அவ்வாறு வழக்கினுள் இல்லை என்று உணர்க. ‘இருதிணை மருங்கி னைம்பாலறிய’ 9என்ற 10சூத்திரத்துள் உம்மை இன்றி வந்தன. உடம்பொடு புணர்த்தல் என்பதனாற் செய்யுளுள் உம்மை இன்றி வருவனவும், உள என்றலும் ஒன்று. இது சிறுபான்மை. இனி வினைப்படாத பெயர்ப்பாட்டின்கண் தமிழ்நாட்டு மூவேந்தர் இவர் எனினும் அமையும் என்பது. (33) அடிக்குறிப்புகள் 33-1 எi “உள்ளதூஉம் இல்லதூஉம்” 2 எi “வரையறை உள்ளது” 3 i-ii “தொகைப்படும் வழிப்படுவதோர்” 4 i-ii-iஎ “தொகை கொடுமிடத்து” iii-எ “தொகை கொடுக்குமிடத்து” எi-எiii “தொகை கொடுத்துக் கூறுமிடத்து” 5 எi “உவமை” 6 எi “இவை முதற்கிளவி” (‘இது முதற் கிளவி’ என வந்ததற்கு ஒத்தது இது) 33-7 i “நம்பிக்கண்” 8 ii “செய்யு(ளு)ட்டொக்கும்” 9 i-எi “என்று” 10 எi “சூத்திரத்துள்ளும் உம்மையின்றி” 34. மன்னாப் பொருளும் அன்ன வியற்றே. என்பது என்நுதலிற்றோ எனின், இன்னும் உலகத்துப் பொருள் 1இல்லதும் உள்ளதும் என இருவகைத்து; அவற்றுள் இல்லதன்மேற் பிறக்கும் மரபிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- உலகத்து இல்லாப் பொருளும் மேலதனோடு ஒத்த இயல்பினையுடைத்து என்றவாறு. 2அன்னவியல் என்பது மேலும் பிறபொருள் 3ஒழிந்தன உள எனப்படுதற்கு அஞ்சி முற்றும்மை கொடுக்க என்றா4ன். அதுபோல ஈண்டும் ஒழிவது அஞ்சி எச்சவும்மை கொடுக்க என்பான் ‘அன்ன 5இயல’ என்றான் என்பது. (உ-ம்.) முயற்கோடும், ஆமை மயிர்க் கம்பலமும் அம்மிப்பித்தும் துன்னூசிக் குடரும் சக்கரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை எனவரும். மேற் சூத்திரத்து முற்றும்மையோடு இச்சூத்திரத்தை மாட்டேற்றலின் முயற்கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் யாண்டும் இல்லை 8என்பது உதாரணம் ஆகற்பாற்று எனின், யாண்டும் என்னாது இல்லை எனவும் வழக்கு அமைதலின், 9இதுவே பொருளது இன்மையை வாளாதே இல்லை என்பது அன்றி ஓர் இடத்தொடுபடுத்து இல்லை என்புழி எச்சவும்மை கொடாது விடின், பிற இடத்து உண்மை 10சேறலின் மாட்டேற் றொருபுடைச் சேறல் என்பதாகக் கொண்டு மேற்காட்டிய உதாரணம் ஆகற்பால என்பது. (34) அடிக்குறிப்புகள் 34-1 எ “உள்ளத்தும் இல்லதும் என” 2 i-ii-iஎ-எi-எiii “அன்ன இயல்பு” 3 எi “ஒழிந்தனவும் உள” 4 ii “ர்” 5 ii “இயல்பென்றான்” 6 ii “ர்” 34-7 iii-எ “சூத்திரம்” எi “சூத்திரத்திலதை” i “சூத்திரத்திரதை” (சூத்திரத்தினை) 8 iii “என்பது காரணமாகற் பாற்று” 9 எ “இதுவே ஒரு பொருள தின்மையை” (இதுவே பொருள். ஒரு பொருளது இன்மையை என்றிருந் திருக்கலாம்) எi “இது பொருவன்மையை” 10 i-ii “சொல்லின்” iii “சேரலின்” 35. எப்பொரு ளாயினும் அல்ல தில்எனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். என்பது என்நுதலிற்றோ எனின், சொல் தொகுத்து 1இறுத்தல் என்னும் செப்புஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- எவ்வகைப்பட்ட பொருளாயினும் தன்னுழை உள்ளது அல்லதனை இல்லை எனலுறுமே எனின், அவ்வினாவின பொருள் அல்லாத பிறிது பொருள்கூறி இல்லை என்க என்றவாறு. (உ-ம்.) பயறுளவோ 2வணிகீர் என்றக்கால் உழுந்தல்லது தில்லை என்க. பயறுளவோ என்றால், அல்லது என்பது ஒழியவும், பயறில்லை உழுந்துள என இந்நிகரனவும் சொல்லுப; ஆகலான் அல்லது என்பது வேண்டா எனின், அல்லது என்பது அஃறிணை ஒருமைப் பாற்கு உரியதே 3எனினும் மற்றை நான்கு பாற்கண்ணும் பால்வழுவாயும் திணை வழுவாயும் சென்று மயங்கல் கண்டு, அதனைக் காத்தற் பொருட்டாகச் சொல்லினா4ன் என்பது. (உ-ம்.) அவனல்லது, அவளல்லது, அவரல்லது, அதுவல்லது, அவையல்லது எனவரும். அவனல்லது என்புழி 5அல்லது என்பதனைப் பின் பிறனில்லை என்று வருவதனோடு படுத்து வழுவாதல் அறிக. அப்பொருளல்லா என்பது மிகை; அதனாற் பிறிது பொருள் கூறும் வழியும் அவன் வினாயதற்கு 6இனமாயவற்றையே கூறுக என்றவாறு. இதனாற் சொல்லியது, செப்பின்கட் பிறப்பதோர் வழுக்கண்டு அதனை அமைத்தற்குக் கூறியவாறு ஆயிற்று. இதனுள் வழு என்பது என்னை எனின், அவன் வினாயதனை மறுப்பது அன்றி, அவன் 7வினவாத பிறிது ஒன்றனையும் உடம்பட்டுக் கூறினமையின் என்பது. வழுவமைதியேல் பிறிதுபொருள் கூறுக என விதிக்கப் பாற்றன்று எனின், அவ்வாறு கூறலாகாது என 8மறுத்து நின்ற இதுவும் இவ்வாறு கூறுக என்பதோர் விதி 9நீர்மைத்தது என்பது. (35) அடிக்குறிப்புகள் 35-1 i “இருத்தல்” எ “இயற்றல்” 2 i “வணிகீ றென்றக்கால்” 35-3 ii-iஎ-எii “எனினும் நான்கு” i “எனினும் வருவதனோடு படுத்து வழுவாதலறிக. அப்பொருளல்லா நான்கு பாற்கண்ணும்” (கோடிட்ட பகுதியைப் பின்பக்கத்தே சேர்க்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) 4 “ர்” 5 i “அவல் கென்பதனை” 6 ii-எi-எiii “இனமாயவற்றை” 7 எi “வினவாத” 8 i “மறுத்து நின்றவு மிதும்” இவ்வாறு கூறுக” எ “மறுத்து நின்ற . . . . . . வாறு கூறுக” எi-எiii “மறுத்து இவ்வாறு கூறுக” 9 i-எi-எiii “நீர்மைத்தது” 36. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் மேலதற்கு ஓர் புறனடையாயதோர் இறுத்தல் வகைமை கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- அவன் வினாவின 1பொருள்தன்னைச் சொல்லு இடத்துச் சுட்டி, இல்லை என்று சொல்லுக என்றவாறு. (உ-ம்.) இப்பயறல்லது இல்லை; இவையல்லது பயறு இல்லை. எனவரும். (36) அடிக்குறிப்பு 36-1 எ “பொருள் தன்னையே” 37. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் 1பொருள் வேறுபடாஅது ஒன்றா கும்மே. என்பது என்நுதலிற்றோ எனின், இஃது ஒரு பொருள்மேல் இருபெயர் வழுக் காத்தல் நுதலிற்று. மேல் இவை அல்லது பயறு இல்லை என்பதனைப் பற்றிப் பிறத்தலான் மேலதற்கே 2புறனடை எனினும் அமையும். இதன் பொருள்:- பொருளொடு பொருந்தாச் சுட்டுப் பெயராயினும் பொருள் வேறுபடாது; ஒரு பொருளே ஆகும் என்றவாறு. (உ-ம்.) இவை அல்லது பயறு இல்லை எனவரும். இவை என்பது பயறே எனினும் பயறு என்பது பின் உண்மை யின் அதன்மேற் செல்லாது 3பிறிதொன்றதனைச் சொல்லியது போலும் நோக்குடைத்தே எனினும் அமைக என்றவாறு. இதனாற் சொல்லியது ஒரு பொருள்மேல் இருபெயரும் பல பெயரும் கூறுதல் இலக்கணமே எனினும், இயைபுபடக் 4கூறவேண்டும் அன்றே; அவ்வழி இயைபில்லது கண்டு அம் மரபுவழுவினை அமைத்தவாறு ஆயிற்று (37) அடிக்குறிப்புகள் 37-1 i “பொருள் வறுபடா” 2 - (புறனடை. புறநடை என்ற இரண்டு வடிவமும் உரைகளில் காண்கிறோம்) 3 i-ii “பிறிது என்று அதனை” 4 i “கூறவேண்டுமென்றையவ்வழி” (மெ.ம; றே-றை மாறாட்டம்). தொ - 10. 38. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் ஒரு பொருள்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- இயற்பெயராகிய சொல்லும், சுட்டுப் பெயராகிய சொல்லும், வினைச்சொற்கண்ணே கூடவரும் காலம் 1தோன்றின், அவற்றுள் சுட்டுப் பெயர்க்கிளவியை முற்படச் சொல்லார்; இயற் பெயருக்குப் பின் வைத்துச் சொல்லுக என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) சாத்தன் வந்தான் 2அவற்குச் சோறு கொடுக்க; கொற்றி வந்தாள் 3அவட்குப் பூக்கொடுக்க என்றாற்போல்வன. தன்னின முடித்தல் என்பதனானே விரவுப்பெயர்களின் இயற் 4பெயரொழிந்தனவுங் கொள்ளப்படும். (உ-ம்.) முடவன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க என்றாற் போல்வன. ‘இயற்பெயர் வழிய’ என்ற 5மிகையான், உயர்திணைப் 6பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்குஞ் சுட்டுப்பெயர் பிற் கூறுக என்பது கொள்ளப் படும். (உ-ம்.) நம்பிவந்தான் அவற்குச் சோறு கொடுக்க; எருது வந்தது அதற்குப் புல் இடுக எனவரும். ‘ஒருங்கியலும்’ என்ற மிகையான் 7இம்மூவகைப் பெயர்க் குஞ் சுட்டுப்பெயர் கூறும்வழி அகரச்சுட்டே கிளக்க என்பது கொள்ளப்படும். ‘வினைக்கொருங்கியலும்’ என்று வினைக்கே கூறுதலாற் பெயர்க்கு யாது முற்கூறினும் அமையும் என்பது. (உ-ம்.) சாத்தன் அவன்; அவன் சாத்தன் எனவரும். இதனாற் சொல்லியது 8பொருட்பெயரொடு சுட்டுப்பெயர் கூறும் வழி பிற்கூறாது முற்கூறின் பிற பொருள்மேலே நோக்குப் பட நிற்பது கண்டு அவ்வாறு கூறற்க என மரபு வழுக்காத்தவாறு என்றவாறு. (38) அடிக்குறிப்புகள் 38-1 i “தோன் . . . வற்றுட்” ii “தோன்ற அவற்றுட்” 2 i “அவர்கு” (ர-ற மாறாட்டம் பின்னும் இப்படியே வரும்). 3 எi “அவட்குப் பூக் கொடுக்க” 4 i “பேர்” 5 i “மிகையால்” 6 i “பேர்க்கும்” 38-7 எi “இம் மூவகைப் பெயர்க்கும் சுட்டுப் பெயர்க்கும் சுட்டுப் பெயர் கூறும் வழி” 8 எi “பொருட் பெயரோடு” 39. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கியது நுதலிற்று. இதன் பொருள்:- மூவகைப் பெயர்களு1ம் சுட்டுப்பெயரை முற்படச் சொல்லுதல் செய்யுளிடத்தாயின் அமையும் என்றவாறு. (உ-ம்.) “அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய்! வேலன், விறல் மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தார்அணியில் என்னைகொல் பின்னை அதன்கண் 2விளைவு?” என வரும். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. இதனாற் சொல்லியது முற்கூறலாகாது என்னப்பட்ட சுட்டுப் பெயர் மொழிமாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறு ஆயிற்று. (39) அடிக்குறிப்புகள் 39-1 எi “ள்” 2 எi “விளை” 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். என்பது என்நுதலிற்றோ எனின், 1இதுவும் அச்சுட்டுப் பெயர் ஆராய்ச்சியே கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- சுட்டெழுத்து முதலாகவுடைய காரணப் பொருளை உணரநின்ற சொல்லும் மேற்கூறிய சுட்டுப்பெயர் இயல்பு போலப் பெயர்ப்பின்னே யாப்புறத் தோன்றும் என்றவாறு. (உ-ம்.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன், 2அதனான் தம்மாசிரியன் 3உவக்கும் எனவரும். மேற்கூறிய வகைகள் எல்லாம் இதற்கும் ஒக்கும். 4இதுவும் ஆண்டே யடங்காதோஎனின், ஆண்டுச் சுட்டுப் பொருள் வழி வந்தது, ஈண்டு அப்பொருளது குணத்துவழி வந்தது என 5உணர்வது. (40) அடிக்குறிப்புகள் 40-1 i “இதுவுஞ் சுட்டுப்பெயர் ஆராய்ச்சி” ii-iஎ-எi-எiii “இதுவும் சுட்டுப்பெயர் ஆராய்ச்சிய” 2 i “அதனான் தந்தை உவக்கும்” ii-iii-எ “அதனாற் றம்மாசிரியன் உவக்கும்” எi “அதனான் தன் ஆசிரியன் உவக்கும்” 3 ii-எi “உவக்கும் சாத்தி சாந்தரைக்கு மாறு வல்லள் அதனாற் கொண்டான் உவக்கும் என வரும்” 4 iஎ “இதுவும் ஆண்டே எனின்” (ஒரு சொல் விடுபட்டது) 5 எi “உணர்க” 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் ஒருபொருள்மேல் இருபெயர் வழுக் 1காத்தலை நுதலிற்று. இதன் பொருள்:- சிறப்பினாகிய பெயர்ச் சொற்கும், (உம்மையான்) பிற பெயர்க்கும் இயற்பெயராகிய சொல்லை முற்படச் 2சொல்லார் ஆசிரியர்; பிற்படச் சொல்லுவர் என்றவாறு. (உ-ம்.) ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன், படைத் தலைவன் கீரன் என இவை சிறப்புப்பெயர். பிறவும் என்றது குலத்தினான் 3ஆகிய பெயரும், கல்வியினான் ஆகிய பெயரும், தொழிலினான் ஆகிய பெயரும், பிறவும் என்பது. (உ-ம்.) சேரமான் 4சேரலாதன், சோழன் நலங்கிள்ளி; பாண்டியன் மாறன் - இவை குலப்பெயர். ஆசிரியன் சாத்தன் என்றாற்போல்வன கல்வியினான் ஆகிய பெயர். வண்ணாரச் சாத்தன்; தச்சக் கொற்றன்; நாவிதன் 5மாறன்: இவை தொழிலினான் ஆகிய பெயர். இதனாற் சொல்லியதுஒருபொருட்கு இருபெயர் கூறும் வழி, யாது முற்கூறினும் அமையும் என்று கூறலாகாது; மேல் தொட்டும் கூறிவந்த மரபானே கூறாவிடின், அப்பொருள்மேல் செல்லாது பிற பொருள்மேல் நோக்கப்படு என, மரபு வழுவற்க 6என்றவாறு ஆயிற்று. இவ்வாறன்றி இக்காலத்து மயங்கக் கூறுவன உளவாயின், அவற்றைக் கடிசொல்லில்லைக் காலத்துப்படினே என்பனாற் கொள்ளப்படும். (41) அடிக்குறிப்புகள் 41-1 i-iஎ “காத்தலை” 41-2 i-ii-எii “சொல்லால் பிற்படச் சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு” 3 iஎ “ஆய” 4 i “சொல்லாதான்” (b-n; h-ர) 5 i “மாரன்” 6 (என்றவாறாயிற்று என்பதன் பின்னுள்ள பகுதிகள் எi-ல் இல்லை.) 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே. என்பது என்நுதலிற்றோ எனின், ஒருபொருள்மேல் பல பெயர் வழூஉக் காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒரு பொருளைக் கருதிய வேறு வேறாகிய பெயர்ச்சொ1ல் பெயர்க்கு வரும் வினையை வேறுபடச் சொல்லின் ஒரு பொருட்குப் பொருந்தும் இடம் இல்லை. அதனான் வரும் பெயரை எல்லாம் சொல்லிப் பின் தொழில் சொல்லுக என்றவாறு. (உ-ம்.) ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என வரும். இனி இரட்டுற மொழிதல் என்னு ஞாபகத்தால் ஒரு பொருளைக் கருதிய வேறு வேறாகிய பெயர்ச் சொற்கள், வேற்றுத் தொழிலைப் பெயர் தொறும் சொல்லின் ஒரு பொருட்குப் 2பொருந்தும் இடம் இல என, வேறு அல்லாத ஒரு தொழிலைப் பெயர் தொறும் சொல்லின் ஒரு பொருட்குப் பொருந்தும் இடனுடையதூஉம் கொள்ளப்படும். (உ-ம்.) ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன் வந்தான், இளங்கண்ணன் வந்தான், சாத்தன் வந்தான் எனவரும். இதனாற் சொல்லியது, ஒரு பொருள்மேல் வரும் பல பெயர்க்கண் மரபிலக்கணமும் மரபு வழுவமைதியுங் கூறியவாறு ஆயிற்று. ஞாபகத்தான் கொண்டது மரபு வழுவமைதி. அதனை வழூஉ என்றது என்னை எனின், ஒருநிலைக்கண் அது தானே பல பொருள் - மேலும் 3சேறலான் என்பது. (42) அடிக்குறிப்புகள் 42-1 i “ற்” (சந்தி) 2 iஎ “பொருந்தும் இடனுடையதும் கொள்ளப்படும்” (பின்வரும் பொருந்தும் என்பதனோடு இதனை மயங்கியதால் அதன் முன் வருவன விடப்பட்டன.) 3 i-ii-iஎ-எi “சேரலான்” (ர-ற) 43. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். என்பது என்நுதலிற்றோ எனின், எண்ணின்கண் திணைவழு அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- தன்மையாகிய சொல்லினையும் அஃறிணையாகிய சொல்லினையும் விரவி 1எண்ணும் இடமாகிய இடத்து உண்டாகிய திணை ஈறாய் வருதலை நீக்கார்; கொள்வர் ஆசிரியர் என்றவாறு. என்று 2என்றது எண் அசை. (உ-ம்.) யானும் என் னெஃகமுஞ் சாறும். அவனுடை, யானைக்குஞ் சேனைக்கும் போர் என வரும். இதனுள் அவன் வந்தது என்றாற் போலும் திணை வழு இல்லை எனின், அதுவே அல்ல திணைவழூஉ. எண்ணும் இடத்தும் இனம்ஒத்தன3வே எண்ணுக என 4முன் சொல்லினமை யானும் திணைவழுவாவது பொருந்தாது விடுவது என்ப தாகலானும், இதுவும் திணைவழூஉ 5என்னப்படும். இவ்வாறு இடர்ப்படுகின்றது என்னை? 6இதனை மரபு வழுவமைதி என்று கூறுக எனின், வியங்கோளெண்ணுப்7 பெயர். திணை விரவு வரையார் என 8ஆசிரியன் மேல் கூறுகின்றமையின் இதற்கும் அதுவே கருத்து என்பது பெறுதும். இனிச் சொல்லொடு சொன்முடித்தலே திணைவழு எனினும் சாறும் என்னும் உயர்திணை முற்றுச்சொல் 9எஃகம் என்னும் 10அஃறிணையினையும் உளப்படுத்தமையின் வழுவும் இதன்கண் உண்டு என உணர்வது. மருங்கின் என்ற மிகையான், முன்னிலையோடு அஃறிணை எண்ணுதலும், படர்க்கையோடு அஃறிணை 11எண்ணுதலும் கொள்க. (உ-ம்.) நீயும் நின்படைக்கலமுஞ் சாறிர், அவனும் தன் படைக்கலமுஞ் 12சாறும் எனவரும். இவற்றுள், எண்ணுவழு வல்லது முடிபுவழு இல்லை. இதனான் சொல்லியது எண்ணுப் பொருட்கண் திணை பற்றிப் பிறக்கும் மரபுவழுவமைதி என உணர்க. சிறுபான்மை திணைவழூஉ அமைதியும் எனஉணர்க. (43) அடிக்குறிப்புகள் 43-1 எi “எண்ணும் இடத்து” i-எi “என்னும்” 2 எi “என்றது” 3 iஎ “வேலெண்ணுக” 4 i-ii “முன்சொல் இன்மையினும்” iii-எ-எi “யானும்” (அடுத்தும் ‘ஆனும் என’ வருதல் காண்க.) 5 எ-எi “எனப்படும்” 6 எi “மரபு வழுவமைதி” 7 i “ம்” 8 “ஆசிரியந்” 43-9 ii “சொல் அஃகம்” எi “சொல்லே எஃகம்” 10 எi நீங்கியவை “அஃறிணை வினையும்” 11 iii “என வைத்தும் கொள்க” 12 iஎ “சாலும்” 44. ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது. என்பது என்நுதலிற்றோ எனின், எண்ணும் வகையாற் சொல்லும் ஒருவகைச் சொல் நிகழ்ச்சி உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒருமைப் பொருட்கு உரிய எண்ணாய் உயர்திணை இருபாற்கும் பொதுவாகிய 1ஒருவர் என்னும் சொல்லினின்றும் பொதுமைகெடப் பிரித்து உணரப்படும் ஒருவனென்னும் சொல்லாயினும் ஒருத்தி என்னும் சொல் லாயினும் எண்ணாத பொழுது தன் ஒருமை விளங்கும் துணைஅல்லது 2எண்ணு முறைக்கண் முதல் எண்ணாய் நில்லாது. எனவே பொதுமையிற் பிரிந்து நில்லாது எனப் பொதுமையிற் பிரியா ஒருவர் என்னும் சொல் எண்ணும் முறைமைக்கண் நிற்கும் என்றவாறு. (உ-ம்.) ஆண்மக்கள் பலர் நின்றாரை எண்ணுங்காலும் ஒருவர் இருவர் நால்வர் என்று எண்ணுக; பெண்டின் பலரை எண்ணுங்காலும் அவ்வாறே எண்ணுக. ஒருவன் என்பதும் 3ஒருத்தி என்பதும் ஓருழை 4எண்ணேல் எண்ணும் முறைமைக்கண்ணும் ஆகாமை யென்னைஎனின், பொருளான் ஆகாமை இல்லை. ஒருவன் என்பதற்கு ஏற்ப மேலும் இருவன் மூவன் என னகர வீற்றியைபு இன்மையானும், ஒருத்தி என்பதற்கு ஏற்ப இருத்தி முத்தி என இகர 5ஈறு இயைபு இன்மை யானும், மேல் வருகின்ற ரகர ஈறோடு ஒருவர் என்பது 6சொல் இயைபு உடைமையின் அதுவே கொள்ளப்பட்டது. இதனாற் சொல்லியது எண்ணின்கண் பிறக்கும் மரபிலக்கணம் என உணர்க. (44) அடிக்குறிப்புகள் 44-1 iஎ “ஒருவன்” 2 i-ii-iஎ-எii “எண்ணு முறைக்கண் முதல் எண்ணுங் காலும் அவ்வாறே எண்ணுக” (இடையே பல வரிகள் விடப்பட்டுள்ளன). எi “எண்ணு முறைக்கண் முதல் எண்ணுங்காலும் அவ்வாறே எண்ணுக. உதாரணம் ஆண் மக்கள் பலர் நின்றாரை”. (iii-எi - ல் கோடிட்ட மூவர் என்பது இல்லை) 44-3 i “ஒருத்தி மோருழை” 4 எi “எண்ணே எண்ணும்” 5 i “ஈற்று இயைபு” 6 i-எiii “சொல் இயல்வு உடைமையின்மையின்” 45. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். என்பது என்நுதலிற்றோ எனின், 1எண்ணின்கண் திணைவழு அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- வியங்கோட்கண் எண்ணப்படும் பெயரைத் திணைவிராய்வரும் 2வரவினை நீக்கார்; கொள்வர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) ஆவும் ஆயனும் செல்லுக எனவரும். தன்னின முடித்தல் என்பதனான், வியங்கோள் அல்லாத விரவு வினைக் கண்ணும் சிறுபான்மை வருவன கொள்க. அவை ஆவும் ஆயனும் 3சென்ற கானம் என்பன போல்வன. இதனாற் கூறியது, எண்ணின்கண் திணைபற்றிப் பிறக்கும் மரபுவழூஉ அமைதி என உணர்க. (45) அடிக்குறிப்புகள் 45-1 “எண்ணின் கட்டிணை வழு” 2 iii “வரவை” 45-3 எiii “சென்ற கானம் சென்ற கானம் என்பன” iii “செல்லுங்கானம் சென்ற கானம் என்பன” 46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். என்பது என்நுதலிற்றோ எனின், வேறுவினைப் பொதுச் சொற்களது மரபு வழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- வேறுவினை உடையவாகிய பல பொருளையும் பொதிந்து நின்ற பொதுச் சொல்லை ஒரு பொருளது வினையான் சொல்லார் உலகத்தார். அதனான், அவற்றிற்கு எல்லாம் பொதுவாகிய வினையானே சொல்லுக என்றவாறு. (உ-ம்.) அடிசில் கைதொட்டார், அயின்றார்; அணிகலம் அணிந்தார், மெய்ப்படுத்தார்; இயம் இயம்பினார், படுத்தார் எனவரும். இதனான் சொல்லியது, பல பெயர்க்கு உரிய பொதுப் பெயர்ச் சொல்லை எடுத்து மேலதன் வினைகூறும்வழி மரபு வழுவற்க என்றவாறு. இஃது இலக்கணமாகப் பல பொருளும் ஒரு சொல்லுதற் கண் அடங்கி நில்லாது வேறு வேறு அடிசில் எனவும், அணி எனவும் வரும். வரவும், ஒன்றன்வினை ஒன்றற்கு வரும் வரவும் வழுவாக்கிச் செய்யுண் மருங்கினும் 1என்னும் அதிகாரப் புறநடையான் அமைத்துக் கொள்க என்பது. (46) அடிக்குறிப்பு 46-1 i-எi “என்னு . . . ரப்புறனடை” 47. எண்ணும் காலும் அதுவதன் மரபே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அது. இதன் பொருள்:- வேறு வினைப் பொதுச்சொற்களைப் பொதுமையிற் பிரித்து எண்ணும்காலத்தும் ஒன்றன் வினையாற் கிளவாது பொதுவினையாற் கிளத்தல் அதற்கு இலக்கணம் என்றவாறு. (உ-ம்.) யாழுங் குழலும் பறையும் இயம்பினார் எனவரும். இதனாற் சொல்லியது, அப் பொதுச் சொற்களைப் பிரித்து 1எண்ணும் வழியும் வினைமுடிபின்மரபும் வழுவாமற் சொல்லுக என்பதாயிற்று. (47) அடிக்குறிப்பு 47-1 i-ii-எi “எண்ணு வழியும்” 48. இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா. என்பது என்நுதலிற்றோ எனின், 1உரிச்சொற்கண்ணதோர் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் அவ்இரட்டித்துச் சொல்லுதலிற் பிரித்துச் சொல்லப்படா என்றவாறு. அது இசை, குறிப்பு, பண்பு என மூன்று வகைப்படும். (உ-ம்.) சுரு சுருத்தது, மொடு மொடுத்தது என இவை இசை பற்றி வந்தன. கொறு கொறுத்தன, மொறு மொறுத்தார் என்பன குறிப்புப் பற்றி வந்தன. 2கறு கறுத்தார் என்பன பண்பு பற்றி வந்தன. இதனான் சொல்லியது, ஒரு பொருட்கண் இரு சொல் லினை ஒரு பொருள் வேறுபாடு குறியாது கூறின் அது மரபு அல்ல எனினும், அவ்வாறு இரட்டிக்கூறலே அவற்றிற்கு 3அடிப்பாடாகலான், இனி, அதனை மரபு வழுவற்க என மரபு கூறியவாறு ஆயிற்று. இது மரபு வழுவமைதி போலும். (48) அடிக்குறிப்புகள் 48-1 எi “உரிச் சொற்கள் மரபு” 2 ii-எi-எii “குறு குறுத்தார் கறு கறுத்தார்” 3 ii-எi-எii அடிப்பாடாகலின்” 49. ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். என்பது என்நுதலிற்றோ எனின், 1ஒருபெயர்ப் பொதுச் சொற்கண் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் 2சொல்லை ஆண்டுள்ள பொருள் ஒழிய 3உயர்திணைக்கண்ணும் அஃறிணைக் கண்ணும் தெரித்துக்கொண்டு வேறே கிளத்தற்குக் காரணம் அப்பொருட்கண் தலைமையும் 4பன்மையும் ஆம் என்றவாறு. (உ-ம்.) பார்ப்பனச்சேரி என்பது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது. 5எயினர் நாடு; குற்றிளை நாடு என்பன பன்மைபற்றி வந்தன. கமுகந் தோட்டம் 6என்பது அஃறிணைக்கண் தலைமை பற்றி வந்தது. இது தானே பன்மையுள்வழிப் பன்மைபற்றி வந்ததூஉமாம். ஒடுவங்காடு, காரைக்காடு என்பன பன்மை பற்றி வந்தன. சேரி என்பது பல குடியும் சேர்ந்திருப்பது. தோட்டம் என்பது பல பொருளுந் தொக்கு நின்றவிடம். பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது பல பொருளும் உள்வழிப் பிறப்பதோர் பெயர்ச் சொல்லினை அப் பலபொருளினையும் உடன்கூறி அன்றே கூறற்பாலது: அவ்வாறு அன்றி அப் 7பொருள் தலைமையும் பன்மையும்பற்றிச் 8சொல் தொகுத்து இறுத்தல் கண்டு அம்மரபுவழு அமைத்தற்குக் கூறியவாறு ஆயிற்று. (49) அடிக்குறிப்புகள் 49-1 எ “இரு பெயர்” 2 i-ii “சொல்யாண்டுள்ள” 3 i-எ-எi “உயர்திணைக் கண்ணும் தெரிந்துகொண்டு” எi “தெரிக்கக் கொண்டு” (கீழ்க் குறிப்பில் கொடுத்த பாடம்) 4 i-எi “பன்மையும் என்றவாறு” 5 எi “எயினர் நாடு என்பதும் குற்றிளை நாடு என்பதும் அத்திணைக் கண் பன்மைபற்றிய வழக்கு” 6 i-எiii “என்பன” எi “என்பதும்” 49-7 “பொருட்டலைமை” 8 “சொற்றொகுத்திறுத்தற்கண்டு” 50. பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம் மயங்கல் 1கூடா வழக்குவழிப் பட்டன. என்பது என்நுதலிற்றோ எனின், ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாகிய பெயர்க்கண் வரும் மரபு வழுக் காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- பெயரினும் தொழிலினும் ஆண் பெண் என்னும் இருபாற்கும் உரிய பொதுமையிற் பிரிந்து, ஒரு பாற்கண்ணே நடப்பன எல்லாம் இலக்கண முறைமையின் மயங்கின என்று மாற்றல் கூடா; யாதோ காரணமெனின் அம்மயக்கம் 2வழக்கின் அடிப்பட்ட அதனான் என்றவாறு. அப் பொதுப்பெயர், உயர்திணை, அஃறிணை, ஆண்பால், பெண்பால் எனவும் பெயர்வினையோடு 3வைத்துறழ எண்வகைப் படும். அவையாவன: உயர்திணைக்கட் பெயரிற் பிறந்த பெண்ணொழி மிகு சொல்லும், ஆணொழி மிகுசொல்லும், தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும்; அஃறிணைக்கண் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல்லும், ஆணொழி மிகுசொல்லும்; தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகு சொல்லும் என இவை. (உ-ம்.) வடுகரசர் ஆயிரவர் மக்களைஉடையர், பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் எனவும், அரசனோடு ஆயிரவர் மக்கள் தாவடி போயினார், இன்று இவ்வூரார் எல்லாந் தைநீர் ஆடுப எனவும், உயர்திணைக்கட் பெயரினும் தொழிலினும் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகுசொல்லும். நம் அரசன் ஆயிரம் யானையை உடையன், நம்பி நூறு எருமை யுடையன் எனவும், இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம் உழவொழிந்தன, இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம் அறத்திற்குக் கறக்கும் 5எனவும் இவை அஃறிணைக்கண் பெயரினும் தொழிலினும் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகு 6சொல்லும் ஆம். எல்லாம் என்றதனான் மேற்சூத்திரத்து, ஒருபெயர், பொதுச் சொல் அன்றித் தலைமைபற்றி வருவனவும், சிறுபான்மைபற்றி வருவனவும் கொள்க. ஆதீண்டு குற்றி, வயிர கடகம் என்னும் தொடக்கத்தன. இன்னும் அதனானே, இனம் செப்பாது ஒரு தொழிற்கண் மிகை விளக்குதற் பொருட்டாக வருவனவும் அமைத்துக் கொள்க. இவர் பெரிதுஞ் சொல்லுமாறு வல்லர், இவர் பெரிதுங் கால் கொண்டு ஓடுப. இவ் எருது புல்தின்னூம் என வரும். இதனாற் சொல்லியது இருதிணையிடத்தும் ஆண்பாற்கும் 7பெண்பாற்கும் ஒரு சொல்லுதற் கண்ணே உரியபெயர்கள் அப் பொதுமை ஒழிய ஒருபாற்கண்ணே ஓடுதல் மரபுஅன்று; மரபு அன்றாயினும் அமையும் என்று மரபு வழு அமைத்தவாறு. 8இலேசினாற் கொண்டனவும் மரபு வழுவமைதி என உணர்க. (50) அடிக்குறிப்புகள் 50-1 எiii “மயங்கல் சுட்டா” 2 i “வழக்கின் யடிப்பட்ட” 3 i “வைத்ரழ” 50-4 iii “திருவு யிர்த்த” எ “³” (அடிக்குறிப்பு) i “³ (திருவு என்பது பொறையு எனத் திருத்தப் பட்டுள்ளது.) 5 ii “எனவும் வரும்” 6 i-iii-iஎ “சொல்லும் எல்லாம்” 7 எi “பெண்பாற்கும் சொல்லுதற் கண்” 8 i “இலைசினாற்” 51. பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. என்பது என் நுதலிற்றோ எனின், 1செய்யுள் அகத்துத் திணைவழு அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பலஇடத்தானும் திணைவிரவி எண்ணப்படும் பெயர் அஃறிணை முடிபினவாம், செய்யுள் அகத்து என்றவாறு. (உ-ம்.) வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய்எருமை என்றிவை ஆறுங் குறுகார் அறிவுடை யார். என வரும். 2பலவயினானும் என்பதனாற் 3சிலவயினான் திணை விரவாது உயர்திணையான் எண்ணி அஃறிணையான் முடிவன கொள்க என்பது. (உ-ம்.) பாணன் பறையன் 4கடம்பன் துடியனென் றந்நான் கல்லது குடியும் இல்லை எனவரும். சிலவயினான் திணைவிரவி எண்ணி உயர் திணையான் முடிவனவும் கொள்ளாமோ எனின், சான்றோர் 5செய்யுட்கண் அவ்வாறு 6வருவன - வாய் இன்மையிற் கொள்ளாம் என்பது. வடுகரருவாளர் என்பதூஉம் சான்றோர் செய்யுள் அன்றால் எனின், கடுஞ் சினத்த கொல் களிறுங் கதழ்பரிய கலி மாவும், நெடுங் கொடிய நிமிர் தேரும் நெஞ்சுடைய புகன் மறவரு மென, நான்குடன் மாண்ட தாயினும் என்பதும் உண்மையின் அமையும் என்பது. அஃதேல் திங்களும் சான்றோரும் ஒப்பர் எனவும், வேந்தன் பெரும்பதி மண்ணான் மாந்தர் ஈங்கிம்மூவர் இதற் குரி யாரே எனவும் சான்றோர் செய்யுளுள்ளும் வருமால் எனின், திங்களும் பதியும் என்பன அஃறிணை முடிபின எனினும் தாம் உயர்திணைப் பொருள் ஆகலான் அவை இந்நிகரன அல்ல. இவற்றின்கண் சிறுபான்மை வழுவினையும் இப் பலவயினா னும் என்றதனானாதல் அதிகாரப் புறனடையானாதல் அமைத் தும் என்பது. இதனாற் சொல்லியது செய்யுட்கண் திணைவிரவி எண்ணியவழிப் பொதுவாக முடியாது ஒரு திணையான் முடிவது கண்டு அதனை அமைத்தவாறு. இனிப் பொதுமுடிபில என்று அஃறிணை 7முடிபிற்று ஆதற்குக் காரணம் என்னோ எனின். அவ்வாறு எண்ணிய உயர் திணையும் 8பொருள் என்னும் பொதுமையான் 9அஃறிணையான் அடங்கும். உயர்திணையுள் 10அஃறிணை அவ்வாறு அடங்காது என்பது போலும். (51) அடிக்குறிப்புகள் 51-1 i-iஎ “செய்யுளகத்திணை” 2 i “பலவயினானும்” 3 i “சிலவயின்” 4 iஎ “கடம்பன் அடியன்” எi “துடியன் கடம்பன்” 5 i-ii-iஎ-எi-எii-எiii “செய்யுட்கு அவ்வாறு” 6 (வருவன இன்மையின் என்றிருந்திருக்கலாம்). 51-7 i “முடியிற்று” 8 i-iஎ-எiii “பொது என்னும்” (i-ல் பொது பொருளென்று திருத்தம்) 9 எi “அஃறிணையின்” 10 எi “அஃறிணையடங்காது” 52. வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொலென் றாயிரு வகைய பலபொருள் ஒரு சொல். என்பது என்நுதலிற்றோ எனின், மேல் பலசொல்லான் வரும் ஒரு பொருள் உணர்த்தினான். இனி ஒரு சொல்லான் வரும் பலபொருள் உணர்த்துவான் அவற்றது பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- வினையினான் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும், வினையினான் வேறுபடாத பலபொருள் ஒரு சொல்லும் என இருவகைய, பலபொருள் ஒரு 1சொற்கள் என்றவாறு. (உ-ம்.) மா, வாள், கோல், கன்று, தளிர், பூ, காய், பழம் என்னுந் தொடக்கத்தன. இவற்றுள் மா என்பதே பல 2சாதியும் உணர்த்திப் பொதுவாய் நின்றது. அல்லன எல்லாம் ஒரு சாதியை உணர நிற்றலின் பொதுமையிலவால் எனின், அவ்வாறு பொதுமைப் படாதாயினும் விகற்பித்து நோக்கத் தம்முள்ளே 3சாதிப் பாகுபாடு உடைய என உணர்க. இவற்றான் உலகத்துப் பெயர்கள் எல்லாம் 4ஒரு பொரு ளோடும், ஓர் இடத்தோடும், ஓர் காலத்தோடும் பண்போடும் தொழிலோடும் உறுப்போடும் படுத்து நோக்கப் பல பொருள் ஒருசொல் எனப்படும் போலும். (52) அடிக்குறிப்புகள் 52-1 எi “சொல்” 52-2 i “ஜாதி” 3 i “சாதி பாகுபடைய” எi“சாதி மாறுபாடுடைய” 4 i “மொரு ளோடு” 5 i “அப்போடும் படுத்த நோக்கம்” (அ-உறு) 53. அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்கூறிய பலபொருள் ஒரு சொல்லினுள் வினைவேறுபடூஉம் பலபொருள் ஒரு சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற் சொல்லப்பட்ட இரண்டனுள் வினை வேறுபடும் பலபொருளொருசொல் வேறுபடுக்கும் 1வினையானும், அவ்வினையொடு வரும் இனத்தானும், சார்பினானும் “இப்பொழுது இவன் கூறியது இப்பொருள்” எனத் தெளியத் தோன்றும்; பொருளாராய்ச்சிப்படும் நிலைமைக்கண் என்றவாறு. (உ-ம்.) மாப் பூத்தது, காய்த்தது: இவை வேறுபடுவினை. மாவும் அரசும் புலம் படர்ந்தன, மாவும் மருதும் ஓங்கின: இவை 2இனம் பற்றி வந்தன. வில் பற்றி நின்று கோல்தா என்பதூஉம், 3பலகை பற்றி நின்று வாள்தா என்பதூஉம், 4தூம்புபற்றி நின்று கோல்தா என்பதூஉம், சார்புபற்றி நின்றன. உரையிற் கோடல் என்பதனாற் பலபொரு ளொருசொல் வினை இனம் சார்புகளைப்பற்றிப் பலபொருளை ஒழித்து ஒரு பொருண். மேல் நில்லாது, சில பொருளொழித்துச் சில பொருண்மேல் நிற்பதூஉம் கொள்ளப்படும். (உ-ம்.) கழிப்பூக் 5குற்றுக் கானல் அல்கி என்றாற்போல வரும். 6இனமும் சார்பும் பற்றி வரும் அவையிற்றை வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் என்றது என்னைஎனின், அவ்இனமும் - சார்பும் அவ்வினைச்சொல்லை வேறுபடுக்கும் வழி அதனோடு கூடி நின்று வேறுபடுப்பின் அல்லது தாமாக நில்லாமை நோக்கி அவை - யிற்றையும் வினை வேறுபடூஉம் 7பலபொரு ளொருசொல் எனப் பொதுச் சூத்திரத்துள் 8இரண்டையும் ஒன்றாக அடக்கி, ஈண்டு அதன் பாகுபாடு தோன்ற விரித்துக் கூறினவாறு போலும். அதனாற் சூத்திரத்து இனமும் சார்பும் என்பனவற்றை முன்நின்ற வினையோடு தொடர்புபடப் பொருள் உரைத்துக் கொள்க. (53) அடிக்குறிப்புகள் 53-1 i-ii-iஎ-எi-எiii “வினையானும் வினையொடு” (மகரத்தின் மேல் புள்ளியிட்ட குழப்பம்) 53-2 i “இன்மை பற்றி” 3 iஎ “பால் பற்றி நின்று” 4 iஎ “தும்புபற்றி நின்று” எi (தும்புபற்றி நின்று கோல்தா என்பது பலகை பற்றி நின்று வாள்தா என்பதற்கு முன் உள்ளது) 5 எi “குற்றும்” 6 i “இனமுரு சார்பும்” 7 i “பல பொருள் ஒரு சொல் என்ப, பொதுச் சூத்திரந்துள்” 8 i “இரண்டனொன்றாகுக” எ “இரண்டின் ஒன்றாக்கி” 54. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும். என்பது என்நுதலிற்றோ எனின், மேற்சூத்திரத்திற்கு ஓர் புறனடை உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறிய வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல், வினையான் வேறுபட நில்லாது பொதுவாகிய வினையோடு பொருந்திப் பொருட் பொதுமைப்பட நின்றுழியும், மேல் வினையான் வேறு பட்டாற் போல இன்னது இது என வேறுபட நிற்றலும் வழக்கிடத்து உண்டு என்றவாறு. (உ-ம்.) மா வீழ்ந்தது என்பது, வீழ்தல் வினை எல்லா மாவிற்கும் பொதுவே எனினும், இவ்விடத்து இக்காலத்து இவன் சொல்லுகிறது இம்மாவினை என்று 1உணரநிற்கும் என்றவாறு. 2என்றது முன்கூறிய வினை வேறுபடாப் பல பொருள் ஒரு சொல்லும் ஒருநிலைமைக்கண் வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்போல உணர நிற்கும் என்றவாறு. அஃதேற் பல பொருள் ஒரு சொல்லினை இரண்டாக 3ஓதியது என்னை? ஒன்றே ஆகற்பாற்று எனின், அவ்வாறு ஒன்றாயதனையே 4உணரப்பாட்டு வேற்றுமை நோக்கி இரண்டாகப்பகுத்தா5ன் என உணர்க. (54) அடிக்குறிப்புகள் 54-1 ii “அதனை உணர நிற்கும்” 2 i “எனது” 3 i “வாதியது” ii-எi “ஆக்கியது” 4 i-ii “உணர் பாட்டு” 5 - “ர்” 55. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். என்பது என் நுதலிற்றோ எனின்,, வினை வேறுபடாப் பலபொருளொரு சொல்ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- வினையினான் வேறுபடாத பல பொருள் ஒருசொல் ஆராயுங்காலத்து இன்னது இது எனக் கிளக்கப்பட்ட ஆராய்ச்சியை உடைய இடத்து நடக்கும் என்றவாறு. (உ-ம்.) கன்று நீர் ஊட்டுக என்புழிக் கேட்டான் இன்ன 1கன்றென்பது அறியானாமே எனின், ஆன்கன்று, எருமைக் கன்று, பூங்கன்று எனக் கிளந்து சொல்லுக. நினையுங்காலை என்றதனான் கிளவாது கூறினாற் கருமச்சிதைவு உண்டு எனிற் கிளந்து கூறுக; அல்லாதுழி வேண்டியவாறு கூறுக என்பது பெறப்பட்டது. கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறார் என்புழிக் கருமஞ் சிதைந்தது என்பது இன்மையிற் கிளவாது சொல்லவும் அமைந்தது என்பது. 2எனப் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையான் உணரப்பட்டு நிற்றலும், வேறுபடு வினையின்றிப் பொது வினையான் உணரப்பட்டு நிற்றலும், பொதுவினையாற் கருமச் சிதைவு உள்வழிக் கிளந்து சொல்லப்பட்டு நிற்றலும், கருமச் 3சிதைவு இல்வழிப் பொது வினையாற் கிளவாது சொல்லப்பட்டு நிற்றலும் என நான்கு பகுதிப்பட்டது என உணர்க. இச்சூத்திரங்களாற் கூறியது பலபொரு ளொருசொல் வினை பற்றிப் பிறக்கும் மரபிலக்கணப் பாகுபாடு என உணர்க.(55) அடிக்குறிப்புகள் 55-1 i “கன்றென்பததி” iஎ “கன்றென்ப தறியானா” 2 i “என்பால் பொருள்” எi-எiii “எனவே பல பொருள்” (இது பொருத்தமாம்.) 3 எi “சிதைவுள் வழி” எiii “சிதையில்வழி” 56. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் ஓர் செயற்கைப்பொருள்மேன் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- உலகத்து ஒப்பமுடிந்த பொருளை ஒவ்வாமல் சொல்லக் குறித்தவன் சொல்லும் சொல்லாதற்கு ஓர் காரணம் கூறிக் கூறும் சொல்லாய் இருக்கும் என்றவாறு. (உ-ம்.) பல்லார் தோள்தோய்ந்து 1வருதலாற் பூம்பொய்கை நல்வய லூர! நின்தார் புலால் - புல்லெருக்கம் மாசின் மணிப்பூண் எம்மைந்தன் மலைந்தமையாற் காதற்றாய் நாறும் 2எமக்கு. இதனாற் சொல்லியது, ஓர் இயற்கைப் 3பொருளை ஓர் இயற்கையாக ஓர் காரணம்கருதிக் கூறுமிடத்துத் தான் கருதிய காரணத்தினை விளங்கச் சொல்லுக என ஓர் மரபாராய்ச்சி கூறியவாறு. இதுவும் ஓர் மரபு வழுவமைதிபோலும். (56) அடிக்குறிப்புகள் 56-1 எi “வருதலாற் பொய்கை” 2 ii “எமக்கு என் இதனால்” 3 எi “பொருள்” 57. குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல்என் றாவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். என்பது என் நுதலிற்றோ எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- குடிமை என்னும் சொல்லும், ஆண்மை என்னும் சொல்லும், இளமை என்னும் சொல்லும், மூப்பு என்னும் சொல்லும், அடிமை என்னும் சொல்லும், வன்மை என்னும் சொல்லும், விருந்து என்னும் சொல்லும், குழு என்னும் சொல்லும், பெண்மை என்னும் சொல்லும், 1அரசு என்னும் சொல்லும், மக என்னும் சொல்லும், குழவி என்னும் சொல்லும், தன்மை திரிந்ததனாற் பெற்ற பெயர்ச்சொல்லும், உறுப்பிற் பெயர்ச் சொல்லும், காதல் என்னும் சொல்லும், சிறப்பித்துச் சொல்லும் சொல்லும், செறுத்துச் சொல்லும் சொல்லும், விறல் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட பதினெட்டுச் சொல்லும் உள்பட வந்த தன்மையனவும், பிறவும் அவற்றொடு 2கூடித்தொக்கு இவ்வகையாகிய குறிப்பினான் உணரப்படும் சொற்கள் எல்லாம் உயர்திணையிடத்தே நிலைபெற்றன. ஆயினும், அஃறிணையிடத்துச் சொல்லுமாறு போலச் சொல்லப்பட்டு நடக்கும் என்றவாறு. (உ-ம்.) இவற்குக் குடிமை நன்று, தீது; ஆண்மை நன்று, தீது; இளமை நன்று, தீது; மூப்பு நன்று, தீது; அடிமை நன்று, தீது; வன்மை நன்று, தீது; விருந்து வந்தது, போயிற்று; குழு நன்று, பிரிந்தது; 3பெண்மை நன்று, தீது; இவற்கு என்பதை ஏற்புழியொட்டிக் கொள்க. அரசு வந்தது, போயிற்று; மகநன்று, தீது; குழவி எழுந்தது, கிடந்தது. தன்மை திரிபெயர்: அலிவந்தது, போயிற்று. உறுப்பின் கிளவி: குருடு வந்தது, போயிற்று. கூன் வந்தது, போயிற்று; 4காதல்: என் காதல் வந்தது, போயிற்று; என் யானை வந்தது, போயிற்று; என் பாவை வந்தது, 5போயிற்று; செறற் 6சொல்: கெழீஇயிலி வந்தது, 7போயிற்று; 8பொறியறை வந்தது, போயிற்று. விறற்சொல்: பெருவிறல் வந்தது, போயிற்று எனவரும். அன்ன பிறவும் என்றதனாற் பேடிவந்தது, பேடிகள் வந்தன; வேந்து வந்தது, வேள் வந்தது, 9குரிசில் வந்தது, ஒரு கூற்றம் வந்தது, புரோசு வந்தது, உலகு வந்தது என்னுந் தொடக்கத்தனவும் கொள்க. இவற்குக் குடிமை நன்று என்றதன் பொருள் 10இவற்குக் குடிமகனல்லன் என்னும் பொருண்மையாகக் கொள்க. பிறவும் இவ்வாறே உயர்திணையாக உணர்க. குடிமை என்பது குடியாண்மை எனவும், ஆண்மை என்பது ஆண்மகன் எனவும், இளமை என்பது இளவல் எனவும், மூப்பு என்பது முதுமை எனவும், அடிமை என்பது அடி எனவும், வன்மை என்பது வலி எனவும், விருந்து என்பது புதுமை எனவும், 11குழு என்பது கூட்டம் எனவும், திரள் 12என்பது, ஆயம் எனவும், அவை எனவும், பெண்மை என்பது பெண் எனவும், குழவி என்பது பிள்ளை எனவும், மதலை எனவும் பிறவும் வாய்பாடுற்றமை அறிக. இவற்றுள் ஆண்மை பெண்மை என்றாற்போல்வன விரவுப் பெயராய் நிற்கும். குடிமை அடிமை அரசு என்றாற் போல்வன உயர்திணைப் பெயராய் நிற்கும். இவ்விகற்பமும் அறிந்து கொள்க. இக்குடிமை முதலியன எல்லாம் உயர்திணைப் பண்புஆக லான் அப்பண்புச்சொல் தன் பொருண்மேல் ஒரு ஞான்றும் நில்லாது தன்னையே உடைய பொருண்மேலே தன்பொருளும் தோன்றிப் பிரியாது நின்றமையின் உயர்திணையாயிற்று என்பது. 13அவையிற்குஅடி பண்பு என்பது 14போதரல் வேண்டிக் குடிமை யாண்மை எனப் பண்பு வாய்பாடு படுத்துக் கூறினான் போலும்! ‘தன் பொருண்மேல் நில்லாது’ என்றது என்னை? இளமை, மூப்பு என்றாற்போல்வன அவற்றிற்கு அப்பண்பு தன்மேலும் வழக்குண்டால் எனின், அவ்வாறு வருவனவும் சிறுபான்மை உளவேனும் அடிமை, அரசு, மகவு, குருடு, கூன் என்றாற் போல் வன, பொருண்மேலன்றிப் பண்பின்மேல் வழங்கல் இன்மையின் அவற்றிற்கு எல்லாம் முன்கூறியதே நினைவு என்பது. இனி 15 அவை எல்லாம் அப் பண்பின் மேல் எனவும், பண்புகொள வருதல்என்னும் ஆகுபெயராற் பொருண்மேலே நின்றன எனவும், அவற்றுக்கண்ணது ஈண்டாராய்ச்சி எனவும், அவற்றுப் பண்புப் பொருண்மேல் வழக்கில்லனவற்றை இறந்த வழக்கு என்று கூறியும் வரும். பிறவாறு கூறுவாரும் உளர். அதுவும் அறிந்து கொள்க. இதனாற் சொல்லியது பண்பு நிமித்தமாகப் பொருள் நிகழும் சொற்கள் பலவும் தம் பொருட்கு ஏற்ப உயர்திணையாய் முடியாது சொற்கு ஏற்ற ஆற்றான் 16அஃறிணையின் முடிவன கண்டு அதனை ஈண்டு அமைத்தவாறு என உணர்க. (57) அடிக்குறிப்புகள் 57-1 i “ஆரசு” 57-2 எi “கூட்டித் தொக்கு” 3 எi “இவர்க்கு என்பது ஏற்புழி ஒட்டிக்கொள்க. பெண்மை நன்று தீது” 4 i “சிறப்பு” ii-iஎ-எi-எii-எiii “காதல். என் யானை வத்தது” 5 ii-எi “போயிற்று. சிறப்பு - கண்போலச் சிறந்தாரை கண் என்றலும் உயிர்போலச் சிறந்தாரை உயிர் என்றலும் ஆம். ஆதலின், அஃது “ஆலமர் செல்வன், அணிசால் பெருவிரல் போலவரும் எம் உயிர்” “என் உயிர் வந்தது போயிற்று என் கண் வந்தது போயிற்து” எனவும் வரும். செறற் சொல். 57-6 ii “சொலல்” 7 i-iஎ-எi-எii-எiii போயிற்று. என் காதல் வந்தது போயிற்று. பொறியறை. எi (கோடிட்ட பகுதி ‘காதல்’ என முன் வந்ததன் பின் மாற்றப்பட்டுள்ளது) iii “கோடிட்ட பகுதி இல்லை” 8 i-ii “பொரியறை” 9 i “குரிசில் ஒரு கூற்றம்” 10 i “இவர்க்கு க் குடிமை கனலலன்” 11 i “குழ” 12 ii-எi “எனவும்” 57-13 i “அவையற்றுக் கடி” iii “அவையிற்றுக் கடி” ii “அவற்றிற் கடி” 14 i-ii-iஎ-எi-எiii “போதல்” 15 எi “இவையெல்லாம்” 16 எi-எiii “அஃறிணையான்” 58. காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீர், ஐந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் திணைவழுக் காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- காலம் என்னும் சொல்லும், உலகம் என்னும் சொல்லும், உயிர் என்னும் சொல்லும், உடம்பு என்னும் சொல்லும், 1இருவினையும் யாவர்க்கும் வரைந்து ஊட்டும் தெய்வத்தின்மேற் பால் எனவரும் சொல்லும், வினை என்னும் சொல்லும், பூதம் என்னும் சொல்லும், ஞாயிறு என்னும் சொல்லும், திங்கள் என்னும் சொல்லும், சொல் என்னும் சொல்லும் 2என்று சொல்ல வருகிற பத்துச் சொல்லினோடு பிறவும், அத்தன்மையாகிய உயர்திணைப் 3பொருள்மேல் வரும் சொற்கள் எல்லாம் உயர்திணை இடத்துப் பால் உணர்த்தும் சொல்லாற் பிரித்துச் சொல்லப்படா; அஃறிணைப்பாலாற் சொல்லப்படும் என்றவாறு. (உ-ம்.) 4இவற்குக் காலமாயிற்று; உலகு 5பசித்தது; உயிர் போயிற்று; உடம்பு நுணுகிற்று; இவர்க்குப் பாலாயிற்று. வினை நன்று, வினை தீது, இவனைப் பூதம் 6புடைத்தது; ஞாயிறு எழுந்தது, பட்டது; திங்கள் எழுந்தது, பட்டது; 7சொல் நன்று, தீது. பிறவும் என்றதனால் செவ்வாய் எழுந்தது, பட்டது; வெள்ளி எழுந்தது, பட்டது; என வரும். என்னை இவை உயர்திணை ஆயினவாறு என்னை? 8எனின், காலம் என்றது காலனை; உலகம் என்றது உலகத்தாரை; உயிர் என்றது உயிர்க்கிழவனை; உடம்பு 9என்றது அஃது உடையானை; பால் என்பது 10இன்பத் துன்பங்களை வகுப்பதோர் தெய்வம். வினைஎன்பது வினைத்தெய்வம்; பூதம் என்பது தெய்வப்பகுதி; ஞாயிறு, திங்கள் என்பன தெய்வம்; சொல் என்பது சொன்மடந் தையை. 11ஆயின், இவற்றை மேலவற்றோடு ஒன்றாக 12ஓதாதது என்னை எனின், அவை எல்லாம் பண்பு அடியாகப் பொருண்மேல் நிகழ்தலின் அவற்றை முன்னத்தினுணருங் கிளவி என 13ஒருவகையாற்கிளவாதுவரும் பெயரினையும் வேறொரு வகையாக்கிக் கூறினான் என உணர்க. இவற்றுள் பூதம், ஞாயிறு, திங்கள் என்பன 14ஒழித்து அல்லன எல்லாம் ஆகு பெயரான் அஃறிணைப் பெயர் உயர்திணைமேல் நின்றன என உணர்க. இதனாற் சொல்லியது, இவையும் சில உயர்திணைப் 15பெயர் தம் பொருட்டாகு ஏற்ப முடியாது சொற்கு ஏற்ப முடிவதனைக் கண்டு அதனை அமைத்தவாறு ஆயிற்று (58) அடிக்குறிப்புகள் 58-1 iii “இருவினை யாவர்க்கும்” 2 எ “என்று வருகிற” ii “என்று சொல் வருகிற” 3 i-ii-iஎ-எ “பொருள் போல் வரும்” 4 iஎ “இவர்க்கு” 5 iஎ “பசித்தது. வினை நன்று” 6 i-ii-எ “படைத்தது” 7 i-iஎ “சொன்னது தீது” (‘ னன்று’ னது போலத் தோன்றியது போலும்). 58-8 i “எனின் எனின் காலம்” 9 i “என்றது உடையானை” 10 i-ii “இன்பதுன்பங்களை” 11 i “ஆயினயிவற்றை” 12 i “ஒத்ததென்னை” 13 i-ii-எi “வேறு ஒருவகையாற்” எ “கிளவி என்று ஒருவகையாற்” 14 ii “ஒழிந்தல்லன” 15 i “பேர்தம் பொருட்டாகு - கேற்ப படியாது” எ “பெயர்தம் பொருட்டாகு பெயராய் அதற்கு ஏற்ப முடியாது சொற்கேற்ப” 59. நின்றாங் கிசைத்தல் இவண் 1இயல் பின்றே. என்பது என்நுதலிற்றோ எனின், ‘குடிமை ஆண்மை’ என்றதற்கு ஓர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- நின்ற வாய்பாட்டானே நின்று உயர்திணை முடிபு பெறுதல் இக் காலம், உலகம் என்னும் தொடக்கத்தனவற்றிற்கு இயல்பு அன்று. எனவே மேற்கூறிய ஆண்மை என்னும் தொடக்கத் தனவற்றிற்கு இயல்பு என்றவாறு. (உ-ம்.) குடிமைநல்லன், வேந்துசெங்கோல் நல்லன் என வரும். உயர்திணை முடிபிழந்து நின்றனவற்றை 2அம் முடிபு உடைய என்று எய்துவித்தவாறு. 3இம் முடிபு இலக்கணமாதலின் இதுவே பெரும்பான்மை 4ஆகற்பாற்று எனின்:- இலக்கணமே எனினும் வழக்குப் பயிற்சியான் அதுவே பெரும்பான்மை ஆயிற்று என உணர்வது. இச்சொற்கள் ஈறு வேறுபட்டுக் 5குடிமகன், வேந்தன் என 6நிற்பன உயர்திணை முடிபே முடிபு எனக்கொள்க. இதனாற் சொல்லியது மேற்கூறிய இருவகைத் திணைவழு வினையும் ஒருவகை தன்மேலும் முடிபுடையவாயும் ஒருவகை தன்மேல் 7முடிபிலனவாயும் வருவது கண்டு அவற்றது உண்மையும், இவற்றது இன்மையும் உடன் கொண்டு கூறியவாறு ஆயிற்று. (59) அடிக்குறிப்புகள் 59-1 ii “இயல்பன்றே” 59-2 i “யும் முடிபுடைய தென்றவாறு” 3 i “இம்முடி விலக்கமாதலின்” 4 எi “ஆயிற்று எனின்” 5 i-ii “வேந்தன் ஆண் மகன் என” 6 எi “நிற்பனவற்றிற்கு” 7 i-எ “முடிவில்லையாயும்” 60. இசைத்தலும் உரிய வேறிடத்தான. என்பது என்நுதலிற்றோ எனின், காலமும் 1உலகமும் என்பதற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- காலமும் உலகமும் என்னும் தொடக்கத்தன உயர்திணை முடிபுபெறுதலும் உடைய; அவ்ஓதிய வாய்பாடு ஒழிய வேறு வாய்பாடாயின இடத்து என்றவாறு. (உ-ம்.) காலம் என்பது மகரஈறு; காலன் என்னும் னகர ஈறாய் நின்றுழிக் காலன் கொண்டான் என முடியும். உலகத்தோர் பசித்தார், உயிர்க்கிழவன் போயினான் என்பனவும் அவை. இதனாற் சொல்லியது. மேல் ‘நின்றாங்கிசைத்தலிவணியல் பின்று’ என்ற விலக்கு, இவண் எனக் காலமும் உலகமும் என்னும் வாய்பாட்டினையே நோக்கி விலக்காது, அப்பொருள்மேல் வரும் வாய்பாடுகள் எல்லாம் விலக்குவதுபோலும் 2நோக்குப்பட நின்றது என்று கொள்ளினும் கொள்ளற்க, என்று அவை 3வேறிடத்தாயின் இசைக்கும் 4எனவும் கூறவேண்டிக் கூறினான் என்பது. (60) அடிக்குறிப்புகள் 60-1 i-ii-எi “என்பதற்கு ஓர் புறனடை” 60-2 எi “நோக்கப்பட” ii “நோக்கம்பட” 3 i “வேறிட்டதாயின்” 4 ii “என்பது” 61. எடுத்தமொழி இனஞ் செப்பலும் உரித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், 1அருத்தாபத்தி மேற்று. இதன் பொருள்:- விதந்தமொழி தன்னினத்தைக் காட்டி நிற்றலும் உரித்து; உம்மையாற் காட்டாது நிற்றலும் உரித்து என்றவாறு. (உ-ம்.) 2கீழ்ச்சேரிக் கோழி அலைத்தது என மேற்சேரிக் கோழி அலைப்புண்டது என்பது சொல்லாமையே முடிந்ததாம். குடங்கொண்டான் வீழ்ந்தான் எனக் 3குடம் வீழ்வும் முடிந்தது. இவை இனஞ் செப்பின. ஆ வாழ்க, அந்தணர் வாழ்க என்பன இனஞ் செப்பாதன. இவையும் இனஞ்செப்பின என்னாமோ எனின், சொல்லுவான் கருத்து அஃது அன்மையானும், மறுதலை பல உள்ள வழி இனம் செப்பாமை யானும் இனம் செப்பா ஆயின என உணர்க. (61) அடிக்குறிப்புகள் 61-1 ii “இஃது அருத்தாபத்தியாதற் கூறுதல் நுதலிற்று” எi “இஃது அருத்தாபத்தி மேற்று” 2 i “கீழச் சேரி கொழி உலகத்தென மேற் சேரிக் கொழி” 3 i-ii “வீழ்தலும் முடிந்தது. 62. கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே. என்பது என்நுதலிற்றோ எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- கண்ணும் தோளும் முலையும் பிறவும் ஆகிய பன்மைப்பொருளை உணர்த்திய சினை நிலைமை உணர நின்ற சொற்கள் தம் பன்மையாற் கூறுதலையே இலக்கண 1முறைமையாக உடைய அல்ல; அதிகாரத்தானும் உயர் திணையாய் முடிதல்உடைய; 2எப்பொழுதுமோ? எனின், அற்றன்று; தமது வினைக்கு ஏற்ற எழுத்தினாற் சொல்ல நினையாது தம் முதல் வினையாற் சொல்லக் கருதியபொழுது என்றவாறு. (உ-ம்.) 3கண் நல்லள், தோள் நல்லள், முலை நல்லள் 4என்பன. பிறவும் என்பதனான் புருவம் நல்லள், காது நல்லள் என வரும். திணைவழு அதிகாரம் கூறி வாராநின்றதன் இடையே எடுத்த மொழி என்று இயைபில்லது கூறிய அதனான் ஒருமைச்சினை உயர்திணையாய் முடிவனவும் கொள்க. (உ-ம்.) மூக்கு 5நல்லள், கொப்பூழ் 6நல்லள் என வரும். இதனாற் சொல்லியது, உயர்திணைச் சினைப் பொருள் தனக்கு ஏற்ற சினை வினை கொள்ளாது முதல் வினை கொண்டு முடிவன கண்டு அதனை 7அமைத்தவாறு. வினையிற் றோன்றும் பாலறி கிளவி முதலாக இத் துணையும் சென்ற ஆராய்ச்சி எண்வகை இலக்கணத்துள்ளும் எழுவகை வழுவாராய்ச்சி என உணர்க. (62) அடிக்குறிப்புகள் 62-1 எi “முறையாக” 2 ii “அஃது எப்பொழுதுமோ” 3 iஎ “கற்றல்லன்” 4 ii “என்பன ஆம்” 5 எi “நல்லள் எனவரும்” iii-எiii “நல்லன்” 6 iii-எiii “நல்லன்” 62-7 எi “அமைந்தவாறு ஆம்” ii “அமைத்தவாறு என்க” 8 எi (இப்பகுதி இல்லை) 9 எi (இப்பகுதி இல்லை) ii “கல்லாடனார் விருத்தியுரை” முதலாவது - கிளவியாக்கம் முற்றிற்று. வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமா தலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல்களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபாடுடைமையின் அவற்றை முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனாவரையர். “பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றா ரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்றார் தொல்காப்பியனார். வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது வேறாகக் கொள்வதே தமது துணிபென்பார், ‘வேற்றுமைதாமே ஏழெனமொழிப’ ‘விளிகொள்வதன்கண் விளியோடெட்டே’ என்றார் தொல்காப்பியனார். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெறாது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் றோன்றிய பொருள் செயப்படு பொருளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஒடுவுருபாதலின் அது மூன்றாம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது குவ்வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்றோம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிறோம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறு படுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமை யாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாகவுள்ள ஏழு வேற்றுமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்றார். இங்ஙனம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் ஆகிய இம்மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’ என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப்பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 194-197 இரண்டாவது வேற்றுமை இயல் 63. வேற்றுமை 1தாமே ஏழென மொழிப. என்பது 2சூத்திரம் என் நுதலிற்றோ எனின் : இவ் ஒத்து என்ன பெயர்த்தோ எனின் : வேற்றுமை 3இயல் என்னும் பெயர்த்து. வேற்றுமை என்பன சிலபொருளை உணர்த்தினமையான் காரணப் பெயர் ஆயிற்று. மற்று, வேற்றுமை என்னும் பொருண்மை என்னை எனின் : பொருள் களை வேற்றுமை செய்தலின் பெயர் முதலிய எட்டற்கும் வேற்றுமை என்று பெயராயிற்று. யாதோ வேற்றுமை செய்தவாறு எனின், ஒரு பொருள் ஒருவழி ஒன்றனைச் செய்யும் வினைமுதல் ஆகியும், ஒருவழி ஒன்று நிகழ்தற்கு ஏது ஆகியும், 5ஒருவழி ஒன்று செய்தற்குக் கருவி ஆகியும், ஒருவழி ஒன்று செய்தற்குச் செயப்படுபொருள் ஆகியும், ஒருவழி ஒன்று கொடுப்பதனை ஏற்பது ஆகியும், ஒருவழி ஒன்றற்கு உவமம் ஆகியும், ஒருவழி ஒன்று நீங்குதற்கு இடம் ஆகியும், ஒருவழி ஒன்றற்கு எல்லை ஆகியும், ஒருவழி ஒன்றற்கு உடைமை ஆகியும் , ஒருவழி ஒன்று செய்தற்கு இடம் ஆகியும், ஒருவழி முன்னிலையாதற் பொருட்டு விளிக்கப்படுவது ஆகியும், இன்னோரன்ன பிறவும் ஆகிய பொதுப்பட நிற்றலுடைத்து. அவ்வாறு நின்றதனைப் பெயர் முதலியன ஒரோ ஒன்றாகச் சென்று அப்பொதுமையின் வேற்றுமைப்படுத்தி ஒரு பொருட்கு உரிமை செய்து நிற்றலின் வேற்றுமை எனப்பட்டது. இவ்வாறு எட்டற்கும் பொதுப்பட நின்றதோர் பொருள் நிலை அல்லது பொதுப்பட நின்றதோர் சொல் நிலைமை வழக்கிடைக் காணாமால் எனின் : அவ்வாறு வழக்கு இல்லை எனினும், சாத்தன், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்த னின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா! என ஒன்றன் வடிவோடு ஒன்றன் வடிவு ஒவ்வாது, இவ் வேற்றுமைகள் வரும்வழிச் சாத்தன் என்னும் வாய்பாடு எங்கும் நின்றமையிற் பொதுநிலை என்பது உய்த்து உணரப்படும். எழுவாய் அதனொடு வேற்றுமைப் பட்டதோ எனின், சாத்தனை என்றது போல்வதோர் வாய்பாடு இல்எனினும் அவ்ஏழனோடும் ஒவ்வா நிலைமை உடைமையின் இதுவும் ஓர் வாய்பாடு ஆயிற்று என உணர்க. அன்றியும், செயப்படுபொருள் முதலியனவற்றின் வேறு படுத்துப் பொருள் மாத்திரம் உணர்த்தலின், எழுவாய் வேற்றுமை ஆயிற்று என்பாரும் உளர். அல்லதூஉம், வேற்றுமை என்பது பன்மைபற்றிய வழக்கு எனினும் அமையும். 6இவ் வேற்றுமை செய்யும்வழிப் பலசொல் 7ஒரு பொருள் ஆகியும், பல பொருள் ஒரு சொல் ஆகியும் வரும். இனிப் பல சொல் ஒருபொருள் ஆகி வரும்வழி, பல வேற்றுமை பல சொல் ஆகியும், ஒரு வேற்றுமை பல சொல் ஆகியும் வரும். அவை ஆமாறு அறிந்துகொள்க. மேல் ஓத்தினோடு இவ் ஒத்து இயைபு என்னையோ எனின்: மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருட்கண் மேலாமாறு சொல்லிப் போந்தான். அவற்றுள், முதலது பெயர்ச்சொல், அதற்கு இலக்கணம் உணர்த்திய எடுத்துக்கொண்டான் 8என்பது. யாங்ஙனம் உணர்த்தினானோ எனின்: எல்லாப் 9பெயர்களும் எழுவாயாகிப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் 10நிற்றலும், உருபேற்றலும், ஒருவழிச் சில 11பெயர் உரு பேலாது நிற்றலும், காலந் தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற் பொருள் ஒரு கூறாயக்கால் 12காலம் தோன்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சில பெயர் விளியாது நிற்றலும், இன்னோ ரன்ன பிறவும் பெயரது இலக்கணம் என உணர்த்தினான் என்பது. 13பெயரது இலக்கணமேயன்றி 14உருபிலக்கணம் உணர்த்தி னானால் எனின் : அவ் ஆராய்ச்சியும் பெயரது இலக்கணமாய் 15விடுதலுடைமையின் அமையும் என்பது. மற்று இத்தலைச் சூத்திரம் என்நுதலிற்றோ எனின் : தன்னால் உணர்த்தப்படும் பொருளை இனைத்து என்று வரை யறுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- வேற்றுமை என்று சொல்லப்படுவன தாம் ஏழு என்று சொல்லுவர் ஆசிரியர் 16என்றவாறு. தாம் என்பது சந்த இன்பம். ஏ என்பது 17ஈற்றசை. (1) அடிக்குறிப்புகள் 63-1 i-iஎ “தானே” 2 iஎ நீங்கியவை “என்பது என் நுதலிற்று” 3 i-ii-iii-எii-எiii “ஓத்து” (இந்தப் பிரதிகளும் பிற இயல்களில் இயல் என்றே வழங்குதல் காண்க. ஆனால் இவற்றில் இயலின் பெயர் இங்கே வரும் பாடத்திற்கு ஏற்ப இவற்றில் கண்ட உரையிலும் “வேற்றுமை ஓத்து” என்றே காணப்படும்). 4 i-iஎ “என்று பெயராயிற்று” ii-எi-எii-எiii “என்றும் பெயராயிற்று” 5 iஎ “ஒருவழி ஒன்று செய்தற்குச் செயப்படுபொருள் ஆகியும்” (இடையில் “ஒருவரி” விடப்பட்டது போலும்.) 63-6 iii “இவை வேற்றுமை” 7 iii “ஒரொரு பொருளாகியும்” 8 iii “என்பது கொள்க, யாங்ஙனம்” 9 iii “எல்லாப் பொருள்களும் எழுவாய்” 10 iii “நிற்றலும் ஒருவழிச் சில பெயர்” எ “நிற்றலும் காலந் தோன்றாமை” (சொற்கள் விடுபட்ட பாடம்) 11 iii “பேர் உருபேலாது” 12 i “காலந்தோன்றி” 63-13 எi “பொது” (பேரது என்பதனைத் தவறாகப் படித்த பாடம்.) 14 (“உருபிலக்கணமு முணர்த்தினான்” என்பது சிறக்கும். ஒரு “மு” விடுபட்டது போலும்.) 15 எi “விடுதலுடைமையின்” (ழு-டு மாறாட்டம்) 16 i “என்பது” 17 ii-எi “ஈற்றசையாம் என்க” 64. விளிகொள்வ தன்கண் விளியோ டெட்டே. என்பது என்நுதலிற்றோ எனின், ஒழிந்த வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- விளி கொள்வதன்கண் விளியோடு எட்டு வகைப்படும் வேற்றுமை என்றவாறு. விளிகொள்வது என்பது 1பெயரதன்கண் விளி என்றவாறு. விளியோடு எட்டு என்னாது பெயர்க்கண் விளி என்றதனாற் பெற்றது என்னை எனின், மற்றை வேற்றுமைபோலப் பெயர்ப்புறத்துப் பிரிய வாராது, அப்பொருளே ஈறுதிரிதல், முதலாய வடிவினதாகிவருதல் உணர்த்தியது என்றவாறு. வேற்றுமைதாமே எட்டு என ஒரு சூத்திரமாகக் கூறாதது என்னை எனின் : 2இதனது சிறப்பின்மை அறிவித்தற்கு வேறு கூறினான் என்பது. யாதோ சிறப்பின்மை எனின் : விளிஏலாப் 3பொருள்களும் உண்மையின் என்பது. அஃதேல் பயனிலை கொள்ளாப் பெயரும் 4உளஎனின் : அதனோடு இதனிடை வேற்றுமை உண்டு. அஃது 5ஒருவழிக் கொள்வது ஒருவழிக் கொள்ளாதாய் நிற்கும்: அதுதானும் சிறுபான்மை. இஃது யாண்டும் 6கொள்ளாதன கொள்ளாவாயே நிற்கும் என்பது. வேற்றுமையினை ஏழு என்பது எட்டு என்பதாகின்றது சொல்லானோ பொருளானோ? சொல் எனினும் பலவகைய; பொருள் எனினும் பலவகைய, யாதோ கொள்ளுமாறு எனின் : ஒருவழிச் சொல்லானும் ஒருவழிப் பொருளானும் என்பது. இவ்வாறு அன்றி எல்லாம் சொல்லான் என்பதும் ஒன்று. பல சொல்லும் உள எனினும், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்பன பெருவழக்கின ஆகலின் உருபினுள் அவ் ஆறனையுமே கொண்டு அவற்றோடு எழுவாயினையும் விளியினையும் கூட்டி எட்டு என்றான் என்பது. (2) அடிக்குறிப்புகள் 64-1 ii-எi “பெயரின் கண்” 2 எi “இது சிறப்பின்மை” 64-3 எi “பொருளுண்மையின்” 4 i-எ “உளவோ எனின்” ii “உளவாலெனின்” iii “உள அன்றோ எனின்” 5 iii “எத்தாற்கொள்வது” 6 i-ii “கொள்ளாதென” எi “கொள்ளாவென” 7 எi “என்பது இவ்வாறன்றி எல்லாம் சொல்லான் என்பதும் ஒன்று” (“என்பது” என்பதன்பின் ஒரு பத்தி விடுபட்டது.) 8 iii “பெருவழக்கு ஆகலின்” 65. அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி என்னும் ஈற்ற. என்பது என்நுதலிற்றோ எனின், 1வேற்றுமைகளை - பெயரும் முறையும் - உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் வேற்றுமை என்று சொல்லப் பட்டவைதாம் பெயர், ஐ, 2ஒடு, கு, இன், அது, கண், 3விளி என்று கூறும்வழி. இறுதிக்கண் நிற்கின்ற அவ்விளி வேற்றுமையினை இறுதியாக உடையன என்றவாறு. அப்பெயர் பெயர். 4அம்முறை முறை. எழுவாய் வேற்றுமை ஏனை வேற்றுமைக்கும் சார்பாதல் நோக்கி முன் வைக்கப் பட்டது. விளி வேற்றுமை எல்லாவற்றினும் சிறப்பின்மை நோக்கிப் பின் வைக்கப் பட்டது. ஐயினை இரண்டாவது என்றும், ஒடுவினை மூன்றாவது என்றும் இவ்வாறே இவை கூறுதற்குக் 5காரணமும் உண்டோ எனின், 6காரணம் இல்லை. இல்லையேல் வேண்டிய வாறு கூறினும் அமையும் எனின், அமையாது, முன்னூலுள் ஓதிய முறை அதுஎன்பது. (3) அடிக்குறிப்புகள் 65-1 ii-எi “வேற்றுமைகளது” பெயரும் (ii-ல் இது பின்னைய திருத்தமாகத் தோன்றுகிறது.) 65-2 எii “ஒடு, ன்” (i-ல் கு என்பது பின்னைய திருத்தமாகச் சிவப்பு மையில் உள்ளது) 3 எi “விளி இறுதியாக உடையன என்றவாறு” (ஒரு வரி விடப்பட்டது) 4 எi “அம்முறை எழுவாய் வேற்றுமை” (ஒரு சொல் விடுபட்டது) 5 i-ii-iஎ-எ-எi “காரணம் உண்டோ” 6 எi “காரணமும் இல்லை, காரணம் இல்லையேல்” 66. அவற்றுள், எழுவாய்வேற்றுமை பெயர்தோன்று நிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், 1நிறுத்த முறையானே முழு முதற்கண் நின்ற பெயர் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற் சொல்லப்பட்ட வேற்றுமை எட்டனுள் முதல் வேற்றுமையாவது பெயர்ச்சொல், பயனிலைப்பாடு தோன்ற நிற்கு நிலைமை என்றவாறு. (உ-ம்.) 2ஆ எனவரும். விளியோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், ஈறு திரிதலும், ஈறு திரியாமையும், ஈறு திரியாதவழி ஒருவழிப் படர்க்கை யாதலும், முன்னிலையாதலும் எனக் கொள்க. (4) அடிக்குறிப்புகள் 66-1 i-iஎ “நிறுத்த முறையான் எழுதற்கண் நின்ற பெயர்” (ழு-மு மாறாட்டாம்-கொம்பைக் குறிலாகப் படித்தல்) 2 ii-எi “ஆ, மக்கள் எனவரும்” 67. பொருண்மை சுட்டல் 1வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமை என்பது, அறுவகைப்பட்ட 2பயனிலையும் ஏற்றுநிற்பது என்றவாறு. இதன் பொருள்:- பொருட்டன்மை கருதிவரும் வரவும், ஏவலைக் கொள்ளவரும் வரவும், தனது தொழிலினைச் சொல்ல வரும் வரவும், வினாவுதற் பொருண்மைக்கு 3ஏற்று வரும் வரவும், தனது பண்பினைக் கொள்ள 4வரும் வரவும், ஒரு பெயரினோடு தனது பொருள் முடிவதாக வரும் வரவும் என்று 5சொல்லப் பட்டவை அனைத்தும் வரும் பெயர்ச்சொல்லது பயனாகிய நிலைமை என்றவாறு. என்றது, முதல் வேற்றுமையாவது இவ் ஆறு பொருண் மையும் தோன்ற நிற்பது என்றவாறு. 6அவ் அப் பொருண்மையை விளக்குவன பின்வருஞ் சொற்கள் என்றவாறு. பெயர்ப் பயனிலை என்றது பின்வருகின்ற சொற்களே அன்று, அவ் அச் சொல்லின் பொருண்மையினைக் குறித்த பெயர் நிற்கும் நிலைமை வேறுபாடுகளை என்றவாறு. நிலை என்னாது பயனிலை என்றது 7அப்பெயர்களைக் கேட்டான் இப்பொழுது இப்பொருள் இன்ன நிலைமைத்து என உணரும் உணர்ச்சிக்குப் பயன்பட நிற்கும் நிலைமைய என்றற்கு என்பது. (உ-ம்.) பொருண்மைசுட்டல் ஆ உண்டு என்பது. இதன் பண்பு முதலியவற்றைக் கருதாது 8பொருட்டன்மை கருதி நிற்றலாற் 9பொருண்மை சுட்டல் என்னப்பட்டது. உண்மை என்பது பண்பன்றோ எனின், அன்று. அப் பொருட்டன்மை என்பதுபோலும் கருத்து. 10ஆ இல்லை என்பதும் இதன்கண் பட்டு அடங்கும். 11வியங்கொள வருதல்:- ஆ செல்க என்பது. இது மேற் சொல்லுகின்ற வினைநிலை 12உணர்த்தலுள் அடங்கும். ஆயினும், வேறுபாடு உண்டு. அது தன்கண் நிகழ்ந்ததோர் வினை. இது மேல தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவனால் ஏவப்பட்டு நிற்கும் நிலை 13எனக் கொள்க. வினைநிலையுரைத்தல்: ஆ கிடந்தது என்பது. வினாவிற் கேற்றல்: ஆ யாது? ஆவோ? என வரும். பண்பு கொள வருதல்: ஆ கரிது என்பது. இதுவும் வினைநிலை யுரைத்தலுள் அடங்காதோ எனின், அடங்கும். எனினும் வினைக்குறிப்பு ஆகலான் வேறு கூறினான் 14என்பது. பெயர் கொள வருதல், ஆ பல; ஆ இது 15எனவரும். மேற்சூத்திரத்து எழுவாய் வேற்றுமை பெயர் என்னாது தோன்றுநிலை என்றதனாற் 16பெயர்கள் ஒரோ வழி எழுவாயாகத் தான் பயனிலை கொள்ளாது, மற்றோர் எழுவாயின் பயனிலையோடு தானும் பயனிலை யாயும், 17ஒரோவழித் தானே பயனிலையாயும், ஒரோவழி எழுவாயோடு இயைபு படாது பயனிலைக்கு அடையாயும் பிறவாறாயும் வருவனவும் உள என்பது கொள்ளப்பட்டது. (உ-ம்.) தானும் பயனிலையாயது, ஆயன் சாத்தன் வந்தான் என்பது. இது ஆயன் வந்தான், சாத்தன் வந்தான் என வினைப் பின்னும் நிற்கும் 18என்பது. சாத்தன் என்பது எழுவாய். ஆயன் என்பது முன்னே பயனிலையாய் 19நின்றதன்றாலோ எனின், 20அவ்வாறும் ஆம் எனினும் சொல்லுவான் கருத்து அன்னதன்று என்பது. ஆயனாகிய சாத்தன் என்பது 21பண்புட் தொகை யானாலோ எனின், ஓசை பிளவுபட்டிசைத்தலான் ஆகாது என்பது. தானே பயனிலையாயது: ஆ பல என்பது. பயனிலைக்கு அடையாயது : சாத்தன் தலைவன் ஆயினான் என்பது. பிறவாறாய் வருதல் - ஆசிரியன் 22பேரூர்கிழான் செயிற்றி யன் இளங்கண்ணன் சாத்தன் 23வந்தான் என்பது; ஒரு பெயர் எழுவாயாய் நில்லாது பல பெயரும் ஒருங்கே எழுவாயாய் நிற்பன எனக் கொள்க. இன்னும் 24அவ்இலேசினான், பெயர்கள் எழுவாயாய்ப் பயனிலை கொண்டு அமைந்து 25முற்றிநில்லாது, எழுவாய் தானும் பயனிலையும்கூடி ஒருசொல்நீர்மைபட்டு மற்றோர் எழுவாய்க்குப் பயனிலையாய் வருவனவும் கொள்ளப்படும். அவை சினையின் தொழிலை முதற்கு ஏற்றிக்கூறலும், பண்பின் தொழிலைப் பண்படைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், 26தொழிலின் - தொழிலைத் தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், இடத்து நிகழ்பொருளின் தொழிலை இடத்திற்கு ஏற்றிக் கூறலும் என இன்னோரன்ன பலவகைப்படும். (உ-ம்.) 27சினை வினை:- சாத்தன் கண் நல்லன், இவ்யானை கோடுகூரிது என்பன போல்வன. 28பண்பின் வினை:- இம்மணி நிறம் நன்று, 29இம்மலர் நாற்றம் பெரிது என்பன. 30தொழிலின் வினை:- இக்குதிரை நடை நன்று, இத்தேர் செலவு கடிது என்பன. 31இடத்து நிகழ் பொருளின் தொழில் :- 32இவ் யாறு நீரொழுகும், இவ்வயல் நெல் விளையும் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. இன்னும் அவ்இலேசானே எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த பெயர் தானும் 33எழுவாயாய்ப் பயனிலை கொண்டும், உருபேற்றும் வருவனவும் கொள்ளப்படும். (உ-ம்.) இறைவன் 34அருளல் எம் உயிர் காக்கும், எனவும், இறைவன் அருளலின் யாமுயிர் வாழ்தும் எனவும் வரும். இஃது ஆறாவதாம் எனினும் நோக்கு அஃது அன்று என்பது. பயனிலை முன்னும் பின்னும் நிற்றலும், பயனிலை சில சொல்லிடை கிடப்பவருதலும் ஈண்டே கொள்ளப்படும். ஆ செல்க, செல்க ஆ - என முன்னும் பின்னும் நின்றது. ஆ சாத்தனுய்ப்ப நெறியைத் தன் கன்றினோடு 35மறங்கறத்தற்கு இவ்வூரின் நின்றும் அவ்வூரின்கண் செல்லும். இஃது இடைகிடந்த சொல்லொடு வந்தவாறு. இறைவன் அருளல் என்பது எழுவாயொடு பொருள் இயைபு இன்றாயினும், வினைமுதற் பொருள் தோன்ற வந்தமையின் பெயர் கொளவருதல் என 36அடங்கும் என்பது. சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே எனவும், 37கோல் செம்மையிற் சான்றோர் பல்கி எனவும் வரும் பண்புகளும் பொருள் இயைபு இல எனினும் ஒருவாற்றான் பெயர் 38கொளவந்ததன் 39பாற்பட்டு அடங்கும் என்பது. 40எழுவாய் வேற்றுமையின் விகற்பங்கள் எல்லாம் வழக்கின கத்து அறிந்து இவ் இலேசினகத்து அமைத்துக் கொள்க. (5) அடிக்குறிப்புகள் 67-1 i-ii “வியங்கோள்” 2 i “பயனிலையு மோறு நிற்பது” (ர-ற, ர-h மாறாட்டம்) எ “பயனிலையும் . . . நிற்பது” என்றவாறு. 3 ii-iஎ “ஏற்ற வரும் வரவும்” 4 எi “வரும் வரவும் என்று சொல்லப்பட்டவை” யனைத்தும். (ஒரு வரி விடுபட்டது) 5 iii “சொல்லப்பட்ட அனைத்தும்” 6 i “அவ்வவ் பொருண்மையை” 7 i “ஆப் பெயர்களைக் கேட்டா னிப்பொழுது” எi “அப் பெயர்களைக் கேட்பின் இப்பொழுது” 67-8 i “பொருட்டன்மைக் கருதி நிற்றலால்” ii-எi “பொருட்டன்மையைக் கருதி நிற்றலால்” 9 i-ii-iஎ-எii “பொருண்மை சுட்டு என்னப்பட்டது” 10 i “ஆ பில்லை” (பி - யி மாறாட்டம்) 11 i-ii “வியங்கோள் வருதல்” 12 i “உணர்த்தலுடங் . . . ம் வேறுபாடு” ii “உரைத்தலுள் அடங்குமே யெனினும் வேறுபாடு” எ “உணர்த்தலுள் அடங்கும் வேறுபாடு” 13 i-iஎ-எ-எi-ii-எiii “என உணர்க” 14 “ர்” 15 எi “என்பது” 16 i “பெயர்களொடு ராவழி யேழுவாயாகத்” 17 i “ஒரோர் வழி” 67-18 iஎ “என்பது முன்னே பயனிலையாய்” 19 iii-எ “நின்றதானாலோ எனின்” 20 i “அவ்வாறு மாடு மனினும் சொல்லு வானத் தருத்தன்ன ரென்பது (b-ரு, க-த, மாறாட்டம்) எ “அவ்வாறு மாகு மெனினும் சொல்லுவான் அக்கருத்தன்ன ரென்பது” (“அக்கருத்தன்னர்” என்பது “கருத்து அன்று என்பது” என்றும் “கருத்து அன்னதன்று என்பது” என்றும் திருத்தப் பட்டிருக்கக் காண்கிறோம்.) 21 ii “பண்புத்தொகை ஆமாலோ எனின்” 22 i “பேராகிழர்” iii “பேரூர் கிழார்” 23 i-ii-iஎ-எii “வந்தான் ஒரு பெயர்” எ “வந்தான் என ஒரு பெயர்” 24 iii-எ “அவ்விலேசினானே பெயர்கள்” 25 i-ii-iஎ-எii “மாற்றி நில்லாது” iii-எ “மாறி நில்லாது” 67-26 i “தொழிலின் தொழிலடைந்த” ii-எi “தொழிலின் வினையைத் தொழிலடைந்த” 27 ii-எi “சினைவினை முதற் கேற்றிக் கூறல் சாத்தன்” 28 ii-எi “பண்பின் வினை பண்படைந்த பொருட்கேற்றிக் கூறல்” 29 i “இம்மலற் நாற்றம்” 30 ii-எi “தொழிலின் வினையை தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக் கூறல்: இக்குதிரை” 31 ii-எi “இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற் கேற்றிக் கூறல்; : இவ் 32 எi “இவ்வாறு நீர்” 33 i-iii “எழுவாய்ப் பயனிலை” 34 i “அருள் எம்” எ “அருளால் எம்” 67-35 i-iஎ “தெறியைத் தன் கன்றினோடு மரங்கரத்திர் கிவ்வூரின்” எ “நெறியைத் தன் கன்றினோடும் அறங்காத்தற்கு இவ்வூரின்” எi “எருமைத் தன் கன்றினோடு மருங்காக தானிவ்வூரின்” 36 i-ii “வழங்கும் என்பது” 37 i “கொல்” 38 எi “கொள்ள” 39 i-iஎ “வந்ததன் யேற்பட்டடங்கும்” என்பது. ii-எi-எii-எiii “மேற்பட்டடங்கும் என்பது. 40 ii-எii “இன்னும் இவ்வெழுவாய் வேற்றுமை” iii-எ “பிறவும் எழுவாய் வேற்றுமை” 68. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான. என்பது என்நுதலிற்றோ எனின், தனிப்பெயரேயன்றித் தொகைப் பெயர்களும் பயனிலை கொள்ளும் என்கின்றது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இரண்டு பெயர்ச்சொல் முதலாக உளவாகிய தொகைச் சொற்களும் 1உள. உம்மையால் ஒரு வினையும் 2பெயரும் முதலாக உளவாகிய தொகைச்சொல்லும் உண்டு. அவ்இருதிறத்துத் தொகைச்சொல்லும் மேற் சொல்லப் பட்ட பயனிலைக் கூற்றின்கண் உரிய 3என்றவாறு. (உ-ம்.) யானைக்கோடு உண்டு. செல்க, 4வீழ்ந்தது, யாது, பெரிது பல - என வரும். இவை 5பெயரினாகிய தொகை. கொல்யானை உண்டு, செல்க, வீழ்ந்தது, 6யாது பெரிது, பல - என 7இது 8வினையினாகிய தொகை. தொகையும் பயனிலை கொள்ளும் என்கின்றமையின் இவையும் எழுவாயாகற் பால பிற; அதற்கு விதியாதோ எனின், எச்சவியலுள் எல்லாத் தொகையும் என்னும் 9சூத்திரத்துக் கூறப்படும் என்பது. (6) அடிக்குறிப்புகள் 68-1 எi “உள என்றவாறு” (சில வரிகள் விடுபட்டுள்ளன.) 2 i-ii-iஎ-எiii “பெயர் முதலாக” 3 ii “என்பது” 4 i-iஎ “வீழ்த்து கோடோ பரிது பல” எiii “வீழ்ந்தது யானைக் கோடோ பரிது பல” எi “வீழ்ந்தது பெரிது பல” (பதிப்பில் கொண்ட பாடம் பின் கொல்யானை என வருவனவற்றோடு ஒத்திருத்தல் காண்க.) 5 “பேரினாகிய” 6 ii “கொல் யானை யோ யாது” 7 ii “இவை” 8 i “வினையினானாகிய தொகை” 9 ii-எii “தொல்-சொல் - எச்ச-ல் 42ஆம் சூத்திரத்துரையுட்” 69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. என்பது என்நுதலிற்றோ எனின், பெயர் உருபேற்கும் வழிப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- எவ்விடத்துப் பெயரும் விளங்கத் தோன்றி மேற் சொல்லப்பட்ட வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளும் இயல்பின்கண்ணே நிற்றல் செவ்விது என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. 1உதாரணம் மேற்காட்டின. இவ்விதி 2மேல் பெற்றாம் அன்றோ எனின், மேற்பெற்ற தனையே 3ஈண்டும் விதந்து வலியுறுத்தான், பிறிதொன்று 4விளங்கிய என்பது. அஃது யாதோ எனின், பயனிலை ஏற்றலிற் செவ்விது என, உருபு ஏற்றலும் 5பெயர்க்கு இலக்கணம் அன்றே, அதனிற் செவ்விய ஆகாதனவும் உள என்பது. (உ-ம்.) நீயிர் என்பது பெயர். நீயிரை என உருபு ஏலாது. இது நும் என்னும் பெயரது அல்வழிப் புணர்ச்சித் 6திரிபு என்பது. உம்மை என உருபுஏற்குமால் எனின், பிற சந்தித் திரிபு போல நிலைமொழி நிலை 7தோற்ற நில்லாது 8திரிந்தபின் பிறிதோர் பெயர் நிலைமைபடநிற்றலின் வேறோர் பெயர் என 9வேண்டியது போலும். இதனகத்து விகற்பம் எல்லாம் உரையிற் கொள்க. இந்நிகரன ஓருருபும் ஏலாதன. அவ்வாய்க் கொண்டான் என்பது, 10அவ்வாய்க்கட் கொண்டான் என ஏழாம் உருபு ஏலாதது. இந்நிகரன பிறஉருபு ஏற்குமேலும் அறிந்துகொள்க. (7) அடிக்குறிப்புகள் 69-1 ii “உதாரணம் மேற்காட்டின அவையாம்” எi “மேற்காட்டின இவ்விதி” 2 iii “மேலே பெற்றாம்” 3 i “ஈண்டும் மெலிதந்து” (“ஈண்டுமே விதந்து” என்பதுபோலும்) எi “ஈண்டும் தந்து” 4 i “விளங்கியதென்பது” எi “விளக்கிய என்பது” 5 i “பெயர்த்திலக்கணம்” iii-iஎ-எ “பெயரதிலக்கணம்” 6 எ “திரிபு என்பது” iii “திரிபென்றே” 7 எ “தோன்ற நில்லாது” 8 எi “திரிபின் பிறிதோர்” 9 i “வேண்டியன போலும்” எ “வேண்டினான் போலும்” 10 i-ii-iஎ-எ-எi-எii “அவ்வாய்க்கட் கொண்ட . . . விழா முருபு” 70. கூறிய முறையின் உருபுநிலை திரியா தீறு பெயர்க்காகும் இயற்கைய என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், உருபேற்றலும் 1பெயர்க்கு இலக்கணம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறப்பட்ட முறைமையினிடை 2நின்ற அறுவகை உருபும் தத்தம் வாய்பாட்டு 3நிலைமையின் திரியாது பெயர்க்கு ஈறாய் வரும் இயல்பினையுடைய என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். மேல் “கு ஐ ஆன் எனவரூஉம் இறுதி” என்று செய்யுட் கண் உருபுஈறு திரிபு கூறுகின்றா4ன் ஆகலின், அஃதுஒழிய வழக்கினுள் 5திரிபுஇல்லை என்றற்கு நிலை திரியாது 6எனப்பட்டது (8) அடிக்குறிப்புகள் 70-1 i “பெயர்த்திலக்கணம்” iii “பெயரதிலக்கணம்” 2 i “நின்ற வருகை உருபும்” எiii “நின்ற வருவகை உருபும்” ii-எi நின்று வருகிற ஐ முதலாய உருபும் (எi-ல் “முதலாகிய” என்றுள்ளது.) 3 எi “நிலைமையின் வேறாகாது” ii “நிலைமையின் வேறாகாது திரியாது” i-எ “நிலைமையின் வேறாகாதுற் றிரியாது” 4 “ர்” 5 iii “திரிவில்லை” 6 ii-எi “எனப்பட்ட தென்க” 71. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழினிலை ஒட்டும் ஒன்றலங் கடையே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 1பெயர்க்கு ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பெயராகிய நிலைமையுடைய சொற்கள் காலம் தோன்றா; யாவை 2எனின், தொழிலாகிய நிலைமை யுடைய தொழிற் பெயர்கள்; 3யாண்டுமோ எனின் அன்று, 4காலம் தோன்றுதல் தன்மை பொருந்தும் 5ஒரு கூற்றுத் தொழிற் பெயரல்லாதவிடத்து, என்றவாறு. என்றது பெயர்தாம் பெயர்ப்பெயரும், தொழிற்பெயரும் என இருவகைப்படும். பெயர்ப் பெயராவன:- சாத்தன், கொற்றன் எனத் தொழிலாற் பெயரன்றி அவ்வப்பொருட்கு இடுகுறியாய் வருவன. இவை காலம் தோன்றாத் தொழிற்பெயராயின் தோன்றும். தொழிற்பெயர் தாமும், தொழில்மேல்நின்ற தொழிற் பெயரும், பொருள்மேல் நின்ற தொழிற்பெயரும் என இருவகைப்படும். அவற்றுள் தொழிலின் மேல் நின்றனவும் 6காலந் தோன்றா, அவை 7உண்டல் தின்றல் எனப் பொருளது புடை பெயர்ச்சியை அறிவித்து நிற்கும் என்பது. இவற்றுள் பூசை வேட்டை என்றாற் போல்வன வினைச்சொற்கு அடியாய்ப் புடைபெயர்ச்சியை விளக்காது பெயர்ப்பெயரே 8போல நிற்பன உள என்பது. இனிப் பொருண்மேல் நின்றனவும், வினைமுதற் பொருள் மேல் நிற்பனவும் செயப்படு பொருள்மேல் நிற்பனவும் என இரு வகைப்படும். அவ்இருவகையும் காலம் தோன்றி நிற்கும் என்றவாறு. அவை தாமும் ஓசை 9வேற்றுமையான் ஒருவழி வினை எனப்பட்டு நிற்பனவும், வினையாகாது பெயரேயாய் நிற்பனவும் என இருவகைப்படும். (உ-ம்.) உண்டான், தின்றான் ; உண்டது, தின்றது எனப் படுத்தல் ஓசையால் வினை எனப்பட்டுக் காலம் 10தோன்றி நின்றன. உண்டவன், தின்றவன், உண்ணுமது, தின்னுமது என்பன ஓசை வேற்றுமையான் 11அன்றித் தானே பெயராய்க் காலம்காட்டி நின்றன. இவை வினை முதற்கட் பாகுபாடு. ‘12கொலைவர் கொடுமரந் தேய்த்தார்’ அவன் 13ஏறிற்று இக்குதிரை என்றாற் போல்வன 14வினைப்பெயரே. அச்செயப்படு பொருட்கண் காலம்காட்டி 15நின்றது. யான் சொன்னவன் உண்பவை நாழி 16உடுப்பவை இரண்டு என்றாற் போல்வன 17தாமே செயப்படு பொருள்மேல் பெயராய்க் காலந்தோன்றி 18நின்றன. இவை செயப்படு பொருட் பாகுபாடு. நிலமும் காலமும் கருவியும் பற்றி வரும் தொழிற்பெயர் விகற்பமும்19 அறிக. (உ-ம்.) உண்டது என்பது. இத்தொழிற்பெயர்களின் கால 20விகற்பமும் என அறிக. பெயர்ப் பெயர் காலம்தோன்றா என்பதற்கு விதியாதோ எனின்:- 21இச் சூத்திரத்தானே அதுவும் பெறுதும் என்பது. (9) அடிக்குறிப்புகள் 71-1 iii “பெயரதோ ரிலக்கணம்” i “பெயர் க தோரிலக்கணம்” 2 i “யெனில்” 3 i “யாண்டு மோடுவனின்” (டு - b - மாறுபாடு.) 4 ii-எ-எii “காலந் தோன்றுதற்குப் பொருந்தும்” எi “காலந் தோன்றாதற்குப் பொருந்தும்” i-iஎ “காலந் தோன்றுதற்றன்கு பொருந்தும்” எiii “காலந் தோன்று தறன்மை பொருந்தும்” iii “காலந் தோன்று தற்றன்மை பொருந்தும்” 5 ii-iஎ “பெயர்த்தாம்” 6 ii-எi “காலந் தோற்றா” 7 எi “உணல்” 8 எi “போல் நிற்பன” 71-9 i வேற்றுமையால் ஒரு வழி” 10 i-iஎ-எ “தோன்றி நின்றது” 11 i “அறித்தானே பெயராய்” எ “அன்றித் தாமே பெயராய்” 12 i (இருமுறை எழுதப்பட்டிருக்கிறது) 13 i-ii-iஎ-எ “ஏறிற்றுக் குதிரை” 14 iii “வினைப் பெயராய்ச் செயற்படு பொருட்கண்” 15 எi “நின்றன” 16 i “வடுப்பவை” 17 i “தானே” 71-18 i “நின்றது” 19 எi “விகற்பமுங் கொள்க” i “கொள்க வறிக” எ (அறிக என்பது கொள்க எனத் திருத்தப்பட்டுள்ளது) 20 எi “விகற்பம் என அறிக” 21 i-iஎ இச்சூத்திரத்தா னெய்துவும் பெறுதும்” (னெ - னே ; ய் - ய மாறுபாடு) ii-எ-எii “இச்சூத்திரத்தா னெய்தவும் பெறுதும்” (மேல்கண்ட பாடத்தின் திருத்தம்) எi “இச்சூத்திரத்தான் எய்தவும் பெறும்” 72. இரண்டாகுவதே, ஐஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்று மதுவே; காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஒப்பின் புகழின் பழியின் என்றா, பெறலின் இழவின் காதலின் வெகுளியின் செறலின் உவத்தலின் கற்பின் என்றா, அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின் இறுத்தலின் அளவின் எண்ணின் என்றா, ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின் நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா, அன்ன பிறவும் அம்முதற் பொருள என்ன கிளவியும் அதன்பால என்மனார். என்பது என்நுதலிற்றோ எனின், எழுவாய் வேற்றுமை அதிகாரம் உணர்த்தினான். இனி, அம்முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இரண்டாம் 1எண்ணும் முறைமைக் கண்ணதாகிய ஐ என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் யாதானும் ஓர்இடத்துவரினும் வினையும் வினைக்குறிப்பும் என்றும் 2சொல்லப்படுகின்ற அவ்இரண்டும் அடியாக 3 அது வரும் பொருள் பகுதி சொல்லின், காப்பு என்பது முதலாய்ச் சிதைப்பு ஈறாய் ஓதப்பட்ட இவையும் இவை போல்வன பிறவுமாகிய அவ்வவ்வினை, வினைக்குறிப்பு என்னா நின்ற முதற்பொருளைப் பற்றி வருகின்ற எல்லாச் சொற்களும் 4அவ்இரண்டாவதன் கூற்றன என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. (உ-ம்.) மரத்தைக் குறைத்தான் என்பது வினை. குழையை உடையன் என்பது வினைக் குறிப்பு. 5காப்பு : என்பது ஊரைக் காக்கும் ; 6ஒப்பு :- கிளியை ஒப்பும் ; ஊர்தி :- யானையை ஊரும் ; இழை :- எயிலை இழைக்கும் ; 7ஒப்பு :- தாயை ஒக்கும் ; 8இது வினை ; புகழ் :- ஊரைப் புகழும் ; பழி :- நாட்டைப் பழிக்கும் ; பெறல் :- ஊரைப் பெறும் ; இழவு :- ஊரை இழக்கும் ; காதல் :- 9தாயைக் காதலன் ; 10இது வினைக் குறிப்பு ; வெகுளி :- படையை வெகுளும் ; செறல் :- 11செற்றாரைச் செறும் ; உவத்தல் :- தாயை உவக்கும் ; இது வினைக் குறிப்பு ; கற்பு :- நூலைக் கற்கும் ; அறுத்தல் :- ஞாணை அறுக்கும் ; குறைத்தல் :- மரத்தைக் குறைக்கும் ; தொகுத்தல் :- நெல்லைத் தொக்கும் ; பிரித்தல் :- வேலியைப் பிரிக்கும் ; நிறுத்தல் :- 12தூணை நிற்கும் ; அளவு :- 13அரிசியை அளக்கும் ; எண் :- அடைக்காயை எண்ணும் ; ஆக்கல் :- 14 ஊரை ஆக்கும் ; சார்தல் :- வாய்க்காலைச் சாரும் ; செலவு :- நெறியைச் செல்லும் ; கன்றல் :- சூதினைக் கன்றும் ; நோக்கல் :- சேயை நோக்கும் ; அஞ்சல் :- கள்ளரை அஞ்சும் ; சிதைப்பு :- நாட்டைச் 15 சிதைக்கும் ; அன்ன பிறவும் என்றதனால், விரலை முடக்கும் ; நாவினை 16வணக்கும் ; இவை 17வினை. அறிவினை உடையன் ஊரை இன்புறும். இவை 18வினைக் குறிப்பு. பிறவும் அன்ன. காப்பின் என்பது 19 முதலாக நின்ற இன் எல்லாம் உருபும் அன்று ; சாரியையும் அன்று ; அசைநிலை எனக் கொள்க. இடைநின்ற 20என்றா என்பன எண்ணிடைச் சொல். 21மற்றைய வேற்றுமைபோல் இது படும் பொருண்மை உணர்த்தாது முடிபு உணர்த்தியது என்னை, இம்முடிபு ஏனை வேற்றுமைக்கும் உவவால் எனின் : ஈண்டு முடிபு அன்று உணர்த்தியது ; வினை வினைக்குறிப்பின் மேலிட்டு அது படும் செயப்படு பொருளினை உணர்த்திற்றாக உரைக்கப்படும். செயப்படுபொருண்மையாவது என்னையோ எனின் :- ஒருவன் செய்யும் தொழிலினைத் தானுறுதல் எனக்கொள்க. அத்தொழிலினை உறுவது இதுவேயோ, அத்தொழில் செய்வானும் கருவியும் செய்கின்ற காலனும் இடனும் என இன்னோரன்னவும் அத்தொழில் 22உறுமால் எனின், அவை உறும் எனினும் பெரும்பான்மையும் இதன் கண்ணது என்பது கருத்து. வினை என்னாது வினைக்குறிப்பு என்றது என்னையோ எனின், மரம் குறைத்தான் என்புழிக் குறைக்கப்படுதல் என்பதுபோல் ஆகாது குழையை உடையன் என்புழிக் குழையின் உடைமைப்பாடு செயப்படு பொருளாய் விளங்கி நில்லாமையின் வேறுகூறினான் என்பது. அச்செயப்படுபொருள்தான். இல்லது ஒன்றாய் உண்டாக்கப்படுவதும், உள்ளது ஒன்றாய் உடல் வேறுபடுக்கப் படுவதும், உள்ளது ஒன்றாய் ஒரு தொழில் 23உறுவிக்கப்படுவதும், உள்ளது ஒன்றாய் ஒன்றனான் உறப்படுவதும் எனப் 24பலவகைய. இல்லதுஒன்று உண்டாக்கல் :- எயிலை இழைத்தான் என்பது. உள்ளது ஒன்றனை உடல் வேறாக்கல் :- மரத்தைக் குறைத்தான் என்பது. உள்ளதுஒன்று ஓர் தொழிலுறுவித்தல் :- கிளியை ஒப்பும் என்பது. உள்ளதுஒன்றனை ஒன்றுறுதல் :- நூல் நூற்றான் என்பது. பிறவும் அன்ன. இன்னும் இச்செயப்படு பொருள்தான் தன் கண்ணும் ஓர் தொழில் நிகழ்ந்து செயப்படுபொருளாவனவும், தன் கண் தொழில் நிகழாது செயப்படு பொருளாவனவும் என இருவகைய. தன் கண்ணும் தொழில் நிகழ்ந்தது :- 25அறுத்தல் குறைத்தல் என்று தன்கண்ணும் நிகழ்ந்தன. தன்கண் நிகழாதது :- வாய்க்காலைச் சாரும் என்றாற் போல்வன. பிறவும் அன்ன. இன்னும் இரண்டாவதன் செயப்படுபொருள், தெரிநிலைச் செயப்படு பொருளும், தெரியாநிலைச் செயப்படு பொருளும் என 26இருவகைத்து. தெரிநிலை :- மரத்தைக் குறைத்தான் என்பது. தெரியாநிலை :- 27சாத்தன் மரம் குறைக்கப்பட்டது. மற்றிஃது எழுவாய் அன்றோ எனின், சொல்நிலை 28அன்னதாயினும் சாத்தன் எனநின்ற உருபினை நோக்கப் பொருள்நிலை அன்னதன்று என உணர்க. சோற்றை அட்டான் எனச் செய்வான் கருத்து உள்வழிச் செயப்படுபொருளாதலும், சோற்றைக் குழைத்தான் எனக் 29கருத்து இல்வழி ஆதலும் என இருவகைய. இனிச் செய்வானும் செயப்படு பொருளும் என்னும் இரண்டும் ஒன்றே ஆயும் வரும். (உ-ம்.) சாத்தன் தன்னைக் குத்தினான் எனவரும். இனிச் செயப்படுபொருட்கு 30ஏதுவாயதூஉம் செயப்படு பொருளாய் வரும். அவை கற்கப்படும் ஆசிரியர், கற்கப்படா ஆசிரியர் என வரும். மற்றும் 31இதனகத்து விகற்பம் உரையிற் கொள்க. (10) அடிக்குறிப்புகள் 72-1 ii “என்னு முறைமை” 2 i-ii-iஎ-எii “சொல்லப்படுகின்றது இரண்டும் அடியாக” எ-எi “சொல்லப்படுகின்ற இரண்டும் அடியாக” 3 i-ii-iஎ-எ-எii “வரும் பொருள் பற்றிச் சொல்லின்” எiii “அது வரும் பொருட்டுச் சொல்லின்” (பொருட்பகுதி இவ்வாறெல்லாம் படிக்கப் படுகின்றது போலும்.) 4 i-ii-iஎ-எ-எii “இரண்டாவதன் . . . புலவர்” iii “இரண்டாவதன் கூற்றன என்று கூறுவர் புலவர்” 5 எi “காப்பு ஊரைக்காக்கும் ஓப்பு” ii-எi “காப்பு ஊரைக்காக்கும் என்பது” (இவ்வாறு இப்பிரதியில் பின்வரும் உதாரணங்களும் “என்பது” என்றே முடிகின்றன.) 6 ii-எi-எii “ஒப்பு - தாயை யொக்கும்” (சூத்திரத்தின் வைப்பு முறையைக் கண்டு திருத்திய பாடம்.) 72-7 ii-எi-எii “ஓப்பு, கிளியை யோப்பும்” 8 ii-எi-எii “இவை வினை” 9 ii-எi-எii “மனைவியைக் காதலிக்கும்” 10 ii-எi-எii “இவை வினைக் குறிப்பு” 11 i-iii-iஎ-எ “ஊரைச் செறும் (“ஊரைச் சேறும் என்றும் படித்தலாம்.) 12 ii-எi-எii “பொன்னை நிறுக்கும்” 13 i-எi “அரியை அளக்கும்” 14 ii-எi “அறத்தை ஆக்கும்” 72-15 ii-எii “சிதைக்கும் எனவும் அன்னபிற” எi “சிதைக்கும் எனவும் வரும் அன்னபிற” 16 ii-எii “வணக்கும் என வருவனவும் கொள்க இவை” 17 எi “இவை வினையும்” 18 எi “வினைக் குறிப்பும் கொள்க பிறவும்” 19 எi-எiii “முதலான இன்னெல்லாம்” ii-எii “முதலாக இன்னெல்லாம்” 20 எi “என்றா எண்ணிடைச் சொற்களாம் மற்ற” 21 எ “மற்று” வேற்றுமை 72-22 எi “உறுமாலோ எனின்” 23 i “உறுதுக்கப்படுவதும்” 24 ii-எi-எii “பலவகையாம்” 25 ii “அறுத்தல் ஆய வவ்விரு தொழில் மரம் முதலாய தன் கண்ணும் நிகழ்ந்தன வாதலின் தன்கண்” எ “அறுத்தல் குறைத்தல் என்பன அறுத்தல் குறைத்தல் தன் கண்ணும் நிகழ்ந்தன தன்கண்” எi “அறுத்தல் குறைத்தல் மரம் முதலாய தன் கண்ணும் நிகழ்ந்தன ஆதலின் தன்கண்” 72-26 ii-எi-எii “இருவகைத்தாம்” 27 ii-எ-எi-எii “சாத்தனால் என்பது மற்றிஃது” (“சாத்தனால்” என்பது திருத்தம்.) 28 i-iஎ-எi-ii-எii “அன்னதாயினும் சாத்தனான் என்ற உருபினை நோக்கப் பொருணிலை” எ “அன்னதாயினும் பொருண் நிலை” 29 எi “கருத்தில் வழிச் செயப்படு பொருளாதலும் என” 30 எ - “ஏதுவாயதும் செயப்” 31 i-ii-iஎ-எi-எii “இதன் கருத்து விகற்ப முரையில் கொள்க” (i பிரதியில் “வி” - “வ” என்றும்; “ரை” - “றை” என்றும் உள்ளது.) 73. மூன்றாகுவதே ஒடுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே; அதனி னியறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனின் ஆதல் அதனிற் கோடல் அதனொடு மயங்கல் அதனொ டியைந்த ஒருவினைக் கிளவி அதனொ டியைந்த வேறுவினைக் கிளவி அதனொ டியைந்த ஒப்பல் ஒப்புரை இன்னா னேது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனார். என்பது என்நுதலிற்றோ எனின், மேல் நிறுத்த முறையானே மூன்றாம் வேற்றுமை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மூன்றாம் எண்ணு முறைமைக் கண்ணதாகிய ஒடு என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் வினைமுதல் கருவியாகிய காரணங்களையுடைத்து. 1அது வருமாற்றைச் சொல்லின், ஒன்றனான் ஒன்று பண்ணப்படும் பொருண்மை, 2ஒன்றனான் ஒன்று தகுதல் என்னும் பொருண்மை, ஒன்றனான் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை, ஒன்றனான் ஒன்று ஆதல் என்னும் பொருண்மை, ஒன்றனான் ஒன்றைக் கோடல் என்னும் பொருண்மை. ஒன்றனோடு ஒன்று மயங்கல் என்னும் பொருண்மை, ஒன்றனோடு ஒன்று இயைந்து ஒரு வினையாதல் என்னும் பொருண்மை, ஒன்றனோடு ஒன்று இயைந்து வேறு வினையாதல் என்னும் பொருண்மை, ஒன்றனோடு ஒன்று இயைந்து ஒப்பல்லா ஒப்பினை உரைத்தல் என்னும் பொருண்மை. இத் தன்மை யான் என்னும் பொருண்மை, 3ஏதுப் பொருண்மை என்னும் இவையும், இப்பெற்றியானே இதனிடத்து வருகின்ற அத்தன்மையான பிற பொருள்களும் அம்மூன்றாவதன் 4கூறன என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. மூன்றாவதற்கு உருபு ஒடுவும், ஆனும் என இருவகைத்து. ஆன் என்பது 5எடுத்து ஓதிற்றிலன் எனினும் அதனினியறலதற்றகு கிளவி என ஓதிய 6வாய்பாட்டான் பெறுதும் என்பது. வினைமுதல் கருவி என்று ஓதிய பொருண்மை இவ்இரண்டு உருபிற்கும் ஒக்கும் என்பது. (உ-ம்.) வினைமுதல் :- கொடியொடு துவக்குண்டான்; நாயாற் 7கோட்பட்டான். கருவி :- ஊசியொடு குயின்ற தூசும் பட்டும், வேலான் எறிந்தான் என வரும். அதனினியறல் :- தச்சன் செய்த சிறுமா வையம் என்பது. அதற்றகு கிளவி :- வாயாற்றக்கது 8வாய்ச்சி என்பது. அதன் வினைப்படுதல் :- நாயாற் 9கோட்பட்டான், சாத்தனான் முடியுமிக்கருமம் என்பன. அதனினாதல் :- வாணிகத்தான் ஆயினான் என்பது. அதனிற் கோடல் :- காணத்தாற் கொண்ட அரிசி என்பது. அதனொடு மயங்கல் :- எண்ணொடு விராய அரிசி என்பது. அதனொடியைந்த ஒருவினைக் கிளவி :- சாத்தனொடு வந்தான் என்பது. அதனோடு இயைந்த வேறு வினைக்கிளவி :- மலையொடு பொருத 10மால்யானை; காவொடு அறக் குளம் 11தொட்டான் என்பன. வேறு வினை என்பது ஒன்றன் கண்ணே வினையாதல். அதனோடு இயைந்த ஒப்புஅல் ஒப்புரை:- நூலொடு நார் இயைந்தது போலும், 12முத்தொடு முழாக் கோத்தது போலும் என்பன. இன்னான் என்பது, இத்தன்மையான் என ஒருவன் பெற்றி கூறல் அஃது கண்ணாற் கொத்தை; காலான் முடவன் என்பன. ஏது ; முயற்சியிற் பிறத்தலான் இசை நிலையாது என்பது. அதனினியறன் முதலாக அதனிற் கோடல் ஈறாக ஓதிய பொருண்மை எல்லாம் சூத்திரத்துள் ஆன் உருபின் சுவடுபட ஓதினமையிற் பெரும்பான்மை ஆன் உருபிற்கே உரியவாம். சிறுபான்மை ஒடு உருபிற்கும் வருவன உளவேற் கொள்க. இவற்றுள் அதனினியறல் அதன் வினைப்படுதல் என்று ஓதிய இரண்டும் வினைமுதற்பாகுபாடு. அதனிற் கோடல் கருவியின் பாகுபாடு போலும். அதற்றகு கிளவியும் அதனினா தலும் ஏதுவின் பாகு பாடு. அதனொடு மயங்கல் முதலாக அதனொடு இயைந்த ஒப்பல் ஒப்புரை ஈறாக ஓதின எல்லாம் ஒடு உருபுகொடுத்து ஓதினமையிற் பெரும்பான்மையும் ஒடு உருபிற்கே உரிய; சிறுபான்மை ஆன் உருபிற்கும் வருவன உளவேற் கொள்க. இன்னான் என்னும் பொருண்மையும், ஏது என்னும் பொருண்மையும் ஓருருபின் எடுத்து ஓதாமையின் வழக்கிற்கு ஏற்றவாறு கொள்ளப்படும். முன்னும் ஏதுவின் பாகுபாடு 13ஓதிவைத்துப் பின்னும் ஏது என ஓதியது அவ்வாறு ஒழிய வருவனவற்றைக் கருதிப் போலும். 14அவ் ஏது காரக ஏதுவும் ஞாபக ஏதுவும் என இருவகைத்து. முயற்சியிற் பிறத்தல் காரகம் பிறத்தலான் இசை நிலையாது என்பது ஞாபகம். அஞ்ஞாபகத்தைப் போலும் 15ஈண்டு ஏது என ஓதியது. அன்ன பிறவும் என்றது சூத்திரத்துள் எடுத்து ஓதின பாகுபாட்டின் ஒழிந்தனவும் பிற 16பொருட் பாகுபாடுங் கருதிப் போலும். அவை எல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. (11) அடிக்குறிப்புகள் 73-1 எi “அஃது” 2 எiii “ஒன்றனால் ஒன்று தகுதல்” (“த” தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.) எi “ஒன்றால் ஒன்று நகுதல்” எi-எiii “ஒன்றனால் ஒன்று” (இப்பத்தி முழுவதும் இவ்வாறு வருகிறது. முதற் பிரதியில் இங்குமட்டும் வருகிறது.) 3 i “எய்து” 73-4 ii-எi-எ “கூற்றென என்று” 5 iii “எடுத்தோதிற்றிலனேனும்” 6 i “வாய்ப்பாட்டான் பெறுதும்” 7 எ “பட்டான் என்பது கருவி” 8 i “வாச்சி” 9 ii-எi-எii “கோட்பட்டான். சாந்தனான் முடியுமிக் கருமம் என்பன அதனினாதல்” 73-10 ii “மால் யானை என்பது” 11 i-ii-iஎ-எ-எii “தொட்டல் என்பது” 12 ii “முத்தொடும் உறழக் கோத்தது” எi “முத்தொடு பவழம் கோத்தது போலும்” (“முழா” பொருள் விளங்கவில்லை) 13 ii-எii “ஓதுவித்து” 14 i “அவ்வேதுஉ காரக” 73-15 i “ஈண்டது டுதுவென” (டு - b - மாறுபாடு) 16 ii “பொருட் பாடும்” எi “பொருட் பாகுபாடுகளும்” 74. நான்காகுவதே கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே ; அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப் படுபொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடமையின் 2அதற்பொருட் டாதலின் நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பின்என் றப்பொருட் கிளவியும் அதன் பால என்மனார். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே நான்காம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- நான்காம் எண்ணுமுறைமைக் கண்ணதாகிய குவ்வென்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் 3யாதொரு பொருளை யாயினும் ஒரு பொருள் ஈவதோர் பொருளினை ஏற்பதாக 4உணர்த்தி நிற்கும். இன்னும் அது தான் வரும் பொருட் பாகுபாட்டினைச் சொல்லின், ஒன்றற்கு ஒன்று பயன்படுதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கு ஒன்று பொருண்மேற் கொடுப்பதாக உடம்படுதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கு ஒரு பொருள் உரிமை உள்வழிக் 5கூறிடப் படுதல் என்னும் பொருண்மை, அம்முதற்பொருட்டாய் ஆகலான் என்னும் பொருண்மை. 6ஒன்றற்கு ஒன்று பொருத்தமுடைத்தாதல் 7என்னும் பொருண்மை, ஒரு பொருளினை மேற்பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று 8நட்பாதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று பகையாதல் என்னும் பொருண்மை, ஒன்றற் கொன்று காதலுடைத்தாதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று சிறத்தல் என்னும் பொருண்மை என்று சொல்லப்பட்ட அப்பொருண்மேல் வருஞ்சொற்களும், 9அந்நான்காம் உருபின் கூற்றன என்று 10கூறுவர் புலவர் என்றவாறு. எப் பொருளாயினும் என்றது, மூன்றிடத்துப் பொருள் களது பன்மை நோக்கிச். சொற்கள் பொருள்களை உணர்த்துதல் உரிமை நோக்கிச் சொல் தன்மேல் வினைப்பட, எப்பொருளா யினுங் கொள்ளும் என்று கூறினார் எனினும் கோடலை உணர்த் தும் என்றவாறாகக் கொள்க. (உ-ம்.) 11சாத்தற்குச் சோறு கொடுத்தான் 12 என்பது. அதற்கு வினையுடைமை :- கரும்பிற்கு வேலி ; மயிர்க்கு 13எண்ணெய் ; 14என்பது. அதற்குடம்படுதல்:- சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் என்பது. 15அதற்குப் படுபொருள்:- சாத்தற்குப்படுபொருள் கொற்றன் என்பது. அதுவாகு கிளவி :- கடி சூத்திரத்துக்குப் 16பொன். அதற்கியாப்புடைமை :- கைக்கியாப்புடையது 17கடகம். அதற்பொருட்டாதல் :-வரிசைக்கு உழும் ; கூழிற்குக் குற்றேவல் செய்யும் 18என்று இத்தொடக்கத்தன. நட்பு :- 19 நாய்க்கு நட்புடையன். பகை :- மக்கட்குப் பகை 20மரபு. காதல் :- 21தாய்க்குக் காதலன் சிறப்பு :- வடுகரசர்க்குச் சிறந்ததோர் சோழிய 22அரசர். அதற்கு வினையுடைமை முதலாகச் 23சொல்லப்பட்டன எல்லாம் முன் கூறிய கொடைப் பொருளின் பாகுபாடல்ல ; பிற பொருள் என 24உணர்க. அவற்றுள், அதற்குடம்படுதல் அதற்குப் படுபொருள் என்னும் இரண்டும் கொடைநீர்மையும் 25சிறிதுடைய. உம்மையாற் பிறவும் 26அதன்பால் உள. பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு 27எனவரும். பிறவும் அன்ன. உம்மை இறந்தது தழீஇய 28எச்ச உம்மையாகலான் இந்நிகரன கோடற்கு இடம்படாதால் எனின், இறந்தது தழீஇய அதனையே இரட்டுற மொழிதல் என்னும் ஞாபகத்தினான் எதிரது தழீஇயதூஉம் ஆக்கிக் கூறப்பட்டது எனக் கொள்க. (12) அடிக்குறிப்புகள் 74-1 iஎ “நான்காவதே” 2 i-iii-எ “அதற்பொருட்டாகலின்” 3 எi “யாதொரு பொருளினை ஏற்பதாக உணர்த்தி நிற்கும்” (ஒரு வரி விடுபட்டுள்ளது) 4 iii “உணர்ச்சி” (ச - த மாறுபாடு) 74-5 i-ii “கூறிய படுதல்” 6 ii “ஒன்றுக் கொன்று” 7 i-ii-iஎ-எ-எii “என்னும் . . . ஒரு பொருளினை” 8 எi “நட்பாதலும் பகையாதலும் என்னும் பொருண்மை ஒன்றற் கொன்று” i-ii-iஎ-எ-எii “நட்பாத லென்னும் . . . . . . . . . பகையாத லென்னும் பொருண்மை ஒன்றற் கொன்று” 9 ii-எ-எi-எii “நான்கா முருபின்” 10 i-iii-எ “சொல்லுவர் புலவர்” 11 எi “அதற்கு வினையுடைமை சாத்தற்குச் சோறு கொடுத்தான். கரும்பிற்கு வேலி” 12 i “என்பதற்கு வினையுடைமை” 13 i “எண்ணை” 14 iii “என்பன” 74-15 i “அதற்குப் பொருள்” (எi-ல் ‘படு’ இரு பிறைவளைவில் உள்ளது.) 16 ii-எi “பொன் என்பது. அதற்கி” 17 iii “கடகம் அதற்பொருட்டாகல்” i “கடகம் அதற்குப் பொருட்டாக்கல்” எi-எiii “கடகம் கூழிற்குக் குற்றேவல் செய்யும்” (சில சொற்கள் விடுபட்டன.) 18 i-iஎ-எ “என அறிக தொடக்கத்தன நட்பு” (க - த் மாறாட்டம்) 19 ii “அவற்கு நட்புடையன், அவற்குத்தமன் என்பன பகை” எi “நட்புடையன் அவற்குத்தமன் என்பன பகை” 20 ii-எii “பாம்பு. அவற்குப் பகை, அவற்கு மாற்றான்” எi “பாம்பு. அவற்குப் பகை மாற்றான்” 21 ii-எi-எii “நாட்டார்க்குக் காதலன் தாய்க்குக் காதலன் என்பன.” 22 ii-எi-எii “அரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பன” 23 ii-எi-எii “கூறப்பட்டன” 24 ii-எi-எii “அறிக” 25 ii-எii “சிறியதுடைய” 74-26 ii-எii “அதன்போலப் பலவுள அவை” 27 ii-எi-எii “என்பன போல வரும்” 28 i “எச்சவும்மையாகன் இந்நகரின்கோடற் கிடம்படாதால் எனின்” 75. ஐந்தாகுவதே இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னு மதுவே ; வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா, நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை என்றா, முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழமை ஆக்கம் என்றா, இன்மை யுடைமை நாற்றம் தீர்தல் பன்மை சின்மை பற்றுவிடுதல் என் - றன்ன பிறவும் அதன்பால என்மனார். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே ஐந்தாம் 1வேற்றுமை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2ஐந்தாம் எண்ணுமுறைமைக் கண்ண தாகிய இன் என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் 3இப்பொருளினும் இத்தன்மைத்து இப்பொருள் என வரூஉம் பொரூஉப் பொருளினைத் தனக்குப் பொருளாக உடைத்து ; அது வருமாற்றை விரிப்பின், வண்ணம் முதலாகப் பற்றுவிடுதல் ஈறாகச் சொல்லப்பட்ட இப்பொருண்மைகளும் பிற பொருண்மைகளும் அவ்ஐந்தாவதின் கூற்றன என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. 4ஐந்தாவது பொரூஉப் பொருளும், நீக்கப் பொருளும் எல்லைப் பொருளும், ஏதுப் பொருளும் என நால்வகைய. அவற்றுள், பொரூஉப் 5பொருள் சிறப்புடைமையின் முன்னர் எடுத்து 6ஓதினான். பொரூஉ என்பது ஒன்றை 7ஒன்றின் மிகுத்துக் கூறல். இதனின் ஒழிவாகிய உவமமும் இரட்டுற மொழிதல் என்னும் ஞாபகத்தான் ஈண்டே கொள்ளப்படும். நீக்கம் உதாரணப் பகுதி கூறுகின்றவழிக் கொள்ள வைத்தான்8 என்பது. எல்லையும் ஏதுவும் அன்னபிறவாற் கொள்ள வைத்தான் என்பது. (உ-ம்.) காக்கையிற் கரிது 9களாம்பழம். இதனின் என்பது காக்கையின் என்பது. இற்று என்பது கரிது என்பது. இது என்பது களாம்பழம் என்பது. என்றது, காக்கையினும் கரியது களாம்பழம் என்று மிகுத்துக் 10கூறியவாறு ஆயிற்று. உவமத்திற்கும் இதுவே 11உதாரணமாம். காக்கையைப் போலக் கரிது களாம்பழம் என்றவாறாம். இனி வண்ணம் என்பது ஐந்து வகைப்படும். கருமை 12முதலியன. (உ-ம்.) காக்கையிற் கரிது களாம்பழம் என்றாற் போல்வன. வடிவு என்பது முப்பத்திரண்டு வகைத்து. அவை வட்டம் சதுரம் கோணம் 13முதலியன. (உ-ம்.) :- இதனின் வட்டம் இது என்பது. அளவு :- நெடுமை, குறுமை, 14நிகர்மை எனப் 15பலவாம். (உ-ம்.) :- இதனின் நெடிது இது என்பது. சுவை :- அறுவகைப்படும். அவை கைப்பு 16முதலியன. இதனின் தீவிது இது என்பது. தன்மை :- இதனின் தண்ணிது இது என்பது. வெம்மை :- இதனின் வெய்யது இது என்பது. அச்சம் :- கள்ளரின் அஞ்சும் என்பது. இஃது ஏதுவின் கண்ணும் வரும். நன்மை :- 17இதனின் நன்று இது என்பது. தீமை :- இதனின் தீது இது என்பது. சிறுமை :- இதனின் 18சிறிது இது என்பது. பெருமை :- இதனின் பெரிது இது என்பது. வன்மை :- இதனின் வலிது இது என்பது. மென்மை :- இதனின் மெலிது இது என்பது. கடுமை :- இதனின் கடிது இது என்பது. முதுமை :- 19இதனின் மூத்தான் என்பது. இளமை :- 20இவனின் இளையான் 21என்பது. சிறத்தல் :- இவனின் 22சிறந்தான் இவன் என்பது. இழித்தல் :- இவனின் 23இழிந்தான் இவன்என்பது. புதுமை :- 24இவனின் புதியன் இவன் என்பது. பழமை :- 25இவனின் பழையன் இவன் என்பது. ஆக்கம் :- 26இவனின் ஆயினான் என்பது. இது ஏதுப் பொருட்கண்ணும் வரும். இன்மை :- 27இவனின் இலன் என்பது. உடைமை :- 28இவனின் உடையன் என்பது. நாற்றம் :- இதனின் 29நாறும் என்பது. இவைஎல்லாம் பொரூஉப் 30பொருளாம். தீர்தல் :- ஊரின் தீர்ந்தான் 31என்பது. இது நீக்கம். பன்மை :- இவரிற் 32பலர் என்பது. சின்மை :- இவரிற் 33சிலர் என்பது. இவையும் பொரூஉ. பற்றுவிடுதல் :- 34ஊரிற் பற்றுவிட்டான் என்பது. இது நீக்கம். மருவூரின் மேற்கு ; கருவூரின் கிழக்கு 35என்பது எல்லை. முயற்சியிற் பிறத்தலின் இசை நிலையாகாது என்பது 36ஏது. அன்ன பிறவும் என்பது 37எடுத்து ஓதின பொரூஉப் பொருளின் 38பாகுபாட்டினும் நீக்கப்பொருளின் 39பாகுபாட்டி னும் ஒழிந்தவற்றிற்கும், பிறபொருட் பாகுபாட்டிற்கும் புறனடை என உணர்க. (13) அடிக்குறிப்புகள் 75-1 எ “வேற்றுமை உணர்த்துதல்” 2 எi “ஐந்தாம் வேற்றுமைக் கண்” 3 i “இப்பொருளினு மிகுவித் தன்மைத்து” ii-எi-எii-எiii “இப்பொருளின் இத்தன்மைத்து” 75-4 ii-எi-எii “இனி ஐந்தாவது பொரூஉ” 5 i “பொருளை சிறப்புடைமையின்” 6 ii-எi-எii-எiii “ஓதப்பட்டது பொரூஉ” 7 ii “ஒன்று மிகுத்து” 8 “ர்” 9 ii-எi-எii “களம்பழம் என்றாற் போல்வன” i-iஎ “களாப்பழம் என்றாற் போல்வன” 10 எ “கூறிய வாறு உவம” 11 எ “உதாரணம் காக்கையை” 12 ii-எii “முதலியனவாய் உ-ம்” 75-13 எi “முதலியன இதனின் வட்டமிது” 14 ii-எi-எii-எiii “நீளம் என” 15 ii-எi “பலவாம் - இதனின்” 16 ii-எi “முதலாயின. இதனின் தீவிது இது என்பது. வெம்மை இதனின்” (வரி விடுபட்டது.) 17 i-iii-iஎ-எ “இதனின் நன்று” (“இது” என இச்சொற்றொடர் முடியவில்லை. இவ்வாறே “ஆக்கம்-இவனின் ஆயினான்” என்பது வரை இப்பிரதிகளில் “இது” என முடிதல் இல்லை.) 18 i “சிறுமை என்பது” 19 i-எi-எiii “இதனின் மூத்தான் இது” ii “இதனின் மூத்தது இது. இவனின் மூத்தோன் இவன்” எi “இதனின் மூத்தது இது” 75-20 ii-எi “இவனின் இளையோன் இவன்” 21 ii-எii “என்பது இதனினிளைது இது” “முதிது எனவரும்” 22 i “சிறந்தான் என்பது” எii “சிறந்தவன் இவன் என்பது” ii-எi “சிறந்தவன் இவன். இதனிற் சிறந்தது இது என்பன. 23 எiii “இழிந்தவன் இவன் என்பது” ii-எi-எii “இவனின் இழிந்தவன் இவன் இதனின் இழிந்தது இது என்பன” 24 i “இவனியனிற் புதியன் என்பது பழமை” ii-எi-எii “இவனிற் புதியன் இவன் பழமை” ii “இவனிற் புதிது இது என்பன . . . பழமை” 25 i-எ “இவனிற் பழையன் என்பது” ii-எi-எii “இவனிற் பழையன் இவன், இதனிற் பழையது இது என்பன” iii “இவனிற் . . . . . . என்பது” 26 ii-எi-எii “இவனின் ஆயினான்; வாணிகத்தின் ஆயினான் இவன் என்பன” iii “இவனின் . . . . . . . . . என்பது” 27 ii-எ “இவனின் இலன் இவன்” (இப்பிரதிகளில் மட்டுமே, இது முதல் “இவன்” அல்லது “இது” எனச் சில உதாரணச் - சொற்றொடர்கள் முடிகின்றன. பின்னர் இவற்றிலும் சில இடத்து அம்முடிபு இல்லை.) iii “இவனில் . . . . . . . . . என்பது” 75-28 ii-எi-எii “இவனின் உடையன் இவன்” iii “. . . . . . . . . . . . ந” 29 ii-எi-எii “இதனின் நாறும் இது” iii “. . . . . . . . . ” 30 i - எ “பொருள் திரிதல்” 31 ii-iஎ-எii “என்பது பன்மை” i-iஎ “என்பது . . . . . . பன்மை” 32 ii-எi-எii “பலர் இதனிற் பல இவை எள்பன” iii “. . . . . . . . .” 33 ii-எi-எii “சிலர் இதனிற் சில விவை என்பன. இவையும் பொரூஉப் பொருளனவாம்” iii “. . . . . . இவையும் பொரூஉ” 34 iii “ஊரிற் . . . . . . நீக்கம்” ii-எi-எii “ஊரிற் பற்றுவிட்டான் காமத்திற்பற்று விட்டான் என்பன நீக்கம்” 35 எi-எii “என்பன எல்லைப் பொருளனவாம்” ii “என்பன இவை எல்லைப் பொருளனவாம் அன்ன” 36 ii-எi-எii “ஏதுப் பொருளது அன்ன” 37 i “எடுத்தோதிர்த்ன பொரூஉ” 38 i “பாகுபாட்டிலும்” 39 i ³ 76. ஆறாகுவதே அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் “இதன திது” எனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே ; இயற்கையின் உடைமையின் முறைமையிற் கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையின் என்றா, கருவியிற் றுணையின் கலத்தின் முதலின் ஒருவழி 1உறுப்பின் குழுவின் என்றா, தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்து வேறு படூஉம் பிறவும்அன்ன கூறிய மருங்கின் 2தோன்றும் கிளவி 3ஆறன் பால என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே ஆறாம் வேற்றுமை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 4ஆறாம் எண்ணுமுறைமைக் கண்ணதாகிய அது என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல், தன்னொடு தொடர்ந்ததோர் பொருளையும் தன்னின் வேறாகியதோர் பொருளையும் இதனது இது என்று கிழமை செப்பி நிற்றலை இலக்கணமாக உடைத்து ; வருமாற்றைச் 5சொல்லின் இயற்கை என்பது முதலாகத் திரிந்து வேறுபடுதல் ஈறாக ஓதப்பட்ட பொருள் பாகுபாடுகளும் பிறவும், அத்தன்மை தன்னினும் 6பிறிதினும் என ஓதிய இருவகை இடத்துவரும் பாகுபாடுகளும் அவ்ஆறாம் வேற்றுமைக் கூற்றன என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. இதனதிது என்னும் கிளவி என்னாது அன்ன என்றதனான் அஃறிணை ஒருமை தோன்ற வரும் அது 7என்பதன்றி அஃறிணைப் பன்மை தோன்ற வருவதோர் அகரஉருபும் உண்டு என்று கொள்ளப்படும். அஃதேல் அவை அஃறிணை இருபாற்கும் உரிய 8உருபாயினவாறுபோல, உயர்திணை முப்பாற்கும் உரியஉருபு கூறாரோ 9எனின், அவ்வாறு வரும் வழக்கு இன்மையிற் கூறாராயினான்10 என்பது. நமன், நமள், நமர் என்பனவற்றுள் அன், அள், அர் என்பன உயர்திணை உருபு அன்றோ எனின், பிற உருபுபோலத் தொகுத்தலும் 11விரித்தலும் இன்மையானும், தற்கிழமையும் பிறிதின்கிழமையும் என்னும் இரண்டிடத்தும் வாராமையானும், மற்றைப் பெயரும் உருபும் ஆகக் கொள்ளாத ஆறாம் வேற்றுமைத் தொகைச் சொற்போல் இருபொருள் 12நிலைமைத்து ஒரு சொல்என எச்சவியலுள் கூறுகின்றார் என்பது. 13அஃதேல் உயர்திணைப் பொருட்கு உயர்திணைப் பொருளை உடைமை செப்புமாறு என்னை எனின், அதற்கு மேல் வருகின்ற ஓத்தினுள் அதுஎன் வேற்றுமை என்புழிக் கூறுவன் என்பது. தன்னினும் 14என்புழித் தற்கிழமை ஐந்து 15வகைப்படும்; ஒன்று - பலகுழீஇய தற்கிழமையும், வேறுபல குழீஇய தற்கிழமையும், ஒன்றியற்கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாகிய தற்கிழமையும் 16என. பிறிதின் கிழமை இது போலப் பகுதிப் 17படாது என்க. ஒன்று பல குழீஇயது 18எட்குப்பை, எண்ணினது குப்பை என்றவாறு, வேறு பல குழீஇயது :- படைக்குழாம் ; ஒன்றியற்கிழமை :- 19நிலத்ததகலம் ; உறுப்பின் கிழமை :- 20யானைக் கோடு ; மெய்திரிந்தாகியது :- எட்சாந்து ; பிறிதின் கிழமை :- சாத்தனது 21தோட்டம் என வரும். இனி அவ்இருகிழமையும் ஒட்டுமாறு:- இயற்கை :- சாத்தனதியற்கை. இது 22தற்கிழமையுள் ஒன்றியற்கிழமை. உடைமை :- சாத்தனதுடமை. இது பிறிதின்கிழமை; தற்கிழமையும் படும்போலும். முறைமை :- ஆவினது கன்று ; இது பிறிதின் கிழமை. கிழமை :- சாத்தனது கிழமை ; செயற்கை :- சாத்தனது செயற்கை; இவ்இரண்டும் தற்கிழமை ; ஆகுபெயராயவழிப் பிறிதின் கிழமையும் ஆம். முதுமை :- அவனது முதுமை. இது தற்கிழமை. வினை - சாத்தனது வினை ; இதுவும் ஆகுபெயராயவழிப் பிறிதின் கிழமையும் ஆம். கருவி - சாத்தனது வாள்; இது பிறிதின் கிழமை. துணை - சாத்தனது துணை; இதுவும் அது. கலம் - சாத்தனது கலம்; கலம் என்பதனை ஒற்றிக் கலத்தின் மேற்கொள்க. பிறகலத்தின்மேற் கொள்ளாமைக்குக் காரணம் என்னை எனின், இஃதொரு பொருள் 23இருவர்க்குடைமையாக நிற்கும்; 24வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையிற் கோடல். இதுவும் அது. முதல் - சாத்தனது முதல் ; இத்தோட்டம் என 25ஓர்க. இதுவும் ஓர்உடைமை வேறுபாடு எனக் கொள்க. இதுவும் அது. ஒருவழி உறுப்பு - 26யானைக் கோடு: “உறுப்பு” என்னாது “ஒரு வழி உறுப்பு” என்றது, ஓருறுப்பினையுடைமையாகக் கருதாது பலவற்றையும் கருதி உரிமையாகாதப் பொருள் தானாம் என்பது போலும். இது தற்கிழமையுள் 27உறுப்பின் தற்கிழமை. 28குழுவு :- படைக்குழாம், எட்குப்பை, இது தற்கிழமையுள் ஒன்று பலகுழீஇயதூஉம் வேறுபல 29குழீஇயதூஉம் . குழுவென உடனோக்கிற்று. 30தெரிந்துமொழிச் செய்தி :- கபிலரது பாட்டு. இதுவும் பாரியது பாட்டு எனவும் நிற்றலின் இரு பொருட்கு உரிமையாம். கபிலரது என்புழி 31மெய்திரிந்தாகியதன் பாற்படும். பாரியது என நிற்புழிப் பிறிதின் கிழமையாம். நிலை - 32பெண்ணாடகத்துப் பெருஞ் சங்கரனாரது நிலை. இஃது 33ஒன்றியற்கிழமை. வாழ்ச்சி - சாத்தனது வாழ்ச்சி; இது வாழ்தல் என்னும் தொழில் கருதினவழித் தற்கிழமை ; வாழுமிடம் கருதியவழிப் பிறிதின் 34கிழமை. திரிந்து வேறுபடுவன :- எட்சாந்து, கோட்டு நூறு என்பன. சாத்தனது சொல் 35என்பதும் பிறவும் ஒரு பொருள் முழுவதூஉம் திரியாதன. பரணரது பாட்டியல் என்றாற் 36போல வருவன எல்லாம் உதாரண வாய்பாடாக எடுத்தோதாது திரிந்து வேறுபடும் எனப் பொதுப்பட ஒரு பொருண்மையாக எடுத்து ஓதினமையிற் கொள்ளப்படும். பிறவும் என்றதனாற் சாத்தனது வனப்பு, சாத்தனது ஆண்மை, சாத்தனது நடை, சாத்தனது புத்தகம் என வரும். பிறவும் அன்ன. (14). அடிக்குறிப்புகள் 76-1 i “யுருப்பிற்” 2 i “றோங்குங் கிளவி” 3 i “யால்தன் பால” 4 i “ஆறாமெண்ணு மெண்ணு முறைமைக் கண்” (“ஆறாம் என்னும்” போலும்.) 5 எ “சொல்லில் இயற்கை” 6 i-ii-எii “பிறிதெனும்” 76-7 i-iஎ-எ-எi-எii “என்பதன் அஃறிணை” ii “என்பதன் ஆது என்பதும் அஃறிணை” 8 i-ii-iஎ-எ-எi “உருபாயின் அவ்வாறு போல” (ன் - ன மாறாட்டம்.) 9 i “எனினின்” 10 - “ர்” 11 i “விரித்தலுந்” 12 i “நிலமைத்து” 13 iஎ “அஃதேல் அஃறிணைப் பொருட்கு உயர்திணைப்பொருளை உரிமை செப்பு” எi-எiii “உயர்திணைப் பொருளை உரிமை செப்பு” 14 எi “என்புழிக்கிழமை ஐந்து என்று” 15 i-ii “வகைப்படும் அவை” 16 iஎ “என்ப பிறிதின்கிழமை” (“எனப் பிறிதின்கிழமை” எனக் கொண்டது போலும்) 76-17 ii-எi-எii “பது என்க ஒன்று” (i-ல் ‘என்க’ என்பது பிற்சேர்க்கை). 18 i “எட்குவி” iii-iஎ-எ “எட்குப்பலி” 19 i “நிலத்தகலம். உறுப்பின்கிழமை” (உருபின்றியும் எடுத்துக் காட்டுதல் வருகின்றன) ii-எi “நிலத்ததகலம் சாத்தனதியற்கை உறுப்பின்கிழமை” 20 i “யானை கோடு” i-எi “யானையது கோடு” ii-எi-எii “யானையது கோடு புலியது உகிர்” 21 எ “தோட்டம். இனி” 22 எi “நார்கிழமையுள் ஒன்றிய தற்கிழமை” 76-23 “இவர்க்குடைமையாக” 24 (‘வேறுபாட்ட தாகலின்” என்பது போலும்) 25 i “ஒர்க்க” 26 i-ii-எi-எii-எiii “யானையது கோடு” 27 iii-எiii “உறுப்பின் கிழமை” 28 ii-எi-எii “குழவு, எட்குப்பை, படைக்குழாம் என்பன இவை தற்கிழமையுள்” 29 ii-எi-எii “குழீஇதூஉம் ஆம். குழு என்பது உடல் நோக்கிற்று” 30 i-iஎ-எ-எiii “திரிந்த மொழிச் செய்தி” 31 எ “மெய்திரிந்தாகிய தற்கிழமைப் பாற்படும்” 76-32 எi “பெண்ணாகத்து” 33 எi “ஒன்றியதற்கிழமை” 34 ii-எi-எii “கிழமையாம்” 35 i-எ “என்பது பிறவும் திரிந்து” 36 i-எ “போல்வன வருவன” 77. ஏழாகுவதே கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தின் நிலத்திற் காலத்தின் அனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே ; கண்கால் புறம்அகம் உள்ளுழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே ஏழாம் வேற்றுமை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஏழாம் எண்ணுமுறைக்கண்ணதாகிய கண் என்னும் 1பெயரையுடைய வேற்றுமைச் 2சொல் வினைசெய் இடமும், நிலமும், காலமும் ஆகிய மூன்று பொருட்கண்ணும் வரும். அதன் உருபு வரும் 3பாகுபாட்டினைச் சொல்லின், கண் என்னும் உருபு முதலாய்ப் புடை என்னும் உருபு ஈறாக ஓதப்பட்ட உருபுகளும், இடையே 4தேவகை என ஓதிய திசைக்கூற்றுப் பொருண்மையும், பின்னரும் முன் என்னும் உருபு முதலாக இடம் என்னும் உருபு ஈறாக எடுத்து ஓதப்பட்ட உருபுகளும், அத்தன்மைய பிற உருபுகளும் அவ்ஏழாவதன் 5கூற்றன என்றவாறு. வினை செய்இடம் 6 ஒரு தொழில் நிகழும்இடம். 7நிலம் - ஒரு தொழில் நிகழாது வரையறை யுடையதோர் இடம். காலம் என்பது ஒரு தொழில் நிகழ்தற்கு இடமாய் வரையறைப்பட்டு நிற்பது. இம் மூன்றன்கண்ணும் ஏழாவது வரும் இடத்து இடமும் இடத்து நிகழ்பொருளும் வேறுபட 8வருவனவும் வேறுபடாமல் வருவனவும் என இருவகைய. (உ-ம்.) வினைசெய் இடம் :- தட்டுப்புடையுள் வந்தான் ; தட்டுப் புடையுள் வலியுண்டு. நிலம் :- 9குன்றத்துக்கண் கூகை ; குன்றத்துக்கண் குவடு ; ஆகாயத்துக்கண் பருந்து. காலம் :- மாரிக்கண் வந்தான், மாரிக்கண் நாள் என வரும். 10கண் என்பது :- ஊர்க்கண் இருந்தான். கால் :- ஊர்க்கால் 11இருந்தான். புறம் :- ஊர்ப்புறத்திருந்தான். அகம் :- 12மாடத்தினகத்திருந்தான். உள் :- ஊருள் இருந்தான். உழை :- சான்றோருழைச் சென்றான். கீழ் :- மாடத்துக் கீழிருந்தான். மேல் :- மாடத்து மேலிருந்தான். பின் :- ஏர்ப்பின் சென்றான். சார் :- 13காட்டுச்சார் ஓடும் களிறு. அயல் :- ஊரயல் இருந்தான். புடை :- ஊர்ப்புடை இருந்தான். இவையெல்லாம் உருபு. 14தே, வகை என்பன 15திசைக்கூறு;. இது பொருள். திசை என்பது ஆகாயம்போல் வரையறைப்படாது சொல்லுவான் குறிப்பினவாய் நிற்றலின் வேறுபொருள் 16என்று, நிலம் என்புழி அடக்காது, கொண்டு போந்து கூறினான் 17போலும். வடக்கண் வேங்கடம், தெண்கட் குமரி எனவரும். முன் :- தேர் முன் சென்றான். இடை :- சான்றோர் இடை இருந்தான். கடை :- கோயிற்கடைச் சென்றான். தலை :- தந்தைதலைச் சென்றான். வலம் :- கைவலத்து 18உள்ளது கொடுக்கும். இடம் :- 19கையிடத்து இருந்தான். பிறவும் என்றதனால், 20கிழவோடேத்து கிழவோன்மாட்டு என்றாற் போல்வன கொள்க. ஏனை வேற்றுமைபோலப் பொருட் பாகுபாடன்றி உருபின் பாகுபாடு உண்மையின் அதனை விரித்து ஓதினான் 21எனக் கொள்க. ஓதின உருபுகள் எல்லாவற்றினும் கண் என்னும் உருபு சிறந்தமையின் முன்வைத்தது என்பது. மற்றும், புறம் அகம் என்பன போல்வன எல்லாம் பெயராய், ஆறாவதன் பொருண்மையாய் வருகின்றமையின், ஏழனுருபு ஆமாறு என்னை எனின், அகம் புறம் 22என்பன ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதாம். அவ்வாறு அன்றிக் கண் என்பது போல இடம் என முழுதுணர்வு செல நின்றவழி ஏழாவதாம் எனக் கொள்க. இது நோக்கிப்போலும் கண் கால் எனக் கண் என்பதனை இருகாலாவது கூறியது என்பது. இவ்வாறு அன்றிக் கண் என்பது ஓர் இடத்தினை வரையறாது முழுவதும் உணர நிற்கும் உருபு 23என்றும் அல்லன 24ஓர் இடங்களையும் வரையறுத்துக் கொண்டு இடப்பொருள் உணர்த்தி நிற்கும் உருபு எனவும் கூறுவது ஓர் நயம் உண்டுபோலும். (15) அடிக்குறிப்புகள் 77-1 i-எ “பெயருடைய” 2 i-iii “சொல்லினை செய் இடமும்” (ல - வ மாறாட்டம்.) 3 ii-எi “பாகுபாட்டைச் சொல்லின்” 4 iஎ “தெவ்வகை என” i “தேவ வகை என” 5 i “கூற்றன என்பர் புலவர் என்றவாறு” 6 எi “வினை செய்யா நிற்றலாகிய இடம்” 7 எi “வினைசெய் நிலம் = ஒரு தொழில்” 8 i “வரவனவும்” ii “வரூவனவும்” 9 i “குன்றத்துக்குட் கூகை” எi-எiii “குன்றத்துக் கூகை” 77-10 எi “கண்; ஊர்க்கண்” 11 எi “இருந்தான். அகம்” 12 ii-எi-எii “மாடத்தகத் திருந்தான்” iஎ “. . . . . . . . . . . .” 13 i-எ-எiii “காட்டுச் சாரோடு . . . . . . அயல” 14 iஎ “தெவ்வகை” 15 எi “திசைக் கூற்று” 16 ii “என்னு நிலம்” 17 - “ர்” 77-18 i-எ “உள்ளது. இடம்” 19 ii-எi “கையிடத்துப் பொருள் என வரும். பிறவும்” 20 ii “கிழவோரிடத்துக் கிழவிமாட்டு” iஎ “கிழவோடத்து கிழவின்னமாட்டு” i-எiii “கிழவோடேத்து கிழவின்னமாட்டு” எi “கிழவோள் தேத்து கிழவிமாட்டு” 21 - “ர்” 22 எ “என ஓரிடத்தினை” 23 ii-எi “எனவும்” 24 எi-எiii “ஓரிடப் பொருள் உணர்த்தி நிற்கும் உருபு” 78. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்று நின்றியலும் தொகைவயிற் 1பிரிந்தே. என்பது என்நுதலிற்றோ எனின், ஐம்முதலிய ஆறு உருபிற்கும் பொதுவாய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- வேற்றுமைச் சொல்லினது பொருளை விரித்து உணர்த்தும் காலத்து அவ்வேற்றுமைப் பொருள்கள் பெயரது ஈற்றின் கண்ணே நின்று நடக்கும், தொக்க விடத்து 2நின்று நீங்கி என்றவாறு. (உ-ம்.) மரங் குறைத்தான் என்பது மரத்தைக் குறைத்தான் என இறுதிக்கண் விரிந்து நின்றது. தாய் மூவர் என்பது தாயொடு மூவர் என விரிந்தது. பிறவும் அன்ன. இது “கூறிய முறையின்” 3என்றதனால் அடங்காதோ எனின், அஃது உருபுநிற்கும் இடம் கூறியது; அங்ஙனம் நின்ற உருபு விகாரப்பட்டுத், தொக்கு நின்று பின் விரியும் வழியும் பிறாண்டு விரியாது, 4முன் கூறிய ஈற்றின்கண்ணே விரியும் என முற்கூறிய அதனையே திரிபுபடுவழிக் கூறியது எனக் கொள்க. (16) அடிக்குறிப்புகள் 78-1 i “பிரிந்துதே” 2 i-ii-iஎ-எ-எi-எii “நின்று என்றவாறு” 3 i - “என்றதனால் அது அடங்காதோ” 4 எi “முன்கூறிய அதனையே திரிபுபடுவழிக் கூறியது எனக் கொள்க” (ஒருவரி விடுபட்டது. முன் வரும் “முன் கூறிய” என்பதோடு பின்வரும் “முன் கூறிய” என்பதனை மயங்கக் கொண்டமை காணலாம்.) 79. பல்லாறாகப் பொருள் புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லு முரிய என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், உருபு நோக்கிவரும் சொற்களதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- பல நெறியாக அவ் வவ் வேற்றுமையின் பொருளோடு பொருந்தி ஒலிக்கும் எவ்வகைப்பட்ட சொல்லும் வேற்றுமை போலப் பிரியாது இறுதிக்கண் விரிந்து நிற்றற்கு உரிய என்றவாறு. விரித்தற்கு உரிய என்பது, முன் நின்ற அதிகாரத்தாற் கொள்க. இனித் தொகுத்தலும் உரிய என்பது 1ஒன்றென முடித்தல் என்பதனான் கொள்க. (உ-ம்.) படைக்கை என்பது படையினைப் பிடித்த கை என விரிந்தது. குதிரைத் தேர் என்பது குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என விரிந்தது. பிறவும் அன்ன. ஆறாவதற்குப் பொருள் விரிதல் இல்லை. உருபுகள் தொகுத்தலும் விரிதலும் கூறியவழியே அவ்வுருபு நோக்கி வரும் சொற்கள் தொகுத்தலும் விரித்தலும் அடங்குமால் எனின், அவ்உருபு தொக்குழித் தொக்கும், விரிந்துழி விரிந்தும் நிற்றல் 2ஒருதலையன்மையின், அதற்கும் வேறு கூறவேண்டும் என்பது. மரங் குறைத்தான், 3குழையுடையன்; உருபு தொக்குழித் தொகாதாயிற்று எனக் 4கொள்க. (17) அடிக்குறிப்புகள் 79-1 ii “ஒன்றின முடித்தல்” 2 ii-எii “ஒருதலை யின்மையின்” 3 ii “குழையுடையன் என இவை உருபு” 4 ii “கொள்க, இரண்டாவது வேற்றுமை இயல் முற்றும்” எi “கொள்க, வேற்றுமை இயல் முற்றும்” iii-எiii “கொள்க, முற்றிற்று” இரண்டாவது - வேற்றுமை இயன் முற்றும் வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனால் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் “யாதனுருபிற் கூறிற்றாயினும்” என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினாரென்றுங் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 35-ஆக இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 34-ஆகச் சேனாவரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’ (1) என்பது முதல் ‘அச்சக் கிளவிக்கு’ (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி ‘அன்னபிறவும்’ (18) என்பதனால் அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட ‘காப்பின் ஒப்பின்’ எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது தூணைச்சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல்காப்பியனார் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனாகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற்றுமைப் பொருளிற் சென்று மயங்குதல் ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபினாற் சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற் கேற்பப் பொருளை மாற்றாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், ‘யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும்’ என்றார் ஆசிரியர், வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்றால் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ஙனம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினால் முடிதலேயன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின்கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதியிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமேயன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபுகள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனையுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச் சொல்லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச்சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்றார். வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் எனவரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென்னும் இன்றியமையாமை யில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத்தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலை களைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர்தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்றொரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளை யுணர்த்தின் அவையும் ஆகுபெயரேயாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படுமென்பது நன்கு புலனாம். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளைவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளை யுணர்த்துதலும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்றான் தொடர்புடையவேறொரு பொருளையுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினையுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர்களெல்லாம் நின்றாங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொருளோடு தொடர்புடைய வேறொரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ஙனம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர்களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்றார் தொல்காப்பியனார். இங்ஙனம் ஆசிரியர் கூறியதனையுளங் கொண்டு “இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க” என நச்சினார்க்கினியரும், “முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப்பொருள் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப்பொருள் மயக்கம்” எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத்தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமைகருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்ட தென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட் டென்பதற்குப் ‘பொற்றொடி’ யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேனாவரையர் இருபெயரொட் டென்பதற்கு “அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு” எனப்பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலுளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்றாயடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். ‘பொற்றொடி’ யென்பது அன்மொழித் தொகையாவதன்றி ஆகுபெயராகாதெனக்கண்டுணர்ந்த நச்சினர்க்கினியர் இருபெயரொட்டென்பதற்கு ‘அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு’ எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினார். மக்கள்+சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ஙனம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட்டென்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென்பாருமுளர். இனி ‘பொற்றொடி’ என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டுமல்லாத மற்றொரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்றோம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்றொடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, ‘இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது’ எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளை யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங்காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டுவரும் என்றும் அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினார். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனாவரையர் காட்டிய பொற்றொடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாளை யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணிதற்கில்லை. ஆகுபெய ரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும் சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெற்றாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 197-202 மூன்றாவது வேற்றுமை 1மயங்கியல் 80. கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையும் உடைத்தே கண்ணென் 2வேற்றுமை. என்பது சூத்திரம். 2இனி, இவ்ஓத்து என்ன பெயர்த்தோ எனின், உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி உருபே மயங்குதலும், ஒன்றற்கு உரியதனோடு ஒன்று 3மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றோடு 4மயங்குதலும், ஓர் உருபு ஓர் உருபோடு மயங்குதலும், ஓர் உருபு பல உருபோடு மயங்குதலும், 5ஒன்றனது ஒரு பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்கு உரிமை பூண்டு எடுத்து ஓதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்று தன் 6மரபாய் மயங்குதலும். இலக்கண வழக்கு உள்வழி மயங்குதலும், இலக்கணம் இல்வழி மயங்குதலும், மயக்க வகையான் 7மயங்குதலும், சொல்லுதல் 8வகை யான் மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடிந்து தொடர்ந்து 9அடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடியாது தொடர்ந்து அடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையாய் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும், என்று இன்னோரன்ன 10பல மயக்கங்கூறலின், வேற்றுமை மயங்கியல் என்11னும் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே இரண்டாவது அதிகாரத்தானே நின்ற ஏழாவதனோடும் மயங்கு மாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- கருமச் 12சார்ச்சி அல்லாத சார்தல் என்னும் பொருண்மைக்கு உரித்தாதலை உடைத்துக் கண் என்னும் வாய்பாட்ட தாகிய ஏழாம் வேற்றுமை என்றவாறு. (உ-ம்.) அரசரைச் சார்ந்தார் ; அரசர்கண் சார்ந்தான் என வரும். கருமச் சார்ச்சிக்கண் அரசர்கண் சார்ந்தார் எனின், 13அரசர் இடமாக, 14சாரப்பட்டது பிறிதாவான் 15சேறலின் கருமம் அல்லாச் சார்பு என்று ஓதப்பட்டது. (1) அடிக்குறிப்புகள் 80-1 i “மூன்றாவது வேற்றுமை மயங்கும் இயல்” எi “3 வேற்றுமை மயங்கியல்” 2 i-ii-எii “வேற்றுமை இனி, இவ்வோத்து” iii-எ “வேற்றுமை இவ்வோத்து” 3 எ “மயங்குதலும் ஒரு பொருண்மை ஒன்றற்கே” (விடுபட்டுள்ளது.) 4 i-ii-iஎ-எ-எii “மயங்குதலும் ஒரு உருபு பலவுருபோடு” (விடுபட்டுள்ளது) எi “மயங்குதலும் ஒன்றதனொரு பொருளோடு” (விடுபட்டுள்ளது) 5 i-ii-iஎ-எii “ஒன்றென ஒரு பொருளோடு” iii-எ “என்றன் ஒரு பொருளோடு” 6 i “மரபா மயங்குதலும்” 7 iஎ-எi “மயங்குதலும் ஒன்றனோடு பொருள் முடிந்து” 8 i “வகையால்” 80-9 i “அடுக்கிய மயங்குதலும்” 10 எ “மயக்கங் கூறலின் வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று” ii-iii-எii-எiii “பல மயக்கங் கூறலின் வேற்றுமை மயக்கங் கூறலின் வேற்றுமை மயங்கியல்” எi “வேற்றுமை பல மயக்கங் கூறலின் வேற்றுமை மயங்கியல்” 11 ii “என்றும்” 12 i “ச இராசி” 13 ii “அரசரிடமாகச் சாரப்பட்டது” (விளங்குதற் பொருட்டு ச் உள்ள இடத்தில் காற்புள்ளி இடப்பெற்றுள்ளது) 14 iஎ “சாரப்பட்டது” என இச்சூத்திர உரை முடிகிறது (ஒரு வரி விடப்பட்டுள்ளது) 15 iii “செறலிற் கரும” எi “செல்லின் கரும” ii “சொலிற் கரும” i-எiii “சேரலிற் கரும” 81. சினைநிலைக் 1கிளவிக் கையும் கண்ணும் வினைநிலை யொக்கும் என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அவ் இரண்டன் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- சினையாகிய நிலைமையையுடைய பொருண்மைக்கு இரண்டாவதும் ஏழாவதும் அதன் 2வினை கூறு நிலைமைக்கண் ஒத்த பொருள என்று 3சொல்லுவர் புலவர் என்றவாறு. 4(உ-ம்.) கண்ணைக் குத்தினான், 5கண்ணுட் குத்தினான் என வரும். சினைக்கண் இவ் இரண்டும் வரும் என்றது என்னை? பிறவும் வருமால் எனின், முன் இடப்பொருட்கண் வரும் என்ற ஏழாவது, மற்றோர் வேற்றுமையொடு தொடர்ந்து கூறும்வழிச் செயப்படு பொருட்கண் வருதலும் கண்டு அது கூறியவாறு எனக் கொள்க. தொடர்ந்து கூறும் வழியாமாறு உணரச் சொல்லுகின்றார். வினைநிலை என்றது இரண்டாவதற்கு ஓதிய வினை, வினைக் குறிப்பு என உணர்க. (2) அடிக்குறிப்புகள் 81-1 i “கிளைக்கை” 2 i-ii-iஎ-எi-எiii “நினைக்கூறு” (‘வினையைக்கூறு’ என்றிருக்கலாம்) 3 எi “கூறுவர் புலவர்” 4 i “கண்ணை” 5 ii-எi “கண்ணின்கட் குத்தினான்” 6 i “பிரவும்” 7 எi “தொடர்ந்து” (தொடர்த்து என்பதும் வழக்குப் போலும்) 8 எi “தொடர்ந்து” 9 “ர்” 82. கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் அவ் இரண்டன் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறிய இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் கன்றல் என்னும் பொருண்மையும், 1செலவு என்னும் பொருண்மையும் பொருந்திவரும் அவ்வுருபுகளது வினை கூறும் இடத்து என்றவாறு. (உ-ம்.) சூதினைக் கன்றினான், சூதின்கண் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கண் சென்றான் என வரும். (3) அடிக்குறிப்பு 82-1 iii “சொல்லென்னும்” 83. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை 1வருமே. என்பது என்நுதலிற்றோ எனின், வேற்றுமைக்கண்ண தோர் சொல்லுதல் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. மேற்கூறிய சினைநிலைக் கிளவி என்பதற்குப் புறனடை எனினும் அமையும். 2முதற் பொருட்கும் முதலோடு தொடர்ந்த சினைப் பொருட்கும் உருபுகள் 3வருமாறு கூறினானாம். 5இதன் பொருள்:- அது என் வேற்றுமை முதற்கண் வரின் அதன் சினைக்கு இரண்டாம் வேற்றுமை வரும் என்றவாறு. (உ-ம்.) யானையது கோட்டைக் குறைத்தான்; சாத்தனது கண்ணைக் குத்தினான் என வரும். (4) அடிக்குறிப்புகள் 83-1 i “வரும்” 2 i-ii-iஎ-எii “இ--ள்” 3 i-ii-iஎ-எii “வருவாமாறு” எi-எiii “வருமாமாறு” 4 “ரா” 5 i-ii-iஎ-எ-எii “அது என் வேற்றுமை” 84. முதன்முன் ஐவரிற் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளி தென்ப. என்பது என்நுதலிற்றோ எனின், இதற்கும் அக்கருத்து 1ஒக்கும். இதன் பொருள்:- முதற்கண்ணே இரண்டாம் வேற்றுமை வரின் ஏழாம் வேற்றுமை சினைக்கண்ணே வருதல் விளங்கிற்று என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. 2(உ-ம்.) யானையைக் கோட்டின்கண் குறைத்தான்; சாத்தனைக் 3கண்ணுள் 4குத்தினான் என வரும். தெள்ளிது என்றதனான் சிறுபான்மை இரண்டாவது தானேயும் வரப்பெறும். 5யானையைக் கோட்டைக் குறைத்தான்; சாத்தனைக் கண்ணைக் குத்தினான் எனக் கொள்க. இவற்றுள் முதல் சினைப்பொருட்குக் கண்ணுருபினைத் 6தொடர்ந்துக் கூறும்வழி இரண்டாவதனோடு ஒப்பச் செயப்படு பொருட்கண் ஏழாவது வந்தவாறு கண்டுகொள்க. 7தெள்ளிது என்றதனால் முதற் சினைப் பொருட்கண்ணே அன்றிப் பிற பொருட் கண்ணும் இவ்வுருபுகளை இவ்வாறு கொடுத்துச் சொல்லுதல் கொள்ளப்படும் எனக் கொள்க. மணியது நிறத்தைக் 8கெடுத்தான் ; மணியை நிறத்தின்கண் கெடுத்தான் ; மணியை நிறத்தைக் கெடுத்தான். இது பண்பு. தலை மகனது செலவை அழுங்குவித்தல் ; தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல் ; தலைமகனைச் செலவை அழுங்குவித்தல். இது தொழில். பிறவும் அன்ன. இவ்வாறு மூன்று மூன்று உருபு 9வாராது, ஒரு பொருளது இரண்டாவதன் தொடர்ச்சிபற்றி இரண்டாவதுதானே வருவனவும் கொள்க. (உ-ம்.) சாத்தனை நூலை ஓதுவித்தல் ; யாற்றை நீரை விலக்கினான், என்பன போல்வன. பிறவும் அன்ன. (5) அடிக்குறிப்புகள் 84-1 ii “ஒக்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று” 2 ii “உதாஹரணம் வருமாறு யானையை” i-iii-iஎ “யானையை” 3 ii-எi “கண்ணின் கண்” 4 ii “குத்தினான் என தெள்ளிது” 5 ii-எi “அஃது யானையை” 6 எi “தொடர்ந்து கூறும்” 7 எi (இப்பத்தி இல்லை) 8 எi “கெடுத்தான் மணியை நிறத்தைக் கெடுத்தான்” iஎ “கெடுத்தான் இது பண்பு” 9 i “வராது” 85. முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. என்பது என்நுதலிற்றோ எனின், முதல் சினை என்னும் பொருண்மை அதிகாரப்பட்டமை 1கண்டு அப்பொருளை ஆராய்தல் நுதலிற்று. இதன் பொருள்:- முதல் என்றும் சினை 2என்றும் சொல்லப்படுகின்ற பொருள்கள் இது முதல் இது சினை எனத் தம்மின் வேறுபட நில்லாது, ஒருவன் சொல்லும்காலத்து அவன் சொல்லும் கருத்தின்கண் இது முதல் இது சினை என வேறுபாடு உணர நிற்கும் என்றவாறு. (உ-ம்.) கோட்டது நுனியைக் குறைத்தான்; கோட்டை நுனிக்கண் குறைத்தான் ; கோட்டை நுனியைக் குறைத்தான். இது சினை முதலாய் வந்தவாறு. படை என்பதனை முதலாகப் பார்க்கும் வழிப் 3படையின் யானை என சினையாயே நிற்கும் என்பது. (6) அடிக்குறிப்புகள் 85-1 i “கண்ட பொருளை” 2 ii “என்னும்” 3 ii “படையினது யானை என” எi “படையினது யானை என சினையேபோலே நிற்கும்” 86. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியன் மருங்கின் மரீஇய 1பண்பே. என்பது என்நுதலிற்றோ எனின், மேலதன்முடிபு முதலுடையது பிறிதும் உண்டு என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- திரட்சி என்னும் பொருளினை உணர நின்ற பெயர்களும் மேற்கூறிய சினை முதல்களது 2இயற்பின் திரியா. அவை கோடற்குக் காரணம் என்னை எனின், முற்காலத்து நடந்த 3கூற்று ஏதுவாகப் பிற்காலத்து நடந்து 4மருவின முறைமை 5உடையன அவை ஆகலான் என்றவாறு. 6ஆயியல் திரியா என்றது மேல்7சினையே முதலாய் முதல் சினையாய் வந்தவாறு போலப் 8பிண்டமே அப்பொருளாய் அப் பொருளே பிண்டமாய் வரும் 9என்றவாறு அன்றிப் பொருள் 10நிலைமை சொல்லுவான் 11குறிப்பினவாறுஆயினவாறுபோலப் பொருளின் வேறு பிண்டம் என்பது ஒன்று உளதாகல், 12அச் சொல்லுவான் குறிப்பின் பாலது என்றவாறு. (உ-ம்.) அப்பிண்டம்தான் ஒன்றுபல குழீஇயதும், வேறுபல குழீஇயதும் 13ஆக இருவகைத்து. ஒன்றுபல குழீஇயது:- 14எட்குப்பை. எண்ணின் வேறு குப்பை என்று உண்மை வகையின் இல்லை என்றவாறு. வேறு பல குழீஇயது:- படைக்குழாம். முதல் சினை எனவும், பொருள் பிண்டம் எனவும் இவை ஆராய நின்றமையின் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றம் ஆம் பிறஎனின், அதற்கு ஓர் அதிகாரப்பட்டு நின்றது ஆகலானும், பொருள் ஆராய்ச்சியும் 15இச்சொல் ஆராய்ச்சிக்குப் பயன்படு நிலைமைத்து 16ஆகலானும் அமையும் என்பது. (7) அடிக்குறிப்புகள் 86-1 ii-எi “மரபே” 86-2 i “இயல்பின் திரியாது அவை” (‘இயற்பிற்’ என்பது காணாவழக்கு) எi “இயல்பில் அவை” 3 எ “கூற்று அதுவாக” 4 i “மருவினை” (னை-ன எனத் திருத்தப்பெற்றுள்ளது) எi “மருவின்” 5 i-ii-iஎ-எ-எii “உடைமை அவை” 6 i “ஆயியரியாது” 7 எi “சினைமுதலாய்” 8 எi “பிண்டமே பொருளாய்” 9 எi “என்றவாறு. அன்றி” 10 i “ணிலமைச் சொல்லுவான்” 11 i “குறிப்பினவாறாயின வ்வாறு” எi “குறிப்பினவாறாயின் அவ்வாறு” 12 iii “சொல்லுவான் குறிப்பின்” 13 எi “ஆம், ஒன்று பல” 86-14 எi “எள் குப்பை. எள்ளின் வேறு” 15 எi “இப் பொருளாராய்ச்சிக்கு” (முன்சென்ற “பொருளாராய்ச்சி” என்பதனைத் திரும்பவும் எழுதி ஒரு தொடரை விட்டபடியாம்) 16 i “ஆகலானு மும்மமையுமென்பது” 87. ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே. என்பது என்நுதலிற்றோ எனின், மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண்ணதோர் சொல்லுதல் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒருவினை கொண்டு முடிதலுடைய ஒடு என்னும் சொல், அவ் இருவினையையுடைய இரு பொருளினு மாய் அதன்பின் வருமோ எனின், அது கூறுவான் அப்பொருளின் அப்பொழுது 1உயர்ந்ததாகக் கருதியதன் பின்வரும் என்றவாறு. (உ-ம்.) அரசரொடு வந்தார் சேவகர் 2என்பது; சேவகரொடு வந்தார் அரசர் 3என்னற்க. இனி அவ்உயர்புதாம் குலத்தா4ன் உயர்தலும், தவத்தான் உயர்தலும், நிலைமையான் உயர்தலும், உபகாரத்தான் உயர்தலும் எனப் பலவகைய. 5இழிந்தவழி ஒடு வைத்துச் சொல்லுவது, அந்நேரத்து அவற்றாய தொழின்மைச் சிறப்பு நோக்கி என உணர்க. அவை : நம்பி நாயொடு வந்தான் என்றாற் போல்வன. (8) அடிக்குறிப்புகள் 87-1 i “உயர்ந்தாகக் கருதிய ராத்தன் பின்” எ “உயர்ந்ததாகக் கருதியது யாது அதன் பின்” 2 எi “என்பதைச் சேகவ ரொடு” 3 i-ii-iஎ-எii “என்றற்க” 4 i “லு” 87-5 i “இழந்த வழி” 6 ii “(இந்தச் சூத்திரத்தின் முடிவில் முதற்பிரதியைப் பார்த்து இரண்டாம் பிரதியைப்படி செய்தவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.) “இனி, முன்னர் போல அத்துணைத் திருத்தஞ் செய்தெழுதாமல் மூலப்பிரதி (மாதுருகை) யிலுள்ளபடியே எழுதலானேன்.” 88. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கோ ரனைய என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், மூன்றாம் வேற்றுமையும், ஐந்தாம் வேற்றுமையும் ஏதுப் பொருண்மைக்கு ஒத்த கிழமைய என்பது உணர்த்துதல் 1நுதலிற்று. இதன் பொருள்:- 2மூன்றாவதன் ஆனும் 3ஐந்தாவதன் இன்னும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கப்பொருண்மையொடு 4கூடிப் பொருந்திய ஏது என்னும் 5பொருண்மைய. அவ்வுருபுகளான் அப்பொருள் 6விளங்குமிடத்துப் பெரும் பான்மை உள என்று ஆராயுமிடத்து அஃதில்லை. இரண்டும் ஒருதன்மைய என்றவாறு. (உ-ம்.) வாணிகத்தானாயினான் ; 7வாணிகத்தின் 8ஆயினான். கிளவி 9என்றது ஆகுபெயரான் பொருளினை ஆக்கமொடு புணர்ந்தது என்று விசேடித்துக் கூறினமையின், ஆக்கமல்லா ஏது ஒத்தகிழமைத்து அன்று என்பதுபோலும் கருத்து. (9) அடிக்குறிப்புகள் 88-1 ii “நுதலிற்று என்க” 2 i-ii-iஎ-எ-எii “மூன்றாவதனாலும்” எi “மூன்றாவதனினாலும்” 3 i-iஎ-எ-எii “ஐந்தாவதனின்னானும்” எi-எiii “ஐந்தாவதனினாலும்” iii “ஐந்தாவதின்னின்றும்” 4 i-iஎ-எiii “கூடிய பொருந்திய ஏது” ii-எi-எii “கூடிய ஏது” 5 ii-எi-எii-எiii “பொருண்மை அவ்வுருபு” 6 எi-எiii “விளங்குமிடத்து அஃதில்லை” 7 i “வாணிகத்தானாயினான்” iஎ (இரண்டாம் உதாரணம் இல்லை) 8 ii-எii “ஆயினான் என்பது” எi “ஆயினான் என்பன” 9 i-ii-iii-iஎ-எ-எi-எii “என்பதற்குப் பெயராம்” 89. இரண்டின் மருங்கின் நோக்க னோக்கம்அவ் இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். என்பது என்நுதலிற்றோ எனின், இரண்டாவது மூன்றாவத னோடும், ஐந்தாவதனோடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இரண்டாம் வேற்றுமையிடத்து, 1பொறியான் நோக்கப்படுதலன்றி மனத்தான் நோக்கப்படும் நோக்கும். 2மேல் மூன்றாவதன் கண்ணும் ஐந்தாவதன்கண்ணும் ஒத்த கிழமைய என்று ஓதிய ஏதுப் பொருள்படும் என்றவாறு. (உ-ம்.) வானோக்கி வாழும் என்பது ; வானை நோக்கி வாழும், வானானாய பயனோக்கி 3வாழும், வானினாய பயனோக்கி வாழும் எனவரும். ஏதுவும் ஆகும் என்ற உம்மையான் தன் பொருட்பாடே சிறந்தது. இனி ஏதுவாம்வழிச் 4செயப்படுபொருள்படு குறிய நோக்கி என்பதனை ஒழிய வானை வாழும் என்றாற்போல நிற்க வேண்டும் எனின் செயப்படு பொருள் 5ஒழிய, ஏதுப் பொருள்படும் என்பது அன்று கருத்து. ஏதுப் பொருட் குறிப்பொடு செயப்படு பொருளாய் நிற்கும் என்பது போலும் கருத்து. (10) அடிக்குறிப்புகள் 89-1 i-iஎ-எ-எi-எii-எiii “பெற்றியான்” (h-ர-ற-மாறுபாடு) 2 i-ii-iஎ-எi-எii-எiii “என மூன்றாவதன்” 3 iஎ “வாழும் எனவரும்” 4 எi செயப்படு பொருள் படுதற்கு உரிய” (பொருத்தமாகலாம்.) i-ii-iii-எ “செயப்படு பொருள்குறிய (‘செயப்படு பொருள் குறிப்பு’ என்றாகலாம்.) 89-5 எi “ஒழிய ஏதுப்பொருள் குறிப்போடு” (விடுபட்ட பாடம்) 90. அதுஎன் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுஎனுருபு கெடக் குகரம் வருமே. என்பது என்நுதலிற்றோ எனின், ஆறாவது நான்காவத னோடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1அது என்னும் வாய்பாட்டை யுடைய ஆறாம்வேற்றுமை, 2உயர்திணைக்கண் தொக்க தொகையிடத்து அவ் அது என்னும் வாய்பாடுகெட நான்காவதாய் வரும் என்றவாறு. (உ-ம்.) நம்பி மகன், 3நம்பிக்கு மகன் என்பது இலக்கணம் இல்வழி மயங்கல், நம்பியது மகன் என்பது இன்மையின் 4என்பது. 5இச்சூத்திர நயத்தானே இவ்உருபுபோலத்தம் பொருள்பட நில்லாது பெயர்போல் ஆறாவது பால்தோன்றி நிற்கும் என்பது பெற்றாம். இந்நயத்தானே 6வினைக்குறிப்பு நீர்மைப்பட நிற்கும் வழியும் உண்டேலும் கொள்க. (11) அடிக்குறிப்புகள் 90-1 எ “அது என்னும் . . . . . . . . . ஆறாம் வேற்றுமை” 2 i “உயர்திணை வயிற்கட்டொக்க தொகை இடத்து” ii-எi-எii “உயர்திணை வயிகட்டொக்க தொகை இடத்து” எi “உயர்திணைத் தொகை இடத்து” எ “உயர்திணைத் தொகைக்கண் தொக்க தொகை இடத்து” 3 எ “நம்பிக்கு மகன் என்பது” . . . . . . . . . . . . சூத். 12. “தடுமாறு தொழிற்பெயர்” (உரைப்பகுதி முழுதும் சிதிலம்) 4 எi “என்க” 5 எi “இச்சூத்திரத்தானே இவ்வுருபோடு ஒத்து தம் பொருள்” 6 i-ii-எi-எii-எiii “வினைக்குறிப்பு உரிமைப்பட” 91. தடுமாறு தொழிற் பெயர்க் கிரண்டு மூன்றும் கடிநிலை யிலவே பொருள்வயி னான. என்பது என்நுதலிற்றோ எனின், இரண்டாவது மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1வினையினையுடைய பெயர்க்கண் இரண்டாவதும் மூன்றாவதும் 2நீக்கும் நிலைமையில், பொருள் படும் இடத்து என்றவாறு. (உ-ம்.) புலிகொல் யானை என்பது, ஒருகால் புலியைக் கொன்ற 3யானை எனவும், புலியான் கொல்லப்பட்ட யானை எனவும், சொற்றொழில் இரண்டிற்கும் சென்று வருதலின் தடுமாறு தொழிற்பெயர் என்னப்பட்டது. 4புலியான் என்புழி வினை யாதோ எனின், 5அடும்வினை தோன்றல் என்பது. அஃதேற் புலி கருவியாக யானைதான் பிறிதொன்றனைக் கொன்றது என்பது 6பொருளாமால் எனின், செயப்படு பொருளைச் செய்தது போல என்பதனாற் 7கொல்லப்பட்ட 8என்பது பொருளாக நோக்க அவ்வாறு ஆகாது என்பது. செயப்படு பொருட்கண் வினை 9தொகுமால் எனின், செய்குன்று உறைபதி எனப் பிறபொருட்கண்ணும் தொகும் என்பது. (12) அடிக்குறிப்புகள் 91-1 எi-எiii “தடுமாறி வரும் . . . . . . . . .” (சிதிலம்) i-ii-iii-எ-எi-எii “முழுதும் சிதிலம்” 2 ii “நிற்கும் நிலைமையில்” 3 ii-எi “யானை புலியால்” iஎ “யானை எனவும் சொற்றொழில்” 4 ii “புலி யென்புழி” 5 ii-iஎ-எi-எii “ஆண்டும் வினை தோன்றவென்பது” (“தோன்றல்” என்பது “கோறல்” போலும்.) i-எiii “ஆடும் வினை தோன்றவென்பது” 6 i-iஎ “பொருளா மானின்” ii-எi-எii “பொருளா மாறெனின்” 7 i-ii-iஎ-எi-எii-எiii “சொல்லப்பட்ட” 8 i-iii-iஎ “என்பது. என்பது பொருளாக” 9 iii “தொகுமோவெனின்” 92. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி 1பனுவலின் வேற்றுமை 2தெரிப உணரு மோரே. என்பது என்நுதலிற்றோ எனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இறுதிப் பெயர் முன்னர்ப் பொருள் அறிய வரும் சொல்லான் இன்ன வேற்றுமை 3என அறிய, அத்தொகைச் சொல்லது பொருளினை உணர்வார் என்றவாறு. (உ-ம்.) புலிகொல் யானை ஓடுகின்றது, புலிகொல் யானைக் கோடு வந்தது எனவரும். மெய்யறி பனுவல் என்றதனாற் பொருளியைய வராதனவும் உள; புலிகொல் யானை கிடந்தது என்றாற் போல்வன. ஆண்டுச் சொல்லுவான் குறிப்பினான் அறிக. (13) அடிக்குறிப்புகள் 92-1 i “பெனுவலின்” 2 i “தெரி உணருமோறே” 3 எiii “என்பதறிய” 93. ஓம்படைக் கிளவிக் கையும் ஆனும் தாம்பிரி விலவே தொகைவரு காலை. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் இரண்டாவதும் 1மூன்றாவதும் ஒத்த உரிமைய தொகைக்கண் வரும்காலத்து என்றவாறு. (உ-ம்.) புலி போற்றி வா, வாழி 2ஐய. ஒலி கூந்தல் நின்னல்லதியாரும் 3இலள். இவை புலியைப் போற்றிவா எனவும், 4புலியாற் போற்றிவா எனவும் விரியும் என்பது. புலி என்றது புலியான் வரும் 5ஏதத்தினை. ஓம்படை என்பது போற்றுதல். ஈண்டும் இரண்டாவது செயப்படு பொருளொடு ஏதுப் பொருள் படுகின்றது போலும். தொகை வருங்காலை என்றதனான் இவ்வேற்றுமை மயக்கம் எல்லாம் தொக்குழியே மயங்கும் என்பது கொள்ளப் பட்டது. முன்னே ஆன் உருபினோடு இன் உருபும் ஏதுப் 6பொருட்கு ஒக்கும் என்று ஓதப்பட்டமையின் 7ஒன்றென முடித்தல் என்பதனான் புலியிற் போற்றிவா என ஐந்தாவதும் கொள்க. (14) அடிக்குறிப்புகள் 93-1 i “மூன்றாவது . . . . . . . . . ஒத்த” 2 ii “ஐய என்புழி புலியை” எi “ஐய என்பன இவை புலியை” 3 i-எ “இவை புலியை” 4 ii “புலியானாய வேதம் போற்றிவா” 93-5 i “அத்திணை” எ “அச்சத்தினை.” (“ச் ச” என்பது இரு பிறை வளைவுக்குள் உள்ளது.) 6 ii-எi “பொருட்டாகும்” i “பொருட்டு காக்கும்” (இப்பிரதியில் “டு” போல் உள்ளதை கொம்பாகவும் படிக்கலாம்.) எ “பொருட் காகும்” 7 ii-எi “ஒன்றின முடித்தல்” 94. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் கேழு மாகும் உறைநிலத் தான. என்பது என்நுதலிற்றோ எனின், ஆறாவதனோடு ஏழாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆறாவதனிடத்து வாழ்ச்சி என்னும் உரிமைக்கு ஏழாவதும் ஆகும். யாண்டோ எனின், ஆண்டு அஃதுறை நிலத்துக்1கண் என்றவாறு. (உ-ம்.) காட்டியானை, காட்டதியானை, 2காட்டின் கண்யானை என விரியும். உறை நிலத்தான் என்றதனால் உறையா 3நிலம் ஆயக்கால் 4ஆறாவதன்கண் வந்தது ஆகாது, ஏழாவது தானேயாம் என்றவாறு. அஃது, ஊருள் யானையாய்க் காட்டுள் மேயவிட்டதனைக் காட்டியானை என்னும் வழிக் கொள்க. மற்று 5இஃது ஆறன் மருங்கின் வாழ்ச்சி ஆயினவாறு என்னை? அஃது யானைக்காடு என்பதன்றே? ஆண்டு யானையுட்காடு என 6வாராதால் எனின், யானை 7காட்டதன் கண் வாழ்தலால் உடைமை. யாயிற்று அன்றே. அதனான் காட்டியானை என அக்காட்டிற்கு யானையை உறுப்பாகக் 8கூறும்வழி வாழ்தல் அடியாக நின்றது ஆகலின், அதனையும் வாழ்ச்சிக்கிழமை என்று கூறியவாறு போலும். அதனாற் போலும் 9ஆறாவது சிறுபான்மை என்றவாறு. (15) அடிக்குறிப்புகள் 94-1 i “கண் . . . ர் . . . று” 2 i-எi-iii-எiii “காட்டின் யானை” 3 எiii “நில மயக்கம்” 4 ii “ஆறாவது அதன்கண் வந்தது” 94-5 i “இஃது வாழ்ச்சிம் ஆரன் மருங்கின் வாழ்ச்சி” ii-எi-எii “இஃது வாழ்ச்சியும் ஆரன் மருங்கின் வாழ்ச்சி” iii “இஃது ஆறன் மருங்கினான வாழ்ச்சி” எ “இஃது ஆறன் மருங்கின் வாழ்ச்சி” (இடம் விட்டுள்ளது காண்க) 6 i-ii-iஎ-எii “வாகாதால்” எi “ஆகாதால்” 7 i “காட்டன் கண்” ii-எi-எii “காட்டின் கண்” எ“காட்டின்” (காட்டன் கண் என மேலே எழுதப்பெற்றுள்ளது) 8 i-iஎ-எiii “கூறு வழி” 9 எi “என்றது” i-ii-எi-எii “என்றாவது” 95. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அப்பொருளாறற் குரித்தும் ஆகும். என்பது என்நுதலிற்றோ எனின், நான்காவதன் பொருள் ஆறாவதன்கண் செல்லுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1கு வென்னும் வாய்பாடு 2தொக்கு வருகின்ற கொடைத் தொழிலினை ஏற்றுக்கொண்டு நின்ற சொல் மயங்குமாறு 3கூறின் அப்பொருண்மை, ஆறாவதன் உடைமைப் பொருளாதற்கு உரித்தும் ஆம் என்றவாறு. (உ-ம்.) நாகர் பலி என்பது நாகர்க்குப் பலி, நாகரது பலி என விரியும். கொடைக் கிளவி என்னாது எதிர்கிளவி என்றதனான், இவ்வாறு மயங்குவது 4எதிர்கிளவி யாயக்கால் ; அல்லாக்கால் மயங்காது என்பது. 5எதிர்தரல் என்பது 6விழுப்பமுடையாரை நுதலியக்கால் கொண்டு வைத்து விரும்பிக் கொடுப்பது. 7மற்றுஇது கொடை நிகழ்த்தினமையின். நான்காவது ஆயவாறு என்னை எனின், 8நிகழ்ந்ததே அன்று, கொடை 9நிகழ்கின்றதும் நிகழ்வதும் பொருண்மை வகையாற் கொடை எனப்படும் என்பது. (16) அடிக்குறிப்புகள் 95-1 ii “குவ்வென்னும்” 2 i-iஎ “தொக்க” ii-எ-எii “தொக” 95-3 i-ii-எi-எii “கூறின வப்பொருண்மை” எ “கூறின அப்பொருண்மை” 4 i-iஎ “எதிர் கிளவியாய்க் கல்லாக்காம் மயங்காது” (வேண்டா இடத்துப் புள்ளியிட்டதன் விளைவு) எ “எதிர் கிளவி . . . . . . . . . கல்லாக்கால் மயங்காது” எi-எiii “எதிர் கிளவி அல்லாக்கால் மயங்காது” (இடம்விட்ட பகுதியைப் பொருட்படுத்தாது எழுதின பாடம்) 5 i-iஎ-எ “எதிர்கால்” ii-எi-எii “எதிர்தல்” 6 ii “விருப்பமுடையாரை” 7 ii-எii “மற்றிது கொடை நிகழ்த தின்மையின்” எi “மற்றிது நிகழ்தலின்மையின்” 8 i-ii-iஎ-எi-எii-எiii “நிகழ்ந்தே யன்று” 9 “(நிகழ்கின்ற என்பதன் பின் எi-ம் பிரதி முற்றுப்புள்ளியிடும். எ-ம் பிரதி கேள்விக்குறியிடும் நிகழ்கின்றதும் என ஈற்றில் மகர மெய் அந்தப் பிரதியிலும் காணப்பட இல்லை. புணர்ச்சி விதியின்படி மகரம் நில்லாதாகலின் அதனைக் காண்பதற்கில்லை.) 96. அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் எச்சம் இலவே பொருள் வயினான. என்பது என்நுதலிற்றோ எனின், ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அஞ்சுதல் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும், இரண்டாவதும் தம்மில் 1ஒத்த நிலைமைய, பொருள்படும் இடத்து என்றவாறு. (உ-ம்.) புலி அஞ்சும் 2என்பது புலியின் அஞ்சும், புலியின் அஞ்சும் என விரியும். அவ் அச்சம் 3கள்ளரின் அஞ்சும் என்னும் வழக்கிற் பொருள்படு நிலைமையும் உண்டு. ஈண்டு அது கொள்ளற்க. ஓம்படை என்றதற்கண் 4கூறிய நயத்தாற் புலியான் அஞ்சும் என மூன்றாவதன் வரவும் கொள்க. (17) அடிக்குறிப்புகள் 96-1 எi-எiii “ஒத்த நிலைமையாம் பொருள்” 2 எi-எiii “ என்பது புலியை அஞ்சும்” 3 ii-எi “கள்ளரின் மிக அஞ்சும்” 4 i-iஎ “கூறியவத்தால்” ii-எiii “கூறியாயத்தால்” எ “கூறிய நியாயத்தால்” எi “கூறியவற்றால்” (h-ந மாறாட்டம். இதன் பயனாக விளக்கம் கருதி எழுந்த திருத்தங்கள் காண்க.) 97. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா துருபினும் பொருளினும் மெய்தடுமாறி இருவயி னிலையும் வேற்றுமை எல்லாந் திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே. என்பது என்நுதலிற்றோ எனின், வேற்றுமை 1மயக்கத்திற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் எடுத்து ஓதப்பட்ட 2அத்தன்மை யனவும் பிறவும் ஆகிய 3பழையதாகிய நெறிமுறையினைப் பிழையாது உருபானும் பொருளானும் தத்தம் வடிவு தடுமாறித் தனக்குரிய இடம் பிறிதின் இடம் ஆகிய அவ்இரண்டிடத்தும் நிலைபெறுகின்ற வேற்றுமையுள் எல்லாம் அமையா வழு என்று கழிக்கப்படுதலைத் 4தன்னிடத்துடைய அல்ல ஆராய்வார்க்கு என்றவாறு. இதனாற் சொல்லியது வேற்றுமை ஓத்தின்கண் இன்ன பொருட்கு இன்னது உரித்து என எடுத்து ஓதப்பட்ட வேற்று மைகள் அவ்வப் பொருட்கு 5உரியவாறாய் நில்லாது பிறபொருட் கண்ணும் சென்று மயங்குதல் 6உடைமைகண்டு இவை வழுவன்றோ என்று வினாய மாணாக்கற்கு, அவை மேற் றொட்டுப் பிற 7பொருண்மேலும் வழங்கி வருதலான் வழக்கு முடிவினை ஆராய்ந்த முதல் நூலாசிரியர்களும் வேற்றுமை வழு என்று புறத்திட்டார் அல்லர். அதனானே, யானும் அம் முடிபே நேர்ந்தேன் என்பது கூறியவாறு. இதுவும் மரபு வழுவமைதி. அன்ன பிறவும் என்றதனாற் 8கொள்வனவற்றிற்கு உதாரணம் :- முறைக் குத்துக் குத்தினான் என்பது ஓர் தொகை; 9முறையாற் குத்தினான் முறையிற் குத்தினான் என மூன்றாவதும் ஐந்தாவதும், ஏதுப்பொருட்கண் மயங்கி விரிந்தது. இனித் தொகையின்றி நின்று கடலொடு காடொட்டாது என்னும் வழக்கின்கண் கடலைக் காடொட்டாது என இரண்டாவது மயங்கி வந்தது. இன்னும் தொகையல்லாத தந்தையொடு சூளுற்றான் என்னும் வழக்கின்கண் தந்தையைச் சூளுற்றான் என இரண்டாவது மயங்கிவந்தது. பிறவும் அன்ன.(18) அடிக்குறிப்புகள் 97- i எi “மயக்கத்திற்கும் புறநடை” 2 எi “அத்தன்மையன பிறவும் 3 ii-எii-எ “பழைதாகிய” 97-4 எ “தம்மிடத்துடைய” 5 எiii “உரியவறாயே” 6 i-iஎ “உடிமை கண்டு” ii-எii-எi-எiii “உண்மை கண்டு” (ண-டை மாறாட்டம் “உண்மை” என்பதும் ஏற்ற பாடமாம்.) 7 எi “பொருள் மேலும் வழக்கு முடிவினை ஆராய்ந்த முதல் நூலாசிரியர்களும் வழங்கிவருதலால் புறத்திட்டாரல்லர்” 8 ii-எii “கொள்ள” எi-எiii “கொண்டவற்றிற்கு” 9 ii-எii “முறையாற்குத்தினான் என மூன்றாவது முறையிற் குத்தினான் என ஐந்தாவதும் ஏதுப்பொருட்கண். எi “முறையாற் குத்தினான் என ஐந்தாவதும் ஏதுப்பொருட்கண்” 98. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொல் நடைய பொருள்சென் மருங்கே. என்பது என்நுதலிற்றோ எனின், பல உருபு தொடர்ந்து அடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1ஐ முதலிய அறுவகை உருபும் தம் பொருள் தொடர்ச்சிபட 2அடுக்கி வருகின்ற அவ்வேற்றுமைப் பொருண்மையினை உடைய சொற்கள் அவ்அடுக்கின் கடைக்கண் நின்ற வேற்றுமைச் சொல்லிற்கு முடிபாகிய சொல்லினையே தமக்கு முடிபாக உடைய, பொருள்படுமிடத்து என்றவாறு. (உ-ம்.) யானையது கோட்டை நுனிக்கட் குறைத்தான்- யானையது என்பது கோடு என்பதனோடு தற்கிழமைப்பட்டு ஆண்டே முடிந்தது. நுனிக்கண் என்னும் ஏழாவது குறைத்தான் என்பதனோடு முடிந்தது. இடைக்கண் நின்ற 3கோட்டை என்னும் இரண்டாவது முடிபு இன்றி நின்றது. அவ்வாறு தனக்கு உரியதோர் முடிபு இன்றே எனினும், ஏழாவதன் முடிபோடு முடிந்ததாகக் கொள்ளப்படும். அவ்வாறு பொருள்பட நின்றமையான் என்பது. 4தினையிற் கிளியைக் கடியும் என்பது தினையின் என்னும் ஐந்தாவது கிளியை என்னும் இரண்டாவதன் வினையொடு முடிந்தது. பிறவும் அன்ன. அதிகாரத்தான் இதுவும் ஒரு மரபுவழுவமைதி என உணர்க. (19) அடிக்குறிப்புகள் 98-1 எi “ஐம்முதலிய” 2 iii “அடுக்கிவருகின் அவ்வேற்றுமைப் பொருண்” 3 எi “கோடு என்னும்” 4 iii “திணை” 99. இறுதியும் இடையும் எல்லா உருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார். என்பது என்நுதலிற்றோ எனின், உருபு நிற்குமிடம் கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- இருபொருளின் இறுதிக்கண்ணும் அவ் இருபொருளின் இடையின்கண்ணும் அறுவகை வேற்றுமை உருபு வழக்குப்படும் பொருளிடத்து, நிலைபெறுதலை நீக்கார் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது, இருந்தான் குன்றத்துக்கண் ; இவை இறுதிக்கண் வந்தன. நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனதாடை, குன்றத்துக் கண் இருந்தான்; இவை இடையின் கண் வந்தன. 1மற்று ஈறு பெயர்க்காகும் என்ற வழி அடங்கிற்று, பிற, எனின், 2அஃது ஒரு சொற்கண் உருபு நிற்குமாற்றிற்குச் சொல்லியது. 3இஃது இருசொற்கண் உருபு நிற்குமாற்றிற்குச் சொல்லியது என உணர்க. அஃதேல், அவ் ஒரு சொற்கண் நின்ற உருபினை அதன் முடிபாகி வருஞ் சொல்லோடு படுத்து நோக்க, இருசொற்கண் 4வந்ததாம் என்பது சொல்லாமையும் அமையவும் பெறும் அன்றோ எனின், அவ்வாறு உய்த்து 5உணர்வதனையே இனிது உணர்தற் பொருட்டாகவும், உருபுநோக்கிவரும்சொல் அவ்உருபின் முன் நில்லாது பின்நிற்றன் மயக்க நீர்மைத்து 6என்பது அறிதற்பொருட்டாகவும் ஈண்டு கூறினா7ன் என உணர்க. வரையார் எனவே வழுவுடைத்து என்பது போந்தது. 8நெறிபடுபொருள் என்றதனால், இவ்வாறு இடையும் இறுதியும் உருபு நிற்பது, உருபேற்று வழங்கும் பெயர்க்கண்ணே; வழங்காத பெயர்க்கண் நில்லா என்பது. (உ-ம்.) அவ்வழிக் கொண்டான் என்பது, அவ்வழிக்கட் கொண்டான் எனவும், கொண்டான் அவ்வழிக்கண் எனவும் அவ்வாறு வழங்குவார் 9இன்மையின் நில்லாதாயிற்று. வழங்குவார் உண்மையின் அவ்விடம் என்னும் பெயர்க்கண் அவ்விடத்துக்கண் கொண்டான் எனவும் 10கொண்டான் அவ்விடத்துக்கண் எனவும் நின்றது என உணர்க. மற்றிஃது 11எவ்வயிற் பெயரும் என்புழி அடங்கிற்றன்றோ எனின், இதுவும் அவ் இரு சொற்கண் வருமாற்றிற்குக் கூறினா12ன் என்பது. (20) அடிக்குறிப்புகள் 99-1 ii-எi-எii “மற்று இது பெயர்க்காகும்” i-iஎ “மற்றீது பெயர்க்காகும்” iii “மற்றீற்று பெயராக்கும்” 2 i-ii-iஎ-எi-எii “அஃதொருகண் சொற்கண்” 3 i-ii-iஎ-எii “இஃது இருகண் உருபு நிற்கு மாற்றிற்கு சொல்லியது என” எi “இஃது என” 99-4 i “வந்தாம்” 5 எ “உணர்வதனையே எளிதின் உணர்தற் பொருட்டாகுக” 6 i “என் பொருட்டாகவும்” ii-எ-iஎ-எii “எனற் பொருட்டாகவும்” 7 “ர்” 8 i “நெறிப்படு பொருள்” 9 எ “நீங்கியவை இன்மை இல்லாதாயிற்று” 10 ii-எi-எii “கொண்டான் அவ்விடத்துப் பொருள்” i “கொண்டான் அவ்விடத்துப் பொருணனவும்” 11 ii-i-iஎ-எii “எவ்வழியிற் பெரும்” 12 “ர்” 100. பிறிது பிறிதேற்றலும் உருபுதொகை வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. என்பது என்நுதலிற்றோ எனின், விசேட வகையான் 1உருபிற்குரியதோர் இலக்கணமும், எல்லா உருபிற்கும் பொதுவாயதோர் இலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஓர் உருபு ஓர் உருபினை ஏற்று நிற்றலும் எல்லா உருபுகளும் தொக்கு வருதலும் இவை இரண்டு முறைமைப்பட 2இயலும் வழக்கின்கண்ணே உள என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) பிறிது பிறி தேற்றற்கு உதாரணம்: சாத்தனதனை, சாத்தனத னொடு என ஏழாவதன் காறும் ஒட்டுக. 3சாத்தனதுவது எனத் தன் உருபு தன்னை ஏலாது. பிறிது பிறிதேற்கும் என ஏற்பது ஆறாவது 4என்பதூஉம் அதனை ஒழிய ஏற்கும் என்பதூஉம் பெறுமாறு என்னை எனின், முன்னர் உருபு ஏற்பது பெயர் என்று கூறினமையிற் 5பிறிது எனவே அது அல்லாது என்பது பெற்றாம். அஃதே எனின், பிற சொற்களும் 6பிறிது எனப்படுமால் எனின் உரையிற்கோடல் என்பதனான் 7இதுவேயாயிற்று என்பது, பிறிதேற்றல் எனவே தன்னை ஏலாது என்பது பெற்றாம். இனி 8ஒன்றினமுடித்தல் என்பதனாற் சாத்தனது நன்று எனப் பயனிலை கோடலும் சாத்தன ....... விளியேற்றலும் உடைத்து என்பது கொள்ளப்படும். உருபு 9தொக்கு வருதற்கு உதாரணம்: நிலம் கடந்தான், தாய் மூவர், கருப்பு வேலி, வரைவீழ் அருவி, சாத்தன் ஆடை, குன்றக்கூகை எனவரும். இவ்வுருபுகள் தொகுமிடத்து உருபும் பொருளும் உடன் தொகலும், ஒரு வழி உருபே தொகலும் என இருவகைய. அவ் ஆறு உருபினுள்ளும் 10ஆறாவது ஒன்றும் உருபே தொகுவது; அல்லன எல்லாம் இவ்வாறு தொகும் எனக் கொள்க. 11படைக்கை என்பது உருபும் பொருளும் உடன் தொக்கது. நிலங்கடந்தான் என்பது உருபு தொக்கது. பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது உருபு தன் இலக்கணம்மாறிப் 12பெயரதன் இலக்கணம் எய்துதலும், தன் பொருள்வழித் தான் நில்லாதாகலும் வழுவே எனினும் முற்கொண்டமைந்த வழக்கு ஆதலான் 13களையலாவன அல்ல என மரபு வழுவமைதி கூறியவாறு. (21) அடிக்குறிப்புகள் 100-1 iii “ஆறாம் உருபிற்குரிய” (இப்பாடமே பொருந்தும் எனல் வேண்டும்) 2 i-ii-iஎ-எ-எii “இயலும் . . . . . . . . . . . . கண்ணே யுள என . . . . . . . . . வர் ஆசிரியர்” 3 i-ii “சாத்தன்தனை சாத்தன்தனோடு” 4 i-ii “என் . . . . . . . . . மதனை” எi-எiii “என . . . . . . . . . அதனை” iii “என்பதுவும் அதனை” 5 i “என வெய்து வல்லாதென்பது” ii-எi-எiii “என எய்துப அல்லாதென்பது” 100-6 i-ii-iஎ-எii “படுமாலே . . . . . . . . . கோடல்” எi-எiii “படுமால் . . . . . . . . . கோடல்” 7 i-எi “இது வெயிற்றென்பது” ii-iஎ “இது வயிறென்பது” 8 எ “ஒன்றென முடித்தல்” 9 எ “தொகவருவதற்கு” 10 எi “ஆறாவது உருபே தொகுவது” 11 i-எi “படக்கை” iii “படர்க்கை” 12 i-iஎ “பெயரதில் இலக்கணம்” ii-எii “பெயரதிலக்கணம்” எi “பெயரிலக்கணம்” 13 i “களையலாவென் வல்ல வென” எ “களையலாகா என” 101. ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின் மெய்யுருபு 1தொகா இறுதி யான. என்பது என்நுதலிற்றோ எனின், மேல் உருபுகள் 2தொகவரும் 3என்புழித் தொகவருவனவற்றது நிலை ஒவ்வாமை கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- இரண்டாவதன் பொருண்மையும், ஏழாவதன் பொருண்மையும் அல்லாத பொருள்களிடத்து வருகின்ற உருபுகள் தமக்கு உண்மையாகிய வடிவு 4தொக்க நில்லா, இருமொழியின் இறுதிக்கண் என்றவாறு. (உ-ம்.) கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து எனவரும். வந்தான் சாத்தனொடு என்பது வந்தான் சாத்தன் என 5ஒடுத்தொக்குழி அப்பொருள் 6விளங்காமையின், அந்நிகரன இறுதிக்கண் தொகா ஆயின. “நானிலமன்ற” என்னுங் குறுந்தொகையுள் 7“பிரிந்தி சினோர்க்கழல்” என ஆன் இறுதிக்கண் 8தொக்கு நின்றதால் எனின், 9அந்நிகரன வழக்கினுள் இன்மையின் செய்யுள் 10விகாரம் என்க கொள்க. (22) அடிக்குறிப்புகள் 101-1 ii-எii “தொகா அ” (இவ்வாறு கொண்டால் மட்டுமே சீர் நிறம்பும். ஆனால் பிற பிரதிகளில் எல்லாம் இப்பாடம் இல்லை ii-எii பிரதிகள் ஒன்றாம் பிரதியைப் படித்துப் படி செய்தவை யாதலின் இத் திருத்தத்திற்கு மூலம் என்ன என்று விளங்கவில்லை.) 2 ii-எ-எi-எii “தொக்கு வரும்” 3 i “என்றுழின் தொக்கு வரு” ii “என்றுழித் தொக்கு வரு” எ “என். ழித் தொக்கு வரு” 4 i-iஎ “தொக்கு விரு மொழின்று உதிக்கண்” ii-எii-எiii “தொக்கு இரு மொழி யினிறுதிக் கண்” எi “தொகா இரு மொழியினிறுதிக் கண்” எ “தொக்கு வரும் மொழியின் இறுதிக்கண்” 5 எi “ஒருத் தொக்குழி” (ரு-டு மாறாட்டம்) 6 எ “விளக்காமையின்” 7 i-ii-எi-எii “பிரிந்திசினோக்கழல்” 8 i-iஎ “தொக்கு எனின் நின்றதா லெனின்” 9 i “அன்னிகரென” 10 i-ii-iஎ-எi-எii “விகார மென்க” 102. யாதன் உருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை 1சாரும். என்பது என்நுதலிற்றோ எனின், உருபுகள் 2ஒரோவழித் தம் 3பொருண்மையின்றியேயும் மயங்குதல் உடைய என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒரு பொருண்மை யாதானும் ஓர் உருபினாற் கூறப்பட்டதாயினும் அப்பொருண்மை அவ்வுருபின தாகாது, அப்பொருள் செல்லும் கூற்றினையுடைய வேற்றுமை ஆண்டுவந்து 4சார்ந்த அப்பொருளினைக் கொள்ளும் என்றவாறு. (உ-ம்.) கிளையரி நாணற்கிழங்கு மணற்கீன்ற, முளையோரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய் 5என்னும் பாட்டினுள் மணலுள் ஈன்ற என்பது மணற்கீன்ற என்றாயிற்று. இவ்வாறு பொருளன்றியும் மயங்கும் 6என்பதேல், வேண்டியவாறு எல்லாம் வரப்பெறும் என்றவாறாம் பிற, எனின், அதுஅன்று; 7வழக்குள்வழியதுஅம் முடிபு எனக் கொள்க. (23) அடிக்குறிப்புகள் 102-1 i-iஎ “சாம்” 2 i-iஎ “ஓரோர்” 3 i-iஎ “பொருண்மையின்றி மெய்யும் மயங்குதல்” (குறிலிலும் நெடிலிலும் கொம்பு ஒன்றுபோலவே ஓலையில் வரும் ய-ம மாறாட்டம்.) 4 i-ii-iஎ-எii “சார்ந்தப் பொருளினை” எ “சார்ந்து அப் பொருளினை” 5 ii-எii “என்னும் மணலுள்” 6 i “என் தேல்” iஎ-எi “என்றேல்” எ “எனின்” ii-எii “என்ற தேல்” 7 ii-எii “தமக்குள் வழிய” 103. எதிர்மறுத்து மொழியினும் தத்தமரபிற் பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே. என்பது என்நுதலிற்றோ எனின், அவ்வேற்றுமைகள் தம் பொருள் மாறுபட நின்ற வழியும் தம்பொருள் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஐ முதலிய 1ஐவகை உருபிற்கும் செயப்படுபொருள் முதலாக ஓதப்பட்ட பொருண்மைகளை எதிர்மறைபடச் 2சொல்லும் தமக்குரிய மரபாகிய அப்பொருள் நிலைமையின் திரியா அவ்வவ் வேற்றுமைச் சொற்கள் என்றவாறு. (உ-ம்.) மரத்தைக் குறையான் ; சாத்தனொடு வாரான் எனவரும் ; பிறவும் அன்ன. (24) அடிக்குறிப்புகள் 103-1 எiii “அறுவகை” 2 எiii “சொல்லினும் தமக்குரிய” 104. கு ஐஆன்என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும் செய்யுள் உள்ளே. என்பது என்நுதலிற்றோ எனின், அவ்வுருபுகள் 1ஒருசாரன செய்யுளின் திரிபுபட நிற்றலுடைமை கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 2கு என்றும், ஐ என்றும், ஆன் என்றும் சொல்ல வருகின்ற 3உருபு ஈறுகள் அகரத்தொடு பொருந்தி ஈறு திரிந்து நிற்றலும் உடைய, செய்யுளிடத்து என்றவாறு. 4அவை முன்னர்ச் 5சொல்லுதும். (25) அடிக்குறிப்புகள் 104-1 i-ii-iஎ-எii “ஒருசாரான்” 2 i-iii “என்றும்” ii-எii “குவ் வென்றும்” 3 i “உருபு ஈறுகள் ஆகாரத்தோடு” எ “உருபுகள் அகரத்தொடு” 4 i-ii-எii “அவைகளை” 5 i “சொல்லும்” 105. 1அவற்றுள், அ எனப் 2பிறத்தல் அஃறிணை மருங்கின் குவ்வும் ஐயும் இல்என மொழிப. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. இதன் பொருள்:- அ என ஈறு3 திரிந்து நிற்றல் 4அஃறிணை யிடத்துக் ‘கு’ என்னும் உருபும், ஐ என்னும் உருபும் நில்லாமையை உடைய என்றவாறு. எனவே உயர்திணையிடத்து மூன்றுஉருபும் திரியும் என்ப தூஉம், அஃறிணைக்கண் ஆன் என்னும் உருபு ஒன்று திரியும் 5என்பதூஉம் பெற்றாம். (உ-ம்.) 6கடிநிலையின்றே ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்று ஆயிற்று. 7காவலோனக் களிறஞ்சும்மே எனற்பாலது காவலோனை என்று ஆயிற்று. 8புலவரினான் என்பது புலவரினான என்று ஆயிற்று. இவை உயர்திணைக்கண் திரிந்தவாறு. 9புள்ளினான் என்பது புள்ளினான என்று ஆயிற்று. இஃது அஃறிணைக்கண் திரிந்தவாறு. 10அவ்வொடும் என்ற உம்மை எதிர்மறை ஆகலான் ஈறு 11திரியாமல் 12நிற்றல் பெரும்பான்மை. இவை இடைச்சொல் லாதலின் தம்மீறு திரிதல் என்புழி அடங்காதோ எனின், வழக்கினுள் இவ்வாறு வராமையின் அடங்கா என்பது. (26) அடிக்குறிப்புகள் 105-1 i “ஆயெனப் பிறத்தல்” 2 எi “பிறந்தல்” 105-3 iii “திரித்து” 4 எiii “அஃறிணையிடத்து குவ்வென்னும் உருபு” 5 i “என்தூ உம்” 6 ii-எii “கடிநிலையின்றே ஆசிரியர்க்க என்புழி ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்றாயிற்று.” எi “கடிநிலையின்றே ஆசிரியர்க்க ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்றாயிற்று” எiii (“ஆசிரியற்கு” என்றெங்கும் ஒருமையில் வரக் காண்கிறோம்”) 7 எi “காவலோனக் களிறஞ்சும்மே. காவலோனை எனற்பாலது காவலோன என்றாயிற்று” 8 எi “புலவரினான் என்பது புலவரான என்றாயிற்று. இவை உயர்திணை.” iii “புலவரான் என்பது புலவரினான என்றாயிற்று. இஃது அஃறிணை.” (ஒருவரி விடப்பட்டுள்ளது.) 9 எ “புள்ளியினான் என்பது புள்ளியினான” 10 i “ஆ ஓடும்” 11 எ “திரியாது” 12 ii “நிற்றில் தம்மீறு திரிதல் என்புழி” 106. இதன திதுஇற் றென்னும் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனாற் செயற்படற் கொத்த கிளவியும் முறைக்கொண்டு எழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவும் நான்கன் உருபின் தொன்னெறி மரபின தோன்ற லாறே. என்பது என்நுதலிற்றோ எனின், நான்காம் வேற்றுமை, ஏனைய வேற்றுமைக்கண் எல்லாம் சென்று மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 1இப்பொருளினுடையதுதான் இத் தன்மைத்து என்று சொல்லப்படும் ஆறாவதன் பொருண்மையும், ஒன்றனை ஒன்று கொண்டிருக்கும் என்று சொல்லப்படும் இரண்டாவதன் பொருண்மையும், ஒன்றான் ஒன்று செயற்பாடு உடைத்தாதற்குப் பொருந்துதல் என்னும் மூன்றாவதன் பொருண்மையும், 2முறைமையைக் கொண்டு எழுந்த ஆறாவதன் பெயர்ச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையும், எல்லைப் பொருண்மையை வரைந்து 3உணர்த்தலுடைய ஐந்தாம் வேற்றுமைப் பொருண்மையும், பண்பினாகிவருகின்ற ஐந்தாவதன் பொரூஉப் பொருண்மையும், காலப் பொருண்மை யான் அறியப்படுகின்ற ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும், 4பற்று விடுதலாகிய ஐந்தாவதன் நீக்கப் பொருண்மையும், தீர்தல் என்னும் வாய்பாட்டதாகிய ஐந்தாவதன் 5நீக்கப் பொருண்மை யும், அத்தன்மையன பிற வேற்றுமைப் பொருளிடத்து 6நான்கன் உருபின் அடைத்துக்கூறுதலைப் பழையநெறிமுறையாவுடைய; அவை தோன்று நெறிக்கண் என்றவாறு. (உ-ம்.) யானையது கோடு கூரிது என்புழி 7யானைக்குக் கோடு கூரிது என்று ஆயிற்று. 8இவளைக் கொள்ளும் 9இவ்வணி என்புழி, 10இவளுக்குக் கொள்ளும் இவ்அணி என்று ஆயிற்று. வாயான்தக்கது வாய்ச்சி என்புழி வாய்க்குத் தக்கது 11வாய்ச்சி என்று ஆயிற்று. ஆவினது கன்று என்புழி ஆவிற்குக் கன்று என்று ஆயிற்று. 12கருவூரின் கிழக்கு என்புழி கருவூர்க்குக் கிழக்கு என்று ஆயிற்று. சாத்தனின் நெடியன் என்புழி சாத்தற்கு நெடியன் என்று ஆயிற்று. மாரியுள் வந்தான் என்புழி மாரிக்கு வந்தான் என்று ஆயிற்று. ஊரிற் பற்றுவிட்டான் என்புழி ஊர்க்குப் பற்றுவிட்டான் என்று ஆயிற்று. ஊரிற்றீர்ந்தான் என்புழி ஊர்க்குத் தீர்ந்தான் 13என்று ஆயிற்று. என இவை, இனி, அன்னபிறவும் 14என்றதற்கு உதாரணம் :- ஊரிற் சேயன் என்புழி, ஊர்க்குச்சேயன் என்று ஆயிற்று. காட்டிற்குஅணியன் என்பதும் அது. இவை எல்லாம் உருபும் பொருளும் உடன் மயங்கின எனக் கொள்க. மற்று இம் 15மயக்கம் அன்ன பிறவும் என்புழி. அதிகாரத் தானே அடங்காதோ எனின், அஃது ஒன்றனோடு சென்று பரிமாறும் அதிகாரத்தது; இஃது ஒன்று பலவற்றோடு சென்று மயங்கும் அதிகாரத்தது; ஆகலின் அதனுள் அடங்காது என்ப.(27) அடிக்குறிப்புகள் 106-1 i-iஎ-எ “இப்பொருளினுய . . . தான்” ii-எii “இப்பொருளினுடைய திருப்பொருள் அதுதான்” 2 ii-எii “முறைப் பொருண்மையைக் கொண்டாbழுந்த” iii “முறைப் பெயருண்மையைக் கொண்டெழுந்த” 3 i “உணர்த்தலுடைய” 4 i-iஎ-எ “பெற்று வருதலாகிய” 106-5 ii “நீக்கற் பொருண்மை” 6 எ “நான்கனுரு . . . . . . . . . அவை தோன்றும் நெறிக்கண்” i “நான்கன் உருபிற் அடத்துக் கூறுதலை நீக்கப் பழைய நெறி முறையா உடைய அவை தோன்று நெறிக்கண்” 7 i “யானைக்கோடு கூரிது என்றாயிற்று” ii “யானைக்கோடு கூரிது என்றவாறாயிற்று” 8 எi “இவனைக்” 9 i “இவ்வழி” 10 எi “இவனுக்கு” 11 i “வாயற்றக்கது வாச்சி” 12 iஎ “கருவூரின் . . . என்றாயிற்று மாரியுள்” (வரி விடுபட்டது.) 13 எi “என்றாயிற்று. இனி அன்ன பிறவும்” ii “என்றாயிற்று என இவையாம் இனி அன்ன பிறவும்” 106-14 எi “என்றதனான் ஊரிற் சேயன்” 15 i “மயக்கமென்ன பிறவும்” 107. ஏனை உருபும் அன்ன மரபின 1மானம் இலவே சொன்முறை யான. என்பது என்நுதலிற்றோ எனின், நான்காவது ஒழித்து ஒழிந்த வேற்றுமை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- நான்காவது ஒழிந்த உருபுகள் ஐந்தும் நான்காவதுபோலப் 2பல வேற்றுமைப் பொருட்கண்ணும் சென்று மயங்கும் இடத்துக் 3குற்றம் இல. அவ்வாறு சொல்லி வரும் வழக்கு முறைமைக்கண் என்றவாறு. 4உதாரணம் :- வழக்கினுளவேற் கண்டு5கொள்க. காணாமையிற் காட்டாமாயினாம். (28) அடிக்குறிப்புகள் 107-1 i “மாணமிலவே” 2 i-எ “பல வேற்றுமை பல பொருட்கண்ணும்” 3 ii-எi-எii-எiii “குற்றமில்லை” 4 எi “வழக்கினுளவேல் கண்டு” 5 i-iஎ-எiii “கொள்க என்பன காணாமையிற் காட்டா மரபினாம்” (மா.மர; பி.யி.) ii-எi “கொள்க என்பன காணாமையிற் காட்டா மரபினவாம்” 108. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்றா 1இன்னதற்கிது பயனாக என்னும் அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ ஆயெட் டென்ப தொழில்முத னிலையே. என்பது என்நுதலிற்றோ எனின், 2வினைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- 3தொழிலினையும் தொழில் நிகழ்த்தும் கருத்தாவினையும், அவனாற் செய்யப்படும் பொருளினையும், அவன் தொழில் நிகழ்த்தற்கு இடமாகிய நிலத்தினையும், அதற்கு இனமாகிய காலத்தினையும், 4அதற்குத் துணையாகிய கருவியி னையும், 5இன்னாற்கு இவன் இது செய்யப்படுகின்றான் என்று சொல்லப்படுகின்ற அப்பொருளினையும், 6இவனை இதுஎனு... பயமாகச் 7செய்யப்படுகின்ற அப்பொருண்மையினையும் தொகைசெய்து அவ்எட்டும் என்று சொல்லுவர் ஆசிரியர், வினைச்சொற் பிறத்தற்கு இடமாகிய பொருளது நிலைமையை; என்றவாறு. (உ-ம்.) வனைந்தான் என்பது. இதனுள் எட்டும் வந்தவாறு:- வனைந்தான் என வனைதற் றொழின்மை விளங்கிற்று. வனைந் தான் என 8ஒருவனும் விளங்கினான், வனையப்பட்ட 9குட முதலாய 10செயப்படுபொருளும் விளங்கிற்று. வனைந்ததோர் இடம் அகமானும் புறமானும் விளங்கிற்று. கோலும் திகிரியும் முதலாகிய கருவியும் விளங்கிற்று. வனைவித்துக் கொண்டானும் 11விளங்கிற்று. வனைந்தான் பெற்றதொரு பயனும் 12அறமானும் பொருளானும் விளங்கிற்று. பிறவும் அன்ன. வினையது இலக்கணம் வினையியலுள் 13கூறற்பாலது. அதனை, ஈண்டுக் கூறியது என்னை எனின், வேற்றுமைகளைப் பெயர்க்கே உரிமைசெய்து கூறினமையின், வினையோடு 14என்னும் இயல்பில என்பது பட்டு நின்றமையின் அவ்வினை வரும்காலம் 15வேற்றுமைகளொடு வருவது என்பது அறிவித்தற்கு ஈண்டுக் கூறப்பட்டது. 16இது கூறிய 17எட்டு இலக்கணங்களுள் வினை என்பது பொருட் குறிப்பால் இரண்டாவதாய்ச் 18சேர்ந்தது. செய்வது எழுவாயாய்ச் சேர்ந்தது. செயப்படு பொருள் இரண்டாவதாய்ச் சேர்ந்தது. நிலமும் காலமும் ஏழாவதாய்ச் 19சேர்ந்தது. கருவி மூன்றாவதாய்ச் சேர்ந்தது. இன்னதற்கு இது பயனாக என்னும் இவ்இரண்டு நான்காவதாய்ச் சேர்ந்தன. இவ்வாறு ஆறாவதும், விளியும் ஒழிய மற்றைய ஆறும் வந்தவாறு கண்டுகொள்க. (29) அடிக்குறிப்புகள் 108-1 i “இன்னகர்கிது” 2 ii-எii “இஃது வினைச்சொல்” 3 ii-எii “தொழிலினையும் அத்தொழினிகழ்ந்தும்” எi “தொழிலினையும் தொழில் நிகழ்ந்தும்” 4 எi-எiii “அதற்குத் துணை” ii “இன்னாற்கு இவன் இதைச் செய்கின்றான் என்று சொல்லப்படுகின்ற அப்பொருளினையும்” எi “இன்னாற்கு இவன் என்று சொல்லப்படுகின்ற அப் பொருளினையும்” 6 i-iii-iஎ-எ “இவனை . . . . . . . . . பயமாக” எi “இவனை ஏற்றுக்கொண்ட அதனால் பயமாக” 7 iii “செய்யப் படுகின்றான் என்று சொல்லப்படுகின்ற அப் பொருண்மையினையும்” 8 ii “தொழிலியற்றுவான் ஒருவனும்” எi “ஒருவனும் வனையப்பட்ட” 108-9 i-ii “குண்ட முதலிய” (i-ல் ‘ண்’ அடிக்கப்பட்டுள்ளது) 10 எi “செயப்படு பொருளும் விளங்கின” i-ii-iஎ-எ “செயப்படு பொருள் விளங்கிற்று” 11 ii “விளங்கினான்” எi “விளங்கி” 12 i-எi-எiii “மரபானும்” 13 i-எ “கூறற்பால அதனை” 14 எi “என்றும்” 15 எii “வேற்றுமைகளோடு தொடர்ந்தே வருவது” 16 ii-எii “இங்ஙனம் கூறிய” எi-எiii “கூறிய” iii “இக்கூறிய” 17 i “எட்டிலங்களுள்” 18 iஎ “சேர்ந்தது செயப்படு பொருள்” (ஒரு தொடர் விடுபட்டது.) 19 iஎ “சேர்ந்தது இன்ன” (ஒரு தொடர் விடுபட்டது.) 109. அவைதாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். என்பது என்நுதலிற்றோ எனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்சொல்லப்பட்ட எண்வகை இலக்கணமும், வழக்கு நடத்துமிடத்துக் குறைவன குறைந்து வரும் என்றவாறு. (உ-ம்.) கொடியாடிற்று என்பது, செயப்படுபொருளும், இன்னார்க்கு என்பதும், இது பயனாக என்பதும் இல்லை. துஞ்சும் என்புழியும் 1குன்றினஉள. பிறவும் அன்ன. (30) அடிக்குறிப்பு 109-1 ii “இவ்வாறு குன்றின” 110. முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் 1முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ 2அனைமர பினவே 3ஆகுபெயர்க் கிளவி. என்பது என்நுதலிற்றோ எனின், ஆகுபெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- முதற் பொருள் ஏதுவாகக் கூறப்படும் சினைப்பொருளை அறியும் 4சொல்லும், சினைப்பொருள் ஏதுவாகக் கூறப்படும் முதற் 5பொருளை அறியும் சொல்லும், ஒரு பொருள் பிறந்த இடத்தினைச் சொல்ல அவ் 6இடத்தினுட் பிறந்த பொருளை உணர நிற்கும் சொல்லும், ஒரு பண்பினைச் சொல்ல அப்பண்படைந்த பொருளினை விளங்க நிற்கும் சொல்லும், ஒரு தொழிலினைச் 7சொல்ல அத்தொழில் 8நிகழ்ச்சியின் ஆயதனை உணரநிற்கும் சொல்லும். ஒரு பொருண்மேல் இரண்டு பொருளினை ஒட்டிச் சொல்ல அஃது அப்பொருளினை ஒழிய அதனை உடைய வேறோர் பொருளை உணர நிற்கும் சொல்லும், ஒரு வினையை 9நிகழ்த்திய கருத்தாவினைச் சொல்ல அதனான் நிகழ்த்தப்பட்ட தனை உணரநிற்கும் சொல்லும், இவை 10ஏழும் அம்மரபிற்றொக்க தம் பெயர் கூறியவழிக் காரணமாய் நின்றவற்றையே தம்இலக்கணமாக 11உடைய சொற்கள் ஆகு பெயர்ச் 12சொல்லாவன என்றவாறு. (உ-ம்.) 13முதலிற் கூறல் :- கடுத்தின்றான், தெங்கு தின்றான் என்பன. 14சினையிற் கூறல் :- இலை நட்டு வாழும், பூ நட்டு வாழும் என்பன. பிறந்த வழிக்கூறல் :- 15குழிப்பாடி என்பது. பண்புகொள் பெயர் : - நீலம் 16என்பது. இயன்றது மொழிதல்:- ஏறு, 17குத்து என்பது. இருபெய ரொட்டு: - 18பொற்றொடி என்பது. இஃது அன்மொழித்தொகை அன்றோ எனின், படுத்த லோசைப் பட்டவழி அன்மொழித் தொகையாம். எடுத்த லோசைப்பட்ட 19வழி ஈண்டு ஆகுபெயர் ஆகும் என்பது. வினைமுதலுரைக்குங் 20கிளவி, தொல்காப்பியம், 21கபிலம் என்பன. (31) அடிக்குறிப்புகள் 110-1 i-ii “முதலறு” 2 i-ii “அனைய மரபினவே” 3 i “யர்க்கு பெவயர்க் கிளவி” 4 எi “சொல்லும் ஒரு பொருள் பிறந்த” (ஒரு தொடர் விடுபட்டது.) 5 ii-எii “பொருளினை” 110-6 எi “இடத்தினால் பிறந்த” 7 iஎ “சொல்ல அஃது அப்பொருளினை” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது) 8 i-ii-எ-எii “நிகழ்ச்சியினதனை” 9 i-ii-iii-iஎ-எ “நிகழ்ந்த . . . . . . . . . னைச் சொல்ல” 10 iii-எi-எi-எiii “இவை எழுந்தவம் மரபிற்” 11 எi “உடைய . . . . . . சொற்கள்” ii “உடையவான சொற்கள்” 12 ii-எ-எi-எii “சொல்லாம் என்றவாறு” 13 i-iii “உ-ம் . . . . . . தன்றான் தெங்கு” எ “முதலிற் கூறல் . . . . . . தின்றான் தெங்கு” ii-எi-எii “முதலிற் கூறும் சினையறி கிளவி -கடுத்தின்றான் தெங்கு” 14 i “சினையிற் . . . . . . இலை நட்டு” ii-எi-எii “சினையிற் கூறும் முதலறிகிளவி - இலைநட்டு” 15 ii “குழிப்பாடி நேரிது பண்பு” i “குழிப்பாடி . . . . . . . . . என்பது பண்பு” எi “குழிப்பாடி பண்பு” 16 எi “என பல” 17 எi “குத்து இருபெயரொட்டு” ii “குத்து என்பன” 18 எi “பொற்றொடி இஃது” 19 எi “வழி ஆகு பெயர் ஆகும்” 20 i “கிழவி” 21 எi “கபிலர் . . . . . . அவை தாம்” 111. அவைதாம், தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் ஒப்பில் வழியால் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலும் காலை. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் ஆகுபெயர்க் கண்ணே 1படுத்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- முற்கூறிய ஆகுபெயர்கள் தத்தம் பொருட்கண் ஆங்கால், தாம் முன்பு உணர்த்தி நின்ற பொருட்கு வேறுஅன்றி அதனோடு தொடர்ந்த பொருளோடு பொருந்தி நிற்றலும், அம்முதற் பொருளோடு பொருத்தம் இல்லாத கூற்றினான் நின்று பிறிது 2பொருளை உணர்த்தலும் என்று சொல்லப்படுகின்ற அவ்இருவகை இலக்கணத்தினையும் உடைய, சொல்லும் காலத்து என்றவாறு. (உ-ம்.) 3தம்மொடு சிவணல்:- தெங்கு, கடு என்னும் தொடக்கத்தன. ஒப்பில் 4வழியாய் நின்றன. பிறிது பொருள் சுட்டல்: குழிப்பாடி, பொற்றொடி என்பன. இதனாற் சொல்லியது ஒன்றனது பெயரை ஒன்றற்கு இடுங்கால், அம்முதற் பொருளோடு தொடர்புள்வழியே இடவேண்டும் என்று கருதின், அது வேண்டுவதில்லை; அம்முதற் பொருளோடு தொடராது பிறவாற்றானும் இயைபுள்வழியும் இடலாம் என்பது கூறியவாறு ஆயிற்று. அஃதேல், இச்சூத்திரப் பொருண்மை 5மேலைச் சூத்திரத்து ஓதியவாற்றானே பெற்றாம் அன்றோ எனின், பெற்று நின்றதனையே இவ்வாறு ஒப்பில்வழியும் ஆம் என மாணாக்கனை நன்கு தெளிவித்தற் பொருட்டுக் கூறினா6ன் என்பது. (32) அடிக்குறிப்புகள் 111-1 iii “படுத்தவதோர்” 2 எi “பொருள் உளர்த்தலும்” (ள-ண மயக்கம்.) 111-3 i-iii-iஎ “தம்மொடு சிவணின்” ii-எi-எii “தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணல் தெங்கு” 4 ii-எi “வழியால் பிறிது பொருள் சுட்டல் குழிப்பாடி” 5 எi “மேல் சூத்திரத்து” 6 “ர்” 112. வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் ஆகுபெயர்க் கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ் ஆகுபெயர்களை ஐ முதலிய 1ஆறு வேற்றுமைப் பொருண்மையிடத்தினும் இயைபுடைமையைப் பாதுகாத்து 2ஒழுகுதலை வேண்டும் ஆசிரியன் என்றவாறு. (உ-ம்.) 3பொற்றொடி ஆகுபெயர். பொற்றொடியைத் 4தொட்டாள் என இரண்டாவதன் பொருண்மைத்து. தொல்காப்பியம் என்பது தொல்காப்பியனாற் செய்யப் பட்டது என மூன்றாவதன் பொருண்மைத்து. 5தண்டூண் என்னும் ஆகுபெயர் 6தண்டூணிற்குக் கிடந்தது என நான்காவதன் பொருண்மைத்து. பாவை என்னும் ஆகுபெயர் பாவையினும் அழகியாள் என ஐந்தாவதன் பொருண்மைத்து. கடு என்னும் ஆகுபெயர் கடுவினது காய் என ஆறாவதன் பொருண்மைத்து. 7குழிப்பாடி என்னும் ஆகுபெயர் குழிப்பாடிட் டோன்றி யது என ஏழாவதன் பொருண்மைத்து. பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது, முன் ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்டலும் ஆம் என்றமையின் அப்பிறிது பொருள் சுட்டியவாறு பாகுபாடு பெறுங்கொல்லோ எனின், இவ்ஆறு வேற்றுமைப் 8பொருள் இயைபு உள்வழி 9ஆவது; பிறவழி யாகாது கூறியவாறு. (33) அடிக்குறிப்புகள் 112-1 i-ii-எii “ஆறுவகை வேற்றுமை” 2 i-iஎ “ஒழிதலை வேண்டும்” எiii “ஒழுதலை வேண்டும்” ii-எi-எii “அறிதல் வேண்டும்” 112-3 i “பொற்றொடி என்னும் ஆகுபெயர்” 4 ii-எi “தொட்டான் பொற்றொடி என இரண்டாவதன்” 5 ii “தண்டூண் கிடந்தது என்புழித் தண்டூணை என்னும் ஆகுபெயர்” 6 எi “தண்டூணாதற்குக் கிடந்தது” 7 i “குழிப்பாடி எம்” 8 i-ii-எi-எii-எiii “பொருள் . . . . . . . . . ள் வழி பெயராவது” 9 i-ii-iஎ-எii “பெயர்வது” எii-எiii “பெயராவது” 113. அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உளஎன மொழிப 1உணர்ந்திசி னோரே. என்பது என்நுதலிற்றோ எனின், இன்னொருசார் ஆகுபெயர் உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அளவுப் பெயரினையும் நிறைப் பெயரினையும் மேற் கூறிய ஆகுபெயரோடு கொள்ளும் இடங்கள் உள என்று சொல்லுவர் உணர்வுடையோர் என்றவாறு. (உ-ம்.) நாழி, உழக்கு என இவை அளவுப்பெயர். ஈண்டு 2இதன் பொருள் அதற்காயிற்றோ எனின், அளக்கப்பட்ட பொருட்கண் கிடந்த வரையறைக்கண் அப்பெயர் பொருட்கு ஆயிற்று எனக் கொள்க. தொடி, துலாம் என்பன நிறைப்பெயர். ஈண்டு வரையறைக் குண(ர்)த்தினான், பெயர் பொருட் காயிற்று 3எனக் கொள்க. மற்றுஇவை கிளந்தவல்ல என்னும் புறனடையுள் அடங்காவோ எனின், இவற்றை உலகத்தார்க்குப் பெயர்க் குறிப்பு என்று கொள்ளாது அப்பொருட்குப் பெயர்போலக் கொண்டமையின் வேறு கூறினான் எனக் கொள்க. (34) அடிக்குறிப்புகள் 113-1 i “உணர்த்திசினாரே” 113-2 i-ii-iஎ-எii “அதன் பொருள்” 3 எi “என உணர்க” 114. கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் கிளந்த வற்றியலான் உணர்ந்தனர் 1கொளலே. என்பது என்நுதலிற்றோ எனின், 2மேற்கூறிய ஆகுபெயர்க்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் :- ஆகுபெயர்க்கண் மேல் எடுத்தோதின அல்லாதன வேறு பல தோன்றினும் அவ்எடுத்தோதப் பட்டவற்றின் இயல்பினானே உணர்ந்து கொள்க என்றவாறு. (உ-ம்.) யாழ்கேட்டான், குழல் கேட்டான் என அவற்றினாகிய 3ஓசைமேல் நின்றன. பசுப் போல்வாளைப் பசு என்ப, பாவை போல்வாளைப் பாவை என்ப. இனி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர்களும் வரையறைப் பண்பின் பேர்பெற்ற ஆகுபெயர் எனக்கொள்க. அவ்எண்ணுப் பெயரினை (ன்?) அறிகுறியாகிய அலகுநிலைத் தானங்களும் அப்பெயர் ஆயின எனக் கொள்க. இனி அகரமுதலாகிய எழுத்துக்களை உணர்த்ததற்குக் கருவியாகிய 4வரிவடிவுகளும் அப்பெயரவாம். தாழ்குழல், திரிதாடி என்பனவற்றையும் இரு பெயரொட்டு இன்மையின் ஈண்டே கொள்க. மண்ணானாய கலத்தை மண் என்றும், பொன்னானாய கலத்தைப் 5பொன் என்றும் இவ்வாறே காரணத்தின் பேரினைக் காரியத்துக்கு இட்டும் 6கடிசூத்திரத்திற்காக இருந்த பொன்னைக் கடிசூத்திரம் என்றும், தண்டூணாதற்குக் கிடந்த மரத்தினைத் தண்டூண் என்றும் இவ்வாறே காரியத்தின் 7பேரினைக் 8காரணத்திற்கிட்டும் வருவன எல்லாம் கொள்க. இனி எழுத்து எனவும் சொல் 9எனவும் பொருள் எனவும் கூறிய நூன்மேல் ஆகுபெயராய் வருவனவும் ஈண்டே 10கொள்க. ‘வேறு’ என்ற அதனான் அவ்வாகுபெயர்கள் தொல்காப்பியம், வில்லி, வாளி என ஈறு திரிந்தனவும் ஈண்டே கொள்க. இவ்ஆகுபெயரை இவ்வோத்தினுட் .......................... வும் எழுவாய் வேற்றுமை மயக்கம் ஆகலின் ஈண்டே கூறினா11ன் என்பது. (35) 12மூன்றாவது - வேற்றுமை மயங்கியன் முற்றிற்று. அடிக்குறிப்புகள் 114-1 i “கொள்க” எi-எii “கொளவே” 2 எi-எiii “மேற்கூறிய ஆகுபெயர்க்கண் மேல் எடுத்தோதின” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது.) 114-3 i-ii-iஎ-எ-எi “ஓசை கேட்டானையும் பசுப் போல்வாளை” 4 i “அரிவடிவுகளும் அப்பெயராம்” 5 ii “இட்டும் கண்ணும் கடி” 6 i-iஎ-எ “குடிசூத்திர . . . . . . . . . ருந்த” iii “கடி சூத்திரம் செய்யாமலிருந்த 7 ii-எi-எii “பெயரினை” 8 ii “காரணத்திற் கிட்டும் கண்ணும் வருவன” i “காரணத்திற் கிட்டு கிட்டும் வருவன” 9 i-ii-iஎ-எ-எi-எii-எiii “எனவும் . . . . . . . . . உறிய” 10 iii “கொள்க. இவ்வாகுபெயரை” (ஒரு தொடர் விடுபட்டுள்ளது.) 114-11 “ர்” 12 எi 35-இன் பின் “வேற்றுமை மயங்கியல் முற்றும்” என முடியும். பிற பிரதிகள் “மூன்றாவது வேற்றுமை மயங்கியல் முற்றிற்று” என முடியும். விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர்முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்களிவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டுவினாப் பெயர்களும் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமையோடு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல்: இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். ஈற்றயல் நீடல்: லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல்: ஓகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரவீற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல்: இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனீற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களை யிறுதியாகவுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதிணைப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத்திரையில் நீண்டொலிப்பன் வென்றும் கூறுவர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 203-204 1நான்காவது விளிமரபு 115. விளிஎனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய என்ப. இவ்ஓத்து 2என்ன பெயர்த்தோ எனின், விளி மரபு என்னும் பெயர்த்து. மேல் ஓத்தினோடு இவ் 3ஓத்தினிடை இயைபு என்னோ எனின், மேல் வேற்றுமை விளியொடு எட்டே என நிறுத்தா4ன்; 5நிறுத்த முறையானே விளிஒழித்து அவ் ஏழும் உணர்த்தி, இனி ஒழிந்து நின்ற 6விளி உணர்த்தகின்றா7ன் என்பது. இம்முதற் சூத்திரம் என்நுதலிற்றோ எனின் விளி வேற்று மையது பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. 8இதன் பொருள்:- விளி என்று சொல்லப்படுவன தம்மை ஏற்கும் பெயரொடு யாப்புறத் தோன்றும் தன்மைய என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. படுப எனப் பன்மைகூறிய 9அதனான் அவ்விளி தான் ஈறு திரிதலும் ஈற்ற அயல் நீடலும், பிறிதுவந்து அடைதலும், இயல்பு ஆதலும் என நான்கு வகைப்படும் என்பது பெறப்பட்டது. தெளிய என்றதனான் விளிதன்னை எழுவாயின் வேறுபாடதன்றி வேறோர் வேற்றுமை என்பாரும் உளர் என்பதூ உம், 10இவ்வாறு ஒர் வேற்றுமையாக நேர்ந்தார் என்பதூஉம் பெறப்பட்டது. (1) அடிக்குறிப்புகள் 115-1 எi “-4 விளிமரபு” 2 i-ii-எii “என்னை” 3 எi “ஓத்திடை” 4 எi “ர்” 5 எi “அந்நிறுத்த” 6 ii-எi-எii “விளியை” 7 “ர்” 8 எ “உரை - விளி என்று சொல்லப்படுவன” 9 i-ii-எi-எii “அதனால்” 10 எ“இவ்வா வேற்றுமையாக நெர்ந்தாம்” 116. அவ்வே, இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்சொல்லப் பட்டவற்றை இனிச் சொல்லுப என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் விளி ஏற்பவும் ஏலாதனவும் எனச் சொல்லப்பட்டவற்றை இவை என அறியும்படி 1வழக்குக்குத் தழுவ எடுத்தோதுப ஆசிரியர். 2அதனான் யானும் அம்முடிபே கூறுவல் என்பது. இது மொழிவாம் என்னும் தந்திரவுத்தி மற்று அஃது ஆமாறு என்னை? கிளப்பல் என்னாது, கிளப்ப என்றமையின் 3முன்நூலுள் அவ்வாறு கூறும் என்பதன்றே பெறுவது எனின், சொற்கிடை அது எனினும் 4ஈண்டுக் கூறியவாறு போல யானும் ஈண்டுக் கூறுவல் என்பது கருத்தாகக் கொள்க. இனி, கிளப்ப என்பதனைப் பெயர்ப்படுத்துக் கூறலும் ஒன்று. (2) அடிக்குறிப்புகள் 116-1 ii-எii “வழக்குத் தழுவ” 2 ii-எii “இதனான்” 3 எi “முதனூலுள்” 4 ii-எi-எii “ஆண்டுக்” (இதுவே சிறக்கும்) 117. அவைதாம், இ உ ஐ ஓ என்னும் இறுதி அப்பால் னான்கே உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. என்பது என்நுதலிற்றோ எனின், உயிர்ஈற்று உயர்திணைப் பெயருள் விளி ஏற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல், விளி ஏற்கும் எனப்பட்டவை தாம் இ, உ, ஐ, ஓ, என்று சொல்லப்பட்ட ஈறுகளை உடைய அக்கூற்று நான்கு பெயரே உயர்திணையிடத்து மெய்ப் பொருளினைச் சுட்டிய விளியினைக் கொள்ளும் பெயராவன என்றவாறு. உயிர்ஈற்று உயர்திணைப் பெயர்களுள் விளி ஏற்பன இந் 1நான்குமே 2எனவே ஒழிந்த உயிர்ஈறு விளிஏலா என்பதூஉம் இதனாற் பெற்றாம். 3உயிர்ஈறு பன்னிரண்டும் 4உயர்திணைப் பெயர்க்கு ஈறுஆமோ எனின், அஃது ஈண்டு ஆராய்ச்சி அன்று. 5ஈறு ஆவனவற்றுள் விளி ஏற்பன இவை என்றவாறு. மக என்னும் அகரஈறும் ஆடூஉ மகடூஉ என்னும் ஊகரஈறும் இந்நிகரன விளிஏலாதன எனக் கொள்க. மெய்ப்பொருள் சுட்டிய என்றதனான், இவ்ஈற்று அஃறிணைப் பெயர்களும் இவ்உயர்6திணைப் பெயர்போல விளிஏற்பன என்பது கொள்ளப்படும். அவை, தும்பி தும்பீ எனவும், முல்லை முல்லாய் எனவும் வரும். (3) அடிக்குறிப்புகள் 117-1 எi “நான்கும்” 2 எ “என ஒழிந்த” 3 எiii “உ-ம். உயிர்ஈறு” 4 ii “உயர்திணை பெயர்” 5 எ “ஈறு வருவனவற்றுள்” 6 ii-எi “திணைப்போல” 118. அவற்றுள், இஈ ஆகும் ஐஆய் ஆகும். என்பது என்நுதலிற்றோ எனின், மேற் சொல்லப்பட்ட நான்கனுள்ளும் இகரஈறும் ஐகாரஈறும் விளிஏற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. 1இதன் பொருள்:- மேற் சொல்லப்பட்ட நான்கு ஈற்றுப் பெயருள்ளும் இகர ஈற்றுப் பெயர் ஈகாரமாய் விளி ஏற்கும். ஐகார ஈற்றுப் பெயர் 2ஆயாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) நம்பி - நம்பீ, நங்கை - நங்காய் என வரும். இவை ஈறுதிரிதல். (4) அடிக்குறிப்புகள் 118-1 எ “உரை. மேற்சொல்லப்பட்ட” 2 i-ii-எi-எii “ஆயாயும்” 119. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். என்பது என்நுதலிற்றோ எனின், ஒழிந்த இரண்டு ஈறும் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஓகார ஈற்றுப்பெயரும் உகரஈற்றுப் பெயரும் 1ஏகாரத்தோடு பொருந்தி விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) கோ - கோவே எனவும், வேந்து - வேந்தே எனவும் வரும். இவை பிறிது வந்தடைதல். (5) அடிக்குறிப்பு 119-1 எii “எகரத்தொடு” (குறில் நெடில் வேறுபடாத காலத்து மயக்கமாம்.) 120. உகரந் தானே குற்றிய லுகரம். என்பது என்நுதலிற்றோ எனின், ஐயம் அறுத்தல் நுதலிற்று. என்னை? மேல் இ உ ஐ ஓ என்புழி. இன்ன உகரம் எனத் தெரித்துக் கூறாமையானும், உடன் ஓதப்பட்ட எழுத்துக்கள் முற்று இயல்பின ஆதலானும், இன்னஉகரம் என்பது அறியாது 1ஐயுற்றானை ஐயம் தீர்த்தமையின் என்பது. இதன் பொருள்:- மேற்கூறப்பட்ட உகரம்தான் முற்றிய லுகரம் அன்று, 2குற்றியலுகரம் என்றவாறு. (6) அடிக்குறிப்புகள் 120-1 எ “ஐயுற் . . . . . . . . . ஐயந்தீர்த்தமையின்” எi “ஐயுற்றான் ஐயந்தீர்ந்தமையின்” 2 ii-எi-எii “குற்றியலுகரமாம்” 121. ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம் விளிகொள்ளா என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், வேண்டாகூறி 1வேண்டியது முடித்தலை உணர்த்தல் நுதலிற்று. என்னை? வேண்டா கூறியவாறு எனின், அவைதாம் இ உ ஐ ஓ என்புழி இந்நான்கு ஈறும் விளி ஏற்கும், ஒழிந்த உயிர் ஈறு விளி ஏலா என்பது பெற்றமையின் என்பது. இனி வேண்டியது 2முடித்தவாறு என்னை எனின், ஒழிந்த உயிர் ஈறு வேற்றுமை ஏலா என்று, இன்னும் மேற்சொல்லிய உயிர் ஈறு விளி ஏற்கும் என்றமையின். இதன் பொருள்:- மேற்கூறிய நான்கு உயிரே அன்றி ஒழிந்த உயிர்ஈறுகள் உயர்திணைப் பெயரிடத்துத் தாம் விளித்தலைக் கொள்ளா என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. இவ்விதி 2மேலே பெற்றாம் அன்றோ எனின், மேற் கூறியவாறு விளிஏற்கும் என்பது கருத்எனக் கொள்க. கணி - கணியே என இகரஈறு ஏகாரம் பெற்றது. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (7) அடிக்குறிப்புகள் 121-1 எ “வேண்டியதை முடித்தல் நுதலிற்று” 2 ii “முடிந்தவாறு” 3 எ “மேலா பெற்றாம்” 122. அளபெடை மிகூஉம் இகர 1இறுபெயர் இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. 2ஈகாரமாதல் விலக்கி இயல்பாய் விளி ஏற்கும் 3என்றமையின். இதன் பொருள்:- அளபெடுத்தலான் 4மிகுகின்ற இகரமாய இறுதியை உடைய பெயர் இயல்பாய் விளிஏற்கும் செய்தியை உடைய என்றவாறு. (உ-ம்.) 5தொழீஇ இ இ, (தொழீஇ) என்பது பெயர், விளியும் அஃதே எனக் கொள்க. இஃது இயல்பு இயற்கைய என்று பன்மை கூறிய அதனான் இவ்அள பெடை 6மூன்று மாத்திரையில் நிமிர்ந்து நிற்கும் 7என்பது கொள்ளப்படும். செயற்கைய என்றதனான் இவ்8அளபெடைப் பெயர் எழுதும்வழி ஐந்தெழுத்திட்டு எழுதுக என்றவாறு கொள்ளப் பட்டது. (8) அடிக்குறிப்புகள் 122-1 ii “வீறு பெயர்” 2 ii “உரை. கோவீறிகரமாதல் விலக்கி” எi “என்னை. ஈகாரமாதல் விலக்கி” எii “ஈகாரம். இகரவீறு” 3 எ “என்றமையான்” 122-4 எ “மிகுகுறை விகாரமாகிய” (கு-கி மாறுபாடு; றை-ன்ற மாறுபாடு.) 5 i-ii-iஎ-எii “தொழிலீ இ இ இ . . . . . . . . ஃதே எனக் கொள்க. எ “தொழீ இஇ என . . . . . . . . . ஃதே எனக் கொள்க” 6 i “மூன்றும்” 7 எi “என்று கொள்ளப்படும்” 8 i-ii-iஎ-எii “அளபெடை . . . . . . அவ்வழி” எ அளபெடைப் . . . . . . மவ்வழி” 123. முறைப்பெயர் மருங்கின் ஐஎன் இறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே. என்பது என்நுதலிற்றோ எனின், மேற்சிறப்புவிதி 1வகுத்தலை நுதலிற்று. 2ஐகார ஈறு ஆயாய் 3விளியுருபு ஏற்றுவருதலே அன்றி ஆ ஆயும் விளி ஏற்கின்றமையின். இதன் பொருள்:- முறைப் பெயரிடத்து ஐ என்னும் ஈறு ஆயோடு 4வருதலேயன்றி ஆவோடு வருவற்கு உரியனவும் உள 5என்றவாறு. (உ-ம்.) 6அன்னை - அன்னா என்றும், 7அத்தை - அத்தா என்றும் வரும். உம்மை எதிர்மறை; அதனான், 8ஆயாதலே பெரும்பான் மைத்து. 9மற்று இவை விரவுப் பெயர் அன்றோ எனின், (பெயர்) விரவுப் பெயர்களை 10உயர்திணைப் பெயர்களோடு மாட்டெறியும். ஆதலானும் அம்மாட்டேற்றிற்கு ஏற்ப உயர்திணைப் பெயர்களுள் இவ்வாறு விளி ஏற்பன இன்மை யானும், ஆண்டுக் கூறற்பாலதனை ஈண்டுக் கூறியது எனக் கொள்க. (9) அடிக்குறிப்புகள் 123-1 ii “வகுத்தலை உணர்த்துதல்” 2 எ “உரை. ஐகார ஈறு”(இவ்வாறே இவ்வியலிலிருந்து “இதன் பொருள்” என்று பதிப்பில் காணும் இடங்களில் இப்பிரதி “உரை” என்று கூறிச் செல்கிறது. இனிமேல் இப்பிரதி பேதம் குறிக்கப் பெறுவதில்லை.) எi “முறைப் பெயரிடத்து ஐகார ஈறு” 3 i-ii-iஎ-எii “விளி . . . . . . விளி” எ “வினி . . . . . . ரவாயும் விளி” 123-4 i-எ “வருதலன்றி” 5 i-ii-iஎ-எii “என்னுதல் நுதலிற்று” (முன்னரே “நுதலிற்று” என வந்தமையின் இங்கு வேண்டா” 6 i “ஆன்னை ஆன்னா” (ஆ-அ மாறுபாடு.) 7 ii “ஆத்தை ஆத்தா” ( ஷ ) 8 எ “ஆயாதல் பெரும்பான்மைத்து” 9 எi “மற்றிவை விரவுப் பெயர்களை உ.ப திணைப் பெயர்களோடு” (தொடர் விடுபட்டுள்ளது.) 10 எ “திணைப் பெயர்களோடு” 124. அண்மைச் சொல்லே 1இயற்கை யாகும். என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது 2விதிவகுத்தல் நுதலிற்று; 3மேற்கூறியவாறு அன்றி இன்னுழி இயல்பாம் என்கின்றமையின். இதன் பொருள்:- மேற்கூறிய உயிர் ஈறு நான்கினையும் உடைய அணியாரைக் கூவும் சொற்கள் மேற்கூறியவாறு அன்றி இயல்பாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) நம்பி வாழி, நங்கை வாழி, வேந்து வாழி, கோ வாழி என வரும். (10) அடிக்குறிப்புகள் 124-1 i “இயற்கை வாகும்” 2 ii “விகுதி” 3 எ “உரை. மேற்கூறிய” i-ii “இ - ள், மேற்கூறிய” 4. i-ii-எ “மேற்கூறிய” 125. னரலள என்னும் அந்நான் கென்ப புள்ளி இறுதி விளிகொள் பெயரே. என்பது என்நுதலிற்றோ எனின், உயர்திணைக்கண் உயிர்ஈறு விளி ஏற்பன இவை என்பது உணர்த்தி இனி அவ் உயர்திணைக்கண் புள்ளி ஈறு விளி ஏற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ன ர ல ள என்று சொல்லப்பட்ட அந் நான்கு ஈற்றுப் பெயரும் என்று சொல்லுப ஆசிரியர், புள்ளி ஈற்றினை உடைய விளித்தலைக் கொள்ளும் உயர்திணைப் 1பெயர் ஆவன என்றவாறு. புள்ளி ஈற்றுள் இவை கொள்ளும் எனவே ஒழிந்தன விளி கொள்ளா என்பதூஉம் பெற்றாம். (உ-ம்.) பொருந, பாண () எனவும். 2எல்லாரும் எனவும் இவை 3முதலாயினவிளி ஏலாதன எனக் கொள்க. (11) அடிக்குறிப்புகள் 125-1 i “பேர்” 2 iii “எல்லாமே” 3 ii “முதலியன” 126. ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா. என்பது என்நுதலிற்றோ எனின், வேண்டா கூறி 1வேண்டியது முடித்தலை 2நுதலிற்று. இதன் பொருள்:- மேற் சொல்லப்பட்ட நான்கும் அல்லாத புள்ளி ஈறு உயர்திணை 3இடத்து விளித்தலைக் கொள்ளா என்றவாறு. மற்று இவ்விதி மேலேபெற்றாம் அன்றோ எனின், மேற் சொல்லிய நான்கு புள்ளி ஈறும் இனிக் கூறுமாறு போலாது விளி ஏற்றலும் 4உடைமைய என்றற்கு மிகைபடக் கூறப்பட்டது எனக் கொள்க. (உ-ம்.) னகர ஈற்றுள் மேல் ஓதுகின்ற அன் ஈறும் ஆன் ஈறும் அல்லாத னகரஈறு தம்முன், தம்முன்னே எனவும், நம்முன் நம்முன்னே எனவும் விளி ஏற்றது. ரகர ஒற்றுள் ஓதுகின்ற அர் ஈறும் ஆர் ஈறும் அல்லாத இர் ஈறு பெண்டிர், பெண்டீரே என ஏகாரம் பெற்றும், கேளிர் 5கேளிர் என இயல்பாயும் விளி ஏற்றது. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. இன்னும் இம்மிகுதியானே ஏனைய புள்ளியுள்ளும் சிறுபான்மை யாவன உள. விளங்குமணிக் கொடும்பூண் 6ஆஅய் என யகரஈறு இயல்பாய் விளி ஏற்றது. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (12) அடிக்குறிப்புகள் 126-1 எ “வேண்டியதை” 2 ii-எi-எii “உணர்த்துதல் நுதலிற்று” 3 i “விடத்து” 126-4 எi “உடைய” (இது சிறக்கும்) 5 ii-எi “கேளீர்” 6 ii “ஆய்” 127. அவற்றுள், அன் 1என் இறுதி ஆ ஆகும்மே. என்பது என்நுதலிற்றோ எனின், மேனிறுத்த முறையானே, னகரஈறு விளிஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அந்நான்கு புள்ளியுள்ளும் னகரஈற்று அன் 2என்னும் இறுதி பெயர் இறுதி ஆவாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) சோழன்-சோழா, சேர்ப்பன்-சேர்ப்பா என 3வரும். (13) அடிக்குறிப்புகள் 127-1 i “அன்னென்னிறுதி” 2 i “அன் எனிறுதி பெயரிறுதி” எi “அன் என்னும் பெயரின் இறுதி” 3 ii “வரும் துறைவன் துறைவா என்பதும் அது” 128. அண்மைச் சொல்லிற் ககரம் ஆகும். என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அவற்றுள் அன்ஈறு 1அணியாரை விளிக்கும் சொல்லிடத்து அகரமாகும் என்றவாறு. (உ-ம்.) சோழன்-சோழ, சேர்ப்பன்-சேர்ப்ப என 2வரும். (14) அடிக்குறிப்புகள் 128-1 i “அணியார் விளிக்கும்” 2 ii “வரும் துறைவன் துறைவ என்பதும் அது” 129. ஆன்என் இறுதி இயற்கை யாகும். என்பது என்நுதலிற்றோ எனின், 1னகரஈற்றுள் 2ஒருசாரன விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆன் என்னும் னகர இறுதிப் பெயர் இயல்பாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) சேரமான், மலையமான் என வரும். (15) அடிக்குறிப்புகள் 129-1 i-எ “இதுவும் அது. னகர ஈற்று” 2 iii “ஒரு சாரன்” 130. தொழிலிற் கூறும் ஆன்1என் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- ஒருவன் செய்யும் தொழில் ஏதுவாகக் கூறப்படுகின்ற ஆன்என் இறுதிப்பெயர் 2விளிக்கும் இடத்து ஆய் ஆகும் என்றவாறு. (உ-ம்.) உண்டான் - உண்டாய். நின்றான் - 2நின்றாய் எனவரும். (16) அடிக்குறிப்புகள் 130-1 i-ii “என்னிறுதி” 2 எi “விளியேற்குமிடத்து” 3 ii “நின்றாய்; வந்தான் வந்தாய்; சென்றான் சென்றாய் என வரும்.” 131. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அவற்றுள் பண்பு தனக்குப் 1பொருண்மை யாய்க் கொண்ட பெயரும் மேற்கூறிய தொழிற்பெயரோடு ஒரு தன்மைத்து என்றவாறு. (உ-ம்.) 2கரியான் - கரியாய், 3செய்யான் - செய்யாய் என வரும். (17) அடிக்குறிப்புகள் 131-1 எi “பொருண்மையாக கொண்ட” 2 எi “கரியான்” 3 எi “செய்யான்” 132. அளபெடைப் பெயரே அளபெடை இயல. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ்ஆன்ஈற்று அளபெடைப் பெயர் மேற்கூறிய இகரஈற்று அளபெடைப் பெயர்போல இயல்பாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) 1அழாஅஅன், புழாஅஅன் என வரும். மற்று இஃது ஆனென் இறுதி இயற்கையாகும் என்ற வழியே அடங்காதோ எனின், அளபெடுத்த ஆன் என் இறுதி ஆகலின் வேறு கூறிற்றுப்போலும். (18) அடிக்குறிப்பு 132-1 iஎ “சோழா அன்” 133. முறைப் பெயர்க் கிளவி ஏயொடு வருமே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. இதன் பொருள்:- னகர ஈற்று முறைப்பெயராகிய சொல் ஏகாரம் பெற்று விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) மகன் - மகனே, மருமகன் - மருமகனே என வரும். மற்று இது விரவுப்பெயர் அன்றோஎனின், மேல் ஐகார ஈற்றுள் கூறியவாறே 2கூறுக. (19) அடிக்குறிப்புகள் 133-1 i-ii “இனி இதன்பொருள்” 2 ii “ஈண்டுங் கூறுக” 134. தான்என் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யான்என் பெயரும் வினாவின் பெயரும் அன்றி அனைத்தும் விளிகோள் இலவே. என்பது என்நுதலிற்றோ எனின், னகர 1ஈற்றுள் விளிஏற்பன எல்லாம் உணர்த்தி, விளி ஏலாதன 2கூறுகின்றது நுதலிற்று. இதன் பொருள்:- தான் என்னும் ஆன் ஈற்றுப் 3பெயரும், சுட்டெழுத்தை முதலாகஉடைய அன் ஈற்றுப் 4பெயர்களும், யான் என்னும் ஆன் ஈற்றுப் பெயரும், வினாப் பொருண்மை உணர்த்தும் அன் ஈற்றுப் 5பெயரும் - அவ்அனைத்துப் பெயரும், மேற்கூறியவாற்றான் ஆயினும் பிறவாற்றான் ஆயினும் 6விளிகோடலை இல என்றவாறு. தான், யான் என்பன ஆன் ஈறே எனினும் விளி ஏலா எனக் கொள்க. அவன், இவன், உவன் என்னும் சுட்டுப் 7பெயரும், யாவன் என்னும் வினாப்பெயரும் 8அன் ஈறே எனினும் விளி ஏலா என்றவாறு. மற்றுத் தான் 9என்பது விரவுப்பெயர் அன்றோ எனின், விரவுப் 10பெயர்களை உயர்திணைப் பெயர்களோடு மாட்டெறியும் வழி விலக்கற்பாடு மாட்டெறிதற்கு ஒப்பன இன்மையின் ஈண்டே கூறினான் என்பது. (20) அடிக்குறிப்புகள் 134-1 ii “ஈற்றில்” 2 ii-எi “கூறுகின்றது உணர்த்துதல் நுதலிற்று” i-iii-எ-iஎ “கூறுகின்றது” 3 iஎ “பேரும்” 4 எi “பெயர்களும் . . . . . . . . . அவ்வனைத்துப் பெயர்களும்” 5 iஎ “பெயரும் மேற்கூறிய வாற்றான்” (விடுபட்டுள்ளது.) 6 எi-எiii “விளிகோடல் சில” 7 “பெயரும் அன்னீறே எனினும்” (விடுபட்டுள்ளது.) 8 i “ஆன்” 9 எ “என்பது வி . . . . . . . . . ன்றோ எனின்” எi-எiii “என்பதன்றோ எனின்” (விடுபட்ட இடத்தைச் சேர்த்தெழுதியதால் எழுந்த மயக்கம்.) iii “என்பது விரவுப்பெயரன்றோ எனின்” (இது இந்தப் பிரதியின் ஊகம். இருபிறை வளைவிற்குள் உள்ளது. இந்த ஊகம் கொள்ளத்தக்கதே ஆம்.) 10 எ “பெயர்களையும் திணைப்பெயர்களோடு” 135. 1ஆரும் அருவும் ஈரொடு சிவணும். என்பது என்நுதலிற்றோ 2எனின், நிறுத்த முறையானே 3ரகார ஈறு விளி 4ஏற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- ஆர் என்னும் ஈறும், அர் என்னும் ஈறும், ஈர் என்னும் வாய்பாட்டோடு பொருந்தி விளி ஏற்கும் 5என்றவாறு. (உ-ம்.) பார்ப்பார் - பார்ப்பீர், கூத்தர் - கூத்தீர் 6என வரும். (21) அடிக்குறிப்புகள் 135-1 i “ஆருமரூஉ மீரொடு” 2 i-ii-iஎ-எii “எனின் . . . . . . . . . த்த முறையானே” 3 எi “ரகாரவீறு” i “கரஈறு” 4 i “ஏற்கும் என்றவாறு இள்” 5 i-iஎ “என்நுதல் நுதலிற்று - உ.ம்” 6 எi “எனவரும் . . . . . . 21” 136. தொழிற்பெயராயின் ஏகாரம் வருதலும் 1வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. என்பது என்நுதலிற்றோ எனின், 2இஃது எய்தியதன் மேல் சிறப்பு விதி வகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- மேற்கூறிய இரண்டு ஈறும் தொழிற் பெயர்க்கு ஈறாய்3வரின் மேற்கூறிய ஈறோடு ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று என்று 4சொல்லுவார், 5விளங்கிய அறிவை உடையார் என்றவாறு. (உ-ம்.) உண்டார் - உண்டீரே, 6தின்றார் - தின்றீரே என வரும். அர் ஈறு வந்தவழிக் கண்டு கொள்க. 7வழுக்கின்று என்றதனான், தொழிற் பெயர் அல்லனவும் ஈரோடு ஏகாரம் பெறுதல் கொள்க. (உ-ம்.) நம்பீரே கணியீரே எனவரும். (22) அடிக்குறிப்புகள் 136-1 i-ii-iஎ-எii “வழக்கின்றென்மனார்” 2 i “இது எய்தியதின்” 3 எ “வரின் ஈரொடு” 4 ii “சொல்லுவர். கூறுவர்” 5 எ “விளங்கின” 6 எ “நின்றார். நின்றீரே” 7 i-ii-iஎ-எii “வழக்கின்று” 137. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் எய்தியதன் மேற் சிறப்பு விதி வகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ்இரண்டு ஈற்றுப் பண்பு கொள் பெயரும் அத் தொழிற் பெயரோடு ஒருதன்மைத்து என்றவாறு. (உ-ம்.) கரீயீரே, செய்யீரே எனவரும். ஈண்டும் ஆர்ஈறு வந்தவழிக் கண்டுகொள்க. (23) 138. அளபெடைப் பெயரே அளபெடை இயல. என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் 1பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. 2இதன் பொருள்:- 3ரகரஈற்று அளபெடைப்பெயர் 4னகர ஈற்று அளபெடைப் பெயர் போல இயல்பாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) 5மகாஅர், சிறாஅர் எனவரும். (24) அடிக்குறிப்புகள் 138-1 ii “பிறிது வகுத்தல்” 2 i-ii-iஎ-எii “இனி இதன் பொருள்” 3 ii-எi-எii “ரகார” 4 எi “னகார” 5 ii “மகா அஅர் சிறாஅ அர்” 139. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. என்பது என்நுதலிற்றோ எனின்,: 1ரகர ஈற்றுப் பெயர் விளி ஏலாதன கூறுகின்றது. இதன் பொருள்:- ரகர ஈற்றுச் சுட்டெழுத்தினை முதலாக உடைய பெயர்கள் 2னகர ஈற்றுச் சுட்டுமுதற்பெயர்போல விளி ஏலாது என்னுதல் நுதலிற்று. 3அவர் இவர் உவர் என்பன அர் ஈறே எனினும் விளி ஏலா 4என்றவாறு. (25) அடிக்குறிப்புகள் 139-1 ii-எi “ரகார” 2 ii-எi “னகார” 3 எi (இப்பத்தி இல்லை) 4 i-iஎ “என்னுதல் நுதலிற்று” ii-எii “என்னுதல் ஆயிற்று” iii “என்னு நுதலிற்று” 140. நும்மின் திரிபெயர் வினாவின் பெயர்என் றம்முறை இரண்டும் 1அவற்றியல் பியலும். என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் விளிஏலாதன கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- நும் என்னும் சொல்லினது திரிபாகிய நீயிர் என்னும் சொல்லும், வினாப்பொருளை 2உணரநின்ற சொல்லாகிய யாவர் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட அம்முறையினை உடைய சொல் இரண்டும் மேல் விளி ஏலா 3எனச் சொல்லப்பட்ட சுட்டுப்பெயர் போலத் தாமும் விளிஏலா என்றவாறு. நீயிர் என்பது இர் 4ஈறாகலின் ஈண்டு எய்தியது இன்மையின் விலக்கல் வேண்டா எனின், ஏனைப்புள்ளி என்பதனுள் இர் ஈறும் கொள்ளப்பட்டமையின் வேண்டும் என்பது. (26) அடிக்குறிப்புகள் 140-1 i “அவற்றவற் றியல்பே” 2 iii “உணர்கின்ற” (கி - நி மாறாட்டம்.) 3 ii-எi “ஏலாது என்று சொல்லப்பட்ட” 4 (பல பிரதிகளில் i-ii-எii ஈ என்பது கூ போலவே உள்ளது.) எ “இர் . . . . . . . . . ஈண் டெய்தின்மை” 141. எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும். என்பது என்நுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே 1லகார ஈறும் ளகாரஈறும் விளி 2ஏற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. இதன் பொருள்:- லகார ளகாரம் என எஞ்சிய இரண்டு எழுத்தினையும் இறுதியாக உடைய பெயர்கள் ஈற்றின் நின்ற எழுத்திற்கு அயல் எழுத்து நீண்டு விளி 3ஏற்றலை வேண்டும் என்றவாறு. (உ-ம்.) 4குரிசில் - குரிசீல், தோன்றல் - தோன்றால், மக்கள் - மக்காள் எனவரும். (27) அடிக்குறிப்புகள் 141-1 ii லகார வீறும்ஏற்குமாறுணர்த்தல் நுதலிற்று” 2 i-iஎ “ஏற்குமாறு கூறுகின்றது” 3 எi-எii “ஏற்றல் வேண்டும்” 4 i “குருசில் - குருசீல்” 142. அயல்நெடி தாயின் இயற்கை ஆகும். என்பது என்நுதலிற்றோ எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- அவ் இரண்டு 1ஈற்றுப்பெயரும் அயல்எழுத்து நீண்ட நிலைமைய ஆயின் இயல்பாய் விளிஏற்கும் என்றவாறு. (உ-ம்.) 2பெண்பால் ஆண்பால் 3ஏமாள் 4கோமான் என வரும். (28) அடிக்குறிப்புகள் 142-1 எi “ஈற்றயல் எழுத்து நீண்ட” 2 ii-எi “ஆண்பால் பெண்பால்” 3 i-ii “ஏமான்” 4 எ -எi “ஏ கோமான்” 143. வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் 1ஆள்என் இறுதி ஆய்ஆ கும்மே விளிவயி னான. என்பது என்நுதலிற்றோ எனின், அவ்இரண்டு ஈற்றுள் ளகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் 2பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. 3இதன் பொருள்:- வினையினானும், பண்பினானும் ஆராயத் தோன்றும் 4ஆள் என் இறுதி, விளிக்கும் இடத்து ஆய்ஆய் விளிஏற்கும் என்றவாறு. (உ-ம்.) 5உண்டாள் - உண்டாய் எனவும், கரியாள் - கரியாய் 6எனவும் வரும். (29) அடிக்குறிப்புகள் 143-1 i “ஆனெனி றுதி” (ன ள மாறாட்டம்) 2 ii “பிறிது வகுத்தல்” 3 i-ii “இனி இதன் பொருள் வினை” எ “உரை - வினை” 4 i “ஆன் எனிறுதி” ii-எi-எii “ஆள் என்னுமிறுதி” 5 i “உண்டான்” 6 i “எனவரும்” 144. முறைபெயர்க் கிளவி முறைப்பெயர் இயல. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- 1ளகார ஈற்றுப்பெயர், 2னகாரஈற்று முறைப்பெயர் போல, ஏகாரம் பெற்று விளிஏற்கும் என்றவாறு. (உ-ம்.) மகள் - மகளே! மருமகள் - மருமகளே! என வரும். 3இதுவும் விரவுப் பெயர் அன்றோ எனின் மேற்கூறியவாறே கொள்க. (30) அடிக்குறிப்புகள் 144-1 ii-எi-எii “ளகார” 2 ii-எi-எii “னகார” 3 ii-எi-எii “மற்றும் இதுவும் விரவுப்” 145. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். என்பது என்நுதலிற்றோ எனின், 1ளகர ஈற்றுள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- ளகார ஈற்றுச் சுட்டெழுத்தினை முதலாக உடைய அவள் இவள் உவள் என்னும்பெயர்களும், வினாப் பொருண்மையுடைய யாவள் என்னும் பெயரும், 2னகர ஈற்றுச் 3சுட்டு முதற்பெயரும் வினாவின் பெயரும் போல, விளி ஏலா என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. (31) அடிக்குறிப்புகள் 145-1 ii-எi-எii “இஃது ளகார” 2 ii-எi-எii “னகார” (காரச்சாரியை இப்பிரதிகளில் பின்னும் வரும்) 3 i-எi-எii “சுட்டெழுத்து முதற்பெயரும்” எ “சுட்டுப்பெயரும்” 146. அளபெடைப் பெயரே அளபெடை இயல. என்பது என்நுதலிற்றோ எனின், 1லகர ளகர ஈற்றுப்பெயர் இரண்டற்கும் எய்தியது விலக்கிப் 2பிறிது விதிவகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- 3லகர ஈற்று அளபெடைப் பெயரும், ளகர ஈற்று அளபெடைப் பெயரும் னகர ஈற்றுப் பெயர்போல, இயல்பாய் விளி ஏற்கும் என்றவாறு. (உ-ம்.) 4மாஅல், கோஒஒள் எனவரும். அதிகாரத்தான் 5இவ்விதி ளகர ஈற்றின் மேல் ஆகாதோ எனின், 6லகார ஈற்றுவிளி ஏலாதனவும் கூறி, இது கூறுகின்றமையின் அதிகார மாறிற்று என உணர்க. (32) அடிக்குறிப்புகள் 146-1 (“லகரப்பெயர்க்கு எய்தியது விலக்கி” என்றிருத்தல் வேண்டும் போலும்.) 2 ii “பிறிது வகுத்தல்” 146-3 ii-எi-எ-எiii “லகார ஈற்று அளபெடைப்பெயரும் னகர ஈற்றுப் பெயர் போல” (இப்பாடமே பொருந்துவதாம்.) 4 ii-iii-எi-எii “மாஅல் எனவரும்” (இதுவே பொருந்தும்) ii “மாஅல் கோஅன் எனவரும்” 5 எ “அவ்விதி ளகர ஈற்றின் மேலாகாதே” 6 i “எனின் ளகார ஈற்று விளி ஏலாதனவும் கூறி” எ “இது! கூறுகின்றமையின்” 147. கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய 1விளிக்குங் காலை. என்பது என்நுதலிற்றோ எனின், 2உயர்திணைப்பெயர் 3விளிஏற்குமாறு கூறி விரவுப்பெயர் விளிஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல் உயர்திணைப் பெயர்க்கண் விளிஏற்கும் எனப்பட்ட உயிர்ஈறு நான்கினையும் புள்ளி ஈறு நான்கினையுமே தமக்கு ஈறாக உடைய உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிவரும் பெயர்கள் அவ்ஈறுகளின் எடுத்துஓதின முறைமையைஉடைய, விளிக்கும்காலத்து என்றவாறு. (உ-ம்.) சாத்தி - சாத்தீ; தந்தை - தந்தாய்; 4பூண்டு - பூண்டே என வரும். ஓகார ஈற்று விரவுப்பெயர் கண்டது இல்லை. இவை உயிர் ஈறு. இனி, புள்ளிஈறு :- சாத்தன் - சாத்தா; கூந்தல் - 5கூந்தால்; என வரும். ரகார ளகார ஈறாய் வரும் விரவுப்பெயர் கண்டது இல்லை. (33) அடிக்குறிப்புகள் 147-1 i “விளக்குங்காலை” 2 ii-எii “உயர்திணைப் பொருள்” 3 எi “விளியேற்குமாறு உணர்த்துதல் நுதறிற்று” (தொடர் விடுபட்டுள்ளது) 4 ii-எi-எii “பூண்டு பூண்டே” (“பூடு பூடே” என்றிருத்தல் வேண்டும் போலும்) 5 ii-எii “கூந்தால் எ-ம்” 148. புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉம் காலந் தோன்றின் தெளிநிலை உடைய ஏகாரம் வரலே. என்பது என்நுதலிற்றோ எனின்,, உயர்திணைப் 1பெயரும் விரவுப்பெயரும் விளி ஏற்குமாறு உணர்த்தி, இனி அஃறிணைப் பெயர் விளிஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- புள்ளி எழுத்தினையும் உயிர் எழுத்தினையும் ஈறாக 2உடைய அஃறிணை இடத்து எல்லாப் பெயர்களும் விளிக்கும் நிலைமை 3பெறும்காலம் உண்டாயின், அவ்விடத்து ஏகாரம் வருதலைத் தெளியப்படு நிலையை உடையன என்றவாறு. (உ-ம்.) நரி - நரியே; புலி - புலியே; 4அணில், அணிலே; மரம் - மரமே எனவரும். 5வருந்தினை வாழியென்னெஞ்சமே எனவும் காட்டுச் சாரோடுங் குறுமுயால் எனவும் பிறவாறும் விளிஏற்று வந்தனவால்எனின், அவ்வாறு வருவன வழக்கினகத்து 6இன்மையின் அந்நிகரன செய்யுள் விகாரம் எனக் கொள்க. 7புள்ளிஈறாகலின் புள்ளி ஈறு முற்கூறினான் எனக் கொள்க. விளிநிலை பெறூஉங்காலந் தோன்றின் என்றது அவை விளிஎற்கும் நிலைமை சிறுபான்மை என்றது என உணர்க. தெளிநிலையுடைய என்றது அவ் 8ஏகாரப் 9பெற்றி ...........த்தற்குக் கூறியவாறு ஆகக் கொள்க. (34) அடிக்குறிப்புகள் 148-1 ii-எii “பெயரும் விரவுப்பெயரும் விளிஏற்குமாறு” (கோடிட்ட பகுதி 1ம் பிரதியில் வரி பிளப்பாக உள்ளது.) 2 i-ii-iii-iஎ-எ-எi “உடைய . . . . . . . . . . . . தெல்லாப் பெயரும்” எ “உடைய . . . . . . . . . . . . த்தெல்லாப் பெயரும்” 3 i-ii-iஎ-எi “பெருங்காலம்” 4 i-iஎ “அனில் அனிலே” 5 i “தினைவாழி யென்னெஞ்சமே” எனவும் காட்டுச். எi “வருந்தினைவாழி நெஞ்சம்” எனவும் காட்டுச் ii வருந்தினை வாழி நெஞ்சமே” காட்டுச் 6 i-iஎ-எii “இன்மையின் நரிகாள்” எi-எii “இன்மையின் நரிகள்” (ன்-ன மாறாட்டம் நீமேல் உள்ள கொண்டை வளைவை ‘ரி’ என மயங்கல் h-ர; ன-ள மாறாட்டம் காண்க.) 7 எi இப்பத்தி இல்லை “கொள்க விளிநிலை” 8 எ-எi “ஏகாரம் பெற் . . . . . . . . .” 9 ii “பெற் . . . . . . க் கூறிய எi “பற்றி . . . . . . க்கூறியதாக” 149. உளஎனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான. என்பது என்நுதலிற்றோ எனின், 1இது மேற்கூறிய மூவகைப் பெயர்க்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. இதன் பொருள்:- மேல், விளிஏற்றற்கு 2உள என எடுத்து ஓதப்பட்ட எல்லாப் பெயர்களும் தத்தம் மாத்திரையின் 3மிக்கிசைக்கும் விளிக்கும் காலத்து ; யாண்டுமோ எனின், அற்றன்று ; சேய்மைக் கண்ணிசைக்கும் வழக்கிடத்து என்றவாறு. (உ-ம்.) 4நம்பீஇ-சாத்தாஅ! எனவரும். வரையறையின்மையின் வேண்டியவாறு 5அளபெழும் எனக் கொள்க. ஆயின், உயிர் பன்னிரண்டு மாத்திரையும் ஒற்றுப் பதினொரு மாத்திரையும் எனக்கொள்க. (35) அடிக்குறிப்புகள் 149-1 ii-iii-iஎ-எii “மேற்கூறிய” 2 ii-எii “உரியன என” எi “உரியன ன” 3 ii “மிக்கிசைக்குங் காலத்து” எi “மிக்கிசைக்கும் விளக்கும்வழிக்கிடத்து” (தொடர் விடுபட்டுள்ளது) 4 i-எ “நம்பீ சாத்தாஅ” 5 i “அளபெழுத்து ஒலிக்கும் என” 150. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. என்பது என்நுதலிற்றோ எனின், இதுவும் 1விளித்திறத்தொ படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள்:- அம்ம என்று சொல்லப்படுகின்ற அகர ஈற்று அசைச்சொல் ஆகாரமாகி நீண்டு 2நிற்றல் அவ்விளி ஏற்கு முறைமையை உடைய பெயர்களோடு பொருந்தாது ஆயினும், பெயர் விளிகளோடு இதனையும் ஒரு விளிநிலைமைத்தாகக் கொள்வர் தெளிந்த அறிவினைஉடையவர் என்றவாறு. (உ-ம்.) அம்மா! - கொற்றா! என வரும். (36) அடிக்குறிப்புகள் 150-1 ii “விளித்திறத்தோடு படுவ” எ “விளித்திறத்துப் படுவ” 2 எ “நிற்றல் விளியேற்கு” 151. த ந நு எ என அவைமுத லாகித் தன்மை குறித்த ன ள ர என் இறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே. என்பது என்நுதலிற்றோ எனின்,. இதுவும் உயர்திணைப் பெயருள் விளிஏலாதன கூறுதல் நுதலிற்று. இதன் பொருள்:- த, ந, நு, எ என்று சொல்லப்பட்ட அவ் எழுத்துக்களை முதலாக உடையவாகி ஒரு தொடர்ச்சித் தன்மையைக் குறித்த ன, ள, ர என்னும் ஈற்றுஎழுத்தினைஉடைய பெயர்களும், அத்தன்மையான பிறபெயர்களுமாய உள்ள பெயராகிய நிலைமையை உடைய சொற்கள் வரின், மேல் விளிஏற்கும் எனப்பட்ட பெயரோடு விளிகோடலை இல்லாமையை வேண்டும் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்.) தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; எனவும், பிறவும் என்றதனான், மற்றையான், மற்றையாள், மற்றையார்; பிறன், பிறள், பிறர்; எனவும் வரும். இவற்றை உயர்திணைப் பெயர்களோடு கூறாது ஈண்டுக் கூறியது என்னை எனின், இவை ஓர் இனத்துட்பட்டு இயைந்து வருதலான் ஈண்டுப் 1போந்து உடன் கூறினா2ன் எனக் 3கொள்க. (37) நான்காவது - விளிமரபு முற்றும். அடிக்குறிப்புகள் 151-1 எi-எiii “போதந்து” 2 “ர்” 3 எi “கொள்க, 37 விளிமரபு முற்றும்”